கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குடி இயல் (சி.பா.த.ப. வகுப்புக்குரியது)

Page 1


Page 2

GE 9
(சி.பா.த.ப. வகுப்புக்குரியது)
முதனூலாசிரியர் :
திரு. எஸ். எவ். டீ சில்வா
கொழும்பு அப்போதிக்கரீஸ் கம்பெனி, லிமிற்றெட் குமாரவிதி கோட்டை, கொழும்பு, இலங்கை 1958
Aسسس3248

Page 3
முதற் பதிப்பு 1953 இரண்டாம் பதிப்பு 1956 மூன்ரும் பதிப்பு 1958
கொழும்பு அப்போதிக்கரீஸ் கம்பெனி, லிமிற் றெட் அச்சியந்திர சாலையில் பதிப்பிக்கப்பட்டது.

மு ன்னுரை
இலங்கை இப்போது பிரித்தானிய ராச்சியப் பொது நலவமைப்பில் பரிபூரண சுதந்திரம் வகிக்கும் ஒரு அங்கத்துவ நாடாக மிளிர்கிறது. ஆகவே, இலங்கையின் அரசியற் பிரச்சினைகளில் மாத்திரமன்றி அப்பொதுநலவமைப்புப் பிரச் சினைகளிலும் உயர்தர மாணக்கர்களுக்குச் சிரத்தையூட்டும் நோக்கத்துடனேயே இந்நூல் எழுதப் பெற்றிருக்கிறது. ஒரு சனநாயக நாட்டிலே வாழும் இளம் பிரசைகள் சன நாயகத்தைப் பற்றியும் சனநாயகத்தாபனங்களைப் பற்றியும் கொஞ்ச அளவுக்காவது அறிந்திருத்தல் இன்றியமையாதது. குடி இயலையும் அதனேடு தொடர்புள்ள விடயங்களையும் அறி வதற்குரிய ஆரம்ப நூலாக இந்நூல் அமைந்து, மாணுக் கர்களுக்குப் பயன்படும் என்பது எமது நம்பிக்கை.
எஸ். எவ். டீ. சில்வா
குறிப் பு
குடி இயல் பாடசாலைகளுக்குரிய ஒரு முக்கிய பாடமாக இப்போது விளங்குகிறது. தமிழைப் போதன மொழியாகக் கொண்டு சி. பா.த. ப. வகுப்புப் பரீட்சைக்கு அல்லது பொதுக் கல்வித் தராதரப்பத்திரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணுக்கர்களுக்கென்றே இந்நூல் தயாரிக்கப்பெற்றிருக்கின்ற தெனினும் இலங்கையின் அரசியல் அமைப்பையும் பிரித் தானியப் பொதுநலவமைப்பையும் பற்றி ஒர் அளவுக்கேனும் அறிய விரும்பும் சகலருக்கும் இது பயன்பட ஏதுவாகும் என்பதே எமது நம்பிக்கை. அரசியலில் வரும் ஆங்கிலக் கலைச் சொற்களுக்குரிய தமிழ்ச் சம பதங்களை இந்நூலில் உபயோகிக் கும் சந்தர்ப்பங்களில் அவ்வாங்கிலக் கலைச் சொற்கள் ஆங் காங்கே அடிக்குறிப்புக்களாகச் சேர்க்கப்பெற்றிருப்பது இந் நூலின் குறிப்பிடத்தக்கவோர் அம்சமாகும். இது ஆசிரியருக் கும் மாணுக்கருக்கும் ஏனையோருக்கும் பயன்படும் என்பதே எமது நம்பிக்கை.

Page 4

அத்தியாயம்
அத்தியாயம்
அத்தியாயம்
அத்தியாயம்
அத்தியாயம்
அத்தியாயம்
அத்தியாயம்
அத்தியாயம்
அத்தியாயம்
அத்தியாயம்
அத்தியாயம்
10
II
உள்ளுறை
மனிதர் வசிக்கும் இடங்கள்-மனித
சமூகங்கள். - - - -
இலங்கையர் சமூகம்
சங்கங்களும் நிலையங்களும்
மானியமுறை நாடுகள்-இலங்கை
சனநாயகம்-அதன் கருத்து
இலங்கை அரசாங்கம்-கிராமச் சமூ
கங்கள்--கிராமச் சங்கங்கள் . .
ஊராட்சி அமைப்புக்கள்-நகர சமூகங்கள்
மத்திய அரசாங்கம்-அதன்
அமைப்புக்கள்
இலங்கைச் சமவரசின் அமைப்பு
பிரித்தானிய ராச்சியப் பொது
நலவமைப்பு
இங்கிலாந்தின் அரசாங்கம் பிரித்தானியப் பாராளுமன்றம்அமைப்பு கருமங்கள்-கருமமுறை இலங்கை-பிரித்தானியப் பொதுநல வமைப்பில் ஓர் அங்கத்துவ நாடு
பக்கம்
17
29
134
1 50
227
24&
3 O 6
340
380
422
462

Page 5

அத்தியாயம் 1.
மனிதர் வசிக்கும் இடங்கள்
மனித சமூகங்கள்
ஆட்சி பரிபாலனம் ' என்னும் சொற்கள் சர்வ சாதாரணமாக வழங்கப்படுகின்றன. இவற்றின் கருத்து என்ன? "ஆள்" என்னும் அடியில் இருந்து பிறந்ததுவே ஆட்சி’ என்னும் பதம். ஆளுதல் ' என்ருல் கொண்டு நடத்தல் ’ எனவும் பொருள்படும். எனவே, ‘ ஆட்சி’ என்னும் இந்தச் சொல் மனிதரைப் பொறுத்தவரையில் எந்த விதமான விசேட கருத்தைக் கொண்டிருக்கிறது? அவர்க ளுடைய விடயங்கள் எவ்வாறு எடுத்தாளப்படுகின்றன? அல்லது கொண்டு நடத்தப்படுகின்றன? அவற்றை யார் எடுத்தாளுகின்றனர் அல்லது கொண்டு நடாத்துகின்றனர்? இவ்வினுக்களுக்கு நாம் விடைகாண வேண்டியது ஆவசியமா கின்றது. ஆனல் இதனை அறிய முயலுமுன் நாம் பல திறப்பட்ட இடங்களில் உள்ள மனிதரைப்பற்றி ஆராய்ச்சி செய்யவேண் டும். இவ்விடங்களிற் சில, குடிசன நெருக்கமுடையனவாயும் சில அவ்வாறில்லாதனவாயும் இருக்கும். இவ்வாருக நாம் ஆராய்ச்சி செய்த பின், அவர்கள் விடயத்தில் எடுத்தாளப்பட அல்லது கொண்டு நடத்தப்படவேண்டிய பிரச்சினைகள் எவ் வாறு எழுகின்றன என்பதையும்-அதாவது ஆட்சி’ அல்லது பரிபாலனம் ' என்பது எவ்வாறு தோன்றுகிறது என்பதையும்-அப் பிரச்சினைகள் எவ்வாறு தீர்க்கப்படுகின் றன என்பதையும் அறிதல் வேண்டும்.
குடிசனச் செறிவினைக் காட்டும் உலகப்படத்தை நீங்கள் நோக்கினல் மனிதர் வசிக்கும் இடங்கள் எவை எவை என்பதை அறிவீர்கள். தாவரச்செறிவுள்ள இடங்களைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். தாவரங்கள்-புல், பூண்டு செடி, கொடி, மரம் என்பன-இனரீதியில் ஒன்று சேர்ந்து செறிந்துள்ள இடங்களையே தாவரச்செறிவிடங்கள் என்பர். வனங்கள், புல்வெளிகள், புதர்க்காடுகள் என்னும் இன்னே 1 ன்னவை இத் தாவரச் செறிவிடத்தின் பல திறப்பட்ட பகுதிகளாகும். தாவரங்களுக்குச் செறிவிடங்கள் இருப்பது போல மனிதர்க்கும் செறிவிடங்கள் உள. பூமியின் மேற் பரப்பிலே சில இடங்களில் அதிக நெருக்கமாகவும், வேறு சில இடங்களில் நெருக்கம் குறைவாகவும் மக்கள் வாழும்
2-8--B

Page 6
2 மனிதர் வசிக்கும் இடங்கள்-மனித சமூகங்கள்
இடங்களை மனிதர் செறிவிடம் எனலாம். மக்கள் செறிவிடம் ஒன்றை நீங்கள் நுணுக்கமாக அவதானிப்பீர்களேயானல் அதன் தsமையைப்பற்றிய விபரங்களை நீங்கள் அறியமுடியும். உலகத்தின் எந்த வொரு பெரிய பகுதியையாவது நீங்கள் ஆராய்ந்து பார்த்தால் அங்கேயுள்ள மக்கட் கூட்டம் "சமூகங் களை ' க் கொண்டதாக இருப்பதைக் காண்பீர்கள். " ஓர் பொதுவான வாழ்க்கை நடாத்துவதன் பொருட்டு குறித்த சில பகுதிகளிலே ஒருங்குசேர்ந்து வாழும் மக்கட்டொகுதி யினரையே சமூகம் என்கிருேம். உதாரணமாக, கிராமம் என்பது ஓர் மக்கட் சமூகமே ; அச் சமுகம் ஓர் சிறிய இடத் திலே ஒருங்குவசித்து விவசாயத்தைத் தனது பிரதான வாழ்க் கைத் தொழிலாகக் கொள்ளுகிறது. மீன்பிடி தொழிலைப் பிரதானமாகக் கொண்டுள்ள மக்கள் வசிக்கும் இன்னேர் கிராமத்தின் அமைப்பு மேலே சொல்லிய விவசாயிகள் கிராம அமைப்பிலும் பார்க்க வித்தியாசமாக இருக்கும். அச்சமூகத் தின் பிரதான தொழில், முந்திய கிராமத்தில் உள்ளதுபோல விவசாயமாக இராது மீன்பிடி தொழிலாக இருக்கும்; அப்படி யிருந்தபோதிலும் இக்கிராமத்துச் சமூக மக்கள், விவசாயக் கிராமத்துச் சமூக மக்கள்போலத் தமக்கெனப் பொதுவான லட்சியங்களும் நோக்கங்களும் உடையராகவும் பரஸ்பரம் நேசபான்மையும் தொடர்பும் கொண்டுள்ளவர்களாகவும் ஓர் சிறு பகுதியில் வசிக்கிருர்கள். விவசாயச்சமூகம், வலைஞர் சமூகம் என்பவற்றிலும் பார்க்க அதிக வித்தியாசமுடையது. ஒர் பட்டினச் சமூகம் : அது மேலே கூறியவற்றிலும் பார்க் கப் பெரிதாகவும் அதிக அங்கத்தவர்களைப் கொண்டதாகவும் இருக்கிறது. அதிலுள்ள மக்களின் தொழில்கள் பல திறப் பட்டனவாகவும், அவர்களின் ஆர்வம் பல்வேறு விடயங்களில் ஈடுபட்டுள்ள தாயும் இருக்கும். இப்படியெல்லாமிருந்தும் இம்மக்கட் டொகுதியினரை ஓர் சமூகமாக அமைக்கும் பொது வாழ்க்கைக்கேற்ற மூலாதார நிலைமைகள் இருக்கத்தான் செய் கின்றன. அவர்கள் குறித்த ஓர் பகுதியில் வசிக்கிருர்கள்; அப் பகுதியுடன் தொடர்புள்ள பல விடயங்களில் அவர்கள் பொதுவான ஆர்வம் உடையவர்களாயிருக்கிருர்கள். உதா ரணமாக, பட்டினத்தின் சுகாதாரம், அதன் வனப்பு என்ப வற்றிலும் அதன் திறமையான நிருவாகம், அது தன் மக்களுக் களிக்கவேண்டிய பாதுகாப்பு, அது அவர்களுக்கு உதவிவரும் செளகரியங்கள், சுகானுபவங்கள் முதலிய இன்னுேரன்னவற்றி லும் அவர்கள் பொதுவான ஆர்வம் காட்டிவருகிருரர்கள். கிராமங்கள் பட்டினங்களுக்கப்பால் இன்னும் விசாலமாக நோக்குமிடத்துப் பெரியநகரங்களைக் காண்கிருேம். லண்டன், நியுயோர்க், கல்கத்தா என்பன பெரிய நகரங்களாகும்.

மனிதர் வசிக்கும் இடங்கள்-மனித சமூகங்கள் 3.
அங்கே லட்சக்கணக்கான மக்கள் வசிக்கிருர்கள். நாம் இது வரை குறிப்பிட்ட கிராமங்கள் பட்டினங்கள் என்னும் சமூகங் களிலும் பார்க்கப் பெருந்தொகையான சனங்களை இந்நகரங் கள் கொண்டிருக்கின்றன. இந்நகர மாந்தர் தொகையில் அதிகமாயிருந்தாலும், பல்வேறுவிதமான தொழில்களைக் கடைப்பிடித்துப் பல திறப்பட்ட ஆர்வமுடையவர்களா யிருந்தபோதிலும் அவர்களைக் கொண்ட நகரத்தைச் சமூகம் என்றுதான் கொள்ளுகிருேம். மேலே சொல்லிய கிராமங்கள் பட்டினங்கள் என்பன எவ்வாறு தத்தம் மக்கட்டொகுதியி னரின் பொதுவாழ்க்கைக் கேற்ற மூலாதார நிலைமைகளைஆக்கி வழங்கிச் சமூகமாகத் தனித்தனி விளங்குகின்றனவோ, அவ் வாறே இந் நகரங்களும் அந் நிலைமைகளை ஆக்கிக்கொடுத்துச் சமூகங்களாகின்றன. தாம் லண்டன் அல்லது கொழும்பு போன்ற ஓர் நகரத்திலே வாழும் பிரசைகள் என்ற உணர்ச்சி அவ்வந்நகரத்தில் வாழும் மக்களிடையே நன்ரு கத்தெரிகிறது. அவர்கள் குறித்த ஓர் இடத்தில் ஒன்ருக வசிப்பதும் தங்கள் எல்லார்க்கும் பொதுவான பணிகளிற் பங்குபற்றுவதும் இவ்வுணர்ச்சிக்குக் காரணம் என்க. ஒர் நகரத்திலே வாழும் மக்கள் அந் நகரம் தங்களுக்கே உரியதெனக்கொண்டு அதனை -தங்கள் நகரத்தை-இட்டுப் பெருமிதம் கொள்ளவும் ஆரம்பிக்கிருர்கள். நகரவாசி ஒருவன் எவ்வாறு தன் நகரத் தையிட்டுப் பெருமிதமுற்று அப்பெருமையைக் கூறிக்கொள்ளு கின்றனே அவ்வாறே ஓர் கிராமவாசியும் தனது கிராமத்தை யிட்டுப் பெருமை கொண்டு அதனைப் புகழ்கின்றன்.
கிராமங்கள், பட்டினங்கள், நகரங்கள் என்பன போன்ற சமூகங்களின் வளர்ச்சியானது பல புறவமைப்பு விடயங்க ளுடன் அதிகமாகச் சம்பந்தப்பட்டுள்ளது எனலாம். உதா ரணமாக, லண்டன் ஒர் நகரமாகத் தோன்றி வளர்ச்சியடைந் தமைக்கான சாதனங்களில் ஒன்று லண்டன் டாலம் என வழங்கப்படும் பாலமே யாம். அந்தப் பாலத்துக்குக் கீழாக நதி ஒடுக்கமாகப் பாய்கிறது. அது அவ்வாறு அந்த இடத்தில் ஒடுக்கமாக இருப்பதனலேயே அங்கே பாலம் அமைப்பது சுலபமாக இருந்தது. மற்றும் இடங்களில் இந் நதி அகன்று பிரவாகிக்கிறபடியினுல் அவ்விடங்களில் அதற்கு மேலாகப் பாலம் இடுதல் கஷ்டம். ஆகவேதான் இப்போதுள்ள இடத் திற் பாலம் கட்ட, அதன் பயணுக லண்டன் பட்டினம் உரு வாகிப் பிரபல்யமடைந்தது. இவ்வாறு ஆறுகளை மக்கள் கடந்துபோதற்குரிய சாதனங்கள் இருந்தமையினல் சன சமூகங்கள் தோன்றிப் பெருகியதற்கு கல்கத்தா, மாத்தறை, களுத்துறை என்னும் பட்டினங்கள் தக்க உதாரணங்கள். மேலும், சுரங்கத்தொழில் நடைபெறுதல், பூகர்ப்பப்

Page 7
4 மனிதர் வசிக்கும் இடங்கள்-மனித சமூகங்கள்
பொருள்கள் காணப்படுதல், துறைமுகங்களும் பெருந்தொகை யில் மீன்படுமிடங்களும் இருத்தல், கணவாய்கள் அமைந் திருத்தல், விவசாயத்துக்கேற்ற நல்ல விளைநிலங்கள் இருத் தல், நல்ல தண்ணிர் வசதி கிடைத்தல், செல்வம் கொழிக்கும் இடங்களுக்கு இலகுவிற்போய் வருதற்கான சாதனங்கள் இருத்தல் என்னும் இன்னேரன்னவை உலகின் பல்வேறு பகுதிகளிலே மனித சமூகங்கள் தோன்றி வளர்வதற்கு இயல் பாகவுள்ள காரணங்களிற் சிலவாகும். ஆனல் இக்காரணங் களினல் மாத்திரம், குறித்த இடங்களிலே சனசமூகம் விருத்தி யாயது என்று சொல்லவும் முடியாது. இந்த இயற்கைக் காரணங்களைவிட சரித்திர சம்பந்தமான காரணங்களும், மத நம்பிக்கைகளும் கொள்கைகளும் சனசமூகங்கள் அவ்வவ் விடங்களில் தோன்றி விருத்தியாவதில் பங்கெடுத்திருக் கின்றன. ஆகவே, தொகுத்துக் கூறுங்கால் இயற்கை, பொரு ளாதாரம், சமயம் என்னும் இன்னுேரன்னவை மனித சமூகம் தோன்றி விருத்தியாவதில் தனித்தனி உதவி செய்திருக் கின்றன எனலாம்.
காலச்சக்கர வேகத்தில் அகப்படாது, காலத்துக்கேற்ற வாறு மாற்றங்களை அடையாதுள்ள அநாகரீக தேசங்களில் தான் மனித சமூகம் முந்தியிருந்த நிலைமையில் இன்னும் இருக் கிறது. ஆனல் மற்றும் தேசங்களில் உள்ள சனசமூகங்கள் ஒரே தன்மையாக நெடுங்காலத்துக் கிருக்கமாட்டா , காலத் துக்கேற்ற கோலமாக அவை மாற்றங்கள் அடைகின்றன. இன்றுள்ள நிலைமையிலே மனித சமூகங்கள் தனித்து வாழ்வ தென்பது முடியாத கருமம் ஆகும். தெருக்கள், புகையிரதப் பாதைகள், தந்தி, தெ லிபோன் எனப்படும் தொலைபேசி, ஆகாசப் போக்குவரத்து, புதினப்பத்திரிகைகள், ரேடியோ எனப்படும் வானெலிச் சாதனங்கள் முதலியன மனித சமூகங் களை முன்னரிலும் பார்க்க அதிகம் நெருங்கிய தொடர் புடையனவாக்கிவிட்டன. உதாரணத்துக்கு கண்டி நகரத் தைச் சுற்றியுள்ள கிராமங்களை எடுத்துக்கொள்ளுவோம் : முற்காலத்திலே இந்தக் கிராமங்களில் வசித்த மக்கள் தமக்கு வேண்டிய பொருள்களைத் தாமே ஆக்கி வெளியாருடைய தயவை எதிர்பார்க்காமல் தம்பாட்டில் இருந்தனர். இன்று இந்த நிலைமை இருக்கிறதா ? இல்லை. அந்தக் கிராமங்களின் நிலைமை முற்முக மாறிவிட்டது. இப்போது அக்கிராமவாசி களின் வருவாய் பட்டணத்துக்குப்போய் தம் விளைபொருள் களை விற்பதில் தான் தங்கியிருக்கிறது என்றும் கூறலாம். இவ் வளவுடன் இது நிற்கவில்லை. கிராமவாசியின் அநுபவமும் இப்போது எவ்வளவோ மாற்றமடைந்து விசாலித்துவிட்டது. கிணற்றுள் தவளை போன்றிராமல் அவன் வெளியுலகத்தைப்

மனிதர் வசிக்கும் இடங்கள்-மனித சமூகங்கள் 5
பற்றியும், வாழ்க்கையைப் பற்றியும் பன்னெடுங் காலத்துக்கு முன் வாழ்ந்த தன் மூதாதையரிலும் பார்க்க அதிகம் அறிந்திருக் கிருன். கிராமங்களில்தான் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதோ வெனில் பட்டினங்களிலும் இது தீவிரமாக ஏற்பட்டிருக்கிறது. இன்றைய பட்டினவாசி தாமும் தம்பாடுமாய்ப் பட்டினத்துக் குள்ளே ஒதுங்கிச் கிடந்த தன் மூதாதையரைப்போலில்லாது வெளியுலகத்துடன் ஊடாடி வருவதால் அவனது வாழ்க்கை யிலும் அநுபவத்திலும் போதிய மாற்றம் அவனிடம் ஏற்பட்டி ருக்கிறது. உங்களில் அநேகர் ஐரோப்பாவின் சரித்திரத்தைப் படித்திருப்பீர்கள். மத்திய காலத்திலே, ஐரோப்பிய பட்டி னங்கள் இப்போதுபோலில்லாது தனித்தனி ஒதுங்கியிருந்தன. அவை ஒவ்வொன்றும் எதற்காவது மற்றப் பட்டினங்களில் தங்கியிராது, அவற்றுடன் சேராது, தனித்தியங்கின. அவை பரஸ்பரம் பொருமையுடையனவாய் மாறுபட்டு அடிக்கடி பொருதுவந்ததையும் நீங்கள் சரித்திரவாயிலாக அறிந்திருப் பீர்கள். இப்போது அந்த நிலைமை-குறுகிய மனப்பான்மை -மறைந்து விட்டது : அப்பட்டினவாசிகள் தம் முன்னேரைப் போலில்லாது வெளியுலகத்து மக்களுடன் இப்போது ஊடாடி அவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளச் சந்தர்ப்பங்கள் ஏற்ப ட் டி ருக் கி ன்ற ன. இதனல் மு ன் னேர் க் கிருந்த குறுகிய மனப்பான்மை அவர்களுக்கிப்போது இல்லாது ஒழிந்துவிட்டது. ஐரோப்பாவில் உள்ள நவீன பட்டினவாசி கள் புறநாட்டவருடன் தொழில் விடயமான தொடர்புகள் இப்டோது வைத்துக்கொண்டிருக்கிருர்கள். நாம் மேலே கூறிய ரேடியோ என்னும் வானெலிச்சாதனமும் இவ்வகையில் விசேட உதவி புரிகிறது. எந்தத் தூரமான இடங்களில் வசிப் வர்களையும் ரேடியோச்சாதனம் மிகவும் அண்மையினராக்கி விடுகிறது. ஆகவே, மனித சமூகங்கள் இந்த உலகத்தின் எப் பகுதியில் வசித்தாலும் அவை இன்றைய நிலைமையில் தனித் தொதுங்கி வாழ்வனவல்ல என்பது தெளிவு. மனிதரை ஓர் காலத்திற் பிரித்து வைத்த தடைகளை விஞ்ஞானம் தகர்த் தெறிந்துவிட்டது. விஞ்ஞான நிபுணர்களும் ஏனைய சாத்திர விற்பன்னர்களும் நவ நவமான சாதனங்களையும் முறைகளை யும் கண்டுபிடித்து இத் தடைகள் எல்லாவற்றை தும் நீக்கிவிட, இன்று உலகின்கண்வதியும் மனித சமுதாயம் "ஒன்றே குலம்’ என்னும் மொழிக் கிலக்காகிவிட்டது என்று கூறலாம்.
நாம் மேலே காட்டிய சமூகங்களான கிராமம், பட்டினம், நகரம் என்பன வெறும் மனிதக் கூட்டங்களை மாத்திரம் உடையனவாயில்லை. அவை ஒவ்வொன்றும் குறித்த சில வெளி யமைப்புக்களையுடையனவாயும் விளங்கு கின்றன. ஒரிடத் திலேயுள்ள மக்கள் ஒருங்குசேர்ந்து வாழவேண்டுமாயின் இப்

Page 8
6 மனிதர் வசிக்கும் இடங்கள்-மனித சமூகங்கள்
படியான அமைப்புகள் அல்லது ஒழுங்குகள் இருக்கவேண்டும். ஒர் கிராமத்தை நாம் நோக்குவோமானல் மக்களின் முயற் சிக்கு வேண்டிய விளை நிலங்களையும் ஆடு மாடுகள் மேய்வதற் கான புல்வெளிகளையும் காணலாம். இன்னும், சந்தை, குடியா னவர்கள் வசிக்கும் வீடுகள் என்பனவும் அங்கேயுண்டு; இவை எல்லாம் வேறுவேருக இருக்கும். ஓர் பட்டினத்தை நாம் நோக்குவோமேயானல் அங்கே குடியிருப்புக்கென விசேட இடங்கள் இருப்பதையும், சந்தைகள், தொழில்கள், வர்த்தகம் என்பவற்றுக்கு வேறிடம் இருப்பதையும் காணலாம். மேலும், அப்பட்டினத்தைப் பரிபாலிக்கும் அதிகாரிகள் கடமையாற்றும் காரியாலயம் பட்டினத்தின் பிறிதோரிடத் திலும், விளையாட்டுத் தாபனங்கள், சிரமபரிகார நிலையங்கள், நவ நாகரீகச்சாலைகள் வேருேர் இடத்திலும் கைத்தொழிற் சாலைகள் பிறிதோர் பகுதியிலும் இருக்கும். இப்படியாக இந் நிலையங்கள் தமக்கெனக் குறிக்கப்பட்ட இடங்களில் இருப்ப தால் அப்பட்டினத்தில் இன்ன இன்ன அமைப்புக்கள் இன்ன இன்னவற்றைக் காட்டுகின்றன என்பதைச் சுலபத்தில் அறிந்து கொள்ளலாகும். கொழும்பு நகரத்திற்கு ஒருவர் விஜயம் செய்தால் அவர் கோட்டைப் பகுதியிலேயுள்ள பரிபாலனக் காரியாலயங்களையும் வர்த்தக நிலையங்களையும் சுலபமாக மட்டிட்டு அறியலாம். அங்கே துறைமுகத்துக்குச் சமீபமாகக் கைத்தொழில் நிலையங்கள் செறிந்திருப்பதையும் அவற்றுக் கண்மையில் தொழிலாளி வகுப்பினர் குடியிருக்கும் இடங்கள் இருப்பதையும் காணலாம். இந்த இடங்களுக்கு அப்பால் தென் பாரிசத்தில், கொழும்புச் செல்வர்கள் வசிக்கும் கறு வாத்தோட்டமும் இவர்களிலும்பார்க்கச் செல்வத்திற் குறைந் தவர்கள் வதியும் கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, வெள்ள வத்தை என்னும் பகுதிகளும் உள.
குறித்த ஓர் பகுதியிலே மனிதர் ஒருங்குசேர்ந்து வசிக்கும் போது அவர்களுக்கிடையே ஒருவித உணர்ச்சி வெகு சீக்கிரத் தில் நிலவுகிறது. இந்த உணர்ச்சியைச் சமூக உணர்ச்சி என்பர். தனி மனிதர் என்ற தன்மையில் இவர்களுக்கிடையே எத் தனையோ விதமான அபிப்பிராயபேதங்களும் வித்தியாசங் களும் இருக்கலாம், அப்படி இருந்தாலும் தாம் எல்லாரும் சமூகவிடயமாக ஏதோ ஒரு விதத்தில் தொடர்புடையவர்கள் -பந்துத்துவம் உடையவர்கள்-என்ற உணர்ச்சி அவர் களுக்கு ஏற்படுகிறது. கிராமம் விடயமாகவோ. அக் கிராமச் சமூக விடயமாகவோ அவர்களுக்கிடையே "நான்', "எனது' என்ற மனப்பான்மை இல்லாது ‘நாங்கள்’, ‘எங்களுடைய' என்ற மனப்பான்மை உதிக்கிறது. அவர்களில் எவராவது ‘என் கிராமம்’, ‘என் பட்டினம்’, ‘என் நகரம்’ என்று

மனிதர் வசிக்கும் இடங்கள்- மனித சமூகங்கள் 7
சொல்லாது ' எங்கள் கிராமம்' , ' எங்கள் பட்டினம் ', எங்கள் நகரம்', என்று கூறுவது கண்கூடு . ஒர் கிராமவாசி விடயத்தில் அவனுடைய சகோதரக் கிராமவாசி விசேட சிரத்தை காட்டுவதையும், இவர் எங்கள் கிராமத்தவர் என்று பெருமிதத்துடன் கூறுவதையும் நாம் அவதானிக்கி ருேம்; ஆனல் வேருேர் கிராமவாசி விடயத்தில் அவன் இவ் வளவு சிரத்தை காட்டுவது இல்லை. ஏன்? ஏனைய கிராமத்தவ வர்கள் விடயத்தில் அவன் உபேட்சை காட்டுகிருன் என்ருலும் அது மிகையாகாது. ஓர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பிற தேசத்தில் சந்தித்தால் அவர்கள் அடையும் மகிழ்ச்சிதான் என்ன ! அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுப்பிரியாது ஒருவர்க் கொருவர் துணையாகவும் இருப்பர். பிறநாட்டிலே ஒருவர் இடைஞ்சற் படுவதை வேருெருவர் கண்டு, அவ்வாறு இடைஞ்சற்படுபவர் தன் சொந்தக் கிராமத்தவரே என்பதை அறிந்தால், அவரை முன் ஒருபோதும் அறியாதபோதிலும் அவர்க்கு இதவார்த்தை கூறி உதவிபுரிந்து அவ்விடைஞ்சலி னின்றும் அவரை நீக்கிவிடுவார். இவை எல்லாம் நமக்கு எதனைக் காட்டுகின்றன? ஒர் சமூகத்தில் உள்ளவர்களிடையே பரஸ்பரம் நல்லெண்ணமும் சகோதரத்துவபாவனையும் உரு வாகி அவர்களை ஒன்றுசேர்க்கும் தன்மையை இவை எல்லாம் காட்டுகின்றன. முற்காலத்திலே இந்தவிதமான சகோதர மனப்பான்மை ஒரே சாதியை, ஒரே இனத்தைச் சேர்ந்தவர் கள் மாட்டுத்தான் காட்டப்பட்டுவந்தது. அதாவது, ஒர் கிராமத்தில் ஓர் சாதியை அல்லது ஒர் இனத்தைச் சேர்ந்தவர் கள் அதே சாதியை அல்லது அதே இனத்தைச் சேர்ந்தவர்கள் மாட்டுத்தான் இத்தகைய மனப்பான்மையைக் கொண்டிருந் தனர். ஆனல் தெருக்கள் முதலாம் போக்குவரத்துச் சாத னங்களினுல் இவ்வாறு தனித்தொதுங்கி வாழ்ந்த நிலைமை அற்றுவிட, மேலே சொல்லிய சமூக மனப்பான்மை பரந்து விரிந்தது. கிராமத்துடன் நின்ற சகோதர மனப்பான்மை, இப்போது கிராமத்துக்கப்பால் முழுத்தேசத்திலும் வதியும் தேசிய இனத்தார் விடயத்திலும் விரிகின்றது. இச்சந்தர்ப் பத்திலே தேசீய இனத்தார் என்ருல் என்ன? என்ற ஒர் கேள்வி பிறக்கிறது. இந்த இரண்டு பதங்களுக்கும் சரி யான, நிதார்த்தமான கருத்துக்கள் கூறுதல் கஷ்டம். " நாம் ஒர் தேசத்தார்" அல்லது ‘நாம் ஒர் தேசத்தைச் சேர்ந்த வர்கள்" என்று கூறுவோமேயானல், அத்தேசத்தின் அங்கத் தவர்களாகவுள்ள எத்தனையோ லட்சக்கணக்கான மக்களை ஏதோ ஒர் விதமான பந்துத்துவம் அல்லது நேசமனப்பான்மை ஒன்று சேர்க்கிறது என்பதை ஒப்புக்கொள்பவர்களாவோம்.
1. Nation.

Page 9
8 மனிதர் வசிக்கும் இடங்கள்-மனித சமூகங்கள்
சமூகம் என்பது எவ்வாறு ஒர் கிராமத்தின் அல்லது பட்டினத் தின் சமுதாய ஒற்றுமையைக் குறிப்பதாயிருக்கிறதோ, அவ் வாறே தேசீய இனம் என்பதும் பல்வேறு விதத்தினராகவும் பெருந் தொகையினராகவுமுள்ள மக்கட்டொகுதியின் ஒற்று மையைக் குறித்துக் காட்டா நிற்கும். மேலும், தேசீய இனம் என்ருல் அதற்கென ஓர் அரசாங்கமும் இருத்தல் வேண்டும். ஆகவே(தேசீய இனம் என்பதற்கு அதனைச்சேர்ந்த மக்களிடயே உறுதியான ஒற்றுமை மனப்பான்மை நிலவவேண்டும். அத் துடன் அதற்கெனத் தனியான ஒர் அரசியல்-ஒர் அரசாங்கம் -இருத்தல் வேண்டும். இவை இரண்டும் ஓர் தேசீய இனத் துக்குரிய பிரதான அம்சங்கள்; தேசீய இனத்தைத் தனியாகக் காட்டும் குறிகள் அவை. ஒர் தேசீய இனத்திடையே ஒற் றுமை உணர்ச்சி நிலவுதற்குப் பல ஏதுக்கள் உள. அதனைச் சேர்ந்தவர்களுக்குச் சரித்திர ரீதியாகவோ, ஐதீகரீதியாகவோ பொதுவான் ஒர் பந்துத்துவம் இருந்தால் அது அவர்களி ளிடையே ஒரளவுக்கு ஒற்றுமை மனப்பான்மையை நிலவச் செய்யும். இன்றுள்ள ஓர் தேசீயஇன மக்கள் பன்னெடுங்காலத் துக்கு முன் வாழ்ந்த தம் மூதாதையரின் சரித்திரத்தைத் துருவி ஆராய்ந்து கொண்டுபோய் தாம் அனைவரும் ஓர் இனத்தின் அல்லது குலத்தின் வழித்தோன்றல்களே என்பதை அறியுங்கால், அவ்வறிவும் அவர்களை ஒன்றுசேர்க்கத்தூண்டும். அப்ப்டியாகத் தாம் அனைவரும் ஓர் குலத்தின் வழித் தோன்றல்கள் என்று அறிந்து அதில் நம பிக்கை கொண்டு மனம் கிளர்தல் அவர்களது தேசீய இன பந்துத்துவத்தை உறுதிப்படுத்தும். பொதுவான மொழி, பொதுவான பண்பாடு என்பவையும் மக்களைத் தேசீய இனமாக்கும். ஆனல் இதுரை கூறிய தன்மைகள் இல்லாமலும் ஓர் தேசீய இனம் இருக்கலாம் என்பதை இச்சந்தர்ப்பத்தில் ஞாபகப்படுத்திக்கொள்ளவேண்டும். உதாரணமாக, ஐக்கிய அமெரிக்க நாடுகளையும் சோவியத் குடியரசு நாடுகளையும் எடுத்துக்கொள்ளுவோம். இந்த இரு தேசங்களிலும் எத்த
யோ விதமான சாதியார் இருக்கிருர்கள். அப்படியிருந்தும் அத்தேசங்களிலே ஒவ்வோர் தேசீய இனம் இருக்கிறது என்ப தற்குச் சந்தேகம் இல்லை. இந்தியாவிலே பலவிதமான சாதி யினர் வசிக்கிருர்கள் ; பலவிதமான மொழிகள் பேசப்படு கின்றன ; பலவிதமான வருணத்தவர் இருக்கிருர்கள். அப்படி யிருந்தும் அங்கே ஒர் தேசீய இன உணர்ச்சி மெல்ல மெல்ல உருவாகி வளர்ந்து வருகிறது. சீன தேசத்திலும் இப்படித் தான். வட சீனத்தில் உள்ளவர்களுக்கும் தென் சீனத்தில் உள்ளவர்களுக்குமிடையே வேற்றுமைகள் இருந்தபோதிலும் சீன இனம் என்ற ஓர் தேசீய இனம் உருவாகி வருகிறது. ஓர்

மனிதர் வசிக்கும் இடங்கள்-மனித சமூகங்கள் 9.
இன மக்கள் அல்லது ஓர் சாதி மக்கள் அல்லது ஓர் மொழி யைப் பேசும் மக்கள்தான் தேசீய இனமாக முடியும் என்று நாம் எண்ணிக் கொள்ளக்கூடாது. ஒர் கூட்ட மக்களுக் கிடையே ஓர் பொதுவான சாதி அல்லது ஓர் பொதுவான மொழி இருப்பின் அவர்கள் ஒர் தேசீய இனமாக வளர்வது சுலபம். அவர்களது தேசீய இன வளர்ச்சியை இப்பொது மொழியும் இப்பொதுச் சாதியும் துரிதப்படுத்தும் என்பது உண்மையே யெனினும் இவை இல்லாமலும் ஓர் தேசீய இனம் உருவாகலாம் என்பதை நாம் நன்கு குறித்துக் கொள் ளுதல் வேண்டும். ஆனல் ஓர் தேசீய இனத்துக்கு இன்றியமை யாதிருக்கவேண்டியன, அதன் மக்கள் டையே ஓர் பொதுவான உணர்ச்சி, கூட்டுவாழ்க்கையின் பயனக ஏற்படும் உறுதியான ஒற்றுமை, துன்பம் வந்துற்ற காலத்தில் அதனை ஒருங்கு சேர்ந்து அநுபவித்தல் என்பன அல்லது பொதுவான ஓர் வாழ்க்கை முறையை ஏற்றல் என்பது. இந்த அம்சங்கள் இல்லாத எந்த மக்கட்டொகுதியையும் தேசீய இனம் என்று diso (plgu lit gil, மேலும் அவ்வினத்துக்கென ஓர் அரசாங்க மும் இருத்தல் வேண்டும். அரசாங்கம் இல்லாத தேசீய இனம் அவனியில் இல்லை. ஆகவே ஓர் தேசிய இனம் என்பது சரித்திர நிகழ்ச்சிகளினல் ஆக்கப்பட்டு, பொதுவான ஆத்மீகக் கொள்கைகளினல் உறுதிப்பாடுற்ற ஓர் வித சமூகத்தை-ஒர் வித இனத்தை-ஓர் வித சமூக மனுேபாவத்தை-மக்களுக் கிடையே ஏற்படும் பரஸ்பர ஒத்தாசை உணர்ச்சியை-- குறிக்கிறது என்பது புலப்படும். இவ்வாரு ன சரித்திர நிகழ்ச் சிகளும் பொதுவான ஆன்மார்த்தக் கொள்கைகளும் மிகவும் பரந்தும் உறுதியாகவும் இருக்கின்ற மையால் அவற்றின் உணர்ச்சியில் திளைக்கும் மக்கள் தமக்கென வேருக, தமக்கென விசேடமாக ஓர் பொது அரசாங்கம் இருக்கவேண்டுமென விரும்புவர் *.
(1945-ம் ஆண்டுக்கு முன் சில காலம் ஜெர்மனியில் அதி காரம் வகித்த நாஸிக்கட்சி எனப்படும் தேசீய சமதர் மக்கட்சி யினர்1 தேசீய இனம் என்ரு ல் என்ன என்பதற்கு ஒர் வியாக்கி யானம் கொடுத்திருக்கிருர்கள்.) (ஓர் தேசீய இனம் என்பது அதன் சரியான இலக்கணத்துக்குத்தக இருக்கவேண்டுமே யானுல் அது ஒரே சாதியினரை, ஒரே இனத்தவரைக் கொண் டதாக இருக்கவேண்டும் என்பதுதான் நாஸிக்கட்சியினர் கொண்டிருந்த கொள்கை. அக்கொள்கைப்படிதான் ஜெர் மன் சாகியத்தைத் தூய்மைப்படுத்துதற் காக" அவர்கள் ஜெர் மனியிலிருந்து யூதர்களை அடித்துத் துரத்தினர்கள். ஜெர்மன் நாஸிக்கட்சியினர் தம் கொள்கைகளை வெகு தூரம் பிரசாாம்.
1. National Socialist Party.

Page 10
O மனிதர் வசிக்கும் இடங்கள்-மனித சமூகங்கள்
செய்திருக்கிருர்கள். ஆகவே இக்கொள்கையைப் பற்றியும், ஈண்டு சில குறிப்பிடுதல் பொருத்தமுடைத்தாகும். 'சா கியம் என்ருல் என்ன என்பதற்கு எவரும் நிதார்த்தமாக அர்த்தம் கொடுத்தல் இயலாத கருமம் ; ஏன்? இன்று சாகியம்’ அல்லது ‘குலம்’ என்று சொல்லப்படும் ஒவ்வொன்றும் பல்வேறுவிதமான இனங்களைக் கொண்டனவாக இருத்தலி னுல் என்க. இப்படியிருப்ப நாஸிக்கட்சியினர் தூய்மையான கலப்பற்ற ஆரியச்சா கியம் அல்லது ஆரியக்குலம் என்பதைப் பற்றிப் பரக்கப் பேசுவது மெளட்டீகத்தின் பாற்பட்ட செய லன்றி வேறென்ன ? இப்பரந்த பூமியின் கண்ணே கோடிக் கணக்கான மக்கள் வசிக்கிருர்கள். அவர்கள் எல்லாரும் ஒரேமாதிரி இல்லாது, பல்வேறுவிதமான அங்க அமைப்புக் கள் உடையவர்களாகக் குறித்த குறித்த இடங்களில் வசிக்கி ருர்கள். இப்பல்வேறு மக்களுக்கிடையே விருப்பும் வெறுப் பும், அவாவும், வெகுளியும் தோன்றிச் சமுதாய ஒற்றுமைக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் காலத்தில்தான் அவர்களுக்கிடையே பரஸ்பர உயர்வு தாழ்வு மனே பாவம் ஏற்படுகிறது. கறுப்பு இன மக்கள். வெள்ளை இனமக்கள் என்று சொல்லப்படும் மக்கட்டொகுதியினர்க் கிடையேயுள்ள எதிரிடைக்கும் இதுவே காரணம் என்க. ஆராயுங்கால் இது பழக்க வழக்கங்கள், நோக்கங்கள், லட்சியங்கள் என்னும் இன்னுேரன்னவற்றினல் வேற்றுமைப்பட்ட மக்கட் டொகுதியினர்க் கிடையே தோன்றிய எதிரிடையேயன்றி நிறம்பற்றி எழுந்த எதிரிடை யன்று; கறுத்தவர்கள்’ ‘ வெள்ளையர்கள்" என்று நாம் மனித குலத்தைப் பிரிக்க முடியாது. மக்களின் அங்க அமைப்புக்கள் பற்றி அவர்களை நாம் பாகுபடுத்தலாம். ஆனல் சாகியம் ? அல்லது ' குலம் ' என்பதை நாம் அவ்வாறு பாகுபடுத்த முடியாது. ஓர் சாகியத்தை அல்லது ஒர் குலத்தைப்பற்றி நாம் நினைக்கும்போது அது ஏதோ ஒர் தனி உயிரினத்தின் தொகுதி யாய் கலப்பற்றதாய் இருக்கிறதென்று நாம் நினைப்பதில்லை; அப்படி நினைக்கவும் முடியாது. உலகிற் காணப்படும் சாகியங் கள் அனைத்தும் கலப்புற்றனவாகவே காணப்படுமன்றிக் கலப் பற்றனவாக இல்லை. ஜெர்மன் நாஸிக்கட்சியினர் கூறிய அந்தச் * சுத்த " " கலப்பற்ற ஆரியர்குலமும் எத்தனையோ வித கலப்புக்களை கொண்டதுதான். நாம் தமிழரை ஓர் சாதியாக அல்லது ஒர் குலமாகச் சொல்லும்போது அவர்கள் ஏதோ தனித்தவர்கள், மற்றவர்களுடன் தொடர்பில்லாதவர்கள் என்று சொல்வதில்லை. இப்படித்தான் இப்பூவுலகத்தின்கண் வதியும் எச்சாதியாரை எடுத்து நோக்கினலும்-அவர்கள் ஆங்கிலராயினுமாக, ஜெர்மனியராயினுமாக, சீனராயினுமாக ஜப்பானியராயினுமாக-அவர்கள் எல்லாரும் கலப்பற்ற சாதியினர் என்று கூறமுடியாது.

மனிதர் வசிக்கும் இடங்கள்-மனித சமூகங்கள் 11
அநேக சமூகங்கள் தமக்குள்ளேயே பல வித்தியாசங்களை யுடையனவா யிருப்பதையும் காணலாம். சில சமூகங்களில் வருணங்களும் வருண முறைகளும் இருப்பதைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். எங்கள் நாட்டிலும் இந்த வருண முறை இருந்துவந்தது. தொழில்பற்றியே இந்த முறை பூர்வ காலத்தில் ஏற்பட்டது. ஆனல் இப்போதுள்ள பலர் தத்தம் வருணங்களுக்குரியன எனக் குறிக்கப்பட்ட தொழில்களைப்பின் பற்றுவதில்லை. ஆசிரியர்கள், நியாயவாதிகள், வைத்தியர், வர்த் தகர், சிவில் சேர்விஸ் அதிகாரிகள் என்னும் இன்னுேரன்னவர் களில் பல வருணத்தவர்கள் அடங்கியிருக்கிருர்கள். பூர்வ இலங் கையில் அநுட்டானத்தில் இருந்த வருணமுறை இப்போது இல்லை. அக்காலத்திலே சிங்களர் அல்லது தமிழரில் உயர்ந்த வருணத்தவர் இவர், தாழ்ந்த வருணத்தவர் இவர் என்று மக்களைக் குறிப்பிடுதற்கிருந்த ஏதுக்கள் இப்போது இல்லை.
இலங்கையிலே வருணம்பற்றிச் சமூகப்பிரிவினை இருந்தது போல, மற்றும் தேசங்களிலே இனம் அல்லது வகுப்புப்பற்றிய பிரிவினைகள் சமூகங்களுக்கிடையே உண்டு. இங்கேயுள்ள பல்வேறு வகுப்புக்கள் அவ்வவற்றின் அந்தஸ்துக்குரிய ஏற்றத் தாழ்வினைக் குறிக்கும். உயர் வகுப்பினர் நடுத்தர வகுப் பினரிலும் பார்க்க உயர்ந்த அந்தஸ்துடையவராயும், நடுத்தர வகுப்பினர் கீழ்நிலை வகுப்பினரிலும் பார்க்க உயர்ந்த அந்தஸ்துடையராயுமிருப்பர். இத்தகைய வகுப்பு வேற்று மைகளுக்குப் பல காரணங்கள் உள. எங்கள் இலங்கையிலே வருணமுறை எவ்வாறு தொழில்பற்றி ஏற்பட்டதோ அவ் வாறு இந்த வகுப்புமுறையும் சில இடங்களில் பொருளாதார அதிகாரம் பற்றிப் பிறந்திருக்கிறது. ஒருவர்க்குக் காணி பூமிகள், தோட்டங்கள் இருந்தால், அல்லது வர்த்தகம் தொழிற்சாலை என்பவற்ருல் பெரும் பணவருவாய் கிடைப்பின் அவருக்கு ஓர் உயர்ந்த அந்தஸ்து ஏற்படலாம். அவர் விடயத்தில் மற்றவர்கள் மரியாதை காட்டுவர் ; சில சமயங் களில் அவர் பால் அச்சமும் கொள்வர். வேறு சிலர் அரசி யல் அதிகாரம் உடையவராய் இருப்பர். அந்த அதிகாரத்தின் பயனக அவர்களது அந்தஸ்து மற்றவர்கள் அந்தஸ்திலும் பார்க்க உயர்ந்ததாய் அவர்களைத் தனி வகுப்பர்க்கும். இப்படி அவர்கள் தமது அந்தஸ்துக்குத் தக்கபடி வேருக, அவர்களின் பழக்கவழக்கங்களிலும் வாழ்க்கைப்போக்கிலும் வித்தியாசம் ஏற்பட்டு அப்பிரிவினையை இன்னும் உறுதிப்படுத்தும். உதா ரணமாக, உயர் வகுப்பினரின் வாழ்க்கைவிதமே வேறு. அவர் களுக்கு வேருண கலாசாலைகள் இருக்கும். அவர்கள் கூடிப் பொழுதுபோக்குதற்குப் பிரத்தியேகமான இடங்களும் சங்கங்

Page 11
12 மனிதர் வசிக்கும் இடங்கள்- மனித சமூகங்கள்
களும் இருக்கும். ஏன்? சமுதாய பழக்க வழக்கங்கள் தாமும் வேருக இருக்கும்.
மனித சமூகங்களின் வாழ்க்கையின் அம்சங்களாக மேலே சொல்லிய வகுப்புக்களும் வகுப்பு வித்தியா சங்களும் இருக்கத் தான் வேண்டும் என்று வாதிக்கும் ஒரு சாராரும் இருக்கின் றனர். மனிதனின் சரித்திரமே போராட்டச் சரித்திரமாகும். தாழ்ந்தவராயினேர் உயர்ந்தவர்களுக் கெதிராக நடாத்தி வந்த போராட்டத்தைக் குறிப்பதுதான் மனித சரித்திரம் என்றும், இப்போராட்டத்தின் பயனகவே மனித சமூகங்கள் வளர்வதும் அபிவிருத்தியடைவதும் என்றும் இவர்கள் வாதிப் பர். தாழ்ந்த வகுப்பினர்க்குச் சுதந்திரம் இல்லை; நல்ல உணவு, நல்ல குடியிருப்புவசதி, நல்ல கல்வி என்பனவற்றைப் பெறுதற்கான சாதனங்கள் அவர்களுக்குக்கிடையா ; மேல் வகுப்பினராக இருக்கும் முதலாளிச் செல்வர்கள் கொடுக்கும் சம்பளத்தை ஏற்று அதனைக் கொண்டே தம் வாழ்க்கையை அவர்கள் நடாத்துகிருர்கள், இப்படியாக உயர்ந்த வகுப் புக்கள் என்றும் தாழ்ந்த வகுப்புக்கள் என்றும் வகுப்புக்கள் இருக்கும் முறை எப்போது இல்லா தொழிகின்றதோ அப்போது தான் உண்மைச் சுதந்திரம் உயதமாகும். உண்மைச் சுதந் திரம் என்பது வகுப்புப்பேதம் அற்று எல்லாரும் ஓர் குலம், எல்லாரும் ஓர் இனம் என்ற நிலை ஏற்படும்போதுதான் உண் டாகும் என்று இவ்வகுப்புப் போராட்டவாதிகள் வாதிப்பர். இவர்களுன்டய வாதத்தில் எவ்வளவு தூரம் உண்மையிருக் கிறது என்பதனை இப்போது கூறமுடியாது; காலந்தான் அதனைக் காட்டவேண்டும். தாழ்ந்த வகுப்பினர் என்று சொல்லப்படுவோரை நடத்தும் கொடிய முறையை எவ்வள வுக்கோ குறைக்கலாம். அவர்கள் தம் தாழ்ந்த நிலையி லிருந்து உயர்வதற்குச் சந்தர்ப்பங்களை அவர்களுக்கு அளிக்க லாம். இப்படியெல்லாம் செய்தால் அவர்களுடைய துய ரங்கள் ஒரளவுக்கு நீங்கி சுபீட்சப்பாதையில் அவர்கள் செல் வதற்கு வழிகோல முடியும் என்பதற்கையமில்லை. அமெரிக்கா விலும், இங்கிலாந்திலும், சோவியத் ருஷியாவிலும் தாழ்ந்த வகுப்பினர் என்று சொல்லப்பட்ட வகுப்பு மக்களில் எத்தனை யோபேர் தம் திறமையினல் அங்கங்கே அதியுந்நத பதவிகளை வகித்துத் தமக்கும் தத்தம் நாடுகளுக்கும் பெருமை தேடிக் கொடுத்திருப்பதை நாம் அறிவோம். ஆனல் இப்படி இவர்கள் மேனிலையை எய்தினுலும் அவர்களை மேல் வகுப்பினர் மனமு வந்து ஏற்றுத் தம்முடன் சமத்துவமாக மதித்துக் கணித் தனரோ என்பது சந்தேகத்துக்கிடமாகவே யிருக்கிறது. ஏன் என்ருல் இப்படிப்பட்டவர்களைத் தானும் பரந்த நோக்குடன் வரவேற்றுச் சமத்துவம் அளிக்கும் மனுேபாவம் இல்லாது,

மனிதர் வசிக்கும் இடங்கள்-மனித சமூகங்கள் 13
அவர்களை ஒட்டவந்த பிடாரியாய் மதிக்கும் மனச்சார்பு இவ்வுயர்ந்த வகுப்பினர்க்கிடையே ஓரளவுக்கு இருப்பதனல் என்க.
ஆனல் மேலே சொல்லிய வகுப்புமுறை எங்கள் நாட்டில் உள்ள வருண முறையைப்போலில்லாது காலத்துக்கேற்ற வாறு அமையக்கூடியது. ஒருவன் தன் வருணத்தைத் தான் நினைத்தபடி மாற்றமுடியாது. அவன் அதிலேயே பிறந்து அதிலேயே வளர்ந்து அதிலேயே இறப்பான். வருணம் என் பது மாற்றமுடியாத, மாற்றத்துக் கிடம் கொடாத சமுதாயப் பிரிவினையாகும். ஆனல் வகுப்புக்கள் இப்படியானவையல்ல. ஒருவன் தக்க கல்வி பெற்றுக் கீர்த்திமானகினல் அல்லது குபேர சம்பத்துப் படைத்திருப்பனேல், அல்லது உயர்ந்த அதி கார பதவி வகிப்பனேல் அவன் தனது வகுப்பிலும் பார்க்கக் கூடிய வகுப்பை எய்தலாம். அவன் தாழ்ந்த வகுப்பிற் பிறந் தவனுயிருந்தபோதிலும் அவன் பெறும் கல்வி அவனுக்கு உயர்ந்தாரோ டிணங்கும் பான்மையையும் பழக்க வழக்க சீர்திருத்தத்தையும் நல்கும். அவனது பொருள் (செல்வம்) அவனுக்கு ஏவல் இடம் இரண்டையும் கொடுக்கும். அவன் வசிப்பதற்கு ஏற்ற நல்ல இல்லத்தையும் உயர் வகுப்பினரு ருடன் தாராளமாக ஊடாடும் வசதிகளையும் இச்செல்வம் அவனுக்கு உதவும். அதிகார பதவியெனிலோ அவனுக்கு மதிப் பையும் மரியாதையையும் மற்றவர்களிடமிருந்து, பெற்றுக் கொடுக்கும். ஆகவே இந்த வகுப்புமுறையானது, ஒருவன் உயர்வதற்கு தாண்டமுடியாது தொடர்ச்சியாகவுள்ள தடை களைக் கொண்டுள்ள வருணமுறையைப் போலவிராது, கீழிருந்து மேலே போவதற்கான மலைச்சாரலைப் போன்றதாகும் என்க.
வருணமுறை மெல்ல மெல்ல வாகத் தேய்ந்து வருகிறது. முற்காலத்திலே இம்முறை, சமுதாய ஒழுங்கினை நிலைநாட்ட ஏற்பட்ட சாதனமாக இருந்தது. ஆனல் இப்போது காலம் மாறிவிட்டது. சட்டத்துக்குட்பட்டுத் தான் நினைத்தபடி செய்ய ஒவ்வொரு தனி மனிதனுக்கும் சுதந்திர மிருக்கிறது என்பதை மக்கள் முன்னரிலும் பார்க்கக் கூடியதாக ஒத்துக் கொள்ளும் இக்காலத்திலே வருணத்தடைகள் மெல்ல மெல்ல வாக அகலுகின்றன ; இதனை நாம் எங்கள் நாட்டில் இன்று காண் கிருேம். ஒருவன் தான் விரும்பிய கல்வியைப் பெறு தலையோ தான் விரும்பிய தொழிலைச் செய்தலையோ தடைசெய்ய முடியாது. இந்நாட்டின் அதிஉந்நத அதிகார பதவியைத் தானும் தாழ்ந்த வருணத்து மக்களில் ஒருவன் வகிக்கலாம். தொழில்களைச் செய்வதற்கு இப்போது வருணபேதம் கிடையாது. எங்கேனும் தூரமான உள்நாட்டுக்

Page 12
1 4 மனிதர் வசிக்கும் இடங்கள்-மனித சமூகங்கள்
குள் இருக்கும் கிராமங்களிற்ருன் சில வருணங்களுக்குத் தொன்றுதொட்டு ஏற்பட்டுள்ள சமூகக்கறையைக் காணலாம். சமீபகாலத்தில் ஏற்பட்டுள்ள மகத்தான மாற்றங்களினல் இந்த வருணமுறை அடியோடு ஒழிவதற்கான உற்பாதங்கள் தென்பட்டிருக்கின்றன. இந்நாட்டுச் சட்டங்கள் எல்லார்க் கும் பொதுவானவை. முந்தியிருந்த வருண ரீதியான சட்டங் கள் எல்லாம் ஒழிக்கப்பட்டுவிட்டன. கிராமச்சங்கம் முதல் பாராளுமன்றம் ஈரு கவுள்ள அரசியல் மன்றங்களுக்குப் பிரதி நிதிகளைத் தெரிவுசெய்தற்கான வாக்குரிமையும், இம்மன்றங் களிலே பிரதிநிதிகளாக அமர்ந்து தொண்டாற்றுதற்கான உரிமையும் எல்லா வருணத்தவர்க்கும் இப்போது உண்டு. இன்ன வருணத்தவர் இன்ன உரிமைகளை அநுபவிக்கக்கூடாது என்ற வழக்கமோ சட்டமோ இல்லை. அரசியல் அதிகா ரம் என்பது குறித்த ஒர் வருணத்தவர்க்கு ஏகபோக உரிமை யாக இருந்த அந்தக்காலம் மலையேறிவிட்டது. நவநாகரீகப் போக்குவரத்துச் சாதனங்கள் பழைய வருணமுறைகளுக்குச் சாவுமனி யடித்துவிட்டன. உயர் வருணத்தவர் வேருகவும் தாழ்ந்த வருணத்தவர் வேருகவும் வசிக்கவேண்டும் என்ற கொள்கைக்கெல்லாம் இன்றைய புகையிரதங்களும் மோட் டார் வசுக் களும் உலைவைத்துவிட்டன. இந்த வண்டிக ளிலே உயர் வருணத்தவரும், தாழ்ந்த வருணத்தவரும், பேதம் பாராட்டாது அருகருகே அமர்ந்து பிரயாணம் செய்யும் காலம் இது. வியாபாரம் வர்த்தகம் என்னும் தொழில்களை எல்லாரும் செய்து கொள்ளலாமாதலின் அதுவும் வருணக் கோட்பாடுகளைச் சிதறடித்துவிட்டது. நாம் எம்முற்காலச் சமூகத்திலிருந்த வருணமுறைகளுக்குப் பிரியாவிடை கூறி அனுப்பிவிட்டு ' எங்கும் சுதந்திரம் ’, ‘ எல்லார்க்கும் சுதந் திரம்' என்ற நிலைமையில் ஓர் சமத்துவ சமூகமாய் மிளிர்கின் ருேம். பழைய மானியமுறையில் திளைத்துக்கிடந்த எம் சமூகம் இன்று ஓர் சுதந்திர சமூகமாக விளங்குகிறது.
அப்பியாசங்கள் 1. மனித சமூகங்கள் " என்பதன் கருத்தை உதாரண
முகத்தால் விளக்குக. 2. இலங்கையில் உள்ள மனித சமூகங்கள் சிலவற்றை
எடுத்துக்காட்டுக. 3. உமது பட்டினம் அல்லது கிராமத்தின் புறவமைப்பைக்
காட்டும் ரேகைப்படம் ஒன்று வரை க. 4. குடியிருப்புப்பகுதிகள், சந்தைப்பகுதிகள், தொழில் முயற்சியிடங்கள் என்பனவற்றை உதாரணமுகத் தால் விளக்குக.

மனிதர் வசிக்கும் இடங்கள்-மனித சமூகங்கள் 5
5. சமூகமனப்பான்மை ' என்ருல் என்ன ? நமது பாட
சாலையோடு ஒட்டி இதனை விளக்குக.
6, தேசீய இனம் ' என்பதற்கு வரைவிலக்கணம் கூறி, அதன் கருத்தை உதாரணமுகத்தால் விளக்கிக் காட்டுக. முற்கால இக்கால இலங்கையின் நிலமை களை இவ்விடயத்திற் சீர்தூக்கிப் பார்க்க.
7. சாதிமுறையை இவ்விலங்கையில் தகர்த்தெரிவதற்கு
ஏதுவாயிருந்த சக்திகள் சிலவற்றை விபரிக்க.

Page 13
I6 இலங்கையர் சமூகம்
குடிசனச் செறிவைக் காட்டும் இலங்கைப் படம்
சதுரமைலுக்கு
.50க்கு குறைய
: 50க்கு மேல் 100க்குக் குறைய 100 க்கு மேல் 250க்கு குறைய 250க்கு மேல் 500க்கு குறைய 500க்கு மேல்
 
 
 
 
 

அத்தியாயம் 2. இலங்கையர் சமூகம்
சமூகம் என்ருல் என்ன என்பதை முந்திய அத்தியாயத்தில் ஒருவாறு பொதுப்பட ஆராய்ந்தோம். இந்தச் சமூகத்தை இலங்கையுடன் தொடர்புபடுத்தி இந்த அத்தியாயத்தில் ஆராய்வோம். குடிசனச் செறிவைக்காட்டும் இலங்கைப்படம் ஒன்றை அவதானித்தால் இலங்கையில் உள்ள சனசமூகம் எவ் வாறு, எங்கெங்கே செறிந்துள்ளது என்பதை அறியலாம். இவ்விடயத்தின் பொருட்டு மழை வீழ்ச்சிஅளவை ஆதார மாகக்கொண்டு இலங்கையை இரண்டு பகுதிகளாகப் பிரிப் போம். ஒரு பகுதி ஈரலிப்பு வலையம் ; அது தென்மேற்கில் அடங்கியுள்ளது. மற்றப்பகுதி வெப்ப வலையம் ; அது வடக் குப் பகுதியையும் வடகிழக்குப் பகுதியையும் அடக்கியதாகும். ஈரலிப்பு வலையத்திலே மனிதச்செறிவு ஓரளவுக்கு அடர்த்தி யாயிருப்பதை நீங்கள் அவதானிக்கலாம். இச்செறிவு கொழும் பிலும், கரையோரமாக அதற்கு வடக்கிலும் தெற்கிலும் அதிக அடர்த்தியாக இருக்கிறது. தென்னை, ரப்பர், தேயிலை ஆகியவற்றுக்கான தோட்டங்கள் உள்ள பகுதிகளிலே இவ் வடர்த்தி ஓரளவுக்குக் குறைகிறது. ஆனல் இப்பகுதிகளிலும் ஓர் சதுர மைலுக்கு 200 பேர் வீதம் வசிக்கிருர்கள். வெப்ப வலையத்திலே யாழ்ப்பாணக் குடாநாட்டினையும் மட்டக்களப் புக்கு மிகவும் அண்மையில் உள்ள இடங்களையும் ஒழிந்த ஏனைய பகுதிகளில் குடிசன அடர்த்தி மிகவும் குறைந்திருக்கிறது. இவ்வாறு சில இடங்களில் அதிகமாகவும் சில இடங்களிற் குறைவாகவும் மக்கட் சமூகம் இலங்கையிற் செறிந்திருப்பது எமக்கு ஒர் விடயத்தை மிகத் தெளிவாகக் காட்டுகிறது. அதாவது, மனிதனுக்குத் தண்ணிர் வசதி எவ்வளவு அவசியம் என்பதும், அத்தண்ணிர் வசதி ன்ங்கே அதிகம் உண்டோ அங்கே குடிசனச் செறிவும் அதிகமாக இருக்கும் என்பதுமே என்க. ஈரலிப்பு வலையத்திலே அதிக மழையுண்டு. வெப்பமும் அதிகம் இவற்றின் பயணுக அங்கே கமுகு, தென்னை, கறுவா, தேயிலை, ரப்பர் முதலாம் பயிர்களை மனிதன் உண்டாக்கச் செளகரியங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இப்பயிர்களை விளை விக்கவும் அவ்விளைவோடு தொடர்பாய சேவைகளை ஆற்றவும் தொழிலாளர்கள் வேண்டும் ; விளைவுப்பொருள்களைக் கொழும் புக்குக் கொண்டுபோக வேண்டும் ; அதற்கு இப்பிரதேசங்களி லிருந்து கொழும்புக்குத் தெருக்களும் புகையிரதப்பாதை.

Page 14
8 இலங்கையர் சமூகம்
களும் வேண்டும். இனி, கொழும்புக்குக் கொண்டுவந்த இவ் விளைபொருள்களைக் கப்பல்களில் ஏற்றிப் புறநாடுகளுக்கனுப்ப வேண்டியதான அவசியம் கொழும்பிலே ஓர் துறைமுகம் தோன்றக் காரணமாயிருந்தது. இத்துறைமுகம் ஏற்பட்ட தஞல் வர்த்தகத்தொழில் பெருகப் பல வர்த்தகக் கொம்பனி கள் தோன்றின. இக்கொம்பனிகளிலும், கொழும்புத் துறை முகத்திலும் ஏனைய தாபனங்களிலும் வேலை செய்வதற்குப் பெருந்தொகையினர் தேவை. பல்லாயிரக்கணக்கான மக்கள் கொழும்பில் பல்வேறு தொழில்களிலீடுபட்டு வருகிருர்கள். ஆதலினுல்தான் இலங்கையின் ஏனைய பட்டினங்களிலும் பார்க் கக் கொழும்பில் குடிசன நெருக்கம் அதிகமாக இருக்கிறது.
வெப்ப வலையம் வானம்பார்த்த பூமி. அங்கே மழை பெய்வது அரிது. அரிதான மழையும் வேண்டிய காலத்திற் பெய்யும் என்பதற்கு நிச்சயமில்லை. இதன் பயணுக அங்கே விவசாயத் தொழில் அபிவிருத்தியடையாமல் பங்கப்படுகிறது. முற்கா லத்திலே எம்நாட்டைப் பரிபாலித்த மன்னர்கள் இந்த வெப்பவலையப் பகுதிகளிலேயே தம் இராசதானிகளை அமைத் துச் செங்கோலோச்சினர். அவர்கள் அரசர்களாயிருந்து செங்கோலோச்சியதுமட்டுமன்றிச் சிறந்த விவசாயிகளாகவும் விளங்கினர். ஆனல் இப்போது அந்த இடங்களின் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. அங்கே நெற்செய்கைக்கேற்ற பல இடங்கள் இருந்தும், அவற்றில் வேளாண்மை செய்வது அதிகம் பயன் தரக்கூடிய தொழிலாக இருக்கவில்லை. அக்கள் லத்திலே முப்போக நெல்லு தப்பாமல் விளைந்த கழனிகள் இன்று காடாய்க் கிடக்கின்றன. மலேரியா என்னும் காட்டுக் காய்ச்சல் அங்கே வாழும் மக்களைப் பீடித்து அவர்களைக் கொன்றுவிடுகின்றது. ஆனல், இந்தக் கொடிய நோயை அறவே ஒழித்து எம் நாட்டு மக்களுக்கு வேண்டிய உணவுப் பொருளாகிய நெல்லைப் போதிய அளவுக்கு விளைவித்து அவர் களுக்கு வழங்குவதற்கு மீண்டும் முயற்சிகள் செய்ய, இன்று காடாய்க் கிடக்கும் வெப்ப வலையப்பகுதி காலகதியிலே தொன்மை நிலையை எய்திக் குடிசன நெருக்கமுடையதாக விளங்கும் என்பதற்கு ஐயம் இன்று.
யாழ்ப்பாணக் குடா நாட்டிலே பல நல்ல தண்ணிர் ஊற் றுக்கள் உள. அங்குள்ளார் கிணற்று நீரினுல் தம் பயிர்களுக்கு இறைப்பர். மட்டக்களப்பிலே மிகவும் செழிப்பான வண்டல் நிலம் உண்டு. அதன் பயனக அங்கே நெல் அபரிமிதமாக விளைகிறது. இது மாத்திரமன்றி கடலிலிருந்தும் மீன் முதலாம் உணவுக்குரிய கடற் பிராணிகள் அகப்படுகின்றன.
மேலே கூறியவற்றிலிருந்து இலங்கையின் மக்கட் சமூகச் செறிவு தண்ணீர் வசதியுடன் நெருங்கிய தொடர்புடை

இலங்கையர் சமூகம் 19
யதாக இருக்கிறது என்பது தெளிவு. எம் சீவியத்துக்கு விவ சாயத் தொழிலிலேயே முற்றிலும் தங்கியிருக்கிருேம் என்பத ஞலேதான் இந்நிலைமை ஏற்பட்டிருக்கிறது. (கொழும்பிலும் ஏனைய பட்டினங்களிலும் வசிப்பவர்கள்தான் விவசாயத் தொழிலில் ஈடுபடாது வேறும் தொழில்கள் புரிந்து தம் சீவனுேபாயத்தைத் தேடுகிருர்கள். ஆனல் இவர்கள் தாமும் உள்ளூரிலோ புறநாடுகளிலோ எமது விளைபொருள்கள் விற்ப னையாகிவரும் வருமானத்தின் பயணுகவே தமது நாளாந்த வேதனத்தையோ வாராந்த வேதனத்தையோ மாதாந்த வேதனத்தையோ பெற்றுத் தம் சீவியத்தை நடாத்து கிருர்கள். எனவே, உற்று நோக்குமிடத்து இலங்கையராகிய நாம் விவசாயிகள் சமூகமே யாவோம்.
இலங்கையர் சமூகம் என்பது பல்வேறுவிதமான மக்களை அடக்கியது. இவர்களில் தொகையில் மிகுந்தவர்கள் சிங்களர். இவர்களின் முன்னேர் ஒரு காலத்தில் இந்த இலங்கையைப் பரிபாலித்தவர்கள். இன்று சிங்களரில் இரு பிரிவினர் உளர். ஒரு பிரிவினர் கீழ் நாட்டுச் சிங்களர் என்றும் மற்றப் பிரிவினர் மலை நாட்டுச் சிங்களர்? என்றும் வழங்கப்படுவர். முன்னையவர்கள் (கீழ் நாட்டுச் சிங்களர்) இலங்கையின் தென் பாரிசத்திலும் தென்மேற்குப் பாரிசத்திலும் உள்ள சமவெளி களில் வசிக்கிருர்கள். மலை நாட்டுச் சிங்களர் மத்திய, ஊவா, வடமத்திய, சப்பிரகமூவா மாகாணங்களில் வசிக்கின்றனர். முற்காலத்திலே போக்குவரத்துச் சாதனங்கள் இன்றி மக்கள் ஒருவரோடொருவர் ஊடாட வசதிகள் இல்லாது தனித்து ஒதுங்கி வாழ்ந்தமையினுல் சிங்களர்க்கிடையே இப்படியான பிரிவு ஏற்பட்டிருக்கலாம். தென்மேற்குப் பகுதியில் இருந்து வெகு தூரத்துக்கப்பால் மலைப்பாங்கான பகுதிகளில் வசித்து வந்த மலைநாட்டுச் சிங்களர் பன்னெடுங் காலமாகத் தம் அரசியற் சுதந்திரத்தை இழக்காது பாதுகாத்து வந்தனர். போர்த்துக்கீசர் ஒல்லாந்தர் முதலாம் அந்நிய நாட்டவரின் செல்வாக்கு அவர்களை அவ்வளவாகப் பாதிக்கவில்லை. கீழ் நாட்டுச் சிங்கள ரெனிலோ பல காலமாக அந்நியரதிகாரத் துக்குள் அகப்பட்டு இருந்ததன் பயனக அவ்வந்நியரின் உடை, நடை, பாவனைகளையும் பழக்க வழக்கங்களையும் கிரகித்துப் பின்பற்றினர். இதன் பயனுகச் சிங்கள மக்களுக்கிடையே வேற்றுமை ஏற்பட்டது நூதனம் அல்ல. உதாரணமாக, மலை நாட்டுச் சிங்களப் பெண்கள் தமது ஆடைகளை ஒரேமாதிரி அணிந்து வந்தனர்; ஆனல் கீழ் நாட்டுச் சிங்களப் பெண்கள்
1. தாழ்ந்த பிரதேசச் சிங்களர் என்றும் கூறப்படுவர். 2. கண்டிச் சிங்களர் எனவும் வழங்கப்படுவர்.

Page 15
20 இலங்கையர் சமூகம்
போர்த்துக்கீச உடையையும் ஆங்கிலேயரின் உடையையும் மாறிமாறிப் பின்பற்றி வந்தனர்.
சிங்களர்க்கு அடுத்தபடியாகப் பெரும்பான்மையினராக வுள்ளவர்கள் தமிழர். இவர்கள் வெப்பவலையம், ஈரலிப்பு வலையம் என்னும் இரண்டு வலையங்களிலும் செறிந்திருக்கிருர் கள். முதன் முதற் குடியேறிய தமிழரின் சந்ததியார் வட மாகாணத்திலும் இலங்கையின் கிழக்குக் கரையோரப் பகுதியி லும் வசிக்கிருர்கள். இவர்களுக்குப்பின் வந்தவர்கள் இந்தியத் தமிழர். இவர்கள் மலை நாட்டுப் பகுதிகளில் வசிக்கிருர்கள். தமிழர் இலங்கையிற் குடியேறியது இருவிதங்களினல் என்று கூறலாம். ஒன்று தமிழரசர்களின் படையெடுப்பினுல் : மற்றது மெல்ல மெல்ல வாக வந்து இடையீடின்றிக் குடியேறி யதால் , தமிழரின் பெரும் படையெடுப்பு சோழ, பாண்டிய இராச்சியங்கள் தென்னிந்தியாவில் பராக்கிரமமுற்றிருந்த காலத்தில்தான் நிகழ்ந்தது. அப்படையெடுப்பின் பயனுக கி.பி. 1017-ம் ஆண்டிலே சோழர்கள் வட இலங்கையை ஆக்கிரமித்து கி.பி. 1072-ம் ஆண்டுவரை அப்பகுதியை ஆண்டு வந்தனர். இதே வருடத்தில்-அதாவது 1072-ம் ஆண்டில் -முதலாம் விஜயபாகு சிங்கள ஆட்சியைப் பொலனறுவையில் தாபித்தான். இந்நாட்டின் மீது ஏற்பட்ட படையெடுப் புக்களின் பயணுகவும் அந்நியராட்சியின் பயணுகவும் தமிழ்ப் போர் வீரர்களும் அவர்களுடைய சுற்றத்தவர்களும் இங்கே வந்து குடியேறி இந்நாட்டைத் தம் தாயகமாகக் கொண்டனர். இவர்களுடன் தமிழ் வியாபாரிமாரும் வந்திருக்கலாம். இவர் கள் இவ்வாறு குடியேறியதின் பயணுகப் பல சிங்கள இடப் பெயர்களுக்குத் தமிழ் மெருகு பூசப்பட்டிருக்கிறது. உதார ணமாக, தமிழில் வழங்கப்படும் "வலிகாமம்’ என்பது முன் னர் வெலிகம " என்ற சிங்களப் பெயராக இருந்திருக்கலாம். யாழ்ப்பாணக் குடாநாடுதானும் ஒர் காலத்தில் சிங்கள இராச் சியத்தின் ஒர் பகுதியாக இருந்தது என்பதற்குச் சந்தேகம் இல்லை. பூரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் இருக்கும் தங்கத் தகட்டில் பொறிக்கப்பட்டுள்ள சாசனம் யாழ்ப்பாணக் குடா நாடு வஸல என்ற சிங்கள அரசனின் பரிபாலனத்தில் அவனது மந்திரி இலிகிரிய என்பவனுல் ஆளப்பட்டது என்பதற்குச் சான்றுபகருகிறது. இங்கே பல பெளத்த விகாரைகளும் நல்ல நிலைமையில் இருந்தன.
நெடுங்காலத்துக்குப்பின் இலங்கையின் வடபகுதியில் உள்ள இச்சமபூமியைச் சிங்கள மன்னர் கைவிட யாழ்ப்பாண இராச்சியம் என்றவோர் இராச்சியம் அங்கே உண்டானது. இலங்கையின் வடபகுதியிற் பெரும்பாகம் இந்த இராச்சியத் தில் அடங்கியிருந்தது. இதன் பின்னர் தென்னிந்தியாவி

இலங்கையர் சமூகம் 2.
லிருந்து மக்கள் இங்கே புதிது புதிதாக வந்து குடியேறிச் சனத்தொகையைப் பெருக்கினர். அதன் பயனக வடபகுதி யும் கிழக்குப்பகுதியும் தமிழ் மக்களின் இடங்களாயின. இங்கே அவர்களின் பண்பாடும் நன்கு வேரூன்றியது. தமிழரிற் பெரும் பான்மையினர் சைவ சமயிகள். கிறிஸ்துவ சமயத் தைப் பின்பற்றும் தமிழரும் அநேகர் உளர்.
மத்திய இலங்கையில் தமிழர் குடியேறியது மலைப்பாக ங் களில் தோட்டங்கள் ஆரம்பமான காலத்திலாகும். கோப்பித் தோட்டங்களுக்கும், அதன் பின்னர் தேயிலைத் தோட்டங்க ளுக்கும் தொழிலாளர் தேவையாக இருந்தது. இத் தொழிலா ளரில் மிகப்பெரும் பகுதியினர் தென்னிந்தியாவில் இருந்து வந்தனர். இவ்வாறு வந்த தொழிலாளரின் சந்ததியாரும் காலந்தோறும் தென்னிந்தியாவில் இருந்து தோட்டத் தொழில்களுக்கு வரும் தொழிலாளர்களும் தோட்டங்களி லேயே வசித்து வருகிருர்கள். இந்திய வர்த்தகரும், பொன் வேலை, வெள்ளிவேலை முதலாகிய தொழில்களைப் புரியும் இந்தியரும் பட்டினப் பக்கங்களில் வசித்து வருகிருர்கள்.
தமிழ் மக்கள் இலங்கைக்கு ஒர் புதிய மொழியையும் ஒர் புதிய பண்பாட்டையும் கொண்டுவந்து, இந்நாட்டின் அரசி யல், பொருளாதார, கலைத் துறைகளிலே முக்கியமாகப் பங்கு கொண்டிருக்கிறர்கள்.
இலங்கை முஸ்லிம்கள் அநேகமாகப் பட்டனப் பக்கங்களி லேயே வசிக்கிருர்கள். பழைய காலத்தில் துறைமுகங்களா யிருந்த காலி, வெருவில, களுத்துறை, கொழும்பு, நீர் கொழும்பு, சிலாபம், புத்தளம், மன்னர், மட்டக்களப்பு என்னும் இடங்களிலே முஸ்லிம் சமூகங்கள் பெருந்தொகை யில் உள. பட்டினப்புறங்களில் வசிக்கும் முஸ்லிம்கள் வியாபாரத் தொழிலிலும், நாட்டுப்புற முஸ்லிம்கள் விவசா யத் தொழிலிலும் அநேகமாக ஈடுபடுகிறர்கள், மட்டக் களப்பு மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் இந்நாட்டின் மிகச் சிறந்த நெல் விவசாயிகளாவர். அவர்களிற் சிலர் மகா வலி கங்கையின் கல்ஒயாப் பள்ளத்தாக்குகளிலும் பரந்து அங்கே புகையிலைச் செய்கையில் ஈடுபட்டிருக்கிருர்கள். மன்னர் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்களும் நெல் விவசாயிகளே. முஸ்லிம்களின் மார்க்கம் இஸ்லாம். அவர்களின் பண்பாட்டுக் குரிய மொழி அரபு. அவர்களின் வரவினல் இஸ்லாமியப் பண்பாடும் இங்கே நிலை எய்தியது. இப்பண்பாட்டை இப் போது நாம் அறிந்திருப்பதிலும் பார்க்கக்கூடிய அளவுக்கு இலங்கை மக்கள் அறிந்து அதனை மதிக்கும் காலம் ஒன்று வரும் என்பதற்குச் சந்தேகம் இல்லை. இலங்கைப் பல்கலைக் கழகத்திலே அரபு, பாரசீகம், இஸ்லாமிய நாகரிகம் என்னும்

Page 16
22 இலங்கையர் சமூகம்
பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன என்பதும் ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.
இலங்கைக் குடிசனங்களிற் சிங்களர், தமிழர், முஸ்லிம்கள் என்பவர்கள் முன்வந்து குடியேறியவர்கள். இலங்கை இந்தி யாவுடன் கொண்டிருந்த தொடர்பினலும், இந்தியாவின் கடல் வர்த்தகத்தினுலும்தான் இங்கே இக்குடியேற்றங்கள் நிகழ்ந்தன.
குடிசனவளர்ச்சி
லட்சங்கள் - 20 p ༈ 50 60 70
88 2,759,738
89. 3,007,789
90 3,565,934
9 | 4,106,350
92 4,498,650
93 5,306,87
946 6,657,339
இலங்கையிற் குடியேறிய ஐரோப்பியர்களில் போர்த்துக் கீசரே முதன் முதலாக இங்கே வந்தவர்கள். அவர்கள் இத் தீவின் தெற்கு, மேற்கு, வடக்குப் பகுதிகளை நூற்றைம்பது ஆண்டுகாலம்வரை பரிபாலித்து வந்தனர். அவர்களிற் சிலர் சிங்களருடனும் தமிழருடனும் விவாகத் தொடர்பும் வைத் திருந்தனர். அப்படியாகத் தொடர்பு வைத்திருந்தவர்களின் சந்ததியாரிற் பெரும்பான்மையினர் இலங்கையின் பட்டினப்
 
 

இலங்கையர் சமூகம் 23
பகுதிகளில் இப்போது வசிக்கிருர்கள். அவர்கள் இலங்கைக் குடிசனத்தொகையில் மிகச் சிறு பகுதியினர். அப்படியிருந் தும் அவர்களுடைய ஆட்சிக்காலம் இந்நாட்டு மக்களின் வாழ்க்கையிற் பல மாறுதல்களை உண்டாக்கித் தன் சின்னங் களை விட்டுப்போயிருக்கிறது என்று கூறலாம். அநேக போர்த் துக்கீசச் சொற்கள் சிங்கள மொழியிற் கலந்து வழக்கில் வந்தி ருக்கின்றன. இப்போது இலங்கையிலே பலர் அநுட்டிக்கும்
நகர்ப்புற நாட்டுப்புறக் குடிசனங்களின் நூற்று விகிதம்
0 O 20 30 40 50 60 70 80 90
طاطس..
zHA || || || || || || || |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||| کی کڑک کرکے za || || || || || || ||
நாட்டுப்புற நகர்ப்புற Z
92
93
946
ருேமன் கத்தோலிக்க கிறிஸ்துவ மதமும், போர்த்துக்கீசர் இந்நாட்டைப் பரிபாலித்த காலத்தில் வந்த போர்த்துக்கீசச் குருமாரின் விடாமுயற்சியின் பயணுகவே பரவியது.
போர்த்துக்கீசப் பெண்களைப்போலவே கீழ் நாட்டுச் சிங்க ளப்பெண்களும், சமீபகாலம் வரை, தம் உடையை அணிந்து வந்தனர்.
போர்த்துக்கீருக்குப்பின் இலங்கையை ஆண்ட ஒல்லாந் தரின் சந்ததியார் இன்று " பேகர் ' என்றும் " ஒல்லாந்தர்' என்றும் வழங்கப்படுகிருர்கள். அவர்கள் பட்டினவாசிகள்.

Page 17
24 இலங்கையர் சமூகம்
மாத்தறை, காலி, களுத்துறை, கொழும்பு, கண்டி என்னும் பட்டினங்களிலே அதிகமாகவும் மட்டக்களப்பில் ஓர் அளவுக்கும் அவர்கள் வசிக்கிருர்கள். அவர்கள் வந்த பின்பே புருெட்டெஸ்தாந்த கிறிஸ்துவ மதம் இலங்கையிற் பரவியது. ஒல்லாந்தப் பாதிரிமார் தம் சுவிசேடங்களைச் சிங்களத்திலும் தமிழிலும் மொழிபெயர்த்துச் சாதாரண மக்களும் அவற்றை அறியும் படி செய்தனர். ஒல்லாந்தரது ஆட்சிக்காலத்திலேயே ருே மன்-டச்சுச் சட்டமும் தமிழர்க்குரிய தேச வழமைச் சட்டமும் முறையாக ஒழுங்குபடுத்தப்பட்டன. இப்போதுள்ள அநேக இடப்பெயர்களும், சட்டம், வர்த்தகம் சம்பந்தமான விவகாரங்களில் உபயோகிக்கப்படும் அனேக சிங்களச் சொற்களும் ஒல்லாந்த மொழியிலிருந்தே பிறந்தன. கறுவா, தென்னை, கோப்பி என்னும் தோட்டப் பயிர்ச்செய்கை ஒ ல் லா ந் த ர் முயற்சியினலேயே இங்கே ஆரம்பித்தது. கால் வாய்களை இங்கே நிரு மாணிப்பதற்குக் காரணகர்த்தர் களாக இருந்தவர்களும் அவர்களே.
பிரித்தானியர் இலங்கையைக் கைப்பற்றிப் பரிபால னத்தை மேற்கொண்டதும் இங்கிருந்த ஒல்லாந்தரின் ஒத் தாசை தமக்கு மிகவும் உதவியாக விருந்ததைக் கண்டனர். ஒல்லாந்தரிற் பலர் சிறந்த நியாயவாதிகளாயும், வைத்தியர் களாயும் பெரும் தொகையினர் இலிகிதராயும் (கிளர் க்குமார்) கடமையாற்றிப் பிரித்தானிய அரசாங்கத்துக்குப் பரிபாலன விடயமாக உதவி செய்தனர். இன்றும் இலிகிதர் சேவையை அவர்களிற் பலர் விரும்புகின்றனர்.
ஒரு விதத்தில், இந்நாட்டு ஒல்லாந்தர் இரண்டும் கெட் டான் நிலைமை ' யில் இருந்து வந்திருக்கின்றனர் என்றும் கூறலாம். முதலாவது அவர்கள் இந்நாட்டுச் சுதேச மக்க ளுடன் கலந்து அவர்களுடன் ஒன்ருக முடியாது. இரண்டா வது அவர்கள் ஐரோப்பியர் இனத்தில் தம்மைச் சேர்த்துக் கொள்ளவும் முடியாது. இவர்களிற் செல்வராயினேர் ஐரோப் பாவில் இருந்து இங்கு வந்து வசிக்கும் ஆங்கிலர் முதலியவர் களைப்போலப் பழக்க வழக்கங்களும் நடை யுடை பாவனை களும் வாழ்க்கைத் தரமும் உடையவர்களா யிருக்கலாம். அப்படியே அவர்கள் இருந்தும் வருகிருர்கள். ஆனல் ஏழைக ளான ஒல்லாந்தர் நிலைமை கேவலமாக இருக்கிறது. அவர்கள் செல்வரான தம் சகோதர ஒல்லாந்தரைப் போல வாழ முடியாது. மற்றும் சமூகங்களுடன் கலந்து வாழவும் முடி யாது. அவர்கள் சனத்தொகையிலும் சமுதாய வாழ்க்கை முறையிலும் குறைவுற்றிருப்பதால் அரசியல் விடயமாக அவர் களது நிலைமை கஷ்டமானது என்று கூறலாம்.
1 டச்சுக்காரர் என்றும் சொல்வர்.

இலங்கையர் சமூகம் 25
மலாயர் ஒல்லாந்தருடன் இங்கே வந்தவர்களாவர். ஒல்லாந் தரைப்போல இவர்களும் இலங்கையிலே சிறுபான்மையினர் தான். ஆனல் அவர்கள் இஸ்லாம் மதத்தைத் தழுவுபவர். ஆனமையின் இங்குள்ள ஏனைய முஸ்லிம்களுடன் ஒரளவுக்கு ஒத்து வாழமுடிகிறது. இலங்கையில் உள்ள முஸ்லிம் மக்கட் டொகுதியில் அவர்கள் இப்போது ஒன்று சேர்ந்திருக்கிருர்கள்.
இலங்கையிலே சில ஆங்கிலேயரும் வசிக்கின்றனர். ஆனல் அவர்கள் இங்கே நிரந்தரமாக வசிப்பவர்களல்லர். அவர்கள் அரசாங்க உத்தியோகார்த்தமாகவோ, தொழில், வர்த்தகம் செய்தற்காகவோ தோட்ட அதிகாரிகளாகவோ இங்கு வந்தவர்களாவர். அவர்களுடைய மனக்கருத்து முக் காலே மூன்றுவீசமும் தம் தொழில் விருத்தியுடன் மாத்திரமே சம்பந்தப்பட்டுள்ளது. அவர்கள் இந்நாட்டு மக்களது வாழ்க் கையில் தீவிரமாகப் பங்குபற்றுவதில்லை. அவர்கள் எப்பொழு தும் தனித்து, வேருகவே வாழ்ந்துவந்தனர். அது மாத்திர மன்றி இந்நாட்டு மக்களை ஒரளவுக்கு உதாசீனப்பார்வை யுடனும் நோக்கி வந்தனர் என்று கூறலாம். தாம் ஆளும் சாதியார், ஆளப்பிறந்த சாதியார் என்ற மனே பாவம் அவர்க ளுக்கிடையே தோன்றிப் பல கெடுதிகளை விளைவித்துவிட்டது. வெள்ளை நிறமுடையோர் ஆளப்பிறந்தவர்கள் என்றும் கறுத்த நிறத்தவர்கள் அவர்களுக்கு அடிமையாகிக்கிடக்கப் பிறந்தவர்கள் என்றும் ஓர் பிழையான எண்ணத்தை இந்த மனுேபாவம் சிருட்டித்துவிட்டது. துரதிட்டவசமாக இங்கி ருந்த ஆங்கில மக்களின் சமுதாய வாழ்க்கை முறையும் இவ் வித எண்ணத்தை மேலும் விருத்தியாக்க ஏதுவாயிருந்தது. இலங்கையிலே-அதிலும் விசேடமாக எதிர்காலத்திலேஅவர்களின் நிலைமை பல கஷ்டமான அரசியற் பிரச்சினைக ளுடன் தொடர்புள்ளதாக விருக்கிறது. சுதந்திர இலங்கை யிலே அவர்கள் எவ்வாறு தம் நிலையை அமைத்துக்கொள்வர் என்பதை இப்போது கூறமுடியாது. காலம்தான் அதனைக் காட்டும். இப்போது காலம் மாறிவிட்டது. ஒரு சில ஆங்கில சிவில் சேர்விஸ் அதிகாரிகள் இந்த இலங்கையை ஆள, ஆங்கில அதிகாரிகளும் வர்த்தகர்களுமே அரசியலில் அதிக செல்வாக் குடையவராக இருந்த காலமும் ஒன்றிருந்தது. பிரித்தானி ரின் தோட்டத்தொழிலையும் வர்த்தகத் தொழிலையும் இங்கே அபிவிருத்தி செய்வதிலேயே அக்காலத்து அரசாங்கமும் கண் ணும் கருத்துமாய் இருந்தது. ஆனல் இந்த நிலைமை எல்லாம் இப்போது மறைந்துவிட ஓர் புதிய சகாப்தம் உதயமாகியிருக் கிறது. ஆண்டான் அடிமை, வெள்ளையர் கறுத்தவர் என்ற வித்தியாசங்கள் எல்லாம் அருக நாம் பிரித்தானியப் பொது

Page 18
26 இலங்கயைர் சமூகம்
நலவமைப்பிலே பரிபூரண சுதந்திரமுடைய அங்கத்தவர் களாயிருக்கும் புதிய சகாப்தம் இது. இதுவரை பிரித்தானிய ஏகாதிபத்தியம் என்ற ஒன்றில் பெருமை பாராட்டிவந்த ஆங்கில மக்கள் அவ்வேகாதிபத்தியத்திலும் பார்க்க அதி சிறப்புவாய்ந்த ஒர் புதிய அமைப்பை-ஒர் புதிய உலகத்தை -சிருட்டி செய்யலாம். ஆனல் அப்படிச் செய்தற்கு அவர் கள் தம் இனத்தை யொழிந்த ஏனைய இன மக்களது உரிமை களைச் செயலளவிற் கணித்து மதிப்புக் கொடுக்கவேண்டும்.
சாகியம்
இலங்கைக் குடிசனத் தொகை சிங்களர் கீழ்நாட்டுச் சிங்களரும் மலைநாட்டுச்
சிங்களரும் 4, 637,000 இலங்கைத் தமிழர் 826,000 இந்தியத் தமிழர் . . 682,000 இலங்கைச் சோனகரும் மலாயரும் O vir 393,000 இந்தியச் சோனகர் உட்படவுள்ள ஏனைய
இந்தியர் - o 69,000 ஒல்லாந்தரும் யூரேசியரும் e 36,000 ஐரோப்பியர் 5,000 Grðaði Gun fi . . . 1 1,000
ағшошйо பெளத்தர் a e a w 4,288,000 இந்துக்கள் 1,326,000 கிறிஸ்தவர் a - 606,000 முஸ்லிம்கள் a 433,000 ஏனையோர் s o 5,000
இலங்கைச் சமூகம் பல வர்ண நூல்களினல் இழைக்கப் பட்டுள்ள அழகிய ஆடை ஒன்றினை நிகர்க்கும். இந்த ஆடை யிலே சிங்களர், தமிழர், முஸ்லிம்கள் என்பவர்களின் புராதன கீழைத்தேயப் பண்பாடும் அதற்கூடாக நவீன ஆங்கிலப் பண்பாடும் இழைக்கப் பெற்றிருப்பதை நாம் காணலாம். இப்படியான பல வர்ணப் பட்டாடையைத் தன் பச்சிளம் மேனியில் எங்கள் அன்னை இலங்கை இன்று அணிந்து காட்சி யளிக்கிருள்; இப்பட்டாடைப்பிரபை, இந்நாட்டு மக்கள் அனை வர்மீதும் பரவ இங்கே பண்பும் சீரும், பொலிவும், வனப்பும் மங்களமாகப் பொங்கும் என்பதற்கையமில்லை.
1. British Commonwealth, பிரித்தானிய சாம்ராஜ்யம் என்றும்
ச்ொல்வர்.

இலங்கையர் சமூகம் 27
இலங்கையர் சமூகமானது பல்வேறு மொழிகளைப் பேசும், பல்வேறு சமயங்களை அநுட்டிக்கும், பல்வேறு பண்பாடுகளைக் கொள்ளும் மக்கட் கூட்ட்த்தினரைக் கொண்டதாகும். ஆகவே, இலங்கையர் சமுதாயத்தைப் பலவிகற்பச் சமுதாயம் என்று சொல்லாம். ஒரே மொழியைப் பேசி ஒரே சமயத்தை அநுட்டிக்கும் ஒரே மக்கட் கூட்டம் இருக்குமானல் அதி யொற்றுமைமிக்க சமுதாயம் ஒன்று அதிலிருந்து உண்டாகும். புராதன இலங்கையிலே, சில சில காலங்களிலாவது இப்படி யான வோர் ஒற்றுமை மிக்க சமுதாயம் இருந்தது என்று நாம் கருதுவதற்குச் சான்றுகள் உள. ஆனல் இந்தச் சமுதாயம் காலப்போக்கில் மாறிப் பலவிகற்ப வேற்றுமைச் சமுதாய மாகிவிட்டது.
இப்படியான பலவிகற்பச் சமுதாயமாக இந்நாட்டின் மக்கட்கூட்டம் இருப்பதனல் பல பிரச்சனைகள் தோன்று கின்றன. சிங்களரும் தமிழரும் இந்நாட்டின் பெரும்பான்மை யினரான மக்கள். 100க்கு 80 விகிதத்துக்கு மேற்பட்ட சனத்தொகையை அவர்கள் கொண்டிருக்கிருர்கள். அவர் களிலும் சிங்களர் முழுக்குடிசனத் தோகையில் 100க்கு 75 விகிதத்தினராவர். இப்படியாக இவ்விரு பெரும் சாகியத் தாரும் இருப்பதால் மொழியை அடிப்படையாகக் கொண்டு சிங்கள மாகாணம், தமிழ் மாகாணம் என்னும் இரண்டு மாகாணங்களைச் சிருட்டித்து அவை தனித்தனி அரசாள விடவேண்டும்; ஆனல் சில கருமங்களின் பொருட்டுச் சமஷ்டி யாக இயங்கவேண்டும் என்று சமீபகாலத்தில் ஒரியக்கம் உருவாகியிருக்கிறது. பல வி கற்ப ச் சமுதாயம் எதிலும் இப்படியான இயக்கங்கள் தோன்றுவது நூதனமான விடயமல்ல. சிங்களம் தமிழ் என்னும் இரண்டும் அரசாங்க மொழிகளாகவும் தேசீய மொழிகளாகவும் வருமானல் இந்தப் பிரிவினை மனப்பான்மை இன்னும் வலியடையக்கூடும். ஆனல் இந்தப் பிரிவினை மனப்பான்மை ஒருபுறமிருக்க, எதிர்ப்புறத் தேயுள்ள பொருளாதார ஒற்றுமையை நாம் நோக்கவேண்டும்; தேசம் முழுவதனதும் செழிப்பு அதன் மூன்று ஏற்றுமதிப் பொருள்களிலேயே இன்றும் தங்கியிருக்கிறது.
மக்கள் சமுதாயரீதியிலோ சமயரீதியிலோ பண்பாட்டு ரீதியிலோ கூட்டங்கூட்டங்களாகப் பிரிந்து கொள்ளாத இடங் களில் சனநாயக ஆட்சிமுறை இனிதே நடைபெறும். அப் படியான இடங்களிலே மக்களுக்கிடையே கூடிய ஒற்றுமை உண்டு. பெரும்பான்மையினர் சிறுபான்மையினரை அடக்கி யாள்வர் என்ற பயமும் இல்லை. ஆனல் இலங்கையிலே உள்ள ஒவ்வொரு மக்கட்டோகுதியினரும் தத்தம் தனித் தன்மையை, தத்தம் மொழியை, தத்தம் சமயத்தை, தத்தம்

Page 19
28 இலங்கையர் சமூகம்
பண்பாட்டைத் தம் அரும் பெரும் செல்வமாய்ப் போற்றிப் பாதுகாத்து வருகிருர்கள். அப்படி அவர்கள் செய்வதும் முறையே. ஆனல் அவர்களுக்கிடையே பரஸ்பரம் நம்பிக்கை ஏற்படுதல் சிறிது கஷ்டம். ஆங்கிலத்தைப் போன்ற ஒரு பொது மொழி அகல அதன் இடத்தைத் தேசீய மொழிகள் கொள்ளுமானல் இந்தக் கஷ்டம் இன்னும் அதிகமாகும்.
இப்படியான வேற்றுமைகளுக்கிடையே ஒரே முறையைப் புகுத்தாது ஒற்றுமை காண்பதுதான்-ஒரு ஐக்கிய இலங்கையைச் சிருட்டிப்பதுதான்-இந்நாட்டு மக்களை எதிர் நோக்கியுள்ள பெரும் பிரச்சினையாகும்.
அப்பியாசங்கள்
1. இலங்கையின் குடிசனச் செறிவைச் சுருக்கமாக விளக் குக. (அ) மழைவீழ்ச்சி (ஆ) நிலவுயரம் என்பத னுடன் குடி சனச் செறி வைத் தொடர்புபடுத்திக் காட்டுக. 2. அதிக மழை பெய்யும் இடங்களுக்கும் குடிசனநெருக்க முடைய இடங்களுக்குமிடையே நெருங்கிய தொடர்பு இருக்கக் காரணம் என்ன ? 3. பூர்வ காலச் சிங்கள மக்கள் வெப்பவலையப்பகுதிகளிலே செழிப்புடன் வாழ்ந்தமைக்குக் காரணம் என்ன ? ஆனல் அதே பகுதிகள் இப்போது தேடுவாரற்றுக் குடிசனமில்லாது இருப்பதன் காரணம் யாது ? 4. மலைநாட்டுச் சிங்களர் ' , ' கீழ்நாட்டுச் சிங்களர் ‘ என்ற பாகுபாடு சிங்கள மக்களுக்கிடையே எவ்வாறு தோன்றியது ? இவ்விரு சாராருக்கும் இடையில் உள்ள குறிப்பிடத்தக்க வித்தியா சங்கள் யாவை ? இவ்வித்தியாசங்களுக்குக் காரணங்கள் என்ன ? தமிழர் பெரும்பான்மையினராக வசிக்கும் மாவட்டங்
கள் எவை ? இதற்குக் காரணம் யாது ? 6. இலங்கையிலே முஸ்லிம்களின் செறிவைக் கூறுக.
கி.பி. 1600 இல் இருந்து இலங்கையர் சமூகவாழ்விற்
புகுந்துள்ள புதிய அம்சங்கள் யாவை ?
7

அத்தியாயம் 3. சங்கங்களும் நிலையங்களும்
சங்கங்கள்
ஒரு கூட்ட மக்களை- அவர்கள் இளைஞராயினுமாக, முதி யோராயினுமாக--நாம் நோக்குவோமே யானுல் அவர்கள் எல்லாரும் ஒரே மாதிரி இருப்பதில்லை என்பதை அவதானிப் போம். அவர்கள் தம் விருப்பு வெறுப்பிலும் தொழில்துறை யிலும், கருத்துக்களிலும் பரஸ்பரம் வித்தியாச முடையவரா யிருப்பர். ஏன் ? உங்களுடைய வகுப்பினையே உதாரணத் துக்கு எடுத்துக்கொள்ளுவோம். அங்கேயுள்ள மாணுக்கர் சரி, மாணக்கிகள் சரி எல்லாரும் ஒருவிதமானவர்களாயிருக்கின் றனரா ? இல்லை : சிலருக்கு கிறிக்கெற் பந்தாட்டத்தில் நாட் டம் : இன்னும் சிலருக்கு உதைப் பந்தாட்டத்தில் விருப்பம் : வேறு சிலர்க்கு பழைய முத்திரைகள் சேகரித்தல், தோட்ட வேலை செய்தல் என்பவற்றில் ஆர்வம் ; இதுபோலவே வளர்ந் தவர்களிடையேயும் பல திறப்பட்ட ஆர்வங்கள்ைக் காணலாம். சிலர் பத்திரிகைகள், நூல்கள் வாசிப்பதில் அதி ஊக்கம் செலுத்துவர். இன்னும் சிலர் தோட்ட வேலைகளிலோ விளை யாட்டுக்களிலோ புலன் செலுத்துவர். இவைபோன்ற இன் னும் பல விதங்களில் மக்கள் ஒருவர்க்கொருவர் வித்தியாச முடையவர்களா யிருக்கின்றனர். ஆனல் இப்படியான வேற் றுமைகள் ஓர் சமூக மக்களிடையே இருந்தாலும் அவ்வேற் றுமைகளுக்கிடையே சில விடயங்களில், அவர்களில் பலர் ஒற்றுமை உடையவர்களாயிருப்பதையும் காணலாம். உதார ணமாக ஒர் தொகையினர் பூந்தோட்ட வேலையில் ஈடுபடுவர்: இன்னும் ஒர் தொகையினர் வீட்டுப் பறவைகளை வளர்ப்ப பதில் ஆர்வமுடையவராயிருப்பர். இன்னும் ஒர் தொகையினர் சங்கீதம் சித்திரம் என்னும் நுண்கலைகளில் சிரத்தையுடைய வராயிருப்பர். வேறும் சிலர் இயற்கைத் தேவியின் வனப்பைச் சு கிப்பவராயிருப்பர். இப்படியாகப் பல திறப்பட்ட ஆர்வ மும் நோக்கும் உடையவர்கள் தம்மோடொத்த ஆர்வமுடை யாரை நாடி அவர்களுடன் இணங்கி வாழும் சார்பு ஒன்று ஏற்படுவது கண்கூடு. இனம் இனத்தை நாடுவது சகஜம் தானே! இவ்வாறு ஒத்த மனப்பான்மையும், ஒத்த ஆர்வமும், ஒத்த தொழிலும் உடையவர்கள், தாம் தாம் ஆர்வம் கொண் டுள்ள விடயங்களை ஊக்குவித்து அபிவிருத்தி செய்தற் பொருட்டு சங்கமாகச் சேருவர். உதாரணமாக, ஒர் சமூகத்தில்

Page 20
30 சங்கங்களும் நிலையங்களும்
உள்ள விவசாயிகள் அனைவரும் விவசாயிகள் சங்கமொன்றை நிறுவுதன்பொருட்டு ஒன்று சேருவர். இப்படியே ஒத்த தொழில் உடையோர் வேறும் சங்கங்களை நிறுவுவர். இவ் வாரு க ஒர் சமூகத்திலே ஆசிரியர் சங்கம், புடவை உற்பத்தி யாளர் சங்கம், நியாயவாதிகள் சங்கம், வைத்தியர் சங்கம், வியாபாரிகள் சங்கம் என்னும் பல திறப்பட்ட சங்கங்கள் தோன்றலாம். குறித்த ஒர் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அத்தொழிலின் நலவுரிமைகளைப் பாதுகாக்கவும் அதில் ஈடுபட்டுள்ள அங்கத்தவர்களின் நன்மை யின் பொருட்டுத் தேவையானபோது தக்க நடைவடிக்கை எடுக்கவும் இச்சங்கங்கள் கருவியாக இருக்கும்.
தொழில்முறைபற்றிய சங்கங்களை விட வேறு விடயங்களுக் கும் சங்கங்கள் ஏற்படலாம். ஒர் சமூகத்தைச் சேர்ந்தவர் களிற் சிலர் தம்மிலும் பார்க்க அதிட்டம் குறைந்தவர்களாய்க் கீழ் நிலையில் உள்ளவர்களுக்கு உதவி செய்தற்பொருட்டு ஓர் சங்கத்தைத் தாபிக்கலாம். இதுபோலவே கலா விருத்தி யிலோ விஞ்ஞானவிருத்தியிலோ ஈடுபட்டுள்ளவர்கள் கலா சங்கங்களையும் விஞ்ஞான சங்கங்களையும் நிறுவலாம். ஆகவே மக்கள் பல விதங்களில் பரஸ்பரம் வேற்றுமை உடையவர்க ளாயிருப்பனும் அவர்கள் பொது நோக்கு அல்லது பொதுக் கருத்து உடையவர்களாகவும் இருக்கலாம் என்பது மேலே கூறியவற்ருல் தெளிவாகின்றது. ஒரே நோக்கு அல்லது ஒரே கருத்து உடையவர்களினுல் அமைக்கப்படும் ஒர் சங்கம் என் பது ' அத்தகைய பொது நோக்கை அல்லது ஒர் கூட்டான பொது நோக்கங்களை அடைவதற்குரிய வழிவகைகளைச் செய்தற்கு ஏற்படுத்தப்படும் கூட்டுறவுத் தொகுதி என்று வியாக் கியானம் கூறலாம். ஓர் பொதுநோக்கின்பொருட்டு மக்கள் தாமாக வலிந்து சேர்வதால் தான் இச்சங்கங்களிற் பல உரு வாகின்றன. எனவே இவற்றை யதேச்சா சங்கங்கள் என்பர். ஆணுல் சங்கங்களிலே மக்கள் கட்டாயமாகச் சேரவேண்டு மென்று அவர்களைப் பலவந்தம் செய்து அதன் பயனுகச் சங்கங் கள் உருவானுல் அவற்றை யதேச்சா சங்கங்கள் என்று கூற முடியாது. அரசாங்கமே தனது பிரசைகளின் வாழ்க்கை முறை அனைத்தையும், அவ்வாழ்க்கைக்கான அம்சங்கள் எல்லா வற்றையும் கட்டுப்படுத்தி அவற்றைத் தனது அதிகாரத்தில் வைத்திருக்கும் நாடுகளும் இவ்வுலகிலே உள. அத்தகைய நாடுகளில்தான் இப்படியான பலவந்த சங்கங்கள் இருக் கின்றன என்று கேள்விப்படுகிருேம்.
மனித சமுதாயங்களில் காணப்படும் பிரதானமான சங்கங்கள் சிலவற்றை இனி தொகுத்து ஆராய்வாம். அவை வருமாறு :-

7
சங்கங்களும் நிலையங்களும் 31
பொருளாதாரச் சங்கங்கள். ஏதும் தொழில் அல்லது வர்த் தகம் சம்பந்தமாக அமைக்கப்பட்டுள்ள தாபனங்கள் யாவும் இத்தொகுப்பில் அடங்கும். நமது இலங்கை யிலே இருக்கும் பொருளாதாரச் சங்கங்களில் தோட்ட முதலாளிமார்சங்கம், தாழ்ந்த பிரதேசவிளை பொருள் உற்பத்தியாளர் சங்கம், கொழும்பு தேயிலை வர்த்தகர் சங்கம், ரப்பர் வர்த்தகர் சங்கம், இலங்கை வர்த்தகர் சங்கம், இந்திய வர்த்தகர் சங்கம் முதலியன குறிப்பிடத்தக்கன. (இங்கே காட்டிய சங்கங்களைவிட ஏனைய பொருளாதார சங்கங்களும் பல வுள. அவற்றின் பெயர்களை, ஆங்கிலத்தில் பிரசுரமாகும் பெர்குஸன்வழிகாட்டி நூலில் இருந்து அறியலாகும்).
கல்வி சம்பந்தமான சங்கங்கள்.
சமய சங்கங்கள். அல்லது மார்க்க சங்கங்கள்
. சுகாதார-சிரமபரிகார சங்கங்கள். உதாரணம் :-தேகாப் பியா ச சங்கங்கள், விளையாட்டுச் சங்கங்கள் போன்றவை.
கவின்கலை விருத்திச் சங்கங்கள். உ-ம் : சங்கீத, சித்திர
நாட்டிய, நாடக, கலா சங்கங்கள். சாத்திரச் சங்கங்கள். உ-ம் : பூகோள ஆராய்ச்சி, சரித் திர ஆராய்ச்சிச் சங்கங்கள். இயற்கைச் சாத்திர ஆராய்ச்சிச் சங்கம், ருேயல் ஆசிய சங்கம் எனப்படும் அரசபிமான ஆசியக் கலை ஆராய்ச்சிச் சங்கம் என்பன.
. சமுதாய மக்கள் ஒருவரோடொருவர் பழகற்கான சங்கங்கள்:
மக்கள் வந்து சந்தித்து ஒருவரோடொருவர் அளவளாவிக் கருத்துக்களைப் பரஸ்பரம் வெளி யிடற்கான நிலையங்கள் இதில் அடங்கும். சிலர் தமது வாழ்க்கையில் உள்ள அலுப்பைப்போக்க இச்சங்கங் கள் உதவியாகும். இன்னும், மக்கள் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்து நேசபான்மையுடன் உரையாடவும் இச்சங்கங்கள் சந்தர்ப்பம் அளிக்கின்றன.
அரசாங்கம். சங்கங்களின் ஆவலியிலே அரசாங்கத்தை யும் சேர்த்தல் சிலருக்கு ஆச்சரியத்தை விளைக்கலாம். அரசாங்கமும் ஒர் சங்கமா என்று அவர்கள் கேட்க லாம். ஆம், அரசாங்கமும் ஓர் சங்கமே தான் என்று கூறுவர் சனநாயக வாழ்க்கை முறையில் நம்பிக்கை கொள்வோர். அரசாங்கம் என்பது குறித்த சில கருமங்களின் பொருட்டு அமைக்கப்பட்ட ஒர் சாதன மேயன்றி எவ்விதத்திலாவது மனிதனின் கட்டுப்
Ferguson's Directory.

Page 21
32 சங்கங்களும் நிலையங்களும்
பாட்டுக்கோ விமரிசனத்துக்கோ அப்பாற்பட்ட ஒர் சக்தியல்ல. அதாவது அதில் உள்ள மக்கள் ஒவ் வொருவரும் முன்னேற்றம் அடைதற்குரிய நிலைமை களை அவர்கள் அனைவருக்கும் ஏற்படுத்திக் கொடுப் பதுவே அரசாங்கம். ஆகவே அந்த அரசாங்கமானது அளவுக்கு மீறித் தனது அதிகாரத்தைப் பிரயோகித் துத் தனி மனிதனின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தக் கூடாது, நாட்டிலே ஒழுங்கினையும் அமைதியையும் நிலைநாட்டுதற்பொருட்டு அல்லது இதுபோன்ற, சகலரதும் நன்மைக்கான பொதுப் பணியின் பொருட்டு அதிகாரத்தைப் பிரயோகிக்கலாம். அப் படியின்றி அரசாங்கமானது தன் பிரசைகள் சம்பந்த மான சகல விடயங்களிலும் தன் அதிகாரத்தைப் பிர யோகிக்கலாகாது என்று இந்தச் சனநாயகவாதிகள் கூறுவர். இவ்விடயமாக இன்னேர்வித அபிப்பிராயம் கொண்டுள்ள சாராரும் இருக்கின்றனர். மேலே கூறியவாறு அரசாங்கம் ஒர் சங்கம் அல்ல என்பதே இவர்களது வாதம். அரசாங்கம் என்பது மனிதனுக்கு மேற்பட்டதாய், தெய்வீகத் தன்மையுடையதாய் இருக்கும் அமைப்பு என்று இவர்கள் கொள்ளுகிரு ர்கள். தன்னகத்தே வாழும் ஒவ்வொருவரதும் வாழ்க்கையை எவ்வாறு உருவாக்கவேண்டும் என்பதை நிர்ண யிக்கும் அதிகாரம் அரசாங்கத்துக்குத்தான் இருக்கவேண்டும்; அப்படியாக உருவாக்குதற்குத் தன்னகத்தேயுள்ள மக்களின் தனிவாழ்க்கையினதும் பொதுவாழ்க்கையினதும் ஒவ்வோர் அம்சத்தையும் கட்டுப்படுத்தும் தத்துவமும் அரசாங்கத்துக்கே இருக்கவேண்டும் என்று இவர்கள் சாதிக்கின்றனர். இவர் களின் வாதப்படி தனி மனிதனின் தன்மைகள் சுபாவங்கள் யாவும் அடங்கிய சாதனமே அரசாங்கம். அதாவது அரசாங் கமே சகலவற்றையும் அடக்கியதாக இருக்கும் *. அரசாங் கத்தின் அதிகாரத்துக்கு மேற்பட்டதாக அல்லது அதற்கப் பாற்பட்டதாக, லெளகீக விடயங்கள் சரி, ஆன்மார்த்த விடயங்கள் சரி இருப்பதில்லை ? . சுருங்கக் கூறுங்கால், இவர் களின் கூற்றுப்படி அரசாங்கமே சர்வாதிகாரி. சமுதாயத்தின் சகல விடயங்களுக்கும் அதுவே பரமகர்த்தா.
அரசாங்கத்தின் தன்மைகள் பற்றியுள்ள இருவிதமான அபிப்பிராயங்களை மேலே காட்டியுள்ளோம். இந்த இரண்டு வித அபிப்பிராயங்களும் பரஸ்பரம் மாறுபட்டவை. சமு தாயத்தின் ஒர் பகுதிதான் அரசாங்கம் ; குறித்த சில லட்சி யங்களை அடைதற்பொருட்டு மக்கள் சங்கமாகச் சேர்ந்ததே அது. ஆகவே அந்த அரசாங்கமானது வாழ்க்கையுடன் சம்பந்

சங்கங்களும் நிலையங்களும் 33
தப்பட்ட எல்லா லட்சியங்களையும் எல்லாக் கருமங்களையும் கட்டுப்படுத்தக்கூடாது; எ மது வாழ் க் கை யி லே பல அம்சங்கள் உள ; உதாரணமாக ஆன்மார்த்த விடயங்கள் இருக்கின்றன. அவை அரசாங்க விடயங்களுக்குப் புறம் பானவை ; ஆனமையினல் அவை விடயத்தில் அவ்வரசாங்கம் தலையிட்டுக் கட்டுப்படுத்தக்கூடாது என்று சனநாயக வாதிகள் கூறுவர். இன்னும் , " சில விடயங்கள்தான் அரசாங்க பரிபாலனத்துக்குட்பட்டவையே யன்றி எ ல் லா விடயங்களுமன்று லெளகீகார்த்தமானவையும் ஆன்மார்த்த மானவையுமான பல கருமங்கள் அரசாங்கத்தின் அதிகாரத் துக்களாகாமல் இருக்கின்றன ; ஆகவே " அரசாங்கத்துக்குரிய கடமைகளை அரசாங்கத்துக்கும், ஆண்டவனுக்குரிய ஆன்ம லாபத்துக்குரிய கடமைகளை ஆண்டவனுக்கும் நாம் செலுத்த வேண்டும் ' என்று வாதிப்பர் சனநாயகவாதிகள்.
அரசாங்கம் என்பது ஒர் சங்கமே யானல் அதனை எந்த நோக்கத்துடன் மனிதர்கள் அமைத்தார்கள்? அரசாங்கம் செவ்வனே ஆற்றக்கூடிய கருமங்கள் யாவை? அதன் அதி காரத்துக்கப்பால் விடப்படவேண்டிய விடயங்கள் யாவை ? என்னும் இன்னுேரன்ன கேள்விகள் இச்சந்தர்ப்பத்திற் பிறக் கின்றன.
நாட்டிலே ஒழுங்கையும் அமைதியையும் நிலைநாட்டவும் பொது சனங்களுக்கிடையே சமாதானத்தை ஏற்படுத்தவுமே அரசாங்கம் தாபிதமாயது என்று மேலேயுள்ள முதலாம் கேள்விக்கு விடை கூறலாம். ஓர் நாட்டில் வாழும் மக்கள் எல்லார்க்கும் பொருத்தமாகிய பிரமாணங்களை வகுத்து அவ ரவர்க்கு முக்கியமாக வேண்டற்பாலனவாகிய செளகரியங் களைச் செய்து கொடுத்தல் அரசாங்கத்தினல்தான் முடியும். ஒர் நாட்டின் மக்கள் அனைவரது ம் நல விரு த் தி யுடன் தொடர்பாய விடயங்களை அரசாங்கம் வகுக்கவேண்டும். பொருள்களை நிறுத்தற்கான நிறுவைப் படிகளையும், அளத்தற் கான அளவுப்படிகளையும் ஏற்படுத்தலும், அவற்றின் மதிப்பில் ஏற்றத் தாழ்வு ஏற்படாத படி உத்தரவாதப்படுத்தலும் அரசாங்கம் ஆற்றவேண்டிய கடமையாகும். இன்னும், நீதிபரி பாலனம் செய்தலையும் அரசாங்கத்தின் பொறுப்பில் விடுதல் சாலச்சிறந்ததாகும். இதனை யதேச்சாபூர்வமான சங்கங்களி டம் பொறுப்பித்தல் நல்லதன்று. நீதி பரிபாலனம் செவ்வனே நடைபெறுவதிலேயே மக்களின் சகல உரிமைகளும் நலன் களும் தங்கியிருக்கின்றன ; மேலும், மக்கள் எல்லாரதும் நலவுரிமைகள் சம்பந்தப்பட்டுள்ள சந்தர்ப்பங்களிலும், எல்லார்க்கும் நன்மையளிக்கும் பிரமாணங்கள் கண்டிப்பாக அமுல் நடத்த வேண்டிய சநதர்ப்பங்களிலும் அரசாங்கம்
;0-س3248:

Page 22
34 சங்கங்களும் நிலையங்களும்
தலையிட்டுக் கருமம் ஆற்றுதல் சாலச்சிறந்ததாகும் என்பதை யும் நாம் குறித்துக்கொள்ளுதல் வேண்டும். இப்படியே அரசாங்கம் செய்யவேண்டிய வேறும் பல கருமங்களும் உள. அவற்றை அரசாங்கமே சிறப்பாக, செவ்வனே ஆற்ற முடியும்; உதாரணமாக, கல்வி விடயத்தை எடுத்துக்கொள்ளுவோம். கல்விவிருத்தியிலே ஓர் சமூகத்தின் வளர்ச்சி தங்கியிருக்கிறது. இவ்விடயத்தில் அரசாங்கம் தலையிடுதற்கு இந்த ஒரு காரண முமே போதும். ஆகவே, கல்விவிடயமாக ஒர் பொதுவான தராதரத்தை அமைத்து அதனைப் பேணும் பொறுப்பை அரசாங்கத்திடம் விடவேண்டுமென்றும், அதன்பொருட்டுப் பிரமாணங்கள் வகுக்கப்படல் வேண்டுமென்றும் வாதிப்பர். இதே வாதம் சனங்களின் சுகாதாரம் விடயமாகவும் சமூகநன்மை சம்பந்தமான பணிகள் விடயமாகவும் அரசாங்க அதிகாரம் இருக்கவேண்டும் என்பதற்கும் பொருத்த முடைத்தாகும். உதாரணமாக, சில தொழில்களில் ஈடுபட் டுள்ளவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தல் வேண்டும். சில அபாயகரமான தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நன்மைக்கு உத்தரவாதம் அளிக்கவும் அவர்களுக்கு இன்ன தொகைக்குக் குறைய வேத னம் கொடுக்கக்கூடாது, இவ்வளவு மணித் தியாலங்களுக்கு மேல் அவர்களுக்கு வேலை கொடுக்கக்கூடாது என்று முத லாளிமாருக்குச் சட்டபூர்வமாகக் கற்பித்து அதற்கான பிர மாணங்களை வகுக்கவும், தொழிலாளர் தம் தொழிலை ஆற்றும் போது ஊறடையும் கள் லத்தில் அல்லது வேலையற்று இருக்கும் காலத்தில் அவர்கட்கு நிவாரணம் அளிப்பதற்கான பிரமாணங் களை ஆக்கவும் அரசாங்கத்தினுல்தான் முடியும். இவை மாத்திரம் அல்ல; இன்னும் கூறுதும் ஓர் சமூகத்திற்கு இயற்கையன்னை பல வளங்களை அளித்திருக்கிருள் அவை அச்சமூகத்தின் மூலவளங்கள் ; வனங்கள், வனம் படுபொருள் கள், மீன்களாதியாம் கடல்படு திரவியங்கள் என்னும் இன் னுேரன்னவையே அவை. இவற்றைத் தனிப்பட்ட தாபனங் களின் பொறுப்பில் விட்டால் அவை சுய நல மிகளால் தம் சொந்த நன்மைக்கு உபயோகப்படுத்தப்பட்டு ஈற்றில் நாச மாகியும் விடலாம். ஆகவே, இவற்றைப் பாதுகாத்துப் பேணும் பொறுப்பைத் தாங்குதற்கும் அரசாங்கமே தகுதியான தொன்ரு கும்.
அரசாங்க அதிகாரத்துக்கப்பால் விடப்படவேண்டிய விடயங்களும் சில உள. அரசாங்கம் சமூகம் முழுவதுககுமே பிரதிநிதியாக விருப்பதால் அச்சமூக மக்கள் அனைவரையும் பாதிக்கும் விடயங்களை அதன் பொறுப்பில் விடுதல் உசித மாகும். ஆனல் தனி மனிதரைப் பாதிக்கும் விடயங்களை

சங்கங்களும் நிலையங்களும் 35
அதாவது தனிமனிதனின் சொந்த, அந்தரங்க விடயங்களைஅரசாங்கம் கட்டுப்பாடு செய்யக்கூடாது. ஒருவன் அல் லது ஒருத்தி தன் மனதுக்கு விருப்பமான மதத்தைப் பின் பற்றவோ, பிரச்சினைகள் பற்றி விருப்பமான அபிப்பிராயங் களும் கொள்கைகளும் கொள்ளவோ அவனுக்கு அல்லது அவளுக்குச் சுயாதீனம் இருத்தல் வேண்டும். இப்படியான விடயங்களிலே ஒருவர் அல்லது ஒரு சாரார் கொள்ளும் அபிப்பிராயப்படியே மற்றவர்களும் கொள்ளுவர் என்று நாம் எதிர்பார்க்ககூடாது. அபிப்பிராய வேற்றுமைகள் இருப்பது சர்வசாதாரணம். சித்திரம், சங்கீதம், காவியம், சமயம் அல்லது மார்க்கம் என்னும் எத்தனையோ விடயங்களில் எமக்கிடையே அபிப்பிராய பேதங்கள் உள. இன்னும், மரணத்தின் பின் மனிதனுக்கு இன்னேர் வாழ்கையுண்டா? இல்லையா? என்பதில் அபிப்பிராய பேதங்கள் உள. இப்படியே இன்னும் எத்தனையோ விடயங்களில் மனிதர்க் கிடையே அபிப்பிராய பேதங்கள் இருக்கலாம். இவ்வாறு பலவிதமான அபிப்பிராயங்களை ஒர் பிரச்சினை விடயத்திற் கொள்ளக்கூ டாது; இன்னவிதமான அபிப்பிராயத்தினை அல்லது கொள்கை யினையே கொள்ளவேண்டுமென்று அரசாங்கம் எமக்கு யதேச் சாதிகாரமாகக் கட்டளைவிதிக்க ஒருபோதும் விடக்கூடாது. ஒருவனுடைய அந்தரங்க வாழ்க்கை அவனுக்குப் பரிசுத்த மானது. அந்தப் பரிசுத்தமான இடத்தில் எந்த அரசாங்க மாவது நுழைய இடம் கொடுக்கக்கூடாது. அப்படி இடம் கொடுத்தால், பெறுதற்கரிய மானிடப்பிறவியின் மகத்தான பெருமையைச் சிதைப்பதாகவே முடியும். மனிதனின் அழிந்து போகும் சடலத்தை அரசாங்கம் தன் அதிகாரத்தைப் பிரயோகித்து அழித்துக் கொள்ளலாம். ஆனல் அவனது ஆத்மாவைக்கொல்ல அதனல் முடியாது. அரசாங்கம் என்பது மனிதனுக்காக ஏற்பட்ட சாதன மே யன்றி, மனித ன் அரசாங்கத்துக்காகச் சிருட்டிசெய்யப்பட்ட ஒர் பிராணியல்ல; இதுவே எமது சித்தாந்தம்.
அமைப்புக்கள்
இவ்வதிகாரத்தின் முதற் பகுதியில் நாம் எடுத்துக்காட் டியபடி சங்கங்கள் என்பன குறித்த சில லட்சியங்களை அடைய அமைக்கப்பட்ட தாபனங்களேயாகும். இவ்விலட்சியங் களைப் பூர்த்திசெய்யவேண்டுமானல் ஓர் சங்கத்துக்கு அதனை இயக்கும் கருவிகளும் பிரமாணங்களும் ஒழுங்குவிதிகளும் இருக்கவேண்டும். ஓர் கலா சங்கத்தை நாம் அவதானிப் போ மானுல் அதற்கு ஓர் பிரமாணத் தொகுதியிருப்பதைக் காண்போம். இப்பிரமாணத் தொகுதியை அமைப்புத்திட்டம்

Page 23
36 சங்கங்களும் நிலையங்களும்
என்பர். இன்னும், இச்சங்கத்தை இயக்கத் தலைவர் என்றும், காரியதரிசி, என்றும், தஞதிகாரி என்றும் நிருவாகசபையினர் என்றும் ஓர் சிலர் இருப்பர். இவர்கள்தான் இச்சங்கத்தை இயக்கும் உறுப்பினர். இச்சங்கத்துக்கெனச் சொந்தமான ஓர் கட்டிடமோ பல கட்டிடங்களோ இருக்கும். இங்கே அதன் நூல் நிலையம் நிறுவப்பட்டிருக்கும். சங்கக் கூட்டங்களும் நிகழும். பிரமாணங்கள், கட்டடங்கள் உறுப்பினர் குழு என் னும் இவை எல்லாம் அச்சங்கத்தை இயக்குதற்கான கருவி களாம். இவ்வாரு கவுள்ள சங்கத்தைப்போல ஒர் அரசாங்கத் துக்கும் ஒர் அமைப்புத்திட்டம் உண்டு. அதனை அரசிய லமைப்பு என்பர். அரசியற்றிட்டம் என்றும் அதனை வழங்கு வர். அரசாங்கத்தின் கருமத்தை நிருவகிப்பதற்குப் பெரும் தொகையான மக்களும் பல்வேறு விதமான கட்டிடங்களும் அதற்குண்டு. இவையும் அரசாங்கத்தை இயக்கும் கருவி களாம். இதற்கு நாம் நமது இலங்கையையே உதாரணமாக எடுத்துக்கொண்டு இந்த அரசாங்கக் கருவியின் தன்மைகளைச் சுருக்கமாக ஆராய்வோம்:-
முதலில் இங்கே அரசரின் பிரதிநிதியாக கவர்ணர் ஜெனரல் ' என்று ஆங்கிலத்தில் வழங்கப்படும் மகா தேசாதிபதி இருக்கிருர், மகா தேசாதிபதி என்ற நியதியில் அவர்க்குரிய கடமைகள் யாவை என்பதை விவரமாகக் கற்பிக்கும் அரச உரிமை யதிகாரமும் அரச கற்பனைகளும் அவரிடம் உண்டு. அவருக்கு அடுத்ததாக ஒர் பாராளுமன்றம் இருக்கிறது. அதிலே தேசத்து மக்களின் பிரதிநிதிகள் இருப்பர். அது அரசாங்க சபைக் கட்டிடம் எனச் சாதாரணமாக வழங்கப் படும் பாராளுமன்றக் கட்டிடத்திற்கூடும். பாராளுமன்றத்துக் கான அங்கத்தவர்களைத் தெரிவுசெய்வது பற்றிய பிரமாணங் கள் தேர்தல் விடய இராசசபைக் கட்டளைகள்? எனப்படும் அரசாக்கினையாலும், பாராளுமன்றத்திலே கருமம் ஆற்றப் படும் முறை பாராளுமன்றத்து நிலை விதிகளாலும் வரை யறுத்துக் கூறப்பட்டிருக்கின்றன. அன்ருட பரிபாலனக் கருமத்தை நடாத்துதற்காக அரசாங்கம் தன்னகத்தே L. 1 Ꭷl) பகுதிகளைக் கொண்டிருக்கிறது : இப்பகுதிகளை இலாக்காக்கள் என்றும் சிலர் கூறுவர். நிதிப்பகுதி, சட்டப்பகுதி, அரசுக்கருமாலயம்* என்பன இப்பகுதிகளுட் பிரதான
1. Royal Letters Patent and Royal Instruction.
2. Elections Orders in Council.
Order in Council என்பதற்கு 'இராச சபைச் சட்டம், ‘மந்தண ஆணை’ எனவும் வழங்குவர்.
3. Standing Orders.
4. Secretariat.

சங்கங்களும் நிலையங்களும் 37
மானவை. விவசாயம், சுகாதாரம், கல்வி, தொழிலாளர் விடயம், வர்த்தகம், போக்குவரத்து, அரசாங்கக் கட்டட வேலைகள், தலபரிபாலனம் என்னும் இன்னுேரன்னவற்றை நிரு வகிக்கத் தனித்தனி பகுதிகள் இருக்கின்றன. இவை எல்லாம் அரசாங்கம் என்னும் பாரிய யந்திரத்தை இயக்கும் உறுப்புக் களாம். ஓர் அரசாங்கத்துக்கு வேண்டிய அதிகாரிகள், பிர மாணங்கள், ஒழுங்கு விதிகள், உபகரணங்கள் என்னும் இன் னுேரன்னவற்றை எல்லாம் சேர்த்து அமைப்புக்கள்’ என்று கூறலாம். எந்த ஓர் சங்கத்தை நாம் நோக்கினலும் அதற்கு ஒர் அமைப்பு இருப்பதை அவதானிக்கலாம். ஒழுங்காக நடைபெறுதற்கெனத் தாபிக்கப்பட்ட முறைகளையே அமைப்பு என்று கூறுவர். தேச பரிபாலனம் ஒழுங்காக நடைபெறுவதற்கு அரசாங்கம் சில அமைப்புக்களே உடையதாயிருக்கின்றது. மக்கள் அநுட்டிக்கும் சமயம் அல்லது மார்க்கத்திலும் சில அமைப்புக்கள் உள. தேவால யங்கள், கோயில்கள், பள்ளிகள், கிரியைகள், வணக்க முறை கள் என்னும் இன்னுேரன்னவை அவ்வமைப்புக்கள் ஆகும். இந்த அத்தியாயத்தின் முற்பகுதியிலே சங்கங்கள் சிலவற்றி ஆவலி தரப்பட்டிருக்கிறதல்லவா ? இச்சங்கங்களுக்கொத்தன் அமைப்புக்களை நீங்கள் வகுத்து ஆவலிப்படுத்தல் நன்மை பயக்கும். இதுவரை கூறியவற்றிலிருந்து எந்தத் தாபன மாவது அநுகூலத்துடன் நடைபெற வேண்டுமானல் அதற்கு ஒர் அமைப்பு இருத்தல் இன்றியமையாதது என்பது தெளி வாகிறது.
யதேச்சா சங்கங்களும் சனநாயக சமுதாயத்தில் அவற்றின் நிலையும்.
இட்டபூர்வமான, அதாவது மக்கள் யதேச்சையாக, எவ் வித பலவந்தமுமின்றிச் சேர்ந்துள்ள, சங்கங்களைப்பற்றி முன் னர்க் குறிப்பிட்டோம். இத்தகைய சங்கங்களின் பிரதானத் தையும், எமது அரசாங்கத்தை உண்மையான சனநாயக அரசாங்கமாக்குவதில் அவை எமக்கு எவ்வளவு இன்றியமை யா தன என்பதையும் இன்னும் சற்று விபரமாக ஆராய்தல் ஏற்புடைத்தாகும். எண்சாணுடம் பைக் கொள்பவர் எல்லா ரும் மனிதர் அல்லர். இதனலன்ருே “ இப்புவியில் மக்கள் எல்லாம் மானிடருமாவரோ " என்ருர் அறிஞர். இந்த என்புதோல் போர்த்த உடம்பிற்குள் இருந்து இயக்குவிக்கும் சக்தி ஒன்று உண்டே, அதுதான் பிரதானம். இதுபோலவே தேர்தல்களும் வாக்குச் சம்மதங்களும், அரசவை மன்றங்களும் உண்மையான சனநாயகம் அல்ல. இவையெல்லாம் மனி தனின் உடம்புபோன்றவை. இவை எல்லாம் இருந்தாலும்
l. Local Administration. உள்ளூர்ப் பரிபாலனம் என்றும் கூறுவர்

Page 24
38 சங்கங்களும் நிலையங்களும்
சனநாயகத்துக்கு உயிர் கொடுக்கும் சக்தி எம்மிடத்தில் இல்லை யேல் அந்தச் சனநாயகத்தினல் ஆம் பயன் இல்லை. இவ்விடய மாக, யதேச்சா சங்கங்கள் சனநாயக உணர்ச்சியினைக் கொஞ்ச மாவது எம்க்கு ஊட்டும் முறையை அவதானித்தல் பொருத்த முடைத்தாகும். உதாரணத்துக்கு உங்கள் பள்ளிக்கூடத் தையே எடுத்துக்கொள்ளுவோம். இந்தப் பள்ளிக்கூடத்திலே பல சங்கங்கள் உண்டென்றும் அவற்றிலே விரும்பியவர்கள் சேர்ந்து கொள்ளலாம் என்றும் வைத்துக்கொள்ளுவோம். பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியரோ, ஏனைய ஆசிரியர்களோ அங்குள்ள ஏதாவதொரு சங்கத்திற் சேரவேண்டுமென்று மாணவர்களை நேர்முகமாகவோ மறைமுகமாகவோ எவ்விதத் திலேனும் நிர்பந்திப்பதில்லை. இந்த நிலைமையில் நீர் ஒரு சங்கத்திற் சேருகிறீர். ஆகவே, முதலாவதாக உம்மோ டொத்த கருத்தும் லட்சியங்களும் உடையவர்களின் சேர்க் கையை நீர் நாடுகிறீர். நீரும் அவர்களும் சேர்ந்து ஆற்றும் தொண்டு உமக்கு நன்மையை அளிக்கிறது. அச்சங்கத்திற் சேர்ந்துள்ள மற்றவர்களின் உதவியால்-அவர்கள் உமக்கு வழிகாட்டுதலால்-அவர்களது உதாரணத்தால்-நீர்நன்மை யடைகிறீர். இரண்டாவதாக அச்சங்கத்துக்கு வேண்டிய அமைப்புக்களை இயக்குவதில் துணைசெய்கிறீர். ஒரு பொது லட்சியத்தை அடையும் பொருட்டு மற்றவர்களுடன் சேர்ந்து தொண்டாற்றவேண்டும் என்ற ஓர் அரிய கற்பனையைப் பெறு கின்றீர். நீர் மற்றவர்களுடன் ஒத்து வாழப் பயில்கின்றீர். அதன்பயணுக மற்றவர்களின் விடயத்தில் உமது சமுதாய நோக்கு ஆழ்ந்து விரிந்து பரவுகிறது. உம்மை இதுவரை ஒதுக்கிவைத்துத் தனித்து வாழவைத்த பழக்க வழக்கங்களை எல்லாம் இப்போது நீர் கைவிட ஏதுவாகிறது. விடயங்களை மற்றவர்களுடன் கலந்து பேசவும், பிரச்சினைகளை அழுங்குப் பிடியாக வற்புறுத்தி தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் ' என்ருங்கு பிடிவாதம் செய்து வாதிக்காமல் இணங்கி வாழ வும், சமரச நோக்கம் கொள்ளவும், இணக்கமுறைகளைப் பின்பற்றவும் பயில்கின்றீர். ஒரு விடயத்திலே உமக்கு எவ்வளவு உரிமைகள் உண்டோ அவ்வளவு உரிமைகள் மற்றவர்கள் தங்கள் லட்சியத்தை யடைவதற்குமுண்டு என்பதையும், நீரே சர்வாதிகாரியாக எதனையும் உமது இட்டப்படி நடாத்தவோ பெறவோ முடியாது என்பதையும் இச்சங்க சகவாசத் தால் நீர் அறிந்து கொள்ளுகிறீர். இன்னும், பிரச்சினைகளை மற்றவர்களுடனும் கலந்து பேசி எல்லாரும் ஏற்கக்கூடிய விதமாக அப்பிரச்சினைகளைத் தீர்க்கவும் சங்கசகவாசத்தால் நீர் பயின்றுகொள்ளுகிறீர்.

சங்கங்களும் நிலையங்களும் 39
மேலே சொல்லிய சற்சங்கப்பழக்கங்கள் அதி உந்நத நிலை யில் இன்னும் அநுட்டிக்கப்படவில்லை என்பதைக் குறிப்பிடா மல் இருக்கமுடியாது. சங்கங்களில் மற்றவர்கள் யதேச்சை யாகச் சேரவேண்டும் என்று வாயாற் சொல்லுகிருேம் ; ஆணுல் எமது சொந்த அபிப்பிராயங்களையே அதிகமாகக் கொண்டு கூட்டு அபிப்பிராயத்துக்கோ, சங்க அபிப்பிராயங் களுக்கோ அதிக மதிப்புக்கொடுப்பது இல்லை. ‘இலங்கை மக்கள்" என்று நாம் இக்காலத்திற் கூறும்போது உண்மையில் நாம் இலங்கையின் மக்கள் சமுதாயத்தைக் கருதாது ஒரு பெருங்கூட்டுத் தனி மனிதரையே கருதுகின்ருேம். ஆனல் நன்கு வளர்ச்சியுற்ற ஓர் சனநாயக சமுதாயத்திலே "மக்கள்’ என்பது தனி மனிதரை மாத்திர மின்றி தத்தம் நலவுரிமை களுக்கேற்றவாறு தனி மனிதர் சேர்ந்துள்ள சங்கங்களையும் குறிக்கும். இங்கே எங்கள் இலங்கையிலே மக்களை இனம், குலம், சாதி, சமயம் என்பவை பற்றியே அதிகமாகப் பாகு படுத்திவருகிருேம். சாதி, சமய குல ரீதியாகவன்றி சங்கரீதி யாக மக்களை நாம் கருதவேண்டும். நாம் சங்கங்களாகயதேச்சாபூர்வமான சங்கங்களாக-சேர்வதினல் பிரச்சினை களில் குறுகிய மனப்பான்மை காட்டுவது ஒழியும் ; பரந்த நோக்கம் ஏற்படும்.
இன்னும், ஒர் சங்கத்தை நடாத்துவதால் நாம் சனநாயக ஒழுங்கு முறையில் பயிற்சி பெறுகின் ருேம், கலந்து பேசி விவாதிப்பதற்கு ஊக்கம் அளிப்பதாயும், மற்றவர்களின் சே மா பிவிருத்தியின் பொருட்டுப் பொறுப்பேற்கும் பயிற்சி அளிப்பதாயும் சங்கம் இருக்கிறது. சனநாயக ஆட்சியிலே பொறுப்பு ஏற்பது பிரதானம். எவர் பொறுப்பேற்கப் பின்னிற்கின்ரு ரோ அவர் சனநாயகத்துக்கு உதவாதவராவர். சனநாயகமுறை அநுகூலமடையவேண்டுமெனில் மக்கள் பொறுப்பு வகிக்கப் பயின்று கொள்ளுதல் வேண்டும். தொகுத் துக் கூறுங்கால் இத்தகைய யதேச்சாபூர்வச் சங்கங்கள், கருமங்களைத் திறமையுடன் நிருவகிப்பதற்குரிய சனநாயக முறையில் பிரசைகளை நன்கு பயிற்றுவதற்கும், ஓர் தலைவன் இருப்ப அவனுக்கு அடங்கி ஒடுங்கி நடக்கும் அடிமை மனப் பான்மையை ஒழிப்பதற்குமான அரியசாதனமாகும்.
தொழிற் சமாசங்கள் வியாபாரம் கைத்தொழில் என்பன நாட்டில் துரிதமாக வளர்ச்சியடைய ஒரு விசேடமுறையான யதேச்சா சங்கங் களும் நவமாகத் தோன்றி அபிவிருத்தியடையலாயின. அவை தான் தொழிற்சமாசங்கள். இங்கிலாந்திலே நிகழ்ந்த கைத்
l. Trade Unions.

Page 25
40 சங்கங்களும்நிலையங்களும்
தொழிற் புரட்சியினைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர் கள். அப் புரட்சியின் ஆரம்பகாலத்திலே சுரங்கங்களிலும் தொழிற்சாலைகளிலும் வேலை செய்த தொழிலாளரை முதலாளி மார் மனிதர் என்று மதிக்காது உயிரற்ற பொருள்களாகதமக்குப் பாடுபட்டுழைக்கப் பிறந்த சென்மங்களாகமதித்தனர். இத் தொழிலாளர் வறுமையில் வாடினர் ; அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கூலியோ மிகவும் அற்ப மானது. கூலி போதாது, கொஞ்சம் கூடத்தாருங்கள் என்று கேட்டால் பிழைப்புப் போய்விடும். முதலாளிமார் அதிசக்தி வாய்ந்தவர்களாக இருந்தனர். அவர்களிடம் நிறையப் பணம் இருந்தது. தொழிலாளர் பிழைப்புத்தேடி ஒருவருக் கொருவர் எதிரிடையாக நின்றதால், முதலாளிமார் மலிந்த கூலியில் தமக்கு வேண்டிய தொழிலாளர்களைப் பெறக்கூடிய தாகயிருந்தது. அக்காலத்திலே தொழிலாளராயினுேர் தம் நலவுரிமைகளைப் பாதுகாப்பதன் பொருட்டு ஒன்ருகச் சேர மனதில் நினைக்கவும் முடியாது. அப்படிச் செய்வது மகா பாதகச்சதி என்றும் மக்களாற் பொதுவாகக் கருதப்பட்டது. அந்த அளவுக்கு முதலாளிமாரின் செல்வாக்கும் அதிகாரமும் பரவியிருந்தது. தமது நலவுரிமைகளைப் பாதுகாக்கத் தொழி லாளர் சங்கமாகச் சேர்வது சட்டவிரோதம் என்று இங்கிலாந் தில் 1799-ம் ஆண்டிலும் 1801-ம் ஆண்டிலும் சட்டங்கள் இயற்றப்பட்டன. வேலை நிறுத்தம் செய்வது சட்டவிரோத மான பாதகச் செயல் என்றுகூட அரசாங்கத்தால் பிர கடனம் செய்யப்பட்டது. தொழிலாளர் சங்கமாக ஒன்று சேர்வதற்கு விரோதமாக விருந்த சட்டங்கள் 1824-ம் ஆண் டில் தவிர்க்கப்பட்டனவேனும் வேலைநிறுத்தம் பற்றிய சட்டங் கள் தொடர்ந்து அநுட்டானத்தில் இருந்தன. ஆனல் இப்படி யான சட்டங்களும் ஒழுங்கு விதிகளும் இருந்தும் தொழிலாளி வகுப்பினர் சோர்வடையாது தங்கள் நலவுரிமைகளைப் பேணும் சங்கங்களைத் தாபித்து வளர்த்து வந்தனர். தொழி லாளரின் சமா சங்களைச் சட்டபூர்வ தாபனங்களாக்கும் சட்டங்கள் 1871-ம் ஆண்டிலும் 1876-ம் ஆண்டிலும் நிறை வேற்றப்பட்டன. தொழிலாளர் தங்களுக்குள் கலந்து ஆலோ • சித்து கூட்டுச் செயலில் ஈடுபடுவது குற்றமாகக் கருதப்பட, அவர்கள் தீவாந்தர தண்டனையை முந்திப்பெற்றுவந்தனர். அந்தத் தண்டனைமுறை நீக்கப்பட்டது. தொழிலாளர் தமது தொழில் நிலைமைகளிலும் வேதனங்களிலும் சிறந்த விதிகளைப் பெறுதற்கு அத்தியாவசியகமாயுள்ள சாதனங்களே தொழிற் சமா சங்கள் என்று 1913-ம் ஆண்டுக்குப்பின் கணிக்கப்பட்டு, அவற்றுக்குரிய மதிப்புக் கொடுக்கப்படலாயிற்று.
l. Industrial Revolution.

சங்கங்களும் நிலையங்களும், 41
குறித்த ஒரு தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் சங்கமே தொழிற்சமாசம் ஆகும். விவசாயிகள் தமக்கென ஒரு சமாசத்தைத் தாபிக்கலாம். நெசவாளர் தமக்கென ஒரு சமாசத்தைக் கொண்டிருக்கலாம். இப்படியே மற்றும் தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களும் செய்யலாம். ஆனல் இக்காலத்துப் பாரிய கைத்தொழில்களின் பின்னலானதன்மை காரணமாக, தொழிலாளருக்குரிய இத்தாபனங்கள் பல்வேறு தன்மை வாய்ந்தனவாக அமைகின்றன. பல்வேறு தொழிற் சமாசங்கள் ஒன்று சேர்ந்து தமக்கென ஒரு பாராளுமன்றம் போன்ற தொழிற்ச மாசச் சம்மேளனத்தை அமைத்துக் கொண்டன.
தொழிலாளர்களின் சேமாபிவிருத்தி ஒன்றினையே முழு நோக்காகக் கொண்டு தொழிற்சமா சங்கள் ஆரம்பத்தில் அமைக்கப்பட்டன. தம் கீழ் உள்ள தொழிலாளர்களுக்குப் போதிய சம்பளத்தையும் வேலை விதிகளையும் முதலாளிமாரா யுள்ளவர்கள் வழங்கி, அத்தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்கச் செய்வதனைத் தொழிற் சமா சங்கள் தம் பெருநோக்காகக் கொண்டிருந்தன. ஆனல் இங்கிலாந்து போன்ற நாடுகளிலே தொழிற்சமா சங்கள், காலப் போக்கில் அரசியலிலும் தீவிரமாகத் தலையிடத் தொடங்கின. தொழிலாளர்களுடைய உரிமைகளுக்கு மதிப் புக் கொடுத்து அவர்களின் தேவைகளைக் கவனித்து, நல்ல, மனரம்மியமான வாழ்க்கைக்கு வேண்டிய வழிவகைகளை அவர்களுக்கும் வகுத்துக்கொடுக்கும் கொள்கை பூண்ட அர சாங்கத்தை உருவாக்குவதில் தாங்களும் பங்குபற்றவேண்டும் என்று இங்கிலாந்தில் இருந்த தொழிற்சமா சங்கள் விழைந்த தன் பயனுகவே பிரித்தானிய தொழிற்கட்சி உருவானது. இக்கட்சி தேசீயக் கொள்கையினையே-அதாவது தேசம் முழுவ துக்கும் பொதுவான கொள்கையினையே--கொண்டிருந்தா லும் தொழிலாளர் நலத்தில் அதிக சிரத்தை கொண்டிருந் தது. உதாரணமாக, தொழிற் கட்சி அதிகாரத்துக்கு வந்த போது சர்வநல வர சாங்கம்? ஒன்றினைச் சிருட்டிக்க முயன்றது. கல்வி வசதியை எல்லாரும் பெறவும் வைத்திய சேவைகளை வறியவர் தாராளமாகப் பெறவும் கருமம் ஆற்றப் பட்டது. நிலக்கரிச்சுரங்கத்தொழில் போன்ற சில தொழில் களும் தேசீய மயமாக்கப்பட்டது. நிலக்கரிச் சுரங்கங்கள், உருக்குத்தொழில், தெருப்போக்குவரத்து, புகையிரதப் போக்குவரத்துச் சேவைகள் என்னும் இவற்ருல் வரும் நன்மைகளைத் தேசங்கள் அனைவரும் பகிர்ந்து அநுபவிக்கும்
1. Trade Union Federation. 2. Welfare State.

Page 26
全2 சங்கங்களும் நிலையங்களும்
பொருட்டு அவற்றை அரசாங்கமே நடாத்தவேண்டும் என்பது தொழிற் கட்சியின் சித்தாந்தமாகும்.
தாங்கள் நியாயமானவையெனக் கருதும் கோரிக்கைகளைப் பெறுதற்குப் பேச்சுவார்த்தைகள் நடாத்தி அநுகூலமடையா விட்டால் வேலை நிறுத்தம் என்னும் பேராயுதத்தைத் தொழிற் சமா சங்கள் பிரயோகிக்கும். ஒவ்வொரு சமாசத்துக்கும் ஒவ் வொரு செயற்குழு உண்டு. வேலை நிறுத்தத் தீர்மானம் ஆர அமர ஆலோசித்த பிறகே செய்யப்படும். வேலை நிறுத்தம் என்பதனைச் சமா சங்கள் பொறுப்பற்ற தன்மையில் கையாளு மானுல் சமுதாயத்துக்குக் கெடுதிகள் நேரிடும். போக்கு வரத்துச் சேவைகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர் அல்லது அவை போன்ற அத்தியாவசியகச் சேவைகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர் ஒரு வேலைநிறுத்தத்தினை நடாத்துகின்றனர் என்று வைத்துக் கொள்ளுவோம். இந்த வேலை நிறுத்தத்தால் முழுச்சமுதாயமுமே இடைஞ்சற்படும். இப்படியான சந்தர்ப் பத்திலே ஒரு வின எழுகின்றது. சமுதாயத்தின் ஒருபிரிவினர் தம் சுயநலம் கருதி அச் சமுதாயத்தின் முழுப்பேருக்கும் துன்பம் விளைக்கலாமா? அப்படித் துன்பம் விளைக்க அவர் களுக்கு உரிமை உண்டா ? என்பதே அக்கேள்வி. ஒரு வேலை நிறுத்தம் சமுதாயம் முழுவதையுமே பாதித்துத் துன்பம் உண்டாக்குமானல் சமுதாயத்தின் நன்மையையிட்டு அரசாங் கம் தலையிட்டுக் கருமம் ஆற்றவேண்டும் என்ற எண்ணம் இப் போது மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது. வேலை நிறுத்தத்தி ணுற் பாதிக்கப்படும் சேவைகளை அரசாங்கமே எடுத்து நடாத்த வேண்டி வரும். இந்த விடயத்தில் அரசாங்கம் மூன்று வழி களிற் கருமம் ஆற்றலாம். முதலாவது, குறித்த சில தொழில் களில் வேலை நிறுத்தம் செய்யக்கூடாது என்று சட்டம் பிறப் பிக்கலாம். எரிவாயு, தண்ணீர், மின்சாரம் என்னும் இவற்றை உதவும் தொழில்களிலும் பொலிசுத்தியோகங்களிலும் வர்த் தகக் கப்பற் போக்குவரத்திலும் வேலை நிறுத்தம் செய்வது சட்ட விரோதம் என்று இங்கிலாந்தில் தீர்மானிக்கப்பட்டிருக் கிறது. இரண்டாவது, ஒரு வேலைநிறுத்த அபாயம் சூழும்போது அதற்கெதிராக நேரடியான மாற்று நடைவடிக்கை எடுப்பது. 1926-ம் ஆண்டின் அவசரகாலத்தத்துவச்சட்டம் இங்கிலாந் தின் அரசாங்கத்துக்கு இவ்விடயத்தில் அதிகாரம் கொடுத் திருப்பது நோக்கற்பாலது. மூன்ருவது, தொழிலாளி முதலாளி என்னும் இருசாரார்க்குமிடையேயுள்ள பிணக்கைத் தீர்க்கும் வழிவகைகளை அரசாங்கம் காண்பதாகும்.
இலங்கையிலே தொழிற் சமாச இயக்கம் சமீபகாலத்தில் உருவாகி வளர்ச்சியுற்றதாகும். தோட்டப்பகுதிகளில், அவற் றிலும் சிறப்பாகத் தேயிலைத்தோட்டங்களில், தொழிலாளர்

சங்கங்களும் நிலையங்களும் 43
பெருகிவந்ததில் இருந்தும், கொழும்பு முதலிய பட்டினங் களில் தொழிலாளர் சமூகம் தோன்றி அபிவிருத்தி எய்தியதில் இருந்து மே இவ் வியக் கம் வளரலாயிற்று. கொழும் பிலே தொழிற்சாலைகள், வேலைத்தலங்கள், போக்குவரத்துச் சேவைகள் முதலானவற்றில் ஆயிரக்கணக்கான தொழிலா ளர்கள் ஈடுபட்டிருக்கிருர்கள். அவர்களுக்குச் சிறந்த வேலை விதிகளைப் பெற்றுக் கொடுப்பதனைப் பெருநோக்காகக் கொண்டே தொழிற் சமா சங்கள் அமைக்கப்படலாயின.
ஒரு தொழிற்சமாசமானது அரசாங்கத்திற் பதியப் படுதல் வேண்டும் என்ற கட்டாயவிதியை 1935-ம் ஆண்டினது தொழிற் சமா சக்கட்டளைச் சட்டம் ஏற்படுத்தியது. தொழிற் சமா சங்களைப் பதிவு செய்யும் கருமத்துக்கு தொழிற் சமாசப் பதிவாளர்? பொறுப்பாளியாவர். இவரே தொழில் விவகார அதிகாரி யுமாவர். தொழில் முயற்சிக்கிணங்கத் தொழிற் சமாசங்களை வகுத்துக் காட்டுவதால் அவற்றின் செறிவு நன்கு புலப்படும். 1. தோட்ட விவசாயத்
தொழில்கள் 10 சமா சங்கள் 95,995 அங்கத்தர் 2. கைத்தொழில்கள் 32 9 l 6,419 p is 3. போக்குவரத்துச்
சேவைகள் 12 9 2, 688 4. லிகிதர் சேவைகள் 7 9 9 4,800 9 p. 5. உத்தியோக சேவைகள் 8 9 ዎ 3,969 6. பொதுச் சேவைகள் 13 is 5,456
தொழிற்சமா சங்களில் உள்ள அங்கத்தவர்களில் மிகப் பெரும்பான்மையினர் தோட்டப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது மேலே காட்டிய சூசியில் இருந்து பெறப்படும். இவர்களில் அநேகர் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்யும் இந்தியத் தொழிலாளரே யாவர். அடுத்ததாகவுள்ள தொழிலாளர் தொகுதி தோட்டத் தொழில்களுடன் மறை முகத்தொடர்பு கொண்டுள்ளதாகும். இலங்கையிலே கைத் தொழில் என்று சொல்லக்கூடிய பெருங் கைத் தொழில் இல்லை. இப்போதுள்ள தொழில்கள் தோட்டவிளைபொருள்களைப் பதனிடுதல், இயந்திரங்களைப் பழுதுபார்த்தல் பேணுதல், என்பவற்றுடன் நெற்குற்றல் போன்ற சிறு கைத்தொழில் களையும் அடக்கும்.
1946-ம் ஆண்டிலே 181, 774 அங்கத்தவர்களைக்கொண்ட வேலையாட்களின் தொழிற்சமா சங்கள் இருந்தன. சங்க
l. Trade Unions’ Ordinance. 2. Registrar, Trade Unions. 3. Commissioner of Labour.

Page 27
44 சங்கங்களும் நிலையங்களும்
ரீதியாக அமைக்கப்படக்கூடிய தொழிலாளர்களில் 100க்கு 12 விகிதமானவர்களே இவர்கள். 1950-ம் ஆண்டிலே 127, 809 அங்கத்தவர்களைக் கொண்ட வேலையாட்களின் தொழிற் சமாசங்கள் இருந்தன. சங்கரீதியாக அமைக்கப் படக்கூடிய தொழிலாளர்களில் 100க்கு 8.5 விகிதமானவர் களே இவர்கள். ஆகவே, தொழிற் சமாச அங்கத்தவர்களின் தொகை அருகிக்கொண்டு வந்திருக்கிறது.
கைத்தொழிற் பிணக்குகளைத் தீர்த்துவைப்பதற்குரிய வழிவகைகள் 1931-ம் ஆண்டின் கைத்தொழிற் பிணக்குக் கட்டளைச் சட்டத்தினல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனல் தொழிற்சமா சங்களின் எண்ணிக்கை அதிகரிக்க பல தொழில்களையுமடக்கிய சட்டம் வேண்டியதாயிற்று. ஆகவே 1950-ம் ஆண்டில் கைத் தொழிற் பிணக்குச் சட்டம் நிறை வேற்றப்பட்டது. பிணக்குகளைத் தீர்ப்பதில் நாலுவித கட்டங் களைச் அச்சட்டம் ஏற்பாடு செய்திருக்கிறது.
1. பிணக்கை தொழிலாளிகளும் முதலாளிகளும் உடன் பட்டுத் தீர்த்துக்கொள்ளலாம். அப்படியாகச் செய் யப்பட்ட உடன்படிக்கையை தொழிற் கரும அமைச் சருக்கு அறிவிக்க அவர் அதனை அரசாங்க வர்த்த மானிப் பத்திரிகையில்? பிரசுரிக்க ஒழுங்குசெய்வார். 2. இப்படியான ஓர் உடன்பாடு ஏற்படாதிருக்குமிடத்து தொழிற்கருமப்பகுதியானது சமரசவழியில் குறித்த பிணக்கைத் தீர்க்க முயற்சிக்கும். அப்படியான முயற்சியின் பயணுக ஏற்படும் முடிவு விதிகள் ஒரு விஞ்ஞாபனத்தில் அடக்கப்படும். முடிவுக்குச் சம் மதம் அளித்த கட்சியினரை இவ்விஞ்ஞாபனம் கட்டுப்படுத்தும். 3. தொழிற் கருமப்பகுதி ஒரு பிணக்கைத் தீர்க்கத்தவறு மிடத்து, அதுபற்றி நடுத்தீர்ப்புக் கூறுதற்கு, தொழிற் கரும அதிகாரியால் அப்பிணக்கு ஒரு மாவட்ட நீதிப திக்கு விடப்படும். அந்த நீதிபதி செய்யும் முடிவு கட்டுப்படுத்துவதாகும். ஆனல் ஒரு முதலாளியோ தொழிலாளியோ எழுத்து மூலமான அறிவித்தல் கொடுத்து இந்த நடுத்தீர்ப்பை நிராகரிக்கலாம். 4. இம் முறைகள் எல்லாம் பிரதிகூலம் அடையுமிடத்து பிணக்கைக் கைத்தொழில் நீதிமன்றத்துக்கு விட லாம்; இம் மன்றத்தில், மகாதேசாதிபதியால் நியமிக் கப்பட்ட ஒரு சிலர் நீதிபதிகளாக இருப்பர். அம் l. Industrial Disputes Ordinance 1931.
2. Government Gazette. 3. Industrial Court.

சங்கங்களும் நிலையங்களும் 45
மன்றத்தின் தீர்ப்பும் அபிப்பிராயமும் இறுதி யானவை. அதன் தீர்ப்பை ஆட்சேபித்து தொழிற் கரும அமைச்சருக்கு மனுச் (அப்பீல்) செய்யலாம். அவர், குறித்த மன்றம் தனது தீர்ப்பைப் புனரா லோசனை செய்யும் படி அதற்கு விண்ணப்பிக்க வேண்டும். இலங்கையிலே விவசாயம், சுகாதாரம், கல்வி என்பன
சம்பந்தமான அமைப்புக்கள் எந்த மனித சமூகமாவது நன்கு இயங்கி முன்னேற வேண்டுமானல் குறித்த சில இன்றியமையாச் சாதனங்கள் அதற்கு இருக்கவேண்டு மென்பதை நீங்கள் ஏற்கெனவே படித்திருக்கிறீர்கள். மக்களுக்கு முதலாவது இன்றியமையாச் சாதனம் உணவு என்க. உணவு இல்லையேல் மக்கள் உயிர் வாழ முடியாது. இரண்டாவதாக சமூகத்துக்கு வேண்டியது ஆரோக்கியம். ஆரோக்கியம் இல்லையேல் ஓர் சமூகம் நோய் பிடித்து அழிந்தொழிந்துவிடும். இதற்கடுத்ததாக கல்வி இன்றியமையாதது. ஓர் சமூகம் தான் அறிந்தவற்றைத் தன் கான்முனைகளுக்குக் கற்பித்து அவர்களை முன்னேறச் செய்வதற்குக் கல்வி என்பது அத்தியாவசியகம் தேவை. மேலே சொல்லிய உணவு, ஆரோக்கியம், கல்வி என்னும் மூன்று பிரதான விடயங்களையும் இனி ஆராய்வோம்.
ஒரு காலத்திலே இலங்கை மக்கள் தமக்கு வேண்டிய உணவுப்பொருள்கள் அனைத்தையும் தாமே விளைவித்து வந்த னர். பூர்வ காலத்திலே இத்தீவின் வெப்பவலையப் பிரதேசங் களில் நெல் விளைவிப்பதற்கு வேண்டிய தண்ணிர்க் குளங் களும், பச்சைப்பசேல் என்று விளங்கிய செழிப்புமிக்க கிராமங்களும் செறிந்திருந்தன. விவசாய மே மக்களின் பிரதான தொழிலாக இருந்தது. ஒவ்வொரு கிராமமும் தனக்கு வேண்டிய சகல உணவுப் பொருள்களையும் விளைவித்துத் தனக்குத் தேவையான சகல பொருள்களையும் தானே ஆக்கி, உணவு உடை ஆதியா ம் விடயங்களில் பிறர் கையை எதிர்பாராது தற்பாது காப்புடையதாக விளங்கியது. மக்களுக்குத் தேவையான சகல பொருள்களும் கிராமத்தி லேயே கிடைத்ததால், கிராம மக்கள் மற்றவர்களுடன் நெருங்கிய தொடர்போ, வியாபாரமோ வைத்துக்கொள்ள ஏது ஏற்படவில்லை.
பண்டைக்காலத்தில் இருந்த இந்த விவசாயச் சமூகம் பல்வேறு காரணங்களினல் படிப்படியாகச் சிதைந்து அழிந் தொழிந்தது. அந்நியர் படையெடுப்பினல் இங்கேயிருந்த குளங்கள் தகர்ந்து தூர்ந்துபோயின. அதன் பயனகத் தண் னிர்ப் பஞ்சம் ஏற்பட்டுக் கழனிகள் வற்றிக் காய்ந்தன. மலே

Page 28
46 சங்கங்களும் நிலையங்களும்
ரியா என்னும் கொடிய காட்டுச்சுரம் தோன்றி வெப்ப வலையப் பகுதிகளிற் பரவி அங்கிருந்த மக்களிற் பலரைக் கொன்று, கிராமங்களையும் இருந்த இடம் தெரியாமல் படிப்படியாக நாசமாக்கியது. இந்தக் காரணங்களினல், சிங்கள மன்னர் தங்கள் தொன்மையான இருப்பிடங்களைத் துறந்து, வித்தி யாசமான சுவாத்திய நிலையுள்ள மலைநாட்டுப் பகுதிகளுக்கோ தென்மேற்குப் பகுதிகளுக்கோ போயினர். காலகதியில் வெப்பவலையத்துக் கழனிகள் இருந்த இடங்களில் எல்லாம் அடவிகள் சூழ்ந்து அவற்றை மறைத்து விட்டன. இன்று இந்த வெப்பவலையப் பகுதியிலே மக்கள் செறிவு மிகமிகக் குறைவு. w
வெப்பவலையப் பிரதேசங்கள் இவ்வாறு காடடர்ந்த நில மாக, இலங்கையின் மத்தியபகுதியும் தென்மேற்குப் பகுதி யும் அபிவிருத்தியடைந்தன. அங்கே தேடுவாரற்றுக்கிடந்த இடங்கள் யாவும் பெரும் பயன்றரும் தோட்டங்களாயின. போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் முதலாம் ஐரோப்பியர் இங்கே வந்து ஐரோப்பிய நாடுகளில் விற்பனையாகக் கூடிய பொருள் களை விளைவிப்பதில் ஊக்கம் செலுத்தினர். இலங்கையின் மேற்குப் பகுதியில் கறுவாச் செய்கை பிரதான தொழிலாக ஏற்பட்டதற்கு இவர்களது முயற்சியே காரணமாகும். பிரித் தானியரின் பரிபாலன காலத்தில் கோப்பியும், அதன் பின்னர் தேயிலை, ரப்பர், தென்னை என்பனவும் வருவாய்க்கேதுவான விற்பனைப் பொருள்களாயின. ஆகவே விவசாயத்தில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. உணவுப்பயிர்களுக்குப் பதிலாகப் பணப் பெருக்கத்துக்கான தோட்டப்பயிர்கள் விளைவிப்பதுதான் விவசா யத்தின் நோக்கமெனக் கருதப்பட்டது. அதன் பயனக எம் நாட்டு மக்கள் தம் அன்ரு டச் சீவனுேபாயத்தின் பொருட்டு சிறுசிறு காணிகளில் நெல் விளைவித்த பழையமுறை அகல அந்த இடத்தில் பாரிய தோட்டங்கள் உற்பத்தியாயின. இந்த மாற்றமானது தொன்றுதொட்டு விவசாயத்தை நம்பி யிருந்த குடியானவனது வாழ்க்கையை மிகவும் பாதித்து அவனுக்குப் பங்கம் விளைத்தது. இதுவரை தனது நிலம்புலத் துடன் திருப்திப்பட்டு வாழ்க்கையை நிம்மதியுடன் நடாத்திய குடியானவனுக்கு நாகரிக மோகம் பிடித்தது. நவ நாகரிக வாழ்க்கையிலே தானும் ஈடுபடவேண்டும் என்று அவன் விழைந் தான். அதற்கு அவனுக்குப் பணம் அன்ருடம் தேவையாக இருந்தது. அதனை அவனது நிலம் புலம் கொடுக்கமாட்டாது; நவமாகத் தோன்றிய தோட்டத் தொழில்களும் ஏனைய தொழில்களும்தான் கொடுக்கும். எனவே அவன் தனக்கு அன்ருடம் வேண்டிய உரொக்கப் பணத்தை உழைப்பதன் பொருட்டு தனது நிலம் புலங்களையும் கிராமத்தையும் விடுத்

சங்கங்களும் நிலையங்களும் 47
துப் பட்டணப் பக்கங்களை நாடிச் சென்ரு ன். அவனது வாழ்க்கையின் சீவாதாரத் தொழிலாக விருந்த நெல் விவ சாயம் தனது நிலையை இழந்தது. அரசாங்கம் தனது வரு வாயைக் கருதிப் புதிதாகத் தோன்றிய தொழில்களிலேயே தன் கவனம் முழுவதையும் செலுத்தி அவற்றை விருத்தியாக்க முனைந்தது. இந்தத் தொழில்களினலேயே அரசாங்கம் அக் காலத்திலே தனது வருமானத்தின் ஒரு பெரும் பகுதியைப் பெற்றது. நவமான தொழில்கள் விருத்தியானமையினல் அக் காலத்திலே பணம் என்பது எவ்வளவுக்கும் இருந்தது. வேண் டிய அரிசியை மலிந்த விலையில் புற நாடுகளில் இருந்து பெற வசதிகளும் இருந்தன. எனவே, இங்கே விவசாயத் தொழில் ஊதிபம் தராததாக வர, குடியானவர்கள் தமது சிறிய நிலம் புலங்களைக் கைவிட்டார்கள். உலக வல்லரசுகளிடையே யுத்தங்கள் மூண்டு அரிசிவரத்துத் தடைப்படும் காலங்களில் தான், உணவுப்பயிர்களை விளைவிக்கவேண்டும் என்னும் ஆர்வம் மக்களிடையே பிறக்கிறது. ஆகவே, இவ்விடயமாக யுத்தங் களும் எமக்கு நல்ல படிப்பினையைத் தரவல்ல சாதனங்களா கும். 1929-ம் ஆண்டிலே ஏற்பட்ட பொருளாதார நெருக் கடியும் வர்த்தக மந்தமும் மக்களது கண்ணைத்திறந்து உணவு, உடை என்னும் விடயங்களில் தற்பாதுகாப்பு உடையவர்களா யிருக்கவேண்டியதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் தெருட்டின. தேயிலை, ரப்பர், தேங்காய் என்னும் முப் பொருள்களும் அந்நிய நாடுகளில் விற்பனையாவதில்தான் இந்நாட்டின் செல்வவிருத்தி இன்றுவரை தங்கியிருக்கிறது. ஆனல் இப்பொருள்களை அந்நாடுகளுக்கு நாம் மாத்திரம் விற்பதில்லை ; எம்மைப்போல இப்பொருள்களை விளைவித்துப் புற நாடுகளில் விற்பனை செய்யும் எத்தனையோ நாடுகள் உள. ரப்பர் தேங்காய் என்னும் பொருள்களது விற்பனை விடயத்தில் அத்தேசங்களுக்கு எம்மிலும் பார்க்கக்கூடிய சில செளகரியங்களும் உண்டு. ஆகவே இப்பொருள்கள் உலகிலே விற்பனையாவதில் ஏதும் குறைவு ஏற்பட்டால் நாம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படுவோம். அப்படியான ஓர் கஷ்ட காலம் வந்தால் இம்மூன்று பொருள்களையும் காலத்துக்கேற்ற படி ஒதுக்கிவிட்டு, வேறும் பொருள்களை விளைவித்து உலகிலே மானமாக விற்கலாம் என்ருலோ அதற்கும் எம்மிடம் அத் தகைய பொருள்கள் இல்லை. தேயிலை, ரப்பர், தேங்காய் என்னும் பொருள்களைப் புற நாடுகளுக்கு அனுப்பி விற்பனை செய்வதாற் கிடைக்கும் வருமானம் குறையும் காலத்திலே, நாம் இறக்குமதியாக்கும் உணவுப்பொருள்களுக்குப் பணம் இறுப்பதற்கான சக்தியும் எமக்குக் குறைந்துபோகும். இப் படியான ஒர் நிலைமை ஏற்படுங்கால் நாட்டிலே சொல்

Page 29
48 சங்கங்களும் நிலையங்களும்
லொணுக் கஷ்டங்கள் ஏற்படும். ஆனல், எமக்குத் தேவையான உணவுப் பொருள்களை நாம் எம் நாட்டில் இப்போதே விளை வித்துக் கொள்ளுவோமேயானல், எங்கள் புற நாட்டு வர்த் தகத்துக்கு எது நிகழ்ந்தாலும் அது எங்கள் உணவு நிலை மையைப் பாதிக்கமாட்டாது. எதுதான் நிகழ்ந்தாலும் எமது நாட்டிலேயே போதிய உணவுப் பொருள்கள் எமக்குக் கிடைக் க்கும் அல்லவா ?
எமக்குத் தேவையான உணவுப் பொருள்களை-அவற்றி லும் விசேடமாக அரிசியை-எமது நாட்டிலேயே விளைவித் துக்கொள்ள இப்போது முயற்சிகள் செய்யப்படுகின்றன. இம் முயற்சிகளுக்கெல்லாம் நாம் மேலே எடுத்துக்காட்டிய விடயங்களும் காரணங்களாம். நெல் விளைவுடன் மாத்திரம் நாம் நிற்காமல் பருப்புவகைகள், அவரை வகைகளையும் பயி ரிட நாம் முயற்சிசெய்தல் வேண்டும். இவை புஷ்டிதரும் சிறந்த உணவுகள், உணவு விடயத்தில் நாம் தற்பாதுகாப் புடையோராக இருந்த பழைய காலத்திலே இப்பருப்புவகை களையும் நாம் அபரிமிதமாய் விளைவித்து வந்தோம். குரக்கன், சோழம், வரகு, சாமை என்னும் தானியங்களையும் எண்ணெய் தரும், எள், நிலக்கடலை என்பவற்றையும் நாம் அதிகம் விளை வித்து உபயோகிக்கவேண்டும். உணவுப் பயிர் களை விட, விவசாயிக்கு ஊதிபம் தரக்கூடிய பருத்திச் செய்கை, பழச் செய்கை என்பவற்றிலும் அவன் ஈடுபடல் வேண்டும். இங்கே பருத்தி நன்கு உண்டாகும். இன்னும், தோடை, எலுமிச்சை, முந்திரிகை என்பனவும் பயிரிடப்படவேண்டும். அரசாங்க மும் இப்பயிர்களை அபிவிருத்தி செய்வது பற்றி இப்போது ஆராய்ச்சிகள் நடாத்தி வருகிறது. நாமும் இப்பயிர்களை உண் டாக்கும் விடயத்தில் கூடிய கவனம் செலுத்தவேண்டும்.
விவசாய விடயமாக இப்போதுள்ள பிரச்சினை இதுதான் ; அதாவது :-உணவுப் பயிர்ச் செய் கையையும் அதற்கடுத்த தாகப் பணப்பெருக்கத்துக்கான பயிர்ச் செய்கையையும் அபிவிருத்தி செய்தற்கான வழிவகைகளைப் கண்டறிதலே என்க. இத்துடன் பால், இறைச்சி என்பவற்றைப் பெறுதற் காகக் கால்நடைகளையும் மக்கள் வளர்ப்பதற்கு முயற்சி செய்தல் வேண்டும். நல்ல புஷ்டியான உணவில்லாத எந்தச் சமூகமும் சுகத்துடன் வாழமுடியாது. எனவே மேலே காட்டி யனவற்றைச் செய்தல் இன்றியமையாததாகின்றது. நாட்டு மக்கள் அனைவர்க்கும் இன்றியமையாததாக இருக்கும் இப் பணிகளைத் தனி மனிதரிடம் விடாது, அவர்களின் தயவில் தங்கியிருக்காது, அரசாங்கமே ஏற்று நடாத்தவேண் டும் என்று கூறுவாரும் உளர். மக்கள் அனைவர்க்கும் நன்மை தரும் முயற்சிகளை ஊக்குவித்தல் அரசாங்கத்தின் கடமை

சங்கங்களும் நிலையங்களும் 49
என்பது மெய்: ஆனல் அம்முயற்சிகளை அரசாங்கமானது தானே பொறுப்பேற்று நடாத்த வேண்டுமா என்பது விவா தத்துக்கிடமானது.
இலங்கையிலே விவசாயத்துக்குச் துணைச்செய்யும் சாத னங்கள் அல்லது அமைப்புக்கள் இரண்டு உள. ஒன்று அரசாங் கம் மற்றது தனிப்பட்டவர்கள் : இங்கே நாம் அரசாங்க அமைப்புக்களைப் பற்றியே ஆராய்கின்ருேமாதலினல், முதலில் அவற்றை அறிந்துகொண்டு, ஏனைய அமைப்புக்களைப் பின்னர் ஆராய்வோம்.
இலங்கையிலே விவசாய விடயமான கொள்கையினை உரு வாக்கும் பொறுப்பு பாராளுமன்றத்துக்குரியதாகும். சனப் பிரதிநிதிகளைக்கொண்ட பாராளுமன்றம் அங்கீகரிக்கும் கொள்கையை அரசாங்கத்தின் விவசாயப்பகுதி அநுட்டானத் துக்குக் கொண்டுவரும். விவசாயப்பகுதியின் பேரதிகாரியாக விவசாய அமைச்சர் இருக்கிருர், விவசாயப் பகுதியைவிட நீர்ப் பாசனப்பகுதி, அளவைப்பகுதி வனபரிபாலனப்பகுதி என்ப வையும் இவ்வமைச்சரின் அதிகாரத்தில் உள. கடல் தொழிற் பகுதியும் இவரின் அதிகாரத்தில் இருக்க வேண்டியதே முறை. ஆனல் இப்போது அப்பகுதி வேருேர் அமைச்சரின் பரிபாலனத்தில் இருக்கிறது
விவசாயப்பகுதியின் தலைமைக்காரியாலயம் இப்போது பேராதனையில் இருக்கிறது. ஆனல் அது விரைவில் அநுராத புரத்துக் கணித்தாகவுள்ள மகா இலுப்பலம என்னும் ஊருக்கு அகற்றப்பட இருக்கிறது. விவசாயப்பகுதிக் கதிபதியாக ஒருவர் இருக்கிருர். அவருக்குதவியாக, அவரின் கீழ் பல தகுதிவாய்ந்த, திறமையான உத்தியோகத்தர் பலர் உளர்.
1. விவசாயப்பகுதியின்? நோக்கங்கள்
இலங்கை மக்களுக்குப் பயன்றரக்கூடிய பயிர்கள் யாவை? அவற்றை எவ்வாறு பயிரிடலாம் ? என்னும் இன்னுேரன்ன வற்றை ஆராய்ந்து அறிதல் விவசாயப்பகுதியின் பிரதான லட்சியமாகும். அதற்கு ஒர் மத்திய ஆராய்ச்சி நிலையம் உண்டு. அங்கே இலங்கையிற் காணப்படும் பல்வேறு தரை களின் தன்மைகளைப் பாகுபடுத்தி ஆராய்தல், பயிர்களுக்கேற் படும் பலவித நோய்களின் தன்மைகளை ஆராய்தல், இலங்கை யிலே நவமாக என்ன என்ன விதமான பயிர்களை உண்டாக்க லாம் என்பதைப் பரீட்சா மூலம் அறிதல் என்னும் இன்னே ரன்ன கருமங்கள் நடைபெறும். இந்நாட்டு இளைஞர்களுக்கு விவசாயத் தொழிலில் தக்க பயிற்சி அளிப்பதற்கு ஒர் பயிற்சிக் கழகமும் அங்கேயுண்டு
1. Department of Fisheries.
2. Department of Agriculture- áFC56f95Ü LUGUÉS) as LP4iš GM357Ági) பகுதி என்றும் சொல்வர்.

Page 30
qımızasságú gitasy-G asgï
~ooOOOOoqı mı ? 10 Uso
~ooOOOOo
/0.
gęņuffÈ sw-wisgogismure
Ꭽ1 .
qıłnțeșm LúfĚ, qıfỆgĒĢĒ9)nışsınn quos rus uqooyousus;11&srts9€. ‘ŌŌŌŌŌıłeųouo ohņĞơi gợi sữrıē,
ܟܗ --
18.
Hızıgıųưsuo “qytûqîmgybī£)
/ I • ! lysosoɛ ‘HỊusreos@gı ‘uyoqoopmūeises į76. I
quosasun yn ‘ē#ņusfè '(5@yırı ‘ąșeșīīīīīīīīņā
6ț7.,
9ỵ{ s IH 1,9omun@ łīlī£9)
E8 S6.96
EOS S6096
ԵՏ Ե 0Տ6!-676 }
|- Z - o - 丈王 的工 9 - Z - 8 - 6 - 0 主
二王
Sջ: }; 6*76|-8}76]
SAL• 7 . 8ʻy6 !TA76 |
Z | - {|- 寸1主
S i 1ųoorņırı@tuÈT
 
 
 
 
 
 

சங்கங்களும் நிலையங்களும் 5 I
விவசாயப்பகுதி. தனக்குரிய கருமங்களைச் சிறந்த வகையில் ஆற்றுதற்காக அது பல்வேறு பிரிவுகளாக அமைக்கப்பட் டிருக்கிறது. அவை வடபிரிவு, தென் பிரிவு, கீழ்ப்பிரிவு, மத்திய பிரிவு, தென்மேற்குப் பிரிவு என்பனவாம். ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொரு பிரிவதிகாரியின் கீழ் உள்ளது. இப்பிரிவதிகாரி களுக்கு உதவிசெய்யப் பல உத்தியோகத்தர் இருப்பர். இலங் கையின் உணவு அபிவிருத்தித் திட்டத்திலே நெல்விளைவுக்குத் தான் பிரதான இடம் இப்போது அளிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே நெல் விளைவை அபிவிருத்தி செய்தற்கென ஒர் அதி காரி விசேடமாக இங்கே நியமிக்கப்பட்டிருக்கிருர். அவர் நெல் அபிவிருத்தி அதிகாரி எனப்படுவர். புதிய இன நெல் இங்கே விளைவிக்கப்பட முடியுமா ? இப்போதுள்ள நெல் விளைவை எவ்வாறு அதிகரிக்கலாம்? நெற்பயிர்களுக்கு எத் தகைய பசளைகள் சிறந்தன ? விவசாய முறைகளை எவ்வாறு அமைக்கலாம் ? என்னும் இன்னுேரன்னவற்றை அறிதற்கான ஆராய்ச்சிகளுக்கு இந் நெல் அபிவிருத்தி அதிகாரி பொறுப் பாளியாக விருப்பார். நெல் அபிவிருத்தி ஆராய்ச்சிக்காகப் பல இடங்கள் இந்நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவற் றில் பின்வரும் ஊர்களில் உள்ளவை முக்கியமானவை :- திஸ் மகாரு மை, அம்பலாந்தோட்டை, பல துவ, பேராதனை.
பல கமங்களில் கால்நடைகள் வளர்ப்பது, அவற்றின் இனம் பெருக்குவதுபற்றியும் ஆராய்ச்சிகள் நடாத்தப்படு கின்றன. பேராதனையிலே கால்நடை வளர்ப்புப் பயிற்சி நிலையம் ஒன்றுண்டு. வீட்டு மிருகங்களான ஆடு மாடு எருமை முதலியவற்றை வளர்ப்பதில் விவசாய மாணவர்களுக்கு இங்கே பயிற்சி அளிக்கப்படுகிறது. மிருகவளர்ப்புப் பயிற்சி நிலை பங்கள் முருங்கன், அக்கரைப்பற்று (இங்கே ஆடு வளர்ப்பு, வீட்டுப்பறவைகள் வளர்ப்பு என்பன சம்பந்தமான பயிற்சி அளிக்கப்படுகிறது) என்னும் இடங்களிலும் அம்பெயுஸ், பஸ் யாலை, நிக்காவறற்றிய, பொலன்னருவை, போபத்தலாவை என்னும் இடங்களிலும் உண்டு. இலங்கைக்கு வேண்டிய பாலைத்தரும் விசேட இனக்கால்நடைகள் யாவை? இங்கே உள்ள கால்நடைகளையும், கோழி வாத்து முதலாம் வீட்டுப் பறவைகளையும் கூடிய பயன் அளிக்கத்தக்கதாக எவ்வாறு வளர்க்கலாம் ? கால்நடைகளுக்கு வேண்டிய புல்லினங்களை எவ்வாறு அபிவிருத்தி செய்யலாம் ? என்னும் இன்ன பிற விடயங்களில் இந்தப் பண்ணைகளில் தக்க ஆராய்ச்சிகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. மேலும், வீட்டு மிருகங்களுக் கும் வீட்டுப் பறவைகளுக்கும் வரும் நோய்கள், அவை வரா மல் தடுத்தல், வந்த பின் குணமாக்கல் என்னும் விடயங்களும்
1. Paddy Officer.

Page 31
52 சங்கங்களும் நிலையங்களும்
கால்நடைகளுக்கு வேண்டிய புல்லை உலரவைத்து தேவை யான நேரம் அவற்றுக்கு அதனை வைக்கோல் போல இடுவதற்கு என்ன என்ன முறைகளை அநுட்டிக்கவேண்டும் என்பதும் இங்கே ஆராயப்பட்டு வருகிறது. வெப்பவலையப் பிரதேசங் களில் உள்ள விவசாயிகளுக்கு இது ஒர் முக்கியமான விடய மாகும். அங்கே வெயிற் காலத்திலே தரைகள் எல்லாம் பசுமை என்பது இல்லாது காய்ந்து தரிசு பற்றிக் கிடக்கும் : கால்நடைகள் மேய்வதற்குப் புல் நிலங்கள் இல்லாதுபோகும். புல்லை ஏற்கெனவே சேகரித்து வைக்கோலைப்போல வைத்திருந் தால் இப்படியான வறட்சிக் காலத்திலே விவசாயிகளுக்கு நன்மை யேற்படுமன்ருே ?
விவசாயப்பகுதி இப்போது மாத்திர மன்றி, எப்போதுமே இந்நாட்டின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒர் பகுதியாக விளங் கும் என்பதற்கு ஐயம் இல்லை. பூமிதிருத்தி விவசாயம் செய்வதுதான் எமக்குச் சிறந்த, தகுதியான தொழிலாக என்றும் இருக்கும். விவசாயத்துக்குப் பதிலாக வேறேதும் தொழிலில் ஈடுபடுதற்கான மூலபலம் எமக்கு அதிகம் இல்லை. விவசாயத்துக்கேற்ற மூல பலத்தைத் தான் இயற்கை அன்னை எமக்குத் தந்திருக்கிருள். நாம் பயன்படுத்த வேண்டிய ஒரு கோடி இருபது லட்சம் ஏக்கர் பூமி வெப்ப வலையப் பிரதேசத் திலேயுண்டு.
விவசாயப்பகுதி ஆராய்ந்து தீர்க்கவேண்டிய பிரச்சினைகள் பல உள. வேளாண்மைக்கான நிலத்தை ஆராய்தல், அதன் வளத்தை யறிதல், அங்கே என்ன விதமான பயிர்களைப் பயிரிடவேண்டும் என்பதைத் தெரிதல், குடியானவர்களின் செலவுக்கேற்ற வருவாய் தரக்கூடிய விதத்தில் அவர்களுக் குரிய விவசாயக் காணிகள் எப்படி வகுக்கப்படல் வேண்டும் என்பதை நிர்ணயித்தல் என்பன இப்பிரச்சினைகளிற் சிலவாம். வீட்டுமிருக வளர்ப்பினை ஊக்குதல், புல் நிலங்களை விருத்தி செய்தல், கால்நடைகளுக்கு வேண்டிய புல் இனங்களை உண் டாக்கல் என்பன வேறு சில. வனபரிபாலனம் வேருெ ன்று. இப்பிரச்சினைகளைச் சரிவரத் தீர்ப்பதனல் நாம் எம் நாட்டில் உள்ள விளைநிலங்களை முன்னரிலும் பார்க்கச் சிறந்தவகையிற் பண்படுத்தி அதன் பயனுக இந்நாட்டு மச்கள் வயிருர உண்டு, நல்லாடை அணிந்து நல்லிருப்பிடங்களில் வசிக்க முடியும். மலை நாட்டுப் பகுதிகளிலே யுள்ள விவசாயப் பிரச்சினைகள் வெப்பவலையத்துக்கான பிரச்சினையிலும் பார்க்க வித்தியாச மானவை. மலைகளின் ஈரலிப்பு வலையத்தைக் கொண்டுள்ள மேற்குப்பகுதியிலே தேயிலையே பிரதான விளைபயிராகும். இங்கே தனிமனிதரதும் வர்த்தகச் சமுதாயங்களதும் தோட்டங்கள் நன்கு அமைக்கப்பட்டு ஒழுங்காக நடைபெறு

சங்கங்களும் நிலையங்களும் 53
கின்றன. தேயிலை உற்பத்தியை எவ்வாறு அதிகரிக்கலாம் என்பது பற்றிய ஆராய்ச்சியை இத்தொழிலில் ஈடுபட்டுள்ள தனிமனிதரும் சமுதாயங்களும் அரசாங்கமும் செய்துவரு கின்றன. மலைகளின் கிழக்குப்பாகங்களிலுள்ள வெப்பப் பகுதிகள் பல காலமாகப் புறக்கணிக்கப்பட்டவையாகும். அங்கே மழை வீழ்ச்சி குறைவாக இருப்பதால் (ஒரு ஆண்டில் 50-75 அங்குல மழை வீழ்ச்சிதான் அங்கே உண்டு) பயிர் களுக்கு நீர்ப்பாய்ச்சும் பிரச்சினை பெரிதாகவுளது. அப்பகுதி யிலேயுள்ள நிலம் கரடுமுரடானது : ஒழுங்கானதல்ல; மேடும் பள்ளமுமாயது. இதன் பயனுக நெற் செய்கையில் ஈடுபடுதல் அங்கே கஷ்டம் என்க. அங்கே விசாலமான பல மேட்டு நிலங்கள் உண்டு. அவற்றைப் பற்றனைகள் என்று சிங்களத்திற் சொல்லுவர். இப்பற்ருனைகளை எவ்வாறு பயன் படுத்தலாம் என்பதை இதுவரை நாம் அறிந்து கொள்ளவில்லை. ஊவா மாகாணத்தின் சில பகுதிகளில் உள்ள பற்ருனைகளுக்கு ஆவணி மாதத்தில் தீயிட்டுக் கொழுத்தி அந்த இடங்களிலே சேனைச் செய்கையில் மக்கள் ஈடுபடுவர். அவர்கள் ஆவணி மாதத்தில் விதைக்கும் தானியங்கள் முளைத்துச் சிறு பயிராக, புராட்டா தியிற் பெய்யும் மழை அப்பயிர்களுக்கு வாய்ப்பாகும். மற்றும் இடங்களிலே பற்ருனைகளில் உள்ள மன்னப் புல்லுக்கு நெருப்பு வைத்துவிடுவர். மழை பெய்ய, எரிந்த புற்கற்றை யடியில் மெல்லிய இளம் புல்லுமுளைத்து வளர அதனை அரிந்து கால்நடைகளுக்குத் தீனியாக உபயோகிப்பர். பற்ருனை நிலத்தை நன்கு பயன்ற ரத்தக்க விதத்தில் எவ்வாறு உப யோகிக்கலாம் என்பது இன்னும் அறியப்படவில்லை. இனித் தான் அதுபற்றிய ஓர் முடிவு காணவேண்டும். எம் நாட்டு விவசாயத்துறையில் ஈடுபட்டுள்ளளோர் தீர்க்கவேண்டிய இன் னேர் பிரச்சினை இது.
ஈரலிப்பு வலையத்திலே தென்னை, ரப்பர் முதலாம் தோட் டப்பயிர்கள் செழித்து வளருகின்றன. கிளை விடாது உயர்ந்து ஒலை விடும் தென்னை, கமுகு, கித்துல் முதலாம் மரங்களுக்கும் பட்டை தரும் மரங்களுக்கும் (கறுவா, புல்லெண்ணெய்ப்பயிர் போன்றவை) பால் தரும் மரங்களுக்கும் (ரப்பர் போன்றவை) இந்த வலையம் உகந்தது. சப்பிரகமுவா மாகாணத்திலும் தென் மாகாணத்து வடபகுதியிலும் கிழக்குப் பகுதியிலும் இன்னும் எவ்வளவோ நிலங்கள் பண்படுத்தப்படாமற் கிடக் கின்றன. இங்கே பலகை, தளபாடங்கள் முதலியனவற்றுக்கு வேண்டிய மரம் தருதருக்கள் சிலவும் பயன்றராச் செடிகள் பலவும் அடர்ந்து கிடக்கின்றன. இந்தக் காடுகளிலேயுள்ள மரங்களை இப்போது பாவிப்பு மரங்களுக்கும் விறகுகளுக்குமே உபயோகிக்கிருேம். இப்படி இக்காடுகளிலிருந்து பயன் பெறு

Page 32
54 சங்கங்களும் நிலையங்களும்
தற்குப் பதிலாக வேறுவிதமாகக் கூடிய பயன்களைப் பெற இவற்றைப் பிரயோசனப் படுத்த முடியுமா ? உபயோகமான மரங்கள் நிரை நிரையாக நன்கு அழகு தரக்கூடிய வனங்க ளாக இவற்றை மாற்ற முடியுமா ? என்னும் பிரச்சினைகளையும் நாம் ஆராயவேண்டும். புற நாடுகளிலேயுள்ள வனங்கள் அவ்வந்நாட்டு மக்களுக்கு அதிக வருவாய் கொடுக்கின்றன. எங்கள் நாட்டில் உள்ள வனங்களையும் நாம் வளமுள்ளன வாக்கி அவற்றிலிருந்து நல்ல வருவாய் பெறலாம்.
எமது முக்கியமான பிரச்சினைகளிற் சிலவற்றை மேலே விபரித்தோம். எம் நாட்டிற் காணப்படும் வளநிலங்களை எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்பதுபற்றி எமக்கெதிரே தோன்றியுள்ள இப்பிரச்சினைகளை நாம் தீர்க்கவேண்டும். நாம் உணவுப் பயிர்களையும் பணப் பெருக்கத்துக்கான பயிர்களையும் விளைவிக்கவேண்டும். தேயிலை, ரப்பர் என்னும் பணப் பெருக்கத்துக்கான பயிர்களைப் பெருந் தோட்டமுறையில் உண்டாக்குதல் பொருத்தமானதுதான். ஆணுல் இச்சந்தர்ப் பத்தில் சிறு சிறு காணிகளுக்குச் சொந்தக்காரர்களான நம் நாட்டுக் குடியானவர்களையும் நடுத்தர விவசாயிகளை யும் பற்றிச் சிந்திக்கவேண்டும். இன்று எம் பாடசாலைகளிலே பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் படித்துவருகிருர்கள். தம் படிப்பை முடித்து அரசாங்க உத்தியோகங்களுக்கோ, உபாத் திமைத் தொழில், வைத்தியத் தொழில், நியாயவாதத் தொழில் என்பவற்றுக்கோ அவர்கள் எல்லாரும் போகமுடி யாது. அவர்கள் எல்லாரும் இப்படியான உத்தியோகங்களி லும் தொழில்களிலும் ஈடுபடுதல் உசிதமுமன்று. விவ சாயத்தை மக்கள் மேற்கொள்ளவேண்டும். அதற்கு அவ் விவசாயத்தை ஊதிபம் தரக்கூடியதாக்க வேண்டும். இப் போது எங்கள் நாட்டிலே வேலையின்மை வர வர அதிகரித்து வருகிறது. இதனைத்தீர்க்கும் மார்க்கங்களை ஆராயவேண்டும். எம் நாட்டில் இருக்கும் பூமி அனைத்தையும் திறமையுடன் பண்படுத்தி, இனிப் பண்படுத்தப் பூமி இல்லை என்ற ஓர் நிலை ஏற்பட்டால் அப்போது எம்மக்கள் வேறேதும் தொழிலில் ஈடுபட நாம் வழிவகை தேடவேண்டும். கைத்தொழில்களால் தான் நாடு கதியடையவேண்டும் என்று சாதிப்பாரும் உளர். கைத்தொழில்கள் பெருகினல் மக்களிற் பலருக்கு வேலை கிடைக்கும், நாட்டுக்கு வருவாய் உண்டாகும் என்று இவர்கள் கூறுகிருர்கள். ஆணுல் இங்கே எமக்கு இயற்கை அன்னை அளித்துள்ள மூலபலங்களை அவதானித்து நோக்குமளவில் இவர்களுடைய சித்தாந்தத்துக்கு ஆதாரமில்லையென்றே கூற வேண்டும். எங்கள் நாட்டிலே மின்சார சக்தி பெறுதற்கான மார்க்கங்கள் உள என்பதும், அம்மின்சார சக்தியைக்கொண்டு

சங்கங்களும் நிலையங்களும் 55
யந்திரக் கைத்தொழில்களை நிறுவலாம், இயக்கலாம் என்பதும் உண்மைதான். ஆனல் மின்சார சக்தி இருந்தால் மாத்திரம் போதாது. கைத்தொழில்களுக்கு இன்றியமையாத பல மூலப் பொருள்களும் வேண்டும். அப்பொருள்கள் ஒரளவுக்குத்தான் இங்கேயுள. கைத் தொழில்களுக்கு வேண்டிய நிலக்கரியோ, மண்ணெண்ணெய், பெற்ரோல் என்பனவோ இல்லை. அவை ஒரு சமயம் எம் பூமிக்குள் இருந்தாலும் அவை எங்கே எந்த அளவில் உண்டு என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும் இங்கே பூமிக்குள் காணப்படும் இரும்பு மிகவும் சொற் பம். இக்காலக் கைத்தொழில்களுக்கு இவ்விரும்பு போதாது. ஆகவே, நவீன யந்திரக் கைத்தொழில்களை நிறுவி நடாத்து தல் சுலபமான கருமமல்ல. சீமந்து, சவர்க்காரம் வண்டிச் சிற்களுக்கு வேண்டிய ரப்பர் வளையம் (ரயர்) என்பவற்றை உற்பத்தியாக்கல், தாவர எண்ணெய் வகைகள் தயாரித்தல், பருத்தி நூல் நூற்றல், வீடுகள் கட்டிடங்களுக்கு வேண்டிய செங்கற்கள், ஒடுகள் செய்தல், கயிறு திரித்தல், கயிற்றுப் பொருள்கள் செய்தல், மீன் பதப்படுத்தல் ஆதியாம் தொழில் களை நாம் இங்கே விருத்தி செய்யலாம் என்பதும், இத் தொழில்கள்வாயிலாக இந்நாட்டு மக்களுக்கு இப்பொருள்கள் பற்றிய தேவையைப் பூர்த்தி செய்யமுடியும் என்பதும் உண்மைதான் ஆனல் இவற்றை மிகப்பெரிய கைத்தொழில் களாக்கலாமோ என்பது ஆசங்கைக்கிடமான விடயமாகும். ஆகவே எமக்கு அருந்துணை எங்கள் விவசாய மூலபலம்தான். இம்மூலபலத்தை நாம் பயன்படுத்த வேண்டுமானல் நாம் அதனைப்பற்றித் தக்க ஆராய்ச்சி செய்யவேண்டும். இந்தப் பெரிய பணியைத் தான் விவசாயப்பகுதி செய்து வருகிறது ; எனவே எம் தேசோத்தாரண விடயமாக இவ்விவசாயப் பகுதியின் கடமை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக் கிறது என்று திடமாகக் கூறலாம்.
விவசாயப் பகுதியுடன் இணைபிரியாதிருப்பது நீர்ப்பா சனப் பகுதி. இந்த இரண்டு பகுதிகளுக்குமிடையே ஒர் நெருங்கிய தொடர்புண்டு. எம்நாட்டில் 100-க்கு 72 விகித மான பகுதி வெப்பவலையத்தில் உண்டு. இங்கே மழைவீழ்ச் சியோ மிகவும் குறைவு. அதாவது, அயன எல்லைகட்குட்பட்ட ஓர் தீவுக்குப் பூகோளார்த்தமாக பெய்யவேண்டிய மழை யிலும் பார்க்கக் குறைந்த மழையே இந்த வெப்ப வலையப் பிரதேசங்களிற் பெய்கிறது. அப்படியாகப் பெய்யும் அற்ப மழையும் குறித்த காலத்திற்ருன் பெய்யும். அவ்வாரு கப் பெய்யும் மழை நீர் வெப்பத்தினல் மிகச் சீக்கிரத்தில் ஆவியாகி மேலே சென்றுவிடும். இத்தகைய பிரதேசங்களில் மழை பெய்யுங்காலத்தில் அம்மழை நீர் அவமேபோகாமல்

Page 33
56 சங்கங்களும் நிலையங்களும்
அதனைச் சேகரித்து வைப்பது மிகவும் முக்கியமான ஓர் கருமமாகும். தண்ணிரைத் தேக்கி வைக்காவிட்டால் அங்கே விவசாய முயற்சி வியர்த்தமாகிவிடும். இதனற்றன் இந் நாட்டினையாண்ட பூர்வ மன்னர்கள் பெரிய குளங்களைக் கட்டிவைத்தனர். இந்நூலின் முற்பகுதியில் நாம் எடுத்துக் காட்டியவாறு அக் குளங்கள் அந்நியர் படையெடுப்பின் காரணமாகத் தூர்ந்துவிட்டன. அவற்றை முன்னைய நிலைக் குக் கொண்டுவரும் சீரிய தொண்டில் நீர்ப்பாசனப்பகுதி இப்போது சில காலமாக ஈடுபட்டு, கலவேவ, மின்னேரியா, பராக்கிரம சமுத்திரம், ஏலாஹர, மினிப்பே என்னும் பிர மாண்டமான நீர்த் தேக்கங்களைப் புநருத்தாரணம் செய்து வருகிறது. பூமிதிருத்திப் பயிரிடுவது சம்பந்தமாக நீர்ப் பாசனப்பகுதி வகுத்துள்ள பிரதான திட்டங்களைக் காட்டும் அட்டவணை ஒன்று கீழே தரப்பட்டிருக்கிறது.
1. வள வகங்கைத் திட்டம்: 26,000 ஏக்கருக்கு நீர்ப்பாய்ச்ச 2. கிரிந்தி ஓயாத் 9 y 24,000 s is 9 y 3. ஹெட ஓயாத் y 20,000 ヌ * y 4. கல் ஓயாத் , , 73,000 , , 9 5. உன்னிச்சைத் y 20, 000 is 9 9 6. மினிப்பே எ லாத் , 125,000 , 9 p. 7. பிராக்கிரம
சமுத்திரத் y 9 24,000 s 9 8. மின்னேரியாத் s 10,000 y 9 y 9. எலாஹரத் y 1 0, 000 3 y y 10. மல் வத்த ஓயாத் , , 24,000 9 y y 9 11. கல ஒயாத் is 9 1 0, 000 9 12. தெ துர ஓயாத் y 9 40,000 y
406,000 ஏக்கர் .
புதிய திட்டங்கள் வகுப்பதுடன், ஏற்கெனவே உபயோகத்தி லிருக்கும் குளங்களையும் கால்வாய்களையும் பாதுகாத்துப் பேணும் அன்ரு டத் தொண்டும் நீர்ப்பாசனப் பகுதிக்கு உண்டு. மேலும், சூரிய வெப்பத்தால் நீர் ஆவியாகி அவமே போவதை எவ்வாறு குறைக்கலாம், மண்ணுக்குள் தண்ணிர் அளவுக்கு மிஞ்சி ஊறிச் செல்வதை எப்படித் தடுக்கலாம் என்பதைப் பற்றியும், இலங்கையின் தென்கிழக்குப் பகுதி யிலே தண்ணீர் தேங்கி நிற்காது ஓடச்செய்யும் பிரச்சினை களைப் பற்றியும் அது ஆராய்ச்சி நடாத்துகிறது. ஆற்றுப் பெருக்குப்பற்றியும் இப்போது ஆராய்ச்சி செய்யப்பட்டுவரு கிறது. இப்பிரச்சினைகள் யாவற்றையும் ஆராய நீர்விடய

சங்கங்களும் நிலையங்களும் 57
வாய்கூடம் என்ற ஒன்று உண்டு. இவ் வா ராய்ச்சி அநுகூலமாக நிறைவேறி அதற்கியைய நடைவடிக்கைகள் எடுக்கப்பட்டால், ஆற்றுப்பெருக்காலும் வெள்ளப் பெருக்கா லும் ஆண்டுதோறும் பாழடையும் எத்தனையோ ஆயிர ஏக்கர் நிலம் பாதுகாக்கப்பட்டு விவசாய முயற்சிக்குப் பயன்படும் என்பதற்கையமின்று
11. செளக்கியப்பகுதி
ஓர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தேகாரோக்கியத்துடன் இருந்தாற்ருன் அச்சமூகம் சக்தியுடையதாகவிருக்கும். பூர்வ காலத்தில் இருந்த அநேக சமூகங்கள் சுகாதாரக் குறைவின லும் நோயினலும் அழிந்தொழிந்து போயின. புராதன காலத்திருந்த கிரேக்கரையும் சிங்களரையும் மலேரியாக் காய்ச்சல் அழித்தது என்றும் சில ஆராய்ச்சியாளர் கூறுவர். சமீப காலத்தில் இந்த நோய் பரவி மக்களைக் கொள்ளை கொண்டமை இவ்வாராய்ச்சியாளர் கூற்றுக்கு ஓரளவு ஆதார மும் அளிக்கிறது. தன்னகத்தேயுள்ள மக்கள் ஆரோக்கிய முள்ளவர்களாயும் தேக பலமுள்ளவர்களாயும் இருப்பதற் கான சிறந்த நிலைமைகளை ஏற்படுத்திக் கொடுத்தல் ஒவ் வோர் சமூகத்தினதும் பெரும் பிரச்சினையாகவிருக்கிறது. இந்தப் பிரச்சினை எங்கள் இலங்கையிலும் இருக்கத்தான் செய் கிறது. எம் மக்களிலநேகர் வறியவர்கள், எமது சமூகம் ஒர் வறிய சமூகம் , எமது வருமானமோ மிகவும் சொற்பம் , உண்ணச் சிறந்த உணவும், வசிப்பதற்குத் தகுதியான வீடும்
எம்மவர் பலருக்கில்லை. எமது வாழ்க்கைத்தரம் மிகவும் குறைவானதென்றும் கூறலாம். அதற்கு முக்கியமான கார ணம் வறுமை. வேருேர் காரணம் அறியாமை. எங்கள்
பாடசாலைகளிலே கணிதம் இலக்கியம் போன்ற பாடங் ளுக்குக் கொடுக்கும் மதிப்பு சுகாதார பாடத்துக்குக் கொடுக் கப்படுவதில்லை. ஆனல் அதிட்டவசமாக இப்போது சில காலமாக நன்மைக்கேதுவான மாற்றம் ஒன்று நம் பாடசாலை களில் ஏற்பட்டு சுகாதாரமும் ஒர் பிள்ளைக்குரிய பாடங்களி லொன்ருக விதித்துப் படிப்பிக்கப்பட்டு வருகிறது.
எமது இலங்கைத் தீவு பூகோளத்தின் அயன எல்லைக்குள் இருக்கிறது. அதன் பயனுக இவ்வயனத்துக்குரிய நோய்கள் அடிக்கடி இங்கே பரவி எமக்குச் சத்துருக்களாக விருக்கின்றன இவற்றுள் மலேரியா என்னும் காட்டுக்காய்ச்சல், பாண்டு நோய், வைசூரி என்பன பிரதானமானவை. இந்நாட்டின் முக் காற்பகுதி குடிசன நெருக்கமில்லாமலிருப்பதற்கான காரணங்க களில் மலேரியாவுமொன்று, இங்குள்ள பள்ளிக்கூடப் பிள்ளை
J. Hydrological Laboratory.

Page 34
58 சங்கங்களும் நிலையங்களும்
களைச் சுகாதார சம்பந்தமான பரிசீலனை செய்து பார்த்த போது ஓர் விடயம் தெள்ளிதிற் புலப்பட்டது. மத்திய பகுதி யிலும் தென்மேற்குப் பகுதியிலுந்தான் பிள்ளைகள் இக் கொடிய மலேரியா நோயினுற் குறைவாகப் பாதிக்கப் பட்டிருக்கிருர்கள். அங்கே 100-க்கு 20 விகிதத்திற்குக் குறைவாகவே அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிருர்கள். ஆணுல் மத்திய பகுதியும் தென்மேற்குப் பகுதியும் இலங்கையிற் காற் பங்குப் பிரதேசத்தையே அடக்கியுள்ளன. மீதி முக்காற் பங்குப் பகுதியிலும் இந்த மலேரியாக் கொடுமை அதிகமாக இருக்கிறது. பல இடங்களில் 100-க்கு 20 விகிதத்துக்கு மேற்பட்ட பிள்ளைகள் இந்நோயாற் பீடிக்கப்பட்டிருக்கிருர் கள். சில இடங்களில் 60 விகிதத்துக்கு மேற்பட்ட பிள்ளை களுக்கு மண்ணீரல் வீங்கிப் பெருத்திருக்கிறது. எங்கள் நாட்டிலே இந்த நிலைமையிருப்பது உண்மையில் பரிதாபகர மானது. இலங்கையிலே சில இடங்கள் வெளிப்பார்வைக்குச் செல்வமுற்றனபோலத் தோன்றுகின்றன. ஆனல் மனித உயிர் மிகவுமற்பமான கிள்ளுக்கீரைபோல் மதிக்கப்பட்டு மக்கள் கவனிக்கப்படாத இடங்களும் இந்தச் செல்வமுள்ள இலங்கை யில் இருக்கின்றன என்பதை நாம் மனத்திற் பதித்துக் கொள்ளல் வேண்டும். தேடுவாரற்று, ஆரோக்கியமற்றுக் கிடக்கும் மக்களுக்குச் சுகவாழ்வு கொடுப்பது செளக்கியப் பகுதியாரின் லட்சியங்களில் ஒன்ரு கும். இப்பகுதியார் ஆரோக்கியம், சுகாதாரம் என்னும் பிரச்சினைகளை ஆராய்ந்து ஏற்றன செய்ய இருக்கிருர்கள். செளக்கியப் பகுதியார் மேற்கொண்டுள்ள வேலையைப் பின்வருமாறு தொகுக்க லாம் :
(1) நோய் வருவதைத் தடுப்பது, (2) நோய் வந்தாற் சிகிச்சை அல்லது பரிகாரம், (3) ஆராய்ச்சியும் பயிற்சியும் (4) சுகாதாரக் கல்வி.
நோய் வந்த பின் காப்பதிலும் பார்க்க வருமுன் காப்பது தான் சிறந்தது. காட்டுக் காய்ச்சல் பாண்டுநோய் என்பவற் றுக்கான காரணங்களை வே ரோ டு களைய செளக்கியப் பகுதி இலங்கை எங்கணும் முயற்சி செய்துவருகிறது. இதற் கென விசேட பயிற்சிபெற்றுள்ள உத்தியோகத்தர் இப்பணி யிலீடுபட்டிருக்கிறர்கள். ஆண்டுதோறும் இப்பணி செவ்வனே நடைபெற்று வருகிறது. மலேரியாவுக்கு மூல காரணம் நுளம்பு. நுளம்புகளை உற்பத்தித்தானத்திலேயே நாசமாக்கச் செய்யப்படும் முயற்சிகள் பல. சிற்றறுகள், குட்டைகள், சகதியான இடங்கள் என்பவற்றில் எண்ணெய் ஊற்றுதல், நுளம்புகளின் முட்டைகளையும் மூலப்புழுக்களையும் உண்ணும் ஓரின மீன்களைச் சிற்ருறுகள், குளம் குட்டைகளில் வளர்த்தல்

சங்கங்களும் நிலையங்களும் 59
ஆற்றங்கரைகளை வற்றடித்தல் என்னும் இன்னுேரன்ன முயற்சிகளைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். வெப்ப வலையப் பிரதேசத்திலே நிலத்தைப் பண்படுத்தி அங்கே மக்களைக் குடியேற்றும் முயற்சியுடன் மலேரியா ஒழிப்புப் பணியும் குறைவின்றி நடைபெறுதல் வேண்டும். இப்போது எம் நாடு சுகாதார விடயமாக இருக்கும் நிலையிலே எமக்குப் பல்கலைக்கழகம்தான் எதற்கு? உயர்தரக் கல்விதான் எதற்கு ? மக்கள் நோயின்றிச் சுகமாக வாழ்வதற்கு, மலேரியா என்னும் கொடிய நோயைப் பூண்டோடு நாசமாக்கித் தந்தாற் போதும் என்றும் சிலர் வாதித்தால் அவ்வாதத்திற் பிழை யுண்டு என்று கூறமுடியுமா ? மலேரியா நோய் எம் நாட்டின் முக்காற்பங்கு தேசத்தை மனித சஞ்சார மற்ற பாழிட மாக்கிவிட்டது. எனவே, எம் மக்களில் மிகச் சிறிய தொகையினர்க்கு மாத்திரமே பயன்படும் உயர்தரக் கல்வியூட்டுவதிலும் பார்க்க மலேரியாவை அழித்தல் மிகப் பிரதானம் என்று சிலர் அபிப்பிராயப் படுகிருர்கள். ஆனல் பல்கலைக்கழகமும் எமக்கு வேண்டியதுதான். அங்கே செய் யும் ஆராய்ச்சிகள், நோய்களை நாம் வெற்றிகொள்ளவும் ஓர் காலத்தில் உதவலாம். ஆகவே பல்கலைக்கழகத்துக்குச் செல வழிக்கும் பணம் அவசியமற்றது, விருதா வானது என்று நாம் கருதி வாதிக்கக் கூடாது
இலங்கை எங்கணும் உள்ள ஆசுப்பத்திரிகளின் வேலையை செளக்கியப் பகுதி மே ற் பார்  ைவ செய்து கட்டு ப் படுத்துகிறது. பெரிய மாகாணங்கள் ஒவ்வொன்றிலும் வைத் திய அத்தியட்சர் என்னும் உத்தியோகத்தர் ஒருவர் இருப் பர். அவருக்குக் கீழ்ப் பல வைத்தியர்கள் இருந்து கடமை யாற்றி உதவிபுரிவர். மாகாணத்துத் தலைப்பட்டணத்திலே ஒர் மத்திய ஆசுப்பத்திரியும் கிராமப்பக்கங்களிலே டிஸ் பென்சரி’ என்று ஆங்கிலத்தில் வழங்கப்படும் மருந்தகங் களும் உள. கிராமப் பக்கங்களிலும் ஆசுப்பத்திரிகள் நிறுவுதற்கு ஒர் திட்டம் நவமாக வகுக்கப்பட்டிருக்கிறது. இது கிராம மக்களுக்கு ஒர் வர ப் பிரசாதமாக வே இருக்கும். சாதாரண ஆசுப் பத்திரிகள், மருந்தகங்கள் என்பவற் றைவிட, குறித்த சில வியாதிகளுக்கு விசேடமான ஆசுப்பத்திரி களும் உண்டு. ஹெந்தலையிலும் மாந்தீவிலும் தொழுநோய் ஆசுப்பத்திரியுண்டு : முகம, காங்கேசன்துறை, அம்பாந் தோட்டை என்னும் இடங்களிலே காசம் போன்ற நுரையீரல் சம்பந்தமான வியாதிகளுடையார்க்கு ஆசுப்பத்திரிகள் உள. அங்கொடை யி லே புத்தி சுவாதீனம் அற்ருர்க்கென 1. Medical Superintendent-606uai 5lu diul 'Ai5G).567 6767gpuh கூறுவர். மேலதிகாரி எனவும் வழங்கப்படுவர்.

