கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: என் இனியவளுக்கு

Page 1
tr
 
 
 
 
 
 


Page 2

V/ ܠܗ উইিঞ্জৎ' V U U}}, 4 \ క్షీకీ తa ή% ` !, பிடித0 கு", \/
غير
1υ Ζδ4 4.
6tar அன்புக்கணவரின் கடிதங்களில் இருந்து தொகுக்
கப்பட்ட இந்நூலுக்கு முன்னுரை எழுதக்கூடிய திறமையோ,
புலமையோ எனக்கில்லை. ஆனாலும் அவரைப்பற்றி நிறைய எழுதவேண்டும் என்ற ஆசை உண்டு.
அவரைப்பற்றி நானாக அறிந்தவற்றைவிட அவரின் நேய மக்கள், நண்பர்கள், உறவினர்கள் சொல்லக்கேட்டு அறிந் தவை ஏராளம்,
அவரின் எண்ணங்களை அதே மக்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்பியமைதான், அவரின் இறுதிக்காலங்களில் அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதி களை நூலுரு ஆக்கும் முயற்சியிலீடுபடத் துண்டியது.
1983 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில்தான் நான் அவரை முதன் முதல் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
༡༣, ༣ ༣ ༣ ༥
حصہ ہم C) AA) ـــــ۔
?عیبر

Page 3
அது சிறிலங்கா இராணுவம் தன்னிச்சைப்படி யாழ்ப் பாணத்தின் மூலை முடுக்குகள் எல்லாம் உலா வந்துகொண் டிருந்த காலம்.
விடுதலைப் புலிகள் மறைந்திருந்து செயல்பட்டு, நாட் டின் சுதந்திரத்திற்காகவும், மக்களின் எதிர்கால நலனுக்காக வும் தம் உயிரைப் பணயம் வைக்கத் தொ ட ங் கி யிருந்த (5#5 TT"Gu)L b.
போதிய உணவின்றி, உறக்கமின்றி, இருக்கப் பாது காப்பான இடமின்றி, தியாகங்கள் நிறைந்த வாழ்க்கை முறை யுடன், நாட்டின் விடிவிற்காகத் தம்மை முழுமையாக அர்ப் பணித்து, மகிழ்வுடன், கடமை ஒன்றிலேயே கண்ணும் கருத் துமாக இருந்தது இவர்களின்மேல் எனக்கு ஒரு உயர்ந்த எண் ணத்தையே உருவாக்கியது.
அக்காலகட்டத்தில் கிட்டு அவர்களைச் சந்திக்க நேர்ந்த போதுதான் அதுவரை கதைகளில், காவியங்களில் மட்டு}ே நான் அறிந்திருந்ததைப்போல ஒரு வீர நாயகனை, தி யாக
ii
 

' ' ' ' ' ' ), iris. ྋ"་ : ( இலது ஐ. "ბიბულან ༦《་ལ་ཞེ་ சீலனை என் வாழ்நாளிலேயே முதல் முறையாக நேரடியாகக் கண்டேன்.
அந்நாள் முதலே அவர்மீது ஒரு இனந்தெரியாத பக்தி யும், பாசமும் ஏற்பட்டது. அதுவே நாளடைவில் அதி உன் னத உரிமையுடைய அன்புறவை எம் இருவருக்குமிடையில் மலரவைத்தது.
எம் மக்களுக்குச் சுதந்திர பூமியை அமைத்துக்கொடுக்க வேண்டும்; நாம் விடுதலை பெற்ற இனமாக வாழவேண்டும்; அதற்கு இக்காலகட்டத்தைப் பயன்படுத்த வேண்டியது வரலாறு எம்மேல் சுமத்திய கட்டாயக் கடமை என்பதை எனக்குப் புரியவைத்தவர், உணரவைத்தவர் அவர்தான்.
அவருக்கிருந்த திறமைகளுடன் அவருக்கு மிகுந்த ஆன் மீக ஈடுபாடும் காணப்பட்டது. தமது எதிராளிகளுக்காகப் ப்ரி தாபப்பட்டு, அவர்களின் குடும்பங்களை நினைத்து வேதனைப் படும்போதும், போராட்டக் காலங்களில் மக்களின் துயர்கண்டு கவலைப்பட்டு அவற்றைத் தீர்க்கத் தம்மாலான முயற்சிகளை எல்லாம் மேற்கொள்ளும்போதும் அவரின் மக்கள் நேயத்தை மேலும் கண்டேன். மற்றும் தனக்குத் தெரியாத விடயங்களை, யாராக இருந்தாலும் அவர்களிடம் ஒரு சிறுபிள்ளைபோல் இருந்து எல்லாம் கேட்டுத் தெரிந்துகொள்ளுவார். இவையெல் லாம் எனக்கு அவர்மேல் பன்மடங்கு மதிப்பை உயர்த்திற்று.
தொடர்ந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்து அவர் நாட்டின் விடுதலைக்காகவும், மக்களின் நல்வாழ்விற்காகவும் பணியாற் றியது எல்லோரும் அறிந்ததே. -
அந்நாட்களில் துர்அதிர்ஷ்டவசமாக, 1987ஆம் ஆண்டு பங்குனிமாதம் 30ஆம் திகதி, எதிர்பாராத குண்டுத் தாக்குதலில் தன் கால் ஒன்றை இழக்க நேரிட்டது.
சிகிச்சை பெற்றுக்கொண்டு, உடல் வலியினால் துன்பப் பட்ட வேளைகளிலும்கூட அவரது எண்ணமெல்லாம் போராட்
டத்தைப்பற்றியும், மக்களைப்பற்றியுமே இருந்தது.
தன் கருத்துக்களை அவர் சிகிச்சை பெற்று வந்த காலத் திலும் 1987ஆம் ஆண்டு நல்லூரில் நடந்த மே தினக் கூட்டத்
世
1/。

Page 4
திலும் ஆவணியில் நடந்த சுதுமலைக் கூட்டத்திலும் தன் இனிய மக்களுடன் சொற்பொழிவுமூலம் பகிர்ந்துகொண்டார்.
பின் அவர் சிகிச்சையைத் தொடர்வதற்காக இந்தியா சென்றார். அப்போது தமிழீழத்தில் இந்திய இராணுவத்துட னான யுத்தம் ஆரம்பித்துவிட்டதால் அங்கேயே வீட்டுக்காவ வில் வைக்கப்பட்டார். 鶯。
அக்காலத்தில் அவருடன் எனக்கிருந்த உறவை அறிந்த இந்திய இராணுவத்தால் கார்த்திகை ஆரம்பப் பகுதியில், யாழ்ப்பாணத்தில் வைத்து நானும் கைதுசெய்யப்பட்டேன்.
கார்த்திகை இறுதிப்பகுதியில் இந்திய இராணுவத்தினா லேயே இந்தியா கொண்டுசெல்லப்பட்டு, 1988 புரட்டாதி நடுப்பகுதிவரை அவருடனேயே வீட்டுக்காவலில் வைக்கப்பட் டிருந்தேன். அப்போது என் கணவரின் வழிநடத்தலையும், அறி வுரைகளையும், எண்ணக்கருத்துக்களையும் நிறையப்பெறும் சந் தர்ப்பம் பெற்றேன்.
பின் 1988 புரட்டாதி நடுப்பகுதியில், அவரும் ஏனைய அங்கிருந்த விடுதலைப் புலிகளும் நானும் சென்னை ம த் தி ய சிறைச்சாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அங்கு 27 நாட்கள் இருந்தோம். பின் அங்கிருந்து யாழ்ப்பாணம் கொண்டுவரப் பட்டு, 1988 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 12 ஆம் திகதி விடு விக்கப்பட்டோம்.
தொடர்ந்து அவர் தமிழீழத்தில் மறைந்திருந்த வண்ணம் தன் இலட்சியப் பணியைத் தொடர்ந்தார்.
1989 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 25 ம் திகதி எங்கள்
திருமணம் இறை ஆசியுடன் நடைபெற்றது. அதன் பின் அவர் தன் பணியைத் தொடர லண்டன் பயணமானார்.
அவரது தமிழீழ விடுதலைக்கான பணிகள் ப ல் வேறு இடங்களில், பல்வேறு வடிவங்களில் தொடர்ந்தன.
ஆனால் அன்றிலிருந்து தன் இறுதி மூச்சுவரை தன் தாயக மண்ணினையே நினைத்து
हैंy

தன் அன்பிற்கினிய மக்களைக் காணவேண்டும், - அவர்களுடன் மீண்டும் அன்புடன் பழகவேண்டும், - அவர்களுக்குச் சுதந்திரமான, சுபீட்சமான வாழ்வை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று தன் கனவிலும் நன விலும் துடித்துக்கொண்டிருந்ததை, நன்றாகவே அறிவேன். இதை அவரின் பல கடிதங்களிலும் காணக்கூடியதாக உள்ளது.
அவர் மண்ணையும் மக்களையும் நேசித்த விதம், கொண் டிருந்த பற்று அலாதியானது; அளவு கடந்தது. இம் மண்ணின், மக்களின் வாழ்வை வளப்படுத்த இம்மண்ணைப் பிரிந்திருக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டது. பல இடர்களையும் துன் பங்களையும் அனுபவிக்கவேண்டியும் வந்தது. 1992 ஆம் ஆண்டு பங்குனி நடுப்பகுதியில் இருந்து தனது இறுதிக்காலம் வரை, ஒருவித அஞ்ஞாதவாச வாழ்க்கையே நடாத்தி வந்தார். எனி னும் எல்லாம் தன் மக்களுக்காக என்பதால் திருப்தியுடன் ஏற் றுக்கொண்டார்.
அவரின் கடிதங்களில் எல்லாம்,
- எம் மண்ணின், எம் இனத்தின் விடுதலை - மக்கள் சேவையின் மகத்துவம் -- மனித வாழ்வின் புனித இலட்சியம்
போன்ற கருத்துக்களே இழையோடி நிற்கின்றன.
மேலும் இக்கடிதங்கள் என் கணவருக்கு அவ்வப்போது தோன்றிய சிந்தனைகளின் பகிர்ந்துகொள்ளல்களே. எனவே இக்கடிதங்களில் சீரான ஒழுங்கு முறையையோ, முழுமையான இலக்கணத்தையோ, வளமான மொழி நடையையோ எ தி ர் பார்க்க முடியாதென்பது நாம் புரிந்துகொள்ளக்கூடியது.
அவர்,
- தன் அன்பு மக்களைச் சந்திக்கவேண்டும், - அவர்களின் துன்பங்களில் பங்குகொள்ள வேண்டும், -- தன் அனுபவங்களை அவர்களுடன் பகிரவேண்டும், -- தன் எண்ணங்களைச் சொல்லவேண்டும்,
-- உண்மையான விடுதலையைப் பெற்று, அவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை அமைத்துக்கொடுக்க வேண்டும்,

Page 5
போன்ற தனது கோடாகோடி இலட்சியக் கனவுகளை நனவாக்க வேட்கைகொண்டு, தமிழீழத் தாயக மண்ணோக்கிப் புறப்பட்டு ஓடோடி வந்திருப்பார்.
அவரும் அவர் தோழர்களும் தமிழீழ மண்ணில் மீண் டும் கால்பதியும் கணத்தை எதிர்நோக்கிக் குதூகலத்துடன் தம் கடல் பயணத்தையும் தொடங்கியிருப்பார்கள்.
ஆனால் வரும் வழியில்தான், படைத்தவன் அவரைத் தன்னுடன் அனைத்துக்கொள்ள நேரம் குறி த் தி ரு ந் தா ன் போலும். அக்கணங்களில் என்னென்ன நடந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே என்மனம் அஞ்சி நடுநடுங்கி மறுக்கின்
மாற்றானிடம் அடிபணியாமல், தன் த மி ழ் த் தாயி ன் மானம் காத்து, தன் இலட்சியத்திற்காகவே த ன த ரு  ைம த் தோழர்களுடன் வீரசுவர்க்கம் அடைந்துவிட்டார்.
"மக்கள் மக்கள்' என்று மக்களுக்காகவே வாழ்ந்து, அவர் களுக்காகவே தன் உயிரை அர்ப்பணித்த என் அன்புக் கணவர் காட்டிய பாதையில் மக்களுக்காக என்னையும் அர்ப்பணிக்க கடவுளிடமும், என் கணவரிடமும் ஆசி வேண்டி நிற்கின்றேன்.
ஆன் சிந்தியா கிருஷ்ணகுமார் (டாலி)
இது, தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியீட்டுப் பிரிவின்
16,01, 1994
wi
 

o6.02-1991 என் அன்பு டாலிக்கு,
என் மண்ணைப் பிரிந்த பின்தான் புரிகிறது, நான் மண்ணை எவ்வளவு நேசித்தேனென்று. அந்தக் கடற் காற்றும், பூவரச மர வாசமும் நாம் எங்கு தேடினாலும் கிடைக்காது. ஒரு சாரம் மட்டும் கட்டிக்கொண்டு சுதந்திரமாகத் திரிந்த எமக்கு இன்று ஒன்றுக்கு ஐந்து உடை போடும் சுமைகள். வின்ரரில் கடும் குளிர், சம்மரில் எரிக்கும் வெயில், எமது நாடு சொர்க்க பூமிஎன்றுதான் அதைப் பார்ப்பேன்? ஏங்குகின்றேன். புழுதியில் புரளும் நாய்களும் பூவரசு மரத்துக் குயிலும் சாமரம் விசும் தென்னைகளும் கன்னங்கரு என்ற U600607 Cey(0 எல்லாவற்றையும் பிரிந்து விட்டு என்னை இங்கு வாட வைத்ததே என் விதி.

