கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சனநாயகமும் மனித உரிமைகளும்

Page 1

நாயகமும்
GODGED

Page 2

சனநாயகமும் மனித உரிமைகளும்
நீலன் திருச்செல்வம்
(CES O
COLOMBO
இனத்துவ ஆய்வுகளுக்கான சர்வதேச நிலையம் கொழும்பு

Page 3
முன்பக்க அட்டைப் படம்:
“பாடசாலை விடுதியில் தமிழ் மாணவிகள்”
மேரி மற்றும் மாக்கிரட், ய.லிச், இலங்கையில் ஏழு வருடங்கள் என்பதிலிருந்து ஒரு விளக்கப்படம். மிஷனரி வாழ்க்கையின் கதைகள். அமெரிக்கன் நம்பிக்கை நிதியம், நியூயோர்க் (1890),
நவராங்கினால் மீளப் பதிப்பிக்கப்பட்டது. நியூடெல்கி, 1993,17ஆம் பக்கத்தில்.
Democracy and Human Rights
Copyright 1996 by International Centre for Ethnic Studies
All rights reserved. No part of this book may be reproduced or utilized in any form or by any means, electronic or mechanical, including photocopying, recording or by any information storage and retrieval systems, without permission in writing from the Publisher.
Tiruchelvam, Neelan Democracy and Human Rights
SBN 955-580-018-9
Published in Sri Lanka in 1996 by International Centre for Ethnic Studies, Colombo
Type Setting by Unique Graphics Printed by Unie Arts (Pvt) Ltd.

காமினி வாசுதேவன் ஜானகி ஆகியோருக்கு சமர்ப்பணம்

Page 4

பொருளடக்கம்
முன்னுரை
சனநாயகமும் மனித உரிமைகளும்
(O)
O)
(G)
டு
மனித உரிமைகள் இயக்கம்: 21 ஆம் நூற்றாண்டின் சவால்கள் 1 சர்வதேச மனித உரிமைகள் தினம் 34 மனித உரிமைகள்- ஆசிய நிலைமை: பிரதேச முறைமை ஒன்று தேவைப்படுகின்றதா? 38 மனித உரிமைகளும் அபிவிருத்தியும் பாதுகாப்பும் 43 பால் சமத்துவப் போராட்டமும் மனித உரிமை நெருக்கடியும் 56 மனித உரிமைக் கொள்கையின் இன, கலாசாரப் பரிமாணங்கள் 69 சனநாயகத்தை வலுப்படுத்தல்: பிரதிநிதித்துவத் தேர்தல் முறை சார்ந்த சனநாயகத்துக்கு அப்பால். 76 6 திரணியின் களிநடனம்: சிலியின் சர்வசன வாக்கெடுப்பு 91
இலங்கையில் போரும் அமைதியும்
C)
O)
பழம் பெருமை கொண்ட பெருநகர் யாழ்ப்பாணத்தின் அழிவு 101 இலங்கையில் போரும் அமைதியும் 104 இலங்கை யுத்தம்; உயிர்களின் விலை என்னP 107 திட்டம் வெற்றி பெறுமாP 110 இலங்கையில் அரசியல் தீர்வு சாத்தியமா? 113 தேர்தல் என்பது எதுவரைP 116 இலங்கையில் இரு மொழிக்கொள்கை 119 உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் 122 சிறுபான்மையினருக்குப் பெரும் மனவேதனை 125 உயிர் வாழும் உரிமை 128 அமைதியைத் தேடி 131 என்று தணியும் இந்த சுதந்திர தாகம்P 135

Page 5
சட்டமும் நீதியும் விவாத அரங்க உரைகள்
O)
G)
இலங்கை கணக்கீட்டு, கணக்காய்வுத் தராதரங்கள் மசோதா பற்றி.! 143 தொடர்பு சாதனங்கள் 145 வங்கியற் சட்டத் திருத்தம் 150 நுகர்வோர் பாதுகாப்பு (திருத்த) மசோதா 153 வரவு செலவுத்திட்ட விவாதம் - 1995 156 தொழிற் பயிற்சி அதிகாரசபை மசோதா 169 தொடர்பு சாதனங்களும் கருத்து வெளியீட்டுச் சுதந்திரமும் 173 இலங்கைக்கான சீராக்கப்பட்ட குறைகேள் அதிகாரி பதவி 178 சுரங்கம், கணிப்பொருட்கள் சட்டத்தின் ஒழுங்கு விதிகள் மீதான விவாதம் 184 வரவு செலவுத் திட்டம் - 1996 188 மாகாண சபைகளின் விற்பனை வரிகள் (வரையறைகளும் விதிவிலக்குகளும்) சட்டம் 197 இலஞ்ச ஊழல் ஆணைக்குழுச் சட்டம் 199 பொருளாதார வளர்ச்சியில் சமத்துவமும் நீதியும் 205
மாண்புறு மானிடர் சிலர்
(G)
(C)
சோ. நடேசன்: மனித உரிமைகளுக்காகத் தனித்துக் குரலெழுப்பிய வீரர் 219 ஜி. பார்த்தசாரதி : நடுவராக அவரின் பங்கும் தேசியப் பிரச்சினையும் 227 கலாநிதி எம்.சி.எம். கலில்: இரங்கற் தீர்மானத்தின் மீதான உரை 237 பண்டாரநாயக்கா: அவரின் இலட்சியங்களும் சமூக அமைதியும் 240 கீழைத் தேசத்தின் தவப்புதல்வி: பெனாஸிர் பூட்டோவின் சுயசரிதை 269 அக்கியூனோவும் பிலிப்பைன்ஸில் சனநாயகத்தின் மறுமலர்ச்சியும் 280 மியன்மார் பற்றிய தீர்மானம் மீதான உரை 294

முன்னுரை
மனித உரிமைகள், சனநாயகம், சிவில் சமூகம் என்ற மூன்று கருத்துக்களும் இன்று முதன்மை பெற்றுள்ளன. பல்கட்சி சனநாயக அமைப்பும், போட்டித் தேர்தல் முறையும் நிலைபெற்ற நிறுவன அமைப்புக்களாக உலகின் எல்லா நாடுகளிலும் வேரூன்ற முடியும் என்ற நம்பிக்கை இன்று தோன்றியுள்ளது. கிழக்கு ஐரோப்பாவிலும், மத்திய ஐரோப்பாவிலும் நிகழ்ந்த வியத்தகு மாறுதல்கள் இந்த நம்பிக்கையைத் தோற்றுவித்தன. தென்னாசியாவிலும் கூட பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகளில் அரசியல் மாற்றங்கள் மிக விரைவாக நிகழ்ந்தேறின. இதனால் எதேச்சதிகாரம், மன்னராட்சி முறை ஆகிய அமைப்புக்களிலிருந்து மக்களின் பங்குபற்றலுக்கு இடம்தரும் அரசியல் அமைப்புக்கள் இந்நாடுகளிலும் தோன்றின. மனித உரிமைகளை மீறும் செயல்கள் தொடர்ந்தும் நிகழ்கின்றன. இதனால் உலகம் மேற்குறித்த வழிகளில் அடைந்த முன்னேற்றம் மறுதலிக்கப்படுகின்றது. முன்னைய யூகோசிலாவியாவிலும் செச்னியாவிலும் நிகழும் இனக்குழுக்களுக்கிடையிலான அழிவு தரும் யுத்தம், மேற்கு ஐரோப்பாவில் பரவும் இனத்துவேஷம் என்பன எமக்குக் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்துகின்றன. தென்னாசியாவில் கூட சமய, இனச் சகிப்புத்தன்மை குறைவதால் சமூகப் பொதுவான நீதிசார் விழுமியங்களும் நிறுவனங்களும் தம் நிலைபேற்றிற்காக ஊசலாடும் நிலை தோன்றியுள்ளது. மேற்குறித்த சிக்கலான பிரச்சினைகளையும், மாறுதல்களையும் ஆராய்வதே இத்தொகுப்பில் அமைந்துள்ள கட்டுரைகளினதும் உரைகளதும் நோக்கங்களாக அமைந்தன.
இந்நூல் நான்கு பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளது. முதல் பகுதியில் ஆய்வு மாநாடுகளில் படிக்கப்பட்ட புலமைசார் ஆய்வுகள் இடம்

Page 6
பெறுகின்றன. இம் மாநாடுகள் சர்வதேச மட்டத்திலும், பிராந்திய மட்டத்திலும், தேசிய மட்டத்திலுமாக நிகழ்ந்தவை. இரண்டாவது பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் அவ்வப்போது சஞ்சிகைகளில் சமகால நிகழ்வுகள், வளர்ச்சி பற்றி எழுதப்பட்ட அரசியல் விமர்சனங்களாகும். மூன்றாவது பிரிவு பாராளுமன்ற உரைகளின் தொகுப்பாக உள்ளது. சட்ட ஆக்கத்தின் போதும் பிற நடைமுறைகளின் போதும் சட்ட பொருளியல் விடயங்கள் குறித்த கருத்துக்களாக இவ்வுரைகள் விளங்குகின்றன. நான்காம் பிரிவு முக்கிய அரசியல், சட்டத்துறைப் பிரமுகர்கள் பற்றிய வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புக்களாக உள்ளன. இத்தலைவர்களின் வாழ்க்கை அவர்களை உருவாக்கிய கருத்துக்கள், நிகழ்வுகள் என்னும் பகைப்புலத்தில் சித்தரிக்கப் படுகின்றது. இத்தொகுதியில் எல்லாமாக நாற்பது கட்டுரைகளும் உரைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு தேவைகளைக் கருத்திற் கொண்டு எழுதப்பட்டனவும் , பேசப்பட்டனவுமான கட்டுரைகளினதும், உரைகளினதும் சேர்க்கையாக இவற்றை ஒன்று தொகுக்கும் போது ஒற்றுமையைப் பேணவும் முயன்றுள்ளேன்.
இந்நூல் வெளியிடுவதற்குப் பலர் உதவினர். கட்டுரைகளைச் சேகரிப்பதிலும் மொழிபெயர்ப்பை ஒழுங்கு செய்வதிலும் திரு. பி. தம்பிராஜா முன்னின்று உழைத்தார். இத்தொகுப்பு கையடக்கமான அளவில் அமைய வேண்டும் எனக் கருதினோம். இதனால் அவர் அரிதின் முயன்று சேகரித்த கட்டுரைகள் பலவற்றை இத்தொகுதியில் சேர்க்க முடியவில்லை. ஆ. தேவராஜன், நோபேட் அன்ரனி ஆகிய இருவரும் கட்டுரைகளை மொழிபெயர்த்து உதவினர். திரு. க. சண்முகலிங்கம் அச்சுப்பிரதியைப் படித்து ச.ஆ. ரகளின் பொருளமைதி, நடை ஆகியன நன்கு அமைவுற உதவினார். இக்கட்டுரைகள் எழுதப்படுவதற்குக் காரணமாக அமைந்தோர் வ ழங்கிய ஆதரவினையும் உற்சாகத்தினையும் நன்றியுடன் நினைவு கூருகின்றோம். "இந்தியா டுடே" யின் தமிழ்ப்பதிப்புக்காக எழுதப்பட்டவையே இத்தொகுதியில் இடம் பெறும் அரசியல் விமர்சனங்கள். "இந்தியா டுடே" யின் முன்னாள் இணை ஆசிரியரும் தற்போது "இந்தியன் எக்ஸ்பிரஸ்" நாளிதழின் ஆசிரியராக விளங்குபவருமான சேகர் குப்தா அவர்களுக்கும் விருந்தினர் பக்கத்தில் எழுதுவதற்கு இடமளித்த "இந்தியா டுடே' தமிழ்ப் பதிப்பின் ஆசிரியஃர் வாஸந்தி அவர்களுக்கும் எனது நன்றி உரித்தாகுக. இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ள பல கட்டுரைகளை எழுதத் தூண்டியர் வீரகேசரி ஆசிரியர்

திரு. ஆ. சிவநேசச் செல்வன். 1992 புரட்டாதி 26 ஆம் திகதி நிகழ்த்திய பண்டாரநாயக்க ஞாபகார்த்தப் பேருரை, ஆசிய பசுபிக் பெண்கள், சட்டம் அபிவிருத்தி கழகத்தின் ஆண்டு மாநாட்டில் ஆற்றிய உரை, 1993 ஆனி 2 ஆம் திகதி ஐரோப்பிய பாராளுமன்றத்தின் மனித உரிமைகள் குழுவின் முன்னிலையில் பிரஸ்ஸல்ஸ் நகரில் ஆற்றிய உரை, 1993 தை மாதம் ஸ்ராஸ்பேர்க் நகரில் ஐரோப்பிய கவுன்சிலின் மாநாட்டில் 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மனித உரிமைகள் என்ற தலைப்பில் ஆற்றிய உரை ஆகியனவும் இத் தொகுப்பில் இடம்பெறுகின்றன. "ஏசியன் வோல் ஸ்ரீட் ஜேர்னல்", "பார் ஈஸ்ற்றேர்ண் இக்கொனமிக் ரிவியூ" என்பனவும் சில கட்டுரைகளை வெளியிட்டன. சென்னை “இந்து" பத்திரிகையின் மாலினி பார்த்தசாரதி, என்.ரவி, ஆகிய இருவரும் "புரண்ட் லைன்” ஆசிரியர் என். ராம் அவர்களும் தொடர்ந்து என்னை ஊக்குவித்து வந்தனர். "இந்து", "புரண்ட் லைன்" இதழ்களில் இத்தொகுதியில் இடம்பெறும் கட்டுரைகளில் பல வெளிவந்தன.
இனத்துவ ஆய்வுகளுக்கான சர்வதேச நிலையம், சட்ட, சமூக நம்பிக்கை நிதியம் ஆகிய இரு நிறுவனங்களும் எனது ஆய்வு முயற்சிக்குப் பேருதவி வழங்கின. இந்நிறுவனங்கள் சுதந்திர ஆய்வுக்கும், சிந்தனைக்கும் ஏற்ற நல்ல சூழலை வழங்கின. இந்நிறுவனங்களின் பணிப்பாளர்களான ராதிகா குமாரசுவாமி, டமரா விக்கிரமசேகரா ஆகியோருக்கும் அந்நிறுவனங்களின் ஏனைய நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
அவசரத்தில் நான் எழுதும் கட்டுரை வரைவுகளை ஒழுங்கும், நேர்த்தியும் மிக்க ஆக்கங்களாக்கும் பணியைப் புரிபவர் பி.எம். மெளசில், அவரின் உதவி இன்றி உரிய கால எல்லைகளுக்குள் என் பணிகளைப் புரிவதோ பாராளுமன்ற விவாதங்களுக்கு என்னைத் தயார்ப்படுத்துவதோ இயலாத காரியமாக இருந்திருக்கும். கோவைகளைத் தேடுவதிலும் எனது இடையறாத வேண்டுதல்களுக்குப் பதில் வழங்குவதிலும் சலிப்பின்றி ஈடுபட்டவர் எஸ். ராஜரத்தினம். "ஹன்சாட்" இதழ்களிலிருந்து எனது பாராளுமன்ற உரைகளைத்ை திரட்டி உதவினார் மாலினி. எனது கருத்துக்களையும், மொழிநடையையும் செம்மைப்படுத்துவதில் உதவிய சித்தி திருச்செல்வம் அவர்களிற்கு எனது உளம் கனிந்த நன்றி. கின்சி ரெறளயில் பணியாற்றும் சட்டநிபுணர்களதும், சமூக விஞ்ஞானிகளதும் மனச்சாட்சியாகவும் அவர் விளங்கி வருகிறார்.

Page 7
இலங்கையின் பிரச்சினைக்குரிய அரசியல் சட்டவியல் வரலாற்றை இத்தொகுதியின் கட்டுரைகள் பல ஆராய்கின்றன. இந்த முயற்சி ஒரு பரந்த பின்புலத்திலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சனநாயகம் நோக்கிய முன்னேற்றம், மனித உரிமைகள், பாதுகாப்பு, சமூக இயக்கங்கள் என்பனவற்றோடு தொடர்புடைய விடயங்கள் கோட்பாட்டு முறையிலும், ஒப்பீட்டு ஆய்வு முறையிலும் மேற்கொள்ளப்பட்டன. மியன்மார், சிலி, ஆகியவை பற்றிய குறிப்பான ஆய்வுகளும் உள்ளன. ஒப்பீட்டு அரசியல் யாப்பு, அரசியல் விருத்தி ஆகியவை பால் நான் கொண்டிருந்த விருப்பை அவை எடுத்துக் காட்டுவன.
இத்தொகுப்பின் கட்டுரைகள் பயனுள்ள விவாதம் ஒன்றுக்குத் தூண்டுதலாக அமைந்து எமது காலத்தின் சமூக, ஆத்மார்த்த பிரச்சினைகள் பற்றிய கேள்விகளை தெளிவுபடுத்த உதவுமாயின் அதுவே என் முயற்சியின் நற்பயன் எனக் கொள்வேன்.
நீலன் திருச்செல்வம்.

சனநாயகமும் மனித உரிமைகளும்

Page 8

மனித உரிமைகள் இயக்கம்: 21 ஆம் நூற்றாண்டின் சவால்கள்
அறிமுகம்
மனித உரிமைகள் இயக்கம் 21ஆம் நூற்றாண்டில் எதிர்கொள்ளப்போகும் சவால்களுக்கு உறுதுணையாக இருக்கக் கூடிய எத்தகைய முயற்சிகளிலும் இடம்பெறப் போகும் பிரச்சினைகளை இனங்காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். மனித உரிமைகள் பற்றிய விடயங்களில் வியன்னா மகாநாடு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. மனித உரிமைகள், சனநாயக விழுமியங்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பதிலும் பிணக்குகளை சமாதானமாகத் தீர்த்துக் கொள்வதிலும் சர்வதேச சமூகத்துக்கு இருக்கக் கூடிய ஆற்றல் குறித்த சாதகமான எதிர்ப்புகள் மற்றும் அதற்கு எதிரான நம்பிக்கையீனங்கள் ஆகியவற்றின் பின்னணியிலேயே இம்மகாநாடு நடந்தது. கிழக்கு ஐரோப்பா, மத்திய ஐரோப்பா, தென்னாசியப் பகுதிகள், தென்கிழக்கு ஆசியா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளில் நிகழ்ந்த அசாதாரணமான அரசியல் மாற்றங்களில் மனித உரிமை இயக்கத்தின் பங்களிப்புக் காரணமாகப் பலர் ஊக்கம் பெற்றனர்.
1992 இல் ஜோஸ் ஸலாகுவத் (JoseZalaquet) பின்வருமாறு கூறினார்: "மனித உரிமைகள் தொடர்ச்சியாக நடைபெற்ற போதும் உலகின் பல பகுதிகளில் மனித உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. சுதந்திரம் மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளதுடன் மனித உரிமை விழுமியங்கள் நமது காலத்தின் சமூக ஒழுக்கமுடைமையின் மிகப்பாரிய விடயமென்பது மனித உள்ளங்களில் ஆழமாகப் பதிந்து விட்டது. இவை குறிப்பிடத்தக்க இரண்டு சாதனைகளாகும்." அத்துடன் அவர் மனித உரிமை இயக்கத்தினால் ஏற்பட்ட பல நிறுவனரீதியான அமைப்புகளுக்கும்,

Page 9
சாசனங்களுக்கும் வழிவகுத்தமையைப் பட்டியல்படுத்துகிறார். சர்வதேச, பிரதேச மனித உரிமைப் பொருத்தனைகள், கண்காணிப்பு அமைப்புகள், சர்வதேச ரீதியாகவும் பிராந்திய ரீதியாகவும் மனித உரிமைவாதிகள் தம்மை நிறுவனப்படுத்திக் கொண்டமை ஆகியன இப்பட்டியலில் அடங்கும். "மனித உரிமைகள் என்னும் களத்தின் முதுகெலும்பாக விளங்குபவர்கள் நடுநிலையான உயர்தொழில் தகைமையாளர்களே” என அவர் மேலும் குறிப்பிடுகிறார். சமகால மனித குலத்தின் குழப்ப நிலைமைகளுக்கு முகம்கொடுப்பதில் உரிமைகளின் பொருத்தமுடைமை என்பது பற்றி கார்டினல் எச்சிகரே (Cardinal Etchegaray) பின்வருமாறு தெளிவாக விளக்குகிறார்:
"திசை தவறிய மனித குலம் இன்று தன்னில் தானே நம்பிக்கை இழக்கத் தொடங்குகிறது. இந்நிலையில் மனித உரிமைகள் நோக்கிய முறையீடுகள், அவை ஒழுங்கற்று இருந்த போதும், உயிர்வாழத் துடிப்பவர்களின் இயற்கையான கதறலாகும். மனித உரிமைகளை இறுகப் பற்றியிருக்கும் மனித குலத்தின் கரங்கள் கடலில் ஓர் உயிர்காப்பு மிதவையை இறுகப் பற்றியிருக்கும் கரங்களாகும்."
ஆட்கள் காணாமல் போதல், சித்தி . த, நீதிக்கு அப்பாலான கொலைகள், குழு வன்முறை, பயங்க பளிப்பாடுகள், இனத்துவ மற்றும் சமயத்தின் பேரிலான சகோதரப் படுகொலைகள் போன்ற் தொடர்ச்சியான, பாரிய மனித உரிமை அத்துமீறல்களினால் மற்றவர்கள் அதிர்ச்சியும் வெறுப்பும் அடைந்துள்ளனர். இதில் வேடிக்கை என்னவெனில் இத்தகைய கொடுமையைப் புரிவோர் சட்டத்தினாலும் அரசியலினாலும் பாதுகாக்கப்படுகின்றார்கள். இந்தக் குற்றங்களுக்கு அரசினையே வகைகூறச் செய்யப்படும் மனித உரிமைக் குழுக்களின் செயற்பாடுகள் உலக சமுதாயத்தின் ஆதரவை ஒருமுகமாகப் பெறுகின்றன எனக் கூறுவதற்கில்லை.
ஒரு மனிதன் என்ற மகத்துவத்தின் அடிப்படையில் மதச்சார்புகள் இன்றிப் பெறப்படும் உரிமைகள் என்னும் எண்ணக்கருவைத் தளமாகக் கொண்டு சர்வதேச மனித உரிமைகள் முறைமை மற்றும் அவற்றைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் பற்றிய முழுமையானதொரு பகுப்பாய்வை மேற்கொள்ள வியன்னா மகாநாடு வாய்ப்பளித்தது. அத்துடன், கடந்த 40 ஆண்டு காலமாக இத்துறையில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்தும் அது மதிப்பீடு செய்தது. அண்மையில் மைக்கல் சிசேனி (Michael Czemy) பின்வருமாறு கூறினார்:
2

"மனித உரிமைகள் தொடர்பான உலக மகாநாட்டு ஏற்பாடுகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின. நடத்தப்பட்ட 4 உத்தியோகரீதியான முன்னேற்பாட்டுக் கூட்டங்களும் பல்வேறு பிரதேசக் கூட்டங்களும் எதிர்பார்ப்புகளைத் தெளிவுபடுத்திக் கொள்ளவோ, ஒரு நிகழ்ச்சி நிரலை ஒழுங்கமைத்துக் கொள்ளவோ ஒரு இறுதிப் பிரகடன நகலைத் தயாரித்துக் கொள்ளவோ முடியாத நிலையில் இருந்தன. இவ்வாறாக நிகழ்ச்சி நிரல் கடைசியில் பொதுச்சபையிடமிருந்து வரவேண்டியிருந்தது. அதுவும் தற்காலிகமானதாக இருந்தது. மகாநாட்டை நடத்துவதும் மிகவும் சிரமமானதாக இருந்தது. 12,000 வார்த்தைகள் கொண்ட இறுதிப் பிரகடனம் மற்றும் செயற்பாடுகளின் நிகழ்ச்சித் திட்டத்தை விவாதித்துத், திருத்தி, அனுமதி பெற இரண்டு வாரங்கள் பிடித்தது.”
வீயென்னா பிரகடனத்தைப் பற்றிய வெளிப்பாடுகள் பல்வேறு விதமாக இருந்தன. நீண்ட விவாதங்கள், பிணக்குகள் ஏற்பட்ட போதும் பிரகடனம் பற்றிய கருத்தொருமிப்பு ஏற்பட்டமை குறித்து சிலர் திருப்திப்பட்டனர். பெண்களின் உரிமைகள் உள்ளடக்கப்பட்டமை மனித உரிமைகளின் சர்வதேசத் தன்மையும், அதன் பிரிக்க முடியாத தன்மையும் ஏற்றுக்கொள்ளப்பட்டமை காத்திரமான அமைவுகளாகும். மனித உரிமைகளைப் பாதுகாப்பதும் முன்னேற்றுவதும் அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பு எனவும் ஐக்கிய நாடுகளின் முதன்மையான குறிக்கோள் எனவும், சர்வதேச சமூகத்தின் சட்டரீதியான கரிசனை எனவும் பிரகடனம் 6 டுத்துரைத்தது. எனினும், "வார்த்தைகளுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் செயற்பாட்டில் இல்லை எனவும் குழம்பிக்கிடக்கும் உலகத்தின் கோரிக்கைகளுக்கு முகம் கொடுப்பதற்கு மனித உரிமைகள் தயாராக இல்லை" எனவும் மைக்கல் சேர்னி சுட்டிக்காட்டினார். மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகள் ஒருவரை நியமிக்க எடுக்கப்பட்ட தீர்மானமானது உண்மையில் முன்னேற்றப் பாதையில் எடுத்து வைத்த ஓர் அடியாகும்.
ஆனால் இந்த ஆரவாரங்களுக்கிடையில் சர்வதேச மனித உரிமைகள் நியமங்கள், அவற்றின் சர்வதேசப் பிரயோகம், மனித உரிமைகளின் பாதுகாப்புத் தொடர்பாக ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நடவடிக்கைகள் தொடர்பான ஆழமான தத்துவார்த்த வேறுபாடுகள் இல்லாமலில்லை. பல தென் கிழக்கு ஆசிய நாடுகளின் உத்தியோகரீதியான கருத்தினைப் பிரதிபலிக்கும் "பிலாபாரி கெளசிகன்" (Bilabhari Kausikan) பிரகடனமானது "பொய்மை நிறைந்த யதார்த்தமற்ற
3

Page 10
சர்வதேச வாதத்திற்கும், நொறுக்கிவிடக் கூடிய கலாசார சார்பு வாதத்திற்குமிடையில் ஒரு சமநிலையைக் காணத் தவறிவிட்டது" எனக் கூறினார். வாரக்கண்க்கில் நடந்த வாதப் பிரதிவாதங்கள் இறுதியாக ஓர் இராஜதந்திர ரீதியான சமரசம் செய்தலாக முடிந்ததே தவிர எப்பிரச்சினையையும் தீர்க்கக் கூடியதாக அமையவில்லை எனவும் ஆசியாவுக்கும் மேற்கு நாடுகளுக்குமிடையில் உண்மையான கலந்துரையாடல் நடக்கவில்லை. பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேர்மையான முயற்சிகளோ, உள்ளங்களை இணைத்து வைப்பதற்கான நடவடிக்கைகளோ எடுக்கப்படவுமில்லை. ஏதாவது நடந்தேறியது எனில் அது இருபக்கத்தினரது மனப்பாங்குகளை இன்னும் இறுக்கமாக்கியதுதான் மேற்கு நாடுகளின் மனித உரிமைகள் கோஷத்தைப் பற்றிய மகாநாடு ஆசிய நாடுகள் கொண்டிருக்கும் சந்தேகத்தை இன்னும் ஆழமாக்கியது" எனவும் அவர் மேலும் கூறினார்.
வியன்னா மகாநாடு, அபிவிருத்திக்கான உரிமை சர்வவியாபகமானதும் கையளிக்கப்பட முடியாததுமான உரிமை எனப் பிரகடனப்படுத்திய போதும் அதன் உள்ளடக்கத்தை விளக்குவதற்கோ அபிவிருத்தி என்பது நடைமுறையில் எதனைக் குறிக்கிறது என்பதைத் தெளிவாக்கவோ முயலவில்லை. அதுமட்டுமல்லாது பிரச்சினைக்குரிய அம்சங்களான அரசியல் நிபந்தனை அல்லது மனிதத்துவத் தலையீடு என்பவை பற்றித் தெளிவாக்கப்படவில்லை. மைக்கல் சேர்னி குறிப்பிட்டதைப் போல வீயென்னாவில் தேசிய இறைமை கனமாக அழுத்தியது; அதன் விளைவாக இவ்விடயங்களில் உண்மையான கருத்தொருமிப்பு சாத்தியமாகவில்லை. சுதேசிய மக்களினதும் அவர்களது குழந்தைகளினதும் உரிமைகள் புதிய உத்வேகத்துடன் மீள உறுதிப்படுத்தப்பட்ட போதும் இவை தொடர்பான ஐ.நா பொறிமுறைகளையும் நடைமுறைகளையும் வலுப்படுத்தும் முறைகள் பலவீனமாகவே இருந்தன.
சர்வவியாபகத் தன்மையைத் தேடும் மாயமான் வேட்டை
அடிப்படைக் கோட்பாடுகளில் கருத்தொருமிப்பைப் பெறுவதாக வீயன்னாவில் கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. வீயன்னா பிரகடனம் பின்வருமாறு கூறியது: "இந்த உரிமைகள் மற்றும் சுதந்திரங்களின் சர்வவியாபகத் தன்மை பற்றிய கேள்விக்கு
4

இடமில்லை" இந்த சர்வவியாபகத் தன்மை பற்றிய கருத்தொருமிப்பு ஓர் கபடமாகும். பிலாபாரி கெளசிகன் பின்வருமாறு வாதிட்டார்: "மனித உரிமைகள் பற்றிய ஆசியாவினதும் மேற்குலகினதும் பார்வைகளுக்கிடையில் உள்ள உண்மையான இடைவெளியை நிரப்புவதில் சகல மனித உரிமைகளிேன் சர்வவியாபகத்தன்மை என்னும் பொய்மை மிகவும் ஆபத்தானது. இந்த இடைவெளி உருவாக்கப்பட்டால் அதனை நிரப்ப முடியாது" ஒரு நாட்டின் தனித்துவமான கலாசார, சமூக, பொருளாதார, அரசியல் சூழ்நிலைகளைக் கவனத்தில் கொள்ளாத ஒரு தடை உத்தரவு என அவர் இதனை வர்ணிக்கிறார். இது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். 45 வருடங்களுக்கு முன்னர் சர்வதேசப் பிரகடனத்தின் போது பெறப்பட்ட கருத்தொருமிப்பு இன்று கேள்விக்கிடமாகியுள்ளது. அதனுடைய தகுதியுடைமையும் இன்று பிரச்சினைக்குள்ளாகியுள்ளது. பின் வருமாறு கெளசிகன் வாதிடுகிறார், "அதனுடைய 30 உறுப்புரைகளும் அவற்றின் வியாக்கியானம் மற்றும் பிரயோகம் தொடர்பான விவாதத்திற்குரியவை. சகலமும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன என நாம் நினைப்பது தவறானதாகும்.” கருத்தொருமிப்பு தொடர்ந்து பேணப்பட வேண்டுமெனில் அதிலுள்ள பல்வேறு அம்சங்களும் தொடர்ச்சியாக விவாதத்துக்கு உட்படுத்தப்பட வேண்டுமென அவர் வற்புறுத்துகிறார். இனப்படுகொலை, கொலை, அடிமைத்தனம் ஆகியவற்றுக்கிடையில் ஒரு வித்தியாசத்தைக் காண இந்த விமர்சகர்கள் முயற்சி செய்கின்றனர். இவ்விடயங்களில் சர்வதேச சட்டத்தின் பிரயோகத்தில் ஒரு கருத்தொருமிப்பு நிகழ்வதாக இவர்கள் கருதுகின்றனர். ஆனால் இத்தகைய அடிப்படையின் ஒரு பகுதியாக (மரணதண்டனை, விசாரணையின்றித் தடுத்துவைத்தல், பத்திரிகைச் சுதந்திரத்தைக் குறைத்தல், பொருளாதார நியாயத்தைப் பேணுவதற்காகக் கடுமையான சட்டங்களைக் கொண்டு வருதல் போன்றவையும் அமைய வேண்டுமா என்பது பற்றி இவர்கள் வித்தியாசமான கருத்தைக் கொண்டுள்ளனர். அத்துடன் தேசியப் பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகளின் சகல அம்சங்களையும் தழுவியதாக சர்வதேச மனித உரிமைகள் சட்டங்கள் நீண்டு விரிவதைப் பற்றியும் இவர்கள் சாதகமான கருத்தைக் கொண்டிருக்கவில்லை. இச்சட்டங்கள் வேதனம், வேலைநிலைமைகள், தொழிற் சங்கங்கள், வாழ்க்கைத்தரம், ஓய்வு, நலவுரிமை, சமூகப் பாதுகாப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமை மற்றும் சூழலியல் ஆகிய அனைத்தையும் தழுவுவதாகக் கவலை தெரிவிக்கின்றனர்.

Page 11
இக்கருத்தினை "ஆங் சன் சூகி" வன்மையாக எதிர்க்கிறார். "பர்மிய மக்களைப் பொறுத்த மட்டில் மனித உரிமைகளின் உள்ளார்ந்த பெருமிதமும், சமத்துவமும், கைமாற்ற முடியாத தன்மையும், சர்வதேச சகோதரத்துவமும் எவ்வாறு சுதேசிய விழுமியங்களுக்கு எதிராக இருக்க முடியும் என்பது பிரச்சினையாக உள்ளது. சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தின் முப்பது உறுப்புரைகளும் சிறப்பும் முழுமையும் கொண்டவை என்பதைத் தவிர வேறுவிதமாக எண்ணுவதற்கு அவர்களால் முடியாமல் உள்ளது.”
“டனிலோ ரேக்" என்பவர் சர்வவியாபகத் தன்மை என்பதை ஓரினத்தன்மை எனப் பொருள் கொள்ளக் கூடாது என அபிப்பிராயப்படுகிறார். சர்வதேச மற்றும் பிரதேச மனித உரிமை நியமங்களை அமுல் நடத்தும் போது உள்நாட்டு நீதிமன்றங்களுக்கு தற்துணிபு அதிகாரம் இருத்தல் வேண்டுமென அவர் விதந்துரைக்கிறார். எனினும் அவ்வாறான ஒரு கொள்கை முற்றுமுழுதாகத் தடைசெய்யப்பட வேண்டிய சித்திரவதை, ஒருதலைப்பட்ச மரணதண்டனை, காணாமற் போதல், ஒருதலைப் பட்ச தடுத்து வைத்தல், கைது ஆகியவற்றுக்கு ஏற்புடைத்தாகாது. வேறு விடயங்கள் இதற்குப் பொருத்தமானதாகும்.
மேலும் வளர்ச்சியடைந்து வரும் மனித உரிமைகள் நீதியும், சர்வதேச நியமங்களும் பாதிப்புக்குள்ளாவது மேற்குலகின் தனிமனித சார்புகளின் காரணமாகவேயன்றி ஆசியாவின் சமூகம் சார்ந்த மரபுகளினால் அல்ல எனவும் ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. அத்துடன் சட்ட நிறுவனங்களும், அமுல் நடத்தும் பொறிமுறைகளும் மேற்குலகின் விரோதமான சட்ட முறைமையைப் பிரதிபலிக்கின்றனவே தவிர ஆசியாவின் அல்லது தென்கிழக்கு ஆசியாவின் மரபுகளான விட்டுக் கொடுத்தல், மற்றும் கருத்தொருமிப்பு என்பவற்றையல்ல எனவும் சுட்டிக் காட்டப்படுகிறது. இத்தகைய விமர்சனங்கள் பெரிதும் பொருத்தமானவை அல்ல எனவும் மேற்குலகின் சட்டம் மற்றும் மரபுகள் தனிமனித சமூகம் சார்ந்த தன்மைகளையும் ஒருங்கே பிரதி பலிக்கின்றன எனவும் சில அறிஞர்கள் கருதுகின்றனர். அத்துடன் கருத்தொருமிப்பை நாடும் அணுகுமுறையானது ஒரு தனிமனிதனைத் தனது உரிமைகள் யாவற்றையும் சமூகத்திடம் அர்ப்பணிக்க வைக்கிறது என்னும் கோட்பாட்டையும் அவர்கள் எதிர்க்கின்றனர்.
"யாஸ் ஹாய்" என்பவர் அரசினையும் சமூகத்தையும் ஒன்றாகக் கருதுதல் பிழையானது 6 ன எடுத்துரைக்கிறார். அரசும் சமூகமும் இரு வெவ்வேறு நிறுவனங்கள். சமூகத்தின் பெயரால் பல
6

அரசாங்கங்கள் குடியியல் சமூகக் குழுக்களின் சமூக, அரசியல் முனைப்புகளை அமுக்கிவிட்டிருக்கின்றன. அத்துடன் இத்தகைய நடவடிக்கைகள் சுதேசிய மக்கள், சிறுபான்மையினர், மாற்று அபிவிருத்தி நோக்கங்களைக் கொண்ட நிறுவனங்கள் ஆகியவற்றை ஓரங்கட்டவும் உதவியுள்ளன. தென்பகுதி நாடுகள் யாவும் ஒரு பொதுவான கலாசாரம் மற்றும் சித்தாந்தத்தினால் பிணைக்கப்பட்டுள்ளன என்பதும் இது மேற்குலகின் தனிமனித மரபுகளுக்கு எதிரானது என்று அனுமானிப்பதும் பிழையானதாகும். ஆசியாவுக்குள் மட்டுமன்றி, ஓரினத்தன்மையைக் கொண்டிருப்பது போல் தோற்றமளிக்கும் கிழக்கு அல்லது தென்கிழக்கு ஆசியாவிலும் கூட பல வேறுபாடுகள் உள்ளன.
சுதேசிய கலாசாரம் மற்றும் விழுமியங்களின் அடிப்படையில் ஒரு பொதுவான தளத்தை அமைக்க முடியாவிடின் மனித உரிமைகள் பற்றிய ஒரு தெளிவான நோக்கினை அமைப்பதற்குத் தடையாகி விடும் 61ன யாஸ் ஹாய் வாதிடுகிறார். அத்துடன் மனித உரிமைகள் பற்றிய விவாதங்களில் ஆசியாவுக்கும், மேற்குலகத்துக்குமிடையில் இடைவெளி உள்ளதெனவும் அவர் நம்புகிறார். மேற்குலகில் நன்கு ஊன்றிய சனநாயகங்களில் ஒன்றை யொன்று எதிர்க்கும் அரசியல் அமைப்புகள் இல்லை. ஆசியாவில் மனித உரிமைகள் "மாறுநிலைத் தன்மைகளைக்" கொண்டிருப்பதுடன் அதிகாரப் போட்டிக்கும் நல்லதொரு சமூகத்தில் பிற போட்டிகளுக்கும் வழிவகுக்கின்றன. இரண்டாவதாக ஆசியாவின் இனத்துவக் குழுக்கள், பெண்கள், குழந்தைகள், பின்தங்கிய சமூகங்களுக்கு எதிரான பாரிய மனித உரிமை மீறல்கள் கடந்த காலத்திலும் இன்றும் நடக்கின்றன. பெருந்தொகையான கொலைகளும், பரவலாகக் காணாமற் போதலும் இதில் அடங்கும்.
மனித உரிமைகளில் அரசாங்கமே பாரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அத்துடன் குடியியல் சமுதாயத்திலும் இத்தகைய உரிமைமீறல்கள் ஆழ்ந்துள்ளன. இதன் காரணமாக குழு உரிமைகளைப் பற்றிய ஆழமான உணர்வுகள் ஊட்டப்படுவதோடு, இவ்வுரிமைகளைக் காக்க மாற்று உத்திகளும் கண்டறியப்பட வேண்டும். எனினும் மனித உரிமைகள் தொடர்பான ஒரு கருத்தொருமிப்பைப் பேணுதலை நாம் குறைவாகக் கணிக்க முடியாது. பனிப்போருக்குப் பின்னர் கருத்தொருமிப்பைக் கட்டியெழுப்புதல் தொடர்பாக இரண்டு முக்கிய அபிவிருத்திகள் தோன்றியுள்ளன.
7

Page 12
முதலாவதாக மனித உரிமைகளின் சர்வவியாபகத் தன்மையை உயர்த்திப் பிடிக்கும் சில மேற்குலக நாடுகளின் நம்பகத் தன்மை சீரழிந்து வருகிறது. இதற்குக் காரணம் அந்நாடுகளில் முளைவிட்டுள்ள இனவாதப் போக்கும், குடிவரவு தொடர்பான பாரபட்சமான கொள்கைகளும், நடைமுறைகளுமாகும். அத்துடன் இந்நாடுகள் பொருளாதாரப் போட்டி யில் தோல் வியடைந்தமையும் , போதைப்பொருள், குற்றங்கள் போன்ற உள்நாட்டு பிரச்சினைகளும், அவர்களுடைய பின்தங்கிய வகுப்பினரை அவர்களால் உயர்த்த முடியாமையும் இந்நாடுகளின் நோக்கங்களைக் கேள்விக் குரியதாக்கியுள்ளன. இரண்டாவதாக கிழக்காசியாவும், தென்கிழக்கு ஆசியாவும் பெற்ற பொருளாதார வெற்றிகள் அவற்றை "1990 களின் மையக் காரணிகள்” என்னும் அந்தஸ்துக்கு உயர்த்தியுள்ளன. அத்துடன் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் பின்னர் முதன் முதலாக "யூத-கிறிஸ்தவ மரபுகளுக்கு வெளியிலுள்ள நாடுகள் முதல்நிலை”யை அடைந்துள்ளன. இந்நாடுகளில் தமது நாகரீகம், கலாசாரம், மரபுகள் தொடர்பான உணர்வுகள் இன்று மேல் எழுகின்றன. எனவே மனித உரிமைகளை "மேற்குலகின் உலகளாவிய மேலாண்மைக்கான ஒரு திட்டம்” என நோக்கும் ஒரு நிலையும் தோன்றியுள்ளது. அத்துடன் புதிதாகக் கைத்தொழில் மயப்படும் நாடுகளின் அத்திவாரத்தில் போடப்படும் ஒரு அடியாகவே மேற்குலகின் மனித உரிமைப் பிரசாரம் நோக்கப்படுகிறது.
"மனித உரிமைகள் அந்தந்த நாடுகளின் இறைமைக்கு உட்பட்டவை” என்பது இன்று முதன்மை பெற்று வரும் கருத்தாகும். ஒரு கருத்தொருமிப்பை ஏற்படுத்த எடுக்கப்படும் முயற்சியானது மனித உரிமைகள் பற்றிய வாதங்களின் மீது எமது கவனத்தைத் திருப்புகிறது. தென்பகுதியில் வாழும் மக்களுக்குப் புரியாத மொழியிலும் மரபுகளிலும் மனித உரிமைகளின் சர்வவியாபகத் தன்மை பற்றிய வாதம் நிகழ்த்தப்படுமாயின் அதன் முக்கியத்துவம் சீக் கிரமே இழக்கப்பட்டுவிடும். ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாட்டு மக்களின் சமூக, சமய அனுபவங்களுக்கும் உள்ளடக்கத்தையும் அர்த்தத்தையும் வழங்கும் அவர்களது நம்பிக்கைகளுடன் இணைக்கப்படுமாயின் மனித உரிமைகளின் ஆதரவுத் தளம் விரிவாக்கப்படலாம். உதாரணமாக இந்து, பெளத்த நீதிமுறையில் "தர்மம்" என்னும் எண்ணக்கரு அடித்தளமாக உள்ளது. ஆட்சியாளர்கள் தமது பிரசைகளின் விசுவாசத்தைப் பெறவேண்டுமெனில் இவ்வாறான ஒழுக்க வரையறைகளை மீறமுடியாது. இவ்வாறான
8

எண்ணக்கருக்களை ஆட்சிக் கோட்பாடுகள் மற்றும் சனநாயக வகை கூறல்களுக்கு அடித்தளமாகக் கொண்டு வருவதற்கு பெருமுயற்சிகள் செய்யப்பட்டன எனக் கூறமுடியாது. இதேபோல சர்வதேச மனித உரிமைகள் பற்றிய வியாக்கியானங்களுக்கும் இஸ்லாமிய உலக நோக்குக்கு அடிப்படையான எண்ணக்கருக்கள், எண்ணங்கள், நிறுவனங்கள், மொழி ஆகியவற்றிற்கும் இடையே தொடர்புகளை உருவாக்க வேண்டும். இவ்வாறான அணுகுமுறை தற்போது நிலவக் கூடிய நியமங்களைக் குறைக்கவோ அல்லது கலாசார சிறப்புரிமை என்னும் அடிப்படையில் இழிவுபடுத்தவோ முயலவில்லை. அல்லது ஒரு "கற்பனையான கடந்த காலம் அல்லது கலாசாரத்துக்குள்” நுழைந்து கொள்வதுமல்ல. அதே நேரத்தில் ஆசிய, ஆபிரிக்க நாடுகளின் சமய, கலாசார மரபுகள் பாரபட்சமானதும், மனிதத் தன்மையற்றதுமான நடைமுறைகளைச் சிலவேளைகளில் பொறுத்துக் கொள்கின்றன என்பதையும் நாம் மறுக்க முடியாது. சமயமும் கலாசாரமும் தமது அடக்குமுறையின் மூலங்களாக விளங்குகின்றன எனப் பெண்கள் நினைக்கிறார்கள் என ராதிகா குமாரசாமி எச்சரிக்கை விடுக்கின்றார். எனவே நிலைமை சிக்கலானது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மனித உரிமைகளுக்கான ஆதரவுத் தளத்தை விரிவாக்க வேண்டுமெனரில் வழமையான சிந்தனைப் போக்குகளிலிருந்தும் வரையறைகளிலிருந்தும் நாம் விடுபட வேண்டும். மனித உரிமைகள் இயக்கத்தின் வெளிப்படையான தோல்விகளில் ஒன்று சனநாயக, பன்முகப்பட்ட விழுமியங்களுக்கான ஆதரவுத் தளத்தை அதனால் விரிவாக்க முடியாமையாகும். ஒரு முழுத்தலைமுறையினருமே இனத்துவ சிந்தனைகளினாலும், சகிப்புத்தன்மை இன்மையினாலும் கவரப்பட்டுள்ளனர். 1990 களிலும் அதன் பின்னரும் நமக்கு முன்னுள்ள சவால்கள் என்னவெனில் நமது பன்முகத்தன்மை கொண்ட வரலாற்றை மீட்டெடுப்பதும் அதன் மூலமாக நமது பன்முகத்தன்மை கொண்ட எதிர்காலத்துக்கு வழிசமைப்பதுமாகும்" என ஷயா சர்தார், ஆஸிஸ் நான்டி, மெரில் 606 16ör, GL656v (ZiaSardar, Ashis Nandy, Merrylwyn Davies) gafGuirtir அண்மையில் சுட்டிக் காட்டியுள்ளனர்.
மனித உரிமைகள், சனநாயகம் மற்றும் அபிவிருத்தி
வீயன்னாவில் நடந்த விவாதத்தின் மையமாக மனித உரிமைகளுக்கும், அபிவிருத்திக்கும் இருந்த இணைப்பு விளங்கிய போதிலும்
9

Page 13
பரிர கடனமானது வெறுமனே பரந்த கருத்துக் களின் வெளிப்படுத்தல்களுடன் முடிவடைந்தது. அபிவிருத்தி செய்யும் உரிமையுடன் தொடர்புடைய அடிப்படைக் கொள்கைப் பிரச்சினைகள் பற்றியோ, மனித உரிமைக்கும் சந்தை நிலைமைகளுக்கும் உள்ள தொடர்பு பற்றியோ பிரகடனம் கருத்தில் கொள்ளவில்லை. வீயென்னா பிரகடனமானது சனநாயகம், அபிவிருத்தி மற்றும் மத உரிமைகளின் கெளரவம் ஆகியவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன என்றும் பரஸ்பரம் வலுவூட்டக் கூடியவை என்றும் உறுதிப்படுத்தியது. அத்துடன் அபிவிருத்திக்கான உரிமை சர்வவியாபகமானதெனவும், கையளிக்கப்பட முடியாதெனவும் அது அடிப்படை மனித உரிமைகளின் ஒரு கூறு எனவும் உறுதிப்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் மனிதனே சகல அபிவிருத்தி முயற்சிகளினதும் மையம்; அபிவிருத்தி மனித உரிமைகளை அனுபவிப்பதற்கு வசதியளிக்க வேண்டும். மனித உரிமைகளை மறுப்பதை நியாயப்படுத்துவதற்கு அபிவிருத்தி முயற்சிகள் கொண்டு வரப்படக் கூடாது என்னும் கோட்பாடுகளையும் வீயென்னாப் பிரகடனம் உறுதிப்படுத்தியது.
மனித உரிமைகளும் அபிவிருத்தியும் ஒன்றிலொன்று தங்கியிருப்பது 1986 மார்கழி மாதம் 4 ஆம் திகதி பொதுச் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐ.நா. அபிவிருத்தி உரிமைப் பிரகடனத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இப்பிரகடனத்தின் மையக் கருத்துக்களாக பின்வருவன அமைந்துள்ளன:
l. அபிவிருத்தியின் மையமாக மனிதனே விளங்க வேண்டும். அபிவிருத்தி உரிமையின் பங்குதாரரும், நன்மை பெறுபவனும் மனிதனே.
2. மனித உரிமைகள் அனைத்தும் (குடியியல், அரசியல், பொருளாதாரம், சமூக, கலாசார) பிரிக்க முடியாதவையும் ஒன்றிலொன்று தங்கியிருப்பனவுமாகும். இவை யாவும் சமமான கவனிப்புக்கு உரித்துடையவை.
3. மேற்படி உரிமைகளை அங்கீகரிக்கத் தவறுதல் அபிவிருத்திக்கான
தடையாக அமையும்.
இவ்வாறு உரிமைகளையும் சுதந்திரங்களையும் மதிக்கத் தவறுவதால் அபிவிருத்திக்கு எதிராக ஏற்படும் "தடிைகளை” அகற்றும் ஏற்பாடுகளைச் செய்ய அரசுக்கு அளிக்கப்பட்ட அதிகாரமானது ஐ.நா. பிரகடனத்தில் ஒரு முக்கிய புத்தாக்கமாகும். அதன் காரணமாக அரசானது
10

(அ) சர்வதேச மனித உரிமைகள் மகாநாட்டுடன் படிக்கைகளில் குறிப்பிட்டுள்ள உரிமைகளையும் சுதந்திரங்களையும் மதிக்க வேண்டும். (ஆ) இவ்வுரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்கும் தடையாக உள்ள அரச அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் கொள்கைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
"உபேந்திரா பாக்ஷி" (Upendra Baxi) குடியியல் சமுதாயத்திலிருந்தும் அபிவிருத்திக்கான தடைகள் தோன்றக்கூடும் எனக் குறிப்பிடுகிறார். குடியியல் சமுதாயத்தில் காணப்படும் நிறுவனங்களும் நடைமுறைகளும் சிறுபான்மை மற்றும் பின்தங்கிய சமூகக் குழுக்களின் மனித உரிமைகளுக்குத் தடையாக விளங்கக் கூடும். மனித உரிமைகளின் பிரிக்க முடியாத தன்மை பற்றி சர்வதேசப் பிரகடனங்கள் குறிப்பிட்டுள்ள போதும் பல் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் இக்கருத்துக்கு உடன்பாடாக இருக்கவில்லை. இவற்றில் குறைந்த அபிவிருத்தி யடைந்துள்ள நாடுகளும் அண்மைக் காலத்தில் மிகவும் வெற்றிகரமாகக் கைத்தொழிலாக்கம் பெற்ற நாடுகளும் அடங்கும். இவற்றில் பின்தங்கியுள்ள நாடுகள் பொருளாதார அபிவிருத்தி மனித உரிமைகளை விட மேலானவை என வாதிடுகின்றன. புதிய கைத்தொழில் நாடுகள் தமது வெற்றிக்கு எதேச்சாதிகாரமான அரசியல் அமைப்பே காரணம் எனக் கூறுகின்றன.
"யாஸ் ஹாய்” ஐ. நா. பிரகடனத்தை ஒரு "குழப்பமான ஆவணம்” எனவும் அது எல்லாருக்கும் எல்லாவற்றையும் கொடுக்க முயல்கிறது எனவும் கூறுகிறார். இப்பிரகடனம் மனித உரிமைகள் பற்றிய சர்வதேச விவாதத்துக்கு ஒரு மாற்று ஏற்பாட்டை வழங்குகிறது. இது (அ) மனித உரிமைகளை உள்நாட்டு விவகாரம் என்ற அந்தஸ்திலிருந்து சர்வதேச அரங்கத்துக்கு மாற்றியுள்ளது; (ஆ) ஒரு இரட்டைத் தன்மை கொண்ட அபிவிருத்தி உரிமைக்கு விசேட உரிமைகளை வழங்க முயல்கிறது. அதாவது அரசு இதனை வரையறை செய்து நடைமுறைப்படுத்தும் பொறுப்பினை ஏற்றுக்கொள்கிறது. நாம் முன்பு குறிப்பிட்டது போல அபிவிருத்தி உரிமை என்னும் கருத்தை வரையறை செய்து அமுல் நடத்துவதற்குத் தேவையான வழிகாட்டலை வழங்கவில்லை.
மனித உரிமைகளின் பிரிக்க முடியாத தன்மை பற்றியும் அபிவிருத்தி உரிமை பற்றியும் சங்கடமான போக்குகள் இன்று தென்படுகின்றன.
11

Page 14
1991 மார்கழி 21 இல் நடந்த ஆறாவது சார்க் உச்சிமாநாட்டில் மனித உரிமைகள் என்னும் விடயம் குறுகிய அரசியல் நோக்கத்துக்குள் உட்படுத்தப்படக் கூடாது எனக் குறிப்பிட்டது. இக்கடமையானது 'மனித உரிமைகளையும் 'அபிவிருத்தியையும் இருகூறாக்கியது. அத்துடன் "அபிவிருத்தியைச் சகல பிரசைகளுக்கும் உறுதிப்படுத்தல்" மூலமே மனித உரிமைகளை அடையவும் அனுபவிக்கவும் முடியும் எனவும் கூறியது. மனித உரிமைக் குழுக்கள் இதனைத் தற்காப்பு நிறைந்த கூற்று எனக் கருதின. அதாவது மனித உரிமைகளை முழுமையாக அடைய முதலில் அபிவிருத்தி மேற்கொள்ளப்பட வேண்டுமென இக்கூற்று சூசகமாகக் கூறுகிறது என இக்குழுக்கள் கருத்துத் தெரிவித்தன.
மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமுள்ள தொடர்புகளை ஆய்வு செய்யும் போது பல நாடுகளில் பின்பற்றப்படும் அபிவிருத்தி மாதிரிகள் மனித உரிமைகளையும், சமூக நிலையையும் உறுதிப்படுத்தக் கூடியதாக இல்லை என இன்று வாதிடப்படுகின்றது. இம்மாதிரிகள் தனியார்துறை அபிவிருத்தியையும் வர்த்தக மயப்படுத்தலையும் மேம்படுத்தும் கொள்கைகளைப் பின்பற்றுகின்றன. சந்தையில் அழுத்தம் கொண்டிருக்கும் ஒரு பொருளாதார மாதிரியானது அரச கட்டுப்பாடுகளைச் சிதைக்கும் கொள்கைகளைப் பின்ப ற்றுகிறது. அத்துடன் அந்நியச் செலாவணிக் கட்டுப்பாடுகளைத் தவிர்த்து வெளிநாட்டு முதலீடுகளையும் மூலதனச் சந்தையின் அபிவிருத்திகளையும் மேம்படுத்துகிறது. இத்தகைய மாதிரிகள் சமத்துவமிக்க பிரதேச வேறுபாடுகளையும் வளர்க்கின்றன என விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். அத்துடன் நகர கிராமிய ஏழை மக்களின் நலஉரிமை ஏற்பாடுகளைக் குறைப்பதோடு உழைக்கும் வர்க்கத்தின் தொழிற் பாதுகாப்பையும் குறைக்கிறது. சுதந்திர வர்த்தக வலயங்களின் ஊதிய உயர்வுக் கோரிக்கைகளை மட்டுப்படுத்தும் முயற்சியாக தொழிற்சங்க உரிமைகள் வரையறுக்கப்படுகின்றன. இத்தகைய மாதிரிகள் தீர்மானம் மேற்கொள்ளுதலை மத்தியமயப்படுத்துவதுடன் அரசின் எதேச்சாதிகாரத் தன்மையையும் அதிகரிக்கின்றன. அத்துடன் சிறுபான்மையினர் மற்றும் சுதேசிகளின் உரிமைகளைப் பாதிக்கும் பாரிய செயற்றிட்டங்களிலும் முதலீட்டுத் திட்டங்களிலும் முக்கியமான தீர்மானம் மேற்கொள்வதில் அரசு சாரா நிறுவனங்கள், மக்களியக்கங்களுக்கு ஆற்றக் கூடிய பங்கினைத் தவிர்க்கவும் வழிவகுக்கின்றன. மேலும் இம்மாதிரிகள் சூழல் மற்றும் மனித உரிமைகளில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்
12

அபிவிருத்தித் திட்டங்களை எதிர்க்கக் கூடிய மரபுரீதியாகக் கூட்டுச் சேரும் சமூக சக்திகளான தொழிற்சங்கங்கள், விவசாய நிறுவனங்கள் மற்றும் ஏனைய அபிவிருத்திக் குழுக்களையும் வலுவற்றவைகளாகச் செய்கின்றன. ஏனெனில் இச்சக்திகளால் மாற்று அபிவிருத்தி மாதிரி ஒன்றினை முன்வைக்க முடிவதில்லை. எனவே இத்தகைய அபிவிருத்தி மாதிரிகள் அச்சத்துடன் நோக்கப்படுகின்றன. ஏனெனில் அவை பின்தங்கிய குழுக்களின் சமூக, பொருளாதார உரிமைகளை மட்டுமல்லாது அரசியல், பொருளாதார தீர்மானம் மேற்கொள்வதிலும் காத்திரமாகப் பங்குபற்றும் உரிமையையும் பாதிக்கின்றன. எத்தகைய அபிவிருத்திச் செயற்பாடுகளினதும் மையமாக வறுமை நீக்கமே உள்ளது. வறுமை என்பது மனித உரிமைகளைப் பரவலாக மறுப்பதால் ஏற்படுகிறது. ஏனெனில் ஏழைகள் பலமற்றவர்களாகவும் தமது உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஒன்று சேர முடியாதவர்களாகவும் உள்ளனர். எனவே பலநாடுகளில் பின்பற்றப்படும் அபிவிருத்தி மாதிரிகள் ஏழைகளையும், பின்தங்கிய குடும்பங்களையும் மென்மேலும் வறுமைக்கு ஆளாக்குவனவாகவே அமையுமென மனித உரிமைக் குழுக்கள் நம்புகின்றன.
மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்கும் உள்ள தொடர்புகளில் 6oldui Lost 5 O–6i 617 இன்னுமொரு பிரச்சினை அரசியல் நிபந்தனைகளாகும். அதாவது அபிவிருத்திக்கான உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட வேண்டுமெனில் "சிறந்த ஆட்சி", குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளை வழங்குதல் போன்ற அரசியல் நிபந்தனைகள் பின்பற்றப்படுதல் வேண்டும்.
ஐரோப்பியக் கவுன்சில் 1991 கார்த்திகை 28 இல் மனித உரிமைகள், சனநாயகம், அபிவிருத்தி பற்றிய அபிவிருத்திக் கவுன்சில் தீர்மானத்தில் பின்வருமாறு கூறியது: "மனித உரிமைகளை மதித்தல், சட்ட ஆட்சி, வகை கூறக் கூடிய அரசியல் நிறுவனங்கள் ஆகியவை நீதியான அபிவிருத்தியின் அடிப்படையாகும் சமூகம், நாடு ஏனைய நாடுகளுடனான உறவுகளில் மனித உரிமைகளைக் காத்தல் மிகவும் முக்கியமானது என வலியுறுத்தியது. பாரதூரமான மனித உரிமைகள் மீறல் அல்லது சனநாயகச் செயன்முறைகளுக்கு இடையூறு ஏற்படுத்தல் போன்ற சந்தர்ப்பங்களில் சமூகமும் ஏனைய நாடுகளும் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் இத் தீர்மானம் மேலும் கூறியது. மனித உரிமைகளுக்கு அடுத்த சிறந்த ஆட்சி பற்றியும் இத்தீர்மானம் கவனம் எடுத்தது. சிறந்த ஆட்சியில் சனநாயகத் தீர்மானம்
13

Page 15
மேற்கொள்ள ல் , அரசாங்க நடவடிக்கைகளில் போதிய பகிரங்கத்தன்மை, நிதிசார் வகை கூறல், சட்டவாட்சி, கருத்துச் சுதந்திரம் ஆகியவை அடங்கியிருக்கும். இராணுவச் செலவினங்களில் அதிகரிப்பு அபிவிருத்திக்கான நிதியைத் திசை திருப்பல் மட்டுமன்றி உள்நாட்டில் மனித உரிமைகளை மறுப்பதற்கும், நசுக்குவதற்கும் வழி செய்கின்றது.
மனித உரிமைகளையும் சனநாயகத்தையும் மேம்படுத்தும் அபிவிருத்தி உதவி வழங்கும் கொள்கைகளில் இரண்டு கொள்கைகள் முக்கியம் பெறுவதைச் சுட்டிக் காட்டுகின்றது. முதலாவது மனித உரிமைகளும், சனநாயகமும் இறுதி இலக்குகளாகுமே தவிர இலக்குகளை அடைவதற்கான வழிகளல்ல. இரண்டாவது அபிவிருத்திக்கான முழுமையான அணுகு முறையாகும். "மனித உரிமைகள், சனநாயகம் மற்றும் நல்லாட்சி ஆகியவை ஓர் ஒன்றிணைக்கப்பட்ட அபிவிருத்திச் சட்டகமாகும்" எனக்கூறும் சர்வார் லத்தீவ் என்பவர் ஒரு சிக்கலான சமூகக் கட்டமைப்புக்கு உதவி வழங்குவோரின் கடந்தி கால முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன எனவும் குறிப்பிடுகிறார்.
எனினும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் மனித உரிமைகளையும் உதவியையும், தொடர்புபடுத்துவது தமது தேசிய இறைமையைப் பாதிக்கின்றது என்ற அடிப்படையில் எதிர்த்து வந்துள்ளன. மனித உரிமைகளின் பாதுகாப்பு என்ற அடிப்படையிலான தலையீடு தென்பகுதி நாடுகளின் மீது வடக்கு ஏற்படுத்த விரும்பும் அரசியல், சித்தாந்த மேலாண்மைக்கான ஒரு கருவி என இவை நினைக்கின்றன. ஆனால் மனித உரிமைக் குழுக்கள், மனித உரிமைகள் மற்றும் மனிதத்துவப் பிரச்சினைகள் பற்றிய சர்வதேசக் கரிசனைக்குத் தடையாக விளங்கும் தேசிய இறைமைப் பிரச்சினைகள் எதுவும் இருக்க முடியாது என வாதாடுகின்றன. அத்துடன் அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகள் சர்வதேச மனித உரிமைச் சாசனங்களின் பங்காளர்களாக மாறுவதன் மூலம் தமது உள்நாட்டு மனித உரிமை நிலைமைகள் பற்றிச் சர்வதேச அவதானிப்புகளைத் g5тиотек(Зои கோருகின்றன.
இறைமை என்பது மனித உரிமை மீறல்களை மறைப்பதற்குப் பயன்படுத்தப்படுமெனில் அது துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகிறது என, பேட்ரம் ராம்சரன் 1990 இல் குறிப்பிட்டார். தேசிய இறைமை என்பது சர்வதேச பொறுப்புடைமை என்னும் எண்ணக்கருவுக்கு
14

விட்டுக்கொடுத்ததன் மூலம் நாடுகளின் இறைமை என்பது இன்று அவ்வளவு அர்த்தமுடையதல்ல 61 ன்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது" என 1991 இல் இலங்கை குடியியல் உரிமை இயக்கம் கூறியது. இக்கொள்கையை உதவி வழங்குபவர்கள் உறுதியுடன் பின்பற்ற வேண்டுமெனில் நம்பகத்தன்மையும் உறுதிப்பாடும் இருக்க வேண்டும். நம்பகத்தன்மை என்பது தென்பகுதி நாடுகள் தமது அகதிகள், உழைப்பாளர்கள் மற்றும் பின்தங்கிய வகுப்பினரைப் பாரபட்சமாக நடத்தவில்லை என்பதை 'வடக்கு உறுதிப்படுத்துவதாகும். மனித உரிம்ைப் பிரச்சினைகளில் உள்நாட்டு நடைமுறைகள் சர்வதேசியக் கொள்கைகளுடன் ஒத்துப் போகவில்லை எனில், நம்பத்தன்மை என ஒன்றில்லை. உறுதிப்பாடு என்பது உதவி வழங்குபவர்கள் தமது உதவிகளை அவ்வந் நாடுகளில் நிலவும் மனித உரிமைகளிலா அல்லது அந்நாடுகளின் அரசியல்-புவியியல் முக்கியத்துவம் அல்லது பொருளாதார மாதிரி ஆகியவற்றிலா சார்ந்துள்ளனர் என்பதாகும்.
அண்மையில் சிலி, ஆர்ஜென்டீனா, நேபாளம், பங்களாதேஷ், உருகுவே, பிரேசில், எல் சல்வடோர், உகண்டா, சாட், பிலிப்பைன்ஸ் மற்றும் கிழக்கு, மத்திய ஐரோப்பாவின் பல நாடுகளில் ஏற்பட்ட சனநாயக மாற்றங்களுடன் தொடர்புள்ள இன்னுமொரு சவாலும் உள்ளது. இது கடந்த காலங்களில் மனித உரிமைகளை மீறியோரின் வகை கூறல் தொடர்பானது, "ஸ்லாகுவத்” பின்வருமாறு கூறுகிறார்: "இங்கு பிரச்சினையானது ஒழுக்கம் மற்றும் சட்டத்தைச் சார்ந்துள்ளது. உண்மைக்கும் நியாயத்துக்குமான தேவைபற்றியது; நடந்த கொடுமைகளுக்குப் பரிகாரம் செய்து இனிமேல் அவ்வாறு ஏற்படுவதைத் தடுப்பது சம்பந்தமானது. ஆனால் பிரச்சினை அரசியல் மற்றும் நடைமுறை சார்ந்ததாகவே உள்ளது. அதாவது தேசத்தை ஓர் அலகாக ஒன்றிணைக்கும் தேவையையும் கருத்தில் கொண்டுள்ளது" பல நாடுகள் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பிரச்சினைகளில் அனுபவம் கொண்டுள்ளன. இவ்வனுபவங்கள் மற்றவர்களையும் சென்றடைய வேண்டும்.
குழு உரிமைகள்
இனத்துவ வன்முறைகள், உள்நாட்டு ஆயுதப் போராட்டங்கள், மனித உரிமைத் துஷ்பிரயோகம் ஆகியவை இன்று அதிகரித்து வருகின்றன. இவற்றினை விளங்கிக் கொள்வதன் அடிப்படையாக
15

Page 16
இன்று குழு உரிமைப் பிரச்சினைகள் தொடர்பான அம்சங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. உலகின் பல பகுதிகளில் மிகவும் பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கு இனத்துவப் பிணக்குகள் காரணமாக இருந்துள்ளன. காணாமற் போதல், சித்திரவதை, நீதிக்குப் புறம்பான கொலைகள், ஒருதலைப்பட்சமான கைதுகள் இவற்றில் அடங்கும். வீயென்னாவில் நடந்த உலக மாநாடானது சகல விதமான இனவாத செயற்பாடுகளுக்கு எதிராகவும் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்குமாறு சகல நாடுகளையும் வற்புறுத்தியது. இவ்வாறான நடவடிக்கைகளில் சட்டங்களை ஆக்குவதும்: நிறுவனங்களை அமைப்பதும் அடங்கும். அத்துடன் இனக் கொலை, இன ஒழிப்பு, அகதிகள் போன்ற அடிப்படைகளில் நடாத்தப்பட்ட பாரிய மனித உரிமை மீறல் பற்றி இம்மாநாடு கவலை தெரிவித்ததுடன் இதற்குக் காரணமான நபர்கள் தண்டிக்கப்பட வேண்டுமெனவும் இவ்வாறான குற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமெனவும் அறைகூவியது.
சிறுபான்மையினர் தமது கலாசாரத்தையும் மதங்களையும் பின்பற்றவும் தமது மொழியைப் பயன்படுத்தவும் எவ்வித தடைகளும் இருக்கக் கூடாது எனவும் தேசிய, இனத்துவ, மத, மொழிவாரிச் சிறுபான்மையினர் பற்றிய ஐ.நா பிரகடனத்தின் படி சட்டத்தின் முன் அவர்கள் சமத்துவம் பெறுவதற்கு ஏற்பாடு செய்யும்படி இம்மகாநாடு சகல நாடுகளையும் கேட்டுக் கொண்டது.
ஆயுதப் போராட்டம் அல்லது அகிம்சை முறையிலான போராட்டத்தின் வழியாக சிறுபான்மையினர் சுயநிர்ணய உரிமை கோரல் பிரச்சினையான ஒரு விடயமாகும். தேசிய அரசுகள் இத்தகைய கோரிக்கைகள் தொடர்பாக அச்சமடைவதுடன் அவை நாட்டைத் துண்டாட வழிவகுக்கும் என்று கருதி நசுக்குவதற்கும் முயல்கின்றன. வீயன்னா பிரகடனமானது சுயநிர்ணயக் கோட்பாட்டினையும் நாடுகளின் ஆள்புல ஒருமைப்பாட்டையும் இணக்கமுறச் செய்வதற்கு ஏற்பாடுகளைச் செய்தது.
இதன் பொருட்டு வீயென்னா பிரகடனம் மூன்று கோட்பாடுகளை வெளியிட்டது. முதலாவது சகல மக்களும் தமது சுயநிர்ணய உரிமையைச் சுதந்திரமாகத் தீர்மானிப்பதற்கும் தமது பொருளாதார, சமூக, கலாசார அபிவிருத்தியைச் சுதந்திரமாகப் பின்பற்றுவதற்கும் உரிமையைக் கொண்டுள்ளன. இரண்டாவது அத்தகைய உரிமைகளைக்
16

கோருவது ஓர் இறைமையுள்ள சுதந்திர அரசுகளின் ஆள்புல ஒருமைப்பாட்யுைம் அரசியல் ஒற்றுமையையும் சிதைப்பதை ஊக்குவிப்பதாகவும் இருக்கக் கூடாது. இதன் அடிப்படையில் நாடுகளுக்கிடையில் நட்புறவான தொடர்புகள் மற்றும் ஒத்துழைப்புப் பற்றிய சர்வதேசச் சட்டக் கோட்பாடுகளை இம்மகாநாடு உறுதிப்படுத்தியது. மூன்றாவது ஆள்புல ஒருமைப்பாடு என்னும் கோட்பாடு மக்களின் சமத்துவ உரிமைகள் மற்றும் சுயநிர்ணயக் கோட்பாடுகளுக்கு ஏற்றவிதத்திலும் தனது மக்கள் அனைவரையும் எவ்வித பாகுபாடு அற்ற விதத்திலும் நடத்தும் அரசுகளுக்கே பொருத்தமானது.
இப்பிரகடனமானது சர்வதேசச் சட்டம் நடைமுறை ஆகியவற்றையும் சோவியத் யூனியன், யூகோஸ்லாவியா, செக்கோஸ்லாவாக்கியா ஆகிய நாடுகள் சிதைவடைந்ததால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கும் இடையில் இணைப்பதில் உள்ள சிரமங்களைக் கவனத்திற் கொண்டது. 1991 மார்கழி 11 ஆம் திகதி ஐரோப்பிய சமூகங்களின் கவுன்சில் "கிழக்கு ஐரோப்பாவிலும் சோவியத் யூனியனிலும் தோன்றிய புதிய அரசுகளை அங்கீகரிப்பதற்கான வழிகாட்டல்கள் என்னும் பிரகடனத்தை மேற்கொண்டது. இவ் ஆவணமானது இவ்வாறான அங்கீகாரத்துக்குப் பின்வரும் அம்சங்களை வலியுறுத்தியது.
முதலாவது அரசானது சனநாயக அடிப்படையில் இருக்க வேண்டும். இரண்டாவது அது தன்னுடைய சர்வதேசக் கடப்பாடுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். மூன்றாவது சமாதான செயல்முறைகளிலும் வார்த்தைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். எனவே மக்களின் சுயநிர்ணய உரிமை என்னும் கோட்பாடு ஒரு குடியேற்றவாத சூழ்நிலையில் வரையறை செய்யப்பட முடியாது. ஆனால் அவ்வாறான சூழ்நிலைக்கு வெளியே இக் கோட்பாட்டின் அர்த்தம் தெளிவற்றதாகவும் பிச்சினைக்குரியதாகவும் உள்ளது. அண்மையில் "தோமஸ் பிராங்" சுயநிர்ணயம் பற்றி ஒரு புதிய கோட்பாட்டை உருவாக்க முனைந்தார். அதன்படி "சுயநிர்ணய உரிமை என்பது ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் வாழும் மக்கள் அதே நாட்டின் ஏனைய பிரதேசத்தில் வாழும் மக்கள் அனுபவிக்கும் உரிமைகளைச் சமமாக அனுபவிப்பதற்குக் கொண்டிருக்கக் கூடிய உரிமையாகும். மறுதலையாக ஒரு பிரதேசத்தில் வாழும் மக்கள் கொண்டிருக்கக் கூடிய உரிமைகளைத் தாமும் கொண்டிருந்தால் அவர்களுக்குச் சுயநிர்ணய உரிமை என்பது இல்லை.
17

Page 17
இது தொடர்பான ஒரு பிரச்சினை என்னவெனில் சிறுபான்மையினரின் பாதுகாப்புத் தொடர்பாகச் சர்வதேச அங்கீகாரத்தைப் பெறக் கூடிய எண்ணக்கருக்களையும் கோட்பாடுகளையும் உருவாக்குவதாகும். இத்தகைய கோட்பாடுகள் பிணக்குகளைச் சமாதானமாகத் தீர்ப்பதற்கு உதவியாக அமையும். இங்கு ஒரு முக்கியமான விடயத்தையும் குறிப்பிட வேண்டும். இனத்துவ அடையாளம், இனத்துவக் கோரிக்கைகள், இனத்துவக் குழுக்களுக்கிடையிலான சமநிலை என்பவற்றின் மாறுகின்ற இயல்பை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் பொழுது பெரும்பாலான அமைப்பு ரீதியான ஏற்பாடுகள் இறுக்கமாக இருக்க முடியாது. எனவே புதிய சவால்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ற விதத்தில் இத்தகைய ஏற்பாடுகள் திரும்பவும் புதுப்பிக்கப்பட வேண்டும்.
அண்மையில் ஐக்கிய நாடுகள் நிறைவேற்றிய சிறுபான்மையினர் பற்றிய பிரகடனம் அவர்களது இனத்துவ, கலாசார, மொழிவாரி அடையாளங்கள் கெளரவிக்கப் படல் வேண்டுமெனவும் , மேம்படுத்தப்படல் வேண்டுமெனவும் வற்புறுத்தியது. அத்துடன் தமது உரிமைகளை அனுபவிக்கவும் வாழவும் அச்சுறுத்தலாக அமையும் எத்தகைய நடவடிக்கைகளுக்கும் எதிராகத் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை அவர்களுக்கு உள்ளது என்வும் இப்பிரகடனம் வலியுறுத்தியது. இப்பிரகடனத்தின் அடிப்படையில் அரசானது சிறுபான்மையினரின் பிரதேச, தேசிய மட்டத்தில் அரசியலில் பங்குபெற ஊக்கப்படுத்தல் வேண்டும். தேசிய கொள்கைகளும், திட்டங்களும் சிறுபான்மையினர் அரசியல், பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு ஊக்கப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு அமுல்படுத்தப்படல் வேண்டும்.
மக்களையும், சிறுபான்மையினரையும், வரைவிலக்கணப்படுத்தும் தேவையும் இன்று எழுந்துள்ளது. இப்பிரச்சினை பற்றி மக்களின் உரிமைகள் மீதான யுனெஸ்கோ ஆய்வில் நிபுணர்கள் (பாரிஸ் 1990) பின்வருமாறு கூறினர்: ஒரு தனிநபர்களின் குழுவை மக்களாகக் கொள்வதற்குப் பின்வரும் பிரமாணங்கள் அடிப்படையானவைபொதுவாக வரலாற்று மரபு, இனத்துவ அடையாளம், கலாசார ஒருமுகத் தன்மை, மொழிவாரி ஒற்றுமை, சமய, சித்தாந்த ஈடுபாடு, ஆள்புலத் தொடர்பு மற்றும் பொதுவான பொருளாதார வாழ்க்கை.
குழு உரிமைகள் என்னும் எண்ணக்கரு வரைவிலக்கணத்துக்கு உட்படுத்தப்படல் வேண்டும். குழு உரிமைகளுக்கும் தனிநபர்
18

உரிமைகளுக்குமிடையில் உள்ள பிணக்குகள் தீர்க்கப்பட வேண்டும். அத்துடன் அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு, சம வாய்ப்புகள், சிறுபான்மைப் பாதுகாப்பு குறிக்கோள்களுக்கிடையில் உள்ள தொடர்புகளும் ஆய்வு செய்யப்படல் வேண்டும். சிறுபான்மை இனங்களின் பாதுகாப்புத் தொடர்பாக அரசாங்க நிறுவனங்களின் பயனுறுதி பற்றி மீள் மதிப்பீடு செய்யப்படல் வேண்டும். அத்துடன் சகல பாரபட்சங்கள் தொடர்பான கமிட்டியும் மீள் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். சிறுபான்மையினர் ஐ.நா. பிரகடனத்தை அமுல் நடத்துவதற்கு ஒரு புதிய ஏற்பாடும் கண்டறியப்படல் வேண்டும்.
சுதேசிய மக்கள் பற்றிய ஐ.நா. செயற்குழு (WGIP)தனது இரண்டாவது கூட்டத்தில் இம்மக்களின் உரிமைகளைப் பற்றிய ஒரு நகல் பிரகடனத்தை முன்வைத்தது. இச் செயற்குழுவும் பாரபட்சங்களினைத் தடை செய்தல் மற்றும் சிறுபான்மையினர் பாதுகாப்பு D II i ஆணைக்குழு இந்த நகல் பிரகடனம் பற்றி 1994 இல் ஆய்வு செய்யும். இந்த உப ஆணைக் குழுவின் முடிவுகளின் அடிப்படையில் மனித உரிமைகள் ஆணைக் குழு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
இந்த நகல் பிரகடனமானது தேசிய மற்றும் சுதேசிய மக்களின் பிரதிநிதிகள், நிபுணர்கள் ஆகியோருக்குப் பல சட்ட, அரசியல் சவால்களை முன்வைக்கும். எனினும் இவர்கள் சகல தரப்பினர்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஓர் ஆவணத்தைத் தயாரிக்கும் பொறுப்பினைக் கொண்டிருக்கிறாார்கள் . இவர் களது ஆய்வுக்கு முன் வைக்கப்பட்டிருக்கும் சில பிரச்சினைகள் பின்வருமாறு:
மனித gD Ftʻ? 685) LD 95 6fi தொடர்பான சர்வதேச மகாநாட்டுடன்படிக்கையின் உறுப்புரை 1 இல் பயன் படுத்தப்பட்டுள்ள சொற்களின் படியான வெளியக சுயநிர்ணய gd ff60) D.
பரவலான அதிகாரங்களும் மற்றும் செயற்பாடுகளுடன் éfin l qui தன்னாதிக்கம் அல்லது சுயாட்சி நோக்கிய "உள்ளக சுயநிர்ணய' Фгfl60oшр.
• நிலம் மற்றும் இயற்கை வளங்களின் மீதான பொதுவான சொத்துரிமை.
19

Page 18
* பழைய தவறுகளுக்கு நட்ட ஈடும் மீட்டளிப்பும்;
தற்போதுள்ள உரிமைகளையும் சுதந்திரங்களையும் மேலும் வலுப்படுத்தல்.
இவற்றின் அடிப்படையில் குடியியல் யுத்தம், இனத்துவ அல்லது சமய மோதல்களில் ஏற்படும் உள்நாட்டு ஆயுதப் போராட்டங்களின் போது ஏற்படும் மனித உரிமை மீறல்களின் மீது நமது கவடைம் ஈர்க்கப்படுகிறது. கொலம்பிய, \பேரு, யதய ' . அயர்லாந்து, மொசாம்பிக், அங்கோலா, எதியோப்பியா, தென் ஆபிரிக்கா, இஸ்ரேல், கம்போடியா, இலங்கை, பிலிப்பைன்ஸ் உட்பட முன்னைய சோவியத் யூனியன், மற்றும் யூகோஸ்லாவியா முதலிய நாடுகள் இத்தகைய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றன. இதன் காரணமாக சர்வதேச மனிதத்துவ சட்டங்களுக்கும் அகதிகளையும், புலம்பெயர்ந்த நபர்களையும் பாதுகாக்கும் மனித உரிமைகள் சட்டத்துக்குமிடையில் தொடர்ச்சியான இடைவினைகள் நடைபெற வேண்டும்.
இவ்வாறான பிரச்சினைகள் அரசாங்க நடைமுறைகளுடன் தொடர்புடையன எனக் கூறிக் கொண்டு மனித உரிமைகள் அமைப்புகள் வாளாவிருந்து விடமுடியாது என ஸலாகுவத் குறிப்பிடுகிறார். அவர் மேலும் கூறுவதாவது: "ஆயுதப் போராட்டங்கள் மற்றும் அரசியல் வன்முறைகள் ஆகியவற்றுக்கு முகம் கொடுக்கக் கூடிய எண்ணக்கருக்களையும், செயற்படு முறைகளையும் உருவாக்குவது இன்றைய தத்துவார்த்த, நடைமுறைச் சவாலாகும். நான்கு வகையான சர்வதேசச் சட்டங்களை அடுக்கி வைப்பதால் மட்டும் பயனில்லை. இவ்வாறான சூழ்நிலைகளில் பக்கம் சாராது, நம்பிக்கை தரும் விதத்தில் பயனுறுதியுடன் செயற்பட வேண்டுமெனில் பல சட்டப் பிரச்சினைகள் தெளிவுபடுத்தப்படல் வேண்டும்; கருத்து இடைவெளிகள் நிரப்பப்பட வேண்டும். அதைவிட முக்கியமாக முறைமைகள் வடிவமைக்கப்பட வேண்டும்."
செயற்பாட்டுக் குழுவானது கடந்த ஏழெட்டு வருடங்களாக இந்த நகல் தயாரிப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறது. ஆனால் இன்னும் பல சிக்கலான சட்டப் பிரச்சினைகளையும் அரசியற் தடைகளையும் நிவர்த்தி செய்ய வேண்டியுள்ளது. இச் செயன்முறையானது வரலாற்று ரீதியாகப் பின்தங்கிய குழுக்களின்
20

மனித உரிமைகளைப் பாதுகாக்கும் சர்வதேச முயற்சிகளில் உள்ள சிரமங்களையும், விரக்திகளையும் காட்டுகிறது. பாரபட்சம் காட்டும் நடைமுறைகளைப் பற்றிய பல ஆய்வுகளும் அறிக்கைகளும், பல உள்ளன. "பல நாடுகளில் கடந்த கால, நிகழ்காலத் தவறுகளைத் திருத்தும் மனப்பான்மையும் ஆவலும் காணப்படுகின்றது. ஆனால் இன்னும் நகல் பிரகடனத்தைப் பூர்த்தி செய்வது முடியாத காரியமாக உள்ளது. வெறுமனே இவை பற்றிச் சர்வதேச ஆண்டுகளைப் பிரகடனப்படுத்துவதால் பிரயோசனம் ஒன்றுமில்லை. இவை நாடுகளுக்கு ஒரு ஆறுதலே தவிர சுதேசிய மக்களுக்கல்ல".
பெண்களின் உரிமைகளை ஒன்றிணைத்தல்
வீயென்னா பிரகடனம் மற்றும் நடவடிக்கைத் திட்டத்தின் உறுப்புரை 18 (1993) பின்வருமாறு தெளிவாகக் குறிப்பிடுகிறது."பெண்களினதும், சிறுமிகளினதும் மனித உரிமைகள் சர்வதேச மனித உரிமைகளின் பிரிக்க முடியாத பகுதியாகும்.” உறுப்புரை 36 பெண்கள் சகல மனித உரிமைகளை அனுபவிப்பதற்கும் உரித்துடையவர்கள் என்றும் உறுப்புரை 37 பெண்களின் உரிமைகள் சகல ஐ.நா. நடவடிக்கைகளிலும் ஒன்றிணைக்கப்படல் வேண்டும் எனவும் கூறுகிறது. உறுப்புரை 38 பெண்களுக்கெதிரான வன்முறை சர்வதேச மனித உரிமைகளிலுள்ள விசேட பிரச்சினை எனக் குறிப்பிடுகின்றது.
வீயென்னா பிரடகனம் சர்வதேச சமூகத்திற்கான ஒரு நடவடிக்கைத் திட்டத்தையும் விதந்துரைக்கிறது. குழந்தை உரிமைகளின் மகாநாட்டுடன்படிக்கை, மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர், பெண்களுக்கெதிரான வன்முறைகள் பற்றிய விசேட அறிக்கையாளர் போன்றவை இப்பிரகடனம் கூறியுள்ள சில ஏற்பாடுகளாகும். பெண்களின் உரிமைகளை சர்வதேச மனித உரிமைகளோடு இணைக்கும் விடயமானது ஐ.நா. மனித உரிமை நிகழ்ச்சித் திட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே இருந்து வந்துள்ளது. இம் முயற்சி தொடர்பாக எழுப்பப்படும் முக்கிய கேள்வி என்னவெனில் பெண்களின் உரிமைகள் என்பது உண்மையில் மனித உரிமைகளிலிருந்து வேறுபட்டதா என்பதாகும்.
பெண்களின் உரிமைகள் ஆரம்பத்தில் சர்வதேச முறைமைக்குள் பாரபட்சமின்மை என்னும் கோட்பாடாக ஒன்றிணைக்கப்பட்டது.
21

Page 19
இத்தகைய பகுப்பாய்வுக்குக் காரணமாகப் பெண்களுக்கெதிரான சகல விதமான பாகுபாடுகளையும் நீக்கும் மகாநாட்டுடன்படிக்கையைக் கூறலாம். இப்பொருந்தனையானது பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையில் பாகுபாடு இருக்கக் கூடாது என்ற கோட்பாட்டின் அடிப்படையில் கட்டி எழுப்பப்பட்டது. இப் மகாநாட்டு டன்படிக்கையானது ஆண்களும் பெண்களும் ஒரே விதமான பதவி நிலையில் இருக்கும் பொழுது அவர்களைப் பாரபட்சமாக நடத்தக் கூடாது என்பதை உறுதிப்படுத்துகிறது. பெண்களுக்கெதிரான மரபு ரீதியான நடைமுறைகளை நீக்கும் பகுதிகளில் மாத்திரமே பெண்களுக்கு விசேட தேவைகளும் விசேட உரிமைகளும் உள்ளன என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது. பெண்களுக்கெதிரான வன்முறைகளை நீக்கும் இயக்கங்களும், பெண்களைப் பற்றி சர்வதேச முறைமைகளில் கவனிக்கப்பட வேண்டும் என்பதும் பெண்களின் உரிமைகள் மனித உரிமைகளாகக் கணிக்கப்படுவதற்கான முக்கிய காரணங்களாக இருந்தன. கற்பழிப்பு, பெண் குழந்தைகளைக் கொலை செய்தல் உள்வீட்டு வன்முறை, பாலியற் துன்புறுத்தல், கடத்துதல் ஆகியவை பெண்களுக்கெதிராக இழைக்கப்படும் வன்முறைகளாகும். இவ்வாறான பால் நிலைப்பாடு பெண்களின் உரிமைகளை ஒரு விசேட பகுதியாகக் காட்டுகின்றன. ஆயுத போராட்டச் சூழ்நிலைகளில் மனித உரிமைகளைப் பற்றிப் பகுப்பாய்வு செய்யும் பொழுது குழுமுறைக் கற்பழிப்பு, மனித உரிமைகளில் இயல்பாகப் பொருந்தவில்லை. பெண்கள் குழுக்கள் கற்பழிப்பை ஒரு வகையான சித்திரவதை எனவும் அது மனித உரிமைகளுக்குள் சேர்க்கப்படல் வேண்டும் எனவும் வற்புறுத்தின. பெண்களுக்கெதிரான பால்சார் குற்றிங்கள் தற்பொழுது உள்ள ஏற்பாடுகளுக்கப்பால் ஒரு வித்தியாசமான விளக்கத்தை வேண்டி நிற்கின்றன. இதன் காரணமாகவே மனித உரிமைகளின் ஒரு பகுதியாகப் பெண்கள் உரிமை ஏற்கப்பட வழி வகுத்துள்ளது.
பெண்கள் உரிமைகளை மனித உரிமைகளுடன் இணைத்தல் இரண்டு அம்சங்களைக் கொண்டது. ஒரு புறத்தில் பெண்களின் பிரச்சினைகளை குறிப்பாகக் காட்டுவதற்காகத் தற்போதுள்ள ஏற்பாடுகளை விளக்குதல். உதாரணமாகக் கற்பழிப்பைச் சித்திரவதையாக விளக்குதல். அத்துடன் புதிய ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும். இதன் மூலம் பெண்கள் பிரச்சினைகளைப் பெண்களின் உரிமைகளுடன் தொடர்பு டையதாக்குதல். உதாரணமாகப் பெண்களுக்குத் தீமை விளைவிக்கும் மரபுரீதியான பழக்கங்கள், உள்வீட்டு வன்முறைகள், முதலியன இவற்றில் செய்யப்படும் ஏற்பாடுகள் பெண்களின் உரிமைகளை
22

ஆண்களின் உரிமைகளினின்றும் வித்தியாசமானதாகக் காட்ட வேண்டும். இவ்வகையான இரட்டை வழி அணுகு முறையின் மூலம் 6திர்கால மனித உரிமை நடவடிக்கைகளின் ஒரு முக்கிய கூறாகப் பெண்களின் உரிமைப் பிரச்சினைகளை ஆக்க முடியும்.
தற்போதுள்ள ஏற்பாடுகளும் எதிர்கால முனைப்புகளும்
மனித உரிமைகளையும், அடிப்படைச் சுதந்திரங்களையும் பாதுகாப்பதற்கு ஐ.நா. பல மாதிரிகளையும் நுட்பங்களையும் உருவாக்கியுள்ளது. ஆலோசனைச் சேவைகள், அமைதியான இராஜதந்திர நடவடிக்கைகள், தலையிடுதல், உண்மையை விளம்புதல் போன்றவை இவ்வாறான மாதிரிகளிற் சிலவாகும். நுட்பங்கள் பின்வருமாறு: தாமாகவே சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளை மீளாய்வு செய்தல், கட்டாயமான அறிக்கைப்படுத்தலும், மீளாய்வு செய்தலும், தனிப்பட்ட நபர்களினதும் பொதுவாகவும் இழைக்கப்பட்ட மனித உரிமைக் குற்றங்களுக்கு சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து விளக்கம் கோருதல், நாடுகளுக்கு விஜயம் செய்தல் மற்றும் அந்தந்த இடங்களுக்குச் சென்று கண்காணித்தல். ஐ.நா. வின் இவ்வாறான மாதிரிகளும், நுட்பங்களும் தனித்தனியாக ஏற்பட்ட அபிவிருத்திகளாகும். மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா. அணுகுமுறை திட்டமிடப்பட்ட ஒரு முறைமை அல்ல. மாறாக இடைக்கிடை ஏற்பட்ட மாற்றங்களும் புத்தாக்கங்களுமாகும்.
1991 இல் வீயென்னாவில் நடத்தப்பட்ட மனித உரிமைகள் உலக மகாநாடு உலகின் பல பகுதிகளிலும் நடைபெறும் மனித உரிமை மீறல்களைப் பற்றி கவலை தெரிவித்தது. அத்துடன் தற்போதுள்ள மனித உரிமை ஏற்பாடுகளைப் பிரதேச, சர்வதேச மட்டத்தில் இன்னுஞ் சிறப்பாக நடைமுறைப்படுத்தவும், அவற்றை மேலும் வலுப்படுத்தவும், பல்வேறு அமைப்புகள், வழிமுறைகள் மற்றும் நடைமுறைகளுக்கிடையே கூடிய வினைத்திறனும் பயனுறுதியும் ஏற்படத்தக்கவாறு ஒன்றிணைக்கவும் இம்மகாநாடு விதந்துரைத்தது. ஐ.நா. வின் வேண்டுகோள் மிகவும் தெளிவாக அமைந்தது. மனித உரிமைகள் அமைப்புகளையும் மேலும் வலுப்படுத்தவும், செயன் முறைகளை மேலும் சீராக்கவும் அது அறைகூவல் விடுத்தது.
23

Page 20
தற்போதுள்ள ஏற்பாடுகளும் சீர்திருத்தத்துக்கான ஆலோசனைகளும்
மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகர்
மனித உரிமைகள் உலக மகாநாட்டின் முக்கியமான ஆலோசனைகளில் ஒன்று உயர் ஸ்தானிகர் பதவியை உருவாக்கியதாகும். இவரின் பங்கு பற்றிய சில பிரச்சினைகள் எழுந்த போதும் பொதுவாக இப்பதவி உருவாக்கம் வரவேற்கப்பட்டது. விதிகளின் படி உயர் ஸ்தானிகளின் பொறுப்புகள் பின்வருமாறு:
மனித உரிமைகளைப் பூரணமாக அனுபவிப்பதற்கு ஏற்பாடு செய்தல்.
மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் அதிகாரமுள்ள மனித உரிமை அமைப்புகளுக்கு விதந்துரைகள் செய்தல்.
• மனித உரிமை மீறல்களை நீக்குவதற்குத் தீவிரமாகச் செயற்படுதல்.
சர்வதேச ஒத்துழைப்பை உயர்த்துதல்.
மனித உரிமை முறைமையை ஒன்றிணைத்தலும் இயைபாக்கம் செய்தலும்.
ஐ.நா. மனித உரிமை அமைப்பின் வினைத்திறனையும் பயனுறுதியையும் மேம்படுத்துவதற்காக அதனை ஒழுங்கு படுத்தலும் வலுப்படுத்தலும்.
நெருக்கடி நிலைமைகளில் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகள் சூழ்நிலைக்கேற்ப நெகிழ்ச்சியுடன் நடந்து கொள்ள முடியும். அத்துடன் மனித உரிமைகளின் அபிவிருத்தியில் நீண்ட காலக் கண்காணிப்பையும் கொண்டிருக்க முடியும். உயர் ஸ்தானிகர் பதவியின் தாக்கத்தை மேலும் வலுவுடையதாக்குவதற்குப் பின்வரும் விதந்துரைகள் செய்யப்பட்டன:
மாதந்தோறும் பாதுகாப்புச் சபைக்கு மனித உரிமை மீறல்கள் பற்றி அறிக்கை சமர்ப்பித்தல், சர்வதேச சமாதானத்துக்கும்,
24

பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ள நிலைமைகள் பற்றி பாதுகாப்புச் சபையின் கவனத்துக்குக் கொண்டு வருதல்.
O மனித உரிமை ஆணைக் குழு, பொருளாதார சமூகக் கவுன்சில், சிறுபான்மையினரின் பாதுகாப்பு மற்றும் பாரபட்சத்தை தடுத்தல் பற்றிய உபஆணைக் குழு, பொதுச்சபையின் மூன்றாவது கமிட்டி ஆகியவற்றுக்குச் சிரமமாக அறிக்கைப்படுத்தல்.
O ஐ.நா. வின் விசேட அமையங்களுக்கு காலத்துக்குக் காலம்
அறிக்கைப்படுத்தல்.
ஐ. நா. அமைப்பு முறைமையின் மீது தாக்கம் செலுத்துவது மட்டுமல்லாமல், உயர் ஸ்தானிகள் மனித உரிமை விவகாரங்களில் மிகக் கூடிய முக்கியத்துவம் பெற வேண்டும். சில நாடுகளிலும் பிரதேசங்களிலும் உயர் ஸ்தானிகளின் கிளை அலுவலகங்கள் அமைக்கப்பட வேண்டும். இதன் மூலம் அவ்வப் பகுதி விவகாரங்கள் தொடர்பாக உடனடி விபரங்களை அவர் பெறக் கூடியதாக இருக்கும். நெருக்கடி நிலைமைகளில் உயர் ஸ்தானிகர் காத்திரமான பொறுப்புக்களைக் கொண்டிருத்தல் வேண்டும். அத்துடன் உயர் ஸ்தானிகள் ஐ.நா. வின் சமாதானத்தைக் காக்கும் முயற்சிகளில் ஓர் ஒன்றிணைந்த கூறாகவும் அமைய வேண்டும்.
மனித உரிமைகளுக்கான நிலையம்
மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா. நடவடிக்கைகளில் மனித உரிமைகளுக்கான நிலையம் முக்கிய பணிகளை ஆற்றுகிறது. இந்நிலையத்தை வலுப்படுத்துமாறு வீயென்னா பிரகடனம் குறிப்பாக வற்புறுத்தியது. உயர் ஸ்தானிகர் நியமிக்கப்பட்டதால் இந்நிலையம் இன்னும் கூடிய முக்கியத்துவம் பெறக்கூடும். உண்மைகளை உடனடியாக அறிதல், மனித உரிமைகளை நீண்டகால அடிப்படையிற் கண்காணித்தல் ஆகிய வல்லமைகளை இந் நிலையம் அடைதல் வேண்டும்.
தற்போது இந்நிலையம் மனித உரிமைகள் முறைமையின் விசேட நடைமுறைகளுக்குப் பின்னணிச் சேவைகளை வழங்கி வருகிறது. எனினும் வளப் பற்றாக்குறை காரணமாக இதன் பணிகள் காத்திரமானதாக இல்லை. எனவே இதனுடைய துணைச் செயற்பாடுகளை இன்னும் பயனுடையதாக ஆக்குவதற்கு இந்நிலையம்
25

Page 21
வளம், ஆளணி தொடர்பாக வலுப்படுத்தப்படல் வேண்டும். கடந்த காலங்களில் இந்நிலையம் அரசியல், குடியியல் தொடர்பான மனித உரிமைப் பிரச்சினைகளிலேயே கூடுதலாக ஈடுபட்டிருந்தது. தற்போது பொருளாதார சமூக விடயங்களில் ஈடுபடுகிறது. இன்று பல ஆய்வுகள் விருத்தி செய்யப்பட்டுள்ளதால் சட்ட அடிப்படைகளில் மட்டும் கவனம் செலுத்தாது இந்நிறுவனம் பல்துறைகள் சார்ந்ததாக வளர்ச்சியடைய வேண்டும் எனக் கூறப்படுகிறது.
மனித உரிமை ஆனைக்குழு
மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும், மேம்படுத்துவதிலும் ஐ.நா.வின் முக்கிய உறுப்பு இந்த ஆணைக் குழுவாகும். கடந்த 40 ஆண்டுகளில் இந்நிறுவனமானது மனித உரிமைகள் மீறப்படும் போதும், அதன் பின்னரும் பயன்படக் கூடிய பல்வேறு நடைமுறைகளையும், அறிக்கைப்படுத்துதலையும் விருத்தி செய்துள்ளது. பிரதேச மனித உரிமை நிறுவனங்கள் மற்றும் ஏனைய விசேட நிறுவனங்களுடன் குறிப்பாக அரசு சாரா நிறுவனங்களுடன் இவ்வாணைக் குழு நெருக்கமாகச் செயற்படுகிறது.
இவ்வாணைக்குழு முதலாவதாக ஓர் அரசியல் அமைப்பாகும். இது தேசிய - அரசுகளின் நலன்களிற் கூடிய கவனம் செலுத்துகிறது. தனிப்பட்ட நிபுணர்கள் மற்றும் தொழில்சார் குழுக்களின் மேன்முறையீடுகளுக்குப் பதிலளிப்பதற்கு தேசிய-அரசுகளுக்கு ஒரு மன்றமாகவும் இது செயற்படுகிறது. இதன் அரசியல் தன்மை காரணமாக எத்தகைய மனித உரிமைச் சூழ்நிலைகளிலும் இதனாற் செயற்பட முடிகிறது. அதுமட்டுமல்லாமல் ஐ.நா. முறைமையில் இவ்வாணைக்குழுவே மிகவும் பிரதானமான மனித உரிமைகளைப் பாதுகாக்கும் கருவியாகும்.
இவ்வாணைக் குழுவின் மீதான சீர்திருத்தங்கள் இதனைப் பிரதேச மக்களுடன் நெருங்கிய பிணைப்பு ஏற்படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அத்துடன் அதன் செயன்முறைகளின் புறவயத் தன்மைகளை வலுப்படுத்தவும் முனைகிறது. அதனுடைய வருடாந்தக் கூட்டத்தொடருடன் சேர்த்துப் பிரதேசப் பிரச்சினைகளை முக்கியத்துவப் படுத்துவதற்காகப் பிரதேச அமர்வுகளையும் செய்ய வேண்டுமெனவும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது. இத்தொடர்கள் ஐ.நா. வின் பொருளாதார, சமூக ஆணைக் குழுவின் பிரதேச தலைமைச் செயலகங்களில் நடத்தக் கூடியதாக இருக்கும். அத்துடன் இவ்வாணைக் 26

குழு பிரதேச மனித உரிமை ஆணைக் குழுக்களுடன் கூடுதலாக ஒத்துழைக்கவும் முயலலாம்.
இவ்வாணைக் குழு தனது வேலைகளின் பெரும்பகுதியை நிபுணத்துவ விசாரணை ஆணைக் குழுக்களுக்குக் கையளிக்க வேண்டுமெனவும் கூறப்படுகிறது. இவ்வாறான ஆணைக் குழுக்கள் நாடுகளின் சங்கத்தில் (League ofNations) இருந்தன. சில முக்கிய விடயங்களில் இவ்வாணைக் குழுவின் புறவயத்தன்மை தொழிலாண்மையும் இதனால் அதிகரிக்கும். அத்துடன் ஆணைக் குழுவின் நீதிசார்ந்த தன்மை அரசியற் பேரம் பேசல்களுக்கு அப்பாற் சென்று மனித உரிமை முயற்சிகளுக்குக் கூடிய பங்களிப்பு செய்யக் கூடும்.
இவ்வாணைக் குழுச் சேவைகள் சந்தர்ப்பத்துக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளன. இதனால் தனிநபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் இதன் நடைமுறைகள் பற்றித் தெளிவில்லை. எனவே இதன் நடைமுறைகள் யாவும் உள்ளடங்கிய ஒரு முழுமையான கையேடு தயாரிக்கப்படல் வேண்டும்.
தனது ஐம்பதாவது கூட்டத் தொடரில் இவ்வாணைக் குழுவானது தனது செயற்பாடுகளை ஆராய்ந்து சீர்திருத்தங்களை விதந்துரை செய்ய ஒரு பத்து நாள் செயலமர்வை ஏற்பாடு செய்யத் தீர்மானித்துள்ளது. இச்சந்தர்ப்பத்தில் ஏனைய மனித உரிமைக் குழுக்களின் விதந்துரைகளை ஆய்வு செய்து தன்னைப் பயனுறுதியுள்ள ஒரு ஸ்தாபனமாக மாற்றியமைக்க முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விசேட நடைமுறைகளும் பணிக்குழுக்களும்
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் "புறவயமான" அம்சம் என்னவெனில் குற்றச்சாட்டுகள் போன்றவற்றை ஆய்வு செய்யும் பணிக்குழுக்களையும், அறிக்கையாளர்களையும் கொண்ட விசேட நடைமுறைகளாகும். அண்மைக் காலத்தில் ஆணைக் குழுவின் பணிகள் விரிவடைந்தமை காரணமாக இந்த நடைமுறைகள் இன்று இன்னும் கூடிய முக்கியத்துவம் பெற்றுள்ளன. தற்போது ஒவ்வொரு விசேட அறிக்கையாளரும், பணிக் குழுவினரும் தமது வேலை முறைமைகளை மனித உரிமைகள் நிலையத்தின் துணையுடன் தாமே
27

Page 22
திட்டமிட்டுக் கொள்கின்றனர். இவ்வாறான ஏற்பாடுகள் ஐ.நா. அமைப்பின் மனித உரிமைச் செயன்முறைகளின் மையமாகத் திகழ்கின்றன. எனினும் இன்றும் கூட இந் நடவடிக்கைகள் நிபுணர்களின் ஒய்வு நேரத்துடன் சம்பந்தப்பட்ட தொண்டுகளாகவே அமைந்துள்ளன. இந்த நடைமுறைகள் மிகவும் முக்கியமானவை. ஆனால் அற்றின் வேலை முறைகளை முன்னேற்ற எதுவும் நடைபெறவில்லை. எனினும் அவற்றை மேலும் பயனுறுதியுள்ளவையாக மாற்றுவதற்குப் பல ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பின்வருவன அவற்றிற் சிலவாகும்:
அறிக்கையாளர் மற்றும் பணிக்குழுவினரின் செயற்பாடுகளிலுள்ள இரட்டிப்புத் தன்மையைத் தவிர்த்து அவர்களுக்கிடையிற் கூடிய கலந்துரையாடல்கள்.
O விசேட நடைமுறைகளின் செயற்பாடுகள் குறித்தும் அவர்களுக்கு உள்ள சேவைகள் குறித்தும் அறிவுறுத்துவதற்காக மனித உரிமைகள் நிலையம் ஒரு கையேடு தயாரித்தல்.
ஆணைக்குழு அறிக்கையாளர்கள் மற்றும் பணிக் குழுவினரின் அறிக்கைகள் மீது முறையான ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மனித உரிமை ஆணைக் குழுவின் கூட்டத் தொடர்களின் போது கூடிய நடவடிக்கைகளும் கூட்டங்களும் நடத்தப்பட வேண்டும். இதன் மூலம் விசேட நடைமுறைகளுடன் தொடர்புள்ளவர்கள் அரசாங்கப் பிரதிநிதிகளுடனும் அரசுசாரா நிறுவனங்களுடனும் கூடிய கலந்துரையாடல்களில் ஈடுபட முடியும்.
• உலகில் முக்கிய பிரச்சினை உள்ள இடங்களுடன் நேரடியான தொடர்புகளும், கண்காணிப்பு ஏற்பாடுகளும் விரிவுபடுத்தப்படல் வேண்டும். விசேட நடைமுறைகளுடன் தொடர்புடைய ஐ.நா. அலுவலர் கண்காணிப்புச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காக விசேடமாகப் பயிற்றப்பட வேண்டும்.
O விசேட நடைமுறைகளினால் கண்டறியப்பட்ட விடயங்களும் அவற்றின் விதந்துரைகளும் தொடர்பாடல் சாதனங்களின் கூடிய கவனத்தைப் பெறல் வேண்டும்.
அரசு சாரா நிறுவனங்களின் பங்களிப்பு விசேட நடைமுறைகளுக்கு அவசியம் என்னும் காரணத்தால்
28

இந்நிறுவனங்களின் உள்ளீடுகள் அதிகரிக்கப்படல் வேண்டும். அத்துடன் குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளைச் சார்ந்த அரசு சாரா நிறுவனங்களுக்குக் கூடிய ஆலோசகர் அந்தஸ்து வழங்கப்படல் வேண்டும்.
o மனித உரிமைகள் நிலையத்துக்குக் கூடிய வளங்கள்
வழங்கப்படல் வேண்டும்.
சர்வதேச மகாநாட்டுடன்படிக்கைகள்
ஐ.நா. முறைமைக்குள் உள்ள ஏற்பாடுகள் மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச மகாநாட்டுடன்படிக்கைகளினால் வலுவூட்டம் பெறுகின்றன. எனினும் இவ்வாறு ஒப்பந்தங்களைச் செய்யும் அமைப்புகளுக்கும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. முதலாவது அங்கத்துவ நாடுகள் இம்மகாநாட்டுடன்படிக்கைகளில் கையொப்ப மிடுமுன் பல்வேறு விதிவிலக்குகள் மகாநாட்டுடன்படிக்கையின் அடிப்படையையே தாக்கி விடுகின்றன. இரண்டாவதாக மகாநாட்டுடன்படிக்கையை அமுல்படுத்துவதற்கு அவசியமான அறிக்கைகளை அங்கத்துவ நாடுகள் உடனடியாக அனுப்பி வைப்பதில்லை. இந்த நீண்ட தாமதமானது மகாநாட்டுடன்படிக்கையின் பணிகளைத் தடை செய்கின்றன. மூன்றாவதாகக் கமிட்டிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மிகக் குறைந்த வளங்கள் காரணமாக அவற்றின் பணிகள் வினைத்திறனும் பயனுறுதியும் இல்லாத கீழ் மட்டத்தில் இருக்கின்றன.
இ த்தகைய சிரமங்கள் இருந்த போதிலும் மகாநாட்டுடன்படிக்கைகளை ஆக்கும் 'அமைப்புகள் புதிய முனைப்புகளை முன்னெடுத்துள்ளன. உதாரணமாக மனித உரிமைகள் கமிட்டி சில விசேட சூழ்நிலைகளில் மூன்று மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரும் வழக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் சில சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்ட அங்கத்துவ நாடுகள் கமிட்டியின் நேரடி விஜயத்தை அங்கீகரிக்க வேண்டுமெனவும் இதன் மூலம் கமிட்டிக்குத் தேவையான தகவல்களை நேரடியாகப் பெறக் கூடியதாக இருக்கும். இத்தகைய செயற்பாடு வேறு மாற்றுவழிகள் இல்லாத பட்சத்தில் மாத்திரமே மேற்கொள்ளப்படும்.
மனித உரிமைகள் கமிட்டி, இனப்பாகுபாடு ஒழிப்புக் கமிட்டி, குழந்தை உரிமைக் கமிட்டி ஆகிய பல அவசர செயல் நடவடிக்கைக்கான
29

Page 23
நடைமுறைகளையும், செயற்படுவதற்கான கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளன. தமக்கு விதிக்கப்பட்ட கடமைகளை இக்குழுக்கள் நிறைவேற்றுவதற்கு இப்புத்தாக்கங்கள் முக்கியமானதாகும்.
இன்னுமொரு முக்கிய விதந்துரையாவது, பிரதேச, உபபிரதேச மட்டங்களில் நிபுணத்துவ அமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதாகும். இவை ஐ.நா. மனித உரிமைகள் பற்றிய மகாநாட்டுடன் படிக்கைகளின் கீழ் அறிக்கைகளைப் பெறவும், அறிக்கைகளை ஆக்கவும் முடியும். இத்தகைய தகவல்கள் உயர் மட்டத்துக்கு அனுப்பப்படுவதன் மூலம் செயன்முறையின் புறவயத் தன்மையையும், பக்கச்சார்பின்மையையும் அதிகரிக்க முடியும். அத்துடன் பிரதேசங்களுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தவும் முடியும்.
முறைமையின் தோல்விகள்
மனித உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்தும் பல முயற்சிகள் அண்மைக் காலங்களில் மேற்கொள்ளப்பட்டாலும் கூட மனித உரிமைகளை அமுல்படுத்துவதில் பல சிக்கலான பிரச்சினைகள் இருக்கவே உள்ளன. ஐ.நா. அமைப்புக்குள் சில மகாநாட்டுடன்படிக்கை செய்யும் அமைப்புகளைத் தவிர்த்து மற்ற இடங்களில் அரசியல் அபிலாஷைகள் மேலோங்கியுள்ளன. மனித உரிமை ஏற்பாடுகளை மனச்சாட்சியுடன் நடைமுறைப்படுத்துவதில் தேசிய நலன்கள் மேம்பட்டு நிற்கின்றன. இதனைக் "குற்றங்களைச் சமமாகப் பங்கீடு செய்தல்" என "டனிலோ ரேக்" குறிப்பிடுகிறார். இவ்வாறு மனித உரிமைகளையும் தேசிய நலன்களையும் சமப்படுத்துதலானது மனித உரிமைகள் மீறலுக்கு பொறுப்பானவர்களைத் தண்டனையிலிருந்து தப்ப வைக்கிறது. பிணக்குகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் மற்றும் தேசிய நலன்களை மனித உரிமை மீறல்களுடன் சமப்படுத்தல் ஆகியவை ஒரு நம்பகத் தன்மை வாய்ந்த நீதிச் செயன்முறை தோற்றம் பெறுவதற்குத் தடையாக உள்ளன. இத்தகைய ஒரு நீதிச் செயன்முறை மனித உரிமைகளை முழுமையாக அமுல் நடத்துவதற்கு மிகவும் அவசியமாகும்.
மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பான ஐ.நா. நடவடிக்கைகளிலுள்ள இன்னுமொரு பிரச்சினை அவசரகாலச் சூழ்நிலைகளில் ஐ.நா.வினிால் தலையிட முடியாததாகும். அத்துடன் ஏற்படப் போகும் பிரச்சினைகளில் நேரகாலத்துடன் சர்வதேச
30