Page 35
sgĒĢ@gogi ugi us&3 qogỆgẾorių 5), o ,Z• இதீவிருeருயனபப்ரூși@@@@ qsmusgo mugi
இதிருெeUıııgıłosog)I@rog) qishnaso esquio sumų asgjøı ‘ıųoorstvoog) ofiì e68.|-
‘qısıJoểuore|gsgï-e surilo) zs. Is
1Ịoolşselgono
*■
qıúuesi %50ĝaenrı olsooof¡isorius@gắmgšgặrtstos oņu osło
$6.8
ON
OO
n
\O
-ܨܢܐ
fy
LISI ZS6S6
期 リ リ ガ √©懒猴期 泊上© メQメ6wo Ưtsuoi幼QQ 3©ダ6 \0!:-)-...- - vn<>3- 例ア寸1士 |- 영화G|- ∞
 
 
 

சங்கங்களும் நிலையங்களும் 6 I
ஒர் நிலையம் உண்டு. கொழும்பிலே மத்திய பல் வைத்திய சாலையும் கண் வைத்தியசாலையும் பிரசவ வைத்தியசாலையும் இருக்கின்றன.
வைத்தியம், சத்திர வைத்தியம் என்பனவற்றில் நம் வாலி பர்க்குப் பயிற்சி அளிப்பதற்கு ஒர் வைத்தியக் கல்லூரியும் கொழும்பில் உண்டு. அது இப்போது இலங்கைப் பல்கலைக் கழகத்தின் வைத்தியப்பகுதியின் அங்கமாக இருக்கிறது. இவ் வைத்தியக் கல்லூரி மூலமாக நம் வாலிபரும் கன்னியரும் எதிர்காலத்திலே சிறந்த வைத்தியராக வருதற்கான பயிற்சி யளிக்கப்படுவதுமன்றி, வியாதிகள் வருவதைத் தடுப்பது, பரிகரிப்பது என்னும் விடயங்களிலும் அரிய ஆராய்ச்சிகள் நடாத்தப்படும் என்றும் நாம் காத்திருக்கலாகும்.
மக்கள் சுகமாக வாழ்வதற்குச் சிறந்த உணவுகள் யாவை என்பதை ஆராய்வதும் செளக்கியப்பகுதியின் கடமையாகும். நாம் உட்கொள்ளும் உணவின் தன்மையை முறைப்படி ஆராய்ந்து அதில் என்ன குறைகள் இருக்கின்றன என்பதைக்கண்டு எமக்கு அறிவிக்கும் முயற்சிகள் ஏற்கெனவே ஒரளவுக்குச் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த முயற்சி இனிச் செய்யவிருக்கும் சிறந்த வேலைக்கு அத்திவாரமாக இருக்கும்.
வைத்தியக் கல்லூரியிலே மேனுட்டு வைத்திய முறைகள் கற்பிக்கப்படுகின்றன. இக்கல்லூரியைவிடச் சுதேச வைத்தி யக் கல்லூரி? ஒன்றும் கொழும்பில் இருக்கிறது. இங்கே ஆயுர்வேத வைத்திய முறைகளில் மாணுக்கர்களுக்குப் பயிற்சி யளிக்கப்பட்டுவருகிறது. இதன் பயனுக இவ்வைத்திய முறை யில் தொன்றுதொட்டு உபயோகமாகிவந்த மருந்துகள் மூலி கைகள் என்பவை சாத்திர ரீதியாக ஆராய்ச்சி செய்யப்படும் என்றும், எம் முன்னேர் தமது அநுபவம், அறிவு என்பன வற்றைக்கொண்டு ஆக்கி எமக்களித்துவிட்டுப்போன அரும் செல்வமான ஆயுர்வேதக் கழஞ்சியத்தை நாம் அடைந்து பயன்பெறலாம் என்றும் காத்திருக்கலாகும்.
செளக்கியப்பகுதி மக்களிடையே சுகாதாரக் கல்வியைப் பரப்புவதில் சிரத்தை கொண்டிருக்கிறது. வித்தியா சாலை களுக்குக்குரிய வைத்திய உத்தியோகத்தர்கள் ஒழுங்காக அவ் வித்தியாசாலைகளுக்கு விஜயம்செய்து ஆங்குள்ள பிள்ளைகளின் தேகாரோக்கியத்தைப் பரிசீலனை செய்வர். அவர்களில் யாருக்கேனும் ஆரோக்கியக் குறைவு இருப்பதைக் கண்டால் அவர்கள் அப்பிள்ளையின் பெற்ருருக்கு அறிவித்து அக்குறையை எவ்வாறு நிவிர்த்திக்கவேண்டும் என்று ஆலோசனையும் கூறு வர். இவ்வாறு செய்வதால் பிள்ளைகள் தம் வாழ்க்கையைச் சிறு
: Faculty of Medicicine. 2. College of Indigenous Medicine.

Page 36
hņuossun is@Ţuningsrı
84. qı Fı II u os sĩ LI TI -ysgow @ęs@sofiooQooạori ŋ 9) I u ri logo II§§~ qıhnUsosą9 osoqi fillos ugıışse {@s@gsumgoặys
qıfı) ısseurig) Quaesum@oğơi
- On
z1圖
quaestiņussos, où sotooɗogue-iuri
ま*■
qi 1990 surių r. ‘ą9űĺąjįonn ņirgoņinyɛfề ‘ıųoorsicoriusqểussąoo şorţuesher
10-wl S6 S6
96 S60S6
ES-O OS6676.
ՇԵ-6 676|-8}76|
ምቆ•8 ,8ነ6!–/ቇነ6!
un@!buu
§ † - rg
 
 
 

சங்கங்களும் நிலையங்களும் 63
வயதிலிருந்தே ஆரோக்கியமாக அமைக்கவும், எத்தனையோ கெடுதிகளைத் தடுக்கவும் முடிகிறது. மாநகர சங்கம், நகர சங்கம்,? பட்டண சங்கம், கிராமச் சங்கம் என்னும் பல திறப்பட்ட ஊராட்சிச் சங்கங்கள் நிருவகிக்கும் இடங்களில் செளக்கியப்பகுதி வைத்திய அதிகாரிகளின் உதவியுடன் செளக்கியக் கூறுகள் நிறுவப்பட்டுள்ளன. இக்கூறுகள் மக்களின் ஆரோக்கிய வளர்ச்சி விடயமாக நல்ல தொண் டாற்றி வருகின்றன. ஆரோக்கியத்துக்கேதுவான பழக்க வழங்கங்களை மக்களுக்குக் கற்பிப்பதில் சினிமா என்னும் சலனப்படச் சாதனங்களும் நன்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இப்படியாக மக்களின் ஆரோக்கிய வளர்ச்சியில் செளக்கியப்பகுதி சிறந்த பணியாற்றி வருகிறது. ஆனல் மேலும், செய்யவேண்டிய பணிகள் பல உண்டு. வறிய மக்களிடையே ஆரோக்கிய பழக்க வழக்கங்கள் விருத்தியடை வது கஷ்டம். அவர்களுக்கு நல்ல உணவில்லை; குடியிருக்க நல்ல வீடில்லை; எனவே அவர்களுக்கிடையே ஆரோக்கியத் துக் கேதுவான பழக்க வழக்கங்களை ஏற்படுத்த இப்பகுதி யதிகாரிகள் செய்யும் முயற்சிகள் வேண்டிய அளவுக்குப் பயன் அளித்து வரவில்லை. கொழும்பு நகரத்திலே வறிய மக்கள் வசிக்கும் ஒர் சேரியைப் பார்த்தால் எமது கூற்றின் உண்மை புலப்படும். தமது அன்ரு டச் சோற்றுக்கே திண்டாடி அதனைப் பெறுதற்கு அலைந்து திரிந்து அதே கவலையாக இருக்கும் மக்கள் ஆரோக்கிய உபதேசங்களைச் செவிமடுக்க அவகாசம், உண்டா ? இவ்வுபதேசங்களைச் செவிமடுத்தாலும், அவற்றின் வழி நின்ருெழுக மனம் இருந்தாலும் அதற்கான இடம் பொருள் ஏவல் அவர்களுக்கு உண்டா ? சுகாதாரமற்று, அழுக்கு மண்டிக் கிடக்கும் சேரிகளை முதலில் ஒழிக்கவேண்டும். பிறந்தநாள் தொடக்கம் சேரிகளிலே வசிப்பதால் அச்சேரி மக்கள் அவ்வாழ்க்கையில் திளைத்து சுகாதாரத்தைப்போற்ருத அழு க்கை வெறுக்காத-ஒர் மனப்பான்மையைப் பெறு கின்றனர். அத்தகைய மனப்பான்மையை நாசமாக்கவேண் டும். இது ஒர் பெரிய பிரச்சினை. இது இந்நாட்டு ஊராட்சி நிலையங்களுக்குப் பெரும் சிக்கலானதோர் பிரச்சினையாக இருக் கிறது. போதிய சுத்தமான காற்றும் வெளிச்சமும் மக்கள் பெற்று வாழ்வதற்கேற்ற முறையிலே நம் நகரங்கள் நிருமா ணிக்கப்படல் வேண்டும். பூகேர்ள அயன எல்லைக்குட்பட் டுள்ள வெப்பப் பிரதேசங்களிலேயிருக்கும் நகரங்களைச் சுகா
1. Municipal Council. 2. Urban Council. 3. Town Council. 4. Health Units.

Page 37
64 சங்கங்களும் நிலையங்களும்
தார முறைகளுக்கிணங்கிச் செவ்வனே அமைக்காவிட்டால் அவை பிளேக், வைசூரி, காசம் என்னும் கொடிய நோய் களின் நிரந்தர வாசத்தானங்களாகிவிடும். மக்கள் வாழ்க் கைக்கு மூலாதாரமாகவேண்டிய வெளிச்சமும் காற்றும் இல்லாத சேரிகளிலேதான் இக்கொடிய வியாதிகள் பரவி அநர்த்தம் விளைக்கும். பூகோள அயன எல்லைக்குள் இருக் கும் நாடுகளிலே நகரங்களை நந்தவனங்கள் போல அமைக்க வேண்டும். வீடுகள் கட்டடங்களுக்கிடையே ஏரிகளும் உத்தியா னங்களும் விளங்கவேண்டும். அப்போதுதான் சுத்தமான காற்று வரக்கூடிய திறந்த வெளிகள் இருக்கும் ' என்னும் கருத்துப்பட பேராசிரியர் பற்றிக் கெடேஸ் அவர்கள் கூறி யதும் ஈண்டுக் குறிப்பிடத்தக்கதாம். சுகத்துக்கான வீடுகள் குறைந்த வாடகையில் வறிய மக்களுக்குக் கிடைக்க வேண்டும். இந்தப் பணியை மாநகர சங்கங்களும் நகர சங்கங்களும் செய்யலாம். அவை இலாபம் கருதி இப்பணியைச் செய்யாது தத்தம் பிரசைகளின் நன்மை, அவர்களின் சுகாபிவிருத்தி என்பனவற்றை லட்சியமாகக்கொண்டு இப்பணியில் ஈடுபடுதல் வேண்டும்.
இது வரை நாம் விவசாயப் பகுதி செளக்கியப்பகுதி என்னும் இரண் டு பகுதிகளதும் கரு மங்களை எடுத்துக் காட்டினுேம். அவை இலங்கையிலே மனித சமூகத்துக்கு இன்றியமையாது வேண்டிய உணவு ஆரோக்கிய வாழ்வு என்பவற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன.
III. வித்தியாபகுதி அல்லது கல்விப்பகுதி
இன்று சிறுவர்களாயிருப்பவர்களே நாளைய மனிதர், நாட் டின் எதிர்காலப் பிரசைகள். இவர்களை நற் பிரசைகளாக்கும் சீரிய தொண்டினைக் கொண்டுள்ளது வித் தியா பகுதி அல்லது கல்விப்பகுதி. இப்பகுதியின் அமைப்பைச் சுருக்கமாக ஆராய் வோம். அது கல்வி அமைச்சரின் பரிபாலனத்தில் உள்ளது. கல்வியமைச்சர், பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் இந் நாட்டின் கல்விக் கொள்கையை வகுப்பார். இக்கொள்கைகளை அநுட்டானத்துக்குக் கொண்டு வரும் அதிகாரிகளை யுடைய் துவே வித்தியா பகுதி , அல்லது கல்விப் பகுதியாகும். வித்தி யாதிபதி? என்பவரே இப்பகுதியின் தலைமை அதிகாரி. பகுதிக் குரிய அன்ருட பரிபாலன வேலைகளைச் செய்தற்கு அவரின் கீழ் பல உத்தியோகத் தரும் பெருந்தொகை கிளாக்குமாரும்
1. Professor Patrick Geddes.
2. Educational Policy: 3. Director of Education. ¿56)65l 95u 5 67687ug o Jef 11515
மொழிகள் அலுவலகத்தின் சமசொல்.

சங்கங்களும் நிலையங்களும் 65
உளர். கல்வி விடயமாக இத்தீவு பல பெரும் பாகங்களாக வகுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வோர் பெரும் பாகத்திலும் ஓர் கல்விக் கந்தோருண்டு. அதன் மேலதிகாரியாக பெரும்பாகக் கல்வியதிகாரி ஒருவர் இருப்பர் அவரின் கீழ் ஓர் மாவட்ட வித்தியாதரிசியும் சில உப வித்தியா தரிசிகளும் கடமையாற் றுவர்.
கல்விப்பகுதியின் பிரதான கருமங்கள் யாவை ? பாராளு மன்றத்தால் கல்வி விடயமாக அங்கீகரிக்கப்பட்ட கொள்கை களை அநுட்டானத்துக்குக் கொண்டுவந்து நிறைவேற்றுவது அதன் முதல் வேலை. கிராமப் பக்கங்களிலே ஒர் புது மாதிரி யான பள்ளிக்கூடம் அமைக்கப்படவேண்டும் எனத் தீர்மான மாயிற்று என்று ஒர் உதாரணத்தின் பொருட்டு வைத்துக் கொள்ளுவோம். தேவையான பணத்தைச் செலவழித்து, வேண்டியவர்களை வேலைக்கமர்த்தி, இத்தகைய பள்ளிக்கூடங் களை அமைப்பது வித்தியாதிபதியினதும் அவர் தம் பகுதியின தும் கடமையாகும். பள்ளிக்கூடங்களைக் கட்டி முடித்துவிட் டால் மாத்திரம் போதாது. அவற்றைத் திறமையுடன் நடத் தவும் வேண்டும். பள்ளிக்கூடங்களிலே கல்வித்தரமானது உயர்ந்திருப்பதற்கு வித்தியாதிபதியே பொறுப்பாளி. கல்வித் தரத்தை உயர்த்துதற்கு வேண்டிய ஏற்பாடுகளை அவர் செய்ய வேண்டும். வித்தியாசாலைகளுக்குக் காலம் தோறும் விஜயம் செய்து அங்கே தளபாடங்கள் உபகரணங்கள் இருப்பதையும், பள்ளிக்கூடம் சுத்தமாக வைத்திருக்கப்படுவதையும், படிக்கும் பிள்ளைகள் ஆரோக்கியத்துடன் இருப்பதையும், ஆங்கே கல்வித்தரம் குறையாமல் இருப்பதையும் பரிசீலனை செய்ய வித்தியா தரிசிகள் உளர். பரீட்சைகளும் நடாத்தப்படுவ துண்டு. எல்லாப் பாடசாலைகளிலும் ஒரே தரத்தான கல்வி யூட்டப்பட்வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டே கல்விப்பகுதியார் சில பரீட்சைகளைக் காலந்தோறும் நடாத்து கின்றனர் உதாரணத்துக்குச் சிரேட்ட தராதரப் பத்திர வகுப்புப் பரீட்சையை எடுத்துக் கொள்ளுவோம். அப்பரீட் சைக்குரிய விஞக்களை கல்விப்பகுதியார் நியமித்துள்ள அறி ஞர்கள் தயாரிப்பர். பரீட்சைக்கு இலங்கையில் உள்ள சி. த. ப. வகுப்பு மாணக்கர்கள் எல்லாரும்-அவர்கள் எந்தப் பகுதியில் வசித்தாலும் எந்தப் பாடசாலையிற் படித்தாலும்தோன்றி இவ்வினுக்களுக்கு விடை எழுதவேண்டும். வித்தியா
1. Divisional Education Officer.
3248-D

Page 38
66 சங்கங்களும் நிலையங்களும்
சாலைகள் தம் மானுக்கர் சிரேட்டதராதரத்தினை அடையச் செய்வதற்குத் தம் மாலான முயற்சிகளைச் செய்யும். அதன் பயணுக எல்லாப் பள்ளிக்கூடங்களும் ஒரே தன்மைத்தான தரத்தையுடையனவாக வரும் பள்ளிக்கூடங்கள் பரீட்சை விடயத்தில் சுதந்திரமாக இருந்து தாம் தாம் விரும்பியவாறு அதனை நடாத்தலாம் என்று விதித்தால் எல்லாப் பாடசாலை களிலும் ஒரே விதமான-ஒரே தரமான- கல்வியூட்டப்பட மாட்டாது. அங்கங்கே நடக்கும் பரீட்சைத் தரமும் வித்தியா சப்படும். இப்படியிருப்பது உசிதமல்ல. எல்லா வித்தியா சாலைகளும் ஒரே தரத்தினதாய கல்வியை ஊட்டுதலே சாலச் சிறந்தது.
கல்விப்பகுதியார் பல இடங்களிலே ஆசிரியர்க்கான போதன கல்லூரிகளையும் நிறுவி ஆசிரியர்களைப் பயிற்றி வருகி ழுர்கள். இது மிகவும் பிரதானமான வோர் பணியாகும். தனிப்பட்டவர்களாலும் சங்கங்களர்லும் நடாத்தப்படும் வித்தியாசாலைகளைவிட கல்விப்பகுதியும் ஆரம்ப பாடசாலை, கனிட்ட பாடசாலை, சிரேட்ட பாடசாலை, மத்திய பாடசாலை என்னும் பல பல திறப்பட்ட பாடசாலைகளைத் தானக நிருவகித்து நடாத்து கிறது. கல்வி சம்பந்தமான ஆராய்ச்சித்துறையில் ஈடுபட்டு முயற்சி செய்யவும் கல்விப்பகுதி இப்போது நவமாகத் தொடங்கியிருக்கிறது. கல்வி முறைகளிலேயுள்ள குறைபாடு களையும் பிழைகளையும் அகற்றுதற்கு இம்முயற்சி கால கதியில் உபயோகமாகும்.
இலங்கையிலே கல்விவளர்ச்சி சம்பந்தமான ஓர் சிறந்த அறிக்கை சமீபகாலத்தில் வெளியிடப்பட்டது. இதற்கெனத் தெரிந்தெடுக்கப்பெற்ற ஓர் சபை தனது அறிக்கையாக இதனை 1943-ம் ஆண்டில் வெளியிட்டது. அதனைப்பற்றியும் நீங்கள் சுருக்கமாக அறிதல் இச்சந்தர்ப்பத்திற் பொருத்தமுடைய தாகும். எதிர் காலத்திலே பயன்றரத்தக்க விதமாகக் கல்வி முறையிலே சீர்திருத்தங்கள் செய்யவேண்டுமென இவ் வறிக்கையிலே மேலே சொல்லிய சபையினர் சிபாரிசு செய் திருக்கிரு ர்கள். இச்சிபாரிசுகளை நீங்களும் அறிந்திருத்தல் வேண்டும். சிறு பிள்ளைகளுக்கு அவரவர் தாய் மொழியான சிங்களத்திலோ தமிழிலோ தான் கல்வி கற்பிக்கவேண்டும் என்பது இவ்வறிக்கையின் முதற் சிபாரிசு, இதுவரை பாலர் வகுப்புத் தொடக்கம் மேல் வகுப்புக்கள் வரை ஆங்கிலத்தில் தான் பிள்ளைகளுக்குக் கல்வி யூட்டப்பட்டு வந்த தென்பது உங்களுக்கு நன்ற கத் தெரியும். இவ்வாறு கல்வி பயின்ற பிள்ளைகளில் அநேகருக்கு ஆங்கிலம் அந்நிய மொழி :
1. Training College: ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி என்றும் சொல்வர்.

சங்கங்களும் நிலையங்களும் 67
அதாவது, அவர்களின் வீடுகளில் சாதாரணமாகப் பேசப் படாத மொழி. ஆகவே, அப்போதுதான் படிக்க ஆரம்பித்த ஓர் மொழி மூலம் விடயங்களைப் படிப்பதென்றல் பிள்ளை களுக்கு-பச்சிளம் குழந்தைகளுக்கு-இலகுவான கருமமா? அவர்கள் மிகவும் சங்கடப்பட்டார்கள். இதன் பயணுக அவர் கள் தமக்குப் படிப்பிக்கப்பட்ட பாடங்களை-அவை கணித மாயினுமாக, இயற்கைச் சாத்திரமாயினுமாக, பூகோள சாத் திரமாயினு மாக-இலகுவிற் கிரகிப்பது முடியா திருந்தது. ஆகவே இந்த விசாரணைச் சபையினர் பாலர் வகுப்புத் தொடக்கம் ஐந்தாம் வகுப்பு ஈருக, சகல பாடங்களையும் தாய்மொழியிலேயே பயிற்றவேண்டும் என்று சிபாரிசு செய் தனர். பிள்ளைகள் ஐந்தாம் வகுப்பு முடித்து ஆரும் வகுப்புக் குப் போக முன்னர் ஒர் பரீட்சையில் சித்தியடைய வேண்டும் என்பதும் அப்பரீட்சையில் அவரவர்க்குத் தெரிந்த சாதாரண பள்ளிக்கூடப் பாடங்களில் மாத்திர மன்றிப் புத்திக்கூர்மை விடயமாகவும் அவர்கள் எவ்வளவு தூரம் அபிவிருத்தியடைந் திருக்கிருர்கள் என்பதுபற்றிப் பரீட்சிக்கப்பட வேண்டு மென்பதும் அவர்கள் செய்த வேருேர் பிரதான சிபாரிசு. பிள்ளைகள் சரியான முறையிற் பயன் பெறத்தக்க வித்தியா சாலைகளுக்கு அனுப்பப்படல் வேண்டும். இத்தகைய வித்தி யாசாலைகளிற் சாதனு பாடசாலைகள் ஓர் இனம். இங்கே பிள்ளைகள் மொழி, இலக்கியம் முதலாம் சாதாரண பாடங் களுடன், தமக்குப் பயன்படக்கூடிய தச்சு வேலை, சித்திரம், வினைத் தொழில், தோட்ட வேலை என்னும் இன்னுேரன்ன வற்றிலும் தக்க பயிற்சி பெறுவர். பிள்ளைகளுக்கு உண்மை யான, பயன்றரத்தக்க கல்வியையூட்டும் பிரயத்தனமே இது. இப்போதுள்ள நிலையிலே பிள்ளைகள் அனைவர்க்கும், அவர்கள் அதிவிவேகசாலிகளாயினும் சரி, சாதாரண புத்திக் கூர்மை யுடையவர்களாயினும் சரி, மந்தராயினும் சரி ஒரே வித மான கல்வியே ஊட்டப்பட்டு வருகிறது. இது பிள்ளைகளுக் கேற்ற உண்மைக் கல்வியாகாது. அவர்களுக்குக் கல்வி என்ற பெயரால் ஓர் சுமையைத் தலையில் வைப்பதுபோலாகும். ஒரே நிலத்தில் பல இனப்பயிர்களை உண்டாக்கி அவற்றுக்கு ஒரே விதமான பசளை இட்டால் அன்வ எல்லாம் செழிப்பாக வளர மாட்டா. நிலமும் "பசளையும் பயிர்களும் ஒன்றுக் கொன்று ஏற்றவிதமாக இருத்தல் வேண்டும். இதுபோலத் தான் எல்லாப் பிள்ளைகளுக்கும் ஒரே தன்மைத்தான கல்வியை யூட்ட நாம் முயற்சிக்கக் கூடாது. பிள்ளைகளின் தரத்தை, தகுதியை ஆராய்ந்து அவரவர்க்கேற்ற, அவரவர்க்கு நன்மை
1. Practical Schools.

Page 39
68 சங்கங்களும் நிலையங்களும்
தரக்கூடிய கல்விமுறையை வகுப்பதுதான் சிறந்த மார்க்கம். மேலே குறிப்பிடப்பட்ட சாதன பாடசாலைகளை விட வேறும் இரு விதமான பாடசாலைக்ளும் இருக்கவேண்டுமெனக் குறித்த அறிக்கையிற் சிபாரிசு செய்யப்பட்டது. இவை சாதன பாடசாலைகளுக்குப் போகத் தகுதியற்ற பிள்ளைகளுக் காம் . சிரேட்ட பாடசாலைகள், சிரேட்ட உயர்தர பாடசாலைகள்? என்பனவே இவை. சிரேட்ட பாடசாலைகள் லிகிதர் வேலை வர்த்தக சமுதாயங்களுக்குரிய வேலை என்பனவற்றில் மாணுக் கர்களைத் தகுதியாக்கும் பயிற்சியை அளிக்கும். சிரேட்ட உயர்தரப் பாடசாலைகளிற்ருன் அதிவிவேகசாலிகளான பிள்ளை கள் விடப்படுவர். பல்கலைக் கழகங்களிலே பிள்ளைகள் சென்று வைத் தி யம், நியாயவாதம், உபாத்திமைத் தொழில் ஆதியாம் தொழில்களிலும் பரிபாலனம் சம்பந்தமான தொழில்களிலும் பயிற்சிபெற அவர்களை ஆயத்தப்படுத்தும் கல்வியூட்டுவதுதான் சிரேட்ட உயர்தர பாடசாலைகளின் நோக்கம். ஆனல் ஓர் சாதன பாடசாலையிலோ சிரேட்ட பாடசாலையிலோ சேர்ந்துள்ள பிள்ளை பல்கலைக்கழகத்திற் சேர்ந்து மேலே சொல்லிய தொழில்களுக்கான கல்வியைப் பெறவோ பரிபாலனக் கல்விபெற்று உயர்ந்த பதவிகள் பெறவோ முடியாது என்று நாம் நினைத்துக்கொள்ளக் கூடாது. அப்பிள்ளைகள் தகுதியும் திறமையுமுடையவர்களாக விருப் பின் பல்கலைக்கழக்கத்திற் சேர்ந்துகொள்ளவும் சந்தர்ப்பம் அளிக்கப்படும்.
ஈற்றில், மேலே குறித்த விசாரணைச் சபையினர் இலவசக் கல்வி முறை இலங்கையில் இருக்கவேண்டும் என்றும் சிபாரிசு செய்தனர். அதாவது பாலர் வகுப்புத் தொடக்கம் பல்கலைக் கழகப் படிப்புவரை சகல பிள்ளைகளுக்கும் வேதனம் பெருக் கல்விமுறை வகுக்கப்படவேண்டும் என்றனர். இது சாலச் சிறந்த ஓர் சிபாரிசு. இற்றைக்குச் சில காலத்துக்கு முன் கல்வி விடயமாக இங்கிருந்த நிலைமையை இச் சந்தர்ப்பத்தில் நாம் அவதானிக்கவேண்டும். வேதனம் கொடுக்கக்கூடியவர் கள்தான் நல்ல கல்விபெற அருகதையுள்ளவர்களாயிருந்தனர்; செல்வந்தரின் பிள்ளைகள்தான் அதிவிவேகசாலிகள் என்று நாம் கருதமுடியாது. வறிய பிள்ளைகளிலும் எத்தனையோபேர் அதிவிவேகசாலிகளாக இருப்பர். எனவே முந்தியிருந்த கல்வி முறை வறிய பிள்ளைகளுக்குப் பாதகம் விளைப்பதாக இருந்தது: அவர்களிலும் பார்க்க விவேகத்திற் குறைந்த செல்வப் பிள்ளை களுக்குக் கல்விவிருத்தி விடயமாக இருந்த சந்தர்ப்பங்கள் அவர்களுக்கில்லாது போயின. இப்படி யிருந்தமை தேசத்
1. Senior School. 2. Senior Secondary School.

சங்கங்களும் நிலையங்களும் 69
துக்கே பெரும் நட்டம் என்று கூறினுல் அது மிகையாகாது. இந்த நூண நிலைமையினல் நம் இலங்காதேவி தன் புதல்வர்கள் எல்லாரதும் திறமையைப் பயன் படுத்த முடியவில்லை. ஓர் நாட்டின் முன்னேற்றம் அங்குள்ள சிவில் சேர்விஸ் உத்தி யோகத்தர், இன்ஜினியர் மார், வைத்தியர், நியாயவாதிகள், விஞ்ஞானிகள், சங்கீத விற்பன்னர், வர்த்தகர், புதிய விடயங் களை நவமாகக் கண்டு அறிவிக்கும் கலா வல்லுநர் என்பவர்களின் தொண்டில்தான் தங்கியிருக்கிறது. இத்தகைய தேசத் தொண்டராக வரும் சந்தர்ப்பம் இதுவரை ஒரு சில சிரேட்ட பாடசாலை மாணவர்களுக்குத்தான் இருந்தது. தக்க கல்வி பெறும் வசதிகளைச் சகலர்க்கும் அளித்தால் எத்தனையோ அதிவிவேகசாலிகளான வறிய பிள்ளைகள் தம் திறமையை அபிவிருத்தி செய்தற்கான சாதனங்களைப் பெறுவர். இந்த நாட்டிலே 100-க்கு 2 பேர்தான் செல்வர்கள். இச் சிறு தொகையினர் மாத்திரம் தாம் கொண்டிருந்த செல்வத் தின் காரணமாக உயர் கல்வி பெற்று நாட்டின் பெரும் பதவி கள் அனைத்தையும் பெறவிடுதல் நீதியாகாது.
1950-ம் ஆண்டிலே ஒரு புதிய கல்வித் திட்டத்தை அரசாங்கம் ஏற்றுக் கையாளத் தொடங்கியது. இத்திட்டத் தின்படிக்கு ஒரு பிள்ளை தனது 11 வயதுவரை அல்லது 5-ம் வகுப்புவரை தாய்மொழியிலேயே ஆரம்பப் பாடசாலைகளில் கல்வியூட்டப்படும். ஆரம்பப் படசாலைப் படிப்பு முடிந்ததும் அப்பிள்ளை கனிட்ட உயர்தரப் பாடசாலை எனப்படும் பாடசா லைக்குப் போகும். அங்கே அது 14 வயதுவரை கல்வி கற்கும். 14 வயதில், அப்பிள்ளையின் எதிர்காலக் கல்வித் திட்டம் நிர்ணயிக்கப்படும். அது சிரேட்ட உயர்தர பாட சாலையிற் சேர்ந்து கல்வியைத் தொடர்ந்து படிப்பதா, அல்லது தொழிற்பயிற்சிப் பாடசாலையிற் சேர்ந்து தொழிற்கல்விபெறு வதா? என்பது இக்கட்டத்திலே நிச்சயிக்கப்படும். கனிட்ட உயர்தர பாடசாலையிலே, இதுவரை ஒரு பிள்ளை நல்லாகப் படித்து கல்வித்துறையில் திறமையும் ஆர்வமும் கொண்டு தன் திறமையாலும் ஆர்வத்தாலும் பல்கலைக் கழகக் கல்விக்கும் தகுதி யானது எனக் காணப்படுமேயானல் அது சிரேட்ட உயர்தர பாடசாலைக்குப் போய்ப் படிப்பைத் தொடர்ந்து நடாத்த அநுமதிக்கப்படும். ஆனல் ஒரு பிள்ளை புத்தகப்படிப்பில் ஆர்வமோ திறமையோ கொள்ளாது தொழில்முறைகளிலே சிரத்தை கொண்டு அம்முறைகளுக்கே தான் ஏற்றது எனக் காட்டுமிடத்து, அது தொழிற் பயிற்சிப் பாடசாலைக்கு அனுப்பப்படும். தொழிற்பயிற்சிப் பாடசாலையில் தமிழ் அல்லது சிங்களம், ஆங்கிலம் என்னும்
l. Junior Secondary School.

Page 40
70 சங்கங்களும் நிலையங்களும்
வழக்கமான பாடங்களுடன் விவசாயம், மிரு கவளர்ப்பு, தச்சு வேலை, உலோகவேலை, மின்சார வேலை இஞ்சினியரிங் தொழில் எனப்படும் பொறிஇயல் தொழில் முதலாம். பலவித தொழில் களில் அப்பிள்ளைக்கு விசேட பயிற்சி அளிக்கப்படும். இப்படி யான ஒரு கல்விமுறையினல், எல்லாப் பிள்ளைகளும், 14 வயது வரையில் வாழ்க்கைக்கு வேண்டிய பொதுக் கல்வியைப் பெறு வர். அதன் பின் அவர்கள் தங்கள் தங்களுக்கு வாழ்க்கையில் அதிபயன்தரத்தக்க, த த் தம் திறமைக்கேற்ற, கல்வியைப் பெறுவர். ஆகவே இந்த கல்விமுறையினுல் இந்நாட்டின் வருங்காலப் பிரசைகளாய இன்றைய பிள்ளைகள், தம் எதிர் கால வாழ்க்கையைத் தத்தம் திறமை, தகுதி என்பவற்றுக் கிணங்க அமைக்கச் சமசந்தர்ப்பம் ஏற்படுகிறது. அதன் பயனக, எம் நாடு தன் மக்கள் சகலரதும் ஆற்றலைத் தனது வளர்ச்சிக்குச் சாதகமாக்கி முன்னேற முடியும்.
மேலே குறிப்பிடப்பட்ட சபையின் அறிக்கையின் ஏனைய பிரதான அம்சங்கள் அனைத்தையும் இங்கே குறிப்பிடுதல் இயலாத கருமம். அவற்றை நீங்கள் உங்களாசிரியரிடம் அறிந்துகொள்ளலாம். அவற்றின் குனகுணங்களையும் ஆசிரி யர்களுடன் கலந்து பேசுதல் உசிதமாகும். இந்நாட்டு மக்க ளுக்குகந்ததாயும் அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடியதாயும் உள்ள எவ்வித கல்விமுறையை அமைக்கவேண்டு மென்பதைத் தெரிவிக்கும் முதற் பிரயத்தனமே இந்த அறிக்கை யெனலாம். இதுவரை இங்கிலாந்திலுள்ள பிள்ளை களுக்கென வகுக்கப்பட்ட கல்விமுறையையே இங்கேயும், இலங்கைப் பிள்ளைகள் விடயத்தில், அநுட்டித்து வந்தனர். இங்கிலாந்திலேயுள்ள நிலைமை வேறு, இங்குள்ள நிலைமை வேறு என்பதை அக்காலத்திலிருந்தவர்கள் உணரவில்லை. இன்று மாணுக்கர்களாக இருக்கும் நீங்கள்தான் இந்நாட்டின் வருங் காலப் பிரசைகள். நீங்கள் இவ்வறிக்கையிற் சிரத்தை கொண்டு படிக்கவேண்டும். படித்து, அது எம் நாட்டை எவ்விதமாகப் பாதிக்கும் என்பதனை ஆராயவேண்டும். எங்க ளுடைய நாகரீகம், சீர்திருத்தம், லட்சியம் என்பவற்றுக் கேற்றதாகவே எங்கள் கல்விமுறை இருக்கவேண்டும். இங்கே இன்றுள்ள நிலைமைகளை ஆதாரமாகக் கொண்டே எம் கல்வி முறை இருத்தல் வேண்டும். அவ்வாறிருந்தாற்ருன் இன்றைய கான்முளைகளை நாளைய சிறந்த பிரசைகளாக்கமுடியும். எமது அரசியல் லட்சியம் சனநாயகம்; சனநாயகமுறை செவ்வனே நடைபெறுவதற்கு மக்கள் சிறந்த கல்வியும் சனநாயகப் பயிற்சியும் பெறுபவராக இருத்தல் வேண்டும். ஒரு சிலர் மாத்திரம் அதிகார பதவிகளில் அமர்ந்து நாட்டைப் பரிபா லித்தல் சனநாயகக் கொள்கைக்கே ஆபத்தானது. ஒர்

சங்கங்களும் நிலையங்களும் 71
உண்மையான சனநாயக நாட்டிலே ஒவ்வொரு தனி மனித னும் முன்னேறச் சமசந்தர்ப்பங்கள் அளிக்கப்படவேண்டும். ஒரு சிலரின் தயவிலோ தாட்சண்யத்திலோ அம்முன்னேற்றத் தொண்டை விடக் கூடாது.
IV. கூட்டுறவும் அதன் அபிவிருத்தியும்
நீங்கள் சங்கக் கடைகள் என்பவற்றைப்பற்றிக் கேள் விப்பட்டிருப்பீர்கள். இரண்டாவது உலக மகா யுத்தம் நடந்த காலத்திலும், இப்போதும் உங்கள் குடும்பத்துக்கு வேண்டிய அத்தியாவசியக உணவுப் பங்கீட்டுப் பொருள்களைப் பெற உதவி செய்பவையே இச்சங்கக்கடைகள். யுத்தம் ஆரம்பமானதும் இந்நாடு தனக்கு வேண்டிய உணவுப்பொருள் களைப் பெறுவதும் அதனை மக்களுக்கு விநியோகிப்பதுமான கருமம் ஒர் அந்தரமான நிலையை எய்தியது. இந்நிலைமையை நிவிர்த்திக்க அரசாங்கம் தலையிட்டுப் பொதுமக்களின் உதவி யுடன் கூட்டுறவுச் சங்கக் கடைகளை இத்தீவெங்கணும் தாபித் தது. தேச மக்களைச் போஷிப்பதிலும், கிடைத்த உணவுப் பொருள்களைச் சகலர்க்கும் பங்கிட்டு வழங்குவதிலும் சிறந்த பணியை கூட்டுறவுச் சங்கக் கடைகள் ஆற்றியிருக்கின்றன. யுத்தம் முடிந்துவிட்டது. ஆனல் கூட்டுறவுக்கடைகள் இந் நாட்டின் முக்காற்பங்கு மக்களுக்கு வேண்டிய அத்தியாவசியக உணவுப் பொருள்களை இப்போதும் வழங்கிவருகின்றன. இத் தகைய கூட்டுறவு இயக்கமானது எம் தேசீய இனப்பண்பை உருவாக்குவதில், அதனை நன்னிலைமைக்குக் கொண்டுவரு வதில், எவ்வளவு தூரத்துக்குப் பங்கெடுக்க முடியும் என்பது இன்றுள்ள கேள்வி. இதனை நீங்கள் நன்கு ஆராய்ந்து கொள்ள வேண்டும்.
கூட்டுறவுப்பகுதி
எங்கள் இலங்கை ஒர் சிறிய நாடு. சராசரியாகப் பார்க்கு மிடத்து இங்குள்ள ஓர் மனிதனின் வருமானம் மிக மிகக் குறைவு. ஒருவனின் ஆண்டு வருமானம் 100 ரூபாவுக்கும் 200 ரூபாவுக்குமிடையிற்ரு ன் உள்ளது எனக் கணிக்கப்பட்டி ருக்கிறது. கணவன், மனைவி இரண்டு பிள்ளைகள் என்னும் நால்வரைக் கொண்டுள்ள ஓர் சிறிய குடும்பத்துக்கு ஆண் டொன்றுக்குக் குறைந்தபட்சம் 720/- ரூபா செலவு என்றும் கணக்கிடப்பட்டிருக்கிறது. இதிலிருந்து நாமறிவது என்ன? பெருந்தொகையான மக்கள் தம் செலவுக்கு வேண்டிய வருமான மின்மையினல் மிகவும் கீழ்த்தரமான சீவியத்தை நடாத்தி வருகின்ருர்கள் என்பதும், வெப்பவலையப் பிரதேசம் போன்ற இடங்களில் வசிப்பவர்கள் அநாதர்களைப்போலச்

Page 41
72 சங்கங்களும் நிலையங்களும்
சதா தவிக்கிருர்கள் என்பதும் தெளிவு. கிராமப் பக்கங்களிலே வாழும் எம் மக்களின் நிலை பரிதாபகரமானது. வறுமை என்னும் படுகுழியிலே அவர்கள் ஆழ்ந்து கிடந்து தவிக்கிருர்
56.
இப்படியான கேவல நிலை இருப்பினும் வறுமைக் குழியில் கிடந்து தவிக்கும் மக்களை ஒரளவுக்காவது மீட்க மார்க்கம் உண்டு. தனித்தனியாக இருக்கும்போது இம் மக்கள் பல வீனர்தான். ஆனல் அவர்களை ஒன்று சேர்த்தால் அவர்கள் ஒரளவுக்குப் பலம் கொண்டு உறுதியாக நிற்கமுடியும். மிகவும் பலம் குறைந்த, நொய்தாம் அடம்பன் கொடியும். திரண் டால் மிடுக்கு அன்ருே ? எனவே இம்மக்கள் வறியவர்களா யினும் ஒற்றுமை கொண்டு ஒரே மனப்பான்மையினராக இருப் பரேல் அவர்கள் தம்மைத் தாக்க வரும் தீமைகளைத் எதிர்த்துப் போராடும் சக்தியைப் பெறுவர். இவ்விடயத்தினை இன்னும் தெளிவாகத் தெருட்டுவதற்கு ஓர் உதாரணம் காட்டுதும் :-வெப்ப வலையத்திலே ஓர் " கமம் இருக்கிறது ; அங்கேயுள்ள கிராம மக்கள் நெல் விளைவித்தும் சிறு தானியங் கள் உண்டாக்கியும் தம் சீவியத்தைக் கழிக்கிருர்கள் ; இத் தொழில்களினல் வரும் ஊதிபம் அவர்களின் சீவியத்துக்குப் போதாது. அவர்கள் தங்கள் விளைபொருள்களை சமீபத்தில் உள்ள கடை முதலாளி க்கு விற்று, வறியவர்களான தமக்கு வேண்டிய உப்பு, மிளகாய், துணி, ஆயுதங்கள் என்னும் அத்தி யாவசியகப் பொருள்களை வாங்குகிருர்கள். வரட்சி ஏற்பட்டு வயல்களும் சேனைகளும் நாசமானல் அவர்களுடைய பாடு திண்டாட்டம்தான். அவர்களுக்கு உணவு வேண்டும் ; அடுத்த போகத்தில் விதைப்பதற்கு விதைநெல் வேண்டும். அவர்கள் தம் அந்தரமான நிலையைக் கடை முதலாளிக்குத் தெரிவித்து. அவனது உதவியை நாடுகிருர்கள். முதலாளி கடன் கொடுக் கிரு ன். ஆனல் அக்கடனுக்கு ஈடு ஏழை விவசாயியின் அடுத்த அறுவடைதான். அறுவடை நடக்கும் காலத்தில் வயலிலோ சேனையிலோ அந்த முதலாளியைக் காணலாம். அவன் தனக் குச் சேரவேண்டிய பங்கினை எடுத்துக் கொண்டுபோக மீந்தி ருப்பது, கிராம வாசி அடுத்த அறுவடைவரை சீவிப்பதற்குப் போதியதாக விராது. எனவே அவன் பழையபடி கடன் பெறு கிருன். அறுவடைக்காலம் வரக் கடன் கொடுத்த முதலாளி பழையபடி வந்து தன் பங்கைத் திரட்டிக்கொண்டு போகி முன். இவ்வாருகக் கிராம வாசிக்குக் கடன் சுமை ஒருபோதும் குறைவதில்லை. அவன் மிடிமை என்னும் பொல்லாத சங்கிலி யாற் பிணிக்கப்பட்டு விடுதலைகாண வழியின்றித் தவிக்கிருன்.
ஆணுல் கிராமவாசிகள் ஒர் மத்திய நிதியைத் தாமே ஏற் படுத்தி, நல்ல விளைவு ஏற்படும் காலத்திலே தமக்கு மீந்துள்ள

சங்கங்களும் நிலையங்களும் 73
பணத்தை இந்நிதியிற் சேமித்து அதனை விருத்திசெய்து வந்தால் அவர்களுக்கு நன்மை விளையுமன்ருே ? பஞ்சம் அல்லது கஷ்டம் ஏற்படும் காலத்திலே அந்தப் பொதுநிதியில் இருந்து-தம் சொந்தச் சேமப்பணங்களைக்கொண்ட அந்நிதி யில் இருந்து-பணமோ பண்டமோ பெற்று தமக்கு நேரும் பஞ்சத்தை அல்லது கஷ்டத்தை நிவிர்த்தி செய்துகொள்ளலா மன்ருே? இந்த நிதி ஒருவர் இருவர் சொத்து அல்ல. கிராம மக்கள் அனைவருக்கும் பொதுவானது. அதனை நிருவகிப் போரும் அவர்களே. எனவே, தம் மிலொருவர்க்கு இடைஞ் சல் நேர்ந்தால் அவர்கள் எரிந்த வீட்டிற் பிடுங்கியதறுதி " என்ருங்கு கருமம் ஆற்றும் கடைக்கார முதலாளியைப்போலில் லாது, குறைந்த, செளகரியமான நிபந்தனைகளில் கடன் கொடுத்து உதவுவர். இப்படியான முறையை-அதாவது மக்கள் ஒன்று சேர்ந்து பரஸ்பரம் துணைபுரியச் செய்யும் முயற்சியை-கூட்டுறவு என்பர்.
இரண்டாவது உலக மா யுத்தத்தின் பயணுக பர்மா, கிழக்கிந்தியத்தீவுகள் என்னும் நாடுகளிலிருந்து எமக்கு உண வுப் பொருள்கள் இறக்குமதியாகவில்லை. ஏதோ கிடைக்கக் கூடிய உணவுப்பொருள்களை எல்லாருக்கும் பங்கீடு செய்ய அரசாங்கம் தீர்மானித்து இப்பங்கீட்டு உணவை விநியோகிக் கும் பொறுப்பைக் கூட்டுறவுக் கடைகளிடம் ஒப்புவித்தது. உங்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்களுக்கும் புடைவைக் கும் நீங்கள் இக்கடைகளுக்குப் போயிருப்பீர்கள். இவை எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை நீங்கள் விசாரணை செய்து பார்த்தால், அவற்றை ஊரவர்களே நடத்துகிருர்கள் என்பது தெரியவரும். ஒச் சங்கக்கடையின் வர்த்தக முதலுக்கு அக்கடையிற் பொருள்கள் வாங்கும் வீட்டுக்காரர் அனைவரும் பணம் செலுத்தியிருப்பர். செல்வராய அங்கத்தவர்கள் கூடிய தொகை பணத்தை முதலாக இட்டிருப்பர். இவ்வாரு க அங்கத்தவர்கள் அனைவரும் இறுத்துள்ள பணம்தான் கடையின் முதலாகும். இம் முதற் பணத்தைக்கொண்டே கடை அமைக்கப்பட்டதும் பொருள்கள் சேமிக்கப்பட்டது ιρΠ (3) ιb. விற்பனை பெருகப்பெருக உம்முடைய சங்கக் கடை" யும் கொஞ்ச இலாபம் அடையும். இலாபப் பணம் மத்திய நிதியில் இடப்படும் அல்லது பங்குக்காரர்க்கிடையே அவரவர் இட்ட முதலுக்குத் தக்கதாகப் பிரிக்கப்படும்.
யுத்தகாலத்தில் மாத்திரமின்றிச் சமாதான காலத்திலும் உமது சங்கக்கடை உமக்குத் தொண்டாற்றக் கூடியது. அரசாங்கத்திடம்
இருந்தோ, பொருள்களை இறக்குமதி செய்யும் பெரும் வர்த்த கரிடமிருந்தோ மொத்த விலைக்குப் பொருள்களைப் பெற்று மற்

Page 42
74 சங்கங்களும் நிலையங்களும்
றும் இடங்களில் விற்கும் விலையிலும் பார்க்கக் குறைந்த விலைக்கு இப்பொருள்களைச் சங்கம் விற்பனை செய்யும். ஒர் கடைக்காரன் தனது கடையைத் தனது சொந்த இலாபத்தின் பொருட்டு நடத்துகிருன். ஆனல் சங்கக்கடை யெனிலோ அதன் அங்கத் தவர்கள் அனைவரதும் நன்மைக்காக நடாத்தப்படுகிறது.
கூட்டுறவு எத்தனையோ விதங்களில் நமக்கு நன்மை பயக்கிறது. ஓர் பகுதியிலேயுள்ள குடியானவர்களிற் பெரும் பான்மையினர் வெற்றிலைக் கொழுந்து உண்டாக்குபவரா யோ. கோழி வளர்ப்பவராயோ இருக்கிருர்கள் என வைத்துக் கொள்ளுவோம். இவர்களில் ஒவ்வொரு குழுவினரும் கூட்டறவு உற்பத்திச் சங்கம் ஒன்றை அமைத்து, ஒருவர்க் கொருவர் எதிரிடையில்லாது ஒற்றுமை கொண்டு தம் பொருள் களை விற்பனை செய்யச் சம்மதித்திருக்கின்றனர் என்றும் வைத்துக்கொள்ளுவோம். இப்படியாகக் கூட்டுறவு முறை யில் தம் பொருள்களை விற்பனை செய்யத் தீர்மானித்துள்ள வர்கள் தமக்குப் பொதுவாக ஒர் கூட்டுறவு விற்பனைச் சாலையை ஒழுங்குபடுத்தலாம். தம் பண்டங்களை அவற்றின் தகுதிக்கேற்பத் திணிசு திணிசாக்கி அவற்றைத் தம் வாடிக்கைக் காரர்க்கு ஒர் மோட்டார் வான்’ மூலம் விநியோகிக்கலாம். அவர்கள் தம் கூட்டுறவுச் சங்கத்திலே முழு நாளும் வேலை செய்யும் ஒர் கிளாக்கை நியமிக்கலாம். மனேஜர்' என்று சொல்லப்படும் ஓர் முகாமைக்காரனையும் . நியமித்துக் கொள்ளலாம். இப்படியான ஓர் முறையை அநுட்டிப்பதால் பொருள்களை விளைவிக்கும் விவசாயிகளுக்கு ஆவசியகமற்ற பொருள் விரயமோ அவர்களுக்கிடையே எதிரிடையோ ஏற்பட மாட்டாது. மேலும், இக்கூட்டுறவு முறை விவசாயிகள் தங்கள் பொருள்களை தெருவுக்குத்தெரு கொண்டு திரிந்து அலையாது, மானத்துடனும் மிடுக்குடனும் விற்பனை செய்ய உதவும் ஒத்த மனப்பான்மையுடன் கூட்டுறவு முறையிற் செய்யூப் படும் முயற்சியினல் அவர்கள் தமக்கென ஓர் கடையை வைத்து அதில் பொருள்களை விற்பனை செய்யவும், ஓர் வான்" மூலம் விற்பனை செய்யவும் முடிகிறது. இவர்கள் எல்லாரும்' தனித்தனி தம் தொழிலைச் செய்துவரின் இப்படி யெல்லாம் , செய்ய முடியுமா? கூட்டுறவுமுறை விற்போருக்கு மாத்திர மன்றி வாங்குவோருக்கும் நன்மை யளிக்கிறது. பொருள்களை வாங்கி உபயோகிக்கும் ஊரவர்கள் இடையில் உள்ள தரகர் மாரை அண்டி அவர்களுக்கு ஓர் கூலி கொடுக்காமல் விளைவிப்பவரிடம் நேரே சென்று தமக்கு வேண்டிய பொருள் களைச் சுலபமாகவும் மலிவாகவும் பெறலாம். பொருள்கள் எல்லாம் திணி சாக்கப்பட்டிருக்கிறபடியால் தாம் விரும்பிய பொருள்களை அவர்கள் பெறுதல் முடியும்.

சங்கங்கங்களும் நிலையங்களும் 75
இதுவரை விற்பனை விடயமாகவுள்ள கூட்டுறவுச் சங்கங் களைப்பற்றிக் குறிப்பிட்டோம். மக்களிடையே ஒறுப்பனவுப் பழக்கத்தை வளர்ப்பதற்கும் கூட்டுறவுச் சங்கங்களை அமைக்க லாம். நம்மவரில் அநேகர் தம் உழைப்பில் ஒரு பகுதியைச் சேமித்து வைப்பதில்லை. சேமிப்பதற்குப் பணம் இல்லாமை அதற்கு முக்கியமான காரணம் அல்ல ; சேமிப்பதற்குத் தகுந்த இடம் இல்லாமையே பிரதான காரணம். ஓர் சிறு கிராமத்தில் உள்ளவர்கள் தம்மிடையே சேமிப்புப் பழக்கத்தை அபிவிருத்தி செய்யவேண்டும் என்று க்ருதினுல் ஓர் ஒறுப் பனவுச் சங்கத்தை நிறுவி அதன் மூலமாக நன்மை யடைய லாம். அச்சங்கத்திலே ஒருவர் எச்சிறு தொகையைய்ேனும் தம் மிச்சமாகச் சேமிக்கலாம். " சிறு துளி பெரு வெள்ள மன்ருே ? ஒருவர் மிகவும் சொற்பமான தொகைகளைத் தானும் காலந்தோறும் ஒழுங்காகச் சேமித்து வருவரேயானல் அது ஈற்றில் பயன் றரத்தக்க பெரும் முதலாகிவிடும். கூட்டுறவுச் சங்கங்களில் இருந்து கிராம மக்கள் தம் பயன்றரும் தொழில் களுக்கு வேண்டிய முதலையும் கடனகப் பெறலாம். கடன் கோருபவரும் அக்கிராமத்திலேயே வசிப்பவராதலின் அவரைக் கிராம மக்கள் நன்கு அறிவர். அவர் நாணயமான மனிதன், அவர் கோரும் கடன் பயன்றரும் விடயத்துக்குத்தான் என் பதை அவர்கள் உணர்ந்தால் கடனைக் கொடுப்பர். இப்படி யாகத் தம் சொந்தக் கிராமத்தவர்களைக்கொண்ட சங்கத் திடம் இருந்து கடன் பெறும் முறையினுல் கிராமவாசிகளுக்கு அதிக நன்மையுண்டு. வெந்த வீட்டிற் பிடுங்கிய தறுதி என்றபடி தன்னிடம் அகப்பட்டவனின் பொருளைக் கடைசி வரை க்கும் உறிஞ்சி அவனை ஒட்டாண்டியாக்கும் தனிகரிடம் இருந்து கிராமவாசியைத் தப்பவைக்கும் சாதனம் இத்தகைய கூட்டுறவுச் சங்கமாகும். ஓர் ஐக்கிய நாணய சங்கம் தன் அங்கத்தவர்கள் விடயத்தில் வட்டிக்கு வட்டிவாங்கும் மூட்டுப் பூச்சிகள் போல் வார் போலச் சின்னத்தனம் காட்டாது, நேர்  ைம யாக நடந்து , அவர் களை நல்வழி ப்படுததும் தொண்டினைச் செய்யும்.
கூட்டுறவு இயக்கம் இலங்கையின் மதிப்பற்ற பொக்கிஷமாக
இருப்பதன் காரணம்
எங்கள் இலங்கையிலே புதிய தேசீய இனம் ஒன்றினை உருவாக்குவதில் கூட்டுறவியக்கம் பெரும் பணியாற்றலாம். அதற்குக் காரணங்கள் பல வுள. எமது அரசாங்கம் சனநாய கக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. உண்மையான சனநாயக முறையில் அரசாங்கம் நடைபெற்று அநுகூல மடைய வேண்டுமானல் அந்தச் சனநாயக உணர்ச்சி மக்க

Page 43
76 சங்கங்களும் நிலையங்களும்
ளிடையே நன்கு பரவவேண்டும். பட்டணப் பக்கங்களிலும் கிராமப்பக்கங்களிலும் உள்ள மக்கள் தமது லட்சியங்களை அடையவேண்டிச் சிறு சிறு தொகையினராகக் கூடிச் சமத்துவ முறையில் கருமம் ஆற்றுவதாற் சனநாயக உணர்ச்சி நன்கு வளரும். இவ்வாரு க மக்கள் ஒன்று கூடி அமைக்கும் சங்கங் களுக்கு உள்ள கருவிகள் பின்வருவனவாம் :-(1) அங்கத்த வர்கள்; இறுதி அதிகாரம் இவர்களிடமேயுண்டு ; (2) தலை வரும் நிருவாக சபையும் ; கருமங்களை ஆற்றும் சாதனகர்த் தாக்களே இவர்கள்; (3) பொதுக்கூட்டம்: இது தான் கலந்து பேசி முடிவு காணும் சாதனம். கூட்டுறவு இயக்கம் மக்களி டையே சகோதரத்துவ பாவனையை வளர்க்க உதவிசெய்யும். மக்களை ஒற்றுமைப்பாதையிற் செலுத்தி அவர்களிடையே கோஷ்டி மனப்பான்மையையும் பொறுப்புணர்ச்சியையும் வளர்க்கும். கணக்கெழுதுதல், கணக்குப் பரிசோதனை செய்தல், கணக்குப் புத்தகங்களைப் பரிசோதனை செய்தல் என்னும் இன் னுேரன்ன தொழில் நுட்பங்களில் மக்களுக்குத் தேர்ச்சி அளிக் கும். கூட்டுறவு இயக்கத்தினுல் இலங்கையிலே சனநாயக உணர்ச்சியை ஒரளவுக்கா வது விருத்தி செய்வோமாயின் அது ஒர் சிறந்த வெற்றியாகும் என்பதற்கையமின்று.
கூட்டுறவு இயக்கத்தினல், மேலே சொல்லிய நன்மைகளை விட இன்னும் பல சா சுவதமான, வருவாய் விருத்திக்கேது வான, நன்மைகளையும் அடையலாம். இலங்கை மக்களில் 100க்கு 80 விகிதத்தினர் தம் சீவனுேபாயத்துக்கு விவசாயத் தொழிலையே நம்பியிருக்கிருர்கள். அவர்களுடைய செல்வம், புற நாடுகளில் விற்பனையாகும் தேயிலை, ரப்பர், தெங்குப் பொருள்கள் என்பவற்றில் தான் தங்கியிருக்கிறது. ஆனல் இந்தப் பொருள்களை விற்பதற்குப் புற நாடுகளில் எமக்குத் தான் ஏகபோக உரிமையில்லை. ரப்பர், தேயிலை, தேங்காய் என்பன எம் நாட்டில்தான் உண்டாவதில்லை. எத்தனையோ நாடுகளில் இவற்றை விளைவிக்கிருர்கள். இந்த நாடுகளும் தமது தேயிலை முதலாம் பொருள்களை உலகச் சந்தையில் விற்பனை செய்யத் துரிதமுயற்சிகள் செய்யும் காலத்திலே எமது இப்பொருள்கள் புற நாடுகளில் விற்பனையாவது குறைந்துவிடும். தேயிலை, ரப்பர், தேங்காய் என்பன புற நாடுகளில் விற்பனையாவதில்தான் எமது வருமானம் இது வரை தங்கியிருந்தது. இந்த விற்பனை குறையும் காலத்திலே, எமது பண வருவாயும் சுருங்கிவிடும். வருமானம் குறைந்தால் நாம் இறக்குமதி செய்யும் உணவுப் பொருள்களுக்கு வேண்டிய பணத்தை இறுக்க வகையற்றவராய் விடுவோம். இப்போது எங்கள் வருமானத்தில் 12 இல் 5 பகுதியை உணவுப் பொருள் களின் பொருட்டு மாத்திரம் செலவிடுகிருேம். எமது ஏற்று

சங்கங்களும் நிலையங்களும் 77
மதி வர்த்தகத்தில் இனியும் தளரா நம்பிக்கை கொண்டிருத் தல் புத்திசாலித்தனமாகாது. ஆகவே நாம் எமக்கு வேண்டிய அரிசி, மிளகாய், தானியவகைகள், பருப்புவகைகள் என்னும் உணவுப்பொருள்களை இங்கேயே இயன்றளவுக்கு விளைவித்து, அவைபுறநாடுகளில் இருந்து இறக்குமதியாவதைக் குறைத் துக்கொள்ளுதல் வேண்டும். இப்படியான உணவுப் பயிர் களையும், பருத்தி, எண்ணெய் விதைகள், கரும்பு முதலாம் பணப் பெருக்கத்துக்கான பயிர்களையும் விளைவிப்பதாலும், கால்நடைகளை வளர்த்தல், ஆடுகளைப் பெருந்தொகையில் வளர்த்தல், ஆகியவற்ருலும், கடற்ருெழிலை அபிவிருத்தி செய்தலாலும் பொருளாதாரத்துறையில் எம் கிராம மக்கள் இப்போதிலும் பார்க்கச் சிறந்து வாழ முடியும். இந்த விடயத்தில்தான் கூட்டுறவு இயக்கம் அதிகம் துணை செய்ய முடியும். எமது நாட்டுக் குடியானவர்கள் தனிப்பட்ட முறை யில் மேலே சொல்லிய பொருள்களை விளைவிக்கவும் அபிவிருத்தி செய்யவும் தகுதியுடையவர்களா யிருக்கவில்லை. ஆனல் எப்பகுதியிலேனும் உள்ள குடியானவர்கள், உற்பத்தியாக்கு வோர் சங்கம், ஒறுப்பனவுச் சங்கம், விற்பனைச் சங்கம், பொருள் வாங்குவோர் சங்கம் என்னும் இன்னுேரன்ன சங்கங் களாகச் சேர்ந்து கொண்டால் அவர்களுக்கு நல்ல பயன் கிடைக்கும் என்பதற்குச் சந்தேகமேயில்லை. இன்றுள்ள குடியானவர்களின் விவசாயமுறையைக் கெடுத்துவிட்டால் அந்த இடத்தில் ஒன்றில் முதலாளித்துவ விவசாயம் அல்லது அரசாங்க விவசாயம் தோன்றும். முதலாளித்துவ விவசாயம் இதுவரை சுதந்திரத்துடன் இருந்த குடியானவனைக் கேவலம் கூலிக்காரணுக வைத்துக்கொள்ளும். அரசாங்கம் விவசாயத் தைத் தன் பொறுப்பில் எடுத்துச் செய்யும் முறையெனிலோ மக்களைப் பலவந்தத்துக்காளாக்கும். தனது விவசாய முயற்சி களில் மக்கள் எல்லாரும் பங்குபற்றவேண்டும் என்று அரசாங் கம் குடியானவர்களை நிர்ப்பந்திக்கும். இவ்விரு முறைகளும் ஒவ்வாதன. எம் நாட்டுக் குடியானவனை நேர்மையும், நம்பிக் கைக்குகந்த விசுவாசமும் உடைய பிரசையாக்கி அவன் வாழ்க்கையைச் சீர்ப்படுத்துதற்கு மேலே குறித்த இரண்டு முறைகளும் உதவாதன. அரசாங்கம் குடியானவர்கள் விடயத்தில் உதவி செய்யலாம் ; அந்த உதவியைச் செய்யவும்தான் வேண்டும். ஆனல் சனங்களே செய்ய வேண்டிய ஓர் முயற்சியை அது செய்ய கூடாது. சனங்களைக் கொண்டுள்ள கூட்டுறவு இயக்கத்தின் அபிவிருத்தியால் மக்களது பொருளாதார நிலைமை செம்மையாகும். அதுவுமன்றி பிரசைகள் என்ற கூட்டுறவுத் தன்மையில் அவர்களது ஒழுக்கமும் விருத்தி யாகும். ஆகவே கூட்டுறவு அபிவிருத்தியைக் கல்வி விடயமாக

Page 44
78 சங்கங்களும் நிலையங்களும்
-அதாவது அறிவு விருத்தி விடயமாகப்-பார்த்தாலும் பொருளாதார அபிவிருத்தி விடயமாக நோக்கினலும் நன்மை விளையும் என்று திடமாகக் கூறலாம். மக்கள் முன்னேற்றம் தான் எங்கள் எல்லாரதும் லட்சியம். அந்த லட்சியத்தை அடைந்து தேசீய வாழ்க்கையைத் திறம்பட அமைப்பதில் மிகச்சிறந்த உதவி தருவது கூட்டுறவு இயக்கம். இந்த இயக் கத்தினல் நன்மையடைந்து நந்தா விளக்குகள் போலப் பிரகா சிக்கும் இரு நாடுகள் உள. அவை தான் டென்மார்க், ஸ்விட்ஸர்லாந்து என்பன. அவை மிகச்சிறிய நாடுகள் ; ஆனல் கூட்டுறவுப்பண்பை அகிலத் துக் கெடுத்துக்காட்டும் சிறந்த உதாரணங்களாக அவை இன்று மிளிர்கின்றன.
இலங்கையிற் கூட்டுறவு இயக்க வரலாறு
இந்தியாவிலே விவசாய அபிவிருத்தி விடயமாகச் சில காலத்துக்கு முன் நியமிக்கப்பட்ட விசாரணைச் சபை ஒன்று தான் வெளியிட்ட அறிக்கையில் பின்வரும் கருத்துப்படக் கூறியது:
* கிராமவாசிகளிற் பலர் இன்று கடன் சுமையினல் தவிக்கி முர்கள். இந்தப் பொல்லாத நிலைமையில் இருந்து அவர்களை மீட்பதற்குரிய சாதனம், நல்ல முறையில் அமைக்கப்படும் கூட்டுறவு இயக்கமேயாகும். கிராம மக்களை ஒழுங்கான முறை யிற் பயிற்றி, அவர்களுக்குக் கூட்டுறவுக் கல்வியைச் சாவதான மாக ஊட்டுவதால் ஏற்படும் ஓர் முறையே இக்கூட்டுறவு இயக்கத்துக்காதாரமாக இருத்தல் வேண்டும். அவ்வாறு கூட்டுறவு முறை அபிவிருத்தி யடையுமாயின் கிராம மக்கள் முன்னேறுவதற்குச் சந்தேகமேயில்லை’.
மேலே காட்டிய கூட்டுறவு நம் நாட்டுக்கும் சரிவரப் பொருந்தும் , இங்கேயும் நம் குடியானவர்கள் வறுமையி லாழ்ந்து கடன் பழுவினல் நசுக்கப்பட்டு வருகிருர்கள். இக் கேவல நிலைக்குப் பல காரணங்கள் இருந்தன. ஈரலிப்புப் பிரதேசத்தில் தோட்டங்கள் பெருகி ஏற்றுமதி வர்த்தகத்துக் கான பொருள்கள் உற்பத்தியானமை குடியானவர்களின் விவ சாயத் தொழிலைக் கெடுத்தது. பழைய காலத்திலே குடியான வர்கள் தம் வளவுகளில் கமுகு, கறுவா, மிளகு, கொடி முந்திரி முதலாம் பணப்பெருக்கப் பயிர்களை உண்டாக்கி அவற்றின் பயன்களை விற்றர்கள். போர்த்துக்கீசர் ஒல்லாந்தர் காலத்தி லும் இவ்வாறு நடந்தது. ஆனல் தேயிலை ரப்பர் தெங்குத் தோட்டங்கள் விருத்தியானமை இச்சிறிய வருவாய் தரும் பயிருந்பத்தியை நாசமாக்கியது. குடியானவர்கள் தங்கள் நிலத்து விளை பொருள்களை விற்றுச் சீவிக்கமுடியாத நிலைமை ஏற்பட்டது. துர் அதிர்ஷ்டவசமாக, ஈரலிப்பு வலையப் பிர

சனங்களும் நிலையங்களும் 79
தேசங்கள் நெற் செய்கைக்கு வாய்த்தனவாகவும் இருக்க வில்லை. எனவே அப்பகுதியில் இருந்த குடியானவர்கள் தமது உணவுப் பொருளையும் பெற முடியாது விட்டது. இதன் பயனக அவர்களின் இளைய பிள்ளைகள் பட்டணங்களிற் குடி யேறி அன்ருட்ச் சம்பளம் பெறும் தொழிலாளர்களானர்கள். மற்றவர்கள் தோட்டங்களில் தொழிலாளராயமர்ந்து கால கதியில் விவசாயக் கலையையே மறந்துவிட்டார்கள். இவை யாவற்றிலும் மேலாக, அவர்கள் " பூமி திருத்தி உண்ணு வதை ஒழித்தமையினல் தமக்கும் பூமாதேவிக்கும் தொன்று தொட்டிருந்த பந்துத்வத்தையும் இழந்தனர். அவர்கள் தமக்கு அன்ருடம் சம்பளமாகக் கிடைத்த உரொக்கப்பணத் தையே பெரிதாக மதித்து அதனைத் தமது உணவுக்கும், உடைக்குமாகக் கடைகளிற் செலவிட்டனர். ரப்பர் தேங் காய் என்பவற்றின் விலை வீழ்ச்சியடைந்தால் அவர்கள் வேலை யிலிருந்தும் நீக்கப்படத் தமது உணவின் பொருட்டுச் சோற்றுக் கடைக்காரனுக்குக் கடனளிகளாவர். அவர்களுக்குத் திருப்தி யான வாழ்க்கையில்லை. நிம்மதியான சீவியம் இல்லை. அவர்க ளுடைய பிழைப்பு எந்த நேரம் இல்லாதுபோய்விடும் என்று சொல்லமுடியாத ஓர் அந்தர நிலைமையில் தவிக்கிருர்கள். இது ஈரலிப்புவலையக் குடியானவர்களின் நிலைமை. வெப்ப வலையத்திலே யிருந்த குளங்கள் பன்னெடுங்காலம் தேடு வாரற்றுப் புறக்கணிக்கப்பட்டபடியால் அவை தூர்ந்து இருந்த விடமே தெரியாது போயின. இக்குளங்களில்லாது குடியான வர்கள் தம் நிலங்களைப் பண்படுத்திப் பயிர் செய்ய முடியாது. உணவுப் பஞ்சத்தால் வாடிய அவர்களை நோயும் பீடித்து அவர்களது தொகையைக் குறைத்து, ஈற்றில் உலக்கை தேய்ந்து உளிப்பிடியான தன்மைபோல அப்பிரதேசத்துக் கிராமங்கள் மிகவும் கீழான நிலைமையை எய்தின.
பட்டணப் பக்கங்க்ளிலே வசிக்கும் மக்கள் நேர்முக மாகவோ வேறுவிதமாகவோ தோட்ட விவசாயத்திலேயே தங்கியிருக்கின்றனர் என்று கூறலாம். பட்டணத்துப் பெருந் தொழில்கள் பிரித்தானிய அல்லது இந்திய முதலாளிகள் வசமிருந்தன. தொழில்களுக்கு வேண்டிய முதற் பணமும் பயிற்சியும் இல்லாமையினல், சிறு தொழில்கள் தானும் இலங்கையர் பொறுப்பில் இருக்கவில்லை. ஆகவே நாட்டிலும் சரி நகரிலும் சரி எங்கு பார்த்தாலும் இலாபம் தரக்கூடிய தொழில்கள் யாவும் அந்நியர் பொறுப்பில் இருக்க இந்நாட்டு மக்கள் அவர்களின் தயவில் தங்கி வாழும் கேவல நிலையிற் கிடந்தனர்.
கூட்டுறவு முறை ஒன்றுதான் கிராம மக்களையும் பட்டண வாசிகளையும் தற்பாதுகாப்புடையோராச்கும் பயிற்சியை

Page 45
80 சங்கங்களும் நிலையங்களும்
யளிக்க வல்லது. ஆகவே அரசாங்கம் இவ்விடயத்தில் உதவி செய்யவேண்டும். இந்நாட்டில் வாழும் சகல மக்களும் நல்வாழ்க்கை நடாத்துதற்கான நிலைகளை ஏற்படுத்திக் கொடுத் தல் அரசாங்கத்தின் கடமை யன்ருே ? இக்காரணத்தினலேயே 1912-ம் ஆண்டிலே கூட்டுறவு நாணையச் சங்கச் சட்டம் என்னும் ஓர் கட்டளைச் சட்டம் நிறைவேறியது. இச்சட்டத் தின் பயனக நாணய சங்கங்கள் மாத்திரமே தோன்றிச் சேவைசெய்தன. இது போதாது என்பதைக் கண்ட அரசாங் கம் 1921-ம் ஆண்டிலே மற்றும் பலவித கூட்டுறவுச் சங்கங் களை நிறுவுதற்கான ஓர் கட்டளைச் சட்டத்தை நிறைவேற்றி யது. அத்துடன் கூட்டுறவு இயிக்கத்தைத் தகுந்த முறையிற் பரிபாலிப்பதற்காக அது விவசாயப்பகுதி அதிபதியின் பொறுப் பில் விடப்பட்டது. கூட்டுறவியக்கத்துக்குத் தலைமை தாங்கும் ரீதியில் விவசாயப்பகுதியதிபதி பதிவுக்காரியஸ்தர் என வழங்கப்பட்டார். 1926-ம் ஆண்டிலே ஓர் இணைப்பதிவுக் காரியஸ்தரின் உதவி அவர்க்கு அளிக்கப்பட்டது. இன்னேர் அரசாங்கப் பகுதியுடன் கூட்டுறவுப்பகுதி இணைந்திருக்கக் கூடாது, அது தனியாக ஒர் பகுதியாக இருப்பது ஆவசியம், என அரசாங்கத்துக்கு கால கதியில் தோற்றியது. எனவே அது கூட்டுறவுப் பகுதியைத் தனியாக அமைத்து அதன் பதிவுக் காரியஸ்தராக திரு. டபிள்யூ. கே. எச். காம்பெல் என்பவரை நியமித்தது. 1945-ம் ஆண்டிலே கூட்டுறவு அபிவிருத்திப்பகுதி? என்ற இன்னேர் பகுதி நவமாகத் தாபிக் கப்பட்டது. இலங்கையிற் புதிதாகத் தோன்றியுள்ள கூட் டுறவு இயக்கத்தை நல்ல முறையில் அமைத்து வழி நடாத்து தற்கே இப்புதிய பகுதி சிருட்டிக்கப்பட்டது. பொருள் வாங்குவோரது கூட்டுறவு இயக்கத்துக்கு வேண்டிய பொருள் உதவும் கருமத்தைத் திறம்பட அமைப்பதில் இப்புதிய பகுதி இன்று தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. கூட்டுறவு மொத்த வியாபாரத் தாபனத்தின் பொறுப்பையும் இப்பகுதி மேற் கொண்டிருக்கிறது. இலங்கை எங்கும் உள்ள சங்கக் கடை களுக்கு வேண்டிய பொருள்களை வழங்குவது இந்த மொத்த வியாபாரத்தாபனமே யாம்.
கூட்டுறவுச் சங்கங்களை அமைப்பதிலும், அவற்றை ம்ேற் பார்வை செய்தல், அவற்றின் கணக்குகளைப் பரிசோதனை செய்தல் ஆதியாம் கருமங்களைக் கூட்டுறவுப் பதிவாளர்*
I. Mr. W. K. H. Campbell. 2. Department of Co-operative Development. 3. Co-operative Wholesale Establishment. 4. Registrar of Co-operative Societies.

சங்கங்களும் நிலையங்களும் 8
ஆற்றுகிருர், அவரின் கீழ் ஒர் பிரதிப்பதிவாளரும். இரண்டு உதவிப்பதிவாளரும் உளர். கூட்டுறவு விடயமாக இலங்கை பல பெரும் பாகங்களாக வகுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வோர் பெரும் பாகமும் ஓர் உதவிப்பதிவாளர் கீழ் இருக்கிறது. பெரும் பாகம் ஒவ்வொன்றும் பல வட்டங்களாக வகுக்கப் பட்டு ஒவ்வோர் வட்டத்துக்கும் ஓர் பரிசோதகர் இருப்பர். பரிசோதகர்க்கு உதவியாக உதவிப் பரிசோதகர்கள் உளர். உதவிப் பரிசோதகர்கள் சங்கங்களுக்குச் சென்று அவற்றை மேற்பார்வை செய்தல், கணக்குகளைப் பரிசோதித்தல் ஆதி யாம் கருமங்களைச் செய்வர்.
1943-ம் ஆண்டில் சுட்டுறவுப் பகுதியில், கல்வி, பிர சாரம் என்பவற்றின் பொருட்டு இன்னேர் பிரிவு நவமாகத் தாபிக்கப்பட்டது. ப்ரிசோதகர்கள், உதவிப் பரிசோதகர்கள் என்பவர்களுக்கும் புதிதாகச் சேர்ந்துள்ள ஏனைய உத்தியோ கத்தர்க்கும்பயிற்சியளித்தல், அவர்களுக்குக் கூட்டுறவு விடய மா. க க், காலந்தோறு ம் அறிவுறுத் த ல் சங்கங்களின் நிருவாகிகளுக்குப் பயிற்சியளித்தல், கூட்டுறவின் பிரதானத் தையும் அத்தியாவசியகத்தையும் மக்கள் விளங்கியுணர அவர் களுக்கிடையே பிரசாரம் செய்தல் என்பன மேலே கூறிய பிரிவின் கருமங்களாம்.
கூட்டுறவுப் பயிற்சிப் பாடசாலை" என்ற பெயருடன் ஓர் பாடசாலை கண்டி நகரத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இப் பாடசாலைக்கு ஒர் பிரதமா சிரியர் உளர். புதிதாகச் சேரு வோர் பரிசோதகரெனில் 18 மாதமும் உதவிப் பிரிசோதக ரெனில் 12 மாதமும் இங்கே பயிற்சிபெறுவர். கூட்டுறவு, கூட்டுறவுச் சட்டம், பொருளாதாரம், பொருளாதாரச் சரித் திரம், இலங்கையுடன் தொடர்புகொண்டுள்ள சரித்திரம், பூகோளம், விவசாயம் நிலவளம் என்னும் பாடங்கள் இங்கே போதிக்கப்படுகின்றன.
ஐக்கியதீபம் என்று தமிழிலும், சமூகோபகாரய * என்று சிங்களத்திலும் இரண்டு பத்திரிகைகள் கூட்டுறவுப் பகுதியாற் பிரசுரிக்கப்படுகின்றன.
கூட்டுறவுச் சங்கங்கள்
இலங்கையிற் பலவிதமான கூட்டுறவுச் சங்கங்கள் உள. 1942-ம் ஆண்டு இங்கே, 2,000 சங்கங்கள் இருந்தன. அவற் றில், 92,000 பேர் அங்கத்தவர்களா யிருந்தனர். இச்சங்கங் களின் முதற்பணம் 70 லட்சம் ரூபா. 1945-li ஆண்டு சித் திரை (ஏப்பிரல்) மாதம் முடிய 6,400 சங்கங்கள் இருந்
I. School of Co-operation.

Page 46
நாணய சங்கங்களின் முன்னேற்றம்
லட்ச ரூபா வரைவற்ற உத்தரவர்தம் 45
40
ܐ ܫ- ܢ ܫ ** م
35E
30
25
20
- ஆண்டிற் கொடுக்கப்பட்ட கடன்கள்
. ஆண்டில் அறவிடப்பட்ட கடன்கள் 5 ராலு
’ வரல்லா to L. նւ4ւ 116ծծ մo
O 1944-45 945-46, 946-47 947-48, 1948-49 949-50
 

சங்கங்களும் நிலையங்களும் 83
தன. அவற்றின் அங்கத்தவர்கள் தொகை 1,100,000. முதல் தொகை 2 கோடி 60 லட்சம் ரூபா.
இனி, இச்சங்கங்களின் பிரதான இனங்களைச் சிறிது ஆராய் வாம் : முதலில் நாணைய சங்கங்களை எடுத்துக்கொள்ளுவோம். இவற்றில் இரண்டு விதங்கள் உண்டு. ஒன்று மட்டுப்படாத உத்தரவாதம் உடையது. / மற்றது மட்டுப்பாடுள்ள உத்தர வாதமுடையது. ங்கத்தவர்கள் ஒருவரை யொருவர் நன்கு அறியும் சிறிய இடங்களில் தான் மட்டுப்படா உத்தரவா முடைய சங்கங்கள் இருக்கின்றன. (ஒர் கடன் உறுதியை நிறைவேற்ற இத்தகைய சங்கம் தவறினல் அதில் உள்ள அங்கத்தவர்களின் ஆதனம் முழுவதுக்கும் துரட்சி* செய்யலாம்.) ஆனல் இச்சங்கங்கள் சிறு பகுதிகளில்தான் இயங்குகின்றன என்பதும் அவற்றின் அங்கத்தவர்கள் ஒரு வரையொருவர் நன்கு அறிந்தவர்கள் என்பதும் நோக்கற் i Ift Gl) gil. அவர்களில் ஒருவர் கடன் கோரி மநுச் செய்தால் அம்மநு மிகவும் நுணுக்கமாகவும், கவனமாகவும் சங்கத்திற் பரிசீலனை செய்யப்பட்டு உபயோகமான, ஊதிபம் தரக்கூடிய விடயங்களுக்கே அநுமதிக்கப்படும். இப்படியான நாணைய சங்கம் ஓர் வங்கியைப்போன்றது என்றும் கூறலாம். தனது அங்கத்தவர்களிடையே சேமிப்புப் பழக்கத்தை விருத்தியாக்கி அவர்களைச் சேமிக்கத் தூண்டுதலும், நியாயமான விகித வட்டியில் கட்டுப்பாடுள்ள கடன்களை அவ்வங்கத் தவர்களுக்கு வழங்குதலுமே இச்சங்கத்தின் பிரதான နှီ႔မ်ားႏွစ္ထိ ஆண்டில் இப்படியான சங்கங்கள் இலங்கையில் 1897 இருந் தன. மட்டுப்பாடுள்ள உத்தரவாதமுடைய சங்கத்து அங்கத் தவரின் உத்தரவாதத்தொகை அவரது பங்கு முதலின் அளவே யாகும். பட்டண வங்கிகளிற் சிறந்த இனம்தான் இச்சங்கம். ஒருவரை யொருவர் நன்கு அறிந்துள்ள சிறிய கிராமப் பக்கங்களிலே மட்டுப்பாடற்ற உத்தரவாதமுடைய நாணைய சங்கம்தான் சிறந்தது. ஆனல் பட்டணப் பக்கங்களிலே அங்கத்தவர் ஒருவரை யொருவர் நெருங்கி அறிய முடியாது. ஆகவே இங்கே மட்டுப்பாடுள்ள உத்தரவாதமுடைய சங்கம் தான் சிறந்தது. மட்டுப்பாடுள்ள உத்தரவாதச் சங்கத்தில் அல்லது வங்கியில் நட்டம் ஏற்படுமானல், அந்நட்டத்தினை, மிகவும் கூடியதாக நிர்ணயிக்கப்பட்டுள்ள அதன் பங்கு முதல் ஈடுசெய்யும் , அங்கத்தவர்களது உத்தரவாதமும் அவர்களது பங்குமுதலைப்பொறுத்திருக்கும். இப்படியான பட்டண வங்கி (இந்த நாணைய சங்கம் உண்மையில் ஓர் வங்கியே) தொழி லாளர், வினைஞர், வர்த்தகர் எனப்படுவோரின் தேவைகளுக் உதவி செய்யவே அமைக்கப்படுவது. மட்டுப் பாடற்ற உத்தரவா முடைய நாணைய சங்கங்கள் சிறு தேவைகள்

Page 47
ஒறுப்பனவுச் சங்கங்களின் முன்னேற்றம்
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 30-ம் திகதியில்
அங்கத்துவம் சேமிப்பு ஆயிரக்கணக்கில் அங்கத்துவ நிலையும் சேமிப்பும் லட்சக்கணக்கில் 45
A.
40 た一
V v’
35
30
25
محبر
20
イ
O
tapo அங்கத்துவம் l
a சேமிப்பு 5 l
154.4s 94.4, 1946-47 1944s 1948-49 1945.50

சங்கங்களும் நிலையங்களும் & 5
உடையராய், அச்சிறு தேவைகளைப்பெற தமக்கிருக்கும் சகல வற்றையும் ஈடு செய்பவராயுள்ளவர்களுக்கு மாத்திரமே ஏற்றது. தேவைகள் அதிகமானவர்கள் மட்டுப்பாடுள்ள உத்தரவாதத்தைக் கைக்கொள்ளுகிருர்கள். அவர்களுக்கு எவ்வளவுக்கெவ்வளவு அதிக தொகை வேண்டுமோ அவ் வளவுக்கவ்வளவாக அவர்கள் தம் பங்குமுதலை இடுவர் *. மட்டுப்பாடுள்ள உத்தரவாதமுடைய நாணைய சங்கங்கள் இப்போது 114 வரை இருக்கின்றன.
வ்ேருேர்விதக் கூட்டுறவுச் சங்கம் ஒறுப்பனவுச் சங்க மாகும், மக்களிடையே ஒறுப்பனவுப் பழக்கத்தை ஊட்டி அவர்களைச் சேமிக்கத் தூண்டுவதே இச்சங்கங்களின் நோக் கம். இப்போது அரசாங்க உத்தியோகத்தரின் ஒறுப்பனவுச் சங்கங்கள் ஏறக்குறைய 46 உள. இவற்றைவிட தலைமைக் காரர் சங்கம் 31 உம், பெண்கள் சங்கங்கள் 87 உம் ஏனை யோர் சங்கங்கள் 32 உம் உள.
விளைபொருள்களை விற்பனை செய்தற்கும் ஓரினக் கூட்டுற வுச் சங்கங்கள் உள. 1945-ம் ஆண்டிலே இப்படியான விளை பொருள் விற்பனைச் சங்கங்கள் ஏறக்குறைய 160 இருந்தன. அவற்றில் 15,400 பேர் அங்கத்தவராயிருந்தனர். அவை 25 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து 68,000 ரூபா இலாபம் அடைந்தன. இத்தகைய சங்கங்களிற் பிரபல்யம் வாய்ந் தவை யாழ்ப்பாணம் மலையாளப் புகையிலை விற்பனைச் சங்கம், வெங்காயம் மிளகாய் என்பவற்றை விற்பனை செய்யும் விவசாயப் பொருள் உற்பத்தியாளரின் விற்பனைச் சங்கம், அம்ப லாந்தோட்டையிலும் திசமகாரு மையிலும் உள்ள நெல் விற்பனவுச் சங்கங்கள், தனக்கே சொந்தமாக ஓர் சிறந்த நெற் குற்றும் யந்திர சாலையையும் கிட்டங்கிகளையும் வைத் திருக்கும் மின்னேரியா நெல் விற்பனைச் சங்கம், வெலிம டைக்குச் சமீபமாக பலுகமத்தில் இருக்கும் உடப்பலாத விவசாய விளைபொருள் விற்பனைச் சங்கம், தெங்குப் பொருள் உற்பத்தியாளரின் விற்பனைச் சங்கம், சந்தலங்காவ சங்கம் என் பவையேயாகும். இவற்றிலுள்ளும் மிகச் சிறந்த முறை யில் தொழிலாற்றுவது கடைசியிற் கூறப்பட்ட சந்தலங்காவ சங்கமே யாம். அது தனக்கெனக் சொந்தமாக மோட்டார் வண்டிகளை வைத்து தன் விளைபொருள்களை தன் சொந்த லொறி களிலேயே அனுப்பிவருகிறது. 1945-ம் ஆண்டில் மாத்திரம் இச்சங்கம் 245,000 ரூபாவுக்க மேலாக விற்பனை செய்திருக்கிறது.
மேலே காட்டிய சங்கங்களை விட பொருள் பாவிப்பாளர் சங்கங் களும் உள. இரண்டாவது உலக மகாயுத்த காலத்தில்
1. Consumers' Society.

Page 48
விற்பணுவசதிச் சங்கங்களதும் உற்பத்திச் சங்கங்களதும் விற்பனை ஒப்புநோக்கல் 1947-1950
6),3 தெங்குப் பொருள் ரூபாய்கள்
20
O
00
90
80
70
60
50
40
30
20
O
1947/48 948/49 1949/50
ரூபாய்கள்
விவசாய உற்பத்தியும் 6酚萎子 விற்பனையும்
20
O
00
90
80
70
60
50
40
30
20
O
1947/48 i948/49 1949/50
தெங்குப்
ஆண்டு பொருள் மீன்பிடித்தல் :: ஏனையவை மொத்தம்
947-1948 ዘ4-7 85 55-2 22 90-6
948-949 802 8-9 58-3 9-2 666
949-1950 08 9:2 06 85 244-6
s L 68
ரூபாய்கள் மீன்பிடித்தல் ரூபாய்கள் ஏனயவை
20 20
O
00
90
80
70
60
50
40
30
20
O
1947/48 1948/49 1949/50
O
00
90
80
70
60
50
40
30
20
O
1947/48 948/49 1949/50
 
 
 
 

சங்கங்களும் நிலையங்களும் 87
தான் இவை உருவாகி பங்கீடு செய்யப்பட்டு வரும் பொருள் களைப் பெற்றுத் தமது அங்கத்தவர்களுக்கு வழங்கி வருகின் றன.
கூட்டறவு இயக்கத்தின் வேருேர் முக்கிய அம்சம் அதன் வங்கித் தொழிலாகும். கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு என்னும் நாலு பட்டினங்களிலும் ஒவ்வொரு மத்திய வங்கி தாபிக்கப்பட்டது. Yஇலங்கையின் மாகாணம் ஒவ்வெர்ன்றிலும் ஒவ்வொரு வங்கியைத் தாபிக்க வேண்டும் என்பதே அதில் தொடர்புடையாரின் நோக்கமாகவிருக்கிறது. தனிப்பட்ட சங்கங்களும் கூட்டுறவுச் சங்கங்களும் இந்த வங்கிகளிலே பங்குகளைப்பெற்றும் தம் சேமிப்புக்களை இட்டும் கொள்ளலாம். பணம் தேவைப்படும் கூட்டுறவுச் சங்கங்கள் இந்த வங்கிகளிலே தமக்கு வேண்டிய பணத்தை நியாயமான நிபந்தனைகளுடன் கடனகப் பெற்றுக் கொள்ளலாம். 1944-ம் ஆண்டில் இவ்வங்கிகள் கொடுத்த கடன்களின் தொகை 1 கோடி 50 லட்சம் ரூபா. ஆனல் இத் தொகை 1947-ம் ஆண்டில் 8 கோடி ரூபா ஆனதில் இருந்து அவற்றின் தொழில் எவ்வளவுக்கு அபிவிருத்தியடைந் திருக்கிற தென்பது புலப் படும். 1950-ம் ஆண்டிலே இவ் வங்கிகளால் உதவப்பட்ட கடன் தொகை 8 கோடி 70 லட்சம் ரூபா ஆனது. நாட்டிலே உள்ள கூட்டுறவுச் சங்கங்கள் தம்மிடம் இருக்கும் பணத்தைச் சேமிப்பதற்கு உரிய தாபனங்களாயும் அவற்றின் உற்பத்திக் கருமங்களுக்கு வேண்டிய முதற் பணத்தை அளிப்பதற்குரிய நிலையங்களாயும் இம்மத்திய வங்கிகள் இருக்கின்றன.
*ಷಿ-|...| | | | | لم ل ل ل ل ل ل ل 6 بميمه
கூட்டுறவுத்தாபனங்கள் அனைத்தினதும் நிதிகளைக் கட்டுப் படுத்தி மேற்பார்வை செய்யவும் அவற்றை ஒரோமுகப்படுத்த வும் ஒரு மகா வங்கி இன்றியமையாததெனத் தென்பட்டது. ஆகவே அப்படியான ஒரு வங்கி ‘இலங்கைக் கூட்டுறவுச் சமஷ்டி வங்கி? என்ற பெயருடன் 1948-ம் ஆண்டில் பதிவு
1. Central Bank. LSlug, T607 a 58 67667 p! di, p 5 ft. 2. Co-operative Federal Bank of Ceylon.

Page 49
88 சங்கங்களும் நிலையங்களும்
செய்யப்பட்டது. இதற்கு அரசாங்கம் 20 லட்சம் ரூபா உதவியது. 1,045 சங்கங்களும் பங்குகள் பெற்றன. அவை தம் பங்குப் பணமாக 210, 000 ரூபா உதவியுள்ளன. மற்றும் பங்குகள் பெற்றவர்களின் பங்குப் பணத்துடன் 560,000 ரூபா ஆக அதன் முதல் அதிகரித்தது.
1943-ம் ஆண்டிலே கூட்டுறவு மொத்த வியாபாரத்தா பனம் என்ஜ பெயருடன் ஒரு தீர்ப்னம் அமைக்கப்பட்டது கூட்டுறவு இயக்கத்தின் மற்றுமொரு அபிவிருத்தியாகும். அக் காலத்திலே, தமக்கு வேண்டிய சரக்குகளைப் பெறுவதில் தாம்படும் கஷ்டங்களைப் பல கூட்டுறவுச் சங்கங்கள் முறை யிட்டன. ஆகவே, அவற்றுக்கு வேண்டிய பொருள்களை உதவக்கூடிய ஒரு தாபனம் உடன் அமைக்கவேண்டியதவசி யம் எனப் புலப் பட்டது. அதன்படி அத்தாபனம் 1943-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. அதன் பரிபாலனத்தை நடாத் தப் பல உத்தியோகத்தரும் தொழிலாளரும் இப்போது இருக் கிருர்கள். அதற்குப் பல சாமான் குதங்களும் பண்டசாலை களும், பொருள்களைக் கொண்டு செல்லும் மோட்டார்வாக னங்களும் உண்டு.
மக்களுக்கு வேண்டிய பொருள்களைச் சில்லறையாக விற் கும் சங்கக் கடைகளுக்கு வேண்டிய சகல சாமான்களையும் உதவுதற்குரிய சாதன மே இக்கூட்டுறவு மொத்த வியாபாரத் தாபனமாகும். சங்கக்கடை ஒவ்வொன்றும், அல்ல்து சங்கக் கடைகள் சில சேர்ந்து, தங்களுக்கு, வேண்டிய சாமான்களை உள்ளூரிலோ, புறநாட்டிலோ தம்பாட்டில் கொள்ளத் தலைப் பட்டால், அதனுல் போட்டியும் குழப்பமும் உண்டாகும். இது கூட்டுறவு இயக்கத்துக்கே பொருந்தாது. சங்கக் கடைகளுக்கு வேண்டிய பொருள்களை உள்ளூரிலும் பிறவூரி லும் வாங்குவதோடமையாது. சாத்தியமானவிடத்து உற் பத்திசெய்து கொடுப்பதையும் கூட்டுறவு மொத்த விபாபாரத் தாபனம் நோக்கமாகக் கொண்டிருக்கிறது. இப்போது இத் தாபனம் 3, 523 சங்கங்களுக்குச் சாமான்கள் கொடுத்து வரு கிறது. இச்சங்கங்கள் எனிலோ, நாட்டு மக்களில் மூன்றில் இரண்டு பங்கினருக்குச்.சாமான்கள் வழங்கிவருகின்றன. இந்த நாட்டிலே அத்தியாவசிய உணவுப் பொருள்களையும் உடுபுடை வைகளையும் வழங்கும் அதியுன்னத விநியோகத்தாபனம் இதுவேயாகும்.
இதுவரை கூறியதிலிருந்து எங்கள் நாட்டின் பொருளா தார அபிவிருத்திக்குக் கூட்டுறவு முறை எவ்வளவு பிரதானம் வாய்ந்தது என்பதை இப்போது நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.
1. Co-operative Wholesale Establishment.

சங்கங்களும் நிலையங்களும் 89
நாங்களோ வறிய மக்கள். எங்கள் குடியானவர்கள் கடன் என்னும் பாராங்கல்லினல் அமுக்கப்பட்டு வருகிருர்கள். அவர்களை மீட்டு அவர்களையும் நம் பட்டணத் தொழிலாளரை யும் நல்நிலைமையில் வைத்து அவர்களைச் சுயமரியாதையுள்ள பிரசைகளாக்குதற்குக் கூட்டுறவு இயக்கம் பெருந்துணைச் செய்யும். இன்று காடாகக் கிடக்கும் நிலங்களை வளமுள்ளன வாக்கி பெரிய முதலாளிகளுக்கின்றி சாதாரண குடியானவர் களுக்கு அவற்றை வழங்கவும் கூட்டுறவு இயக்கம் உதவி செய்யும். இப்படியான மகத்தான பணிகளில் தான் ஓர் நாட் டின் எதிர்கால சுபீட்சம் தங்கியிருக்கிறது. ஈற்றில், கூட்டுறவு இயக்கமானது மக்களுக்கு சனநாயகப் பழக்கங்களான தற் பாதுகாப்பு, பொது நன்மை விருத்திக்கான பிரயாசை என்ப வற்றிலும் சிறந்த பயிற்சி அளிக்கும்.
W. தேசிய சேமிப்பு இயக்கம்
எங்கள் நாட்டின் ஏற்றுமதி இறக்கு மதிப் பொருள்களின் அட்டவணை ஒன்றை அவதானமாகப் பாருங்கள். அப்போது ஒரு விடயம் தெள்ளிதிற் புலப்படும். அதாவது: நாம், எமக்கு வேண்டிய உண்வுப்பொருள்களை இறக்குமதி செய்வதோடு மாத்திரம் நிற்கவில்லை. எமக்குத் தேவையான சகல உற்பத் திப் பொருள்களையும், அன்ருட உபயோகத்திற்கு வேண்டிய எண்ணெய், நிலக்கரி என்பவற்றையும் இன்னும் எத்தனையோ பொருள்களையும் புற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கி ருேம். இப்படியாக நாம் இறக்குமதி செய்து வாங்கும் பொருள்களுக்குப் பதிலாக, நாம் ஏற்றுமதிசெய்து புற நாடு களில் விற்பதற்கு மூன்றே மூன்று பிரதான பொருள்களே உண்டு. அவைதான் தேயிலை, ரப்பர், தெங்குப்பொருள் என்பன. இப்படியான மிகச் சொற்பமான பொருள்களையே எமது வருமானத்துக்குத் தங்கியிருக்கும் இந்நிலையிலே, எங்கள் நாட்டுச் சனத்தொகை ஆண்டு தோறும் பெருகிக்கொண்டு வருகிறது. ஆகவே நாம் எமக்கு வேண்டிய உணவுப் பொருள் களை விளைவித்து, வெளி நாடுகளில் விற்பனையாகும் எம் விளை பொருள்களை அதிகரிக்காவிட்டால் ஆயிரக்கணக்கான எம்ம வர் பொல்லாத வறுமைப் பிணியால் வாடவேண்டி ஏற்படும். வறுமை காரணமாகச் சத்துணவு இன்றி மக்கள் தவிக்க, நோய்கள் அவர்களைப் பீடிக்கும். ஈற்றில் இந்த ஈழ நாட்டு மக்கள் அழிந்து போகவும் கூடும்.
இப்படியான ஒரு கெடுதியான நிலைமையில் நாம் இருக்கி ருேம் என்று வாயாற் சொல்லுவதுடன் நாம் நின்று கொள்ளக்
1. National Savings Movement.

Page 50
99 சங்கங்களும் நிலையங்களும்
கூடாது. இந்நிலையை மாற்றக் கருமத்தில் ஈடுபடவேண் டும். அப்படியான கருமங்களில் மிகப் பிரதானமானது உண வுப்பொருள் விருத்தி: இப்போது பயனற்றுக் கிடக்கும் நிலங் களை விளை நிலங்களாக்க வேண்டும். ஆசுப்பத்திரிகளையும், சிகிச்சா நிலையங்களையும் ஊர் தோறும் தாபிக்கவேண்டும். நீர்வீழ்ச்சி மின்சாரம் போன்ற சக்திகளைத் திரட்டி நாட்டில் ஆக்கத் தொழில்களுக்கு அவற்றைப் பயன் படுத்தவேண்டும். கடல் படு திரவியங்களை விருத்தியாக்க வேண்டும். எமக்கு இலாபம் அளிக்க வல்ல பொருள்களை ஆக்கும் தொழிற்சாலை களைத் திறக்கவேண்டும். இப்படியான நற்கருமங்களை நாம் தொடங்கி நடாத்துதற்குப் போதிய மூலதனம் வேண்டும். நாம் எடுத்துக்கொண்ட நற்கருமங்களைப் பூர்த்தியாக்க விவ சாயக் கருவிகளை வாங்கவேண்டும். சீமந்து, உருக்குச் சலா கைகள் போன்ற கட்டிடச் சாதனங்கள் வாங்கவேண்டும். மின்சார ச்சக்தி விநியோகத் தானங்களுக்கு வேண்டிய யந் திரங்கள் வாங்கவேண்டும். மைல் கணக்கில் நீளமுள்ள உலோகக் கம்பிகளைப் பெறவேண்டும். அதிகம் போக வேண் டாம்: ஒரு பருத்தி ஆலையை எடுத்துக்கொள்ளுவோம். அதனை அமைக்க எத்தனையோ விதமான உபகரணங்கள் தளபாடங் கள் வேண்டும். அவற்றில் எவ்வளவை எம் நாட்டில் நாம் வைத்திருக்கிருேம் ? எந்த அளவுக்குமில்லை என்றுதான் சொல்லவேண்டும். அவ்வாலைக்கு வேண்டிய முக்காலே மூன்று வீதப் பொருள்களையும் புறநாடுகளிலிருந்தே தருவிக்க வேண்டியிருக்கிறது. இன்னேர் உதாரணத்துக்கு எங்கள் நாட்டுப் பாடசாலைகளையே எடுத்துக்கொள்ளுங்கள். 600 பிள்ளைகள் படிக்கக்கூடிய வோர் பாடசாலையைக் கட்டிமுடிக்க 500,000 ரூபா தொடக்கம் 600,000 ரூபா வரை வேண்டும். அக்கட்டிடத்துக்கு வேண்டிய இரும்புத் தீராந்திகள், சலாகை கள் என்பவற்றையும் சீமந்தையும்? புற நாடுகளில் இருந்தே தருவிக்கவேண்டியிருக்கிறது. சீமந்து குழைக்கும் யந்திரங்கள் போன்ற யந்திரங்களையும் இறக்குமதி செய்யவேண்டி இருக் கிறது. இவ்விடயமாகக் கல் ஓயாத்திட்டத்தை ஓர் உதாரணத் துக்கு எடுத்துக்கொள்ளலாம். அங்கே நடைபெறும் கருமங் களுக்கு உபயோகிக்கப்படும் பாரிய யந்திரங்களை நீங்கள் கண்டிருக்கலாம். அவை ஒவ்வொன்றும் பெருந்தொகைப் பணம் பெறுமதியானது. இப்படியான யந்திரங்களை நாம் உபயோகிக்க, ஒன்றில் பணம் கொடுத்து முற்ருக வாங்கவேண்
. Hydro-Electricity-fift-iss67 என்றும் கூறுவர்.
2. கங்கேசன்துறையில் ஒர் சீமெந்து தொழிற்சாலை இப்போது நடைபெறுகிறதெனினும் அதன் உற்பத்தி இப்போதைய தேவைக்குப் போதியதாகாது.

சங்கங்களும் நிலையங்களும் 9.
டும் ; அல்லது வாடகை கொடுக்கவேண்டும். எங்கள் நீர் வீழ்ச்சி-மின்சாரத்திட்டம் இருக்கிறது; அதன் மூலமாக எமது மூல பலத்தை விருத்தியாக்கப் பெருந்தொகை மூலதனம் வேண்டும். கொழும்புத் துறைமுக அபிவிருத்தித் திட்டம்,1 பெரும் மூலதனத்துக்கேதுவான இன்னேர் கருமமாகும்.
எங்கள் இலங்கை நாட்டை வளமுள்ளதாக்கி அதன் மூலம் இந்நாட்டு மக்களை எந்நாட்டு மக்களுக்கும் பின்வாங்காப் பெற்றியராக்க வேண்டுமானல் மேலே கூறியனபோன்ற பல நற் கருமங்களில் ஈடுபடவேண்டும். ஆனல் அதற்குப் பணம் வேண்டும். அப்பணத்தை எங்கிருந்துபெறுவது? என்ற ஓர் கேள்வி பிற க் கிறது. /எ ம் மிலும் பார் க் க ச் செல்வ நிலையில் உள்ள வேற்று நாடுகளில் இருந்து அப்பணத்தைக் கடனுகப் பெறலாம். வேற்றுநாட்டுச் செல்வர் தம் பணத்தை இங்கே முதலீடு செய்யத் தூண்டலாம் உதா ரணமாக இலங்கையில் உள்ள தேயிலை, ரப்பர், தெங்குத் தோட்டங்களை எடுத்துக் கொள்ளுவோம். இவற்றில் மிகப் பெரும்பான்மையின ஐரோப்பியரின் சொந்தமாகவிருந்து, அ வர் க ளா ல் நடாத்தப்படுவன. ஐரோப்பியர் தங்கள் செல்வத்தை இங்கே முதலீடுசெய்து, தோ ட் டங்களை விருத்தியாக்கியமையினல், வரிப்பணமாக ஓர் தொகைப் பணம் அரசாங்கத்துக்குக் கிடைத்தது. ஆயிரக்கணக்கா னுேர்க்குத் தொழில் கிடைத்தது. தேயிலை, ரப்பர், தென்னந் தோட்டங்களின் வருமானத்தைக் கொண்டு, புற நாடுகளில் இருந்து வரும் எமது உணவுப்பொருள்கள், உடைப் பொருள் கள் ஆகியவற்றுக்குப் பணம் கொடுக்க வசதி ஏற்பட்டது. இப்படியான நன்மைகள் இருந்த போதிலும் உய்த்துணருங் கால், அந்நிய மூலதனம் இந்நாட்டில் இருப்பது நன்மையல்ல என்று கருத்துக் கொண்டவர்கள் இருக்கிருர்கள். அந்நியர் இங்கே வந்து தோட்டங்களைத் திறந்தபடியாற்ருன் இலங்கை யின் மத்திய பகுதியிலும் மேற்குப் பகுதியிலும் இருந்த காணிகள் அவர்கள் வசமாக, பல்லாயிரக் கணக்கான இலங்கையர் நிலம்புல மிழந்து அகதிகளாயினர் ; இன்னும், அந்நிய மூலதனம் அந்நியருக்கே இலாபம் அளிக்கும் அவர்கள் இங்கே வந்து தம் பாரிய மூலதனத்தையிட்டுத் தொழில் துறைகளைக் கைப்பற்றியபடியாற்ருன், இன்று இலங்கையின் இறக்குமதி வர்த்தகம் ஐரோப்பியர் பொறுப்பிலும் இந்தி யர் பொறுப்பிலும் வந்துவிட்டது என்பது இவர்களின் வாதம்.
தேசீய அபிவிருத்திக்கு வேண்டிய மூலதனத்தை அரசாங்க
மானது பல வழிகளாற் பெறலாம். வரிவிதிப்பு முறை அவற் றுள் ஒன்று. இலங்கையில் வசிக்கும் நாம் ஒவ்வொருவரும்
1. Colombo Port Development Scheme.

Page 51
92 சங்கங்களும் நிலையங்களும்
இவ்வளவு இவ்வளவு தொகையை வரியாகச் செலுத்தவேண் டும் என்று அரசாங்கம் விதித்து, அப்படியாகச் சேரும் பணத் தை ஒர் பாரிய நிதியாக்கி அதனைக்கொண்டு விவசாயத்தை அபிவிருத்தி செய்யலாம்; பாடசாலைகள், ஆசுப்பத்திரிகள், தெருக்கள், நீர்ப்பாசன வேலைகள் என்னும் இன்னேர ன்ன வற்றை நிருமாணிக்கலாம். இப்படியாக வரி விதிக்காமல், அரசாங்கம் வேருேர் முறையையும் கையாளலாம். அதாவது எங்கள் வருவாயில் ஒரு பகுதியை நாங்களே சேமிக்கச் செய்வதே. வரிவிதிப்பு முறையிலும் பார்க்க இந்த முறை தான் நல்லதென்றும் சொல்லலாம். அதனல் மக்களுக்கு ஒர் நற்பழக்கம் உண்டாகிறது. உண்டானபோது ஊதாரித்தன மாகப் பணத்தைச் செலவழிக்காமல், ஒறுப்பனவாக வாழ்க் கையை நடாத்த இந்த முறை உதவுகிறது. ஆங்காலந் தன்னிலே பணத்தை அவமே இறைத்துவிட்டு சாங்காலம் தன்னிலே சங்கரா சங்கரா என்ரு ற் போன பணம் வராது; ஆகவே முன்னுக்கே சேமிப்புச் செய்யவேண்டும்.
இலங்கைத் தேசீய சேமிப்பு இயக்கம் என இப்போது வழங்கப்படும் இயக்கம், யுத்த சேமிப்பு இயக்கம் என்ற பெயருடன் 1941-ம் ஆண்டு ஆனி (யூன்) மாதம் ஆரம்பிக்கப் பட்டது. அரசாங்கமானது அந்தக் காலத்தில் ஈடுபட்டுள்ள 4த்த முயற்சிகளுக்குக் கடன் உதவுவதற்காகவே இவ்வியக்கம் தொடக்கமானது. ஆனல் இரண்டாவது உலக மகா யுத்தம் முடிந்ததும். அந்த இயக்கத்தை அரசாங்கம் தனது பிரசைக ளிடையே ஒறுப்பனவு வாழ்க்கையைத் தூண்டவும் வீண் விரயத்தைத் தடுக்கவுமான முயற்சியாக்கியது. மக்கள் சேமித்து அரசாங்கத்துக்குக் கடனகக் கொடுக்கும் பணம் தேசீய அபிவிருத்திக் திட்டங்களுக்காகும் என நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது.
முன்னர் இலங்கை யுத்த சேமிப்பு இயக்கம் என்றிருந்தது 1945-ம் ஆண்டு ஐப்பசி (ஒக்ரோபர்) மாதம் இலங்கை தேசீய சேமிப்பு இயக்கம் என்ற புதுப்பெயர் கொண்டி லங்கி அன்று தொட்டின்றுவரை மக்களுக்குப் பெரும் பணியாற்றி வருகிறது. தேசீய சேமிப்பு இயக்க நோ க்கங்கள் வருமாறு:-
(1) தபாற் கந்தோர்ச் சேமிப்பு வங்கியிலோ, இலங்கைச் சேமிப்பு வங்கியிலோ, இலங்கைச் சேமிப்புப் பத்திரங்களிலோ மக்கள் தம் மிச்சப் பணத்தை முதலீடு செய்யத் தூண்டி அதன் பயனக ஒறுப் பனவு வாழ்க்கையை அவர்களுக்கிடையே ஊக்கு வித்தல்.

சங்கங்களும் நிலையங்களும் 93
(2) ஊரவர்களுக்கிடைய சிறு சிறு சேமிப்புக் குழுக்களை
ஆக்கி அவற்றின் மூலம் அவர்கள் தங்கள் சம்பளத் தின் ஒரு பகுதியையோ, வருமானத்தின் ஒரு பகுதி யையோ மேலே காட்டிய தபாற் கந்தோர்ச் சேமிப்பு வங்கியிலேனும், இலங்கைச் சேமிப்பு வங்கி யிலேனும், இலங்கைச் சேமிப்புப் பத்திரங்களிலே னும் முதலீடு செய்ய ஊக்கூதலும் உதவுதலும். (3) இந்நாட்டின் தேசீய அபிவிருத்திப் பணியின் பொருட்டு அரசாங்கம் ஆரம்பித்துள்ள கடன் திட்டத்துக்கு வேண்டிய பேராதரவை அளித்தல். மக்களிடையே கிரமமான ஓர் ஒறுப்பனவுப் பழக்கத் தைக் கொண்டுவந்து அவர்கள் தம் வருமானத்தில் ஒரு பகுதியை சேமிக்கச் செய்வதில் அவர்களுக்கு-அவர்களிலும் விசேடமாக சிறு தொகைகள் சேமிப்போருக்கு- உதவிசெய்ய அரசாங்கம் பல திட்டங்களை வகுத்திருக்கிறது. இக்கரு மத்தைத் திறம்பட நடத்தத் தேசிய சேமிப்புப்பகுதி என்ற ஒரு பகுதியை அரசாங்கம் தன்னகத்தே கொண்டிருக்கிறது. ஆனல் இப்பகுதி பணம் புளங்குவதும் இல்லை, சேமிப்புப் பத்திரங்கள் வழங்குவதும் இல்லை என்பதை நாம் குறித்துக் கொள்ளுதல் வேண்டும். தபாற் கந்தோர்ச் சேமிப்பு வங்கி யிலோ, இலங்கைச் சேமிப்பு வங்கியிலோ சேமிப்பவர்கள், அந்த அந்த இடங்களுக்குத் தாமே போய்ப் பணத்தைச் செலுத்துவர்: அல்லது சேமிப்புக் குழுக்களின் அலுவலர் மூலம் பணத்தைச் செலுத்துவர் சேமிப்புக் குழுக்களின் அலுவலர் இதற்கெனச் சம்பள்ம் பெறுபவரல்லர். பணி ஒன்றை நோக்கமாகக்கொண்டு ஊதியம் பெருது தொண் டாற்றுபவர்கள். சேமிப்புச் சபைகள், சேமிப்புக் குழுக் கள் என்பனவற்றை அமைத்தல், சேமிப்புவாரங்கள் சேமிப் புப் போட்டிகள் என்பவற்றை நடத்தல், சேமிப்பு விடயமான பிரசாரத்தை மக்களிடையே செய்தல் என்னும் கருமங்க ளுடன் சேமிப்புப்பகுதி நின்றுவிடுகிறது. அதற்குச் சட்ட பூர்வமான அதிகாரங்கள் இல்லை. அதன் கருமங்கள் ஓர் சட்டத்தினுல் வரையறுக்கப்படவும் இல்லை. சேமிப்பு என்பது ஓர் பெரும் சமுதாயப்பணி அதனை அரசாங்கமே ஆரம்பித்து வைத்தாலும், அதனைத் தம் சொந்த நன்மையின் பொருட்டு மாத்திரமல்ல, தேசீய நலாபிவிருத்தியின் பொருட்டும் ஓர் புநிதமான பணியாகக்கொண்டு நடத்துபவர்கள் பொது மக்கள்தான். அவர்களுக்கு வேண்டிய வேண்டியபோது
1. Savings Groups. 2. National Savings Department.

Page 52
94 சங்கங்களும் நிலையங்களும்
தக்க ஆலோசனைகளைச் சொல்லிக்கொடுத்து ஆகவேண்டிய கருமங்களை வகுத்துக் கொடுப்பதுதான் அரசாங்கத்தின் கருமம். இன்று இந்தச் சேமிப்புப்பணியிலே ஈடுபட்டுள்ள பன்னுாற்றுக் கணக்கான தொண்டர்கள் இலங்கை முழுவதும் விரவி அரிய பணியாற்றி வருகிருர்கள். இச்சேமிப்பு இயக்கம் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறது என்பது நன்கு நிரூபணமாகி விட்டமையினல், அதற்கான பகுதியை தனது நிரந்தர பகுதி யாக 1946-ம் ஆண்டில் அரசாங்கம் ஆக்கியது.
தேசீய சேமிப்புப் பகுதி தான் எடுத்துக்கொண்ட நற் பணியைக் பல வழிகளாற் பிரசாரம் செய்துவருகிறது. புதினப் பத்திரிகைகளில் தனது முயற்சிகளை அதுவிளம்பரம் செய்கிறது. ஆயிரக்கணக்கான துண்டுப்பத்திரங்களை அச்சிட்டு விநியோகிக்கிறது; செய்தித் தாள்களைக் காலந்தோறும் பிரசு ரித்து, தனது முயற்சிகளைக் காட்டுகிறது. வானுெவிமூலம் பிரசாரணங்கள் செய்விக்கிறது; சினிமாப்படங்கள், மாயா தீபக் காட்சிகளை ஊர் தோறும் காட்டுகிறது. பெரும் சுவரொட்டி விளம்பரங்களாலும், "சேமிப்பு வாழ்வே சிறந்த வாழ்வு’ என்பது போன்ற வாக்கியங்களைப் பரப்புவதாலும், சேமிப்பு வாரம் போன்ற இயக்கங்களை நடத்துவதாலும், இப் பகுதி தான் மேற்கொண்ட கருமத்தை இனிதே நடத்தி வரு கிறது. ஆங்கிலம், தமிழ், சிங்களம் என்னும் மும் மொழிகளி அலும், இப்பகுதி தனது பிரசாரக் கருமத்தை நடத்திவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சுப்பிறீந்தென்மார் எனப்படும் அத்தியட்சர் அறுவர் தேசீய சேமிப்புப் பகுதியில் உளர். இலங்கையின் மாகாணங் கள் முழுவதிலும் உள்ள சேமிப்புக்கருமத்தை இவ்வறு வரும் மேற்பார்வை செய்வர். இவர்களுக்குக் கீழ் மாவட்ட மேற் பார்வையாளர் எனப்படும் உத்தியோகத்தார் 23 பேர் உளர். இப்பகுதியின் உதவிக் கொமிஷனர் ஒருவர் கண்டியில் உளர். தோட்டப் பகுதிகளிலே சேமிப்பு இயக்கத்தை விருத்தி செய்வது இவருடைய கருமமாகும். தலைமைக்கந்தோரிலே சேமிப்புப் பகுதிப் பிரதம அதிகாரியான கொமிஷனரும், அவருக்குதவியான பிரதிக் கொ மிஷனரும் 28 உத்தியோகத் தரும் உளர். இவர்களிற் சிலர் கீழ் உத்தியோகத்தர்.
1949-ம் ஆண்டுச் சுதந்திர தினத்தில் சேமிப்பு முத்திரை கள் முதன் முதலாக வழங்கப்பட்டன. இவை பல வர்ணங் களில் வனப்புற அமைந்துள்ளன. தேசீய சேமிப்பியக்கத்தின் விருதுச்சின்னம் அதில் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. 10 சத முத்திரைகள் ஆரஞ்சி நிறத்திலும், 25 சத முத்திரைகள்
l. District Superyisors,

சங்கங்களும் நிலையங்களும் 95
ஊதாக்கபில நிறத்திலும், 50 சத முத்திரைகள் கரும் பச்சை நிறத்திலும் 1 ரூபா முத்திரைகள் நல்ல சிகப்பிலும் அச்சிடப் பட்டுள்ளன.
சேமிப்பு முத்திரைகளை வாங்குவோருக்குச் சேமிப்பு முத்திரை ஒட்டும் புத்தகங்களும் வழங்கப்படுகின்றன. பிள்ளை கள் முத்திரைகளை வாங்குவதென்ரு ல், அவர்களுக்கு இதற் கெனவுள்ள அட்டைகளும் அட்டை மடிப்புக்களும் வழங் கப்படும். அட்டை மடிப்புக்களில் சிறு பிள்ளைகள் முத் திரை களை பங்கமில்லாமல் ஒட்டிக் கொள்ளலாம். ஓர் அட்டையில் அல்லது புத்தகத்தின் ஓர் பக்கத்தில் முத்திரை ஒட்டி முடிந்த பின், அவ்வட்டையினையோ புத்தகத்தினையோ, சமீபத்தில் உள்ள தபாற் கந்தோருக்குக் கொண்டுபோய், அங்குள்ள உத்தியோகத்தரிடம் கொடுத்து, முத்திரையின் பெறுமதி யான பணத்தை தபாற்கந்தோர்ச் சேமிப்பு வங்கியிலோ இலங்கைச் சேமிப்பு வங்கியிலோ முதலீடு செய்விக்கலாம். அல்லது பெறுமதிக்கியைய சேமிப்புப் பத்திரங்களைப் பெற லாம். சேமிப்பு முத்திரைகளைக் கொடுத்து பணம்பெற முடி
Tgl.
இப்படியான சேமிப்பு முத்திரைகள் இப்போது இலங்கை யிலே மிகவும் மானமாக இருக்கின்றன. தபாற்கந்தோர் களிலும், உப தபாற்கந்தோர்களிலும், இதற்கென அதிகாரம் வழங்கப்பட்டவர்களிடமும், வாரம் தோறும் 25,000 ரூபா பெறுமதியான முத்திரைகள் இப்போது விற்பனையாகின்றன.
சேமிப்புச் சபைகள்
தேசிய சேமிப்புச் சபை: நாட்டின் சேமிப்பு இயக்கத்துக் குத் துணைபுரிய முன்னர் இருந்த தாபனம் சேமிப்பு ஆலோ சனச்சபை" என்பது. அதற்குப் பதிலாக இப்போது உள்ளது தேசிய சேமிப்புச்சபை.? தேசீய சேமிப்பு இயக்கத்தின் லட்சிய பூர்த்திக்கான ஆலோசனைகளை அரசாங்கத்துக்கு எடுத்துக் காட்டவே இச்சபையுளது. இதன் அங்கத்தவர்களை மகா தேசாதிபதி? நியமிப்பார். இலங்கை அரசாங்கத்தின் திறை சேரி,கி தபாற்பகுதி, மாகாண பரிபாலனப் பகுதி ஊராட்சிப் பகுதி என்பவற்றின் பிரதிநிதிகளும், தொழிலாளர் பிரதிநிதி களும், பரிவர்த்தனை வங்கிகள் கல்வி நிலையங்கள், பெண்கள் தாபனங்கள், மத சம்பந்த சபைகள் என்னும் இன்னுேரன்ன
1. Advisory Committee.
2. National Savings Committee.
3. Governor General.
4. Treasury. 5. Exchange Banks.

Page 53
96 சங்கங்களும் நிலையங்களும்
வற்றின் பிரநிதிகளும் இச்சபையில் அங்கம் வகிப்பர். மேலே சொல்லிய தாபனங்கள் ஏதுமோர் விதத்தில் இச்சேமிப்பு இயக்கத்துடன் தொடர்புடையன.
மாவட்டச் சேமிப்புச்சபைகள்1. காரியாதிகாரியின் மாவட் டங்கள் 19 பகுதிகள் இலங்கையில் உண்டு. இப்படி யான பகுதிகள் ஒவ்வொன்றிலும் மாவட்டச் சேமிப்புச்சபை ஒவ்வொன்று உண்டு. இச்சபைக்குக் குறித்த மாவட்டத்தின் அரசாங்க அதிபரோ உதவி அரசாங்க அதிபரோ தலைவராக இருப்பர். மாவட்டத்தில் உள்ள சேமிப்புச்சபைகள் அனைத் தினதும் கருமங்களை ஒரோ வழிப்படுத்தி, கரும நிருவாகத்தை ஒரோவிதத்தினதாக்குவதே மாவட்டச் சபையின் பிரதான தொழிலாகும் ஓர் மாவட்டத்தில் உள்ள நகர்ப்புறச் சேமிப் புச்சபைகள், கிராமப்புறச் சேமிப்புச் சபைகள் என்பவற்றின் தலைவர்கள், வித்தியாதிகாரி, அரசாங்கப் பகுதிகளின் தலை வர்கள், தோட்ட அதிகாரிகள், சங்கத் தலைவர், காரியாதிகாரி3, அப்பகுதியில் செல்வாக்குடைய ஏனையோர் ஆகியவரைத் தனது அங்கத்தவர்களாக மாட்டச் சேமிப்புச்சபை கொண்டி ருக்கும். தேசீய சேமிப்புப்பகுதியின் அதிகாரியாகக் குறித்த பிரிவில் கடமையாற்றும் அத்தியட்சரோ, பிரிவு மேற்பார்வை யாளரோ சபைக்கூட்டங்களின்போது அதற்கு வேண்டிய உதவிகளை அளிப்பார். இலங்கையில் உள்ள சகல மாவட்டச் சேமிப்புச் சபைகளும், தம் கரும நிருவாகத்துக்கென தனித் தனி அமைப்பு விதிகளைக் கொண்டிருக்கின்றன.
நகர்ப்புறச் சேமிப்புச் சபைகள்: மாநகரசங்கங்கள், நகர சங்கங்கள், பட்டணசங்கங்கள் என்பவற்றின் பரிபாலனப் பகுதிகளில் இவை அமைக்கப்படுவன. இவை ஒவ்வொன்றுக் கும் தெரிவு செய்யப்படும் தலைவர் ஒருவர் இருப்பர். அநேக மாக அந்த அந்த இடத்துத் ஊராட்சிச் சபையின் தலைவரா யுள்ளவரே இச்சபைக்கும் தலைவராக இருப்பர். ஊராட்சிச் சபையின் அங்கத்தவர்களும் அந்தந்த இடத்துப் பொது மக்களிடையே செல்வாக்குள்ளவர்களும் இச்சபைகளிலே அங்கம் வகிப்பர்.
கிராமப்புறச் சேமிப்புச் சபைகள்: இவை கிராமப் பக்கங் களில், கிராமச்சங்கத் தலைவர்களின் தலைமையில் இயங்குவன. கிராமச் சங்கத்தலைவர் ஒர் கிராமச் சேமிப்புச் சபைக்குத் தலைமைவகிக்க முடியாவிடத்து அச்சபையில் உள்ளார் தமக்
கிடையே ஒருவரைத் தலைவராகத் தெரிவுசெய்வர். ஒா
1. District Savings Committee. 2. Education Officer, 3. Divisional Revenue Officer. 4. Local Authority.

சங்கங்களும் நிலையங்களும் 97
கிராமத்தில் உள்ள சேமிப்புச்சபை, அக்கிராமப்பெயர் கொண்டழைக்கப்படும். இப்போது ஒரு சேமிப்புச் சபைக்கு மேல் ஓர் கிராமச்சங்க எல்லைக்குள் இல்லை. ஒர் கிராமத்தின் தலைமைக்காரர், கூட்டுறவுப் பரிசோதகர், ஆசிரியர்கள், சமயத்தலைவர்கள், தபாற்கந்தோர்த் தலைவர், உள்ளூரில் செல்வாக்குக் கொண்டவர்கள், கிராமச்சங்க அங்கத்தவர் கள் என்பவர்கள் கிராமச் சேமிப்புச் சபையில் அங்கத்தவர் களாயிருப்பர்.
சேமிப்புச் சபைகளின் கடமைகள். ஓர் சேமிப்புச் சபையின் கடமைகள் பின்வருவனவாகும் :-(1) கூட்டங்கள் நடத் தல். இக்கூட்டங்களிலே சேமிப்பு இயக்கத்தின் தன்மைகளும் நோக்கங்களும் சமுகமளிப்போருக்கு விளக்கப்படுதல் வேண் டும். (2) சேமிப்புக் குழுக்களை அமைத்தல் (3) சேமிப்புக் குழுக்களின் நிருவாகிகளின் கருமங்களில் உதவி செய்து அவர்களை வழிநடத்தல் (4) சேமிப்பு இயக்கங்கள், சேமிப்பு வாரங்கள் நடத்துவதில் சேமிப்புக் கொ மிஷனருக்கு உதவிபுரிதல் (5) இவ்வியக்கத்துக்கு வேண்டிய ஆர்வத்தை மக்களிடையே, ஊட்டி, யதேச்சையாக இத்தொண்டில் பணி யாற்றக் கூடியவர்களைச் சேர்த்தல். S.
இணைத்தல். தேசீய இயக்கக் கொ மிஷனரிடம் இருந்து ஏற்கெனவே அங்கீகாரத்தைப் பெருத எந்த நகர்ப்புறச் சபையும், கிராமச்சபையும் கணிப்புக் குரியதாகாது. மாவட்டச் சேமிப்புச் சபையின் தலைவராகவுள்ள அரசாங்க அதிபர் அல்லது உதவி அரசாங்க அதிபர் மூலம் இந்த அங்கீகாரத்தை ஒவ்வொரு நகர்ப்புறச் சபையும் கிராமச் சபையும் பெறுதல் வேண்டும். ஒவ்வொரு சேமிப்புச்சபையும், இலங்கைத்தேசீய சேமிப்பு இயக்கத்துடன் இணைக்கப்படும். இப்படியாக இணைக் கப்பட்டபின்தான், சேமிப்பு இயக்கம் பற்றிய இலக்கியங் களும் ஏனைய பிரசாரச் சாதனங்களும் அதற்கு வழக்கப்படும்"
சேமிப்புச் குழுக்கள் வரைவிலக்கணம். ஒரு பகுதியிலேயுள்ள எத்தொகுதியினர் அல்லது குழுவினராவது தம் வருமானத்தின் ஒரு பகுதியை
(1) இலங்கைச் சேமிப்புப் பத்திரங்களில், அல்லது (2) தபாற்கந்தோர்ச் சேமிப்பு வங்கியில், அல்லது (3) இலங்கைச் சேமிப்பு வங்கியில் இட்டுவைக்க வேண்டுமென்று கூட்டாகச் சேர்ந்ததையே சேமிப்புக்குழு என்பது குறிக்கும்.
ஓர் சேமிப்புக்குழுவை அமைக்கும்முறை : ஒர் சேமிப்புக்குழு ஐந்து பேருக்குக் குறையாத அங்கத்தவர்களைக் கொண்டி ருக்க வேண்டும். தாம் கட்டவேண்டிய பணத்தை ஒழுங்காக
3.248-E

Page 54
98 சங்கங்களும் நிலையங்களும்
மாதந்தோறும் செலுத்தக்கூடிய எப்பகுதியினரும் இப்படி யான குழுக்களை அமைக்கலாம். உதாரணமாக, தொழிற் சாலைகள், கடைகள், பள்ளிக்கூடங்கள் தோட்டங்கள், சங்கங் கள், இலங்கை இராணுவத்தின் பல்வேறு பகுதிகள் என்பன வற்றில் இருப்போர் இப்படிக் குழுக்களாகலாம். ஒர் சேமிப் புக் குழுவை அமைத்த பின், அதனைப் பதிவுசெய்யும்படி சேமிப் பியக்கக் கொ மிஷனருக்கு W.S. M.I. என்ற பத்திரத்தில் விண் ணப்பிக்க வேண்டும். குறித்த சேமிப்புக்குழு கருமம் ஆற்றும் பகுதியில் உள்ள சேமிப்புச்சபையின் தலைவர் மூலமாகவே இவ்விண்ணப்பத்தினை அனுப்புதலும் வேண்டும். அரசாங்கப் பாடசாலைகளில் தாபிக்கப்படும் சேமிப்புக்குழுக்கள் தம் விண்ணப்பத்தை வித்தியாதிகாரி மூலம் அல்லது வித்தியா தரிசி மூலம் அனுப்புதல் வேண்டும். இப்படியாகச் செய்யப் படும் விண்ணப்பத்தை கொ மிஷனர் அங்கீகரித்து முறைப்படி பதிவு செய்தபின்தான் அது சட்ட பூர்வமானதாகும். ஒரு சேமிப்புக் குழுவின் நிருவாகி அதன் கெளரவ காரியதரிசி அல்லது தஞதிகாரியாகும். காரியதரிசி தனதிகாரி என்ற இருவரையும் ஓர் குழுகொண்டு மிருக்கலாம். சேமிப்பு விடயமான பத்திரங்கள் யாவும் கொ மிஷனரால் இலவசமாக வழங்கப்படும். பணத்தை அனுப்புதற்குத் தபாற் கந்தோர் களில், பதிவுச் சலாரோ மனிஒடர்க் கொ மிஷனே இல்லை எனவே, ஓர் சேமிப்புக்குழுவை நடத்துதற்கு எந்த வி,ை கயான செலவும் ஏற்படமாட்டாது.
அங்கத்துவத்தால் உள்ள நன்மைகள். இலங்கைச் சேமிப் புப் பத்திரங்களிலோ, தபாற் கந்தோர்ச் சேமிப்பு வங்கி யிலோ, இலங்கைச் சேமிப்பு வங்கியிலோ தனது அங்கத்தவர் கள் தம் பணத்தை மிச்சப்படுத்தி மிகவும் சுலபமான முறை யில் சேமிக்க ஒரு சேமிப்புக்குழு உதவிசெய்கிறது. அங்கத்த வர்கள், தம் பணத்தைச் செலுத்த தபாற்கந்தோருக்குப் போகவேண்டியதில்லை. அவரவரால் செலுத்தப்படவேண்டிய பணம் சம்பளப்பட்டியலில், சம்பள இடத்தில் கழிக்கப்படும். அவ்வாறு கழிக்கப்பட்ட பணத்தை குழுநிருவாகிகள் உரிய இடத்திற் சேமிப்பர். ஆகவே அங்கத்தவராயினோர்க்கு இவ் விடயமாக எந்தவிதமான கஷ்டமும் இல்லை. அங்கத்தவர்கள் மிச்சம் பிடிக்கவேண்டுமென்பதைக் குழுநிருவாகிகள் அவர் களுக்கு ஒழுங்காக ஞாபகப்படுத்தி, இவ்விடயத்தில் தொண்டு புரிவர்.
பதிவுநீக்கம். ஒரு சேமிப்புக்குழு இயங்குவதொழிந்து விட்டால், அதன் பதிவை கொ மிஷனர் நீக்கிவிடவேண்டும். ஒரு குழுவின் இயக்கத்தை நிறுத்த, அதிற் சேந்துள்ளவர்கள் தீர்மானித்தால், அதனை அப்படியாக நிறுத்த முன் கொமிஷன

சங்கங்களும் நிலையங்களும் 99
ருக்கு அறிவிக்கவேண்டும். அக்குழுவின் பொறுப்பில் உள்ள சகல பத்திரங்களையும் சாதனங்களையும் உரித்தாள் இல்லாத சேமிப்புப் பத்திரம் போன்ற பொருள்களையும், பதிவத்தாட் சிப் பத்திரத்தையும் குழுநிருவாகிகள், தேசீய சேமிப்பியக்கக் கொமிஷனருக்கு அனுப்பிவிடுதல் வேண்டும். அவற்றை கொமிஷனர் தம் பாதுகாப்பில் வைத்திருப்பார். பெயர் எழுதப்படாத வெறும் சேமிப்புப் பத்திரங்களைக் குழுநிரு வாகிகள் தம் பொறுப்பில் வைத்திருக்கக்கூடாது. அப்படி யாக வெறும் பத்திரங்கள் இருந்தால், அவற்றை அவை அவற்றுக்குரிய ஆட்களிடம் சேர்ப்பிக்கக் கருமம் ஆற்றுதல் வேண்டும். பதிவை நீக்கவேண்டும் என்ற விண்ணப்பத்தைச் செய்யமுன், இப்படியான கருமங்களைச் செய்து கணக்குக் களைத் தீர்க்கவேண்டும். பதிவை நீக்கமுன் மாற்ற முடியா திருக்கும் வெறும் சேமிப்புப் பத்திரங்களை, உரித்தாளர் இல் லாத பத்திரங்கள் என்று கொ மிஷனர்க்கு அனுப்பிவிடுதல் வேண்டும்.
சேமிப்புக் குழுக்களுக்கான திட்டங்கள்
சேமிப்புக் குழுக்களுக்கான எழுவகைத் திட்டங்கள் உள. அவையாவன :- -
வேலைக்கமர்த்துபவர் அல்லது முதலாளியின் திட்டம் சுற்றுத்திட்டம்? சேமிப்பு முத்திரைத்திட்டம் மாறு படக்கூடிய சந்தாத்திட்டம் முழுப்பத்திரத் திட்டம்* தபாற் கந்தோர் சேமிப்பு வங்கித்திட்டம் இலங்கை சேமிப்பு வங்கித்திட்டம்
தேசிய சேமிப்பு (5 ஆண்டு) இலங்கைச் சேமிப்புப் பத்திரங்கள் 5 ஆண்டுச் சேமிப்புப் பத்திரங்கள் பின்வரும் விதங்களில் வழங்கப்படுகின்றன
ரூ. ச. ரூ. ச. ரூ. ச. ரூ. ச. ரூ. ச. உள்ள மதிப்புவிலை. 5.00 10.00 50.00 100.00 1000.00 வாங்கும் விலை 4.25 8.50 42.50 85.00 850.00 உள்ள மதிப்புவிலைக்கும் வாங்கும் விலைக்கும் வித்தியாசம் உண்டு என்பதை நீங்கள் அவதானிக்கலாம். ஓர் பத்திரத்தை வாங்கிய திகதியில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்குப்பின் உள்ள வட்டிவருமானமே இவ்வித்தியாசத் தொகையாகும். இது 1. Employer's Scheme. 3. Variable subscription Scheme, 2. Cycle Scheme. 4. Whole Certificate Scheme.

Page 55
1 00 சங்கங்களும் நிலையங்களும்
ஆண்டொன்றுக்கு 3.3 விகித மானதாய் வருமானவரியாற் பாதிக்கப்படாததாயுள்ள வட்டிக்கு வட்டியாகும்.
ஒர் தனி மனிதர் 10,000 ரூபா மதிப்பு விலை உள்ள பத்திரங்களை மாத்திரமே பெறலாம். ஆனல் அங்கீகரிக்கப் பட்ட சேமிப்புக்குழு அல்லது சங்கத்தின் அதி உச்சச்சேமிப்பு 20,000 ரூபா.
5 ஆண்டுச் சேமிப்புப் பத்திரங்களை எந்நேரமும் மாற்றிக் கொள்ளலாம்.
(12 ஆண்டு) இலங்கை சேமிப்புப் பத்திரங்கள்: இப்பத்திரங்கள் பின்வரும் விதங்களில் வழங்கப்படுகின்றன.
ரூ. ச. ரூ. ச. ரூ. ச. ரூ. ச. ரூ. ச. உள்ள மதிப்புவிலை. 7.50 15.00 75.00 150.00 1500.00 வாங்கும் விலை. 5. OO 10.00 5 O. O. O. 00.0 0 1 000. 00 ஒர் பத்திரத்தை வாங்கிய திகதியில் இருந்து 12 ஆண்டு களுக்குப்பின் உள்ள வட்டிவருமானமே, உள்ள மதிப்பு விலைக் கும் வாங்கும் விலைக்குமுள்ள வித்தியாசத் தொகையாகும். இது ஆண்டொன்றுக்கு வருமானவரியாற் பாதிக்கப்படாத 3.05 விகித வட்டிக்கு வட்டியாகும்.
தனி மனிதர் ஒருவர் 6,000 ரூபா மதிப்பு விலை உள்ள பத்திரங்களை மாத்திரமே பெறலாம். ஆனல், அங்கீகரிக்கப் பட்ட சேமிப்புக்குழு அல்லது சங்கத்தின் அதி உச்ச சேமிப்பு இப்பத்திர விடயமாக 12,000 ரூபா ஆகும்.
12 வருடச் சேமிப்புப் பத்திரம் பெற்ற ஒருவர் அதனைப் பெற்ற முதலாண்டு முடிவதற்குள் மாற்றிப் பணம் பெற (UDL9- UI JfTğ5H. முதன் மூன்று ஆண்டுகளுக்கிடையில் அதனை மாற்றுவதென்ருல் அதற்கு வட்டியும் கிடைக்காது.
தனிப்பட்டவர்களுக்கு வே ண் டி ய புது ஆண் டு ச் சேமிப்புப் பத்திரங்கள் எந்தத் தபாற் கந்தோரிலேனும், காரியாதிகாரி கந்தோரிலேனும் தபாற் பகுதியதிபரால் அங்கீகரிக்கப்பட்ட வங்கியிலேனும், இதற்கென அதிகாரம் பெற்ற வேறெவரிடமிருந்தும் பெறற்பாலன.
தபாற் கந்தோர்ச் சேமிப்பு வங்கி. ஆரம்ப வைப்புப் பணம் 1 ரூபா. இதன் பின் ஒராண்டில் எல்லாமாக 4,000.00 ரூபாவுக்கு மேற்படாத தொகையைச் சேமிக்கலாம். எவரும் எல்லாமாக 10, 000 ரூபாவுக்குமேல் அதிற் சேமிக்கமுடியாது.
வட்டி, வருமானவரியற்றது. 100-க்கு 2 விகிதம். இலங்கைச் சேமிப்பு வங்கி:-ஆரம்பவைப்புப் பணம் 50 சதம் இதன்பின் ஒரு ஆண்டுக்கு எல்லாமாக 3,000-00 ரூபாவுக்குமேற்படாத தொகையைச் சேமிக்கலாம். எவரும் எல்லாமாக 10,000 ரூபாவுக்குமேல் அதிற் சேமிக்க முடியாது.
வட்டி, வருமானவரியற்றது. 100-க்கு 2 விகிதம்.

சங்கங்களும் நிலையங்களும் 101
அரசாங்கக் கடன்கள். அரசாங்கக் கடன் பங்குகளை இலங்கை மத்திய வங்கியின் அதிபர் பிறப்பிப்பர். அவை பற்றிய விபரங்களை அவரிடம் அல்லது தேசீய இயக்கக் கொமிஷனரிடம் இருந்து' அறிந்து கொள்ளலாகும். இதற் கான விண்ணப்பப் பத்திரங்களை எல்லா வங்கிகளிலும், கச்சேரிகளிலும், தபாற்கந்தோர்களிலும், இலங்கை மகா வங்கியிலும், தேசீய சேமிப்பு இயக்கக் கொ மிஷனரின் கந் தோரிலும் பெறலாகும்.
பொது
தனி மனிதருக்கு வேண்டிய மூலதனத்தையோ, தேசத் துக்கு வேண்டிய மூலதனத்தையோ ஆக்குவதற்குச் சேமிப்பு முறை இன்றியமையாதது. இப்போது எங்கள் இலங்கையின் சனத்தொகை, தினம் ஒன்றுக்கு 700 பேராக அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்தச்சன அதிகரிப்புக்கொப்ப, எம் நாட்டின் பொருள் வளமும் அதிகரித்துக்கொண்டே வர வேண்டும். இரண்டாவது உலக மகா யுத்தத்துக்குப்பின் உலக நாடுகள் சகலவற்றிலும் விலை வீக்கம் ஏற்பட்டிருக் கிறது. இந்த விலை வீக்கத்தினல் செலவுக்கான பணத் தொகை அதிகரிக்கிறது. அந்த அதிகரிப்புக்கிணங்க மக்கள் புளங்கும் பொருள்களின் தொகை அதிகரிப்பதில்லை. இதன் விளைவு என்ன? பொருள்களின் விலை கண்டபடி உயருகிறது; வாழ்க்கைச்செலவு அதிகரிக்கிறது. வெந்த வீட்டில் பிடுங்கிய தறுதி என்ற மனப்பான்மையுடைய சுயநலமிகள் சிலரை யொழிந்த ஏனையோர்'கஷ்டப்படுகிருர்கள். அவர்களிலும், வறிய மக்கள் நிலைமை மிக மிக மோசமாகிறது. வாழ்க்கைச் செலவு உயராதபடி குறைக்கவேண்டும். அதற்குரிய வழிகள் பலவுள. செலவுக்குப்போகும் மிதமிஞ்சிய பணத்தைக் குறைத் தல் அவற்றுள் ஒன்ரு கும். அவசியமற்ற செலவுக்குப்போகும் பணத்தைச் சேமிப்பிற் செலுத்தவேண்டும்.
தேச மக்கள் சேர்ந்து, சேமிப்புக்கொள்கையை அநுட் டித்து, அரசாங்கத்துக்குக் கடனுக அதனை உதவினல் விளை யும் இரு நன்மைகள் உள.
1. நாம் பணத்தை, காகித நாணயமாகவோ, உலோக நாணயமாகவோ எம் பொறுப்பிலேயே வைத்திருந்தால் சில சமயம் அவற்றை இழக்கவும் நேரிடும். அவற்றைக் கள்வர் கவரலாம். வேறுவழிகளால் அவை நாசமாகலாம். உரொக்க மாக வைத்திருக்காமல் அப்பணத்தை ஆபரணங்களில் இட்டு வைத்தாலும் இந்த ஆபத்துக்கள் உண்டுதான். ஆனல் எம்மிடம் இருக்கும் உரொக்கப்பணத்தை தேசீய சேமிப்புப் பத்திரங்களிலோ வேறெதும் அரசாங்கப் பிணைகளிலோ முத
l. Inflation.

Page 56
፲-02 சங்கங்களும் நிலையங்களும்
லீடு செய்தால் அதற்கு எவ்வித ஆபத்தும் இல்லை. நாம் வேண்டியநேரம் மாற்றியும் கொள்ளலாம்.
2. தேசத்தை அபிவிருத்தி செய்வதற்கும், தேசவளத் தைப் பெருக்குதற்கும் அரசாங்கத்துக்குப் போதிய மூலதனம் வேண்டும். இம் மூலதனம் இல்லையேல் அரசாங்கத்தால் தேசோத்தாரண கைங்கரியங்களில் ஈடுபடமுடியாது. ஆகவே, நாம் சேமித்து அரசாங்கத்துக்குக் கடனுக அதனைக் கொடுப்ப தால் அதன் நற்பணிகளுக்கு இன்றியமையாத மூலதனத்தை நாம் உதவுபவராவோம்.
உலகத்திலுள்ள எந்த அரசாங்கத்துக்கும் பணவருவாய்க் குள்ள சாதனங்கள் மூன்ரும். முதல் வருவாய் அந்நிய நாடுகளிலிருந்து பெறும் கடன். இது ஒரு நியாயமான முறை தான். ஆனல், இப்படியான வருவாயைப்பெற வேண்டின் நாம் எமது ஏற்றுமதிகளை அதிகரிக்கவேண்டும் அல்லது இறக்கு மதிகளைக் குறைக்கவேண்டும். ஏன்? நாம் கடன் பெற்ற முதலை யும் அதற்கான வட்டியையும், நாம் கடன்பட்ட நாடுகளுக்கு திருப்பிச் செலுத்த வேண்டுமல்லவா? அதற்கு ஏற்றுமதிகளை அதிகரித்து இறக்குமதிகளைக் குறைக்கவேண்டும். ஆகவே புற நாடுகளிலிருந்து நாம் கடன் பெறுவதென்பது இலகுவான கருமம் அல்ல; மேலும், இலங்கை புறநாடுகளில் இருந்து கடன் பெறுவதானல், அது தான் விதிக்கும் நிபந்த்னைகளின் படிக்கே கடன் கேட்குமல்லாது, கடன் தரும் நாடு தான் கொடுத்த கடனைக் காரணமாகக் கொண்டு எம் செல்வத்தைச் சூறையாட அநுமதிக்காது என்பதனையும் நாம் ஈண்டுக்குறித் துக் கொள்ளுதல் வேண்டும். எங்கள் நிபந்தனைகளின் பேரில் தான் புறநாடுகளில் இருந்து கடனைப் பெற்ருலும், அதற்குரிய வட்டிப்பணம் வெளியே போகுமல்லவா ? ஆகவே, புறநாடு களிடமிருந்து கடனைப்பெற்று, அந்நியருக்கு எம் பணத்தை வட்டியாக இறைக்காமல், எங்கள் சொந்த மக்களது சேமிப் பையே அரசாங்கம் கடனுகப் பெற்றல், அதற்குரிய வட்டி எங்கள் மக்களுக்கே திரும்பி வருமல்லவா ?
மேலதிக வரிகளை விதித்தும் அரசாங்கம் தனக்குவேண்டிய பணத்தைப் பெறலாம். இது இரண்டாவது வழி. இப்போது இலங்கையில் வதியும் நாம் எல்லாரும் நேர்முகமாகவோ மறைமுகமாகவோ பல விதமான வரிகளை இறுத்து வருகிருேம் ; இன்னும் மேலதிக வரியை நாம் இறுக்க வேண்டுமானல், எமது வாழ்க்கைத் தரத்தைத் கு  ைற க் க வேண் டி ஏற்படும். அரசாங்கமானது தனது அபிவிருத்தித் திட்டங்களைப் பரிபூர ணமாக நிறைவேற்றி முடித்த பின் வாழ்க்கைத்தரம் மீளவும் உயரும் என்ற ஒரு நம்பிக்கையுடனேயே நாம் மேலதிக வரி களை இறுக்கவேண்டும். ஆனல் இப்படியான மனப்பான்மை

சங்கங்களும் நிலையங்களும் I 03
கொண்டு, கூடிய வரிகளை அரசாங்கத்துக்கு இறுக்க எவரும் முன் வரார்.
தனது பிரசைகளின் சேமிப்புப் பணத்தைக்கொண்டு ஒரு அரசாங்கம் வருமானம் பெறுவது மூன்ருவது வழி ; இதனைப் பற்றிச் சிறிது ஆராய்வாம்.
எம்மெல்லாருக்கும் இருவிதத் தேவைகள் உள; இன்றைய தேவை, எதிர்காலத் தேவை அல்லது எதிர்பாராக் கருமத் தேவை என்பனவே அவை. நாம் முதுமையை யடைந்துள்ள காலத்திலே செளகரியமாகவும் மகிழ்ச்சியுடனும் சீவிக்க வேண்டுமென விரும்புகிருேம். அதற்கான செல்வத்தை இப் போதே தேடி வைத்துக் கொள்ள வேண்டும்; இடையிலே எமக்கு ஏதும் சுகவீனம் ஏற்படக்கூடும். அதனை மாற்றுதற் குப் பெருந்தொகைப் பணம் வேண்டியதாக வரும். சில சமயங்களில் எமது தொழில் முயற்சி குன்றிவிடும். வேலை யில்லாது சில காலத்துக்கு இருக்க வேண்டி ஏற்படும். எம் பிள்ளைகளின் கல்வி விருத்திக்கான பணம் எமக்கு வேண்டிய தாகவரும். இப்படியே எமக்கு எத்தனையோ விதமான செலவு கள் எமது எதிர்காலத்தில் ஏற்படவிருக்கிறது. அதற்குத் தக்கதாக நாம் எமது பண நிலையைச் சரிப்படுத்திக்கொள்ளல் வேண்டும். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்யாது விட்டால் பின்னுக்கு மிகவும் இடைஞ்சற் படவேண்டி ஏற்படும். முதலிற் சேமித்து, பின் தேவையான போது செலவழித்தல் தான் புத்திசாலித்தனம். கண்டபடி செலவழிக்காமல் தேவையானபோது செலவழிப்பதற்குள்ள சாதனமே சேமிப்பு என்பது. ஒரு சந்ததி மக்கள் தாம் சேமிப் புச்செய்து, அப்பணத்தை நாட்டின் அபிவிருத்தியின் பொருட் டுச் செலவிடுவரேயானல், அது அவர்களின் அடுத்த சந்ததி யாருக்கு நன்மை விளைத்து, அவர்களின் வருவாய் மிச்சமாக உதவி செய்யும். இவ்வாறு தேசீய மூலதனம் சிதையாது பாதுகாக்கப்படும். மக்களின் சேமிப்பு வாயிலாகக் கிடைக்கும் மூலதனத்தை அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், தேசீய அபிவிருத்தித் திட்டங்களை ஊக்கவும், அரசாங்கம் செலவிடும். இப்படிச் செய்வதால், மக்கள் வருவாய் அதிக மாகும். அதன் பயனக அவர்கள் மேன்மேலும் சேமிப்பர். தேசீய மூலதனமும் அதன் காரணமாகப் பெருகும். இவ் வாரு க தேசநலம் பங்கப்படாது சதா வளர்ச்சியுறும் என்க.
உலகம் இயங்குவது பாலர்களால் என்ற ஒரு கூற்று இருக்கிறது. பிள்ளைகளாய் இன்று இருப்பவர்கள் சேமிப்புப் பழக்கத்தில் ஈடுபட்டால் அது சம்பந்தமான மற்ற விடயங் கள் யாவும் சுலபமாக முடிந்துவிடும்.
தாமும் வளர்ந்தவர்கள் என்ற ஓர் உணர்ச்சியைப் பிள்ளை கள் கொள்ள நாம் கருமம் ஆற்றவேண்டும். வளர்ந்தவர் களுக்குப் போலத் தங்களுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருக்

Page 57
104 சங்கங்களும் நிலையங்களும்
கிறது என்ற உணர்ச்சி பிள்ளைகளுக்கு ஏற்படச் செய்யவேண் டும். "சேமிப்புப் பழக்கம் கொள்ளுதல்தான் வளர்ந்தவர் களுக்கு-வயதின் மிக்கவருக்கு-அறிகுறி : ஆகவே நாமும் சேமிக்கவேண்டும்." என்று பிள்ளைகள் மனதிற் கொண்டு சேமிப்புப் பழக்கத்தில் ஈடுபட அவர்களை நாம் ஊக்குதல் வேண்டும். இன்றைய ஆசைகளைக் கவனிக்காது எதிர்கால நன்மைகளைச் சிந்திப்பவர் தான் வளர்ந்தவர்கள். ஓர் குழந்தை இருக்கிறது; அது தனக்கு வேண்டியதை இப்போதே வேண்டும் என்கிறது. நாளைத் தேவையை அது சிந்திப்பதில்லை. ஆகவே நாளைக்கு வேண்டும் என்ற மனப்பான்மையைச் சிறு பிள்ளைகளுக்கு ஊட்டிவிட்டால், அவர்கள் சேமிப்புப் பழக்கத் தில் ஈடுபட்டுப் பொறுப்புணர்ச்சியுள்ள எதிர்காலப் பிரசைக ளாக வர முடியும். ஆணுல், எம்மவரில் வளர்ந்தவர் சிலர், நாளையத் தேவைகளை உணராது உள்ளதை உடனேயே விருதா வாகச் செலவழிக்கவேண்டும் என்று நிற்கிருர்கள். இவர்களின் மனப்பான்மை குழந்தை மனப்பான்மையிலும் பார்க்கக் கேவலமானது.
ஒழுங்காகச் சேமிப்பது ஒழுக்கத்தின் அறிகுறி: ஒறுப்பன வுப் பழக்கம் ஒருவரிடம் ஏற்படும்போது, அதன் பயனுக வேறும் பல நற்பழக்கங்களும் அவருக்கு உண்டாகும்.
ஜெனீவாப் பிரதிக்கனையின் குழந்தைகள் உரிமைப் பிர கடனத்து, 5-ம் விதி கூறுவது வருமாறு: "தனது ஆற்றலையும் திறமையையும் தனது சகோதர மனிதரின் சேவைக்கு ஈடு படுத்த வேண்டும் என்ற ஒர் உணர்ச்சியை ஒவ்வொரு குழந்தைக்கும் ஊட்டவேண்டும். மனித சமூகம் தன்னகத்தே யுள்ள குழந்தைகளைச் செவ்வனே பாதுகாத்துத் தன்னலான சிறந்த தொண்டினையாற்றவேண்டும். மற்றவர்களுக்குச் சேவைபுரியும் பரநலவாழ்க்கை யுணர்ச்சியை ஒவ்வொரு பிள்ளைக்கும் ஊட்டுதல் மனித சமூகத்தின் மகத்தான கடமை, என்பது மேற்குறித்த பிரகடனத்து விதி. 'முனிவரும் மன்ன ரும் முன்னுவபொன்னன் முடியும்’ என்பது ஆன்ருேர் வாக்கு; நாம் செய்யவேண்டிய தொண்டினைப் பொன் எனப்படும் பணம் செய்யும்; நாம் ஒரிடத்தில் இருப்பதால், வேருே ரிடத் திற் செய்யப்படவேண்டிய பணிகளைச் செய்யமுடியாது. ஆனல் எமக்குப் பதிலாக எமது பணம் அந்தப் பணியைச் செய்யலாம்.
ஒறுப்பனவுக்குச் சிலர் உலோபத்தனம் என்று தப்பர்த்தம் கொடுக்கிருர்கள். ஒறுப்பனவாகத் தன் வாழ்க்கையை நடாத்தும் ஒருவனை உலோபி என்றும் ‘கஞ்சன்’ என்றும் 1. Declaration of the Rights of the Children in the Declaration of Geneva.

சங்கங்களும் நிலையங்களும் I 05
சொல்லுகிருர்கள். அப்படிச் சொல்வது பிழை: ஒறுப்பன வாகத் தன் வாழ்வை நடாத்துபவன் உலோபியுமல்ல, கஞ்சனு மல்ல: அவன் தன் எதிர்கால நலத்துக்கு உழைப்பவன். * இருக்கிறபோது நல்லாய் உண்ணவேண்டும், குடிக்கவேண் டும், அநுபவிக்கவேண்டும். இன்றைக்கிருக்கும் நாம், நாளைக் கிருப்போம் என்ற நிச்சயம் இல்லை; ஆகவே இருக்கிறபோதே சுகிக்கவேண்டும்: நாளைக்கு வேண்டியதை நாளைக்குப் பார்த் துக் கொள்ளலாம்’ என்று கூறுவாரும் உளர். இது குறுகிய, கேவலமான மனப்பான்மையினல் உதிக்கும் எண்ணம்: நாம் என்றும் சுதந்திரராக இருக்கவேண்டும்: இருப்பதை இன்றைக்கே அநுபவித்துத் தொலைத்துவிட்டு, நாளைக்கு மற்ற வர்கள் தயவில் தங்கியிருக்க கூடாது என்றும் இள வேனிற்காலம் இருக்காது. மாரி ஒன்று வந்துதான் தீரும். அந்த மாரிக்காலத்துக்கான பாதுகாப்பை இப்போதே தேடிக் கொள்ள வேண்டும். ஆபத்து வர முன் காப்பவனே புத்தி மான்: வந்த பின் காக்க நினைப்பவன் மூடன்.
சகல மக்களும் தம் வருமானத்தைக் தக்கவாறு செல வழித்து, அதில் ஒர் பகுதியைத் தக்கவாறு சேமிக்க வேண்டும். இப்படியான ஒர் உணர்ச்சியை ஊட்டி அதற்கான சூழ் நிலையை ஏற்படுத்துவதுதான் தேசீய சேமிப்பு இயக்கத் தின் நோக்கமாகும். ஒருவன் தனது வருமானத்தை விருதா வாகச் செலவழிப்பானேயானல் எவ்வளவோ கெடுதிகள் அவ னுக்கு உண்டாகக் கூடும். நாம் எமது வருமானத்தை ஊதாரித்தனமாகச் செலவழிக்காது அதனைத் தக்கவாறு சேமிப்போமேயானல் நாம் தனிப்பட்ட முறையிலும் சமுதாய முறையிலும் முன்னேற்ற மடைவோம். நாம் எம் பணத்தைச் சாவதானமாகச் செலவழிக்க வேண்டும். அப்படிச் செலவிடு மிடுத்து, பயன்றரும் முயற்சிகளில் ஈடுசெய்யக்கூடிய பணம் எமக்கு மிஞ்சும்.
ஆகவே, தேசீய சேமிப்பு இயக்கம் என்பது, மக்களை மிச்சம் பிடிக்கச் செய்து அரசாங்கப் பிணைகளில் ஈடுசெய்யத் தூண்டும் சாதனம் மாத்திரம் அல்ல; இவ்வியக்கம் சமுதாய முன்னேற்றத்துக்கான சாதனமுமாகும். எந்தச் சாதியாரா யினுமாக, எந்தச் சமூகத்தாராயினுமாக, அவர்கள் தமது எதிர்கால நன்மையைச் சிந்தித்துத் தியாகம் செய்யவேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் அச்சமூகம் உயிர்வாழ முடியாது. இந்த ஒரு பெரிய உண்மையை-உலகம் தோன்றிய நாள் தொடக்கம் இன்றுவரை அறிஞராலும் பெரியாராலும் சங்க நாதம் செய்யப்பட்ட இந்த உண்மையை-எமக்குத் தெருட்டு வது தான் சேமிப்பு இயக்கம் என்க.

Page 58
1 06 சங்கங்களும் நிலையங்களும்
WI. தொழிலாளர் கருமப்பகுதியும் சமூக சேவைப்பகுதியும்"
* அன்றடித்து அன்றுவாயிற்போடும நிலைமையில் உள்ள வர்கள் தொழிலாளர்கள்; இவர்களைவிட, சீவியத்தை நடாத்து தற்கே வகையற்ற பலர் இருக்கின்ருர்கள். இவ்விரு பகுதியாரதும் நலன்களைக் கவனிப்பதற்கே தொழிலாளர் கருமப்பகுதி, சமூகசேவைப்பகுதி என்ற இரண்டு பகுதிகளை அரசாங்கம் தன்னகத்தே கொண்டிருக்கிறது. அவர்களுடைய நலன்களைக் கவனிப்பது கடமை என்பதனை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதற்கு இவ்விரு பகுதிகளதும் அமைப்பு ஓர் அறிகுறியாகும். 1946-ம் ஆண்டின் குடிசன மதிப்புப்படி 1,381,612 பேர் விவசாயம், கைத்தொழில், கடற்றெழில் என்னும் இவற்றில் ஈடுபட்டிருந்தனர். ஊதிபம் தரும் தொழின் முயற்சியுடையவர்களில் இவர்கள் 100க்கு 52.9 விகிதத்தினராவர். கைத்தொழில்களிலே 286,000 பேர் ஈடுபட்டிருக்கிருர்கள். தொழில் முயற்சியுடையாரில் இவர்கள் 100க்கு 11 விகிதத்தினராவர். ஆகவே, இப்படியான இத் தொழில் முயற்சிகளில் ஈடுபட்டிருப்போரின் நூற்றுவிகிதம் 639 என்பதும், இவர்களில் அரைப்பங்கினர்க்குமேல் விவ சாயத்திலும் 10 இல் ஒரு பங்கினர்க்குமேல் கைத்தொழில் களிலும் ஈடுபட்டிருக்கிருர்கள் என்பதும் புலப்படுகிறது. இவர் களைவிட வங்கித் தொழில், வர்த்தகம் காரியதரிசித் தொழில் என்பவற்றில் 100க்கு 211 விகிதத்தினரும், அரசாங்கசேவை, நியாயவாதத் தொழில் போன்ற தொழில்கள், வீட்டுப்பணி யாளர் சேவை என்னும் இவற்றில் 100க்கு 15 விகிதத்தினரும் ஈடுபட்டு இருக்கிருர்கள்.
எமது பிரதான விவசாயப் பொருள்கள் மூன்று : அவை யும் அநேகமாக ஏற்றுமதிக்கே உரியன. இவ்விளைபொருள் கள் விற்கப்படும் புறநாடுகளில் விற்பனை விடயமாக ஏதும் மாற்றம் நிகழு மாஞல், அது இங்குள்ளாரை வெகுவாகப் பாதிக்கும். அந்நாடுகளில் இப்பொருள்களின் விலை வீழ்ச்சி யடைய இங்கே பலருக்கு வேலையில்லாது போய்விடும். இங்குள்ள கைத்தொழில்களும், இவ்விவசாய விளைபொருள் களுடன் தொடர்பு கொண்டவை. எனவே, அவ்விளைபொருள் களில் விலைவீழ்ச்சி எற்படின் அது கைத்தொழில்களில் ஈடுபட் டுள்ள தொழிலாளர்களையும் பாதிக்கும்.
நாட்டிலே வேலையின்மைக் கொடுமையைக் குறைக்கும் நோக்கத்துடன் அரசாங்கம் தொழிலாளர் கரும அமைச்சின்?
1. Department of Labour and Department of Social Services. 2. Ministry of Labour.

சங்கங்களும் நிலையங்களும் 1 07
கீழ் ஒரு தொழிலீட்ட நிலையத்தை 1938-ம் ஆண்டில் முதன் முதலாக அமைத்தது. இரண்டாவது உலக மகா யுத்தம் 1945-ம் ஆண்டில் முடிந்ததும், போர்க்கருமத்தில் ஈடுபட்டி ருந்த பல்லாயிரக்கணக்கானேர் வேலையற்றனர். அவர்களுக்கு உதவி செய்வதன் பொருட்டு அரசாங்கம் இலங்கையின் ஊர்க டோறும் பல தொழிலீட்ட நிலையங்களை அமைத்தது. வேலையற்றிருக்கும் எவரும் இப்படியான ஒரு நிலையத்துக்குப் போய் தாம் பார்க்கக்கூடிய தொழில் இன்னது என்பதனைப் பதிந்து கொண்டால், அவருக்குப் பொருத்தமான ஒரு வேலை யைத் தேடிக்கொடுப்பதில் அது உதவிபுரியும். இன்ன இன்ன வேலை இன்ன இன்ன இடத்திலே உண்டு என்ற தகவலையும் இந்நிலையம் அளித்துவருகிறது. தொழிலீட்ட நிலையம் மூல மாகவே அரசாங்கப்பகுதிகள் அனைத்தும் தமக்கு வேண்டிய கீழ்ப் பணியாளர்களைப் பெற்றுக்கொள்ளுகின்றன. இப்படி யான நல்ல பணியாற்றிவரும் தொழிலீட்டச்சேவை, கொழும் பிலே ஒரு மத்திய நிலையத்தையும் பிரதான மாவட்டங்களில் பதிணுெரு பகுதி நிலையங்களையும் எட்டுக்கிளை நிலையங்களையும் பதினெரு பதிவுத்தானங்களையும் கொண்டிருக்கிறது. பெண் களுக்கென ஒரு தொழிலீட்ட நிலையம் கொழும் பில் வேருக இருக்கிறது.
தொழிலாளர் தாபனம், கைத்தொழில் தொடர்பு
நலவிருத்தி
தொழிலாளர்கள் தாபனரீதியில் தொழிற்சமா சங்களிற் சேருவது என்ற கருத்து மேனடுகளில் இருந்து இங்கு வந்ததா கும். தொழிற் சமா சங்கள் எல்லாம் பதிவு செய்யப்படவேண் டும் என்று 1935-ம் ஆண்டின் தொழிற் சமா சக் கட்டளைச் சட் டம் கட்டாயவிதி ஏற்படுத்தியது. இதனல் தொழிற் சமா சங் களுக்குச் சட்ட பூர்வக் கணிப்புக் கொடுக்கப்பட்டது. 1947 ம் ஆண்டில் 81 தொழிற் சமா சங்கள் இருந்தன. 1937- Lh ஆண்டில் இச்சமா சங்களில் 6,717 அங்கத்தவர்களேயிருந் தனர். ஆனல் 1947-ம் ஆண்டில் இத்தொகை 16,903 ஆனது. 1949-ம் ஆண்டிலே, இலங்கைத் தொழிலாளர்களில் 100க்கு 8 6 விகிதத்தினர் தொழிற் சமா சங்களில் அங்கத்தவர்களாக விருந்தனர். தோட்டத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களே தொழிற் சமாசங்களில் பெருந்தொகையில் அங்கத்தவர்களா யிருக்கின்றனர். இலங்கை இந்தியக் காங்கிரசின்? தொழிலா ளர் சமாசத்தில் 76,000 பேர் அங்கத்தவர்களாயிருக்கின்றனர். இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சமாசத்தில் 4,400 பேர் அங்கத்தவர்களாயிருக்கின்றனர். அரசாங்க சேவையில்
1. Employment Exchange. -
2. இலங்கை இந்தியக் காங்கிரஸ் என்னும் பெயருடன் இருந்த காபனம் இப்போது இலங்கைச் சனநாயகக் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்று இரண்டு தாபனங்களாகப் பிரிந்
திருக்கிறது.

Page 59
108 சங்கங்களும் நிலையங்களும்
இருப்பவர்களும் தொழிற் சமாசங்கள் அமைத்துக் கொள் வதன் பொருட்டு தொழிற் சமாசங்கள் பற்றிய சட்டத்துக்கு 1948-ம் ஆண்டில் ஒரு திரிபு ஏற்படுத்தப்பட்டது. லிகிதர் சேவையில் உள்ளவர்களும் ஆசிரிய சேவையில் உள்ளவர்களும் இதனைப் பயன்படுத்தித் தொழிற் சமா சங்கள் அமைத்துக் கொண்டனர். தொழிலாளர் சமா சங்களைப் பின்வருமாறு வகுககலாம -
தோட்ட-விவசாயத் தொழிலாளர் கைத்தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர். போக்குவரத்துச்சேவைத் தொழிலாளர். லிகிதர் சேவைத் தொழிலாளர். உத்தியோகத் தொழிலாளர். பொதுத் தொழிலாளர். தொழிலாளர்கள் தொழிற் சமா சங்களிலே தாபனரீதியாக இவ்வாறு சேர்ந்திருப்பதனை அவர்களுக்கு வேலை கொடுக்கும் முதலாளிமார் கண்டனர். நாட்டின் வாழ்க்கையிலே இத் தொழிற் சமா சங்கள் ஒர் இன்றியமையா அம்சமாக இருப்ப தனைக் கண்ட் அவர்களும் தாபனரீதியாகச் சேர்ந்து இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தைத் தாபித்திருக்கின்றனர். இவ் வாருக முதலாளிமார் தொழிலாளிகள் என்னும் இருசாராரும் தாபனரீதியாக இருப்பதினல், தொழிலாளரின் சம்பளம் போன்ற விடயங்களில் பிணக்கு ஏற்படும் காலத்தில் தொழிற் சமாசத் தலைவர்கள் முதலாளிமாருடன் ஆலோசித்து ஒரு சமரசமுடிவுக்கு வருதல் இலகுவாகிறது. இன்னும், தொழி லாளி முதலாளி என்பவர்களுக்கிடையேயுள்ள பிணக்கின் காரணங்களை இரு சாராரும் நன்கு பரிசீலனை செய்வதற்கு இப்படியாகத் தாபனரீதியில் அமைக்கப்பட்டிருப்பது உதவி செய்ய வல்லதாகும்.
கைத்தொழிற் சுகாதார, பாதுகாப்பு நல விருத்திப் பிரிவு? என்ற பெயருடன் தொழிலாளர் கருமப்பகுதி தன்ன கத்தே ஒரு பகுதியை அமைத்திருக்கிறது. இதன் கடமை
}6TIT6).16ðs —
அ. அரசாங்கப் பகுதிகளுக்கு ஆலோசனை அளித்தல். ஆ. வைத்திய மேற்பார்வை, தொழிலாளர் நல விருத்தி விதிகள் என்பனபற்றி கைத்தொழிற்ரு பனங் களுக்கு ஆலோசனை அளித்தல். இ. பல்வேறு தொழில் முயற்சியினல் தேக சுகத்துக்கு ஏற்படும் ஆபத்துக்களைக் கண்டறிந்து கட்டுப்படுத்தி அவற்றைத் தடுத்தல். 1. Employers' Federation of Ceylon. 2. Division of Industrial Hygiene, Safety and Welfare.

சங்கங்களும் நிலையங்களும் 09
ஈ. கைத்தொழில்களில் தொழிலாளர்களுக்கு ஏற்படும்
விபத்துக்களைக் கட்டுப்படுத்தல், தடுத்தல். குறித்த சில தொழில் முயற்சிகளைத் தெரிவுசெய்து அவற் றின் சுகாதாரச் சூழ்நிலைபற்றிய ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. கொழும்பில் உள்ள மார்பு நோயாய்வுத்தானம்", வைத்திய ஆராய்ச்சித்தாபனம் என்பனவற்றில் உள்ள வைத்திய உத்தியோகத்தரின் உதவியுடன் தொழிற்சாலை களில் பணியாற்றுபவர்களின் சுகாதாரநிலை அளவிடப்பட்டு வருகிறது. சுரங்கங்கள் தொழிற்சாலைகள் என்னும் இவற்றில் வேலைசெய்பவர்கள் இப்போதிலும் பார்க்கச் சிறந்த நிலைகளி லும் சுகத்துக்கேதுவான முறையிலும் தம் தொழில்களை யாற்றி, தம் தொழின் முயற்சி காரணமாக ஏற்படக்கூடிய சு கக்கெடுதிகளில் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள, இப்படியான பணிகளினல், காலப்போக்கில் வழிபிறக்கும் என்று காத்திருக்கலாகும்.
தொழிலாளருக்கான சட்டங்கள். தோட்டப் பகுதிகளிலே வேலைசெய்யும் பெருந்தொகைத் தொழிலாளர்களை வைத்து அவர்களுக்குப் பாதுகாப்பளிக்கவேண்டும் என்பதனை முதற் காரணமாகக் கொண்டே தொழிலாளருக்கான சட்டங்கள் ஆரம்பமாயின. இத்தோட்டத் தொழிலாளரில் மிகப்பெரும் பான்மையினர் இந்தியாவில் இருந்து வந்தவர்கள். வைசூரி, பேதிநோய் போன்ற வியாதிகள் இவர்களுக்கிடையே தோன்றி அவர்களிற் பலரை இறக்கச் செய்தன. 1867-ம் ஆண்டிலும் 1877-ம் ஆண்டிலும் பேதி நோய் தோன்றிப்பெரும் சேதம் விளைத்தது. 1889-ம் ஆண்டில் தொற்ருெதுக்கமுகாம்கள்? திறக்கப்பட்டன. இப்படியான கொள்ளை நோய்கள் பரவு வதைக் கட்டுப்படுத்துவதில் இவை பெரிதும் துணைச் செய்தன. 1923-ம் ஆண்டில் இந்திய வருங்குடித்தொழிலாளர் பகுதி3 என்ற பெயருடன் ஒரு அரசாங்கப் பகுதி அமைக்கப்பட்டது. வியாதிகள் கட்ட ளை ச் சட்டம்,  ைவ. த் தி ய உதவிக் கட்டளைச் சட்டம் என்ற இரண்டு கட்டளைச் சட்டங்களாலும், 10 ஏக்கர் அளவுக்குமேல் உள்ள தோட்டங்களின் அதிகாரிகள் தங்கள் தோட்டங்களில் யாருக்கேனும் பேதி நோய் அல்லது பிளேக், அல்லது வைசூரி அல்லது சின்னமுத்து அல்லது வயிற்றுழைவு தோன்றியிருக்கிறது எனச் சந்தேகித்தால்
1. Chest Clinic. 2. uெarantine Camps. தொற்றுநோய் பரவாத் தடை நிலையம் என்றும் சொல்லுவர்.
3. Department of Indian Immigrant Labour.
4. Diseases Ordinance. 5. Medical Wants Ordinance.

Page 60
I 1 0 சங்கங்களும் நிலையங்களும்
அதனை உடனே வைத்திய ஆரோக்கிய சேவைகளின் அதி பதிக்கு அறிவிக்கவேண்டும் என்று கட்டாயமாக விதிக்கப் பட்டனர். இன்னும், தோட்டத் துரைமார் அல்லது அதிகாரி கள் தங்கள் தொழிலாளருக்குத் தகுதிவாய்ந்த விடுதிகளை அமைத்துக் கொடுத்தல் வேண்டும், நல்ல தண்ணிர் வசதி, மலசல கூட வசதி என்பவற்றை ஆக்கிக்கொடுத்தல் வேண்டும் என்றும் விதிக்கப்பட்டனர். ஒரு பெண் தொழிலாளி கர்ப்ப முற்றுப் பிரசவிக்கும் காலத்தில் அவளுக்கு வைத்திய உதவி, பரிகரிப்பு, லீவு நாட்களுக்குச் சம்பளம், உணவு என்பன வற்றை வழங்கவேண்டும் என்று 1941-ம் ஆண்டின் பிரசவ காலச் சகாயக்கட்டளைச் சட்டம்? ஏற்பாடு செய்தது.
மேலே காட்டிய நன்மைகள் தோட்டத் தொழிலாளருக் காகவே ஆரம்பத்தில் இருந்தன. 1934-ம் ஆண்டில் தொழி லாளர் நட்ட ஈட்டுக் கட்டளைச்சட்டம் என்ற ஒன்று நிறை வேற்றப்பட்டது. ஒரு தொழிலாளி தான் வேலைசெய்யும் போது ஊறடைந்தால் அதற்கான நட்ட ஈடு அவருடைய முதலாளியினல் கொடுக்கப்படவேண்டும் என்பது இக்கட்ட ளைச் சட்டத்தின் ஏற்பாடு ஆகும். கொடுக்கவேண்டிய நட்ட ஈட்டுத் தொகை, முதலாளி நட்டஈடு கொடுக்க வேண்டியி ராத சந்தர்ப்பங்கள் என்பனவற்றைப் பற்றியும் இக்கட்டளைச் சட்டத்தில் ஏற்பாடுகள் உண்டு. உதாரணமாக ஒரு தொழி லாளி குடிவெறியினல் தான் வேலைசெய்யும்போது ஊறடைந் தால், அதற்கு முதலாளி நட்ட ஈடு கொடுக்கவேண்டும் என்ற
சம்பளச்சபைகள். ஒரு தொழிலாளிக்குக் கொடுக்கப்பட வேண்டிய ஆகக் குறைந்த சம்பளத்தை ஆலோசிப்பதற்குரிய முதற் சம்பளச்சபை 1927-ம் ஆண்டின் ஆகக் குறைந்த சம்ப ளக் கட்டளைச் சட்டத்தினல் ஏற்படுத்தப்பட்டது. இந்தியத் தோட்டத் தொழிலாளரின் சம்பளவிடயத்தளவிலேயே இச் சபை நின்றது. ஏனைய தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இக் குறைந்த சம்பளக் கட்டளைச் சட்டம் பொருந்தும் விதத் தில் 1941-ம் ஆண்டில் வகுக்கப்பட்டது. தோட்டத்தொழி லாளர்களைவிட கடைகள், தொழிற்சாலைகள், அச்சியந்திர சாலைகள், இஞ்சினியர் வேலைத்தலங்கள், மோட்டார்ப் போக்கு வரத்துச் சேவைகள், துறைமுகம் என்னும் இவற்றிலே, சிறப் பாகக் கொழும்பு மாநகரிலும் பொதுவாக ஏனைய பிரதான
1. Director of Medical and Sanitary Services. 2. Maternity Benefits Ordinance. 3. Workmen's Compensation Ordinance. 4. Wages Boards. 5. Minimum Wage Ordinance.

சங்கங்களும் நிலையங்களும் I
பட்டினங்களிலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணி யாற்றுகிருர்கள். இந்தத் தொழிலாளர்கள் விடயத்திலும் சம்பளச்சபைக் கட்டளைச் சட்டம் பொருந்த அதன் அதிகாரம் விஸ்தரிக்கப்பட்டது. தொழிலாளரின் சம்பளம் இன்ன காலத்துக்குள் கொடுக்கப்படுதல் வேண்டும், இவ்வளவு தொகைக்குமேல் அவர்களின் சம்பளத்தில் இருந்து கழிக்கக் கூடாது என்னும் இன்னேரன்ன விதிகளைக் குறித்த கட்டளைச் சட்டம் ஏற்படுத்தியிருக்கிறது. சம்பளச்சபைகளுடைய அதி காரங்கள், கருமங்கள், கடமைகள் என்பவைபற்றிய பிர மாணங்களையும் இக் கட்டளைச் சட்டம் வரையறுத்து வகுத்து இருக்கிறது. ஆகக் குறைந்த சம்பள விகிதம், ஆகக் குறைந்த வேலை நேரம், வார, ஆண்டுவிடுமுறை நாட்கள் என்பனவற்றை நிர்ணயித்தல் ஒரு சம்பளச்சபைக்குரிய அதிகாரங்களிற் சில வாம்.
பின்வரும் தொழில்கள் சம்பளச்சபைக் கட்டளைச் சட்டத் துக்குள் அடங்குவனவாகும் :-
தேயிலைத் தோட்டச் செய்கையும் உற்பத்தியும்.
ரப்பர் தோட்டச் செய்கையும் உற்பத்தியும்.
தெங்குத் தோட்டச் செய்கையும் உற்பத்தியும், தெங்குப்
பொருள் உற்பத்தியும்.
இஞ்சினியர்த்தொழில்.
அச்சுத் தொழில்.
காரீயத் தொழில்
தேயிலை ஏற்றுமதி.
ரப்பர் ஏற்றுமதி.
கள்ளு, சாராயம், வினகிரித்தொழில்
சுருட்டுத்தொழில்.
கறுவாத்தொழில்.
மோட்டார்ப்போக்குவரத்து, துறைமுகப்போக்குவரத்துச்
சாதனத் தொழில்கள்.
கட்டட நிர்மாண வேலை.
எந்த ஒரு தொழிலுக்கும் உரியதான சம்பளச்சபையில் அத்தொழில் முதலாளிமாரின் சார்பாய பிரதிநிதிகளும் அப் பிரதிநிதிகள் அளவு தொகையினரான அத்தொழிலில் ஈடு பட்ட தொழிலாளர் பிரதிநிதிகளும் இருப்பர் ; அவர்களுடன், அத்தொழிலில் முதலாளியாகவோ, தொழிலாளியாகவோ வேறுவிதத்திலோ தொடர்பற்றவர்கள் நியமிக்கப்படுவர். தொழிலாளருக்கு வேண்டிய நன்மைகளைப் பலாத்காரம் இன்றி யும் அதிருப்தி இன்றியும் பெற்றுக்கொடுப்பதில் இச்சம்பளச் சபைகள் நல்ல பணியாற்றி இருக்கின்றன. சம்பளச்சபைகள் செய்யும் முடிவுகளை அநுட்டானத்துக்குக் கொண்டுவருவதனை

Page 61
112 சங்கங்களும் நிலையங்களும்
மேற்பார்வை செய்தற்கு தொழிற் பரிசோதகர்கள் இருக்கி ருர்கள். சட்டம் சரிவர அநுட்டிக்கப்படுவதனை இவர்கள் மேற்பார்வை செய்வதுடன், குறித்த கட்டளைச்சட்டத்தின் கீழ் முதலாளி தொழிலாளி என்னும் இருசாரார்க்கும் உள்ள உரிமைகளையும் கடமைகளையும் அறிவுறுத்தலும் இப்பரி சோதர்களின் கடமையாகும்.
1942-ம் ஆண்டில் இயற்றப்பட்ட தொழிற்சாலைக் கட்ட ளைச்சட்டம், தொழிற்சாலைகளில் வேலைசெய்யும் தொழி லாளர்களின் சுக விதிகளையும் பாதுகாப்பையும் நல விருத்தியினையும் உத்தரவாதப்படுத்துகிறது. வேலைக்கூடங் களிலே சனநெருக்கம், வெளிச்சம், காற்ருேட்டம் என்னும் இன்னுேரன்னவை பற்றி இக்கட்டளைச்சட்டம் விதிகள் ஏற் படுத்தியிருக்கிறது. இயந்திரங்கள், கொதிகலங்கள், அங்கு மிங்கும் அசையும் சங்கிலிகள் முதலியனவற்ருல் ஏற்படும் ஊறுகளில் இருந்து தொழிலாளர் பாதுகாக்கப்படுதல் வேண் டும் என்றும், நல்ல குடிதண்ணிர் வசதி, தேகத்தைச் சுத்தம் செய்யத் தண்ணிர் வசதி, இளைப்பாறும் வசதி, முதல் உதவி வசதி என்பனவற்றைத் தொழிற்சாலைகள் தம் தொழிலாள ருக்குச் செய்து கொடுக்கவேண்டும் என்றும் இக்கட்டளைச் சட்டத்தால் கண்டிப்பாக விதிக்கப்பட்டிருக்கிறது.
1939-ம் ஆண்டில் சாப்புச்சட்டம்? அநுட்டானத்துக்கும் கொண்டுவரப்பட்டது. சிறப்பாக மாநகரப்பகுதிகளில் நேர வரையறைவில்லாது தொழிலாற்ற நிர்ப்பந்திக்கப்படும் கடைத் தொழிலாளர்களின் நன்மையின் பொருட்டு இச்சட்டம் இயற்றப்பட்டது. தினந்தோறும் அல்லது வாரந்தோறும் ஒரு கடைத் தொழிலாளியிடம் இத்தனை மணித்தியாலங்களுக்கு மேல் வேலை பெறக்கூடாது; மேல் நேர வேலை செய்தால் அதற்கென வேருகச் சம்பளம் கொடுக்கப்படுதல் வேண்டும் : சுகவீனத்தின் பொருட்டுவீவு கொடுக்கப்படுதல் வேண்டும், வார, ஆண்டுவிடுமுறைகள் வழங்கவேண்டும் என்று சாப்புச் சட்டம் கண்டிப்பாக விதித் திருக்கிறது.
சமூக சேவைகள்
வறியவர்கள் அநாதர்கன் எனப்படுவோருக்கு இடுக்கண் கள் நேர்ந்தால் அவற்றைப் போக்குதற்கு பொது சனங்கள் தாமாக ஏதும் உதவி செய்யவேண்டும், அல்லது பொதுத் தாபனங்கள் உதவிபுரிதல் வேண்டும், அல்லது அரசாங்கம் உதவி நன்கொடைகள் அளித்தல் வேண்டும், அல்லது அரசாங்க ஆசுப்பத்திரிகளில் இலவச சிகிச்சை அளித்தல்வேண்டும். என்ற
l. Factories Ordinance.
2. Shop Act.

சங்கங்களும் நிலையங்களும் 113
ஒழுங்குதான் மிகச் சமீபகாலம் வரை இந்நாட்டில் இருந்தது. ஆணுல் 1929-ம் ஆண்டில் நிகழ்ந்த வியாபார வீழ்ச்சியால் ஏற்பட்ட இன்னலும் 1936-ம் ஆண்டில் கொள்ளை நோயாய் பரவிய மலேரியாவின் கொடுமையும் மக்களின் கண்ணைத் திறந்தன. வேண்டிய வேண்டிய சமயங்களிலே சனங்களுக்கு நிவாரணம் அளிப்பதற்குரிய கருமங்களை ஒழுங்கான முறை யில் வகுத்துக் கொள்ளவேண்டும் என்று மக்கள் எண்ணத் தலைப்பட்டனர். இந்த விடயத்தை நன்கு ஆராய்வதற்கென 1944-ம் ஆண்டில் ஒரு கொ மிஷன் நியமிக்கப்பட்டது. அதன் அறிக்கை 1947-ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அவ்வறிக் கையின் பயனக தொழிலாளர்கரும-சமூகசேவைகளின் அமைச்சு என்ற பெயருடன் ஒரு புதிய அமைச்சு அமைக்கப் பட்டது. அத்துடன் சமூகசேவைப் பகுதி என்ற ஒர் அரசாங் கப் பகுதியும் ஓர் அதிபதியின் தலைமையில் ஆக்கப்பட்டது. ஏற்கெனவேயிருந்த சமூகசேவைச்சாதனங்களை அபிவிருத்தி செய்து விஸ் த ரிப்பது, சமூக சேவைகளுக்குரிய பணி யாளர்களுக்கு வேண்டிய பயிற்சியை அளிப்பது முதலாம் கருமங்களில் இப்பகுதி ஈடுபட்டு இருக்கிறது. மக்களுக்குச் சுகவீனம் ஏற்படும் காலத்திலும் வேலையற்றிருக்கும் காலத் திலும் அவர்களுக்குதவிசெய்ய ஒரு வீமாத்திட்டத்தினையும் ஒரு தேசீயச்சகாய நிதியினையும் வகுக்க அது ஒரு திட்டத்தைத் தயார் செய்திருக்கிறது.
மாநகர சங்கப் பரிபாலனம் நிகழும் பகுதிகளில் வறிய வருக்கு நிவாரணம் அளிப்பது அந்த அந்த மாநகர சங்கத் தினது பொறுப்பில் இருக்கிறது. கொழும்பிலே இதற்கென ஒரு தர்ம கைங்கரியக் கொ மிஷனர் இருக்கிருர். மாநகர சங்க அதிகாரத்துக்கப்பால் உள்ள பகுதிகளில், காரியதிகாரிகளின்? உதவியுடன் சமூகசேவைப் பகுதி நிவாரணத்தொண்டைச் செய்து வருகிறது. காரியாதிகாரிகளுக்கு இவ்விடயத்தில் மாவட்ட ஆலோசனைச் சபைகளும் உள்ளுர்ச்சபைகளும்4 உதவிபுரியும்.
நிவாரணம் பல வழிகளில் வழங்கப்படுகின்றது. (அ) பொதுசன உதவி. (ஆ) வெள்ளத்தினல் ஏற்படும் இன்னலுக்கு நிவாரணம். (இ) பயிர்கள் அழிவதாலும் கொள்ளை நோய்களாலும்
ஏற்படும் இன்னலுக்கு நிவாரணம் என்பன சில.
1. Charity Commissioner. 2. Divisional Revenue officers. 3. District Advisory Committees. 4. Local Committees.

Page 62
14 சங்கங்களும் நிலையங்களும்
அரசாங்கத்தைவிட தனிப்பட்ட தாபனங்களும் ஏழைகள், துன்புறுவோருக்கு உதவிபுரிவதில் ஈடுபட்டிருக்கின்றன லங்கா மகில சமிதி, சமூகசேவைச் சங்கம் என்பன இவற்றுள் இரண்டு. இத்தாபனங்களுக்கு அரசாங்க உதவியும் உண்டு. குருடர் செவிடர்க்கான பாடசாலைகளும் வயோதிபர் விடுதி களும், அரசாங்க உதவியுடன் தனிப்பட்ட தாபனங்களினுல் நடாத்தப்படுகின்றன. ஆனல் குருடர் செவிடர்களைக் கவனிக் கும் பொறுப்பை அரசாங்கம் இப்போது ஏற்றுக் கொண்டி ருக்கிறது. இதற்கென 400,000 ரூபா ஒதுக்கப்பட்டிருக் கிறது. விசேடபயிற்சி பெறுவதற்கு இது தொடர்பான உத்தியோகத்தர் புற நாடுகளுக்கு அனுப்பப்பட்டிருக்கிருர் கள். கொக்கலை, கைதடி என்னும் இடங்களிலே வயோ திபர் விடுதிகளை அரசாங்கம் தன் பொறுப்பில் தாபித் திருக்கிறது. ஹிக்கடுவையில் இளங்குற்றவாளிகளுக்கான ஒரு பாடசாலை ஆரம்பிக்கப்படவிருக்கிறது. சருவநல அரசாங்கம் என்னும் லட்சியம் மெல்ல மெல்லவாக இவ்வாறு அடையப் பட்டு வருகிறது.
V11 கிராமாபிவிருத்தி
சுயாட்சியும் சர்வசன வாக்குரிமையும் அளிக்கப்பட்ட தோடு, இந்நாட்டின் கிராமங்களில் வதியும் மக்களின் தேவை களின் முக்கியத்துவம் நன்கு உணரப்பட்டிருக்கிறது. கிராமப் புறங்களில் இருப்பவர்களுக்கு அறிவூட்டுவது பற்றிப் புதுப்புதுக் கருத்துக்கள் தோன்றி நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. ஆதாரக் கல்விக்கான சில நிலையங்களை ஆரம்பிப்பதற்கு ஐக்கிய நாடுகளின் கல்வி விஞ்ஞான பண் பாட்டுத்தாபனம் ஒரு கோஷ்டியைச் சமீபகாலத்தில் இங்கு அனுப்பி வைத்திருக்கிறது. இதற்கெனவுரிய பாடசாலைகளிலே பிள்ளைகள் குறித்த சில பாடப் புத்த கங்களில் இருந்து படிப்பதே கல்வி என்று வாழையடி வாழையாக இங்கு கருதப் பட்டுவந்தது. உண்மைக்கல்வி அதுவல்ல ; தனிப்பட்ட மனிதர் தாம் அங்கத்தவராயுள்ள சமூகத்துக்குப் பயன்விளைக்கும் பணிகளில் ஈடுபட அதன் பயணுக அச்சமூகம் வளர்ச்சியடைய எது உதவிசெய்கிறதோ அதுவே முறையான கல்வி என்பது கல்விக்கு இப்போது கொடுக்கப்பட்டுள்ள கருத்தாகும்.
இப்படியான சேவை இலட்சியங்களால் உந்தப் பெற்றி ருப்பதே கிராமாபிவிருத்திப் பகுதியாகும். தனிப்பட்டவர் களின் தரத்தையும் சமுதாயத்தின் தரத்தையும் உயர்த்துதற்கு வேண்டிய வழிவகைகளை அமைத்துக்கோடுக்கும் நோக்கத் துடன் இப்பகுதி தாபிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கிரா மத் தலைமைக்காரன் பகுதியிலும் ஆண்களுக்கும் பெண்க
1. Welfare State.

சங்கங்களும் நிலையங்களும் II5
ளுக்கும் கிராமாபிவிருத்திச் சங்கங்களைத் தாபிப்பது இப் பகுதியின் பணியாகும். இப்போது ஆண்களுக்குரிய சங்கங்கள் 4986 உம் பெண்களுக்குரிய சங்கங்கள் 819 உம் உண்டு. ஒரு விதான ஆராய்ச்சி அல்லது ஓர் உடையாரின் பிரிவுக்குள் இருக்கும் சங்கங்கள் மத்திய கிராமாபிவிருத்தித் தொகுதிக் குப் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யும். மத்திய கிராமாபி விருத்தித் தொகுதிகள் ஒன்ருகச் சேர்ந்து ஒவ்வொரு பிரிவுக் காரியாதிகாரியின் பகுதிக்குள் பணியாற்றும் கிராமாபிவிருத் திச் சமா சங்கள் ஆகும். காரியாதிகாரிகளின் பகுதிகளுக்குள் இவ்வாறு இயங்கும் கிராமா பிவிருத்திச் சமா சங்கள் மாவட்டக் கிராமா பிவிருத்திச் சபைகளாகும். இப்படியாகக் கிராமாபி விருத்திச் சங்கங்களையும் சமா சங்களையும், டாரியனவான உள் ளூர்ப்பாலன அமைப்புக்களுக்குட்கொண்டு வருவதால், விவ சாயப்பகுதி, சுகாதாரப்பகுதி என்னும் இன்னுேரன்ன அரசாங்கப் பகுதிகளின் சேவையைக் கிராமாபிவிருத்திப் பணியில் பெறுதற்குச் சுலபமாகும்.
I 94 9 -- Lo ஆண்டில், கிராமா பிவிருத்திப் பணியின் பொருட்டு இலங்கைமுப்பெரும் பிரிவுகளாக வகுக்கப் பட்டது. அவையாவன, வடபிரிவு, மத்திய பிரிவு, தென்பிரிவு என்பனவாம். இவற்றுக்கான மத்தியத்தானங்கள் முறையே அநுராதபுரம் கொழும்பு, மாத்தறை என்னும் இடங்களில் இருந்தன. இவை ஒவ்வொன்றும், ஒவ்வொரு கிராமாபி விருத்தி உதவியாளர் என்னும் அதிகாரியின் பொறுப்பில் விடப்பட்டது. இவ்வுதவியாளர், அரசாங்க அதிபர்களுடனும் உதவி அரசாங்க அதிபர்களுடனும் காரியாதிகாரிகளுடனும் தொடர்பு கொண்டிருப்பர். கிராமா பிவிருத்தி உத்தியோகத் தர் என்று வழங்கப்படும் கள உத்தியோகத்தர்? ஒவ்வொரு காரியாதிகாரியுடனும் கடமையாற்றுவார். சிரேட்ட கிராமா விருத்தி உத்தியோகத்தர் கச்சேரிகளில் அரசாங்க அதிபதிக்குக் கீழ் பணியாற்றுவர்.
கிராம மக்களுக்கு உண்மையான அறிவைப்புகட்டுவதே கிராமா பிவிருத்தியின் பெருநோக்காகும். அவர்கள் தங்கள் கருமங்களை மற்றவர்கள் தலையீடின்றித் தாமே நிருவகித்து தாங்கள் அங்கத்துவம் வகிக்கும் சமுதாயத்தோடு தொடர் புடைய பிரச்சினைகளைத் தாங்களே தீர்ப்பதற்கான பயிற்சியை அவர்களுக்கு உதவுதல் வேண்டும். இதனைக் கிராமாபி விருத்தி இயக்கம் செய்துவருகிறது. உணவுற்பத்தி, சுகா தாரம், கைத்தொழில் என்னும் இவற்றில் கிராமாபிவிருத்தி
1. Rural Development Assistant. 2. Field Officers.

Page 63
1 6 சங்கங்களும் நிலையங்களும்
இயக்கம் ஈடுபட்டு இப்பிரச்சினைகளில் கிராமமக்களுக்கு உதவி செய்துவருகிறது. இவ்விடயத்தில் விவசாய, கூட்டுறவுப் பகுதிகளும், உள்ளூர்க்கூட்டுறவுவிற்பனவுச் சங்கங்களும் காணி அதிகாரியின் பகுதியும் வேண்டிய உதவியைச்செய்தன. வட மேல் மாகாணத்தில் உள்ள அம்பஹேன கிராமாபிவிருத்திச் சங்கம் 2,500 ஏக்கர் நிலத்தை வேளாண்மைக்குகந்ததாக்கி யது. மாத்தளை மாவட்டத்தில் உள்ள தித்தவல் கொல சங்கம் 125 ஏக்கர் நிலத்தில் குரக்கனும், 20 ஏக்கர் நிலத்தில் மரக்கறிப்பயிர்களும் 50 ஏக்கர் நிலத்தில் நெல்லும், 40 ஏக்கர் நிலத்தில் பருத்தியும் உண்டாக்கியது. சியனகோரளை யில் 1,000 ஏக்கர்களுக்கு மேல் வீட்டுத் தோட்டங்கள் செய்யப்பட்டன. மன்னர் மாவட்டத்திலே கிராமாபிவிருத் திச் சங்கங்கள் கலவைப் பசளையை உற்பத்தி செய்வதில் ஈடு பட்டன. அங்கே ஒரு காரியாதிகாரியின் பிரிவில் 3,500 அந்தர் கலவைப்பசளையை உற்பத்தி செய்யப்பட்டது. கலவைப்பச ளையை உற்பத்திசெய்தது பிரதானமல்ல, கழிவுப்பொருள்களை வயல்களுக்கும் தோட்டங்களுக்கும் நன்கு பயன்படக்கூடிய ஒரு பொருளாக்க அவர்கள் பயின்றதுதான் இவ்விடயத்திற் பிரதானம் என்பதனை நாம் குறித்துக்கொள்ளுதல் வேண்டும். தம்மன் கடவை மாவட்டத்தில் மண்பாதுகாப்புப் பணியில் கிராமாபிவிருத்திச் சங்கங்கள் ஈடுபட்டு 3,000 ஏக்கர் நிலத் தில் உள்ள வெள்ளத்தைப்போக்கி வரம்புகட்டின. மண் அரிப்பு என்பது எம்நாட்டுக் குடியானவர்களுக்குப் பெரும் கெடுதிவிளைக்கும் தன்மை வாய்ந்தது. அதனை எதிர்த்து வெற்றிகாண்பதில் அவர்கள் இக்கிராமா பிவிருத்திச் சங்கங் களிஞல் பயிற்றப்பட்டு வருகிருர்கள்.
சுகாதார-ஆரோக்கிய சேவைப்பகுதி குடியானவர்களுக் குச் சுகாதார வாழ்க்கை அறிவை யூட்டுவதில் கிராமா பிவிருத் திச் சங்கங்களுடன் ஒத்துழைத்து நல்ல பணி ஆற்றி வந் திருக்கிறது. மலசல கூடங்களை நிருமாணித்தல், குடிப்பதற் குரிய தண்ணிர் நிலையங்களைப் பாதுகாத்தல், ஒட்டு நோய் தொற்றுநோய்கள் ஏற்படும் காலங்களில் முன்னேற்பாடுகள் செய்து கொள்ளல், கிடைக்கக்கூடிய உணவுப் பொருள்களைக் கொண்டே சத்துணவைக் கொள்ளுதல் என்னும் இன்னுேரன்ன வற்றில் இப்பகுதி கிராம மக்களுக்கு போதனை மூலமும் சாதனை மூலமும் அறிவுறுத்தியது. கிராமா பிவிருத்திச் சங்கங்கள். விளையாட்டு முன்றில்களையும் சிரமபரிகார நிலையங்களையும் ஏற்படுத்திக் கிராம மக்களுக்குக் கொடுத்திருக்கின்றன.
குடிசைக் கைத்தொழிற் பகுதி குடிசைக் கைத்தொழில்கள் விடயமாகக் கிராம மக்களுக்குச் சாதனை மூலமாகப் பயிற்சி
l. Department of Cottage Industries.

சங்கங்களும் நிலையங்களும் I 1 7
யளித்தும், தனது குடிசைக்கைத் தொழில் ஆசிரியர்களின் உதவியைக் கொடுத்தும் கிராமாபிவிருத்திச் சங்கங்களுக்கு உதவிசெய்திருக்கின்றன. மாரவில என்னும் இடத்தில் உள்ள புடைவைத் தொழிற் சமாசம் 24,000 ரூபாவுக்கு மேற் கையால் நெசவு செய்யப்பட்ட புடைவைகளைவிற்றது. கிராம வாசிகளின் அறிவு வளர்ச்சிக்கு குடிசைக்கைத்தொழில்களின் அபிவிருத்தி அதிமுக்கியமானதாகும். கிராமத்தில் உள்ள கைவினைஞனின் பாரம்பரிய திறமை அழிந்து விடாதபடி அவை தடுப்பதோடு அவனது சீவனே பாயத்துக்கும் வழிதேடிக் கொடுக்கின்றன. அவை எல்லாவற்றிலும் பார்க்க, குடிசைக் கைத்தொழில் அபிவிருத்தி, குடியானவனின் குணநலத்தை யும் வெகுவாகப் பாதிக்கிறது. பரம்பரை பரம்பரையாக வந்த கைவினைத் தொழில்கள் அருக, அத்தொழில்களில் ஈடுபட்டுள்ள வினைஞனுக்குப் பிழைப்பில்லாமற்போகவே அவன் சோம்பேறி யாகி சமுதாயத்துக்கு ஒரு சுமையாகிருன்.
கிராமப் பக்கங்களிலே நிலா பிவிருத்திக்கும், வயல்கள் தோட்டங்களில் விளையும் பொருள்களைக்கொண்டுபோய் விற் பனை செய்வதற்கும் நல்ல வீதிகள் இன்றியமையாதன. இப்படியான வீதிகளை நிரு மாணிப்பதிலும் கிராமா பிவிருத்திச் சங்கங்கள் நல்ல பணி ஆற்றியிருக்கின்றன. இச்சங்கங்களின் சுறுசுறுப்பான முயற்சியினல் 1,250 மைல்களுக்குமேல் நீள மானவீதிகள் புதிதாக நிர்மாணிக்கப்பெற்றன.
கிராமத்துச் சமுதாயவாழ்க்கையின் தரத்தை அபிவிருத்தி செய்வதற்கும் கிராமா பிவிருத்திச் சங்கங்கள் நன்கு முயன்று ஒரளவுக்கு வெற்றியும் கண்டு வருகின்றன. கிராமவாசிகள் வழக்காடுவதில் அதிவிருப்புடையவர்கள் என்பது யாவரும் அறிந்த விடயமாகும். இதனுல் நீதித்தலங்களில் வாதிக்கும் நியாயவாதிகளே செல்வராய்வர, இக்கிராமவாசிகள் மேலும் மேலும் வறுமைக்காளாகின்றனர். கிராமவாசிகளுக்கிடையே நிகழும் பிணக்குக்களைத் தீர்ப்பதற்குச் சமரசச் சபை களைச் சில கிராமா பிவிருத்திச் சங்கங்கள் நிறுவியிருக் கின்றன. 1949-ம் ஆண்டிலே 1891 சமரசச் சபைகள் நிறுவப் பட்டன; அவை மூலம் 6, 5 66 வழக்குகள் தீர்க்கப்பட்டன.
கிராமத்தைப் பாதுகாக்கவும் அங்கே பாதகச் செயல்கள் நிகழ்வதைத் தடுக்கவும் ரோந்துத் தொண்டர் குழுக்களை? நிறுவச் சில திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. இத் தொண்டர் குழுக்கள் பொலிசாருக்கு உதவி செய்வன
1. Conciliation Boards. 2. Volunteer Patrols.

Page 64
18 சங்கங்களும் நிலையங்களும்
என்பதனைப் பொலிசுப்பகுதி இப்போது கணித்திருக்கிறது. 16,822 கிராமத்தொண்டர்களைக் கொண்ட 1,392 ரோந்துப் படைகள் இப்போது உள.
இன்னுேரன்ன வழிகளால், கிராம மக்கள் தங்கள் பிரச் சினைகளைத் தாங்களே தீர்க்கவும், தற்காப்புடையவர்களா யிருக்கவும் பயிற்சியளிக்க முயற்சி செய்யப்படுகிறது. நாட்டு மக்களை நல்ல பிரசைகளாக்குதற்கு வேண்டிய பயிற்சியளிப்ப தற்குரிய சிறந்த முறைகளில் இதுவுமொன்ரு கும்.
VIII. சட்டமும் ஒழுங்கும். ஒரு சமுதாயமானது தனது மத்தியிலே சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் சாதனங்களைக் கொண்டிருக்கா விட்டால் அது நெடுங்காலத்துக்கு நிலைத்திருக்கமுடியாது. உலகின் கண் உள்ள எல்லாச் சமுதாயங்களிலும் சமுதாய விரோதிகளான சிலர் இருப்பதனை நாம் காண்கிருேம். அவர் கள் தம் சுயநலத்தின் பொருட்டுச் சமுதாயத்துக்குக் கெடுதி யான தொழில்களில் ஈடுபட்டுவருகிருர்கள். இவர்கள் கொள்ளையடிப்பர், களவெடுப்பர், வலிந்து சண்டைக்கிழுப் பர். தங்கள் சட்டபூர்வமான தொழில் துறைகளுக்குப் போகிறவர்களுக்குத் துன்பம் கொடுப்பர். நாட்டில் வாழும் சகல மக்களும் நல்ல, அமைதியான வாழ்க்கை நடாத்து வதற்கு வேண்டிய நிலைமைகளை ஏற்படுத்திக்கொடுத்தல் அரசாங்கத்தின் கருமமாகும். ஆகவே, சமுதாயத்தின் பல ருக்கு விரோதமாகவுள்ள சிலரின் கெட்ட தன்மையைக் கட்டுப் படுத்தவும், இயலுமானல் ஒழிக்கவும் வேண்டும். ஆகவே தான், அமைதியையும், சட்டத்தையும் ஒழுங்கையும் பேணிக் கொள்வதற்குக் குறித்த சில சாதனங்களை அரசாங்கம் கொண் டிருக்கிறது.
நாட்டில் அமைதியும் பாதுகாப்பும் நிலவவேண்டியதன் அவசியத்தைப் புராதன காலங்களிலும் மக்கள் உணர்ந்திருந் தார்கள். அவர்கள் தமது வாழ்வுக்கு வேண்டிய அந்த அமைதி, ஒழுங்கு என்பவற்றை தமது அரசன் ஆனவன் ஒழுங்குபடுத்திக் கொடுக்கவேண்டும் என்று இருந்தனர். இதன் பொருட்டே அரசனுக்கு அளவில்லாத அதிகாரங்கள் இருந்தன. மக்களுக்கிடையே ஏற்படும் பிணக்குகளைத் தீர்க்கவும், குற்றங் கள் இழைப்பவர்களை அகப்படுத்தித் தண்டிக்கவும் அவனுக் கதிகாரம் இருந்தது. இப்படியான அதிகாரம் அரசனுக் கிருப்பது தங்களுடையே நன்மைக்கேயாகும் என்பதனைப் பெரும்பான்மையினரான மக்கள் கணித்து ஒழுகினர்; புராதன இலங்கையில் கிராம வாழ்க்கை எவ்வாறு நடந்து வந்தது என்பதனைப்பற்றியும், அக்காலத்தில் சட்டம் அமைதி என்பன

சங்கங்களும் நிலையங்களும் 19
எப்படி நிலைநாட்டப்பட்டன என்பதனைப்பற்றியும் நீங்கள் படித்திருக்கக்கூடும்.
ஒரு குற்றம் இழைத்த எவனையும் 40 நாட்களுக்கிடையில் அகப்படுத்துவது ஒரு கமச்சபையின் கடமையாகும் என்று ஆருவது மகிந்தனின் (கி.பி. 975) சிலா சாசனம் ஒன்ரு ல் நாம் அறிகிருேம். அக்காலத்திலே எழுத்து மூலமான சட்டங் கள் இருக்கவில்லை. ஆணுல் தொன்று தொட்டிருந்த முறைகள் சட்டப்பெலம் உடையனவாக இருந்தன. மக்கள் செய்யக் கூடாது என்று விலக்கப்பட்ட கருமங்கள் பல இருந்தன. உதாரணமாக, எருமை விவசாயிக்கு மிகப் பயன் தரும் மிருக மானமையினுல் அதனை வதை செய்யக்கூடாது; அப்படியின்றி, வதை செய்தால் அது குற்றம் என்று கருதப்பட்டது. குற்றங் கள் காலத்துக்குக்காலம் அவ்வக் காலச் சமுதாயத்தின் தன்மைக்கேற்றவாறு, மாற்றமடையும். ஒரு தனி மனிதன் இழைக்கும் குற்றத்தின் பொருட்டு அவனுடைய குடும்பம் முழுவதும் தண்டிக்கப்படும் என்று ஆரும் மகிந்தனின் சிலா சாசனத்தால் நாம் அறியக்கிடக்கின்றது. ஒரு கிராமத்தில் உள்ள ஒருவன் குற்றத்தை இழைக்க, அவனை அக்கிராமம் கண்டுபிடித்துக் காட்டிக் கொடுக்காவிட்டால், அக்கிராமம் முழுவதுமே தண்டிக்கப்பட்டது. சட்டத்தையும் அமைதியை யும் நிலைநாட்டுதல் அரசாங்கத்தின் முக்கிய கருமமாக இருந்தது. அவ்வரசாங்கத்தின் தலைவன் என்ற நியதியில் அரசனே அதிபிரதான சட்டவதிகாரியாக விருந்தான். அவ னுடைய உத்தியோகத்தர்கள் ஊர் கடோறும் சென்று நீதி வழங்கினர்.
புராதன காலத்திலே காலத்துக்குக் காலம் பழக்கவழக்கங் களில் இருந்தனவே சட்டங்களாகக் கொள்ளப்பட்டு வந்தன. ஆணுல் இக்கால அரசாங்கத்திலே சட்டங்களைச் சனங்களே, பாராளுமன்றம் அல்லது (நகர சங்கம், மாநகர சங்கம் போன்ற) சபைகள் போன்ற சட்டமியற்றும் தாபனங்கள் மூலமாக வகுத்துக்கொள்ளுவர். ஆகவே, சட்டங்கள் என்பன தெய் வீக சக்தியால் ஆக்கப்பட்டு மாற்றமுடியாதனவல்ல. அவற்றை மனிதனே ஆக்கி, அவை தேவையற்ற காலத்தில் அழிக்கவும் அவனுல் முடியும். சட்டங்களை ஆக்குவதும் அழிப்பதும் பொது சன அபிப்பிராயமாகும் என்பது இதிலிருந்து புலப்படும். யாரேனும் யதேச்சாதிகாரி பொதுமக்களுக்கு விருப்பமில்லாத, அவர்களுக்கு வெறுப்பூட்டும் சட்டங்களைச் செய்தால் அவற் றுக்கு எதிர்ப்பு நிச்சயமாக ஏற்படும் ; சில சமயங்களில் கலகமும் உண்டாகும். பிரித்தானியர் இலங்கையைப் பரிபா
லிக்கத்தொடங்கிய காலத்தில் இங்கு புகுத்திய சென்னைவரி

Page 65
12 O சங்கங்களும் நிலையங்களும்
முறையை எதிர்த்து நிகழ்ந்த கலகம் இதற்கு ஓர் உதாரண மாகும். இலங்கைச் சரித்திரத்தில் இருந்தும் ஏனைய நாடு களின் சரித்திரங்களில் இருந்தும் இப்படி இன்னும் பல உதார ணங்களை எடுத்துக்காட்டலாம்.
இனி, சட்டங்கள் எப்படி வகுக்கப்படுகின்றன, எப்படி அவை நடைமுறைக்குக் கொண்டுவரப்படுகின்றன என்ப தனைச் சிறிது அவதானிப்போம். எங்கள் நாட்டுக்கு வேண்டிய சட்டங்களைப் பாராளுமன்றம் செய்கிறது. இச்சட்டங்களை நீதிமன்றங்கள் நடைமுறைக்குக் கொண்டுவருகின்றன. ஒரு வருக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்புக்கொடுக்க அத்தீர்ப்பில் அவர் திருப்திப்படாவிட்டால் அவர் உயர் நீதி மன்றத்துக்கு அத்தீர்ப்பை ஆட்சேபித்து அப்பீல்' (மநு) செய்வதற்கு உரிமையுடையவராயிருக்கிருர், ஒரு சட்டத்துக்கு நீதி மன்றம் ஒன்று பிழையான வியாக்கியானம் கொடுத் திருக்கு மிடத்து, அல்லது அச்சட்டத்தில் நூானதன்மையிருக்கிறது எனக் காணப்படுமிடத்து, பாராளுமன்றம் அதனை நீக்கிவிட்டு அதன் இடத்துக்கு இன்னெரு சட்டத்தை ஆக்கிக்கொள்ள லாம். இப்படியாக, சட்டங்கள் காலத்துக்குக்காலம் தோன்றி வளருவனவாகும். சமுதாய நிலை மாற மாற புதுப்புதுப் பிரச் சினைகளும் புதுப்புதுக்கஷ்டங்களும் தோன்றும் சமுதாயத் துக்குச் சேவையாற்ற வேண்டுமானல் சட்டமும் அச்சமுதாய நிலைக்குத்தக்கதாக மாற்றமடைந்து கொள்ளுதல் வேண்டும். சட்டங்களுக்கு வியாக்கியானம் செய்து அவற்றுக்கிணங்க நீதி வழங்கும் பொறுப்புடையவர்கள், தங்கள் கடமைகளை யாருக்கும் அஞ்சாது, எவருடைய முகமனையும் பொருட்படுத் தாது ஆற்றக்கூடிய நிலையில் இருத்தல் வேண்டும். அரசியற் கட்சிகளில் ஏற்படும் மாற்றங்கள் அவர்களை எவ்விதத்தி லேனும் பாதிக்கக்கூடாது. இதனுல்தான் நீதி செலுத்தும் கடமை பூண்ட நீதிபதி எவரும் அரசியலில் ஈடுபடக் கூடாது என்ற நியதி இருக்கிறது. அவர் கட்சிப்பற்றுள்ள ஒருவராயிருப்பின், அவருடைய தீர்ப்பு அவர் கட்சியாட்க ளுக்குச் சாதகமாக இருக்கக்கூடிய ஆபத்து இருக்கும். இந்தக் காரணத்தையிட்டே பிரதம நீதியரசர்களதும் உதவி நீதி யரசர்களதும் நியமனங்கள் முடியாற் செய்யப்படுவனவாகும். (இங்கே முடி என்பது அரசன் அல்லது அரசியைக் கருதுவ தாகும்). முடியின் பிரதிநிதி என்ற தன்மையில் இந்த நியமனங்களை மகாதேசாதிபதி அவர்களே செய்வார். செனேற் சபையும் பிரதிநிதிகள் சபையும் சமர்ப்பிக்கும் கோரிக்கையின் பிரகாரம் மகாதேசாதிபதி இந்த நீதிபதிகளை அவர்களுடைய பதவிகளில் இருந்து நீக்கலாமே ஒழிய வேறு

சங்கங்களும் நிலையங்களும் 121
விதங்களில் அவர்களை நீக்கமுடியாது. ஒரு நீதிபதி தமது கடமையையாற்றுவதில் தவறி மக்களுக்கிடையே பெருமள வுக்கு அதிர்ப்தி விளைக்குமிடத்தில் மாத்திரமே இப்படியாக அவர் நீக்கப்படுவார் ; தொகுத்துக் கூறுமிடத்து, உயர்தர நீதிமன்ற நீதியரசர் அல்லது உதவி நீதியரசர்கள், தாம் தம் கடமையைச் சரிவர நிறைவேற்றும் வரையில் தம் பதவியில் இருந்து கொள்ளலாம். எக்கட்சிக்காவது, அதிகாரத்தில் இருக்கும் எவருக்காவது மனத்தாங்கல் விளைத்துவிட்டதால், தம்மைப்பதவியில் இருந்து நீக்கிவிடுவார்கள் என்ற பயம் நீதி பதிகளுக்கு வேண்டியதில்லை. அரசாங்கம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் நீதிபதிகள் அவ்வரசாங்கத்துக்குப் பாதகமாகத் தீர்ப்பு அளித்திருக்கும் சம்பவங்களும் எத்தனையோ உண்டு. அப்படித் தீர்ப்பளித்தபடியினல், அந்நீதிபதிகளுடைய பதவி களுக்கு எவ்வித ஆபத்தும் நேர்ந்துவிடவில்லை.
உயர்தர நீதிமன்றத்து நீதிபதிகளல்லாத ஏனைய கீழ் நீதிபதிகளின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதன் பொருட்டு, அவர்களின் நியமனம் நீதிபரிபாலனசேவைக் கொமிஷன் என்னும் அதிகார சபையினல் செய்யப்படுகிறது. இந்த அதிகார சபையிலே உயர்தர நீதிமன்றத்துப் பிரதம நீதியர சர், ஒர் உதவி நீதியரசர், உயர்தர நீதிமன்றத்தில் நீதியரச ராயிருந்த அல்லது நீதியரசராக இருக்கப்போகும் ஒருவர், என்னும் மூவர் அங்கத்துவம் வகிக்கிருர்கள். நீதிபதிகளே நியமிக்கும், மாற்றும், பதவி நீக்கம் செய்யும் அல்லது வேறே தும் ஒழுங்கு நடைவடிக்கை எடுக்கும் அதிகாரம் நீதிபரிபாலன சேவைக் கொமிஷனுக்கு உண்டு. ஏதும் நியமனம் சம்பந்த மாகக் குறித்த அதிகாரசபைமீது தம் செல்வாக்கைப் பிர யோகிக்க எத்தனிக்கும் எவர்மீதும் வழக்குத் தொடரப்பட இடம் இருக்கிறது. இதனல் நீதிபதிகள் நியமன விடயத்தில் இன்னெரு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. நீதிபரி பாலனச்சேவை கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டதாய், எவரது தயவு தாட்சண்யத்தையும், எவரது விரோதத்தையும் பொருட்படுத்தாமல் நீதிவழங்கும் பெரும்பணியில் ஈடுபட் டிருக்கிறது.
இப்போது நடைமுறையில் இருக்கும் சட்டங்களிற் பல இன்று நேற்றுத் தோன்றியனவல்ல. அவை தம் வரலாற்றுச் சின்னங்களை இன்னும் தம்மகத்தே கொண்டிருக்கின்றன. உதாரணமாக, தேசவழமைச்சட்டம் என்பது யாழ்ப்பாணத் தமிழரின் வழக்கங்களுடன் தொடர்பு கொண்டது. இவ்
l. Judicial Services Commission.