Page 6
ހުގެ25-ހަ-><
ല്ലേ?
9.0.4, 1991 என் இனிய டாலி, நான் என் உணர்வுகளைப் பற்றிக் கவிதை ஒன்று எழுதுகிறேன். நாடு விட்டு
நாடு வந்து என் நாட்டை எண்ணிப் பார்க்கின்றேன்
காணத்துடிக்கின்றேன் இங்கு காண முடியாது.
என் விட்டு முற்றத்து மல்லிகைப் பந்தலும்
புகை கக்கும் CTB பஸ்களும் தெருவோரத்து சொறி நாய்களும்
கோபங் கொண்டு அலையாய் மோதும்
மாரிக் கடலும் அடித்து, அடங்கி
வற்றிப் போகும் கோடைக் கடலும்
{J რეტპ6ზ} மகளிர் கல்லூரிகளைச் சுற்றும்
விடலைப் பையன்களும் இங்கு காண முடியாது; ஆனால் காணத் துடிக்கின்றேன்.
Sہ ہائکوپلاٹے & ရှီဗ☎ 凝
 
 
 

OA () 6, 199 அன்பு டாலி,
என் கவிதைகள் உனக்குப் புரியாது. ஏனென்றால் நான் கவிதை எழுதவில்லை, இதயத்தில் இருக்கும் வேதனையால் எண்ணத்தில் உதிக்கும் அலைகள், அதைத்தான் எழுதுகின்றேன். நான் இப்போதுதான் ஆத்மீகத்தை உணர்கின்றேன். ஆத்மீகத்துக்குள் ஆழ்ந்தால் தன்னலம், சுயநலம் மறையும்; உலகின் நியதி புரியும்.
எது நியதி என்றால்
பிறந்தவர் இறப்பதும் போகும் போது அரிய செல்வம் அனைத்தையும் விட்டுப் போவதும்.
இதுதான் நியதி. இதைப் புரிந்தால் சுயநலம் மறையும், பாதை தெரியும். எது பாதை?
மக்களின் வாழ்வும் சேவையும். முதலில் வாழ்வு, இங்கே எமது மக்களின் வாழ்வு மறுக்கப்படுகிறது. ஆயுத முனையில் ஒடுக்கப்படுகின்றது. முதலில் அதற்காகப் போராடு, பின் மறுபடி வாழ்வு வளப்படுத்தப்படல் வேண்டும். ஒரு வகையில் வறியவர்களுக்கு வாழ்வு மறுக்கப்படுகின்றது.
இந்நிலை மாற வேண்டும். விறகு கொத்தும் கந்தனும்

Page 7
கள்ளு வடிக்கும் பூதனும் கோவணத்துடன் தோட்டம் கொத்தும் ராமையாவும் கரைவலை இழுக்கும் கோபுவும் தமது வாழ்நாளிலும் வயது போன காலத்திலும் மற்றவரில் தங்கி வாழ்ந்ததையும் பிச்சையெடுத்துச் செத்ததையும் பார்த்திருக்கின்றேன். இவர்களின் வாழ்வு வளம் பெற எல்லோரும் உழைக்க வேண்டும். இதைத்தான் ஆத்மீகமும் சொல்கிறது, புரட்சியும் சொல்கிறது. ஆத்மீகம் போதிக்கிறது, புரட்சி வழிகாட்டுகின்றது. ஆத்மீகமும் புரட்சியும் வேறல்ல; இரண்டும் ஒன்றுதான்.
s
ہی ہوگا9ٹے
eeل
 

8.07, 1991 அன்புமிகு டாலிக்கு,
உன் கடிதங்கள் கிடைத்தன.
மற்றும் எமது சனங்கள் படும் கஷ்டம் பற்றியும் எழுதியிருந்தாய். மிகவும் கவலையாகத்தான் உள்ளது. இப்படியான சில விடயங்களை எனக்கு அ டி க்க டி தெரியப்படுத்திக்கொண்டிரு.
சிறிலங்கா அரசு தொடர்ந்தும் இராணுவத் தீர் வையே முன்வைக்கின்றது. எமது மக்கள் மீது பொரு ளாதாரத் தடையை விதித்து, மக்களைப் பட்டினி போட்டு, கஷ்டத்திற்கு உள்ளாக்கி, நெருக்கடிகளை ஏ ற் ப டு த் தி அவர்களை உளவியல் ரீதியில் பாதிப்படைய வைத்து, விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகத் திருப்புவதுதான் சிறிலங்காவின் நோக்கம். இது சிறிலங்காவில் மட்டும் அல்ல உலக்ளாவிய ரீதியில் விடுதலைப் புரட்சிக்கு எதிராக பல நாடுகளினால் கடைப்பிடிக்கப்படுகின்றது.
மொத்தத்தில் இது பெரிய பிரச்சனைதான். ஒரு குறுகிய வட்டத்துக்குள் நின்றுகொண்டு, எந்த அரசி யல் ஞானமும் தொலைநோக்கும் இல்லாமல் வாழும் சாதாரண மக்களும், வெறும் பட்டப்படிப்புக்களை மட் டும் முடித்துவிட்டு தம்மைப் புத்திஜீவிகள் என்று கருதிக் கொள்பவர்களும் இத்தகைய கஷ்டங்களைப் பொறுத் துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் இவர் க ளி டம் இருந்து நாம் இதற்கு மேல் எதிர்பார்க்கவும் முடியாது. ஆனால் இவர்கள் எல்லோரும் எமது மக்கள், எ ம து
5

Page 8
செல்வங்கள். இவர்களுடைய துன்பம் எம்முடையது, இவர்களுடைய வாழ்வு வளப்படுத்தப்படல் வேண்டும்.
ஒரு உயர்ந்த இலட்சியத்தை அடைய வேண்டும், எமது மக்கள் நிரந்தர அமைதியுடன் சுதந்திர வாழ்வை வாழ வேண்டும் என்பதுதான் எமது எண்ணம். ஆனால் இடையில் எவ்வளவோ கஷ்டங்கள், துயரங்கள், துன் பங்கள்; எதைக்கண்டும் கலங்கிவிடாதே.
உலகமும் உதவாதவர்களும் எதையாவது கூறட் டும். ஆனால் மக்களுக்குச் சேவை செய்வதை நிறுத்தி விடாதே. " மக்கள் சேவைதான் ம  ேக ச ன் சேவை.” மக்களுக்கும் மக்களின் வாழ்வுககும் சேவை செய்வது தான் எமது வாழ்க்கை, அதுதான் உண்மையானது,
மிக மன உறுதியுடன் உனது படிப்பைத் தொடர்ந்துசெல். *
நான் என்னுடைய மண்ணையும் மக்களையும் அளவு கடந்து நேசிக்கின்றேன். ஆதரவற்று அவதிப்பட்டு துயரத்தில் மூழ்கியிருக்கும் மக்களின் அவலங்களில் பங்குகொள்ள விரும்புகிறேன் - அங்கு வந்து அந்த மக்களுடன் சேர்ந்து அவர்களின் துயரத்தில் நானும் பங்கேற்க விரும்புகின்றேன்.
ஆனாலும் உனக்கு அந்தப் பாக்கியம் கிடைத்தி ருக்கின்றது. மக்களின் சாதாரண அன்றாட வாழ்க் கையை வாழ்ந்து கொண்டிருந்தாலும் தொலை நோக்கு டன் விடயங்களைப் பார். திறந்த மனதுடன் பரந்த
ό
 

மனப்பான்மையுடன் பிரச்சனைகளை நோக்கவும் அணு கவும் பழகிக் கொள். பிரச்சனைகளோ கஷ்டங்களோ இல்லாமல் வாழ்க்கையும் இல்லை; எதுவும் இல்  ைல. பிரச்சனைதான் வாழ்க்கை. இதுதான் உண்மை.
மேலும் அடக்குமுறையாளனால் அடக்கப்படுவ தும் கொல்லப்படுவதும் தமிழீழத்தில் மட்டுமோ அல்லது யாழ்ப்பாணத்தில் மட்டும்தான் என்றில்லை. உலகெங் கிலும் இதுதான் நியதி. அடக்குமுறையாளனின் அடக்கு முறைக்கெதிராக எத்தனையோ இனங்கள் போராடித் தான் வந்துகொண்டிருக்கின்றன. அத்தகைய போராட் டங்களோடு ஒப்பிடும் போது எமது நிலை பரவா
யில்லை என்றே தோன்றுகின்றது.
எமது மக்களின் வாழ்வுக்காக என்னால் முடிந்த ரை எனது இறுதிச் சக்தி இருக்கும் வரை போராடிக் கொண்டிருப்பேன்.
sپہنچی ہوئے
عليe

Page 9
@體。體0,1991
அன்பின் டாலிக்கு,
ஜெனிவாவில் ஒரே வேலைதான். பொழுது போகி றது மிகவும் அழகிய நாடு. வெளியே போவதுமில்லை. உள்ளத்தில் அமைதி இருந்தால்தான் எதையும் ரசிக்க முடியும். எனது நாட்டையும் மக்களையும் பிரிந்திருப் பதே மிகவும் தாங்க முடியாத விடயம்.இந்நிலையில் எனக்கு அமைதியெங்கே?
உள்ளத்தில் அமைதியாக இருப்பதுதான் பெரிய கொடை, அதுதான் உண்மையான அழகு. ஆனால் வெறும் புற அழகுகள் எப்படி அமைதியைக் கொடுக்க முடியும்?
ஒவ்வொரு மனிதனும் பிறக்கின்றான், இறக்கின் றான். ஆனால் அவன் மனிதகுலத்திற்கு ஆற்றும் சேவை தான் நிலைத்திருக்கின்றது. உன்னால் முடிந்த வரை சேவைசெய், பொழுதுகளை வீணே கழிக்காதே.
மேலும், சுயநலமும் குறுகிய பிற்போக்கு சிந்தனை யும் கொண்ட வட்டத்தில்தான் நீர் வாழ்ந்துகொண்டி ருக்கின்றிர். ஆனால் இவற்றைக்கண்டு இவர்களின் மாயைக்குள் சிக்குண்டு விடாதே. கவனமாயிரு, ஆழ்ந்து சிந்தி, அங்கு பலர் நுனிப்புல் மேயும் ஆ டு க  ைள ப் போல் எதையும் ஆழ்ந்து பாராமல், வெறும் சித்தாந் தங்களைப் படித்துவிட்டு வேதாந்தம் பேசிக்கொண்டிருக் கின்றனர். 'நான்கு குருடர்கள் யானையைப் பார்த்தது போல்'தான் இவர்கள் விடுதலைப் போராட்டத்தை
s
 

விமர்சிப்பதும். எதையும் எல்லோரும் விமர்சிக்கலாம். ஆனால் அந்த விமர்சனங்கள் கூட சில வழிகளைக் காட்ட வேண்டுமே ஒழிய வெறும் குதர்க்கமாக இருக்கக் கூடாது. எந்தச் சித்தாந்தவாதியும் தத்துவவாதியும் நடைமுறை வாழ்க்கையில் வழிகாட்ட வேண்டுமே ஒழிய, வெறும் மாயையில் வாழ முடியாது. அப்படியானால் அவற்றை வெறும் ஏட்டுச்சுரக்காய் என்று கூறுவது தான் வழக்கம்.
உலகத்தில் எல்லோருடைய கருத்தையும் கேள்; சிந்தி, நன்றாகச்சிந்தி, நியாகச்சிந்தி; யாரும் உனக்கா கச் சிந்திக்கமாட்டார்கள்.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஏதாவது படித் துக்கொண்டுதான் இருக்கிறேன். உலகத்தில் நாம் படிக்க வேண்டியவை ஏராளம், ஏராளம். நீயும் அப்படியே செய். வெறும் புத்தகத்தை மட்டும் படிக்காமல் உலகத்தையும் வாழ்க்கையையும் படித்துக்கொள்.
ஒவ்வொரு நாள் பொழுதும் ஒவ்வொரு மணிப் பொழுதும் எதையோ எமக்குச் சொல்லிக்கொண்டுதான் இருக்கின்றன. அதைச் சரியாகப் புரிந்துகொண்டவனும் அதைப் படித்துக்கொண்டவனும்தான் ஞானியாகின் றான். அதைவிடுத்து வெறும் வரட்டுச் சித்தாந்தங்களைப் பேசும் போலித் தத்துவவாதிகளின் பசப்பில் ஏமாந்து விடாதே, சிந்தனையும் தேடலுமே ஒருவனை உயர்த்த முடியும். ஆனால் எப்போதும் மனிதனுடைய சிந்தனை மற்றவர்களுக்காகவும் மனித இனத்தை முன்னேற்றுவதற் காகவும் இருக்கவேண்டும். அதைவிடுத்து தமது விற்பன்