சமூகம் தலையிடுவதற்கு வசதி அளிக்கக் கூடிய விதத்தில் ஒரு 6 ச்சரிக்கை செய்யும் ஏற்பாடுகள் எதுவுமில்லை. அண்மைக்காலத்தில் ருவாண்டாவில் மனித உரிமைகளுக்கான ஐ.நா. ஆணையாளர் இத்தகைய நேரகாலத்துடன் தலையிடும் அடிப்படையிலேயே தலையிட்டார். ஆனால் அவசரகாலத் தலையீடு வெற்றியளிக்க வேண்டுமெனில் சர்வதேச வளங்களைத் திரட்டக் கூடிய ஒரு முறைசார்ந்த செயன்முறை இருக்க வேண்டும்.
மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா. செயற்பாடுகளில் ஐ.நா. சமாதானப் படையும் மிகவும் முக்கியமானதாகும். அவசரகாலச் சூழ்நிலை என்பது இச் சமாதானப் படைக்கும் பொருத்தமானதே. சர்வதேச மன்னிப்புச் சபையின் "சமாதானம் காத்தலும் மனித உரிமைகளும்" என்னும் அறிக்கை இவ்விடயம் பற்றிய முன்னுரையாக அமைந்தது. சர்வதேச சமாதானத்தைப் பேணுதலில் மனித உரிமைகளை அமுல்படுத்துவதற்கு உதவும் 15 அம்ச செயற்திட்டமே இந்த அறிக்கையாகும். இந்த 15 அம்சங்களும் மிகவும் முக்கியமான விடயங்களை அலசுகின்றன. ஐ.நா. நடவடிக்கைகளுக்கு முன்னர் அரசு சாரா நிறுவனங்களைத் திரட்டுதல் மிகவும் முக்கியமானதாகும். மனித உரிமை மீறல்களின் அளவு குறித்த விபரங்களை அறிய இந்த அரசு சாரா நிறுவனங்களின் உதவி மிகவும் அவசியமாகும். பிணக்குகளில் ஈடுபட்டுள்ள பகுதியினரிடம் நுழைவு பெறுவதற்காக உரிமையை தக்க வைத்துக் கொள்ளவதற்காக வேண்டி ஐ.நா. செயற்பாடுகளின் போது சர்வதேச ஐ.நா. ஆளணியினர் மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்தாமல் மெளனம் காக்க வேண்டிய அவசியமில்லை. எத்தகைய அரசியல் ஏற்பாடுகளும் மனித உரிமைகளை மதிப் பதற்கும் எதிர் காலத்தில் மனத உரிமைகளை அமுல்படுத்துவதற்கும் உறுதி அளிக்க வேண்டும். மனித உரிமையாளர்கள் இது தொடர்பாக அறிவுரை வழங்க வேண்டும். சமாதான பாதுகாப்பு நடவடிக்கைகளின் போது மனித உரிமைகளின் கெளரவம் பற்றிய விடயங்களில் உணர்வு பூர்வமான அணுகுமுறை கையாளப்படல் வேண்டும். அத்துடன் புனர்வாழ்வுத் திட்டங்களில் மனித உரிமைக் கல்வி ஒரு பகுதியாக இடம் பெற வேண்டும். மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பானவர்களுக்குத் தகுந்த தண்டனை வழங்குதலும் சர்வதேச நடவடிக்கைகளில் உள்ளடக்கப்படல் வேண்டும். போர்க் குற்றவாளிகளைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரிப்பதற்கு விசேட நீதிமன்றங்கள் நிறுவப்பட வேண்டுமெனச் சர்வதேச மன்னிப்புச் சபையும் ஏனைய அமைப்புகளும் வலியுறுத்துகின்றன. சமாதானம்
31

Page 24
காக்கும் பணிகள் மனிதத்துவத்துக்கான கெளரவத்துடன் தொடர்புபட்டது. மனித உரிமைகள் இச் செயற்பாடுகளின் பிரிக்கமுடியாத கூறாக மாறாத பட்சத்தில் இத்தகைய செயற்பாடுகளுக்குக் காரணமான மூல காரணங்கள் சரியான முறையில் விளங்கிக் கொள்ள முடியாத நிலை வரலாம். எனவே எவ்வித சமாதான நடவடிக்கைகளிலும் மனித உரிமைகளைக் கண்காணிப்பது முக்கியமான பகுதியாகும்.
மனித உரிமை நடவடிக்கைகளின் தோல்விக்கான முக்கிய காரணிகளில் ஒன்று சர்வதேச மனித உரிமைகள் கலாசாரம் என ஒன்றில்லாததாகும். ஐ.நா. சாசனம், மனித உரிமைகள் பற்றிய சர்வதேசப் பிரகடனம் ஆகியவற்றின் காரணமாக ஒரு சர்வதேச கலாசாரம் ஒரு முறையான யதார்த்தமாக விளங்கிய போதிலும் உண்மையிலேயே அப்படியொரு கலாசாரம் இருப்பதாகக் கொள்ள முடியாது. சர்வதேசத் தன்மையின்மைக்கான முக்கிய காரணி வெளியக அமைப்புகளால் வற்புறுத்தப்படும் மேற்குலக சிந்தனையே மனித உரிமைகள் என்ற ஒரு கருத்தாகும். ஓர் அரசியல் உலகில் ஓர் அரசியல் ஆயுதமே மனித உரிமைகள் என்ற கருத்தும் இதையொற்றி எழுகிறது. இத்தகைய சிந்தனையை ஐ.நா. அமைப்பும் முறைமையும் ஊக்குவிக்கின்றன எனக் கூறலாம். எனவே இத்தகைய சிந்தனையை மாற்றுவதற்கு உலகளாவிய ரீதியில் மனித உரிமைகள் கலாசாரத்தின் பகுதியே என்ற உணர்வு ஊட்டப்படல் வேண்டும். அதுமட்டுமல்லாமல் நீதிச் செயன்முறையை இவ்விடயத்தில் அரசியலுக்கு மேம்பட்டதாக மாற்றியமைக்க வேண்டும். எதிர் காலத்தில் ஓர் உண்மையான சர்வதேச மனித உரிமைகள் கலாசாரம் தோன்ற வேண்டுமெனில் மனித உரிமை ஏற்பாடுகள் அரசியலிலிருந்து தொலைவுபடுத்தப்பட வேண்டும்.
பொது விதந்துரைகள்
அண்மைக் காலங்களில் ஐ.நா. மனித உரிமைகள் முறைமையை பொதுவாக வலுப் படுத்துவதற்குப் பல ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் முதலாவது ஆலோசனை உலக மனித உரிமைகள் நிலை பற்றிய அறிக்கையைக் கிரமமாகப் பிரசுரிப்பதாகும், இவ்வறிக்கையில் ஒவ்வொரு அங்கத்துவ நாட்டினதும் மனித உரிமை நிலைபற்றி அறிக்கைப்படுத்தப்படும். இவ்வாறான
32

ஓர் அறிக்கை ஒவ்வொரு நாட்டிலும் மனித உரிமைகளின் அபிவிருத்தி பற்றி முழுமையாகக் கண்காணிப்பதற்கு வசதி அளிக்கும். அத்துடன் சர்வதேச மனித உரிமை நடவடிக்கைகளுக்கான ஆய்வுத் தளத்தையும் அமைக்கும். தனித்தனி நாடுகள் ரீதியாகக் கண்காணிப்புச் செய்யும் ஏற்பாடு தற்போதைய ஐ.நா. முறைமையில் இல்லை.
மனித உரிமைகள் நிலையத்துடன் இணைக்கப்பட்ட மனித உரிமைகளுக்கான ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவகம் ஒன்றினை அமைத்தல் முன்வைக்கப்பட்டுள்ள இன்னொரு ஆலோசனையாகும். மனித உரிமைகள் பற்றிய விடயத்தில் ஆழமான ஆய்வும், பயிற்சியும் அவசியம் என்பதும் இன்று ஏற்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் சட்ட வரையறைக்குள் இருந்து இன்று வறுமை, அபிவிருத்தி, பெண்கள் உரிமை, பிள்ளைகளின் உரிமை ஆகிய எல்லைகளுக்கும் விரிவடைந்துள்ளது. எனவே இவ்விடயங்களில் மனித உரிமைகள் சார்பாகத் தலையீடு செய்யும் பொழுது போதிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த நிறுவனத்தின் பயிற்சிக் கூறானது மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் தேசிய கட்டமைப்புக்கு உதவ முடியும். இந்நிலையமானது மனித உரிமைகள் தொடர்பான ஆய்வுகளை இயைபாக்கம் செய்வதோடு பாடசாலைகளிலும் சர்வகலாசாலைகளிலும் பயன்படுத்தக் கூடிய கலைத் திட்டங்களையும் பாடநூல்களையும் அபிவிருத்தி செய்வதற்கும் உதவ முடியும். இந்நிறுவனமானது மனித உரிமைகள் பற்றிய தரவுகளைத் தொகுத்து வைப்பதோடு மனித உரிமை ஆய்வுக்கும் நடவடிக்கைக்குமான ஒரு மைய நிலையையும் அடைய முடியும். இவ்வாறான ஓர் ஆய்வு நிலையம் தற்போது இல்லை. இவ்வாறான ஒரு நிலையத்தை மனித உரிமைகள் நிலையத்தின் ஒருபகுதியாக அமைப்பது விரும்பத்தக்கது. இதன் மூலம் ஐ.நா. வின் மனித உரிமைகள் நிகழ்ச்சித்திட்டத்தில் மிக முக்கிய பங்களிப்பைச் செய்வதற்காக அமைக்கப்பட்டிருக்கும் மனித உரிமைகள் நிலையத்துக்குப் பாரிய உதவியும் சேவையும் கிடைக்கும்.
மனித உரிமைகள் பற்றிய உலக மகாநாடு 25 ஆணி, 1993
33

Page 25
சர்வதேச மனித உரிமைகள் தினம்
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை நினைவுகூரும் இந்நிகழ்ச்சியை ஒழுங்கு செய்வதற்கு முனைப்புடன் செயலாற்றியமைக்காக நாம் கெளரவ மகிந்த சமரசிங்க அவர்களைப் பாராட்டுவதற்குக் கடமைப்பட்டிருக்கிறோம். பாராளுமன்றம் ஒரு நிறுவனம் என்ற அடிப்படையில் மனித உரிமைப் பிரச்சினைகளுக்கு முதன்மை வழங்குவது முற்றிலும் பொருத்தமானதே. ஏனெனில் ஒவ்வொரு தனிநபரும் தனது குறைகளைச் சுட்டிக்காட்டுவதற்கு மட்டுமல்லாமல் அதற்குப் பரிகாரம் தேடிக்கொள்ளவும் பாராளுமன்றத்தின் அதிகாரங்களையும் வலுவாண்மைகளையும் பயன்படுத்தக்கூடிய வாய்ப்புகளைப் பாராளுமன்றம் வழங்கக் கூடியதாக இருக்க வேண்டும். பாராளுமன்ற வரம்புக்குள் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளையும் பாகுபாடுகளையும் முன்வைப்பதற்குப் பல சந்தர்ப்பங்கள் உள்ளன. தனிப்பட்ட மனுக்கள் பாராளுமன்றத்தின் மனுக்கள் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றதுடன் அங்கு வந்து சேரும் பெருந்தொகையான மனுக்களைச் சமாளிக்க முடியாமல் இக் குழு திணறிக் கொண்டிருக்கிறது. அவசரகால விவாதமும், நாட்டில் அவசரகாலத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பல்வேறு பொதுவான மற்றும் குறிப்பான மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பினை அளிக்கிறது. பாராளுமன்ற கேள்வி நேரத்திலும் கூட பாகுபாடுகள் மற்றும் மனித உரிமைகளின் துஷ்பிரயோகம் முதலான பிரச்சினைகள் முன்வைக்கப்படுகின்றன. பாராளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் தமது தொகுதியில் நடைபெறும் முறையற்ற கைதுகள், தடுத்து வைத்தல் போன்ற விடயங்களில் தலையிட வேண்டிய தேவைகள் ஏற்படுகின்றன. எனவே மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள்
34

பாராளுமன்றத்துடன் நெருக்கமாகத் தொடர்புபட்டுள்ளதுடன், இந்நாட்டு மக்களின் முழுமையான பிரக்ஞையின் நிலைக்களனாகவும் பாராளுமன்றம் விளங்குகின்றது.
சர்வதேச ரீதியான கண்ணோட்டத்தில் பார்க்கும் போது கடந்த சில ஆண்டுகளில் மனித உரிமைகள் தொடர்பாகப் பல முக்கிய சர்வதேச மகாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. 1993 இல் வீயன்னா மாநாடும் தொடர்ந்து கொப்பனேகனில் சமூக உச்சிமாநாடும் (Social Summit) பின்னர் பெய்ஜிங்கில் பெண்கள் மாநாடும் நடந்தேறின. ஐக்கிய நாடுகள் சபையின் 50 ஆவது ஆண்டுவிழா தொடர்பாகப் பல மாநாடுகள் நடத்தப்பட்டன. இவற்றில் மனித உரிமைப் பிரச்சினைகளில் ஐக்கிய நாடுகளுக்கு இருக்கும் நிறுவனரீதியான பொறுப்புகள் வலியுறுத்தப்பட்டன. மனித உரிமைகள் மற்றும் சனநாயக விழுமியங்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பதில் சர்வதேச சமூகத்துக்கு இருக்கக்கூடிய ஆற்றல் பற்றிய உடன்பாடான கருத்துக்கள் மற்றும் எதிர்மறையான கருத்துக்கள் ஆகியவற்றின் பின்னணியிலேயே இம் மகாநாடுகள் நடாத்தப்பட்டன. உண்மையில், முக்கியமான இரு சாதனைகளை நாம் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும். முதலாவது உலகின் பல பாகங்களில் மனிதத்துவத்துக்கு எதிரான தொடர்ச்சியான நடவடிக்கைகளுக்கு மத்தியில் உயிர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. சுதந்திரம், மீட்கப்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக மனித உள்ளங்களில் மனித உரிமைகள் மிகவும் மகோன்னதமான சமூக ஒழுக்கம் என்பது ஊன்றப்பட்டுள்ளது. இரண்டாவதாக, சர்வதேச ரீதியாகவும், பல அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலும் மனித உரிமைகள் நடவடிக்கைகள் நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ளன. பல சர்வதேச, பிராந்திய மனித உரிமை மகாநாட்டுடன்படிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன; மனித உரிமைகளைக் கண்காணிக்கும் நிறுவனங்களும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
இலங்கையைப் பொறுத்தவரையில் அதன் மனித உரிமைகள் பற்றிய வரலாறு நீண்ட காலமாகவே பிரச்சினைக்குள்ளாகியுள்ளது. இரண்டாவது குடியரசு யாப்பில் அரசின் சகல உறுப்புக்களினாலும் அடிப்படை உரிமைகள் மதிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, முன்னெடுத்துச் செல்லப்படும் எனக் கூறப்பட்டுள்ளன. எனினும் காணாமற் போவோர் பற்றிய ஐ.நா. நடவடிக்கைக் குழுவின் 1990, 1991 ஆம் ஆண்டு அறிக்கைகளில் தாம் ஆய்வு செய்த 52 நாடுகளில் இலங்கையில் மாத்திரமே காணாமற் போவோர் ஆகக் கூடுதலாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிடுகின்றன. அரசியல் யாப்பின்
35

Page 26
11 ஆவது உறுப்புரை சித்திரவதைக்கோ அல்லது கொடுமையான, மனிதத்தன்மையற்ற, இழிவான நடத்தைகளுக்கோ அல்லது தண்டனைகளுக்கோ எந்தவொரு நபரும் உட்படுத்தப்படலாகாது எனக் குறிப்பிடுகிறது. எனினும் மிகவும் கொடுமையான, இழிவான சித்திரவதை முறைகள் விசாரணைகளின் போது வழமையாகவே பின்பற்றப்படுவதாகச் சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிடுகிறது. பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் அவசரகால விதிகளைப் பயன்படுத்தி ஒருதலைப்பட்சமான, முறையற்ற கைதுகளும் தடுத்து வைத்தலும் செய்யப்பட்டிருப்பதை மனித உரிமைக் குழுக்கள் தொடர்ச்சியாக ஆவணப்படுத்தியுள்ளன. அன்பையும் பொறுமையையும் கடைப் பிடிக்க வற்புறுத்தும் சமய மரபுகளுக்கு நாம் உரித்துடையவர்களாக இருந்த போதும் எமது நாளாந்த வாழ்க்கையில் அதிர்ச்சி தரும் கொடுமைகளுக்கும் இழிவுகளுக்கும் நாம் முகம் கொடுக்க வேண்டியவர்களாகியுள்ளோம்.
இத்தகைய மனித உரிமை நெருக்கடிகளுக்கு நாம் தேடக்கூடிய தீர்வுகள் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டிருக்க வேண்டும். ஒரு புறத்தில் மனித உரிமைகளைப் பாதுகாக்கக் கூடிய சட்டம் மற்றும் யாப்பு ஏற்பாடுகளை நாம் வலுப்படுத்த வேண்டும். அரசியல் யாப்புத் தெரிவுக்குழு இப்பணியை மேற்கொண்டுள்ளது. அத்துடன் ஒரு தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவை உருவாக்கும் சட்டத்தையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம். இவ்வாணைக் குழுவானது தற்போது நடைமுறையில் இருக்கும் மனித உரிமைகள் செயலணிக் குழு (HumanRightsTaskForce) மற்றும் பாகுபாடுகளை நீக்குவதற்கான ஆணைக்குழு ஆகியவற்றுக்குப் பதிலாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. எனினும் ஒரு பிரச்சினையைத் தீர்க்க ஒரு புதிய நிறுவனத்தை ஏற்படுத்தினால் போதுமானது என நினைப்பது தவறானது. நாம் புதிய சட்டங்களையும் நிறுவனங்களையும் உருவாக்குவதில் பாரிய சக்தியைச் செலவிடுகிறோம். ஆனால் இந்நிறுவனங்களைப் பயனுறுதியுடன் கொண்டு நடத்துவதற்குத் தூரதிருஷ்டியும், கண்ணியமும், வலிமையும் உள்ள நபர்களை நியமிப்பதில் பெரும்பாலும் தவறிவிடுகிறோம்.
அத்துடன் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் எமக்குள்ள சர்வதேசக் கடப்பாட்டை நாம் இன்னும் தீவிரமாகக் கருத்தில் எடுக்க வேண்டும். நாம் மிக முக்கியமான பல சர்வதேச மகாநாட்டுடன்படிக்கைகளின் பங்காளிகளாக இருந்த போதும் இவை தொடர்பாக நாம் சமர்ப்பிக்கும்
36

அறிக்கைகள் தொடர்பாகக் கவனம் 6 டுப்பதில்லை. ஐ.நா. மனித உரிமைகள் குழுவினர்க்கும், பெய்ஜிங் மாநாட்டுக்கும் நாம் சமர்ப்பித்த அறிக்கைகள் மிகவும் கவனக்குறைவாகத் தயாரிக்கப்பட்டிருந்தன. இப்பிரச்சினைகளுக்கு வழங்கப்பட வேண்டிய முக்கியத்துவத்தை அவை பிரதிபலிக்கவில்லை. இலங்கையானது சிவில் மற்றும் அரசியல் மகாநாட்டுடன்படிக்கையின் கீழுள்ள சித்திரவதை ஒழிப்பில் பங்காளியாக வேண்டும். இதன் மூலம் தனிநபர்கள் முறையீடு செய்யும் வாய்ப்புகளை உறுதிசெய்து கொள்ள முடியும். மனித உரிமைகள் தொடர்பான எத்தகைய கலந்துரையாடலும் சிவில் சமூகத்தின், குறிப்பாக அரசுசாரா நிறுவனங்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்கக் கூடிய பங்களிப்பு இன்றிப் பூர்த்தியாக மாட்டாது. அத்துடன் எந்தவொரு சனநாயக அரசாங்கமும் சிவில் சமூகத்தின் நிறுவனங்கள் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளில் ஈடுபடுவதைத் தடுக்கும் முயற்சிகளில் ஈடுபடக்கூடாது.
மனித உரிமைப் பிரச்சினைகளை நாம் சமாதானம் மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தாமல் தனித்துப் பார்க்கவும் முடியாது. கடந்த இரு தசாப்தங்களாக இழைக்கப்பட்ட மிகப் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் இன்றைய இனத்துவப் பிணக்குகளுடன் தொடர்புபட்டுள்ளன. நாம் இப்பிரச்சினைகளுக்கு உறுதியான தீர்வுகளை மேற்கொள்ள வேண்டுமெனில் இரு முனைப்பட்ட அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டும். எதிர்வரும் வியாழக்கிழமை பாரிஸில் கைச்சாத்திடப்படும் சமாதான ஒப்பந்தம் மூலம் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான ஐரோப்பாவின் மிகக் கொடுமையான பிரச்சினைகளில் ஒன்று அநேகமாக முடிவுக்குக் கொண்டு வரப்படலாம். இன்று நாம் எதிர்நோக்கும் மிகவும் முக்கியமான மனித உரிமைகள் மற்றும் மனிதத்துவப் பிரச்சினை வலிகாமம் பகுதியிலிருந்து பெருந்தொகையான மக்கள் யாழ்ப்பாணத்தின் ஏனைய பகுதிகளுக்கும், பெருநிலப்பரப்புக்கும் குடிபெயர்ந்துள்ளமையாகும். இவ்வாறு குடிபெயர்ந்த மக்களின் பிரச்சினைகளை அணுகி, அவர்கள் தமது இல்லங்களுக்குக் கெளரவத்துடனும், பாதுகாப்புடனும் மீண்டும் செல்வதற்கு ஏற்ற, ஏற்பாடுகளைச் செய்வதற்கு ஒன்றுபட்டுச் செயலாற்றுமாறு நான் சகல அரசியல் கட்சிகளையும் வினயமாக வேண்டுகிறேன். எம்மால் அதனைச் செய்யமுடியுமாயின் மனித துயரங்களை நீக்குவதில் நாம் வார்த்தைகளை விடுத்து உறுதியான நடவடிக்கைகளை எடுக்கக் கூடியவர்கள் என நிரூபிக்கவும் முடியும்.
12 ιDπήΦμβ, 1995
37

Page 27
மனித உரிமைகள் : ஆசிய நிலைமை : பிரதேச முறைமை ஒன்று தேவைப்படுகின்றதா?
ஐரோப்பா, அமெரிக்கா, ஆபிரிக்கா என்பன பிரதேச ரீதியான மனித உரிமைகள் அமைப்புக்கான ஒழுங்குகளைக் கொண்டிருக்கும் அதே வேளையில் ஆசியா அத்தகையதொரு ஒழுங்கினைக் கொண்டதாக இல்லை. ஐரோப்பிய சபையின் இருபத்தைந்து அங்கத்தவர்கள் மனித உரிமைகள் பற்றிய ஐரோப்பிய மகாநாட்டுடன்படிக்கையின் கட்சிகளாக இருக்கும் அதேவேளையில், ஐரோப்பாவில் பாதுகாப்பு, ஒத்துழைப்பு என்பன தொடர்பான மகாநாட்டு வரைச் சட்டத்திற்குள் உள்ளடங்கும் ஐம்பத்து மூன்று நாடுகள் முரண்பட்ட தீர்மானங்கள், தடுப்புக்கள் என்பனவற்றிற்கான இயங்கும் ஒழுங்கமைவு ஏற்பாடுகளின் ஸ்தாபிதம் உட்பட சிறுபான்மையினரின் பாதுகாப்பு, மனித உரிமைகள் என்பன தொடர்பாகவும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
ஆசியாவில் மனித உரிமைகளுக்கான பிரதேச ரீதியான ஆணைக்குழு, பிரதேச ரீதியான அன்மப்பு என்பனவற்றின் ஸ்தாபிதம் தொடர்பாக இதற்கு முன்னர் அரச மட்டங்களிடையேயும், அரசுசார்பற்ற மட்டத்திலேயும் மேற்கொள்ளப்பட்ட பல நடவடிக்கைகள் இதுவரையில் சிறிதளவு முன்னேற்றத்தையே கண்டுள்ளன. எனினும் 1993 ஆம் ஆண்டு பங்குனி 29 - சித்திரை 22 ஆம் திகதி வரை நடைபெற்ற மனித உரிமைகள் மீதான ஐக்கிய நாடுகள் அமைய உலக மகாநாட்டில், பாங்கொக்கில் நடைபெற்ற ஆசிய பிராந்தியக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அறிவிப்பின் விளைவாக இத்தகையதொரு பிரேரணையில் புதுப்பிக்கப்பட்டதொரு ஆர்வம் அண்மையில் மீண்டும் செலுத்தப்பட்டு வருகின்றது. இந்த அறிவிப்பில் கூட்டத்தில் பங்கு பற்றிய நாடுகள் "ஆசியாவில் மனித உரிமைகளின் மேம்பாட்டிற்கான பிரதேச ஒழுங்குகளை ஸ்தாபிதம் செய்வதற்கான சாத்தியக் கூறுகளைத்
38

தேடுவதன்" தேவையை வற்புறுத்தின. அரசு சார்பற்ற அமைப்புக்களின் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட, 1993 ஆம் ஆண்டு பங்குனி 27ஆம் திகதியிடப்பட்ட பாங்கொக் அரசசார்பற்ற அமைப்புக்களின் அறிவித்தல் கூட இக் கருத்திற்கு போதுமான ஆதரவினை வழங்கியது.
எனினும் அரசுசார்பற்ற அமைப்புக்கள் இத்தகைய நடவடிக்கைகள், தற்பொழுதுள்ள சர்வதேச அமைப்புக்களுக்கு மனித உரிமைகளின் துஷ்பிரயோகத்திற்கு எதிராகத் தனிப்பட்டவர்களுக்கும், அரசுசார்பற்ற அமைப்புக்களுக்கும் இருக்கும் மனுச் செய்யும் உரிமையினைத் தடை செய்யக்கூடாதெனவும், இருக்கும் சர்வதேச அமைப்புக்களின் கடமைப்பாடுகளைக் குறைத்து விடக் கூடாதென்றும் வலியுறுத்தித் தமது ஆதரவினைத் தெரிவித்துள்ளன. இத்தகைய பிரேரிக்கப்பட்ட பிரதேச ரீதியான ஆணைக்குழுவின் கூட்டமைப்புப் பற்றியும் அதன் அங்கத்துவத்தைத் தீர்மானிப்பதில் அரசுசார்பற்ற அமைப்புக்கள் ஆற்ற வேண்டிய பங்குபற்றியும் அரசுசார்பற்ற அமைப்புக்கள் மேலும் தமது கருத்தினைத் தெரிவித்துள்ளன. இராணுவத்தினதும் பாதுகாப்புப் படைகளினதும் நடத்தையினை விசாரிப்பதற்குரிய அதிகாரங்களை உள்ளடக்கியதாக மனித உரிமைகள் பிரதேச ஆணைக்குழு விசாரணை செய்யக் கூடியதும் தீர்ப்புக் கூறக் கூடியதுமான அதிகாரங்களைக் கொண்டிருக்க வேண்டுமெனவும் அவை மேலும் சிபார்சு செய்துள்ளன. மனித உரிமைகள் தொடர்பாகப் பிரதேச ஒழுங்கு ஒன்றிற்குச் சார்பாக வாதிடுபவர்கள் இத்தகைய ஒழுங்குகள் அரசியல், பொருளாதார சட்ட ஒன்றிணைப்பின் செய்முறை ஒன்றுடன் தொடர்புபடுவதனை நோக்குகிறார்கள். இதுவரை அத்தகைய செய்முறை ஒன்று முழு ஆசியப் பிரதேசத்தினுள் இடம் பெறவில்லை. வர்த்தக பொருளாதார ஒன்றிணைப்பின் வெற்றிகரமான செய்முறை 'ஆசியான் மட்டத்தில் இடம் பெற்றுவருகின்றது. இருதரப்புத் தகராறுகள் காரணமாகப் பல பின்னடைவுகளைக் கொண்ட 'சார்க்' என்பது அண்மையில் இடம் பெற்று வரும் செய்முறைகளுள் ஒன்றாகும்.
இத்தகையதொரு ஒழுங்கு பயன் தரு செயலாக்கம் ஒன்றினுக்கு வழி காட்டும் என்பதே இரண்டாவது வாதமாகும். மேலும் பிரதேச ரீதியான ஒழுங்குகள் சர்வதேச ஒழுங்குகளை விடக் கூடியளவு சென்றடையும் நிலையை வழங்குவதுடன் செலவுக் குறைப்பினையும் ஏற்படுத்துகின்றன என்றும் வாதிடப்படுகின்றது. அவை உள்ளூர் அமைப்புக்கள் சிலவேளைகளில் பற்றாக் குறையாகக் கொண்டுள்ள
39

Page 28
சுதந்திரத்தையும், ஒன்றிணைப்பினையும் வழங்கக் கூடியதாக இருப்பதுடன், ஒழுங்கு விதிகள் நிறுவன ரீதியான நலிவுகள் ஏனைய குறைபாடுகள் என்பனவற்றையும் நிவர்த்திக்கக் கூடியனவாக இருக்கின்றன. உதாரணமாக நேபாளம் போன்ற நாடுகள் புதிய அரசியலமைப்புக்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவை அடிப்படை உரிமைகளுடன் தொடர்புபட்ட அரசியலமைப்பு விதிகளை எடுத்துக் காட்டி விவாதிப்பதற்கு நிதித்துறை நிபுணத்துவத்தையும், அனுபவத்தையும் பற்றாக் குறையாக கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த எதிர்பார்ப்புகள் உண்மையானதா? இத்தகைய பிரதேச ரீதியான அமைப்புக்களுக்காக நியமனம் பெறுபவர்கள் அவர்களது உள்ளூர் சரிநேர் அலுவலர்களை விட கூடிய நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடிய தகுதியுடையவர்களா? மனித உரிமைகள் தொடர்பாக பாதுகாப்பானதும் எதிர் மறையானதுமான நிலையினைக் கடைப்பிடிக்கும் ஆசிய நாட்டு அரசாங்கங்கள் போதுமான பயன்தரு அதிகாரங்களைக் கொண்ட பிரதேச அமைப்பு ஒன்றினுக்கு அதிகாரமளிப்பதற்கு முயற்சிக்குமா?
மனித உரிமைகள் இயக்கத்தினைப் பலப்படுத்துவதற்கு பிரதேச ரீதியான முயற்சிகள் தேவைப்படுமானால், ஆவணப்படுத்துதல் கற்பித்தல், கல்வி, வாதாடுதல் என்பன தொடர்பாகக் குடியியல் சமூக மட்டத்தில் அவை இயங்குமானால் அவை பெருமளவில் பயனளிக்கக் கூடியவையாக இருக்கும். தென் ஆசியப் பிராந்தியத்திற்குள் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு போன்ற தேசிய நிறுவனங்களை அமைப்பது சம்பந்தமாக நாம் ஏறக்குறைய சமாந்தரமான கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளோம். சர்வதேச நுண்ணாய்வு, சர்வதேச ரீதியாக பதில் அளிக்கும் பொறுப்பு என்பனவற்றிற்கு மாற்றீடாக இத்தகைய நிறுவனங்கள் அரசாங்கங்களினால் பிரேரிக்கப்படும் பொழுது இந்த நிறுவனங்களின் சட்ட அதிகாரம் மட்டுப்படுத்தப்படுவதுடன் அவற்றின் விசாரணைத் தீர்மானிப்பு அதிகாரங்கள் மனித உரிமைகள் இயக்கத்திற்குள் நேர்மையான ஐயுறவு வாதம் உள்ளதா என்பதனைச் சுற்றிவட்டமிட்ட வண்ணமும் இருக்கும்.
பிரதேச அமைப்பு ஒன்றினை உருவாக்குதல் என்னும் பிரேரணை பாற்சமத்துவம் மனித உரிமைகள், பல்லினவாதம், சனநாயகம் போன்ற பெறுமானங்களின் பொதுமையமாகப் பிரதேசம் ஒன்றும் பொதுமைப்படுத்தப்பட வேண்டும் என்ற முயற்சியினையும், இந்த எண்ணக் கருவினைக் கட்டிக்காக்கக் கூடிய நிறுவனங்கள்,
40

செய்முறைகள் என்பனவற்றின் உருவாக்கத்தையும் பிரதிபலிப்பதாக இருக்கும். குடியியல் சமூக அமைப்புக்கள் தென் ஆசியப் பிரதேசத்தை மீண்டும் பொதுமைப் பிரதேசமாக மாற்றக் கூடிய பலதரப்பட்ட ஆரம்ப முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. ஐரோப்பா, ஆபிரிக்கா, வட, தென் அமெரிக்கா என்பனவற்றில் உள்ள பொதுமைப்பாடுகள் இவ் வேறுபாடுகளினை அதிக தூரம் கடந்து சென்றுவிட்டன. மிகத் தீவிரமான புவியியல், அரசியற் கருத்துநிலை பொருளாதாரத் திருப்பங்களைப் பண்பாகக் கொண்டுள்ள ஆசியப் பிராந்தியத்தில் உண்மைக்கு மாறாகச் சிறிது குறைவுபட்டிருக்கலாம். தென் ஆசியப் பிரதேசத்தில் ஆசியான் பிரதேசம் போன்று உபபிரதேச மட்டங்களில் பொதுமைப்பாடுகள் இருக்கின்றன. இன்னும் தெளிவாகச் சொல்வதானால் பகிர்வுச்சட்ட வரலாற்றினால் ஓரளவு உருவமைக்கக் கூடிய பொதுவான சட்டக் கலாசாரம் ஒன்று இல்லாதிருப்பதாக கூறலாம். சட்டரீதியான சிந்தனைகளின் மரபுகள் அவற்றின் விவரணங்கள் என்பனவெல்லாம் நேபாளம், பர்மா, தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளிலெல்லாம் மிகவும் வேறுபட்டுக் காணப்படுகின்றன. உதாரணமாக, ஐரோப்பாவிற்குள் குடியியல் பொதுச் சட்ட மரபுகளிடையே உள்ள வேறுபாடுகளை விட இவை மிகவும் தெளிவான வேறுபாடுகளைக் கொண்டு காணப்படுகின்றன.
ஐரோப்பாவிலும் ஏனைய இடங்களிலும் விருத்தியடைந்த மனித உரிமைகள் தொடர்பான சட்ட இயலையும் சர்வதேச மனித உரிமைகள் வட்டத்தில் கடந்த நான்கு வருடங்களாக நிகழ்ந்த அபிவிருத்திகளையும் எடுத்துக் கொள்ளும் சந்தர்ப்பம் ஆசியப் பிரதேசத்திற்கு வழங்கப்பட்டிருப்பதாகப் பொதுவாக விவாதிக்கப் படுகிறது. மனித உரிமைகளின் ஆதரவு என்று கருதக்கூடிய ஆசிய கலாசார மரபுகள், அறிவாற்றல் என்பனவற்றின் முழு உருவமாகிய எண்ணக்கருக்கள், பெறுமானங்கள் என்பனவற்றை உருவாக்கிக் கொள்வதற்கும் இது உதவியாக அமைந்திருக்கும். பிரதேசத்திற்குள் அரசாங்கப் பிரதிநிதிகள், சட்டவல்லுநர்கள், ஏனைய நிபுணர்கள் என்பவர்களினால் வடிவமைக் கப்படும் ஆவணங்களின் நெறிமுறைவாய்ந்த சட்டப்படியான நிலையினால் நிறுவனம் அலங்கரிக்கப்படும் அதேவேளையில் மனித உரிமைகளின் எல்லைப் புறங்களை விஸ்தரிப்பதற்கான சந்தர்ப்பத்தையும் பிரதேச அமைப்பு வழங்கும் ଶ ଗଠୀ விவாதிக்கப்படுகின்றது. எனினும் விடய விவாதிப்பாளர்கள் இக்கருத்துத் தொடர்பாக முரண்படுகின்றனர். அவர்கள் உலக சமுதாயத்தினுள் காணப்படும் நேருக்கு நேர்
41

Page 29
பொருதும் சூழ்நிலையிலும் பல ஆசிய நாடுகளில் பதிவு செய்யப்பட்ட உள்ளூர் பதிவுகள், பொதுசன நிலைமைகள் என்பனவற்றின் அடிப்படையிலும் இத்தகையதொரு பிரதேச ரீதியான அமைப்பு மனித உரிமைகள் இயக்கத்தில் ஒரு பின்னடைவை ஏற்படுத்துமென நம்புகின்றனர். மனித உரிமைகள் குழுவின் இத்தகைய கருத்திலிருந்து சிக்கல் வாய்ந்த வார்த்தைச் செய்முறையினுள் அவர்கள் அதிக அளவு சக்தியினையும் முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டி வரும். உள்ளூர் இயக்கத்தினைப் பலப்படுத்தும் முயற்சியினை நோக்கி இம் முயற்சிகள் மிகவும் திட்பமாகப் பயன்படுத்தப்பட (Լքւգ-պւD.
மனித உரிமைகள் பற்றிய உலக மகாநாடு 11 ஆனி 1993, வியன்னா.
42

மனித உரிமைகளும் அபிவிருத்தியும் பாதுகாப்பும்
கடந்த சில வருடங்களுள் உலகில் பல வகையான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மனித வர்க்கத்திடையே ஏற்பட்ட துரிதமாற்றத்தை ஒப்பிட்டுப் பார்க்கக் கூடிய இன்னொரு காலப்பகுதி இல்லையென்றே கூறலாம். இந்த வருட காலப்பகுதியில் ஐரோப்பாவில் தாராள சனநாயக மாற்றங்களுள் சோவியத் ஒன்றியத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியுடன் அவை தனியரசுகளாகப் பிரிந்து போனமையும் சமத்துவமும் சுதந்திரமும் கொண்ட குடியரசுகள் பொதுநலவாயச் சுதந்திர அரசுகளுடன் இலகுவான முறையில் இணைந்து கொண்டமையையும் காணக்கூடியதாக இருந்தது. இவ்வாறான மாற்றங்கள் அபிவிருத்தி யடையும் உலகில் முக்கிய விளைவுகளுக்குக் காரணமாயிற்று. கருத்தியல் ரீதியான வீழ்ச்சியைப் போன்று, மாற்று அபிவிருத்தி நோக்குகளின் செயற்படுதிறன் தொடர்பான நிச்சயத்தன்மை இழக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இக்கட்டுரை இந்தத் தசாப்தத்தின் அபிவிருத்தி, சனநாயகம் மற்றும் மனித உரிமைகள் என்னும் மூன்று பிரதான கருத்துகளிடையேயுள்ள தொடர்புகளைப் பரிசீலிக்கின்றது. மனித உரிமைகளின் பாதுகாப்பில் அபிவிருத்தி என்னும் விடயம் தொடர்பாகப் பின்வரும் மையக் கருத்துக்களைச் சரியாக ஆராய்தல் வேண்டும்.
(அ) மனித உரிமை மேம்பாட்டுக்காக, அரசுகளுக்கிடையே அபிவிருத்தி
உதவியையும் பொருளாதார உறவுகளையும் பயன்படுத்தல்.
(ஆ) இத்தகைய நிறுவனங்கள் மற்றும் முகவரகங்களினால் ஆதரிக்கப்பட்ட பொருளாதார அபிவிருத்தி மாதிரிகள், சர்வதேச
43

Page 30
நாணய நிறுவனங்கள் மற்றும் அபிவிருத்தி முகவரகங்களின் பங்கு என்பன மனித உரிமைகளில் ஏற்படுத்திய பாதிப்புகள். (இ) மனித உரிமைகளிலும் அபிவிருத்தியிலும் குடியியற் சமூகங்கள் மற்றும் நீண்ட ஆய்வுகளின் பங்கு. இந்த விவகாரங்கள் தென்னாசியாவினுள் உண்டான சித்தாந்தம் மற்றும் கொள்கை மாற்றங்களின் பின்னடைவுகளைத் தேடுவதாக அமையும்.
தென்னாசியப் பிரதேசம் புவியியல், அரசியல் மற்றும் சமூக பொருளாதார நிலைமைகளில் அசாதாரண வேறுபாடுகளைக் கொண்டது. இப்பிரதேசத்தின் ஒரு பகுதி சனத்தொகை அடர்த்தி குறைந்த பவளக் கற்பாறைத் தீவுக் கூட்டங்களைக் கொண்டுள்ளது. மாலைதீவு ஒருகட்சிக் குடியரசு அரசாங்கத்தையுடையது. பூட்டானும் நேபாளமும் நிலத்தினால் சூழப்பட்ட உப மானிய அரசுகளாக உள்ளன. பூட்டானில் முடியாட்சி நிலவி வருகின்ற வேளையில் நேபாளம் அண்மையில் சனநாயக ரீதியான அரசியல் மாற்றங்களுக்கு உள்ளாயிற்று. அங்கு அரசியலமைப்படிப்படை முடியாட்சித் தலைமையின் கீழ் பல கட்சி அரசு உருவானது. இப்பிரதேசத்தின் இன்னொரு பகுதியாகவுள்ள பாகிஸ்தானும் வங்காளதேசமும் ஓர் உள்நாட்டு யுத்தத்தினைத் தொடர்ந்து பிரிந்து போயின. இவ்விரு நாடுகளிலும் நிலவிவந்த சர்வாதிகார இராணுவ ஆட்சிகள் சனநாயக அடிப்படையில் உருவாக்கப்பட்ட அரசாங்கங்களால் விலக்கப்பட்டன. பிரதேசத்தின் மையமாக இந்தியா விளங்குகிறது. கைத்தொழில் மற்றும் பிரதிநிதித்துவ அடிப்படையில் உருவான நிறுவன ரீதியான பிரதிநிதித்துவத்தை நீண்டகால மரபாகவுடைய சமஷ்டி ஆட்சிமுறை நிலவி வருகிறது. இறுதியாக இலங்கையைக் குறிப்பிடலாம். இது புரட்சியொன்றினால் முற்றுகைக்குள்ளான தீவுக் குடியரசாகும். இந் நாட்டின் மக்கள் சமுதாயம் கலவரங்களுக்கும் இராணுவமயமாதலுக்கும் உள்ளாகி வருகிறது.
அரசியல் உறுதிப்பாட்டைப் பேணுதல், நிறுவன உருவாக்கம் தொடர்பான பிரச்சினைகள் பாரிய பொருளாதார மற்றும் சனத்தொகை காரணமாகத் தோன் றும் அழுத்தங்களுடன் மேலும் இணைக்கப்படுகின்றன. இப்பிரதேசம் உலகளாவிய வருமானத்தில் 2 சத வீதத்தை மட்டும் கொண்டுள்ள வேளையில், உலக சனத்தொகையில் 22 சத வீதமான சனத்தொகைக்கு உதவ வேண்டிய நிலையிலும் உள்ளது. இப்பிரதேசச் சனத்தொகையில் அரைப்பங்கினர் வறுமைக்கோட்டின் கீழேயே வாழ்கின்றனர். அடிப்படைத் தேவைகள்
44

6. வையுமில்லை. மேலும் இப்பிரதேசத்தின் வருடாந்த சனத்தொகை அதிகரிப்பு 25 மில்லியனாகும். OCED நாடுகளின் சனத்தொகை அதிகரிப்பிலும் பார்க்க 5 மடங்கு அதிகமாகும். இவ்வாறான வேறுபாடுகளுக்கும் சிக்கல் நிலைமைகளுக்குமிடைய ஒரு பிரதேசமாக நிலைத்திருக்கிறது. பருவகாலத் தேர்தல்கள், பிரதிநிதித்துவ நிறுவனங்கள், அடிப்படை உரிமைகள் மற்றும் சனநாயகச் சுதந்திரம் போன்றவற்றில் சனத்தொகையினருள் பெரும்பங்கினர் ஈடுபாடு காட்டி வருகின்றனர். ஆகவே, அரசியலமைப்புப் பரிசோதனைக்கும் நிறுவனஞ் சார்ந்த மதிப்பீடுகள் மற்றும் புதுப்பித்தல்களுக்கும் கணிசமானளவு முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாகவுள்ளது. அரசியலமைப்பு விவகாரங்கள், மனித உரிமைகள், சனநாயகம் என்பன அரசியல் மற்றும் அறிவாற்றல் நடவடிக்கைகளின் மையமாகவுள்ளன. அண்மையில் நேபாளத்திலே இறைமை, பல கட்சி அரசு, அடிப்படை உரிமைகளை நடைமுறையில் கொண்டுவருதல் ஆகியவற்றினடிப்படையில் புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. வங்காள தேசம் அரசாங்கமொன்றை அமைக்கும் வரிவாதங் களில் (பாராளுமன் ற அல்லது சனாதிபதி) ஈடுபட்டுவந்துள்ளது. இவற்றுள் முன்னையதற்குச் சார்பாக முடிவை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் அரசின் மதசார்பற்ற அடிப்படைகளும் ஆட்சிமுறையின் சமஷ்டிப் பண்புகளும் புரட்சிகர மற்றும் பிரிவினைவாத இயக்கங்களின் சவால்களுக்குள்ளாயிற்று. பாகிஸ்தானும் அரசியலமைப்புச் சட்டகம் பற்றிய முரண்பாடுகளைக் களைவதற்குப் போராடி வருகிறது. அது வெஸ்மினிஸ்ரர் முறையிலான, உயர்மட்டத்தில் மத்திய மயப்படுத்தப்பட்ட சனாதிபதி முறை அரசாங்கம் ஒன்றைத் தெரிவு செய்துள்ள போது இலங்கை தனது உரிமை மசோதாக்களைச் சிறுபான்மையினர் மற்றும் அரசியல் கருத்து முரண்பாடுடையவரது மனித உரிமைகள் தொடர்ந்தும் மீறப்படுதல், தொடர்ந்தும் வரும் முறைப்பாடுகளுக்கு மதிப்பளித்து அவற்றைப் புனரமைப்புச் செய்ய முற்படுகிறது.
மனித உரிமை அறிஞரும் மற்றும் வினைத்திட்பக் கோட்பாளருமான "போல் சீக்காட்" என்பவர் அரசியலில் காணப்படும் மிகமுக்கியமான வெறுக்கத்தக்க அம்சமாக, "நீங்கள் முட்டையை உடைக்காமல் ‘ஓம்லெட் செய்ய முடியாது எனக் கூறியுள்ளார். பொருளாதார அபிவிருத்தித் துறையிலே கணிசமானளவு மக்களின் அடிப்படை உரிமைகளைத் தற்காலிகமாகவேனும் மீறாமல் வளர்ச்சியின் நன்மைகளை உருவாக்க முடியாது எனப் பொருள் தருகிறது. இந்தக்
45

Page 31
கருத்தின் அடிப்படையிலேயே தென்கிழக்காசிய நாடுகள் பலவற்றில், மனித உரிமைகளும் சனநாயகமும் அபிவிருத்தியின் முக்கிய அம்சங்களுடன் இணைக்கப்பட வேண்டும் என வாதிடுகின்றனர். புதிய கைத்தொழில் நாடுகள் இதற்கு (சில சமயங்களில் நான்கு வேதாளங்கள் (dragons) என வருணிக்கப்படுகின்றன) உதாரணமாக எடுத்துக்காட்டப்படுகின்றன. ஆனால் இந்த நாடுகளுள் சிங்கப்பூரும் ஹொங்கொங்கும் சிறிய நகர அரசுகளாகும். இவற்றின் அனுபவங்களிலிருந்து பொதுவான அம்சங்களைப் பெற்றுக் கொள்வதும் மிகக் கடினமானதாகும். மார்க்கோஸ் ஆட்சியின் வீழ்ச்சி, வங்காளதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இராணுவ ஆட்சியின் வீழ்ச்சி போன்றவற்றினால் இந்த மாதிரி மேலும் நம்பிக்கையை இழந்தது. இவையாவும் அதிகார வர்க்கவாதத்துக்கும் அரசியல் அதிகார துஷ்பிரயோகத்துக்கும் நியாயமாக இருக்குமென்பது தெளிவாயிற்று. இந்த அபிவிருத்தித் தசாப்தத்தில் காணப்பட்ட ஒரு தனி முன்னேற்றம் என்பதுடன் அபிவிருத்தி முழுமையாக உதவும் மனித உரிமைகளால் நன்கு ஆதரிக்கப்படுகிறது. இதன் பொருள் என்னவெனில், தனிநபர் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் பொருளாதார அபிவிருத்தியை முன்னேற்றுமே தவிர அதற்குத் தடையாகவிருப்பதில்லை. மனித உரிமைகளும் அபிவிருத்தியும் ஒன்றிலொன்று தங்கியிருத்தல் என்ற நோக்கு, அபிவிருத்தியுரிமை என்னும் ஐ.நா. பிரகடனத்துள் உள்ளடக்கப்பட்டுள்ளது. இது 1986 மார்கழி மாதம் 4 ஆம் திகதி பொதுச் சபையால் மேற்கொள்ளப்பட்டது. இப்பிரகடனத்தின் மூலம் அறிவிக்கப்படும் முக்கிய எண்ணக் கருத்துக்கள் பின்வருமாறு:
(l) அபிவிருத்தியின் மையப் பொருள் மனிதன் என்றும் அபிவிருத்தியில் அவன் பங்கு கொள்ளவேண்டும். அதன் நன்மைகளை அனுபவிக்கும் உரிமையும் அவனுக்கு உண்டு.
(2) சகல மனித உரிமைகளையும் உறுதி செய்கிறது (குடியியல் அரசியல் மற்றும் பொருளாதார, சமூக கலாசார உரிமைகள்) இவை பிரிக்க முடியாதவை, ஒன்றிலொன்று தங்கியிருப்பவை: அத்துடன் சம கணிப்புக்குப்படுபவை.
(3) குடியியல், மற்றும் அரசியல் உரிமைகள் அவ்வாறே பொருளாதார, சமூக, கலாசார உரிமைகளைக் கடைப்பிடிக்கத் தவறுதல் அபிவிருத்திக்குத் தடையாக விளங்கும்.
ஆயினும் குழப்பமான எதிர்ப்போக்குகளும் காணப்படுகின்றன. அவை மனித உரிமைகள், அபிவிருத்தி என்பவற்றின் பிரிக்க
46

முடியாத தன்மை பற்றிய பிரச்சினையாகவேயுள்ளன. 1991 மார்கழி 21 இல் நடைபெற்ற 6 ஆவது சார்க் உச்சி மகாநாடு, மனித உரிமை விவகாரங்களைக் குறுகிய நோக்கிலும் அரசியல் அடிப்படைக்குப் புறப்பாகவும் கருதக் கூடாது 6 ன எடுத்துக் காட்டியுள்ளது. மேலும் இப்பிரகடனம் மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமிடையே பிரிவினையை ஏற்படுத்தவும், சகல மக்களும் "உறுதியென்னும் நிபந்தனைப்பாட்டில் சகல பிரசைகளும் அபிவிருத்தியில் ஈடுபாடு காட்டுதல்" ஊடாக மனித உரிமைகளை அடையவும் அனுபவிக்கவும் வேண்டும். மனித உரிமைக் குழுக்கள் இதனை ஒரு பாதுகாப்புக் கூற்றாகவே கருதுகின்றன என்ற வகையில் மனித உரிமைகளை முழுமையாக அடைதல் அபிவிருத்திக்கு அவசியமானது எனத் தெரிவிக்கிறது.
அபிவிருத்திக்கும் மனித உரிமைகளுக்கும் இடையிலான தொடர்புகளைக் கண்டறிவதில் மேற்கொள்ளப்பட்டு வந்த அபிவிருத்தி மாதிரிகள் குறிப்பாக ஆசிய நாடுகளில் மனித உரிமைகளையும் சமூக நீதியையும் நிலை நாட்டத் தவறிவிட்டன எனக் கூறப்படுமளவுக்கு உள்ளன. இத்தகைய மாதிரிகளை உலக வங்கி, சர்வதேச நாணய நிதி, நன்கொடைச் சமூக உறுப்பினர்கள் பலர் என்றவாறான பல்பக்க நிறுவனங்கள் கூடுதலாகப் பிரயோகித்துள்ளன. அவர்களால் ஈடுபாடு காட்டப்பட்ட கொள்கைகள் பல தனியார்துறை அபிவிருத்தி, வர்த்தக மயமாதல், தனியார் மயமாக்கல் போன்றவற்றிற்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டவை. சந்தை நடவடிக்கைகளில் கவனஞ் செலுத்தும் ஒரு பொருளாதார மாதிரி, அரசாங்கக் கட்டுப்பாட்டைச் சீர் குலைக்கும் சட்டவாக்கம் மற்றும் ஏனைய நடவடிக்கைகளில் ஈடுபடுதல், வெளிநாட்டு நாணயமாற்றினைத் தாராளமயமாக்கல், அந்நிய முதலீடுகளை ஊக்குவித்தல், மூலதனச் சந்தை அபிவிருத்தி போன்றவற்றில் கவனஞ் செலுத்த வேண்டும். இந்த அபிவிருத்தி மாதிரி பற்றிய விமர்சனங்கள், இத்தகைய கொள்கைகளானது சமத்துவமின்மையையும் , பிரதேச அடிப் படையிலான வேறுபாடுகளையும் அதிகரிக்கச் செய்யுமெனச் சுட்டிக்காட்டுகின்றன. மேலும் இதன் பலனாக நகர, கிராமங்களிலுள்ள அடைய வேண்டிய சமூக நலன்களைக் குறைத்துக் கொள்ளவும், வேறு இடங்களுக்கு மாற்றப்படவும் நேரிட்டன. தொழிற்படையினர் மத்தியில் பாதுகாப்பின்மையையும் தோற்றுவித்தன். தொழிற் சங்கங்கள் கைத்தொழிற் பேட்டைகளிலும் சுதந்திர வர்த்தக வலயங்களிலும் சம்பளக் கோரிக்கைகளின் உரிமைகளைக் கட்டுப்படுத்துகின்றன.
47

Page 32
மேலும் இத்தகைய பொருளாதார மாதிரியைப் பயன்படுத்தும் போது தீர்மானம் மேற்கொள்ளுவதில் அரசின் மத்திய மயப்போக்கும் அதிகாரத்தன்மையும் அதிகரிக்கும். மேலும் முதலிட்டுத் திட்டங்கள் மீதான தீர்மானங்களை மேற்கொள்வதிலிருந்தும் பாரிய விவசாயக் கைத்தொழில் அல்லது அணைச் செயற்றிட்டங்களிலிருந்தும் அரசு சாரா நிறுவனங்களையும் மக்கள் இயக்கங்களையும் விலக்கி வைக்கும். இவை சிறுபான்மையினர் உரிமைகள், உள்ளூர் மக்கள் உரிமைகளில் பாதிப்புகளையும் உண்டாக்கும். தொழிற் சங்கங்கள், கிராமிய விவசாயத் ஸ்தாபனங்கள் மற்றும் அபிவிருத்திசார் குழுக்களைக் கொண்ட சமூகச் சக்திகளின் மரபுரீதியான கூட்டு, சுற்றாடல் அல்லது மனித உரிமைகள் மீது எதிர்மாறான பாதிப்புகளை ஏற்படுத்தும். இதற்குக் காரணம் மாற்று அபிவிருத்தித் திட்டநோக்கொன்றினைச் செயற்படுத்தும்.ஆற்றலின்மை அவர்களிடம் காணப்படுதலாகும். ஆகவே இத்தகைய அபிவிருத்திகள் பற்றி மிகவும் எச்சரிக்கையாகவுள்ளனர். இவை பின்தங்கிய குழுவினரின் சமூக, பொருளாதார உரிமைகளில் மாத்திரமன்றி, அரசியல், பொருளாதாரத் தீர்மானம் மேற்கொள்ளலில் பயன்தரு முறையில் பங்குபற்றல் மற்றும் கூட்டுச் சேரும் உரிமையையும் கட்டுப்படுத்துகிறது.
அபிவிருத்தியின் எந்தவொரு செயல் முறையிலும் மையப்பொருளாக விளங்குவது வறுமையை அகற்றுதலாகும். வறுமை, மனித உரிமைகள் பரவலாக மறுக்கப்படுதலுடன் இணைந்துள்ளது. ஏனெனில் வறியவர்கள் சக்தியற்றவர்கள். அவர்கள் தம்மைப் பாதுகாக்க இயலாதவர்கள். ஆகவே தென்னாசிய நாடுகள் பலவற்றிலுள்ள அபிவிருத்தி மாதிரிகளில் மனித உரிமைக் குழுக்கள் பங்குபற்றுதல் தவிர்க்க முடியாதது. மற்றும் அமைப்பு ரீதியான சீராக்கக் கொள்கைகளில் ஈடுபாடு காட்டுதல் வறியவர்களையும் பின் தங்கிய குழுவினரையும் மேலும் வறியவர்களாக்கி ஓரங்கட்டுவதாக அமையும்.
மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமிடையேயுள்ள தொடர்பில் எழுந்துள்ள இன்னொரு பிரச்சினை அரசியல் நிபந்தனைப்பாடுகள் பற்றிய பிரச்சினையாகும். அதாவது, அபிவிருத்தி உதவிகளைத் தொடர்தல் "நல்ல ஆட்சி" மற்றும் குடியியல் உரிமை, அரசியல் உரிமைகளைக் கடைப்பிடித்தல் போன்ற அரசியல் நிபந்தனைகளைப் பின்பற்றுவதிலேயே தங்கியிருக்கும். ஐரோப்பியக் கழகம் 1990 கார்த்திகை 20 இல் மனித உரிமைகள், சனநாயகமும் அபிவிருத்தியும் பற்றிய தனது அபிவிருத்திக் கழகத் தீர்மானத்தில், மனித உரிமைகளுக்கு
48

மதிப்பளித்தல், சட்ட ஆட்சி, பயன்பாடும் பொறுப்பும், சனநாயகச் சட்டங்களை அனுபவிக்கின்ற அரசியல் நிறுவனங்களின் உறுதிப்பாடு 61 ன்பன சமநிலை அபிவிருத்திக்கு அடிப்படையானவையென வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, மனித உரிமைகளைப் பாதுகாத்தலானது, சமுதாயம், அதனுடைய அங்கத்துவ அரசுகளும் ஏனைய நாடுகளுக்குமிடையேயுள்ள உறவைப் பேணுதலில் முக்கிய பகுதியாகும் என கூறியுள்ளது. இத் தீர்மானத்தின் மூலம் மேலும் சுட்டிக் காட்டப்படுவது யாதெனில் மனித உரிமை மீறப்படுதலில் பிடிவாதமாக இருத்தல் அல்லது சனநாயகச் செயல் முறைகளைக் குழப்புவதில் தீவிரமாக இருத்தல் போன்றவற்றைப் பொறுத்துச் சமுதாயமும் அங்கத் துவ அரசுகளும் பொருத்தமான எதிர்ச்செயல்களைக் கருத்திற்கொள்ளும் எனச் சுட்டிக் காட்டுகிறது. இத்தகைய பொறுப்புகள் இரகசியமான அல்லது பகிரங்க "அரசியல் நடவடிக்கை”யையும், உள்ளடக்கத்தில் மாற்றங்களையும் அல்லது ஒத்துழைப்புக்குரிய வழிமுறைகளையும் அல்லது அவசியமேற்படும் பொழுது அத்தகைய ஒத்துழைப்பை ஒத்தி வைத்தலையும் உள்ளடக்கியிருக்கும். மனித உரிமைகளுக்கு மேலதிகமாக, கழகத் தீர்மானங்கள் நல்ல ஆளுகை பற்றிய பிரச்சினைகளுக்கும் முக்கியத்துவங் கொடுக்கிறது. இவை சனநாயக ரீதியான தீர்மானங்களை மேற்கொள்ளல், அரசாங்கத்தின் ஒழிவுமறைவற்றதன்மை, மற்றும் நிதி விடயங்களில் பொறுப்புடைய தன்மை, சட்ட ஆட்சிக்கு மதிப்பளித்தல், பத்திரிகை மற்றும் கருத்துச் சுதந்திரம் என்பவற்றையும் உள்ளடக்கும்.
ஆணைக்குழுவின் தீர்மானம் இராணுவச் செலவினப் பிரச்சினைக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளது. இவ்வாறான மேலதிக இராணுவச் செலவினங்கள் அபிவிருத்தி நோக்கங்களிலிருந்து திசைதிரும்பப்படுவது மட்டுமன்றி உள்ளக ஒடுக்க முறை நோக்கங்களுக்கும் மனித உரிமைகளை மறுப்பதற்கும் பயன்படுகின்றன. கனடாவில், உள்நாட்டு விவகாரம் மற்றும் சர்வதேச வர்த்தகத்துக்குமான பொதுமக்கள் சபை (BaO) auf (5til 15, giCup (The House of Commons Standing Committee on External Affairs and International Trade) 1987 இல் மனித உரிமைகளில் காணப்படும் முன்னேற்றம், அபிவிருத்தி, உதவிக்குரிய முக்கிய கூறாக இருக்க வேண்டுமென விதந்துரைத்தது. ஆயினும் முழு அளவிலான மனித உரிமை மீறல்கள், அரசாங்கத்துக்கு அரசாங்கம் உதவத் தடையாக இருக்கும் வேளையில், மக்கள் சமுதாயத்துக்கு உதவும் மாற்று வழிகளையும் அறிந்திருத்தல் வேண்டும்.
49

Page 33
அவசர கால நிலைமையில் செய்யப்படும் மனிதாபிமான அடிப்படையிலான உதவிகள் மறுக்கப்படலாகாது.
இத்தகைய நிபந்தனைகள் தனது தேசிய இறைமையை மீறும் என்ற அடிப்படையில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் பெருமளவில் மனித உரிமைக்கும் உதவிக்குமிடையேயுள்ள இணைப்பைத் தடுத்துள்ளன. இவ்வாறான பரிந்துரைகள் தெற்கின் மீது வடக்கின் அரசியல் மற்றும் கருத்தியல் சார்ந்த செல்வாக்குக்கு மனித உரிமைகள் ஒரு கருவியாக அமையும் என அரசியல் ரீதியாகக் கருதுகின்றனர். ஒழுக்கம், கீழோரிடத்து அன்பு செலுத்துதல், கலாசார மேன்மை போன்றவை தெற்கு நாடுகளின் மனித உரிமைத் தீர்ப்புகளின் உள்ளடக்கமாக இருக்கின்றன. மறுபுறத்தில் மனித உரிமைக் குழுவினர் இவற்றை வரவேற்கின்றனர். இவை சர்வதேச மனித உரிமைகள் தரத்துடன் இணக்கமுடையவை என நம்புகின்றனர். மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானப் பிரச்சினைகளில் சர்வதேச நோக்கின் படி தேசிய இறைமை சார்ந்த பிரச்சினைகள் எவையும் தடையாக இருக்க மாட்டா என்றும் தெரிவிக்கின்றனர். மேலும் வளர்முக நாடுகள் சர்வதேச மனித உரிமைச் சாசனங்களில் கையொப்பம் இடுவோராக மாறும் போது, தமது உள்ளூர் மனித உரிமைப் பதிவேடுகள் சர்வதேச நுண்ணாய்வுக்கு உட்படுவதை ஏற்றுக் கொள்கின்றனர்.
1990 இல் "பேட்ரம் ராம்சரன்" கருத்துத் தெரிவிக்கையில், மனித உரிமை மீறல்களை அல்லது பொறுக்க முடியாத மனிதத் துன்பங்களைப் பாதுகாக்க முற்படும்போது, இறைமை துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்கிறார். இலங்கைக் குடியியல் உரிமை இயக்கம் 1991 இல் வெளியிட்ட ஒரு கூற்றின் படி "அரசுகளின் இறைமைக் கோட்பாடுகள், தனது குடிமக்களின் குடியியல் உரிமைகளைப் பேணாவிட்டால் நீடித்திருக்க முடியாது" என்பது இன்று ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்டமாகும். தேசிய இறைமை பற்றிய எண்ணக்கரு இந்த வகையிலேயே சர்வதேசப் பொறுப்பு என்னும் எண்ணக்கருவுக்கு இடமளித்துள்ளது. ஆனால், மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமிடையேயுள்ள தொடர்பில் காணப்படும் பிரச்சினை வடக்குத் தெற்குத் தொடர்பின் சர்வதேச சமுதாயத்தை மேலும் பிளவுபடுத்துதல் சார்பான அச்சத்தைக் கொடுக்கிறது.
1991 கார்த்திகையில் கிழக்கு ரிமோரில் இந்தோனேசியப் படைவீரர்கள் மரண ஊர்வலம் ஒன்றில் துப்பாக்கிப் பிரயோகம் செய்த போது
50

குடிமக்கள் பலர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர். டச்சு அரசாங்கம் இந்தோனேசியாவுக்கு அபிவிருத்தியுதவிகளை வழங்குவதை நிறுத்திக் கொண்டது. இந்நிகழ்ச்சிக்கு எதிராக எழுந்த சர்வதேச எதிர்ப்பு விடயத்தில், இந்தோனேசியா ஒரு விசாரணை மன்றினை நியமித்தது. இந்த அறிக்கையின் விளைவாக அரசாங்கம் தனது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டதுடன், படை வீரர்களுக்குப் பொறுப்பாகவிருந்த இரண்டு சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளை இடைநிறுத்தம் செய்தது. சர்வதேச மனித உரிமைகள் பற்றிய விடயத்தில் இந்தோனேசிய அரசாங்கம் சட்டத்துக்குச் சார்பாக நடந்து கொண்டது எனப் பல அவதானிகள் தவறுதலாக விளக்கமளித்தனர். ஆயினும் சில வாரங்களுக்குள், இந்தோனேசிய அரசாங்கம் அதனுடைய உதவித் தொடர்புகளை நெதர்லாந்துடன் நிறுத்திக் கொண்டது. இது மிகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்ட கிழக்கு ரிமோர் நிகழ்ச்சியாகும். இதனையொத்த பழிவாங்கும் நிகழ்ச்சியொன்று, அந்நாடு நோர்வேயுடன் இராஜ தந்திர உறவுகளை மேற்கொண்ட காலத்தில் அரசியல் வேறுபாடுகளால் கென்யாவைப்பற்றி நோர்வே விமர்சித்திருந்தது. உதவி, வியாபாரம் அல்லது பல்பக்க உதவிகளுடன் அபிவிருத்தியை இணைக்க முற்பட்ட காலத்தில் சீனாவும், இந்தியாவும் அதனை எதிர்த்தன.
இக்கொள்கையைப் பேணுவதில் உதவி வழங்கும் சமூகம் பயன்மிக்கதாக விளங்குமானால் , அங்கு உறுதிப்பாடும் நம்பிக்கையும் அவசியமாகின்றன. நம்பிக்கை என்பது, தெற்கு நாடுகள் அவற்றினுடைய தேசிய எல்லைகளுக்குள், அகதிகள், குடிவந்த தொழிலாளர்கள், அந்நாட்டின் பின்தங்கிய வகுப்பினரை வேறுபடுத்தும் முறையிலோ பக்கச் சார்பான முறையிலோ நடந்து கொள்ளக் கூடாது என வடக்கு உறுதி செய்யும் ஆற்றலுடன் தொடர்பு கொண்டுள்ளது.
மனித உரிமைப் பிரச்சினைகளில் உள்நாட்டு நடவடிக்கைகளுக்கும் சர்வதேசக் கொள்கைகளுக்குமிடையே வேறுபாடுகள் நிலவினால் அத்தகைய நம்பிக்கை இருக்க முடியாது. ஒருமைப்பாடு பற்றிய பிரச்சினைகள், தண்டனை நடவடிக்கைகளுக்கு உட்படும் நாடுகள் பற்றிய தெரிவின் போது எழலாம். மனித உரிமைகளைக் கருத்திற் கொண்டு, அபிவிருத்தி உதவிகளைத் தடுத்து வைப்பதற்கு அல்லது நிறுத்தி விடுவதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டால், அல்லது அர்சியற் புவியியல் காரணிகளுக்கு முக்கியம் கொடுத்தால் அவற்றைப் பெறும் நாடுகளால் முன்னெடுத்துச் செல்லப்படும் பொருளாதார மாதிரி
5

Page 34
நன்கொடை வழங்கும் நாட்டின் உள்நாட்டு அரசியலிலும் அத்தகைய தீர்மானங்களிலும் செல்வாக்குச் செலுத்தப்படுமா?
அரசியல் நிபந்தனைப் பாடுகள் பற்றிய பிரச்சினைகள் விமர்சனத்துக்குட்பட்டுள்ளன. அதாவது, வளர்முக நாடுகள், மேலைத்தேய விழுமியங்களை, நல்ல ஆட்சிமுறை மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் என்ற அம்சங்களினூடாகப் புகுத்த முற்படுகின்றார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விளைவு என்னவெனில், மனித உரிமைகளின் சர்வதேச இயல்புகள் தெற்கிலுள்ள நாடுகள் பலவற்றின் சவாலுக்கு உட்படுகின்றன. அண்மையிலே ஒங் சன் சூ கிய் (Aung San Suu Kyi) என்பார். "உள்ளார்ந்த மாண்பு" மனித உயிரினத்தின் சமத்துவ மற்றும் மாற்றத்தகாத உரிமைகள் பர்மியர்களுக்கு ஏன் புதிராக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இது மனிதர்கள் எல்லோரும் காரணங்கள், உளச் சான்றுகளுக்கு உள்ளாவதை ஏற்றுக் கொள்கிறது, சகோதரத்துவத்தின் சர்வதேச ரீதியான ஊக்கம் உள்ளூர்ப் பெறுமானங்களைப் பொறுத்துத் தீங்கு விளைவிப்பன எனவும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இவற்றுள் எந்தவொரு உரிமையேனும் மனித உரிமைகள் பற்றிய சர்வதேசப் பிரகடனத்தின் 30 பிரிவுகளிலும் இடம்பெற்றிருக்கின்றனவா எனக் காண்பது அவர்களுக்குக் கடினமானது. அவர்களுடைய சொந்தப் புவியியல் மற்றும் கலாசார எல்லைகளுக்கு அப்பால் கருத்துகளும் நம்பிக்கைகளும் தகுதியை மறுக்குமானால், பெளத்தம் வட இந்தியாவுக்கும், கிறிஸ்தவம் மத்திய கிழக்கின் ஒடுங்கிய வலயத்திற்கும், இஸ்லாம் அரேபியாவுக்கும் உரித்தாக இருந்திருக்கும்"
கலாசாரச் சூழ்நிலை சர்வதேச மனித உரிமைத் தரங்கள் மற்றும் கடப்பாடுகளிலிருந்து திரிபுபடுதலுக்கு அல்லது மதிப்புக் குறைதலுக்கு அடிப்படையாக விளங்கினால், மனித உரிமைகள் பற்றிய உரையாடல்களும் விளங்காத மொழியில் இடம் பெற வேண்டுமென்பதை நாமும் ஏற்றுக் கொள்ள வேண்டியேற்படும். ஆட்சியமைப்பு முறையின் பரந்த துறைகளுக்கு இது பொருத்தமற்றதாகும். மனித உரிமை இயக்கத்தின் முனைப்பான தோல்வி சார்பின்மைக்கு ஆதரவுதரும் அடிப்படைகள், சனநாயக மற்றும் பன்மைத் தன்மை வாய்ந்த விழுமியங்களை விரிவுபடுத்த முடியாமை போன்றவற்றைக் கூறலாம். ஒரு முழுப் பரம்பரையின் சமூகக் கற்பனைத் தோற்றத்தினைத் தவிர்த்தல் பற்றிய அடிப்படைக் கருத்து நிலைகள் மற்றும் சகிப்புத் தன்மையின்மை என்பவற்றால் கைக்கொள்ளப்பட்டுள்ளது.
52

ஆகவே, மனித உரிமைகள் பற்றிய விளக்கங்களும் அபிவிருத்தித் தேவைகளும் தென்னாசியாவின் சமய, கலாசார மரபுகளால் வளம்படுத்தப்பட வேண்டும். அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரம் பற்றிய பேச்சுக்கள் தனிப்பட்ட, அரசியல்கலை அறிஞரின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டவை. அடிப்படை உரிமைகளுக்கான ஆதரவினை, நம்பிக்கை வாய்ந்த முறைமைகளுடன் இணைத்தால் அதனை விரிபடுத்த முடியும் . இவை தென்னாசியாவிலுள்ள மக்களுக்குச் சமூக மற்றும் சமயம் சார்ந்த அனுபவங்களுக்குப் பொருளை வழங்குகின்றன. இவ்வாறான உள்ளூருக்குரிய கலாசார, சமய மரபுகள் நீதித்துறைச் சமுதாய உறுப்பினரின் கருத்துகளை வலியுறுத்துகின்றன. அத்துடன் முரண்பாடுகளுக்குரிய தீர்ப்புகளுக்கு, கணக்குரீதியான, ஒத்திசைவு கொண்ட அணுகு முறைகளுக்கும் இடமளிக்கின்றன.
ஒரு குடும்பத்தில் நிலவும் பரஸ்பர கடப்பாடுகள் குழந்தையின் உரிமைகளுக்கு ஆதரவான மனப்பாங்குகளையும் விழுமியங்களையும் வளர்க்கவும் வளர்ந்தோரின் தேவையைப் பூர்த்தி செய்யவும் உதவுகின்றன. இவ்வாறானதொரு அணுகுமுறை சமூக உரிமைகளை, சட்டரீதியான அமைப்பிலும் பார்க்க வினைத்திறனுடையதாகப் பாதுகாக்க வழிகோலும். இவை பிரச்சினைகளை அரசுக்கு முரணாகத் தனிப்பட்டோர் சார்பிலேயே நோக்குகின்றன.
ஏனைய கருத்துக்களிலே "தர்மம்" இந்து - பெளத்த நீதிக் கொள்கைகளுள் முக்கியமாக விளங்குவதுடன் அவை ஒழுக்கத்துக்கான எல்லைகளையும் வரையறை செய்கின்றன. ஆட்சியாளர்கள், குடிமக்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஆதிக்கம் உடையவராயிருந்தால் அவற்றுக்கு மாறாக நடக்க முடியாது. இவ் எண்ணக்கருவைக் கற்பனா ரீதியாக உருவாக்கும் ஆட்சி முற்ைக் கோட்பாடுகளைத் தெளிவாகக் காணுதல், மற்றும் சனநாயக ரீதியான பொறுப்பை ஏற்றல் சிறியளவிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவை மொழி மற்றும் மரபுமொழிகளிலே இந்து - பெளத்த மரபுகளிலே உள்ளன. இதனையொத்த சில முயற்சிகள், அரசியலமைப்பு விழுமியங்களுக்கும் உரிமைகள் பற்றிய பேச்சுகளுக்குமிடையே தொடர்புகளை உண்டாக்கவும், மறுபுறத்தில் எண்ணக் கருத்துக்கள், நிறுவனங்களுக்குமிடையே தொடர்பை உண்டாக்க வேண்டிய தேவையுள்ளது. இவை நம்பிக்கை முறைமைக்கும் இஸ்லாத்தின் உலகளாவிய நோக்குக்கும் மையமாகவுள்ளன.
53

Page 35
இந்த விடயம் பற்றி அண்மையில் தாய்லாந்து முடியாட்சியின் சனநாயக சார்பான சக்திகளும் இராணுவமும் அரசியலமைப்பு ரீதியான எதிர் கொள்ளலின் போது எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. பெரும்பாலான அரசியலமைப்புச் சட்ட வல்லுனர்கள் தாய்லாந்து அரசியலமைப்பின் நிலையான மற்றும் மாறுமியல்புகள் பற்றிக் கருத்துரை வழங்கியுள்ளனர். 1932 ஆனி 27க்கும் 1959 தை 29 க்கும் இடையில் தாய்லாந்தில் ஏழுக்குமேற்பட்ட அரசியலமைப்புகள் உருவாக்கப்பட்டன. அவற்றுள் இரண்டு தற்காலிகமானவை (1932, 1947), ஒன்று இடைக்கால அரசியலமைப்பாகும் (1950). இச்செயல் முறையை ஓர் அறிஞர் சுயநல அரசியலமைப்புவாதம் என விபரித்துள்ளார். இது "சுயநல முனைப்புகளில் ஏற்படும் பிரதான மாற்றங்களுக்குப் பொருந்தும் வகையிலும் பாதுகாக்கும் வகையிலும் புதிய அரசியலமைப்பை வரைவு செய்யும் செயல் முறையாகும். ஆனால், இதுபற்றிய அவதானம் என்னவெனில் தாய்வான் "இரண்டு அரசியலமைப்புகளை"க் கொண்டிருக்கிறது. அவற்றுள் ஒன்று எழுதப்பட்டுள்ளது. இது நிலையற்றது; பெருமளவுக்கு சட்டத்தையும் மரபுகளையும் பேணுவதாயுள்ளது. இதனிலேயே அரசாங்கம் கூடுதலாகத் தங்கியிருக்கிறது. அரசாட்சியின் தேரவாதக் கோட்பாடு பற்றித் தம்பையா குறிப்பிடும் போது (அரசனை ஒரு போதிசத்துவர் என்றும் பிரதேச ஆட்சியாளரைச் சக்கரவர்த்தி என்றும்) தாய்லாந்தின் வரலாறு பூராகவும் மாறுந்தன்மையுடையதாக இருந்தது. அரச அதிகார அமைப்பை சட்டப்படி மாற்றியமைத்தும் வந்தது என்கிறார்.
தம்பையா முக்கியமான புராணக்கதையையும் குறிப்பிடுகிறார். இது மனுவின் தர்மசாஸ்திரத்துடனும் தாய்லாந்து மற்றும் பர்மா போன்ற தேரவாத பெளத்த நாடுகளிலுள்ள உள்ளூர் வழக்கங்களுடனும் இணைக்கப்பட்டுள்ளன. மீள உள்ளடக்குதல் என்ற இச்செயல் முறை ஒரு புதிய மனுவை உருவாக்க வேண்டுமெனக் கூறுகிறது. மறுபுறத்தில் நாம் துன்பம், மனவேதனை, மனமுறிவு என்பவற்றுக்கு உள்ளாகும் சந்தர்ப்பங்களும் உண்டு. இவ்வாறானதொரு துன்பநிகழ்வு அயோத்தியில் நடந்த விடயத்தோடு தொடர்புடையது. அங்கு நிகழ்ந்த வன்செயலின் விளைவாக, மதவெறி, சகிப்புத் தன்மையின்மை என்பன உபகண்டத்தைச் சூழ்ந்து கொண்டன. மனித உரிமைப் போதனைகளிலோ இல்லாவிட்டால் அபிவிருத்தியிலோ இனத்துவ அல்லது தேசிவாதச் சக்திகளுக்கும் போதியளவு பொறுப்பு இருந்தது. இவை நாட்டு அரசின் ஒருமைப்பாட்டுக்கும் மத சார்பற்ற சனநாயக ஆட்சிக்கும் அடிப்படையாய் அமைந்தன. இவ்வாறான அபிவிருத்தி
54

மாயைத் தோற்றங்கள் அற்ற நிலைக்கு இட்டுச் சென்றதுடன், அரசியலமைப்பு ரீதியான சித்தாந்தங்களுக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து நீடிப்பதற்குமிடையே அச்சுறுத்தலாக அமைந்தன.
மனித விழுமியங்கள் பற்றிய போராட்டத்தில் அச்சுறுத்தல்களுக்கு இடமளித்தல் ஒழுக்கஞ்சார்ந்ததன்று. ஒங் சான் சூ சியி, அபிவிருத்திக்கும் மனித உரிமைகளுக்குமான போராட்டம் "மனித இயல்பின் குறைகளை அவனது ஆன்ம பலத்தால் களைந்து முன்னேறல்" என்பதை நிரூபிக்கும் பொது முயற்சியாக இருத்தல் வேண்டும் என எடுத்துக் காட்டியுள்ளார். இந்தக் கூட்டத்தின் பிரதான இலக்குகளில் ஒன்று, 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மனித உரின்மகளை எதிர் நோக்கும் சவால்களையும் அச்சுறுத்தல்களையும் இனங்காண்பதாக இருத்தல் வேண்டும்.
தென்னாசியாவிலே கடந்த சில வருடங்களிலே பெரும்பாலான மாற்றங்கள் எமது எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டவையாக நிகழ்ந்துள்ளன. இவை சனநாயகத்துக்கும் மனித உரிமைப் போராட்டங்களுக்குமுரிய சந்தர்ப்பங்களாக அமைந்தன. இவ்வாறான சந்தர்ப்பங்கள் நம்பிக்கையையும் , அரசியலமைப்புகள் , பலகட்சியமைப்பையும் உருவாக்கும், தொகுதிவாரிச் செயல்முறையில் போட்டியைத் தோற்றுவிக்கும். குடியியற் சமூக நிறுவனங்களை மாற்றமடையச் செய்யும் நியாயமான மனித உரிமைக்கு உத்தரவாதமளிக்கும் என்றும் நம்பப்பட்டது.
*21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மனித உரிமைகள்" பற்றிய உலக மகாநாடு. 28-30 தை 1993, ஸ்ராஸ்பேர்க்,
55

Page 36
பால் சமத்துவப் போராட்டமும் மனித உரிமை நெருக்கடியும்
இந்த மாலைப்பொழுதிலே உங்களோடு இருப்பதனையிட்டும், இந்த மகாநாட் டி ல் கலந்து கொள் வதையரிட் டும் பெரிதும் மகிழ்ச்சியடைகின்றேன். இங்கு நான் கலந்து கொள்வதற்குப் பல காரணங்கள் உள. முதலாவதாக, CES, LST நிறுவனங்களிலுள்ள எனது சகாக்கள் பலர் APWLD இன் பணிகளில் உற்சாகமுடன் ஈடுபட்டு வருகின்றார்கள்: இதனுடைய வெற்றிக்கு அவர்களது பணி அளப்பரியது. இரண்டாவதாக, இப் பிரதேசத்திலேயுள்ள சில முக்கியமான மனித உரிமை நிறுவனங்களுள் APWLDயும் ஒன்றாக விளங்குவதுடன் பால் சமத்துவம் பற்றிய விவகாரங்களில் எமது கவனத்தை ஈர்க்கும் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இவற்றுடன் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், மற்றும் இப்பிரதேசத்திலேயுள்ள பெண்களுக்கு வலுவூட்டும் உள்ளூர் மற்றும் சர்வதேச நடவடிக்கைகளைப் பலப்படுத்துதல் ஆகியவற்றையும் குறிப்பிடலாம். இத்தகைய முயற்சிகளின் பயனாக, எமது பிரதேசத்தில் மனித உரிமை பற்றிய விடயங்களிலே முக்கியமான தரம்மிக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எமது சமூகங்கள் பலவற்றிலே மனித உரிமை, அரசியலமைப்புச் சீர்திருத்தங்களில் பால் சம்பந்தமான விவகாரங்கள் மையமாக விளக்குவதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய அறிவாற்றல், கொள்கை மற்றும் நிறுவனரீதியான முயற்சிக்கும் குறிப்பாக நிமால்கா பெர்ணான்டோ அவர்களுக்கும் கோலாலம்பூரிலுள்ள அவருடைய பணிப்பாளர் சபைக்கும், அவருடைய சிறியளவிலான அர்ப்பணிப்புள்ள அலுவலர்க்கும் நாம் கடன்பட்டுள்ளோம்.
இந்த மாலைப்பொழுதிலே நான், மனித உரிமை நெருக்கடி தொடர்பான சில குறிப்புகளையும் எமது சமூகங்களிலேயுள்ள நீதி முறைமையையும் பற்றிக் கூற விரும்பியுள்ளேன். "அஸ்மா" அவர்கள்
56

தமது தலைமையுரையில், பால் சமத்துவம் பற்றிய விவகாரங்களை எடுத்துரைப்பார் என எண்ணுகிறேன். எனது பொதுக் குறிப்புகள் குறிப்பான பிரச்சினைகளை எடுத்துக் காட்டச் சிறந்த பின்னணியாக விளங்கும்.
தலைவர் அவர்களே, கடந்த சில வருடங்களாக கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் நிகழும் மாறுநிலைகளினாலும் பங்களாதேஷ், பாகிஸ்தான் , நேபாளம் ஆகிய நாடுகளிலுள்ள சனநாயக இயக்கங்களாலும் நாம் பிரதான நெருக்கடிகளின் மத்தியில் உள்ளோம். கடந்த நான்கு தசாப்தங்களில் மனித உரிமைகள் இயக்கம் அடைந்த முக்கிய வெற்றிகள் எம்மை அச்சுறுத்துகின்றன. அண்மையில் அயோத்தியில் பள்ளிவாசல் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட நிகழ்வினாலும் அதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகப் பாகிஸ்தானிலும் லண்டனிலும் கோயில்கள் அழிக்கப்பட்டன. அதனால் நிகழ்ந்த மரணங்களும், அழிவுகளும் உபகண்டத்தைப் பாதிதுள்ளமை எமக்குக் கவுலை தந்துள்ளது. இந்நிகழ்ச்சிகள் இந்திய ஆட்சிமுறையை ஒழுங்குபடுத்திய முக்கியமான பெறுமானங்களில் மதச்சார்பின்மை, சமஷ்டி, சமத்துவம் போன்றவற்றிற்குப் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளன. மிக முக்கியமாக இவை இந்திய அரசின் சட்ட ஆட்சிக்கும் நீதித்துறையின் வினைத்திறனுக்கும் ஒழுக்கச் சட்டங்களுக்கும் சவாலாக விளங்குகின்றன. இங்கு குறிப்பிட்டுக் கூறப்படக் கூடிய அம்சமாக, இன, வெகுஜனவாதம் என்ற கருத்து வலியுறுத்தப்படுவதுடன், விலக்கிவைத்தல் சகிப்புத்தன்மையின்மை மற்றும் மதவெறி போன்றவற்றினால் இச் சித்தாந்தங்கள் புதிய பரம்பரையினரின் சமூகரீதியான சிந்தனைகளைக் கட்டுப்படுத்தும் என்றும் சமூக சக்திகளைப் பிரித்து வைக்கும் என்றும் அச்சுறுத்துகின்றது. இவை மனித உரிமை இயக்கங்களுக்கு ஆதரவு வழங்கும் அடிப்படையாகவும் விளங்கும். இவ் இயக்கம் பற்றிய மாயைத்தோற்றங்கள் எவையும் இல்லை. குறிப்பிட்ட சில பிரதேச எல்லைக்குள் உள்ளன எனவும் கூறலாம். அத்துடன் யாதாயினும் ஒரு நாட்டுக்கு இது குறிப்பானதுமன்று,
வெகுஜனச் சர்வாதிகாரச் சித்தாந்தங்கள் மற்றும் எமது நாடுகளில் காணப்படும் சமய இனத்துவ வேறுபாடுகள் என்பவற்றினை இம் மனித உரிமை இயக்கம் எதிரொலிக்கின்றன. நீங்கள் நடத்தும் மகாநாட்டில் இவையாவும் திட்டவட்டமாகப் பெண்ணிலைவாதச் சித்தாந்தத்துக்கு எதிரானவை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
57

Page 37
அத்துடன் விழுமிய மேம்பாட்டில் ஏதுவானதொரு ஈடுபாட்டைக் காட்டும் தென்னாசியப் பிராந்தியத்தில் ஒரு புதிய சிந்தனையை உருவாக்கும் எமது முயற்சிகளை இவை பாரதூரமாகப் பாதிக்கிறது
என்றும் கருத்திற் கொள்ள வேண்டும். ஆகவே இவ்வாறான . அபிவிருத்திகள் பிரதேசக் கூட்டமைப்புக்கான நிகழ்ச்சித் திட்டத்துக்கு அரசாங்க மற்றும் உள்ளூர் சமுதாய மட்டத்தில் அச்சுறுத்தலாக உள்ளன. பெண்களுக்கு வலுவூட்டும் உங்கள் மகாநாடு இவ்வாறான சித்தாந்தச் சவால்களுக்கு எவ்வாறு முகங்கொடுக்கலாம் என்பதைப் பரிசீலனை செய்ய வேண்டும். மனித உரிமை இயக்கமும் தனது முறையியல்களையும் அவற்றின் பயன்பாட்டையும் பற்றி மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.
சுற்றாடல் இயக்கம் வெற்றிகரமான முறையில் மேற்கொண்ட தொழில்நுட்பங்கள், ஆய்வு முறையியல் பயன்பாடு, நுணுக்கு ஆய்வு, நேருக்கு நேர் சந்திப்புப் போன்றவற்றை இந்த இயக்கமும் மேற்கொள்ள முடியுமா? மனித உரிமைகள் இயக்கமும் பெண்கள் இயக்கமும் பெண்ணிலை வாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஏற்ற நிறுவன ரீதியான ஆற்றல், வளப்பயன்பாடு என்பவற்றைப் பிரயோகிக்க (Upl ql - ujl DfT ?
இந்த விடயம் தொடர்பாக நாம் கவனத்திற் கொள்ள வேண்டிய இன்னொன்று உள்நாட்டில் முரண்பாடுகள், உள்நாட்டு யுத்தங்கள் நிலவும் போது பெண்கள் பாதிக்கப்படுதல் பற்றியதாகும். இவ்விடயம் தொடர்பாக பொஸ்னியாவிலும், முன்னைய யூகோசிலாவியாவிலும் நிகழ்ந்த அதிர்ச்சி தரும் கற்பழிப்புகள் பற்றிய அறிக்கைகள் மீதும் கவனம் செலுத்த வேண்டும். இங்கு ஐரோப்பிய சமூகத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர் குழுவினால் நடத்தப்பட்ட புலனாய்வுகளிலிருந்து உள்நாட்டில் பிணக்குகள் நிலவிய வேளையில் 20,000 கற்பழிப்புகள் நடந்துள்ளனவெனத் தெரிவிக்கப்படுகிறது. வேறு சில அறிக்கைகளில், இந் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட முகாம்களில், ஏழு வயதிற்குக் குறைந்தோர் உட்பட 50,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சேர்பிய இராணுவம் கற்பழிப்பை ஓர் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தியமை பற்றிக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது; இதற்கு இராணுவத் தளபதிகளே ஊக்கங் கொடுத்தனர். பொஸ்னியாவின் முஸ்லிம்கள் திட்டமிட்ட கற்பழிப்புப் பிரச்சாரத்துக்கு முக்கிய இலக்கானர்கள். முஸ்லிம்களும், குரோசியர்களும் இவ்வாறான எதிர்த்தாக்குதல்களை உதவியற்ற பெண்கள் மீது மேற்கொண்டார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
58

நடைமுறையிலுள்ள சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள் கற்பழிப்பை ஒரு போர்க் குற்றமாகக் கருதுவதில்லை. ஐரோப்பியப் பாராளுமன்றிலே, திட்டமிட்ட கற்பழிப்பு "கொலைகாரப் பைத்தியத்தனம்" 6 னக் கருதுவதுடன், இதனைப் போர்க்குற்றமாகவும் கருத வேண்டும் எனக் கோரியுள்ளது. சர்வதேசப் போர்க்குற்ற விசாரணை மன்றங்கள் இவ்வாறான குற்றங்களைப் பற்றிப் புலனாய்வு செய்ய உருவாக்கப்பட வேண்டுமெனவும் இத்தகைய அட்டூழியமான குற்றம் செய்தோரைக் கண்காணிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது. எமது சமூகங்களிற் கூட உள்நாட்டில் நடைபெறும் முரண்பாடுகளால், பெண்கள் முக்கியமாகப் பாதிக்கப்படுகின்றனர். உள்ளூரில், இடம்பெயர்ந்தோரில் பெண்களும் பிள்ளைகளும் பெரும்பான்மையாக உள்ளனர். அகதிமுகாம்களில் நலிவுற்று வாழும் இவர்கள் நோய்வாய்ப்படுதல், இடருறுதல், வன்முறைகள் பல்வேறு வகையான அவமானம் துன்புறுத்தல்களுக்கும் உள்ளாகின்றனர். பெண் வழக்கறிஞர்கள் தாமாகவே முன்வந்து, சர்வதேசச் சட்டம், அபிவிருத்தி அவற்றின் மீள்வகைப்படுத்தல் போன்ற விடயங்களிலும், மிகக் குறிப்பாக, சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்ட அபிவிருத்தியிலும் கவனமெடுத்தல் வேண்டும். உள்ளூரில் இடம்பெயர்ந்த ஆட்கள் பற்றிய விடயத்திலும் சர்வதேசச் சட்டம் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் உண்டு.
பெண்கள் பற்றிய சர்வதேசச் சட்டம் பற்றி ஆய்வு மேற்கொண்ட "றெபேக்கா குக்” (Rebeeca Cook) மூன்று பிரதான துறைகளை இனங்கண்டுள்ளார். அங்கெல்லாம் பெண்களின் உரிமைகள் நடைமுறைப்படுத்தப்படுவதில் தோல்வி கண்டுள்ளன. இவை:
(அ) பெண்களின் துணைநிலை இயல்பைச் சரியாகப் புரிந்து
கொள்ளாமை
(ஆ) மனித உரிமை மீறல் என்ற வகையில் பெண்களின் துணைநிலைப்
பண்பை அறியத் தவறுதல்,
(இ) பெண்களுக்கு எதிராகக் காட்டப்படும் வேறுபாடுகளைக் கண்டிக்க அரசு முற்படாதிருத்தல் போன்றவற்றை உள்ளடக்கும். மேலும் ஏனைய மனித உரிமைத் துஷ்பிரயோகங்களினின்றும் பெண்கள் உரிமை மீறல்களில் பண்பளவில் வேறுபாடுகள் உண்டென அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இவை ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையே அதிகாரத்தில் அமைப்பு ரீதியான சமநிலையின்மையுடன் கூடியவாறு இடம்பெற்றுள்ளது.
59

Page 38
அண்மைக்கால சர்வதேச ஆலோசனைக் கூட்டங்கள் பால் சமத்துவ இலக்குகளை மேம்படுத்தும் சர்வதேசச் சட்டங்களின் பயன்பாட்டினை அதிகரிக்கத் தேவையான புதிய உபாயங்களை எடுத்துக்காட்டி வந்துள்ளன. இது தொடர்பாகவுள்ள முக்கியமானதொரு உபாயமாக, மனித உரிமைக் குழுக்கள் நீதிமன்றங்கள் மற்றும் ஆணைக்குழுக்களிலே பெண்களும் இடம்பெற வேண்டும் என்பதாகும். இவை ஆணாதிக்கம் கொண்டவை. இந்த நிறுவனங்களிலே பெண்கள் அதிகரிக்கும் போது, பெண்களின் விடயங்களும் வெளியிடப்படும் என்பதோடு, பெண்களின் துணை நிலைமை இயல்புக்குரிய புதிய கோட்பாடுகளும் விருத்தியாகும். இது தொடர்பாக ஆர்வமூட்டக் கூடிய ஒரு முன்மொழிவாக அரச இறைமை முனைந்துருவாக்கப்படுதலாகும்.
புதிய கோட்பாட்டின் பரிணாமத்தின் தொடர்புடைய இன்னொரு முக்கிய பகுதி சர்வதேச மனித உரிமைக் கடமைப் பொறுப்பினை மீறும் அரச பொறுப்பாகும். இத்தகைய கோட்பாடுகள் சர்வதேச மனத உரிமைச் சட்டத்தின் ஏனைய பகுதிகளிலும் வெளியிடப்பட்டுள்ளன. தற்பொழுது பெண்களின் உரிமை மீறல் களுடனும் இணைந்துள்ளது. மனபித உரிமைத் துஷ்பிரயோகத்துக்குரிய அரச பொறுப்புக் கோட்பாடுகள், பெண்களுக்கு எதிராக நிகழ்ந்த தனிப்பட்ட வன்செயல்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்கத் தவறியமைக்கு அரசாங்கமே பொறுப்பு ஏற்க வேண்டும். இத்தகைய கோட்பாடுகளின் கீழ், பெண்களுக்கு எதிரான உள்நாட்டு வன்செயல்களை எதிர்த்து நிற்பதற்கான குறைந்த மட்டத் தற்காலிக அணுகுமுறைகள் போதாது. ஆனால் அதேயளவிலான ஊக்கம் மற்றும் வளங்களைப் பயன்படுத்தி ஆண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் பற்றிய விடயங்களைப் போல, பெண்களுக்கு, எதிரான குற் ற சி செயல களிலும் குற் ற வரியல் சட்டங் களை நடைமுறைப்படுத்துகிறது என எடுத்துக்காட்டுகிறது. அரச வளங்களைப் பயன்படுத்துவதிலும் பாகுபாடு காட்டப்படாமை பற்றிய எண்ணக்கருக்களும் உள்ளன. அவை உள்நாட்டு வன்செயல்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான ஏனைய வன்செயல்கள் பற்றிய பிரச்சினைகள் குற்றவியல் நீதி அமைப்பின் மூலம் கடுமையான முறையில் ஈடுபடுகின்றது என உறுதிப்படுத்தப்படுவதை ஊக்குவித்தல் வேண்டும்,
பெண்கள் இயக்கத்துள் பெண்களின் உரிமைகள் பற்றிய உள்ளடக்கம், இயல்பு பற்றிப் பெருமளவு விவாதங்கள் இருந்து வந்துள்ளன.
60

மற்றும் இந்தப் போதனைகள் வேறுபட்ட சமூக மற்றும் கலாசார நிலைமைகளில், சட்டபூர்வமான நிலையையும் ஏற்புடமையையும் பெறக்கூடும். மெல்போர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஹிலாரி சாள்ஸ்வேர்த் (Hilary Charlesworth) என்பவர் சட்டபூர்வமான உரிமைகள் பெண்களுக்கு 61வற்றையேனும் வழங்க முற்படுகின்றனவா 6ன்ற வினாவை முன்வைத்துள்ளார். பெண்களின் பின்தங்கிய நிலைமை எப்பொழுதும் அமைப்பு ரீதியான நீதியீனங்களாலும், தனியார் உரிமையை நிலைநாட்டுதலாலும் மாறுதல்களுக்கு உட்படவில்லை. சமூக, பொருளாதாரக் கஷ்டங்களை அனுபவிக்கும் சில நாடுகளிலும், வறியவர் மற்றும் பின்தங்கியோரைப் பாதிக்கும் அமைப்பு ரீதியான கொள்கைகளை மேற்கொள்ளும் நாடுகளிலும் உரிமை சார்ந்த உபாயங்களிலும் பார்க்க அடிப்படைத் தேவை சார்ந்த உபாயங்களே அவசியமாகும். ராதிகா குமாரசுவாமி அவர்கள் குறிப்பிடும் போது, "ஆசியாவிலேயுள்ள உரிமைப் போதனைகள் நலிவானவை. ஏனெனில் சலுகைகள் வழங்கப்படாத சுத்ந்திரமான பெண்களைக் கொண்டிருக்கும் வேளையில் ஆசியப் பெண்கள் தமது சமூகங்களிலுள்ள சாதி அல்லது இனக்குழுவுடன் பிணைக்கப் பட்டுள்ளனர். ஆகவே உரிமை சார்ந்த போதனைகள் பயன்பாடுடையதாக இருக்க வேண்டுமெனில், ஒரு சமூகத்திலுள்ள கலாசார மற்றும் மரபுகளில் காணப்படும் அதன் கட்டுப்பாடுகளும் சட்ட ரீதியான உபாயங்களும் பெண்களின் வலுவூட்டலுக்குத் தேவையான மரபுரீதியான மூலகங்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.
இரத்னா கபூர் அவர்களும் "வலுவூட்டும் கருவியாகச் சட்டரீதியான எழுத்தறிவு” என்ற தொகுதியிலுள்ள ஒரு கட்டுரையில், உரிமைகளும் சட்டங்களும் பெண்கள் இயக்கத்துடன் முழுமையாக ஈடுபடும்போது ஆழமான புரிந்துணர்வை அல்லது அடக்குமுறை தொடர்பிலான விசாரணையைத் தடுத்து விடுகிறது. இவை சட்டங்களினால், குறிப்பாகப் பொருளாதார உறவுகளினால் பேணப்படும்போது மக்களைச் சமமின்மைக்கு உள்ளாக்குகிறது. சீதனம் கோருதல் மற்றும் சீத்னத்துக்காகக் கொலை செய்தல் காரணமாகச் சீதனச் சட்டத்தில் குறிப்பான சீர்திருத்தங்கள் அவசியம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். கற்பழிப்புச் சட்டத்தில் திருத்தம், கற்பழிப்புத் தொடர்ந்தும் நிகழ்தல், அவற்றைப் பற்றிப் பெண்கள் எடுத்துக் கூறாமல் இருத்தல், தெரிவிக்கப்பட்ட வழக்குகளிலிருந்து விடுதலை. பெறுவோர் வீதம் என்பன உயர்வாகவுள்ளன. கற்பழிப்புச் சட்டத்தின் தோல்வி காரணமாகப் பாலியல் சம்பந்தமான விடயங்களை விசாரிக்கும்
61

Page 39
போது இயக்கம் தோல்வியடைகிறது எனவும் சமூக, பொருளாதார நிலைமைகளால் பெண்கள் உரிமைகளைப் பெறும் வாய்ப்ப்புகள் தடுக்கப்படுகின்றன எனவும் அவர் கூறுகிறார்.
முறைசார் உரிமைகள் பெண்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் எனக் கூறமுடியாது என்றும் அவர் தெரிவிக்கிறார். ஆகவே பெண்களை ஈடுபடுத்தும் வகையில் உரிமை பற்றிய பேச்சுகள் பரந்த அரசியற் போராட்டங்களுடன் இணைக்கப்பட வேண்டும் என்பதற்குச் சார்பாக அவருடைய வாதம் அமைந்துள்ளது. இந்தப் போதனைகளில் பல நன்மைகளைக் காணும் பலர் உளர். இது தொடர்பாக எடுத்துக் காட்டப்பட்ட இன்னொரு முக்கிய கருத்தாக, உரிமை பற்றிய போதனைகள் அரசியல் மற்றும் சமூகரீதியான குற்றங்களை உருவாக்கவும் அவற்றைப் புரியவுமான முக்கிய சொற் களஞ்சியத்தைத் தந்துதவுகிறது என்பதைக் குறிப்பிடலாம்.
உலகளாவிய ரீதியில் காணப்படும் மனித உரிமைகள் வடச்குத் தெற்கு அடிப்படையில் பெருமளவுக்குப் பிரிந்து செல்வதை நாம் அவதானிக்க வேண்டும். மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமிடையேயுள்ள தொடர்பில் முக்கியமாகவுள்ள பிரச்சினை அரசியல் நிபந்தனைகள் பற்றிய விவகாரங்களாகும். இதன்பொருள் என்னவெனில், அபிவிருத்திக்கான் உதவிகளைத் தொடர்தல், "நல்ல ஆட்சிமுறை" மற்றும் குடியியலுரிமையையும் அரசியல் உரிமைகளையும் காத்தல் போன்ற அரசியல் நிபந்தனைகளைக் கடைப்பிடித்தலிலேயே தங்கியுள்ளது எனலாம்.
ஐரோப்பியக் கழகம் மனித உரிமைகள், சனநாயகம் மற்றும் அபிவிருத்திக் கழகத்தின் 1991 கார்த்திகை 28 ஆம் திகதி வெளியிட்ட தீர்மானத்தில் மனித உரிமைகளை மதித்தல், சட்டவாட்சி, பயனுள்ள முறையில் அரசியல் நிறுவனங்கள் செயற்படுதல், சனநாயக ஆட்சியை அனுபவித்தல் என்பன சமநிலை அபிவிருத்திக்குரிய அடிப்படையாகும் எனக் கூறியுள்ளது. இது தொடர்பாக, மனித உரிமைகளைப் பாதுகாத்தலானது சமுதாயம், உறுப்பு நாடுகள் மற்றும் ஏனைய நாடுகளிடையே உறவுகளைப் பேணுதலிலே தங்கியுள்ளனதென உறுதிசெய்யப்பட்டுள்ளது. இத்தீர்மானத்தின் மூலம் மனித உரிமை மீறல்களைத் தொடர்ந்தும் கடைப்பிடித்தல் அல்லது சனநாயக செயல்முறைகளைச் சீர்குலைத்தல் என்னும் விடயங்களிலே, சமுதாயமும் உறுப்பு நாடுகளும் பொருத்தமான முறையில் செயற்பட வேண்டும்.
62

இவ்வாறான நடவடிக்கை இரகசியமான அல்லது பொதுசன அரசியல் முயற்சிகளையும் கூட்டுறவில் காணப்படும் உள்ளடக்கம் அல்லது வழிமுறைகளில் மாற்றங்களையும் அவசியமேற்படும் போது, கூட்டுறவைத் தடுத்து நிறுத்துதல் போன்றவற்றையும் உள்ளடக்கும். மனித உரிமைகளுக்கு மேலாக கழகத்தின் தீர்மானம் "நல்ல ஆட்சிமுறை" பற்றிய விவகாரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளது. இவை சனநாயக முறையிலமைந்த தீர்மானம் மேற்கொள்ளல், அரசாங்கத்தின் ஒழிவுமறைவற்ற தன்மை, நிதிசார்ந்த பொறுப்புகள், சட்டவாட்சிக்கு மதிப்பளித்தல், பத்திரிகைச் சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றையும் உள்ளடக்கும் வகையில் வரையறை செய்யப்பட்டுள்ளன. ஆணைக்குழுவின் தீர்மானமும் இராணுவச் செலவினங்கள் பற்றிய பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன், மேலதிக இராணுவச் செலவு அபிவிருத்தி நோக்கங்களுக்கும் பயன்படுத்தும் நிதியைத் திசை திருப்புவதுடன் உள்நாட்டில் ஒழுங்கு முறைக்கும் மனித உரிமை மறுப்புக்கும் பயன்படுகிறது. கனடாவின் வெளிநாட்டு விவகார, உள்நாட்டு வர்த்தகத்துக்குப் பொறுப்பான பொதுமக்கள் சபை நிலையியற் குழு 1987 வைகாசி மாதத்தில் மனித உரிமைகளில் காணப்படும் முன்னேற்றங்கள், அபிவிருத்தி உதவிக்கான முக்கிய அம்சமாக விளங்க வேண்டுமெனச் சிபார்சு செய்துள்ளது. ஆயினும் மனித உரிமை மீறல்கள் எங்கு அரசாங்கத்துக்கு அரசாங்கம் உதவி செய்வதைத் தடுக்கின்றதோ அங்கு மக்கள் சமுதாயங்களுக்கு உதவி கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். மேலும் அவசரகால மனிதாபிமான உதவிகள் ஒருபொழுதும் மறுக்கப்படக் கூடாது என்றும் எடுத்துக் கூறுகிறது.
வளர்முக நாடுகள் பெருமளவில் மனித உரிமைக்கும் உதவிக்கும் இடையே இருக்கக் கூடிய பிணைப்பை அத்தகைய நிபந்தனைகள் தமது தேசிய இறைமையைக் கட்டுப்படுத்துமென்ற அடிப்படையில் தடுத்து நிறுத்தியுள்ளன. அத்தகைய இடையீடுகளை அரசியல் ரீதியாக தெற்கின் மீது வடக்கு வகிக்கும் அரசியல் மற்றும் சித்தாந்தத் தலைமைத்துவத்தின் மூலம் மனித உரிமையைப் பெறும் முயற்சியாக விளங்குமெனக் காண்கின்றனர். அத்துடன் ஒழுக்கஞ் சார்ந்த நேசநிலை, மற்றும் கலாசார மேலாதிக்கம் சார்ந்த மனப்பாங்குகள் தெற்கு நாடுகள் பலவற்றில் மனித உரிமை சந்தர்ப்பங்களின் போது அதிகாரத் தன்மை உள்ளடங்கியிருப்பதைக் காணலாம். மறுபுறத்தில், மனித உரிமைக்குழுக்கள் இத்தகைய முயற்சிகளை வரவேற்றுள்ளன.
63

Page 40
இவை சர்வதேச மனித உரிமைத் தரங்களுடன், இணக்கப்பாடு காணுமென அவர்கள் நம்புகின்றனர். சர்வதேச இறைமை பற்றிய விவகாரங்கள் 6 வையும் மனித உரிமைகள், மனிதாபிமானப் பிரச்சினைகளைப் பொறுத்த மட்டில், சர்வதேச நோக்கில், ஒரு தடையாக இருக்கவில்லை என வாதிடுகின்றனர். மேலும் வளர்முக நாடுகள் மனித உரிமைச் சாதனங்களில் கையொப்பமிடுவோராக மாறும்பொழுது தமது உள்ளூர் மனித உரிமைப் பதிவேடுகள் சர்வதேச நுண்ணாய்வுக்கு உட்படுவதை ஏற்கின்றனர் எனவும் கூறுகின்றனர்.
1990 இல் பேட்ரம் ராம்சரன் கருத்துத் தெரிவிக்கையில் மனித உரிமை மீறல்களை அல்லது பொறுக்க முடியாத மனித துன்பங்களைப் பாதுகாக்க முற்படும் போது இறைமை துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்கிறார். இலங்கைக் குடியியல் உரிமை இயக்கம் 1991 இல் வெளியிட்ட ஒரு கூற்றின்படி "அரசுகளின் இறைமைக் கோட்பாடுகள், தனது குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பேணாவிட்டால் நீடித்து இருக்க முடியாது என்பது இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள ஒரு கூற்றாகும். தேசிய இறைமை பற்றிய எண்ணக்கரு இந்த வகையில், சர்வதேசப் பொறுப்பு என்ற எண்ணக்கருவுக்கு இடமளித்துள்ளது." மனித உரிமைகளையும் அபிவிருத்தியையும் இணைத்தல் என்னும் இப்பிரச்சினை, சர்வதேச சமூகம் வடக்குத் தெற்கு என்ற அடிப்படையில் மேலும் பிரிந்து போதலுக்கு அச்சுறுத்தலாகவுள்ளது.
பெண்கள் இயக்கமானது பெண்களின் உரிமைகளுக்கும் அபிவிருத்தி ஒத்துழைப்புக்குமிடையேயுள்ள தொடர்புகள் பற்றிய தெளிவான நிலையை எடுத்துக் காட்ட வேண்டியது அவசியமாகும். பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை நீக்குவதில், அபிவிருத்தி உதவிகள் சட்டரீதியாகவும் தெளிவாகவும் மரபுகளுடன் இணக்கம் காண்பதில் தொடர்பு காண வேண்டும். அல்லது பெண்களுக்கு எதிரான வன்செயல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை எடுக்குமா? நல்ல ஆட்சிமுறையொன்றின் தகுதிவிதிகள் உள்ளூர் வன்செயல் பற்றிய பிரச்சினைகளில் அவதானம் செலுத்தும் போது குற்றச் செயல் நீதியமைப்பின் பயன்பாட்டை உள்ளடக்கும் வகையில், மீளமைக்கப்பட வேண்டுமா? மனித உரிமைகளின் விஷேட வகை என்ற வகையில் பாகுபாட்டுக்கு எதிரான உரிமைகள் மீள எண்ணக்கருவாக்கம் செய்யக் கூடியவையா? இவை அபிவிருத்திக்
64

கூட்டுறவுடன் அபிவிருத்தியை உடனடியாக இணைக்க முடியுமா? அத்தகைய ஓர் அணுகு முறை பால் சமத்துவத்துவச் செயற்பாடுகளை முன்னேற்றுமா அல்லது பெண்ணிலைவாத இயக்கங்களின் நன்மதிப்பையும் சட்டபூர்வமான நிலையையும் சீர்குலைக்குமா?
அரசியல் நிபந்தனைப் பாடுகள் பற்றிய முழுப் பிரச்சினைகளும் வளர்ச்சியடைந்த நாடுகள் மேற்கு நாடுகளல்லாதவற்றில், நல்ல ஆட்சி முறையையும் மனித உரிமைகளையும் மேம்படுத்துதல் 61ன்ற போர்வையில் மேலைத்தேய விழுமியங்களைப் புகுத்த முற்படுகின்றன என்ற விமர்சனத்துக்கு உட்பட்டுள்ளன. மனித உரிமைகளின் சர்வதேசப் பண்புகள் என்ற விளைவு தெற்கிலுள்ள பல நாடுகளின் சவாலுக்கு மட்டுப்பட்டுள்ளன. "ஓங் சன் சூ கியி” என்பவர் பர்மியர் பற்றிய ஒரு புதிரில், எண்ணக் கருக்கள் ஏன் "உள்ளார்ந்த மாண்புகளை" மனிதனின் சம உரிமைகளை அங்கீகரிக்கின்றன என்றும் சகல ஆண்களும் காரணம் மற்றும் மனச் சாட்சிக்கு உரித்துடையவர் என்றும், அவை சகோதரத்துவம் பற்றிய உணர்வுக்கு இடமளிக்கிறது என்பதுடன் உள்ளூர்ப் பெறுமானங்களுக்குத் தீங்குதருவனவாகவும் இருக்கக் கூடும். அத்துடன் ஏதாவது ஒர் உரிமை உலகளாவிய மனித உரிமைப் பிரகடனத்தின் 30 வாசகத்தையும் உள்ளடக்கியதா என விளங்கிக் கொள்வதும் மிகக் கடினமானது. அவர்களுடைய எண்ணங்களும் நம்பிக்கைகளும் புவியியல் மற்றும் கலாசார எல்லைகளுக்கு அப்பால் தகுதியற்றன என மறுக்கப்பட்டால் பெளத்த மதம் வட இந்தியாவிலும் கிறிஸ்தவம் மத்திய கிழக்கின் ஒடுங்கிய பிரதேசத்திலும், இஸ்லாம் அரேபியாவிலும் மட்டும் நிலவியிருக்கும். கலாசாரச் சார்புகள் உலகளாவிய மனித உரிமைகள் தரத்திலிருந்து மாறுபட்டதாகவோ அல்லது தகுதியில் குறைந்தனவாகவோ இருக்க முடியாது. மனித உரிமை நிலைப்பாடுகள் சிலரால் மட்டும் விளங்கிக் கொள்ளக் கூடிய மொழியில் இடம் பெறுவதை நாம் ஏற்றுக் கொள்வதுடன் அவை ஆட்சியமைப்பின் பரந்த பிரிவுகளுக்குத் தகுதியற்றவை. மனித உரிமை இயக்கத்துக்கு ஏற்பட்ட தோல்வி, அது மதச்சார்பின்மை, சனநாயகம் மற்றும் பன்மைத்தன்மை வாய்ந்த பெறுமானங்களுக்கான ஆதரவை விரிவுபடுத்த முடியாமையால் ஏற்பட்டது எனலாம். முழுப்பரம்பரையினதும் சமூகரீதியான சிந்தனை இனவெகு ஜனவாதம், விலக்குதல் மற்றும் சகிப் புத் தன் மையின் மை போன்ற சித் தாந்தங்களுடன் ஆளுகைக்குட்பட்டுள்ளன.
65