Page 66
122 சங்கங்களும் நிலையங்களும்
வழக்கங்களை டச்சுத் தேசாதிபதியாகவிருந்த சைமன்ஸ் என்பவர் ஒன்ருகத் திரட்டித் தொகுத்தார். மலைநாட்டுச் சிங் க ள ரு க் கு ப் பொருந்து வன வா ய், அவர்களின் வழக்கங்களுடன் தொடர்பு கொண்டுள்ள கண்டிச் சட்டத் தொகுப்பு ஒன்றும் உண்டு. முஸ்லிம்களின் பழக்க வழக்கங் களுடன் தொடர்புகொண்டது இஸ்லாமியச்சட்டம். டச்சுக் காரர் கரையோர மாகாணங்களை ஆட்சி செய்த காலத்தில் ரோமன்-டச்சுச் சட்டத்தைக் கொண்டுவந்தனர். இலங்கையை பிரித்தானியர் கைப்பற்றிய காலத்தில் இச்சட்டத்தை இங்கிருந்த பிரித்தானிய நீதிமன்றங்களிலும் கைக்கொண்ட னர். இந்தப் பழைய சட்டத் தொகுப்புக்களைவிட, கிறிமினல் சட்டம், வர்த்தகச் சட்டம், சிவில் விவகாரச்சட்டத்தொகுப்பு கிறிமினல் விவகாரச்சட்டத்தொகுப்பு முதலியன ஆங்கிலச் சட்டத்தில் இருந்து இங்கு கொண்டுவரப்பட்டவையாகும். சட்டம் என்பது காலத்துக்குக்காலம் வளரும் சந்தர்ப்பத் துக்குத் தக்கவாறு சட்டங்களைப் பாராளுமன்றம் தயாரிக்கும். சட்ட பரிபாலனத்துக்குரிய சாதனங்கள் சட்டங்களும் அச் சட்டங்களுக்கு வியாக்கியானம் கொடுக்கும் நீதிமன்றங்களு மாம். நீதிமன்றங்கள் யாவற்றுக்கும் தலையாய் இருப்பது சுப்பிறீம் கோடு என்றும் வழங்கப்படும் உயர்தர நீதிமன்ற மாகும். சுப்பிறீம் கோடு ஒரு பிரதம நீதியரசரையும் எட்டு உதவி நீதியரசர்களையும் அசை சுக் கொமிஷனர் மாரையும் கொண்டதாகும். முடியின் பிரதிநிதி என்ற நியதியில் மகா தேசாதிபதி அவர்களே இவர்களைனைவரையும் நியமிப்பார். நீங்கள் கொழும்பில் உயர்தர நீதிமன்றம் நடக்கும்பொழுது போய்ப் பார்த்தால், அங்கே பிரதம நீதியரசரே எப்போதும் தலைமை வகிப்பதை நீங்கள் காணமுடியாது. வழக்குகள் இப்போது மிகப் பெருந் தொகையில் ஏற்படுகிறபடியினல், பிரதம நீதியரசருக்கும் உபநீதியரசர்களுக்கும் உரிய வழக்கு விசாரணைகளிற் சில அசைசுக் கொ மிஷனர் என்னும் நீதியரச ரிடம் ஒப்புவிக்கப்படுகின்றன. அசைசுக் கொமிஷனரையும் நியமிப்பவர் மகாதேசாதிபதி அவர்களே ஆவர்.
உயர்தர நீதிமன்றத்தின் நீதியரசர்கள்தான் நாட்டிலே யுள்ள நீதிபதிகள் அனைவருக்கும் மேலானவர்கள். அவர்கள் தங்கள் கடமைகளை ஆற்றுவதில் வேண்டிய அளவு சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிருர்கள். இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் :-
* உயர்தர நீதிமன்றத்தின் நீதியரசர் ஒவ்வொருவரும் தாம் தம் கடமையைச் சரிவர ஆற்றும் வரை பதவிவகிப்பர் ; செனேற்சபை பிரதிநிதிகள்சபை என்பனவற்றின் கோரிக்
1. Simons.

சங்க்ங்களும் நிலையங்களும் I 23
கையின் பேரில் மகாதேசாதிபதியால் அவர்கள் பதவியில் இருந்து நீக்கப்படலாமேயன்றி வேறுவிதங்களால் நீக்கப்பட லாகாது".
ஒரு நீதியரசர் தமக்குரிய கடமையைத் திறமையுடன், நோய்காரணமாக தேகவலிகுன்றது, ஆற்றும் வரைக்கும் அவரைப்பதவியில் இருந்து நீக்கமுடியாது என்பதே அரசிய லமைப்பு விதியின் கருத்தாகும். ஒரு நீதியரசர் தகைமை யற்றவர் என்று இலங்கைப் பாராளுமன்றம் கண்டால் மாத் திரம் அவரைப் பதவியில் இருந்து நீக்கலாம் என்ற இவ்விதி யிருப்பதால் அவர் யாருக்கும் தம் கடமை விடயமாக அஞ்ச வேண்டியதேயில்லை. அவர் அஞ்சவேண்டியது தமது தகைமை யின்மைக்கும் திறமையின்மைக்குமே யாம்.
உயர்தர நீதிமன்றத்து நீதியரசர்களின் சம்பளத்தைப் பாராளுமன்றமே நிர்ணயித்தல் வேண்டும். அச்சம்பளம் திரட்டு நிதிக்கணக்கில் செலவெழுதப்படுதல் வேண்டும் என்றும் அரசியலமைப்பில் விதிக்கப்பட்டிருக்கிறது. இது மிகப் பிரதானமானதொரு விடயமாகும். இப்படியிருத்தலி ஞல், மற்றும் உத்தியோகத்தர்களின் சம்பளங்களைப்போல நீதியரசர்களின் சம்பளத்தைப் பாராளுமன்றம் ஆண்டு தோறும் அநுமதிக்க வேண்டியதில்லை. நீதியரசர்களின் சம் பளம் பாராளுமன்றத்தால் அநுமதிக்கப்படுதல் வேண்டும் என்ற நியதியிருப்பின், அவர்களின் நீதிபரிபாலனக் கடமை களில் குரோதம் கொண்டுள்ள ஒரு பாராளுமன்ற அங்கத்த வர், அச்சம்பளங்களில் ஒரு வெட்டுச் செய்யவேண்டும் அல்லது அவற்றைக் குறைக்கவேண்டும் என்று பிரேரிப்பதற்கு இடம் இருக்கும். நீதியரசர்களின் சம்பளவிடயத்தில் இப்படி யாக நடப்பதற்கு இடமேயில்லை. ஆகவே, அவர்கள் பாராளு மன்றத்தின் அங்கத்தவர்களுடைய கண்டனங்களுக்கு ஆளா காத நிலையில் வைக்கப்பட்டிருக்கிருர்கள். இது அவர்கள் தங்கள் கடமையைத் திறம்பட, நீதிகோணுது ஆற்றுதற்கு வேண்டிய சுதந்திர வுணர்ச்சியை அவர்களுக்குக் கொடுக் கிறது. இவ்வுணர்ச்சி இல்லையேல், அவர்கள் தம் கடமையை நிறைவேற்றமுடியாது.
நாட்டின் நீதிமன்றங்களில் சுப்பிறீம் கோடு என்று வழங் கப்படும் உயர்தர நீதிமன்றமே மகோன்னதமானது. சகல கிறிமினல் வழக்குக (குற்ற வழக்குகள்)ளிலும் இந்நீதிமன்றத் துக்கே மூலாதார நியாயாதிக்கம்? உண்டு என்று சட்ட சம்பந்தமான நடையிற் கூறுவர். கொலை வழக்குகளை அது
1. Consolidated Fund. 2. Original Jurisdiction.

Page 67
1 24 சங்கங்களும் நிலையங்களும்
ஒன்று மாத்திரமே விசாரனைபுரிந்து தீர்ப்பளிக்கலாம். இப்படி யான கொலை வழக்குகள் எல்லாவற்றையும் கொழும்பிலேயே விசாரணை செய்யமுடியாது. எனவே இலங்கை இதன் பொருட்டு ஐந்து சுற்றுக்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அவையாவன:-வட சுற்று,2 கீழ்ச்சுற்று, தென்சுற்று, மேற் சுற்று, மத்திய சுற்று ேஎன்பவைகளாகும். நீதியரசர்கள் இச்சுற்று நீதிமன்றங்களுக்குச் சென்று விசாரணை நிகழ்த்துவர்; விசாரணைகளில் யூரிமார் சமூகமாயிருந்து வழக்கைக்கேட்டு, எதிரியாகவுள்ளவர் குற்றவாளியா சுத் தவாளியா என்று தீர்ப் பளிப்பர். உயர்தர நீதி மன்றத்திலே குற்றவழக்கு விசாரணை செய்யப்படும்பொழுது நீங்கள் அதிற் சமுகமாயிருந்து பார்வையிடுவது அதிக பயனைத் தரும். யூரிமார் தொகை ஏழு. அவர்கள் இதற்கெனவுள்ள ஒரு குழுவில் இருந்து திருவுளச் சீட்டு முறையில் தெரிவு செய்யப்படுவர். தெரிவு செய்யப்பட்ட ஒருவர் யூரியாகக் கடமையாற்றுவதை வழக் கோடு சம்பந்தப்பட்டவர்கள் ஆட்சேபித்தால், அவர் பதவி ஏற்க மாட்டார். நீதவான் கோட்டில் இருந்து, உயர்தர நீதிமன்ற விசாரணைக்குப் பாரப்படுத்தப்படும் சகலரையும் பிசுக்கால் அம்மன்றத்துக்கு முன்னல் கொண்டுவந்து ஒப்பு விப்பார். அரசாங்க அதிபராக இருப்பவரே அநேகமாக பிசுக் காலாகவும் இருப்பர். குற்றம் சாட்டப்பட்டிருப்ப வருக்கு எதிராகவுள்ள குற்றங்கள் என்ன என்ன என்பது வாசித்துக்காட்டப்பட்டபின், அக்குற்றம் சாட்டப்பட்டிருப்ப வர் குற்றவாளியா சுத்தவாளியா என்று கேட்கப்படுவார். உதாரணத்தின் பொருட்டு, அவர் தாம் சுத்தவாளி என்று சொல்லுகிருர் என வைத்துக்கொள்ளுவோம். இதன்பின், கொலைக்குற்ற வழக்குகளில் வழக்கை நடாத்தும் பொறுப்பு முடிக்குரியது. முடிக்குரிய நியாயவாதி எழுந்து குற்றத்தின் விபரங்களைச் சாட்சியங்கள் மூலமாக யூரிமாருக்கு எடுத்து விளக்குவார். சாட்சிகளை எதிரிபக்க நியாயவாதி குறுக்கு விசாரணை செய்து, தம் கட்சிக்காரர் சுத்தவாளியே என்ப தனை நிலைநாட்டத் தம்மா லான வரை முயற்சிப்பார். அவர் தம் கட்சிக்குச் சார்பாகவுள்ள சாட்சிகளை வரச்செய்து அவர் களை விசாரிப்பார். இச்சாட்சிகளை முடிக்குரிய நியாயவாதி குறுக்குவிசாரணை செய்வார். இப்படியான விசாரணையின
. Circuits. . Northern Circuit. Eastern Circuit. . Southern Circuit. ... Western Circuit, . Midland Circuit,
:

சங்கங்களும் நிலையங்களும் I 25
லும் குறுக்குவிசாரணையினலும், நீதிமன்றத்திற்சமர்ப்பிக்கப் பட்ட சாட்சியத்தில் இருந்து குற்றம் சாட்டப்பட்டிருப்பவர் குற்ற வாளி யா சுத்தவாளியா என்பதனை யூரி மார் அறிந்துகொள்ளமுடியும். அவர்கள் சட்டப் பிரச்சினைகளை அறியாதவர்கள்; எனவே நீதியரசர் குறித்த வழக்கின் சட்டப் பிரச்சினையை அவர்களுக்கு விளக்கி, அளிக்கப்பட்ட சாட்சியங் களைத் தொகுத்துக் காட்டுவார். குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளிதான் என்று யூரிமார் முடிவு செய்தால், நீதியரசர் சட்டப்படி தண்டனை விதிப்பார்.
உயர்தர நீதிமன்றம் அப்பீல் (அல்லது அப்பல்) கோடு என்று சாதாரணமாக வழங்கப்படும் மேல் தீர்ப்பு நீதிமன்றமு மாகும். மாவட்ட நீதிமன்றம் போன்ற கீழ் நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பினைச் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் ஆட்சேபிப் பின், அவர்கள் தம் ஆட்சேபனையை எடுத்துக்காட்டி அப்பீல் கோட்டிற்கு விண்ணப்பம் செய்யலாம். இத்தகையதான மநுவைச் சுப்பிறீம் கோட்டின் நீதியரசர்களில் ஒருவரோ இருவரோ மூவரோ விசாரணை செய்து தீர்ப்பளிப்பர். இத் தீர்ப்புச் சுப்பிறீம் கோட்டின் தீர்ப்பு எனக் கருதப்படும்.
இப்போது சுப் பிறீம் கோடு, கிறிமினல் அப்பீல் கோடு என்று வழங்கப்படும் குற்ற வழக்குமேல் தீர்ப்பு நீதிமன்றமு மாகவும் விளங்குகிறது. 1940-ம் ஆண்டுக்குமுன்னர், சுப் நீம் கோட்டில் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் அதனை ஆட்சேபித்து இங்கிலாந்தில் உள்ள அரசவையின் நீதிக்குழு? வுக்கு மனுச்செய்ய, அல்லது தமக்கு விதிக்கப்பட்ட தண்ட னையை விலக்கி ம ன் னி ப் பளிக் க வேண்டும் அல்லது அத் தண்டனையைக் குறைக்கவேண்டும் அல்லது மாற்றவேண்டும் என்று தேசாதிபதிக்கு விண்ணப்பம் செய்ய மாத்திரமே இடம் இருந்தது. அரசவையின் நீதிக்குழுவுக்கு மனுச்செய்வது அதிக செலவுக் கேதுவானது. அத்துடன் அதற்கான அநுமதி பெறுவதும் அரிது. நீதிபரிபாலன விடயமாக மக்களுக்கு ஏற்படும் இவ்விடைஞ்சல்களை நீக்குவதன் பொருட்டு சுப்பிறீம் கோட்டின் தீர்ப்புக்களை ஆட்சேபித்துச் செய்யப்படும் மனுக் களை விசாரணைசெய்ய, சுப்பிறீம் கோடே, கிற மினல் அப்பீல் கோடு அல்லது குற்ற வழக்கு மேல் தீர்ப்பு நீதிமன்றமாகவும் இருக்க வேண்டும் என்று ஓர் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இத்தகையதான குற்ற வழக்கு மேல் தீர்ப்பு நீதிமன்றத்தில் பிரதம நீதியரசரும் உபநீதியரசர்கள் சிலரும் அங்கத்தவரா யிருப்பர். ஆனல், எந்தத் தீர்ப்பை ஆட்சேபித்து மனுச்
l. Court of Criminal Appeal. 2. Judicial Committee of the Privy Council.

Page 68
126 சங்கங்களும் நிலையங்களும்
செய்யப்படுகிறதோ அந்தத் தீர்ப்பையளித்த நீதியரசர் அத் தீர்ப்புச் சம்பந்தமான, மேல் தீர்ப்பு நீதிமன்றத்தில் அங்கத் துவம் வகிக்கமாட்டார்.
சிவில் வழக்குகளில் அரசவையின் நீதிக்குழுவிற்கு மனுச் செய்ய இப்போதும் இடம் இருக்கிறது. ஆனல் அப்படியான மதுவை அநுமதிக்கமுன் குறித்த சில நிபந்தனைகள் பூர்த்தி யாக்கப்படுதல் வேண்டும். உதாரணமாக :- குறித்த ஒரு வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு இலங்கை நீதித்தலங்கள் சம்பந்தப்பட்ட அளவில் இறுதியானதாக இரு த் த ல் வேண்டும். சொத் துப் பற்றிய வழக்கெனில் குறித்த சொத்தின் பெறுமதி 5,000 ரூபாவுக்கு மேல் இருத்தல் வேண்டும்.
சுப்பிறீம் கோடு எனப்படும் உயர்தர நீதி மன்றத்தைவிட டிஸ் திறிக்கோடு எனச் சாதாரணமாக வழங்கப்படும் மாவட்ட நீதிமன்றங்களும் இலங்கையில் உள. டச்சுக்காரர் காலத் திலே சிவில் றட்டுக்கள் எனப்பட்ட நீதித்தலங்கள் இருந்தன என்று நீங்கள் சரித்திர பாடத்திற் படித்திருக்கலாம். சிவில் ருட்டுக்களை அநேக விடயங்களில் ஒத்திருப்பனவே இப் போதுள்ள மாவட்ட நீதிமன்றங்கள். சிவில் வழக்குகள் யாவும் மாவட்ட நீதிமன்றங்களிலேயே விசாரித்துத் தீர்ப்பளிக் கப்படும். உதாரணமாக, ஆதனங்கள், மரண சாதனங்கள் என்பவற்றுடன் சம்பந்தப்பட்ட வழக்குகளும் தங்களுடைய ஆதனங்களைத் தாங்களே நிருவகிக்கமுடியாதிருக்கும் பராய மற்றவர் முதலியவர்களுடன் சம்பந்தப்பட்டுள்ள வழக்கு களும், பராயமற்றவர்களுக்குப் பாதுகாவலர்களை நியமித்தல் தொடர்பான வழக்குகளும் விவாக நீக்க வழக்குகளும் மாவட்ட நீதிமன்றங்களிலே விசாரணைசெய்து தீர்ப்பளிக்கப் படும். இப்படியான சிவில் வழக்குகளில் இந்நீதிமன்றத்துக்கு மூலாதார நியாயாதிக்கம் உண்டு.
கிறிமினல் வழக்குகளும் மாவட்ட நீதிமன்றங்களில் விசாரணை செய்யப்படுவது உண்டு. தனது விசாரணைக்குச் சமர்ப்பிக்கப்படும் ஒரு வழக்கை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை செய்யும்படி சுப்பிறிம் கோடு உத்தரவிடலாம். சாதாரணமாக, நீதவான் கோடுகளால், மாவட்ட நீதிமன்றங் களுக்குப் பாரப்படுத்தப்படும் வழக்குகள் அந்நீதி மன்றங் களில் விசாரணை செய்யப்படும். ஆனல் மாவட்ட நீதிமன்றங் கள் விதிக்கும் தண்டனைகளுக்கு ஒரு எல்லை வகுக்கப்பட்டிருக்
1. Civil Raads.

சங்கங்களும் நிலையங்களும் 7 2ן"
கிறது. உதாரணமாக அது விதிக்கக்கூடிய மிகக்கூடிய சிறைத் தண்டனை இரண்டு ஆண்டுகளுக்கேயாம். மிகக்கூடிய அப ராதம் ஆயிரம் ரூபா.
கிராமக்கோடுகள் என்று வழங்கப்படும் கிராம நீதிமன் றங்களின் தீர்ப்புக்களை ஆச்சேபித்துச் செய்யப்படும் மநுக்களை விசாரணை செய்யும் அப்பல் கோடு மாவட்ட நீதிமன்றமாகும் என்பதனையும் நாம் குறித்துக்கொள்ளுதல் வேண்டும்.
மாவட்ட நீதிமன்றத்துக்கு அடுத்ததாக இருப்பது நீத வான் கோடு என்று சாதாரணமாக வழங்கப்படும் நீதவான் நீதிமன்றமாகும். நீதவான் கோடுகளில் விசாரணை செய்யப் படும் வழக்குகளைப்பற்றிப் புதினப்பத்திரிகைகள் வாயிலாக நீங்கள் நாடோறும் அறிவீர்கள். ஓரிடத்திற் கொலை நிகழ்ந் தால், கொலை செய்தவன் எனக் குற்றம் சாட்டப்படுபவனை ஆரம்பவிசாரணையின் பொருட்டு, நீதவான் “மன்றத்துக்கே கொண்டுவருவர். அங்கே விசாரணை முடிந்ததும், வழக்கு விபரங்களை நீதவான் அற்றேணி ஜெனரல் என ஆங்கிலத்தில் வழங்கப்படும் அரசாங்கமகாதரணிக்கு அனுப்பிவைப்பார். கொலை வழக்குகளில், வழக்கை நடாத்தும் பொறுப்பு முடிக்கேஉரிய தானமையினல், ஒரு கொலை வழக்கு நீதவான் மன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு முடிந்ததும், அதனைத்தொடர்ந்து எவ்வாறு நடாத்துவது என்பதனை மகாதரணியே நிச்சயித்தல் வேண்டும்.
நீதவான் மன்றங்களின் அதிகாரங்கள் சட்டபூர்வமாக வரையறுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு நீதவான் ஆறுமாதங் களுக்கு மேற்பட்ட சிறைத்தண்டனையோ, 100 ரூபாவுக்கு மேற்பட்ட அபராதமோ விதிக்கமுடியாது. குற்றவாளிகளுக் குச் சவுக்கடித்தண்டனை விதிக்கவும், மாவட்ட நீதிமன்றங் களுக்குப் போல, நீதவான் மன்றங்களுக்கும் அதிகாரம் வழங் கப்பட்டிருக்கிறது.
மாநகரசங்கங்கள் சுயாட்சித்தாபனங்களாகும். அவை தங்கள் பகுதிகளின் பரிபாலனத்துக்கு வேண்டிய உபவிதி களைத் தாங்களே "வகுத்துக்கொள்ளும். கொழும்பு மாநகரத் துக்குள், அம்மாநகரசங்கம் வகுத்துள்ள உபவிதிகளை யாரும் மீறினல், அவர் மாநகர நீதிமன்றத்தில்? விசாரணை செய்யப் பட்டுத் தண்டிக்கப்படுவர். ஏனைய மாநகரங்களிலே சாதா
1. Athorney General, அரசாங்க மகாதரணி, இராசகாரியச் சிரேட்டி நியாயவாதி என்பன இதற்குரிய சமசொற்கள்; அரசாங்க மொழிகள் அலுவலகம், இதற்குச் சட்டத்துறைத் தலைமை அதிபதி எனனும் சம சொல்லை நவமாக ஆக்கியிருப்பதும் நோக்கற்பாலது.
2. Municipal Court.

Page 69
28 சங்கங்களும் நிலையங்களும்
ரண நீதவான் மன்றங்களில், மாநகர சங்க உபவிதிகளை மீறு வோர் விசாரணை செய்யப்படுவர்.
விண்ணப்ப நீதிமன்றங்கள் 300 ரூபாவுக்கு மேற்படாத கடன், நட்டஈடு, காணிப்பிணக்கு என்பவை சம்பந்தமான வழக்குகளை இந்நீதிமன்றங்கள் விசாரணை செய்யும். கொழும் பிலே விண்ணப்ப நீதிமன்றத்துக்கு வேருக ஒரு நீதவான் இருக்கிருர், அவரை விண்ணப்ப நீதிமன்றக் கொமிஷனர்? என்று சொல்வர். கொழும்பை ஒழிந்த ஏனைய விடங்களில் மாவட்ட நீதிபதி அல்லது நீதவானே தமது வழக்கமான கடமை களுடன் விண்ணப்பநீதிமன்றக் கொ மிஷனராகவும் கடம்ை யாற்றுவார்.
கிராமப்பகுதிகளிலே, குறித்த சில விடயங்கள் தொடர் பாய நியாயாதிகாரம் கிராமக் கோடுகள் என்று வழங்கப் படும் கிராம நீதிமன்றங்களிற் பொறுப்பிக்கப்பட்டிருக்கிறது. 100 ரூபாவுக்கு மேற்படாத கடன்கள், நட்டஈடு, காணிப் பிணக்கு என்பவை தொடர்பான வழக்குகளைக் கிராம நீதி மன்றங்கள் விசாரணை செய்து தீர்ப்பளிக்கலாம். கிராம நீதிமன்றத்தின் தலைவரைக் கிராமக்கோட்டு நீதவான்’ என்று கூறுவர். அவர் நீதிபரிபாலன சேவைக்கொமிஷன் என்னும் குழுவினல் நியமிக்கப்படுவர். 50 ரூபாவுக்கு மேற்படாத அபராதத்தையும் 14 நாட்களுக்கு மேற்படாத சிறைத் தண்ட னையும் விதிக்கக் கிராமக்கோட்டு நீதவானுக்கு அதிகாரம் உண்டு.
அரசாங்க மகாதரணி எனப்படும் அதிகாரியினதும் அவர் பகுதியினதும் பொறுப்பிலேயே இலங்கையின் நீதிபரிபாலனக் கருமம் பொறுப்பிக்கப்பட்டிருக்கிறது. முடிக்குரிய பிரதான சட்ட அதிகாரி அரசாங்க மகாதரணியே யாவர். வழக்குத் தொடருவது, சட்ட சம்பந்தமான விடயங்கள் என்பனபற்றி அரசாங்கப்பகுதிகள் எல்லாம் இவரிடமே ஆலோசனை கேட் கும். முடியால் தொடரப்படும் வழக்குகளை நடாத்துபவர்கள் அரசாங்க மகாதரணியும் அவரின் உத்தியோகத்தர்களுமே யாவர். அவர் அரசாங்கத்தின் பிரதான சட்ட அதிகாரியா
1. Courts of Request: plug still as மொழிகள் அலுவ கத்தின் & ԼԸ சொல் இது: சாதாரண மக்கள் இவற்றை “சின்னக்கோடுகள்" என்று வழங்குவர். சிறு வழக்கு நீதிமன்றம் என்றும் கூறுவர்.
2. Commissioner of Requests;
3. அரசாங்க மொழிகள் அலுவலகம் அங்கீகரித்துள்ள சொல்.
4. நீதாசனசேவை அதிகாரசபை என்று அரசாங்க மொழிகள் அலுவலகத்தின் சமசொல்
5. Department.

சங்கங்களும் நிலையங்களும் 129
யிருப்பதோடமையாது, பொதுசன உரிமைகள் தொடர்பான சகல விடயங்களிலும் பொது சனங்களின் பிரதிநிதியாகவும் கடமையாற்றுவார்.
அரசாங்க மகாதரணிக்குதவியாக மகா சொலிசித்தர் என் னும் சட்டத்துறை அதிகாரி யொருவரும் முடிக்குரிய நியாய வாதிகளும் இருக்கிருர்கள். பாராளுமன்றத்திற் சமர்ப்பிக் கப்படும் சட்ட நிரூபணங்களை மசோதாக்கள்? உருவில் அமைத்துக்கொடுக்க வேண்டிய கடமை அரசாங்க மகா தரணியினதாகும். அரசாங்கப்பகுதிகள் தாங்கள் யோசித் திருக்கும் ஒழுங்கு விதிகளைச் சட்ட முறையில் அமைப்பதற்கு மகாதரணிக்கே அனுப்பும். உதாரணமாக, கல்வி சம்பந்த மான சகல பிரமாணங்களையும் சட்டவுருவில் அமைக்க, வித்தி யாபகுதி மகாதரணிக்கே அனுப்பும்.
அரசாங்கப்பகுதி ஒவ்வொன்றினதும் கருமங்கள் இப் போது பன்மடங்காக அதிகரித்திருக்கின்றன. பொருளாதார, சமுதாய சேவைகளின் பொருட்டு நாடோறும் அதிகரித்துக் கொண்டேவரும் சட்ட நிரூபணங்கள், மக்கள் தங்களுக்குரிய உரிமைகளைப்பற்றிக் கொண்டுள்ள தீவிர உணர்ச்சி, அரசியல் அதிகார முன்னேற்றம், புதுப்புதுக் கொள்கைகள், புதுப்புது அரசாங்கப்பகுதிகள் என்பனவற்ருல் மகாதரணியின் பகுதிப் பணிகள் அதிகரித்துவிட்டன. அரசாங்கம், பணம் தொடர் பான எத்தனையோ கருமங்களில் ஈடுபட்டிருக்கிறது. சுங்க வரி, வருமான வரி, பூதல் வரி4 முத்திரை வரி, மதுப்பகுதி வரி என்பன தொடர்பான விடயங்களில் அரசாங்கத்துக்குத் தினந்தோறும் ஆலோசனையளித்தல் மகாதரணியின் பகுதி யின் கருமங்களில் ஒன்று. பரிபாலனம் சம்பந்தமாக ஏற்படும் பிரச்சினைகள் பல்வேறு வகைப்பட்டவை. இவை எல்லாவற்றுக்கும் தக்க ஆலோசனைகளை வகுத்துக் கொடுப்பது மகாதரணியின் பகுதியேயாகும். இவ்வாரு கப் பிரச்சினைகள் பல்வேறு வகைப்பட்டனவாக இருத்தலினல் இப்பகுதியின் சட்ட உத்தியோகத்தர் ஆற்றிவரும் பணிகளைப் பொது மக்கள் அதிகமாக அறியமுடிகிறதில்லை.
அரசியல், அரசியற் கட்சிகளுக்கப்பால் உயர்தர நீதி மன்றத்து நீதியரசர்கள் இருப்பதற்கு வகுக்கப்பட்டிருக்கும்
l. Solicitor General. (9) Udstilblais வழக்கறிஞர் தலைமை அதிபதி, சொலிசிற்றர் ஜெனரல் என்ற சமகொற்களை அரசாங்க மொழிப் பகுதி வகுத்திருக்கின்றது.
2. Bills.
3. கல்விப்பகுதி என்றும் சொல்லப்படும்.
4. Death duty.
3248-F

Page 70
130 சங்கங்களும் நிலையங்களும்
முறையினை நீங்கள் ஏற்கெனவே படித்திருக்கிறீர்கள். ஏனைய நீதிபரிபாலன உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் அது போன்ற ஒரு பாதுகாப்பை யுறுதிப்படுத்துவதன் பொருட்டு அவர்கள் மீதுள்ள அதிகாரம் முழுவதும் நீதிச் சேவைக் கொமிஷனிலேயே பாரிக்கப்பட்டிருக்கிறது.
நீதிச் சேவைக் கொமிஷனில் பிரதம நீதியரசர், உயர் தர நீதிமன்றத்தில் நீதியரசராகவிருக்கும் அல்லது அவ் வாறு இருந்த ஒருவர், அம்மன்றத்தில் நீதியரசராகவிருக்கும் ஒருவர் என்னும் மூவர் அங்கத்தவர்களாயிருப்பர். செனேற் சபையிலோ பிரதிநிதிகள் சபையிலோ அங்கத்தவராகவிருக் கும் எவரும் இக் கொ மிஷனில் அங்கத்துவம் வகிக்கமுடியாது. பிரதம நீதியரசரே இக் கொ மிஷனின் தலைவராக விருப்பர். இம்மூன்று அங்கத்தவர்களையும், பிரதம அமைச்சரின் ஆலோ சனையின் பேரில், மகாதேசாதிபதி நியமிப்பார். உயர்தர நீதிமன்றத்து நீதியரசர்கள் அல்லது அசைசுக்கோடு எனப் படும் பருவ நீதிமன்றத்தின் நீதியரசர் என்னும் இவர்களை யொழிந்த ஏனையு நீதிபரிபாலன உத்தியோகத்தர்களின் நிய மனம், மாற்றம், அவர்களுக்கு விரோதமாக எடுக்கப்படும் ஒழுங்குநடைவடிக்கை முதலியனவற்றுக்கு நீதிச்சேவைக் கொமிஷனே பொறுப்பாளியாகும்.
பொலிசுச் சேவை
நாட்டிலே அமைதியைப் பாதுகாத்து, தீங்குகள் நிகழ் வதைத் தடுக்கவும் பாதகக்கருமம் புரிவோர்களை அகப்படுத்தி அவர்கள் இழைத்த குற்றங்களுக்கேற்றபடி தண்டனைகள் வழங்குவிக்கவும் பொலிசுப்படை அமைக்கப்பட்டிருக்கிறது. பழையகாலத்திலே இந்தப் பாதுகாப்புக் கடமை ஒவ்வோரூரிலு மிருந்த தலையாரிமாரிடம் ஒப்புவிக்கப் பட்டிருந்தது. இப் போதுதானும், பொலிசுப்படை இல்லாத ஊர்களிலே, அமைதி ஒழுங்கு என்பனவற்றைப் பாதுகாப்பதில் கிராமத் தலைமைக்காரர் உதவிபுரிந்து வருகிருர்கள்.
நன்ற க அமைக்கப்பட்டு நல்ல பயிற்சியளிக்கப்பட்டவர் களைக் கொண்டே பொலிசுப்படை இருத்தல் வேண்டும். இற்றைக்குச் சில காலத்துக்கு முன்னர், பொலிசுப்படை யினரை, ஏறக்குறைய இராணுவத்தினரைப்போல மதித்துப் பயிற்சியளித்தனர். அதன் பயணுகப் பொலிசார் இராணுவத் தினர் நடந்துகொள்ளும் முறையில் நடந்தனர். இப்போது அப்படியான நிலையில்லை. பொலிசார் ஊரவர்களின் நல்
1. Prime Minister. பிரதமமந்திரி என்றும் சொல்லுவர்.

சங்கங்களும் நிலையங்களும் 131
லெண்ணத்தையும் ஒத்துழைப்பையும் தங்களுடைய ஒழுக்க சீலத்தாலீட்டிக் கொள்ளவேண்டும் என்ற ஒரு நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது. அதாவது, சமுதாயத்திலே ஒழுங்கையும் அமைதியையும் பொலிசார் பாதுகாத்துக்கொள்ள வேண்டு மென்ருல் அவர்கள் ஊரவர்களுடன் இதமொழிபேசி அவர் களுக்கு உதவிபுரியக் கூடியவர்களாக இருத்தல் வேண்டும் என்பது இன்றைய கொள்கை.
பொலிசுப்படைக்கு ஒரு தலைவர் இருக்கிறர். அவரைப் பொலிசுத்தலைவர் அல்லது பொலிசுப்பகுதித்தலைவர் என்று சொல்வர். பிரதிப்பொலிசுத்தலைவர்களும் சிலர் இருக்கி ருர்கள். மாகாணம் ஒவ்வொன்றிலும் சுப்பிறீந்தன் என்று வழங்கப்படும் அத்தியட்சர் மாரும் உதவி அத்தியட்சர் மாரும் இருக்கிருர்கள். உள்ளூர்ப் பொலிசுத்தானங்களுக்கு அவர் கள் பொறுப்பாகவிருப்பர். பொலிசுப்பகுதிக்குரிய மேலுத்தி யோகத்தருக்கு விசேட பயிற்சி அளிக்கப்படுகிறது. மற்றும் பொலிசாருக்குக் கட்டுக்குருந்தை என்னும் இடத்தில் உள்ள பொலிசுப் பயிற்சிப் பாடசாலையில் பயிற்சி யளிக்கப்படுகிறது. விசேடமாகத் தெரிவு செய்யப்படும் உத்தியோகத் தருக்குஅவர்களிலும் சிறப்பாகத் துப்பறியும் பகுதியுடன் சம்பந்தப் பட்டுள்ளவர்களுக்கு-அதிவிசேடமான ஒரு பயிற்சியளிக்கப் படுகிறது. பாதகச் செயல்களை இழைத்துவிட்டுக் கரந்து திரிபவர் கிளை அகப்படுத்துவது இத்துப்பறியும் பகுதியின் ஒரு கருமமாகும். எத்தனையோ கிருத்திரமங்கள் அம்பலமாகாமல் இருக்க அவற்றை அம்பலப்படுத்தி அவற்றுக்குக் காரணரா யுள்ளவர்களைத் தண்டனைக்குட்படுத்தல் பிறிதொரு கருமமா கும். இப்படியான துப்பறியும் கருமத்துக்கு அதி பிந்திய, நவீன விஞ்ஞானமுறைகளை அறிந்திருக்கவேண்டும். இக் காலத்திலே பாதகச் செயல்புரிபவன், மிகத் திறமைசா லி; தான் செய்யும் அக்கிரமத்தினை அம்பலப்படுத்தக்கூடிய அடை யாளங்கள், சாதனங்கள் முதலியவற்றை மறைக்கப் பெரு முயற்சி செய் வான். ஆகவே, அத் த  ைகய அடை யாளங்கள் சாதனங்களைக் கண்டுபிடித்து, ருசுக்களை ஒன்று சேர்த்து வகுத்து அவற்றை யாதாரமாகக் கொண்டு குற்ற வாளிக்குரிய தீண்டனையைப் பெற்றுக்கொடுப்பதற்கு இத்
1. Inspector General of Police. plugitid (OLDITLSt Jug55 'Guitosa, it பரிசோதகர் தலைமை அதிபதி' என்று ஒரு சமசொல்லைக் கொடுத் திருக்கிறது.
2. Criminal Investigation Department: (5ip Lolast விசாரணைப் பகுதி’ என்பது அரசாங்க மொழிப்பகுதி சிருட்டித்துள்ள சம சொல் ஆகும்.

Page 71
32
சங்கங்களும் நிலையங்களும்
துப்புத்தொழிலில் ஈடுபடுவோருக்கு மிகச்சிறந்த பயிற்சியை யளித்தல் வேண்டும். தண்டனை பெற்ற குற்றவாளிகளின் கைவிரலடையாளங்களைப் பதிவுசெய்து வைத்திருப்பதற்கான ஒரு பிரிவும் பொலிசுப்பகுதியில் உண்டு. குற்றங்களைக் கண்டு பிடிப்பதில் கைவிரலடையாலங்கள் எவ்வளவு தூரத்துக்கு உதவிபுரிகின்றன என்பதனைத் துப்பறியும் கதைகள் படித் திருப்பவர்கள் நன்கு அறிவர்.
I 0.
ll.
அப்பியாசங்கள் * சங்கம் ' என்ற சொல்லின் கருத்தை உதாரணம்
மூலமாக விளக்குக. இலங்கையில் உள்ள சங்கங்களில், எல்லாராலும் நன்கறியப்பட்ட ஐந்தைக்கூறுக. அவற்றின் நோக் கங்கள் கருமங்களை எடுத்துக் காட்டுக. * அரசாங்கம் என்பது குறித்த சில கருமங்களின் பொருட்டு மாத்திரமே அமைக்கப்பட்ட சங்கம்* என்ற கருத்தை விமரிசனம் செய்க. மக்களின் நன்மையின் பொருட்டு அவர்களுக்கு அர சாங்கம் செய்து கொடுக்கக்கூடிய கருமங்கள் யாவை? விவசாயப் பகுதியின் நோக்கங்களைச் சுருக்கமாகத்
தருக. 56-ம் பக்கத்தில் காட்டப்பட்டிருக்கும் நில அபிவிருத் தித் திட்டங்கள் எங்கெங்கே யிருக்கின்றன என்ப தனை ஒரு இலங்கைப் படத்திற் குறித்துக்காட்டுக. இலங்கை மக்களின் எதிர்கால வாழ்வுக்கு நீர்ப்பா சனப்பகுதியின் பணிகள் மிகப் பிரதானமானவை என்பது தற்குரிய காரணங்கள் யாவை ? 1950-ம் ஆண்டின் கல்விச்சட்டத்தில் காட்டப்பட்ட வாறுள்ள பாடசாலை முறையை ஓர் விளக்கப்படம் வரைந்து காட்டுக. − இலங்கையிலே கூட்டுறவு இயக்கம் அபிவிருத்தி யடைந்த தன்மையைச் சுருக்கமாக விளக்கி, மக்க ளின் வாழ்க்கையில் அது மிகவும் பிரதான இடத்தை வகிக்கும் காரணத்தை எடுத்துக்காட்டுக. தேசீய சேமிப்பு இயக்கம் ' என்பது யாது? பருவ நீதிமன்றம் ஒன்று நடக்கும்போது விஜயம் செய்து அங்கே கைக்கொள்ளப்படும் கருமமுறையைப் பற்றி ஓர் அறிக்கை எழுதுக.

12.
13.
4.
5.
6.
சங்கங்களும் நிலையங்களும் 133
உமது ஊரிலேயுள்ள பொலிசுத்தானத்துக்குச் சென்று அதன் அமைப்பையும் வேலையையும் பற்றி ஒர் கட்டுரை எழுதுக. உயர்தர நீதிமன்றம், பாராளுமன்றத்தின் கட்டுப் பாட்டிலிருந்து எவ்வெவ்வழிகளாற் பாதுகாக்கப் பட்டிருக்கிறது என்பதனைக் கூறுக. இப்படிச் செய் திருப்பது எதன் பொருட்டு ? நீதிச் சேவைக் கொமிஷனின் அங்கத்தவர்கள் யார்?
அதன் பிரதான கடமைகள் யாவை ? இலங்கையில் உள்ள நீதிமன்றமுறைகளை ஒரு விளக்கப் படம் மூலம் காட்டுக. ஒவ்வொரு நீதிமன்றத்தை யும் பற்றிச் சுருக்கமான ஒரு குறிப்புரை எழுதுக. மகாதரணி எனப்படும் சட்ட அதிகாரியின் கருமங்கள்
unr 60 6u ?

Page 72
அத்தியாயம் 4.
மானியமுறை நாடுகள்-இலங்கை
‘மானியம்’, ‘மானியமுறை என்ற இரண்டு பதங்கள் சரித்திர நூல்களில் அடிக்கடி வருவதை நீங்கள் அவதானித் திருக்கலாம். பல்வேறு தேசங்களிலே, பல்வேறு காலங்களிலே இருந்த மக்கள் சமூகங்களாக வாழ்வதற்கு உதவிசெய்ய இருந்த ஒருவித அமைப்பு-ஒழுங்கு-தான் மானியமுறை என்று சரித்திரக்காரர் கூறுவர். உரோம சக்கராதிபத்தியம் சின்னபின்னமானதும் அச்சக்கராதிபத்தியத்தைச் சேர்ந் திருந்த மாகாணங்களில் ஒர் அல்லோல கல்லோல நிலைமை ஏற்பட்டதை நீங்கள் சரித்திர வாயிலாக அறிந்திருப்பீர்கள். பட்டணங்கள் நாசமாயின; அவற்றை ஒன்ருே டொன்று இணைத்த பாலங்கள் தகர்ந்தன; தெருக்கள் தேடுவாரற்று, சன சஞ்சாரத்துக்கு உதவாத மேடும் பள்ளமுமாயின; இப்படி யாக நிலையிழந்து சீர்குலைந்திருந்தன.
உரோமச் சக்கராதிபத்தியத்தின் பின், ஒழுங்கான சீர்திருந் திய வாழ்க்கையை மீண்டும் அமைப்பதற்குப் பல கருமங் களைப் புநருத்தாரணம் செய்யவேண்டி யேற்பட்டது. தரிசு பற்றிக்கிடந்த நிலங்களை மீண்டும் பண்படுத்த வேண்டியிருந் தது; ஒழுங்கையும் அமைதியையும் நிலைநாட்டவேண்டியிருந் தது. இவ்வாரு ய புநருத்தாரண கருமங்கள் ஒருசில ஆண்டு களிற் பூர்த்தியாகவில்லை. எத்தனையோ நூற்றண்டு காலம் சென்றது. இவ்வளவு காலத்திலும் இப்புநருத்தாரணப் பணியைச் செய்த அமைப்பினையே மானியமுறை அமைப்பு என்பர் சரித்திர நூலார். இந்த அமைப்பைக் கொண்டிருந்த நாடுகளை மானியமுறை நாடுகள் என்று கூறலாம். *
ஓர் மானியமுறை நாட்டிலே நிலம் அல்லது பூமி தான் செல்வத்துக்கான ஊற்று. விவசாயமே மக்களின் பிரதான தொழில். இராச்சியத்து நில மனைத்தும் மன்னனுக்கே சொந்த மானது. அங்கே அக்காலங்களிற் பணப்புழக்கம் குறைவான மையின் அரசனுயினேன் தனக்குச் சேவைசெய்த பிரதானி களுக்கு ஒர் தொகை நிலங்களைக் கொடுத்து அவற்றுக்கு அவர்களையே அதிகாரிகளுமாக்கினன். இதற்குப் பிரதியுப காரமாக பிரதானிகள் மன்னனுக்குச் சரீரசேவை செய்தும் நிலங்களில் விளையும் தானியங்களைத் திறையாகச் செலுத்தி யும் வந்தனர். ஓர் பெரும்பகுதி நிலத்தை அரசனிடம்
l. Feudal States.

மானியமுறை நாடுகள்-இலங்கை 135
இருந்து மானியமாகப் பெறும் பிரதானி அதனைப்பிரித்துப் பிரித்துக் தன்கீழ் உள்ளவர்களுக்குக் கொடுக்க அவர்கள் அவனுக்குத் தம் சரீரசேவையையும் திறைகளையும் கொடுப் பர். இவ்வாருகவே நிலம் அக்காலத்திற் பயிரிட்டு விளைவிக்கப் பட்டது. விவசாயிகளுக்கு வேண்டிய பாதுகாப்புக்களைப் பிரதானிகள் அவ்வப்போது செய்து கொடுத்தனர்.
மேலே சொல்லிய ஓர் அமைப்புமுறை எங்கள் இலங்கையி லும் இருந்தது என்று கூறலாம். அரசனயினேன் ராஜரட்டை என்னும் இராசதானியில் இருந்து அதனைப் பரிபாலித்து மற்றும் மாகாணங்களின் பரிபாலன வேலையைத் தனது பிர தானிகளிடம் ஒப்புவிப்பான். அவனுக்குப்பின் அரசனுக வரும் உரிமையுடைய இளவரசன் மாயரட்டை (இது தென் இலங்கையெனப் பிற்காலத்தில் வழங்கப்பட்டது) என்னும் இடத்தைப் பரிபாலிப்பான். ரட்டைகள் என வழங்கிய சிறு ஊர்கள் ரட்டலட்டன் என்னும் பகுதி ப் பிரதானி களின் பரிபாலனத்தில் விடப்பட்டன. ஒவ்வொரு ரட்டையிலும் சில கிராமங்கள் இருந்தன. அவை ஒவ்வொன்றுக்கும் அதி காரியாக ஒவ்வொரு கமலட்டன் என்னும் பிரதானி இருப் பான். ரட்டலட்டன், கமலட்டன் என்பவர்களே முக்கிய மான நிலப் பிரபுக்கள். இவர்களையும் மற்றவர்களையும் கொண்டனவே ரட்டசபை, கம்சபை போன்ற ச  ைபகள் இனி, கமம் என்று சிங்களத்தில் வழங்கப்பட்டுவந்த கிராமத் தைப்பற்றி ஆராய்வோம்:
முற்காலத்திலே-சிங்கள அரசர்களது காலத்திலே*கமம்" என்பது குறித்த ஓர் வருணத்தாரைக் கொண்டதாக இருந்தது. பல்வேறு வருணத்தவர் தத்த மக்குரிய கமங்களில் வசித்து வந்தனர். இலங்கையிலே பூர்வ காலத்தில் வகுப்புப் பிரிவுகள் எவ்வாறு இருந்தன என்பதனைக் காட்டும் சாதனங் களாக இக்கழங்கள் இருந்தன. மக்கள் தாம் தாம் பிறந்த வருணத்தில்தான் இருந்து வந்தனர். விவசாயியின் பிள்ளை விவசாயியாகவும் கொல்லன் பிள்ளை கொல்லணுகவும் இருந்து தத்தம் வருணத்துக்குரிய தொழில்களை ஆற்றிவந்தனர். ஓர் பிள்ளை குறித்த ஓர் வருணத்திற் பிறந்தால் அவன் வளர்ந்து மனிதனுக வந்த பின், தான் விரும்பிய தொழிலைச் செய்யாது தன் குலத் தொழிலையே பின்பற்றவேண்டும் என்ற நியதி இருந்தது. அவன் தன் குலத்துக்குத் தொன்றுதொட்டுப் பாரம் பரியமாக வழங்கப்பட்டுள்ள உரிமைகளையும் வசதிகளையும் அநுபவிக்கக் கூடியவனக இருந்தான். இன்னும், வருணரீதி யான சில ஒழுங்குகளும் இருந்தன. இன்ன இன்ன வருணத்த வர் இன்ன இன்ன ஆடைகளை இன்ன இன்னவாறு அணிய

Page 73
36 மானியமுறை நாடுகள்-இலங்கை
வேண்டும் ; இன்ன இன்னவாறு பாதைகளிற் போக்குவரத்துச் செய்ய வேண்டும்; இன்ன இன்ன விதமாக வீடுகளை அமைத்து வாழவேண்டும் என்று கட்டுப்பாடுகள் இருந்தன. நீதி பரிபாலன கருமத்தில்தானும் உயர்ந்த வருணத்தவர்க்கும் தாழ்ந்த வருணத்தவர்க்குமிடையே வித்தியாசம் காட்டப்
ill-gil.
மேலே காட்டப்பட்ட விதமான ஓர் சமூகத்தில் வாழும் தனி மனிதனின் நிலைமை என்ன? அவனுக்குச் சுதந்திரம் இல்லை என்பதை இதுவரை கூறியதிலிருந்து நீங்கள் உணர முடியும். அவன் தான் விரும்பிய ஒர் தொழிலைச் செய்து தான் விரும்பியவாறு தன் சீவியத்தை நடாத்தவோ, தான் விரும்பியவாறு ஆடை அணிகலன்கள் பூணவோ, தான் விரும் பியபடி வீடுகட்டி வசிக்கவோ சுதந்திரம் இல்லாதிருந்தது. அவன் எவ்வளவு திறமைசாலியாக விருந்தாலும், எவ்வளவு செல்வம் படைத்திருந்தாலும் உயர் வருணத்தவர்க்கிருந்த சலாக்கியங்கள் தனக்கும் வேண்டுமென்று உரிமை கொண்டாட முடியாது. ஆகவே பழையகாலத்திலங்கையிலே வாழ்ந்த ஒவ்வொரு தனிமனிதனும் பல கருமங்களில் சுதந்திர மற்றவ ணுகவே இருந்தான் என்பது புலப்படும். முதலில் அவனுக்குச் சுய சுதந்திரம் இல்லை. அவுன் நினைத்த இடத்திற் குடியிருக்க முடியாது. அவன் தனது இனத்தவருடனேயே வாழுதல் வேண் டும். இரண்டாவது பொருளாதாரச் சுதந்திரம் அவனுக்கு இல்லை. அவன் விரும்பினுலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி தன் குலத் தொழிலையே செய்யவேண்டும். வேறேதும் தொழில்கள் செய் வதற்கு அவனுக்குச் சுயாதீனம் இல்லை. கடைசியாக, அவனுக் குச் சமூக சுதந்திரம் இல்லை. அவன் தாழ்ந்த வருணத்திற் பிறந் தால் அது அவனுக்கு ஒர் கறையாகி மற்றவர்களின் அவமதிப் புக்கும், உதாசீனத்துக்கும் அவனை ஆளாக்கும். இவ்வாருக நாம் விபரிப்பதால் முற்காலத்திலே தாழ்ந்த வருணத்தவர்கள் சதா துன்பத்தில்தான் அழுந்திக்கிடந்தனர் என்று கூறுவதாக விளங்கிக்கொள்ளக் கூடாது. அக்காலத்திலே இந்த வருண முறை ஒன்றுதான் சமூக ஒழுங்காக மதிக்கப்பட்டது. மக்கள் அவ்வொழுங்கிற்குள் அமைந்து வாழ்ந்து அவ்வரம்புக்குள் ளேயே இறந்தனர்.
மனிதர் வருணரீதியிற் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்தபடியினல் அவர்களுக்கு வேண்டிய பாதுகாப்புக்களை அக் கூட்டங்களே அளித்துவந்தன. ஓர் கூட்டத்து மக்க ளுக்கு ஆபத்து அல்லது பஞ்சம் நேர்ந்த காலத்தில் அவர் களுக்கு வேண்டிய பாதுகாப்பு, நிவாரணம் என்பவை அவர்களுக்கு அளிக்கப்பட்டுவந்தன. இவ்வாருக அக்காலத்

மானியமுறை நாடுகள்-இலங்கை 137
திலிருந்த வருணமுறை நன்மைக்கேதுவானதாகவும் இருந் தது. இப்போது காணப்படுவதுபோன்ற வேலையில்லாக் குறை அக்காலத்திலே யிருக்கவில்லை. ஒவ்வொருவருக்கும் தொழிலிருந்தபடியினல் வேலையில்லாமற் போய்விடுமோ என்ற பயம் ஏற்படவில்லை. ஓர் வருணத்தில் இருந்தவர்கள் கட்டுப்பாடான் ஒற்றுமையுடனும் உறுதியுடனும் இருந்தனர். ஒற்றுமையுணர்ச்சி ஓர் வருணத்து மக்களிடையே பலமாக இருந்ததால் அவர்கள் பயமில்லாது பாதுகாப்புடன் இருந் தனர். சமுதாய வாழ்க்கைமுறை மாறி, சுதந்திரம், சுயராச் சியம் என்பவை சம்பந்தமாகப் புதுப்புதுக் கொள்கைகள் உருவாகும் காலத்தில்தான்-இவ்வருணக்கட்டுப்பாட்டுமுறை மக்கள் முன்னேற்றத்தைத் தடுக்க ஏதுவாக இருக்கும் போதுதான்-அதன் நூனதன்மைகள் புலப்பட்டன. பூர்வ காலத்திலே வருணமுறையானது சமூகத்திற்கு நன்மை தரக் கூடிய விதத்தில் தொழிலாளர்களை வகுத்து பொருளாதாரச் செம்மைக்கு ஏதுவாக இருந்தது. விவசாயிகள் பூமி திருத்திப் பயிரிடவும், வினைஞர் ஆயுதங்கள் உபகரணங்களை ஆக்கவும், குயவர் பானை சட்டி வனையவும், இடையர் ஆடுமாடுகள் மேய்க்கவும் இவ்வருணமுறை ஏதுவாக இருந்தது. வருண முறையினல் மக்களின் ஒவ்வோர், கூட்டத்தவரும் மற்றவர் களுக்குச் சேவைசெய்ய முடிந்தது. சமூகம் முழுவதுக்கும் நன்மையான கைங்கரியங்களைச் செய்வதே அக்காலத் தொழில் லட்சியமாக இருந்தது. ஆனல் இன்று தொழில் லட்சியம் தனி மனிதனின் நன்மை எனச் சில இடங்களிற் கருதப்பட்டு வருகிறது; இம் மனப்பான்மை நன்மைக்கேதுவானதன்று.
மானியமுறை அநுட்டானத்திலிருந்த பழையகால இலங்கை யிற் சமூகமானது பல்வேறு அடுக்குகளை அல்லது படைகளை யுடையதாக இருந்தது. ஒவ்வொரு படையும் ஓர் வருணமா கும். ஒருவன் எவ்வளவு திறமையுடையவனுக இருந்தாலும் அவன் கீழ்ப்படை வருணத்தவனுக இருந்தால் மேற்படைக்கு உயர முடியாது. ஒவ்வொருவருக்கும் சமூக வாழ்க்கையில் ஒவ்வோர் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த இடமே வருணமாகும். ஒவ்வொரு வருணத்துக்கும் ஒவ்வொரு தர்மம் இருந்தது. அதனைக் குலதர்மம் அல்லது வருணதர்மம் என்பர். தன் குல தர்மத்தை அல்லது வருண தர்மத்தை எவன் திறம்படச் செய்தானே அவனே சிறந்த பிரசை எனக் கணிக்கப்பட்டு வந்தான். நாட்டின் பாரம்பரிய வழக்கங்களை எவன் மீற முயற்சித்தானே அவன் கெட்ட பிரசையெனக் கணிக்கப்பட்டான். கீழ் வருணத்தவர்களை உயர் பதவிகளுக்கு நியமித்து ‘நாட்டின் பாரம்பரிய பழக்க வழக்கங்களை மீறிய"

Page 74
138 மானியமுறை நாடுகள்-இலங்கை
நெறிகெட்ட மன்னர்களைப்பற்றி மகாவம்சம் என்னும் சிங்களச் சரித்திரநூல் கூறுகிறது. வருணக் கட்டுப்பாட்டை மீறுவதால் நாட்டிலே தொன்று தொட்டிருந்து வந்த நிலைமை சீரழிந்துவிடும். இன்று நாம் காணும் தனி மனிதர் என்பது அக்காலத்தில் இருக்கவில்லை. இப்போது நாம் தனி மனிதனைப் பற்றியும் அவன் அபிவிருத்தி பற்றியும் சிந்திக்கிருேம். தனி மனிதர்க்கு உரிமைகளும் சுதந்திரமும் வேண்டும் என்று இன்று நாம் விரும்புகிருேம். ஆனல் இவை எல்லாம் முந்தியகால இலங்கைச் சூழ்நிலையில் தேவையற்றிருந்தன.
இனி, முற்காலத்திலே-அதாவது, மானியமுறை இருந்த காலத்திலே-தேச பரிபாலனம் எவ்வாறு நடைபெற்றது என்பதனை ஆராய்வோம்: முதலில் நாட்டின் தலைவனுக அர சன் இருந்தான். அவனுக்கு மகத்தான அதிகாரங்கள் இருந்தபோதிலும் அவை நாட்டின் பழக்க வழக்கங்களுக்கு அமைவாகவே இருந்தன. அவனது பரிபாலனக் கருமத்தில் உதவிசெய்ய ஒர் சபை இருந்தது. அதிலே தேசத்துப் பிர தானிகளே அங்கம் வகித்தனர். இச்சபை எம்மாதிரி, எத் தகைய கருமங்களை ஆற்றின என்பதை நாம் அதிகம் அறி யோம். ஆனல் 12வது நூற்றண்டில் அரசு புரிந்த நிசங்க மல்லன் என்பவனது சபா மண்டபத்தூண் ஒன்றிற் செதுக்கப் பட்டுள்ள சில பெயர்களிலிருந்து இச்சபைகளைப்பற்றிக் கொஞ்சம் அறியமுடிகிறது. பட்டத்துக்குரிய இளவரசன், சேனதிபதி, முதல் மந்திரி என்பவர்களுடன், சாசனங்களைப் பாதுகாக்கும் அதிகாரிகளும் மாகாணத் தேசாதிபதிகளும், பகுதிப் பிரதானிகளும் வர்த்தகக்கூட்டத் தலைவனும் இச்சபை யிலே அங்கம் வகித்தனர் என்று இக்கற்றுாண் சாசனத்தால் அறிகிருேம்.
மத்திய அரசாங்கம், அதாவது அரசனது பரிபாலனம், யதேச்சாதிகாரமானது. அப்படியிருந்தபோதிலும் அவன் தனது எண்ணப்படிசகல கருமங்களையும் நடத்திவிடஅங்கிருந்த பாரம்பரிய வழக்கங்களும் முறைகளும் விடமாட்டா. பெளத்த குருமாரும் இந்து மதத்தலைவர்களும் அக்காலத்திலே மிகச் செல்வாக்குற்றிருந்தமையினல் அவர்களது செல்வாக்கும் இவ் வரசர்களது அதிகாரத்தைக் கட்டுப்படுத்தியது. நாட்டின் சம் பிரதாயங்களையும் பழக்க வழக்கங்களையும், தொன்று தொட்டு வந்த ஒழுங்கு முறைகளையும் மீறும் அரசன் பிரசை களின் மதிப்பையும் இராச பக்தியையும் இழந்து சதா பயத் துடனும் பாதுகாப்புடனும் தான் வாழவேண்டும். அப்படி யான ஒரு அரசன்தான் பெற்ற தகப்பனைக் கொன்ற காசியப்பன் என்பவன்.

மானியமுறை நாடுகள்-இலங்கை 139
அரசன் தன் குடிகளைச் செவ்வனே பரிபாலிப்பதற்கு அவனுடைய பிரதானிகளின் ஆதரவும் உதவியும் அவனுக்கு இன்றியமையாதன. அந்த ஆதரவும் உதவியுமின்றேல் அவன் தனது பரிபாலனத்தை நடாத்த முடியாது. முற்காலத்து அரசர் தம் பரிபாலனக் கருமத்தில் மந்திரி பிரதானிகளைக் கொண்ட ஒர் சபையைக் கலந்தாலோசித்தனர் என்பதற்கு இன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் சில சாசனங்கள் சான்று பகரும். அவற்றில் பல இராசாவினது சபையினர் ஏகசம் மத மாக இயற்றிய கட்டளையின் பிரகாரம்’ என்ற கருத்துடைய சிங்கள வசனங்களைக் கொண்டுள்ளன. அரசர்கள் தம் சபை களை அநேகமாகக் கலந்தாலோ சித்தனர் என்பதை இதிலிரு ருந்து அறியலாகும். ஆனல் இச்சபையினர் அரசனது செயல் களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் உடையராயிருந்தனரோ என்பதற்கு ஆதாரம் இல்லை.
மாகாணப் பரிபாலனம் அக்காலத்திலே பிரதானிகள் பொறுப்பில் இருந்தது. பாச ” என்னும் பெரிய பகுதியை பாசலட்டன்’ என்னும் அதிபிரதானி பரிபாலிக்க, ‘ரட்டை” கள் எனப்பட்ட சிறு பகுதிகளை ரட்டலட்டன்’ எனப்படும் சிறு பிரதானிகள் பரிபாலித்தனர். ரட்டைகளுக்குக் குறைந் தனவே கமங்கள் அல்லது கிராமங்கள். இக்கிராமங்கள் சில சேர்ந்ததுவே “கோரளை . கம்பகா யகோரளை, காம் திகிகோரளை, பகலவிசிதேககோரளை என்னும் பெயர்கள் இன்றும் உள. ஒவ்வொரு கமமும் ஒவ்வோர் கமலட்டனலும் கமச்சபை யாலும் பரிபாலிக்கப்பட்டுவந்தது. யெல் உத்பகாதேன’ (வயல்களுக்குப் பெறுப்பாயுள்ள ஐவர்) 'அடவிய அட்டதேன’ (அடவிகள் அல்லது வனங்களுக்குப் பொறுப்பாயுள்ள எண்மர்) என்னும் சொற்ருெடர்கள் இதனைக் காட்டுவனவாயுள்ளன. இச் சொற்கள் சிங்களச் சரித்திர நூல்களிலும் சில சாசனங்களி லும் காணப்படுகின்றன.
மானியமுறை இலங்கை எவ்வாறு பரிபாலிக்கப்பட்ட தென்பதைக் கீழே தரப்பட்டுள்ள விளக்கப்படம் காட்டும் :-
அரசனும் அவனது சபையும்
பசலட்டன் - மாகாணங்கள்
ரட்டலட்டன் = மாவட்டங்கள்
இவர்களுடன்
ரட்டசபைகள் கமலட்டனும் \
4.குைம் கிராமம்

Page 75
1 4 0 மானியமுறை நாடுகள்-இலங்கை
அரசனையும் கமங்களையும் தொடர்பு படுத்து வோர் அவனது நாட்டாண்மைக்காரராவர், இவர்கள் ஆண்டுக் கொருமுறை பல்வேறு கிராமங்களுக்கும் சென்று அரசனுக் குச் சேரவேண்டிய திறையைச் சேகரிப்பதுடன் அவனது பெயரால் ஊரவர்களுக்டையே நிகழும் பிணக்குகளையும் தீர்ப்பர்.
இவ்வாருக மானியமுறையில் பரிபாலிக்கப்பட்டுவந்த இலங்கை பல ஏதுக்களினலே காலகதியில் மாற்றம் அடைந் தது. போர்த்துக்கீசரின் ஆட்சி இலங்கையில் ஆரம்பித்த வன்றே பல நிகழ்ச்சிகள் ஒன்றன்பின்னென்ருக நேர்ந்து இன்றைய இலங்கையைச் சிருட்டி செய்யும் ஏதுக்களாயின. இதுவரை ஒதுங்கிக்கிடந்த இலங்கை போர்த்துக்கீசரின் ஆட்சி யுடன் வெளியுலகத் தொடர்பை முதன் முதலாகப்பெற்றது. போர்த்துக்கீசர் இங்கே வருமுன் எங்கள் தொடர்பு இந்தியா வுடனும் கீழைப் பிரதேசங்களுடனும்தான் இருந்தது. போர்த் துக்கீசர் இங்கிருந்த வருணமுறையைச் சட்டபூர்வமாக அழிக்கவில்லை என்ருலும் அவர்கள் புகுத்திய கிறிஸ்துவ சமயம் சாதிக் கட்டுப்பாடுகள் அல்லது வருணக் கட்டுப்பாடுகளை ஒரளவுக்கு தளர்த்த உதவியாக இருந்தது. கிறிஸ்துவக் குருமார் வருணத்தை லட்சியம் செய்யவில்லை. போர்த்துக் கீச அதிகாரிகளும் தமக்கு வேண்டியவர்களை, வருணம் பாராட் டாது நியமித்தனர். போர்த்துக்கீசருக்குப் பின் ஆட்சிபுரிந்த ஒல்லாந்தர் காலத்திலே அநுட்டானத்துக்குக் கொண்டுவரப் பட்ட ருே மன்-டச்சுச் சட்டம் வருண உரிமை முறைகள் என்பவற்றை அகற்றித் தனி மனிதனின் உரிமைகளை நிலை நாட்டியமையும் இச்சாதிக் கட்டுப்பாட்டுத் தளர்ச்சிக்கு இன் னும் ஓர் படி உதவி செய்தது. ருே மன்-டச்சுச் சட்டம் வருண உரிமைகளை ஆதாரமாகக் கொள்ளவில்லை. அதன் படிக்கு, ஒவ்வொருவரும், நீதித்தலங்களில் இன்ன சாதி இன்ன வருணம், இன்ன குலம் என்பதின்றி தனி மனிதன் என்ற முறையில் மதிக்கப்பட்டு நீதி வழங்கப்பட்டது. ஒருவன் செய்த குற்றத்தின் பொருட்டு அவனது குடும்பத்தையோ கிராமத்தையோ தண்டிப்பதில்லை.
பிரித்தானிய பரிபாலன காலத்தில் தோட்டச்செய்கை ஆரம்பமாகி விருத்தியடைந்தமை இலங்கையில் இருந்த மானியமுறைச் சமுதாயத்தை அழித்து அதற்குப்பதிலாக ஓர் விவசாயச் சமுதாயத்தை அமைப்பதற்கான பெரும் சக்தியாக விளங்கியது. 1832-ம் ஆண்டில் ஆரம்பமான கோப்பித்தோட்டச் செய்கை மலைநாட்டின் மேற்குப்பகுதியில் நன்கு விருத்தியானது. அந்நிய தேச முதலாளிகளும், சுதேச
l. Roman Dutch Law.

மானியமுறை நாடுகள்-இலங்கை 1 41
முதலாளிகளும், சிங்களக் குடியானவர்களும் கோப்பிச் செய் கையில் ஈடுபட்டனர். அதன் பயணுக 1849-ம் ஆண்டுக்கும் 1869-ம் ஆண்டுக்குமிடையில் விளைந்த முழுக் கோப்பியிலும் காற்பங்கு தொடக்கம் அரைப்பங்குவரையில் கிராமங்களி லிருந்தே பெறப்பட்டன. இவ்வாறு கோப்பிச் செய்கையில் ஈடுபட்டுள்ள குடியானவனுக்குப் பணம் உரொக்கமாகக் கிடைக்க அவன் அதனைப் புளங்கும் விதத்திலும் பரிச்சிய முற்ருன். மலைநாட்டுப் புறங்களில் விளைந்த கோப்பியைக் கொண்டு போதல் புதுப்புதுத் தொழில்களைச் சிருட்டிக்க ஏதுவாக இருந்தது. 1867-ம் ஆண்டில் மலைநாட்டுப் பகுதி யில் இருந்து கொழும்புக்கு புகையிரதப்பாதை திறக்கப்பட மேலும் பல மாற்றங்கள் நேர்ந்தன. பழைய காலத்து மானிய முறை நாடுகளில் இருந்த மக்களுக்கு இயல்பாக அமைந் திருந்த ஒதுக்க மனப்பான்மையைக் கெடுப்பதற்கும் மக்கள் ஒருவரோடொருவர் நெருங்கிப் பழகுவதற்கும் புகையிரதங் கள், தெருக்கள் என்பவற்றின் மூலம் போக்குவரத்துச் செய் தமை சிறந்த சாதனமாக இருந்தது. வருணக் கட்டுப்பாடு கள் தாமாகவே நெகிழ்ந்தன. மோட்டர் ரதங்கள் மூலமாயோ, புகையிரதங்கள் மூலமாகவோ இன்று பிரயாணம் செய் பவர்கள் தம் வருணக் கட்டுப்பாடுகளைக் கவனிக்க முடியுமா? தேயிலை, ரப்பர், தென்னை என்பவற்றை விளைவிக்கும் பொருட்டு மேலும் மேலும் நிலங்கள் பண்படுத்தப்பட புகையிரதப் பாதைகளும் தெருக்களும் அதிகம் அதிகமாக நிரு மாணிக்கப் பெற்றன. புதிய பல தொழில்களும் தோன்றின. இத்தகைய தோட்டச் செய்கை அபிவிருத்தி இதுவரை மானிய முறைச் சமூகமாயிருந்த எமது சமுதாய வாழ்க்கையில் எத்த கைய மாற்றங்களைக் கொண்டுவந்தன என்பதை இனி ஆராய்வோம்.
மானியமுறை இருந்த காலத்தில் தமக்கு வேண்டிய உண வின் பொருட்டும் அரசனுக்கு இறுக்கவேண்டிய திறையின் பொருட்டுமே குடியானவர்கள் நிலத்தைப் பண்படுத்தினர். ஆனல் புதிதாகத் தோன்றிய விவசாயமுறை உரொக்கப்பணம் பெறுவதையும் இலாபம் பெறுவதையும் லட்சியமாகக் கொண் டிருந்தது. அதன் நோக்கம் விவசாயிக்கு நேர்முகமான ஆதரவு- உணவு-கொடுக்காது பண வருவாயை மட்டுமே கொடுப்பதாகும். இது எம் நாட்டுக் குடியானவனுக்கு அந் நியமான வழக்கம்: இதுவரை மானியமுறையில் விவசாயத் தைச் செய்த அவனுடைய மனுேபாவம், உரொக்கப் பணத் தைக் கண்டதும், மாறுதல் அடைந்தது. தனது அன்ரு ட தேவைக்கு வேண்டியதிலும் பார்க்க மேலதிக பணம் சம்பா திக்க வேண்டும் என்றும் அம்மேலதிக பணத்துக்கு ஏதும்

Page 76
丑42 மானியமுறை நாடுகள்-இலங்கை
வாங்க வேண்டுமென்றும் அவாக்கொண்டான் அவன்; உள்ளதே போதும் என்று தன் கிராமத்தில் திருப்தியுடன் வாழ்ந்த அவன், ஒர் புதிய உலகத்தைக் கண்டு சுறுசுறுப்பும், தான் முன்னுக்கு வரவேண்டும் என்ற மனே பாவமும் கொண் டுள்ள வாழ்க்கையை மேற்கொண்டான். பணம் சம்பாதிப் பதற்கு அவனுக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பங்களினல் சாதிக் கட்டுப்பாடு அல்லது வருணக் கட்டுப்பாடும் இனக் கட்டுப் பாடும் ஓரளவுக்குத் தளர்ந்தன. முந்தியகால விவசாயத் துக்கு அயலவரின் ஒத்துழைப்பும் ஆதரவும் உதவியும் தேவை யாக இருந்தன. ஆனல் நவீனகாலத் தொழில்களுக்கு ஒரு வனது சொந்த ஊக்கமும், சுறுசுறுப்பும் முயற்சியுமே வேண்டி யிருந்தன. தபால் தந்தியும் தெ லிபோன் எனப்படும் தொலை பேசியும் பத்திரிகைகளும், தோட்டச்செய்கை, பிரயா ணம், பொருள்களை அனுப்புதல் என்னும் கருமங்களிற் புரட்சிகரமான மாற்றங்களைச் செய்ய ஏதுவாயின. இவை சிதறிக்கிடந்த மக்களை ஓர் சமூகமாக்கி ஒன்ருக்கின. மானிய முறை இருந்த பழைய காலத்திலே ஒரு பகுதியில் உள்ளார் இன்னேரிடத்தில் உள்ளாருடன் தொடர்புவைக்க முடியா திருந்தது. அதன் பயணுக அக்காலத்து மக்கள் சிதறுண்டு சிறு சிறு பகுதியினராக ஒவ்வோர் பகுதியில் ஒதுங்கி வாழ்ந் தனர். பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கு நவமாக அமைக் கப்பட்ட தெருக்கள், புகையிரதப்பாதைகள் என்பவை உள் ளூர் வர்த்தகத்தை அபிவிருத்தி செய்யவும், மக்கள் பண்புட் மாற்றுச் செய்யவும் பேருதவி புரிந்தன. இவற்றின் பயனர்க, மககள் முன்னரிலும் பார்க்க அதிக பணம் சம்பாதிக்கவும் ஒருவரோ டொருவர் நெருங்கிப் பழகவும் முடிந்தது. தோட் டங்கள் விருத்தியாகப் பட்டணங்களும் பல்கின. குடியான வர்கள் உணவுக்கான பயிர்களை விளைவித்து அவற்றின் பிர யோசனங்களை இலாபத்துக்கு விற்க போவர். மானியமுறைக் காலத்தில் பட்டணங்கள் அரிதாகவே யிருந்தன. எங்கே மக்கள் தமக்கு வேண்டிய பொருள் களைத் தாமே ஆக்காது பிறர் தயவை எதிர்பார்த்து அவற் றைப் பெறுகின்றனரோ அங்கேதான் பட்டணங்கள் உண்டா கும். ஆகவே முற்காலத்திற் பட்டிணங்கள் அரிதாகவும் கிராமங்கள் மிகவாகவும் இருந்தமை நூதனம் அன்று. ஆனல் ரப்பர், தேயிலை, தென்னந் தோட்டங்கள் தோன்றி அதிகரித் ததும், பணத்தை அன்ருடம் உழைத்து அதனைக்கொண்டு தமக்கு வேண்டிய உணவுப்பொருள்களைப் பெறும் ஒர் வகுப்பு மக்கள் தோன்றினர். தம் வர்த்தகத்துக்கும் தொழிலுக்கும் வசதியாக பட்டணங்களில் இவ் வகுப்பினர் வசித்து வந்த னர்; இப்படி நவமாகத் தோன்றிய தொழில்முறை மனிதர்க்கு

மானியமுறை நாடுகள்-இலங்கை 1 4 3
அக்கால மானியமுறைச் சமுதாயத்தில் இடமேயில்லை. இவர் களுக்கும் அச்சமுதாய வாழ்க்கைமுறை பிடிக்கமாட்டாது. மானியமுறை வாழ்க்கை இந்நவ நகாரீக மனிதரது உற்சாகத் தையும் முயற்சியையும் கெடுக்கக்கூடியது. பூமி திருத்தி யுண்ணும் பணியில் கிஞ்சித்தும் தொடர்பில்லாத மக்களே, புதிதாகத் தோன்றிய வர்த்தகத் துறைகள் அளித்த சந்தர்ப் பங்களையும் வசதிகளையும் பயன்படுத்த அதிதீவிரமாக முன்வந்தனர். இது ஒர் நூதன மன்று, ஆச்சரியப்படக்கூடிய கருமமுமன்று. இன்று தொழில் வர்த்தகத்துறையில் நாம் காணும் சிங்கள மக்கள் யாரென்ருல் கடற்கரையோரமாக வசித்து ஒர் காலத்திற் கடல்படு திரவியங்களைப் பெற்று அநுபவித்தவர்களே என்க.
மேலும் தோட்டச் செய்கையானது பல்வேறு முயற்சி களையும் உண்டாக்கியது. ஏற்றுமதி இறக்குமதிக் கொம் பனிகள் பலருக்குக் கூலிவேலை கொடுத்தன. மோட்டர் ரதச் சாரதிகள், யந்திரம் பழுதுபார்ப்போர், கிளாக்குமார் முகாமைக்காரர் என்னும் பல திறத்தினராக மக்கள் வேலை பெற்றனர். பொருள்களை ஏற்றுமதி இறக்குமதி செய்ய யந்திர சாதனங்கள் ஏற்பட்டமையினுல் யந்திரந் திருத்தும் பல சாலைகள் உண்டாயின. அநுபவம் பெற்ற தொழிலாள ராகவும், வேலைத் தலைவராகவும், எஞ்சினியர் மாராகவும் பலர் வேலைகள் பெற்றுத் தம் சீவியத்தைக் கழிக்க மார்க்கம் தேடினர். வங்கிகளும், வர்த்தக காரியாலயங்களும் தோன்றி, மானியமுறை இலங்கையில் இல்லாதிருந்த கிளாக்குமார் என்ற புதிய வகுப்பு மக்களை உண்டாக்க உதவிசெய்தன. அநேக இலங்கையர் இவ்வாறு கிளாக்குமாராகி அரசாங்கக் கந்தோர்களிலும், வங்கிகளிலும், வர்த்தகக் காரியாலங்களி லும் கடமையாற்றித் தம் சீவியத்துக்கு வழிதேடினர். இவர் கள் மற்றவர்களிலும் பார்க்கத் தம் உடை நடைகளை வித்தி யாசமாக அமைத்துத் தாம் தனித்த விசேட வகுப்பினராகப் பட்டணப் பக்கங்களில் வசிக்கத் தலைப்பட்டனர். கிராமப் பக்கங்களில் வசித்த மக்களுடன் தொடர்பில்லாதவர்களாக, அநேக விடயங்களில் அவர்களிலும் பார்க்க வேறுபட்டவகர்க ளாகவும் அவர்கள் இருந்தனர். அவர்கள் ஆங்கில மொழி யைப்பேசி ஆங்கில ரைப்போல ஆடையணிந்து ஆங்கிலரைப் போலவே தமது சமுதாய வாழ்க்கையையும் அமைத்தனர். சமுதாய வாழ்க்கையில் இவ்வாறு ஏற்பட்டுள்ள வேறுபாடு களும் இலங்கைச் சமூகத்திற் பிளவுண்டாக்கியன.
சில இலங்கையர் புதிய சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி வர்த்தகராகவும் பெருங் காணிக்காரராகவும் வந்தனர்.

Page 77
144 மானியமுறை நாடுகள்-இலங்கை
அவர்களுக்கு வேண்டிய செல்வம் இருந்தபடியினல் அவர்கள் தங்கள் பிள்ளைகளை இங்கும், வேற்று நாடுகளிலும் உள்ள சிறந்த கலாசாலைகளுக்கனுப்பி நிறைந்த ஆங்கிலக் கல்வியை ஊட்டினர். இப்படிக் கல்விகற்ற பிள்ளைகள் உத்தியோகத் தராக, அவர்கள் சந்ததியாரும் காலகதியிலே உத்தியோகத் தையே தம் சீவியத் தொழிலாக நாடினர். இவர்கள் உத்தி யோகம் வகிக்கும் நடுத்தர வகுப்பினர் எனப்படுவர். நியாய வாதிகள், வைத்தியர்கள், எஞ்சினியர் மார் என்பவர்களுடன் சிவில்சேவிஸ், நீதிபரிபாலனப் பகுதிகளில் உத்தியோகம் வகிப் பவர்களும் நடுத்தர வகுப்பில் அடங்கியவராவர். இவர்களி லும் பார்க்க அதிட்டம் குறைந்தவர்களான இன்னேர் வகுப் பினர் உளர். இவர்களும் கிராமங்களில் இருந்து பட்டணங் களுக்கு வந்தவர்களே.... பட்டணத் தொழில்களாற் கிடைக் கும் பண வருவாயில் மயங்கி அங்கே வந்து பல்வேறு தொழில் நிலையங்களில் தொழிலாளர்களாக அமர்ந்துள்ளவர்களே அவர்கள். பட்டணங்களில் அவர்களுக்குச் சொந்தமாக வீடுகளோ காணிபூமிகளோ இல்லை. அன்றடித்து அன்று வாயிலிடும் நிலைமையில் அவர்களிருப்பர். அவர்களின் வசிப் பிடங்கள் தொழிற்சாலைகளுக் கணித்தாக இருக்கும். பட் டணங்களுக்கு வந்து புதிய தொழில்களை அவர்கள் கைக் கொண்டதால், அவர்கள் தங்கள் பழைய கிராமீயப் பழக்க வழக்கங்களிலும் ஆசாரானுட்டானங்களிலும் Ꭰ. 1 ᎧbᎩ வற்றை க்  ைக விட்டு வாழ்ந்தனர். அவர்களது வாழ்க் கையிலே இருந்த முந்திய கூட்டுறவுமுறை அற்றுவிட, தன் தன் பாட்டுச் சீவியமுறை அதிகரித்தது. வருணம் குலம் என்னும் கட்டுப்பாடுகளையும் அவர்கள் அதிகமாகப் புறக் கணித்தனர். இப்படியாகப் பலவிதங்களில் கிராமத்துக் குடியானவர்களிலும் பார்க்க அவர்கள் வாழ்க்கை வித்தியாச முடையதாக அமைந்து வந்தது. இம்மாற்றங்களின் பயன் தான் என்ன? முந்தியிருந்த சமுதாயமுறை மாறி வேருேர் சமுதாய முறை உருவானது. சேவையை அடிப்படையாகக் கொண்டு ஒருவரோ டொருவர் பிணிக்கப்பட்டிருந்த சமூக மானது, செய்கூலியாக உரொக்கப்பணம் பெறும் சமூகமானது: முற்காலத்தில் மக்களை இணைத்தது அவரவரது நிலை. இப்போது அதுபோய், ஒப்பந்தமுறையே மக்களை ஒருவரோ டொரு வுர் சம்பந்தப் படுத்துவதாக இருக்கிறது. அதாவது இன்ன வேலைக்கு இன்ன கூலி தரவேண்டுமென்ற ஒப்பந்தம் செய்துகொண்டே மக்கள் ஒருவரோ டொருவர் தொடர்பு கொள்ளுகிருர்கள். பழைய காலத்திலே ஒவ்வொருவருக்கும் அவரவரது வருணம்பற்றி ஒவ்வோர் நிலை இருந்தது. பல

மானியமுறை நாடுகள்-இலங்கை I 45
வகை நிலை மக்களைக் கொண்டதாக அக்காலச் சமூகம் இருந் தது. புதிய சமுதாய வாழ்க்கையிலே இந்த நிலைகளெல்லாம் மறைந்தன. ஒருவர் உயர் வருணத்தவராயிருப்பதால் அவருக் குக் காலந்தோறும் கடமை ஆள்-தொண்டுகள்-புரியவேண் டும் என்ற நியதி இப்போதில்லை. தொழில்முறைகளிலும் வர்த்தகக் கருமங்களிலும், ஏனைய உத்தியோகங்களிலும் இப் போது இன்ன வேலைக்கு இன்ன கூலி என்ற கொள்கையே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எவரும் எந்த வேலையிலும் ஈடுபடலாம். முந்தி இவ்வாறு இல்லை. தான் பிறந்த வருணத் துக்குரிய தொழிலையே ஒருவன் ஆற்றவேண்டும் என்ற கட்டுப் பாடு அக்காலத்திலிருந்தது.
இப்போது உருவாகியுள்ள புதுச் சமுதாய வாழ்க்கையிலே ஒவ்வொரு தனிமனிதனும் , மானியமுறைச் சமுதா யக் கட் டுப்பாடுகளுக்கு அகப்படாது விடுதலை யடைகிருன். இந்தக் கட்டுப்பாடுகளில் இருந்து விடுதலை யடைந்துள்ள அவன் மானியமுறைச் சமுதாயத்தை விடுத்து மிதவாதச் சமுதாயத் தின் அங்கத்தவனகிருன். இங்கே மிதவாதம் என்பது சுதந் திரத்தை, சுயாதீனத்தை குறிக்கிறது என்க. மிதவாதச் சமுதாயமுறை, மானியச் சமுதாயமுறைக்கு நேர் விரோத மானது. மிதவாதச் சமுதாய முறையிலே ஒருவனுக்குச் சாதிக் கட்டுப்பாடு அல்லது வருணக் கட்டுப்பாடு இல்லை. அவன் தான் விரும்பியபடி ஓர் தொழிலைச் செய்யலாம். தான் விரும்பியபடி வீடமைக்கலாம். அவனுக்குத் திறமையும் தகுதியும் இருப்பின் அவன் முன்னுக்கு வந்து தன் சமுதாயத் துக்குத் தலைவனுகவும் விளங்கலாம். அவன் நிலம்புலம் வைத் திருக்கலாம். அவனுக்குச் சங்கீதம் முதலாம் கவின் கலைகளில் நாட்டமிருப்பின் அவற்றில் ஈடுபட்டுச் கொள்ளலாம். தொகுத்துக் கூறுங்கால் அவன் சுதந்திர மனிதன்; அவன் தான் விரும்பியவாறு தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள லாம். அவன் எவ்வருணத்திற் பிறந்தாலும் அவ்வருணத்துக் குரிய தொழில்களைத்தான் புரியவேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. ஆகவே, மிதவாத இராச்சியத்திலே ஒவ்வொருவனுக் கும் சுதந்திரம் உண்டு. அவன் வருணக்கட்டுப்பாடு என்னும் பாராங்கல்லினல் வருந்தாது வாழ்க்கைச் சுதந்திரத்தையும் அடைகிருன். அவனுக்கு அரசியற் சுதந்திரமும் உண்டு. அவன் எந்த வருணத்தில், எந்தக் கோத்திரத்திற் பிறந் தாலும், எந்த மதத்தை அநுட்டித்தாலும் தன் தேசம், தன் பட்டணம் அல்லது கிராமம் என்பவற்றின் பரிபாலனக் கருமங் களிலே பங்குபற்ற உரிமையுண்டு. இப்படி எல்லாம் கூறுவ
1. Liberal Society; தாராளச் சமுதாயம் என்றும் கூறுவர்.

Page 78
1 4 6 மானிய முறை நாடுகள்-இலங்கை
தால், மிதவாத அரசாங்கம் அல்லது இராச்சியமிருக்கும் இடம் பூலோக சொர்க்கம்தானு என்று நீங்கள் அதிசயிக்கவும் கூடும். ஆனல் மிதவாத அரசாங்கத்திலே மேலே சொல்லிய சுயாதீனங்கள் இருந்தபோதிலும்-செளகரியங்கள் கிடைத்த போதிலும்-வறியவர்களின் நிலைமை சிறந்திருக்கிறது என்று சொல்லமுடியாது. நவமாகக் கிடைத்த சுதந்திரத்தால் அவர்கள் அதிகம் பயனைப்பெறவில்லை. எல்லோரும் முன்னேறு வதற்குப் பொதுவான சந்தர்ப்பங்களை இச் சுதந்திரம் வழங்கி யிருக்கிறது என்பதும் எவனும் தன் திறமையை அபிவிருத்தி செய்து முன்னேறச் சுதந்திரம் உண்டென்பதும் உண்மை தான். ஆனல், இப்படிப் பொதுவான சந்தர்ப்பங்களும் சுதந்திரமும் வழங்கியிருத்தல் வறிய மக்களுக்கு இடைஞ்ச லாகவுமிருக்கிறது. ஒரு வறியவனின் பிள்ளையை உதாரணத் துக்கு எடுத்துக்கொள்ளுவோம். அவனுக்குத் திறமையும் ஆற்றலும் இயல்பாகவே அமைந்திருந்தாலும், அவற்றை விருத்திசெய்யத் தகுந்த கல்வி பெறவேண்டும். அக் கல்விக் குப் பணம் வ்ேண்டும். வறியவனுகிய அவனிடம் பணம் ஏது? ஆகவே ஒர் மிதவாத இராச்சியத்திலும் மேலே சொல்லிய சுதந்திரங்கள் அனைத்துமிருந்தாலும் அவற்றை அநுபவிக்கபயன்படுத்த-சந்தர்ப்பங்கள் இல்லையேல் அச்சுதந்திரங்களி ஞற் பொதுமக்கள் அதிகம் பயனை அடையமாட்டார்கள் என்றே கூறவேண்டும். உண்மையைக் கூறுங்கால், வாழ்க்கை யிலே ஏற்படும் இடையூறுகளை எதிர்த்து வெற்றிகொள்வதற் கான சாதனங்களை உடையார்க்கே மிதவாத அரசாங்கம் நன்மை பயக்கும். இடம் பொருள் ஏவல் என்னும் மூன்றும் உடையரே வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றிபெற, அவை யில்லாதவர்கள் அப்போராட்டத்திலே அகப்பட்டு நசுங்கி மாளவும் கூடும்.
பழைய மானியமுறைச் சமுதாயத்திலே யிருந்த வருண முறை தனது மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் சிறந்த சாதனமாகவிருந்தது. ஒர் வருணத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு ஆபத்துவந்த காலத்தில் அல்லது உதவிவேண்டிய காலத்தில் தம் வருணத்தில் உள்ள மற்றவர்கள் பாதுகாப்பும் ஆதரவும் அளிப்பர் என்று தம் வருணத்து மக்களின் கூட்டுறவில் தளரா நம்பிக்கை கொண்டிருந்தனர். ஓர் கூட்டத்தில் அல் லது வருணத்தில் இருந்த மக்கள் தமக்கு ஏதும் குறை வந்து விடுமோ என்ற பயமும் கொள்ள ஏதுவிருக்கவில்லை. ஆனல் இப்போதுள்ள மிதவாத சமுதாயத்திலே இந்தப்பயமற்ற நிலைமை இருக்கமாட்டாது. ஒவ்வொருவரும் தன் தன் கருமத்திற் கண்ணுயிருந்து தனக்குத் தனக்கு வருவதைத்

மானியமுறை நாடுகள்-இலங்கை 147
தான் தானே பார்த்துக்கொள்ள வேண்டிய நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது. போட்டி அல்லது எதிரிடைதான் மித வாத சமுதாயத்தின் அடிப்படை. விவசாயிகள் விவசாயி களுடனும், வினைஞர் வினைஞருடனும், வைத்தியர் தம்போன்ற வைத்தியருடனும், நியாயவாதிகள் நியாயவாதிகளுடனும் தொழில்பற்றிப் போட்டியிட்டு ஒவ்வொருவரும் தான் தான் முன்னுக்குவர முயற்சிப்பர். இத்தகைய சமுதாய வாழ்க்கை யிலே ஒவ்வொருவரும் தத்தம் முழுத் திறமையையும் காட்டி உழைக்கவேண்டும். திறமையுடையவர்தான் பிழைப்பர். முற் காலத்து மானியமுறைச் சமுதாய வாழ்க்கை ஒத்துழைப்பை ஆதார மா க க் கொண் டது. ஆனல் மிதவாதச் சமுதாய முறையோ மேலே கூறியாங்கு போட்டியை ஆதாரமாகக் கொண்டது: பழைய மானியமுறை அரசாங்கங்களிலே மக்கள் ஒற்றுமை பூண்டு கூட்டங்களாக, கூட்டங்கள் தமக்கிடை ஒற்றுமை பூண்டு நாட்டுக்குத் தொண்டாற்றின. ஆனல் மிதவாத அரசாங்கங்களிலே இருக்கும் தனிமனிதன் தன் சிறந்த தன்மைகளை வெளிக்காட்டும் போட்டிப்பான்மை அந்த கூட்ட ஒற்றுமையின் இடத்தைச் சுவீகரித்து விட்டது.
புதிய சமுதாயமுறையை வகுப்பதில் கல்விமுறையும் ஒர் பெரிய பங்கெடுத்தது. இங்குள்ளார் ஆங்கில நாட்டுச் சரித் திரத்தையும் ஆங்கில அரசியன் முறைகளையும் கற்றமை, அம்முறைகள்-அவற்றிலும் விசேடமாக அரசியற் சுதந்திர முறைகள்-வளர்ச்சியடைய ஊக்கப்படுத்தியது. பழைய மானியமுறை இலங்கையிலே குறித்த சில வகுப்பினர் அர சியற் பரிபாலனத்தை நடாத்த மற்றவர்கள் அப்பரிபால னத்துக் கடங்கி வாழ்ந்து வந்தனர். புதிய கல்விமுறை அரசியற் பரிபாலனக் கருமங்களில் மக்களும் பங்குபற்ற வேண்டும் என்ற கொள்கையைப் புகுத்தியது. பொதுமக்கள் பரிபாலனக் கருமத்திற் பங்குபற்றுதற்கு, அவர்களின் பிரதி நிதிகள் மகாசனங்களால், மகாசனங்களுக்கெனத் தெரிவு செய்யப் படும் சபைகளிற் கூடிக் கலந்து பேசவேண்டும். இவ்வாறு தெரியப் படும் சபைகள் முற்கால மானிய மு  ைற இலங்கையில் இருந்த சபைகளைப் போன்றனவல்ல. புதிய அமைப்பிலே யுள்ள பிரதிநிதிகள் சனங்களால் தெரிவு செய்யப்பட்டவர்களாவர். அரசியல் உரிமைகளும் அரசியற் சுதந்திரமும் இந்நாட்டு மக்களுக்கு வேண்டும் என்ற கிளர்ச்சியைப் பட்டணங்களில் வசித்துப் புதிதாக ஆங்கிலம் படித்தவர்கள் செய்தனர். ஆனல் குடி யா ன வ ர் கள் இக்கிளர்ச்சிக்கு ஆரம்பத்தில் செவி சாய்க்கவில்லை. அரசாங்க ஏசண்டு ' என்று வழங்கப் பட்ட மாகாணுதிபதிகளும், முதலியார் மாரும் ரட்ட மகாத்

Page 79
1 48 மானியமுறை நாடுகள்-இலங்கை
மாயாக்களும் மணியகாரன்மாரும் புரிந்த ஆட்சியிலே குடி யானவர்கள் திருப்தியடைந்து வந்தனர். 1910-ம் ஆண்டிலே அரசியல் சம்பந்தமாக ஒர் மாறுதல் ஏற்பட்டது. கேம்பிரிஜ் ஸ்பீனியர் பரிட்சையிலோ அதற்குச் சமானமான அல்லது அதற்கு உயர்ந்த பரிட்சையிலோ சித் தி யடைந்த வர் களுக்கு இவ்வரசியல் மாற்றத்தின் பயனுக வாக்குரிமை அளிக் கப்பட்டது. அதனைப் படித்த இலங்கையர்க்கான வாக்குரிமை என்பர். இவர்களே அரசியல் மன்றத்துக்குச் சனப்பிரதிநிதி களைத் தெரிவுசெய்யும் உரிமையுடையராயிருந்தனர். 1920-ம் ஆண்டிலே, பொதுசனங்களின் கோரிக்கைக்கிணங்கி வேருேர் பிரதானமான மாற்றம் வழங்கப்பட்டது. அதுதான் பிரதேச வாரிப் பிரதிநிதித்துவம் என்பது. இதன்படி இலங்கை பல தேர்தற் ருெ குதிகளாகப் பிரிக்கப்பட்டு அவற்றில் வசித்தோர் தமக்குரிய பிரதிநிதிகளைத் தெரிவு செய்யவேண் டும் என்று ஒழுங்கு செய்யப்பட்டது. ஆனல் அப்படித் தெரிவு செய்யும் உரிமை இங்கிருந்தவர்களில் 100க்கு 4 விகிதத் தினர்க்கே வழங்கப்பட்டது. 1910-ம் ஆண்டு வழங்கப்பட்ட வாக்குரிமை முறையிலும் பார்க்க இது முன்னேற்றமான தென்பதற்குச் சந்தேகமில்லை. அப்படியிருந்தும் குடியான வர்களுக்கும் பட்டணத் தொழிலாளருக்கும் இவ்வாக்குரிமை பயன் அளிக்கவில்லை. ஏனென்ருல் அவர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படாததினல் என்க. ஆனல் இந்த நூநமுறை 1931-ம் ஆண்டு வழங்கப்பட்ட அரசியலால் நிவிர்த்தியாக்கப் பட்டது. வயது வந்தவர்கள் அனைவருக்கும் இப்புதிய அரசி யற்றிட்டப்பிரகாரம் வாக்குரிமை அளிக்கப்பட்டது. அதன் பயனக மக்கள் அனைவரும் தங்கள் பிரதிநிதிகளைத் தாங்களே தெரிவு செய்யும் உரிமையைப் பெற்றனர். இவ்வாறு சில அரசியல் உரிமைகளை அடைந்ததன் பயணுக இந்நாட்டில் வாழ்ந்த ஒவ்வொரு ஆடவனும் ஒவ்வொரு பெண்ணும் இப் போது அரசியல் வாழ்க்கையிலே முக்கியமான ஒர் நிலைமை வகிக்கும் தன்மை ஏற்பட்டிருக்கிறது. மேலும், 1931-ம் ஆண் டின் ஆரசியற் றிட்டத்தின்படி அமைக்கப்பட்ட அரசாங்கசபை என்ற மக்களின் மத்திய அரசியல் மகா சபைக்கு மகத்தான அதிகாரங்கள் வழங்கப்பட்டன. இச்சபை ஏழு பகுதிகளாக (நிருவாக சபைகளாக)ப் பிரிந்து நாட்டின் பரிபாலனத்தை நடாத்தும் அதிகாரத்தையும் பெற்றமையினல், ஒரளவு பொறுப்பாட்சியையும் மக்கள் பெற்றனர் எனலாம். கிராமச் சங்கங்களின் அபிவிருத்தியினல் கிராம மக்களின் அரசியல் உரிமைகளும் விருத்தியாகின. பெரிய பட்டணங்களிலே
1. Territorial Representation.

மானியமுறை நாடுகன்-இலங்கை 丑49
நகர சங்கங்கள் தாபிதமாயின; காலி, கண்டி, கொழும்பு, யாழ்ப்பாணம், குருநாகல் நுவரெலியா, நீர் கொழும்பு முதலிய நகரங்களில் மாநகர சங்கப் பரிபாலனம் ஏற்பட்டது. கிராமச் சங்கங்கள், பட்டணசங்கங்கள் நகர சங்கங்கள், மாநகர சங்கங் கள், என்னும் இவற்றிலே சனங்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இருந்து ஊராட்சி பற்றிய கருமம் ஆற்றுகிருர் கள். இப்போது இலங்கையில் வாழும் மக்கள் பழையகால மானியமுறைக் கட்டுப்பாடுகளில் இருந்து நீங்க இந்நாடு இன்று மிதவாதச் சனநாயக அராசங்கத்தை யுடையதாக விருக்கி றது. அரசியற் பரிபாலனக் கருமங்களில் இங்குள்ள ஒவ்வொரு வரும், அவர்கள் ஆண்களாயினுமாக, பெண்களாயினுமாக, அரசியல் விடயமாக அதி முக்கியத் துவ ம் வாய்ந்தவர் களாகவும் சுவாதீனம் உடையவர்களாகவும் இருக்கின்றர்கள். இந்த நாட்டுக்கு எந்த விதமான அரசாங்கம் வேண்டுமென விரும்புகிருர்களோ அந்த விதமான அரசாங்கத்தை அமைத்துக் கொள்ளும் உரிமையும் சுவாதீனமும் இங்குள்ளார் ஒவ்வொரு வருக்கும் உண்டு. இன்று அரசாங்கம் இந்நாட்டு மக்களது சம்மதத்தையும் ஆதரவையும் அநேகமாகக் கொண்டிருப்பது. இப்படியான நிலைமை-அதாவது மக்களது சம்மதத்தைக் கொண்டு இயங்கும் அரசியல் நிலைமை-பழையகாலத்து மானியமுறை இலங்கையில் இருக்கவேயில்லை
அப்பியாசங்கள்
1. மானியமுறைக்காலத்தில் இலங்கையில் இருந்த மத்திய ஆட்சித்தன்மையையும் ஊராட்சித் தன்மையையும் சுருக்க மாக விளக்குக.
2. புராதன கால இலங்கையிலிருந்த மக்கள் வகுப்புக்கள் யாவை? எந்த அளவுக்கு அவை இப்போது காணப்படு கின்றன?
3. இலங்கையின் மானியமுறைச் சமுதாயவாழ்க்கை மறைந்ததற்கான காரணங்கள் யாவை?

Page 80
அத்தியாயம் 5.
சனநாயகம்-அதன் கருத்து அ. சனநாயக, சர்வாதிகார அரசாங்கங்கள்
பழைய காலத்திலே மானியமுறையில் இயங்கிய ஒர் நாடு படிப்படியாக மிதவாத நாடாக மாறியதை முந்திய அத்தியா யத்திற் படித்தோம். மானியமுறை அரசியலிலே தனி மனித னுக்குத் தராதரம் இல்லை. குழு அல்லது வருணம் அல்லது குலம்தான் ஓர் சமுதாயத்தின் சீவாதார அம்சமாக இருந்தது. ஆனல் ஓர் மித வாத அரசாங்கத் தி லே தனி மனிதன் முக்கியத்துவம் பெறுகிருன். வருணக் கட்டுப்பாடு, குலக் கட்டுப்பாடு என்பவற்றிலிருந்து அவன் சுவாதீனம் பெற்று அதன் பயனகப் பிரசா சுதந்திரம் பெறுகிருன். அவன் தனக்குத்தகுந்த தொழிலைச் செய்யலாம்; அவன் எதனையும் வாசிக்கலாம்; எவ்விதமான அபிப்பிராயமும் கொள்ளலாம்; தான் விரும்பியபடி தனது வாழ்க்கையை அமைத்துக்கொள்ள லாம்; தனக்கு வேண்டிய இல்லத்தை யமைக்கலாம் ; தான் காதலிக்கும் பெண்ணை மணக்கலாம்; வேண்டியவர்களுடன் கொண்டாடலாம்; தான் விரும்பியபடி தன் ஒய்வு நேரத்தைக் கழிக்கலாம்; அவன் தன் குலத்தவர்கள் தொன்றுதொட்டு அநுசரித்து வந்த மதக் கோட்பாடுகளைத்தான் பின்பற்ற வேண்டும் என்ற நிர்ப்பந்தம் அவனுக்கில்லை. அவனுக்கு எந்த மதத்தில் நம்பிக்கையுண்டோ அதனை யநுசரிக்கலாம் : அல்லது மதமில்லை என்றுதானும் சாதிக்கலாம். சமயம்பற்றி அவன் கொள்ளும் அபிப்பிராயங்களும் கொள்கைகளும் அவனது இனசனத்தவரின் அபிப்பிராயங்களுக்கும் கொள்கை களுக்கும் முரணுனவையாயிருப்பின் அவற்றின் பொருட்டு அவன் தண்டிக்கப்படமாட்டான். இவை போன்ற சுதந்திரங் களுடன் அவன் அரசியற் சுதந்திரத்தையும் பெற்றுவிட்டான். அரசியற் சுதந்திரமாவது, அவன் தன் கிராமம் அல்லது பட்டணத்தினதும் தேசத்தினதும் பரிபாலன கருமத்தில் பங் கும் உரிமையும் சுதந்திரமும் பெற்றுக் கொள்ளும் தன்மையே என்க. நிறம், குலம், கோத்திரம், வருணம், சாதி என்பன அவனுடைய முன்னேற்றத்துக்கு இனித் தடையாக இரா. உயர்ந்த வருணத்தவனுக்கும், தாழ்ந்த வருணத்தவனுக்கும், வெள்ளை நிறத்தவனுக்கும் கறுத்த நிறத்தவனுக்கும் ஒரே சட்டம்தான். எவனும் தனது உரிமைகளைச் சட்டப்படி பெறுவதற்கு அவனது சாதி, குலம், வருணம் என்பன இடைஞ்

சனநாயகம்-அதன் கருத்து I 5.1
சலாக இருக்கமாட்டா. எக்குலத்தானுயினுமாக, எக்கோத் திரத்தானுயினுமாக, எம் மதத்தவனுயினுமாக, அவனுக்கு மற்றவர்களுடன் சமத்துவ நிலைமை உண்டு. தனி மனிதன் சமுதாய பொருளாதார அரசியற் கருமங்களில் முன்னேற்ற மடைந்து உந்நத நிலைக்குவர ஏதுக்கள் ஏற்பட்டமை நவ இலங்கையின் சரித்திரத்திலே குறிப்பிடத்தக்கவோர் விசேட
அம்சமாகும்.
இலங்கையிலே ஓர் மிதவாத முறை அரசாங்கம் உருவாகி விட்டது என்பதை முந்திய அத்தியாயத்திற் குறிப்பிட்டோம். அரசாங்கம் மாத்திரமல்ல, சமுதாயமுமே மானிய முறையில் இருந்து சனநாயகமுறைக்கு மாறிவிட்டது.
சனநாயகம் என்ருல் என்ன ? சனநாயக முறையில் அமை கப்படும் சமுதாயம் என்பதன் கருத்து என்ன? சனநாயகம் என்பது சனங்களே நாயகமாகவுள்ள, அதாவது சனங்கள் தாமாகவே அமைத்துக்கொண்டுள்ள, அரசாங்கத்தைக் குறிக் கும். பூர்வகால அதென்ஸ் நகரத்திலேயிருந்த சுதந்திர மக்கள் ஒன்ருகக் கூடித்தம் நகரத்து வியவகாரங்களைக் கலந்து பேசுவர். இந்த வகையில் சனநாயகம் என்பது பரிபாலனக் கருமங்களை நடாத்தும் முறை என்பது கருத்து. இதனைப் பற்றிப் பின்னர் விரிவாக ஆராய்வாம். 'பரிபாலனக் கருமங்களை நடாத்தும் முறை' என்ற கருத்து ஒர் புறமிருக்க ‘வாழ்க்கையின் ஒர் முறை’ என்ற ஓர் கருத் தும் சனநாயகத் துக் கு உண்டு. வாழ்க்கைமுறை ' என்பதனைச் ‘சமுதாயமுறை ? என்றும் சொல்லுவர். இதன் கருத்து என்ன என்பதனை முதலில் ஆராய்வோம். இந்த வாழ்க்கை முறை ‘ப்படி, பிறப்பினல் உயர்வு தாழ்வு இல்லை. எல்லாரும் சமத்துவ முடையவர்களே. இப்படிக் கூறுவது சிலருக்கு விபரீதமாக வும் தோன்றும். இது ஓர் மெளட்டீகக் கூற்று ’ என்றும் சிலர் சாதிப்பர். உலகில் உள்ள எந்த இரண்டுபேரை எடுத் துப் பார்த்தாலும் அவர்கள் ஒரு மாதிரி இருக்கிருர்களா ? ஓர் சிலர் வறியவர்கள் வீட்டிலும், இன்னும் சிலர் செல்வர் வீட்டிலும் பிறக்கவில்லையா ? சிலர் ஊமையராகவும் சிலர் குருடராகவும், இன்னும் சிலர் மன்மத ரூபராகவும் பிறக்கிருர் களே. திறமை, ஆற்றல் பற்றி நோக்குமிடத்தும் எல்லாரும் ஒரே திறத்தினராக இருக்கிருர்களா ? சிலர் அதி விவேக சாலிக ளாயிருப்ப, இன்னும் சிலர் மூடசிகாமணிகளாக இருக்கிருர் களே! வாழ்க்கைப் போராட்டத்திற்ருனும் எல்லாருக்கும் ஒரே வித சித்தி கிடைக்கிறதா ? சிலர் இவ் வாழ்க்கைப் போராட்டத் தில் வெற்றியடைந்து சமுதாய வாழ்விலும் அரசியல் வாழ் லும் உயர்நிலை எய்தி உச்சாணிக்கிளையில் இருப்ப பலர்

Page 81
52 சனநாயகம்-அதன் கருத்து
மிடிமைப் படுகுழியிற் கிடக்கின்றனரே, ஆகவே பிறப்பினல் உயர்வு இல்லை என்றும், எல்லாரும் சம நிலையினரே என்றும் கூறுதல் பொருந்துமா ? என்று கூறுவார் உளர். இவர்களின் இத்தகைய ஆட்சேபனைகளுக்கு உத்தரம் கூறுமுகத்தால் சன நாயகத்தின் உண்மைக் கருத்தை-அது குறிக்கும் சமத்து வத்தின் கருத்தை-விபரித்துக் காட்டுதல் ஆவசியமா கின்றது. எமக்குள்ளே பலவிதமான வேறுபாடுகள் உள என்பது மெய்தான். அப்படியிருந்தும் எம் எல்லார்க்கும் ஒர் கணிப்பு உண்டு. எம்மில் ஒருவன் வறியவனுக இருக்க லாம்; இன்னெருவன் மூடனக இருக்கலாம்; அப்படியிருப்ப தற்காக அவனை நாம் புறக்கணிக்க முடியாது. எமது அங்கலட் சணம் எப்படியாயினும், எமது குணங்கள் எப்படியாயினும் மனிதர்கள் என்ற தன்மையிலே நாம் எந்தச் சமுதாயத்தில் இருக்கிறேமோ அந்தச் சமுதாயத்திலே சம நிலை யுனிடய அங்கத்தவராவோம். உதாரணத்துக்கு உங்கள் வகுப்பினையே எடுத்துக்கொள்ளுவோம். அங்கே யுள்ளவர்கள் பல்வேறு வகைப்பட்ட தரத்தினராக, உருவத்தினராக இருக்கிறபோதி லும் அவர்கள் அனைவரும் வகுப்பு மாணவர் என்ற நியதியில் சமநிலை உடையவர்களே. வகுப்பிலே பல திறத்தவர் இருப்பது அவர்களது வகுப்பு நிலையாற் காட்டப்படும். அதாவது மிகவும் புத்திசாலியான மாணவன் முதலாம் பிள்ளையாக இருக்க அவிவேகியான பிள்ளை கடைசி நிலையில் இருப்பான். அதிசெல்வனின் பிள்ளை அழகான, புநிதமான ஆடையுடுத்தி, தனக்கு வேண்டிய புத்தகங்கள் உபகரணங்கள் என்பவற்றைக் குறைவின்றிக் கொண்டுவர, வறியவனின் பிள்ளை அவ்வாறின்றி வருவான். இவையெல்லாம் வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகள். இவ்வேற்றத் தாழ்ச்சிகளினல், ஒரு வகுப்பிலே எல்லாரும் ஒரே நிலை உடையவர்கள் என்பது கெட்டுவிடாது. இப்படியேதான் இப்பரந்த உலக வாழ்க்கையிலும். உலகில் உள்ள மக்கள் அனைவரும் செல்வத்திலோ திறமையிலோ தகைமையிலோ ஒரே மாதிரியில்லை. ஆனல் சனநாயக சமுதா யத்திலே அவர்கள் எல்லாரும் சமத்துவ நிலையிலே வைத்துக் கணிக்கப்படுவர். இன்னேர் உதாரணத்துக்கு ஒர் நீதித் தலத்தை எடுத்துக்கொள்ளுவோம். அங்கே நீதி என்பது பட்ச பாதகம் இன்றி எல்லாரும் ஒரேமாதிரியாக வழங்கப் படும். குற்றவாளியின் பெரிய பதவியோ, நிலைமையோ அவன் செல்வமோ அவனது குற்றத்தை மறைத்து அவனை நிரபராதியாக்க முடியாது. 17-ம் நூற்றண்டிலே, முதலா வது சால்ஸ் மன்னனுக்குப்பின் இங்கிலாந்தினைக் குடியர சாக்கிப் பரிபாலித்த குருெம்வெல் சேனதிபதியின் அதிகாரி

சனநாயகம்-அதன் கருத்து I 53
ஒருவர் இந்தச் சமத்துவக் கொள்கையை அழகாக விளக்கி யிருக்கிருர். அவர் கூறியதாவது:- இந்த நாட்டிலே செல் வன் ஒருவன் தன் உயிரைப் பேணி வாழ்வதற்கு எவ்வளவு உரிமை யுடையவன கவிருக்கிருனே அவ்வளவு உரிமையை மிக்க வறிய ஒருவனும் உடையவனக இருக்கிருன்'. சன நாயக சமுதாயத்திலே தனி மனிதன் மதிக்கப்படும் விதம் இதுதான். மானியமுறைச் சமுதாயத்தில் தனி மனிதர்க் கிருந்த மதிப்பு இதிலும் பார்க்க வித்தியாசமானது என்பதை ஈண்டுக் குறிப்பிடுவது மிகை.
, பிறப்பினுல் உயர்வு தாழ்வு இல்லை; எல்லாரும் சமத்துவ நிலையில் உள்ளவர்கள்: ஆகவே ஒவ்வொருவரும் தத்தம் திறமையையும் ஆற்றலையும் அபிவிருத்தி செய்து முன்னுக்கு வர, சனநாயக சமுதாயத்தில் பூரண சுதந்திரம் உண்டு. ஒவ்வொருவரும் தாம் தாம் செய்யவேண்டியதைத் தாமே வகுத்து தம் வாழ்க்கையை அமைக்கவும், தமக்கு வேண்டிய இல்லினை நிருமாணிக்கவும் தாம் எதனை அறியவேண்டுமோ அதனை நூல்கள் வாயிலாகவோ வேறெவ்வாயிலாகவோ அறிய வும், தாம் யார் யாரை நண்பர்களாகவும் கூட்டாளிகளாக வும் கொள்ளவேண்டுமோ, அவர்களை அவ்வாறு கொள்ளவும் பரிபூரண சுதந்திரம் உண்டு. ஒருவனுடைய வீடு அவனுக்கு அரண்; அங்கே அவனுடைய அநுமதியின்றி எவரும் பிரவே சிக்க முடியாது: யாரும் அத்துமீறிப் பிரவேசித்தால் அவர்களை வெளியேற்ற அவனுக்கு உரிமையுண்டு. அவன் எக்கொள்கை யிலும் நம்பிக்கை கொள்ளலாம்; சங்கீதம், இலக்கியம், சித் திரம் என்னும் இன்னுேரன்னவற்றில் அவன் விரும்பியபடி ஈடுபடலாம். அவனுக்கு நம்பிக்கையில்லாத கருமங்களில் நம்பிக்கை கொள்ளும்படி எவரும் அவனைப் பலவந்தப்படுத்த முடியாது. இப்படியெல்லாம் அவரவர் நினைத்தபடி நடத்க விடலாமா ? சரியான வாழ்க்கை நடாத்தும் விடயத்திலே அவர்களுக்குத் தலைமை தாங்கி அவர்களை வழிநடாத்தவேண் டாமா ? என்றும் நீங்கள் கேட்கலாம். ஆம், சனநாயக சமுதா யத்திலே இவை எல்லாம் செய்யப்படுகின்றன தான். ஆனல் ஒவ்வொரு தனி மனிதனும் தான் விரும்பியதைத் தெரிந்து கொள்ள அவனுக்குச் சுதந்திரம் உண்டு. சனநாயக சமுதாயத் திலே இன்ன இன்ன மாதிரி மக்கள் நடக்கவேண்டும் என்று போதிக்கப்படுகிறது. ஆனல் அவற்றை யெல்லாம் எல்லாரும் அப்படியே ஏற்கவேண்டும் என்ற பலவந்தம் இல்லை. உலோகங் களை உருக்கி வார்ப்பதற்கான அச்சுக்களில் ஊற்றி வி7ை ஞணுனவன் தான் விரும்பிய உருவத்தைப் படைப்பா
அவ்வினைஞனைப்போல தான் விரும்பிய ஓர் திட்டத்சி

Page 82
154 சனநாயகம்-அதன் கருத்து
மக்களை அமைக்கும் கட்டாய மனே பாவம் சனநாயக சமுதா யத்தில் இல்லை. திட்டத்தை அமைக்கும் பொறுப்பு உம்: முடையதேயாகும். இன்னமாதிரித்தான் திட்டத்தை யமைக் வேண்டும் என்று உம்மை எவரும் கட்டாயப் படுத்துவதில்லை. நாம் மேலே பிறிதோரிடத்திற் காட்டியவாறு மனிதர்கள் எல்லாரும் ஒரே மாதிரியானவர்கள் அல்லர். ஒர் சமுதாயத் தில் உள்ள பல்வேறு மக்களும் தத்த மக்கியன்றவாறு பல் வேறு விதத்தில் அபிவிருத்தி அடைய அவர்களுக்குச் சுயா தீனம் அளித்தால் அதன் பயணுக அச்சமுதாயம் முழுவதுமே நன்மையடையும், பல்வித மக்களின் பலவித ஆற்றல்களினுல் பலவிதமான, மகத்தான நன்மைகள் சமுதாயத்திற் பொலி யும். நாம் எறும்புகள் செய்வதுபோன்ற வாழ்க்கையை நடாத்த முடியாது. எறும்புப்புற்றில் ஒற்றுமையுண்டு. எறும் புகள் போல நாமும் வாழ்க்கையை நடாத்தினுல் அந்த எறும்புப் புற்று ஒற்றுமை எம்மிடமும் இருக்கும். ஒருவர் போனபக்கம் தான் நாம் எல்லோரும் போவோம். இந்த முறை வாழ்க்கைச் செழிப்புக்கும் சமுதாய விருத்திக்கும் ஏற்றதன்று. உங்கள் வகுப்பினையே மீண்டும் உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளு வோம். அங்கே பல திறப்பட்ட மாணவர்கள் உளர். ஒருவர் கணித சாத்திரத்தில் விற்பன்னர். இன்னெருவர் சித்திரக் கலைஞர்: வேருெருவர் சங்கீத வித்துவான்; இன்னெருவர் ஆயுத வேலை தெரிந்தவர். இப்படியாகப் பலவிதத் திறமை யாளராக விருக்காது எல்லாரும் கணித விற்பன்னராகவே இருக்கவேண்டும் என்று உங்கள் ஆசிரியர் கட்டளையிட்டு அப்படி ஒரேவிதத்தினராக்க முற்படுவாரானல் அவர் அப் பிள்ளைகளிற் காணப்படும் பல்வேறு விதமான திறமைகளை நாசம் செய்பவரே யாவர். அப்படிச் செய்யாது ஒவ்வொரு வரும் தத்த மக்கியல்பாகவுள்ள திறமையை விருத்தி செய்யச் சுயேச்சை அளித்தால் அவர்களைக்கொண்ட சமுதாயமே அத் திறமைகளின் பயனகப் பெரும் நன்மையடையும்.
ஆனல், சனநாயக சமுதாயத்திலேயுள்ள ஒவ்வொரு தனி மனிதனும் தான் தான் விரும்பியவிதத்தில் அபிவிருத்தி எய்த அநுமதித்தால் அவர்கள் ஒவ்வொருவரதும் நலவுரிமைகள் ஒன்ருே டொன்று மாறுபட்டுப் பொருதவும் சந்தர்ப்பம் நிச்சய மாக ஏற்படும்; போட்டியும் பிணக்கும் சர்வசாதாரணமாகி விட, அதன் பயனக அச்சமுதாயம் நாசமாகிவிடும்; சமுதாயத் தில் பிரிவினை ஏற்படும்; அது சமுதாய ஒற்றுமைக்குப் பங்கம் விளைத்து அதன் பலத்தைக் குறைக்கும். சனநாயக சமுதாயத் திலே இப்படியான எதிரிடைகளும் பிணக்குகளும் ஏற்படு வதைத் தவிர்க்க முடியாதெனினும் சமரச மனப்பான்மையினு.

சனநாயகம்-அதன் கருத்து 155
லும் இணக்கமுறையினுலும் இவ்வின்னல்களை வெற்றிகொள்ள லாம் என்பது சனநாயக சமுதாயத்தின் சித்தாந்தம். உலகத் தின் பல தேசங்களிலே சமய சம்பந்தமான பிணக்குகளும் கோர யுத்தங்களும் ஓர் காலத்தில் நிகழ்ந்ததும் உண்டு. தாம் கைக்கொண்டு அநுட்டிக்கும் சமயம்தான் மெய்ச்சமயம் என் பதில், தளரா நம்பிக்கைகொண்டு அதனை மற்றவர்களும் கடைப்பிடிக்கவேண்டும் என்ற வைராக்கியம் பூண்டு அதனைப் பலவந்தம் மூலமாகக் கைகொள்ளுவிக்கச் சில கட்சிகள் முனைந்தன. தமது நோக்கம் நல்லதுபோலவும் அவைக்குத் தோன்றியிருக்கலாம். இக்கட்சியினர் எவ்வாறு தம் மதக் கொள்கையில் திட நம்பிக்கையும் வைராக்கிய பக்தியும் கொண்டிருந்தனரோ அவ்வாறே அக்கொள்கைகளைத் தீவிர மாக ஆட்சேபித்துத் தாம் கொள்ளும் மதமே சிறந்தது என இருந்தவர்கள், முன்னையவர்களின் பலவந்தத்துக் கிணங்காது விட, கொடிய யுத்தங்கள் மூளலாயின. இவ்வாரு கச் சனங்க ளிடைய்ே மூண்ட சமயப் பிணக்குகளும் யுத்தங்களும் ஈற்றில் சமரச மனப்பான்மை விருத்தியானதன் காரணமாக ஒழிந் தன. சமரச மனப்பான்மை என்ருல் என்ன ? என்பதை இச்சந்தர்ப்பத்தில் ஆராய்வது பொருத்தமுடைத்தாகும். நீர் கைக்கொள்ளும் கொள்கையில் உறுதியான நம்பிக்கை கொண்டு, மற்றவர்களின் கொள்கைகளுக்கும் நம்பிக்கைக்கும் மதிப்புக்கொடுக்கும் பான்மைதான் சமரச மனப்பான்மை எனப்படும். நீர் உம்முடைய கொள்கையில் எவ்வளவு திட மாகவும் உறுதியாகவும் இருக்கிறீரோ அவ்வளவு திடமாகவும் உறுதியாகவும் தம் கொள்கையைத் கடைப்பிடிக்கும் மற்ற வரை நீர் கனம்பண்ணுதல் வேண்டும்; அவரின் கொள்கைக்கு நீர் மதிப்புக்கொடுத்தல் வேண்டும்; அவரும் உம்மைப்போலச் சமுதாயத்திலே சம நிலையுடைய ஒரு வர் தா ன்; உமக்கு உமது கொள்கையில் உறுதிகொள்ள எவ்வளவு உரிமை யுண்டோ அவ்வளவு உரிமை அவர் கொள்கை விடயத்தில் அவருக்குமுண்டு நீர் அவருடைய கொள்கைகளுக்கும் அபிப் பிராயங்களுக்கும் மதிப்புக்கொடுத்தால் அவரும் உம் கொள்கை களுக்கும் அபிப்பிராயங்களுக்கும் மதிப்புக் கொடுப்பார். இவ் வாறு செய்வதைவிடுத்து உங்களிருவருக்குமுள்ள அபிப்பிராய பேதங்களை வளரவிட்டால் அது பிணக்காக முற்றி சண்டை யிற் கொண்டுபோய்விட நீரும் அவரும் ஈற்றில் அழிந்து போவீர்கள். சமரசமனப்பான்மை கொள்ளுதல் சிலருக்குச் சிரமமாகவும் இருக்கலாம். வேறு சிலருக்கு அது வெறுப்பாக வும் இருக்கலாாம். ஆனல் மனிதருக்கிடையே சமாதானம் நிலவு தற்கு அதனைவிடச் சிறந்த மார்க்கம் பிறிதில்லையென

Page 83
I 5 6 சனநாயகம் அதன்-கருத்து
லாம். ஒரேவித கொள்கையோ ஒரேவித மனப்பான்மையோ மக்களிடையே நிலவவேண்டும் என்று நினைப்பது வீண்: அது முடியாத கருமம்; ஆகவே சமரச மனப்பான்மையே சிறந்தது. சமரச மனப்பான்மை உமது சமுதாயத்திலே ஒற்றுமையை வளர்க்கும். அதுவுமன்றி, ஓர் சமுதாயத்திலுள்ள பல திறப் பட்டவர்களும் ஒற்றுமைகொண்டு தம் பல திறப்பட வாழ்க் கையை நடாத்துவதால் உண்டாகும் அரிய பயனும் அச்சமுதா யத்துக்குக் கிடைக்கும்.
இனி, அடுத்ததாகவுள்ள இணக்கமுறை என்ருல் என்ன என்பதை ஆராய்வோம்: இணக்கமுறை என்பதற்குச் சிலர் பிழையான அர்த்தமும் கொடுத்து விடுகிறர்கள். ஏதும் நன்மை பெறுதற்காக, அரிதாக மதித்துவந்த கொள்கைகளை விட்டுக்கொடுத்தல் என்றும் இச்சொல்லுக்குச் சிலர் வியாக்கி யானம் செய்கிறர்கள். ஆனல், மனிதர்க்கிடையே எழுகின்ற அபிப்பிராய பேதங்களைத் தீர்க்கும் வகையில், இணக்கமுறை என்பது மற்றவர்களின் உரிமைகளையும், உரித்துக் கோடல் களையும் ஒத்துக்கொள்வதைக் குறிக்கும். ஓர் உதாரணம் காட்டுதும் உங்கள் வகுப்பு மாணுக்கர்களிற் சிலர் பாடசாலை நூல்நிலைய நிதியிலிருந்து இருபது ரூபா பெற்றுக் குறித்த சில நூல்களை வாங்கவேண்டுமென்று விரும்புகிருர்கள். ஆனல் இந்நூல்கள் வேண்டாம், வேறு நூல்களையே வாங்கவேண்டும் என்று வகுப்பில் உள்ள வேருேர் பகுதியார் வாதாடுகிருர்கள். இருபகுதியினரும் தாம் தாம் கூறுவதுதான் சரியானது, நியாயமானது என்று வற்புறுத்துகிறர்கள். இந்தப் பிணக்கை எவ்வாறு தீர்ப்பது? இரண்டு கட்சியினரும் பிணக்குற்று, ஈற்றில் கைகலந்து சண்டையிட்டால் இவ்விடயம் தீர்க்கப் பட்டுவிடுமா ? அடிபட்டுக்காயம் அடைந்ததுதான் கண்ட மிச்சமாகும். ஒவ்வோர் பகுதியினரும் தாம் தாம் கொண்ட கொள்கைதான் சரி என்று அழுங்குப்பிடியாக நின்ருல் நூல் நிலையத்துக்குப் புதிய புத்தகங்கள் வந்துசேரா. நீங்கள் அந்நூல்களைப் படிக்கவும் முடியாது. முரட்டுப் பிடிவாதம் சாதிப்பதால் இரண்டு பகுதியினரும் பயன் அடையார் . ஆகவே இணக்கமுறையில் இதனைத் தீர்த்தால் என்ன? ஒரு கட்சி மற்றக்கட்சி தெரிந்த புத்தகப் பெயர்களை ஆராய்கிறது; அப்புத்தகங்களைத் தெரிவதற்கு அக்கட்சிக்கு உரிமையிருக் கிறது தா ன் என்பதனையும் மற்றக்கட்சி ஒத்துக்கொள்ளு கிறது. இதன்பயணுக இரண்டு கட்சிகளும் இதுபற்றிக் கலந்து பேசி முடிவு செய்கின்றன. எதற்கு? தாம் தாம் தெரிந்த நூல்கள்தான் சிறந்தனவாகையினுல் அவற்றையே நிதியில் இருந்து வாங்கவேண்டும் என்பதை ஒன்றுக்கொன்று வற்புறுத்

சனநாயகம்-அதன் கருத்து 157
தவன்று. இவ்விடயத்தில் ஏதேனும் ஓர் ஒழுங்குக்கு, ஓர் உடன்பாட்டுக்கு இரு கட்சியினரும் வரமுடியாதோ என்பதை ஆராய்வதற்கே இவ்வாறு கலந்து பேசுகின்றனர். இப்படிக் கலந்து பேசுதல் இருகட்சிகளுக்கும் சம்மதமாய ஓர் உடன் பாட்டைத் தரும். இருகட்சிகளில் ஒன்ருவது தன் கோரிக்கை களை அப்படியே பெரு மல் ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுக் கவே வேண்டும். அதன் பயணுக நூல்நிலையம் நன்மை யடையும். புதிதாகப் பல நூல்கள் அதிற்சேர, மாணுக்கர் அவற்றைப் படித்துப் பயன் அடைவர். இந்த இணக்கமுறை யினுல் உங்கள் பிரச்சினை தீர்ந்துவிடுகிறது. விட்டுக்கொடுத் தல் அல்லது இணங்குதல் என்னும் இந்த முறையானது ஓர் சமுதாயத்து மக்களிடையே, கருத்து வேற்றுமை காரணமாக எழுந்துவரும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குக் கைகண்ட மருந் தாகும். இணக்கமுறையினல் ஏற்படும் சமாதானமும் அதிக காலம் நிலைபெறக்கூடியது: ஏனெனில் அது பலவந்தத்தின லன்றி மனச்சம்மதத்தினல் விளைந்ததாதலின் என்க. பல வந்தம் காரணமாக ஏற்படும் சமாதானம் நீடித்து நிற்க மாட்டாது. இது சரித்திர வாயிலாக நாம் கண்ட உண்மை.
ஈற்றில், எல்லா மக்களும் தங்களுடைய நல் வாழ்வுக்கு வேண்டிய சகல நன்மைகளையும் பெறுதற்குரிய சாதனமாக அரசாங்கத்தை அமைத்துக் கொள்ளச் சனநாயக முறை விதிக்கிறது. அதாவது: அரசாங்கம் தன்னகத்துள்ள மக்க ளுக்கு வேண்டிய பணிகளைச் செய்யும் ஒர் ஆயுதமாக, கருவி யாக, சாதனமாக அதனை அவர்கள் வைத்துக்கொள்ளல் வேண்டும். இதுதான் சனநாயகம். நாட்டிலே சமாதானத் தையும் ஒழுங்கையும் அரசாங்கம் நிலைநாட்ட வேண்டும். இவை யில்லையேல் நல்வாழ்க்கைக்கு வேண்டிய ஆதார அம் சங்கள் மனிதனுக்குக் கிடையா. மக்களுக்குச் சேவைசெய்ய அரசாங்கம் இருப்பதேயன்றி, அதற்குச் சேவைசெய்ய மக்கள் இருக்கக்கூடாது. அரசாங்கம் என்ரு ல் ஏதோ விண்ணி லிருந்து குதித்த பொருள் அன்று. ஆகவே அதற்கு மக்கள் கை கட்டி வாய் புதைத்து வணங்க வேண்டியதில்லை. உமது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும், கட்டுப்படுத்தும் அதிகாரம் அதற்கில்லை. நாட்டிலே அமைதியையும் ஒழுங்கை யும் நிலைநாட்டல் போன்ற குறித்த சில கருமங்களை அது ஆற்றி வெளிப்புற ஒழுங்குகளை அது சீர்ப்படுத்த வேண்டும் என்பது உண்மை. ஆனல் உமது தனிவாழ்க்கையை, உமது எண்ணங்களை, உமது கொள்கைகளைக் கட்டுப்படுத்த அது முன்வருமானல் அதனுற் சனநாயக வாழ்வு சிதையும். அரசாங்கம் என்பது குறித்த சில நோக்கங்களைப் பூர்த்தியாக்

Page 84
置5& சனநாயகம்-அதன் கருத்து
கற்பொருட்டு மக்கள் சேர்ந்து அமைத்த ஓர் சங்கமேயாகும். எனவே அது மனித சமுதாயத்தின் ஓர் பகுதியேயாம். அது தான் சமுதாயம் முழுவதும் அல்ல. சமுதாயம் முழுவதும் அதுவேயானல் எமது வாழ்க்கை முழுவதையுமே அது கட்டுப் படுத்த வேண்டும்.
ஆ. ஓர் அரசியல் முறை என்ற ரீதியில் சனநாயகத்தின் தன்மை
நாம் ஏற்கெனவே கூறியாங்கு சனநாயகம் என்பது வாழ்க்கை முறையின் ஓர் தன்மை. வாழ்க்கைக்கேற்ற கருமங் களை ஆற்றும் சாதனமாகவும் சனநாயகம் அமையும். தனி மனிதன் முன்னேறுவதற்கு அவனுக்குச் சுயாதீனம் அளிக்கப் பட்டுள்ள ஓர் சமுதாயத்திலே அப்படியான தனிமனிதர் தம் எல்லார் க்கும் பொதுவான, தம் மெல்லாரையும் பாதிக் கும் கருமங்களில் தம் அபிப்பிராயத்தை வெளிதிறந்து கூறச் சந்தர்ப்பம் அளிக்கும் வழக்கம் உண்டு. அதாவது ஓர் சன நாயக சமுதாயத்தில் உள்ளவர்களின் சம்மதமின்றி, அவர் களைக் கலந்தாலோ சித்தலின்றி, அவர்களைப் பாதிக்கும் எக் கருமமும் ஆற்றப்படமாட்டாது. சனநாயக சமுதாயங்களில் தனி மனிதனின் சுதந்திரம் மிகவும் முக்கிமான அம்சமானல், தனி மனிதனின் வளர்ச்சியே சமுதாய வளர்ச்சியானல், அத் தனி மனிதர் அனைவரும் சேர்ந்து சமுதாய வளர்ச்சிக்குக் கருமம் ஆற்றுதல் வேண்டுமென்பதும், சமுதாயக் கருமங் களில் அவர்கள் எல்லோரும் சிரத்தை கொள்ளல் வேண்டு மென்பதும் தெளிவு. சமுதாயப்பணியிலே எவ்வாறு பங்கு பற்றலாம்? அதற்கான முறை என்ன? சமுதாயம் சம்பந்தப் பட்ட எக்கருமத்தையும் முடிவு செய்யுமுன் அந்தக் கருமத் தைப்பற்றிக் கலந்து பேச, விவாதிக்கச் சமுதாய மக்கள் அனைவர்க்கும் அநுமதி கொடுப்பதால் அவர்களை இவ்வாறு பங்கு பற்றச் செய்யலாம். விவாதித்தல், விடயங்களைக் கலந்து பேசல், மற்றவர்களின் அபிப் பிர்ா யங்களைக் கேட்டல் என்பன சனநாயக சமுதாயத்துக்குரிய இன்றியமையா இலக்கணங்க ளாம். ஆகவே, சனநாயகம் என்பது விடயங்களையும் கரு மங்களையும் கலந்தாலோசிப்பதன் மூலம் ஆற்றுவித்தற்கான ஒர் சாதனமாக விளங்குகிறது. சனநாயக முறைக்கு முற்றிலும் மாறன் ஓர் முறையும் உண்டு. ஓர் அரசன் அல்லது சர்வாதிகாரி கட்டளையிட, அக்கட்டளைக் கிணங்கி இயங்கும் முறையே அது.
கலந்து பேசுதல் என்ருல் என்ன? தங்கள் தங்கள் கருத்துக் களைத் தெரிவித்து தாம் தாம் கூறுவதுதான் சரி, மற்றவர்கள் கூறுவது பிழை என்பதைக் காட்டுதல் கலந்து பேசுதல்

சனநாயகம்-அதன் கருத்து 59
ஆகாது. அப்படிச் செய்வதால் கருமங்கள் நடைபெறவும் மாட்டா. கருமங்கள் நடைபெரு விட்டால் ஓர் சமுதாயம் சரி ஓர் அரசாங்கம் சரி, அழிந்தே போய்விடும். ஆகவே, அரசியற் கருமங்களைக் கொண்டு நடாத்துதற்குரிய ஓர் முறையாக கலந்தாலோசித்தல் என்பது இங்கே ஒரே ஒரு கருத்தையே கொள்ளும். அதாவது: பல்வேறு மக்கள் ஒர் விடயத்தில் உடன்பாடு கொள்ளச் செய்யும் முயற்சியே. இதுவே கலந்தா லோசிப்பதன் நோக்கமும், ஒரு சமுதாயத்திலே பல்வேறு வித அபிப்பிராய முடையவர்கள் இருப்பர்; அப்படி இருந்த போதிலும் கருமங்கள் செவ்வனே நடைபெறுதற்கு ஓர் உடன் பாடு ஆவசியகமாகிறது. உதாரணத்துக்கு உங்கள் வகுப் பையே மீண்டும் எடுத்துக்கொள்ளுவோம் : பாடசாலையில் உள்ள விளையாட்டுச் சங்கம் எவ்வாறு நடைபெறவேண்டும் என்பதில் எல்லாரும் ஒரே வித அபிப்பிராயம் கொள்ளுபவரா யில்லை. ஒவ்வொருவரும் ‘தான் "பிடித்த முயலுக்குத்தான் மூன்று கால்’ என்ருங்கு தாம் கொண்டது தான் சரி என்று விடாப்பிடியாகச் சாதித்தால் உங்கள் விளையாட்டுச் சங்கம் நடைபெற மாட்டாது. ஆஞல் ‘எப்படியாவது எங்கள் சங்கம் நடைபெற வேண்டும், அதற்கு நாம் எல்லாரும் சேர்ந்து ஒர் திட்டம் வகுக்கவேண்டும்’ என்று முன்வந்தால் நீங்கள் எல்லாரும் உங்கள் கருமத்தை ஆற்றுவதற்குக் கலந்தா லோசிப்பீர்கள். இப்படிக் கலந்தாலோசிப்பது எதற்கு? விளை யாட்டுச் சங்கத்தை இயக்க. ஆகவே இயக்கக் கருவியாகக் கலந்தாலோசித்தல் என்பதிருக்கிறது. கலந்தாலோசித்தலின் நோக்கம் ஒற்றுமை-உடன்பாடு-காணலே. இந்நேர்க்கத் தைக் கைவிடுவதனலேயே, விவாதங்கள் கலகங்களில் முடி கின்றன. இதனல் எவர்க்கும் எவ்வித நன்மையும் கிடைக்காது. எவ்விதமான கருமமும் நடைபெருது.
இந்த வகையில் கலந்தாலோசித்தல்’ என்பது எப்போ தும் ஏக சம்மதமான முடிவைத் தரும் என்பது அன்று. ஏக சம் மதமான முடிவு இல்லாவிட்டால் நடப்பது என்ன? அப்படியே சகல கருமங்களையும் விடுத்து வாளா இருக்கலாமா? எல்லாரும் ஓர் விடயத்தில் ஒத்துப்போகாவிட்டாலும் ஏதேனும் ஓர் முடிவு காணத்தானே வேண்டும் ! உங்கள் விளையாட்டுச் சங்கத்தைச் சகலர்க்கும் பயன்படத்தக்க முறையில் அமைக்க எவ்வாறு கருமம் ஆற்றவேண்டும் என்பதைக் கலந்து பேச உங்கள் வகுப்புப் பிள்ளைகள் கூடுகிருர்கள். குறித்த ஒர் திட்டப்படி நடந்தால் சங்கம் செவ்வனே நடைபெறும். ஆனல் அத்திட்டத்தை எல்லாரும் அங்கீகரிக்காவிட்டால் நடப்பது என்ன ? வாக்குச் சம்மத முறையை அநுட்டிக்க

Page 85
160 சனநாயகம்-அதன் கருத்து
வேண்டும். இம்முறையைப்பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். வாக்குச் சம்மதமுறையை. உங்கள் சங்கக்கருமத்தில் அநுச ரித்து பெரும்பான்மையினரின் அபிப்பிராயப்படி நடக்கல்ாம். அதாவது, பெரும்பான்மையினரின் அபிப்பிராயம் எதுவோ அதன்படி கருமம் நடைபெறும். “ இப்படிச் செய்வது நீதி யாகுமா ? பெரும்பான்மையினர் சிறுபான்மையினரை அடக்கி யாள விடலாமா !’ என்றும் நீங்கள் கேட்கலாம்; மேலும், "இப்படிப் பெரும்பான்மையினர் அதிகாரம் செலுத்த விடுவது கொடுங்கோன்மைக் கிடமாகுமே; பெரும்பான்மைக் கட்சி யினர் தம் பெரும்பான்மைப் பலத்தைக்கொண்டு சிறுபான் மையினரின் அபிப்பிராயத்தை அலட்சியம் செய்வரே; அவர் களின் அபிப்பிராயங்களுக் கிணங்காத சிறுபான்மையினர்க்கு நீதி இல்லையா? நியாயம் இல்லையா?’ என்றும் நீங்கள் கேட்க லாம். இப்படி நீங்கள் கருத்துக்கொள்ளுவது முற்றிலும் சரியன்று. 'சனநாயக முறையிலே பெரும்பான்மைக் கட்சி ஆட்சியின் தன்மை சர்வாதிகார ஆட்சி போன்றதன்று. சிறு பான்மையினரின் அபிப்பிராயங்களைக் கேட்டுத்தான் சன நாயகமுறையில் கருமங்கள் நடைபெறுதல் வேண்டும். சிறு பான்மையினரின் அபிப்பிராயத்துக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்க வேண்டுமென்று சனநாயகமுறை விதிக்கிறது பெரும்பான்மையினரின் ஆட்சிமுறையை எதிர்க்கவும் கண் டிக்கவும் சிறுபான்மையினர்க்கு உரிமை உண்டென்பதை சனநாயகம் ஒத்துக்கொள்கிறது. சிறுபான்மையினரின் அபிப் பிராயங்களுடன் பெரும்பான்மையினர் ஒரளவுக்காவது இணங்கிக்கொள்ள வேண்டும்; அப்படியிருந்தாற்ருன் பெரும் பான்மையினரின் ஆட்சி சிறுபான்மையினர்க்கு ஒத்துப் போகும் என்று சனநாயகம் விதிக்கிறது. ஒர் விடயம் தீர்மானிக்கப்படமுன் அதுபற்றிய விவாதத்தில் சிறுபான் மையினரும் தாராளமாக, எவ்விதக் கட்டுப்பாடுமின்றிப் பங்குபற்றித் தம் கருத்தை ஒளிப்பு மறைப்பின்றி வெளி திறந்து கூறுவதால், அத்தீர்மானத்துக்குச் சிறுபான்மை யினரும் இணங்குவர். இப்படியான தீர்மானங்கள் செய்யப் படும்போது வாக்குச் சம்மதமுறை அநுசரிக்கப்படுகின்றது. வாக்குச் சம்மதம் கொடுக்கும்போது பெரும்பான்மையினர் சிறுபான்மையினரைப் பலவந்தப் படுத்துகின்றனரா ? இல் லையா ? தாம் நினைத்தபடி வாக்குச் சம்மதம் அளிப்பதற்கு சிறுபான்மையினர்க்குப் பரிபூரண சுதந்திரம் இருக்கிறதா? இல்லையா? வாக்குச் சம்மதம் அளிக்குமுன் நிகழும் விவாதத்தில் தத்தம் அபிப்பிராய்த்தை வெளிதிறந்து கூறச் சிறுபான்மை யினர்க்குச் சுதந்திரம் உண்டா ? இல்லையா? என்பனவே சன

சனநாயகம்-அதன் கருத்து 161
நாயகத்தின் சீவாதார பிரச்சினைகள். சிறுபான்மையினர் பல வந்தப்படுத்தப்படாது சர்வசுதந்திரத்துடன் விவாதங்களிற் பங்குபற்றவோ வாக்குச் சம்மதமளிக்கவோ சனநாயகத்தில் உரிமை உடையவர்களா யிருக்கின்றனர். எனவே, அப்படி யான நிலைமையில் பெரும்பான்மையினர் கொடுங்கோன்மை செலுத்துகின்றனர் என்றே சர்வாதிகாரம் செலுத்துகின் றனர் என்ருே கூறமுடியாது. சனநாயகம் என்பது பெரும் பான்மையினரால், சிறுபான்மையினருடன் எவ்வித பலவந்த தமோ கட்டுப்பாடோ இல்லாது கலந்தாலோசித்து நடத்தப் படும் அரசியலேயாகும்; சனநாயகமுறையிலே பெரும்பான் டிையினரின் ஆட்சியைச் சிறுபான்மையினர் கைகட்டி வாய் புதைத்து ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதன்று. எதிர்ப்பை அல்லது தனக்கு எதிராக வரும் கண்டனங்களை அடக்கிச் சிறுபான்மையினரின் அபிப்பிராயங்களைப் புறக்கணித்து பெரும்பான்மையினர் அரசியலை நடத்துவரேயானல் அவர் கள் சனநாயகத்துக்கே விரோதிகளாவார்கள்; அதனைக் குழி தோண்டிப் புதைப்பவராவார்கள். இதனை நாம் மனத்தில் நன்கு பதித்துக்கொள்ளுதல் வேண்டும். சனநாயகமுறையில் கருமங்களை ஆற்றும்போது பழைய மானியமுறை மனப்பான் மையைக் கொள்ளுவோமேயானல், நாம் சனநாயகத்தை வேரறப்பறித்த பெரும் குற்றத்துக்கு ஆளாவோம்: இலங்கை யையே உதாரணத்தின் பொருட்டு எடுத்துக்கொண்டு இவ் விடயத்தை இன்னும் சிறிது விரிவாக ஆராய்வாம். இப்போ துள்ள பாராளுமன்றத்திலே சிங்களர்தான் பெரும்பான்மை யினராக இருக்கிறர்கள். அவர்கள் சனநாயகமுறையில் உண்மையான நம்பிக்கை கொள்பவராயின், அக்கொள்கைப் படி நடக்க மனப்பூர்வமாக விரும்புவராயின், தாம் நாட்டுக்கு வகுத்துள்ள திட்டங்களை ஏற்கெனவே சிறுபான்மையினருக்குத் தெரிவிக்கவேண்டும். அவர்களுடன் இதுபற்றிக் கலந்தா லோசிக்கவேண்டும். அவர்களுடைய உடன்பாட்டையும் பெற முயற்சித்தல் வேண்டும். ஏக சம்மதமான ஓர் உடன் பாட்டைப் பெற முடியாவிட்டால் இவ்விடயமாகச் சிறுபான் மையினருடன் இன்னும் நன்கு ஆலோசிக்கவேண்டும். இருசா ராரும் தத்தம் அபிப்பிராயங்களை ஒழிப்பு மறைப்பின்றி வெளி துறந்து கூறவேண்டும். இதன் பயனக ஓர் இணக்கமுறை ஏற்படவேண்டும்; பெரும்பான்மை வாக்குச் சம்மதங்களைக் கொண்டு ஒர் கருமத்தைத் தீர்மானிக்கமுன் மேலே கூறிய இணக்கமுறையைக் கையாளுதல் வேண்டும். தாம் பெரும் பான்மையினராக இருப்பதால், இத்தீவின் நலவிருத்தித்குத் தாம் வகுக்கும் திட்டங்களை மற்றவர்கள் அப்படியே ஏற்றுக்
3248-G

Page 86
162 சனநாயகம்-அதன் கருத்து
கொள்ளவேண்டும் என்று சிங்களர் நினைப்பின் அது பெரும் பிழை. இப்படியான மனப்பான்மை சிங்கள மக்களுக்கிடையே நிலவுமானல் நாம் இங்கே காண்ப்து சனநாயகமல்ல, பெரும் பான்மையினரின் சர்வாதிகாரமே என்க.
ஒர் அரசியல்முறை என்ற ரீதியில் சனநாயகம் சிறந்த தன்மையில் இருக்கவேண்டும். அதிற் சேர்ந்துள்ள பெரும் பான்மையினரும் சிறுபான்மையினரும் எந்த ஒரு கருமத்தை யும் நன்கு கலந்தாலோசித்தல் வேண்டும். அவர்களுக்கிடையே இணக்கமுறை இருத்தல் வேண்டும். சிறுபான்மையினரின் நலவுரிமைகளுக்குப் பெரும்பான்மையினர் மதிப்புக்கொடுத் தல் வேண்டும். பழைய காலத்து அதென்ஸ் நகரத்துச் சுதந்திர மக்கள் அனைவரும் தமது அரசியற்கருமங்களைப்பற்றி ஆலோசித்து நடைவடிக்கைகள் எடுப்பதன்பொருட்டு ஓரிடத் தில் ஒன்று சேர்வர். அப்படியாக மக்கள் அனைவரும் கூடுதல் இன்று முடியாத கருமம். இன்றைய அரசாங்கங்களில் அடங்கிய மக்களோ மிகப்பெருந் தொகையினர். அவர்கள் எல்லாரும் ஓரிடத்திற் கூடிக் கலந்தாலோசிப்பது முடியாது. ஆகவே பழையகாலத்து அதென்ஸ் நகரத்திலிருந்த நேர் முகமான சனநாயக முறைக்குப் பதிலாக இப்போது பாராளு மன்றச் சனநாயகம் என்ற முறை உருவாகியிருக்கிறது. இந்த முறையின் பிரகாரம் மக்கள் தங்கள் தங்களுக்கெனப் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்ய, அப்பிரதிநிதிகள் ஒன்றுகூடித் தெரிவுசெய்த மக்களுக்கு வேண்டிய பரிபாலன கருமங்களைக் கலந்தாலோசித்துச் செய்வர். பாராளுமன்றச் சன்நாயக முறை செவ்வனே நடைபெறுவதற்குச் சில நிபந்தனைகளும் உண்டு. முதலில் தகுதியானவர்களைப் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்தல் வேண்டும். அப்பிரதிநிதிகள் தம் முன்வரும் பிரச்சினைகளை நன்கு கலந்துபேசத் தகுதியுடையவர்களாக இருத்தல் வேண்டும். மந்த புத்தியுள்ளவர்களையோ, "எது வந்தாலும் எமக்கென்ன” என்ற பராமுக மனப்பான்மை யுடையவர்களையோ தெரிவுசெய்தல் பயன் அளிக்கமாட்டாது. அதுபோலவே சுயநலமிகளான திறமைசாலிகளையும் தெரிதல் பயன் கொடுக்காது. குறித்த சில கருமங்களில் விசேட திறமையுடையார்களையே தெரிவுசெய்தல் வேண்டும் என்ற நியதியும் இதில் இல்லை. இத்தகைய திறமைசாலிகளின் உத வியை வேண்டிய வேண்டிய சந்தர்ப்பங்களில் அரசாங்கத் துக்கு அளிக்க அவர்களை அழைக்கலாம். ஆகவே, உங்கள் பிரதிநிதிகள் கல்வித்துறை, எஞ்சினிர்த்தொழில், வியாபாரம்,
l. Parliamentary femocracy. கலந துபேசும் சனநாயக முறை என்றும் சொல்லலாம்.

சனநாயகம்-அதன் கருத்து 1 63
கைத்தொழில் என்பவற்றில் நிபுணத்துவம் உடையராய் இருக்கவேண்டிய அவசியமும் இல்லை. நீங்கள் தெரிந்து கொள்ளும் பிரதிநிதிகள் ஒருவரோடொருவர் ஒத்துப்போகும் இயல்பினராகவும், கருமங்களைக் கலந்தாலோசித்து ஒரேபான் மையினராய்க் கருமம் ஆற்றக்கூடியவர்களாயும் இருத்தல் வேண்டும். இப்படியான மனேபாவம் நிபுணராயுள்ளார்க்கு அதிகமாயில்லை என்றும் கூறலாம். அதிசக்தி வாய்ந்த, ஆனல் ஒடுங்கிய மனப்பான்மையுடையார் இப்படியான இணக்கமுறையிற் கலந்தாலோ சிக்கும் விடயங்களுக்கு உத வார். ஏதேனும் ஒர் பிரச்சினை விடயமாகப் பேசும்போது அதில் நிபுணத்துவம் உடையாரின் ஆலோசனை வேண்டும் என்று கண்டால் அப்படிப்பட்டவர்களைக் கூப்பிட்டு அவர்க ளது ஆலோசனையைக் கேட்கலாம். உதாரணமாக, நகர நிரு மாணம் அல்லது சுகாதாரம் பற்றிய ஒர் பிரச்சினை விவா திக்கப்படும்போது தமக்கு உதவி செய்வதற்கு, சனப் பிரதி நிதிகள் இப்படியான விடயங்களில் நிபுணராயுள்ளாரைக் கூப் பிட்டு அவர்களது ஆலோசனையைக் கேட்கவேண்டும். ஆனல் அரசாங்கத்தை நடாத்தும் விடயத்தில் சகல துறைகளிலும் நிபுணராயுள்ளாரையே பிரதிநிதிகளாகக் கொள்ளுதல் விரும் பத்தக்கதல்ல. அப்படியின்றி விரும்பத்தக்கதாகத்தான் இருந் தாலும் எல்லாப் பிரதிநிதிகளையும் நிபுணராகப் பெறுதலும் இயலாத கருமம். அரசியற் கருமங்களைப் பொதுவாக நடாத் து தற்கு எம் பிரதிநிதிகளுக்கு விசேட அறிவு வேண்டியதே யில்லை. அவர்கள் எல்லாரும் ஒற்றுமை மனப்பான்மை கொண்டு ஏகோபித்த முடிவு காணவும் இணக்க மனப்பான்மை கொள்ளவும் தயாராகவிருத்தல் வேண்டும். இப்படிக் கூறுவ தால், அறிவில்லா மூடரைப் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்ய வேண்டும் என்பது அர்த்தமல்ல. அப்படி அர்த்தம் கொள்ள வும் இதுவரை கூறியதிற் காரணம் இல்லை. ஒத்த முடிவுகள் காணவேண்டிக் கலந்தாலோசிக்கும் மனப்பான்மை மூடருக்கு இல்லை. நீதி, நியாயத்துக் கடங்கியவர்களான, சமரச மனப்பான்மை உள்ளவர்களே சனநாயகமுறை விவகாரங்களில் பயன்றரும் விதத்திற் பங்கு பெறமுடியும்.
ஆகவே, நாம் தகுதியான பிரதிநிதிகளைத் தெரிவுசெய்ய வேண்டும். சனங்கள் தெரிவுசெய்யும் எல்லாப் பிரதிநிதி களும் ஒத்து மனப்பான்மையினராக இருப்பது அரிது. மக்களைப் பரிபாலிப்பது பற்றி அவர்களுக்கிடையே பலமான அபிப்பிராய பேதங்கள் இருப்பதை நாம் வரவேற்கவே வேண்டும். எங்கே அபிப்பிராயபேதம் இல்லையோ அங்கே பயன்றரும் முறையிற் கலந்து பேசுதலும் இல்லையாம். அபிப்

Page 87
64 சனநாயகம்-அதன் கருத்து
பிராயபேதங்கள் இருப்பதனல் தேசம் நன்மையுமடையும். பலவித அபிப்பிராயங்களையும் திரட்டி நாட்டுக்குகந்த கொள் கையை உருவாக்கலாம். ஆனல் ஒரேவித கொள்கைக்குப் பதிலாகப் பலவித கொள்கைகளைப் பல்வேறு பிரதிநிதிகள் கொண்டிருப்பின் நாட்டுக்கு நன்மை விளையாது. தங்கள் தங்கள் கொள்கைகளையே அநுட்டானத்துக்குக் கொண்டு வரவேண்டுமென்று எல்லாப் பிரநிதிகளும் சாதித்தால் ஒற்று  ைமக்கு வழி பிறக்கமாட்டாது.
எல்லாரும் பலவிதமான அபிப்பிராயங்களைக் கொண்டிருக் கிருர்கள். ஆனல் ஒத்த அபிப்பிராயமுடையவர்கள் ஒன்று சேர்வதாற் கட்சி உருவாகிறது. இப்படியான அரசியற் கட்சிகளிலேயுள்ளார் ஒரே அபிப்பிராய முடையராக இருப் பர்; அவர்களுக்கென ஓர் திட்டமும் இருக்கும். இதனைக் கட்சியின் கருமவொழுங்கு" என்பர். ஒவ்வொரு தனிப்பிரதி நிதியும் தத்தம் ஆலோசனையை அரசாங்கத்துக்குக் கொடுத் தல் நல்லதுதான்; ஆனல் பிரதிநிதிகள் தத்தம் அபிப்பிராயத் துக்கேற்றவாறு கூட்டாகச் சேர்ந்துகொள்ளாது அவ்வபிப் பிராயத்தைத் தனித்தனியாக வெளியிட்டால் அவ்வபிப்பிரா யத்தின்படி கருமம் நடைபெற மாட்டாது. பேச்சில்தான் முடியும். எங்கள் பாராளுமன்றம் போன்ற சபையிலேயுள்ள நூறு அங்கத்தவர்களும் நூறுவிதமான அபிப்பிராயம் கொண்டி ருந்தால் அந்த அபிப்பிராயத்தை நடைமுறையிற் கொண்டு வரமுடியுமா? ஆஞல் அங்கத்தவராயுள்ளார் தமக்கிடையே கலந்தாலோசித்த பின் தம் கொள்கைகள் அனைத்தையும் ஒன்ருகத்திரட்டி அதுவே தம் கட்சிக்கொள்கை என்று பிரதி நிதிகள் சபையிலே ஆலோசனைக்கும் அங்கீகாரத்துக்கும் சமர்ப்பித்தால் அச்சபையின் வேலை சுலபமாகிவிடும். பல் வேறு விதமான அநேக கொள்கைகளை ஆலோசிப்பதிலும் பார்க்க திரட்டுக்கொள்கைகளை ஆலோசிப்பதும், ஏற்பதும், ஏற்றபின் அவற்றை அநுட்டானத்துக்குக் கொண்டு வருவதும் சுலபம். சனநாயகமுறை சரிவர இயங்குவதற்குக் கட்சிமுறை இன்றியமையாததாகின்றது என்பதனை மேலே எடுத்துக் காட்டினுேம். இங்கே கட்சி என்பது நாட்டுக்கு வேண்டிய தெனத் தாம் கருதும் ஒர் அரசியற் கொள்கை ஒழுங்கினைக் கொண்டு அதன்படி கருமம் ஆற்ற முனைந்துள்ளவர்கள் சேர்ந்த கூட்டமே என்க. கட்சிகள் ஒன்றுக்கொன்று நேச பான்மயுைடையனவாயிருத்தல் வேண்டும். ஒர் கட்சி தனது பெரும்பான்மைப் பலத்தினுல் அதிகாரத்துக்கு வந்தால் மற்றக் கட்சிகளை-தனது எதிர்க்கட்சிகளை-நசித்தொழிக்க வேண்டும் என்று தனக்குரிய அதிகாரத்தைத் துர்ப்பிரயோகம்
,
1. Party Programme.

சனநாயகம்-அதன் கருத்து I 6 5.
செய்யக் கூடாது. அது மற்றும் கட்சிகளின் அபிப்பிராயங் களுக்கும் கொள்கைகளுக்கும் மதிப்புக் கொடுக்கவேண்டும். ஒர் கட்சியின் ஆலோசனைகளை மற்றக் கட்சியார் கண்டிக்ககுணுகுணங்களை எடுத்துக்காட்ட-சந்தர்ப்பம் அளிக்கவேண் டும், எதிர்க்கட்சியினரின் வாயை அடக்கக்கூடாது. ஓர் திட்டத்தினை எதிர்க்கட்சிக்கண்டனம் என்னும் உரை கல்லில் வைத்துப்பார்த்தாற்ருன் அதன் குணகுணங்கள் விளங்கும். அபிப்பிராய வேற்றுமைகளுக்கு இடம் கொடுக்காமல், மதிப் புக் கொடுக்காமல், தான் செய்வதும் செல்வதும்தான் சரி என்று கருமம் ஆற்றும் எந்தக்கட்சியும் சனநாயகத்தின் பரம விரோதியாகும். ஆகவே சனநாயகம் செவ்வனே நடைபெறு தற்குக் கட்சிமுறை எமக்கு வேண்டியதாகிறது. இங்கே கட்சிமுறை என்பது சர்வாதிகாரத்துவத்தைக் குறிக்கவில்லை. கட்சிமுறை சர்வாதிகாரமுறைக்கு நேர்மாரு னது. பேச்சுச் சுதந்திரம் சனநாயகத்தின் பிரதான அம்சம்: விடயங்களை வெளிதிறந்து பேசுதல், வெளிப்படையாக ஓர் கொள்கையை எடுத்துக்காட்டல், மற்றக் கட்சியினரின் அபிப்பிராயங்களை யும் தேவைகளையும் உதாசீனப்படுத்தி உதறித்தள்ளாது அவற் றுக்கிணங்கத் தயாராகவுள்ள மனே பாவம் என்னும் இன்னே ரன்னவையே சனநாயகக் கட்சிமுறை இலக்கணங்களாம். இந்தத் தன்மைகள் இல்லையேல் கட்சிமுறை என்பது வடி கட்டிய கொடுங்கோலாட்சியாகவே முடியும். இத்தகைய ஓர் தனிக் கொடுங்கோலாட்சியை இற்றைக்குச் சில காலத் திற்குமுன் ஜெர்மனியிற் கண்டோம்.
மேலும், எல்லாருக்கும் ஒப்பான தீர்மானங்களைச் செய் வதற்கு விவாதம் நடத்தும் சாதனமே கட்சிமுறை. ஓர் கருமத்திற் சர்வாங்கீகாரம் இல்லாவிடத்து பெரும்பான்மை யினர் எதற்கு ஆதரவாகத் தம் வாக்குச் சம்மதத்தை அளிக் கின்றனரோ அதுவே நடைமுறைக்கு வரும். ஒர் கொள்கையை -ஒர் தீர்மானத்தை-இவ்வாறு பெரும் பான்மையினரின் சம்மதத்தால் நிறைவேற்றிவிட்டால் அதனை நடைமுறைக்குக் கொண்டுவருதல் வேண்டும். இதற்கு ஓர் நிருவாகசபை போன்ற செயற்குழு தெரிந்தெடுக் கப்படல் வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கொள்கையை-தீர்மானத்தை-அநுட்டா னத்திற் கொண்டுவரும் பொறுப்பு இக்குழுவுக்கு வழங்கப் படும். இங்கிலாந்திலே இப்பொறுப்பினை வகிக்கும் குழுதான் அமைச்சர்சபை அல்லது மந்திரசபை. எங்கள் இலங்கையி லும் ஒர் அமைச்சர் சபை உண்டு. இவ்வமைச்சர் சபைதான் நாட்டின் பரிபாலனத்திற்குப் பொறுப்பாகவுள்ளது. சனநாய
l. Cabinet.

Page 88
1 6ቲ6 சனநாயகம்-அதன் கருத்து
கத்தின் அம்சமாகவுள்ள அமைச்சர் சபையின் தன்மையை விளக்குதற்கு உங்கள் பாடசாலையின் கலா விருத்திச் சங்கத்தை உதாரணத்துக்கு எடுத்துக்காட்டலாம். இச்சங்கத்திலே மேல் வகுப்புப் பிள்ளைகள் அங்கத்தவராயிருப்பர். அதன் வேலை ஒழுங்கை வகுக்க்வும் அதன் அன்ருட கருமங்களை திருவகிக்க வும் நிருவாகசபை என்ற ஓர் சிறிய சபையை அச்சங்கத்தங் கத்தவர்கள் தெரிந்து கொள்ளுகிருர்கள். இந்த நிருவாக சபை உங்கள் சங்கத்து வேலை ஒழுங்கை வகுத்து அன்ரு ட கருமங்களை நிருவகிப்பதுபோலவே நாட்டின் கருமங்களைப் பயன் றரு விதத்தில் நிர்வாகிப்பது அமைச்சர் சபை.
சனநாயக முறைக்கு இன்றியமையாது வேண்டிய வேருேர் அம்சமுண்டு. அதுதான் வாக்காளர்; இவர்களிலும் பல திறத்தினர் இருப்பர். வருணம், சமயம் விடயங்களில் அவர் கள் ஒருவருக்கொருவர் வேறுபாடுடையவராக இருக்கலாம்; அபிப்பிராயங்களிலும் வேறுபாடுடையராக விருக்கலாம். இப் படியாகப் பல திறப்பட்ட வாக்காளரைக் கொண்டதே ஒர் தேர்தற்ருெ குதி.2 சனநாயக முறை அநுகூலமடைய வேண்டு மானுல் வாக்காளர் எப்படி இருத்தல் வேண்டும்? முதலாவ தாக, வாக்காளர் தான் தம் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்கி முர்கள். ஆகவே தமக்கு வேண்டிய அரசாங்கத்தை வாக்கா ளரே தெரிவுசெய்கின்றனர் என்று கூறலாம். எங்கள் நாட்டி ளேயுள்ள வயது வந்த ஆண்களும் பெண்களும் நாட்டபி விருத்திக்கு வேண்டிய நடைவடிக்கைகளைக் கையாளும் பிரதி நிதிகளைத் தெரிவுசெய்கிறர்கள். தேச அபிவிருத்திக்கு வேண்டிய திட்டங்களைப் பயன்றருமுறையில் அநுட்டிப்பது நாம் தெரிந்தனுப்பிய பிரதிநிதிகள் பொறுப்பில் உள்ளது. எனவே அரசாங்கமும் ஓர் விதத்தில் எமது அரசாங்கமே. நாம் தகாதவர்களைப் பிரதிநிதிகளாகத் தெரிந்து அரசாங் கத்தை நடத்தும்படி விட்டால் அதனல் நட்டம் அடைவது நாம்தான். ஆகவே எமது பொறுப்பு மிகவும் அபாரமானது என்பது புலனுகிறது. எமது எதிர்காலச் சுபீட்சத்தை ஆக்கு வதும் அழிப்பதும் நாங்கள்தான். தம் பிரதிநிதிகளைத் தெரிந் தனுப்பவேண்டிய பெரும் பொறுப்பைக் கொண்டுள்ள வாக் காளர்களுக்கு இதுபற்றிச் சரியான கல்வி ஊட்டப்படல் வேண்டும் என்று பலர் அபிப்பிராயப் படுகிருர்கள். ஆனல் இங்கே கல்வி என்ருல் என்ன ? ஜெர்மனியிலே கல்வி நன்கு அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தது. தக்க கல்வி பெற்றவர்கள் எனக் கருதப்பட்ட ஜெர்மன் மக்கள் சனநாயக முறைகளைத்
I. Voters. 2. Electorate.

சனநாயகம்-அதன் கருத்து 16 7
தகர்த்தெறிந்து ஓர் சர்வாதிகார முறையைத் தெரிவுசெய்ய வில்லேயா? ஆகவே தக்க கல்வி' என்பதன் உண்மைக் கருத்தை சனநாயக விடயத்தில் ஆராயவேண்டும். கல்வி என்ருல் வெறும் புத்தகப்படிப்பு மாத்திரம் அல்ல. தாம் தெரிந் தனுப்பும் பிரதிநிதிகள் தம்பொருட்டு என்ன செய்கிருர்கள் என்பதை மக்கள் விழிப்புடன் நோக்கவேண்டும். அவர்கள் முதலில் தம் கிராமத்துப் பரிபாலன விடயங்களிலும் அதன் பின் பட்டணத்தினதும் தேசத்தினதும் பரிபாலனக் கருமங் களிலும் சிரத்தை கொள்ளவேண்டும். தம் கருமத்தை ஏற்ற வர்களில் விடுத்து "எல்லாவற்றையும் அவர்களே பார்க்கட் டும்’ என்று கண் மூடிக்கொண்டிருப்போர் மத்தியில்தான் சர்வாதிகாரமுறை தோன்றி வளரும். இந்தக் கண்மூடிகள் தான் சுயநலமிகளின் இனிப்பு வார்த்தைகளில் மயங்கி அவர் களுக்குப் பணிவர். சனநாயகமுறை அநுகூலமடைய வேண்டு மானுல், மக்கள் பரிபாலனக் கருமங்கள் செவ்வனே நடை பெறுகின்றனவா என்பதைக் கூர்மையாக அவதானித்து தீய ஆட்சி தலையெடா மற் சதா கண்விழிப்புடன் இருத்தல் வேண் டும். அவர்கள் அடிக்கடி அதுபற்றியும் இதுபற்றியும் அதிர்ப்தி தெரிவிக்கவேண்டும். மிகவும் சுலபத்தில் திருப்திப்படாமை, பராமுகமா யிருக்காமை என்பனதான் சனநாயகமுறை அநு கூலமடைவதற்கான அம்சங்களாகும். எதற்கும் ‘ஆம்’ சொல்லி அடிமைகள் போல, தலைவர் எனப்படுவோர் சொல் வனவற்றுக்கும் செய்வனவற்றுக்கும் தலை யசைப்போர் சன நாயகத்தை அநுகூலமடையச் செய்யார்.
தம் பிரதிநிதிகளைத் தெரிந்துகொள்ளும் மக்கள் தேசீயக் கொள்கைகளை நன்கு உணர்ந்தவராயும் தம் நாட்டின் அபி விருத்திக்கெனத் தம் முன் சமர்ப்பிக்கப் பெற்றுள்ள பலவிதத் திட்டங்களையும் ஆலோசனைகளையும் நன்கு விளங்கியவர்க ளாயுமிருத்தல் வேண்டும் என்று சிலர் கூறுவர். இந்தக் கூற்றை நாம் ஒப்புக்கொள்ள (1Քւգաng/. மேலே சொல்லிய வாறுள்ள திட்டங்களை நாம் விளங்கிக்கொள்ளவேண்டும் என் பது அவசியம் அன்று. இத்திட்டங்களை விளங்கிக் கருமம் ஆற்றக்கூடிய பிரதிநிதிகளை நாம் தெரிந்தனுப்புகிருேம். எம் நாட்டுக்கு வேண்டிய பலவிதக் கொள்கைகளை நுணுக்கமாக ஆராய்ந்து அவற்றை விளங்கும் நிபுணராக நாம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நல்லவர்களை எம் பிரதிநிதிக ளாகத் தெரிவதுதான் எம் கடமை. நல்ல மனிதர் என்பது நியாயம் நீதி தெரிந்தவர்களாய், எதிர்க்கட்சியுடனும் சமரச மனப்பான்மை உடையவர்களாய், பொது நன்மையின் பொருட்டு மற்றவர்களுடன் மனப்பூர்வமாக ஒத்துழைத்துத்

Page 89
168 சனநாயகம்-அதன் கருத்து
தொண்டாற்றக் கூடியவர்களாய் இருப்பவர்களையேயாம். சில கருமங்களில் விசேட அறிவு தேவைப்படின் அவ்வறிவு படைத் தவரிடம் நம் பிரதிநிதிகள் அதனைப் பெறலாம். அவர்களின் ஆலோசனைகளை நம் பிரதிநிதிகள் கேட்டு இது சம்பந்தப்பட் டுள்ள ஏனையோருடனும் கலந்து பேசுங்கால் ஒன்றுக்கொன்று மாறன கொள்கைகள் பிறக்குமானல் அவற்றில் ஓர் உடன் பாட்டை அமைத்துக்கொள்ளலாம். ஆகவே, இதில் எம் கடமை என்னவானுல், நீதி நியாயத் தகைமைகள் உடைய வராய், ஒத்துழைப்பு விருப்புடையராய், மற்றவர்களின் அபிப் பிராயங்களுக்குச் சமரசபான்மையுடன் மதிப்புக்கொடுப்பவ ராய், தத்தம் வேலைத்திட்டத்தில் ஆர்வம் கொண்டு அவ்வவ் வேலைத்திட்டத்தை நடைமுறையிற் கொண்டுவரக் கங்கணம் கட்டியுள்ள பல்வேறு கட்சிகளுடன் விடயங்களைக் கலந்து பேசி ஓர் ஒத்த முடிவு காண ஆவலுடையவராய் உள்ள பிரதி நிதிகளைத் தெரிவுசெய்தலே என்க. சரியான பிரதிநிதிகளைத் தெரிந்துகொள்வதுதான் எமது அதி முக்கிய கடமை. ஆகவே எமக்குரிய வாக்குரிமையைச் செலுத்துதற்கு எமக்கு விசேட மாகக் கல்வி பயிற்றவேண்டிய அவசியமேயில்லை. பிரதிநிதி களைத் தெரிந்துகொள்ளும் ஆற்றலும் தகுதியும் எமக்கு உண்டோ என்பதைக் காட்டுதற்குக் கல்வி என்னும் உரைகல் எமக்கு வேண்டியதில்லை. கல்விதான் இவ்விடயத்தில் உரை கல்லெனில், ஜெர்மனிய தேசமே உலகிற் சனநாயக ஆட்சிக்கு எடுத்துக்காட்டான சிறந்த நாடாக விளங்கியிருக்க வேண்டும். நாங்கள் சாதாரண மனிதர் ; கருமங்கள் செவ்வனே நடை பெறுவதுதான் எமக்கு வேண்டியது. எங்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்தற்கு, அவர்கள் பாராளுமன்றத்தில் ஒன்று கூடிச் செய்யவேண்டிய கருமங்களின் நுணுக்கங்கள் அனைத் தையும் நாம் அறியவேண்டிய அவசியம் இல்லை. ஆனல் அவர்கள் அங்கேபோய்ச் செய்யும் கருமங்கள் எமக்கு நன்மை தருகின்றனவா இல்லையா என்பதைச் சொல்ல எமக்குத் தெரியும். அதற்கு விசேட அறிவு எமக்கு வேண்டியதில்லை. உதாரணமாக: எமக்குச் செருப்புக்களோ, சப்பாத்துக்களோ ஆக்கத்தெரியாது என்பது உண்மை. ஆனல் செம்மான் செய்து எமக்குத் தரும் சப்பாத்துக்களும் செருப்புக்களும் எம் பாதங்களுக்கு அளவாக இருக்கின்றனவா இல்லையா என் பதைச் சொல்ல எம்மால் முடியும். இதனைச் சொல்வதற்குச் சப்பாத்துத் தொழிலில் நுணுக்கம் எமக்குத் தெரியவேண்டும் என்பதில்லை. இதுபோலவே, வாக்காளரும் சிக்கல் முக்கலான

சனதாயகம்-அதன் கருத்து 169
அரசியற் கொள்கைகளையும், பின்னலான அரசாங்கக் கருமங் களையும் நன்கறிந்துகொள்ளும் நிபுணராக இருக்கவேண்டும் என்பதில்லை. சனநாயக நோக்குடையவர்களை, அதாவது மற்றவர்களுடன் ஒத்துழைத்து எல்லார்தும் நன்மைக்காக அரசாங்கக் கருமங்களை நடாத்தவல்லுநர் என நாம் நம்பிக்கை கொள்ளுபவர்களை, எம் பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்ய அறிந்து கொண்டாற் போதும்.
தமக்கு வழங்கப்பட்டுள்ள தெரிவுரிமையைச் சரியாகப் பிரயோகிக்கத் தகுதியில்லாதவர்களுக்கு அவ்வுரிமையை வழங் கக்கூடாது என்றும் சிலர் கூறுவதை நீங்தள் கேள்விப்பட்டி ருப்பீர்கள். இதிலே தகுதி ' என்ருல் என்ன என்பதை இவர்கள் நிதார்த்தமாகக் குறிப்பிடுவது இல்லை. இலங்கை
மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சர்வசன வாக்குரிமையை, ஆட்சேபிப்பாரும் இருக்கிருர்கள். இவர்கள் கூறுவது இது தான் :- இங்குள்ள ஆண்களும் பெண்களும் வருணரீதியா
கவோ, மார்க்கரீதியாகவோ தம் வாக்குரிமையைச் செலுத்தி வருகிருர்கள். அதன் பயனக அவர்கள் சிறந்த, தகுதியான பிரதிநிதிகளைத் தெரிவதில்லை. யார் சிறந்த பிரதிநிதி, யார் தகுதியான பிரதிநிதி, என்பதை அப்பிரதிநிதியைத் தெரிவு செய்ய உரிமைபூண்ட மக்களால் அன்றி மற்றவர்களாற் கூறமுடியாது. தெரிவுரிமையைக் கொண்ட அம்மக்கள் தமக்கு எவர் சிறந்தவர் எனத் தோற்றுகிறரோ, அவர்க்கே ஆதரவு அளிக்கிருர்கள். வருணம், குலம், சமயம் என்ப வற்றை மாத்திரம் கொண்டு ஒர் பிரதிநிதியை மதிக்கக்கூடாது என்ற நிலைமை ஏற்படின் மக்கள் அவரது அரசியல் அபிப்பிராயத்தைக் கொண்டு ஆதரவளிப்பர். வருண சமய ரீதியில்தான் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டாலும் அவர் கள் எல்லா வருணத்தவர்க்கும் எல்லாச் சமயத்தவர்க்கும் எல்லாக் குலத்தவர்க்கும் உடன்பாடுள்ள தீர்மானங்களை ஒற்றுமையுடன் செய்வதற்கு வேண்டிய மனுேபாவம் உடைய வர்களாயிருப்பின் சனநாயக அரசாங்கம் செழிக்கவே செய்யும் ஆகவே வருண, சமயரீதியிற் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யச் சர்வசன வாக்குரிமை முறை தூண்டுகிறது என்றும் அதனுற் கெடுதி விளையும் என்றும் சாதிப்பது பிழை. ஏதும் பிழை காணப்படுமானல் அதற்குச் சர்வசன வாக்குரிமை முறை காரணமன்று; சனநாயகப்பழக்கங்கள் இங்கு நன்கு வேரூன் ருமையே காரணம். ஓர் வருணத்தவர் அல்லது சமயத்தவர், மற்றும் வருணத்தவர், சமயத்தவரை நசித்துவிடுவர் என்ப தற்கான பயத்துக்கும் சனநாயகப் பழக்கங்கள் வேரூன்ரு

Page 90
170 சனநாயகம்-அதன் கருத்து
மையே காரணம். ஒர் சபையிலே பல்வேறு வருண, சமயத்தவர் களின் பிரதிநிதிகள் இருக்கலாம்; ஆனல் அவர்கள் சனநாயக முறைகளை மேற்கொண்டு எல்லாரும் கூடிக் கலந்தாலோசித்து எல்லா மக்களுக்கும் நன்மை விளைக்கக்கூடிய கொள்கைகளை வகுக்கலாம். சர்வாங்கீகாரம் இல்லாவிட்டாலும் சிறுபான் மையினரை நசித்து ஒடுக்காது அவர்களுக்குப் பெரும்பான்மை யினர் மதிப்புக்கொடுக்கும் மனுேபாவமும் கொள்கையும் நன்கு வேரூன்றியிருக்குமேல் அப்பெரும்பான்மையினரே அரசியல் நிருவாகத்தை நடாத்துதல் முடியும். ஆகவே, இங்கே ஏதும் பிழை ஏற்பட்டால் அதற்குச் சர்வசன வாக் குரிமை வழங்கியது காரணமல்ல; வேற்றுமையில் ஒற்றுமை காணும், கலந்து பேசும், முறை இன்மையே காரணம் என்க. இதுவரை நாம் கூறியனவற்றைத் தொகுத்துக் கூறுதும்: சனநாயகம் ஒர் கருமமுறை. அக்கருமமுறை செவ்வனே இருப்பதற்குப் பின்வருவன வேண்டும்: (1) கலந்து பேசும் பழக்கம்-இது விதண்டாவாதமும் தர்க்கமுமன்று. (2) கலந்து பேசல் முலம் ஒற்றுமைக்கு வழி தேடவேண்டும் என்ற அவா. (3) சமரசம், இணக்க முறையை விரும்பும் உணர்ச்சி (4) சர்வாங்கீகாரம் இல்லாத இடத்தும் பெரும்பான்மையினர் சிறுபான்மையினரை நசுக்க எத்தனிக்காமை. (5) பெரும் பான்மையினரின் கருமங்களை எதிர்க்கவும் குணணம் கூறவும் உண்டான உரிமை அதிகாரத்தில் இருப்பவர்களின் கருமக் குணகுணங்களுக்கு எதிர்க்கட்சிதான் உரைகல். (6) தனக் குரிய பிரதிநிதியைச் சாதாரண மனிதன் தன் விருப்பப்படி தெரிவுசெய்யும் உரிமை. (7) இப்பிரதிநிதிகள் கட்சிகள் மூலம் ஒன்று சேரவேண்டும். அப்படிச் சேருவதால் அரசாங் கத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கொள்கைகள் உருவாகும். இக்கொள்கைகளில் எது ஏற்கப்படுகிறதோ அது நடைமுறை யில் வரும். (8) கருமங்கள் செவ்வனே, தாமதமின்றி நடை பெறுவதற்கு ஓர் சிலரைக்கொண்ட சபை ஒன்று தெரிவு செய்யப்படல் வேண்டும். வகுக்கப்பட்டு நடைமுறையில் வரும் திட்டங்களைப் பொதுசன நன்மையின் பொருட்டு அநு கூலமாக அநுட்டிக்கப்படுவதற்கு இச்சபை அப்பொது மக்க ளுக்குப் பொறுப்பாளியாக விருத்தல் வேண்டும்.
மேலே கூறிய சனநாயக இலக்கணங்கள் சிலவற்றைப் பின்வரும் சக்கரப்படத்தால் விளக்குதும்.
இப்படி எல்லாம் சனநாயகமுறையை விபரித்திருப்பதால் அம்முறையில் அரசாங்கம் நடைபெறும் நாடுகளிலே மக்கள் அனைவரும் சுபீட்சமாகத்தான் வாழுகின்றர்கள், அவர்களுக்

சனநாயகம்-அதன் கருத்து | 7 |
பிரதிநிதிகளை
கத்தினை
மக் கள் அரசாங்
N A
حماية ఇనాశ
"7,1616ן ש7
கெவ்விதமான குறைவும் இல்லை என்று நீங்கள் எண்ணவும் கூடும். இப்படி எண்ணுவதும் இயல்பே. ஆனல் எல்லாரும் சுபீட்சமாக வாழும் நிலை அந்நாடுகள் பலவற்றில் இல்லை. அரசியல் விடயமாகப் பார்க்குமிடத்து அங்கே மக்கள் எல்லா ரும் சமத்துவநிலையிற் சுதந்திரமுடையோராகத்தான் இருக்கி முர்கள். ஆனல் மற்றும் விடயங்களில் அவர்கள் நன்னிலையில் இல்லை. அரசியற் சனநாயகத்திலே அரசியல் அதிகாரம் மக்களிடமே உண்டு என்பது உண்மைதான். அவர்களே சனப்பிரதிநிதிகளைத் தெரிவுசெய்கிருர்கள். அப்படியாகத் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் தம்மைத் தெரிவு செய் யும் பொது சனங்களுக்குப் பொறுப்பாளிகள். ஆனல் அரசி யலில் மாத்திரமன் றிச் சகலவற்றிலும் சனநாயகக்கொள்கை வீசும் சமுதாயத்தில் அரசியலைப்போல பொருளாதார அதிகார மும் ஓர் சிலரின் அல்லது ஓர் சில வகுப்பினரின் பொறுப் பில் இராது பொது சனங்களிடமே பரிபூரணமாக இருத்தல்
வேண்டும். பொருள்களுற்பத்தி, மக்களால் மக்களுக்காக இருக்கவேண்டும் என்பது உண்மையான சனநாயக சித்தாந் தம். இதற்கு ஓர் சமூகமானது போட்டிக் கொள்கையை
ஆதாரமாகக் கொள்ளாது ஒத்துழைப்பு அல்லது கூட்டுறவுக் கொள்கையை ஆதாரமாகக்கொண்டு அமைக்கப்படல் வேண் டும். ஓர் சமூகத்தின் அங்கத்தவர்களால் நடாத்தப்படும் பொருளாதாரக் கருமங்கள்-அவை விவசாயமாயினுமாக, கைத்தொழிலாயினுமாக, வர்த்தகமாயினுமாக-தனி மனி தன், தனித்தாபனங்களின் இலாபத்துக்காகவன்றி, முழுச் சமூகத்தின் நன்மைக்காகவும் இலாபத்துக்காகவும் இருத்தல் வேண்டும். இன்றுள்ள எமது அரசியற் சனநாயகத்திலே பொருளாதாரச் சமத்துவம் எமக்கு இல்லாமையினலேயே

Page 91
72 சனநாயகம்-அதன் கருத்து
பலவிதமான இன்னல்களும் துயரங்களும் உள. ஓர் சமுதாயத் தில் உள்ள அங்கத்தவர்கள் வாக்குரிமை செலுத்தவும் அரசி யல் விவாதங்களிற் பங்குபற்றவும் சுயாதீனம் உடையராய் மாத்திரம் இருந்தாற் போதாது. உண்மையான சனநாயக அரசாங்கம் என்பது எல்லா மக்களினதும் நலவிருத்தியின் பொருட்டே இயங்குவது என்று கூறுவது மெய்யானுல் அது மக்கள் குறைவின்றி, சுகமாய் வாழ்வதற்கு வேண்டிய நிலை களை ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும் என்பது சொல்லாமலே போதரும். வேலையின்மையும் வறுமையும் மலிந்துள்ள இடங் களிலும், ஓர் சிலர் சுகசீவியம் நடாத்த மற்றும் பலர் அச் சீவியமின்றி வாழும் இடங்களிலும், சுக சீவியம் நடாத்துதற் கான நிலைமைகள் இவ்வதிட்டம் கெட்ட பல்லாயிரவர்க்கு மறுக்கப்படும் இடங்களிலும் இந்தச் சூழ் நிலைகள் இல்லை. ஓர் சமுதாயத்திலுள்ள ஒவ்வொரு தனிமனிதனும்தான் தன் தேசத்து அரசியற் பரிபாலனக் கருமங்களில் மாத்திரமன்றி அதன் பொருளாதார வாழ்க்கையிலும் பங்குடையான் என்ப தனை மனப்பூர்வமாக ஒர்ந்து, தான் ஒர் தொழிலாளியாக எத்துறையில்-அது விளைநிலத்திலாயினுமாக, தொழிற்சாலை யிலாயினுமாக, கந்தோரிலாயினுமாக,-தொண்டு ஆற்றின லும் தான் செய்யும் அத்தொண்டு ஒருவர் இருவருக்கல்ல, சமூகம் முழுவதுக்குமே பயன்தருவதாகும் என்று அவன் ஓர் வித பெருமித மனப்பான்மை கொள்ளத் தக்கவிதத்தில் அச் சமுதாயத்தின் பொருளாதார முறை மாற்றி அமைக்கப்படுமே யானுல் அதுவே அரசியல் பொருளாதார சம்பந்தமான எல்லா அதிகாரங்களையும் மக்களிடம் பூரணமாகப் பொறுப்பிக்கும் உண்மையான சனநாயகமாகும். இந்தக் கொள்கைப்படிக்குச் செல்வ உற்பத்திச் சாதனங்களாய பூமி, வனங்கள், சுரங்கங் கள், தொழிற்சாலைகள் என்னும் இன்னுேரன்னவையாவும் மக்களுக்கே சொந்தமானவை. ஆகவே சாதாரண மனிதன் இவை எல்லாம் என்னுடையவை’ என்ற பெருமிதத்துடன் தொண்டாற்றவும் அவற்றின் பொருட்டு வாழவும், சந்தர்ப் பம் நேர்ந்தால் யுத்த களத்தில் போரிட்டுத் தன் ஆருயிரையே தியாகம் செய்யவும் அவனைத் துரண்டும் ஒர் காரண சக்தி யிருக்கிறது. இவை எல்லாம் மற்றவர்களின் பொருள்கள்; இவற்றை விருத்திசெய்ய நான் ஏன்பாடுபடவேண்டும்’ என்ற மனப்பான்மை-கூலிக்கு மாரடிக்கும் மனப்பான்மை-அவனை விட்டகல அவன் அப்பொருளாதாரத்துறைகளிலே திரிகரண சுத்தியாக ஈடுபட்டுத் தொண்டாற்றுவான்; அப்போது அவன் எண்ணம் முழுவதும் ஒத்துழைப்பை நாடுமேயன்றி போட்டியை நாடாது. இவை எல்லா வற்றுக்கும் மேலாக, இப்படியான ஓர் சனநாயகத்திலே எல்லார்க்கும் தொழில்

சனநாயகம்-அதன் கருத்து 73
கிடைக்கும்; இவ்வித சனநாயகம் உருவாதற்கான உற்பாதங் கள் கடந்த இருபத்தைந்தாண்டு காலத்தில் இவ்வுலகில் தோன்றியிருக்கின்றன என்பதனை நீங்களும் அவதானித்திருப் பீர்கள். உற்பத்திச் சாதனங்களை ஓர் சிலர் மாத்திரம் வைத் துக்கொண்டிருக்கும் பொருளாதாரமுறையை மாற்றவேண்டு மானல் புரட்சியையே செய்யவேண்டும் என்று கூறிப்போந்த அறிஞரும் உளர். நிலங்கள், சுரங்கங்கள், தொழிற்சாலைகள் என்னும் இன்னேரன்னவற்றைத் தம் சொந்த மென வைத்துக் கொண்டிருக்கும் ஓர் சிலர் தாம் இதுவரை அநுபவித்துவந்த அதிகாரத்தையும் செல்வாக்கையும் சமாதானமுறையில் ஒரு போதும் கைவிடமாட்டார்கள்; கடைசிவரை போராடியே அவர்கள் தம் அதிகாரத்தையும் செல்வாக்கையும் கைவிடுவர் என்று இந்த அறிஞர் கூறுவர். உதாரணத்துக்கு ருஷியாவை யும் இவர்கள் எடுத்துக்காட்டுவர். அங்கே சக்கரவர்த்திகள் அரசு புரிந்த காலத்திலே பிற்போக்கும் சுயநலமும் உடைய செல்வர்கள் இருந்து தம் அக்கிரமத்தைப் புரிந்தமையினலேயே ஒர் புரட்சி இன்றியமையாது ஏற்பட்டது என்றும், அப்புரட்சி யின் பயனகச் செல்வம் யாவும் பொதுசனங்களுக்குச் சொந்த மாகும் விதத்தில் பொருளாதாரமுறை மாற்றியமைக்கப்பட்ட தென்றும் இவர்கள் தெருட்டுவர். ஆனல் தேசத்துச் செல் வத்தை-உற்பத்திச் சாதனங்களை-புரட்சி இன்றியே தேசீய மயமாக்கலாம், பொதுச் சொத்தாக்கலாம் என்று கூறும் இன் னேர் பகுதி அறிஞரும் உளர். புரட்சியின்றித் தேசத்துச் செல்வத்தில் மக்களுக்குக் கூடிய அதிகாரம் கொடுக்கப் பொரு ளாதார முறையில் மாற்றம் இங்கிலாந்தில் நடைபெற்று வருவதை நாம் அறிந்துவருகிருேம். நிலக்கரிச் சுரங்கங்களைத் தேசீய மயமாக்குதற்கு இங்கிலாந்தில் தொழிற் கட்சி அரசாங் கம் ஓர் மசோதாவை நிறைவேற்றியிருக்கிறது. உருக்குத் தொழிலையும் இவ்வாறு தேசீய மயமாக்க ஒர் மசோதா உருவா கியிருக்கிறது என்று இங்கிலாந்தில் இற்றைக்குச் சில காலத்துக்கு முன் அதிகாரத்தில் இருந்த தொழிற் கட்சி யரசாங்கம் பகிரங்கப்படுத்தினது.
பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றமுறையானது அம் மாற்றத்தை விழையும் ஒவ்வோர் சமூகத்தினதும் அரசியல், பொருளாதார நிலைகளிற்மு ன் அதிகம் தங்கியிருக்கிறது. கொமியூனித்தர் புரட்சி முறையே சிறந்தது என்பர். இங்கிலாந்தி லேயுள்ள தொழிற் கட்சியினர் போன்ற சமதர்மிகள்? புரட்சி ஆகாது, படிப்படியான மாற்றமே சிறந்த தென்பர்
E. Communists. 2. Socialists.

Page 92
I 74 சனநாயகம்-அதன் கருத்து
சர்வாதிகார அரசாங்கங்கள்
முதலாவது உலக மகா யுத்தம் முடிந்த காலம் முதல் இரண் டாவது உலக மாகயுத்தம் ஆரம்பித்த காலம் ஈரு கவுள்ள காலத்திலே, உலகத்தின் பல நாடுகளிலே மகத்தான அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன. அக்காலத்திலே சனநாயகமுறை மறையச் சர்வ்ாதிகாரமுறை தலையெடுத்தது. ஜெர்மனி, இற்றலி, யப்பான், ருஷியா என்னும் நாடுகளிலும் ஏண்ைய சில நாடுகளிலும் சனநாயக அரசாங்கம் திறமையற்றுப் பயன் கொடுக்கத் தவறியது. திறமையும் தகுதியுமற்ற அரசாங்கங்களினல் மக்களுக்கு ஆம் பயன் இல்லை. ஆகவே பல்வேறு காரணங்களினல் மேலே கூறிய நாடுகளிற் சனநாயக முறை தகுதியற்றுத் திறமையற்றுப்போக, சுயநலமிகள் தோன்றி அரசியல் முறை என்ற ரீதியில் சனநாயகம் உத வாது, பயன் றராது என்று பிரசாரம் செய்தனர். இவர்களின் பிரசாரம் உண்மையை ஆதாரமாகக் கொள்ளவில்லை. சனநா யகம் உதவாத முறையன்று. ஆனல் அது அநுகூலமாக நடை முறையில் இருப்பதற்கு வேண்டிய நிலைமைகள் ஜெர்மனி, யப்பான், இற்றலி என்னும் நாடுகளில் இருக்கவேயில்லை. இதனல்தான் அந்நாடுகளிற் சனநாயகமுறை பயன் அளிக்க வில்லை.
முதலாவது உலக மகா யுத்தத்தில் தோல்வியடைந்த தேசத்தினர் பலவித இன்னல்களுக்காளாயினர். அவர்கள் தங்களுக்கு நேர்ந்த இன்னல்களிலிருந்து மீள்வதற்கு, அக் காலந்தோன்றிய வியாபார வீழ்ச்சி தடையாக இருந்தது. அதன் பயனக அவர்கள் செய்வதின்னதென்றறியாது தயங்கி னர். இந்த நிலைமையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திச் செல்வாக்கும் அதிகாரமும் படைக்கக் கங்கணம் கட்டினர் சுயநலமிகளான ஓர் சில அரசியல்வாதிகள். வலியிழந்து, பொலிவிழந்து, பஞ்சத்தால் வாடிப் பசியால் நலிந்து, மதியு மிழந்திருந்த மக்களுக்கு ஏதோ திறமையுற்ற, சக்தியுற்ற, தகுதியானதெனச் சொல்லப்படும் அரசாங்கத்தை யமைக்க வேண்டும், அதன் மூலமாகவே அவர்கள் சுபீட்சம் அடைய லாம் என்று இவ்வரசியல்வாதிகள் பிரசாரம் செய்து, தாம் கருத்திற்கொண்ட அரசாங்கங்களை அமைத்து அதிகாரத் தையும் செல்வாக்கையுந் தாமே கைப்பற்றிக்கொண்டனர். இற்றலியிலும் ஜெர்மனியிலும் புதிதாகத்தோன்றிய அரசாங் கங்கள் திறமையுற்றனவாகத்தான் இருந்தன. ஆனல் அத் திறமை எதில்? அதிதீவிரமாகக் கருமங்கள் ஆற்றுவதிலும் பொதுசனங்களின் மனக்கிளர்ச்சியைத் துரண்டிவிடுவதிலும் திறமை காட்டின. இப்புதிய அரசாங்கங்களின் தலைவர்கள் சுவாதீன நிலைமையில் உள்ள சனங்களின் சம்மதத்தைக்

சனநாயகம்-அதன் கருத்து I 75
கொண்டு அதிகாரத்தின் உச்சியை அடையவில்லை. தோல்வி, துன்பம், அவமானம், வறுமை என்பவற்ருல் தம் நிலையிழந்த மக்கள், "செல்வம் பெருமை அதிகாரம் என்பவற்றை மீட்டுத் தந்து உங்களைத் தொன்மைபோலாக்குவோம்’ என்று பரக்கப் பிரசாரம் செய்த சுயநலமிகளுக்கு வாக்குச் சம்மதமளித்து அவர்களைத் தெரிந்தனர். இவ்வாருகவே, புதிய, சக்தி வாய்ந்த அரசாங்கங்கள் அதிதந்திர சாலிகளான மனிதர்களா லும் நன்கு அமைக்கப்பட்ட கட்சிகளாலும் சிருட்டிசெய்யப் பட்டன.
அரசியலை எவ்வாறு நடாத்துவது என்பதுபற்றிய புராதன காலத்து இந்திய நூல் ஒன்று விளக்கமாகக் கூறுகிறது. அந் நூலின் பெயர் அர்த்த சாத்திரம்: அரசாங்கத்தின் லட்சியம் அதிகாரமே. அவ்வதிகாரம் முழுவதும் அரசனுக்கே உரியது. அவன் தனக்கு வேண்டிய இராச்சியத்தைப் போர் செய்து பிடித்துக்கொள்ளலாம். அவசியம் நேர்ந்தால் கொடுங் கோன்மை புரிந்து அதனை வைத்துக்கொள்ளலாம். மற்றும் அரசர்களுடன் போர் செய்து அவன் தனது இராச்சியத்தைப் பெருப்பிக்கலாம்: கடைசியில் இராச்சியத்தாற் கிடைக்கும் செல்வத்தையும் அதிகாரத்தையும் அவன் அநுபவிக்கவேண் டும். ஓரிராச்சியத்தை அவன் பெறுதற்குச் சாம பேத தானr தண்டம் என்னும் சதுர்வித உபாயத்தையும் அவன் கைக்* கொள்ளலாம். (உதாரணமாக, போரிற் பகைவனை வெற்றி கொண்டு அவனது இராச்சியத்தைக் கைப்பற்றலாம்; அல்லது சமாதான முறையிற் பெற்றுக்கொள்ளலாம்; அல்லது நடுவு நிலைமை வகித்துத் தந்திரத்தாற் பெறலாம்; இல்லையேல் நட்புப்பூண்டு பெறலாம். உள்ளொன்று வைத்துப் புறம் மொன்று காட்டி வஞ்சிக்கலாம். உடன்படிக்கைகள் எழுதிப் பின் ஏமாற்றிவிட்டு இராச்சியத்தை யபகரிக்கலாம். சமா தானம் உண்டாக்கிவிட்டு அதனைப்பின் புறக்கணிப்பதால் நாடு பெறலாம். "எவன் அதிகாரத்தில் உயர்ச்சி அடைகி முனே அவன், தான் சமாதான காலத்திற் செய்த உடன்படிக் கையைக் கிழித்தெறியலாம்’ நேர்மையைக் கடைப்பிடிக்கும் அரசியல்வாதி அற்பன்' ' கட்டிய மனைவியை, பெற்ற பிள்ளை யைத் தானும் நம்பக்கூடாது'; 'நண்டுகள் எவ்வாறு தம்மை உற்பவித்த தாய் நண்டுகளைக் கருவழிக்குமோ அவ்வாறே இவ்வரசர்களும் தம் பெற்றே ரைக் கொல்வது மரபே 'பால் தரும் பசுவைப்போலச் சனங்களை மதித்து அவர்களைப் பேண வேண்டும்". மேலே சொல்லிய அர்த்த சாத்திரத்திற் காணப் படும் அரச இலக்கணங்களே இவை
உலகாயுத-அதாவது சத்தியம், நீதி என்பவற்றைப் புறக்கணிக்கும்-அரசாங்கத்தின் தன்மைகளை விளக்குவனவே

Page 93
176 சனநாயகம்-அதன் கருத்து
மேலே காட்டியுள்ளன. அப்படியான ஓர் அரசாங்கம் நல் லொழுக்கங்களுக்கு விதிவிலக்கு நல்லொழுக்கங்களை இராச்சி யத்தில் உள்ளார் பின்பற்றவேண்டுமன்றி அதன் அதிகாரி பின்பற்றவேண்டியதில்லை. ‘ஓர் முயற்சி சரியானதா, நீதி யானதா, அல்லது பிழையானதா என்பதை இப்பூமியிற் காட்டும் சக்தி அதன் சித்தியேயாகும்." என்று கூறினர் ஹிட்லர். மேலே காட்டிய இலக்கணங்களைக் கொண்ட ஒர் அரசாங்கம் ஐரோப்பாவில் உருவானது. குறித்த சில் விலட்சி யங்களை அடைவதன்பொருட்டு மக்கள் சங்கமாகச் சேர்ந்த அரசாங்கமல்ல அது. ஆகவே அது சமுதாயத்தின் ஓர் அங்க மாக, பகுதியாக இருக்கவில்லை. அது சகல மக்களுக்கும் மேற்பட்டதாய் அவர்களது சகல அம்சங்களையும் கட்டுப் படுத்தித் தானே மேற்பார்வை செய்தது. மனித சமுதாயம் என்பது அரசாங்கத்தில் அடங்கியதாக இருந்ததேயன்றி அரசாங்கம் சமுதாயத்தில் ஒர் அம்சமாக அடங்கவில்லை. ஆகவே அங்கே தனிமனிதனுக்கென வாழ்க்கை இல்லை. அவன் தான் தகுதியெனக் காணும் விதத்திற்றன் வாழ்வை நடத்த முடியாது. தான் சரியெனக் கொள்வதில் நம்பிக்கைகொள்ள முடியாது. அரசாங்கமென்ற தாபனம் எது தகுதியென்று கருதி எது சரியென விதிக்கிறதோ அதனையே மக்கள் கொள்ள வேண்டும். எனவே, எவனெருவன் அரசாங்கத்தின் கட்டளை களுக்கு முற்ருக, திரிகரண சுத்தியுடன், பணிந்து தனது சுய அறிவையும் அபிப்பிராயங்களையும் அர்ப்பணம் செய்கிருனே அவனே சிறந்த பிரசை எனக் கணிக்கப்படுவான். ஒருவன் தானுக வியங்கமுடியாது. அப்படி இயங்கலாம் என்பது பொய்; உயிரிலே உயிரணுக்கள் எவ்வாறு பிரியாதுள்ளனவோ சதையிலே நகம் எவ்வாறு பிரியாதுள்ளதோ, அவ்வாறே தனி மனிதரும் அரசாங்கத்திற் பிரியாது இருப்பர். தனி மனிதர்களைப் பிரித்துவிட்டால் அவர்களுக்கு இயங்குந்தன்மை கிடையாது. உயிரணுக்கள் தேகத்தைச் சுறுசுறுப்புடனும் சு கத்துடனும் வைத்து அதனை இயக்க உதவும். ஆனல் அவ்வணுக்களைப் பிரித்துவிட்டால் அவை தாமாக இயங்குமா? இல்லை. இதேபோலத்தான் தனி மனிதரும் அரசாங்கத்தை இயக்கவேண்டும். அவர்கள் தனித்தியங்க முடியாது, மேலே கூறியனவே சர்வாதிகாரமுறையின் கொள்கை.
அரசாங்கம் அமைக்கும் வழியிலேதான் தனி மனிதன் இயங்க வேண்டும் என்பது சர்வாதிகார அரசியற் சித்தாந் தம். இப்படியாகச் சர்வ/அதிகாரமும் பராக்கிரமமும் படைத் துள்ள அரசாங்கம் எது? அதன் தன்மை என்ன? அவ்வரசாங் கம் யார்? என்று கேட்டால், சர்வாதிகாரமுறையை விதந்து

சனநாயகம்-அதன் கருத்து 77
கூறுவோர், அதற்காக வாதிப்போர் சாதாரண மக்கள் புரிந்து கொள்ளாத ஒரு பாணியிற் பதில் கூறுவர். இற்றலியச் சர்வாதிகாரியாக இருந்த முசோலினி சர்வாதிகார அரசாங் கத்தைப்பற்றிப் பின்வரும் கருத்துப்பட வர்ணித்தார்:-
மனித சமுதாயத்தின் அதிசக்திவாய்ந்த திரட்சிய்ே அரசாங்கம்; அது வெறும் சக்திமட்டுமல்ல; ம்னிதனின் ஒழுக்க வாழ்க்கையிலும் ஆன்மீக வாழ்க்கையிலும் உள்ள சகல சக்திகளையும் தன்னகத்தே கொள்ளும் அதியுந்நத ஆத்ம் சக்தியாகும். ஆகவே, இந்த அரசாங்கமானது வெறும் ஒழுங்கையும் அமைதியையும் நிலைநாட்டுவதுடனும் அந்நிலை நாட்டற் கருமத்தை மேற்பார்வை செய்வதுடனும் நின்றுவிட முடியாது. தனி மனிதனுக்கு ஏதோ சுதந்திரமுண்டாம் . அச்சுதந்திர வீட்சண்யத்தின் எல்லையைக் கட்டுப்படுத்தும் யந்திரமுமல்ல அரசாங்கம்: அது மனிதனின் கட்டுப்பாடு, ஒழுங்கு என்பவற்றின் சொரூபம்; அது மனிதனின் கட்டுப் பாட்டையும் ஒழுங்கையும் காட்டும் சூக்குமார்த்த அளவு கோல்; அது மனிதனின் சித்தம், புத்தி என்பவற்றில் வியா பித்து அவற்றைத் திளைக்கச்செய்வது. அன்ரு டச் சீவியத்தை மாமூல் பிரகாரம் நடாத்தும் சமூகத்திலே மனிதத் தன்மையை ஊக்கி வளர்ப்பதுவே அதன் தத்துவம்; இத்தத்துவம் நன்கு ஊடுருவிப்பாய்ந்து கர்ம வீரனின் இருதயத்திலும், ஞானியின் இருதயத்திலும்,சித்திரக்கலைஞனின் இருதயத்திலும்,விஞ்ஞானி யின் இருதயத்திலும் குடிகொள்ளுகிறது. அது உயிருக்குயிர்; அரசாங்கம்தான் சர்வாதிகாரி, தனிமனிதர் அவ்வரசாங்கத் துக்குத் துணைவர்; அரசாங்கத்துக் கடங்கியிருக்கும் வரையில் தனி மனிதர் கணிக்கப்படுவர். மக்களின் அகப்பாதுகாப் பிற்கும் புறப்பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் அளிக்கும் சாதன மாக மட்டும் அரசாங்கம் இருக்கவில்லை. மக்களின் உணர்ச்சி பாவத்தைப் பாதுகாக்கும் சாதனமாயும் அதனை உருவாக்கி வெளியாக்கும் உபகரணமாயும் அது விளங்குகிறது. அரசாங் கம் என்பது இன்றைக்கு மாத்திரம் உள்ள சாதனமல்ல. அது சென்ற கால மாட்சியையும் எதிர்கால விருத்திகளையும் தன்னகத்தே கொண்டதாக விருக்கிறது. அது தனிமனிதனின் அற்பா யுள் எல்லைக்கு அதீதப்பட்டதாய், ஓர் தேசீய இனத்துக் கியல் பாயுள்ள சக்தியைப் பிரதிபலிக்கும்’.
முசோலினியின் கூற்றில் உள்ள படா டோபப்பதங்களை நீக்கி விட்டு உண்மையை நோக்குவோமானுல் ஒன்றேயொன்று புலப்படும். அதென்னவெனில், இப்படியான சர்வாதிகார அரசாங்கத்தின் கருமம், குறித்த சிலர் கூட்டாகச்சேர்ந்து சொல்வதைச் செய்வதே என்க. சில இலட்சியங்களைக்

Page 94
፲ 78 சனநாயகம்-அதன் கருத்து
கொண்ட ஒர் கட்சி, அதிகாரத்தைக் கைப்பற்றி அரசாங்கம் என்னும் இயந்திரத்தை இயக்கும். இதுதான் சர்வாதிகாரத்து வத்தின் வெளிப்படையான கருத்து.
அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள அரசாங்கம் மனித சமுதாயத்தைக் கட்டுப்படுத்த அவ்வதிகாரத்தை உபயோகிக் கிறது. ஆலயம், வீடு, குடும்பம், சங்கம், பாடசாலை, தொழிற் சாலை, பத்திரிகை, ரேடியோ என்னும் இன்னேரன்னவற்றை எல்லாம் ஆக்கிரமித்து முழுச்சமுதாய வாழ்க்கையையும் கட்டுப்படுத்த அது முனைகிறது. பாசித்த (இற்றலியச் சர்வா காரமுறை பாசித்தம் எனப்படும்) அரசாங்கம் ‘ஓர் பிள்ளை யைத் தொட்டிலில் இருந்து எடுத்துக்கொண்டுபோய் அவன் அறுபது வயதான பொழுதே அவனை வீட்டுக்குத்திருப்பி விடும்’ என்று முசோலினி கூறியமையும் ஈண்டுநோக்கற் பாலது. ஒர் பிள்ளையை வளர்த்து அவனைக் கொண்டு வேலை செய்வித்து, அவனுல் இனிப்பயன் பெற முடியாது என்று கண்ட முதியவயதிலேயே அவனைத்திருப்பிவிடும். அரசாங் கத்தை நடாத்தும் கட்சியின் கொள்கைகளுக்கும் நம்பிக்கை களுக்கும் ஏற்றவாறு பிரசைகளை அமைக்கும் வேலை, ஒரு வனின் பிள்ளைப்பருவத்திலேயே ஆரம்பமாகிவிடுகிறது. கட்சி விரும்பியபடிதான் அப்பிள்ளைக்குப் பயிற்சி அளிக்கப்படும். அப்பிள்ளையின் திறமை என்ன? தகுதி என்ன? அதற்கு எவ்வித கல்வியூட்டப்படல் வேண்டும்? எவ்விதமான பயிற்சி அளிக்கப் படல் வேண்டும்? என்பவற்றைக் கட்சி சிந்திப்பதில்லை. தான் நினைத்த படிசெய்யும். இப்படியாக மக்களை உருவாக்கும் வேலை இடையீடின்றி நடக்கும். ஒருவன் வாலிபனகியவுடன் ருனும் இவ்வுருவாக்கும் வேலை ஒழியாது. அவனது ஆயுள் முழுவதும் இப்பயிற்சி வேலை நடந்துகொண்டேயிருக்கும். தொழிற்சாலையில், விவசாய நிலத்தில், வயலில், தோட்டத்தில் அரசாங்கக் கட்டுப்பாடும் மேற்பார்வையும் ஓர் சிறிதாவது தளராது இருக்கும். உழைப்பு நேரத்துக்குப் பிறகு தானும் ஒரு மனிதனுக்குச் சுதந்திரம் உண்டா? அவன் அரசாங்க கட்டுப் பாடுகளிலிருந்து. காவலிலிருந்து தப்பி தன் காணிக்குள், வீட்டுக்குள் நிம்மதியாயிருக்கத்தானும் சுதந்திரம் உண்டா? இல்லை. அரசாங்கத்தால் அமைக்கப்பட்டு அரசாங்கத்தாற் கட்டுப்படுத்தப்பட்டுள்ள சங்கங்களுக்கும் சபைகளுக்கும் அவன் தன் வேலை நேரத்துக்குப்பின் போகவேண்டும். இச் சங்கங்களுக்கும் நிலையங்களுக்கும் அவர்கள் கொடுத்துள்ள பெயர்களோ மிக அழகானவை, விசித்திரமானவை. கட்டக் கரிம ணியில்லாதவளுக்கு முத்துமாலை' என்ற பெயர் சூட்டப் பட்டதுபோல ஆநந்தம் மூலம் வேலைநிலையம்’, ‘ரம்மியம்
l. Fascist Government.