Page 10
ടല്ലേ.
னத்தைக் காட்டவும் மற்றவர்களை விமர்சிக்கவும் மட்டும் இருக்கக்கூடாது.
என் வாழ்நாளில் நான் ஒரு போராளியாக, என் மக்களுக்காக, அவர்களின் சுபீட்சத்துக்காகப் போராடும் வாய்ப்புக் கிடைத்ததை ஒரு பெரும் பாக்கியமாகக் கருது கின்றேன். எனது ஆயுட்காலம் வரை இப்பணியைச் செய்ய வேண்டும் என்பதே என் விருப்பம் நாம் எமது மக்களுக்கு அமைதியையும் சுபீட்சத்தையும் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் போராடிக்கொண்டிருக் கின்றோம். எமது எதிரியோ எமது தேவையை, கோரிக் கையை ஏற்பதாக இல்லை. தான் கொடுக்கும் சலுகை களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கின்றானே ஒழிய, எமது உரிமையைக் கொடுக் கத் தயாராக இல்லை. நாம் பேராசை பிடித்தவர்களோ, உலகின் நடைமுறை தெரியாதவர்களோ அல்ல. நாம் கேட்கின்ற அடிப்படை உரிமை, எமது மண்ணிலே எமது மக்கள் உயிர் வாழ்வதற்கான உரிமைதான். அதை விடுத்து மாகாண சபையையோ அல்லது அதைவிடக் கூடிய அதிகாரங்களைக் கொண்ட சபையாலோ எமது பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது. எமது மக்களின் பாதுகாப்பு பூரணமாக உறுதிப்படுத்தப்படும் ஒரு வடிவத் தைத்தான் நாம் தேடிக்கொண்டு இருக்கின்றோம்.
W په داشوے
." eeله -ة
 
 

டா"
22. O. 1991 என் அன்பே டாலி,
நான் ஜெனிவாவுக்கு வந்த பின் உன் கடிதங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இன்று ஏனோ உற்சாகமே இல்லை. யாழ்ப்பாணத்தில் மிகவும் பலத்த மோதல்கள் நடைபெறுவதாகச் செய்திகள் அடிபடுகின் றன. ஒரே யோசனை.
மேற்குலக நாடுகளிலே பல மாற்றங்களும் அந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் வகையில் விழிப் புணர்வும் ஏற்பட்டிருக்கின்றது. ஆனால் இந்த மாற்றங்கள் ஆசியாவிலே இன்னும் ஏற்படவில்லை ஆனால் அதற் காக நாம் மனம் சோர்ந்து விடலாகாது. தொடர்ந்து போராடவேண்டும். அப்போதுதான் எமது உரிமையை பெற்றுக்கொள்ள முடியும்,
நாம் ஓர் தேசிய இனம், எமது தலைவிதியை நிர்ணயிக்கும் உரிமை எமக்கு உண்டு. இதை இப்படியும் கூறலாம். எமது அரசியல் அந்தஸ்தை தீர்மானிக்கும் உரிமையும் எமக்குண்டு. நாம் சிறிலங்கா அரசின் கீழ் இருக்க வேண்டிய அவசியமில்லை. நாம் தமிழீழம் என் னும் தனி நாட்டுக்காகவே போராடுகின்றோம். ஆனால் அதேவேளை உலகில் நடைபெறும் புதிய அரசியல் மாற் றங்களையும் பார்க்கின்றோம். பல தேசிய இனங்கள் தமது இறைமையைப் பேணும் வகையில் சேர்ந்து வாழ முடியும் என்பதையும் பார்க்கின்றோம். அதனால் நாமும் இறைமையுள்ள சுதந்திர அரசை அமைத்துக் கொண்டு, மற்ற அரசான சிறிலங்காவுடன் சமமான அந்தஸ்துடன்
ff

Page 11
− രം
சேர்ந்து வாழ முடியும். அதை விடுத்து சிறிலங்காவின் அதிகாரத்துக்குள் எமது பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றால் அது யாராலும் முடியாத விடயம். அதை நாம் ஏற்றுக்கொள்ளப் போவதுமில்லை.
வெளிநாடுகளிலே ஏராளமான தமிழர்கள் அகதி யாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சுவிஸ் நாட்டில் மாத்திரம் 20 ஆயிரம் தமிழர்கள் இருக்கின்றார்கள் இப்படியாக ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழ் அக திகளைத் திருப்பி அனுப்புவதற்கு அந்நாடுகள் முனைந்து வருகின்றன ஜேர்மன், சுவிஸ் போன்ற நாடுகளில் எமது மக்களுக்கு எதிரான உணர்வு தலைதூரக்கியுள்ளது. பல இடங்களில் எம்மவர்கள் தாக்கப்படுகின்றனர். இதனால் இந்த நாடுகள் இவர்களைத் திருப்பி அனுப்ப முயல்கின் றன. வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள்கூட நிம்மதி யாக வாழ முடியாது. எங்கும் சுதந்திரம் இல்லை. எமக் கென்று ஒரு நாடு அமையும் போதுதான் நாம் எங் கென்றாலும் கெளரவமாக வாழமுடியும். எமது போராட் டத்திலே எத்தனை இன்னல்கள் வந்தாலும் நாம் தாங்கி நின்று போர்ாடி வெற்றி பெறவேண்டும். மக்களின் அவலங்களும், கஷ்டங்களும் என்னை மிகவும் வாட்டு கின்றன. ஆனால் இப்ப கஷ்டப்படுவதற்குப் பயந்து போராட்டத்தைக் கைவிட்டால் எமது இனம் என்றைக் குமே நிம்மதியாக வாழமுடியாது. எமது இனமே வாழ முடியாத நிலையும் ஏற்படும். அதனால் நாம் எந்தக் கஷ்டத்தையும் தாங்கிப் போராடுவோம்.
நாம் தனிய எமது ஆதரவாளர்களுக்கு மட்டும் ۔ தமிழீழம் எடுக்கப் போராடவில்லை. அனைவருக்கும்
12

எம்மை ஆதரிப்பவர்கள், ஆதரவளிக்காதவர்கள், எதிர்ப் பவர்கள் இப்படியாக ஒட்டுமொத்தமாக அனைத்து மக் களுக்காகவுந்தான் போராடுகின்றோம். இதில் நம்பிக் கையுடனும் தெளிவுடனும் இருக்கின்றோம். ஆனால் ஓர் போராட்டம் நடந்துகொண்டிருக்கும் போதே அப் போராட்டத்தை அழிக்க நினைப்பவர்களையும் அதற்குத் துணைபோபவர்களையும் நாம் சகித்துக்கொள்ள முடி யாது.
குழப்பவாதிகளும் அதிருப்தியாளர்களும் எங்கும் இருக்கத்தான் செய்வார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் அற்ப பிறவிகள், ஓர் போராட்டத்தின் உன்னத உண்மை யைப் புரியாதவர்கள். எப்படி ஒரு குருடன் உலகத்தைப் பார்க்கிறானோ அப்படித்தான் அவர்களும் ஏதோ சில சித்தாந்தங்களைப் படித்துவிட்டு, அந்தக் கிணற்றுக்குள் இருந்துகொண்டு விடுதலைப் போராட்டத்தைப் பார்க் கின்றனர். இவர்கள் நித்திரைபோல் பாசாங்கு செய் பவர்கள்; இவர்களை யாரும் எழுப்ப முடியாது.
நான் உலகத்தின் அதிமுன்னேறிய நாடுகளில் இருந்து எமது நாட்டையும் மக்களையும் எமது போராட் டத்தையும் பார்க்கின்றேன். அதனால் எமது போராட்டம் இன்னும் உறுதியாக முன்னெடுக்கப்படல் வேண்டும் என்று உணர்கின்றேன். நாம் எந்த வகையிலும் போராடித்தான் ஆகவேண்டும்.
நான் என்னால் முடிந்த வரைக்கும் எமது மக்கள் நன்றாக வாழ வேண் டு ம் என்பதற்காகத்தான் பணி அரண் இருக்கின்றேன். சிறிலங்கா அரசு
f8_

Page 12
டன் பேச்சுவார்த்தை நடத்த பல முயற்சிகளைச் செய்து வருகின்றேன். அவர்கள் இராணுவத்தீர்வில் நம்பிக்கை கொண்டு இராணுவ ரீதியாகத்தான் எமது பிரச்சனை, யைத் தீர்க்க முயல்கின்றனர். இதற்குக் காரணம் சிங் கள இனவா தம் அரசியல்வாதிகளைவிட மிகவும் வளர்ந்துவிட்டதும் ஒரு காரணமாகும். அமைதியாக வாழ்ந்த இனங்களுக்கிடையே மிகவும் மலிவான, கீழ்த் தரமான அரசியல்வாதிகள் இனவேறுபாட்டை உருவாக் கினர். 1956ம் ஆண்டில S.W.R.D. பண்டாரநாயக்கா தான் முதன்முதலாக தமிழர்களுக்கு எதிரான இன வாத உணர்வைத் துரண்டித் தனது பதவியைப் பெற்றுக் கொண்டார். அக்கதை நாற்பது வருடங்க ளா க த் தொடர்கிறது. இன்னும் பிரேமதாசாவுக்கு எதிரான குழு வினர் தமிழ் எதிர்ப்புணர்வைத் தூண்டித்தான் சிங்கள மக்களிடையே தமது செல்வாக்கைத் தேட முயல்கின்ற 60) / ,
பிரேமதாசாவும் தான் அவர்களை விடச் சிறந்த சிங்களவன் என்பதைக் காட்ட, தமிழர்கள் மீது தாக்கு தலை நடத்துகின்றார். ஒட்டுமொத்தமாக யாரும் தமிழ் மக்களைப் பற்றிக் கவலைப்படவில்லை.
இன்று உலகத்திலே பல மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அண்மையில் சோவியத் யூனிய னில் நடந்த விடயங்களைக் கேள்விப்பட்டிருப்பாய், பல தேசிய இனங்களை உள்ளடக்கியதாக இருந்த சோவியத் யூனியனில் இருந்த ஒவ்வொரு தேசிய இன மும் தமது இறைமையைப் பேணும் வகையில் பிரிந்துள் ளன். ஒவ்வொரு தேசிய இனமும் தமது பாதுகாப்பை
14
 

தாமே நிர்ணயித்துக்கொள்ளக்கூடிய் வகையிலும் நிதி, வெளியுறவு போன்றவற்றையும் தாமே நிர்ணயித் துக்கொள்ளக்கூடிய வகையிலும் பிரிந்துள்ளன. தேவை ஏற்படின் தமது பிரதிநிதிகளை உள்ளடக்கிய சம அதி காரம் கொண்ட ஒரு பொது அமைப்பையும் அமைக் கத் தயாராக உள்ளன. இவர்களுடைய சுதந்திரப் பிர கடனத்தை சர்வதேச நாடுகளும் ஏற்றுக்கொண்டுள் ளன. அதே போலவே யூகோசிலாவியாவிலும் இருந்து குரோசியா எனும் பகுதி சுதந்திரமடைய விரும்புகின் றது. குரோசியாவும் தாம் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் பிரிந்து சென்று இறைமையுள்ள குடி யரசை அமைக்கும் தமது உரிமையைக்கேட்கின்றனர். இதற்கும் சர்வதேச நாடுகள் ஆதரவு தெரிவிக்கின்றன.
& deessa .
"
15

Page 13
14. 1, 1991 என் அன்பு டாலிக்கு,
. இங்கு என்  ைன ப் பற்றி எழுத எதுவும் இல்லை. நான் ஒரு சிறிய வீடு வாடகைக்கு எடுத் திருக்கின்றேன். வேலைகளும் சுமாராகப் போகின்றன. மிச்ச நேரமெல்லாம் ஒரே படிப்புத்தான். இப்போ ஒரே குளிர் தொடங்கிவிட்டது. சுவிஸ் மிக அழகிய மலை நாடு. ஆனால் எம்முடைய நாட்டுக்கு நிகரில்லை. மற் றும் நாம் இங்கு வேண்டாத விருந்தாளிகள்தான், பல இடங்களில் எம்மவர்க்கு அடி விழுகிறது.
நாம் உ ல கத் தி ல் எங்குதான் கெளரவமாக வாழ வேண்டும் என்றாலும் நாம் சுதந்திரப் பிரஜை களாக வாழ வேண்டும். அகதிகளாக எல்லாக் காலமும் எல்லோரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எ ம க்கு என்று ஒரு நாடு அமைந்தால்தான் நாம் கெளரவமாக வாழ முடியும். அங்கே நீங்களெல்லாம் மிகவும் கஷ் டத்துடன் வாழ்கையில் நான் இங்கிருந்து தத் து வ ம் பேசுகின்றேன் என்று நினைக்காதே. உலகத்தில் வெளி யில் வந்த பின் மே லு ம் உறுதியாகத் தெரிகின்றது எமக்கென்று ஓர் நாடு வேண்டும் என்று.
இங்கு நாம் எமது பிரச்சனையை ச மா தா ன முறையில் தீர்ப்பதற்கு எவ்வளவோ முயன்ற போதும் சிறிலங்கா எமது பிரச்சனையைப் புரிந்துகொள்ளத் தயாராக இல்லை. எம்மை இராணுவ ரீதியில் அழிக் கவே முனைகிறது எமது ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு மாகாண சபையை ஏற்குமாறு கூறுகின்றது.
16
 