Page 41
ஆகவே மனித உரிமை மற்றும் அபிவிருத்தி பற்றிய நிலைப்பாடுகளைத் தென்னாசிய நாடுகளின் மத, கலாசாரப் பின்னணிகளைக் கொண்டு வளம்படுத்த வேண்டிய தேவையுண்டு. அடிப்படை உரிமைகள், சுதந்திரம் என்பன பற்றிய பேச்சுகள் தனிநபர் மற்றும் அரசியலறிஞரின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டவை. அடிப்படை உரிமைகளுக்குரிய ஆதரவுகள், அவை தென்னாசிய நாடுகளிலுள்ள மக்களின் சமூக, சமய ரீதியிலான அனுபவங்களுக்கு மரபு ரீதியாகக் கொடுக்கப்பட்ட உள்ளடக்கம், பொருள் என்பவற்றின் நம்பிக்கை முறைமையுடன் இணைக்கப்படும் போதே விரிவுபடுத்தப்பட முடியும். உள்ளூருக்குரிய இத்தகைய சமய, கலாசார மரபுகள் நீதியின் சமூகஞ்சார்ந்த கருத்துக்களை வலியுறுத்துவதுடன், முரண்பாடுகளைத் தீர்க்கும் அணுகு முறைகள் இணக்கமுடையவையாகவும் விருப்பத்துக்குரியவையாகவும் இருத்தல் வேண்டும்.
குடும்பத்திற்குள் நிலவும் பரஸ்பரக் கடப்பாடுகள் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் வளர்ந்தோரின் தேவைக்கு ஏற்ற மனப்பாங்கையும் விழுமியங்களையும் பெற உதவுகின்றன. அவ்வாறான அணுகுமுறை சட்ட ரீதியாகக் கிடைக்கக் கூடியவற்றிலும் பார்க்கக் கூடுதலான சமூக உரிமைப் பாதுகாப்புக்கு வழிகோலும். இவை இவ்வாறான விவகாரங்களைப் பரவலாக அரசு என்பதிலும் பார்க்கத் தனிப்பட்டவர்" என்ற முறையிலேயே நோக்குகின்றன.
"தர்மம்" போன்ற ஏனைய கருத்துகளும் இந்து-பெளத்த நீதிக் கொள்கைக்கு மையமாகத் திகழ்கின்றன. ஒழுக்க எல்லைகளை நிருணயிக்கின்றன. இவை தமது குடிகளின் பற்றுறுதியைக் கட்டுப்படுத்துமானால், ஆட்சியாளர் இதனை மீறாமல் இருக்கலாம். இத்தகைய எண்ணக்கருக்களைக் கட்டியெழுப்பும் முயற்சிகள் சிறிதளவே எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஆட்சிமுறைக் கோட்பாடுகளையும் சனநாயகரீதியான பொறுப்புக் கூறலையும் இணைப்பதற்கு மொழி மற்றும் மரபுத் தொடர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. அவை இந்துபெளத்த மரபுகளின் பிரிவாக உள்ளன. இவ்வாறான முயற்சிகள் ஒரு புறத்திலே அரசியலமைப்புச் சார்ந்த பெறுமானங்களையும் உரிமைகளின் சொல்லாட்சித் திறத்துக்குமிடையே இணைப்பை ஏற்படுத்துவதற்கு அவசியமாகின்றன. மறுபுறத்திலே எண்ணக்கருக்கள், சிந்தனைகள், மற்றும் நிறுவனங்கள் போன்றவை நம்பிக்கை முறைமைக்கும் இஸ்லாத்தின் உலக நோக்குக்கும் மையமாகத் திகழ்கின்றன.
66

பால் சமத்துவம் பற்றிய உலகளாவிய கோட்பாடுகளும் இனக் குழுக்களின் குழு உரிமைகளும் தனிநபர் சட்டங்களிலே முரண்பாட்டுக்குரிய பகுதியாகவுள்ளன. இனக்குழுக்களும் சமயச் சிறுபான்மையினரும் தனியாள் சட்டங்களில் அரசு தலையிட முனையும் போது அவற்றைத் தடுக்க முயல்கின்றன. ஏனெனில் அத்தகைய அத்துமீறல்கள் அவர்களுடைய சொந்தத் தனிச்" க க்கு ஓர் அச்சுறுத்தலாக அமைந்து விடுகின்றன. மறுபுறத். 4) வேபூ படுத்தும் தனியாள் சட்டங்கள் பெண்களுக்கு எதிராகக் கட்டப்படும் வேறுபாடுகளைச் சர்வதேச ரீதியில் தடை செய்வதைத் தகர்த்து விடுகின்றன. இது பற்றிக் குமாரசுவாமி கருத்துத் தெரிவிக்கையில், தனியாள் சட்டம் மாற்றத்துக்கு அதிகம் இடம் கொடுப்பதில்லை. இது பெண்களுடைய வாழ்வில் முக்கியமான பகுதியை உள்ளடக்குகிறது (குடும்பம்) என்கிறார். மேலும் "குடும்பத்தில் சமத்துவம் நிலவவில்லையானால் சமூகத்தில் சமத்துவம் நிலவ முடியாது" என்றும் சுட்டிக் காட்டியுள்ளார். ஆகவே இந்த அறிஞர்கள் மனித உரிமை இயக்கத்தின் சமூக அடிப்படைகளை விரிவுபடுத்த மரபு வழிவந்த எண்ணக் கரு மற்றும் சிந்தனைகளின் பயன்பாடுபற்றி வினா எழுப்புகின்றனர். பெண்களின் அடக்குமுறைக்கு ஆதாரமாக அமைவது சமயமும் கலாசாரமுமேயென அவர்கள் எப்பொழுதும் வாதிடலாம்.
உங்களுடைய மகாநாடு மனித உரிமை நெருக்கடிகள் பற்றிப் பரவலாகக் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இது பாற் சமத்துவத்துக்கான செயற்பாடுகளை மறுவடிவமைப்பதும் , மீளவரையறை செய்ய வேண்டியதும் தவிர்க்க முடியாதது. உலகளாவிய மனித உரிமை இயங்கங்களிடையே பிரிவினை உண்டாதல், மதச்சார்பின்மை, சமூக சமத்துவத்தை வலியுறுத்தும். விழுமியங்களுக்கு சித்தாந்த ரீதியான உள்நாட்டுப் பிரச்சினைகளின் போது பெண்கள் தொடர்ந்தும் பாதிக்கப்படுதல், பரந்தளவிலான சந்தர்ப்பங்களை வழங்குதல் போன்றவற்றுக்கிடையே மகாநாட்டின் செயற்பாடுகளை முன்னேற்ற வேண்டிய தேவையுண்டு. உள்நாட்டு நிலைமையில் உரிமைப் போதனைகளின் பலத்தையும் மட்டுப்பாடுகளையும் மீண்டும் மதிப்பீடு செய்ய வேண்டிய தேவையுண்டு. இவை பரந்த அரசியல் போராட்டங்களுடன் இணைக்கப்பட வேண்டும் என்பதும் இன்றியமையாதது.
பெண்களுக்கு வலுவூட்டும் உள்நாட்டு நடவடிக்கைகளை அரச அமைப்புகளில் பரவலாகவும் முக்கியமாகவும் கவனஞ் செலுத்துவதன்
67

Page 42
மூலம் முன்னேற்றலாம் என நம்புவது ஆபத்தானது. இன்னொரு உள்நாட்டு நிறுவனத்தை அமைப்பதன் மூலம் துஷ்பிரேயாகம் என்னும் பிரச்சினையைத் தீர்க்கலாம் என நம்புவதும் ஆபத்தானது. இதற்கான உதாரணங்கள் பல எமது குறைகேள் அதிகாரியிடம் உள்ளன. இவர் மனித உரிமைகள் பற்றிய முறைப்பாடுகளைப் பெறவில்லை. தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தனது சட்ட உரிமைகளை மாற்றியுள்ளது. பெண்கள் ஆணைக்குழுவுக்கு எவ்விதமான சட்ட அதிகாரங்களும் இல்லை. மீயுயர் நீதிமன்றங்கள் தமது அரசியலமைப்புப் பற்றிய நியாயாதிக்கத்தை மனித உரிமை எல்லைகளை விரிவாக்கவன்றி அவற்றைக் கட்டுப்படுத்தவே பயன்படுத்துகின்றன. குடியியல் சமுதாய நிறுவனங்களுக்கு வலுவூட்டுதல் மூலம் உள்ளூர் நடவடிக்கைகள் பலப்படுத்தப்படுகின்றன. சட்ட ரீதியான மற்றும் அரசியல் கலாசாரமொன்றை உருவாக்குவதன் மூலம் பெண்களின் உரிமைக்கு ஆதரவு கிடைக்கும். பெண்கள் குழுக்கள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாவதை ஆவணப்படுத்தும் நிறுவன ஆற்றலையும் தொழில்சார் தேர்ச்சியையும் வலுப்படுத்தும் வழிகாட்டலில் ஈடுபடல், இத்தகைய பணிகளுக்கான ஆதரவின் அடிப்படைகளை விரிவாக்கல் போன்றவற்றை மனித உரிமைக் கல்வியின் மூலம் மேம்படுத்தலாம். ஆகவே இங்கு புதிய உபாயங்களும் புதிய அறிவாற்றல் மிக்கோரும் சட்டம் மற்றும் அரசியல் ஈடுபாடு கொண்டோரும் அவசியமாகின்றனர். பெண்களுக்கு வலுவூட்டும் பயன்பாடுமிக்க கருவியாகச் சட்டமும் இடம் பெற வேண்டும்.
68

மனித உரிமைக் கொள்கையின் இன, கலாசாரப் பரிமாணங்கள்
இந்த உரையின் நோக்கம், இனத்துவப் பிணக்குகள் தொடர்பான மனித உரிமைகள் சிலவற்றை எடுத்துக் காட்டுவதும் மனித உரிமைக் கொள்கையிலும் அபிவிருத்தி தொடர்பான கூட்டுகளில் அதன் பாதிப்புகள் பற்றியும் குறிப்பிடுதலாகும். இன முரண்பாடுகள் தென்னாசியாவின் பல பாகங்களில் தீவிரமான முறையில் மனித உரிமை மீறல்களுக்கு இடமளித்துள்ள. இவ்வாறான கடும்மீறல்கள், காணாமற் போதல், சித்திரவதை, நீதிக்கு அப்பாற்பட்ட கொலைகள். பக்கச் சார்பு, பாரபட்சமற்ற கைதுகள் போன்றவை தற்போதுள்ள இன முரண்பாடுகளுடன் தொடர்புபட்டுள்ளன.
இந்திய உபகண்டத்தின் அண்மைக்கால வரலாற்றிலே, இனக் கலவரங்கள் அதிகரித்து வருதல் ஒரு பொதுவான போக்காகவுள்ளது. பாகிஸ்தானில் நிகழ்ந்த “பாதன் பிகாரி" (Pathan-Bihari) மோதல்கள் தொடக்கம் புதுடில்லியில் நிகழ்ந்த சீக்கியருக்கு எதிரான கலவரம் வரை, குஜராத்தில் ஒதுக்கீட்டுக்கு எதிரான கிளர்ச்சி, இலங்கையில் சிங்கள-தமிழ் முரண்பாடுகள் முதலியவற்றைக் குறிப்பிடலாம். இந்த இனக் கலவரங்கள் மனித உயிரழிவுக்கும், சொத்துக்கள் அழிவுக்கும் வழிகோலியுள்ளன. இவ்வாறான கலவரங்களால் உண்டாகும் மனவெழுச்சி மற்றும் உளவியல் ரீதியான பாதிப்புகள் பெளதீக ரீதியான சேதங்களிலும் பார்க்க அழிவு தருபவை. பன்மைச் சமுதாயத்திலுள்ள சமுதாய உணர்வுகள் கொடூர நிகழ்வுகளால் அடிக்கடி சிதறடிக்கப்பட்டுள்ளன. குழுமுறையிலான வன்செயல்கள் மூலம் பீதியும் துன்பமும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.
அருமையான வளங்களுக்கும் பொருளாதாரச் சந்தர்ப்பங்களுக்கும் எழுந்த போட்டிகள் இனம், சாதி, சமயம், மொழி, பழங்குடிகள்
69

Page 43
61ன்ற அடிப்படையில் பிரிவினைகளைத் தோற்றுவிக்கின்றன. சிதைந்து போன அரசியல் நிறுவனங்கள் இன மற்றும் மதக்குழுக்களின் அதிகாரக் கோரிக்கைகளுக்கும் அவர்களுக்கு வளங்களைப் பகிர்ந்து கொடுத்தலுக்கும் போதியளவு இடங்கொடுக்கவில்லை. தேசிய ஒருமைப்பாட்டைப் பேணும் கொள்கைகளின் முன்னேற்றம் சிறுபான்மைக் குழுக்களின் மொழி மற்றும் கலாசார மரபுகளிலிருந்து தொடரப்பட்டன. இனக் குரோதங்கள் பிரிவினைவாத இயக்கங்களின் தோற்ற்த்துக்கு வழிகோலின. இவை அரசாங்கத்தின் சமூகத் தீர்ப்புகள் மற்றும் மனித உரிமைகள் என்னும் கருத்தில் ஒடுக்கு முறைகளுக்கு உள்ளாயின. இத்தகைய பிரச்சினைகள் மேலும் பல இலட்சக்கணக்கில் உள்நாட்டில் மக்கள் இடம்பெயர்வதாலும், உள்ளூர் முரண்பாடுகளால் அகதிகளாக்கப்பட்டமையாலும் சிக்கலடைந்துள்ளன.
ஆனால், அண்மைக் காலங்களிலே இனப் பிரச்சினைகளின் சர்வதேசப் போக்கு, அவற்றின் சிக்கல் வாய்ந்த தன்மை பற்றிய அறிவு, பொருத்தமான உபாயங்களை வகுத்துக் கொள்ள வேண்டிய தேவை, இன முரண்பாடுகளைத் தீர்க்கும் நிகழ்ச்சித் திட்டங்கள், அமைப்புகள் என்பன வளர்ந்து வருகின்றன. பல பல்லினக்குழு ஆட்சிமுறையில், சமஷ்டி முறையிலான பரவலாக்கம் அரசியலமைப்பிலும், அரசியல் ஒழுங்கிலும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இத்தகைய அரசியலமைப்பு மாதிரியின் வளர்ச்சியில், தனியான மற்றும் சமஷ்டி முயற்சியில் முரண்பாடுகள் தொடர்ந்தும் நிலவி வந்துள்ளன. இவை மத்தியமயப்படுத்தப்பட்ட மற்றும் பரவலாக்கப்பட்ட அமைப்புகளிலும் நிலவுகின்றன. இந்தியாவிலே, சமஷ்டி ஆட்சிமுறை மொழியடிப்படை மாநில ரீதியாக அமைந்துள்ள வேளையில், மலேசியாவில் அரசுகளின் கூட்டு உள்ளூர் ஆட்சியாளர் மற்றும் புதிய ஆள்புலங்களாலும் ஆளப்படுகிறது. இவற்றிக்கு விஷேட சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. முன் ைஎய நைஜீரிய மாதிரி சில வேறுபாடுகளுடன் கூடியதாகவுள்ளது. அரக்கரின் எல்லைகளை வகுப்பதில் குறிப்பிட்ட சில பிரதேச மற்றும் புராதனக் குழுக்கள் மீது ஒத்த தன்மைகள் உண்டு. வேறுபாடுகள் கொண்ட இன, புராதன மற்றும் பிரதேச ரீதியான குழுப்பகுப்புகளில் சமஷ்டி பற்றிய கருத்து வேறுபாடுகள் உள்ளன. இத்தகைய கருத்துகள் முரண்பாடுகளையும் பதட்ட நிலையையும் சமஷ்டி ஆட்சி நடைமுறையில், ஒவ்வொரு சமூகத்திலும் கொண்டிருக்கின்றன. இவ்வாறான சமூகங்கள் ஒவ்வொன்றிலும் இத்தகைய ஆட்சிமுடிவுகளின் சமஷ்டிப் பண்புகளைப் பலப்படுத்தும் முகமாக அமைப்பு ரீதியான மீள் ஒழுங்கு செய்தல் அவசியமாகும்.
70

இத்தகைய முயற்சிகள், மத்திய-மாநில அரசு உறவுகளை கல்வி, கலாசாரக் கொள்கை, பொலிஸ் அதிகாரம், வளங்களின் பயன்பாடும் மீள் பகிர்ந்தளிப்பும், அவசரகால மற்றும் ஏனைய அதிகாரங்களைப் பொறுத்து மீள வரையறை செய்ய வேண்டும். இவ்வாறான முயற்சிகளும், இனக்குழுக்களிடையே சமமாக அதிகாரங்களைப் பகிர்தல் தொடர்பாகவுள்ள அடிப்படை விவகாரங்கள் வெளிவருவதால் உருவாகும் பிரச்சினைகள், இப் பிரச்சினைகளை வெளிப்படையாக எடுத்துக் கூறுவதில் உள்ள தோல்விகள், இன மற்றும் உபதேசியக் குழுக்களைப் பாதிக்காதவாறு பிரிவினைவாதிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளது. பரவலாக்கத்தில் சமஷ்டி மற்றும் ஓரளவு சமஷ்டி மாதிரிகள் பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், இலங்கை போன்று சச்சரவு நிறைந்த சமூகங்களுக்குப் பொறுத்தப்பாடுடையது. இந்நாடுகள் அண்மையிலே புதிய அரசியலமைப்புகளை உருவாக்கியுள்ளன அல்லது நிகழ்கால அரசியலமைப்பின் சட்டகங்களை மீண்டும் வரையறை செய்யும் நிலையிலுள்ளன.
சுயநிர்ணயம் பற்றிய பிரச்சினை, இனக் குழுக்களினால், ஆயுதப் போராட்டங்களின் போது அல்லது அகிம்சை முறை அரசியல் போராட்டங்களின் போது உறுதியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இவை மிகவும் பிரச்சினைக்குரியவை. நாட்டின் அரசுகள் இவ்வாறான சந்தர்ப்பங்களிலேயே பெரிதும் எதிர்ப்பைத் தெரிவித்ததுடன், இனரீதியான கோரிக்கைகளை அடக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டன. இவற்றின் விளைவு பிரிவினையில் அல்லது தனியாகப் பிரிந்து போகையில் முடியும் எனக் கருதுகின்றனர்.
இன முரண்பாடுகளிலுள்ள இன்னொரு முக்கிய அம்சம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரச் சந்தர்ப்பங்கள் போன்ற வாய்ப்புகளில் நிலவும் வேறுபாடுகள் பற்றியதாகும். இந்தக் கொள்கைகள் எப்பொழுதும் உரிமைகளை இழக்கச் செய்யும் வேளையில் பதிலாக சமூக நீதிசார்ந்த போட்டிகளுக்கு வித்திடுகின்றன. இந்தியா மிகவும் சிக்கல் வாய்ந்த கட்டமைப்புடைய சமூகங்களைக் கொண்ட நாடு. இது மிகவும் நலிந்த, பின்தங்கிய சிறுபான்மையினருக்கும் பழங்குடிகளுக்கும் சலுகை வழங்கும் கட்டாயக் கொள்கையை அரசியல் அமைப்பினுாடாக வழங்கியுள்ளது. கொள்கை வகுப்போரும் நீதிபதிகளும் அத்தகைய கொள்கைகளுக்கான அரசியல் அமைப்பு ரீதியான எல்லைகளை வரையறை செய்வதில் பெரும் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இத்தகைய விவகாரங்களில் வரலாற்றுரீதியாக
71

Page 44
ஒடுக்கப்பட்ட சாதி மற்றும் புராதன குழுக்களுக்கும் பொருளாதார, அடிப்படையில் பின்தங்கிய வகுப்பினருக்கும் இடையே சமநிலை பேணப்படுவதாகத் தோன்றுகின்றன. சலுகைக் கொள்கைகள் அரசியல் ரீதியாக முன்னணி வகிக்கும் பெரும்பான்மைக்குச் சாதகமாகவுள்ளது. மலேசியாவிலுள்ள புதிய பொருளாதாரக் கொள்கை, பண்பளவில் வேறுபட்ட சமூக-அரசியல் விவகாரங்களை விகிதாசார அடிப்படையிலான சலுகைக் கொள்கைகளின் சட்ட ரீதியான எல்லைகளுடன் தொடர்புபடுத்திக் காட்டுகின்றன.
சர்வதேச சமுதாயம், சிறுபான்மையினரின் பாதுகாப்புக் கருதி புதிய கோட்பாடுகளுக்கும் எண்ணக்கருத்துக்களுக்கும் ஏற்புடைமையைப் பெறும் என்பதுடன் முரண்பாடுகளுக்கும் சமாதானமான தீர்வுகளை வழங்கக் கூடிய நிலையிலும் உள்ளன. இனத் தனித்துவம், இனத்தின் தேவைகள், இனக்குழுக்களிடையேயுள்ள அதிகாரச் சமநிலையில் ஏற்படும் பெயர்ச்சிகள் என்பவற்றால் உண்டாகும் மாற்றங்கள் அநேகமான அமைப் பொழுங்குகள் திரவத் தன்மையினவாகவும் இருக்குமென வலியுறுதப்பட வேண்டும். ஆகவே தொடர்ந்தும் இவ்வொழுங்கமைப்புகளைப் புதுப்பித்தல் மற்றும் புனரமைப்புச் செய்தல் புதிய சவால்களுக்கும் கோரிக்கைகளுக்கும் பொறுப்புக் கூறும் வகையில் இருத்தல் வேண்டும். இன முரண்பாடுகள் மனித உரிமைகள், சமூகநீதி என்பவற்றோடு தொடர்புடைய அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியுள்ளது. இவற்றினை மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுகளின் சமுதாயக் கொள்கையின் அமைப்புக்குள் நின்று எடுத்துக் காட்டப்பட வேண்டிய தேவையுண்டு.
முதலாவதாக, ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் சிறுபான்மையினர் பற்றிய ஒரு பிரகடனத்தை அண்மையில் மேற்கொண்டது. இப் பிரகடனம் இன, கலாசார, தொழில்கார்ந்த தனித்துவத்துக்கு எவ்வித வேறுபாடுகளுமின்றி மதிப்பளிக்க வேண்டும்; மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது, ஒரு இன, மொழிச் சிறுபான்மையைச் சார்ந்த ஒரு நபரின் உரிமையை அவரது மனித உரிமையையும் அடிப்படைச் சுதந்திரத்தையும் பூரணமாக அனுபவிப்பதற்கு எதிராக அச்சமூட்டினால் அவரைப் பாதுகாக்க வேண்டுமெனவும் எடுத்துக் காட்டுகிறது. இப்பிரகடனத்தை முன்னெடுத்துச் செல்லும்போது, சிறுபான்மையினர் தேசிய மற்றும் பிரதேச மட்ட அரசியல் ஒழுங்கமைப்பில் சிரத்தையுடன் பங்குகொள்கின்றனர் を「60s
72

உறுதிப்படுத்த அரசை ஊக்குவிக்க வேண்டும். ஆகவே இந்த ஆணைக்குழு உதவிபெறும் நாடுகளின் தேசியக் கொள்கைகளுடன் நிகழ்ச்சித் திட்டங்களும், சிறுபான்மையினரும் நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றங்களில் பூரணமாகப் பங்குகொள்ளக் கூடியவாறு திட்டமிடப்பட்டு அமுல்படுத்தப்படுகின்றன என உறுதிசெய்ய வேண்டும். அபிவிருத்திக் கூட்டமைப்பின் நிகழ்ச்சித் திட்டங்கள் இனக்குழுக்களினதும் உள்ளூர் மக்களினதும், வழமையான வாழ்விடங்களிலிருந்து அல்லது அவர்கள் முன்மை வகிக்கும் சனத்தொகைச் சமநிலையில் குழப்பம் ஏற்படுத்துவதன் மூலம் அவர்களைக் கட்டாயப்படுத்தி இடம்பெயரச் செய்யவில்லை எனவும் உறுதிசெய்யத்தக்கவாறு மீளாய்வு செய்யப்பட வேண்டும். அபிவிருத்தி உதவி நிகழ்ச்சித் திட்டங்கள் உள்நாட்டு யுத்தங்களினால் ஏற்படும் அச்சத்தையும் உள்ளக முரண்பாடுகளைக் குறைக்கவும் புனர்வாழ்வு, புனரமைப்பு நிகழ்ச்சித் திட்டங்களுக்கு உதவி செய்வதன் மூலமும், அவற்றை ஊக்குவிப்பதன் மூலமும் முயற்சிகள் மேற்கொள்ளலாம். இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இவை மனவெழுச்சி மற்றும் உளவியல் ரீதியான ஆதரவை வழங்கும் எனக் கூறலாம். அபிவிருத்தி உதவி நிகழ்ச்சித் திட்டங்களும் பிரதேசச் சமநிலையின்மை பற்றிய விவகாரங்களை எடுத்துக்காட்டி , இனச் சிறுபான்மையினர் முதன்மை வகிக்கும் பிரதேசங்களில் வெளிப்புற அபிவிருத்திசார் உதவிகளை சமமாகப் பகிரவும் உறுதி செய்ய வேண்டும்.
இரண்டாவதாக மனித உரிமைக் கொள்கைகளும் அபிவிருத்திசார் உதவிகளும் முரண்பாடுகளுக்கு அடிப்படையாகவுள்ள காரணங்களை எடுத்துக்காட்ட உதவக் கூடியதாக இருத்தல் வேண்டும். இவை இன முரண்பாடுகளின் தோற்றத்துக்கும், கல்வி நிகழ்ச்சித் திட்டத்துக்குமுரிய சமூக மற்றும் கருத்தியல் தோற்றப்பாடுகள், பொருளாதார ஆய்வுகளையும் உள்ளடக்குதல் வேண்டும். இவை பல்லின சமுதாயங்களில் சகிப்புத்தன்மை பரஸ்பர மதிப்பு ஆகிய மனப்பான்மைகளை முன்னேற்றும் நோக்குடையதாக இருத்தல் வேண்டும். இவ்வாறான நிகழ்ச்சித் திட்டங்கள் பாடசாலைகளிலும், பல்கலைக்கழகங்களிலுமுள்ள கல்வி நிகழ்ச்சித் திட்டங்களையும், பரந்தளவில் நெறிப்படுத்தப்பட்ட தொடர்பு சாதன நிகழ்ச்சித் திட்டங்களையும் உள்ளடக்க வேண்டும்.
நிகழ்ச்சித் திட்டங்கள் அரசியலமைப்புச் சீர்திருத்தத்திற்கு உதவக் கூடியவாறு தகவல் மற்றும் தொழில்நுட்ப உதவிகளைப்
73

Page 45
பகிர்ந்துகொள்ளல், மொழி ஆணைக்குழு, சிறுபான்மையினர் ஆணைக்குழு, தன்னாதிக்க அல்லது பரவலாக்க ஒழுங்கமைப்புகளை வரைதல் போதிய புதிய அமைப்புகளை உருவாக்கல் ஆகியவற்றையும் உள்ளடக்கும். இவை шпөйо இனக்குழுக்களின் அரசியல் ரீதியான நாட்டங்களுக்கும் சமூக-பொருளாதாரத் தேவைகளுக்கும் விடை தருவதாக விளங்கும். அவ்வாறான நிகழ்ச்சித் திட்டங்கள் நாட்டிலேயுள்ள இனப் பிரச்சினைகளைச் சிறப்பாக எடுத்துக்காட்டும் நீதிமுறை, சமூக நிறுவனங்களுக்கு வலுவூட்டல், இவை குழுக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதில் ஈடுபாடு காட்ட சமூக நிறுவனங்களுக்கு வலுவூட்டல், கல்வி, மனித உரிமைகள் துஷ்பிரயோகங்களைப் பதிவு செய்தல், இனங்களுக்கிடையேயான நீதி, மற்றும் சமத்துவப் பிரச்சினை தொடர்பான தகவல்களைப் பரப்புதல் போன்ற செயல்களில் ஈடுபடும் அரச முறைசார் நிறுவனங்களைப் பலப்படுத்தலும் உள்ளடக்கும்.
மூன்றாவதாக, முரண்பாடுகளுக்கான தீர்வு முரண்பாடுகளைத் தவிர்த்தல் பற்றிய முக்கிய விடயம் பற்றியதாகும். சர்வதேச சமுதாயம், உள்ளூர் முரண்பாடுகளைத் தீர்ப்பதில் தீவிரமாகச் செயற்பட வேண்டிய தேவையுண்டு. இவை பல நாட்டின் அரசுகளை சீர்குலைத்துள்ளன; பிரதேச உறுதிப்பாட்டுக்கு அச்சமூட்டுவனவாயும் இருந்துள்ளன. இவ்வாறான சர்வதேச அவதானங்கள், அரச மற்றும் அரச மட்டங்கனில் நிலவும் முரண்பாட்டுத் தீர்வுகளுக்கான உள்நாட்டு அரசியல் செயல்முறைகளைச் சார்ந்து பலப்படுத்தப்பட வேண்டும். அவ்வேளையில், உள்நாட்டுச் செயல்முறைகள் செயலிழந்தவையாகக் காணப்பட்டால், சர்வதேச சமுதாயம் போராடும் குழுக்கள் மத்தியில், அரசியல் இணைப்புகளை ஏற்படுத்தக்கூடிய நிலையில் இருத்தல் வேண்டும். அத்தகைய குழுக்களை நிலைத்து நிற்கக் கூடிய தீர்வுகளை நோக்கி உறுதியாகப் பணியாற்ற ஊக்குவித்தல் வேண்டும்.
நான்காவதாக, சமுதாயமும் அங்கத்துவ அரசுகளும், வேற்றுமை சம்பந்தமான கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும். இவை மனித இனத்தை நேசிக்கும் பண்புள்ள சில தனியார் நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட வேண்டும். வேறாக்கற் கொள்கையின் குறிக்கோள் பன்மைவாதம், சம சந்தர்ப்பம், போன்றவற்றை மேம்படுத்துவதாயும் இன, பால் அடிப்படையில் காட்டப்படும் வேறுபாடுகளுக்கு முடிவு கட்டுவதாகவும் இருத்தல் வேண்டும். இத்தகைய கொள்கை பன்மைச்
74

சமுதாயங்களைப் பலப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டங்களை உருவாக்க ஊக்கமளித்தல் வேண்டும். மற்றும் சிறுபான்மையினருக்கும் வரலாற்று ரீதியாகப் பின்தங்கிய குழுக்களுக்கும் கிடைக்கக்கூடிய சந்தர்ப்பங்களை அதிகரிக்கவும் வேண்டும். அபிவிருத்திக் கூட்டமைப்பின் பங்காளிகள் முகாமைத்துவ வேறாக்கத்தை கடைப் பிடிக்கவும் நிறுவன உத்தியோகத்தர்உதவியைப் பெறவும் அவற்றை அமுல்படுத்தவும் உற்சாகமூட்டப்படுதல் வேண்டும். பங்காளிகள் வேறாக்கம் பற்றிய தமது இலக்குகளைத் தெளிவாக அறிய, இவ் வேறாக்கத்தை எய்துவதற்கு உள்ள தடைகளை அறிய வேண்டிய தேவையுண்டு. வேறாக்கம் பற்றிய கவனங்கள், இனத்துவம், பால் மற்றும் தேசிய இனம் என்பவற்றையும் உள்ளடக்க வேண்டும். நீடித்து நிலவக் கூடிய உபாயங்கள் குறிப்பிட்ட சமூகங்களின் தேவைகளுக்கும் சவால்களுக்கும் ஏற்பச் சீர்திருத்தியமைக்கப்பட வேண்டும்.
ஐந்தாவதாக, சமுதாயமும் அங்கத்துவ அரசுகளும் கொள்கையைப் பேண முற்படும் போது அங்கு உறுதிப்பாடும் நன்மதிப்பும் அவசியமாகும். நன்மதிப்பு என்பது தெற்கிலுள்ள நாடுகளின் தேசிய எல்லைக்குள் வாழ்கின்ற அகதிகள், குடிவந்த தொழிலாளர்கள், மற்றும் அந்நாட்டிற்குச் சொந்தமான கீழ் வகுப்பினர் ஆகியோர் வேறுபடுத்தலுக்கும், பக்கச் சார்பாக நடத்துவதற்கும் உட்படக்கூடாது என்பதை உறுதிசெய்யும் வடக்கின் ஆற்றலிலேயே தங்கியிருக்கிறது. மனித உரிமைப் பிரச்சினைகளின் உள்நாட்டு நடைமுறைக்கும் சர்வதேசக் கொள்கைக்குமிடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் காணப்படுமானால் அங்கு நன்மதிப்பு நிலவமுடியாது. உறுதிப்பாடு பற்றிய பிரச்சினைகள், தண்டனை நடவடிக்கைகளுக்கு உள்ளாகும் நாடுகளைத் தெரிவு செய்தல் தொடர்பாகவே எழக்கூடும். அபிவிருத்தி உதவிகளை நிறுத்தும் அல்லது ஒத்திவைக்கும் தீர்மானங்கள் மனித உரிமைகளைக் கருத்திற் கொண்டு எடுக்கப்பட்டால், அல்லது அரசியல் புவியியல் காரணிகள் முக்கியமாக இருந்தால், உதவி பெறும் நாட்டினால் கடைப்பிடிக்கப்படும் பொருளாதார மாதிரியும் நன்கொடை வழங்கும் நாட்டின் உள்நாட்டு அரசியலும் அத்தகைய தீர்மானங்கள் மீது செல்வாக்குச் செலுத்தக் கூடும்.
2 = 3 ஆனி, 1993
75

Page 46
சனநாயகத்தை வலுப்படுத்தல் :
பிரதிநிதித்துவத் தேர்தல் முறை சார்ந்த சனநாயகத்துக்கு அப்பால்...!
சட்டத்தரணிகளுக்கான பங்கு ஒன்று உள்ளதா?
கடந்த சில ஆண்டுகளாக தென் ஆசியா பாரிய அரசியல் மாற்றங்களைக் கண்டுள்ளது. பாகிஸ்தான் சனாதிபதி ஸியாவுல் ஹக் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து 1988 இல் அங்கு தேர்தல் நடாத்தப்பட்டு மக்கள் அரசாங்கம் பதவியில் அமர்த்தப்பட்டது. பங்களாதேஷில் சனநாயக இயக்கங்கள் ஒரு காபந்து அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டு வந்தன. அவ்வரசாங்கம் சுதந்திரமான, நீதியான தேர்தலை நடத்தியது. இத் தேர்தல்கள் இராணுவ ஆட்சிக்குப் பதிலாக சனாநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கங்களை ஆட்சிக்குக் கொண்டு வந்தன. இது பங்களாதேஷில் பாராளுமன்றச் சனநாயகத்துக்கு வழிவிட்டுள்ளது. நேபாளத்திலும் கூட குறிப்பிடக்கூடிய அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதன் காரணமாக ஓர் அரசியல் யாப்பு முடியாட்சியின் கீழ் பல்கட்சி ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. தென் ஆசியப் பிராந்தியத்தில் நடுநாயகமான இந்தியா சமய அடிப்படையும் மற்றும் பிரிவினைவாத வன்முறைகள் உருவாக்கிய சவால்களுக்கு முகம்கொடுத்து தனது சமஷ்டி அரசியலமைப்பையும், பிரதிநிதித்துவ அமைப்புகளையும் காத்து வந்துள்ளது. இலங்கையிலும் கூட இரண்டு ஆயுத கிளர்ச்சிகள் மற்றும் சிவில் சமூகத்தின் இராணுவப் மயப்படுத்தல் ஆகியவற்கிடையில் பல்கட்சி தேர்தல்களை நடாத்தி பிரதான அரசியல் ஆட்சிகளுக்கிடையே அதிகாரமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆசிய பிரதேசமானது இவ்வாறு அசாதாரணமான புவியியல், அரசியல், சமூகப் பொருளாதார பல்லினத் தன்மைகளைக் காட்டி நிற்கிறது. இவ்வாறான
76

பல்லினத் தன்மை மற்றும் சிக்கல்களுக்கு மத்தியில் இப்பிரதேசமான 5i பிரதிநிதித்துவ அமைப்புகளுக்கான தேர்தல்கள், அடிப்படை உரிமைகள் மற்றும் சனநாயக சுதந்திரங்கள் ஆகியவற்றுக்குத் தம்மை சிந்தாந்த ரீதியாக அர்ப்பணித்துள்ள மிகப் பெரிய சனத்தொகையைக் கொண்டுள்ளது. எனவே அரசியலமைப்புப் பரிசோதனைகள், நிறுவனரீதியான மீள் மதிப்பீடுகள் மற்றும் புத்தாக்கங்களின் அடிப்படையில் இப்பிரதேசமானது குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. அரசியலமைப்பு வாதம், சனநாயக மாறுநிலை, அரசியல் பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் இங்கு அரசியல் மற்றும் அறிவுநிலை விவாதங்களின் மையப் பொருளாக அமைந்துள்ளது. நேபாளம், மக்கள் இறைமை, பல்கட்சி அமைப்பு மற்றும் அமுல்படுத்தக் கூடிய அடிப்படை உரிமைகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு புதிய அரசியலமைப்பை ஏற்படுத்தியுள்ளது. பங்களாதேஷ் ஒரு சனாதிபதி முறையிலிருந்து பாராளுமன்ற முறைமைக்குத் தமது அரசியல் யாப் பை மாற்றியமைத்துள்ளது. எனினும் சனநாயக அமைப்புகளை நிலைப்படுத்திப் பேணுவதில் அரசாங்கத்துக்கும் எதிர்கட்சிக்கும் இருக்க வேண்டிய குறைந்தபட்சக் கரிசனை வேகமாகத் தேய்வடைந்து வருகிறது. இந்தியாவில் அரசின் மதச்சார்பற்ற அடித்தளங்களும், யாப்பின் சமஷ்டிப் பண்பும் அடிப்படைவாதிகளும் பிரிவினைவாதிகளும் விடுத்த சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளன. பாகிஸ்தான் தனது வெஸ்ட்மினிஸ்டர் பாணியிலான அரசியல் யாப்புச் சட்டத்துக்கும் பெரிதும் மத்தியப்படுத்தப்பட்ட சனாதிபதி முறைமைக்கும் இடையில் இணக்கம் காணத் தடுமாறிக் கொண்டிருக்கின்றது.
இலங்கையானது இன்னுமொரு புதிய அரசியல் யாப்புப் பரிசோதனையின் நுழைவாயிலில் நின்று கொண்டிருக்கிறது. தற்போதைய அரசியலமைப்பைக் கைவிட்டு மாற்றுவழி தேடவேண்டியுள்ளது. இப்பரிசோதனையானது இப்போதுள்ள உரிமை மனுவையும் சனநாயகப் பரிகாரங்களையும் வலுப்படுத்தி ஒரு சமஷ்டி ரீதியான அதிகாரப் பகிர்வை நிறுவனப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.
இக் கட்டுரையின் நோக்கம் சனநாக மாறுநிலை மற்றும் அரசியல், சனநாயக பொறுப்புக் கூறும் அமைப்புகளை வலுப்படுத்தல் போன்ற செயன் முறைகளில் சட் டத் தரணிகளின் பங் கினை மையப்படுத்துவதாகும். தேர்தல் செயன்முறையின் கண்ணியத்தை
77

Page 47
உறுதிப்படுத்துவதிலும், வாக்குரிமையின் புனிதத்தன்மையைப் பாதுகாப்பதிலும் சட்டத்தொழிலின் பங்கினை இக்கட்டுரையானது ஆய்வுக்கு உட்படுத்துகிறது. சனநாயக ஆட்சி வடிவங்கள் மக்களின் விருப்பம் என்ற அடிப்படையிலிருந்தே தமது சட்டபூர்வ தன்மையைப் பெறுகின்றன. இதன் மறுபுறம் தேர்தல் சட்டங்களும், நடைமுறைகளும் தேர்தல்கள் மக்களின் இந்த விருப்பத்தை உண்மையாகவே வெளிப்படுத்தும் வகையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனவா என்பதில் தங்கியுள்ளது. நம்முடைய நாடுகள் பலவற்றில் சனநாயகம் என்பது காலத்துக்குக் காலம் நடைபெறும் தேர்தல்களில் பங்குபற்றும் வாய்ப்புகளை மட்டுமே அளிக்கிறது. தேசிய ரீதியாகத் தீர்மானம் மேற்கொள்ளும் நடைமுறைகளில் மக்கள் தொடர்ச்சியாகப் பங்குபற்றக் கூடிய அமைப்புகள் இந்நாடுகளில் மிகவும் குறைவாகும். எனவே இக்கட்டுரையானது சட்டவாக்க நடைமுறைகளில் மக்கள் பங்குபற்றுவதிலுள்ள பிரச்சினைகளைப் பற்றியும் நிர்வாக துஷ்பிரயோகங்களை மீளாய்வு செய்வதிலும் கவனஞ் செலுத்தும். இறுதியாக அரசியல் பல்லினத்தன்மையை (Political Pluralism)அதாவது சிவில் சமூகத்தையும் அரசுக்கு வெளியே இருக்கக்கூடிய கூட்டு வாழ்க்கைக்கான அமைப்புகளையும் வலுப்படுத்துவதில் சட்டத்தரணிகள் ஆற்றக்கூடிய பங்குபற்றியும் ஆராய வேண்டும்.
தேர்தல் செயன்முறையின் கண்ணியம்
அரசு சாரா "சார்க் (SAARC) அவதானிகள் குழுவினர் பின்வருமாறு குறிப்பிட்டனர்: "அரசியல் பங்குபற்றலின் மிகவும் வெளிப்படையான குறியீடு தேர்தல்களாகும். பயனுறுதி மிக்க பங்குபற்றலை அடைவதற்கு நேர்மையும், சுதந்திரமும், நீதியும் மிக்க தேர்தல்கள் காலந்தவறாமல் நடத்தப்படல் வேண்டும்" வாக்குரிமைதான் மக்களின் இறைமையின் பிரிக்க முடியாத பகுதி என சில ஆசிய யாப்புகளும், சில அரசியல் ஆய்வாளர்களும் கருதுகின்றனர். அத்துடன் இது அடிப்படை மனித உரிமையாகும். ஏனைய உரிமைகள் (குடியியல், அரசியல் உரிமைகள்) இதன் மீதே கட்டி எழுப்பப்படுகின்றன.
ஒரு சுதந்திரமான, நீதியான தேர்தலை மதிப்பீடு செய்வதற்கான பிரமாணங்கள் நடைமுறை ரீதியானது உயிர்நிலையானது. நடைமுறைக் காரணிகள் என்பவை வாக்களிக்கும் முறை, எண்ணுதல் மற்றும் தேர்தல் முடிவுகளை வெளிப்படுத்தல் ஆகியவைகளாகும். உயிர்நிலைக் காரணிகள் என்பவை தேர்தல் நடத்தப்படும் சூழ்நிலை, நியமனங்களின்
78

போட்டித் தன்மையும், தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் நியாயம், வாக்களிக்கும் உரிமையின் நிர்ணயம், தேர்தல் நிர்வாகத்தின் நடுநிலை ஆகியவற்றைக் குறிக்கும். சட்டத்தரணிகள் தேர்தல் தொடர்பான சட்டங்களின் அமைப்பினும், செயன்முறைச் சுதந்திரமும் நீதியானதாகவும் இருக்க வேண்டும் என்பதிலும் தீவிரமாக செயற்பட்டுள்ளனர். தென் ஆசிய சூழலில் மிகவும் முக்கியமான காரணிகளில் ஒன்று தேர்தலை நடத்தும் அரசாங்கம் நடுநிலையுடனும், நீதியாகவும் நடந்து கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்வதாகும். அதிலும் அரசாங்க அதிகாரம் ஒரு எதேச்சாதிகார அல்லது இராணுவத் தலைமையிடமிருந்து ஒரு சனநாயக தலைமையிடம் அல்லது பங்குபற்றும் தலைமையிடம் மாறும்போது இது மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. பங்களாதேஷில் சனநாயக சார்பு இயக்கம் ஒரு இடைக்கால அரசினை அமைப்பதில் வெற்றி கண்டது. இவ்வரசு முன்னாள் பிரதம நீதிபதியின் தலைமையில்நடுநிலை தவறாத சிவில் உத்தியோகத்ர்களைக் கொண்டு அமைக்கப்பட்டது. இவ்வரசாங்கத்தின் தலையாயப் பொறுப்பாக அமைந்தது. தேர்தலை மேற்பார்வை செய்வதும் தேர்தலை அவதானிக்க சர்வதேசிய மற்றும் உள்ளூர் அவதானிகள் குழுக்களை அழைப்பதுமாகும். அதேபோல நேபாளத்தில் பிரதம மந்திரி கிருஷ்ண பிரசாத் பட்டாராய் தலைமையில் நேபாள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சுயாதீனக் குழுக்களைக் கொண்டமைந்த இடைக்கால அரசு புதிய அரசியல் யாப்பை ஏற்கும் செயன்முறையையும், பாராளுமன்ற தேர்தலையும் மேற்பார்வை செய்தது.அதேபோல பாகிஸ்தானில் மொயின் குரேஷி தலைமையில் அமைக்கப்பட்ட காபந்து அரசாங்கம் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு அது தேர்தலை நடத்திய முறைபற்றி யாரும் முறைப்பாடும் செய்யவில்லை. இங்கு இன்னுமொரு பிரச்சினையும் சகல தேர்தல்களையும் நாட்டின் பிரதான அரசியல் அமைப்புகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு நடுநிலையான காபந்து அரசாங்கம் மேற்பார்வை செய்ய வேண்டும் எனக் கோருவது சட்டபூர்வமானதாகுமா என்பதே இன்றைய பங்களாதேஷின் அமைதியின்மைக்கும் இதுவே காரணமாகும். இங்கு எதிர்க் கட்சிகள் பொதுத்தேர்தல் ஒரு காபந்து அரசாங்கத்துக்குக் கீழ் நடத்தப்பட வேண்டுமென வலுயுறுத்துகின்றன.
ஒரு நீதியான தேர்தலை உறுதிப்படுத்தும் அடிப்படைகளில் தேர்தல் இடாப்பும் ஒன்றாகும். இது ஒன்றுக்கு மேற்பட்ட வாக்களிப்பைத் தவிர்க்கும் வகையில் சீராக இருக்க வேண்டும். அத்துடன் தகுதியான
79

Page 48
வாக்காளர்கள் அனைவருடைய பெயரும் பதியப்பட்டிருக்க வேண்டும். பொதுவாக மரபுரீதியாகத் தேர்தல்களைக் குழப்பியடிக்கும் காரணிகள் வன்முறை, பயமுறுத்தல், அநாவசிய செல்வாக்குகள் மற்றும் இலஞ்ச ஊழல் ஆகியவைகளாகும். நீதியான தேர்தல் ரிரசாரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் சட்டத்துக்கு உட்பட்டு சுதந்திரமாக தேர்தல் சட்டங்களை நடத்தவும், தேர்தல் பிரசுரங்களை விநியோகிக்கவும் தமது வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டவும் வாய்ப்பு இருக்க வேண்டும். இலக்ரோனிக் ஊடகங்களில் கிடைக்கும் சமவாய்ப்புகள் பற்றியும் அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அச்சு ஊடகங்கள் ஆட்சியுள்ள கட்சிக்கு நீதியற்ற முறையில் வாய்ப்புகள் வழங்குவது பற்றியும் இன்று வாதப் பிரதிவாதங்கள் நடக்கின்றன. இதே போல பொதுவளங்கள், பொது போக்குவரத்து, அரச வாகனங்கள், ஹெலிகொப்டர்கள், பொது மைதானங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதிலுள்ள சமவாய்ப்புகள் பற்றியும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. தேர்தல் சட்டங்கள் மற்றும் நடைமுறைகளைப் பொறுத்த மட்டில் தேர்தல் ஆணைக்குழு, பொலிசார், அதிகாரிகள் ஆகியோர் நடுநிலையாகவும், நீதியாகவும் நடந்து கொள்வதை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் கோரப்படுகிறது.
அண்மைக் காலமாகத் தென் ஆசியாவின் ஏற்பட்டுவரும் அபிவிருத்திகளில் ஒன்று தென் ஆசியாவில் நடைபெறும் தேர்களைக் கண்காணிப்பதில் சிவில் சமூகங்களுக்கிடையே ஏற்பட்டுவரும் ஒத்துழைப்பாகும். கடந்த ஆறு வருடங்களில் அரசு சாரா "சார்க்” குழுவினர் 1988, 1990, 1993 ஆகிய ஆண்டுகளில் பாகிஸ்தான் தேர்தல்களையும் 1988 இலங்கை சனாதிபதி தேர்தலையும் 1991 இல் பங்களாதேஷ் தேர்தலையும் நேபாளத்தில் 1991 ஆம் தேர்தல்களையும் இந்தியாவில் 1991 ஆம் ஆண்டு லோகசபை தேர்தல்களையும் அவதானித்து வந்துள்ளனர். இந்த அபிவிருத்திகளின் எதிர்பாராத விளைவுகள் என்னவெனில் அரசாங்கங்கள் இத்தகைய தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளை மத்தியமயப்படுத்துவதாகும். குறிப்பாக இலங்கை, நேபாள அரசுகள் தமது தேர்தல் ஆணைக்குழுவினருடன் சேர்ந்து சர்வதேச அவதானிகள் குழுவை ஏற்படுத்தியதுடன் அவர்கள் தேர்தல்களைக் கண்காணிக்கப் போதிய வசதிகளையும் வழங்கி வந்துள்ளன. தேர்தலை நடாத்தும் அமைப்புகளே தேர்தலின் நியாயத்தைக் கண்காணித்து மதிப்பீடு செய்யும். இந் நடவடிக்கைகளை இணைப்பாக்கம் செய்வதில் பல்வேறு சிரமங்கள் இருக்கவே செய்கின்றன. பிரதேச, சர்வதேச அவதான நடவடிக்கைள் சுதந்திரமான
80

அரசு சாரா நிறுவனங்களினாலும் அரசுகளுக்கிடையிலான அமைப்புகளினாலும் தேர்தலை நடத்தும் அரசின் வசதிகளிலும் வளங்களிலும் தங்கியிருக்காத பட்சத்தில் அவற்றின் நம்பகத்தன்மையைக் கூட்டமுடியும். மேலும் குற்ற நடவடிக்கைகள் தேர்தல் சட்டங்கள் மற்றும் நடைமுறைகளில் ஏற்பட்டுள்ள சீர்திருத்தங்களில் தமது பார்வைகளைப் பதித்துள்ளன. உதாரணமாக பாகிஸ்தான் அரசு கடந்த தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் தகைமையீனம் பற்றிய பதியதொரு கருத்தினை முன்வைத்தது. தமது வங்கிக் கடன் கட்டத் தவறியோர் இதன்படி தேர்தல்களில் போட்டியிடும் தகுதியை இழப்பர். இதைப்போல் இத்தகைய தேர்தல் ஆணையாளர் இனவாதக் கட்சிகளைத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து நீக்குவதிலும் முதன் மந்திரிகளும் ஏனைய அமைச்சர்களும் அரசு வசதிகளை நியாயமற்ற முறையில் அனுபவிப்பதைத் தடுப்பதிலும் முக்கிய பங்கு வகித்தார்.
பிரதிநிதித்துவத்துக்கு மேலான பங்குபற்றல்
தென் ஆசிய நாடுகள் பலவற்றில் சட்டச் சீர்திருத்தச் செயன்முறையானது சட்டவாக்க செயன்முறையில் அரசுசாரா நிறுவனங்கள் மற்றும் தொழில்சார் சங்கங்கள் மற்றும் ஆர்வமுள்ள பொதுமக்கள் பங்குபற்றும் வாய்ப்பினை வழங்கவில்லை. இது தொடர்பாக ஏற்பட்டுள்ள மிகவும் முக்கிய புத்தாக்கமானது ஒரு சட்ட ஆணைக் குழு ஸ்தாபிக்கப்பட்டதாகும். இவ்வாணைக்குழுவில் அங்கம் வகிக்கும் நீதிபதிகள், சட்டத்தரணிகள், சமூக விஞ்ஞானிகள் ஆகியோர் சட்டத்தின் பல்வேறு கிளைகளையும் முறையாக மீளாய்வு செய்து சீர்திருத்தத்துக்கான விதந்துரைகள் செய்வர். இலங்கையில் இத்தகைய சட்ட ஆணைக்குழு மிகவும் சுதந்திரமான ஓர் அமைப்பாகும். அது பாராளுமன்றத்துக்கு நேரடியாக விதந்துரைகள் செய்யும் அதிகாரம் கொண்டதாகும். இக்குழுவானது அதன் செயன்முறையில் பொதுமக்களுடனனும், குழுக்களுடனும், தனிநபர்களுடனும் கலந்துரையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த உறுதிமொழியானது காப்பாற்றப்படவில்லை. சட்ட ஆணைக் குழுவானது பெரும்பாலும் பகுதிநேர ஊழியர்களையே கொண்டிருந்தது. இவர்களால் சீர்திருத்தப் பணிகளில் ஈடுபடக்கூடிய வலிமை இருக்கவில்லை. அத்துடன் ஆணைக்குழுவுக்கு சட்டங்கள் மற்றும் அவற்றின் பாதிப்புகள் பற்றி ஆய்வு செய்து உதவக் கூடிய ஆய்வாளர்களின் ஆதரவும் கிடைக்கவில்லை.
81

Page 49
தென்னாசிய சட்டவாக்க அமைப்புகளில், இன்று தெரிவுக் குழுக்களை அமைத்து சீர்திருத்த ஆலோசனைகளையும் அவற்றுக்கு இருக்கக் வடிய மக்கள் ஆதரவினையும் ஆய்வு செய்யக்கூடியதாக ஏற்படுத்தப் பட்டிருக்கும் ஏற்பாடுகளும் செயலிழந்துள்ளன எனக் கூறலாம். பொதுமக்களின் அபிப்பிராயங்களைச் செவிமடுக்கக் கூடிய நிலையியற் கட்டளைகள் தென் ஆசிய நாடுகளில் ஏற்படுத்தப்படவில்லை. அரசுசாரா நிறுவனங்கள், கல்வி மற்றும் தொழில்சார் குழுக்கள் சட்டவாக்கச் செயன்முறையில் தலையிட்டு இத்தகைய கமிட்டிகளின் முன்னிலையில் பல்வேறு அபிப்பிராயங்களை முன்வைக்குமளவுக்கு ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கவில்லை. பாராளுமன்ற நடைமுறைகளும் விவாதங்களும் சாதாரண பொதுமக்களை அடையக் கூடிய அளவுக்கு எளிமைப்படுத்தல் வேண்டும். பொதுமக்களுக்கும் சட்டவாக்கத்தின் பல்வேறு கட்டங்களிலும் தலையிடும் உரிமை இருக்க வேண்டும். சட்டவாக்கக் குழுக்களுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் உரிமை பதிவு செய்யப்பட்ட அரசுசாரா நிறுவனங்களுக்கு வழங்கப்படல் வேண்டும். இத்தகைய பிரதிநிதித்துவங்கள் சகலருக்கும் உறுதிப்படுத்தப்படல் வேண்டும். சட்டவாக்க சபைகளின் நிலையியற் கட்டளைகள், கட்டளைகள், பொதுமக்கள் 'இச்சபைகளின் முன் வாய்மூல பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய அளவுக்குத் திருத்தப்படல் வேண்டும். அத்துடன் இந்த வாய்மூலப் பிரதிநிதித்துவத்துக்கு போதுமான பிரசாரம் மேற்கொள்ளப்படவும் வகை செய்ய வேண்டும். சட்டவாக்க சபைகளினதும் குழுக்களினதும் நடைமுறைகளை வெளிப்படுத்துவதற்கு இலக்ரோனிக் ஊடகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும். சட்டவாக்கச் சபைகளின் நிலையியற் கட்டளைகள் திருத்தப்பட வேண்டும். இத் திருத்தங்களின் மூலம் இவ்வாறு அக்கறையுள்ள குழுக்கள் சட்டவாக்க குழுக்களுக்கு வாய்மூல , பிநிதித்துவம் செய்யவும் அப் பிரதிநித்துவங்களுக்குப் போதுமான அளவுக்கு பிரசாரப்படுத்தவும் வகை செய்யப்பட வேண்டும். இலக்ரோனிக் தொடர்பு ஊடகங்களுக்கு சட்டவாக்கச் செயன் முறைகளை நேரடியாக அவதானிக்க வசதிகள் அளிக்கப்படல் வேண்டும்.
பிரதிநிதித்துவ அமைப்புகளின் சனநாயக பொறுப்புக்கூறல் மற்றும் பொதுசன பங்குபற்றலுடன் தொடர்புடைய இன்னுமொரு முக்கிய விடயம் அரசுசாரா நிறுவனங்கள் பற்றிய சட்டம் மற்றும் கொள்கைகளாகும். பல தென் ஆசிய நாடுகள் இந் நிறுவனங்கள் தொடர்பாக மிகவும் கவனமும் வரையறைகளும் கொண்ட அணுகு முறைகளைப் பின்பற்றியுள்ளன. அரசுசாரா நிறுவனங்களைச் சந்தேகக்
82

கண்கொண்டு பார்க்கும் இவ்வரசாங்கங்கள் இவற்றின் பதிவு, செயற்பாடுகள், நிதியீட்டம் மற்றும் நிதி அறிக்கைகள் பற்றிக் கட்டுப்பாடான சட்டங்களை நிறைவேற்றியுள்ளன. இந்தியாவிலும் பங்களாதேஷிலும் இத்தகைய கட்டுப்பாடான சட்டங்கள் காணப் படுகின்றன. இலங்கையில் அரசுசாரா நிறுவனங்கள் பற்றிய சனாதிபதி ஆணைக் குழுவானது தனது விதந்துரைகளில் இவற்றின் கட்டாப்பதிவு, விளக்கமான நடைமுறைக்கு அசாதாரணமான நிதிசார் அறிக்கைகள் ஆகியவற்றை வலியுறுத்தியுள்ளது. மனித உரிமைக் குழுக்கள், சூழல் குழுக்கள், அபிவிருத்திக் குழுக்கள் ஆகியவைகளும் கூட அரசின் அழுத்தங்களுக்கும், பயமுறுத்தல்களுக்கும் ஆளாகின்றன. உண்மையில் அரசு சாரா நிறுவனங்களின் சட்ட, யாப்புச் சட்டங்கள் அவற்றின் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், தேவையான ஆளணியைப் பெறவும், உள்ளூர் வெளிநாட்டு, நிறுவனங்களைத் திரட்டவும் அரச தலையீடின்றி வாய்ப்புகளை அளிக்கும் வண்ணம் வலுப்படுத்தப்படல் வேண்டும்.
இலங்கை போன்ற நாடுகளில் சனநாயகம் மற்றும் அரசியல் யாப்பு நியமங்களை வழமையாக அரசு உடைத்தெறிய முற்பட்டிருப்பினும் இலங்கை மக்கள் அவற்றை உண்மையாக கடைப்பிடித்து வந்துள்ளனர். தென் ஆசிய நாடுகளில் நகரங்களில் கூட்டாக வாழும் மத்திய வகுப்பினர் எதேச்சாதிகாரத்துக்கு எதிரான தடையாக இருந்து வந்துள்ளனர். இத்தகைய கூட்டுகள் இனரீதியாகப் பல்லினத் தன்மை கொண்டவை. இது அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கும் பல்வேறு குடியியல் உரிமை இயக்கங்களுக்கும் களமாக அமைந்துள்ளது. இத்தகைய இயக்கங்கள் கிராமிய சமூகங்களையும் இவ்வாறான சூழல், அபிவிருத்தி மற்றும் மனித உரிமை விடயங்களில் வெற்றிகரமாக ஒன்றுதிரட்டியுள்ளன. சனநாயக அபிவிருத்திக்குச் சுதந்திரமான சிவில் சமூகம் மிகவும் முக்கியமானதாகும். சட்டத்தரணிகள் இவ்வாறான தொழில்சார், குடியியல், அபிவிருத்தி சார்ந்த மற்றும் சூழலியல் இயக்கங்களின் தன்னாதிக்கத்தைப் பாதுகாப்பதில் கூடிய பங்காற்ற முடியும்.
ஒளிவுமறைவின்மை மற்றும் பொறுப்புக் கூறலில் உள்ள பிரச்சினைகள்
சனநாயக அ பரிவரிரு திதிகள் பல கட் சரி முறைமையை நிறுவனப்படுத்துகின்றன; தேர்தல் செயன்முறைகளின் கண்ணியத்தைப்
83

Page 50
பாதுகாக்கின்றன. சட்டவாக்கத்தில் மக்களின் பங்குபற்றலை வலுப்படுத்துகின்றன. அத்துடன் பயனுறுதிமிக்க பொறுப்புக்கூறல் முறைகளையும் வற்புறுத்தகின்றன. அரசியல் அதிகாரத்தைத் துஷ்பிரேயாகம் செய்தல், ஊழல், முறையற்ற நிர்வாகம் ஆகியவை இவற்றை நீக்குவதற்கான புதிய சட்டங்கள் மற்றும் அமைப்புகளின் தேவைக்கு வழிவகுத்துள்ளன.
ஊழல், அரசாங்க அமைப்புகளின் மீது பொது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை நலிவடையச் செய்கின்றது. அத்துடன் அதிகார துஷ்பிரயோகம் செய்வோர் தப்பிக் கொள்ளும் போது முறைமையின் மீத வெறுப்பையும் உருவாக்குகின்றன. தனிப்பட்டவர்கள் செல்வத்தைக் குவிப்பதும் பொதுமக்கள் சீரான வாழ்க்கைத் தன்மையை நலிவடையச் செய்கின்றன. சந்தை மற்றும் தனியார் துறை அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுக்கும் ஒரு பொருளாதார அபிவிருத்தி மாதிரி உண்மையில் பேராசையினால் உந்தப்படுவதாகும். பாரிய தனியார் கூட்டுத்தாபனங்கள் குறிப்பாக வெளிநாட்டு கூட்டுத்தாபனங்கள் அரசாங்க உயர் அதிகாரிகளுக்கும் இடையில் பரஸ்பர ஒத்துழைப்பு இல்லாமல் பேரளவிலான ஊழல் இடம் பெறமுடியாது. பெரும்பாலும் வெளிநாட்டு ஒப்பந்தக்காரர்கள், கம்பெனிகள், மற்றும் நிபுணர்களே லஞ்சம் வழங்குகின்றனர். இவர்கள் மூன்றாம் உலக நாடுகளுடன் வர்த்தகம் செய்வதிலுள்ள செலவுகளில் ஒன்றாகவே லஞ்சம் வழங்குதலைக் கருதுகின்றனர்.
சீர்திருத்தம் பற்றிக் கருதும்போது ஊழல்களை வெற்றிகரமாக ஒழித்துவிட்ட நாடுகளின் நடைமுறை பற்றி கவனம் செலுத்தவது மிகவும் அவசியம். சிக்கலான, உறுதியான சட்டவாக்கட் ரிாத்திரம் ஊழலை ஒழிக்க போதுமானதல்ல என்பதை இந்நாடுகளின் நடைமுறைகள் எடுத்துக் காட்டுகின்றன. இத்தகைய சட்டங்களுக்கு ஆதரவாக மேலும் பல குறுங்கால, நிண்டகால நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இத்தகைய நடவடிக்கைகயில் முதலாவது கொள்வனவு செய்தல் மற்றும் ஒப்பந்தம் செய்தல் தொடர்பான நியமங்கள், நடைமுறைகள் ஆகியவை மீளாய்வு செய்யப்பட்டு திருத்தப்படல் வேண்டும். இது பணம் வழங்குதல் மற்றும் கணக்காய்வு நடைமுறைகளுக்கும் விஸ்தரிக்கப்படல் வேண்டும். கொள்வனவு நடைமுறைகள் முடிந்தளவுக்கு தனியார் கம்பனிகள், பொதுக் கூட்டுத்தாபனங்கள் மற்றும் தனியார் மயப்படுத்தப்பட்ட தொழின் முயற்சிகளுக்கும் பொருத்தமுடையதாக்கப்பட வேண்டும். இத்தகைய
84

நடைமுறைகள் அவற்றின் வெளிப்படையான தன்மை நியாயமான போட்டித்தன்மையை ஊக்குவித்தல் குறிக்கோள்களையும் தெரிவுப் பிரமாணங்களையும் வெளிப்படுத்தல் மற்றும் பிரச்சனை தீர்வுக்கான பொறிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும் தேவை உள்ளது. அத்துடன் சிவில் சேவைச் சீர்திருத்தங்கள் பற்றிய விடயங்களையும் கவனத்திற் கொள்ள வேண்டும். இச்சீர்திருத்தங்கள் அதிகாரிகளின் தொழிற் சிறப்பு, வருமானம், ஆர்வம், ஊக்கல், பொறுப்புக் கூறல் ஆகியவற்றை உயர்த்தக் கூடும். அத்துடன் தவறான முறையில் நடந்துகொள்ளும் கூட்டுத்தாபனங்கள் மற்றும் நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றைப் பற்றிய தகவல்களை சம்பந்தப்பட்டவர்கள் பரிமாறுவதற்கு ஊக்குவிக்கப்பட வேண்டும். இவ்வாறு உழல் நடத்தைகளைக் கொண்ட நிறுவனங்களின் கறுப்புப் பட்டியலைத் தயாரித்தல் இவ்வகையான நடத்தைகளுக்கு ஒரு தடைக் கல்லாக அமையக் கூடும். உயர் தொழில்களின் ஒழுக்கம் சார்ந்த நியமங்கள் மற்றும் நடத்தைக் கோவைகள் ஆகியவற்றைத் திருத்தியமைக்கும் தேவையுமுள்ளது. பொறியியலாளர்கள் கட்டிடக் கலைஞர்கள், கணக்காளர்கள், சட்டத்தரணிகள் ஆகியோர் தொழில சார்ந்த சிக்கற்தன்மைகள், ஊழல் நடைமுறைகள் போன்றவற்றில் சிக்காமற் தடுப்ப்தற்கு இது அவசியமாகும். நீதியமைச்சு இது தொடர்பாக "சர்வதேச ஒளிவின்மை” போன்ற சர்வதேச கண்காணிப்பு அமைப்புகளுடன் தொடபுறுத்த வேண்டும். இவ்வாறான அதிகாரத் துஷ்பிரயோகத்துக்கு எதிரான உறுதியான பாதுகாப்பு தகவலறிந்த உள்ளூர்ப் பொதுமக்கள் அபிப்பிராயமும் உள்ளூர் விளிப்புக் குழுக்களும் இவற்றின் உருவாக்கம் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
ஊழற் குற்றங்கள் அதிகாரத் துஷ்பிரயோகம் பற்றி விசாரணை ஆகியவற்றுக்கெதிரான சட்ட நடவடிக்கைகளில் ஒரு குறிப்பிட்ட எதிர்பார்க்கத்தக்க வட்டங்கள் இருப்பதை இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் நாம் அவதானித்திருக்கிறோம். 1990 களின் ஆரம்பத்தில் ஊழல் சுட்டம் மிகவும் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளின் காரணமாக மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டதோடு நீதித்துறைச் செயன்முறைகளின் கண்ணியத்திலும் நம்பிக்கை குறைந்தது. இக்கால கட்டத்தில் இலஞ்ச ஊழல், வெளிநாட்டு செலாவணி மீறல் தொடர்பான விசேட வழக்குகளில் நடைமுறைகள் மற்றும் சாட்சியங்கள் என்பன நடைமுறை விதிகளிலிருந்து வேறுபட்டுக் கையாளப்பட்டது. இது நீதித்துறையின் கண்ணியம், நியாயம் பற்றிய பொதுசனப் பார்வையை நலிவடையச்
85

Page 51
செய்தது. இதே போல 1970 களின் இறுதியில் அதிகாரத் துஷ்பிரயோகத்தினை விசாரணை செய்வதற்காக முடுக்கிவிடப்பட்ட விசேட சனாதிபதி ஆணைக்குழு விசாரணை சட்டம் பொதுசன அபிப்பிராயத்தை எதிராகத் திருப்பியது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் பொதுசன அபிப்பிராயமானது தெரிவு செய்யப்பட்ட அலுவலர்களின் பொறுப்புக் கூறல் என்னும் பிரச்சினையிலிருந்து விசாரணை நடைமுறைகளின் செயன்முறை, நியாயம் ஆகியவற்றுக்குத் திரும்பியது. தென்னாசியாவில் நிர்வாகக் குறைபாடுகளைத் தீர்ப்பதற்கு ஒரு பயன்தரு அமைப்பினை உருவாக்கும் குறிக்கோளுங் கூட பல தசாப்தங்களாகக் கைகூடவில்லை. ஐம்பதுகளின் நடுப் பகுதியிலிருந்து தென் ஆசிய பொதுச் சட்ட ஆய்வாளர்கள் ஒம்புட்ஸ்மன் எனப்படும் குறைகேள் அதிகாரி என்னும் பதவி அமைப்புப் பற்றிப் பெரிதும் ஆர்வம் செலுத்தி வந்தனர். இந்த அமைப்பு 1809 இல் சுவீடனில் உருவாக்கப்பட்டடது. நியாயமற்ற நிர்வாக நடவடிக்கைகள் பற்றிய குறைபாடுகளைப் பொதுமக்களிடமிருந்து பெறுவதும் விசாரிப்பதும் இதன் பணியாகும். 1909 இல் பின்லாந்திலும் பின்னர் டென்மார்க் நோர்வே நியூசிலாந்து ஆகிய நாடுகளிலும் இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இவ்வாறான ஒரு அமைப்பைப் பல ஆண்டுகளாக எதிர்த்து வந்த ஐக்கிய இ ராச்சியமும் கூட 1960 களில் நிர்வாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளர் என்னும் பதவியையும் 1974 இல் உள்ளூராட்சிக்கான ஆணையாளரையும் அநீதிகளையும் நிர்வாக சீர்கேட்டையும் நீக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டது.
எனினும் ஒம்புட்ஸ் மன் பதவியில் பிரித்தானியாவுக்கும் ஸ்கென்டினேவியாவுக்குமிடையில் அடிப்படை வேறுபாடு ஒன்று உள்ளது. ஸ்கன்டினேவிய மாதிரியில் ஒம்புட்ஸ்மன் என்பது தற்போது உள்ள அரசியல் நிர்வாக நிறுவனங்களிலிருந்து சுதந்திரமான ஒன்றாகும். ஆனால் பிரித்தானிய மாதிரியில் இது பாராளுமன்றத்தின் ஓர் இணைப்பாகும். இலங்கையைப் பொறுத்த வரையில் இப்பதவியானது இவ்விரண்டு மாதிரிகளுக்குமிடையில் தடுமாறிக் கொண்டிருக்கிறது. இலங்கையில் நிர்வாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளர் பதவி 1981 இல் ஸ்தாபிக்கப்பட்டது. நிர்வாகச் சீர்கேட்டுக்கெதிராக இது சுதந்திரமாகவும் நடுநிலையாகவும் ஒரு கண்காணிப்பாளராக இயங்க வேண்டும் எ னும் மக்களின் எதிர்பார்ப்பு கடந்த பதின்மூன்று வருடங்களா நிறைவேறவில்லை. இதற்குப் பல காரணங்களுண்டு.
86

ஒம்புட்ஸ்மன் எனும் பதவி ஒரு தனியாள் அமைப்பாகும். இது தனது வலிமையை அப்பதவியை வகிப்பவரின் ஆளுமையிலிருந்து பெறுகிறது. நீதி மற்றும் நியாயம் ஆகிய விழுமியங்கள தொடர்பான தீவிர அர்ப்பணிப்பு இப்பதவிக்கு மிகவும் முக்கியமானதாகும். இப்பதவிக்கு ஒருவரைத் தெரிவு செய்வதில் அரசாங்கங்கள் கூடிய முக்கியத்துவத்தைக் கொடுக்கவில்லை. அத்துடன் ஒம்புட்ஸ்மனுக்குத் தேவையான நிதி மற்றும் மனித வளங்களை வழங்குவதிலும் அக்கறை காட்டவில்லை.
இப்பதவியைப் பற்றியை பொதுமக்களின் விளக்கம் நம்பிக்கை ஆகியவையும் குறைவாகும். இப் பதவியைப் பற்றிப் பொதுமக்களுக்கு விளக்குவதற்கு எவ்வகையான அர்த்தமுள்ள நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இப்பதவியைப் பற்றிய விளக்கமுள்ளவர்கள் அதனுடைய பயனுறுதியில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. அடிப்படை உரிமைகளின் துஷ்பிரயோகம் பற்றி எவ்விதமான முறைப்பாடுகளையும் ஒம்புட்ஸ்மன் பல ஆண்டுகளாகப் பெறவில்லை என்பது இதனை நிரூபிக்கிறது.
ஒரு சனாதிபதி பாராளுமன்ற முறைமையில் ஒம்புட்ஸ்மன் ஓர் இரட்டைத் தன்மையிலான உறவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார் . ஒம்புட்ஸ் மன் சனாதிபதியினால் நியமிக்கப்படுகிறார். ஆனால் பாராளுமன்றத்துக்கு அவர் பொறுப்புக் கூற வேண்டும். தற்பொழுது திருத்தத்துக்குள்ளாகி யிருக்கும் இச்சட்டத்தின்படி ஒம்புட்ஸ்மன, பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் பொது மனுக்கள் குழுவுடனும் நெருக்கமான தொடர்பு கொண்டிருப்பார் என எதிர்பார்க்க முடியும். ஆனால் இந்தத் தொடர்பு உண்மையாக, ஏற்படுத்தப்படும் என்பதைவிட, சட்டபூர்வமானதாகவே இருக்கும். ஐக்கிய இராச்சிய பாராளுமன்றத்தில் தெரிவுக் குழு ஒம்புட்ஸ்மன் பதவிக்கு வழங்கியிருக்கும் சட்ட அந்தஸ்து இலங்கையில் பொது மனுக்கள் குழுவினால் வழங்கப்படவில்லை. இச் சூழ்நிலைகளில் பாராளுமன்றமானது ஒம்புட்ஸ்மனுக்குப் போதிய அதிகாரங்களை வழங்குவதற்கு வழிப்படுத்தப்படவில்லை. அத்துடன் பாராளுமன்ற ஆணையாளரின் அறிக்கைகள் மற்றும் விதந்துரைகள் தொடர்பாகப் பெரியதொரு சட்ட ஈடுபாடும் காட்டப்படவில்லை. சட்டப்படி வருடத்துக்கு ஒருமுறையேனும் தன்னால் செய்யப்பட்ட வேலைகள் பற்றி சனாதிபதிக்கும் பாராளுமன்றத்திற்கும் அறிக்கைப்படுத்த வேண்டுமென சட்டத்தில் தெளிவாகக்
87

Page 52
கூறப்பட்டுள்ள போதிலும் அவ்வாறான இரண்டறிக்கைகள் மாத்திரமே இதுவரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
ஒம்புட்ஸ்மனுக்கு வழங்கப்பட்டுள்ள மிக முக்கியமான அம்சங்களான அதிகாரங்களும் நியாயாதிக்கமும் நியாயமற்ற, பாகுபாடான அடக்குமுறையான நிர்வாக நடைமுறைகளோடு தொடர்புடையது. இவ்வாறான நடைமுறைகளை மீளாய்வு செய்வதில் ஒம்புட்ஸ்மன் இதுவரை எத்தகைய அர்த்தமுள்ள தாக்கத்தையும் கொண்டு வரவில்லை. சுவீடனில் ஒம்புட்ஸ்மனின் வரிதந் துரை காரணமாக குற் ற வரியல் முறைமை திருத்தியமைக்கப்பட்டது. நியூசிலாந்தில் நிர்வாக முறைகளின் சீர்திருத்தத்தில் ஒம்புட்ஸ்மனின் விதந்துரைகள் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தின.
(uplq66)
தேசிய சூழ்நிலைகள் பற்றிய விசேட அம்சங்களை மறந்துவிட முடியாதெனினும் சனநாயகம் தொடர்பான தென் ஆசிய அனுபவங்களை வேறுபடுத்திக் காட்டும் சில பொதுவான அம்சங்களை இங்கு முன்வைக்க முடியும்.
l.
கட்சிமுறை, அதிகார அமைப்பு, நீதித்துறை மற்றும் தொடர்பு சாதனங்கள் ஆகியவற்றின் வலிமையும் உயிர்த்துடிப்பும் நீண்ட காலமாகத் தொடரும் சர்வசன வாக்குரிமை மற்றும் போட்டியான அரசியல் செயன்முறைகள் ஆகியவற்றையே பெருமளவுக்கு அடிப்படையாகக் கொண்டள்ளன. இத்தகைய நீண்ட கால அரசியல் சனநாயக மரபுகளே சட்டரீதியான யாப்பு முறைமையை காலத்துக்காலம் ஏற்படும் வன்முறை எழுச்சிகள், சதிப்புரட்சிகள், முதலிய சவால்களுக்கு எதிராகத் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன. இது பாகிஸ்தான், பங்களாதேஷ் முதலிய நாடுகளுக்கு அவ்வளவு பொருத்த மானதல்ல; ஏனெனில் இந்நாடுகளில் இராணுவம் அரசாங்கத்தைக் கைப்பற்றியதன் காரணமாக அரசியல் யாப்பு முறைமையில் தொடர்ச்சி அறுந்து விட்டது. எனினும் இந்நாடுகளிலும் கூட எதேச்சாதிகாரத்துக்கு முந்திய காலத்தில் இருந்த நிறுவன மரபுகளும், சட்ட, அதிகாரத்துவ கலாசாரமும் இன்றும் கூட எஞ்சியுள்ளன. எதேச்சாதிகாரத்திலிருந்து மாறுநிலையில் அவை பெரிதும் உதவியாகவுள்ளன.
88

ஒப்பீட்டளவில் ஆபிரிக்கா, தென்கிழக்காசியா, மற்றும் சில லத்தீன் அமெரிக்க நாடுகளில் தென் ஆசிய நாடுகளை விட சனநாயகமானது விரைவில் நலிவடையக்கூடியதாக உள்ளது 6 னலாம்.
அரசியல் நிறுவனங்கள் மற்றும் செயன்முறைகளில் தென் கிழக்காசியாவில் வெளிப்படையான மீட்சி இருந்த போதிலும் இங்கு ஒரு பாரிய எழுச்சி ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. அரசியல் அமைப்பின் இயல்புகள் மற்றும் பல்வேறு சமயங்கள், இனத்துவக் குழுக்கள், ஆகியவற்றுக்கிடையிலான தொடர்புகள் ஆகியவற்றை மீள வரையறைப்படுத்தும் முயற்சிகளும் இங்கு தொடர்கின்றன. அரசியல் அதிகார மாற்றத்தைத் தொடர்ந்து வந்த அரசியல் ஒப்பந்தங்கள் குழுக்களுக்கிடையில் உருவாகும் நெருக்கடிகளை தீர்க்கக் கூடிய சட்டத்தை வழங்குகின்றன. எனினும் இத்தகைய சட்டகங்கள் இன்று பொருத்தமானவைகளாக இல்லை. அத்துடன் ஒப்பந்தத்தின் மையக் கருத்துக்கள் இன்று நிராகரிக்கப்படுகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரையில் சமயம், இனத்துவம் மற்றும் சாதி தொடர்பாகப் பல்வேறு சமூகங்களுக்கிடையிலான சமநிலை சமஷ்டிவாதம், சமய சார்பின் மை, சமத்துவம் ஆகிய கருத்துக்களினால் நிலைப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இப்பிரச்சினைகள் தொடர்பான அரசியற் கருத்தொருமிப்பு சீக்கிரமே நலிவடைந்தது. ஏனெனில் மாற்று ஏற்பாடுகளான ஏற்றுக் கொள்ளக்கூடிய தன்மை சமூகங்களுக்களுக்கிடையே ஏற்படுத்தப்படவில்லை. இதனால் சமூகக் கிளர்ச்சியும் தோன்றியது. சமயச் சார்பின்மை என்னும்கோட்பாடுகளில் அரசின் அர்ப்பணிப்புகள் தொடர்பாக அடிப்படைவாதக் குழுக்கள் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளன. பல்வேறு சமயப் பரிரச்சனைகளுக் கிடையில் ஒரு நடுநிலையாளராக அரசினை நோக்கும் பார்வை இன்று வலுவிழந்து விட்டது. சமய நம்பிக்கைகள் நிறுவனங்கள் மற்றும் வணக்கஸ்தலங்கள் ஆகியவை தொடர்பாக அரசாங்கம் பாரபட்சமாக நடக்க வேண்டுமென பெரும்பான்மையினர் விரும்புகின்றனர். இவ்வாறான பிரச்சனைகளுக்கு இறுதியான தீர்வு என ஒன்றுமில்லை என்பது இன்று உணரப்படுகிறது. இனத்துவப் பிணக்குகளைத் தீர்ப்பதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சமூக ஏற்பாடுகள் திரும்பவும் திரும்பவும் புதுப்பிக்கப்பட வேண்டிய தேவை உணரப்படுகிறது. தென்கிழக்காசியாவிலும் ஆபரிாரிக் காவரிலும் லத்தீன் அமெரிக் காவரிலும்
89

Page 53
குழுக்களுக்கிடையிலான உறவுகள் பற்றியும் ஆட்சி அமைப்பு முறை பற்றியும் மீள் மதிப்பீடு குறைந்த அளவு தீவிரத்துடன் நடைபெறுகிறது. லத்தீன் அமெரிக்கா கிழக்கு ஆசியா ஆபிரிக்கா (தென்னாபிரிக்கா தவிர) ஆகியவற்றில் அரசியலமைப்பு மற்றும் சனநாயக மீள் நிர்மாணம் ஆகிய செயன்முறைகளில் குழுக்களுக்கிடையிலான பிணக்குள் மைய நிலையைக் கொண்டிருக்கவில்லை.
அரசியல் யாப்பினை மீள் வரையறை செய்வதில் மக்களின் பங்குபற்றல் அதிகரிக்கிறதுடன் மனித உரிமைகள், குழுக்கள், சமூகச் செயற்பாட்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் ஊடாக எழுத்தாளர்கள் சட்டத்தரணிகளின் பங்குபற்றலின் மூலம் ஆற்றல் மிக்க இடைத்தொடர்புகள்ை ஏற்படுத்துகின்றனர். இத்தகைய செயன்முறையின் விளைவாகவே இன்று இந்தியாவில் அடிப்படை உரிமைகளை அமுலாக்குவதில் சமூக, பொருளாதார உரிமைகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதிலிருந்து ஒருவிடயம் தெளிவாகிறது. அதாவது அரசியல் அமைப்புப் புத்தாக்கம் என்பது இனிமேல் சட்ட வியலாளர்களினதும் அரசியற் தலைவர்களினதும் மொத்த தனியுரிமையாக இருக்க மாட்டாது. ஒரு சிவில் சமூகத்தின் சகல கூறுகளும் அடிப்படை உரிமைகளின் எலலைகளை விரிவாக்குவதில் காத்திரமான பங்களிப்பை வழங்க முடியும். சனநாயக சட்டபூர்வத் தன்மையும் அடிப்பையை விரிவாக்குவதில் இத்தகைய மக்களின் பங்குபற்றல் ஏனைய ஆசிய ஆபிரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளில் இவ்வளவு தெளிவாக உள்ளதா என்பது தெளிவாகவில்லை.
தென்னாசியாவைப் பொறுத்தவரையில் சட்ட க் 1.7ழிலானது தென்றலுக்கும் புயலுக்கும் சமரசம் ஏற்படுத்தும் கடினமான பணிக்குத் தன்னை ஆட்படுத்த வேண்டிய நிலைகுத் தள்ளப்பட்டுள்ளது. நவீன தேசிய அரசுகளாக மலரத் துடிக்கின்ற நாடுகளின் விழிப்படைந்த சிவில் சமூகத்தின் சவால்களுக்கும் அதே நேரத்தில் அங்கு நடைபெறும் இனத்துவ சமயப் படுகொலைச் செயன் முறைக்கும் இடையில் இணக்கம் காண வேண்டிய பொறுப்பு அதன் மீது சுமத்தப்பட்டுள்ளது. இப் பொறுப்பினை ‘ தென்னாசியாவின் சட்டத் தொழிலானது உறுதியாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
9 - 13 தை 1995 யகார்த்தா, இந்தோனேசியா.
90

எதிரணியின் களிநடனம் : சிலியின் சர்வசன வாக்கெடுப்பு
(நூலாசிரியர் மக்கள் தீர்ப்பை அவதானிக்கும் குழுவின் உறுப்பினராக 1988, அக்டோபர் 5 ஆம் திகதி சந்தியாகோவில் இருந்தார். முன்னை நாள் ஸ்பெயின் பிரதம மந்திரி கலாநிதி அடல்போ சுவாலரஸ் , முன்னைநாள் கொலம்பியா சனாதிபதி, லெஸெல் பஸ்ட்ரானா ஆகியோர் தலைமை தாங்கிய இக் குழுவில் முப்பது நாடுகளைச் சேர்ந்த அரசியற் தலைவர்களும் அரசியலமைப்பு அறிஞர்களும் பங்குகொண்டனர்.)
நோபல் பரிசு பெற்றவரும் புரட்சிக் கவிஞருமான பப்லோ நெலூடா 1924 இல் பின்வருமாறு எழுதினார்: "துன்பம் தோய்ந்த வரிகளை இன்றிரவில் எழுதுகிறேன். இரவு சின்னாபின்னமாகிறது. வான் முகட்டில் தாரகைகள் அஞ்சி நடுங்குகின்றன." 1973 செப்ரம்பர் 11 ஆம் திகதி இஸ்லாநெக்ரா என்ற இடத்தில் நெலூடா தமது மரணப்படுக்கையில் கிடக்கும் போது உருக்கமான இந்த வார்த்தைகள் அவரைச் சுற்றி எதிரொலிக்கின்றன. இருள் சூழ்ந்த அன்றைய தினம் சந்தியாகோவிலுள்ள மனேடா மாளிகை குண்டு வீச்சுக்குட்பட்டது. சனாதிபதி சல்வடோர் அலன்டோ அன்று கொல்லப்பட்டார். 12 நாட்கள் கழித்து நெலூடாவும் புற்றுநோயால் உயிரிழந்ததையடுத்து துரோகத்தனத்தையும் அடக்கு முறையையும் எதிர்த்து "கவிதை என்னும் புராதன பேராயுதங்கள்" மூலமாக அவர் நடத்திய போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இராணுவ சதிப்புரட்சியையடுத்து முன்னெப் பொழுதும் காணப்படாத அடக்குமுறையும் மனித உரிமைகளின் புறக்கணிப்பும் மலிந்திருந்த ஒரு காலப்பகுதி உதயமாயிற்று. 1973 செப்டம்பர் மாதத்திற்கும் 1977
91

Page 54
ஆம் ஆண்டின் இறுதிக்கும் இடைப்பட்ட காலத்தில் பாதுகாப்புப் பொலிசாரால் கைது செய்யப்பட்ட ஏறக்குறை 2000 சிலி மக்கள் காணாமற் போய்விட்டனர் என அறிவிக்கப்பட்டது. மேலும் மனித உரிமைகளுக்கு 6திராக இழைக்கப்பட்ட அட்டூழியங்களும், சித்திரவதை, நீதித்துறைக்குப் புறம்பான உயிர்ப்பலிகள், நாடு கடத்தல் என்பன அடங்கும். இலத்தீன் அமெரிக்காவில் மிகவும் பழைமை வாய்ந்த ஒரு சனநாயக ஆட்சி முறை தகர்க்கப்பட்டது; அரசியல் கட்சிகள் ஒழிக்கப்பட்டு சட்டவிரோதமாக்கப்பட்டன; வாக்காளர் பதிவேடுகள் நிர்மூலமாக்கப்பட்டன; 1977 ஆம் ஆண்டின் இறுதியளவில் இராணுவ ஆட்சியால் வேறுவிதமான அடக்குமுறைகளும் கையாளப்பட்டன. சிலி சமுதாயமானது, பொய்த்தகவல், சந்தேகக் கண்ணோட்டம், பொய் வதந்திகள், கொலை, பதற்றநிலை என்பவற்றின் ஊடாக அடக்கியாளப்பட்டது. சர்வசன வாக்கெடுப்பு இடம்பெறும் அக்டோபர் 5 ஆம் திகதி சிலி நாட்டுக்கு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளாகும். அரசியலமைப்பையும் அரசியலையும் அடிப்படையாகக் கொண்ட பரந்தவொரு அமைப்பு முறைக்குள்ளேயே இந்நாளை நோக்க வேண்டும்.
சர்வசன வாக்கெடுப்பு அதிகாரத்துவத்துக்கும் சனநாயக ஆட்சிமுறைக்கும் இடையில் செய்யப்படும் தெரிவொன்றாக அல்லாமல், 1980 ஆம் ஆண்டின் அரசியல் அமைப்பு மூலம் எதிர்நோக்கப்படும் ஒரு புது யுகத்துக்கு இட்டுச்செல்லும் ஒரு திருப்பு முனையாகவே நோக்கப்படுதல் வேண்டும் என தாய்லாந்து நாட்டிற்கான சிலிநாட்டுத் தூதுவர் அட்மிரல் சேர்ஜிஸ் கபிலாஸ் விபரித்தார். அரசியலமைப்பு 1980 இல் நடத்தப்பட்ட சர்வசன வாக்கெடுப்பு ஒன்றில் 67 வீதமான மக்களால் ஏற்று அங்கீகரிக்கப்பட்டவொன்றாகும் என்பதை அவர் மேலும் வலியுறுத்தினார். ஆயினும் அத்தகைய சர்வசன வாக்கெடுப்பில் எதிர்க்கட்சியினர் பங்குபெறவில்லை. அவர்கள் அரசியலமைப்பை மறுதலித்தோடு மட்டுமல்லாது வாக்குச் செல்லுப்படியானதா என்றும் வினவினர். ஆயினும் 1980 ஆம் ஆண்டின் அரசியலமைப்பு, "சிலி நாடு தானே தெரிந்தெடுத்துக் கொண்ட சனநாயக அமைப்பு முறையொன்றுக்கு" ஏற்பாடு செய்கின்றது என்று தூதுவர் கபிலாஸ் எடுத்துரைத்தார். புதிய அரசியலமைப்பு சிலி நாட்டின் பொருளாதா ரத்தைத் தாராளப் போக்குடையதாக்குவதற்கு வசதியளித்து உள்ளதுடன், நாட்டில் என்றுமே கண்டிராத செழுமையும் சுபீட்சமும் நிறைந்த ஒரு காலப்பகுதிக்கு வித்திட்டுள்ளது என அதன் சார்புக்காரர்கள் வாதிடுகின்றனர்.
92

1980 ஆம் ஆண்டின் அரசியலமைப்பு, "பாதுகாக்கப்பட்ட சனநாயகம்” ஒன்றைத் தாபிப்பதற்கான அரசாங்கத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். 1989 பெப்ரவரி 1 ஆம் திகதி முடிவடையும் வட்டு ஆண்டுகளைக் கொண்டவொரு காலப்பகுதிக்குக் குடியரசின் சனாதிபதியாக இராணுவத் தளபதி ஜெனரல் அகஸ்டோ பினோச்செட்ட என்பவரின் பெயரைக் குறித்துரைத்தது. இக்காலப்பகுதி முடிவுறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் சர்வசன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துமாறு அரசாங்கம் கேட்கப்பட்டிருந்தது. இதில் சிலி மக்கள், இராணுவ செயலாட்சிக் குழுவால் நியமிக்கப்பட்ட சனாதிபதி பதவிக்கான அபேட் சகரை அங்கீகரிப்பதற்கோ நிராகரிப்பதற்கோ உரித்துடையவர்களாவர்.
சர்வசன வாக்கெடுப்பில் "ஆம்" என்னும் வாக்கு வெற்றியீட்டினால் ஜெனரல் பினோச்செட் மேலும் எட்டு ஆண்டுகளுக்கு சனாதிபதியாகப் பதவி வகிப்பார். பெரும்பான்மையோர் "இல்லை" என்று வாக்களித்தால் ஜெனரல் பினோச்செட் மேலதிகமாக ஓராண்டு காலத்திற்கு சனாதிபதியாகத் தொடர்ந்திருப்பார் . அக் காலப் பகுதி முடிவடைந்ததற்குத் தொண்ணுறு நாட்களுக்கு முன்னர் சனாதிபதி பதவிக்குக் கட்டுப்பாடற்றவையும் போட்டி அடிப்படையில மைந்தனவுமான தேர்தல்கள் இடம் பெற வேண்டும். மக்களொப்பு வாக்கெடுப்பின் பெறுபேறுகள் எவ்வாறிருப்பினும் காங்கிரஸ் தேர்தல்கள் 1990 பெப்ரவரி 1 ஆம் திகதிக்கு முன்னர் நடைபெற வேண்டும்.
தற்பொழுது நிலவும் அரசியல் - சட்ட ஒழுங்குமுறையை வலிதாக்குவதற்கென உத்தேசிக்கப்பட்ட பல அம்சங்கள் 1980 ஆம் ஆண்டின் அரசியலமைப்பிலிருந்தன. இந்த அம்சங்களுள் முதலாவது அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பகிர்ந்தளித்தல் தொடர்பில் இராணுவத்தின் பங்கினை பற்றியதாகும்.
நிலை மாறும் காலப்பகுதியின் போது இராணுவ, கடற்படை, வான்படைத் தளபதி மற்றும் ஆயுதந்தாங்கிய பொலிஸ் படையின் பணிப்பாளர் தலைமையதிபதி ஆகியோரைக் கொண்ட அரசாங்க செயலாட்சிக்குழு சட்டவாக்க அதிகாரத்தை, ஏன், அரசியலமைப்பு அதிகாரத்தைக் கூட (சர்வசன வாக்கெடுப்பு நிபந்தனைக்கு உட்பட) பிரயோகித்தது. ஆனால் இக்காலப்பகுதியின் பின்னர், படைத் தலைவர்கள் தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விடயங்கள் அல்லது
93

Page 55
"அமைப்பு முறையின் அடித்தளம்" ஆட்டங்காணும்பொழுது சனாதிபதிக்கு ஆலோசனை வழங்குவதற்காக தேசிய பாதுகாப்புப் பேரவையை உருவாக்குவர். மேலும் தேசிய பாதுகாப்புப் பேரவை, முன்னைநாள் இராணுவத் தளபதியொருவரையும், கடற்படை, விமானப்படை, இராணுவப் பொலிஸ் என்பவற்றிலிருந்து ஒவ்வொருவரையும் செனட் சபைக்குத் தெரிவு செய்வதற்கு உரித்துடையதாகும். ஜெனரல் பினோச்செட் தாமே ஆயுள் முழுவதும் செனட் சபையில் தொடர்ந்திருக்க உரித்துடையவராவர்.
மற்றுமொரு அம்சம், அரசியலமைப்புத் திருத்தத்தின் நடைமுறை பற்றியதாகும். நிலைமாறும் காலப்பகுதியின் பொழுது சர்வசன வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க செயலாட்சிக் குழுவின் ஒருமைப்பாடு அதற்குத் தேவைப்படும். நிலைமாறும் காலப்பகுதியின் பின்னர், காங்கிரஸின் மொத்த உறுப்பினர்களுள் ஐந்தில் மூவர் விசேட பெரும்பான்மையொன்றும் சனாதிபதியின் ஒருமைப்பாடும் தேவைப் படுகின்றது. சனாதிபதி தமது ஒருமைப்பாட்டை அளிக்காவிடின் தேவைப்படும் விசேட பெரும்பான்மை, ஒவ்வொரு மன்றத்திலும் பதவியிலிருக்கும் உறுப்பினர்களின் நாலின் மூன்று ஆகும். சிலியைப் பற்றிய அரசியற் போக்கின் தரத்தைக் கருத்திற் கொள்ளுமிடத்தும் பெரும்பாலும் செனட் சபையின் மூன்றிலொரு பகுதி, விசேட அக்கறை கொண்ட திறத்தவர்களால் நியமிக்கப்பட்ட ஆட்களைக் கொண்டிருப்பதனாலும் அரசியலமைப்புத் திருத்தத்தை ஆதரிக்கும் சக்திகள் அத்தகைய பெரும்பான்மைகளைக் கொண்டிருக்கும் என்பது உண்மை நிலைக்கு மாறானதாகவே தோன்றும்.
விடுதலை வேட்கைக்கு எதிராக அரசியலமைப்பில் காணப்படும் மற்றுமோர் அம்சம், (வர்க்கப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டவொரு சமுதாயத்தை அல்லது அரசை ஆதரித்துப் பரிந்துரைக்கும் கோட்பாடுகளைப் பரப்பும்) குழுக்களுக்குத் தடைவிதித்தல் எனப்படும் 8 ஆம் உறுப்புரை பற்றியதாகும். கம்யூனிஸக் கட்சிக்கும் சோசலிசக் கட்சியின் அல்மெய்டா குழுவிற்கும் தடை விதிப்பதாகவே 8 ஆம் உறுப்புரை உட்புகுத்தப்பட வேண்டுமென விதந்துரைக்கப்பட்டுள்ளது. 8 ஆம் உறுப்புரையின் கோட்பாடுகளைப் பரப்புபவர்களுக்காகப் பரிந்துரைத்தமைக்காக முன்னைய வெளிநாட்டமைச்சர் குளோடோமேறோ அல்மெய்டா 1987 இல் பிற்பகுதியில் கைது செய்யப்பட்டு’ அன்றிலிருந்து சிறை வைக்கப்பட்டுள்ளார்.
94.