சனநாயகம்-அதன் கருத்து 179
மூலம் பலம்தரு சங்கம்' என்ற பெயர்களினல் அவை இயங்குகின்றன! ஒய்வுநேரங்களைக் கட்டுப்படுத்தும் இந்நிலை யங்களுக்கு இட்டுள்ள பெயர்கள் இவை! இதுவரை கூறியன வற்றைத் தொகுத்துக் கூறுங்கால் ஒருவனது வாழ்க்கை அவனது சொந்தக் கருமமன்று. அது அரசாங்கத்தினது கருமம் என்பது சர்வாதிகாரக் கொள்கை.
சர்வாதிகார நாடுகளில் உள்ளார், சர்வாதிகாரியின் கட்டளை பிறந்ததும் கடுகிப்பணிகள் செய்வர். இந்த அளவில் இங்கே கட்டுப்பாட்டுமுறை உண்டு என்று சொல்லலாம். ஆனல் கட்டுப்பாடு என்பது ஒருவன் தனக்குத்தான் விதித்துக் கொள்ள வேண்டும். அதுவே உண்மையான அடக்கமும் கட்டுப்பாடும். இந்த முறை சர்வாதிகார நாடுகளில் இல்லை. அதிகார பீடத்தில் உள்ளவர்கள் காலா லிடுவதைத் தலையாற் சுமந்து செய்வதுதான் இங்கே கட்டுப்பாடும் அடக்கமும் என்பது. இப்படியான கட்டுப்பாட்டுக்குள் அடங்கியிருப் போர் தம் தலைவன் எதனைச் சொல்லுகிருனே அதற்கு எதிருத் தரம் இன்றி அவன் கட்டளைக்கிணங்கி அவனைப் பின்தொடர் வர். இன்னும், அந்நாடுகளில் ஒருவன் ஓர் கூட்டத்தில், தானும் ஒருவனுக நின்று கட்டுப்பாட்டுடன் நல்ல வேலை செய்ய லாம். அவன் தனி மனிதன் என்ற தன்மையில் அவ்வேலையைச் செய்யான். ஏன்? அவனுக்கிருந்த தன்னறிவும் தன்னுணர்ச்சி யும் அரசாங்கம் கொடுத்துவந்த பயிற்சியினல் அழிந்து விடுகிறது. தன் இச்சை ஒழிந்து தன் பலம் கெட்டு தன் அறிவு இல்லாத மக்களைக்கொண்டு ஆளும் சர்வாதிகாரி தீவிரத்திற் கருமங்களை ஆற்றமுடியும். எதிர்ப்புத்தோன்றி ஞல் அதனைச் சீக்கிரத்தில் அடக்கவும், தனக்கு எது சிறந்த முறை எனத்தோன்றுகிறதோ அம்முறையில் அவன் பரிபால னம் செய்யவும் சுலபமாகிறது. அம் மக்களை யுத்த சந்நத் தராக்கி, அவர்களைப் போருக்கு இட்டுச் செல்வதும் சர்வாதி காரிக்குச் சுலபமான வேலை. கட்டுப்பாடும் பணிவும் உள்ள மக்கட் கூட்டம் தலைவன் விதிப்பதைச் செய்யுமேயன்றி 'இது
ஏன் இப்படி!' என்று நினைக்கமாட்டாது. *சர்வாதிகார அரசாங்கம் யுத்த தளபாடங்களையும் ஆயுதங்களையும் தயா ராக வைத்துக்கொண்டுள்ள அரசாங்கம் அன்று. யுத்த
முறையிலேயே தன் கருமங்கள் சகலவற்றையும் நடாத்தும் அரசாங்கம்’ என்னும் கருத்துப்பட முசோலினி ஒரு முறை கூறினர். இவ்வரசாங்கங்கள் சமாதான கால வேலைகளைத் தானும் யுத்த முறைப்படி செய்யும். இவை பலர் ஒன்ரு கச் சேர்ந்து செய்யும் கூட்டுக்கருமங்களையே விரும்பும். பலர் ஒன்று சேர்ந்து கூட்டாகக் கருமம் ஆற்றும்போது பார்ப்போ

Page 95
80 சனநாயகம்-அதன் கருத்து
ருக்குப் பரவசமளிக்கும். பார்ப்பவன், “ஆகா, எவ்வளவு சனக்கூட்டம்! அதன் ஐக்கியம் என்ன! ஒற்றுமை என்ன! திண்மை என்ன! இவர்களோடு நான் யார்! ஒர் அற்பன் தானே நான்!” என்ற ஓர் மனப்பான்மையைக் கொள்ளுகிருன். சர்வாதிகார நாடுகளிலே தொழிலாளர் தம் வேலைத்தலத் துக்குப்போகும் போது யுத்தபேரிகை முழங்க அணிவகுத்துச் செல்லுவர். சாதாரணமான எந்த வேலைக்கும் இராணுவப் பெயர்களையே குட்டுவர். வயலில் வேலை செய்வதை ‘விவ சாயமுன்னணிப் போராட்டம்’ என்பர். வயல்களில் அரிவி வெட்டுதல், அறுவடை சேர்த்தல், சேறு அள்ளுதல், விருந் துண்ணல், விடுமுறை கொண்டாடல் என்பன தானும் யுத்த முறையில் வகுக்கப்பட்டிருக்கும். மக்கள் சஞ்சரிப்பதும், கேளிக்கை செய்வதும், களியாட்டயவர்வதும் இராணுவ சங்கீத சகிதமாகவே. எல்லாக்கருமங்களுக்கும் குறிக்கப்பட்ட நேரமும் அளவும் உண்டு. இப்படிப்பட்ட சமுதாயத்திலேயே தனி மனிதனின் ஆன்மபலமும் சரீர பலமும் கிள்ளுக்கீரை போல மதிக்கப்படும். இரக்கம், தயை, தாட்சண்யம் என்பன மருந்துக்கும் கிடையா. ஜெர்மனிய நாசிக்கட்சியினரின் பகைமையைத் தேடிக்கொண்ட மல்லர் என்னும் ஜெர்மன் மேற்றிராணியார், "இரக்கம் என்பது ஜெர்மனியருக்கு அந் நியமான ஓர் கொள்கை எனக்கருதப்படுகிறது’. என்ருர், யுத்தப்பயிற்சியினையே சகலவற்றுக்கும் அளிக்கும் அரசாங்கம், ஈவிரக்க மற்ற வன்னெஞ்சனன, ஆனல் அதிதிறமை வாய்ந்த இராணுவ வீரனை உண்டாக்கும். ஆனல் அவனின் கெட்டித் தனமும் திறமையும் தன் கூட்டத்தில் இருக்கும்போதுதான். கூட்டத்தினின்றும் புறப்பட்டு வெளியேவந்தால், தனி மனி தன் என்ற தன்மையில் மேலே காட்டிய குணங்கள் அத்தனையும் அவனிடம் இருக்குமா என்பது சந்தேகம். கூட்டத்தில் இருக்கும்போது அவனை நாம் நம்பலாம். ஆனல் தனியாக இருக்கையில், தனி மனிதன் என்ற நியதியில், அவனை எப் போதும் நம்பமுடியாது. இத்தகைய பிரசைகள் தம் தலைவன் பால் வைத்துள்ள மூடபக்தியும், திடவைராக்கியமும் கீழ்ப் படிவுத் தன்மையும், எமக்கு அசாத்தியம் போலத்தோன்றும் கருமங்களை அவர்கள் செய்யத் தூண்டும். நாம் நினைக்கவும் முடியாத கருமங்களைச் செய்யவும் அவர்கள் பின்னிற் கார்,
ஓர் தலைவனிலும் அவன்கட்சியிலும் அடங்கியுள்ள அரசாங் கத்தை வணங்குவதால் விளையும் பயன் யுத்தம்தான். இத் தகைய அரசாங்கங்களுக்குச் சமாதானம் என்பது யுத்த வெற்றியினுற் பிறக்கவேண்டும். ஒர் உந்நத சீர்திருத்த வளர்ச்சியின் பொருட்டு உலகத்தை வெற்றிகொண்டு அதனைக்

சனநாயகம்-அதன் கருத்து I 81
கைப்பற்றி ஆளும் சக்திவாய்ந்த மக்களது வெற்றிவாளில் தான் சமாதானம் த ங் கி யி ரு க் கி றது என்பதுதான் சர்வாதிகார முறையினரின் சித்தாந்தம். வாழ்க்கையின் நோக்கமுமிலட்சியமும் போராட்டமே. ‘முடிவற்ற யுத்தங் களிஞல் மநுக்குலம் உந்நத நிலையை அடையும்; முடிவுறும் சமாதானத்தால் அம் மநுக்குலம் உழுத்துவிடும்'. என்பது சர்வாதிகாரிகளின் கொள்கை.
நாம் இதுவரை கூறியதிலிருந்து சனநாயக அரசாங்கத்துக் கும் சர்வாதிகார அரசாங்கத்துக்கு மிடையேயுள்ள வேற் மைகளைத் தொகுத்துக் கூறுவாம்:-(முதலாவது, சனநாயகத் திலே அரசாங்கம் என்பது சமுதாய்த்தின் அங்கமே யாகும். ஒழுங்கையும் அமைதியையும் நிலைநாட்டல் என்பதுபோன்ற குறித்த சில இலட்சியங்களின் பொருட்டு ஏற்பட்ட மக்கட் சங்கமே அது. இந்த விலட்சியங்களைவிட வேறு மிலட்சியங் களை அடையவேறு சங்கங்கள் உண்டு. கல்வி வளர்ச்சி, சங் கீதவிருத்தி, நுண்கலை அபிவிருத்தி என்னும் இன்ருே ரன்னவற் றுக்கு வேறுவேரு ன சங்கங்கள் உள. இச்சங்கங்களுக்கு மேற் பட்டதன்று அரசாங்கம் : ஆகவே அது அவற்றை உருவாக் கவும் தனது எண்ணப்படி விருத்தியாக்கவும் முயற்சி செய்வ தில்லை. இரண்டாவது, ஒவ்வொரு தனி மனிதனும் தான் தான் தனக்குச் சிறந்ததெனக்கொள்வதை அப்படியே கொள்ளுதற் குச் சுவாதீனமுடையவனக இருக்கிறன். ஆனல் அவன் தனக் குள்ள உரித்துக்கள் மற்றவர்களுக்குப் பங்கம் விளைக்காத தன்மையில் அவற்றை அமைத்துக்கொள்ளவேண்டும். உரித் துக்களிற் போட்டி ஏற்பட்டால் அதனைச் சமரச மனே பாவத் தாலும், கலந்து பேசுவதனலும், இணக்கமுறையாலும் சமா தானமாகத் தீர்த்துக்கொள்ளலாம். ஈற்றில், ஒவ்வொரு தனி மனிதனும் அபிவிருத்தியடைதற்குச் சிறந்த ஏதுக்களையும் சூழ் நிலைகளையும் அமைத்துக்கொடுப்பதும் சனநாயக அரசாங் கத்தின் கருமமாகும்.
ஆனல் சர்வாதிகார அரசாங்கம் மனித சமுதாயத்தின் சங்கமன்று. அது மனித சமுதாயத்தின் அங்கமுமல்ல என்று சந்தேக விபரீதமறத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அது மனித சக்திக்கு அப்பாற்பட்டு தனது அங்கத்தவர்களின் வாழ்வை உருவாக்குவதன் பயனக மனித வாழ்க்கையையும் மனித இயக்கங்களையும் பரிபூரணமாகத் தானே கட்டுப்படுத்தும் தனிப் பெரும் சக்தியாகும். ஆகவே ஓர் சர்வாதிகார நாட்டை மற்றும் நாடுகளிலிருந்தும் வேருகக் காட்டுவது அதன் அரசியன் முறையன்று. சனநாயகத்துடன் தொடர் புள்ள எல்லா விதமான அரசியன் முறைகளும் ஓர் சர்வாதி

Page 96
182 சனநாயகம்-அதன் கருத்து
கார நாட்டில் இருக்கலாம். அங்கே வாக்காளர், கட்சிமுறை, (சர்வாதிகார நாடுகளில் ஒரே கட்சிதான் இருக்கும்), பாராளு மன்றம், அமைச்சர் சபை என்பனவும் இருக்கும். சனநாயகத் தின் வெளித்தோற்றம் சர்வாதிகார நாடுகளிலே இருக்கின் றது. ஆனல் இத்தோற்றவுருவுக்குள்ளே சனநாயக உணர்ச்சி மருந்துக்குமில்லை. வாக்காளர்களை அரசாங்கமே கட்டுப் படுத் தி அவர்களைத் தன் கைப்பொம்மையாக்குகிறது. அர சாங்கம் ஒரே கட்சித் தொடர்பானது. வேறு கட்சிகள் கிடையா. ஆகவே பாராளுமன்றத்தில் விவாதமும் இல்லை; கலந்தாலோசித்தலும் இல்லை. அங்குள்ள 'அங்கத்தவர்கள்’, அரசாங்கம் எதனைத்தான் செய்யப்போகிறது எனக் கூறு கிறதோ அதனைப் பொம்மைகள் போலச் செவிமடுப்பர். அங்கே சனங்களுக்குப் பொறுப்பாயுள்ள அமைச்சர் சபை கிடையாது. அதற்குப்பதிலாக "மர்மமான’, ‘தை வீகமான” அரசாங்கத்தின் சின்னமாகவும் கருவியாகவும் தம்மை அமைத் துக்கொண்ட தலைவனும் அவன் கூட்டாளிகளும் இருப்பர். பூர்வ காலத்து உரோமரின் தெய்வங்களில் ஒன்ருன மொலோக் தனது பூசாரிமார் மூலமாகத்தான் பேசியது என்பது உரோம புராணம். மொலொக்கைப் போலவே சர்வாதிகார அரசாங் கம் என்னும் தெய்வமும்! இத்தெய்வம் தலைவன் மூலமாகவும் அவன் கட்சி மூலமாகவுமே இயங்கும். இதிலிருந்து, முசோ லினி ஒருபோதும் பிழை செய்யார். அவர் செய்வது எதுவும் எப்போதுமே சரி’ என்று இற்றலிய பாசித்தரும், அடோல்ப் ஹிட்லரே உண்மையான பரிசீத்த ஆவி என்று ஜெர்மன் நாசி யரும் நம்பிக்கைகொண்ட காரணத்தை நாம் உணரலாம். ஈவிரக்கமற்ற, கொடிய அதிகார வெறிபிடித்த சாமானிய மனிதர் கையிலே ஓர் அரசாங்கம் சிக்குமானல் அது மனிதரை எவ்வளவு கீழ் நிலைமைக்குக் கொண்டுவந்து அவர்களது சுபாவத்தையே மாற்றிவிடும் என்பது இற்றலிய, ஜெர்மனிய மக்கள் சர்வாதிகாரிகள் ஆட்சிப்பயணுகக் கொண்டிருந்த மனப்பான்மையிலிருந்து அறியலாகும்.
அரசாங்கத்தின் சக்தி சமுதாயத்தின் சக்திக்கப்பாற்பட்ட தென்றும் மனித வாழ்க்கையையும் மனித இயக்கத்தையும் அது பரிபூரணமாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் சர்வா திகாரத்துவ நாடுகள் கூறும்.
சர்வாதிகார நாடுகளின் அரசாங்க அமைப்புக்களில் வித்தியாசங்களும் உள. அவ்வித்தியாசங்கள் அவ்வவற்றி னிலட்சியத்துக்கும் கொள்கைக்கும் பான்மைக்கும் ஏற்றபடி யுள்ளது. ஜெர்மனியிலே நாசிக்கட்சியினதும் அரசாங்கத்தின தும் அதிமுக்கிய கொள்கை இரத்த ஒற்றுமை அல்லது சாகிய

சனநாயகம்-அதன் கருத்து 183
ஒற்றுமை வளர்த்தல் என்பதே. ஒரே இரத்தம் உள்ள ஒரே சாகியம் இருந்தால்தான் ஜெர்மன் சமுதாயமும் அரசாங்க மும் உறுதிப்படும் என்பது நாசிகளின் கொள்கை. இதனல் தான் அவர்கள் அங்கிருந்த யூதரைக் கொடுமைப்படுத் தினர். இதனலேயே ஜெர்மனியரல்லாத மற்றும் இனத்த வரை அவர்கள் அற்பமாக நினைத்ததும். இவ்வினப் பெரு மிதத்துக்கு இற்றலிய பாசித்த சர்வாதிகாரமுறை அதி முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ‘இனப் பெருமிதம் மனக் கிளர்ச்சிக்குரியது: அது ஒர் மனப்பிராந்தி: ஆனல் அது உண்மையானதன்று; 100க்கு 90 வீதம் அது மனக் கிளர்ச்சி யின் பாற்பட்டது' என்பது இற்றலிய பாசித்தரின் கொள்கை. "அரசாங்கத்தின் சாரமாக உள்ளது தேசீய அல்லது சாகிய உணர்ச்சி. அவ்வுணர்ச்சி நன்கு பரவ வேண்டும். அதிலே மக்கள் அனைவரும் திளைக்கவேண்டும்". இற்றலிய பாசித்தர் தம் தேசம் முழுவதுக்குமுரிய தேசீய இனத்தவரைக் கனம் பண்ணினர்: அவர்கள் ஜெர்மன் நாசியரைப்போலச் சாகியத்தை கனம் பண்ணவில்லை. சாகியம் என்பது இற்றலிய பாசித்தர் கொள்கைப்படி இனங்களைக்கொண்டதல்ல; பொது எண்ணம், பொதுப்பான்மை, பொதுவிலட்சியங்கள், என்பன வற்றைக் கொண்டுள்ளவர்கள், அவர்கள் எச்சாகியத்தைச் சேர்ந்தாலும், எவ்வினத்தைச் சேர்ந்தாலும், தேசீய இனத் தில் அடங்குவர். எனவே, இற்றலியப் பாசித்தர், ஜெர்மனிய நாசியரைப்போல யூதர்க்குப் பகைவராகவிருக்கவில்லை.
பாசித்த, நாசிக் கொள்கையினரை விட, கொ மியூனித்தர் என்ற ஓர் சாரார் உளர். இவர்கள் வகுப்பு அல்லது வர்க்கக் கிளர்ச்சியினர். சமுதாயத்தின் அபிவிருத்தி வகுப்புப் போராட் டத்திலேயே தங்கியிருக்கிறது என்றும் வகுப்புப்பேதமற்ற சிறந்த சமுதாயமானது வகுப்புப் பேதமற்ற அரசாங்கத் திலேயே உருவாகும் என்றும் இவர்கள் கூறுவர். கொமி யூனித்தர் தத்தம் நாடுகளுடன் மாத்திரம் திருப்திப்படார். அவர்களுடைய கொள்கை அகில உலகையும் அடக்கியது. மனித சமுதாயம் பல வகுப்பினரைக் கொண்டது; வகுப்புத் தான் பிரதானமேயன்றி சாதி, குலம், வருணம், சா கியம், இனம் என்பவற்றைக் கொண்டு மக்களுக்கிடையே பிரிவினை ஏற்படுத்த கூடாது என்பது அவர்களது சிந்தாந்தம். 9Ꭰ - ᎶuᎧ கிலேயுள்ள சகல சாகியத்தாரிடையேயும், தேசத்தாரிடையே யும் சமாதானம், நல்லெண்ணம் என்பன நிலவவேண்டும் என் றும் அவர்கள் வாதிப்பர். ஆனல் நசுக்கப்பட்ட மக்கள் தம் மைப் பிணித்துள்ள அடிமைத்தளையை அறுத்தெறிந்து சுதந் திர மக்களாக விளங்கு தற்கு வகுப்புப் போராட்டம் அல்லது வர்க்கப்போராட்டம் வேண்டுமென்பர் கொ மியூனித்தர்.

Page 97
184 சனநாயகம்-அதன் கருத்து
இ. கீழைச்சனநாயகம்; மேலைச்சனநாயகம் இரண்டாவது உலக மகா யுத்தம் முடிந்த பின்னர் இருவித அரசாங்கங்கள் உலகில் தோன்றி ஒன்றுக்கொன்று எதிரிடை கட்டி வருவதை நாம் காண்கிருேம். ஒன்றினைக் கீழைச் சனநாயகம் என்றும் மற்றதை மேலைச்சனநாயகம்" என்றும் அரசியலார் வழங்குவர். சனநாயகமுறை ஆட்சி நிலவும் மேற்கைரோப்பிய நாடுகளும் புது உலகமாய அமெரிக்கக் கண்டமும் மேலைச்சனநாயக நாடுகள் எனப்படுகின்றன. சோவியத் சமதர்மக் குடியரசுக்கூட்டும், கொமியூனித்த வாழ்க்கை முறையை ஏற்றுக்கொண்டுள்ள கிழக்கைரோப்பிய நாடுகளும் கீழைச் சனநாயக நாடுகள் வகுப்பில் அடங்குவன.
சனநாயக முறையிலும், கீழைச்சனநாயகம் மேலைச்சன நாயகம் என்ற இரண்டு இருக்கின்றனவா என்று நீங்கள் ஆச்சரியப்படக்கூடும். இப்படியான பிரிவினை எவ்வாறு ஏற்பட்டது! அது நியாயமானதா? என்பனவற்றை ஆராய் வாம்.
பெரிய பிரித்தானியா, பிரித்தானியப் பொதுநலவமைப் பிற் சேர்ந்துள்ள நாடுகள், பிரான்ஸ், ஸ்கன்டினேவிய நாடு கள், ஒல்லாந்து, பெல்ஜியம், ஸ்விற்சர்லாந்து, ஐக்கிய அமெ ரிக்க நாடுகள் என்னும் தேசங்களிலே நடைமுறையில் இருந்து வரும் அரசியன் முறையினையும் சமுதாய முறையினையும் குறிக்கும் சொற்ருெ டரே மேலைச்சனநாயகம் என்பது. இந்த நாடுகளின் அரசாங்க முறைகள் பல்வேறு விதத்தினவாக இருக்கின்றன வென்பது உண்மைதான். ஆனல் அவற்றுக் கெல்லாம் பொதுவான ஒரு அடிப்படைக் கொள்கை இருந்தே வருகிறது. இந்த அடிப்படைக் கொள்கையே இந்நாடுகளை ஒற்றுமைப்படுத்தி, மேலைச்சனநாயகம் என்னும் வகுப்பிற் சேர்க்கும் சாதனமாக விளங்குகிறது.
மேலைச்சனநாயக முறையின் ஆணிவேர் சட்ட அதிகாரம் ஆகும். அதாவது சட்டம், ஒழுங்கு என்பவற்றுக்கு மதிப்புக் கொடுத்து அவற்றுக்கு அடங்கும் முறையே என்க. மேலைச் சனநாயக முறை அநுட்டிக்கப்படும் சகல நாடுகளிலும் சட்டம் என்பதற்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந் நாடுகளிலே உள்ள ஒருவன், ஏதுமோர் குற்றத் தொழிலைச் செய்தாலொழிய அவனைச் சிறைப்படுத்தமுடியாது. ஒருவன் மீது குற்றம் சுமத்தப்பட்டால், அக்குற்றம் தக்கமுறையில் விசாரணை செய்யப்பட்டு, அவன் குற்றவாளி எனக் காணப்
). Eastern Democracy.
2. Western Democracy. 3. Union of Soviet Socialist Republics.

சனநாயகம்-அதன் கருத்து 185
பட்டபின்னரே அவனுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்படும். ஆனல் தேசத்துக்கு ஆபத்து ஏற்படும் காலங்களிலே அவசர காலச் சட்டங்களும் இந்நாடுகளில் அநுட்டிக்கப்படும். ஒருவர் தேசத்தின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் ஆபத்துச்சூழுகிறர் என்று சந்தேகிக்கப்படுமிடத்து அவரை விசாரணையில்லாமலே சிறையில் வைத்திருக்க இவ்வவசரகாலச்சட்டங்கள் இடமளிக் கும். அவசர காலங்களிற்ருன் இப்படியான முறை இருக் கும். சாதாரண காலங்களிலே இப்படியிராது. சட்டத்துக்கு அமைந்து நடக்கும் எவரையும் கண்டபடி சிறைப்படுத்தும் அதிகாரம் அரசாங்கத்துக்கில்லை. மேலைச் சனநாயக நாடு களிலே விசாரணையின்றி ஒருவரைச் சிறையில் தள்ளுவது என்பது மனத்தாலும் நினைக்கமுடியாத ஒரு கருமம். அரசாங் கம் சட்டத்தை மீறித் தான் நினைத்தபடி கரும மாற்ருமல் இருக்க, இந்நாட்டு மக்கள் சதா கண்விழிப்புடன் இருக்கி ருர்கள்.
மேலைச் சனநாயகத்தின் வேறேர் பிரதான அம்சம் பொது மக்களாட்சி என்பதாகும். நாட்டில் உள்ள சகல ஆடவரும் பெண் களும் நாட்டுக்குரிய அரசாங்கக் கருமங்களில் பங்குபெற இச் சனநாயகமுறை அநுமதிக்கும். வயதுவந்த சகலருக்கும் வாக் களிப்புரிமை அங்கே உண்டு. அவ்வுரிமையைக் கொண்டு அவர் கள் ஊராட்சிச் சங்கத் தெரிவிலும், மாநகரச் சங்கத் தெரி விலும், மாகாணமன்றத் தெரிவிலும், பாராளுமன்றத் தெரி விலும் பங்குபற்றித் தம் அபிப்பிராயத்தை வெளியிட அவர் களுக்குச் சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறது. அதுமாத்திரமல்ல; வயதுவந்த ஆண்களாயினும் சரி, பெண்களாயினும் சரி, தேர்த லுக்கு அபேட்சகராக முற்பட்டுப் பிரதிநிதியாகி நாட்டின் நிரு வாகத்தை நடாத்துதற்கும் அவர்களுக்கு இச் சனநாயகமுறை சந்தர்ப்பம் வழங்குகிறது. பொதுசனங்களால் இவ்வாரு கத் தெரிவு செய்யப்படும் ஆட்சி நிலையங்களுக்கு வரம்பிலா அதி காரத்தையும் இச்சனநாயகமுறை அளிக்கிறது. " சனநாயகம் என்பது மக்களின் பரமாதிகாரச் சாதனம். சகல வித தத்து வங்களுக்கும் தோற்றுவாய் அதுவே. ஆனல், அதிகாரம் என் பதைக் கட்டின் றிவிடக் கூடாது அதிகாரம் என்பது செருக்க களித்துச் சீர்குலைக்கும். அப்படி என்ருல் வரம்பிலா அதிகாரம் வரம்பிலாக்கெடுதி விளைக்கும்’ என்று அக்தன்பிரபு? ஒருமுறை கூறியதும் ஈண்டு நோக்கற்பாலது. ஆனல் ஒரு நாட்டின் அர சாங்கம் செவ்விதே நடைபெற வேண்டுமானல் அதற்குரிய அதி காரத்தை யாரிடமாவது, எக்குழுவிடமாவது ஒப்புவித்தேயாக
1. Popular Government. 2. Lord Acton.

Page 98
86 சனநாயகம்-அதன் கருத்து
வேண்டும் ஆகவே இச்சந்தர்ப்பத்தில் ஒரு கேள்வி எழுகிறது.
யார் யார் அதிகாரத்தை வகிக்கலாம் என்பது அக்கேள்வியல்ல; அதிகாரத்தைக் கொண்டுள்ளவர், அதனைத் துர்ப்பிரயோகம்
செய்யாது நன்மைக்கான கருமங்களில் அதனைப் பிரயோகிக்க என்ன செய்யலாம்? எவ்வாறு செய்யலாம்? என்பதுதான்
கேள்வி. இக்கேள்விக்கான விடையை மேலைச்சனநாயக முறை அளிக்கிறது. நாட்டுக்கு வேண்டிய அரசியற் பரிபாலகர்களைத் தெரிவதற்கும், தெரிந்தவர்களை அகற்றுதற்குமான அதிகாரத்தை அந்நாட்டின் சாதாரண மக்களிடமே ஒப்படைக்கவேண்டும் என்று மேலைச்சனநாயகம் விதிக்கிறது. தாம் தம் வாக்குச்
சம்மதத்தைக் கொண்டு தேச பரிபாலனத்துக்கெனத் தெரிந்
தெடுத்தவர்கள் தம் கடமையைச் சரிவரச்செய்தனரா? இல்லையா? என்பதுபற்றித் தம் தீர்க்கமான தீர்ப்பையளிப் பதற்கு உரிய உரிய காலத்தில் பொதுசனங்களுக்குச் சந்தர்ப்
பம் ஒன்றை வழங்குவது மேலைச் சனநாயக முறை. தேச
பரிபாலனத்துக்கெனப் பொதுசனங்களால் தெரிவு செய்யப் பட்டிருப்பவர்கள், தம் காலத்தில் தாம் ஆற்றிய கடமைகள் பற்றி அப்பொது சனங்களுக்குவகை சொல்லவேண்டும். அவர்
கள் தம் கடமையை அப்பொது சனங்கள் எதிர்பார்த்தபடி திருப்திகரமாக ஆற்ரு விடத்து பதவியிலிருந்து அகற்றப்பட ஏனையோர் அந்த இடத்துக்குத் தெரிவுசெய்யப்படுவர்.
அதாவது யாரேனும் சிலருக்குப் பரிபாலன அதிகாரத்தை
வழங்க, அவர்கள் எதிர்பார்த்தபடி தம் கருமத்தை ஆற்றத்
தவறினல், அவ்வதிகாரம் ஏனையோருக்கு வழங்கப்பட இச்
சனநாயகமுறையில் இடம் உண்டு என்பது குறிப்பிடத்தக்க
ஓர் விடயமாகும். அதாவது ஒர் அரசாங்கத்தை அகற்றிவிட்டு அதற்குப்பதிலாக இன்னேர் அரசாங்கத்தை நிறுவும் அதி காரம் சாதாரண ஆண்களுக்கும் பெண்களுக்கும் உண்டு:
ஓர் அரசாங்கம் பயனற்றது, நன்மை விளைக்காதது என்று
சொல்லும் தன்மை மாத்திரம் மக்களுக்கிருந்தாற் போதாது.
அப்படியான அரசாங்கத்தை அகற்றிவிட்டு, அதனிடத்துக்கு
வேருேர் அரசாங்கத்தைத் தெரிவுசெய்யும் அதிகாரமும் இருக்கவேண்டும். ஒர் அரசாங்கத்திலே எதிர்க்கட்சி இருப் பது, சமயம் நேரும் காலத்தில் பதில் அரசாங்கம் அமைப்ப
தற்கேயாகும். ஆகவேதான் கொடுங்கோலாட்சி புரிந்தால்,
எதிர்க்கட்சி தன்னைக் கவிழ்த்துவிட்டுவிடும் என்ற ஒரு பயம்
எந்த அரசாங்கத்துக்கும் இருந்து அதனை நேரியபாதையிற்
செலுத்த ஏதுவாகும்.
மேலைச்சனநாயக முறையின் பிறிதோர் அம்சம் கட்சி முறை: இம்முறையினல் சாதாரண சனங்கள் அரசியற் கருமங்

சனநாயகம்-அதன் கருத்து 187
களில் பங்குபெற முடிகிறது. சனங்கள் சிறு சிறு குழுக்க ளாகப் பிரிந்து நின்ற ல், உறுதியான அரசாங்கம் நிறுவுதல் முடியாது. பெரிய கட்சிகளாக ஒரு சில இருக்கவேண்டும். அப்படி இருந்தால், சனங்கள் பரிபாலனத்திற் பங்குபெறவும், ஓர் அரசாங்கத்தை உறுதியாக்கவும் முடியும். பொருளாதார அடிப்படையைக்கொண்டே கட்சிகள் இயங்கவேண்டும் என்று கூறுவாரும் உளர். மக்களுக்குப் பொருள்தான் முக்கிய மானது என்று இவர்கள் கருதுகிருர்கள்போலும். இப்படிக் கருதுவது சரியல்ல. பொருளாதார நோக்குடன் மாத்திரமே மக்கள் இயங்கமுடியாது; வேறும் பல விடயங்களும் மனித வாழ்க்கையில் உள.
மேலைச்சனநாயக முறையில் மேலுமோர் அம்சம் உளது. இம்முறைப்படிக்கான அரசாங்கம் "பிரசையின் சட்டபூர்வ மான நலவுரிமைகளைப் பேணுதற்கு மாத்திரமே உளது: அவனது உரிமைகள், அவனது அயலவரின் உரிமைகள் ஆகிய வற்றைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரங்களுக்கு மேலான அதிகாரம் அதற்கில்லை". ஆகவே அரசாங்கம் என்பதற்கும் சமூகம் என்பதற்குமிடையே ஓர் தெளிவான பிரிவினை இச்சன நாயக முறையில் உண்டு. சமூகம் என்பது அரசாங்கத்திலும் பார்க்க விரிந்தது; சகல விதங்களிலும் அது அரசாங்கத்திலும் பார்க்க முக்கியத்துவம் வாய்ந்தது என்பது மேலைச்சனநாயக முறைக்கோட்பாடு. ஒருவன் வாக்காளர் என்ற தன்மையில் அல்லது வரியிறுப்போர் என்ற தன்மையில் அரசியலோடு தொடர்புற்றவணுய் அரசியற் பிரசையாக இருக்கலாம். அப் படியிருப்பதனல் அவன் அரசாங்கம் என்ற யந்திர இயக்கத் தில் இழுபடும் ஒரு கருவியாக மாட்டான். அவன் அரசாங்கத் துக்குச் சொந்தமான அல்லது அதன் கட்டுப்பாட்டுக்குள் அடங்கியதொழிலில் ஒரு தொழிலாளியாக இருக்கலாம்: அல் லது அரசாங்க உத்தியோகத்தணுகவிருக்கலாம். அப்படியிருப் பதால் அவனுடைய வாழ்க்கை முழுவதும் அத்தொழிலுக்கு அல்லது உத்தியோகத்துக்குக் கட்டுப்பட்டு அவற்றுடன் பிணிக்கப்பட்டதல்ல. அவர் தனக்கு விருப்பமான காணி பூமிகளை வைத்திருக்கலாம்; அவற்றிலே அவன் தான் நினைத்த படி வேலைசெய்யலாம்: அவன் தன்க்குகந்நவர்களை நண்பர்க ளாகக்கொண்டு அவர்களுடன் தனது ஒய்வு நேரங்களைக் கழிக்க லாம். அவன் தனக்கு விரும்பிய சங்கங்கள் சபைகளில் அங்கத் தவனுகச் சேர்ந்து அவற்றின் பணிகளில் ஒத்துழைக்கலாம். சமயவிடயமாகச் சொல்லுகில், அவன் தனக்கு விருப்பமான மதத்தைக் கைக்கொள்ளலாம். இப்படியான துறைகளிலே, அவனைக் கட்டுப்படுத்தும் அதிகாரமோ,தலையிடும் அதிகாரமோ

Page 99
88 சனநாயகம்-அதன் கருத்து
அரசாங்கத்துக்கு இல்லை. சனநாயகச் சமுதாயத்திலேயுள்ள மக்கள் தாம் தாம் விரும்பிய தொழிலைச் செய்யவோ, தாம் தாம் விரும்பியபடி கருமம் ஆற்றவோ அநுமதிக்கப்படு கின்றனர். இதன் பயணுக அவர்களின் முயற்சிகளும் பல்வேறு திறத்தனவாய் பயன்றரு முறையில் இருக்கின்றன. நன்கு அபிவிருத்தியான மேலைச்சனநாயக நாடுகளிலே இம்முயற்சி கள் சம்பந்தமான இரு பிரதான அம்சங்களை நாம் காண்கி ருேம். அவற்றுள் ஒன்று பிறருதவியின்றித் தம் பெலத்தில் இயங்கும் தாபனங்களின் தோற்றமும் இயக்கமும் மற்றது சமுதாய சேவாமுறைத் தோற்றமும் இயக்கமும். இந்த இரண்டு இயக்கங்களும் பிறர் தூண்டுதலின்றி யதேச்சை யாகத் தோன்றி இயங்குபவை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியான தாபனங்கள் அரசியல் அல்லது பொருளாதார அல்லது தொழில் பற்றிய நலவுரிமைகளுக்காக மாத்திரம் ஏற்படுவனவன்று. அரசியற் கலப்பு இல்லாத எத்தனையோ சங்கங்கள் அங்கே உள. கலை, சங்கீதம், நாடகம் என்னும் இன்னுேரன்னவை பற்றிய தாபனங்கள் இவற்றுட் சில. அர சாங்கக் கருமங்களுக்கு அப்பாற்பட்ட எத்தனையோ விடயங் கள் ஒர் சமுகத்தின் வாழ்க்கையில் உண்டு என்பதற்கு இது சாட்சியாகும்.
மேலைச்சனநாயக வாழ்க்கைமுறையின் மிகப்பிரதான அம்சம் சமரசமனப்பான்மை. பிரசைகளாயினேர் தங்கள் அபிப்பிராயங்களை வெளிதுறந்து கூறலாம்; அவர்கள் ஒன்று கூடித் தமக்கு விருப்பமான ஒரு பிரச்சினையைப் பற்றி எவ்வித கட்டுப்பாடுமின்றிக் கலந்து பேசலாம்; அரசாங்கத்தின் கருமங் களின் குனகுணங்களைக் கூட விவாதிக்கலாம். அவர்கள் தாம் விரும்பியதை வாசிக்கலாம்; மற்றவர்களை அவமானப் படுத்தாத முறையில் எதனையும் எழுதிப் பிரசுரிக்கலாம். தணிக் கையாளர் தம் கடிதங்களை இடைமறித்துப் பார்ப்பரோ என்ற அச்சமில்லாமல் கடிதங்கள் அனுப்பலாம்: எவ்வித பயமு. மின்றித் தமது அபிப்பிராயத்தை எடுத்துக் கூறலாம்.
மேற்கைரோப்பாவிலே அரசியற் கொள்கைகளும் அரசி யற் சம்பிரதாயங்களும் சிறப்பான வோர் முறையில் அபி விருத்தியான மைதான், இம் மேலைச்சனநாயகத்தின் இந்தச் சிறப்பான அம்சங்களுக்குக் காரணமக கும்.
கிரேக்க நாகரிகமும் கிறிஸ்துவ போதனைகளும் மேற்கை ரோப்பாவிலே நன்கு வேரூன்றி இருக்கின்றன. ஆண்டவன் முன்னிலையில் அனைவரும் சமம் என்பது கிறிஸ்துவ கோட் பாடு. கடவுளுக்குச் சாதி வித்தியாசமில்லை: மத வித்தியாச மில்லை: ஆண் பெண் என்ற பேதமும் இல்லை. இப்படியான

சனநாயகம்-அதன் கருத்து 189
போதனைகள் மனித சமத்துவக் கொள்கையை மேற்கைரோப் பிய நாடுகளில் திளைக்கச் செய்தன. மேலும் கிறிஸ்துவம் பூமண்டலாதிபர்களுக்கும் மேற்பட்டதாய ஒர் தர்மத்தைப் போதித்தது. அதன் பயணுக தர்மம் என்பது தழைக்கவும், அரசாங்கத்துக்கு மேலாகத் தனிமனிதனது உரிமைகள் நிலை நாட்டப்படவும் முடிந்தது.
நீதி, தர்மம் என்பன ஒர் சர்வாதிகாரியின் யதேச்சா தி காரத்துக்கும் மேற்பட்டன என்பதற்கு இங்கிலாந்து, பள்ள நாடுகள் ஆகியதேசங்களது சரித்திரம் சான்று பகருகிறது. இச்சரித்திரத்தை நீங்கள் ஏற்கெனவே படித்துமிருப்பீர்கள். இங்கிலாந்திலே 17-ம் றுாற்ருண்டில் அரசு புரிந்த ஸ்ருவாட் வம்சத்துமேன்னர் தமது யதேச்சாதிகாரப்படி அரசு நடத்தத் தலைப்பட்டனர். இதனைப் பாராளுமன்றம் எதிர்த்தது. இதன் பயணுக அங்கே கொடியதான உள்நாட்டு யுத்தம் ஒன்று மூண்டு ஈற்றில் யதேச்சாதிகாரிகளாய் கொடுங்கோல் செலுத்தத் தலைப்பட்டவர்கள் படுதோல்வியடைந்தனர். இதன் காரணமாக தேசதர்மத்துக்கு அணுவளவேனும் பிசகாது பரிபாலனத்தை நடாத்த உடன்பட்ட வரம்புடை மன்னர் முறை அங்கே ஏற்பட்டது. பள்ளநாடுகளிலும், டச்சுக்காரர். தம்மை அடக்கியாண்டு கொடுங்கோல் செலுத்திய ஸ்பானிய அரசுக்கெதிராகக் கலகம் செய்து ஒரு குடியரசைத் தாபித் தனர்.
மேற்கைரோப்பாவிலே சனநாயகக் கொள்கைகள் நன்கு விருத்தியானதற்கு மற்றுமோர் காரணம், அங்கே மத்திய வகுப்பினர் என்ற வோர் வகுப்பு மக்கள் இருந்தது. ஏற்றுமதி இறக்குமதித் தொழிலில் ஈடுபட்டுள்ள வணிகர், வியாபாரி மார், கலைத்தொழிலாளர் என்பவர்களே இம் மத்திய வகுப் பினர் என்க. இவர்கள் மானியகால ஐரோப்பாவில் அதிகமாக இருக்கவில்லை. சிறு தொகையினரான அவர்கள் பொது வாழ் வில் முக்கியமான ஒர் தானம் வகிக்கவில்லை. ஆனல், பிற்காலத் தில் அவர்கள் தொகையிற் பல்கி தம் செல்வம், திறமை என்ப வற்றைக்கொண்டு தமக்குச் சுவாதீனமும் அதிகாரமும் சம்பா திக்கத் தலைப்பட்டனர். தனி மனிதன் சுதந்திரனுக இருக்க வேண்டும், அவன் தனது ஆற்றலையும் திறமையையும் தனக்கு கந்தமுறையிற் பிரயோகித்து முன்னேற உரிமை இருக்க வேண்டும் என்று இம் மத்திய வகுப்பார் கோரினர். அவர்கள் திருச்சபையுடன் தானும் வாதிட்டுப் போரிட்டு,
1. LOW Countries. பெல்ஜியம், ஒலலாந்து என இப்போது வழங் கப்படும்.
2. Stuart Kings.

Page 100
190 சனநாயகம்-அதன் கருத்து
தாம் விரும்பியவாறு விடயங்களைப்பற்றி நினைக்கும் உரிமை யையும் வழிபாட்டுரிமையையும் பெற்றனர். மானியமுறைப் பிரபுக்களின் அதி கா ரத்  ைத த் தகர்ப்பதற்கு அவர்கள் மன்னருடன் ஒத்துழைத்தனர். அவர்கள் திரைகடலோடித் திரவியம் தேடி அத்திரவியத்தின் பயனக அதிகாரமும் செல்வாக்கும் கொண்டனர். இந்த அதி கா ரத்  ைத யும் செல்வாக்கையும் கொண்டு தமக்குக் கூடிய சுவாதீனம் வேண்டும் என்று அவர்கள் கோரி அதனையும் பெற்றனர். அவர்கள் தொ ன்று தொட்டு வழக்கில் வந்த பழக்க வழக்கங்கள் ஒழு க் கங்களை உதறித் தள்ளிவிட்டு காலத் துக்கேற்ற கோலமாக புதிய பழக்க வழக்கங்களைக் கைக் கொள்ளத் தலைப்பட்டனர். சகல விடயங்களிலும் தனிமனி தனின் சுதந்திரமே முக்கியமானது என்பதை வற்புறுத்திய அவர்கள் தனி மனிதனின் உரிமைகளுக்குப் பங்கம் விளைத்த பழைய வழிபாட்டு முறைகள், அரசியல் முறைகள் பழக்க வழக்கங்களை விலக்கினர். இத்தகைய சக்திவாய்ந்த ஒரு மத்திய வகுப்பினரால்தான் மேலைநாடுகளிலே சனநாயக முறை களும் சனநாயக அரசியலும் நிலவின. இங்கிலாந்து, ஸ்கான் டினேவிய நாடுகள், சுவிற்சர்லாந்து என்பன இந்நாடுகளிற் பிரதானமானவை.
கிழக்கு ஐரோப்பாவிலும் மத்திய ஐரோப்பாவிலும் அரசி யல், அபிவிருத்தி என்பது மந்த கதியிலேயே இருந்தது. சமீப காலத்தில்தான் அங்குள்ள மக்கள் அரசியல், சமுதாயச் சுதந் திரத்தைப் பெற்ருர்கள். பிரான்சீய அரசியற்புரட்சி, மக்க ளுக்கு ஒரு புத்துணர்ச்சியை ஊட்டி, அரசியலில் தமக்கும் பங்கு இருக்கவேண்டும் எனத் தூண்டியது உண்மைதான்: ஆனல் யதேச்சாதிகாரிகளின் பரிபாலனத்தில் தேசீய இன இராச்சியங்கள் உருவாகி இப்புரட்சியின் பாதிப்பைத் தடுத்து விட்டன. ஐரோப்பாவில் யதேச்சாதிகாரிகளின் பாலனத்துக் குள் அடங்கியிருந்த நாடுகளில் முக்கியமானவை ஜெர்மனியும் ருஷியாவும் ஆகும். முதலாவது உலக மகா யுத்தம் மூண்டு அதிலே ஜெர்மனியும் ஆஸ்திரிய-ஹங்கேரிய சக்கிராதிபத்திய மும் 1918-ம் ஆண்டில் படுதோல்வி அடைந்ததன் பயணுகவே, ஆங்கிருந்த மக்கள் அரசியற் சுதந்திரம் பெற முடிந்தது. இந்த யுத்த முடிவில்தான் போலந்து, செக்கோஸிலா வாக் கியா, ஜூகோ ஸிலேவியா, ஹங்கேரி என்பனவும் சுவாதீனத் தைப் பெற்றன.
மத்திய ஐரோப்பாவிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் சன நாயகமுறை அபிவிருத்தி யடையாமைக்கு வேருேர் காரணம் அங்கே செல்வாக்கும் சக்தியும் மிகுந்த மத்தியவகுப்பினர்

சனநாயகம்-அதன் கருத்து 9
இல்லாமை. அங்கு வாழ்ந்த சனங்களில் மிகப் பெரும்பாலோர் குடியானவர்கள். அவர்கள் பிரபுக்களுக்குரிய நிலங்களில் வேலைசெய்து கேவலம் சிற்றடிமைகளாகவே வாழ்ந்தனர். இப்படியான நாடுகளிலே யதேச்சாதிகார அரசுமுறை தலை யோங்கி வளர்ந்தது. பேராசை பிடித்த கொடிய நிலப்பிரபுக் களிடம் இருந்து அப்பாதுகாப்பினையேனும் இவ்வரசுகள் குடி யானவர்களுக்குப் பெற்றுக்கொடுத்திருந்தால், அக்குடியான வர்கள் திருப்தியடைந்திருப்பர்.
கீழைச்சனநாயக முறை அநுட்டானத்துள்ள நாடுகளுக் குச் சிறந்த எடுத்துக்காட்டு சோவியத் ருஷியா. ஆதிகாலத்தி லிருந்தே ருஷியாவானது மேற்கைரோப்பாவிற்கு வித்தியாச மான நாகரிகத்தையும் சீர்திருத்தத்தையும் கொண்டிருந்தது. உரோம சக்கராதிபத்தியத்தின் கடைசிக்காலத்தில், அச்சக்கரா திபத்தியத்தின் கீழைப்பாகம் கொன்ஸ்தாந்திநோபிளைத் தலைந கராகக் கொண்டு விளங்கியது என்பதை நீங்கள் சரித்திர வாயி லாகப் படித்திருப்பீர்கள். கொன் ஸ்தாந்திநோப்பிளை இராச தானியாகக்கொண்ட சக்கரவர்த்திகள் தமக்கு எதிரிகளேயில் லாமல், தாம் சொல்வதற்கும் செய்வதற்கும் ஆட்சேபிப்பவர் இல்லாமல் தம் மனம்போனபடி இராச்சிய கருமங்களை நிரு வகித்தனர். சனங்களும் தமது சக்கரவர்த்தியே சர்வாதிகாரி என மனப்பூர்வமாக நம்பி ஆன்மார்த்த விடயங்களில் சரி, லெளகீக விடயங்களில் சரி அவர்கள் ஆக்கினைகளுக்கு மறுப் பில்லாது பணிந்து வாழ்ந்தனர். ஆனல் மேற்கைரோப்பாவில் இத்தகைய நிலை இருக்கவில்லை. அங்கே திருச்சபைக்கும் அரசாங்கத்துக்குமிடையே பரஸ் பரம் முரண்பாடுகள் ஏற்பட்டன. அரசாங்கம் தனது கருமங்களில் தலையிடுவதை திருச்சபை பலமாக ஆட்சேபித்தது. ஈற்றில் அரசாங்கமும் திருச்சபையும் தத்த மக்குரிய அதிகாரங்களை வேறுவேருக வைத்துக் கொள்ளும் நிலைமை உருவானது.
கொமியூனிசம் என்ற ஒரு நவீனக் கொள்கை ருஷியாவில் தோன்றிப் பரவப் பல்லாண்டு காலத்துக்கு முன்னிருந்தே, அங்கே சர்வாதிகார அரசுக் கொள்கை நன்கு வேரூன்றி இருந்தது. அரசனயுள்ளவனே திருச்சபை விடயங்களுக்கும் லெளகீக விடயங்களுக்கும் பரமாதிகாரி என்று ருஷியர் எண்ணி நடந்தனர். மகாபீட்டர் ரு ஷியத் திருச்சபையை அரசாங்கத்துக்குள் அடங்கிய ஒரு பகுதியாக்கி அதற்கும் தானே அதிபதியாக இருந்தான். அவனும், அவன்முன் அரசு புரிந்தவர்களும் ரு ஷிய மக்களுக்கு ஒப்புயர்வற்ற அதிபதி களாக விளங்கினர். ரு ஷியச் சக்கரவர்த்திகள் வைத்ததுதான்
1. Peter the Great. ܚ ܚܚ

Page 101
192 சனநாயகம்-அதன் கருத்து
சட்டம் என்று இருந்தது. ஆனல் இப்படியான சர்வாதிகார மனப்பான்மை மேற்கைரோப்பிய மன்னர்களிடத்துத் தோன் றிய காலத்தில் அதனை மக்கள் கட்டுப்படுத்தி அடக்கியிருக்கி (Ιηrt 56ίτ. ரு ஷிய மக்கள் சர்வாதிகார மனப்பான்மைக்கு அடங்கி ஒடுங்கி வாழ்ந்தனர்.
முதலாவது உலக மகா யுத்தத்தில் ருஷியா ஜெர்மனிக்கு விரோதமாக நேசக்கட்சியினர் பக்கமாக நின்று 1917-ம் ஆண்டில் ஜெர்மனியரால் முறியடிக்கப்பட்டது. இதன் பய ணுக, ருஷிய ஸாரின்(சக்கரவர்த்தி)செல்வாக்கு பங்கப்பட்டது. லெனின் என்பவரும் அவருடைய நண்பர்களுமாகச் சேர்ந்து ஒரு புரட்சி இயக்கத்தை நடத்த இத்தோல்வி வழிகோலியது. லெனின், சக்கரவர்த்தியின் சர்வாதிகார ஆட்சியை நீக்கி இன்னேர் தன்மையினவாய சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத் ஞர். அதாவது ஒரு தனி மனிதனன ஸஈரீன் சர்விாதிகாரத் துக்குப் பதிலாக கொமியூனிசக் கட்சியின சர்வாதிகாரத்தை நிலைநாட்டினர். இக்கட்சியும் அரசியல் அதிகாரத்தை வேறும் கட்சிகளுடன் பங்காகக் கொள்ளவில்லை. ஸார் எப்படிச் சர்வாதிகாரியாக இருந்தாரோ, அப்படியே இக்கட்சியும் ஒரு புதுவிதச் சர்வாதிகாரியாக இருந்தது. அது எதிர்க்கட்சிக்கு இடம் கொடுக்கவில்லை: கலந்துபேசும் முறையிலோ, இணக்க முறையிலோ இக்கட்சிக்கு நம்பிக்கையில்லை. இப்புதிய சர் வாதிகார முறையும், ஸாரின் சர்வாதிகார முறையினைப் போல மக்கள் மீது தனது அதிகாரத்தை இரும்புப்பிடியாகக் கொண்டு தனது கொள்கைப்படியே அரசாங்கம் இருக்க வேண்டுமென விதித்தது. பழைய ஸார் இப்போது ருஷியா வில் இல்லாதுபோனுலும் அவருடைய இடத்தில் சர்வாதி காரம் செலுத்தும் ஒர் கட்சி தனக்குரிய தலைவர்களுடன் அங்கே இருக்கிறது. இக்கட்சித் தலைவர்கள் ஆட்சிசெய்ய, எல்லா மக்களும் அவர்களுக்கு அடங்கி வாழவேண்டும்.
மேலே காட்டியனவற்றில் இருந்து ஒரு விடயம் தெற் றெனப் புலப்படும். அதாவது, கீழைச் சனநாயகம் என்பது உண்மையிற் சனநாயகமல்ல என்பதே. பழைய ஸார்களின் சர்வாதிகார முறைக்குப் புதிய மெருகு கொடுத்திருப்பதே நாம் காணும் கீழைச் சனநாயகம்’ என்பது; மிகவும் உந்நத மான முறையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள ஒரு கட்சி சர்வாதி காரம் செலுத்தி, தனது கொள்கைகள் லட்சியங்களுக்கு தன்னடிப்பட்டுள்ள மக்களனைவரையும் இணக்குதற்கு தன் னல் இயலக்கூடிய சகல அடக்குமுறைகளையும் அதிகாரங்களை யும் பிரசாரத்தையும் அது பிரயோகித்து வருகிறது. கல்வி,
l. Lenin.

சனநாயகம்-அதன் கருத்து 193
விஞ்ஞானம், சங்கீதம், கலை என்னும் இன்னுேரன்ன மனித ஆக்கச் சக்திகள் யாவும் கொ மியூனிசக் கட்சி வகுத்த வழிப் படியே செலுத்தப்படுகின்றன. அக்கட்சியின் செல்வாக்கை வளர்ப்பதற்கே அவை பயன்படுத்தப்படுகின்றன. எல்லா ருக்கும் ஒரேவித வாழ்க்கைமுறையினை வகுத்து, அதனையே சகலரும் ஏற்கவேண்டும் என்று தன்னலான சக்திகள் யாவற்றையும் பிரயோகித்து அது வற்புறுத்துகிறது. இப்படி யான ஒரு அரசியன்முறையைச் சனநாயகமுறை என்று கூற முடியுமா? தனி மனிதனின் சுதந்திரத்துக்கு மதிப்புக் கொடுக் காத இம்முறை சனநாயகமாகாது. தனி மனிதனுக்கு எண்ணச் சுதந்திரம், கருமச் சுதந்திரம் என்பவற்றை இந்த அரசியன் முறை மறுத்து, அவனை அரசாங்கம் என்னும் யந்திரத்தில் ஒட்டி இழுபடும் கருவியாக்குகிறது. இப்படியான முறையி ஞல் மனிதர் தமது அன்ருட வாழ்க்கை விடயமாகச் சில நன்மைகள் பெறவும் கூடும். ஆனல் அவர்களது அறிவுவிருத் தியும் ஆன்மவிருத்தியும் பங்கப்படுகின்றன. மனிதன் அன் றடித்து அன்று வாயிற்போட்டு சில உலக இன்பங்களை அநுப விக்கமாத்திரம் பிறந்தவனன்று. அப்படியென்ருல் இப்படி யான அரசாங்கங்கள் அவனுக்கு ஏற்றதுதான். ஆணுல் அவன் வேறும் பல உயரிய லட்சியங்களைக் கொண்டவன். அந்த லட்சியங்களை அவன் அடைவதில் இப்படியான சர்வாதிகார அரசாங்கம் அவனது முயற்சிகளுக்குத் தடையாக உள்ளது.
சனநாயகத்தின் இயக்கச் சக்திகள் பலகாலம் அடிமை வாழ்வில் இருந்தவர்கள் சனநாயக அரசியன் முறையைப் பெற்றதும் பெரிதும் உற்சாகம் அடை வர். அதற்குரிய காரணமும் உண்டு. மற்றவர்களின் அதிகார மில்லாமல் இனி தம்மைத் தாமே பரிபாலித்துக்கொள்ளலாம் என்ற உணர்ச்சியை அவர்கள் கொள்வதே அது. தாம் ஏதோ ஒரு புதிய அந்தஸ்தினை அடைந்துவிட்டதாகப் பூரிப் படைவர். தாம் இனி மற்றவர்களுக்கு எவ்வாற்ருனும் தாழ்ந் தவர்களல்லர் என்ற உணர்ச்சியைக் கொள்ளும் அவர்கள் தமக்குரிய புதிய பொறுப்புக்களை மனப்பூர்வமாக உவந் தேற்று, தாம் புதிதாகப் பெற்றுக்கொண்ட அதிகாரத்தைத் தம் எல்லாரதும் நன்மைக்காகப் பிரயோகிக்க முற்படுவர்.
ஆனல் சனநாயகமுறை அநுகூலமடைவதற்கு அது சம்பந் தப்பட்டுள்ள மக்களிடையே உற்சாகம் மாத்திரமிருந்தாற் போதாது. அவர்களுக்கிடையே குறித்த சில ஒழுக்கத்தகை மைகளும் இருக்க வேண்டியது அவசியம். இத்தகைமைகள் இல்லையேல், சனநாயகம் இயங்கவே மாட்டாது. சமரச மனப் பான்மை இத்தகைமைகளில் ஒன்று. உதாரணமாக, ஒரு
3.248

Page 102
194 சனநாயகம்-அதன் கருத்து
சமுதாயத்திலே பன்னெடுங் காலமாக சமயச் சண்டையோ, கொள்கைக் கலவரமோ இல்லாதிருந்திருக்குமானல் அச்சமு தாயத்தில் சனநாயகம் விருத்தியாகும். அத்தகைய ஒரு சமுதாயத்திலேயுள்ளார், பரஸ்பரம் வேற்றுமையான மதங் களைக் கைக்கொண்டாலும் கொள்கைகளைக் கடைப்பிடித் தாலும், சமரசநோக்கு நிலவும். மற்றவர்களின் அபிப்பிரா யங்களுக்கும் கொள்கைகளுக்கும் மதிப்புக் கொடுக்கவேண்டும். என்ற மனப்பான்மை அங்கே ஒளிவிட்டு வீச சனநாயகமுறை தழைக்கும்.
பொறுப்பேற்கத்தயாராக இருத்தல் என்பது சனநாயக அநுகூலத்துக்கு வேண்டிய இன்னேர் தகைமை யாம். ஓர் தேசத்து மக்களின் பிரச்சினைகளை அவர்கள் பொறுப்பில், விடாது பல காலமாக மற்றவர்களே பார்த்துத் தீர்த்துவந் திருந்தால், அல்லது அவர்களை நல்லாட்சி புரியும் யதேச்சாதி காரி ஒருவன், பிள்ளைகளை வழிநடத்துவதுபோல நடத்திவந் திருந்தால், அவர்கள் திடீரெனத் தம்மைத் தாம் பரிபாலிக் கும் தகைமையுடையராய் வரமுடியாது. அவர்கள் அதிகாரத் தைப் பெற்றதும் அதன் போதையில் மயங்குவரன்றி, அவ் வதிகாரத்தைச் சேவா சாதனமாக்கார். தமக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை தம் எல்லாரதும் நன்மையின் பொருட்டுப் பிர யோகிக்கப் பயின்றவர்களும், அதிகாரத்தைத் துர்ப்பிர யோகம் செய்தால் அதனல்வரும் கெடுதிகளை உணர்பவர்க ளும் இருக்கும் தேசத்தில்தான் சனநாயகமுறை தழைக்கும். பன்னெடுங் காலமாகப் பால் குடிப் பிள்ளைகள் போல மற்றவர் களின் பாதுகாப்பில் வளர்ந்தவர் மத்தியில் சனநாயகமுறை வளருதல் அரிது.
எங்கள் இலங்கை நாட்டிலே வாழும் மக்கள் பன்னெடுங் காலமாக பரஸ்பரம் அன்பு பூண்டொழுகி வந்திருக்கிருர்கள். அவர்கள் சமயச் சண்டை, சாதிச்சண்டையில்லாது சமரச மனப்பான்மையுடன் சீவித்து வந்திருக்கிருர்கள். பெளத்த மதம் மற்றச்சமயங்கள் பால் எப்போதும் சமரசபாவத் தைக் கொண்டே வந்திருக்கிறது. வகுப்புச்சண்டைகளும் அதிகம் இருக்கவில்லை. ஆனல் சுயராச்சியம் வழங்கப்பட்டபின் வகுப்புவேற்றுமை கொஞ்சம் கொஞ்சமாகத் தலைகாட்டத் தொடங்கி இருக்கிறது.
சனநாயகம் விருத்தியடைவதற்கு வகுப்புப்பிரிவினை இருத் தல் பெரும் தடையாக முடியும். சர்வசன வாக்குரிமை சிங்கள ருக்கு அமோகமான அரசியல் அதிகாரத்தை வழங்கி இருக் கிறது. இந்த அதிகாரத்தை அவர்கள் பிரயோகித்துத் தம் சொந்த நன்மைகளை மாத்திரம் விருத்தியாக்கவும் மற்றவர் களை அழிக்கவும் கூடும் என்ற ஒரு பயம் சிலரிடையே தோன்றி

சனநாயகம்-அதன் கருத்து 95
இருக்கிறது. தமிழரசுக்கட்சி என்றும் சமஷ்டிக்கட்சி என்றும் சொல்லப்படும் கட்சியாரின் கொள்கைக்கு இந்தப் பயம்தான் காரணம். இன்னும், பெரும்பான்மையினர் எவ்வளவுதான் தாராளபோக்குடன் நடந்தாலும், அவர்களின் சனநாயக ஆட்சி வேண்டவே வேண்டாம் என்று விடாப்பிடியாக நிற்கும் சிறுபான்மையினர் இருக்கும் இடத்திலும் சனநாயகமுறை தழைக்காது. எங்கள் நாட்டுக்குள்ள பெரும் பிரச்சினைகளில் இதுவுமொன்று. இங்கே சிங்களர், தமிழர், முஸ்லிம்கள், பேர்கர் எனப்படும் ஒல்லாந்தர் ஆதியாம் சமூகத்தவர் வசிக்கிருர்கள். இவர்கள் சகலவிதங்களிலும்-மொழி, சமயம், கலை, பண்பாடு, உடை, பாவனையாகியவற்றில்வேறுபட்டவர்களாக இருக்கிருர்கள். பரஸ்பரம் நல்லெண் ணம், நம்பிக்கை என்பவற்றை விருத்திசெய்தலால் இப்பிரச் சினையைச் சுமுகமாகத் தீர்க்கலாம். அப்படித் தீர்ப்பதற்கு, பொருளாதாரச் சலுகைகள், நன்மைகள், உத்தியோகங்கள் என்பவற்றைப்பெறுவதில் இங்குள்ள சமுகத்தினருக்கிடையே யுள்ள போட்டி பெரும் தடையாக இருக்கிறது. தொழில், மொழி, பண்பாடு என்பவைபற்றிய வேற்றுமைகளுடன் பொருளாதாரப் போட்டியும் சேர்ந்திருக்கிறது. இந்த வேற் றுமையினையும் போட்டியையும் திருப்திகரமாகத் தீர்த்துவைப் பது இலங்கையின் சனநாயக அரசாங்கத்துக்குரிய பெரிய பொறுப்பாகும்.
உரிய காலத்தில் பொறுப்புவகிக்கத் தயங்குவது, பொறுப்பு வகிக்கப் பின்வாங்குவது சனநாயக வளர்ச்சிக்கு இடை யூரு ன இன்னென்ரு கும். யதேச்சா முறைச் சங்கங்கள் உரிய முறையிற் கரும மாற்றுவதில் பிரதிகூலமடைவது கண் கூடு: எனக்கென்ன, அவர் பார்க்கட்டும்’ என்ற மனப்பான்மை நம் மக்களில் மிகப்பலருக்கிடையே நிலவி வருவது வருந்தத் தக்க விடயமாகும். உதாரணத்துக்கு நம் நாட்டில் உள்ள கூட்டுறவு இயக்கத்தை எடுத்துக்கொள்ளுவோம். பொது நன்மையின் பொருட்டுத் தமது க்ாலத்தையும் தொண்டையும் தரக்கூடிய தொண்டர்கள் இன்மையால் இவ்வியக்கம் எதிர் பார்க்கப்படுமளவுக்கு அபிவிருத்தியடையவில்லை. நகர சங்கங் கள் போன்ற ஊராட்சித்தாபனங்களில் கூட்டம் கூடுதற்குத் தானும் போதிய அங்கத்தவர்கள் சமுகமளிக்காதிருப்பதனை நாம் அடிக்கடி கேள்விப்படுகிருேம். ‘நமக்கென்ன' என்ற இவ்விதமான மனப்பான்மை மக்களுக்கிடையே நிலவுவதனல் பணியாற்றும் தொண்டர்களின் சேவையில் தங்கியிருக்கும் தாபனங்கள் பல சீரழிந்துவிடுகின்றன: அது மாத்திரமல்ல; அதிகாரத்தைக் கைப்பற்றச் சந்தர்ப்பம் நோக்கி இருக்கும்

Page 103
196 சனநாயகம்-அதன் கருத்து
ஒரு சிலருக்கு பொது சனங்களுக்கிடையே நிலவும் பராமுக மனப்பான்மை தக்க வசதியையும் யளிக்கிறது. இவர்கள் அரசியலையே தம் வாழ்க்கைத் தொழிலாகக்கொண்டு, தம் பிரசாரத்தின் மூலம் பொது சனங்களைத் தம் கைப்பொம்மை. களாக்கியும் விடுவர். அப்படியான நிலையில் கட்சிகள் என்பது மிக ஒடுங்கிய நோக்கங்களை உடையனவாய் குறித்த குழுக்க ளுக்கே நன்மை விளைக்கும் நோக்கத்துடன் இயக்கப்படும். இதன் பயன், சனநாயக அரசியலுக்கு நேர் விரோதமான தாகும்.
கட்சிமுறை இருக்குமிடத்தில் கட்சிக்கொள்கையும் இருக் கும். கட்சிக்கொள்கை என்பது, குறித்த ஒரு கட்சியால் தேசம் முழுவதுக்குமென வகுக்கப்படும் ஒரு கொள்கையாகும். இப்படியாகத் தேசம் முழுவதுக்குமான கொள்கையை ஒரு கட்சி கைக்கொள்ளாவிட்டால் அக்கட்சிமுறை சனநாயகத்துக் கேற்றதல்ல என்றுதான் சொல்லவேண்டும். குறுகிய நோக் கங்கள்கொண்ட அரசியற்கட்சிகள் எம்நாடுபோன்ற நாடு களிலே தோன்றி நிலைக்க இடமுண்டு. ஒரு கட்சி குறித்த ஓர் இனத்தின் நலவுரிமைகளைக் கவனிப்பதாகக்கூறி அவ்வினத்தவ ரின் உணர்ச்சிகளை மிகவேகமாகக் கிளறிவிடலாம். மக்களின் சமய உணர்ச்சிகளைத் தூண்டி, பல்வேறு மதத்தவர்க்கிடையே வேற்றுமையையும் பிணக்கையும் கொண்டுவரச் சில கட்சிக ளால் முடியும். இப்படியான ஒடுங்கிய சமய, சாதி நலவுரிமை களை ஆதாரமாகக்கொண்டுள்ள கொள்கைகளைக் கட்சிகள் வகுத்தல் கஷ்டமல்ல, ஆனல் இப்படியான கொள்கையினல் தேசம் முழுவதுக்கும் நன்மை கிடைக்கமாட்டாது. இலங்கை ஒரு புதிய சனநாயக நாடு. நாடு முழுவதும் வாழ இங்குள்ள ஒவ்வொருவரும் கருமம் ஆற்றவேண்டும். ஆகவே கட்சிகள் தேசியக் கொள்கைகளைக் கைக்கொள்ள வேண்டுமன்றி, குறுகிய பிரிவினைக் கொள்கைகளைக் கடைப் பிடிக்கக் கூடTது. இப்படியான தேசோத்தாரண கொள்கையைக் கடைப்பிடிப்பதில் நாம் தவறுவோமேயானல், இந்நாட்டின் எதிர்காலம் கலவரம் நிறைந்ததாகவே இருக்கும்.
நலன்புரியரசாங்கம்? மனித சமுதாயங்கள் காலத்துக் காலம் மாற்றமடைந்து வந்திருக்கின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். அத்தகைய தான மாற்றத்துக்குக் காரணங்கள் பலவாகும். ஓர் சமுதா யத்தின் சீவனே பாயமுறையில் ஏற்படும் மாறுதல் இம்மாற் றத்திற்கான காரணங்களிற் பிரதானமானது. உதாரணத்
1. Party Policy. 2. Welfare State.

சனநாயகம்-அதன் கருத்து 翼97
துக்கு எங்கள் இலங்கையையே எடுத்துக்கொள்ளுவோம். புராதன இலங்கையிலே பட்டணங்கள் மிகக்குறைவாகவும் கிராமங்கள் மிகப்பலவாகவும் இருக்க வாழ்க்கையின் உலகார்த்தத் தேவைகளுக்கும் ஆன்மார்த்தத் தேவை களுக்கு மிணங்கத்தக்கதாகச் சமுதாயமும் அமைக்கப்பட்டி ருந்தது. தொழில் பற்றி மக்கள் விவசாயிகள் அல்லது கமக்காரர், வினைஞர், போர் வீரர், பிராமணர், வைசியர் கூடித்திரியர் என்று வகுக்கப்பட்டிருந்தார்கள். சிங்களப் பகுதிகளிலே பெளத்த சங்கத்திற் சிலர் சேர்ந்து பிக்குகளா யிருந்தனர். அக்காலத்திலிருந்த ஒவ்வோர் கிராமமும் தனக்கு வேண்டிய உணவு, உடைப்பொருள்களைத் தானே ஆக்கிக் கொண்டிருந்தபடியால், இப்பொருள்கள் சம்பந்தமான வியா பாரமிருக்கவில்லை. போக்குவரத்தும் பாதைகளும் மிகவும் குறைவாகவிருந்தன. எனவே விலையுயர்ந்த புலநுகர்ச்சிப் பொருள் வியாபாரம்தான் அக்கால மிருந்தது. இந்த நிலை இலங்கையில் மாத்திர மன்றி, மானியமுறை நிலவிய உலகப் பகுதிகள் எங்குமே நிலவியது.
காலம் போகப்போக உற்பத்தி விடயமாக நவீனமுறை கள் கையாளப்பட்டன. இதன் பயணுக வியாபாரமும், வியா பாரம் நடைபெறும் நகரங்களும் தோன்றிப் பெருகின. இப்படித்தோன்றிப் பெருகியதன் பின்னர் கிராமப் பக்கங் களுக்கும் பட்டணப் பக்கங்களுக்குமிடையில் வியாபார விடய மான வோர் தொடர்பு ஏற்பட்டது. இத்தொடர்பு, காலப்போக்கில், தேசவெல்லைகளைத் தாண்டிப் புறநாடுகளுக் கும் சென்றது. சர்வதேச வியாபாரத்துக்கு வேண்டிய வங்கி கள் போன்ற தாபனங்கள் அமைக்கப்படலாயின. ஆணுல் ஐரோப்பாவில் மறு மலர்ச்சி, சீர்திருத்தம் என்பனவற்றுக்கு வழி கோலிய நிலைமைகளிலிருந்து புதியவோர் கொள்கை உருவானதை இச்சந்தர்ப்பத்தில் நாம் மனத்திற் குறித்துக் கொள்ளுதல் வேண்டும். தனிமனிதன் தனது ஆற்றலை அபி விருத்தி செய்து, சமுதாயத்தில் முன்னேறுவதற்குச் சுதந் திரம் இருக்கவேண்டுமென்பதே அக்கொள்கை என்க. முயற்சி யுடைய தனிமனிதன், சமூகத்துக்குப் பயன்தரும் பொருள் களைக் கொண்டுவந்து மற்றவர்களுடன் போட்டியாக வழங்கு வதினல், சமூகத்துக்கு நன்மை புரிவதோடு தானும் முன் னேற முடியும் என்ற புதுக்கொள்கை மறுமலர்ச்சியுடன் உருவானது. மறுமலர்ச்சிக்காலம் வியாபாரப் பெருமக்கள் பொலிவதற்குரிய காலமாக விளங்கியது. அவர்கள் தம் தொழிலுக்கு இன்றியமையாது வேண்டிய அமைதியையும் சமாதானத்தையும் நிலைநாட்டக்கூடிய அரசர்களுக்குப்

Page 104
198 சனநாயகம்-அதன் கருத்து
பேராதரவாளர் க ளா கவும் விளங்கினர். வலிமைமிக்க அரசர்கள்ே மானிய காலப் பிரபுக்களையும் அவர்களுக்கு விரோதமாகக் கிளம்பும் நிலம் புல மற்ற வர் களையும் அடக்கிச் சமாதானத்தை உண்டாக்கமுடியும். அக்காலத் திலேயிருந்த நிலப்பிரபுக்களுக்கு விரோதமாக மன்னர்கள் செய்த முயற்சிகளுக்கு, புதிதாகத் தோன்றிய வர்த்தகர்கள் பேருதவி புரிந்தனர். நாட்டிலே சமாதானமும் அமைதியும் நிலவினல்தான் வர்த்தகம் பெருகும். அத்தகையதான சமாதானத்துக்கும் அமைதிக்கும் பங்கம் விளைத்த மானிய முறைப்பிரபுக்களை அடக்கிப் பணியவைத்து சமாதானத்தை நிலைநாட்டிய வரசர்களுக்கு இவ்வர்த்தகர்கள் தம்மா லான உதவிகளனைத்தையும் செய்து கொடுத்தனர். தேசியமுடி யரசுகள் தோன்றின. அவற்றுக்கு மக்கள் தேசீய அடிப்படை யில் விசுவாசம் பாராட்டினர். அதே நேரத்தில் தேசீய திருச்சபைகளும் தோன்றின. அவை தமது ஆராதனைகளில் தத்தம் மக்களது தேசீய மொழிகளை உபயோகப்படுத்தின. இதன் காரணமாக மத்திய காலத்தில் சகல கிறிஸ்துவ மக்களுக்கும் பொதுவான தனித்தாபனமாயிருந்த திருச்சபை பலவாகப்பிரிந்தது. தான் எந்தவிதமான கொள்கையைப் பின்பற்றவேண்டும், எந்த விதமான அபிப்பிராயத்தைக் கொள்ளவேண்டும், எந்த விதமான தொழில்களைக் கடைப் பிடிக்க வேண்டும், எந்த விதமான கருமங்களை யாற்ற வேண்டு மென்பதில் ஒருவனுக்குப் பூரண சுதந்திர மிருத்தல் வேண்டும்; வெளியார் அவனைக் கட்டுப்படுத்தக் கூடாது என்ற அபிப்பிரா யம் உருவாகி ஒரு மகா சக்தியாக வளர்ந்த மையும் உரோமச் சக்கராதிபத்தியம், எல்லாருக்கும் பொதுவாக விருந்த திருச் சபை என்னுமிரண்டையும் பெரும் மாற்றத்துக் காளாக்கி யது. தனிமனிதனனவன், சமுகத்துக்காகத்தான் வாழவேண் டும் என்ற பழைய மானியமுறை நிலையிலிருந்து விலகி, தன் சொந்த நன்மையின் பொருட்டு உழைக்கவேண்டும் என்ற நோக்கம் ஒவ்வொருவனிடத்தும் பிறந்தது. இப்படியான வோர் மாற்றம் இலங்கையிலும் நிகழ்ந்தது. ஆனல், ஐரோப் பாவில் மாற்றம் ஏற்பட்ட அதிககாலத்துக்குப் பின்னரே அது இங்கே-அதாவது தோட்டப் பயிர்ச்செய்கை ஆரம்ப மான பின்னரே-தோன்றியது. பழையன கழிய, நமது இலங்கையில், முயற்சியுடைய தனிப்பட்ட மனிதனே விவசா யம், வியாபாரம், வர்த்தகம் என்னும் இன்னேரன்னவற்றில் முன்னுக்கு வந்தான்.
தனிப்பட்டவன் முன்னுக்கு வந்தமைக்கு, ஐரோப்பாவில் தோன்றிவளர்ந்த இன்னேரியக்கம் பெரிதும் துணைச் செய்தது
1. National Monarchies.

சனநாயகம்-அதன் கருத்து 199
அதுதான் கைத்தொழிற் புரட்சி. இதன் பயனுக இயந்திரப் பொருள்கள் அபரிமிதமாக உற்பத்தியாக்கப் பட்டன. கடல் மீதும் தரைமீதும் மிகக் குறைந்த செலவில் போக்குவரத்து செய்தற்கான சாதனங்கள் அமைக்கப்பட்டன. சம்பளம் பெற்று வாழ்க்கையை நடாத்தும் பெருந்தொகை நகரமக்கள் தோன்றினர்; அவர்கள் தொழிலாற்றும் தொழிற்சாலைகள் பெருகின. கைத்தொழிற் புரட்சியால் முன்னெருபோது மில்லாத அளவுக்குத் தொழில் நிபுணத்துவமும் தொழிற் பாகுபாடும் ஏற்பட்டன. பெருந்தொகையிற் பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டுவந்தபடியினல், அவ்வுற்பத்திக்கு வேண்டிய மூலப்பொருள்களும், உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்யவேண்டிய இடங்களும் இன்றியமையாது வேண்டப்பட்டன. பொருளாதார நிலைமைகளில் ஏற்பட்ட இந்த மாற்றங்கள் சமுதாய அமைப்பையும் பாதித்தன. இந்த நிலைமைகளைத் தமக்குச் சாதகமாக மக்கள் பயன்படுத் திக் கொள்ளவும் தத்த மக்கு உகந்த தொழில்களை அவர்கள் பின்பற்றவும் அவர்களுக்கு எவ்வித தடங்கலுமில்லாப் பரி பூரண சுதந்திரம் இருக்கவேண்டும் என்று மக்கள் அபிப்பிரா யம் கொள்ளத் தலைப்பட்டனர். இவ்விடயமாக மக்கலே என் னும் ஆங்கிலப் பிரமுகர் கூறியது நோக்கற்பாலது :-
* எம்மை ஆளுபவர்கள் தமக்குரிய கடமைகளுடன் மாத் திரம் நின்று விடவேண்டும். முதலீடுசெய்வோர் தமக்கு நல்ல இலாபம் தரக்கூடிய வழிகளில் தம் முதற்பணத்தை யிடுவதற்கு விடவேண்டும் ; பண்டங்கள் தமக்குரிய நியாய விலையைப் பெற விடவேண்டும்; விடாமுயற்சியும் கூர் மதியும் தமக்குரிய பிரதி பலனைப் பெறவிடவேண்டும்; சோம்பலும் தவறும் தமக்கு வேண்டிய தண்டனையைப் பெற விடவேண் டும்; மக்களின் சொத்துக்களைப் பாதுகாத்து, அரசாங் கத்தின் ஒவ்வொரு பகுதியிலும் சிக்கன முறையினைக் கண்டிப்பாகக் கைக்கொண்டு ஒழுகுதல் வேண்டும். இவ்வள வையும் அரசாங்கம் செய்யுமாக: மீதிக்கருமங்களை மக்கள் நிச்சயமாகத் திறம்படச் செய்வர்”.
அரசாங்கம் இவ்விடயத்தில் எப்படி நடக்கவேண்டும் என்று சனங்கள் விரும்பினர்கள் என்பதனை மேலே எடுத்துக் காட்டிய கூற்று விளக்குகின்றது. அரசாங்கமானது ஓர் நடுவர் அல்லது மத்தியஸ்தர் நிலைமையில் மாத்திரமே நின்று கொள்ள வேண்டும். நேர்மையற்ற முறையில் யாரேனும் கருமமாற்று வதனைத் தடுக்கவும், தீயவர்களின் கொடுமைகளிலிருந்து மக்க
l. Lord Macaulay.

Page 105
200 சனநாயகம்-அதன் கருத்து
ளின் சொத்துரிமைகளைப் பாதுகாக்கவும் அது இருக்கிறது. காவல் புரிந்துகாப்பதே அதன் கடமை எனக் கருதப்பட்டது. தொழில்துறைகளில் ஒருவரோடொருவர் எதிரிடையிட்டுக் கொள்ளச் சுதந்திரம் உடைய மக்கள் அனைவரும் திறமையிலும் ஒரே தரத்தினராகவிருந்து சம சந்தர்ப்பங்கள் உடையரா யிருந்தனர் என்ற வோர் எண்ணம் பொதுவாக இருந்தது. அறிவும் முயற்சியுமுடையார் எப்படியாவது முன்னேறுவர், அறிவும் முயற்சியும் எப்போதும் உரிய பயனைக் கொடுக்கும் என்று கருதப்பட்டு வந்தது. ஆனல் தொழில்துறைகளில் முன்னேறுவதற்கு இன்றியமையாதனவாய சொத்தும் முதலும், தொழிற்பயிற்சியும் கல்வியும் ஒர் சிலர்க்குத் தான் பொருந்தியிருந்தன. எனவே, கட்டுப்பாடின்றி யாவரும் தொழில்துறைகளிற் போட்டியிடச் சந்தர்ப்பங்களிருந்தன என்று நினைப்பது சரியன்று; மிகக் கொடியதான வாழ்க்கைப் போராட்டத்திலே வலியவர்களே வெற்றிகொள்ள மெலி யார் அழிந்தொழிந்தனர். அவ்வாறு அழிந்தொழியாதவர் கள் நித்திய வறுமைக்குள்ளாகி நடைப் பிணங்களாகக் காலம் போக்கினர். இங்கிலாந்திலே நிகழ்ந்த கைத்தொழிற் புரட்சி விளைவுகள் எம் கூற்றுக்குச் சான்றுபகரும். அக்கைத்தொழிற் புரட்சியை உரியவிதத்திற் பயன்படுத்திய வோர் சிலர் குபேர சம்பத்துப்படைத்துக் கோடி சீமான்களாக, இலட்சக்கணக் கான மக்கள் போதிய உணவில்லாமல், ஒதுங்கி வாழ உறைவிட மில்லாமல் உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லாமல் சதா சஞ் சலத்துடன் தம் வாணுளைப் போக்கி வந்தனர். அரசாங் கம் "தாராளமனத்துடன் காட்டிய நடுவுநிலைமை வலியார்க் குதவியளித்ததேயன்றி மெலியார்க்கு எந்த விதத்திலாவது நன்மையளிக்கவில்லை.
கைத்தொழிற் புரட்சியில் விழைந்த சொல்லொணுத்து யரத்திலிருந்து மனித சமூகத்துக்குச் சேவை புரிய வேண்டும் என்றவோர் இயக்கமும் தோன்றியது. ஒவ்வொருவரையும் தன் தன் எண்ணப்படி நடக்கவிட்டால், ஒவ்வொருவருக்கும் தன் தன் நலவுரிமையை மாத்திரம் பேணும் சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டால், வாழ்க்கைப் போராட்டத்திலே மெலி யாராயுள்ளார் வலியார்க்கடிமைகளாகவே வரவேண்டியேற் படும்; அப்போராட்டத்தில் நிர்வகிக்கும் ஆற்றலற்ற மெலி யார் வலியாரால் அடக்கி யொடுக்கப்படுவர்; எனவே, அரசாங்கமானது மெலியார்க்கு உதவிசெய்ய ஏன் தலையிடக் கூடாது? அரசாங்கம் வாளா பார்த்துக் கொண்டிருப்பதனை விடுத்து உண்மையில் உதவவேண்டியவர்களுக்கு அவ்வுதவியை ஏன் அளிக்கக்கூடாது? இவர்கள் மெலியாராய், வறியவர்க

சனநாயகம்-அதன் கருத்து 2 0 Τ.
ளாய்வந்தது தங்கள் பிழைகளினலா? இல்லையே! என்று இன்னுேரன்ன விதமான அபிப்பிராயங்கள் உருவாகின. மன்னுயிர் நலவிருத்திக்குரிய இப்படியான அபிப்பிராயங்கள் மக்கள் மனத்தில் உதித்துப் பரவ அதன் பய்னக மன்னுயிர் நலவிருத்தி இயக்கங்களும் தோன்றலாயின.
மேலே சொல்லப்பட்ட மன்னுயிர் நலவிருத்தி இயக்கங்க ளால் ஏற்பட்ட பயன்களோ அளப்பில. தொழிற்சாலைகளில் தம் சீவனுேபாயத்தின் பொருட்டுப் பாடுபட்ட பெண்களுக்கும் சிறுவர் சிறுமியர்க்கும் பல பாதுகாப்புக்களைத் தேடிக் கொடுத்தன. தொழிலாளர்களைப் பாதுகாக்கும் வேறு பல சட்டங்களும் பின்னர் நிறைவேற்றப்பட்டன. அவற்றுட் பிரதானமானது 1890-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட சட்டமாகும். இங்கிலாந்திலேயுள்ள தொழிலாளர் வேலை செய்யும்போது ஊறடைந்தால் முதலாளிமார் ஈடுசெய்ய வேண்டும் என்பதே அச்சட்டமாகும். நாட்டில் உள்ள உற் பத்திச் சாதனங்களைத் தம் அதிகாரத்தில் வைத்துக்கொண்டு, தாபன ரீதியில் தம்மை உறுதியாக அமைத்துக்கொண்ட வோர் சில செல்வர்களின் சுயநல வேட்கையிலிருந்து மக்களைக் காத்து அம்மக்களின் சேமாபிவிருத்திக்குப் பணியாற்றுவது அரசாங்கத்தின் இன்றியமையாகக் கடன் என்ற வோர் கொள்கை மக்களிடையே நன்ரு கப் பரவினது. போட்டியை ஆதார்மாகக் கொண்டுள்ள உலகிலே நிலவும் போராட்டத் தின் கொடுமையைக் குறைப்பதற்கு அரசாங்கம் தலையிட வேண்டும். எனவேதான் தொழிற்சாலைகளில் வேலை செய் யும் தொழிலாளர்கள் விடயமான பல சட்டங்கள் பிறப்பிக் கப்பட்டன. இன்ன இன்ன வேலை செய்வோர்க்கு இன்ன இன்ன சம்பளம் கொடுக்கப்படுதல் வேண்டும்; இத்தனை மணி நேரத்துக்கு மேல் அவர்களிடம் வேலை வாங்கக்கூடாது; தொழிலாளர் தம் நலவுரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ளச் சங்கமாகச் சேர்ந்துகொள்ளும் உரிமையுண்டு என்று சட்ட பூர்வமாக உறுதியளிக்கப்பட்டது. பிள்ளைகளுக்கு இலவசக் கல்வி ஒழுங்கு, செளக்கிய வீமாத்திட்டம் என்னும் இன்னே ரன்ன சிமூகசேவைகளின் பொருட்டு சமீபகாலத்தில் இங்கி லாந்திற் பல சட்டங்கள் உண்டாக்கப்பட்டன. இரண்டாவது உலகமகா யுத்தம் ஏற்பட்ட பின்னர் சமூகசேவை விடயத்தில் அரசாங்கத்தின் தலையீடு மேலும் அதிகமானது. யுத்தகாலம் போன்ற நெருக்கடியான காலங்களிலே மக்களுக்கு வேண்டிய பொருள்கள் அரிதாகக் கிடைக்கும். அப்பொருள்களை எல்லாருக்கும் சமபங்காக விநியோகப்படுத்தும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டது.
l. Humanitarian movements.

Page 106
202 சனநாயகம்-அதன் கருத்து
இப்படியான நல்ல மாற்றங்களை இலங்கையிலுள்ள நாமும் எம்மத்தியிற் கண்டிருக்கின்ருேம். பல்வேறு துறைகளில் அரசாங்கம் தலையிட்டுப் பணியாற்றி வருகிறது. இலவசக் கல்வி முறையொன்று இங்கேயிருக்கிறது. விளைபொருள்களைச் சிறிய அளவில் உண்டாக்கும் சிறு விவசாயிக்கு உதவிசெய்ய வோர் விற்பனை வசதிப்பகுதியை அரசாங்கம் தன்னகத்தே கொண்டிருக்கிறது. கூட்டுறவுப் பகுதி இலங்கை யெங்கணும் பல கூட்டுறவுச் சங்கங்கள் தாபிதமாக உதவியிருக்கிறது. இச்சங்கங்கள் சிறு விவசாயிக்கும் குடியானவனுக்கும் நல்ல உதவியளித்திருக்கிறது. நாட்டில் உள்ள புகையிரதப்போக்கு வரத்துப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்றுக் கொண்டிருக் கிறது. மின்சாரம் உதவும் பணியும் அதனதே. எத்தனையோ ஆசுப்பத்திரிகளையும் அதுவைத்து நடாத்துகின்றது. நாட்டில் உள்ள உப்பளங்கள் யாவும் எமது அரசாங்கத்தின் பொறுப்பி லேயே இருக்கின்றன. கைத்தொழில் அமைச்சர் என்னும் அமைச்சரின் நிருவாகத்தின் கீழ்ப் பல அரசாங்கத் தொழிற் சாலைகள் தாபிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் பல தொழிற் சாலைகள் தாபிக்கப்பட விருக்கின்றன. கடற்றெழிற் பகுதி என்ற வோர்பகுதி மக்களுக்கு வேண்டிய மீன்களை மிகவும் குறைந்த விலைக்குக் கொடுத்து வருகின்றது. கூட்டுறவு மொத்தவியாபாரத்தாபனம் தனக்கெனப் பல பண்டசாலை களையும் விற்பனைத் தாபனங்களையும் வைத்து நடாத்தி மக்க ளுக்குப் பெரும், பணியாற்றி வருகின்றது. கமத்தொழிற் பகுதி? நீர்ப்பாசனப்பகுதி" என்ற இரண்டு பகுதிகளை அரசாங்கம் தன்னகத்தே கொண்டு நாட்டிற் கமத்தொழிலை அபிவிருத்தி செய்து, இதுவரை காடாய்க்கிடந்த இடங்களைக் கழனிக ளாக்கி அங்கே மக்களைப் பெருந்தொகையிற் குடியேற்றும் பணியில் ஈடுபட்டிருக்கின்றது. ஏற்கெனவே வகுக்கப்பட் டுள்ள குடியேற்றத் திட்டங்களைவிட, மேலும் பல குடி யேற்றத் திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன. மக்களின் சமூகபொருளாதார வாழ்க்கை முன்னேற்றத்தைத் தனிப் பட்டவர்களின் பொறுப்பில், விடாது. அரசாங்கம் தானே கையேற்றுப் பணியாற்றிவருகின்றது என்பதனை இவை எமக் குக் காட்டுகின்றன. தனிப்பட்டவர்கள் தங்கள் சுயநலத் தையே கருதுவார்கள். ஆனல் அரசாங்கம் மக்களனைவருக் கும் பொதுவானது.
l. Marketing Department. 5pb 003 Lu(Bass, it u(55 (7607 g) to கூறுவர்.
2. Agricultural Department. 661& Tut Ug 5 67667(1)b G5IIdealist. 3. Irrigation Department.

சனநாயகம்-அதன் கருத்து 20B
சமூக, பொருளாதார முயற்சிகளைத் தனிப்பட்டவர்கள் தமது மனம் போனபோக்கில் செய்து கொண்டிருந்தனர்: அவர்களுடைய விடயத்தில் தலையிடக்கூடாது என்று ஓர் காலத்தில் எண்ணியிருந்த அரசாங்கம் அம்முயற்சிகளில் தீவிர மாகத் தலையிட்டு, மக்களனைவருக்கும் நன்மைகளை ஈட்டிக் கொடுக்கத் தொடங்கியிருக்கிறது. பொதுமக்கள் இந்த நன்மைகளை வேறு வழிகளாற் பெறமுடியாது. அப்படி யின் றிப் பெறுவதென்றல், யாரும் தருமசிந்தையுள்ள தனிப்பட்டவர்களால்தான் ஆகவேண்டும். முயற்சியுடைய வர் களுக்கு, அவர்கள் தாம் எடுத்துக்கொண்ட முயற்சி யில் முன்னேறச் சமசந்தர்ப்பத்தை வழங்குவதோடு மெலி யார்களைக் கைதூக்கி அவர்களுக்கு வாழவழி காட்டுவதும் தன் இன்றியமையாக்கடமை என்ற சித்தாந்தத்தினை அரசாங் கம் இப்போது கொண்டிருக்கிறது. அரசாங்கம் என்பது மக்களை ஆட்சி செய்வதற்காக மாத்திரம் ஏற்படுவதன்று. மக்களுக்கு நலன் புரிவதற்கே அது ஏற்படுவது: எனவே அது நலன்புரி அரசாங்கமாகத் திகழவேண்டும் என்ற கொள்கை அரசியலாரிடத்தில் தோன்றி உருவாகியிருக்கிறது.
நலன்புரி அரசாங்கம் எவ்வாரு கத் தான் ஏற்றுக்கொண்ட பணிகளை யாற்றவேண்டும்? என்ற கேள்வி இப்போது பிறக் கின்றது. மக்களுக்குப் பயன்படுசேவைகளையும் சமூகசேவை களையும் மாத்திரம் அரசாங்கம் கையேற்றுக் கொள்வதா? அல்லது நாட்டின் செல்வ உற்பத்திச் சாதனங்களனைத்தையும் விநியோகச் சாதனங்களனைத்தையும் தன் பொறுப்பில் எடுத் துக் கொள்ளவேண்டுமா? பொருள்களின் உற்பத்தியையும் அவற்றின் விநியோகத்தையும் அரசாங்கமே ஓர் திட்டப்படி வகுத்துக் கொள்ளவேண்டுமா? என்ற இப்படியான கேள்வி கள் தோன்றியிருக்கின்றன.
நாட்டில் உள்ள கமத்தொழில் கைத்தொழில், வியா பாரம், வாணிபம் முதலியனவை சம்பந்தமாகவோர் திட்டம் வகுத்து அத்திட்டப்படி கருமமாற்றி பொருளாதார முயற்சி கள் அனைத்தையும் அரசாங்கமே தன் பொறுப்பில் ஏற்றுக் கொண்டால் அது தனிமனிதனின் ஆக்கச் சக்தியையும் முயற்சியையும் சிதைத்துவிடும். உலகம் தோன்றியநாள் தொடக்கம் இதுவரை மனித குலத்துக்குக் கிடைத்த பெரும் பேறுகள் யாவும் தனிப்பட்டவர்களின் முயற்சியாலேயே உண் T66) of இப்போது அத்தனிப்பட்டவர்களின் ஆக்கச் சக்தியைச் சிதைத்து விட்டால், எல்லாம் வெறும் பாழாகி விடுமே என்று சிலர் கூறுவர். ஆனல் நாம் ஓர் விடயத்தை ஒத்துக்கொள்ள வேண்டும். அதாவது சமுதாயத்துக்கு ஒர் பெரும் கடமையிருக்கிறது. அது தனது அங்கத்தவர்கள்

Page 107
204 சனநாயகம்-அதன் கருத்து
அனைவரையும் நல்ல முறையில் வாழச் செய்தல் வேண்டும். அவர்களை அவர்களால் இயன்ற பயன்றரு பணியில் ஈடுபடுத்த வேண்டும். அந்தப் பணியை அவர்கள் உரியவிதத்தில் ஆற்றி வருகிருர்களோ என்பதனைக் கவனிக்கும் கடமையும் உரிமை யும் சமுதாயத்துக்குண்டு.
இந்தப் பிரச்சினை யை ஒன்றுக்கொன்று நேர் எதிரிடை யான இரு கோணங்களிலிருந்து அணுகலாம். தனிப்பட்ட வர்களுடைய முயற்சியில் தலையிடாது, மக்களுக்கு வேண்டிய இன்றியமையாப் பொருள்களைத் தரும் விவசாயம், கைத் தொழில், வியாபாரம், வாணிபம் முதலியனவற்றில், அத் தனிப்பட்டவர்கள் தாங்கள் விரும்பியவாறு செய்யலாம் என்று விட்டால், ஒர் சிலர் குபேர சம்பத்திற்புரள, இலட்சக் கணக்கானேர் வறுமைக்குழியிற்கிடந்து தவிக்கும் ஓர் சமு தாயமே உண்டாகிவிடும் என்பதனை யாரும் மறுக்கமுடியாது. முதலாளிமார் தாம் விரும்பியபடியே தம் தொழிலாளருக்குக் கூலி கொடுப்பர். அந்தக்கூலியைக் கொண்டுதான், அத்தொழி லாளர் தம் சீவியத்தை எப்படியாவது நடாத்துதல் வேண்டும். முதலாளிமார் மனமிரங்கித் தருவதைத் தொழிலாளர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றவோர் நிலையுண்டாகும். தனிப் பட்டவர்கள் தம் மனம் போனவாறு தம் முயற்சிகளை நடாத்த விடவேண்டும், அவர்களை கட்டுப்படுத்தக்கூடாது என்ற அபிப் பிராயத்துக்கு ஆதரவளிப்பவர் இப்போது எவருமில்லை. கட்டுப்பாடின்றித் தனிப்பட்டவர்கள் கரும மாற்றும்படி விட்டால் எவ்விதக் கெடுதிகள் நேரும் என்பதனைச் சரித்திரம் சந்தேகத்துக்கிடமில்லாமற் காட்டியிருக்கிறது.
மேலே காட்டிய கொள்கைக்கு நேர்மா முன கொள்கை வருமாறு:-நாட்டில் உள்ள நிலங்கள், கழனிகள், சுரங்கங் கள், ஆலைகள், தொழிற்சாலைகள், பாடசாலைகள், கல்லூரிகள் ஆகிய மக்களுக்கு வேண்டிய சகலவற்றையும் அரசாங்கமே தன் சொந்தமாக வைத்திருத்தல் வேண்டும், அவ்வாருக வைத்துக் கொண்டு, எவ்வளவு நிலத்தில் விவசாய்ம் செய்தல் வேண்டும், என்னவிதமான பயிர்களை உண்டாக்கவேண்டும், தாதுப் பொருள்களில் எவ்வளவினதைச் சுரங்கங்களில் இருந்து எடுத்தல் வேண்டும், என்ன விதமான பொருள்களை, எந்த அளவில் உற்பத்தியாக்குதல் வேண்டும் என்பதனைத் திட்ட மிட்டுக் கொள்ளவேண்டும். அப்படியானவோர் அரசாங் கம், நாம் எதனைச் செய்யவேண்டும், நாம் எதனை உண்ண வேண்டும், எதனை யணிய வேண்டும், எதனைப் படிக்கவேண்டும் எப்படி நினைக்கவேண்டும் என்று எமக்குக் கற்பிக்கும். தொகுத் துக் கூறுங்கால், எமது வாழ்க்கை முழுவதனையும், எமது நன்

சனநாயகம்-அதன் கருத்து 205
மையின் பொருட்டு, அரசாங்கமே ஓர் திட்டப்படி அமைத் துக் கொடுக்கும். இது நிறைவேற்ற முடியாதவோர் அதி தீவிரக்கொள்கை என்பதனை நீங்களும் ஒத்துக்கொள்ளுவீர்கள். மக்கள் யாவரும் வறியவர்களாய் ஓர் தன்மையினராக விருக் கும் நாட்டிலே என்னவிதமான உணவுப் பொருளை விளை விக்கவேண்டும், என்னவிதமான சாமான்களை உற்பத்தியாக்க வேண்டும் என்று திட்டமிட்டு வகுத்தல் முடியும். ஆனல், பலவித மக்களைக் கொண்டு, மக்களின் தேவைகளும், விருப்பு வெறுப்புக்களும் பலவிதத்தினவாக விருக்கும் ஓர் சமுதா யத்திலே இப்படித் திட்டமிட்டு வகுத்துக் கருமமாற்றுவது பல சிக்கல்களை உண்டாக்கி விடக்கூடும்.
மேலே காட்டப்பட்ட இருவிதத்தீவிரக் கொள்கைகளும் உசிதமானவையல்ல். இரண்டுக்கும் இடையில் உள்ள நடுப் பாதைக் கொள்கையே சிறந்தது. இந்த நடுப்பாதைக் கொள்கையினல் மனித சுதந்திரத்தின் மதிப்பும் மாண்பும் பாதுகாக்கப்படுகின்றன. அதே சமயத்தில், அரசாங்கத்தின் அங்கத்தவர்களாய், அதன் பிரசைகளாயுள்ள அனைவரதும் நல்வாழ்வுக்கு வேண்டிய சூழ்நிலைகளும் வகுத்துக் கொடுக்கப் படுகின்றன. மனிதனின் தனித்தன்மையைச் சிதைத்து, அவன் தனது வாழ்க்கையைத் தனக்கு வேண்டிய விதத்தில் அமைத்துக்கொள்ளவும், தனக்கு வேண்டிய விதத்தில் தன் சிந்தணு சக்தியை அபிவிருத்தி செய்யவும் விடாது அவன் சுதந்திரத்தில் இடறுகட்டைகளை யேற்படுத்துவது மனித வாழ்க்கையின் ரசத்தையே நாசம் செய்து மக்களை அற்பன்றும் புக் கூட்டங்களாக்குவதாக முடியும். 'பாவம் செய்யக்கூட எனக்குச் சுதந்திரம் இருக்கவேண்டும்’ என்று காந்தியடிகள் ஒர் முறை கூறியதும் ஈண்டு நோக்கற்பாலது. நாம் விரும்பிய படி எமது வாழ்க்கையை நடாத்தச் சுதந்திரமிருந்தாற்ருன், அந்த வாழ்வு சோபிக்கும். ஆனல், அப்படியாக நாம் சுதந் திரத்துடன் இருப்பது மாத்திரம் போதாது. மக்களனைவரும் மனரம்மியமான வாழ்க்கையை நடாத்துதற்கு வேண்டிய நிலைகளை அமைத்துக்கொடுக்கும் கடமையினை அரசாங்கம் தன்னதாக ஏற்றுக்கொள்ள நாம் பெருமுயற்சி செய்தல் வேண்டும், வாழ்வுக்கு வேண்டிய உணவு, இருக்கவீடு, உழைப்பு, தேக செளக்கியம் என்பன மக்களுக்கு வேண்டியன வற்றுட் சில. அவர்கள் தங்கள் அறிவினை அபிவிருத்தி செய்ய வும் சமுதாயநலனை அபிவிருத்தி செய்யவும் சந்தர்ப்பங்கள் அளிக்கப்படுதல் வேண்டும். எல்லாருக்கும் கல்விவசதி வழங்க வேண்டும். அவர்கள் ஆன்மீகத்துறையிலும் பண்பாட்டுத்து றையிலும் அன்ரு டச் சிரமப் பரிகாரத்துறையிலும் தம் தேவை களைப் பூர்த்தி செய்வதற்கு தாங்கள் எல்லாரும் சங்கமாகச்

Page 108
206 சனநாயகம்-அதன் கருத்து
சேர்ந்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் அவர்களுக்கு வழங்கப் படுதல்வேண்டும். இதனைத்தான் செய்யவேண்டும், இப்படித் தான் செய்யவேண்டும் என்று போர்வீரரின் பாசறைக்கட்டளை களை மக்களின் வாழ்க்கை விடயமாகப் பிரயோகிக்கக்கூடாது. குறித்த சில காலங்களிலே-உதாரணமாக யுத்த காலத்திலே --மக்கள் இன்ன இன்ன நியதிப்படிதான் நடக்கவேண்டும் என்று விதித்தல் அவசியமாக விருக்கலாமெனினும், சாதா ரணமாக மக்களின் வாழ்க்கையைக் கட்டுப்படுத்தல் எந்த விதத்திலேனும் விரும்பத்தக்கதன்று.
ஆகவே, ஒன்றுக்கொன்று மாறுபட்ட பான்மைகளுக் கிடையிற் சமரசத்தை நிறுவமுயற்சிப்பது நலன்புரியரசாங் கத்தின் பெருங்கடமையாகும். ஒர் பக்கத்தில் தனிப்பட்ட வனின் உரிமைகள் இருக்கின்றன; மற்றப் பக்கத்தில் மக்க ளின் நல்வாழ்வுக்கு வேண்டிய சாதனங்களை அமைத்துக் கொடுக்க வேண்டியிருக்கிறது. திட்டம் வகுத்து, அத்திட்டப் படி கரும மாற்றுவதும் நல்லதுதான். அது ஒர் நோக்கத்தைக் கொண்டு அந்நோக்க பூர்த்தியின் பொருட்டுக் கரும மாற்றத் துணை செய்யும். ஓர் நாட்டுக்குரிய இயற்கை மூலவளங்களைப் பாதுகாத்துக் கொள்ள அரசாங்கத்திட்டவமைப்பு உதவு கின்றது. இங்கிலாந்திலே நிலக்கரியைச் சுரங்கங்களிலிருந்து பெறுதலாகிய தொழில் இப்போது அரசாங்கத்தின் பொறுப் பாக்கப்பட்டிருக்கிறது. இலங்கையிலே மின்சாரம் வழங்கல் அரசாங்கத்தின் கருமமாய், ஓர் பொதுக் கைத்தொழிலாக விளங்குகின்றது. நாட்டிலே யுள்ள மூலவளங்களைப் பயன் படுத்துவதோடு மாத்திரம் நிற்காமல், அவற்றைப் பேணிப் பாதுகாத்தலும் வேண்டும். எனவே, அவற்றுட் பலவற்றை மேலும் பொதுச் சொத்துக்களாக்குவது விரும்பத்தக்கதாய் வரலாம். இலங்கை முக்காலே மூன்று வீசமும் கமத்தொலிழில் தான் தங்கியிருக்கின்றது. அப்படியிருந்தும் தேயிலை, றபர் என்பனவற்றின் உற்பத்தியின் பொருட்டு மலைப்பக்க நிலங் கள் உபயோகிக்கப்பட்டபோது, அங்கேயிருந்த மண் அரிக் கப்பட்டு அவமே போக விடப்பட்டது. மண் என்பது அற்ப மானதன்று. அதுவிலை மதிப்பற்றது. அது தேசச்சொத்து. அதனை என்றும் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். மண்ண ரிப்பைத் தடுத்து மண்ணைப் பாதுகாப்பதற்கு வேண்டிய சட் டங்கள் எம் நாட்டுக்கு இன்றியமையாது வேண்டப்படுகின் றன.
பொதுச் சொத்தாக்கக்கூடிய எமது மூலவளங்களில் வனங் களும் சேர்ந்தனவாகும். கட்டுப்பாடு யாது மின்றி வனங் களில் உள்ள மரங்களைத் தறிக்கவிட்டதால், அங்குள்ள மண் ணுக்குப் பெருஞ்சேதம் ஏற்பட்டதோடு, ஆறுகளில் அழுக்கும்

சனநாயகம்-அதன் கருத்து 2O7
குவிந்துவிட்டது. காலந்தோறும் நிகழ்ந்துவரும் கழனிப் பெருவெள்ளங்களுக்கு இது ஒர் காரணமாகும். பொதுச் சொத்தாக்கவேண்டிய வேருேர் தொழில் கடற்ருெழில். மக்க ளுக்கு இன்றியமையாது வேண்டப்படும் உணவுப் பொருள் களில் ஒன்றைச் சுலபமாக வழங்குவதற்கு இதனல் வழி பிறக்கும்.
நாட்டின் மூலவளங்களைச் சரியான முறையில் மக்கள் எல்லார்க்கும் பயன்படுத்ததற்கு அவற்றின் நிருவாகத்தை இதற்கெனவமைக்கப்படும் குழுக்கள் அல்லது தேசிய கைத் தொழிற் கழகங்களிடம் ஒப்புவித்தல் தான் சிறந்தவழி என்ற எண்ணத்தைப் பலர் கொண்டிருக்கிருர்கள். இத்தகைய தான கழகங்களுக்கு கல்ஒயா அபிவிருத்திக்குழு?வும் கூட்டுறவு அபிவிருத்திக்குழுவும் தக்க உதாரணங்கள். ஆஞல் அரசாங் கமே தனது பகுதிகள் அல்லது இலாகாக்கள் மூலம் நாட்டின் இயற்கைமூலவளங்களை அபிவிருத்தி செய்யும் பணியில் நேரடியாக ஈடுபடுதல் வேண்டும் என்று வாதிப்பாரும் உளர். கைத்தொழில்களை அரசாங்கம் கட்டுப்படுத்தி நடத்தல் அல்லது அவற்றின் நிருவாகத்தில் பங்குபற்றுதல் என்னும் பிரச்சினை விடயமாக கைத்தொழிலபிவிருத்தியையும் கைத்தொழிற் கொள்கையையும் ஆராய்ந்து ஒர் அறிக்கை சமீபகாலத்தில் வெளியிடப்பட்டது. கைத் தொழில்களை அரசாங்கம் கட்டுப் படுத்தி நடத்துவதன் நோக்கங்கள் வருமாறு:-
(அ) மூலப் பொருள்களையும் ஆட்பலம் மின்சக்தி என்ப
வற்றையும் பூரணமாகப் பயன்படுத்தல். (ஆ) அவ்வவ்விடங்களில் உள்ள மூலவளங்களைத் தக்க வாறு பயன்படுத்தும் பொருட்டு கைத் தொழில்களை நாடெங்கும் பரவச்செய்தல். (இ) நியாயமான செலவில் பொருள்களை உற்பத்தி
யாக்கள். (ஈ) செல்வம் எல்லாருக்கும் செறியும்படி செய்தல்.
மேலே காட்டப்பட்ட இலட்சியங்களை அடை வதற்குக் குறித்த அறிக்கை மூன்று வழிகளை வகுத்தது. அவையாவன: (அ) முழுநிருவாகத்தையும் அரசாங்கமே பொறுப்பெடுத்
த ல. (ஆ) அரசாங்கத்தின் தொழில்களையும் தனிப்பட்டவர்க ளின் தொழில்களையும் பரஸ்பரம் ஒற்றுமையாக நிருவகித்தல் 1. National Industries Corporation.
2. Gall Oya Development Board. 3. Board for Co-operative Development.

Page 109
2 O 8 சனநாயகம்-அதன் கருத்து
(இ) அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்கு அமைவாகத்
தனிப்பட்டவர்களின் நிருவாகம் இருத்தல், இப்படியான ஆலோசனைகள் கூறப்பட்டிருக்கிறபோதி லும், அரசாங்கமானது தனிப்பட்டவர்களின் முயற்சிக்கு உதவி செய்வதோடு மாத்திரம் நின்றுவிடவேண்டுமன்றிக் கைத்தொழில்களில் நேரடியாகத் தலையிடக்கூடாது என்ற வாதமும் சில இடங்களில் இருந்து பிறக்கின்றன. ஏனைய நாடுகளிலே, கட்டுப்பாடற்ற தனிப்பட்டவர்களின் முயற்சி கள் எத்தகைய பயன்களை விளைத் திருக்கின்றன என்ப தனை நாம் கண்டிருக்கின்ருேம். குறித்த சில தொழில்களில் ஓர் சிலர் ஏகபோக உரிமை பெற்றுக் குபேர சம்பத்துப் படைத் திருக்க இலட்சக்கணக்கான மக்கள் வறுமையிலாழ்ந்து தம் பிழைப்பு எப்போது பறிபோய் விடுமோ என்ற ஏக்கத்துடன் சதா காலம் கழிக்கிருர்கள். இலங்கையில் உள்ள ஆதாரக் கைத்தொழில்களை அரசாங்கம் பொதுச் சொத்தாக்கவேண்டும் என்று கருதப்பட்டது. அத்தொழில்களாவன:-
1 நீர்-மின்சக்தியை அபிவிருத்தி செய்தலும் விநியோ
கித்தலும். 1 சீமந்து, இரும்பு, உருக்குத் தொழில்கள். 111 ஒரு கமத் தொழில்நாட்டுக்கு இன்றிய  ைம யாது வேண்டப்படும் உர உற்பத்தி, இரசாயனப் பொருள் கள் உற்பத்தி. IV உடைக்கு வேண்டிய புடைவைகளை நியாயமான விலை யில் மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கக்கூடிய பருத்தி நெசவுத் தொழில். இத்தொழில்களைப் பொதுவாக்க வேண்டும் என்பதற்குரிய காரணங்கள் சிலவற்றை இனி ஆராய்வாம்:-இலங்கை மக் கள் ஏறக்குறைய 100க்கு 80 விகிதமானவர்கள் விவசாயத் தொழிலில் தான் தங்கியிருக்கின்ருர்கள். அவர்களின் விவ சாயம் மூன்றே மூன்று பயிர்களையே ஆதாரமாகக் கொண் டிருக்கிறது. அவையாவன:-தேயிலை, ரபர், தென்னை என் பன: குடிசனத்தொகை நாட்டில் வர வர உயர்ந்து கொண்டு வருகிறது. ஆகவே மக்களுக்கு, அவர்களிலும் விசேடமாக அபிவிருத்தியடைந்துவரும் பட்டணப்பக்க மக்களுக்கு, வேலை கொடுப்பதற்கு ஒரளவு கைத் தொழில்களும் வேண்டி யிருக் கின்றன. மக்களுக்குத் தொழில் பெற்றுக் கொடுப்பதனைத் தனது பணியாக ஏற்றுக் கொண்ட இலங்கையரசாங்கம், அதன் பொருட்டு, விவசாயத்துடன் கைத்தொழில்களையும் விருத்தியாக்கவேண்டும் என்ற குறிக்கோளைக் கொண்டிருக் கிறது.

சனநாயகம்-அதன் கருத்து 209
மேலும், எங்கள் நாட்டில் மண்ணெண்ணெய், பெற்ரோல் போன்ற நெய்களோ, நிலக்கரியோ கிடைப்பதில்லை. இவை கைத்தொழில்களுக்கு இன்றியமையாது வேண்டப்படுவன. எனவே, அவற்றுக்குப் பதிலாக மின்சார சக்தியைக் கைத்தொ ழில்கள் விடயத்திற் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. ஆகவே மின்சார சக்தியை அபிவிருத்தி செய்வது ஒர் தேசீய சேவையாகும். இக்கூற்று, இரசாயனக் கைத்தொழில்கள்விசேடமாக உரம் உற்பத்தித் தொழில்-விடயத்திற் பொருந் தும். இப்போது இவ்விரசாயனப் பொருள்களும் உரவகை களும் புறநாடுகளிலிருந்தே இறக்குமதியாகின்றன. எங்கள் நாட்டிலே விவசாயப்பயிர்களும், உரொக்கப்பணம் தரும் பயிர்களும் தக்க பயன்களைத் தர வேண்டுமானல் மலிந்த விலை யில் உரவகைகளை விவசாயிகளுக்கு உதவுதல் வேண்டும். ஒர் விவசாயச்சமூகத்தின் வாழ்க்கைத்தரம் அபிவிருத்தியடை வது இதில்தான் தங்கியிருக்கிறது என்று கூறுவது மிகை யாகாது. சில துறைகளில் பொதுச் சொத்தாக்கும் முறை அவசியமானது என்பது இதிலிருந்து நன்கு புலப்படுகிறது. நாட்டுமக்களனைவரதும் சேமா பிவிருத்திக்குக் குறித்த சில மூலவளங்கள் இன்றியமையாதன. அவற்றைத் தனிப்பட்ட வர்களின் பொறுப்பில் விட முடியாது என்னும் தத்துவம் ஈண்டுக்குறிப்பிடற் பாலது.
அப்பியாசங்கள்
1. ஓர் சனநாயகச் சமுதாயத்தின் தன்மைகள் யாவை?
2. இங்கிலாந்திலே செல்வனயுள்ளான் எப்படி உயிர் வாழவேண்டுமோ அப்படியே பரம தரித்திரணுகியவனும் உயிர் வாழவேண்டும்’ என்னும் கூற்றின் கருத்தை விளக்குக.
3. " சனநாயகம் என்பது அரசியற் கருமங்களைச் சீர் திருந்திய முறையில் நடத்துவதாகும்’ என்னும் கூற்றை ஆராய்க.
4. "உண்மையான வோர் சனநாயக நாட்டிலே மக்கள் தமக்கு வேண்டிய வோர் அரசாங்கத்தைத் தெரிவு செய்யும் உரிமையினையும் ஆற்றலையும் கொண்டிருக்கிருர்கள் இக் கூற்றை நீர் ஆமோதிக்கின்றீரா? அதற்குக் காரணம் யாது?
5. அரசியற் கட்சிகளைச் சமாதான முறையில் மாற்றிக் கொள்ளவேண்டும் என்பது சனநாயக ஆட்சிமுறையின் விதி. இதற்குக் காரணம் என்ன?
6. ஓர் சனநாயக நாட்டிலே பெரும்பான்மையினர்தான் ஆட்சி செய்யவேண்டும் என்பதற்கு நீர் கூறும் காரணங்கள் ul IIT 60) 612

Page 110
210 சனநாயகம்-அதன் கருத்து
7. சர்வாதிகார அரசாங்கத்துக்கும் சனநாயக அரசாங் கத்துக்குமிடையில் உள்ள பேதங்கள் யாவை?
8. ஒரே கட்சி நாட்டைப் பரிபாலிப்பதால் விளையும் நன்மை தீமைகள் யாவை?
9. உமது அபிப்பிராயப்படி ஒர் சனநாயக அரசாங்கத் துக்குள்ள குறைபாடுகள் யாவை?
10. சர்வாதிகார நாட்டிலே, சனநாயகநாட்டிலும் பார்க் கத்திறமையான அரசாங்கம் நடைபெறும் என்று கூறப் படுவதுண்டு. இக்கூற்றுடன், எவ்வளவு தூரத்துக்கு நீர் உடன்படுகிறீர்?

அத்தியாயம் 6.
இலங்கை அரசாங்கம் கிராமச் சமூகங்கள்-கிராமச் சங்கங்கள்
பூர்வ காலத்து இலங்கையில் இருந்த கிராமச் சங்கங்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். அக்காலத்திலே ஓர் கிராமத்தின் கருமங்கள் கமலட்டன் என்பவராலும் கமச் சபையாலும் நிருவகிக்கப்பட்டுவந்தன என்பதை நீங்கள் ஏற் கெனவே இந்நூலிற் படித்திருக்கிறீர்கள். கமலட்டனும் கமச்சபைகளும் கிராமத்திலே ஒழுங்கையும் அமைதியையும் நிலைநாட்டல், நிலத்தைப் பண்படுத்தி விவசாயம் செய்தல், நீர்ப்பாசனச் சாதனங்களை நிறுவுதல், திருத்துதல், ஆதியாம் கருமங்களைச் செய்தனர். ஆண்டுக்கொருமுறை அரசனது தலையாரி வரும்போது அவனிடம் கிராம மக்கள் அரசிறையை இறுப்பர். குற்றம் இழைத்து விசாரணைக்கு வைத்திருக்கப் படுபவர்களையும் இத்தலையாரி விசாரணை செய்வான், கமச் சபைகள் மானியமுறையில் அடங்கியன. இவற்றுக்கான அங்கத்தவர்களைச் சனங்களே தெரிவதில்லை என்று கருத இடமிருக்கிறது. இப்போது நம் இலங்கையிலே ஓர் புதிய உணர்ச்சியுடன்-அதாவது சனநாயக உணர்ச்சியுடன்கிராமச் சபைகள் அல்லது கிராமச் சங்கங்கள் இயங்குகின்றன. வருண, இன, குல பேதமற்று, ஆண் பெண் இரு பாலாரும் இப்போது வாக்காளராக இருக்கிருர்கள். ஆனல் இவர்கள் வாக்குரிமை செலுத்தப் பூரண தகுதியுடையவர்களா யிருப்பதற்குக் கீழே சொல்லப்பட்ட த கை மைகளைக் கொண்டிருக்க வேண்டும்:-
'ஆண் பெண்ணுக உள்ள ஒவ்வொரு வரும் வாக்குரிமைத் தகுதி கொள்ளுதற்கு
(அ) ஒர் இலங்கைப் பிரசையாகவும் (ஆ) தேர்தல் நிகழும் ஆண்டின் தை மாதத்து முதலாம்
திகதியன்று pஇவயதுக்குக் குறையாதவராயும் (இ) தெரிவுக்கு அபேட்சரை நியமிக்கும் திகதிக்குப் பதி னெட்டு மாதங்களுக்கு முன் ஆறு மாதங்களுக்கு குறையாமல் அவ்வட்டாரத்தில் தொடர்ச்சியாக வசித்திருப்பவராயும் இருத்தல் வேண்டும்'. இனி, வாக்குரிமை செலுத்த யார் யார் அருகராகார் என்ப தற்கும் பிரமாணங்கள் உள. உதாரணமாக ஒருவர்:

Page 111
2丑2 சனநாயகம்-அதன் கருத்து
(அ) ஒரு தொழிலாளியாக, அல்லது எத்தோட்டத்திலாவது வேலைக் கமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர்க்குப் பொறுப்பாளியாகவுள்ள கங்காணியாக இருந்து, அப்படியான கங்காணிஅல்லது தொழிலாளிக்கெனத் தோட்டச் சொந்தக்காரரால் வழங்கப்பட்டுள்ள தோட்டக் கட்டடம் எதிலாவது வசிப்பவராயிருந் தால், அல்லது அத்தகைய தொழிலாளி அல்லது கங்காணியின் கணவன் அல்லது மனைவியாக அல்லது பிள்ளையாக அல்லது அத்தொழிலாளி அல்லது கங் காணியில் தங்கியிருப்பவராக அவருடன் அப்படி யான எத்தோட்டத்திலேனும், அத்தோட்டத்து எக்கட்டடத்திலேனும் வசிப்பவராயிருந்தால்
அல்லது (ஆ) புத்தி சுவாதீனமற்றவரென்று தகுதிவாய்ந்த நீதித் தலத்தால் தீர்ப்பளிக்கப்பட்டவராயிருந்தால்
அல்லது (இ) கைலஞ்ச, அல்லது ஆள்மாருட்டக் குற்றச்சாட்டின்
மீது தண்டிக்கப்பட்டவராயிருந்தால்
வாக்குரிமை செலுத்த அருகராகார். மேலே சொல்லிய நிபந்தனைகளைச் சற்று விபரமாக ஆராய் வாம்: இன்றுள்ள கிராமச்சங்கப் பரிபாலன நிலைமையில், 21 வயதுக்கு மேற்பட்டார் அனைவருக்கும் (ஆண்களும் பெண் களும்) குறித்த அக்கிராமப்பகுதியிலே வசித்திருப்பின் அவர் களுக்கு வாக்குரிமை உண்டு. 21 வயதுக்கு மேற்பட்ட சகலர்க் கும் வாக்குரிமை வழங்கப்பட்டிருத்தல், கிராம பரிபாலன விடயத்தில் சர்வசன வாக்குரிமை யிருப்பதைக் காட்டுகிறது. தன் பகுதிக்கான பரிபாலனத்திற் பங்குபற்றும் சனநாயக வசதி அல்லது சனநாயக உரிமை சாதாரண மனிதனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. வாக்குரிமை என்பது அரசியலிலே தனி மனிதனுக்குக்குள்ள முக்கியத்துவத்தைக் காட்டும் ஒன்ன மேயாகும். மானியமுறை இலங்கையில் இவ்வுரிமை இருக்க வில்லை.
ஓர் வாக்காளர் தனது வாக்குரிமையைச் செலுத்த வேண்டு மானல் தன் தேர்தற்ருெ குதியில் குறைந்தபட்சம் இவ்வளவு காலத்துக்காவது வசித்திருக்கவேண்டும் என்று விதிக்கப்பட்டி ருக்கிறது. அப்பகுதியிற் சிரத்தை கொண்டுள்ளவர்களுக்கே வாக்குரிமையை வழங்கியிருப்பதால் அவ்வாக்குரிமைமுறை திருப்திகரமாக நடைபெறும். தங்களுடைய சொந்தக் கிரா மம் அல்லது பகுதி என்ற ஓர் ஆர்வத்தினல் அவர்கள் அதனைச் சிறந்த நிலைக்குக் கொண்டுவர விரும்புவர். சமூக நன்மையின்

சனநாயகம்-அதன் கருத்து 213
பொருட்டுத் தொண்டாற்ற வேண்டும் என்ற ஆர்வத்துக்கு மூலாதாரமான சமூக மனப்பான்மையை அவர்கள் கொள்ளு வர். கிராமத்துடன் தொடர்பில்லாதவர்களை அதன் பரிபால னக் கருமங்களிற் புறக்கணிப்பது அதன் பொருட்டேயாம். ஓர் தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளிக்குக் கிராம வாசியின் சமூக உணர்ச்சி இருக்கமாட்டாது. அவன் கிராமத் துக்கு அந்நியன். அவனுடைய சமுக உணர்ச்சி, அவன் வேலை செய்யும் தோட்டத்துக்குள்ளேயே, தன் சொந்த இனத்தவர், குலத்தவர், வருணத்தவர்க்கிடையேதான் இருக்கும். அவன் கருத்து முழுவதும், அவன் பெறும் வேதனத்திலேயே அழுந் திக்கிடக்கும். ஏதும் சம்பாதித்துவிட்டு இந்தியாவில் உள்ள தன் சொந்தக் கிராமத்துக்கு எப்போது போய்விடலாம் என்பதில் அவன் கவனம் முழுவதும் செல்லும். ஓர் கிராமத் தைத் தம் சொந்தம் என்று நினைத்து அதில் நேரடியான தொடர்பும் சிரத்தையும் கொண்டிராத மக்கள் அதன் பரிபா லனத்திற் பங்குபெற்ருல் அக்கிராமச் சங்கம் ஒருபோதும் நன்ருக வேலை செய்யமாட்டாது. வெளியாட்களின் தலையீடு கிராமச் சங்கத்துப் பரிபாலனக் கருமத்தைக் கெடுத்துவிடும். கிராமத்திற் பிறந்து வளர்ந்து அதனைத் தமது சொந்தம் என மதித்து அதனைத் தமக்கும் தம் சகோதரக் கிராமவாசிகளுக் கும் சிறந்த வோர் இடமாக அமைப்பதற்கு முயற்சி செய்யும் மக்களே கிராம நிருவாகத்திற் பங்குபெறுதல் வேண்டும் என்பது தெளிவு:
பூர்வ கால அதென்ஸ் நகரத்தில் வாழ்ந்த சகலரும் ஒரிடத் திற் கூடி தம் கிராம நிருவாகத்தை நடாத்திய மாதிரி இக் காலத்திற் செய்யமுடியாது. ஆகவே, கிராம நிருவாகத்துக் கென ஓர் பாராளுமன்றச் சனநாயகமுறை' ஏற்படுத்தப்பட்டிருக் கிறது. இம்முறையின்படி, ஓர் வாக்காளர் தம் பிரதிநிதிகளை (ஆண்களாயினும் பெண்களாயினும்) தெரிவு செய்ய இப்பிரதி நிதிகளே கிராமச் சங்கமாக அமைவர். கிராமச்சங்கம் கிராம விவகாரங்களைக் கலந்தாலோசிக்கும் மன்றம். இங்கே கிராமத்துக்குரிய கருமங்களை ஆலோசித்து அவற்றை ஆற்று தற்குரிய சனநாயகமுறை அறுட்டானத்துக்குக் கொண்டு வரப்படும். பிரதிநிதிகளாக வருவோர் வாக்காளருக்கிருக்க வேண்டிய தகைமைகளுடன் பின் வரும் தகைமைகளையும் கொண்டிருக்கவேண்டும் என்று சட்டபூர்வமாக விதிக்கப்பட் டிருக்கிறது. பிரதிநிதியாக வருவதற்கு விரும்பும் ஒருவர் :
1. Parliamentary Democracy: 656) isg/Gug முடிவுகாண் சனநாயக முறை என்பர்.

Page 112
214 இலங்கை அரசாங்கம்
(அ) இருநூறு ரூபாவுக்கு குறையாத மதிப்புடைய அசை வற்ற ஆதனத்தை அல்லது ஆண்டில் 60- ரூபாவுக் குக் குறையாத வருமானத்தை உடையவராக இருத் தல் வேண்டும். (ஆ) சிங்களம் , தமிழ் அல்லது ஆங்கிலம் வாசிக்க எழுதத் தெரிந்தவராதல் வேண்டும். அன்றியும் அவர் பிர தான தலைமைக் காரணுகவோ சாதாரண தலைமைக் காரணுகவோ, கிராமச் சங்கத்திற் சேவை செய்து ஊதியம் பெறுபவராயோ இருக்கக்கூடாது. சட்டப் படி இணைக்கப்பட்ட கம்பனியின் பங்குதார் என்ற ரீதியில் இல்லாது, கிராமச் சங்கத்துடன் யாரேனும் செய்யும் ஒப்பந்தத்தில் நேர்முகமாகவோ மறைமுக மாகவோ உரித்துடையவராகவும் இருக்கக்கூடாது. மேலும் பாதகத்தடைக் கட்டளைச் சட்டத்தில் அடங்கியுள்ள ஏதும் குற்றத்தின் பாற்பட்டு மூன்று மாதம் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்துக்குச் சிறைத்தண்டனை பெற்றவராயுமிருக்கக்கூடாது. மேலே காட்டப்பட்ட பிரமாணங்களிலிருந்து ஒர் கிராமச் சங்கத்து அங்கத்தவர் அல்லது பிரதிநிதி (அ) ஆதனத்தகைமை அல்லது (ஆ) உரொக்கமான ஆண்டு வருமானமுடையவராக இருத்தல் வேண்டும் என்பது புலப்படும்; ஆதனத்தகைமை என்பது அவரது காணி பூமி ஆதனத்தின் பெறுமதின் யக் குறிப் பதாகும்.
கிராமச் சங்கத்திலே அங்கத்தவர்களா தற்கு இத்தகைய தடைகளை ஏன் விதிக்கவேண்டும் என்று நீங்கள் ஆச்சரியப்பட வும் கூடும். ஒருவருக்கு உரொக்க வருமானம் அல்லது ஆதன வருமானம் இருப்பது அவருக்குப் பொருளளவில் சுதந்திரத் தைக் கொடுக்கிறது. அதன் பயனக அவர் தனது நேரத்தைக் கிராமச் சங்கத்துச் சேவையின் பொருட்டுச் செலவிட முடி யும். அற்றைச் சம்பளம் பெறும் ஓர் தொழிலாளி ஊதிபம் தராத, கெளரவமான சங்க வேலைகட்குத் தனது நேரத்தைச் செலவிட முடியுமா? மேலும், ஓர் சங்கத்து அங்கத்தவர் என்ற ரீதியில் தகாத முறையிற் பணம்பெறவும் சில நேரங்களில் ஓர் சபல புத்தி பணமில்லாருக்கு ஏற்படக்கூடும். ஆனல் ஒரளவுக்குப் பொருள்பற்றிச் சுதந்திரமுடையார் இத்தகைய சபல புத்தியின் பாற்படார் என்று கூறலாம். பணவருவாய் எதுவுமில்லாதவர்கள் இலஞ்சம் முதலியன பெறவும் தூண் டப்படலாம். ஒர் அங்கத்தவர் தமது நேரத்தைச் சமூக சேவையின் பொருட்டுச் செலவிடத்தக்க தகுதியுடையரா யிருத்தல் வேண்டும்.
1. Prevention of Crimes Ordinance.

இலங்கை அரசாங்கம் 215
ஒர் அங்கத்தவர் சங்கத்தின் நடைவடிக்கைகளை விளங்க வேண்டும். அதன் பிரமாணங்களையும் ஒழுங்குவிதிகளையும் கிரகிக்கவேண்டும் ஆலோசனைக்கு வரும் பத்திரங்களையும் விளங்கவேண்டும். இதன் பொருட்டுத்தான் கல்வித்தகைமை பிரதிநிதிகளுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது.
அங்கத்தவர்களாயினுேர் தம் சங்கத்துடன் பணக் கொடுக்கல் வாங்கல்களோ ஒப்பந்தங்களோ வைத்திருக்கக் கூடாது என்றும் விதிக்கப்பட்டிருக்கிறது. சங்கத்தில் உள்ள பணக்கொடுக்கல் வாங்கல்களில் ஏதேனும் ஒர் விதத்தில் அங்கத்தவர் உரித்துடையராக அநுமதித்தால் அவர் அச் சங்கத்தின் சுதந்திரமான, பட்சபாதகமற்ற அங்கத்தவராக இருக்கமாட்டார். அவர் தான் அங்கத்தவராயிருக்கும் நிலைமை யைத் தன் தொழிலுக்குச் சாதகமாகப் பயன்படுத்தவும் தன் சொந்த லட்சியத்தை அடைதற்பொருட்டு அச்சங்கத்தை ஒர் கருவியாக்கவும் கூடும். அவருடைய பணம் அல்லது ஆதாயம் சம்பந்தப்பட்டுள்ள ஓர் கருமத்தைச் சங்கம் ஆலோசிக்கும் போது அவர் பட்ச பாதகமற்ற நிலைமை யை வகிக்கமாட்டார். அவர் தம்முடைய சொந்த நலன்களைப்பற்றி அதிகம் யோசிப் பாரேயன்றிச் சமூக நலன்களைப்பற்றி யோசிக்க மனம் அதிக மாக வராது. இதுபோலவே ஓர் தலைமைக்காரன் போன்ற உத்தியோகத்தரும் சங்க அங்கத்தவராயிருக்க முடியாது. ஏனென்றல் அவர் சுதந்திரராய், பட்ச பாதமற்றவராயிருக்க முடியாதமையில் என்க. எவராயினும் சரி, இரண்டு எசமான் களுக்குச் சேவைசெய்ய முடியாது: இரண்டு தோணிகளிற் கால் வைக்கவும் கூடாது.
இனி, ஓர் கிராமச் சங்கம் எவ்வாறு உருவாகிறது என் பதை அவதானிப்போம். குறித்த ஓர் பிரதான தலைமைக்கார னின் பிரிவு அல்லது உபபிரிவு ஒர் கிராமச் சங்கத்தின் ஆதிக்கத் தில் வர இருக்கிறது என்று அரசாங்கம் பிரகடனம் செய்யும். இப்பிரகடனம் அரசாங்க வர்த்தமானப் பத்திரிகையிற் பிரசுர மாகும். கிராமச்சங்கப் பரிபாலனத்தில் வரவிருக்கும் பகுதி பிரகடனத்திற் குறிக்கப்படும். பின்னர் இப்பகுதி வட்டாரங் களாகப் பிரிக்கப்படும். ஒவ்வொரு தலைமைக்காரன் பிரிவும் ஓர் வட்டாரமாகும். ஒவொரு வட்டாரத்துக்கும் ஒர் அங்கத் தவர் தெரிவு செய்யப்படுவர்.
வர்த்தமானப் பத்திரிகையில் பிரகடனம் வெளிவந்த மூன்று மாதகாலத்தின் பின் ஒவ்வொரு வட்டாரத்து வாக்கா ளரும் தம் பிரதிநிதியைத் தெரிவுசெய்யும் திகதியை நிர்ணயிக் கும் அறிவித்தல் ஒன்று, அத்திகதிக்கு ஒரு மாதத்துக்கு முன்

Page 113
21 6 இலங்கை அரசாங்கம்
இதற்கெனவுள்ள தேர்தல் அதிகாரியாற் செய்யப்படும் பிரதி நிதிகளாகத் தெரிவுசெய்யப்பட விரும்புவோர் தத்தம் நியமனப் பத்திர ங்களை ஒப்புவிக்கவேண்டிய திகதியையும் நேரத்தையும் அவர் அறிவிப் பார். அபேட்சகர்களின் நியமனம், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தொகையின வாய நியமனப் பத்திரங்களால் நடைபெறவேண்டும். ஒவ் வோர் நியமனப் பத்திரத்திலும், அபேட்சகர் தாம் பிரதிநிதி யாக வருதற்குச் சம்மதம்தான் என்பதைக் குறித்து ஒப்ப மிடுதல் வேண்டும். அத்துடன் வாக்குரிமையுள்ள ஒருவர் அவர் பெயரைப் பிரேரிக்கவும் இன்னெருவர் அநுமதிக்கவும் வேண்டும். இவ்வாறு நியமனப்பத்திரங்கள் மூலம் நியமிக்கப் படாதோர் தேர்தலுக்கு அருகராகார். நியமனப் பத்திரங் களை தேர்தல் அதிகாரியிடமோ அவரால் இதற்கென நியமிக்கப்பட்டுள்ள தெரிவுக்கரும உத்தியோகத்தரிடமோ? ஒப்புவிக்கமுன் அரசாங்கத்திடம் ரூபா 10.00 இறுத்தல் வேண்டும். நியமனப் பத்திரம் என்ருல் என்ன என்பது உங்களுக்கு அதிகம் பரிச்சியமில்லாது இருக்கலாம். ஒர் பாட சாலைக் கலா விருத்திச் சங்கத்துக்கு ஒர் காரியதரிசியையும் ஏனைய நிருவாகிகளையும் தெரிவதற்குக் கூட்டம் கூடி நடத்தப் படுவது போலவே இதுவும் ஓரளவுக்கு இருக்கும். ஓர் அங்கத்தவர் வேருேர் அங்கத்தவரின் பெயரைக் காரியதரிசிப் பதவிக்குப் பிரேரிப்பார். வேருெருவர் இப்பிரேரணையை அநுவதிப்பார். பிரேரித்து அநுவதிக்கப்பட்ட பெயர் இவ் வாறே பிரேரித்து அநுவதிக்கப்பட்ட ஏனைய பெயர்களுடன் ஆலோசிக்கப்படுதற்காகச் சங்கத்திற் சமர்ப்பிக்கப்படும். நிய மனம் செய்தல் என்பது ஒருவரின் பெயரை ஒர் பதவிக்கோ உத்தியோகத்துக்கோ நாமம் சொல்லிக் குறித்தலே என்க.
10 00 ரூபாப் பிணைப்பணம் இறுக்கவேண்டும் என்பதற்கும் ஓர் நியாயம் இருக்கிறது. கணிப்பற்ற அற்பரான மனிதர் இப்படியான தெரிவுகளில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கே இந் நிபந்தனை ஏற்பட்டுள்ளது. அளிக்கப்பட்டுள்ள வாக்குச் சம்மத மொத்தத்தில் எட்டில் ஒரு பங்கை ஒர் அபேட்சகர் பெரு விட்டால் அவர் இறுத்த 10 00 ரூபாப் பிணைப்பனம் பறிமுதலாக்கப்படும்.
மேலே காட்டியவாறு நியமனப் பத் தி ரங்களை ஒர் அபேட்சகர் சமர்ப்பிக்குமிடத்து, அவருடைய நியமனத்தை ஆட்சேபிப்பதற்கும் இடம் வழங்கப்பட்டிருக்கிறது. உதாரண மாக, ஒர் அபேட்சகருக்கு வேண்டிய தகைமைகள் இல்லை
1. Elections Officer-தேர்தல் உததியோகத்தர் என்றும கூறுவர். 2. Nomination Papers. 3. Returning Officer.

இலங்கை அரசாங்கம் 2 7
யென ஒருவர் ஆட்சேபிக்கலாம். இப்படியான ஆட்சேபனை களைத் தேர்தல் அதிகாரி விசாரணை செய்து, அவை சரிதான் எனக் காணுமிடத்து குறித்த நியமனத்தை நிராகரித்து விடு வார். ஆட்சேபனைகள் சரியற்றவை எனக் காணுமிடத்து நியமனத்தை ஏற்றுக்கொள்வர்.
ஓர் வட்டாரத்துக்கு ஓர் அபேட்சகர் மாத்திரமே பிரதி நிதியாக முற்பட்டால் தேர்தல் அதிகாரி அவரே பிரதிநிதி யாகத் தெரிவு செய்யப்பட்டதாக அறிவிப்பார். அப்படி யில்லாது, ஒன்றுக்கு மேற்பட்ட அபேட்சகர்கள் பிரதிநிதிக ளாக முற்பட்டால், அவர்களில் யாரைப் பிரதிநிதியாகத் தெரிவுசெய்வது என்பதற்குரிய தேர்தலை தேர்தல் அதிகாரி நடத்துவார். இப்படியான தேர்தல் எங்கே, எப்போது நடைபெறும் என்பதனை தேர்தல் அதிகாரி நிருணயிப்பார். இதற்கென வாக்குச் சம்மதம் அளிக்கப்படும் தானத்தில் தேர் தல் அதிகாரியோ அவரின் அதிகாரம் பெற்ற இன்னேர் உத்தி யோகத்தரோ தலைமை வகிப்பார்.
இரகசிய முறையிலேயே வாக்களிப்பு நடைபெறும். ஒவ் வொருவரும் தான் தான் விரும்பியவாறன்றி எவ்விதத்திலா வது தூண்டப்பட்டுச் சம்மதமளிக்காம லிருப்பதற்கென ஏற் படுத்தப்பட்ட முறையே இது. தான் தன் வாக்குச்சம் மதத்தை ஆருக்கு வழங்கியது என்பது வாக்குச் சம்மதம் செலுத்திய வாக்காளர் ஒருவருக்குத் தான் தெரியுமன்றி வேறெவருக்கும் தெரியாது.
வாக்கெடுப்பு முடிந்ததும், அளிக்கப்பட்ட சம்மதச் சீட்டுக் கள் எண்ணப்படும். எவர் பெரும்பான்மையான வாக்குச் சம்மதங்களைப் பெறுகின்ரு ரோ அவரே பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்படுவர்.
இவ்வாரு கப் பல்வேறு வட்டாரங்களின் பிரதிநிதிகளும் தெரிவு செய்யப்பட்ட பின்னர் சங்கத்தின் முதற் கூட்டத்தை அப்பகுதிக்குப் பொறுப்பாகவுள்ள ஊராட்சிநிலைய உதவிக் கொ மிஷனர் கூட்டத்திற்கு ஐந்து நாட்களுக்கு முந்தியே ஒவ்வொரு அங்கத் த வர் க் கும் எழுத்து மூல மாக அறிவித்துக் கூட்டுவார். கூட்டம் கூடியதும் அதன் முதற் கருமம் ஓர் தலைவரைத் தெரிவு செய்தலே. இதற்குத் தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களில் அ  ைர ப் பங் கி ன ரா வது கூட்டத்திற் சமுகமாயிருக்கவேண்டும். கூட்டம் கூடுவதற்குப் போதுமான அங்கத்தவர் தொகையை ஆங்கிலத்திலே *கோரம்? என்பர். தமிழில் நிறைவெண்குழு என்று கூறுவர். இப்படியான ஓர் விதி இல்லாவிட்டால் சில சூழ்ச்சிக்காரர் தம்
1. Assistant Commissioner of Local Government. 2. Quorum.

Page 114
21 8 இலங்கை அரசாங்கம்
சிநேகிதரின் உதவியுடன் தம்மவரில் ஒருவரையே தலைவராகத் தெரிந்துவிடுவர். சங்கத்து அங்கத்தவர் எல்லாரும் சமுகமளித் துள்ள கூட்டத்திலேயே தலைவரைத் தெரிதல் நல்லது. அப்படி நடைபெற்ருல்தான் அங்கத்தவர் ஒவ்வொருவரும் தாம்தாம் தகுதியெனக் காணும் விதத்தில் தமக்குரிய வாக்குரிமையை அளிக்க முடியும். தலைவர் தெரிவு இரகசியமாக நடைபெறும். அதனுல் அங்கத்தவர்கள் கபீட்டுப் பாடில்லாமல் தாம் விரும்பிய படி தம் சம்மதத்தை அளிக்க முடியும் இதே தெரிவுமுறையில் ஓர் உபதலைவரும் முதற் கூட்டத்தில் தெரிவு செய்யப்படுவர். ஒர் கிராமச்சங்கத்தின் காலம் மூன்று ஆண்டு. அக்கால வெல்லை முடிந்ததும் ஓர் புதுச்சங்கம் தெரிவு செய்யப்படும். ஓர் தலைவர் (இடையில் இறக்கா விட்டால் அல்லது பதவியி லிருந்து விலகா விட்டால்) சாதாரணமாக மூன்று ஆண்டு காலத்துக்கு கடமை யாற்றுவார். உபதலைவர் ஆண்டுக்கொரு முறை தெரிவுசெய்யப்படுவார். இப்படிச் செய்வது நல்ல முறை. ஒருவரன்றிப் பலரும் உபதலைவர்க்குரிய பரிபாலன வேலைகளில் பயிற்சிபெற இதனற் சந்தர்ப்பம் அளிக்கப்படு கிறது. தனது நலவுரிமைகளைப்பேணத் தனக்கென ஓர் கிராமச் சங்கத்தை அல்லது கிராமச்சபையை இப்போது: ஒவ்வோர் கிராமமும் கொண்டிருக்கிறது. சமூகத்தின் நன் மைக்கான பிரமாணங்களையும் ஒழுங்குவிதிகளையும் - வகுக்கும் அதிகாரம் போன்ற நிரூபண அதிகாரம் கிராமச் சங்கத்துக்கு இப்போது வழங்கப்பட்டிருக்கிறது. சங்கத் தலைவரே நிருவாக அதிகாரி; கிராமச் சங்கம் அங்கீகரித்த திட்டங்களை நடை முறைக்குக் கொண்டுவருதல் அவருடைய கடமை. இவர் தமது கடமையைச் சங்கம் காட்டிய அல்லது வகுத்த வழிப் படியே செய்யவேண்டும். மேலும், சங்கமானது காலந், தோறும் நிறைவேற்றும் தீர்மானங்களுக் கிணங்கத் தம் நிரு. வாக கடமைகளை அவர் ஆற்றுதல் வேண்டும். அவர் ஓர் உள்ளூர்ப் பிரதானியாகவோ, ஓர் சிறிய சர்வாதிகாரியாகவோ இருந்து தான் நினைத்தபடி கரும மாற்ற முடியாது.
கிராமச் சங்கங்களின் அதிகாரங்களும் கடமைகளும் ஒா கிராமச் சங்கம் தாபிதமானவுடன் அது ஒர் விசேட அந்தஸ்துடைய ஆட்சிக் கழக் மாகிறது. அது எந்த இடப் பரப்பில், எந்த இடப்பரப்புக்காக ஏற்பட்டதோ அந்த இடப் பரப்பின் பெயரைத்தாங்கி, ஆதனங்கள் வைத்திருக்கவும், ஒப்பந்தங்கள் செய்துகொள்ளவும், சித்தாரிக்கவும், மற்றவர் களால் சித்தாரிக்கப்படவுமான தகுதி அதற்கு வழங்கப்படும். சங்கக் கூட்டத்திற் சமூகம் அளிக்கும் அங்கத்தவர்களிற்
I. Corporation.

இலங்கை அரசாங்கம் 219
பெரும்பான்மையினரின் வாக்குச் சம்மதத்துக் கிணங்கவே ஓர் கிராமச் சங்கத்தின் தீர்மானங்களும் கருமங்களும் இருக் கும்; அதன் கருமங்களுக்குச் சட்டபூர்வமான அதிகாரம் அளிப்பதற்கும் அவற்றைக் கிரமப்படுத்துவற்கும் அதன் நடை வடிக்கைகள், தீர்மானங்கள், கட்டளைகள், கருமங்கள் யாவும் ஓர் கூட்ட நடைவடிக்கைப் புத்தகத்திற் பதிவுசெய்யப்படும். இப்பதிவைச் சங்கம் உறுதிப்படுத்திய பின்னர், தலைவர் தம் ஒப்பத்தை இடுவர். இப்படியாகவே ஒர் பாடசாலையில் உள்ள கலாவிருத்திச் சங்கமும் தனது கூட்ட நடைவடிக்கைகளை எழுதி வாசிப்பித்து உறுதிப்படுத்துவிக்கிறது என்பது உங்க ளுக்குத் தெரியும்.
ஒர் கிராமச் சங்கம் எந்த நோக்கங்களுக்காக அமைக்கப் பட்டுள்ளதோ அந்த நோக்கங்களைப் பூர்த்திசெய்வதற்குரிய கடமைகளையும் அதிகாரங்களையும் அது கொண்டுள்ளது. கிராமத்துச் சுகவாழ்விலும் அதன் அபிவிருத்தியிலும் அதில் உள்ள வயதுவந்த சகல மக்களும் சிரத்தை எடுப்பதற்கு வேண்டிய ஊக்கத்தை அவர்களுக்குக் கொடுத்து அவர்களை நற் பிரசைகளாகப் பயிற்றுவது ஒர் கிராமச் சங்கத்தின் பிரதான நோக்கமாகும். மக்களது முயற்சியைப் பயன் றருமுறையில் உருவாக்குவதற்குக் குறித்த சில அதிகாரங்கள் கிராமச் சங்கத்துக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. கிராமச் சங்கத்தின் பிரதான கடமைகளை இனிச் சுருக்கமாக ஆராய் வாம். இவற்றின் விரிவான விளக்கம் ‘கிராமச் சமூகக்கட்டளைச் சட்டம்' என்ற அரசாங்க வெளியீட்டில் உண்டு.
ஒர் கிராமச் சங்கம் எந்தப் பகுதியின் மீது அதிகாரத்தைச் செலுத்தவேண்டுமோ, அந்தப்பகுதி சம்பந்தப்பட்ட அளவுக்கு அதன் கடமைகள் இருக்கும். கிராமத்தில் இருப்பது கிராமச் சமூகமே. கிராமவாழ்க்கையும் அதன் சூழலும் சம்பந்தப்பட்ட அளவுக்கு ஆரோக்கிய நிலைமைகளையும் அபிவிருத்தியையும் அச்சமூகத்துக்குப் பெற்றுக்கொடுப்பது கிராமச் சங்கத்தின் பிரதான நோக்கமாகும்; கிராமச் சங்கத்தின் கடமைகள் பின்வருவன பற்றியுமிருக்கும் :-
(1) நிலம் (2) ஆரோக்கியமும் சுகாதாரமும் (3) சமு தாயம்
ஒர் கிராமச்சங்க அதிகாரத்தில் காணி, பூமி ஆதனங்கள் மத்திய அரசாங்கத்தால் ஒப்புவிக்கப்பட்டுள்ளன. தானகவே இந்நிலங்களைக் கிராமச் சங்கம் அபிவிருத்தி செய்யலாம். வீட்டு மிருகங்கள்ை வளர்த்தல், அவற்றை இனம் பெருகச் செய்தல் என்பனவற்றிலும், விவசாய விருத்தியிலும், குடி
1. Village Communities Ordinance.

Page 115
22 O இலங்கை அரசாங்கம்
யானவர் பார்த்துப் பின்பற்றக்கூடிய மாதிரித் தோட்டங்களை நடாத்துதற்காகவும் இந்நிலங்களைக் கிராமச் சங்கங்கள் பயன் படுத்தலாம். இவை கிராமச் சங்கத்து நில அபிவிருத்திக் கடமைக்குள் அடங்கும். தனது அதிகாரத்தில் உள்ள நிலங் களை விவசாயம் செய்தல், ஆடு மாடுகள் மேய்வதற்கான புற்றரைகளை அமைத்தல் என்னும் பிரயோசனமான கருமங் களுக்கும் அது விரும்பியவாறு குத்தகைக்குக் கொடுக்கலாம். அல்லது, தானே புற்றரைகளைப் புதிதாக அமைக்கலாம். அல்லது புல் வளர்ப்பதற்கு நிலத்தைக் குத்தகைக்குக் கொடுக் லாம்.
தண்ணிர் ஒடும் வடிகால்கள், பள்ளமான சகதி நிலங்கள் நீர்ப்பர்வை என்னும் இவை சனங்களுக்குத் தீமை விளைக்காம லிருக்க அவற்றைத் தானே பெற்றுத் தன் பரிபாலனத்தில் வைத்திருப்பதும் கிராமச் சங்கத்தின் இன்னுேர் கடமை யா கும். ஆறுகள் கடப்பதற்குரிய ஒடத் துறைகள், பாதைகள் என்பவற்றை அமைத்துப் போடுதலும் அதன் கடமையாகும்.
கிராமச் சங்கத்தின் அதி பிரதான கடமை மக்களின் ஆரோக்கியத்துடன் சம்பந்தப்பட்டதாகும். தனது பரிபா லனத்தில் உள்ள மக்கள் தேகாரோக்கிய முடையராய் வாழ் தற்குரிய சகல கருமங்களையும் அது ஆற்றும். ஓர் சமூகம் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு அதன் சூழ் நிலை சிறந்ததா யிருக்கவேண்டும். அப்படியான சிறந்த சூழ்நிலையைக் கிராமச் சங்கம் அமைக்கவேண்டும். பின்வரும் விதங்களில் அது கிராமத்தில் வீடுகள் கட்டுப்படுவதை ஒழுங்குசெய்ய அதி காரம் உடையதாக இருக்கிறது:-(1) வீடுகளுக்கு ஆபத்து விளைக்காத உபகரணங்களையே, அவை கட்டுவதில் உப யோகிக்கவேண்டும் என்று அது விதிக்கும் (2) கட்டப்படும் வீடுகள் போதிய வெளிச்சமும் காற்ருேட்டமும் உடையன வாக இருத்தல் வேண்டும் என்று விதிக்கும். சுகாதாரத்துக் கேற்ற இந்த நிபந்தனைகளைப் புறக்கணித்தால் ஓர் கிராமத் தின் சில இடங்கள் சுகாதார மற்ற வீடுகள் ஒன்ருே டொன்று நெருங்கி அழுக்கு நிறைந்த சேரிகளாகிவிடும். சாக்கடைகளைச் சுத்தம் செய்தல் மலசலசுத்தி, கழிவுப்பொருள்களை அகற்றி, ஆபத்து விளைக் காத வகையில் அப்புறப்படுத்தல் என்பனவும். ஓர் சமூகத்தின் ஆரோக்கியத்துடன் தொடர்பான பிரதான கருமங்களாகும். போசன சாலைகள், பாண் போரணைகள், பாற் சாலைகள் என்பவற்றையும், சீக்கிரத்தில் அழுகிவிடும் மீன் இறைச்சி முதலியவற்றின் விற்பனையையும் மேற்பார்வை செய்தல் இன்னேர் பிரதான கருமமாகும். சுகாதார விதிக ளுக்கமைய, சுத்தமான உணவுப்பொருள்களைச் சந்தைகளில்

இலங்கை அரசாங்கம் 22
வைத்து விற்பதற்கு, அச்சந்தைகளைத் தனதாக்கி அவற்றை மேற்பார்வை செய்துவருதலும் கிராமச் சங்கத்தின் கடமை களில் ஒன்று. ஈற்றில், மலேரியாபோன்ற நோய்கள்பரவா மற் கட்டுப்படுத்தல், கிராம மக்களுக்கு நல்ல நீர் வசதிகள் பெற்றுக்கொடுத்தல் என்பனவும் கிராமச் சங்கத்தின் கடமை களில் அடங்குவன.
தனது நிருவாகத்தில் உள்ள மக்களின் நடைவடிக்கைகளைக்,
கட்டுப்படுத்தவும் ஓர் கிராமச் சங்கத்துக்கு அதிகாரம் உண்டு. பொருள்கள் வாங்குவோர் சுயநலமிகளான வியாபாரிமாரிடம் ஏமாரு மல் இருப்பதற்காக கடைகளில் உள்ள நிறுவைப்படி கள், அளவுகோல்கள், அளவைகள் என்பவற்றைக் காலந் தோறும் பரிசோதனை செய்து அவை பிரமாணத்துக்குக் குறை யாமல் இருப்பதைக் கிராமச் சங்கம் கவனித்துக்கொள்ள அதிகாரம் கொண்டிருக்கிறது. சட்டத்தை மீறி நடப்பவர் களைத் தண்டிப்பதற்கும் அதற்கு அதிகாரம் உண்டு. கிராம மக்களுக்கிடையே சூதாட்டம், கோழிச்சண்டை முதலாம் கெட்ட வழக்கங்கள் இருப்பின், அவற்றைத் தடுக்கக் 6ìprrr LD ở: சங்கத்துக்குச் சட்டபூர்வமான அதிகாரம் இருக்கிறது. 16 வயதுக்குக் குறைந்த பிள்ளைகளுக்கும், பெண்களுக்கும் மது வகைகள் விற்கப்படுவதை அது தடுக்கலாம். இவ்வாருக ஒர் கிராமச் சங்கம் தனது மக்களின் சமுதாய வாழ்க்கையை அபிவிருத்தி செய்யவும் சிறந்ததான ஓர் சமுதாயச் சூழ் நிலையை ஏற்படுத்தவும் தன்னுலியன்றவரை தொண்டாற்றும் . ஓர் நற்சமுதாயத்தின் புற நிலைகளை வகுத்துப்பேண ஓர் கிராமச் சங்கத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது என் பது மேலே காட்டிய விபரங்களில் இருந்து புலனுகிறது. அரசாங்கம் என்பது பிரசைகளின் நன்மைக்கான ஒர் சங்கம் அல்லது கூட்டுறவே என்ற சனநாயகக் கொள்கைக்கிணங்க ஓர் சமூகத்தின் புற நிலைமைகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் கிராமச் சங்கத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வளவுடன் -அதாவது மக்களுக்கான புற நிலைமைகளைக் கட்டுப்படுத்துவ துடன்-கிராமச் சங்கத்தின் அதிகாரங்கள் நின்றுவிடுகின்றன மக்களின் அபிப்பிராயங்கள், நம்பிக்கைகள், கொள்கைகள், சம்பிரதாயங்கள் என்பவற்றின் மீது அதற்கு அதிகாரம் கிடையாது. இவற்றின் மீதும் அதிகாரம் கொடுத்தால் அது சனங்களின் வாழ்க்கையிற் சர்வாதிகாரம் செலுத்த ஏது வாகும். கிராமச் சங்கமும் அரசாங்கத்தைப்போலச் சமுதா யத்தில் ஓர் அங்கமேயாகும். ஆகவே சில கருமங்களிற்றன் அதற்கு அதிகாரமுண்டு. A
தன் பரிபாலனத்தில் விடப்பட்டுள்ள கருமங்களை நிரு வகிப்பதற்குப் பிரமாணங்களை வகுக்கவும் ஒர் கிராமச் சங்கத்

Page 116
ty d Q இலங்கை
மாகாணங்களும் ETSi tfö
மாவட்டங்களும் سم” یوسے - *வட
A atasafuu TTܝܢܪܳ SN மரகாணம S மன்னுர் மன்ஞர் 8. மாவட்டம்
மாவட்டம்."
வவனியாக
திருக்கோணமலுே தி
வட மத்திய
ருக்கோணமலை
அஅநுராதபுரி DITAJ
مملکت அனுராதபுரி மாவட்டம்
Y மாகாணம் ○
l
மேல் Dröm மிட்டக்களப்பு
ଝୁମ୍ରି மத்திய மட்டக்களப்பு குரு Ο» மாவட்டம் D6D نتی குருளுக்கல் upitout'it to
LBTAILð
கண்டி 愛
கண்டி மாவட்டம்
கொழும் மாவட்டம் ہرقل
வதுளை மாவட்டம்
குஇரத்தினபுரி DITSE GOOTo
களுத்துறை 免 を இரத்தினபுரி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இலங்கை அரசாங்கம் 223
துக்கு அதிகாரமுண்டு. தன் திட்டங்களை அநுட்டானத்துக்குக் கொண்டு வருவதற்கு அதற்கு (அ) பணம் (ஆ) தான் சட்ட பூர்வமாக வகுத்துள்ள பிரமாணங்களுக்கு மக்களைக் கீழ்ப்படி யச் செய்தற்கான அதிகாரம் என்பன வேண்டும்.
பணம் சேகரித்து, அதனைத் தான் அங்கீகரித்த கருமங்க ளுக்குச் செலவழிக்க ஓர் கிராமச் சங்கத்துக்கு அதிகாரம் உண்டு. அது தனக்கு வேண்டிய பணத்தைப் பின்வருமாறு பெறும்:-
வரிகள் முலம்
(அ) ஆயக்குத்த கை (ஆ) தலைவரி1 (இ) நிலவரி அல்லது காணிவரி (ஈ) உத்தரவுப் பத்திர (லைசென்ஸ்) வரி (உ) வாகனங்கள், மிருகங்கள் மீது வரி இவற்றிற் சிலவற்றைச் சற்று விபரமாக விளக்குதல் ஆவசியகமாகிறது. தலைவரி என்பது கிராமத்தில் வாக்குரிமை யுள்ள ஒவ்வொரு ஆடவனும் இறுக்கவேண்டிய வரியாகும். இதனைக் கிராமச் சங்கத்தொழில்கள் சம்பந்தமாக ஒருவர் சரீரத்தாற் பிரயாசைப்பட்டும் இறுக்கலாம்: அதாவது பண மாக வரியை இறுப்பதற்குப் பதிலாகச் சரீர உழைப்பைக் கொடுக்கலாம். நிலவரி அல்லது காணிவரி பின்வருவன வற்றில் ஒன்ருக அல்லது இரண்டும் சேர்ந்தனவாக இருக்கும். (அ) கிராமத்தில் உள்ள சகல கட்டடங்கள், நிலங்கள் என்பவற்றின் ஆண்டு மதிப்பில் 100க்கு 4 விகிதத் துக்கு மேற்படாத ஓர் வரி. (ஆ) கிராமச்சங்க எல்லைக்குட்பட்டு நெற்செய்கை அல்லது சேனைச் செய்கையில்லாது பணப் பெருக்கத்துக் கான பயிர்கள் நிரந்தரமாக அல்லது ஒழுங்காகச் செய்யப்படுவதாயுள்ள ஒவ்வோர் ஏக்கருக்கும் ஆண்டுக்கு 50 சதத்துக்கு மேற்படாத ஓர் ஏக்கர் 61 ff2.
இவ்வாரு கச் சேகரிக்கப்படும் பணம் சமூக நிதி என வழங்கப்படும். கிராமச் சங்கத்தலைவர் அல்லது உபதலைவர் கையொப்பமிட்ட உத்தரவினுலன்றி அப்பணத்தில் எப்பகுதி யேனும் செலவழிக்கப்படமாட்டாது.
1. Capitation Tax. 2. Acreage Tax. 3. Communal Fund.

Page 117
224 இலங்கை அரசாங்கம்
ஒர் கிராமச் சங்கத்தின் கணக்குகள் அரசாங்கக் கணக்குப் பரிசோதனை அதிகாரியினல் அல்லது அவரின் பிரதிநிதியான ஒர் உத்தியோகத்தரினல் ஆண்டுதோறும் பரிசோதனை செய் யப்படும்.
சமூக நிதிபற்றிய சட்டங்களை இயற்றுவதற்கும், அந்நிதி யைச் செலவழிப்பதற்கும் உரிய அதிகாரம் முழுவதும் பின்வருவனவுக்கமைவாக இருக்கும்:-
(அ) வரி அல்லது ஆயக்குத்தகை வரி அல்லது உத்தரவுப் பத்திர (லைசென்ஸ்) வரி என்பவற்றில் எதனையாவது விதிக்கவேண்டும் என்று கிராமச் சங்கம் செய்யும் தீர்மானம் அல்லது நிர்ணயம் ஒவ்வொன்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படல் வேண்டும். (ஆ) கிராமச் சங்கம் செய்யும் தீர்மானம் அல்லது
நிர்ணயம்: 1. ஏதும் காணியை அல்லது கட்டடத்தை விலைக்கு வாங்குதல் அல்லது விற்பனை செய்தல் அல்லது மாற்றிக்கொள்ளல், 2. சங்கத்திற் பொறுப்பிக்கப்பட்டுள்ள அசைவற்ற
ஆதனத்தைக் குத்த கைக்கு விடல், 3. சங்கத்துச் சேவையின் பொருட்டு வேதனம்
பெறும் உத்தியோகத்தை ஆக்கல், 4. சமூக நிதியிலிருந்து 100.00 ரூபாவுக்கு மேற்
பட்ட தொகையைச் செலவு செய்தல், 5. 100.00 ரூபாவுக்கு மேற்பட்ட ஒர் ஒப்பந்தம், 6. கஷ்ட நிவாரணத்தின் பொருட்டேனும் தருமம் அல்லது கல்விவிருத்தி போன்ற வேறேதும் கைங்கரியத்துக்கேனும் அளிக்கப்படும் நன் கொடைகள், என்பவைபற்றியதெனில் அப்படியான ஒவ்வொரு விடய மும் அரசாங்க அதிபரால் அங்கீகரிக்கப்பட்டு பின்னர் உள் ளூராட்சிப்பகுதி அமைச்சரினல் உறுதிப்படுத்தப்படல் வேண் டும்.
கிராமச்சங்கப் பரிபாலனம் விடயமாக, மேலே காட்டிய விதத்தில் சில கட்டுப்பாடுகள் இருப்பது விரும்பத்தக்கது என்று கூறலாம். சில சமயங்களில் கிராமச் சங்கத்து அங்கத் தவர்கள் அதி மிஞ்சிய உற்சாகத்தினல், கிராமம் தாங்க முடியாத செலவுத் திட்டங்களை வகுக்கவும் கூடும். அப்படி 1. Auditor General: கலீைக்குப் பரிசோதகர் தலைமை அதிபதி என்றும் சொல்வா,

இலங்கை அரசாங்கம் 225
வகுத்துப் பின்னர் இடர்ப்படுவதைக் தடுக்கவே இக்கட்டுப் பாடுகள் உள. மத்திய அரசாங்கப் பரிபாலன விடயத்திற் ருனும் இத்தகைய கட்டுப்பாடுகள் உள. அவற்றைப்பற்றிப் பின்னர் நீங்கள் படிப்பீர்கள்.
தான் நிறைவேற்றும் சட்டங்களையும் ஒழுங்கு விதிகளையும் மீறுபவர்களை விசாரணை செய்து தண் டிப்பதற்கான அதிகாரமும் கிராமச்சங்கத்திடம் ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது. தானிடும் கட்டளைகளுக்கு மக்களைக் கீழ்ப்படியச் செய்யும் அதிகாரம் கிராமச் சங்கத்துக்கு இல்லாவிட்டால், கிராமப் பரிபாலனத்தை அது செவ்வனே நடாத்த முடியாது; கிராமத் தில் ஒழுங்கு, அமைதி என்பவையும் நிலவமாட்டா.
இனி, ‘கிராமக் கோடு' என்று சாதாரணமாக வழங்கப் படும் கிராம நீதித்தலம் என்ற ஓர் தாபனமும், கிராமச் சமூகத்தின் நன்மைக்காக ஏற்பட்டிருக்கிறது. ஒர் கிராமப் பகு திக்கு நீதித்தலம் நிறுவமுன், அது பற்றிய ஒர் பிரகடனத்தை அரசாங்கம் முதலிற் செய்யும். பின்னர் அந்த நீதித்தலத்துக் கென ஓர் தலைவரை அது நியமிக்கும் இத்தலைவர் ‘கிராமக் கோட்டு நீதவான்? என்று சாதாரணமாக வழங்கப்படுவார். இவருக்குரிய வேதனத்தை மத்திய அரசாங்கமே உதவும். அவரின் நீதிபரிபாலன வேலையில் அவருக்கு உதவிசெய்ய மூன்று ஆலோசகர் இருப்பர். அவர் ஒர் வியாச்சியத்தை விசாரணை செய்து அது சம்பந்தமான தீர்ப்பை அளிக்க முன்னர் தமது ஆலோசகர்களைக் கலந்துகொள்ள வேண்டும். தீர்ப்பு விடயத்தில் அவர்களுக்கும் தலைவர்க்குமிடையே உடன் பாடு இல்லாவிட்டால், தலைவர் தம்முடைய எண்ணப்படிக்கே தீர்ப்பை அளிக்கவேண்டும். ஆனல் இந்த அபிப் பிராய பேதத்தை அவர் பதிவுசெய்துகொள்ளுதல் வேண்டும். அப் பதிவில் அபிப்பிராயபேதம் கொண்டுள்ள ஆலோசகர்களும் கையொப்பம் இடுதல் வேண்டும்.
கிராம நீதித்தலத்தில் தமிழ் அல்லது சிங்களத்தில் தான் கருமங்கள் ஆற்றப்படும். ஆனல் அங்குள்ள பதிவுகள், சாத னங்கள் என்பவற்றை ஆங்கிலத்தில் எழுதி வைத்திருக்கலாம். கிராம நீதித்தலத்தில் நியாயாதிக்கத்துக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது. 20.00 ரூபா தொடக்கம் 100.00 ரூபா வரையுள்ள கடன், நட்டம், கேள்வி என்பனபற்றிய தாகவே அதன் விசாரணை அதிகமாக இருக்கும். இப்படியான அற்ப விடயங்களில் கிராமங்களில் பிணக்கு ஏற்படுதல் சாதாரணம். இவற்றைத் தீர்க்க, கிராமவாசிகள் பட்ட
1. Village Tribunal. 2. President of Village Tribunal.
I| حس-3248:

Page 118
226 இலங்கை அரசாங்கம்
ணத்து நீதித்தலங்களுக்குப் போவதென்ருல் அவர்களுடைய காலமும், பணமும் விரயமாகிவிடும். எனவே அவர்களின் செளகரியத்தின் பொருட்டே கிராம நீதித்தலங்கள் ஏற்பட் டுள்ளன. இந்நீதித்தலங்களில் அப்புக்காத்து, பிறக் கிராசி என்று சொல்லப்படும் நியாயவாதிகள் ஏற்பட்டு வாதிக்க முடியாது. கட்சிக்காரர் தாமாக வெளிப்பட்டுத் தம் வாதப் பிரதிவாதங்களை நீதவானுக்கு எடுத்துரைக்கவேண்டும். இங்கே தொடுக்கப்படும் வழக்குகள், மேலே கூறியாங்கு அற்ப பிணக்காலானவை. அப்பிணக்கை முற்றவிடாது. கட்சிக்காரர்க்கிடையே சமாதானத்தை உண்டாக்கி வழக்கைச் சமரசமாகத் தீர்க்கவே நீதவானும் அவரது ஆலோசகர்களும் முயற்சி செய்வர். சமரசம் ஏற்படாவிட்டால்தான் விசாரணை செய்து தீர்ப்பு அளிப்பர்.
அப்பியாசங்கள்
1. கிராமச் சங்க அங்கத்தவர்களைத் தெரிவு செய்தற்கு வேண்டிய உரிமையைப் பெற ஒருவர் எத்தகையவராயிருத்தல் வேண்டும்?
2. ஒர் கிராமச் சங்கத்தில் அங்கத்தவராய் வரமுற்படு பவர் எத்தகைய தகைமைகளைக் கொண்டிருத்தல் வேண்டும்.
3. ஒர் கிராமச்சங்கத்தின் தத்துவங்களும் கடமைகளும் urt 60) all P

அத்தியாயம் 7.
ஊராட்சி அமைப்புக்கள்
நகர சமூகங்கள்
அ. ஒர் நகர சங்கம்
ஒர் கிராமச் சமூகத்துக்கான பரிபாலன முறையே, அமைப்பே, ஒர் கிராமச் சங்கமாகும். ஒர் கிராமச் சமூகத்தி லும் பார்க்க, ஒர் நகர சமூகமானது பல விதங்களில் வித்தி யாசமுடையது. எனவே ஒர் நகர சங்கமானது, கிராம ச் சங்கத்தைப்போலில்லாது, நகர பரிபாலனத்தின் பொருட்டு சில விசேட கடமைகளை உடையதாக இருக்கிறது. இவ் விடயத்தில் நகர சமூகத்துக்கும், கிராமச் சமூகத்துக்கும் இடையில் உள்ள பேதங்கள் என்ன என்பதை எவ்வாறு அறிய முடியும்? முதலில் ஓர் விடயத்தை எடுத்து அவதானித்துக் கொள்ளுவோம். நகர சமூகம் தன் வாழ்க்கைக்குப் பூமி திருத்தியுண்ணுதலாய விவசாயத் தொழிலையே பிரதான தொழிலாகக் கொள்ளாது. அது தன் வாழ்க்கைக்கு விவசாயத் தில் தங்கியிருக்கமாட்டாது. கிராமப் பக்கங்களிலே உணவுப் பொருள்களை விளைவிக்க, அப்பொருள்களை ஆதாரமாகக் கொள்ள முடியுமானல்தான் நகரங்கள் உண்டாகும்; அதா வது கிராம மக்கள் உணவுப்பொருள்களை ஆக்கித் தர அவற்றை நகர மாந்தர் தம் பணத்தைக்கொண்டோ தம் திறமையைக் கொண்டோ பெறுவர். எனவே, நகரம் என்பது தனது சுகவாழ்வுக்குக் கிராமத்தையே நம்பி, அதில் தங்கியிருக் கிறது. நகரத்தில் உள்ள சமூகம் தன் சீவனே பாயத்தை, கிராமச் சமூகம் தேடிக்கொள்வதிலும் பார்க்க வித்தியாசமான முறையில் தேடிக்கொள்ளுகிறது. நகரத்து மக்களுக்குப் பல்வேறு விதமான தொழில்கள் உள. பலர் கடைகளிலும் தொழிற்சாலைகளிலும் வேலை செய்வர்; கந்தோர்களில் கடமை பார்ப்பர். இன்னும் பலர் வர்த்தகக் கொம்பணிகளில் சேவை புரிவர். கொள்வனவு விற்பனவுத் துறைகளில் ஈடுபட்டிருப்ப வர்கள் பலர்; இப்படியாக நகர மக்கள் பல்வேறு விதமான தொழில்களில் ஈடுபட்டுத் தம் சீவியத்துக்கு வழி தேடுகிறர் கள். மேலும், ஒர் நகரத்தின் அமைப்புத்தானும் கிராம அமைப்பிலும் பார்க்க வித்தியாசமாக இருக்கிறது. வீடுகள் ஒன்றே டொன்று நெருங்கியனவாயும், பயிர்கள் விளையும் தோட்டங்கள் குறைவாகவும் அங்கே இருக்கும். கட்டடங்கள்

Page 119
名23 ஊராட்சி அமைப்புக்கள்
நிருமாணிப்பதற்கும் தெருக்கள், பாதைகள் அமைப்பதற்குமே அங்கேயுள்ள நிலங்கள் பெரும்பான்மையும் உபயோகிக்கப் படுகின்றனவன்றி விவசாயத் தொழிலுக்கு அவற்றை உபயோகிப்பது இல்லை. மக்கள் நெருங்கிக் கூட்டமாக வாழ்வதினுல் அங்கே சுகாதாரம் பற்றிய பிரச்சினை பெரிதாக இருக்கிறது. கட்டடங்களைச் சுகாதார முறையில் எவ்வாறு நிரு மாணிக்கவேண்டும், வெளிச்சம், தண்ணீர் என்பவற்றை எவ்வாறு சனங்களுக்கு உதவவேண்டும், அன்றன்று சேரும் குப்பை கூளங்களையும் அழுக்குப் பொருள்களையும் எவ்வாறு அகற்றவேண்டும் என்னும் இன்னேரன்ன பிரச்சினைகள் ஒர் நகரத்திலேயுண்டு.
ஒரு நகரத்தின் பரிபாலன வேலை தானும் கிராமப் பரிபாலன வேலையைப்போ லிராது அநேகம் பிரச்சினைகளைக் கொண்டதாக இருக்கும். நகர மக்களில் காணப்படும் சமூக மனப்பான்மையும், கிராம மக்களின் சமூக மனப்பான்மையிலும் பார்க்க வேறுபட்டது. நகரத்து மக்களுக்கிடையே கூடிய சமுதாயத் தொடர்புகள் உள. அவர்கள் நெருக்கமாக வசிப்பதால் ஒருவரோடொருவர் நெருங்கிப் பழகுகிருர்கள். அந்நியரை அவர்கள் வெறுப்பு மனப்பான்மையுடன் நோக்க மாட்டார்கள். கடைகள், கந்தோர்கள், சந்தைகள் என்னும் இன்னேர ன்னவற்றில் பல்வேறு விதமான மக்கள் தொழில் புரிவதால் அவர்களுக்கிடையே வருணக்கட்டுப்பாடோ, இனக் கட்டுப்பாடோ அவ்வளவு இறுக்கமாக இல்லை. இன்னும், கிராம மக்களிடையே காணப்படுவதிலும் பார்க்க நகர மக்க ளிடையே கூடிய தன்னம்பிக்கையும் தனி மனித்ன் சுதந்திர மும் நிலவுகின்றன. அவர்கள் ஒவ்வொருவரும் தன் தன் சக்தியைக்கொண்டு, தன் தன் நயம் கருதித் தொழில் புரிவர். கிராமப் பக்கங்களிலே உள்ளவர்கள் ஒருவர்க்கொருவர் உதவி செய்யவேண்டியவர்களாக இருக்கிருர்கள். அவர்கள் தமது அறுவடைக் காலத்தில் ஒருவருக்கொருவர் உதவி புரிவர். இத்தகைய பரஸ்பர உதவி நகரவாசிகளுக்கு வேண்டியதில்லை. நகர வாசி ஒருவன் தான் செய்யும் வேலைக்குள்ள வேதனத் தைப் பெற்றுக்கொள்ளுகிருன். அவன் தான் செய்யும் வேலைக்கு மற்றவர்களின் உதவியை நாட வேண்டியதில்லை. தன் கையே தனக்கு உதவி என்று தனக்குரிய வேலையைச் செய்யும் அவன், தன் சகோதர நகர வாசிகளுடன் நெருங்கிப் பழக அவகாசமுடையவனகிருன். அதன் பயணுக, அவ்ன் தனது உரிமைகள் யாவை என்பதனையும், மற்றவர்களின் உரிமைகள் யாவை என்பதனையும், கிராமவாசியிலும் பார்க்க அதிகம் அறிந்துகொள்ளுகிருன். இவ்வறிவினல் அவன்,

ஊராட்சி அமைப்புக்கள் 229
கிராமவாசியானவன் அதிகாரத்தில் இருப்போர்க்கு அஞ்சிப் பதுங்குவதுபோல, அஞ்சான், பதுங்கான், ஆகவே அவன் கிராமவாசியிலும் பார்க்க, விடயங்களை நுணுக்கமாக ஆராய வல்லவனுகி அவற்றின் குனகுணங்களை அறிய முயற்சிப்பான். அவன் கிராமவாசியிலும் பார்க்க அநேக விடயங்களைக் கேள் விப்படுகிருன் அநேக விடயங்களை வாசித்து அறிகிமு ன். விடயங்களைக் கூடிய சுவாதீனத்துடன் விவாதிக்கிருன். இவ் வாரு ன பழக்கங்களை நகரவாசி கொண்டிருப்பதனல் அவன் கிராமவாசியிலும் பார்க்கத் தன் சுதந்திரத்திலும் மனிதன் என்ற நியதியில் தனக்கு இருக்க வேண்டிய உரிமைகளிலும் அதிக சிரத்தையுடையவன கவிருந்து அச்சுதந்திரத்தையும் உரிமைகளையும் பேணிப் பாதுகாக்க முயற்சிக்கிருன்.
மேலே காட்டியனவும் நகர சங்கப் பரிபாலனக் கருமத்தை, இராமச் சங்கப் பரிபாலனக் கருமத்திலும் பார்க்க கஷ்டமும் சிக்கலுமுடையதாக்குகின்றன. ஓர் நகரத்தைப் பரிபாவிக் கும் தாபனத்தை நகரசங்கம் என்கிருேம்.
இனி, நகரசங்கம் ஒன்றினது அமைப்பையும் அதன் கருமங்களையும் ஆராய்வாம்:
ஓர் நகர சங்கத்தை அமைக்கமுன் அது அமையவேண்டிய இடத்தை எல்லை குறித்து அரசாங்கம் பிரகடனம் செய்யும். இப்பிரகடனம் அரசாங்க "கசெற்" பத்திரிகையில் வெளி யாகும். அதன்பின் குறித்த இடப்பரப்புக்கென ஓர் நகர சங்கம் தாபிக்கப்பட்டு அதற்கான அமைப்புக்களும் பிர மாணங்களும் இயற்றப்படும். இந்த அமைப்புக்கள் பிர மாணங்கள், 1939-ம் ஆண்டின் 61-ம் இலக்க நகர சங்கக் கட்டளைச் சட்டத்தில்? விரிவாகத் தரப்பட்டிருக்கின்றன.
மேலே சொல்லிய கட்டளைச் சட்டத்தில் ஓர் நகர சங்கத் தின் கருமங்கள் யாவை என்பது பின்வருமாறு கூறப்பட்டிருக் கிறது:-
*பொதுசன ஆரோக்கியம், பொதுநலச் சேவைகள் போக்குவரத்துப் பாதைகள் என்பவை சம்பந்தமான சகல விடயங்களையும் ஒழுங்கு செய்தல், கட்டுப்படுத்தல், பரிபா லனம் செய்தல் என்பவற்றுடன் சனங்களின் செளகரியம், வசதி, சுகம் என்பவற்றையும் பாதுகாத்து அபிவிருத்தி செய் த ல் என்பவைபற்றிய பொதுவான பொறுப்பினை நகர சங்கம் ஏற்று நடாத்தவேண்டும் என விதிக்கப்பட்டிருக்கிறது’.
நகர வாசிகளின் ஆரோக்கிய வாழ்க்கைக்கேற்ற நிலைமைகளை ஆக்கி அவற்றைப் பேணுவதே ஓர் நகர சங்கத்தின்
I. Urban Council. 2. Urban Councils’ Ordinance No. 61 of 1939.

Page 120
23 O ஊராட்சி அமைப்புக்கள்
பிரதான கருமம் ஆகும் என்பது மேலே கூறிய கட்டளைச் சட்டத்தாற் புலனுகிறது. தேசத்து அரசியல் விவகாரங்களில் நகர சங்கத்துக்குச் சம்பந்தம் இல்லை. அதன் எல்லைக்குள்ளும் சரி வெளியேயும் சரி உள்ள அரசியற் கட்சிகளதும், மத சம்பந்தமான கட்சிகளதும் கருமங்களுடன் தானும் அதற்குக் தொடர்பு இல்லாதிருக்கும். சமுதாயச் சேவை புரியும் ஓர் அமைப்பின் கருமங்கள் எவ்வாறு இருக்குமோ அவ்வாறே ஒர் நகர சங்கத்தின் கருமங்களும் இருக்கும்.
ஓர் நகர சங்கத்தில் ஆறுபேருக்குக் குறைவாகவேனும் பன்னிரண்டுபேருக்கு அதிகமாகவேனும் அங்கத்தவர்கள் இருக்கக்கூடாது. நகர சங்கத்து அங்கத்தவர்களில் இரு வரை மத்திய அரசாங்கம் நியமிக்கும் வழக்கம் கொஞ்சக் காலத்துக்கு முன் இருந்தது. இப்போது அவ்வழக்கம் இல்லை. வட்டாரத்துக்கு அல்லது பிரிவுக்கு ஒருவராக எல்லாப் பிரதி நிதிகளும் நகர வாசிகளாலேயே தெரியப்படுவர்.
கிராமச்சங்க வாக்காளர்க்குரிய தகைமைகளே நகர சங்க வாக்காளர்க்கும் பெரும்பான்மையுமுள்ளன. ஆணுல் பின் கூறியவர்கள் விடயத்தில் இத்தகைமைகள் நன்கு விபரிக்கப் பட்டிருக்கின்றன. ஓர் நகர சங்க வாக்காளர் தான் வாக் குரிமை செலுத்தக்கோரும் பகுதியில் வசிப்பவராதல் வேண் டும். அத்துடன் அவர்:
1. மாதம் ஒரு ரூபாவுக்குக் குறையாத வாடகைக்குரிய ஒர் காணியில் அல்லது வீட்டில் அல்லது கட்டடத்தில் வசிப்பவராக அல்லது 2. ஆண்டுக்கு 10.00 ரூபாவுக்குக் குறையாத மதிப்பு வரிக்குரிய ஒர் காணி அல்லது வீடு அல்லது கட்டடத் துக்குச் சொந்தக்காரராக அல்லது 3. 60.00 ரூபாவுக்குக் குறையாத ஆண்டு வருமானம்
உடையவராக இருத்தல் வேண்டும். 21 வயதுக்குக் குறையாத ஆண்களும் பெண்களும், மேலே சொல்லிய தகைமையில் ஒன்றையுடையராக விருப்பின் வாக் குரிமை செலுத்தலாம் என்பது தெளிவு: வாடகைப் பணம் இறுப்பவர்கள் வாக்குரிமை செலுத்த அருகதையுடையார் என்பதை 1-ம் பிரிவு காட்டுகிறது. இந்த வகுப்பில் அடங்கிய வர்கள் ஒர் நகர சமூகத்திலேயே விசேடமாக இருப்பர். கிராமத்திலே வாடகை கொடுத்து வசிப்பவர்கள் அரிது. வாக்குரிமை செலுத்துதற்குத் தகுதியாக்கும் வாடகைத் தொகையும் மிகவும் குறைவாகவே விதிக்கப்பட்டிருக்கிறது என்பதும் நோக்கற்பாலது. தொழிலாளரான மக்களுக்கு
1. Assessment Tax.

ஊராட்சி அமைப்புக்கள் 231
வாக்குரிமையை வழங்குதற்காகவே இத்தொகை இவ்வள வாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. 2-ம் பிரிவினல் தொழிலாள ராயில்லாத சிறிய காணிச் சொந்தக்காரருக்கு வாக்குரிமை அளிக்கப்படுகிறது. 3-ம் பிரிவு உரொக்கப்பண வருமானம் உடையவர்களுக்கு வாக்குரிமையை அளிக்கிறது.
நகர சங்க அங்கத்தவர்க்கு வேண்டிய தகைமைக்ள் கிராமச்சங்க அங்கத்தவர்க்கு உரியன போன்றவையே.
நகர சங்க அங்கத்தவர்களைத் தெரிவுசெய்யும் முறை வரு L DIT MOJ: —
குறிக்கப்பட்ட ஒரு தினத்திலே குறிக்கப்பட்ட நேரத் துக்கு முந்தி அபேட்சகராக வருபவர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தொகையினவாய நியமனப் பத்திரங்களை இதற் கெனவுள்ள தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பித்தல் வேண்டும். ஒவ்வொரு பத்திரத்திலும் வாக்காளராக உள்ளார் இருவர் கையொப்பம் இடுதல் வேண்டும். அபேட்சகராகப் பிரேரிக்கப் படுதற்குத் தானும் சம்மத காரனே என்பதை அவ்வபேட்சகர் ஒவ்வோர் பத்திரத்திலும் எழுத்து மூலமாகத் தெரிவித்தல் வேண்டும். அத்துடன் அவர் பிணைப்பணமாக 100.00 ரூபா இறுத்தல் வேண்டும். தேர்தலில் அளிக்கப்பட்ட முழு வாக்குச் சம்மதங்களில் 8 இல் ஓர் பங்கை ஒர் அபேட்சகர் பெரு விட் டால் அவர் இறுத்த 100.00 ரூபா பிணைப்பணம் அரசாங்கத் துக்குப் பறிமுதலாகிவிடும்.
மேலே கூறியவாறு அபேட்சகர்கள் அவ்வவ் வட்டாரங்க ளுக்குத் தத்தம் நியமனப் பத்திரங்களைச் சமர்ப்பித்த பின்னர், எதிரிடை அல்லது போட்டியுள்ள தானங்களுக்குப் பொதுத் தேர்தல் நிகழும். இதற்கென ஓர் திகதி குறிக்கப்பட்டு வாக்காளர் தம் சம்மதங்களைத் தெரிவித்தற்கு வேண்டிய ஒழுங்குகள் செய்யப்படும். வாக்குச் சம்மதம் அளிப்பதும் இரகசிய முறையிலேயே நடைபெறும். தேர்தல் முடிந்து அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டதும் நகர சங்கத்தின் (மதற் கூட்டத்தை ஊராட்சிப் பகுதி யதிகாரி கூட்டுவார்; இக்கூட்டத்திலே அங்கத்தவர்கள் தம்மில் ஒருவரைத் தலைவ ராகத் தெரிவு செய்வர். இத்தலைவர் மூன்று ஆண்டு காலத்துக் குப் பதவிவகிப்பர். ஓர் நகர சங்கத்தின் காலமும் மூன்று ஆண்டுகளாகும். தலைவரை விட ஒர் உபதலைவரும் முதற் கூட் டத்தில் தெரிவு செய்யப்படுவார். இவரின் பதவிக்காலம் ஒரு ஆண்டு மாத்திரமே யாகும்.
ஒர் நகரத்தின் நிருவாக அதிகாரி அதன் தலைவரே யாம். சங்கம் காலந்தோறும் இயற்றும் தீர்மானங்களுக்கியைய அவர் தம் கடமைகளை ஆற்றவேண்டும். முழு அங்கத்தவர்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கினருக்குக் குறையாமல்

Page 121
232 ஊராட்சி அமைப்புக்கள்
அங்கத்தவர்கள் சமுகமளித்தால் மாத்திரமே ஓர் சங்கக் கூட்டம் நடைபெறலாம். சங்கத்தின் தீர்மானங்கள் பெரும் பான்மையினரான அங்கத்தவர்களின் சம்மதத்தால் நிறை வேறவேண்டும். கூட்ட நடவடிக்கைகளை இதற்கெனவுள்ள ஓர் புத்தகத்தில், ஒழுங்காக முறைப்படி பதிந்து கொள்ளுதல் வேண்டும்.
ஓர் நகர சங்கம் தனது கருமங்களை ஆற்றுதற்குத் தனக்கெனச் சில உத்தியோகத் தரைக் கொண்டிருத்தல் வேண்டும். எழுத்து வேலைகள் பல அதற்குண்டு. அவற்றைச் செய்தற்கு ஒர் காரியாலயம் அல்லது கந்தோர் வேண்டும். ஓர் செயலாளரும் பல கிளாக்குமாரும் வேண்டும். இவர்களை முந்தி நகர சங்கமே நியமித்துவந்தது. ஆனல் இப்போது அவர்களை ஊராட்சிச் சேவைக் கொ மிஷன் நியமித்துவருகிறது. இவர்களுக்குரிய வேதனம் சங்கப் பணத்திலிருந்தே கொடுக் கப்பட்டுவருகிறது.
நகர சங்கக் காரியாலயம் ஒன்றிற்கு நீங்கள் போனல் அங்கே செய்யப்படும் வேலையின் தன்மையையும் அதன் அளவையும் நீங்கள் அறியலாம்.
நகர சங்கமும் கிராமச் சங்கத்தைப்போலவே சட்டபூர்வ மாக அமைக்கப்பட்ட ஓர் ஆட்சிக் கழகமே யாம். அது ஆதனங்களைச் சொந்தமாக வைத்திருக்கச் சட்டபூர்வமான அதிகாரமுடையதாக இருக்கிறது. அது நீதித்தலத்திலே மற்ற வர்களைச் சித்தாரிக்கவும், மற்றவர்களால் சித்தாரிக்கப்பட வும் தகுதிவாய்ந்தது. அதன் அசைவற்ற ஆதனங்கள் பின் வருவனவாக இருக்கும்; தரிசு நிலம், வெளிநிலம், கல்மேடு கள், கழிமண் மேடுகள், குருணிக்கல் இடங்கள், பொதுசன உபயோகத்துக்கான வாவிகள், ஆறுகள், குளங்கள், துரவுகள், மடுக்கள், வாய்க்கால்கள், கட்டடங்களுடன் சேர்ந்த அல்லது கட்டடங்கள் சேராத முடிக்குரிய காணிகள். நகரசங்கத்தில் ஒப்புவிக்கப்பட்டுள்ள ஏனைய ஆதனங்கள் பின்வருவன:- பொதுசன உபயோகத்துக்கான உத்தியா வனங்கள், 2 தோட் டங்கள், பொதுத் தெருக்கள், பாதைகள் கால்வாய்கள், பாலங்கள், சந்தைகள் என்பவற்றுடன் பொதுசன உபயோ கத்துக்கான விளக்குகள், வெளிச்சக் கம்பங்கள், சாக்கடைக் குழாய்கள், சங்கிலிகள், சலா கைகள் முதலாம் உபகரணங் களும்.
நகர சங்கத்தின் கருமங்களைப் பின்வரும் தலையங்கங்களில் வகுத்துக் கூறலாம்:-
1. Local Government Service Commission. 2. Parks.

ஊராட்சி அமைப்புக்கள் 233
(அ) சட்டமியற்றும் கருமங்கள் (ஆ) நிருவாகக் கருமங் கள்.
தனது அதிகாரத்தில் உள்ள விடயங்களை ஒழுங்குபடுத்தி நடத்துவதற்கான பிரமாணங்களை ஆக்குதற்கு ஒர் நகர சங்கத்துக்கு அதிகாரம் உண்டு. தனது எல்லைக்குள் கட்டடங் கள் நிரு மாணிக்கப்படுவதைக் கட்டுப்படுத்தற்கு-அதாவது கட்டடங்கள் தெருவில் இருந்து எவ்வளவு தூரத்துக்கப்பால் இருக்கவேண்டும், என்ன என்ன விதமான தளபாடங்களையும் உபகரணங்களையும் வீடுகள் கட்டுவதில் உபயோகிக்கவேண்டும் என்பவைபற்றியும், அப்படியான கட்டடங்களுக்கு வெளிச்சம், காற்று இருப்பதுபற்றியும்-பிரமாணங்களை ஆக்கவும் அதற்கு அதிகாரம் உண்டு. நகரத்திலேயுள்ள அழுக்கு நிறைந்த சேரிகளை அழிக்கவும் வீடுகளில் மிதமிஞ்சிய தொகையினர் வசிப்பதைத் தடுக்கவும் தண்டிக்கவும் அதற்கு அதிகாரம் உண்டு. இன்னும், தெருக்களை எவ்வாறு உபயோகிக்கவேண் டும் என்பதை ஒழுங்கு செய்யவும், புதுத் தெருக்களை அமைக்க வும், தெருக்களைத் துர்ப்பிரயோகம் செய்வோரைத் தடுக்கவும் அது அதிகாரம் உடையதாக இருக்கிறது.
ஓர் நகரத்துப் பொதுசனங்களின் ஆரோக்கியத்துடன் சம்பந்தப்பட்டுள்ள கருமங்களை நிருவகிப்பது ஒர் நகர சங்கத் தின் பிரதான கடமை ஆகும். நகரத்திலே தண்ணிர் தேங்கி நின்று சனங்களுக்குக் கெடுதி விளேக் காமல் அதனை வடிகால்கள், மதகுகள், வாய்க்கால்கள் என்பவற்றின் மூலம் அப்புறப்படுத்த நகர சங்கம் சட்டங்களை ஆக்கலாம். நகரத்தில் வசிப்பவர்கள் மலசல விமோசனம் செய்தற்கு *கக்கூசு’ எனப்படும் மலசல கூடங்களையே உபயோகிக்க வேண்டும் என்று அது நகர மக்களுக்குக் கட்டளை பிறப்பிக்கும். இம் மலசல கூடங்கள் சுத்தமாக வைத்திருப்பதை அது மேற் பார்வை செய்யும். கழிவுப் பொருள்கள் காலந்தோறும் அகற் றப்படுவதை அது கவனிக்கும். பொதுசன உபயோகத்துக் கான தெருக்கள், பாதைகளைப் பெருக்கிச் சுத்தமாக வைத் திருக்க அது ஒழுங்கு செய்யும். நகர மக்கள் தங்கள் வளவுக ளைத் துப்பர வாக வைத்திருக்கவேண்டும் என்றும் அது விதிக் கும். இவ்வளவுடன் மாத்திரம் ஓர் நகர சங்கத்தின் கருமங் கள் நின்றுவிடா. அது பொதுசன நன்மைக்கான திட்டங்களை வகுத்து நடைமுறைக்குக் கொண்டுவரலாம். உதாரணமாக, பல நகரங்களிலே போதிய தண்ணீர் வசதி இல்லை. தண்ணீரைத் தன் தன் நகர மக்களுக்கு உதவக்கூடிய திட்டங் களை ஒவ்வோர் நகர சங்கமும் வகுக்கலாம். மின்சாரத்தினல் தெருக்களுக்கு வெளிச்சம் ஏற்றும் திட்டங்களைப் பல நகரங்

Page 122
234 ஊராட்சி அமைப்புக்கள்
கள் வகுத்திருக்கின்றன. சனங்கள் குளிக்க, முழுக, சுத்தம் செய்யவேண்டிய பொது ஸ்நாந இடங்களை அமைத்தல், சந்தைகளைச் சுத்தமாக வைத்திருத்தல், வறிய மக்களுக்குச் சுகாதாரமான வீடுகள் உதவல் என்பனவும் நகர சங்கத்தின் அதிகாரத்திலடங்கிய விடயங்களாம். இவை பற்றி ஓர் நகர சங்கம் சட்டங்களை ஆக்க அதிகாரம் கொண்டிருக்கிறது. சிசுக்கள்-தாய்மார் பாதுகாப்பு நிலையங்களை ஏற்படுத்திக் கொடுப்பதும் நகர சங்கக் கருமங்களில் அடங்கும். ஓர் நகரத்தின் நலா பிவிருத்திக்கு வேண்டிய சட்டங்கள், அந்நகர சமூகத்தின் வாழ்க்கையுடன் மிகத் தொடர்புடையன என் பதை நீங்கள் இதுவரை கூறியவற்றில் இருந்து அறிந்து கொள்ளலாகும். நகர சமூகத்தின் பிரச்சினைகள் பின்வருமாறு என்பதை இதுவரை காட்டியனவற்றில் இருந்து தொகுத்துக் கூறலாம்:-
1. மிதமிஞ்சிய குடிசன நெருக்கத்தைச் சமாளித்தல்; வீடு
கள் இல்லார்க்கு வீடுகள் கட்டிக்கொடுத்தல். 2. மலசல மகற்றுதல்; கட்டடங்கள் நெருக்கமாகவுள்ள இடங்களில் சுகாதார நிலைமைகளை ஏற்படுத்தல்: 3. நகரங்களுக்கு விசேட பிரச்சினைகளான தண்ணீர் வழங்கல், தெருக்களுக்கு வெளிச்சம் ஏற்றுதல், சனங் களின் பொது உபயோகத்துக்கான ஸ்நாந இடங்கள், உத்தியா வனங்கள் முதலானவற்றை அமைத்தல். 4. உணவுப்பொருள்கள்-அவற்றிலும் சிறப்பாகச் சீக்கி ரத்தில் பழுது படக்கூடிய பால், மீன், மாமிசம் என் பன-விற்பனையாவதைக் கட்டுப்படுத்தி மேற்பார்வை செய்தலும் நகரப்பகுதிகளின் விசேடமான கருமம். நகர சங்கம் சட்டம் ஆக்குதற்குரிய விடயங்களே மேலே காட்டப்பட்டனவாகும். இனி நகர சங்கத்தின் நிருவாகக் கருமங்கள் யாவை ? (1) தான் நிறைவேற்றிய திட்டங்களை அல்லது பிரேரணைகளை நடைமுறைக்குக் கொண்டுவருதல். (2) தான் இயற்றிய சட்டங்களுக்கு மக்கள் இணங்கிக் கீழ்ப்படிந்து நடக்கத் தனது அதிகாரத்தைக் கொண்டு நடைவடிக்கை எடுத்தல் என்பன ஓர் நகர சங்கத்தின் நிருவாகக் கருமங்கள் ஆகும்.
மேலே சொல்லிய முதலாம் நிருவாகக் கருமத்தைச் செய்யும் பிரதான நிருவாக அதிகாரி நகர சங்கத் தலைவரே யாவர். இவரைவிட தனது பரிபாலன வேலையின் விசேட பகுதிகளை மேற்பார்வை செய்து நடாத்த இஞ்சினியர்,
1. பொறி இயலார் என்றும் எ ைஜினியர், இஞ்ஜினியர் என்றும் சொல்லுவர்.

ஊராட்சி அமைப்புக்கள் 235
வைத்தியர் போன்ற விசேட உத்தியோகத் தரையும் ஒரு நகர சங்கம் கொண்டிருக்கும். இன்னும், சங்கத்தின் அன்ரு ட கருமங்களை நடாத்துதற்குப் பரிசோதகர், ஒவசியர் எனப் படும் மேற்பார்வையாளர் முதலியோரும், தேர்ச்சிபெற்ற, தேர்ச்சிபெருத தொழிலாளரும் இருப்பர். சங்கத்துப் பத்தி ரங்களைப் பாதுகாத்து வைத்தல், கணக்கு எழுதி வைத்தல், பற்றுச்சீட்டுக்கள் கொடுத்தல், அநுமதிப் பத்திரங்கள் வழங் கள் எழுதல் என்னும் இன்னேர ன்ன கருமங்களைச் செய்ய நகர சங்கத்தில் ஓர் தொகைக் கிளாக்குமாரும் இருப்பர்.
ஓர் நகர சங்கம் தன் கருமங்களைச் செவ்வனே நடாத்து தற்குப் பணம் இன்றியமையாது வேண்டப்படுகிறது. அது தனது உத்தியோகத்தர்க்கு வேதனம் கொடுக்கவேண்டும்; அதன் நிரு மாண வேலைகளுக்கு வேண்டிய தளபாடங்கள் உபகரணங்களைப் பெற வேண்டும்; தனது திட்டங்களை நடை முறையில் ஒழுங்காக வைத்திருக்கவேண்டும். இவற்றுக் கெல்லாம் பணம் வேண்டும். இப்பணத்தைப் பின்வரும் வழிகளில் பெறலாம்.
(அ) ஒழுங்குவிதிகளை மீறுபவர்கள் மீது அபராதமும்
தண்டப்பணமும் விதித்தல். (ஆ) முத்திரை வரி, அநுமதி வரி விதித்தல். (இ) மதிப்பு வரி, வரி என்பன விதித்தல். (ஈ) மின்சார சக்தி போன்றவையை விற்பதால் அல்லது
குத்த கைக்கு விடுவதால் பணம் பெறுதல். (உ) வேறும் விதத்தில் வருமானம் பெறல். இவ்வாரு கச் சேகரிக்கப்படும் பணம் ஊராட்சி நிதி என்ற ஒர் நிதியில் சேமிக்கப்படும்.
மேலே சொல்லியவாறு பெறும் வருமானத்தைவிட, அரசாங்கத்தின் அநுமதியையும் அங்கீகாரத்தையும் பெற்று, அதனிடமிருந்தே தேவை காணுமிடத்து ஓர் தொகைப் பணத் தையும் கடனுகப் பெறலாம். பெரும் தொகைப் பணம் வேண்டிய நீர் உதவித்திட்டம் அல்லது வீடு கட்டிக்கொடுக் கும் திட்டம் போன்ற பெரிய திட்டங்களுக்கு இக்கடன் பணம் ஆவசியகமாக நேரிடும். தான் கடன் கேட்கும் திகதிக்கு முந்தியுள்ள ஐந்து வருடத்துச் சராசரி வருமானத் தில் 10 மடங்குக்கு அதிகமாகாத ஓர் தொகையை ஓர் நகர சங்கம் மத்திய அரசாங்கத்திடம் இருந்து கடனுகப் பெற முடியும்.
சங்கத்தலைவர் ஆண்டுதோறும் ஒர் வரவு செலவுத்திட்டம்? தயாரித்து அதனைச் சங்கத்திற் சமர்ப்பிக்கவேண்டும். வரவு 1. Clerks: எழுத்தாளர், எழுதுவினைஞ்சர் எனவும் சிலர் கூறுவர். 2. Budget.

Page 123
236 ஊராாட்சி அமைப்புக்கள்
செலவுத் திட்டம் என்பது குறித்த ஓர் வருடத்தில் ஏற்பட விருக்கும் உத்தேசச் செலவுத் தொகையையும், அச்செலவுக்கு வேண்டிய பணத்தை எவ்வாறு சேகரிக்கலாம் என்பதையும் காட்டும் அறிக்கையேயாகும். பணம் எது எதற்கு வேண்டும் என்பதைத் தெளிவாக, முறையாகக் காட்டும் தன்மையில் செலவினங்கள் வேறு வேருக வகுத்து விபரம் காட்டப்படல் வேண்டும். ஒவ்வோர் ஆண்டு முடிவிலும் தலைவரானவர் விரிவான ஒர் பரிபாலன அறிக்கையையும் வெளியிடல் வேண் டும். பணம் எவ்வாறு, எவ்வளவு, வரவானது, அது எவ்வாறு செலவழிக்கப்பட்டது என்பன விபரமாக இவ்வறிக்கையிற் காட்டப்படல் வேண்டும். பரிபாலன அறிக்கை முதலில் நகர சங்கத்துக்குச் சமர்ப்பிக்கப்படும். பின்னர் ஊராட்சிக் கொமிஷனர்? என்னும் அதிகாரி மூலமாக ஊராட்சிப்பகுதி அமைச்சுக்கு அனுப்பப்படல் வேண்டும்.
இலங்கையில் உள்ள நகர சங்கங்கள் மீது, மத்திய அரசாங் கம் ஓரளவுக்கு அதிகாரம் உடையதாக இருக்கிறது. ஓர் சங்கத்தலைவர் தம் கடமையை ஆற்றத் தகுதியற்றவர் என்று கண்டால், அல்லது அவர் வேண்டுமென்றே தம் கடமையை ஆற்ருது இருந்தார் என்று கண்டால் அவரைப் பதவியிலிருந்து நீக்குதற்கும், ஒர் சங்கத்தைக் கலைப்பதற்கும் மத்திய அரசாங் கத்துக்கு அதிகாரம் உண்டு. ஊராட்சிக் கருமமானது, ஊராட்சிப்பகுதி அமைச்சரின் அதிகாரத்தில் உள்ளது; எனவே அந்த ஊராட்சித் தாபனங்களின் கருமங்களை மேற்பார்வை செய்தல் இவ் வ ைம ச் சின் பிர தா ன க ட  ைம யாகும். இதன் பொருட்டு ஊராட் சிக் கொ மி ஷ னர்4 என்ற ஓர் நிருவாக உத் தியோ கத் த ரை இவ் வ ைமச் சு தன்னகத்தே கொண்டிருக்கிறது. இவ்வதிகாரி நகர சங்கக் கருமங்களை மேற்பார்வை செய்தும் கட்டுப்பாடு செய்தும் வருவார். இன்னும், ஓர் நகர சங்கத்தின் கருமங்கள் எவ் வாறு நடைபெறுகின்றன என்பதை விசாரிக்க ஓர் சபையை நியமிக்க அல்லது இதுபற்றி ஊராட்சிக் கொ மிஷனருக்கு அதிகாரம் வழங்க அரசாங்கத்துக்கு அதிகாரம் உண்டு. ஓர் நகர சங்கம் தான் செய்ய வேண்டிய பிரதான கருமம் ஒன்றி னைச் செய்யத் தவறினல், அல்லது அக்கருமத்தைச் செய்வதில் பராமுகமாக விருந்தால் அக்கருமத்தைச் செய்யும்படி வற்பு றுத்த அரசாங்கத்துக்கு அதிகாரம் உண்டு. மேலும், நகர சங்கங்களுக்கென விதிக்கப்பட்ட பிரமாணங்களை மாற்றவோ,
l: Administration Report. 2. Commissioner of Local Government. 3. Ministry of Local Government. 4. கொமிஷனர் என்னது கொமிசனர் என்றும் கூறுவர்.

ஊராட்சி அமைப்புக்கள் 237
புதிதாகப் பிர மா ண ங்க ள் ஆக்க வோ அ ர சாங் கம் அதிகாரம் உடையதாக இருக்கிறது. நகர சங்கங்கள் என்ன என்ன கருமங்களை ஆற்றவேண்டும் என்பதுபற்றியும் அரசாங் கம் ஆலோசனை சொல்லிக்கொடுக்கும். தண்ணிர் உதவல், பொதுச்னங்களின் ஆரோக்கியத்துக் கேதுவான திட்டங்களை வகுத்தல், வறியவர்களுக்கு வைத்திய வசதி செய்துகொடுத் த ல் முதலாம் பணிகளை ஒர் நகர சங்கம் கையேற்று நடத்தாவிட்டால் அவற்றை எவ்வெவ்வாறு கையேற்று நடத்தவேண்டும் என்று கொள்கை வகுத்துக்கொடுக்கவும் அரசாங்கம் அதிகாரம் உடையதாக விருக்கிறது. நகர சங்கத்தின் கணக்குப் புத்தகங்களையும் ஏனைய பத்திரங்களை யும் பரிசீலனை செய்ய அரசாங்கம் அதிகாரிகளை நியமிக்கலாம். ஓர் நகர சங்கம் தனது வரவு செலவுத் திட்டத்தினை ஊராட் சிக் கொ மிஷனரிடம் சமர்ப்பிக்கவேண்டும். அதனை அவர் நுணுக்கமாகப் பரிசீலனை செய்வார். ஓர் நகர சங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தைக் கட்டுப் படுத் த ஊராட் சிப்பகுதி அமைச்சுக்கு அதிகாரம் இருக்கிறது. ஈற்றில், நகர சங்கங்களுக்கிடையே ஏதும் பிணக்குகள் நேர்ந்தால் அவற்றைச் சமரசமாகத் தீர்க்கவும் அரசாங்கம் முயற்சி செய்யும். இதுவரை கூறியனவற்றில் இருந்து நகர சங்கப் பரிபாலன விடயத்தில் மத்திய அரசாங்கம் அதிகாரம் உடைய தாக இருக்கிறது என்பதும், நகர சங்க நடைவடிக்கைகளைக் கட்டுப்படுத்த அதற்கு அதிகாரம் இருக்கிறதென்பதும் தெளி வாகும்.
இப்படியாக மத்திய அரசாங்கம் நகர சங்கக் கருமங்களைக் கட்டுப்படுத்தல் இன்றியமையாதது என்றும் கூறலாம். எங்கள் நாட்டுக்குச் சரி, எங்கள் மக்களுக்குச் சரி உள்ளூர் விடயங்களில்தானும் சுயாட்சி நடாத்துவது ஓர் நவமான கருமம் ஆகும்; ஆகவே மத்திய அரசாங்கத்தின் மேற்பார்வை யும் கட்டுப்பாடும் இருப்பது வேலை அநுகூலமாக நடைபெறு தற்கு அத்தியாவசியகமாகின்றது. நகர சங்க அங்கத்தவர்கள் சில சமயங்களில் பிழைகள் விடவும் கூடும். சிலர் தம் கெளர வத்திலும் பெருமையைக் காப்பதிலும் மிகவும் சிரத்தை யுடையராயிருப்பர ன்றி மற்றும் பல கருமங்களில் பராமுக மனப்பான்மை யுடையராயிருப்பர். இன்னும் சிலர் அங்கத்த வராக வருதற்கு மாத்திரம் ஆர்வமுடையராக இருந்துவிட்டு, அப்படியான பின் அங்குள்ள கருமங்களில் அதிகம் சிரத்தை எடுக்கார். இப்படியான நூானநிலைமைகள் இன்னும் எம் நாட்டு நகர சங்க நிருவாகம் சம்பந்தமாக இருக்கிறபடி யினல் மத்திய அரசாங்கத்தின் மேற்பார்வை இருத்தலும் விரும்பத்தக்கது தா ன.

Page 124
238 ஊராட்கி அமைப்புக்கள்
நகர சங்கம் போன்ற ஓர் சனநாயகத் தாபனத்தை அநு கூலமாக நடாத்த வேண்டுமானல் அங்கேயுள்ளார் ஒத்த முடிவு காணவேண்டிக் கலந்தாலோசிக்கும் வழக்கம் உடைய ராக இருத்தல் வேண்டும். இந்த வழக்கம், ஆண்டா ன் அடிமை மனப்பான்மை அதிகமாக இருக்கும் இடங்களிலே உருவாதல் மிகவும் கடினம். ஓர் நகர சங்கத்து அங்கத்தவர்க ளுக்கிடையே வருணமுறையிற் பிரிவினை இருக்குமானல் அது இன்னலிற் கொண்டுபோய் விட்டுவிடும். வரக்கூடிய இன்னல் கள் எல்லாவற்றையும் தாண்டி அங்கத்தவர்கள் எல்லாரும் சனநாயக மனப்பான்மை கொண்டு தம் சங்கத்தின் மூலம் சீரிய தொண்டினை ஆற்றுவார்களேயானல் இச்சங்கங்களே சனநாயக ஒழுக்கங்களில் தமது அங்கத்தவர்களுக்குப் பயிற்சி நிலையங்களாக விளங்கும் என்பதற்குச் சந்தேகம் இல்லை. இந்த சனநாயகப் பயிற்சி எவ்வளவுக் கெவ்வளவு பரந்து விரிகிறதோ அவ்வளவுக் கவ்வளவு இலங்கை முழுவதும் நன்மை அடையும். இப்பயிற்சியின் மூலம் மக்கள் பயன் அளிக்கா விதண்டா வாதங்களில் ஈடுபடாது மனித சமூகத்தைச் சேர்ந்த தமது நன்மை விருத்திக்கு வேண்டிய கருமங்களைக் கலந்தாலோசிப்பதன் மூலம், கருமங்களை வகுத்து ஒழுங்காக நடத்தி நன்மை பெறமுடியும். இதுவே பரிபாலனத்தின் நோக்கமும் தொண்டும் ஆகும்.
(ஆ) மாநகர சங்கங்கள்
முனிசிப்பற் சபை என்றும் முனிசிப் பற் சங்கம் என்றும் சாதாரணமாக வழங்கப்படும் மாநகர சங்கத்தைப் பற்றி இனி ஆராய்வாம். ஓர் மாநகர சங்கத்துக்குரிய பகுதியும், ஏறக் குறைய நகர சங்கப் பகுதியினளவேயாகும். ஆனல் குடிசன நெருக்கம் அதில் அதிகமாக இருக்கும். நகர சங்கத்தின் பகுதியிலே வீடுகள் நெருக்கமாக இருப்பினும் அங்கே வெளி நிலங்களும் கொல்லைப் புறங்களும் உள. ஆனல் மாநகரப் பகுதியிலே இவ்வாறு வெளிநிலங்களும் கொல்லைப்புறங்களும் இருப்பது அரிது. அங்கே சனங்கள் மிகவும் நெருக்கமாக வாழ்வர். கொழும்பு மாநகரத்தின் விஸ்தீரணம் பதின் மூன்று சதுர மைல் மாத்திரமே. ஆனல் அங்கே வசிப்பவர்கள் தொகை மூன்று இலட்சம். இதற்கடுத்தாப்போல இருக்கும் தெகிவல-கற்கிசை நகர சங்கப் பகுதியில் இவ்வளவாகச் சன நெருக்கம் இல்லை.
மாநகரப் பகுதியிலே குடிசன் நெருக்கம் அதிகமாக இருப்பதனல் மக்களின் ஆரோக்கியத்தைப் பேணல், வசிப் பிடங்களையும் ஏனைய இடங்களையும் சுகாதார முறையில்
I. Municipalities.