எமக்கு A.K 47 ஒன்றும் பெ ரி த ல் ல. நாம் எமது ஆயுதங்கள் என்று குறிப்பிடுவது எமது பாதுகாப்பு வடிவத்தையே. தமிழ் மக்களுக்குப் பாதுகாப்புக்கு ஓர் உத்தரவாதம் வேண்டும். சிங்களப் படைகளை நாம் எமது பாதுகாப்புக்கு உத்தரவாதமாக ஏற்கமுடியுமா?
சிலர் நினைக்கலாம் நாம் ஆயுதங்களில் காதல் கொண்டவர்கள், ஆயுதப்போராட்டத்தைத் தவிர வேறு வழி தெரியாதவர்கள் என்றும் கரு த லா ம். ஆனால் நாம் அப்படியல்ல. அரசியலையும் உலகின் நடை முறைகளையும் நன்கு புரிந்ததனால்தான் கூறுகின் ரேன், நாம் எமது உரிமைகளை வெ ன் றெ டு க் க போராடித்தான் ஆகவேண்டும்.
அதேவேளை சமரசத்தீர்வுமூலம் எதிரி எமது பிரச்சனையைத் தீர்க்க முன்வந்தால், நிச்சயம் பின் நிற்கமாட்டோம். ஆனால் எமது எதிரி பேச்சுவார்த்தை, சமரசம், சமாதானம் என்று கூறிக்கொண்டு உலகத் தையும் ஏமாற்றி வருகின்றான். அதே வேளை சமரசப் பேச்சின்மூலம் எமக்கு மாகாண சபையைத் தரத் தயா ராக இருப்பதாகவும் கூறிக்கொள்கின்றான். இதைச் சொல்வார்கள் 'சலுகைகள்’ என்று.
எமக்கு வேண்டியது உரிமைகள். நாம் ஓர் தேசிய இனம். எமக்கு உரிமைகள் உண்டு. அதைத்தான் கேட் கின்றோம். இலங்கை என்ற தீவிலே இரு இனங்கள் எப்படி சம உரிமையுடன் வாழ்வது என்பது பற்றிப் பேசு வதற்கு நாம் தயாராக உள்ளோம். அதை விடுத்து மீண்டும் சிறிலங்காவின் இனவெறி பிடித்த அரசுக்குள்
f7

Page 14
ബ്രമശ്രീം
அடிமைப்பட்டுப் போக எந்தத் தமிழனும் ஏற்றுக்கொள்ள மோட்டான், •
எமது மக்களை நினைக்கையில் மிகக் கவலை யாக உள்ளது. தினமும் அவலங்களையே தமது அன் றாட வாழ்வாகச் சந்தித்துக்கொண்டிருப்பவர்கள். மர ணம் ஒரு பக்கம், பசி, பட்டினி மறுபக்கம். இப்படியாக அவர்கள் படும் துயரத்திற்கு அளவேயில்லை. நாம் எமது மக்களுக்கு ஒரு சுபீட்சமான எதிர்காலத்தை அமைத்துக்கொடுக்க வேண்டும்.
உன் படிப்பு எப்படிப் போகிறது? மக்களுக்கு சேவை செய்ய உனக்குச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. உன்னால் முடிந்தவரை சனங்களை நன்றாகக் கவனித் துக்கொள். மக்களுக்குச் சேவை செய்வதுதான் உயர்ந்த பணி. நாம் கடவுளைக் கும்பிட்டு ஆத்மீகத்துறையில் ஈடுபட்டாலும் அங்கே மக்கள் சேவைதான் உச்சக் கட்டமாகின்றது.
ہے جو نکالاشے
8- deessa
18
 
 

25. 11, 1991 என் அன்பு டாலிக்கு,
என் உளமார்ந்த நத்தார் வாழ்த்துக்கள்.
நேற்று முன்தினம் மாவீரர் விழா கொண்டா டினோம். 1700 சனத்துக்கு மேல் வந்திருந்தனர். தமிழ் நாட்டில் இருந்து நெடுமாறன் அண்ணனும் மணியரசன் என்பவரும் வந்திருந்தார்கள்.
இங்கு ஒரே குளிர். வெளியில் திரிவதில்லை, விட்டின் உள்ளேதான் அடக்கம், குளிரோ - 18°. குளிர் கூட என்னை என் நாட்டுக்கு ஒடு என்றுதான் விரட்டு கின்றது. காலநிலை பார்ப்பதற்கு அழகாய் இருந்தால் மட்டும் போதாது. உணர்வுக்கும் நல்லாய் இருக்கவேண் டும். இங்கு ஒரே பனி, வெள்ளை மயம். பார்க்க மட் டும்தான் அழகு, நிச்சயமாய் உணர்வதற்கு அல்ல. எமது நாடு பார்க்க மட்டும் அல்ல எப்போதும் வாழ் வதற்கும் அழகுதான்.
அன்பே, இன்றோ நத்தார் பெருவிழா. இந்நாளில் என் இதயமெல்லாம் திறந்து உன்னை வாழ்த்துகின் றேன். எந்தப் பிரச்சனையும் உன்னை அணுகாமல் அமைதியான வாழ்வை உனக்குக் கொடுக்க இறைவனை வேண்டுகின்றேன்.மக்களுக்குச் சேவை செய்ய உனக்குக் கிடைத்திருக்கும் கிடைத்தற்கரிய சந்தர்ப்பத்தைச் சரி யாகப் பயன்படுத்திக் கொள். மக்களின் சேவைதான்
19

Page 15
உண்மையான வாழ்வு. உனது அறிவையும் சிந்தனை யையும் அகலப்படுத்து. மக்களைச் சிந்தி, மக்களுக் காகச் சிந்தி. அதுதான் வாழ்வு. படிப்பில் கவனத்தைச் செலுத்து. அதுதான் நீ எனக்குச் செய்யும் கைமாறு.
سب سعيه، نکالاشے
. :
20
 
 

και η s , K και S'. ༥ དགའ་
R, O . Of . 1992 என் அன்பு நிறைந்த டாலிக்கு, ' ' ' ' : '
இப்புதுவருடத்தில் உன்னை வாழ்த்துகின்றேன். வாழ்க, வாழ்க, நலமுடன் வாழ்க, அதைவிட அறிவு டன் வாழ்க. அதைவிட நற்பெயருடன் வாழ்க, அதை விட மற்றவர்களுக்காக வாழ்க, அதைவிட மக்கள் சேவை செய்க, அதைவிட நல்லதையே நினைக்க,
மேலும் நல்லதே செய்க. வாழ்க, வாழ்க என வாழ்த்துகின்றேன்.
@ VO
&- qes a
1
Z'.
S
4.
4.

Page 16
to 19, O 1, 1992 என் அன்புக்குரிய டாலி, . . . . . . . . . .
படங்கள் கிடைத்தன. இதயத்தை ஒரு முறை சோகம் கவ்விப் பிடித்தது. எமது விடுதலைப் போர் விலைமதிக்க முடியாத உயிர்களை உள்வாங்கிவிட்டது.
இங்கு இப்போது பகுதி பகுதியாக தொடர் கூட்டங்கள் நடத்தி வருகின்றேன். அதனால் வெளியில் திரிகின்றேன். இங்கு சனங்கள் நல்ல ஆதரவு.
இங்கு இப்போது ஒரே குளிர். என் நடமாட் டத்தை குளிர் கட்டுப்படுத்துகின்றது. கட்டுப்பாடுகளில் இருந்து விடுபட்டு ஓடி வரத் துடிக்கிறேன்.
எனது மண்ணையும் உன்னையும் என்னால் பிரிந்திருக்க முடியவில்லையே என் செய்வேன் எதற்கும் வழியில்லையே என் கடமை உன்னையும் என்னையும் பிரித்தது பரவாயில்லை காதலை விட கடமை பெரிதென்று உணர்வேன். ஆனால் என் கடமை என் மண்ணில் இருந்து என்னை நீண்ட காலமாய் பிரித்து விட்டது. அன்பே, நான் உன்னையும் மண்ணையும்
காதலிக்கின்றேன் அதனால் பிரிவுத் துயர் பல மடங்காகின்றது.
22
 

என் மண்ணிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை என் புதைகுழியைத் தவிர. அன்பே, என் ஏக்கத்தைப் புரிந்துகொள். இது ஒலங்கள் மட்டுமல்ல மண்ணை நேசித்துப் பிரிந்து வாழும் ஆன்மாவின் அலறல்கள்.
20. Of . 1992
நான் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் எல்லாம் படிக்கிறேன். இப்போது எமது அரசியல் மிகவும் நுணுக்கம் வாய்ந்த பகுதிகளைக் கொண்டிருக்கின்றது. நாம் தேசிய இனம் என்று உணர்கின்றோம். ஆனால் எமது எதிரிகள் இலங்கைத் தமிழர்கள் தேசிய இனம் இல்லை என்று கூறி எமது உரிமையைக் குறைக்கப் பார்க்கின்றனர்.
மேலும் இப்போது நாம் பல அரசாங்க மட்டங் களுடன் பேசத் தொடங்கியுள்ளோம் இதனால் இப் போது அதிகமாகப் படிக்கவேண்டியுள்ளது. முடிந்த வரை படிக்கின்றேன்.
༤-༧་་ནས་་་་་་་་་་་
لجھ esܟ݂
23

Page 17
ജ്രം,
என் அன்பு டாலிக்கு,
நான் மிகவும் நலத்துடன் இருக்கின்றேன். உமது நலன்களைப்பற்றி அடிக்கடி எழுதிக்கொண்டு இருக் கவும்.
எனது நண்பர்கள் அனைவரையும் அன்புடன் விசாரித்ததாகக் கூறவும்.
இப்போது யாழ். குடாநாட்டை போர் மேகங் கள் குழ்ந்துள்ளது. எப்போதும் யாழ். குடாநாட்டின் மீதான தாக்குதல்கள் ஆரம்பிக்கலாம். இருந்தாலும் நாம் இங்கு, சர்வதேச நாடுகளின் மூலமாக இத்தாக்குதல் முயற்சியை நிறுத்துமாறு சிறிலங்கா அரசுக்குப் பல விதமான அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றோம். பல நாடுகளும் சர்வதேச அமைப்புக்களும் சிறீலங்கா அரசைக் கண்டித்துள்ளன. இருந்தாலும் என்ன நடக் கும் என்பது கூற முடியாதுள்ளது.
முக்கியமாக உமது படிப்பு விடயத்தில், அவசியம் கவனிக்கவேண்டிய விடயம், படிப்பு மக்களுக்குப் பயன் பட வேண்டும். மனித வாழ்வின் முன்னேற்றத்துக்கு உபயோகப்படல் வேண்டும். நீ அதற்காகத்தான் படிக் கிறாய். r
படிப்பு வெறும் சம்பளம் பெறுவதற்கானதல்ல. அல்லது வெறும் சமூக அந்தஸ்தைப் பெறுவதற்கான தும் அல்ல. பெருமையடித்துக் கொள்வதற்கும் உரியது
24
 

அல்ல. உண்மையில் சனங்களுக்கு உதவி செய்வ தற்கு, சேவை செய்வதற்கு பணி செய்வதற்காகத் தான், ஒவ்வொருவரும் படிக்கவேண்டும். ஆனால் எமது
சமுதாயத்திலே பட்டப்படிப்பு என்பது ஒரு அந்தஸ்துக் காகவே செய்யப்படுகின்றது.
இங்கு ஐரோப்பிய மற்றும் முன்னேறிய நாடுக ளில் ஒவ்வொருவனும் தன்னுடைய தொழிலில் முழுமன விருப்பத்துடன்தான் ஈடுபட்டிருக்கின்றான். ஆனால், எமது சமுதாயம் சம்பளத்திற்காகவும், கெளரவத்திற்கா கவுமே படிப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆனால் படிக்கின்ற காலத்தில்கூட ஏன் படிக்
கின்றோம் என்கின்ற விடயத்தில் தெளிந்த சிந்தனை
இருக்கவேண்டும். இலட்சியம் என்ன? நோக்கம் என்ன? என்பவற்றில்கூட தெளிவாக இருக்கவேண்டும்.
இதேவேளை சனத்தைப்பற்றி நீங்கள் சரியா கப் புரிந்து கொள்ளவேண்டும். சனங்கள் என்பது யார்? அவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதைப்பற்றி யும் சற்றுச் சிந்திக்க வேண்டும். சனங்கள் என் கின்றபோது எல்லோரும் இருப்பார்கள். நல்லவர்கள், நல்லவர்போல் நடிப்பவர்கள், உள்ளொன்று வைத் துப் புறம் ஒன்று பேசுபவர்கள், பொறாமைக்காரர்கள், எதிரிகள், நண்பர்கள், பகைவர்கள் இப்படியாக எல் லாரையும், எல்லா வகையினரையும் உள்ளடக்கியவர் களைத்தான் சனங்கள் என்கின்றோம்.
சனங்கள் என்கின்றபோது, எத்தனையோ குணா திசயங்களைக் கொண்டவர்கள் இருப்பார்கள். மற்றவர்
莺25