சிலி நாட்டு 6திர்கட்சிகள், சர்வசன வாக்கெடுப்பில் தாங்கள் எப்படிச் செயற்பட வேண்டும் என்பது பற்றி ஆரம்பத்தில் நிச்சயமற்றிருந்தனர். 1989 ஆம் ஆண்டு அரசியலமைப்புக்கு ஆதரவு கோருவதற்கு முன்னர் பினோச்செட் ஆட்சியால் எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு இணங்காததோடு பினோச்செட்ட இராஜினாமாச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மூலம் எதிர்ப்பும் தெரிவித்தனர். இந்தப் பேச்சுக்கள் முறிவுற்றன. கிறிஸ்துவ இடதுசாரிகள் மிதவாத சோசலிஸ்ட் கட்சியினர் ஆகியோர் தொடக்கம் சனநாயக வலதுசாரிகள் வரை பதினொரு அரசியற் கட்சிகள் முழு சனநாயகத்தை நோக்கி நிலைமாறுவதற்காக ஏற்பட்ட "தேசிய உடன்படிக்கை” 1985 ஆம் ஆண்டின் கார்டினல் பிறெஸ்னோ எடுத்த ஊக்க முயற்சியினால் அமைவுற்றது. இந்த ஒழுங்கு 1980 ஆம் ஆண்டு அரசியல் அமைப்பு சீர்திருத்ததின் அடிப்படையிலும் ரண சுதந்திரத் தேர்தல் அடிப்படையிலும் முழுமையான சனநாயக முறையை நோக்கி இணக்கப் பேச்சு வார்த்தையின் வாயிலாக நிலைமாற்றம் ஒன்றை எதிர்பார்த்தது. 1986 ஆம், 1987 ஆம் ஆண்டுகளில் தொடர் அரசியல் கிளர்ச்சிகள் நடத்தப்படும். (சில படுமோசமாக அடக்கப்படடது) மனுவல் றொட்ரிகாவின் தேசாபிமான முன்னணியால் வன்செயல்கள் துாண்டி விடப்பட்டும் அரசியலமைப்புச் சீர்திருத்தத்துக்கும் கட்டுப்பாடற்ற தேர்தல்களை நடத்துவதற்கான கோரிக்கையை அரசாங்கம் விட்டுக் கொடுக்கவில்லை. சர்வசன வாக்கெடுப்பு நெருங்கி வந்து கொண்டிருந்த நேரத்தில் எதிரணியின் போக்கு உத்தி மாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டு வந்தது. சர்வசன வாக்கெடுப்பில் 'இல்லை" என்ற வாக்கு சிலி நாட்டில் அரசியல் போக்கை முற்றாக மாற்றிவிடும் என்ற வாதம் வலுப்பெற்றது.
‘தேசிய உடன்படிக்கை தலைவர் சேர்ஜியோ மோலினோ வாக்காளர் பதிவை ஊக்குவிப்பதற்கான நாடளாவிய இயக்கமொன்றினை அறிவித்தார். கோடானுகோடி வாக்காளர்களின் பதிவு, அரசியலமைப்புச் சீர்திருத்தத்திற்குச் சாதமாகத் தானாகவே செல்வாக்குச் செலுத்தும் எனவும் எதிர்க்கட்சியுடன் இணக்கப் பேச்சு வார்த்தை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் எனவும் ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது. வாக்காளர் பதிவின் போது தகுதிவாய்நத 82 இலட்சம் வாக்காளர்களுள் 73 இலட்சம் பேர் பதிவாகினர். ஆயினும், அரசு, அரசியலமைப்பில் விதித்துரைக்கப்பட்ட காலவரையறையைக் கண்டிப்பாக கடைப்பிடித்தது. பல வேட்பாளர்கள் போட்டியிடும் தேர்தல்ஒன்றுக்கான வாய்ப்புகள் படிப்படியாகக் குறையவே பல
95

Page 56
எதிர்க்கட்சிகள் தங்களைச் சீரமைத்து உத்தியோக பூர்வமான வேட்பாளரான அகஸ்டோ பினோச்செட் என்பவரை நிராகரிக்கக் கோரும் பிரசாரத்திற்குத் தங்களை ஒன்று திரட்டிக் கொண்டன. கம்யூனிஸ்ட் கட்சி கூட அதன் முக்கிய நிலையை மாற்றி 1988 யூன் மாதத்தில், சர்வசன வாக்கெடுப்பில் பங்குபற்றி "இல்லை" என்று வாக்களிக்கும் படி தனது ஆதரவாளர்களைத் துரண்டியது.
இந்தத் தந்திரோபாய மாற்றநிலையால் எதிரணி அரசியல் கட்சிகள், தாம் முன்னர் எந்த அரசியல் யாப்பின் செல்லுபடியாகும் தன்மையை இ துவரை நிராகரித்தனரோ அந்த அரசியல் யாப்புக்குச் சட்டவலுவூட்டும் ஆபத்துக்குத் தள்ளப்பட்டனர். தற்போதைய அரசியலமைப்பின் கட்டுக்கோப்பிற்குட்படும் ஆத்தையும் அரசியல் அதிகாரத்தை மீளப் பகிர்ந்தளிக்கச் செய்து ஆயுதப் படைகளின் மீது குடியியல் அதிகாரத்தைச் செலுத்துவதிலிருந்தும் ஜெனரல் பினோச்செட்டை விரைவில் துறக்குமாறு நிர்ப்பந்திக்கச் செய்யும் பணியை நிறைவேற்ற இயலாத நிலைக்கு ஆளாகும் ஆபத்தையும் எதிர்நோக்கியது.
சனநாயகத்துக்கான கட்சித் தலைவரும் சோவியத் ஒன்றியத்திற்கு அலன்டேயின் தூதுவராக நியமிக்கப்படவிருந்தவருமான ரிக்காடேலாகோஸ் இந்நிலைமையிட்டு அமைதியற்றிருந்தார். ஆயினும் “இல்லை” என்று உறுதியாகக்கூறும் வாக்கினால் சனாதிபதி பினோச்செட்டை ஒரு நொண்டிக் குதிரையின் நிலைக்குத் தள்ளிவிட்டு, அரசியலமைப்புச் சீர்திருத்தம் ஒன்றைச் செய்வதற்கு இராணுவத்திற்கும் எதிரணிக்கும் இடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெறச் செய்யும் சாத்தியக் கூறுகளை அதிகரிக்கும் என்று வாதாடினார். ஆனால் இந்த எதிர்பார்ப்புகள் உண்மைநிலைக்கு மாறானவையாக மாறிவிட்டன. ஜெனரல் பினோச்செட் தோல்லியை (பெரும்பாலும் இராணுவ செயலாட்சிக் குழுவின் ஏனைய உறுப்பினர்களினதும் உள்துறை மற்றும் வெளிநாட்டமைச்சர்களினதும் வற்புறுத்தலினால் இருக்கலாம்) ஏற்றுக்கொண்டார். பொறுப்பேற்பதற்கான அல்லது அரசியலமைப்புச் சீர்திருத்தத்திற்கான கோரிக்கையை ஏற்றுக் கவனிப்பதற்கான காலக்கெடுவைக் குறைக்க முடியாதெனத் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
சனநாயக , ஆட்சிமுறையொன்றினை நோக்கிப் பயனுறுதியுடன் நிலைமாறும் தொடர்பில் சிலியின் எதிர்காலம் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. சர்ச்சைக்குரிய, கொடுரமான 15 வருட கால ஆட்சியின் பின்னர் பினோச்செட்டின் ஆட்சிக்குக் கிடைத்த 43% வாக்கு
96

அற்பத்தனமான ஒரு சாதனையல்ல என்று பல அரசியல் அவதானிகளால் கருதப்படுகிறது. சிலியின் அரசியல் நிலைப்பாடு கன்சர்வேட்டிவ் கட்சி, கிறிஸ்தவ சனநாயகக் கட்சி, சோசலிஸ்ட் கட்சி என்பவற்றிற்கிடையே வரலாற்று ரீதியாக பெரும்பாலும் சமபலமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சிலியின் கார்ளோஸ் என்பவரால் அரசியல் அபிப்பிராயத்தின் மீது நடத்தப்பட்ட அண்மைக்கால மதிப்பீடொன்றிலிருந்து சகல சமூக வகுப்புகளையும் சேர்ந்த சிலி மக்கள் 1950 ஆம் ஆண்டின் பின்னர் தங்கள் அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்து மிகச் சிறிதளவே மாறியுள்ளனர் எனக் காணப்பட்டுள்ளது. மிகச் சமீபகால மாற்றங்களையடுத்து சனநாயக எதிரணிகள் மேலும் பிளவுபட்டு தற்பொழுது 6 தேசிய கட்சிகளும் 6 பிராந்திய கட்சிகளும் உத்தியோகபூர்வமான அங்கீகாரம் பெற்றுள்ளன. சனாதிபதிப் பதவியை விரும்புபவர்களுள் அறிஞர் றிகாடோ லாகோஸ் என்பவரே எல்லோரையும் கவரக் கூடிய, பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய செயல்வீரர் என்பது நடுநிலை அவதானிகளின் கருத்தாகும். நிகர்த்து நிற்க முடியாத இலட்சியங்களில் பலரகப் பிளவுபட்ட சக்திகள் அத்தகைய ஒருமித்த தெரிவு அபேட்சகர் ஒருவரின் தலைமையில் ஐக்கியப்படுவது சாத்தியமல்ல.
இறுதிக் கணக்கெடுப்பின்படி, "இல்லை" என்பதற்குச் சாதகமாக 54.68 வாக்குகள் கிடைத்திருப்பதாக உள்துறை அமைச்சின் பேச்சாளர் அறிவித்த சிறிது நேரத்துக்குள் ஆயிரக்கணக்கான சிலி மக்கள் சந்தியாகோ நகரின் வீதிகளில் ஆடிப்பாடி மகிழ்சி ஆரவாரம் செய்தனர். இந்த இயக்கத்தின்போது நீலவர்ண டான்யூப் நதி "எதிரணியினர் களிநடனம் புரியும்” நடன அரங்காக மாறியது. எதிரணியின் பிரமாண்டமான வெற்றிப் பேரணிகளில் மக்கள் "அவர் வீழ்க", "அவர் வீழ்க" எனக் கோஷமிட்டனர். இராணுவ ஆட்சி திடீரென சரிந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு உண்மைக்குப் புறம்பானதாக ஏமாற்றமாக அமைந்தது. பகடைக்காய் பினோச்செட்டிற்கு ஆதரவாகவே உருளுகின்றது. எனினும் ஆட்டத்தில் உடனடியாக மாற்றம் எதுவும் ஏற்படுத்துவதற்கான அறிகுறிகள் இல்லை.
97

Page 57

இலங்கையில் போரும் அமைதியும்

Page 58

பழம் பெருமை கொண்ட பெருநகர் யாழ்ப்பாணத்தின் அழிவு
இலங்கை இன மோதலிலேயே மிக மிக வேதனையான கட்டம் இலங்கை அரசின் "ரிவிரச” (சூரிய ஒளி) இராணுவ நடவடிக்கையுடன் ஆரம்பமானது. சனத்தொகை அதிகமான பகுதி என்பதால் யாழ்ப்பாணத்தின் மீது முழு அளவிலான இராணுவ நடவடிக்கை எடுக்க முன்னைய அரசுகள் தயங்கியதுண்டு. எனவேதான் அமைதியைக் கொண்டு வருவதாகக் கூறி மக்கள் கட்டளை பெற்று அமைத்த இந்த அரசு முன்னைய அரசுகள் நடத்தத் தயங்கிய நடவடிக்கையில் இறங்கியது எதிர்பாராத ஒன்று.
நாலரை இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்தப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு யாழ்ப்பாணத் தீபகற்பத்தின் பிற பகுதிகளில் பரிதாப வாழ்க்கையில் உழலுகிறார்கள். வெளியேறிய மக்களுக்கு உணவோ, தண்ணிரோ, தங்குமிடமோ, சுகாதார வசதியோ, குறைந்த பட்ச மருத்துவ உதவியோ கூடக் கிடைக்க வழியில்லாமற் போயிற்று. ஊர் விட்டு ஊர் போனதால் ஏற்பட்ட உடல்ரீதியான கஷ்டம் தவிர மன வேதனையும் சொல்லி மாளாது. அவர்கள் வாழ்வே அடியோடு உருக்குலைந்து போயிற்று. "பொஸ்டன் குளோப்" சுட்டிக்காட்டியது போன்று, "அந்த வட்டாரத்திற்குள் செய்தியாளர்களோ புகைப்படக்கருவிகளோ அனுமதிப்படாததால் தமிழர்கள் அனுபவிக்கும் பயங்கரக் கஷ்டம் நடுக்காட்டில் ஒசையில்லாமல் மரம் சாய்ந்தது போல வெளியே தெரியாமல் போகிறது. ஆனால் இவர்களும் முன்னைய யுகோஸ்லாவிய அகதிகள் படும் அளவுக்கு வேதனையைச் சந்திக்கிறார்கள்."
101

Page 59
தமிழர்களின் பண்பாட்டு, நாகரீகத் தலைமையகம் யாழ்ப்பாணம். தொன்மையான நகர் இது. பெருமைமிக்க வரலாறு கொண்டது. 13 ஆம் நூற்றாண்டிலிருந்தே ஆரியச் சக்கரவர்த்திகள் அரியணை அமர்ந்து கோலோச்சிய பீடம் யாழ்ப்பாண ராஜ்யம். 1620 இல் போர்த்துக்கேயர் இந்த மன்னராட்சிப் பகுதியைக் கைப்பற்றினார்கள். சைவப் பற்றாளர்களான ஆரியச் சக்கரவர்த்திகள் தங்கள் காசுகளில் நந்தி இலச்சினை பொறித்தார்கள். சுமார் நாற்பது வருடம் வரை யாழ்ப்பாணத்தைப் பிடி த்து வைத்திருந்த போர்த்துக்கேயர் யாழ்ப்பாணக் கோட்டையைக் கட்டினார்கள்.
1798 இல் ஆங்கிலேயர்கள் வரும்வரை ஆண்ட போர்த்துக்கேயர் நகரை விரிவுபடுத்தி முக்கிய கோயில்கள் பலவற்றைக் கட்டினார்கள். பின்பு ஆங்கிலேயர் ஆட்சியின் போது யாழ்ப்பாணம் இந்தத் தீவின் இரண்டாவது பெரிய நகராக உருவெடுத்தது. அமெரிக்கப் பாதிரிகள் பலதரப்பட்ட பள்ளிக் கூடங்களை நிறுவினார்கள். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கையில் ஆறுமுக நாவலரும் தென்னிந்தியாவில் சி.டபிள்யூ. தாமோதரம்பிள்ளையும் சிறந்த தமிழறிஞர்களாகத் திகழ்ந்தார்கள். நாவலர் இந்து மறுமலர்ச்சி இயக்கத்தை முன்னின்று நடத்தினார். உரைநடைத் தமிழுக்கு இவர் செய்த பங்களிப்பு மதிப்பார்ந்தது. தாமோதரம் பிள்ளையின் தமிழ் இலக்கியப் படைப்புக்கள் அற்புதமானவை. இலக்கிய விமர்சனத்துறையையும் துவக்கி வைத்தார். யாழ் நகரில் 21 ரோமன் கத்தோலிக்கக் கோயில்களும், 8 புரட்டஸ்தாந்துக் கோவில்களும், 8 மசூதிகளும், பத்துக்கும் மேற்பட்ட இந்துக் கோயில்களும் இருக்கின்றன. நல்லூர் கந்தசாமி கோயில், யாழ்ப்பாணம் சிவன் கோவில், மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் என்பவை பல நூற்றாண்டு காலப் புராதனம் கொண்டவை.
கொழும்பு, அனுராதபுரம், கண்டி இந்த மூன்றின் கலவைதான் யாழ்ப்பாணம் என்பதை தமிழர்களின் கலாசார அரசியல் எண்ணங்களிலிருந்து பகுத்துச் சொல்லியிருக்கிறார் ஜெயதேவ உயாங்கொட. ஆக, யாழ்ப்பாணத்திலிருந்து மக்களைக் காலி செய்வது என்பது ஒரு பயங்கர சோகம்தான். இது குறித்து இலங்கைத் தமிழர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த மனவேதனை.
இப்போது குடி பெயர்ந்திருக்கும் மக்களின் சேமநலத்திற்குத்தான் சம்பந்தப்பட்டவர்கள் முன்னுரிமை தரவேண்டும். அவர்களின் துயரம் பூதாகரமாகி விடாமலிருக்க முடிந்தவரை முயற்சிக்க வேண்டும்.
102

இந்தப் பழம்பெரும் நகரில் சகஜநிலை திரும்ப, மக்கள் பத்திரமாகச் சொந்த வீட்டிற்குச் செல்லக் கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.
சிக்கலில் மாட்டியிருக்கும் இந்த தீவின் எதிர்காலம் இருண்டுபோய்ப் பயங்கரமாகத் தோன்றுகிறது. என்றாலும் உள்நாட்டுப் போர் மற்றும் மோதல் நடக்கும் உலகின் மற்றப் பகுதிகளில் இது விஷயத்தில் பிரமிக்கத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஐரோப்பாவில் நடந்த மிகக் கொடுமையான உள்நாட்டுப் போர்களுள் ஒன்றான பொஸ்னிய-சேர்பிய யுத்தம் ஓர் உதாரணம் , 21 நாள் பேர்ச்சுவார்த்தைக்குப் பின்பு சேர்பிய, பொஸ்னிய, குரோஷிய அரசுகள் ஓர் அமைதி ஒப்பந்தத்திற்கு வந்திருக்கின்றன. (இந்த மோதலில் 2 லட்சத்திற்கும் மேலான மக்கள் உயிரிழந்தனர். 20 லட்சம் மக்கள் அகதிகளானார்கள்) இங்கிலாந்து-அயர்லாந்து இடையே மிக நீண்ட காலமாக நடந்துவரும் மோதலிற் கூட பேச்சு வார்த்தைகளுக்குப் பின் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. பல பின்னடைவுகள் ஏற்பட்டும் கூட மத்திய கிழக்குப் பகுதியில் பாலஸ்தீனர்களுக்கு சுயாட்சி புரியும் உரிமை வந்திருக்கிறது. இந்த வெற்றிகளில் இருந்து இலங்கை மோதலுக்குச் சில படிப்பினைகள் கிடைத்தே தீரும்.
இரண்டு தரப்புகளுக்கிடையே மறுபடியும் பேச்சுவார்த்தை நடக்காமல் மனித நேயப் பிரச்சினைகளையோ அல்லது அரசியற் பிரச்சினைகளையோ தீர்க்க முடியாது. ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தை தோற்றுப் போனதால் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டதாக அர்த்தமில்லை. இரண்டு தரப்புகளுக்குமிடையேயும் அவநம்பிக்கை கணிசமான அளவு அதிகரித்திருக்கிறது என்பதில் சந்தேகமேயில்லை. இந்தச் சூழலில் பேச்சுவார்த்தை நடக்க மூன்றாவது நபர் ஒருவர் தலையிட இரண்டு தரப்புமே அனுமதிக்க வேண்டும். வெளியார் தலையீடு இதுபோன்ற மற்றய மோதல்களில் பலன் தந்திருக்கிறது. பொஸ்னியாவில் அமெரிக்கா தலையிட்டு ஏற்பட்ட உடன்படிக்கை நியாயமானதுதானா என்று பொஸ்னிய அதிபரைக் கேட்டார்கள். அது நியாயமானது இல்லையென்றாலும் கூட, சண்டை தொடர்வதைவிட மேலானது என்று அவர் பதில் சொன்னார்.
“இந்தியா டுடே", டிசம்பர் 6:20, 1995
103

Page 60
இலங்கையில் போரும் அமைதியும்
யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்ட ராணுவ நடவடிக்கை இப்போது கடும் போராக வெடித்திருக்கிறது. ஒரு சில நாட்களிலேயே இரண்டு தரப்பிலுமாக 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயமடைந்தார்கள் அல்லது கொல்லப்பட்டார்கள். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தொடர்ந்து நகரை விட்டு வெளியேறி அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் வசிக்கும் பகுதிகளில் கண்மூடித்தனமாக விமானம் மூலம் குண்டு வீசப்படுகிறது. இதனால் சாவின் எண்ணிக்கை அதி பயங்கரமாகக் கூடுகிறது. யாழ் நகருக்குப் போதுமான உணவு, மருந்துகள் அனுப்பப்படவில்லை என்று தொண்டர் ஸ்தாபன அமைப்புகள் கசப்புடன் குற்றம் சாட்டுகின்றன. பாமர மக்களைப் பட்டினி போடுவதை ஒரு யுத்தகால வியூகமாகக் கடைப்பிடிப்பது சர்வதேச சட்டப்படி குற்றம். அரசு உறுதிமொழிகளைக் கொடுத்தாலும் ராணுவ நோக்கங்களை அடைய மனிதநேயப் பிரச்சினைகளைத் தொடர்ந்து ஓரங்கட்டி வருகிறது.
யுத்தம் கொழும்பு நகரையும், பற்றிக்கொண்டதால் நெருக்கடி இன்னும் சிக்கலாகியிருக்கிறது. எண்ணெய்க் கிடங்குகள் மீது தைரியமாகத் தாக்குதல் தொடுத்து எட்டுப் பெற்றோலியத் தாங்கிகளைத் தீக்கிரையாக்கியமை கொழும்பு நகரை அதிரவைத்தது. இந்தத் தீ, வீடுகளை எரித்து நகரின் பெரும்பாலான இடத்தைச் சாம்பலாக்கிவிடும் என்று மக்கள் பீதியில் நடுங்கினார்கள். இந்தியத் தீயணைப்பு வீரர்கள் தீயணைப்புக் கருவிகளுடன் விரைந்து வந்து உள்ளூர் வீரர்களுடன் சேர்ந்து ஒருவழியாக நெருப்பை அணைத்தார்கள். இந்தத் தாக்குதலைத் தொடுத்த ஆயுதமேந்திய குழுவிற்கும் அரசுப்படிைக்கும் இடையே அடுத்த நாளும் தெருக்களில் மோதல்
104

தொடர்ந்து நடந்தது. ஒரு கூட்டம் நகரைச் சுற்றி வந்து அப்பாவித் தமிழ் மக்களை அச்சுறுத்தியது. இரண்டு தமிழர்கள் கம்பால் அடித்துக் கொல்லப்பட்டார்கள். தமிழர்கள் என்பதாலேயே பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வரைமுறையில்லாமல் கைதாகித் துன்புறுத்தப்பட்டார்கள். இதற்கிடையில் பிரதேச எல்லைகளிலிருக்கும் அனுராதபுரம், பொலநறுவை, அம்பாறை மாவட்டக் கிராமங்களில் நிராயுதபாணி மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள். இவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நிராயுதபாணி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதில் நியாயமேயில்லை.
இலங்கையில் நடக்கும் இந்த உள்நாட்டு யுத்தத்தைச் சர்வதேச தொடர்புச் சாதனங்கள் மறந்து போய் விட்டன. உள்ளூர் நிருபர்களைக் கூடக் காணவில்லை. நடந்து கொண்டிருக்கும் சோகத்தை விளக்கப் புகைப்படங்களும் காணோம். இதற்கு மாறாக, செஸ்னியாவிலும் முன்னாள் யூகோஸ்லாவியாவிலும் நடந்த யுத்தத்தைப் பற்றி 10,000 மடங்கு அதிகமாகச் செய்திகள் வருகின்றன. இங்கே வெளிநாட்டுச் செய்தி நிறுவனங்களும் செய்தியாளர்களும் கூட இராணுவச் செய்தித் தொடர்பாளர், கொடுத்த செய்திகளை மட்டுமே நம்பி இருக்கிறார்கள்.
இராணுவ நடவடிக்கைகளைப் பற்றிய செய்திகள் தணிக்கை செய்யப்படுவது உண்மைதான். ஆனால் சர்வதேச தொடர்புச் சாதனங்களுக்குத் தணிக்கை எதுவும் கிடையாது. வட-கிழக்கில் நடக்கும் சண்டை உள்ளூர் மோதலாகக் கருதப்படுவதுதான், சர்வதேச தொடர்பு சாதனங்கள் அதை அவ்வளவாகக் கண்டு கொள்ளாமல் இருப்பதற்குக் காரணம். இந்தச் சண்டையில் சர்வதேச தொடர்பு சாதனங்களின் கவனத்தைக் கவருமளவுக்குப் பெரிய அளவில் பூகோள-அரசியற் பிரச்சினைகள் இல்லை என்று தோன்றுகிறது.
இலங்கையின் மக்கள் இந்த நெருக்கடியிலிருந்து எப்படி மீளுவார்கள்? சிவிலியன்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றிக் கவலைப்படாமல் இராணுவ நடவடிக்கையை அரசு தொடர்ந்து நடத்துமா? ஏதேனும் ஒருவிதத்தில் வெளியிலிருந்து மத்தியஸ்த முயற்சிகள் நடப்பது சாத்தியமா? அமைதிக்கான முயற்சியில் உதவி செய்ய ஐ.நா. பொதுச் செயலாளர் முன்வந்திருக்கிறார். அரசிடமிருந்து தெளிவான பதில் எதுவும் கிடைக்கவில்லை. ஐ.நா.வின் சில அமைப்புகள் போர்
105

Page 61
அகதிகளுக்கு நிறைய உதவிகளைச் செய்திருக்கின்றன. செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேசக் குழு, உணவு மற்றும் மருந்துகளை எடுத்துச் செல்லவும் யாழ்ப்பாணப் பொது மருத்துவ நிலையத்தில் அறுவைச் சிகிச்சை நடத்தவும் உதவி செய்திருக்கிறது. இந்தப் போரினால் எழுந்துள்ள மனிதாபிமான, மற்றும் மனித உரிமைப் பிரச்சினைகள் பற்றி ஐ.நா. கவலைப்படுகிறது. ஆனால் அரசியற் பிரச்சினைகளில் ஐ.நா.வைத் தலையிட அனுமதிக்க அரசு தயங்கி வருகிறது. புலிகளுக்கும் தனக்கும் இடையே அரசியல்ரீதியாகத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதற்காக நோர்வே, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிடம் தனக்கிருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்திக் கொள்ளவும் அரசு தயங்குகிறது. இனப்பிரச்சினையைத் தீர்க்க சர்வதேச நிபுணர்களின் உதவி தேவையில்லை என்று சமீபத்தில் அரசு வலியுறுத்திக் கூறியது. 1994 இறுதியிலும் 1995 தொடக்கத்திலும் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குக் கொழும்பைச் சேர்ந்த அங்கிலிக்கன் பிஷப் அதி வண. கென்னத் ஃபெர்னாண்டோ போன்ற உள்ளூர் மத்தியஸ்தர்கள் உதவினார்கள். ஆனால் சர்வதேச சமூகத்தின் உதவியின்றி இனிப் பேச்சுவார்த்தையைத் தொடங்க (pl. LUTTE என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
சனாதிபதி சந்திரிகா, அமெரிக்காவில் இருந்தபோது, பேச்சுவார்த்தைகளை மறுபடியும் தொடக்குவதற்கு மூன்று நிபந்தனைகளைத் தெரிவித்தார். போர் நிறுத்தம், பேச்சுவார்த்தைக்கான தேதிகள் மற்றும் அடையாளபூர்வமாக ஆயுதங்களைக் கீழே போடுதல் ஆகியவைதான் அந்த நிபந்தனைகள். பேச்சைத் தொடங்க இவை முக்கியமானவை என்பதிற் சந்தேகம் இல்லை. மக்கள் படும் அவதிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் இதற்குப் புலிகளிடமிருந்து ஆக்கபூர்வமான பதில் வர வேண்டும். சில மாதங்களுக்கு முன்பு சந்திரிகா வெளியிட்ட அமைதித் திட்டத்தைப் பேச்சுவார்த்தைக்கான அடிப்படையாக வைத்துக் கொள்ளலாம். இந்த வாய்ப்பைத் தவற விட்டால் மரணம், அழிவு என்ற கொடூரச் சுழலில் இருந்து தப்பவே முடியாது.
“இந்தியா டுடே", நவம்பர்”, 6:20, 1995
106

இலங்கை யுத்தம்உயிர்களின் விலை என்ன?
மக்கள் கூட்டணி அரசு 1994 ஆவணியில் ஆட்சிக்கு வந்ததும் மனித உரிமைப் பிரச்சினைகள் மற்றும் முன்னைய ஆட்சியில் நடந்த விசாரணையில்லாக் கொலைகள், திடீரென்று சிலர் காணாமற் போவது ஆகியவற்றில் மும் முரமாகக் கவனம் செலுத்தியது. தெற்கில் "ஜனதா விமுக்திப் பெரமுன” கலகத்தின் போது பாதுகாப்புப் படைகள் செய்த படுகொலைகளையும் வடக்குக் கிழக்கில் நபர்கள் காணாமல் போகும் சம்பவங்களையும் புலனாய்வு செய்ய மூன்று ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. பல பிணக்குவியல்கள் தோண்டியெடுக்கப்பட்டன. இராணுவம் மற்றும் பொலிசில் ஒரு பிரிவினரின் மனித உரிமை அத்துமீறல்கள் எல்லாம் அனைவர் கவனத்திற்கும் வந்தது. இதையடுத்து அரசு மனித உரிமைகள் ஆணைக்குழுவை நிறுவுவதாக வாக்குறுதியளித்தது. அப்பாவிச் சிவிலியன்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்குக் கைது செய்வது, காவலில் வைப்பது சம்பந்தமாக விரிவான ஆணைகளும் பிறப்பிக்கப்பட்டன. தெம்பை அளித்த நடவடிக்கைகள் இவை.
இருந்தாலும் புதிய அரசு வந்தபின் மனித உரிமைகள் விடயத்தில் நிறையக் கவலை தரும் சம்பவங்கள் நடந்திருக்கின்றன; நடந்து வருகின்றன. பல மாதங்களாக, கொழும்பின் பல்வேறு பகுதிகளில் தமிழ் இளைஞர்கள் காவல்துறைச் சின்னம் பொறிக்காத வேன்களில் வந்தவர்களால் பிடித்துச் செல்லப்படுகிறார்கள். ரோயல் கல்லூரி மாணவர் ஒருவரும் அவர்களில் ஒருவர். இவர் ஜி.சி.ஈ. தேர்வில் எல்லாப் பாடங்களிலும் மிக அதிக மதிப்பெண்கள் பெற்றவர். அவருக்குப் போதை மருந்து தரப்பட்டு ரகசிய இடத்துக்குக்
107

Page 62
கொண்டு செல்லப்பட்டார். சித்திரவதை நடந்தது. பாலியல் வன்முறைக்கும் ஆளானார். இக் கைதுகளையடுத்து, சொல்லி வைத்தாற்போல பொல்கொட ஏரியிலும் நகரின் பல இடங்களில் சாலையோரத்திலும் பிணங்கள் கிடந்தன. அந்த உடல்கள் அழுகிப் போய் உருக்குலைந்திருந்ததால் அடையாளம் காண்பது கடினமாயிருந்தது. என்றாலும் அவர்கள் எல்லாரும் தமிழர்கள்தான். கைது செய்து ரகசிய இடத்திற் சிறை வைத்துச் சித்திரவதை செய்வதற்கும் அடையாளம் தெரியாத உடல்கள் கிடப்பதற்கும் தொடர்பு இருப்பதாகப் பலமான சந்தேகம் நிலவியது. பல மாத புலனாய்வுக்குப் பின் காவலில் வைக்கப்பட்ட தமிழர்களைக் கொன்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இராணுவத்திலும் விசேட அதிரடிப் படையிலும் கிட்டத்தட்ட 30 பேரைக் கைது செய்திருப்பதாக அரசு கூறியது.
அரசு அதன் புலனாய்வுகளுக்காகப் பாராட்டப்பட வேண்டுமென்றாலும் அது பற்றிய முழு விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை. இதற்கிடையே தமிழ் இளைஞர்களும் இளம் பெண்களும் தொடர்ந்து எழுந்தமானமாகக் க்ைது செய்யப்படுகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் 48 மணிநேரத்தில் விடுதலை செய்யப்படுகிறார்கள். ஆனால் பாதுகாப்புப் படைகள் ரசீது தருவது மற்றும் கைதானவர்களின் உறவினருக்குத் தெரிவிப்பது போன்ற நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதில்லை என்று மனித உரிமைகள் கழகத்தினர் குறை கூறுகிறார்கள்.
வடக்குக் கிழக்கில் நடக்கும் சண்டையில் சிவிலியன்கள் கொல்லப்படுவது பெரும் கவலை தரும் விடயம். "முன்னேறிப் பாய்தல்" ராணுவ நடவடிக்கையில் பல சிவிலியன்கள் உயிரிழந்தார்கள். 2,00,000 பேருக்கு மேல் வீடிழந்தனர். புரட்டாதி 22 இல் பருத்தித்துறைக்கு அருகே ஒரு பாடசாலையின் மீது குண்டு வீச்சு நடந்ததில் ஏறத்தாழ 23 குழந்தைகள் கொல்லப்பட்டார்கள். 118 பேர் காயம் அடைந்தார்கள். பருத்தித்துறை மருத்துவமனையில் பணிபுரியும் பிரெஞ்சு டாக்டர்கள் அப்போது 34 பேருக்குக் கை, கால் நீக்கம் செய்து காப்பாற்ற வேண்டியிருந்தது. வேண்டுமென்றே செய்கிறார்களோ, கவனக்குறைவோ பொதுமக்கள் வாழுமிடத்தில் குண்டு வீசுவது நியாயமே அல்ல. வடக்கில் அரசு தன் தாக்குதலைத் தீவிரப்படுத்தினால் பொதுமக்கள் உயிர், உடைமை இழப்புக்கு மேலும் ஆளாகலாம் என்ற பயம் அதிகரிக்கிறது.
108

இந்த அரசு ஆட்சிக்கு வந்து ஒரு வருடமாகிறது. அரசியற் திட்டங்களை அறிவிக்கும் துணிவான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. என்றாலும் நாடு முழுக்கத் தமிழ் சிவிலியன்கள் பயங்கர அவதிப்படுகிறார்கள். மனித உயிர் புனிதமானது, மற்றவர்களைப் போலவே தமிழர், அவர்கள் நிலை மிகப் பயங்கரமானது. உயிரும் மதிப்புள்ளது என்ற அடிப்படையில்தான் சமாதானத்துக்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளப்பட வேண்டும். மனித உரிமைகள் மற்றும் பொதுமக்கள் உயிர், உடைமை ஆகியவற்றின் பாதுகாப்புப் போன்ற பிரச்சினைகள் முக்கியத்துவம் பெறுவது அதனால்தான்.
கைதுகளின் போது கைதிகளுக்கான பாதுகாப்பு நெறிமுறைகளை ஒழுங்காக அனுசரிக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மனித உரிமைகள் செயலனிப் பிரிவுக்குத் தாராளமாக அதிகாரம் வழங்கப்பட்டும் அது தன் வேலையை இன்னும் சரிவரச் செய்யவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஒரு வர்த்தகரும் அவர் மனைவியும் தொழில் ரீதியான போட்டியால் பொய் முறைப்பாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு பொலிஸ் கெடுபிடிக்கு உள்ளானார்கள்.
இது போன்ற சம்பவங்களில் செயலணியினரின் குறுக்கீடு முக்கியத்துவம் பெற்றது. ஆனால் கைது, குறுக்கு விசாரணை ஆகியவற்றில் பொலிஸ் சர்வதேச மனித உரிமைகள் தரத்துக்கு வருமாறு செயலணியினர் பார்த்துக் கொள்ளவில்லை. உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பல வருடங்களாகப் பலரும் கவலையை வெளியிட்டும் நகரின் மையத்திலேயே இரகசிய இடங்களில் சிறை வைத்துச் சித்திரவதை செய்வது தொடர்ந்து நிகழ்கிறது என்பது தான் கொடுமை.
தமிழர்கள் சமமாக மதிக்கப்படுவார்கள் என்று புதிய அரசின் அமைப்பில் உறுதியளிக்கப்படுகிறது. ஆனால் பாதுகாப்புப் படைகளில் ஏதாவதொரு பிரிவு தமிழர்களின் உயிர்வாழும் உரிமையைப் பறித்துவிடும் போக்கில் தடங்கலின்றி இயங்குவதால் இந்த உறுதிமொழியெல்லாம் அர்த்தமற்றவையாக்கப்படுகின்றன,
“இந்தியா டுடே, ஒக்டோபர், 6:20, 1995
109

Page 63
திட்டம் வெற்றி பெறுமா?
இலங்கையின் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க முன்வைத்த திட்டங்கள்தான் அரசியல் விவாதங்களுக்கு இன்றைய தலைப்பு. இந்தத் திட்டங்களை அரசியற் சாசன நகல் திட்டமாக மாற்றுவதும், பல அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகளைக் கொண்ட பாராளுமன்றத் தேர்வுக் குழுவிடம் கையளிப்பதும் அடுத்த கட்டம். பின், இரண்டு மாதங்கள் அக்குழு அதனைப் பரிசீலிக்கும். தேர்வுக்குழு ஒப்புக் கொண்டால், தீர்வுத்திட்டம் பாராளுமன்றம் செல்லும். பாராளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் ஒப்புக் கொண்டால் அரசியற் சாசன நகல் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகி விடுகிறது. 225 இடங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு 150 இடங்கள் வேண்டும். மக்கள் கூட்டணி அரசிடம் இருப்பது 139 வாக்குகளே. எனவே, திட்டம் வெற்றி பெற வேண்டுமெனில் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவு வேண்டும். பின்பு, புதிய அரசியற் சாசனத்தின் மீது நாடு முழுவதும் பொதுக் கருத்துக் கணிப்பு நடத்தி அதிலும் வெற்றி பெற வேண்டும்.
அரசின் புதிய ஆலோசனைகளின் முக்கிய அம்சங்கள் இவை:
(1) இலங்கை வேறுபட்ட பல இன, மத, சமூகங்களைக் கொண்ட ஒரு பன்மைச் சமூகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்த சமூகங்கள் தங்கள் தனி அடையாளங்களைப் பேணிக்காக்க, வளர்க்க உரிமையுடையவை.
1 10

(2)
(3)
(4)
(5)
சிங்கள மொழிக்குச் சமமான அந்தஸ்துடன் தமிழ் ஆட்சி மொழியாக்கப்பட்டிருக்கிறது. 1988 இல், இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற் கூட தமிழ் ஆட்சிமொழியாக வழிவகை செய்யப்பட்டிருந்தது. எனினும், சிங்களத்துடன் சம அந்தஸ்துத் தரப்பட்டிருப்பது இப்போதுதான். இதன் மூலம், இனங்களின் உறவில் உறுத்திக் கொண்டிருந்த ஒரு முள்ளை அகற்ற அரசு முயற்சி எடுத்திருக்கிறது.
அரசின் தன்மையே மீள்வரையறை செய்யப்பட்டிருக்கிறது. இரண்டாம் குடியரசு அரசியற் சாசனம் இலங்கையை ஒற்றையாட்சி அரசாக வடிவமைத்தது. புதிய ஆலோசனைத் திட்டம், இலங்கையை ஒன்றுபட்ட, இறையாண்மை உடைய பிரதேசங்களின் ஒன்றியமாக விவரித்திருக்கிறது. இந்திய அரசியற் சாசனத்தின் வழியில், அதிகாரம் பகிர்வு செய்யப்பட வேண்டும் என்று கூறிய மங்கள முனசிங்க பரிந்துர்ைகளின் அடிப்படையில், இது ஒரு உணர்வுபூர்வமான முயற்சியே.
சட்டமியற்றல் மற்றும் நிர்வாக அதிகாரங்கள் முழுமையாகப் பிரதேசங்களின் பட்டியலுக்கு மாற்றப்பட்டுவிடும். இன்றைய மாகாணம் ஒவ்வொன்றும் பிரதேசமாக மாற்றப்படும். ஆனால் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து புதிய பிரதேசங்கள் பிரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே இருந்த பொதுப் பட்டியல் நீக்கப்பட்டு அதிலிருந்த துறைகள் பிரதேசப் பட்டியலுக்கு மாற்றப்படும். இதில் நிலம், சட்டம் போன்ற துறைகளும் அடங்கும்.
மத்திய-மாகாண அரசுகளின் உறவினைப் பொறுத்தவரை, முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. ஆளுநரின் அதிகாரம் வெட்டப்பட்டிருக்கிறது. இனி அவரை நியமிக்க முதல் அமைச்சரின் ஒப்புதலும் வேண்டும். இயற்றப்படும் சட்டங்களை மறுக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. பிரதேச சட்டமன்றங்களின் பெரும்பான்மை ஆதரவு இருக்கும் வரையில், முதல் அமைச்சரை நீக்கும் அதிகாரம் இல்லை. ஆனால், வடக்கு, கிழக்கிற்கு எந்த வடிவத்தில் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும் என்பதுதான் முக்கிய விடயம், சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் நலன்களைக் கருத்திற் கொண்டு புதிய 6 ல்லைகள் வகுக்கப்படும் என ஆலோசனைத் திட்டம் கூறுகிறது. இது மிகவும் சர்ச்சைக்குரியது.

Page 64
இன முரண்பாடுகளைத் தீர்ப்பதற்காக முன்வைக்கப்பட்ட முன்னைய திட்டங்களைவிட இன்றைய திட்டம் குறிப்பிடத்தக்க வகையில் மேம்பட்டது. எனினும், ஆலோசனைத் திட்டம் தேசத்தை உடைப்பதில்தான் கொண்டு போய் நிறுத்தும் என்கிறார்கள் அதன் 6திர்ப்பாளர்கள். நாட்டின் ஒற்றை ஆட்சி முறையை மாற்றுவதையோ, நிலம், மீன்பிடி, நீர்ப்பாசனம், சட்டம்-ஒழுங்கு போன்றவற்றில் அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்படுவதையோ கடுமையாக ஆட்சேபிக்கிறர்கள். நேரடியாக அயல்நாட்டு முதலிடுகள் பெறவும் பன்னாட்டு உதவிகள், கடன்கள் பெறவும் பிரதேச சட்ட மன்றங்களுக்கு அதிகாரம் அளிக்கும் யோசனையையும் எதிர்க்கிறார்கள்.
அரசு தனது முடிவில் உறுதியாக நிற்பதிலும், சிங்களத் தேசியவாதிகளினால் திட்டங்கள் நீர்த்துப் போகாமல் பார்த்துக் கொள்வதிலும்தான் திட்டத்தின் எதிர்காலம் உள்ளது. இதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவைப் பெற வேண்டும். கோட்பாட்டு அளவில் அதிகாரப் பகிர்வையும் அரசியல் தீர்வையும் ஐக்கிய தேசியக்கட்சி ஒப்புக்கொண்டாலும், எச்சரிக்கையாக வாய் திறவாமல் இருக்கிறது. திட்டத்தைத் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள்முன் வைத்து, அவர்களையும் பேச்சு வார்த்தைக்கு இணங்கவைக்க முயற்சி எடுக்குமாறு அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் தமிழர் ஐக்கிய வரிடுதலைக் கூட்டணியின் தலைவர் திரு. எம்.சிவசிதம்பரம். திட்டம் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், இது போன்ற வழி முறைகளைக் கையாளாவிட்டால் அது ஏட்டளவிலேயே நீடிக்கும்.
“இந்தியா டுடே', செப்ரெம்பர், 6:20, 1995
112

இலங்கையில் அரசியல் தீர்வு சாத்தியமா?
இலங்கை இனப்பிரச்சினைக்கு விரைவாக ஒரு தீர்வு காண்பது என்பது இலகுவான காரியமல்ல. அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் இப்பிரச்சினையைத் தீர்ப்பதில் தீவிரம் காட்டவில்லை. இதை உடனடியாகத் தீர்த்தாக வேண்டியதன் அவசியத்தையும் அவை உணரவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. அமைதிக்கான புதிய வியூகம் வகுப்பதற்காக மக்கள் முன்னணிக்கு, குறிப்பாக சந்திரிகா குமாரதுங்காவுக்கு, மக்கள் வாக்களித்ததாகப் பரவலாகக் கருதப்படுகிறது.
செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைமையுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு, நேரடிப் பேச்சுவார்த்தைக்கான தேதியை முடிவு செய்வதே சந்திரிகா தேர்ந்தெடுத்த அணுகு முறை. சந்திரிகாவின் அணுகு முறை அவர் நியமித்த தூதுக் குழுவிற் பிரதிபலித்தது. இனமோதலின் சோகமான விளைவுகள் குறித்து அவருக்கு இருக்கும் கவலையை வெளிப்படுத்துவதாக அது அமைந்தது. பொருளாதாரத் தடையை நீக்கி உணவு மற்றும் மருந்து விநியோகத்தை அதிகரிக்க உடனடியாக நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்று அவர் கருதினார். மறுவாழ்வு மற்றும் புனர்நிர்மாணப் பணிகளுக்காகத் திட்டம் தீட்டினார். துண்டிக்கப்பட்டிருந்த மின் சப்ளை மீண்டும் அளிக்கப்பட்டது. சாலைகள் சீரமைக்கப்பட்டன. போரின் விளைவாக நாசமாகி இருந்த துணை நிர்வாக அமைப்புகள் சரிசெய்யப் பட்டன . புனர்நிர்மாணத்திற்கான தேவைகளை மதிப்பிட்டு முடிவு செய்வதற்காக மந்திரிசபைக் குழுவொன்று நியமிக்கப்பட்டது. கலாநிதி சி. குணசிங்கம்
13

Page 65
தலைமையில் அமைக்கப்பட்ட ஆலோசகர்கள் குழு ஒன்று மந்திரிசபைக் குழுவிற்கு உதவுவதற்காக ஏற்படுத்தப்பட்டது. குணசிங்கம் உலக வங்கிக்காக இது போன்ற பணிகளைச் செய்த அனுபவம் கொண்டவர். அடுத்த கட்டமாக, பரஸ்பர விரோத மனப்பான்மையைப் போக்குவதில் சந்திரிகா கவனம் செலுத்தினார். பூநகரி வழியாக புதிய கடல் மார்க்கமும், ஆனையிறவு வழியாகப் புதிய தரை மார்க்கமும் ஏற்படுத்தி வடக்குக்கும் தெற்குக்கும் இடையே போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்வதில் ஈடுபட்டார்.
காமினி திசநாயக்க கொலை செய்யப்பட்டது, அரசை மிகவும் கவலை கொள்ள வைத்து அமைதி முயற்சிகளில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.அதிர்ச்சியும், ஆவேசமும் நிரம்பிய சூழ்நிலையில் அமைதி முயற்சிகளைத் துவக்கினால் மக்கள் ஆதரவு கிடைக்காது என்று அரசு கருதியது. இந்த ஆண்டு சனவரி தொடக்கத்தில்தான் இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை தொடங்கியது. பகையுணர்ச்சியை நீக்கி, புனர்வாழ்வுக்கான பணிகளை மேற்கொள்வதற்குத்தான் அரசு முதலில் முக்கியத்துவம் கொடுத்தது. சுமார் 80 கோடி அமெரிக்க டாலர் செலவாகக் கூடிய திட்டம் ஒன்றை அரசு முன்வைத்தது. புனர் நிர்மாணப் பணிகளைப் பார்வையிடுவதற்காக வட கிழக்கு அபிவிருத்தி அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி, அதில் புலிகளைப் பங்கு பெறச் செய்வது பற்றியும் விவாதம் நடந்ததாகத் தெரிகிறது. பகையுணர்வைப் போக்கும் விடயத்தில்தான் முதலில் முன்னேற்றம் ஏற்பட்டதாகத் தோன்றியது. போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்வதுடன், அமைதி நிலவுவதைக் கண்காணிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதை இரு தரப்புகளும் ஒப்புக்கொண்டன. கண்காணிப்புக் குழுக்களில் இருதரப்பினருமே தங்களது ஆட்களை நியமிக்க வேண்டும். இக் குழுக்களுக்கு நோர்வே, கனடா மற்றும் நெதர்லாந்து நாட்டின் பிரதிநிதிகளைத் தலைவர்களாக்க வேண்டும் என்று ஏற்பாடு ஆயிற்று. சனவரி 20, 21 தேதிகளில் இலங்கைக்கு விஜயம் செய்த கத்தோலிக்க மதகுருவான போப் இரண்டாம் ஜோண் போல் அவர்களின் விஜயத்தின் போது எந்தத் தடங்கலும் ஏற்படக் கூடாது என்பதில் இரு தரப்பினருமே அக்கறை எடுத்துக் கொண்டார்கள். சனவரி 14 ஆம் தேதியன்று நடந்த மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது போர் நிறுத்தம் காலவரையின்றி நீடிக்கப்பட்டது.
அரசியற் பிரச்சினைகளைக் கவனிப்பது பற்றியும், அரசியல் ரீதியாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது பற்றியும் மூன்றாவது கட்டப்
114

பேச்சுவார்த்தையின் போது விவாதிக்கப்பட்டன. இலங்கையின் ஒருமைப்பாட்டுடன் தமிழர்களின் உணர்வுகளையும் கணக்கில் எடுத்துக் கொள்வதுதான் அரசியல் தீர்வு. இதில் இரண்டு விடயங்களைக் கவனிக்க வேண்டும். ஒன்று, அரசியல் ரீதியான பேச்சு வார்த்தைகளை எப்போது தொடங்குவது என்பது பற்றி இரு தரப்பினரிடையே நல்லுறவை வளர்க்க மேலும் சில நடவடிக்கைகள் எடுப்பதற்கு முன்பே அவற்றைத் தொடக்கிவிட முடியுமா? உதாரணமாக, பூநகரி அல்லது ஆனையிறவுப் பாதைகளைத் திறப்பது சம்பந்தமான பிரச்சினைகளை அரசு தீர்த்த பிறகுதான் பேசத் தொடங்க வேண்டுமா? அரசு, புனர்நிர்மாணத் திட்டங்களை அமுல்படுத்தித் தனது நல்லுணர்வை நிரூபித்துக் காட்டிய பிறகு பேச்சுவார்த்தைகளை வைத்துக் கொள்ள வேண்டுமா? அமைதிக்கான வாய்ப்புகள் ஊசலாடிக் கொண் டி ருக்கும் வரை புனர் நிர் மாணத் திட்டங் களை அமுல்படுத்துவதற்குத் தேவையான உதவிகளை வெளியிலிருந்து திரட்ட முடியுமா? பேச்சுவார்த்தை எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி அரசு கோடி காட்டியிருக்கிறது. தான் முன்வைக்கும் அமைதித் திட்டங்களைப் புலிகள் பரிசீலித்து ஒப்புதல் வழங்க வேண்டும் ஒன்று அது விரும்புகிறது. முழுமையான அதிகாரங்கள் வழங்கும் திட்டம் அதில் இருக்குமா அல்லது தனிநபர் மற்றும் குழுக்களுக்கான முழு உரிமைகளையும் வழங்குதல், சமமான வாய்ப்பு, மத்தியில் அதிகாரப் பகிர்வு ஆகிய அம்சங்கள் இருக்குமா என்பது தெரியவில்லை. அரசியல் சாசன வரம்பிற்கு உட்பட்டுத்தான் அதிகாரம் கைமாற்றப்படும் என்பதால் அது சம்பந்தமாகவும் அரசு கவனம் செலுத்த வேண்டி இருக்கும். ஆனால், 1950களின் மத்தியில் உருவாக்கப்பட்ட அரசியல் சாசன அமைப்பு இப்போதைய நிலவரத்திற்கும் தேவைகளுக்கும் ஏற்ப மாறித்தான் ஆக வேண்டும் என்பது மட்டும் நிச்சயம். நியாயமான, நீடித்து நிற்கும் ஒப்பந்தத்தைச் செய்துகொள்ள வேண்டும் என்று இருதரப்பினரும் விரும்பினால் உறுதியும், தெளிவான நோக்கமும் இருந்தாக வேண்டும்.
“இந்தியா டுடே', பெப்ரவரி, 6:20, 1995
115

Page 66
தேர்தல் என்பது எதுவரை?
சனாதிபதி டிங் கிரி பண்டா விஜயதுங்க இலங்கையில் நாடாளுமன்றத்தைக் கலைத்துப் பொதுத் தேர்தல் நடத்தப் போவதாக அறிவித்தபோது எதிர்க்கட்சியினர் மட்டுமன்றி அவரது கட்சி உறுப்பினர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தார்கள். ஆடி 4 இல் இருந்து 11 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் ஆவணி 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கட்சித் தலைமையுடன் கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட இந்த முடிவு பற்றிப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவிற்கு அதிருப்தி. பாராளுமன்றத்தைக் கலைக்கும் அறிவிப்பில் மிகவும் அதிருப்தி அடைந்திருக்கிறார். ஆனால் சனாதிபதி ஏற்கனவே கையெழுத்திட்டு விட்டநிலையில், பிரதமரின் எதிர்ப்புக்குரல் எடுபடாமல் போய்விட்டது.
சனாதிபதி வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பினால் அவரது கட்சிக்கே பாதகமான விளைவுகள் ஏற்படக்கூடும். தன் கட்சியின் எதிர்காலத்துடன் விளையாடும் அளவிற்கு சனாதிபதி விஜயதுங்கவிற்கு என்ன நிர்ப்பந்தம்? பூரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஓர் அறுவைச் சிகிச்சைக்காகச் சிங்கப்பூர் சென்றிருந்த நிலையில் எதிர்கட்சியை எதிர்பாராத அதிர்ச்சிக்குள்ளாக்குவது சனாதிபதியின் நோக்கங்களில் ஒன்று. அதோடு அந்தக் கட்சியின் நிர்வாகிகளை நியமிக்கும் விஷயத்திலும் குழப்பமிருந்தது. அரசு எடுத்த சில தொடர் நிவாரண நடவடிக்கைகளால் அத்தியாவசியப் பண்டங்களின் விலை குறைந்திருந்தது. இந்த நிலையில் பாராளுமன்றத் தேர்தல் நடந்தால் ஆளுங்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் (யு.என்.பி.) பாராளுமன்ற
116

உறுப்பினர்கள் பெரும்பாலேனோரின் வெற்றி உறுதி என்றும் சனாதிபதி நினைத்தார். அப்படியே தோற்றாலும் கூட பாதுகாப்புப் படைகள் ஐக்கிய தேசியக் கட்சியின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். 17 வருடங்களாக அடக்கி வைக்கப்பட்ட கோபம், அரசியல் விரோதம் இவற்றினால் 61ழும் தேர்தலுக்குப் பிந்திய வன்முறையைத் தடுக்க இது உதவலாம். சமீப காலத்தில் தன்னுடைய அரசியல் அதிகாரம் தொடர்ந்து வலுவிழந்து வருவதும் சனாதிபதிக்குக் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. சில எம்.பி.க்களை ராஜினாமாச் செய்யுமாறு கேட்ட போது அவர்கள் மறுத்தார்கள். இது, சனாதிபதி பிரேமதாச ஆட்சியின்போது நினைத்துப் பாாக்க முடியாத ஒன்று. சமீபத்திய அமைச்சரவை மாற்றமும் அமைச்சரவையில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அமைச்சர்கள் அலிக் அலுவிகார தனக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்பில் மனக்குறை கொண்டு ஆரம்பத்தில் பதவிப் பிரமாணம் எடுக்க மறுத்தார். இதே மாதிரி முன்னாள் முதலமைச்சர் ஜெய விக்கிரம பெரேரா தன்னை அமைச்சராக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்று பதவியைப் பெற்று விட்டார். தன்னுடைய அரசை மாற்றி அமைக்கவும் ஆளுங்கட்சிக்குப் புத்துயிர் ஊட்டவும் சனாதிபதியால் முயற்சி எடுக்க முடியாமற் போய் விட்டது.
தெற்காசியாவில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை இருக்கிற ஒரே நாடு இலங்கைதான். இரண்டு விதமான பிரதிநிதித்துவ அமைப்புகள் இருக்கின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு கட்சிக்கும் கிடைக்கும் வாக்குகளின் விகிதாசார அடிப்படையில் 21 தேர்தல் மாவட்டங்களிலிருந்து 196 வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நாடு முழுவதும் கட்சிகளுக்குக் கிடைத்த மொத்த வாக்குகளின் விகிதாசார அடிப்படையில் தேசியப் பட்டியலில் 29 இடங்கள் ஒதுக்கப்படும்.
வடக்குக் கிழக்கு மாவட்டங்களில் தேர்தல் நடைபெறுமா என்பதுதான் இப்போது இலங்கை எதிர்நோக்கியுள்ள முக்கிய பிரச்சினை. யாழ்ப்பாண மாவட்டமும் வன்னி மாவட்டமும் பெரும் சிக்கலான பகுதிகள். இந்த இரு மாவட்டங்களிலும் தேர்தல் நடத்துவது குதிரைக் கொம்புதான். யாழ்ப்பாண மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொகை சொற்பம்தான். வன்னி மாவட்டத்தில் வவுனியாவிலும் மன்னாரிலும் மட்டும்தான் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. யாழ்ப்பாண
117

Page 67
மாவட்டத்திலிருந்து 11 வேட்பாளர்களும் வன்னி மாவட்டத்திலிருந்து 5 வேட்பாளர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 225 எம்.பி.க்களில் 10 சதவீதத்த்திற்கும் அதிகமானவர்களை வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் தேர்ந்தெடுக்கும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் சிக்கல் இருப்பது போல் தெரிகிறது. அரசியற் சாசனப்படி பாராளுமன்றத் தேர்தலும் சனாதிபதி தேர்தலும் நாடு முழுவதும் நடத்தப்பட வேண்டும். இந்தக் கருத்தை வைத்துப் பார்க்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தல் இல்லாமல் நாடாளுமன்றத் தேர்தல் பூர்த்தியடையாது என்றே சொல்ல வேண்டும். நாடு முழுவதும் வாக்கெடுப்பு நடத்தாமல் தேசியப் பட்டியலைப் பூர்த்தி செய்வதும் சாத்தியப்படாது. இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் பூர்வமான தீர்வு ஒன்றைக் காணாமல் மக்களாட்சியை முழுமையாக மலரச் செய்வது சாத்தியமல்ல. 1989 இல் இந்திய அமைதி காக்கும் படை அந்தப் பகுதியில் இருந்தபோது அங்கு தேர்தல் நடைபெற்றது. ஆனால் அப்போது இருந்த சூழ்நிலையும் இப்போது நிலவுகின்ற சூழ்நிலையும் முற்றிலும் வித்தியாசமானது. இன்று அதுபோல நடத்த முடியாது. இந்நிலையில் தேர்தல் நடந்தால் அதற்குச் சட்டபூர்வமாக அங்கீகாரம் இருக்குமா, அது சட்டப்படி செல்லுபடியாகுமா என்பது சந்தேகத்திற்குரிய விஷயம்தான். முறைப்படி கொழும்பில் அரசு அமைக்க வசதியாக ஏதாவதொரு வகையில் தேர்தலை நடத்த முடியும் என்று அரசு நம்புகிறது. ஆனால் இலங்கையின் அரசியல் சாசன சட்டத்தையும் அங்கு இப்போது நிலவும் சூழ்நிலையையும் வைத்துப்பார்க்கும்போது, அங்கு தேர்தல் நடத்துவது என்பது பெரும்பாலும் கேலிக்கூத்தாகவே இருக்கும். இப்படிப்பட்ட கேலிக்கூத்திற்கு நிச்சயமாக நம்பகத்தன்மை இருக்காது. வடகிழக்குப் பிரச்சினைக்குத் தீர்வு காணாவிட்டால் நாட்டுக்கு மட்டுமல்ல, சனநாயகத்தின் எதிர்காலத்திற்கும் ஆபத்து என்பதைத்தான் சனாதிபதியின் சமீபத்திய அறிவிப்பு மக்களுக்கு தெளிவாக உணர்த்துகிறது.
“இந்தியா டுடே', யூலை, 6:20, 1994
118

இலங்கையில் இரு மொழிக்கொள்கை
அரசு அதிகாரிகளுக்கு தமிழ், சிங்களம் இரண்டும் கற்றுத் தருவது பற்றி பல பிரசுரங்களை ஆட்சி மொழித் துறை சமீபத்தில் வெளியிட்டது. இலங்கையின் தேசியம் தொடர்பான ஆட்சிமொழிக் கொள்கைப் பிரச்சினையில் கவனம் செலுத்த சனாதிபதி டிங்கிரி பண்டா விஜயதுங்கவுக்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்தது. 1956 இல் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்று சட்டம் இயற்றப்பட்டதால்தான் இனப் பிரச்சினை தீவிரமடைந்தது. தமிழ் பேசுவோர் அன்னியப்படுத்தப்பட்டார்கள் என்று அரசியல் விமர்சகர்கள் பலர் சுட்டிக் காட்டினார்கள். அஹிம்சை முறையில் மொழிச் சமத்துவம் கோரி நடந்த அரசியற் போராட்டங்கள் 1958 கலவரங்களின்போது கொடுரமாக ஒடுக்கப்பட்டன. பல ஆண்டுகளாக இந்த மொழிப் பிரச்சினைதான் மக்களைப் பிரித்து வைத்து வந்தது. “மொழி ஒன்றானால் நாடு இரண்டாகும். மொழி இரண்டானால் நாடு ஒன்றாகும்” என்று மறைந்த கொல்வின் ஆர். டி சில்வா பாராளுமன்றத்தில் கடுமையாக எச்சரித்தார்.
அது முதல் நிலைமை படிப்படியாக முன்னேறி உள்ளது. 1965 இல் வடக்கு - கிழக்குப் பகுதிகளில் நிர்வாக, நீதித்துறைகளில் தமிழ் ஆட்சி மொழியாக்கப்பட்டது. 1978 இல் இரண்டாவது குடியரசுச் சாசனம் தமிழைத் தேசிய மொழிகளில் ஒன்றாக ஆக்கியது. 1987 இல் இந்தியஇலங்கை ஒப்பந்தத்துக்குப் பிறகு சாசனத்தில் 13 ஆவது, 16 ஆவது திருத்தங்கள் செய்யப்பட்டன. அதனால் தமிழும் ஆட்சி மொழியாக இருக்க வழி பிறந்தது. இந்தக் கொள்கையை அமுற்படுத்துவதற்கான ஆட்சிமொழிக் குழுச் சட்டம் பாராளுமன்றத்தில் ஒரு மனதாக
119

Page 68
நிறைவேறியது. இப்படியாக, முப்பதாண்டுகளில் மாபெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழுக்கு ஆட்சி மொழி அந்தஸ்து தருவதில் கிட்டத்தட்ட ஒருமனதான கருத்து உருவாகி விட்டது.
என்றாலும் கடந்த ஏழு ஆண்டுகளில் நிர்வாகம் தமிழை ஆட்சி மொழியாகப் பயன்படுத்தும் அழகைப் பார்த்தால் இன்னும் கசப்புணர்வும் அதிருப்தியும் இருப்பது தெரிகிறது. தமிழுக்கு அரசியற் சாசனத்தில் சம உரிமை தரப்படவில்லை என்ற கவலை ஒருபுறம். அரசியற் சாசனம் சிங்கள, தமிழ் மொழிகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வை அங்கீகரிக்கிறது. அரசியற் படிவங்களில் சிங்களமா, தமிழா என்ற கேள்வி எழுந்தால் சிங்களத்துக்குத்தான் முன்னுரிமை என்னும் வகையில் இப்போது பல சட்டங்கள் வகை செய்கின்றன.
மேலும் தேசத்தில் மூன்று மொழிவழி மண்டலங்கள் இருப்பதை அரசியற் சாசனம் அங்கீகரிப்பதுபோல் தோன்றுகின்றது. முதலாவதாக நிர்வாக, நீதித்துறைகளில் தமிழ் ஆட்சி மொழிய்ாக உள்ள வடக்கு கிழக்கு பகுதிகள், இரண்டாவதாக சிங்களம் நிர்வாக, நீதித்துறைகளில் ஆட்சி மொழியாக உள்ள மற்ற பகுதிகள், மூன்றாவதாக, இரண்டு மொழிகளுமே ஆட்சிமொழியாக உள்ள தமிழர்கள், சிங்களவர்கள் இரண்டு சாராரும் கணிசமாக உள்ள பகுதிகள். இந்த நிலைமை தான் மேற்கு மாகாணம், மத்திய மாகாணம், சப்ரகமுவா, ஊவா மாகாணங்களில் உள்ள பல அரச பிரதிநிதி பிரிவுகளில் நிலவி வருகிறது. இருமொழி பேசும் பகுதிகளில் இந்த இரட்டை மொழிக் கொள்கையை அமுல்படுத்த சனாதிபதி உத்தரவிட வேண்டும். ஆனால் அவர் உத்தரவு பிறப்பிக்கவில்லை. அரசுடன் தாங்கள் விரும்பும் ஆட்சிமொழியில் தொடர்பு கொண்டு காரியங்களைக் கவனிக்க முடியவில்லை என்ற வெறுப்பு தமிழர்களுக்கு இருக்கிறது. தமிழில் அதிகாரபூர்வக் கடிதங்களைப் பெறுவது, அஞ்சல் நிலையங்களில் தமிழ் மொழியில் புழங்குவது, காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்வது எல்லாவற்றிலும் சிக்கல்கள். இதனால் அரசியல் சாசனரீதியான உத்தரவாதம் அர்த்தமற்றதாகி, கானல்நீராகி விடுகிறது.
தகவல் தொடர்புக்கான வசதிகளை இரண்டு மொழிகளிலும் அரசு மேம்படுத்த வேண்டும். நிறைய தமிழ் அலுவலர்களைச் சுருக்கெழுத்தாளர்களைப் பணியிற் சேர்க்கலாம். அல்லது அரசு அதிகாரிகள் எல்லாருக்கும் தமிழ்மொழிப் பயிற்சி தரலாம். நீதிமன்றங்களில் தமிழ் பயன்படுத்தப்படுவதற்கான வசதிகள் மிக
120

மிகக் குறைவு. இந்த விஷயத்தைக் கவனிப்பதற்காகவே நியமிக்கப்பட்ட ஆட்சிமொழி ஆணைக் குழு உருப்படியான செயல்திட்டம் எதனையும் உருவாக்கவில்லை. இதனால் அதன் தாக்கம் வ்ெகு சொற்பமே. மொழி உரிமை மீறலுக்குள்ளாக்கப்பட்ட தனிநபர்கள் ιιι Πίτ வேண்டுமானாலும் இந்த ஆணைக் குழுவிடம் புகார் தரச் சட்டம் இடம் அளிக்கிறது. சட்டத்தை வேண்டுமென்றே மீறும் <9/5° அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கும் அதிகாரம் இந்த ஆணைக் குழுவிற்கு உண்டு.
இந்த விஷயத்திலும் பொதுமக்களின் ஆதரவு உற்சாகம் தருவதாக இல்லை. முறையான புகார் தர அத்தனை சீக்கிரம் மக்கள் முன் வருவதில்லை. சட்டம் தரும் தீர்வின் தாக்கம் குறைவதற்கு இதுவும் காரணம். மனித உரிமைகள் குழுக்களும், அரசு சாராத குழுக்களும் இந்த விஷயத்தில் உத்வேகத்துடன் ஈடுபட வேண்டும். அரசைக் கட்டுப்படுத்தும் விதத்தில் முன்மாதிரி வழக்குகளின் தொகுப்பை உருவாக்க ஆணைக் குழுவிற்கு உதவ வேண்டும்.
இலங்கையின் இருமொழிக் கொள்கை பல இனக்குழுக்கள் கொண்ட சமுதாயம் உருவாவதற்கு மிகமிக முக்கியம். ஆனால், வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இருந்துவிட முடியாது, சாதாரண மக்களின் அன்றாட வாழ்வில் இது கைகூட வேண்டுமானால் அரசியல் ரீதியான மன உறுதியும், எப்படிச் செயற்படுத்துவது என்ற நிர்வாகத்துறைச் சிந்தனையும் தேவை.
“இந்தியா டுடே', ஏப்ரல், 21-மே 5, 1994
121

Page 69
உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகள்
முழுமை பெறாத ஒரு தேர்தல் அல்லது தேர்தலே இல்லை என்ற நிலைமைகளுக்கிடையில் இலங்கை தளம்பிக் கொண்டிருக்கின்றது. இதே நிலைமை 1988 ஆம், 1989 ஆம் ஆண்டுகளில் தெட்டத்தெளிவாகத் தலைதுாக்கியது. அப்போது தென்னிலங்கையில் நிலவிய கிளர்ச்சி பல பாகங்களில் நிர்வாகத்தை ஸ்தம்பிக்கச் செய்திருந்தது. ஆனாலும், குடியரசுத் தலைவர் தேர்தலையும் பாராளுமன்றத் தேர்தலையும் நடத்தி முடிக்க வேண்டிய தேவை அரசுக்கு இருந்தது. அந்தச் சந்தர்ப்பத்தில் அரசியல் யாப்பு வளைந்து கொடுக்காத நிலையில் இருந்தது. குடிசார் போர் தொடர்ந்து கொண்டிருக்கும்போது கிழக்கிலங்கையின் பெரும் பகுதிகளில் இராணுவம் குவிந்திருந்த நிலையில் சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடக்குமா என்ற ஐயம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிர்ப்பந்தம் அரசியல் நிர்ப்பந்தமாகவே இருந்தது.
அவநம்பிக்கைக்கும் நிச்சயமற்ற தன்மைக்கும் மத்தியில் பாரிய வன்செயல் எதுவும் இன்றி பங்குனி முதலாம் தேதி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. தேர்தலைக் குழப்புவதில்லை என்ற ஓர் உள்ளார்ந்த முடிவைத் தமிழீழ விடுதலைப் புலிகள் எடுத்திருப்பதாகத் தெரிகிறது. தேர்தலுக்கு மறுநாள் தேர்தல் ஆணையாளர் திரு. சந்திரானந்த டி சில்வா இந்தக் கடனைக் குறிப்பாக அங்கீகரித்து நன்றியும் தெரிவித்தார். இதனால் தேர்தல் நடை முறைகள் பிரச்சினையின்றி நடைபெற்றதாகச் சொல்வதற்கில்லை. பலவந்தமாகப் பலரது பெயர்கள் வேட்பு மனுக்களில் போடப்பட்டு ஒப்பம் பெ றப்பட்ட நிகழ்வுகள் தொடர்பாகப் பல குற்றச்சாட்டுகள் எதிர்க்கட்சிகளினாற் சுமத்தப்பட்டன. தேர்தலின்
122

போது ஏறாவூர், முதுTர், காத்தான்குடிப் பகுதிகளில் அதிகமா6 ஆள்மாறாட்டம் செய்யப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
இந்தக் குறை குற்றங்களின் மத்தியிலும் அரசு 72.8% வாக்குப் பதிவு இருந்தாக மார்தட்டிக் கொண்டது. 7,50,957 வாக்காளர்களுள் 5,46,986 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.
தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரையில் அரசியல் விற்பன்னர்களின் வியாக்கியானம் வேறுபட்டதாக உள்ளது. கிழக்கிலங்கையில் இன்று இனத்துவக் குழுக்களிடையே ஓரளவு சமநிலை உள்ளது. இங்கு தமிழர்கள் 42% ஆகவும், முஸ்லிம்கள் 32% ஆகவும், சிங்களவர்கள் 26% ஆகவும் இருக்கிறார்கள். ஆயினும், குடிசார் போரினால் இந்த விகிதாசாரங்கள் மக்கள் இடப்பெயர்வினாலும், வெளியேற்றத்தாலும் மாற்றம் அடைந்திருந்தன. முக்கியமான தமிழ் நகரசபைகளிலும் (வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு), பிரதேச சபைகளிலும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளாட்), தமிழீழ விடுதலைக் கழகம் (டெலோ), ஈழ மாணவர் புரட்சிகர அமைப்பு (ஈரோஸ் - பிரிந்த குழு) என்ற அமைப்புகளைச் சார்ந்த உறுப்பினர்களைக் கொண்ட சுதந்திரக் குழுக்களை மக்கள் பெருமளவில் ஆதரித்துள்ளனர். முஸ்லிம் பகுதிகளைப் பொறுத்தவரையில் குறிப்பாக அம்பாறை மாவட்டதில், பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெருமளவு வாக்குகளைப் பெற்றுப் பெரும்பான்மையாக முஸ்லிம்களைக் கொண்ட பிரதேச சபைகளில் இரண்டைத் தவிர ஏனையவற்றைக் கைப்பற்றியுள்ளது. திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களிலுள்ள சிங்கள பெரும்பான்மைப் பகுதிப் பிரதேச சபைகளில் ஐக்கிய தேசியக் கட்சி 13 இடங்களையும், பூரீலங்கா சுதந்திரக் கட்சி 2 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.
ஆக, 72% மக்களைக் கொண்ட தமிழர்களும், முஸ்லிம்களும் கிழக்கிலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சியை நிராகரித்து விட்டார்கள். தமிழ் வாக்காளர் நடந்த விதம் முன்கூட்டியே தெரிந்ததுதான். கிழக்கிலங்கையில் முன்பு நடந்த தேர்தல்களில் நடந்ததைப் போலவே நடந்துள்ளது. அரசின் முஸ்லிம் அமைச்சர்கள் தாம் செல்வாக்குச் செலுத்தும் முஸ்லிம் பகுதிகளில் தோல்வி கண்டனர். இது ஐக்கிய தேசியக் கட்சிக்குப் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம்களின் இந்த மாற்றத்துக்கு அண்மைக் காலங்களில் குடியரசுத்
123

Page 70
தலைவர் டி.பி. விஜேதுங்க ஆற்றி வரும் உரைகளே காரணமாகும். இந்தப் பேச்சுகள் தெளிவாக தமிழ், முஸ்லிம் மக்களின் அபிலாசைகளுக்கு விரோதமானவையாகக் கருதப்பட்டன. உண்மையில் ஒரு குடியரசுத் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டால், கிழக்கிலங்கையில் பெரும்பான்மையான மக்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருக்கு எதிராகவே வாக்களிப்பார் என்று சில ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இது ஆளும் கட்சி வேட்பாளரின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும். ஆயினும் ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் முடிவுகளை வேறு விதமாக வியாக்கியானம் செய்கிறது. அவர்கள் இரண்டு விடயங்களைக் குறிப்பிடுகிறார்கள். முதலாவதாக, சிங்களப் பெரும்பான்மை மக்கள் வாழுமிடங்களில் அவர்கள் பூரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பெருமளவில் நிராகரித்து விட்டார்கள். இரண்டாவதாக, பூரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும், சுயேச்சைக் குழுக்களுக்கும் கிடைத்த வாக்குகள் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராகக் கிடைத்த வாக்குகள் என்று கொள்ள முடியாது. ஏனெனில், இந்தக் கட்சிகளும், குழுக்களும் அரசுடன் தோழமை பூண்டவை.
இப்போது எல்லோர் கவனமும் தென் இலங்கையின் பக்கம் திரும்பியுள்ளது. இங்கு மார்ச் 24 இல் நடக்கவுள்ள மாகாண சபைத் தேர்தலில் போட்டிகள் அதிகம். தேர்தல் களத்தில் கட்சித் தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட ஏதுவாகப் பாராளுமன்றமும் மேல்மாகாண சபையும் தத்தமது அமர்வுகளை ஒரு மாதத்துக்கு ஒத்தி வைத்துள்ளன. தென்னிலங்கை மாகாண சபையை ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் கைப்பற்றுமேயானால், அரசு பாராளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே ஆடியில் அல்லது ஆவணியில் நடத்தத் தூண்டப்படக்கூடும். மாறாக, பூரீலங்கா சுதந்திரக் கட்சி வெற்றி பெறுமானால் சூ யரசுத் தலைவர் விஜேதுங்க குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெறுவது சந்தேகத்துக்கு இடமானது. அது சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்கவின் கவர்ச்சிகரமான ஆளுமையைப் பாதிக்காது.
“SbgSulfT (6GBL”, Dritti 21-sJagdtb 5, 1994
124

சிறுபான்மையினருக்குப் பெரும் மனவேதனை
இலங்கையில் 1978 முதல் நடைபெற்ற மிக முக்கியமான அரசியல் நிகழ்வு, முன்னாள் குடியரசுத் தலைவர் ஜெயவர்த்தனா தலைமை. தாங்கிய ஐக்கிய தேசியக் கட்சி அரசில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இணைந்து கொண்டதாகும். இதன் விளைவாகத் திறமையான தொழிற்சங்கவாதியான எஸ். தொண்டமான் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். 1948 முதல் அக்கிரமமான முறையில் குடியுரிமை பறிக்கப்பட்ட பெருந்தோட்டங்களில் வாழ்ந்த மலையகத் தமிழர்களின் நிலைப்பாட்டைப் பொறுத்தவரை இது ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் நடவடிக்கையாகும். நாடற்றவர் பிரச்சினையைப் படிப்படியாகத் தீர்த்துக் கொள்ள இது வழிவகுத்தது. குடியுரிமை பெறுவதற்கு விரும்பிய, ஆனால் தொடர்ந்து இலங்கையில் வாழ்ந்து வந்த மலையகத் தமிழர்களை நாடு கடத்துவதை நிறுத்துவதிலும் அவர் வெற்றி கண்டார். நாடற்றவர் பிரச்சினைக்குக் காணப்பட்ட தீர்வு, குறிப்பாக நுவரெலியா மாவட்டத்திலும், மத்திய ஊவா, சப்ரகமுவா மாகாணங்களிலும் இ.தொ.கா. வின் செல்வாக்கை தேர்தல் அடிப்படையில் முக்கியத்துவம் அடையச் செய்தது. தேசிய மற்றும் மாகாணத் தேர்தல்களில் இ.தொ.கா. ஒரு செல்வாக்கு மிக்க அமைப்பு மட்டுமன்றி ஒரு அசைக்க முடியாத பங்காளி என்பதையும் ஐ.தே.க. தெளிவாகப் புரிந்து கொள்ள வைத்த்து. ஒரு சாதுரியமான அரசியல்வாதி என்ற முறையிலும், ஒரு விட்டுக் கொடுக்காத தொழிற்சங்கப் பேச்சுவார்த்தை நிபுணன் என்ற முறையிலும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விஷயங்களில் பல சலுகைகளையும் தொண்டமானால் வென்றெடுக்க முடிந்தது. அத்துடன் இனப்பிரச்சினைக்கு ஓர் அமைதித் தீர்வு காணப்பட வேண்டும்
125

Page 71
61ன்பதை அச்சமின்றி ஆதரித்தும் வருகிறார். குடியரசுத் தலைமைத்துவ அதிகாரங்களையும், மற்ற அதிகாரங்களையும் தன்கையில் எடுத்துக் கொண்ட ரணசிங்க பிரேமதாச குடியரசுத் தலைவராக இருந்த காலத்திலும் இந்த உறவு தொடர்ந்தது. இருந்தாலும், இ.தொ.க. உறவைப் பிரேமதாச மதித்து நடந்தார். 1991 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் இரண்டு சபைகளுக்கான தேர்தல்களில் ஐ.தே.க. உறுப்பினர்களும் இ.தொ.க. பட்டியலில் சேவல் சின்னத்தில் போட்டியிடுவதற்கு 6 ன்று விட்டுக் கொடுத்தார்.
பிரச்சினைக்குத் தீர்வு காணத் தொண்டமான் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதுபோல் காட்டிக் கொண்டாலும், அந்தரங்கமான அந்த முயற்சிக்கு குடியரசுத் தலைவர் பிரேமதாச ஆதரவு நல்கினார் என்றே சொல்ல வேண்டும்.
குடியரசுத் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்ட டிங்கிரி பண்டா விஜேதுங்க தலைமையில் இ.தொ.க. - ஐ.தே.க உறவுமுறையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. தனது முன்னைய இரண்டு குடியரசுத் தலைவர்களையும் போலன்றி விஜேதுங்க கண்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அங்கு மலையகப் பெருந்தோட்டங்களில் வாழும் தமிழர்களுக்கும் அவர்களைச் சுற்றிக் கிராமங்களில் வாழும். தொழிலாளர்களுக்குமிடையில் போட்டி களும், வெறுப்புகளும் அதிகமாகவே இருந்து வந்துள்ளன.
இ.தொ.க.வுக்கும் முன்னைய அரசுக்கும் இடையில் மலையகத் தமிழர்களுக்கு தொழிற்றுறைப் பயிற்சி அளிப்பது, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்குக் குடியிருப்புகள், காய்கறித் தோட்டத்துக்கான காணித் துண்டுகள் வழங்கல், ஆண்டுக்கு 300 நாள் வேலைவாய்ப்பு போன்ற விடயங்களில் ஏற்பட்டிருந்த பல இணக்கப்பாடுகள் இன்று ஆபத்தை எதிர்நோக்குவதாகத் தெரிகிறது. குடியரசுத் தலைவர் செயலகத்தில் உள்ள அதிகாரிகளின் தூண்டுதலாலோ என்னவோ இந்த விடயங்கள் அனைத்திலும் ஏற்பட்ட இணக்கப்பாடுகள் முற்றிலுமாக மாற்றப்படுவதாக குடியரசுத் தலைவர் விஜேதுங்க தொண்டமானுக்குத் தெளிவாக்கி இருக்கிறார். இ து தொண்டமானுக்குக் கவலையைத் தந்தது.
காமினி திசநாயக்காவுடன் இணக்கம் ஏற்படுத்திக் கொண்டு தொண்டமான் மத்திய மாகாண ஐக்கிய தேசியக் கட்சி அரசைக்
126

கவிழ்க்க முயற்சி செய்தார். இதற்கு எதிர்ப்புக் காண்பித்த இ.தொ.க. செயலாளர் எம்.எஸ். செல்லச்சாமி தந்த உற்சாகத்தால் மத்திய மாகாண சபையில் இருந்த பதினோரு இ.தொ.க. உறுப்பினர்களுள் ஒன்பது பேர் இ.தொ.கா. கட்டுப்பாட்டை மீறி ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாகவே இருந்தனர். இதனால் முயற்சி தோல்வி கண்டது. தொண்டமான் மேலும் நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட குடியரசுத் தலைவரைத் தெரிவு செய்யும் நடைமுறைக்கு அரசியல் யாப்பில் திருத்தங்கள் கொண்டுவர இருக்கிறார். இன்றிருக்கும் நடைமுறையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட குடியரசுத் தலைவரைத் தெரிவு செய்யும்போது சிறுபான்மையினர் அரசியற் கட்சிகளுக்குப் பெரும்பான்மை இன குடியரசுத் தலைவரைப் பணயம் வைக்கும் நிலைமை உருவாகிறது. சிறுபான்மையினர் வாக்குப் பலத்தை நம்பியிருக்கும் நிலைமையை ஒழித்துக் கட்டும் நோக்கில் பாராளுமன்றம்தான் குடியரசுத் தலைவரைத் தெரிவு செய்ய வேண்டும் 6 ன்ற கருத்தைக் குடியரசுத் தலைவர் விஜேதுங்க முன்வைத்துள்ளார். அடுத்த பத்து மாதங்களுக்குள் அத்தகைய மாற்றம் சாத்தியமாகுமா என்பது ஐயத்துக்குரியது.
எது எப்படி இருப்பினும் தொண்டமானுக்கும், ஏனைய சிறுபான்மையினருக்கும், பெரும்பான்மையினர் தமது ஏகபோக உரிமைகள் என்று உயர்மட்டத்தில் இதனை மீள வலியுறுத்துவது பெரும் மனவேதனையை உண்டாக்கி உள்ளது. சிறுபான்மை மக்களின் அரசியல் செல்வாக்கை நலிவுறச் செய்ய மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி இனத்துவ வேறுபாடுகளை மேலும் கூர்மையடையவே செய்யும் இனத்துவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் சிறுபான்மையினரை முற்றாக ஓரம்கட்டும் விதத்தில் அரசியற் சட்டங்களை மாற்றி அமைக்க முயலும் ஓர் அரசில், தொடர்ந்து செல்வாக்குடன் இருக்க முடியுமா என்ற பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டிய நிர்பந்தத்தில் தொண்டமான் இருக்கிறார்.
“இந்தியா டுடே, பெப்ரவரி 21-மார்ச் 5, 1994
127

Page 72
உயிர் வாழும் உரிமை
சூரியகந்த என்ற இடத்தில் தை 3 ஆம் தேதி திங்கட்கிழமை வெவ்வேறு பகுதிகளில் பல சடலங்கள் ஒன்றாகப் புதைக்கப்பட்டிருப்பது தெரிய வந்ததும், மனித உரிமைக்காகப் போரிடுபவர்கள் பெரும் கவலைக்கு ஆளானார்கள். குவிந்து கிடக்கும் சடலங்கள் காணாமல் போனவர்களின் சடலங்களாக இருக்கக்கூடும் என்று சந்தேகம் வருவது இது முதல் முறையல்ல. 1985 இல் கிழக்கு மாகாணத்தில் இளைஞர்கள் காணாமல் போனதும் தைரியமாக அதை விசாரிக்கச் சென்ற கல்முனை மக்கள் கமிட்டித் தலைவர் ஆர். நல்லநாயகத்துக்கு ஏற்பட்ட கதி எல்லாருக்கும் நினைவிருக்கிறது. வதந்தி பரப்புவதாக குற்றம் சாட்டப்பட்டு அவரே காவலில் வைக்கப்பட்டார்.
இலங்கையில் மிகவும் துடிப்புடன் பணியாற்றும் குடியியல் உரிமைகள் இயக்கம், அதிகாரிகள் நன்றாக புலனாய்வு செய்யாமற் போகலாம் என்று சூரியகந்த பற்றிக் கவலை தெரிவித்துள்ளது. சடலங்களைத் தோண்டி எடுப்பதில் தலையீடு இருக்கலாம் என்றும் அந்த இயக்கம் கருதுகிறது.
இந்த விஷயத்தில் இலங்கை இருள் சூழ்ந்த வரலாற்றை விட்டுள்ளது. இலங்கையின் தென்பகுதியில் மட்டும் 1988, 89, 90 ஆம் ஆண்டுகளில் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமற் போனார்கள். வட-கிழக்குப் பகுதிகளிலும் இந்த மாதிரி நடப்பது மிகவும் அதிகரித்துள்ளது. உள்நாட்டு, சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இவற்றைக் கவனமாகப் பதிவு செய்து வருகின்றன. 1991 ஐப்பசியில் தலைமறைவுகள்
128

குறித்து செயற்படுகின்ற ஐ.நா. செயற்பாட்டுக் குழு இலங்கைக்கு வந்தது. இலங்கை அரசின் அழைப்பின் பேரில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில் தெரிவிக்கப்பட்ட கவலையினாலும் அந்தக் குழு இலங்கைக்கு வந்தது. 1983 முதல் 1991 வரை கிட்டத்தட்ட 12,000 பேர் காணாமல் போயிருப்பதாக அந்தக் குழு கணக்கிட்டிருக்கிறது. மனித உரிமைகள் ஆணைக் குழுவிற்கு இந்தக் குழு சமர்ப்பித்த ஆண்டறிக்கையில் இடம் பெற்ற 40 நாடுகளில், மிக நல்லமுறையில் ஆவணப்படுத்தப்பட்டவையாக இலங்கையில் நிகழ்ந்த நிகழ்வுகள் அமைந்துள்ளதாகக் குழு சுட்டிக் காட்டுகிறது. இலங்கை பற்றிய தகவலில், கைது செய்த அதிகாரிகள், கைது செய்யப்பட்ட இடம், ஏற்றிச் சென்ற வாகனங்களின் எண் போன்ற விவரங்களும் இருக்கின்றன. 1991 இல் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போனதாகச் செயற்பாட்டுக் குழுவிற்குத் தகவல் கிடைத்தது. இதில் 40 பேர் தென்பகுதியையும் மற்றவர்கள் வட-கிழக்குப் பகுதியையும் சேர்ந்தவர்கள்.
வடக்குப் பகுதியிலும் கிழக்குப் பகுதியிலும் இப்படி நடந்திருப்பதற்கு இராணுவமும், தெற்கில் பொலிசும்தான் காரணம் என்று ஐ.நா செயற்பாட்டுக்குழு முடிவு செய்தது. அரசின் பாதுகாப்புப் படைகளின் உதவியுடன் கொலைக் குழுக்களும் இதில் ஈடுபட்டுள்ளதாகவும் அது மேலும் குற்றம் சாட்டியது. "சிவில் பாதுகாப்புப் படைப்பிரிவுகள் இராணுவத்திடம் பயிற்சியும் ஆயுதமும் பெற்றுள்ளன" என்றும் கூறியது.
மனித உரிமைகள் சமூகமும், ஐ.நா. செயல்பாட்டுக் குழுவும் அளித்த பரிந்துரைகளை அமுற்படுத்த ஒத்துழைப்போம் என்று இலங்கை அரசு வாக்குறுதி அளித்து வந்தபோதிலும் நடைமுறையில் எந்த முன்னேற்றமும் இல்லை. முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் அன்மன் சோசா தலைமையில் மனித உரிமைகள் செயலணிப்பிரிவு அமைக்கப்பட்டது. அவர் முறை கேடான கைதுகள் பற்றியெல்லாம் துணிச்சலாக விசாரணை நடத்தினார். இக் குழுவிற்குச் சட்டரீதியான அதிகாரம் இல்லாததாலும், கைதுகள் குறித்து அதிகாரிகள் பதிவு செய்து வைக்காததாலும் இதன் வீச்சு மிகவும் குறுகிவிட்டது.
இதற்கெல்லாம் அடிப்படைக் காரணமாக விளங்கும் அரசியற் பிரச்சினையைத் தீர்க்காத வரையிலும் மனிதாபிமான அரங்கில் அர்த்தமுள்ள முன்னேற்றம் ஏற்படப் போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்,
129

Page 73
1991 இல் நடைபெற்ற அனைத்துக் கட்சி மாநாடு, வாழ்வதற்கான உரிமையை அங்கீகரிக்கும் நோக்கத்துடன் அரசியற் சாசனத்தில் உள்ள அடிப்படை உரிமைகளை மாற்றியமைக்க வேண்டும் என்று சிபாரிசு செய்தது. அதை அமுல்படுத்த 61ந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காணாமல் போகும் விவகாரம் இலங்கையின் சட்ட வரலாறுகளில் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் கறையாகும். இனத்துவத்துக்கு அப்பாற்பட்ட பிரச்சினை இது. அதிகாரிகள் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்க வேண்டிய செயல் இது. அரசு காணாமற் போனவர்களைத் தேடுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறையில் வைக்கப்பட்டவர்களைப் பற்றிய விவரங்களைச் சேகரித்து வைப்பதற்கு உரிய சட்ட நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்டவர்களைக் காவலில் வைக்கும் இடங்களில் பரிசோதனை நடத்துவதற்கான அதிகாரம் குடியியல் நிர்வாகிகளுக்கு அளிக்கப்பட வேண்டும்.
எல்லாவற்றிக்கும் மேலாக, இதற்குக் காரணமானவர்களைக் கடுமையாகத் தண்டிக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இவர்களெல்லாம் சட்டத்தைக் கவசமாக்கித் தப்பித்துக் கொள்ள விடக்கூடாது. மனித உயிரின் புனிதத் தன்மையைக் காப்பது 61ல்லா உரிமைகளுக்கும் மேலான உரிமை என்பதை இலங்கை அரசும், அதன் அதிதீவிர எதிரிகளும் அங்கீகரித்தாக வேண்டும். உயிர் வாழ்வதற்கான உரிமைக்கே உத்தரவாதமில்லாத பட்சத்தில் அனைத்து சனநாயகப் பண்புகளும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் 61 ன்பதை 6 ல்லோரும் உணரவேண்டும்.
“இந்தியா டுடே', சனவரி 21:பெப்ரவரி 5, 1994

அமைதியைத் தேடி - !
இலங்கையின் இனத்துவ முரண்பாடு அநேகமாக உடனடியாகத் தீர்வு காணப்படும் வாய்ப்பு இல்லாத, மீட்சி இல்லாத குடிசார் முரண்பாடுகளுள் ஒன்றெனக் கருதப்பட்டு வந்தது. இந்த முரண்பாட்டுக்கு இட்டுச்சென்ற காரணிகள் பற்றியோ அன்றி இதனால் ஏற்பட்டுவரும் பரிதாபகரமான விளைவுகள் பற்றியோ அக்கறைக் குறைவாக அல்லது அவசியத்தை உணராத நிலையில் இருந்ததாகக் காலத்துக்குக் காலம் ஆட்சி செலுத்திய அரசுகள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அமைதிக்கான வாய்ப்புகள் தொடர்பாக ஒரு நம்பிக்கையை அண்மையில் நடந்தேறிய பாராளுமன்ற, மற்றும் குடியரசுத் தலைவர் தேர்தல்கள் துளிர்க்க விட்டுள்ளன. அமைதிக்கான புதியதொரு திறனை மேற்கொள்ளப் பொதுசன ஐக்கிய முன்னணிக்கு, குறிப்பாக, திருமதி. சந்திரிகா குமாரதுங்க அவர்களுக்குக் கிடைத்த ஆணை இது என்று பரவலாக நம்பப்படுகிறது.
பன்னாட்டுச் செஞ்சிலுவைச் சங்கத்தின் நல்லெண்ணத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமைத்துவத்துடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்திப் பேச்சுவார்த்தைக்கான திகதியைத் தீர்மானிப்பதே திருமதி. சந்திரிகா குமாரதுங்க அவர்களின் அணுகு முறையாக இருந்தது. தூதுக் குழுவின் உறுப்பினர் தெரிவிலிருந்து முரண்பாட்டின் விளைவுகளை மனிதாபிமானத்துடன் நோக்குவதை மேலாகக் காட்டும் அவரது அணுகு முறை பிரதிபலித்தது. பொருளாதாரத் தடையைத் தளர்த்தியும், அத்தியாவசிய உணவு மற்றும் மருந்து வகைகளை விரைவாகக் கிடைக்க வசதி செய்தும் மனிதாபிமான அடிப்படையிலான இடர்தணிப்பு வேலைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்
131

Page 74
என்பதை அவர் உணர்ந்தார். மின்சாரத்தை மீண்டும் வழங்கல், வீதித் திருத்தங்கள் உள்ளிட்ட, போரினால் சிதைக்கப்பட்ட உள்ளகக் கட்டமைப்புக்களைச் சீர்செய்வது அடங்கலான புனர்வாழ்வு, புனரமைப்புத் திட்டங்களையும் அவர் வகுத்துள்ளார். புனரமைப்புத் தேவைகளை மதிப்பீடு செய்ய அமைச்சுகளை இணைத்த ஒரு செயலணியையும் அவர் உருவாக்கியுள்ளார். இந்தச் செயலணிக்கு கலாநிதி சி. குணசிங்கம் தலைமையிலான நிபுணத்துவக் குழுவொன்றும் உதவியது. அக்கறைக்குரிய அலுவல்களில் இரண்டாவதாக இடம் பெற்றது பகைமைத் தவிர்ப்பும், வடக்கு - தெற்குக்கான பாதுகாப்பான போக்குவரத்துக்கு மாற்றுக் கடல்வழிப் பாதையாகச் சங்குப்பிட்டியையும் (பூநகரி), தரைவழிப் பாதையாக ஆனையிறவுப் பாதையையும் திறப்பது தொடர்பானதாகும்.
காமினி திசநாயக்காவின் படுகொலை அரசைச் சீர்குலையச் செய்ததுடன் அமைதி முயற்சிகளையும் வெகுவாகப் பின்னடையச் செய்தது. அரசியற் படுகொலையைத் தொடர்ந்து எழுந்த அதிர்ச்சி மற்றும் உணர்வலைகளின் பின்னணியில் பேச்சுவார்த்தை முயற்சிகளை உடனடியாகவே தொடர்வதற்கு மக்களின் எண்ணப்பாடு ஆதரவாக இருக்கமாட்டாது என்று அரசு கருதியது. முயற்சிகள் ஐப்பசி 24 ஆம் திகதி முதல் கிட்டத்தட்ட ஆண்டு முடியும் வரை நிறுத்தி வைக்கப்பட்டன். இரண்டாம் கட்டப் பேச்சுகள் தை முற்பகுதியில் நடைபெற்றது. இந்தப் பேச்சுகள் பகைமைத் தவிர்ப்புடனும் புனரமைப்புடனும் மட்டுப் படுத்தப்பட்டிருந்தது. அரசு 23 பில்லியன் நபாய்கள் (800 மில்லியன் அமெரிக்க டொலர்) பெறுமதியான திட்டங்களை முன் வைத்தது. தமிழீழ விடுதலைப் புலிகளும் பங்கேற்கக் கூடிய முறையிலான வட-கிழக்கு வளர்ச்சி அதிகார சபை ஒன்றை நிறுவது பற்றிய சாத்தியங்கள் தொடர்பாகவும் பேசப்பட்டதாகத் தெரிகிறது. இருப்பினும் பகைமை தவிர்ப்புத் தொடர்பாக மட்டுமே உடனடியான முன்னேற்றம் காணக் கூடியதாக இருந்தது. "பாதகமான செயல்" எது என்று வரையறை செய்யப்பட்ட பகைமை தவிர்ப்பு உடன்பாடு ஒன்றை நடை முறைப்படுத்தவும் அந்த நடை முறையைக் கண்காணிக்கக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கவும் இருதரப்பினரும் இணக்கமாக இருந்தனர். இருதரப்பினரும் கண்காணிப்புக் குழுக்களுக்குத் தத்தமது பிரதிநிதிகளை நியமிப்பர். ஒவ்வொரு குழுவுக்கும் நோர்வே, கனடா, அல்லது நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு பிரதிநிதி தலைமை தாங்குவார் எனவும் மேலும் இணக்கம் காணப்பட்டது.
132

தை 20, 21 ஆம் திகதிகளில் இலங்கைக்கு பாப்பரசர் இரண்டாவது அருளப்பர் சின்னப்பர் வருகைதர இருந்தமை, பகைமைதவிர்ப்பு உடன்பாடு ஒன்றை இறுதியாக்குவதற்கு உடனடி உந்துசக்தியாக அமைந்தது. இந்த வருகை எந்தவிதக் குழப்பமும் இன்றி நிறைவேற வேண்டுமென்பதில் இருதரப்பினரும் ஆர்வமாக இருந்தனர். மூன்றாவது கட்டப் பேச்சுகள் தை 14 ஆம் திகதி நடைபெற்றது. காலவரையறை இன்றிப் பகைமை தவிர்ப்பு நீடிக்கப்பட்டது. கிளாலிக் கடலேரிப் பாதைக்கு மாற்றுப் பாதை ஒன்றைக் காண்பதில் இணக்கம் ஏற்படவில்லை.
இலங்கையின் ஒருமைப்பாட்டி ற்கும் தமிழ் மக்களின் அபிலாசைகளுக்குமிடையில் இணக்கம் காணக்கூடிய அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கு, அடிப்படை அரசியற் பிரச்சினைகளை ஆராய்வதே பேச்சுவார்த்தை நடவடிக்கைகளின் மூன்றாம் கட்டமாகும். இத் தொடர்பில் அக்கறைக்குரிய இருவகை அலுவல்கள் உண்டு. முதலாவது அரசியற் பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கான காலத்தைத் தீர்மானிப்பதாகும். இருதரப்பினருக்குமிடையில் நல்லெண்ணத்தையும் நம்பிக்கையையும் வளர்க்கக் கூடிய நடவடிக்கைகளை நிறைவேற்றாமல் அத்தகைய ஒரு பேச்சுவார்த்தை சாத்தியமாகுமா? சங்குப்பிட்டிப் (பூநகரி) பாதை அல்லது ஆனையிறவுப் பாதை திறப்பது தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காணும் படி அரசு வேண்டப்படுமா? புனரமைப்புத் திட்டங்களை நடை முறைப்படுத்தி அரசு தன் நல்லெண்ணத்தை மேலும் நிரூபிக்க வேண்டும் என்று வேண்டப்படுமா? அமைதிக்கான சாத்தியங்கள் தொங்குபொறி நிலையிலும் நம்பிக்கை அற்றதாகவும் இருக்கும் நிலையில் புனர் வாழ்வுத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல ஏதுவான வெளிநாட்டு மூலவளங்களைப் பெற்றுக் கொள்வது அரசுக்குச் சாத்தியமாகுமா?
பேச்சு வார்த்தைக்கான வழி முறைகளைப் பொறுத்தவரை சில திட்டங்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புவதாக அரசு தன் நிலைப்பாட்டைச் சுட்டிக்காட்டி உள்ளது. அத்தகைய திட்டங்கள் அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக மட்டும் இருக்குமா அல்லது தனி மனித மற்றும் குழுக்களதும் உரிமைகளையும், மத்தியில் சமசந்தர்ப்பத்தையும் அதிகாரப் பகிர்வையும் உள்ளடக்கியதாகவும் இருக்குமா? அதிகாரப் பரவலாக்கலை நிலைப்படுத்தக் கூடியதான அரசியல் யாப்பு வரைவிலும் நாட்டம்
133

Page 75
இருக்கத்தான் செய்யும், பண்டாரநாயக்கா - செல்வநாயகம் ஒப்பந்தம் போன்ற முன்னைய ஒப்பந்தங்கள் கருதுகோள் கூறுகளை வழங்கலாம் என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐம்பதுகளின் நடுப் பகுதியில் எதிர்கொள்ளப்பட்டவற்றுக்கு மிக அப்பால் அரசியல் யாப்பு வரைவு செல்ல வேண்டும் என்பதுடன், சமகாலத் தேவைகளுக்கும் யதார்த்தங்களுக்கும் ஈடுகொடுக்கக் கூடியதாகவும் அமைய வேண்டும் என்பதும் தெளிவாக உள்ளது.
இனத்துவ எல்லைக்கோட்டின் இருபுறமும் நம்பிக்கை வளர்ந்து வரும் அதேவேளை, பேச்சுவார்த்தையின் செல்நெறி சிக்கலானதும் கடினமானதும் என்ற யதார்த்த விளக்கமும் இருக்கத்தான் செய்கிறது. சாண் ஏற முழம் சறுக்கவும் கூடும். வெளியாகவும், துல்லியமாகவும் நடத்தப்படும் இந்த முயற்சி மட்டுப்படுத்தலுக்கும் புறக் கட்டுப்பாட்டுக்கும் உட்படலாம் என்பதையும் கருத்திற் கொள்ள வேண்டும். மரபுவழியாக வந்துவிட்ட அவநம்பிக்கையில் இருந்தும் மீண்டுகொள்ள வேண்டியுள்ளது. எவை எப்படி இருப்பினும், நியாயமான நிலைபேறுடைய ஒரு உடன்பாட்டுக்கு வருவதில் இரு பகுதியினரும் வெற்றிகான வேண்டியதற்கான தீர்மானம், உறுதி, தெளிவு என்பவற்றுக்குப் பாப்பரசர் இரண்டாவது அருளப்பர் சின்னப்பர் அவர்களின் அண்மைய வருகை கவனத்தை ஈர்த்துள்ளது.
“இந்து", 4 பெப்ரவரி 1995.
134

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?
"இந்தியாவிலும் இலங்கையிலும் 6 முந்த தேசிய மறுமலர்ச்சி"களுக்கிடையிலான உடனடித் தொடர்பைப் பற்றி இலங்கைத் தேசிய காங்கிரசின் தொடக்க விழாவின் தலைமை உரையில், குடியேற்றத்துவ விடுவிப்பு தொடர்பாகச் சுட்டிக் காட்டிய பொன்னம்பலம் அருணாசலத்தின் கருத்துடன் இலங்கைச் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் தம்மை இணைத்துக் கொள்ளலாம். அவர் தொடர்ந்து பேசுகையில் குறிப்பிட்டதாவது:
"வினை விதைத்தவர் அமல மோகன் போஸ். ஒரு தசாப்தத்தின் பின் அது இந்திய தேசிய காங்கிரசாக மலர்ந்தது. அதே மாதிரி பயனுள்ள செல்வாக்கினால், எனது அருமை நண்பர் காலஞ்சென்ற நீதியரசர் செய்யது முகம்மது அலிகார் முகம்மதிய கல்லூரிக்குத் திட்டமிட்டார். அது முகம்மதியர்களின் அறிவுத்துறை அரசியல் துறைகளில் புதுவலுவை ஏற்படுத்தியது."
அந்த உணர்வலைகளின் செல்வாக்கைத் தழுவிக் கொள்ளாத "நீர் தேங்கிய சதுப்பு நிலமாக" இலங்கை இருக்கிறது என்று அருணாசலம் 1917 இல் கவலைப்பட்டார். ஆனால் பின்னால் ஏற்பட்ட நிகழ்வுகள் அருணாசலத்தின் அவநம்பிக்கைகளை மறுதலித்தன. வட-கிழக்கிற் கூட பல தலைமுறை அரசியல் தலைவர்களின் சிந்தனைகள் உப கண்டத்தில் ஏற்பட்ட தேசிய இயக்க அலையினால் முறுக்கேற்றப்பட்டன, உப்புச் சத்தியாக்கிரகம், ரவ்லாற் சட்ட முன்வரைவுகள், ஜாலியன்வால பாக் படுகொலைகள் என்பன போன்ற விடுதலை இயக்கத்தோடு தொடர்புடைய பல நிகழ்வுகள் கூட்டு நினைவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி தேசிய மீளெழுச்சிச்
135

Page 76
செல் நடைக்குக் காத்திரமான பங்களிப்பைச் செய்துள்ளன. அறிவார்ந்த பண்பார்ந்த ஜவஹர்லால் நேரு, இந்திய அரசியலின் "புயல் குண்டான” சரோஜினி நாயுடு, எளிமைத் துறவு பூண்ட மகாத்மா காந்திஜி போன்றவர்களின் யாழ்ப்பாண வருகை இந்த மீளெழுச்சிக்கு வித்திட்டன. இந்தியத் தேசிய இயக்கத்தின் இலட்சிய வேட்கையைக் குடியேற்ற நாடான இலங்கையில் புகுத்தி அரசியற் சீர்திருத்தம் காணச் செய்யப்பட்ட முயற்சியின் சின்னமாக யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் விளங்கியது. யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் பூரண சுதந்திரம் வேண்டிப் போராடியது. அதனால் பூரண சுதந்திரத்தை வழங்காத டொனமூர் அரசியல் திட்டத்தின் அடிப்படையில் நடைபெற்ற தேசிய சட்டசபைக்கான முதல் தேர்தலைப் புறம் தள்ளும்படி அது கோரிக்கை விடுத்தது.
இருப்பினும், குடியேற்றத்துவத்தின் விடுவிப்பு நடவடிக்கையின் முக்கிய கட்டமென்ற உணர்வோ உற்சாகமோ வட-கிழக்கில் பெப்ரவரி 4 ஆம் திகதியைப் பொறுத்தவரை மிக அரிதாகவே ஏற்பட்டுள்ளது. சம்பிரதாயமாகச் சுதந்திரம் வழங்கப்பட்டதைக் கானாவின் குவாமே என்குரூமா கொடியேற்றித் தேசிய கீதம்பாடும் சடங்காகவே கணித்தார்.
வட-கிழக்கில் உள்ள பெரும்பாலான தமிழர்கள் மாசி 4 ஆம் திகதியை அதே இருமுகப் போக்குள்ள உணர்வுடனேயே நோக்குகிறார்கள். பல்லினத்துவ சமுதாயத்துக்கான அரசியல் யாப்பு அடித்தளத்தைச் சோல்பரி யாப்பு அமைக்கவில்லை என்பது அவர்கள் கருத்து, மதச்சார்பற்ற பன்முகக் கொள்கை அடிப்படையிலான கருத்துருவம் தரப்படவில்லை என்பது அவர்களது நம்பிக்கையாகும். நீதித்துறை மூலம் நிறுவப்படக் கூடிய அடிப்படை உரிமையோ அன்றி அரசியல் அதிகாரப் பரவலாக்கத்துக்கான வழிமுறையோ அதில் இடம் பெறவில்லை. "முக்கிய நிகழ்வுகள் - சமகால இந்தியா பற்றிய ஒரு மானுடவியல் விளக்கப்பாடு” என்ற தனது அண்மைய நூலில் வீணாதாஸ் மேல்வருமாறு கூறுகின்றார்: "19 ஆம் நூற்றாண்டின் பிற் பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற் பகுதியிலும் பல உள்ளூர், தேசிய மட்டங்களில் குடியேற்றத்துவத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் அதிகாரப் பகிர்வு பற்றியதாகவே இருந்தன. இருந்த போதிலும் 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிரதிநிதித்துவ மக்களாட்சியம் என்பதே கேள்விக் குறியாகி விட்டது, பிரதிநிதித்துவத்தின் பெயரால் அதிகாரம் செலுத்தப்பட்ட பொழுதிலும் அது வரைமுறையற்றதாக ஆகிவிட்டது என்பது தெளிவாகத்
136

தெரிகிறது" இந்நிலை உணரப்பட்டமையினாலேயே மக்களாட்சியத்தில் நம்பிக்கை இழக்கச் செய்த அண்மைக்கால இலங்கையின் வரலாறு உருவாவதற்குக் காரணமாக இருந்தது. அதுவே அத்தகைய வரை முறையற்ற விதத்தில் அதிகாரம் செலுத்துவதைக் கட்டுப்படுத்தவும் ஒழுங்கு நிலைப்படுத்தவும், அரசியல் இயக்கங்கள் தோன்றவும், அரசியல் இயங்கிகள் தோன்றவும், வழிவகுத்தது. சோல்பரி அரசியல் யாப்பின் 29 (2) ஆம் உறுப்புரை எந்த ஒரு இனக் குழுமத்திற்கும் பாதகமாகவோ அன்றி மற்ற எவருக்கும் இல்லாதவாறு சாதகமாகவோ எதையும் செய்யக் கூடாது என்று தடைவிதித் திருந்தது. பெரும்பான்மைத்துவ ஆடசிப் போக்குக்கு ஆனால் அது கட்டுப்பாடு விதிப்பதாகக் கொள்ளப்பட்டது. உண்மையில் 29 ஆம் உறுப்புரை சிறுபான்மையினருக்குத் தகுந்த பாதுகாப்பாக அமையவில்லை. பெருந்தோட்டத் தமிழர்கள் பெரும்பான்மையோரின் குடியுரிமையைப் பலிகொண்ட குடியுரிமைச் சட்டத்தையும், இலங்கைப் (பாராளுமன்றத் தேர்தல்) திருத்தச் சட்டத்தையும், இலங்கை உயர்நீதிமன்றமும், பிரித்தானிய நீதிப்பேராயமும் (பிறிவிக் கவுன்சில்) சட்டவிரோதமாகத் தவறி விட்டன.
"இந்தத் தீர்ப்புகள் பின்பு இலங்கை அரசியல் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இதனை 1952 ஆம் ஆண்டுத் தேர்தலுக்கும் பின்பு அரசியல் அதிகாரம் அடைந்த மாற்றத்திலிருந்து காணக் கூடியதாக இருக்கிறது. அது சிறுபான்மையினர் நலன்களுக்குப் பாதகமாக அமைந்தன” என்று திரு. எச்.எல்.டி. சில்வா சுட்டிக் காட்டியுள்ளார். சட்டமா அதிபர் எதிர் கோடீஸ்வரன் என்ற வழக்கில் 1956 ஆம் ஆண்டின் அரசகரும மொழிச்சட்டம் பற்றிய அரசியல் யாப்புத் தொடர்புபட்ட சட்டப் பிரச்சினைபற்றி உயர்நீதிமன்றம் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டது. அரசுடன் அரச ஊழியருக்கு சட்ட மூலம் நிவாரணம் கோரக் கூடிய ஒப்பந்தம் எதுவும் கிடையாது என்று மட்டும் தீர்ப்பு வழங்கியது, மாவட்ட நீதிமன்றில் நீதிபதி ஓ.எல்.டி. கிறெட்சர் இரு பிரச்சினைகளிலும் வழக்காளிக்குச் சார்பாகத் தீர்ப்பளித்தார். பிரித்தானிய நீதிப்பேராயம் (பிறிவிக் கவுன்சில்) உயர்நீதிமன்றத் தீர்ப்பை மாற்றி அமைத்தது. ஆனால் அரசியல் யாப்புச் சார்ந்த பிரச்சினை தீர்க்கப்படாமலேயே இருந்தது. "ரணசிங்க எதிர் இலஞ்ச ஆணையர் என்ற வழக்கில் பியர்ஸ் பிரபு தெரிவித்த சட்டவலுவுள்ள கூற்று இல்லையேல் பரிதாபத்துக்குரிய வலுவற்ற இனத்துவ நலக் காப்பீடாக அரசியல் யாப்பு வரலாற்றில் 29 ஆம் உறுப்புரை மறக்கப்பட்டிருக்கும். 29 ஆம் உறுப்புரை இலங்கைக் குடிமக்களுக்கிடையிலான உரிமைகளின் வழுவாத 137

Page 77
சமநிலையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்த அடிப்படை நிபந்தனையின் மீதான நம்பிக்கையிலேயே அவர்கள் "இந்த அரசியல் யாப்பை ஏற்றுக் கொண்டனர். ஆம், இந்த அரசியல் யாப்பின் மீது இந்த உறுப்புரையை மாற்றிவிட முடியாது" என்று பியர்ஸ் பிரவு அந்த வழக்கில் கூறியிருந்தார்” என்று எச்.எல்.டி. சில்வா மேலும் கூறியுள்ளார். இந்தக் கூற்றுகள் தொடர்ச்சியான சில நிகழ்வுகளைத் தோற்றுவித்தன. இதன்விளைவாக முதலாவது குடியரசு அரசியல் யாப்பில் 29 ஆம் உறுப்புரை நீக்கப்பட்டதுடன் சட்டவாக்க அதிகாரம் கொண்ட பாராளுமன்றத்துடனான உறவில் நீதித்துறையின் அதிகாரங்களும் மட்டுப்படுத்தப்பட்டன.
சோல்பரி அரசியல் யாப்புத் தந்த பொய்மையான தொடக்கமும், குடியுரிமை மொழியுரிமைச் சட்டங்களும் இனத்துவ மற்றும் இனங்களுக்கிடையிலான சீர்கெட்ட நல்லுறவுகளைப் பல வகைகளில் மேலும் மோசமடையச் செய்தன. இருப்பினும் வரலாற்றுத் தன்மைகொண்ட தவறுகளைச் சீர்செய்யப் பின்பு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. குடியுரிமையைப் பொறுத்தவரை சீரமைப்பு ஒரு பகுதியையே செய்ய முடிந்தது. ஏனெனில் பூரீமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் பெருந்தொகையான பெருந்தோட்டத் தமிழர்கள் நாடுகடத்தப்பட்டு விட்டனர். அப்படி இருந்த போதிலும் 1986 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க நாடற்றோர் குடியுரிமைச் சட்டம், 1988 ஆம் ஆண்டின் சிறப்பு ஏற்பாடுகள் சட்டம் என்பன மூலம் எஞ்சியுள்ள நாடற்றோர் பிரச்சினைக்குத் தீர்வுகாண முயற்சிகள் எடுக்கப்பட்டன.
மொழியைப் பொறுத்தவரையில், படிப்படியாக 1972 இல் தேசிய மொழியாகவும், 1987 இல் சட்டவாக்க நிர்வாக, நீதிமன்ற அரசகரும மொழிகளுள் ஒன்றாகத் தமிழ்மொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இருப்பினும் திறனுள்ள நடைமுறைப்படுத்தல் தொடர்பாகத் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் இன்னும் உண்டு. 13 ஆம் அரசியல் யாப்புத் திருத்தம் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்க முனைந்தது ஆயினும் வட-கிழக்கு மாகாண சபை ஒரு பொழுதும் முழுமையாகச் செயற்பட விடப்படவும் இல்லை என்பதும், 1990 முதல் அச்சபை கலைக்கப்பட்ட நிலையிலேயே இருக்கிறது என்பதும் கொடிய முரண்நகையாகும். இந்த அதிகாரப் பரவலாக்கல் ஏற்பாடு பின்பு சட்ட, நிர்வாக நடவடிக்கைகளால் ஊடறுக்கப்பட்டதால் அது சமகால யதார்த்தங்களுக்கும் தேவைகளுக்கும் பயனற்றதாகி விட்டது என்பதும் தெளிவு.
138

"அரசு அதிகாரங்களைத் திணிப்பதற்கும், தனதாக்கிக் கொள்வதற்கும் எதிராகச் சமூகங்கள் சவால்விடுவதைக் கொண்டதாக அண்மைக் காலத் தென்னாசிய வரலாறு அமைந்துள்ளது. பின்வருவனவற்றை அறிவுசார் ஆய்வு விமர்சனத்துக்கு உட்படுத்துவதன் வழியாகச் சவால் அமைகிறது” என்று வீணாதாஸ் வாதிட்டுள்ளார்.
(அ) ஓரினத்தன்மையை அழுத்தும் தேசிய புனைக்கதைகள் (ஆ) சட்டத்துக்கு மேலான ஆரசின் தனியாதிக்கம் (இ) வன்முறையில் அரசின் தன்னாதிக்கம் மறுபுறத்தில் பல்லின சமூகங்களின் வரலாறு, சட்டம் சார்ந்த பன்மைத்துவம், என்பவற்றுக்கு இந்த அறிவுசார் ஆய்வு விமர்சனங்கள் அழுத்தம் கொடுக்கின்றன. அத்துடன் மாற்று அரசியல் யாப்புகளும், சட்ட முறைமைகளும், மற்றும் மாற்று அரசியல் வன்முறைகள், கருத்து வேறுபாடுகளைக் கட்டுப்படுத்தல் என்பனவற்றின் மீதும் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
சுதந்திரத்துக்குப் பிந்திய இலங்கையின் வரலாற்றிலும் அதுமாதிரியான நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன. அரசு முழுமையாக அனைத்திலும் உரிமை பாராட்டுவதை மக்கள் சமூகங்கள் எதிர்க்க வேண்டும் என்பது போல் மிக முக்கிய சமூகங்களாக இருந்தாலும் அவற்றின் முழுமையான உரிமை திணிக்கப்படுவதைத் தனிமனிதர்களும் எதிர்க்கத்தான் வேண்டும் என்பதையும், அது மனிதப் பிறவிகளின் சுதந்திரம் என்பதையும் அவர் ஒத்துக் கொள்கிறார். ஆக, வெறுமனே ஐரோப்பிய வல்லாதிக்கத்துக்கு எதிரான மக்கள் எழுச்சி என்பதற்கு மேலானது குடியேற்றத்துவ விடுவிப்பு. அல்ஜீரிய சிந்தனையாளன் பிரான்ஸ் பனன் கூறியதுபோல் குடியேற்றத்துவ விடுவிப்பு என்பது "தனிமனித தன்மானப் பிரச்சினை" ஆகும்.
“டெய்லி நியூஸ்”, பெப்ரவரி 4, 1995.
139

Page 78

சட்டமும் நீதியும் விவாத அரங்க உரைகள்

Page 79

இலங்கை கணக்கீட்டு, கணக்காய்வுத் தராதரங்கள் மசோதா பற்றி --
கணக்கீட்டுத் தராதரங்கள் பற்றிய இம்மசோதா இரு ந்ோக்கங்களைக் கொண்டது. முதலாவது நோக்கம் வர்த்தக நிறுவனங்களின் கணக்குகள் தகுதிவாய்ந்த கணக்காய்வாளர்களாற் பரிசீலனை செய்யப்படுவதை உறுதி செய்தல். இரண்டாவது இத்தகைய நிறுவனங்களின் கணக்குகள், இலங்கையின் கணக்கீட்டுத் தராதரங்களுக்கு ஏற்ப அமைவதையும் அந்நிறுவனங்களின் நிதிச் செயலாற்றங்களைச் சரியாக எடுத்துக் காட்டுவதாகும். மசோதாவின் ஆறாவது ஏற்பாடு தொழில் நிறுவனங்கள் பின்பற்றியொழுக வேண்டிய தராதரங்கள் பற்றியதாகும். கணக்காய்வு நிறுவனம் அல்லது தொழில்முறைக் கணக்காளர் மீது இவ்வாறான சில தராதரங்களைச் சுமத்துவது முக்கியமானதாகும். ஏனெனில், கணக்காய்வு அறிக்கைகள், நிதிக் கூற்றுக்கள் என்பவற்றில் தங்கியிருப்போர், உண்மையில் இக் கணக்காய்வாளர்களின் மதிப்பீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டியிருக்கும்.
சபை உறுப்பினர்களில் மூவர் பதவி வழி உறுப்பினர், கணக்காய்வு நிறுவனங்கள், வர்த்தக சங்கம், வழக்கறிஞர் சங்கம் ஆகியவை செய்யும் நியமனங்களிலிருந்து எட்டுப் பேரை அமைச்சர் நியமிப்பார். நியமன உறுப்பினர்களில் ஒருவரைத் தலைவராக அமைச்சர் தெரிவு G)óFlij6) 1/Tf7. இவ்விடயத்தில் அமைச்சர் செயற்படுவது கட்டுப் படுத்தப்படுகின்றது.
இம் முயற்சியில் வெற்றி காணக் கூடிய, நம்பிக்கையான, திறமை மிக்க ஒருவரை அமைச்சர் த்ெரிவு செய்யும் வகையில் அமைச்சர்களுக்குச் சந்தர்ப்பம் இருத்தல் வேண்டும். சட்ட, சமூக நம்பிக்கை நிலையத்தின்
143

Page 80
ஏற்பாட்டின்படி கணக்காளர் குழுவொன்று இம் மசோதாவை ஆராய்ந்து பல விதந்துரைகளை வழங்கியது. திரு. ஹென்றி ஜயமஹா தமது உரையின் போது இவ்வம்சங்கள் பற்றிக் குறிப்பிட்டார். இவை பற்றி நானும் கருத்துரை கூற விரும்புகின்றேன். ஏற்பாடு 40 இல் கம்பெனி என்பதற்கு வரையறை தரப்பட்டுள்ளது; அட்டவணைப் பகுதியில் "கம்பெனிகள் குழு" பற்றி விவரணம் நீக்கப்படல் வேண்டும் எனக் கருதுகின்றேன்.
அமைச்சரின் முயற்சிகளும் செயற்பாடுகளும் முக்கியமாக வர்த்தக நிறுவனங்கள் பற்றியதாகவே அமைந்துள்ளன. எனினும் இவற்றைப் பொதுத்துறை சார்ந்த கணக்காய்வு முறை, நிதிக் கணக்கீட்டு அறிக்கை என்பவற்றுடன் தொடர்புபடுத்த வேண்டிய தேவையொன்றுண்டு. இதில் காணப்படும் குறைபாடுகள் காரணமாக நிதிக்கட்டுப்பாடு இல்லாமற் போய்விட்டது. பயிற்சி பெற்ற கணக்காய்வாளர்களும் போதிய அளவு இல்லாதது ஒரு முக்கிய பிரச்சினையாகும்.
இருக்கும் ஒரு சிலர் அத்தனை வேலைகளையும் செய்து முடிக்க முடியாதுள்ளது. கணக்காய்வு மற்றும் நிதி சம்பந்தப்பட்ட சூழலானது தொழில் முறையாகவும் , தன் னரியக் க முறையாகவும் அமைக்கப்படவில்லை. அரசாங்கத்தின் எல்லா நிலைகளிலும், கணக்காய்வாளர்கள், கணக்காளர்கள் ஆகியோரின் தொழிற் தகுதிகளை மேம்படுத்த வேண்டும். அவர்கள் போதிய அளவு நியமிக்கப்படவும் வேண்டும். வரவு செலவுத் திட்டம், கணக்காய்வு என்பவற்றில் நவீன தன்னியக்க முறைகளை அறிமுகம் செய்ய வேண்டும் . கணக்காய்வாளரின் சுதந்திரமும் வலுப்படுத்தப்படல் வேண்டும். பொதுக்கணக்குக் குழு முழுமையாக மறுசீரமைப்புச் செய்யப்படல் வேண்டும் . அவ்வாறே, அட்டவணையிலுள்ள பொதுக் கூட்டுத்தாபனங்கள் பற்றியுள்ள வரைவிலக்கணம் சகல பொதுக் கூட்டுத்தாபனங்களையும் சட்டபூர்வ அமைப்புகளையும் உள்ளடக்கும் வகையில் திருத்தி அமைக்கப்படல் வேண்டும்.
21 ஆடி,1995
144

தொடர்பு சாதனங்கள்
அன்புக்குரிய தொடர்பு சாதன அமைச்சர், சுற்றுலா விமானத்துறை உப அமைச்சர் பழம்பெரும் தொழிற்சங்கவாதி. அவர் நியாயமான முறையில் நடந்து கொள்வதை இச்சபையிலுள்ளோர் எல்லோரும் ஏற்றுக் கொள்வர்.
1994 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் எல்லாமாக 28 செய்தித்தாள்கள் இருந்தன. அவற்றுள் 14 சிங்கள மொழியிலும், 7 தமிழ்மொழியிலும், 7 ஆங்கில மொழியிலும் வெளிவந்தன. இவற்றுடன் இன்னும் 4 ஆங்கில வாராந்தச் செய்திப் பத்திரிகைகளும் 3 சஞ்சிகைகளும் இருந்தன. சிங்களமொழி மாற்றுச் செய்தித்தாள்கள் சற்று உணர்ச்சியூட்டுபவையாக விளங்கின. 9 தேசிய செய்தித்தாள்களுடன் பிரசித்தி வாய்ந்த சிற்றேடுகளும் பல வாராந்தச் செய்தித்தாள்களும் வெளிவந்தன. இவற்றுள் பிரதேச ரீதியான செய்தித்தாள்கள் இடம்பெறாமல் இருந்தமை ஏமாற்றத்தைத் தந்தது. மறுபுறத்தில் உயிரோட்டமுள்ள ஒரு சிங்களச் சஞ்சிகைக் கைத்தொழில் பல பிரசுரங்களைக் கொண்டிருந்தது. தகவற் திணைக்களம் ஒரு செய்தித்தாளைத் தமிழ்மொழியில் நடத்தி வந்தது. ஆயினும் அதன் முதற்பதிப்புத் தவிர்ந்த ஏனைய பதிப்புகளை நான் கண்டதில்லை. இந்த அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்த காலம் முதல் இலத்திரன் தொடர்பு சாதனங்களில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. புதிய தொலைக்காட்சி அல்லது வானொலி நிலையங்களுக்கு உத்தரவுப் பத்திரம் வழங்கப்படவில்லை. எல்லாமாக 6 தொலைக்காட்சி அலைவரிசைகள் உள்ளன. அவற்றுள் 4 தனியாரால் நடத்தப்படுகின்றன. இந்த அலைவரிசைகள் சிலவற்றில் செய்தி
145

Page 81
நிகழ்ச்சிகள் நுட்பமான முறையில் தயாரித்தளிக்கப்படுகின்றன. சுயாதீனத் தொலைக்காட்சியும் ரூபவாஹினியும் இவ்விடயத்தில் பின்தங்கியவையாக உள்ளன. இவ்வாறே பல தனியார் வானொலி நிலையங்களும் பிரபல்யமடைந்து வருகின்றன. ஆயினும் அவை இசைநிகழ்ச்சிகளுக்கே கூடுதலான முக்கியத்துவமளிக்கின்றன. கல்விசார் உள்ளடக்கம் குறைவாகவேயுள்ளது.
அரசாங்கமானது 1994 கார்த்திகையில் புதியதொரு சனநாயகரீதியான தொடர்பு சாதனக் கலாசாரத்தைத் தோற்றுவித்தது. அரச முகவர்களால் அல்லது அவற்றின் உயர்தொழிற் கடமைகளை மேற்கொள்ளும் ஏனைய பொறுப்பு வாய்ந்தவர்களால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ செய்தியாளர்கள் தாக்கப்படுதலுக்கும் துன்புறுத்தப்படுதலுக்கும் முடிவு கட்டப்பட்டது. நடைமுறையிலுள்ள தொடர்பு சாதனங்களின் சுதந்திரத்துக்கு உத்தரவாதமளிக்கும் புதிய தாபனங்களை உருவாக்குதல், அச்சு வடிவ மற்றும் இலத்திரன் தொடர்புச் சாதனங்களின் தரத்தையும் பண்பினையும் மேலோங்கச் செய்தல் போன்றவற்றுக்குக் கொள்கை உறுதியளித்தது. இவற்றைக் குறித்து எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கை "லேக்ஹவுஸ்" உடமைகளைப் பரவலாக்குதல், செய்தித்துறையிலுள்ளோரின் தொழிற் தேவைகளை நிறைவு செய்யக் கூடிய தேசிய தொடர்பு சாதன நிறுவகம் ஒன்றை உருவாக்குதல் மற்றும் சட்டமுறைச் சீர்திருத்தம் என்பவற்றை உள்ளடக்கியது.
இத்தகைய குழுக்களின் பணிகள் விதந்துரைகளின் நிலைமைகள் பற்றி அமைச்சர் தெளிவுபடுத்துவார் என நினைக்கிறேன். இலத்திரன் துறையிலே நிறுவன மற்றும் கொள்கை ரீதியான இடைவெளியுண்டு. அனுமதிப்பத்திரம் தொடர்பாக ஓரளவு கொள்கைத் தெளிவு இருத்தல் வேண்டும். ஒலிபரப்புத் தரத்தைக் கண்காணிக்க ஐக்கிய அமெரிக்காவிலுள்ள சுதந்திர ஒலிபரப்பு ஆணைக்குழு போன்ற முகவர் நிலையம் இருப்பது நன்று. இந்நிறுவனம் ஒலிபரப்புத் தரம் பேணும் வழிகாட்டல்களை வழங்கலாம். பக்கச் சார்புள்ள ஒலிபரப்புப் பற்றிய முறைப்பாடுகள் அல்லது சமநேரம் கோரும் தனிநபர்களின் மனக் குறைகளைப் போக்கும் வகையிலும் இந்நிறுவனம் தொழிற்படலாம்.
இவை தொடர்பாக அமைச்சரால் நிறுவப்பட்ட குழுக்களுள் ஒன்று தனது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது என்றும், ஏழு பேர்
146