ஊராட்சி அமைப்புக்கள் 239
வைத்திருத்தல் என்னும் பிரச்சினைகள் அதி முக்கியத் துவ மடைகின்றன. அங்கே வீடுகள் கட்டப்படுவதை மிகவும் சாவதானத்துடன் மேற்பார்வை செய்தல் வேண்டும். இல்லை யேல் ஒழுங்கற்ற முறையில் வீடுகளும் தெருக்களும் கேவல மாகக் காட்சியளிக்கும். மாநகரப் பகுதியிலே சன்சஞ்சாரமும் வாகனப் போக்குவரத்தும் அதிகம்; எனவே அங்கே தெருக்களையும் பாதைகளையும் நிரு மாணித்து நல்ல நிலைமை யில் வைத்திருக்கவேண்டும். இன்னும், தண்ணிர் உதவல் உத்தியா வனங்களையும் பூங்காக்களையும் அமைத்தல், வீடுகளை ஒழுங்கான முறையிற் கட்டுவித்தல், அழுக்குப்பொருள்களை அகற்றுதல், தொற்றுநோய் பரவுவதைத் தடுத்தல், தீப்பர வாதபடி முன்னெச்சரிக்கையுடன் சாவதானமாக இருத்தல், சீக்கிரத்திற் கெட்டுப்போகக் கூடிய உணவுப் பொருள்கள் விற்பனையாவதை மேற்பார்வை செய்தல் ஆதியாம் கருமங்கள் ஒர் மாநகர சங்கத்துக்கு விசேடமாக உள்ளவை. இக்கருமங் களைச் சாவதானமாகக் கிரமப்படி செய்யாவிட்டால் தொற்று நோய்கள் பரவி மக்களை அல்லற்படுத்தும்; அல்லது வேறு வழிகளில் உயிர்ச்சேதம் பொருட்சேதம் ஏற்படும். இவற்றின் பயனக மனித சமூகம் பலவீனமுற்று அழிந்தே போய்விடும்.
மாநகர பரிபாலனத்தின் நோக்கம் என்ன ? தன்னகத்தே வசிக்கும் மக்களின் நலம் கருதி, பரிபாலனக் கொள்கைகளைச் சரியான முறையில் வகுத்து சீரியமுறையில் அவற்றை அநுட் டானத்துக்குக் கொண்டுவருதல் தான் மாநகர பரிபாலனத்தின் நோக்கமாயிருத்தல் வேண்டும். இந்நோக்கம் முனிசிப்பற் சங்கக் கட்டளைச் சட்டம் என்னும் மாநகரச் சங்கக் கட்டளைச் சட்டத்தில் தொகுத்துக் காட்டப்பட்டிருக்கிறது. அந் நோக்கம் பின் வருபவை பற்றியன:-
1. பொது இடங்கள் உ.ம். வெளிச்சம் ஏற்றல்; கட்டடங் களை மேற்பார்வை செய்தல்; வியாபார நிலையங்களைக் கட்டுப்படுத்தல்; சன சஞ்சாரம் வாகன நடமாட்டம் என்பவற்றை ஒழுங்கு செய்தல். 2. பொதுச் சுகாதாரம்: சந்தைகள், குளிக்குமிடங்கள், கழுவும் இடங்கள், தொற்றுநோயாளர் முகாம்கள், தொற்று நீக்கித் தாபனங்கள், ஆசுப்பத்திரிகள், கால்நடைத் தொழுவங்கள்; மலசல கூடங்கள், சாக் கடைகள், திரும் வண்டிகள் எனப்படும் மின்சார ரதங்கள்,? நீர்ப்பாதைகள், உத்தியா வனங்கள், நந்த வனங்கள், என்னும் இன்னுேரன்னவற்றை அமைத் தல், பேணல், மேற்பார்வை செய்தல், கட்டுப் படுத்தல். 1. Municipal Councils’ Ordinance. 2. Tram Cars.

Page 125
24 O ஊராட்சி அமைப்புக்கள்
3. தொழிலாளர் வகுப்பினர்க்கு இருப்பிடங்கள் அமைத் துக் கொடுத்தல், அவற்றைப் பேணுதல், திருத்துதல் அபிவிருத்தி செய்தல்; தெருக்களைச் சுத்தம் செய்தல் முதலியன. 4. பாடசாலைகளையும் பொதுநூல் நிலையங்களையும் பேணு த ல், வறியவர்களின் சகாயம் பொருட்டு உதவல் அல்லது ஏதும் தருமச் சங்கம் அல்லது சகாயச்சங்கம் அல்லது தருமத்தாபனத்தை ஆதரித்தல். 5. நெருப்பு விபத்துக்களிலிருந்து உயிர்ச்சேதம் பொருட்
சேதம் ஏற்படாத படி பாதுகாத்தல். மாநகர பரிபாலனத்தின் தன்மையைக் சுருக்கமாக விளக்குபவையே மேலே காட்டப்பட்டுள்ளன. ஏனைய ஊராட்சித் தாபனங்களைப்போலவே மாநகர சங்கங்களும் சன நாயகத்தை ஆதாரமாகக் கொண்டவை.
மாநகர மக்கள், வட்டாரத்துக் கொருவராகச் சில பிரதி நிதிகளைத் தெரிந்து கொள்ளுவர். அவர்களுக்குரிய வாக்குரிமை முறையும் விசாலமானது: அதாவது மிகக்கூடிய தொகையினர் பிரயோகிக்கத் தக்கவிதமாக வாக்குரிமை வழங்கப்பட்டிருக் கிறது. அங்கத்தவர்களைத் தெரியும் வாக்காளர்க்கு வயதுத் தகுதியும் குடியிருப்புத் தகுதியும் இருக்கவேண்டும். அவர்கள் 21 வயது நிரம்பியவர்களாயும் குறித்த மாநகரப் பகுதியில் வசிப்பவராயும் இருத்தல் வேண்டும் என்பதே அத்தகைமைகள் என்க. ' குறித்த மாநகரப் பகுதியினுள் வீடுகளில் அல்லது கூட்டுவசிப்பிடங்களில் அல்லது விடுதிச்சாலைகளில் மாதம் 15.00 ரூபா வாடகையில் குடிக் கூலிக்கிருப்பவர்களும் ஆட்சி யில் இருப்பவர்களும், மாதம் 100.00 ரூபாவுக்குக் குறையாத கட்டணம் செலுத்தி ஹோட்டல் எனப்படும் தங்குநிலையங் களில் அல்லது கூட்டுவசிப்பிடங்களில் அல்லது விடுதிச் சாலை களில் வசிப்பவர்களும் வாக்குரிமை செலுத்த அருகராவர். இன்னும், 180.00 ரூபாவுக்குறையாத ஆண்டு மதிப்புடைய ஆதனமுடையாரும் இலங்கையில் அல்லது ஐக்கிய இராச்சியத் தில் அல்லது இந்தியாவில் அல்லது பிரித்தானிய குடியேற்ற நாடு ஒன்றில் உள்ள பல்கலைக்கழகப் பட்டதாரியாக உள்ளா ரும் வாக்குரிமை செலுத்த உரிமையுடையராவர்.
தேர்தலுக்கு முற்பட்டுள்ள அபேட்சகர்கள் தத்த மக்குரிய நியமனப் பத்திரங்களை இதற்கென விசேடமாக அதிகார மளிக்கப்பட்ட தேர்தல் அதிகாரி என்னும் உத்தியோகத்தரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் ஒவ்வொரு அபேட்சகரும் 250.00 ரூபா வைத் தேர்தல் அதிகாரியிடம் சேர்ப்பிக்கவேண் டும். வாக்களிக்கும் முழுத்தொகையினரில் 10இல் 1 பங்கினரது

ஊராட்சி அமைப்புக்கள் 24. I
வாக்குச் சம்மதத்தை அபேட்சகர் ஒருவர் பெருதுபோனல் அவர் கட்டிய 250.00 ரூபாவும் பறிமுதலாகிவிடும். ஒர் வட்டாரத்தில் ஒருவருக்கு மேற்பட்ட அபேட்சகர்கள் முன்வந் தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் தேர்தற் சின்னம் வழங்கப்படும். இந்தச் சின்னமுறையினைச் சிறிது விளக்கு வாம்-ஓர் வட்டாரத்தில் முன்வரும் அபேட்சகர்களில் ஒரு வர் தமது தேர்தற் சின்னமாக யானையைத் தெரியலாம். இன்னுெருவரின் சின்னம் துவிச்சக்கரவண்டியாக இருக்கலாம். மற்றவரின் சின்னம் நட்சத்திரமாக இருக்கலாம். வாக்களிப் புச் சீட்டுகளில் இந்த மூன்று அபேட்சகர்களின் பெயர்களும் குறிக்கப்பட்டு அவர்களின் பெயர்களுக்கெதிரே அவரவர்க் குரிய சின்னங்களும் பொறிக்கப்பட்டிருக்கும். சின்னங்களுக் கெதிரே கோடுகளால் அடைக்கப்பட்டுள்ள சதுரங்கள் உள. வாக்காளர் தாம் விரும்பிய அ பே ட் ச க ரி ன் சின்னத்துக் கெதிரே ஒர் புள்ள டி (X) அடையாளம் இடுதல் வேண்டும். இதனையே சின்னமுறையில் வாக்க ளிப்பது என்பர். சில காலத்துக்குமுன் வர்ணமுறை இருந்தது. ஒவ்வோர் அபேட்ச கர்க்கும் ஒவ்வோர் வர்ணம் அளிக்கப்பட்டது. வாக்களிக்கும் தினத்தன்று வாக்காளர் தாம் விரும்பிய அபேட்சகர்க்குரிய வர்ணப்பெட்டிக்குள் தம் சீட்டுக்களை இடுவர். இந்த முறை இப்போது தவிர்க்கப்பட்டுவிட்டது. பட்டண சங்கத் தேர்த லி லாயினுமாக, நகர சங்கத் தேர்தலிலாயினுமாக, மாநகர சங்கத் தேர்தலிலாயினுமாக, பாராளுமன்றத் தேர்தலிலாயி னுமாக, இப்போது மேலே காட்டிய சின்னமுறையே அநுட்டி கப்பட்டு வருகிறது.
மேலே காட்டிய ஒழுங்குகளை எல்லாம் தேர்தல் அதிகாரி யானவர் செய்து விட்டு, மாநகர சங்கத்துக்கான பிரதிநிதி களைத் தெரிவு செய்தற்குரிய திகதியையும் இடத்தையும் "கசெற்" பத்திரிகைமூலமும், வேறுவிளம்பரங்கள் மூலமும் அறிவிப்பார். ஒரு மாநகர சங்கத்தின் வட்டாரங்கள் அனைத் துக்கும் ஒரே தினத்திலேயே தேர்தல் நடாத்தும் முறை இப்போது வந்திருக்கிறது.
ஒரு வட்டாரத்தில் ஒர் அபேட்சகர் மாத்திரமே முன் வந்தால் அங்கே தேர்தல் எதிரிடையிராது. இவ்வாறு எதிரி டையில்லாது முன்வந்த அபேட்சகரே குறித்த வட்டாரத் துக்குத் தெரிவு செய்யப்பட்டிருக்கிருர் என்று தேர்தல் அதிகாரி பகிரங்கப்படுத்துவார்.
மாநகர சங்கத்து முதற் கூட்டத்திலே "மேயர் ' என்று ஆங்கிலத்தில் வழங்கப் படும் மாநகரத் தலைவரும் பிரதி * மேயர்' எனப்படும் மாநகரப் பிரதித் தலைவரும் தெரிவு செய்யப்படுவர். இதன்பின் பணம்பற்றிய கரும நிருவாகசபை?
1. மாநகராகிபதி என்றம் சொல்வர். 2. Standing Committee on Finance.

Page 126
242 ஊராட்சி அமைப்புக்கள்
என்ற ஒரு சபையும் மூன்றுக்குக் குறையாத வேறு கரும நிருவாக சபைகளும் தெரிவு செய்யப்படும். வாக்களிப்பு முறையிலேயே இந்நிருவாகசபைகள் தெரிவு செய்யப்படும். மாநகரத் தலைவர் தமது பதவிரீதியில் நிதிபற்றிய கரும நிருவாக சபைக் குத் தலைவராக இருப்பர். மற்றும் நிருவாக சபைகள் தனித்தனி ஆறு அங்கத்தவர்களை உடையதாகத் தத்தம் தலைவரைத் தாமே தெரிந்து கொள்ளும். நிருவாக சபைக் கூட்டங்களில் மாநகரத் தலைவர் சமுகமளித்துப் பேச லாம். ஆனல் வாக்குச் சம்மதம் அளிக்க முடியாது. கரும நிருவாக சபைகளைப் பற்றி இச் சந்தர்ப்பத்திற் சிறிது விளக்கு த ல் பயன்தரும், பணம் சம்பந்தமான எந்த விடயமாவது அதற்குரிய கரும நிருவாக சபை அதனைப் பரிசீலனை செய்து, கலந்து பேசி, அறிக்கை விடமுன் மாநகர சங்கக் கூட்டத்தில் விவாதிக்கப் படமாட்டாது. பணம் போலவே வேறு விடயங் களும் அவை அவற்றுக்குரிய நிருவாக சபைகளின் பரிசீலனைக் கும் அறிக்கைக்கும் விடப்படும். இப்படியாக நிருவாக சபை களிடம் விடயாலோசனையை விடுவதால் சங்கத்தின் நேரம் வீணுகாது. சங்கக் கூட்டத்தில் விடயங்கள் பற்றி தேவை யற்ற விவாதங்களுக்கும் அதிக இடம் இராது. ஒர் பிரேரணை பற்றிய விபரங்களைச் சங்கக் கூட்டத்தில் விடுத்தால் அங்கத்த வர்கள் அப்பிரேரணை பற்றி விவாதம் நடத்த அதனல் நேரம் விரயமாகிவிடும். ஆனல் பிரேரணை பற்றிய விபரங்களை ஆராய்ந்து ஒர் அறிக்கை விடும்படி குறித்த ஓர் நிருவாக சபையிடம் விடுத்தால் அது அதனை ஆர அமர ஆராய்ந்து அறிக்கை செய்யும். இவ்வறிக்கையை ஆதாரமாக வைத்துக் கொண்டு குறித்த பிரேரணை பற்றி ஒர் தீர்மானத்தைச் சீக் கிரம் செய்யமுடியும். ஏற்கெனவே நிருவாக சபை பிரேரணை பற்றிய விபரங்களை நன்கு ஆராய்ந்து அறிக்கை விட்டிருப்பத ஞல் அவ்விபரங்களை மீண்டும் விவாதிக்காது சங்கக் கூட்டம் ஒன்றில் அப் பிரேரணை ஏற்றுக்கொள்ளப்படும் அல்லது நிராகரிக்கப்படும்.
மாநகரத் தலைவரே, சங்கத்தின் அதி பிரதான நிருவாக அதிகாரியா வர். அவருக்கு அடுத்ததாக இருப்பவர் * கொமி ஷனர் ' எனப்படும் மாநகரசங்க அதிகாரி. சங்கத்து ஏனைய உத்தியோகத்தர் யாவரும் இவருக்குக் கீழ்ப்பட்டவர்களே u urT u b. கொ மிஷனர் சங்கம் விதிக்கும் உத்தர்வுகளுக்கும் செய்யும் கற்பனைகளுக்கும் இணங்கக் கருமங்களை நடத்து வித்தல் வேண்டும். சங்கத்துக்குரிய புத்தகங்கள், பத்திரங் கள், சாதனங்கள் முழுவதுக்கும் அவரே பொறுப்பாளி. ஒர் மாநகர சங்கத்துக்கெனவுள்ள விசேட வேலைகளை நிருவகிக்கப் பின்வரும் உத்தியோகத்தரும் நியமிக்கப்படுவர்:-

ஊராட்சி அமைப்புக்கள் 243
(அ) மாநகர சங்கப் பிரதிக் கொ மிஷனர்! (ஆ) ஆரோக்கிய விடய வைத்திய அதிகாரி? (இ) மாநகரத் தனதிகாரி (ஈ) மாநகர இஞ்சினியர் (உ) நீர் வேலைப்பகுதி இஞ்சினியர்* (ஊ) மிருக வைத்தியர்* (எ) மாநகர மதிப்பதிகாரி3 இவர்களும் மாநகரசங்க அதிகாரியும் சேர்ந்து சங்கத்தின் நிருவாகக் கருமங்களை ஆற்றுவரானமையின் இவர்களைச் சங்க நிருவாக உத்தியோகத்தர்? என்பர்.
தனக்குள் அடங்கியுள்ள விடயங்கள் பற்றிச் சட்டம் ஆக் கும் அதிகாரமும் ஓர் மாநகர சங்கத்துக்கு உண்டு. அவ்வதி காரத்தை, தண்ணிர் உதவல், மின்சாரம் உதவல், வறியவர் களுக்கு நிவாரணம் அளித்தல், தேவைப்பட்டவர்களுக்கு வைத்திய வசதிகள் செய்து கொடுத்தல் என்னும் இன்னே ரன்ன சமுதாய நன்மைக்கான விடயங்களில் பிரயோகிக்க லாம். மா நகரத் தி ல் வசிக்கும் சனங்கள் தா ன் வகுத்த பிரமாணங்களுக்கு அமைந்து நடப்பதைக் கட்டாயப் படுத்தச் சட்டங்களை ஆக்கவும் அது அதிகாரம் உடையதாக இருக்கிறது. கொழும்பு மாநகர சங்கம் தனக்கென ஓர் நீதித்தலத்தையும் கொண்டிருக்கிறது. அந்த நீதித்தலத்தின் நீதிபதியை மாநகர நீதிபதி அல்லது மாநகர நீதவான்° என்பர். LDITib 35 graf சட்டத்து உபவிதிகளை மீறுபவர்களை விசாரணை செய்து ஏற்ற தீர்ப்பளிப்பது மாநகர நீதித்தலத்தின் கருமம் ஆகும்.
மாநகர சங்கத்தின் தாபனங்களையும் திட்டங்களையும் நடாத்துதற்குப் பணம் தேவை. இப்பணத்தை விகிதவரி, வரி9 என்பன மூலமாக ஒர் மாநகர சங்கம் அறவிட்டுக்கொள் கிறது. ஆண்டுதோறும் தலைவர் (மேயர்) ஓர் வரவு செலவுத் திட்டத்தையும், வருடாந்தப் பரிபாலன அறிக்கையையும் தயார் செய்து சங்கத்திற் சமர்ப்பிக்க வேண்டும்.
மாநகர சங்கங்களின் கருமங்களை மேற்பார்வை செய்யும் அதிகாரம் மத்திய அரசாங்கத்துக்கு உண்டு. மாநகர சங்கம் போன்ற ஊராட்சிச் சங்கங்களுக்குப் பொறுப்பதிகாரியாக
. Deputy Municipal Commissioner.
Medical Officer of Health. . Municipal Treasurer. ... Waterworks Engineer. . Veterinary Surgeon.
Municipal Assessor. . Executive Officers.
. Municipal Magistrate. ... Rates and Taxes.

Page 127
244 ஊராட்சி அமைப்புக்கள்
வுள்ளவர் ஊராட்சிப் பகுதி அமைச்சரே யாவர். ஓர் மாநகர சங்கம் திறமையும் தகுதியுமற்றது என்ற காரணத்தால் அல்லது வேறு தக்க காரணத்தால் அதனைக் கலைப்பதற்கு ஊராட்சிப்பகுதி அமைச்சருக்கு அதிகாரம் உண்டு. சங்கத்துக் கணக்கு வைக்கும் விடயத்தில் ஏதும் ஒழுங்கீனம் காணப் படின் அதனை விசாரணை செய்விக்கவும் அவர் அதிகாரம் உடையவராக இருக்கிருர், தொகுத்துக் கூறுங்கால் ஒர் மாநகர சங்கம் எந்த விதமான உயரிய நேக்கங்களுக்காகத் தாபிக்கப்பட்டதோ அந்த நோக்கங்கள் பூர்த்தியாக அது உழைக்கிறதா என்பதனை மத்திய அரசாங்கம் தனது ஊராட் சிப்பகுதி அமைச்சர் மூலமாக மிக வும் சி ரத்  ைத யு டன் அவதானிக்கும்.
ஒர் மாநகர சங்கத்தின் கருமங்களை மிகவும் சுருக்க மாகவே மேலே காட்டியுள்ளோம். ஒர் நகர சங்கத்திலே சனநாயகமுறை கையாளப்பட்டு, சனநாயகமுறையில் கருமங் கள் நிருவகிக்கப்படுதற்கும், மாநகர சங்கத்தில் கருமங்கள் நிருவகிக்கப்படுதற்கும் அதிகம் பேதம் இல்லை. நகர சங்கப் பகுதியிலேயுள்ள சனத்தொகையிலும் பார்க்க மாநகர சங்கப் பகுதியில் கூடிய சனத்தொகை உண்டு. அங்கே மக்கள் இட நெருக்கடி காரணமாக நெருக்கமாக வாழ் வர். சனத் தொகைக்கு ஏற்றவாறு ஓர் மாநகர சங்கத்துக் கருமங்கள் அதிகமாக இருக்கும்.
மாநகர சங்கக் கருமம் பற்றிய விபரங்களை, அரசாங்கம் வெளியிட்டுள்ள இரண்டு சட்டங்கள் மூலமாக நீங்கள்
அறிந்து கொள்ளலா கும். மாநகரச் சங்கக் கட்டளைச் சட்டம்' *கொழும்பு மாநகரச் சங்க (அமைப்புக்) கட்டளைச் சட்டம்?" என்பவையே அவை. கொழும்பு மாநகர சங்கம், யாழ்ப்
பாணம் மாநகர சங்கம் முதலாம் சங்கங்கள் தங்கள் காரியா ல யங்களை 'ரவுன்ஹோல்' என்று ஆங்கிலத்தில் வழங்கப்படும் நகர மண்டபத்தில் வைத்திருக்கின்றன. நீங்கள் இக்காரியால யங்களுக்குச் சென்று மாநகர பரிபாலன வேலை எவ்வாறு நடைபெறுகின்றது என்பதனை அவதானித்தால் அப்பரி பாலனம்பற்றி நல்ல விளக்கம் கொள்ளுவீர்கள். கொழும்பிலே மாநகர சங்கப்பொறுப்பில் மக்களின் ஆரோக்கியம் பற்றிய ஆராய்ச்சிகள் இதற்கெனவுள்ள விசேட நிலையங்களில் நடை பெற்று வருகின்றன. லபுகம என்னும் இடத்திலே நீர் உதவல் பற்றிய கருமங்கள் ஆற்றப்படுகின்றன. இந்த இடங்களுக்கு நீங்கள் சென்று அங்கே நடக்கும் கருமங்களை
1. Municipal Councils Ordinance. 2. Colombo Municipal Council (Constitution) Ordinance.

245
ஊராட்சி அமைப்புக்கள்
SK0LLLKYT L LSL LLL 00 L ZY LLLL 0 L L L S L S L0L 0L YL LL L LLLLS000 LL L LT0L KS K 0000KKLL SL LLLL L L L L L L L L L L 0L 0T LL L L0S KT LLL LLL LL 0YL 0S00S1191,9 hmoog) og số SL LLLL LL LLL LLYY LLL LL LLSYY00S0 00 00 K KKSLY LS LS LLL LLL LTTTL LL L LLYS
· 1,9 ± 418)(3£ © ® 4/1/GT 41199 segi uolo) og 59 @ : 0 I $ u qrto Q& @ @ @ @rī SL LLLL 00 LLLLL LLL L0L LL LTT LL 0000 yLSL YLLSK LYLL LL LLLLY· GT (gø-T o sĩ Iso so LLLY YL YYSLYS L0 LTY S KK LLL LL LY SLLLL L L L L KK L0 LLLL LL SLLLL00 L 0 KKY000 LL LLLS LLLLLL LLLL LL L L L L L L L L L L L L L L L L L 0 YL YK LSLLLLKS
· ự ftos@rı sırmų sē (g) y flo@rı sırtı ğ ĢĒC)· ựre(o)rısımų sĩ (g)aj 99 f)%) uso (g) g(?) logo urte f) {@rī aj qof) g) Lo sg)· 4. sto@TTTTTT sự để0)af gof)%) uolo)(51] [1o gĪ UGT qi@FTIT 1919 qimqig) § @ logo uređì qī @aŭ (99 (fi) @ uso (g) ? (?) logo lufto (fi)ș0) logo urte fià q'I Ŵ):ų fo@TTTTTTŲ sĩ (g) af gof)%) 11:90) feargo qi@rto $ $ $ IssoL L L LY L0L LYYLLL LLY L L L L YL LLS K00LL 0LL 00LL LLLL YYLLLLS ļıysoņiorgie șơ11/113541935편5國道第 12民T니arT1955편sa편le Cagiuporțioesie soosĩIIGI
||||
----||
| 41 UTI Į 109 stossa Losc) ? (soos zē| ||
|Į 109 # 99T Uo (o) speg-77 U 11 sēē
------|
41 119 lidorm f(0) # 6 sĩ qï tî sï igo y # # J' (golo @@rısı(3-7 Lúīē
|
4) so pon golo Gori sı(3-II U 11 No
|
quÚıçson@ıısırı
(5711; úīĒā

Page 128
246 ஊராட்கி அமைப்புக்கள்
அவதானித்தல் உங்களுக்கு நன்மையைத் தரும், மாநகர சங்க அதிகாரிகளுடன் நீங்கள் பழகுவதாலும் அநேக விடயங்களை அறியலாம். கொழும்பிலே விளையாட்டு மைதானங்கள் பற்றிய திட்டம் ஒன்றுண்டு. அதனை அறிதல் இளைஞராகிய உங்களுக்கு நன்மை பயக்கும். நீங்கள் கொழும்பு மாநகரத்திலே பார்க்க வேண்டிய இடங்களில் தீயணைக்கும் படையினர் வசிக்கும் நிலையமும் ஒன்று. இன்னும் அங்கேயுள்ள நோய்க்கிருமி ஆராய்ச்சி நிலையத்துக்கும் நீங்கள் போய்ப் பார்க்கவேண்டும். அங்குள்ள காட்சிச்சாலையிலே, மனிதனின் பொல்லாத சத்து ருக்களான கிருமிவகைகள் பல வைக்கப்பட்டிருக்கின்றன. இக்கருமங்களை எல்லாம் மாநகர சங்கமே நிருவகித்து வரு கிறது. இக்கைங்கரியங்களைப்பற்றி இச்சிறு நூலில் விபரித்தல் இயலாத கருமம். இவற்றை உங்கள் கண்ணுரக்கண்டு அறிவை விசாலப்படுத்த வேண்டுமன்றி புத்தகப் படிப்புடன் மாத்திரம் நின்றுவிடகூடாது.
இப்போது இலங்கையிலே கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி, குருநாகல், காலி, நுவரெலியா, நீர்கொழும்பு என்னும் நகரங்களில் மாநகர சங்கப் பரிபாலனம் நடைபெறுகிறது.
குறிப்பு
கிராமச் சங்கங்கள், நகர சங்கங்கள், மாநகர சங்கங்கள் என்னும் ஊராட்சிச் சங்கங்களை விட, பட்டண சங்கங்கள் என்பன இப்போது நவமாகத் தாபிக்கப்பட்டிருக்கின்றன. இலங்கை எங்கணும் 36 பட்டண சங்கங்கள் இன்று (1952) உள. இவை கிராமச் சங்கத்துக்கும் நகர சங்கத்துக்கும் இடை யில் உள்ளவை என்று சொல்லலாம்.
பட்டண சங்கப் பிரதிநிதிகளாக முற்படும் அபேட்சகர் நகர சங்க அபேட்ச கரைப் போலவே தனித்தனி 100.00 ரூபாய் பிணைப்பணம் செலுத்தவேண்டும். பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யும் முறை, கிராமச் சங்கம், நகர சங்கம், மாநகர சங்கம் என்னும் எனைய ஊராட்சி நிலையங்களின் பிரதிநிதிகளின் தெரிவுக்குரிய முறையிலே இருக்கும்.
அப்பியாசங்கள்
1. ஒத் நகரசங்கம் எந்தெந்த விதங்களில் ஒர் கிராமச் சங்கத்திலும் பார்க்க வேறு பாடானது.
2. ஒந்நகர சங்க வாக்காளருக்குரிய தகைமைகள் யாவை ?
3. 985 நகரங்கங்கத்தின் பிரதான கருமங்களை விபரித்துக் கூறுக! உமது விடையை ரேகைப்படம் ஒன்று வரைந்து அதன் மூலம் விளக்குக.
l. Fire Brigade.
2. Bacteriological Institute.

ஊராட்சி அமைப்புக்கள் 247
4. கிராமச்சங்கங்கள், நகர சங்கங்கள் மீது மத்திய அரசாங் கம் எவ்விதமான அதிகாரங்களைக் கொண்டிருக்கின்றது ?
5. ஒரு மாநகரசங்கத்தினமைப்பை ரே கைப்படம் ஒன்றன் மூலம் விளக்குக.
6. ஒரு மாநகர சங்கத்தின் நிருவாகக்கரும்ங்கள் யாவை ? இக்கருமங்கள், ஒர் கிராமச்சங்கத்தினது நிருவாகக் கருமங் களிலும் பார்க்க எவ்விதங்களில் வேறுபட்டவை ?
7. உமது சொந்த ஊரில் உள்ள ஊராட்சி முறையை விபரிக்க,
8. மக்களுக்குப் பொறுப்புணர்ச்சி பூட்டுவதிலும் பொறுப்பு வகிக்கப் பயிற்றுவதிலும் பிரதிநிதித்துவ உள்ளூர்ப் பொறுப்பா ட்சிமுறை எவ்வளவுதூரம் பயன் அளிக்கின்றது என்பதனை விளக்குக.
9. ஊராட்சித் தாபனங் களைத் திறம்பட நடத்துவதி லேயே சுயாட்சியை அநுகூலமாக நடத்துவது தங்கியிருக் கிறது என்னும் அபிப்பிராயத்தை நீர் ஏற்றுக் கொள்ளுகிறீரா?

Page 129
அத்தியாயம் 8.
மத்திய அரசாங்கம்-அதன் அமைப்புக்கள்
இலங்கையிலே பாராளுமன்ற அரசியல்முறை இப்போது அநுட்டானத்தில் இருக்கிறது. பாராளுமன்றமே இந்நாட்டின் அரசியற் பரிபாலனத்தை நடாத்தும் அதிமுக்கிய தாபனம் அல்லது அமைப்பாக இருக்கிறது. ஆகவே அரசாங்க அமைப் புக்களை விபரமாக ஆராயமுன் இப்பாராளுமன்ற அரசியல் எவ்வாறு ஏற்பட்டது, அதன் தன்மைகள் யாவை, அதன் கடமைகள் யாவை என்பனவற்றைக் கூறுதல் பொருத்த முடைத்தாகும்:-
1802 ம் ஆண்டிலே இலங்கை ஆங்கில மன்னர் பரிபாலனத் தில் ஓர் குடியேற்றநாடு? ஆகியது. இங்கிலாந்தின் மன்னர் தம் பிரதிநிதியாக ஓர் தேசாதிபதியை அனுப்பி அவர் மூலமாக இந்நாட்டைப் பரிபாலித்தார். பரிபாலனக் கருமம் முழுவ துக்கும் தேசாதிபதியே பொறுப்பாளியாக இருந்தபடியினுல் அவரைக் கட்டுப்படுத்தும் சபை எதுவும் அக்காலத்தில் இருக்கவில்லை. 1833-ம் ஆண்டில் ஓர் சட்ட நிரூபண சபை' தாபிக்கப்பட்டது. சட்ட நிரூபணம் என்ருல் சட்டங்களை ஆக்குவது என்பர். ஆனல் 1833-ம் ஆண்டில் நிறுவப்பட்ட * சட்டநிரூபண சபை' ஒர் ஆலோசனைச்சபை யாக மாத்திரமே இருந்தது. அதன் உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்களைத் தேசாதிபதியே நியமித்தார். பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யும் முறைகளில் அக்காலத்து இலங்கை மக்கள் பரிச்சியமற்று இருந்தபடியினல் அவர்களுக்குப் பிரதிநிதிகளைத் தெரிவுசெய் யும் உரிமைகளை வழங்குதல் சமயோசிதமானதல்ல என்று பிரித்தானிய அரசாங்கம் கருதியது. தேசாதிபதியினல் மேலே எடுத்துக் காட்டியபடி நியமிக்கப்பட்ட அங்கத்தவர்கள் ஐரோப்பியர், ஒல்லாந்தர், சிங்களர், தமிழர் என்பவர்களுக்கு எனத் தனித்தனி பிரதிநிதிகளாக இருந்தனர். அவர்கள் சட்டநிரூபண சபையில் அங்கத்தவர்களாக இருந்தாலும் நாட் டின் நன்மைக்காக இன்ன இன்ன சட்டங்களை ஆக்கவேண்டும் என்று ஆலோசனை கூற அவர்களுக்கு அதிகாரம் இருக்கவில்லை.
1. Parliamentary Government. 2. Colony. 3. Legislative Council. 4. Unofficial Members.

மத்திய அரசாங்கம்-அதன் அமைப்புக்கள் 249
இன்னும், தேசாதிபதியின் பரிபாலனக் கருமங்கள் பற்றியோ, சட்டநிருவாக சபையில் இருந்த உத்தியோக அதிகாரிகளின் கருமம் பற்றியோ குணுகுணம் கூறத்தானும் சட்டநிரூபண சபை அங்கத்தவர்களுக்கு ஆரம்பத்தில் அதிகாரம் இருக்க வில்லை. பரிபாலனக் கருமம் பற்றித் தத்தம் சமூகத்தினரின் அபிப்பிராயங்களையும் கொள்கைகளையும் தேசாதிபதிக்கு எடுத்துரைப்பதுதான் சட்ட நிரூபண சபை அங்கத்தவர்களின் பிரதான கடமையாக விருந்தது. இந்த ஒழுங்கு சரியான தல்ல முறையானதல்ல என்பதனைக் கண்டு முதன் முதல் அதிர்ப்திப்பட்டவர்கள் ஐரோப்பியர், ஒல்லாந்தரின் பிரதி நிதிகளேயாம்: தேசாதிபதி நியமிக்காது தாமே தம் பிரதி நிதிகளைச் சட்டநிரூபண சபைக் குத் தெரிந்துகொள்ளும் உரிமையைத் தமக்கு வழங்கவேண்டும் என்று அவர்கள் வாதாடினர்கள். சட்டநிரூபண சபையிலே உத்தியோகப் பற்றற்ற அங்கத்தவர்களே பெரும்பான்மையினராக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்கள். தமது அங்கத் தவர்கள் பெரும்பான்மையினராகச் சட்டநிரூபண சபையில் இருந்தால்தான் தங்கள் நல உரிமைகள் சாதகமாகக் கவனிக் கப்படும் என்ற நோக்கத்துடனேயே ஐரோப்பியரும் ஒல்லா ந் தரும் இவ்வாறு கோரினர். ஆனல் அக்காலத்திருந்த தேசாதி பதிகள் இக்கோரிக்கைகளுக்கு இணங்க விரும்பவில்லை. ஐரோப் பியரும் ஒல்லாந்தரும் இலங்கையின் சனத்தொகையில் மிகவும் சிறுபான்மையினரே. அப்படிப்பட்டவர்களுக்கு அதிகாரத் தைக் கொடுத்தால் அதனை எல்லாரதும் நன்மையின் பொருட்டு உபயோகிக்காது தம் சுய தேவைகளுக்காகவே உபயோகிப்பர் என்று தேசாதிபதிகள் குடியேற்றநாட்டு மந்திரிக்கு? எடுத்துக் காட்டினர். ஐரோப்பியர் ஒல்லாந்தர் சமூகங்கள் ஒர் பக்கமாகவும், மிகப் பெரும்பான்மையினராக விருந்தும் நிராதரவான நிலைமையில் இருந்த இலங்கையர் சமூகம் இன்னேர் பக்கமாகவும் இருப்ப தாம் நீதிகோணுது பட்ச பாத மின்றிப் பரிபாலிப்பதே தம் கடமை என்பதை அக்காலத் தேசாதிபதிகள் உணர்ந்து ஐரோப்பியர், ஒல்லாந் தரின் கோரிககைகளுக்கு இணங்க மறுத்தனர்.
1855-ம் ஆண்டில் சேர் ஹென்றி வாட்3 தேசாதிபதியாக இலங்கையைப் பரிபாலித்தபோது ஐரோப்பிய வர்த்தக (வர்த்தக சபை) ருக்கும் தோட்டத் துரை மார்க்கும் தத்தம் பிரதிநிதிகளைச் சட்டநிரூபண சபைக் குத் தெரிவுசெய்யும்
உரிமை வழங்கப்பட்டது. அப்படி வழங்கப்பட்டாலும் எந்த
l. Executive Council. 2. Secretary of State for Colonies. 3. Sir Henry Ward.

Page 130
250 மத்திய அரசாங்கம்-அதன் அமைப்புக்கள்
விதமான அரசியல் அதிகாரமும் ஐரோப்பிய சமூகத்துக்குக் கொடுக்கக்கூடாது என்று சேர் ஹென்றி வாட் வற்புறுத் தினர். ‘இக்குடியேற்ற நாட்டிலே 7,000க்கும் 8,000க்கும் இடையேயுள்ள தொகையினரான ஐரோப்பியரும் கல்வி கேள்வியறிவு படைத்த சிறு தொகை ஒல்லாந்தரும் வசிக்கி ருர்கள். ஆனல் 20 லட்சம் இலங்கையரும் இருக்கிருர்கள். இப்படியான நிலைமையிலே பிரதிநிதித்துவப் பரிபாலன! முறையைப் புகுத்துவது இயலாது. ஐரோப்பியரின் நலவுரிமை களுக்கும் சுதேசிகளின் நலவுரிமைகளுக்குமிடையே ஏற்றத் தாழ்வின்றி நடத்த வேண்டியது முடியின் (பிரித்தானிய அரசாங்கத்தின்) கடமையாகும்’ என்னும் கருத்துப்பட சேர் ஹென்றி வாட் அக்காலத்து ஐரோப்பியரின் கோரிக்கை சம்பந்தமாக, பிரித்தானிய அரசாங்கத்துக்கு எழுதியமையும் ஈண்டு நோக்கற்பாலது.
20-ம் நூற்ருண்டு ஆரம்பத்துடன் இலங்கை அரசியல் விடயமாகப் பல மகத்தான மாற்றங்கள் நிகழ்ந்தன. இந் நாட்டவர்களான சிங்களர், தமிழர், முஸ்லிம்கள் ஆகி யோர் தமக்கும் அரசியல் அதிகாரம் இருக்கவேண்டியது ஆவசியகம் என்று உணரத் தலைப்பட்டனர். ஆங்கிலம் படித்து அம்மொழியில் தேர்ச்சியுற்றேர் பலர் சுதேசிகளி டையே விளங்கினர். ஆங்கிலம் படித்த வகுப்பினர் என்ற ஒர் வகுப்பு மெல்ல மெல்ல வாக இங்கே உருவாகியது. இது வரை ஐரோப்பியர்க்கு மாத்திரமே வழங்கப்பட்டிருந்த அரசி யல் அதிகாரத்தைத் தமக்கும் வழங்கவேண்டுமெனப் படித்த இலங்கையர் கோரிக் கிளர்ச்சிசெய்யத் தொடங்கினர். இவர் கள் இவ்வாறு கிளர்ச்சிசெய்யத் தொடங்க, இதுவரை அர சாங்கத்தை மும்முரமாக எதிர்த்து அதன் செயல்களைத் தீவிரமாகக் கண்டித்து வந்த ஐரோப்பியர் அதே அரசாங் கத்தை ஆதரிக்கத் தொடங்கினர். அது மாத்திர மன்றி இலங்கையர்க்கு அரசியல் உரிமைகள், அதிகாரங்கள் வழங்கப் படுவதையும் எதிர்த்தனர்.
இலங்கையர் தமது கிளர்ச்சியை விடாது நடத்திவந் தனர். 1833-ம் ஆண்டு நிருமாணிக்கப்பெற்று அநுட்டானத் தில் இருந்த சட்டநிரூபண சபை காலத்துக்கேற்றதல்ல வென் றும், காலப்போக்கை யனுசரித்து புதிய அரசியன்முறை யொன்றை வழங்கவேண்டும் என்றும் அவர்கள் வாதாடினர். பழைய அரசியல் முறை சுதேசிகளுக்கு நீதி வழங்கவில்லை என்பதனை அவர்கள் எடுத்துக்காட்டினர். 1900-ம் ஆண்டிலே சட்டநிரூபண சபையில் 9,000 ஐரோப்பியர்க்கு மூன்று பிரதி
I. Representative Government.

மத்திய அரசாங்கம்-அதன் அமைப்புக்கள் 251
நிதிகளும் 23,000 ஒல்லாந்தர்க்கு ஒரு பிரதிநிதியும் இருக்க, 20 லட்சம் சிங்களர்க்கு இரண்டே இரண்டு பிரதிநிதிகளும் 955, 000 தமிழர்க்கும் 226,000 முஸ்லிம்களுக்கும் முறையே ஒவ்வோர் பிரதிநிதியும் இருத்தல் நியாயமாகாது என்பதை யும் அவர்கள் குடியேற்ற நாட்டு மந்திரிக்கு எடுத்துக்காட்டி னர்.
1910-ம் ஆண்டில் சட்டநிரூபண சபை அமைப்பில் அற்ப மான மாறுதல் ஒன்று செய்யப்பட்டது. அதிலே 11 உத்தி யோக அதிகாரிகளும் 10 உத்தியோகப் பற்றில்லாத அங்கத்த வரும் இருக்கத் தக்கதான மாற்றமே அது. உத்தியோகப் பற்றில்லாத 10 அங்கத்தவர்களில் நால்வர் பின்வருமாறு தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளாவர்:-
நகர்ப்புற ஐரோப்பியர்க்கு . 1 பிரதிநிதி நாட்டுப்புற (தோட்டப்பகுதி)
ஐரோப்பியர்க்கு . . 1 9 பறங்கியர்க்கு . . I s படித்த இலங்கையர்க்கு ... 1 s )
4.
தெரிவுசெய்யப்பட்ட 4 அங்கத்தவர்களுடன் 6 அங்கத்த வர்கள் பின்வரும் முறைப்படி நியமிக்கப்பட்டனர்.
கீழ்நாட்டுச் சிங்களர்க்கு . . . . 2 அங்கத்தவர்கள் மலைநாட்டுச் சிங்களர்க்கு ... 1 y 9 தமிழர்க்கு w ... 2 9 முஸ்லிம்களுக்கு ... 1 y 9
6
சட்டநிருவாக சபை முன்னரைப்போலவே உத்தியோ க அதிகாரிகளையே கொண்டிருந்தது. தேசாதிபதியே தேச பரிபாலனத்துக்கு முழுப் பொறுப்பாளியாக இருந்தார். அவரே வரவு செலவுத்திட்டத்தைத் தயாரித்தார். அவரே சட்டநிரூ பணசபைக் கூட்டங்களைக் கூட்டினர். ஒர் விடயத்தைச் சட்டநிரூ பணசபை நிறைவேற்ற அது தமக்கு விருப்பமற்றதாக விருப் பின் அதனை நிராகரிக்கும் அதிகாரம் அவருக்கு இருந்தது. சட்ட நிரூபண சபை இயற்றும் சட்டங்களுக்கு அவருடைய அங்கீ காரம் தேவையாக இருந்தது. இப்படியாகத் தேசாதிபதியே இலங்கைப் பரிபாலனத்துக்கு முழுப் பொறுப்பாளியாக விருந் தாலும், படித்த இலங்கையர் தம் பிரதிநிதியைத் தெரிவு செய்யும் உரிமை ஒன்று வழங்கப்பட்டமையினல் பிரதிநிதித் துவ பரிபாலனமுறையில் ஒர் சிறிது முன்னேற்றத்தை இலங்கை

Page 131
252 மத்திய அரசாங்கம்-அதன் அமைப்புக்கள்
அடைந்தது என்று கூறலாம். ஆனல், தம் பிரதிநிதிகள் மூல மாக இந்நாட்டு மக்கள் தம் சொந்த நாட்டின் பரிபாலனத்தை நடாத்தாதபடியினல் பொறுப்பாட்சி என்பது அக்காலத்தில் ஏற்படவில்லை என்பதனையும் இச்சந்தர்ப்பத்திற் குறித்துக் கொள்ளுதல் வேண்டும்.
1920-ம் ஆண்டிலே அரசியற் சீர்திருத்தம் ஒன்று வழங்கப் பட்டது. அதன்படிக்கு சட்டநிரூபண சபை அங்கத்தவர்கள் தொகை அதிகரிக்கப்பட்டது. 14 உத்தியோக அதிகாரிகளும் 23 உத்தியோகப் பற்றில்லா அங்கத்தவர்களும் அச்சபையில் இருந்தனர். ஆகவே இலங்கைச் சரித்திரத்தில் அரசியல் மன்றத்தில் சனப்பிரதிநிதிகள் பெரும்பான்மையினராக விருக் கும் முறை ஒன்று முதன் முதலாக ஏற்படுத்தப்பட்டது. 23 உத்தியோ கப்பற்றற்ற அங்கத்தவர்களில் 14 பேர் சனங்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள். இவர்களிற் சிலர் வகுப்பு வாரியாகவும் (ஐரோப்பியர் 3-ஒல்லாந்தர் 1) சிலர் பொருளா தார முறை வாரியாகவும் (ஐரோப்பிய வர்த்தகர் 1; கீழ் நாட்டு விளைபொருள் உற்பத்திச் சங்கம்? 1) தெரிவு செய்யப் பட்டனர். கடைசியிற் கூறப்பட்ட கீழ்நாட்டு விளைபொருள் உற்பத்திச் சங்கத்துக்கு ஒர் பிரதிநிதியாகத் தெரிந்துகொள்ள உரிமை கொடுத்தது இலங்கையரின் வர்த்தக நலவுரிமைகளும் சட்டநிரூபண சபையில் பிரதிநிதித்துவம் பெறவேண்டுமென் பதை அரசாங்கம் ஒப்புக் கொண்டதற் கொப்பாகும். இவ் வாரு க 6 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட மீதி 10 பேரில் மேல் மாகாணத்துக் கிரண்டுபேரும், ஏனைய மாகாணங்களுக் கொவ்வருவருமாக தெரிவு செய்யப்பட்டனர்.
முன்னர், படித்த இலங்கையர்தான் வாக்குரிமை செலுத்த லாம் என்று இருந்த முறையும் 1920-ம் ஆண்டில் மாற்றப் பட்டது. படித்த இலங்கையரை விட ஏனைய சில தகைமைகள் உள்ளவர்களும் வாக்குரிமை செலுத்தலாம் என்று விதிக்கப் பட்டது. இதன் பயனுக இலங்கை மக்களில் 100க்கு 4 விகிதத்தினர் வாக்குரிமை பெற்றனர். ஆணுல் மீதி 96 விகிதத்தினரிற் பெரும்பான்மையினரான குடியானவர்களும் தொழிலாளரும் தேச பரிபாலன விடயங்களில் பங்குபற்ற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 1924-ம் ஆண்டில் சட்டநிரூபண சபை அங்கத்தவர்கள் தொகை மேலும் அதி கரிக்கப்பட்டது. முன்னர் 23 ஆக விருந்த உத்தியோகப்பற் றில்லா அங்கத்தவர்கள் தொகை 37 ஆக்கப்பட்டது. இந்த 37 பேரில் 29 பேர் ஒன்பது மாகாணங்களாலும் தெரிவு செய்யப் பட மீதி எண்மர் தேசாதிபதியினல் நியமிக்கப்பட்டனர்.
. Responsible Government. 2. Low Country Products Association.

மத்திய அரசாங்கம்-அதன் அமைப்புக்கள் 25.5
1929-ம் ஆண்டுவரை இலங்கை அரசாங்கம் ஒர் தேசாதி பதியையும், உத்தியோக அதிகாரிகளையும் கொண்ட சட்ட நிருவாக சபையினையும் உத்தியோகப் பற்றில்லா அங்கத்தவர் களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட சட்டநிரூபண சபையையும் கொண்டிருந்தது. இவ்வாரு க இருந்த அரசியல் முறையில் பல குறைகள் இருந்தன. சட்ட நிருவாக சபை சட்ட நிரூபண சபையின் அதிகாரத்துக்கப்பாற் பட்டதாக இருந்தது. பரிபாலனத்துக்குப் பொறுப்பாளிகளாய் அப் பரிபா ல னக் கருமங்களை நடாத்தும் உத்தியோக அதிகாரிகளைக் கொண்டி ருந்ததுவே அச்சபை. அவ்வதிகாரிகளின் கருமம் பற்றிய குண குணங்களைக் கூறவோ, அக்கருமங்களைக் கட்டுப்படுத்தவோ சனப் பிரதிநிதிகளுக்கு அதிகாரமில்லாதிருந்தது. இதன் பயணுகத் தேச பரிபாலனத்தை நடத்துவோர் பொதுசன அபிப்பிராயங்களைப் பொருட்படுத்தாது தம் மனம் போன போக்கில் கருமம் ஆற்ற முடிந்தது. சட்டநிரூபண சபைக்குச் சட்டங்களை இயற்றும் அதிகாரம் இருந்தாலும் அச்சட்டங்களை நடைமுறைக்குக் கொண்டுவரும் சபைமீது அதற்கு அதிகாரம் இருக்கவில்லை. எனவே சட்டநிருவாக சபை, சட்டநிரூபண சடை என்ற இரண்டும் ஒன்றுக்கொன்று சந்தேகமும் பகையும் கொண்டுநடக்க ஏதுவிருந்தது. சட்டநிரூபண சபையைச் சட்ட நிருவாக சபையினர் புறக் கணிப்பதும் சர்வசாதாரணமா யிருந்தது.
சட்டநிரூபண சபையிலே சனப் பிரதிநிதிகளே பெரும் பான்மையினராக இருந்தமையினல் அதற்கு அதிக அதிகாரம் இருந்தும் நிருவாக அலுவல்களில் அதிகாரம் இன்மையினல் அதிக பயன் கிடைக்கவில்லை. அரசாங்கத்தைத் தாக்கிக் கண்டிக்கத்தான் சட்டநிரூபண சபை யங்கத்தவர்களுக்குச் சந்தர்ப்பம் கிடைத்ததே யன்றி கஷ்டமான பரிபாலனக் கரு மங்களிற் பயிற்சிபெறச் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. சட்ட நிரூபண சபைக்கு அரசியல் அதிகாரம் இருந்தது உண்மை தான். ஆனல் அந்த அதிகாரத்தை அன்ரு டப் பரிபாலன வேலையில் உபயோகித்துப் பொறுப்பினை வகிக்க சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை. தாம் இயற்றும் சட்டங்களைத் தாமே அநுட்டானத்துக்குக் கொண்டு வரும் பொறுப்பு அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை. இப்படியாக அதிகாரம் ஒரு சாரா ரி டத்தும், பொறுப்பு இன்னேர் சாராரிடத்தும் விடப்பட்ட மையினல் நாட்டுக்கு அதிகம் நன்மை கிடைக்கவில்லை. சட்டநிரூபண சபையில் இருந்த சனப் பிரதிநிதிகள் அரசியல் விடயங்களில் அபிவிருத்தியடைந்து அவற்றின்நுணுக்கங்களைக் கிரகிக்கும் நிலைமையை எய்தியிருந்தபோதிலும் பொறுப் புணர்ச்சியை அவர்களுக்கு ஏற்படுத்தச் சந்தர்ப்பம் அக்கா லத்து அரசியன் முறையினுல் வழங்கப்படவில்லை.

Page 132
254 மத்திய அரசாங்கம்-அதன் அமைப்புக்கள்
இவ்வரருக இருந்த அரசியல் நிலைமை உசிதமானதா? அல்லது அதில் அபிவிருத்தி ஏற்படுத்த வேண்டுமா ? என்பதை விசாரித்து அறிக்கை விடும்படி ஓர் விசாரணைக் கொமிசன் 1929-ம் ஆண்டில் இலங்கைக் கனுப்பப்பட்டது. இதன் தலை வர் டொணுேமுர் பிரபு? என்னும் ஆங்கிலப் பிரமுகராகும் இவ்விசாரணைக்குழு தன் விசாரணையை முடித்துப் பின்வரும் சிபாரிசுகளைச் செய்தது :-
(1) தேச பரிபாலனத்தை நடாத்தும் கருமத்தில் சனப் பிரதிநிதிகளுக்குப் பயிற்சியளித்தல் விரும்பத்தக்க தாம். அதி கா ரம் உ  ைட யார் அவ்வதிகாரத் தைப் பிரயோகித்துக் கருமங்களை ஆற்றுவதிலும் பொறுப்பு உடையவர்களாயிருத்தல் வேண்டும்; எனவே தேசத்துச் சட்டங்களை ஆக்கும் கருமமும் அச் சட்ட த் தை நடைமுறையிற் கொண்டுவந்து அன்ருடம் நிருவகிக்கும் கருமமும் ஒரே சபையில் ஒப்புவிக்கப்பட்டு சனப் பிரதிநிதிகள் வசம் பொறுப் பிக்க வேண்டும். (2) இதுவரை குறித்த ஒரு தொகையினருக்கே வாக் குரிமை வழங்கப்பட்டது; சனங்கள் அனைவருக்கும் அது அளிக்கப்படவில்லை. அதன் பயனக சனங்கள் அனைவருக்கும் நன்மை பயக்கச் கூடிய திட்டங்கள் உருவாகவில்லை. தொழிலாளர், வியாபாரிகள், கைத் தொழிலாளர் என்பவர்களின் நலவுரிமைகளை அர சாங்கம் பேண வெண்டும். அவ்வுரிமைகளைப்பற்றி அரசாங்கம் சிந்தித்து ஆவனவற்றைச் செய்யவேண் டும்; ஆகவே, 21 வயதுக்கு மேற்பட்ட சகல ஆண்க ளுக்கும் பெண்களுக்கும் வாக்குரிமையை அளித்து அதன் மூலமாகச் சாதாரண மனிதனின் அரசியல் அந்தஸ்தை உயர்த்தவேண்டும். டொனேமூர் விசாரணைக்குழுவினர் இவ்வாறு செய்த சிபாரிசினைப் பலர் கண்டித்தனர். பொதுசனங்கள் இன்னும் போதிய அரசியல் ஞானம் பெறவில்லை; அதற்கிடையில் அவர் களுக்கு வாக்குரிமையை வழங்கினல் அவர்கள் தகுதியான வர்களுக்கு வாக்களிக்காமல் தம் மனம் போனபடி வாக்களிப் பர் என்றெல்லாம் சிலர் கூறினர். ஆனல் ஒருவன் தனக்கு வேண்டிய பிரதிநிதியைத் தெரிந்துகொள்வதற்கு அவனுக்கு எத்தகைய கல்வியை அளிக்கவேண்டும் என்று கேட்டால் அதற்கு நிதார்த்தமான மறுமொழியை எவரும் இதுவரை
l. Commission of Inquiry. 2. lord Donoughmore.

மத்திய அரசாங்கம்-அதன் அமைப்புக்கள் 25 5
தரவில்லை. எல்லாருக்கும் வாக்குரிமையை அளிப்பதால் ஒரு நன்மை ஏற்படுகிறது. மக்கள் அனைவருக்கும் நன்மை பயக் கக்கூடிய சட்டங்களை இயற்றும்படி பிரதிநிதிகளைச் சர்வசன வாக்குரிமை முறை கட்டாயப்படுத்தும். சாதாரண மனிதன் அரசியல் அந்தஸ்தில்லாது, மதிப்பில்லாது இருக்கும் வரை அவனைப் பற்றி அரசியல் வாதிகள் கவலை கொள்ளார்கள். அவனுக்கு வாக்குரிமை இருந்தால்தானே அவனை இவர்கள் நாடுவர்கள்? அவனின் நலவுரிமைகளைப் பேணச் சட்டமியற்று வர்! அவனுக்கு வாக்குரிமையிருக்க, இவர்கள் அவன் பொருட்டு ஒன்றும் செய்யாவிட்டால் அவனது ஆதரவையும் இழந்து தம் பதவியையும் இழந்து போவரல்லவா? சிலர் கூறியபடி சாதாரண மனிதனுக்கு அரசியல் நுணுகங்கள் தெரியாமல் இருக்கலாம். ஆனல் நாட்டிலே நடக்கும் நற் கருமங்களை அவன் அறியச் சக்திபடைத்தவனுக இருக்கிருன் தான். அவனுக்கு வேண்டியதென்ன? சீவியத்துக்குத்தொழில் வேண்டும்; உண்ண உணவு வேண்டும்; போக்குவரத்துச் செய் யத் தெருக்கள், பாதைகள் வேண்டும்; குடியிருக்க வீடு வேண்டும் நோயுற்ற காலத்தில் வைத்திய உதவி வேண்டும்; பிள்ளைகளுக்குக் கல்வியூட்ட வசதி வேண்டும். இந்த வசதிகளை யார் பெற்றுக்கொடுக்கிருரோ அவருக்கு அவன் தன் வாக் குரிமையை வழங்குவான். அவன் ஆரம்பத்திலே இவ்விடய மாகப் பிழை விடவும் கூடும்; ஒர் அபேட்சகரின் வருணம், சமயம் என்பவற்றுக்காக அவன் அவரை ஆதரித்து வாக்குச் சம்மதம் அளிக்கலாம். ஆனல் இவ்வாருக வாக்களித்தமை யினல் தனக்குப் பயன் கிடைக்கவில்லை என்று கண்டவுடன் முந்திய கொள்கையை விடுத்து தனது வாழ்க்கைச் செளகரி யத்துக்கான விடயங்களை எவர் பெற்றுக் கொடுப்பாரோ அவருக்கே தன் சம்மதத்தை அளிப்பான், ‘நீர் எங்களுக்கு என்ன செய்துவிட்டீர்?’ என்று தன்னிடம் வாக்குச் சம்மதம் கோரிவரும் அபேட்ச கரைச் சாதாரண மனிதன் இப்போது கேட்கத் தொடங்கிவிட்டான். இந்தக் கேள்வியை அவன் கேட்பதற்கு, அவனைக்கேட்கக் செய்வதற்கு இந்தவாக்குறிமை முறை இருக்கவேண்டும்; சர்வசன வாக்குரிமை வழங்கப் பட்டது நியா யமே என்பதற்கு இது ஒன்றே போதுமாகும். சர்வசன வாக்குரிமை மூலமாகவே மக்களை உண்மையான சனநாயக முறையிற் பயிற்றழுடியும்.
அரசாங்க சபை': முந்திய சட்டநிரூபண சபை, சட்ட நிருவாக சபை என்ற இரண்டு சபைகளுக்கும் பதிலாக அரசாங்க சபை என்ற பெயருடன் ஒர் புதிய சபை அமைக்கப்பட்டது.
I. State Council.

Page 133
256 மத்திய அரசாங்கம்-அதன் அமைப்புக்கள்,
அதில் மூன்று அரசாதிகாரிகளும் சனங்களால் தெரிந்தெடுக் கப்பட்ட 50 பிரதிநிதிகளும் சிறுபான்மைச் சமூகத்தினருக் கென நியமனம் செய்யப்பட்ட ஒர் தொகை அங்கத்தவர்களும் இருந்தனர். அரசாதிகாரிகள் என்பவர்கள் பிரதமக் காரியதரிசி? நிதிக் காரியதரிசி சட்டக் காரியதரிசி" என்பவர்களே. பிரதம காரியதரிசி அரசாங்க உத்தியோகத்தருக்குத் தல்ைமை அதிகாரியாவர். நாட்டின் நிதிப்பகுதிக்குத் தலைமை யதிகாரி யாக இருந்தவர் நிதிக்காரியதரிசி; தேசத்தின் நீதி பரிபாலன விடயத்துக்குச் சட்டக்காரியதரிசி பொறுப்பாக இருந்தார். அரசாங்க உத்தியோகத்தர் பகுதி, நிதிப்பகுதி, நீதிபரிபால னப் பகுதி என்னும் மூன்று பகுதிகளும் சனப்பிரதிநிதிகளின் பரிபாலனத்தில் இல்லாது, வேருக வைக்கப்பட்டன. இவற்றை ஒதுக்கப்பட்ட விடயங்கள் அல்லது பிரத்தியேக விடயங்கள்? என்று கூறுவர். இலங்கை 50 பிரதேச வாரித்தொகுதிே களாகப் பிரிக்கப்பட்டது. ஒவ்வோர் தொகுதிக்கும் ஒவ் வோர் அங்கத்தவர் தெரிவு செய்யப்பட்டார். சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த அபேட்சகர்கள் இத்தொகுதிகளில் வெற்றிபெறுவது துர்லபம்; எனவே அவர்களுக்கு அரசாங்க சபையில் இடம் அளிக்கவே எட்டுக்கு மேற்படாத தானங்கள் தேசாதிபதியின் நியமனத்துக்கு விடப்பட்டன.
அரசாங்க சபைக் குத் தெரியப்பெற்ற அங்கத்தவர்கள் ஒன்று கூடி சபைக் கூட்டங்களுக்குத் தலைமை வகிப்பதற்கு ஓர் சபாநாயகரை தெரிவர். Nஅதன் பின் அவர்கள் ஏழு நிருவாக சபைகளாகப் பிரிவர். இவ் வாறு பிரிந்து ஏற்பட்ட நிறுவாக சபைகள் தனித்தனி கூடித் தமக்கென ஓர் தலை வரைத் தெர்ந்து கொள்ளும். அத்தலைவரே மந்திரி என வழங்கப்பட்டார்.
அரசாங்க சபையும் நிருவாக சபையும் எவ்வாருகக் கருமம் ஆற்றின என்பது சுருக்கமாகக் கீழே தரப்பட்டிருக்கிறது:
அரசாங்க சபையின் கருமங்கள்;
சட்டம் இயற்றுதல் அங்கத்தவர்கள் முழுப்பேரும் கூடியுள்ள அரசாங்க சபை பிலிருந்தே சட்டங்கள் பிறக்கும். நாட்டின் நன்மைக்கான ஆலோசனைகளை அரசாங்க சபையானது மசோதா8 உருவாக்கி நிறைவேற்றும். மசோதாக்களைத் தேசாதிபதி அங்கீகரித்த
1. 0ficers of State; அரசாங்க அதிகாரிகள் என்றும் கூறுவர். 2. Chief Secretary.
3. Financial Secretary.
. Legal Secretary.
. Reserved Subjects.
. Territorial Constituencies.
. Speaker.
... Bill.

மத்திய அரசாங்கம்-அதன் அமைப்புக்கள் 257
தும் அவை நடைமுறையிற் கொண்டுவரப்படும். சட்டம் இயற்றுதல் எப்படி நடக்கிறது என்பதனையும், ஒர் மசோதா சட்டபூர்வமாக வருதற்கான ஒழுங்கு முறைகள் யாவை என்பதனையும் அவதானிப்போம்:-இலங்கையிலே பழச் செய் கையை விருத்திசெய்வதில் ஒர் அரசாங்கசபையங்கத்தவர் சிரத்தை கொண்டுள்ளார் என்று உதாரணத்துக்கு வைத்துக் கொள்ளுவோம். அவர் இவ்விடயத்தை நன்கு ஆராய்ந்திருக் கிருர்; அத்துடன் இதுபற்றிய அநுபவமுடையாருடனும் அறிவு டையாருடனும் நன்கு கலந்து பேசியிருக்கிருர், பின்னர் இவ்விடயத்தின் பொருட்டு ஓர் திட்டத்தை வகுக்கிருர். அத்திட்டத்தை ஓர் தீர்மானம் அல்லது பிரேரணை மூலம் அரசாங்க சபையிற் கொண்டுவரத் தீர்மானிக்கிருர். இதன் பின் அத்தீர்மானத்தை தாம் அரசாங்கசபையில் எடுத்தாள அநுமதி தரல் வேண்டும் என்று அரசாங்க சபைக்கு விண்ணப் பிக்கவேண்டும். அவ்விண்ணப்பத்தில் அவர் தான் எடுத்தாள விருக்கும் மசோதாவின் நோக்கத்தையும் பிரதான அம்சங்களை யும் காட்டுதல் வேண்டும். அரசாங்க சபை கூடியதும், இவ்விண்ணப்பம் ஆலோசிக்கப்படும். குறித்த அங்கத்தவர் மசோதாவை எடுத்தாள்வதற்கு அநுமதி கொடுக்கலாமா, கொடுக்கக்கூடாதா எ ன் ப ைத அரசாங்க சபை தீர்மானிக் கும். அநுமதி கொடுக்கலாம் என்று சபை தீர்மானித்தால், குறித்த அங்கத்தவர் தமது மசோதாவின் பிரதி ஒன்றை அரசாங்கசபையின் கருமாதிகாரியிடம் கொடுப்பார். இதன் பின் அம்மசோதா அரசாங்க "கசெற்" பத்திரிகையில் பிரசுர மாகி, அதன் பிரதிகள் அரசாங்கசபை யங்கத்தவர் ஒவ் வொருவருக்கும் அனுப்பப்படும். அரசாங்கசபை மீண்டும் கூடியதும் அம்மசோதா முதன் முறையாக எடுத்தாளப்படும். முதன் முறை எடுத்தாளப்படும்போது மசோதாவின் பெயரை மாத்திரம் குறிப்பிட்டு எவ்வித விவாதமும் இன்றி விவசாயநிலநிருவாகசபையின்? பரிசீலனைக்கு விடப்படும். முதன் முறையாக ஓர் மசோ தா எடுத்தாளப்படுவதை முதல் வாசிப்பு என்பர். விவசாய-நிலநிருவாக சபை , மசோ தாவை நன்கு பரிசீலனை செய்யும்; அதன் அம்சங்களை நுணுக்கமாக ஆராயும்; மசோதா பற்றிய தனது ஆலோசனைக் கூட்டங்களுக்குச் சமுகமாயிருக்கும் படி மசோதா எடுத்தாள் பவரைச் சில சமயங்களிற் கேட்கும். இவ்வாரு க நிருவாக சபை மசோதாவை நன்கு பரிசீலனை செய்தபின் அது உசிதமானது
l. Clerk to the State Council: o, JFIT isgau அலுவலர் என்றும் கூறுவர்.
2. Executive Committee of Agriculture and Lands.
3. First Reading.
K۔ 3248

Page 134
25 S மத்திய அரசாங்கம்-அதன் அமைப்புக்கள்
தான் என்று அபிப்பிராயப்பட்டது என்றும் விவசாயப்பகுதி யில் உள்ள பழச்செய்கை விருத்தி நிபுணர் அதனைப் பற்றித் தம் அபிப்பிராயத்தைச் சாதகமாக அளித்துவிட்டார் என்றும் வைத்துக்கொள்ளுவோம். அப்படியான நிலைமையில் விவசாய நிலநிருவாக சபை அம் மசோதா வைப் பற்றி அரசாங்க சபைக் குச் சாதகமாக அறிக்கை செய்யும். இதன் பின் மசோதாவின் இரண்டாவது வாசிப்புத்தினம் நிர்ணயிக்கப்படும். மசோதாக் கள் அரசாங்க சபையில் எடுத்தாளப்படும் கிரமமுறையை வகுப்பது மந்திரிகள் சபை' ஆகும். ஒவ்வொரு நிருவாக சபையும் சம்பந்தப்பட்ட மசோதாக்களை அரசாங்க சபை விவாதிப்பதற்கு எந்த எந்த வரிசைக் கிரமத்தில் அங்கே சமர்ப்பிக்கவேண்டும் என்ற ஒழுங்கை மந்திரிகள் தமக்குட் கலந்து பேசிச் செய்வர். நிற்க, மேலே காட்டிய பழவிருத்தி சம்பந்தமான மசோதாவின் இரண்டாம் வாசிப்பின்ேேபாது அதன் நன்மை தீமைகள் பற்றியும் அதன் பொதுக்கொள்கை பற்றியும் விவாதம் நிகழும். அப்போது குறித்த மசோதாவின் கொள்கையை ஏற்கத்தான் வேண்டும் என்று பெரும்பான்மை யினர் வாக்குச் சம்மதம் அளித்தால் அது A, B என்ற கருமா லோசனைச் சபைசிகளில் ஒன்றன் பரிசீலனைக்குச் சமர்ப்பிக்கப் படும்.
தன்னிடம் சமர்பிக்கப்பட்ட மசோதாவின் அம்சங்களை மேலே குறித்த கருமாலோசனைச் சபை நன்கு விவாதித்து ஆராயும். மசோதாவில் உள்ள பல்வேறு பந்திகளும் இலக்க மிடப்பட்டு, அவை ஒவ்வொன்ரு க ஆலோசிக்கப்பட்டு, வேண் டிய வேண்டிய இடங்களில் திருத்தம் செய்யப்படும். சில பகுதிகள் முற்ருக நீக்கப்படும். மசோதாவை இவ்வாரு கப் பரிசீலனை செய்த ஆலோசனைச் சபையின் தலைவர் அரசாங்க சபையில், மந்திரிகள் சபை நிர்ணயிக்கும் தினம் ஒன்றில் அதனைச் சமர்ப்பிப்பார். அப்போது கருமாலோசனைச் சபை செய்த மாற்றங்களின் மீது விவாதம் நிகழும். இதன் பின் மசோ தாவை மூன்ரும் முறையாக வாசிக்கப்படவேண்டும் என்ற பிரே ரணையை எடுத்தாள்வர். பிரேரணை நிறைவேறினல், மசோதா மூன்ரும் வாசிப்பிலும் நிறைவேறியதாகக் கொள்ளப்படும். பின்னர், அம் மசோதா வைத் தேசாதிபதியின் அங்கீகாரத் துக்கு அரசாங்கசபைத் தலைவர் சமர்ப்பிப்பார். தேசாதிபதி மசோதாவை அங்கீகரித்துத் தம் ஒப்பத்தை இட்டவுடன் அம்
I. Agriculture Department.
2. Board of Ministers: Jóbal)g. மந்திரிகள் குழு என்பர்.
3. Second Reading. 4. Standing Committee.

மத்திய அரசாங்கம்-அதன் அமைப்புக்கள் 259
மசோதா சட்டமாகி அநுட்டானத்துக்குக் கொண்டுவரப்படும். பழச்செய்கை அபிவிருத்திக்கென ஓர் தனி அங்கத்தவர் செய்த முயற்சியின் பயணுகவே மேலே காட்டிய மசோதா சட்டமானது. இதுபோலவே வேறும் தனிப்பட்ட அங்கத் தவர்களும் வீடுகட்டி மக்களுக்குக் கொடுத்தல், வறிய வர்களுக்குக் கல்வி வசதி யளித்தல், மீன்பிடித் தொழிலை அபிவிருத்தி செய்தல், கால்நடை இனங்களை விருத்தியாக்கல் என்னும் இன்னேரன்ன விடயங்களில் சிரத்தை கொண்டு திட்டங்களை வகுத்து அரசாங்க சபையிற் சமர்ப்பித்து அவற்றை நிறைவேற்றுவித்துச் சட்டமாக்கி நடைமுறையில் கொண்டுவர இடமிருந்தது.
தனிப்பட்ட அங்கத்தவர்கள் மசேதா க்களை எடுத்தாளும் முறையிருந்தபோதிலும் அநேகமான மசோதாக்கள் அரசாங்க மசோதாக்க ளாகவே எடுத்தாளப்பட்டன. இதனை விளக்க ஓர் உதாரணம் காட்டுதும் நடைமுறையில் இருந்த கல்வி முறையினை மாற்றி அதிலும் பார்க்கச் சிறந்த ஒர் கல்வி முறையை வகுக்கவேண்டும் என்று கல்வி நிருவாக சபை எண்ணியது என வைத்துக்கொள்ளுவோம். அது இவ்விடயத் தில் நிபுணராயுள்ளாரின் ஆலோசனையைக் கேட்டு நன்கு ஆராய்ந்து கலந்து பேசியபின் ஓர் கல்வி மசோதாவைத் தயாரிக்கும். இம்மசோதா மேலே காட்டிய ஒழுங்குமுறைப் படி அரசாங்க சபையிலும் கருமாலோசனைச் சபையிலும் முறைப்படி சமர்ப்பிக்கப்பட்டுச் சட்டமாகும். ஒர் மசோதா உருவாதற்கு இன்னேர் வழியும் உண்டு. அதனை ஒர் உதாரண முகத்தால் விளக்குதும் நீர்ப்பாசனப் பகுதியிலே உள்ள அதிகாரி அல்லது புத்திசாலியான ஓர் கீழ் உத்தியோகத்தர் வெள்ளப் பாதுகாப்பு விடயமாக விசேட ஆராய்ச்சி செய்திருக் கிருர்; அல்லது அரசாங்க வேலைப் பகுதியில் உள்ள இஞ்சினியர் ஒருவர் நீர் வீழ்ச்சி-மின்சாரத்தை அபிவிருத்தி செய்தற்கு ஓர் திட்டம் வகுத்திருக்கிருர் என்று வைத்துக்கொள்ளு வோம். நீர்ப்பாசன உத்தியோகத்தர் அல்லது அரசாங்க வேலை இஞ்சினியர் தாம் தாம் அமைத்த திட்டங்களை விபரமாக வகுத்துத் தத்தம் மந்திரிக்கும் அவரது நிருவாக சபைக்கும் சமர்பிக்கலாம். திட்டத்தை மந்திரியும் நிருவாக சபை யினரும் ஆராய்வர். அதில் உள்ள அம்சங்களை விளக்கும் படி சில சமயங்களில், குறித்த அவ்வுத் தியோகத் தரை அவர் கள் கூப்பிடுவர். இன்னும் அதனை நன்கு ஆராய்ந்து அதன் பலாபலன்களைப்பற்றி ஓர் அறிக்கை விடும்படி ஒர் நிபுணரைக் கேட்கவும் கூடும். இவ்வாரு க உத்தியோக அதிகாரிகள்
l. Government Bills.

Page 135
260 மத்திய அரசாங்கம்-அதன் அமைப்புக்கள்
சமர்ப்பிக்கும் திட்டங்கள் நுணுக்கமாக ஆராயப்பட்டு அவை நன்மையானவை எனக் காணப்படின் அவற்றை மசோதா உருவத்தில் அரசாங்கசபைக்குச் சமர்ப்பிப்பர். இதுவரை கூறியதிலிருந்து மசோதாக்கள்.
(1) தனிப்பட்ட அங்கத்தவர்களினல், (2) ஓர் மந்திரியாலும் அவரது நிருவாக சபையாலும் உருவாக்கப்பட்டு அம்மந்திரியால் எடுத்தாளப்பட லாம்: அல்லது மந்திரியின் பரிபாலனப்பகுதி ஒன்றில் உள்ள உத்தியோகத்தர் ஒருவரின் முயற்சியால் உரு வாகலாம் என்பது புலனுகிறது. நாட்டின் புநருத்தா ரண கைங்கரியங்களுக்கான ஆலோசனைகளையும் திட்டங்களையும் வகுத்துத் தம் தலைவரான மந்திரி யின் பரிபாலனத்துக்குச் செம்மை தேடிக் கொடுக்கக் கூடிய உத்தியோகத் தரைத் தம் கீழ் ஊழியராகக் கொண்டுள்ள மந்திரி உண்மையிற் பாக்கியசாலி தான் என்று கூறினல் அது மிகையாகாது.
நிருவாகக் கருமங்கள்
டொனுேமூர் அரசியற் றிட்டத்தின் படி மூன்று அரசாங்கப் பகுதிகள் மந்திரிகள் பொறுப்பில் விடப்படாமல் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன என்று மேலே கூறினுேம், அம்மூன்று பகுதிகளும் பின்வருவனவாம்:
(அ) அரசாங்கச் சேவையாளர் விடயம்; பாதுகாப்பு; அந்நிய நாடுகளுடன் தொடர்பு.
(ஆ) திறைசேரி.
(இ) சட்ட நிருவாகம்.
இந்த மூன்று பகுதிகளும் முறையே பிரதம காரியதரிசி, நிதிக்காரியதரிசி, சட்டக் காரியதரிசி என்னும் மூன்று அரசதி காரிகளினதும் பரிபாலனத்தில் விடப்பட்டன. ஏனைய அரசாங் கப் பகுதிகள் அனைத்தும் மந்திரிகள் பரிபாலனத்திலேயே விடப்பட்டிருந்தன. இப்பகுதிகள் தத்தம் பெயர்களுக்கேற்ப நாட்டின் அன்ருட பரிபாலன கருமங்களைச் செய்து வந்தன. இலங்கை யருக்குப் பரிபாலன வேலையிற் பயிற்சியளித்து அதற் கான பொறுப்பினையும் அவர்கள் வகிக்கும்படி விடவேண்டும் என்று டொனேமூர் விசாரணைக் குழுவினர் நன்கு வற்புறுத் தினர். இன்னும், இலங்கையின் உள்நாட்டு அபிவிருத்தியுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை இலங்கையரே ஆராய்ந்து அவற்றைத் தீர்க்கவும் அவர்களுக்குச் சந்தர்ப்பம் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் (டொனேமூர் விசாரணைக் குழுவினர்) விரும்பினர். அவர்களின் சிபாரிசின் பயனக

மத்திய அரசாங்கம்-அதன் அமைப்புக்கள் 26. I
பின்வரும் மந்திரிமார் இருக்கலாம் என்று விதிக்கப்பட்டது. 1. உள்நாட்டு விவகார மந்திரி. இவருக்கிருந்த பகுதி கள்:-(அ) பொலிசுப்பகுதி (ஆ) சிறைச்சாலைகள் (இ) மதுப் பகுதி என வழங்கப்படும் கலால்பகுதி (ஈ) மது விடயமாக ஊரவர் சம்மதமறிதல்? (உ) இரசா யனப் பாகுபாட்டுப்பகுதி.
2. விவசாய-நிலப்பகுதி மந்திரி. இவருக்கிருந்த பகுதி கள்:-(அ) காணிகளும் காடுகளும் (ஆ) நீர்ப்பாய்ச்ச லும் விவசாயமும் (இ) மிருக வைத்திய சேவைகள் (ஈ) அளவைப் பகுதியும் வானிலை ஆய்வுப் பகுதிக்யும் (உ) கூட்டுறவுச் சங்கங்கள். 3. ஊராட்சி மந்திரி. இவருக்கிருந்த பகுதிகள்:- (அ) ஊராட்சிப்பகுதி (ஆ) கடல் தொழிற் பகுதி (இ) சுரங்கங்களும் உப்பு உற்பத்தியும் (ஈ) பொதுஉபயோ கத்துக்குரிய நிலத்தைப் பெறுதல். 4. சுகாதார மந்திரி. இவருக்கிருந்த பகுதிகள்:- (அ) வைத்திய-சுகாதார சேவைகள் (ஆ) குடியிருப்பு வசதிகள். 5. கல்வி மந்திரி. இவருக்கிருந்த பகுதிகள்:-(அ) கல்வி
(ஆ) நூதனசாலை (இ) தொல் பொருள் ஆராய்ச்சி.7 6. தொழில், கைத்தொழில், வர்த்தக மந்திரி,8-:இவ ருக்கிருந்த பகுதிகள்:-(அ) தொழில் (ஆ) கைத் தொழில் அபிவிருத்தி (இ) வர்த்தகம் (ஈ) பிரதம பதிவுக் காரியஸ்தர் பகுதி (உ) ஏழைகள் கஷ்டநிவா ரனம்.10 7. போக்குவரத்து வேலைப்பகுதி மந்திரி11:-இவருக்கிருந்த பகுதிகள்:-(அ) அரசாங்கக் கட்டடவேலை (ஆ) புகையிரதப்பகுதி தபால், தந்தி (இ) துறைகள், துறைமுகங்கள், மின்சார முயற்சிகள்.
... Minister of Home Affairs. . Local Option.
Minister of Agriculture and Lands. . Meteorological Department. . Minister of Local Administration. . Minister of Health. . Archaeology. . Minister of Trade, Industry and Commerce. . Registrar General’s Department. Lugoyéis ésCULOITÉ6)&sníh 67 Görgpund கூறுவர்.
10. Poor Relief. ll. Minister of Communications and Works.

Page 136
262 மத்திய அரசாங்கம்-அதன் அமைப்புக்கள்
ஒதுக்கப்பட்ட விடயங்கள்
(அ) சட்டபரிபாலனம். இந்த விடயம் ஒர் அரசாதிகாரியின் பரிபாலனத்தில் விடப்பட்டது. இவ்விடயத்தைப் பொது சனப் பிரதிநிதியாகவுள்ள ஓர் மந்திரியிடம் விடுத்தால் அவர் அதனைச் செவ்வனே நடாத்தமுடியாது என்று அக்காலத்திற் கருதப்பட்டிருக்கலாம். இன்னும், நீதிபரிபாலனத்தைச் செய் வோர் அவரிவருக்கு அஞ்சாது தயவு, தாட்சண்யம், முகமன் பாராட்டாது நடுக்கோணது இருத்தல் வேண்டும். எனவே, வாக்காளரைப் பிரீதிப்படுத்தற்காகவோ, தேர்தலில் தமக்கு விரோதமாக நின்றுவிடுவர் என்று பயந்தோ கருமம் ஆற்றக் கூடாது. ஆகவே தான் நீதி பரிபாலன விடயம் பொது சனப் பிரதிநிதிகளிடம் விடாது அரசாதிகாரி ஒருவர் பொறுப் பில் விடப்பட்டதாயிருக்கலாம். சட்டக் காரியதரிசியின் பகுதிக்கிருந்த பிரதான கருமங்கள் வருமாறு:-
(1) நீதிபரிபாலனம் செவ்வனே நடைபெற ஒழுங்கு செய்
த ல். (2) சட்டங்களை அமைத்தல்; மசோதாக்கள் அரசாங்க சபையிற் சமர்பிக்கப்படும்போது அவை சட்டத் தயாரிப்பாளரால் சட்டமுறையில் ஒழுங்காக்கப்படும். (3) அரசாங்கத்துக்குச் சட்டம் சம்பந்தமான ஆலோசனை களைச் சொல்லிக்கொடுத்தல்; முடியின் (மன்னர்) சார்பாக சிவில் வழக்குகள், கிறிமினல் வழக்குகளைத் தொடர்தல் உ.ம்.--கொலைக் குற்றம் சாட்டப்படு வர்கள் மீது முடியின் பேரினலேயே வழக்குத் தொட ரப்படுகிறது. (4) அரசாங்கசபைத் தேர்தல்களை நடாத்துவது. (5) அரசாங்கத் தரும கர்த்தாவின்* கடமைகளைப் பரிபா லிப்பது உ.ம்: அரசாங்கத் தருமகர்த்தா வின் பொறுப்பில் பராயமடையாத பிள்ளைகளின் ஆதனங் கள் விடப்பட்டால் அவ்வாதனத்தைப் பரிபாலித் தல்; பூரீ சந்திரசேகரா நிதி போன்ற தர்ம நிதிகளைப் பரிபாலித்தல், (ஆ) பிரதம காரியதரிசி. இவர் அரசாங்க உத்தியோகத் தரின் கருமங்களுக்குப் பொறுப்பாளியாக இருந்தார். அரசாங்க உத்தியோகத்தர்’ என்பது அரசாங்க சேவை செய்யும் எவரையும் அடக்கும் என்க. (மிக உயர்ந்த பகுதித் தலைவர்கள் தொடக்கம் மிகக் குறைந்த கிளாக்குமார் ஈருக
l. Legal Draftsman. 2. Public Trustee: நம்பிக்கைப் பொறுப்பாளர் என்றும் கூறுவர்

மத்திய அரசாங்கம்-அதன் அமைப்புக்கள் 263
உள்ள) அரசாங்க உத்தியோகத்தரின் உதவியுடன்தான் நாட் டின் பரிபாலன வேலை நடைபெறுவது: இவர்கள் தம் கடமை யைத் திறமையுடன் செய்யவேண்டுமானல் மந்திரிமார்களோ அரசாங்க சபையங்கத்தவர்களோ அவர்களுடைய கருமங் களிற் பிரவேசிக்கக் கூடாது. பொதுசனப் பிரதிநிதிகள் பிரவேசித்து அவர்களின் தயவில் அரசாங்க உத்தியோகத்தர் இருக்கவேண்டின், அவ்வுத் தியோகத்தர் அவர்களைப் பிரீதிப் படுத்தி அவர்களுடைய முகமனைச் சம்பாதிக்கக் கருமம் ஆற்ற வும் கூடும். அப்படிச் செய்தால் நாட்டின் நிர்வாகத்துக்கே பங்கம் ஏற்படும். அரசாங்க உத்தியோகத்தராயினேர் பட்ச பாதகமற்றுத் தம் கடமைகளே ஆற்றுபவராய், தம் அரசாங்கக் கடமைகளுக்கே திரிகரண சுத்தியாகத் தம்மை ஒப்புக்கொடுப் பவராய் இருத்தல் வேண்டும். இன்னும், அரசாங்க சேவையில் உள்ள உத்தியோகத் தரை அரசாங்கசபை அங்கத்தவர்கள் கட்டுப்படுத்தினுல் அல்லது தம் செல்வாக்கை அவர்கள் விடயத்திற் செலுத்தினல் நடப்பது என்ன? உத்தியோகத்தர் பிரதியுபகாரம் கருதியும் உத்தியோக உயர்ச்சி கருதியும் அரசாங்க சபையங்கத்தவர்கள் தயவில் நிற்பர். அதன் பயனுகப் பல சமயங்களில் தகாத முறைகளும் நீதியீனங்களும் நடைபெறக்கூடும். ஆகவே அரசாங்க உத்தியோகத்தரை அரசாங்க சபையின் கட்டுப்பாட்டிலிருந்து அகற்றி அவர்களை அரசியல்வாதிகளின் செல்வாக்கிற்குள் விடாது ஒழுங்கு செய்யப்பட்டது. ஆனல் இதிலும் ஓர் விடயத்தை நாம் அவதானித்துக்கொள்ளுதல் வேண்டும். அரசாங்க சேவையில் பிரதான உத்தியோகத் தரை நியமிக்கும்போது ஒர் மந்திரியும் அவரது நிருவாக சபையும் ஆரை நியமிக்கவேண்டும் என்று அரசாங்க சேவைக் கொமிஷனுக்குத் தம் சிபார்சினை அளிக்க லாம் என்ற விதியிருந்தது. உத்தியோகத்தர் நியமன விடய மாகத் தேசாதிபதிக்கு ஆலோசனை கூறும் ஒரு குழுவே மேலே சொல்லிய அரசாங்க சேவைக் கொ மிஷன், அரசாங்க உத்தி யோகத் தரை மந்திரிமார், பாராளுமன்ற அங்கத்தவர் என்ப வர்களின் மேற்பார்வை, கட்டுப்பாடு என்பவற்றிலிருந்து நீக்கியுள்ள முறைதான் இங்கிலாந்திலும் அநுட்டிக்கப்பட்டு வருகிறது. அப்படி யிருந்தாலும் இங்கும் சரி இங்கிலாந்திலும் சரி உள்ள உத்தியோகத்தர், பாராளுமன்றத்தால் அங்கீகரிக் கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்களைப் பயன்றரு முறையில் அநுட்டானத்துக்குச் கொண்டுவர வேண்டும்.
E. Public Services Commission.

Page 137
264 மத்திய அரசாங்கம்-அதன் அமைப்புக்கள்
இத்தீவின் பாதுகாப்புச் சம்பந்தமான சகல விடயங் களுக்கும் பிரதமக் காரியதரிசி பொறுப்பாக விருந்தார். அதுமாத்திரமன்றி, இங்கிலாந்து, சமவரசு நாடுகள், இந்தியா, குடியேற்ற நாடுகள் என்னும் வெளிநாடுகளுடன் கொண்டிருந்த வியவகாரங்களுக்குப் பிரதம காரியதரிசிதான் பொறுப்பாக இருந்தார்.
(இ) நிதிக் காரியதரிசி. நிதி சம்பந்தப்பட்ட கருமங்கள் யாவும் நிதிக் காரியதரிசியின் பொறுப்பில் இருந்தன. அவர் இலங்கையின் பண நிலைமை பற்றிய ஆலோசனைகளை மந்திரி மாருக்கு எடுத்துச் சொன்னர். மந்திரிமார் செய்யவிருந்த செலவுகள் உசிதமானவை அன்று என்று அவருக்குத் தோன்றி ஞல், அச்செலவுகளால் ஏற்படும் தீங்குகளைப்பற்றி அவர் எச்சரிக்கை செய்தார். இக்கடமையுடன் ரே குப்பகுதி அல்லது சுங்கப்பகுதி?, அரசாங்க பண்டசாலை, அச்சு நிலையம்* என்பவற்றுக்கும் அவரே பொறுப்பாளியாக விருந்தார். அரசாங்கத்தின் பெயரால் நடைபெறும் செலவுகளுக்குரிய பணம் அவரால் அல்லது அவருடைய பிரதான உத்தியோகத்த ரால் இறுக்கப்படும்.
விவசாயம், உணவு, நீர்ப்பாசனம், ஆரோக்கியம், தொழில், வர்த்தகம், வியாபாரம், கல்விபோன்ற சீவாதார விடயங்கள் மந்திரிமாரின் பரிபாலனத்தில் விடப்பட்டன. தேசத்தின் பொருளாதார, சமுதாய வளர்ச்சிக்கான விடயங் களில், இந்நாட்டுச் சனப் பிரதிகள் சேவைசெய்து பொது சனங்களுக்கு நன்மை செய்ய டொனேமூர் அரசியல் திட்டம் நல்ல சந்தர்ப்பங்களை அளித்தது. மேலே சொல்லிய கருமங் களைத் திறம்பட, அநுகூலமாக நிருவகிப்பதிலேயே இந்த இலங்கைத் தீவின் நன்மை முழுவதும் தங்கியிருக்கிறது
என்றும் கூறலாம். ஒரு மந்திரியானவர் தம் பரிபாலன வேலையை எவ்வாறு நடாத்தினர் என்பதனை விளக்க ஓர் உதாரணம் காட்டல் பொருத்தமுடைத்தாகும். கைத்
தொழில் நிருவாக சபை நன்கு ஆராய்ந்து, நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் இங்கே பட்டு உற்பத்தியாக்க வேண்டும் எனத் தீர்மானித்தது என வைத்துக் கொள்ளுவோம் அது இவ்விடயமாகக் கொண்டிருந்த ஆலோசனைகள் ஓர் மசோதாவாகிவிட்டன வென்றும் அம் மசோதா வை அரசாங்க சபை நிறைவேற்றத் தேசாதிபதியும் அங்கீகாரம் அளித்து விட்டார் என்றும் வைத்துக்கொள்ளுவோம். இதன்பின்
1. Dominions. டொமினியன் என்றும் வழங்குவர். 2. Customs Department.
3. Government Stores.
4. Government Press.

மத்திய அரசாங்கம்-அதன் அமைப்புக்கள் 265
அது அநுட்டானத்துக்குக் கொண்டுவரப்படும். மந்திரி தனது பரிபாலனத்தில் உள்ள பல்வேறு பகுதிகளின் தலைமையதிகாரி களைக் கூப்பிட்டு இவ்விடயமாகக் கூறுவர்; அல்லது அரசாங்க சபையின் அங்கீகாரத்துடன் பட்டு உற்பத்தித் தொழில் அதி காரி என்ற ஓர் உத்தியோகத்தரின் தலைமையில் புதிய ஒர் பகுதியைத் தொடக்கலாம். பட்டு உற்பத்தி வேலையை ஆரம் பிப்பதற்கு வேண்டிய பணம், ஆட்கள், உபகரணங்கள் என்னும் இன்னேரன்னவை அவ்வுத்தியோகத்தருக்கு வழங்கப் படும். பட்டுப்பூச்சி விருத்தியாவதற்கான முசுக்கட்டை மரம் வளர்ப்பதற்கு விவசாயப் பகுதியாரின் உதவி அவ்வுத்தி யோகத் தருக்குத் தேவை. பட்டுப்பூச்சிகளை வளர்ப்பதற்கு விசேட ஆராய்ச்சி தேவைப்படும். இன்னும், பட்டுப்பூச்சி களுடன் புளங்கும் விடயத்திலும், பட்டுப்பூச்சியின் கூட்டி லிருந்து பட்டு நூலை எடுப்பதற்கும் விசேட பயிற்சிபெற்றுள்ள தொழிலாளர் தேவை. பட்டு உற்பத்திக் கருமங்கள் யாவும் திறம்பட, முறைப்படி நடக்கின்றனவா என்பதைப் பரிசோ திக்கப் பரிசோதகர்கள் தேவை. இம்முயற்சி எவ்வாறு நடக் கிறது என்பது பற்றி மந்திரியானவர் நல்லாக அறிந்துகொள்ள வேண்டும். அரசாங்க சபையில் உள்ள அங்கத்தவர்கள் இப் பட்டுத்தொழில் விடயமாகக் காலந்தோறுல் மந்திரியைக் கேள்விகள் கேட்டுக் கொண்டேயிருப்பர். அவர்களுக்கு மந்திரி தக்க விடையளிக்கவேண்டும். பொதுத்தாபனங்கள் மந்திரியை வரவழைத்து இம்முயற்சி எவ்வாறு நடைபெறு கிறது என்பதனை விளக்கும் படியும் கேட்கும். சில சமயங்களில் இதனைப்பற்றிப் பாதகமான கண்டனங்களும் சரமாரியாக வரும். இப் பகுதியிலே ஏதும் பிழைகள் நேர்ந்தால் அவற்றுக் குக் காரணம் காட்டும்படியும் மந்திரி கேட்கப்படுவார். சுருங் கக் கூறுங்கால், வாக்களிப்பு முறையினல் தெர்ந்தெடுக்கப் பட்டு, பொது சனங்களுக்குப் பிரதிநிதியான மந்திரியே ஒர் அரசாங்கப் பகுதியின் அநுகூலத்துக்கும் பிரதிகூலத்துக்கும் பொறுப்பாக்கப்பட்டார். ஆகவே, நாட்டின் பிரதான அம் சங்களில் மந்திரியும் ஒன்ரு க இருந்தார். இதுவரை நாம் உதாரணத்தின் பொருட்டுக் காட்டிய கைத் தொழிற் பகுதி மந்திரியைப்போலவே ஏனைய மந்திரிகளும் அன்ரு டபரிபாலன வேலைகளுக்குப் பொறுப்பாளிகளாயிருந்தனர். அவர்கள் எல்லோரும் சேர்ந்து தத்த மக்குக் கீழ் உள்ள பகுதிகளுக்கு தனித்தனி பொறுப்பு வகித்தனர். தேசத்தின் விவசாயத் தொழில் புறக்கணிக்கப்பட, உணவுப் பொருள் உற்பத்திக் கென அரசாங்க சபை செய்த திட்டங்கள் பிரதிகூலமடைந் தால் அதற்கு விவசாய மந்திரி தக்க காரணம் காட்டவேண்டும். மலேரியா நோய் தோன்றிப் பரவ அதனல் பாதிக்கப்பட்டவர்

Page 138
266 மத்திய அரசாங்கம்-அதன் அமைப்புக்கன்
களுக்கு நிவாரணம் அளிப்பதற்கு ஒர் தொகைப் பணத்தை அரசாங்கசபை அநுமதித்தால், அந்நிவாரணவேலை அநுகூல மாக நடைபெறுகிறதா இல்லையா என்று சுகாதார மந்திரி கேள்வி கேட்கப்படுவார். பொலிசுப்பகுதியாரில் ஊரவர் களுக்கு அதிருப்தி ஏற்பட்டால் அதற்குரிய காரணத்தை விளக்கும்படி உள்நாட்டு மந்திரி கேட்கப்படுவார். ஆகவே, ‘அரசாங்கம்’ என்பதனைக் குற்றம் சொல்பவர்கள், அரசாங்க மாயிருக்கும்படி தாமே தெரிந்து அனுப்பியவர்களைத்தான் உண்மையிற் குற்றம் சொன்னர்கள். சட்டநிரூபண சபை, சட்டநிருவாகசபை என்பன வேறு வேருக இருந்த முந்திய காலத்திலே தம் மனத்தில் எழுந்த எல்லாக் குறைகளுக்கும் அரசாங்கத்தையே பொறுப்பாளியாக்கி அதனைக் குற்றம் சாட்டுவது வழக்கமாயிருந்தது. ஆனல் இந்த மனக் குறை நாடகத்தை இப்போதிருக்கும் நிலைமையில் நடிக்கமுடியாது; நடித்தாலும் அதனை அதிகம் பேர் கவனிக்கார். காரணம் இன்றைய அரசாங்கத்தை நடத்துபவர்கள் பொது சனங்களின் பிரதிநிதிகளாயிருப்பதனுல்; அரசாங்கம் பிழை விட்டால் அதற்கு அதனைத் தெரிந்த பொது சனங்கள்தான் பொறுப் பாளிகள்.
தத்தம் பரிபாலனத்தின் கீழ் உள்ள பகுதிகள் அநுகூல மாக வேலை செய்வதற்குப் பொறுப்பாளிகள் மந்திரிமாரே' என்று முன்னர்க் கூறினுேம். அவர்கள் யாருக்குப் பொறுப் பாளிகள் என்ற கேள்வி பிறக்கிறது. ஒரு பக்கமாகப் பார்த் தால் அவர்கள் தேசாதிபதிக்கும் அவர் மூலமாக முடிக்கும் (மன்னருக்கும்) பொறுப்பாளிகள். ஏனென்ருல் அவர்கள் தேசாதிபதியின் மந்திரிகளாயிருந்தமையினுல் என்க. ஆனல் மற்றப்பக்கமாகப் பார்க்குமிடத்து, அவர்கள் இலங்கை மகா சனங்களினல் தெரிவு செய்யப்பட்டவர்களானமையின் அந்த மகா சனங்களுக்கே பொறுப்பாயிருந்தனர் என்று கூறவேண் டும். ஆனல், ஒரு மந்திரி பிழைசெய்த விடத்து அவரைப் பதவியினின்றும் நீக்கும் அதிகாரம் சனங்களிடம் , இருக்க வில்லையாதலினல் அவர் மகா சனங்களுக்குக் கட்டுப்பட்டவர் என்று சொல்லவும் முடியாது. அரசாங்கசபையிருந்த காலத்து நிலைமையில் ஒரு மந்திரி தன் பரிபாலனப் பிழையை, அரசாங்க சபை பிழையான திட்டத்தை வகுத்துவிட்டது அல்லது போதிய பணம் தரவில்லை என்ற காரணம் கூறி, அச்சபையின் தலையிலேயே சுமத்திவிடவும் இடம் இருந்தது. ஆனல் காலகதியில் பாராளுமன்றச் சம்பிரதாயங்கள் இங்கே விருத்தி யாக அரசாங்கசபையிலோ அதற்கு வெளியிலோ ஒர் மந்திரி

மத்திய அரசாங்கம்-அதன் அம ைப்புக்கள் 267
யின் பரிபாலனக் கருமங்கள் கண்டிக்கப்பட்டு அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்படின் அவர் தம் பதவியிலிருந்து விலக நிர்ப்பந்தம் ஏற்படும். எங்கள் நாட் டிலே பொதுசன அபிப்பிராயம் என்பது இன்னும் பயன்றரும் முறையில் உருவாகவில்லை என்றே கூறவேண்டும். இப்போது சிலர் ‘பொதுசன அபிப்பிராயம்’, ‘பொதுசனக் கோரிக்கை” என்றெல்லாம் சொல்லுகிரு ர்கள். ஆணுல் உற்று நோக்கு மிடத்து அவை எல்லாம் மனக் குறைகொண்ட ஒர் சிலரின் முணுமுணுப்பேயன்றி உண்மையான பொதுசன அபிப்பிராய மல்ல என்றே கூறவேண்டும்.
டொனுேமூர் அரசியற்றிட்டம் அநுட்டானத்தில் இருந்த காலத்தில் மந்திரிமார்கள் தத்தம் பகுதி வேலைகளுக்குத் தனித்தனி பெறுப்பாளிகளாயிருந்தனர். வரவு செலவுத் திட்டம் பற்றி மாத்திரம் அவர்கள் கூட்டுப்பொறுப்பு வகித் தனர். இவ்விடயமாக மந்திரிகள்சபையைப் பற்றிச் சிறிது விளக்கவேண்டியது அவசியமாகிறது. மேலே காட்டிய ஏழு மந்திரிகளையும் மூன்று அரசதிகாரிகளையும் கொண்டதே மந்திரிகள் சபை. மந்திரிகள் சபைக் கூட்டங்களுக்குத் தலைமை வகித்தவர் பிரதம காரியதரிசியே யாவர். மந்திரிகள்சபை என்பது நிருவாக அதிகாரத்துக்குரிய சாதனமே என்று கூற லாம். அதாவது அரசாங்க சபை நிறைவேற்றும் சகல தீர் மானங்களையும் நடைமுறைக்குக் கொண்டுவந்து நாட்டின் அன்ரு ட பரிபாலன வேலையைத் திறம்பட, அநுகூலமாக நடத்தும் கருவியாக அது அமைந்திருந்தது. அரசாங்கம் என்னும் யந்திரத்தை இயக்கிய கோஷ்டியே அது. இங்கிலாந் திலே, பயன்றருவிதத்தில் அரசாங்கத்தை இயக்கும் சாதன மாய மந்திர சபையை ஒரளவுக்கு ஒத்திருந்ததே இலங்கை மந்திரிகள் சபையும்.
மந்திரிகள் சபையின் பிரதான கருமங்கள் பின் வருவன வாக இருந்தன:
(அ) அரசாங்கக் கருமங்களைக் கிரமப்படுத்துவது: அதாவது அரசாங்கசபை கூடும் காலத்தில் அங்கே விவாதிக்கப்பட வேண்டிய விடயங்களை கிரமப்படி வகுப்பது.
(ஆ) உத்தேச வரவுசெலவுத் திட்டத்தைத் தயார் செய்வது.
வரவுசெலவுத் திட்டம் எப்படித் தயார் செய்யப்படு கின்றது என்பதனைச் சிறிது ஆராய்வாம்: அரசாங்கத்தின் பல பகுதிகள் மந்திரிமார், நிருவாக சபைகளது பரிபாலனத்தில்
l... Public Opinion. 2. Budget Estimates,

Page 139
268 மத்திய அரசாங்கம்-அதன் அமைப்புக்கள்
இருந்தன. வேறுசில பகுதிகள் அரசாதிகாரிகளின் பரிபாலனத் தில் இருந்தன. தங்கள் தங்கள் பகுதிகளுக்கு இவ்வளவு செலவு அடுத்துவரும் வருடத்தில் தேவைப்படும் என்று நிரு வாகசபைகளும் அரசதிகாரிகளும் கணிப்பர். இப்படி யான உத்தேசக்கணிப்பை அவர்கள் மந்திரிகள் சபைக்கு நிதிக் காரியதரிசி மூலம் சமர்ப்பிக்கவேண்டும். இவ்வாறு வேறு வேருக வந்த உத்தேசச் செலவுகளை எல்லாம் மந்திரிகள் சபை பரிசீலனை செய்து எல்லாவற்றையும் திரட்டி குறித்த ஆண்டுக் குரிய வரவுசெலவுத் திட்டம் ஒன்றைத் தயாரிக்கும். கல்வி, விவசாயம், சுகாதாரம் என்னும் இன்னேரன்ன சேவைகளுக்கு எவ்வளவு பணம் வேண்டும், அப்பணத்தை எவ்வாறு சேகரிப் பது என்பதைக் காட்டுவதே வரவுசெலவுத் திட்டம். மந்திரிகள் சபை வரவு செலவுத் திட்டத்தைப் பரிசீலனை செய்து அதனை அங்கீகரித்த பின்னர், மந்திரிகள் சபையின் உபதலைவரால் அரசாங்கசபையில் அத்திட்டம் சமர்ப்பிக்கப்படும். மந்தி ரிகள் சபையின் உபதலைவர் தான், அரசாங்கசபை முதல்வரு மாயிருந்தார். இதன் பின் முழு அரசாங்கசபையும் ஆய்வுச் சபையாக மாறி வர வு செ ல வுத் திட்டத் தினை விபரமாக ஆராயும். ஒவ்வொரு விடயமும் நன்கு பரிசீலனை செய்யப் படும். மந்திரிமார் ஒவ்வொருவரும் தத்தம் பகுதிகளுக்குரிய உத்தேசச் செலவுகளுக்குத்தக்க காரணம் எடுத்துக் காட்ட வேண்டும். ஆய்வுச்சபையாக மாறிய அரசாங்கசபை தன் முன் சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தை இவ்வாறு நன்கு பரிசீலனை செய்து உ சி த ப் படி திருத்தங்களையும் மாற்றங்களையும் செய்யும். சில சமயங்களில், மாற்றம், திருத்தம் இன்றி மந்திரிகள்சபை சமர்ப்பித்த திட்டத்தை அப் படியே அங்கீகரித்தும் விடும். சில சமயங்களில் வரவுசெலவுத் திட்டத்தை மந்திரிகள் சபையின் புநராலோசனைக்குத் திருப்பி விடும். அப்படி ஒரு முறை தா ன் திருப்பியனுப்பலாம். புநராலோசனைக்கு அனுப்பப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தை மந்திரிகள்சபை மீண்டும் அரசாங்கசபையிற் சமர்ப்பிக்க அது நிராகரிக்கப்பட்டால் தேசாதிபதி அரசாங்கசபையைக் கலைத்து விடுவார். ஆகவே வரவுசெலவுத் திட்டத்தை, அரசாங்க சபையானது மந்திரிகள் சபையின் புநராலோசனைக்கு விடுத் தும் சரி, விடாமலும் சரி நிராகரித்தால் அரசாங்கசபை கலைக் கப்பட்டுப் புதுத் தேர்தல் ஒன்று நிகழும். நிதி சம்பந்தமான விடயங்களிலோ வேறேதும் விடயங்களிலோ மந்திரிகள்சபைமீது ஒர் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அரசாங்க சபையில் எடுத்தாண்டு நிறைவேற்றினலும்,
1. Leader of the House in the State Council.

மத்திய அரசாங்கம்-அதன் அமைப்புக்கள் 269
அரசாங்கசபையைத் தேசாதிபதி கலைத்து விடுவர். அரசாங்க சபைமுறை அநுட்டானத்தில் இருந்த காலத்து மந்திரிகள் சபை ஒரே மனப்பான்மையுடன் கருமம் ஆற்றிய கோஷ்டி யாக இருக்கவில்லை. ஒவ்வொரு மந்திரியும் தான் தான் தலைமை தாங்கும் பகுதிகளுக்குப் பொறுப்பாக இருந்தார். வரவு செலவுத் திட்டம் ஒன்றை வகுப்பதில்தான் மந்திரிமார் கூட்டுப் பொறுப்பை வகித்தனர்; மற்றும் சகல விடயங்களி லும் தாம் தாம் நினைத்தபடி கருமம் ஆற்றினர். அவர்களில் ஒருவர் மீது அல்லது சிலர் மீது ஒர் நம்பிக்கையில் லாத் தீர் மானத்தை அரசாங்க சபையில் நிறைவேற்றினல், மந்திரி மார் முழுப்பேரும் பதவிகளை விட்டு விலகவேண்டும் என்ற நியதி அக்காலத்தில் இருக்கவில்லை. அவர்களுக்கிடையே அர சியற் பரிபாலனம் விடயமாக அதிகம் ஒற்றுமையும் இருக்க வில்லை. இப்படியான, தான் தான் தன் தன் கருமத்தைப் பார்க்கும் தனிக் கொள்கையை விடுத்து நாட்டின் பொது நன்மைக்கான கல்வி, விவசாயம் முதலாம் கைங்கரியங்களில் ஒரே கொள்கையை வகுத்து மந்திரிமார் அனைவரும் கோஷ்டி மனப்பான்மை கொண்டு அரசாங்கக் கருமங்கள் அனைத்துக்கும் கூட்டுப் பொறுப்பு வகித்திருந்தால் அவர்களுக்கிடையே கூடிய ஒற்றுமை இருந்திருக்கும். அக்காலத்தில் இருந்த நிலைமையில், உற்சாகமும், சுறு சுறுப்பும் முயற்சியும் உடைய மந்திரி ஒருவர் தமக்கு விடப்பட்டுள்ள பகுதிக்கருமங்களை அதி தீவிரமாகச் செய்துகொண்டுபோக அவரிலும் பார்க்கத்திறமையும் உற் சாகமும் முயற்சியும் குறைந்த இன்னேர் மந்திரி வாளா விருந்து காலம் கடத்தினர். இதனல் சில விடயங்களில் முன்னெற்ற மும் சில விடயங்களில் மந்த நிலையும் ஏற்பட்டன. இப்படி யிருந்தது நாட்டுக்கு நன்மையானதன்று. இன்னும், டொனே மூர் அரசியற்றிட்டத்து மந்திரிகளுக்கிடையே கோஷ்டி உணர்ச் சியும், கோஷ்டிப் பொறுப்பும் இல்லாத நிலைமை இருந்தபடியி னல் ஒவ்வொரு மந்திரியும் சுயநல மேலிட்டவராக தானே சிறந்த பரிபாலனம் செய்யவராயிருக்கவேண்டும் என்று அவாப் படவும் முடிந்தது. பரிபாலன விடயங்களில் தானே மகத்தான வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தினல் ஒவ்வொரு மந்திரியும் பாமர மக்கள் பார்த்து சபாஷ்' சொல்லவேண்டிக் “கலாதி யான திட்டங்களை வகுக்கவும் முந்தியிருந்த கோஷ் டிப் பொறுப்பற்ற முறை இடமளித்தது.
இவ்வாரு க ஏழு மந்திரிமாரும் காண்பவர்க்கும் கேட்ப வர்க்கும் “கலாதி’யான திட்டங்களைத் தனித்தனி வகுத்துக் கொண்டே போனல் நாட்டில் தாங்க முடியாத பணச்செலவு
1. Collective Responsibility.

Page 140
27 O மத்திய அரசாங்கம்-அதன் அமைப்புக்கள்
ஏற்பட்டுவிடும். விடயங்களை உள்ள உள்ளவாறு நோக்கி நடை பெறக் கூடிய கருமங்களையே நிருவகிக்கவேண்டும் என்ற கொள்கையுடைய அரசாங்க சபை இப்படிக் “கலாதி யான திட்டிடங்களை நிராகரிக்காது விட்டால் சில தினங்களில் அரசாங் கம் ஆனமுதலில் அதிகம் செலவானன்” நிலைமையை எய்திவிடும் என்பது திண்ணம். மந்திரிமார் உற்சாகமுடை யோராயிருப்பது நல்லதுதான். ஆனல் அந்த உற்சாகத்தைத் தனித்தனியாகக் கொள்ளாது கோஷ்டி உணர்ச்சியுடனும் கோஷ்டிப் பொறுப்புடனும் அதனைப் பிணித்தல் வேண்டும். ஒர் பாடசாலை விளையாட்டை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்ளுவோம். விளையாட்டுக் கோஷ்டியினர் அனைவரும் கோஷ்டி மனப்பான்மை கொண்டு விளையாடினல் விளையாட்டு சோபிக்கும். அதனை விடுத்து கோஷ்டியில் உள்ள ஒவ்வொரு வரும் சுயநலம் கொண்டு தாம் மாத்திரம் பிரபல்யம் அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் கோஷ்டி மனப்பான்மை யின்றி விளையாடினல் வெற்றி கிடைப்பது அரிது. இப்படித்தான் அரசாங்கசபை காலத்திலிருந்த மந்திரிகள் நிலையும் இருந்தது. மந்திரிகள் சபையிலே கோஷ்டி மனப்பான்மை இல்லாதிருந்த தோடு அதனை வழிநடாத்துதற்கு தலைவனும் இல்லாதிருந்தது. தலைவன்தான் ஒரு கோஷ்டியை ஒரே வழிப்படுத்தி நடத்து பவன். அவனே சமயோசித தீர்மானங்களைச் செய்யவேண்டி யவன். அந்த அந்த இடத்துக்குத் தக்க ஆட்களை நியமிக்க வேண்டியவனும் அவன்தான். பிரித்தானிய அரசியல் அமைப் பிலே இப்படியான ஓர் தலைவனுக்கு இடம் இருந்தது. அத்தலைவன்தான் பிரதம மந்திரி. அவர்தான் மந்திரசபை? என்பதனை இயக்கும் பெரிய சக்தி; ஆனல் அவ்ர் தான் நினைத் ததையே நடாத்தும் சர்வாதிகாரியன்று. அவர் தலைவராக விருந்து செய்யும் கருமங்கள் தீயனவாய், நாட்டுக்குக் கெடுதி விளைவிப்பனவாக இருப்பின் பொதுமக்கள்சபை அவர் மீது ஒர் கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றி, அல்லது பொதுமக்கள் சபைக்கு வெளியேயுள்ள வா க்காளர் தக்கவிதத் தில் தம் வெறுப்பைத் தெரிவித்து அவரைப் பதவியிலிருந்து விலக்கிவிடுவர். பிரதம மந்திரியானவர் மகாசனங்களுக்கு மேற்பட்டவராய் அவர்களுடைய கட்டுப்பாட்டுக்கப்பாற் பட்டவராய் இருப்பவரல்லர். இப்படியான பாராளுமன்ற முறையை இங்கேயும் கடைப்பிடித்து அநுகூலமடைவதற்கு எங்களுக்கு இன்னும் அதிக காலம் செல்லும், பாராளுமன்ற
l. Prime Minister. Sus Lo Poupéfñ என்றும் கூறுப. 2. Cabinet. மந்திரி சபை, கபினெற் என்று சொல்வாருமுளர். 3. House of Commons.

மத்திய அரசாங்கம் அதன்-அமைப்புக்கள் 27
முறையில் அரசியற் பரிபாலனத்தை நடாத்துவதில் இந்நாட்டு மக்களைப் பயிற்றும் சாதனமாகவே அரசாங்கசபை என்பது இலங்கைக்கு வழங்கப்பட்டது. சனநாயகப் பாராளுமன்ற முறையில் மக்களைப் பயிற்றுவதற்கு எம் நாட்டுச் சரித்திரத் தில் இப்படியான ஒர் சனநாயகத்தாபன முறை இருக்கவில்லை என்பதனை இச் சந்தர்ப்பத்தில் நாம் மனத்திற் கொள்ளுதல் வேண்டும். அரசியல் வியவகாரங்களை நாமாக ஆற்றுவதால் தான் அவற்றில் பயிற்சி பெறமுடியும். நீரிற் குதித்துத் தான் நீந்தப் பழகுதல் வேண்டும். அப்படிச் செய்யாமல் நீந்தப் பழகமுடியாது. அதுபோலத்தான் அரசாங்கக் கருமங்களை நிருவகிக்கும் விடயமும். அதில் ஈடுபட்டுச் சில சமயங்களில் பிழைகளும் விட்டுப் பயிற்சியடையாவிட்டால் பரிபாலனப் பொறுப்பை நாம் ஒருபோதும் நிருவகிக்கமுடியாது. இந்த உண்மையினைச் சிலர் அறியாது அரசாங்கசபை அரசியன் முறை வழங்கியதைக் கண்டித்தும் இருக்கிறர்கள். அரசாங் கப் பரிபாலனம் என்பது வெறும் புத்தகப் படிப்பால் மாத் திரம் வருவதன்று; அல்லது ஓர் இடத்தில் இருந்துகொண்டே கடிதம் மூலம் பயிற்சி பெற்று அதனல் நடாத்துவதுமன்று, நீருட் குதித்து நீந்தப் பழகுவோன் எவ்வளவோ பிழைகளை ஆற்றுவான்; சில சமயங்களில் ஆபத்திலும் சிக்குவான்; இவற் றுக்கெல்லாம் பயந்துகொண்டு வெளியே இருந்தால் அவன் ஒரு போதும் நீந்தப் பழகமாட்டான்: இதுபோலவே அரசியலை நிருவகிக்கும் விடயத்திலும் பிழைகள் நேரிடக்கூடும். மனதுக் குப் பிடிக்காத பல சம்பவங்களும் நிகழலாம். இவற்றை எல்லாம் பொறுமையுடன் எதிர்த்துச் சமாளித்து விடயங் களைக் கிரியாம்சத்தில் நடத்துவதனலேயே அரசியற் பரிபால னப் பயிற்சியைப் பெறலாம். பிழைகள் விடப்படும்தான்: ஆனல் அப்பிழைகளில் இருந்து அரிய கற்பனைகளையும் பெற லாம். "நீருக்குள் குதித்தால் அமிழ்ந்தி விடுவோ மே" என்று பயந்தால் நீங்கள் ஒருபோதும் நீந்தப் பழக மாட்டீர்கள். ஆனல் நீங்கள் புதுப் பழக்கத்தில் அமிழ்ந்தி விடாதபடி பார்த்துக்கொள்ளச் சமீபத்தில் ஒருவர் நிற்கவேண்டும்தான். அவர் உங்கள் நீந்தற் பயிற்சி ஆசிரியராக இருக்கலாம். இவ் வாரு கவே அரசியல் என்னும் கப்பலை நவமாகச் செலுத்துப வர்கள் அதனைப் பாறைகளில் மோத விடாதபடி பார்த்துக் கொள்ள ஒருவர் இருந்தார். அவர் யார்? அவரது கடமைகள் யாவை? என்பவற்றை இனி ஆராய்வாம்:-
பொதுமக்களுக்கு அரசியல் அதிகாரம் முழுவதையும் திடீரெனக் கொடுக்கக் கூடாது படிப்படியாகவே வழங்க வேண்டும் என்றும், டொனுேமூர் விசாரணைச் சபையினர்

Page 141
272 மத்திய அரசாங்கம்-அதன் அமைப்புக்கள்
சனப் பிரதிநிதிகளுக்குத் திடீரென அதிக அதிகாரத்தை வழங்கிவிட்டனர் என்றும் சிலர் கூறியதை நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள். அரசியல் அதிகாரத்தைப் பொது சனங்க ளிடம் கொடுக்க வேண்டும்தான்; ஆனல் அதனைப் படிப்படி யாகவே கொடுக்க வேண்டுமென்று கூறும் இவர்கள் இவ்விடயத் தில் 'படிப்படியாக’ என்று சொல்வதன் அர்த்தம் என்ன? எந்த எந்தப் பரிமாணத்தில், எந்த எந்த அளவில், அரசியல் அதிகாரம் வழங்கப்படவேண்டும் என்பதனை நிர்ணயிப்பவர் கள் யார்? தம்மைத் தாமே ஆள்வதற்கு ஒர் தேச மக்களுக்கு ஏற்பட்டுள்ள சக்தியை அளந்து காட்டும் கருவிதான் யாது? அவர்களுடைய அருகதையைக் காட்டும் அளவுகோல் என்ன? என்னும் இன்னேரன்ன கேள்விகள் இச் சந்தர்ப்பத்திற் பிறக் கின்றன. சாதாரண மக்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்கினல் தாம் இதுவரை ஏகபோகமாக அநுபவித்த அதி காரங்கள் பறிபோய்விடுமே என்று துடித்து வயிற்றெரிச்சற் படுபவர்கள்தான் சாதாரண மக்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கப்படுவதை எதிர்ப்பவர்கள் என்று அநேகமாகக் காணப் பட்டிருக்கிறது. தமது சுயநலத்தைப் பூர்த்தியாக்குதற்காக மக்களது அன்ருட வாழ்க்கையில் எத்தனையோ பயங்கர மான சம்பவங்களுக் கேதுவாக இருந்த இவ் வாஷாடபூதிகள், “ஒன்றும் தெரியாத பூனை, இதுவும் குடிக்குமோ பாலை’ என் ருங்கு அப்பாவிகள் போலக் கபட நாடகம் நடிக்கிறர்கள், * வெள்ளாடு நனைய வேங்கைப்புலி விம்மி விம்மி அழுத வாறு இவர்கள் சாதாரண மனிதனின் நலவுரிமைகளுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கிருர்கள்! அரசாங்க சபையின் பரிபாலன காலத்திலே தேசமானது சர்வ நாசத்தை நோக்கிப்போனது என்றெல்லாம் இவர்கள் பிர லாபித்தனர். ஆனல், இவர்கள் ஏன் பிரலாபித்தார்கள் என்பதனை ஆராயுமிடத்து ஓர் விடயம் தெள்ளிதிற் புலப்படும். இதுவரை தாமே ஏகபோகமாக அநுபவித்த உரிமைகளைத் தாம் முந்தி உதாசினத்துடன் புறக், கணித்து வைத்த பொதுசனங்களுடன் இப்போது பங்காக அநுபவிக்கவேண்டி ஏற்பட்டதே என்பதனையிட்டுத்தான் அவர் கள் புலம்பினர் அன்றிப் பொதுசன நன்மையையிட்டன்று.
தேசாதிபதியின் அதிகாரங்கள் டொனேமூர் அரசியலமைப்பிலே தேசாதிபதி எந்த அந்தஸ்தை வகித்தார் என்பதனைச் சரிவர உணருவதற்கு 1931-ம் ஆண்டுக்கு முன் அவருக்கிருந்த அந்தஸ்தினையும் அதிகாரங்களையும் அறிதல் பொருத்தமாகும். அக்காலத்திலே தேசத்துப் பரிபாலனத்துக்குத் தேசாதிபதியே பொறுப்பாளி யாக இருந்தார். அவரே அரசாங்கத்தின் முக்கிய நிருவாக

மத்திய அரசாங்கம்-அதன் அமைப்புக்கள் 273
அதிகாரியாக இருந்தமையினல் அவருக்கு அதிக அதிகாரம் இருந்தது. ஆனல் அந்த நிருவாக அதிகாரம் ஏழு நிருவாக சபைகளிடத்தும் அரசாங்க சபையிடத்தும் கையளிக்கப்பட்ட தும், அவருடைய அந்தஸ்திலும் ஓர் மாற்றம் நிகழ்ந்தது. அவர் ஓர் வரம்புடை அரச' னின் நிலையை எய்தினர். அவர் தாமாக அரசு புரியாது இருப்ப அவ்ரது மந்திரிமா ரே அரசாங்கத்தை நடாத்தினர். மந்திரி மாரது பரிபாலனக் கருமங்களை மேற்பார்வை செய்யும் ஓர் வித அதிகாரிபோலவே அவர் இருந்தார். இதனை நீங்கள் நன்கு விளங்க ஒர் உதார ணம் காட்டுதும் உதை பந்தாட்டமே அந்த உதாரணம். முற்காலத்தில் தேசாதிபதியானவர் ஒர் உதைபந்தாட்டக் கோஷ்டியின் தலைவனைப்போல இருந்தார். இத்தலைவனே உதைப் பந்தாட்டக் கோஷ்டிக்குத் தலைமை வகிப்பான். அந்த அந்த இடங்களில் ஆட்டக்காரரை நியமிப்பதும் அவன்தான். இன்ன இன்ன மாதிரி விளையாடவேண்டும் என்றும் சொல்லிக் கொடுப்பான் அவன் அவசரப்பட்டு எதனையும் செய்யா ன்: விளையாட்டில் ஈடுபட்டுள்ள தன் கோஷ்டியினர் பதழுது நிதானமாக விளையாடவேண்டும் என்று கற்பிப்பான்: இந்தத் தலைவனது நிலைமையில்தான் தேசாதிபதி முந்தி இருந்தார். ஆனல் டொனேமூர் அரசியல் திட்டம் அநுட்டானத்துக்கு வந்த பின் அவருடைய நிலைமை மாறிவிட்டது. விளையாட்டுக் கோஷ்டியின் தலைவனைப்போல இருந்த அவர் இரு கோஷ்டி களையும் வழிநடாத்தும் மத்தியஸ்தர் அல்லது நடுவர் போலா னர். விளையாட்டிலே நடுவர் பக்கம் சேர்ந்துகொள்வதில்லை. ஆனல் அவர் விளையாட்டை ஒழுங்காக நடைபெற உதவி செய்வார். விளையாட்டுக்குரிய பிரமாணங்களை ஆட்டக்காரர். எவராவது மீரு திருப்பதை அவர் பார்த்துக்கொள்ளுவார். அவர்கள் ஒருவரோ டொருவர் முட்டிப் பொருதிச் கொள்ளா மல் பிரமாணங்களுக்கு விரோதமாக விளையாடாமல் இருப் பதை அவர் கண்காணித்துக் கொள்ளுவார். யாரும் ஆட்டக் காரர் பிரமாணங்களுக்கு விரோதமாக ஆடினல் அவரைத் தண்டிக்க நடுவருக்கு அதிகாரம் உண்டு. இன்னும், ஓர் கட்சியில் உள்ள ஆட்டக்காரர் முறை கேடாக விளையாடினல் அதற்கு நட்ட ஈடாக எதிர்க்கட்சியாருக்கு ஒன்ருே பலவோ சலுகைகளை வழங்குவார் ஆட்டக்காரர் பிரமாணங்களைக் கவனியாமல் மனம் போனபடி விளையாடி ஆட்டத்துக்குப் பங்கம் விளைக்கிருர்கள் என்று அவர் கண்டால் அவர் அந்த ஆட்டத்தை முற்ருக நிறுத்தி விடவும் அதிகாரம் உடையவ ராவர் உதைபந்தாட்டப் பிரமாணங்களை எங்கள் அரசியல்
1. Constitutional Monarch.

Page 142
274 மத்திய அரசாங்கம்-அதன் அமைப்புக்கள்
அமைப்புப் பிரமாணங்களுக்கு உவமையாகக் கூறலாம். நடுவருக்கிருந்த உரிமைகளையும் சலுகைகளையும் தேசாதிபதி யின் விசேட அதிகாரங்களுக்கு ஒப்பிட்டுக் கூறலாம். அரசாங்க சபை என்னும் ஆட்டக் கோஷ்டியினரின் அரசியற் பரிபாலனக் கருமத்தை மேற்பார்வை செய்த நடுவரே தேசாதிபதி என்க.
நடுவர் இல்லாமல் ஓர் விளையாட்டை நடாத்துவது எவ் வாறு இயலாதோ அவ்வாறே நாட்டின் பரிபாலனக் கருமத்தை எல்லாருக்கும் நீதி வழங்கும் முறையில் மேற்பார்வை செய்ய ஒருவரோ பலரோ இல்லாது நடாத்த முடியாது என்பது மேலே காட்டியவற்ருல் நன்கு புலனுகிறது. ஆகவே டொனே மூர் அரசியன்முறை அநுகூலமாக நடைபெறுவதற்கு தேசாதி பதியானவர் இன்றியா மயாத அதிகாரியாக இருந்தார் என்க.
தேசாதிபதிக்கிருந்த அதிகாரங்கள் யாவை? முதலாவது, அவர் இலங்கைப் பரிபாலனக் கருமங்களை மேற்பார்வை செய் யும் அதிகாரியாக இருக்கவேண்டியிருந்தது. அவருக்களிக்கப் பட்டிருந்த மன்னர் கட்டளைகளில் பின்வரும் கருத்துப்பட அவரது அதிகாரம் குறிக்கப்பட்டிருந்தது: " உள்நாட்டு விவகா ரங்களைத் தாமே நிருவகிப்பதற்கான பொறுப்பினை இலங்கை மக்கள் மீது பாரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள மாட்சிமை தங்கிய மன்னர் பிரானின் உள்ளக்கிடக்கையின் தன்மையை அகத்துட்கொண்டு தேசாதிபதி நடத்தல் வேண்டும். மந்திரி மார் எடுத்துச் சொல்லும் அபிப்பிராயங்களையும், கூறும் ஆலோசனைகளையும் அதிசாதகமாக நோக்குதல் வேண்டும். அவர் தம்முடைய மந்திரிமாருடன் அடிக்கடி க்லந்தாலோ சித்து அவர்களது விருப்பங்களையும் தேச மக்களின் அபிப் பிராயங்களையும் பூரணமாகத் தெரிந்து கொள்ளுதல் வேண் டும். இங்கிலாந்தில் உள்ள பிரதான மந்திரிகளிடம் இருந்து பெறும் பத்திரங்கள், தாம் அவர்களுக்கு அனுப்பவேண்டிய பத்திரங்கள் ஆகிய சகலவற்றையும் பற்றி மந்திரிகள் சபைக்கு அவர் அறிவிக்கவேண்டும்.
ஆனல் குறித்த சில விதமான மசோதாக்களுக்குத் தம் அங்கீகாரத்தை யளிக்கக்கூடாது என்றும் அவருக்கு விதிக்கப் பட்டிருந்தது. தேசாதிபதியின் அங்கீகாரம் பெருத எந்த மசோதாவும் சட்ட பூர்வமாகாது என்று நீங்கள் ஏற்கெனவே படித்திருக்கிறீர்கள் அல்லவா? தேசாதிபதி அங்கீகாரம் அளிக் கக் கூடாதிருந்த மசோதாக்கள் சில பின்வருமாறு:-
(1) விவாக நீக்கம் பற்றிய மசோதாக்கள்.
(2) தமக்கு ஏதும் நிலம் அல்லது பணம் வழங்குதற்கான
மசோதாக்கள்.

மத்திய அரசாங்கம்-அதன் அமைப்புக்கள் 275
(3) அரசாங்க உத்தியோகத்தர்களின் உரிமைகளுக்கும் சலுகைகளுக்கும் பாதகம் விளைக்கக்கூடிய மசோதாக் கள். (4) தீவின் பண நிலைமையைச் சீர்குலைக்கக் கூடிய
மசோதாக்கள். (5) அவரவர்க்குரிய கடமைகளுக்குப் பதில் வேறுவேரு ன கடமைகளை விதிக்கும் மசோதாக்கள்; மாட்சிமை தங்கிய மன்னர் பிரானது தரைப்படை, கடற்படை, ஆகா சப்படை என்பவற்றின் ஒழுங்கு அல்லது கட்டுப் பாட்டில் தலையிடும் மசோதாக்கள். (6) குறித்த ஓர் சமூகத்தை அல்லது சமயத்தைச் சேர்ந் துள்ள மக்களுக்கு மாத்திரமே வசதியீனங்களை உண்டா க்கும் மசோதாக்கள். (7) சிறுபர்ன்மைச் சாகியத்தார் அல்லது சிறுபான்மைச் சமயத்தார் அல்லது வேறுவிதத்திற் சிறுபான்மை யின ரா யுள்ளோரின் தீவிர எதிர்ப்புக் கேதுவான கொள்கையுள்ள மசோதாக்கள். (8) நீதி பரிபாலனம் பற்றிய ஏதும் மசோதாக்கள். இத்தீவில் உள்ள சாகியத்தார் அல்லது சமயத்தார்க் கிடையே சாதக பாதகம் விளைக்கக்கூடிய-அதாவது ஒரு சாரார்க்குச் சாதகமாயும் இன்னுேர் சாரார் க்குப் பாதக மாயும் இருக்கக்கூடிய-முயற்சிகளைச் செய்தால் அல்லது அநீதியான சட்டங்களை இயற்றினல் அதனைத் தடைசெய்யும் சாதனங்களாகத் தேசாதிபதியின் அதிகாரங்கள் இருந்தன என்பது மேலே காட்டிய ஆவலியில் இருந்து புலணுகும். நாட்டிலே பரிபாலன விடயமாக எள்ளுக்காய் பிழந்தன்ன வாறு நீதியாக அரசியற் பரிபாலனம் நடப்பதனைத் தேசாதி பதி மேற்பார்வை செய்ய வேண்டியிருந்தது.
எந்த மசோதாவா வது சட்ட பூர்வமாக வேண்டுமானல் அதற்குத் தேசாதிபதியின் அங்கீகாரம் தேவையாக இருந்தது. தம் அங்கீகாரத்தின் பொருட்டுத் தம்மிடம் அரசாங்க சபை யினுல் சமர்ப்பிக்கப்பட்ட மசோதாக்கள் விடயமாகத் தேசாதி பதி பல விதமாக க் கருமம் ஆற்றலாம் என்று இருந்தது.
(1) அவர் தமது அங்கீகாரத்தை அளிக்க ஓர் மசோதா
சட்ட பூர்வமாகும். (2) அவர் ஓர் மசோதாவுக்குத் தமது அங்கீகாரத்தை
யளிக்க மறுக்கலாம். (3) மாட்சிமை தங்கிய மன்னர் பிரானது உளக்குறிப் புக்கு ஓர் மசோதாவை ஒதுக்கி வைக்கலாம். அதா

Page 143
276 மத்திய அரசாங்கம்-அதன் அமைப்புக்கள்
வது ஒர் மசோதாவை மன்னர் பிரானது (இங்கே மன்னர் பிரான் என்பது அவரின் மந்திரிகளில் ஒருவ ரான குடியேற்றநாட்டு மந்திரியைக் குறிக்கும்) அபிப்பிராயத்துக்கு விடலாம்.
(4) ஓர் மசோதாவுக்கு அங்கீகாரம் அளித்தவிடத்தும் அம் மசோதா அநுட்டானத்துக்கு வருவதை ஆறு மாதத்துக்கு மேற்படாத காலத்துக்குத் தவணை யிடலாம்.
(5)தம் மிடம் சமர்ப்பிக்கப்படும் ஒர் மசோதாவை அரசாங்க சபையின் புநராலோசனைக்கு அனுப்ப லாம். அம் மசோதாவில் ஏதும் திருத்தங்கள், மாற்றங்கள் செய்யவேண்டும் என அவர் கண்டால் அத்திருத்தங்கள் மாற்றங்கள் என்ன என்பதையும் மசோ தாவுடன் குறித்து அனுப்பலாம்.
(6) ஒர் மசோதாவானது பிரதானமான ஒர் கொள்கை யுடன் பின்னப்பட்டிருப்பதை அவர் உணர்ந்தால் அந்த மசோதா சாதாரண முறையிலன்றி அரசாங்க சபைத் தலைவர், அர் சதிகாரிகள் என்பவர்களையும் சேர்த்து அரசாங்க சபையங்கத்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கினரால் நிறைவேற்றப்பட்டால் ஒழி யத் தமது அங்கீகாரத்துக்கு அதனை அனுப்பக் கூடாது என்று அரசாங்கசபைத் தலைவர் மூலமாக அரசாங்க சபைக்கு அறிவிக்கலாம்.
மாட்சிமை தங்கிய மன்னர் பிரானது உளக் குறிப்புக் கென ஓர் மசோதாவை ஒதுக்கிவைக்கத் தேசாதிபதிக்கு அதிகாரம் உண்டென மேலே கூறினேம். அப்படியான அதி காரத்தை அவர் பிரயோகம் செய்யுமிடத்து அவர் அம் மசோதாவை இரட்டைப் பிரதிகளில் குடியேற்ற நாட்டு மந்திரிக்குக் கூடிய சீக்கிரத்தில் அனுப்புதல் வேண்டும். இவ் வாறு அனுப்பப்பட்ட மசோதாவை லண்டனில் உள்ள பிர தான அதிகாரிகள் நுணுக்கமாக ஆராய்வர். பின்னர் இவ் விடயத்தில் தேசாதிபதி என்ன செய்ய வேண்டும் என்று கற்பிக்கப்படுவர். மேலே கூறிய அதிகாரங்களில் மூன்ருவது தொடக்கம் ஆரு வது ஈரு கவுள்ள அதிகாரங்களில் எதனையா வது பிரயோகிக்கும்போது அதனைத் தோ சாதிபதியானவர் குடியேற்ற நாட்டு மந்திரிக்கு அறிவிக்கவேண்டும். தேசாதிபதி யின் தீர்ப்பை நிராகரிக்கவோ மாற்றவோ குடியேற்ற நாட்டு மந்திரிக்குச் சட்ட பூர்வமான அதிகாரம் இருந்தது. குடி யேற்ற நாட்டு மந்திரியளித்த தீர்பைத் தேசாதிபதி. அரசாங்க சபைக்கு அறிவிக்க வேண்டியவராக இருந்தார்.
l. In Duplicate.

மத்திய அரசாங்கம்-அதன் அமைப்புக்கள் 277
அரசாங்க உத்தியோகத் தரைப் பரிபாலிக்கும் மேலதிகாரி யாகவும் தேசாதிபதி இருந்தார். அவ்வுத்தியோகத் தரை நியமித்தல் அவர்களுக்கு உத்தியோக உயர்ச்சி அளித்தல், அவர்களை ஒர் இடத்திலிருந்து இன்னேரிடத்துக்கு மாற்றுதல், வேலையினின்றும் நீக்குதல், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தல் என்பவற்றில் தேசாதிபதிக்குப் பல்வேறு வகைப் பட்ட அதிகாரங்கள் இருந்தன. நீதிபதிகளையும் சமாதான நீதிபதிகளையும் கொ மிசன்கள் எனப்படும் விசாரணைக் குழுக் களையும் நியமித்தற்கும் அவர் அதிகாரம் உடையவராயிருந் தார். பல்வேறு வகைப்பட்ட குற்றங்களுக்காகத் தண்டிக்கப் பட்டவர்களை மன்னித்து விடுதலை செய்யவும், தண்டனை பெற்றவர்களின் தண்டனையில் ஒர் பகுதியை உசிதமெனத் தாம் கருதும் விதத்தில் நீக்கவும் அவருக்கு அதிகாரம் இருந் திது. ஈற்றில், அரசாங்கசபையைக் கூட்டும் அதிகாரமும் அதனைக் கலைக்கும் அதிகாரமும் அவர் உடையவராக இருந் தார்.
மேலே சொல்லிய அதிகாரங்களைவிட அவசரகாலத் தத்து வங்கள் என்ற தத்துவங்களும் அவருக்கிருந்தன. பகைவரின் கிருத்திரமத்தால் அபாயம் நேர்ந்தவிடத்து அல்லது அபாயம் நேரப்போகிறது எனக் காணுமிடத்து, அல்லது ஆபத்துக் கேது வான விடயம் காணுமிடத்து அவர் அதனைப் பிரகடனம் செய்து அரசாங்கத்தின் எந்தப் பகுதியையாவது சொந்த அதிகாரத்தில் வைத்துக்கொண்டு உசிதமெனக்ருகாணும் கட்டளைகளைப் பிறப்பிக்கவும் அவருக்கு அதிகாரம் இருந்தது. அப்படியான சந்தர்ப்பங்களில் அவர் தமது கருமத்துக்கான, கட்டளைக்கான, காரணத்தை விளக்கி விபரமான அறிக்கை ஒன்றினைக் குடியேற்ற நாட்டு மந்திரிக்குச் சமர்ப்பிக்க வேண்டும்; இன்னும், அவர் தமது அதிகாரத்தைப் பிரயோ கித்து அதிகாரச் சட்டங்கள் இயற்றிப் பரிபாலனத்தை நடாத் தலாம் என்றும் அரசாங்கசபைக்குரிய இராசசபைக் கட்டளையிேல் ஒர் திருத்தம் பின்னுக்கு ஏற்பட்டது. தேசாதிபதி ஒர் மசோதா அவசியமானது எனக் கருத அதனை நிறைவேற்ற அரசாங்கசபை இணங்கா விட்டால் அவர் தமக்கு வழங்கப் பட்ட தத்துவத்தைப் பிரயோகித்துத் தாம் விரும்பிய மசோ தாவைச் சட்டமாக்கி விட அதிகாரம் இருந்தது. இது டொனேமூர் அரசியலமைப்பின் நோக்கத்துக்கு முரணுனது என்பது பல அரசியல் வல்லாரது சித்தாந்தம்.
1. Emergency. Powers. 2. Order in Council: இதனை மந்தன -ଞ୍ଜୁଥିs୦୦୮ என்றும் கூறுவர்.

Page 144
278 மத்திய அரசாங்கம்-அதன் அமைப்புக்கள்
1931-ம் ஆண்டு தொடக்கம் 1947-ம் ஆண்டுவரை இலங்கையின் பரிபாலனம் டொனுேமூர் அரசியலமைப்பின் படி நடந்தது. 16 ஆண்டு காலமாக இந் நாட்டு மந்திரிமாரும் அரசாங்கசபை யங்கத்தவரும் அரசியல் நிருவாகக் கைங்கரி யத்தில் போதிய அநுபவம் பெற்ருர்கள். இத் தீவின் உள் நாட்டு வியவகாரங்கள் பற்றிய எல்லாப் பிரதான விடயங் களையும் தாமே நடாத்தி உபயோகமான பல சட்டங்களையும் நிறைவேற்றினர். பொதுசனங்களின் வாழ்க்கை நிலையைத் திருத்துவதில் அரசாங்க சபை யங்கத்தவர்களும் மந்திரிமாரும் அதிக ஆர்வம் காட்டினர். ஆனல் அதனையும் எள்ளி நகை யா டியவர்களும் உளர். இக் கருமங்கள் எல்லாம் அடுத்த தேர்தலுக்கு அடிகோலுவனவாகும் என்றும், பொதுசனங் களின் வாக்குச் சம்மதங்களை அடுத்த தேர்தலிற் பெறச் செய்யும் தந்திரோபாயங்களே இவையன்றிப் பொது சனங் களின் உன்மையான நன்மை விருத்தியில் அரசாங்கசபை யங்கத்தவர்கள் ஆர்வம் கொண்டிருந்தவர்களல்ல வென்றும் சிலர் சொன்னர்கள். ஆனல் இவர்களுடைய இக்கூற்று விடயமாக ஒன்றை நாம் மனதிற் பதித்து வைத்துக் கொள்ள வேண்டும். சுயநலமே அதிகமாக உள்ள உலகிலேதான் நாம் வசிக் கிருேம் என்பதை முதலில் நாம் ஒத்துக்கொள்ள வேண் டும். அவ்வுலக இயல்பின்படி அரசியல் வாதிகளும் தம் கரு மமே கண்ணுயிருக்கலாம். அவர்களுக்கும் அவா, ஆசையிருக் கும். அந்த ஆசையைத் தேசம் என்னும் ரதத்திற் பூட்ட வேண் ஆசை இழுக்க தேசமும் முன்னேறும். தேசம் முன்னேறப் பொதுசனங்களும் முன்னேறிச் சுபீட்சம் அடைவர். அரசியல் வாதிகள் அடுத்துவரும் தேர்தலிற் கண்ணுயிருக்காவிட்டால் பொதுசனங்களுக்கு எவ்விதமான நன்மையும் செய்திருக்க மாட்டார்கள். அரசாங்கத்தை மிகவும் கவனமாக-விழித்த கண் மூடாதபடி-கருமம் ஆற்றச் செய்வதற்குள்ள ஒரே ஒரு சிறந்த மார்க்கம் அடுத்து வரும் பொதுத் தேர்தலை அடிக் கடி அவர்களுக்கு நினைப்பூட்டிக்கொண்டிருத்தலே என்றும் கூறலாம். அடுத்த தேர்தலிலே பொதுசனங்களின் ஆதரவைப் பெறவேண்டும் என்ற ஒரு எண்ணம் மாத்திரமே அரசியல் வாதிகளை நற்கருமங்கள் ஆற்றத் தூண்டும். அந்த எண்ணம் இல்லாவிட்டால், நகரத் தொழிலாளரின் வாழ்க்கை நிலையை திருத்தும் நோக்கத்தைக்கொண்ட சம்பளச்சட்டம், சாய்ப்புச் சட்டம் தொழிலாளர் பாதுகாப்பு உத்தர் வாதச் சட்டம் போன்ற தொழிலாளர் ச காயத்துக் கான சட்டங்களைக் கண்டி ருக்கவும் மாட்டோம். இதுபோலவே குடியானவர்களின் விவசாயத்தையும் உணவுப் பொருள் உற்பத்தியையும் அபி விருத்தி செய்ய நல்ல தொண்டுகள் ஆற்றப்பட்ட்ன. நீர்ப்

மத்திய அரசாங்கம்-அதன் அமைப்புக்கள் 279
பாய்ச்சல் வசதிகளை விருத்தி செய்தற்கும், வெப்பவலையப் பிரதேசத்தில் குடியேற்றங்களைத் தாபிப்பதற்குமான நீண்ட காலத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டன. குடியர்ன்வர்களுக் குத் தக்க முறையில் உதவிசெய்யக் கூட்டுறவு இயக்கம் நன்கு அபிவிருத்தியாக்கப்பட்டது. அவர்களின் விளைபொருள் களை நல்ல விலைக்கு விற்பதற்கனுகூலமாக அரசாங்கப்பொறுப் பில் ஓர் விற்பனைவசதிப்பகுதியும் ஏற்படுத்தப்பட்டது. முன் எல்லாம் தேடுவாரற்றும் கிடந்த உள்நாட்டுப் பகுதிகளிலே ஆசுப்பத்திரிகள், மருந்து விநியோ கச்சாலைகள், பிரசவ ஆசுப் பத்திரிகள் என்னும் இன்னுேரன்னவை தாபிதமாகி வைத்திய சுகாதாரப்பகுதியின் வேலை அபிவிருத்தியாக்கப்பட்டது. இவ்ை எல்லாம் எதனைக் காட்டுகின்றன? படித்தவர்கள் எனச் சொல்லப்படும் குறைந்த தொகையினரான வாக்காள ரால் மாத்திரம் தெரியப்பட்ட எந்த அரசாங்கமாவது ஆற்றிய தொண்டுகளிலும் பார்க்ககூடிய கைங்கரியங்களைப் ப்ொது சனங்களின் நன்மையின் பொருட்டு அரசாங்கசபை ஆற்றி யிருக்கிறது என்பதனை உள்ளங்கை நெல்லிக்கனி என எடுத்துக் காட்டுகின்றன. இக் கை ங் கரியங்களுடன் மாத் திர ம் அரசாங்கசபை நிற்கவில்லை. இந் நாட்டு மக்கள் விடயத்திலே மகத்தான, புரட்சிகரமான ஓர் மாற்றத்தையும் அது செய்தது: பாலர் வகுப்புத்தொடக்கம் பல்கலைக்கழகப் படிப்புவரை இலவசக்கல்வி முறையை அது உருவாக்கியது. இந்த இலவசக் கல்வி முறைக்கு விரோதமாக எவ்வளவோ கண்டனங்களும் * கிண்டல்'களும் பிறந்தன. ஆனல், இத் திட்டம் வர முன் படிப்புவாசனை என்பது அறவே இல்லாதிருந்த எத்தனையோ பிள்ளைகள் இப்போது பள்ளிக்கூடங்களுக்குச் சென்று கல்வி கற்று வருகிறர்கள் என்பது மறுக்கொணு உண்மை. தக்க கல்வியைப்பெற்று உய்வதற்குப் பெருந்தொகையான நம் பிள்ளைகளுக்கு இப்போது சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருக்கிறது. இலவசக் கல்விக் கொள்கை நாடெங்கும் நிலைத்துவிட்டது. முன்னர் பாடசாலைகள் கொழும்பு, காலி, கண்டி, யாழ்ப் பாணம் போன்ற நகரங்களிற்ருன் அதிகமாக இருந்தன. ஆனல், இலவசக் கல்வித் திட்டம் அநுட்டானத்துக்கு வந்த தன் பயணுக இந் நாட்டின் கிராமப் பக்கங்களிலும் சிரேட்ட, மத்திய, கனிட்ட பாடசாலைகள் நவமாகத் தாபிக்கப்பட்டு நல்ல பணியாற்றி வருகின்றன.
இவை எல்லாவற்றிலும் மேலாக டொனேமூர் அரசியல் அமைப்பினல் கிடைத்த ஒரளவு சுயாட்சியினலும் சர்வசன வாக்குரிமை முறையினலும் இந் நாட்டின் அரசியல் வாழ்க்கை டிலே ஓர் புதிய உணர்ச்சி ஓர் புதிய உத்வேகம் தோன்றி,
1. Marketing Department. 5 bogoju35é, Lo பகுதி எனறும் கூறுவர்.

Page 145
280 மத்திய அரசாங்கம்-அதன் அமைப்புக்கள்
யிருக்கிறது. முன்னர் எல்லாம் இருந்த ஆட்சிமுறை தகப்பன் பிள்ளைகளை வைத்து நடாத்திய பாலனமுறையில் இருந்தது. அக்காலத்தில் இருந்த பொதுசனங்கள் அரசியல் விடயங்களிற் சிரத்தை கொள்ளவில்லை. 'இராவணன் ஆண்டால் என்ன, இராமன் ஆண்டால் என்ன, கூடவந்த குரங்குகள் தாம் ஆண்டால் என்ன? என்ற பராமுக மனப்பான்மையுடன் அவர்கள் இருந்தனர். ஆனல் டொனேமூர் அரசியலமைப்பும் சர்வசன வாக்குரிமையும் அவர்களுக்கு ஒர் புதிய அந்தஸ்தைக் கொடுத்திருக்கின்றன. 'நாமும் இவ்வரசாங்கத்தின் அங்கம் தான்’ என்று பெருமித உணர்ச்சியுடன் அவர்கள் கூறும் காலம் இது. அவர்களின் உணர்ச்சியை "இடதுசாரிக் கட்சி யினர் தூண்டி விட்டிருக்கிருர்கள். பழைய கொள்கைகளையே தழுவுவாருக்கு, இன்றைய சாதாரண மனிதனின் கோரிக்கை கள் அதிர்ச்சியைக் கொடுக்கவும் ஏதுவாம். இந்தக் கோரிக்கை கள் புரட்சிகரமானவை என்று பழைமை தழுவோருக்குத் தோன்றவும் கூடும். ஆனல், இப்போது உருவாகிவரும் புதிய உணர்ச்சியிலும் ஒர் ஆபத்து இருக்கிறது என்பதனை மறுப்பு தற்கில்லை. அவ்வுணர்ச்சி சில சமயங்களில் சட்டத்தை மீறும் அளவுக்கு மக்களைத் தூண்டவும், தாம் கருதும் புதிய சகாப்தத்தை உதயமாக்குதற்கு பழையனவற்றை அவர்கள் நாசம் செய்யவும் ஏதுவாகவும் இருக்கும். ஆகவே இந்தப் புதிய உணர்ச்சியைநாம் கட்டுப்படுத்தி நல்ல வழியில் விடுதல் வேண் டும். எந்த விடயத்திலும் நிதானபுத் தி வேண்டும்; ஆறுதல் வேண்டும்; ஆராய்வு வேண்டும்; அப்படி யிருந்தால்தான் நாம் கடைத்தேறலாம். பொதுசனங்களைச் சரியான, நல்ல நெறியிற் கொண்டு செல்வதற்குத் தக்க தலைவர்கள் இருக்கவேண்டியது. அவசியம். ஆனல் சில சமயங்களில் தலைவர் என வெளிப் படுவோர் தலைமை தாங்கி நடத்துதற்குப் பதிலாகப் பொது சனங்கள் இடும் தாளத்துக்கு ஆடுபவராக மாறியும் விடுவர். ஓயாத, உறுதியான உழைப்பினுல்தான் தனக்கும் தன்னில் தங்கியிருப்பவர்களுக்கும் நல்வாழ்வுக்கு வேண்டிய நிலைமை களை ஆக்கிக்கொடுக்க முடியும் என்பதனைச் சாதாரண மனிதன் மனப்பூர்வமாக உணரவேண்டும். அவன் தனக்குச் சகல செளகரியங்களும் வேண்டும் என்று கேட்கவேண்டுமானுல் அச் செளகரியங்களைத் தனது உழைப்பால் ஆக்கவேண்டும். தொண்டு, பணி என்னும் இவைதான் நம்மவரின் லட்சியமாக இனி இருத்தல் வேண்டும். ‘என் கடன் பணிசெய்து கிடப்பதே என்று இந்நாட்டு மக்கள் அனைவரும் எண்ணிக் க்ருமம் ஆற்று த ல் வேண்டும். பணிதான் தேசீய வருவாயை விருத்திசெய்யும். தேசிய வருவாய் விருத்தியாக சாதாரண மனிதனின் வருவாயும்

மத்திய அரசாங்கம்-அதன் அமைப்புக்கள் 281
உயரும், இப்படியாகப் பணிசெய்வதை விடுத்து ‘இதுவரை கொள்ளையடித்தவரை நாம் இனிக்கொள்ளையடிப்போம்” என்ற ம ன ப் பா ன்  ைம யினை ச் சா தா ர ன ம னித ன் கொண் டு, சுலபமான முறையில் செல்வம் தேடப் புறப்படுவானே யானுல் அது சர்வ நாசத்துக்கே கொண்டுபோய்விடும். இந்தச் சின்னஞ்சிறிய இலங்கையிலே எத்தனை செல்வர்கள் இருக்கி ருர்கள்? அவர்களை எவ்வளவு காலத்துக்குக் கொள்ளை அடிக்க லாம் ? நாமோ கிடைத்தற்கரிய சுதந்திரத்தைப் புதிதாகப் பெற்ருக்கிருேம். அதனை நாம் அநுபவித்து அதன் உண்மை யான பயனை அடைய வேண்டுமானல் நாம் அனைவரும் சலியா துழைக்க வேண்டும். வயலில், தோட்டத்தில், சுரங்கத்தில், தொழிற்சாலையில், சுருங்கக் கூறுங்கால் நாம் எங்கெங்கே தொழிலாற்றவேண்டுமோ அங்கங்கே எல்லாம் திரிகரண சுத்தி யாகப் பணியாற்றவேண்டும். ஆனல் துர் அதிட்டவசமாக இந்த உணர்ச்சியை-தே சோத்தாரணத்துக்கான மனப்பான் மையைச்-சாதாரண மனிதன் இன்னும் கொள்ளவில்லை.
சோல்பரிக் கொமிஷன்
இலங்கை மக்களின் நலவுரிமைகளைப் பாதுகாக்கும் விடயத்திலும் அவற்றை விருத்தியாக்கும் விடயத்திலும் டொனேமூர்த் திட்டத்தால் அதிக பயன் கிடைத்தது என்பது உண்மையேயாயினும் அத்திட்டத்திற் காணப்பட்ட நூாந அம்சங்களையிட்டு மக்கள் அதிருப்தி கொண்டனர். இதனை யுணர்ந்த பிரித்தானிய அரசாங்கம் 1943-ம் ஆண்டு மே மாதம் 26-ம் திகதி ஓர் பிரகடனத்தை வெளியிட்டது. இலங்கையில் அநுட்டானத்தில் இருந்த டொனேமூர் அரசியல் திட்டம் திருத்தியமைக்கப்படும் என்றும், அப்படியான திருத்தியமைத் தல், முடி (பிரித்தானிய அரசாங்கத்தின்)யின் கீழ் சிவில் பரிபாலன விடயமான சகல உள்நாட்டு விடயங்களையும் பூரண பொறுப்பேற்று இலங்கை நிருவகிக்க அதற்குப் பொறுப் பாட்சி வழங்குவதை நோக்கமாகக் கொள்ளும் என்றும் அப் பிரகடனத்திற் குறிப்பிடப்பட்டது. உள்நாட்டு விடயங்களில் பூரண பொறுப்பாட்சி வழங்கப்பட்டாலும் அந்நிய நாடுக ளுடனும் பிரித்தானியப் பொதுநலவமைப்பில் உள் ள நாடு களுடனும் இலங்கை கொள்ளவிருக்கும் தொடர்பு பிரித் தானிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்கும் மேற்பார்வைக் கும் அடங்கியதாக இருக்கும் என்றும் அப் பிரகடனம் தெரி வித்தது. இப் பிரகடனத்தின்படி கருமம் ஆற்றும் பொருட்டு
1. British Commonwealth, பிரித்தானிய சாம்ராச்சியம் என்றும் கூறுவர்.

Page 146
3. 82 மத்திய அரசாங்கம்-அதன் அமைப்புக்கள்
சோல்பரிப் பிரபு என்னும் ஆங்கிலப் பிரமுகர் தலைமையிலே ஒர் கொ மிசன் நியமிக்கப்பட்டது. அதனை சோல்பரிக் கொமிசன் Gi6 1i. மேலே கூறிய பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட லட்சியங்களை என்ன என்ன விதத்தில் அடையலாம் என்பதனை விசாரணை செய்து அறிக்கை வெளியிடவேண்டும் என்று சோல்பரி கொ மிசனுக்கு கற்பிக்கப்பட்டது. அதன்படி அக் கொ மிசன் விசாரணை புரிந்து தன் சிபாரிசுகளைக் கொண்ட ஒரறிக்கையைச் சமர்ப்பிக்க அவ்வறிக்கை 1945-ம் ஆண்டு பிரசுரிக்கப்பட்டது. டொனுேமூர் அரசியல் அமைப்பைப்பற்றிய அரியவிபரமும், இலங்கை அரசியல் நிலைமையுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகள் பற்றிய விபரமும், இந்த அறிக்கையில் வெளி பிடப்பட்டன. எனவே அதனை மாணவர்களனைவரும் பெற் றுக் கட்டாயம் படிக்கவேண்டும். சோல்பரி கொ மிசன் தனது அறிக்கையிற் காட்டிய பிரதானமான சிபாரிசுகளின் சாரம் கீழே தரப்பட்டிருக்கிறது:-
1 வாக்குரிமை
டொனுேமூர் அரசியற்றிட்டத்திலே சர்வசன வாக்குரிமை? முறை இருந்தது. அந்த முறையில் மாற்றம் இல்லாது அப் படியே இருக்கவேண்டும் என்று சோல்பரி விசாரணைக் குழு சிபாரிசு செய்தது. இவ் விடயமாக அக்குழு கூறியன ஈண்டுக் குறிப்பிடத்தக்கன: சர்வசன வாக்குரிமையைச் சில சமயங் களில் துர்ப் பிரயோகம் செய்திருந்த போதிலும், 1931-ம் ஆண்டில் இவ்வுரிமை வழங்கப்பட்டபின் சமுதாயச் சீர்திருத் தம் விடயமாக நாட்டிலே நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக் கிறது. அந்த முன்னேற்றம் சர்வசன வாக்குரிமை முறையை வழங்கியது நீதிதான் என்பதனை நன்கு வலியுறுத்திக் காட்டு கிறது. வாக்குரிமை முறையைக் கட்டுப்படுத்தியிருந்தால் வறிய மக்களது தேவைகளும் அபிலாஷைகளும் இதுவரை கவனிக்கப்பட்டதுபோலக் கவனிக்கப்பட்டிருக்குமோ என்பது ஆசங்கைக்கிடமான விடயம்’ என்று சோல் பரிக் குழுவினர் தமது அறிக்கையிற் குறிப்பிட்டனர். பிரதேசவாரியாகப் பிரதிநிதி களை த் தெரிவு செய்யும் முறை குறித்த சில திருத்தங்களுடன் முன்போல இருக்கவேண்டும் என்றும் கொ மிசன் சிபாரிசு செய்தது. பிரதேசவாரியாகப் பிரதிநி கள் தெரிந்தெடுக்கப்படும் முறையில், சிங்களர்தான் பெரும்
1. சோல்பரி பிரபு: இலங்கை டொமினியன அல்லது சமவரசு நிலைமை அடைந்த பின், இரண்டாவது, மகாதேசாதிபதியாக 1949-ம் ஆண்டு ஜூலை மாதம் 6-ம் திகதி கடமையேற்றர் என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.
2. Universal Franchies.

2த்திய அரசாங்கம்-அதன் அமைப்புக்கள் 283
பான்மையான தானங்களைக் கைப்பற்றி விடுவர் என்பதனேயும் குழுவினர் சரியாகக் கண்டனர். முந்திய டொனேமூர் அரசியல் அமைப்பில் இருந்த 50 தானங்களில் 39 தானங்களைச் சிங்களரே பெற முடிந்தது; ஆகவே மற்றும் சாகியத்தார் முன்னரிலும் பார்க்கக்கூடிய தானங்களைப் பெறுதற்காகப் பிரதேசவாரிப் பிரதிநிதித் துவ முறையில், சோல்பரிக்குழுவினர் சில திருத்தங்களைச் சிபாரிசு செய்தனர். 75,000 மக்களுக்கு ஒர் பிரதிநிதியுடன் 1,000 சதுர மைல் பிரதேசத்துக்கும் ஒர் பிரதி நிதியும் இருக்கவேண்டும் என்று அவர்கள் சிபாரிசு செய்தனர். இன்னும், குறித்த ஒர் இடத்திலேயுள்ள மக்களில் ஓர் தொகை யினர் அங்குள்ள பெரும்பான்மையினருடன் சமூகநல ஒற்றுமைப் பாடுடையவராக இருந்தும் வேறு விடயங்களில் வித்தியாச முடையோராயிருப்பின் அவர்களுக்கும் அரசியல் மன்றத்திலே பிரதிநிதித்துவம் அளிக்கவேண்டும் என்று விதித் தனர். இந்த முறையினல் சிறுபான்மையினர் முந்தியிலும் பார்க்கக்கூடிய தொகைப் பிரதிநிதிகளை அரசியல் மன்றத் துக்கு அனுப்பமுடியும். இந்த முறையை அநுட்டித்தால் 101 அங்கத்தவர்களைக் கொண்ட மன்றத்தில் பெரும்பான்மை ச் சமூகப் பிரதிநிதிகள் 58 பேரும் நியமனப் பிரதிநிதிகள் உட்படச் சிறுபான்மையினர் பிரதிநிதிகள் 43 பேரும் இருப்பர் எனக் கருதப்பட்டது.
வகுப்புவாத முறையில் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்தல் தேசத்துக்குக் கெடுதி விளைக்க ஏதுவாகும் என்பதை சோல்பரி கொ மிசன் உணர்ந்தது. வகுப்புப் பிணக்கினல் ஏற்படும் சங்கட நிலையில் இருந்து தப்புவதற்கு வகுப்புவாரிப் பிரதி நிதித்துவமுறை சுலபமான மார்க்கமாகத் தோற்றியபோதி லும் கொ மிசன் தக்க காரணத்தைக் கொண்டு அம் முறையை அங்கீகரிக்கவில்லை. வகுப்பு வேற்றுமை ஒழிந்தால்தான் நாட் டுக்கு நன்மை விளையும் என்பதனை உணர்ந்த அவர்கள் பெரும் பான்மையினரின் உரிமைகளுக்கும் அந்தஸ்துக்கும் பாதகம் விளைக் காத முறையில் சிறுபான்மையினரின் பிரதிநிதித்து வத்தை அதிகரிக்க எத்தனித்தனர். வகுப்புவாதத்தை ஒழிக்க வேண்டுமென்ற நோக்கத்தினலேயே அவர்கள் சமபலப் பிரதி நிதித்துவமுறை" என்று சிலர் கூறியமுறையை ஏற்க மறுத் தனர். இயற்கைக்கு விரோதமான கருமங்களால் ‘பெரும் பான்மைச் சமூகத்தாரைச் சிறுபான்மையினராக்கும் முறை அநியாயம் மாத்திரமன்றி பிரதிகூலமடைவதற்கு மேது வாகும்’ என்றும் அவர்கள் உணர்ந்தனர். அரசாங்கத்தின் நோக்கம் தேசபரிபாலனமே. அப் பரிபாலனக் கருமத்தில்
J. Balanced Representation.

Page 147
284 மத்திய அரசாங்கம்-அதன் அமைப்புக்கள்
* சம பலங்களையும் புகுத்திவிட்டால், அரசாங்கங்கள் அடிக் கடி மாறி ப யன்றரா தொழியவும் கூடும். தேச பரிபாலனத்தை நிருவகிப்பதற்கான உரிமைகளை யாரோ சிலரிடம் ஒப்புவிக்க வேண்டும் என்பதும், அதிகாரத்தைக் கையேற்கும் அவர்கள் அவ்வதிகாரத்தைத் துர்ப்பிரயோகப்படுத்திப் பிழையான வழியில் அரசாங்கத்தை நடத்துவதைத் தடுப்பதற்குச் சில தடைகள் இருக்கவேண்டும் என்பதும் உண்மையே; ஆணுல் உறுதியான அரசாங்கம் இருப்பதற்கு இடையூறுகளும் தடை களும் இருக்குமானல் அரசியல் என்பதன் நோக்கமே பங்க மடைந்துவிடும். ஆகவே தடைகளும், மேலே கூறிய சம பலக் கொள்கையும் கண்டபடி இருக்கக்கூடாது.
1 அரசியற் சாதனம்
ஒர் மேற் சபையும் கீழ்ச்சபையும் கொண்டதாக அரசியற் சாதனம் இருக்க வேண்டும் என்று சோல் பரிக் குழுவினர் சிபாரிசு செய்தனர். செனேற் என வழங்கப்படும் மேற்சபை யிலே 30 அங்கத்தவர்களும், பிரதிநிதிகள் சபை? என வழங்கப் படும் கீழச்சபையிலே 101 அங்கத்தவர்களும் இருக்க வேண்டும் என்றும் அவர்களில் அறுவர் தேசாதிபதியால் நியமிக்கப் படல் வேண்டும் என்றும் பிரதிநிதிகள் சபை யங்கத்தவர் களைப் பாராளுமன்ற அங்கத்தவர்கள் என வழங்கவேண்டும் என்றும் சோல் பரிச் சபையினர் சிபாரிசு செய்தனர்.
பிரதிநிதிகள்சபை தான் அதிகாரத்தின் ஊற்று, தோற்று வாய். அதாவது சகல அதி கா ரங்களும் அதிலிருந்தே பிறக்கும். அரசாங்கம் தனக்குரிய கருமத்தை நியதிப்படி ஆற்றுதற்கான சக்தியை அளிப்பதும் அதுவே. தேசத்துக் குரிய சட்டங்கள் யாவும் பிரதிநிதிகள் சபையிலேயே நிர்ண யிக்கப்பட்டு உருவாதல் வேண்டும். பணம்பற்றிய அதிகார மும் அதனிடமே உள்ளது. அதன் ஆயுட்காலம்-அதாவது அது கடமை யாற்றவேண்டிய காலம்-5 ஆண்டு ஆணுல் ஏதும் காரணம் பற்றி இக் காலவெல்லைக்குள் அது கலைக்கப்பட G6) | T | L) ,
செனேற் அல்லது மேற் சபை பிரதிநிதிகள் சபையிலும் பார்க்கக் குறைந்த தொகை அங்கத்தவர்களைக் கொண்டது. பொதுசன உணர்ச்சியை ஒட்டியே கருமங்களை ஆற்றவேண் டும் என்ற மனப்பான்மை பிரதிநிதிகள் சபைக்கு இருப்பது போல செனேற்றுக்கு அவ்வளவாக இல்லை என்று கூற லாம். பிரச்சினைகளைக் காய்தல் உவத்தல் இன்றிச் சாந்தமாக l. Senate. mev uun 2. House of Representatives.

மத்திய அரசாங்கம்-அதன் அமைப்புக்கள் 285
விவாதித்து முடிவு காண்பதற்கு செனேற் தக்க இடமாகும். பொதுசன அபிப்பிராயம் எப்படி இருக்கிறது என்ப திலேயே கண்ணும் கருத்துமாயிருந்து அடுத்த தேர்தலுக்கு அடிகோலும் பிரதிநிதிகள் சபை அங்கத்தவர்களைப் போன்ற வர்களல்லர் செனேற் அங்கத்தவர்கள்.
* மகத்தான பொதுசன சேவை செய்தவர்கள் அல்லது கல்வி, சட்டம், வைத்தியம், விஞ்ஞானம், பொறி இயற்றுறை, வர்த்தகம், கைத்தொழில், விவசாயம் ஆதியாம் துறைகள் எதிலும் பிரபல்யம் அடைந்துள்ளவர்களிலிருந்து’ தேசாதிபதி 15 பேரை செனேற் அங்கத்தவர்களாக நியமிப்பார். இப்படிப்பட்டவர்கள் பரந்த அநுபவமும் ஆழ்ந்த அறிவும் பெற்றவர்களானமையின் பொதுவாழ்க்கை யின் பல்வேறு அம்சங்களுடன் தொடர்பு பற்றிய மசோதாக் களே ஆலோசிக்கும்போது அவர்களது அறிவும் அநுபவமும் பெருந்துணைச் செய்யும். பிரிதிநிதிகள் சபையிலே அநுபவம் அற்றவர்கள் இருத்தலும் கூடும். அவர்கள் தமக்கிருக்கும் மிதமிஞ்சிய உற்சாகத்தினுல் நடைமுறையில் எடுத்தாள்வதற் குச் சிரமமான திட்டங்களை வகுக்கவும் கூடும். அப்படியான சந்தர்ப்பங்கள் நேரும் காலத்திலே பழுத்த அநுபவசாலிக ளான செனேற் சபையினர் அத்திட்டங்களில் அநுபவ சாத் திய மாகா அம்சங்களை நீக்கி அல்லது மாற்றி அவற்றை அநுபவ சாத்தியமாக்க உதவி செய்வர். தேசாதிபதி நியமிக்கும் 15 பேரை ஒழிந்த மீதி 15 பேரையும் பரிமாணப் பிரநிதிதித்துவ முறை என்றும் அளவுப் பிரதிநிதித்துவ முறை என்றும் வழங்கப் படும் ஒருமுறையில் பிரதிநிதிகள் சபை தெரிவு செய்யும். இந்த முறையினைச் சிறிது விளக்குவாம். பிரதிநிதிகள் சபை யிலே 101 அங்கத்தவர்கள் உளர். இவர்களுக்குப் பொதுவாக 15 பேர் செனேற் சபைக் குத் தெரிவு செய்யப்படல் வேண்டும். இதனைப் பங்கு முறை? என்பர். அதாவது ஒரு பிரதி நிதியைத் தெரிவுசெய்தற்கு எத்தனை பங்கினர் வாக்களிக்க வேண்டும் என்பதை விதிக்கும் முறையே அது. பிரதி நிதிகள் சபை அங்கத்தவர்களின் தொகையை (101), தெரிவு செய்யப்படவேண்டிய அங்கத்தவர்கள் தொகை (15) யுடன் ஒன்றைக் கூட்டி வந்த தொகையாற் பிரித்து, வரும் ஈவுடன் ஒன்றைக் கூட்ட வரும் தொகைதான் பங்குத் தொகை. அதாவது அத் தொகையங்கத்தவர்களைச் செனேற் சபைக்குத் தெரிவு செய்யலாம். 器=6·3+1=7. ஆகவே செனேற் சபைக்கு ஒரு அங்கத்தவரைத் தெரிதற்கு 7 பிரதிநிதிகள் சபை அங்கத்தவர் போதுமானது. இந்த முறை இருப்பதனல்
1. Proportional Representation.
2. Quota System.

Page 148
286 மத்திய அரசாங்கம்-அதன் அமைப்புக்கள
சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் செனேற் சபை யங்கத்தவர்களாகத் தெரிவு செய்யப்படக்கூடிய சந்தர்ப்பம் இருக்கிறது. நேரடியான வாக்குச் சம்மதம் அளிக்கும் முறையில் தெரிவு நடப்பதாயின் சிறுபான்மையினர் செனேற் சபை யங்கத்தவர்களாகத் தெரிவு செய்யப்படுதல் இயலாத கருமமாயும் இருக்கும்.
செனேற் சபையின் பயன்தான் என்ன? தன்னிடம் சமர்ப் பிக்கப்படும் பிரேரணைகளை ஆர அமர ஆலோசித்து ஏற்றவாறு செய்தலே செனேற் சபையின் கடமை. ஒர் சட்டம் நிறை வேறுவதை அது ஒரு மாதத்துக்குத் தாமதப்படுத்தலாம். அதற்கு மிஞ்சித் தாமதப்படுத்த அதற்கு அதிகாரம் இல்லை அது ஒர் மசோதாவை நிராகரித்துவிட அம் மசோதா அடுத் தடுத்து இரண்டுமுறை பிரதிநிதிகள் சபையில் மீண்டும் நிறை வேறுமாயின் அது சட்டபூர்வமாக நிறைவேறியதெனக் கருதப் படும். நிதி பற்றிய எந்த மசோதாவையேனும் நிராககரிக்க செனேற்சபைக்கு அதிகாரம் இல்லை. வேண்டுமானல் அம் மசோதா சட்டபூர்வமாவதை ஒரு மாதக் காலத்துக்குத் தாமதப்படுத்தலாம். இவ்வாறு தாமதப்படுத்தலும், ஒர் பக்கமாக நோக்குமிடத்து, நன்மையானது என்று கூறலாம். ஒரு மசோதா பற்றி ஏற்படும் மனக்கொதிப்புக்களை ஆற்றவும், மனக் கிளர்ச்சியை அடக்கவும், இந்த ஒரு மாத காலம் உதவக் கூடும் செனேற் சபை பொதுசனங்களின் பிரதிநிதித்துவத் தாபனமாய், அவர்களுக்குப் பொறுப்பாளியாக வில்லா திருப் பதனல் பிரதிநிதிகள் சபையைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அதற்கு இல்லை என்பது இதுவரை கூறியதிலிருந்து புலணுகும். கீழ்சசபைக்குப் பரிபாலனக் கருமங்களில், வேண்டிய நேரங் களில் தக்க ஆலோசனை சொல்லிக் கொடுப்பதில்தான் செனேற் சபையின் பயன் தங்கியிருக்கிறது.
III. நிருவாகசாதனம்
சோல் பரிக் கொ மிசன் அமைத்துள்ள திட்டப்படி பிரதம மந்திரியும் ஒர் மந்திரசபையுமே நாட்டின் நிருவாக சாதன மாகும்.
பிரதிநிதிகள் சபைக்கான அங்கத்தவர்கள் தெரிவு முடிந்த பின், எவர் அவ்வங்கத்தவர்கள் பெரும்பாலோரின் ஆதரவைப் பெற்றிருக்கிருர் என்று தேசாதிபதிக்குத் தோற்றுகிறதோ அவரை அழைத்துப் பிரதம மந்திரியாக நியமிப்பார். இதன் பின் பிரதம மந்திரியானவர் பிரதிநிதிகள் சபை நிறைவேற்றும் பிரேரணைகளைப் பயன்றரு விதத்தில் அநுட்டிப்பதற்கு தமது கோஷ்டியில் யார் யாரைச் சேர்க்க வேண்டும் என்ற

மத்திய அரசாங்கம்-அதன் அமைப்புக்கள் 287
ஆவலியைத் தேசாதிபதியிடம் சமர்ப்பிப்பர்; தெளிவாக இதனைக் கூறுங்கால், பிரதம மந்திரி தமது சகபாடிகளான ஏனைய மந்திரிமாராக யார் யாரை நியமிக்கவேண்டும் என் பதைத் தேசாதிபதிக்குச் சிபாரிசு செய்வார். அவ்வாறு சிபாரிசு செய்யப்பட்ட பெயர்களைத் தேசாதிபதி அங்கீகரித்த தும் அவர்கள் மந்திரிமாரா கி மந்திர சபையில் அங்கத்துவம் பெறுவர். பிரதம மந்திரியும் மந்திர சபையினரும் ஒருமித்தும் தனித்தும் பிரதிநிதிகள் சபைக்குப் பொறுப்பாளிகளாவர். அவர்களைப் பதவியிலிருந்து நீக்கு தற்குப் பிரதிநிதிகள் சபைக்கு அதிகாரம் உண்டு. ஒர் கோஷ்டி என்ற தன்மையில் கருமம் ஆற்றவும், ஆற்றும் கருமங்களுக்குப் பொறுப்பாக இருக் கவும் மந்திர சபையில் உள்ளார் குறித்த ஒர் வேலைத்திட்டத் தில் உடன்பாடு உடையவராக இருத்தல் வேண்டும் , அத்து டன் அவர்கள் பரிபாலனக் கொள்கையிலும் உடன்பாடுடைய வராக இருத்தல் வேண்டும். இக் கொள்கை அரசாங்கத்தின் ஒர் பகுதியை மாத்திர மன்றி. முழு அரசாங்கக் கருமத்தை யுமே தழுவியதாக இருத்தல் வேண்டும். ஆகவே, மந்திர சபையில் உள்ளார் தம் மனம்போனபடி தனித்தனி கருமம் ஆற்ருது அனைவரும் ஒருங்குசேர்ந்து ஒத்த மனப்பான்மையின ராக நாட்டின் அபிவிருத்திக்கான ஒரோ வழித்திட்டத்தை வகுக்கவேண்டும். டொனுேமூர் அரசியலமைப்பில் இருந்த மந்திரிகள் சபையிலே இவ்வொரோ வழித்திட்டம் இருக்க வில்லை. அப்போதிருந்த நிருவாக சபைமுறை மந்திரிகளுக் கிடையே போட்டி உணர்சசியை உண்டாக்கியது. மந்திரி மார் தத்தமக்கு விடப்பட்டுள்ள பகுதிகள் விடயத்தில் மாத் திரம் தேசத்தில் அபிவிருத்தி உண்டாக் கற்காகத் தத்த மக் கிடையே எதிரிடை கொண்டிருந்தனர். பரிபாலனக் கொள் கையினை ஒரோ வழிப்படுத்தற்கான முயற்சி மந்திரிமார்க் கிடையே அப்போது இருக்கவில்லை. ஆனல் சோல் பரி அர சியலமைப்பின்படி ஏற்பட்ட மந்திர சபைப் பரிபாலன முறை இதற்கு முற்றிலும் வித்தியாசமானது. அதிலே முந்தியிருந்த நூத அம்சம் இல்லை. அரசாங்கத்தின் ஒவ்வோர் பகுதியையும் விருத்தி செய்தற்கான திட்டத்தைத் தனித்தனியாக நினைக் காம ல் முழு அரசாங்கத்துடனும் சம்பந்தப்படுத்திக் கொண்டு கருமம் ஆற்றுதல் வேண்டும். அரசாங்கம் என்ற ரதத்தைச் செவ்வனே இழுப்பதற்கு மந்திரிமார் என்ற குதிரைகள் பூட்டப் பட்டுள்ளன. இக் குதிரைகள் தனித்தனியாக ஒவ்வொரு பக்கத் துக்கு இழுத்தால் ரதம் தான் போக வேண்டிய இடத்துக்குப் போக மாட்டாது. ஆனல் அந்தக் குதிரைகள் அனைத்தும் ஒரே நோக்குடன் ஒரோ வழிப்படி இழுத்தால் ரதம் மிகவும் அழகாக

Page 149
288 மத்திய அரசாங்கம்-அதன் அமைப்புக்கள்
நகர்ந்து தான் செல்லவேண்டிய இடத்தை அடையும். மந்திரி மார் ஒத்த மனப்பான்மையினராக கோஷ்டியாக கருமம் ஆற்றவேண்டும் என்ற அவசியம் இருப்பதால், ஓர் பொது நலக் கொள்கையினையே அவர்கள் ஆலோசித்து வகுத்து அதன்படி கருமம் ஆற்ற அவர்கள் நிர்ப்பந்திக்கப்படுவர். மந்திர சபையிலே கோஷ்டி மனப்பான்மை இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லாவிட்டால் மந்திரிமார் ஒவ்வொருவரும் தம் தம் மனம் போனவாறு கருமம் ஆற்றவும் தூண்டப்படுவர். கோஷ்டி முறை இருப்பதால் மந்திரிமார் தனித்தனியாகக் கொள்கை வகுக்காது தாம் எல்லாரும் ஒத்துக்கொள்ளும் ஒரே கொள்கைப்படியே நடப்பர். இவ்வாரு ன கோஷ்டி மனப்பான்மையும் கூட்டுச் செயலும் இருப்பது நாட்டுக் கேற்ற கொள்கைகள் வகுக்கப்படுதற்கும் மக்கள் அங்கீகரிக்கக் கூடிய திட்டத்தை ஆதாரமாகக் கொள்ளும் அரசியற் கட்சிகள் உருவாதற்கும் எதுவாகும்.
மந்திர சபை 10 மந்திரிமாரைக் கொண்டிருக்கவேண்டும் என விதிக்கப்பட்டது. பிரதம மந்திரி2யே வெளிநாட்டு விவகாரப்பகுதிக்குப் பொறுப்பாக இருப்பர். டொனுேமூர் அரசியல் அமைப்பில் இருந்த நிதிக்காரியதரிசி, சட்டக்காரிய தரிசி என்ற அரசதிகாரிகளுக்குப் பதிலாக, சோல்பரி அரசிய லமைப்பில் நிதிமந்திரி நீதிமந்திரி என்பவர்கள் முறையே உளர். நிதிமந்திரியே அரசாங்க உத்தியோகத்தரது அன்ரு ட உத்தியோகக் கருமங்களும் ஒழுங்குகளும் சம்பந்தப்பட்ட வரை அவர்களுக்கு அதிகாரியாக இருப்பர். நிதிமந்திரி, நீதிமந்திரி என்பவர்களைவிட டொனுேமூர் அரசியல் அமைப் பில் இருந்த படியே ஏழு மந்திரிமார் இருக்கலாம் என்று சோல்பரி விசாரணைச் சபை சிபாரிசு செய்தது. இவ்வாருக இலங்கையின் உள்நாட்டு விவகாரங்கள் அனைத்துக்கும் இலங்கை மந்திரிமாரே பொறுப்பாளிகளாக்கப்பட்டனர். இலங்கையில் மற்றவர்கள் வந்து குடியேறுதல், இங்குள்ள குடிசன அமைப்பு என்னும் விடயங்களில் ஏதும் தீர்மானம் செய்ய இலங்கையருக்கு முந்தி அதிகாரம் இருக்கவில்லை. ஆனல் சோல்பரி அரசியலமைப்பில் இவ்விடயங்கள் தாமும் இந்நாட்டு மந்ரிதிமார் பொறுப்பில் விடப்பட்டன. இன்னும், இந்நாட்டின் இராணுவப் பாதுகாப்புப் பிரச்சினைகள் எமக்கு மாத்திரம் அன்றி பிரித்தானியப் பொநலவமைப்பு ழுமு வதுக்குமே பிரதானமாகவுள்ளன. எனவே பிரித்தானிய அரசாங்கம் இத்தீவினதும் பொதுநல வமைப்பினதும் பாது
1. இத்தொகை பின்னர் 14 ஆக்கப்பட்டது. இப்போது (1958 இல்) 15 பேர் மந்திரிமாராக இருக்கின்றனர்.
2. பிரதமமந்திரியைப் பிரதமர் என்றும் அழைப்பர்.

மத்திய அரசாங்கம்-அதன் அமைப்புக்கள் 289
காப்புக்குத் தேவையான இராணுவத்தாபனங்களையும் தள பாடங்களையும் வழங்க, நிறுவ, பேண, பாதுகாக்க அவற்றுக்கு வேண்டிய உத்தியோகத்தர்களையும் ஏனையோரையும் நியமிக்க வும் மேற்பார்வை செய்யவுமான அதிகாரத்தையும் கட்டுப் பாட்டையும் தன் பொறுப்பிலேயே வைத்துக்கொள்ள விதிக் கப்பட்டது. மேலே சொல்லிய பாதுகாப்புக் கருமங்களுக் கான செலவை இலங்கை அரசாங்கமும் பிரித்தானிய அரசாங் கமும் தாம் பேசி முடிவு செய்து கொண்டுள்ள விகிதாசாரப் படி ஏற்றுக்கொள்ளும்.
IV சிறுபான்மையினர் எம் நாட்டினைப்போன்ற நாடுகளிலே சனநாயக முறை களைக் கைக்கொள்ளும்போது பெரும்பான்மைச் சாகியத்தார் கையிலேயே அரசியல் அதிகாரம் என்னும் ஆயுதம் தானுகச் சேருகிறது. இதன் பயணுகச் சிறுபான்மையினர் தாம் பெரும் பான்மையினர்க்குக் கீழ் அரசியல் அடிமைகளாய் வர நேருமோ என்று அஞ்சுவதும் இயல்பே. பெரும்பான்மைச் சாகியத்தார் தாம் ஆற்றும் கருமங்களினல் சிறுபான்மையினரின் நம்பிக்கை யையும் விசுவாசத்தையும் பெறும் வரை அச்சிறுபான்மையின ருக்குப் பாதுகாப்புக்கள் இன்றியமையாதிருத்தல் வேண்டும். பொதுசன ஆட்சி என்பது உண்மையில் நிலவவேண்டுமானுல் பெரும்பான்மைச் சாகியத்தார்க்கே அரசியல் அதிகாரத்தை வழங்கவேண்டும் என்று சோல் பரி விசாரணைச் சபையினர் கண்டனர். அத்துடன் நாட்டிலேயுள்ள சகல சமூகத்தவருக்கும் பங்கு அளிக்கக்கூடிய அரசியல் இருக்க வேண்டுமெனில் சிறு பான்மையினருக்குப் பாதுகாப்பளிக்க வேண்டியது பிரதானம் என்பதனையும் உணர்ந்தனர். எனவே, அவர்கள் சிறுபான்மை யினரின் நலத்துக்காகச் சில பாதுகாப்புக்கள் இருக்க வேண்டு மெனச் சிபாரிசு செய்தனர்: அவற்றுட் சில வருமாறு:- 1. இரண்டாவது அரசியல் மன்றம்-செனேற்-நிறுவுதல். 2. சிறுபான்மையினரின் நியாயமான உரிமைகளுக்குப் பாதகமாகவுள்ள மசோதாக்களுக்கும், இலங்கைப் பாராளு மன்றத்திற்குள்ளும் வெளியும் தேசமெங்கும் எதிர்ப்பை உண் டாக்கும் மசோதாக்களுக்கும் அங்கீகாரம் அளிக்கக்கூடாது என்று தேசாதிபதி மன்னர் பிரானல் அதிகாரம் அளிக்கப் பட்டிருத்தல்.
3. அரசியல்வாதிகளின் செல்வாக்குக் கப்பாற்பட்டு எவ் வாற்ருனும் அவர்களது கட்டுப்பாட்டுக்குள் இராத அரசாங்க சேவைக் கொமிசன் என்ற ஒன்றை நிறுவுதல். இந்தக் கொமி சனே அரசாங்க உத்தியோகத்தர் நியமனம் பற்றிய சிபாரிசு களைத் தேசாதிபதிக்குச் செய்யும்.
l. Public Service Commission.
3248-L

Page 150
290 மத்திய அரசாங்கம்-அதன் அமைப்புக்கள்
தேசாதிபதியின் அதிகாரங்கள்
தங்களுடைய சிபாரிசின் படி தேசாதிபதியானவர் பழைய குடியேற்ற நாட்டுமுறைத் தேசாதிபதியின் நிலைமைக்கும் *அரசியல் வரம்பு’ டைய தேசாதிபதியின் நிலைமைக்குமிடை யில் உள்ளவராய் இருத்தல் வேண்டும் என்று டொனுெமூர் விசாரணைச் சபையினர் விரும்பினர். எனவே அவர்கள் மாட்சிமை தங்கிய மன்னர் பிரானது திருவுளச்சம்மதத்துக்கு இலங்கைத் தேசாதிபதி சமர்ப்பிக்கவேண்டிய 17 வகை மசோ தாக்களை விதித்தனர். ஆனல் சோல்பரி கொ மிசன் தேசாதி பதிக்கிருந்த விசேட அதிகாரத்தை 17 வித மசோதாக்களி லிருந்து 7 வித மசோதாக்கள் விடயத்திலேயே பிரயோகிக்க லாம் என்று விதித்தது. இராணுவப் பாதுகாப்பு, வெளிநாட்டு விவகாரம், நாணயம், வங்கி 'நோட்டுகள்’ எனப்படும் கட தாசி நாணயம் வெளியிடல் என்னும் இன்னேரன்னவை பற்றிய விடயங்களில் தான் தேசாதிபதி தம் விசேட அதிகாரத்தைப் பிரயோகிக்கலாம் என்று சோல்பரி கொ மிசன் விதித்தது. (இது பற்றிய விபரங்களை குறித்த கொ மிசன் அறிக்கையின் 332-ம் பிரிவிற் பார்க்கவும்) அரசியலமைப்பை நடத்துவதில் தேசாதி பதி நேரடியாகத் தலையிடலாகிய முறையைக் குறைத்து மந்திரி மாரது பொறுப்பிலேயே அதிக விடயங்கள் பொறுப்பிக் கப்பட்டன என்பதனை இதிலிருந்து அறியலாகும். இவ்வாருக ஏற்பட்ட அரசியற்றிருத்தங்களின் பயனகத் தேசாதிபதியான வர் அரசாங்கப் பரிபாலனச் சிக்கல்களில் இருந்து படிப்படி யாக விலகி இங்கிலாந்திலே மன்னரானவர் கட்சி பேதங் களுக்கப்பாற்பட்டு வகிக்கும் நிலைமையை இங்கு வகிக்கிருர்.
டொமினியன் நாடுகளிலே மகாதேசாதிபதி?கள் எந்த விதமான அந்தஸ்தினை வகிக்கின்றனரோ அந்த விதமான அந்த ஸ்தே சோல்பரி அரசியலமைப்பிலும் இலங்கைத் தேசாதி பதிக்கிருந்தது என்று கூறலாம். தமது மந்திரிமாரின்அவர்களிலும் விசேடமாகப் பிரதம மந்திரியின்-ஆலோசனைப் படி அவர் நடக்கவேண்டும்; பாராளுமன்றத்தைக் கூட்டுதல், கலைத்தல், மந்திரிமாரை நியமித்தல், அவர்களைப் பதவியி லிருந்தும் நீக்கல் என்னும் விடயங்களில் இங்கிலாந்து மன்ன ரான வர் எந்த விதமான சம்பிரதாயங்கள்-வழக்குகளைகைக்கொள்ளுகின்றரோ அந்தவிதமான சம்பிரதாயங்கள் வழக்குகளைக் கைக்கொள்ளவேண்டும் என்றும் இலங்கைத் தேசாதிபதி எதிர்பார்க்கப்பட்டார். இவ்வாருக இராணுவப் பாதுகாப்பு, வெளிநாட்டு விவகாரம் என்ற விடயங்களை விட
1. Dominions: éF LC)ő) | Udrá5Gö7. 2. Governor-General.

மத்திய அரசாங்கம்-அதன் அமைப்புக்கள் 291
இலங்கையின் ஏனைய பரிபாலனக் கருமங்கள் யாவும் தேசாதி பதியின் அதிகாரத்திலிருந்து தேச மக்கள் மீது பொறுப்பிக்கப் பட்டன. ஆகவே குடியேற்ற நாட்டந்த ஸ்திலிருந்து அந்நிய நாட்டு விவகாரம் இராணுவப் பாதுகாப்பு என்னும் விடயங் கள் ஒழிந்த ஏனைய சகல விடயங்களிலும் சுயராச்சியம் வகிக் கும் நாடாக இலங்கை மாறியது. வெளிநாட்டு விவகாரத்தில் தானும் பிரித்தானிய அரசாங்கம் ஏதும் கருமம் ஆற்றும் போது இலங்கை அரசாங்கத்தையும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டது. இலங்கைப் பிரதம மந்திரியே இலங்கையின் இராணுவப் பாதுகாப்பு, வெளிநாட்டு விவகாரங்கள் என்னுமிவற்றைக் கவனிப்பவராக இருப்பர். உலக அமைப்பிலே இலங்கை ஒர் மிகவும் முக்கியமான தானத்தை வகிக்கிறது. அதன் பாதுகாப்பு பொதுநல வமைப்பைச் சேர்ந்த ஏனைய நாடுகளின் பாதுகாப்புக்கு இன்றி யமையாதது. எனவே இந்நாட்டின் பாதுகாப்பு விடயமாக பிரித்தானிய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துடன் கலந்தா லோசித்துக் கருமம் ஆற்றவேண்டும் என்று விதிக்கப்பட்டதும் சரிபோலவே தோன்றுகிறது. பாதுகாப்பு விடயமான அதி காரத்தைப் பிரித்தானிய அரசாங்கத்திடம் விடுத்ததைச் சிலர் ஆட்சேபிக்கவும் கூடும். ஆனல் இந்தக் காலத்திலேயுள்ள நவீன யுத்தமுறைகளைக் கொஞ்சம் விளங்கினல் எம் பாது காப்பு விடயத்தில் இவ்வதிகாரத்தை பிரித்தானிய அரசாங்கத் திடம் விடுத்த மை புத்திசாலித்தனம்தான் என்பதை உணர
g)T).
1947-ம் ஆண்டு நவம்பர் மாதம் 25-ம் திகதி இலங்கை யின் புதிய பாராளுமன்றம் கூடியது. இலங்கையின் சரித்திரத் தில் முதன் முதலாகக் கட்சிமுறையில் அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்படுதற்கான முயற்சி அற்பமாக வேனும் ஆரம்பிக்கப் பட்டிருக்கிறது என்பதனைப் புதிய பாராளுமன்றத்தவர்களிலி ருந்து அறிய முடிந்தது. பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட கட்சிகளில் பெருந்தொகையினரைக் கொண் டது ஐக்கிய தேசியக்கட்சியேயாகும். இதன் தலைவராக விளங்கிய வர் திரு. டீ. எஸ். சேனநாயக்க அவர்கள். இடதுசாரி வகுப் பினர் அல்லது தீவிரவாதிகளின் லட்சியமான புரட்சிமுறை களுக்கு நேர்விரோதமான கொள்கையைக் கொண்டதே ஐக்கிய தேசீயக் கட்சி. எனவே அதனை ஓர் விதத்தில் பழைமை தழுவும் கட்சி அல்லது புரட்சிமாறுதல் வேண்டாக்கட்சி என்றும் கூறலாம். இடது சாரிகள் என்னும் தீவிரவாதிகள் என்போர் பல வகுப்பினர். லங்கா சமசமாஜக்கட்சி, போல்ஷெவிக் லெனின்
l. United National Party.

Page 151
292 மத்திய அரசாங்கம்-அதன் அமைப்புக்கள்
கட்சி கொமியூனித்தக்கட்சி என்ற மூன்று கட்சிகளில் அவர்கள் அடங்கினர். ஆகவே இலங்கையின் புதிய பாராளுமன்றத் திலே வலதுசாரிகள்’ இடதுசாரிகள்’ என்ற இரண்டு பிர தான பகுதியினர் இருப்பதைக் கண்டோம். இந்த இரண்டு பகுதியினருக்குமிடையில் இருப்பவர்கள் கட்சிப்பற்றில்லாத அங்கத்தவர்கள். இவர்கள் தம்மைச் சுயேச்சைவாதிகள் என் றும் சொல்வர். இவர்களது கொள்கை இடதுசாரியானதா, வலதுசாரியானதா என்று சொல்ல முடியாது. ஐக்கிய தேசீயக் கட்சி, இடதுசாரிகள், கட்சிப்பற்றில்லாதோர் என்பவர்களை விட அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசுக்கட்சி, தமிழரசுக் கட்சி, இலங்கை இந்தியக் காங்கிரசு என்ற மூன்று வகுப்பு வாதக் கட்சிகளும் இருந்தன. இலங்கை இந்தியக் காங்கிர சுக்கட்சி இந்தியர்களையே பிரதான்மாகக் கொண்ட தோட்டத் தொழிலாளரால் ஆதரிக்கப்படுவது?.
டொனேமூர் அரசியற்றிட்டத்தின் குணகுணங்களை இனித் தொகுத்துக்கூறுவாம்:-
பொறுப்பாட்சி முறையில், அதிலும் விசேடமாக நாட் டி ன் அபிவிருத்தி தொடர்பாய விடயங்களில் இலங்கை மக்க ளுக்கு ஒரளவு பயிற்சி யளிப்பதனையே டொனேமூர் அரசியற் றிட்டம் மூலநோக்காகக் கொண்டிருந்தது. அரசாங்கசபை யங்கத்தவர்கள் சட்டங்களை யாக்கி அச்சட்டங்களை நடை
1. போல்ஷெவிக் லெனின் கட்சி சமசமாஜக்கட்சியுடன் இப்போது ஒன்றி விட்டது; ஆனல் சமசமாஜக்கட்சியில் பிரிவினை உண்டாகி புதிய சமசமாஜக் கட்சி, பழைய சமசமாஜக்கட்சி என்ற இரு கட்சிகள் தோன்றி இருக்கின்றன.
2. இந்தப் பந்தியிற் காட்டப்பட்டுள்ள கட்சிமுறை 1947ம்-ஆண்டுப் பொதுத் தேர்த்தலுக்குப்பின் இருந்ததாகும். 1952-ம் ஆண்டுப் பொதுத் தேர்த்தலுக்குப் பின்னும் ஐக்கிய தேசியக்கட்சியே மிகப் பெரும்பான்மையான தானங்களைக் கைப்பற்றியது. அதற்கடுத்த ulquila, Lof 6)i& IT dig fö5 Jáá 6 (Sri Lanka Freedom Party.) லங்கா சமசமாஜக்கட்சி, கொமியூனித்தக்கட்சி, தமிழ்க்காங்கிரசுக்கட்சி, தமிழரசுக்கட்சி என்னும் கட்சிகள் இருந்தன. இலங்கை இந்தியக் காங்கிரசின் சார்பாக எவ்வங்கத்தவராவது தெரிவு செய்யப்பட வில்லை. தெரிவு முடிந்ததும், ஒரு இந்தியப் பிரமுகர் நியமன அங்கத்த வராக நியமிக்கப்பட்டார். இலங்கை இந்தியக் காங்கிரசு என்ற பெயருடன் இருந்த தாபனம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசு (Ceylon Workers Congress) என்ற பெயருடன் மாற்றியமைக்கப்பட்டது. பின் அதிலும் பிரிவினையேற்பட இப்போது, இலங்கைத் தொழிலாளர் காங்கிரசு, இலங்கைச் சனநாயகத் தொழிலாளர் காங்கிரசு (Ceylon Workers Democratic Congress) 61637,69).Jh g(55 TLugo, Elas Gin உண்டாயின.

மத்திய அரசாங்கம் அதன்-அமைப்புக்கள் 293
முறைக்குக் கொண்டுவருதற்கான சந்தர்ப்பங்கள் அளிக்கப் பட்டதன் மூலம் இப்பயிற்சி யளிக்கப்பட்டது. முந்திய அரசிய லமைப்புக்களின் கீழ், சட்ட நிரூபண சபை யங்கத்தவர்களா யிருந்தவர்கள் அரசாங்கக் கருமங்களைச் கண்டிப்பதற்கும், சட்டங்கள் வகுப்பதற்கும் கருமங்களைக் கட்டுப்படுத்தற்கும் அதிகாரம் கொண்டிருந்தனர். ஆனல் தேச நிருவாகத்துக் கான பொறுப்பு அவர்களிடம் இருக்கவில்லை. நிருவாகச் சாதனம் வேரு னதாய், சட்ட நிரூபண சபையின் கட்டுப்பாட் டுக்கு அப்பாற்பட்டதாயிருந்தது. அரசாங்கசபை அரசிய லமைப்பில் இந்தக் கஷ்டம் இருக்கவில்லை. சட்டங்களை ஆக்கும் பொறுப்பும் அவற்றை நடைமுறையிற் கொண்டு வரும் பொறுப்பும் அரசாங்க சபைக்கு இருந்தன. நிருவாக சபைகளின் அன்ரு ட ஆலோசனைகளில் அங்கத்தவர்கள் பங்கு பற்றி, வாளா வா யாற் கண்டிப்பதற்குப் பதிலாக, பிரச்சினை களை ஆக்கமுறையில் அணுகவேண்டியிருந்தது. இதுவ்ரை வாய்ப் பேச்சுடன் மாத்திரமே அரசியல் விடயங்களில் தலை யிட்ட அரசியல்வாதிக்கு, இது ஆக்க வேலையில் நல்ல பயிற்சி யளித்தது. மேலும், நிருவாக சபையில் அநேக கருமங்கள் ஆற்றப்படவேண்டியிருந்தமையினல், அங்கே சொற்பொழி வுகளுக்கு இடமிருக்காமல் ஆக்கப்பணிக்குச் சந்தர்ப்பமிருந் தது. பழைய காலத்தில் அரசியல்வாதிகள் 'அரசியலுரிமை கள்’, ‘மக்களின் உரிமைக்குரல் 'ஏகாதிபத்தியக் கொடுமை", * ஏகாதிபத்தியவாதிகளின் சுரண்டல்’ என்னும் இன்னுேரன்ன விதமாக உணர்ச்சியைத் தூண்டும் சொல்லம்புகள் தொடுப்பது வழக்கம். அச்சொல்லம்புகள் தொடுப்பதற்குப் பதிலாக, சுகாதாரம், நீர்ப்பாசனம், வீதிகள், உணவு, விவசாயம், மக்களுக்கு வீடுகள், பாடசாலைகள் முதலிய இன்றியமையா விடயங்களில் கூடிய சிரத்தை எடுப்பதற்கு டொனேமூர் அரசியற்றிட்டத்தின் நிருவாகசபை முறை சந்தர்ப்பம் அளித் தி து.
இப்படியான நன்மைகளுடன் சில தீமைகளும் நிருவாக சபைமுறையால் விளைந்தன. நிருவாகசபைமுறையிருப்பதனல் தம்மிடம் வந்திருக்கும் அதிகாரத்தைத் தனிப்பட்ட அரசாங் சபையங்கத்தவர் உணர்ந்து அதனைத் துர்ப்பிரயோகம் செய்ய வும் இடமிருந்தது. உதாரணமாக, அரசாங்கசபைக் காலத்து நிருவாகசபை யங்கத்தவர் என்ற தன்மையில் அவர் அந்நிரு வாகசபையின் கீழிருந்த அரசாங்கப்பகுதி உத்தியோகத்த ருக்குக் கட்டளைகள் பிறப்பிக்கவும் பின்வாங்கவில்லை. உத்தி யோக நியமனங்களில் தனது அபிப்பிராயத்துக்கு மதிப்புக் கொடுத்தல் வேண்டும், தம்மைச் சேர்ந்தவர்களுக்குச் சலாக்

Page 152
2.94 மத்தி அரசாங்கம்-அதன் அமைப்புக்கள்
கியங்கள் அளிக்க வேண்டும் என்றும் அவர் நிற்கமுடிந்தது. நிருவாக சபைகளின் சிபாரிசின் பேரிலேயே நியமனங்கள் செய்யப்படுதல் வேண்டும் என்ற நியதியிருந்தமையினல் அரசாங்க அதிகாரிகள், இப்படியான அங்கத்தவர்களின் கருமங்களை எதிர்க்க-அவர்களின் கட்டளைகளை மீற-சக்தி யற்றவர்களாக இருந்தனர். உத்தியோகங்களுக்கு விண்ணப் பிப்பவர்களும், தம் தகைமை திறமை என்பனவற்றில் தங்கி நிற்காமல், நிருவாக சபையங்கத்தவர்களின் உதவியை நாடி ஞர்கள்.
அரசாங்க சபையின் ஒரு நிருவாக சபையில் இருந்த தனிப் பட்ட அங்கத்தவர்களிற் சிலர் ஒன்று சேர்ந்து அச்சபைத் தலைவராகவிருந்த அமைச்சரையும் தம்மெண்ணப்படி ஆட்டி வைக்கச் சந்தர்ப்பம் இருந்தது. நிருவாக சபையில் உள்ள வர்கள் கட்சிகள், கோஷ்டிகளா கப்பிரிந்து, தம் ஆதரவுக்குப் பிரதியுபகாரமாகத் தாம் கோருவனவற்றை நிறைவேற்றி வைக்கவேண்டும் என்றும் வாதிப்பர். இந்நிருவாக சபைகளில் வகுப்புவாத நோக்குடன் கட்சிகள் பிரிந்திருக்கவும் இடம் இருந்தது; பொது நன்மைக்காகத் தாம் எல்லாரும் உழைக்க வேண்டும் என்ற உண்மையை நிருவாக சபையங்கத்தவர் பல சந்தர்ப்பங்களில் மறந்தனர்.
இனி, நிருவாக சபை ஒவ்வொன்றும் தன் தன் பகுதிக் கருமங்களேயே பெரிதாகக் கொண்டு அக்கருமங்களையே இயலு மானவரை நிறைவேற்ற முயற்சிசெய்தது. நிருவாக சபைகள் அனைவற்றினதும் வேலைகளை ஒரோமுகப்படுத்தி ஒரு திட்ட மாக வகுக்கவேண்டும் என்பது முடியாததாக விருந்தது. செலவுத் திட்ட மானியங்களில் தத்தம் பகுதிக்கே அதிக தொகையினை ஒதுக்கிவைக்க வேண்டும் என்று ஒவ்வொரு அமைச்சரும் போட்டியாக நின்றனர். இப்படியான ஒர் நிலைமையினல் டொனேமூர் அரசியலமைப்பின் பயனக வேற் பட்ட அரசாங்கம் ஒரே நேரத்திற் பல சாரதிகளாற் இசலுத் தப்படும் தே ரொன்றைப் போன்றிருந்தது.
டொனுேமூர் அரசியலமைப்பு தனிப்பட்ட அங்கத்தவ ருக்கு வழங்கியிருந்த அதிகாரம் அவரை வகுப்பு வாதியாகத் தூண்டியது என்றும் சொல்லலாம். பட்டம் பதவிகளைப் பெற் றுக்கொடுக்கும் வழிவகைகளும் வியாபாரம் விவசாயம், தெரு வீதிகள், பாடசாலைகள் என்பவற்றை விருத்தியாக்கும் வழி வகைகளும் தன்னதிகாரத்துக்குள்ளிருப்பதனை உணரும் ஒரு அங்கத்தவர் தனது மக்களுக்கே அவற்றைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற ஒரு குறுகிய மனப்பான்மையினைக் கொள்ளவும் இடமிருந்தது. ஒருவர் அரசாங்க சபையங்கத்தவராகத் தெரிவு

மத்திய அரசாங்கம்-அதன் அமைப்புக்கள் 295
செய்யப்பட்டதும் அவர் குறித்த ஒரு தொகுதியின் அங்கத்த வர் என்ற தன்மையை இழந்துவிட வேண்டும். இந்த உண்மை யினை அரசாங்க சபையங்கத்தவர் பலர் மறந்தனர். ஒரு வர் எத் தொகுதியினின்றும் தெரிவு செய்யப்பட்டாலும் அவர் தேசம் முழுவதுக்குமான அரசாங்கசபையின் அங்கத்தவரா வார். அவர் ஒரு தொகுதிக்கு மாத்திரமல்ல இலங்கை முழு வதுக்குமேயான பிரதிநிதிகளில் ஒருவராகிருர் . * பாராளு மன்றம் என்பது பரஸ்பரம் அபிப்பிராயபேதமுடைய நலவுரி மைக்காரரின் பிரதிநிதிகளாயுள்ள அரசுத்தூதரைக் கொண்ட ஒரு மகாநாடு அன்று. இப்படியான ஒரு மகாநாட்டில் தான் ஒவ்வொரு அரசுத்தூதரும் தாம் தாம் பிரதிநிதியாகவுள்ள நலவுரிமைகளுக்காகப் பாடுபடுதல் வேண்டும் , அவ்வுரிமைக ளுக்காக வாதாடவேண்டும். பாராளுமன்றம் ஒரே தேசிய இனத்தின்-ஒரேநாட்டின்-மக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட ஆலோசனை மன்றமாகும். அது ஒரு முழுத்தாபனத்துக்கு முரிய தான சாதனம் . . . நீங்கள் ஒரு அங்கத்தவர்களைத் தெரிவு செய்வது உண்மைதான். ஆனல் அவரை நீங்கள் தெரிவு செய்து முடிந்ததும் அவர் 'X' , தொகுதியங்கத்தவர் என்று சொல்லப் படாது பாராளுமன்ற அங்கத்தவர் என்றே சொல்லப்படு கிருர்’ என்று இவ்விடயமாகப் பிரபல பிரித்தானிய அரசியல் வாதி ஒருவர் கூறியதும் ஈண்டு நோக்கற்பாலது.
மக்களனைவரதும் நன்மையைக் கருத்திற் கொண்டுள்ள கட்சி ய ர சே சனநாயகமுறை யரசாங்கத்தின் பிரதான தன்மையாகும். அதாவது ஒரு அரசியற் கட்சி நாட்டின் பொது நன்மைக்குரியதான ஒர் வேலைத்திட்டத்தைச் சமர்ப்பிக்கும். திட்டத்தை நாட்டு மக்களின் மிகப் பெரும்பான்மையினர் ஏற்று அக்கட்சியை அதிகார பீடத்தில் அமர்த்தினுல், அது குறித்த அத் திட்டத்தை நடைமுறையிற் கொண்டுவர முயற் சிக்கும். டொனேமூர் அரசியலமைப்பின் பயனக ஏற்படுத்தப் பட்ட நிருவாக சபைகள் ஒவ்வொன்றிலும் சிறுசிறு குழுக்கள் தோன்றித் தத்தம் நலன்களுக்காகப் பாடுபட்டன. நிரு வாக சபைகளுக்கிடையில் ஒரு பொதுத் திட்டமோ பொதுக் கொள்கையோ நிலவவில்லை இதன் காரணமாக நிருவாக சபை ஆட்சிமுறையில் அரசியற் கட்சிகள் அபிவிருத்தியாக முடியவில்லை. ஓர் அங்கத்தவர் தேர்தலுக்கு முற்படும்போது அவர் தேசீயக் கொள்கைகளை, அல்லது தேசம் முழுவதுக்கும் நன்மை தரக்கூடிய ஓர் திட்டத்தைச் சமர்ப்பித்து அக்கொள் கைகள், திட்டத்தின் பொருட்டுதன்னைத் தெரிவு செய்யவேண் டும் என்று கோர வேண்டிய அவசியம் ஏற்படவில்லை, தம்மைத்
1. 67'LOG57 L. Gurid-Edmund Burke.

Page 153
296 மத் திய அரசாங்கம்-அதன் அமைப்புக்கள்
தெரிவு செய்தால் எல்லா நன்மைகளையும் செய்து தருவதாக ஒவ்வொரு அங்கத்தவரும் தத்தம் தொகுதியினருக்கு வாக்குச் செய்வர். அவர் தெரிவு செய்யப்பட்டபின், நிருவாக சபைக் குள் தமக்கிருந்த அதிகாரத்தைத் தமது அரசியற் கருமங்களின் பொருட்டுப் பிரயோகிக்கச் சந்தர்ப்பம் இருந்தது. நிருவாக சபை முறை அங்கத்தவர்களின் அரசியல் நோக்கைக் குறுகச் செய்தது. தம் சொந்த நலவுரிமையொன்றைவிட மற்ற நல வுரிமைகளை அவர் சிந்திக்காத படி இந்த முறை அவரைத் தூண்டியது.
தனிப்பட்ட அங்கத்தவர்களுக்கு அதிக அதிகாரம், நிரு வாக சபை முறையினல் வழங்கப்பட்டிருந்தது என்று கூறி னேம். ஆனல், நாட்டிலே நல்லாட்சி நிலவாதுவிட, மக்கள் அதனை யிட்டுக்குறை கூறும் காலத்தில், நிருவாக சபையொவ் வொன்றிலும் அதிகாரம் வகித்துக் கருமமாற்றிய அங்கத்த வரில் எவராவது அத்தகையதான கூடா வாட்சிப் பொறுப் பைத் தாமே ஏற்றுக் கொள்ளாது. அதற்கு மற்றவரே கார ணம் என்று பரஸ்பரம் குற்றம் சாட்டுவர். உதாரணமாக, நாட்டின் கல்விக் கொள்கை சரிவர நடைமுறைக்குக் கொண்டு வரப்படாவிட்டால், அதற்குக் கல்வி நிருவாக சபையில் இருந்த அங்கத்தவர்களைப் பொறுப்பாளிகளாக்கமுடியாது. அவர்கள், அதற்குத் தாம் பொறுப்பாளிகளல்லர், கல்வி அமைச் சரே பொறுப்பாளி என்பர். கல்வி அமைச்சரோவெனில், தாம் பொறுப்பாளியல்ல, கல்விக் கொள்கையை வகுத்த கல்வி நிருவாக சபையே பொறுப்பாளி என்பார். பின்னர் இரு சாராருமாக கல்விப் பகுதியதிகாரிகளின் மீது பொறுப் பைச் சுமத்திவிடுவர். அரசாங்கம் ஆற்றும் செயல்களுக்கு ஒருமித்தும் தனித்தும் பொறுப்பேற்கக்கூடிய ஓர் அரசாங்கக் கட்சி நிருவாக சபைமுறையரசியலில் இருக்கவில்லை. இதன் காரணமாக ஒவ்வொரு நிருவாக சபையும் தன் மனம் போன போக்கில் நாட்டுப்பணத்தைச் செலவிட்டது; நிருவாகசபை களுக்குப் பொறுப்புணர்ச்சி யில்லாதிருந்தமையினல், அவை விடயங்களை ஆர அமர ஆலோசிக்காது, எவ்வித கட்டுப்பாடு மில்லாது பயன்ற ராக்கருமங்களுக்குப் பணத்தைச் செல விட்டன. இவ்விடயத்தில், சனநாயக ஆட்சிமுறையின் பிர தான அம்சமாகவுள்ள கூட்டுப்பொறுப்பு என்பது தினையள வுக்குத்தானும் இருக்கவில்லை.
கடைசியாக, அரசாதிகாரிகள் என்றிருந்தவர் வேறேர் கஷ்டத்தை ஆக்கி வைத்தனர். அவர்கள் மூவர்: அவர் கள் முறையே சட்டம், அரசாங்க சேவைகள், நிதி என் பனவற்றுக்குப் பொறுப்பாளிகளாக விருந்தனர். குறித்த

மத்திய அரசாங்கம்-அதன் அமைப்புக்கள் 297
இந்த மூன்று விடயங்களும் ஒதுக்கப்பட்ட விடயங்கள் என விருந்தன. அரசாதிகாரிகள் அரசாங்கசபைக் கட்டுப்பாட் டுக்கு அப்பாற்பட்டவர்களாயிருந்தமையினல், தம்மீது செய்யப்பட்ட கண்டனங்களையிட்டுப் பராமுக மனப்பான்மை யுடன் இருந்தனர். அவர்கள் விரும்பினுல், அமைச்சர்கள் சபை யின் பிரேரணைகளை, பணம் சம்பந்தமாக, புறக்கணிக்கவும் இடமிருந்தது. அமைச்சர்கள் கோரியபணத்தைத் தடுத்து வைக்கவும், குறைக்கவும் அவர்களுக்கு அதிகார மிருந்தது. இப் படியாக விருப்பதனல், தாம் செய்யவேண்டும் என்று கருதி யுள்ள தேசப் பணிகளைச் செய்ய முடியாமலிருக்கிறது என்று அமைச்சர்கள் குறை சொல்லி வந்தனர். அர சாதிகாரிகள் அரசாங்க சபைக்குப் பொறுப்பாளிகளாயிராது தாமே ஓர் தணியதிகாரத் தாபனமாகக் கருமம் ஆற்றினர். அரசாங்கத் துக்குள் வேருேர் அரசாங்கமாக அவர்களிருந்தமையினல், அவர்களை அரசியலமைப்பிற் புகுத்திய டொனேமூர் அரசியற் றிட்டம் இரட்டையாட்சி முறையொன்றை நாட்டில் ஏற்படுத்த அதன் பயணுகப் பல இடைஞ்சல்கள் ஏற்பட்டன.
சோல்பரி அரசியல் அமைப்புத் தோன்றிய சில காலத்திற் குள் வேருேர் பெரிய மாற்றம் அரசாங்கத்தில் ஏற்பட்டது. பிரித்தானிய பாராளுமன்றம் இவ்விடயமாக ஒர் பிரசித்தி வாய்ந்த அறிக்கையை விடுத்தது. அவ்வறிக்கை வந்த சில காலத்துக்குள் இலங்கைக்கு சமவரசு அந்தஸ்து வழங்கவேண் டும் என்ற ஒர் மசோதா பிரித்தானிய பாராளுமன்றத்தில் நிறை வேறியது. அதன் பயனகப் பிரித்தானியப் பொதுநல வமைப் பிலே பரிபூரண சுதந்திரம் பெற்ற ஓர் சமவரசு நாடாக இலங்கை, 1948-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ம் திகதி தனது வாழ்க்கையை ஆரம்பித்தது. இலங்கையின் இராணுவப் பாது காப்புக்குத் தேவையான காலத்தில், இந்நாட்டின் இராணுவத் தளங்களை பிரித்தானிய இராணுவம் உபயோகித்துக் கொள்ள லாம் என்று இலங்கை அரசாங்கமும் பிரித்தானிய அரசாங்க மும் உடன்படிக்கையும் செய்து கொண்டன. இலங்கையின் செம்மையான பாதுகாப்பில் தங்கியுள்ள நாடுகளும் சில உண்டு: இவை இலங்கையின் நட்புநாடுகள். இவற்றேடும் இங்கிலாந்துடன் செய்த உடன்படிக்கை போன்ற உடன் படிக்கைகளை இலங்கை செய்தது.
இலங்கைச் சரித்திரத்தில் 1948-ம் ஆண்டு மகத்தான, குறிப்பிடத்தக்கதான ஒர் ஆண்டாகும். இங்கே பிரித்தானி யரின் குடியேற்றநாட்டு ஆட்சிமுறை ஒழியப் புதிய ஓர் சகாப் தம் உதயமானது இந்த ஆண்டிலேயேயாகும்.
1. Reserved. Subjects.