Page 18
களுக்காக வாழும் தியாக மனப்பான்மை கொண்டவர் களும், சுயநலம் மிக்கவர்களும், பிற்போக்குத் தன்மை களை உடையவர்களும் இப்படியாக வேறு வேறு பட்ட குணங்களைக் கொண்டவர்கள்தான்.
ஆனால் நீர் இவர்கள் எல்லோருக்கும் சேவை செய்வதற்காகத்தான் படித்து முடிக்கவேண்டும் என் பதை, மனதிலே ஆழமாகப் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.
மனிதர்களுள்ளே வேறுபாடுகளைக் கண் டு வெறுப்படையாதே; மனிதர்களில் மாணிக்கங்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
நல்ல மனிதர்களோடு உறவுகளை வளர்த்துக் கொள். மற்றவர்களிடமிருந்து எதையும் எதிர்பாராதே.
)VN ہیکا9ٹے :
ܘܧܟ݂
26
 

鼎、 2O. O4, 1992 என் அன்பு டாலிக்கு,
நான் இப்போது வேறு இடத்தில் இருக்கின்றேன். எனது சுவிஸ் நண்பர் அதைப்பற்றி உனக்குத் தெரியப் படுத்தியிருப்பார் என்று நம்புகின்றேன்.
மற்றும் எனது நண்பர்களைப் பற்றியும் வீட் டாரைப் பற்றியும் எழுதவும்.
ஏழைகளிடம் அதிக அன்பாக நடந்துகொள். ஏழைகளும் கல்வியறிவு அற்றவர்களையுமே நாம் அதி கமாக நேசிக்க வேண்டும்.
ஏழைகளும் கல்வியறிவு அற்றவர்களும் எமக்குப் பிடித்தமாதிரி நடக்கமாட்டார்கள். அவர்களுக்கு அப்படி நடக்கத் தெரியாது. அதற்கு அவர்களைப் பிழைகூற C909. CU (7 657.
எனது கருத்துக்களை நீர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் கூறவில்லை. அறிவும், வயதும், அநுபவமும், உயர்வும் கிடைக்கும்போது, நாம் பணிய வேண்டும். பணிவு என்பது, உலகையும் மக்களையும் புரிந்து கொண்டு, அவர்களுக்காக உழைத்தல் என்ப தையே குறிக்கும்.
ஆனால் படித்தவர்கள், புத்திஜீவிகள் எ ன் று கூறிக்கொள்பவர்கள் தலைக்கணம் மிக்கவர்களாக இருப்பதையே நாம் காண்கின்றோம். உண்மையில் அறிவும் கல்வியும் கூடும் போது மனிதன் கீழ் இறங்க வேண்டும். அதுதான் மனிதப்பண்பு.
ہستہ نکالاٹے
8- dees
27

Page 19
- . . . . . . 16. O5, 1992 என் அன்பு டாலி, 、
இன்று நான் நலம்.
எனக்கு அடிக்கடி கடிதம் போடவும். நான் மிக வும் பிரச்சினையில் இருந்தபோது, உன்னுடைய கடைசிக் கடிதத்தைப் படித்தபோது மிகவும் ஆறுதலாக இருந்தது. எந்தப் பிரச்சினையையும் தாங்கக்கூடிய மனவலிமை என்னிடம் உண்டு என்பதை, நீ எழுதி இருந்தபோது மேலும் மேலும் என்னிடம் உறுதி பெருகுவதை உணர் கின்றேன்.
இன்னும் ஒடிக்கொண்டுதான் இருக்கின்றேன். சில பிரச்சினைகள், சில அழுத்தங்கள் எல்லாவற்றை யும் சமாளிக்க வேண்டும். சமாளிப்பேன், பிரச்சினை இல்லை.
என்னைப்பற்றி அதிகம் கவலைப்படாதே. எல்லா வற்றையும் சமாளிக்க என்னால் முடியும்.
எப்போதும் ஏழைகளுக்காகவும், மக்களுக்காக வும் உழைக்க வேண்டும் என்பதையே மனதில் வைத் திருக்க வேண்டும். வறியவர்களையும், கல்வியறிவு அற்றவர்களையும், உழைப்பாளிகளையும் மதிக்க வேண் டும். அவர்களுடைய முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக் கும் எம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும்.
சமுதாயத்தில் மக்களைச் சுரண்டி வாழும் பணக் காரர்களுக்கும் மேல்தட்டு வர்க்கத்தவர்களுக்கும் உள்ள
*露&
 

மரியாதை, சாதாரண கீழ்மட்ட மக்களுக்குக் கொடுக் கப்படுவதில்லை. இந்நிலையும் இம்மனப்போக்கும் மாற வேண்டும். ஒவ்வொரு மனிதர்களும் கற்றவர்களும் இந் நிலையைச் சிந்தித்துச் செயற்பட வேண்டும்.
உன்னைச் சந்திக்கும் நாளை ஆவலுடன் பார்த் திருக்கின்றேன்.
29

Page 20
O8. O6. 1992 அன்பே என் டாலி,
உனது கடிதங்களைச் சமீபமாகக் காணவில்லை. ஏனோ? நான் மிகவும் நலமாக இருக்கின்றேன். உனது நலன் பற்றியும் எழுதவும்.
நான் இப்போதெல்லாம் ஒரே படிப்புத்தான். ஆங் கிலம், அரசியல், பொது விடயங்கள் மற்றும் ஓவியம் வரைதல் என்பவை செய்து கொண்டு இருக்கின்றேன்.
என் நண்பர்கள் எப்படி உள்ளனர்? அவர்களை விசாரித்ததாகவும் தெரிவித்துவிடு.
படிப்பில் கவனம் செலுத்து என்பது, இயந்திர மாகப் படிக்கச் சொல்லவில்லை. படிப்பின் இடையில் நன்கு ஒய்வு எடுத்துக்கொள். மனதுக்குப் பிடித்த விதத் தில் நன்கு ஒய்வு எடுக்கும்போதுதான் பின்பு நன் ராகப் படிக்க முடியும். அடிக்கடி கோவிலுக்குப் போ.
உலகின் அதிமுன்னேறிய நாடுகளில், முதலாம் நாடுகள் என்று கூறிக் கொள்பவர்களின் நாடுகளை யும் பார்த்துவிட்டேன். ஆனால், அவைகள் ஏனோ என் நாட்டுடன் ஒப்பிட முடியாதபடியே உள்ளன. இங்கு பல உடுப்புக்களும் கோட்டும் போட்டுக் கொண்டிருந்தாலும் எனது நாட்டில், ஒரு சாரத்துடன் திரிகின்ற கம்பீரம் இங்கு கிடைக்கவில்லை.
பல மாடிக் கட்டடங்களும் பெருத்த வீதிகளும் எம்வீட்டு முற்றத்துக்கு இணையாகமாட்டாது.
 

இங்கே எப்போதும் அந்நிய முகங்களையே பார்க்கின்றேன். அவர்களும் எம்மை அப்படித்தான் நடத்துகின்றனர். எம்நாட்டில் காணும் எமது முகங் களை இங்கே காண முடிவதில்லை.
எமது மக்கள் இங்கே முகவரிகளையும் முகங்க ளையும் தொலைத்து விட்டல்லவா வாழ்கின்றனர்! எப் படி இந்த மண்ணில் என்னால் வாழ முடியும்?
புறச்சூழ்நிலைகளுடன் ஒட்ட முடியாது. உள்ளத் தில் சுமக்கும் கடமையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின் றேன். உன் வாழ்நாளிலும் வெளிநாட்டுக் கனவுகள் வராதவண்ணம் பார்த்துக்கொள். வெளிநாடு சொர்க் கம் என்றும் சுகபோக வாழ்க்கைக்கு உகந்தது என் றும் ஒருபோதும் எண்ணி விடாதே. உலகத்தின் எந்த நாடும் எமது தாயகத்துக்கு இணையாகமாட்டாது. அங்கே வாழ்க்கை இன்புற எல்லாமே இருக்கின்றது. இங்கு கொம்பியூட்டர்களும் இயந்திரங்களும்தான். மனி தன் இல்லை; மனிதம் இல்லை, இங்சே கலர்தான் முக்கியம். மனிதன் அல்ல.
என்னுடைய பொழுது ஒரு மாதிரியாகப் போய்க் கொண்டிருக்கின்றது. எனது சனங்களுக்கும் எனது நாட்டுக்கும் என்னால் முடிந்தவரை சேவை செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பம், இலட்சியம்.
ஆனால் வெளியில் வந்த பின்பும் முழு அளவில் என்னால் வேலைசெய்ய முடியவில்லையே என்பது தான் எனது கவலை. நாட்டில் இருந்தால் எவ்வளவோ
31

Page 21
வேலைகள் செய்ய முடியும். எனது திறமைக்கு ஏற்ற வகையில் வேலைசெய்ய முடியவில்லை என்பது, மிக வும் வருத்தத்தைக் கொடுக்கின்றது. ஒவ்வொரு மணி நேரத் துளியினதும், பெறுமதியையும் மதிப்பையும் புரிந்து கொண்டவன். எனது நேரங்கள் வினே கழி வதைப் பொறுக்க முடியவில்லை. எனது மண்ணுக்காக வும் அங்கு விசும் காற்றுக்காகவும் ஏங்குகின்றேன்.
(s
32
 
 

SSLSLLLSLLLMSSSLSCLSSLLSCLLLSSLSLLSqSLLLMLMLMLSCLLLLSSMSLLLLSLSSSMSqMLMSSSMSSSMLLLLLSLSLSLLqSLSLSLS LSSSSSSMLSSSMSSSMLSS0LSSLLMSSSLSSSLLL LLLLTMSLLSL LSSSSMSLSMS MSk LkTSSMSLLL SLLSLLLLL LSLLLSMTeTTeezTMSqSeTLeLGSqekezSe Ake eLTTTLSGSTeeTe eiTTY LSTeSMSeTTTTqeSSSiMeTeTeLeLeeLSLMSTeLSTTeLeLSeLeLeeLSTqeLeLASLeLekeSTTLLGAeYYqASA SLYSAAAALAAAAAL
.5 ܘܶܐܦ݁ܶܣܣܗ̈ܝ̈ܪܵܬ̈ܒܩܰܒ݂ܘܿܬܵܐܬܘܱܣܚܶܬܐܝ̈ܣܣܗܶܢܶܬܐܚܵܘ̈ܬܐ

Page 22
یہ sھی G تیریئرنگڑے
கவர்ந்து இழுக்கிறது. ஆனால் இங்கோ எது வு மே இல்லை. வேணும் என்றால், எம்மை நாமே மறந்து வாழ்ந்தால்தான் இங்கு வாழ முடியும். அப்படியும் சிலர் இங்கு எம்மிடையே இருக்கத்தான் செய்கின்ற னர். ஆனால் அவர்களை யாரும் பெரிதாக மதித்து விடுவதில்லை.
அன்பே, அங்கு வாழும் நீங்கள், உங்கள் வாழ் வின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளுங்கள். மண்ணை நேசியுங்கள். மண் என்கின்றபோது மக்களையும் சேர்த்துத்தான். எல்லோரையும் நேசிக்கப் பழகு. வெறும் சித்தாந்தமோ, தத்துவமோ இல்லை. அதை நடைமுறை (பில் காட்டு,
பணக்காரனையும் ஏழையையும் சமமாக நடத் தப்பழகு. படித்தவனுக்கும் பாமரனுக்கும் சமமான மதிப் புக்கொடு. இம்மாற்றங்கள் மனதில் ஏற்பட வேண்டும். செயலில் காட்டப்படல் வேண்டும். இது சோஷலிசமும் அல்ல, ஆத்மீகமும் அல்ல. இதுதான் மனிதனாய் வாழ் வது என்பது. -
ܢ ܗܝ . . . - ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கைக்கும் அர்த் தம் இருக்கின்றது. ஆனால் எம்முடைய வாழ்க்கையின் அர்த்தத்தை நாம்தான் தேடிக்கொள்ள வேண்டும். நாம் எம்மை நாமே தேடிக்கொள்ள வ்ேண்டும். எம் முள்ளே இருக்கும் அழுக்கை அகற்ற வேண்டும். தேடல் என்பது எம்முள்ளே இருக்கும் அழுக்குகளை அகற்றுவ தைத்தான் குறித்து நிற்கின்றது.
34
 