கொண்ட ஒலிபரப்பு அதிகாரசபை ஒன்றை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது எனவும் நான் அறிகின்றேன். இவ்விடயத்திலே அமைச்சரவர்கள் "பிரசார் பாரதிச் சட்டத்தைக்" (PrasarBharathi Act) கவனத்தில் கொள்ளலாம். அதிலே கூறப்பட்டிருக்கும் பல கருதுகோள்கள், மற்றும் கருத்துக்கள் பயன்தரக்கூடிய முறையில் இங்கும் மேற்கொள்ளப்படலாம். முதலாவதாக, இச்சபை மூன்றுபேர் கொண்ட குழுவின் விதந்துரையின் பேரில் சனாதிபதியால் நியமிக்கப்படும். இது அரச கழகத்தின் தலைவரை உள்ளடக்கும். இச்சபை புதிய அரசியல் அமைப்பின் கீழ் நிறுவப்படவுள்ளது. அரசியலமைப்புக் கழகத்தின் விதந்துரையின்படி நிறுவப்படலாம். இரண்டாவதாக இந்த அதிகாரசபை ஒழுங்குபடுத்தும் கடமைகளையும் ரூபவாஹினி மற்றும் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனங்களின் நடைமுறைப் பொறுப்புகளையும் நிறைவு செய்ய வேண்டும். மூன்றாவதாக, நாட்டின் பன்மைக் கலாசாரம், மொழிகள் மற்றும் பிரதேசம் ஆகியவற்றையும் உள்ளடக்கும் அதிகாரம், சிறந்த ஒலிபரப்பும் அலைவரிசைப் பயன்பாடு, உயர்தரம் பேணல் ஆகியவற்றை உறுதி செய்தல் வேண்டும். நான்காவதாக, அதிகாரசபையின் பணியை மேற்பார்வை செய்தல், அது தனது குறிக்கோள்களை நிறைவு செய்கிறது என்பதை உறுதி செய்தல் வேண்டும். தெரிவுக் குழுவால் நியமிக்கப்பட்ட 20 பேர் கொண்ட பாராளுமன்றக் குழுவும் இருத்தல் வேண்டும். ஐந்தாவதாக, பாரபட்சமான ஒலிபரப்பினையிட்டுத் தனியாட்களால் மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகளைப் பெற்றுக் கொள்ளவும், அவற்றைக் கவனிக்கவும், ஒலிபரப்புக் கழகம் இருத்தல் வேண்டும். இக் கழகத்தில் பாராளுமன்ற உறுப்பினருக்கும் பொதுவாழ்க்கையில் ஈடுபடும் சிறந்தோருக்கும் சம பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.
தீர்மானம் மேற்கொள்ளவும், ஒழிவுமறைவற்ற தன்மைக்கு உதவும் நோக்கிலும் தகவல் சுதந்திரச் சட்டமொன்றை இயற்றுவதில் அமைச்சர் கவனம் எடுத்தல் நல்லது. இவ்விடயம் தொடர்பாக, அவர் ஐக்கிய அமெரிக்கா, கனடா, சுவீடன் போன்ற நாடுகளின் அனுபவங்களைப் பெற முடியும். அத்துடன் பாராளுமன்ற நிகழ்ச்சித் தொடர்களை ஒளிபரப்ப வேண்டும் என நான் உறுதியாகச் சிபார்சு செய்கிறேன். இந்நோக்கத்திற்காக, நிலையியல் ஒழுங்குக் குழுவின் (Committee on வStanding orders) கூட்டம் கூட்டப்பட வேண்டுமெனவும் நான்
ஆலோசனை தெரிவிக்கிறேன்.
147

Page 82
இந்நாட்டிலே இராணுவரீதியான பிணக்குகள் ஏற்பட்ட வேளையிலும், அரசியல் அதிகாரங்களைக் குறிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்ற வேளையிலும் அரசாங்கத்தின் தொடர்புச் சாதனக் கொள்கை கடும் நெருக்கடிக்குள்ளானது. இத்தகைய அழுத்தங்களும் நெருக்கடிகளும் தலைதுாக்கிய வேளையில், கருத்துச் சுதந்திரம் பாதிக்கப்பட்டது. இவ் விடயத்திலே, "யுக்திய" பத்திரிகை ஆசிரியர் திரு. சுனந்த தேசப்பிரிய பெந்தோட்டையிலே நேர்மையற்ற குழுவொன்றினால் கபடத்தனமாகத் தாக்கப்பட்டமையைக் குறிப்பிட விரும்புகிறேன். இவ்வாறான நிலைமையை அமைச்சர் திரு. தர்மசிறீ சேனநாயக்கா போக்கியுள்ளார். மற்றும் அவருடன் சேர்ந்து உழைக்கும் திரு. மங்கள சமரவீர, திரு. எஸ்.பி. திசநாயக்கா ஆகியோரும் ஐரோப்பிய அரசு சாரா நிறுவனங்களின் மகாநாட்டின் போது அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்ட அத்தகைய அச்சுறுத்தல்கள் இடம்பெறா என உறுதி கூற வேண்டும். நேற்று தெளிவான காரணங்கள் எவையுமின்றி அசோசியேற்றட் பத் திரிகைச் செய்தியாளர் கைது செய்யப் பட்டுத் துன்புறுத்தப்பட்டுள்ளமையையிட்டு நாமும் குழப்பமடைந்துள்ளோம். இவ்வாறே "இந்தியா டுடே" யின் நிருபரும் தொலைக்காட்சிக் குழுவினரும், நியூஸ் ராக் (NewsTrack) பிரிவினரும் தவறான முறையில் விசாரணை செய்யப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளனர். செய்தித் தணிப்புப் பற்றிய விடயத்தில் குடிமக்களின் இறப்புப் பற்றிய பிரசுரங்களின் தணிக்கைச் சட்டத்துக்கு முரணாக மீறப்படுதல் பற்றிய விபரங்கள் எம்மிடமும் உண்டு. போர்ச் செய்திகளைத் தருவதில் தொடர்பு சாதனச் செய்தித் தணிப்பும், தடைகளும் எதிர்மறையான விளைவுகளைத் தரும் என்பதுடன் அவை நாட்டின் தொடர்புச் சாதனங்களின் மீதுள்ள ஆர்வத்தையும் குறைக்கின்றன. போர்களத்திலே பாதுகாப்பு அமைச்சினால் அனுமதி வழக.ப்பட்டவர் தவிர்ந்த செய்தியாளர்,படப்பிடிப்பாளர், தொலைக்காட்சிப் பிரிவினர் இல்லாத ஒரே போர் இதுவாகும். செஸ்னியா, ஆப்கானிஸ்தான், மத்திய கிழக்கு, ருவாண்டா, புறுாண்டி, காஷ்மீர் போன்ற இடங்களில் நிலவும் பிரச்சினைகள் பற்றிச் சர்வதேச தொடர்புச் சாதனங்கள் செய்திகளைத் தருகின்றன. ஆயினும் கிளிநொச்சி, தென்மராட்சி ஆகிய இடங்களுக்கு அகதிகள் செல்லக் கூட மறுப்புத் தெரிவிக்கப்படுகிறது. பொஸ்ரன் குளோப் (Boston Globe), நியூயோர்க் ரைம்ஸ் (New York Times), ரொறன்ரோவின் குளோப் அன்ட் மெயில் (Globe & Mail in Toronto), -96.6iugGuau into figyeit 677 qJg (Age in Australia), g5 60 pupa (The Times), g5du இராச்சியத்திலுள்ள இன்டிப்பென்டன் (Independent) உம் கார்டியனும் பாரிஸில் உள்ள
148

லெமோண்டி , சென்னையிலுள்ள இந்து (Hindu) ஆகிய செய்தித்தாள்களின் செய்திகளையும் ஆசிரியர் தலையங்கத்தையும் மாண்புமிகு அமைச்சர் வாசிப்பாராயின் இத்தகைய கொள்கை அரசாங்கத்தின் கண்ணோட்டத்தில் கூட * 6 வ்வித பாதிப்பையும் 61ற்படுத்தவில்லையென அவர் உணர்வார்.
யுனெஸ்கோ நிறுவனம் “கலாசாரமும் அபிவிருத்தியும்” என்னும் விடயம்பற்றி வெளியிட்ட ஓர் அறிக்கையிலே, சர்வதேச தொடர்புச் சாதன அமைப்பில் பல்லினத்தன்மை மற்றும் போட்டிக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் உலகளாவிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வான்வழிகளும் விண்வெளியும் பூகோளத்துக்குப் பொதுவான பகுதியாகக் கொள்ளப்பட வேண்டும். அது சகல மனித வர்க்கத்துக்கும் சொந்தமானது. அண்மைக் காலத்தில் இச் சர்வதேசச் சொத்து, வளங்களும் தொழில்நுட்பமும் உடைய நாடுகளால் உரிமை கொண்டாடப்படுகிறது. ஆகவே சர்வதேசப் பங்கீட்டுக்கு ஏற்ற பன்மைத் தொடர்புச் சாதன முறைமையும் (Plural MediaSystem) மாற்று நிகழ்ச்சித் திட்டமும் அவசியமாகின்றன. சர்வதேச அமைப்புக்கு உட்பட்டுச் சில ஆயத்தங்களைச் செய்ய மாண்புமிகு அமைச்சரவர்கள் ஆதரவளிப்பார்கள்.
பிரதேச மற்றும் சர்வதேச செய்மதி அமைப்புக்குத் துணையாக மாற்றுத் தொலைக்காட்சிச் சேவையும் வானொலியும் அவசியமாகும். கலாசாரத்துக்கும் அபிவிருத்திக்குமான உலக ஆணைக்குழு சுட்டிக்காட்டியது போன்று, "பல குரல்கள் கேட்க வேண்டும்; பலவிதமான கருத்துகள் தெரிவிக்கப்பட வேண்டும்; சிறுபான்மையினரின் விருப்பங்கள் புறக்கணிக்கப்படக் கூடாது என்ற நோக்கம் உறுதி செய்யப்பட வேண்டும். நவீன தொழில் நுட்பம் தெரிவுக்கு இடமளிக்கிறது; செய்தி, தகவல் மற்றும் விளக்கம் போன்றவற்றுக்கான மூலகங்களை விரிவுபடுத்துகிறது, மற்றும் கலாசாரப் பரிமாற்றத்தில் இருவழித்தொடர்பை அதிகரிக்கச் செய்கிறது.”
17 பங்குனி, 1995
149

Page 83
வங்கியியற் சட்டத் திருத்தம்
1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கியியல் சட்டத் திருத்த மசோதா நிதித்துறைச் சீர்திருத்தம் சார்பாக நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஓர் அம்சமாகும். இலங்கையின் நிதித்துறை தனியார் துறையினர் மேற்கொள்ளும் முதலிட்டு நிதியைக் கட்டுப்படுத்துவதில் பல குறைபாடுகளைக் கொண்டிருந்தது. குறுங்கால வணிகக் கடன்களுக்கு 25-30 சத வீதமான உயர்வட்டி வீதம் விதிக்கப்பட்டிருந்தமையால், தனியார் துறை முதலிடுகள் நீடித்து நிலவப் பெருந்தடையாக இருந்தன. எமது பொது நிதியமைப்பில் காணப்பட்ட குறைபாடுகள் இதற்குக் காரணமாக இருந்ததுடன் நிதிக்கொடுப்பனவு மற்றும் வைப்புகள் ஆகியவற்றிடையேயும் கூடுதலாகப் பரந்திருந்தது. இலங்கையில் நிதிக் கொடுப்பனவு (Lending) மற்றும் வைப்பு வீதங்களிடையுள்ள பரம்பல் மூன்றாண்டுகளுக்கு மேலாக 6 சதவீதத்திலும் கூடுதலாக இருந்துள்ளது. இது மலேசியாவில் 1 சத வீதமாகவும் சிங்கப்பூர், ஹொங்கொங் போன்ற நாடுகளில் 3 சத வீதத்துக்குக் கிட்டியதாகவும் இருந்தது. நிதித்துறை சார்ந்த சீர்திருத்தங்கள் இத்துறையில் காணப்படும் குறைபாடுகளை நீக்குதல் என அமையும் போது, அதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இத்தகைய சீர்திருத்தங்கள் ஒப்பந்தச் சந்தைகளின் விருத்தியையும் உள்ளடக்க வேண்டும். அத்துடன் கடன்களை மீளப்பெறும் சட்டம் பற்றிய முக்கிய விவகாரங்களிலும் கவனமெடுக்க வேண்டும்.
வங்கியியற் சட்டச் சீர்திருத்தத்துக்கான எமது அணுகு முறை 1995
இன் ஆரம்பத்தில் BCCIவங்கியின் முறிவைத் தொடர்ந்து ஏற்பட்ட உலகளாவிய போக்கினைக் கருத்திற் கொள்ள வேண்டும். நிறுவன
150

fதியான தகுதியீனங்கள் குறித்து சிங்கப்பூரைச் சேர்ந்த ஒழுங்குபடுத்துவோரால் குற்றஞ்சாட்டப்பட்டது.லண்டன் வங்கியின் மேற்பார்வை போதாது 6 ன்ற முறையிலும் சில அடிப்படைப் பிரச்சினைகள் எழுப்பப்பட்டன. இலங்கையிலே எமது நிதிப்பிரிவு, பல்வேறு நிதிக் கம்பனிகளின் வீழ்ச்சியுடன் தொடர்பான பிரச்சினைகளாலும் BCCI வங்கியின் வீழ்ச்சியினால் உண்டான உள்ளூருக்குரிய பாதிப்புகளாலும் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. ஹொங்கொங்கிலுள்ள ஓவர்ஸிஸ் ரஸ்ட் வங்கியும் (Overseas Trust Bank) Gipó flugolfbgoi16tg). ஆனால், அதிஷ்டவசமாகக் ஹொங்கொங் அரசாங்கம் வங்கியைச் சுவீகரித்து, அதனைத் தனியார் துறையிடம் ஒப்படைத்துள்ளது.
இத்தகைய உலகளாவிய மாற்றங்கள், வங்கித்துறை ஒழுங்குவிதிகள் தொடர்பான சில பழைய எடுகோள்கள் பற்றி மீண்டும் சிந்திக்கச் செய்கின்றன:
(1) வைப்புகள் பற்றிய ஆபத்து என்ற நோக்கில், வங்கிச் சட்டச் சீர்திருத்த அணுகு முறை தொடர்ந்தும் பொருத்தமானதாக இருக்கப் போவதில்லை. சந்தை நிலைமை ஆபத்துடன், வெளிநாட்டு நாணய ஆபத்து, வட்டிவீத ஆபத்துத் தொடர்பான பிரச்சினைகளையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.
(2) ஏற்றுக்கொள்ளக்கூடிய விரிவான ஒழுங்குபடுத்தும் சட்டத்தை அதனை நிருவகிக்கக் கூடிய ஆளணிகள் மற்றும் தகவல்கள் இல்லாவிட்டால் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஆகவே வங்கி நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவோருக்கும், வங்கி நிலைமைக்குமிடையே பெருமளவு தகவல் பரிமாற்றம் இடம் பெற வேண்டும்.
(3) தகுதி வாய்ந்த அதிகாரிகளிடம் கணக்காய்வாளர்கள் ஒழுங்கான அறிக்கைகளைச் சமர்ப்பிக்கும் போது, அவை கடும் பாதிப்புகளை ஏற்படுத்துமென அறிந்திருந்தால், அவர்களுக்கு மேலதிக பொறுப்புகளை விதிக்க வேண்டிய தேவையும் உண்டு. BCCI இன் கணக்காய்வாளர்கள் இவ்விடயத்தில் தவறிழைத்துள்ளனர்.
(4) வங்கிக் கைத்தொழில் தமக்கெனச் சில தொண்டர் தாபனங்களை உருவாக்கி, உப சட்டங்கள் மற்றும் ஒழுங்காற்று விதிகள் மூலம்
151

Page 84
அவற்றின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த வேண்டும். சிங்கப்பூரில் காணப்படும் இத்தகைய சுய ஒழுங்கு விதிகள் வங்கியமைப்பில் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போதைய மசோதாவில் வலியுறுத்தப்பட வேண்டிய மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன. இவற்றுள் முதலாவது, வெளிநாட்டு நாணய வங்கிப் பிரிவுகள் பற்றிய ஒழுங்குவிதிகள் தொடர்பானவை. இந்தத் திருத்தம் குறிப்பிட்ட பிரிவுகள், வதிவிடமற்றோரின் (nonresidents) நடவடிக்கைகள் தொடர்பான தடைகளை நீக்கியுள்ளது. நாணயச் சபை உள்ளூர் மக்களுடன் இருந்து வந்த விடயங்களையே ஒழுங்குபடுத்தலாம். மேலும் இச்சபை தனது விருப்பப்படி வங்கியியல் சட்டத்தின்படி கரைக்கு அப்பாலானா வர்த்தகத்தில் II, IV, V ஆம் பிரிவுகள் தொடர்பான விண்ணப்பங்களை மேற்கொள்ள உரிமை வழங்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் மூலதனத் தேவை, ஒதுக்கு நிதி, பராமரிப்பு, திரவச்சொத்து, கணக்கு வைத்தல், கணக்காய்வு, தகவல், பரிசோதனை (Inspection) என்பவற்றோடு தொடர்பு கொள்கின்றது. அவ்வாறே சில சூழ்நிலைகளில், கரைக்கு அப்பால் மேற்கொள்ளப்படும் வர்த்தகத்தில் நாணயச் சட்ட விதிகளின் 11, V1, V ஆம் ஏற்பாடுகளைப் பிரயோகிக்கும் அதிகாரமும் நாணயச் சபைக்கு வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக, அனுமதிப்பத்திரம் பெற்ற வணிக வங்கிகளின் வங்கிக் கட்டுப்பாடுகளுக்கு முரண்படாவகையில் நடவடிக்கைகளில் ஈடுபடுதல், அசையாச் சொத்துக்களைக் கொள்வனவு செய்தல் அல்லது சில பொது விதிகளுக்கு உட்பட்டு உரிமைகளை அனுபவித்தல் என்பவற்றைத் தடைசெய்யும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மூன்றாவதாக வைப்புகளை ஏற்றல், முதலீடுகள், கடன் கொடுத்தலில் ஈடுபடும் விஷேட வங்கிகளின் அனுமதிப்பத்திரம் வழங்கல் மற்றும் ஒழுங்கு விதிகள் தொடர்பான புதிய பிரிவு வங்கியியல் சட்டத்துடன் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். இத்தகைய நிறுவனங்கள் நடைமுறைக் கணக்குகளை வைத்திருப்பதில்லை. எனினும் தேசிய அபிவிருத்தி வங்கி, அரச ஈட்டு வங்கியும் முதலீட்டு வங்கியும், தேசிய சேமிப்பு வங்கி என்பவற்றைச் சட்டம் உள்ளடக்குகின்றது.
19 guðf, 1995
152

நுகர்வோர் பாதுகாப்பு (திருத்த) மசோதா
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் நெகிழ்ச்சியான போக்கினைக் கடைப்பிடிக்கும் நோக்கில் இத் திருத்தம் அமைச்சரால் முன்வைக்கப்பட்டுள்ளது. 1994 ஆண்டின் முன்னேற்ற அறிக்கையில் அமைச்சர் சுட்டிக்காட்டியது போன்று, இச்சட்டத்தை நடை முறைப்படுத்துவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று உள்நாட்டு வியாபாரத் திணைக்களத்தை நிருவாக ரீதியாக மீள ஒழுங்குபடுத்துதல் பற்றியதாகும். இத்திணைக்களத்தில் 300 பணியாளர்கள் உள்ளனர். ஆரம்பத்திலே செயற்படுத்தும் அதிகாரங்கள் பிரதேச செயலகங்களுக்கு ஒப்படைக்கப்பட்டிருந்தன. அவை திருப்திகரமற்றவையாகக் காணப்பட்ட வேளையில், இச் செயற்படுத்தும் அதிகாரம் மாவட்டச் செயலாளரின் பொறுப்பில் விடப்பட்டன. சமன் கெலகமவும் (Saman Kelegama) , யோகேசன் காசிச் செட்டியும் (Yogesan Casiechetty) சட்டமும் சமூக நம்பிக்கையும் என்னும் விடயம் பற்றி வெளியிட்ட அறிக்கையொன்றிலே சில பிரதேசங்களிலுள்ள உள்நாட்டு வியாபாரத் திணைக்களங்கள் வினைத்திறனற்றவை எனச் சுட்டிக் காட்டியுள்ளனர். உணவு, மருந்துப் பரிசோதகர் களிடையேயுள்ள தொடர்புகள் பலவீனமானவை. அரசாங்கப் பகுப்பாய்வுத் திணைக்களம், உள்நாட்டு வியாபார ஆணையாளரிடையே நிலவிய பலதரப்பட்ட ஒழுங்கீனங்கள் காரணமாக உணவுக் கலப்படம் இடம் பெறுகிறது. உணவு விடுதிகளிலே தேநீர், கோப்பி தயாரிப்பதற்கும் குளிர்பானங்கள் இனிப்புப் பண்டங்கள் தயாரிப்பதற்கும் சக்கரின் பயன்படுத்தப்படுகிறது மிளகாய்த் தூளுடன் மரத்தூள், நெல் உமி கலப்படம் செய்யப்பட்டுள்ளது என சட்டத்துக்கும் சமூகத்துக்குமான அறநிலைய அறிக்கை தெரிவிக்கிறது. உள்நாட்டு வியாபாரப்

Page 85
பணிப்பாளர் இப்பிரச்சினை தொடர்பாக அதிகாரம் பெ ற்றவராயினும் ஏனைய முகவர்களுடன் போதியளவு இயைபாக்கம் இன்மையால் அவற்றைச் செயற்படுத்துவதில் அவரது அலுவலகம் வினைத்திறன் குன்றிக் காணப்படுகிறது.
இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய இரண்டாவது அம்சம், உள்நாட்டு வியாபாரத் திணைக்களத்தில் போதியளவு ஆளணியினர் இல்லை என்ற விடயத்துடன் தொடர்புடையது. 1993 இல் வெளிவந்த சட்டத்துக்கும் சமூகத்துக்குமான அறநிலைய அறிக்கை அளவீடு மற்றும் சேவைகள் பிரிவிலுள்ள 85 பதவிகளில் 1/5 பங்கு வெற்றிடமாக இருந்தன என்றும், அங்கேயுள்ள அலுவலர்கள் வாகனம் ஏனைய போக்குவரத்து வசதிகள் பற்றாக்குறையினால் மிகக் குறைந்த அளவிலேயே வெளிக்கள வேலைகளைப் பூர்த்தி செய்தனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. திணைக்களத்தின் ஆய்வுகூடமும் பல வசதியீனங்களைக் கொண்டிருந்தது. ஆய்வுகூடத்தில் வேலை செய்வதற்கு அங்கீகரிக்கப்பட்டோர் தொகை 10 ஆக இருந்த போதிலும் ஆய்வு கூட உதவியாளர் ஒருவரேயுள்ளார். நிறையையும் அளவையையும் பரிசோதனை செய்வோருக்கும் (பரிசோதகர்) பற்றாக்குறை நிலவுவதால், பால் பரிசோதனை செய்யும் சாதனம் சரியாகப் பேணப்படுவதில்லை. அமைச்சர் அவர்களே, ஆளணி மற்றும் சாதனம் குறிப்பாகத் தவறான பிரதிநிதித்துவம், விலக்கிவைக்கப்பட்ட முறையில் வியாபாரம் செய்தல், விலை வேறுபாடு போன்ற முரண் நடவடிக்கைகளைக் கவனிக்கும் பரிசோதகர்களின் உயர்தொழிற் தேர்ச்சியை முன்னேற்றும் நிகழ்ச்சித் திட்டங்கள் நடைமுறையிலுள்ளனவா என ஆலோசனை வழங்க வேண்டும்.
மூன்றாவது விடயம் நுகர்வோர் மனக்குறையைத் தீர்த்து வைத்தலுடன் தொடர்புடையதாகும். உள்நாட்டு வியாபாரத் திணைக்களம் பல சந்தர்ப்பங்களிலே நுகர்வோரது மனக்குறைகளைத் தீர்க்கும் முறையில் ஈடுபட்டுள்ளது என அமைச்சரின் 1994 ஆம் ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது. பொதுப் பயன்பாடுகள் தொடர்பாக நுகர்வோர் தெரிவிக்கும் முறைப்பாடுகள் பற்றிய இந் நடவடிக்கை இன்னும் பலப்படுத்தப்பட வேண்டும். பொது மக்கள் பயன்பாடுபற்றி இவ் விவகாரத்தை சட்டத்துக்கும் சமூகத்துக்குமான அறநிலைய அறிக்கையும் எடுத்துக் காட்டியுள்ளது. தேசிய நீர் வழங்கல், வடிகால் சபை, மின்சார சபை, இலங்கை ரெலிகொம் ஆகியன பற்றி நுகர்வோர்
154

ஒருவர் முறைப்பாடு செய்தால், இவ்வாறான முறைப்பாடுகளை ஆராய்வதற்கும் நல்ல முடிவுகளை வழங்கவும் சிறந்த அமைப்பு ஒன்று இருத்தல் வேண்டும். ஐக்கிய இராச்சியத்தில் நுகர்வோர் இறைமை பற்றிய முறைப்பாடுகள், நுகர்வோர் மனக் குறைகளைத் தீர்த்து வைத்தல் போன்றவை முக்கியத்துவம் பெற்றிருப்பதுடன், அவை தற்போதைய ஐக்கிய இராச்சிய அரசாங்கத்தினால் மக்கள் பட்டயத்திலும் இடம்பெறச் செய்யப்பட்டுள்ளது. அக்கறை செலுத்தப்பட வேண்டிய மற்றொரு விடயம் விமானப் போக்குவரத்து, பிரயாண முகவர்கள் தொடர்பான மக்களின் மனக்குறைகளாகும். சர்வதேச உள்ளூர் விமானக் கம்பனிகளின் பொறுப்பற்ற கடுமையான நடத்தை காரணமாகப் பல்லாயிரக்கணக்கான இலங்கையர்கள் ஏராளமான பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். இம் முறைப்பாடுகளை விசாரித்து அவற்றுக்கான நட்டஈடுகளை வழங்குவதற்கென்று ஒரு விசேட அமைப்பை இந்தியா உருவாக்கியுள்ளது. இவ்வாறான ஏற்பாடுகள் பற்றிக் கெளரவ அமைச்சரவர்கள் ஆராய்ந்து இலங்கையிலும் அவ்வாறான அமைப் பொன்றை உருவாக்க வேண்டுமென நான் விதந்துரைக்க விரும்புகிறேன்.
இறுதியாக நுகர்வோர் பாதுகாப்பு என்பது அவர்களுடைய விழிப்புணர்வுடனும் கண்காணிப்புடனுமேயே திட்டவட்டமாகத் தொடர்புபடுகிறது என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இலங்கையில் இருக்கின்ற நாலாயிரம் தன்விருப்பான நுகர்வோர் சங்கங்களில் ஒரு சிலவே நன்கு இயங்குகின்றன. இத்துறையில் நாம் தேல்வியடைந்துள்ளமை தெளிவானது. நாட்டில் ஒரு சக்தி வாய்ந்த நுகர்வோர் இயக்கம் இயங்க வேண்டுமாயின் சகல நுகர்வோர் சங்கங்களின் தலைமைச் சங்கமாக விளங்கும் சம்மேளனத்தை வலுப்படுத்த வேண்டும். சக்தி வாய்ந்த, விழிப்புணர்வுடைய நுகர்வோர் இயக்கத்தின் ஆதரவின்றி அதனை ஒழுங்கு படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பயன்தராது.
24 ஆவணி, 1995
55

Page 86
வரவு செலவுத் திட்ட விவாதம் - 1995
அரசாங்கம் தனது வருமான, பொருளாதார, சமூகக் கொள்கைகளை விளக்கிக் கூறுவதற்காகப் பயன்படுத்துகின்ற பிரதானமான கருவிகளில் ஒன்றே வரவு செலவுத் திட்டமாகும். அது பொருளாதார வழிகாட்டலின் முக்கியமான அம்சங்களுள் ஒன்றாக இருப்பதுடன், இலங்கையில் அது அபிவிருத்தி உபாயங்களில் தீவிர மாற்றங்களைக் குறித்துக் காட்டுவதற்குச் சந்தர்ப்பத்தையும் வழங்கியுள்ளது. பாராளுமன்றத்தின் உண்மையான அதிகாரம் பணத்தில் தனது கட்டுப்பாட்டை வைத்திருத்தல் ஆகும். பொதுப்பணத்தின் செலவீடு, வரிவிதிப்பு என்பனவற்றில் அதன் அதிகாரம் பெறப்பட வேண்டியுள்ளது. எனினும் இன்று கட்டுப்பாடு என்னும் எண்ணக்கரு தவறான சொல் வழக்காக உள்ளது. பிரித்தானிய விமர்சகர் பெர்னாட் கிறிக் எடுத்துக் கூறுவது போல “கட்டுப்பாடு என்பது செல்வாக்கின் நேரடி அதிகாரம் அல்ல; புத்திமதி கூறுதல் ஆணையிடுதல் அல்ல; ஆராய்ந்து கருத்து வழங்குதல் தடையல்ல; துல்லியய்ாக ஆராய்தல் ஆரம்பச் செயல் நடவடிக்கையல்ல; வெளிப்படையானது. இரகசியமானது அல்ல" எனக் குறிப்பிட முடியும். பொதுப் பணத்தைச் சேகரித்தல், செலவழித்தல் ஆகியவை நாடொன்றின் செழிப்பு நிலை, செல்வத்தின் பரம்பல் என்பனவற்றின் மீது தாக்கத்தைக் கொடுக்கக் கூடிய கொள்கைத் தெரிவுகளுடன் சம்பந்தப்படுகின்றன.
ஐக்கிய இராச்சியத்தில் கூட பல விமர்சகர்கள் நிதி மீதான சட்ட ரீதியான கட்டுப்பாடு என்பது பெருமளவில் ஒரு மாயையாகும் என
எடுத்துக் காட்டியுள்ளனர். வருடாந்த வரவு செலவுத் திட்டம்
156

என்பது பெருமளவில் செய்து முடிக்கப்பட்ட வினை ஒன்றாக இருப்பதுடன் நிதிச் சட்டம் கல் வடிவிலான வார்ப்பில் இடப்படுகின்றது. நடைமுறையில் குறிப்பிடத்தக்க திருத்தங்கள் அருமையாகவே இடம் பெறுகின்றன. "ஏர்ஸ்சைன் மே" அவர்கள் "அரசாங்கத்தின் உந்துதலாலன்றி ஏனைய எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பொதுப் பணச் செலவீடு இடம் பெறக் கூடாது என்பது உயர் அரசியலமைப்பு முக்கியத்துவத்தின் கோட்பாடாகும்" எனக் குறிப்பிடுகின்றார். பாராளுமன்றம் செலவழிப்புத் தொகையை அதிகரிக்க முடியாது அல்லது தனது சொந்தத் தெரிவுகளை நோக்கி அதனை வழி காட்டவும் முடியாது. வரவு செலவுத் திட்டத்தின் பாராளுமன்ற விவாதம் என்பது பொதுமக்கள் ஆர்வம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து செல்லும் வழமைச் செயல் முறையில் ஒன்றாகும். ஐக்கிய இராச்சியத்திலும் ஏனைய பொதுநலவாய நாடுகளிலும் கூட அரச நிதிக் கொள்கைகளின் பாராளுமன்றத்தின் நுணுக்கமான ஆய்வுக்கான ஒழுங்கு விதிகள் திறன் குறைந்தனவாகவும், பற்றாக் குறையாகவும் இருப்பதாகக் கருதப்படுகிறது.
நிதியின் சட்ட ரீதியான நுணுக்க முறை ஆய்வின் போது வரவு செலவுத் திட்டத்தின் மையத்திலிருந்து விடுபட்டு வேறு திசையில் திசை திருப்பக் கூடிய பல அபிவிருத்திகள் காணப்படுகின்றன. முதலாவதாக வருமானத்துறைப் பிரேரணைகள் வரவு செலவுத் திட்டத்தில் புகுத்தப்பட்ட அரசிறை வருமானத்தின் தாக்கத்தினை இலகுபடுத்துவதற்காக வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னரே அறிவிக்கப்படும் போக்கு காணப்படுகின்றது. இரண்டாவதாக குறைநிரப்பு மதிப்பீடுகளின் அளவுத் திட்டமும் நோக்கும் வரவு செலவுத் திட்ட, வருமானச் செலவு எறியங்களை நம்பிக்கையற்ற எண் கணிதவியல் பயிற்சியில் ஒன்றாகவும், பிழையான வழிகாட்டுதலை வழங்கும் ஒன்றாகவும் குறைக்கின்றது. ஏற்கனவே எடுத்துக் காட்டியது போல் குறைநிரப்பு மதிப்பீடுகள் வருடாந்த வரவு செலவுத் திட்டச் செலவீனங்களில் ஏறக்குறை 1/4 பங்கினை உள்ளடக்குகின்ற 25 மில்லியனை, வருடமொன்றினுக்கான சராசரித் தொகையாகக் கொண்டிருக்கின்றன. கொள்கை விடயங்கள் பற்றி ஆராயப்படுகின்ற வரவு செலவுத் திட்ட விவாதத்திற்கும், ஒவ்வொன்றுக்குமான ஒதுக்கீடு விரிவாகப் பரிசீலிக்கப்பட வேண்டிய குழு நிலைக்குமிடையிலான வேறுபாடு பெரும்பாலும் தெளிவற்றுக் காணப்படும் போக்கு ஒன்று காணப்படுகின்றது. ஒரு வகையில் வரவு செலவுத் திட்ட விவாதம் என்பது எண்ணங்களின் மோதுதல்
57

Page 87
நடைபெறும் களமாகவும், முன்னைய பேச்சாளரிடமிருந்து தனது விவாதத்திற்கான கருப்பொருளை ஒவ்வொருவரும் பெற்றுக்கொள்ளும் இடமாகவும், முன்னைய பேச்சாளரினால் முன் வைக்கப்பட்ட கருத்துக்களுக்குப் பதிலிறுப்பதற்குப் பெருமுயற்சி மேற்கொள்ளப்படும் மையமாகவும் மாறி வருகின்றது. மறுபுறத்தில் பொதுவாக அரசாங்கத்தில் அல்லது எதிர்க்கட்சியில் உள்ள ஒவ்வொரு பேச்சாளர்களும் விவாதத்தின் போக்கிற்குக் குறைந்த முக்கியத்துவம் வழங்கித் தம்மால் சொந்தமாகத் தயாரிக்கப்பட்ட தமது தலையீடுகளை முன்வைப்பதில் முனைந்து நிற்கின்றனர். குழுநிலை விவாதம் ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் அக்கறை கொள்கின்ற திணைக்கள நடவடிக்கைகளை விமர்சிப்பதற்காக அர்ப்பணிக்கப்படுகின்றது. இவ்வரவு செலவுத் திட்டத்தில் உள்ள முக்கியமான கண்டுபிடிப்பு என்னவென்றால் 1995 - 1997 கலப்பகுதியை உள்ளக்கிய 3 வருடங்களுக்கான வரவு செலவுத் திட்ட வடிவமைப்பு வருமான மற்றும் செலவு எறியங்களுடன் அமைந்திருப்பது ஆகும். ஒழுங்கு நியதிச் சீர்திருத்தத்திற்கான அவசியத் தேவை ஒன்று காணப்படுகிறது. இதன் மூலம் மதிப்பீடுகள் முன்னதாகவே பச்சைத தாள்" வடிவில் சமர்ப்பிக்கப்பட முடிவதுடன், தெரிவுக்குழுவில் இம் மதிப்பீடுகள் துல்லியமாக விரிவாக ஆராயப்படுவதற்கும் இடம் ஏற்படுகின்றது.
1983 ஆம் ஆண்டு பங்குனி மாதத்தில் திறைசேரிக் கட்டுப்பாடுகளின் பயனுறுதித் தன்மைகள், வரவு செலவுத் திட்ட செய்முறைகள் என்பனவற்றின் மீளமைப்பு தொடர்பான அத்தியாவசியத் தேவை குறித்து கவனத்தில் கொண்டு வந்துள்ளோம். திறைசேரிக் கட்டுப்பாடுகள், நிதிமுகாமைத்துவம் என்பனவற்றில் இம்முறை பிரிட்டனின் நிதி அமைச்சராகப் பத்து வருடங்களாகவும், பிரதம மந்திரியாக 12 வருடங்களாகவும் இருந்து, செலவுகளின் மீது கட்டுப்பாடுகளின் ஒன்றிணைந்த முறை ஒன்றினை தமது மரபு வழிச் செல்வமாக விட்டுச் சென்ற கிளாட்ஸ்ரோனின் முத்திரையினை இன்று வரையில் தன்னகத்தே கொண்டிருக்கின்றது. நாம் அவ்வேளையில் எடுத்துக் காட்டியது போல நவீன நிபந்தனைகளின் கேள்விகளைச் சமாளிப்பதில் இம் முறையின் செயல் விளைவுத் தன்மை குறித்து அதிக அக்கறை காட்டப்படுகின்றது. 1961 ஆம் ஆண்டு பிளொடன் குழு காத்திரமான பாராளுமன்றக் கட்டுப்பாட்டிற்கான சந்தர்ப்பம் கொடுக்கப்பட வேண்டுமெனச் சிபார்சு செய்தது. 1983 ஆம் ஆண்டு நான் வழங்கிய எனது உரையில் இருந்து இதனைக் குறிப்பிடுவதாயின் "இந்தியாவிலும் ஐக்கிய
158

இராச்சியத்திலும் அரச வருமான ஒழுங்கிற்குத் தேவைப்படுகின்ற செலவுகளின் விரிவானதும் துல்லியமானதுமான ஆய்வினை மேற்கொள்கின்ற மதிப்பீடுகளின் குழு ஒன்று காணப்படுகின்றது. அரசாங்கக் கணக்கியல் குழு அத்தகைய நுணுக்கமான பரிசீலனையில் ஈடுபட்டுள்ளது. எனினும் இது அத்தகைய செலவுகளுக்குட்பட்ட பின்னரே மேற்கொள்ளப்படுகின்றது. இத்தகைய குழு ஒன்றின் ஆய்வுரிமை வரம்பு அத்தகையதொரு மதிப்பீட்டைப் பரிசீலனை செய்து அதனைப் பாராளுமன்றத்திற்கு அறிவிப்பது ஆகும். பாராளுமன்றத்தில் இக்குழுவினது கருத்துரைகளின் அடிப்படையில் அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்படுகின்ற கொள்கை திறமையாக அல்லது பொருளாதாரச் சிக்கனம் வாய்ந்ததாக நிறைவேற்றப்பட (ւpւգ պւD. இதன் மூலம் பணத்திற்கான தரமான பெறுமதியினை அல்லது குறைந்த மதிப்பீடுகளைத் தயாரிக்கக் கூடியதாக இருக்கும். "நிலையியற் கட்டளைகள் குழு மதிப்பீடுகள் மீதான அத்தகையதொரு குழுவினை அமைப்பதில் அதிக கவனத்தை செலுத்துகின்றது என்பதனையும் நவீன நிபந்தனைகள் சம்பந்தமாக பணத்தின் மீதான பாராளுமன்றக் கட்டுப்பாட்டுத் தொழில் நுட்பங்கள், இயக்க முறைமைகள் என்பனவற்றின் செயல் விளைவுத்தன்மையினை மீள் மதிப்பீடு செய்கின்றது என்பதனையும் நான் பலமாக வற்புறுத்த விரும்புகின்றேன்.
1995 ஆம் ஆண்டு தை 6 ஆம் திகதி இச் சபையில் மேன்மை தகு சனாதிபதி அவர்களினால் நிகழ்த்தப்பட்ட கொள்கைப் பிரகடனத்தில் முதன்மையாக எடுத்துரைக்கப்பட்ட அரசின் பொருளாதார உபாயங்களின் முழுமையான வழிகாட்டுதல்களை இங்கு பதில் நிதியமைச்சர் எமக்கு விரிவாக எடுத்துக் காட்டியுள்ளார். இக் கொள்கைப் பிரகடனம் வளர்ச்சியின் பிரதான அங்கமாகத் தனியார் துறை அமைய உள்ளது என்பதனை அங்கீகரிக்கின்ற நிலையான பேரினப் பொருளாதார ரீதியான சட்டவரைபு ஒன்றினை நிறுவ இருப்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கு எனக் குறிப்பிட்டுள்ளது. இந்த உபாயத்தின் பின் தொடர்ச்சியாக வளர்ச்சியின் வேறுபாடுகளை நீக்கி சமத்துவத்தைத் தோற்றுவிப்பதற்கும், வட்டி வீதங்களைக் குறைத்தல், பணவீக்கத்தைக் குறைத்தல், வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையினை வரையறை செய்தல் போன்ற பேரினப் பொருளாதார அடிப்படைகளை சீரமைப்பதற்கும் முயற்சிப்பதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. நிதியமைச்சர் தனது நீண்டகால உபாயத்தின் தளராத நம்பிக்கை கொண்ட மதிப்பீட்டில் பொதுத்துறை
59

Page 88
முதலிட்டிலும் சேமிப்பிலும் மேலதிக வெளிநாட்டு முதலீட்டைக் கவர்வதின் முக்கியத்துவத்தையும் சர்வதேச பொருளாதாரத்தில் இலங்கையின் பொருளாதாரத்தை ஒன்றிணைப்பதன் தேவையையும் வற்புறுத்தியுள்ளார். கெளரவ அமைச்சர் அவர்கள் நேர்மையான சுதந்திரப் பொருளாதார சந்தை எனத் தான் விவரித்த விடயமே அரசாங்கத்தின் முழுமையான கடப்பாடு எனச் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் தென்கிழக்காசியாவில் உள்ள புதிய கைத்தொழில் நாடுகளின் பொருளாதார மாதிரியுருவினை முழுமையாகப் பின்பற்றுவதற்கு நாம் எண்ணவில்லையென்றும் தொடர்ந்தும் அரசாங்கம் ஏழைகளைப் பாதுகாத்துவருவதுடன் வெளிப்படையான சனநாயகக் கொள்கைகளைப் பின்பற்றிவருமென்றும் அவர் எடுத்துக்காட்டியுள்ளார்.
அறிவு நுட்பம் வாய்ந்த நிதி முகாமைத்துவத்தின் பிரதான ஒழுங்குமுறை விதிகளில் ஒன்றாக இருப்பது நடைமுறைக் கணக்கில் மிகை மேலதிகம் ஒன்று இருப்பதனை உறுதி செய்தலாகும். 1995 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 வீதத்தை முழுமையான வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையாகவும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 வீதத்தை நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறையாகவும் கொண்டு பதில் நிதி அமைச்சர் தனது ஆரம்ப வரவு செலவுத் திட்ட எறியங்களில் சோர்வுற்ற ஒரு நிலையினை எதிர்நோக்கியுள்ளார். இந்த மதிப்பீடுகள் 98 பில்லியன் ரூபா முழுமையான வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையினையும் அச்சடிக்கப்பட்ட பணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 வீதத்தை அல்லது 7.5 பில்லியன் ரூபாவை கடனாகப் பெறுவதற்கு அரசாங்கத்தை வற்புறுத்துவதாயும் உள்ளது. இது உயர்வான பணவீக்கமாகவும் வட்டி விகிதங்களின் அதிகரிப்பாகவும் அமைந்திருக்கக்கூடும். எனினும் திருத்தியமைக்கப்பட்ட மதிப்பீடுகள் குறிப்பிடத்தக்க அளவில் நிதிக் காட்சியமைப்பை மாற்றி அமைத்து விட்டன. மீளமைக்கப்பட்ட புள்ளிவிபரத்தின்படி நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறையாகிய 12,203, நடைமுறைக்கணக்கு மேலதிகமாகிய 10,565 ஆக மாற்றப்பட்டுள்ளது. இதன் விளைவாக முழுமையான வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறை 98,166 மில்லியன் ரூபாவிலிருந்து 49,406 மில்லியன் ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 10 சத வீதமாக இருந்த வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை ஏறக்குறை 7.5 சத வீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
பேரினப் பொருளாதார வரைச்சட்டத்தின் பிரதான மூலக்கூறு ஒன்று கைத்தொழிற் தொடர்புகளின் சட்டத்துடன் தொடர்புடையது.
160

கைத்தொழில் பொருள் ஏற்றுமதி உபாயம் சம்பளக் கோரிக்கை, அதன் விளைவாக உருவாகிய தொழிற்சங்கங்களின் பலமிழக்கும் நிலை என்பன போன்ற சூழ்ச்சி நயங்களினால் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. அமைச்சரினால் 6 டுத்துரைக்கப்பட்ட அபிவிருத்தி உபாயத்தின் மையம் பொதுத்துறை முயற்சிகளுடன் தொடர்பு பட்ட சீர்திருத்தத் திட்டமாகும். பொதுத்துறை முயற்சிகளில் உள்ள தனியார் துறை முதலிடுகளை ஆரம்பித்து வைத்தல், ஒன்றிணைத்தல் ஆகிய கடமைகள் ஒப்படைக்கப்பட்ட பொது முயற்சி சீர்திருத்த ஆணைக்குழு என்ற புதிய நிறுவன ரீதியான வரைச்சட்டம் ஒன்றினை கெளரவ அமைச்சர் முன்மொழிந்துள்ளார். அமைச்சரினால் எடுத்துரைக்கப்பட்ட உபாயங்கள் அரசாங்க உடமைகள், சொத்துக்கள் என்பனவற்றின் விற்பனை, அவற்றினை வாடகைக்கு வழங்குதல், பங்குகளின் விற்பனை, திறந்த போட்டி நிலை, பொதுத்துறை தனியார் துறைகளுக்கிடையே இணைப்பு முயற்சிகள், முகாமைத்துவம், தொழில்நுட்பம், சந்தைப்படுத்தல் ஒழுங்குகள் என்பன போன்ற பல விடயங்களை உள்ளடக்கிக் காணப்படுகின்றது. அரசாங்கம் சீர்திருத்தங்களினால் கிடைக்கப்பெறும் வருமானம் 13 பில்லியன் என எதிர் நோக்குவதுடன் இப் பயிற்சியில் உள்ளடக்கப்படவுள்ள முயற்சி அமைப்புகளையும் தெளிவாக வரையறை செய்துள்ளது. இது தொலைத் தொடர்பு, விமான வழி, பெற்றோலியம், கப்பற் துறை போக்குவரத்து, புகையிரதத்துறை என்பனவற்றை உள்ளடக்குகின்றது. இலங்கை அரசாங்கத்தினால் இ துகால வரையில் எதிர்நோக்கப்பட்ட மிகவும் விரிவான திட்டங்களில் இது முக்கியமானது என்பது தெளிவானதாகும். தமது வேலைவாய்ப்பின் நிபந்தனைகள், ஊழியர் உரிமை என்பனவற்றின் பாதுகாப்புத் தொடர்பாக வரலாற்று ரீதியாகத் தொழிலாளர்கள் இத்தகைய தனியார்மயத் திட்டங்களின் தாக்கம் குறித்து அதிக அக்கறை செலுத்துபவர்களாக உள்ளனர். சகல சூழ்நிலையிலும் பொதுத்துறை, ஊழியர்களின் உரிமைகள் யாவும் முழுமையாகப் பாதுகாக்கப்படுமென அமைச்சர் தனது உரையில் திட்டவட்டமாக எடுத்துக் கூறியுள்ளார். அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்கும் முகமாகத் தரமான தொழிற் தொடர்பின் முக்கியத்துவம் குறித்து அதிக அக்கறை தெரிவிக்கப்பட்டது. இங்கு மீண்டும் அரசாங்கம் வெளிநாட்டு முதலீடு தொடர்பான தொழிலாளர் கொள்கையில் தீங்கு விளைவிக்கக் கூடிய மாற்றங்கள் எதுவும் செய்யப்பட மாட்டாது என உறுதிமொழி வழங்கியுள்ளது. அக் கடன் தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்பாக தொழில் வழங்குநர்களுடன்
16

Page 89
கூட்டுப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதென்றும் இந்நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட பல்லிணக்கச் செய்முறை பேச்சுவார்த்தைகளில் பயன்படுத்தப்படுமென்றும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. தனியார் துறை அபிவிருத்தியைப் பொறுத்து இலங்கையில் எமது அணுகுமுறை எண்ணக்கருவில் அடிப்படையில் சிறிய கொந்தளிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த அணுகு முறையில் தொழிலாளர்கள் எதிரிகள் என்ற அடிப்படையிலேயே நோக்கப்பட்டுள்ளார்கள். முதலிட்டு ஊக்குவிப்பு தனியார்மய உபாயங்கள் என்பனவற்றைப் பயன்தரு முறையில் நிறைவேற்றுவதற்கு தொழிலாளர்கள் தடையாக இருப்பார்கள் என்றே பெரும்பாலும் எண்ணப்படுகிறது. சில தொழிலகங்களில் காணப்படும் தொழிலாளர்களின் மிகக் குறைந்த சம்பளநிலை தொழிற் சூழலில் காணப்படும் மோசமான நிபந்தனைகள், தொழிலாளர் நலன்புரி அமையங்களில் காணப்படும் தளர்வான முயற்சிகள், தொழிற்சங்க மயமாக்கலுக்கு எதிராகக் காணப்படும் திறந்த பகைமையுணர்வு ஆகிய காரணிகள் பொதுத்துறை அபிவிருத்திக்குச் சாதகமான கொள்கைகளைப் பொறுத்தமட்டில் தொழிலாளர் நம்பிக்கையற்ற வர்களாக மாறுவதற்குப் பெரிதும் பங்களிப்பினைச் செலுத்தியுள்ளன.
அரசாங்கத்திற்கும் தொழிலாளர் தனியார்துறைக்குமிடையிலான புதியதொரு சமூக ஒப்பந்தமே உண்மையில் தேவைப்படுவதாகும். அத்துடன் தனியார்துறை அபிவிருத்தியில் தொழிலாளர் சமமான, பிரயோசனமுள்ள பங்குதாரர் என்பதனை ஏற்றுக் கொள்கின்ற மற்றொரு ஒப்பந்தமே தேவைப்படும் மற்றொரு விடயமாகும். தனியார் மயமாக்கப்படலுக்கு உள்ளாக உள்ள அல்லது வெளிநாட்டு முதலீட்டைக் கொண்ட தொழிலகங்களின் தொழிற் கோரிக்கைகளைப் பொறுத்து இப்பொழுது காணப்படுகின்ற நடைமுறைகளில் முழுமையான கருத்து மாற்றமும், மாற்று நோக்கும் உண்டாகும் பட்சத்தில் இது சாத்தியமானதாக அமையும். அத்துடன் தொழிற் தகராறுகளின் தீர்வுக் கூட்டுப் பேரம் என்பனவற்றில் பயன்தரு மாற்று நடவடிக்கைகளும் அவசியமாகின்றன. கைத்தொழில், தனியார் மயக் கொள்கைகளின் நிறைவேற்றம், விரிவாக்கம் என்பனவற்றிலும் பேரினப் பொருளாதாரத் தீர்மானம் மேற்கொள்ளல் செய்முறையிலும் தொழிலாளர்கள் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். துறை, முயற்சி மட்டத்தில் அமைப்புரீதியான சீராக்கல் கொள்கைகளினால் ஏற்படும் தாக்கத்தின் மீது ஆலோசனை செய்வதற்கும் பேச்சு வார்த்தை நடத்துவதற்கும் வரைச் சட்டம் ஒன்று இருத்தல்
62

அவசியமானது. மேற்கு ஐரோப்பாவில் நிலக்கரி அகழ்வு, புடவை, உருக்கு, கப்பல்கட்டுதல் போன்ற அமைப்பியல் மாற்றங்கள் அதிகளவில் இடம்பெற்ற துறைகளில் முக்கூட்டு ஆலோசனைகளும் பேச்சு வார்த்தைகளும் வெற்றியளித்துள்ளன. இத்தகைய பேச்சு வார்த்தைகளுக்கான நிறுவன ரீதியான வரைச்சட்டம் ஒன்றில் அரசாங்க அமைப்பு ஒன்றாக இருக்க முடியும். அல்லது கடுமையான ஒழுங்குவிதிச் சட்டங்களின் கட்டுப்பாடுகளின்றி மரபுரீதியற்ற முறையில் இடம்பெற முடியும். சமூக உடன்படிக்கைகள் சம்பளத் தீர்மானம் தொழிலாளர் அசைவுடன் இணைந்த விடயங்கள், தேவைக்கு மேலதிகமான கொடுப்பனவுகள் போன்றவற்றுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுடன் சம்பந்தம் உடையனவாக உள்ளன. தொழிலாளர் கல்விக்கான நிகழ்ச்சித் திட்டங்கள் தொழிற்சங்க முகாமைத்துவம் திறன் விருத்தி போன்ற விடயங்களும் குறைந்த அளவு கவனத்தையே ஈர்க்கின்றன. எனவே தேவைப்படுவது என்னவெனில் தொழிலாளரின் பங்கு பற்றிய தீவிர மீள் எண்ணக்கருவியலே ஆகும். இத்தகையதொரு அணுகு முறை தனியார் துறை விருத்திக் கொள்கைகளும் ஏனைய அமைப்பு ரீதியான செம்மையாக்கல் திட்டங்களும், நன்கு விருத்தியடைந்த நிலையான தொழில் தொடர்பு முறையினால் ஆதரிக்கப்படுகின்றன என்பதனை உறுதி செய்யும். கொள்கைப் பிரகடனத்தில் எடுத்தியம்பப்பட்ட பொருளாதார விடுதலையும் வரவு செலவுத் திட்டமும், அத்தகைய சீர்திருத்தங்களுக்கான அடிப்படை ஆதரவை விரிவடையச் செய்வதன் மூலம் பெரும்பாலும் வெற்றியளிக்கக் கூடியவை.
தனியார் துறை விருத்தி தொடர்பான சட்ட ரீதியானதும் நிறுவன ரீதியானதுமான வரைச்சட்டம் தொடர்பாக நாம் எடுத்து விளக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. தனியார் துறை விருத்தியில் சட்ட முறையும் அதன் தொடர்புத் தன்மை பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டியதொரு தேவை உள்ளது. 1978 இல் பொருளாதார விடுதலையுடன் சட்டச் சீர்திருத்தம் நோக்கிப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 1970 ஆம் ஆண்டளவில் புத்தி ஜீவிகள் சொத்துச் சட்டத் தொகுப்பு, 1982 ஆம் ஆண்டின் கொம்பனிகள் சட்டம், 1987 இன் பாதுகாப்புச் சபைச் சட்டம், 1988 இன் வங்கிகள் சட்டம் என்பன அத்தகைய சட்டங்களில் முக்கியமானவையாகும். 1978 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க பாரிய கொழும்புப் பொருளாதார ஆணைக் குழுச் சட்டம் (தற்பொழுது முதலீட்டுச் சபைச் சட்டம் என அழைக்கப்படுகிறது) பெருந்தன்மையான முறையில் வருமானச்
163

Page 90
சலுகைகளை அனுமதிக்கவும் செலாவணிக் கட்டுப்பாடுகள், தீர்வைகள் என்பனவற்றில் விதிவிலக்கு அளிக்கவும் அதிகார சபை ஒன்றினை நிறுவியது. ஏறக்குறைய 30 சதவீதமான கடனை மீண்டும் செலுத்தத் தவறிய பல வர்த்தக வங்கிகளிடமிருந்து மீண்டும் கடனைப் பெறுவது தொடர்பாக சட்டரீதியான வரைச்சட்டம் சம்பந்தமாக தொடர்ச்சியான அக்கறை காட்டப்பட்டு வருகின்றது. 1990 ஆம் ஆண்டின் ஆரம்ப காலப்பகுதியில் கடன்களைப் மீளப் பெறுவது சம்பந்தமான சூழலை மாற்றும் நோக்குடன் 13 சட்டங்கள் உருவாக்கப்பட்டன.
இத்தகைய மாற்றங்கள் இருக்கின்ற போதிலும் தனியார் துறை விருத்தியுடன் தொடர்புபட்ட சட்டங்களின் ஒழுங்கு முறையான மதிப்பீடு இதுவரையில் இடம் பெறவில்லை. கவனத்தை வேண்டி நிற்கின்ற பல துறைகள் காணப்படுகின்றன. முதலில் வர்த்தக வாணிப ஆணைக்குழுச் சட்டத்தை மறுசீராய்வு செய்வதற்கான தேவையும், போட்டிக் கொள்கைகளை நிறைவேற்றுதல், தனியுரிமை நடவடிக்கைகளையும் சட்டத்திற்கு முரணான முறையில் நடைபெறும் வர்த்தகத்தையும் கண்காணித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வர்த்தக வாணிப ஆணைக்குழுவின் இயலளவினை மதிப்பிடும் தேவையும் காணப்படுகின்றது. இரண்டாவதாக கம்பனிகள் சட்டத்தின் மறுசீரமைப்பு இடம்பெற்று வருகின்றது. இது பூர்த்தி செய்யப்பட வேண்டியது அவசியமான ஒன்றாகும். மூன்றாவதாக கடன் தீர்க்க வகையற்ற நிலை தொடர்பான சட்டங்களின் செயற்பாடு மறுசீரமைக்கப்பட வேண்டும். தமது நடவடிக்கைகளைத் தொடர்ந்து கொண்டு நடத்த முடியாத முயற்சிகளின் ஒழுங்கு பூர்வமான வெளியேற்றம் போல சந்தைப் பொருளாதாரத்தில் புதிய முயற்சிகளின் வருகைக்கான கட்டுப்பாடுகள் அகற்றப்பட வேண்டியதும் அவசியமான ஒன்றாகும். விசேடத்துவம் பொருந்திய வழக்கறிஞர்களின் தேவையும் காணப்படுகின்றது. அதன் மூலமான முயற்சிகள் அத்தகைய வழக்கறிஞர்களை ஆலோசிப்பதற்குத் தூண்டுகிறது. புனருத்தாரணம் முடியக் கூடியது அல்ல என்ற நிலை ஏற்படும் வரை இச் செய்முறையினைத் தாமதம் செய்தல் ஆகாது. நான்காவதாக 46 தொழிற் சட்டங்களின் ஒழுங்கு முறையான மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டிய தேவை இருப்பதுடன் அத்தகைய சட்டங்களின் உறுதிப்பாடு நோக்கித் தொழிற்பட வேண்டியதும் அவசியமாக உள்ளது. ஐந்தாவதாக தனியார் மயமாக்கத்திற்கான சட்ட ரீதியான வரைச்சட்டம் ஒன்று உட்பட பொதுவினைத்திட்டங்களுடன் தொடர்புடைய கொள்கைகள், சட்டங்கள் என்பனவற்றின் விரிவான
64

மறுசீரமைப்பிற்கான தேவை ஒன்றும் காணப்படுகிறது. தனியார் மயமாக்கத்திற்கான மாற்றுத் தொழில்நுட்பங்களையும், நிறுவனரீதியான ஒழுங்குகளையும் வரவுசெலவுத் திட்ட உரை வழங்கியுள்ளது. ஆறாவதாக, வர்த்தக ரீதியான நடுவர் தீர்ப்பிற்கான புதிய சட்டரீதியான வரைச் சட்டம், வர்த்தக நீதிமன்றம் ஒன்றினை உருவாக்குதல் என்பன போன்ற பிரேரணைகளை உள்ளடக்கிய வர்த்தகத் தகராறுகளின் மன்றத் தீர்மானங்களுக்கான செய்முறையை மறுசீரமைக்கப்பட வேண்டிய தேவை காணப்படுகின்றது. இறுதியாக, தனியார் துறை அபிவிருத்தியில் எதிர்மறைத் தாக்கம் ஒன்றினைக் கொண்டுள்ள வர்த்தகச் சட்டங்கள், உரிமைச் சட்டங்கள் போன்ற ஏனைய அம்சங்களின் விரிவான மறுசீரமைப்பு ஒன்றினை மேற்கொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது.
இலங்கையின் பொருளாதார முகாமைத்துவத்தில் சர்வதேச அபிவிருத்தி உதவி என்பது பிரதான மூலக்கூறாக உள்ளது என்பது தெளிவானதாகும். ஒப்பந்த வகையில் பல கட்சிகளைக் கொண்ட நிதி நிறுவனங்கள் நன்கொடைச் சமூகங்கள் என்பனவற்றிடமிருந்து மானியம், சலுகை உதவி என்ற வடிவங்களை இந்த உதவி பெற்றுக் கொள்கின்றது. ஏறக்குறைய 90 சத வீதமான இந்தச் சலுகை உதவிகள் ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, யப்பான் போன்ற அமைப்புக்களிடமிருந்து எமக்குக் கிடைக்கப் பெறுகின்றது. கடந்த காலத்தில் இந்த உதவி 600 மில்லியன் அமெரிக்க டொலராகக் காணப்பட்டது. எனினும் இந்த நிதி உதவிகளை நாடு பயன்படுத்தும் நிலை மற்றும் பணக் கொடுப்பனவு என்பன மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. கொள்கை ஆய்வு நிலையம் 1994 இல் பொருளாதாரத்தின் நிலை என்னும் தனது ஆய்வில் 1991 இல் இத்தகையை உதவிகளின் பயன்பாட்டு நிலை 26.5 சத வீதத்திலிருந்து 1992 இல் 16.8 சத வீதமாகவும் 1993 இல் 14 சத வீதமாகவும் வீழ்ச்சியடைந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது. இந்த அறிக்கை எடுத்துக் காட்டுவது போன்று "வழங்கப்பட்டுள்ள உயரிய சலுகைத் தன்மைகளின் கீழ் இந்த நிதி உதவி முதலிடுகளுக்கான சந்தர்ப்பத்தின் இழப்பு நிலையையும், அபிவிருத்தி இழப்பு நிலையையும் குறித்து நிற்கின்றது" எனலாம். நிதி உதவிப் பயன்பாட்டில் காணப்படுகின்ற கனதியான வீழ்ச்சிக்கு அடையாளப்படுத்தப்பட்ட பல காரணிகள் காணப்படுகின்றன. முதலாவதாக, செயலுரிமை, அதிகார ஒழுங்கு முறைகளில் காணப்படும் தாமதத்தையும் கேள்விப் பத்திரங்களின் பின்போடல், இரத்துச் செய்யப்படல் நிலைமையையும்
165

Page 91
குறிப்பிடலாம். இரண்டாவதாக எதிரிணை ரூபா நிதியத்தின் பற்றாக்குறை. மூன்றாவதாக முக்கியமான அபிவிருத்தித் திட்டங்களின் தரம் குறைந்த தொழில் தகமையற்ற முகாமைத்துவம் , இரசாயன அபிவிருத்தி, கல்வி, விவசாயம், சக்தி, தொலைத்தொடர்பு, போக்குவரத்து போன்ற துறைகளில் உள்ள மனித மூலவளத் திட்டம், உள்ளமைப்பு அபிவிருத்தி போன்றவற்றை இக் காரணிகள் பாதிக்கின்றன. அதே போலப் புனருத்தாரணம், புனர்நிர்மாணம் ஆகிய துறைகளில் திட்ட முகாமைத்துவம், திட்ட அபிவிருத்தி என்பனவற்றிற்கான நிறுவனரீதியான இயலளவு சம்பந்தமாக அக்கறை காட்டப்படுவதுடன் இதற்கான 600 மில்லியன் டொலர்களையும் அரசு ஒதுக்கியுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதில் 40 மில்லியன் ரூபா வடக்குக், கிழக்கு புனர்நிர்மாணத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்ட உரையில் முக்கியத்துவத்தை பெற்றுக் கொள்கின்ற ஆளுகை என்றகேள்வியுடன் தொடர்புறுவதற்கு இவ் விடயங்கள் 61 மக்கு வழிகாட்டுகின்றன. ஊழலைக் குறைப்பதற்கும் அரசியல் ரீதியாகப் பதில் சொல்லும் பொறுப்பினை அதிகரிப்பதற்கும் முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் அதே வேளையில், வணசிங்க குழுவினால் தெரிவிக்கப்பட்ட 1988 ஆம் ஆண்டின் நிர்வாகச் சீர்திருத்தக் குழுவின் சிபார்சுகளை அமுலாக்கம் செய்வதற்கு அதிக கவனம் செலுத்தப்பட வேண்டிய தேவையும் காணப்படுகிறது. அமைச்சுக்களின் எண்ணிக்கையைக் குறைத்தல், மீள் நிகழ்வினை அகற்றுதல், தொழிற்படாதிருக்கும் முகவர் நிலையங்களை மூடுதல் முறைமைகள், ஒழுங்கு விதிகள் என்பனவற்றைப் பகுத்தறிவுக்கேற்ப விளக்கிக் கூறுதல் 6ன்பனவற்றை செயற்படுத்துவதற்குப் பலமான அரசியல் விருப்பும், உறுதிப்பாடும் வேண்டப்படுகிறது. தேசிய மட்டம், மாகாண மட்டம் என்ற இரு மட்டங்களிலும் முகாமைத்துவத் திறனை மேம்படச் செய்தலை உள்ளடக்கிய சிவில் சேவைச் சீர்திருத்தம் என்பது இக் கடமைப்பாட்டில் கடினமானதாகும். இதுவரையில் இதற்காகக் கையாளப்பட்ட அணுகுமுறை முழுமையாக பூர்த்தியடையாதனவாக உள்ளன. எனவே இக்கடின வினாக்களுக்கு விடையளிக்க வேண்டிய உறுதியான முடிவு ஒன்று அவசியமாகின்றது.
அரசின் வருமானப் பிரேரணைகளின் விரிவான ஆய்வுக்கான சந்தர்ப்பத்தை நேரக் கட்டுப்பாடு என்ற காரணி வழங்குவதில்லை.வரி செலுத்துபவர்களும் நுகர்வாளர்களும் வருமானவரி செலுத்துபவர்களின்
166

பரப்பெல்லையில் ஏற்பட்ட அதிகரிப்பினையும் சுங்கத்தீர்வைகளில் ஏற்பட்ட குறைப்பினையும் வரவேற்பர். தேசிய வரிமதிப்பு ஆணைக்குழு தற்பொழுது உட்படுத்தப்படாத சில மூல வளங்களை உள்ளே கொண்டு வரும் முகமாக நேரடி மறைமுக வரிகள் இரண்டினதும் வரி அடிப்படையை விசாலமாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வற்புறுத்தியுள்ளது. கறுப்புப் பொருளாதாரம் மொத்தத் தேசிய உற்பத்தியில் 6 வீதத்தை உறிஞ்சிக் கொள்கின்றது என்றும் 1990 ஆம் ஆண்டில் இது 13.6 பில்லியன் ரூபா எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. தனிப்பட்டவர்களையும் குழுக்களையும் பொறுத்த மட்டில் வரி விதிப்பில் காணப்படும் சமத்துவமற்ற நிலை நீக்கப்பட வேண்டிய தேவை காணப்படுகின்றது. பாரிய திறன் விருத்தியினை ஏற்படுத்தக் கூடிய வருமான வரி செலுத்துவதிலிருந்து தவிர்ப்பதனை குறைத்தல் ஆகிய நோக்குகளின் அடிப்படையில் வரி நிர்வாகத்தில் குறிப்பிடத்தக்க சீர் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் எனவும் ஆணைக்குழு சிபார்சு செய்துள்ளது. பொருட்கள் சேவைகளின் வரி சம்பந்தமாக புதிய முறை ஒன்றினை அமைச்சர் அறிமுகப்படுத்தியுள்ளார். மாகாண சபைகள் மொத்த, சில்லறை விற்பனைகளில் வரி விதிப்பதற்கு தகுதி பெற்றுள்ள பொருட்கள் சேவைகளில் பாரியதொரு அவதானத்தின் தேவையினை இங்கு நான் எடுத்துக் காட்ட விரும்புகின்றேன். நிதிப் பரவலாக்கம் என்பது சிக்கல் மிகுந்த ஒரு விடயமாகும். கலாநிதி எம்.வி. சல் கொட மறுசீரமைக்கப்படுகின்ற பொதுத்துறைத் திட்டங்களின் வருமானம் சம்பந்தமான அறிக்கை ஒன்றினைத் தயாரித்துள்ளார். இவ்வாய்பினைப் புதிய தகவல்களுடன் பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவை உள்ளது. இந்த ஆய்வின் படி மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்ற மூலங்கள் 1990 இல் 2500 மில்லியன் ரூபாய்களாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வருமான மூலங்கள் விற்பனை வரி, சொத்துக்களின் மாற்றங்களுக்கான முத்திரை வரி, மோட்டார் வாகன உத்தரவுப் பத்திரக் கட்டணம், நீதிமன்றச் சபைகளினால் உத்தரவிடப்பட்டு பெறப்படுகின்ற குற்றப் பணம், மோட்டார் வாகனப் போக்குவரத்து சட்டத்தின் கீழ் அறவிடப்படும் கட்டணம் போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். 1989 இல் மாகாண சபைகளுக்கான செலவினங்கள் 12,388 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டது. இதன் மூலம் ஏற்படும் இடைவெளியாகிய 9,888 மில்லியன் ரூபா, மத்திய அரசாங்கத்திடமிருந்து பெறப்படும் மானியங்கள் மூலம் ஈடுசெய்யப்பட வேண்டும். இந்தியா போன்ற நாடுகளில் அரசுகளின் செலவீனங்களில் 50 வீதத்திற்கும் மேற்பட்ட தொகை வருமான
167

Page 92
மூலங்களிலிருந்து பெறப்படுகின்றது. பிறேசிலில் இது 77.4 சத வீதமாகவும் பாகிஸ்தானில் 86.5 சத வீதமாகவும், மெக்சிக்கோவில் 93.8 சத வீதமாகவும் இந்த அளவுகள் உள்ளன. பொறுப்புக்களில் ஏற்படுகின்ற குறிப்பிடத்தக்க அதிகரிப்புகளின் உண்மையான சாத்தியப்பாட்டுடனும், அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள செலவீனங்களின் அடிப்படையிலும் இலங்கையில் இந்த அதிகாரிகளும் தமக்கு வழங்கப்பட்டுள்ள பல்வேறு வருமான வழிகளின் அடிப்படையில் தமது செலவுகளைக் குறிப்பிடத்தக்க அளவில் சமாளிக்கக் கூடியதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க முக்கியமான விடயம் ஒன்றாகும்.
வரவு செலவுத் திட்டம் 2000 ஆம் ஆண்டின் முடிவில் தேசிய வருமானத்தை இரட்டிப்பாக ஆக்குவதனை நிச்சயிப்பது தனது நோக்குகளில் ஒன்று என தெளிவாகக் குறிப்பிடுகின்றது. பல பேச்சாளர்களும் குறிப்பிட்டது போன்று தேசியப் பிரச்சினையின் தீர்மானம், சமாதானம், நல்லிணக்கம் இந்தக் குறிக்கோள்களை அடைவதற்கான அடிப்படைகளாக உள்ளன. கொள்கை ஆய்வு நிலையம் குறிப்பிடுவது போன்று எதிர்காலக் கொள்கை சந்தையின் ஆதரவினை வேண்டி நிற்பதாகவும் நிலையற்றதொன்றாக இல்லாமல் நிலையான ஒன்றாகவும் குறுக்கீடுகளற்ற வசதிகளை ஏற்படுத்தக் கூடியதொன்றாகவும், நிச்சயமற்றதாக இல்லாமல் எதிர்வு கூறக் கூடிய தொன்றாகவும் இருத்தல் வேண்டும். சமத்துவமான வளர்ச்சியினை நாடி நிற்கின்ற பேரினப் பொருளாதாரக் கொள்கையுடன் நாம் உடன்பாடு கொண்டுள்ளோம், அரசியல் ஸ்திரப்பாடு, சமாதானம் என்பன பொருளாதார வளர்ச்சியுடன் கொண்டுள்ள விடுவித்துக் கொள்ள முடியாத பிணைப்புப் பற்றியும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
10 LDraf, 1995
168

தொழிற் பயிற்சி அதிகார சபை மசோதா
தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பற்றிய விடயம் சம்பந்தமாக அரசாங்கத்தின் ஆதரவுடன் இயங்கும் 3000 க்கும் மேற்பட்ட பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் தற்பொழுது நாட்டிலுள்ளன. இவை பல்வேறு அமைச்சுக்களினால் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. எமது தொழில் நுட்ப நிறுவனங்களின் நோக்கம் 21 ஆம் நூற்றாண்டில் தொழில்நுட்ப ரீதியான சவால்களை எதிர்கொள்ளக் கூடிய பயிற்சியாளர்களை ஆயத்தஞ் செய்தலாகும் எனத் தொழிலமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. 1995 இல் தொழிலமைச்சினால் வெளியிடப்பட்ட முன்னேற்ற அறிக்கையில் பின்வரும் பிரச்சினைகள் இனங்காணப்பட்டுள்ளன.
(அ) காலாவதியான பாடத்திட்டம்
(ஆ) திறன் விருத்தியிலுள்ள குறைபாடு
(இ) பயிற்சி நெறி இயைபாக்கத்திலுள்ள நலிவு
(RF) கிடைக்கக் கூடிய வளங்களைப் பயன்படுத்துவதிலுள்ள
குறைநிலை
(உ) பரீட்சைகளை நடத்துவதிலுள்ள தாமதம்
இப் பயிற்சி நெறிகளுக்கு மாணவர்களை அனுமதித்ததிலுள்ள வீழ்ச்சியும் இங்கு சுட்டிக் காட்டப்படத்தக்கது. 1982-83 இல் தொழில் நுட்பக் கல்லூரிகளிலே 21,934 மாணவர்கள் இருந்தனர். இத்தொகை 1992 இல் 18,068 ஆகக் குறைந்துள்ளது.
தொழில் நுட்பக் கல்லூரிகளின் பெளதிக மற்றும் மனித வளங்களின் பயன்பாடுகளைக் கண்காணிக்கும் குழு தனது அறிக்கையிலே, தொழில் நுட்பக் கல்லூரிகளில் 71 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
169

Page 93
முதலீடு செய்யப்பட்டுள்ள வேளையில் அவை நன்மை தரக் கூடிய பங்களிப்பினை நாட்டின் தொழில்நுட்ப அபிவிருத்தி சார்ந்து வழங்கத் தவறி விட்டன எனக் குறிப்பிட்டுள்ளது. தொழில் நுட்பக் கல்லூரிகளின் தரமும் மிக வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளது. மாணவர்களின் நலன்களும் கவனிக்கப்படாமல் விடப்பட்டுள்ளன. சில முன்னேற்றமடைந்த பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களின் மூலமும் திறன்களை மேம்படுத்தும் வசதிகளும் இல்லை. இலங்கையின் வேலைவாய்ப்புக் கொள்கையில் திறன் விருத்திக்கான gd L I Tu i tij 356i பற்றி கொள்கை ஆய்வு நிறுவனத்துக்கு "ரெறன்ஸ் கெலி" (Terence Kelley)என்பவர் சமர்ப்பித்த அறிக்கையில், தொழிற்பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் தேவை நோக்கியவை என்றும், பயிற்சியானது தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் என்ற தவறான எடுகோளின் அடிப்படையிலேயே கடந்த கால நிகழ்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் சுட்டிக் காட்டியுள்ளார். ஜேர்மனியிலே கைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட தொழிற் பயிற்சி நிகழ்ச்சித் திட்டமொன்றின் வெற்றியைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, தொழிற் பயிற்சி என்பது "அபிவிருத்தி சார்ந்த ஒரு புதிரின் ஒரு பிரிவே" என அவர் தெரிவிக்கிறார். 1994 ஆம் ஆண்டு மனித உரிமை அறிக்கையிலுள்ள சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திப் பிரிவில் "நந்தினி குணவர்த்தன” (NandiniGunawardena) பயிற்சி நெறியின் பலவற்றிலே ஆரம்பக் கட்டத்தில் சேர்வு வீதம் கூடுதலாக இருந்த போதிலும், பல பயிற்சி நெறிகளிலே இடை விலகு வீதமும் உயர்வாக உள்ளது எனக் கூறியுள்ளார். உயர் கல்வியமைச்சினால் வழங்கப்பட்ட தொழில் நுட்பப் பயிற்சி நெறிகளில் 50 சத வீதத்தினர் இடையில் விலகிச் சென்றுள்ளனர். இளைஞர், விளையாட்டு மற்றும் கலாசார அமைச்சினால் வழங்கப்பட்ட தொழில் நுட்பவியலாளர் பயிற்சி நெறிகளில் 30 சதவீதத்தினர் இடை விலகியுள்ளனர். தமது கல்வியைப் (கற்றல் நிகழ்ச்சியைப்) பூர்த்தி செய்த பட்டதாரிகளில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் ஓரிரு வருடங்களுக்குள் வேலைவாய்பினைப் பெற்றுக் கொள்ள முடியாமலிருந்தது. மற்றும் தொழிற்சந்தையின் போக்கினை அளவீடு செய்யும் பொறிமுறையின்மை, பயிற்சியை வழங்குவதிற் காணப்படும் பால் வேறுபாடு, பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களுக்கும் தனியார் துறைக்குமிடையேயுள்ள இணைப்புகள் வினைத்திறனுடையவையாக இல்லை என்றும் நந்தினி குணவர்தன கூறியுள்ளார்.
அமைச்சரவர்கள் ஓரளவுக்கு மத்திய மயப் படுத்தப்பட்ட அதிகாரமொன்றை இங்கு முன்வைத்துள்ளார். இது அண்மிய
170

இயைபாக்கத்தின் தேவையைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. மேலும் தனியார் துறையினருடன் கொண்டிருக்க வேண்டிய இணைப்பையும் வலியுறுத்துகிறது. இத்தகைய இணைப்புகள் சக்திமிக்கவையாகவும் இருக்கலாம். ஆயினும் மிகக் கூடுதலாக மத்திய மயப்படுத்தப்பட்ட மாதிரிகையொன்றுக்கு அமைச்சர் அதிகளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்பதையிட்டு ஒருவர் ஆச்சரியப்படலாம். பொதுவான மற்றும் குறிப்பான வழி காட்டல்களையும், அதிகாரசபையின் பணிகள் பற்றி விசாரணை நடத்துதல், தொழிற் பயிற்சி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் விதிமுறைகளை அமைத்தல் போன்றவற்றிற்கும் அமைச்சருக்கு அதிகாரமுண்டு. இங்கு முக்கியமானது என்னவெனில், தொழிற் பயிற்சிச் சபையில் சிறப்பாகத் தொழிற்படக் கூடிய ஆக்கத்திறன் மற்றும் கற்பனாதிறன் உள்ள ஒருவரைக் கண்டு கொள்ள வேண்டியமையாகும். அத்தகைய ஒருவர் புதிய அதிகாரசபைக்குத் தலைமை தாங்குதல் மட்டுமன்றி, தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்குச் சிறந்த தலைமைத்துவத்தை வழங்கக் கூடியவராகவும் இருத்தல் வேண்டும். இதன்பொருள் என்னவெனில் நாடுமுழுவதிலும் சில சிறப்பான நிலையங்களை உருவாக்க வேண்டும் என்பதாகும். இவை உள்ளூரிலுள்ள தனியார் தேைையயும் எற்றுமதித் தேவையையும் பூர்த்தி செய்யத்தக்கதாக இருக்க வேண்டும். பயிற்சி வழங்கும் நிறுவனப் போதனாசிரியர்களுக்கு நல்ல சம்பளத் திட்டமும் அவசியமாகும். அத்துடன் தகுதி குறைந்த போதனாசிரியர்களின் எண்ணிக்கையையும் குறைக்க வேண்டும். தகுதியான ஒருவரை எமது நாட்டில் கண்டுகொள்வது அவ்வளவு தூரம் இலகுவானதன்று. எனவே வெளிநாட்டுச் சிறப்பறிஞரை நாம் தேட வேண்டியுள்ளது. எவ்வாறாயினும், அத்தகைய ஒருவர் நல்லமுறையில் செயலாற்றல் வேண்டும். சட்டங்களும் ஒழுங்கு விதிகளும் அவர்களுக்குத் தடையாக இருக்கக் கூடாது. தேய்வடைந்த நிலையிற் காணப்படும் அத்தகைய நிறுவனங்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்குத் தேவையான நெகிழ்ச்சித் தன்மை, அதிகாரம் மற்றும் தன்னாதிக்கமும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
மலைநாட்டிலே தமிழ்மொழி மூலம் போதனை வழங்கப்படும் தொழிற்பயிற்சி நிலையங்கள் பலவற்றில் சமநிலையின்மை நிலவுவதையிட்டுக் கவனத்திற் கொள்ளுமாறு மாண்புமிகு அமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்விடயம் பற்றி ஆய்வு செய்ய எம்.கே. பெரைரா தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
171

Page 94
வறக்காப்பொலை, கேகாலை, கண்டி, நுவரெலியா, பதுளை, பண்டாரவளை, இரத்தினபுரி ஆகிய இடங்களிலுள்ள பயிற்சி நிலையங்களில் தமிழில் போதனை நடைபெறுவதில்லை. அவ்வாறு வழங்கப்படாவிடில் பெருந்தோட்டங்களிலுள்ள இளைஞர்கள் ஆகக் குறைந்த கல்வித் தேவையையும் பெற முடியாமல் போகும் நிலையேற்படும். ஆகவே பெருந்தோட்ட இளைஞர்களுக்காக "நொராட்” டின் உதவியுடன் ஹற்றணில் ஒரு பயிற்சி நிலையத்தை அமைக்க வேண்டும். இச்செயற்றிட்டம் 1987 ஆம் ஆண்டு தொடக்கம் பூர்த்தி செய்யப்படாமல் இருப்பது விரக்தி தருகிறது. இதனை உடனடியாக நிறைவு செய்து முடிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு அமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன்.
(1995 இன் 12 ஆம் இலக்க மசோதா தொடர்பாக நிகழ்த்தப்பட்ட உரை)
172

தொடர்பு சாதனங்களும் கருத்து வெளியீட்டுச் சுதந்திரமும்
தொடர்புசாதன, சுற்றுலா, விமானப் போக்குவரத்து அமைச்சு மூன்று பிரதான விடயங்களை அடக்கியுள்ளது. இவ்விடயங்கள் சார்ந்த பொறுப்புகள் தர்மசிறீ சேனநாயக்கா அவர்களுக்கு ஒப்படைக்கப் பட்டிருப்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். சமகால அரசியல் விவாதங்களிலே தொடர்பு சாதனங்களின் சுதந்திரமும் பொறுப்புகளும் முக்கிய இடம் வகிப்பதனால், தொடர்பு சாதனங்கள் பற்றி மட்டும் உரையாற்ற எண்ணியுள்ளேன். குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேசக் கட்டுறுத்துகளில் இடம்பெற்றுள்ள 19 ஆம் உறுப்புரை பற்றி நாம் எல்லோரும் அறிவோம். அவ்வுறுப்புரையின் மூலம் தகவல் தேடுதல், தகவல் பெறுதல், அவற்றைப் பரிமாறுதல் ஏனைய சகலவகைக் கருத்துகள் உட்படக் கருத்துரை வழங்கும் உரிமைக்கு இங்கு உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளது. லண்டனிலுள்ள சர்வதேச அரசுசாரா நிறுவனமொன்று 1994 இல் 19 ஆம் உறுப்புரையை வெளியிட்டது. மிக அண்மையில், 1995 இல் இத்தகைய உரிமையை இலங்கையில் எவ்வாறு பாதுகாக்கலாம் என்பது பற்றிய இரண்டு அறிக்கைகள் வெளிவந்தன. இவற்றையொத்த அம்சங்கள் 1993 ஆம் ஆண்டின் மனித உரிமைகள் நிலை பற்றிய அறிக்கையிலும் எழுப்பப்பட்டுள்ளன. அரசியல் யாப்பிலுள்ள கருத்துரை வழங்கும் உரிமை, இவ்வுரிமைக்கான கட்டுப்பாடுகளைத் தாராளமயப்படுத்தல் மற்றும் அவற்றின் பொருத்தப்பாடு என்பனவற்றின் மீதும் கவனத்தைச் செலுத்துகிறது. இத்தகைய விடயங்களில் அரசியல் யாப்புத் தெரிவுக் குழுவும் கூடுதலாகக் கவனமெடுக்க வேண்டும். பேச்சுச் சுதந்திரத்தில் அளவுக்கதிகமான கட்டுப்பாடுகளை விதிக்கும் ஏனைய சட்டங்களும் உள்ளன.
73

Page 95
அவை பாராளுமன்றத்தின் (அதிகாரங்களும் சலுகைகளும்) 1953 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்கச் சட்டத்தையும் பத்திரிகைக் கழகச் சட்டத்தையும் உள்ளடக்குகின்றன. பொதுசனப் பாதுகாப்புச் சட்டங்கள், பொதுசனப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டங்கள், இவற்றின் கீழ்வரும் அவசரகால ஒழுங்கு விதிகள், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், சுதந்திரமாகக் கருத்துரை வழங்குவதில் பொருத்தமற்ற முறையில் கட்டுப்பாடுகளை விதித்தல் போன்ற விடயங்களிலும் கவனஞ் செலுத்துதல் வேண்டும். இத்தகைய சட்டங்களுக்கும் தொடர்பு சாதனங்களுக்குமாக ஒரு குழுவும் "லேக்ஹவுஸ்" நிறுவனத்தைத் தாராளமயமாக்குதல் தொடர்பான பிரச்சினைகளை ஆராய இன்னொரு குழுவும் அமைச்சரால் நியமிக்கப்பட்டுள்ளன. இவற்றைப் போன்ற கவனங்கள் இலத்திரன் தொடர்பு சாதனக் கட்டுப்பாடுகள் பற்றியும் செலுத்தப்பட்டுள்ளன. இக்குழுக்கள் யாவும் வரையறுக்கப்பட்ட கால எல்லைக்குள், தொடர்புசாதனங்கள் பற்றி அமைச்சரால் வழங்கப்பட்ட கொள்கை விளக்கங்களுக்கு அமையத் தமது விதந்துரைகளை மேற் கொள்ளுமென நினைக்கிறேன். இதனை ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு சாசனம் என்றே கூறுவேன். இச்சபையிலுள்ள உறுப்பின ர் எவராயினும் சாசனத்தின் உள்ளடக்கம் பற்றி உடன்பாடின்மையைக் கொண்டிருப்பர் என நான் நினைக்கவில்லை.
ஆனால், தொடர்பு சாதனங்கள் பற்றிய பிரச்சினை அத்துடன் முடிந்துவிடவில்லை. அறிக்கைகளை நடுநிலையாக வெளியிடுதல் பற்றிய விவகாரங்கள் தீவிர விவகாரங்களாக மாறுகின்றன. இத்தகைய விவகாரங்கள் இலங்கைக்குரிய குறிப்பான விவகாரங்கள் மட்டுமன்று. கருத்தியல் ரீதியான உரிமைகள் மூலம் பில் மற்றும் ஹிலாரி கிளின்டன் பற்றி மாசுபடுத்தும் இசைவடிவப் பிரசாரங்கள், தொடர்பு சாதனங்களின் அதிகாரம் மற்றும் பதில் கூறும் பொறுப்பு, பற்றிய பல நூல்கள் வெளி வருவதற்கு வழிவகுத்தன. அடம் கொப்பிங் என்பவரால் எழுதப்பட்டு, 1994 மார்கழி மாதம் 12 ஆம் திகதி "நியூயோக்கர்" (NEWYORKER) சஞ்சிகையில் வெளிவந்த கட்டுரைபற்றி இங்கு எடுத்துக் கூற விரும்புகிறேன். இக்கட்டுரை தொடர்பு சாதனங்கள் பற்றி அண்மையில் வெளிவந்த ஒன்பது நூல்களை மதிப்பீடு செய்துள்ளது. இங்கு கவனத்திற்கு எடுக்கப்பட வேண்டிய இரண்டு பரந்த விடயங்கள் உள்ளன. முதலாவது விடயம் தீவிர கருத்தியல் வாதிகளின் பங்கினை எடுத்துக் காட்டுகிறது. இவர்கள் யாதாயினும் உண்மையை அல்லது ஓர் அரசியல் நிகழ்வை முன்னேற்றும் பொது மதிப்பினைக் குறைத்துக் கூறும் அல்லது
174

திரிபுபடுத்திக் கூறும் வல்லமையுள்ளவர்கள். இரண்டாவது விடயம் தனிநபர் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை விடயங்களை நுணுக்கமாகக் கவனிக்கும் அளவுக்கதிகமான அதிகாரம் பற்றியதாகும். பழைய கதைகளைத் திரித்துக் கூறுதல், பொதுசேவைப் பதவிகளை வகிப்போர் மீது தாமாகவே சில முடிவுகளுக்கு வருதல் போன்றவை இதனுள் அடங்கும். செய்திப் பத்திரிகைத் துறை, தீவிர பத்திரிகைத் துறைகளின் அவதூறு செய்யும் மற்றும் பரபரப்பூட்டும் கலாசாரத்துக்கிடையேயுள்ள சாதாரண பிளவுகளிலும் பார்க்க இவ்விவகாரம் சிக்கல் வாய்ந்தது என ஆசிரியர் சுட்டிக் காட்டியுள்ளார். அமெரிக்கச் செய்தித்துறையானது வன்முறைக் கலாசாரத்துக்கு உட்பட்டு மாற்றம் பெற்றுள்ளது என்றும் ஒரு பத்திரிகையாளனின் வெற்றி வன்முறை சார்ந்த நடைமுறைகளுக்கு உட்பட்டுச் செய்திகளை வெளிப்படுத்துவதற்கான விருப்பத்திலேயே தங்கியுள்ளது என்றும் நம்புகிறார். மேலும் தற்பொழுது தொடர்பு சாதனங்கள் வன்முறைகளால் கவரப்படுகின்ற போதும் அவற்றின் சுயதிணிப்பு முறை மூலம் அந்த வன்முறைகள் கடுமையான அரசியல் விவாதங்களுடன் தொடர்பு கொள்ளாதவாறு தடை செய்யப்படுவதுடன் நடத்தை மற்றும் ஒழுக்க மேம்பாட்டுக்கான கருத்துகள் உருவாக இடமளிக்கின்றன. வன்முறைகள் கருத்தியல் பஞ்சமான அல்லது பரிவிரக்கமற்ற நிலையில் கடைப்பிடிக்கப்படுகிறன.
இதனையொத்த கவனங்கள் அவதூறு செய்யும் கலாசாரம் பரபரப்பூட்டும் செய்தி மற்றும் சமூக ஆபாசங்கள் சம்பந்தமாகவும் இருத்தல் வேண்டும். எமது வார இறுதிப் பத்திரிகைகளின் சில பிரிவுகளை இவை ஆட்கொண்டு விட்டன. எம்மத்தியிலுள்ள பொது வாழ்க்கையில் ஈடுபடுவோரின் நடத்தைகள் பத்திரிகைத் துறையினரின் நுண்ணாய்வுக்கு உட்படுதல் தவிர்க்க முடியாதது. அவ்வாறான ஆய்வு நோக்குக்குச் சட்டரீதியான எல்லைகள் எவை. பெண் அரசியல்வாதிகளைப் பொறுத்த மட்டில் அவர்களைப்பற்றி அற்பத்தனமாகக் கருதுவதில் அவை ஈடுபடுகின்றன. இதனால் பெண்களை ஆண்களுக்குச் சமமாகக் கருதுதல் மறுக்கப்படுகிறது. இவ்வாறான அற்பக் கருத்துக்கள் அவர்களுடைய உடை, உணவுப் பழக்க வழக்கம் மற்றும் சமூக வாழ்க்கை போன்றவை பற்றி அமைந்துவிடுகின்றன. 1994 கார்த்திகையில் நிலோஃபர் டி மெல் தெரிவு விவக்ாரம் பற்றிய தமது ஆசிரியர் தலையங்கத்தில் சுட்டிக்காட்டியது போன்று, ஆண்கள் இவ்வாறான நடவடிக்கைகளால் ஒரு போதும் பாதிக்கப்படுவதில்லை, அதனைப் பின்வரும் முறையில் சுருக்கமாக விபரிக்கின்றார். இவை குடும்பத் தலைவராட்சி எவ்வாறு ஒரு குறிப்பிட்ட சாயலை உருவாக்கப் பயன்படுகின்றது என்பது
175

Page 96
மட்டுமன்றி குறிப்பிட்ட சில "மேலைத்தேயஞ்சாரா" என்பதற்காகத் தேசிய தனித்துவம் என்பதிலிருந்து ஆண்கள் மன்னிக்கப்படுகின்றனர். இதனால் நடத்தை, உடைகள் பற்றிப் பெண்கள் மட்டுமே கவனிக்க வேண்டும் என்னும் நிலைக்குட்படுகிறார்கள். ஆகவே தெரிவுச் சுதந்திரமுடைய தனியாள் என்பதிலும் பார்க்க, ஒரு பெண் ஒழுங்காக ஆடை அணியவேண்டும், புனிதத்தன்மையின் அடையாளமாக விளங்க வேண்டும்". சில வேளைகளில் இத்தகைய பிரிவுகள் மனக் காழ்ப்புகளை உண்டாக்கும் கருவியாகவும் மாற்றமடையக் கூடும். பத்திரிகைகளில் காணப்படும் இத்தகைய தனிப் பகுதிகள் தனிப்பட்ட முறையில் பழிவாங்கும் இயல்பினவாகவும் உள்ளன. வீண் பேச்சுகள் அடங்கிய தனிப்பகுதிகளும் கதைகள் பரப்புவதற்குப் பயன்படுகின்றன. இவை உண்மையிலே தவறானவை என்ற காரணத்தால் உள்ளத்திற்கு ஊறு விளைவிக்கின்றன. பத்திரிகைத் துறையின் தரத்தைக் கீழ் நிலைப்படுத்தும் போது, தீவிர பத்திரிகைத் துறையின் உயர் ஒழுக்கத்தைப் பேணுதல் கடினமாக இருக்கும் எனலாம்.
பத்திரிகைத் துறையில் ஈடுபடுவோர் யாராயினும் ஒருவகைத் துன்புறுத்தலுக்கு உள்ளாக வேண்டும் என இது கருதவில்லை. ஏனெனில் அவர்கள் மேலே எடுத்துக் காட்டிய தரத்துக்கு மாறாக நடந்துள்ளனர். 1993 ஆம் ஆண்டின் இலங்கை மனித உரிமைத் தரமானது, சண்டே ரைம்ஸ் , யுக்திய, ராவய, அத்த, லக்திவ, மற்றும் லங்காதிப பத்திரிகையாளர்கள் பன்முறை துன்புறுத்தல்களுக்கு ஆளானவர்கள் என்பதை எடுத்துக் காட்டுகிறது. 1993 இல் மாநகரசபை, நீர்ச்சபை, மின்சாரசபை மற்றும் உள்நாட்டு இறைவரித்திணைக்களம் ஆகியன ஒன்றிணைந்து இந்தப் பத்திரிகைகள் மீது குற்றம் சுமத்த முனைந்தன. இவை முன்னாள் பொலிஸ் மாஅதிபர் உடுகம்பொலவின் சத்தியக் கடதாசியில் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளன. சட்டவாட்சி பாதுகாக்கப்பட வேண்டும். அத்துடன் தரக்குறைவான முறையில் தாக்குகின்ற கட்டுரையாளர் சட்டத்தின் விதிகளுக்குள் முழுமையாக உட்படுத்தப்பட வேண்டும். ஆயினும் எமது சட்டத்திலே பாரிய இடைவெளியுண்டு. அவற்றிடையே செய்தித்தாள் அறிக்கை உண்மையற்றவை, திரிபுபடுத்தப்பட்டுள்ளவை, பொருத்தமற்றவை என்ற முறைப்பாடுகள் தாக்கத்தை உண்டு பண்ணுகின்றன அல்லது நற்பெயரைக் கெடுக்கின்றன எனக் கூறப்படுவதாலும் பயன் தரக்கூடிய பரிகாரங்கள் ஏற்படப் போவதில்லை. இதற்குரிய மாற்றுவழியாக, இலங்கைச் செய்திப் பத்திரிகைக் கழகச் சட்டத்தின் 9 ஆவது பிரிவின்படி சட்ட நடவடிக்கை எடுத்தல் வேண்டும் அல்லது அவ்வாறான அவதூறுக்குக் குடியியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
176

முறைப்பாடுகளோ அல்லது தொடர்பு சாதனங்களோ இலங்கைப் பத்திரிகைக் கழகத்தின் மீது நம்பிக்கை கொள்ளவில்லை. மற்றும் நீதிசார் நடைமுறைகள் பெருஞ் செலவுக்குரியவை. அத்துடன் இக்கழகமானது இறுதியில் கலைக்கப்படும் வரையில் பல வருடங்கள் செயற்படாமலும் இருந்தது. எனவே எமக்கு ஒரு சட்டவரையறை தேவைப்படுகிறது. முறைப்பாடு செய்வோரும் தொடர்பு சாதனங்களும் அதன் மீது நம்பிக்கை கொள்ளலாம்.
நாம் இறுதியாகக் கருத்திற் கொள்ள வேண்டிய குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த பொருள் ஒன்று உண்டு. முரண்பாடுடைய தீர்மானங்களின் போது தொடர்பு சாதனங்களின் பங்கினை அது தொடர்புபடுத்துகிறது. அண்மைக் காலத்திலே நிகழ்ந்த பல ஆய்வுகளின்படி, சைபீரியா, குரோஷியா, பொஸ்னியா, செக்கிகோவினா போன்ற நாடுகளிலுள்ள சாதனங்கள் தேசிய பகைமையையும் பயத்தையும் துரண்டிவிடும் மிக முக்கியமான சாதங்களுள் ஒன்றாக விளங்கிஓ, இத்தருணத்தில் மார்க் தோம்சன் (Mark Thompson) என்பவரால் நடை முறையிலுள்ள போர் பற்றி மேற்கொள்ளப்பட்ட முக்கியமான ஆய்வு ஒன்றைப்பற்றி இச்சபையிலே குறிப்பிட விரும்புகின்றேன். இது 1994 இல் தணிக்கைக்கு எதிரான சர்வதேச நிலையத்தினால் 19 ஆம் உறுப்புரை மூலம் வெளியிடப்பட்டது. 1912 ஆம், 1913 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பால்கன் யுத்த ஒழுக்கம் பற்றி ஆராய்ந்த சர்வதேச ஆணைக்குழுவின் அறிக்கையிலிருந்து மேற்கோள் காட்ட விரும்புகின்றேன்.
"எங்களுடைய அறிக்கையில் கொலைகள், படுகொலைகள், மூழ்கடித்தல், தீயால் காயப்படுத்தல் மற்றும் கொடுமைகள் பற்றிய ஒரு நீண்ட பட்டியல் காணப்படுகின்றது. ஆயினும் இவற்றைச் செய்த குற்றவாளிகள் போல்க்கன் மக்களல்லர் என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன். உண்மையான குற்றவாளிகள் பொதுமக்கள் அபிப்பிராயத்தைத் திசை திருப்புகின்றவர்கள். மக்களினுடைய அறியாமையைப் பயன்படுத்திப் டெ//7ய்யான வதந்திகளை7டப் பரப்புகின்றவர் நாட்டுக்கு அபாயமானவர் என்று கூறித் தமது நாட்டவரையும் பிற நாட்டவரையும் தூண்டி விட்டு விரோதங்களை உருவாக்குகின்றனர். இக்குற்றவாளிகள் தமது விருப்பம் அல்லது நலன்கள் காரணமாக முரண்பாடுகளும் தகராறுகளும் பதிலடிகளும் தவிர்க்க முடியாதவையெனப் பிரகடனஞ் செய்து இறுதியில் தமது நாட்டை இந் நிலைமைகளுக்கு உள்ளாக்குகின்றனர்."
30 கார்த்திகை, 1995
177

Page 97
இலங்கைக்கான சீராக்கப்பட்ட குறைகேள் அதிகாரி பதவி
இலங்கையிலே, பல தசாப்தங்களாக, நிருவாக ரீதியான குறைபாடுகளால் மக்களுக்கு ஏற்படும் மனக்குறைகளைத் தீர்க்கும் நிறுவனமொன்றை அமைத்தல் நீண்டகால இலக்காக இருந்து வந்துள்ளது. 50 களின் நடுப் பகுதியிலிருந்து பொதுச் சட்டம் பயிலும் இலங்கை மாணவர்கள் பலர் குறைகேள் அதிகாரியின் பதவி பற்றிப் பெரும் ஆர்வத்துடன் கற்று வந்தனர். 1809 ஆம் ஆண்டில் சுவீடனில் இத்தகையதோர் நிறுவனம், நிருவாகச் செயல்முறைகளால் அநீதியிழைக்கப்பட்ட குடிமக்களின் குறைபாடுகளைப் பெறுதலும் அவைபற்றி விசாரணை செய்தலுமான நோக்கங்களுடன் தோற்றம் பெற்றது. இதன்ைத் தொடர்ந்து 1909 இல் பின்லாந்திலும் பின்னர் டென்மார்க், நோர்வே, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலும் பரவியது. ஐக்கிய இராச்சியத்திற் கூட பல வருடங்கள் தடை செய்யப் பட்டிருந்தாலும் 1967 இல் இத்தகைய நிறுவன ரீதியான புத்தாக்கம் நிருவாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளரை உருவாக்கியது. அத்துடன் நிருவாகச் சீர்கேடுகளால் நிகழ்ந்த அநீதிகளுக்குப் பரிகாரமாக 1974 இல் உள்ளூர் நிருவாக ஆணையாளரையும் நியமித்தது. ஆயினும் ஸ்கன்டிநேவியாவின் நடை முறையிலிருந்த குறைகேள் அதிகாரி நிறுவனத்துக்கும் பிரித்தானிய நிறுவனத்துக்குமிடையே முக்கியமான எண்ணக்கரு சார்ந்த வேறுபாடுகள் காணப்பட்டன. ஸ்கன்டிநேவிய அமைப்பிலே குறைகேள் அதிகாரி பதவியானது ஒரு நிறுவனம் போல எண்ணக் கருவாக்கஞ் செய்யப்பட்டிருந்ததுடன் அரசியல் மற்றும் நிருவாக ரீதியாகச் சுதந்திரமானதொரு நிறுவனமாகவும் இருந்தது. ஆனால் பிரித்தானிய அமைப்பில் குறைகேள் அதிகாரி பாராளுமன்றத்தின் உதவியாளராகவே கருதப்பட்டார். இந்த நிறுவனம்
178

சார்ந்த இலங்கையின் பரிசோதனைகள் இவ்விரு அமைப்புக்களின் மாதிரிகளுக்குமிடையேயிருந்து தடுமாறுகிறது.
குறைகேள் அதிகாரிப் பதவி பற்றி முதலாவது முக்கியத்துவம் வாய்ந்த பகிரங்கக் கலந்துரையாடல் 1959 இல் கண்டியில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் கருத்தரங்கில் இடம்பெற்றது. டென்மார்க்கின் குறைகேள் அதிகாரி தனது பதவி பற்றிய ஒரு கட்டுரையைச் சமர்ப்பித்தார். இவ்வெண்ணக் கரு நியூசிலாந்தின் ஆர்வத்தைத் தூண்டியது. டட்லி சேனநாயக்காவின் அரசாங்க அமைச்சரவையிலே அமைக்கப்பட்ட ஓர் உபகுழுவிலே திரு. சி.பி.டி.சில்வா, திரு.ஜெ.ஆர்.ஜெயவர்தன, திரு.எம்.திருச்செல்வம், திரு.ஏ.எவ். விஜேமானே ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இக்குழு கவனமான முறையில் அணுகு முறைகளை மேற்கொண்டு, 1965 மார்கழி 22 இல், பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலம் குறைகேள் அதிகாரி, முறைப்பாடுகளைப் பெறுவார் என்றும் அவற்றுள் சில, பொதுமக்கள் மனுக்குழுவினால் தெரிவு செய்யப்படும் என்றும் விதந்துரைக்கப்பட்டது. 1978 இல் பிரதம நீதியரசர் விக்டர் தென்னக்கோன் தலைமையிலான சட்ட ஆணைக்குழு, அரசியல் யாப்பின் 156 ஆம் பிரிவில் குறிப்பிட்டவாறு நிருவாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளர் பதவியை உருவாக்குவதில் தீவிர கவனம் செலுத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. அந்த நேரத்தில் நான் சட்ட ஆணைக்குழுவின் உறுப்பினராக இருந்தேன். இந்த வேண்டுகோளுக்குத் தீவிர முக்கியத்துவம் கொடுத்து குறைகேள் அதிகாரிப் பதவியைத் தோற்றுவிக்கும் பொருட்டு ஓர் அறிக்கையையும் ஒரு நகல் மசோதாவையும் அவ்வாணைக் குழு தயாரித்தது.
இந்த அறிக்கை மீள்பதிப்புச் செய்யப்பட வேண்டிய உத்தேச மசோதாவின் தேவைகள் பற்றிய உள்நிலைமைகளைப் பரவலாக வழங்கியிருந்ததுடன் எல்லோருக்கும் தெரிவிக்கப்பட்டது. சட்ட ஆணைக்குழுவின் ஆலோசனைகள் ஸ்கண்டிநேவிய மாதிரியைப் பின்பற்றியதுடன் பாதிக்கப்பட்ட ஆட்களிடமிருந்து முறைப்பாடுகள் பெறவும் அல்லது அவருடைய சொந்த மனுவின் மீது விசாரணைகள் நடத்தவுமுள்ள நேரடி அதிகாரம் குறைகேள் அதிகாரிக்கு வழங்கப்பட்டது. அவ்வாறே ஒருவர் அல்லது அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஓர் எழுத்து முறைப்பாட்டின் மூலமாகக் குறைகேள் அதிகாரியின் விசாரணை நியாயாதிக்க அதிகாரத்தைப் (Jurisdiction) பெற்றுக்கொள்ளலாம். ஆயினும் இத்தகைய விதந்துரையை
179

Page 98
அப்போதைய அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. 1960 களின் நடுப்பகுதியில் நியமிக்கப்பட்ட அமைச்சர்களின் துணைக் குழுவொன்று சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் சனாதிபதி ஜயவர்த்தன இத்தகைய அதிகாரி ஒருவரை, பாராளுமன்றத்துடன் இணைத்துப் பொதுவாகவும் பொதுமனுக்கள் குழுவைப் பொறுத்தவரையில் குறிப்பாகவும் செயலாற்றும் வகையில் நியமித்தார்.
ஆகவே இம் மசோதா சட்ட ஆணைக்குழுவின் விதந்துரையை மீளமைக்க முற்படுவதுடன் குறைகேள் அதிகாரியின் அலுவலகம் முறையாகச் செயற்படுவதைத் தடை செய்யும் நடைமுறைக் காரணிகளை அகற்றவும் முற்படுகிறது. பாராளுமன்ற ஆணையாளரான திரு. சாம் விஜேயசிங்க பாராளுமன்றத்திடம் சமர்ப்பித்த தமது ஆண்டறிக்கைகளில் சட்டவரையறைகளின் சில நடைமுறைத் தடைகளையும் நியாயாதிக்க வரையறைகளையும் பற்றி எடுத்துக் கூறியுள்ளார். அத்துடன் அரசாங்கக் கொள்கை தொடர்பான முறைப்பாடுகளைப் பரிசீலித்தல் அல்லது தன் விருப்பான நிர்வாக நடைமுறைகளை விசாரிப்பதில் தனிடயாக அமைந்துள்ள சில சட்ட ஏற்பாடுகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். குறைகேள் அதிகாரியின் நியாதிக்கத்தைப் பொறுத்தவரையிலான ஒரு முக்கிய தத்துவம் அவர் "முறையற்ற நிருவாகம்” தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்துவார் என்பதும் சில நியாயங்களின் அடிப்படையில் தீர்மானங்களை மறுபரிசீலனை செய்யும் அதிகாரம் அவருக்கு இல்லையென்பதுமாகும். ஆயினும் இந்த அறிக்கைகள் அடிப்படை நியாயாதிக்கக் கட்டுப்பாடுகளைக் குறிக்கவில்லையென்பதால், குறைகேள் அதிகாரி அமைச்சர்களின் விதப்புரைகளையும் தீர்மானங்களையும் விசாரணை செய்ய முடிவதில்லை.
1981 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட நிருவாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளர் பதவி கடந்த 13 ஆண்டுகளாகப் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளைச் சுதந்திரமான முறையில் நிறைவு செய்யும் பொருட்டும், பக்கச் சார்பற்ற முறையிலும் முறையற்ற நிருவாகத்துக்கு எதிராகவும் ஆரம்பிக்கப்படவில்லையென்பதற்குப் பல்வேறு காரணங்களைக் கூறலாம்.
(1) குறைகேள் அதிகாரியின் அலுவலகம் தனிப்பட்ட ஒரு நிறுவனமாக விளங்கும்போது அதனுடைய பலம் அவருடைய ஆளுமை, அவருடைய நோக்கு, ஈடுபாடு, தீர்மானங்களின் பெறுமானம்,
180

(2)
(3)
(4)
நடுவுநிலைமை ஆகியவற்றைப் பொறுத்தே அமைய முடியும். நிருவாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளர் தெரிவில், இந்த அலுவலகத்துக்கு அரசாங்கம் போதியளவு முக்கியத்துவம் கொடுக்குமென நான் எண்ணவில்லை. அத்துடன் நிதி மற்றும் மனிதவளம் பற்றிய விடயத்திலும் அவ்வாறில்லை.
குறைகேள் அதிகாரியின் நிறுவனம் மீது பொதுமக்கள் புரிந்துணர்வும் நம்பிக்கையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதனைப் பற்றியறியும் பொருட்டுக் கருத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் மேற் கொள்ளப்படவில்லை. இதனைப்பற்றி அறிந்தவர்கள் கூட அதன் பயன்பாடு பற்றி எதிர்மறையான கருத்தையே கொண்டிருக்கின்றனர். குறைகேள் அதிகாரி பல வருடங்களாக அடிப்படை உரிமைத் துஷ்பிரயோகம் பற்றிய முறைப்பாடுகளைப் பெறவில்லையென்பது இங்கே முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது.
குறைகேள் அதிகாரி சனாதிபதியாட்சிப் பாராளுமன்ற முறையில் பக்கச் சார்புள்ள தொடர்பையே கொண்டிருந்தார். அவர் சனாதிபதியால் நியமிக்கப்பட்டதுடன் பாராளுமன்றத்துக்குப் பொறுப்புக் கூற வேண்டியும் இருந்தது. தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினருக்கும் பொதுமனுக்குழுவுக்கும் இடையே நெருக்கமான தொடர்பைப் பேணும் வகையில் முக்கியமான சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இத்தொடர்பு உண்மை நிலையிலும் பார்க்க முறை சார்ந்ததாகவேயுள்ளது. ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்றத்தில் குறைகேள் அதிகாரிக்கான தெரிவுக்குழுவுக்கு வழங்கப்பட்டது போல பொதுமனுக் குழுவுக்கு சட்டவாக்க மேற்பார்வை வழங்கப் படவில்லை. சில சந்தர்ப்ப சூழ்நிலைகளில் பாராளுமன்ற அதிகாரசபை குறைகேள் அதிகாரிக்கு முகங்கொடுக்க முடியவில்லை. பாராளுமன்ற ஆணையாளரின் அறிக்கைகளிலும் விதப்புரைகளிலும் சட்டரீதியான அக்கறை காணப்படவில்லை. சட்டத்தின் வேண்டுகோளுக்கு இணங்கமட்டுமன்றி, குறைகேள் அதிகாரி தான் ஆற்றிய பணிபற்றி சனாதிபதிக்கும் பாராளுமன்றத்துக்கும் ஆகக் குறைந்தது ஓர் அறிக்கையையேனும் ஆண்டுக்கு ஒரு முறை அனுப்பி வைக்க வேண்டும்.
குறைகேள் அதிகாரியின் அதிகாரம் மற்றும் நியாயாதிக்கம் பற்றிய இன்னொரு முக்கிய அம்சம், நிருவாக நடைமுறையோடு
181