Page 154
298 மத்திய அரசாங்கம்-அதன் அமைப்புக்கள்
சோல்பரி அரசியற்றிட்டம்
இலங்கைக்கு வழங்கப்பட்ட புதிய அரசியற்றிட்டம் பல விதத்திலும் பிரித்தானிய அரசியற்றிட்டத்தை ஒத்திருக் கிறது. இங்குள்ள பிரதிநிதிகள் சபையே பொதுசனங்களினல் தெரிந்தெடுக்கப்பட்டு அவர்களுக்குப் பொறுப்பாகவுள்ளது. செனேற் இர ண் டா வது சபையாக இருக்கிறது. கீழ்ச் சபையாகிய பிரதிநிதி க ள் சபை  ையக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அதற்கு இல்லை. பிரதிநிதிகள் சபையிலே அரசாங் கத்தை நடத்துவோர், அதற்கெனவுள்ள தானங்களில் இருப்ப எதிர்க்கட்சியினர் அவர்களுக்கெதிராக இருப்பர். பழைய அரசாங்க சபைக் காலத்தில் இவ்வாரு க அங்கத்தவர்கள் இருக்கவில்லை. அரசாங்கசபைத் தலைவருக்கு முன்னுல் அவர் கள் எல்லாரும் வட்டமாக இருந்தனர். அப்படியிருந்த முறையில் பகைவனும் நண்பனும் பக்கம் பக்கமாகவும், பழைய முறையைப் பின்பற்றும் முதலாளியும் முதலாளித்துவக் கொள்கையை வேரோடு பிடுங்கிவிட வேண்டும் என்னும் கொ மியூனித்தரும் அருகுக்கருகே இருந்தனர். இப்போது அங் கத்தவர்கள் இருக்கும் முறை வேறுவிதமாக வகுக்கப்பட்டி ருக்கிறது. ஆசன வகுப்பு கட்சிமுறையைக் காட்டுவதாக இருக்கும். அரசாங்கக் கட்சியினர் ஒரு பக்கமாகவும், எதிர்க் கட்சியினர் அவர்களுக்கு எதிர்ப் பக்கமாகவும் இருக்கத் தக்கதாக இப்போது ஆசனங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருக் கின்றன.
தே ச பரிபா ல னக் கருமங்களைக் கலந்து பேசற் கான அரங்கமே பிரதிநிதிகள் சபையாம். எதிர்க்கட்சியினர் ஆரம் பத்திலிருந்தே தம் சக்தியை உணர்ந்து கொண்டனர் என்பது புதிய அரசியல் அங்குரார்ப்பணமானதிலிருந்து நன்கு புலப் படுகிறது. அவர்கள் அரசாங்கக் கட்சிமீது சரமாரியாகக் கேள்விகள் விடுத்துச் சுறுசுறுப்பாக விருந்தனர்.
பிரதிநிதிகள் ச  ைபயின் முதற் கூட்டத்தினை ) is தேசாதிபதி ஆரம்பித்து வைத்து ஓர் பிரசாரணத்தைச் செய்தார். இங்கிலாந்திலே இப்படியர்ன சந்தர்ப்பங்களிலே மன்னரான வர் செய்யும் சிம்மாதனப் பிரசாரணம் போல அரசாங் கத்தின் கொள்கையை விளக்குவதாக மகாதேசாதிபதியின் பிரசாரணம் இருந்தது. இதன் பின் வரவுசெலவுத்திட்டம் எடுத்தாளப்பட, அதனை ஆய்வுநிலையில் சுறுசுறுப்பாக விவா தித்தனர். ஒவ்வொரு மந்திரியும் கோரிய பணத்தொகையை அங்கத்தவர்கள் நுணுக்கமாக ஆராய்ந்து அவ்வம் மந்திரியின் கொள்கை விடயமாகக் கேள்விகள் கேட்டனர். நாட்டிலே
I. Speech from the Throne.

மத்திய அரசாங்கம்-அதள் அமைப்புக்கள் 299
யுள்ள குறைகளை அங்கத்தவர்கள் எடுத்துக்காட்ட, அவற்றை நிவர்த்திக்கத் தம்மாலியன்றவரை உழைப்பதாக அமைச் சர்கள் உறுதிகூறினர்.
அரசாங்கம் தான் நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டிய ஓர் கொள்கையை உடையதாக இருக்கிறது. ஆகவே அக் கொள்கையை ஆதாரமாகக் கொண்டுதான் பிரமாணங்களை அது ஆக்கும். நாட்டின் நன்மை விருத்தியைச் செய்து அதன் மூலமாகத் தனது கீர்த்தி பரவுதற்காக ஒவ்வொரு மந்திரியும் பல்வேறு திட்டங்களைக் கொண்டிருப்பர். இத்திட்டங்களை மந்திர சபை அங்கீகரித்தால் அவை மசோதா உருவாகும். ஆகவே சபையின் ஆலோசனைக்குவரும் மசோதாக்களிற் பெரும்பான்மையின அரசாங்க மசோதாக்களாகவே இருக் கும். தனி அங்கத்தவர்களும் தம் மசோதாவுக்கு அரசாங்கத் தின் ஆதரவைப் பெற்ரு ல், தம் பெயரில் அம்மசோதாக்களை எடுத் தாண்டு நிறைவேற்றுவிக்கலாம். மசோ தாக்களை அரசாங்கமே எடுத்தாளவேண்டும் என்று இருத்தலும் ஒரு விதத்திற் சரி என்றுதான் கூறவேண்டும். தேச பரிபாலன வேலையைச் சரிவரச் செய்தற்கென்றே ஒரு அரசாங்கம் இருக் கிறது. அது அவ்வேலையைச் செய்ய முடியாவிட்டால் வெளி யேறிச் சரியாக திறமையாக, கருமம் ஆற்றக்கூடிய அரசாங்கம் ஏற்பட இடமளிக்கவேண்டும். அரசாங்கக்கட்சிக்கு எதி ராகவுள்ள எதிர்க்கட்சி ஒரு பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று அதன் மூலமாகத் தேசபரிபாலனம் செய்ய மகாசனங் களின் அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டால் அது தனது திட்டங்களையும் கொள்கையினையும் நடைமுறைக்குக் கொண்டு வரும். அரசாங்கத்தின் கருமம் அரசியலை நடாத்தலே: அது பிழைவிடும் காலத்தில் அப்பிழைகளைக் காட்டுவதும் கேள்விகள் கேட்டு அரசாங்கம் செய்யத் தவறும் கருமங்களைச் செய்விப்பதும் எதிர்க்கட்சியின் கடமையாகும். இவ்வாரு கச் சபை மண்டபத்திலே அரசாங்கக்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கு மிடையில் ‘நான் முந்தி நீ முந்தி’ என்று அரசியல் விவாதங்கள் நிகழ இக்கலந்தாலோசிக்கும் முறை அரசியல் நடைபெற்று வருகிறது.
மந்திர சபை" என்பது பயன்றருகருமச் சாதனமே யாகும். அது தனது கொள்கையை நடைமுறைக்குக் கொண்டுவந்து அதன் நன்மை தீமைகளுக்குப் பூரண பொறுப்பு உடையதாக இருத்தல் வேண்டும். இதற்கு மந்திரசபையில் உள்ளார்க் கிடையே பூரண ஒற்றுமை இன்றியமையாதது. மந்திரிமார்
1. மந்திரிசபை, மந்திரிகள் சபை, அமைச்சர் சபை என்றும் சொல்வர்.

Page 155
3 O O மத்திய அரசாங்கம்-அதன் அமைப்புக்கள்
பரிபாலன விடயமாக ஓர் பொதுத் திட்டத்துக்கு அமைய வேண்டும். உதாரணமாக, கல்வி அமைச்சரின் கொள்கை அவருக்கு மாத்திரமன்றி மந்திர சபையில் உள்ளார் அனைவருக் குமே உரியதாகும். அக்கொள்கைக்கான பொறுப்பை அமைச் சர் மார் ஒருமித்தும் தனித்தும் வகிக்கவேண்டும். வரவுசெலவுத் திட்டத்தை நோக்குவோம்: அமைச்சர் மார் ஒவ்வொருவரும் தத் தமது பகுதிகளுக்கு வேண்டிய உத்தேசச் செலவினங்களைத் தயாரித்து நிதியமைச்சரிடம் சேர்ப்பிப்பர். நிதியமைச்சர் இவை எல்லாவற்றையும் சேர்த்து ஒரு வரவுசெலவுத் திட்டத் தைத் தயாரிப்பர். இந்த முழு வரவு செலவுத் திட்டத்தினை யும் மந்திர சபை நுணுக்கமாக ஆராயும். மந்திர சபையில் உள்ளார் வரவு செலவுத் திட்டத்துக்குப் பரிபூரணமாகச் சம்மதித்த பின்னர் அது பிரதிநிதிகள்சபையிற் சமர்ப்பிக்கப் படும். மந்திர சபையானது சம்பந்தமான சகல விடயங்களி லும் ஒரே கோஷ்டியாகக் கருமம் ஆற்றுதல் வேண்டும்.
இக்கோஷ்டிக்குப் பிரதம அமைச் சர்தான் தலைவர். இங்கி லாந்திலே பிரதம மந்திரியின் திறமையும் வன்மையுமே மந்திர சபையை வழிநடாத்த, அவருடைய அபிப்பிராயத்துக்கே மந்திர சபையில் மதிப்பு உண்டு. மந்திர சபையில் உள்ள ஒருவர் தனது கட்டுப்பாட்டுக்குள் அடங்கா திருக்கிறர் எனப் பிரதம மந்திரி கண்டால் அவரைப் பதவியிலிருந்து விலகும்படி வற்புறுத்தலாம். ஒர் கிறிக்கெற் பந்தாட்டக் கோஷ்டியின் தலைவனைப்போலவே ஒர் பிரதம மந்திரியும் அநேக விடயங் களில் இருக்கிறர். பந்தை அடிப்பதோ, எறிவதோ என்பதை நிர்ணயிப்பது கோஷ்டித் தலைவன். பந்தெறிபவர்களையும், அடிப்பவர்களையும் தெரிவதும் அவர்களை அணிப்படுத்துவதும் அவனே. சுருங்கக் கூறுங்கால் விளையாட்டுச் சம்பந்தமான பிரதான விடயங்களை நிர்ணயிப்பவன் அவனேதான். அவற் றுக்கான பொறுப்பினைச் சுமப்பவனும் அவனே. இதனைப் போலவே மந்திர சபையில் ஒர் பிரதம மந்திரியும் தான் உசித மானவை என்று காண்பவற்றைச் செய்து அதற்குப் பொறுப்பு வகிக்கிருர்,
(35մմւլ: பரிமாணப் பிரதிநிதித்துவ முறை" பரிமாணப் பிரதிநிதித்துவ முறை என்ருல் என்ன? அதன் பயன்கள் என்ன? என்னும் இவற்றை ஆராய்தற்கு அம்முறை யினை ப் பெரும்பான்மை முறையுேடன்  ைவத்து நோக்குதல்
J. Proportional Representation. 2. Majority System.

மத்திய அரசாங்கம்-அதன் அமைப்புக்கள் 30
சால்புடைத்தாகும். பெரும்பான்மை மக்கள் வாக்குச்சம் மதம் அளிக்க அதனல் பிரதிநிதிகள் தெரியப்படுவதே பெரும் பான்மை முறை. பரிமாணப் பிரதிநிதித்துவ முறையுடன் ஒப்பு நோக்கும்போது பெரும்பான்மை முறை மிகவும் சுலப மான அமைப்புடையது. அதனைத் தீவிரமாகச் செயற்படுத்த லாம். இம்முறைத் தெரிவினல் வரும் பயனும் தீர்க்கமானது. அதாவது ஒர் பொதுத்தேர்தலின் பிரதான நோக்கம் பெரும் பான்மை மக்களது அபிமானத்தைப் பெறும் அரசாங்கத்தை உறுதியாக நிலைநாட்டலேயா கில் பெரும்பான்மையினர் தெரிவு நல்ல பயன் அளிக்கும் என்று கூறலாம்.
ஆனல் பெரும்பான்மை முறையிலும் ஒர் குறை இருக்கிற தென்பதை மறுக்கமுடியாது. இம்முறையினுல் சிறுபான்மை யினர்க்குப் பிரதிநிதித்துவம் ஏற்படாமல் போகிறது. இன்னும், சில சமயங்களில் வாக்களிக்கப்படும் முழுச் சம்மதங் களின் பரிமாணத்துக்கு மிஞ்சிய தானங்களையும் சில கட்சிகள் பெறச் சந்தர்ப்பம் ஏற்படுகிறது. 1918-ம் ஆண்டிற்கும் 1935-ம் ஆண்டிற்கும் இடையில் இங்கிலாந்திலே கன்ஸர் வேற்றி வ் கட்சி எனப்படும் பழைமைக் கட்சிக்குச் சாதக மாகக் கிடைத்த முழு வாக்குச் சம்மதங்களும் அதற்குப் பாதக மாகக் கிடைத்த முழு வாக்குச் சம்மதங்களிலும் பார்க்கக் குறைந்தன. அப்படியிருந்தும் குறித்த இந்தக் காலத்திலே பழைமைக் கட்சியே நாட்டில் அதிகாரம் வகித்தது. 1918-ம் ஆண்டிலே கூட்டுக்கட்சி யரசாங்கம் 5,564,318 வாக்குச் சம்மதங்களைப் பெற்று 428 தானங்களைக் கைப்பற்றியது. ஆனல் எதிர்க்கட்சியினர் 4, 132,912 வாக்குச் சம்மதங்களைப் பெற்றும் 217 தானங்களையே பெறமுடிந்தது. 1922-lb. ஆண்டில் தொழிற் கட்சியும் விபரல் கட்சி என்னும் மிதவாதக் கட்சியும் சேர்ந்து 8,500,000 வாக்குச் சம்மதங்களைப் பெற்ற போதிலும் 5, 381,433 வாக்குச் சம்மதங்கள் பெற்ற பழைமைக் கட்சியே 299 அதிக தானங்களைப் பெற்று அரசாங்கத்தை அமைக்க முடிந்தது. வாக்குச் சம்மதங்கள் குறைந்தாலும் பெருந் தொகைத் தானங்களைப் பழைமைக் கட்சி பெற்ற மைக்கு இப்பெரும்பான்மை முறையே காரணம்.
ஆகவே பெரும்பான்மைத் தெரிவுமுறை, பாராளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யும் விடயத்தில் மக்களது உண்மை யான அபிப்பிராயத்தைக் காட்டுவதாக இருப்பதில்லை என்றும் சிலர் அபிப்பிராயம் கொள்ளுகிருர்கள். *அளிக்கப்படும் வாக்குச் சம்மதங்களுக்கும் கைப்பற்றப்படும் தானங்களுக்கும் ஓர் பரிமாணம் இருக்கவேண்டும் அதாவது பரிமாண முறைத் தெரிவு இருக்கவேண்டும் என்று இவர்கள் வாதிக்கிருர்கள்.
. Coalition Government.

Page 156
302 மத்திய அரசாங்கம்-அதன் அமைப்புக்கள்
ஒவ்வொரு பிரதிநிதியை மாத்திரம் தெரிவுசெய்யும் தொகுதிகளுக்குப் பதிலாக 10 அல்லது 12 பிரதிநிதிகளை ஒரே தெரிவின் மூலம் தெரிவு செய்யும் பெரும் தொகுதிகள் அமைக் கப்படல் பரிமாணப் பிரதிநிதித்துவ முறைக்குரிய ஒழுங்கா கும். இப்போதுள்ள முறையில் வாக்காளர் சம்மதச் சீட்டினைப் பெற்று அதில் உள்ள இரண்டு அல்லது மூன்று நாலு பெயர் களில் ஒன்றுக்கு எதிரே மாத்திரம் ஓர் ‘புள்ள்டி இடுகிருர், இந்த முறை பரிமாணத்தேர்தல் முறையில் இருக்கமாட்டாது. வாக்குச் சம்மதச் சீட்டில், பல அங்கத்தவர்களைத் தெரிவு செய்தற்கான தொகுதியில் முன்வந்துள்ள அபேட்சகர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கும். வாக்காளர் சம்மதச் சீட்டினைப் பெற்று அவ்வபேட்சகர்களில் தமக்கு யாரில் வரிசைப்படி விருப்பம் என்பதை இலக்கம் கொண்டு அவரவர் பெயர்க்கெதிரே குறிப்பர். முதல் விருப்பமானவர் பெயருக் கெதிரே 1 என்றும் இரண்டாவது விருப்பமானவர் பெயருக் கெதிரே 2 என்றும் இப்படியே கடைசிப்பெயர் வரை தம் விருப்பத்தை இலக்கம் கொண்டு காட்டுவர். விதிக்கப்பட்ட வாக்குச் சம்மதங்களைப் பெறும் அபேட்சகர்கள் தெரிவு செய்யப்படுவர்.
இதில் விதிக்கப்பட்ட தொகை அல்லது பங்குத் தொகை" என்ருல் என்ன? அபேட்சகர்களின் பெயர்களுக் கெதிரே * புள்ள டி' இடுதற்குப் பதிலாக வரிசை இலக்கம் இடுவதன் கருத்து என்ன?
அளிக்கப்பட்ட சம்மதச் சீட்டுக்களின் தொகையை, தெரிவு செய்யப்படவேண்டிய பிரதிநிதிகளின் தொகையுடன் ஒன்றைச் சேர்த்து வந்த தொகையாற் பிரித்துவரும் ஈவுடன் ஒன்றைச் சேர்ப்பதால் வரும் தொகையே பங்குத் தொகை அல்லது விதிக்கப்பட்ட தொகையாகும். ஒரு அங்கத்தவரைத் தெரிவு செய்ய வேண் டு ம் என்றும் அதற்கு 100 பேர் வாக்களிக்கின்றனர். என்றும் வைத்துக் கொள்ளுவோம். ஆகவே 杂=50+1一51) 51 வாக்குச் சம்மதங்கள் பெற்
ற வர் தெரிவு செய்யப்படுவர். 9 அங்கத்தவர்களைத் தெரிவு செய்யவேண்டிய பல அங்கத்தவர் தேர்தற் ருெ குதி ஒன்றை எடுத்துக்கொள்ளுவோம். அங்கே 100,000 பேர் வாக்களிக் கின்றனர் என்றும் எண்ணிக்கொள்ளுவோம். அப்படியானல் விதிக்கப்பட்ட வாக்குச் சம்மதத் தொகை 10,001 ஆகும். 100,000 -
------- = 1 0, 000 + 1 = 1 0,
9 -- 1 十 OOOO

இலங்கை அரசாங்கம்-அதன் அமைப்புக்கள் 303
இனி, அபே ட் ச க ர் களது பெயர் களுக்கு எதி ரே வரிசைப்படி இலக் க மி டு த லின் கருத்தை நோக்குவாம்: A,B,C,D,E,F,G,H,I,J, 6T 6ởT GD) i b 1 0 G3 LJ i 9 5 IT GST Iš 5 (G35 j, (g5 3?iř பல அங்கத்துவ தொகுதியில் அபேட்சராக முன்வந்திருக்க கின்றனர் என்று ஒர் உதாரணத்துக்கு வைத்துக் கொள்ளு வோம், 100,000 பேர் எல்லா மாக அத்தொகுதியில் வாக் களிக்கிருர்கள். வாக்களிக்கப்பட்ட சீட்டுக்களில் 12, 001 சீட்டுக்களில் A என்பவர் பெயருக்கெதிராக 1 என்று இலக்க மிடப்பட்டிருக்கிறது. அதாவது அவருக்கே முதற் சலுகை என அவ்வாக்காளர் குறித்திருக்கிருர்கள். ஆனல் வெற்றி யுறுதற்கு விதிக்கப்பட்ட தொகை 10,001 மாத்திரமே. ஆகவே A தெரிவுசெய்யப்படுகிறர். அது மாத்திர மன்று அவருக்கு மேலதிகமான 2,000 சம்மதங்களும் உள. இப் போது அநுட்டானத்தில் உள்ள முறையின் படிக்கு இந்த 2,000 சம்மதங்களாற் பயன் இல்லை. ஆனல் பரிமாணத் தெரிவு முறையில் இந்த 2, 000 வாக்குச் சம்மதங்களும் பயன்படுத் தப்படுகின்றன. அது எப்படி என்பதனை அவதானிப்போம்.
12,001 வாக்குச் சம்மதச் சீட்டுக்களில் A க்கு முதல் இடம் வழங்கப்பட்டிருக்கிறது என்று சொன்னேம். இச்சீட்டுக்கள் சிலவற்றிலே இரண்டாம் இடம் B க்கு வழங்கப்பட்டிருக்க லாம். 9,000 சீட்டுக்களில் இரண்டாம் இடம் B க்கும், 3,000 சீட்டுக்களில் இரண்டாம் இடம் C க்கும் குறிக்கப் பட்டிருக்கிறது என்றும் கூறுவோம்.
தனக்கு வழங்கப்பட்ட வாக்குச் சம்மதங்களில் மேலதிக மாகவுள்ள 2,000 ஐயும் A பிரிக்கலாம். இத்தொகை B, C என்பவர்களுக்கிடையில் அவர்கள் பெற்ற இரண்டாம் சலு கைச் சம்மதப் பரிமாணப்படி பிரிக்கப்படும். B, 9,000 சம் மதங்களையும் C 3,000 சம்மதங்களையும் இரண்டாம் சலுகை யாகப் பெற்றிருக்கிறபடியினல் முதலாம் சலுகைக்காரர்க்குக் கிடைத்த 3,000 சம்மதங்களில் B : பங்கையும் C 4 பங்கையும்-அதாவது B 1,500 வாக்குச் சம்மதங்களையும் C 500 வாக்குச் சம்மதங்களையும் பெறுவர்.
இதனை விட B க்கு முதற் சலுகையாக 9,000 சீட்டுக்கள் வேழுகக் கிடைத்திருக்கின்றன என்று வைத்துக்கொள்ளு வோம். தெரிவுக்கு இந்த, 9,000 மும் போதாது. 10,001 வாக்குச் சம்மதங்கள் வேண்டும். ஆனல் A யின் முதற் சலுகைச் சம்மதங்களாற் கிடைத்த 1,500 சம்மதங்களை இந்த 9,000 உடன் சேர்த்தால் 10,500 சம்மதங்கள் ஆகும். ஆகவே B யும் இரண்டாவது அங்கத்தவராகத் தெரிவு செய்யப்படுகிறர்.
1. Multi-member Constituency.

Page 157
304 மத்திய அரசாங்கம்-அதன் அமைப்புக்கள்
இவ்வாரு கவே இந்த முறை மீண்டும் அநுட்டிக்கப்படு கிறது. அதாவது தெரிவு செய்யப்படுவர்களுக்குக் கிடைக்கும் மேலதிக வாக்குச் சம்மதங்களை மற்றும் அபேட்சகர்களது வாக்குச் சம்மதங்களுடன் சேர்த்து 9 அங்கத்தவர்களும் தெரிவு செய்யப்படும் வரை கணிக்கப்டும்.
இந்த விதமான பரிமாணப் பிரதிநிதித்துவத் தெரிவு முறையினல் எல்லாவிதமான அபிப்பிராயமுடையாரும், சிறு பான்மையினரும் தெரிவுசெய்யப்பட இடமுண்டு என்று இம் முறையை விரும்புவோர் வாதிப்பர்.
பரிமாணப் பிரதிநிதித்துவ முறை வேண்டுமென்பார் கூற்றிலும் உண்மை இருக்கிறதுதான். ஆனல் தேர்தல்களின் நோக்கம் என்ன என்பதை நாம் நோக்குங்கால் இந்தப் பரிமாணப் பிரதிநிதித்துவ முறையிலே அவர்கள் கூறுவது போல அவ்வளவு பிர மாத நன்மை இருப்பதாகக் காணுேம். திட்டவட்டமான கொள்கையினை நடாத்தும் அரசாங்கத்தை அமைப்பதே தேர்தல்களின் நோக்கம். ஆனல் பரிமாணப் பிரதிநிதித்துவமுறை இதனைப் பிரதானமாகக் கொள்ளவில்லை என்றே தெரிகிறது. சமூகம் முழுவதிலும் உள்ள பல்வேறுவித அபிப்பிராயத்தினர், பல்வேறுவித நலவுரிமையினர் என்ப வர்களைப் பதிவுசெய்யும் சாதனமாகவும் குடிமதிப்புப்போல வும் தான் பரிமாணப் பிரதிநிதித்துவத் தேர்தலும் விளங்கும். ஓர் சனநாயக நாட்டின் கண் உள்ள பல்வேறு அரசியற் கட்சி கள் தத்தம் கொள்கைகளைப் பகிரங்கமாக விவாதித்து அவையே சரி என்று தனித்தனி வாதிட அதனுல் பொதுசன அபிப்பிராயம் தெளிவடையும். அப்போது சனங்கள் தமக்கு எவ்விதமான கொள்கை ஏற்றது, எவ்விதமானவர்கள் தம் அரசாங்கத்தை நடாத்தவேண்டும் என்பதைத் தம் வாக்குச் சம்மதங்களைக் கொண்டு நிச்சயிக்க முடியும். இந்தப் பெரு நோக்கத்தினையே தேர்தல்கள் கொள்ளுதல் வேண்டும்.
பெரும்பான்மைமுறை, அரசியற் கட்சிகள் பெருகுவதைக் கட்டுப்படுத்தும்; ஆனல் பரிமாணப் பிரதிநிதித்துவ முறையி ஞல் கட்சிகள் பல்கும். இம்முறை ஏற்கெனவேயுள்ள சிறு பான்மையினரைப் பிரதிபலிப்பது ம ன்றி, பிரதானமான அரசியற் கட்சிகளின் செலவில் புதிது புதிதாக இன்னும் பல அரசியற் கட்சிகளை உண்டாக்கி சிறுபான்மையினரை இன்னும் அதிகமாகச் சிருட்டிசெய்யும் புரட்சிகரமான அமிதவாதச் சிறு கூட்டத்தினரின் நியாயமற்ற அபிலாஷைகளை நிறை வேற்றச் சாதனமாக விளங்கவும் ஏதுவாகும். பெரும்பான்மை முறை இருக்கும் வரை குழுவினர் இச்சிறு பாராளுமன்றத்தில் இடம் பெறுவது துர்லபம்.

மத்திய அரசாங்கம்-அதன் அமைப்புக்கள் さ 05。
அப்பியாசங்கள் 1. இலங்கையிலே பிரதிநிதித்துவ ஆட்சிமுறை வளர்ச்சி யுற்ற விதத்தை வரிசைக் கிரமத்திற் கூறுக.
2. 1924-ம் ஆண்டில் இருந்த சட்ட நிரூபண சபைக்கு அதிகார மிருந்ததேயன்றிப் பொறுப்பு இருக்கவில்லை என்னும் கூற்றை ஆராய்க.
3. டொனேமூர்க் கொமிஷன் இலங்கைக்கு அனுப்பப் பட்ட காரணம் யாது?
4. சர்வசனவாக்குரிமையை வழங்க வேண்டும் என்று டொனேமூர்க் கொமிஷன் சிபாரிசு செய்ததற்குக் காரணம் штф] ?
5. டொனேமூர் அரசியலமைப்பு இலங்கை மக்களுக்கு எந்த அளவுக்குச் சுயாட்சியை வளங்கியது?
6. டொனேமூர் அரசியலமைப்பால் இலங்கை மக்கள் அரசியல் விடயமாக அடைந்த நன்மைகள் யாவை ?
7. இலங்கை மக்கள் ஆட்சிமுறையில் அநுபவம் பெறு வதற்கு டொனுேமூர் அரசியலமைப்பு உதவியது என்னும் கூற்றை விளக்குக.
8. அமைச்சர்குழு அல்லது மந்திரிகள் சபை ஏற்படுத்தப் பட்டதால் விளைந்த நன்மை தீமைகள் யாவை ?
9. டொனேமூர் அரசியலமைப்பின் கீழ் தேசாதிபதிக் கிருந்த அதிகாரங்கள் யாவை ?
10. டொனுேமூர் அரசியலமைப்பினல் இலங்கை யடைந் துள்ள நன்மைகளை விபரிக்க.
11. டொனேமூர் அரசியலமைப்பிற் செய்ய வேண்டிய திருத்தங்கள் விடயமாக சோல்பரி கொ மிஷன் செய்த சிபாரிசு களைச் சுறுக்கமாகக் கூறுக.
12. சோல்பரி அரசியலமைப்பின் கீழ் சிறுபான்மையினரின் உரிமைகள் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன?
13. செனேற் எனப்படும் இரண்டாம் சபையை அமைப் பதற்கு சோல்பரி கொ மிஷன் சிபாரிசு செய்ததற்குக் காரணம் யாது? செனேற்றை எவ்வாறு அமைக்கவேண்டும் என்று விதிக்கப்பட்டது.

Page 158
அத்தியாயம் 9.
இலங்கைச் சமவரசின் அமைப்பு
பிரித்தானியப் பொதுநலவமைப்பிலே சுதந்திரமான பங்காளியாக இலங்கை இப்போது இருக்கிறது. எனவே டொமினியன் அல்லது சமவரசு என்ருல் என்ன என்பதை நாம் அறிந்திருத்தல் பயனுடைத்தாகும். இதனை அறிதற்கு இப் பொதுநலவமைப்பிலே சுதந்திர அரசாங்கங்கள் எவ்வாறு உருவாயின என்பதை ஆராய்தல் பொருத்தமாகும்.
குடியேற்ற நாடுகளுக்கும் சுதந்திரம் இருக்கவேண்டும் என்ற உணர்ச்சி ஆங்கிலம் பேசும் மக்கள் சென்று குடியேறிய நாடுகளில் தான் முதலில் உண்டாயது. ஆங்கிலக் குடியேற்ற நாடுகள் சில தம் தாய் நாட்டுக்கு எதிராகக் கலகம் செய்து தம் சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டதை நீங்கள் அறிவீர் கள். அந்நாடுகளே பின்னர் ஐக்கிய அமெரிக்க நாடுகளாயின. அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்துக்குச் சில காலத்துக்குப் பின் கனடா தனக்குப் பொறுப்பாட்சி வேண்டும் என்று கோரி அதனைப் பெற்றுக்கொண்டது. இவ்வாரு கவே, ஆங்கிலம் பேசும் மக்கள் சென்று குடியேறிய ஆஸ்திரேலியா, நியூசிலந்து என்னும் நாடுகளும் பொறுப்பாட்சி வேண்டுமென்று கோரி அதனைத் தனித்தனி பெற்றுக்கொண்டன.
கால கதியில் மேலே சொல்லிய ஆங்கிலம் பேசும் நாடுகளில் ஒர் தேசீய இன உணர்ச்சி உருவாகி வளர, உள்நாட்டு விடயங்களில் மாத்திரம் பொறுப்பாட்சி தந்தாற் போதாது, அதிலும் கூடியதான அதிகாரம் வேண்டும் என்ற கோரிக்கை பிறந்தது. 1867-ம் ஆண்டில் கனடா டொமினியன் என்னும் பெயருடன் ஒர் புதிய அந்தஸ்தை அடைந்தது. அதன்பின் ஆஸ்திரேலியா தன்னைப் பொதுநலவமைப்பு என்று குறித்தது. தென்ன பிரிக்கா தன்னை யூனியன் என்றது. டொமினியன், பொதுநலவமைப்பு, யூனியன் என்ற முப்பெயர்களுடன் இவ் வாறு அதிக பொறுப்பாட்சி பெற்ற மேலே சொல்லிய நாடு கள் தமது நன்மைக்கான வர்த்தக உடன்படிக்கைகளை வேற்று நாடுகளுடன் செய்யத் தமக்கு உரிமை வேண்டுமெனக் கோரின. மேலும் பிரித்தானிய ஏகாதிபத்தியக் கொள்கை விடயமாகவும் அந்நிய நாட்டுக்கொள்கை விடயமாகவும் இங்கிலாந்து தம்மையும் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் அவை கோரின. இவ்வாறு அவை கோரியதும் இயல்பே.
1. Commonwealth: சாம்ராச்சியம் என்றும் சிலர் கூறுவர்.

இலங்கைச் சமவரசின் அமைப்பு 3.07.
முதலாவது உலக மகா யுத்தத்தின் பயணுக இங்கிலாந் துக்கும் ஏகாதிபத்தியத்தில் சுயேச்சை அநுபவித்த நாடு களுக்குமிடையே யிருந்த தொடர்பில் பல மாற்றங்கள் உண்டாயின. அந்த யுத்தத்திலே டொமினியன் நாடுகள் அதிதீவிரமாகப் பங்குபற்றின. எனவே, அந்நிய நாட்டுக் கொள்கைபற்றிய ஆலோசனைகளிலும் எதிர்காலச் சமாதான ஒழுங்கிலும் தம்முடனும் இங்கிலாந்து கலந்தாலோசிக்க வேண்டும் என்று அவை உரித்துக்கோரக் காரணம் இருந்தது ஆகவே, சமாதான மகாநாட்டில் டொமினியன்கள் தம் பிரதி நிதிகளை அனுப்ப ஒழுங்கு செய்யப்பட்டது. சமாதான உடன் படிக்கைகளுக்கு டொமினியன் ஒவ்வொன்றும் கையொப்பம் இட்டது. இவ்வாரு கவே "இந்த டொமினியன்கள் சர்வதேச சமுதாய வாழ்க்கையில் பிரவேசித்து, அதன் பயனக உருவாய பிரித்தானிய ராச்சியப் பொதுநலவமைப்பு என்னும் தாப னத்திலே தாம் ஒன்றுக்கொன்றும், ஐக்கிய ராச்சியத்துட னும் சமத்துவமுடையனவாய ஓர் அந்தஸ்தை அடைந்தன.
ஆனல் உண்மையான சம அந்தஸ்தை அடைவதற்குப் பல நூந அம்சங்களை அகற்றவேண்டியிருந்தது. முந்திய குடியேற்ற நாடுகள் இங்கிலாந்தாகிய தாய் நாட்டுடன் கொண்டிருந்த தொடர்பின் கடைசி அறிகுறிகளாக இந்நூந அம்சங்கள் இருந்தன. டொமினியன்களின் மகாதேசாதிபதி களது அந்தஸ்தும் கருமங்களும் வரையறுக்கப்பட வேண்டி யிருந்தது. இன்னும், பொதுநலவமைப்பின் அந்நிய நாட்டு விவகாரங்களில் ஒவ்வொரு டொமினியனும் எவ்வாறு பங் கெடுப்பது என்பதும் தீர்க்கப்படவேண்டியிருந்தது. இதுவரை மகாதேசாதிபதியை இங்கிலாந்தின் மன்னர் தமது எண்ணப் படி நியமித்துவந்தார். இங்கிலாந்துடன் சமத்துவ அந்தஸ் துக் கொண்டுள்ள ஓர் டொமினியனின் மகாதேசாதிபதியை இங்கிலாந்தின் மன்னர் தமது எண்ணப்படி நியமித்தல் முறை யாகாது என்று கருதப்பட்டது. அந்நிய விவகாரங்களிலும் பிரித்தானிய அரசாங்கத்தின் அபிப்பிராயமே பாதிப்புடைய தாக இருந்தது. டொமினியன்கள் இங்கிலாந்துடன் சமத்துவ அந்தஸ்து உடையனவென்பது உண்மையேயாயின் இப்படி யான நிலைமை இருக்கக்கூடாது, இந்நிலைமை மாற்றப்படல் வேண்டும் என்றும் கருதப்பட்டது. இவையும், பொது நலவமைப்பில் இருந்து விரும்பினல் பிரிந்துபோவது என்றது போன்ற வேறும் பல விடயங்களும் பல்பூர் பிரபுவின் தலைமை யிலே 1926-ம் ஆண்டு நடந்த ஓர் ஏகாதிபத்திய மகாநாட்டில்2 சமர்ப்பிக்கப்பட்டன.
1. Lord Balfour.
2. Imperial Conference.

Page 159
3 08 இலங்கைச் சமவரசின் அமைப்பு
டொமினியன் அந்தஸ்து எவ்வாரு க இருக்கவேண்டும் என்பதை மேலே சொல்லிய ஏகாதிபத்திய மகாநாடு பின்வரு மாறு வரையறுத்தது:-அவை பிரித்தானிய முடியிடத்து (மன்னரிடத்து) பொதுவான இராச விசுவாசம் என்பதனல் ஒற்றுமையடைந்துள்ள போதிலும், பிரித்தானிய இராச்சியப் பொதுநலவமைப்பின் அங்கத்தவர்களாக யதேச்சையாகவே சேர்ந்துள்ளபோதிலும், அவை பிரித்தானிய ஏகாதிபத்தியத் துக்குள்ளே சுதந்திரமுடைய சமூகங்களாய், தம் உள்நாட்டு விவகாரங்களிலும் வெளிநாட்டு விவகாரங்களிலும் ஒன்றுக் கொன்று தாழ்ச்சியின்றி ஒன்றுக்கொன்று கீழ்ப்பட்டனவாக இராது சம அந்தஸ்துடையனவாக இருக்கும் . . . ஏகாதிபத் தியத்தில் சுதந்திரத்துடன் மிளிரும் ஒவ்வொரு அங்கத்துவ நாடும் தன்தன் தலைவிதியைத் தானே நிர்ணயிக்கும் பொறுப் பைத் தாங்கியுள்ளது. சட்டபூர்வமாக எழுதப்படாவிட்டா லும் உண்மையாகவே எந்தவகையான நிர்ப்பந்தத்திற்கும் ஒர் டொமினியன் நாடு உட்படுத்தப்படமாட்டாது.
மேலே கூறிய வியாக்கியானம் சட்டமுறையாக வெஸ்ற் மினிஸ்ரர் சட்டம்" என்ற சட்டத்தில் சேர்க்கப்பட்டது. இச் சட்டம் பொதுமக்கள் சபை, பிரபுக்கள் சபை என்ற இரண்டு சபைகளிலும் நிறைவேறி 1931-ம் ஆண்டில் மன்னரின் சம்ம தத்தைப் பெற்றது.
வெஸ்ற்மினிஸ்ரர் சட்டத்தின் பிரதான அம்சங்கள் வரு DIT ft) :—
(அ) பிரித்தானிய இராச்சியப் பொதுநலவமைப்பில் உள்ள அங்கத்துவ நாடுகளது யதேச்சையான இணக்கத்தின் சின்னமாக முடி (மன்னர்) இருப்ப தனலும் முடியின் பால் உள்ள பொது விசுவாசத் தினுல் இவ்வங்கத்துவ நாடுகள் ஐக்கியப்பட்டு இருப்பதாலும் அரச உரிமை அல்லது அரசமுறை, அல்லது அரச பட்டங்கள் பற்றிச் சட்டத்திலே ஏதும் மாற்றம் செய்வதாயிருப்பின் அம்மாற்றத்துக்கு ஐக்கிய ராச்சியத்துப் பாராளுமன்றத்தின் சம்மதம் தேவையாக இருப்பதுபோல டொமினியன்களின் பாராளுமன்றங்களது சம்மதமும் வேண்டியதாகும். (ஆ) எந்த டொமினியனதும் கோரிக்கைப்படியும் சம்ம தப்படியும் அன்றி ஐக்கிய இராச்சியத்துப் பாராளு மன்றத்தினுல் இயற்றப்படும் எந்தச் சட்டமும் எந்த டொமினியன் நாட்டுக்கும் பிரயோகிக்கப்
படமாட்டாது.
I. Statute of Westminster.

இலங்கைச் சமவரசின் அமைப்பு 3 O 9
(இ) இச்சட்டம் அநுட்டானத்துக்குவரத்தொடங்கியபின் ஒவ்வொரு டொமினியனது பாராளுமன்றத்தின லும் இயற்றப்படும் எந்தச் சட்டமாவது அது இங்கிலாந்துச் சட்டத்துக்கு விரோதமானது என்ற காரணத்தால் அந்த டொமினியனில் பிரயோக மாகாமலோ சட்டபூர்வமா காமலோ இருக்க மாட்டாது.
(ஈ) தன் பிரதேசத்துக்கு வெளியேனும் பிரயோகமாகத் தான் சட்டங்களை இயற்றுதற்கு ஒர் டொமினியன் பாராளுமன்றத்துக்குப் பூரண அதிகாரம் உண்டு.
மேலே கூறியனவற்றில் இருந்து ஒர் டொமினியன் என்பது பரிபூரண சுதந்திரம் அநுபவிக்கும் நாடென்பதும், தான் யதேச்சையாகச் சுதந்திரமாகச் சேர்ந்து பங்காளியாக அங்கத் துவம் வகிக்கும் பொதுநலவமைப்பில் தொடர்ந்திருக்கவும் அதனை விட்டு விலகவும் முழு அதிகாரம் உடையதென்பதும் தெளிவு. ஆனல் ஓர் டொமினியன் பொதுநலவமைப்பிலே அங்கத்துவம் வகிக்கும்வரை அது மற்றும் சகோதர அங்கத் துவ நாடுகள் பால் ஆற்றவேண்டிய கடமைகளும் உண்டு. ஒவ்வொரு டொமினியனும் தன் தன் நலவுரிமைகளையே முதலில் கவனிக்கவேண்டும் என்பது ஒத்த முடிபு. தமக்கே விசேடமாகவுள்ள விடயங்களும் சில டொமினியன்களுக்கு உள. உதாரணமாகத் தென்கிழக்கு ஆசிய விவகாரங்களில் ஆஸ்திரேலியாவுக்கு அதிக சிரத்தை உண்டு. அங்கே நடக்கும் விடயங்கள் அதற்குச் சீவாதாரமானவை. ஆனல் கனடாவின் நலன்கள் தென் கிழக்கு ஆசியாவில் இல்லை. அதன் நலன்கள் ஐக்கிய அமெரிக்க நாடுகளுடனும், கிறீன்லாந்துடனும் வட துருவப்பனியுறை பகுதிகளுடனும் தான் உள. ஒவ்வொரு டொமினியனும் தான் தான் விரும்பிய எந்த நாட்டுடனும் இராணுவப் பாதுகாப்பு உடன்படிக்கைகளோ, வியாபார வர்த்தக உடன்படிக்கைகளோ செய்யச் சுதந்திரம் உண்டு. ஆனல் அவ்வாறு செய்யமுன் தனது முழு எண்ணத்தையும் மற்றும் சகோதர டொமினியன்களுக்கு அது அறிவித்தல் வேண்டும். பல்வேறு டொ மினி யன் களுக்கு மிடையில் உள்ள மத்திய தொடர்புச் சாதனம் லண் டனி ல் உள்ள டொமினியன் காரியாலயமே யாகும். டொமினியன் களைப் பாதிக்கும் விடயங்களைப்பற்றிக் கலந்தாலோசிக்கக் காலந் தோறும் பொதுநலவமைப்பின் மகாநாடுகளும் கூட்டப்படும். இம்மகாநாடுகளில் டொமினியன்கள் பரஸ்பரம் தமது கருத் துக்களைத் தெரிவிக்கும். டொமினியன் பிரதிநிதிகள் பொது
... Dominion Office.

Page 160
31 O இலங்கைச் சமவரசின் அமைப்பு
நலவமைப்பு நாடுகளிலும் புறநாடுகளிலும் உளர்; ' எந்த விடயத்திலாவது தன் கொள்கையைத் தான் விரும்பியபடி அமைத்துக்கொள்வதற்கும் வெளிநாட்டுச் கருமங்கள் விடய மாகத் தான் மற்றும் அரசாங்கங்களுடன் எவ்வளவுக்கு ஒத்து ழைக்கவேண்டும் என்பதை நிர்ணயிட் பதற்குமான கடைசி அதிகாரம் அந்த அந்த டொமினியனுக்கே உளது. ஆகவே ஒரு மத்திய இடத்திலிருந்து முழு ஏகாதிபத்தியத்துக்குமான ஒரே அந்நியநாட்டுக் கொள்கையை வகுப்பதென்பது இயலாத கருமம் ஆகும். ஒரே அந்நிய நாட்டுக் கொள்கையில்லாதபோதும் ஒன்று கூடி அங்கீகரித்த நியமப்படி வகுக்கப்பட்ட ஒர் பொது வான அந்நிய நாட்டுக்கொள்கை இருக்கலாம்'.
ஐக்கிய ராச்சியத்திலே மன்னரானவர் எந்த அந்தஸ்தினை வகிக்கிருரோ அந்த அந்தஸ்தினையே மகாதேசாதிபதி ஓர் டொமினியனில் வகிக்கிருர், (அயர் என வழங்கப்படும் ஐயர்லாந்தை ஒழிந்த ஏனைய) டொமினியன்கள் எல்லா வற்றிலும் அரசாங்கத்தின் அதி உன்னத அதிகாரங்கள் யாவும் முடி (மன்னர்) யிலிருந்தே பெறப்பட்டு மன்னர் பெயரா லேயே பிரயோகிக்கப்படும். ஐயர்லாந்தை ஒழிந்த ஏனைய டொமினியன்களின் சட்டநிரூபண அமைப்பில் மன்னர் அல் லது அவரின் பிரதிநிதி ஒர் இன்றிமையா அம்சம்?. “டொமினி ti I Gir பாராளுமன்றத்து ஆலோசனை, சம்மதம் என்பவற்ருலும் அவ்வாலோசனை, சம்மதத்தைக் கொண்டும் சட்டங்கள் மகா தேசாதிபதியால் வழக்கமாகப் பிறப்பிக்கப்படும். ஒர் டொமினியன் அரசாங்கத்துப் பரிபாலன அல்லது நிருவாகக் கருமங்கள் முடியின் ஊழியரால், கோட்பாட்டின்படி முடிக்கே பொறுப்பாளிகளாயுள்ள மந்திரிமாரால் நடாத்தப்படும். அர சியல் விடயமாக மந்திரிமார் தங்களின் கீழுத்தியோகத்தரின் கருமங்களுக்கும், தாம் முடிக்கு அளிக்கும் ஆலோசனைகளுக் கும் சனங்களால் தெரிந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிநிதிகளுக் குப் பொறுப்பாளிகளாவர்.
1. இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் மன்னர்பெயரால் அதிகாரம் செலுத்தப்படமாட்டாது. இவை பொதுநலவமைப்பிலே அங்கத்துவம் வகிக்கிறபோதிலும் ஏனைய டொமினியன்களுக்கிருப்பதுபோல மன்னர் தொடர்பு அவற்றுக்கு இல்லை. இலங்கையும் ஓர் குடியரசாவதற்கான அறிகுறிகள் தோன்றியிருக்கின்றன. இலங்கை குடியரசாகு மிடத்து, மன்னர் பெயரால் அதிகாரம் செலுத்தப்படமாட்டாது.
2. இந்தியா, பாகிஸ்தான் புதிய அரசியலமைப்பிலே இந்த அம்சம் இல்லை.

இலங்கைச் சமவரசின் அமைப்பு 31 I
ஆகவே டொமினியன் அந்தஸ்தானது ஓர் நாட்டுக்குச் சகல விடயங்களிலும் நிறைவான, பரிபூரணமான சுதந் திரத்தை வழங்குகிறது என்பது மேலும் தெளிவாகிறது. அந் நாடு பொதுநலவமைப்பில் இருக்கும் வரை அதன் அதிகாரத்து ஊற்று மன்னராக இருப்பர். இங்கிலாந்திற்போல டொமினி யன்களிலும் அவரது அமைச்சர் மாரே அரசாங்கத்தை நடாத்து வர். மேலும், ஓர் டொமினியன் பொதுநலவமைப்பிலே அங்கமாக இருக்கும்வரை தன் சகோதர டொமினியன் நாடுக ளுடன் பரஸ்பர தொடர்புபற்றியும் அந்நிய நாடுகளுடன் கொண்டுள்ள தொடர்பு சம்பந்தமாகவும் பேசிக் கலந்தா லோ சிக்கவேண்டும். ஆணுல் இப்படிப்பேசிக் கலந்தாலோ சிப்ப தால் அது தான் விரும்பியபடி நடப்பதற்கான சுதந்திரம் எவ்வாற்ருனும் கட்டுப்படுத்தப்படமாட்டாது; அல்லது குறைக்கப்படமாட்டாது. இரண்டாவது உலக மகா யுத்தத் தின்போது பொதுநலவமைப்பில் இருந்த சுதந்திர நாடுகளில் அயர் நாடானது (Eire) பொதுச் சத்துருவுக் கெதிராகப் போர் தொடுக்காது தன்னந்தனியாக நின்றமை ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. அது நடுவுநிலைமை வகித்தமை இங்கிலாந் துக்குப் பெரும் ஆபத்தாகவும் அதன் பாதுகாப்புக்குப் பெரும் கஷ்டம் விளைத்ததாகவும் இருந்தபோதிலும் e 91 51 யுத்தத்திற் சேரும்படி பலவந்தம் செய்யப்படவில்லை.
1948-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ம் திகதி இலங்கையும் ஓர் டொமினியனுகியது. டொமினியனுக்குள்ள சகல உரிமை களும் சலாக்கியங்களும் அதற்கு வழங்கப்பட்டன. பிரித் தானிய இராச்சியப் பொதுநலவமைப்பிலே பூரண பொறுப் பந்தஸ்து வழங்கும் ஒர் மசோதா இதன் பொருட்டுப் பிரித் தானியப் பாராளுமன்றத்திலே நிறைவேற்றப்பட்டது. டொமினியன் அந்தஸ்தை நடைமுறையிற் கொண்டுவரு தற்கு இம் மசோதாவுடன் வேறும் நாலு சாதனங்கள் தேவை யாக இருந்தன: அவையாவன:-
(1) இலங்கை அரசியற்றிட்டத்தில் பொறுப்பாட்சிக்கு வரைவிட்டிருந்த தடைகளை அகற்றுதற்கான ஓர் இராசசபைக் கட்டளை. (2) சில வெளிநாட்டு விவகாரங்கள் சம்பந்தமான விட யங்களை வழங்குவதற்கான ஓர் வெளிநாட்டு விவகார உடன்படிக்கை. (3) இலங்கையின் இராணுவப் பாதுகாப்புக்குத் தேவை யான கருமங்களைச் செய்தற்கு ஓர் பாதுகாப்பு உடன்படிக்கை.

Page 161
312 இலங்கைச் சமவரசின் அமைப்பு
(4) அரசாங்க உத்தியோகத்தர் விடயமாக இதுவரை ஐக்கிய இராச்சியத்து அரசாங்கத்தில் விடப்பட் டிருந்த பொறுப்பை இலங்கை யரசாங்கத்துக்கு மாற்றுதற்கான அரசாங்க உத்தியோகத்தர்பற்றிய உடன்படிக்கை. ஐக்கிய இராச்சியத்து அரசாங்கமும் இலங்கை யரசாங்க மும் சம்மதித்து ஒப்பமிட்ட ‘இலங்கைச் சுதந்திர மசோதா!" பாதுகாப்பு உடன்படிக்கை, வெளிநாட்டு விவகார உடன் படிக்கை என்பவற்றின் பிரதான பிரிவுகள் சில அப்படியே கீழே தரப்பட்டிருக்கின்றன:-
இலங்கை பிரித்தானிய இராச்சிய பொதுநலவமைப்பில் பூரண பொறுப்பந்தஸ்து அடைவது பற்றி ஒழுங்கு இயற்று தற்கான
ஒர் மசோதா 1.-(1) நியமனதினத்தன்று? அல்லது அதற்குப்பிந்தி ஐக்கிய ராச்சியத்துப் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப் படும் எந்தச் சட்டமும், இலங்கை அப்படியாக ஓர் சட்டம் இயற்றவேண்டும் எனத் தீர்க்கமாகக் கோரி அது இயற்றப் படுதற்குச் சம்மதம் அளித்தாலன்றி, இலங்கை அரசியற் பிரமாணத்தில் ஒர் பகுதியாக இலங்கைக்குப் பிரயோக மாகவோ பிரயோகமாகும் எனக் கருதப்படவோ மாட்டாது. (2) நியமன தினத்திலிருந்து ஐக்கிய இராச்சியத்தில் உள்ள மாட்சிமைதங்கிய மன்னர் பிரானது அரசாங்கம் இலங்கையின் அரசாங்கத்துக்குப் பொறுப்பாக இருக்கமாட் t-fT gil.
(3) நியமன தினத்திலிருந்து இச்சட்டத்தின் முத லாம் அட்டவணை விதிகள் இலங்கையின் சட்டநிரூபண அதி காரங்கள் விடயமாகப் பலம் கொண்டவையாகும்.
இலங்கையின் சட்டநிரூபண அதிகாரங்கள்
1.-(1) 1865-ம் ஆண்டின் குடியேற்ற நாட்டுப்பிரமான உறுதிப்பாட்டுச் சட்டம், நியமன தினத்தின் பின் இலங்கைப் பாராளுமன்றத்தால் இயற்றப்படும் எந்தப் பிரமாணம் விட யத்திலும் பொருந்தாது.
1. Ceylon Independence Bill.
2. நியமிக்கப்பட்ட தினம் என்பது இலங்கை டொமினியன் அந் தஸ்தை அடைய நியமிக்கப்பட்ட தினமாகிய 4-2.48ஐக் குறிக்கும். Appointed Day.
3. Colonial Laws Validity Act.

இலங்கைச் சமவரசின் அமைப்பு 313
-(2) இந்த நியமன தினத்தின் பின் இலங்கைப் பாராளு மன்றத்தினுல் இயற்றப்படும் எந்தப் பிரமாணமும், எந்தப் பிரமாண ஏற்பாடும் இங்கிலாந்துப் பிரமாணங்களுக்கோ ஐக்கிய இராச்சியத்துப் பாராளுமன்றத்தின் நடைமுறையில் உள்ள எந்தச் சட்ட ஏற்பாடுகளுக்கோ அல்லது எந்த எதிர் காலச் சட்டத்துக்கோ அல்லது அப்படியான சட்டத்தின் கீழ் இயற்றப்பட்டும் கட்டளை, விதி அல்லது ஒழுங்கு விதிக்கோ விரோதமானது என்ற காரணத்தால் சூனியமாய் அல்லது காரியப்பட மாட்டாததாய் இருக்கமாட்டாது. இன்னும், அத் தகைய சட்டம், கட்டளை, விதி, ஒழுங்குவிதி இலங்கைப் பிர மாணத்திற்குப் பா த கமா க இருக்குமாயின் அவற்றைத் தவிர்க்கவோ மாற்றவோவுள்ள அதிகாரங்களும், இலங்கைப் பாராளுமன்றத்து அதிகாரங்களில் அடங்கும்.
2.-தன் நாட்டுக்கு வெளியேயும் செல்லுபடியாகும் பிரமாணங்களை ஆக்க இலங்கைப் பாராளுமன்றத்துக்குப்
பரிபூரண அதிகாரம் உண்டு.
பாதுகாப்பு உடன்படிக்கை பிரித்தானிய இராச்சியப் பொதுநலவமைப்பில் பரிபூரண பொறுப்புவாய்ந்த அங்கத்துவ நாடாக, முடியின் (மன்னரின்) பால் உள்ள பொது விசுவாசம் என்பதனல் மற்றும் நாடுக ளுடன் யதேச்சையாகச் சேர்ந்து ஐக்கியப்பட்டு, உள்நாட்டு விவகாரங்களிலும் சரி, வெளிநாட்டு விவகாரங்களிலும் சரி எவ்வாற்ருனும் குறைவில்லாத அந்தஸ்துடன் விளங்கவேண் டிய அரசியல் அபிவிருத்தி நிலைமையை இலங்கை எய்தி விட்டமையினலும்,
இலங்கையினதும், பெரிய பிரித்தானியா, வட அயர்லாந்து என்பவற்றைக்கொண்ட ஐக்கிய இராச்சியத்தினதும் பிர தேசங்களைச் சரியான முறையில் ரட்சிக்கவும் பாதுகாக்கவும் வேண்டிய நடவடிக்கைகளைச் செய்தலும், இந்நோக்கத்தின் பொருட்டுத் தேவையான வசதிகள் வழங்கலும் இரு நாடு களினதும் பரஸ்பர கருத்தே யாதலினலும்,
ஐக்கிய இராச்சிய அரசாங்கமும் இலங்கையரசாங்கமும் பின்வருமாறு ஒத்துக்கொண்டன:-
1. தத்தம் பிரதேசப் பாதுகாப்புக்கும், வெளிநாட்டாரின் தாக்குதலினின்றும் பாதுகாத்தற்கும் பரஸ்பர நன்மையின் பொருட்டுச் செய்து கொடுக்கப்படும் அத்தியாவசியக போக்கு வரத்துச் சாதனங்களைப் பாதுகாத்தற்கு வேண்டிய இராணுவ உதவியை ஐக்கியராச்சியத்து அரசாங்கமும் இலங்கை யரசாங்கமும் பரஸ்பரம் கொடுத்துதவும். இந்நோக்கங்களுக்

Page 162
3I4 இலங்கைச் சமவரசின் அமைப்பு
குத் தேவையாகவும், பரஸ்பரம் ஒத்துக்கொண்டபடியும் ஐக்கியராச்சிய அரசாங்கமானது இலங்கையிலே கடற்படைத் தளங்களையும் ஆகாசப்படைத் தளங்களையும், தரைப்படை களையும் வைத்திருக்கலாம்.
2. முதலாம் பிரிவிற் குறிக்கப்பட்டுள்ள நோக்கங்களுக் கான சகல தேவையான வசதிகளையும் ஒத்துக்கொள்வதற் கிணங்க ஐக்கியராச்சிய அரசாங்கத்துக்கு இலங்கை அரசாங் கம் உதவும். கடற்படைத் தளங்கள், ஆகாசப்படைத் தளங் கள், துறைமுகங்கள், இராணுவத் தாபனங்கள் என்பவற்றை உபயோகித்தல், தந்தி-போக்குவரத்துச் சாதனங்களைச் உப யோகித்தல், மேலே சொல்லிய படைகளைச் சேர்ந்தவர்கள் மீது, இப்போதுபோலக் கட்டுப்பாடும் நியாயாதிக்கமும் செலுத் தற்கான ராணுவ நீதிமன்றங்களையும் வைத்து அதிகாரங் களைப் பிரயோகித்தல் என்பன இவ்வசதிகளில் அடங்கும்.
3. இலங்கையின் இராணுவத்தின் பயிற்சிக்கும் அபிவிருத் திக்கும் காலந்தோறும் வேண்டிய இராணுவ உதவியை இலங்கை யரசாங்கத்துக்கு ஐக்கிய இராச்சிய அரசாங்கம் வழங்கும்.
4. இராணுவப் பாதுகாப்பு விடயங்களில் ஒத்துழைப்பது பற்றியும் இரு அரசாங்கங்களுக்கும் வேண்டிய ராணுவத் தேவைகளைத் தீர்மானித்தல் பற்றியும் அவற்றை ஒரோமுகப் படுத்தல் பற்றியும் வேண்டியவை எனத் தாம் உடன்படும் பரிபாலனச் சாதனங்களை இரு அரசாங்கங்களும் அமைக்கும்.
5. பிரித்தானிய ராச்சியப் பொதுநலவமைப்புக்கள் பரி பூரண பொறுப்பந்தஸ்து இலங்கைக்கு வழங்கப்படுவதற்கு ஏற்ற அரசியல் நிர்மாண ஒழுங்குகள் நடைமுறையில் வரும் தினத்தன்று இவ்வுடன் படிக்கையும் நடைமுறைக்கும் வரும்.
வெளிநாட்டு விவகார உடன்படிக்கை
பிரித்தானிய ராச்சியப் பொதுநலவமைப்பின் பரிபூரண பொறுப்புவாய்ந்த அங்கத்துவ நாடாக, முடியின் பால் உள்ள பொதுவிசுவாசம் என்பதனல் மற்றும் நாடுகளுடன் யதேச்சை யாகச் சேர்ந்து ஐக்கியப்பட்டு உள்நாட்டு வியவகாரங்களிலும் சரி, வெளிநாட்டு வியவகாரங்களிலும் சரி எவ்வாற்ருனும் குறைவில்லாத அந்தஸ்துடன் விளங்கவேண்டிய அரசியல் அபிவிருத்தி நிலைமையை இலங்கை எய்திவிட்டமையினலும்,
பெரிய பிரித்தானியா, வட அயர்லாந்து என்பவற்றைக் கொண்ட ஐக்கியராச்சிய அரசாங்கமும் இலங்கையரசாங்க மும் வெளிநாட்டு விவகாரங்கள் சம்பந்தமான சில விடயங் களை விதிக்க உடன்படிக்கை செய்து கொள்ள விரும்புகிற படியினலும்,

இலங்கைச் சமவரசின் அமைப்பு 35
ஐக்கிய இராச்சிய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் பின்வருமாறு உடன்பட்டிருக்கின்றன -
1. கடந்தகால ஏகாதிபத்திய மகாநாடுகளின் நிர்ணயங் களைக் கைக்கொள்ளவும் பின்பற்றவும் இலங்கையரசாங்கம் தனது சம்மதத்தைத் தெரிவிக்கிறது.
2. வெளிநாட்டு விவகாரங்கள் பற்றிப் பொதுவாகவும், ஆலோசனைகளைத் தெரிவித்தல், தகவல்களைத் தெரிவித்தல் என்பனபற்றி விசேடமாகவும், ஐக்கியராச்சிய அரசாங்க மானது இலங்கை சம்பந்தப்பட்டவரை, பொதுநலவமைப் பில் உள்ள அங்கத்துவ நாடுகளால் இப்போது அநுட்டிக்கப் படும் நியமங்களையும் வழக்குகளையும் கைக்கொள்ளவும், இலங்கையரசாங்கமும் தன்னைப் பொறுத்தவரை அதே நியமங்களையும் வழக்குகளையும் கைக்கொள்ளவும் உடன் படுகின்றன.
3. இலங்கையரசாங்கத்தின் பிரதிநிதியாக லண்டனில் ஒர் ஹை கமிஷனர் இருப்பர். கொழும்பிலும் ஐக்கியராச்சி யத்தின் பிரதிநிதியாக ஓர் ஹை கமிஷனர் என்னும் அரசுத் தூதர் இருப்பர்.
4. அந்நிய நாடுகளுடன் இராசரீகப் பிரதிநிதிகளை மாற் றிக்கொள்ள இலங்கை விரும்பி, அவ்விருப்பத்தை அவ்வந்நிய நாட்டு அரசாங்கங்களுக்கு அறிவிக்கவேண்டும் என்று இலங்கை யரசாங்கம் கோரினல், ஐக்கியராச்சிய அரசாங்கம் அவ்வாறு தெரிவிக்கும். இலங்கையின் இராசரீகப் பிரதிநிதியில்லாத எந்த அந்நிய நாட்டிலும் தன் இராசரீகப் பிரதிநிதியே இலங்கையரசாங்கத்தின் சார்பாக அந்நாட்டிற் கருமம் ஆற்ற வேண்டும் என்று இலங்கையரசாங்கம் கோரினல், அப்படிச் செய்யவும் ஒழுங்குசெய்யும்.
5. ஐக்கியநாடுகள் தாபனத்திலாவது, ஐக்கியநாடுகள் தாபனத்து உரிமைப்பத்திரத்தின் 57வது பிரிவில் விபரிக்கப் பட்டுள்ள எந்த விசேட சர்வதேசீய தாபனத்திலாவது அங்கத் துவம் கோரி இலங்கை செய்யும் மநுவுக்கு ஐக்கியராச்சிய அரசாங்கம் தனது முழு ஆதரவையும் அளிக்கும்.
6. ஏதும் சர்வதேசீயச் சாதனம் காரணமாக இலங்கைக் குப் பொருத்தமாகி இதுவரை ஐக்கியராச்சியத்தின் கடமைக ளாகவும் பொறுப்புக்களாகவும் இருந்தவை இனி இலங்கை யரசாங்கத்தின் மீது பொறுப்பிக்கப்படும். அத்தகைய சர்வ தேசீயக் சாதனம் இலங்கைக்கு இதுவரை பொருத்தமாயிருந் தமையினல் ஐக்கியராச்சிய அரசாங்கம் ஏதும் உரிமைகளையும் நன்மைகளையும் அநுபவித் திருந்தால் அவ்வுரிமைகளும் நன்மை களும் இனி இலங்கையரசாங்கத்தால் அநுபவிக்கப்படும்.

Page 163
31 6 இலங்கைச் சமவரசின் அமைப்பு
7. பிரித்தானிய இராச்சியப் பொதுநலமைப்பிற்குள் பரி பூரண பொறுப்பந்தஸ்து இலங்கைக்கு வழங்கப்படுதற்கு ஏற்ற அரசியல் நிர்மாண ஒழுங்குகள் நடைமுறையில் வரும் தினத் தன்று இவ்வுடன் படிக்கையும் நடைமுறைக்கு வரும்.
மேலே சொல்லிய மசோதாக்களின் பிரதான அம்சங்கள் சட்டமுறையில் எழுதப்பட்டிருக்கிறபடியினுல் அவ்வளவு தெளிவாக உங்களுக்குப் புரியாமல் இருக்கலாம்.
பிரித்தானியப் பாராளுமன்றத்தின் சட்டநிரூபண அதி காரத்தில் இருந்து இலங்கை என்னும் டொமினியன் பரிபூரண மாக விடுதலை அடைகிறது என்பதைச் சுதந்திர மசோதா தெள்ளத் தெளியக் காட்டுகிறது. பிரித்தானியப் பாராளு மன்றம் தான் இலங்கைக்கு வேண்டிய பிரமாணங்களை இயற்றிய காலமும் ஒன்றிருந்தது. ஆனல் இந்த உரிமைகளைப் பிரித்தானிய அரசாங்கம் மேலே சொல் லிய சுதந்திர மசோதாவினல் தானகவே துறந்துவிட்டது.
1865-ம் ஆண்டிலே குடியேற்றநாட்டுப் பிரமாண உறுதிப் பாட்டுச்சட்டம் என்று ஒர் சட்டம் இங்கிலாந்தில் நிறை வேற்றப்பட்டது. அச்சட்டத்தின்படி ஓர் குடியேற்றநாட் டின் சட்டசபையானது ஏகாதிபத்தியத்து எந்தச் சட்டத்துக் கும் முரணுன எவ்வித சட்டத்தை நிறைவேற்றிஞலும் அது சூனியமாக, அநுட்டானத்துக்குக் கொண்டு வரப்படாததாக இருக்கும் என விதிக்கப்பட்டது. இச்சட்டம் இப்போது தவிர்க்கப்பட்டுவிட்டது. அச் சட்டம் இனி இலங்கை விடயத்தில் பொருந்தாது. நாம் இலங்கைப் பாராளு மன்றத்தில் நிறைவேற்றும் பிரமாணங்கள், இப்போதுள்ள பிரித்தானிய சட்டங்களுக்காவது, இனிவரும் பிரித்தானிய சட்டங்களுக்காவது விரோதமானவையாக விருப்பினும் சூனிய மாகா. அவை நடைமுறையிற் கொண்டுவரப்படும். இவை எல்லாம் எதனைக் காட்டுகின்றன? நாம் வலிந்து கோரினல் ஒழிய, பிரித்தானியப் பாராளுமன்றம் இனி இந்நாட்டுக்கான பிரமாணங்களை இயற்றி நிறைவேற்ற அதிகாரம் உடையதாக இல்லை என்பதனையும், பிரித்தானியப் பாராளுமன்றத்தின் இப் போதைய அல்லது இனிவரும் சட்டங்களுக்கு விரோத மானவை என்ற காரணம் பற்றி நாம் எம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றும் சட்டங்கள் சூனிய மாகா என்பதனையும் இவை எல்லாம் துலாம் பரமாகக் காட்டுகின்றன.
இலங்கைக்கு அப்பாலும் செல்லுபடியாகக் கூடிய பிர மாணங்களை ஆக்க இலங்கைப் பாராளுமன்றத்துக்குச் சுதந்திர மசோதா அதிகாரம் அளித்திருக்கிறது. முந்தி எல்லாம் ஒர் டொமினியன் தன் அமைதிக்கும் ஒழுங்குக்கும்

இலங்கைச் சமவரசின் அமைப்பு 3 I ア
நல்லாட்சிக்கும் இன்றியமையாதனவல்லாத பிரமாணங்களைத் தன் எல்லைக்கப்பால் பிரயோகிப்பதற்கு இயற்றமுடியாது. உதாரணமாகத் தனது பிரசை ஒருவன் வெளிநாடுகளில் இயற்றும் குற்றத்தின் பொருட்டு அவனைத் தண்டிக்க முடியாது. ஆனல் இப்போது வழங்கப்பட்ட புதிய அதிகாரத்தினுல் இலங்கைப் பிரசைகள் வெளிநாடுகளில் செய்யும் குற்றங் களுக்கும் அவர்களைத் தண்டிக்க இலங்கையரசாங்கத்துக்கு, உரிமை இருக்கிறது. தொகுத்துக் கூறுங்கால் எந்தவிதமான மேலதிகார ராச்சியத்தின் தலையீடுமின்றி இலங்கைப் பாராளு மன்றம் சட்டங்களை ஆக்கும் அதிகாரத்தை இப்போது உடையதாக இருக்கிறது.
இராணுவப் பாதுகாப்புப் பற்றிய சகல விடயங்களிலும், இலங்கைப் பாராளுமன்றத்துக்குப் பரிபூரணமான அதிகாரம் இருக்கிறது. ஆனல் நாம் எமது உண்மை நிலைமையை இவ் விடயத்தில் உணரவேண்டும்; நாமோ தொகையிற் குறைந்த வர்கள்; எமக்குப் பாரிய தரைப்படையோ, கடற்படையோ,
ஆகா சப்படையோ இல்லை. ஆகவே பகைவர் வந்து எம். நாட்டைத் தாக்கும் காலத்தில் நாம் நிராதரவான நிலையில் இருக்க ஏற்படும். எனவே, எம்முடன் நட்புக் கொண்டுள்ள
ஓர் வல்லரசுடன் இவ்விடயமாக ஒர் நட்புடன் படிக்கை செய்துகொள்ளுதல் நன்மை தருமல்லவா? உலக அமைப்பிலே ராணுவ விடயமாக இலங்கை ஒர் கேந்திரத் தானத்தை வகிக் கிறது. எனவே எம் பாதுகாப்பு மிகவும் இன்றியமையாதது, அப்பாதுகாப்புக்குரிய ஒர் இராணுவப் பாதுகாப்பு உடன் படிக்கை இங்கிலாந்துடன் செய்யப்பட்டது. சமத்துவமும், பரிபூரண சுதந்திரமும் உடைய இரண்டு அரசாங்கங்கள் என்ற நியதியிலேயே இலங்கையும் இங்கிலாந்தும் இவ்வுடன் படிக்கையைச் செய்தன. இப்பாதுகாப்பு விடயங்கள், குறித்த பாதுகாப்பு உடன் படிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளன. இவ் வாரு ன உடன்படிக்கையை இங்கிலாந்துடன் செய்திருக்கிற படியினல், எமது அயல்நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், பர்மா, ஆஸ்திரேலியா என்பவற்றுடன் நாம் இராணுவ உடன்படிக்கைகள் செய்யமுடியாது என்பது கருத்து அன்று. குறித்த இந்த நாடுகளுடனே வேறும் நாடுகளுடனே நாம் விரும் பியபோது எந்த விதமான உடன் படிக்கைகளையும் செய்துகொள்ள எமக்குச் சுதந்திரம் உண்டு.
பொதுநலவமைப்பில் நாம் அங்கத்தவராக இருப்பது, ஓர் கல்லூரிப் பழைய மாணவர் சங்கத்து அங்கத்தவரா யிருப்பதைப் போன்றது என்றும் கூறலாம். இந்தப் பழைய மாணவர் சங்கத்து அங்கத்தவர்கள் ஒவ்வொரு வரையும்

Page 164
3.18 இலங்கைச் சமவரசின் அமைப்பு
பிணிக்கும் அந்தரங்க சக்தி ஒன்று இருக்கிறது. அவர்கள் ஒவ்வொருவரும் தத்த மக்குச் சிறந்த கொள்கையினைப் பின் பற்ற பூரண சுதந்திரம் இருக்கிறபோதிலும், தாம் செய்த அல்லது செய்யப்போகும் கருமங்களை மற்றும் சகோதர அங்கத் தவர்களுக்கும் தெரிவிக்கவேண்டிய ஓர் கடமை இருக்கிறது. இதுபோலத்தான் பொதுநலவமைப்பு நாடுகள் விடயத்திலும்: இப்பொதுநலவமைப்பு நாடுகள் அனைத்துக்கும் பொதுவான ஒர் அந்நிய நாட்டுக் கொள்கையில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்: ஆனல் நடந்துமுடிந்த இரண்டு உலக மகா யுத் தங்கள் போன்ற சம்பவங்கள், வெள்ளைநிற மனிதர் வசிக்கும் டொமினியன்கள் ஒற்றுமைப்பட்டு ஒன்று கூடியே வாழும் என் பதைக் காட்டியிருக்கின்றன. வெள்ளை நிறத்தவர் வசிக்கும் டொமினியன்களுக்கிடையில் ஒருவித பந்துத்துவமும் பண் பாட்டு ஒற்றுமையும் உள. அப்பந்துத்துவமும் ஒற்றுமையும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை என்னும் பிற்கால டொமி னியன்கள் பால் இல்லை. பின் கூறிய மூன்று டொமினியன்களும் வெள்ளைநிறத்தவர் பூமியன்று. அவற்றை வெள்ளேக்காரர் பரிபாலித்த முறை சுதேசிகளுக்கெப்போதும் இணக்கமாக இருக்கவும் இல்லை. இந்தியாவில் பிரித்தானியரின் ஆட்சி இந்திய மக்களுக்குக் கைப்பாக இருந்ததுபோல, இலங்கையில் அவர்களது ஆட்சி இலங்கை மக்களுக்குக் கைப்பாக இருந்தது என்று கூறமுடியாது. ஆணுல் பழையன எல்லாவற்றையும் மறந்து இப்போது ஒர் புதிய சகாப்தத்தை நாம் எய்தியிருக் கிருேம். இப்போது எமக்கும் பிரித்தானியருக்குமிடையே யுள்ள தொடர்பு வேறுவிதமானது. இன்று இந்தியாவிலே இங்கிலாந்து விடயத்தில் இருக்கும் நல்லெண்ணம் போல எக் காலத்தும் இருக்கவில்லை என்று இந்தியா-இங்கிலாந்து உறவு பற்றி பூணி ஜவஹர்லால் நேரு கூறியமை FF 6ööT (6) நோக்கற்பாலது. பூரீ நேரு அவர்கள் கூற்று இலங்கைஇங்கிலாந்து விடயத்திலும் நன்கு பொருந்தும். இந்த ஒற்றுமைக்கும் நல்லெண்ணத்துக்குமான புதிய உணர்ச்சி காலம் போ கப்போக, பல்வேறுவகையான டொமினியன்கள் அனைத்தையும் ஒரே சங்கமாக்க ஏதுவாகும் என்பதற்குச் சந்தேகமின்று.
அந்நிய நாட்டு விவகாரங்களில் தானும், ஒர் டொமினி -யன், தான் பரிபூரண சுதந்திரநாடு என்ற ரீதியில் தனது சொந்த நலன்களையே கவனிக்க உரித்துடையதாகும். இங்கி லாந்து காட்டும் வழிப்படிதான் நடக்கவேண்டும் என்ற பல வந்தம் எந்த டொமினியனுக்காவது இல்லை. ஆணுல் நல் "லெண்ணத்தை ஆதாரமாகக்கொண்டு அமைக்கப்படும் எச் சங்கத்திலும் கலந்து பேசும் முறையிருக்கிறதன்ருே? ஒவ்

இலங்கைச் சமவரசின் அமைப்பு 39
வொரு டொமினியன் நாடு ம் தான் கைக்கொள்ளும் கொள்கையை மற்றும் சகோதர டொமினியன்களுக்குப் பூரண மாக அறிவித்து அதன் ஆலோசனையைக் கேட்கும், ஒவ்வொரு டொமினியனும் ஒவ்வோர் ஹைகொ மிஷனரை (அரசுத்துர தரை) மற்றும் டொமினியனுக்குத் தனது பிரதிநிதியாக அனுப் பும். இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா என்னும் டொமினியன்களது ஹைகொ மிஷனர் மார் இங்கே இருக்கிருர்கள். எம் நாட்டுக்குரிய ஹைகொ மிஷனர்கள் மற்றும் டொமினியன்களில் இருக்கிருர்கள். லண்டனிலே யுள்ள டொமினியன் காரியாலயம் மூலமாகப் பல்வேறு டொமி னியன்களது கொள்கை பரஸ்பரம் தெரிவிக்கப்படுகிறது. பொதுநலவமைப்புப் பிரதமமந்திரிகள் மகாநாடுகளும் காலந் தோறும் நிகழ்கின்றன. இம் மகா நாடுகளில் பொது நலவமைப்புச் சம்பந்தப்பட்ட சகல பிரச்சினைகளும் நன்கு, பகிரங்கமாக, பரிபூரணமாக விவாதிக்கப்படுகின்றன. இவ் வாரு க, பொதுநலவமைப்பு அரசியற் பிரமுகர்களும் பிரதம மந்திரிகளும் அடிக்கடி ஊடாடுவதால், அந்நாடுகள் ஒன்றையொன்று நன்கு விளங்கவும் தம் அந்நிய நாட்டுக் கொள்கையினையும் பாதுகாப்புக் கொள்கையினையும் ஒரோ வழிப்படுத்தியமைக்கவும் முடியும். டொமினியன்களுக்கும். இங்கிலாந்துக்குமிடையே இதுவரை ஓர் பொதுவான நட்பும் உரிமைப்பாடும் இருந்து வந்தன. பொதுச் சத்துருவுக்கெதி ராக இங்கிலாந்தும் டொமினியன்களும் ஒற்றுமையுடனேயே கருமம் ஆற்றிவந்திருக்கின்றன. ஆகவே ஆபத்துக் காலங் களில், அயர்நாடு ஒன்றை ஒழிந்த ஏனைய டொமினியன்கள் எல்லாம் இங்கிலாந்துக்கு இதுவரை உதவிசெய்து வந்திருக் கின்றன. டொமினியன்கள் இங்கிலாந்துக்கு உதவி செய் வதைப்பற்றி ஓர் ஆசிரியர் அழகாக விபரித்திருக்கிருர்: "எம். பழையவர்க்கெதிராக யுத்தம் மூண்டிருக்கிறது. நாம் ஒன்று சேர்ந்து அவருக்கு உதவிசெய்வோம்’ என்று குறிப்பிட்டிருக் கிருர். பழையவர் நன்றியுடையவராயிருக்கலாம். அல்லது நன்றியில்லாதவராக இருக்கலாம். ஆனல் தம் கல்லூரிப் பழைய மாணவர்களில் அவரும் ஒருவரே என்றும், தம் பழைய கல்லூரிக்கும் பழைய மாணவர்க்கும் உதவிசெய்வது தம் கடமையே என்றும் டொமினியன்கள் என்னும் ஏனைய பழைய மாணவர் நன்கு உணர்ந்துகொண்டு கருமம் ஆற்றி வந்திருக்கி றர்கள். இந்த உணர்ச்சியைச் சரிவரக் கொண்டு ஒற்றுமை லட்சியமே மேலாகக் கொள்ளப்படுமானல், நிற மனிதர் எனப் படுவோரது டொமினியன்கள், தமக்குச் சம அந்தஸ்து இருக் கிறதுதான் என்பதை ஏனைய டொமினியன்களும் ஒத்துக்

Page 165
320 இலங்கைச் சமவரசின் அமைப்பு
கனம் பண்ணுவதைக் காணுமானல், பல்வூர்ச்சபையினர் அன்றுவிதித்த லட்சியத்தை பிரித்தானிய இராச்சியப் பொது நலவமைப்பு அடைந்து விட்டது என்றே கூறலாம்.
இலங்கை அரசாங்கம்
டொமினியன் அந்தஸ்து வழங்கப்பட்ட படியினுல் இலங்கை சுயராச்சிய நாடானது. சட்டநிரூபண அதிகாரம் யாவும், இலங்கை மகாசனங்களுக்குப் பிரதிநிதித்துவமாயுள்ள பா ரா ஞ ம ன்ற த் தி லேயே யுள்ளது. செனேற் பொது சனங்களுக்குப் பிரதிநிதித்துவமானதன்று: ஏனவே இறுதியதி காரம் பொதுமக்களால் தெரிவு செய்யப்படும் கீழ்ச்சபையி லேயே தங்கியிருக்கிறது.
முடி
இலங்கை இப்போது பரிபூரண சுதந்திரம் பெற்று பிரித் தானிய பொதுநலவமைப்பிலே ஒர் அங்கத்துவ நாடாக இருப்பதனல், தேசாதிபதி என்ற ஒருவர் நியமிக்கப்படுவ தில்லை. இலங்கைக்கு இப்போது இராணி மாட்சிமை தங்கிய இரண்டாவது எலிசபெத் ஆகும். அவர் நேராக இங்கே இருக்க முடியா தா கை யி ன ல் அவருக்குப் பிரதிநிதியாக ஒருவர் இங்கே நியமிக்கப்பட்டுள்ளார். அவரை இராணியே தமது அமைச்சர் மாரின் ஆலோசனைப்படி நியமிப்பர். அவர் தான் மகா தேசாதிபதி. ஆகவே மகாதேசாதிபதி என்பவர் அரசாங்கத்தின் தலைவர் என்ற நியதியில் இராணியின் அதிகாரத்தின் சின்னமே யாவர். இலங்கைத்தீவின் பரி பாலனம், இராணியின் பெயரால் இத்தீவு மக்களுக்குப் பொறுப்பாளிகளாயுள்ள அவருடைய மந்திரிமாரால் நடாத் தப்பட்டு வருகிறது. மந்திரிமாரை மகாதேசாதிபதி பிர தம மந்திரியின் சிபாரிசின்பேரில் நியமிப்பார். பிரதம மந்திரியை நியமிப்பவர் மகாதேசாதிபதியே. சனப்பிரதி நிதிகள் சபையங்கத்தவர்களிற் பெரும்பாலாரது நம்பிக் கையையும் ஆதரவையும் பெற்று அதன்மூலமாக ஓர் அரசாங்கத்தை அமைத்து நடாத்தக்கூடியவருக்கே பிரதம மந்திரிப்பதவி வழக்கப்படுகிறது. எதிர்க்கட்சியானது ஒரு சமயத்தில் அரசாங்கத்தைத் தானே அமைத்து நடத்தக் கூடியதாக விருக்கவேண்டும். துர் அதிட்டவசமாக அத் தகைய நிலைமை இப்போது இலங்கையில் இல்லை. ஆனல் இனிவரும் காலத்தில் எதிர்க்கட்சியே மாட்சிமை தங்கிய இராணியின் மாற்றரசாங்கமாக விளங்க, நடைமுறையில் உள்ள அரசாங்கம் தோல்வியடையும் காலத்தில், மகா தேசாதிபதி எதிர்க்கட்சித் தலை வரை அழைத்து ஒர்

· Hiq, f) uolo) qi-i-i-T og spaľugo Ti@1111 uri

Page 166
நகர மண்டபம், கொழும்பு.
 

இலங்கைக் சமவரசின் அமைப்பு 32
அரசாங்கம் அமைக்கும்படி பணிக்கத்தக்கவிதமாக அரசியல் நிலைமையில் இங்கே அபிவிருத்தி விளையும் என எதிர்பார்ப் GL IIT Lot 5.
மேலே காட்டியனவற்றில் இருந்து, இலங்கையிலே முடியின் (இராணியின்) நிலைமையானது, இங்கிலாந்தில் இருப் பதைப்போலவே சகல விடயங்களிலும் இருக்கிறது என்பது தெளிவாகிறது. பிரமாணம், நீதி, பரிபாலனம் என்பவற்றின் ஊற்று மன்னர் அல்லது இராணியே. அவருடைய பெயரால் அவருடைய அமைச்சர் மார் தேச பரிபாலனத்தை நடாத்துகிருர் கள். அமைச்சர் மார் தேச மகாசனங்களால் தெரிவுசெய்யப் பட்டு தேச மகாசனங்களுக்குப் பொறுப்பானவர்கள். பாராளு மன்றத்தில் எவர்கள் அதிக அங்கத்தவர்களின் நம்பிக்கையை யும் ஆதரவையும் பெறுகின்றனரோ அவர்களையே அரசரோ இராணியோ தம் அமைச்சர்மாராக நியமிக்கிருர், ஆனல் அமைச்சர் மார் பாராளுமன்ற அங்கத்தவர்கள் பெரும்பான்மை யோரது நம்பிக்கையையும் ஆதரவையும் இழந்துவிடும்போது அவர்கள் தம் பதவியைவிட்டு விலக, அவ்விலகலை மன்னரோ இராணியோ ஏற்றுக்கொண்டு, ஒர் அரசாங்கம் அமைக்கும் படி எதிர்க்கட்சியைப் பணிப்பார். ஓர் பிரதான பிரச்சினை யிலே அரசாங்கம் தோல்வியுற்றுப் பதவியிலிருந்து விலக, அல்லது பொதுத் தேர்தல் மூலம் வாக்காளர் அபிப்பிராயத்தை அறிய நிச்சயித்தால் அரசர் பாராளுமன்றத்தைக் கலைத்து விடுவார். எங்கள் பாராளுமன்றத்து ஆயுட்காலம் 5 ஆண்டே அக்காலம் முடிந்ததும் மகா தேசாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்துவிடுவார், பொதுத்தேர்தலின் பின் அவர் பாராளு மன்றத்தைக் கூட்டி, புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்கத் தின் கொள்கையை சிம்மாசனப் பிரசாரணம் மூலம் காட்டு வார். இலங்கையிலே மகாதேசாதிபதி, மன்னரது பிரதிநிதி என்ற நியதியில், பாராளுமன்றக் கூட்ட அங்குரார்ப்பணத் தின்போது சிம்மாதனப் பிசாரணத்தைச் செய்வார்.
இங்கிலாந்தின் பொதுவாழ்க்கையிலும் சமுதாய வாழ்க்கை யிலும் மன்னரானவர் எவ்விதமான பங்கு எடுக்கிருரோ, அவ்விதமான பங்கினையே இலங்கைச் சமுதாய வாழ்க்கையிலும் பொதுவாழ்க்கையிலும் மகாதேசாதிபதி எடுக்கிருர்,
ஆகவே முடி என்பது எமது அரசியற்றிட்டத்தின் இன்றி யமையாத அம்சமாகும். எல்லாப் பிரமாணங்களும் அவர் பெயராலேயே பிறக்கின்றன. கெளரவப்பட்டங்கள் அனேத் தும் அவரிடம் இருந்தே வருகின்றன. நீதித்தலங்களில் அவருடைய பெயராலேயே நீதி பரிபாலனம் செய்யப்படு கிறது. கடைசியில், இத்தீவின் பரிபாலனமும் அவருடைய
3248-M

Page 167
322 இலங்கைச் சமவரசின் அமைப்பு
பெயரினலேலே நடாத் தப்படுகின்றது. ஆனல் பர்மா, அயர் என்னும் நாடுகள் செய்த மாதிரி இலங்கையும் பிரித்தானியப் பொதுநலவமைப்பில் இருந்து நீங்க இனிவரும் எக்காலத் தாவது தீர்மானித்தால் இந்த நிலைமை மாறிவிடும்.1
முந்திய அரசாங்க முறையில் தேசாதிபதியே அரசாங்க உத்தியோகத்தர் பகுதியைப் பரிபாலிக்கும் தலைமையதிகாரி. ஆணுல் இப்போது அரசரது பிரதிநிதி என்ற தன்மையில் மகா தோ சாதிபதி இத்தீவில் உள்ள எக்கட்சியுடனுவது தொகுதி யுடனுவது தொடர்புடையவரல்லர். அவர் கட்சி, தொகுதி வகுப்பு, சாதி, சமயம் யாவற்றுக்கும் அப்பாற்பட்டவர். பட்ச பாத மற்றவர் அவர் இருக்கும் நிலையோ உந்நதமானது; எல்லார்க்கும் பொதுவானது. நடுக்கோணது வீற்றிருக்கு அவர் எல்லார்க்கும் பொதுவானவர்.
பாராளுமன்றம்
கலந்துபேசும் அரசாங்கமே இலங்கைப் பாராளுமன்றம்: சனநாயகம் என்பது கலந்துபேசி அரசாங்கம் நடத்தும் முறை என்று நீங்கள் முன்னப் படித்திருக்கிறீர்கள். இக் கலந்து பேசல் பாராளுமன்றத்தில் நிகழுகிறது. இதிற் பங்குபற்றும் கட்சிகள் இரண்டு. அவையாவன:-(1) அரசாங்கம், அதா வது அதிக அங்கத்தவர்களின் ஆதரவைக்கொண்டுள்ள கட்சி (2) எதிர்க்கட்சி: இதில் ஒரு கட்சி அல்லது பல கட்சிகள் சேர்ந்திருக்கும். ஆரம்பத்தில் இலங்கை அரசியலில் எந்த ஒரு கட்சியும் பரிபூரணமான பெரும்பான்மைப் பலம் உடைய தாக இருக்கவில்லை. ஆகவே அதிக அங்கத்தவர்களைக் கொண்ட ஐக்கிய தேசீயக்கட்சிதான் ஓர் அரசாங்கத்தை அமைப்பதற்கும் தானே அதிகாரத்தைப் பெறுதற்கும் கட்சிப் பற்றில்லாத அங்கத்தவர்களின் உதவியை நாடவேண்டி யிருந்தது. இப்படியிருப்பது நல்லதன்று: ஏன்? தன் பலம் பூரணமாகவில்லாத எந்த அரசாங்கமும் தான் அதிகாரத் தில் இருப்பதற்காகப் பலவிதமான சேர்க்கைகளை நாட வேண்டியிருக்கிறது. இதன் பயணுக அது பல விடயங்களில் தன் கொள்கையை விட்டுக்கொடுக்கவும் வேண்டி ஏற்படும். இப்படிச் செய்வது அதற்கே பலவீனம் அளிப்பதாகும். அங் போதிருந்த நிலைமையில், கட்சிப்பற்றில்லாத அங்கத்தவர் களிற் பெரும்பான்மையினர் எதிர்க்கட்சியுடன் சேர்ந்து வாக் களித்திருந்தால் அரசாங்கம் தோல்வியடைந்திருக்கும். பின் னர் ஒர் அரசாங்கத்தை யமைப்பதற்குக் கட்சிகள் சேர வேண்டும். இக்கூட்டுக்கட்சியரசாங்கமும் கட்சிப்பற்றில்லாத
1. இந்தியாவின் புதிய அரசியலின்படி மன்னர் பெயரால் பரி பாலனம் நடைபெறுவதல்லை.

இலங்கைச் சமவரசின் அமைப்பு 323
வர்களின் வாக்குச் சம்ம தங்களினல் தோல்வியடையும். ஆகவே கட்சிப்பற்றில்லாதார்தான் அன்றிருந்த நிலைமையில் அதிக சக்தியுடையவர்களாக இருந்தார்கள். ‘இன்னது செய்து தந்தால் எங்கள் ஆதரவு உமக்கு’ என்று அவர்கள் எந்த அரசாங்கத்துடனும், பேரம் பேசும் நிலையில் இருந்தார் கள். எம் பாராளுமன்றத்திலே அப்போது ஒர் கூட்டுக்கட்சி யரசாங்கம் இருந்தது. அதுவே மன்னரின் அரசாங்கம்: ஆனல் அந்த அரசாங்கம் வீழ்ச்சியுற்ருல் அந்த இடத்துக்கு அரசாங்கம் அமைக்கத்தக்கதாக எதிர்க்கட்சி யிருக்கவில்லை. எதிர்க்கட்சி, அப்படியான ஒர் அரசாங்கம் அமைத்தற்குத் தயாரான நிலையில் இருக்கவேண்டும். இதுதான் உண்மை யான எதிர்க்கட்சியின் நோக்கம்.
நிருவாகக் கருமங்களைத் திறம்படச்செய்யும் சாதனமே மந்திர சபை. நாட்டின் பரிபாலனத்துக்கு எந்த விதமான திட்டத்தைக் கைக்கொள்ளவேண்டுமென்பதில் மந்திர சபை யில் உள்ளார் பரிபூரணமான ஒற்றுமையுடையராயிருத்தல் வேண்டும். பரிபாலனக் கொள்கை விடயமாக அவர்களுக் கிடையே அபிப்பிராயபேதம் இருத்தலாகாது. ‘ஒன்ரு ய் வாழ்வது அல்லது ஒன்ரு ய் வீழ்வது' என்ற கொள்கையுடைய வர்களாக அவர்கள் இருத்தல் வேண்டும். மந்திர சபை திறம் படக் கருமம் ஆற்றவேண்டுமானல் அதிலே கோஷ்டிமனப் பான்மை நிலவவேண்டும். இக்கோஷ்டியின் தலைவர்தான் பிரதம மந்திரி. அவரே கோஷ்டியை வழிநடத்தவேண்டும். அது ஒத்த மனப்பான்மையுடன் வேலை செய்யத்தக்கதாக இயக்கவேண்டியவரும் அவரே . மந்திர சபையில் உள்ள எந்த மந்திரியாவது பிரதம மந்திரியுடன் அபிப்பிராய பேதமுற்று பரிபாலனக் கருமங்களில் அவருடன் ஒத்து நடக்க விருப்பமில்லாதுவிடின் அவரைப் பதவியிலிருந்து விலகும்படி கேட்கப் பிரதம மந்திரிக்கு உரிமையுண்டு. குறித் த அந்த மந்தி ரி பதவி யை விட்டு வில கா விட்டால் அவரின் நடத்தையைப் பிரதம மந்திரி மகா தேசாதிபதிக்கு அறிவிக்க மகாதேசாதிபதி அன்னவரைப் பதவியிலிருந்து நீக்கிவிடுவார். நாட்டின் அரசாங்கக் கருமங் களில் மிகவும் முக்கியபங்கு எடுப்பவர் பிரதமமந்திரியே யாகும். ஒர் நிருவாக சபையின் தலைவர் மாத் தி ர மன்று அவர். மந்திர சபையின் இயக்கச் சக்தியே அவர். அவருடைய அபிப்பிராயங்களுக்குச் சபையில் மதிப்பு இருக்க வேண்டும். அவருடைய அபிப்பிராயங்களே கடைசித் தீர்ப் பளிப்பதாயிருத்தல் வேண்டும். இப்படிக்கூறுவதால் அவர் ஓர் சிறு சர்வாதிகாரியாக இருக்கவேண்டும் என்பது கருத்தன்று.

Page 168
324 இலங்கைச் சமவரசின் அமைப்பு
அவருடைய அபிப்பிராயங்களையும் செயல்களையும் பாராளு மன்றத்து அங்கத்தவர்க 3 விற் பெரும்பான்மையினர் அங்கீ கரிக்காதுவிட்டால் அவர் மீது ஒர் நம் பிக் கையில் லாத் தீர்மானம் நிறைவேற்றி அவரைப் பதவியிலிருந்து நீக்குதற்குப் பாராளுமன்றத்துக்குச் சர்வ அதிகாரமும் உண்டு; ஒர் பிரதம மந்திரி சுறுசுறுப்பும் உற்சாகமும், விடயங்களை
நடாத்தும் வன்மையும் இல்லாதவராயிருப்பின் மந்திர சபை என்னும் கோஷ்டி பயன்றருமுறையிற் கருமம் ஆற்ருது. இவ்வாரு ய ஒர் மந்திர சபையினுற்பயன் யாது மில்லை எனலாம்.
நாட்டுக்கு வேண்டிய சட்டங்கள் யாவும் இப்போது அரசாங்கத்தாலேயே பிறப்பிக்கப்பட்டு அரசாங்க மசோதாக். களாகப் பாராளுமன்றத்திற் சமர்ப்பிக்கப்படும். அதிகாரத் தில் இருக்கும் கட்சியின் வேலைத்திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவனவாகவே இம் மசோதாக்களிற் பல இருக்கும். அரசாங்கத்தின் கல்விக் கொள்கையை அநுட்டானத்துக்குக் கொண்டுவருதற்கான மசோதாக்களைக் கல்வி மந்திரி எடுத் தாளுவார். இவரைப்போலவே, ஏனைய மந்திரிமாரும் தத்தம் பொறுப்பில் உள்ள கருமங்கள் பற்றி மசோதாக்களை எடுத் தாளுவர். இவ்வாறு மந்திரிமார் எடுத்தாளும் மசோதாக்க ளுக்கு அரசாங்கத்தின் ஆதரவு உண்டு. முந்தி-அதாவது அரசாங்க சபை இருந்த காலத்தில்-இந்த விதமான் முறை இருக்கவில்லை. ஒரு மந்திரியின் கொள்கை முழு அரசாங்கத்தின தும் கொள்கையாக இருக்காது; அவரதும் அவர் தம் நிருவாக, சபையினதும் கொள்கையாக இருக்கும். ஒரு மந்திரியின் கொள்கைக்கு அக்காலத்திலேயிருந்த மந்திரிகள் சபையினது ஆதரவு இருக்கவேண்டும் என்ற நியதி இருக்கவில்லை.
எல்லா மசோதா ச்களும் மூன்று முறை பாராளுமன்றத். தில் வாசிக்கப்படும். முதல் வாசிப்பின்போது மசோதாவின் நோக்கம் மாத்திரம் தெரிவிக்கப்படும். இரண்டாவது வாசிப் பில் தான் மசோதா பற்றிய விவாதம் நிகழும். அதில் திருத் தங்களும் மாற்றங்களும் செய்யவேண்டும் என்ற ஆலோசனை யும் இவ் வாசிப்பின் போது நிகழும். இதன் பின் மசோதா ஆய்வுநிலையில் ஆராயப்படும். ஆதாவது முழுப் பிரதிநிதிகள் சபையும் ஆய்வுச்சபையாக மாறி மசோதாவின் அம்சங்களை ஒவ்வொன்ருக ஆராயும். இவ்வாரு க ஆராய்ந்த பின் மசோதா மூன்றம் முறையாக வாசித்து அதன் மீது வாக்குச் சம்மதம் எடுக்கப்படும். மூன்ரும் வாசிப்பிலும் மசோதா நிறைவேறி விட்டால், அது செனேற்றுக்கு அனுப்பப்படும். அங்கே என்ன நடைக்கிறதென்பதை நோக்குவாம்: செனேற் அல்லது மேற்சபையிலும் அரசாங்கக் கட்சி, எதிர்க்கட்சி என்ற இரண்டு

இலங்கைச் சமவரசின் அமைப்பு 325
கட்சிகள் உள. அங்கே நடக்கும் விவாதங்கள் கீழ்ச்சபை விவாதங்களைப் போலவிராமல் உயர்ந்த ரகத்தைச் சேர்ந்தன வாயும் காய்தல் உவத்தல் இல்லாதனவாயும் ஆழ்ந்த ஞானம் பொதிந்தனவாயும் இருக்கவேண்டும் என்றுதான் எதிர்பார்க் கப்படுகிறது. செனேற்றும் மசோதாவை நிறைவேற்றி விட்டால், அது மகாதேசாதிபதியின் அங்கீகாரத்துக்கு அனுப் பப் படும். அரசரின் பெயரால், மகாதேசாதிபதிஅம் மசோதா வுக்குத் தம் அங்கீகாரத்தையளிப்பார்.
ஆனல், குறித்த அந்த மசோதா மேற்சபைக்கு விருப்ப மற்றதாயிருந்து, குறித்த ஓர் அயனம் முடியமுன் ஒரு மாதத் துக்கிடையில் நிறைவேற்றப்படாவிட்டால், அல்லது இரண் டாவது அயனத்து ஒரு மாதத்துக்கிடையில் நிறைவேற்றப் படாவிட்டால், மசோதா மகாதேசாதிபதியின் அங்கீகாரத் துக்கு அனுப்பிவைக்கப்படும். சாதாரண சட்ட நிருமாணங்களை செனேற் தாமதப்படுத்த மாத்திரம் முடியும் என்பதை இது காட்டுகிறது. ஆனல் கீழ்ச்சபை செய்த எந்த தீர்மானத் தையும் மாற்றுதற்கு அதற்கு அதிகாரம் இல்லை. காரணம், கீழ்ச்சபையே மகாசனங்களின் பிரதிநிதித்துவ தாபனமா யிருத்தலாலும் அதன் தீர்மானங்களே நடைமுறையில் வரவேண்டும் என்பதனலும் என்க.
தனிப்பட்ட அங்கத்தவர்கள் அரசாங்கத்தின் அநுதாபத் தையும் ஆதரவையும் பெற்ருல் ஒழியத் தாமாக மசோதாக்களை எடுத்தாண்டு நிறைவேற்றுதல் அரிது. இப்படியான முறை யிருப்பது தனிப்பட்ட அங்கத்தவர்களுக்கு நீதியீனம் விளைப்ப தற்கு ஒப்பாகும் எனவும் நீங்கள் கருதக்கூடும். ஆனல் இது பற்றி நீங்கள் ஓர் விடயத்தை மனத்திற் குறித்துக்கொள்ளுதல் வேண்டும். பெரும்பான்மைக் கட்சியை வாக்காளர் அதி காரம் கொடுத்து அனுப்பியது தேச பரிபாலனத்தை நடாத்து வதற்கே. அதிகாரம்படைத்துள்ள கட்சி மற்றவர்களின் தலையீடின்றித் தேச பரிபாலனத்தை நடத்த அதற்குச் சகல சந்தர்ப்பங்களும் அளிக்கப்படல் வேண்டும். அதன் கருமங் களில் மற்றவர்கள் தலையிட்டால் அரசாங்கம் பயன்றராது போகும். சனநாயகமுறை அரசாங்கத்தில் உள்ள ஓர் பெரும் கெடுதி என்னவென்ரு ல் பிரிவினை, கட்சிப்பிணிப்பின்மை என்பவற்ருல் ஓர் அரசாங்கத்தை நடாத்தும் கட்சி வேறும் கட்சிகளின் உதவியை நாட அதன் பயணுக அரசாங்கமே பலவீனமுறுதல் என்க. -
சனநாயக அரசாங்கம் உறுதியாக இருப்பதற்கு இரண்டு விடயங்கள் இன்றியமையாதன. அவையாவன: சிறந்த முறையில் அதிகாரத்தை நடாத்தும் அரசாங்கக்கட்சியும்,
1. அல்லது நிலைமைக்குத்தக்கபடி அரசியின் பெயரால்.

Page 169
326 இலங்கைச் சமவரசின் அமைப்பு
பயன்றரும் முறையில் எதிர்க்கும் எதிர்க்கட்சியுமே யாம். எங்கள் நாடு சமீப காலத்தில்தான் சனநாயகமுறையில் சுதந்திரத்தை அடைந்துள்ளது. எனவே பல வருடகாலமாக சனநாயகத்தில் திளைத்துள்ள சனநாயக நாடுகளில் காணப் படும் கட்சி உறுதி, கட்சி ஒற்றுமை, கட்சிக்கட்டுப்பாடு என்பன இங்கே இன்னும் பரிபூரணமாக அபிவிருத்தியடைய வில்லை.
அரசாங்கத்து நிருவாகக் கருமங்கள் மந்திர சபையிடம் உள்ளன. தனது கொள்கையைப் பிரதிநிதிகள்சபை அங்கீ கரித்துவிட்டதும், அதனை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டிய பொறுப்பு மந்திர சபையினதே. கல்ஒயா நீர்ப்பா சனத்திட்டம் வகுப்பதைப் பாராளுமன்றம் அங்கீகரித்து விட்டது என்று வைத்துக்கொள்ளுவோம். அதற்கான பணத் தையும் செலவழிக்க அது அங்கீகரித்துவிட்டது. இனி அந்த வேலையைச் சரிவர நடத்திமுடிப்பதற்கு விவசாய மந்திரி பொறுப்பாளியாவர். திட்டம் பற்றிய வேலை எவ்வாறு நடை பெறுகிறது என்பதை அவர் அறிந்துகொள்ளுதல் வேண்டும். அவ்வேலை பற்றி பாராளுமன்றத் தில் எதிர்க்கட்சியினர் அவரைச் சரமாரியாகக் கேள்விகள் கேட்பர். அவர் இவ் விடயமாகப் பராமுகமாயிருப்பின் அல்லது சுறுசுறுப்பில்லா திருப்பின், மந்திரி என்ற தன்மையில் அவருக்குள்ள அந்தஸ் தும் கெளரவமும் குறைய, தம் பதவியிலிருந்து விலகும்படி சில சமயங்களில் நிர்ப்பந்திக்கவும் படுவார். மந்திர சபை என்பது ஓர் விமானம் அன்று: அதன் பாதுகாப்பில் யாரேனும் இருக்க அது அவர்களைக் கொண்டுசெல்லாது. அரசாங்கம் என்னும் ரதத்தை இழுக்கும் மாடுகள் போல மந்திரசபை இருக்கவேண்டும்; எல்லாரும் இழுக்க ஒருவர் மாத்திரம் ரதத்துக்குள் ஒடிப்போய் இருத்தலாகாது. எல்லாரும் சேர்ந்து ரதத்தை இழுத்தல் வேண்டும். தம் முழுச் சக்தியையும் சேர்த்து இழுக்காதவர் விலகிக்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மந்திரிக்கும் உதவியாக ஒர் பாராளுமன்றக் காரியதரிசி உளர். இப்பாராளுமன்றக் காரியதரிசி அநேக விதங்களில் ஓர் உபமந்திரியே. மத்திரியில்லாதபோது பாராளு மன்றக் காரியதரிசியே அவருக்குப் பிரதிநிதியாக இருந்து, பிரதிநிதிகள் சபையில் கேட்கப்படும் கேல்விகளுக்கு, மந்திரி யின் சார்பாக மறுமொழி கூறுவார்.
1. Parliamentary Secretary.

இலங்கைச் சமவரசின் அமைப்பு 327
மந்திரி, பாராளுமன்றக் காரியதரிசி என்பவர்களுக்கு அடுத்ததாக அதிசிரேட்ட உத்தியோகத்தர்குழு ஒன்று இருக்கிறது. இவ்வுத்தியோகத்தர் நிரந்தரக் காரியதரிசிகள் என அழைக்கப்படுவர். ஓர் மந்திரியின் பரிபாலனத்தில் உள்ள பகுதிகள் செய்யும் வேலைகளை மேற்பார்வை செய்வதும், அப்பகுதிகளிலே நடைபெறும் வேலைகள் பற்றி மந்திரிக்குத் தகவல்கள் அளிப்பதும் ஒர் நிரந்தரக் காரியதரிசியின் கடமை களாகும். எதிர்க்கட்சியில் உள்ள அங்கத்தவர் ஒருவர் ஒர் விடயம்பற்றி மந்திரியைக் கேள்வி கேட்டால், அக்கேள்வி பற்றிய சகல தகவல்களையும் மந்திரிக்கு அளிக்கவேண்டிய பொறுப்பு நிரந்தரக் காரியதரிசியைச் சேர்ந்ததாகும். மந்திரியின் கட்டளைகளை அவ்வப் பகுதி யதிகாரிகளுக்குத் தெரிவிப்பவரும் நிரந்தரக் காரியதரிசியே. அரசாங்கத்தின் கொள்கையினை ஒர் அரசாங்கப்பகுதி யதிகாரி நடை முறையிற் கொண்டுவருகிரு ரா அன்ரு என்பதைக் கவனமாக மேற்பார்வை செய்பவரும் இவரே யாவர். இவ்வாருக அரசாங்கத்தின் நிருவாகக் கருமங்கள் நடைபெறுகின்றன: அக்கருமங்களைக் கிரமப்படி செய்தற்கான நிரந்தர ஊழியரே பகுதியதிகாரிகளும், ஒவ்வோர் பகுதியிலும் உள்ள உத்தி யாகத் தரும் .
ஓர் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுவோம்: இந்த நாட் டிலே 100 பாலர் பாடசாலைகளை ஆரம்பிக்கவேண்டுமென்பது மந்திரசபையின் கொள்கை என வைத்துககொள்ளுவோம். இக்கொள்கையினை அநூட்டானத்துக்குக் கொண்டுவந்து 100 பாலர் பாடசாலைகளையும் ஆரம்பிப்பது கல்விமந்திரியின் கருமம் ஆகும். இப்பள்ளிக்கூடங்களைத் தாபித்து அவற்றுக்கு வேண்டிய உபகரணங்கள், தளபாடங்கள் என்பவற்றைச் சேகரித்து, வேண்டிய ஆசிரியர்களை நியமித்து இன்னும் ஆகவேண்டியனவற்றைச் செய்யவேண்டும் என்று கல்வி மந்திரியின் நிரந்தரக் காரியதரிசி வித்தியாதிபதிக்குக் கட்டளை பிறப் பிப் பார். இக்கட்டளைப்படி வித்தியாதிபதி கருமம் ஆற்ற அக்கருமம் நடைபெறும் விதத்தை நிரந்தரக் காரிய தரிசி அவ்வப்போது விபரமாக மந்திரிக்குத் தெரிவிப்பார்.
இவ்வாருக, அரசாங்கத்தின் கொள்கை அநுட்டானத் துக்குக் கொண்டுவரப்படுகிறது.மன்றி அன்ரு டப் பரிபாலனக் கருமமும் இடையூறின்றி நடைபெறக்கருமம் ஆற்றப்படுகிறது. பரிபாலனக்கருமம் நடைபெறுவதில் ஏதும் இடையூறு ஏற் பட்டால் அதனை நீக்கி மீண்டும் நல்ல நிலைமையில் கருமங்களை நிர்வகித்தல் ஒவ்வோர் மந்திரியினதும் கடமையாகும். அவர்
1. Permanent Secretaries.

Page 170
328- இலங்கைச் சமவரசின் அமைப்பு
களுக்கு இவ்விடயத்தில் மகத்தான உதவி புரிபவர்கள் நிரந் தரக் காரியதரிசிகளாவர். எனவே அவர்களின்-அதாவது நிரந்தரக் காரியதரிசிகளின்-பொறுப்புக்களோ அபார L) fT GÖT 65) ( , பரிபாலனம் என்னும் கட்டிடத்தின் மூலைக்கல் அவர்களே என்று கூறினல் அது மிகையாகாது.
வரவுசெலவுத் திட்டம்
ஒரு அரசாங்கம் தான் வகுத்துள்ள வேலைத்திட்டத்தைச் சரியான முறையில் அநுட்டானத்துக்குக் கொண்டுவர வேண்டு மாயின் அதற்குப் பணம் இன்றியமையாதது. அப்ப்ணத்தை அரசாங்கம் சம்பாதிக்க வேண்டும் பின் அதனைச் செலவிட வேண்டும். இப்படியாகச் சம்பாதிப்பதற்கும் செலவிடற்கு மான திட்டமே வரவு செலவுத் திட்டமாகும். ஆண்டுதோறும் வரவுசெலவு பற்றிய அறிக்கை பிரதிநிதிகள் சபை முன்னர்ச் சமர்ப்பிக்கப்படும். அப்படிச் சமர்ப்பித்து அச்சபையின் அதிகாரத்தைப் பெற்ற ல் தான் வருமானத்தைப் பெறவும் அதனைச் செலவிடவும் முடியும்.
ஒவ்வொரு அரசாங்கப்பகுதித் தலைவரும் தன் தன் பகுதிக்கு எதிரே வரும் ஆண்டில் ஏற்படக்கூடிய உத்தேசச் செலவைக் குறித்துத் தமக்கு அதிகாரியாகவுள்ள நிரந்தரக் காரியதரிசிக்குப் பிப்ரவரி மாதம் 15-ம் திகதி கிடைக்கக்கூடிய தாக அனுப்பிவைத்தல் வேண்டும். தன்னிடம் சமர்ப்பிக்கப் படும் உத்தேசச் செலவினங்களை நிரந்தரக் காரியதரிசியானவர் தமது அதிகாரியான மந்திரியுடன் சேர்ந்து மிகவும் நுணுக்க மாகப் பரிசீலனை செய்து கடைசி உத்தேசத் திட்டத்தை மார்ச் மாதம் 1-ம் தி க தி க் கு மு ன் தி  ைற சே ரி க் கு அனுப்பிவிடுவார்.
திறைசேரியின் அதிபிரதம அதிகாரி நிதிமந்திரியேயாவர். ப ல் வேறு ம ந் தி ரி மா ரி ட ம் இரு ந் து பெறும் செலவுத் திட்டங்களை எல்லாம் சேர்த்து ஒரே செலவுத்திட்ட மாக்கி, நிதி மந்திரியானவர், அதனை மந்திர சபையிற் சமர் பிப்பார். நிதிமந்திரி சமர்ப்பித்த கடைசித்திட்டத்தை மந்திர சபை மிகவும் கவனமாகப் பரிசீலனை செய்யும். அத் திட்டத்துக்கு மந்திரி மார் ஒரு மித் து ம் த னி த் தும் பொறுப்பாளிகளாயிருப்பதனுல் அதில் ஏதும் குறைகள் இராத படி அவர்கள் அதனை மிகவும் நுணுக்கமாக ஆராய்வர். இவ் வாருக மந்திரிமார் நன்கு கலந்தாலோசித்து வரவுசெலவுபற்றி ஓர் ஒத்த முடிவு கண்டபின் வரவு செலவுத்திட்டம் தயார் செய்யப்படும். இவ்வரவுசெலவுத்திட்டம் பரமரகசியமாக வைத்திருக்கப்பட்டு உரிய காலத்தில் பிரதிநிதிகள் சபையிலே

இலங்கைச் சமவரசின் அமைப்பு 329
சமர்ப்பிக்கப்படும். வரவு செலவுத்திட்டத்தைப் பிரதிநிதிகள் சபையிற் சமர்ப்பிக்கும்போது அதன் அம்சங்கள் பற்றி நிதி மந்திரியானவர் ஒர் விளக்கப் பிரசாரணம் செய்வார். வருவாயை எவ்வாறு பெறுவது; அதனைப் பல்வேறு திட்டங் களுக்கு எவ்வாறு செலவிடுவது என்பதுபற்றி இயன்றவரை தெளிவாக அவர் எடுத்துக்கூறுவார். இதன் பின் முழுப் பிரதி நிதிகள் சபையும் ஆய்வுச்சபையாக மாறி ஒவ்வொரு மந்திரி யின் பகுதிக்குமுள்ள செலவினங்களே நுணுக்கமாக ஆராயும். இந்தச் சந்தர்ப்பத்தை எதிர்க்கட்சி நன்ற கப் பயன்படுத்திக் குறித்த, வொரு மந்திரியின் உத்தேசச் செலவினங்களிலே மாறறம் செய்யவேண்டும். அல்லது அச்செலவினங்களை நீக்க வேண்டும் என்று பிரேரிக்கும். ஓர் மந்திரியின் பரிபாலனக் கருமத்தைக் கண்டிக்கவேண்டுமானுல் எதிர்க்கட்சிக்கு இது தான் வாய்த்த சந்தர்ப்பமாகும். ஆனல் மந்திர சபைக்குப் பிரதிநிதிகள் சபையிலே பெரும்பான்மையினரின் ஆதரவு இருக்குமானல், பிரதான விடயங்களில் அதற்குத் தோல்வி ஏற்படமாட்டாது. கண்டனங்களை அரசாங்கம் ஏற்று அற்ப விடயங்களில் எதிர்க்கட்சியினரின் கோரிக்கைக்கு இணங்குத லும் சகஜம். உதாரணமாக 1947-1948-ம் ஆண்டு வரவு செலவுத் திட்ட விவாதத்தின்போது அரசாங்கம் எதிர்க்கட் சியினரின் கோரிக்கைளுக்கு இணங்கி, பாற்கட்டி மீது இறக்குமதி வரிவிதிக்க வேண்டுமென்று தான் முன்னர்ச் செய்த தீர்மானத்தைக் கைவிட்டது.
பிரதிநிதிகள் சபை ஆய்வுச்சபை முறையில் வரவு செலவுத் திட்டத்தை ஆராய்ந்த பின், அது கடைசியாகப் பிரதிநிதிகள் சபையில் எடுத்தாளப்பட்டு நிறைவேறும். ஆனல் நிறைவேறு வதற்குப் பதிலாக அவ்வரவுசெலவுத் திட்டம் நிராகரிக்கப் பட்டால், அரசாங்கம் பதவியிலிருந்தும் விலகிவிடவேண்டும்.
அரசாங்க உத்தியோகத் தரைப் பரிபாலிப்பதற்கென ஓர் சபை இப்போது இருக்கிறது. அதனை அரசாங்க சேவைக் கொமி ஷன் என்று கூறுவர். இதில் மூன்று அங்கத்தவர்கள் உளர். இவர்கள் பாராளுமன்றத்துடனே அரசியல் விவகாரங்களு டனே எவ்விதமாயேனும் சம்பந்தப்பட்டவரல்லர். ஆண்டுக்கு 4,080/- ரூபா அல்லது அதற்கு மேற்பட்டதொகை வேதனம் பெறும் உத்தியோகத் தரை நியமிக்கும் பொறுப்பு இக்கொமி ஷனைச் சேர்ந்ததாகும். மேலே சொல்லிய தொகை வேதனம் பெறும் ஒர் அரசாங்க உத்தியோகத் தரை நியமிக்க வேண்டு மானல், அவரை வேண்டிய அமைச்சின் நிரந்தரக் காரியதரிசி மூலமாக விண்ணப்பங்கள், உரிய சிபாரிசுகளுடன் அரசாங்க சேவைக் கொ மிஷனுக்கு அனுப்பப்படும். கிடைத்த விண்ணப் பங்களில் எது உசிதமானதெனத் தோன்றுகிறதோ அதனைக் குறித்த கொ மி ஷ ன் அங்கீகரிக்கும். உத்தியோகத் தர்க்கு உயர்ச்சியளித்தல், அவர்களை ஒரிடத்திலிருந்து இன்னேரிடத்துக்கு மாற்றுதல், வேலையினின்றும் நீக்குதல்,

Page 171
சங்கம் - நேர் வரிகள் புகையிரதப் பகுதி மின்சாரப் பகுதி
உப்புப்பகுதி மதுப்பகுதி 4·6丑
5. தபால் தந்திப் பகுதி 6. துறைமுகக் கட்டணங்கள். par
. நில அரசிறையும் பலவி கற்ப
9. லைசென்சுச் சலார்கள் உள்ளூர் அரசிறை
மானமும்
8. திருப்பிச் செலுத்தப்பட்ட
வட்டியும்
.59
நிதி ஆண்டு 1952
வருவாய்க்கான இடங்கள்
டொமினியன் வரவு செலவுத்திட்டம்
விகற்பம் 22.7
பென்ஷன்கள் 3.63
பரிபாலனம் 7.3
உபயோகச் சேவைகள்
20.86
வரவு 98 44 செலவு 98.28 கடன் பகுதி ፵፰ • 68 மிஞ்சிய பணம் ... 6
Y
கடன் நிதி
33.68
சமூக சேவைகள் 47.81
 

இலங்கைச் சமவரசின் அமைப்பு 33
அவர்கள் மீது ஒழுங்கு நடைவடிக்கை எடுத்தல் என்னும் அதி காரங்களும் இக்கொ மிஷன் மீதே பொறுப்பிக்கப்பட்டிருக் கின்றன.
அரசாங்க சேவைக் கொ மிஷனைப்போலவே இன்னேர் கொ மிஷன் உண்டு. அதன் பெயர் நீதிச்சேவைக் கொமிஷன் எனப்படும். நீதிபரிபாலனம் செய்யும் மாவட்ட நீதிபதிகள் எனப்படும் பெரிய கோட்டு நீதவான்கள், மாஜிஸ்திரேட்டுகள் எனப்படும் நீதவான்கள், சின்னக்கோட்டுக் கொமிஷனர் மார், கிராமக்கோட்டு நீதிபதிகள் என்பவர்களை நியமித்தல், அவர் களுக்கு உத்தியோக உயர்ச்சி அளித்தல், ஓரிடத்திலிருந்து இன்னேரிடத்துக்கு மாற்றுதல், வேலையினின்றும் நீக்குதல், அவர்கள் மீது ஒழுங்கு நடைவடிக்கை எடுத்தல் என்ப வற்றுக்குப் பொறுப்பாக நீதிச் சேவைக் கொ மிஷன் இருக்கும். இதிலே பிரதம நீதியரசரும் இன்னும் இருவரும் அங்கத்தவர் களாக இருப்பர்.
அரசாங்க உத்தியோகத் தர்கள் அனைவர்க்கும் முகமன் இல்லாது நீதி நியாயம் வழங்கப்படுதற்கே அரசாங்க சேவைக் கொ மிஷன் நிறுவப்பட்டது. அச்சபையில் உள்ளார் அதி உயர்ந்த உத்தியோக அதிகாரிகளல்லர்; ஏதும் அரசியற் கட்சியைச் சேர்ந்த வருமல்லர், ஆகவே உத்தியோகத்தரை நியமனம் செய்யும் விடயத்தில் அல்லது உத்தியோகத்தர் களது ஏனைய கருமங்களைப் பரிபாலிக்கும் விடயத்தில் அவர் கள் மீது அரசாங்க அதிகாரிகளோ அரசியல்வாதிகளோ அதி காரப்பிரயோகம் செய்து தம் எண்ணத்துக்கு இசையும்படி செய்யமுடியாது. இச்சபையைப்போலவே நீதிச் சேவைக் கொ மிஷனும், நீதிபதிகளாயினுேர் முகமன் கருதாது, அச்சம் இன்றித் தம் நீதிபரிபாலனக் கருமங்களைச் செவ்வனே ஆற்று தற்கு அரசியல்வாதிகளின் தலையீடு, அல்லது உத்தியோக அதிகாரிகளில் தலையீட்டிலிருந்து பாதுகாப்பளிக்கிறது.
இன்று இலங்கையில் உள்ள அரசாங்கம், சோல்பரி கொமி ஷன் சிபாரிசு செய்த முறையிலேயே அநேகமாக அமைக்கப் பட்டிருக்கிறது. சோல்பரி அரசியலமைப்புக்கும் இப்போதுள்ள அரசியலமைப்புக்குமிடையே சொற்பமான வித்தியாசங்களே 36. இலங்கை டொமினியனுக வந்ததினுல்தான் இந்தச் சொற்ப வித்தியாசங்கள் ஏற்பட்டன. முந்தி மகாதேசாதிபதி மன்னரது நிருவாக அதிகாரி என்ற முறையிலேயே இங்கு கருமம் ஆற்றினர். ஆனல் இப்போது அவர் மன்னரின் பிரதி நிதியாக இருக்கிருர், குடியேற்ற நாட்டு அரசியல்முறையில் தேசாதிபதிக்குப் பல அதிகாரங்கள் இருந்தன. அந்த அதிகாரங்கள் இப்போது மகாதேசாதிபதிக்கு இல்லை.
1. Judicial Services Commission.

Page 172
332 இலங்கைச் சம வர சின் அமைப்பு
இலங்கை இப்போது பரிபூரண சுதந்திர நாடாக இருக்கிற படியினல், இந்நாட்டு மக்களிடமே பூரணமான பொறுப் பாட்சி ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது. சனங்களால் தெரிந் தேடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட பாராளுமன்றமுறை யிலேயே இப்போது அரசாங்கம் நடாத்தப்பட்டு வருகிறது. நிரூவாக அதிகாரம் பிரதம மந்திரியிடமும் மந்திர சபையிட மும் உண்டு. பிரதம மந்திரி யும், மந்திர சபையில் உள்ள அவரது சகாக்களும் பாராளுமன்றத்தின் நம்பிக்கைக்குப் பாத் திரராகும் வரையில் பதவிவகிப்பர். பாராளுமன்றம் இரண்டு பகுதிகளை உடையது. ஒன்று பிரதிநிதிகள் சபை, மற்றது செனேற் எனப்படும் மேற்சபை. பிரதிநிதிகள் சபையே சகல வித நிரூபண நிருவாக அதிகாரங்களுக்கும் ஊற்று. செனேற் ஒர் பாதுகாப்புச் சாதனம் போல விளங்கும்.
பாராளுமன்றச்சனநாயகமுறை அநுகூலமாக நடைபெறு வதற்குச் சில நிபந்தனைகள் உள. முதலாவது பொருளா தாரப் பிரச்சினைகளை அடிப்படையாகக்கொண்ட அரசியற் கட்சி கள் இருக்கவேண்டும். இரண்டாவதாகச் சிறந்த ஒர் எதிர்க் கட்சி யிருத்தல் வேண்டும். நடைமுறையில் உள்ள அரசாங்கம் தோல்வியடைந்தால் அந்த இடத்துக்கு எதிர்க்கட்சி அரசாங் கம் அமைக்கத்தக்கதாக இருத்தல் வேண்டும் ஆணுல் துர் அதிட்டவசமாக இன்று அப்படியான எதிர்க்கட்சி இலங்கை யில் இல்லை என்றே கூறவேண்டும். இன்று எதிர்க்கட்சி என்ற பெயரால் வழங்கப்படுவது ஒன்றுக்கொன்று எதிரிடைகட்டி யுள்ள சிறு சிறு கோஷ்டிகள்ேயாம். இக்கட்சிகள் அரசாங்கத் தின் கருமங்களைக் கண்டிக்கவல்லன வாயிருக்கின்றனவேயன்றி அவ்வரசாங்கம் வீழ்ச்சியுற்ருல் அந்த இடத்துக்கு ஒர் அரசாங் கத்தை அமைக்கக்கூடியனவாக இல்லை. ஆகவே இன்றுள்ள எதிர்க்கட்சி அரசாங்கத்தைச் சாவதானமாக இருக்கச் செய் வதில தொண்டாற்றுகிறது என்பது உண்மையேயாயினும் அது உண்மையான சனநாயக இலக்கணத்தின்படி சக்தியற்றது என்றே சொல்லவேண்டும்.
நீதிபரிபாலன சேவைகளுக்கும், அரசாங்க சேவைகளுக் கும் உத்தியோகத்தர் நியமிக்கப்படும் விடயத்தில் அரசியல் வாதிகள் பிரவேசித்துத் தம் செல்வாக்கைப் பிரயோகிப்பதை அரசாங்க சேவைக்கொ மிஷனும், நீதிச் சேவைக் கெர் மிஷனும் தடுத்து இச்சேவையில் உள்ளார்க்குத்தகுந்த பாதுகாப்பளிக் கின்றன. இவ்விருவித அரசாங்க ஊழியரும், அரசியல் மாற் றங்கள், அரசியற் செல்வாக்கு என்பவற்றுக்குத்தப்பி, அரசி யல் நிலைமை எவ்வாருயினும் தம் கடமையைச் சரிவர நிஷ் பாதகமாகச் செய்யவேண்டும் என்ற உணர்ச்சியுடன் செய்

1951-1952 வரவு செலவுத்திட்ட வரவுகள்
கோடி ரூபா - 哥 40 50 CO On
三 次 35: 19 கோடி ரூபா g -7
oo -00 - LA on
A-90 9스
s da e o -80 ح
g 3 3 és o - ANO よ ー70 憲 葛 ー
ド ON み நில அரசிறையும் பலவிகற்ப வருமானமும்
aus 60
திருப்பிக் கொடுத்தலும் வட்டியும்
59
லைசென்ஸ் சலாரும் ஏனைய பலவித வருமானமும்
1951-1952 வரவு செலவுத்திட்டச் செலவு
கோடி ரூபா ver 3 20 40 50 o 478 SI சமுக சேவைகள் கோடி ரூபா 20*86 -00 உபயோகச் சேவைகள்
9-09 தேசியக் செல்வ அபிவிருத்தி 90 حص
-80 N
R3 N СА 3 ܣ . Ca 一て -70 Si
S 添 ܟܗ தற்காப்பும் வெளிநாட்டு விலகாரங்களும் 으: 9金
రా -60 区 湿
-ܐ 9소

Page 173
34 இலங்கைச் சமவரசின் அமைப்பு
வதற்கு அவர்களுக்குப் பாதுகாப்பளிக்கவேண்டியது அத்தி யாவசியகமே.
அரசியற்கட்சிகள்
இலங்கையிலே மத்திய வகுப்பினர் என்ற பகுதியினரின் தோற்றம் அரசியற் கட்சிகளின் தோற்றத்துக்கும் காரண மானது. உதாரணமாக, தாழ்ந்த பிரதேச விளை பொருட்சங்கமும் அதன் பின்னர்த் தாபிக்கப்பட்ட இலங்கைத் தேசீய காங்கிரசும், பெரிய நிலச் சொந்தக்காரர்கள், வைத் தியர், நியாயவாதிகள் போன்ற தொழில்களில் உள்ளார் ஆகியவர்களின் கருத்தை எடுத்துக்காட்டும் சாதனங்களாக விருந்தன. அரசியலதிகாரத்தின் தன்மையைத் தாம் நன்கு உணர்ந்தவர்கள் என்பதனை அவர்கள் இத்தாபனங்கள் மூல மாக எடுத்துக்காட்டினர். அவர்களில் தலைவர்களாக விளங்கி யவர்களிற் பலர் ஆங்கிலக்கல்வியறிவு பெற்றவர்கள். இங்கி லாந்தில் இருந்த மிதவாதிகளின் நோக்கையும் கருத்தையுமே இவர்கள் கொண்டிருந்தனர்.
1931-ம் ஆண்டில், உள்நாட்டுக் கருமங்கள் விடயமாகச் சுயாட்சி அளிக்கப்பட்டதும், சர்வசன வாக்குரிமை வழங்கப் பட்டதும் அரசியற் கட்சிகளைச் சிருட்டி செய்தன. ஒர் தேர் தற் ருெ குதியில் உள்ள மக்களின் வாக்குச் சம்மதங்களை அபேட்சகராக முன்வருவோர் பெறுவதன் பொருட்டு உருப் படியான திட்டங்களை அம் மக்களுக்கு எடுத்துக்காட்டவேண்டி யேற்பட்டது. இத்திட்டங்கள் அபேட்சர்களின் அரசியல் நோக்குக்களாற் பெரிதும் பாதிக்கப்படும். உதாரணமாக, வட கொழும்பு, தென் கொழும்பு என்னும் நகரப்பகுதிகளி லும் கரையோரப் பகுதிகளிலும் தொழிலாளர்களான பெருந் தொகை மக்கள் வசிக்கிருர்கள். அவர்களுக்குச் சொந்தமான நிலம்புல மில்லை. ' அன்றடித்து அன்று வாயிற் போடும்’ நிலைமையிலேயே அவர்கள் இருக்கிரு ர்கள். இப்படியான நிலைமையில் இருப்பவர்கள், தங்களுடைய நிலைமையைச் சீர்ப் படுத்திக்கொள்ளுதற்குச் சமதர்மத் திட்டங்களே உவந்தன என்பதனை ஏற்றுக்கொள்ளுகிருர்கள். இவர்களைப் போலவே, இலங்கை யெங்கணும் பரவியுள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் சமத்துவ இலக்கினை வெளியிடும் சமதர்மக் கொள்கைகளை வரவேற்கிருர்கள். அரசியலதிகார மோகம் வகுப்புவாதக் கொள்கைகளை ஊக்குவதில் பெருந்துணைச் செய்தது. இனக்கு ரோதத்தைத் தூண்டி அதன் பயனக அரசியலதிகாரத்துக்கு வர எண்ணினர்க்குச் சர்வசனவாக்குரிமை முறை வாய்ப் பளித்தது. நிலம் புலம் செல்வம் படைத்திருந்தவர்கள், சர்வ

லங்கை சமவரசின் அமைப் 335
էվ
சன வாக்குரிமையளிக்கப்பட்டதால், சம தர்மக் கொள்கை கள் பரவித் தங்கள் செல்வத்துக்கு ஆபத்து வந்து விடுமோ என்று பயந்தனர்.
இலங்கைக்கு வெளியேயுள்ள நாடுகளில் அரசியற்கட்சிகள் தோன்றி அபிவிருத்தியானதன் எதிரொலி இங்கும் கேட்டது. சோவியத் சமதர்மக் குடியரசுகளின் யூனியனும் அதற்குப்பின் சீனமும் உலக வல்லரசுகளாக வளர்ச்சியடைந்ததும், அவை தம் மக்களுடைய சமுதாய பொருளாதார நன்மைகளின் பொருட்டு நடாத்திவரும் வேலைத்திட்டமும் இங்குள்ள சில ருக்கும் ஓர் முன்மாதிரியாக இருக்கின்றன. ரு ஷியா, சீனம் ஆகிய நாடுகளிற் கைக்கொள்ளப்பட்ட அதே முறையை இங்கும் கைக்கொள்ளவேண்டும் என்று சொல்லும் இவர்கள் அரசியற் புரட்சியை வெளிப்படையாக ஆதரித்து வருகிருர் S 6T .
இலங்கையின் அரசியல்வாழ்வில், அரசியல பிப்பிராயங் களும் அரசியற் கொள்கைகளும் இரண்டு வழிகளிற் செல்வ தனை நாம் காணலாம். ஒன்று பிரித்தானிய அரசியற் கொள் கையைப் பின்பற்றியது. பாராளுமன்றச் சனநாயக முறையை இது ஆதாரமாகக் கொண்டது. பொதுமக்களுக்குத் தங்கள் அரசியற் கொள்கையை எடுத்துக் காட்டி அவர்களின் ஆதர வுடன் அதிகாரத்துக்குவந்து, அக்கொள்கையை நடைமுறை யில் கொண்டு வருதற்குப் பாராளுமன்ற ஆட்சிமுறையைப் பயன்டுத்துவது ஒரு வழியாளரின் இலக்காகும்.
சோவியத் ரு ஷியா, சீனம் என்னும் நாடுகளில் நிகழ்ந்த புரட்சி இயக்கங்களை ஆதாரமாகக் கொண்ட செயல்முறையை பின்பற்றுவது மற்ற வழியாளரின் இலக்காகும். * வேரூன் றிய நலவுரிமைகளின் அதிகாரத்தைச் சிதைத்து அதன் பயணுக ஒரு சிறந்த சமுதாயத்தை ஆக்குதற்குப் புரட்சிஅதுவும் வாளேந்தி, இரத்தம் சிந்திச் செய்யப்படும் புரட்சிசெய்யவேண்டும் என்பது இவர்களின் சிந்தாந்தம். புரட்சி என்பது மக்களின் வாழ்வுக்கு வேண்டிய செயல்முறை, அத னல் என்ன கெடுதிநேர்ந்தாலும் பாதகமில்லை என்று இவர்கள் கூறுவர். இப்படியான இருவிதச் செயல்முறைகளை ஆதார மாகக் கொண்டுள்ள இலங்கை அரசியற் கட்சிகளை இரண்டாக வகுக்கலாம். ஒன்று பழைமைக்கட்சி; அதனை வலதுசாரிக் கட்சி என்று சாதாரணமாகச் சொல்வர். மற்றது புரட்சிக் கட்சி: இதனை இடதுசாரிக் கட்சி என்பர்.
வலது சாரிக்கட்சிகளில் மிகப்பெரியதாயிருந்தது ஐக்கிய தேசியக் கட்சியாகும். தேசத்தின் மூலவளத்தைப் பெருக்குவ
l. Wested Interests.

Page 174
336 இலங்கைச் சம வர சின் அமைப்பு
தற்குத் தனிப்பட்டவர்கள் தாமாக முயற்சிசெய்தல் இன்றி யமையாதது; தனிப்பட்டவர்கள் தங்களுக்கெனச் சொத்துக் களை வைத்திருத்தல் வேண்டும் என்பது இக்கட்சியின் கொள்கை. நாட்டிலே அபிவிருத்திக் கருமங்களின் பொருட்டு அந்நிய முதலீடுகளை அது உற்சாகப்படுத்தும். ஆனல் அம் முதலீடு களைச் செய்வோர், அவற்றைக் காரணமாக வைத்துக் கொண்டு அதிகாரம் செலுத்த அது விடமாட்டாது. ஒரு நாட் டிலேயுள்ள எச்சாகியத் தாரும் எச்சமயத்தாரும், சாதி சமய பேதம் இல்லாது சுதந்திர ராய் அரசாங்கத்தின் ஆதரவுடன் வாழ்க்கையை நடத்துதற்குச் சனநாயக முறையே மிகச்சிறந் தது என்பது இக்கட்சியின் சித்தாந்தம். சனநாயக முறை யிற் கருமங்களை ஆற்ற வேண்டும் என்னும் கொள்கை பூண்ட இது எல்லாவிதப் புரட்சிகளையும் அறவே வெறுக்கிறது. நாட்டிலே சீர்திருத்தங்களைப் புகுத்துவதில் அது சட்டபூர்வ மான முறைகளைத் தான் கைக்கொள்ளும்; விவசாயத்தில் உள்ள சகல மூலவளங்களையும் அபிவிருத்திசெய்து நாட்டை உணவு விடயத்தில் தற்காப்புடையதாகச் செய்வது இதன் இலக்கு; இதன் காரணமாகவே பெரும் பெரும் நீர்ப்பாசனத் திட்டங்கள் மூலமாகவும் விவசாயக்குடியேற்றங்கள் மூலமாக வும் வெப்ப வலையப் பகுதிகளை அபிவிருத்தியாக்கிக்கொண்டு வருகிறது. கைத்தொழில்களையும் நாட்டில் அபிவிருத்தி செய்யவேண்டும்தான்; ஆனல் அவற்றின் அபிவிருத்தி நீர் மின் வளங்களிலும் ஏனைய வளங்களிலும் தங்கியிருக்கிறது. அத்துடன் கைத் தொழில்களுக்கு வேண்டிய மூலப்பொருள் ஒரு அளவுக்குத்தான் இங்கேயுண்டு. ஆகவே கைத்தொழில்களை அபிவிருத்தியாக்குவது என்று இப்போதுள்ள நிலையிற் கூறுவது வெறும் வாய்ப்பேச்சாக முடியும் என்னும் கொள்கையை ஐக்கிய தேசீயக்கட்சி கொண்டிருக்கிறது:
ஐக்கிய தேசீயக் கட்சியின் அந்நிய நாட்டுக் கொள்கை, பிரித்தானியப் பொது நலவமைப்பு நாடுகளின் அந்நிய நாட் டுக் கொள்கையுடன் ஒற்றுமை கொண்டது. இப்பொது நலவமைப்பில் இலங்கையும் ஓர் அங்கத்துவநாடாக விருத்தல் வேண்டும் என்பதில் அது தளரா நம்பிக்கை கொண்டிருக் கிறது. ஆகவே தான் இங்குள்ள கடற்படைத் தளங்களையும் விமானப்படைத்தளங்களையும் ஐக்கியராச்சியம்? உபயோகித் துக்கொள்ள அநுமதித்தது. கொ மியூனிசக் கொள்கை நாடுகளுடன் சமாதானமாக வாழவேண்டும் என்னும் கொள் கையை அது எதிர்ப்பதில்லை. இப்படியான ஒரு கொள்கையை
I. Hydro Electric Resources. 2. United Kingdom.

இலங்கை சமவரசின் அமைப்பு 337
அது கொண்டிருப்பதனல்தான், ஐக்கிய அமெரிக்க நாடுகள் வெறுப்புப்பார்வையுடன் நோக்கியபோதும் அதனைப்பொருட் படுத்தாது அது ஒரு வியாபார ஒப்பந்தத்தைச் சீனத்துடன் செய்தது. வல்லரசுக்கோஷ்டிகள் எதிலும் சேரக்கூடாது என்ற கொள்கையினையும் அது கொண்டது. ப்ல ஆசிய மகாநாடுகளிலும் அது பங்கு பற்றியிருக்கிறது. இம்மாநாடு கள் யாவும் வல்லரசுகளின் குடியேற்றநாடு முறையினை எதிர்த்தன என்பதும் இங்கு குறிப்பிடற்பாலது.
ஐக்கிய தேசீயக் கட்சியிலிருந்து தோன்றிப் பிரிந்து தனி யான ஒர் கட்சியாக இயங்குவது பூரீலங்கா சுதந்திரக் கட்சியாகும். அதன் தலைவர்? ஐக்கிய தேசீயக்கட்சியின் தலையாய அங்கத்தவர்களில் ஒருவராக ஒரு காலத்திலிருந் தவர். இலங்கை பிரித்தானியப் பொதுநலவமைப்பில் இருந்து விலகி ஒரு குடியரசாகத்தன்னை அமைத்துக் கொள்ளவேண்டும் என்று பூரீலங்கா சுதந்திரக்கட்சி கோருகிறது. உலக வல்லர சுக் கோஷ்டி எதிலும் இலங்கை சேரக்கூடாதானமையின் இராணுவத்தளங்களை எ ந் த வல்லரசா வது உபயோகிக்க விடக்கூடாது என்பதும் அதன் கொள்கை.
உள்நாட்டு விடயங்கள் சம்பந்தமாகச் சொல்லுமிடத்து, சட்ட பூர்வமான நடைவடிக்கைகளையே கைக்கொள்ளவேண் டும்; தனது வேலைத்திட்டத்தை நிறைவேற்றி வைக்கப் பாராளுமன்றத் தாபனங்களைப் பயன்படுத்தவேண்டும், எந்த முறையிலேனும் புரட்சி முறையைக் கைக்கொள்ளக்கூடாது என்பன பூரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகள். சிங்களம், தமிழ் என்னும் இரு மொழிகளையும் கால தாமதமின்றி உடனே அரசாங்க மொழிகளாக்க வேண்டும் என்றும் அது கூறுகிறது. இவ்விடயத்தில், ஐக்கிய தேசியக் கட்சி ஒத்த மனப்பா ன்  ைம யுடையதாகத் தானிக்கிறது. ஆனல் இப்படியான மொழி மாற்றத்தினைப் படிப்படியாகக் கொண்டுவர வேண்டும் என்று அது கூறுகிறது. எவ்விதமான கட்டுப்பாடுமின்றித் தனிப்பட்ட மனிதரோ தாபனங்களோ பெருந்தொழில் முயற்சிகளைச் செய்ய விடவேண்டும் என் னும் கொள்கையினை, பொருளாதார விடயமாக, இக்கட்சி ஆட்சேபிக்கிறது. தான் அதிகாரத்துக்கு வந்தால், தேயிலைத் தோட்டங்கள் போன்ற பெரிய தோட்டங்களையும் போக்கு வரத்துச் சாதனங்களையும் இன்னுேரன்ன பொது உபயோகச் சேவைகளையும் படிப்படியாகத் தேசீய மயமாக்குவது, அதா வது பொதுச் சொத்துக்களாக்குவது, என்ற கொள்கையை
Power Block. 2. திரு. S. W. R. D. பண்டாரநாயக்கா. 3. இது 1956-ம் ஆண்டுக்குமுன் இருந்த நிலை.

Page 175
338 இலங்கைச் சமவரசின் அமைப்பு
அது கொண்டிருக்கிறது. இலங்கையிலே கைத்தொழில்கள் நல்லாய் அபிவிருத்தி எய்துவதற்கிடமிருக்கிறது; எனவே கிராமப்பக்கங்களில் விவசாயத்திலும் பார்க்கக் குடிசைக் கைத் தொழில்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுதல் வேண்டும்; அதன் பயனுகக் கிராமங்களிலே மக்களுக்குப் போதிய அளவுக்குப் பிழைப்புக் கொடுக்கமுடியும் என்று இக்கட்சி கருதுகிறது. சமயவிடயமாகச் சொல்லுமிடத்து, பூரீலங்கா சுதந்திரக் கட்சி பெளத்த சமயத்தைத் தீவிரமாக வளர்த்து அதனை நாட்டில் ஒரு ஆக்கச் சக்தியாக்கவேண்டும் என்கிறது. இந்தக் கொள்கைக்குப் பெளத்த மக்களிடமிருந்து நல்ல ஆதரவிருக்கிறது. அவர்கள், தாங்கள் நாட்டின் பெரும் பான்மையினராக விருந்தும் நாட்டுக்கல்விக் கொள்கையில் தாம் வேண்டிய அளவுக்கு அதிகாரம் இல்லாதவர்களாயிருப்ப தாக எண்ணுகிறர்கள். சிங்களப் பெளத்தர்களுக்கு பூரீலங்கா சுதந்திரக்கட்சி பெரிதும் உவந்த கட்சியாக விருக்கிறது.
ஒரே சமயத்தில் பலவிதங்களில் தேசீயக்கட்சியாகவும் வகுப்புவாதக் கட்சியாகவும் இயங்குவது இலங்கைத் தமிழரசுக் கட்சி என்பது. இது இலங்கைத் தமிழர்களுடைய தாபனம். அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரசு என்ற தாபனம் ஐக்கிய தேசீயக் கட்சியுடன் ஒற்றுமை கொண்டு அரசாங்க நிருவாகத் திற்பங்குபற்ற, அதனை விட்டுப் பிரிந்தவர்களைக் கொண்டே இலங்கைத் தமிழரசுக்கட்சி தாபிக்கப்பட்டது. இலங்கை யிலே சிங்களரும் தமிழ்பேசும் மக்களும் இருக்கிருர்கள். சிங்களர் பெரும்பான்மையினராக இருக்கிறர்கள். ஆகவே நாட்டில் ஒரங்க ஆட்சிமுறை யிருக்குமானல் சிங்களரே அதிகா ரத்தைக் கைப்பற்றி தமிழையும் தமிழ்ப் பண்பாட்டையும் சிதைத்துவிடுவர் ; ஆகவே இலங்கையில் ஒர் சமஷ்டி அரசியல் இருத்தல் வேண்டும். சிங்களப் பிரதேசங்கள் ஒரு அரசாங்க மாகவும் தமிழ்ப்பிரதேசங்கள் வெருேரு அரசாங்கமாகவும் இருந்து ஒரு சமஷ்டி அரசியலை அமைத்துக்கொள்ளுதல் வேண் டும் என்பது இத் தமிழரசுக்கட்சியின் கொள்கை.
இலங்கையில் உள்ள இடதுசாரிக்கட்சிகளை நிதார்த் மாக வரையறுப்பது கஷ்டம். அவை எல்லாம் புரட்சிமுறை களில், பொது உபயோகத்துக்குரிய சாதனங்கள், தொழில் கள் தோட்டங்கள் என்பனவற்றைப் பூரணமாகப் பொது வாக்குவதிலும் உடன்பாடு உடையன. எவருக்காவது சரி 250 ஏக்கருக்கு மேல் நிலமிருக்கக்கூடாது; மாதம் 2,000 00 ரூபாவுக்குமேல் வருமானம் இருக்கக்கூடாது; மிஞ்சியிருப்பன வெல்லாம் அரசாங்கத்தைச் சேரவேண்டும். வாரத்தில் 40 மணி நேரத்துக்கு மேல் எவரிடமும் வேலைவாங்கக் கூடாது என்பது நவலங்கா சமசமாஜக் கட்சிக் கொள்கையாகும்.

இலங்கைச் சமவரசின் அமைப்பு 339
அப்பியாசங்கள் 9. 1. டொமினியன் அந்தஸ்து அல்லது சம வரசுக்கு வெஸ்ற் மினிஸ்ரர் சட்டம் கூறும் வரைவிலக்கணத்தைச் சுருக்கமாகக் காட்டுக.
2. இலங்கைச் சுதந்திர மசோதாவின் விதிகள் யாவை ? 3. பாதுகாப்பு உடன்படிக்கைபற்றிய விதிகளை விபரித்து அவற்றைப்பற்றி உமது அபிப்பிராயத்தைக் கூறுக. இவ்வுடன் படிக்கை ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை? இவ்வுடன் படிக்கையின் பயனுக, இலங்கை பரிபூரண சுதந்திர நாடாக இருக்கவில்லை என்னும் கூற்றை நீர் ஏற்றுக்கொள்ளுகிறீரா?
4. வெளிநாட்டு விவகார உடன்படிக்கை யாது? 5. இப்போதைய அரசியலமைப்பில் மகாதேசாதிபதியின் கடமைகளையும் அந்தஸ்தையும் விளக்குக.
6. இப்போதைய அரசியலமைப்பானது பாராளுமன்றத் தின் சட்டநிரூபண அதிகாரத்தை எவ்விதத்திற் கட்டுப் படுத்துகிறது என்பதனைக் காட்டுக.
7. ஒரு மந்திரசபை அமைக்கப்படும்முறையை எடுத்துக் காட்டி, இப்போது அமைக்கப்பட்டுள்ள மந்திர சபையின் உறு தியையும் பெலவீனத்தையும் விமரிசனம் செய்க.
8. இலங்கையில் உள்ள பிரதான அரசியற் கட்சிகள் யாவை? அவற்றின் நோக்கங்கள் யாவை? இவை பொதுசனக் கோரிக்கையால் தோன்றியனவா? அல்லது தனிப்பட்டவர்க ளின் அபிப்பிராயத்தைப் பிரதிபலிப்பனவா? என்பதனை விளக்
குக.
9. பிரதம மந்திரியின் அந்தஸ்தையும் கருமங்களையும் விளக்கி ஆராய்க.
10. வரவு செலவுத்திட்டம் என்ருல் என்ன? அதனைச் சுருக் கமாக விளக்குக. அது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? அது இறுதியாக நிறைவேற்றப் படுவதற்குமுன் எத்தகைய தடை களைக் கடக்கவேண்டும்?
11. செனேற்றின் அதிகாரங்களையும் கருமங்களையும் விளக்குக. -
12. அரசாங்க சேவைக் கொ மிஷன், நீதிச் சேவைக் கொ மிஷன் என்பவற்றின் கருமங்கள் யாவை?

Page 176
அத்தியாயம் 10. பிரித்தானிய ராச்சியப்
பொதுநலவமைப்பு
இலங்கை இப்போது பிரித்தானிய இராச்சியப் பொது நலவமைப்பிலே அங்கத்துவம் வகிக்கிறது என்று நீங்கள் இதுவரை படித் தீர்கள். இப்பொதுநலவமைப்பின் தன்மை என்ன, அது எவ்வாறு தோன்றியது, அதன் லட்சியங்கள் என்ன, இந்தச் சாம்ராச்சியத்துக்கும் உலகத்திலே தோன்றிய ஏனைய சக்கராதிபத்தியங்களுக்கும் இடையில் உள்ள பேதம் என்ன என்னும் இன்னேரன்னவற்றை நீங்கள் இப்போது அறிதல் பொருத்தமாகும்.
ஆதிகாலம் தொட்டே இப்பூவுலகில் எத்தனையோ ஏகாதி பத்தியங்கள் இருந்திருக்கின்றன, அசீரியர், பபிலோனியர், கிரேக்கர், பாரசீகர், உரோமர், இந்தியர், சீனர் என்னும் பல்வேறு இனத்தவர் பல்வேறு காலங்களில் சக்கராதிபத்தி யங்களை அமைத்து அவற்றை ஆட்சிசெய்தனர். இச்சக் கராதி பத்தி யங்கள் அநேகமாக அவ்வவ் வினத்தைச் சேர்ந்த மன்ன ரது பராக்கிரமத்தாலும் அதிகார ஆசையினலும் ஏற்பட்டன. அம்மன்னருடைய பராக்கிரமம் மற்றும் இனத்தாரை வெற்றி கொள்ள ஏதுவாக இருந்தது. அவர்கள் தாம் வெற்றி கொண்ட இராச்சியங்களைத் தம் சக்கராதிபத்தியத்திற் சேர்த்து அரசு புரிந்து வந்தார்கள். அவர்களே சக்கரவர்த் திகள்; அவர்களே சர்வாதிகாரிகள். சனங்கள் அவர்களது குடிகள் அல்லது பிரசைகளே. தேசம் பற்றிய சகல விடயங் களுக்கும் இச்சக்கரவர்த்திகளே சர்வாதிகாரியாக இருந்தனர்.
ஆனல் பிரித்தானிய சக்கராதிபத்தியம் மேலே சொல்லிய வாறு சிருட்டிக்கப்படவில்லை. இன்ன பிரித்தானிய அரசன் தன் சேனைகளை அந்நிய நாடுகளுக்கு அனுப்பி அவற்றைத் தனது ஆட்சியிற் கொண்டு வந்தான், அந்நாட்டு மக்களைத் தனது அதிகாரத்திற்குட் கொண்டு வந்தான் என்று நாம் படிக்கவில்லை. "ஆதாயம் சம்பாதிக்கும் நோக்கத்துடனும், இங்கிலாந்திலிருந்து கடல்களுக்கப்பால் புதுப்புது இல்லங்கள் காணவேண்டும், வகுக்கவேண்டும் என்ற நோக்கத்துடனும் பிரித்தானிய மக்கள் தம் சுய தேசத்தைவிட்டுச் சஞ்சாரம் செய்ததன் பயனகவே பிரித்தானிய ஏகாதிபத்தியம்’ என்ற

பிரித்தானிய ராச்சிய பொதுநலவமைப்பு 34l
ஒன்று உருவானது என்று கூறலாம். குடியேற்றநாட்டு அபிவிருத்திக்கு இரண்டு மூல காரணங்கள் இருந்தன. முதற் காரணம் இங்கிலாந்திலிருந்த மிதமிஞ்சிய குடிசனத்ெெதாகை. இம் மிதமிஞ்சிய சனங்கள் போய்க் குடியேறி வசிப்பதற்குப் புதுப்புது இடங்கள் தேவையாக இருந்தன. இரண்டாவது காரணம் மிதமிஞ்சிய உற்பத்திப் பொருள்களை ஏற்றுமதி செய்ய வேண்டியிருந்த அவசியம். இங்கிலாந்தின் ஆலைகளில் உற்பத்தியாகிய மிதமிஞ்சிய பொருள்களைப் புறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும், புற நாடுகளிலிருந்து உணவுப்பொருள் களையும், மூலப்பொருள்களையும் இறக்குமதி செய்யவும் ஓர் அவசியம் ஏற்பட்டது. இந்த அவசியம் காரணமாகவே குடியேற்ற நாடுகளை அபிவிருத்தி செய்யவேண்டும் என்ற எண்ணம் இங்கிலாந்தில் ஏற்பட்டது. இவ்வபிவிருத்தி 1620-ம் ஆண்டளவில் ஆரம்பித்து 18-ம்-நூற்ருண்டுவரை நிகழ்ந் தது. பிரித்தானியத் தீவுகளிலிருந்த மக்களிற் பலர் வெளியேறி மேற்கிந்தியத் தீவுகளிலும், இன்னும் அதிகமாக வெப்பப் பிரதேசங்களுக்கப்பால் உள்ள வட அமெரிக்க நாடுகளிலும் குடியேறினர்கள். இவ்வாரு கவே கனடாவும், இப்போது ஐக்கிய அமெரிக்க நாடுகள் என வழங்கப்படும் பெரிய தேச மும் ஆங்கிலம் பேசும் மக்களின் நாடாயின. இங்கே குடியேறி யவர்கள் பொற்குவியல் நாடி வரவில்லை. குபேர சம்பத்துப் படைக்கவேண்டும் என்ற ஆசையுடன் அவர்கள் தங்கள் சென்மபூமியைத் துறந்து கடல் கடந்து இந்நாடுகளை யடைய வில்லை. இவர்களில் அநேகர் இங்கிலாந்தின் கீழ்ப்பக்கத்தில் குடிசன நெருக்கமாக இருந்த இடங்களில் இருந்து சென்ற வர்கள்: இன்னும் பலர் சமயச் சண்டைகளினல் நிகழ்ந்த இடுக்கண்களுக்குத் தப்பி ஓடியவர்கள். நியு இங்கிலாந்து நாடுகளில் குடியேறியவர்கள் இந்த இனத்தைச் சேர்ந்த வர்களே. இவர்கள் சிறந்த விவசாயிகள்: பல தொழில் வினைஞரும் அவர்களுக்கிடையே இருந்தனர். காடுகளையழித்து அவற்றிற் குடியேறித் தமக்கு வேண்டிய உணவுப்பொருள் களைத் தாமே விளைவிக்கும் ஆற்றல் உடையவராக அவர்கள் இருந்தனர்.
பிற்காலத்தில் பிரித்தானிய மக்கள் வெளியேறிக் குடி யேறியது இன்னும் அதிகரித்தது. 19-ம் நூற்ருண்டு ஆரம் பத்தில் பிரித்தானியத் தீவுகளின் குடிசனத்தொகை ஒரு கோடிக்குமேல் இல்லை. ஆனல் 19-ம் நூற்ருண்டு முடிய இத்தொகை மூன்றுகோடி எழுபது லட்சம் ஆனது. இப் பெருந்தொகைச் சனங்களுக்கு உணவளிப்பது, தொழில் கொடுப் "து என்பன பெரும் பிரச்சினையாகிவிட்டது. இங்கி

Page 177
342 பிரித்தானிய ராச்சியப் பொதுநலவமைப்பு
லாந்திலே கைத்தொழில்கள் அபிவிருத்தி எய்தியமை சிலர் க் குத் தொழில் கொடுத்தபோதிலும் எல்லாரும் தொழில் பெறுவது அரிதாக விருந்தது. எனவே அநேகர் கனடா, தென் ஆபிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசீலந்து முதலாம் நாடுக ளுக்குச்சென்று அங்கே குடியேறினர். இவ்வாரு கவே பூமண்ட லத்துத் தென் கோளம் பிரித்தானிய இன மக்களுக்குத் தாயகமாய் வந்தது.
17-ம் நூற்றண்டில் பிரித்தானிய கிழக்கிந்தியக் கொம்பனி என்ற வர்த்தகக் கொம்பனி இந்தியாவிலே தன் செல்வாக்கை நிலைநாட்ட சில வியாபாரக் குடியிருப்புக்களைத் தாபித்தது. 1640-ம் ஆண்டில் சென்னை பிரித்தானியரால் பெறப்பட்டது. இங்கிலாந்தின் மன்னரான இரண்டாவது சால்ஸ் ஒர் போர்த் துக்கீச இராச கன்னிகையை மணஞ்செய்ய, அதன் பொருட்டு பம்பாய் சீதனமாக அவளுக்கு வழங்கப்பட்டது. 1690-ம் ஆண்டு கிழக்கிந்தியக் கொம்பனி கல்கத்தாவைப் பெற்றது. இப்படியாக இந்தியாவின் பிரதான இடங்களைப் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கொம்பனி தனது அதிகாரத்துக்குட் கொண்டு வந்தமை பல யுத்தங்களைக் கிளப்பியது. இந்த யுத்தங்களின் பயணுக மேலும் பல இடங்கள் பிரித்தானிய கிழக்கிந்தியக் கொம்பனியின் அதிகாரத்தில் வந்தன. 1557-ம் ஆண்டுக்கும் 1858-ம் ஆண்டுக் குமிடையில் பரத கண்டத்தின் பெரும் பாகத்தை இக்கொம்பனியே தனது ஆட்சிக்குள் கொண்டு வந்தது. 1858-ம் ஆண்டில் பிரித்தானியப் பாராளுமன்றம் இந்தியா விடயத்திற் பிரவேசித்து அதன் ‘நற்பரிபாலனத்தின் பொருட்டு ஓர் சட்டம் இயற்றியது. ஏகாதிபத்திய லட்சிய அபிவிருத்தியில் இது ஓர் பிரதான கட்டமாகும். இதுவரை வர்த்தகம் செய்து இலாபம் அடைவதே கிழக்கிந்தியக் கொம்பனியின் பெரு லட்சியமாக இருந்தது. ஆனல் மக்களைப் பரிபாலிக்கும் கருமத்தில் ஓர் கொம்பனியை அநுமதிக்க கூடாது; தாமே அதனை ஏற்று நடாத்த ல் வேண்டும் என்று முடியும் (பிரித்தானிய அரசியும்) பாராளுமன்றமும் உணர்ந்தன. இந்தியாவானது தானே தன் பரிபாலனக் கருமங்களைக் கையேற்று நடாத்தும் பருவத்தை எய்தும் வரைக்கும் அதனை பிரித்தானிய மன்னரும் பாராளுமன்றமுமே தருமகர்த்தா முறையில் பரிபாலிக்கவேண்டும் என்ற் நோக் கம் படிப்படியாக உருவானது. ஆளுவோர், ஆளப்படுவோர் என்ற இரு சாரார் சம்பந்தமாகவும் உள்ள தருமகர்த்தாப் பரிபாலன முறையை முதன் முதல் வெளியிட்டவர் எட்மன்ட்
I. Trade Settlements.

பிரித்தானிய ராச்சியப் பொதுநலவமைப்பு 343
பேர்க் என்ற பிரித்தானிய அறிஞரே யாவர். ‘மக்கள் மீதுள்ள அரசியல் அதிகாரம் அவர்களின் நன்மைக்காகவே பிரயோகிக் கப்படல் வேண்டும். உற்று நோக்குமிடத்து அந்த அதிகார மும், அவ்வதிகாரப் பிரயோகமும் தருமகர்த்தா முறையி லேயே இருத்தல் வேண்டும்’ என்னும் கருத்துப்பட அவ்வறி ஞர் கூறியமை ஈண்டு நோக்கற்பாலது. முடியும் பாராளு மன்றமும், ஆளப்படும் மக்களுக்குத் தருமகர்த்தாக்களாக விளங்குவது என்பது, ஏகாதிபத்தியங்களின் சரித்திரத்தி லேயே நவமான கொள்கையாகும். குடியேற்ற நாடு களையும் மக்களையும் அடிமைகள்போல வைத் திருக்காமல், முடியின் அல்லது இங்கிலாந்து மக்களின் இலாபத்தின் பொருட்டு வைத்திருக்காமல், பேணவேண்டும் என்ற கொள் கையைப் பல பிரித்தானிய அறிஞர் எடுத்தோதி ஏகாதிபத் தியம் என்ற கொள்கைக்குப் புதுவியாக்கியானம் ஒன்று தந்தனர். இந்தக் கொள்கையை, இலங்கையைப் பரிபாலித்த தேசாதிபதிகளில் ஒருவராய சேர் தோமஸ் மெயிற்லான்ட்2 மிகவும் அழகாக எடுத்துக்காட்டியிருக்கிறர்: "சுதேசிகளின் சந்தோ ஷ வாழ்க்கையினையும் செல்வவாழ்க்கையினையும் பொது வாக அபிவிருத்தி செய்தல் மூலமே இத்தீவின் செல்வநிலையை உறுதியாக்கவேண்டும். இதுவே அரசாங்கத்தின் தனிப்பெரு நோக்காக இனியும் இருத்தல் வேண்டும்’ என்ருர் தேசாதிபதி மெயிற்லான்ட். முன்னர் எல்லாம் * அதிகாரம்' என்பதுதான் ஏகாதிபத்தியத்தின் சுலோக மா யிருந்தது. ஆனல் அது மாறி “சுதந்திரம்' என்பது சுலோகமாயது. பிரித்தானிய ஏகாதிபத்தியம் எவ்வாறு நிறுவப்பட்டாலும் அது காலப் போக்கில் சுதந்திரத்தின் சாதனமாய் சுதந்திரத்தாபனங்களின் வளர்ச்சிக்கு நிலைக்களஞக விளங்கியது. பிரித்தானிய இன மக்கள் வதிந்த குடியேற்ற நாடுகள் கூடிய சீக்கிரத்தில் சுதந் திரமடைந்தன. 1783-ம் ஆண்டில் அமெரிக்கக் குடியேற்ற நாடுகள் கலகம் செய்து சுதந்திரத்தைக் தாபிக்க, முதலாவது பிரித்தானிய ஏகாதிபத்தியம் முடிவடைந்தது. அமெரிக்கக் குடி யேற்ற நாடுகள் கலகம் செய்து சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டபின்னரும், பிரித்தானிய மன்னரும், பாராளுமன்ற மும் படிப்பினை பெற்றதாகத் தெரியவில்லை. பலாத்காரத்தி ல்ை ஓர் ஏகாதிபத்தியத்தை வைத்திருக்கலாம் என்று அதிகார வர்க்கம் தினைத்திருந்தமைக்கு மாருகவே எல்லாம் முடிந்தன. எனவே, ஏகாதிபத்தியத்தைப் பலாத்காரமின்றி அன்பின் மூலம் எப்படி வைத்திருக்கலாம் என்பதைப் பிரித்தானிய
1. Edmund Burke. 2. Sir Thomas Maitland.

Page 178
344 பிரித்தானிய ராச்சியப் பொதுநலவமைப்பு
அரசாங்கம் ஆராய்ந்தது. டர்ஹாம் பிரபு 1840-ம் ஆண்டில் கனடா விடயமாக விடுத்த அறிக்கை, ஏகாதிபத்தியத்துக் குள்ளே சுதந்திர நாடுகள் அபிவிருத்தியடைய வழிகோலியது.
ஏகாதிபத்தியம் என்ற பெயர் போய் சுதந்திர இனத் தாரைக் கொண்ட ஒர் பொதுநலவமைப்பானது. ஆனல் அச் சுதந்திரம் எல்லார்க்கும் கிடைக்கவில்லை. பிரித்தானிய இனத்தைச் சேராத மக்கள் வசித்த இந்தியா, இலங்கை போன்ற தேசங்கள் மெல்ல மெல்ல வாகவேனும் முன்னேறி தனி மனிதன் சுதந்திரம், அரசியற் சுதந்திரம் என்னும் சுதந்தி ரங்களுக்கான பாதையிற் சென்றன. இந்தியாவிலே சுதந்திரக் கிளர்ச்சி காலந்தோறும் அபிவிருத்தியடைந்து வந்தது. 1858 ம் ஆண்டு தொடக்கம் அரசியல் முன்னேற்றம் பற்றிய பல சட்டங்கள் அங்கே நிறைவேற்றப்பட்டன. 1861-ம் ஆண்டி லும் 1909-ம் ஆண்டிலும் 1919-ம் ஆண்டிலும் 1935-ம் ஆண்டிலும் நிறைவேறிய சட்டங்கள் இந்தியாவைச் சுதந்தி திரப்பாதையில் எவ்வளவோ தூரத்துக்கு முன்னேற்றின. தொழிற் கட்சி இங்கிலாந்தில் அதிகாரத்துக்கு வந்ததும் 1947-ம் ஆண்டில் பிறிதோர் மகத்தான அரசியல் முன்னேற்றம் இந்தி யாவில் நிகழ்ந்தது. அந்நாடு இந்தியா, பாகிஸ்தான் என்ற இரண்டு டொமினியன்களாகப் பிரிக்கப்பட்டது; இப்போது அவ்விரு நாடுகளும் பரிபூரண சுயராச்சிய நாடுகளாக விளங்கு கின்றன. இந்தியா பல்லாண்டு காலமாகச் சுதந்திரப் போராட் டத்தில் ஈடுபட்டிருந்தது. அதன் சுதந்திரக் கோரிக்கைக் கிணங்க பிரித்தானிய அரசாங்கம் தாமதித்தமை பிரித்தானியர் பால் பலவித குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதற்கும் ஏதுவாக இருந்தது. இங்கிலாந்து சுயநலத்தினுலும் அதிகாரத் திமிரின லுமே தன் வாக்குறுதிகளை நிறைவேற்றி இந்தியாவுக்குச் சுதந்திரத்தை வழங்கவில்லை; எவ்வளவுதான் வாக்குறுதிகள் செய்தாலும், 'ஏகாதிபத்தியத்தைக் கலைப்பதில் பங்கெடுக்க மாட்டேன், கையில் உள்ளதைக் கடைசிவரை வைத்திருப் போ ம்’ என்று சேர்ச்சில் கூறியதற்கிணங்க இந்தியாவைக் கடைசிவரை அடிமைத்தனத்தில் வைத்திருக்கத்தான் சூழ்ச்சி செய்கிறது என்ற குற்றச்சாட்டு இங்கிலாந்தின் மீது அடிக்கடி பாரிக்கப்பட்டது. சேர்ச்சில் போன்ரு ரின் கூற்றுக்கள் எவர்க் கும் நன்மை விளைப்பனவன்று நேர்மாருக கெடுதியையே விளைப்பன. இக்கூற்றுக்கள் பிரித்தானிய மக்களின் உண்மை யான மனே பாவத்தைப் பிரதிபலிப்பனவல்ல. ஆளப்படும் மக்களுக்கு அரசியல் ஆற்றலையுண்டாக்கி, பொறுப்பாட்சிக்கு வேண்டிய சூழ்நிலைகளை அந்த ஆளப்படும் நாடுகளிலே ஏற் படுத்தவேண்டுமென்பதில் பிரித்தானியப் பாராளுமன்றம் பல

பிரித்தானிய ராச்சியப் பொதுநலவமைப்பு 345
சந்தர்ப்பங்களில் சிரத்தை காட்டியிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனல் இது சம்பந்தமாக நாம் ஒர் பிர தான விடயத்தையும் கவனிக்கவேண்டும். ஓர் நாட்டிலே ஏறக்குறைய ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு உடைய மக்கள் இருந்தால் அங்கே சனநாயகம் சிறந்த முறையில் தொழிற்படும். அங்கே பெரும்பான்மையினரின் ஆட்சிக்குச் சிறுபான்மையினர் அஞ்சார். பெரும்பான்மையினராக, சிறு பான்மையினராக, அவர்கள் அனைவரும் பல மூலாதார விடயங் களில் ஒற்று பைப்பாடுடையவராதலினல், அரசியல் விடய மாக இன்று சிறுபான்மைய னராக வுள்ளார் நாளை பெரும்பான் மையினராக வரலாம். ஆனல் இப்படியான மக்கட்சமுதாயம் இந்தியாவிலேனும் இலங்கையிலேனும் இல்லை. சாதி, மதம் பற்றிய பிரிவினைகள் இந்நாடுகளில் உண்டு. இக்கஷ்டங்கள் இருந்தாலும், அவற்றைக் காரணமாகக் கொண்டு இந்நாடு களின் சுதந்திரத்துக்குத் தடையிடக்கூடாது. ஆனல், பிரித்தானிய பிரமுகரிற் சிலர் இந்த வித்தியாசங்களைப் பிரமாதப்படுத்திச் சுதேசிகளுக்குச் சுயராச்சியம் வழங்கும் விடயத்தில் இடையூருக நின்றனர். ஏகாதிபத்தியத்தின் நற்பெயருக்குத் தீங்கு விளைக்கக் கருமம் ஆற்றும் பிரித் தானியர் சிலர் இன்னும் இருக்கின்றனர்தான் இவர் கள் தாம் ஆளப்பிறந்த சாதியார் என்னும் அகம் பாவத் தினுல் அந்த நிலைமையை மேலும் தாபிக்கக் கருதிச் சுயநல மேலீட்டினுற் கருமம் ஆற்றுகிறர்கள். இவர்களின் ஆளும் சாதி மனுேபாவம் சுதேசிகளுக்கு வெறுப்பைக் கொடுத்து இங்கிலாந்தின் மீது அவர்களுக்கு (சுதேசிகளுக்கு) இருக்கும் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் கெடுக்கவும் ஏதுவா கிறது. இதனைப் பேராசிரியர் கூப்லான்ட் என்னும் அறிஞர் தெள்ளிதில் எடுத்துச் சொல்லியிருக்கிருர். அவர் கூறுவதா வது: "இந்தியச் சிப்பாய்க்கலக2த்தின் பின்னர், பிரித் தானியப் பரிபாலனவிடயமாக நிகழ்ந்த அவமானம் தரத்தக்க சம்பவங்கள் சரித்திரப் புத்தகங்களில் வெளிவரவில்லை. இச் சம்பவங்கள் சின்னத்தனமானவை; சில ஆங்கில ஆடவரும் மகளிரும் சம்பந்தப்பட்டவை: இச்சம்பவங்கள் ஒரு விடயத்தை எமக்குத் துலாம் பரமாகக் காட்டின. தாம் உயர்ந்த சாதியார் என்ற ஒர் காரணத்துக்காகத் தம்மை வணங்கவேண்டும் என்று இந்த ஆங்கிலர் விரும்பினர்; இந்த விருப்பத்தை வாளா தெரிவிக்கவில்லை: மன்னிக்கமுடியாத அகம்பாவத்து துடன், அதிகார்தோரணையில் தெரிவித்தார்கள்’. இந்தியா விடயத்தில் சில பிரித்தானியர் நடந்தவிதத்தை இப்பேராசிரி
l. Professor Coupland. 2. Indian Mutiny.

Page 179
346 பிரித்தானிய ராச்சியப் பொதுநலவமைப்பு
யர் விளக்கிய இக்கூற்று இலங்கை விட்யத்திலும் பொருந்தும் என்பதற்குப் பல இலங்கையர் சாட்சிப்கருவர். இன்னும், * சில சமயங்களில் தம் சமூகப்பெருமை பிரித்தானியர்க்குத் தாமாக வெளிவந்துவிடும். தாம் மாத்திரம் ஓர் உயர்ந்த சாதியார் என்ற விளக்கத்தை அவர்கள் கொண்டதற்கு ஓர் உதாரணம் காட்டுதும்: 1883-ம் ஆண்டில் இந்திய இராஜப் பிரதிநிதியாயிருந்த றிப்பன் பிரபு ஓர் மசோதாவை எடுத் தாண்டார். ஐரோப்பியன் ஒருவன் ஒரு கிறிமினல் குற்றத்தை இழைத்தால் அவனை ஓர் இந்திய நீதிபதி விசாரணை செய்ய லாம் என்பதே அம்மசோதாவின் கருத்து. அம்மசோதா வெளியானதும் பிரித்தானியச் சமூகம் முழுவதும் கூக்குர லிட்டது. வெள்ளை நிற மனிதன் ஒருவனை இந்தியன் விசாரணை செய்யலாமோ என்ற கண்டனம் பெரிதானது. இந்தப் பெரும் புயலுக்கு றிப்பன் பிரபு பணிய வேண்டியே ஏற்பட்டது. அதன் பயனக அந்த மசோதாவின் சக்தி முழுவதும் குறைக்கப்பட்டது. ‘நிறவேற்றுமை, இன வேற்றுமை பற்றிய இந்தப் படிப்பினையை எந்தப் படித்த இந்தியனும் மறக்கமாட்டான்’ (கூப்லான்ட்).
பிரித்தானியரல்லாத மக்களைக்கொண்ட குடியேற்ற நாடு களில் சுதந்திர வளர்ச்சி தாமதமாக இருந்ததற்கு வேறு பல காரணங்களும் இருந்தன. பொருளாதார விடயங்கள், இந் நாடுகள் சுதந்திரமடைவதற்கு இடையூறுகளாக விளங்கின. இலங்கை, இந்தியா போன்ற நாடுகளை தம் உற்பத்திப்பொருள் கள் விற்பனையாகும் சந்தைகளாகவும் தம் முதலை இட்டு விருத்திசெய்தற்கான இடங்களாயும் பிரித்தானிய வர்த்தகர் ஒரு காலத்தில் மதித்துவந்தனர். சுதந்திர மில்லாது தமக்குக் கீழ்க் குடியேற்றநாடாக ஒர் தேசம் இருந்தால் அங்கே தாங்கள் விரும்பியவாறு பொருள் தேடலாம் என்றும், அக்குடியேற்ற நாடுகளுக்குச் சுயராச்சியம் வழங்கி அங்கே சுதேசிகள் பரிபா லனம் ஏற்பட்டால் தம் வர்த்தக உரிமைகள் அதிகம் கவனிக் கப்படா என்றும் பிரித்தானிய வர்த்தகர் கருதிவந்தனர். இப்படிப்பட்டவர்கள்தான் மனிதனின் அரசியற் சுதந்திரத் துக்குச் சத்துருவாகி எக்காலத்திலும் இருந்தவர்களாவர்.
இந்தியாவில் ஆக்கப்பட்ட வர்த்தகக் குடியிருப்புக்கள் போல ஆபிரிக்காவிலும் பல வர்த்தகக் குடியிருப்புக்கள் பல் வேறு கொம்பனிகளால் ஆக்கப்பட்டன. அவற்றுள் ஒன்று முயல் நிஜர் கம்பனி என்பது. இது 1886-ம் ஆண்டு தன் கருமத்தை ஆரம்பித்து நிஜேரியா என்னும் பிரதேசத்தைத் தனதாக்கி யது. பிரித்தானிய கிழக்கா பிரிக்கக் கொம்பனியின் முயற்சிகளி
1. Royal Niger Company.

பிரித்தானிய ராச்சிய பொதுநலவமைப்பு 34 7
ஞல் கிழக்கா பிரிக்காவில் குடியேற்றநாடுகள் ஏற்பட்டன. ருயல் ஆபிரிக்கன் கொம்பனியின் முயற்சியால் உருவானதே ருேடே ஷியா என்னும் பிரதேசம்,
இதுவரை கூறியதிலிருந்து பிரித்தானிய ஏகாதிபத்தி யத்தில் இரண்டுவிதமான குடியேற்றநாடுகள் இருக்கின்றன வென்று அறிந்தோம். ஒருவிதம் சீதளப்பகுதிகளில் உள்ளது. இங்கே பிரித்தானியர் சென்று குடியேறி அதனைத் தம் தாயக மாகக் கொண்டனர். கனடா, ஆஸ்திரேலியா, நியுசீலந்து, தென் ஆபிரிக்கா என்பவை இவ்விதக் குடியேற்ற நாடுகளுக்கு உதாரணங்கள். மற்றும்விதக் குடியேற்றநாடுகள் வெப்பப் பிரதேசங்களில் உள்ளவை. இவை பிரித்தானிய மக்களுக்குத் தாயகமாய் விளங்காதன. அவர்களின் வர்த்தகக் கருமங் களுக்கே அவை அதிகமாகப் பயன்படுவன. வெப்பவலையப் பிரதேசத்துக் குடியேற்றநாடுகள் பிரித்தானிய வர்த்தகர் களுக்கு தேயிலை, கோப்பி, சீனி, எண்ணெய், ரப்பர் என்ப வற்றை உதவி வந்திருக்கின்றன. இந்த நாடுகளிலே பிரித் தானியருக்குச் சொந்தமாகப் பரந்த பல தோட்டங்கள் உள. இத்தோட்டங்களினல் அவர்கள் பெருந்தொகை வரு மானம் அடைகிருர்கள். பிரித்தானியத் தொழிற்சாலைகளில் உற்பத்தியாக்கப்படும் பொருள்களை விற்பனையாக்கும் இடங்க ளாகவும் இக்குடியேற்றநாடுகள் விளங்குகின்றன. இங்கிலாந் தில் உள்ள பங்குதார்களுக்கு நல்ல இலாபம் தரும் பங்குகளை வாங்குவதிலும் விற்பதிலும் பல பிரித்தானியக் கொம்பனிகள் இக்குடியேற்ற நாடுகளில் ஈடுபட்டிருக்கின்றன. காணிகளி லும், சுரங்கங்களிலும், புகையிரதப்போக்குவரத்துச் சாதனங் களிலும் பெருந்தொகையான முதற்பணத்தை பிரித்தானிய முதலாளிமார் இந்நாடுகளில் முடக்கியிருக்கிறர்கள். இத் தொழில்களில் சுதேசிகளும் தொழிலாளராய் ஈடுபட்டு பண வருவாய் பெறுகின்றனர் என்பது மெய்தான். ஆணுல் இவை எல்லாம் நன்மைக்கன்று என்று அவர்கள் உணருகிருர்கள். எனவே தான், தங்கள் சொந்த நன்மையின் பொருட்டுத் தங்கள் முயற்சிகளைத் தாங்களே விருத்திசெய்யத் தமக்குச் சுதந்திரம் வேண்டுமென்று அவர்கள் அவாப்படுகிறர்கள். இத்தகைய பொருளாதாரச் சுதந்திரம் அரசியற் சுதந்திரத் துடன்தான் வருதல் வேண்டும். பேராசிரியர் பேக்கர்? என்பவர் பிரித்தானியரைப் பற்றிக் குறிப்பிடுகையில் பின்வருமாறு சொன்னர்:-"அவர்களும் (பிரித்தானியர்களும்) மனுடர் தான்; அவர்களைப்போல நாங்களும் மனுடர்தான்: (அவர்க ளுடைய பணத்தைக் கொள்ளுவதற்கு) அவர்களுக்குச்
l. Royal African Company.
2. Prof. Baker.

Page 180
348 பிரித்தானிய ராச்சியப் பொதுநலவமைப்பு
சட்டைச் சாக்கு இருப்பதுபோல எமக்கும் உண்டு: அவர்களுக்கு ஆன்மா இருப்பதுபோல எமக்கும் உண்டு’. இந்த உணர்ச்சி தான் குடியேற்றநாட்டுச் சுதேசிகளுக்கும் உதித்திருக்கிறது. பிரித்தானியரைப்போலத் தாங்களும் மனிதர்தான். தங்க ளுக்கும் பணம் சம்பாதிக்கத் தெரியும் தான். தங்களுக்கும் ஆன்மா உண்டு தான் என்று அவர்கள் நல்லாக நம்புகிறார்கள்; சுதந்திரம் தங்களுக்கும் நல்லதுதான் என்பது அவர்களது வாதம். இந்த வாதத்தின் பலத்தை பிரித்தானிய அரசாங்கம் நன்கு உணர்ந்திருக்கிறது. இதன் பயணுக பிரித்தானியரல் லாதவர்களைக்கொண்ட குடியேற்றநாடுகளிலும் அரசியற் சுதந்திரம் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறதை நாம் பார்க்கிருேம். இலங்கையின் அரசியல் முன்னேற்றத்துக்கான பிரதான சட்டங்கள் 1833-ம் ஆண்டுச் சட்டம், 1910-ம் ஆண்டுச் சட்டம், 1920-ம் ஆண்டுச் சட்டம், 1931-ம் ஆண்டுச் சட்டம், 1948-ம் ஆண்டுச் சட்டம் என்டனவே. இப்போது வழங்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் பயனக பூரண பொறுப் பாட்சியைப் பெற்றுள்ளோம்.
பிரித்தானிய இராச்சியப் பொதுநலவமைப்பு மூன்று பகுதி களையுடையது. முதலாம் பகுதி பிரித்தானிய மக்கள் சென்று குடியேறிய இடங்கள். இவை சுதந்திர இராச்சியங்களாகி விட்டன. கனடா, ஆஸ்திரேலியா, நியுசீலந்து என்னும் டொமினியன்களும், தென் ஆபிரிக்க யூனியனும், இப்பகுதி யில் அடங்கியன. வர்த்தகக் குடியிருப்புக்களின் பயணுக ஏற். பட்ட இந்திய சக்கராதிபத்தியமே இரண்டாம் பகுதி.
மூன்றவதாக உள்ளது இங்கிலாந்தில் தங்கியிருக்கும் சாம்ராஜ்யப் பகுதியாகும். இப்பகுதியிலே பல குடியேற்ற நாடுகள் உள. நிஜேரியா, கெனியா, தங்கனிக்கா, உகண்டா என்பவை இப்பகுதியில் அடங்கும். இந்நாடுகளில் ஒரளவுக்கு உள்நாட்டு அலுவற் சுவாதீனம் உண்டு. பரிபாலன வேலை யில் சுதேசிச் சபைகளும், சுதேசித் தாபனங்களும், சுதேசிப் பிரதானிகளும் பங்கெடுப்ப அவர்களின் சேவை நல்ல விதத் திற் பயன்படுத்தப்படுகிறது .
பிரித்தானியப் பொதுநல வ ைமப்புடன் சம்பந்தமாய மூன்று பெரிய பிரச்சினைகளும் உள. முதலாவது பிரச்சினையை மக்கட்கலப்புப் பிரச்சினை என்று சொல்லலாம். ஏற்கெனவே வேறின மக்கள் வசித்த பிரதேசங்களில் பிரித்தானிய இன மக்கள் புகுந்து குடியேறியமை அப்பிரதேசங்களில் இன முரண் பாடுகளும் சாதிச் சண்டைகளும் கிளம்ப அநேகமாக ஏதுவா யிருந்தது. இந்த நிலைமையை இன்று தென்ன பிரிக்காவில், நாம் காண்கிருேம். ஆனல் சில இடங்களில் கலப்பு மனங்கள் நடை

பிரித்தானிய ராச்சியப் பொதுநலவமைப்பு 349
பெற்றுமிருக்கின்றன. இக்கலப்பு மணங்களின் பயணுக ஆங்கி லோ-இந்தியர், யூறே ஷியன் என்ற புதுச் சமூகங்கள் இந்தி யாவில் தோன்றின. நியுசீலந்திலே பிரித்தானிய இனத்த வர்கள் மாயோ ரிச் சாதியினருடன் கலப்பு மணம் செய்தமை யினுல் இன்னேர் புதுச் சமூகம் அங்கே தோன்றியது. இவ் வாறு தோன்றிய புதுச் சமூகங்கள் அநுபவிக்கவேண்டிய உரிமை கள் உள. அவ்வுரிமைகளைப் பாதுகாத்தல் சீவாதார பிரச் சினையாகும். அவர்கள் சிறுபான்மையினர். சுயராச்சியம் அநுபவிக்கும் நாடுகளிலே இச்சிறுபான்மையினர் கொள்ள வேண்டிய பங்கு, அவர்களின் உரிமைகள் என்பன சட்டபூர்வ மாக நன்கு வரையறுக்கப்படுதல் வேண்டும். எங்கள் இலங்கை யிலும் பேகர், முஸ்லிம்கள் இவ்வாரு ய சிறுபான்மையின ராக விருக்கிருர்கள். அவர்களுடைய பிரச்சினையும் சட்ட பூர்வமாக வரையறுக்கப்படவேண்டியது. தென்ன பிரிக்கா யூனியனிலும் ஆஸ்திரேலியப் பொதுநலவமைப்பிலும் வெள்ளை நிற மக்கள், அங்கு வாழும் கருநிறத்தவர் பால் கொண்டுள்ள மனப்பான்மையினுல் வெள்ளைநிற மக்களின் நல்லெண்ணத் தில் மக்கள் நம்பிக்கையை இழக்கக்கூடிய நிலைமை ஏற் பட்டிருக்கிறது என்றும் கூறலாம். வெள்ளைநிற மனிதனுக்கு உரிமைகள் உளதான்; ஆனல் அதே உரிமைகள் கறுத்தநிற மனிதனுக்கும் உண்டு. இதனை நாங்கள் மறந்துவிடக்கூடாது. அவர்களுக்கி டையே யு ள்ள வித் தியா சங்களைச் சமரச முறையில் தீர்த்து பரஸ்பரம் நல்லெண்ணத்தையும் விசுவா சத்தையும் தாபிக்கவேண்டும்; இதற்கு ஆழ்ந்த அரசியன் ஞானம் வேண்டும்.
இரண்டாவது உள்ளது பொருளாதாரப்பிரச்சினை. டொமினியன் நாடுகள் தங்கள் தங்கள் நன்மைகளை அபிவிருத்தி செய்ய ஆற்றும் முயற்சிகளினல் இப்பிரச்சினை எவ்வளவு பிரதானமாயிருக்கிறதென்பதை அறியலாகும். இந்த முயற்சி கள் டொமினியன்களுக்கிடையே பரஸ்பரம் வேற்றுமையைக் கொண்டுவந்து எதிரிடையையும் பகைமையையும் மூட்டி விடுமா? அல்லது அவை எல்லாவற்றுக்குமிடையே பொது வான ஒர் ஒத்துழைப்பை உண்டாக்குமா? இதுவும் ஓர் பெரிய பிரச்சினையாக இன்று இருக்கிறது. இப்பிரச்சினையைச் சமரசமாக, திருப்திகரமாகத் தீர்ப்பதில்தான் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் அறிவும் ஞானமும் தங்கியிருக்கின்றன என்று கூறினல் அது மிகையா காது. அவர்களுக்கு இப் பிரச்சினை ஓர் சவாலாக இருக்கிறது என்று கூறலும் பொருந்தும் .

Page 181
350 பிரித்தானிய ராச்சியப் பொதுநலவமைப்பு
விரித்தானியர் வர்த்தகக் குடியிருப்புக்களை ஆக்கிப் பின்னர்த் தம் பரிபாலனத்தில் கொண்டுவந்த குடியேற்ற நாடுகளிலே இப்பொருளாதாரப் பிரச்சினை மிகவும் மோச மாக இருக்கிறது. பிரித்தானிய வர்த்தகர் சுதேசிகளிலும் பார்க்க அநுபவம் உடையவர்கள் தம் தொழில்களைச் சிறந்த முறையில் அமைத்துச் சுதேசிகளின் போட்டியை வெற்றி கொண்டு புடைவை, உலோகப்பொருள்கள், யந்திரப்பொருள் கள் முதலாம் பொருள்களின் வர்த்தகத்தை தாமே ஏகபோக மாக அநுபவித்தனர்.
மேலே சொல்லிய புடைவைகள், உலோகப்பொருள்கள், யந்திரப் பொருள்கள் யாவும் பிரித்தானியத் தொழிற்சாலை களில் ஆக்கப்படுபவை. எனவே, அவற்றைப் பெறுவதும் குடியேற்றநாடுகளில் உள்ள பிரித்தானிய வர்த்தகர்களுக்குச் சுலபம். பிரித்தானிய முதலாளிமாரிடம் முதற் பணமும், நல்ல பணப்புளக்கமும் உண்டு. அவர்கள் கொம்பனி களாகச் சேர்ந்தோ தனித்தோ குடியேற்ற நாடுகளில் காணிகள் வாங்கி அவற்றில் விளைபொருள்கள் உண்டாக்கி அவற்றை ஏற்றுமதிசெய்யத்தக்க் வசதிகளும் கிடைத்தன. இவ்வாரு கப் பிரித்தானிய வர்த்தகர்கள் செல்வாக்கு உற்றமையினல், அநேக குடியேற்றநாடுகளில் உள்ள வங்கிகள், வியாபார இடங்கள், வர்த்தக நிலையங்கள் என்பவற்றில் அவர்கள் அதிக பங்கு கொண்டிருந்தனர்.
குடியேற்ற நாடுகளில் வாழும் சுதேசிகளின் வாழ்க்கை முறை அதிகமாக மானியமுறை வாழ்க்கையைப் பின்பற்றி யது: அப்படிப்பட்டவர்கள் போட்டியை ஆதாரமாகக் கொண்ட புது உலகில் "ஏட்டிக்குப் போட்டி’ என்ற தன்மை யில் தாமும் போட்டியிட்டு வாழ்வது அரிதாக இருந்தது. குடியேற்ற நாடுகளில் வர்த்தக விடயமாகவும் பொருளாதார விடயமாகவும் நிகழ்ந்த போட்டியில் அதிக மூல பலம் வாய்ந்த பிரித்தானிய வர்த்தகரே வெற்றியடையச் சுதேசிகள் பலவீன ராயினர். குடியேற்ற நாடுகளில் அநுட்டானத்தில் இருந்த அரசாங்கங்களும் இச்சுதேசிகளைப் பாதுகாக்கத் தலையிட வில்லை. ஓர் நாட்டிலேயுள்ள ஒவ்வொருவரும் தான் தான் விரும்பிய தொழில் துறைகளைச் செய்யச் சுதந்திரம் இருக்கவேண்டும்; அதில் அரசாங்கம் தலையிடக்கூடாது என்ற கொள்கையைக் குடியேற்றநாட்டு அரசாங்கங்கள் கைக் கொண்டபடியினலும், இப்போதும் கைக்கொண்டு வருகிற படியினலும், அவை சுதேசிகளை வர்த்தகப் போட்டியிலிருந்து பாதுகாக்க முன் வரவில்லை. இப்படியான கொள்கை-அதாவது தனி மனிதனின் தொழில்துறைகளில் அரசாங்கம் தலையிடக்

பிரித்தானிய ராச்சியப் பொதுநலவமைப்பு 351
கூடாது என்ற கொள்கை-சமத்துவநிலையில் உள்ளார் விடயத்திற் சாலவும் பொருந்தும். ஆனல் சுதேசிகளுக்கும் பிரித்தானிய வர்த் தகர்களுக்குமிடையே இவ்வாரு ன சமத்துவநிலை இருக்கவில்லை. பிரித்தானியர் மிகவும் பலமுள்ள வர்கள்; தக்க மூல பலமுள்ளவர்கள். இவர்களுடன் சுதேசிகள் போட்டியிட்டுத் தாமாகவே கைத்தொழில்கள் ஆரம்பித் தலோ, தம் நாட்டு வர்த்தகத்தில் நீதியான பங்கு பெறுதலோ, முடியாத கரும மாயது. எனினும் இந்தக் கேவல நிலைமை வெகு காலத்துக்கு இருக்கவில்லை. சுதேசிகள் தங்கள் உள் நாட்டுப் பரிபாலன விடயமாகப் கூடிய அளவுக்குப் சுயா தீனம் பெற்றதும் தங்கள் தங்கள் நலவுரிமைகளைப் பேண முயற்சிசெய்து வருகிருர்கள். இன்று இலங்கையில் உள்ள அரசாங்கம் தனது மந்திரிமார் மூலமாக, இலங்கை மிக்களின் பொருளாதார நன்மைக்கான விடயங்களையே முன்னதாகச் சிந்தித்து வருகிறது. இன்ன இன்ன விடயங்கள் இன்ன இன்ன முறையில் இலங்கை மக்களுக்குப் பொருளாதார நன்மை தரமுடியுமா என்பதனை ஆராய்வதில் இலங்கை யரசாங்கம் இப்போது ஊக்கம் காட்டிவருகிறது. முன்னர் இப்படியான நிலைமை இருக்கவில்லை. வர்த்தகர், தோட்டத்துரை மார் என்பவர்கள் பொறுப்பிலேயே இந்நாட்டின் பொருளாதார அபிவிருத்திப் பணி விடப்பட்டிருந்தது. அவர்கள் இலங்கை மக் களின் பொருளாதார நன்மையைப் பிரதானமாகக் கொள்ள வில்லை. தங்கள் சொந்தச் செல்வவிருத்தியிலும் இலாபவிருத்தி யிலுமே கண்ணும் கருத்துமாயிருந்தனர். இப்படியிருந்த மையும் இயல்பே. இப்போது இந்தியாவிலும் இந்திய வர்த்தகர் புடைவை, உலோகப் பொருள்கள் முதலானவற்றை உற்பத்தி செய்யத் தாமே தொழிற்சாலைகளை நிறுவி பிரித்தானிய வர்த்த கருடன் போட்டியிடத் தொடங்கிவிட்டனர். இவ்வீருகக் குடியேற்றநாடுகளிற் சுதேசிகள் பொருளாதார விடயமாக அபிவிருத்தி எய்தி பிரித்தானிய வர்த்த கருடன் போட்டி யிட முன்வந்தமை, அங்குள்ள பிரித்தானிய நலவுரிமைகளுக்கு இடைஞ்சலாக இருந்தது. இதன் பயனக இருசாரார்க்கு மிடையே மனக்கசப்பு வளர ஒருவரையொருவர் குற்றம் சாட்டவும் தலைப்பட்டனர். இதனைச் சமரசமாகத் தீர்ப்பது இரண்டாவது பிரச்சினை. சுதேசிகளின் நலவுரிமையைப் பேணுதலோடு பொதுநலவமைப்பில் உள்ள ஏனையோரின் நலவுரிமைகளையும் பாதுகாப்பதாகிய இரண்டாவது பிரச்சினை யைப் பொதுநலவமைப்பில் உள்ள அரசியல்வாதிகள் சமரச மாகத் தீர்க்கவேண்டும். வெள்ளை நிறத்தவரும், கறுத்த நிறத்தவர்களும் ஒரே பொதுநலவமைப்பின் அங்கத்தவர்கள் என்பது உண்மையேயானல் அவர்களுக்கிடையே நிறம்,

Page 182
352 பிரித்தானிய ராச்சிய பொதுநலவமைப்பு
வருணம், சமயம் பற்றிய பாகுபாடுகள் இருக்கக் கூடாது. தென் ஆபிரிக்காவும் ஆஸ்திரேலியாவும் கறுத்த நிற மனிதர்க் கெதிராகக் கருமம் ஆற்றினல், அக் கறுத்த நிறத்தவர் எதிர்த் தாக்கல் செய்ய உரிமையுடையவரே யாவர். ஆனல் "ஏட்டிக் குப்போட்டி’ என்ற பாவனையில் எதிர்த்தாக்கல் செய்வதும் புத்திசாலித்தனமாகாது. ஒற்றுமையே பலம் தரும். இப்ப டியாக பொதுநலவமைப்பில் உள்ள நாடுகள் பரஸ்பரம் மாறு பட்டு ஒன்றுக்கொன்று விரோதமாகக் கருமம் ஆற்றுமானல் அப்பொதுநலவமைப்பின் உறுதியும் திண்மையும் கெட்டு விடும். இந்தியா பொதுநலவமைப்பிலிருந்து விலகினல் ஆஸ்திரேலியாவா வது தென் ஆபிரிக்காவா வது நன்மையடை யப்போவதில்லை. பொதுநலவமைப்பு என்பது எல்லா மக்க ளுக்கும் சுதந்திரத்தை வழங்கும் உண்மையான சாதனமாக இருக்கவேண்டுமானல் நிறப் போராட்டமும் அதனுல் விளையும் மனக்கசப்பும் ஒழிக்கப்படல் வேண்டும். அத்லாந்திக் சாசனம் என்றும் வேறும் பலவிதமான சாசனங்கள் என்றும் இப்போது நாம் கேள்விப்படுகிருேம். இச்சாசனங்கள் மனித உரிமையைப் பாதுகாப்பன வென்றெல்லாம் சொல்லப்படுகிறது. ஆணுல், மனிதர்க்கிடையேயுள்ள நிற வேற்றுமையைக் களைத் தெறிந்து, அவ்வேற்றுமைக்குப் பதிலாக நீதி, நேர்மை, சமர சம் என்பன விளங்கத்தக்கதாகப் பொதுநலவமைப்பை ஆக்கி அதில் அங்கத்துவம் வகிப்பதனுல் சமத்துவம் உண்டாகும் என்ற மனப்பான்மையை மக்களிடையே உண்டாக்காவிட் டால், இந்த உரிமைச் சாசனங்கள் எல்லாம் வெறும் ஏட்டுச் சுரைக்கா யாகவே முடியும்.
மூன்ரு வது பிரச்சினை பண்பாட்டுப் பிரச்சினை அல்லது கலாச்சாரப் பிரச்சினை. பிரித்தானிய வர்த்தகர், பாதிரி மார், உத்தியோகத்தர் என்பவர்கள் குடியேற்றநாடுகளில் பிரித் தானியச் சமுதாய வாழ்க்கை முறையினையும் பண்பாட்டையும் புகுத்தினர்கள். எங்கள் இலங்கையில் தானும், ஆங்கில மொழியே மக்கள் சாதாரணமாகப் பேசும் மொழியாகியது. ஆங்கிலரின் பழக்கவழக்கங்களையும் நம்மவர் தமது சமுதாய வாழ்க்கையிற் கடைப்பிடித்தனர். ஆங்கிலம் படித்த மக்கள், சுதேசமுறையிற் கல்வி கற்ற ரிலிருந்தும் பிரிந்து ஒதுங்கினர். இதன் பயனுகச் சமுதாயத்தில் ஓர் பிளவு உண்டாயது. சுதே சிகள் தம் பழக்கவழங்கங்களைக் கைக்கொள்ளவேண்டும் என்ற கொள்கையைப் பிரித்தானியர் எப்போதாவது கொள்ளவில்லை என்பதை நாம் இச்சந்தர்ப்பத்திற் குறித்துக்கொள்ளுதல் நலம். ஆனல் ஆங்கிலம் பயின்று, ஆங்கிலப் பழக்கவழக்கங் களிற் பரிச்சியமானேர் மிகவும் சுலபமாக ஆங்கில உத்தி
. Atlantic Charter.

பிரித்தானிய ராச்சியப் பொதுநலவமைப்பு 35.3
யோகத்தருடன் ஊடாடமுடிந்தது. அப்படிப்பட்டவர்களை அக்கால ஆங்கிலேய அதிகாரிகளும் அதிகமாக விரும் பினர். ஆனல் தாம் விரும்பியமுறையில் அபிவிருத்தியடையச் சுதேசிகளை விடுவதே பிரித்தானியரின் கொள்கையாக இருந் தது. ஒருவன் தான் விரும்பியபடி வாழ்க்கையை நடாத்த வும், தான் விரும்பியபடி தனது வாழ்க்கைநிலையை அபி விருத்தி செய்யவும் சுதந்திரம் அளிப்பதே பிரித்தானிய பரி பாலனத்தின் பெரும் குறிக்கோளாக இருந்தது என்பதனையும் நாம் மறுக்க முடியாது.
இதுவரை கூறியவற்றிலிருந்து, பிரித்தானியப் பொதுநல வமைப்பின் இன்றியமையா அம்சம் சுதந்திரமே என்பதை அறிந்தோம். சுதந்திரத்தாபனங்களே அதன் உயிர்நாடி. சுயேச்சையான ஒத்துழைப்பே அதன் சாதனம். சமாதானம், பாதுகாப்பு, முன்னேற்றம் என்பன அதன் லட்சியங்களிற் சில (1926-ம் ஆண்டின் பல்பூர்ச்சபை அறிக்கை).
ஏகாதிபத்தியத்திற்குள்ளேயே ஒர் புதிய அபிவிருத்தி உண்டாயது. பிரிபூரண சுதந்திர நிலையுடைய இராச்சியங்க ளாய்க் குடியேற்றநாடுகள் விளங்க அவற்றுக்குப் புதியதொரு அந்தஸ்து வழங்கப்பட்டமை இவ்வபிவிருத்தியின் பிரதான அம்சமாகும். இந்த அபிவிருத்தியினதும் அந்தஸ்தினதும் பயனுக ஒவ்வொரு டொமினியனும் தனது வாழ்க்கை முறையைத் தா ன் விரும் பிய படி அமைத் து ஐக்கிய ராச்சியத்தின் கட்டுப்பாட்டில் இருந்தோ ஏனைய டொமினி யன்களது கட்டுப்பாட்டில் இருந்தோ விலகிப் பரிபூரண சுதந்திரத்துடன் இருக்க வழி ஏற்பட்டது. டொமினியன்கள் என்பன பரிபூரண சுதந்திர அந்தஸ்துடைய நாடுகள். பரிபூரண சுதந்திர அந்தஸ்து என்பதன் கருத்து என்ன?
(1) தனது நியாயாதிக்க எல்லைக்குள் தான் விதிக்கும் பிரமாணங்களை அமுல் நடாத்துதற்கு வேண்டிய ஓர் நிரந்தர மான அரசியலமைப்பு
(2) அந்நிய அல்லது வெளிநாட்டுக் கட்டுப்பாட்டிலிருந் தும் விடுதலை
(3) வரையறுக்கப்பட்ட பிரதேசங்கள் என்னும் மூன்றும் கொண்டதே பரிபூரண சுயராச்சிய நாடு. இம்மூன்று அம்சங்களும் ஓர் டொமினியனுக்கு உண்டு. குறிக்கப்பட்ட இடப்பரப்புக்குள் சர்வாதிகாரம் கொண்ட அரசியல் அமைப்பு அதற்கு உண்டு. பிரித்தானிய அரசாங்கத் தின் மேற்பார்வையோ கட்டுப்பாடோ அதற்கு இல்லை. ஓர் டொமினியனைக் கட்டுப்படுத்தும் பிரமாணங்களை ஆக்கவோ,
3.248-IN

Page 183
品54 பிரித்தானிய ராச்சியப் பொதுநலவமைப்பு
ஒர் டொமினியன் பாராளுமன்றத்தின் கருமங்களிற் பிரவேசிக் கவோ பிரித்தானியப் பாராளுமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. ஆகவே ஓர் டொமினியன் என்பது பரிபூரண சுதந்திரம் அநுப விக்கும் நாடாகும். அது தனது இராசரீகத் தூதர்களைத் தன் சார்பாக அந்நிய நாடுகளுக்கும் ஏனைய டொமினியன் களுக்கும் அனுப்பவும் அந்நிய நாட்டு இராசரீகத் தூதுவர்களை ஏற்கவும் பரிபூரணமான அதிகாரம் உடையதாக இருக்கிறது. இந்த விடயத்திலும் ஒர் டொமினியன் பிரித்தானிய அரசாங் கத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கவில்லை. இங்கிலாந்தின் அநுசரணையில்லாமல் தாணுக நேரே பிறநாடுகளுடன் உடன் படிக்கைகள் செய்யவும் ஓர் டொமினியனுக்கு அதிகாரம் உண்டு. ஆனல் டொமினியன்கள் இவ்வாறு உடன்படி க் கையைச் செய்ய உத்தேசிக்கும்போது, அந்த உத்தேசத்தைச் சகோதர டொமினியன்களுக்கும் ஏற்கெனவே அறிவித்தல் வேண்டுமென்ற ஒர் கடமைப்பாடு உண்டு. ஆகவே, இங்கிலாந் துக்கும் டொமினியன்களுக்குமிடையே அடிக்கடி ஆலோ, சனைகள் நடைபெற ஏதுவாகிறது. இங்கிலாந்து செய்கிற மாதிரியே மற்றும் டொமினியன்களும் செய்யவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இங்கிலாந்தின் செயலைப் பின்பற்றி டொமினியன்கள் நடக்காத சம்பவங்களும் உண்டு. உதாரண மாகச் சில ஆண்டுகளுக்கு முன் ரு ஷியாவில் சோவியத் அரசாங் கம் ஏற்பட்டபோது, அக்காலத்திலே இங்கிலாந்தில் இருந்த தொழிற் கட்சி அரசாங்கம் அந்த சோவியத் அரசாங்கத்தைக் கணித்து ஏற்றுக்கொண்டது. ஆனல் கனடா இங்கிலாந்து செய்தவாறு சோவியத் அரசாங்கத்தை மதித்து அதனை ஏற்க வில்லை.
ஓர் டொமினியன் பரிபூரண சுதந்திரமுடையதாயினும் பொதுநலவமைப்பிலே ஓர் சுதந்திரமான பங்காளியாகவும் விளங்குகிறது. எனவே, டொமினியன்களுக்கிடையே ஓர் வித பந்துத்துவமும் கடமைப்பாடும் உண்டு. ஒர் டொமினி யன் இன்னெரு நாட்டின் மீது யதேச்சையாக யுத்தப்பிர கடனம் செய்யலாமா? என்று நீங்கள் கேட்கலாம். அப்படிச் செய்யலாம் என்று இதுவரை எந்த டொமினியனவது கோர வில்லை. ஆணுல் தாங்கள் மனப்பூர்வமாகச் சம்மதிக்காமல், தங்களை எந்த யுத்தத்திலும் இங்கிலாந்து இழுக்கமுடியாது என்பதனை அவை பட்டவர்த்தனமாகத் தெரிவித்திருக்கின் றன. இங்கிலாந்து ஜெர்மனி மீது யுத்தம் தொடுத்தவுடன் டொமினியன்களும் யுத்தம் தொடுக்கவில்லை. அவற்றின் பாராளுமன்றங்கள் தனித்தனி கூடி யுத்தம் தொடுக்கவேண் டும் என்று தீர்மானித்த பின்னரேயே அவை ஒவ்வொன்றும்

பிரித்தானிய ராச்சியப் பொதுநலவமைப்பு 355
ஜெர்மனி மீது யுத்தம் தொடுத்தன. ஒர் டொமினியன் தான் நினைத்த நாடுகள் மீது தான் நினைத்த நேரம் யுத்தப்பிரகடனம் செய்யலாம் என்ற உரிமை இருக்கிறபோதி லும், பொதுநலவமைப்பின் அங்கத்துவநாடு என்ற நியதியில் அந்நாடு அவ்வாறு யுத்தப்பிரகடனம் செய்யுமுன் மற்றும் சகோதர டொமினியன்களுடன் இவ்விடயமாகக் கலந்தாலோ சிக்கவேண்டுமென்ற ஓர் வழக்கு இருக்கிறது. டொமினி யன்கள் பொதுநலவமைப்பிலே சம பங்காளிகளானமையினல், தாமாகவே யுத்தம் தொடுத்தல் அதிகமாக நிகழாது. ஆனல் ஏதும் சீவாதாரமான காரணங்களினல் யுத்தம் தொடுக்க வேண்டும் என்ற அவசியம் ஓர் டொமினியனுக்கு ஏற்பட்டால் அந்த யுத்தப்பிரச்சினை முழுப் பொதுநலவமைப்புக்குமே பொதுவாகி அதனைப்பாதிக்கும் விடயமாகும். நாஸிக்கட்சி யின் அதிகாரத்திலடங்கிய ஐரோப்பா முழுப் பொதுநல வமைப்புக்குமே ஆபத்துக் கொடுப்பதாக இருந்தது. எனவே நாஸியர் மீது போர் தொடுப்பது பொதுநலவமைப்பின் பிர தான கருமமாயது. இங்கிலாந்து ஈடுபட்டுள்ள யுத்தம் ஒன்றிலே ஒர் டொமினியன் நடுவுநிலைமை வகிக்கலாமோ என்பதுபற்றி இப்போது தீர்க்கமாக ஒன்றும் கூறமுடியாது. ஆனல் இரண்டாவது உலக மகா யுத்தத்தின்போது ஐரிஷ் சுவாதீனக் குடியரசு நடுவுநிலைமை வகித்தமை ஈண்டுக் குறிப் பிடற்பாலது. இங்கிலாந்து ஈடுபட்டுள்ள ஒர் யுத்தத்தில் டொமினியன் நடுவுநிலைமை வகிக்கலாகாது, இங்கிலாந்துடன் சேர்ந்து யுத்தம் செய்யவேண்டுமென 1937-ம் ஆண்டில் கனடாப் பாராளுமன்றம் மிகப்பெரும்பான்மையான வாக்குச் சம்மதங்களினல் ஓர் தீர்மானம் நிறைவேற்றியமையும் இச்சந்தர்ப்பத்திற் குறிப்பிடற்பாலது.
இப்போது நாம் காணும் பொதுநலவமைப்பு நவமானது; முற்காலத்திய சக்கராதிபத்தியங்களைப் போன்றதன்று அது. அதன் குறிக்கோள் சுதந்திரம்-அடிமைத்தனம் அன்று; அதன் பிணிப்பு யதேச்சாமுறையான கூட்டுறவு மார்க்க மன்றி பலவந்த மன்று. இன்று இலங்கையும் இந்தியாவும் பரிபூரண சுதந்திர நாடுகளாக மிளிர்கின்றன. அவை தம் உள்நாட்டு விவகாரங்களையும் வெளிநாட்டு விவகாரங்களையும் தாம் நினைத் தபடி நடாத்தச் சர்வாதிகாரம் உடையனவாயிருக்கின்றன. ஆனல் அவை தமக்கிடையே அல்லது அந்நியவல்லரசுகளுடன் ஏதும் உடன்படிக்கைகள் செய்துகொள்ள வேண்டுமானல் அதனைப்பற்றிப் பொதுநலவமைப்பில் உள்ள ஏனைய சகோதர டொமினியன்களுடன் ஆலோசிக்கவேண்டும் என்ற ஒர் கடமைப்பாடு உண்டு அதற்கு மிஞ்சி வேறெவ்விதமான நிர்ப்பந்தமும் இல்லை.