இன்னும் சாதியும் ஏழை, பணக்காரன் என்ற வர்க்க வேறுபாடும் எமது மண்ணிலே வாழ்கின்றது. ஏனென்றால் அது எம்முடைய அறிவினத்தையே சுட் டிக் காட்டுகின்றது. மாற்றம் ஏற்பட வேண்டும். முதற் படியாக நாம் ஒவ்வொருவரும் தனித்தனியாக எம்மைத் தேடிக்கொள்வதன் மூலமே சமுதாய மாற்றங்களை ஏற்படுத்த முடியும்,
- ཕྱི་ཚིགས་
eeل
குருதி) 90 சி' ரசலவி ஈதில்
:35

Page 23
ബ്രമശ്രീം
24, O6. 1992 என்றும் என் அன்பு நிறைந்தவளுக்கு,
நான் நலம், மிக மிக நலம். உன் சுகம் அறிய மிக ஆவல்.
நாடிருந்தும் நாடோடியாக நாளெல்லாம் நாடெல் லாம் ஓடுகின்றேன். இன்னும் என் ஒட்டம் முடி ய வில்லை. தொடர்ந்து ஒடுகின்றேன்.
நாடிருந்தும்
நாடோடியாக
நாளெல்லாம்
நாடெல்லாம்
ஒடுகின்றேன்
ஒடுவதற்கு உடல்வலு தேவையில்லை
மனவலு இருந்தால் மட்டும் போதும்
ஒடுவதற்கு கால் எனக்குத் தேவையில்லை
போதிய உளஉரம் வேண்டும்
ஓடுவதால் மீண்டும் மீண்டும் உறுதி பெறுகின்
றேன் நாம் ஓடாமல் இருப்பதற்கு ஓர் சுதந்திர நிலம் அமைக்க வேண்டும் என்று.
(இது கவிதை அல்ல - என் எண்ணங்கள்)
நான் என் மண்ணுக்கு வர ஏங்குகின்றேன்.
ஆனால் அதற்கான சமயமோ எனக்கு வாய்க்கவே
இல்லை. எம்மண்ணிலே வாழும் அரிய ப 7 க் கி ய ம் உனக்குக் கிடைத்திருக்கின்றது. மண்ணை நேசி, மக்
36
 

களை நேசி, உனது உற்றாரையும் உறவினரையும் நேசி. இன்று நீ உயர்ந்துகொண்டு வருகின்றாய். நிலை உயரும்போது தல்ை தாழ வேண்டும். உறவி னர்களோடும் நல்ல உறவை வளர்த்துக்கொள்.
உனது மக்களையும் மண்ணையும் நேசி. மண் னினதும் மக்களினதும் சுதந்திரத்திற்காகப் போராடும் உன்னதமானவர்களையும் நேசி. எல்லோரும் மனிதர்கள், அவர்களை மனிதர்களாகவே பாருங்கள்.
எத்தனையோ தத்துவ நூல்களையும், தத்துவங் களையும் பற்றிக் கேள்விப்படுகின்றேன். அனைத் துத் தத்துவங்களும் அநீதிக்கு எதிராகவும், அடக்குமுறைக்கு எதிராகவும் போராட வேண்டும் என்றுதான் படிப் பினையை ஊட்டுகின்றன. எந்தத் தத்துவங்களும் அநீ திக்கும் அடக்குமுறைக்கும் வளைந்துகொடுக்கும்படி கூற வில்லை. எப்போதும் அநீதிக்கு எ தி ராக ப் போராடுபவர்களுக்கு உதவ வேண்டியது ஒவ்வொரு மனிதனதும் கடமையாகின்றது.
என்னைப்பற்றி எழுதுவதற்கு ஒன்றும் பெரி தாக இல்லை. படிப்பும் ஓவியம் வரைதலும்தான் செய்துகொண்டு இருக்கின்றேன். நான் நல்லாக ஒவி யம் வரையாவிட்டாலும் சுமாராக வரைவேன்.
என்னைப் பற்றி ஒன்றும் பெரிதாக யோசிக் காதே. நான் எப்போதும் எதையும் தாங்கி நின் று எனது இலட்சியப் பாதைக்கு என்னால் முடிந்தவரை உழைப்பேன்.
37

Page 24
േ
29.06. 1992 என் அன்பு டாலி,
இக்கடிதம் உனக்குக் கிடைக்கும்போது பரீட்சை முடிந்திருக்கும். இருந்தாலும் என் வாழ்த்துக்கள்.
நீ படித்தால் எத்தனையோ ஆயிரக் கணக்கான மக்களுக்குச் சேவை செய்ய முடியும். உனது படிப்பில் எத்தனையோ அர்த்தங்கள் உண்டு. எதைப்பற்றியும் கவலைப்படாமல் படிப்பில் கவனம் செலுத்தவும். உனது படிப்பு வேளையில்கூட, மக்களுக்கு உதவிக்கொண்டு தானே இருக்கின்றாய். அதிலே ஒரு ஆத்ம திருப்தி உண்டு. மக்களுக்கு உதவுவதில் சந்தோஷத்தைக் காண முயற்சி செய். சேவை செய்வதுதான் உண்மையான இன்பம். உண்மையான இன்பத்தை உணரக் கற்றுக் கொள்.
. என்னைப்பற்றி எதுவும் யோசிக்காதே. இப்படியான பிரச்சினைகளை எல்லாம் எதிர் நீச்சல் போட்டு கடக்கத்தானே வேண்டும். படிப்பில் கவனத்தைச் செலுத்து. என்றோ ஒரு நாள் எமக்காக மலரும்; அன்று
நாம் சந்திப்போம்.
எனது நண்பர்களை விசாரித்ததாகக் கூறவும்.
கடிதம் எழுதும்படியும் கூறவும்.
ി ...... எமது சூரியன் ஒரு நாள் மலரும். அன்று
எம் வாழ்க்கை மறுபடியும் தொடரும்.
ܓܖ`
ཡིན་6ལ་ qeܘ இ
38

f ༣ ‘. . . . . .
. ܟ
წ.), * o .. ',ბა " x : * ა. པོ་་ ༣ 24.07. 1992 என் அன்பு டாலிக்கு,
in பரீட்சை முடிந்தபின் எ ப் போது மறுபடியும் படிப்புத் தொடங்கும்? படிப்பு இல்லாமல் இருந்தாலும் எப் படியாவது உன்னால் முடிந்தவரை சனங்களுக்கு உதவிசெய்ய முற்படவும். ஏதோ எப்படியோ உன் நேரத்தை சனங்களுக்குச் சேவைசெய்வதிலேயே செல விடவும்.
எப்போதும் ஏழைகளுக்கு உதவுவதிலும், சனங்க ளுக்கு உதவுவதிலும் உள்ள இன்பத்தை அறிந்துகொண் டால் அதைவிட உன்னதமானது எதுவும் இருக்க முடி CV/7og2/ . − ii iiSiuSuMMSiSiSS SuSuKSKSSiSei SSuS SuMS
உன் படிப்பினதும் தொழிலினதும் தத்துவத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு மனிதன் படித்து முன்னேறுவது ஏனையவர்களுக்குச் சேவை செய்யும் பொருட்டுத்தான். ஆனால் துர்அதிர்ஷ்டவச மாக, படித்தவர்கள் யாரும் அப்படியாக நினைப்பது இல்லை. தமது படிப்பால் பதவியால் அந்தஸ்தால் மற் றவர்களையும் ஏழை, எளியவர்களையும் தாழ்வாகவே பார்க்கும் பழக்கமே எம்மத்தியில் நிலவி வருகின்றது. உண்மையில் ஒரு மக்கள் சமுதாயம் தனது தேவைக் காகவே கல்விமான்களையும், அறிஞர்களையும் உரு வாக்குகின்றது. மக்களின் பணத்தில் படித்து முன்னே றும் இவர்கள், படித்த பின் அம்மக்களை விட்டு ஓடி விடும் கல்மனம் மிக்கவர்களாகவும் சுயநலக்காரர்க ளாகவும் இருப்பதுதான் எனக்குப் புரியவில்லை. எனவே
39

Page 25
கே
படிக்கும்போது அதன் நோக்கத்தையும் சரியாகப் படிக்க வேண்டும்.
எனது நண்பர்களைப் பற்றியும் எழுதவும், நிலை மைகள் எப்படி உள்ளன?
கஸ்ரோவை போய்ப் பார்க்கவும். அவருடைய உடல் நலம் எப்படி உள்ளது என்றும் எழுதவும்,
மேலும் சனங்களுடைய மனநிலைகள், படித்த வர்களின் மனநிலைகள் எப்படியுள்ளன என்பது பற்றி யும் எழுதவும்.
உன் கடிதங்களைக் கண்டு தொடர்கின்றேன்.
-2་ཚོས་ག་
"" qeܘ 参
40

O2. O8, 1992 அன்பே என் டாலி,
நலம், நலமறிய ஆவல். உன்னுடைய கடிதத்தை மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றேன். உன் பரீட்சை எப்படி முடிந்தது என்பதைப் பற்றியும் எழுதவும்.
மனிதன் பிறந்ததன் பயனைச் செய்ய வேண் டும். உனக்கென்ற பல கடமைகள் உண்டு. அவற்றைத் தேடிப்பார். உன்னை நீ அறிந்துகொள்வாய்.
நாம் இங்கே அமைதியை ஏற்படுத்துவதற்கான பல முயற்சிகளைச் செய்துகொண்டுதான் இருக்கின் றோம். இருந்தாலும் சிறிலங்கா அரசு சமாதானத்தின்
பால் நாட்டம் கொண்டுள்ளதாய்த் தெரியவில்லை. அவர் கள் இராணுவத்தீர்வின் மூலம் எமது போராட்டத்தை
ழிக்கவே முயல்கின்றனர்
-ཀྱི་ཀི་ས་
& لهee 感
41

Page 26
&& ཊ་ vg|
1992 .O. O 1 ية : ، فسة تبثه في سنة ضة بنية என் அன்பு டாலிக்கு, , |
படிப்பின் போதோ அல்லது தினமும் சிலவேளை களில் திரும்ப நல்ல விடயங்களையும் தத்துவங்களை யும் படிக்க வேண்டும். வெறும் ஏட்டுச் சுரக்காய்க ளான தத்துவங்களை அல்லாமல் மிக நல்ல மனிதர்க ளுடைய தத்துவங்களைப் படிக்க வேண்டும்.
மனித வாழ்வின் அர்த்தத்தைத் தேடவேண்டும்.
நீயும் நானும் கலியாணம் முடித்து, பிள்ளைகள் பெற்று, பிள்ளைகளை வளர்ப்பது மட்டும் வாழ்க்கை யாக முடியாது. எமது வாழ்வுக்கும் நாமேதான் அர்த் தத்தைத் தேடவேண்டும். நான் தேடிக்கொண்டுதான் இருக்கின்றேன். நீயும் தேடவேண்டும்.
சிந்தனையில் எளிமையாக வாழ வு ώ மனித சேவையையும் எப்போதும் முக்கியமாகக் கருத வேண் டும்.
நேர்மையாகவும் உண்மையாகவும் வாழப் ժg& வேண்டும்.
* இன்னொருவரைப் பற்றி குறைவாக இன்னொரு வருடன் பேசாதே. பிரச்சனைக்குரியவரிடம் நேர்மை யாகத் தெரிவிக்கலாம். ஆனால் உனது எண்ணங்களை எல்லாம் தெரிவிக்கவேண்டும் என்பதும் இல்லை.
நேர்மையாகப் பேசுதல், நேர்மையாக நடத்தல் இவ்விடயங்களில் எப்போதும் கவனமாக இருக்க வேண்
鲨2
 

டும் தொடர்பகம் நூல்நிலையத்தில் நல்ல புத்தகங்கள் உண்டு. அவற்றை எடுத்துப் படிக்கலாம்.
உனது படிப்பையும் வேலையையும் ஒரு வேலைக்
குரிய கடமையாகச் செய்யாமல், அதற்கு முழு அர்த் தம் கொடுக்கக்கூடிய் மாதிரியாகச் செய்யவும்.
நான் உல்லாசவிரும்பியல்ல, அது என் இயல்
பும் அல்ல. உல்லாசத்தை விரும்பினால் உல்லாசமாக இருக்கலாம்தான், முடியவில்லையே.
ཀྱི་ཡི་གི་ཁག་གི་ Kees) 4.
43