Page 99
தொடர்புடையது. அது நியாயமற்றது. வேறுபாடு காட்டும் தன்மையது, அடக்கு முறையுடன் கூடியது. அவ்வாறான நடவடிக்கை பற்றிய கருத்து குறைகேள் அதிகாரியின் பதவி பற்றிய கருத்துள்ள விளைவுகளைத் தரவில்லை. சுவீடனில் தண்டனை முறைமை (Penal System) குறைகேள் அதிகாரியின் பணிகளின் விளைவாக மாற்றத்துக்குட்பட்டிருக்கின்றன. நியூசிலாந்தில், குறைகேள் அதிகாரியின் விதந்துரைகள் நிருவாக அமைப்புச் சீர்திருத்தங்களில் பல முக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன.
ஆகவே பொதுமனுக் குழு, குறைகேள் அதிகாரியின் பணிபற்றி சட்டரீதியாக மேற்பார்வை செய்வதற்கு அதன் தேவைகள் மீள் எண்ணக் கருவாக்கம் செய்யப்பட வேண்டும். இக்குழு (1) குறைகேள் அதிகாரியின் அறிக்கைகளை மீளாய்வு செய்யலாம். (2) மீளாய்வுக்கு உட்பட வேண்டிய நிருவாக நடவடிக்கைகளைப் பரிசீலனை செய்யலாம். (3) 17 (3) ஆம் பிரிவின் கீழ் பாதிக்கப்பட்ட ஒருவர் பற்றிக் குறைகேள் அதிகாரி அறிக்கை சமர்ப்பிக்கும் வேளையில், அவரது சிபார்சுகளைத் தொடர்ந்து பயனுள்ள திணைக்கள ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாதவிடத்து ஆலோசனை கூறலாம். (4) பொது மனுக்குழுவின் நியாயாதிக்கத்துக்கு அப்பாற்பட்ட விடயங்கள் குறித்து நிகழும் அநீதிகள் சம்பந்தமான மனுக்களைப் பெறலாம். தற்பொழுது மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பொது மனுக்குழுவுக்கும் பாராளுமன்றத்துக்கும் முன் வைக்கப்பட்டுள்ளன. இவை இக்குழுவின் விசாரணை செய்யும் ஆற்றல் பற்றி விவாதிக்க வேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளன.
சில சந்தர்ப்ப சூழ்நிலைகளில், 1981 ஆம் ஆண்டு பாராளுமன்ற ஆணையாளர் சட்டத்துக்குக் கொண்டு வரப்பட்ட திருத்தம் வரவேற்கப்படுகிறது. இது குறைகேள் அதிகாரி நிறுவனத்துக்குச் சிறப்புகளைத் தேடிக் கொடுக்கும் முயற்சி எனலாம். இவை முறைப்பாடுகளைப் பெற்றுக் கொள்ளும் முறைகள் தொடர்பாகவும், அவருடைய துணிபு, மற்றும் தொடர்புடைய நிறுவனத் தலைவருக்குச் சிபார்சுகளைச் செய்யும் இயல்பு பற்றினவாயும் உள்ளன. இது தொடர்பாகப் பிரதான சட்டத்தின் 10 ஆம் பிரிவு, ஒரு முறைப்பாட்டினைப் பாதிக்கப்பட்ட தனியாள் அல்லது பொதுசன நலனில் அக்கறையுள்ள ஆட்கள் குழு மேற்கொள்ளலாம் என்ற விடயத்தில் தெளிவாக இருத்தல் வேண்டும். ஒரு குறைகேள்
182

அதிகாரியை நியமனம் செய்வதன் மூலம் நிருவாகச் சீர்திருத்தம் மற்றும் நிருவாக ரீதியான நிதி ஆகிய விடயங்களில் அரசாங்கம் அக்கறை காட்டவேண்டுமென நாம் விரும்புகிறோம். குறைகேள் அதிகாரி மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும், மற்றும் அவருக்குச் சட்டத்தின் மூலம் வகுத்துக் கொடுக்கப்பட்ட பிரதிக் குறைகேள் அதிகாரியின் நியமனம் உட்படப் போதிய வளங்களைக் கொடுப்பதன் மூலம் வலுவூட்ட வேண்டும்.
(1994 இன் 26 ஆம் இலக்க மசோதா தொடர்பாக நிகழ்த்தப்பட்ட A 60y)
183

Page 100
சுரங்கம், கணிப்பொருட்கள் சட்டத்தின் ஒழுங்கு விதிகள் மீதான விவாதம்
இந்த ஒழுங்கு விதிகள் மூன்றாண்டுகளுக்கு முன்னர் முன்னாள் கைத்தொழில் அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களால் உருவாக்கப்பட்டன. 1992 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்கச் சுரங்கம் மற்றும் கணிப்பொருட்கள் சட்டத்தின் முக்கிய சட்டப் பிரிவுகளை அறிமுகப்படுத்தியமைக்காக அவருக்கு நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளோம். முக்கிய சட்டத்தின் 64 ஆம் பிரிவின் கீழ்வரும் ஒழுங்கு விதிகள் பாராளுமன்றச் செய்தித் திரட்டில் வெளிவந்த திகதி தொடக்கம் நடைமுறைக்கு வந்தது. எனவே அவை பாராளுமன்ற அங்கீகாரத்துக்குக் கொண்டுவரப்பட்ட போது இலகுவாயிருந்தது. துணைநிலைச் சட்டங்கள் சபைக்குக் கொண்டு வரப்படும் வேளையில், குழுநிலையில் அவை நுண்ணாய்வுக்கு உட்படும் வேளையில், தொழில்நுட்ப இயல்புகளுக்கும் விஷேட அம்சங்களுக்கும் முக்கியத்துவங் கொடுத்து, மிக விரைவில் திருப்திகரமான நிலையில் ஏற்றுக் கொள்ளும் முறையொன்றை நாம் கொண்டிருக்க வேண்டும். இச்சபை முழுமையான வகையில் ஒழுங்கு விதிகள் பற்றிக் கவனஞ் செலுத்த முடியாமல் இருப்பதனால் தற்போதைய அமைப்புத் திருப்திகரமற்றது என்பது தெளிவு. விவாதங்கள் அத்துடன், கொள்கை மீதான பரந்த பிரச்சினைகளில் கவனஞ் செலுத்த வேண்டியுள்ளது என்பதனால் அப்பிரச்சினைகளுக்கு விடையளிக்க வேண்டியுமுள்ளது. இப் பிரச்சினைகள் பாதீட்டின் குழுநிலையின் போது எழுப்பப்படுகின்றன. இவ்விடயத்தை, அடுத்து வரும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எழுப்புமாறு பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தை கெளரவத்துடன் கேட்டுக் கொள்கிறேன்.
184

எமது முதலாவது கனியவியல் அளவீடு 1902 - 1906 இடைப்பட்ட வருடங்களில் ஆனந்த குமாரசுவாமி அவர்களால் மேற் கொள்ளப்பட்டது. இலங்கையின் கனியவியல் பற்றிய அவரது பணிக்காக விஞ்ஞானக் கலாநிதிப் பட்டம் வழங்கப்பட்டது. விஞ்ஞானி என்ற வகையில் அவர் பெற்றிருந்த புலமையினால், முன்பு அறிந்திராத கனியமான செரன் டிபைற்றை (Serendibite) அவர் இனங்கண்டிருந்தார். அத்துடன் அவருடைய விஷேட பணிகள் இன்றும் பயன்பாட்டிலுள்ளன. அவர் மிகப் பரந்த அடிப்படையில் வெளிக்களப் பணிகளில் ஈடுபட்ட வேளையில் பல கிராமங்களுக்கும் சென்று, கிராம வாழ்க்கை முறையையும் கிராமியக் கைப்பணிகளையும் அவதானித்து மத்திய காலச் சிங்களக் கலை என்னும் மூலச்சான்று நூலை எழுதப் பயன்படுத்தினார். ஆனந்த குமாரசுவாமியைத் தொடர்ந்து பல புவிச்சரிதவியலாளர் முக்கியமான புவிச்சரிதவியல் நூல்களையும் அறிக்கைகளையும் இந்நாட்டில் வெளியிட்டுள்ளார்கள்.
பிரதான சட்டமானது அகழ்தல் மற்றும் கனியவியல் சம்பந்தமான சட்ட மற்றும் நிறுவன ரீதியான மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
(1) தோட்டம் மற்றும் வர்த்தக ரீதியான பயன்பாட்டின் ஒழுங்கு படுத்துதல் மற்றும் தொழில் துறை உரிமையாளர் தொழிற்பாட்டுக்குமிடையேயுள்ள வேறுபாடுகளை எடுத்துக் காட்டியது.
(2) இது புவிச்சரிதவியல் அளவீடும் சுரங்கத் தொழில் பணியகமும் என்ற புதிய நிறுவனத்தை உருவாக்கியதன் மூலம் இலங்கையின் கனியவளங்களை இனங்காண்பதற்கும், தேட்டங்கள், அகழ்தல், பதனிடல் மற்றும் வியாபார நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.
(3) அனுமதிப் பத்திரங்களை வழங்குதல் அவற்றை இரத்துச் செய்தல் எண் பனவற்றில தெளிவான அமைப் பு உருவாக்கப்பட்டது. அத்துடன் அனுமதிப்பத்திரம் தொடர்பான முறையீடுகள் மீயுயர் நீதிமன்றத்தினால் மேற் கொள்ளப்பட்டன. அத்துடன் சுற்றாடல் பாதுகாப்புச் சம்பந்தமான பிரச்சினைகள், சுகாதாரப் பிரச்சினைகள் பாதுகாப்பு மற்றும் பணியாளர்களின் நலன்கள் என்பனவற்றிலும் ஈடுபாடுகாட்டி வருகிறது.
சபையிலே முன்வைக்கப்பட்ட ஒழுங்கு விதிகள் மேலும் அனுமதிப்பத்திரம் வழங்கல் மற்றும் தேவைகளை அறிவித்தல்,
185

Page 101
அகழ்தல் தொழில் நடைமுறைகளையும், நில உரிமை வழங்கு தொகையையும் பதிவுக் கட்டணத்தையும் வழங்குதல் போன்ற விவகாரங்களைத் தெளிவுபடுத்த வேண்டும். அவை மேலும் விண்ணப்பிக்கும் முறைகளையும் பல்வேறு விண்ணப்பங்களும் அவற்றின் புதுப்பித்தலும் தொடர்பான பிரச்சினைகளையும் தெளிவாக்க வேண்டும். இத்தகைய ஒழுங்கு விதிகள் பற்றிய பல அவதானங்களை மேற் கொள்ள வேண்டிய தேவையும் எமக்கு உண்டு. அகழ்தற் தொடர்பான சிறந்த சட்ட வடிவமைப்பு உண்டு 61 ன்பது தெளி வாயினும் நாம் சிறந்த அகழ்தற் கொள்கையொன்றை வடிவமைக்க வேண்டும். அவ்வாறான கொள்கை பின்வரும் துறைகளைப் பற்றி விளக்கமாகக் கூற வேண்டும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் ஊக்குவிக்கப்படுதல் வேண்டும். இவற்றினை மேற்கொள்வதிலே பணியகம் ஆதரவற்ற முன்மொழிவுகள் அடிப்படையில் அல்லது திறந்த போட்டியடிப்படையில் விலை குறித்தலைப் பின்பற்றலாம். இப்பிரச்சினைகள் பற்றிய நிச்சயமற்ற தன்மை கணிசமான அளவிலுண்டு. அப்பிரச்சினைகள் குறிப்பாகப் பணியகத்துக்கும் அரசாங்க முயற்சிச் சீர்திருத்த ஆணைக்குழுவுக்கும் இடையே காணப்படும் தொடர்பு பற்றியவை ஆகும். வியட்நாமில் கூட அகழ்தல் பற்றிய கொள்கைப் பத்திரம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறானதொரு விடயத்திற்கு முன்னுரிமை வழங்குமாறு அமைச்சரை வேண்டுகின்றேன்.
இரண்டாவதாக 10 ஆவது ஒழுங்கு விதியின் படி, சுரங்கம் மற்றும் கனியங்களுக்குப் பொறுப்பான அமைச்சரின் செயலாளர் தனியார் பிரிவு முதலீட் டாளர்களுடனும் நிறைவேற்று முதலிட்டு உட்ன்படிக்கைகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தும் பொறுப் புடையவராவர். ஒழுங்கு விதி 10 (3) பேச்சுவார்த்தை நடத்தும் அவ்வாறான ஒப்பந்தங்களில் பணியகத்தை ஒப்பமிடும் இணைப்பு முகவராக இனங்காண்கிறது. அனுமதிப் பத்திரம் வழங்கும் செயற்பாடு, முதலீடு பற்றிய பேச்சு வார்தைகளுடன் தொடர்புடையது. 35 ஆவது பிரிவிலுள்ள பிரதான சட்டம் அனுமதிப்பத்திரம் வழங்கும் அதிகாரத்தைப் பணியகத்துக்குக் கொடுத்துள்ளது. அதற்கு ஓரளவு சுதந்திரமும் தன்னாதிக்கமும் உண்டு. அமைச்சின் செயலாளர் மேன்முறையீட்டுப் பணிகளை நிறைவேற்றுகிறார். 10 ஆவது ஒழுங்கு விதியைப் பொறுத்தளவில், பணியகத்துக்கும் செயலாளருக்குமிடையே நிலவும் தொடர்புகளில் முரண்பாடு உண்டு. இவை மீள் பரிசீலனைக்கு உட்பட வேண்டியவையாகும்.
186

சர்வதேச வழக்கறிஞர்கள் பலர், அகழ்தல் பற்றிய புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ள விருப்பம் தெரிவிக்கின்றனர். 1ாரிய அளவிலான கணிப்பொருள், அபிவிருத்திக்கு வெகுமதிகளையும் ஆபத்துக்களையும் சமமாகப் பகிர்ந்தளிக்கவுள்ளன. இத்தகைய ஒப்பந்த ரீதியான உடன்படிக்கைகள் பற்றிய பேச்சுவார்த்தை நடத்துவதில் பணியகத்திற்கு போதியளவு சிறப்பறிஞர்கள் அவசியமென நான் நினைக்கிறேன்.
உரிமைப் பங்குக்கான (Royalty) கொடுப்பனவு தொடர்பான 32 ஆவது ஒழுங்குவிதி பற்றியும் மேலதிக அவதானம் இன்றியமையாதது. சில வரி சம்பந்தமான நியாயாதிக்கத்துக்குட்பட்டிருக்கும் முதலீட்டாளர்கள் தமது சொந்த நியாயாதிக்க எல்லைக்குள் உரிமைப் பங்குக் கொடுப்பனவுகளுக்காக வரிச்சலுகை பெறுவதில்லை என்பதனால் அணுகு முறையொன்று அவசியமானது. மறுபுறத்தில், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள வரிகளுக்கு வரிச் சலுகையைப் பெற முடியும். இந்த நடைமுறையின் முழுமையான நோக்கம் இலங்கையின் வரி வருமானங்களைப் பெறுவதாகும். அன்றேல் இவை வெளிநாட்டு வரியாகப் போய்விடும். உள்நாட்டு வருமான நடவடிக்கைகளுக்கும் வெளிநாட்டு வரி அமைப்புக்குமிடையே நிலவும் தொடர்புகளை உரிமைப்பங்குக் கொடுப்பனவு பற்றிய விடயத்தில் ஒவ்வொரு விடயமாக எடுத்துப் பரிசீலனை செய்தல் வேண்டும்.
21 புரட்டாதி, 1995
187

Page 102
வரவு செலவுத் திட்டம் - 1996
வரவு செலவுத் திட்டம் பற்றிய விவாதம் நடை பெறுகின்ற இவ்வேளையில் 1942 இல் ஹென்றி சென். ஜோன் (Hentry St. John) ஞாபகப்படுத்திய விடயத்தை நினைத்துப் பார்த்தல் நன்று. "பாராளுமன்றங்கள் எமது அரசியல் யாப்பின் முக்கிய பகுதி என்பது மட்டுமன்றி அவை 61மது நிருவாத்தின் முக்கிய பகுதியுமாகும்" என அவர் கூறினார். அவை நிறைவேற்று அதிகாரத்தைக் கோரவில்லை. ஆயினும் அவற்றினுடைய வருடாந்த நிகழ்வின்றி நிறைவேற்று அதிகாரத்தை நடைமுறைப்படுத்த முடியாது. வரவு செலவுத் திட்டம் சம்பந்தமான செயன் முறைகளிலே ஐரோப்பியப் பாராளுமன்றங்களும் அவற்றின் பங்கும் பற்றி அண்மையில் மேற் கொள்ளப்பட்ட அளவீட்டின் படி, டேவிட் கூம்ஸ் என்பவர் பலரும் கூறுவது போன்று வரவு செலவுத் திட்டம் ஒரு "பொருளற்ற ஆவணம்” எனவும் இது தொடர்பான பாராளுமன்ற நடைமுறைகளை "கேவையற்ற செயல்" எனவும் சுட்டிக் காட்டியுள்ளார். 1994, 1995 ஆம் ஆண்டுக்குரிய வரவு செலவுத் திட்டத்தினைப் பரிசீலனை செய்யும் போது, நிதியமைச்சு நடப்பு நிதியாண்டில் வரவு மற்றும் செலவினங்களை எதிர்வு கூறுவதிலும், வரவு செலவுத் திட்ட முகாமைத்துவத்திலும் அனுபவித்த கஷ்டங்களை நாம் உணர்கிறோம்.
1994 இல் மொத்தச் செலவினம் மொத்த தேசிய உற்பத்தியின் 27.1 சத வீதமாக இருந்த போது மெய்ச் செலவினம் 29 சத வீதமாக இருந்தது. மொத்த வருமானம் மொத்த தேசிய உற்பத்தியின் 20.3 சத வீதமாகவும், மெய் வருமானம் 19 சத வீதமாகவும் காணப்பட்டது. வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை மொத்தத் தேசிய் உற்பத்தியின்
188

6.8 சத வீதத்திலிருந்து 10 சத வீதமாக உயர்வடைந்தது என மதிப்பிடப்பட்டது. உள்நாட்டுக் கொள்வனவுத் தேவைகள், மதிப்பீடு செய்யப்பட்ட அளவிலும் பார்க்க 3 மடங்கு கூடுதலாக இருந்தது. 1994 ஆம் ஆண்டு நிதியாண்டிலே நிலவிய வரவு செலவுத் திட்ட முகாமைத்துவச் சறுக்கல்களால் வெளிச் செல்லும் அரசாங்கம் தேர்தலுக்கு முன்னர் பெருந்தொகைப் பணத்தை செலவு செய்ய நேரிட்டது, புதிய நிருவாகம் உணவு மானியத்தை அதிகரித்தது.
1995 நிதியாண்டில் இதனையொத்த சறுக்கல், வரவு செலவுத் திட்ட முகாமைத்துவத்தில் காணப்பட்டது. மொத்தத் தேசிய உற்பத்தியில் மொத்தச் செலவினம் 28 சத வீதமாக இருக்குமென்றும் அதில் நடைமுறைச் செலவு 20.2 சத வீதம் என்றும் மூலதனச் செலவு 6.5 சத வீதம் என்றும் மதிப்பிடப்பட்டது. இவ்வேளையில் மொத்த வருமானம் மொத்தத் தேசிய உற்பத்தியில் 20.8 சத வீதம் எனவும் எதிர்வு கூறினர். இத்தகைய கஷ்ட நிலைமைக்குப் பல காரணிகள் துணையாக இருந்துள்ளன. இவை புதிதாகத் தோன்றிய எதிர்ப்பு நடவடிக்கைகள், ஓரளவு குறைந்த வளர்ச்சி வீதம், பங்குச் சந்தை விலை வீழ்ச்சியினால் அரசாங்கத்தின் இருப்புகள் விற்பனை மூலம் கிடைத்த குறைந்த வருமானம் என்பவற்றை உள்ளடக்கும். எனவே அதன் மூல மதிப்பீடான ரூபா 254,329 மில்லியனிலிருந்து செலவினம் திருத்தியமைக்கப்பட வேண்டும். தேறிய அதிகரிப்பான ரூபா 12,224 மில்லியன் அல்லது 5 சத வீதம் மூல மதிப்பீட்டிலும் மேலாக இருத்தல் வேண்டும்.
பாதுகாப்புச் செலவினம் காரணமாக ஆரம்ப மதிப்பீடு ரூபா 24,144 மில்லியனிலிருந்து ஏறக்குறைய ரூபா 32,134 மில்லியனாக உயர்ந்தது. பாராளுமன்றத்தினாலும் அமைச்சரவையாலும் அங்கீகரிக்கப்பட்ட குறை நிரப்பு மதிப்பீடு 27,543 மில்லியன் ரூபாவாகத் தள்ளாடியது. பாதுகாப்புக்கு மட்டும் மேற்கொள்ளப்பட்ட குறைநிரப்பு மதிப்பீடு ஏறக்குறைய 13,200 மில்லியன் ரூபாவாகும். பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களின் செலவினங்களைக் குறைப்பதன் மூலம் இவை சிறிதளவு குறைக்கப்பட்டாலும் பாதுகாப்பு அல்லாதவை தொடர்புடைய குறைநிரப்பு மதிப்பீடு எமது வரவு செலவுத் திட்ட முகாமைத்துவத்தின் பிரதான குறைபாடாகக் காணப்படுகிறது. இவற்றின் ஒருபகுதி மதிப்பீடுகள் பல்வேறு அமைச்சுகளினால் மேலதிக நிதிப்படுத்தலுக்காகக் கோரப்பட்ட போதிலும் அவை திறைசேரியினால் கட்டுப்படுத்தப்பட வேண்டும். சம்பளங்கள் மற்றும் ஒய்வூதியம், மேலதிகச் செலவினம்,
189

Page 103
வெளிநாட்டு நிதியை அடிப்படையாகக் கொண்ட செயற்றிட்டங்களுக்கு ஏற்படும் மூலதனச் செலவு தொடர்பாக ஏனைய அதிகரிப்புகள் அமைகின்றன.
குறைநிரப்பு மதிப்பீடு தொடர்பாகத் திறைசேரி மற்றும் அரசாங்கத்தின் அணுகு முறை கடுமையானதாக இருத்தல் வரவுசெலவுத் திட்ட முகாமைத்துவத்துக்குச் சிக்கலாக இருக்கும். பிரித்தானிய வரவு செலவுத் திட்ட முறைமை பற்றி சேர் ஹேர்பேட் பிரிட்டன் மேற்கொண்ட ஆய்வொன்றிலே, "குறைநிரப்பு மதிப்பீட்டுக்கான யாதாயினும் இலகுவான அல்லது பரந்த வழிமுறைகள் வரவுசெலவுத் திட்ட எதிர்வு கூறல்களையும், கொள்கைகளையும் தடுமாறச் செய்யும்" என்றார். ஆகவே, திறைசேரி எப்பொழுதும் உத்தேச மேலதிகச் செலவினங்களின் வகுப்புகளை மாத்திரமன்றி யாதாயினும் காலந்தள்ளிப் போட முடியாத அல்லது நிதிப்படுத்த முடியாத விடயம் அன்றேல் பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்படும் புதிய கோரிக்கை என்பவற்றின் மூலம் தன்னைத் திருப்திப்படுத்த முயலும். டயமன்ட் பிரபு தமது நூலில் நடைமுறை அரச செலவினங்கள் பற்றிக் கூறும்போது, "குறைநிரப்பு மதிப்பீடு, தேர்ச்சியின்மைக்கு அல்லது அளவுக்கு மீறிய செலவுக்குத் தெளிவான சான்றாக இருந்தது" எனச் சுட்டிக் காட்டியுள்ளார். நாம் அரசாங்கத்தையும் குறிப்பாக நிதி அமைச்சினையும் வேண்டிக் கொள்வது யாதெனில் குறைநிரப்பு மதிப்பீடுகள் அவசியமாக இருக்கும் வேளையில் அவைபற்றிக் கடுமையான நுண்ணாய்வில் ஈடுபட வேண்டும். குறிப்பாக அத்தகைய மதிப்பீடுகள் மேலதிக பணத்தைக் கோரி நிற்கையில் இந்நுண்ணாய்வு அவசியமாகும். குறைநிரப்பு மதிப்பீட்டின் மீதான பாராளுமன்றத்தின் நுண்ணாய்வும் திருத்திகரமானதல்ல. முதலாவதாக இந்த மதிப்பீடுகள் போதிய துணை விபரங்களின்றி முன் வைக்கப்படுகின்றன. இரண்டாவதாக, பெருமளவிலான குறைநிரப்பு மதிப்பீடுகள் பல அமைச்சுகளையும் உள்ளடக்குவதுடன் பல்வேறு வகையான செலவுகளிலும் ஈடுபடுகின்றன. அத்துடன் நிதி வருடத்தின் இறுதியிலே, போதிய நுண்ணாய்வுக்கு உட்படாமல் வந்து குவிகின்றன. மூன்றாவது, விவாதங்கள் உண்மையிலே பொருத்தப்பாடுகள் பற்றி அல்லது செலவு விபரங்களில் அல்லது அடுத்த நிதியாண்டுக்கு ஒத்திவைக்கலாமா என்ற விடயங்களில் கவனத்தைச் செலுத்துகிறது. நான்காவது, எந்தவொரு குறைநிரப்பு மதிப்பீடும் குறிப்பிட்ட அமைச்சிலுள்ள ஆலோசனைக் குழுவின் சிபார்சு இன்றியும் செலவினங்களை மீளாய்வு செய்யவென அமைக்கப்படும் விஷேட
190

குழுவின் சிபார்சு இன்றியும் பாராளுமன்றத்தில் அதன் அங்கீகாரத்துக்காகச் சமர்ப்பிக்கப்படக் கூடாது.
பல வரவு செலவுத் திட்ட விவாதங்களிலே, நிதிக்குரிய அதிகாரத்தில் பாராளுமன்றத்தின் கட்டுப்பாட்டுக்கான புதியநோக்கு ஒன்றின் அவசியம் பற்றிக் கூற விரும்புகின்றேன். பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மதிப்பீடுகளின் ஆழத்தைப் பரிசீலனை செய்வதற்கு செலவினக் குழுவொன்றை அமைப்பதிலே நாம் விஷேட கவனஞ் செலுத்த வேண்டும் என எடுத்துரைத்துள்ளேன். ஐக்கிய இராச்சியத்தின் செலவின க்குழு பல உப குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருப்பதுடன் செலவு விபரங்களில் அவை சிறப்பறிஞரின் சான்றுகளையும் பெற்றுக் கொள்கின்றன. அவை இயலக் கூடிய மாற்றுவழிகளையும் தெரிவுகளையும் வழங்கும். இந்தக் குழுவுக்கு (தொழில் நுட்ப ஆதரவு உயர்மட்டத்தில்) இச்சபையில் கிடைக்கக் கூடியதிலும் பார்க்க உயர்மட்டத்தில் தொழில் நுட்ப ஆதரவு வழங்கப்பட வேண்டும். ஆயினும் அரச செலவினங்களைச் சனநாயக ரீதியாகக் கண்காணிக்கும் பாராளுமன்றத்தின் பங்கினை அளவுக்கதிகமாக வலியுறுத்துதல் உண்மைக்குப் புறம்பானதாகும். அங்கு காணப்படும் அமைப்புகள் பலவற்றுள் ஒன்றைத் தவிர சிக்கலான செயல் முறையில் எவையும் செல்வாக்குச் செலுத்த முடியாது. இன்று அரசாங்கம் தேசிய வருமானத்தின் 50 சத வீதத்தை பரந்துபட்ட பல்வேறு விடயங்களுக்காகச் செலவு செய்கிறது. அத்தகைய ஒரு சூழ்நிலையில், பாராளுமன்றமும் பொதுநிதியும் என்னும் நூலில் ஆன் ரொபின்சன் (Ann Robinson) "நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட அல்லது நன்கு சேவையாற்றிய சட்டம் பரவலான கட்டுப்பாட்டை வைத்துக்கொள்ளும் என ஒருவர் உண்மையிலே எதிர்பார்க்க முடியாது. பொதுமக்கள் சபையானது, பொதுச் செலவினங்களைத் தீர்மானிக்கும் செயல்முறைகளில் பங்குகொள்ளும் பலருள் செல்வாக்குடையதொன்றாக இருக்கும் என நம்பலாம்".
நடைமுறைச் செலவில் குறிப்பிட வேண்டியுள்ள இன்னொரு அம்சம் வரவு செலவுத் திட்ட அமைப்பினை விளங்கிக் கொள்வதிலுள்ள கடினத் தன்மையாகும். நாம் தொடர்ந்தும் வரவு செலவுத் திட்டப் பற்றாக் குறையைக் கூடுதலாக அனுபவிப்பதால், பொதுப்படுகடனுக்கும் உயர்ந்த வட்டிவீதம் கொடுக்க வேண்டிய நிலையுண்டு. 1996 இல் பொதுப் படுகடனுக்கான வட்டி வீதம் 48,322 மில்லியன் ரூபா அளவில் உயர்ந்தது என்றும் அது நடைமுறைச் செலவில் 29 சத
191

Page 104
வீதம் என்றும் மதிப்பீடு செய்யப்பட்டது. அரசாங்க சேவையிலுள்ளோரின் மொத்தச் சம்பளமாக 40,650 மில்லியன் ரூபா அல்லது நடைமுறைச் செலவின் 24 சத வீதம் வழங்கப்பட்டது. அரசாங்க ஓய்வூதியப் பணம் 16,900 மில்லியன் ரூபாவாகும். பிரதி நிதியமைச்சர் சுட்டிக் காட்டியது போன்று, "வட்டி, சம்பளம், ஓய்வூதியம் என்பன பெருமளவு நெகிழ்ச்சியுடன் காணப்பட்டது என்றும் இவை நடைமுறைச் செலவின் 63 சதவீதமாகவும் அரசாங்க வருமானத்தின் 2/3 பங்கு எனவும் கருதலாம். இது நிதிமுறைமையில் காணப்பட்ட பெருங்குறைபாடாகும்” சிவில்சேவைச் சீர்திருத்தம் பற்றிய பிரச்சினை நடைமுறைச் செலவைக் குறைக்கும் அல்லது அவ்வாறே பேணும் எனக் கூறமுடியாது. பாதுகாப்பு ஆளணியினர் தவிர்ந்த பல அரச பணியாளர்கள் தொகை 1990 ஆம் ஆண்டில் 609,750 இலிருந்து 1994 இல் 700,000 ஆக 15 சத வீத அதிகரிப்பைப் பெற்றுள்ளது. கொள்கை ஆய்வு நிறுவனம் (The Institute of Policy Studies) தனது "பொருளாதார நிலைமை 1995” என்ற அறிக்கையில், "வெட்டுகளை மேற்கொள்ளக் கூடிய சில துறைகளுள் ஒன்று உப்பிப்போன பணித்துறை ஆட்சியாகும்” எனச் சுட்டிக் காட்டியுள்ளது. ஆயினும் அதன் போக்குகள் எதிர்த்திசையில் அமைவதாகத் தெரிகிறது. ஆசிரியர் நியமனம், பிரதேசச் செயலாளர் மட்டத்தில் சமுர்த்தி நிகழ்ச்சித் திட்டத்தை முகாமைத்துவம் செய்ய 1500 பட்டதாரிகள் நியமனம், மேலும் 23,000 சமுர்த்தி நியாமாக்காக்களைப் (Niyamakas) பணிக்கு அமர்த்தல், சம்பள ஆணைக்குழு நியமனம் ஆகியன யாவும் பணித்துறையாட்சியைக் குறைத்து எடைபோடும் நோக்கில் எதனையும் கூறவில்லை. அரசாங்கத்தின் தொழிற்பாடுகளையும், மேல் மிகுதியான, ஒன்றுக்கொன்று தொடர்புடைய செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தல், ஒழுங்கமைப்பு மீளாய்வைப் பொறுப்பேற்றல், தொழில் நிலைப் பிரிவு முகாமைத்துவம் ஆகியவற்றின் மூலம் நவீன சந்தைப் பொருளாதாரத்தின் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
நடைமுறைச் செலவில் காணப்படும் இவ்வாறான சீரற்ற தன்மைகள் மூலதனச் செலவில் பொது முதலிடு தொடர்ந்தும் வீழ்ச்சியடையக் காரணமாயமையும். 1992 இல் மூலதனச் செலவிலான முதலிடு மொத்தத் தேசிய வருமானத்தின் 5.9 சதவீதமாக இருந்தது. 1993 இல் 6.7 சத வீமாகவும், 1994 இல் 5.3 சத வீதமாகவும் காணப்பட்டது. 1995 இல் கூட மூலதனச் செலவிலான முதலிடு மொத்தத் தேசிய உற்பத்தியின் 8 சத வீதமாக இருக்க வேண்டும் என மதிப்பீடு செய்யப்பட்ட போதிலும் மெய்ச் செலவினம் குறைவாக இருந்தது.
192

8.5 பில்லியன் ரூபாவிலும் செலவு குறைவாக இருந்தமை இதற்குக் காரணமாகும். கொள்கை ஆய்வு நிறுவனம் சமூக மற்றும் பெளதிக அடிப்படை வசதிகளைக் (நாட்டின் நீண்டகால உள்ளார்ந்த ஆற்றல்) குறுங்கால அரசியல் நோக்கங்களுக்காகத் தியாகஞ் செய்தல் தவறெனச் சுட்டிக் காட்டியது. உலக கோதுமை விலையில் உண்டான அதிகரிப்புக் காரணமாக, கோதுமை மாவுக்கான மானியம் உணவு முத்திரைக்கு வழங்கப்பட்ட மானியத்திலும் பார்க்க உயர்வாக இருந்தது என அவ்வறிக்கை மேலும் சுட்டிக் காட்டுகிறது. இத்தகைய அளவிலேயுள்ள வெளிப்போக்குகள் மேலும் பேணப்படுமா, மாவுக்கு வழங்கப்படும் மானியம் தேவையைப் பொறுத்து விரிவுபடுத்தப்படுமா என்ற வகையில் வினாக்கள் முன்வைக்கப்படலாம்.
இப்பொழுது வருமானப் பிரேரணைகள் பற்றிய சில அம்சங்களை எடுத்துக் கூறுதல் அவசியமானது. பல்வேறு பேச்சாளரும் வருமானப் பிரேரணைகள் விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும், நுகர்வோருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடிய வகையில் கற்பனையில் அமைக்கப்பட்டன எனச் சுட்டிக்காட்டினர். இந்த வகையிலே வரவு செலவுத் திட்டத்தை ஒரு வெகுசன வரவு செலவுத் திட்டம் அல்லது நுகர்வோரைக் கருத்திற் கொண்ட வரவு செலவுத் திட்டம் என விபரிக்கலாம். வருமானப் பிரேரணைகளின் இவ்வாறான அம்சங்கள் சபையின் இரு தரப்புப் பேச்சாளராலும் வரவேற்கப்படும் என்பதில் ஐயமில்லை. நிருவகிக்கப்பட்ட செலவு அல்லது வருமானச் சலுகைகள் என்பவற்றிலும் பார்க்க, வாழ்க்கைத் தரம், சாதாரண மக்களின் நல்வாழ்வு என்பனபற்றி நாம் சிந்திக்க வேண்டும். பிரதியமைச்சர் சரியாகச் சுட்டிக் காட்டியது போன்று "வரவு செலவுத் திட்டத்தில் நிலவும் உயர் பற்றாக்குறை, பணவீக்கத்துக்கும் தனியார் துறைச் செயற்பாட்டுக்கும் கடிவாளமிடுகிறது” என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.
புதிய நிதிப் பிரேரணைகளின் முக்கிய பகுதியாக அமைவது, வரவு செலவுத் திட்டக் குறைநிலையை அரச முயற்சிகளைச் சீர்திருத்துவதன் மூலம் பெறப்படும் வருமானத்தைக் கொண்டு ஈடுசெய்யலாம் என்ற எதிர்பார்ப்பாகும். இந்த நிதியாண்டிலே அரசாங்கத்தின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்வதில் அரச முயற்சிகளின் drig5 (Digg, 9,606007 5(gCup (Public Enterprise Reform Commission) தோல்வியடைந்தமைக்குப் பொதுப்படுகடனை அடைக்கவும். பற்றாக் குறையை ஈடுசெய்யவும் 13 பில்லியன் ரூபாவைப் பயன்படுத்தியமையே
193

Page 105
காரணம் எனப் பேச்சாளர் பலரும் சுட்டிக் காட்டினர். வரவு செலவுத் திட்ட நோக்கங்களுக்காக இரு முகாமைத்துவக் கம்பனிகள் 850 மில்லியன் ரூபாவையும், இலங்கை மசகு எண்ணெய்ச் சுத்திகரிப்பின் மூலம் 600 மில்லியன் ரூபாவையும் பெறலாம் என நிதியமைச்சர் கூறுகிறார். திரவநிலைப் பெற்றோலிய வாயு உற்பத்தியில் ஷெல் கம்பனி ஒரு பங்குதாரராக இருப்பதன் மூலம் 2 பில்லியன் ரூபா கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. உலக வங்கியானது தனியார் மயமாக்கல், இரண்டு பெரும் அரசவங்கிகளின் பங்கினை மீண்டும் வரையறை செய்வதன் மூலம் திருத்தியமைத்தல், தொலைத் தொடர்பின் சகல அம்சங்களிலும் தனியார் துறை பங்குகொள்வதை அதிகரித்தல், இலங்கைப் புகையிரதப் போக்கு வரத்தினை மேலும் திருத்தியமைத்தல் போன்ற நிகழ்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளுமாறு கோரியுள்ளது. மேலும் அரச கூட்டுத்தாபனங்கள் நிதியமைப்புக்குப் பெருஞ் சுமையாக விளங்கியதோடு, 1992 இல் மொத்த வர்த்தக வருமானத்தில் 10 சத வீதத்துக்கு மேற்பட்ட பங்கினை உள்வாங்கிக் கொண்டது. 1992 இல் அரச கூட்டுத்தாபனங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட வரவில் 60 சத வீதத்துக்கு மேற்பட்ட தொகைக்கு இலங்கை மின்சார சபை, இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை மொத்த விற்பனவு நிலையம், அரச பெருந்தோட்டங்கள் என்பன பொறுப்பாக இருந்தன. வளங்களில் உண்டாகும் இவ்வாறான சேதம் பேரினப் பொருளாதாரத்தின் உறுதிப்பாடின்மைக்கு முக்கிய காரணமாகி விடுகிறது. அரச முயற்சிச் சீர்திருத்த ஆணைக் குழுவுக்குத் தடையாக விளங்கிய காரணிகள் தனியார்மயமாக்கல் மற்றும் மீளமைத்தல் போன்ற நிகழ்ச்சித் திட்டங்களைத் தாமதப்படுத்தும் போது அடுத்த ஆண்டுக்குரிய தொகையான 21 பில்லியன் ரூபா கூடுதலான எதிர்பார்ப்பாக இருக்கலாம்.
எமது நாட்டிலே மேற் கொள்ளப்படும் நேரடி வெளிநாட்டு முதலிடுகள் ஏமாற்றந் தருகின்றன என்பதையும் எடுத்துக் காட்ட வேண்டும். 1994 இல் இத்தொகை 160 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது. இது மொத்த தேசிய உற்பத்தியின் 1.6 சத வீதமாகும். இது அவசியமெனக் கருதப்பட்ட தொகையின் 1/3 பங்கிலும் குறைவானது. வெளிநாட்டு முதலிடு மேற் கொள்ளப்படுவதில் பிரதேசச் சமநிலையின்மை நிலவுகிறது. பல்வேறு துறைகளிலே காணப்படும் பற்றாக்குறையான கட்டுமான வசதிகளும் பெருந்தடையாகவுள்ளன. மேலதிக உருவாக்கல் இயலளவு இல்லாவிட்டால் அடுத்த வருட ஆரம்பத்தில் சக்தித் துறையில்
194

பற்றாக்குறை ஏற்படும். போக்குவரத்துத் துறையில் ஏற்படும் விரைவான விரிவாக்கம் கடும் போக்குவரத்துத் தடைகளை உண்டாக்குகின்றன. பிரதான போக்குவரத்து வாயில்களின் விரிவாக்க ஆற்றல் விவசாய அல்லது தயாரிப்புத் துறையின் ஏற்றுமதியிலுள்ள போட்டியை எதிர்கொள்ளக் கடினமாக இருக்கும். தொலைத் தொடர்புச் சேவைகளுக்கான திருப்தி செய்யப்படாத தேவைகள் தற்பொழுது இணைப்பு வழங்கப்பட்ட சாந்தாதாரரின் தொகையை மிஞ்சலாம். வீட்டுரிமையாளர்களின் அடிப்படையில் தலா ஒருவருக்கான சக்தி நுகர்வை அளவிட்டபோது அது இந்தியாவிலும் பார்க்கக் குறைவாகக் காணப்படுவதாக மதிப்பிடப்பட்டது. சுத்தமான குடிநீருக்கான அடைகையும் இந்தியாவிலும் பார்க்க இலங்கையில் மோசமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டது. BOO/BOOT ஒழுங்குகளையும், தனியார் துறைக் கட்டுமானங்களையும் ஊக்குவித்தல் சாதகமான விருத்திகளாக இருக்கும். BOT திட்டங்களைப் பொறுப்பேற்றல் சற்றுச் சிக்கலானது. "அவர்கள் பணம், காலம் எடுப்பார்கள் பொறுமையைச் சோதிப்பர்." ஆனால் நன்மைகளைக் கொண்டுவரும்.
எமக்குத் தேவை பலம் வாய்ந்த நிறுவனங்கள், தெளிவான கொள்கைகள் மற்றும் போதியளவு தொழில்நுட்ப ஆதரவுமே. பெருமளவுக்கு எல்லா அமைச்சுகளிலும் தரகு பற்றிய தீர்மானங்களில் செயலற்ற தன்மை நிலவுகிறது. தனியார்மயமாக்கல், மூலம் மூலதனச் சந்தைக்குப் புத்துயிர்ப்பு அளித்தலும் பெருமளவிலான மூலதனப் பாய்ச்சலும் இறுதியில் போராட்டத்துடன் தொடர்புபடுகின்றன. இந்த வரவு செலவுத் திட்ட விவாதம் போர்ச் சூழ்நிலையிலும் வடக்கு, தெற்குக்கு இடையே நிலவும் பொருளாதார ரீதியான பிரிவினைச் சூழ்நிலையிலும் இடம்பெறுகிறது. 1992 இலிருந்து 1995 வரையில் நாட்டின் சராசரி வளர்ச்சி வீதம் 4 தொடக்கம் 7 சத வீதம் வரை காணப்பட்ட போதிலும் வளர்ச்சிப் பொறியானது தயாரிப்புத் தொழில், நிருமாணம், சேவைகள் என்ற துறைகளிலே தெற்கில் தங்கியிருந்தது. வடக்கிலே, இது தொடர்ந்து வீழ்ச்சியடைந்ததோடு தற்பொழுது விவசாயம், மீன்பிடி வியாபாரம் அல்லது சேவைத்தொழில்கள் போன்ற சாதாரண பொருளாதார வாழ்க்கை சீர்குலைந்துள்ளது. அண்மைக் கால உப கண்ட வரலாற்றிலே, பொதுமக்கள் பெருமளவில் அகற்றப்பட்டமையையும் இடம்பெயர்ந்தமையையும் வடக்கிலே காண்கிறோம். பெருமளவில் இடம் பெற்ற மனிதாபிமான அடிப்படைத் துயரங்களையும் மனவெழுச்சி மற்றும் உளவியல் ரீதியான பாதுகாப்புகளையும் நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது. நாங்கள்
195

Page 106
ஏறக்குறைய 40 பில்லியன் ரூபாய்களை மரணத்துக்கும் அழிவுக்குமெனப் பயன்படுத்தும் அதேவேளை சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமென எதனையும் செலவு செய்யவில்லை. அரச கரும மொழித் திணைக்களத்தின் வரவு செலவுத் திட்டம் 1995 இல் 3 மில்லியன் ரூபாவாக இருந்தது. பெருந்தொகையான மனித வளம் தமது மதிப்பு மரியாதையையும் தமது உற்பத்தியாற்றலையும் இடம் பெயர்தலால் இழந்து நிற்கின்ற வேளையில் நாம் பேரினப் பொருளாதார உறுதிப்பாடுபற்றிப் பேசுதல் சாலச் சிறந்தது. போர்க்களச் சத்தங்கள் சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்கும் குரல் கொடுக்கின்றன. இப்போரையும் வன்முறைக் கொலைகளையும் முடிவுக்குக் கொண்டு வருவதைத் தூண்டும் பணி தவிர வேறு ஒரு பணியும் இல்லை. நாம் இதில் தவறுவோமாயின் எமது கூட்டுப் பொருளாதாரமும் அரசியல் எதிர் காலமும் நிச்சயமற்றதாகி விடும்.
13, கார்த்திகை, 1995
196

மாகாண சபைகளின் விற்பனை வரிகள் (வரையறைகளும் விதிவிலக்குகளும்) சட்டம்
பாராளுமன்றத்தினால் இயற்றப்பட்ட சட்டத்தில் விதந்துரைக்கப்பட்ட வரையறைகள், விதி விலக்குகள் 6 ன்பனவற்றிற்கமைய மொத்த, சில்லறை விற்பனைகள் மீது விற்பனை வரிகளை விதிக்கக்கூடிய அதிகாரத்தை மாகாண சபைகள் கொண்டிருக்கும் என அரசியலமைப்புச் சட்டத்தின் 13 ஆவது திருத்தம் எடுத்துக் கூறுகிறது. ஆகவே இச்சட்டம் விதிவிலக்குகளை விளக்கிக் கூறுவதனையும், வரையறைகளை வரைவிலக்கணப் படுத்துவதனையும் நோக்காகக் கொண்டுள்ளது. வரி விதிப்பு, நிதி என்பனவற்றின் உரிமை மாற்றம் என்ற விடயம் மத்திய மாகாண அரசுகளுக்கிடையிலான அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் 6ந்த ஒரு திட்டத்திலும் மைய முக்கியத்துவம் கொண்ட ஒன்றாக உள்ளது. இது வருமானக் கொள்கை அல்லது வரி நிர்வாகம் என்ற நோக்கிலிருந்து போதுமான கவனத்தை ஈர்த்துக் கொள்ளாத ஒரு விடயமாக உள்ளது. குறிப்பிடத்தக்க அளவில் மீளமைக்கப்பட்டு காலத்திற்கு ஏற்ப புத்தம் புது நிலைக்கு கொண்டு வரப்பட வேண்டிய தேவையினைக் கருதி 1988 இல் கலாநிதி எம்.ஆர்.பி. சல்கொட அவர்களினால் மறுசீரமைக்கப்பட்ட பொதுத் துறையில் வருமான விடயங்கள் என்றதொரு ஆய்வு காணப்படுகின்றது. கலாநிதி சல்கொட 1987 இல் மாகாண சபைகளுக்கு உரிமை மாற்றிக் கொடுக்கப்பட வேண்டிய வருமான மூலங்களின் விளைவு 1.65 பில்லியன் ரூபா என மதிப்பிட்டதுடன் இதில் விற்பனை வரியாக 715 மில்லியன் ரூபாய்கe எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். மாகாண சபைகளின் மொத்த வருமானத்தில் ஏறக்குறைய 45 சத வீதத்தை உள்ளடக்கிய முக்கியமான வருமான மூலாதாரத்தில் ஒன்றாக விற்பனை வரி காணப்படுகின்றது என்பது இந்த எதிர்வு கூறல்கள் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது.
197

Page 107
1987 இல் 9.88 பில்லியன் ரூபாய்களை வருமான இடை வெளியாகக் கொண்டு வருமானம் 2.5 பில்லியன் ரூபாய்களாக அதிகரிக்கும் என்றும் அதே வகையில் எதிர்வு கூறப்பட்ட செலவீனங்கள் 12.23 பில்லியன் ரூபாய்களாக இருந்தனவென்றும் மதிப்பிடப்பட்டது. 6ந்த ஒரு பரவலாக்கல் திட்டத்திலும் உள்ள வருமானக் கொள்கையுடன் இணைந்த பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் முகமாக மாகாண சபைகளின் வருமானம், செலவு என்பன பற்றிய விரைந்ததொரு ஆய்வினை மேற்கொள்வது இன்றியமையாததாகும். நிர்வாகம், தகவற் பரிமாற்றம், விதிவிலக்குகள், வரி விகிதங்கள் என்பன சம்பந்தமாக மாகாண சபைகளுக்கும் மத்திய அரசுக்குமிடையே பாரிய இணக்கப்பாட்டினை நிச்சயப்படுத்திக் கொள்ளவேண்டிய தேவை 6 மக்கு உள்ளது. வருமானத்திற்கும் செலவுக்குமிடையிலான இடைவெளியைக் குறைப்பதற்குரிய ஒரேயொரு முடியக்கூடிய வழி, உரிமை மாற்றப்பட்ட மூலங்களிலிருந்து மாகாண சபைகளுக்கான வருமானப் பாய்ச்சலினை உயர்த்துதல் அல்லது வருமானத்தைப் பகிர்ந்து கொள்ளுதல் அல்லது வருமான ஒப்படைப்பு ஒழுங்குகளை மேற்கொள்ளுதல் ஆகும். பல கிழக்காசிய, லத்தீன் அமெரிக்க நாடுகளில் மாகாண அரசுகளின் ஒரு சில பிரதான உள்ளக செலவீனங்களுக்கு நிதி வழங்கப்படும் பொது முறைகளில் ஒன்றாக குறிப்பிட்ட நோக்கிற்காக ஒதுக்கி வைத்தல் என்பதனைக் குறிப்பிட்ட வரிகள் அல்லது வரிக்குழுக்களிலிருந்து பொதுவாக அரசியலமைப்பு சட்டவிதிக் கூறு அல்லது எழுத்து வடிவச் சட்டம் ஊடாகக் குறிப்பிடப்பட்ட அரச நடவடிக்கைகள் அல்லது நடவடிக்கைப் பகுதிகளுக்கு வருமானத்தை ஒப்படைக்கும் செய்முறை என வரையறை செய்யப்பட்டுள்ளது. வருமானப் பரவலாக்கம் சம்பந்தமாக இந்திய அனுபவங்களை வருமான முறையில் மறு பரிசீலனை செய்துள்ள இந்தியாவில் பத்தாவது வருமான ஆணைக்குழு என்பதன் அறிக்கையைக் கவனத்தில் கொள்ள வேண்டிய தேவையும் எமக்குள்ளது.
18 güudf, 1995
198

இலஞ்ச ஊழல் ஆணைக் குழுச் சட்டம்
இலஞ்ச ஊழற் சட்டமானது கடந்த நான்கு தசாப்தங்களாக நமது சட்டப் புத்தகங்களை அலங்கரித்து வந்துள்ளதுடன் எட்டு முறை திருத்தப்பட்டுள்ளது. இலஞ்சக் குற்றமானது நமது தண்டனைக் கோவையில் இன்னும் நீண்டகாலமாக நிலைத்து வந்துள்ளது. அரசியலமைப்பு விவகார மற்றும் வெளிநாட்டு வர்த்தக அமைச்சரின் பணி சிரமமானது. இச்சபையின் இரு பகுதி உறுப்பினர்களும் இலஞ்சக் குற்றம் பற்றித் தீவிரமாகக் குரலெழுப்பிய போதும் பொது வாழ்க்கையில் இலஞ்சத்தை ஒழிப்பதற்கான ஆக்கபூர்வமான வழிகள் இல்லாமை குறித்து மக்கள் பெரிதும் அதிருப்தி கொண்டுள்ளனர். கருத்து ரீதியாகப் பார்க்கும் போது ஊழல் என்பது தனிப்பட்ட நன்மைகளுக்காக அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வதாகும். 1948 இல் நீதிபதி கிறேஷியன் நவீன ஊழல் நிகழ்வினைச் சமாளிக்கக் கூடிய அளவுக்குப் பழைய சட்டங்களுக்கான வியாக்கியானம் செய்ய முடியாமலிருப்பது பற்றித் தமது விரக்தியை வெளியிட்டார். விசாரணை ஆணைக் குழுவுக்குத் தலைமை வகித்த இரு மதிப்புக்குரிய நீதிபதிகளான எம்.டபிள்யூ.எச். டி சில்வா மற்றும் ஆர்தர் கெனமன் ஆகிய இருவருமே இலஞ்ச ஆணைக்குழு ஒன்றை அமைப்பது பற்றிக் குறிப்பிட்டனர். இது 1980 ஆம் ஆண்டில் 40 ஆம் இலக்கச் சட்டத்தின் படி உருவம் பெற்றது. ஊழல் பல வடிவங்களைக் கொண்டது. இலஞ்ச ஊழற் சட்டமானது அடிப்படையில் சட்டவிரோதமான முறையில் கையூட்டுப் பெறுவது தொடர்பானதாக அமைந்தது. ஆனால் பின்னர் ஏனைய குற்றச்சாட்டுகளும் இணைக்கப்பட்டன. சட்டமானது போதிய வலிமையற்றதாக ஏன் உருவாக்கப்பட்டதுP கெளரவ அமைச்சர் இலஞ்ச ஊழல்
199

Page 108
ஆணையாளருக்குப் போதிய சுதந்திரம் இல்லாதிருப்பதைச் சுட்டி க் காட்டினார்.
ஊழல்கள் நடைபெறுவது அரசின் நிறுவனங்கள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையைச் சிதைக்கின்றன. பெரிய அளவிலான அதிகாரத் துஷ்பிரயோகம் அதனைச் செய்பவருக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத வண்ணம் நடத்தப்படுமாயின் மக்கள் நம்பிக்கையை இழக்கின்றனர். மக்களுக்கு வெறுப்பூட்டும் அளவுக்குத் தனிப்பட்டோர் செல்வம் சேர்க்கும் போது அரசியல் முறைமையின் சட்டபூர்வத்தன்மையின் மீது மக்களின் நம்பிக்கை வீழ்ச்சியடைகிறது. சந்தை மற்றும் தனியார் துறை அபிவிருத்திக்கு முதன்மை வழங்கும் பொருளாதார அபிவிருத்தி மாதிரியானது போராசையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அரசாங்க உத்தியோகத்தருக்கும் பல்தேசியக் கம்பனிகளுக்கும் தொடர்புகள் இல்லாமல் பாரிய ஊழல்கள் நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை. கைமாறும் பெருந் தொகைக் கமிஷன் அந் நியக் கம்பனரிகளின் ஒப்பந்தக்காரர்களினால் வழங்கப்படுகின்றன. மூன்றாம் உலகத்துடன் வர்த்தகம் செய்வதற்கான செலவுதான் இலஞ்சம் என்று இவர்கள் கருதுகின்றனர்.
இலஞ்ச ஊழலை ஒழிப்பதற்கான அணுகுமுறையைப் பற்றிச் சிந்திக்கும் போதும் பொதுவாக ஊழலை வெற்றிகரமாக ஒழித்த நாடுகளின் நடைமுறையைப் பற்றி நாம் கவனம் செலுத்துகின்றோம். இத்தகைய நடைமுறைகளிலிருந்து நாம் அறிவது என்னவெனில் கடுமையான சட்டம் மாத்திரம் ஊழலை ஒழிக்கப் போதுமானதல்ல. இத்தகைய சட்டங்களுக்கு உதவியாகப் பல குறுங்கால, நெடுங்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளது. இத்தகைய ஏற்பாடுகளில் முதலாவது கொள்வனவு மற்றும் ஒப்பந்தம் செய்யும் நியமங்கள் தொடர்பான சட்டங்களும் நடைமுறைகளும் மீளாய்வுக்கும், சீர்திருத்தத்துக்கும் உட்பட வேண்டும். இதே போல பணம் வழங்கல் மற்றும் கணக்காய்வு நடைமுறைகளிலும் மீளாய்வு தேவைப்படும். இத்தகைய கொள்வனவு நடைமுறைகள் முடியுமான அளவுக்குத் தனியார் கம்பனிகள், பொதுக் கூட்டுத்தாபனங்கள், மற்றும் தனியார் மயப்படுத்தப்பட்ட தொழின் முயற்சிகள் ஆகியவற்றுக்குப் பொதுவானதாக இருக்க வேண்டும். இந் நடைமுறைகள் அவற்றின் வெளிப்படையான தன்மை, நியாயமான போட்டி, குறிக்கோள்களை வெளிப்படுத்தல், நியாயமான தெரிவுப் பிரமாணங்கள் மற்றும்
200

பிரச்சினைத் தீர்வுக்கான ஏற்பாடுகள் ஆகியவை தொடர்பாக மதிப்பீட்டுக்கு உட்பட வேண்டும். அத்துடன் குடியியல் சேவைச் சீர்திருத்தங்களின் பிரச்சினை பற்றியும் கவனத்திற் கொள்ள வேண்டும். அதிகாரிகள் தொழில்லாண்மை, ஒழுக்கம், ஊக்கம் மற்றும் வகைகூறல் ஆகியவற்றை இச் சீர்திருத்தங்கள் மேம்படுத்தக் கூடும். அத்துடன் ஊழல்களில் ஈடுபடும் கூட்டுத்தாபனங்களைப் பற்றிய ஒரு பட்டியல் தயாரிப்பதற்கான விபரங்கள் உதவியை வழங்கும் நிறுவனங்களுக்கும், பெறும் நிறுவனங்களுக்குமிடையே பரிமாறப்பட வேண்டும். உயர் தொழில்கள் தொடர்பான ஒழுக்க நியமங்கள் மற்றும் நடத்தைக் கோவைகள் ஆகியவை திருத்தப்படல் வேண்டும். இதன் மூலம் ஊழல் நடத்தைக்கும் உயர் தொழில் நடத்தைக்கும் இடையிலுள்ள வேறுபாடுகள் உறுதிப்படுத்தப்பட முடியும். நீதி அமைச்சர் அவர்கள் சர்வதேச வெளிப்படைத் தன்மை போன்ற சர்வதேசக் கண்காணிப்புக் குழுக்களை நமது நாட்டுடன் தொடர்புபடுத்த வேண்டும். நமது நாட்டிலும் இத்தகைய அமைப்புகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். விடய ஞானமும், விழிப்புணர்வும் உள்ள மக்கள் தான் அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிரான உறுதியான தடைகள்.
இலஞ்ச ஊழல் குற்றங்கள் மற்றும் அதிகாரத் துஷ்பிரேயாகம் தொடர்பான அண்மைக்கால விசாரணைகளில் நாம் சில குறிப்பிட்ட அனுமானிக்கக் கூடிய வட்டங்களைக் காண முடியும். 1970 களின் ஆரம்பத்தில் இலஞ்ச ஊழல் சட்டம் மிகவும் வேகத்துடனும் தீவிரத்துடனும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இக் காலத்தில் நடைமுறையில் கடைப்பிடிக்கப்பட்ட எல்லை மீறல்கள் நீதித்துறையின் கண்ணியத்தில் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையைச் சிதைப்பனவாக அமைந்தன. சாட்சியம், நடைமுறை ஆகியவற்றில் பொதுவாகக் கைக்கொள்ளப்படும் வழமைகள் இலஞ்ச ஊழல் மற்றும் அந்நியச் செலாவணி ஊழல் ஆகிய விசேட வழக்குகளில் மீறப்பட்டன. இதன் காரணமாக நீதி விசாரணைச் செயன்முறையின் கண்ணியத்தில் மக்களுக்கிருந்த நம்பிக்கை குறைவடைந்தது. இதே போல மக்கள் அபிப்பிராயம் மாறுபட்ட இன்னொரு சந்தர்ப்பத்தையும் இங்கு ஞாபகப்படுத்த வேண்டும். எழுபதுகளின் பின்னரைப் பகுதிகளில் அதிகாரத் துஷ்பிரயோகத்தை விசாரிப்பதற்காக விசேட சனாதிபதி ஆணைக்குழு விசாரணைச் சட்டம் முடுக்கி விடப்பட்ட போது தெரிவு செய்யப்பட்ட அலுவலர்களின் வகை கூறற் பொறுப்பினை விடுத்து' மக்களின் அபிப்பிராயமும் கவனமும் விசாரணைச் செயன்முறை மற்றும் அவற்றின் நியாயத் தன்மையின் பால் திரும்பியது.
201

Page 109
எனவே இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில் இம் மசோதாக்கள் விசேட நீதிமன்றங்களை அமைக்க மாட்டா என்பதும் நாட்டின் சாதாரண நீதிமன்றங்களில் விசாரணை நடந்த பின்னரே தண்டனை விதிக்கப்பட முடியும் என்பதுமாகும். குடியியல் உரிமைகள் நடவடிக்கைகளினால் இந்த அம்சம் பாராட்டப்பட்டுள்ளது எனினும் அவர்கள் இம் மசோதாக்களில் காணப்படும் விசாரணை அதிகாரம், மேலதிக தண்டனைகள் பற்றி அக்கறை கொண்டுள்ளனர். மனித உரிமைக் குழுக்களின் கருத்துக்கள் விசேட அவதானத்தை ஈர்க்கின்றன. ஏனெனில் அக்குழுக்கள் அரசியல் உணர்வுகளுக்கு அப்பால் நின்று கோட்பாடுகள் மற்றும் விழுமியங்கள் பற்றி அக்கறை செலுத்த வேண்டுமென்ற எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகியுள்ளன. இக்குழுக்களுக்குச் சமகால பொதுசன அபிப்பிராயத்துக்கு எதிரான தனிமைப்பட்ட நிலைப்பாடுகளை எடுக்க வேண்டிய நிலைமைகள் அடிக்கடி ஏற்படுகின்றன. இவ்வாறான பல விடயங்கள் பற்றி ஏற்கெனவே இச்சபையின் ஏனைய உறுப்பினர்களது கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. இவற்றில் முதலாவது "பொது ஊழியன் (Public Servant) என்னும் பதத்தின் வரைவிலக்கணம் தொடர்பானதாகும். இவற்றில் மிகவும் முக்கியமான இரு பகுதிகள் உள்ளன. முதலாவது பாராளுமன்ற அங்கத்தவர்கள் (மந்திரிகள் உட்பட) தொடர்பானது. பாராளுமன்ற அங்கத்தவர்கள் இலஞ்ச ஊழல் சட்டம் (13 ஆம், 14 ஆம் பிரிவுகளைப் பார்க்கவும்) மற்றும் குற்றவியல் கோவைக்கு உட்பட மாட்டார்கள் என்பது ஏற்றுக் கொள்ளவதற்கு சிரமமானதாகும். அத்துடன் ஆளுநர்கள், மாகாண மந்திரிகள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் என்போர் இன்னும் பிரச்சினையான ஒரு தொகுதிக்குள் அடங்குகின்றனர். இந்நிறுவனங்கள் 1987 ஆம் ஆண்டிலேயே தோற்றம் பெற்றன. அதனால் இலஞ்ச ஊழல் சட்டம் மற்றும் குற்றவியல் கோவை ஆகியவற்றை உருவாக்கியோர் இவற்றைப் பற்றி கவனத்தில் எடுக்கவில்லை.
சொத்துக்களைப் பறிமுதல் செய்வதென்பது சொத்துக்களைப் பொதுவாகப் பறிமுதல் செய்வதாகாது. பிழையான வழிகளில் கிடைத்த சொத்துக்களே இதில் அடங்குகின்றன. இவ்விடயத்தில் தீர்மானம் மேற்கொள்ளும் பொறுப்பு நீதிமன்றங்களிடமே விடப்பட்டுள்ளன. எனினும் இது பெறுமதிக்காகக் கொள்வனவு செய்யும் உண்மையான வாங்குவோரதும், பெறுமதிமிக்க காணிகளின் மீது கொண்ட ஈடுபாட்டின் காரணமாக கொள்வனவு செய்யும் ஏனையோரதும் உரிமைகளைப் பாதிக்கும் எனவும் கருத்துக்கள்
202

தெரிவிக்கப்பட்டுள்ளன. கருத்து ரீதியாக இது சொத்துக்களின் பறிமுதல் மற்றும் விற்பனை பற்றியதாக இருப்பினும் இது உண்மையில் மேலதிக தண்டனையாகக் கருதப்பட வேண்டும் அல்லது திரும்பப் பெறும் ஒரு மாற்று வழியாகக் கொள்ளக் கூடாது. கடவுச் சீட்டுக்களை தடுத்து வைத்து சம்பந்தப்பட்ட நபர்கள் இலங்கையை விட்டு வெளியேறுவதைத் தடை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரம் பற்றியும் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. பயணம் செய்யும் சுதந்திரத்துக்கு ஊறு விளைவிக்கும் நடவடிக்கையே இதுவென்னும் நோக்கமும் உண்டு. இது தொடர்பான இப்போதுள்ள நடைமுறை என்னவெனில் விசாரணையில் இருக்கும் போது நாட்டைவிட்டு நீங்குவதைத் தடை செய்யுமாறு 80 ஆம் பிரிவின் கீழ் ஒரு நீதிவானைக் கோருவதாகும். எனினும் இந்த நடைமுறையில் ஏற்படும் தாமதம் நீதிக்குப் பங்கம் விளைவிக்குமாயின் நேரத்தின் அடிப்படையிலும் சில பகுதிகளைச் சேர்ந்த நபர்களின் அடிப்படையிலும் ஆணைக்குழுவின் கட்டளை பயன்படுத்தப்படலாம். 4 (2) ஆம் பிரிவின் படி கிடைக்கும் தகவல்களின் அடிப்படையிலேயே இத்தடை உத்தரவு கொண்டு வரப்படலாம். இவ்வாறான ஒரு கடவுச் சீட்டைத் தடுத்துவைத்தல் 3 மாதங்களுக்கு மேற்படலாகாது. அதற்குள் இலஞ்ச ஊழல் சட்டத்தின் 80 ஆம் பிரிவின் அடிப்படையில் ஆணைக்குழு சாதாரண நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.
அடிப்படை நீதிமன்றுகளின் தடை உத்தரவு மற்றும் அழைப்பாணை நியாயாதிக்கம் பற்றிய அதிகாரப் பரப்புப் பற்றியும் குரல் எழுப்பப்படுகிறது. இவற்றில் முதலாவது விடயத்தில் நீதிமன்ற அதிகாரம் உயர்நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. எனினும் அதனை வரையறைக்கு உட்படுத்துவது அவசியமாகலாம். அதேபோல அடுத்ததும் கூட 1970 இல் நிறைவேற்றப்பட்ட பொருள் கோடல் (திருத்தம்) கட்டளைச் சட்டத்தின் திருப்தியற்ற அம்சங்களை தக்கவைத்துள்ளதைப் போலத் தெரிகிறது. அதே போல இலஞ்ச ஊழல் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ஒருவரைப் பிணையில் விடுவதில் நீதிமன்றத்துக்கு இருக்கக் கூடிய சுயமான தீர்மானம் மேற்கொள்ளும் அதிகாரத்தை நீக்கியுள்ளது தொடர்பாகவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த ஏற்பாடு தற்போதுள்ள இலஞ்ச ஊழல் சட்டத்தின் ஒரு பகுதியைத் திரும்பவும் கொண்டுவர முயல்கிறது.
விவாதத்தின் குழுநிலையின் போது இவ்வேற்பாடுகள் சிலவற்றை மீளநோக்கும் சந்தர்ப்பத்தை அரசாங்கம் பெறும் என்பதில் எனக்கு
203

Page 110
எவ்வித சந்தேகமுமில்லை. தமது பதவி நிலையைத் தமது தனிப்பட்ட இலாபங்களுக்காகத் துஷ்பிரயோகம் செய்யும் நபர்களின் வகைகூறல் பற்றிய பொதுமக்களின் கரிசனையானது நீதியின் தேவைகளுடன் தனிநபர் உரிமைகள் மற்றும் நியாயமான நீதிமுறைச் செயற்பாடுகளின் பாதுகாப்பினை வழங்கச் செய்வதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
20 கார்த்திகை, 1995
204

பொருளாதார வளர்ச்சியில் சமத்துவமும் நீதியும்
அரசு தனது நீதி, பொருளாதார, சமூகக் கொள்கைகளை வடிவமைப்பதற்குப் பயன்படுத்தும் அடிப்படைக் கருவிகளுள் வரவு-செலவுத் திட்டமும் ஒன்று. அது பொருளாதாரக் கொள்கைப் போக்கின் திசையைக் காட்டும் ஒரு முக்கிய அறிக்கையாகும் வளர்ச்சிச் செயற்றிறன் முறைமையில் மேற்கொள்ளப்படும் அடிப்படை மாற்றங்களை அது கோடிட்டுக் காட்டுகின்றது. பாராளுமன்றத்தின் உண்மையான அதிகாரம் பணத்தின் மீது அது செலுத்தும் கட்டுப்பாட்டில் தங்கியுள்ளது. வரி விதிக்கவும் பொதுப் பணத்தைச் செலவு செய்யவும் பாராளுமன்றத்தின் அதிகாரம் பெறப்படவேண்டி உள்ளது. ஆனால் இன்று "கட்டுப்பாடு" என்பது ஒரு தவறான வழக்காகிவிட்டது. பிரித்தானிய விமர்சகர் பேனாட் கிறிக் சுட்டிக்காட்டியது போன்று "கட்டுப்பாடு என்பது செல்வாக்கு, நேரடி அதிகாரமல்ல; ஆலோசனை, கட்டாயம் அல்ல; விமர்சனம், முட்டுகட்டை அல்ல; துருவி ஆய்தல், தொடக்கி வைத்தல் அல்ல; பகிரங்கப்படுத்தல், இரகசியப்படுத்தல் அல்ல" பொதுப் பணத்தைத் திரட்டுவதும், திரட்டிய பணத்தைச் செலவழிப்பதும் கொள்கைத் தெரிவுகளுடன் இணைந்தது. இது ஒரு நாட்டின் செல்வப் பகிர்வு மீதும் செல்வச் செழிப்பின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
நீதி மீது சட்டவாக்கக் கட்டுப்பாடு என்பது ஒரு பொய்த்தோற்றம் கொண்டது என்று இன்று இங்கிலாந்தில் கூட விமர்சகர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் ஒரு முடிந்த முடிபு: நிதிச் சட்டம் ஒரு பொறிக்கப்பட்ட கல்வெட்டு. நடைமுறையில் உள்ளடக்கமான திருத்தங்கள் மிக அரிது. அரசின் உந்துதலின்றி எந்தச் செலவினத்தையும் மேற்கொள்ள முடியாது
205

Page 111
என்பது மிக உயர்ந்த யாப்பியல் முக்கியத்துவம் வாய்ந்த கொள்கை என்று "ஏர்ஸ்கைன் மே" சுட்டிக்காட்டியுள்ளார். செலவினத் தொகையைப் பாராளுமன்றம் கூட்டவும் முடியாது. தன் விருப்பத் தெரிவுத் தேவைகளுக்கு அதைப் பயன்படுத்தவும் முடியாது.
வரவு - செலவுத் திட்டத்தின் மீதான பாராளுமன்ற விவாதம் உள்ளியல்பில் ஒரு சங்கற்ப நடைமுறை மாத்திரமே. இதில் பொதுமக்கள் அக்கறை குறைந்து கொண்டே வருகிறது. அரசுகளின் நிதிக் கொள்கைகள் மீதான பாராளுமன்றத் துருவியாய்வுக்கான நடை முறைகள் போதாது என்றும் வினைப்பயனற்றது என்றும் இங்கிலாந்திலும், பொதுநலவாய நாடுகளிலும் கரிசனை கொண்டுள்ளனர். நிதி பற்றிய சட்டவாக்கவாளர்களின் துருவியாய்வு வரவு - செலவுத் திட்டத்தின் நடுவண் தன்மையிலிருந்து விலகிச் செல்ல வைக்கும் பல வெளிப்பாடுகள் தோன்றியுள்ளன. முதலாவதாக வரவு - செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட வருமான வழிவகைகளினால் ஏற்படக்கூடிய தாக்கங்களைத் தணிக்கக்கூடும் என்ற எண்ணத்தில் உத்தேச வருவாய் மும்மொழிவுகளை முன் கூட்டியே அறிவிக்கும் போக்கு உள்ளது. இரண்டாவதாக, வரவு - செலவுத்திட்டத்தில் காட்டப்பட்ட வருமானத்தையும் செலவினத்தையும் தவறான நம்பிக்கைத் தன்மையற்ற கணக்குக் காட்டல் என்ற நிலைக்குக் குறை நிரப்பு மதிப்பீடுகளின் அளவும் செயற் பரப்பும் தாழ்த்தி விடுகின்றன. சுட்டிக் காட்டப்பட்டிருப்பது போன்று கடந்த காலத்திய குறை நிரப்பு மதிப்பீடுகள் ஆண்டொன்றுக்குச் சராசரி 25 பில்லியன் ரூபாய்களை அடைந்துள்ளது. இது வரவு - செலவுத்திட்ட செலவினத் தொகையில் கால்வாசியாக இருக்கிறது. வரவு - செலவுத் திட்டத்தின் மீதான விவாதம் கொள்கைத்திட்டம் தொடர்பாக அமைய வேண்டும். குழு நிலையிலான விவாதத்தில் அமைச்சுகள் திணைக்களங்களுக்கான வாக்குப் பணம் விரிவாக அலசி ஆராயப்பட வேண்டும். இந்த இரண்டு நிலைகளுக்கும் இடையிலான வேறுபட்ட பண்பு பேணப்படுவதில்லை. குழம்பிய நிலையிலேயே காணப்படுகிறது. ஒரு பக்கத்தில் வரவு - செலவுத்திட்ட விவாதம் கருத்து மோதல் கொண்ட விவாதமாக இருக்கத் தவறிவிட்டது. முன்னைய பேச்சாளரின் சிந்தனைப் போக்கைப் பின் தொடர்வதில்லை. அதைத் தொட்டுத் தொடர்ந்து அதற்கு சார்பாகவோ, மாறாகவோ கருத்தைத் தொடர்ந்து கருத்துகளின் வளர்ச்சிக்கும் முழுமைக்கும் பேச்சாளர்கள் பங்களிப்புச் செய்வதில்லை. மறுபுறத்தில் ஒவ்வொரு பேச்சாளரும், எதிர்த்தரப்பினராக இருந்தாலும், அரச தரப்பினராக
206

இருந்தாலும் தாம் முன்கூட்டியே தயாரித்த கருத்துக்களையே முன்வைக்கிறார்கள். விவாதத்தின் போக்கில் சிறிதளவு கவனமே செலுத்தப்படுகிறது. மக்கள் கரிசனைக்குரிய திணைக்கள நடவடிக்கைகளை மீளாய்வு செய்வதற்காகவே குழுநிலை விவாதம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வரவு - செலவுத் திட்டத்தில் ஒரு புத்தாக்கம் உள்ளது. அது 1995 முதல் 1997 வரையிலான மூன்றாண்டுகளுக்கான வருவாய் மற்றும் செலவினம் தொடர்பான திட்ட ஏற்பாடாகும். நடை முறைச் சீர்திருத்தம் அவசியம் தேவைப்படுகிறது. இதன்வழியாக முன்கூட்டியே மதிப்பீடுகளைத் தயாரிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். இவற்றை மதிப்பீடுகள் தொடர்பான தெரிவுக் குழு ஒன்று ஆராய்ந்து முடிவு செய்யக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.
1983 பங்குனி மாதம் வரவு - செலவுத் திட்டத் தயாரிப்பு முறைகள் மீளாய்வு செய்யப்பட வேண்டிய தேவையைச் சுட்டிக் காட்டிக் கவனத்தை ஈர்த்தோம். கூடவே திறைசேரிக் கட்டுப்பாடுகளின் விளை பயன்களைப் பற்றியும் கவனத்தை ஈர்த்தோம். திறைசேரிக் கட்டுப்பாடுகளும் நிதிப் பராமரிப்பு முறைகளும் இன்றுவரை கிளாட்ஸ்ரோனின் கைவண்ணத்தையே காட்டுகின்றது. பத்து ஆண்டுகள் நிதியமைச்சராகவும், பன்னிரெண்டு ஆண்டுகள் பிரதம மந்திரியாகவும் இருந்த காலத்தில் செலவினங்கள் மீது செலுத்திய ஒரு சீரான கட்டுப்பாட்டு நடைமுறையின் நிழல் இன்றும் தொடர்கின்றது. தற்காலத் தேவைகளுக்கு ஈடுகொடுக்கும் விதத்தில் அவை விளைபயன் தருகின்றனவா என்பதில் கரிசனை காட்டப்படுகிறது என்று நாம் அன்று சுட்டிக்காட்டியது போன்று இன்றும் கரிசனை காட்டப்படுகிறது. 1961 இல் பிளவ்டென் குழு ஆக்கத் தன்மையான பாராளுமன்றக் கட்டுப்பாட்டுக்குச் சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டுமென்று விதப்புரை வழங்கியது. நான் 1983 இல் ஆற்றிய உரையிலிருந்து மேற்கோள் காட்ட விரும்புகிறேன். "இந்தியாவிலும் இங்கிலாந்திலும் ஒரு மதிப்பீட்டுக் குழு செயற்பட்டு வருகிறது. இவை நிதித்துறை ஒழுங்கு முறைக்குத் தேவையான விதத்தில் மதிப்பீடுகளை விரிவான ஆய்வுக்கு உட்படுத்துகின்றன. பொதுக் கணக்குகள் ஆய்வுக்குழுக் கணக்குகளை ஆய்வு செய்கிறது என்பது உண்மைதான். ஆனால் அது செலவுகள் செய்யப்பட்ட பின்புதான் ஆய்வுகளைச் செய்கின்றது. ஆனால் மதிப்பீடுகள் குழுவின் அதிகார வரம்பு, அரசு மேற்கொண்ட கொள்கைத் தீர்மானத்தைக், கூடுதல் சிக்கனமாக அல்லது கூடுதற் திறனுள்ளதாக எப்படிப் பணம் குறைந்த மதிப்பீட்டுடன் அல்லது
207

Page 112
பணத்துக்கேற்ற மிகுந்த பயன்பாட்டுடன் செயற்படுத்தல7ம் 6/ன்பதை ஆராய்ந்து, பாராளுமன்றத்துக்கு அறிவிப்பதை இலக்காகக் கொண்டதாகும்" என்று கூறினேன். மதிப்பீடுகள் குழு ஒன்றை அமைப்பது பற்றிக் கவனம் எடுக்கும்படி பாராளுமன்ற நிலையியல் ஒழுங்கு விதிகள் குழுவை நான் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். அதன் மூலம், தற்காலச் சூழலுக்கு ஏற்ப, பாராளுமன்றம் இன்று நிதி மீது செலுத்தும் கட்டுப்பாடுகள் தொடர்பான வழி முறைகள், ஏற்பாடுகளை மீள் மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
அறிவு நுட்பம் வாய்ந்த நிதிப் பராமரிப்புத் தொடர்பான முதற் கோட்பாடுகளில் ஒன்று நடைமுறைக் கணக்கில் மேலதிகப் பணம் இருக்கும்படியாகப் பார்த்துக் கொள்வதாகும். தொடக்க நிலை வரவு - செலவுத்திட்ட ஏற்பாட்டின் போது பிரதிநிதிஅமைச்சர் நடைமுறைக் கணக்கில் பரிதாபகரமான அளவுக்கு நிதிப்பற்றாக்குறை இருந்த நிலையைச் சந்திக்க வேண்டி இருந்தது. இது மொத்த உள்ளூர் உற்பத்தியில் 2% ஆக இருந்தது. 1995 இல் உத்தேச மொத்த உள்ளூர் உற்பத்திக்கு 10% விட்டுக்கொடுக்கும் முன், முழு வரவு - செலவுத் திட்டத்திலும் காணப்பட்ட பற்றாக்குறை இவ் வரவு - செலவுத்திட்ட மதிப்பீட்டில் ஒட்டு மொத்தமாக ரூபா 9.8 பில்லியனாக இருந்திருக்கும். இதை ஈடுசெய்ய அரசு 7.5 பில்லியன் ரூபாய்களைக் கடன் வாங்கியிருக்க வேண்டும். இது மொத்த உள்ளூர் உற்பத்தியில் 1% ஆக இருந்திருக்கும். இதற்குப் பணத்தை அச்சடித்திருக்க வேண்டி இருந்திருக்கும். இது பணவீக்கத்தை மேலும் கூட்டியிருக்கும். வட்டி வீதமும் கூடியிருக்கும். மீளாய்வு செய்யப்பட்ட மதிப்பீடுகள் நிதி நிலைமையின் தோற்றத்தை முற்றிலும் மாற்றி அமைத்துள்ளது. மீளாய்வு செய்யப்பட்ட நிலையில் 12,203 ஆக இருந்த நடைமுறைக்கணக்குப் பற்றாக்குறை, நடைமுறைக் கணக்கில் 10,565 மேலதிக இருப்பாக மாற்றப்பட்டது. இதன் பயனாக வரவு - செலவுத் திட்டத்தில் ஒட்டு மொத்தமான பற்றாக்குறையாக இருந்திருக்கக் கூடிய ரூ. 98,166 மில்லியன், ரூ. 49,406 மில்லியனாகக் குறைக்கப்பட்டது. உண்மையில் வரவு - செலவுத் திட்டத்தில் உள்ள பற்றாக்குறை மொத்த உள்ளூர் உற்பத்தியில் 10% என்ற நிலையிலிருந்து மொத்த உள்ளூர் உற்பத்தியில் 7.5% ஆகக் குறைக்கப்பட்டது.
பேரினப் பொருளாதார வரைவின் ஒரு முக்கிய உள்ளிடு தொழிலியல் உறவுகளின் வரைவுடன் தொடர்புபட்டதாகும். ஏற்றுமதியின் ஏற்றத்தை இலக்காகக் கொண்ட தொழில்மயத் திறன்முறை சம்பளக்
208

கோரிக்கைகளை அடக்கியும், அதன் வழியாகத் தொழிற்சங்கங்களைப் பலவீனப்படுத்தியும் விட்டது. அமைச்சரால் கோடு காட்டப்பட்ட வளர்ச்சித் திறன்முறையின் நடுவண்கரு பொதுத்துறை முயற்சிகள் தொடர்பான சீர்திருத்தத் திட்டமாகும். மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஒரு புதிய நிறுவன வரைமுறையை முன்மொழிந்துள்ளார். அது பொதுத் துறை முயற்சிகள் சீர்திருத்த ஆணையம் என்றழைக்கப்படும். பொதுத்துறை சார்ந்த முயற்சிகளில் தனியார் துறையினரின் முதலீடுகளை ஊக்குவிப்பதும் ஒருங்கிணைப்பதும் இந்த அமையத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்பாகும். அமைச்சரால் கோடுகாட்டப்பட்ட திறன்முறைகளுள் அரச உடைமைகள், மூலதனங்களை விற்றல், குத்தகைக்கு விடுதல், பங்கு விற்பனைகள், திறந்த போட்டி என்பனவும், பொதுத்துறை தனியார்துறை முயற்சிகள், பராமரிப்பு, தொழில்நுட்ப மற்றும் சந்தைப்படுத்தல் ஒப்பந்தங்கள் என்பவற்றில் கூட்டு நடவடிக்கைகள் என்பனவும் அடங்கும். இந்த முயற்சிகளின் பேறாக 13 பில்லியன் வருமானம் கிட்டும் என்று அரசு உத்தேச மதிப்பீடு செய்துள்ளது. இந்த முயற்சிகளில் எந்தெந்தத் துறைகள் அடங்கும் என்று அரசு திட்டவட்டமாகக் காட்டியுள்ளது. தொலைத்தொடர்பு, விமானப் போக்குவரத்து, எரிபொருள், கப்பற்றுறை போக்குவரத்து, புகையிரப் போக்குவரத்துச் சேவைகள் என்பன இவற்றுள் அடங்கும். இலங்கை அரசினால் இது காலவரையில் அறிவிக்கப்பட்ட அரசுடைமைகளைத் தனியார் உடைமைகளாக்கும் உத்தேசம் தொடர்பான ஓர் உள்ளடக்கமான திட்டமாக இது அமைகிறது.
தொழில் தொடர்பான சேவைக் காலம் மற்றும் தொழில்சார் நிபந்தனைகள் என்பவை மீது அத்தகைய தனியார் மயப்படுத்தல் திட்டங்கள் ஏற்படுத்தக் கூடிய தாக்கங்கள் பற்றி நிறுவனங்களில் தொழில்புரிவோர் தமது வரலாற்றுத் தன்மையான கரிசனைகளை வெளிப் படுத்தியுள்ளனர் , எ ல் லாச் சூழ்நிலைகளிலும் பொதுத்துறைகளில் தொழில்புரிவோர் உரிமைகள் முற்றிலுமாகக் காக்கப்படும் என்று அமைச்சர் திட்டவட்டமாக உறுதி அளித்துள்ளார். வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு தொழிலியல் துறையில் நல்லுறவைப் பேண வேண்டியதன் அவசியத்தைப் பற்றி அரசின் கொள்கைத் திட்டத்தில் கரிசனை தெரிவிக்கப்பட்டது. இங்கும் வெளிநாட்டு முதலீடு தொடர்பான தொழிலாளர் கொள்கையில் பாதகமான மாற்றம் ஏற்படாதிருக்க அரசு உறுதி பூண்டுள்ளது. தொழில் கொள்வோருடன் தொழிலாளர்கள் கூட்டாகப் பேச்சுவார்த்தை
209

Page 113
நடத்தும் உரிமையையும், இத் தேவைக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள இணக்கம் காண்பதற்கான வழிமுறைகளையும் அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
தனியார் துறை வளர்ச்சியைப் பொறுத்தவரையில் இக்கால வரையில் கருத்தியல்ரீதியாக அது தவறானதாக அமைந்துவிட்டது. காரணம் தனியார் மயப்படுத்தல் முயற்சியில் தொழில் புரிவோரைப் பாதகமானவர்களாக நாம் கருதியதே ஆகும். முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் தனியார் மயப்படுத்தல் தொடர்பான நடை முறைகளைக் கையாளும் போது அவற்றின் வினைப்பயன்மிகு செயலாக்கத்துக்குத் தொழில்புரிவோர் முட்டுக்கட்டையாக இருப்பார்கள் என்று எப்பொழுதும் விளங்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது. சில முயற்சிகளில் தொழிலாளர்களுக்கு வேதனக் குறைப்பு, தொழில் புரியுமிடத்தில் நிலவும் பாதகமான சூழல், தொழிலாளர் நலன்புரி நடவடிக்கைகள் மேம்பாட்டில் அசட்டையான போக்கு, தொழிற்சங்க அமைப்பு நடவடிக்கைக்குப் பகிரங்கமான பகைமை என்பன தனியார் மயப்படுத்தல் வளர்ச்சிக்குச் சாதகமான முயற்சிகள் மீது தொழிலாளர்களை அவநம்பிக்கை கொள்ள வைத்துவிட்டது.
இன்று என்ன தேவைப்படுகிறது என்றால் தொழிலாளர்களுக்கும், தனியார் துறையினருக்கும், அரசினருக்கும் இடையியே ஒரு புதிய சமூக ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம் தனியார் துறை வளர்ச்சியில் தொழிலாளர்கள் சமமான திறனுள்ள பங்காளிகள் என்பதை ஏற்றுக்கொள்வதாக இருக்க வேண்டும். வெளிநாட்டு முதலீடு தொடர்பான அல்லது தனியார் மயப்படுத்தலுக்குட்பட்ட முயற்சிகளில் உள்ள தொழிற்றுறை சார்ந்த குறைபாடுகளைத் 'பதற்கான வழிமுறைகள் முற்றாக அக்குவேறு ஆணிவேறாக மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்பதே இதன் அர்த்தமாகும். இதனிடத்தில் தொழிற்றுறை சார்ந்த பிணக்குகளுக்குத் தீர்வு காண்பதற்கும் கூட்டாகப் பேரம் பேசுவதற்கும் இடமளிக்கும் மிகுதிறனுள்ள வழிமுறைகள் புகுத்தப்படவேண்டும். பேரினப் பொருளாதாரம் சார்ந்த விடயங்களில் தீர்மானம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளிலும் மற்றும் தொழிலியல் விரிவாக்கல் , நடைமுறைப் படுத்தல் நடவடிக்கைகளிலும் தொழிலாளர்கள் நேரடியாக இணைய வேண்டும். துறை மற்றும் தொழில் முயற்சி மட்டத்தில் கட்டமைப்பு மீள் வரைவுக் கொள்கைகளினால் ஏற்படக்கூடிய தாக்கங்களைப் பற்றிக் கலந்தாலோசிக்கவும் பேச்சு வார்த்தை நடத்தவும் ஒரு வரைமுறை ஏற்படுத்தப்பட வேண்டும். நிலக்கரி அகழ்வு, புடவை, இரும்புருக்கு,
210

கப்பல் கட்டல் போன்ற துறைகள் சார்ந்த மிகப் பாரிய மீள்கட்டமைப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்ட போது மேற்கு ஐரோப்பாவில் மும்முனைக் கலந்தாலோசிப்பு, பேர்ச்சுவார்த்தை முயற்சிகள் மிகவும் பயனுள்ளவையாக அமைந்துள்ளன. அத்தகைய பேச்சுவார்த்தை களுக்குரிய நிறுவன வரைவு ஓர் உத்தியோக பூர்வமான அமைப்பாக இருக்கலாம். அல்லது நடைமுறைச் சட்டதிட்டங்களின் இறுக்கப்பாடுகள் இல்லாது சுமுகமாகவும் நடத்தப்படலாம். வேதனத்தைத் தீர்மானித்தல், தொழிலாளர் தங்கு தடையின் றிக் கிடைத்தல், மிகைப்பட்ட கொடுப்பனவுகள் என்பவற்றுக்கிடையில் ஓர் இணக்கப்பாடு காண்பதை உள்ளடக்கியதே சமூக உடன்பாடாகும். ஆக, இத்துறையில் உண்மையிைல் தேவைப்படுவது தொழிலாளர் பங்கு, பணிகள் தொடர்பான அடிப்படையிலேயே வேறுபட்ட ஒரு புதிய கருத்தியலாகும். அத்தகைய ஓர் அணுகு முறைதான் தனியார்துறை வளர்ச்சிக் கொள்கைகள், கட்டமைப்புகளின் சீரமைப்புத் திட்டங்களுக்கு உயர்ந்த உறுதியான தொழிலியல் உறவுகள் அமைப்பு முறையின் ஆதரவு கிடைப்பதை உறுதி செய்ய முடியும். கொள்கைத் திட்டத்திலும் வரவு - செலவுத் திட்டத்திலும் தெரிவிக்கப்பட்ட தவறான பொருளாதாரக் கொள்கையின் கூடுதல் வெற்றியை அத்தகைய சீர்திருத்தங்களுக்கான ஆதரவுத் தளத்தை விரிவுபடுத்துவதன் மூலமே அடையலாம்.
தனியார் துறை வளர்ச்சி தொடர்பான சட்ட, மற்றும் அமைப்பியல் வரைவுகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும். தனியார் துறை வளர்ச்சி தொடர்பான சட்ட அமைப்பு முறையை மீளாய்வு செய்ய வேண்டிய தேவை உண்டு. இத்துறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும் தனியார் துறை வளர்ச்சி தொடர்பான சட்டங்களை மதிப்பீடு செய்தல் இனித்தான் மேற்கொள்ளப்படவுள்ளது. கவனத்தை ஈர்க்கின்ற பல துறைகள் உள்ளன:
(1) நியாயமான வர்த்தக ஆணையச் சட்டத்தை மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டிய ஒரு தேவை உண்டு. போட்டிக் கொள்கையை நடை முறைப்படுத்தல், நியாயமற்ற வர்த்தகம் மற்றும் தனியாதிக்க நடை முறைகள் என்பவற்றைக் கண்காணித்தல் என்பவை தொடர்பாக நியாயமான வர்த்தக ஆணையத்துக்குள்ள தகைமை பற்றிய யதார்த்த மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.
(2) கொம்பனிகள் சட்டச் சீர்திருத்தம் நடந்து கொண்டிருக்கிறது.
அதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.
(3) பொருளாதார முறிவு தொடர்பாக வழக்கில் உள்ள சட்டங்களை மீளாய்வு செய்ய வேண்டும். சந்தைப் பொருளாதாரத்தில் புதிய
2

Page 114
முயற்சிகள் சேர்ந்து கொள்வதற்கு அனைத்துத் தடைகளும் நீக்கப்பட வேண்டியது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் வாய்ந்தது அதில் ஈடுகொடுத்து நிலைகொள்ள முடியாத முயற்சிகளை வெளியேற அனுமதிப்பது வகையற்ற நிலைக்குத் தள்ளப்பட்டவர்களுக்குக் காலநேரத்தோடு ஆலோசனை வழங்கக்கூடிய சிறப்புத் திறமையுள்ள சட்ட வல்லுநர்களின் சேவையும் தேவை. நொடிந்துபோன தொழில்முயற்சியாளர்களுக்கு புனர்வாழ்வளிப்பது முடியாத விடயமாகிப் போகுமளவும் காத்திராமல் உதவி பெற இது மிக அவசியம். (4) வழக்கிலுள்ள கிட்டத்தட்ட 46 தொழிற் சட்டங்களை ஒழுங்காக மீளாய்வு செய்வதை மேற்கொள்ள வேண்டும். அந்த முயற்சி அவற்றை ஒரே சட்டமாக ஒன்றிணைக்க வழிவகுக்க வேண்டும். (5) பிறர்வினை மேற்கொள்ளுதல் தொடர்பான சட்டங்களையும் கொள்கைகளையும் கச்சிதமாக மீளாய்வு செய்ய வேண்டிய தேவையுண்டு. துலாம்பரத்தன்மை, வகை கூறும் கடப்பாடு மற்றும் நியாயமான போட்டியினைக் கொண்ட தனியார் மயப்படுத்தலுக்கு இடமளிக்கும் புதிய சட்ட வரைவும் இதில் அடங்கும். வரவு - செலவுத் திட்டம் தனியார் மயப்படுத்தலுக்கு ஏதுவான அமைப்பியல் ஒழுங்குகள் மற்றும் மாற்றீடான நுட்பங்கள் பற்றியும் பேசுகிறது. (6) வர்த்தகப் பிணக்குகளுக்குத் தீர்வு காண்பதற்கான நடைமுறை மீளாய்வு செய்யப்பட வேண்டும். இதில் ஒரு வர்த்தக நீதிமன்றம் அமைப்பது, வர்த்தகப் பிணக்குகள் தொடர்பான தீர்வு காண்பதற்கு ஒரு நடுவர் குழு அமைப்பது போன்ற விடயங்களும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். (7) தனியார் துறை வளர்ச்சிக்குப் பாதகமான தன்பைப் கொண்ட வர்த்தகம் சார் சட்டங்கள் மற்றும் குடிசார் சட்டங்களின் எல்லாக் கூறுகளும் கச்சிதமான மீளாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
இலங்கையின் பொருளாதாரப் பராமரிப்பில் பன்னாட்டு வளர்ச்சி, உதவிகள் முக்கிய கூறாக உள்ளன என்பது தெளிவு. இந்த உதவிகள் பல்வகைப்பட்டவை. மானியங்கள், உதவி வழங்கும் நாடுகளின் சலுகை அடிப்படையிலான உதவிகள், பன்முகச் செயற்பாடுகள் கொண்ட நிதி நிறுவனங்களின் உதவிகள் என்ற வகைகளில் இவை கிடைக்கின்றன. இத்தகைய உதவிகளிலே உண்மையில் கிட்டத்தட்ட 90 வீதமான உதவிகளை ஆசிய அபிவிருத்தி வங்கியும், உலக வங்கியும் யப்பானும் வழங்குகின்றன. முன்பு இந்த உதவிகள் 600
212

மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது. இந்த உதவியைப் பயன்படுத்திய விதமும், பகிர்ந்தளித்த விதமும் மிக மோசமான நிலையில் இருந்தன என்பது அபாயகரமானது. 1994 இல் பொருளாதார நிலை என்ற தலைப்பில் கொள்கை ஆய்வுகளுக்கான நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த உதவிகள் பயன்படுத்தப்பட்ட விகிதாசாரம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 1991 இல் 26.5% மாக இருந்த இந்த விகிதாசாரம் சரியத் தொடங்கியது. 1992 இல் 16.8% ஆகவும், 1993 இல் 14% ஆகவும் சரிந்தது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று "அதன் அதிகமான சலுகைத் தன்மையை நோக்கும்போது, இது வளர்ச்சி மற்றும் முதலீட்டு வாய்ப்புக்களை நாம் இழந்துவிட்டோம் என்பதையே காட்டுகிறது. இது எம்மால் தாங்கிக் கொள்ள முடியாத ஒன்றாகும்.” உதவிகளைப் பயன்படுத்தலில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சிக்கான பல காரணங்கள் இனம் காணப்பட்டுள்ளன. (1) பிறர்வினைகளை மேற்கொள்வதில் ஏற்பட்ட நடைமுறைத் தாமதங்கள், மற்றும் அடிக்கடி கேள்விகளை இரத்துச் செய்தலும் பின்போடுதலும் போன்ற நடவடிக்கைகள் (2) ஈடான ரூபாய் நிதியம் இல்லாமை, (3) முக்கிய வளர்ச்சித் திட்டங்கள் பராமரிப்பு மோசமாக இருந்ததும், துறைசாராதவர்கள் கையில் விடப்பட்டதும் உள்ளகக்கட்டமைப்பு வளர்ச்சியைப் பாதித்துள்ளன. அத்துடன், போக்குவரத்து, தொலைத்தொடர்பு, சக்தி, விவசாயம், கல்வி மற்றும் கிராமிய வளர்ச்சித் துறைகள் சார்ந்த மனித வளத் திட்டங்களையும் பாதித்துள்ளன. புனர்வாழ்வு, புனரமைப்புச் சார்ந்த வளர்ச்சித் திட்டப் பராமரிப்பு தொடர்பான அமைப்பியல் ரீதியான செயற்றிறன் பற்றியும், இதுபோன்ற கரிசனைகள் உண்டு. வட - கிழக்குப் புனரமைப்புக்கு அரசு திட்டமிட்டுள்ள 800 மில்லியன் டொலர் வேலைத் திட்டத்தை நிறைவேற்றுவதில் அரசு கொண்டுள்ள உறுதியை இந்தப் பின்னணியில் நோக்க வேண்டும்.
வரவு - செலவுத் திட்டத்தில் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ள நல்லாட்சி தொடர்பாகக் கவனம் செலுத்த வேண்டிய தேவையை இந்தக் கரிசனைக்குரிய விடயங்கள் தூண்டுகின்றன. அரசியல்ரீதியான வகைசொல் கடப்பாடு மற்றும் ஊழல் குறைப்பு முயற்சிகளை மேம்படுத்த முக்கிய நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்ட இந்த வேளையில், 1988 ஆம் ஆண்டின் நிர்வாகச் சீர்திருத்தக் குழு (வனசிங்க குழு) செய்த விதப்புரைகளை நடை முறைப்படுத்துவதற்கு அவசர கவனம் செலுத்தப்பட வேண்டும். இதற்கு அரசியற் திடசங்கற்பம் வேண்டும். அத்துடன் அமைச்சுகளின் எண்ணிகையைக் குறைப்பதற்கும், இரட்டிப்பு வேலைகளை நீக்குவதற்கும், செயலிழந்த
213

Page 115
துறைகளை மூடி விடுவதற்கும், அமைப்பு முறைகள் மற்றும் நடை முறைகளைச் சீரமைப்பதற்கும் திடமான தீர்மானமும் தேவை. இதற்குக் குடி சார் நிர்வாகச் சீர்திருத்தம் அவசியம் தேவை. அத்துடன் தேசிய மட்டத்திலும் மாகாண மட்டத்திலும் முகாமைத்துவத் திறன் மேம்படுத்தப்பட வேண்டும். இதுவரை இந்தப் பிரச்சினைகள் அரைகுறை மனசுடனேயே அணுகப்பட்டன. இந்தச் சிக்கலான பிரச்சினைகளைக் கையாள்வதில் உறுதியான தீர்மானம் வேண்டும்.
அரசின் நிதி முகாமைத்துவ முன் மொழிவுகளைப் பற்றி விரிவாக ஆராய நேரம் இடம் தராது. வரி விதிப்புக்குரிய வருவாய் எல்லை உயர்த்தப்பட்டுள்ளதை வரிசெலுத்துவோரும், நுகர்வோரும் வரவேற்பர். சுங்க வரிகள் சீராக்கத்தையும் குறைப்பையும் அனைவரும் வரவேற்பர். இப்போது தவிர்க்கப்பட்டுள்ள வளங்களை உள்ளடக்குவதற்காக வரி விதிப்புத் தளத்தை அகலப்படுத்தி நேரடி, மறைமுக வரிவிதிப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை தேசிய வரிவிதிப்பு ஆணையம் வலியுறுத்தியுள்ளது. கறுப்புப் பொருளாதாரம் பொது உள்ளூர் உற்பத்தியில் 6 வீதத்தை விழுங்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 1990 இல் இது ரூ. 1.6 பில்லியன் ஆகும். சில தனிப்பட்டோர், குழுமத்தோர் மீதான வரி விதிப்புகளில் உள்ள சமசீரின்மை நீக்கப்பட வேண்டும். ஆணையம் பல்கோணத் திறனைக் கருதிப் பல விதப்புரைகளைச் செய்துள்ளது. திறன் பேணல், கூடுதல் வருமானம், மேம்பட்ட ஒத்துழைப்பு, ஒளித்தல் தவிர்ப்பு போன்றவை இதில் அடங்கும். பொருட்கள், சேவைகள் மீதான ஒரு புதிய வரிவிதிப்பை அமைச்சர் அறிமுகம் செய்துள்ளார். மாகாண சபைகளுக்கு மொத்த, சில்லறை விற்பனை வரிவிதிக்கும் உரிமை உண்டு. இந்த வரிவிதிப்பிற்கும் அமைச்சர் குறிப்பிட்டுள்ள பொருட்கள், சேவைகள் வரிவிதிப்புக்கும் இடையில் ஒரு அமைதி காணப்பட வேண்டும். அதிகாரப் பரவலாக்கல் தொடர்பான செலவினங்களுக்குப் போதிய கவனம் செலுத்தப்படாமை ஒரு கவலையான விடயம். பொதுத் துறைகள் சீரமைப்புத் திட்டம் தொடர்பான நிதிக் கூறுகள் தொடர்பாகக் கலாநிதி எம்.வி. சல்காது ஒரு அறிக்கை தயாரித்துள்ளார். இந்த ஆய்வு தற்போதைய நிலைக்கு ஏற்பச் செய்யப்பட வேண்டும். பல்வேறு வரிகள் மூலம் மாகாண சபைகளுக்கு ரூ. 2,500 மில்லியன் கிடைக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. 1989 இல் செலவினம் ரூ. 12,388 மில்லியன் என மதிப்பிடப்பட்டது. பற்றாக்குறை ரூ. 9,888 மில்லியனாக உள்ளது. அது மத்திய அரசின் மானியத்தால் நிரப்பப்பட வேண்டி இருந்தது. இந்தியா போன்ற நாடுகளில்
214

மாநிலங்களின் செலவுகளில் 50% பரவலாக்கப்பட்ட வளங்களிலிருந்து பெறப்படுகிறது. பிரேசிலில் இது 77.4%, பாகிஸ்தானில் 86%, மெக்சிக்கோவில் 93.8% அதிகாரப் பரவலாக்கல் செய்யப்படும்போது அதற்கேற்ப வருவாய் தரக்கூடிய வளங்களையும் பரவலாக்க வேண்டும்.
2000 ஆம் ஆண்டு முடிவில் தேசிய வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்று வரவு - செலவுத் திட்டம் கூறுகிறது. இந்த இலக்குகளை அடையப், பல பேச்சாளர்கள் குறிப்பிட்டபடி இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டு இணக்கம் காணப்பட வேண்டும். வருங்காலக் கொள்கை சந்தைப் பொருளாதாரத்துக்கு ஆதரவாக இருக்க வேண்டும். தற்காலிகமானதாக அன்றித் தளம்பாததாக இருக்க வேண்டும். தலையிடுவதாக அன்றி உதவுவதாக இருக்க வேண்டும். நிச்சயமற்றதாக அன்றித் தீர்க்கமாகச் சொல்லக் கூடியதாக இருக்க வேண்டும். வளர்ச்சிக்கும் நியாயத்துவத் துக்குமிடையில் இணக்கம் காணக் கூடிய பேரினப் பொருளாதாரக் கொள்கைக்கு நாம் பரந்தளவு ஆதரவாக இருக்கிறோம். இது பிரிக்க முடியாதபடி அரசியல் தளப்பமின்மை, அமைதி மற்றும் பொருளாதாரச் செழிப்பு என்பவற்றுடன் பின்னிப் பிணைந்துள்ளது.
சாத்தியமானதன் கைவண்ணம்தான் அரசியற் கலை என்று பிஸ்மாக் கூறினார். இதற்கு வரவு - செலவுத் திட்டம் ஒரு நல்ல உதாரணம். திறமையான பொருளாதார முகாமைத்துவத் தேவைகளுக்கும் தேர்தல் தொகுதி அரசியலின் நிர்ப்பந்தத்துக்குமிடையில் நல்லிணக்கம் காணப் பெருமுயற்சி செய்யப்படுகிறது. வளர்முக நாடுகளுக்குப் பல்வேறு நாடுகளில் பயிலப்படும் நடைமுறைகள் ஏற்றதாக அமையவில்லை. "தாறிக் பரூணி” குறிப்பிட்டது போன்று வளர்ச்சிக் கொள்கைகள் சாத்தியங்களை மீள்வரைவு செய்யும் காரணிகளுக்குச் சுணைப்பாக இருக்க வேண்டும் என்று கூறினார். அது அவ்வந்நாட்டுப் பொருளாதார, சமூக, அரசியல் அமைப்புகளின் தன்மை, வரலாறு என்பவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அது அந்நாட்டுப் பண்பாட்டுத் தன்மை, இலட்சிய முரண்பாடுகளின் வரலாறு என்பவற்றையும் கவனத்தில் எடுக்க வேண்டும். இந்தச் சிறப்பியல் புகளைப் புறக் கணித்து, கொள்கை வகுத் து நடைமுறைப்படுத்துவது அபாயகரமான சமூக விளைவுகளை ஏற்படுத்தும்.
1 பங்குனி, 1995
215

Page 116

மாண்புறு மானிடர் சிலர்

Page 117

சோ. நடேசன்: மனித உரிமைகளுக்காகத் தனித்துக் குரலெழுப்பிய வீரர்
மகாராணியாரின் வழக்கறிஞரும் இலங்கை சட்ட அறிஞர் சபையில் முதுபெரும் உறுப்பினருமான சோமசுந்தரம் நடேசன் 1986 மார்கழி 21 இல் காலமானார். நடேசன் எண்பத்திரண்டு வயதுடையவராக இருந்த போதிலும் அவர் உடலாலும், மனதாலும் விழிப்புடனும் சுறுசுறுப்பாகவும் இருந்ததால் அவரது நண்பர்களுக்கும், சகாக்களுக்கும் அவரது திடீர் மறைவு ஒரு பெரும் அதிர்ச்சியாகவே இருந்தது.
இருபதாம் நூற்றாண்டின் திருப்பத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் ஆனைக்கோட்டையில் நடேசன் பிறந்தார். அவரது தந்தையார் இடைநிலைப் பாடசாலை ஒன்றின் நிர்வாகியாக இருந்தார். இளம் நடேசன் கொழும்பு றோயல் கல்லூரிக்கான தேசாதிபதியின் புலமைப் பரிசில் பெற்றார். அவரது கல்லூரி வாழ்க்கை சிறந்து விளங்கியது.
அவர் விளையாட்டுக்களில் அதிக ஆர்வம் காட்டவில்லை. அவருக்கு லத்தீனோ அல்லது கிரேக்கமோ தெரிந்திருக்கவில்லை. இருப்பினும், அவர் ஆங்கில இலக்கியத்தில் ஓரளவு ஆரம்ப ஆர்வங் காட்டியதுடன் தனது ஆசிரியர்கள் தனக்கு சார்ள்ஸ் டிக்கன்ஸ் என்பவரின் நூல்களை உரத்து வாசிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். பின்னர் அவர் பல்கலைக் கல்லூரியிலும், சட்டக் கல்லூரியிலும் சேர்ந்தார்.
பன்முகத் தோற்றம் கொண்ட திரு. நடேசனின் வாழ்க்கை முன்னேற்றங்களில் அரை நூற்றாண்டுக்கும் மேலான பொதுவாழ்வு சட்டத்திலும் அரசியலிலும், அநீதி, அடக்கு முறை என்பவற்றிகெதிரான அவரது இடையறாத போராட்டத்திலும் கழிந்தன. அவரது தொழில்
219

Page 118
ஒழுங்கு முறைக்கு அப்பாற்பட்டதான மூன்று குறிப்பிட்ட தன்மைகளைச் சுட்டிக் காட்டுவது எளிதாகும். முதலாவது அவர்து சட்டத் தொழில் முன்னேற்றம். நவீன மேற்கொணரும் அப்பழுக்கற்ற கல்வி வாழ்க்கை முன்னேற்றத்துடன் அது பிணைக்கப்பட்டது. சட்டத் தொழிலில் தனக்கென ஓர் இடத்தைப் பிடிக்க நடேசன் பல்வேறு சிக்கல்களையும் எதிர்த்துப் போராடுகையில் புகழ் மெதுவாக அவரைத் தேடி வந்தது. அரசியல் அதிகார மாற்றத்தின் போது அதன் செல்வாக்கின் உச்சத்தில் சட்டத் தொழில் இருந்தது. ஆற்றல், திறமை, கல்வி என்பவற்றில் உயர்ச்சி பெற்றவர்கள் புகழுடன் மிளிர்ந்த காலமது. தளபதிகளை மட்டும் கொண்ட ஓர் இராணுவத்துக்கு அது ஒப்பிடப்பட்டது. சட்ட ஆய்வுத் திறமைகள், வெளிப்படுத்தும் விளக்கலாற்றல் ஆகியவற்றை நடேசன் பொறுப்பேற்றுச் செயற்பட்டார். அவரது விளக்க ஈடுபாடு அவருக்கு விரைவில் வெற்றியையும், அங்கீகாரத்தையும் அளித்தன. அவர் சட்டத்துறைக்கு அனுமதிக்கப்பட்டு ஏறத்தாழ இருபது ஆண்டுகளின் பின்னர் 1953 இல் அவர் மகாராணியாரின் வழக்கறிஞரானார். (கியூ. ଗu'])
ஒரு குற்றவியல் வழக்கைப் போலவே, நிர்வாக அல்லது அரசியலமைப்பு விடயங்களிலான கூட்டமைப்பு அல்லது வரி வழக்கு அல்லது ரிட்மனு போன்ற எதிலும் அவர் கைதேர்ந்தவரானார். நீதிமன்ற நடைமுறை, வழக்குத் தந்திரங்களுடனான அவரது சாமர்த்தியம் சத்தியத்தில் அவரின் திறமைக்கு இணையாக இருந்தன. சட்டம் பற்றிய எத்தகைய பிரச்சினையிலும் அவர் தன்னைச் சம ஆர்வத்துடன் பிரயோகித்து சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ தகவல்களைப் படித்து ஒரு பழமையான புலமையாளரின் நிறைவுடன் தவது சட்டச் சமர்ப்பணங்களை வளர்த்துக் கொண்டார். நீதிமன்றத்தில் அவர் நடந்து கொண்ட பாணி விளையாட்டுத்தனமாகவும், சில வேளைகளில் அவரது எதிராளி வழக்கில் வெறுப்புடையதாகவும் விளங்கியது. இது தீர்வைத் தாமதப்படுத்தியதுடன் அவரது மிகவும் தீவிரமான எதிராளிகளை ஆத்திரப்படவும் செய்தன.
“நடேசனின் உண்மையான பலம் ஒரு வழக்கை நிர்முலமாக்கும் அவரது ஆற்றல், அவரது தன்மை, சமர்ப்பிக்கும் முறை என்பவற்றால் நீதிமன்றில் இருந்து ஒரு வழக்கை நகைப்புடன் வெளியேறச் செய்து விடுவார்” என ஒரு முறை பிரதம நீதியரசர் திரு. எஸ். சர்வானந்தா குறிப்பிட்டிருந்தார்.
220