Page 184
356 பிரித்தானிய ராச்சியப் பொதுநலவமைப்பு
இவ்வாறு பரிபூரண சுதந்திர நாடுகளான டொமினியன் கள் என்னும் பங்காளிகளை ஆலோசனைக் காலங்களில் ஒன்று சேர்ப்பதற்கு ஏதேனும் ஓர் சாதனம் இருக்கவேண்டுமல்லவா? பொதுநலவமைப்புச் சம்பந்தப்பட்ட விடயங்களை நிருவகிப் பதற்கு பொதுநலவமைப்புப் பாராளுமன்றம் ஒன்று அமைக் கப்படவேண்டும் என்றும், அப்பாராளுமன்றத்தின் தீர்ப்புப் படியே சகல டொமினியன்களும் நடக்க வேண்டுமென்றும் ஒர் ஆலோசனை ஓர் சமயம் கூறப்பட்டது. அங்கத்துவ டொமினி யன்களை இவ்வாறு கண்டிப்பாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற ஆலோசனை அதிட்டவசமாகக் கைவிடப்பட்டு விட்டது; இப்போது பொதுநலவமைப்புக்கெனத் தீர்க்கமான விதிகளோ வரையறுக்கப்பட்ட அமைப்புச் சட்டமோ கிடையாது. பொதுநலவமைப்பின் பகுதிகள் மீது கண்டிப்பான கட்டுப் பாடுகளையும் பிரமாணங்களையும் விதிக்காது அவை சமயோசித மாகக் கருமம் ஆற்றத் தக்கவாறு நிருவகிக்கவேண்டியதன் அவசியத்தை வற்புறுத்தி திரு. போல்டுவின் 1937-ம் ஆண்டு கூறியமை ஈண்டு நோக்கற்பா லது: “எங்கள் அமைப்புக்களை நிதார்த்தமாக, கண்டிப்பாக வகுத்து இன்னமாதிரித்தான் அவை இருக்கவேண்டுமென்று விதிப்போமேயானல், நாம் மூச்சுத்திணறி மாண்டுவிட ஏதுவாகும். எங்கள் அமைப்புக் களுக்கு நாங்கள் அதிக வியாக்கியானங்கள் கொடுக்க முனைவோ மேயானல், எங்கள் சக்கராதிபத்தியத்தைச் சின்னுபின்னப் படுத்த வழிதேடியவருமாவோம். கண்டிப்பான எழுத்து முறை விதிகளினுற் பயன் இல்லை; அப்படியான விதிகள் நாசத்துக்கு மேதுவாகும். கண்டிப்பான எழுத்து விதிகளுக்குப் பதிலாக, நல்ல மனேபாவமே எம் சக்கராதிபத்திய அமைப் புக்கு வேண்டற்பா லது. அம் மனுேபாவமே வாழ்வுக்கு வழி’ என்னும் கருத்துப்பட திரு போல்டுவின் கூறியமை இவ் விடயத்தில் எவ்வளவு பொருத்தமாயிருக்கிறது!
பொதுநலவமைப்பு முழுவதுக்கும் உள்ள பாராளுமன்றத் துக்குப் பதிலாக, நாலு வருடங்களுக்கொருமுறை ஏகாதி பத்திய மகாநாடு? ஒன்று கூடுகிறது. இம்மகாநாடுகளுக்கு ஐக்கியராச்சியத்துப் பிரதம மந்திரியே தலைமை வகிப்பார். டொமினியன்களின் மந்திரி, பிரித்தானிய அரசாங்கத்தின்
1. Mr. Baldwin.
2. Imperial Conference. இப்போது ஏகாதிபத்திய மகாநாடு என்ற பெயர் அகன்று, பொதுநலவமைப்பு மகாநாடு அல்லது சாம்ராச்சிய மகாநாடு என்று சொல்லப்படுகிறது.
3. Secretary of State for Dominions: இப்போது இவரின் உத்தி யோகப் பெயர் பொதுநலவமைப்பு உறவு மந்திரி என மாற்றப் பட்டிருக்கிறது.

பிரித்தானிய ராச்சியப் பொதுநலவமைப்பு 3 57
சார்பான மற்ற அங்கத்தவராவர். பல்வேறு டொமினியன் களின் பிரதம மந்திரிகளும், இந்தியா ஐரிஷ் சுவாதீனக்குடியரசு என்பவற்றின் பிரதிநிதிகளும் இம்மகாநாட்டின் ஏனைய அங்கத்தவர்களாவர். மகாநாட்டு ஆலோசனைக் கூட்டங்களில், பொதுநலவமைப்பைச்சேர்ந்த நாடுகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வாக்குச் சம்மதம் கொடுக்கும் உரிமையுண்டு. அந்த அந்த டொமினியன் பாராளுமன்றம் ஏற்ருல் ஒழிய, இம் மகாநாட்டில் செய்யப்படும் தீர்மானங்கள் எந்த நாட்டையும் நிர்ப்பந்திக்கா. ஓர் கொள்கையை வகுத்தல் அல்லது வரைய றுத்தல் ஏகாதிபத்திய மகாநாட்டின் நோக்க மன்று. பிரித் தானியப் பொதுநலவமைப்பில் உள்ள நாடுகளில் ஏற்படும் கஷ்டங்கள், உள்ள பிரச்சினைகள், அவற்றின் நோக்கங்கள் என்னும் இன்னுேரன்னவற்றைப்பற்றி அவை ஒவ்வொன்றும் பரஸ்பரம் தெரிவித்துத் தம் நிலைமைகளை ஒன்றுக்கொன்று நன்கு உணரச்செய்தலில்தான் இம்மகாநாட்டின் பெரும் பயன் தங்கியிருக்கிறது. இப்படியான விடயங்களைக் கடிதங் கள் மூலமோ, வேறெச்சாதனமூலமோ பொதுநலவமைப்பு அரசாங்கத்தினர் பரஸ்பரம் நிறைவாக அறிந்துகொள்ள முடியாது, ஒருவரோ டொருவர் ஊடாடி, ஒருவரோடொருவர் நெருங்கிப் பழகுவதால் அவர்கள் தத்த மக்கிடையேயுள்ள பிரச்சினைகளை நன்கு விளங்கவும் கிரகிக்கவும், நேச பான்மையை வளர்க்கவும் முடியும். இவ்வாறு டொமினியன் அரசியல் வாதிகள், இம் மகா நாடுகள் மூலம் பிரச்சினைகளை நன்கு அறிந்துவிட்டால் அவர்கள் தங்கள் தங்கள் அரசாங்கம் மூலமாக முழு ப் பொதுநல வ மை ப் பின் நன்மைக்குமான கருமங்களை ஆற்ற முடியும். பொதுநலவமைப்பு என்ற மகத்தான சாதனத்தை இயக்குவதில் சனநாயகமுறை எவ்வாறு கையாளப்படுகிறது என்பதனை இது விளக்கா நிற்கிறது.
ஆலோசனை செய்வதற்குரியவோர் சாதனம்
பொதுநலவமைப்பில் உள்ள பல்வேறு அங்கத்துவ நாடு கள் பலவிதச் சாதனங்கள் மூலமாக ஒன்றுக்கொன்று கலந்து பேசியும் ஆலோசித்தும் தமக்கிடையேயிருக்கும் கூட்டுறவை வளர்த்து வருகின்றன. இப்படியான ஆலோசனைகள், சம்பந் தப்பட்டுள்ள பொதுநலவமைப்பு அரசாங்கங்களுக்கிடையே தினம்தோறும் நடைபெற்று வருகின்றன.
அரசாங்கங்களுக்குக்கிடையே நேரடியான கடிதத்தொடர்பு
பொதுநலவமைப்பில் சுவாதீனம் பெற்றுள்ள நாடுகள் ஒவ்வொன்றிலும், ஏனைய பொதுநலவமைப்பு நாடுகளுடன்

Page 185
358 பிரித்தானிய ராச்சியப் பொதுநலவமைப்பு
கொண்டுள்ள தொடர்பு பற்றிய கரு மங்களை நிருவகிக்க வேருக ஒரு மந்திரி இருப்பர். இந்த மந்திரி மார் ஒருவருக் கொருவர் கடிதங்கள் மூலமாகவோ தந்திமூலமாகவோ தமக் கிடையே தொடர்பேற்படுத்திக்கொள்வர். எங்கள் இலங்கை யிலே பிரதம மந்திரியாக உள்ளவரே பாதுகாப்புக் கருமங்க ளுக்கும் வெளிநாட்டு விவகாரங்களுக்கும் பொறுப்பாக இருக் கிருர். ஆகவே, அவர்தான் பொதுநலவமைப்பு நாட்டுத் தொடர்புகளுக்கும் பொறுப்பாக இருந்து அவற்றை நிருவகிக் கிரு ர். இங்கிலாந்திலே பொதுநலவமைப்பு உறவு மந்திரி என்பவரே பொதுநலவமைப்பு நாட்டுத் தொடர்புகளுக்குப் பொறுப்பாகவுள்ளவர். ஆனல் அதிமுக்கியத்துவம் வாய்ந் துள்ள கடிதப் போக்குவரத்து பிரதம மந்திரிகளுக்கிடையே நடாத்தப்படும்.
சமவரசுத் தூதர்
1926-ம் ஆண்டின் ஏகாதிபத்திய மகாநாட்டுக்கு முந்தி ஒரு டொமினியன் அல்லது சமவரசு நாட்டில் உள்ள மகா தேசாதிபதியே ஐக்கிய இராச்சியத்துக்குப் பிரதிநிதியாகவும் ஒர் அளவுக்குக் கடமை யாற்றிவந்தார். 1926-ம் ஆண்டுக்குப் பின்னர் இந்த ஒழுங்கு மாற்றப்பட்டது. மகாதேசாதிபதி மன்னரின் பிரதிநிதியாக மாத்திரமே இருக்கவேண்டுமன்றி ஐக்கிய இராச்சியத்துப் பிரதிநிதியாக எவ்வகையிலேனும் இருக்கக்கூடாது என்ற நிய தி ஏற்படுத்தப்பட்டது. இப் போது பொதுநலவமைப்பு நாடுகள் ஒவ்வொன்றிலும், ஐக்கிய இராச்சியத்திலும் ஒவ்வொரு பொதுநலவமைப்பு நாட்டினதும் அரசுத்தூதர் இருக்கின்றனர். சம வர சுத்தூதர் சில கருமங்களில் இராசரீகத் தூதுவருக்கு வித்தியாசமான வர்கள் எனினும் நாடுகளுக்கிடையே தொடர்பேற்படுத்து வதில் இராசரீகத் தூதுவருக்குச் சமானமானவர்களாவர். இராசரீகத் தூதுவர் ஆற்றும் கருமங்களையே இவர்களும் ஆற்று A G1 prit Guit.
பொதுநலவமைப்பு சம்பந்தப்பட்டுள்ள பாதுகாப்பு உட் படும் சகல சர்வதேசீய விடயங்களும் சமவரசுத்தூதர்க்கு அடிக்கடி அறிவிக்கப்படுகின்றன. ஓர் இராச்சியத்தின் தலை நகரத்தில் உள்ள சம வர சுத் துரத ர் ஒருவர்க்கொருவர் சமீபமாக இருப்பதனல் பொதுநலவமைப்பு சம்பந்தமான தகவல்களை ஒருவர்க்கொருவர் உடனுக்குடன் அறிவிக்கமுடிய கிறது. அவை பற்றிய கருமங்களையும் உடனுக்குடன் செய்ய
1. High Commissioners. 2. Imperial Conference. 3. Ambassadors.

பிரித்தானிய ராச்சியப் பொதுநலவமைப்பு 359
முடிகிறது. உதாரணமாக, இரண்டாவது உலக மகா யுத்தக் காலத்தில் டொமினியன் விவகார இராச்சிய மந்திரி (இப் போது இவர் பொதுநலவமைப்பு உறவு மந்திரி என வழங்கப்படுகிருர்)க்கும் லண்டனில் உள்ள பொதுநல வமைப்பு அரசுத் தூதர்களுக்குமிடையே தினம்தோறும் மகாநாடுகள் நிகழ்ந்தன. டொமினியன் விவகார மந்திரி யுத்தக் கரும மந்திர சபையில் அங்கத்தவராக இருந்தவர். ஆகவே யுத்தத்தை நடாத்துவதில் ஐக்கிய இராச்சியத்தின் கொள்கை இன்னது என்பதை அவர் சமவர சுத் தூது தர்க ளுக்குச் சமயந்தோறும் அறிவிக்கக் கூடியவராக இருந்தார்.
எகாதிபத்திய மகாநாடு
பொதுநலவமைப்பில் உள்ள நாடுகள் சமாதான காலத் தில் தங்கள் எண்ணங்களைப் பரிமாறிக்கொள்ளவும் கூட்டு முறையில் கருமங்களை நடாத்தவும் வகுத்த முறைதான் இந்த ஏகாதிபத்திய மகாநாட்டு முறை: 1939-ம் ஆண்டு தொடக் கம் 1945-ம் ஆண்டு ஈருக நிகழ்ந்த யுத்தத்துக்கு முந்தி, ஐந்து ஆண்டுகளுக் கொருமுறையேனும் அதற்குக் குறைந்த காலத்துக் கொருமுறையேனும் இப்படியான ஏகாதிபத்திய மகாநாடுகள் கூடின. இம் மகாநாடுகளில் ஐக்கிய இராச்சி யத்துப் பிரதம மந்திரி தலைவராகவும் பொதுநலவமைப்பு நாடுகளின் பிரதம மந்திரிகள் (அல்லது அவர்களின் பிரதி நிதிகள்) அங்கத்தவர்களாகவும் இருந்தனர்.
1937-ம் ஆண்டில் இருந்து ஏகாதிபத்திய மகாநாட்டுக் கூட்டம் எதுவும் நடைபெறவில்லை. ஆனல் யுத்த காலத்தி லும் அதற்குப் பின்னும் பொதுநலவமைப்பு நாடுகளின் பிரதம மந்திரிமாரும் ஏனைய மந்திரிமாரும் சம் பிரதாயமற்ற முறை யிற் கூடி அந்த அந்தச் சந்தர்ப்பத்துக்கு வேண்டிய அவசிய கருமங்களுக்குத் தக்கவாறு கலந்தாலோ சித்தனர்.
ஏகாதிபத்திய மகாநாடு சரி, சம் பிரதாயமற்ற முறையில் பொதுநலவமைப்பு நாடுகளின் மந்திரி மார் கூடும் மகாநாடுகள் சரி ஆலோசனைச் சபைகளாயிருந்தனவேயன்றி அதிகாரம் கொண்டுள்ள சபைகளாயிருக்கவில்லை. சட்டநிரூபணம் செய் யும் அதிகாரமோ அச்சட்டத்தை அமுல் நடாத்தும் அதிகா ரமோ அவற்றுக்கு இல்லை. இம் மகாநாடுகளிற் செய்யப் படும் நிர்ணயங்கள், அவற்றிற் சமுகமளித்து அந் நிர்ணயங் களுக்குச் சம்மதமளித்த பிரதிநிதிகளின் அரசாங்கங்களைத் தானும் சட்டப்படி கட்டுப்படுத்த முடியா. மகாநாட்டு நிர்ண யங்களை ஏற்று அவற்றை அமுல் நடத்தும் அதிகாரம் அந்த அந்த நாட்டு ப் பாராளுமன்றங்களுக்கும் அரசாங்கங் - 1. Secretary of State for Commonwealth Relations.

Page 186
36 O பிரித்தானிய ராச்சியப் பொதுநலவமைப்பு
களுக்கும் தான் உரியது. ஆனல் இம் மகாநாடுகளால் ஒரு பெரும் நன்மையுண்டு பொதுநலவமைப்பு நாடுகளைச் சேர்ந்த மந்திரிமார் ஒன்றுகூடி அவ்வமைப்பின் அந்நிய நாட்டுக் கொள்கை, பாதுகாப்பு, ஏகாதிபத்தியத் தொடர்புகள் என்னும் இன்னுேரன்னவை பற்றி ஒருவர்க்கொருவர் கலந்து பேசி ஒரு ஒத்த முடிவுக்கு வரலாம். இப்படியான ஒத்த முடி வுகளுக்கு சம்பந்தப்பட்டுள்ள பொதுநலவமைப்பு நாடுகளில் மதிப்புண்டாகும். அதன் பயனக அவை இது சம்பந்த மாகச் சட்டநிரூபணங்கள் செய்யவும் அச்சட்டங்களை அமுல் நடத்தவும் சுலபமாகும். பொதுநலவமைப்பில் அங்கத்து வம் வகிக்கும் நாடுகள் தாமாக அபிவிருத்தி யடைவதற்கு இடைஞ்சல் விளைக்காது அவற்றுக்கிடையே ஒற்றுமையை உண்டாக்கி பொதுநலவமைப்பு என்ற மகாதாபனத்தின் உறுதியைப் பேணிவருவதில் இம் மகாநாடுகள் நற்பணி யாற்றி இருக்கின்றன.
தொழிற்கலைச் சபைகள்
பல்வேறு விதமான தொழிற் கலைச் சபைகளும் மகாநாடு களும் பொது நலவமைப்புக்கெனவுண்டு. குறித்த சில விசேட மான கருமங்கள் பற்றி பொது நலவமைப்பு நாடுகளுக்கிடையே கூட்டுறவை வளர்ப்பவை இச்சபைகள். இவற்றுட் சில பின் வருவன:-பொது நலவமைப்புப் பொருளாதாரச் சபை? கப்பற் போக்குவரத்துச் சபை விவசாய அலுவலகம்", தந்தித்தொடர்புச் சபை, பொது நலவமைப்பு விஞ்ஞான சம்பந்தத் தொடர்புக் கந்தோர்கள், வனபாலனத்தானம், பொதுநலவமைப்பு ஆகாசப் போக்குவரத்துச் சபை9. குறித்த சில கருமங்களுக்கெனச் சில சமயங்களில் மகாநாடுகள் கூட் டப்படுகின்றன. இம் மகாநாடுகளிற் சமுகமாயிருந்து வேண் டிய வேண்டிய ஆலோசனைகளை அளிப்பதற்கு அந்த அந்தக் கருமங்களில் நிபுணராயுள்ளோரும் அழைக்கப்படுவர். இப்படி யான மகாநாடுகளில் லண்டனிற் கூடப்பட்ட பின்வருவன குறிப்பிடத்தக்கவை:-அரசாங்க பூர்வ விஞ்ஞான மகா நாடு, சமுதாய நட்ட ஈட்டு உத்தரவாத மகாநாடு, தேசீய இனத்துவம் பிரசாதத்துவம் பற்றிய மகாநாடு11.
. Technical Committees. . Commonwealth Economic Committee. . Shipping Committee. Agricultural Bureau. . Telecommunication Board.
Commonwealth Scientific Liaison Offices. . Forestry Institute. . Commonwealth Air Transport. Official Scientific Conference.
. Conference on Social Insurance. . Conference on Nationality and Citizenship.

பிரித்தானிய ராச்சிய பொதுநலவமைப்பு 36
யுத்தகால ஆலோசனைகள்
பொதுநலவமைப்பில் உள்ள ஒவ்வொரு சமவரசும் பூரண சுவாதீனம் உடையது; தனது யுத்தப்படைகளைக் கட்டுப் படுத்துவது, அவற்றை எங்கெங்கு அனுப்பவேண்டுமோ அங்கங்கு அனுப்புவது, பகைநாட்டின் மீது யுத்தப்பிரகடனம் செய்வது என்னும் இன்னுேரன்ன கருமங்களை முடிவு செய்யும் முழுப்பொறுப்பும் ஒவ்வொரு சமவரசுக்குமே உரியது. அப் டியிருந்தாலும் ஒன்றுக்கொன்று நெருங்கிய கூட்டுறவை யுத்தகாலத்தில் ஏற்படுத்திக் கொள்ளுதல் அவசியம் என் பதை அறிந்த பொதுநலவமைப்பு நாடுகள் அதன் பொருட்டுச் சில நடைவடிக்கைகளை எடுத்தன.
முதலாவது உலக மகா யுத்தத்தில் ஒரு ஏகாதிபத்திய யுத்த மந்திரசபை லண்டனில் நிரந்தரமாக இருந்ததைப் போல 1939-ம் ஆண்டு தொடக்கம் 1945-ம் ஆண்டு ஈருக கடந்த இரண்டாவது உலக மகா யுத்தத்தின்போது இருக்க வில்லை. ஆனல் அதிபிரதானமான கருமங்களில் பொதுநல வமைப்பு மந்திரிமாருக்கிடையே அடிக்கடி ஆலோசனைகள் நடைபெற்று வந்தன. லண்டனில் உள்ள பொதுநலவமைப்பு அரசுத்தூதுவர்க்கு, ஐக்கிய இராச்சியத்து யுத்தக்கரும மந்திர சபை செய்யும் தீர்மானங்களை பூரணமாக அறிவிக்க விசேட முறைகள் அநுட்டிக்கப்பட்டன: அத்துடன் பொதுநலவமைப்பு நாடுகளின் பிரதம மந்திரிகளைக் கொண்டமகாநாடுகளும் அடிக் கடி லண்டனிற் கூடின. இன்னும், அடிக்கடி லண்டனுக்குக் கருமார்த்தமாகப் போகும் பொதுநலவமைப்பு நாட்டு மந்திரி மார் யுத்தக் கரும மந்திர சபைக் கூட்டங்களிலும் சமுகமாக விருந்தனர். ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் கோரிக்கைப்படி அதன் அரசுத் தூதுவராக லண்டனில் இருந்தவர் ஆஸ்திரிரேலிய அரசாங்கத்தின் பிரதிநிதியாக யுத்தக்கரும மந்திர சபையிலும் நியமிக்கப்பட்டார். நேசக்கட்சியினரின் யுத்த திட்டங்களில் பரிபூரணமான ஒற்றுமை ஏற்படுத்தற்குப் பல்வேறு விதமான தாபனங்கள் யுத்தக்காலத்தில் இருந்தன. இத்தாபனங்களில் பொதுநலவமைப்பு நாடுகள் தத்தம் நலவுரிமைகளுக்கேற்பப் பிரதிநிதிகளைக் கொண்டிருந்தன. உதாரணமாக கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலந்து என்னும் நாடுகளின் பிரதிநிதிகள் லண்டனிலும் வாஷிங்ரனிலும் இருந்த பசிபிக் யுத்த சபை? களிலும் இந்தியப் பிரதிநிதி லண்டனில் இருந்த பசிபிக் யுத்த சபையிலும் அங்கம் வகித்தனர்.
1. Imperial War Cabinet. 2. Pacific War Council.

Page 187
362 பிரித்தானிய ராச்சியப் பொதுநலவமைப்பு
யுத்த காலத்தில் பொதுநலவமைப்பு நாடுகளின் கூட்டுற வுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியது, பிரித்தானியப் பொதுநலவமைப்பின் விமானப் பயிற்சித் திட்டமாகும். நேசக் கட்சியினர் விமானப்படை விடயத்தில் பகைவரிலும் பார்க்க அதி உந்நத நிலையடைய உதவியது இத்திட்டமே யாகும். இத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்த நாடு ஐக்கிய இராச்சியம்; கனடா, ஆஸ்திரேலியா, நியூசீலந்து, அதிற் பங்குற்ற கனடா அரசாங்கம் அதன் பரிபாலன-முகாமை நாடானது: இத்திட்டம் பொதுநலவமைப்புக்குள் இராத நாடுகளையும் அடக்கப் பின்னர் விஸ்தரிக்கப்பட்டது: ஒரு காலத்தில் பதினுலு இராச்சியங்கள் அதிற் பங்கு பற்றித் தம் விமானிகளுக்கு ஒரேவித பயிற்சியை யளித்துப் பகைவரை முறியடிக்க முடிந்தது.
சர்வதேச ஒத்துழைப்பு
சர்வதேசங்களும் பாதுகாப்பாயிருப்பதும், உறுதியான பொருளாதார நிலை உலகத்தில் இருப்பதும் பிரித்தானியப் பொதுநலவமைப்புக்கு மிக மிக இன்றியமையாதன. எனவே தான் பொதுநலவமைப்பில் உள்ள நாடுகள் சர்வதேசீய ஒத்துழைப்பில் தளராத நம்பிக்கை கொண்டு, 1919-ம் ஆண்டின் சமாதான உடன்படிக்கைக்குப் பின்னர் தாபிக்கப் பட்ட சர்வதேச சங்கத்தினதும், இரண்டாவது உலக மகா யுத்தத்துக்குப்பின் தாபிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் தாபனத் தினதும் அரசியல், பொருளாதார, சமுதாய, கலாச்சார, நிவாரணக் கைங்கரியங்களில் அதிக பங்கெடுத்து வந்திருக்
ஐக்கிய இராச்சியம், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலந்து, தெ60 ஆபிரிக்கா, இந்தியா என்னும் நாடுகள் இத்தாபனத்தின் மூல அங்கத்தவர்களாகி அதன் உரிமைச் சாசனத்தை 1945-ம் ஆண்டில் தயாரிப்பதில் பங்குபற்றின. பாகிஸ்தான் 1947-ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 30-ம் திகதி அதில் அங்கத்துவம் பெற்றது.
ஐக்கிய நாடுகள் தாபனத்து வளர்ச்சியில் பொதுநல வமைப்பு நாடுகள் ஆற்றிய பணி, அவை அத்தாபனத்துப் பொதுச்சபையிலும் கரு மச்சபைகளிலும் செய்த சேவைகளி ணுல் நன்கு புலப்படும். இத்தாபனத்துப் பாதுகாப்புச்சபைக் யில் ஆஸ்திரேலியா அங்கத்துவம் வகித்துச் சேவை புரிந்திருந்
1. British Commonwealth Air Training Plan. 2. League of Nations. 3. United Nations Organisation. 4. Security Council.

பிரித்தானிய ராச்சியப் பொதுநலவமைப்பு 363
திருக்கிறது. கனடா இப்போது அதில் அங்கத்துவம் வகிக் கிறது. ஐக்கிய இராச்சியம் பாதுகாப்புச்சபையில் நிரந்தர அங்கத்துவம் வகிக்கிறது. ஐக்கிய இராச்சியம், ஆஸ்திரே லியா, நியூசீலந்து, இந்தியா என்னும் நாடுகள் இத்தாபனத் துப் பொருளாதார - சமுதாயச் சபையில் அங்கத்துவம் வகிக் கின்றன. கனடாவும் அதில் அங்கத்துவம் வகித்து இருக் கிறது: இச் சபையின் முதல் தலைவராக இருந்தவர் ஒரு இந்தியர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பொருளாதாரசமுதாயச் சபையின் ஆதரவில் பொருளாதார-தொழிலீட்டக் கொ மிஷன்,2 மனித உரிமைக் கொ மிஷன் என்னும் இன்னே ரன்ன குழுக்கள் உண்டு. இவற்றுக்கெல்லாம் பொதுநல வமைப்பு நாடுகள் தங்கள் அறிவையும் அநுபவத்தையும் நல்கி நல்ல பணியாற்றி வந்திருக்கின்றன. நம்பிக்கைப் பொறுப்பில் பரிபாலிக்க விடப்பட்டுள்ள நாடுகளான தங்க னிக்கா, பிரித்தானியக் கமரூன் தீவுகள், பிரித்தானிய தோஜ லாந்து (இவை ஐக்கிய இராச்சியத்தின் பொறுப்பில் உள்ளன) நியுகினி (ஆஸ்திரேலியா) மேற்கு சமோவா (நியுசீலந்து) நவுரு (இது மேற்சொல்லிய மூன்று நாடுகளதும் பொறுப்பில் உள்ளது) என்பவற்றை நம்பிக்கைப் பொறுப்பின்பேரில் பரிபா லிக்கும் தருமகர்த்தா நாடுகள் என்ற நியதியில் ஐக்கிய இராச்சியம், ஆஸ்திரேலியா, நியூசீலந்து என்பன தருமகர்த் தாச்சபையில் அங்கத்துவம் வகிக்கின்றன. இந்தத் தரும கர்த்தா முறையும் அதற்கு முந்தியிருந்த சர்வதேச சங்கத்துப் பாலனதிகார முறையும் பிரித்தானியக் குடியேற்ற நாட்டர சியன் முறையினையே பெரிதும் தழுவி இருக்கின்றன. பரிபால னம் செய்யும் பொறுப்பினை ஏற்றுக்கொண்டநாடுகள் தம் கீழ் விடப்பட்டுள்ள நாட்டு மக்களது நலத்தையும் அபிவிருத்தி யையும் குறிக்கோளாகக்கொண்டு அப்பரிபாலனத்தைப் புரிய வேண்டும் என்பதே இம்முறை என்க.
ஐக்கிய நாடுகள் தாபனத்துடன் தொடர்பு கொண்டுள்ள சர்வதேசத் தொழிலாளர் கருமத்தாபனம், ஐக்கியநாடுகளின் கல்வி, விஞ்ஞான கலாச்சாரத்தாபனம்" என்னும் இன்னே ரன்ன சேவைத் தாபனங்களின் பணியிலும் பொதுநலவமைப்பு நாடுகள் பங்கெடுத்து வருகின்றன. அகதிகளைப் புநர்க்குடி
Economic and Social Council. . Economic and Employment Commission. . Human Rights Commission.
. Trusteeship Council.
. Mandate System.
. International Labour Organisation. . United Nations Educational Scientific and Cultural Organisation.

Page 188
364 பிரித்தானிய ராச்சியப் பொதுநலவமைப்பு
யிருத்தும் ஐக்கிய நாடுகளின் சங்கம், ஐக்கிய நாடுகளின் சர்வ தேசக்குழந்தைகள் காப்பு அவசர நிதி? முதலிய நிவாரண கைங்கரியங்களுக்கும் பொதுநலவமைப்பு நாடுகள் தாராள மாக உதவி புரிந்திருக்கின்றன.
பொதுநலவமைப்பு நாடுகள் பன்னெடுங் காலமாகப் பரஸ் பரம் கூட்டுறவை ஆதாரமாகக் கொண்டு நெருங்கிய தொடர் புடையவை. பாலன விடயமாகவும் கருமங்களை இனிதே நிறைவேற்றுவதிலும் இக் கூட்டுறவின் பயணுகப் போதிய அனுபவத்தை அவை படைத்திருக்கின்றன. இப்படியான நேசமுறையில் ஒன்றுசேர்ந்து தாம் அங்கத்துவம் வசிக்கும் தாபனங்களுக்குத் தம் அநுபவத்தையும் ஆற்றலையும் அளித்து வருகின்றன. கொடிய யுத்தத்தினுல் அல்லோல கல்லோலப் பட்டு நாசமடைந்திருந்த உலகத்தைப் புநருத்தாரணம் செய் வதில் பொதுநலவமைப்பு நாடுகள் அளித்த இவ்வுதவி தக்க பயனை அளித்து இருக்கிறது என்றே சொல்லவேண்டும். 1945-ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 24-ம் திகதி ஐக்கிய நாடு கள் தாபனத்து உரிமைச் சாசனமானது சம்பந்தப்பட்டுள்ள அரசுகளால் கையொப்பமிடப்பட்டது: இனிக் கவலையில்லை, இந்தத்தாபனத்தின் பயணுக உலகம் சுபீட்ச நிலையை வெகு சீக்கிரத்திலேயே எய்தப் புநருத்தாரணப் பணிகள் ஆற்றப் படும் என்று உலக மக்களனைவரும் அக்காலத்தில் எதிர்பார்த் தனர். அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு விடயங்கள் நடை பெரு விட் டா ல் அதற்குப் பொதுநலவமைப்பு நாடுகள் பொறுப்பன்று என்று திடமாகக் கூறலாம்.
இப்படி எல்லாம் மேலே கூறியிருத்தலால், சர்வதேசத் தாபனங்களில் பொதுநலவமைப்பு நாடுகள் சகல கருமங் களிலும் ஒத்துப் பணியாற்றுகின்றன, அல்லது பேசுகின்றன, அல்லது வாக்களிக்கின்றன என்று நாம் நினைத்துக்கொள்ளக் கூடாது. எத்தனையோ கருமங்களில் அவை பரஸ்பரம் அபிப்பி ராய வேற்றுமைகொண்டு பணியாற்றியிருக்கின்றன. பொது நலவமைப்பு ஒற்றுமையைக் காட்டுதற்காக அதிற் சேர்ந் துள்ள எல்லா நாடுகளும் ஒரேவிதமாகப் பேச வேண்டும் அல்லது ஒரேவிதமாக வாக்களிக்கவேண்டும் என்ற நியதி இல்லை. அப்படிச் செய்யவேண்டும் என்று ஒரு நாட்டை மற்ற நாடு வற்புறுத்துவதுமில்லை.
உலக சமுதாயம் சமாதானமாக வாழுவதும் உறுதியாகத் தனது கருமங்களை ஆற்றுவதும் பொருளாதார நிலையில் தங்கியிருக்கின்றன. இப்பொருளாதார நிலையுடன் பொது
l' United Nations Refugees Rehabilitation Association. 2. United Nations International Childrens' Emergency Funds.

பிரித்தானிய ராச்சியப் பொதுநலவமைப்பு 365
நலவமைப்பு நாடுகள் கொண்டுள்ள தொடர்பை ஈண்டுக் குறிப்பிடுதல் பொருத்தமாகும். பொருளாதாரம் சம்பந்த மாக அவை ஒன்றுக்கொன்று கொண்டுள்ள தொடர்பு யாது? பொதுநலவமைப்பில் உள்ள நாடுகள் அனைத்தும் ஒரேவித பொருளாதார கொள்கையைக் கைக்கொள்ளவேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. ஏற்றுமதி, இறக்குமதி, வர்த்தகம் போன்ற பொருளாதார விடயங்களிலும் கைத்தொழில் சம்பந்தமான விடயங்களிலும் இப்படியான ஒரு கொள்கையைச் சகல பொதுநலவமைப்பு நாடுகளும் கொள்ளுதல் அசாத்தியம். உதாரணமாக, இங்கிலாந்து ஒரு கைத்தொழில் நாடு: அதற்கு, தனது உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்தற்கு உலக மெங்கணும் விற்பனையிடங்கள் வேண்டும். பொதுநலவமைப்பு நாடுகளுடன் மாத்திரம் விற்பனை செய்தால் போதாது. இன் னும், அதன் தொழிற்சாலைகளுக்கு வேண்டிய மூலப் பொருள் களை உலக மெங்கணும் இருந்தே பெறவேண்டியிருக்கிறது. இங்கிலாந்தைப் போலவே மற்றப் பொதுநலவமைப்பு நாடு களும் உலகம் முழுவதிலும் தம் பொருளாதார அபிவிருத்திக் குத்தங்கி இருக்கின்றன.
1932-ம் ஆண்டில் ஒரு கொடிய வியாபார நெருக்கடி ஏற்பட்டது. அது உலகமனைத்தையும் பாதித்தது. அப்போது பொது ந ல வ  ைம ப்பு நாட்டுப் பிரதிநிதிகள் கனடாவின் ஒட்டாவா நகரத்திற் கூடி பரஸ்பர சகாய முறை ஒன்றினை நிச்சயித்து அதற்கென ஒரு உடன்படிக்கையும் செய்தனர். இதன் பயனக பொதுநலவமைப்பு நாடுகளில் இறக்குமதியாகும் புறநாட்டுப் பொருள்கள் மீது மேலதிகத் தீர்வை விதிக்கப் பட்டது. இது பொதுநலவமைப்பு நாடுகளை அந்த வியாபார நெருக்கடிக் கொடுமையிலிருந்து ஒரு அளவுக்குக் காத்தது.
பொதுநலவமைப்பு நாடுகளுக்குள்ளே யிருந்த பொருளா தாரச் சக்திகள் மாற்றம் அடைந்து வருகின்றன. இயற்கை யன்னை தந்துள்ள மூலப் பொருள்கள் இந்நாடுகளில் அபரிமித மாக உண்டு. கனடா, ஆஸ்திரேலியா என்னும் நாடுகளின் கோதுமை, இந்தியா, ஆஸ்திரேலியா என்பவற்றின் பூவர்க்கத் திரவியங்கள்; ஆஸ்திரேலியா, நியூசீலந்து என்பவற்றின் கால் நடைகள்; இந்தியா, பாகிஸ்தானின் பருத்தியும் சணலும்; இலங்கை, மலேயாவின் தேயிலையும் ரப்பரும் பொதுநல வமைப்புக்குரிய வற்ருத செல்வங்களாகும். இவை பொது நலவமைப்பைச் சேர்ந்த நாடுகள் அனைத்தினதும் நன்மைக்காக உபயோகமாகும் மூலப்பொருள்கள் என்க. சோவியத் ருஷியா, ஐக்கிய அமெரிக்க நாடுகள் என்ற இரண்டும் இப்போது பரஸ்பரம் எதிரிடை கட்டிக் கருமம் ஆற்றிவருகின்றன.

Page 189
366 பிரித்தானிய ராச்சியப் பொதுநலவமைப்பு
இவ்விரு சக்திகளுக்குமிடையே ஒரு நடுப்பாதையைப் பொது நலவமைப்புநாடுகள் கடைப்பிடித்து கைத்தொழில் வர்த்தக விடயங்ளை நடாத்தித் தம் செல்வ நிலை அபிவிருத்திக்கும் அதன் மூலம் உலக செழிப்புக்கும் வழிகோல முடியும். உலக சமாதானத்துக்குத் தானும் ஒரு உறுதியான செல்வநிலையில் உள் ள சுதந்திர மா ன பொதுநலவமைப்பு காரணமாக இருக்கக்கூடும்.
தென் ஆபிரிக்கா, ஆஸ்திரேலியா என்ற இரு டொமினி யன்களின் சில இடங்களில் சர்வசன வாக்குரிமை முறை இல்லை. ஆனல் மற்றெல்லா டொமினியன்களிலும் சர்வசன வாக்குரிமை முறைதான் அநுட்டானத்தில் இருக்கிறது. வாக் காளர் டொமினியன் பாரளுமன்றத்துக்கான பிரதிநிதிகளைத் தெரிவர். எந்தக் கட்சி பெரும்பான்மையினரான அங்கத்த வர்களைக் கொண்டுள்ளதோ அந்தக் கட்சியே அரசாங்கத்தை அமைத்து நடாத்தும். பிரதம மந்திரியே நிருவாக அதிகாரி: அதாவது பயன்றரு கருமங்களை நிருவகிக்கும் கர்த்தா அவரே. அவரே தமது சகாக்களான ஏனைய மந்திரிமாரை நியமித்து மகா தேசாதிபதிக்குச் சிபாரிசு செய்ய, வழக்கப்படி அவரது சிபாரிசை மகாதேசாதிபதி அங்கீகரித்து அவர்களைத் தமது மந்திரிமாராக்குவார். டொமினியன் பாராளுமன்றம் கலந்து பேசும் மன்றமாகும். அங்கே எதிர்க்கட்சியானது அரசாங்கத் தின் கொள்கையினைப் பயன்றருவிதத்தில், பொறுப்பான தன்மையில், ஆக்கம் விளைக்கக்கூடிய தன்மையில், கண்டனம் செய்யும். பெரும்பான்மையினர் அளிக்கும் வாக்குச் சம்ம தப்படியே நிர்ணயங்கள் செய்யப்படும். சுருங்கக்கூறுங்கால் சகல பிரதான அம்சங்களிலும் டொமினியன்கள் இங்கிலாந் தைப்போலப் பா ரா ஞ ம ன்ற சனநாயக முறைப்படியே பரிபாலிக்கப்படுகின்றன.
ஆனல் இங்கிலாந்தோ மிகவும் சிறிய தேசம்: டொமினி யன்கள் ஒவ்வொன்றும் அதிகம் நிலப்பரப்பை உடையன. ஆஸ்திரேலியா ஒர் உபகண்டம்: கனடாவின் விஸ்தீரணமோ மிகப்பெரியது. தென்ன பிரிக்க யூனியனும் அவ்வாறே. டொமி னியன்கள் இவ்வாறு மிகப்பெரிதாக இருக்கிறபடியினல், மிக வும் சிறிய பிரித்தானிய தீவுகளுக்கு வேண்டிய அரசியல் முறை யிலும் பார்க்க வேறு குறிக்கப்பட்ட ஒர் அரசியல்முறை அவற் றுக்குத் தேவையாகிறது. இந்த முறை அரசியலை சமஷ்டி அரசியல் GT Gð.T Luri . இச்சமஷ்டி அரசியன்முறையை ஒர் உதாரணம் காட்டி விளக்குதும்:-

பிரித்தானிய ராச்சியப் பொதுநலவமைப்பு 36 7
கனடா மிகப்பெரிய ஒர் தேசம்: அங்கே பல பிரிவுகள் உண்டு. இப்பல்வேறு பிரிவுகளும் தமக்கென விசேடமாகப் பல்வேறு பிரச்சினைகளை யுடையனவாக இருக்கின்றன. கிழக் குக் கனடாவில் உள்ளவர்கள் பிரித்தானியக் கொலம்பியாவில் உள்ளவர்களிலும் பார்க்க சாகியம், சமயம், தொழில் என்ப வற்றில் அதிகம் வித்தியாசமுடையவர்கள். இனி, பிரித் தானியக் கொலம்பியாவில் உள்ளவர்களும் மனிற்ருே பா அல்லது சஸ் கச்சேவன் என்னுமிடங்களில் உள்ளவர்களிலும் பார்க்கப் பல விதங்களில் வித்தியாசமானவர்கள். இவ்வா ரு கப் பல்வேறு இடங்களில் பல்வேறு விதமான பிரச்சினைகள் இருந்தால் அவற்றைத் தீர்ப்பது எப்படி? ஒரு இன மக்கள், ஒரு சமய மக்கள், ஒருவித பொருளாதார நிலையுடைய மக்கள் வதியும் இடங்களுக்குத் தனித்தனி சுயேச்சை கொடுத்து உள்ளூர் விடயங்களை அவர்களேயே பரிபாலிக்கும்படி விடுத லால் இப்பிரச்சினைகளைச் சுலபமாகத் தீர்க்கலாம் என்று வைத் துக்கொள்ளுவோம். உள்ளூர் மக்களுக்குச் சுயேச்சையை வழங்கினல், அவர்கள் தங்கள் தங்கள் இடங்களுக்குத்தக்க வாறு கருமங்களை நிருவகிப்பர். இம்முறையினுல் கனடாவின் பல்வேறு மாகாணங்களுக்கும் ஒரேவிதமான அரசியல் இராது. எல்லா மாகாணங்களையும் அடக்கும் அரசியன் முறை இல்லாது ஒவ்வோர் மாகாணமும் சுயராச்சிய நாடாக விளங்கும் இப். படி விளங்கினல் கனடா என்ற டொமினியன் பெயரே இருக்க LDIT L'll-sfgjl. ஆனல் மாகாணங்களுக்குச் சுயேச்சையை வழங்க, அவை தனித்தனி தம் கருமங்களை நிருவகிப்பதோடு தம் மெல்லோருக்கும் பொதுவான பிரச்சினைகளைத் தீர்ப்ப தற்கு ஒன்றுசேர்ந்து ஒர் மத்திய அரசாங்கத்தை நிறுவுதல் நல்லதல்லவா? ஓர் உதாரணத்துக்குத் தெருக்களை எடுத்துக் கொள்ளுவோம். கனடாவில் உள்ள ஒவ்வோர் மாகாணத்தி லும் தெருக்கள் உண்டு; புகையிரதப் பாதைகள் உண்டு; விமா னப் போக்குவரத்து உண்டு. இவை அவ்வம் மாகாணத்துடன் நின்று விடாமல் ஏனைய மாகாணங்களுடனும் தொடர்பு கொண்டன. ஒவ்வோர் மாகாணமும் தன்தன் பகுதியில் உள்ள இப்போக்குவரத்து வசதிகளைக் கவனிப்பதுடன் மாத் திரம் நின்றுவிட்டால் அவ்வசதிகள் விருத்தியடையா. எல்லா மாகாணங்களும் ஒன்று சேர்ந்து அவற்றைப் பரிபாலித்து விருத்தி செய்யவேண்டும். உள்ளூர் விடயங்களைப் பரிபாலிப் தற்கு உள்ளூர் அரசாங்கங்களை நிறுவிக்கொண்டு, தம்மெல் லார்க்கும் பொதுவான சில விடயங்களைப் பொதுவாக நிரு வகிப்பதற்கு ஒர் மத்திய அரசாங்கம் நிறுவவேண்டும் என்று மாகாணங்கள் உணர்ந்து கருமம் ஆற்ற சமஷ்டி அரசாங்கம் தோன்றுகிறது. மாகாணங்களின் சங்கமே சமஷ்டி என்க.

Page 190
368 பிரித்தானிய ராச்சியப் பொதுநலவமைப்பு
மாகாணங்க ளனைத்தையும் ஒன்ரு க்கிப் பரிபாலிப்பதே சமஷ்டி அரசாங்கம். அநேக சிறு பகுதிகளைக்கொண்ட ஒர் பெரிய தேசத்தில் சமஷ்டியரசியன் முறை சாலச்சிறந்ததென்பதற்கு வேறும் பல காரணங்கள் உண்டு. எத்தால் வாழலாம்? ஒத்தால் வாழலாம். அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு அல்லவா? ஆஸ்திரேலியாவிலே பல மாகாணங்கள் உள. அவை தனித்தனியாகச் சுயராச்சிய நாடாக இயங்குமானுல் ஜப்பானியப்படை எடுப்பு ஒன்றுக்கு எதிர் நிற்கமுடியாது! ஆனல், மாகாணங்கள் அனைத்தும் ஒர் சமஷ்டியிற் சேர்ந்தால் முழுத்தேசத்திலும் உள்ள ஆட்பலமும் பொருட்பலமும் அவர்கனைவரதும் உதவிக்குக் கிடைக்குமல்லவா? இன்னும், பல்வேறு மாகாணங்கள் தங்கள் பொருளாதார நலன்களைப் பரஸ்பரம் வழங்கி ஒத்துழைக்கச் சமஷ்டி முறை தூண்டும். சமஷ்டிமுறை யிருப்பதனுல் மாகாணங்கள் பரஸ்பரம் வர்த்த கம் செய்வதோடமையாது, எல்லா மாகாணத்து வர்த்தகத் தையும் ஓர் மத்திய மேற்பார்வையிலும் பரிபாலனத்திலும் அமைத்துப் புறநாடுகளுடன் அம்மத்தியச்சாதனம் மூலமாக வர்த்தகம் செய்தற்குச் சுலபமாகும். மாகாணங்கள் தனித் தனியாகப் புறநாடுகளுடன் வர்த்தக ஒழுங்கு செய்வதிலும் பார்க்க, எல்லாம் சேர்ந்து ஒர் மத்திய அரசாங்கம் மூலமாக அவ் வர்த்தகத்தைச் செய்தல் கூடிய வசதிகளைத்தரும் அல்லவா? மாகாணங்களுக்கிடையே ஏதும் பிணக்கு நேர்ந் தாலும் அதனைத் தீர்ப்பதற்கு ஒர் மத்திய சமஷ்டி அரசாங்கம் துணை செய்யும். ஈற்றில், ஓர் பெரிய நாட்டின் பிரசைகளா யிருக்கும் பெருமிதம், பல்வேறு மாகாணத்து மக்களையும் ஒன்றுசேர்த்து அவர்களுக்கிடையே உறுதியான ஒற்றுமையை வளர்க்கும். ஒர் சமஷ்டி அரசியலில் அல்லது சங்க அரசியலில் அதனைச் சேர்ந்துள்ள அங்கத்துவ மாகாணங்கள் தங்கள் உள்நாட்டுப் பரிபாலன விடயங்களில் பரிபூரண சுதந்திர முடையனவாக இருக்கும். ஆனல் தனி மனிதனின் அல்லது தனி மாகாணங்களின் சுதந்திரலட்சியம் பற்றிய பிரச்சினைகள் மத்திய அரசாங்கத்தில் விடப்படும். வேற்றுமையில் ஒற்றுமை காணும் ஓர் சாதனமாகச் சமஷ்டி அரசியல் மிளிரும்.
ஓர் சமஷ்டியிலே மத்திய அரசாங்கத்தின் கருமம் என்ன? மாகாண அரசாங்கத்தின் கருமம் என்ன? என்பதை இனி அவதானிப்போம். இதற்கும் கனடாவையே உதாரணத்துக்கு எடுத்துக்கொள்வோம். சமஷ்டி அரசியல் முறையில் மத்திய அரசாங்கத்தின் கருமங்கள் பின்வருவனவற்றுடன் சம்பந்தப் பட்டவையாகும்:-

1.
பிரித்தானிய ராச்சியப் பொதுநலவமைப்பு 369
தரைப்படை, கடற்படை, ஆகாசப்படை இவற்றுக்
குரிய சேவைகள்: இராணுவப்பாதுகாப்பு.
2. வியாபாரம், வர்த்தகம், கப்பற்போக்குவரத்து, கடல்
3.
நடமாட்டம், தபால் தந்திப்பகுதிகள், புகையிரதப் பகுதிகள், கால்வாய்கள். நாணயங்கள், கடதாசி நாணயங்கள், வங்கிமுறை; நிறுத்தல் அளவைகள், முகத்தல் அளவைகள்: சகல மாகாணங்களுக்கும் வேண்டிய பிரச்சினைகளே மேலே கூறியவை என்பதும், இவற்றின் மீது மத்திய அரசாங் கம் அதிகாரம் கொண்டிருக்கிறது என்பதும் உங்க ளுக்குப் புலனுகிறது. தம் எல்லோருக்கும் பொது வான இராணுவப்பாதுகாப்பு, போக்குவரத்துமுறை இருத்தல் மாகாணங்களுக்கே நல்லது. ஒவ்வோர் மாகாணமும் தான் தான் விரும்பியவாறு புகையிரதப் பாதைகளை அமைத்துப் போக்குவரத்து விடயத்தில் ஒரே விதமான கொள்கையை அநுட்டிக்காவிட்டால் அவற்றுக்கிடையே வியாபாரம் நடைபெறமாட்டாது. ஒரு மாகாணம் ஒடுங்கிய புகையிரதப்பாதையை அமைக்க அடுத்த மாகாணம் அகன்ற புகையிரதப் பாதையை அமைத்தால் ஒன்றுக்கொன்று புகையிரத மூலமான வர்த்தகம் ஏற்படாமல் போய்விடும். இவ் வாறே மாகாணங்கள் அனைத்துக்கும் பொதுவான நாணயம், வங்கிவசதிகள், வர்த்தகம், நிறுத்தலளவை முகத்தலளவைக் கருவிகள் என்பவற்றை ஓர் மத்திய தாபனத்தின் மேற்பார்வையில் விடுத்தல் நன்மை பயக்கும். இவை ஒவ்வோர் மாகாணத்துக்கும் மாத்திரம் உரிய விடயங்களாயிராமல் முழு அரசாங் கத்துக்குமே உரியன. இவ்விடயங்களில் எல்லா மாகா ணங்களும் ஒற்றுமை கொண்டிருத்தல் அவற்றின் செல்வ வளர்ச்சிக்கு ஏதுவாகும்.
பின்வருவன போன்ற கருமங்கள் மாகாண அரசாங்கங் களுக்கு விடப்பட்டிருக்கின்றன:-
.
மாகாண அரசாங்கத்தை நடாத்தல்: வரிகள்மூலம் வருமானம் பெறல் விவசாய விருத்திபோன்ற Lif ணக்கைங்கரியங்களுக்கான சட்டங்கள் இயற்றல்.
மாநகர சங்கம் போன்ற ஊராட்சித் தாபனங்கள், ஆசுப்பத்திரிகள் முதலாம் உள்ளூர் நிலையங்களைப் பரிபாலித்தல்.
நீதிபரிபாலனம், கல்வி.

Page 191
37 O பிரித்தானிய ராச்சியப் பொதுநலவமைப்பு
எல்லா டொமினியன்களும் சமஷ்டிமுறையில் அமைக்கப் பட்டிருக்கவில்லை. தென் ஆபிரிக்க யூனியன், நியுசீலந்து என்பனவற்றில் சமஷ்டி அரசியல் இல்லை.
இனி இந்திய அரசியல் விடயமாகச் சிறிது அவதானிப் போம். அங்கேயுள்ள மக்கள் பிரித்தானிய இனத்தைச் சேர்ந்த வர்களல்லர். பிரித்தானிய இனத்தைச் சேராத மக்கள் அரசி பற் சுதந்திரம் விடயமாக முன்னேற்றமடைந்தமைக்கு இந் தியா ஒர் சிறந்த எடுத்துக்காட்டு, கனடா ஆஸ்திரேலியா, நியுசீலந்து என்னும் டொமினியன்களில் உள்ளவர்கள் பிரித் தானியரது வழித்தோன்றல்களே; எனவே அவர்களுக்கு இங்கி லாந்து சுதந்திரம் வழங்கியமை நூதனம் அன்று. மேலும், பிரித்தானியப் பாராளுமன்றச் சனநாயகமுறை இந்நாடுகளில் ஏற்கெனவே நன்கு வேரூன்றியிருந்த படியினல், அரசியற் சுதந் திரம் வழங்கியபின் அங்கே சமுதாய விடயமாகவோ அரசியல் விடயமாகவோ பெரும் புரட்சிகள் நிகழவில்லை. ஆனல் இந்தி யாவிலே யிருந்த நிலைமை வேறு. அது ஓர் பெரிய தேசம். அங்கே பேசப்படும் மொழிகளோ பல; பண்பாட்டுப் பேதங் ளும் மிகப் பல. இப்படிப் பல்வேறு விதமான சமூகத்தினரைக் கொண்ட ஒர் பரந்த நாட்டிலே அரசியல் அதிகாரத்தை வழங்கவேண்டும் என்றவுடனேயே அங்குள்ளார்க்கிடையே பரஸ்பர அச்சமும் சந்தேகமும் உண்டாகி அவர்களுக்கிடையே பிரிவினை ஏற்படும். இந்துக்களும் முஸ்லிம்களும் அரசியல் மன்றங்களிற் பிரதிநிதித்துவம் பெற்று அரசாங்கத்தை நிருவகிக்கும் அரசியல் அதிகாரம் பெரு தவரை அவர்களுக் கிடையே பிணக்கு இல்லை. ஆனல் அரசியல் அதிகாரம் அவர்களுக்குக் கிடைத்ததும் பரஸ்பரம் சந்தேகமும் அச்சமும் கிளம்பின. ஒரு சமூகத்தார் மற்றச் சமூகத்தாரை நசித்து விடுவரோ என்ற பயமும் ஏற்பட்டது. இந்தியாவுக்குப் பொறுப்பாட்சியை வழங்கினல், இந்துக்களே அதிகாரத்தைப் பெற்று ஒர் இந்து இராச்சியத்தைத் தாபித்து விடுவர் என்ற பயம் முஸ்லிம்களுக்கு இருந்தது. சுயராச்சிய நிலைமையிலே தங்கள் சமயமும், தங்கள் மொழியும், தங்கள் பண்பாடும் எக்கதியடைந்து விடுமோ என்று முஸ்லிம்கள் அஞ்சினுர்கள். ஆகவே சாகியம், சமயம் என்பவற்றல் ஏற்கெனவே வேற்றுமை யடைந்துள்ள மக்களிடையே அரசியல் அதிகாரம் வழங்கப் படுதல் அவர்களுக்கிடையே மேலும் பிளவினை உண்டாக்க ஏதுவாகிறது. இந்தக்கூற்று இலங்கைக்கும் பொருந்தும் என்க. இங்கேயும் அரசியல் அதிகாரம் வழங்கியமை தமிழர், சிங்களர், முதலாம் வகுப்பினருக்கிடையே பரஸ்பரம் பயத்தையும் வேற்றுமையையும் உண்டாக்கியது. இப்பயத்

பிரித்தானிய ராச்சியப் பொதுநலவமைப்பு 37
தினையும் சந்தேகத்தினையும் உண்மையான சனநாயக முறைக ளால் தீர்த்துக்கொள்ளலாம் என்பது மெய், ஒர் உண்மை யான சனநாயகத்திலே சிறுபான்மையினர் அஞ்சவேண்டியது யாதுமில்லை. ஆனல் மக்களுக்கிடையே அதிகம் வேற்றுமை, பிளவு இருப்பது சனநாயகம் அநுகூலமாக நடைபெறுவதற்கு இடையூருகும். இந்த இடையூறுகள் இந்தியாவிலும் இலங்கை யிலும் இருந்தவாறு பழைய டொமினியன்களான கனடா, ஆஸ்திரேலியா, தென்ன பிரிக் கா என்பவற்றில் இருக்கவில்லை. இந்தியா இவ்வாரு க இரண்டுவித சமயங்களினல் இரண்டு பகுதியாக வேற்றுமை கொண்டு நின்றபடியினுல், அங்கே இரண்டு சுதந்திர ராச்சியங்களைத் தாபிப்பதுதான், இப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மார்க்கம் என்று உணரப்பட்டது. எனவே பாகிஸ்தான் என்ற ஒர் முஸ்லிம் டொமினியனும் இந்தியா என்ற ஓர் டொமினியனும் அங்கே நிறுவப்பட்டன. பாகிஸ்தான் மதத்தினையே அடிப்படையாகக் கொண்டது. ஆணுல் இந்தியாவையும் ஓர் இந்து இராச்சியமாக்க வேண்டு மென்று சிலர் செய்த முயற்சியை இந்தியத் தலைவர்களான மகாத்மா காந்தி, பண்டிதர் ஜவஹர்லால் நேரு போன்ற வர்கள் பலமாக எதிர்த்து வெற்றி பெற்றனர். அதன் பயனக இந்தியா இப்போது சமயத்தை அடிப்படையாகக் கொள்ளாத அரசாங்கமாக இருக்கிறது.
ஓர் பெரிய தேசத்தை இவ்வாறு இரண்டாகத் துண்டாடியது துர் அதிட்டவசமான விடயம் என்றே கூறவேண்டும். ஆனல் அப்படித்துண்டாடியமைதான் சமயோசிதமானது போலவும் தெரிகிறது. இப்பிரிவினை, ஒற்றுமை உண்டாக மார்க்கம் இருந்த இடத்திலே வேற்றுமையைத் தாபித்து விட்டது. இதன் பயனுக இந்தியா முழுவதும் பொருளாதார விடயத் தில் பலவீனமடைந்து விட்டது. பாகிஸ்தானிலே இப்போது கோதுமையும் சணலும் மிதமிஞ்சி இருக்கிறது. ஆனல் கைத் தொழில்களுக்கு வேண்டிய மூல பலம் அதற்கு இல்லை. இந்த மூலப்பொருள்கள் இந்திய டொமினியனில் உள. இந்தியாவின் மக்களுக்குப் போதிய உணவுப்பொருள்கள் இல்லை. இன்னும், கரைப் பாதுகாப்புக்கு வேண்டிய கேந்திரத் தானங்களில் முக்கியமானவை பாகிஸ்தானின் அதிகாரத்தில் உள்ளன. வடமேற்கில் கைபர் கணவாயும் போலன் கணவாயும் கிழக்கே இம்பால், கோஸ்மா வாயில்களும் பாகிஸ்தானின் அதிகாரத்தில் இன்று உள்ளன. பாகிஸ்தான் எப்போதாவது இந்தியாவுக்குச் சத்துரு நாடாகுமானல் ஆபத்துத்தான். மற்றப்பக்கமாகப் பார்க்குமிடத்து சிறந்த துறைமுகங்கள் யாவும் இரும்புச் சுரங்கங்களும், கரிச் சுரங்கங்களும் இந்தியா வின் அதிகாரத்தில் உள்ளன. எண்ணெய் விதைகள்,

Page 192
372 பிரித்தானிய ராச்சியப் பொதுநலவமைப்பு
அரிசி, தேயிலை என்பவற்றுடன் நீர் வீழ்ச்சி மின்சார மூலப்பலங்கள் என்பவையும் இந்திய டொமினியனுக்குள் ளேயே அதிகமாக இருக்கின்றன. ஆகவே, இவற்றை எல்லாம் நோக்கும்போது, இயற்கை ஒன்ருக இருக்கவேண்டும் என்று விதித்ததை மனிதன் பிரித்துவிட்டான் என்றும் கருதவேண்டி யிருக்கிறது.
இந்தியாவுக்கு ஒர் சமஷ்டியரசாங்கம் மிக உசிதமானது என்பதற்குப் பல காரணங்கள் உள. முதலாவது காரணம் அந்நாட்டின் பாதுகாப்புப் பற்றியது. ஜப்பான் போன்ற நாடுகள் எப்போதாவது இந்தியாவை ஆக்கிரமிக்கலாம். அப்படியான காலத்திலே இந்தியச்சமஷ்டியின் ஆட்பலமும் ஆயுதப்பலமும் அவ்வாக்கிரமிப்பைத் தடுக்கப் பேருதவிபுரி யும்; இந்தியாவுக்கு வேண்டிய இரும்பும் உருக்கும் கல்கத்தா வுக்கு மேற்கே ஒறிசா மாகாணத்தில் ஒரிடமாக இருக்கின்றன. இந்த இடமே இந்தியா முழுவதுக்கும் வேண்டிய ஆயுதங்களைச் செய்யும் மத்திய ஆயுதசாலையாக விளங்கவேண்டும். சமஷ்டி யரசியலினுல் இராணுவப் பலமும் அரசியற் பலமும் உண்டா கும.
இரண்டாவது, இந்தியாவோ மிகப்பரந்த ஒர் தேசம். மாகாணங்கள் தம் பொறுப்பில் தெருக்கள், புகையிரதப்பாதை கள், தந்தி, தெலிபோன் சாதனங்களை வைத்திருக்காமல் மத்திய அரசாங்கம் பொறுப்பில் விடுத்தால், எல்லா மாகா ணங்களுக்கும் பொதுவான நல்ல ஒர் முறையில் இந்தச்சாத னங்கள் அனைத்தும் வகுக்கப்படும். இப்படிச் செய்வதால் மாகாணங்கள் ஒதுங்கியிருப்பது ஒழிந்துவிட ஒன்ருே டொன்று கூடிய தொடர்புடையனவாகும். இதஞல் உள்நாட்டு வர்த்த கமும் அபிவிருத்தியாகும். இன்னும், மாகாண வாரியான குறுகிய மனப்பான்மை மக்களிடையே இல்லாதுவிட ஓர் பரந்த தேசீய உணர்ச்சியும் உருவாகும்.
மூன்ருவதாக, விவசாயமே இந்தியாவின் மிகப் பிரதான தொழில்களில் ஒன்று. ஆனல் கிடைக்கக்கூடிய நிலத்தில் 100க்கு 35 விகிதமானதுதான் இதுவரை பண்படுத்தப்பட்டி ருக்கிறது. இலங்கையைப்போலவே இந்தியாவும் வரண்ட பிரதேசங்களை அதிகம் கொண்டிருக்கிறபடியினுல், அதிக நிலத்தைப் பண் படுத்த முடியவில்லை. இப்போதிலும் பார்க்கக் கூடிய நீர்ப்பாசன வசதிகள் கிடைக்குமானல் கூடிய அளவில் நிலம் பண்படுத்தப்படும். அத்துடன் விளைவும் அதி கரிக்கும். ஆனல் இந்த நீர்ப்பாசனக் கைங்கரியத்தைத் துண்டம் துண்டமாக ஒவ்வோர் மாகாணமும் செய்தால் அதிக பயன் கிடைக்கமாட்டாது. நீர்ப்பாசனப் பிரச்சினை

பிரித்தானிய ராச்சியப் பொதுநலவமைப்பு 373
மிகவும் பெரியது. அது முழுத் தேசத்தையுமே பாதிப்ப தாகும். எனவே அதனைச் சமஷ்டிமுறையில் உள்ள மத்திய அரசாங்கம் தான் சிறப்பாகச் செய்யமுடியும். பல்வேறு மக்கட்டொகுதியினர் சேர்ந்துள்ள சமஷ்டியரசியன் முறைக்கு சோவியத் ருஷியா ஒர் தக்க உதாரணம்.
சனநாயக முறையில் நம்பிக்கை கொண்டுள்ளார் விரும் பும் அரசியல் சமஷ்டி அரசியலேயாகும். தனி மனிதர் தாம் விரும்பியபடி வாழ்க்கை நடாத்தும் உரிமைகளைச் சமஷ்டி அரசியல் வழங்குகிறது. அத்துடன் பல்வேறு விதப்பட்டவர் கள் நல்லெண்ணம், பரஸ்பர உடன்பாடு என்பவற்றை ஆதார மாகக்கொண்ட ஒற்றுமையடையவும் சனநாயகச் சமஷ்டி முறை இடமளிக்கிறது.
மனித சரித்திரத்திலே ஏற்பட்ட பல்வகைச் சாதனங் களில், பிரித்தானியப் பொதுநலவமைப்பு என்பது ஒர் விசேட தன்மையுடையது என்று கூறலாம், பரிபூரணமாக சுதந்திர முடைய பல அரசாங்கங்களைக் கொண்ட ஒர் அகில அரசாங் கம் போல இப்பொதுநலவமைப்பு விளங்குகிறது. ஒரு அரசரே பல தேசங்களுக்கும் மன்னராக விளங்க இவ்வமைப்புமுறை இடமளிக்கிறது: பல்வேறு அரசாங்கங்கள் இவ்வாறு சங்க மாகச் சேருவதில் முடி என்பது பெரும் பங்கு எடுக்கிறது. அவை எல்லாவற்றுக்கும் பொதுவான அம்சமாக அது விளங்கு கிறது. இப்பொதுநலவமைப்பில் உள்ள இன்னுேர் பிரதான அம்சம், அவ்வமைப்புக்குள் அடங்கிய நாடுகளுக்கிடையே யேயுள்ள பரஸ்பர நல்லெண்ணமும் ஒத்துழைப்பு மனுேபாவ மும் என்க. தம்மெல்லோருக்கும் பொதுவான விடயங்களைக் கலந்தாலோசித்து எல்லாருக்கும் பொதுவான ஒத்த முடிவு காண முயற்சித்தல் பொதுநலவமைப்பில் உள்ள இன்னேர் பிரதான அம்சமாகும். ஆங்கிலம் பேசும் மக்களைக்கொண்ட டொமினியன்களுக்கிடையில் ஒர் மகத்தான பந்துத்துவம் விளங்கி வந்திருக்கிறது. இப்பந்துத்துவம் இழையைப்போல் நுண்ணிதேயாயினும் உருக்கிலும் பார்க்கப் பலம் கொண்டது என்பதைக் கடந்த கால சம்பவங்கள் நன்கு நிரூபித்திக் காட்டி விட்டன. கடந்துபோன இரண்டு உலக மகா யுத்தங்களிலும் டொமினியன் நாடுகள் பரஸ்பரம் ஒத்துழைத்து எவ்வளவோ உயிர்த்தியாகமும் பொருட்டியாகமும் புரிந்தன. இத்தியாகத் தினுல் பொதுநலவமைப்பு நாடுகளுக்கிடையேயிருந்த பந்துத் துவத்தின் பலம் எத்தகையதென்பது வெளியானது.
கனடா ஐரோப்பாவிலும் பார்க்க விஸ்தீரணத்தில் சற்றுக் குறைவானபோதிலும் அங்குள்ள மக்கள் தொகை 1 கோடி 20 லட்சம்தான். அது இந்தியாவிலும் பார்க்க

Page 193
374 பிரித்தானிய ராச்சியப் பொதுநலவமைப்பு
இரண்டுமடங்கு பெரியது. ஆனல் பல்வேறு காரணங்களினல் அதன் பல பிரதேசங்கள் பெருந்தொகை மக்களை ஆதரிக்கத் தக்கனவாக இல்லை. பிரெஞ்சு மொழி பேசும் மக்களைக் கொண்ட செயின்ற் லோறன்ஸ் பள்ளத்தாக்கு, ஒன்ரேறி யோக்குடா நாடு, புற்றரைகள் செறிந்துள்ள மனிற்றே பா, சஸ்கச் சேவன், அல்கீபர்ட்டா என்னும் மாகாணங்கள், வனங் கள் நிறைந்துள்ள பிரித்தானியக் கொலம்பியா என்பனவே இன்று கனடாவின் பிரதான பாகங்களாக விளங்குகின்றன.
கனடா புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட அமெரிக்கக் கண்டத்துக்குரியது: எனவே அதன் வர்த்தக அரசியற் ருெடர் புகள் ஐக்கிய அமெரிக்க நாடுகளுடனேயே அதிகமாக உள்ளன. அலஸ்கா மாகாணம் அமெரிக்காவின் அதி வடகோடியில் இருந்து ரு விய நடைவடிக்கைகளை அறிவதற்கு ஒர் சாளரம் போல விளங்குகிறது. இரண்டாவது உலக மகா யுத்தத்தில் இம் மாகாணத்தின் பயன் நன்கு புலப்பட்டது. அலஸ்கா மாகாணம் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கே சொந்தமா யிருக்கிறபோதிலும், அது கனடாவினுல் பிரிக்கப்பட்டிருக் கிறது. ஆகவே கனடாவின் ஆதரவில்லாவிட்டால், அமெ ரிக்கா, அலஸ்கா மாகாணத்தைப் பூரணமாகப் பயன்படுத்த முடியாது. கனடாவின் வடபாங்கரில் பணிக்கட்டி யுறைந்து அவமாகக் கிடக்கும் பிரதேசத்துக்கு மேலாக உள்ள்து சோவி யத் ருஷிய-ஐக்கிய அமெரிக்க ஆகாச விமானப்பாதை. கிழக்கே ஐரோப்பாவிலிருந்து புது உலகாகிய அமெரிக்கா வுக்குச் செல்வதற்கு மிதிகற்கள் போல விளங்கும் இடங்களும் கனடாவுக்கே இட்டுச் செல்கின்றன.
மேலே சொல்லிய காரணங்களினல் கனடாவின் அந்நிய நாட்டுக் கொள்கை அதற்கே விசேடமானதாக விருக்கிறது. ஏனைய டொமினியன்களின் கொள்கையுடனே ஒத்துப்போக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பூகோள அமைப்பிலே அது இருக்கும் நிலைமையினுல் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அரசியல் சம்பந்தம் அதற்கு வேண்டியதாகி, அதற்கிணங்கத் தன் அந்நிய நாட்டுக் கொள்கையை வகுக்க வேண்டியிருக்கி றது. நியூபவுண்ட்லாந்தின் நிலைமையும் இவ்வாறுதான்.
தென் ஆபிரிக்காவில் மிகவும் நெருக்கடியான நிறப் பிரச்சினே யுண்டு. முதன் முதல் அங்கே குடியேறியவர்கள் டச்சுக்காரர். அவர்களுக்குப் பின்னர்க் குடியேறிய ஆங்கிலர் தமது ஆட்சியை அங்கே நிறுவியமை டச்சுக்காரர் அல்லது ‘போயர்’ களுக்குப் பிடிக்கவில்லை. எனவே அவர்கள் வடக்கே சென்று திருன்ஸ்வால், ஒறேஞ்ஜ் சுவாதீன இராச்சியம்

பிரித்தானிய ராச்சியப் பொதுநலவமைப்பு 375
என்னும் போயர்க் குடியரசுகளை நிறுவினர் என்பதைச் சரித் திர வாயிலாக நீங்கள் அறிந்திருப்பீர்கள். 1905-ம் ஆண்டில் போயர்களுக்கும் ஆங்கிலருக்கும் யுத்தம் மூண்டது. அதில் போயர்கள் தோற்ருர்கள். ஆனல் அத்தோல்வியினல் மனம் புண் அடைந்த போயர்களை பிரித்தானிய அரசியல் வாதி களின் ஒளதாரியத்தன்மை நேயர்களாக்கி, பல்வேறு மாகா ணங்களையும் ஐக்கியமாகக்கொண்ட தென் ஆபிரிக்க யூனியன் அரசாங்கத்தை 1910-ம் ஆண்டில் அங்குரார்ப்பணம் செய்தது. தென் ஆபிரிக்க யூனியனின் மொத்த சனத்தொனிக் 1 கோடி 10 லட்சம்: இதில் ஐரோப்பிய இனத்தவர் தொகை 2, 300,000 மாத்திரமே. இவர்களிலும் 100-க்கு 60 விகிதமாயினேர் ஒருவித ஒல்லாந்த மொழியைப் பேசும் * ஆபிரிக்கன்டர் சாகியத்தார். இவர்கள் பிரித்தானிய தொடர்பை அதிகம் விரும்புபவர்களல்லர். பொதுநலவமைப் பில் இருந்து தென்னபிரிக்க யூனியன் விலகிவிடவேண்டு மென்ற கொள்கையுடைய ஒர் கட்சியும் அங்கே இருக்கிறது.
ஆபிரிக்கச் சுதேசிகளான பாந்துச் சாதியாரையும் டர்ப னிற் குடியேறிய இந்தியர்களையும் நடத்துவது விடயமாகத் தென் ஆபிரிக்க யூனியனில் ஒரு பெரிய பிரச்சினை தோன்றி அமைதியின்மையைக் கொடுக்கிறது. வெள்ளைநிறத்தவருடன் * கறுப்ப*ரான சுதேசிகளையும் இந்தியர்களையும் சம அந்தஸ்தில் வைத்து அவர்களுக்குச் சம உரிமைகள் வழங்கக் கொஞ்ச மேனும் விரும்புகிருர்களில்லை. பொதுநலவமைப்பில்ே இது ஒர் விசித்திரமான நிலைமை. சனநாயகமுறை என்று சொல்லக் கூடாத ஒர் முறையில் வெள்ளை நிறத்தவரான சிறுபான் மையினர் "கறுத்தவரான பெரும்பான்மையினரை ஆட்சி புரியும் நூநமான முறை இது. 'கறுத்தவர்களிலும் பார்க்க வெள்ளையர் உயர்ந்தவர்கள் என்ற ஒரு நிற அகம் பாவத்தை ஆதாரமாகக் கொண்ட பாசித்த அரசியல் முறைக்கு ஆபிரிக் காந்தர் சமூகத்திலே ஒர் சார்புண்டு’ என்றும் கூறலாம்.
ஆஸ்திரேலியாவும் நியு சீலந்தும் பொருளாதாரத் தொடர்புகளினல் இங்கிலாந்து டன் பிணிக்கப்பட்டிருக் கின்றன. ஆஸ்திரேலிய உற்பத்திப் பொருள்களுக்கு இங்கி லாந்தே சிறந்த வாடிக்கை நாடாக விளங்குகிறது.
ஆஸ்திரேலியாவுக்கும் தன்னைப் பொறுத்தவரை பல கஷ்டங்களுண்டு. அங்கே மிகப்பரந்த இடங்கள் பலவுண்டு. அவை எல்லாவற்றையும் பயன்ற ரத்தக்கதாக ஆக்கல் மிகவும் கஷ்டம். அதன் பண்படுத்தக்கூடிய நிலம் தெற்கு, தென் கிழக்குத்திசைக் கரையோரமாகப் பிறைவடியில் இருக்கின் றது. 30 லட்சம் சதுர மைல்களுக்குள் உள்ள அதன் சனத்

Page 194
376 பிரித்தானிய ராச்சியப் பொதுநலவமைப்பு
தொகை 70 லட்சத்து 25 ஆயிரமே. ஜப்பானியர், இந்தியர் போன்றவர்கள் தென் கிழக்காசியாவில் ஆதிக்கம் செலுத்தா மல் இருப்பதற்காக ஆஸ்திரேலியாவில் சர்வம் வெள்ளை நிறமக்களே வசிக்கவேண்டும் என்ற லட்சியத்தை அது கொண்டிருக்கிறது. ஆட்பலமற்றிருப்பது எவ்வளவு ஆபத்து என்பதை இரண்டாவது உலக மகா யுத்தம் ஆஸ்திரேலியா வுக்கு நன்கு தெருட்டியிருக்கிறது. ஆசிய மக்களோ பெருந் தொகையினர். அவர்கள் சரியான முறையில், தக்கவிதமாக ஆயுதங்கள் கொண்டு படையெடுத்துத் தாக்கினல் ஆஸ்திரேலி யாவினல் நிருவகிக்க முடியாது. கனடாவுக்குப்போல, ஆஸ்தி ரேலியாவுக்கும் அதன் பூகோள நிலைமையினுற் சில விசேட பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன. அது இலங்கை, இந்தியா என்னும் நாடுகளுடனும் தனக்கு மிகவும் அண்மையில் உள்ள இந்தோனேஷியாவுடனும் நேச பான்மைத் தொடர்புகள் உடையதாக இருத்தல் வேண்டும் இத்தகைய காரணங்களினல் அதனுடைய (அந்நிய நாட்டுக்) கொள்கை கனடா அல்லது தென்னுபிரிக்கா அல்லது இங்கிலாந்து என்பவற்றின் கொள் கையுடன் ஒத்துப்போகாததாயும் இருக்கக்கூடும்.
இந்தியா, இலங்கை போன்ற டொமினியன்கள் ஐரோப் பிய இனமக்களைப் பெரும்பான்மையினராகக் கொண்டிருப் பணவன்று. வெள்ளை நிற மக்கள் இந்நாடுகளைப் பரிபாலித் தனர்; அப்பரிபாலனத்தை ஒழிக்க, அடிமைத்தனத்தைக் கெடுக்க இந்நாடுகளிலே தீவிரமான தேசீய இயக்கங்கள் தோன்றின. இந்தியாவில் 1885-ம் ஆண்டில் தோற்றுவிக்கப் பட்ட இந்திய தேசீயக் காங்கிரஸ் பாரத நாட்டின் அரசியல் விடுதலைக்காக இடைவிடாது போராடியது. அது ஆரம்பமான காலத்தில், சட்டநிரூபண சபைகளிலும் உத்தியோகங்களிலும் இந்தியர் நியமிக்கப்படல் வேண்டும் என்று மாத்திரமே கோரி யது. படிப்படியான அரசியல் மாற்றங்களை யடைந்து ஈற்றில் டொமினியன் அந்தஸ்தை இந்தியா அடைய வேண்டும் என் பதே 1904-ம் ஆண்டு தொடக்கம் 1916-ம் ஆண்டுவரை அதன் கொள்கையாக இருந்தது.
மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தி (மகாத்மா காந்தி) இந்திய அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்டு தமது சாத்வீகப் போராட்ட இயக்கத்தை ஆரம்பித்ததும் இந்திய அரசியல் வானத்தில் ஒர் மாற்றம் நிகழ்ந்தது. இதுவரை டொமினியன் அந்தஸ்து அடைவதே லட்சியம் என இருந்தது. 1921-ம் ஆண் டில் சுயராச்சிய அந்த ஸ்தே லட்சியம் என மாறியது. இதன் பயனுகக் காங்கிரசும் ஓர் புரட்சிச் சாதனமாக மாறி, பிரித்

பிரித்தானிய ராச்சியப் பொதுநலவமைப்பு 37 7
தானிய பரிபாலனத்துக்கு விரோதமாக சாத்வீகப் போராட்டம் என்ற முன் ஒருபோதும் கேள்விப்படாத ஒர் முறையில் தனது புரட்சி இயக்கத்தை நடத்தியது.
1919-ம் ஆண்டிலும் 1935-ம் ஆண்டிலும் வழங்கப்பட்ட அரசியற்றிருத்தங்கள் போன்ற பல திருத்தங்களை பிரித்தானி யர் இந்தியாவுக்கு வழங்கினர். ஆனல் அவை இந்திய மக்க ளுக்குத் திருப்தியை யளிக்கவில்லை. இதற்கிடையிற் சம்பவங் கள் வெகு துரிதமாக நிகழ்ந்தன. 1942-ம் ஆண்டில் ஜப்பானி யர் இந்தியாவை நோக்கிப் படை எடுத்தார்கள். அப்போது பூரணமான டொமினியன் அந்தஸ்துடன் ஒர் இந்திய யூனி யனை அமைக்க பிரித்தானிய அரசாங்கம் ஒருப்பட்டது. ஆனல் அதனுடன் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் காங்கிரசுக்கு ஏற்றன வாக இருக்கவில்லை.
ஓர் ஐக்கிய இந்தியாவே பரிபூரண சுதந்திரத்துடன் இருக்கவேண்டுமென்று இந்திய தேசீயக் காங்கிரஸ் கோரியது. ஆணுல் இக்கோரிக்கையை முஸ்லீம் லீக் ஆதரிக்காது பாகிஸ் தான் என்ற வொரு முஸ்லிம் இராச்சியம் வேருக அமைக்கப்பட வேண்டும் என்று கோரியது. 1947-ம் ஆண்டிலே இந்தியா இரண்டாகப் பிரிக்கப்பட, இந்தியா, பாகிஸ்தான் என்ற இரு இராச்சியங்கள் ஏற்பட்டன.
1935-ம் ஆண்டுவரை பர்மா, இந்தியாவின் ஒர் மாகாண மாகவே இருந்தது. இப்படியிருந்தமை பர்மிய மக்களுக்கு விருப்பாக இருக்கவில்லை. அவர்கள் தம்முடைய தேசம் வேருகவே இருகவேண்டும் என்று கிளர்ச்சி செய்தனர். 1935-ம் ஆண்டின் சட்டத்தின் பயனக பர்மா இந்தியாவினின் றும் பிரிக்கப்பட்டது. அச் சட்டத்தின் படி பர்மாவுக்கு பிரதிநிதிகள் சபை, செனேற் என்ற இரு மன்றங்களைக் கொண்ட ஒர் அரசியல் முறை வழங்கப்பட்டது. பிரதிநிதி கள் சபைக்குப் பொறுப்பாளிகளான பத்து மந்திரிமார் பரிபாலனக் கருமங்களை நடத்த வேண்டுமென்றும் பாதுகாப்பு, நிதி என்னும் விடயங்கள் பற்றித் தேசாதிபதிக்கு விசேட அதிகாரம் இருக்கவேண்டுமென்றும் விதிக்கப்பட்டது. ஆனல் இந்த அரசியலில் பர்மியர் திருப்தி கொள்ளவில்லை. அவர்க ளுக்கிடையே தாக்கீன் கட்சி என்ற ஓர் புரட்சிக்கொள்கைக் கட்சி இருந்தது. அக்கட்சியினர் ஜப்பானியருடன் சேர்ந்து சதி செய்தனர். ஆனல் ஜப்பானியர் பர்மாவை ரட்சிக்க வரவில்லை என்பதைச் சீக்கிரத்தில் உணர்ந்த தாக்கின் கட்சி ஜப்பானியரை எதிர்க்கும் கட்சியாக மாறியது. La fiι ρΓτ

Page 195
37.8 பிரித்தானிய ராச்சியப் பொதுநலவமைப்பு
ஜப்பானியரிடம் இருந்து மீட்கப்பட்டதும் அதற்கு டொமினி யன் அந்தஸ்து வழங்கப்பட்டது. இப்போது பர்மா பிரித் தானியப் பொதுநலவமைப்பில் இருந்து விலகிவிட்டது.
பொதுநலவமைப்பில், சமீப காலங்களில் காணப்பட்டுள்ள விசேட அம்சம் என்ன என்று கேட்டால், கலந்து பேசு வதில் நம்பிக்கையே அவ்வம்சம் என்று விடையிறுக்கலாம். பொதுநலவமைப்புக்குப் பொதுவான அந்நிய நாட்டுக் கொள்கையோ உள்நாட்டுக் கொள்கையோ பொருளாதாரக் கொள்கையோ இல்லை. அப்படியான ஒர் பொதுக் கொள் கையை வகுத்துவைத்துக் கொள்ளவேண்டும் என்று அது விரும்பவுமில்லை. எல்லாரும் கூடிக் கலந்து பேசும் முறை யிலேதான் அதன் நம்பிக்கை தங்கியிருக்கிறது. எல்லாரும் ஒரு மாதிரிப் பேசி ஒரு மாதிரித் தீர்மானத்துக்கு வர வேண்டு மென்பது பொதுநலவமைப்பின் நோக்கமன்று. இப்பொது நலவமைப்புக்குச் சமீபகாலத்தில் எத்தனையோ இடையூறு களும் எத்தனையோ நெருக்கடிகளும் நேர்ந்தன. அவற்றில் எல்லாம் இவ்வமைப்பைச் சேர்ந்த நாடுகள் அநேகமாக ஒத்த முடிவுகளே கண்டன. பொதுவான நலவுரிமைகளும் பொது வான நோக்கங்களும் அவற்றுக்கு இருந்தபடியினல் அவை கலந்தாலோசித்து ஒத்த முடிவுகளைக் கண்டன. கலந்தாலோ சித்தல், கலந்து பேசுதல் என்பது சனநாயகத்தின் மிகப் பிரதானமான அம்சமாகும். கட்டுப்பாடற்ற கலந்து பேசுதல் எங்கே இல்லையோ அங்கே உண்மையான சனநாயகம் இல்லை. இந்த வியாக்கியானத்தின் படிக்கு பிரித்தானிய இராச்சியப் பொதுநலவமைப்பென்பது ஒர் சர்வதேசீயச் சனநாயகமுறை என்று கூறினும் பொருந்தும். கலந்து பேசி முடிவு காண்பதி லேயே அது நம்பிக்கை கொள்ளுகிறது. கலந்து பேசல் சரியான பயன்கொடுக்க வேண்டுமானல் அதில் ஈடுபடுவோர் அவதா னிக்க வேண்டிய விடயங்களும் சிலவுண்டு. தோன்றுகிற ஒவ் வொரு பிரச்சினையையும் அதனதன் தன்மைக் கேற்றவாறு சம யோசிதமாக ஆலோசிக்க வேண்டும். அதிகார பீடத்தில் இருந்து கொண்டு சொல்வதுபோல் இன்ன மாதிரித்தான் ஆலோசிக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்தலும், ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டதை வாளா உர்ச்சிதப்படுத்த மாத்திரமே போலியான ஆலோசனை செய்தலும், சனநாயக முறைக் கலந்தாலோ சித்தலில் ஆகா. இன்னும், உடனடியான விடயங்களை விடுத்து எப்போதோ வருங்காலத்தில் நிகழ விருக்கும் சம்பவங்களைப் பற்றியும் ஆலோசித்துத் தீர்மானிக் கப் பொதுநலவமைப்பில் இடம் இல்லை.
l. International Democracy.

பிரித்தானிய ராச்சியப் பொதுநலவமைப்பு 379
அப்பியாசங்கள்
1 பொதுநலவமைப்புக்குள் சுயாட்சி அனுபவிக்கும் இராச்சியங்கள் சமத்துவநிலையில் இயங்கலாம் என்னும் கருத்து அபிவிரித்தியாகியதை வருசைக்கிரமமாகக் காட்டுக. 2. பொதுநலவமைப்புக்குள் இருக்கும் நாடுகள் ஒரே கொள்கையினையே கடைப்பிடிக்கவேண்டும் என்ற நியதி உண்டா? உமது விடையை உதாரணமூலம் விளக்குக.
3. பொதுநலவமைப்பில் இருக்கும் நாடுகளின் அரசியன் முறையைச் சுருக்கமாக விளக்குக. பொதுநலவமைப்பு ஒற்று மை யை அவை எவ்வாறு பேணிவருகின்றன?
4. ஒரு டொமினியன், பொதுநலவமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய நாடுகளுடன் சதா தொடர்பு வைத்துக் கொள்ளக் கொண்டிருக்கும் சாதனங்கள் யாவை?
5. பிரித்தானிய ராச்சியப் பொதுநலவமைப்பு என்பது சர்வதேசீயச் சனநாயக முறை என்னும் கூற்றை ஆராய்க.

Page 196
அத்தியாயம் 11.
இங்கிலாந்தின் அரசாங்கம் 1. முடியாட்சி
இங்கிலாந்தின் அரசாங்கத்திலே முடி அல்லது அரசரின் பங்கு என்ன என்பதை முதலில் ஆராய்வாம். பொதுநல வமைப்பிலேயுள்ள பல்வேறு நாடுகளது விசுவாசத்துக்கு உறை விடமாய், அவ்விசுவாசம் செலுத்தப்படும் இடமாயிருப்பது முடியே (மன்னரே) என்பதனை முந்திய அதிகாரங்களிற் படித் தோம். பொதுநலவமைப்பில் உள்ள டொமினியன்களை ஒன்ருே டொன்று பிணிக்கும் பொன் சங்கிலியே மன்னர். குடி யேற்ற நாடுகளின் பொதுவான இராசபக்திக்கு இலக்கான வரும் அவரே.
பெரிய பிரித்தானியாவிலே (பெரிய பிரித்தானியா என்பது இங்கிலாந்து, ஸ்கா த்லாந்து, வேல்ஸ் என்பவற்றைக் கொண்டது. இவ்வதிகாரத்தில் இங்கிலாந்தின் அரசாங்கம் எனக் குறிப்பிட்டது பெரிய பிரித்தானியாவின் அரசாங்கத் தையே என்க) மன்னர் வகிக்கும் நிலை சற்றுப் பின்னலானது. அங்கே மன்னரானவர் தொன்று தொட்டு நாட்டைப் பரிபா லித்த மன்னர் வழிவந்தவரே. எனவே அவருச் குத் தனி மதிப்பும் தனி அந்தஸ்தும் அங்கேயுண்டு. இத்தகைய ஒர் மதிப்பையும் அந்தஸ்தையும் பொதுசனங்களால் தெரிவு செய்யப்படும் எந்த அரசாங்கத் தலைவரும் பெறக் கனவிலும் நினைக்க முடியாது. தங்கள் மன்னர் கட்சிகளுக் கதீதப் பட்டவர், கட்சியுணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டவர் என்ற உணர்ச்சி பிரித்தானிய மக்களுக்கு உண்டு. அவர்களுக்கு அவர் அரசாங்கத்தின் மகோந்நத தலைவர். பன்னுரற்ருண்டு களுக்கு முன் இங்கிலாந்தைப் பரிபாலித்த மன்னர் யதேச்சாதி காரிகளாகவே யிருந்தனர். ஆனல் அந்த நிலைமை இப்போது இல்லை. பிரித்தானிய சரித்திரத்தைப் படிப்பவர்கள் இப் போதுள்ள பரித்தானிய மன்னர்கள், முற்காலத்து மன்னர் களைப்போல யதேச்சாதிகாரிகள் அல்லர் என்பதை அறிவர். இப்போதுள்ள பிரித்தானிய அரசர்கள் வரம்புடையரசர்"; மக்களது விருப்பத்துக்கிணங்கிப் பரிபாலனம் நடத்த வேண்டி யவர்கள். மன்னரானவர் தான் நினைத்தவர்களை மந்திரிக
1. Constitutional Monarchs.

இங்கிலாந்தின் அரசாங்கம் 38 I
ளாக நியமித்து நாட்டின் பரிபாலனத்தை நடத்த முடியாது; மக்களது நம்பிக்கையைப் பெற்றவர்களையே அவர் தமது மந்திரிமாராக நியமித்து அவர்கள் மூலம் பரிபாலனத்தை நடாத்தவேண்டும். ஆகவே, முற்காலத்திலேயிருந்த மன்னர் கள் தம் எண்ணப்படி நடத்திய அரசாங்க நிருவாகம் இப் போது இல்லை. பொதுசனங்களே தெரிந்துகொண்ட பிரதி நிதிகளால் நடாத்தப்படும் அரசாங்கமே இப்போது நிலவு கிறது. 'அரசர் என்பவர் பரிபாலிப்பவரேயன்றி அடக்கி யாள்பவரல்ல" என்பது பிரித்தானிய மன்னரின் கருமம்பற்றிய ஒர் வியாக்கியானம் ஆகும். எல்லாரையும் சமமென மதித்து, எல்லாருக்கும் பொதுவான பரிபாலனத்தை அவர் செய்வ தால், அவர் எல்லாக் கட்சிகளதும் விசுவாசத்தையும் பக்தி யையும் பெறுபவராகிருர், “எங்களுடைய வாழ்க்கையிலே நாங்கள் மதித்து ஒழுகும் வழக்கங்களின் சின்னமாகவே எங்கள் மன்னர் விளங்குகிறர். ஒரு நல்ல பிரசையின் அம்சங் களுக்கெல்லாம் உறைவிடமாய், அவ்வம்சங்கள் அனைத்தின தும் சொரூபமாய் இலங்குபவரே அவர் பொதுசன நன்மை யின் பொருட்டு இரவு பகல் சலியாதுழைப்பவராய் அப் பொதுசனங்களின் வாழ்வு தாழ்வுகளிற் பங்குபற்றுபவராய், செவ்விய ஒழுக்கம், சுயநலத்தியாகம், கடமையிலார்வம் என்னும் இன்னுேரன்ன குணநலவமைப்புடையவராய் இருப்ப வரே எங்கள் மன்னர்’ என்னும் கருத்துப்பட ஒர் பிரபல பிரித் தானிய அரசியல் வா தி இவ்விடயமாகக் கூறியமை அவதானிக்கற்பாலது. மேலும், பென்ஜமின் டிஸ்ரய்லி என்னும் பழைய பிரித்தானிய பிரதம மந்திரி மன்னராயுள்ளா ரின் தன்மையைப் பின்வருமாறு கூறினர்: "அறிவின் மிக்க எங்கள் முன்னேர், மனிதனின் காமக்குரோத மாதியா ம் தீக்கு ணங்களை யகற்றி, சுகுணங்கள் அனைத்தையும் ஒன்ருகத் திரட்டி முடி அல்லது மன்னர் சொ ரூ பத் தி ல் எங்களுக்களித்து விட்டுப்போயினர். அது எங்கள் முன்னேர் எமக்களித்து விட்டுப்போன அரும் பெரும் செல்வம் . . . இங்கே கட்சிப் பூசல்கள் இருக்கலாம்: கோஷ்டிப் பிரிவினைகள் இருக்கலாம்: ஆணுல் இக்கட்சி பேதங்களுக்கு அதீதமாக, கோஷ்டிப் பிரி வினைக்கப்பாற்பட்டதாக, இக் கட்சிகளும், கோஷ்டிகளும் தத்தம் அபிப்பிராயபேதங்களையும் பிரிவினைகளையும் விடுத்து ஒன்று சேரக்கூடிய ஒர் சக்தி இந்நாட்டில் எப்போதும் இருந்து வந்திருக்கிறது. அச்சக்தி சட்டத்தின் மாட்சிக்கும் நீதித் திறமைக்கும் பிரத்தியட்ச எடுத்துக்காட்டாக விளங்கி, மக்கள் அனைவரதும் உரிமைகளையும் பெற்றுக்கொடுத்து கெளர
1. Benjamin Disraeli.

Page 197
38.2 இங்கிலாந்தின் அரசாங்கம்
வத்தின் தனிப்பெரும், ஊற்ருக விளங்குகிறது. இச்சக்திதான் முடி அல்லது மன்னர் .
மன்னரானவர் அதி உந்நத அந்தஸ்தில் விளங்கி வாழ வேண்டும்; மக்கள் அனைவருக்கும் அவர் மலைமேல் தீபம் என விளங்கவேண்டும். இன்னும் வேறு பல கடமைகள் அவருக்கு உண்டு. ஒர் பிரதம மந்திரியை நியமனம் செய்வது அக்கட மைகளில் பிரதானமானது. இக்கடமையை ஆற்றுவதும் எப்போதும் சுலபமாயிராது. உதாரணமாக, தொழிற் கட்சி தான் பொதுமக்கள் சபையிலே பெரும்பான்மைக் கட்சியாக வந்திருப்பின் அரசர் பிரதம மந்திரியை நியமிப்பதில் அதிக சிரமப்படவேண்டியது இல்லை. அக்கட்சித் தலைவரையே அழைத்துப் பிரதம மந்திரியாயிருக்கும்படி பணிக்கலாம். ஆனல் கன்சர் வேற்றிவ் கட்சி எனப்படும் பழைமைக் கட்சியே பெரும்பான்மையான தானங்களைக் கைப்பற்றினல், பிரதம மந்திரியை நியமனம் செய்யும் முறை வேறுவிதமாக விருக்கும். தமக்கு யார் தலைவராயிருக்கவேண்டுமென்பதைத் தாமே தெரியவேண்டும் என்பது தொழிற்கட்சியினர் கொள்கை: ஆணுல் கன்சர் வேற்றிவ் கட்சியினர் அப்படியான கொள்கை பூண்டவரல்லர். மன்னர் யாரைத் தலைவர் என நியமிக்கிருரோ அவரையே தம் தலைவராக ஏற்றுக் கொள்வது என்ற கொள்கையை அவர்கள் கொண்டிருக்கி ரு ர்கள். கன்சர் வேற்றிவ் கட்சி யங்கத்தவர்களே, பொது மக்கள் சபையில் பெரும்பான்மையினராக வந்தால், மன்னர் தாமாக அவர்களுக்குரிய ஒர் தலைவரை நியமித்து அவரைப் பிரதம மந்திரியாக்கல் வேண்டும். மன்னரால் இவ்வாறு நியமிக்கப்பட்டவரையே கட்சி தன் தலைவராகக் கொள்ளும். மன்னரின் நியமனத்தில் தனக்குள்ள விசுவாசத்தின், நம்பிக்கையின் அறிகுறியாகவே, மன்னர் நியமித்தவரைக் கட்சி தன் தலைவர் என ஏற்கிறது. ஆகவே கன்சர் வேற் றிவ் கட்சிக்கு ஒர் தலைவரை நியமிக்கமுன், மன்னரானவர் பொறுப்புவாய்ந்த பலருடன் இவ்விடயமாகக் கலந்தாலோ சிக்க வேண்டும். அவரின் நியமனத்தில்தான் சகல கருமங் களும் தங்கியுள்ளன. 1940-ம் ஆண்டில் திரு. வின்ஸ்ரன் சேர்ச்சிலை மன்னர் பிரதம மந்திரியாக நியமித்தமை ஈண்டுக் குறிப்பிடத்தக்க ஒர் விடயமாகும். திரு. சேர்ச்சில் பல கால மாகத் தமது கட்சியின் ஆதரவற்ற தனி மனிதனுகவே பாராளு மன்றத்தில் இருந்தார். ஜெர்மனி இங்கிலாந்தைத் தாக்க ஆயத்தம் செய்கிறது என்று அவர் பல காலமாக எச்சரிக்கை செய்தபோது அவருடைய கூற்றுக்களைக் கன்சர் வேற்றிவ் கட்சியினரே எள்ளி நகையாடினர். அப்படிப்பட்ட ஒருவரை l. Mr. Winston Churchil. --

இங்கிலாந்தின் அரசாங்கம் ‰ 8 ፰
1940-ம் ஆண்டில் மன்னர் பிரதம மந்திரியாக நியமித்தார். இந்நியமனம் எவ்வளவு உசிதமானது என்பதனை அதற்குப் பிந்தி நிகழ்ந்த சம்பவங்கள் நன்கு காட்டியிருக்கிறன.
சில சமயங்களில் எக்கட்சிக்காவது பொதுமக்கள் சபையில் அதிக பலம் கிடைக்காத நிலைமை ஏற்படும். அப்படியான நிலைமையில் யாரைப் பிரதம மந்திரியாக நியமிப்பது என்பது மிகக் கஷ்டமான தாகிவிடும். 1924-ம் ஆண்டிலே இப்படி யான ஓர் சங்கடமான நிலைமை ஏற்பட்டது. லிபரல் கட்சி எனப்படும் தாராளக் கட்சிக்கும் தொழிற் கட்சிக்குமிடையே போட்டியிருந்தது. ஆனல் அவற்றில் எதாவது பெரும்பான் மைப் பலம் கொண்டதா யிருக்கவில்லை. லிபரல் கட்சித் தலை வர் திரு. அஸ்குவித், தொழிற் கட்சித் தலைவர் திரு. மும் சே மக்டோனல்ட்2, என்னும் இவர்களில் யாரைப் பிரதம மந்திரியாக நியமிப்பது என்ற பிரச்சினை மன்னருக்குப் பெரிதாக இருந்தது. ஈற்றில் அவர் தொழிற் கட்சிக்குப் பொதுமக்கள் சபையில் மூன்றில் ஒரு பங்கு அங்கத்தவர்களே யிருந்தபோதி லும், அக்கட்சித் தலைவராய திரு. மக்டோனல் டையே பிரதம மந்திரியாக நியமித்தார். பிரதம மந்திரியை நியமிப்பது ஒர் சுலபமான வேலை, அல்லது பாராளுமன்றத் தேர்தல் முடிந் ததும் பிரதம மந்திரியை நியமித்தலும் தானகவே முடிந்து விடக்கூடிய வேலை அல்ல என்பது மேலே காட்டியனவற்றில் இருந்து புலனுகிறது. தமது நாட்டின் தலைவிதியையே நிர்ண யிக்கும் தீர்மானங்களைச் செய்யவேண்டிய சில சந்தர்ப்பங்க ளும் மன்னருக்கு ஏற்படும். 1940-ம் ஆண்டிலே திரு. சேர்ச் சிலைப் பிரதமமந்திரியாக்க மன்னர் செய்த தீர்மானம் இப்படி யான சந்தர்ப்பம் ஒன்றில் தான் ஏற்பட்டது.
மன்னரது ஏனைய கடமைகள் முந்திக் கூறப்பட்ட கடமை. யைப்போல அவ்வளவு முக்கியமானவையன்று, கஷ்டமான வையுமன்று. அவர் ஏனைய மந்திரிமாரை நியமிப்பது பிரதமமந்திரியின் சிபாரிசின் பேரிலேயே; மந்திர சபையை அமைக்கும் பொறுப்பு பிரதம மந்திரிக்கே உரியது. எனவே தமது சகாக்களைத் தெரிந்து, மன்னருக்குச் சிபாரிசு செய்வார். இராச ரீகத்தூதுவர், நீதிபதிகள், தரைப்படை, கடற்படை, ஆகா சப்படை என்பவற்றுக்குரிய அதிகாரிகள், சிவில் சேவைப் பகுதியின் அதிகார உத்தியோகத்தர்கள் எனப்படுவோரை நியமிப்பவரும் மன்னரே. பாராளுமன்றத்தைக் கூட்டுவதும் கலேப்பதும் அவர், நாட்டுக்கு நற்சேவை புரியும் பிரசைகளை, அவர்கள் எக்கட்சி, எவ்வகுப்பைச் சேர்ந்தவராயினும் பேதம்,
l. Mr. Asquith. 2. Mr. Ramsay Mac Donald.

Page 198
384 இங்கிலாந்தின் அரசாங்கம்
பாராட்டாது அவர்களுக்குக் கெளரவப் பட்டங்கள் வழங்கு வார். இன்னும் சிலரைப் பிரபுக்களாக்குவார். பாராளு மன்றம் நிறைவேற்றும் சட்டங்களுக்குத் தம் அங்கீகாரத்தை யும் அவர் அளிப்பார். அப்படி அளிப்பதும் மந்திர சபையின் சிபாரிசுப்படிக்கேயாம். அரசாங்கத்தின் பல்வேறு கருமங்களை அவர் விசாரித்து அறிந்து கொள்ளுவார். மந்திர சபைக் கூட்டங் களின் வரலாற்றுப் புத்தகங்களை எடுப்பித்து வாசித்து, அச் சபையில் நடந்தனவற்றை அறிவார். அந்நிய நாட்டுக் காரி யாலயத்தாரின் அறிக்கைகளையும் பொதுமக்கள்சபை விவாத அறிக்கைகளையும் அவர் படித்துக்கொள்ளுவார். இங்கிலாந் திலும். புற நாடுகளிலும் அரசியல் விடயமாக நிகழும் விவகா ரங்களை உடனுக்குடன் அறிவிக்க அவருக்குச் சில உத்தியோ கத்தர் உளர். மேலே கூறியனவற்றில் இருந்து ஓர் மன்னரது பதவி மிகவும் சுலபமான கடமையுடையதன்று என்பது புலனுகும். அவரது வேலை மிகவும் கஷ்டம்: ஆனல் அதனை அநேகர் உணர்வதில்லை.
மேலே சொல்லிய உத்தியோ கார்த்தக் கடமைகளுடன் நாட்டின் சமுதாய வாழ்க்கையிலும் மன்னர் பங்கு பெறு தல் வேண்டும். அவர் சகல தேசீயக் கூட்டங்களிலும் சமுகமாயிருந்து அவற்றில் பிரதான பங்கு பெறுவார். இவற்றில் எல்லாம் மன்னரானவர் பொது சன நோக்கு என் னும் பெருவெளிச்சத்துக்கிலக்கா வர். இத்தகைய சந்தர்ப் பத்தில் மனித சுபாவம் மிகவும் கடினமான சோதனைக்குள் ஆளாகும்; மக்கள் எல்லாரதும் பார் வைக்குத் தெரியத்தக்க தாக மலைமேல் தீபம் என ஒருவர் தம் வாழ்க்கையை நடாத்து வது உலகில் மிகக் கஷ்டமான கருமம் ஆகும். ஆனல் இப்படி யான வாழ்கையைத் தான் மன்னர் நடாத்த வேண்டும். அரச கருமங்களில் இதுவே கடினமானது என்று கூறினுல் அது மிகை u 1 fT d#5 t g!.
பிரித்தானியத் தீவுகளின் அரசியலைப் பாராளுமன்றச் சனநாயகம் எனக் கூறுவர். தேசமக்கள் தங்கள் பிரதி நிதிகள் மூலம் தங்களுக்கான ஒர் அரசாங்கத்தைத் தாங்களே நடத்தும் முறையே அது. கலந்துபேசிக் கருமம் ஆற்றுதலாலும் அது பாராளுமன்ற அரசியலேயாம். இத்தகைய அரசிய லுக்கு நாலு சாதனங்கள் உள. இச்சாதனங்கள் மூலமே அரசியல் நடக்கிறது; அவையாவன:-
1. வாக்காளர் தொகுதி. 2. கட்சி, அல்லது நிதார்த்தமாகச் சொல்லப்புகின்,
கட்சிகள். பாராளுமன்றம் அல்லது கலந்துபேசும் அரசாங்கம் , 4. மந்திர சபை.

இங்கிலாந்தின் அரசாங்கம் 385
வாக்காளர் தொகுதி மக்களைக்கொண்டது. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அபேட்சகர்கள் தம்முன் சமர்ப்பிக்கும் பல்வேறு வகைத்திட்டங்களையும் ஆராய்ந்து தமக்கு உசிதம் எனத் தோன்றும் திட்டங்களைக்கொண்ட கட்சி அபேட்ச கருக்கு வாக்காளர் தம் வாக்குச் சம்மதத்தை அளிப்பர். எனவே, தேர்தலுக்கு அபேட்ச கரை நிறுத்தும் கட்சிகள் தனித் தனி நன்கு ஆலோசித்தும் கலந்துபேசியும் வேலைத் திட்டங் களை வகுத்து அபேட்சகர்களைத் தெரிந்துகொள்ளும். வாக்கா ளர் தெரிந்தனுப்பிய பல்வேறு கட்சிப் பிரதிநிதிகளும் கலந்து பேசும் அரங்கமே பாராளுமன்றம். பாராளுமன்றத்து அங்கத் தவர்களிலிருந்து மந்திர சபையினர் தெரிவு செய்யப்படுவர். கலந்தாலோ சிக்கும் கருமத்தை நடத்துவதோடு, கலந்துபேசிக் கண்ட முடிவுகளை நடைமுறையிற் கொண்டுவருவது மந்திர சபையே. வாக்காளர், கட்சி, பாராளுமன்றம், மந்திர சபை என்ற நான்கு அம்சங்களும் அரசாங்கம் நடைபெற எவ்வாறு உதவிபுரிகின்றன என்பதை இன்னும் கொஞ்சம் விரிவாக அவதானிப்பாம் : வாக்காளர் தங்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதால் உதவிபுரிவர் : கட்சிகள் தமக்கெனத் திட்டங்களை வகுத்து, அவற்றில் சிறந்த திட்டத்தைத் தெரிந்துகொள்ளும் படி வாக்காளர் முன் சமர்ப்பிக்கும். மசோதாக்களைக் கலந்தா லோசித்தும் அதி பெரும்பான்மைக் கட்சித் தலைவர்களைக் கொண்ட மந்திர சபை ஒன்றினை அமைக்க உதவிசெய்தும் பாராளுமன்றம் கருமம் ஆற்றும், கலந்தாலோசிப்பதற்கான விடயங்களை ஆரம்பித்தும், கலந்தாலோசிக்கும் கருமத்தை நடத்தியும், அப்படித் தான் கலந்தாலோசித்து முடிவுசெய்த விடயங்களிற் பாராளுமன்றத்தைத் தூண்டியும் மந்திர சபை கருமம் ஆற்றும். ஆகவே மந்திர சபையே கருமங்களைக் கடைசிவரைக்கும் கலந்து ஆலோசித்து, உள்நாட்டு வெளி நாட்டு விவகாரங்கள் பற்றிய கொள்கையினை வகுத்து அதற் கேற்றபடி சட்டங்களை ஆக்கும்.
1. வாக்காளர்
இங்கிலாந்திலே வளர்ந்த ஆண், பெண் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே அங்கும் இலங் கையிற் போலவே வாக்காளர் இருப்பர் என நீங்கள் யூகிக்க வும் கூடும். ஆனல் அப்படி நீங்கள் நினைப்பது தவறு: அதற்குப் பல காரணங்கள் உள. முதலில் இங்கிலாந்தில் உள்ள வாக்கா ளர் தம் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதில் இங்குள்ளாரிலும் பார்க்க அதிக அநுபவம் உள்ளவர்கள். இங்கிலாந்து மக்களில் மிகப் பெரும்பாலார் ஏதேனுமோர் சங்கத்தில் அங்கத்தவராக இருப்பர். இலங்கை வாக்காளரில் அநேகர் அப்படி இருப்ப
3248-O

Page 199
386 இங்கிலாந்தின் அரசாங்கம்
தில்லை; அங்கே பலர் தொழிற் சமாசங்களில் அங்கத்தவராய் இருப்பர். இன்னும் பலர் தொழிலாளருக்குரிய சங்கங்களில் அங்கத்துவம் வகிப்பர். இன்னும் பலர் தேவாலயச் சபைக ளில் அங்கத்தவராயிருப்பர்; வேறும் பலர் வேறும் பலவித சங்கங்களில் அங்கத்துவம் பூண்டிருப்பர். இவ்வாரு க இங்கி லாந்திலேயுள்ள மக்களில் மிகப் பெரும்பாலார் சங்கக் கருமங் களிற் பரிச்சியமுற்றிருக்கிருர்கள். சங்கங்களில் கலந்துபேசி முடிவுசெய்யும் முறையினை அவர்கள் நன்கு அறிவர். அவர் களுக்குப் பரிபாலன விடயமாகவும் சிரத்தையுண்டு. தாம் தெரிந்தனுப்பும் பிரதிநிதிகள் பாராளுமன்றத்திலே என்ன செய்கிரு ர்கள் என்பதை அவதானித்த வண்ணமாக இருப்பர். அவர்கள் சங்கங்களை நடத்தும் முறையிலும் நல்ல அநுபவமும் தேர்ச்சியுமுடையார். ஓர் சங்கத்தின் கருமங்கள் கிரமப்படி நடக்காவிட்டால் எவ்வித கட்டுப்பாடுமின்றிக் கேள்விகள் கேட்கப்படும். குறைகள் பகிரங்கமாக ஒளிப்பு மறைப்பின்றி எடுத்துக் காட்டப்படும். எங்கள் நாட்டிற் சங்க விவாதங்கள் தனி மனிதருக்கிடையே குரோதத்தையும் பிணக்கையும் விளை விப்பதனை நாம் காண்கிருேம். ஆனல் இது இங்கிலாந்தில் இல்லை. ஒருவர் வேருெ ருவரின் கருத்துக்கு முரணுன அபிப் பிராயம் கொண்டால் அதனைப் பகைமையாக ஆங்கில மக்கள் கருதுவது இல்லை. இங்கே ஒருவர் இன்னுெருவரின் அபிப்பிரா யத்துக்கு மாரு ன அபிப்பிராயம் கொண்டு அதனை வெளியிட் டால் அவர் ஒர் பகைவன் எனவும் சில சமயங்களில் மதிக்கப் படுகிரு ர். ஆனல் இப்படியான குறுகிய மனப்பான்மை இங்கி லாந்தில் இல்லை. மாரு ன கருத்துக்கொண்டார் விடயத்தில் சமரச மனே பாவம் காண்பிக்கப்படும். இவ்வாரு க இங்கிலாந் தில் உள்ள வாக்காளர் சனநாயகக் கொள்கைகளில் அதிக முன்னேற்றம் அடைந்துள்ளவர்களாய் இங்குள்ளாரிலும் பார்க்க அவ்விடயத்தில் வித்தியாசமாக இருக்கிருர்கள்.
இனி, கட்சிமுறை அங்கேயிருப்பதும், மக்கள் பல்வேறு விதமான கொள்கைகளை நன்கு அறிந்து தங்கள் வாக்குரிமை யைத் தகுந்த முறையில் பிரயோகிக்கவும் உதவிபுரிகிறது. ஒவ்வொரு அரசியற் கட்சியும் தனக்கென ஒர் வேலைத்திட் டத்தை வகுத்து அதன் தன்மையை வாக்காளருக்குப் புகட்ட முயற்சிக்கும். கடும் பதங்களைப் புகுத்தி ஆலாபனையில்லாது, வாக்காளர் எவரும் இலகுவில் விளங்கத்தக்க முறையில் கட்சி கள் ஒவ்வொன்றும் தத்தம் வேலைத்திட்டத்தை விளக்கும். உதாரணமாக ஒரு கட்சி, ஆயுதப்பரிகரணம், காணிகள், சுரங் கங்களைப் பொதுச் சொத்தாக்கல், செலவு குறைந்த கிராமீய
l. Trade Unions.

இங்கிலாந்தின் அரசாங்கம் 387
இல்லங்கள், நியாயமான வாடைகையில் சுகாதார விடுதிகள், வயோதிபருக்குக் கூடிய பென்ஷன் எனப்படும் சம்பளம், சுகாதாரச் சேவைகள், இலவசக் கல்வி என்பவற்றைத் தன் வேலைத்திட்டமாக வாக்காளருக்குச் சமர்ப்பிக்கும். இவையே மக்கள் விளங்கிக் கிரகிக்கக் கூடியன. இப்படியாகவே இன் னேர் கட்சியும் வேறுவிதமான ஓர் வேலைத்திட்டத்தைக் கொண்டிருக்கும். இவ்வாரு கப் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை வாக்காளர் ஆராய்வர்: ஆராய்ந்து தமக்கு விருப்பமான திட்டத்தைக் கொண்ட அபேட்சகருக்குத் தம் சம்மதங்களை அளிப்பர். இலங்கையில் துர் அதிட்டவசமாக இப்படியான நிலைமை இல்லை. திட்டவட்டமான வேலைத் திட்டங்கள் வாக்காளருக்குச் சமர்ப்பிக்கப்படாதிருக்கிறபடி யினல், அவர்கள் வேலைத்திட்டங்களுக்கன்றித் தனி மனிதர் தகைமையைச் சிந்தித்தே தம் வாக்குச் சம்மதங்களை வழங்கு கிருர்கள். ஆனல் இங்கிலாந்தில் மக்கள் தனி மனிதருக்காக வாக்குச் சம்மதம் அளிக்காது அரசியற் கொள்கைக்கே-அரசி யல் வேலைத்திட்டத்துக்கே-சம்மதமளிக்கிருர்கள். இதனைச் சிறிது விரிவாக விளக்குதும்:- தொழிற் கட்சியின் (உள் நாட்டு வெளிநாட்டுக்) கொள்கை தான் சிறந்தது என்று கருதி வாக்காளரில் மிகப் பெரும்பான்மையினர் வாக்களித்துவிட்ட னர் என்று வைத்துக்கொள்ளுவோம். இதன் பயனு கத் தொழிற் கட்சி அங்கத்தவர்களே பொதுமக்கள் சபைத்தானங் களிற் பெரும்பான்மையினவற்றைக் கைப்பற்றிவிட்டார்கள் என்றும் கருதிக்கொள்ளுவோம். இவ்வாரு கத் தொழிற் கட்சியே பெரும்பான்மைக் கட்சியாகப் பாராளுமன்றத்தில் விளங்கு கிறபடியால் மன்னர் அக்கட்சியின் தலைவரைப் பிரதம மந்திரி யாக்குவர். பிரதம மந்திரி தமது சகாக்களான ஏனைய மந்திரி மாரை நியமிப்பார். இம்மந்திரிமார் ஒவ்வொருவரும் தம் கட்சிக் கொள்கைக் கிணங்க ஒவ்வொரு அரசாங்கப் பகுதிக் கும் பொறுப்பாக இருப்பர். மந்திரி மார் எல்லாரும் சேர்ந்தது மந்திர சபை. தொழிற் கட்சி இவ்வாரு க அதிகாரத்தில் இருப்பதால் அது தனது கொள்கைக்குரிய திட்டங்கள் பல வற்றை நடைமுறைக்குக் கொண்டுவரலாம். ஆகவே வாக் காளரே தமக்கு இன்னவிதமான அரசாங்கம் வேண்டுமென் பதை நிர்ணயிக்கிறர்கள். ஆனல் இந்தத் தொழிற் கட்சி யரசாங்கம் தாம் எதிர்ப்பார்த்திருந்த அளவுக்கு அநுகூல மடையவில்லை என்றும் அதன் அந்நிய நாட்டுக்கொள்கை சித்தியடையவில்லை என்றும், பாராளுமன்றத்துக்கு உள்ளும் வெளியிலும் மக்கள் கட்சிக் கொள்கையில் அதிர்ப்தி தெரிவிக் கிருர்கள் என்றும் ஒர் உதாரணத்துக்கு வைத்துக்கொள்ளு

Page 200
388 இங்கிலாந்தின் அரசாங்கம்
வோம். தான் இதுவரை அநுட்டித்து வந்த கொள்கை சரி தான, அது வாக்காளருக்குப் பிடித்திருக்கிறதுதான என்பதனை அறிவதற்குத் தீர்மானித்து ஒரு பொதுத் தேர்தலை நடாத்தத் தொழிற் கட்சி அரசாங்கம் ஒழுங்கு செய்யலாம். இப்படியான ஒரு பொதுத் தேர்தலிலே தொழிற் கட்சி தன் செல்வாக்கை யிழந்து பெரும்பான்மையினரான அதன் அங்கத்தவர்கள் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படவில்லை என்றும் கன்சர் வேற்றிவ் கட்சியினரே பெரும்பான்மைத் தானங்களைக் கைப்பற்றிவிட்டனர் என்றும் வைத்துக்கொள்ளுவோம். ஆகவே அரசாங்கத்தை ஆக்குவதும் நீக்குவதும் மக்கள்தான் என்பது புலப்படுகிறது. முந்தி தொழிற் கட்சியினரை ஆதரித் தவர்கள் பின்னர் அவர்களுக்கு விரோதமாகக் கன்சர் வேற் றிவ் கட்சியினரை எவ்வாறு ஆதரிக்கலாம் என்றும் நீங்கள் கேட்பீர்கள். ஆனல் இங்கிலாந்திலேயுள்ள ஒவ்வொருவரும் ஏதோ ஒர் கட்சியில் மாறுபடாத் தொடர்புடையவர்கள் அல்லர். கட்சிப்பற்றில்லாது உள்ள பெருந்தொகையான வர்கள் அங்கேயுளர். இவர்கள் தமக்கு நன்மை விளைக்கும் எனக் கருதும் ஒர் கொள்கையை ஆதரிக்கிருர்கள். ஆனல் அவர்கள் எதிர்பார்க்கிறபடி அக்கொள்கையினல் நன்மை கிடைக்கா விட்டால், அக்கொள்கைக்கா தரவு அளிப்பதனை விடுத்து இன்னேர் கொள்கைக்கு ஆதரவு அளிப்பர். கட்சிப் பற்றில்லா தோர் தொழிற் கட்சி சமர்ப்பித்த கொள்கையில் நம்பிக்கை வைத்து அதற்குத் தம் வாக்குச் சம்மதத்தைக் கொடுத்திருக்க லாம். ஆனல் நாட் செல்லச்செல்ல இக்கொள்கை பிழை யானது என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளலாம். தொழிற் கட்சியை அதிகாரத்தில் வைத்தபோது கொள்கை யின் நூநதன்மைகள் அவர்களுக்குப் புலப்படவில்லை. கட்சி அரசாங்கத்தை அமைத்து அரசியற் கருமங்களை நடாத்தத் தொடங்கிய போதுதான் அந்த நூநதன்மைகள் புலப்பட்டன. தொழிற் கட்சி போகிற போக்கு நல்லாயில்லை என்பதைக் கட்சிப்பற்றில்லாத இப்பெருந்தொகை வாக்காளர் - உணர்ந் தால், அவர்கள் சாவதானக் கொள்கையுடைய கன்சர் வேற். றிவ் கட்சியினரை ஆதரிக்க நிச்சயிப்பர். அப்படி ஆதரித்து ஒர் கன்சர் வேற்றிவ் அரசாங்கத்தை அமைக்க உதவியும் புரி வர். இவ்வாரு ய கட்சிப்பற்றில்லாதோர் நியாயமான தொகையில் இங்கிலாந்தில் உளர். இப்படி இருந்தபோதிலும் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர் அதிக மாகத் தொழிற் கட்சிக்கே தம் வாக்குச் சம்மதத்தை அளிப் பர். கிராமீயப் பக்கங்கள், செல்வர்கள் வதியும் இடங்கள், வர்த்தக நிலையங்கள் என்பன செறிந்துள்ள பகுதிகள், கன்சர் வேற்றிவ் கட்சியினையே அதிகமாக ஆதரிக்கும். இந்த இரண்டு

இங்கிலாந்தின் அரசாங்கம் 389
விதமானவர்களுக்குமிடையில் கிளாக்குமார் போன்ற சாதா ரண உத்தியோகத்தர் உளர். அவர்கள் தொழிற் கட்சிக்கோ கன்சர் வேற்றிவ் கட்சிக்கோ நிரந்தர ஆதரவு காட்டுபவர்கள் அல்லர். தமக்கு எக்கட்சியின் கொள்கை சாதகமாயிருக்குமோ அக் கட்சிக்கே தம் ஆதர வைக் கொடுப்பர். தொழிற் கட்சியின் கொள்கை தங்களின் நலவுரிமைகளுக்குப் பங்கம் விளைக்கும் எனக்கண்டால் அவர்கள் தம் ஆதரவைத் தொழிற் கட்சிக்கு அளிக்காது, தமக்கு உசிதமானதெனக் காணும் கொள்கையைக் கொண்ட கன்சர் வேற்றிவ் கட்சிக்கே அளிப்பர். இந்தக் கீழ்ப்படி மத்திய வகுப்பாரின் ஆதரவுதான் தேர்தலின்போது ஒர் கட்சியின் வெற்றி தோல்வியை நிர்ணயிக் கிறது என்பது பிரித்தானிய அரசியல் ஆராய்ச்சியாளரின் முடிவு. எனவே இவர்களின் ஆதரவைப் பெறுதற்குத் தொழிற் கட்சியும் கன்சர் வேற்றிவ் கட்சியும் பகீரதப் பிரயத்தனம் செய்யும்.
2. கட்சிகளும் அவற்றின் கொள்கைகளும்
இங்கிலாந்திலேயுள்ள பாராளுமன்றச் சனநாயகச் சாத னங்களில் கட்சி அல்லது கட்சிகள் முக்கியமானவை என்பதை ஏற்கெனவே இந்நூலின் கண் கூறியுள்ளோம். கட்சி என்ருல் என்ன? இங்கிலாந்திலே கோடிக்கணக்கான மக்கள்-ஆண்க ளும் பெண்களுமாக-வதிகின்றனர் இவர்கள் வாக்காளர் அல்லது தெரிவாளர்?. இவ்வளவு கோடிக்கான மக்களும் பரஸ்பரம் விரோதமான அபிப்பிராயங்களைக் கொண்டு பரஸ் பரம் மாறுபாடாகக் கருமம் ஆற்றினல் நிகழ்வது என்ன? சமுதாயத்திலே குழப்பம் தான் ஏற்படும். மக்கள் ஒன்றுபட்ட அபிப்பிராயம் கூறுவதின்றி, பரஸ்பரம் மாறுபாடான அபிப் பிராயங்களைக் கூறி வருவர். ஆனல் பல விடயங்களில் பரஸ் பரம் அபிப்பிராயபேதம் உடையராயிருந்தபோதிலும் சில விடயங்களில் பரஸ்பரம் ஒத்த மனப்பான்மையினராக மக்கள் இருப்பதையும் நாம் அவதானிக்கிருேம். இப்படியாக ஒத்த மனப்பான்மையினர் ஒன்றுகூடி ஒவ்வோர் குழுவினை அல்லது கட்சியை அமைக்கிருர்கள். ஒவ்வொரு கட்சியிலும் ஓர் பிரதான விடயத்தைப்பற்றி, அதிற் சேர்ந்துள்ளார் ஒத்த மனப்பான்மையினராக இருப்பர். இந்தப் பிரதான விடயம் ஒழிந்த ஏனைய விடயங்களில் அவர்களுக்கிடையே அபிப்பிராய பேதமும் இருக்கலாம். ஒர் பிரதான விடயத்தில் ஒத்த மனப்பான்மையினராக இருககும் தன்மைதான் ஒர் கட்சிக்கு சீவத்துவமும், முக்கியத்துவமும் அளிக்கிறது. இவ்வாருகவே
l. Lower Middle Glasses. 2. Voters or Electors.

Page 201
390 இங்கிலாந்தின் அரசாங்கம்
மக்கள் தம்மோடொத்த மனப்பான்மை, ஒத்த நலவுரிமை களுடையாருடன் ஒத்துழைப்பதால் கட்சிகள் அமைக்கிருர்கள். ஓர் கட்சியைச் சேர்ந்த அனைவரும் ஒரே தன்மையான கொள் கையிலேயே லயித்திருக்கிருர்கள் என்றும் சொல்வதற்கில்லை. ஓர் சிலர் தாம் கொண்டுள்ள கொள்கையில் திடபக்தி கொண் டிருப்ப, பலர் அக்கொள்கையை ஏறத்தாழ அநுசரிப்பர்.
ஓர் கூட்ட மக்களுக்கிடையே ஒழுங்கினை உண்டாக்கு வதற்கு அவர்களுக்கிடையே கட்சிகள் இருப்பது அவசியமா கிறது. மக்கள் கட்சிகளாகப் பிரிவதும் சுபாவமே. ஆனல் எங்கள் இலங்கையிலே கட்சிகள் அநேகமாக வருணம், சாதி, வகுப்பு, சமயம், சா கியம் என்பவற்றையே ஆதாரமாகக் கொண்டிருக்கின்றன. கட்சிகள் அமைப்பதில் முந்திய நூாந மானமுறை இப்போது சில காலமாக ஒரளவுக்கு மாற்றப்பட்டு வந்திருக்கிறது. என்பது உண்மைதான். ஆனல் அவற்றை அமைக்கும் ஆதாரமுறை பழையபடிதான் இன்னும் இருக்கி றது. இப்போது இங்கும் அரசியற் கட்சிகள் இருக்கின்றன தான் ஆஞல் இவற்றின் மூலாதாரம், சாதி, வருணப் பாகு பாடர்கவே தோற்றுகிறது. இங்கிலாந்திலே இந்தவிதமான நிலைமை இல்லை. இந்தியாவிலும் இலங்கையிலும் கட்சிகள் சாதியை, சமயத்தை ஆதாரமாகக் கொண்டிருப்பதைப் போல இங்கிலாந்தில் கட்சிகள் கொண்டிருப்பதில்லை. இலங்கை, இந்தியாவில் வருணம், சமயம், குலம் என்பவை தான் அரசியற் பிரச்சினைகளிலும் புகுந்து கட்சி பேதங்களை உண்டாக்குகின்றன. ஆனல் இங்கிலாந்து அரசியலில் இவ்வா றில்லை. அங்கே இவ்வித வித்தியா சங்கள் இங்குபோல அவ் வளவாகப் பாராட்டப்படுவதில்லை. தொழில் வர்த்தகம் சம்பந்தமான பிரச்சினைகளே அதிகமாக அங்கே அரசியற் கட்சிகளுக்கிடையே பேதங்களை யுண்டாக்குவன. ஒவ்வொரு கட்சியும் குறித்த குறித்த தொழில் நலவுரிமைகள், பொருளா தார நலவுரிமைகள் பற்றியதாக இருக்கும். அவ்வுரிமைகள் சம்பந்தப்பட்டோரிற் பெரும்பாலினர் ஒவ்வோர் கட்சியை ஆதரிப்பர். ஆனல் குறித்த குறித்த வகுப்பினர்தான் குறித்த குறித்த கட்சியை ஆதரிப்பர் என்ற கட்டாய விதியும் இல்லை. உதாரணமாகத் தொழிற் கட்சியிலே இருப்பவர்கள் எல்லா ரும் தொழிலாளரன்று. எத்தனையோ பிரபுக்களும் படித்தவர் களும் அக்கட்சியில் இருக்கிருர்கள். இதுபோலவே பழைமைக் (கன்சர் வேற்றிவ்) கட்சியில் இருப்பவர்கள் எல்லாரும் செல் வர்களல்லர். ஆகவே இன்ன இன்ன வகுப்பினர்தான் இன்ன இன்ன கட்சியில் இருப்பர் என்பது இங்கிலாந்தில் இல்லை என்பது புலப்படுகிறது. இதனுல்தான் இங்கிலாந்தில் கட்சி

இங்கிலாந்தின் அரசாங்கம் 391
முறையில் அரசாங்கம் நடைபெறுவதற்குச் சுலபமாகவிருக் கிறது. கட்சிகள் பரஸ்பரம் ஒன்றுக்கொன்று தீவிரமாக மாறுபட்டு ஒன்றன் கழுத்தை மற்றது நெரித்துக்கொல்லத் தயாரான நிலைமையில் இருக்குமானல் அங்கே சனநாயக அரசாங்கம் நடைபெறமாட்டாது. அங்கே ஒத்துழைப்புக்குப் பதிலாகக் கலகமும் சண்டையும்தான் நிகழும். அதிகாரத் துக்கு வரும் கட்சி, வலிமை குறைந்த கட்சியை நசித்து ஒழித்துவிடும்.
இங்கிலாந்திலே அரசியற் கட்சிகள் இருந்தாலும் அவை சில விடயங்களில் ஒற்றுமையுடையனவாயு மிருக்கின்றன. அப் படியிருக்கிறபடியினுல்தான் அவை சில சமயங்களிற் கலந்து பேசி ஒத்த முடிவும் காண்கின்றன. ஆனல் பலாத்காரத்தை அடிப்படையாகக் கொண்ட வேற்றுமைகளையோ, மாற்றமுடி யாத வேற்றுமைகளையோ பரஸ்பரம் கொண்டுள்ள கட்சிகள் விடயத்தில் இப்படியான ஒற்றுமை காணமுடியாது.
இன்னும், குறித்த ஒரு சிறுபகுதியினருக்கு மாத்திரமே உவப்பாயிருக்கும் கொள்கைளைக் கொண்ட ஒர் கட்சி இங்கி லாந்தில் பெரும் பான்மையினரது ஆதரவைப் பெறமுடியாது. உதாரணமாக தொழிற் கட்சி என்பது குறித்த ஒரு வகுப்பி னது நன்மைக்கு மாத்திர மே உழைக்கும் என இருக்குமானல் அது மற்றவர்களின் ஆதரவை இழந்துவிடும். இப்படியே பழைமைக் கட்சி விடயமும். ஆகவே இங்கிலாந்தில் உள்ள ஒவ்வொரு கட்சியும், குறித்த ஒரு பகுதியினருக்கு மாத்திர மன்றித் தேசம் முழுவதற்குமே நன்மை விளைக்கக்கூடிய கொள்கையை வகுத்துக் கருமம் ஆற்றும். மற்றும் நாடுகளில் போல இங்கிலாந்தில் கட்சி பேதங்கள் அவ்வளவு பிரமாத மாக வில்லா மைக்கும். இதுதான் காரணம். இங்கிலாந்தில் உள்ள அரசியற் கட்சிகளுக்கும் ஏனைய நாடுகளில் உள்ள அரசியற் கட்சிகளுக்கும் வேருேர் விதத்திலும் வித்தியாசம் உண்டு. பிரான்ஸ் முதலாம் சில நாடுகளிலே சாதனையிற் கொண்டுவருதற்கரிதாய பெரிய பெரிய தத்துவங்களை அரசி யற் கட்சிகள் கொண்டுள்ளன. மனிதன் உரிமைகளைப்பற்றி எல்லாம் அந்த நாடுகளிலே வானளாவப் பேசுகிருர்கள்; இந்த உரிமைகள் எப்படி இருக்கவேண்டுமென்பதில், அந்த நாடுகளிலே, கட்சிகளுக்கிடையில் வாதப் பிரதிவாதங்கள் நிகழுகின்றன. இப்படியான தத்துவங்களை-ஏட்டுச்சுரைக் காய் போன்றனவற்றை-ஆதாரமாகக் கொண்டு அரசாங்கம் நடாத்த இங்கிலாந்தில் உள்ள கட்சிகள் முயலுவதில்லை. வைக்கவுன்ற் சாமுயல் என்னும் பிரித்தானிய அரசியல்வாதி,
l. Wiscound Samuel.

Page 202
392 இங்கிலாந்தின் அரசாங்கம்
இங்கிலாந்தில் உள்ள அரசியற் கட்சிகளின் தன்மையைப் பின்வரும் கருத்துப்பட அழகாக எடுத்துக்காட்டியிருக்கிருர்:- *(ஜெர்மன்) நாசிக் கொள்கையினரும், சோவியத்ரு ஷியரும் வானளாவக்கூறும் தத்துவங்களை நாம் கையேற்பதில்லை. நாம் அவற்றையெல்லாம் நிராகரித்துவிட்டு அன்ருடம் எழக் கூடிய சந்தர்ப்பங்களைக் கொண்டு எம் மக்களது அபிவிருத்தி தியை வளர்க்க முயற்சி செய்கிருேம். பொதுமக்களின் சுகாதாரம், அவர்களுக்கு வேண்டிய குடியிருப்புவசதி, அவர் கள் தம் வேலைகளை முடித்த பின் சிரமபரிகாரம் செய்தற்கு வசதிகள் பெறக்கூடியதாகப் பட்டணங்களை நிரு மாணித்தல், அவர்களின் ஆரோக்கியத்தை அபிவிருத்திசெய்து அதன் மூலமாக அவர்களைத் தகுதியான பிரசைகளாக்கல் என்னும் பிரச்சினைகளை அநுகூலமாக நிறைவேற்ற நாம் முயற்சிசெய்து வந்திருக்கிருேம். எம் மக்கள் நோயுற்ற காலத்தில் அவர்கள் சகாயம் பெறுதற்கான வசதிகளைச் செய் திரு க் கிருே ம். அவர்கள் வயோதிபதசையை யடையும் காலத்தில் உபகார வேதனம் பெற ஒழுங்கு செய்திருக்கிருேம். குருடர்களுக்கும், பலவீனர்களுக்கும் சகாயம் வழங்க ஏற்பாடுகள் செய்திருக்கி ருேம். தொழிலாளரின் வேதனத்தை உயர்த்தவும், அவர்கள் வேலை நேரத்தைக் குறைக்கவும் அவர்களுக்கு ஒழுங்காக வேலை கிடைக்கவும், தொழிலில் நல்ல செளகரியங்கள் கிடைக்கவும் ஒர் பெரும் முயற்சி செய்யப்பட்டிருக்கிறது. பெரிய பெரிய தத்துவங்களைக் கூறி அவற்றை நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும் என்பவர்களன்று பிரித்தானியராகிய நாம்; அத்தத் துவங்களை விளங்க, கிரகிக்க ஆற்றலில்லாது நாம் இருக்கவுமில்லை. ஆணுல் இத்தத் துவங்களை நடைமுறைக்குக் கொண்டுவருதல், அதி நுண்ணறிவாளர்கள் கூறுவதுபோல, அவ்வளவு சுலபமான கருமம் அன்று. நடைமுறையிற் கொண்டு வர இயலாத தத்துவங்களை ஏற்பதில்லை. சமுதாய முன்னேற் றத்துக்கு எது எது உகந்ததோ அது அதனைச் சந்தர்ப்பத்துக் கேற்றவாறு அநுட்டிப்பதே இங்கிலாந்தின் கொள்கையாக இது வரை இருந்து வந்திருக்கிறது. பொதுசனங்களின் முன்னேற் றம்தான் எமது குறிக்கோள். திட்டவட்டமாக எழுதப்பட்ட அரசியலமைப்பு எமக்கு இல்லை. மூலாதாரப் பிரமாணங்களும் இல்லை. எம்முடைய தாபனங்கள் யாவும் இயல்பாகவே வளர்ச்சியடைகின்றன. ஒர் புதிய அரசாங்கத்துக்கு அரசிய லமைப்பை வகுக்கும்படி ஒரு பிரித்தானிய அரசியல்வாதி ஒரு முறை கேட்கப்பட்டார். என்ன! அரசியலமைப்பை எழுதுவதர்? ஓர் விருட்சத்தைக் கட்டு என்று கூறுவதுமாதிரி யல்லவா இது இருக்கிறது!’ என்று அவர் விடையறுத்தார். தத் துவங்கள் இருப்பது நல்லதுதான். ஆனல் அத்தத் துவங்க

இங்கிலாந்தின் அரசாங்கம் 39.3
ளுக்கிணங்க கருமங்களை நடத்துவதுதான் அதிபிரதானம் என் பதே எங்கள் கருத்து; சாதனைககு அப்பாற்பட்ட தத்துவங்கள், கொள்கைகளைக் கடைப்பிடிப்பதில் பயனிலலை’’
பிரச்சினைகள் எழும் போது, அவற்றை எப்படித் தீர்ப்பது என்பதனை பிரித்தானிய அரசியல்வாதிகள் சிந்திப்பர். ஆகவே இன்ன இன்ன பிரச்சினைக்கு இன்ன இன்ன மாதிரி நடக்க வேண்டும் என்ற தத்துவங்களோ பிரமாணங்களோ முன் க்ட்டியே இங்கிலாந்தில் இல்லை. சமயோசிதமாகப் பிரச்சினை களேத் தீர்ப்பதுதான் புத்தி என்பது ஆங்கில மக்கள் கொள்கை. எனவே தான் அவர்களில் அநேகர் குறித்த ஒரு கட்சியில் பிரியாது இருப்பது இல்லை. ஆனல் நாசிக் கட்சியினர் அதி காரம் வகித்தபோது, ஜெர்மன் மக்கள் குறித்த ஒரு கட்சியில் அங்கத்தவராக இருக்கவேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்பட்ட னர். இங்கிலாந்து மக்கள் இன்ன கட்சியைத் தான் ஆதரிக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப் படுவதில்லை. மக்களின் தேவைகளை எந்தக்கட்சி பூர்த்தியாக்கத் தக்கதான கொள்கை களை வகுத்துக்கொள்ளுகிறதோ அந்தக் கட்சிக்கே அவர்கள் தம் விருப்பப்படி ஆதரவை அளிப்பர். இப்படியாகப் பொது சனங்களின் மனப்பான்மை இருப்பதால், அவர்களுடைய ஆதரவைப் பெறுதற்காக பிரித்தானிய அரசியற் கட்சிகள் ஒன்ருே டொன்று சமரச பாவனை கொண்டு, உடன்பாடு காண வேண்டி, விட்டுக் கொடுக்கும் தாராள மனப்பான்மையைப் பரஸ்பரம் கொள்ளும். இவ்வாரு க சமரச மனே பாவம், விட்டுக் கொடுக்கும் தன்மை இல்லாது, எந்த ஒரு கட்சியும் அரசியலை நடாத்த முடியாது.
இங்கிலாந்திலேயுள்ள அரசியற் கட்சிகள் எவ்வாறு கொள்கை விடயமாக அதிகம் வேற்றுமைப்பாடின்றி இருக் கின்றன என்பதை, 1935-ம் ஆண்டுத் தேர்தலின்போது கன் சர் வேற்றிவ் கட்சியினை அதிகமாகக்கொண்ட தேசீய அரசாங் கமும் தொழிற் கட்சியும் செய்த பிரசாரத்தில் இருந்து டக்ரர் சேர் ஐவர் ஜென்னிங்ஸ் பின்வருமாறு தொகுத்துக் காட்டு 50gorii::-
தேசிய அரசாங்கம் தொழிற் கட்சி 1. சர்வதேச சங்கத்தை ஆத 1. சர்வதேச சங்கத்தை
ரித்தல். ஆதரித்தல் 2. எங்கள் பாதுகாப்பு முறை 2. போதிய பாதுகாப்புப் யில் உள்ள குறைகளை படைகளை வைத்திருத் நிவிர்த்தி செய்தல். தல்.
1. Dr. šir. Ivor Jennings: 96)ä605Ú பல்கலைக்கழக உப அத்தி யட்சகர் அல்லது துணைவேந்தராக இருந்தவர்.

Page 203
394
ஆயுதப் பரிகரணம். ஏகாதிபத்திய வர்த்த கத்தை அபிவிருத்திசெய் தல் இறக்குமதி ஏற்று மதி இடைஞ்சல் களைக் குறைத்தல். விவசாயத் தொழிலாளருக் குப் பாதுகாப்பு உத்தர வாதம் அளித்தல். . விவசாயத் தொழில், கடல் தொழில் என்ப வற்றை ஆதரித்தல்.
. குடியிருப்பு நிலை  ைம க ளை
அபிவிருத்தி செய்தல்.
கல்வி முறையைத் திருத்தி
யமைத்தல்:
. சர்வதேச
பிரபுக்கள்
இங்கிலாந்தின் அரசாங்கம்
ஆயுதப் பரிகரணம்.
ஒத்துழைப்பின் மூலம் வர்த்தகத்தை அபிவிருத்தி செய்தல்.
விவசாயத் தொழிலாள ருக்குப் பாதுகாப்பு உத் தரவாதம் அளித்தல்.
. காணிகளைப் பொதுச் சொத்
தாக்கல் விவசாயத் தைப் புநர்நிரு மாணம் செய்தல்.
நியாயமான o). If I i Gað) 35 யில் சுகாதாரத்துக் கேதுவான வீடுகள் அமைத்துக் கொடுத் தல்: மலிந்த கிராமீயக் குடிசைகள் அமைத்துக் கொடுத்தல். கல்வி முறையில் முன் னேற்ற முறைகளைக்
கையாளல்.
. வங்கித்தொழில், ஏற்றுமதி,
இறக்குமதி, மின்சாரம் இரும்பு, உருக்கு ஆகிய தொழில்களைப் பொதுச் சொத்தாக்கல். '
F66s
ஒழித்தல்.
மேலே காட்டிய ஆவலியில் இருந்து கன்சர் வேற்றிவ் கட்சி, தொழிற் கட்சி எனப்படும் இரு பிரதான கட்சிகளுக் கிடையே எவ்வளவு ஒற்றுமை இருக்கிறதென்பதை நாம் அவதானிக்கலாம். அவற்றுக்கிடையே வேற்றுமைக் கேது வாய பிரச்சினைகள் மேலே காட்டிய ஆவலியில் தடித்த எழுத்
1. Disarmament.

ங்கிலாந்தின் அரசாங்கம் 395
ந
தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. குறித்த சில தொழில்களை யும், காணிகளையும் பொதுவாக்க வேண்டுமென்பது தொழிற் கட்சியின் சித்தாந்தம். ஆனல் அவற்றைத் தனி மனிதர் பொறுப்பில் இப்போது இருக்கும் முறைப்படியே இனியும் இருக்கவிடுதலே உசிதம் என்பது கன்சர் வேற்றிவ் கட்சியின் கொள்கை. இன்னும், குறித்த இரண்டு கட்சிகளதும் நோக் கத்தில் வித்தியாசம் எதுவுமில்லை. நாட்டு மக்களின் சுபீட் சமே அவை இரண்டினதும் லட்சியமாகும். இந்நோக்கத்தை எவ்வாறு அடையலாம் என்பதில் மாத்திரமே அவற்றுக் கிடையே அபிப்பிராயபேதம் உண்டு.
ஆனல், கட்சி அரசியல் முறையை எதிர்ப்பார் கூறும் நியாயங்களும் சில உள. கட்சி முறையில் அரசியல் நடை பெறுவதாயிருப்பின், ஒரு நாட்டிலே பல கட்சிகள் முளைத்து வளரவும் கூடும். அவ்வாறு பல கட்சிகள் இருப்பது உறுதியான அரசாங்கம் அமைப்பதற்கு இடைஞ்சலாக இருக்கும் : வாக் கா ளரும் எந்தக் கட்சிக்குத் தம் ஆதரவை அளிப்பது என்று கஷ்டப்படுவர். பல கட்சிகள் அரசியல் மன்றத்தில் இருப்ப தால் உறுதியான ஒரு அரசாங்கம் இருக்காமல், அரசாங்கங்கள் அடிக்கடி மாறவும் கூடும். இப்படியான நிலைமை இருப்பது நாட்டுக்குத் தீங்கு விளைக்கும் என்று கட்சி முறையை எதிர்ப் போர் வாதிப்பர்.
பல கட்சிகள் இருக்கக்கூடாது என்பதற்கு மேலே காட்டிய காரணங்கள் ஒரளவுக்குப் பொருந்தும் என்று கூற லாகும்; ஒரு நாட்டிலே குறித்த ஒரு அளவுக்குமேல்-மித மிஞ்சி-கட்சிகள் இருந்தால் உறுதியான அரசாங்கத்தை அமைத்தல் கஷ்டமாகும். ஆனல் இங்கிலாந்திலே இந்தக் கஷ்டம் இல்லை. அங்கே அளவுக்கு மிஞ்சிய அரசியற் கட்சிகள் இல்லை. இரண்டு பிரதானமான கட்சிகளே அங்கு இப்போது உள. அப்படியிருப்பதினுல் அங்கே உறுதியான அரசாங்கம் ஏற்பட்டு நடைபெற உதவியாகிறது. ஒரு கட்சி அதிகாரத் துக்கு வந்தால் அது தன் சீர்கேட்டினுல் வீழ்ச்சியடையும் வரை, அதிகாரத்தில் இருந்து பரிபாலனத்தை நடாத்தும். அக்கட்சி வீழ்ச்சியடையுமிடத்து, மற்றக் கட்சி அதிகாரத் தைப் பெற்று அரசாங்கத்தை ஏற்று நடாத்தும். பல கட்சி கள் இருந்தால் அதிகாரமோகம் காரணமாக அவற்றுக் கிடையே அரசியற் சூழ்ச்சிகள் நடக்கும். ஒன்றையொன்று வீழ்த்தத் தருணம் நோக்கி அதற்கான கருமங்களையும் செய்
1, 25 ஆண்டுகளுக்கு முன் மிகச் செல்வாக்குடன் இருந்த லிபரல் கட்சி இப்போது தேய்ந்துவிட, பழைமைக் கட்சி, தொழிற் கட்சி என்ற இரண்டுமே அங்கு பிரதானமாக இருக்கின்றன.

Page 204
396 இங்கிலாந்தின் அரசாங்கம்
யும். இப்படியான நிலைமை இங்கிலாந்தில் இல்லாதபடியால் அங்கே அதிகாரத்துககு வரும் கட்சி உறுதியாக நின்று நல்ல வேலையாற்ற ஏதுவாகிறது. அடிக்கடி அரசாங்கம் மாறுவது ஒரு நாட்டுக்கு நல்லதன்று. ஒரு கட்சியமைத்து நடத்திய அரசாங்கத்தின் கருமம் சரிவர நிறைவேறு முன், இன்னேர் கட்சி அரசாங்கம் அமைத்து முந்திய அரசாங்கத்தின் கருமங் களைத் தலைகீழாக்கியும் விடும். இப்படியாக, கட்சிகள் அடிக் கடி அரசாங்கங்கள் அமைத்து, பரஸ்பரம் மாரு ன அரசியற் கருமங்களை நடத்திவந்தால் அது ஆபத்திற் கொண்டுபோய் விடும். இதன் பயனக பாராளுமன்ற அரசியன் முறையில் சனங்கள் வெறுப்புக்கொள்ளவும் ஏற்படும். கட்சி முறையி ஞல் எங்கே திறமையற்ற அரசாங்கம் இருக்கிறதோ அங்கே தான் சர்வாதிகாரிகள் தோன்றி அதிகாரத்தைக் கைப்பற்று வர். ஆகவே பாராளுமன்றச் சனநாயகமுறை செவ்வனே நடைபெற வேண்டுமானல் மிதமிஞ்சிய அரசியற் கட்சிகள் இருத்தலாகாது என்பது வெள்ளிடைமலை.
பிரித்தானிய அரசியற் கட்சிகள் : இங்கிலாந்திலேயுள்ள அரசியற் கட்சிகளின் பொதுவான தன்மைகளை இதுவரை கூறி னேம். இன்று இங்கிலாந்தில் உள்ள இரு பிரதான கட்சிகளி னதும் தன்மைகளை இனி அவதானிப்பாம். கன்சர் வேற்றிவ் கட்சி அல்லது பழைமைக் கட்சியின் உண்மையான முழுப் பெயர் கன்சர்வேற்றிவ் சங்கம், யூனியனிஸ்ற் சங்கம் என்ப வற்றின் தேசிய சமாசம் என்பதுவே. இந்த சமாசம் அல்லது கன்சர் வேற்றிவ் கட்சியின் அமைப்பு வருமாறு:-முதலில் ஊர்கடோறும் உள்ளூர்த் தொகுதிச் சங்கங்கள்? உள. (Լք (Լք அமைப்பிலும், ஊர் தோறும் உள்ள இச்சங்கங்கள்தான் மிகவும் பிரதானமானவை. கட்சி அங்கத்தவர்களைத் தெரிவுசெய் வதில் இவைதான் பெரும் பணியாற்றுவன. உள்ளூர்த் தொழிற் சங்கங்களுக்கு மேலாகவுள்ளவை மாகாணச்சபை கள். இவற்றுக்கு மேல் உள்ளது மத்திய சபை. மத்திய சபைக்கு மேலாகவுள்ளது ஆண்டு மகாநாடு; வருடாந்த மகாநாட்டில், ஒரு ஆண்டில் கட்சி செய்த வேலை பரிசீலனை செய்யப்படும். எதிர்காலத்துக் கொள்கையும் இம்மகாநாட்டி லேயே ஆலோசிக்கப்பட்டு நிர்ணயிக்கப்படும். கட்சி அங்கத்த வர்கள் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டால், இன்னவிதமாகத்தான் கருமம் ஆற்றவேண்டும் என்று கட்சி
. National Union of Conservative and Unionist Associations. . Local Constituency Association.
. Provincial Association.
. Central Committee.
Annual Conference.

இங்கிலாந்தின் அரசாங்கம் 397
அவர்களுக்குச் சர்வாதிகாரத்துவ முறையில் கண்டிப்பான கட்டளையிடாது என்பதனையும் நாம் ஈண்டுக்குறித்துக்கொள்ள வேண்டும். பொதுத் தேர்தல் நிகழும் காலத்தில், உள்ளூர்த் தொகுதிச் சங்கத்து நிர்வாகசபை, அத்தொகுதிக்குக் கட்சி அபேட்சகராக வர விரும்புபவர்களைக் கூப்பிட்டு குளு குணங்களை ஆராய்ந்து, ஈற்றில் ஒருவரைக் கட்சி அபேட்சக ராகத் தெரிவு செய்து பொதுக் கூட்டத்துக்குச் சிபாரிசு செய்யும். பொதுக் கூட்டம் பின்னர் அபேட்சகரை நியமிக்கும்.
கன்சர் வேற்றிவ் கட்சி அல்லது பழைமைக் கட்சியின், கொள்கைதான் என்ன? 'பழைமை பாடிச் செழுமை தேடல் தான் அதன் கொள்கை என்று கூறினும் பொருந்தும். நாட் டிலே முன்னேற்றம் வேண்டும்தான் என்பதைப் பழை மைக் கட்சி ஒத்துக்கொண்டு, முன்னேற்றத்துக்கான கைங்கரியங் களை ஆற்ற அவாவுறுகின்றது. ஆனல், அம்முன்னேற்றம் சாவதானத்துடன் கூடியதாயிருக்கவேண்டும்; ஏதோ மாற்றம் வேண்டும் என்பதற்காக அவசியமில்லாத மாற்றங்களை அவச ரப்பட்டுச் செய்யக்கூடாது; ஒரு மாற்றம் செய்ய வேண்டு மானல் அம்மாற்றத்துக்குத் தக்க காரணம் இருக்கவேண்டும் என்பது தான் கன்சர் வேற்றிவ் கட்சியின் கொள்கை நிலை மையை உள்ள உள்ளவாறு நோக்கி மாற்றம் அவசியம் என ஏற்படும் காலத்திலே அதனைச் செய்யவேண்டும் அன்றிக் கண்டபடி செய்யகூடாது. உலகத்தை நோக்கி, அதன் தன்மைகளைப் பாகுபடுத்திக் குறைகளைக் கண்டு அக்குறை களைச் சில கோட்பாடுகளின்படி திருத்தவேண்டும் என்ற கொள்கை பழைமைக் கட்சிக்கு இல்லை. உலகம் இப்படி, மனித சுபாவம் இப்படி என்பதை உள்ள உள்ளவாறு அவ தானித்துப் படிப்படியான மாற்றங்களைச் செய்யவேண்டும் என்கிறது.இக்கட்சி. சாதாரண மனிதரை முன்னுக்குக் கொண்டு வர வேண்டும்; அவர்களை நலம்பெறச் செய்யவேண்டும்’ என் றெல்லாம் வாய்ப்பிரசங்கம் செய்வோரு டன் இக்கட்சி ஒத்துப் போவதில்லை. "நாங்கள் வெறும் ஒரு பூந்தோட்டத்தை அமைத்து அதனைக் கண்காணிப்பதில்லை. உலகத்திலே காணப் படும் பல்வேறுவித மக்களுடன் ஊடாடி அவர்களுக்குத் தக்கதாகக் கருமம் நடாத்தவேண்டும். உலகிலேயுள்ளார் அனைவரும் ஒரு மாதிரியும் இல்லை. பாவிகளும், பக்திமான் களும், வெறியரும், விழுமியோரும் தரித்திரரும் செல்வரும், கபடரும், யோக்கியரும், மூடரும், விவேகிகளும் என பல திறப்பட்ட மக்கள் உலகிலே வசிக்கிருர்கள். எத்தனையோ வித மான கருமங்கள் உலகிலே நிகழ்கின்றன. இந்த மனிதருக்குத் தக்கதாகவும், இக்கருமங்களுக் கிசைவாகவும் நாம் கருமம்

Page 205
398 இங்கிலாந்தின் அரசாங்கம்
ஆற்றவேண்டும். சுருங்கக் கூறுங்கால் உலகத்தை உள்ள உள்ளவாறே நோக்கி நாம் கருமம் ஆற்றுகிருேம்’ என்பது பழைமைக் கட்சியின் கொள்கை.
இதுவரை இங்கிலாந்தில் இருந்துவரும் வாழ்க்கை முறை யில் கன்சர் வேற்றிவ் கட்சிக்கு நம்பிக்கையுண்டு. அதனைத் திடீரென மாற்றக் கூடாது என்பது அதன் முடிவு, நாட்டிலே முடியாட்சி நிலவவேண்டும், திருச்சபைமுறை இருக்கவேண் டும், பாராளுமன்றமுறை இருக்கவேண்டும் என்பதில் கன்சர் வேற்றிவ் கட்சிக்குத் தளரா நம்பிக்கை உண்டு. பிரபுக்கள் சபை யை ஒழிக்கவேண்டும் என்று கூறப்படும் ஆலோசனையை அது பல மாக எதிர்க்கிறது. இவ்விடயங்களில் ஏதும் மாற்றம் செய்ய வேண்டுமானல், அம் மாற்றங்களுக்கான அவசியத்தை அது மனப்பூர்வமாக உணரவேண்டும். மாற்றம் வேண்டும் என்ப தற்காக மாற்றத்தைச் செய்யக்கூடாது என்பது கன்சர் வேற் றிவ் கட்சியின் கருத்து. பிரித்தானிய ஏகாதிபத்தியம் இருக் கவே வேண்டும்; அதனை அழிக்கக்கூடாது. அப்படி அழிக்கும் முயற்சியில் பங்குபெற அது ஒருபோதும் ஒருப்படமாட்டாது. இப்படியான நிலைமையை அது கொள்வதினுல், அது ஏகாதி பத்தியத்தின் அமைப்பிலே மாற்றங்கள் செய்வதை எதிர்க் கிறது என்பது கருத்து அன்று. காலத்துக்கு ஏற்றவாறு மாற் றங்கள் நடைபெறுவதை அது ஆட்சேபிக்காது. மக்களுக் கிடையே பஞ்சம், பசி, வறுமை, வேலையின்மை யிருக்கின்றன என்பது உண்மை: இவற்றை நிவிர்த்திக்கவேண்டியதும் அவசி யம். ஆனல் அதன் பொருட்டு இப்போதுள்ள சமுதாய அமைப்பு முறையினை அறவே ஒழித்தல் உசிதமாகாது என்று கன்சர் வேற்றிவ் கட்சி கருதுகிறது. நாட்டின் செல்வத்தை விருத்தியாக் கற்கு ஒவ்வொருவரும் தன் தன் திறமையைக் காட்டச் சந்தர்ப்பம் அளிக்கப்படல் வேண்டும். இலாபம் பெறுதற்காக ஒவ்வொரு வரும் போட்டியிட்டுத் தொழில்களை விருத்தியாக்கவேண்டும்; அவர்கள் தம் சொந்தப் பொறுப் பில் நிலம்புலங்களையும் தொழிற்சாலைகளையும் சுரங்கங்களை யும் வைத்திருக்கவேண்டும் என்று கன்சர் வேற்றிவ் கட்சி வாதிக்கிறது. நல்ல கல்வி சுகாதார சேமா பிவிருத்தித் திட்டங்களை ஆக்கி அவற்றின் மூலமாகப் பொதுசனங்களின் வாழ்க்கையை நன்னிலைமைப் படுத்தவேண்டும் என்பதனை அது ஆட்சேபிக்கவில்லை. நிலம்புலங்கள் கைத் தொழிற்சாலை கள் சுரங்கங்கள் ஆதியனவற்றைப் பொதுச்சொத்தாக்க வேண்டும் என்பதில் அதற்கு நம்பிக்கை இல்லை. மக்கள் ஒவ் வொருவரும் பிரயா சப்படல் வேண்டும் தன் தன் திறமையி ல்ை முன்னுக்கு வரவேண்டும். அப்படி வருவதற்கு ஒவ் வொருவருக்கும் பரிபூரண சுதந்திரம் இருக்கவேண்டும் என்று

ங்கிலாந்தின் அரசாங்கம் 399
ந ஆ
அது வாதிக்கிறது. இந்தியா விடயமாகக் கன்சர் வேற்றிவ் ** கொண்டிருந்த கொள்கையை ஈண்டு விளக்குதல் இச் சந்தர்ப்பத்திற் பொருத்தமாகும் என்று நம்புகிறேம். இந்தியா ?? அடைவதை இக்கட்சி ஆட்சேபிக்கவில்லை. கனடா, ஆஸ்திரேலியா என்னும் நாடுகளைப்போல இந்தியா வும் பிரித்தானியப் பொதுநலவமைப்பில் சம வர சாக (டொமினியனுக) இருக்கவேண்டும் என்றே அது கருதியது. ஆனல் இந்தியா பரிபூரண சுதந்திரமடைய பிரித்தானியர் அந்நாட்டைவிட்டு வெளியேறவேண்டும் என்ற கொள்கையில் அதற்கு நம்பிக்கை இருக்கவில்லை. நன்மைக்கோ தீமைக்கோ ஆங்கிலர் இந்தியாவிலே அதிகாரத்துக்கு வந்தனர் என்றும் அந்த அதிகாரத்தைத் திடீரெனக் கைவிட முடியாதென்றும், என்றைக்கு இந்தியா தனது அரசியலைத் தானே நடாத்தத் தகுதியடைகிறதோ அன்றைக்குச் சுதந்திரமடையும் என்றும் கன்சர் வேற்றிவ் கட்சி கருதியது: சுயராச்சியம் இந்தியனின் பிறப்புரிமையா அன்ற என்பதனைப் பற்றி அது சிந்திக்க வில்லை. சுயராச்சியத்துக்கு இந்தியர் தகுதியானவர்களா என்பதனையே அது நோக்கியது. சுயராச்சியத்துக்கு அவர்க ளைத் தகுதியாக்க அங்கே உள்நாட்டுக் கலகங்கள் இல்லா திருக்கவேண்டும், வகுப்புச் சமரசம் நிலவவேண்டும் என்றும், அதற்கான மார்க்கத்தை முதலில் வகுக்கவேண்டும் என்றும் அது சாதித்தது. கன்சர் வேற்றிவ் கட்சி கொண்டிருந்த இந்த மனப்பான்மை பல இந்தியர்களுக்கு வெறுப்பைக் கொடுத் திருக்கும் என்பதற்கு ஐயம் இல்லை. தாம் சுதந்திரம் அடைவது எப்போது என்பதை அந்நியர் நிர்ணயிப்பதா என்றும் அவர் கள் கேட்டனர். ஆனல் கன்சர் வேற்றிவ் கட்சி சுதந்திரத்துக்கு விரோதமானதன்று என்பதனை நாம் ஒத்துக்கொள்ளவேண்டும். அவ்விடயமாக அதற்குச் சற்றுத் தாமத குணம் உண்டு. இத் தாமத குணத்தினல், தாம் அநுபவிக்கும் சுதந்திரத்தை மற்ற வர்கள் அநுபவிப்பதைத் தடைசெய்கிறர்கள் என்ற ஒரு அபவாதம் கன்சர் வேற்றிவ் கட்சியாளர் மீது அதிகமாகச் சுமத் தப்பட்டிருக்கிறது. ஆனல் இத் தாமத குணம் அவர்களுக் கியல் பாய் அமைந்துள்ள சாவதான மனப்பான்மையினல் ஏற்பட்டதேயன்றித் தீய நோக்கத்தில்ை ஏற்பட்டதன்று என்பதனை நாம் குறித்துக்கொள்ளுதல் வேண்டும் இந்தியா வுக்குக் சுதந்திரம் வழங்கும் விடயத்தில் இந்தச் சாவதானக் கொள்கையுடன் வேறும் விடயங்களும் சேர்ந்துதான் இருந் தன. இப்படியெல்லாம் இருந்தும் இலங்கைக்குச் சர்வசன வாக்குரிமை முறையை வழங்கவேண்டும் எனச் சிபாரிசு செய்தவர் ஒரு கன்சர் வேற்றிவ் கட்சியினரான டொனே

Page 206
4 OO இங்கிலாந்தின் அரசாங்கம்
மூர் பிரபுவே என்பதனையும் இந்தியாவுக்கு கிறிப்ஸ் திட்டத்தை, திரு. சேர்ச்சில் பிரதமராக இருந்த ့နှီ வழங்கினர்கள் என்பதனையும் உய்த்துணருங்கால்தான் கன்சர் வேற்றிவ் கட்சியின் மனப்பான்மையை நன்கு உணரலாகுபு.
கன்சர் வேற்றிவ் கட்சியின் சாவதானக் கொள்கை, அதனை ஆதரிக்கும் தொகுதிகளில் பிரதிபலிப்பதை நாம் நன்கு அவதா னிக்கலாகும். உதாரணமாக, பல்கலைக்கழகங்களுக்குரிய தானங்கள் வட அயர்லாந்துத் தானங்கள் இங்கிலாந்தின் கிராமப் பக்கங்களுக்குரிய அநேகமான தானங்கள் என்பவை கன்சர் வேற்றிவ் கட்சிக்கே கிடைக்கின்றன. பெரிய பட்ட ணங்களில் வர்த்தக நிலையங்கள் உள்ள தொகுதிகளும் செல் வர்கள் வாழும் நகர்ப்பாங்கர்த் தொகுதிகளும் இக்கட்சிக்கு ஆதரவளிக்கின்றன. லண்டன் பெரும் பிரிவில், லண்டன் நகரம், வெஸ்ற் மினிஸ்ரர், செல்வர்கள் வாழ் நகர்ப்பாங்கர்த் தொகுதிகள் அநேகமாகக் கன்சர் வேற்றிவ் கட்சியை ஆதரிக் கின்றன. பொதுவாகக் கூறுமிடத் துக் கிராமீய மக்களும் செல்வர்களும் கன்சர் வேற்றிவ் கட்சிக்கே தம் ஆதரவை அளிக்கிருர்கள் என்று சொல்லலாம். ஏற்கெனவேயுள்ள சமுதாய வாழ்க்கை முறையில் திடீர் மாற்றங்களைப் புகுத்த இவர்கள் விரும்பாதவர்கள். இலங்கையிலும் திடீர் மாற்றங் களை விரும்பாதவர்கள் கிராமீய மக்களும் செல்வ்ர்களுமே. திடீர் மாற்றங்களால் தங்களுக்குத் தீமை விளையும் என அவர்கள் அஞ்சுகிருர்கள். அவற்ருல் தாம் அடையப்பே கும் நன்மைகள் அதிகம் இல்லை என்பதே அவர்களது முடிவு.
தொழிற் கட்சி- தொழிற் கட்சியின் உடன் வேலைத் திட்டம்" என்ற ஒரு பிரசுரத்தில் பின்வருமாறு கூறப்பட்டிருக் கிறது. சமதர்மப் பொதுநலவமைப்பினைச் சிருட்டி செய் வதே தொழிற் கட்சியின் லட்சியம். எல்லாரும் பங்குபற்றி அநுபவிக்கக் கூடிய ஒரு உண்மையான செல்வ நிலையை நாட்டில் ஆக்குதற்கு எம் தேசத்து மூலபலங்கள் அனைத்தை யும் உபயோகிக்க அது நிச்சயித்துள்ளது. இந்த லட்சியத்தை அடைவதற்குரிய வழிகளை விஞ்ஞானம் எமது கையில் அளித் திருக்கிறது. ஆனல் செல்வமும், வர்த்தகமும், கைத்தொழிலும், விவசாயமும் அரசாங்கத்தின் மேற்பார்வையில் ஒரு தேசீயத் திட்டத்துக்கமைந்து இருந்தால்தான் எமது லட்சியத்தை அடையலாம். தொழிற் கட்சியின் இன்னேர் பிரசுரத்தில் பின்வருமாறு காணப்படுகிறது:- உற்பத்திச் சாதனங்கள்",
l. Cripps Plan. 2. The Immediate Plan of Work of the Labour Party.
3. Social Commonwealth. 4. Agents of Production.

இங்கிலாந்தின் அரசாங்கம் 4 OI
'விநியோகச் சாதனங்கள் "பரிவர்த்தனைச் சாதனங்கள்?, ன்பவற்றைப் பொதுவாக்கி, கையாலும் கருத்தாலும் வேலை செய்பவர்கள் தங்கள் உழைப்பின் பரிபூரணமான பயனை அநுபவிக்கச் செய்வதும், செல்வத்தை எல்லார்க்கும் சமபங் காகச் செறியச் செய்வதும் தொழிற் கட்சியின் நோக்கம் .
மேலே அநுவதித்துக் காட்டியனவற்றில் இருந்து
1. உண்மையான செல்வநிலையை எல்லாருக்கும் ஆக்க
வேண்டும் என்ற ஆவல்; 2. செல்வத்துக்கேதுவான சாதனங்களைப் பொதுச்
சொத்தாக்கவேண்டும் என்ற எண்ணம்; 3. அரசாங்கத்தின் மேற்பார்வையில் தேசீய வளர்ச்சிக் கான திட்டங்கள் வகுக்கப்படவேண்டும் என்ற நம் பிக்கை; என்பவற்றை தொழிற் கட்சி நன்கு வற்புறுத்துவது தெரி கிறது.
இப்போதுள்ள நிலைமையில் எல்லாரும் செல்வத்தைச் சமமாக அநுபவிக்கவில்லை என்பது தொழிற் கட்சி கொண் டுள்ள கொள்கை. காணிபூமிகளையும், சுரங்கங்கள், தொழிற் சாலைகளையும் தமதென வைத்திருப்போர் பெரும் சம்பத்துப் படைத்துக்கொள்ள, அவற்றிலே வேலைசெய்யும் தொழிலாளர் தம் வேலைக்குத்தக்க ஊதியத்தைப் பெறுவதில்லை. இதன் பயணுக ஒரு சிலர் குபேர செல்வம் படைத்து உல்லா ச வாழ்க்கை நடாத்தப் பல்லாயிரவர் பஞ்சத்தாலும் பட்டினியாலும் தவிக்கிருர்கள். காணிபூமிகள், சுரங்கங்கள், தொழிற்சாலை கள் என்னும் இன்னுேரன்னவற்றைத் தமதென வைத்துக் கொள்வோர் அவற்ருல் அதிக இலாபம் அடைகிருர்கள். அவர்களுக்குப் பஞ்சம் இல்லை. ஆனல் ‘அன்றடித்து அன்று வாயில் போடும் தொழிலாளிக்கு இந்தவிதமான செளகரியம் இல்லை. அவனுக்கு ஒவ்வொரு நாளும் வேலை கிடைக்கும் என்பதற்குத்தானும் உத்தரவாதம் இல்லை. அவனுடைய வேலை எப்போது பறிபோய்விடும் என்பதனைச் சொல்லவும் முடியாத நிலையில் அவன் தவிக்கிருன். முதுமையை யடைந்து விட்டால் அல்லது நோயாளியாய்விட்டால் அல்லது தொழில் மந்த நிலைமை ஏற்பட்டால் அவனுடைய நிலைமை அதோ கதி தான். இந்தக் கெடுதிகள் எல்லாம் உற்பத்தி விநியோகச் சாத னங்களைத் தனி மனிதர் தம் சொந்த மென அநுபவிப்பதின லேயே உண்டாகின்றன. இந்த முறையை ஒழித்து அதற்குப்பதி லாக மேலே சொல்லிய சாதனங்களைப் பொதுச் சொத்தாக்க
1. Agents of Distribution. 2. Agents of Exchange.

Page 207
402 இங்கிலாந்தின் அரசாங்கம்
dبه
திச் சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும்; இதனைத் திறம்படச் செய்வதற்கு காணிபூமிகள், சுரங்கங்கள் முதலானவற்றின் உபயோகத்தையும், தொழிற்சாலைகளின் உற்பத்தியையும், போக்குவரத்துச் சாதனங்கள் நடைபெறுவதையும் திட்டப் படுத்தவேண்டும். இவ்வாரு கத் திட்ட முறைப்படி கரும மாற்றினுல் சேதங்கள் ஏற்படாமல் எல்லாருக்கும் வேண்டிய பொருள்கள் குறைவில்லாது கிடைக்கும். காணிபூமிகளையும் தொழிற்சாலைகளையும் தனிமனிதர் சொத்தாக விடுவதல் தான் அவர்களுக்கிடையே போட்டி ஏற்படுகிறது. இலாபம் பெறுவதற்காக அவர்கள் ஒரு வருக்கொருவர் போட்டியிட்டுத் தேவைக்கு மிஞ்சிய பொருள்களை உற்பத்தியாக்கி விடுகிருர் கள். தன் பொருள்களை எவ்வளவுக் கதிகமாக விற்று அதிக இலாபத்தைப் பெறமுடியுமோ அவ்வளவுக்கதிகமாக விற்பதி லேயே ஒவ்வொரு முதலாளியும் கண்ணும் கருத்துமாயிருக் கிருன். அவனுக்கு அவனது இலாபத்தைவிட வேறென்றிலும் சிரத்தையில்லை. இப்படியான இலாப நோக்கு இருத்தல் சமுதாய வளர்ச்சிக்கு இடைஞ்சலானது என்பது தொழிற் கட்சியின் வாதம். காணிபூமிகள், தொழிற்சாலைகள், போக்கு வரத்துச் சாதனங்கள் என்னும் இன்னேரன்னவை சேவை செய்யத் தக்கனவாக அமைக்கப்படுதல் வேண்டும் என்றும், தேசத்து மூலபலங்கள் அனைத்தும் அனைவர்க்கும் பயன்பட வேண்டுமானல் அவற்றைப் பொதுச் சொத்தாக்கி நடத்தல் வேண்டும் என்றும் தொழிற் கட்சி கூறுகிறது. தேசத்து மூல பலங்கள் தனிப்பட்டவர்களின் ஆதிக்கத்தில் இருத்தல் அவர்கள் குறைந்த காலத்தில், குறைந்த செலவில், கூடிய இலாபம் பெறுதற்காக அவற்றை உபயோ கப்படுத்திவிடுவர் என்பதும் மூல பலங்களைச் சேமித்து வைப்பதற்கும், அவற்றைப் பாதுகாப்பதற்கும் அவை பொதுச் சொத்தாக இருக்க வேண் டும் என்பதும் தொழிற் கட்சியின் சித்தாந்தம். ஆகவே தொழிற் கட்சிக்கும் கன்சர் வேற்றிவ் கட்சிக்குமிடையே பொதுசன நல்வாழ்க்கைப் பிரச்சினை பற்றிப் பிணக்கு இல் ஜல. அவ்வாழ்க்கையை எவ்வாறு கொண்டுவரலாம் என்பதிலேயே அவற்றுக்கிடை அபிப்பிராயபேதம் உண்டு. உற்பத்திச்சாத னங்கள் முதலியவற்றைப் பொதுச் சொத்தாக்கவேண்டும்; அரசாங்கத்தின் மேற்பார்வையில் தேசீயத்திட்டம் வகுக்க வேண்டும் என்பது தொழிற் கட்சியின் வாதம்: குறித்த சாத னங்களைத் தனி மனிதரே வைத்திருக்கவேண்டும்; எல்லாரும் இன்புற்று வாழ்வதற்குத் தனி மனிதர் சுதந்திரம் இன்றியமை யாதது; அவர்களின் நலவுரிமைகளில் அரசாங்கம் தஐலயிடக் கூடாது என்பது கன்சர் வேற்றிவ் கட்சியின் வாதம்.
வேண்டும்; எல்லாரும் நன்மையடைவதன் பொருட்டு :

இங்கிலாந்தின் அரசாங்கம் 403
இங்கிலாந்திலேயுள்ள அதி சக்திவாய்ந்த அரசியற் சங்கங்களில் தொழிற் கட்சியும் பிரதானமானது. தொழி லாளர் வகுப்பின் ஆதரவும், தொழிற் சமா சக் காங்கிரசின் ஆதரவும் அதற்கு அதிகமாக உண்டு. தொழிற் சமா சக் காங்கிரசு என்பது இங்கிலாந்தில் உள்ள எல்லாவிதத் தொழி லாளரதும் பிரதிநிதித் துவத் தாபனமாய் அவர்களின் நலவுரிமைகளுக்குப் பாடுபடும் சாதனமாக அமைந்துள்ளது. அது நல்ல முறையில் அமைக்கப்பட்டு உறுதியான கட்டுப்பாடு Q- 6OL - I Sl.
தொழிற் கட்சியில் இரண்டுவித அங்கத்தவர்கள் உளர். (1) தனி அங்கத்தவர்கள்? (2) இணைக்கப்பட்ட அங்கத்த வர்கள் என்பவர்களே அவர்கள். முந்தியவர்கள் 16 வயதுக் குக் குறையாத வர்களாய், ஒரு தொழிற் சங்கத்துக்கு அங்கத்தவராயிருப்பதுடன் உள்ளூர்த் தொகுதியின் தொழிற் கட்சியிலும் ஒரு அங்கத்தவரா யிருத்தல் வேண்டும். இணைக, கப்பட்ட அங்கத்தவர்கள் என்பது, தொழிற் சமா சக் காங் கிரசுடன் இணைக்கப்பட்ட, அல்லது அதனுல் கணிக்கப்படும் தொழிற் சங்கங்கள், கூட்டுறவுச் சங்கங்கள், தொழில் பற்றிய தாபனங்கள், தொகுதித் தொழிற் கட்சிகள் என்பனவாம்.
தொழிற் கட்சி மகாநாடு ஆண்டுக் கொருமுறை கூடி கட்சியின் வேலைத்திட்டத்தை நிர்ணயிக்கும். இக்கட்சி யில் சிறு சிறு உட்பிரிவுகள் உள. அவற்றைப்பற்றி இங்கே குறிப்பிடல் ஆவ சியகம் அன்று. தான் நினைத்தபடி அரசாங்கத்தை அமைத்தற்குப் புரட்சி செய்யவேண்டும் என்ற கொள்கையைத் தொழிற் கட்சி கொண்டதாகாது. வாக்காளரை நன்கு பயிற்றவேண்டும்; அப்படிப் பயிற்சிய ளிக்கப்படும் வாக்காளர் தன்னையே அமோகமாக அதரிப்பர்; அப்போதுதான் பாராளுமன்றத்துத் தானங்கள் பலவற்றைக் கைப்பற்றி மற்றக் கட்சிகளின் உத்வியில்லாமல் அரசாங் கத்தைக் கைப்பற்றி தான் விரும்பிய மாற்றங்களைச் சட்டபூர்வ மாகச் செய்ய வேண்டும் என்பது தொழிற் கட்சியின் கொள்கை.
மேலே காட்டிய இரண்டு கட்சிகளையும் விட இன்னேர் கட்சியும் உண்டு. அதுதான் லிபரல் கட்சி அல்லது தாராளக் கட்சி; இற்றைக் குச் சில ஆண்டுகளுக்கு முன் தொழிற் கட்சி இருக்கவில்லை. தாரா ளக் கட்சிதான் கன்சர் வேற்றிவ் கட் சிக்கு எதிரிடையாக இருந்தது. அது தன் காலத்தில்
. Trade Union Congress.
2. Individual Members. 3. Affiliated Members.

Page 208
404 இங்கிலாந்தின் அரசாங்கம்
நல்ல தொண்டு ஆற்றியிருக்கிறது. இப்போது அதன் செல்வாக்கு மிகவும் அருகிவிட்டது; அதில் அங்கத்தவராயிருந் தவர்களில் அநேகர் தொழிற் கட்சியிற் சேர்ந்துவிட்டனர். வேறும் பலர் கன்சர்வேற்றிவ் கட்சியினராகிவிட்டனர். கன்சர் வேற்றிவ் கட்சித் தலைவராகவிருந்த திரு. வின்ஸ்ரன் சேர்ச்சில் ஒரு லிபரலாகவே தம் அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தாராளக் கட்சி அல்லது லிபரல் கட்சியின் நோக்கமும் கொள்கையும் பின்வருமாறு எனக் கூறப்பட்டிருக்கிறது :- த னி ம னி தன் தனது சுதந்திரத்தையும் ஆதனத்தையும், பாதுகாத்துக் கொள்ளவும், எவணுவது வறுமை, அறியாமை, வேலையின்மை என்பவற்றல் துன்புருது இருக்கவும் தக்க தான ஒரு தாராளப் பொதுநலவமைப்பை ஆக்குவதை நோக்க மாகக்கொண்டே லிபரல் கட்சி இருக்கிறது. தனிமனிதன் தனக்குள்ள சுதந்திரத்தையும் சந்தர்ப்பங்களையும் தக்கவாறு அநுபவிக்க அது தொண்டாற்றும்; அது தனது சகல கருமங் களிலும் சுதந்திரத்துக்கே முதல் இடம் அளிக்கும். ஒளதா ரிய மனப்பான்மையையே தா ரா ள க் க ட் சி பிரதானமாகக் கொள்ளும். எங்கள் சாகியத்தார்க்கு உள்ள உரிமைகள் போலவே மற்றும் சாகியத்தார், வகுப்பினர்க்கும் உண்டு என்பதைத் தாராளக் கட்சி ஒத்துக்கொண்டு கருமம் ஆற்றும். எந்த விதமான சர்வாதிகார முறையையும் லிபரல் கட்சி எதிர்க்கும். தொழிற் கட்சியின் லட்சியமாகிய தேசீய மயமாக் குதல் அல்லது பொதுவாக்கல், என்பதனையும் கன்சர்வேற்றிவ் கட்சியின் பொருளாதார தேசீயத்தையும் லிபரல் கட்சி எதிர்க்கும். இவ்விரண்டு கட்சிகளதும் கொள்கை குறித்த ஒரு வகுப்பினரைச் சர்வாதிகாரம் செலுத்தத் தூண்டுமாம். எனவே இச்சர்வாதிகாரமுறை லிபரல் கட்சி கொன்கைகளுக்கு முற்றிலும் விரோதமானது.
மேலே காட்டியதிலிருந்து ஒரு விடயம் தெற்றெனப் புலப்படுகிறது. அதாவது லிபரல் கட்சி கன்சர் வேற்றிவ் கட்சிக்கும் தொழிற் கட்சிக்கும் இடையில் உள்ளது என்பதே. சமுதாய முன்னேற்றத்துக்கு வேண்டிய சட்டங்களை ஆக்கிப் பொதுசனங்களை முன்னேற்ற வேண்டுமென்பதில் லிபரல் கட்சி, தொழிற் கட்சியுடன் ஒத்த மனப்பான்மை யுடைய தாக விருக்கின்றது. மற்றும் சாகியத் தாரு டன் நேச பான்மையுடன் இருக்கவேண்டும் என்று அது கூறுகிறது. எனவே அது சர்வதேசீய நோக்குடையது. இவ்வுலகத்தின் சிறு தேசங்கள் சுதந்தரமடைவதில் லிபரல் கட்சி ஆற்றிய தொண்டுகள் அளப்பில. இந்தியாவின் சிறந்த இராசப்

இங்கிலாந்தின் அரசாங்கம் 405
பிரதிநிதிகளாயிருந்தவர்கள் லிபரல் கட்சியைச் சேர்ந்த வர்களே. ஆனல் தனிமனிதனின் சுதந்திரத்தைக் கெடுக்கக் கூடாது; அவன் சொத்துக்கள் வைத்து அநுபவிப்பதைத் தடை செய்யக்கூடாது என்று அது கூறுகிறது: இவ்விடயத் தில் அதற்கும் தொழிற் கட்சிக்குமிடையே அபிப்பிராய பேதம் உண்டு. அதன் கொள்கை இவ்விடயத்தில் கன்சர் வேற்றிவ் கட்சிக் கொள்கையை ஒத்திருக்கிறது.
2. பாராளுமன்றம்
பாராளுமன்றச் சனநாயகத்தின் மூன்ரு வது சாதனமே பாராளுமன்றம் என எடுத்துக் காட்டினுேம், கலந்துபேசும் அரங்கமே பாராளுமன்றம். கட்சிகள் ஒன்றையொன்று சந் தித்து நாட்டின் பரிபாலன விடயமாக விவாதிக்கும். இங்கே அரசாங்கம் தனது எதிர்க் கட்சியின் நியாயங்களைக் கேட்கும், இவ்வாழுகக் கட்சிகள் கலந்துபேசி முடிவு செய்த பின், அதற்குத் தக்கதாகப் பரிபாலன வேலை நடைபெறும்.
பாராளுமன்றம் இரண்டு பகுதிகளைக்கொண்டது: ஒன்று பொது மக்கள்சபை; மற்றது பிரபுக்கள் சபை, பொது மக்கள் சபையே சனப்பிரதிநிதிகளைக் கொண்டது. எனவே அதுதான் அதி முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கேயே நாட்டுப் பரிபாலன விடயமான சகல ஆலோசனைகளும் விவாதங்களும் நிகழும். எனவே இச்சபையினைப்பற்றிச் சில கூறுதும். பொது மக்கள் சபையிலே 6 15 அங்கத்தவர்கள் உளர். அவர்கள் ஏற்கெனவே கூறப்பட்டுள்ள அரசியற் கட்சி ஏதேனு மொன்றில் அங்கத்தவர்களாயிருப்பர். அவர்கள் ஒவ்வொரு வரும் தத்தம் தொகுதிப் பிரதிநிதிகளாயிருப்பதோடு தம் கட்சிப் பிரதிநிதிகளாயும் இருப்பர். பொதுமக்கள்சபையின் விவாத மண்டபப்படம் ஒன்றை நாம் அவதானிப்போமே யானல், விவாதங்கள் எப்படி நிகழ்கின்றன என்பதை அறிய லாகும். மண்டபத்துக்குள்ளே சபாநாயகரின் ஆசனம் உண்டு. பொதுமக்கள் சபைக் கூட்டங்களுக்குச் சபாநாயகரே2 தலைமை வகிப்பர். அவருக்கு முன்னல் உள்ள மேசைக்குச் சமீபமாக அவரது வலது பாங்கரில் அரசாங்கத்தை நடாத்தும் பிரதம மந்திரியும் அவரது சகாக்களான ஏனைய மந்திரிகளும் வீற்றி ருப்பர். பிரதம மந்திரிக்குப் பின்னல் உள்ள நீளமான ஆச னங்களில் அரசாங்கக் கட்சியினர் இருப்பர். அவர்களுக்கெதி ராக மண்டபத்தின் மற்றப்பாங்கரில் எதிர்க் கட்சியினர் இருப் பர். இவ்வாருக அரசாங்கத்தை நடாத்தும் கட்சியும் எதிர்க் கட்சியும் ஒழுங்குப்படி இருப்ப, நாட்டு நற்பரிபாலனத்துக்கு
I. Viceroy. 2. Speaker.

Page 209
全Q6 இங்கிலாந்தின் அரசாங்கம்
வேண்டிய விவாதம் அங்கே நிகழும். "எதிர்க் கட்சி என்ற ஒன்று எதற்கு ? பெரும்பான்மைக் கட்சியே எவ்வித இடைஞ் சலுமின்றி பரிபாலனத்தை நடாத்தும்படி விட்டால் என்ன? என்றும் நீங்கள் கேட்கலாம். சனநாயக ஆட்சியின் உண்மைத் தன்மையை, அதன் உண்மைக்கருத்தை அறியாதவர்கள்தான் இப்படிக் கேட்பர். ஆனல் இவ்வாறு கேட்பவர்கள் இந்நாட் டில் அநேகர் உளர். ஒரு பெரும்பான்மைக் கட்சி பெரும் பான்மை மக்களது ஆதரவைப் பெற்றிருக்கிறபடியினல் தேசத்தை ஆளவேண்டும் ; அதன் பரிபாலன விடயத்தில் மற்றவர்கள் தலையிட்டு எதிர்க்கக்கூடாது; அவர்கள் எதிர்ப்பது நல் லா ட்சிக்கே இடையூறு விளைக்க ஏதுவாகும் என்று இவர்கள் கூறுகிருர்கள். ஆனல் இவ்வித அபிப்பிராயத்துக்கு இங்கிலாந்திலே இடம் இல்லை. ஒரு பெரும்பான்மைக் கட்சி ஆட்சியைப் புரியவேண்டுமென்பது முறைதான். அப்படி இருந் தும் அது தன் கருமங்கள் பற்றிய ஆலோசனைகளை மற்றவர் களின் விமரிசனத்துக்குச் சமர்ப்பிக்க வேண்டும். அப்படிச் சமர்ப்பித்தால்தான்
(1) அவ்வாலோசனைகள் சரியானவைதான என்பதை எதிர்க்கட்சியின் கண்டனம் என்னும் உரை கல்லில் வைத்துப்பார்க்க முடியும். (2) குறிக்கப்பட்ட அக்கருமத்தைப் பற்றி மற்றும் கட்சி களின் அபிப்பிராயம் என்ன என்பதை அறிய முடி யும் . (3) சிறுபான்மைக் கட்சியினருடன் அக்கருமம் பற்றி
ஏதும் உடன்பாடு காண முடியும். ஒரு கட்சியின் கொள்கையையோ அபிப்பிராயத்தையோ மற்றக் கட்சி ஏற்கவேண்டும் என்ற நிர்ப்பந்தம் கட்சி முறை யில் இல்லை. அல்லது, அதிகாரத்தில் இருக்கும் கட்சி தனது கொள்கையை மற்றும் கட்சிகள் ஏற்கவேண்டும் என்று வற் புறுத்துவதும் இல்லை. தேர்தலில் வெற்றியடைந்து அதன் பயணுக அதிகாரத்தில் இருக்கும் கட்சியானது, நாட்டின் நல்லாட்சிக்கெனத் தான் கொண்டுள்ள ஆலோசனைகளை மற்ற வர்களின் முன்னல் சமர்ப்பித்து அவர்களின் ஆலோசனையைக் கேட்கும்; தன் ஆலோசனைகளுக்கு எதிராக வரும் கண்டனங் களைக் கேட்டு அவ்வாலோசனைகளின் குளுகுணங்களை மட்டிட் டறியும் மற்றவர்களின் அபிப்பிராயங்களையும் கேட்டு அறிவ தால், பெரும் பா ன் மைக் கட்சி கூடிய அளவு எல்லாரும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகத் தன் கருமங்களை வகுக்க முடி யும். சமயோ சிதமாக தான் வகுத்த கருமங்களில் மாற்றங் களையும் செய்யும். இன்னும், பாராளுமன்றத்தில் உள்ள சிறு

இங்கிலாந்தின் அரசாங்கம் 4 O7
பான்மையினர் இவ்வாறு எதிர்க்கட்சியாக இருப்பதன் மூல மாயே தம் அபிப்பிராயங்களை வெளிதுறந்து கூற முடியும். எதிர்க்கட்சி என்ற ஒன்றிருந்து, பெரும்பான்மைக்கட்சி கொண்டுவரும் திட்டங்களைக் கண்டிப்பதனுல்தான், அப் பெரும்பான்மைக் கட்சி தன் திட்டங்களைப்பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிரு ர்கள் என்பதை அறிய முடியும், எதிர்க் கட்சியிருந்தால்தான், பெரும்பான்மைக் கட்சி தான் கொண்டு வரும் ஆலோசனைகளின் நியாயத்தை பாராளுமன்றத்துக்குள் ளேயும் வெளியேயும் துலாம் பரமாகக் காட்ட முடியும். ஒரு ஆலோசனையைப் பற்றி விவாதம் நடக்கும்போது அதற்குப் பாதக சாதகமான நியாயங்கள் பிறக்குமல்லவா? தாம் கூறு வனவற்றுக்கு இரு பக்கத்தினரும் ஆதாரங்களை எடுத்துக் காட்டுவர். இரண்டு பக்க நியாயங்களையும் பொதுசனங்கள் கேட்க, தாம் தாம் கூறுவது சரி, மற்றவர்கள் கூறுவது பிழை என்பதை அவர்களுக்கு நிரூபித்துக்காட்ட ஒவ்வொரு கட்சியும் முயற்சிசெய்யும்.
இன்று எதிர் க் கட்சியா க இருப்பதுவே நாளைக்கு அரசாங்கத்தை நடாத்தும் கட்சியாகவும் வரலாம். உதாரண மாக இப்போது பழைமைக் கட்சி இங்கிலாந்திலே அரசாங் கத்தை நடத்துகிறது. தொழிற்கட்சி இப்போது எதிர்க்கட்சி யாக விளங்குகிறது. ஆனல் பழைமைக் கட்சி தோல்வியடைந்து விட்டால் தொழிற் கட்சியே அரசாங்கத்தை ஏற்று நடாத்த வேண்டி ஏற்படும். ஆகவே இங்கிலாந்திலே எதிர்க் கட்சி என்பது பயனின்றி எதிர்ப்பதற்கும் கண்டிப்பதற்கும் மாத் திரம் உள்ளதன்று: அரசாங்கத்தை நடாத்தும் கட்சி தவறிய விடத்து, அவ்வரசாங்கத்தை ஏற்று நடத்தும் சாதனமாகவும் அது விளங்கும். ஆகவே தான் இங்கிலாந்தில் எதிர்க்கட்சியை * மாட்சிமை தங்கிய மன்னரது பதில் அரசாங்கம்' என்பர். எதிர்க் கட்சிக்கு எவ்வளவு பொறுப்பு உண்டு என்பதனை இதிலிருந்து நீங்கள் உணர்ந்துகொள்ளலாகும். அது கண்டபடி அரசாங்கத்தை வையமுடியாது. பயனில் மொழிகளைப் பிர யோகித்து அரசாங்கத்தைக் கண்டிக்க முடியாது. பயன்றரு முறையில் அது அரசாங்கம் செய்யும் கருமங்களின் குணகுணங் களைக் கூறவேண்டும். வேண்டியவிடத்துத் தானே அரசாங் கத்தை ஏற்று தான் கண்டித்த கட்சியாற்றிய அரசியன்முறை யிலும் பார்க்க விசேடமானதாக அவ்வரசியன் முறையை நடத்த வேண்டும். இவ்வாரு ய பெரும் பொறுப்புக்களைக் கொண்டதுவே பிரித்தானியப் பாராளுமன்ற எதிர்க் கட்சி: இதன் பொருட்டன் ருே எதிர்க்கட்சித் தலைவருக்கு அங்கே
1. His Majesty's Alternate Government.

Page 210
4.08 இங்கிலாந்தின் அரசாங்கம்
ஆண்டு வேதனமாக 2,000 தங்கப்பவுண் அளிக்கப்பட்டு வருகிறது? பாராளுமன்ற அரசியன் முறையிலே எதிர்க் கட்சித் தலைவர் ஒரு பிரதானமான அங்கமாக விளங்குகிருர்,
அதிகாரத்தில் இருக்கும் கட்சியே பாராளுமன்றத்தின் வேலைத்திட்டத்தை வகுத்துக் கிரமப்படுத்தும். பொது மக்கள் சபை நிகழ்ச்சிகளைப் பிரதம மந்திரி வகுப்பார். ஏதும் பிரதான மான விவாதம் நடைபெறுவதெனில் அதற்கான ஒழுங்கை எதிர்க் கட்சித் தலைவருடன் கலந்தாலோசித்து வகுப்பார். பிரதம மந்திரியும் அவரது சகாக்களான மந்திரிமா ருமே அரசாங்கத்தை நடாத்துபவரான படியால், அவர்களே அங்கத் தவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விடை கூறவேண்டும். இதன் பொருட்டு ஒரு நேரம் வேருக உண்டு. அப்போது பிரதம மந்திரியிடமும் ஏனைய மந்திரி மாரிடமும் அவரவரின் பரிபாலனப்பகுதி சம்பந்தமான கேள்விகள் கேட்கப்படும். இவ்வாறு கேள்விகள் கேட்கப்படும் நேரம் அதிகமாயிராது. அதிகமான நேரம் அரசாங்கக் கருமங்களுக்கே செலவாகும். அரசாங்கம் நிறைவேற்ற விரும்பும் மசோதாக்களைப்பற்றி விவாதிப்பதே இக் கருமம் ஆகும்.
ஒரு மசோதா எவ்வாறு பிறக்கிறது, அது எவ்வாறு நிறை வேற்றப்படுகிறது என்பதனை இனி ஆராய்வோம். ஒரு மசோதா வைத் தனி அங்கத்தவரோ அரசாங்கமோ எடுத்து ஆளலாம். அரசாங்கம் ஒரு மசோதாவை எடுத்தாளல் என்பது அவ்வரசாங்கத்தின் அங்கமாயுள்ள ஒரு மந்திரி எடுத் தாளலையே குறிக்கும். ஒரு மந்திரி எடுத்தாளும் மசோதா மந்திர சபையின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் என்ப தனைக்கூறத் தேவையில்லை. ஆனல் ஒர் தனி அங்கத்தவர் எடுத்தாளும் மசோதாவுககு அரசாங்கத்தின் ஆதரவு கிடைக் காவிட்டால் அது பாராளுமன்றத் தில் நிறைவேறுவது துர்லபம்.
தனி யங்கத்தவர்களின் மசோதாக்கள் சரி, அரசாங்க மசோதர்க்கள் சரி எவ்வாறு பிறக்கின்றன? இங்கிலாந்திலே யுள்ள மக்களில் மிகப் பெரும்பாலார் ஏதேனும் ஒரு சங்கத் தில் அங்கத்தவராயிருப்பர் என்று ஏற்கெனவே காட்டியுள் ளோம். இச்சங்கங்கள் ஒவ்வொன்றும் ஏதேனும் ஒரு தொழி லுடன் விசேட தொடர்புடையதாக இருக்கும். உதாரணமாக தானிய வர்த்தகர் சங்கம், மர வியாபாரிமார் சங்கம், இரும்பு, உருக்கு உற்பத்தியாளர் தேசீயச் சம்மேளனம்", திரும் வண்டி ட இரயில் தொழிலாளர் சங்கம், விவசாயிகளின் சங்கம் என்றின் னே ரன்ன சங்கங்கள் அங்கே நூற்றுக்கணக்கில்
l, Federation.

இங்கிலாந்தின் அரசாங்கம் 4.09
உண்டு. இச் சங்கங்களில் ஒன்று தனது அங்கத்தவர்களின் நலவுரிமைகளின் பொருட்டுச் சில நடைவடிக்கைகள் சட்டபூர்வமாக எடுக்கப்படவேண்டும் என்று விரும்புகிறது என வைத்துக்கொள்ளுவோம். அதன் நிருவாகிகள் ஒரு பாராளுமன்றத் தங்கத்தவரைக்கண்டு, தாம் கருதியநோக்கத் தின் பொருட்டு ஒரு மசோதாவை எடுத்தாள வேண்டுமென்று கோருகின்றனர். குறித்த அங்கத்தவர் குறித்த அந்த விடயத்தை நன்கு ஆராய்வார். மற்றவர்களுடனும் கலந்து பேசுவார். இதன் பின்தான் ஒரு மசோதாவை (உதாரணத் து க்கு உள்நாட்டில் தானிய உற்பத்தியை அதிகரிப்பதற்கான மசோதா என்று வைத்துக்கொள்ளுவோம்) தாம் எடுத்தாளப் போவதாகப் பாராளுமன்றத்தில் அறிவித்தல் கொடுப்பார். சில சமயங்களில் சங்கங்கள் அவ்விடயமாகக் கிளர்ச்சிசெய்து, நடைவடிக்கை எடுக்கும் படி விவசாய மந்திரியைத் தூண்டும். சில சங்கங்கள் தூதுக்கோஷ்டிகளை மந்திரியிடம் அனுப்பித்தம் கோரிக்கைகளைச் சமர்ப்பிக்கும். தம்மிடம் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளை மந்திரியானவர் நன்கு பரிசீலனை செய்வார். அவற்றுக்கிணங்க ஒரு மசோதாவை எடுத்தாண்டு நிறை வேற்றுவது நாட்டுக்கு நல்லது, தம்முடைய பெயர் பரவு தற்கும் வாய்ப்பானது, தம் கட்சிக்கு அடுத்த தேர்தலில் பொதுசன ஆதரவைத் தேடித் தர வல்லது என்று அவர் கண்டால், அவர் மந்திர சபையுடன் கலந்தாலோ சித்து அவ் விடயமாக (உள்ளூரில் தானியங்கள் உற்பத்தியாவதற்கு ஊக்கம் அளிக்கவேண்டும் என்ற) ஒரு மசோதாவைப் பாராளு மன்றத்தில் எடுத்தாள்வார். சில சமயங்களில் கல்வி, சுகா தாரம், ஆரோக்கிய விருத்தி என்பன பற்றிப் பொதுசனங்கள் கிளர்ச்சி செய்வர். இக்கிளர்ச்சிக்கு அரசாங்கம் செவிசாய்த்து அதற்கேற்றதாக மசோதாக்களை எடுத்தாளும், இவ்வாருக, கல்வி பற்றிய ஒரு அரசாங்க மசோதா பிறக்கும். தான் எந்த விதமான கொள்கையை வாக்காளருக்குச் சமர்ப்பித்துத் தேர்தலில் வெற்றிகொண்டதோ, அந்தக் கொள்கையை நடைமுறையிற் கொண்டுவருவதில் அரசாங்கம் அதி சிரத்தை கொள்ளும். தொழிற் கட்சி அதிகாரத்துக்கு வந்தால் தன் வேலைத் திட்டத்தின் பிரகாரம் மசோதாக்களை எடுத்தாண்டு நிறைவேற்றும். தொழிற்சாலைகள் கரிச்சுரங்கங்களில் தொழி லாளர் நிலைமைபோன்ற விடயங்களை விசாரணை செய்து அறிக்கை செய்யும் படி விசாரணைக் கொ மிஷன்களையும் அரசாங் கம் சில சமயம் நியமிக்கும். அவ்விசாரணைக் கொ மிஷன்கள் விடுக்கும் அறிக்கைகளை ஆதாரமாகக் கொண்டு அரசாங்கம் மசோதாக்களை எடுத்தாண்டு நிறைவேற்றும். இனி, அரசாங் கப்பகுதிகள் சிலவற்றின் முயற்சி, உற்சாகம், காரணமாகவும்

Page 211
41 O இங்கிலாந்தின் அரசாங்கம்
மசோதாக்கள் பிறக்கலாம். உதாரணமாக, மீன்பிடிதொழிலை அபிவிருத்தி செய்வதில் சிரத்தை கொண்டுள்ள ஒரு உத்தி யோகத்தர் இருக்கிருர் என வைத்துக்கொள்ளுவோம். அவர் இவ்விடயமாக நன்கு ஆராய்ச்சி செய்கிருர்: இவ்விடயமான நூல்கள் பல படிக்கிருர், அநுபவசாலிகளையும் நிபுணரையும் கலந்தாலோ சிக்கிறார். இதன் பின் இவ்விடயமாக ஒரு அறிக் கையைத் தயார் செய்து தன் பகுதிக்குத் தலைவராகவுள்ள மந்திரியிடம் சமர்ப்பிக்கிழுர், மந்திரியும் சுறுசுறுப்பும் உற் சாகமும் உடையவராய் நாட்டுக்கு நன்மையும் தமக்குக் கீர்த்தியும் தரக்கூடிய திட்டங்களை ப் பெற்றுக்கொள்ளும் அவாவும் உடையராய் இருப்பரேல் குறித்த உத்தியோகத்தர் மீன்பிடி தொழில் விடயமாகச் சமர்ப்பித்த திட்டத்தை வரவேற்பார். அவர் இவ்விடயமாக நிபுணர்களாயுள்ளாரின் ஆலோசனையையும் கேட்டு அத்திட்டத்தை மந்திர சபையிற் சமர்ப்பித்து அதன் ஆதரவையும் பெற்றுக் கொள்ளுவார். இவ்வாரு கவும் ஒரு மசோதா பிறக்கலாம். எனவே இதுவரை கூறியதிலிருந்து மசோதாக்கள்
(1) ஒர் சங்கத்தால் அல்லது பெரிய தாபனத்தால் ஊக்கு விக்கப்பட்ட ஒரு தனி அங்கத்தவரின் முயற்சியினல் பிறக்கலாம்; அல்லது (2) (அ) கட்சியின் வேலைத்திட்டத்தைத் துரிதமர் க நிறை வேற்ற வேண்டும் என்ற ஆவலால் அல்லது (ஆ) பொது சனக் கிளர்ச்சியால் அல்லது (இ) குறித்த சில தாபனங்கள் அரசாங்கத்துக்கு நேரே விண்ணப் பித்தலால் அல்லது (ஈ) விசாரணைக் கொ மிஷன் களின் அறிக்கைகளினுல் அல்லது (உ) அரசாங்கப் பகுதி யுத்தியோகத்தரின் உற்சாகத்தினுல் அரசாங் கமே பிறப்பிக்கலாம். ஒரு மசோதா வைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முன் னர், அதனைச் சட்ட முறையில் வகுக்கவேண்டும். ஆகவே அதனே இதற்கெனவுள்ள சட்ட நிபுணர் வகுக்கவேண்டும். இங்கிலாந்திலே பாராளுமன்றச் சட்டத் தயாரிப்பாளர் குழு ஒன்று இருக்கிறது. இதில் உள்ளார் மசோதாக்களைச் சட்ட முறைப் படி வகுப்பர். ஒரு மசோதா சிக்கலானதாய்ப் பல பிரச்சி னைகளைக் கொண்டதாக விருப்பின் அதனைச் சட்ட முறைப் படி தயாரிக்கப் பல மாதங்களும் செல்லும். சட்டமுறையில் ஒரு மசோதாவை வகுத்தபின்தான் அது பாராளுமன்றத்திற். சமர்ப்பிக்கப்படும். உள்நாட்டு விளைபொருள்களை-விசேட மாக கோதுமையை-அபிவிருத்தி செய்ய விவசாய மந்திரி ஒரு மசோதாவை எடுத்தாளப்போ கிருர் என்று ஒர் உதாரண

இங்கிலாந்தின் அரசாங்கம் 41 I
தின் பொருட்டு வைத்துக்கொள்ளுவோம். அம்மசோதாவை மந்திர சபை அங்கீகரித்துவிட, சட்டப்பிரமாணப்படி வகுக்கப் பட்டும் விட்டது. குறித்த ஒரு தினத்தில் அம்மசோதா முதன் முறையாக வாசிக்கப்படும் என முன் அறிக்கை செய்யப்படும். குறிக்கப்பட்ட தினத்தில் அதன் பெயரை மாத்திரம் பொது மக்கள் சபை அலுவலாளர் அல்லது கருமாதிகாரி வாசித்துக் காட்டுவர். இதன் பின் அம்மசோதா இதற்கெனவுள்ள பிரசு ரத்தில் முறைப்படி பிரசுரிக்கப்படும். பின், இரண்டாவது முறை மசோதா வாசிக்கப்படும் திகதியை எதிர்க் கட்சித் தலைவருடன் கலந்தாலோசித்து நிர்ணயிப்பர். இரண்டாம் முறை மசோதா வாசிக்கப்படும்போது அதன் பொதுக் கொள்கைகள் பற்றிய விவாதம் நடக்கும். விபரங்களைப் பற்றி விவாதம் நடக்காது. பின்னர் மசோதா வை ஏற்பதா நிரா கரிப்பதா என்பது பற்றி வாக்குச் சம்மதம் எடுக்கப்படும். வாக்குச் சம்மதத்தின்போது மசோதா நிராகரிக்கப்படாவிட் டால் அல்லது தவணையிடப்படாவிட்டால் அது நிறைவேறி பொதுமக்கள் சபையின் கருமச்சபை யொன்றின் ஆலோசனைக் குச் சமர்ப்பிக்கப்படும். கருமச் சபை என்ற ல் என்ன என்பதைச் சிறிது விளக்கவேண்டியது அவசியமாகிறது. ஒரு பொதுத்தேர்தல் முடிந்து பொதுமக்கள் சபை கூடியதும், நாலு கரு மச்சபைகள் நியமிக்கப்படும். இவை ஒவ்வொன்றி லும் திறமையும் அநுபவமும் உள்ளவர்கள் தெரிவுசெய்யப் படுவர். A, B, C, D என்பவையே இச்சபைகளின் பெயர் கள். ஒவ்வொரு கரு மச்சபையிலும் 30 அங்கத்தவர்களுக்கும் 50 அங்கத்தவர்களுக்கும் இடையில் இருப்பர். பொது மக்கள் சபையில் உள்ள கட்சிப் பலத்துக்கியையவே இச்சபை களில் உள்ள அங்கத்தவர்களின் கட்சிப் பலமும் இருக்கும். ஆகவே, ஒரு கரு மச்சபையை "குட்டிப் பாராளுமன்றம்’ என்றும் கூறலாம். பொதுமக்கள் சபைத் தலைவர், சபையில் உள்ள சில அங்கத்தவர்களைக் கொண்ட ஒரு அக் கிராசனக் குழு வினை அமைப்பர். இக்குழுவிலிருந்தே கரு மச்சபைகளுக்குரிய
அக்கிராசனர் நியமிக்கப்படுவர். இப்படியான சபைகளை விட, முழுப் பொதுமக்கள் சபையுமே சில சமயங்களில் ஆய்வுச் சபையாக மாறும். அப்போது சபாநாயகர் தமது
ஆசனத்தை விட்டு நீங்கிவிட இன்னெருவர் தலைமை வகிப்பர். வழிவகைகாண் தலைவர்? என இவர் அழைக்கப்படுவர். ஒவ் வோர் பாராளுமன்றக் கூட்ட ஆரம்பத்திலும் இவ்வழிவகை காண் தலைவர் நியமிக்கப்படுவர். அரசாங்கக் கருமங்கள்
J. Standing Committee.-.-.ốiữ{550ở65,LJ - 606Ủg, ổ Uj5 g. ữ 3 (oì%,f Lối{1}{i} என்றும் கூறுவர்.
2. Chairman of Ways and Means.

Page 212
412 இங்கிலாந்தின் அரசாங்கம்
செவ்வனே நடைபெறுதற்கு வேண்டிய பணத்தை எவ்வாறு பெறலாம் என்பதற்கான வழிவகைகளை ஆராய்வதற்கு முழுச் சபையும் ஆய்யுச்சபையாக மாறுவதால் அதன் தலைவர் இவ் வாறு வழிவகைகாண் தலைவர், என வழங்கப்படுகின் ருர் போலும், இவ்விடயமாக இலங்கையில் வாழும் நாம் பிரதான மாகக் கவனிக்கத்தக்க தொன்றுண்டு. அதாவது மேலே சொல் லிய கருமச்சபைகளின் தலைவர்களாக எதிர்க் கட்சியில் உள்ள வர்களும் நியமிக்கப்படலாம் என்பதே. அவருக்கு அதிகாரங் கள் பல உள. கருமச்சபையிலே ஒரு மந்திரியின் திருத்தங்களைத் தானும் நிராகரிக்க அவர் அதிகாரமுடையவராயிருக்கிருர், இவ்வாருக எதிர்க் கட்சியிடத்தும் சமரசபான்மை காட்டுவது சனநாயகத்தின் இன்றியமையா அம்சமாகும். நிற்க
ஒரு மசோதா, கரு மச்சபையின் பரிசீலனைக்குச் சமர்ப் பிக்கப்பட்டதும் அது மிகவும் நுணுக்கமாக அங்கே ஆராயப் படும். மசோதாவின் ஒவ்வொரு பந்தியையும் அச்சபையில் உள்ளார் விபரமாகப் பரிசீலனை செய்து வேண்டிய வேண்டிய இடங்களில் திருத்தங்களும் மாற்றங்களும் செய்வர். இப்படி யான மாற்றங்களினல் அது சில சமயங்களில் தனது முந்திய உருவமே புதிதுபோல அதனை இயற்றியவர்கள் தானும் கண்டு பிடிக்க முடியாத அளவில் மாற்றமடையும். இவ்வாறு மாற்ற மடைந்துள்ள மசோதா திரும்பிச் சபைக்கு விவாதத்துக்கு வரும்போது ‘இது யார் மசோதா என்று அங்கத்தவர்கள் வியக்கத்தக் கவிதத்தில் அது மாற்றமடைந்துவிடும் என்று டக்டர் சேர் ஐவர் ஜென்னிங்ஸ் கூறுகிறர்.
கருமச் சபையில் ஆராயப்படும் ஒரு மசோதா வினேப்பற் றிக் கேட்கப்படும் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல அம்மசோதா சம்பந்தப்பட்ட மந்திரியும் அவர் காரியதரிசி களும் அச்சபைக் கூட்டங்களிற் சமுகமாயிருப்பர். அங்கே அரசாங்கக் கட்சிக்கே அதிக பலம் இருக்கிறபோதிலும் மசோ தாவில் திருத்தங்களும் செய்யப்படும். ஒரு கட்சியின் நலத் துக்காகவே ஒரு மசோதா வை ஆக்கவேண்டும் என்பது அரசாங் கத்தின் நோக்க மன்று: எனவே அது எதிர்க் கட்சியாரும் திருப்திப்படக்கூடிய அளவுக்கு மாற்றங்களையும் திருத்தங்களே யும் அம் மசோதாவில் ஏற்றுக்கொள்ளும். ஆகவே பொது மக்கள் சபையில் மசோதா திரும்பி எடுத்தாளப்படும்போது அதற்கு அதிகம் எதிர்ப்பு இருக்கமாட்டாது. ஒரு கருமச்சபை மேலே காட்டியவாறு ஒரு மசோதாவை ஆராய்ந்து ஆகவேண் டியனவற்றை இயற்றியபின்னர் அந்த மசோதா அறிக்கை நிலையை எய்தும். கருமச்சபையில் எல்லா அங்கத்தவர்களும் ஒரு மசோதாவைப் பரிசீலனை செய்யமுடியாது. குறித்த
1. Reporting Stage.

இங்கிலாந்தின் அரசாங்கம் 4 3
சிலரே சபையில் அங்கத்தவராயிருப்பர். ஆகவே எல்லா அங்கத்தவர்களும் ஒரு மசோதாவை ஆராய்வதற்காகவே இந்த அறிக்கை நிலை என்பது ஏற்படுத்தப்படுகிறது. அறிக்கை நிலையில் மசோதா விவாதிக்கப்படும்போது அங்கத்தவர்கள் அதில் மாற்றங்கள் செய்யக் கோரலாம். ஆணுல் ஒரு மசோ தா வை, முழுப்பொதுமக்கள் சபையும் ஆய்வுச்சபையாக மாறி ஆராய்ந்துவிட்டால், அது அறிக்கை நிலையை எய்தமாட்டாது. கருமச்சபைகளினல் பரிசீலனை செய்யப்படும் மசோதாக்கள் தான் அறிக்கை நிலையை எய்தும். பொதுமக்கள் சபை ஆய்வுச்சபையாக மாறி ஆராய்ந்த மசோதாக்களும், அறிக்கை நிலை யை எய்தி ஆராயப்பட்ட மசோதாக்களும் மூன்ரும் முறையாகப் பொதுமக்கள்சபையில் வாசிக்கப்பட்டு, அவை பற்றிய விவாதத்தின் பின்னர் நிறைவேற்றப்படும். அப்படி நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் பிரபுக்கள் சபைக் குச் சமர்ப்பிக்கப்படும். தன்னிடம் சமர்ப்பிக்கப்படும் மசோதாக் களை நிராகரிக்கப் பிரபுக்கள் சபைக்கு இப்போது அதிகாரம் இல்லை. பிரபுக்கள் சபையில் மசோதா நிறைவேறியதும் அது மன்னரின் அங்கீகாரத்துக்கு அனுப்பிவைக்கப்படும். மன்னர் அங்கீகாரமளித்ததும் அது சட்டபூர்வமாகிவிடும்.
பொதுப்பணம் செலவழிப்பதுபற்றிய மசோதாக்களை ஒரு மந்திரியே எடுத்தாளவேண்டும். ஏனைய தனி அங்கத்தவர்கள் எடுத்தாள முடியாது. அப்படியான ஒரு மசோதா முதல் வாசிப்புக்குச் சமர்ப்பிக்கப்படுமுன்னர் அதுபற்றிய பண விப ரங்கள் அரசாங்கத்தால் நன்கு ஆராயப்படும். அதன் பல் வேறு பிரச்சினைகளையும் பற்றி அரசாங்கம் திறைசேரி அதிகாரி களுடன் நன்கு கலந்து ஆலோசிக்கும்.
நாட்டின் நன்மைக்கான மசோதாக்களை நிறைவேற்றுவது பாராளுமன்றத்தின் பிரதான கருமங்களில் ஒன்று: அதற்கு வேருேர் பிரதான கருமமும் உண்டு. அதாவது பணம் சேர்ப்பது, அதனைச் செலவிடுவது என்பதற்கான அதிகாரம் அளித்தலே என்க. பணம் இல்லாமல் இந்த உலகிலே எந்த அரசாங்கமாவது தன் பரிபாலனக் கருமத்தைத் திறமையுடன் ஆற்ற முடியாது. அரசாங்கக் கருமங்களை நடாத்தும் உத்தி யோகத்தருக்கு வேதனம் கொடுக்கப் பணம் வேண்டும்: நாட்டு மக்களின் கல்வி, சுகாதாரம், விவசாயம், வர்த்தகம், நாட்டின் இராணுவப் பாதுகாப்பு என்னும் இன்னுேரன்ன வற்றுக்கான பிரமாணங்களை அநுட்டானத்துக்குக் கொண்டு வரவேண்டுமானல் பணம் இன்றியமையாதது. நாட்டிற்கு வேண்டிய பொருள்களை வாங்கவும், நாட்டின் சேவா சாதனங் களை ஆக்கிப் பேணவும் பணம் வேண்டும். இங்கிலாந்தின்
1. Treasury.