Page 27
ബ്രമശ്രം
Ꭴ4 , 1 1 , , 1992
என் அன்பு நிறைந்த டாலிக்கு,
நீ எழுதிய கடிதங்கள் கிடைத்தது. நன்றி.
எங்கிருந்தாலும் உறுதியாகவே இருக்கின்றேன். நேரங்களை வீணாகப் போக விடுவதில்லை. நேரத் தைக் கலைத்துக்கொண்டுதான் இருக்கின்றேன். இப் போதும் எனக்கு நேரம் போதாமல்தான் உள் ள து. படிப்பு, படம் வரைதல், சிந்தனை, தி யா ன ம், உடற் பயிற்சி இப்படியாக நேரம் போதாமல்தான் உள்ளது. அவ்வளவுக்கு வேலை செய்கின்றேன்.
ஒவ்வொரு நாட்டுக் கிளைகளுடனும் பல பிரச் சனைகளைக் கதைத்து, பிரச்சனைகளைப் பார்ப்பதிலும் அதிக நேரம் போகின்றது. இப்படியாக நேரமும் நானும் போட்டி போட்டுக்கொண்டுதான் இருக்கின்றோம்.
பொதுவாக மனித மனம் கிடைக்காத ஒன்றுக் காகவும் இழந்துவிட்டவைக்காகவுமே ஏங்கிக்கொண்டி ருப்பதும் அவற்றை நினைத்து சோகித்திருப்பதுமே வழக்கம்.
கிடைத்திருப்பதையும் அதன் மதிப்பையும் உயர் வையும் எண்ணிப் பார்க்கத் தவறியும் விடுகின்றது.
அதே மனம் எப்போதும் தனக்கு மேலே உள்ள விடயங்களைப் பார்த்து ஆசை கொண்டு அதனால் கவலையைத் தேடிக்கொண்டுதான் இருக்கின்றதே ஒழிய,
44
 
 

தனக்குக் கிடைத்ததையும் தனக்கும் கீழே இருப்பவர்க ளின் நிலையையும் எண்ணிப் பார்க்க மறுத்து விடு கின்றது.
இதுதான் மனித மனம். இதை வென்றவன் மகாத்மா ஆகின்றான். நாம் மகாத்மாக்கள் அல்லவே. அதனால்தான் ஒவ்வொரு விடயத்திற்கும் சோகித்திருக்கின்றோம்.
எனவே இவைகளைப்பெரிதுபடுத்தாமல் காலத்தை மேலே கொண்டு செல்வோம்.
அறிவைப் பாவித்து மனதை வளர்ப்போம். முன்னேறு, தொடர்ந்து முன்னேறு, மனதைத் தினமும் திடப்படுத்தி தொடர்ந்தும் முன்னேறு.
ஓ, என் சின்னப் பெண்ணே! வாழ்க்கையில் துன்பம், துயரம், சோகம் எல் லோருக்கும் வருவதுதான். இவைகள் சோதனைகளே ஒழிய நிரந்தரமாகிவிடுவதில்லை. நேற்று வந்த சோகங் களைப் பார்ப்போம், அப்படியாகவே இன்று வரும் சோகங்களையும் பார்ப்போம். நாளை இதே சோகங் களைப் பார்த்துச் சிரிக்கப் போகின்றோம். 。 எனவே இன்றைய சோகங்களை வெற்றியுடன் தாண்டுவோம். எனது பொழுது நன்றாகவே போகின் றது. என்னைப் பற்றிக் கவலைப்படாதே.
தயவுசெய்து நான் கவலையுடன் இருப்பதாக நினைத்து உள ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொள் ளாதே.
ܘqe
45

Page 28
O7, 11, 1992
அன்பின் நிஷந்தன், காயத்திரி மற்றும் குண்டன், பாட்டி,
« » a «p» e ao எனது வாழ்த்துக்களையும் நல்லாசிகளை யும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
காலம் வளர்ந்து செல்கின்றது; உங்கள் அறி வும் வளர வேண்டும். ஏராளமாகப் படியுங்கள், நன்றாகச் சிந்தியுங்கள், பொது அறிவு தரக்கூடிய விடயங்களில் நாட்டம் செலுத்துங்கள். புதிய விட யங்களையும் நல்ல கருத்துக்களையும் தேடுங்கள்.
கல்லூரியிலோ அல்லது வேறு வாசிகசாலை களிலோ நல்ல புத்தகங்களை எடுத்துப் படியுங்கள்.
இப்போதிருந்து பல நல்ல தத்துவங்களைப் படி யுங்கள்.
படிப்பது மட்டுமல்ல, அதன் படி வாழவும் பழ குங்கள். நேர்மையானவர்களாகவும் சத்தியவான்களா கவும் வாழ வேண்டும். அப்படியாக வாழப் பழகிக் கொள்ள வேண்டும். ''',
எப்போதும் எல்லோருக்கும் நல்லதே செய்ய நினைக்க வேண்டும், செய்யவும் வேண்டும். அது சிறி தாகவும் இருக்கலாம், பெரிதாகவும் இருக்கலாம்.
சுயநலத்துடன் வாழக்கூடாது. அப்படி வாழ்ப
வர்களுடன் உறவுகளை வளர்க்காதீர்கள், தூர வில குங்கள்.
 

நல்ல நண்பர்களைத் தேடுங்கள். ஆரோக்கிய மான நட்பைப் பேணுங்கள். W
நேர்மையும் உண்மையும் முக்கியம். நேர்மை யாக வாழ்ந்தால் யாருக்கும் பயமில்லை. சிறிய விட யங்களில்கூட நேர்மையையும் உண்மையையும் கடைப் பிடியுங்கள். பாடசாலை வாழ்க்கையில், வீ ட் டி லே, சுற்றத்துடன் நேர்மையுடன் நடந்து அவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும்.
எந்த விடயத்திலும் நேர்மையான கருத்துக்களைத் தெரிவியுங்கள், அதே தடவை ஏனையவர்களின் கருத் துக்களுக்கும் மதிப்பளியுங்கள்.
யாரைப்பார்த்தும் எதற்கும் பொறாமை கொள் எ7ல் கூடாது. . . . .
எளிமையாக வாழ வேண்டும். க டு  ைம ய ர க உழைக்க வேண்டும்.உழைப்பு என்பது உங்களின் சகல
கடமைகளையும் குறித்து நிற்கின்றது.
விண் அரட்டைகள், ஊர் வம்பு பேசுதல் போன்ற வற்றைத் தவிர்க்கவும். ஆரோக்கியமாகச் சிந்தித்து, ஆழமாகச் சிந்தித்து கருத்துக்களைக் கூற வேண்டும்.
ஆடம்பரங்கள், உல்லாச வாழ்வு இவற்றைத் தவிர்க்கப் பழகுவதுடன் எளிமையைப் பேணுங்கள்.
வறியவர்களுக்கும் முதியவர்களுக்கும் இரங்க வேண்டும். தினமும் உண்டியலில் பணம் சேருங்கள்;
47

Page 29
சேர்க்கும் பணத்தை அநாதைகள், அகதிகள் போன்ற வர்களுக்காக நேரடியாகச் செலவளியுங்கள். இது உங் களுக்குச் சோதனை. அகதிகளுக்கோ யார்க்கோ தானே என்று உண்டியல் பணம் சேர்ப்பதில் எப்படி யான அக்கறை கொள்கின்றீர்கள் என்பதை நீங்களே அவதானியுங்கள்,
யோகாசனம், தியானம், உடற்பயிற்சி தினமும் செய்ய வேண்டும். நேரம் இல்லை என்ற கதைக்கே இங்கே இடமில்லை. முயற்சி செய்யுங்கள்.
எப்போதும் சேவை மனப்பான்மையை உங்க ளகத்தே வளர்த்துக்கொள்ளுங்கள். அப்படியாக வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.
ஒவ்வொரு மனிதனுக்கும் தனக்கே உரிய கடமை இருக்கின்றது. அதுவானது, தான் வாழ்வதுடன் தன்னைச் சூழ உள்ளவர்களையும் வாழ வைப்பது.
பணம், புகழ் பெரிதல்ல; மனமே பெரிதானது. உங்களின் ஆன்மா எப்போதும் நல்லதையே சிந்திக்க வேண்டும். அதற்கு உங்களை நீங்களே பயிற்றுவிக்க வேண்டும்.
உணவையோ பணத்தையோ விரயமாக்காதீர் கள்; ஏனெனில் அவை கிடைக்காமல் தவிப்போர் உலகத் தில் ஏராளமானோர்,
/6960 (U வேண்டுமென்று ஆசைகொள்ளா தீர்கள். புகழ் போதை தருவது. மனிதனது ஆன்
43
 

மீகத்தை அழித்துவிடக்கூடியது. புகழுக்காகச் சேவை செய்யாதீர். சேவை மட்டுமல்ல புகழுக்காக, புகழை நோக்காகக் கொண்டு எதையுமே செய்யாதீர்கள். நற் புகழ் தேடிப் பெறுவதல்ல, தானாக வருவதே.
இப்போது உங்கள் மாணவப் பருவம், தாண்டி னால் கிடைக்க மாட்டாது. உபயோகமாகப் பாவியுங் கள். 24 வயதுக்கு மேல் படிக்க முடியாது. அதற்கிடை
பில் ஏராளமாகப் படியுங்கள்.
எப்போதும் உங்களிடத்தே ஆன்மீகத் தேடல் இருக்க வேண்டும். நிஷந்தன், காயத்திரி!
ஏன் இதையெல்லாம் எழுதுகின்றேன் என்று வியக்கின்றீர்களா? இப்போது குழந்தைப் பருவத்தில் இருந்து வாலிபப் பருவத்துக்குச் சென்றுகொண்டிருக் கின்றீர்கள். நீங்கள் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள வேண்டும். வாழத் தெரிந்துகொள்ள வேண்டும். மணி தன் மனிதனாய் வாழ வேண்டும்.
உங்கள் எதிர்காலத்தை ஒளிமயமான எதிர்பார்ப் புக்களுடன் ஆரம்பியுங்கள். பாதை வகுக்க வேண்டி யதும் நீங்களே. குண்டனையும் தமிழினியையும் வழி நடத்துங்கள். அவர்களின் வாழ்விற்குப் பயிற்சியளி யுங்கள.
“ஒளிமயமான வாழ்வு உங்களுக்குக் கிடைப்ப தாகுக.”
ő cee .
குறிப்பு: தன் அண்ணனின் பிள்ளைகளுக்குன்முதிய கடைசிக் கடிதம்
rets fg) ونgin اولیه
蓟 rag' 49

Page 30
i డా. an sa
16.1. 1, 1992
அன்பின் அம்மா, அண்ணா, மச்சாள், பிள்ளைகள்,
உங்கள் நலம் அறிய ஆவல். நான் நலமே உள் ளேன்,
அம்மா எழுதிய கடிதம் கிடைத்தது.
நான் நலமே உள்ளேன். என்னைப் பற்றி யோசித்து கவலைப்பட வேண்டாம். நான் இருக்கும் இடத்தில் இப்போ ஒரே குளிர் விட்டுக்கு வெளியே ஒரே வெள்ளை மயம், அதிகமாக பணி கொட்டியுள் ளது. அதனால் நான் அதிகமாக வெளியில் திரிவ தில்லை.
மற்றும்படி மிகவும் நலத்துடன் இருக்கின்றேன். இப்போது ஒய்வு நேரம் கிடைப்பதால் நிறையப் படிக் கின்றேன். படிப்பதிலேயே அதிகமாகப் பொழுது போகின் 2து.
என்னைப் பற்றி எழுத அதிகமாக விடயங்கள் இல்லை.
அம்மாவின் உடல் நலம் எப்படியுள்ளது? சாப் பாடு விடயத்தில் அதிக கவனம் எடுக்கவும். சோறு, மா போன்ற உணவுகளைத் தவிர்க்கவும். குரக்கன், ஒடியல்மா, மீன் நன்றாகச் சாப்பிடவும்.
அம்மா, வீட்டிலே தனிய இருக்க வேண்டாம். அண்ணா விட்டிலும் டாலி விட்டிலும் அடிக்கடி போய் நிற்கவும். ,,\,\,\,,
59
 

ாரைப்பற்றியும் குறையாகக் கதைக்காதிர் கள். ஏனெனில் அவர்களிடமே நிறைய நல்ல விடயங் கள் இருக்கின்றன. ஒருவரைப் பற்றி நல்லாகக் கதைப் பதற்கு எதையும் யோசிக்காமல் தாராளமாகக் கதை யுங்கள். அதேவேளை கூடாமல் க்தைக்கும் போது நன்கு சிந்தித்து வார்த்தைகளை வெளியிடுங்கள்.
அதனால் கதைக்கும் விடயங்களை நன்கு சிந் தித்துக் கதைக்கவும். மேலும் இப்போது உங்களுடைய வயதுக்கும் அநுபவத்துக்கும் ஏற்ற வகையிலேயே எந்த விடயங்களையும் எடைபோட்டுக் கதைக்க வேண் | (500, .
எம்மிடையே உள்ள பிற்போக்குத் தனங்களை வெல்ல வேண்டும். சமுதாயம் திருந்துவதற்கு முன் எம் முடைய வீடுகளிலேயே அந்த மாற்றம் நடைபெற
முக்கியமாக சாதி வேறுபாடுகளைத் தூக்கி எறி யுங்கள். சமுதாயத்துக்கு முன்மாதிரியாக நடந்து காட் டுங்கள். எப்போதும் மற்றவர்களுக்கு நல்லதையே செய்ய நினையுங்கள்.
மற்றும் சாமியன் இப்போது என்ன செய்கின் றான்?
நான் இன்று இருக்கலாம், நாளை இறக்கலாம். புரட்சிக்குப் புறப்பட்டவன் எந்தநேரத்திலும்
எந்நிலையிலும்
1.51

Page 31
ജ്ജ@.
மரணத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டும்.
சாதாரணமானவர்களை விட என் வாழ்நாள்
குறுகியது
என்று எனக்கு நன்றாகவே தெரியும்.
எனவே எனது தவறுகளைத் திருத்திவிட முனை கின்றேன். சுயதேடல் என்றும் கூறலாம்.
என் வாழ்நாளில் நான் யாருக்கும் தீங்கிழைக்க வில்லை; அப்படி நினைத்ததும் இல்லை. ஆனால் என் சிறு பிராயத்தில் நான் தீங்கிழைக்காவிட்டாலும் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றே நினைக்கின்
‘நாம் மனிதர்கள். எப்போதும் பிழை விட்டுக் கொண்டே இருக்கின்றோம்.’’ ஆனால் நாம் மனிதர்கள்; அவைகளைத் திருத்த முயலவேண்டும்.
ہانگ9ٹے
&
குறிப்பு: தன் தாய்க்கு எழுதிய கடைசிக் கடிதம்.
 