ஒரு களத்தளபதி தாக்குதலுக்கோ அல்லது உள்ளுணர்வுக்கோ சிறிதும் இடமின்றி ஒரு இராணுவத் தொகுப்புத் திட்டங்களைத் தீட்டுவது போல அவர் தனது நீதிமன்றச் செயல் முறையைத் திட்டமிட்டார். தனது சக்தி, சமர்ப்பணம், விரிவுக்கான அர்ப்பணம் %ன்பவற்றால் தனது சமகாலத் திறமைசாலிகளையே தோல்வியுறச் செய்தார். சட்டத்திறன், விடாமுயற்சி, மன ஓர்மம் ஆகியன ஒன்று சேர அவர் ஒரு நிறைவான வழக்கறிஞராக அவரது சகாக்களால் பாராட்டப்பட்டார்.
நடேசனின் வாழ்க்கையின் இரண்டாம் கட்டம், 1947 இல் இலங்கைப் பாராளுமன்றத்தின் இரண்டாவது சபையான செனேட் என்ற மூதவைக்கு அவர் தெரிவானதாகும். ஒரு சிறிது இடைவெளி தவிர 1971 இல் அது ஒழிக்கப்படும் வரை அவர் தொடர்ந்து இருந்தார். அவரது பங்களிப்புகள் கவனமாக ஆய்வு செய்யப்பட்டன. அவரது செல்வாக்கு இரண்டாம் சபையின் வரையறைகளை மேம்படுத்தியதுடன், கட்சித் தலைவர்கள், தொழிற் சங்கவாதிகள், அக்காலப் பிரதமர்களால் கூட அவரது ஆலோசனைகள் பெறப்பட்டன. அரசியல் களத்தில் ஒரு முக்கிய நிலையைப் பெற்றுள்ள சிங்கள - தமிழ் உறவுகள் அவரது நேரத்தையும், சக்தியையும் அதிகமாக எடுத்துக் கொண்டன.
1949 இல் தேசியக் கொடி ஒன்று உருவாக்கும் இரு சமுதாயங்களுக்கு இடையிலான ஓர் உணர்வான, தீர்மானமான விடயத்திற்குரிய குழுவில் அவர் ஓர் உறுப்பிராக நியமிக்கப்பட்டார். அக்குழுவில் சேர் ஜோண் கொத்தலாவல, திரு. ஜே.ஆர். ஜெயவர்தன, அல்ஹாஜ் டி.பி. ஜாயா, திரு.எல்.ஏ. ராஜபக்ஷ, திரு. ஜீ.ஜீ. பொன்னம்பலம், மற்றும் திரு. சு. நடேசன் ஆகியயோர் அங்கம் வகிக்க திரு. எஸ். டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா தலைமை தாங்கினார்.
ஒரு தேசியக்கொடி தேசிய ஐக்கியத்தின் சின்னமாக விளங்க வேண்டுமென்றும், சிங்கக் கொடியுடன் கோடுகள் வெளியே இடப்படுதல் அதன் ஒற்றுமையின்மையின் ஒரு சின்னம் என வாதிட்டு உறுதியான சுதந்திரத்தை வெளிப்படுத்தி குழுவில் தனியான வேறுபாட்டாளரானார். 1950 ஆம் 1960 ஆம் ஆண்டுகளுக்கிடைப்பட்ட காலமொழிக் கிளர்ச்சியின் போது நடேசன் அரசியல் ரீதியாகக் கசப்புற்ற தமிழ்ச் சமுதாயத்தின் அபிலாஷைகளைத் தெளிவாக்குதலிலும், இணக்கப் பேச்சுகள் நடத்தக் கூடிய சூழ்நிலையை உருவாக்குதலிலும் ஒரு முக்கிய அறிவார்ந்த பங்களிப்பை வழங்கினார்.
22

Page 119
1957 இல் "சண்டே ஒப் சேவர்" இதழில் அவர் பல கட்டுரைகளை எழுதினார். அவற்றில் அவர், "இலங்கையில் வாழும் சிங்கள, தமிழ் தேசியவாதிகள் வெவ்வேறு மொழிகளைப் பேசுகின்றனர். பிரதான வேறு மதங்களைக் கடைப்பிடிக்கின்றனர். சிறப்பான வரலாற்று நினைவுகளையும் பாரம்பரியங்களையும் கொண்டுள்ளனர். இது நாம் எதிர்நோக்க வேண்டிய ஒரு மக்கள் தொகை இயல் யதார்த்தம்” என வாதிட்டார். இரு தேசிய இனங்களுக்கிடையிலான சிக்கல்கள், பிரச்சினைக்கு சனநாயக் கோட்பாடுகளைக் கையாண்டு பெரும்பான்மைத் தேசிய இனத்தின் ஆதிக்கத்தை சிறுபான்மை தேசிய இனத்தின் விடுதலையுடன் இணங்குவதன் மூலம் மட்டுமே தீர்க்க முடியும் எனவும் அவர் வாதிட்டார். இதர சமூகங்கள் இரு மொழிக் கொள்கை, கூட்டாட்சி (சமஷ்டி), பிரதேச சுயாட்சி, தேசிய சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளுக்கு அரசிலமைப்பு ரீதியான பாதுகாப்புகள் என்பவற்றை கடைப்பிடித்துள்ளன.
சமஷ்டி என்பது பிரிவினைக்கு வழிகோலும் இயக்கமாகும் என்ற எண்ணத்தை அவர் நிராகரித்தார். அவர் அதனை விளக்க "மறுபுறத்தில் தேசிய சிறுபான்மையினரைக் கொண்டுள்ள ஒற்றையாட்சி நாடுகளில்தான் பிரிவினை இயக்கங்கள் வேரூன் றியுள்ளன" எனக் குறிப்பிட்டார். இக் கட்டுரைகள் தமிழின கூட்டுத் தன்மையின் தேசியத் தோற்றத்தைப் பாதுகாக்கும் அவசியத்தை வலியுறுத்தியதுடன் பிற்கால அரசியல் நிலவரங்களை முன்னதாகவே நிழலிட்டுக் காட்டின.
முதலாவது குடியரசு அரசியல் யாப்பை வரைய 1971 இல் ஓர் அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்ட போது நடேசன் இக் கொள்களை மீட்பித்தார். "நாட்டில் இப்போது இடம்பெறும் விவாதத்துக்கு ஒரு பங்களிப்பு” என அவர் ஒரு தனிக் கட்டுரை நூலை வெளியிட்டார். ஒரு பல்லின ஆட்சி முறையில் ஓர் அரசியல் யாப்பானது ஏதும் சட்டபூர்வத்தை அனுபவிக்க வேண்டுமாயின் அது தேசிய சிறுபான்மையினரின் சம்மதத்தைப் பெற வேண்டும். அரசியல் நிர்ணய சபையில் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படைத் தீர்மானங்களை அவர் ஒரு விரிவான விமர்சனத்துக்குட்படுத்தி மொழி மற்றும் சிறுபான்மையினர் உரிமைகள் தொடர்பான ஏற்பாடுகள் புதியனவல்ல எனக் குறிப்பிட்டுக் காட்டினார்.
பாராளுமன்ற சிறப்புரிமைகள் பற்றிய 1952 இன் கூட்டுத் தெரிவுக் குழுவிலும், 1958 இன் அரசியலமைப்பு மீதான கூட்டுத் தெரிவுக்
222

குழுவிலும் நடேசனின் செல்வாக்கு குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அவர் எப்போதும் தமிழ் அரசியல் சுற்றளவிலேயே செயல்பட்டார். நடுமேடை ஜீ.ஜீ. பொன்னம்பலத்தினாலும், எஸ்.ஜே.வி. செல்வநாயகத் தினாலும் ஆக்கிரமிக்கப்பட்டு 1955 ஆம் ஆண்டளவில் பின்னவர் படிப்படியாக முன்னவரால் தேய்பிறையாக்கப்பட்டார். அவர் தமிழ் அரசியல் பிரயாணத்தில் அரிதாகவே பங்கெடுத்தார். 1956 சத்தியாக்கிரக இயக்கத்திலிருந்து தன்னை வேறுபடுத்திய அவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு இடைவிடாத விமர்சகராகக் குரல் எழுப்பினார். 1977 இலும், 1983 இலும் சமுதாயத்தைப் பாதித்த வன்முறைகளால் அவர் ஆத்திரமடைந்தார். தனது முயற்சிகளை வழமையான அரசியல் களத்திலிருந்து இலங்கையர் சமுதாயத்தில் மனித உரிமைகளின் பாதுகாப்பு நோக்கித் திருப்பி 6) ήι Lπή.
மனித உரிமைகள் செயற்பாட்டாளராக நடேசனின் பங்கு அவரது பொது வாழ்வில் மிகத் தீர்மானமான நீடித்த கட்டமாகும். இப்போராட்டம் அவரது அக் கறையான அறிவாற் றலுக்கும் நீதிக் கான மனவெழுச்சிக்குமான முழுமையான வெளிப்பாட்டைக் கொடுத்தது. பதினெட்டாயிரம் சிங்கள இளைஞர்களின் சாவுக்குக் காரணமான ஒரு கிளர்ச்சியின் பின்விளைவாக 1971 இல் சனநாயக உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் ஒன்றை அமைக்க அவர் உதவினார். அக்காலத்தில் அவசரகால அதிகாரங்கள் துஷ்பிரயோகம், காவலில் உள்ள நபர்களின் உரிமைகள் மறுப்பு, பொலிஸ் அராஜகம் ஆகியவற்றுக்கு எதிரான பொதுமக்கள் எதிர்ப்பில் சனநாயக உரிமைகளின் பாதுகாப்பிற்கான இயக்கம் முன்னணி வகித்தது.
அரசியலமைப்பு நீதிமன்றத்தின் முன் பத்திரிகைப் பேரவைச் சட்டமூலத்தை எதிர்த்து வாதாடிய இவ்வியக்கத்தின் வழக்கறிஞர் குழுவுக்கு நடேசன் தலைமை தாங்கினார். எனினும் வெற்றி பெறவில்லை. இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பு அமுலாகிய பின்னர் இயக்கம் தொடர்ந்து திருமதி.பண்டாரநாயக்கா மற்றும் அரசியல் எதிரிகளின் குடியியல் உரிமைப் பறிப்பு, பாராளுமன்ற ஆயுட்கால நீடிப்பு, சர்வசன வாக்கெடுப்பின் நியாயத்தன்மை, காவலில் சித்திரவதையும் சாவும், தடுப்புக் காவல், தோட்டத் தொழிலாளர் நாடற்ற நிலை, தொழிற் சங்கவாதிகள் மற்றும் தொழிலாளர் தொடர்பான இதர பிரச்சினைகளில் கவலையும் அக்கறையும் காட்டி வந்தது. இயக்கத்தின் முதுகெலும்பாக நடேசன்
223

Page 120
நிலைத்ததுடன் ஒரு சனநாயக ஆட்சியலமைப்பில் சட்ட மற்றும் அரசியல் முக்கியத்துவங்களில் தனது விட்டுக்கொடாத கடப்பாட்டின் இயக்கச் சின்னமாகவும் விளங்கினார்.
பாராளுமன்றச் சிறப்புரிமை பற்றிய பல தொடர் கட்டுரைகளை அவர் எழுதியபோது தன்னை அழிவுக்கு முன் வைத்தார். சிறப்புரிமை மீறலுக்காக அவருக்கு எதிராக நடவடிக்கைகள் தாக்கலாகின. இவ்வழக்குகளில் மனித உரிமைகள் அமைப்புகள், சட்ட அறிஞர் சங்கங்கள், வழக்கறிஞர்கள் என்பவற்றால் மிகுந்த சர்வதேச ஆர்வம் காட்டப்பட்டது. நடேசனுக்காக ஆஜரான சிரேஷ்ட வழக்கறிஞர் எச்.எல்.டி. சில்வா தனது திறமையான ஆரம்ப உரையில், "இவ்வழக்கு எமது சுதந்திரங்களின் சாராம்சம், யதார்த்தம் என்பன பற்றிய பிரச்சினையில் எங்களை விழித்தெழச் செய்கிறது. . 6ல்லா முறையான பிரகடனங்களும். புனிதரின் வார்த்தைகளில் "சத்தமிடும் பித்தளை, ஒலி எழுப்பும் கைத்தாளம் மட்டுமே தவிர அதில் முக்கியத்துவம் எதுவுமேயில்லை என்றிருக்குமா” என்றார். நாலு நாட்கள் விசாரணையின் பின்னர் உயர் நீதிமன்றம் நடேசனுக்கு எதிரான தீர்ப்பைத் தள்ளுபடி செய்து வழக்கறிஞரின் கூற்றை உறுதி செய்து “பாராளுமன்றத்தவர்களை நியாயமான விமர்சனத்தில் இருந்து தனித்து வைக்கப் பாராளுமன்ற சிறப்புரிமை கருதப்படவில்லை" என்று தெரிவித்தது.
1980 ஜூலை பொது வேலைநிறுத்தமும் நாற்பதாயிரம் அரசாங்க ஊழியர்களை வேலைநீக்கஞ் செய்ய அவசரகால அதிகாரங்கள் பயன்படுத்தப்பட்டதும் தொழிற்சங்க இயக்கத்துக்கு முக்கிய விளைவான ஒரு நிகழ்வாகும். சனநாயக உரிமைகள் பாதுகாப்பு இயக்க வெளியீடான வேலைநிறுத்தமும் அதன் பின்விளைவும் என்ற பிரசுரத்தை நடேசன் எழுதினார். அதில் "அத்தியாவசிய சேவைகளில் உள்ள வேலை நிறுத்தக்காரர்களின் பிரச்சினைகள் எவ்விதம் வரலாற்று ரீதியாகக் கையாளப்பட்டன என்ற ஒரு நியாயமான ஆய்வுடன், வேலை நிறுத்தக்காரர்களை நீக்கஞ் செய்தமை நீதி, நியாயம் அற்றதெனவும் வாதிட்டிருந்தார். 1982 இல் சர்வசன வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் பாராளுமன்ற ஆயுளை மேலும் ஆறு ஆண்டுகள் நீடிக்கும் அரசின் முடிவு, இயக்கத்தை அதிர்ச்சிக்கும் விழிப்புக்கும் உட்படுத்தியது. சர்வசன வாக்கெடுப்பை எதிர்த்து இயக்கம் பல நியாயபூர்வ அறிக்கைகளை வெளியிட்டதுடன் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நடை முறைகள் குறித்தும் கேள்வி எழுப்பியது. இக் காலப் பகுதியில் வாக்கெடுப்பை எதிர்த்த "பவிதிஹன்ட” (குருமாரின் 224

குரல்) என்ற துண்டுப் பிரசுரம் ஒன்று சட்ட விரோதமாகப் பொலிசாரால் கைப்பற்றப்பட்டு, அதன் செயலாளர் வன. ரத்னசார தேரோ கைதாகலாம் எனவும் தெரிய வந்தது.
இத் தகவல் கிடைத்த சில மணி நேரங்களில் நடேசன் உயர் நீதி மன்றத்திற்கு ஓர் அடிப்படை உரிமைகள் மனுதாக்கல் செய்தார். நீதி மன்றம் மனுவை ஏற்று கம்பஹா பொலிஸ் அதிபரைப் பத்தாயிரம் ரூபா நட்ட ஈடாகவும், ரூபா 2,100 செலவுத் தொகையாகவும் செலுத்த உத்தரவிட்டது. விடயம் அத்துடன் முடியவில்லை. அரசு ஓர் அசாதாரண நடவடிக்கையாகப் பொது நிதியிலிருந்து நட்ட ஈட்டையும், செலவுத் தொகையையும் செலுத்த உத்தரவிட்டுப் பொலிஸ் அதிபருக்கு பதவி உயர்வு வழங்கியது. அரசாங்க அதிகாரிகள் கடமைகளைச் செய்வதுடன் பாதகமான நீதிமன்ற முடிவுகளுக்குப் பயமில்லாமல் கட்டளைகளைப் பின்பற்றுவதை உறுதிப்படுத்தவே அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
1984 இல் இலங்கை பிரதம நீதியரசர் ப்ரிசளிப்பு வைபவம் ஒன்றில் ஆற்றிய உரையொன்றில் 1983 ஜூலை வன்செயல் பற்றிக் குறிப்பிடுகையில், வடிக்கின் பயங்கரவாதம் தொடர்பாக அரசின் செயலற்ற தன்மைக்கு எதிரான வெளிப்பாடே பொது மக்கள் எதிர்ப்பு எனக் குறிப்பிட்டார். நாட்டிலுள்ள பல்வேறு மிதவாதிகளும் பிரதம நீதியரசரின் 1983 ஜூலை நிகழ்வுகளின் ஆய்வு குறித்து அதிர்ச்சியும் கவலையும் அடைந்தனர். அத்தகைய கருத்துக்களை அவர் வெளியிட்டமை அவரது நீதித் துறைக் கடமைகளைப் பழுதடையச் செய்ததாகச் சிலர் கருதினர். வேறு சிலர் பேச்சுச் சுதந்திர வரையறைக்குள் அவர் நடந்து கொண்டார் என வாதிட்டனர்.
பிரதம நீதியரசரின் நடத்தை குறித்து ஆராய அரசு, பாராளுமன்றத் தெரிவுக் குழு ஒன்றை நியமித்தது. குழு தனது விசாரணையை முடித்துக் கொள்வதற்குள் அவர் ஓய்வு பெற்று விட்டார். இதனிடையே நடேசனைப் பிரதம நீதியரசர் தனக்காக வாதிட அமர்த்தினார். இயக்கமும், நீதித்துறை சுதந்திரத்தில் ஆக்கிரமிப்பாகவும், பிரதம நீதியரசரின் கருத்துச் சுதந்திரத்தில் தலையீடாகவும் அரசின் நடவடிக்கையைக் கருதியது.
சந்தேகத்திற்கிடமின்றி, நடேசனின் தொழில் துறைக்கு குடியியல் உரிமை வழக்கறிஞர் என்ற முறையில் போல் நல்லநாயகம் வழக்கு தகுந்த நிறைவாகும். கல்முனை பிரசைகள் குழுத் தலைவரான
நல்லநாயகம் சுமார் 40 தமிழ் இளைஞர்கள் காணாமற் போனமைக்கு
225

Page 121
இலங்கைப் பொலிசின் அதிரடிப் படையினரைச் சம்பந்தப்படுத்தியதாக துரோகக் குற்றச்சாட்டுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். நல்லநாயகம் அப்பாவி மக்களை அதிரடிப் படையினர் கொன்றதாக பி.பி.சிக்கும், "லேமண்டே”க்கும் பொய் அறிக்கை கொடுத்ததாக மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் உயர் நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.
1986 பங்குனி 17 இல் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு ஆரம்பமாகி ஆடி 17இல் முடிவுற்றதுடன் எல்லாக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டார். இவ்வழக்கு குடி மக்களின் உரிமைகளை விட்டுக்கொடுக்க போல் நல்லநாயகம் மறுத்தது மட்டுமன்றி, அப்பாவி குடி மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் பிரசைகள் குழுவின் பங்கையும் சுட்டிக்காட்டியது. நடேசன் சட்டத்துறையில் சாமர்த்தியம் கொண்டவர். தொழிலியலில் கைதேர்ந்தவர். உள்ளத்தில் சுறுசுறுப்புடையவர்; நீதிக்கு மட்டுமே வாதாடும் ஒரு மனம் கொண்டவர்.
தினகரன், சனவரி 1987
1956 இல் சிங்களம் மட்டும் சட்டத்துக்கு எதிராக தமிழரசுக் கட்சித் தலைவர்கள் காலிமுகத்திடலில் நடாத்திய சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்குபற்றியோரில் இடமிருந்து வலமாக திரு. ஜீ.ஜீ. பொன்னம்பலம், திரு. எஸ். நடேசன் (இரண்டாவது இடத்தில்), திரு. சி. சுந்தரலிங்கம், திரு. கு. வன்னியசிங்கம், திரு. எஸ்.ஜே.வி. செல்வநாயகம் ஆகியோர் காணப்படுகின்றனர்.
226
 

ஜீ. பார்த்த சாரதி : நடுவராக அவரின் பங்கும் தேசியப் பிரச்சினையும்
கொழும்பிலுள்ள சனாதிபதி இல்லம் உண்மையில் கடைசி ஒல்லாந்து தேசாதிபதியான ஜோன் ஜெராட் வான் அங்கில் பீக்கின் தனிப்பட்ட வாசஸ்தலமாக விளங்கியதாகும். அத்துடன் கொழும்பு கோட்டையின் மையமாக விளங்கியதும் அதுவே. இவ்வில்லமானது கட்டடக்கலைக்கு ஓர் உதாரணமாகும். வனப்புடன் வடிவமைக்கப்பட்டு பளபளக்கும் பைன் மரத்திலான உட்கூரைகளையும் அலங்காரமான, தரை அமைப்பையும் கொண்டு விளங்கும் இவ்வில்லத்தின் அழகுக்கு மேலும் அழகூட்டும் வகையில் 17 ஆம் நூற்றாண்டு டச்சு அலுமாரிகளும் கருங்காலி மரத்திலான மேசைகளும் நாற்காலிகளும் வரவேற்பு அறையையும், கூட்ட மண்டபத்தையும் அலங்களிக்கின்றன.
அன்று ஆடி 29 ஆம் திகதி மதிப்புமிக்க இந்திய அரசியல் வாதிகள் பலரும் சிரேஷ்ட அரசு அதிகாரிகளும் இரண்டு அரசுத் தலைவர்களின் வருகையை எதிர்பார்த்து கூட்ட மண்டபத்தில் நின்று கொண்டிருந்தனர். யூனியன் மந்திரிகளான திரு. நரசிம்மராவ், திரு. நட்வர் சிங், தமிழ்நாடு அமைச்சர்களான திரு. சீ. சிதம்பரம், திரு. எஸ். இராமச்சந்திரன் ஆகியோருடன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளரான திரு. ஜீ. கருப்பையா மூப்பனார் ஆகியோர் அந்தக் குழுவில் அடங்குவர். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பரஸ்பர விளக்கம் ஏற்படுவதற்கு முன்னோடியாக அமைந்த மிகவும் சிக்கலான, நீண்ட நேரப் பேச்சு வார்தைகளில் அவர்கள் அனைவரும் தமது பங்கினைச் செலுத்தியிருந்தனர். தனது கொழும்பு விஜயத்தின் காரணமாக வடக்கில் ஒரு இராணுவத் தாக்குதலை நிறுத்திவைத்த முன்னைய வெளிநாட்டு அமைச்சரான திரு. தினேஷ் சிங்கும்
227

Page 122
உடனிருந்தார். எனினும் ஒரு மனிதர் அங்கில்லாதது தெளிவாகத் தெரிந்தது. அவரே ஒப்பந்த வரைவில் காத்திரமான பங்களிப்புச் செய்தவர்.
மூன்று தகுதி விதிகள்
1983 ஆவணி மாதத்தில் இலங்கை சனாதிபதி ஒர் அரசியல் தீர்வினை எட்டுவதற்கு இந்தியப் பிரதம மந்திரி திருமதி இந்திரா காந்தி முன்வந்து வழங்கிய ஆதரவை ஏற்றுக் கொண்டார். இந்தியஇலங்கை உறவுகளில் இது ஒரு முக்கிய ஆரம்பமாகும். இதனைத் தொடர்ந்து மிகவும் நுணுக்கமும் சிக்கலும் நிறைந்த இந்தப் பேச்சுவார்தைப் பணிகளை மேற்கொள்ள ஒரு தூதுவரைத் தேடும் பணி ஆரம்பமானது. இத்தகைய முக்கிய பணியை மேற்கொள்ளும் நபர் மூன்று தகுதிவிதிகளுக்கு உட்படக் கூடியவராக இருக்க வேண்டுமென அரசாங்க உயர்மட்டங்களில் எதிர்பார்க்கப்பட்டது. முதலாவதாக அவர் இப்பிரதேசத்தின் புவியியல் - அரசியல் தேர்ச்சி மிக்க ஓர் ஆற்றல்மிக்க இராஜதந்திரியாக இருத்தல் வேண்டும். இரண்டாவதாக இலங்கை அரசியல் யாப்பின் நெளிவு சுழிவுகளைச் சமாளித்து ஓர் ஒற்றையாட்சி கொண்ட நாட்டில் தன்னாட்சி கொண்ட பிரதேசத்தை உருவாக்கக் கூடிய ஆற்றல் மிக்க ஒரு சட்டத் தரணியாக இருக்க வேண்டும். மூன்றாவதாக இந்தியாவின் உள்ளூர் அரசியலில் நன்கு பரிச்சயம் கொண்டவராக இருப்பதோடு இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையில் அனுதாபம் கொண்டுள்ள தமிழ்நாட்டின் அரசியல் அபிப்பிராயத்தின் நம்பிக்கையைப் பெற்றவராக இருக்க வேண்டும். திரு. பார்த்தசாரதி இந்த நிபந்தனைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யக் கூடியவராக இருந்தவர். பல தசாப்தங்களின் இராஜதந்திர சேவை மூலம் பெற்ற சிறிய அனுபவமும், சட்டப் பயிற்சியும் அவரை இப்பணிக்கு மிகவும் பொருத்தமானவராக ஆக்கியிருந்தன.
திரு. பார்த்தசாரதிக்கு வேறு பல சிறப்புகளும் இருந்தன. அவர் அன்றைய இந்தியப் பிரதமரின் பூரண நம்பிக்கையைப் பெற்றிருந்தார். பல சிக்கலான உள்ளூர், வெளிநாட்டுக் கொள்கைகள் பலவற்றில் அவரது ஆலோசனை பெறப்பட்டது. இவ்வாறு இந்திய அரசாங்கத்தின் உயர் மட்ட அதிகாரத்தை அவரால் பிரதிபலிக்க முடிந்தது. அத்துடன் எல்லாருக்கும் தெரியாத ஒரு விடயமும் ஒன்றிருந்தது.
228

திரு. பார்த்தசாரதி கொழும்பின் மத்திய, வர்த்தக மேற்குலகக் கல்வி கற்ற உயர்ந்தோர் குழுவைச் சார்ந்த பலருடன் நீண்டகாலமாக நட்பையும் தோழமையையும் பேணிவந்திருந்தார். சென்னை பிரெசிடென்ட் கல்லூரியின் கிரிக்கெட் குழுவுக்குத் தலைமை தாங்கி வந்த அவர் அக்காலத்தில் இலங்கை கிரிக்கெட் அரங்கின் ஜாம்பவானான ஒக்ஸ்போர்ட் புகழ் எவ்.ஸி.டி.சேரம் போன்ற வர்களுடன் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றிருந்தார். சர்வதேச சிவில் சேவையாளரான இராஜீ குமாரசாமி, இலங்கைக் கம்யூனிஸ்ட் க்ட்சியின் தலைவரான பீற்றர்.கெனமன் (மோகன் குமார மங்கலத்துடன் ஒன்றாகக் கற்றவர். இருவருமே கேம்பிரிஜ் யூனியனில் தலைவர்களாக இருந்தனர்) போன்றவர்கள் அவரது ஒக்ஸ்பிரிஜ் தோழர்களாவர். அத்துடன் அரசியல் அதிகாரத் தரகரும், லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைவரும், ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் தலைமையின் நெருங்கிய ஆலோசகருமான எஸ்மன்ட் விக்கிரமசிங்கவையும் கூட அவர் தெரிந்து வைத்திருந்தார்.
திரு. பார்த்தசாரதி தனது பணியின் சிக்கல்களையும் தனது பாதையில் நிறைந்திருந்த குன்று, குழிகளையும் சீக்கிரமே புரிந்து கொண்டார். 1983 ஆடியில் நடந்த வேதனை தரும் நிகழ்வுகள் இரு இனங்களையும் துருவப்படுத்தியிருந்தன. எனவே இனத்துவ இணக்கத்துக்கான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவாகவே இருந்தன. இரண்டு இனங்களும் இப்பிரச்சினை மீது கொண்டிருந்த இருவேறு பார்வைகளும் அவர்களது இனத்துவச் சிந்தனைகளில் ஆழப்பதிந்து போயிருந்தன. அவர் பணியாற்றக் கூடிய இரு இனங்களுக்கும் பொதுவான ஒரு களம் அவரது பார்வைக்கு எட்டவில்லை. நாட்டின் வரலாறு, சமகால அரசியல் அபிவிருத்திகள், இருபக்கத்திலுமிருந்த தலைவர்களின் ஆளுமைகள், மனப்பாங்குகள் ஆகியவற்றை அவர் விளங்கிக் கொள்ளவேண்டியிருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களின் பார்வைகள் மாற்றப்பட வேண்டுமெனில் அவர் இரு இனங்களினதும் அவர்களது தலைவர்களினதும் உள்ளுணர்வுகளையும் மனச் சான்றுகளையும் தொட வேண்டியிருந்தது.
எளிமையும் நகைச்சுவை உணர்வும்
ஜீபியின் ஆரம்ப விஜயங்கள் சிங்களத் தலைவர்களுடனும், முக்கியஸ்தவர்களுடனும் பரிச்சயம் கொள்வதாக அமைந்திருந்தது.
229

Page 123
சிரேஷ்ட அமைச்சர்களுடனும், எதிர்க்கட்சித் தலைவர்களுடனும் அவர் அளவளாவினார். அவர்கள் ஒவ்வொருவரையும் அவர் தனித் தனியாகச் சந்தித்து அவர்களது பார்வைகள், பயங்கள், கவலைகள், மனப்பதிவுகள் ஆகியவற்றை அவர் பொறுமையுடன் செவிமடுத்தார். பெளத்த பிரம்மஞான சங்கத்தின் தலைவரான திரு. காமினி ஈரியகொல்ல, மகா சங்கத்தின் உயர் பேரணியின் செயலாளர் நாயகமான வண. வல்பொல ராகுல ஆகியோர் உட்பட அவர் சிங்கள அபிப்பிராயத்தை உருவாக்கும் பலரையும் சந்தித்தார். அவர்களது அபிப் பிராயங்கள் பல உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டிருப்பினும் கூட அவர்கள் தவிர்க்க முடியாதவாறு இத்தன்னடக்கம் நிறைந்த நடு நிலையாளருடன் மிகவும் இணக்கமாகவே நடந்து கொண்டனர். சிறுசிறு மரியாதைக் குறைவுகள் ஏற்பட்ட போதும் கூட அவற்றை அவர் தன்னுடைய பணிவு, நகை உணர்வு காரணமாக ஒதுக்கித் தள்ளிவிட்டார். ஓர் இளந்தலைவர், ஜிபி அவர்கள் தன்னிடம் வரவேண்டும் என வற்புறுத்தியதோடு பொதுவான மரியாதை நியமங்கள் கடைப்பிடிக்கப்படல் வேண்டுமென மிகவும் வற்புறுத்தினார். ஆனால் ஜிபி அவர்கள் தமக்கே உரிய தன்னடக்கத்துடன் அதனை ஒத்துக் கொண்டார். ஏனெனில் இப்பிரச்சினையில் முக்கியமானவர்களின் பெருமையும் ஆளுமைப் பண்புகளும் அவர்களது நம்பிக்கைகளைப் போலவே முக்கியமானவை என்பதை அவர் ஏற்றிருந்தார்.
ட்றொஸ்கியவாத இடது சாரித் தலைவர்களான திரு. பெர்னாட் சொய்ஸா, கலாநிதி கொல்வின் ஆர்.டி. சில்வா ஆகியோருடனும் அவரது நண்பரான பீற்றர் கெனமன் ஆகியோருடனும் அவரால் இலகுவாகப் பழக முடிந்தது. அவர்களின் மதச் சார்பின்மை அவரைக் கவர்ந்தது. தேசிய சிறுபான்மையினரின் அபிலாஷைகள் குறித்த அவர்களது உடனடியான வெளிப்பாடுகள் அவரை ஆகர்ஷித்தன.
குவிமையம்
திரு. பார்த்தசாரதி வெகுசீக்கிரமே தமிழினத்தின் ஏக்கங்களினதும் எதிர்பார்ப்புகளினதும் குவிமையமானார். நேரத்தை அவர் பொருட்படுத்தவில்லை. பல தூதுக்குழுக்களை அவர் சந்தித்தார். பல்வேறு தீவிரவாதக் குழுக்களுடன் பேச்சு வார்த்தைகள் நடாத்தினார்.
230

அவர் அக்குழுக்களுக்கு அவர்களது வரையறைகளைத் தெளிவாக்கிக் கொள்ளுமாறு அறிவுரை கூறினார். தமது அடிப்படை வாதத்தின் நிலைகளிலிருந்து வழுவாமல் அடம் பிடித்துக் கொண்டிருந்தோருடன் தொடர்ச்சியாகப் போராடி பேச்சுவார்த்தைக்குள் கொண்டு வருவது அவரது வழியாக இருந்தது. அவரது பணி கடினமானது. வன்முறை அதிகரிப்பதும், சாதாரண மக்கள் சகிக்க முடியாத அளவுக்குத் துன்பப்படுவதும் அவருக்கு அதீத கவலையை அளித்தன. மனித உரிமைகள் மீறப்படும் சம்பவங்கள் அவரது கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டபோதும் மிகுந்த அக்கறையுடன் செவிமடுத்தார்.
தவிர்க்க முடியாதவாறு ஜீபி தமிழர் கூட்டு விடுதலை முன்னணியுடன் விசேட உறவை வளர்த்துக் கொண்டார். அவர்களுடன் அவர் அறிவு சார்ந்த கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். ஆனால் உணர்வு நிலையில் அவர் விலகியே இருந்தார். "சுய நிர்ணய உரிமை", மரபுவழித் தாயகம்" போன்ற கோட்பாடுகளைப் பற்றி மிகவும் ஆழமாக விசாரித்தறிந்தார். அவ்வாறான ஆய்வுகளின் போது ஒரு முக்கியமான அணுகுமுறை முரண்பாட்டை அவர் சுட்டிக் காட்டினார். தேசிய சிறுபான்மையினருக்கான தன்னாதிக்கமுள்ள பிரதேசம் (1984 இல் சர்வ கட்சி மாநாட்டுக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆலோசனை) என்னும் அணுகுமுறைக்கும் ஒரு சனநாயக அரசுக்கு சமஷ்டி அல்லது அரை சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வு என்னும் அணுகுமுறைக்கும் உள்ள முரண்பாட்டினை அவர் சுட்டிக் காட்டினார்.
இவ்விரண்டும் தெளிவான அரசியல் யாப்பு மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டவை என்பதையும் இரண்டும் ஒன்றாக முடியாது என்பதையும் அவர் எடுத்துக் காட்டினார். தமது செழுமை அரசியல், இராஜதந்திர அனுபவங்களைக் கொண்டு காஷ்மீர், மிசோரம், வியட்னாம் ஆகியவற்றின் விடுதலைப் போராட்டங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளைச் சுட்டிக்காட்டினார். தமிழர்களின் பேச்சுவார்த்தைக்கான நிலைப்பாடு உள்ளார்ந்த உறுதியான கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டுமே தவிர சந்தர்ப்பத்துக்கேற்றவாறு அமையக் கூடாது என்பதைச் சுட்டிக்காட்டினார்.
ஜிபி அவர்களின் காத்திரமான பங்களிப்பு இணைப்பு "சீ ஆகும்.
பேச்சுவார்த்தையில் உட்படுத்தக் கூடிய பிரதேச சபைகளுக்கான அதிகாரப் பகிர்வுக்கான ஆலோசனைகள் இவ்விணைப்பில்
231

Page 124
அடங்கியுள்ளன. 1983 ஆவணி மாதத்திலிருந்து மார்கழி மாத்ம் வரை 4 மாதங்கள் செலவிட்டு கொழும்பிலும், புதுடி ல்லியிலும் சனாதிபதி ஜயவர்தனாவுடன் கலந்துரையாடலின் பின்னர் அவர் இதனைப் பூர்த்தி செய்தார். ஜயவர்தன அரசாங்கத்திற்கும் தமிழர் அரசியல் தலைமைக்குமிடையில் பேச்சுவார்த்தைகளை ஒழுங்கு செய்வதில் தனது முழுத் திறமையையும் அவர் ஈடுபடுத்தினார். சமத்துவமும் அதிகாரப் பகிர்வும் இருக்கத்தக்கதாக, தனிநாட்டுக் கோரிக்கைக்குக் குறைந்த ஒரு அதிகாரப் பகிர்வுத் திட்டத்தைத் தயாரிக்குமாறு தமிழர் விடுதலைக் கூட்டு முன்னணியினை அவர் கேட்டுக் கொண்டார்.
நகல் திட்டத்தை மீளமைத்தல்
ஆரம்ப நகல் மாநிலங்களின் யூனியன் ஒன்றினை ஏற்படுத்துவதாக அமைந்தது. இது ஒரு சமஷ்டி அமைப்பாகும். இதன்படி சமூக, பொருளாதார அபிவிருத்தி கல்வி, கலாசாரக் கொள்கை, காணி, குடியேற்றம், சட்டமும் ஒழுங்கும் ஆகிய விடயங்கள் மாநிலங்களுக்கு பகிர்வு செய்யப்படும். தமிழர்களின் கோரிக்கை தொடர்பான திட்டத்தின் பதப்பிரயோகங்கள் சிங்கள எதிர்ப்புணர்வுக்காகத் தூண்டத் தக்கதாக அமைந்துவிடக் கூடாது என்பதில் ஜீபி தனது கருத்தைச் செலுத்தத் தவறவில்லை. இலங்கையின் ஐக்கியம், இறைமை, பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை ஏற்றுக் கொண்டு அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. மாநிலங்களின் யூனியன், பிரதேசங்களின் யூனியன் என மாற்றப்பட்டது. மத்திய அரசாங்கத்துக்கும் பிரதேசங்களுக்கும் அதிகாரம் பகிர்வு செய்யப்படுவதுடன், தமிழர்கள் ஆயுதப்படை, பொலிஸ், பொதுச்சேவை ஆகியவற்றில் தமது விகிதத்துக்கு ஏற்ற முறையில் பங்கினைப் பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேசிய அபிவிருத்தியில் இணைந்து கொள்ள வேண்டுமெனில் தமிழர்களின் மத்தியிலும் அதிகாரத்தைப் பகிர்வு செய்து கொள்ள வேண்டுமென ஜீபி அபிப்பிராயம் தெரிவித்தார்.
திரு. ஜயவர்தனா அதிகாரப் பகிர்வுக்கான அலகு ஒன்றைத் தவிர ஏனையவற்றை உடனடியாக ஏற்றுக் கொண்டார். மாவட்டங்கள் தான் பகிர்வுக்கான அடிப்படை அலகு என்பதே அரசாங்கத்தின் கொள்கையாக இருந்தது. மாவட்டங்களை இணைப்பதும் கூட அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் தமிழர்களுக்குக் கூடுதலாக விட்டுக் கொடுப்பதாக அமையும் எனவும் கருதப்பட்டது.
232

ஜிபி மற்றவர்களை இணங்கச் செய்யும் தனது வல்லமையின் விளிம்புக்குத் தான் வந்துவிட்டதை உணரத் தொடங்கினார். எனவே வேறு ஒரு உத்தியைக் கையாண்டார். திரு. ஜயவர்தனாவை நேரடியாகவே அவரது இல்லத்தில் சந்திக்க விரும்பினார். திரு. தொண்டமான் உட்பட இன்னும் ஒருவருடன் 1983 ஆவணி 6 ஆம் திகதி சனாதிபதியைச் சந்தித்தார். "தமிழர்களின் அடிப்படைக் கோரிக்கைக்கு நியாயமான ஒரு மாற்றீடாகத் தமது ஆலோசனைகளை" அவர் முன்வைத்தர். திரு. ஜயவர்தனா களைப்படைந்து காணப்பட்டார். எவ்விதமான குறிப்புகளுமின்றி செவிமடுத்தார். சொல்லப்பட்ட விடயங்களை அவர் கிரகித்துக் கொண்டாரா என்பதை விளங்கிக் கொள்ள முடியவில்லை. கூட்டம் முடிந்து படிகளில் இறங்கி வரும் போது திரு. பார்த்தசாரதி பின்வருமாறு குறிப்பிட்டார். "எனக்கு 73 வயதாகிறது. திரு. தொண்டமானுக்கு 73 வயதாகிறது. ஆனால் திரு. ஜயவர்தனா தனது 6 ன்பதுகளில் இருக்கிறார். வயது தனது தாக்கத்தைச் செலுத்தாமல் விடுவதில்லை. எனினும் திரு. ஜயவர்தனா முன் வைக்கப்பட்ட வாதங்களைக் கிரகிக்காமல் இல்லை. அடுத்த நாள் காலையில் அவர் மாகாண சபைகளை அமைக்க சம்மதம் தெரிவித்தார்.
பின்னர் திரு. ஜயவர்தனா புது டில்லிக்குச் சென்றபோது ஒரு மொழிவாரிப் பிராந்தியத்துக்கு திருமதி இந்திராகாந்தியின் ஆதரவையும் ஜீபி திரட்டி வைத்திருந்தார். அத்துடன் ஒரு சிக்கல் நிறைந்த இப்பிரச்சினையை வெளிப்படையாகவும் முழுமையாகவும் பேசித் தீர்ப்பதற்காகச் சகல ஆயத்தங்களையும் அவர் செய்து வைத்திருந்தார். திரு. ஜெயவர்தனா ஒத்துக் கொள்ளவில்லை. தன்னுடைய ஆதரவுத் தளத்தைப் பங்கப்படுத்திக் கொள்ள அவர் தயாராக இருக்கவில்லை. எனினும் அவர் விட்டுக்கொடுக்கத் தயாராகவே இருந்தார். இணைப்பு "சி" பிரதேச சபைகளை மாகாண எல்லைகளுக்கு மட்டுப்படுத்தும், எனினும் தமிழர் தலைமைத்துவம் சர்வகட்சி மாநாட்டில் மாகாணங்களின் இணைப்பை முன்வைக்கலாம். அசோக ஹோட்டலில் ஆலோசனைகளை மீளாய்வு செய்த திரு. ஜெயவர்தனா தான் எங்கு கையொப்பமிடவேண்டுமென ஜீபீ யிடம் கேட்டார். இது ஒரு ஒப்பந்தமல்ல என்பதனால் கையொப்பமிட வேண்டிய அவசியமுமில்லை என ஜீபி எடுத்துரைத்தார். சர்வகட்சி மாநாட்டுக்கான அடிப்படையாக இணைப்பு "சீ அமையுமெனவும் 1984 தை மாதத்தில் கூட்டப்படும் அம்மாநாட்டில் ஒரு கருத்தொருமைப்பாட்டை அடைய முடியுமெனவும் எதிர்பார்க்கப்பட்டது.
233

Page 125
ஆனால் நடந்ததோ வேறு. சர்வ கட்சி மாநாடு இணைப்பு 'சி'யை நிராகரித்தது. சிங்கள பெளத்த சங்கங்கள் மற்றும் சில எதிர்க்கட்சிகள் ஆலோசனைகளை விமர்சித்தன. அரசாங்கம் இணைப்பு ‘சி’ பற்றிய பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயன்றது. சிறுசிறு விடயங்களைக் காரணமாகக் காட்டி மகாநாடு ஒத்தி வைக்கப்பட்டது. முடிவில்லாமல் மகாநாடு நீண்டு கொண்டிருக்க வன்முறையும் ஆயுதப்படைகளின் அத்து மீறல்களும் அதிகரித்தன. தமிழ்க் குழுக்கள் விரக்தியடைந்தன. எனினும் மகாநாட்டிலிருந்து விலகிக் கொள்ள வேண்டாமென ஜிபி வற்புறுத்தினார். இறுதியாக 1984 மார்கழியில் ஆலோசனைகள் அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்டன. ஆலோசனைகள் மிகவும் குறைவான அதிகாரப்பகிர்வை வழங்கும் வகையில் குறைக்கப்பட்டிருந்தன. தமிழர்களின் எதிர்பார்ப்புகளுக்கு இத்திட்டம் கொஞ்சமும் ஏற்புடையதாக இருக்கவில்லை. 1984 மார்கழி 21 இல் சர்வ கட்சி மகாநாடு முடிவடைந்தது.
1985 இன் ஆரம்பத்தில் தனது அயலவர்களுடனான இருவழித் தொடர்பினை விருத்தி செய்யும் கொள்கை ஒன்றினைப் புது டெல்லி முனைப்புடன் முன்வைத்தது. இக்கொள்கை முனைப்புகள் முன்வைக்கப்பட்ட அதே நேரத்தில் பேச்சுவார்த்தைச் செயன்முறையில் ஜீபியின் பங்கு குறித்து கேள்விகளும் எழுப்பப்பட்டன. இத்தகைய போக்குக்கு இரண்டு காரணிகள் அடித்தளமாக அமைந்தன. முதலாவதாக தமிழ் அரசியல் தலமையானது வழிகாட்டல், ஆலோசனை மற்றும் அரசியல் உத்திகளுக்காக ஜிபியின் மீது பெரிதும் தங்கியிருக்கத் தலைப்பட்டமையாகும். அவர்கள் ஜிபியுடன் நடத்திய கலந்துரையாடல்கள் குறித்து இந்திய, இலங்கைப் பத்திரிகைகளில் கூடுதலாக விளம்பரம்படுத்தப்பட்டது. இது ஜிபியின் பங்கு பற்றிய சிங்களவர்களின் பார்வையைப் பெரிதும் மாற்றியமைத்தது. இரண்டாவது புதுடில்லியின் அரசியல் மற்றும் அதிகாரத்துவத்தின் சதிகளுக்கு ஜிபி பலிக்கடா வாக்கப்பட்டார். இதன் காரணமாக அவரைப்பற்றி தொடர்ச்சியாக அவதூறுப் பிரச்சாரம் மேற்கொண்டால் அவரது பங்கினை இழிவுபடுத்துவதற்கு முடியும் என கொழும்பு வட்டாரங்களில் நம்பிக்கை ஏற்பட்டது.
பாதகமான வரவின்மை
இத்தகைய சதித் திட்டங்கள் காரணமாக ஜிபி மிகவும் சஞ்சலமடைந்தார். அவரது நடிபங்கு சிறிது சிறிதாக மறையத் தொடங்கியது. எனினும் 234

இலங்கையின் தென்பகுதியிலும் அதன் இனத்துவப் பிரச்சினையிலும் அவர் ஒரு நிறுவன ரீதியான நினைவாக நிலைத்திருந்தார். இலங்கையின் இனத்துவப் பிணக்குகளின் சிக்கற் தன்மைக்கு முகம் கொடுத்து சிறப்பாகப் பேச்சு வார்த்தையைக் கொண்டு நடத்தக் கூடிய ஆற்றல் அவரைப் போல வேறு 6 வர்க்கும் இருக்கவில்லை. இதன் காரணமாக புதுடில்லியின் தீர்மானம் மேற்கொள்ளும் செயன்முறையும், பேச்சுவார்த்தை செயன்முறையும் பெரிதும் நலிவடைந்தன. இதன் விளைவு இலங்கையைப் பாதித்தது.
இனத்துவ அடையாளம்
இலங்கைத் தமிழர்கள் தெளிவான இனத்துவ அடையாளத்தைக் கொண்டவர்கள் என்றும் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் (தற்போது பிணக்குகளின் உறைவிடம்) மரபுரீதியாகத் தமிழர் பெரும்பான்மையைக் கொண்டவை என்பதையும் இலங்கை - இந்திய ஒப்பந்தம் அங்கீகரிக்கிறது. அத்துடன் இப்பிரதேசத்தை ஒரு தனித்துவமான மொழிவாரிப் பகுதியாகக் கொண்டு அதன் அடிப்படையில் ஒரு அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை முன் மொழியும் இவ்வொப்பந்தம் இப்பிரதேசத்துக்கு அரசியற் தன்னாதிக்கத்தை வழங்குகிறது. தமிழ் மொழி முதன் முறையாக சிங்களத்துடன் இணையாக உத்தியோக மொழியாக அமையும். இதன் காரணமாக நாடு முழுவதும் தமிழும் நிர்வாக மொழியாகவும் அமையும். அத்துடன் சகல அரசியல் கைதிகளின் விடுதலைக்கும், தமிழ் நாட்டிலிருந்த தமிழ் அகதிகளின் வருகைக்கும், போர் நடந்த பிரதேசங்களில் சிவிலியன் அரசாங்கத்தின் மீளமைவுக்கும் வழிவகுத்தது. ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் உண்மையில் அதன் முழுமையில் தங்கியிருந்தது. அத்துடன் இரண்டு அரசாங்கங்களுக்கிடையிலான ஒரு முறையான ஒப்பந்தமாகவும் அது அமைந்தது. இரு அரசாங்கங்களுக்கிடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் விளைவுகளும் ஒரு சமாதானப் படையும் இந்தியாவின் சமாதானப் பங்கு பற்றிய ஜீபியின் எதிர்ப்புக்களையும் விஞ்சியிருக்கக் கூடும். இணைப்பு ‘சி’க்கும் 1983 க்குப் பின்னர் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளுக்குமிடையே பல ஒப்புவமைகள் மேற்கொள்ளப்பட்டன. இணைப்பு ‘சி’ பொதுவான கோட்பாட்டு அடிப்படைகளைக் கொண்டிருந்தது. பின் வந்த நகல்கள் விளக்கமான ஏற்பாடுகளைக் கொண்டிருந்தன. ஒப்புவமைகள் எப்படியிருந்த போதிலும்
235

Page 126
இலங்கையில் ஒரு பல்லின அரசுக்கான அடிப்படையினை உருவாக்கிய பெருமை ஜிபியையே சாரும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஏனைய முயற்சிகளும் முக்கியமானவையே என்பதில் 61வ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் ஒப்பந்தத்தின் உள்ளார்ந்த கூறாக உள்ள அடிப்படைக் கருத்துகளை வரையறுப்பதில் ஜீபியின் பங்கு மிகவும் தீர்க்கமானதாக இருந்தது.
236

கலாநிதி எம்.சி.எம்.கலீல் இரங்கற் தீர்மானத்தின் மீதான உரை
தொண்ணுாறு வயது முதிர்ந்த நிலையில் தனது வாழ்வை முடித்துக் கொண்ட திரு. எம்.சி.எம். கலில் அவர்களின் மறைவு இலங்கையின் சுதந்திரத்தை அடுத்த காலப்பகுதி முழுவதுடனும் தழுவி இணைந்திருந்த அவரது அரசியல் வாழ்வுக்கு முடிவு ஒன்றினைக் கொண்டு வந்தது. டாக்டர் கலில் அவர்கள் சாதாரண அரசியல் வாதிகளுள் ஒருவரல்ல. அவர் உறுதி படைத்த நேர்மையாளராகவும், கருணை மிகுந்தவராகவும், பொதுத் தொண்டுகளில் முனைப்பார்வம் கொண்டவராகவும் விளங்கினார். உயர் குடியில் பிறந்து கருணை மிகு உளப்பாங்கு கொண்ட ஒருவர் ஒழுங்கற்ற, குப்பை கூழங்கள் நிறைந்த அரசியலில் வெற்றி வாகை சூடினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அவர் சட்டசபை அங்கத்தவராகவும், பாராளுமன்ற அங்கத்தவராகவும் இருந்ததுடன், மந்திரியாகவும் பதவி வகித்து, ஆரம்பகாலம் முதற்கொண்டு தாபக அங்கத்தவர்களில் ஒருவராக இணைந்திருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகத் தனது இறுதி வாழ்வை முடித்துக் கொண்டார்.
டாக்டர் கலில் அவர்கள் தனது இறப்பு வரையில் தானே தலைவராக நிலைத்திருந்த அகில இலங்கை முஸ்லிம் லீக்குடன் மிகுந்த விருப்புடன் ஒன்றியிருந்தார். இலங்கையில் முஸ்லிம் சமூகத்தினரின் சமூக முன்னேற்றத்துடனும் கல்வியுடனும் தொடர்புபட்ட விடயங்களில் அவர் ஆழமான் அக்கறை கொண்டிருந்ததுடன் தமிழும் இந்த நாட்டின் அரச கரும மொழிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டு சமத்துவமான பயன்பாட்டையும் நிலையையும் கொண்டிருக்க வேண்டுமென்றும் வாதாடினார்.
237

Page 127
டாக்டர் கலில் அவர்களின் குடும்பம் அளுத்கமவிற்கு அருகிலுள்ள கிராமம் ஒன்றினைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்தது. அவர்கள் ஆரம்பத்தில் மெசெஞ்சர் வீதியில் வசித்து அதனைத் தொடர்ந்து முகத்துவாரம் பகுதியில் வாழ்ந்து வந்தனர். அவரது தந்தை ஆரம்பக் கல்வியை அவருக்கு வழங்கி இஸ்லாத்தில் அவருக்கு வழிகாட்டியாகவும் விளங்கினார். இவர் தென்னிந்தியாவின் வேலூரில் உள்ள மத்ரஸாவில் மெளலவி ஒருவரால் பயிற்றுவிக்கப்பட்ட ஒருவராவர். அக்காலத்தில் முகத்துவாரத்தில் இருந்த சென். தோமஸ் கல்லூரியில் சேர்ந்த இவர் பல விசேட சித்திகளைப் பெற்றுக் கொடுத்து சீனியர் கேம்பிறிட்ஜ் பரீட்சையைப் பூர்த்தி செய்தார். வைத்திய பட்டப்படிப்பினைப் பெற்றுக் கொள்ள 6 டின்பேர்க்கிற்குச் செல்லுமாறு வார்டன் ஸ்ரோன் என்பவரால் தூண்டப்பட்டதையடுத்து அங்கு சென்று மருத்துவப் பட்டத்தீைப் பெற்றார். அவர் பின்னர் டப்ளினில் பட்டப் பின் படிப்பு டிப்ளோமா ஒன்றினையும் பெற்றுக் கொண்டார்.
இலங்கை திரும்பியதை அடுத்து மருதானையில் வாழும் முஸ்லிம்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு வைத்தியசாலை ஒன்றினை அமைப்பதில் பெரும் ஆர்வம் காட்டினார். சகல சமூகங்களுக்கும் தனது சேவையினை வழங்கும் முகமாக "கலில் வைத்திய நிலையம்” என்பதனை ஆரம்பித்து வைத்தார். அவர் தனது சக வைத்தியர்களினால் உயர் தகுதி படைத்த வைத்திய நிபுணர் என மதிக்கப்பட்டதுடன் இலங்கையில் பென்சிலினை அறிமுகப்படுத்தியவர் என்றும் கருதப்படுகிறார். அவர் தனது நோயாளிகளின் நலன்களில் மிகுந்த கவனம் செலுத்தியதுடன், மருத்துவம் என்பது வெறும் தொழிற் றேர்ச்சி அல்லவென்றும், அது ஒரு வாழ்க்கைநெறி என்றும் குறிப்பிட்டார்.
சட்டசபை அங்கத்தவராக இருந்த அவர் எப்பொழுதும் தொழிலாள வர்த்தகத்தினரின் சமூக பாதுகாப்புத் திட்டத்திற்கான தேவையினைப் பற்றிப் பேசி வந்துள்ளார். தொழில் சமூக சேவைகள் அமைச்சராக இருந்த அவர் தொழில்களின் பெரும் கட்டமைப்பானது மூன்று தூண்களில் தான் கட்டியெழுப்பப்படுவதாக நம்பினார். சுதந்திரமான சம்பளத்தை நிர்ணயிக்கின்ற சம்பள சபைகள்; கூட்டுப் பேரத்திற்கு இடமளிக்கின்ற தொழில் உறவுகள் சட்டம்; தொழிலாளர்களின் கடமை நேரம், லிவு என்பவற்றை ஒழுங்கமைக்கின்ற கடை, காரியாலய உத்தியோகத்தர், தொழிலாளர் சட்டம் என்பனவே அவை
238

மூன்றுமாகும். அவர் சுதந்திரமானதும், முன்னேற்ற நோக்குடையதுமான கொள்கைகளைக் கொண்டவராக இருந்ததுடன் ஐக்கிய இராச்சியத்திலிருந்து திரும்பிய காலம் முதற் கொண்டு முஸ்லிம் பெண்களின் கல்வி பற்றிய விடயத்தில் ஆதரவு அளிப்பவராகவும் விளங்கினார்.
நான்கு பரம்பரைகளை உள்ளடக்கிய அவரது பரந்த குடும்ப அங்கத்தவர்கள் கல்வி, கவின் கலைகள், வைத்தியம் கணக்கியல் போன்ற பல துறைகளை உள்ளடக்கியதான பொது வாழ்வின் பல அம்சங்களில் தம்மைத் தாமே புகழ் பெறச் செய்துள்ளனர். எனக்கு டாக்டர் கலில் அவர்களின் பிள்ளைகள் பலரைத் தெரியும். இயந்திரப் பொறியியலாளராகிய அஷ்லான் என்னுடன் றோயல் கல்லூரியில் கல்வி பயின்றவர். அய்னுல் என்பவர் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் பின்பு கேம்பிறிட்ஜிலும் இருந்த சிறப்புப் பெற்ற திரைப்பட இயக்குநர், றிஸ்வி இனங்களின் கல்விக்கான சர்வதேச நிலையத்தில் சமூக விஞ்ஞானியாக இருந்தவர். திருமதி கலில் அவர்கள் தனது தனித்திறமையான கவர்ச்சியினாலும், அறிவு நுட்பத்தினாலும், மன உணர்வினாலும் இக்குடும்பத்தைத் தளைத்திருக்கச் செய்து அக் குடும்பத்தின் மையமாக விளங்கினார்.
டாக்டர் கலில் எம்மிடமிருந்து வேறுபட்ட நெடுந் தொலைவிலுள்ள ஒருவரல்ல, அவர் சபையில் பல தலைவர்களின் மனதினைத்
தொட்ட ஓர் அரசியல் வாதியே.
7 ஆணி, 1995
239

Page 128
பண்டாரநாயக்கா: அவரின் இலட்சியங்களும் சமூக அமைதியும்
நான் அப்போது ஒரு பாடசாலை மாணவன். ஒருநாள் திடீரென எமது வீட்டில் நிலவிய அமைதியை ஒரு செய்தி குலைத்தது. பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா தல்துவ சோமராம என்பவரால் கொடூரமாகவும், மிருகத்தனமாகவும் சுடப்பட்டுவிட்டார் 6 ன்பதே அந்தச் செய்தி. 0.455 ரக சன்னங்களால் நான்கு முறை தாக்குண்டு உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த அதே வேளை நாட்டுக்கு ஒரு செய்தியைக் கூறிக்கொண்டிருந்தார். அது எழுதியெடுக்கப்பட்டது. அந்தச் செய்தியில் கொலையாளியிடம் கருணை காட்டும்படி நாட்டு மக்களை வேண்டினார். நண்பர்களையும் குடும்பத்தினரையும் மன உறுதியோடும் , சகிப்புத் தன் மையோடும் இருக்கும் படி கேட்டுக்கொண்டார். உடம்புக்குள்ளே இரத்தப் பெருக்கு அதிகமாக இருந்தது. வயிற்றுப் பகுதியிலிருந்து நாலு பைந்து இரத்தம் வெளியே எடுக்கப்பட்டது. அறுவைச் சிகிச்சை அளிக்கப்பட்டபோது இருபது பைந்து இரத்தம் அவருக்கு ஏற்றப்பட்டது. மரணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அவர் உணரவில்லை. நகைச்சுவையாகப் பேசிக்கொண்டிருந்தார். "அரசியல்வாதிகளான நாங்கள் தடித்த பேர்வழிகள்" என்றுகூடச் சொன்னார். ஆனால் கொடியவிதி வேறுவிதமாகத் தீர்மானித்தது. 26 ஆம் திகதி காலை 7.30க்கு மயக்கம் அடைந்தார். 7.45க்கு அவர் உயிர் பிரிந்தது.
பண்டாரநாயக்காவின் மரணம் நாட்டை மோசமாக உலுப்பிவிட்டது.
அவரது உடலைப் பார்ப்பதற்கும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்குமாக இரவு பகலென்று பாராது 50,000 மக்கள் பொறுமையாக வரிசையில்
240

காத்திருந்தனர். மக்கள் நின்ற வரிசை ஆறு மைல்களுக்கு நீண்டிருந்தது. இந்த அஞ்சலி அவரது இல்லத்திலும் பின்பு பாராளுமன்றத்திலும் இருந்தது. கொழும்பு மாநகர் வெள்ளைக் கொடிகளால் போர்த்திக் கிடந்தது. மாகாண நகரங்கள் செயலிழந்து காணப்பட்டன. இந்த நிகழ்வு என்மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. இதற்குப் பிந்திய எந்த நிகழ்வும் இதுபோன்று ஒட்டுமொத்தமான துயரத்தையும் ஏக்கத்தையும் காட்டியதில் ஈடாக அமையவில்லை.
1956 இல் எதிர்பாராத, ஆனால் குறிப்பிடத்தக்க தேர்தல் பெருவெற்றிக்குப் பின் பாராளுமன்றத்தின் முதல் அமர்வுக்குப் பின்பு மக்களிடம் காணப்பட்ட மகிழ்ச்சி ஆரவாரத்துக்கு முற்றிலும் எதிர்மாறாகவே இந்தச் சந்தர்ப்பத்தில் மக்களின் மனோநிலை இருந்தது. தொலைதூரக் கிராமங்களில் இருந்து வந்த மக்கள் பாராளுமன்ற அமர்வின் போது பார்வையாளர் கூடங்களை எல்லாம் முண்டியடித்துக் கொண்டு நிறைந்திருந்தனர். அமர்வு முடிவுற்றதும் பாராளுமன்ற மண்டபத்துக்குள் நுழைந்தனர். ஒருவர் பின் ஒருவராக சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தனர். பாராளுமன்ற மண்டபத்துள் நின்றுகொண்டு பார்வையாளர் கூடங்களை நோக்கி “எங்கள் அரசு" (அபே ஆண்டுவ) என்ற சுலோகத்துடன் ஒரு தன்னம்பிக்கை கூடிய பார்வை பார்த்தனர். அதிகார மாற்றத்தினால் ஏற்பட்ட மக்கள் எழுச்சியும் அவர்களின் உணர்ச்சியும் இப்படி வெளிப்படுத்தப்பட்டன.
திரு. பண்டாரநாயக்கவின் அசாதாரணமான மூளைத்திறனைப் பற்றி நிறைய எழுதப்பட்டுள்ளன. இருபதாம் நூற்றாண்டில் இந்தத் துணைக்கண்டம் தந்த மிகவும் கற்றறிந்த நகர்சார்ந்த பண்பட்ட அரசியல் தலைவர்களில் ஒருவராக விளங்கினார். ஆங்கில மொழியை அசாதாரண முறையில் மிக எளிமையாகக் கையாளும் ஆற்றல், கவித்துவ நடையில், சிந்து நடையில் ஒன்றைப் படம் பிடித்துக் காட்டும் ஆற்றல், மயக்கும் சொற்சிலம்பம், கூரிய அறிவு, நீண்ட பார்வை என்பன அவர் பேச்சுகளிலும், எழுத்துக்களிலும் மட்டும் தொனிக்கவில்லை.
அவரது சமகால அரசியல்வாதிகளைப் பற்றியும் அழகுற எழுதியுள்ளார். 1933 க்கும் 1935 க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் "சிலோன் கோசறி"க்கு எழுதிய 18 தொடர் கட்டுரைகள் போர்க்கால ஒக்ஸ்போட் பற்றிய நினைவுகளை வைத்துப் பின்னிய சுய சரிதையை இலக்கிய நயம் பட எழுதியுள்ளார். மிகச் சிறப்புப் பெற்ற தென்னாசியத்
241

Page 129
தலைவர்கள் பலர் ஒக்ஸ்பிறிட்ஜ் கல்வி கற்றனர். கேம்பிறிட்ஜில் இயற்கை விஞ்ஞானம் கற்றார் ஜவகர்லால் நேரு, ஒக்ஸ்போட் சென், கத்தரீன் கல்லூரியின் லிக்குவட் அலிகான், எச்.எஸ். சுகுரவார்டியோ, மிக அண்மையில் பாகிஸ்தானின் பெனாஸிர் பூர்டோவும், பர்மாவின் ஓங் சான் சூ கீ ஆகிய இருவரும் மெய்யியல், அரசியல், பொருளியல் என்பவற்றை ஒக்ஸ்போட்டில் கற்றனர். ஆனால் இவர்கள் எவரும் இத்தகைய முக்கியத்துவமும் தராதரமும் கொண்ட இலக்கிய நயமுள்ள படைப்பைத் தரவில்லை. போர்க்கால ஒக்ஸ்போட் வாழ்க்கையை ஆதாரபூர்வமாகவும், நுணுக்கமாகவும் இன்றும் தருகின்ற எழுத்தோவியங்களாக அவை விளங்குகின்றன. ஒக்ஸ் போட் பல்கலைக்கழகம் தொடர்பான வரலாறு, ஒக்ஸ்போட் யூனியன் தொடர்பான வரலாறு எழுதியவர்கள் இதிலிருந்து பெருமளவில் மேற்கோள் காட்டியுள்ளனர். பல்கலைக்கழகங்களில் இலங்கைக் குள்ளோ அல்லது வெளியிலோ சேர விரும்புபவர்களுக்கு இவை இலகுவாகக் கிடைக்க முடியாதிருப்பது சமகாலக் கல்வி ஏற்பாட்டின் கவலைக்குரிய பிரதிபலிப்பாகும்.
திரு. பண்டாரநாயக்க தனது அசாதாரண விவாதத்திறமையை ஒக்ஸ்போட் கிறைஸ்ற் சேர்ச் கல்லூரியில் பட்டதாரி மாணவனாக இருந்த ஐந்து ஆண்டுக் காலத்தில் வளர்த்துக் கொண்டார். இலக்கிய நயம் கலந்த அவரது உரைதான் அவரது சொற்பொழிவுத் திறமையின் அடிநாதமாய் விளங்கியது. ஒருமுறை அவர் ஒக்ஸ்போட் யூனியனில் பேசும்போது, "ஒளிமயமான வெற்றிடத்தில் சிறகடிக்கும் வானுலகத் தூதுவர்" என்று உலக நாடுகள் சங்கத்தை (லிக் ஒப் நேஷன்ஸ்) வர்ணித்து சபையை மகிழ்வித்தார். இதை விட முக்கியமான விவாதம் ஒன்றுண்டு. "இந்தியா மீது காலவரையறையற்ற பிரித்தானிய இறைமையைத் தொடர்வது பிரித்தானிய அரசியல் இலட்சியங்களுக்கு முரணானவை” என்ற தலைப்பில் நடைபெற்ற விவாதத்தில் அவர் ஆற்றிய உரை முக்கியமானது. அது அவரது வாதத்திறமையை மட்டும் காட்டவில்லை. பல்திறப்பட்ட சபையோரையும் திணறடிக்கக் கூடிய வாதத்திறமை அவருக்கு இருந்ததை அது காட்டுகிறது. தான் ஒக்ஸ்போட்டில் நிகழ்த்திய மிகச் சிறந்த உரை இதுவென திரு.பண்டாரநாயக்க அவர்களே விபரித்துள்ளார். அதற்கான தகுதிவாய்ந்த பெறுமதியை ஒக்ஸ்போட் யூனியன் தலைவரிடமிருந்து பெற்றுக் கொண்டார். "திரு. பண்டாரநாயக்க இந்த யூனியனின் மிகச் சிறந்த பேச்சாளர்” என்று தலைவர் பாராட்டினார். தனது உரையை முடித்துவிட்டு, முடிவுக்கு வரும்போது பிரித்தானியரின் விடுதலை
242

விருப்பை இத்தாலிய மறுமலர்ச்சிக் காலத்தில் வரையப்பட்ட ஒரு படத்துக்கு ஒப்பிட்டார். "அந்தக் கலைப் படைப்பு முழுவதிலும் ஒரு பொன்னிற ஒளி பரவியிருந்தது. அது காற்றிலே தொக்கி நின்றது, அந்த ஒளி ஆண்கள், பெண்களது கண்களிலே களிநடம் புரிந்தது. அவர்கள் தசைக்குள்ளே பின்னிப் பிணைந்து விட்டது" என்று குறிப்பிட்டார். இறுதியாக "இந்த மக்களுடைய வாழ்க்கையில் ஒளி சேர்த்துக் கொண்டிருக்கிற அந்தப் பொன்னிற ஒளி அவர்களுடைய விடுதலை விருப்பும் சுதந்திரமான கட்டமைக்களும்தான்” என்று முடித்தார். உரையை முடித்துக் கொண்டு, குறிப்புக்களை எடுத்துக் கொண்டு தன் இருக்கைக்குச் செல்லும் வரை பூரண அமைதி நிலவியதாக அவர் சொல்கிறார். சென்றதுதான் தாமதம், பாராட்டு ஒலி முழங்கியது. அதை நிறுத்தப் பல நிமிடங்கள் பிடித்தன.
நான் ஒரு சம்பவத்தையும் குறிப்பிட வேண்டும். இதைக் காலஞ்சென்ற மு. திருச்செல்வம் எனக்குச் சொன்னார். அது அறிவாளர் நிலையில் வெட்டி நிற்கவும், அதேநேரம் அரசியல் நிலையில் ஒட்டி நிற்கவும் திரு. பண்டாரநாயக்கவுக்கு இருந்த அபார ஆற்றலைக் காட்டுகிறது. திரு. திருச்செல்வம். அந்த நேரம் சொலிசிட்டர் - ஜெனரலாக இருந்தார். அவர் பிரதமர் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். அவர் பேசவிருந்த விடயம் அரசின் தலைவரால் உடனடியாகத் தீர்க்கமான முடிவு எடுக்கப்படவேண்டிய விடயம். திரு. பண்டாரநாயக்கவின் மேசை காலியாக இருந்தது. கோப்புகள் எதுவும் இருக்கவில்லை. தனிக்கடுதாசித் துண்டுகள் கூட இருக்கவில்லை. பிரதமர் ஒரு கவிதை நூலைப் படிப்பதிலே மூழ்கி இருந்தார். இது அவர் கிறைஸ்ற் சேர்ச் கல்லூரியில் கழித்த ஒரு மாலைப் பொழுதை நினைவூட்டியது. கையில் ஒரு சுங்கானைப் பிடித்த வண்ணம் ஒரு நாவலையோ (புதினக் கதை) ஹோமரின் காவியம் ஒன்றையோ படித்துக் கொண்டு இருப்பார். அது "தென்ளத் தெளிந்த அமைதியும் மாசற்ற மகிழ்ச்சியும் தரும் வேளை" சொலிசிட்டர் ஜெனரல் தான் சென்ற காரணத்தை விளக்கினார். பிரதமர் அவதானமாகக் கேட்டுக் கொண்டிருந்தார். விடயம் விளக்கப்பட்டதும் பிரதமர் தன் சுருக்கெழுத்தாளரை அழைத்துத் தான் சொல்வதை எழுதச் சொன்னார். அது தெளிவாகவும் அழகான நடையிலும் இருந்தது. அவர் பிரச்சினையின் சுழிவு நெளிவுகளையும் முழுப்பாங்கையும் நன்கு புரிந்து இருந்தார். கடதாசி எடுத்துப் பேனாவால் 61ழுதாமல் ஒரு தீர்வை வகுத்து எடுத்தார். இது அவர் வேலை செய்யும் பாணியை மிகு உணர்ச்சி மயப்படுத்திக் காட்டுவதாகத்
243

Page 130
தோன்றலாம். ஆனால் அவருடன் நெருக்கமாக இருந்து வேலை செய்தவர்கள் இந்த உண்மையை உறுதி செய்கிறார்கள்.
I
நாம் இப்போது இன்றைய சொற்பொழிவின் தொனிப் பொருளுக்குத் திரும்புவோம். திரு. பண்டாரநாயக்கவின் அரசியல் இலட்சியங்களை நோக்குவோம். பண்டாரநாயக்கவின் அரசியல் இலட்சியத்தின் செல்வழிகளை, அடக்கங்களைப் பல அறிஞர்கள் ஆராய்ந் திருக்கிறார்கள். விமர்சித்திருக்கிறார்கள், தேரவாத பெளத்த அறிஞரான ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஹெயின்ஸ் பேச்செட் கூட ஆராய்ந்து இருக்கிறார். பண்டாரநாயக்க ஒரு கருத்துநிலைவாதி அல்ல, அவர் தனது சக்தியை அரசியல் இலட்சிய விளக்கங்கள் எழுதுவதற்குப் பயன்படுத்தவில்லை. நடைமுறை அரசியலின் யதார்த்த களத்தில் எழும் போராட்டங்கள், சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் அமைந்தவையே அவரிடம் உதித்த அரசியல் கருத்துக்கள், என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆதலால் நாம் அவற்றை அவருடைய அரசியல் பேச்சுக்களில் இருந்தும், 1956ஆம் ஆண்டுக்கும் 1959ஆம் ஆண்டுக்கும் இடையில் அவர் தலைமை தாங்கிய அரசின் கொள்கைத் திட்டங்களில் இருந்தும்தான் அவற்றை இனம் காணமுடியும். இந்தப் பேச்சுக்களையும், கொள்கைத் திட்டங்களையும் பகுத்தாய்ந்ததன் மூலம் பண்டாரநாயக்க இலட்சியங்களின் ஒரு பகுதியாக இருந்த ஐந்து பெரும் விழுமியக் கோட்பாடுகளை எடுத்துக் காட்ட முடியும். அவையாவன (அ) தேசியம், சோஷலிசம், அரச உடைமை, சமத்துவம். (ஆ) மக்களாட்சியம், மக்கள் பங்கேற்பு, சமூகப் பொறுப்புகள். (இ) தளப்பமின்மையும், ஒழுங்கமைதியும். (ஈ) உற்பத்தித்துவம், வினைத்திறன், வளர்ச்சி. (உ) நலன்புரித்துவம், மீள்பகிர்வும் வாழ்க்கைத்தர உயர்ச்சியும்.
(அ) தேசியம் என்பது இலங்கைக்கும் முன்னைய குடியேற்ற அதிகாரம் செலுத்திய பிரித்தானியவுக்கும் இடையிலான அரசியல், சட்ட உறவுகளைத் துண்டித்துக் கொள்ளுதல் ஆகும். அத்துடன் வளர்ச்சியுற்ற அந்நிய நாடுகளில் பொருளாதார ரீதியாகத் தொக்கு நிற்கும் நிலையையும் துண்டிப்பதையும் இது அடக்கும். சோஷலிச வளர்ச்சியைச் சார்ந்து நிற்பது என்பது எல்லா அடிப்படை, அத்தியாவசிய தொழிற்துறைகளையும் அரசு
244

(ஆ)
(இ)
(rqf.)
(gD .)
பராமரித்து நடத்துவது என்பதாகும். அத்துடன் பொருளாதார, சமூக சிறப்புச் சலுகைகளை ஒழித்தல், ஏற்றத்தாழ்வுகள், சுரண்டல்களை ஒழித்தல் என்பனவும் அடங்கும்.
மக்களுடைய மக்களாட்சிய உரிமைகளைப் பாதுகாத்து அதிகாரத்துவ ஆட்சியை உருவாக்கக்கூடிய 6 ல் லாப் போக்குகளையும் அரசு எதிர்த்து நின்று நிலைபெறும் தன்மையே இந்த இலட்சியத்தின் மக்களாட்சியக் கூறாகும். சிறப்பாகத் தேர்தல் மூலம் ஆட்சியை மாற்றும் மக்களின் அடிப்படை உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். அத்துடன் அரசாங்கத்தின் மக்களாட்சியக் கட்டமைப்பு குடிசார் நிர்வாகம், பொருளாதார நிர்வாகம், நீதித்துறை நிர்வாகம் உட்பட தேசிய வாழ்வின் எல்லா மட்டங்களிலும் மக்கள் பங்கேற்பு மூலம் விரிவுபடுத்தப்பட வேண்டும்.
தனியார்துறையில் இருந்து அரச கட்டுப்பாட்டுக்குப் பொருளாதாரம் நிலை மாறும் போது அது ஒழுங்கமைதியைப் பேணிச் சீர்குலைவு இல்லாமல் அமைய வேண்டும். தளப்பம் இன்மைக்கும் ஒழுங்கமைதிக்கும் உறுதிப்பாடு கொண்ட இந்த மாற்றம் வன்முறையால் சமூகத்தைச் சீரழித்து ஏற்படுத்தும் மாற்றீடான புரட்சிச் செய்திறனை கண்டிப்பாக நிராகரிக்கிறது.
தேசிய பொருளாதாரத் திட்டத்திற்கு அமைய, பொருளாதாரம் சார்ந்த எல்லாத் துறைகளினதும் விரைவான வளர்ச்சி மூலம் உற்பத்தித்துவம், வினைத்திறன், வளர்ச்சி என்பவற்றுக்குத் தரப்படும் அழுத்தத்தை அடைய முடியும். அரசு சார்ந்த முயற்சிகளில் திருந்திய முகாமைத்துவ வினைத்திறன் மூலம் தொழில், உழவுத் துறைகள் இரண்டிலும் பெருக்கிய உற்பத்தித்துவத்தை அடைய முடியும்.
தொழிலாளர் வர்க்கத்தின் உழைப்புக்கேற்ற ஊதியக் கொடுப்பனவு, தொழில்சார் நிபந்தனைகள் என்பவற்றை மேம்படுத்தி முழுமையான தொழில் வாய்ப்புக்களை உறுதி செய்து, நலன்புரித் திட்டங்கள் மூலம் சமூக உற்பத்திகளை நியாயமான முறையில் மீள்பகிர்வு செய்து, சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும்.
245

Page 131
1970-1977 காலப் பகுதியில் பண்டாரநாயக்கவின் இலட்சியங்களின் பலகூறுகள், சிறப்பாகச் சோஷலிச வளர்ச்சி முறைகள், வெளிநாட்டுப் பொருளாதாரத் தொடர்புகளின் கையாள் கை என்பவை விரிவுபடுத்தப்பட்டு மீளச் செயற்படுத்தப்பட்டன. (பல நோக்கர்கள் கருத்துப்படி சுதந்திரத்துக்குப் பிந்திய இலங்கையின் சோஷலிச அரசுகளில் இது மூன்றாவதும் அடிப்படைத்தன்மை கொண்டதுமாகும்) பண்டாரநாயக்க இலட்சியங்கள் சோஷலிசப் போக்கை கொண்டிந்தாலும், மொழி, சமய மீளுயிர்ப்புத் தொடர்பாகப் பல பாரம்பரியக் கருத்துக்களும் பின்னிப்பிணைந்து கொண்டிந்தன என்பதையும் இங்கு அழுத்திக் கூற வேண்டும். பல அறிஞர்கள் அவரது இலட்சியங்களின் இந்தக் கூறுகளைச் சோஷலிசத்துக்கு முரணானவை அல்லது பிற்போக்கானவை என்று வர்ணித்துள்ளனர். இன்னும் சிலர், பல நூற்றாண்டுகள் அந்நியர் ஆட்சியில் மிகப் பெரிய வசதியீனங்களை அனுபவித்த சமய-இனத்துவக் குழுவான பெளத்த சிங்கள மக்கள் சுதந்திரத்துக்குப் பிந்திய சமூக ஒழுங்கமைப்பில் சிறப்புரிமை பெறுவதற்குத் தகுதியுடையவர்கள் என்று வாதிடுகின்றனர். எப்படி இருந்த போதிலும், மீளுயிர்ப்பு இலட்சியங்களில் கலந்துள்ள இந்தக் கூறுகள் பிரித்து வைக்கும் தாக்கம் கொண்டவையாக அமைந்து சமய, இனத்துவ சிறுபான்மையினரை அந்நியப்படுத்தி விட்டன என்பதில் எந்தவித ஐயத்துக்கும் இடமில்லை.
எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க பற்றிய ஆய்வில் ஜேம்ஸ் மேனர் பண்டாரநாயக்க இலட்சியத்தில் ஒன்றுக்கொன்று முரண்பாடான இரண்டு நிலைப்பாடுகள் இருந்ததாகக் குறிப்பிடுகிறார். முன்னையது பொதுத் தன்மையான சீர்திருத்தம் தொடர்பானது. பின்னையது சிங்களச் சிறப்புரிமை தொடர்பானது. அவரது இலட்சியங்களின் பரிமாணங்களில் உள்ள தாராள சோஷலிசப் போக்கிற்கும், மீளுயிர்ப்புப் போக்கிற்கும் இடையில் உள்ள முரண்பாடுகள்தான் சமூக அமைதி தொடர்பான பிரச்சினைகளில் பண்டாரநாயக்கவின் சிந்தனையை ஆராய எம்மைக் கட்டாயப்படுத்துகின்றன. இது தொடர்பாக நாம் மூன்று பிரச்சினைகளை நோக்குவோம்.
முதலாவதாக, இலங்கையின் இனத்துவப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு தொடர்ச்சியான பொருத்தப்பாடுடைய கருத்து நிலைகள், எண்ணங்கள், விளக்கப்பாடுகளை பண்டாரநாயக்க இலட்சியம் தருகிறதா? அல்லது சில அறிஞர்கள் எத்தனித்திருப்பது போல், இன்றைய பரிதாப நிலைக்கும் பல தசாப்தங்களாக நடைபெறும்
246

இனத்துவப் போராட்டங்களால் அனுபவித்த அழிவுகளுக்கும் திரு. பண்டாரநாயக்காவையே வகை சொல்ல வேண்டியவர் என்று கொள்வது நியாயப்படுத்தக் கூடியதாகுமா?
இரண்டாவது வினா, பண்டாரநாயக்க இலட்சியங்கள் மக்களாட்சிய சீர்குலைவுக்குப் பரிகாரம் தரவல்ல பொருத்தப்பாடுடைய கருத்து நிலைகள், எண்ணங்களைக் கொண்டள்ளனவா? அதாவது மக்களாட்சிய ரீதியாக வகை சொல்லக் கடப்பாடுடைய நிறுவனங்களையும் கட்டமைப்புக்களையும், கருத்து வேறுபாட்டைச் சகித்துக் கொள்ளும் அரசியல் கலாசாரத்தையும் கட்டி எழுப்ப நாம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு வழிகாட்டக் கூடிய கூறுகள் உள்ளனவா?
முன்றாவதாக சமூக முரண்பாடுகளுக்கான தீர்வுகளுக்கும், சமகால இலங்கையின் தேவைகளுக்குப் பொருத்தப்பாடுடைய ஒரு நீதித்துறையை உருவாக்குவதற்கும் பண்டாரநாயக்க இலட்சியங்கள் எவ்வளவு துாரம் முக்கியத்துவம் உடையனP
1925 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நாட்டுக்குத் திரும்பியதும், திரு. பண்டாரநாயக்க எடுத்த முதல் அரசியல் நடவடிக்கைளில் ஒன்றாக முற்போக்குத் தேசியக் கட்சி என்ற பெயரில் ஒரு அரசியல் கட்சியை அமைத்தார். மேலும் அந்தக் கட்சியின் ஆதரவில் இலங்கைக்கு ஒரு இணைப்பாட்சி (சமஷ்டி) வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி தொடர்ச்சியான சொல்லாடலை ஏற்பாடு செய்ய விரும்பினார். இந்தச் சொற்பொழிவில் இலங்கைச் சமூகத்தின் பன்மைத் தன்மை தெளிவாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்தச் சொற்பொழிவில் அன்றைய காலகட்டத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி எச்சரிக்கை செய்தார். 1928 இல் அரசியல் யாப்புச் சீர்திருத்தம் இடம் பெறவிருந்தது. அதாவது டொனமூர் ஆணையத்தைக் கருத்திற் கொண்டு சொன்னார். அவர் சபையோரை அவதானமாக இருக்கும் படி கேட்டுக்கொண்டார். தெளிவாகச் சிந்தித்து முழு அரசியல் பிரச்சினைகளையும் முழுமையான பரிமாணத்தில் வைத்துப் பார்க்கும் படி கேட்டுக் கொண்டார். எடுக்கப்பட்ட ஒரு பொய்யான நடவடிக்கையை, இப்போது எடுக்கப்பட்ட ஒரு பொய்யான தீர்மானத்தை வருங்காலத்தில் மீட்டெடுப்பது கடினமாகி விடும். சாம்பல் பூத்த
247

Page 132
எரிகழலாகக் கிடக்கும் இனத்துவ வேற்றுமைகள் அரசியல் அதிகார கைமாறும் போது வெளிக்கிளம்பி வெந்தியாக எரியலாம் என்றுப அவர் எச்சரித்தார். இது தொடர்பாக சுதந்திரத்துக்குப் பிந்திய இலங்கையின் அரசியல் நிகழ்வுகளை மட்டும் எதிர்பார்க்கவில்லை மத்திய, கிழக்கு ஐரோப்பாவின் இனத்துவ அரசியல் சிதைவுகளையும் 6திர்பார்த்தார்.
தொடர்ந்து அவர் வாதிடுகையில், முக்கிய மூன்று சமூகங்களும் - அன்று அவர் அவர்களை தமிழர்கள், கீழ்நாட்டுச் சிங்களவர்கள், கண்டியச் சிங்களவர்கள் என்று இனம் கண்டார். இலங்கையில் ஆயிரம் ஆண்டுகள் ஒருங்கிணைந்து கொள்ளும் போக்கு எதுவுமின்றி வாழ்ந்து வருகிறார்கள். "அவர்கள் தங்கள் மொழியை, தங்கள் பழக்க வழக்கங்களை, தங்கள் மதத்தைப் பேணி வைத்திருக் கிறார்கள். மத்திய மயப்படுத்தப்பட்ட அரசு எல்லாவற்றையும் ஒரே தன்மைத்தாகப் பார்க்கும் போக்குடையதாக இருக்கும். பெருமளவு இனவேறுபாடுகள் உள்ள நாடுகளுக்கு மத்திய மயப்படுத்தப்பட்ட வகையான அரசு முறையைப் புகுத்தினால் அங்கு குழப்பங்கள் ஏற்படும்." அதன் பின் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, கனடா, சுவிற்சலாந்து போன்ற நாடுகளின் அரசியல் யாப்பு அனுபவங்களை அவர்கள் எப்ப்டி இணைப் பாட் சி (சமஷ்டி) முறையை வெற்றிகரமான நடைமுறைப்படுத்தினார்கள் என்று ஆராய்ந்து காட்டினார். இறுதியாக "இலங்கையில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் பூரண தன்னாட்சி உரிமை இருக்க வேண்டும். தீவின் விசேட வருவாயைக் கவனிக்க இரண்டு சபைகள் இருக்க வேண்டும்" என்று கூறியவர் "ஏதோ ஒரு வகையான இணைப்பாட்சி (சமஷ்டி) தாவ எங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண ஒரேயொரு வழியாகும் என்பதை நான் பூரணமாக நம்புகிறேன்" என்று கூறி முடித்தார்.
பண்டாரநாயக்கவின் இந்தத் தீர்மானத்தை "கற்பனைத் தன்மையானது" என்று ஜேம்ஸ் மேனர் நிராகரித்தார். "அறிவாட்சியின் சிறு விளையாட்டுக்குச் சற்றுக் கூடியது." என்று வர்ணித்தார். 1963 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் தகவல் திணைக்களத்தால் மற்ற வகையில் சிறப்பாக வெளியிடப்பட்ட "திரு. பண்டாரநாயக்கவின் பேச்சுக்களும் எழுத்துக்களும்" என்ற தொகுதியில் சேர்த்துக் கொள்ளப்படாத பேச்சுக்களில் இதுவும் ஒன்று. எப்படி இருந்தாலும் இந்தப் பேச்சு மிக முக்கியமானது. இனத்துவப் பிரச்சிகளையும், தேசத்தைக்
248

கட்டியெழுப்பும் பிரச்சினையையும் திரு. பண்டாரநாயக்க எவ்வளவு உணர்வுபூர்வமாக அணுகினார் என்பதை இந்தப் பேச்சு 6 டுத்துக் காட்டுகிறது. பல் இனத்துவ, பல் சமயத்துவ சமூகமாக இலங்கை இருந்தது. தொடர்ந்தும் இருக்கப் போகிறது என்ற நழுவமுடியாத அரசியல் யதார்த்தத்தை முதலாவதாக அவர் நம்பினார். தொடாந்தும் அவர் நம்பிக்கொண்டே இருந்தார். இரண்டாவதாக ஒரு பல் இனத்துவ சமூகத்துக்கான அரசியல் யாப்பு ரீதியான அடித்தளத்தை அரசியல் அதிகாரம் கைமாற அமைத்துவிட வேண்டும் 61 ன்று அவர் நம்பினார். மூன்றாவதாக மற்றைய பன்மைச் சமூகங்களின் அரசியல் யாப்பு ரீதியான அணுபவங்கள், தகைமை வாய்ந்த அரசியல் தீர்வுகளைக் காணவும், அமைப்பு ரீதியான ஒழுங்குகளை மேற்கொள்ளவும் பொருத்தப்பாடுடையன என்று அவர் நம்பினார், என்றும் அந்த நம்பிக்கையிலிருந்து அவர் விடுபடவில்லை. நான்காவதாக இந்த ஒப்பீட்டு அரசியல் ரீதியான அனுபவம் ஒற்றை ஆட்சியும், மத்தியமயப்படுத்தப்பட்ட அரசும் இனத்துவ வேற்றுமைகளைப் பெருப்பித்து இனத்துவ சிறுபான்மையினரை அந்நியப்படுத்தும் 6 ன்ற நழுவிவிட முடியாத முடிவைக் சுட்டிக் காட்டுகிறது.
இணைப்பாட்சித் (சமஷ்டி) திட்டத்திற்கு அந்த நாட்களில் தமிழ் அரசியல் தலைமைத்துவத்திடம் இருந்து சிறிதளவு ஆதரவே கிடைத்தது. உண்மையில் திரு. ஜேம்ஸ் ரி. இரத்தினம் "சிலோன் மோணிங் லிடர்” பத்திரிகைக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் இந்தத் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார். ஆனால் தயவாக உணர்ச்சி பூர்வமாக எழுதினார். ஆனால் இந்தத் திட்டங்கள் கண்டிய தேசிய சங்கத்தை ஈர்த்தன. நம்ப வைத்தன. “கண்டிய மக்களின் உரிமைகளும், கோரிக்கைகளும்” என்ற அறிக்கையில், இணைப்பாட்சித் (சமஷ்டி) தீர்வுக்கு சார்பாக வாதிட்டனர். இரண்டு மாகாணங்கள் சேர்ந்து ஒரு அலகாகவும், தமிழ் மாகாணங்கள் ஒரு அலகாகவும், ஐந்து கண்டிய மாகாணங்கள் சேர்ந்து மூன்றாவது அலகாகவும் மத்திய அரசு இவை அனைத்தையும் இணைப்பதாகவும் அமைய வேண்டும் என்று கேட்டிருந்தனர்.
நான் சற்று விலகிச் செல்ல முடியுமானால் லியோனாட் ஊல்ப் அவர்களுடைய கடிதங்களை மிக அற்புதமாகப் பதிப்பித்த பிறெட்றிக் ஸ்பொற்ஸ் அவர்களைக் குறிப்பிடலாம், என்று நினைக்கிறேன். சிங்கள - தமிழ் முரண்பாட்டுக்கு ஊல்ப்தான் முதன் முதல்
249

Page 133
இணைப்பாட்சித் (சமஷ்டி) தீர்வை முன்வைத்தார் என்று ஸ்பொற்ஸ் அதீத உரிமை கோருகிறார். உண்மையில் தொழிற் கட்சிக்குச் சமர்ப்பித்த ஒரு மகஜரில் "பெருமளவு அதிகாரப் பரவலாக்கலை உறுதி செய்வது பற்றிய சாத்தியங்கள் பற்றிக் கவனம் செலுத்தப்பட வேண்டும், அல்லது சுவிஸ் அமைப்பிலான ஒரு இணைப்பாட்சி (சமஷ்டி) முறையைப் புகுத்துவது பற்றியும் யோசிக்கலாம்.” என்று ஊல்ப் எழுதினார். மேலும் "இலங்கையை மிகவும் ஒத்த சூழலில் சுவிஸ் இணைப்பாட்சி (சமஷ்டி)அமைப்பில் அலகு முறை அசாதாரண முறையில் வெற்றியளித்தள்ளது. அதாவது ஒரே மக்களாட்சிய நாட்டில் இனம், மொழி, மதம் என்ற காரணிகளால் ஒன்றிலிருந்து ஒன்று கூர்மையாக வேறுபட்டிருக்கும் சமூகங்கள் ஒன்றிணைந்து வாழ முடிகிறது. இந்த வகையில் சிங்கள மக்களின் இடத்தில் வைக்கக் கூடிய 2,750,000 ஜெர்மன் மொழி பேசும் சுவிஸ் மக்களும், தமிழ் மக்களின் இடத்தில் வைக்கக் கூடிய 824,000 பிரெஞ்சு மொழி பேசும் சுவிஸ் மக்களும், முஸ்லிம் மக்களின் இடத்தில் வைக்கக் கூடிய 284,000 இத்தாலிய மொழி பேசும் சுவிஸ் மக்களும் இணைந்து வாழ்கிறார்கள்." லியோனாட் ஊல்ப் அவர்களின் மகஜர் 1938 கார்த்திகையில் திகதியிடப்பட்டுள்ளது. அதாவது 1926 ஆடியில் சிலோன் மோனிங் லீடர் பத்திரிகைக்குப் பல கட்டுரைகள் 6ழுதிய ஒரு தசாப்தத்திற்குப் பின்புதான் ஊல்ப் எழுதினார்.
சிங்கள சமூகத்தில் ஒற்றை ஆட்சிக்கே கருத்து இறுக்கமாக இருந்தது என்பதை உணர்ந்த போது பண்டாரநாயக்க இந்தக் கருத்தைப் பின்பு கைவிட்டு விட்டார் என்று ஜேம்ஸ் மேனர் தெரிவிக்கிறார். எப்படியானாலும், தங்கள் அலுவல்களை நடத்திச் செல்வதற்கு மக்கள் பங்கேற்புக்கான வழி வகைகளைப் பலப்படு*கவதற்காக மட்டும் அரசியல், நிர்வாக அதிகாரங்களைப் பகிர்ந்தளித்துப் பன்முகப்படுத்த வேண்டிய தேவைகளை அழுத்தங் கொடுத்துப் பேசவில்லை என்பது அவர் பேச்சில் தெளிவாக உள்ளது என்பதில் ஐயத்துக்கிடமில்லை.
பண்டாரநாயக்க இலட்சியத்தில் இணைப்பாட்சி (சமஷ்டி) முறைக்கு ஐயம் திரிபற்ற இடம் இருக்கிறதா என்பதைத் தீவிர விவாதத்துக்கு உட்படுத்தலாம் என்று கொண்டாலும் கூட மத்திய மயப்படுத்தப்பட் ஒரு அரசு என்பது அந்த இலட்சியத்துக்கு முற்றிலும் மாறுபட்டது என்பதை உறுதியாக அடித்துக் கூற முடியும். டொனமூர் ஆணையத்தின் விதப்புரைக்கு அமைய உள்ளூர்த் தன்னாட்சிக்கு ஏதுவான
250

வழிவகையைத் தரும் 61 ன்பதால் மாகாண சபைகள் அமைக்கப்படுவதை திரு. டண்டாரநாயக்க ஆதரித்து 1940 இலேயே தேசிய சபையில் பேசியுள்ளார். உண்மையில் இணைப்பாட்சிப் (சமஷ்டி) பிரச்சினையில் கூட 1956 - 1959 காலப் பகுதியில் ஒரு திறந்த மனதோடுதான் இருந்தார். 1957 கார்த்திகையில் அரசியல் யாப்புச் சீர்திருத்தம் தொடர்பாக ஒரு தெரிவுக் குழுவை அமைக்க ஒரு பிரேரணையைக் கொண்டு வந்த போது, அந்தக் குழு இணைப்பாட்சி (சமஷ்டி) முறையை ஆராய்வது தவிர்க்கப்பட்டுள்ளதா என்று திரு. செல்வநாயகம் கேட்டார். அவர் அப்போது உணர்ச்சி பூர்வமாகவும், உடனடியாகவும் சபையிலேயே “நிச்சயமாக இல்லை. அந்தப் பிரச்சினையோ அன்றி வேறெந்தப் பிரச்சினையோ முன் வைக்கப்படலாம். இணைந்த தெரிவுக் குழு நிச்சயமாக அதைப் பரிசீலிக்கும்" என்று சொன்னார்.
இனத்துவ முரண்பாட்டுக்கு ஒரு தீர்வு காண்பதற்கு ஓர் அரசியல் வரைமுறையை வளர்த்தெடுக்க திரு. பண்டாரநாயக்க 61 டுத்த முயற்சியில் பெரிதும் குறிப்பிடக்கூடியது பண்டாரநாயக்க - செல்வநாயகம் ஒப்பந்தம் தான் என்பதில் ஐயமில்லை. அதன் உள்ளடக்கத்தை மட்டுமன்றி அது தோற்றுவதற்குக் காரணமாக இருந்த பின்னணியை ஆராய்வதும் முக்கியமானதே. 1956 ஆம் ஆண்டு சிங்களம் மட்டும் சட்டம் இயற்றப்பட்ட பின்னர் எல்லோருக்கும் தெரிந்தது போல், 1956 ஆம் ஆண்டு ஆவணி 19 ஆம் திகதி திருகோணமலையில் நடைபெற்ற நான்காவது மாநில மாநாட்டில் தனது இலட்சியங்களை வென்றெடுக்க நேரடி நடவடிக்கையில் இறங்கப் போவதாகவும் அது அஹிம்சை வழிப் போராட்டமாகவும் அமையும் என்றும் தமிழரசுக்கட்சி தீர்மானம் நிறைவேற்றியது. அவற்றுள் (அ) தமிழையும் இந்நாட்டின் ஓர் ஆட்சி மொழியாக்கி அங்கீகரித்து மொழிச் சமத்துவம் தருவது. (ஆ) ஒரு தமிழ் மாநில அலகு கொண்ட இணைப்பாட்சி (சமஷ்டி) அரசியல் யாப்பை உருவாக்குதல், (இ) குடியுரிமைச் சட்டங்களை நீக்கி நாடற்றவர்கள் அனைவருக்கும் குடியுரிமை வழங்குதல். (ஈ) குடியேற்றங்களை உடனடியாக நிறுத்தல் 61 ன்பன அடங்கும். 1957 ஆம் ஆண்டு ஆவணி 20 ஆம் திகதி இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் தொடங்கப்படும் என்று இந்தத் தீர்மானம் மேலும் கூறியது.
1957ஆம் ஆண்டு சித்திரை 25 ஆம் திகதி பாராளுமன்றத்தில் தமிழுக்குப் பிரதேச மொழி அந்தஸ்து வழங்குவது பற்றியும், தமிழர்கள் குறைகள் சிலவற்றைத் தீர்த்து வைக்கும் முகமாகவும்
251

Page 134
பிரதேச சபைகள் அமைப்பது பற்றியும் தான் தமிழரசுக் கட்சியுடன் பேச விரும்புவதாகவும், திரு. பண்டாரநாயக்க தெரிவித்தார். இதைத் தொடர்ந்து திரு. செல்வநாயகம் அவர்கள் தலைமையில் சென்ற தூதுக் குழுவுடன் பிரதமர் இல்லத்தில் 1957 ஆம் ஆண்டு ஆனி 26 ஆம் திகதி ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. 1957 ஆம் ஆண்டு ஆனி 13 ஆம் திகதி தமிழரசுக் கட்சியுடன் ஒரு வட்டமேசை மாநாடு நடத்துவதன் பயன்பாடு பற்றி அவநம்பிக்கை தெரிவித்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அப்படி ஒரு மாநாட்டுக்கான காரணம் இருப்பதாக அவர் கருதவில்லை. தொடர்ந்து பல சந்திப்புகள் இடம்பெற்ற பின்னர் 1957 ஆடி 25 ஆம் திகதி நள்ளிரவு ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டது. 1957ஆம் ஆண்டு ஆனி 19 ஆம் திகதி அரசினதும் தமிழரசுக் கட்சியினதும் தலைவர்களது விளக்கப்பாடுகளைக் காணும் போது ஒரு மாதம்கூட நீடிக்காத பேச்சுவார்த்தைகள் மூலம் ஒரு உடன்பாடு 6 ட்டப்பட்டமை அசாதாரணமானது தான்.
இந்த உடன்பாடு இரண்டு பகுதிகளைக் கொண்டிருந்தது. முதலாவதாக இரு பகுதியினரதும் முக்கியமான கொள்கை விளக்கம் இடம் பெற்றது. அதன் படி இரு சாராரும் தத்தமது வேற்றுமைகளை மறக்கும் அதே வேளை தத்தமது பேச்சுவார்த்தை நிலைமைகளை விட்டுக் கொடுக்க விரும்பாத நிலையைத் தெளிவாக்கி இருந்தனர். இணைப்பாட்சி (சமஷ்டி) அரசியல் யாப்பைப் பற்றியோ, பிரதேச சுயாட்சி பற்றியோ, அரச கரும மொழிச் சட்டத்தைப் பாதிக்கும் எந்த விடயத்தைப் பற்றியுமோ பேச்சுவார்த்தை நடத்தும் நிலையில் அரசு இல்ல்ை என்று பிரதமர் கூறினார். அதுபோல தமிழரசுக் கட்சியும் தன்னுடைய எந்தவொரு அடிப்படைக் கொள்கையையோ இலட்சியத்தையோ விட்டுக் கொடுக்காது என்பதும் அங்கீகரி*கப்பட்டது. உடன்பாட்டின் முக்கிய பகுதியில் நான்கு கொள்கைகள் இடம்பெற்றன:
(1) மொழிப் பிரச்சினை தொடர்பாக, தமிழ் மொழி இலங்கைத் தேசிய சிறுபான்மையினரின் மொழி என்பதை அங்கீகரிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், அது வடகிழக்கின் நிர்வாக மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றும் இருந்தது. இது சிங்களம், அரச கரும மொழி என்ற நிலைக்குப் பாதகமில்லாமல் செயற்படுத்தப்பட வேண்டும் என்றும், வட-கிழக்கில் வாழும் தமிழ் பேசாத சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாக்கும் ஏற்பாடுகளுடன் செய்யப்பட வேண்டும் என்றும் இருந்தது.
252

1958
ஆம் ஆண்டு பண்டாரநாயக்கா-செல்வநாயகம் ஒப்பந்தம்
தொடர்பான பேச்சு வார்த்தையின் போது எடுக்கப்பட்ட இப்படத்தில் இடமிருந்து வலமாக திரு. கு. வன்னியசிங்கம், திரு. இராஜவரோதயம் திரு. எஸ். ஜே.வி. செல்வநாயகம், திரு. எஸ். டபிள்யூ. ஆர்.டி. பண் டாரநாயக் கா, திரு. செ. இராஜதுரை ஆகியோர் காணப்படுகின்றனர்.
(2)
(3)
(4)
(அ)
குடியுரிமைப் பிரச்சினை தொடர்பாக, தெளிவான தீர்மானம் இல்லாத போதும், நாடற்றவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற தமிழரசுக் கட்சியின் கருத்துக்களுக்கு உரிய கவனம் செலுத்தப்படும் என்று அரசு இணங்கியது.
குடியேற்றப் பிரச்சினையில் , பிரதேச சபைகளின் அதிகாரங்களில் குடியேற்ற அதிகாரம் வழங்கப்படும் என்றும், காணி வழங்கப்படத் தகுதியானவர்களைத் தெரிவு செய்யும் அதிகாரமும் பிரதேச சபைகளுக்கு இருக்குமென்றும் இணக்கம் காணப்பட்டது.
அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாகப் பிரதேச சபைகள் தொடர்பான சட்டம் மேல் வருமாறு திருத்தப்பட வேண்டும் என்று அரசு இணங்கியது.
பரவலாக்கல் அலகு தொடர்பாக மாகாணம் ஒரு தனி அலகாகவும், கிழக்கு மாகாணம் இரண்டு அல்லது மூன்று
253

Page 135
அலகுகளாகப் பிரிக்கப்பட வேண்டும். மாகாண 61 ல்லைகளுக்கு அப்பாலும் இரண்டோ அல்லது அதற்கு மேற்பட்ட அலகுகளோ இணைந்து கொள்வதற்கு இடமளிக்கப்பட்டது. அப்படி அலகுகள் இணைவது பாராளுமன்ற அங்கீகாரத்துக்குட்பட்டது. இரண்டோ அல்லது அதற்கு மேற்பட்ட பிரதேசங்கள் குறிப்பிட்ட பொது நலன்களில் இணைந்து செயற்பட வசதி செய்து கொடுக்கும் முகமாக மேலும் இடமளிக்கப்படவிருந்தது.
(ஆ) பிரதேச சபைகளுக்கு நேரடித் தேர்தல் நடத்த
இடமளிக்கப்பட்டது.
(இ) பிரதேச சபைகளின் அதிகாரங்கள் விவசாயம், கூட்டுறவு, காணி, காணி அபிவிருத்தி, குடியேற்றம், கல்வி, சுகாதாரம், தொழிற்துறை, கடற்றொழில், வீடமைப்பு, சமூக சேவைகள், மின்சாரம், நீரியற் திட்டங்கள், வீதிகள் போன்றவற்றை உள்ளடக்க வேண்டும் என்றும் இனங்காணப்பட்டது.
இந்த ஒப்பந்தம் சூட்டோடு சூடாக திரு. கு. வன்னியசிங்கம் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பில் 1957 ஆடி 28 ஆம் திகதி நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் தேசிய மாநில மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்டது. திரு. பண்டாரநாயக்க ஒரு கீழ்த்தரமான, கசப்பான குற்றம் சுமத்தும் இயக்கத்திற்கு உட்படுத்தப்பட்டார். ஆனால் அதிகாரத்தில் இருந்த கட்சி இனத்துவத் தீர்வுக்குக் கண்ட இணக்கத்தை உடைத்தெறிய 1957 இல் ஐ.தே.க எடுத்த முயற்சிகள் அதிகம் வெற்றி அளித்ததாக இல்லை. இந்த ஒப்பந்தத்தை எதிர்க்கும் முகமாக 1957 ஐப்பசியில் திரு. ஜெயவர்த்தனா பாதயாத்திரை ஒன்றை ஏற்பாடு செய்தார். இரண்டாவது நாளில் இந்தப் பாதயாத்திரை திரு. எஸ்.டி. பண்டாரநாயக்க அவர்களால் ஏற்பாடு செய்த எதிர் ஆர்பாட்டத்தால் முறியடிக்கப்பட்டது. திரு. பண்டாரநாயக்க அவர்கள் தானே நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஒப்பந்தத்திற்கு ஆதரவு திரட்டினார். பெளத்த சங்கத்தில் உயர் மட்ட செல்வாக்குள்ளவர்களும், மீள் உயிர்ப்பிப்புச் சக்திகளும் கூட அவருக்கு ஆதரவாகவே இருந்தனர். 1957 இன் இறுதியில், முதன்முறையாக இந்த ஒப்பந்தம் தொடர்பான சாதகமான ஒரு கருத்தொருமிப்பு இருந்தது போல் தெரிகிறது. ஒப்பந்தத்திற்கு "தமிழ், சிங்களப் பகுதிகளில் இணக்கத் தன்மையான நல்ல வரவேற்பு" இருந்தது. ஆனால் இந்த நம்பிக்கை சிறிது காலமே உயிர்பிழைத்தது.
254

1ே1க்குவரத்து அமைச்சு புதிதாகத் தேசிய மயப்படுத்தப்பட்ட ஸ்களை சிங்கள "பூரீ இலக்கத் தகடுகளுடன் தமிழ்ப் பகுதிகளுக்கு அனுப்பியபோது புதிய குழப்பநிலை ஒன்று உருவானது. தமிழ்த் தீவிரவாதிகள் ஆத்திரத்துடன் சிங்கள பூரீ எழுத்துக்களை அழித்து தமிழ் பூரீ யைப் பொறித்தனர். தென்னிலங்கையில் இது பதிலடிகளை உருவாக்கியது. கும்பல்களால் தமிழ் எழுத்துக்கள் எங்கும் அழிக்கப்பட்டன. ஆங்காங்கே இனவாத வன்முறைகளும் நடந்தன. மென்மையான கருத்தொருமிப்பு ஆபத்துக்குள்ளானது. 1958 சித்திரை மாதத்தில் ஒப்பந்தத்தை கிழித்தெறியும்படி வகுப்புவாத சக்திகள் கோரிக்கை விடுத்தனர். பல டசின் பெளத்த மத குருமார் றொஸ்மீட் பிளேசில் உள்ள பிரதமர் வீட்டுக்கு ஊர்வலமாகச் சென்றனர். அவர்கள் வீட்டு வாசலில் வீதியில் அமர்ந்து கொண்டனர். ஒப்பந்தம் கிழித்தெறியப்படும் வரை நகர முடியாதென அடம் பிடித்தார்கள். தொடக்கத்தில் திரு. பண்டாரநாயக்க அவர்கள் இந்தக் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க மறுத்தார். பெளத்த குருமாரும் விடாக்கண்டர்களாக இருந்தனர். பின்பு திரு. பண்டாரநாயக்க இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்குச் சென்று, அங்கிருந்து வானொலி மூலம் ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட்டு விட்டதாக அறிவித்தார். இது "அவரது அரசியல் வாழ்வின் மிகப் பாரதூரமான தவறு" என்று சில விமர்சகர்கள் வாதிட்டிருக்கிறார்கள்.
ஆனால் பண்டாரநாயக்கவாயினும் சரி, வேறெந்த அரசியல் தலைவராக இருந்தாலும் சரி, அவர் இருந்த நிலையிலே யதார்த்தமான மாற்றுவழிகள் இருந்திருக்க முடியுமா? பெரும்பான்மையினரின் உணர்வு அலைகளுக்கு எதிராக அவர்கள் முகம் கொடுக்க அவர்களுக்கு இருந்த ஆற்றல் என்ன? பண்டாரநாயக்கவின் தந்திரோபாயங்கள் பிழைபட்டுவிட்டதாக மேனர் வாதாடுகின்றார். தனது அரசின் மிக ஆக்கபூர்வமான ஒரு முயற்சியை பிரதேச சபைத் திட்டத்தைக் கொண்டு போய்த் தமிழர் குறைகளைத் தீர்க்கும் திட்டத்துடன் வெளிப்படையாக இணைத்திருக்கக் கூடாது என்று கூறுகிறார். உரிய சட்டத்தை இயற்றிப் பிரதேச சபை அமைப்பை உருவாக்கி இருந்தால் அது விவேகமான செயலாக இருந்திருக்கும் என்கிறார். அதற்குப் பிறகு தமிழரசுக் கட்சியுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கி தமிழர் நலன்களைச் சேர்த்துக் கொள்ளக்கூடிய வகையில் வட்ட அதிகார வரம்புகளைத் திருத்திக் கொண்டி ருக்கலாம் என்றும் கூறுகிறார். அத்துடன் பேச்சு வார்த்தை விபரங்களைப் பகிரங்கப்படுத்தியதன் மூலம் "சிறுபிள்ளைத்தனமாக” நடந்து விட்டதாகக் குற்றம் சுமத்துகிறார். வகுப்புவாத சக்திகளின்
255

Page 136
பயங்கரத்தன்மையைத் தப்புக் கணக்குப் போட்டுவிட்டதாக அவர் கூறுகிறார்.
ஆனால் பண்டாரநாயக்கவின் திறந்த வெளிப்படையான அரசியல் போக்கைத் தெரிந்தவர்களுக்கு அவர் அப்படிக் கபடமாக நடந்திருக்க முடியும் என்பது யதார்த்தமாகத் தெரியவில்லை. தமிழரசுக் கட்சியும் தன் கடும்போக்காளர்களின் நெருக்குதலில் சிக்கியிருந்தது. ஆதலால் ஒப்பந்தத்தில் ஒப்பமிட்ட சூட்டோடு சூடாகவே ஒப்பந்தத்தைப் பகிரங்கப்படுத்தி, நேரடி நடவடிக்கை முயற்சிகளைக் கைவிடத் தூண்ட வேண்டிய பொறுப்பு கைமேல் இருந்தது. மேலாக பிரதேச சபைத் திட்டத்திற்கு ஒப்பந்தம் கொண்டு வந்த மாற்றங்களின் முக்கியத்துவத்தையும், தார்ப்பரியத்தையும் மேனர் கண்டு கொள்ளத் தவறுகிறார். அவை சிறியவை அல்ல. சந்தேகிக்காத ஒரு சட்ட சபையூடாக ஒளித்து மறைத்து கொண்டு செல்வதற்கு அவை தகுதி அடைப்படையிலான மாற்றங்கள் - அலகையும், அதிகாரங்களையும் பொறுத்தவை அவை. இல்லை என்றால் அது வெறுமனே ஒரு உள்ளூராட்சி அமைப்புத்தொடர்பான ஒரு சாதாரண திருத்தம் என்ற அளவோடு போயிருக்கும். மூலச்சட்டம் பொதுமக்கள் கவனத்தை ஈர்க்காமல் போயிருக்கலாம். ஆனால் பண்டாரநாயக்க - செல்வநாயகம் ஒப்பந்தத்தை உடைத்தெறிந்த அதே அழிவுச் சக்திகளின் ஆத்திரத்தை நிச்சயமாகத் திருத்தச் சட்டம் சந்திருக்கும். ஒரு வேளை 1957 இன் இறுதிக் காலாண்டில் அரசு வேகமாகச் செயற்பட்டு இருந்திருக்கலாம். சட்டவரைவுகளைப் பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்திருக்கலாம். ஒப்பந்தம் செய்யப்பட்டு ஆறு மாத கால எல்லைக்குள் சட்ட வரைவுகள் இறுதியாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எட்டு மாதங்கள் நகர்ந்தும் இலக்கை நோக்கி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழரசுக் கட்சியும் சிங்கள பூரீ எதிர்ப்பு நடவடிக்கையில் இறங்கிய தீவிரப் போக்காளர்களைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது என்று பலர் குறை கூறுகிறார்கள். அதனால் பகையும் மோதலும் மூண்டது என்கிறார்கள். அரசும் தமிழரசுக்கட்சியும் இந்த விடயத்தில் இணக்கப்போக்கைக் கடைப்பிடித்திருந்தால் இந்தக் குழப்ப நிலையைத் தவிர்த்திருக்கவும் கூடும்.
பண்டாரநாயக்க இலட்சியங்கள் இனத்துவ அமைதிக்கு என்ன பொருத்தப்பாடு உடையன என்பதைப் பண்டாரநாயக்க - செல்வநாயகம் ஒப்பந்தத்தின் ஆக்கத்தையும், அழிவையும் அசை மீட்டுப் பார்த்து, நாம் எந்தப் பரந்த முடிவுகளுக்கு வரமுடியும்?
256