Page 213
4 14 இங்கிலாந்தின் அரசாங்கம்
இராணுவப் பாதுகாப்பை ஒரு உதாரணத்துக்கு எடுத்துக் கொள்ளுவோம். தரைப்படை, கடற்படை, ஆகா சப்படை என்னும் முத்திறப்படைகள் அங்கே உண்டு. அவற்றில் உள் ளார் வாளா கையைக் கட்டிக் கொண்டிருந்தால் பாதுகாப்புக் கருமம் நடைபெறுமா? பலவிதமான துப்பாக்கிகள், தாங்கி கள், மோட்டார் வாகனங்கள் என்பன வேண்டும். இவற்றைப் பெறப் பணம் வேண்டும். கடற்படைக்குப் பல திறப்பட்ட கப்பல்கள் வேண்டும். ஆகா சப்படைக்குப் பலவிதமான விமானங்கள் வேண்டும். இவற்றைச் செய்வதற்கு எத்தனை யோவிதமான உபகரணங்கள் வேண்டும். அவ்வுபகரணங் களைக்கொண்டு தொழிலாற்றும் தொழிலாளருக்கு வேதனம் கொடுக்கவேண்டும். தரைப்படை வீரருக்கும், கடற்படை மாலுமிகளுக்கும், ஆகா சப்படை விமானிகளுக்கும் வேத ன மும் உடைகளும் வழங்க வேண்டும். வீரர்களுக்குப் பயிற்சிக் கழகங்களும், மாலுமிகளுக்குப் பயிற்சிக் கப்பல்களும் அமைத் துக்கொடுத்தல் வேண்டும். அவர்களுக்கு நல்ல போதிய பயிற்சி அளிக்கவேண்டும். யுத்தம் நேர்ந்தால், யுத்த தள பாடங்கள் அபரிமிதமாக வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் பணமே வேண்டும். ஆகவே போதிய பண வருவாய் இல்லாத எந்த அரசாங்கமும் இயங்க மாட்டாது என்பது தெளிவு. இந்தப்பணத்தை எங்கிருந்து பெறுவது? ஒரு அரசாங்கம் மக்க ளின் நன்மைக்காகவே இருக்கிறது. அம்மக்களிடம் இருந்தே அவர்களின் நன்மைக்கான இவ்விடயங்களின் பொருட்டுச் செலவிடப் பணமும் வர வேண்டும். ஆகவே அவர்கள் மீது வரி விதித்தல் அத்தியாவசியகமாகிறது. சனநாயகம் என்பது மக்களாலான, மக்களுக்குள்ள, மக்களின் அரசாங்கமே என்று நாங்கள் படித்திருக்கிருேம். எனவே பாராளுமன்றமும் அம் மக்களிடமிருந்தே செலவுக்கு வேண்டிய பணத்தைப் பெற்று, அச் செலவுக்கு வழங்கி, அவ்வாறு வழங்கப்படும் பணம் சரி யான முறையில் செலவழிக்கப்படுகிறதா என்பதனையும் மேற் பார்வை செய்து கட்டுப்படுத்தும். தனக்குத் தேவையான பணத்தை பிரித்தானிய அரசாங்கம் எவ்வாறு பெறுகிறது என்பதனை இனி ஆராய்வோம்.
ஒவ்வொரு ஆண்டினதும் பெப்ருவரி (மாசி) அல்லது மார்ச் (பங்குனி) மாதத்தில், பிரித்தானிய அரசாங்க மந்திரி மார் தத்தம் பகுதிகளுக்கு அடுத்த ஆண்டில் வேண்டிய செலவு பற்றிய உத்தேசச் செலவுத் திட்டம் ஒன்றை விபரமாகத் தனித் தனி தயாரிப்பர். இவ்வாறு தனித் தனியாகத் தயாரிக் கப்பட்ட திட்டங்கள் எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து, அர சாங்கச் செலவுத்திட்டத்தை நிதி மந்திரி தயாரிப்பார். அடுத்த ஆண்டிலே எவ்வளவு பணம் தேவையாகும் என்பதை

இங்கிலாந்தின் அரசாங்கம் 415
அத்திட்டம் காட்டும். இனி, இந்தச் செலவுக்கு வேண் பி-41 பணத்தை எவ்வாறு பெறுவது என்பதை மந்திரி மார் மிகவும் நுணுக்கமாக ஆராய்வர். இப்படி ஆராய்ந்து முடிந்த" நிதி மந்திரியானவர் ஒரு வரவு செலவுத் திட்டத்தைத் தயா ரித்துப் பாராளுமன்றத்திற் சமர்ப்பிப்பார். நாட்டின் தேவிை களைப் பூர்த்தியாக்க ஏற்படும் செலவு, அச்செலவினச் செய் வதற்கு வேண்டிய பணத்தை எவ்வாறு பெறுவது என்னுமி விபரங்களைக் காட்டுவதே வரவு செலவுத் திட்டமாகும்" சட்டபூர்வமாகக் கூறுமிடத்து, வரவுசெலவுத் திட்டம் என்1 தி தேவைகளுக்கு வேண்டிய பணக்கோரிக்கை ஆகும். * முடி பணம் வேண்டும் என்று கேட்கிறது: பொதுமக்கள் சபை அக்கேள்விக்கிணங்கி அப்பணத்தை வழங்குகிறது. ஆனல் பணம் தேவை எனத் தான் கண் டால் ஒழியப் பொது மக்கள் சபை அப்பணத்தை அநுமதிக்க மாட்டாது. அதுவுமன்றி, வரி விதிப்பது அல்லது ஏற்கெனவேயுள்ள வரியை யதிகரிப் Lது, பொதுசன சேவை க்கு ஆவசியம் என்று முடியானது தனது அரசியல் ஆலோசகர்கள் மூலமாக அறிவித்தால் ஒழிய அவ்வரி விதிப்பதை அல்லது ஏற்கெனவேயுள்ள வரியை அதி கரிப்பதை பொதுமக்கள் சபை அநுமதிக்க மாட்டாது’.
முடியானது தனக்குப் பணம் வேண்டும் என்று கேட்பதன் அர்த்தம் என்ன? இங்கே முடி என்பது மன்னரையும் மன்னர் மூலமாக அரசாங்கத்தையும் குறிக்கிறது. அரசாங்கத்தின் நிரந்தர சேவைகளுக்கும் பொதுசன நன்மைக்கான புதுத் திட்டங்களுக்கும் பணம் வேண்டியதாக இருக்கிறது. தனக்கு வேண்டிய பணம் எவ்வளவு, அது எவ்வெவ்வாறு செலவழிக் கப்படும் என்பதை அரசாங்கம் பொதுமக்கள் சபையில் விபர மாக எடுத்துக்காட்டும். இப்படியாக எடுத்துக் காட்டப்படும் உத்தே சச் செலவுத் திட்டத்தைப் பொதுமக்கள் சபை உதவு கருமச்சபை2யாக மாறிப் பரிசீலனை செய்யும். ஒவ்வொரு செலவினமும் மிகவும் நுணுக்கமாக ஆராயப்படும். ஆனல் குறித்த ஒரு மந்திரியின் பரிபாலனக் கொள்கையில் அபிப் பிராயபேதம் ஏற்பட்டால்தான் இந்தக் கருமச்சபையில் விவா தம் நிகழும். உதாரணமாக, தொழில் மந்திரியின் கொள்கை யில் தொழிற் கட்சி அதிருப்திப்பட்டால், அவருடைய செல வினங்களைக் கண்டித்து அக்கொள்கையிலே தீவிரமான மாற் றம் செய்யவேண்டும் என்று முடிவுசெய்யும். இவ்வாரு க உதவு கரு மச்சபை முறையில் செலவினங்களை நன்கு ஆராய்ந்த
1. Chancellor of the Exchequer: 35u 60Já disco,g,603 g526) aust 67.07
றும் கூறுவர்.
2. Committee on Supplies.

Page 214
4 6 இங்கிலாந்தின் அரசாங்கம்
பின், முழுச்சபையும் வழிவகை காண் சபையாக மாறிவர வினங்களை ஆராயும். இச்சபையிலே, நிதி மந்திரி செலவுக்குத் தேவையான பணத்தை எவ்வாறு அறவிடுவது என்பதுபற்றி அளித்துள்ள ஆலோசனைகள் ஆராயப்படும். வரவுசெலவைச் சரிப்படுத்துவது பற்றி அவர் வகுத்துள்ள திட்டமும் பரிசீலனை செய்யப்படும். ஆலோசனைச்சபை முறையில் வரவு செலவுத் திட்டம் ஆராயப்பட்டபின்னர், மூன்ரும் முறையாக அது பாராளுமன்றத்திற் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும். மூன்ரும் முறையும் வரவுசெலவுத்திட்டம் பொதுமக்கள் சபை யில் நிறைவேறுமானல் பரிபாலனத்துக்கு வேண்டிய பணம் உதவும் கருமம் நிறைவேறியது என்று சொல்லலாம். ஆனல் வரவு செலவுத்திட்டத்தைப் பாராளுமன்றம் நிராகரிக்குமா ல்ை, அரசாங்கம் பதவியைவிட்டு விலகிவிடும். அரசாங்கக் கட்சியினரே பெரும்பான்மையினராகப் பொதுமக்கள் சபை யில் இருப்பரானமையினுல் இப்படி நடத்தல் அரிது; இதுவரை கூறியதிலிருந்து பாராளுமன்றமே நாட்டின் அரசியல், சமு தாயம், பொருளாதாரம்பற்றிய சகல சட்டங்களையும் ஆக்கித் தேசபரிபாலனத்தை நடாத்தும் என்பது தெளிவாகிறது.
3. மந்திரசபை
பாராளுமன்றச் சனநாயகத்தின் நாலாவது சாதனம் மத்திர சபையே. மந்திர சபையை ஆங்கிலத்தில் ‘கபினெற்’ என்பர். " கபினெற்’ என்ருல் ஒரு சிறிய அறை என்பது அர்த்தம். ஒரு சிறிய அறைக்குள் இருந்தே முற்கால பிரித் தானிய மந்திரிமார் தம் ஆலோசனைகளை நடத்தினர். எனவே மந்திர சபைக்கும் கால கதியில் கபினெற்’ என்ற பெயர் ஏற்பட்டது. மந்திர சபையே, இன்று இங்கிலாந்தின் பரிபா லனத்திற்குப் பொறுப்பாகவுள்ளது. பாராளுமன்றம் அங்கீ கரிக்கும் கொள்கையை நடைமுறைக்குக் கொண்டுவரும் பொறுப்பு மந்திர சபையினதே. சுருங்கக் கூறுங்கால் பயன்றரு முறையில் கருமம் ஆற்றும் சாதனமே மந்திரசபையாகும்.
மந்திரசபையில் சாதாரணமாக 20 அங்கத்தவர்கள் உளர். இம் மநதிரி மார் அரசாங்கத்தின் பிரதான பகுதிகள் ஒவ் வொன்றுக்கும் பொறுப்பதிகாரியாக விருப்பர் ஆனல், அர சாங்கப் பகுதிகளின் பொறுப்பதிகாரிகள் எல்லாரும் மந்திர சபையில் அங்கம் வகிப்பதில்லை என்பதனையும் நாம் குறித்துக் கொள்ளுதல் வேண்டும். குறைந்த பட்சம் மூன்று மந்திரிமா ராவது பிரபுக்கள் சபை யங்கத்தவராயிருக்கவேண்டுமென்பது இப்போதைய விதி. ஆனல் இவ்விதி முறையானதா என்பது
l. Committee of Ways and Means.

இங்கிலாந்தின் அரசாங்கம் 41 7
ஆட்சேபத்துக்கிடமானது. தேசத்துக்கு வேண்டிய கருமங்கள் பற்றிய தீர்மானங்கள் யாவும் பொதுமக்கள் சபையிலேயே செய்யப்படுவன. ஆகவே, அச்சபையிலேயே மந்திரி மார் அனை வரும் அங்கத்தவராயிருத்தல் வேண்டும். ஒரு மந்திரியானவர் பிரபுக்கள் சபை அங்கத்தவராயிருப்பின் அவர் இருவிதமான பொறுப்புக்களை ஏற்று நடாத்தி அதன் பயனுக இடைஞ்சற் பட வேண்டும். பொது மக்கள் சபையிலும், பிரபுக்கள் சபையிலும் நிகழும் விவாதங்களில் அவர் முக்கிய பங்கு பெறவேண்டி யேற்படும். இதனுல் அவருக்கு அதிக வேலை யளிக்கப்படுகிறது. சில சமயங்களில் அவர் தனது உதவி மந்திரியாகப் பொது மக்கள் சபை அங்கத்தவர் ஒருவரை நியமித்துக் கொள்ளக் கூடும். தனக்குப்பதிலாக இந்த உதவி மந்திரி பொதுமக்கள் சபையில் கருமம் ஆற்றலாம் என்று அவர் கற்பித்தாலும், இந்த ஒழுங்கு அவ்வளவு திருப்திகரமானதன்று என்றே கூற வேண்டும். கீழ் ச் சபையில் விவாதங்கள் நிகழும்போது மந்திரியே அவற்றுக்குப் பதில் சொல்வது உசிதம் : ஒரு மந்திரியின் கூற்றுக்கிருக்கும் மதிப்பு ஒர் உதவி மந்திரியின் கூ ற் று க்கு இருக்க மாட்டாது. ஒரு மந்திரி கேள்வி களுக்கு விடை யளிப்பதுபோல, உதவி மந்திரி விடையளிப்பது முக்கியத்துவமும் கொடுக்காது.
மந்திர சபை என்பது பயன்றரு முறையில் கருமம் ஆற்றும் சாதனமாகும். அதன் பிரதான கருமங்கள் யாவை என்பதனை இனி ஆராய்வோம் நாட்டுக்கு வேண்டிய பிரதான கொள் கைத் திட்டங்களை அது ஆரம்பித்து அநுட்டானத்துக்குக் கொண்டுவரும். உதாரணமாக, அந்நிய நாட்டு விவகார மந்திரியின் பொதுக்கொள்கையை அது விவாதித்து ஆதரிக் கும். ஆனல், பொதுமக்கள் சபை இந்தக் கொள்கையை ஆதரிக்காது எதிர்க்க, மந்திர சபை குறித்த அந்நிய நாட்டு மந்திரியின் கொள்கையே சரி என்று ஆதரித்தால், அம்மந்திர சபை பதவியைவிட்டு விலங்கிவிடும் , அல்லது ஒரு பொதுத் தேர்தல் நடத்தி, வாக்காளரின் அபிப்பிராயம் என்ன என்பதை அறியும். அப்படியான ஒரு பொதுத் தேர்தலில் வாக்காளர் மந்திர சபை அநுட்டித்த கொள்கையே சரி என்று அக்கட்சி யங்கத்தவர்களையே பெரும்பான்மையினராகத் தெரிவுசெய்து அனுப்பினல், மந்திர சபை மீண்டும் பதவியிலமர்ந்து தனது முந்திய கொள்கையைத் தொடர்ந்து அநுட்டிக்கும். சில சம யங்களில் மந்திர சபை பொதுத் தேர்தலை விரும்பாமல் குறித்த அந்த மந்திரியின் கொள்கைக்கு ஆதரவைக் கொடாமல் விடும். அப்படியானபோது அம்மந்திரி தம் பதவியிலிருந்து விலகுவார். ஒரு மந்திரி தனது கொள்கைக்கு வேண்டிய ஆதரவை
3248-P

Page 215
4 18 இங்கிலாந்தின் அரசாங்கம்
மந்திர சபை யளிக்கவில்லை எனக் கண்டாலும், தம் பதவியை விட்டு விலக வேருெ ருவர் அவரிடத்துக்கு நியமிக்கப்படுவார். மந்திர சபை கூட்டுப்பொறுப்பு வாய்ந்தது. அரசாங்கக் கொள்கை முழுவதுக்கும் மந்திர சபை ஒரு கோஷ் டியாகப் பொறுப்பாக இருக்கும். ஆனல் ஒரு மந்திரி தனக்கு விருப்ப மில்லாத கொள்கையை அநுட்டிக்க நிர்ப்பந்திக்கப்படுவார் என்பது இதன் அர்த்தம் அன்று. ஒரு குறித்த கொள்கையில் அவருக்கு விருப்பம் இல்லாவிட்டால் அவர் அதனை வெளி துறந்து மந்திர சபையிற் கூற அவருக்குப் பூரண சுதந்திரம் உண்டு. அவரது அபிப்பிராயத்தை " மந்திர சபை ஏற்றுக் கொண்டால் தான், அக்கொள்கைக்கு மந்திர சபை முழுவதும் பொறுப்பாகும்.
பாராளுமன்றத்தில் நிகழும் விவாதங்களை ஒழுங்கு செய் யும் பொறுப்பும் மந்திர சபையினதே. எந்த விவாதத்தை முதன் முதலாகக் கொண்டுவர வேண்டும் என்பதனை அது எதிர்க் கட்சித் தலைவருடன் கலந்தாலோ சித்து ஒழுங்கு செய் யும். பிரதானமான சட்டங்களை வகுத்தல், எடுத்தாளல், அவற்றை நிறைவேற்றல் என்னும் கருமங்களையும் மந்திர சபையே செய்யும். பொதுப் பணம் செலவு செய்வது பற்றிய எந்த மசோதாவையும் மந்திர சபையில் உள்ளார்தான் எடுத் தாளலாம்.
அரசாங்கத்தின் பல்வேறு பகுதிகள் பரிபாலன விடயமாகப் பரஸ்பரம் மாறுபடும் இடத்து அப்பிணக்கைத் தீர்த்து வைக்கும் உயர்தர நீதிமன்றம் போன்ற தாபனமும் மந்திர சபையே. அரசாங்கத்தின் பிரதான பகுதிகளுக்கு மந்திரிமாரே தலைவர் என்று நீங்கள் ஏற்கெனவெ படித்திரு கிறீர்கள். இப்பகுதிகளுக்கிடையே சில சமயங்களில் பரஸ் பரம் மாறுபாடு ஏற்படுவதும் உண்டு. அப்படியான பிணக்கு ஏற்படும் காலத்தில், அதனைப்பற்றி மந்திர சபை ஆராய்ந்து ஒரு முடிவு செய்யும். அரசாங்கத்தின் பல்வேறு பகுதிகளின் கருமங்களை பரஸ்பரம் மாறுபாடில்லாது ஒரோ வழிப்படுத்த மந்திர சபை சிறந்த சாதனமாக விளங்குகிறது. இவ்வாறு ஒரோ வழிப்படுத்தும் தன்மையினல்தான் அரசாங்கப்பகுதி கள் ஒன்ருே டொன்று மாறுபாடில்லாது பரிபாலனக் கருமங் களை ஆற்றுகின்றன. அரசாங்கத்தில் எத்தனையோ விதமான பகுதிகள் இருக்கின்றன. உதாரணமாக, விவசாயப்பகுதி, கல்விப்பகுதி, சுகாதாரப்பகுதி என்பன உள. இவை பரஸ் பரம் மாறுபாடில்லாது தத்தம் கருமங்களைச் செவ்வனே ஆற்ற அவற்றுக் கிடையே பிணக்கு இல்லாது ஒற்றுமை நிலவ
l. Collective Responsibility.

இங்கிலாந்தின் அரசாங்கம் 419
வேண்டும். அவற்றின் கருமங்கள் ஒன்ருே டொன்று தொடர் புடையனவாய் இருத்தல் வேண்டும். அவற்றின் பரிபாலனக் கருமங்களை ஒரோ வழிப்படுத்தி அவற்றை நல்முறையில் இயக் குவது மந்திர சபையேயாம். மந்திர சபையை ஒரு விளை யாட்டுச் சங்கத்துக்கு ஒப்பிடலாம். ஒரு விளையாட்டுச் சங்கத் திலே பலவிதமான விளையாட்டுக்களுக்கு வெவ்வேறு பகுதிகள் உள. ஒரு பகுதியில் உதைப் பந்தாட்டம்: இன்னேர் பகுதியில் எறிபந்தாட்டம் வேருேர் பகுதியில் ரென்னிஸ் பந்தாட்டம். இப்பகுதிகள் அனைத்தும் கிரமமாக நடைபெற்ருல்தான் விளையாட்டுச் சங்கம் அபிவிருத்தியடையும். சங்கத்தின் பணம் எல்லாப் பகுதிகளுக்கும் ஏற்றத் தாழ்வின்றிப் பிரித்துக் கொடுக்கப்படும். எல்லா விளையாட்டுக்களுக்கும் சமபங்கான உற்சாகம் கொடுக்கப்படும். ஒன்றைப் புறக்கணித்து இன் னென்றை அபிவிருத்தி செய்யச் சங்கம் முன்வரமாட்டாது. இதுபோலவே இங்கிலாந்தில் உள்ள மந்திர சபையும் அர சாங்கக் கருமங்களை இயக்குகிறது. அரசாங்கத்தில் ஏதும் பிழை நிகழ்ந்தால் அதற்குப் பொறுப்பாளி மந்திர சபையேயாகும்.
மந்திர சபையின் தலைவரே பிரதமமந்திரி. அரசாங்கக்கரு மத்தை நடாத்தும் கோஷ்டியின் தலைவர் அவர்தான். அவரே கோஷ்டிக்கு வழிகாட்டி நடத்துபவர். பிரதானமான எல்லா விடயங்களிலும் அவருடைய அபிப்பிராயமே செல்வாக்குடை யதாயிருக்கும். தலைவராயுள்ள பிரதம மந்திரியின் அபிப்பிரா யமே கடைசியில் தீர்மானமாக வரும். எனவே மந்திர சபை என்பது ஒரு கோஷ் டியாகவே வேலை செய்யும். பிரதம மந் திரியே கடைசித்தீர்ப்பு அளிப்பார். மந்திரிமாருக்கிடையே கொள்கை விடயமாக அபிப்பிராய பேதம் அல்லது சந்தேகம் ஏற்படுமிடத்துப் பிரதம மந்திரி எத்தீர்ப்பளிக்கின்றரோ அத் தீர்ப்பின்படியே கருமம் நடக்கும். பிரதம மந்திரியின் அபிப் பிராயத்தை ஒரு மிகவும் பிரதானமான அல்லது மூலாதார மான கொள்கை விடயத்தில் ஏனைய மந்திரிமார் ஒத்துக் கொள்ளாவிடத்து அம்மந்திரி மார் பதவியைவிட்டு விலக வேண்டும் என்று அவர் கோரி அப்படியே செய்விப்பார். தேச நிருவாகத்தை நடாத்தும் அரசாங்கத்தின் மத்திய, பிரதான சாதனமாக மந்திர சபை இருப்பதைப்போல, மந்திர சபையின் பிரதான சாதனகர்த்தாவாக பிரதம மந்திரி இருப்பர். இவ் வாறு பிரதம மந்திரிக்கு அதிக பொறுப்பிருப்பதால், மந்திர சபைக் குக் கூட்டுப்பொறுப்பு இருக்கிறது என்று கூறுவதில் அர்த்தமேயில்லை என்றும் சிலர் வாதிக்கலாம். ஆனல் மந்திர சபைக் கிடையே பூரண ஒற்றுமை நிலவு தற்கும் அதில் உள்ள வர்களை ஒரு கோஷ் டியாக்கி இயக்குதற்கும் அவர்களை

Page 216
420 இங்கிலாந்தின் அரசாங்கம்
அரசாங்கப்பரிபாலனக் கைங்கரியங்கள் விடயமாக ஒரோ வழிப் படுத்தற்கும் பிரதம மந்திரி என்பவர் இன்றியமைதாய ஒரு கர்த்தா என்பது சிறிது உற்று நோக்குங்கால் புலணுகும்.
மந்திர சபை என்பது ஒரு சர்வாதிகாரக் குழுவென்றும் அது தன் கொள்கைகளையும் அபிப் பிராயங்களையும் நாட்டின் மீது திணிக்கின்றது என்றும் இப்போது சில காலமாகக் குற்றம் சாட்டப்பட்டுவருகிறது. மந்திரசபை அதிகாரம் படைத்துத் தன் கொள்கையை அதிகாரரீதியில் நாட்டில் அநுட்டிக்கிறது என்பது மெய்தான். ஆனல் வாக்காளர் அதன் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறபடியால்தான் அப்படி யான அதிகார பதவியை அது பெற்றுள்ளது என்பதனையும் வாக்காளரையும் பாராளுமன்றத்தையும் மீறி அது ஒன்றும் செய்யமுடியாது என்பதனையும் நாம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். மந்திர சபை சட்டங்களை ஆக்கி அவற்றை அநுட்டானத்துக்குக் கொண்டுவரலாம்: ஆனல் அச்சட்டங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். இதுபோலவே பிரதம மந்திரியின் அதிகார அந்தஸ் தும் அவர் மீது அவரது கட்சியும் நாட்டின் வாக்காளரும் வைத்துள்ள நம்பிக்கையாலேயே ஏற்பட்டது. மந்திரிகள், பிரதம மந்திரி என்பார் அதிகார பதவியை எய்தினல் அதற்கு அவர்களின் ஞானத்தில், திறமையில், அநுபவத்தில் வாக் காளர்-அதாவது தேசம்-வைத்துள்ள நம்பிக்கையும் விசு வாசமுமே காரணமாகும்.
‘ஒரு அரசாங்கம் முழுவதையும் இயக்குதற்கு என ஒர் மத்திய நிருவாக அமைப்பு இருக்கவேண்டியது ஆவசியகம். இந்நிருவாக அமைப்பு சர்வ அதிகாரமும் பெற்றுள்ளதாக இருக்கவேண்டும். ஒரு தொகை அங்கத்தவர்கள் பொதுசனங் களால் தெரிவு செய்யப்பட, அவ்வங்கத்தவர்கள் தங்களுக்கு குள்ளே ஒரு கோஷ்டியைத் தெரிவுசெய்யும் முறையில் இந் நிருவாக அமைப்பு இருக்கவேண்டும். அந்த முறைதான் மிகவும் சிறந்தது. இந்த முறையில் அமைக்கப்படும் நிருவாக சபை அல்லது மந்திர சபை அதிகம் சிக்கல் இல்லாதது. அது தன் கருமங்கள் யாவற்றுக்கும் கூட்டுப்பொறுப்பினை வகிக்கும்; பிரதம மந்திரி என்பவரின் அதிகார அந்தஸ்தினுல் மந்திர சபைக்குள் ஒற்றுமையும் ஒத்துழைப்பும் உண்டாகும். மந்திர சபையில் உள்ளார் அனைவரும் ஏகோபித்தே கருமம் ஆற்றுவர். அவர்களுக்கிடையே அபிப்பிராயபேதம் நிலவுமானல், பிரதம மந்திரியின் தீர்மானமே முடிவானதாகும். அபிப்பிராயபேதங் களையும் சந்தேகங்களையும் தீர்த்துவைப்பதும் அவரது தீர்ப் பேயாகும். அவருடைய அபிப்பிராயப்படியே கொள்கையும்

இங்கிலாந்தின் அரசாங்கம் 42 I
உருவாகும். அவர் தான் பிரதானமானதெனக் கொள்ளும் ஒரு விடயத்தில் மற்றும் மந்திரி மார் ஒத்துக்கொள்ளாவிட் டால் அவர்களைப் பதவியினின்றும் விலகச் சொல்லிக் கட்டளை யிடுவார். அரசாங்கத்தின் பிரதானமான நிருவாகச் சாதன மாக மந்திர சபை விளங்கும் தன்மையில், அம்மந்திர சபையின் பிரதான நிருவாக அதிகாரியாகப் பிரதம மந்திரி விளங்கு 6)IIT ri .

Page 217
பிரித்தானியப் பாராளுமன்றம்
அதன் அமைப்பு, கருமங்கள், கருமமுறை என்பவை
பற்றிய பொழிப்பு
முன்னுரை
இங்கிலாந்தில் தோன்றிய தாபனங்களில் பாராளுமன்ற அர சாங் கம் அதி முக்கியமானது. பிரதிநிதித்துவத்துடன் பொறுப்பினைக் கொண்டதே பாராளுமன்ற அரசியல்முறை. பெரும்பான்மையினரின் அபிப்பிராயப்படிதான் கருமங்கள் நடக்கிறபோதிலும், சிறுபான்மைக் கட்சி தனது அபிப்பிராய யத்தை வெளிறுறந்து கூறவும், தான் செலுத்த வேண்டிய செல்வாக்கை பரிபாலனக் கருமங்களில் செலுத்தவும் இப் பாராளுமன்ற முறையிலே சந்தர்ப்பங்கள் உண்டு. Zم"
இங்கிலாந்திலே சர்வசன வாக்குரிமை முறை இருக்கிறது. இதனுல் ஒவ்வொரு ஆங்கிலப் பிரசையும் தனது பாராளு மன்றத்துப் பிரதிநிதியாகத் தான் விரும்பியவரை சர்வ சுவா தீனத்துடன் இரகசியமுறையில் காலந்தோறும் தெரிவு செய்து கொள்ளுதற்கு உரிமையுண்டு. ஆகவே ஒவ்வொரு பிரசைக்கும் அங்கே சமசந்தர்ப்பமும், சமபொறுப்பும் உண்டு. இப்படி யான பாராளுமன்ற அரசியன் முறையானது பன்னுாற்ருண்டு காலம் இயங்கி உறுதிகொண்டிருக்கிறது. அவ்வுறுதியுடன், காலத்துக்கேற்ற தன்மையில் வசையக்கூடிய இயல்பையும் அது தன்னகத்தே கொண்டிருக்கிறது. பண்டு தொட்டிருந்து வரும் ஆடம்பரக்கிரியைகள் இப்பாராளுமன்ற அரசியன் முறையில் இருக்கின்றன தான்: அவை தகாதன என்று சொல்லவும் முடியாது. இப் படி யா ன ஆடம்பரங்கள், கிரி  ைய கள், வைபவங்கள் எல்லாம் அதனுடன் தொடர்பு கொண்டிருந்த போதிலும், பிரித்தானியப் பாராளுமன்றமானது, பயன்றரு விதத்தில் கருமமாற்றத்தக்க திறமையான சாதனம் என்பதை உறுதியாகக் கூறலாம். கட்சிமுறை
இங்கிலாந்தின் பாராளுமன்றச் சனநாயகத்தில் கட்சி முறையென்பது இணைபிரியாத ஒரு அம்சமாகிவிட்டது. ‘பிரதி நிதித்துவபரிபாலனக் கொள்கையிலே கட்சி அரசியல் என்பது சீவாதாரமானது” என்ருர் பேஜொட் என்ற அரசியலமைப்புச்
l. Bagehot.

பிரித்தானியப் பாராளுமன்றம் 423
சரித்திரவாசிரியர். அது மாத்திரமல்ல: அரசியற் சுவாதீனத் தின் பகிரங்கமான, சீவாதாரமான எடுத்துக்காட்டுமாகும் அது. அரசாங்கம் என்பது நடைபெறுதற்கு வேண்டிய மூலா தாரக் கொள்கைகள் விடயமாக பரஸ்பரம் ஒற்றுமை உடை யாரைக் கொண்டதுவே ஒரு கட்சியாகும். சாதாரணமாக கட்சிகள் பல விருக்கலாம்: ஆனல் இங்கிலாந்தின் அரசியல் இரு பிரதான கட்சிகளிலேயே தங்கியிருக்கிறது; ஒன்று அரசாங்கக் கட்சி; மற்றது எதிர்க் கட்சி: உறுதியான அரசாங் கம் ஒன்றை அமைக்கக்கூடிய ஒரு கட்சிக்கேதான் தம் வாக் குரிமையைச் செலுத்துகிருர்கள் என்ற உணர்ச்சி பிரித் தானியருக்கு உண்டு. ஒரு அரசாங்கம் பதவி இழந்தால் அதற். குப்பதிலாக எப்படியான அரசாங்கம் அந்த இடத்துக்கு வரும் என்பதனையும் அறிய அவர்கள் விரும்புகிருர்கள். ஒரு கட்சி அரசாங்கத்தை அமைத்து அன்ருட பரிபாலனக் கருமங்களை நடாத்த மற்றக் கட்சி உத்தியோ கபூர்வமான எதிர்க்கட்சி யாக விளங்குகிறது. இந்த எதிர்க்கட்சியும் எதிர்ப்பதற்காக மாத்திரமே உள்ளதன்று அதற்கென ஒரு தலைவர் உளர்: எதிர் கட்சித் தலைவர் என்ற நியதியில் அவருக்கு ஒரு பெருந்தொகைச் சம்பளம் அளிக்கப்படுகிறது. அது மாத்திர மன்று: அரசாங்கம் பதவியிழக்கும் நேரத்தில் பதவியை வகிக்க ஒரு மாற்று மந்திர சபையையும் எதிர்க் கட்சி தன்னகத்தே தயாராக வைத்துக்கொள்ளும். ஒரு பொதுத் தெரிவில் தெரிவு செய்யப்படும் பாராளுமன்றத்தின் காலம் ஐந்து ஆண்டு காலம் என்யது நியதியேயாயினும் அவ்வளவு காலத்துக்கும் அது இயங்கவேண்டும் என்பது இல்லை. இடையில் ஒரு பிர தா ன பிரச்சினை விடயமாக அரசாங்கம் தோற்றுவிட்டால் பாராளுமன்றம் கலைக்கப்படும். ஒரு அரசாங்கம் பதவியிழந் தால், அதனிடத்துக்கு இன்னேர் அரசாங்கத்தை அமைத்துப் பரிபாலனக் கருமத்தைத் தொடர்ந்து நடாத்தச் சாதனமாக இருப்பது எதிர்க் கட்சியே என்க.
மாட்சிமைதங்கிய மன்னரது எதிர்க் கட்சி?
ஆங்கில மக்களின் ஆரசியற் சுவாதீனத்துக்கு எடுத்துக் காட்டாகவுள்ள வெளித்தோற்றமே இங்கிலாந்தில் உள்ள கட்சி முறையாகும். இங்கிலாந்திலே உள்ள யாரும் எவ் விதமான அரசியற் கட்சியையும் தாபிக்கப் பரிபூரண சுதந்திரம் உடையவராவர். தமது அபிப்பிராயத்தை வெளிதுறந்து கூறவும், அவ்வபிப்பிராயத்தை உருவகப்படுத்தற்கான சங்கங் களை அமைக்கவும் பூரணமான சுவாதீனம் ஆங்கிலருக்கு உண்டு.
1. Shadow Cabinet.
2. His Majesty Opposition : 2 svovg இராணியினது எதிர்க் கட்சி.

Page 218
424 பிரித்தானியப் பாராளுமன்றம்
இங்கிலாந்திலே எதிர்க் கட்சியானது உத்தியோ கபூர்வ மாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது: அதற்குத் தனியான ஒரு மதிப்பும் உண்டு. அரசாங்கத்துக்குரிய முறைகள், கடமைகள் என்ன என்னவென்று எவ்வாறு தெளிவாக வகுக்கப்பட்டிருக் கின்றனவோ, அவ்வாரு கவே எதிர்க் கட்சிக்குள்ள முறையும் கடமைகளும் தெளிவாக வரையறுக்கப் பட்டிருக்கின்றன. யுத்தம் போன்ற சம்பவங்கள் நிகழும் சில நெருக்கடியான காலங்களில், ஆங்கிலர் தமது கட்சிப் பிரிவினையை விடுத்து கூட்டரசாங்கத்தை அமைத்து நடத்துவர் என்பது உண்மை தான். ஆணுல் இது அசாதாரண கால ஒழுங்கு சாதாரண காலங் களில் கட்சி முறையிலேயே அங்கு அரசாங்கம் நிறுவி நடாத் தப்படும். பிரித்தானியப் பாராளுமன்றத்து இரு சபைகளி லும் அங்கத்தவர்களாயினேர் வீற்றிருப்பதற்கான ஆசன வரிசையும் சிறப்பான ஒரு முறையில் ஒழுங்கு செய்யப்பட்டிருக் கிறது. அரசாங்கக் கட்சி அங்கத்தவர்கள் ஒரு பக்கமாக இருப்ப, அவர்களை எதிர்நோக்கி எதிர்க் கட்சியினர் இருப்பர். அவர்கள் கூடும் மண்டபமும் மிகவும் அகன்றதன்று: எதிர்க் கட்சியங்கத்தவர்களும் அரசாங்க கட்சியங்கத்தவர்களும் ஒருவரையொருவர் மிக நெருக்கமாக நோக்கி விடயங்களைக் கலந்து பேசுதற்கு வசதியாகவே அம்மண்டபமும் அமைந் துள்ளது. தேசப் பிரச்சினைகளைப் பற்றி அங்கே அங்கத் தவர்கள் பிரசங்கமாரி பொழிவதில்லை: அவர்கள் தம் வாய்ச் சாதுரியத்தைக் காட்ட அம்மன்றத்தை ஒரு பிரசங்கமேடை யாக்குவதுமில்லை. வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற முறையில் நியாயங்களை எடுத்துக் காட்டுவர். பிரச்சினைகளைச் சுருங்கச் சொல்லி லிளங்க வைப்பர். 1941 - ம் ஆண்டிலே பகை வரின் விமானத் தாக்குதலால் சேதமடைந்த பொதுமக்கள் சபைக் கட்டத்தைப் புநர் நிரு மாணம் செய்வது பற்றி அக் காலப் பிரதம மந்திரியாக இருந்த திரு. வின்ஸ்ரன் சேர்ச்சில் இது விடயமாகக் கூறியமை நோக்கற்பால து: அவர் கூறிய தாவது:-
* நிருமாணிக்கப்படும் சபா கூடம் வட்டமாகவிராது நீள மாக இருக்கவேண்டும்; எல்லா அங்கத்தவர்களுக்கும் இடம் வேண்டியதில்லை என்ற ஒழுங்கில் நான் திருப்திப்படு கிறேன். விவாதம் நடாத்துதல், கலந்துபேசுதல் என்ப வற்றில் அரசாங்கக் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்குமிடையே நெருங்கிய தொடர்பு இருத்தல் வேண்டும்; அவர்கள்
... Coalition Government. 2. பொதுமக்கள் சபை-House of Commons: பிரபுக்கள்சபை House of Lords.

பிரித்தானியப் பாராளுமன்றம் 425
தூரத் தூர இருப்பின் இத்தொடர்ப்பு இருக்காது; எமது பாராளுமன்ற நடைவடிக்கைகள், சர்வ சுவாதீனத்துடன் காரசாரத்துடனும் உத்வேகத்துடனும் கடந்த பல்லாண்டு காலமாக இருந்து வந்திருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் பங்கம் விளைக்காத முறையில் பாராளுமன்றச் சபா மண்ட பம் இருக்கப்போவதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்’ பாராளுமன்றத்தில் நடக்கும் விவாதங்களிலே அங்கத்த வர்கள் காரசாரமாகப் பேசுவர்தான். ஆனல் அவர்கள் விதி களுக்கு மிஞ்சிப்பேசார்கள். அத்துடன் ஒருவிதமான ஒத்து ழைப்பும் அவர்களுக்கிடையே உண்டு. பாராளுமன்றத்துக் கூட்டங்களின் விடய நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்வதில், அர சாங்கம் எதிர்க் கட்சியையும் உசாவியே வரும். எதிர்க் கட்சியின் விருப்பத்துக்கு விரோதமாக அரசாங்கக் கட்சி இவ் விடயத்தில் சாதாரணமாகக் கருமம் ஆற்றமாட்டாது. அர சாங்கத்தின் மீது ஒரு கண்டனத் தீர்மானத்தை எதிர்க் கட்சி எடுத்தாளுவதாக இருந்தால், அல்லது எதிர்க் கட்சி பிரதான மெனக் கருதும் ஒரு விடயத்தை விவாதிப்பதாக இருந்தால், அரசாங்கம் அத்தீர்மானம் விவாதிக்கப்படும், அல்லது விவா தம் நிகழ்த்தப்படும் திகதி, நேரம் என்பவைபற்றி எதிர்க் கட்சியுடன் கலந்தாலோசித்து ஒத்த முடிவு காணும் வழக்கம் இங்கிலாந்தின் அரசியன் முறையிற் பல காலமாக உண்டு. அரசாங்கக் கட்சியின் அநுசரணையில்லாமலும் ஏதேனும் ஒரு விடயத்தைப்பற்றி கேள்விகள் கேட்பதற்கு அல்லது விவாதம் நடாத்தற்கு எதிர்க் கட்சிக்குச் சந்தர்ப்பங்கள் உள. அந்நிய நாட்டுக்கொள்கை, பாதுகாப்புபோன்ற பிரதான விடயங்கள் பற்றிய பாராளுமன்ற நடைவடிக்கைகளை ஒழுங்கு செய்வதில் அரசாங்கக் கட்சித் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவரும் பரஸ்பரம் கூடி ஆலோசிப்பது அங்கே வழக்கம்.
ஒழுங்கு முறையான மாற்றங்களை அடைவதற்கு வேண்டிய ஆற்றல்.
இப்படியான மிதக்கொள்கையினையும், கேவலம் ஒரு தனி மனிதனுயினும் அவனது நலவுரிமைகளையும் சிறுபான்மையின ரின் உரித்துக்களையும் கணித்துக்கொள்ளுதலாய சமரச பாவத் தினையும் அடிப்படையாகக்கொண்டே இங்கிலாந்தானது தனது நீண்டகால அநுபவத்தால் உருவாய பாராளுமன்ற முறையைக் கொண்டு, ஒழுங்கு முறையான மாற்றங்களை படித் துறை அபிவிருத்தி முறையிற் பெற்றது. பழைய முறைகளை எல்லாம் பெருக்கித் தள்ளிவிட்டு புதிய முறைகளையே புகுத்த வேண்டும் என்ற கொள்கைத்திட்டம் பூண்டுள்ள ஒரு கட்சியே அரசாங்கத்தை நடாத்தத் தெரிவுசெய்யப்பட்டால், அவ்வா

Page 219
பிரித்தானியப் பாராளுமன்றம் 426ے
ருன திட்டம் அநுட்டிப்புக்குக் கொண்டுவரப்படும். அப்படி யான திட்டத்தை அமுல் நடத்துவதற்கு முன் பாராளுமன்றம் முழுவதும் அதனை விவாதிக்கச் சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும்.
மன்னர், பிரபுக்கள், பொதுமக்கள்
இங்கிலாந்தில் உள்ள அரசியன் முறையை பாராளுமன்றச் சனநாயக முறை அல்லது கலந்துபேசி முடிவுகாண் சனநாயக முறை என்று அரசியல் வல்லார் கூறுவர். வரம்புடை மன்னர் அல்லது இராணி அங்கு உண்டு. மன்னர் அல்லது இராணியின் பெயரால் அரசாங்கம் நடாத்தப்படும். ஆனல் அவருக்குப் பழைய காலத்தில் இருந்த பல அதிகாரங்கள் இப்போது இல்லை. 'பரிபாலன விடயங்களில் கலந்தாலோசிக்கப் படுதற் கான உரிமை, ஊக்கப்படுத்தும் உரிமை, எச்சரிக்கை செய்யும் உரிமை என்பனதான் மன்னருக்கு இன்றுள்ள உரிமைகள் என்று பேஜொட் என்பவர் கூறியமை ஈண்டுக் குறிப்பிடத் தக்கதாம்.
மன்னர்?
மன்னர், பிரபுக்கள், பொதுமக்கள் என்னும் முச் சாரா ரை யும் கொண்டதே பாராளுமன்றம்: ஆகவே, மன்னர் பாராளு மன்றத்தின் ஒரு இணைபிரியாத அங்கமாவர். அரசியலதி காரத்தின் தோற்றுவாய் அவர்தான் என்பது சட்டம். அவ ருடைய ஊழியர், ஆலோசகர் என்ற தன்மையில்தான் மந்திரி மார் பதவி வகிக்கின்றனர். மன்னரின் மந்திரிமார் என்ற நியதியில் தமக்குரிய பதவி முத்திரைகளை அவர்கள் மன்னரிட மிருந்தே பெறுவர். மன்னரின் பெயராலேயே, நீதிபதிகள் நீதிபரிபாலனம் செய்வதும், சட்ட அதிகாரிகள் சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதும்; படைகள் அனைத்தும் அவருடையதே. அர சாங்கக் கடிதங்கள் அனைத்தும் அவர் பெயராலேயே வழங்கப் படுகின்றன. அரசாங்கப் பகுதிகளின் அதிகாரிகள் தத்தம் பகுதிக்குரிய மந்திரிமா ருக்கன்றி மன்னருக்கே ஊழியர். ஏன்? பாராளுமன்றத்து எதிர்க்கட்சிதானும், மாட்சிமை தங்கிய மன்னரது எதிர்க்கட்சி என்றே சொல்லப்படுகிறது.
மன்னரின் பிரகடனத்தின்பேரிலேயே பாராளுமன்றம் கூடித் தன் கருமத்தில் இறங்கும். ஒவ்வொரு அயனத்தினதும் முதற்கூட்டத்துக்கு மன்னர் விஜயம் செய்து ஆரம்பித்து வைப்
பார். தமது அரசாங்கத்தின் கொள்கை என்னவென்பதை விளக்கும் மன்னர் பிரசாரணம் அவருடைய மந்திரிமாரால்
J. Bagehot.
2. அல்லது இராணி.

· 139-1 logo ao qī (ū işe qigo) u 111In

Page 220

பிரித்தானியப் பாராளுமன்றம் 427
எழுதிக் கொடுக்கப்பட, அதனை அவரே இதற்கெனவுள்ள சிம்மாதனத்தில் வீற்றிருந்து வாசிப்பார். பாராளுமன்றக் கூட்ட அயனக் கால முடிவில், மன்னர் சமுகமளிக்கும் வழக்கம் இப்போது இல்லை. ஆனல் அயன முடிவில் பாராளுமன்றக் கூட்டங்களைத் தவணையிடுவதுபற்றிய மன்னரின் பிரசாரணம் பிரபுக்கள் சபையில், அச்சபையின் சான்செலர்ப் பிரபு எனப் படும் முதல்வராலும் பொதுமக்கள் சபையில் சபாநாயகராலும் வாசிக்கப்படும். ஒரு மசோதா? வானது, சட்டமாக அநுட்டிப் புக்கு வரமுன்னர் மன்னரின் அங்கீகாரத்தைப் பெறுதல் வேண்டும்.
அரசர் ஆளுவதில்லை என்பது உண்மைதான். அவர் பரிபா லிப்பவர் மாத்திரமே அப்படி இருந்தும் இங்கிலாந்தில் அரசி யலிலே அவர் இணைபிரியாத ஒரு அங்கமாக எவ்வாறு விளங்கு கிருர் என்பது மேலே காட்டியனவற்றில் இருந்து புலப்படும்.
காலந்தோறும் ஏற்பட்ட அபிவிருத்தி
இங்கிலாந்தின் முடியாட்சி முறை இன்றைய நிலைகசூ, திடீர் மாற்றங்களால் வரவில்லை. பன்னூற்ருண்டு காலமாக நிகழ்ந்துள்ள மாற்றங்களின் காரணமாக அது இந்த நிலையை அடைந்துள்ளது. 18-ம் நூற்ருண்டின் ஆரம்பகாலத்தில் இங்கிலாந்தைப் பரிபாலிப்பதற்கென ஹனேவர் வம்ச அரசர்4 கொண்டுவரப்பட்டனர். அவர்களில் முதலாவது ஜோர்ஜ், இரண்டாவது ஜோர்ஜ் என்பவர்கள் ஆங்கிலம் தெரியாதிருந் தனர். ஆகவே அவர்கள் பரிபாலனக் கருமங்கள் பலவற்றைத் தமது மந்திரிமார் பொறுப்பில் விட்டனர். அவர்களுக்குப்பின் சிம்மாதனமேறிய மூன்ரு வது ஜோர்ஜ் அரசாதிகாரங்களை மீண்டும் நிலைநாட்டப் பகீரதப் பிரயத்தனம் செய்தான்: பிற்காலத்தில், விக்ரோறியா இராணியும் மந்திரிமார் கைப் பொம்மையாக விராது பல விடயங்களில் தமது சுயேச்சையை நிலைநாட்டினர் என்பது உண்மைதான். ஆனல் 19-ம் நூற்ருண் டில் அரசர் பரிபாலனக் கருமங்களில் தலையிடுவது மெல்ல மெல்ல வாகக் குறையலாயிற்று. அரசர் பரிபாலனக் கருமங் களில் முற்ருகத் தலையிடாது, அவற்றின் நிருவாகம் முழுவதை யும் தமது மந்திரி மாரின் அதிகாரத்தில் விட்டுள்ள இப்போ தைய நிலை ஐந்தாம் ஜோர்ஜ் மன்னரின் காலத்தில் ஏற்பட்டது.
1. Lord Ohancellor. மந்திரத தலைவர்: மந்திரப்பிரபு என்றும் வழங்குவர்.
2. Bill.
3. Act.
4. Kings of the Hanoverian Dynasty.

Page 221
尖2& பிரித்தானியப் பாராளுமன்றம்
* எல்லாரதும் மன்னர்’
எல்லாருக்கும் மேலானவராகவுள்ள மன்னர் அல்லது இராணி என ஒருவர் இருப்பது பொதுநலவமைப்புக்கும் பிரித் தானிய ஏகாதிபத்தியத்துக்கும் மிகவும் முக்கியமானது என்க. பொதுநலவமைப்பு நாடுகளை பரஸ்பரம் பிணிக்கும் தொடர் புச் சாதனமாக விளங்குபவர் அவர்தான். இந்தியா உட்படச் சகல நாடுகளும் பொதுநலவமைப்பின் தலைவர் அவரே என மதிக்கின்றன. பொதுநலவமைப்பைச் சேர்ந்த நாடுகள் ஒவ் வொன்றும் பரிபூரண சுதந்திரம் உடையன. தமக்கு வேண்டிய சட்டங்களைத் தமது இட்டப்படி ஆக்கவும் நீக்கவும் போர் தொடுக்கவும் சமாதானம் ஏற்படுத்தவும் சுவாதீனம் உடை யன. இந்தியக் குடியரசு, பாகிஸ்தான் என்பவற்றை ஒழிந்த ஏனைய பொது நலவமைப்பு நாடுகள் ஒவ்வொன்றுக்கும் ஒர் மகாதேசாதிபதி இருக்கிருர். அவர் அந்நாடுகளிலே மன்னர் அல்லது இராணியின் பிரதிநிதியாக இருக்கிருரேயல்லாது பிரித்தானிய அரசாங்கத்தின் பிரதிநிதியாக இருக்கவில்லை.
ஆகவே, முடி என்பது இங்கிலாந்தின் தேசீயவாழ்க்கைத் தொடர்ச்சிக்கும் பொதுநலவமைப்பு நாடுகளின் ஒற்றுமைக் கும் எடுத்துக்காட்டான வோர் சின்னம் என்று " கூறினும் பொருந்தும். அரசராயினேர் தம்முடைய மகத்தான பதவி காரணமாகவும் உந்நதமான வம்சவழி காரணமாகவும், புராதன காலம் தொடக்கம் இற்றைவரையுள்ள பிரித்தானிய தேசீய இனம் என்பதன் சரித்திரத்தின் பிரதிநிதியாவர் என்று அவரைப்பற்றி விபரிக்கப்பட்டிருக்கிறது. அவர் ஒரு கட்சி அல்லது குழுவின் தலைவரல்லர். அவர் ஒரு தேசீய இனத்தின் பிரதானி அத்துடன் பொதுநலவமைப்பின் தலைவர். அவர் பல்பூர் பிரபு கூறியாங்கு, ‘எல்லாரதும் மன்னர்' அவர் பொதுநலவமைப்பின் சகல மக்களுக்கும் உரியவர். எம் இராணியாக இப்போது விளங்கும் எலிசபெத்தின் தந்தையா ரான ஆருவது ஜோர்ஜ் மன்னரதும் அவர் பத்தினியாரதும் விவாகத்தின் வெள்ளி விழாக் கொண்டாட்டத்தின்போது பிரத மந்திரியாகவிருந்த திரு. கிளெமென்ற் அற்லி! இது விடயமாகக் கூறியது ஈண்டு குறிக் கற்பாலது. அவர் அப் போது கூறியதாவது:-
* பிரித்தானிய அரசியலமைப்பில் உள்ள முடி என்ற தாபனமானது ஒரே சகோதரத்துவ முறையில் பல்வேறு
1. Mr. Clement Attlee.

பிரித்தானியப் பாராளுமன்றம் 429
இன மக்களைப் பிணிப்பதாகும். இது கேவலம் ஒரு அருவமான தாபனம் அன்று: அரசர், இராணி, இளவரசி சிகள் என்பவர்களது உந்நதத் தோற்றங்கள் இந்தப் பிணிப்பை இன்னும் உறுதியாக்குவதாகும். எம்மெல்லா ரையும் ஒன்றுசேர்க்கும் வாழ்க்கை முறையின் எடுத்துக் காட்டாக எம் இராச குடும்பம் விளங்குவதை மக்கள் கண்டு பூரிப்படைகிருர்கள் . . . ஏனைய நாடுகளிலே முடி யாட்சிமுறை தலை கீழாகக் கவிழ்ந்துவிட்ட இக்காலத்திலே அம்முறை முன் ஒரு போதுமில்லாதவாறு எமது நாட்டில் உறுதியாக விளங்கிவருகிறது என்பது எங்கள் எல்லாருக் கும் சொல்லொணுப் பெருமை தரும் விடயமாகும்.
பிரபுக்கள்சபை
பரம்பரை முறையை ஆதாரமாகக் கொண்டு, இரண்டா வது மன்றமாக அமைக்கப்பட்டிருப்பதே பிரபுக்கள் சபை. இங்கிலாந்திலே சாக்சனியர் செல்வாக்குற்றிருந்த காலந் தொடக்கமாக இச்சபை இருந்து வந்திருக்கிறது. பொது மக்கள்சபையிலும் பார்க்க 400 ஆண்டுகளுக்குமுன் இது ஏற்பட்டது. 1950-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பிரபுக்கள் சபையில் 847 அங்கத்தவர்கள் இருந்தனர். இத்தொகை பின்வரும் விதத்தில் பிரிக்கப்பட்டிருந்தது.
இராசப் பிரபுக்கள் (இவர்கள் சபைக் கருமங்களிற்
பங்கு பற்றுவதில்லை என்ற மரபு உண்டு) 4 அதிமேற்றிராணிமார்2 . a a a 2
கோமக்கள்8 «X V 8 8 26
மார்க்குவீஸ்மார்சி - a a 38
ஏள் மார் 5 k e- 10 KO a - 168 வைக் கவுன்ற் மார் 8 a 99 மேற்றிராணிமார்? a - 24 பரன் மார் 8 8 as we 453
ஆயுட்காலப் பிரபுக்கள் (நீதி பரிபாலனம் விஷயமாக நியமிக்கப்படும் இவர்களது ஆயுட்காலம் வரைக்கே
இவர்கள் பிரபுக்களாக நியமிக்கப்படுவார்கள்).
l. Saxons. 5. Earls. - 2. Archbishops. 6. Wiscounts. 3. Dukes; இறைமக்கள் என்றும் சொல்வர். 7. Bishops. 4. Marquisses. 8. Barons.

Page 222
43 O. பிரித்தானியப் பாராளுமன்றம்
ஸ்கொத்லாந்துப் பிரநிதிகளான பிரபுக்கள் (9 ஏள்
மார், 1 வைக் கவுன்ற், 6 பரன்கள்) 1 6.
அயர்லாந்துப் பிரதிநிதிகளான பிரபுக்கள் (4 ஏள்
மார், 2 வைக் கவுன்ற் மார்) . . 62 மொத்தம் ` 8 4 73
அதிமேற்றிராணிமார், மேற்றிராணிமார் என்பவர்களது பிரபுப்பட்டம் பரம்பரை வழி செல்வதில்லை. அவர்களை ஆன் மார்த்தப் பிரபுக்கள் என்பர். ஏனையோரை லெளகீகப் பிரபுக்கள் என வழங்குவர்.
பொதுமக்கள் சபை நிறைவேற்றும் சட்டங்களை நிறை வேற்றும் வரம்பிலா அதிகாரம் பிரபுக்கள் சபைக்கு 1911-ம் ஆண்டுக்கு முன் இருந்தது. 19-ம் நூற்றண்டிலே, 1832-ம் ஆண்டுக்கும் 1893-ம் ஆண்டுக்குமிடையில் பிரபுக்களாயினேர் பொதுமக்கள் சபை இயற்றும் சட்ட நிரூபணங்களை எதிர்ப்பதி
1. 1706-ம் ஆண்டினது ஸ்கொத்லாந்தினுடன் ஐக்கியச்சட் (Union With Scotland Act) டம் நிறைவேற்றப்பட்டதன் பயனுக, பிரித் தானியப் பாராளுமன்றத்தில் ஸ்கொத்லாந்துப் பிரநிதிகள் என்ற தன்மையில் பிரபுக்கள் அநுமதிக்கப்படவில்லை. ஆனல் பின்னர் இயற்றிய சட்டத்தின் விளைவாக, ஸ்கொத்லாந்துப் பிரபுக்கள் தமக் கிடையிருந்து 16 பிரபுக்களைத் தம் பிரதிநிதிகளாக, ஒவ்வொரு பாராளு மன்றத்துக்கும் தெரிவு செய்துக்கொள்ளுவர்.
2. 1801-ம் ஆண்டினது இங்கிலாந்து-ஐயர்லாந்து ஐக்கிய சட்டத் தின் பயனக ஐரிஷ் பிரபுக்கள் தமக்கிடையிருந்து 28 பேரை பிரபுக் கள்சபையில் அங்கத்தவராக இருக்கத் தெரிவு செய்தனர். ஆஞல் 1922-ம் ஆண்டில் ஐரிஷ்சுவாதீன நாட்டு உடன்பாட்டுச்சட்டம் (Irish Free state Agreement Act) நிறைவேற்றப்பட்டதன் பின், ஐயர்லாந்துக்கென வேருகப் பிரபுக்கள் தெரிவு செய்யப்படுவதில்லை. இப்போது பிரபுக்கள் சபைபில் உள்ள 6 ஐரிஷ் பிரபுக்கள், 1922-ம் ஆண்டுக்கு முன் தெரிவு செய்யப்பட்ட வர்களில் எஞ்சி இருப்பவர்களே. ஒரு ஐரிஷ் பிரபு, ஐயர் லாநகின் பிரதிநிதி என்ற தன்மையில் இல்லாது, பிரித்தானியப்பொது மக்கள் சபை யங்கத்தவராகப் தெரிவு செய்யப்படலாம். உதாரணமாக வின்ரர்டன் பிரபு பிரித்தானியப் பொதுமக்கள் சபையில் இருந்திருக் &ტm?fi.
3. இங்கிலாந்தில் உள்ள சகல பிரபுக்களையும் இத்தொகை கொண் டதன்று. பிரதிநிதிததுவமற்ற ஐரிஷ் பிரபுக்கள், ஸ்கொத்லாந்து பிரபுக்கள், சீமாட்டிகள் என்பவர்கள், தம் சொந்த உரிமையில்" பிரபுப்பட்டம் தாங்கி இருக்கிருர்கள். அவர்கள் இததொகையில் சேர்க்கப்பட விேல்லை.
4. Lords Spiritual.
5. Fords Temporal.

பிரித்தானியப் பாராளுமன்றம் 431
லேயே ஈடுபட்டனர். இதில் அவர்கள் பல சந்தர்ப்பங்களில் அநுகூலமுமடைந்தனர். 1893-ம் ஆண்டில் அவர்கள் பொது மக்கள் சபை இயற்றிய ஐரிஷ் சுவாதீன மசோதா வைத் தாம் நிறைவேற்ற மறுத்தனர். பின்னர், 1909-ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பூதல் வரி ஏற்பாட்டுக்கு விரோதமாக வாக்களித்தனர். இதனுல் மனவாத்திரம் கொண்ட அரசாங்கம் பாராளுமன்றத்தைக் கலைத்து நாட்டு மக்களின் தீர்ப்பை இது விடயமாகப் பெறுதற்கு ஒரு பொதுத்தேர்தலை நடத்தியது: அதில் அரசாங்கக் கட்சி வெற்றியடைந்து மீண்டும் பதவி ஏற்றது. ஆனல் பிரபுக்கள் சபையின் அதிகாரங்களைக் குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் சபை யங்கத்தவர்களிற் பெரும் பாலோர் துடிதுடித்தனர். பிரபுக்கள் குறித்த மசோதாவை நிறைவேற்றும் விடயத்தில் மேலும் பிடிவாதம் செய்தால் மேல திகமாகப் பலரைப் பிரபுக்களாக்கி அவர்களைப் பிரபுக்கள் சபை யிற் சேர்த்து அவர்களுடைய உதவியுடன் குறித்த மசோ தா வை அச்சபையில் நிறைவேற்றுவிப்பதாக ஐந்தாவது ஜோர்ஜ் அரசர் ஒரு வாக்குறுதி யளித்தார். இது பிரபுக்கள் சபையினரின் பிடிவாதத்துக்குப் பெரும் மருந்தானது: அவர் கள் தம் பிடிவாதத்தை விடுத்து 1911-ம் ஆண்டில் அந்த மசோதாவை நிறைவேற்ற அது பாராளுமன்றச் சட்ட மானது. தடுப்பதிகாரம் குறைக்கப்படல்
1911-ம் ஆண்டில் பிரித்தானியப் பொதுமக்கள் சபையில் ஒரு பிரதான சட்டம் நிறைவேறியது: அடுத்தடுத்து மூன்று நிருவாக காலக் கூட்டங்களிற் பொதுமக்கள்சபையினல் நிறை வேற்றப்படும் மசோதாக்களைப் பிரபுக்கள் சபை இரண்டு ஆண்டுகளுக்குமேல் தடுத்து வைத்திருக்கலாகாது என்பதே அச்சட்டம். நிதி சம்பந்தமான மசோதாக்கள் விடயமாகப் பிரபுக்கள் சபை தனது தடுப்பதிகாரத்தைப் பிரயோகிக்கலா காது என்றும் இச்சட்டம் விதித்தது. 1949-ம் ஆண்டு நிறை வேற்றப்பட்ட பாராளுமன்றச் சட்டத்தினுல் பிரபுக்கள் சபைக் கிருந்த தடுப்பதிகாரம் இரண்டு ஆண்டுகளில் இருந்து ஒரு ஆண்டுக்குக் குறைக்கப்பட்டது. ஆகவே பிரபுக்கள் சபைக் கிருந்த தாமதப்படுத்துமதிகாரம் இவ்வாருகக் குறைக் கப்பட, அது ஒரு புநராய்வு மன்றமாகக் கால கதியில் அமைய லாயிற்று. ஆய்ந்தோய்ந்து பாராமல் அவசரப்பட்டுச் சட்ட நிரூபணக் கருமங்களை பொதுமக்கள் சபை ஆற்றுவதைத் தாம தப்படுத்தும் ஒரு மன்றமாக அது இப்போது விளங்குகிறது.
Veto.

Page 223
432 பிரித்தானியப் பாராளுமன்றம்
ஒரு மூப்பர்சபை
பரம்பரை முறையிற் பிரபுக்கள் எனப்படுவோர் இப்பிர புக்கள் சபையில் அங்கத்துவம் வகிப்பது நீதியானதா என்றும் சிலர் வாதிக்கலாம். ஆனல் இது சம்பந்தமாக இரண்டு விட யங்களை நாம் அவதானித்தல் வேண்டும். முதலாவது, அச்சபை யிலே இராசவம்சப் பிரபுக்களையும் உட்கொண்ட பரம்பரை முறைப் பிரபுக்கள் பெருந்தொகையில்-மிகப் பெரும்பான் மையினராக இருக்கின்ற போதிலும்-அவர்கள் சபைக்கருமங் களில் பங்கு பற்றுவதில்லை. பிரபுக்கள் சபைக் கூட்டங் களுக்குச் சமுகமளிப்பவர்கள் தொகை சராசரியாக நோக்கு மிடத்து 80 மாத்திரமே. சமுகமளிப்பவர்களிற் பெரும் பான்மையினர் பரம்பரை முறைப் பிரபுக் களல்லாது, சமீபகாலத்திற் பிரபுக்களாக்கப்பட்டவர்களே யென்பது நாம் அவதானிக்கவேண்டிய இரண்டாவது விடயம். இவர்கள் அரசாங்கத்துக்கு, அரசியல் துறைகளில் சேவை புரிந்ததற் காகப் பிரபுக்களாக்கப்பட்டவர்கள். அவர்கள் தம் பதவிக்கு வாக்காளரின் அபிமானத்தை எதிர்பாராதவர்கள்; பிரபுக் கள் சபையில் அங்கத்துவம் வகிப்பதற்குச் சம்பளம் பெருத வர்கள். இப்படிப்பட்டவர்களையும் மற்றும் பிரபுக்களையும் கொண்டுள்ள இப் பிரபுக்கள் சபையை ஒர் மூப்பர்சபை அல்லது பெரியார் சபை அல்லது முதியார் சபை எனலாம்.
பரம்பறை முறையில் இருக்கவேண்டுமா? பொதுசனங்களால் தெரிவு செய்யப்படவேண்டுமா?
பிரபுக்கள் சபை விடயமாகச் சீர்திருத்தம் வேண்டும்தான் என்பதில் சகல அரசியற் கட்சிகளும் ஒன்றுமை உடையனவா யிருக்கின்றன. பிரபுக்கள் சபைபோன்ற இரண்டாவது மன் றம் ஒன்று இருக்கத்தான் வேண்டும் என்பதிலும் பொறுப் புடையார் எல்லாரும் உடன்பாடு கொள்ளுகின்றனர். ஆனல் இந்த இரண்டாம் மன்றத்தை எவ்வாறு அமைப்பது; அதில் யார் யார் அங்கத்தவராக இருக்கலாம் என்பதில் அபிப்பிராய பேதம் உண்டு. நாம் மேலே காட்டிய 1911-ம் ஆண்டுப் பாராளுமன்றச்சட்டம் தனது முகவுரையில் பின்வரும் கருத் துடைய வசனத்தைக் கொண்டிருக்கிறது.
. . . இப்போதிருக்கும் முறையில் அமைக்கப்பட்டுள்ள பிரபுக்கள் சபையை ஒழித்து அதன் இடத்துக்கு பரம்பரை முறையில் அன்றிப் பொதுசனங்களால் தெரிவு செய்யப் படும் முறையில் ஒரு இரண்டாம் மன்றத்தை அமைப்பது நோக்கம். ஆணுல் அப்படியா ன அமைப்பை உடனடி யாகக் கொண்டுவருதல் முடியாது
1. Council of Elders.

பிரித்தானியப் பாராளுமன்றம் 433
சென்ற நாற்பது ஆண்டுகளாக இப்பிரச்சினை பற்றியமுடிவு யாதும் செய்யப்படவில்லை. இரண்டாது உலக மகா யுத்தம் முடிந்த பின் சில ஆண்டுகளாக அதிகாரம் செலுத்தியதொழிற் கட்சி அரசாங்கம் தானும் இது விடயமாக ஏதும் முயற்சி செய்யவில்லை. இவ்வரசாங்கம் இதுபற்றி 1947-ம் ஆண்டுப் பாராளுமன்ற மசோதா மூலம், ஒரு சிறிய அபிவிருத்தியைக் கொண்டுவந்தது. பிரபுக்கள் சபையானது பொதுமக்கள்சபை நிறைவேற்றும் சாதாரண சட்டங்கள் அமுலுக்கு வருவதை இரண்டு ஆண்டு காலத்துக்குத் தாமதப்படுத்தலாம் என்று இதுவரை இருந்தது. அத்தா மதக் காலத்தை ஒரு ஆண்டாகக் குறைத்ததுதான் தொழிற் கட்சியரசாங்கம் செய்த வேலை. மேலே காட்டப்பட்ட பாராளுமன்ற மசோதாவைப் பொது மக்கள் சபை 1947-ம் ஆண்டு டிசெம்பர் மாதம் 10-ம் திகதி நிறைவேற்றியது. ஆனல் அது பிரபுக்கள் சபையிற் சமர்ப் பிக்கப்பட அச்சபை அதனை 1948-ம் ஆண்டு மே மாதம் 9-ம் திகதி நிராகரித்துவிட்டது. இந்த இரண்டு திகதிக்குமிடையில் இரு சபைகளுக்குமிடையில் ஒரு சமரச உடன்பாட்டைக் கொண்டுவர முயற்சி செய்யப்பட்டது. பொதுமக்கள் சபையில் ஒர் மசோதா மூன்ரும் வாசிப்பில் நிறைவேறியபின் பிரபுக்கள் சபைக்குச் சமர்ப்பிக்கப்பட, அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட திகதியிலிருந்து ஒன்பது மாத காலத்துக்கு அம்மசோதா வைப் பிரபுக்கள் சபை தாமதப்படுத்தும் ஒழுங்குக்குப் பொது மக்கள்சபை இணங்க உடன்பட்டது. ஆனல், தான் இரண் டாம் வாசிப்பில் நிறைவேற்றிய திகதியில் இருந்து பன்னிரண்டு மாதங்கள் சென்றபின் குறித்த மசோதா பிரபுக்கள் சபைக்குச் சமர்ப்பிக்கப் பட்டால்தான் இந்த ஒன்பது மாதக் கெடுவுக்குத் தான் சம்மதிப்பதாகவும் பொதுமக்கள் சபை நிபந்தனை விதித் தி து. இந்த நிபந்தனைக்கு பிரபுக்கள் சபை இணங்கவில்லை. இரண்டாம் வாசிப்புத் திகதியில் இருந்து பதினெட்டு மாத காலத்துக்கும். மூன்ரும் வாசிப்புத் திகதியில் இருந்து பன்னி ரண்டு மாத காலத்துக்கும் தாமத அதிகாரம் இருக்கவேண்டும் என்று அது கோரியது. இரு கட்சியினரும் இவ்வாறு பரஸ் பரம் விட்டுக்கொடுக்காமையினல் சமரச முயற்சி தோல்வி யடைந்தது. எனவே, குறித்த மசோதாவை பொதுமக்கள் சபை 1948-ம் ஆண்டு செப்ரெம்பர் 21-திகதி மீண்டும் நிறை வேற்றியது. இதனைப் பிரபுக்கள் சபை 1949-ம் ஆண்டு மார்ச் மாதம் 2-ம் திகதி மீண்டும் நிராகரித்தது. ஆயினும், 1911-ம் ஆண்டில் பாராளுமன்றச் சட்டத்தின் பிரகாரம் அம்மசோதா 1949-ம் ஆண்டு டிசெம்பர் மாதம் 16-ம் திகதி சட்டமானது.

Page 224
434 பிரித்தானியப் பாராளுமன்றம்
இறுதியான அப்பல் கோடு
பிரபுக்கள்சபையானது பாராளுமன்றத் தாபனமாகக் கரும மாற்றுவதுடன் ஐக்கிய ராச்சியப் பிரசைகளின் இறுதி யான அப்பல் கோடாகவும் கருமம் ஆற்றுகிறது.
பிரபுக்கள்சபையிலே அங்கத்துவம் வகிக்கும் பிரபுக்கள் அவ்வளவு பேரும் நீதிபதிகளாக இருந்து அப்பல் விசாரணை களைச் செய்யக்கூடாது என்ற தடையில்லை. அவர்கள் அவ்வாறு விரும்பினுல் அப்படியும் செய்யலாம். ஆனல் நீதிவிசாரணைக் கருமங்களில் அவர்கள் எல்லாரும் ஈடுபடுவ தில்லை. இதற்கெனவுள்ள நீதிபரிபாலனப் பிரபு?, முந்திய நீதிபரிபாலனப் பிரபுக்கள், பிரபுக்களாகவுள்ள முந்திய நீதிபதிகள், சமய சம்பந்த அப்பற் பிரபுக்கள், நீதிபதிகளா யிருந்து அநுபவம் படைத்து, இதன் பொருட்டுச் சீவிய பிரபுத் துவம் வழங்கப்பட்டுள்ள இவர்களே இந்த அப்பற் கோட்டில் அங்கத்ததும் வகிப்பது வழக்கமாக இருந்துவருகிறது.
பொதுமக்கள்சபை
இங்கிலாந்தின் தேசீய சனநாயக அரசாங்கத்தின் சீவா தாரமாகவுள்ளதுவே பொதுமக்கள் சபை. பிரபுக்கள் சபை யின் அதிகாரங்கள் படிப்படியாகக் குறைந்து குறைந்து கொண்டுவர பொது மக்கள் சபையின் அதிகாரங்களும் அதிகரித்துக்கொண்டு வந்திருக்கின்றன.
இங்கிலாந்திலே பாராளுமன்றமுறை தோன்றி அபிவிருத்தி எய்திய வரலாறு ருசிகரமானது. இங்கிலாந்தை சாக்சனிய மன்னர் அரசு புரிந்த காலத்தில் நாம் இப்போது காணும் பாராளுமன்றமுறை இருக்கவில்லை. 'ஆன்ருேர் மன்றம்* என்ருெரு சபை அக்காலத்தரசருக்கிருந்தது. அதிலே நாட் டின் ஆன்ருேராயுள்ளார் அங்கம் வகித்து வேண்டிய வேண்டிய காலத்தில் அரசனுக்கு ஆலோசனையளித்து வந்தனர். இந்த *ஆன்ருேர்’ பொதுசனப் பிரதிநிதிகளல்லர். அவர்களை அரசனே நியமித்துவந்தான். இப்படியான முறையில் ஆலோ சகர்களை நியமிக்கக்கூடாது பொதுசன அபிப்பிராயத்தைப் பிரதிபலிக்கக் கூடியவர்களையே ஆலோசகர்களாக- அமைச்ச ராக-நியமிக்கவேண்டும் என்று காலம்தோறும் அறிஞர்கள் புகட்டிவந்தார்கள். சாக்சனிய மன்னருக்குப் பின்னர் இங்கி
1. Final Court of Appeal. எனபதற்கு மேல்தீர்ப்பு மன்றம், மேல விசாரணை மன்றம் என்றும் கூறுவர்.
... Lord Chancellor. . Lords of Appeal in Ordinary. . Saxon Kings. ... Witenagemot.

பிரித்தானியப் பாராளுமன்றம் 435
லாந்தைப் பரிபாலித்த நோ மானிய மன்னரதும் பிளா ந் தேசனற்?வம்ச முதல் மன்னர்களதும் காலத்தில் முந்திய *ஆன்ருேர் மன்றங்கள்’ ‘மகா சபைகள்’ என்ற பெயருடன் இயங்கின. இச்சபைகள் மானியமுறை அமைப்பிலேயே இருந் தன வென்றலும், காலப்போக்கில் ஒரளவு பிரதிநிதித்துவ முடையனவாயின. 1215-ம் ஆண்டில் இவ்விடயமாக இங்கி லாந்தில் ஒரு மகத்தான முன்னேற்றம் ஏற்பட்டது. அக் காலம் அந்நாட்டைப் பரிபாலித்த ஜோன் என்னும் அரசன் யதேச்சாதிகாரம் செலுத்தி மேலே சொல்லிய மகா சபை களைப் புறக்கணித்து அரசு புரிந்தான். ஆனல் அவன் கருமம் அதிக காலத்துக்கு இருக்கவில்லை. ‘மகா சபை' யங்கத்தவர் அவனுடைய சர்வாதிகாரப் போக்கைத் தடுக்க நிச்சயித்துக் கருமம் ஆற்றினர். பேருரிமைச் சாசனம்" அல்லது ‘மகா வுரிமைச் சாசனம்’ என்னும் ஒரு சாசனத்தை மகா சபையினர் தயாரித்து, அதற்கு இணங்கும் படி மன்னன் ஜோன வற்புறுத் தினர் "இராச்சியத்தின் மக்கள் சபையின் சம்மதமில்லாமல்’ (விதிவிலக்கின் பாற்பட்ட சில வரிகளை யொழிந்த ஏனைய) வரிகளை அரசன் விதிக்க க் கூடாது என்ற சட்டத்துக்கு அரசன் பணிந்துதானகவேண்டும் என்று ஜோன் இச் சாசனத் துக்குக் கையொப்பமிட்டு உடன்பட்டான்.
இங்கிலாந்து பல்வேறு பிரிவுகளாக வகுக்கப்பட்டிருக் கிறது. இப்பிரிவுகளை ஷயர்' என்று ஆங்கிலத்திற் கூறுவர். ஷயர் ஒவ்வொன்றுக்கும் அதிபதியாக ஒருவர் இருப்பர். அவரை ஷெரிப்" என்பர். ஒவ்வொரு பிரிவுக்குமுரிய ஷெரிப், அரசனது இன்றியமை யாத் தேவையைப் பூர்த்தியாக் குவதற்கான உதவியை எவ்வாறு அளிக்கலாம் என்பதனை ஆலோசிப்பதற்காக, நைற்பி’ மார் எனப்படும் பிரமுகரில் இருவரை அனுப்பவேண்டும் என்று 1254-ம் ஆண்டில் விதிக் கப்பட்டது. ஆகவே, அரசனுக்கு வேண்டியனவற்றை உதவுதற்கும் அவற்றைத் தடுப்பதற்கும் உரியதான அதிகாரம் அன்றிருந்து ஆரம்பமானது என்று சொல்லலாம். இந்த அதிகாரத்தை இங்கிலாந்தின் அரசியன் மன்றங்களில் இருந்த சபைப் பிரதிநிதிகள் தாம் அரசனேடும், அவனது நிருவாகி களுடனும் பொருதிக்கொள்ளும்போதெல்லாம் பிரயோகித்து மன்னனின் யதேச்சாதிகாரத்தைக் கெடுத்துவந்திருக்கின்
1. Norman Kings. 4. Shire. 2. Plantagenet. 5. Sheriff. 3. Magna Carta. 6. Knights.

Page 225
436 பிரித்தானியப் பாராளுமன்றம்
றனர். இப்போது தானும், தனது நாட்டில் ஆட்சிபுரியும் ஒரு அரசாங்கத்துக்கு வேண்டிய பணத்தை வழங்காமல் விடும் அதிகாரம் பொதுமக்கள் சபைக் குண்டு: இந்த அதிகாரமே கொடுங்கோன்மை தலைதூக்குவதைச் சிதைக்கும் பேராயுதம் என்றும் சொல்லலாம்.
முன்மாதிரிப் பாராளுமன்றம்!
1265-ம் ஆண்டில், சைமன் டி மொன்திபோட்? என்னும் ஆங்கிலப் பெருமகனின் தீவிர முயற்சியின் பயனுக, ஒரு பாராளுமன்றம் கூட்டப்பட்டது. இந்தப் பாராளுமன்றத் தில் இதுகாறும் இருந்ததைப் போலத் தேசத்துப் பிரிவுகளின் பிரமுகர் மாத்திரம் அங்கத்துவம் வகிக்கவில்லை. நகரங்களுக் கும் பட்டணங்களுக்கும் இப்பாராளுமன்றத்தில் பிரதிநிதித்
துவம் வழங்கப்பட்டது. நகர வாசிகள், பட்டண வாசிகள் என்பவர்களின் பிரதிநிதிகள் இப்பாராளுமன்றத்தில் அங்கத் துவம் வகித்தனர். இப்படியாகப் பாராளுமன்ற முறை
இங்கிலாந்திலே அபிவிருத்தியடைந்து வந்தாலும் இன்று நாம் காணும் சனநாயகப் பாராளுமன்றத்துக்கு அத்திவாரமாக விளங்கியது முதலாவது எட்வேட் அரசனுல் - 1295-ம் ஆண்டில் கூட்டப்பட்ட முன்மாதிரிப் பாராளுமன்றமேயாகும். இப்படியாக முதன் முதற் கூடிய முன்மாதிரிப் பாராளுமன்றத் துக்குப்பிறகு, அதனைப்போல அமைக்கப்பட்டுள்ள பாராளு மன்றங்கள் அடிக்கடி கூட்டப்பெற்றன. அவற்றின் சம்மதத் தைக்கொண்டே அரசனும் ஆக்கினைகள் பிறப்பித்து வந்தான்.
இப்படியாகப் பாராளுமன்ற முறை ஏற்பட்டாலும், யதேச் சாதிகாரம் புரிந்து ஆட்சி செலுத்தக் கங்கணம் கட்டிய பல மன்னர்களும் இருக்கத்தான் செய்தனர். அவர்களுக்கும் பாராளுமன்றத்துக்குமிடையில் சதா பிணக்கு மூண்டுவந்தது. தியூடர் வம்ச அரசர்களும் அரசிகளும் யதேச்சாதிகாரம் செலுத்தினலும், நல்லாட்சி புரியும் யதேச்சாதிகாரிகளாகவே விளங்கினரான மையினுல் அவர்கள் அதிகாரத்தைக் கொண்டி ருத்தல் விடயமாக மக்களிடையே மனக் கசப்பு ஏற்படவில்லை. ஆனல் ஸ்ருவாட் வம்ச அரசர் காலத்தில் நிலைமை மோச மானது. 1689-ம் ஆண்டில் பாராளுமன்றம் புரட்சிகரமான ஒரு மசோதாவை நிறைவேற்றியது. அதனை உரிமை மசோதா6
I. Model Parliament. 4. Boroughs.
2. Simon de Montford. 5. Edward . 3. Cities. 6. Bill of Rights.

பிரித்தானியப் பாராளுமன்றம் 437
என்பர். தேச தர்மத்துக்கு விரோதமான சட்டங்களை அரசன் ஆக்கக்கூடாது; தேசச் சட்டங்களை தான் நினைத்தநேரம் நிறுத்தக்கூடாது; பாராளுமன்றத்தின் சம்மதமில்லாமல் வரிகள் விதிக்கக் கூடாது என்று இந்த உரிமை மசோதா விதித்தது.
மந்திர சபையாட்சி முறை இங்கிலாந்தில் தோன்றி அபி விருத்தியடைந்தது 18-வது நூற்ருண்டிலாகும். 19-ம் நூற் ருண்டில் சனங்களுக்கிருந்த வாக்குரிமை முறை விஸ்தரிக்கப் பட்டது. 1832-ம், 1867-ம், 1884-ம் ஆண்டுகளில் நிறை வேறிய சட்டங்களாலேயே இது நிகழ்ந்தது என்க. ஆனல் பரிபூரணமான சர்வசன வாக்குரிமை 1928-ம் ஆண்டில்தான் அநுட்டிப்புக்கு வந்தது. அதற்கு முந்தி 1918-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட சீர்திருத்தச் சட்டம் முப்பது வயதான பெண்களுக்கு மாத்திரமே, ஆண்களுக்குச் சமமான வாக்குரி மையை வழங்கியது. ஆணுல் 1928-ம் ஆண்டினது சமவாக் குரிமைச்சட்டம்? பாராளுமன்றத் தேர்தல்களிலும் ஊராட்சித் தாபனத் தேர்தல்களிலும் ஆண்களுக்குரிய வாக்குரிமையைப் பெண்களுக்கும் வழங்கியது.
இப்போது இங்கிலாந்திலேயுள்ள பொதுமக்கள்சபை தனது பெயருக்கேற்ப, நாட்டின் பொதுசனங்களால் தெரிவு செய்யப்படும் அங்கத்தவர்களையே ஏறக் குறையக் கொண்டி ருக்கிறது. வருமானம், தொழில் என்னும் இவற்றை அடிப் படையாகக்கொண்ட வித்தியாசமில்லாது சமூகத்தைச் சேர்ந்த சகல பிரிவினரிடம் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள வர்களைப் பொதுமக்கள் சபை தனது அங்கத்தவராகக் கொண் டிருக்கிறது. பொதுமக்கள் சபையில் 1950-ம் ஆண்டில் இருந்த அங்கத்தவர்கள் தொகை 625.
தொகுத்துக் கூறுங்கால், "பொதுமக்கள் சபை பண அதி காரத்தைக் கொண்டு விளங்குகிறது. அரசாங்கத்தை நிருவ கிக்கும் மந்திர சபை தயாரிக்கும் சட்டநிரூபணங்களுக்குக் குணகுணம் கூறுவதும் அது: தனிப்பட்ட அங்கத்தவர்கள் தாங்களே மசோதாக்களைத் தயாரித்து எடுத்தா ளவும் பொது மக்கள் சபையில் இடமுண்டு. தானே நிருவாகப்பொறுப்பை யேற்காவிடத்தும், அரசாங்கத்தை ஆக்குவதும், அதனை ஆத ரிப்பதும், கண்டிப்பதும், அதனைப் பதவியில் இருந்து நீக்கு வதும் பொதுவாக அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தி வைத் திருப்பதும் இப்பொது மக்கள் சபையே என்க."
1. Reform Act.
2. Equal Franchise Act.
3. “எமது பாராளுமன்றம்' (Our Parliament, by S. Gordon).

Page 226
438 பிரித்தானியப் பாராளுமன்றம்
பொதுமக்கள்சபை தெரிவுசெய்யப்படும் விதம்
ஒரு பாராளுமன்றம் ஐந்து ஆண்டு காலத்துக்கிருந்து கருமம் ஆற்றவேண்டும் என்று சட்டபூர்வமாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டுக்காலம் முடிந்ததும் பாராளுமன்றம் கலைக்கப்பட, இன்னெரு புதிய பாராளுமன் றத்தைத் தெரிவு செய்தற்குரிய ஒர் பொதுத்தேர்தல் நிகழும். ஐந்து ஆண்டுகளுக்கொரு முறையே பாராளுமன்றத் தேர்தல் நிகழும் என்ற பொது நியதி இருப்பினும் அக்காலத்துக் கிடையிலும் ஒர் பொதுத்தேர்தலை நிகழ்த்த இடம் உண்டு. உதாரணமாக, அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கம் அதி முக்கியத்துவமான ஒரு பிரச்சினை மீது தோல்வியடைந்தால் அல்லது தான் அநுட்டிக்கும் கொள்கைக்குத் தேச மக்களின் ஆதரவு தொடர்ந்திருக்கிறதா என்பதனை ஒரு பொதுத் தேர் தல் மூலம் அறியவேண்டும் என்று விரும்பினுல், பாராளு மன்றத்தைக் கலைத்துவிடும்படி அது அரசருக்கு ஆலோசனை ón. 101 LD
மந்திரசபை இவ்வாறு ஆலோசனை கூறுவதற்கிணங்க மன்னர், பழைய பாராளுமன்றத்தைக் கலைக்கவும், புதிய பாராளுமன்றத்தை கூட்டவும் தேர்தல் ஆணை?யைப் பிறப்பிக் கும் கட்டளையைச் செய்தற்குரிய பிரகடனத்துக்கு ஒப்பமிடு வார். இப்படியான பிரகடனத் திகதிக்கும் புதுப் பாராளு மன்றத்தின் முதற் கூட்டத்துக்கும் இடையில் உள்ள காலம் இருபது நாட்களுக்குக் குறையக் கூடாது என்று விதிக்கப் பட்டிருக்கிறது தேர்தல் ஆணை பிறப்பிக்கப்பட்டதிலிருந்து எட்டு நாள் வரைக்கும் ஒர் தொகுதிக்குரிய அபேட்சகர்களின் நியமனப்பத்திரங்கள் அந்த அந்தத் தொகுதிக்குரிய தெரிவுத் தியோகத்தரால் ஏற்கப்படும். பிரிவின் அதிகாரியாயுள்ள ஷெரிப் அல்லது மேயர் அல்லது ஊராட்சித்தாபனத்தின் தலைவர்கள்தான் அநேகமாகத் தேர்தல் உத்தியோகத்தராக இருப்பர். ஒருவருக்கு மேற்பட்ட அபேட்சகர்கள் ஒரு தொகுதிக்கு முன்வந்தால் அவர்களில் யாரைச் சனங்கள் தெரிவு செய்கிருர்கள் என்பதனையறிய ஒரு தேர்தல், நியமன தினத்தில் இருந்து ஒன்பது நாட்களுக்குப்பின் நிகழும். தகுதி யற்றவர்கள் முன்வருவதைத் தடுக்கும் பொருட்டு ஒவ்வொரு அபேட்ச கரும் கட்டுப்பணமாக 150 பவுண் தேர்தல் உத்தி யோகத்தரிடம் செலுத்திக் கொள்ளுதல் வேண்டுமென்றும், அளிக்கப்பட்டுள்ள முழு வாக்குச் சம்மதங்களில் எட்டில் ஒரு பங்குச் சம்மதங்களைப் பெருத அபேட்சகர்களின் இக்கட்டுப் பணம் பறிமுதலாகிவிடும் என்றும் விதிக்கப்பட்டிருக்கிறது.
தெரிவு நாள் வாக்களிப்புக்குரிய தினத்துக்கு முந்தி, குறித்த தொகுதிக் குரிய வாக்காளர் இடாப்பில் உள்ள ஒவ்வொரு வாக்காளருக் கும் அவருடைய வாக்களிப்பு இலக்கம், அவருக்குரிய வாக் களிப்புத்தானம் என்பன குறிப்பிடப்பட்டுள்ள வாக்களிப்பு
1. அல்லது அரசிக்கு 2 Writ of Election.

பிரித்தானியப் பாராளுமன்றம் 439
அட்டை ஒன்று வழங்கப்படும். இற்றைக்குச் சில காலத்துக்கு முந்தி இந்த அட்டைகளை விநியோகிக்கும் பொறுப்பு அந்த அந்த அபேட்சகர்கள் மீதே பாரிக்கப்பட்டிருந்தது. ஆனல் 1948-ம் ஆண்டில் நிறைவேறிய மக்கட் பிரதிநிதித்துவச் சட்? டத்தின் பிரகாரம் இந்த விநியோகப் பொறுப்பு இப்போது பதிவுத்தியோகத் தர்மீேது பாரிக்கப்பட்டிருக்கிறது. பிரிவுப் பரிபாலனச்சபை, அல்லது பட்டண சங்கத்தின் கருமாதி காரியே இப்பதிவுத்தியோகத்தராகக் கடமையாற்றுவர்.
பாராளுமன்றத் தேர்தலுக்குரிய வாக்காளர் இடாப்பை ஆண்டு தோறும் தொகுப்பவரும் பதிவுத்தியோகத்தரே. ஐக்கிய ராச்சியத்தில் வசிப்பவராய், 21 வயதுக்கு மேற்பட்ட வராயுள்ள சகல பிரித்தானியப் பிரசைகளின் பெயர்களும் (அயர்லாந்துக் குடியரசுப் பிரசைகளுட்படவுள்ள) சகல பொது நலவமைப்புப் பிரசைகளின் பெயர்களும் இந்த இடாப்பில் அடக்கப்பட்டிருக்கும். ஆனல் சிறையில் தண்டனை பெறுப வர்கள், விசரர் என்று அத்தாட்சிப் படுத்தப்பட்டவர்கள் அல்லது இராச்சியப் பிரபுக்கள் என்னும் இவர்களின் பெயர் கள் இந்த இடாப்பில் இடம் பெரு. இங்கிலாந்து, ஸ்கொத் லாந்துத் தாபிதத் திருச்சபைகளின் குருமார், கத்தோலிக்க திருச்சபைக் குருமார், பட்ட கடன் இறுக்க வகையற்றவர்
. Polling Card.
Representation of the People Act. . Registration Officer.
Country Council. . Borough Cquncil.
6. Established Church of England and Scotland. 1950-th gy 6507 (9 @) நிகழ்ந்த பொதுத தேர்தலில் ஐயர்லாந்துத் திருச்சபையைச் சேர்ந்த சங் ஜே. ஜீ. மக்மனவே என்ற ஒரு போதகர் பெலபாஸ்ற் மேற் குத் தொகுதியின அபேட்சகராக முன வந்து வெற்றியும் பெற்றர். 1801-ம ஆண்டினது (குருமாரைத் ககைமையினராக்கும்) சட்டத்தின் பிரகாம் இவா பொதுமக்களசபையில் அங்கத்துவம் வகிக்கத் தகுதி யுடையவரா, இல்லையா என்பதனை விசாரிக்கப பொதுமக்கள் சபையின் தெரிவுக்குழு ஒன்று நியமிக்கப்படடது ஆனல் இக்குழு தனது விசார ணையை முடித்தபின் ஒருமுகமான முடிவுககு வரவில்லை. ஆகவே (Q6,65uluud egg 60) aluSoó7 fiSág ('p (Judicial Committee of the Privy Council) வின் தீர்ப்புக்கு வந்தது. இக்குழுவினர் சங். மக்மனவே பிர திநி கியாகத் தெரிவுசெய்யப்படத தகைமையுடையவா அன்று என்று தமது அபிப்பிராயத்தைத் தெரிவித்தனர். இதன பின் சங். மக்ம னவே, தமது தெரிவுக்காலத்தில் தகைமையீனம் அடைந்திருக்கிற படியால் பொதுமக்கள்சபையில் இருக்கவும் வாக்களிக்கவும் அரு கதையற்றவர் என்ற ஒரு தீர்மான பொ 5 மக்கள் சபையில் 1950-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19 ம் திக கி எடுத்தாளப்பட்டு நிறைவேறியது. இகன் பயகை அடுத்து வந்த நொவம்பர் மாதம் 29-ம் திகதி ஒரு உப தேர்தல் (கறித்த தொகுதிக்கு நடாத்தப்பட்டது. இதில் சங். மக்ம னவே அபேட்சகராக வருவது தடைசெய்யப்பட்டது.
:
5

Page 227
440 பிரித்தானியப் பாராளுமன்றம்
எனத் தீர்ப்பளிக்கப்பட்டவர், முடியின் கீழ் சம்பளம் பெறும் பதவியில் இருப்பவர்? என்னும் இவர்களை ஒழிந்த வாக்களிப்புத் தகைமைகொண்ட சகலரும் தேர்தலுக்கு அபேட்சகராக முன் வரும் தகைமையைக் கொண்டிருப்பர். தேர்தற் காலத்தில் வாக்களிப்புத் தானங்களுககு நேராக வந்து தம் வாக்குச் சம் மதங்களை யளிக்கமுடியாத படைவீரர்கள், வர்த்தக சேவைப் படையில் இருப்பவர்கள். வெளியில் கருமார்த்தமாகச் சென்றிருக்கும் அரசாங்க உத்தியோகத்தர், பிரயாணிகள், சமுத்திரத்தில் உலாவும் கடல் தொழிலினர், வெளிநாடுகளிற் காட்சி நடாத்தும் நாடகக் கோஷ்டியினர் போன்றவர்கள் தங்கள் தங்கள் வாக்குரிமைகளைப் பிரயோகிக்கும் சந்தர்ப் பத்தைத் தவறவிடாது வாக்களிப்புச் செய்தற்காக விசேட ஒழுங்குகள் செய்யப்படும். அவர்கள் தபால் மூலம் தம் வாக் குச் சம்மதத்தைத் தெரிவிக்கலாம். அல்லது தம் சார்பாக வாக்களிப்புத் தானத்துக்குச் சென்று வாக்களிக்கும்படி தமக்கு விருப்பமானவரை நியமித்துக் கொள்ளலாம். இதுபோன்ற ஒழுங்குகள் நோயாளிகள், குருடர்கள் விடயத்திலும் அநுட்டி கப்படுகிறது. இப்படியான ஒழுங்குகளுடன் அபேட்சகர்களும் இத்தகைய நோயாளிகளை வாக்களிப்புத்தானத்துக்கு இட்டுச் செல்ல வாகனங்களும் அமர்த்துவர். வழக்கமாக காலை 7 மணி தொடக்கம் இரவு 9 மணிவரை வாக்களிப்புத்தானங்கள் திறக்கப்பட்டிருக்கும். வாக்காளர் இதற்கெனவுள்ள மறை வான இடத்துக்குச் சென்று, வாக்குச்சீட்டில் குறிக்கப்பட்டுள்ள அபேட்சகர்களில் யாரைத் தான் தெரிய வேண்டுமென்று விரும்புகிருரோ அவரின் பெயருக்கெதிரே ஒரு புள்ள டியை (X) இட்டு, மூடிப் பூட்டப்பட்டிருக்கும் வாக்குப் பெட்டிக்குள் அதனை இடுதல் வேண்டும். வாக்களிப்பு முடிந்ததும், வாக் களிப்புத்தானத்தில் தலைமை தாங்கிய உத்தியோகத்தர் திறக் கப்படாத வாக்குப் பெட்டிகளையும், உபயோகிக்கப்படாத வாக்குச் சீட்டுக்களையும், எத்தனைபேர் வாக்களித்திருக்கிருர் கள் என்பதனைக் காட்டுவதற்காகக் குறியிடப்பட்டுள்ள இடாப்புப் பிரதியினையும், இது சம்பந்தமாகவுள்ள ஏனைய பத்திரங்களையும் நல்லாகக் கட்டி, மெழுகு முத்திரையிட்டு தேர்தல் உத்தியோகத்தரிடம் அவற்றை ஒப்புவிப்பர்.
அபேட்சகருக்குக் கிடைத்துள்ள வாக்குச்சீட்டுக்களை எண் ணுவது தேர்தல் உத்தியோகத்தரின் மேற்பார்வையில் அவ ரின் உத்தியோகத்தரால் நடாத்தப்படும். என்னும் இடத் 1. வங்குருேத்தானவர் என்றும் சாதாரணமாகக் கூறுவர். 2. மந்திரிமாரும் எதிர்க்கட்சித் தலைவரும், முடியின்கீழ்ப் பதவி வகித்து வேதனம் பெறுபவரெனினும் இந்த விதியிஞற்
பாதிக்கப்படார்.

பிரித்தானியப் பாரளுமன்றம் 44
துக்கு எல்லோரும் அநுமதிக்கப் படமாட்டார்கள். அபேட்ச கர்கள், அவர்களுடைய பிரதிநிதிகள் என்னும் இவர்களே அந்த இடத்துக்கு அநுமதிக்கப்படுவர். ஒரு தொகுதிக்கு இரண்டுபேர் அபேட்கராய் நிற்ப, அவர்களுக்குச் சம தொகை யான வாக்குக்களே கிடைத் திருக்கக் காணப்பட்டால் இரண்டாம் முறை அவ்வாக்குச்சீட்டுக்கள் எண்ணப்படும். அதன் பின்னும் க சரிசமமாக வாக்குகள் இருப்பக் காணப்படின் திருவுளச் சீட்டுமுறையில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும். ஆனல் 1848-ம் ஆண்டினது மக்கள் பிரநிநிதித்துவச் சட்டம் நிறைவேறமுன் இப்படியாக இரண்டு அபேட்சகர்க்கிடையில் சமநிலை ஏற்பட்டால், தேர்தல் உத்தியோகத்தர் இதனை முடிவு செய்வதன் பொருட்டுத் தமது வாக்குரிமையைப் பிரயோகிக்கலாம் என்ற விதி இருந்தது.
தேர்தற் செலவுகள்
இங்கிலாந்திலே பரிமாணப் பிரதிநிதித்துவ முறையும் இரண்டாம் முறை வாக்களிக்கும் முறையும் இல்லை. ஒரு அபேட்சகர் தமது தேர்தல் விடயமாகச் செய்யும் செலவுகள் சட்டபூர்வமாகக் கட்டுப் படுத்தப்பட்டிருக்கிறது. இந்தக் கட்டுப்பாட்டை மீறும் எந்த அபேட்சகரும் தண்டிக்கப்படு வார். சட்டவிரோதமான செலவு செய்து ஒரு அபேட்சகர்
வெற்றிபெற்ருலும், அப்படிச் செலவுசெய்தார் என்று நிரூ
பிக்கப்பட்டதும் அவரைப் பதவியிலிருந்து நீக்க அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. 1948-ம் ஆண்டுச் சனப்பிரதிநிதித் துவ சட்டத்தின் பிரகாரம் ஒரு அபேட்ச கரானவர்:-
பட்டணத் தொகுதிகளில் 450 பவுண் களுடன் ஒரு தெரிவாளருக்கு 11 பென்ஸ் விகிதமான தொகையும்;
பிரிவுத் தொகுதிகளில் 450 பவுண்களுடன் ஒரு தெரி வாளருக்கு 2 பென்ஸ் விகிதமான தொகையையும் செலவிட லாம்.1
ஒருவருக்கு ஒரு வாக்குரிமை
ஒருவருக்குரியது ஒரே ஒரு வாக்குரிமைதான்: 1948-ம் ஆண்டினது மக்கட் பிரதிநிதித்துவச் சட்டம் பன்மை வாக்கு முறையை-அதாவது பல்கலைக்கழகங்கள், தொழில் தாபனங் களின் பிரதிநிதித்துவம் சம்பந்தமாக ஒருவர் தமது சொந்த வாக்குரிமையுடன் மேலதிக வாக்குரிமை செலுத்தும்
1. இங்கிலாந்தில் உள்ள தெரிவு முறையை இன்னும் விபரமாக அறிவதற்கு R 1863, பெரிய பிரித்தானியாவில் பொதுத்தேர்தல்கள் என்ற ஆங்கிலப் பிரசுரத்தை வாசிக்கவும்.

Page 228
442 பிரித்தானியப் பாராளுமன்றம்
முறையை-ஒழித்துவிட்டது. தேர்தல் தொகுதி எல்லை களிலும் இச்சட்டம் மாற்றம் விளைத்து, சராசரியாக 47,000 வாக்காளருக்கு ஒரு தொகுதி என நிர்ணயித்தது. இங்கிலாந் தின் 5 கோடி சனத்தொகையில் ஏறக்குறைய 3 கோடியே 45 லட்சம்பேர் வாக்காளர்கள் அல்லது தெரிவாளர்கள் ஆவர்.
ஒரு அங்கத்தவரின் கடமைகள் ஒருவர் பாராளுமன்றத்து அங்கத்தவராகத் தெரிவுசெய் யப்படுவதும், அவருக்கு இரு கடமைகள் உண்டாகின்றன. ஒரு கடமை அவரைத் தெரிவுசெய்த தொகுதிக்குரியது: மற்றது தேசம் முழுவதுக்குமுரியது. தம் வாக்காளர்களின் நலவுரிமைகளுக்காக உழைத்து அவர்களுக்கு வேண்டிய வேண்டிய காலங்களில் உதவிபுரிதல் வேண்டும். தமக்கு வாக்களித்தவர்களை மாத்திர மன்றி, அத்தொகுதியில் உள்ள சகலரையும் தமது சேவைக்குரியவர்கள் என அவர் கருதிக் கொள்ளுதல் வேண்டும். முழுத் தே சமும் அபிவிருத்தி எய்தி முன்னேறும் விடயத்தில் அரசாங்கத்துக்கு அவர் உதவி புரியவும் வேண்டும். இது அவருக்குரிய மிகப் பிரதான கடமை யாகும். விடயங்களைச் சீர்தூக்கிநோக்கி தேச நலனுக்கான வற்றுக்கு அவர் ஆதரவளித்தல் வேண்டும். இது விடயமாக எட்மன்ட் பேர்க் என்ற ஆங்கில அறிஞர் முன் ஒருமுறை அளித்த விளக்கத்தை ஈண்டு அநுவதித்துக் காட்டுதல் பொருத் முடைத்தாகும் , தமது தொகுதியில் இருப்பவர்களின் அபி லாஷைகள், அபிப்பிராயங்களுக்குரிய மதிப்பையும் கொடுக்க வேண்டும் தான். ஆனல், அத்துடன் தமது அநுபவத்தால் முதிர்ந்த அறிவைப் பிரயோகித்து நல்லது எது, கெட்டது எது, தகுந்தது எது, தகாதது எது என்பதனை நிர்ணயிக்கும் பொறுப்பு அவருடையதேயாகும் என்னும் கருத்துப்பட திரு. பேர்க் குறிப்பிட்டு மேலும் கூறுவதாவது:-
* உங்கள் பிரதிநிதியாக இருப்பவர் உங்களின் நன்மைக் காக உழைக்கவேண்டும் அது மாத்திரமல்ல; விடயங்க ளைச் சீர்தூக்கி ஆராயவும் வேண்டும். அவர் தமது பகுத் தறிவை, உங்களுடைய அபிப்பிராயத்தின் பொருட்டுக் கைவிட்டு உங்கள் அபிப் பிராயத்தின்படி தான் நடந்தால், அவர் உங்களுக்குத் தொண்டு புரிவதற்குப் பதிலாகத் துரோகமே செய்பவராவர். நீங்கள் ஒரு அங்கத்த வரைத் தெரிவுசெய்கிறீர்கள். ஆனல் தெரிவு முடிந்ததும் அவர் பிரிஸ்தல் தொகுதி அங்கத்தவர் என்று சொல்லப் படாது பாராளுமன்றத்தங்கத்தவர் என்றே வழங்கப்படுகி ருர், சமூகத்தைச் சேர்ந்த ஏனையோர்களின் உண்மையான l Edmund Burke.

பிரித்தானியப் பாராளுமன்றம் 443
நன்மைக்கு முரணுண நலவுரிமையைக் குறித்த தொகுதி யினர் கொண்டிருந்தால் அல்லது, ஆர அமர ஆலோசிக் காது ஒரு அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தால் அத் தொகுதிக்குரிய அங்கத்தவர் அதிற் சம்பந்தப்படாது விலகிக்கொள்ளுதல் வேண்டும் . . . "
பாராளுமன்றக் கூட்டங்களிற் சமுகமாயிருந்து அங்கு நிகழும் விவாதங்களிற் பங்குபற்றுவதால் அல்லது அந்த விவா தங்களைக் கேட்டுக்கொண்டிருப்பதால் மாத்திரம் ஒரு அங்கத் தவரின் கடமைகள் ஒழிந்து விடா. தனித்தனியான வாக்காளர் களும், தொகுதி மக்கள் சகலரும் சம்பந்தப்பட்டுள்ள எத்த னையோ விடயங்களை அவர் கவனிக்க வேண்டியிருக்கிறது. அது தொடர்பான கடிதப் போக்குவரத்தினைச் செய்ய வேண்டும். இன்னும், உத்தியோகப்பற்றுள்ள அல்லது உத்தியோகப்பற் றில்லாத சபைகளிலும் அவர் அங்கத்துவம் வகித்துக் கருமம் ஆற்றவேண்டி வரும்.
அங்கத்தவர்களுக்குரிய சம்பளம்
பாராளுமன்ற அங்கத்தவராகப் பணியாற்றுபவர்கள் செளகரியமாகவும் கெளரவமாகவும்-ஆனல் இடாம்பீகமாக வல்ல-வாழக் கூடியவர்களாக இருக்கவேண்டும். அவர் களுக்குப் பொருளிடைஞ்சல் இருந்தால் அது அவர்களின் பணிக்குத் தடையாகும் என்ற ஒரு கொள்கையின் பேரிலேயே பாராளுமன்றத் தங்கத்தவர்களுக்குச் சம்பளம் வழங்கப் பட்டுவருகிறது. மத்தியகாலப் பாராளுமன்றங்களில் அங்கத் துவம் வகித்தவர்கள், தம் சேவைகளின் பொருட்டு நாள் விகிதத்தில் சம்பளம் பெற்றுவந்தார்கள். ஆணுல் 17-ம் நூற்றண்டில், இப்படியாகச் சம்பளம் பெறும் முறை ஒழிக்கப் பட்டது. 1911-ம் ஆண்டில் ஆண்டொன்றுக்கு 400 பவுண் சம்பளம் அளிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இச்சம்பள விகிதம் 1937-ம் ஆண்டில் 600 பவுணுக அதி கரிக்கப்பட்டது. இச் சம்பளத்தைவிட, அவர்கள் பாராளு மன்றம் கூடும் வெஸ்ற்மினிஸ்ரருக்கும், தம் தொகுதிகள், வீடுகள் என்பவற்றுக்குமிடையே இலவசப் பிரயாணம் செய்யும் வசதியும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இன்னும் தபாற் செலவு, எழுத்துக் கருமங்களுக்குரிய காரியதரிசிச் செலவு என்னும் இன்னுேரன்னவற்றின் பொருட்டு வருமான வரிசெலுத்துவதிலும் அவர்களுக்கொரு சலுகை வழங்கப் பட்டது.

Page 229
444 பிரித்தானியப் பாராளுமன்றம்
இது விடயமாக விசாரணைபுரிந்து ஒரு அறிக்கை சமர்ப் பிக்க 1945-ம் ஆண்டில் ஒரு தெரிவுக்குழு அமைக்கப்பட்டது. இக் குழுவினர் தமது சிபாரிசுகளை 1946-ம் ஆண்டிற் சமர்ப்பித் தனர். அங்கத்தவர்களின் ஆண்டுச் சம்பளத்தை 1,000 பவுணுக உயர்த்தவேண்டும் என்பது அச்சிபாரிசுகளில் ஒன்று: அதனைப் பாராளுமன்றம் அங்கீகரித்தது. அதன் பிரகாரம் இப்போது பிரித்தானியப் பாராளுமன்றத்தின் அங்கத்தவர் ஒவ்வொரு வரும் ஆண்டுச் சம்பளமாக 1,000 பவுண்கள் பெறுகிருர்கள். இதனைவிட, தம் பாராளுமன்றக் கடமைகளின் பொருட்டு அவர்கள் ஏதும் செலவு செய்திருப்பின், அச்செலவு 1,000 பவுண்களுக்குட்பட்டிக்கும் வரையில் அதற்கு வருமான வரி யில்லை என்றும் விதிக்கப்பட்டிருக்கிறது.
பாராளுமன்றம் இயங்கும் விதம். சபாநாயகர்
பொதுமக்கள் சபைக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்கி, அச்சபை தனக்கெனப் பிரத்தியேகமகக் கொண்டிருக்கும் விதிகளின் பிரகாரம் அதனைப் பரிபாலிப்பவர் சபாநாயகரே u JÍT LÒ. முடியிடம் இருந்து அவர் பெறும் அதிகாரத்தின் சின்னமாகக் கட்டியக்கோல் விளங்குகிறது. எனவேதான் அவர் சபாநாயகராக இதற்குரிய ஆசனத்தில் வீற்றிருக்கும் பொழுது இக்கட்டியக்கோல் மன்றத்து மண்டபத்தில் இதற் கெனவுள்ள மேசை மீது வைக்கப்பட்டிருக்கிறது. இங்கிலாந் திலே பாராளுமன்றத்துச் சபாநாயகரை "ஸ்பீக்கர்’ என்பர். “ஸ்பீக்கர்’ என்பதற்கு 'பேசுவோர்’ அல்லது “சொல்லுபவர்’ என்பது கருத்து. பொதுமக்கள்சபை யங்கத்தவர்களுடைய அபிப்பிராயத்தை அரசருக்கு எடுத்துச்சொல்லும் கடமை பழையகாலச் சபாநாயகர்களுக்கு இருந்தது. ஆகவேதான் அவர்கள் "ஸ்பீக்கர்’ என்று வழங்கப்பட்டனர். இப்படியாக வுள்ள இந்த “ஸ்பீக்கர்’ பட்டத்தை முதன் முதலாகப் பெற்ற வர் 1377-ம் ஆண்டில் பிரித்தானியப் பாராளுமன்றத்துச் சபாநாயகராக இருந்த சேர் தோமஸ் ஹங்கர் போட்? என்பவ ரேயாம். சபாநாயகரைத் தெரிவுசெய்பவர்கள் பொதுமக்கள் சபை யங்கத்தவர்களாகும். அத் தெரிவு முடிந்ததும், அவ் வாறு தெரிவுசெய்யப்படுபவர் "மாட்சிமைமிக்க மன்னர்தம் அதிவிசுவாசப் பொதுமக்கள் சபை தம்மைத் தெரிவுசெய்து கொண்டதென்றும் "அத் தெரிவினை மாட்சிமைமிக்க மன்னர் கடாட்சித்து அங்கீகரிப்பதற்குத் தம்மை அதி தாழ்மையுடன் ஒப்புக்கொடுப்பதாகவும் அறிவிப்பார்.
I. Speaker. 2. Sir Thomas Hungerford.

பிரித்தா னியப் பாரளுமன்றம் 445
பொதுமக்கள்சபைக்குத் தலைமைதாங்கும் உத்தியோக்த்த ராக மாத்திரம் சபாநாயகர் விளங்குவதில்லை. அச்சபையின் தத் துவங்கள், கெளரவம், சுவாதீனங்கள், சலாக்கியங்கள் என்னுமிவற்றின் பாதுகாவலராகவும் அவர் விளங்குகிருர், அவர் தமது தெரிவை மன்னர் உறுதிப்படுத்தியபின், ஐக்கிய ராச்சியத்துப் பொதுமக்களின் பெயரினல் அவர்களுக்குத் தொன்று தொட்டிருந்துவந்த ஐயந்திரிபுக்கு இடமில்லாத, உரிமைகள், சலுகைகள் என்பவற்றுக்கு உரிமை கோரு வார். அதாவது பொதுமக்கள் சபையில் நிகழும் சகல விவாதங்களி லும் இருந்துவந்த பேச்சுச் சுதந்திரம், வேண்டிய வேண்டிய நேரங்களில் மன்னரைக் கட்டுப்பாடின்றிக் கண்டுபேசும் உரிமை என்பன இருக்கவேண்டும் என்றும், பொதுமக்கள் சபைக் கருமங்கள் சகலவற்றையும் அதி சாதக நோக்குடன் நோக்கவேண்டும் என்றும் ஸ்பீக்கர் கோருவார்.
இதற்கெனவுள்ள கருமமுறை விதிகளின் பிரகாரம் மாத் திர மன்றி, பொதுமக்கள்சபையின் வழக்குக்களாலும் சபா நாயகருக்குப் பரந்த தத்துவங்கள் உண்டு. கருமமுறை விடயங் கள் பற்றி அவர் அளிக்கும் தீர்ப்பு ஆட்சேபனையின்றி ஏற்கப் பட்டு ‘ஹன்சாட்" எனப்படும் சபை நடைவடிக்கைக் குறிப் பில் சேர்க்கப்படும். பின்னர் அது அங்கத்தவர்களுக்கிடையே விநியோகிக்கப்படும். எதிர்காலக் கருமமுறைகளுக்கு இத் தீர்ப்புக்கள் பேருதவியாக விளங்கும். (கருமமுறை, கரும முறைக் கட்டளைக்களுக்குரிய திருத்தங்கள் என்னும் இன்னே ரன்னவை சபையின் நாள்வரிக்குறிப்பு 2 நூல்களில் பதிவு செய்யப்பட்டுவரும்). சபாநாயகரின் நடைவடிக்கையைப் பற்றி ஒரு விவாதத்தின்போது எந்த அங்கத்தவரும் பேசக்கூடாது என்றும், அப்படி விவாதிக்க வேண்டுமானல் இதற்கெனவுள்ள ஒரு தீர்மானம் எடுத்தாளப்படுதல் வேண்டும் என்றும் விதிக்கப்பட்டிருக்கிறது
அதி செல்வாக்குள்ளவர்
பிரித்தானியப் பாராளுமன்றத்துப் பொதுமக்கள் சபையின் சபாநாயகராக இருப்பவர் ஒரு பெரும் பதவியை வகிப் பவர் மாத்திரமல்லர். மக்களின் நாயகமான மகத்தான தாபனம் ஒன்றின் தலைவராக இருந்து அதனை வழிநடத்து வதுடன் அதற்குப் பணியாற்றுபவரும் அவர். அந்த மகா தாபனத்தின் சின்னம் அவரே யாம். அவர் கட்சிபேதங்களுக்கு அதீதப்பட்டவராய், நடுக்கோளுது நியாயம் வழங்கு வதனையே இலக்காகக் கொள்வர். இதனலேயே அவருக்கு
l. Hansard.
2. Journals of the House.

Page 230
44 6 பிரித்தானியப் பாராளுமன்றம்
தேசத்தில் மகத்தான ஒரு செல்வாக்கு உண்டு. 19-ம் நூற் ருண்டில் பாராளுமன்றத்தில் கடமையாற்றிய சபாநாயகர் கள் ஒவ்வொருவரும் கட்சிப்பற்றற்று நடுநிலை வகிக்கும் ஒரு தன்மையை அடையப் பெருமுயற்சிசெய்து ஒரு அளவுக்கு அநுகூலமும் அடைந்தனர். 1839-ம் ஆண்டு தொடக் கம் 1857-ம் ஆண்டு ஈருகச் சபாநாயகராக விருந்த சால் ஸ் ஷோ-லெபேவர் என்பவரின் காலத்திலேதான்-அதாவது முதலாவது சீர்திருத்தச்சட்டம் நிறைவேறியதற்குப் பின் னுள்ள நெருக்கடியான காலத்தில்-இத்தன்மை பூரணமாக முற்றுப் பெற்றது.
சபாநாயகர் தெரிவு
ஒரு கட்சி பெரும் பான்மையினரான அங்கத்தவர்களைக் கொண்டு அரசாங்கத்தை அமைத்துச் கொண்டதும் அக்கட்சி தம்மவரில் அதி பிரபலமற்றவராய் கட்சிகளுக்குரிய வாதப் பிரதிவாதங்களில் பங்கு பற்ருதவராய் பொதுமக்கள்சபை யங்கத்தவர் அனைவரும் ஏற்கக் கூடியவராய் உள்ள ஒருவரை, எதிர்க் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை செய்த பின், சபாநாயகராக வேண்டுமென்று நியமிப்பது இப்போதுள்ள பொது வழக்கம். இதன் பின், அரசாங்கக் கட்சியில் அதி பிரபலமற்றவர் ஒருவர் அவருடைய பெயரைச் சபாநாயகராக பிரேரிக்க, எதிர்க் கட்சியில் உள்ள ஒரு பிரபலமற்றவர் அதனை அநுவதிப்பர். இவ்வாரு கச் சர்வாங்கீகாரமாகச் சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டதும் சபை முதல் வரும்? எதிர்க் கட்சித் தலைவரும் சமாநாயகரை முதன் முதலாகப் பாராட்டுவர். சபாநாயகருக்குரிய ஆண்டுச் சம்பளம் 5,000 பவுண். அவர் வசிப்பதற்கான இல்லமும் வெஸ்ற் மினிஸ்ரர் மாளிகைக்குள் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது. பதவியில் இருந்து ஒய்வு பெற்றதும், அவருக்கு வைக் கவுன்ற் என்னும் பட்டமும் ஒரு பென்ஷனும் வழங்கப்படும்.
சபையிலே வாதப் பிரதிவாதங்கள் காரசாரமாக நடக்கும் போது, சபைக் கருமங்கள் ஒழுங்காக நடைபெறுவதற்கு, சபாநாயகரின் பட்ச பாத மற்ற தன்மைதான் உதவியளிக்கிறது. சபையின் நற்பெயர், சபாநாயகர் அதனைக் கட்டுப்படுத்து வதில் மாத்திரமல்ல, அதனை ஒழுங்கான முறையில் வழிநடாத்
l. Charles Shaw-Lefevre. 2. Leader of the House. agg Ti575d 5.6 (Sao 5(56), J Tull, Jeru அலுவல்களை ஒழுங்குபடுத்தும் அங்கத்தவரே இவா. இலங்கைப் பாரா ளுமன்றத்திலும் ஒரு சபை முதல்வர் உளர்.
3. Viscount.

பிரித்தானியப் பாராளுமன்றம் 447
வதிலும் தங்கியிருக்கிறது. அரசாங்க அலுவல்களுக்கு எதிர்க் கட்சி கண்டபடி முறைதவறி இடைஞ்சல் விளைக்கா திருப்ப பதைச் சபாநாயகர் கண்காணிப்பதுடன், சபையில் மிகச் சிறுபான்மையினராக இருப்பவர்கள் உட்படச் சகலரும் தமது அபிப்பிராயத்தை வெளிதுறந்து கூறச் சந்தர்ப்பத்தையும் அளிப்பார்.
பாராளுமன்றக் கருமமுறை
பொதுமக்கள் சபையின் கருமமுறை அதி தொன்மை வாய்ந்த முறைகளையும் பிரமாணங்களையும் ஆதாரமாகக் கொண்டு சரித்திரப் பெருமை வாய்ந்தது. 16-ம் நூற்ருண்டுக் கும் 19-ம் நூற்ருண்டுக்கும் இடையில் பொதுமக்கள் சபைக் கருமமுறையில் பிரதான மாற்றம் ஏற்படவில்லை. 16வது நூற்ருண்டு ஆரம்பத்திலேயே, சபையின் அன்ரு டக் கருமங் களுக்கு வேண்டிய சாதனங்களிற் பலவும் விவாத விதிகளிற் பல வும் ஏற்கெனவே அநுட்டிப்பில் இருந்தன. பாராளுமன்றத்து இரு சபைகளான பொதுமக்கள் சபையும் பிரபுக்கள்சபையும் இப்போதுபோல வேறு வேருகவே இருக்கத் தொடங்கின. பொதுமக்கள் சபைக் குச் சபாநாயகரே தலைமை வகித்து அதன் கருமங்களைக் கட்டுப்படுத்தி, பொதுமக்கள் சபை முடிவுகளை பாராளுமன்றத்தின் மற்ற அம்சங்களான பிரபுக்கள்சபை, மன்னர் என்பவர்களுக்குத் தெரிவிக் கும் சாதனமாக இன்றுபோல அன்றுமிருந்தார். மசோதாக்கள் இப்போது போல, ஒவ்வொரு சபையிலும் மூன்று மூன்று முறை வாசிக் கப்பட்டபின்பே மன்னரின் அங்கீகாரத்துக்குச் சமர்ப்பிக்கப் பட்டன. இப்போதுபோலவே நிர்ணயங்கள் நிறைவேற்றப் பட்டன: கருமச்சபைகள் தெரியப்பட்டன. பொதுமக்கள் சபைக் கூட்டங்களுக்கு மன்னர் வந்ததில்லை. மிக அரிதாகவே பிரபுக்கள் சபைக் கூட்டங்களுக்குச் சென்ருர், ஆகவே இப்போது நாம் காணும் கருமமுறையும் விவாதப்பிரமாணங் களும் 300 ஆண்டுகளுக்கு முன்னே அபிவிருத்தி எய்தின.
கருமவிதிகள்
பொதுமக்கள் சபையின் விரிவான கருமமுறையினை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். இவற்றுள் மிகச்சிறியது பாராளு மன்றச் சட்டத்தினல் விதிக்கப்பட்டதாகும். 19 1 - b. 1949-ம் ஆண்டுகளின் பாராளுமன்றச் சட்டங்களால் விதிக் கப்பட்டவையே அவை: விவாதத்துக்கிடமாயுள்ள மசோதாக் கள் விடயமாக இரு சபைகளுக்குமுரிய தத்துவங்கள் பற்றியன. அவை அவற்றை இரு சபைகளும் கடைப்பிடித்தாகவேண்டும்.

Page 231
148 பிரித்தானியப் பாராளுமன்றம்
மற்றப்பகுதி (தனிப்பட்ட அங்கத்தவர்களின் விடயங்களை ஒழுங்குபடுத்தும் கரும விதிகள் புற நீங்கலாக) ஏறக்குறைய 95 கருமவிதிகளையும் சில நிருவாக காலக்கட்டளைகளையும் அடக்கியது. கரும விதிகளில் மூன்று மாத்திரமே 1832-ம் ஆண்டுக்கு முந்தியவை. மற்றவை இக்காலப் பாராளுமன்றத் துக்குரிய நிலைமைகளினல் சமய சந்தர்ப்பத்துக்குத் தக்கவாறு ஏற்பட்டவை.
மூன்ருவதாக அதி பெரும் பகுதியாகவுள்ளது சபையின் நாள் வரிக் குறிப்புக்களில் இருந்தும், அங்கத்தவர்கள், சபை உத்தியோகத்தர் என்பவர்களின் அனுபவத்தில் இருந்தும் சேகரிக்கப்பட்டுள்ள வழக்காறுகளையும் முன்மாதிரிகளையும் கொண்ட பெருந் தொகுதியாகும். இவற்றுடன் ஒப்பு நோக்குமளவில் கரும விதிகள் மிகவும் கொஞ்சமே அவற்றை எவரும் இலகுவில் அறிந்துகொள்ளலாம். ஆனல் இந்த முன்மாதிரிகளோ அப்படியில்லை. முன்பு இப்படிச் செய்யப் பட்டிருக்கிறது, ஆனபடியால் இப்போது இவ்விடயத்திலும் அப்படிச் செய்யலாம்’ என்பதற்கே துவான திருட்டாந்தங் களே அவை என்க.
ஒர் மசோதா-அதனைப்பற்றிய விபரம் மசோதா வென்பது பாராளுமன்றத்துச் சட்டத்தின் நக லேயாகும். அதாவது, சட்டமாகுமுன் நகல் உருவத்தில் இருப்பதுவே மசோதா வாகும். மசோதாக்களை நிறைவேற்று வது பாராளுமன்றத்தின் அதிபிரதான கடமைகளில் ஒன்ற கும். ஒரு மசோதா அரசாங்க உபகரனுேதவிக் கந்தோரினல்2 சாதாரணமாகப் பச்சைநிறக் கடுதாசியில் அச்சிடப்பட்டு வெளியாக்கப்படும். ஒரு மசோதாவில் பின்வரும் பகுதிகள் சாதாரணமாக இருக்கும்:-
1. சட்டநிரூபணம் தேவைப்படும் பல்வேறு கருமங்களை
விபரிக்கும் ஒரு நீளமான பெயர். 2. மசோதா பொதுவாக வழங்கப்படுவதற்குரிய ஒரு
சுருக்கப்பெயர். 3. குறித்த ஒரு விடயம் சழ்பந்தமாகச் சட்டம் இயற்றப் படுவது விரும்பத்தக்கது என்பதற்கான காரணங் களை விளக்கும் ஒரு பீடிகை (இக்காலத்தில் வெளி வரும் பொது மசோதாக்களில் இப்பீடிகை பொறித் தல் அரிது).
I. Sessional Orders. 2. இலங்கையில் மசோதாக்களும் ஏனைய அரசாங்கப் பிரசுரங் $ளிற் பெரும்பான்மையினவும் அரசாங்க அச்சகப்பகுதியால், அரசாங்க அச்சியந்திரசாலையில் பிரசுரிக்கப் பெற்று, அரசாங்கப் பிரசுரவிற்பன நிலையத்தால் விற்பனை செய்யப்படும்.

பிரித்தானியப் பாராளுமன்றம் 449
4. பிரதான ஏற்பாடுகளைக்கொண்டுள்ள மசோதாப் பிரிவு
கள். 5. மசோதாவின் பிரதான ஏற்பாடுகளினற் பாதிக்கப் படும் தாபனங்கள் அல்லது முந்திய சட்டங்களின் ஆவலியைக் கொண்ட அட்டவணைகள். ஒரு மசோதா பொதுப்பணச் செலவினை ஏற்படுத்து வதனல் நிதிசம்பந்தமான ஒரு அறிக்கையும் அதனுடன் அணைக்கப்படுதல் வேண்டும்.
இதனுடன், தேவையெனக் காணுமிடத்து ஒரு விளக்க அறிக்கையும் அணைக்கப்பட்டுப் பிரசுரிக்கப்படும்.
பாதிப்பாக வருதற்குரிய நிலைகள்
ஒர் மசோதா சட்டமாக வரமுன் பொதுமக்கள்சபை, பிர புக்கள்சபை என்னும் இரண்டிலும் நிறைவேறுதல் வேண்டும். இவ்விரு சபைகளில் ஒர் சபையிலிருந்தேனும் அது பிறக்க லாம். பொது மசோதாவின் முதல் வாசிப்பு ஒரு ஆசாரமுறை வாசிப்பேயாகும். பொதுச்சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ள மசோதா பொதுமசோ தாவாகும். மசோதாவைக் கொண்டுவந்து சமர்ப்பிக்கலாம் என்ற அநுமதியைச் சபை வழங்கியதும் அதன் பிரதி ரூபம் ஒன்று சபைக் கருமாதிகாரிக்கு வழங்கப்படும். (ஏற்கெனவே அறிவித்தல் கொடுத்திருந்தால் இவ்வாறு அநுமதி பெருமல் அதனைச் சமர்ப்பிக்கலாம்). ஒரு முறை சமர்ப்பிக்கப்பட்ட தும் அதனை அச்சிடும்படி கட்டளை பிறப்பிக்கப்படும்: இதன்பின் அது பிரசுரமாகும். பிரசுரமானதும் பின்வருவன நிகழும்.
இரண்டாம் வாசிப்பு
ஆய்வுநிலை?
"ஆய்வறிக்கை ஆலோசனை?
மூன்ரும் வாசிப்பு
ஒரு மசோதாவை முதன் முறையாக விவாதிப்பது இரண் டாம் வாசிப்பின்போதேயாம். இந்த மசோதா இரண்டாம் தரம் இப்போது வாசிக்கப்படுவதாக’ என்ற ஒரு பிரேரணை யுடன் அது சம்பந்தமான மந்திரி அதனை எடுத்தாளுவார். மசோதாவின் கொள்கைகள் பற்றியே முதலில் விவாதம் நடக்கும். ஆய்வுநிலையிலேயே அதன் விதிகள் விபரமாக விவாதிக்கப்படும். ஆகவே, சில சமயங்களில் எதிர்க்கட்சி
. Second Reading. . Committee Stage.
Consideration on “Report. Third Reading. ... “This Bill be now read a second time'.
3248-Q

Page 232
4 50 பிரித்தானியப் பாராளுமன்றம்
யானது இரண்டாம் வாசிப்பின்போது, குறித்த ஒரு மசோதா வுக்கு விரோதமாக வாக்களிக்காது, ஆய்வுநிலையில் திருத் தங்கள் மாற்றங்கள் கொண்டுவரவும் காத்திருக்கும். ஆணுல் கொள்கையளவில்தானும் எதிர்க் கட்சி அம்மசோதாவை ஆட்சேபித்தால், அதனை நிராகரிப்பதாக ஒரு திருத்தப் பிரேரணையைக்கொண்டு வருவதுதான் வழக்கமான கரும முறையாகும்.
முழுச்சபையும் ஆய்வுநிலைக்கு மாறுதல்
ஒரு மசோதா இரண்டாம் வாசிப்பில் நிறைவேறிவிட்டால், ஆய்வுச்சபையாக மாறியுள்ள முழுச்சபைக்கும் சமர்ப்பிக்கப் படும் அல்லது இதற்கென ஏற்கெனவே வகுக்கப்பட் டுள்ள கருமச் சபைகளில் ஒன்றுக்குச் சமர்ப்பிக்கப்படும். இப்படியான கருமச்சபைகள் வழக்கமாக ஆறு உள்ளன்: அவை A சபை, B சபை, C சபை, D சபை, E சபை, F சபை, இசுக் கோ தி யச் சட்டநிரூபணங்கள் பற்றிய சபை' என்பனவாம்.
முழுச்சபையும் ஆய்வுச்சபையாக மாறி மசோதாக்களைப் பரிசீலனை செய்யும் முறை ஸ்ருவாட்? மன்னர்களின் காலத்தில் உண்டானது. அக்காலத்தில் சபாநாயகராக இருந்தவர்கள் மன்னர்களாலேயே நியமிக்கப்படுபவர்களாவர். அத்தகைய தான சபாநாயகர் தம் ஆசனத்தில் இல்லாதபோது விவாதங் களை நடாத்துவதற்காகத்தான் இந்த முறை ஏற்பட்டது. சபை ஆய்வுநிலைக்கு மாறும்போது, சபாநாயகர் தம் ஆசனத் தைவிட்டு நீங்குவார். அவருடைய அதிகாரத்தின் சின்னமாக வைக்கப்பட்டிருக்கும் கட்டியக்கோலும் உரிய மேசையில் இருந்து அகற்றப்படும். பின்னர் சபாநாயகர் இருந்த இடத் துக்கு, வழிவகை விடயத்தலைவர்? (இவர் உப சபாநாயகருமா வர்) அல்லது அவருக்குப் பிரதியாகவுள்ள பிரதித்தலைவர் வந்து அக்கிராசனம் வகிப்பர். இக்காலத்திலே, எல்லா மசோதாக் கள் விடயத்திலும் முழுச்சபையும் ஆய்வுநிலைக்கு மாறுவ தில்லை. குறித்த ஆண்டில் வரும் பிரதானமான நிதி மசோ தாக்களை அல்லது அதி அரசியல் விசேடத்துவம் வாய்ந்த மசோதாக்களை அல்லது ஆசாரமுறையில் முழுச்சபையும் விவா திக்கவேண்டும் என்றுள்ள மசோதாக்களைப் பற்றிக் கலந்து பேசுதற்கு மாத்திரமே இப்போது முழுச்சபையும் ஆய்வுச்சபை யாக மாறுகிறது.
1. Committee dealing with Scottish Legislation. 2. Stuart. 3. Chairman of Ways and Means: Chairman, என்பதற்கு அக்கிராச
னர் என்றும் கூறலாம்.

பிரித்தானியப் பாராளுமன்றம் 45及
கருமச்சபை
மேலே காட்டப்பட்டுள்ள மசோதாக்களையொழிந்த ஏனைய மசோதாக்கள் யாவும் அவை அவற்றுக்குரிய கரு மச் சபைக் குச் சமர்ப்பிக்கப்படுகின்றன. ஒரு கரு மச்சபையில் வழகக்மாக 60 அங்கத்தவர் இருப்பர். அவர்களில் ஒரு பகுதியினர் குறித்த நிருவாக காலத்துக்கென்று பாராளு மன்ற அங்கத்தவர்களிடையிருந்து நியமிக்கப்படுவர். மற்றப் பகுதியினர், குறித்த விடயங்களில் நிபுணத்துவம் உடையார் என்பதற்காக அவ்விடயங்கள் சம்பந்தப்பட்டுள்ள மசோதாக் களின் பொருட்டு, நியமிக்கப்படுபவராவர். கருமச் சபை யங்கத்தவர்கள், பாராளுமன்றக் கட்சிகளில் இருந்து அக் கட்சிப் பலத்துக்குத் தக்கதாக பரிமாணத்துவ்முறையில் தெரிவு செய்யப்படுவர். கருமச்சபைகளின் அக்கிராசனர், இதற் கெனச் சபாநாயகரால் நியமிக்கப்படும் ஒரு அக்கிராசனக் கோஷ்டியில் இருந்து நியமிக்கப்படுவார்.
கருமச்சபைகளின் கூட்டங்கள் பொதுமக்கள் சபைக் கட்ட டத்தின் மேல் மாடிகளில் நிகழ்வன. கருமச் சபைநிலையில் ஓரங்கத்தவர் எத்தனை தரம் வேண்டுமானலும் பேசலாம். ஆனல், பொதுமக்கள் சபை விவாதத்தில் இப்படிச்செய்ய முடியாது. ஒரு மசோதாவை ஆய்வுநிலையில் வைத்துப் பரி சீலனை செய்வதன் நோக்கம் அதன் சகல பிரிவுகளையும் மிக நுணுக்கமாக ஆராய்வதே ஆகவே அங்கத்தவர்கள் தமக் கெழும் எண்ணங்களை அவ்வப்போது கட்டுப்பாடில்லாமல் தெரிவிக்கவேண்டியது அவசியமாகும். ஒரு மசோதாவில் உள்ள ஒன்றை நீக்குவதால் அல்லது வேறென்றை மேலதிகமாகச் சேர்ப்பதால் அல்லது சொற்பிரயோகத்தில் மாற்றம் செய்வ தால் அல்லது இன்னெரு பிரிவைச் சேர்ப்பதால், அதனைத் திருத்திக்கொள்வது என்பர்.
அறிக்கையும் மூன்ரும் வாசிப்பும்
ஒர் மசோதா ஆய்வுநிலையைக் கடந்த பின்னரும், முழுச் சபையிலும் நிறைவேறிச் சட்டமாக முன் வேறும் இரு தடை களைக் கடக்கவேண்டும். அவற்றை அறிக்கைநிலை, மூன்ரும் வாசிப்பு என்பர். ஆய்வுச்சபையானது மசோதா பற்றி முந்திய கட்டத்தில் என்ன செய்யப்பட்டிருக்கிறது என்பதனைப்பற்றி யும், மேலும் திருத்தங்கள் மசோதாவுக்குச் செய்யவேண்டியது அவசியமா என்பதனைப்பற்றியும் முழுச்சபைக்கும் அறிக்கை செய்ய ஒரு சந்தர்ப்பத்தை வழங்குகிறது. இப்படியானவோர்
l. Standing Committee: நிரந்தர நிருவாகசபை, என்றும் கூறுவர்.

Page 233
452 பிரித்தானியப் பாராளுமன்றம்
அறிக்கையை ஆய்வுச்சபை செய்ததும், அம்மசோதா முழு வதையும் அல்லது அதன் ஒரு பகுதியைப் புநராலோசனை செய்யுமாறு ஒரு ஆய்வுச்சபையிடம் முழுச்சபையும் விடும். இப்படியான நிலையேற்படாது ஒரு மசோதா அறிக்கைநிலை யைக் கடக்குமானல் அது தனது இறுதிக் கட்டமாகிய மூன்ரும் வாசிப்புநிலையை அடையும். மூன்ரும் வாசிப்புக்குப் பின்னர் அது மேற்சபையாகிய பிரபுக்கள் சபைக்கு அனுப்பப் படும்.
மூன்ரும் வாசிப்பின்போது ஆய்வுச்சபையில் அல்லது அறிக்கை நிலையில் உடன்பட்டதற்கிணங்க மசோதா விவா திக்கப்படும். மூன்றம் வாசிப்பில் திருத்தங்கள் எழுத்து மூலம் எடுத்தாளப்படமாட்டாது. நகலுக்கு ஏதும் திருத் தங்கள் செய்யவேண்டின், வாய்மொழிமூலம் அத்திருத்தங் களைப் பிரேரிக்கலாம். பொதுமக்கள் சபையில் மசோதா மூன்ரும் முறையாகவும் நிறைவேறும்பொழுது, சபைக் கரு மாதிகாரி அதனைப் பிரபுக்கள்சபையிற் கொண்டுபோய்ச் சமர்ப்பித்துப் பிரபுக்களினது சம்மதத்தை அறிந்துவர வேண்டு மென்று கட்டளை செய்யப்படுவர். பிரபுக்கள் சபையிலும் அம்மசோதா, பொதுமக்கள் சபையில் உள்ளனபோன்ற தடை களேக் கடந்து நிறைவேற்றப்படுதல் வேண்டும். ஒரு மசோதா பொதுமக்கள் சபையிலன்றி, பிரபுக்கள் சபையிடம் இருந்தே உண்டாகுமானல், அது பிரபுக்கள்சபையில் நின்றவேறியபின், பொதுமக்கள்சபையிலும் நிறைவேறுதல் வேண்டும்.
பிரபுக்கள்சபையில்
தமக்கனுப்பப்பட்ட மசோதாவுக்கு பிரபுக்கள் ஏதும் திருத்தம் செய்வரானல், அத்திருத்தங்களை ஆலோசிக்குமாறு பொதுமக்கள் சபைக்கு மசோதா திருப்பி அனுப்பப்படும். ஒவ்வொரு திருத்தம் பற்றியும் ஒரு பிரேரணை எடுத்தாளப் படும். குறித்த திருத்தம் விடயமாக இச்சபை பிரபுக்கள் சபை யுடன் உடன்படுகிறது (அல்லது உடன்படவில்லை) என்று ஒவ்வொரு திருத்தம் சம்பந்த மா கவும் பிரே ரணை எடுத்தாளப்படும்.
பிரபுக்கள் சபைக்கும் பொதுமக்கள்சபைக்கும் வேற்றுமை தோன்ற விடத்து, பொதுமக்கள் சபை யனுப்பிய மசோதா வுக்கு பிரபுக்கள் சபை அங்கீகாரம் தெரிவிக்கும். அப்படித் தெரிவித்ததும், மசோதா மன்னரின் அங்கீகாரத்துக்குத் தயா ராக இருக்கும். பிரபுக்கள்சபை ஒரு மசோதா விடயமாகச் சில திருத்தங்களைச் செய்து அனுப்ப அத்திருத்தங்களைப் பொது மக்கள்சபை நிராகரிக்குமிடத்து, அப்படியான நிராகரிப்புக்கு ஒரு கருமமுறையுண்டு. பிரபுக்கள் சபை கொண்டுள்ள முடி

பிரித்தானியப் பாராளுமன்றம் 453
வுடன் வேற்றுமை கொள்வதற்கான காரணங்களைத் தொகுத் துக் காட்டப் பொதுமக்கள்சபை தன் அங்கத்தவர்களுக்கிடை யிருந்து ஒரு குழுவை நியமிக்கும். இக்குழு, காரணங்களைத் தொகுத்த பின், அவை பிரபுக்கள் சபைக்கு அனுப்பிவைக்கப் படும். இதன் பின், பிரபுக்கள் சபை, பொதுமக்கள்சபையின் விருப்பத்துக்கிணங்க மசோதாவைப் புநர்த்திருத்தம் செய்ய லாம், அல்லது பதில் திருத்தங்களைச் செய்யலாம்.
பொதுமக்கள் சபைக்கும் பிரபுக்கள் சபைக் குமிடையில் ஒரு மசோதா விடயமாகத் தவிர்க்கமுடியாத அபிப்பிராய பேதம் ஏற்படுமானல், அரசாங்கம் பாராளுமன்றச் சட்டக் கருமமுறை என்னும் விதியைப் பிரயோகிக்கும். அதாவது ஒரு மசோதா பொதுமிக்கள் சபையில் அடுத்தடுத்து மூன்று முறை நிறைவேறுமானல், பிரபுக்கள் சபை அதற்கு எதிர்ப்பா யிருந்தாலும், சட்டமாகும் என்பதே; (மூன்று முறை என்றி ருந்ததை 1949-ம் ஆண்டின் பாராளுமன்றச் சட்டம் இரண்டு முறையென்று குறைத்திருக்கிறது) பிரபுக்கள் சபையிலே உள்ள பெரும்பான்மையினர் பிடிவாதமாக ஒரு மசோ தாவுக்கு இடைஞ்சல் கொடுத்தால், அவர்களின் பெரும் பான்மைப் பலத்தைக் கெடுக்க தன் சார்பானவர்களைப் பிரபுக் களாக்கிப் பிரபுக்கள் சபையில் அங்கத்துவம் வகுக்கச் செய்ய வும் அரசாங்கம் தீர்மானிக்கலாம்.
பண மசோதாக்கள்? 1911-ம் ஆண்டினது பாராளுமன்றச்சட்டத்தின் பிரகா ரம், பண மசோதாக்களுக்கு, குறித்த சில நிபந்தனைகளுக்கு அமைவாக, பிரபுக்கள் சபையின் சம்மதம் வேண்டியதில்லை என்றும் விதிக்கப்பட்டிருக்கிறது. ஒரு மசோதா பண மசோதா என்பதனைச் சபாநாயகர் குறித்து அனுப்புதல் வேண்டும். பன மசோதா எ ன் பது தா ன் என்ன? பண மசோதா என்பது "வரி விதிப்பு, வரி நீக்கம், வரித்தள்ளுபடி, வரி மாற்றம், அல்லது வரி ஒழுங்கு என்பவைபற்றி அல்லது அவற்றுடன் அல்லது அவை எவற்றுடனுவது தொடர்பு கொண்டுள்ள உப விடயங்கள் சம்பந்தமான ஏற்பாடுகளைக் கொண்டிருக்கிறது எனப் பொதுமக்கள்சபைச் சபாநாயகர் கருதும் ஒரு மசோதா வே யாகும் என்று வியாக்கியானம் கொடுக்கப்பட்டிருக்கிறது. சபாநாயகரால் உறுதிப்படுத்தப் படும் பண மசோதாக்கள் பிரபுக்கள் சபைக்கு ஒரு நிருவாகக் காலம் முடிவதற்குக் குறைந்தபட்சம் ஒரு மாதத்துக்கு முந்தி அனுப்பப்படும். தனக்கு அனுப்பப்பட்ட திகதியிலிருந்து
1. Parliament Act Procedure. ܚܫ-- 2. Money Bills.

Page 234
454 பிரித்தானியப் பாராளுமன்றம்
ஒரு மாதத்துக்கிடையில் அப்படியான பண மசோதாக்களைப் பிரபுக்கள் சபை நிறைவேற்ருவிட்டால், அவை பிரபுக்கள் சபையின் சம்மதம் இல்லாமலே இராச உடன்பாட்டைப் பெறும்.
மன்னர் பிரசாரணம், இராச உடன்பாடு2
ஒரு பாராளுமன்றம் அமைக்கப்பட்டபின் அதன் முதற் கூட்டத்துக்கும், ஒரு நிருவாக காலத்து ஆரம்பக் கூட்டத்துக் கும் மன்னர் அல்லது அரசி நேராக சமூகமளித்து பாராளு மன்றத்தை அங்குரார்ப்பணம் செய்துவைப்பார். அப்போது அவர் ஒரு பிரசாரணத்தைச் செய்வார். அதனைச் சிம்மா தனப் பிரசாரணம் அல்லது மன்னர் பிரசாரணம் என்பர். இப்பிரசாரணம் சமயோசிதமாக அவரது மந்திரிமா ரால் எழு திக் கொடுக்கப்படும். அரசாங்கத்தின் கொள்கையை அது விளக்குவதாக இருக்கும். அத்துடன் பாராளுமன்றம் கூட்டப் படும் அல்லது தவணையிடப்படும் அல்லது கலைக்கப்படும் நோக்கங்கள், காரணங்களையும் அப்பிரசாரணம் விளக்கும். ஒரு மசோதாவானது உரிய தடைகளைத் தாண்டி இராச உடன்பாட்டுக்குத் தயாராக இருக்கும்பொழுது அவ்விராச உடன்பாடு, மகா முத்திரை பொறிக்கப்பட்டுள்ள இராசாதி காரத்தால் பிரபுக்கள் சபையில் வழங்கப்படுவது இப்போதைய வழக்கம். இந்த இராச உடன்பாடு கிடைத்ததும் மசோதா? என்று இதுவரை வழங்கப்படுவது 'பாராளுமன்றச் சட்ட4* மாகிறது.
தனி மசோதாக்கள் தனி அங்கத்தவர் மசோதாக்கள்
பாராளுமன்றத்தில் அதி சாதாரணமாக எடுத்தாளப் படும் மசோதாக்கள் பொது மசோதாக்களே7யாம். இதற்கு முன் குறிக்கப்பட்டது ஒரு பொது மசோதா பற்றிய விடயமேயென்க. பொது மசோதாக்களை விட, தனி மசோ தாக்கள் என்றும் உள. ஒரு தனிப்பட்டவர் அல்லது ஒரு கொம்பனி அல்லது ஒரு ஊராட்சி நிலையம் என்னும் இன்னே ரன்னவை சம்பந்தமாக எடுத்தாளப்படும் மசோதாக்களே தனி மசோதாக்கள் எனப்படும். மேலும், தனி மனிதனின் உரிமைகளில் தலையிடக்கூடிய நீர் வேலைகள், புகையிரதப்பாதை . The King's Speech. - . Royal Assent. . Throne Speech or Speech from the Throne. . Act of Parliament. . Private Bills.
. Private Members' Bills. ... Public Bills.

பிரித்தானியப் பாராளுமன்றம் 455
கள் என்பவைபற்றியும் தனி மசோதாக்கள் இருக்கும. தனி மசோதாக்களும் பொது மசோதாக்களைப்போலவே குறித்த சில தடைகளைத் தாண்ட வேண்டும். ஆனல் அது சம்பந்த மான விடயங்களிற் பெரும்பான்மையின ஆய்வுநிலையிலேயே செய்யப்படும். இந்த ஆய்வு நிலையில், குறித்த மசோதாவினுற் பாதிக்கப்படும் கொம்பனிகள், அல்லது ஊராட்சித்தாபனங் கள் அல்லது தனிப்பட்ட மனிதரின் ஆட்சேபனைகள் கேட்டுச் சிந்திக்கப்படும்.
ஆனல், தனி அங்கத்தவரின் மசோ தா பொது மசோதாத் தான். அது முழுச் சமூகத்தையும் பாதிப்பதாகும். அப்படி யிருந்தும் பொது மசோதாக்கள் என்று தீர்க்கமாக வரைய றுத்துக் கூறப்படும் மசோதாக்கள், அரசாங்கத்தை நடாத் தும் மந்திரிமாரால் எடுத்தாளப்படும். ஆனல் தனி அங்கத் தவர் மசோதா அரசாங்கத்திடம் இருந்து பிறக்காது, ஒரு தனிப்பட்ட அங்கத்தவரால் எடுத்தாளப்படும். தனிப்பட்ட அங்கத்தவர்கள் எடுத்தாண்டு நிறைவேற்றுவித்த பல பிர தான மசோதாக்கள் உள. சாமுயல் பிலிம் சல்1 என்பவரின் வர்த்தகக் கப்பற்சட்டம், 1876%, சேர் அலென் பி. ஹேபேட் டின்விேவாக வழக்குச் சட்டம், 19374, எலென் வில்க்கின்சனின் வாடகை கொள்வனவுச் சட்டம் 18389 என்பன இவற்றுட் சில. இரண்டாவது உலக யுத்த காலத்திலும், அதன்பின் உள்ள சில காலத்திலும் பாராளுமன்ற நேரத்தை தனியங்கத் வர்களின் மசோதாக்களின் பொருட்டுச் செலவிட முடியா திருந்தது. ஆனல் 1949-ம் ஆண்டு தொடக்கமாக தனியங் கத்தவர்களும் மசோதாக்கள் எடுத்தாளும் முறை மீண்டும் அநுட்டிக்கப்பட்டது. அப்போது 350 தனியங்கத்தவர் மசோ தாக்கள் எடுத்தாளப்படவிருந்தன. இவை மிதமிஞ்சியிருந்த படியால், இவற்றில் எவற்றைத் தெரிவது என்பதற்கு வாக்குச் சம்மதம் எடுக்கப்பட்டது. ஈற்றில் 25 மசோதாக்களே தெரிவுசெய்யப்பட்டன. அவற்றுட் பல இப்போது சட்டமாகி அநுட்டிப்பில் இருக்கின்றன. மசோதாக்கள், பிரேரணைகளைத் தனிப்பட்ட அங்கத்தவர்கள் எடுத்தாள்வதற்கான வசதிகளை மீண்டும் அளிக்கவேண்டும் என்று ஒரு நிர்ணயம் 1950-ம் ஆண்டு நொ வம்பர் மாதம் 8-ம் திகதி பொதுமக்கள்சபையில் எடுத்தாளப்பட்டு நிறைவேறியது. தனிப்பட்டவர்களின்
. Samuel Plimsoll. . Merchant Shipping Act, 1876. . Sir Alan P. Herbert. . Matrimonial Causes Act, 1937.
... Ellen Wilkinson. . Hire-Purchase Act, 1938.

Page 235
45t பிரித்தானியப் பாராளுமன்றம்
பிரேரணைகளுக்குப் பத்து வெள்ளிக்கிழமைகளும், மசோதாக் களுக்குப் பத்து வெள்ளிக்கிழமைகளும் ஒதுக்கப்பட்டன. இந்த நிர்ணயத்துக்கு ஒரு திருத்தம் சேர்க்கப்பட்டது. அதா வது வாரத்தில் இரண்டு நாட்களில் தாம் ஒரு மசோதாவை எடுத்தாளப்போவதாகக் கூறி அதற்குரிய விளக்கத்தை ஒரு அங்கத்தவர் பத்து நிமிடத்துக்கு மேற்படாத நேரத்துக்குள் தெரிவிக்கும் செளகரியத்தை மீண்டும் அநுட்டிப்புக்குக் கொண்டுவர வேண்டும் என்பதே.
மந்திரிமாரின் பொறுப்பு: பாராளுமன்றத்திற் கேள்வியும் விடைகளும் சகல மந்திரிமாரும் தத்தம் பரிபாலனப் பகுதிகளுக்குள் பொதுக் கொள்கை சம்பந்தமான சகல விடயங்களுக்கும் பாராளுமன்றத்துக்குப் பொறுப்பாளிகளாயிருக்க வேண்டும். இந்த விதமான ஒரு நியதி இருப்பதனுல்தான் பிரசை ஒவ் வொரு வனதும் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன. ஒரு மந்திரி வகுக்கும் எந்தக் கொள்கையினையேனும் எதிர்க்க, ஒவ்வொரு பாராளுமன்றத்து அங்கத்தவருக்கும் சாதாரண பிரசையின் பிரதிநிதி என்ற நிதியில் உரிமையுண்டு. அப்படி யாக எதிர்க்கப்படும்போது, குறித்த மந்திரியானவர் தனது கொள்கை சரியானதுதான் என்பதனை நிலைநாட்டுதல் வேண் டும், அல்லது அக்கொள்கையினைத் தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும். பாராளுமன்றத்திலேயுள்ள அங்கத்தவர் ஒருவர் ஒரு மந்திரியின் கொள்கையை நான்கு பிரதான வழிகளால் எதிர்க்கலாம். அவையாவன:-
(1) ஒரு குறித்த கருமம் விவாதத்துக்கு வரும்போது, பொது விவாதத்தில் அவ்வங்கத்தவர் கலந்து தம் அபிப்பிராயத்தை வெளியிடுவது. (2) பாராளுமன்றத்தில் குறித்த மந்திரியிடம் கேள்வி
கேட்டு விடையறிவது. (3) தமது பகுதிக்குள் அடங்கிய தேச அலுவலை நடாத்து தற்கு வேண்டிய பணத்தை, குறித்த மந்திரியான வர், வரவு செலவுத்திட்டத்தைச் சமர்ப்பித்துக் கேட்கும்போது, அவ்வரவு செலவுத் திட்டம் சம்பந் தமாக நடக்கும் விவாதத்திற் கலந்துகொண்டு, அம்மந்திரியின் கொள்கையை ஆட்சேபிப்பது. (4) ஒத்திவைப்புப் பிரேரணை விவாதத்திற் பங்குபற்று
வது.
1. Adjournment Motion.

பிரித்தானியப் பாராளுமன்றம் 457
ஒரு மசோதா பற்றியுள்ள பொது விவாதத்தில் (இரண் டாவது வாசிப்பின்போது) அங்கத்தவர்கள் கலந்துகொண்டு அம்ம சோதாவின் பொதுக்கொள்கையினை ஆட்சேபிக்கலாம். அல்லது ஆய்வுநிலையில் திருத்தங்கள் கொண்டுவரலாம். அர சாங்கத்தின் கட்சியே பெரும்பான்மையாகப் பாராளுமன்றத் தில் இருந்தாலும், எதிர்க் கட்சியினர் நியாயத்தை விளக்கித் திருத்தங்கள் கொண்டுவந்து நிறைவேற்றுவதும் அரிதன்று; இப்படியாகச் செய்வதால், அரசாங்கக் கட்சியும் எதிர்க் கட்சியும் ஒரு பரிபாலனக் கருமத்துக்கு அபிவிருத்தி ஏற்படுத் துவதில் பரஸ்பரம் பகைமை பராாட்டாது ஒத்துழைக்கிருர் கள் என்பது புலணுகும்.
கேள்விநேரம்
பாராளுமன்றத்தில் கேள்விநேரம் என்ருெரு சமயம் உண்டு. சனப்பிரதிநிதிகளாயுள்ளார் பொதுவிடயங்கள்பற் றித்தான் சாவதானமாக இருககின்றனர் என்பதனை நன்கு காட்டுதற்கு இச்சமயம் சந்தர்ப்பமளிக்கின்றது. பிரசை களின் சுதந்திரம், உரிமை என்பவை விடயத்தில் அரசாங்கம் கவனமாக நடக்கவேண்டும், இல்லையேல் அக்கிரமம் அம்பல மாகும் என்பதனைக் காட்டுவது இக்கேள்வி நேரமேயாகும். * பொதுச்சேவையின் ஒவ்வொரு மூலையினையும் ஊடுருவிச் சென்று அதனை வெளியரங்கப்படுத்தும் ஆய்வொளியாக' கேட்கப்படும் கேள்விகள் இருக்கும். ஒரு விடயத்தைப் பிரேரணைமூலம் கிளப்பாமல் கேள்விமூலம் கேட்டு விடை யறிதல் நேரம் விரயமாவதைத் தடுக்கும். சம்பிரதாயமற்ற முறையில் அரசாங்க அலுவல்கள் சம்பந்தமான தகவல்களை ஆளும் கட்சியினர் வெளியிடற் கும் இக்கேள்விநேரம் பயணுகும்.
சபை கூடிச் சபாநாயகருக்குரிய மதகுரு பிரார்த்தனை செய்து முடித்ததும் கேள்விகள் கேட்கப்படும். வாரத்தின் முதல் நான்கு நாட்களிலும் பி. ப. 2-45 மணிக்குப்பிந்தாமல் கேள்விகள் ஆரம்பமாய் ஏறக்குறைய ஒரு மணி நேரத்துக்கு நடக்கும். வாய்மொழி விடை வேண்டிய கேள்விகள் எழுத்து மூலமாகச் சபாநாயகரது மேசையிற் சமர்ப்பிக்கப்படும்.
மூலக்கேள்வியைக் கேட்கும் அங்கத்தவர், அல்லது வேருேர் அங்கத்தவர் அம்மூலக் கேள்வியுடன் தொடர்பாய இன்னேர் கேள்வியை அல்லது சில கேள்விகளைக் கேட்கவும் இடம் அளிக் கப்பட்டிருக்கிறது. ஆனல் வேறு அங்கத்தவர்கள் ஏற்கெனவே சமர்ப்பித்திருக்கும் கேள்விகளுக்கு நேரமில்லாமல், கேள்வ்
I. Question Time.

Page 236
4 5 & பிரித்தானியப் பாராளுமன்றம்
களையும் உபகேள்விகளையும் ஒரு அங்கத்தவர் மாத்திரம் கேட்டுககொண்டிருக்கச் சபாநாயகர் விடமாட்டார். கேள்வி கள் கேட்பதிலும் பதில்கள் இறுப்பதிலும் பாராளுமன்ற விவாதத்தன்மையின் சிறந்த அம்சம் யாவும் வெளிப்படும்.
எழுத்துமூல விடைகள்
ஒரு கேள்விக்கு எழுத்துமூலமான அல்லது வாய்மொழி விடையைக் கொடுக்கலாம். பி. ப. 3-30 மணிக்குமுன் கிடைக் காத கேள்விகளுக்கும் எழுத்துமூலமான விடையே வேண்டும் என்று அங்கத்தவர் கோரியுள்ள கேள்விகளுக்குமான விடைகள் ‘ஹன்சாட்' என்று வழங்கப்படும் பாராளுமன்றப் பேச்சு அறிக்கையில் வெளியிடப்படும். குறித்த தினத்தன்று நிகழும் விவாத அறிக்கைக்குப்பின்னல் இவை வெளியிடப்படும் கேள் விகள் அங்கத்தவரால் மந்திரிமாருக்கு விடுக்கப்படலாம்: அல்லது ஒரு அங்கத்தவர் பொறுப்பாயுள்ள ஏதும் சபைக் கருமம் சம்பந்தமாக அந்த அங்கத்தவருக்கு விடுக்கப்படலாம்.
பொது நன்மை கருதி, ஒரு மந்திரி தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு மறுமொழி கூற மறுக்கவும் இடம் இருக்கிறது. பி. ப. 3-30 மணிக்கிடையில் கிடைக்காத எக்கேள்விக்குமான விடைகள் சம்பந்தப்பட்டுள்ள பகுதியால், அக்கேள்வியைக் கேட்கும் அங்கத்தவருக்கு அனுப்பப்படும்.
பேச்சுச் சுதந்திரம் பொதுமக்கள் சபைக்குப் பல சலுகைகள் உள. பொது மக்கள் சபையில் அங்கத்துவம் வகிப்பவர்கள் தம்மைத் தெரிந்தனுப்பிய மகாசனங்களுக்குத் தேவையான விதத்திற் பணியாற்றுவதற்காக, அவர்களுக்கு பாராளுமன்றத்துக்குட் பல சலுகைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அச்சலுகைகளில் பேச்சுச் சுதந்திரம் ஒன்று. சபாநாயகரின் கட்டளைகளுக் கமைவாக ஒரு அங்கத்தவருக்குப் பேச்சுச் சுதந்திரம் வழங்கப் பட்டிருக்கிறது. பாராளுமன்றத்திலே ஒரு அங்கத்தவர் செய்த கூற்றின் பொருட்டு அவர் மீது நிந்தை வழக்கோ அவதூறு வழக்கோ இராசத்துரோக வழக்கோ தொடரப்படக்
கூடாது என்று விதிக்கப்பட்டிருக்கிறது.
சலுகையை மீறல் பாராளுமன்றத்துச் சலுகையை மீறும் எவரையும், அதன் உரிமைகள் கெளரவம் என்பவற்றுக்குப் பங்கம் விளைக்கும் எவரையும் தண்டிக்கும் உரிமை பாராளுமன்றத்துக்கு உண்டு இப்படியான ஒரு சலுகை மீறல் ஏற்பட்டால் அதனைப்பற்றி
l. Hansard.

பிரித்தானியப் பாராளுமன்றம் 459
ஒரு அங்கத்தவர் பிரஸ்தாபிக்க அதனை யோசிப்பதற்கு முதலிடம் வழங்கப்படும். இதன் பின் இப்படியான சலுகை மீறற் குற்றத்துக்கு முதன் தோற்றச் சாட்சியமுளதா என்ப தனைச் சபாநாயகர் நிச்சயிப்பார். அப்படியாக முதல் தோற் றச் சாட்சியம் உண்டென அவர் நிச்சயித்தால் பாராளு மன்றமே அவ்விடயத்தை ஆராய்ந்து ஒரு முடிவுசெய்யும். அல்லது இதனை சலுகைச்சபை யின் தீர்ப்புக்கு விடவேண்டும் என்று சபைமுதல்வர் ஒரு தீர்மானத்தை எடுத்தாளுவார். சலுகைச்சபை என்பது பாராளுமன்றத்தில் நீண்டகால அநுப வம்படைத்த அங்கத்தவர்களைக்கொண்ட ஒரு சிறு சபையா கும். குற்றம் சாட்டப்பட்டவர் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டு போதிய அளவுக்குப் பச்சாத்தாபப்பட்டு மன்னிப் புக்கோரினல் அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று இச் சபை சிபாரிசுசெய்வது வழக்கம். இதன்பின் முழுச்சபையும் இச்சிபாரிசினை ஆராய்ந்து ஒரு முடிவுசெய்யும்.
பிரசையும் பாராளுமன்றமும்
தனிப்பட்ட ஒரு பிரசை பாராளுமன்றத்துடன் கொண்டி ருக்கும் தொடர்பு யாது? அரசாங்கத்தில் அவன் தனது செல்வாக்கைப் பிரயோகிக்கிருன? எப்படிப் பிரயோகிக்கிருன்? என்ற கேள்விகள் இச் சந்தர்ப்பத்தில் எழுகின்றன. அவன் தனது வாக்குச் சம்மதத்தையளித்து ஓர் அரசாங்கத்தை அமைப்பதில் உதவி செய்கிருன். அவன் தனது தொகுதிக்குரிய அங்கத்தவருக்கு எழுதி அல்லது அவரிடம் நேராகப்போய் தனக்கும் பாராளுமன்றத் துக்கு மி  ைட யே தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளுகிறன். ஒருவர் பாராளுமன்றத் தங்கத் தவராகத் தெரிவு செய்யப்பட்டதும் அவர் ஒரு கட்சிப் பிரதி நிதியாக மாத்திரம் இல்லாது தனது தொகுதி மக்கள் சகல ரதும் பிரதிநிதியாகிருர். தனது தொகுதி மக்களைச் சட்ட நிரூபணங்கள் பாதிக்கும் விடயத்தில் அவர் வேண்டிய ஆலோ சனையை அவர்களுக்கு உரிய நேரத்தில் அளித்துதவிபுரிதல் வேண்டும். அவர்களுடைய குறைகளைக்கேட்டு அவற்றை நிவிர்த்திக்கும் மார்க்கம் தேடவேண்டும். தேவையானபோது அக்குறைகளைக் பாராளுமன்றத்தில் கேள்வி மூலமாகவோ ஒத்திவைப்புப் பிரேரணை மூலமாகவோ எடுத்துக்காட்டுதல் வேண்டும்.
பிரித்தானியப் பாராளுமன்றத்துப் பொதுமக்கள் சபைக் கட்டடம் 1941-ம் ஆண்டில் ஜெர்மன் விமானங்களால் நாசப் மாக்கப்பட்டது. இதன்பின் ஒரு புதிய கட்டடம் அமைக்கப்
1. Committee of Privileges.

Page 237
全60 பிரித்தானியப் பாரரளுமஸ்றம்
பட்டது. அது 1950-ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 26-ம் திகதி திறக்கப்பட்டது. அந்த வைபவத்தின்போது மன்னர் பிரான் கூறியமை ஈண்டு நோக்கற்பாலது. அவர் கூறியதாவது:-
* பழைய கட்டடத்தின் உருவத்தைப் பின்பற்றியே இது வும் இயன்றவரை கட்டப்பட்டிருக்கிறது. எம் நாட்டின் பாராளுமன்ற வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்கதான அம்சம் உண்டு. ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் தங்கள் வீட்டில் இருந்து சர்வ சுதந்திரத்துடன் தங்களுக்குரிய பிரச் சினைகளைப்பேசி ஆராய்ந்து முடிவு செய்வதுபோல எங்கள் நாட்டுப் பிரதிநிதிகளும் தங்களது பாராளுமன்றக் கட்ட டத்தில் அந்நியோன்னியமாகக் கருமம் ஆற்றிவருகிறர்கள். இது இன்று நேற்று ஆரம்பமான முறையன்று. பன்னெடுங் காலமாக வழக்கில் உள்ள முறையே இதுவாகும் . . .
*எனது பிரசைகள் அனைவரையும் ஒன்று பிணிக்கும் சக்தி யாக அமைந்துள்ளவை அவர்களது சுதந்திரப்பற்றும், நீதி நெறியும், சமரச மனப்பான்மையுமாகும். இவை GT L D gl பாராளுமன்ற முறையில் பிரதிபலிக்கின்றன இந்த லட்சியங் கள் இந்த வெஸ்ற் மினிஸ்ரரில் பிறந்து, இங்கேயே முதிர்ச்சி யடைந்துள்ளன.
இந்தப் புதிய சபா மண்டபம் அகில உலகுக்கும், சுதந் திரத்தில் எமக்குள் இr தளரா நம்பிக்கையையும், எமது பொது லட்சியத்தின் நிரந்தரத் தன்மையில் எமக்குள்ள உறுதியையும், பொதுநலவமைப்பின் பந்துத்துவத்தையும், சுதந்திரப் பிரிய ராகவுள்ள சகல இன மக்களது சகோதரத்துவத்தையும் எடுத்துக் காட்டும் சின்னமாக விளங்கும்.
அப்பியாசங்கள் 1. பெரிய பிரித்தானியாவின் அரசியலில் முடியின் அந்தஸ்தை ஆராய்க.
2. இங்கிலாந்தில் சனநாயக ஆட்சி அநுகூலமாக நடை பெறுவதற்கு யதேச்சா சங்கங்களும் தாபனங்களும் எவ்வெவ் விதங்களில் உதவி புரிந்திருக்கின்றன?
3. இங்கிலாந்தின் அரசியற் கட்சிகள் பொதுசனங்களுக்கு எவ்வாறு அரசியலறிவை ஊட்டுகின்றன?
4. பின்வரும் கட்சிகளினது நோக்கங்களைச் சுருக்கமாக எடுத்துக் காட்டி, அவற்றுக்கிடையே உடன்பாடு எவ்வளவுக் குண்டு என்பதனை விளக்குக:-
(அ) தொழிற் கட்சி (ஆ) பழைமைக் கட்சி

பிரித்தானியப் பாராளுமன்றம் 46
5. இங்கிலாந்திலே எதிர்க் கட்சி யை மாட்சிமைதங்கிய மன்னரது பதில் அரசாங்கம்’ என்று கூறுவதன் காரணம் யாது? 6. ஒரு மசோதா எவ்வெவ்விதங்களில் தோன்றி பாராளு மன்றத்தின் முன் கொண்டுவரப்படலாம் என்பதனைக் காட்டுக. 7. இப்போது இங்கிலாந்துப் பாராளுமன்றத்திற் சமர்ப் பிக்கப்படும் மசோதாக்கள் அதிகமாக அரசாங்கத்தாலேயே கொண்டுவரப்படுவதற்குரிய காரணங்கள் யாவை? இலங்கை யிலும் இந்த விதமான நிலையுண்டா?
8. மந்திர சபையின் கருமங்களை விளக்குக. மந்திரசபை யாற்றும் கருமங்களுக்கு மந்திரிமார் ஒருமித்தும் தனித்தும் பொறுப்பாளிகளாவர் என்பதனை ஆராய்க.
9. பிரபுக்கள்சபைக் கருமங்களை விளக்குக.

Page 238
இலங்கை-பிரித்தானியப் பொதுநலவமைப்பில்
ஒர் அங்கத்துவ நாடு
பிரித்தானியப் பொதுநலவமைப்பு பின்வரும் நாடுகளைக் கொண்டிருக்கிறது:--பெரிய பிரித்தானியா, டொமினியன்கள். இந்தியா, பாகிஸ்தான், ஐரிஷ் சுவாதீனநாடு, இங்கிலாந்தின் பரிபாலனத்தில் உள்ள நாடுகள். பெரிய பிரித்தானியாவே, இன்று பொதுநலவமைப்பில் உள்ள நாடுகள் அனைத்தையும் முன்னர் ஆண்டது. ஆனல் இப்போது அது தனது ஆளும் தன்மையை இந்நாடுகள் பலவற்றின் விடயத்தில் விடுத்து இப்பொதுநலவமைப்பில் தானும் ஒரு அங்கத்துவ நாடாக இருக்கிறது. எனவே, அதனை இப்பொதுநலவமைப்பின் சிரேட்ட அங்கத்துவ நாடு என்று கூறலாம். டொமினியன்கள் எனப்படும் சமவரசுகளும் இந்தியக் குடியரசும் பாகிஸ்தானும் ஐரிஷ் சுவாதீனநாடும் பொதுநலவமைப்பில் இரண்டாவது இடம் வகிக்கின்றன. சம வர சுநாடுகள் பரிபூரண சுதந்திர முடையனவாய் முடியின் பால் பொதுவான விசுவாசம் உடையனவாக இருக்கின்றன. இந்த நாடுகளைவிட ஏனைய பொதுநலவமைப்பு நாடுகள் பிரித்தானியப் பரிபாலனத்தில் இன்னும் இருக்கின்றன.
1802-ம் ஆண்டில் இலங்கை பிரித்தானிய பரிபாலனத்தின் கீழ் ஒரு குடியேற்றநாடானது. கரையோர மாகாணங்களின் முதல் தேசாதிபதியாக நோர்த்1 என்பவர் நியமிக்கப்பட்டார். 1818-ம் ஆண்டில் மலைநாட்டுப் பகுதிகளும் பிரித்தானியரால் வெற்றி கொள்ளப்பட்டன. 1833-ம் ஆண்டில் இம்மலைநாட் டுப் பகுதிகள் இலங்கையின் மாகாணங்களுடன் சேர்க்கப்பட் டன. ஒரு குடியேற்ற நாட்டிலே நிருவாக அதிகாரமும் சட்டங் கள் ஆக்கும் அதிகாரமும் தேசாதிபதியின் பொறுப்பிலேயே விடப்படும். அந்நாட்டின் நல்லாட்சிக்கு அவரே (தேசாதிப பதியே) தனிப்பொறுப்பாளியாக இருப்பர். இப்படிப்பட்ட ஒரு அரசியல்முறை பல்வேறு காரணங்களால் மக்கள் அரசிய லிற் பங்குபற்றத் தகுதியில்லாத நாடுகள் விடயத்தில் பொருத் தமானது. 19-ம் நூற்றண்டின் முதல் அரைப்பாகக் காலத்தில் இந்த நாட்டில் வாழ்ந்த சிங்களர், தமிழர், முஸ்லிம்கள் என்பவர்களில் மிகப் பெரும்பான்மையினர் ஆங்கில அறிவு இல்லாதவர்களாய், அரசியலிற் பங்குபற்றவேண்டும் என்ற அவாவில்லாதவர்களாக இருந்தனர். சிவில் சேவை அதிகாரிக
l. North.

இலங்கை-பிரித்தானியப் பாராளுமன்றம் 463
ளும், மானியமுறை யதிகாரிகளான ரட்டை மகாத்மா யாக்கள், மணியகாரன்மாரும் நாட்டை ஆள்வதில் அவர்கள் திருப்தி கொண்டிருந்தனர். ஆணு ல் அரசியல் அதிகாரத்தின் தன் மையை விளங்கிய ஆங்கிலத் தோட்டத்துரைமாரும் ஒல்லாந் தரும் அவ்வதிகாரத்தை விரும்யினர். அவர்கள் சட்ட நிரூபண சபைபோன்ற பிரதிநிதித்துவ சபைகளில் தமக்குப் பிரதிநிதித்துவமும் அதிகாரமும் வேண்டும் எனக் கிளர்ச்சி செய்தனர். ஆனல் ஆங்கிலரும் ஒல்லாந்தரும் இந்நாட்டு மக்களில் சிறுபான்மையினரே, பட்ச பாதகமற்றுத் தேசபரி பாலனத்தை நடாத்துவதைக் கடனுகக் கொண்ட அக்காலத் தேசாதிபதிகள், இச்சிறுபான்மையினரான ஆங்கில ருக்கும் ஒல்லாந்தருக்கும் அரசியல் அதிகாரம் வழங்கப்படுவதை ஆட்சேபித்தனர். அரசியல் மன்றங்களுக்குத் தம் பிரதி நிதிகளைத் தெரிவுசெய்யும் முறையை அக்கால இலங்கை மக்கள் அறியவில்லை; எனவே பிரதிநிதித்துவ அரசாங்க முறையை அக்காலத்தில் அமைப்பது இயலாததாகியிருந்தது. நாட்டின் நல்லாட்சிக்குத் தேசாதிபதியே முழுப்பொறுப்பாக இருந்தபடியால் அவருடைய அதிகாரத்தைக் குறைப்பதும் முடியாததாகியிருந்தது. ஆகவே, அக்காலத்திலே சட்டங்கள் ஆக்கும் அதிகாரமோ, சட்டங்களை நிருவகிக்கும் அதிகாரமோ உடைய ஒரு சபை இருக்கவில்லை. சட்ட நிரூபண சபை என இருந்த சபை, பல்வேறு சமூகத்தினரின் அபிப்பிராயங்களைத் தேசாதிபதிக்குத் தெரிவிக்கும் சாதனமாக மாத்திரமே இருந் ġb, ġbil -
ஆனல், காலம் செல்லச் செல்ல சனங்கள் தங்கள் பிரதி நிதிகளைத் தெரிவுசெய்யும் முறை அபிவிருத்தி செய்யப்படலா யிற்று. ஐரோப்பியர்தான் முதன் முதலாக இலங்கையில் வாக்குரிமை பெற்றவர்கள். வாக்குரிமையை உபயோகிப்ப தில் அவர்களுக்கு அநுபவம் இருந்தது. அத்துடன் வர்த்தகர் சங்கம், தோட்டத்துரைமார் சங்கம் என்பவற்றை அமைத்து அவை மூலமாக ஒரு தாபனரீதியில் இருந்தனர். வர்த்தகர் சங்கம், தோட்டத்துரைமார் சங்கம் என்பவையே தம் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்ய உரிமையளிக்கப்பட்ட முதல் தாபனங்களாகும். 1910-ம் ஆண்டில் வாக்குரிமை படித்த இலங்கையருக்கு வழங்கப்பட்டது. 1920-ம் ஆண்டில் வாக் குரிமைமுறை இன்னும் விஸ்தரிக்கப்பட்டது. அக்காலத்தில் பிரதேசவாரிப் பிரதிநிதித்துவ முறையும் வகுப்புவாரிப் பிரதி நிதித்துவமுறையும் அநுட்டானத்துக்குக் கொண்டுவரப்பட் டன. குறித்த குறித்த பிரதேசப் பகுதிகளுக்கெனப் பிரதி நிதிகள் தெரிவு செய்யப்படுவது பிரதேசவாரிப் பிரதிநிதித்

Page 239
464 இலங்கை-பிரித்தானியப் பாராளுமன்றம்
துவமுறை: குறித்த குறித்த வகுப்பினருக்கெனப் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுவது வகுப்புவாதப் பிரதிநிதித்துவமுறை. இந்த இரண்டு முறைகளும் ஏககாலத்தில் இருந்தன.
1928-ம் ஆண்டளவில் பிரதிநிதித்துவ அரசியன்முறை இலங்கையில் நன்கு வேரூன்றியதுடன், சனப்பிரதிநிதிகளுக்கு ஒரளவு அதிகாரமும் வழங்கப்பட்டது. சட்ட நிருபணசபை யில் சனப்பிரதிநிதிகளே பெரும்பான்மையினராக விருந்தனர். ஆனல் தேச நிருவாகத்தை நடாத்துவதிலோ அதனைக் கட்டுப்படுத்துவதிலோ அவர்களுக்கு உண்மையான பங்கு அளிக்கப்படவில்லை. உண்மையைக் கூறுங்கால் சனப்பிரதி நிதிகளுக்கு அதிகாரம் இருந்தபோதிலும் நாட்டின் அரசியலை நடாத்துவதில் அவர்களுக்குப் பொறுப்பு வழங்கப்படவில்லை. 1931-ம் ஆண்டிலே சுயாட்சி விடயத்தில் இலங்கைக்கு அதிக முன்னேற்றம் வழங்கப்பட்டது. சட்டங்களை ஆக்குதல், அவற்றை நிருவகித்தல் ஆகிய இரண்டு கடமைகளும் ஒர் அரசாங்கசபையில் ஒப்புவிக்கப்பட்டன. அரசாங்கத் தி ன் ஏழு பகுதிகளுக்கு சனப்பிரதிநிதிகளைக்கொண்ட ஏழு நிருவாக சபைகள் பொறுப்பாக இருந்தன. எனவே இவ்வேழு நிருவாக சபை யங்கத்தவர்களையும் கொண்ட அரசாங்கசபை, இந் நாட்டின் பரிபாலனத்துக்கான அதிகாரத்தைப் புெற்றதுடன் அதற்கான பொறுப்பையும் ஏற்றுக்கொண்டது. 1931-ம் ஆண்டுக்குமுன் இங்கேயிருந்தது அந்நிய அரசாங்கம் என்ற னர். ஆனல் 1931-ம் ஆண்டுக்குப்பின் அமைக்கப்பட்ட அரசாங்கத்தை இந்நாட்டு மக்களின் அரசாங்கம் என்றே கூறலாம்.
குடியேற்றநாட்டு நிலையில் இருந்த இந்த நாடு, இவ்வாருக முன்னேற்றமடைந்து சகல உள்நாட்டு விடயங்களிலும் பொறுப்பா ட்சி பெறும் நிலை மை யை எய்தியது. இலங்கைக்கு உள்நாட்டு விடயங்களில் பூரணமான பொறுப் பாட்சி வழங்கப்படும் என்று ஒரு பிரகடனம் வெளியிடப் பட்டது. 1931-ம் ஆண்டு அநுட்டானத்துக்குவந்த டொனே மூர் அரசியன்முறை எவ்வாறு நடைபெறுகின்றது என்பதனை ஆராய்வதற்காக ஒரு கொ மிஷன் (சோல்பரி விசாரணைக் கொமிஷன்) இலங்கைக்கு விஜயம் செய்தது. இக்கொ மிஷன் இலங்கையருக்கு உள்நாட்டு விடயங்களில் சுவாதீனம் அளிக்கச் செய்த சிபாரிசுகளைப்பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். 1947-ம் ஆண்டு இலங்கையின் சரித்திரத்தில் மிக மங்களமான ஆண்டு எனலாகும். இலங்கைக்குக் கூடிய சீக்கிரத்தில் டொமி னியன் எனப்படும் சம வரசு அந்தஸ்து வழங்கச் சட்டம் இயற்றப்படும் என்று பிரித்தானிய அரசாங்கம் பிரகடனம்

இலங்கை-பிரித்தானியப் பொதுநலவமைப்பு 465
செய்தது அந்த ஆண்டிலேயாம். 1948-ம் ஆண்டு பெப்ருவரி மாதம் 4-ம் திகதி இலங்கை பரிபூரண சுதந்திரமுடைய நாடென அறிவிக்கப்பட்டது. அதே மாதம் 10-ம் திகதி குளோஸ்டர் கோமகன் இலங்கைக்கு விஜயம்செய்து இலங் கைச் சமவரசின் முதற் பாராளுமன்றக் கூட்டத்தை அங்கு ரார்ப்பணம் செய்து வைத்தார்.
இந்தப் சந்தர்ப்பத்திலே, எங்கள் எதிர்கால அரசியல் நிலைமையைப்பற்றிச் சிறிது சிந்தித்தல் பொருத்தமுடைத் தாகும் என்று எண்ணுகிருேம். சிறு மீன்கள் பெரு மீன்களுக் கிரை என்பது ஒரு பழமொழி. அரசாங்கம் விடயத்திலும் இப்பழமொழி ஓரளவுக்குப் பொருந்தும். உலகத்திலே பலம் குறைந்த சிறிய நாடுகள் பேரவாக்கொண்ட பெரும் தேசங் களின் அதிகார வெறிக்கு இலக்காகவும் கூடும். ஜெர்மனியிலே நாசிக் கட்சியினர் அதிகாரத்துக்கு வந்த பின் சிறு நாடுகள் விடயத்தில் அவர்கள் நடந்துகொண்ட விதத்தில் இருந்தும், ஆசியாவில் ஜெர்மனி, இத்தாலி என்னும் அச்சு நாடுகளின் கொள்கையைப் பின்பற்றி ஜப்பான் சிறிய நாடுகளை ஆக்கிர மித்த விதத்தில் இருந்தும் நாம் படிக்கக்கூடிய பாடம் இதுவே. இப்படியான ஆக்கிரமிப்பு நிலைமை இனியும் ஏற்பட்டால் சின்னஞ்சிறிய நாடாகிய எங்கள் இலங்கையின் நிலைமை என்ன? வெள்ளம் வருதற்கு முன் அணை கோலுபவனே புத்தி மான். எனவே இலங்கையானது தனது சுதந்திரத்தை எந்த நாடுகள் மதித்துக் கெளரவிக்குமோ அந்த நாடுகளுடன் சேர்ந்து கொள்ளுதல் வேண்டும். அப்படியான நாடுகளின் சங்கம்தான் பிரித்தானியப் பொதுநலவமைப்பு. அதில் எம் நாடும் அங்கத்துவம் வகித் திருப்பது சாலச்சிறந்ததேயாகும். ஆங்கிலர் முன்னுட்களில் காட்டிய கர்வத்தின் பொருட்டு, இங்கிலாந்துடன் நாம் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள் ளக் கூடாதென்று கூறுவாரும் பலர் உளர். ஆங்கிலர் முன் ஞட்களிற் செய்த செயல்களினல் இவர்கள் மனத்தாங்கல் அடைந்திருப்பது உண்மையே. இத்தகைய மனுேபாவத்தை அவர்கள் கொண்டிருப்பதும் இயல்பே. ஆனல் தனிப்பட்ட ஆங்கிலரின் பிழைகள், கர்வம், நீதியற்ற செயல்களுக்காக நாம் உண்மை நிலையை நோக்காமல் விடலாகாது. இப். போதும் தனிப்பட்ட ஆங்கிலரின் பிழைகளுக்கும் கர்வத்துக்கும் அகம்பாவத்துக்கும் பிரித்தானிய அரசரையோ, பிரித் தானிய பாராளுமன்றத்தையோ நாம் பொறுப்பாளிகளாக்கு வது முறையன்று. அவர்களுக்கும், இத் தனிப்பட்டவர்களின் அகம்பாவச் செயல்களுக்கும் தொடர்பு இல்லை. இங்கிலாந்தின்
1. Duke of Gloucester.
3248-Qa.

Page 240
466" இலங்கை-பிரித்தானியப் பொதுநலவமைப்பு
அரசாங்கத்திடம் நாம் எப்போதும் நீதியை எதிர்பார்க்கலாம். பொதுநலவமைப்பில் எங்கள் நாடு அங்கத்துவம் வகிப்பது எங்களுக்கு அதிக நன்மை தர ஏதுவாகும். இந்து சமுத்திரப் பிரதேசங்களின் படம் ஒன்றை நீங்கள் அவதானித்தால், எங் கள் நாடு எப்படியான ஒரு கேந்திரத்தானத்தில் இருக்கிற தென்பது தெளிவாகும். இலங்கை பகைவர்களது ஆக்கிர மிப்புக்குள் அகப்பட்டு அவர்கள் கையிற் சிக்குமானல் இந்தி யாவின் நிலைமை ஆபத்தாகிவிடும். இன்னும், பொதுநல வமைப்பில் உள்ள ஏனைய நாடுகளான ஆஸ்திரேலியா, தென் ன பிரிக்கா, கிழக்கா பிரிக்கா, என்பவற்றின் நிலையும் ஆபத்தாகி விடும். ஆகவே எங்கள் பாதுகாப்பு எமக்குமாத்திர மன்றி இந்தியா, ஆஸ்திரேலியா, ஆபிரிக்கா முதலாம் பொதுநல வமைப்பு நாடுகளின் பாதுகாப்புக்கும் இன்றியமையாதது. எனவே நாம் ‘இது எங்கள் நாடு: நாங்கள் எப்படியும் செய் வோம்’ என்ற குறுகிய மனப்பான்மை கொள்ளாமல் பொது நலவமைப்பு நாடுகளின் பாதுகாப்புக்குமேற்ற ஒரு கொள்கை யைக் கடைப்பிடிக்க வேண்டும். எமக்கு ஆபத்துவரும் காலத் தில், எம் பாதுகாப்புடன் தொடர்புகொண்டுள்ள நாடுகளில் இருந்து எமக்கு உதவி கிடைக்கும் என்பதற்குச் சந்தேகம் இல்லை. இனிவரும் காலத்தில் வியாபார சம்பந்தமான ஆகாச விமானப் போக்குவரத்துக்கு இலங்கை ஒரு பிரதான மத்தி யத் தானமாக விளங்கும். யுத்த காலத்திலும் இலங்கை ஆகாசவிமானப் படைத்தளமாக விளங்கும். எங்க்ள் நாட்டில் உள்ள திருக்கோணமலைத் துறைமுகம், இந்து சமுத்திரப் பிர தேசம் முழுவதிலும் உள்ள துறைமுகங்களில் மிகப் பிரதானம் வாய்ந்து மிகச் சிறந்த கடற்படைத்தளமாக விளங்குகிறது. யுத்த காலத்திலே இத்துறைமுகம் ஒரு மத்தியத்தான மாக-கேந்திரத்தானமாக-விளங்கும். இக்காரணங்களினல் பிரித்தானியப் பொதுநலவமைப்பிலே எம் நாடு முக்கியமான ஒரு பகுதியாக விளங்குகிறது.
மேலும், எமது வர்த்தகத்திற் பெரும்பான்மையானது பொதுநலவமைப்பு நாடுகளுடன்தான் நடைபெறுகின்றது. ஆகவே அவற்றுடன் நாம் நட்பாக இருந்தால் வர்த்தக விடயமாகவும் நாம் நன்மையடையலாம். எம் நாடு பொது நலவமைப்பில் இருப்பதால் நாம் அரிதிற்பெற்ற சுதந்திரத் தைப் பேணுவோம்: அத்துடன் பொது நலவமைப்பு நாடுகள் அனுபவிக்கும் நன்மைகள் சலாக்கியங்கள் என்பவற்றிலும் பங்குபெறுவோம்.
இரண்டாவது உலக மகா யுத்தத்தின் பயனக ஒரு புதிய உலகம் சிருட்டியாகிறது என்று கூறலாம். இப்புதிய உலகிலே ஆசியாவின் நிலைமையை நாம் நோக்கவேண்டும். அங்கே புதுச்சக்திகள் இப்போது தோன்றியிருக்கின்றன. ஆசியாவில் சோவியத் பிரதேசங்கள் மிக்க பராக்கிரமம் வாய்ந்தனவாக

இலங்கை-பிரித்தானியப் பொதுநலவமைப்பு 467
இருக்கின்றன. சோவியத் குடியரசு ஒரு ஆசிய வல்லரசாகவும் விளங்குகிறது. ஜப்பான் தன் வலிமை குன்றி தன் அகம் பாவ மும் குன்றியிருக்கிறது. இனியாவது அதற்கு நல்ல புத்தி பிறந்து, சுதந்திரநாடுகள் சுவாதீனமாகச் சங்கமாகச் சேர்ந் துள்ள ஒரு புதிய அமைப்பிலே அங்கம் வகித்து ஆசிய முன்னேற் றத்துக்கு உழைக்கும் என எதிர்பார்ப்போ மாக. எம்மைப் போலவே புதிதாகச் சுதந்திரம் அடைந்துள்ள இந்தியாவும் பாகிஸ்தானும் மிகுந்த செல்வாக்கைச் சீக்கிரம் அடையும்: ஆசியாவின் வர்த்தகத்தில் இந்தியா இனிவரும் காலத்தில் அதிக பங்கெடுக்கும். ஆசிய நாடுகளுடன் சேர்ந்துதான் நாம் கருமம் ஆற்றவேண்டும் என்று இங்குள்ளார் சிலர் கூறுகின்றனர். இவர்கள் கூறுவதன் உண்மைக் கருத்து என்ன என்பது இன்னும் தெளிவாக்கப்படவில்லை. ஆனல் நாம் சிறு குழந்தைகள் போலக் கருமம் ஆற்றக் கூடாது. உள்ள நிலைமையை நாம் அவதானிக்கவேண்டும். மனக் கிளர்ச்சி எம்நோக்கினை மறைக்கக்கூடாது. பிரித்தானியப் பொதுநலவமைப்பிலே சுதந்திரமான ஒரு அங்கத்துவ நாடாக எம் இலங்கை அங்கத்துவம் வகிக்கவேண்டும் என்பதே இந் நூலாசிரியரின் திடமான நம்பிக்கையாகும். ஆசிய நாடுக ளுடன் சேர்ந்துகொள்ளலாம்தான்; ஆனல் அந்நாடுகளில் பசுத்தோல் போர்த்த புலிகள் இல்லை என்பதற்கு என்ன உத்தரவாதம்? இப்புலிகள் இச்சிறிய இலங்கை என்னும் ஆட்டுக்குட்டியைச் சமயம் வாய்த்த நேரம் விழுங்கி ஏப்பம் விடா என்பதற்கு என்ன உத்தரவாதம்? ஆனல் பிரித்தானியப் பொதுநலவமைப்பிலே எம் நாடு அங்கத்துவம் வகித்தால் இந்த ஆபத்து எங்களுக்கு ஒருபோதும் நேரமாட்டாது.
எமது எதிர்காலப் பிரச்சினையை இன்னும் நல்லாக ஆராய்ந்து கொண்டுபோக இன்னேர் விடயமும் உங்கள் மனத்தில் படலாம். எங்கள் நாடோ மிகவும் சிறியது; ஆகவே அதனை இந்தியாவுடன் இணைத்தால் என்ன, இந்தியச் சமஷ்டியிலே இந்நாட்டையும் ஒரு மாகாணமாக்கினல் என்ன என்றும் உங்களிற் சிலர் நினைக்கலாம். இந்த இணைப்பில் நன்மையும் உண்டு, தீமைகளும் உண்டு: " சிறுமீன்கள் எல் லாம் பெரு மீன்களுக்கிரை' என்று முன்னர்க்கூறினேம். மீன் வர்க்கத்தில் மாத்திரமல்ல எல்லா வர்க்கங்களிலும் மெலி யாரை வலியார் வருத்தும் ஒரு கொடிய வழக்கம் இயல். பாகவே அமைந்துள்ளது. ஏன், மனித வர்க்கத்திலும் இவ் வழக்கம் அமைந்திருப்பதை நாங்கள் காண்கிருேம். ஆனல் இந்தியச் சமஷ்டியில் சின்னஞ்சிறிய இலங்கை சேருவதால் அதன் அரசியல், சமுதாய, பொருளாதாரச் சுதந்திரம் பங்கப்

Page 241
468 இலங்கை-பிரித்தானியப் பொதுநலவமைப்பு
படாது, உறுதியாகப் பாதுகாக்கப்படும் என்ற ஒரு உத்தர வாதம் கிடைக்குமானல், இந்தச் சமஷ்டிமுறையை ஆதரிக்க இடமுண்டு. இப்படியிருந்தாலும் பிரித்தானியப் பொதுநல வமைப்பென்பது ஒரு பெரிய உலக அரசாங்கம், அதன் குறிக்கோள் சுதந்திரம். ‘அடக்கியாள்தல் என்பதற்கு அதில் இடம் இல்லை. எனவே அத்தகைய ஒரு அமைப்பில் இருப்பது தான் இலங்கைக்கு உகந்தது என எமக்குத் தோன்றுகிறது.
இனி, எங்கள் சொந்த விடயத்தை நாம் சிறிது ஆராய் வாம்: நாம் அரசியற் சுதந்திரத்தை அரிதிற் பெற்றிருக்கி ருேம். அச்சுதந்திரத்தை அபிவிருத்தி செய்வதில் எமக் கெதிரே எத்தனையோ கஷ்டங்களும் இடையூறுகளும் உள. சனநாயகம் என்பது ‘வாழ்க்கைமுறை மட்டுமல்ல. 'கருமங் களை நடத்துவிக்கும் முறை” யாகவும் அது உளது. இந்த நியதியிலேயே சனநாயகத்தை நாம் ஏற்றுக்கொண்டிருக்கி ருேம். எங்கள் சனநாயகம் மாசு மறுவற்றது என்று எவரும் கூறத் துணியார். நாம் எமது லட்சியத்தை இன்னும் அடைய வில்லை. ஆனல் அதனையடைய முயல்கின்ருேம். நாங்கள் எங்கள் லட்சியப்பாதையிற் செல்லும்போது விடும் பிழைகளை யும் செய்யும் நூந கருமங்களையும், எம்முடன் உண்மையான அநுதாபம் அற்றவர்கள் எடுத்துக்காட்டி அகில உலகுக் கும் பறைசாற்றுகிருர்கள். நாங்களோ சிற்றறிவு, சிறு தொழில் உடைய மனிதர் இருந்தாப்போல் இருந்து பூரண சித்தியடைவோம் என்று எம்மிடம் எதிர்பார்க்கமுடியாது. சனநாயகம் என்பது திடீரென நன்மை தரமாட்டாது. அது திடீரென உரித்த வாழைப்பழம்போல வாயில் வந்து விழ மாட்டாது. நாம் நினைத்தவுடன் அது அநுகூலம் தரவும் LDT list gil.
* வாழ்க்கைமுறை’ என்ற நியதியில் சனநாயகத்தின் சாரம் இதுதான். அதாவது தனிமனிதனுக்கு மதிப்புக்கொடுத்தல் என்பதே. தனிமனிதனுக்கு மதிப்புக்கொடுக்கும் மனுேபா வத்தை இதுவரை செய்ததிலும் பார்க்க அதிகமாக இனி நாம் அபிவிருத்தி செய்யவேண்டும். இதனை நோக்கமாகக் கொண்டே எம் கல்வித்திட்டங்கள் யாவும் வகுக்கப்பட்டிருக் கின்றன. ஆனல் எம் சமுதாய வாழ்க்கையில் இம்மனே பா வத்தை இன்னும் அதிகமாக நாம் விருத்தி செய்யவேண்டும். ஒருவனைக் கணிப்பதற்கு, அவனுக்குரிய மதிப்பைக் கொடுப் பதற்கு அவன் வருணம் என்ன? சமயம் என்ன? குலம் என்ன என்பன குறுக்கே நிற்கக்கூடாது. மற்றவர்களுடன் ஒத்து வாழப் பயிலவேண்டும். எத்தால் வாழலாம்? ஒத்தால்தான் வாழலாம். இதன் பொருட்டு நாங்கள் இன்னும் கூடிய

இலங்கை-பிரித்தானியப் பொதுநலவமைப்பு 469
சங்கங்கள் அமைக்கவேண்டும். இவற்றில் மக்கள் பலவந்தப் படுத்தப்படாது யதேச்சையாகச் சேரவேண்டும். பொறுப்பு வகிக்க நாம் பயிலவேண்டும். நாம் கொண்டுள்ள அபிப் பிராயத்துடன் ஒத்துப்போகாத அபிப்பிராயமுடையாருக்கு நாம் மதிப்புக்கொடுக்கப் பழகவேண்டும். மாறுபட்ட அபிப் • பிராயத்தை நாம் உதாசீனப்படுத்தலாகாது. சமரச மனப் பான்மை உடையராயிருத்தல் வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமைகாண முயலல் வேண்டும். ஒத்த உடன்பாடு காண வேண்டிப் பிரச்சினைகளைக் கலந்தாலோசிக்கப் பழகவேண்டும். இந்த நோக்கங்களை லட்சியமாகக்கொண்ட சங்கங்கள் பாட சாலைகளில்தான் முதல் தோன்றிய பின் நாடெங்கும் பரவி எம் சமுதாய அரசியல் பொருளாதார வாழ்க்கையில் சங்கக் கொள்கைகள் பரிமளிக்கவேண்டும். ஒத்துழைப்பு என்பது எவ்வளவுக் கெவ்வளவு பரவுகிறதோ அவ்வளவுக் கவ்வளவு சனநாயக முறையும் அநுகூலமடையும்.
சாதாரண மனிதன் விடயத்தில் நாம் முன்னரிலும்பார்க்க இனிக் கூடியசிரத்தை கொள்ளவேண்டும். இன்று நாம் காண்ப தென்ன? 'தலைவர்' எனத் தம்மைச் சொல்லிக்கொண்டு கிளம் புவர்களுக்குத்தான் கணிப்பு: வருணத்தில் உயர்ந்தவர்கள் எனப்படுவோருக்குத்தான் மதிப்பு. அதிகப் பிரசங்கிகளுக்கு மரியாதை: "இந்நாட்டில் சனநாயகம் குறைவு. அதிகப்பிர சங்கித்தனம்தான் அதிகம்" என முன்னர் இங்கே தேசாதிபதி யாக இருந்த சேர். அன்ட்று கல்டிக்கொற் அவர்கள் ஒரு முறை கூறியது அத்தனையும் சரி என்றுதான் கூறவேண்டும். சாதாரண மனிதன் அறியாமை என்னும் அந்தகாரத்தில் அமிழ்ந்தியிருப்பதனலேயே ஊமைகள் மத்தியில் உளறு வாயன் உயர்வடைவது" போல அதிகப்பிரசங்கிகள் பெருகு கிருர்கள். சுயநலப் புலிகளான இவ்வதிகப்பிரங்கிகள் தம் நலம் கருதி சாதாரண மனிதனை ஏமாற்ற முனைகின்ருர்கள். இவர்களின் ஏமாற்று வித்தை களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகளில் உள்ளார் அவர்களுக்கு (அதிகப்பிரசங்கிகளுக்கு) அழுகிய முட்டைகளி னல் அபிஷேகம் புரிவர். ஆனல் இந்தப் பழக்கத்தை நம் நாட்டுச் சாதாரண மக்கள் இன்னும் கைக்கொள்ளவில்லை.
தக்க கல்விமுறையினல் சாதாரண மனிதர் முன்னேற்றம்
அடைவர் என்பது திண்ணம். ஆனல் புத்த கப்படிப்பு மாத்திரம் இவ்விடயத்தில் உதவாது. "ஏட்டுச் சுரைக்கா காய் ஒருபோதும் கறிக்குதவாது. புத்தகப்படிப்பினல்
மாத்திரம் சனநாயக முறையில் அபிவிருத்தியடைவார்கள் எனின், ஜெர்மனியே சனநாயக நாடுகளுக்கு எடுத்துக்காட்
3248-Qb

Page 242
4 70 இலங்கை-பிரித்தானியப் பொதுநலவமைப்பு
டாக விளங்கியிருக்கும். சாதாரண மனிதனின் சுதந்திரத்தைக் கெடுத்து அவன் சுதந்திரமனிதன் என்ற தன்மையில் நினைத் துச் செயலாற்றுவதைத் தடுக்கும் பந்தங்களை அறுத்தெறியும் கல்விமுறையே வேண்டற்பாலது. இத்தகைய கல்வி அவ னுக்கு ஊட்டப்பட்டால் அவனை அதிகப் பிரசங்கியும், வருணம், குலம், சமயம் என்னும் பேதங்களைப் புகுத்தி அவனை ஏமாற்றத் துணியும் எந்த "வாயாடி’யும் ஏமாற்றமுடியாது. இன்று துர் அதிட்டவசமாக இப்படியான கல்விமுறை சாதா ரண மனிதனுக்கு இல்லை. இதன் பயணுக அவன் தான் ஒரு தனிமனிதன் என்ற உண்மையை உணராது எந்த விடயத் தையும் வருணம், குலம், சமயம் என்னும் நோக்குடன் பார்க் கிருன். அவனுக்கு உண்மையான கல்வியை முறைப்படி ஊட் டியிருந்தால் அவன் பசுத்தோல் போர்த்த புலிகளால் ஏமாற் றப்பட்டிருக்கமாட்டான். அவன் அப்புலியின் பசுத்தோலில் ஏமாருது தனக்குரிய பாதுகாப்பைத் தேடியிருப்பான். சன நாயகத்திலே சாதாரண மனிதனுக்கான கல்விமுறையில் வேருேர் அம்சம் உண்டு. சங்கங்களில் அவன் சேர்ந்து அங்கத்தவனுக இருக்கவேண்டும். அச்சங்கங்களை நடத்து வதில் அவன் பயிற்சி பெறவேண்டும். இப்போதிலும் பார்க்கக் கூடிய தொகையில் சங்கங்கள் இருக்கவேண்டும். - இவற்றில் சாதாரண மக்கள் யதேச்சையாகச் சேரவேண்டும். இச் சங்கங்கள் வருணம் குலம் சமயம் என்பவற்றை அடிப்படை யாகக் கொண்டிராது தொழில் வர்த்தகம் என்னும் அன்ஞ்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டிருத்தல் வேண்டும். சாதி சமயவித்தியாசங்கள் சங்கங்களிற் பாராட்டப்படக் கூடாது. சாதாரண மனிதனுக்கு அறிவூட்டும் இன்னேர் சிறந்த சாதனம் பத்திரிகையாகும். பட்ச பாதகமற்ற முறை யில் நடத்தப்படும் பத்திரிகையையே இங்கு நாம் குறிப்பிடு கிருேம். பத்திரிகைகள் அவசியமற்ற கட்டுப்பாடுகளுக்கு ஆளாகக்கூடாது; ஆனல் இத்தகைய பட்ச பாதகமற்ற பத்திரிகைகள் இப்போது இலங்கையில் இல்லையென்றே கூற வேண்டும். இப்போது இங்கு வெளிவரும் பத்திரிகைகள் குறித்த சில நலவுரிமைக்காரரால் பிரசுரிக்கப்படுவன. சாதாரண மனிதனின் அபிலாஷைகளையும் தேவைகளையும் பிரதிபலித்துக்காட்டும் பத்திரிகைகள் இங்கே இருப்பின் எவ்வளவோ நன்மையுண்டாகும். ஆனல் துர் அதிட்டவசமாக சாதாரண மனிதனின் நலவுரிமைகளுக்கான கட்சிகள் இங்கு இன்னும் அமைக்கப்படவில்லை. இதன் பயனுக நாட்டி ன் சகல மக்களுக்கும் பிரதிநிதித்துவமான பத்திரிகை இப்போது இங்கே இல்லை.

இலங்கை-பிரித்தானியப் பொதுநலவமைப்புப 471
கருமங்களை ஆற்றுதற்கான சாதனம் என்ற நியதியில் சனநாயகத்துக்குக் கஷ்டங்களும் உள. சங்கங்கள் சபைகளின் விடயங்களை யதேச்சையாக விவாதிக்கும் பழக்கம் இன்னும் இங்கே விருத்தியாகவில்லை. யாரோ ஒரு தலைவர் பேசு வதைக் கேட்டு அவர் காட்டும் வழிப்படி நிற்பதுதான் இங் குள்ளாரின் பெருவழக்கமாக இருக்கிறது. தலைவர் கூறுவது சரியா பிழையா என்பதனைப்பற்றி அதிகம் சிந்திப்பதில்லை. பழைய காலத்து ஆண்டான், அடிமை, மனுேபாவம் இன்னும் இருக்கிறது. யார் வருணம் சமயம் குலம் என்பவற்றைச் சந்தியில் இழுத்து அவற்றுக்காகப் பாடுபடுவதாகச் சொல்லு கிருர்களோ அவர்களுக்காதரவு கொடுக்கும் மனுேபாவம் இன்னும் எம்மக்களைவிட்டு அகலவில்லை. இப்படியான சாதி சமயப் பிரச்சினைகளைக் கிளப்பிவிட்டுத்தான் சில நாடுகளில் 'தலைவர்கள்’ எனப்படுவோர் பாமர சனங்களுக்கு சனநாயகத் தால் வழங்கப்பட்டுள்ள வாக்குச் சம்மதங்களைப் பெற்று அதி கார பீடத்தில் அமர்ந்து ஈற்றில் சர்வாதிகாரிகளாகிக் கொடுங் கோலராகிருர்கள். அவர் க ளது கொடுங்கோன்மையை, சர்வாதிகாரத்தை, தலைவர்களையே ஆடு மாடுகள் போலப் பின்பற்றிப் பழகிய பாமர சனங்கள் எதிர்க்கவகையறியார் கள். இதனல்தான் ஜெர்மன் மககள் எவ்வளவு கல்வியறிவு படைத்திருந்தும் தலைவர்களைப் பின்பற்றி இடருற்ருர்கள். ஒரு தலைவர் இருக்கவேண்டும் அவர் சொல்வது அனைத்தும் சரி என்ற மனுேபாவம் ஜெர்மன் மக்களிடையே நன்ருக வேரூன்றியிருந்தது. ஆகவேதான் அவர்கள் அத்தலைவர் காலா லிட்ட பணியைத் தலையாற் சுமந்து ஆற்றும் அடிமைகள் ஆனர்கள். சனநாயகமுறை இதுவன்று. எல்லாரும் கலந்தா லோசித்து ஒத்த முடிவுகண்டு கருமம் ஆற்றுவதற்கேற்ற சாதனமே சனநாயகம். கலந்தாலோசிக்கும்முறை இல்லையேல் சனநாயகம் பிரதிகூலமடையும்.
சனநாயகத்துக்குக் கட்சிகளும் கட்சிமுறையும் இருக்க வேண்டும். உய்த்துணருமிடத்து இங்கே சரியான கட்சிகள் இல்லை. எம் நாட்டுக் கட்சிகள் பல வருணம், மதம் என்பவற்றை அடிப்படையாகக் கொள்ளும் சார்புடையனவாகக் காணப் படுகின்றன. இது நன்மைக்கேதுவானதன்று. கட்சிகள் *கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டிருத்தல் வேண்டும். அதனை விடுத்து குலம், மதம், வருணம் என்பவற்றைக் கட்சிகள் அடிப்படையாகக் கொண்டிருந்தால் மக்களை மீண் டும் பிரிப்பதாகவே முடியும். இப்படியான கட்சிகளுக்கிடையே சமரசமும், இணக்க மனப்பான்மையும் ஏற்படா. அவற்றுக் கிடையே நிகழும் ஆலோசனைகளும் உடன்பாட்டைக்கொண்டு

Page 243
4. 72 இலங்கை-பிரித்தானியப் பொதுநலவமைப்பு
வரா. உண்மையான கட்சிமுறை அநுகூலமடையவேண்டின் கட்சிகளுக்கிடையே ஏதேனும் விடயங்களில் உடன்பாடு இருக்க வேண்டியது ஆவசியகம். இன்னும், அவற்றின் கொள் கைகள் குறித்த சில பகுதியினருக்கு மாத்திரமன்றி நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவாக இருத்தல்வேண்டும். இங்கி லாந்திலே கட்சிமுறை இவ்வளவு காலமாக அநுகூலமடைந்து வருவதன் காரணம் இதுதான். சாதி, குலம், மதம் என்ப வற்றை அடிப்படையாகக்கொண்ட கட்சிக் கொள்கைகள் அவ்வக் குலத்தினர், மதத்தினரது ஆதரவைத் தான் பெறும்; ஆனல் மற்றவர்களின் பகைமையைத் தேடிக்கொடுக் கவும் ஏதுவாகும். இப்படியான கட்சிமுறை மக்களுக்கிடையே பரஸ்பரம் நம்பிக்கையை வளர்ப்பதற்குப்பதிலாக பரஸ்பரம் சந்தேகத்தையும் அச்சத்தையும் உண்டாக்கிவிடும். ‘இன்ன வருணத்தவர் இன்ன சாகியத்தவர் இன்ன மதத்தவர் எம்மை நசுக்கிவிடுவர்' என்ற பயமும் சந்தேகமும் மக்களி டேயே சதா இருக்கும். இதனலன்ருே இலங்கையிலும் சரி, இந்தியாவிலும் சரி அரசியல் அதிகாரம் வழங்கப்பட்டமை சிலருக்கிடையே அச்சத்தை விளைத்தது. இந்தியாவிலே தம்மை இந்துக்கள் நசுக்கிவிடுவர் என முஸ்லிம்கள் அஞ்சினர். இங்கே சிங்களர் தம்மை நசுக்கிவிடுவர் எனத் தமிழரும் ஏனைய சிறுபான்மையினரும் அஞ்சினர். இந்தியா இலங்கை போன்ற நாடுகளிலே சனநாயகத்தின் அம்சமான பெரும் பான்மைக் கட்சி அதிகாரம் வகிக்கும்முறை பெரும்பான்டிைச் சாகியத்தாரிடமே அதிகாரத்தை ஒப்படைக்கவும் ஏதுவாகும். இங்கிலாந்திலே சாகியத்தை அடிப்படையாகக்கொண்டகட்சி முறை இல்லை. அங்கேயுள்ள கட்சிகள் அரசியற் கொள்கை களையே ஆதாரமாகக் கொண்டுள்ளவை. பரஸ்பரம் சந்தேக மும் அச்சமும் கொண்டுள்ள பெரும்பான்மையினரும், சிறு பான்மையினரும் தமக்கிடையே உடன்பாடு காணுதல் அரிது. தமக்கு வேண்டிய அதிகாரத்தை சனநாயக முறையானது சட்டபூர்வமாகத் தமக்கு வழங்கியிருக்கிறது என்று பெரும் பான்மைச் சாகியத்தார் நினைக்கிருர்கள். கையிற்கிடைத்த அதிகாரத்தைக் கைவிடுதற்கு எவரும் பின்வாங்குவர்தான். இப்டியாகச் சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் என ஒரு நாட்டு மக்கள் பிரிந்துநின்று பரஸ்பரம் விரோதம் பாராட் டுதல் கட்சிமுறை, அரசியல்முறை என்ற தன்மையில் சனநாயகத்துக்குப் பெரிய கெடுதிவிளைக்க ஏதுவாகும். எங்கே இன உணர்ச்சியும் சமய உணர்ச்சியும் அரசியல் விடய மாகத் தலைவிரித்தாடுகின்றனவோ அங்கே சர்வாதிகாரிகள் தலையெடுப்பர். இந்தியாவில் இந்த அபாயம் இருக்கிறது. எமக்கும் இப்படியே. எங்கள் பிரச்சினைகளை சிங்களர், தமிழர்,

இலங்-ைபிரித்தானியப் பொதுநலவமைப்பு 4 73
முஸ்லிம்கள், ஒல்லாந்தர் என்ற தன்மையில் நோக்காது இலங்கை மாதாவின் புத்திரர்கள் என்ற தன்மையில் நோக்கு வோமேயானல் எம்மை ஆபத்துச் சூழ மாட்டாது. நாம் இலங்கையர் என்று நோக்குவதற்குப் பிரச்சினைகளைச் சாதா ரண மனிதனின் வாழ்க்கையுடன் ஒட்டிப் பார்க்கவேண்டும். அவனின் உணவு, அவனின் செல்வம், அவனின் கல்வி, அவனின் முன்னேற்றம் என்பவற்றை நாம் சிந்தித்து அதற்கேற்றபடி கருமங்களை நடாத்துவோமே யானுல் பெரும்பான்மையினர் சிறுபான்மையினர் என்ற வித்தியாசம் தானகவே அற்றுவிடும். மனிதனின் அத்தியாவசியக தேவைகளைப் பூர்த்தியாக்கும் வழிவகைகளைக் கையாள்வதே கட்சிகளின் கொள்கையாக இருக்கவேண்டும். மனிதன் என்ற தன்மையில் எல்லாரும் சமமே. ஆகவே, மனிதனின் தேவைகளைப் பூர்த்தியாக்க வேண்டிக் கொள்கைகளை அமைக்க. சனநாயக உணர்ச்சி தானகத் தோன்றும்; அப்போது கறுப்பர், வெள்ளையர், பெளத்தர், கிறிஸ்துவர், தமிழர், சிங்களர் என்ற பேதம் அற்று மனிதர் என்ற தன்மையில் எல்லாரும் இலங்கையரே என்ற உண்மை தெளிவாகும்.
இவை எல்லாம் நடக்குங்கருமங்களா? இவ்வாறு சமரச மனப்பான்மை கொள்ளுதல் இயலும் கருமமா என்றும் சிலர் ஆட்சேபிக்கலாம். ஆனல் இன்று முடியாதனபோலத்தோற்றும் கருமங்களை மனிதன் தன் சக்தியினல் முடியும் கருமங்களாக்க வேண்டும். இல்லையேல் விளைவது அநர்த்தம்தான். கருமங் களை ஆற்றுதற்குச் சனநாயகம் ஒரு கஷ்டமான சாதனம். அது ஒரு கஷ்டமான வாழ்க்கைமுறையும் கூட. ஆணுல் மனிதன் உண்மையான உயர்ச்சியடைய வேண்டுமானல், உண்மை யான முன்னேற்றம் எய்த வேண்டுமானல், இந்தக் கஷ்டமான பாதையையே அவன் கடைப்பிடிக்கவேண்டும். இதனுல் தான் சனநாயகத்தைப் பெறுவதும் கஷ்டமாக இருக்கிறது. அதனைக் கஷ்டப்பட்டுபெற்று, அதன் கஷ்டமான பாதையில்
* மெய் வருத்தம் பாரார் பசிநோக்கார் கண் துஞ்சார் எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்--செவ்வி அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார் கருமமே கண்ணுயினர்’ என்ருங்கு லட்சியத்தைக் கைவிடாது நடந்துசென்ருல் எல்லாரும் இன்புற்றுவாழும் எழிலான மனுேகரக்காட்சியைக் கண்டு ஆனந்தமடையலாம் என்பது திண்ணம்.

Page 244


Page 245