 
 
 
 
 

15.12, 1992 என் அன்பான பெண்மணிய்ே,
நீ எழுதிய கடிதங்களும் பிறந்ததின வாழ்த்தும் புதுவருட வாழ்த்தும் கிடைத்தன. நன்றி.
அன்பானவளே இந்தமுறையும் பரீட்சை எல் லாம் சித்தியடைந்துவிடுவாய். கவலைப்படாதே. உன் வெற்றிக்கு என் வாழ்த்துக்கள். ۔
மேலும் இக்கடிதம் கிடைக்கும்போது உனக்குப் பரீட்சை முடிந்திருக்கலாம். ஒய்வு நேரத்தை நன்கு பயன்படுத்தவும். பிள்ளைகளின் மருத்துவ முகாமைப் பொறுப்பெடுத்துச் செய்யவும். அவ்வேளையில் மிக ஈடுபாட்டுடன் உனது திறமையை வெளிக்காட்டக்கூடிய வகையில் சாதனை படைக்கவேண்டும்.
எவ்வேலையைச் செய்தாலும் மிக ஆழத்துடன் மிகுந்த ஈடுபாட்டுடனும் செய்யவேண்டும். உனது மனதுக்கு, இயல்புக்கு பிடிப்பில்லாத வேலையாக இருந் தால் வேலை செய்வதையே தவிர்க்கலாம்.
மேலும் இன்றைய நிலையில் போராளிகளைக் கவனித்துக் காப்பாற்றவேண்டியது அனைவரினதும் கடமையாகின்றது. போராளிகள், எமது சனங்கள் அனைவரினதும் விடிவுக்காகவே போராடிக்கொண்டி ருக்கின்றனர். எவ்வித சுயநலமுமில்லாது தம்மை அவர் கள் அர்ப்பணித்து வருகின்றனர். இப்போதோ அல்லது
53

Page 32
எதிர்காலத்திலோ எதையும் பெறவேண்டும், லாபமடைய வேண்டும் என்ற நோக்குடன் போராளிகள் போராட் டத்தில் ஈடுபடுவதில்லை; அப்படியாக இயக்கம் யாரை யும் வளர்ப்பதுமில்லை. அதேவேளை இயக்கத்தில் முதிர்ச்சியின்மை, அநுபவமின்மையால் ஆங்காங்கே சில தவறுகள், பிழைகளை போராளிகள் விடவும் கூடும்.
ஆனால் அவை திருத்தப்படும்; அவை நிரந்தரமானதல்ல.
 
 

அன்பே என் டாலிக்கு,
. மருத்துவம் என்பது புண்ணுக்கு மருந்து கட்டுவதும் மருந்து கொடுப்பதும் மட்டும் அல்லவே. மாறாக நோயாளியைக் குணமடையச் செய்தலே.
ஒரு நோயாளி குணமடைவதற்கான குழ்நிலை யையும் மனநிலையையும் ஏற்படுத்த வேண்டும். அத் தோடு சரியான உணவு உட்கொள்ளல், சுகாதாரமான சூழ்நிலையை ஏற்படுத்தல் என்பனவும் முக்கியமாகும். இவ்வேலையை நீ செய்யும்போது, முழு மன ஈடுபாட் டுடன் செய்யவேண்டும். இங்கு மன ஈடுபாடு என் பது வீறுகொண்ட புத்துணர்வையே குறிக்கின்றது.
மருந்து கொடுப்பது மட்டுமல்லாமல் சகல தழ் நிலைகளையும் உருவாக்குதல் வேண்டும்.
மேலும் இதற்கப்பால் சில விடயங்களை அறிய விரும்புகின்றேன்; நீயும் செய்யவேண்டும் என்றும் விரும்புகின்றேன். தமிழீழத்தில் குறிப்பாக இப்போது வடபகுதியில் எப்படி மருத்துவ சேவை இயங்குகின் றது? சகல பகுதியிலும் சகல கிராமத்திலும் வாழும் மக்களுக்கு எப்படி மருத்துவ, சுகாதார வசதிகள் செய் யப்படுகின்றது? அரசாங்கம் இச்சேவையை எப்படிச் செய்கின்றது? மருத்துவப் பிரிவும் சுகாதாரப் பிரிவும் வெவ்வேறானவையா அல்லது அவை எப்படி இயங்கு கின்றன?
55

Page 33
േ
இதைவிட நாம் எப்படியாக மிகச் சிறப்பாக மருத்துவ சேவையை மக்களுக்கு வழங்க முடியும்? தற் போது காணப்படும் நடைமுறைகளில் உள்ள குறை பாடுகள் என்ன? சகல மக்களுக்கும் மருத்துவ சேவை வழங்கப்படல் வேண்டும். இதற்கு எதிர்காலத்தில் நாம் எப்படியான வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்பவை பற்றி, எனக்காக கொஞ்சம் தெரிந்துவைத் துக்கொள்ளவும். இதற்குக் கொஞ்சம் படிக்கவேண் டும்; எனக்காக இதையும் கொஞ்சம் படிப்பாயாக.
இப்போதெல்லாம் நான் விழிப்பு சம்பந்தமாகவே அதிகம் படிக்கின்றேன். எமது மக்களிடையேயும் குறிப் பாகப் போராளிகளிடையேயும் ஆன்ம விழிப்பையும் உண்மையைத் தேடுவதற்கான உணர்வையும் ஏற் படுத்தவேண்டும் என்பதே என் விருப்பம்.
உண்மைக்காகவும் சத்தியத்தை நிலைநாட்டவும் போராடுகின்ற நாம் உண்மையான போராளிகளாகவும் இருக்கவேண்டும் என்பது அவசியம். நாம் எமக்குள் ளேயே நேர்மையையும் வாய்மையையும் சத்தியத்தை யும் வளர்ப்பதன்மூலமே உண்மையான போராளியாக முடியும்.
போராளிகளிடம் மக்கள் நேயம், மனிதநேயம், தன்னடக்கம் போன்றவற்றை வளரச்செய்யக்கூடிய வகையில் நல்ல போதனைகளைச் செய்யவேண்டும். அதைவிட சுயதேடலையும் ஏற்படுத்த வேண்டும்.
56
 
 

ஆன்மபலமும் உண்மையும் சக்திமிக்கவை. ஒவ் வொரு போராளியும் ஆன்மபலத்தின் சக்தியை தமக் குள்ளே வளர்த்து, அதன்மூலம் மக்களுக்கும் நாட்டுக் கும் வழிகாட்ட வேண்டும்.
போராட்டம், புரட்சி என்பவையை சேவையின் உயர்வடிவமாகக் கொள்ளலாம். எனவே மக்கள் சேவை யின் மகத்துவத்தைப் புரிந்துகொண்டு, நாம் கடமை பாற்ற வேண்டும்.
எல்லாவற்றிலும் மேலாக உண்மையான, துரய் மையான போராளியாக நாம் எம்மை ஆக்கிக்கொள் ளுதல் வேண்டும்.
இப்படியாக ஒரு பயிற்சியை, வாழ்க்கை முறையை ஏற்படுத்த முயன்று வருகின்றேன்.
சனங்களிடையே ஆன்ம விழிப்பு ஏற்படுத்துவது அவசியம், உண்மையையும் சத்தியத்தையும் தம்முடைய வாழ்வின் உயரிய லட்சியமாகக் கொள்வதற்கு மக்க ளைப் பயிற்றுதல் வேண்டும்.
எம்மால் புரிந்துகொள்ள முடியாத கடவுளைத் தேடுவதைவிட நாம் சந்திக்கக்கூடிய சத்தியத்தைத் தேடுவது மேலானது.
சத்தியம் என்பது வார்த்தையிலும் செயலிலும் மட்டும் உண்மையுடன் இருப்பது மட்டுமல்லாமல் உள் ளத்திலும் உண்மையுடன் இருப்பதுமாகும்.
57

Page 34
என் அன்பே, நாம் செய்யவேண்டியது ஏரா ளமாக உண்டு. எம்முள்ளே ஆன்மீகத் தேடல் இருக்க வேண்டும். ஆன்மீகத் தேடல் என்பதும்கூட வெறும் படிப்போ அறிவோ அல்ல; நடைமுறையில் அனுசரித் தலே ஆகும்,
எளிமையான வாழ்வுமுறையும், தன்னடக்கமும், பணிவும் கொண்டு நாம் வாழ்தல் வேண்டும்.
எமது வாழ்வின் மூலமாக சத்தியத்தையும் உண் மையான வாழ்வையும் தேட மற்றவர்களை ஆர்வப் படுத்த வேண்டும்.
முதலில் நாம் ஆசைகளைத் துறந்து எளிமையாக
வாழவேண்டும். இப்போதிருந்தே நாம் அதற்குத் தயா ராகிக்கொண்டிருப்போம்.
நாம் இப்படியாகத்தான் எம் எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகின் றேன். போராளிகளை மட்டுமல்ல மக்களையும் இப்படி யான பாதையில் கொண்டுசெல்ல வேண்டும் என்று விரும்புகின்றேன்.
அன்பே, நீயும் என்னைப் புரிந்துகொள்வாய். என்னுடன் என் கொள்கைகளுக்கும் துணையிருப்பாய் இன்னும் எனக்கு உன் அன்பினால் வழிகாட்டவும் செய் வாய் என்பது நன்றாகவே தெரியும்.
 
 

கடவுளை வணங்கும்போது உனக்காக வேண் டிக் கொள்ளாதே. உனக்காக எதையும் கேட்காதே. நீ சரியாக நடக்கும்போது அவை தானாகவே நடக்கும்.
உண்மையும் சத்தியமும் உன்னை வழிநடத்தும்.
நாம் உண்மையுடனும் சரியாகவும் நடக்க வேண் டியதே எமது கடமை. எமது கடமையின் உண்மை எம்மைச் சரியான பாதையிலேயே இட்டுச் செல்லும்,
எனவே உள்ளத்தில் உண்மையின் ஒளியுடன் சரியாக வாழ்வதே எதைவிடவும் சிறந்தது என்று நம்புகின்றேன். -
நாம் எளிமையாக வாழ்வதற்கு இன்னும் ஏராள மாகச் செய்யவேண்டும் என்று விரும்புகின்றேன். என்னுடைய குறைபாடுகளைக் கண்டுபிடித்து நான் இன்னும் உண்மையாக வாழ ஆசைப்படுகின்றேன்.
நாம் சந்திக்க நேரும்போது உன்னிடமும் அத் தகைய மாற்றங்களை எதிர்பார்க்கின்றேன்.
இவ்விடயத்தில் நீ என்னை மிஞ்சவேண்டும் என்றே விரும்புகின்றேன்.
59.

Page 35
."به جھ
é.) ടല്ലല്ല ല്ല
வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை நாம் எமக்கு ஏற்படும் சோதனையாகத்தான் கொள்ளவேண் டும். எவ்வித சோதனைகளையும் எதிர்த்துநின்று வெற்றி பெறுவோம். . ܟ ܢ " - - -
குறிப்பு :
60
Sہ ہونکہلائے
1992 டிசெம்பர் 15ஆம் திகதிக்குப் பின் எழுதப்பட்டது. இது தான் இவரது கடைசிக் கடிதம்,
 


Page 36


Page 37
ഗ്ഗ ീ. % %ീ %/ീ
ബഗ്ഗ് இதுகுேதின் இறுதஅைது %ളു0ീ% 2தத்தனனக்குத்ததை /%/2ബീബ്ലു ഗ്ഗ%ഗ്ഗ ന്നെന്നീള%E 7சதந்திரன்/அத்த)ை
dee
 

, - |- |- , , , |-
, ,
----
-
-
- - -
-- ܗܝܢ -
---
ܗ .
≤ ̄