முதலாவதாக சிங்களம் மட்டும் சட்டத்தின் பிளவுபடுத்தும் தாக்கத்தை வைத்துக் கொண்டு, தேசியப் பிரச்சினைக்கு (இனத்துவப் பிரச்சினைக்கு) பண்டாரநாயக்கவின் அணுகு முறை பற்றிய எந்தப் பொது மதிப்பீட்டையும் உண்மையில் தொடங்கவும் முடியாது, முடிக்கவும் முடியாது. பண்டாரநாயக்க - செல்வநாயகம் ஒப்பந்தம் அத்தகைய ஒரு பகுப்பாய்வில் பிரிக்க முடியாத ஒரு கூறாகவே இருக்க முடியும். ஒப்பந்தம் 6 ன்றுமே நிறைவேற்றப்படவில்லை என்பதில் ஐயமில்லை. ஆயினும் ஒப்பந்தத்தில் இடம்பெறும் கருத்து நிலைகளும் எண்ணங்களும் பின்வந்த இனத்துவத் தீர்வுக்கான எல்லா முயற்சிகளிலும் கட்டுமானக் கற்களாகவே இருந்திருக்கின்றன. 1958 சித்திரையில் றொஸ்மிட் பிளேசில் ஒப்பந்தம் முறியடிக்கப்பட்டமை கழுத்துக்கு மேல் வெள்ளம் வந்த நிலையில் செய்யப்பட்ட ஒரு தந்திரமான மீளப்பெறுகை என்று திரு. பண்டாரநாயக்க அவர்களே உணர்ந்திருந்தார் போலத் தெரிகிறது. இது அவருடைய மிக நெருங்கிய அரசியல் சகாக்கள் ஊடாகவும், அவருடைய பிற்பட்ட அரசியல் விளக்கங்கள் ஊடாகவும் தெளிவாகத் தெரிகிறது. ஒப்பந்தத்தில் இருந்த முக்கியமான அக்கறைக்குரிய விடயங்களை முன்னெடுத்துச் செல்லக் கூடிய சட்டவாக்க நடவடிக்கைளில் உழைக்கத் தெளிவாக நோக்கியிருந்தார்.
1958 புரட்டாதி மாதத்தில் 1958 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கத் தமிழ் மொழிச் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் நிறைவேற்றப்பட்டது. நடைமுறைத் தேவைகள் அனைத்திற்கும் வட-கிழக்கு மாகாணங்களின் நிர்வாக மொழியாகத் தமிழ் மொழி இருக்கும் என்பதை அரச மட்டக் கொள்கையாக ஏற்றுள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ் இயற்றப்பட வேண்டிய விதிகள் 1966இல் கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்தின் பின்னர் தான் இயற்றப்பட முடிந்தது. பிராந்திய மொழி என்ற நிலையிலிருந்து தேசிய மொழி என்ற அந்தஸ்துக்கு உயர்ந்து இறுதியில் அரசியல் யாப்பின் 13 வது திருத்தத்தின் அடிப்படையில் "இலங்கை முழுவதும் அரச கரும மொழிகளுள் ஒன்று" என்று படிப்படியாக அடைந்த வளர்ச்சிப் பின்னணிக்குச் சில காரணிகளுள் பண்டாரநாயக்கசெல்வநாயகம் ஒப்பந்தமும் ஒன்று. அதுபோல பிரதேச சபைகளைப் பொறுத்தவரையிலும், ஒப்பந்தத்தில் எதிர்பார்க்கப்பட்ட மத்திக்கும் - பரவலாக்கப்பட்ட அலகுகளுக்கும் இடையிலான அரசியல் அதிகாரப்பகிர்வு பரவலாக்கப்பட்ட அலகுகள் பற்றிய வரையறை, Ꮪ9lᎶᏡᎧl இணையவோ அல்லது பொது நலன்களில் ஒத்துழைக்கவோ முடியுமான ஆற்றல் என்பன இன்றும் தேசிய பிரச்சினை தொடர்பான அனைத்து அரசியல் சொல்லாடலிலும் மத்தியமான இடத்தை பெற்று நிற்கின்றன.
257

Page 137
குறிப்பிட்ட இந்தக் கால கட்டத்தின் வரலாற்றிலிருந்து நாம் இன்னமும் உள்வாங்கிக் கொள்ளாத பாடங்களுள் ஒன்று மிக முக்கியமானது. புறத்தோற்றத்தில் பரஸ்பர முரண்பாடு தொனிக்கும் தீர்வுகளை ஆதரிக்கிறோம். ஆனால் வலுவுடன் நிறைவேற்ற முடிவதில்லை. இது நாம் அனுபவிக்கும் அசாதாரண இடர்ப்பாடுகளில் ஒன்று. இதை நாம் இன்றும் அரசமொழிக் கொள்கையில் காண்கிறோம். சிங்களம் அரசகரும மொழி என்கிறோம். அத்துடன் அதற்குப் பாதகமில்லாமல் தமிழும் ஒரு அரசகரும மொழி என்று சொல்கிறோம். இலங்கை ஒற்றையாட்சித் தன்மையானது என்கிறோம். அதேவேளை சட்டவாக்க அதிகாரமும், இணைப்பாட்சித் (சமஷ்டி) தன்மைகொண்ட அரசியல் ஒழுங்கமைப்புள்ள மாகாண சபைகளையும் அமைப்போம் என்கிறோம்.
தெரிவுக்குழுவின் வரையறைக்குள், பரவலாக்கல் அலகு என்றொரு கருத்து நிலையை ஒருவாக்க முயல்கிறோம். அது மறுபுறத்தில் இணைப்பை ஏற்றுக் கொள்கிறது. அதேவேளை இணைப்பு உடைப்புக்கும் வழி வகுத்துள்ளது. அதுமாதிரியான ஐயப்பாடான, அசெளகரியமான இணக்கப்பாட்டைப் பெளத்த மதத்திற்கு அரசியல் யாப்பு ரீதியான இடத்தைக் கொடுத்ததில் காண்கிறோம். இலங்கை éfl Du 1 & சார்பான நாடுமல்ல, சமயச் சார்பில்லாத நாடுமல்ல. பெளத்தத்திற்கு முதன்மைத்துவ இடம் அளிக்க வேண்டிய கடப்பாடு அரசுக்குண்டு. அதேவேளை ஏனைய மதத்தினருக்கும் தத்தமது அனுட்டானங்களைக் கடைப்பிடிக்கவும், வணங்கவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இப்படியான அரசியல் உருவாக்கங்கள் தெளிவற்ற நிலையைத் தோற்றுவிக்கின்றன. விளக்கமில்லாமல் இருக்கின்றன. ஒன்றோடொன்று இணைந்து போகாத தன்மையைக் காட்டுகின்றன. முரண்பாட்டுத் தன்மையைக் காட்டுகின்றன. இது ஓர் இடர்பாட்டைத் தருகிறது. ஏனென்றால் அவர்கள் இரண்டு வாக்காளர் தொகுதிகளுடன் பேசுகிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. சிங்கள பெளத்த தொகுதிக்கு அவர்கள் மொழி, மதம், அரச கட்டமைப்பு அவர்களது இனத்துவத் தனித்துவம் அல்லது முதன்மைத்துவம் எல்லாம் பாதுகாக்கப்படும் என்ற உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டிய தேவை உண்டு. மறுபக்கத்தில் தமிழ் சமூகத்திற்கும் பிற சிறுபான்மைச் சமூகங்களுக்கும் சிறப்பான இந்த உரிமைகளும் முதன்மைகளும் இருப்பினும் அவர்கள் நியாயமாக சமத்துவமாக நடத்தப்படுவதற்கான உரிமை மதிக்கப்படும் என்ற உத்தரவாதமும் தரவேண்டியுள்ளது. இது வெறுமனே அறிவார்ந்த பொறி மட்டுமல்ல.
258

இந்த இரட்டை நிலைப்பாடுகள் செயற்படுத்தப்படும் பொழுது பல சரிக் கல் கள் எழுகின்றன . இரு மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் தொடரும் தொல்லைகள், மாவட்ட அபிவிருத்தி சபைத்திட்டத்தின் தோல் வி ஏன் மாகாண சபைத்திட்டமும்கூட தோல்விகாண்பதற்கு இந்த முரண்பாடுகள், ஐயப்பாடுகள், பொருத்தப்பாடுகளால் எழுந்த அல்லோல கல்லோல நிலையே காரணம்.
இனத்துவக் குரோதத்தால் ஏற்படக்கூடிய பாரிய விளைவுகளைப் போதியளவு புரிந்து கொள்ளக் கூடிய தேவையான அரசியல் முதிர்ச்சியை இலங்கைத் தேர்தல் தொகுதி பெற்றுவிட்டது. இந்தத் தொகுதியில் நம்பிக்கை வைத்து, ஐயத்துக்கிடமில்லாத, தனாகவே நிறைவேற்றுந்தன்மை கொண்ட தீர்வுகளை முன்வைக்க வேண்டும்.
இந்தக் காலகட்ட அரசியல் வரலாற்றின் பொது நோக்கு மீளாய்வில் காலி முகத்திடலில் நடந்த சக்தியாக்கிரகத்தையும், 1958 இல் நடந்த கூட்டு வன்முறையையும் அரசு கையாண்ட விதம் தவறானது என்பதைக் கண்டு கொள்ளத் தவற முடியாது. இந்த நிகழ்வுகளை அரசாங்கம் கையாண்ட விதம் குழந்தைப்பிள்ளைத்தனமானது, இயலாமைத் தனமானது, ஒத்துழைப் புத் தன் மையானது. பாதிக்கப்பட்டவர்களின் மனித உழற்சிகள், ஏக்கங்களுக்கு அக்கறை காட்டாத இரக்கமில்லாத தன்மை கொண்டது. இந்த நிகழ்வுகளை நான் விரிவாக இங்கு ஆராய விரும்பவில்லை. ஆனால் இந்த சம்பவங்களும் பின்பு 1977, 1983 இல் நடந்த வன்முறைகளும் தமிழ் சமூகத்தினரிடம் பாதுகாப்பின்மை பற்றிய நம்பிக்கையை ஆழமாகப் பதித்துவிட்டன. தமது உட்யிர்களையோ, உடமைகளையோ பாதுகாக்க அரசின் பாதுகாப்புக் கரங்கள் நீளாது என்ற கருத்தை உருவாக்கி உள்ளது என்பதை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்.
V
நாம் இப்போது பண்டாரநாயக்க இலட்சியத்தின் வேறு இரு கூறுகளை ஆராய்வோம். அவை இதுவரை போதியளவு ஆராயப்படவில்லை. அரசியல், அரசியல் யாப்புச் சீர்திருத்தம் பற்றிய பண்டாரநாயக்கவின் அணுகு முறை முதலாவதாகும். அரசியல் யாப்புச் சீர்திருத்தம் தொடர்பாக 1957 இல் இணைந்த
259

Page 138
தெரிவுக்குழு ஒன்றை நியமிக்கக் கோரிப் பிரேரணை கொண்டு வந்த பொழுது அந்தத் தெரிவுக்கு மேல்வரும் விடயங்களை ஆராய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
(அ) குடியரசை நிறுவுதல். (ஆ) அடிப்படை உரிமைகளை வழங்குதல் (இ) மேல் சபை (செனட் சபை), மக்கள் பிரதிநிதிகள்
சபையில் நியமன உறுப்பினர்கள் நிலையை ஆராய்தல். (ஈ) பொதுச்சேவை ஆணையம், நீதிச் சேவை ஆணையம்
இலங்கை 1972 இல் தான் குடியரசாகியிருந்தாலும், அதன் பின்னணி 1957ஆம் ஆண்டு கார்த்திகை 7ஆம் திகதி அவர் பாராளுமன்றத்தில் ஆற்றிய் உரையில் இருக்கிறது. அதுபோல அடிப்படை உரிமைகளில் ஆழமாக அக்கறை கொண்டிருந்தார். "இன்றைய எமது யாப்பில் அடிப்படை உரிமைகள் பற்றிய போதுமான வரையறை இல்லை” என்று அவர் சொன்னார். அத்தகைய அடிப்படை உரிமைகள் பற்றிய வரையறை தனி மனித சுதந்திரத்தை மட்டும் உறுதி செய்வதுடன் நில்லாது சிறுபான்மையினர் உரிமையையும் பாதுகாக்க வேண்டும் என்றார். "29 ஆம் உறுப்புரைக்கு மேலாக வேறெந்த உறுப்புரையும் இல்லை. அதுவே திருப்திகரமாக இல்லை" என்று அவர் வாதாடினார். இதிலே அவர் ஜோஸப் ஏ.எல். குரேயின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டிருக்கலாம் போலத் தெரிகிறது. 1957 இல் சேர். ஜேம்ஸ் பீரிஸ் நூற்றாண்டு நினைவுப் பேருரையினைக் குரே ஆற்றியிருந்தார். குரே நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்படக் கூடிய அடிப்படை உரிமைகளை வலிமையாக ஆதரித்தவர். இந்திய மாதிரிகளைப் பின்பற்ற வேண்டும் என்று தூண்டியவர். “இன, மத, மற்றும் வேறுபாடுகள் உள்ள ஒரு நாட்டில் மக்களாட்சியம் திருப்திகரமாகத் தொழிற்படுவதில்லை" என்று அவர் சொன்னார். ஆதலால் உரிமைகள் யாப்பில் சரியான முறையில் இடம்பெற வேண்டும் என்றார். "அரசியல் யாப்பு அப்போதுதான் ஒழுக்கக் கோவையின் அடித்தளமாக அமையும், அதன் வழியாக மக்கள் மரியாதையைப் பெறும், மக்களின் அரசியல் ஒப்பந்தம் என்பதால் அவர்கள் பணிவைப் பெறும், அத்தோடு உச்ச சட்ட ஒப்பந்தமாகவும் அமையும்". பல விமர்சகர்கள் அடிப்டை உரிமைகள், அரசியல் யாப்பியல் தொடர்பான குரே கொண்டிருந்த கருத்துக்கள் பண்டாரநாயக்க கொண்டிருந்த கருத்துக்களை ஒத்திருந்ததாகவும் கூறியுள்ளனர். இத்துடன் தொடர்புள்ள நடவடிக்கை தான்
260

மரணதண்டனையை நீக்கிய நடவடிக்கையாகும். இப்போதுதான் அது அனைத்துலக மட்டத்தில் கருத்தில் 6 டுக்கப்பட்டு குடி சார் மற்றும் அரசியல் ஒப்பந்த உறுப்பு நாடுகள் மரண தண்டனையை நீக்கும் படி தூண்டப்பட்டு வருகிறார்கள்.
திரு. பண்டாரநாயக்க தொடங்கிய ஒரு சமூகத் திட்டத்தை இங்கு நான் குறிப்பிட விரும்புகிறேன். அது இன்னமும் முற்றுப்பெறவில்லை. இது தேரவாத பெளத்த மரபின் மொழி வழக்கிலிருந்து பெறப்பட்ட நீதி ஆட்சி, மக்களாட்சியம் சார்ந்த வகை சொல்ல வேண்டப்படுதல் தொடர்பான கொள்கைகள் தொடர்பானவை. இவை மிக முக்கியமானவை. யாப்பியல் விழுமியங்கள், உரிமைகள் தொடர்பான அழுத்தங்கள் என்பன ஒரு புறத்திலும் கருத்துநிலை, எண்ணங்கள், நிறுவனங்கள் என்பவை தேரவாத பெளத்தத்தின் உலகப் பார்வைக்கும் நம்பிக்கை அமைப்புக்களுக்கும் மத்தியமாய் மறுபுறத்தில் இருப்பதால், இவை இரண்டுக்கும் இடையில் இணைப்பை ஏற்படுத்துவது முக்கியமான தேவையாக இருக்கிறது. இலங்கையில் இத்தகையதொரு திட்டத்தை உருவாக்காமல் இருப்பது ஏமாற்றமாக இருக்கிறது. சம காலத்தில் இது பற்றிச் சிந்தித்திருப்பவர் நோபல் பரிசு பெற்றவரும், பர்மாவின் அரசியல் உற்சாகியுமான ஓங்சான் சூ கீ ஆவார். "பர்மிய மக்கள் மக்களாட்சியத்தைத் தேடும் படலத்தில் வெளியுலகத்தில் உள்ள அரசியல் கொள்கைகள், கருத்து நிலைகள் என்பவற்றை மட்டும் தேடவில்லை. தங்கள் சூழலை உருவாக்கிய தங்கள் சொந்த ஆன்மீக அறிவியல் விழுமியங்களையுந்தான் தேடுகிறார்கள்” என்று அவர் சொன்னார். அதற்குப் பின்பு அவர் உலக வரலாறு தொடர்பான பெளத்த பார்வையை விரிவாக ஆராய்கிறார். அரசரியல், அரசரியல் தொடர்பான பத்துக் கடமைகள், தேய்மானத்துக்கு எதிரான ஏழு பாதுகாப்புக்கள் மக்களுக்குத் தரவேண்டிய நான்கு உதவிகள், மற்றும் பல்வேறு ஒழுக்கக் கோவைகள் என்றெல்லாம் ஆராய்ந்த பின் இப்படி முடிவாக எழுதுகிறார். "மனிதப் பிறவிகளின் உடன் பிறந்த தன்மானம், சமத்துவமான மீற முடியாத உரிமைகள் என்பவற்றைக் கணிக்கின்ற கருத்து நிலைகளும், அவை விதந்துரைக்கின்ற அனைத்துலக சகோதரத்துவ உணர்வும் 61ப்படி பாரம்பரிய விழுமியங்களுக்கு முரணாக இருக்க முடியும்" என்று பர்மியர்கள் மயங்குகிறார்கள். அவர் மேலும் குறிப்பிடுகையில், "சட்டம் பற்றிப் பெளத்தத்தின் கருத்துநிலை தர்மத்திலும், நியாயத்துவத்திலும், நன்னெறியிலும் உருவானவை. நிர்க்கதியான ஒரு மக்கள் மீது
26

Page 139
கடுமையான வளைந்து கொடுக்காத சட்டங்களைத் திணிக்கும் அதிகாரத்தின் அடிப்படையில் உருவானதல்ல. ஒரு அமைப்பின் உண்மையான நியாயம் வழங்கும் தன்மை ஆனது பலவீனர்களுக்கும் அது உறுதி செய்யும் பாதுகாப்பின் அளவிலேயே தங்கியுள்ளது". பாரம்பரிய பெளத்தத்தின் விழுமியங்களையும் கருத்து நிலைகளையும் 61ங்கள் காலத்தின் தேவைகளுடன் இணைக்க வேண்டும் என்ற திரு. பண்டாரநாயக்காவின் சொந்தக் கருத்துக்களுடன் பர்மியப் பெண்மணியின் கருத்துக்கள் பல ஒத்துப் போகும் 61 ன்பதில் ஐயமில்லை. திரு. பண்டாரநாயக்க ஒரு முறை சொன்னர் "வெறுமனே பழைய நினைவுகளிலே ஒரு மக்கள் வாழ முடியாது என்பது உண்மைதான், அதே நேரத்தில் அவர்கள் வரலாறு அவர்களுக்கு வருங்காலத்தில் வழி நடத்த வலிமையும், உள்ளொளியும் சேர்க்கின்றது என்பதும் அதுபோல் உண்மைதான்.இறந்த காலத்தின் பின்னணியில் தான் நிகழ்காலத்தையும், வருங்காலத் தையும் சரியான விளக்கப்பாட்டுடன் பார்க்க முடியும்”.
பண்டாரநாயக்க இலட்சியத்தின் இன்னொரு குறிப்பிடப்பட வேண்டிய கூறு நீதி நிர்வாகத்தை, நீதித்துறை சார்ந்தவர்களிடமிருந்து பிரித்தெடுப்பதுதான் இணக்க சபைகள் அமைப்பதன் மூலம் இதனை அடையத் திட்டமிடப்பட்டது. இணக்க சபைகளின் சிற்பி திரு. எம்.டபிள்யூ.எச்.டி. சில்வா, இவர் அப்போது நீதி அமைச்சராகக் கடமையாற்றினார். "இந்தத் தீவின் நீதித் துறை வரலாற்றில் தனித்துவமான" இடத்தைச் சட்டத்துறையில் பெற்றிருந்த இவர் நீதி அமைச்சராக்கப்பட்டார். திரு.எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவுடன் முன்பு சிறிது அறிமுகமாயிருந்தார். நீதித் துறையில் பல சீர்திருத்தங்கள் தேவை என்று கருத்திற் கொண்டிருந்த திரு.எம். டபிள்யூ. எச்.டி. சில்வாவுக்கு நீதித் துறையில் வேண்டிய சீர்திருத்தங்கள் செய்யப் பூரண அதிகாரத்தை திரு. பண்டாரநாயக்க வழங்கியிருந்தார். நீதி நிர்வாகம் திருப்தியாக நடைபெறாதமை, இந்தத் திறமையற்ற அமைப்பில் நீதி வேண்டி மக்கள் செலவழிக்க வேண்டியிருந்த பெருந்தொகைப் பணம் 61 ன்பன அவரை உறுத்தின. அவர் கிட்டத்தட்ட ஐம்பது திட்டங்கள், திருத்தங்களை முன்வைத்தார். அவற்றுள் ஒரு சிலவே நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. ஏழை மக்களுக்கு நீதித் துறையின் உதவி செய்யும் வழிவகைகளை ஆராய ஓர் ஆணையத்தை நியமித்தார். இதனால் 1958 இல் நீதி உதவித்திட்டம் நடைமுறைக்கு வந்தது. பல குடிசார் சட்டப்பிரச்சினைகள் தொடர்பான பிணக்குகளையும் ஒரு சில வகையான குற்றவியல் சட்டப்பிரச்சினைகள்
262

தொடர்பான வழக்குகளையும் துரிதமாக விசாரித்து சமூகத்தில் பிணக்குகள், முறுகல்களைத் தவிர்க்க இணக்க சபைகள் நடைமுறைப 'படுத்தப்பட்டன. நீதி மன்றம் சென்று காலத்தையும் பணத்தையும் விரயம் செய்யாமல் துரிதமாகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு அமைதி பெற இது வழிவகுத்தது. இந்தச் சீர்திருத்தங்களை நான் பிறிதொரு இடத்தில் ஆராய்ந்துள்ளேன். இணக்க சபைகள் நீதி மன்றங்களில் தேங்கிக் கிடந்த வழக்குகளின் பழுவைக் குறைத்தன. மக்கள் பிணக்குகளை சமாதானமாகத் தீர்த்து வைக்க வழிவகுத்தது. கிராமிய மக்களுக்கு பெரும்உதவியாக இருந்தது. 1978இல் இணக்க சபைகள் சட்டம் நீக்கப்பட்டது. ஆயினும் பிணக்குகளுக்கான தீர்வு காண்பதற்கான மாற்று வழியின் தொடர்ச்சியான பொருத்தப்பாட்டை ஏற்றுக்கொண்ட இன்றைய அரசு மத்தியஸ்த சபைகளை அமைப்பதன் மூலம் நிவர்த்தி காண மீளாய்வு செய்து வருகிறது.
V
பண்டாரநாயக்க இலட்சியத்தில் பொதுமையான சீர்திருத்தங்களுக்கும், சிங்கள தனித்துவத்திற்கும் இடையே முரண்பாடுகள் தோன்றிய பொழுதிலும் அந்த முரண்பாடுகளுக்கு தீர்வுகாண திரு. பண்டாரநாயக்க முயற்சிகள் எடுத்தார். அவர் ஒருமுறை "நாம் சிங்களவர்களாக இருப்பதில் பெருமையடைகிறோம். சிங்கள மக்களுக்குத் தேவையான விடயங்களைப் பாதுகாக்கவும், வளர்க்கவும் நாம் விரும்புகிறோம். ஆனால் அதே நிலைப்பாட்டை மற்றவர்களுக்கு மறுப்பதற்கு நாம் தயாராக இல்லை. ஏனென்றால் நீதி நியாயம் என்பதற்கு அது இசைவாக இருக்காது”. தனது அரசியல் வாழ்வில பல அலைமோதல்களை அனுபவித்த திரு. பண்டாரநாயக்க மனித இயற்கையின் நம்பிக்கையூட்டும் தன்மையில் நிறைய அறிவும் அனுபவமும் பெற்றவராக விளங்கினார். அதிகமாக மேற்கோள் காட்டப்படும் பிஷப் றெஜினோட் ஹெபர் அவர்களின் பின்வரும் கூற்றில் அவர் நம்பிக்கை வைக்கவில்லை.
"(உலகில் அனைத்துமே அழகாக இருக்கிறது. மனிதனே கெட்டுப் போயிருக்கிறான்."
மனிதரில் திரு. பண்டாரநாயக்க வைத்திருந்த நம்பிக்கையை மிகத் தெளிவாக இலங்கைப் பல்கலைக்கழகத்தின் (பேராதனை) பட்டமளிப்பு
263

Page 140
விழாவில் 1957 நவம்பர் 8 ஆம் திகதி ஆற்றிய உரையில் வெளிப்படுத்தினார்.
“அமைதியான முரண்பாடு என்னைப் பொறுத்த வரையில் பொருள் பொதிந்த முரண்பாடாகும். வாழ்க்கைக்கு முரண்பாடு மிக அவசியம். முரண்பாட்டிலிருந்துதான் முற்போக்குப் பிறக்கிறது. ஆனால் முரண்பாடு அதற்கு மேலான அமைதியைக் குலைக்கக் கூடாது. எனது கருத்துக்களை நடை முறைப்படுத்துவது சாத்தியம் என்று நான் எப்பொழுதும் நம்பினேன். எனது நாட்டு மக்கள் அது சாத்தியமாக உதவியிருக்கிறார்கள். மனிதனின் இறுதியான நன்நோக்கில், நலம் கொண்ட உறுதியில் நம்பிக்கை வைத்து முயற்சிகள் செய்தேன். பரிசோதனை செய்தேன். நான் அந்தப் பரிசோதனை களை இந்த நாட்டிலேயே செய்தேன். என்னை நம்புங்கள். நான் கணிசமான வெற்றியும் கண்டுள்ளேன்.”
எமது சமூகம் சுற்றிச் சுழன்று வன்முறைகளால் மிருகத்தனமாக உழக்குப்பட்ட தசாப்தங்களை நினைத்துப் பார்க்கையில் இலகுவில் நல்லதுக்குக் காலமில்லை 6 ன்று நலிந்து விடலாம், அல்லது நம்பிக்கை இழந்து நொந்து விடலாம். மனித விழுமியங்களுக்கான போராட்டத்தில் நம்பிக்கை இழப்பது ஒரு ஒழுக்கக்கேடாகும். எமது மக்களின் நன்நோக்கிலும் நலம் கொண்ட உறுதியிலும் நாம் தொடர்ச்சியாக எமது நம்பிக்கையைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று திரு. பண்டாரநாயக்க எமக்கு நினைவூட்டினார்.
1948 பெப்ரவரி 10 ஆம் திகதி ரொறிங்ரன் சதுக்கத்தில் உள்ள சபை மண்டபத்தில் திரு. பண்டாரநாயக்க ஆற்றிய உரையை நினைவுபடுத்தி 6 ன் உரையை முடிக்க விரும்புகிறேன். முதல் பாராளுமன்றத்தை அதி மேதகு குளோ செஸ்ரர் டியூக் கோமான் திறந்து வைத்த வைபவத்தில் இந்த உரை ஆற்றப்பட்டது. அவரது உரை இன்றைய சந்தர்ப்பத்தில் புதிய அர்த்தத்தைப் பெறுகின்றது.
"உலகில் உள்ள பெரிய வலிமை மிக்க நாடுகளுடன் ஒப்பிடும் போது நாம் ஒரு சிறிய நாட்டில் வாழும்
264

சிறு மக்கள். ஆனால் எங்கள் வரலாறு வளமானது - மனித இனத்தை இளக வைக்கக் கூடிய சான்றாண்மை மிளிரும் உணர்வுகள் மிக்க உதாரணங்கள் பலவுண்டு - வீரம், தீரம், சாத்வீகம், தியாகம், சேவை எல்லாமே உண்டு. எமக்கு முன்னே உள்ள இடுக்கண் மிக்க இருண்ட வருங்காலத்தில் நாம் வெற்றி நடை போட வேண்டுமானால் எமக்கு இவை எல்லாம் தேவை."
இணைப்பு
பண்டா - செல்வா உடன்படிக்கை (26.07. 1958)
பகுதி - அ
வளர்ந்து நாட்டில் நெருக்கடியை ஏற்படுத்திவந்த கருத்து வேற்றுமைகளைத் தீர்க்கும் முயற்சியாக, இலங்கைத் தமிழரசுக் கட்சிப் பிரதிநிதிகள் பிரதமரோடு தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தினார்கள்.
உரையாடலின் தொடக்கத்திலேயே தமிழரசுக் கட்சியின் சில கோரிக்கைகளைப் பிரதமர் ஏற்பது சாத்தியமற்றதென்பது தெளிவாகியது.
சமஷ்டி அரசியல் அமைப்பையோ, பிரதேச சுயாட்சியையோ ஏற்படுத்துவது பற்றிப் பேசவோ, அல்லது உத்தியோகமொழிச் சட்டத்தை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவோ அரசாங்கத்தின் நிலையில் தன்னால் இயலாது என்று பிரதமர் கூறினார்.
இலங்கைத் தமிழரசுக்கட்சி தனது அடிப்படைக் கொள்கைகள், நோக்கங்கள் எவற்றையும் கைவிடாத வகையில் ஓர் இடைக்கால
ஒழுங்குக்கு வர இயலுமா என்பதை ஆராயும் கேள்வி பின் எழுந்தது.
265

Page 141
அரசாங்கத்தின் பிரதேச சபைகள் மசோதாவை ஆராய்ந்து, அதன் கீழ் இலங்கைத் தமிழரசுக்கட்சி கருத்திற் கொண்டிருக்கும் சில விடயங்களை நியாயமாக உள்ளடக்கக் கூடியதாக ஏற்பாடுகள் செய்ய இயலுமா என்று பார்க்குமாறு பிரதமர் ஆலோசனை கூறினார்.
அங்கு ஏற்பட்ட உடன்படிக்கை ஒரு தனியான பத்திரத்தில் தரப்படுகிறது.
இடைக்கால ஒழுங்கு
மொழி விடயத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சி சம அந்தஸ்துக் கோரிக்கையை வலியுறுத்தியது. ஆனால் இவ்விடயத்தில் பிரதமரின் நிலையை உத்தேசித்து இடைக்கால ஏற்பாடாக ஓர் உடன்படிக்கைக்கு வந்தனர். தமிழ் ஒரு தேசிய மொழியாக அங்கீகரிக்கப்படுவதும், வடக்குக் கிழக்கு மாகாணங்களின் நிர்வாக அலுவல்கள் தமிழில் நடைபெறுவதும் முக்கியமானவை என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.
நான் முன் குறிப்பிட்டதுபோல, உத்தியோக மொழிச் சட்டத்தை அழிக்கக் கூடிய எந்த நடவடிக்கையும் எடுப்பது சாத்தியமற்றதென்று பிரதமர் கூறினார். கருத்துப் பரிமாறலின் பின், இயற்ற உத்தேசிக்கப்படும் சட்டத்தில் - இலங்கையின் தேசிய சிறுபான்மை யோரின் மொழியாகத் தமிழை அங்கீகரிக்க வேண்டுமென்றும் உத்தியோக மொழியின் நிலையைப் பாதிக்காத வகையில் வடக்குக் கிழக்கு மாகாணங்களின் நிர்வாகமொழியாகத் தமிழே இருக்கும் வகையில் பிரதமரின் நாலு அம்சத்திட்டத்தில் ஏற்பாடு இருக்க வேண்டுமென்றும், வடக்குக் கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் தமிழ் பேசுவோரல்லாத சிறுபான்மையோருக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென்றும் இருதரப்பினரும் ஒப்புக் கொண்டனர்.
இந்திய வம்சாவழியினருக்கு இலங்கைக் குடியுரிமை வழங்குவது பற்றியும், குடியுரிமைச்சட்டம் பற்றியும் தமது கருத்துக்களை இலங்கைத் தமிழரசுக் கட்சிப் பிரதிநிதிகள் பிரதமருக்கு எடுத்து விளக்கி, விரைவில் இப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டுமென்று வற்புறுத்தினார்.
இப்பிரச்சினை விரைவில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென்று பிரதமர் அறிவித்தார்.
266

இம் முடிவுகளின் காரணமாகத் தமது உத்தேச சத்தியாக்கிரக நடவடிக்கையைக் கைவிடுவதாகத் தமிழரசுக்கட்சி அறிவித்தது.
பகுதி ஆ
l. பிரதேச சபைகளின் 6 ல் லைகள் - சட்டதிலேயே அட்டவணையாகச் சேர்க்கப்பட்டு வரையறுக்கப்பட வேண்டும்.
2. வட மாகாணம் ஒரு பிரதேச சபையாகவும் - கிழக்கு மாகாணம் இரண்டு அல்லது கூடிய பிரதேச சபைகளாகவும் அமையும்.
3. மாகாண எல்லைகளையும் தாண்டி இரண்டு அல்லது மேற்பட்ட பிரதேச சபைகள் இணைவதற்குச் சட்டத்தில் விதி இடம்பெறும். பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துக்கு அமைவாக, ஒரு பிரதேச சபை தன்னைப் பிரித்துக் கொள்ளவும் இடம் இருக்கும். இரண்டு அல்லது மேற்பட்ட பிரதேச சபைகளுக்குப் பொதுவான குறிப்பிட்ட நோக்கங்களுக்கு, அவை சேர்ந்தது செயல்படச் சட்டத்தில் இடம் இருக்கும்.
4. பிரதேச சபை உறுப்பினர் நேரடியாகத் தெரிவு செய்யப்படுவர். அதற்கான தொகுதிகளை வகுப்பதற்குத் தொகுதி நிர்ணயக் குழுவோ, குழுக்களோ அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும். பிரதேச சபையின் எல்லைக்குள் அமைந்த மாவட்டங்களின் பாராளுமன்ற உறுப்பினர் - பிரதேச சபைத் தலைவராவதற்குத் தகுதி பெறுவது பற்றி ஆலோசிக்கப்படும். அரசாங்க அதிபர்கள் பரிரதேச ஆணையாளர் களாக நியமிக்கப் படுவது ஆலோசிக்கப்படும். பெரிய பட்டினங்கள், கேந்திர நகரங்கள் மாநகரசபைகள் ஆகியவற்றை மேற்பார்வை செய்யும் அதிகாரங்கள் ஆராயப்படும்.
5. அதிகாரங்கள் பாராளுமன்றத்தினால் வழங்கப் பெற்றுச் சட்டத்தில் வரையறுக்கப்பட வேண்டும். விவசாயம், கூட்டுறவு, காணியும் காணி அபிவிருத்தியும், குடியேற்றம், கல்வி, சுகாதாரம், கைத்தொழில், மீன்பிடித்துறை, வீடமைப்பு, சமூகசேவை, மின்சாரம், தண்ணீர்த்திட்டங்கள், நெடுஞ்சாலைகள் ஆகியவை உள்ளடங்கக் குறிப்பிட்ட விடயங்கள் பிரதேச
267

Page 142
சபைகளின் அதிகாரத்திற்குட்பட்டிக்க வேண்டுமென்று ஒப்புக் கொள்ளப்பட்டது. வேண்டிய அதிகார எல்லைகள் சட்டத்திலேயே வரையறுக்கப்படும்.
குடியேற்றங்களைப் பொறுத்தவரை, தமது அதிகார 6 ல்லைக்குட்பட்ட காணிகள் வழங்கப்பட வேண்டிய குடியேற்றவாசிகளைத் தெரிவு செய்வதும், அத்திட்டங்களில் வேலைக்கமர்த்தப்படும் ஆட்களைத் தெரிவு செய்வதும் பிரதேசசபையின் அதிகாரத்திற்குட்பட்டதாக இருக்கும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. இப்போது கல்லோயா அபிவிருத்திச் சபையினால் நிர்வகிக்கப்படும் பிரதேசத்தின் நிலை ஆராயப்பட வேண்டும்.
சட்ட மூலத்தில் பிரதேச சபைகளையொட்டி உள்ளூராட்சி அமைச்சருக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்களை மாற்றித் தேவையான இடத்தில் பாராளுமன்றத்திடம் ஒப்படைக்கும் பொருட்டு அவ்விதிகள் திருத்தப்படும்.
பிரதேச சபைகளுக்கு மத்திய அரசாங்கம் மொத்தமாக நிதி வழங்கும். அத்தொகை கணக்கிடப்பட வேண்டிய கொள்கைகள் பின் ஆராயப்படும். பிரதேச சபைகளுக்கு வரி விதிக்கவும், கடன் வாங்கவும் அதிகாரம் இருக்கும்.
பண்டாரநாயக்க நினைவுச் சொற்பொழிவு பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபம் 26 புரட்டாதி 1992
268

நூல் விமர்சனம் “கீழைத்தேசத்தின் தவப்புதல்வி" பெனாஸிர் பூட்டோவின் சுயசரிதை வெளியீடு ஹாமிஸ் ஹெமில்டன், லண்டன், 1988
"வரலாற்று ஆசிரியர்களும் வாழ்க்கை வரலாற்று ஆசிரியர்களும் உண்மை நிலையின் சாயலை உருவகித்துக் காட்டுவதற்கு கற்பனைகளையும் புலமை சார்ந்த யுக்திகளையும் பயன்படுத்துகின்றனர். இலக்கியத் திறனையும் கற்பனா சக்தியையும் கொண்டு, ஒரு மனிதனின் குணாதிசயத்தை மனக்கண்முன் இழுத்து வருவதற்கு வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் கற்பனைப் புனைவிலேயே பெரிதும் தங்கியிருக்கின்றார். வரலாற்று ஆசிரியர்கள் தமது வாழ்க்கையே உட்பட்டிருக்கும் ஒரு நிகழ்வுகளின் குழுத்தோற்றத்திற்கு ஒரு தனி மனிதனை இணைத்து விடுகிறார்கள்" என்று வரலாற்று ஆசிரியரான ஏ.ஜே.பி. ரெயிலர் ஒரு தடவை எழுதியிருந்தார். பூட்டோ யுகத்தைப் பற்றிய நூலொன்றை எழுதுமாறு பெனாஸிர் பூட்டோவை அவரது நண்பர்களும் வெளியீட்டாளர்களும் கேட்டுக் கொண்ட பொழுது, தமது தந்தையரான சுல்பிகார் அலி பூட்டோவின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி எழுதுவதா அல்லது 'எவருடைய முக்கியமான அரசியற் போராட்டங்கள் இன்னமும் நடத்தப்படவிருக்கின்றனவோ! அவரைப் பற்றிய சுயசரிதையை எழுதுவதா என்ற கேள்விக் குறியே அவரது மனதில் உதித்தது. சுயசரிதை ஒருவரது வாழ்க்கையின் இறுதிக் கட்டத்திலேயே எழுதப்படுவது வழக்கம். சுயசரிதைகளின் நோக்கம், முன்னிகழ்வுகளைப் பிரதிபலிக்கச் செய்வதும் கடந்த காலத்தை மீண்டும் மனக்கண் முன் கொணர்வதுமேயாகும் என்ற தத்துவத்தில் நம்பிக்கை கொண்ட பெனாஸிர் தமது, சுயசரிதையை எழுதும் நோக்கமுடையவராக இருக்கவில்லை எனினும் வெளியீட்டாளர்கள், அவரது தந்தையின் வாழ்க்கை வரலாற்றையல்ல, தனது சொந்த சரிதையையே எழுதவேண்டும் என வற்புறுத்தினார்கள்.
269

Page 143
இவரது கதையானது, உபகண்டத்தின் கொந்தளிப்பு நிறைந்த வரலாற்றில் பயங்கரமான ஓர் அத்தியாயந்தனில் இடம்பெறும் வேதனை , துயரம், போராட்டம், என்பவற்றைக் கொண்ட ஒரு கதையாகும். இந்த அனுபவங்களை அசைபோட்டு, எழுத்தில் வடித்தெடுப்பது உள்ளக் குமுறலை ஆறுதலடையச் செய்யுமென உணர்ந்தார்.
இந்நூல் பாரம்பரிய சுயசரிதைகளிலிருந்து வேறுபட்டதாக அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கையின் பிந்திய காலப்பகுதியை துன்பக் கடலில் ஆழ்த்திய துயரச் சம்பவமாகிய அவரது தந்தையாரின் மரண தண்டனை நிறைவேற்றத்துடன் ஆரம்பமாகின்றது இக்கதை. தமது தந்தையாரை அவர் கடைசி முறையாகச் சந்தித்த நாள் 1979 சித்திரை 3 ஆம் திகதி ராவல்பிண்டி சிறைக்கூடத்தில் ஆகும்.
"நீங்கள் இருவரும் ஏன் இங்கு வந்தீர்கள்?" இது நரகச் சிறைக் கூண்டிலிருந்து வெளிவரும் அவரது தந்தையின் சோகக் குரல். தாயிடமிருந்து பதிலில்லை. "இது தான் எமது கடைசிச் சந்திப்பா?” 6 ன் கிறார் தந்தை. அன்னையிடமிருந்து வார்த்தைகளை வெளிவர விடாமல் துயரம் தடுக்கிறது. "அப்படித்தான் நினைக்கின்றேன்" என்றேன் நான். அவர் ஜெயில் கண்காணிப்பாளரை அழைக்கின்றார்; "இதுதான் கடைசிச் சந்திப்பா?" என தந்தை வினவுகின்றார்? "ஆம்" எனப் பதில் வருகிறது. "திகதி நியமிக்கப்பட்டாயிற்றா” “நாளை காலை" என்கிறார், ஜெயில் அதிகாரி. “எத்தனை மணிக்குP" “ஜெயில் ஒழுங்கு விதிகளின்படி 5 மணிக்கு" “இத்தகவல் உமக்கு எப்பொழுது கிடைத்தது?" "நேற்றிரவு" தயக்கத்துடன் பதில் வருகிறது. "எனக்கு என் குடும்பத்துடன் இருக்க இன்னும் எவ்வளவு நேரம் இருக்கின்றது?" "இன்னும் அரை மணி நேரம்" "ஜெயில் சட்டத்தின்படி இன்னும் ஒரு மணித்தியாலத்துக்கு எமக்கு உரித்துண்டு" - தந்தை கூறுகின்றார். "இல்லை, அரை மணித்தியாலம்" இது அதிகாரியின் குரல். "அதுதான் எனக்கிடப்பட்ட கட்டளை" என்கிறார் தந்தை. "வாழ்க்கையில் நான் உயிருக்குயிராக நேசித்த ஒருவரிடமிருந்து விடைபெற எனக்குள்ள அவகாசம் இன்னும் அரை மணி நேரம் மட்டும். இன்னும் அரைமணி நேரம் மட்டுமே;” துயரம் என் நெஞ்சை அடைக்க "ஓ" என்று கதறியழ வேண்டும் போலிருந்தது. "இல்லை", நான் அழக்கூடாது, நான் கலங்கிவிட்டால் அப்பா இன்னும் இக்கட்டான நிலைக்கு ஆளாகிவிடுவார்."
270

பெனாஸிரின் நெஞ்சத்தில் பீறிட்டுப் பொங்கியழும் துயரத்தின் மத்தியில் அவரது தைரியமும் மனோவலிமையும் நிலை கொள்ளவில்லை. இவரை, இவரது தந்தையரான சுல்பிகாருடன் பிணித்திருந்த பாசம், அன்புள்ளம் கொண்ட ஒரு தந்தை தமது செல்வப் புதல்வி மீது சொரியும் மட்டற்ற பாசத்தைவிட ஆழமானது, சுல்பிகார் வெறுமனே ஒரு தந்தை மட்டுமல்ல - தமது அரசியல் வழிகாட்டி அறிவூட்டும் ஆசான்; அறிவுரையாளர்; தமது அரசியல் நாட்டத்தைப் பேணி வளர்த்தவர்; தமது சிந்தனையோட்டத்தைத் தூண்டி விட்டவர். அவர் அவரது சொந்தச் சாயலில் பெனாஸிரையும் உருவாக்கினார்.
"அவரின்றி நான் என் செய்வேன்?" மரணத்தின் வாயிலிருக்கும் அவரிடமே நான் கேட்கின்றேன். எனக்குள்ளது யாவும் அரசியற் பாடத்திலான ஹாவாட், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக் பட்டங்களும் மட்டுமே. நான் ஒரு அரசியல்வாதியாக இருக்கவில்லை. ஆனாலும், அவரால் 6 ன்னதான் கூறமுடியும்? எதுவுமே செய்ய முடியாதவராகக் கையை விரிக்கிறார். 1979 சித்திரை 4 ஆம் திகதி அதிகாலையில் சுல்பிகார் அலி பூட்டோ தூக்கிலிடப்படுகிறார். துன்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவருடன் சேர்ந்து பெனாஸிரும் ஓரளவு மடிந்து விட்டார். "சின்னாபின்னமாக்கப்பட்ட எனது வாழ்க்கை சூன்யமாகத் தென்படுகிறது." என்று எழுதுகின்றார் பெனாஸிர்,
பெனாஸிர், செம்மாங்கனி போன்ற சிவந்த கன்னம் உடையவர். ஆதலால் இளஞ்சிவப்பு நிறத்தவர் எனப் பொருள்பட “பின்ங்கி" என்று செல்லமாக அழைக்கப்பட்டார். இவர் தமது 16 வயதில் ரட் கிறிவ் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். இவரது தாயார் இவரை எலியட் மண்டபத்தில் அமர்த்தி, புனித மெக்கா நகரம் அமைந்திருக்கும் திசையையும் கணித்துக் கூறினார். எந்தத் திசையை நோக்கித் தொழுகை நடத்துவது என்பதனை இவர் அறிந்துகொள்ள முடியும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு. கேம்பிறிஜ் பல்கலைக்கழகத்தில் இவரது சக மாணவர்கள் பூட்டோ குடும்பத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லை. இவர்கள், தான் இன்னாரென்று அறிந்திருக்கவில்லை என்பதனால் இவருக்கு உள்ளூர ஒரு பரம திருப்தி. "இங்கு முதற் தடவையாக நான் ஒரு சுதந்திரப் பறவையாகப் பாடித்திரிந் தேன் " என்று கூறுகின்றார். இவரது தாயார் இவருக்கென அன்புடன் விட்டுச் சென்ற பட்டுக்கோடிட்ட கதகதப்பான கம்பளிச்சால்வார் கமீசைக் கலைத்துவிட்டு ஹாவார்ட் கூட்டுறவுக்
271

Page 144
கடையிலுள்ள ஜின்சையும், டீ சேர்ட்டையும் அணிந்து கொள்வதில் இவருக்கு ஓர் அலாதி ஆசை. இவர் கூந்தலை நீள வளர விட்டிருந்தார். சிநேகிதிகள் ஜோன் பேஸ் போலிருக்கிறாய் என்று பாராட்டும் போது உள்ளம் பூரிக்கும். ஆப்பிள் ரசத்தை அளவில்லாமல் பருகி மகிழுவார். "பிறிக்ஹம்" ஐஸ் கிறீம் கடையில் விதம்விதமான ஐஸ்கிறீம் சாப்பிட்டு மகிழ்வார். இதுவே இவரது வாழ்க்கையில் மிகவும் இனிமையான காலப்பகுதி. ஹாவாட் விளையாட்டரங்கில் பிறிஸ்பெஸ்சுடன் விளையாடினார். பிலின்ஸ் பேஸ்மன் ற் பகுதியில் சாமான்கள் வாங்கினார். பீற்றர், போல், மேரி ஆகியோரின் பாடல்களைக் கேட்டு மகிழ்வார்.
இதே வேளையில் இது கொந்தளிப்பு நிறைந்த ஒரு காலப்பகுதியாகவும் விளங்கியது. இவர் யுத்த எதிர்ப்பு இயக்கத்தில் ஈடுபட்டு பொஸ்டன் கொமன்ஸ், வாஷிங்டன் டீ.ஸி. ஆகிய நகரப் பேரணிகளில் ஊர்வலம் செல்வார். இச்சந்தர்ப்பத்திலேயே முதன் முறையாக கண்ணிர்ப்புகைத் தாக்கத்தை அனுபவித்தார். நிலைவாத இயக்கத்திலும் ஈடுபாடு கொண்டு கேற்மில்லே, ஜேர்மெயின் கீரியர் போன்றோரின் பல நூல்களையும் வாசிக்கலானார். புதிய பெண் நிலை வாதிகளின் செல்வாக்குக்கும் உட்பட்டார். "பாகிஸ்தானில் திருமணமும், குடும்ப வாழ்க்கையுமே தங்களது முக்கிய குறிக்கோள் என்ற கருத்தினை ஏற்றுக்கொள்ளாத சிறுபான்மையினர் மத்தியிலேயே நானிருந்தேன்" என்று இவர் கூறுகின்றார். ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில், என்னைப்போல பெண்மை என்ற உணர்வால் நான் தயங்கியது போலல்லாது எண்ணற்ற அவ்வெண்ணமே இல்லாத பெண்மணிகள் மத்தியிலேயே நான் வளர்ந்தேன். அனுபவமற்ற நிலையிலிருந்த என்னிடம் தன்னம்பிக்கை வளர்ந்தது. என் இளமைப் பருவத்தைத் தழுவியிருந்த நாணத்தின் அணைப்பிலிருந்து என்னை ஓரளவு தளர்த்திக் கொண்டேன்."
கல்வித் துறையில் உயர்பட்டப் படிப்பைப் பற்றிச் சிந்தித்தார். ஆரம்பத்தில் உளவியலையும் அதனைத் சார்ந்த பாடங்களையும் கற்க விரும்பினார். ஆனால் பிராணிகளின் வயிற்றைக் கிழித்துப் பார்த்தல் போன்ற பரிசோதனைகளை நினைக்கவே அருவருப்பு உண்டானது. இதனாலேயே ஒப்பியல் அரசியல் விஞ்ஞான பாடத்தையே தெரிந்தெடுக்கலானார். இது அவரது தந்தையை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பேராசிரியர் வொமாக்கின் அரசியல் விஞ்ஞான வகுப்பில் அரசியற் சட்டவுரிமைக்கும் அரசியல் அமைப்புச் சட்டவுரிமைக்கும் இடையிலான வித்தியாசத்தைக் கற்றறிந்தார்.
272

பாகிஸ்தானில் இடம்பெற்ற குரூரச் சம்பவங்கள் இவரது அமைதியான கல்லூரி வாழ்க்கையில் ஒரு சலனத்தை ஏற்படுத்தின. 1971 ஆம் ஆண்டின் முற்பகுதியில் கிழக்குப் பாகிஸ்தான், உலகின் கவனத்தை ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து முஜிபுர் ரஹ"மான் தலைமையில் பிரிவினைவாதப் போராட்டமும் இராணுவத்தின் அடக்கு முறைகளும் இடம்பெற்றன. 'உமது இராணுவம் காட்டுமிராண்டித்தனமானது" என இவரது சகமாணவிகள் இவரைக் குற்றஞ் சாட்டுவர். "நீர் வங்காள மக்களைப் படுகொலை செய்கிறீர்", என்பார்கள். சீற்றத்தால் கன்னம் சிவக்க இவர் தரும் பதில் "நாம் வங்காளிகளைக் கொல்லவில்லை" என்பதாகும். ஒரு முறை பகிரங்க விரிவுரையொன்றின் போது பேராசிரியர் வால்ஸர் என்பவர், "போரும் ஒழுக்க நெறியும்" என்னும் விடயம் பற்றி பேசும் பொழுது, "வங்காள தேச மக்களின் சுய நிர்ணய உரிமையைப் பாகிஸ்தான் மறுத்துள்ளது" எனக் குறிப்பிட்ட வேளையில், பெனாஸிர் குறிக்கிட்டு, "பேராசிரியர் அவர்களே, அது முற்றிலும் தவறு. 1947 ஆம் ஆண்டு வங்காள தேச மக்கள் பாகிஸ்தானைத் தெரிந்தெடுத்துக் கொண்ட பொழுது தங்களது சுயநிர்ணய உரிமையைப் பிரயோகித்தார்கள்” என குரல் நடுங்க அவரைத் திருத்தினார். அக்கணம் அங்கு மயான அமைதி குடிகொண்டது.
அப்போது மிகுந்த துணிச்சலுடன் அவர் எதிர்புத் தெரிவித்த போதிலும் இருபது ஆண்டுகளின் பின்னர் அச்சம்பவங்களைப் பற்றிய இவரது கண்ணோட்டம் முற்றிலும் மாறுபட்டிருந்தது. "எனது அறியாமைக்காக என்னை மன்னிக்கும்படி எத்தனை முறை நான் இறைவனை மன்றாடி இருக்கின்றேன். அக்காலத்தில் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த சனநாயக ஆணை மீறப்பட்டிருந்ததை நான் உணரவில்லை. சிறுபான்மைப் பிரதேசமாகிய மேற்குப் பாகிஸ்தானால் ஒரு குடியேற்றப் பிரதேசமாகவே பெரும்பான்மைப் பிரதேசமான கிழக்குப் பாகிஸ்தான் கருதப்பட்டது. எமது வறிய நாட்டில் மிகப்பெரிய தொழில் தருநரான இராணுவம் அதன் படைவீரர்களுள் 90 வீதமானோரை மேற்குப் பாகிஸ்தானிலிருந்தே திரட்டியது; அதன் அரசாங்கத்தின் 80% மேற்குப் பகுதியைச் சேர்ந்த மக்களைக் கொண்டே நிரப்பப்பட்டது. மத்திய அரசாங்கம் உருது மொழியை எமது தேசிய மொழியாகப் பிரகடனப்படுத்தியது. கிழக்குப் பாகிஸ்தானில் இம்மொழியைப் பேசியவர்கள் ஒரு சிலர் மட்டுமே. ஆதலின் வங்காளதேச மக்கள் அரசாங்க உத்தியோகம் பெறுவதற்கோ உயர்கல்வி கற்பதற்கோ முடியாத ஒரு நிலை
273

Page 145
உருவானது. புறக்கணிக்கப்படுவதாகவும் சுரண்டப்படுவதாகவும் அவர்கள் கருதியதில் தவறில்லை. கட்டவிழ்த்து விடப்பட்ட வேறெந்த இராணுவத்தையும் போல பாகிஸ்தான் இராணுவமும் அட்டூழியம் புரிவதில் சாமர்த்தியம் கொண்டது 6 ன்பதனைச் சிறுமியாகிய 6 ன்னால் அப்போது புரிந்துகொள்ள முடியவில்லை.”
இவரது தந்தை ஐ.நா.பாதுகாப்புச் சபை விவாதத்திற்காக நியூயோர்க் நகருக்கு விஜயம் செய்த பொழுதே முதல் முறையாக இவருக்கு சர்வதேச இராஜதந்திரம் பற்றிய அனுபவம் கிட்டியது. "பாதுகாப்புச் சபையில் எத்தனை பேர் இந்தியாவைக் கண்டிப்பார்களென நினைக்கின்றாய்" என பூட்டோ தமது 18 வயது புதல்வியிடம் வினவிய போது, "எப்படி அவர்களால் கண்டிக்காமல் இருக்க முடியும்?" எனப் பதிலுரைத்தார். "பின்ங்கி, சர்வதேசச் சட்டத்தில் நீ ஒரு சிறந்த மாணவியாக இருக்கலாம், ஆனால் ஹாவாட் பல்கலைக்கழக மாணவியொருவருடன் முரண்பட எனக்குத் தயக்கமாக இருக்கின்றது. 6ன்றாலும் ஆதிக்க அரசியலைப்பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது என்பதனைக் குறிப்பிடாதிருக்க முடியாது" என்றார் தந்தை பூட்டோ.
பாதுகாப்புச் சபை விவாதங்களுக்கு இணையான பல ஒத்திகைக் கூட்டங்களில் பெனாஸிர் கலந்து கொண்டார்.
"கூட்டத்தில் குறுக்கீடு. சோவியத் நாட்டவர்கள் இங்கிருந்தால் சீனர்கள் அழைப்பதாக என்னிடம் வந்து சொல். இங்கு அமெரிக்கர்கள் இருந்தால் ரூஷ்யர்களோ, இந்தியர்களோ வந்திருப்பதாகக் கூறு உண்மையிலேயே இங்கு யாரிருக்கின்றார்கள் என்பதனை எவரிடமும் சொல்லாதே. இராஜ தந்திரத்தின் அடிப்படைப் பாடங்களுள் ஒன்று சந்தேகத்தை எழுப்புவதே. உனக்குத் தெரிந்தது அனைத்தையும் வெளியில் சொல்லிவிடாதே" என்று தந்தை கூறினார். அவரது பணிப்புரைகளைப் பின்பற்றினேன். ஆனால் பாடத்தைப் பின்பற்றவில்லை. 61ப்போதுமே 61ன் மனதைத் திறந்து சொல்லி விடுவேன்."
1972 ஆனி மாதம் சனாதிபதி பூட்டோவுக்கும் பிரதமர் இந்திரா காந்திக்கும் இடையில் நடைபெற்ற உச்சி மாநாட்டின் போது அவர் சிம்லாவுக்குப் போயிருந்தார். அவர் திடீரெனப் பிரபல்யமானார். அவரை இந்தியாவுக்கு வருமாறு கடிதங்களும் தந்திகளும் வந்து
274

குவிந்த601. சிறப்புக் கட்டுரையாளர்களும், பத்திரிகை நிருபர்களும் அவரைப் பேட்டி கானத் துடித்தார்கள், இரவல் பெற்ற சல்வார் கமீஸ் புடவை, ஜின்ஸ், சுவெற் ஷேட் என்பனபற்றி பத்திரிகைகளின் "அலங்காரப்பகுதி" களில் ஏகப்பட்ட விமர்சனம். போர் சமாதானம் பற்றிய வினாக்களுக்கு விடை காணத்தேடித் துருவிய மனசைக் கொண்ட ஹவாட் பல்கலைக்கழக அறிவாளியாகத் தன்னைக் கருதிக் கொண்டார். "அலங்கார ஆடம்பரம் நடுத்தர வர்க்கத்தினரின் பொழுது போக்கு” என்று ஒரு முறை எரிச்சலுடன் ஒரு நிருபர் கேள்விக்குப் பதிலளித்தார். அவர் சிம்லாவில் இருந்ததால் ஏற்படுத்தப்பட்ட உற்சாகம் உணர்ச்சிவசம் என்பவற்றால் அவர் திக்குமுக்காடினார். ஒரு புதிய தலைமைறையைத் தான் பிரதிபலிக்கிறாரோ 6 ன்ற 6 ன்ன அலைகள் மோதின.
"நான் என்றும் இந்தியராய் இருந்ததில்லை. நான் சுதந்திர பாகிஸ்தானில் பிறந்தேன். பிரிவினையின் பயங்கரத்தால் இந்தியர்களையும், பாகிஸ்தானிகளையும் பிரித்த சிக்கல்கள் மனக்கசப்புகளில் இருந்து நான் விடுபட்டிருந்தேன். நாம் வெறுப்பென்னும் சுவர்களால் பிரிந்தே இருக்க வேண்டுமா? அல்லது போரிடும் ஐரோப்பிய நாடுகள் போல ஒரு சமரசத்தைக் காண முடியாதா?”
திருமதி காந்தியுடனான இவரது சந்திப்பு, இவர் எதிர்பார்த்ததைப் போல மனதில் என்றுமே நிலைத்திருக்கும் ஒரு சம்பவமாக அமையவில்லை. திருமதி காந்தியின் விடாமுயற்சியையும் தளராத மனவுறுதியையும் வெகுவாக மதித்தார். ஆனால் திருமதி காந்தி அதிகம் அளவளாதவராய் ஒட்டி உறவாடாதவராய் அடக்கமாகக் 495IT6007li Lilo LITÍŤ.
"அன்னை எனக்கு இரவல் கொடுத்த பட்டுச் சேலையை அணிந்திருக்க எனக்குச் சிரமமாக இருந்தது. ஆறு முழச் சேலையை ஒழுங்காகக் கட்டிக் கொள்வது எப்படி என்று அம்மா எனக்குச் சொல்லித் தந்திருந்தார். சேலை நழுவி விழுந்து விடுமோ என்று கனக்கு ஒரே பயம், திருமதி காந்தி என்னை இமை கொட்டாது பார்த்த வண்ணமிருந்தார். இராஜதந்திர தூதுக்குழுக்களில் சேர்ந்து அவரது தந்தையுடன் சென்ற நாட்களைப் பற்றி நினைக்கிறார் போலும். வேறோரு நாட்டுத் தலைவரின் புதல்வி 6 ன்ற வகையில் என்னை நோக்குகின்றாரா? தந்தை மகள் மீது கொண்ட
275

Page 146
பாசத்தையும், மகள் தந்தை மீது கொண்ட பாசத்தையும் நினைத்துப் பார்க்கின்றாரா? அவரது தோற்றம் 6 வ்வளவு சிறியது, நலிவுற்றது, இத்தனைப் புகழும் துணிவும் அவருக்கு 61ங்கிருந்து தான் வந்ததோ தெரியவில்லை. தந்தையின் விருப்பத்திற்கெதிராகப் பார்ஸி அரசியல்வாதியொருவரை மணந்து கொண்டார். அவர்களது திருமண வாழ்க்கை சோபிக்கவில்லை. இருவரும் பிரிந்தே வாழ்ந்தனர். இப்பொழுது தந்தையும் இறந்து விட்டார். கணவரும் இறந்து விட்டார். இவர் தனித்து விட்டாரா?”
பெனாஸிர் ரட்கிளிவ் பல்கலைக்கழகத்தில் திறமைச் சித்தியுடன் பட்டம் பெற்றார். இதற்கு வெகுமதியாக தந்தை மஞ்சள் நிற எம்ஜி காரொன்றை இவருக்கு வழங்கினார். பிளெட்சர் கல்லூரியில் சட்டமும் இராஜதந்திரமும் கற்பதற்குத் தன்னை அனுமதிக்குமாறு தந்தையிடம் கெஞ்சினார். ஆனால் தந்தையோ இவர் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் பாடம் படிப்பதையே விரும்பினார். "எனது படிப்பிற்குச் செலவு பண்ணுவது அப்பா தானே; ஆதலால் நான் மறுப்புக் கூறியும் பயன்தரவில்லை. நான் ஒரு யதார்த்தவாதியாக இருந்தேன். 1973 இலையுதிர் பருவத்தில் லேடி மார்கறட் மண்டபத்தைச் சென்றடைந்தார். "இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் நான் விட்டுச் சென்ற காலடிச் சுவடிகளில் நீ நடந்து செல்வதை கற்பனை செய்து பார்க்க எனது உள்ளம் பூரிக்கின்றது. நான் ஹாவர்டில் கற்கவில்லை. ஆதலால் அங்குள்ள பின்னணியில் உன்னை எண்ணிப் பார்க்க முடியவில்லை. ஒக்ஸ்போர்ட் வீதிகளில் நீ உலாவித் திரியும் பொழுதும் பனிப்படலம் மூடிய படிக்கட்டுகளில் அடியெடுத்து வைத்து கல்லூரி மண்டப வ:பில்களில் நுழைந்து செல்லும் பொழுதும் நான் என்னையே கற்பனை செய்து பார்க்கிறேன்" என்று தந்தை இவருக்கெழுதிய மடலொன்றில் குறிப்பிட்டிருந்தார். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவே ஒக்ஸ்போர்ட் யூனியனில் சேர்ந்தார். ஆனால் இது இவரது வாழ்க்கையில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. இவர் படித்த மூன்றாண்டு காலப்பதவிக்குள், தலைவர் பதவிக்கான போட்டியில் தோல்வியுற்ற போதிலும் பொருளாளர் பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டார். பட்டப்படிப்பின் டிப்ளோமா பட்டத்திற்காகத் திரும்பிச் சென்றிருந்த நாலாவது ஆண்டின் போது 1976 மார்கழியில் ஒக்ஸ்போர்ட் யூனியனின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
276

தலைவராகத் தெரிந்தெடுக்கப்பட்ட எட்டு மாதங்களுக்குள் அவரது தந்தையின் ஆதிக்கம் முறியடிக்கப்பட்டது. தந்தை பிரதம மந்திரியாகப் பதவி வகித்த காலப்பகுதி, அவரது சமூக - பொருளாதாரக் கொள்கைகளின் தாக்கங்கள், அரசியல் அதிருப்தியைப் பற்றியும், உள்ளூர் நுண்ணாய்வாளர்களுக்கு அவரளித்த பதிலைப் பற்றியும் பெனாஸிர் மிகவும் வெளிப்படையாக வெளியிட்டுள்ளார். 1977 ஆம் ஆண்டின் தேர்தல்கள் நடத்தப்பட்ட விதம் அதனையடுத்து, தேர்தல் முடிவுகள் நிராகரிக்கப்பட்டமை என்பன தொடர்பாகத் தெரிவிக்கப்பட்ட அச்சத்தைத் தணிப்பதற்கு இவர் எதுவுமே செய்யவில்லை. சனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட ஓர் அரசாங்கம் பிரதேச வாதிகளும் பாரம்பரியக் கோட்பாட்டாளர்களும் கைத்தொழிலதிபர்களும் அடங்கிய ஒரு கூட்டுக் குழுவால் தகர்க்கப்பட்டது என்றே இவர் உணர்ந்தார். பிரான்சுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை இவரது தந்தை கைவிட மறுத்தமை, கலாநிதி ஹென்றி கீசிங்க பூட்டோவைப் "பயங்கர உதாரணமாக”க் காட்டப் போவதாக விடுத்த பயங்கர அச்சுறுத்தல் என்பவற்றையும் பெனாஸிர் நினைவு கூறுகின்றார்.
1987 ஆடி மாதத்தில் இவரது தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர்பாராத ஒரு திருப்பம் ஏற்பட்டது. தனது குடும்பத்தினர் ஒழுங்கு செய்த திருமணத்திற்கு உடன்பட்டார். தனது வாழ்க்கையில் தான் தெரிந்து கொண்ட அரசியல் நாட்டத்திற்காக சொந்த விருப்பு வெறுப்புக்களைத் தியாகம் செய்ய வேண்டிய சூழ்நிலையே "ஒழுங்கு செய்யப்பட்ட" இத்தருணம் உருவாக்கியது என்று இவர் கூறுகின்றார். அரசியல் வானில் மிகவும் பிரகாசமாக இவர் மிளிர்ந்து கொண்டிருந்ததனால் வழமையான நடைமுறையில் தனது உள்ளம் கவர்ந்தவரைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை இவர் இழந்து விட்டார். ஆண்களுடன் சற்று அன்னியோன்னியமாகப் பழகிவிட்டாலே வாய்ப்பேச்சுக்களும் வதந்திகளும் காட்டுத்தீ போலப் பரவிவிடக் கூடிய இக்கட்டான ஒரு நிலை உருவெடுத்திருந்தது. இவரது அத்தை நிலச் சுவாந்தர்களான ஸர்தாரி குடும்பத்திலிருந்து சம்பந்தமொன்றைக் கொண்டு வந்தார். ஆசிவ் ஸர்தாரி "பெற்றாரோ கல்லூரியிலும் பொருளியல், அரசியற் கற்கைகளுக்கான லண்டன் நிலையத்திலும் கல்வி பயின்றவர்; ஒரு கைத்தொழிலதிபர், காணிகள், கட்டட வேலைகளில் முதலிடு செய்பவர். "அவருக்கு வாசிக்கும் பழக்கமுண்டா?" என பெனாஸிர் விசாரித்தார். "பெனாஸிருடன் போட்டி போட முடியாவிட்டாலும் வாசிப்பதில் ஓரளவு ஆர்வம் உண்டு” எனப் பதிலளித்தார் மணமகனின் தந்தை ஹக்கீம் அல் ஹக்கம் அலி தேசியப் பேரவையின் முன்னைய
277

Page 147
உறுப்பினரும், தற்பொழுது அவாமி தேசியக் கட்சியின் உபதலைவரும், சனநாயக புனருத்தாரண இயக்கத்தின் உறுப்பினர்களுள் ஒருவருமாவார். ஸ்ர்தாரி குடும்பத்தினர் பாகிஸ்தானில் ஈரானிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்ன்ர் சிந்து நகரின் நவாப் ஷா மாவட்டத்தில் குடியேறியவர்கள். "அவன் உனக்குப் பொருத்தமானவன். எமது பண்பாட்டுக்கும் மரபுகளுக்கும் ஒத்துப் போகக்கூடியவன்" என்றெல்லாம் உறவினர்கள் எடுத்துரைத்த போதிலும் “கொஞ்சக் காலத்துக்கு என்னைச் சுதந்திரமாக இருக்க விடுங்களேன்" என்று திருமணத்திற்கு மறுப்புத் தெரிவித்தார். ஒரு "முன்பின் பழக்கமில்லாத ஒருவரை எப்படியடி மணப்பது? என்று தனது சிநேகிதியிடம் கேட்டபொழுது "ஒருவரை மணந்துவிட்டால் முற்றிலும் வேறுபட்ட கண்ணோட்டத்திலேயே நீர் அவரை நோக்குவீர்” எனப் பதில் கிடைத்தது. தனித்து வாழ்வதால் பாகிஸ்தானுக்குள்ளேயும் வெளியேயும் அரசியல் ரீதியான எதிர்ப்பு நிலவக்கூடும் என்ற எண்ணமும், அதுவும் நாம் வாழும் ஆணாதிக்க சமூகத்தில் இது மோசமானது என்ற எண்ணமும் இவர் மனதில் உதித்தது. "தனித்து வாழும் ஓர் ஆண்பிள்ளையைப் பற்றி எவரும் அக்கறைப்படுவதில்லை. ஆனால் தனித்து வாழும் ஒரு பெண்ணைச் சந்தேகக் கண்ணுடனேயே நோக்குவர்" "ஒரு முஸ்லிம் சமுதாயத்தில் இது முற்றிலும் உண்மை. ஏனெனில் ஒரு ஆணினதும் பெண்ணினதும் வாழ்க்கையின் நிறைவாக திருமணம் கருதப்படுகிறது. அதன் பலாபலனே பிள்ளைகள்” என்ற தத்துவம் இங்கு வேரூன்றியுள்ளது. தமது வருங்காலக் கணவரை லண்டனில் சந்தித்தபோது பண்புள்ளம் கொண்டவராகவும் நகைச்சுவையை விரும்புபவராகவும் காணப்பட்டார். ஆசிவ் ஸர்தாரியை ஒரு நிருபர் "அவளை நீர் காதலிக்கிறீரா?” என்று கேட்ட நிருபருக்கு "எல்லோரும் தானே" என்று பதிலளித்தார். பல நாட்கள் கழித்து, " எனது மார்க்கக் கடப்பாடுகளையும் எனது குடும்பத்தின் மட்டில் எனக்குள்ள கடமையையும் கருத்திற் கொண்டு, எனது அன்னை ஏற்றுக்கொண்ட திருமணச் சம்பந்தத்திற்கு நான் சம்மதிக்கிறேன்" என ஓர் அறிக்கையை வெளியிட்டார்.
அச்சமும் நாணமும் நிறைந்த அரிவையாகிய இவர், பாகிஸ்தானில் மீண்டும் சனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற வேட்கை கொண்ட, மதிநுட்பம் வாய்ந்த ஓர் அரசியல்வாதியாக உருமாறினார். ஆயினும், ஆயிரம் கோடி மக்கள் வாழும் ஒரு நாட்டிற்கு இவரால் தலைமை ஏற்க முடியுமா என்ற அச்சம் நாட்டு மக்களிடையே பரவியது. புரையேறிய நாட்டிற்கு இவர் பரிகாரம் அளிப்பாரா
278

அல்லது அவரது சகாக்களைப் போல, அதிகாரத்தின் ஆணவத்தாலும் சகிப்புத் தன்மையற்ற மனப்போக்கினாலும், இறுமாப்பால் பீடிக்கப்பட்ட ஒருவராகத் திகழ்வாரா? இவரது அரசியல் உணர்வுகள் தெளிவாகவே இருந்தன. ஆனால். ஆட்சி முறையின் விவரங்களைப் பற்றிய போதியளவு அறிவாற்றல், விடாமுயற்சி கடினமான கொள்கைகளை வகுத்து முற்றாக நிறைவேற்றி வைக்கும் மனவுறுதி, என்பன இவரிடம் உண்டா? அறிஞர்களின் மதியுர்ைகளுக்குச் செவி மடுப்பாரா, அல்லது சில சந்தர்ப்பங்களில் தமது தந்தை நடந்து கொண்டது போல, உணர்ச்சிவசப்பட்டு நெறிபிறழ்பவராக இருப்பாரா?
அண்மைக் காலத்தில் தெற்காசியாவில் சுயசரிதை எழுதும் மரபு அருகிவிட்டது. தங்க்ள் வாழ்க்கை அனுபவங்களைப் பற்றி தத்ரூபமாக எடுத்துரைக்கும் திறமையும் மனோ நிலையும் கொண்ட தேசியத் தலைவர்கள் வெகு சிலரே உள்ளனர். அவற்றை எழுதத் துணிந்த ஒரு சிலரின் படைப்புக்களும் சொற் சுவையோ பொருட்சுவையோயின்றி "சப்” பென்றிருக்கும். அரசியலில் புலமைக்குரிய இடம் குறைந்து விட்டமையே இத்தகைய நிலைக்குரிய காரணமாகும். சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அறிவுத் திறனால் பின்னிப் பிணிக்கப்பட்ட அரசியல் சாணக்கியம் இன்றியமையாதது, என்ற எண்ணக் கருத்துக்கு இன்று இடமில்லை. அபாரமான இந்தச் சுயசரிதை பெனாஸிர் தேர்தலில் அடைந்த வெற்றிக்கு முன்னர் வெளியிடப்பட்டமை தெற்காசியாவின் அண்மைக் கால வரலாற்றில் ஈடிணையற்ற ஒரு சம்பவமாகும். இது, இவரது தந்தையும் ச்கோதரனும் அனுபவித்த சிறைவாசம், நாடு கடத்தல், அகோர மரணம் போன்ற கொடூரச் சம்பவங்களின் விளைவாக இருள் சூழ்ந்திருந்த ஒரு காலத்தைப் பற்றி உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து வடிவம் கொண்ட களங்கமற்ற ஒரு படைப்பாகும். பாசாங்குப்பாவனை கிடையாது.
பெனாஸிர் பூட்டடோவின் அரசியற் சாயலும், உறுதிநிலை படைத்த மனோவலிமையும் ஆற்றலும் அவருக்கு, பலி கொள்ளப்பட்ட அவரது ஆருயிர் தந்தையிடமிருந்து சுரந்து வந்ததாகும். பாகிஸ்தான் தேசத்தின் தலை எழுத்தும் பல தரப்பட்ட அதன் மக்களது நம்பிக்கை, அபிலாஷைகள் என்பனவும் மீண்டும் - பூட்டோவின் கரங்களில் வந்து விழுந்து விட்டன. கீழைத்தேசத்தின் தவப்புதல்வி - பூட்டோ.
279

Page 148
அக்யூனோவும் பிலிப்பைன்ஸில் சனநாயத்தின் மறுமலர்ச்சியும்
மனிலா சர்வதேச விமான நிலையத்தை விட்டு ஒருவர் வெளியேறுகையில் "மிகவும் நெருக்கமாகப் பின் தொடர வேண்டாம்” என்று தெளிவான நேரடியான செய்தியைத் தெரிவிக்கும் பிரகாசமான நியோன் சுட்டு வெளிச்சம் பெரும்பாலும் குருடாக்கிவிடுவது போலிருக்கும். கவனமற்ற மோட்டாரோட்டி, அரசியல் ஆய்வாளர் ஆகிய இருவர் மீதும் தொடுக்கப்பட்டதாகத் தோன்றும் ஒரு எச்சரிக்கை அது. அரசாங்க மீளமைப்பு மீதான சனாதிபதி ஆணையத்தைச் சேர்ந்த லூ யி ஆர். வில்லா-பியுயேர் டே கூறியிருப்பதாவது: “மனிலா செய்திப் பத்திரிகைகளை நீங்கள் அறிவுடன் படிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படவில்லை. அவற்றை நீங்கள் அர்த்தப்படுத்தவே படிக்கிறீர்கள். இந்த நாட்டில் விளையாட்டுக்கு அதுதான் பெயர். பிலிப்பைன்ஸில் பிரதம கைத்தொழில்களில் ஒன்று அரசியல் என் பதனால் எல்லா வகையான கருத்துக் கண்ணோட்டங்களையும் ஒரேயடியாக நீங்கள் பெறலாம். எனவே, நீங்கள் பிரதேசத்துடன் அவ்வளவு பரிச்சயம் அல்லாதவராயின், நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" முன்னாள் தூதுவர் ஸ்டீபன் பொஸ்வேர்த்து சொன்னதாகக் கூறும் ஒரு கூற்று "பிலிப்பைன்ஸ் கண்ணில் புலப்படாதவை மிகக் குறைந்த ஒரு சமுதாயம்” எனத் தொகுத்துக் கூறுகிறது.
தங்கள் முன்னாள் தலைவர் ஜோஸ் டபிள்யு, தியோக்னோவைக் கெளரவிக்க இலவச சட்ட உதவிக் குழு கூடியிருந்த இடமான கிளப் பிலிப்பினோவில் ஓர் அமைதியற்ற ஊகம் கலந்த இறுக்கமான சூழல் இருந்தது. தொடர்ச்சியாகப் புகை பிடிப்பவரான தியோக்னோ
280

சுவாசப்புற்று நோயால் பீடிக்கப்பட்டிருந்தார். நேபாளம், பாகிஸ்தான், கானா ஆகிய இடங்களிலிருந்து வந்த பயிற்சிநிலைச் சட்டத்தரணிகளிடம் ஓர் இளம் பிலிப்பினோ சட்டத்தரணி "இங்கு நீங்கள் வரலாறு படைத்தலைப் பார்வையிடுகிறீர்கள். இதனைப்பற்றி முழு உலகுக்கும் நீங்கள் விரைவில் கூறக் கூடியதாகவிருக்கும்" என ஆனந்தக் களிப்புடன் கூறினார். ஸ்பானிய ஆட்சி மறையத் தொடங்கிய நாட்களில் கட்டப்பட்டதான கிளப் பிலிப்பினோ பாராட்டத்தக்க ஓர் அழகிய கட்டிடம். பதினெட்டு மாதங்களுக்கு முன்னர் 1986 மாசியில், அதே கட்டிடத்தில் தான் கோரி அக்யுனோ "பிலிப்பினோ மக்களின் பெயராலும் அவர்கள் விருப்பத்தாலும்” சனாதிபதியாகப் பதவியேற்றார்.
இலவச சட்ட உதவிக் குழுவின் நிறுவனர்கள் ஜோஸ் டபிள்யூ தியோக்னோ ஜோக்கர் அரோயோ மற்றும் லோரன்ஸோ எம் தனாடா-எல்லோருமே அக்யூனோப் புரட்சியை ஏற்படுத்துவதில் மிகவும் சிக்கலான ஒரு பங்கையாற்றியவர்கள் - பொனிபசியோ கோட்டையில் பெனிக்னோ எஸ்.அக்யூனோவின் சிறைத்தோழரில் ஒருவராயிருந்த ஜோஸ் டபிள்யூ. தியோக்னோவை "மிகவும் திறமையான பிலிப்பினோ" எனப் புகழ்ச்சியுடன் கோரி அக்யூனோ பாராட்டினார். அவரது அமைச்சரவையில் மனித உரிமைகள் குழுத்தலைவராகவும், புதிய மக்கள் இராணுவத்துடனான பிரதம இணக்கப் பேச்சாளராகவும் அவர் சேர்ந்தார்.
சிவில் உரிமைகள் வழக்கறிஞர் ஜோக்கர் அரோயோவுக்கு முக்கிய பதவியான நிறைவேற்றச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அதனால் அவர் சனாதிபதியை முற்றாக அணுகும் வாய்ப்பைப் பெற்றுச் சின்ன சனாதிபதி என அழைக்கப்பட்டார். அரோயோவின் முதற் பெயர் அவரது தந்தையாரின் சீட்டாடலின் மீதான விருப்பத்தின் காரணமாக அதைக் குறிப்பதாகவுள்ளது. முழு அமைச்சரவையுமே ராஜினாமாச் செய்வதற்குக் காரணமான ஓர் அரசியல் சூறாவளியின் மத்தியில் அவர் இருந்தார். எண்பது வயதான செனட்டர் லோறென்ஸோ தனாடா ஐக்கிய எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக கோரி அக்யூனோ தெரிவு செய்யப்படுவதை முன்னெடுத்துச் சென்ற மூன்று அமைப்பாளர்களில் ஒருவர். இந்த சிவில் விடுதலை வீரர்கள் தனித்துவமான வீரம்மிக்க மனிதர்களாக இராணுவச் சட்டத்தின் மிகவும் ஒடுக்கு முறையான நாட்களின் போது சகல தீர்மானமான கருத்துடைய அரசியல் தடுப்புக் கைதிகளுக்குமாக வாதாடி வந்தனர். அக்யூனோப் புரட்சி உணர்வையும் பிலிப்பைன்சின் மிதவாதச்
28

Page 149
சிந்தனையையும் அவர்கள் பிரதிபிம்பப்படுத்தினர். தசாப்தங்களாக நிறுவன எதிர்ப்பாளராக இருந்து வந்து, பெர்டினன்ட் மார்க்கோஸின் வெளியேற்றத்துடன் அதிகாரத்துக்கு வந்த சிக்கலான கூட்டணிச் சக்திகளுடன் உயர் மட்டத்தில் அதிகாரப் பகிர்வின் மூலம் அதிகார நிலையில் அமர்த்தப்பட்ட குழுவுக்கு கிளப் பிலிப்பினோவில் இடம்பெற்ற எளிய வைபவம் ஓர் உணர்வுபூர்வ அனுபவமாகும். ஆனால் அதிகாரமோ அல்லது பதவியோ அவர்களின் இலட்சியத்தையோ அல்லது அவர்களின் எதிர்ப்புணர்வையோ குறைத்து விடவில்லை. குக்கி எனப் பரவலாக அழைக்கப்படும் மரியா சொக்கோரோ தியாக்னோ சமீபத்திய போக்குகள் குறித்து அவரது ஏமாற்றக் குரலை எழுப்பியிருந்தார். "எமது நாட்டின் எதிர்காலத்திற்காக நான் இனியும் அமைதியற்று இருக்கவில்லை. முன்னெப்போதும் இல்லாதவாறு மனித உரிமைகள் நிலைமை மிக மோசமாகவுள்ளது. மிக அரிதாகவேனும் இடதுசாரி சார்புகள் அல்லது தாராள அனுதாபங்கள் கொண்டதாகச் சந்தேகிக்கப்படும் எவரையும் விழிப்புக் குழுக்கள் துருவி ஆராய்கின்றன. தலைமைத்துவத்தில் ஒரு மாற்றந்தான் நாம் பெற்றோம். ஆனால் அதிகார அமைப்பில் எதுவித பரிமாற்றமோ அல்லது செல்வப் பகிர்வில் மாற்றமோ ஏற்படவில்லை. அரசியலமைப்பு வழக்கறிஞரும் யேசு சபையின் இடைக்காலத் தலைவரு(சுப்பிரியர்)மான பிதா ஜோகுவின் ஜி. பெர்னாஸ் இதே கருத்துக்களை வேறோரு இடத்தில் வெளியிட்டுள்ளார். “பெப்ரவரிப் புரட்சி எவ்வகையிலும் சமத்துவத்தைப் பெற்றுவிட்ட ஒரு புரட்சியல்ல. அது பெரும் ஒரு அரசியல் புரட்சியே. அது ஒரு சமுதாயப் புரட்சியல்ல." ஏமாற்றம் சிவில் விடுதலையாளர்களுக்குள் மட்டும் அடங்கி விடவில்லை. அக்யூனோவைப் பதவியில் அமர்த்திய கூட்டணிச் சக்திகள் இலட்சிய ரீதியாகவும், உறுதியான சமூக, பொருளாதாரத் திட்டங்கள் தொடர்பாகவும், அரசியல் நோக்கங்கள் பற்றியும் ஆழமாகப் பிளவுபட்டுள்ளன. இந்தக் குழுக்கள் ஒவ்வொன்றும் அரசியல் பரிமாற்றங்களை நோக்கித் தீர்மானமாகப் பங்களிப்புச் செய்துள்ளதாக எண்ணிக் கொண்டு அரசாங்கத்தின் அடிப்படை அமைப்புகளில் ஆதிக்கம் ஏற்படுத்த ஒன்றை ஒன்று ஆட்டிப்படைக்க முனைந்தன.
இந்த வேறுபாடான சக்திகளைச் சமப்படுத்த முதலாவது அக்யூனோ அமைச்சரவை எப்படியோ முனைந்தது. முதலில், ஒழுங்கமைப்புள்ள அரசியல் கட்சிகள் இருந்தன. ஐக்கிய தேசியவாத சனநாயக அமைப்பு (யுனிடா) மற்றும் பி.டி.பி.எல்.ஏ.பி.ஏ.என். அவர்களின் தோழமை சனாதிபதி வாக்களிப்பில் மட்டுமல்லாது பின்பு இடம்பெற்ற
282

காங்கிரஸ் மற்றும் செனட் தேர்தல்களிலும் முக்கியமாக விளங்கின. யூனிடா தலைவர் சில்வடோர் லோரல் சனாதிபதி தேர்தலில் கோரிக்காக விலகி நின்றார். அவருக்கு உதவி சனாதிபதி மற்றும் வெளிநாட்டமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.
பி.டி.பி.எல்.ஏ.பி.ஏ.என் கூட்டானது கோரியின் சகோதரர் ஜோஸ் கோஜுவாங்கோலினாலும் அக்யூனோ பிமென்டெல்லினாலும் ஆக்கிரமிக்கப்பட்டது. பிமென்டெலுக்கு முக்கிய பதவியான உள்ளூராட்சி வழங்கப்பட்டதனால் அதன் மூலம் மாநில ஆளுநர்கள், மேயர்களை மீளமர்த்துவதில் அவர் சிக்கலானதும், சர்ச்சையானதுமான பங்கொன்றை ஆற்றினார். ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பெரும்பாலும் பாரம்பரிய உயர் குழுக்களால் சூழப்பட்டன. அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் பெற்ற இரண்டாவது பிரிவு கத்தோலிக்க திருச்சபையின் ஆதரவு பெற்ற தொழில் வல்லுநர்களையும், வர்த்தகர்களையும் கொண்டிருந்தது. அவர்களுள் மிகவும் பிரபலமானவர்கள் நிதியமைச்சர் பதவி வழங்கப்பட்ட ஜெய்மே ஓங்க்பின் (அழைப்பாளர் குழுவின் உறுப்பினர்களில் ஒருவர்) மற்றும் வர்த்தக, கைத்தொழில் பதவி வழங்கப்பட்ட ஜோஸ் கொன்செப்சன் ஜூனியர் (சனாதிபதி தேர்தலைக் கண்காணித்த சுயேச்சையான கண்காணிப்பு அமைப்பான நாம் பெரலின் தலைவர்) இருவருமே புகழ்மிக்க யேசுயிட் பல்கலைக்கழகம், அற்றெனியோ டி மனிலா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கற்றதுடன் சந்தை அடிப்படையிலான தாராள பொருளாதாரக் கொள்கைகளை ஆதரித்தவர்கள்.
சிவில் விடுதலை வீரர்களில் மூன்றாவது குழு பரவலாக நடுநிலை இடதுசாரிகளாகவும் பிலிப்பைன்சில் இராணுவத்தளங்கள் போன்ற விஷயங்களில் ஆழமான தேசியவாதிகளாகவும் விளங்கியது. தியாக்னோ மற்றும் அரோயோவுடன் நல்ல அரசாங்கத்துக்கான சனாதிபதி ஆணைக்குழுத் தலைவரான ஜோவிட்டா சலோங்கா மற்றும் தொழிலமைச்சராக்கப்பட்ட அகஸ்தோ, சான்செஷ் ஆகியோரும் அவர்களுள் அடங்குவர். இந்த மிதவாத இடதுசாரிச் சக்தியானது பல்வேறு பிரதி அமைச்சர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட நோக்க - அடிப்படையிலான குழு எனப்படும் குழுவால் ஆதரிக்கப்பட்டது, இக்குழுக்கள் தங்கள் தோற்றத்தில் கூடுதலாக வெளிப்படையான இலட்சியமயமானதாகவும் அரசியல் நிகழ்ச்சியின் முன்னணியில் "சமூக நீதி மற்றும் பொருளாதார நியாயம்" பற்றிய பிரச்சினைகள் வைக்கப்படல் வேண்டும் எனவும் வலியுறுத்தின.
283

Page 150
நான்காவதாக, இலட்சிய வண்ணங்களின் மறுமுனையில் 1986 மாசி மார்கோஸ்க்கு எதிரான ஆயுதந்தரித்த புரட்சியில் முன்னணி வகித்தோர் இருந்தனர். பாதுகாப்பு அமைச்சர் ஜுவன் பொன்ஸ் என்றைல் படைத்தளபதி ஜெனரல் பிடெல்ராமோஸ் ஆகியோர் அவர்களுள் அடங்குவர். முதலாவது அக்யூனோ நிர்வாகத்தில் அவர்கள் இடம்பெற்றமை சிவிலியன் - இராணுவ உறவின் சிக்கல்களைக் குறித்தன. அவை பிலிப்பைன்ஸ் அரசியலைத் தொடர்ந்து பயங்கரமாக்கின.
என்றைல், ராமோஸ் ஆகியோரின் விலகல் பிலிப்பைன்ஸ் இராணுவக் கழக வகுப்பினரால் 1982 இல் உருவாக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் இராணுவப்படை சீர்திருத்த இயக்கக் குழுவால் (ஆர்.ஏ.எம்) ஆதரிக்கப்பட்டது. பிலிப்பின்ஸ் இராணுவ உயர் கல்லூரியின் 1971 வகுப்பினரால் இக்குழு அமைக்கப்பட்டது. லெப். கேணல் சிரகாரியோ (கிறிங்கோ) ஹொனாஸன் லெப். கேணல் எட்வேர்ட்ஸ் கப்புனான் ஆகியோரால் வழி நடத்தப்பட்ட அது இராணுவத்தில் ஒருமைப்பாட்டையும் தொழிற் புலமையையும் மீள ஏற்படுத்தலை நோக்கிய வழிகாட்டலை அடிப்படையாகக் கொண்டிருந்தது. கம்யூனிஸக் கிளர்ச்சியாளர்களுடனான இணக்கப் பேச்சுக்கள், மனித உரிமைகள் மீறல்கள் பற்றியும் புலன் விசாரணைகள் போன்ற விஷயங்களில் இராணுவமும், சிவில் விடுதலை வீரர்களும் பகிரங்கமாக மோதிக் கொண்டனர். எல்லாப் புரட்சியாளர்களுக்கும் மன்னிப்பு ஒன்று வழங்குவதாயின் அது போன்றதொரு மன்னிப்பு எல்லாப் படைவீரர்களுக்கும் நீடிக்கப்பட வேண்டியது அவசியம் என என்றைல் பகிரங்கமாகக் கூறினார். இந்த நிலையானது மனித உரிமைகள் மீதான சனாதிபதிக் குழுவின் பங்கைத் தெளிவ. " மிகக் கடுமையாக முடக்கியிருக்கும்.
இந்தச் சக்திகளின் கூட்டணியானது இலட்சியத்தாலோ அல்லது ஒரு அரசியல் கட்சியின் ஒழுங்குமுறையாலோ ஒன்றாகப் பிணைக்கப்பட்டிருக்காததால் விரைவில் அவை பிரிந்துவிட்டன. சகல மாநில ஆளுநர்களையும், மேயர்களையும் அவர் முதலடியாய் தலையடியாய் நீக்கியது வெறுமனே இராணுவத்துக்குள் மட்டுமன்றி, யூனிடோவைக் கட்டுப்படுத்திய பாரம்பரிய உயர்குழுவினர் மத்தியிலும் எதிர்ப்பைக் கிழப்பியதால் பிமென்டல் முதற் பலியானார். உள்ளூராட்சி அமைச்சில் இருந்து அவர் நீக்கப்பட்டதன் பின்னர் செனட்டுக்கான தேர்தலில் போட்டியிட அரசாங்கத்திலிருந்தும் விலகினார். 1986 ஆடி
284

6 இல் மனிலா ஹோட்டலைக் கைப்பற்ற ஆர்டியூரோ ரொவென்டினோ மேற்கொண்ட தோல்வி கண்ட முயற்சியில் ஆசைப்பாடுள்ள ஜூவான் பொன்ஸ் என்றைலின் பங்கு சந்தேகத்துக்கிடமானதால் அவருடன் அக்யூனோ கொண்டிருந்த உறவு நல்லதாய் அமையவில்லை. கிளர்ச்சிக்காரர்களுடன் தணிப்பதான ஒரு கொள்கையை இராணுவம் கொண்டிருந்ததைப் பற்றிய அவரது பகிரங்க விமர்சனத்தினால் அக்கியூனோவிடமிருந்து அவர் விலகிச் செல்வது படிப்படியாக ஆழமானது. கடந்த வருடம் கார்த்திகையில் அக்யூனோ தன்னிச்சையான ஒரு தீர்மானமான நடவடிக்கையால் அவரையும், மூன்று இதர அமைச்சர்களையும் நீக்கியதன் மூலம் என்றைலின் தலை உருண்டது. இவ்வருட மாசி மாதத்தில் தியோக்னோவின் இறப்பினால் அக்கியூனோ தன் வலிமையின் தூண்களில் ஒன்றை இழந்துவிட்டார். பெபெ தான் “றினோய் கேள்வி எதுவுமின்றி உலகின் இறுதிவரை பின்தொடரக் கூடிய ஒரு மனிதர்” என அவர் புகழ்ச்சிபடக் கூறினார்.
மனிலா ஹோட்டல் சம்பவத்தை நடத்திய அதே அதிகாரிகளின் வழிநடத்தலில் 700 துருப்புக்கள் கியூலோன் நகரில் வானொலி, தொலைக்காட்சி ஒலிபரப்பு வளவுக்குள் நுழைந்தது. இராணுவச் சதி ஆபத்து தொடர்ச்சியாக அக்கியூனோவுக்கு உண்டென்பதை மேலும் சுட்டியது. மனிலாவில் அக்கியூனோ ஒரு கடினமான போக்கைக் கடைப்பிடித்தார். "சட்டத்தின் முழுச்சக்தியும் குற்றச் செயலில் ஈடுபட்டதாகக் கருதப்படும் சிவிலியன்களுக்கும், இராணுவ ஆளணியினருக்கும் பிரயோகிக்கப்படும். சமரசத்துக்கும் ஒரு நேரம் உண்டு. நீதிக்கும், செய்த குற்றத்துக்குத் தண்டனையை அனுபவிக்கவும் ஒரு நேரம் உண்டு. அந்த நேரம் வந்துவிட்டது". ஆனால் சீர்திருத்த இயக்கத்தைச் சேர்ந்த கேணல் கிறெகாரியோ ஹொனோஸனும் இதர அதிகாரிகளும் புரட்சியாளர்களுக்கு எதிராக எதுவித பலாத்காரமும் உபயோகிக்கப்பட மாட்டாது, என்ற ஒரு சலுகையை ஜெனரல் ராமோஸிடமிருந்து பெற்றுக் கொண்டனர். அக்யூனோவின் கட்டளையைப் புறக்கணித்த ராமோஸின் இந்தச் சலுகை புரட்சிக்காரர்களின் தலைவரான கேணல் கண்டாஸ் பேரில் ஒரு இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து அதன் மூலம் அக்யூனோவுக்கு ஒரு அவமானமான தோல்வியாக முடிந்தது. இந்த நிகழ்வானது எதிர்காலத்தில் அவரைக் கவிழ்க்க இதர இராணுவப் பிரிவுகளை உற்சாகப்படுத்த மட்டுமே உதவியிருக்கும். எதிர்பார்த்தவாறு, ஆவணி 28 இல் சீர்திருத்த இயக்கத்தைச் சேர்ந்த கிறெகோரியா ஹொனாஸனும், எடுவர்டோ கப்புனாலும் அக்யூனோவைக் கவிழ்க்க, இன்னொரு தோல்வி
285

Page 151
முயற்சியை முன்னெடுத்ததுடன் மலக்கனாங் மாளிகையின் மீது ஒரு தாக்குதலைக் கூட முன்னெடுத்து நடத்தித் தோல்வி கண்டனர். அதில் அக்யூனோவின் மகன் கூடக் காயமுற்றார். தவிர்க்க முடியாதவாறு இந்த நிகழ்வுகள் அக்யூனோ அமைச்சரவையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை வலியுறுத்தி வரும் இராணுவப் படையினரை மேலும் இணங்கச் செய்யும் அவசியத்தை உணர்த்தின.
தீர்மானம் எடுக்கும் நடவடிக்கையில் யூனிடோ கட்சி பெருமளவில் புறக்கணிக்கப்பட்டு வருவதாகக் குற்றஞ் சாட்டி வெளிநாட்டமைச்சர் பதவியை சல்வடோர் லோரல் ராஜினாமாச் செய்தார். ஜோக்கர் அரோயோவையும், நிதியமைச்சர் ஜெய்ம் ஓங்க்கின்னையும் அக்யூனோ மாற்றினார். நிகழ்வுகள் ஒரு முழுச்சுற்று சுற்றி விட்டன. ஒவ்வொரு பங்காளரும் தனது பிரதான நடிகரை இழந்து விட்டனர்.
ஃப்ளோரி நூத் ரொமேரோ தனது புலமைப் பரிசிலை எளிதாக எடுத்துக் கொண்ட ஒரு பாவனை காட்டாத மென்மையான பெண்மணி. அவர் பிலிப்பைன் சட்ட நிலையப் பல்கலைக்கழகத்தின் பணிப்பாளராகவும், அரசியலமைப்பு ஆணையத்தின் செயலாளர் நாயகமாகவும், சிறிய சனாதிபதி செயலகத்தில் அக்யூனோவின் ஒரு முக்கிய ஆலோசகராகவும் விளங்கினார்.
மலாகனாங் மாளிகை ஒரு காலத்தில் மார்கோஸ் குடும்பத்தின் செல்வத்தையும் ஆடம்பரத்தையும் எடுத்துக் காட்டுவதாக விளங்கியது. அந்த மாளிகையில் கோரி அக்யூனோ வாழவோ, பணிபுரியவோ போவதில்லை எனத் தீர்மானித்தார். எனினும், அவர் மாளிகையின் அருகேயே பிரிமியர் விருந்தினர் இல்லம் என அழைக்கப்பட்ட சிறிய கட்டிடத்தில் அலுவலகம் ஒன்றை அமைக்க விரும்பினர். முதல் மாடியில் அவர் அமர்ந்தார். கீழ் மாடியில் ஜோக்கர் அரோயோ அமர்ந்தார். ஒரு சாதாரண கூட்டத்துக்கான இடமின்றி, மிகுந்த இட நெருக்கடியுடன் இருப்பதாகச் செயலாளர் ரொமேரோ என்னிடம் விளக்கிக் கூறினார். எனவே அவர் அரும்பொருட் காட்சியகமாக மாற்றப்பட்ட பிரதான மாளிகைக்கு என்னை அழைத்துச் சென்றார். நீள்சதுர அமர்வு அறையானது எளிமையாக ஆனால் ரசிக்கத்தக்க வகையில் வெல்வெட் வெளிர்பச்சை பொருத்தப்பட்ட தளபாடங்கள், பாரசீகக் கம்பளங்கள், 19ஆம் நூற்றாண்டு ஓவியங்கள், மரவேலைப்பாடுகள், மற்றும் பிலிப்பினோ சித்திரக்காரர்களின் சிற்பங்கள், என்பவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஒரு
286

கட்டிடமானது அதில் இருப்பவர் களின் உணர் வால் ஊட்டப்படுவதாகும். மலாகனாங் மாளிகை புதிய நிர்வாகத்தில் மிகவும் குறைவாகவே விரும்பத்தகாததாகத் தோன்றியது. அமைச்சரவையை மீளமைப்பதிலுள்ள சிக்கல்கள் பற்றி ரொமேரோ பேசினார்; சனாதிபதி தீவிர வலது மற்றும் தீவிர இடது சாரியினரால் முற்றுகையிடப்பட்டுள்ளார். பல்வேறு போட்டி நலன்களை அவர் திருப்திப்படுத்த வேண்டியிருந்ததால் சரியான சமநிலையை ஏற்படுத்தல் கடினமாக இருக்கும்.
1987 ஆடி 8 இல் 209 இலக்க நிறைவேற்றுக் கட்டளை ஒன்றை வெளியிட்ட பிலிப்பைன்ஸின் புதிய சிவில் கோவை பற்றி ரொமேரோ உணர்ச்சியுடன் பேசினார். அது முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஜோஸ் பி.எல்.ரேய்ஸ் தலைமையிலான ஒரு குழுவால் 8 வருடகாலப் பணியின் பின்னர் வரையப்பட்டதுடன் நாலு தசாப்தங்களுக்கு முன்னர் ஏற்கப்பட்டதான பிலிப்பைன்ஸின் சிவில் கோவையின் குடும்பச் சட்ட ஏற்பாடுகளுக்கு மாற்றீடாக அமைக்கப்பட்டது. அக்யூனோ அரசின் தனியான சாதனைகளில் ஒன்றாக அதனை அவர் கருதினார். ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையில் சமத்துவத்தை உறுதிப்படுத்தவும், குடும்பம் என்ற நிறுவனத்தை ஒரு அடிப்படை சமூகக் கூறாக வலுப்படுத்தவும் அரசியலமைப்பில் அமைந்துள்ள கொள்கைகளை அமுலாக்கப் புதிய கோவை முயன்றது.
திருமணத்தை ஒரு "மீற முடியாத சமூக நிறுவனம்" என்று கோவை உறுதிப்படுத்தியதுடன் திருமணத்தை முறித்துக் கொள்ளுதல் மற்றும் விவாகரத்து என்பவை தொடர்பான அதன் ஏற்பாடுகள் இறுக்கமாக நிலைத்தன. இருப்பினும் "மத அல்லது அரசியற் தொடர்புகளை மாற்றுவதற்கான தார்மீக நெருக்குதல்” போதைக்கு அடிமையாதல், மதுசாரம், பெண்களின் தன்னினச் சேர்க்கை, தன்னினச் சேர்க்கை பாலியல் குறைபாடு, பாலியல் விவகாரம், என்பவற்றை உள்ளடக்கி சட்டரீதியாகக் குடும்பம் பிரிந்திருக்க வழிசெய்யும் பிரிவு போதியவாறு விரிவாக்கப்பட்டது. சிவில் திருமணங்களையும், எவராவது குரு, இமாம், ராபி அல்லது ஏதாவது திருச்சபை அல்லது மதப்பிரிவின் ஆசானால் நடத்தி வைக்கப்படுபவற்றையும் கோவை அங்கீகரித் திருக்கிறது.
பாலியல் சமத்துவம் பிரச்சினைகளில் குடும்பத்தை ஆதரிப்பது மற்றும் குடும்ப நிர்வாகத்தில் கணவனும், மனைவியும் கூட்டாகப்
287

Page 152
பொறுப்புடையோராவதற்கு அது வழி செய்திருக்கிறது. தம்பதியரில் 6 வர் ஒருவரும் மற்றவரது ஒப்புதலின்றியே ஏதாவது சட்டபூர்வ தொழில் அல்லது வர்த்தகத்தில் ஈடுபடலாம். பொதுவான சொத்து நிர்வாகம் மற்றும் அவற்றை அனுபவித்தல் தம்பதியர் இருவருக்கும் கூட்டாக உரித்தாவதுடன், பொதுவுடமை உரிமை விலக்கப்பட்டதும் சொத்து சமமாகப் பிரிக்கப்படும். பல தன்மைகளில் இந்தக் கோவை ஒன்றாக வாழ்தல், பரஸ்பரம் காதல், மதிப்பு, நம்பிக்கை என்பவற்றைக் கடைப்பிடித்தல் என்பவற்றில் கணவனதும் மனைவியினதும் பரஸ்பரக் கடப்பாட்டை அங்கீகரிக்கும் ஓர் அதியுன்னத சட்ட ஆவணமாகும்.
பத்திரிகைச் செயலாளர் யோடோரே சிபெனிக்னோ இருக்கும் கலையான் மண்டபம் எனப்படும் மாளிகையின் ஒரு பகுதிக்கு நான் அழைத்துச் செல்லப்பட்டேன். பத்திரிகைச் செயலாளர் வெறுமனே அரசாங்கத்தின் பேச்சாளராக மட்டுமன்றி அமைச்சரவையின் ஒரு உறுப்பினராகவும் இருப்பதுடன் சனாதிபதியின் சகல முக்கிய கூட்டங்களிலும் பெரும்பாலும் கலந்து கொள்வார். அவர் என்னை நீளமான ஒரு அறையினுள் வரவேற்றார். அந்த அறை நாலு கூறுகளாக துணைப் பிரிவிகளாக்கப்பட்டு இரு துணைச் செயலாளர் களையும் அவர் கள் அலுவலகங் களையும் கொண்டிருந்ததுடன் ஒரு சிறிய அமர்வுப் பகுதியையும் கொண்டிருந்தது. பெனிக்னோ சுய நம்பிக்கையுள்ள செயற்பாடுடைய ஒரு மனிதர் என்பதுடன் 20 வருடங்களுக்கும் மேலாக ஓர் ஏ.என்.பி.நிருபராகவும் பணியாற்றியவர்.
ஓர் இடைக்கால நிர்வாகம் நிறுவுதல் பற்றி பிதா கொன்ராடோ பல்வெக்குடனான சமீபத்திய பேச்சுக்கள் பற்றி அவரிடம் நான் கேட்டேன். கார்டில்லேரா வட பிலிப்பைன்சில் உள்ள ஒரு மலைப்பிரதேசம். அது ஸ்பானிய வட அமெரிக்க காலனித்துவத்துக்கு எதிரான போராட்டத்தில் ஒரு நீண்ட பாரம்பரியம் கொண்டது. இப்பிரதேசத்தில் 35 பழங்குடிகள் வாழ்ந்து வருவதுடன், சமீபத்தில் கோர்டிலேரிய நாகரிகத்தையும் பண்பாட்டையும் கொண்ட பழங்குடிகளும் மக்களும் ஒன்றிணைந்த சம்மேளனமாக உருவாக அவர்கள் தீர்மானித்தார்கள்.
கோர்டில்லேரியன் மக்கள் விடுதலை இராணுவத்துக்குப் பிதா கொன்ராடோ பால்வெக் தலைமை தாங்கியதுடன் கொர்டில்லேரியாவை
ஒரு தேசிய இனமாகப் பிரகடனப்படுத்தியதுடன் தங்கள் வரலாற்றைப்
288

பிரதிபலித்த வழக்கங்கள், நெறிமுறைகளின் அடிப்படையில் சுய நிர்ணயமும் கோரினார். அவர்களின் நான்கு அடிப்படைக் கோரிக்கைகள் சுயாட்சி, பாரம்பரிய நெறிமுறைகள், சமுதாயச் சொத்து மற்றும் தங்களுக்கு என ஓர் இராணுவம் என்பன “பேச்சுவார்த்தையில் பாரம்பரிய தீர்மானம் எடுக்கும் பேச்சுவார்த்தை முறைகள், கலந்தாலோசனை, கருத்தொருமிப்பு” என்பவற்றை ஒருங்கிணைப்பதில் அவர்கள் குறிப்பான அழுத்தத்தை ஏற்படுத்தினர்.
"புதிய பிலிப்பைன்ஸ் அரசியலமைப்பு கொர்டில்லேராவுக்கு ஒரு சுயாதிபத்திய பிராந்திய அமைப்பு உருவாக்கத்துக்கு வழி செய்திருக்கிறது. கொர்டில்லேராவின் பிரச்சினை மின்டானாவோவை விடக் கூடுதலாகச் சமாளிக்கக் கூடியது. ஏனெனில் பூகோள அமைப்பானது மிகத்தெளிவாக வகுக்கக்கூடியதாகும்."
பகிர்ந்தளிக்கக்கூடிய அதிகாரங்கள் ஒரேயடியாக வகுத்திட முடியாது. ஆனால் அவர்கள் பிரச்சினைகள் இதர சிறுபான்மையர் மற்றும் சுதேச மக்களின் பிரச்சினையைவிட வேறுபட்டதன்று. தமது கலாசார தனித்துவத்தைப் பாதுகாக்க விரும்புவதுடன் சுகாதாரம், கல்வி மற்றும் இதர சமூகநலன் பயக்கும் திட்டங்களைப் பெறுவதிலும் நாட்டம் கொண்டுள்ளனர். கொர்டில்லேராவுக்கான சுயாதிபத்தியத் திட்டமானது மின்டானாவோவுக்கும் ஒரு மாதிரித் திட்டமாகப் பயன்படக்கூடியது. இருப்பினும், நாம் இணங்க முடியாத ஒரு விஷயம் உண்டு. கொர்டில்லேரியன்கள் பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஒழுங்குக்குப் பொறுப்பாக கொர்டில்லேரியன் மக்கள் விடுதலை இராணுவம் இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். பிலிப்பைன்ஸ் ஆயுதப்படையினரின் கட்டளைத் தொடரை உடைக்கவோ அல்லது அதிகாரத்தை விட்டுக் கொடுக்கவோ எங்களால் முடியாது என்று அவர் ஃப்ளோர் ரொமேரா முன்னர் தெரிவிக்கையில் மலாக்கனாங் மாளிகையில் இடம்பெற்ற பேச்சுக்கள் பிதா பால்வெக் இடைக்கால நிர்வாகத்தில் ஆதிக்கம் பெற விரும்பியதால் முட்டுக்கட்டையாகி விட்டன.சமீபத்திய காங்கிரஸ் தேர்தல்களையடுத்து அப்பிராந்தியத்தில் இருந்து பல பிரதிநிதிகள் தெரிவாகினர். நிலைமாற்ற ஏற்பாட்டில் அதிகாரத்தைப் பாரம்பரிய முறையில் பங்கிடக் கோரினர்.
கோர்டி லிலேரியன் களின் கிளர்ச்சியுடன் தொடர்புடையது மின்டானாவோ முஸ்லிம்களின் பிரிவினைக் கோரிக்கையாகும். செனட்டர் அக்யூலினோ பிமன்டல் மின்டானாவோவிலிருந்து வந்த ஒரு கிறிஸ்தவர்.
289

Page 153
இந்த ஆண்டு சனவரியில் மோரோ தேசிய விடுதலை முன்னணி (61ம்.என்.எல்.எப்) யுடன் நடந்த பேச்சுக்களில் கலந்து கொண்டவர். இஸ்லாமிய மாநாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் சவூதி அரேபியா ஜித்தாவில் பேச்சுக்கள் நடந்தன. தலைநகர் மனிலாவின் பரந்த புறநகர்ப்பகுதியில் ஒன்றான மரிக்கினாவில் பிமென்டல் வசித்தார். எனது டாக்ஸ்பி சாரதி அவர் சனாதிபதியாக விருப்புடையவர் எனக் கூறி அவரை ஆர்வத்துடன் அபிமானித்தார். நோரிடேக் தொழிற்சாலைக்குச் சில மீற்றர் தொலைவில் மரிக்கினாவின் துணைப்பிரிவான பெயர்லேனில் அவர் ஆடம்பரமின்றி வாழ்ந்தார். தன்னந்தனியனான ஒரு பாதுகாப்புக் காவலாளி இருப்பதன் மூலம் அந்த அளவான வீடு கீழ்நிலையான அயலில் இருந்து வேறுபட்டிருந்தது. மார்க்கோஸ் காலத்தில் அவர் நாலு தடவைகள் கைதானதுடன், 1994 மே மாதம் வீட்டுக் காவலில் இருந்த காலத்திலேயே காங்கிரசுக்குத் தெரிவானார்.
"எனது மனைவி ஒரு உறுதியுள்ள பெண். சுமார் இரு தசாப்தங்களாக தீவிர அரசியல் ஏற்றத் தாழ்வுகளில் அவள் என்னுடன் இணைந்து நின்றாள்" மின்டானோலாவின் பிரச்சினைகள் குறித்து அவர் பிரதிபலிக்கும் விதத்தல் பேசினார். "முஸ்லிம்களின் பிரச்சினை பிலிப்பைன்ஸின் உள்ளூர் குடியேற்றத்தின் ஒரு அம்சமாகும்; லு ஸோன் மக்கள் மின் டோனாவின் முஸ்லிம் களையும் , கிறிஸ்தவர்களையும் இரண்டாம் தரக் குடிமக்களாகவே கணிக்கின்றனர். அடிப்படைப் பிரச்சினை என்னவென்றால் நூற்றாண்டுகளாக நாம் முஸ்லிம்கள் மீது கிறிஸ்தவ நாகரிகச் செழிப்புக்களைத் திணிக்க முயன்று வருவதே. இது தவறானது. ஒன்றரைக் கோடி மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 50 லட்சமாக இருப்பதும், 23 மாநிலங்களில் ஐந்தில் மட்டுமே ஆதிக்கம் உடையவர்களாக இருப்பதும், அவர்கள் எதிர்நோக்கும் கஷ்டங்களில் ஒன்றாகும். சில மதிப்பீடுகள் அவர்களின் விகிதாசாரத்தை மிகக் குறைவாகக் காட்டுகின்றன. மோரோ தேசிய விடுதலை முன்னணி மின்டானோவாப் பிராந்தியத்துக்குப் பூரண சுயாட்சியைக் கோரியது. அவர்கள் இழந்து விடுவர் என நான் கூறினேன். மற்றொரு பிரச்சினையானது வெறுமனே இலட்சிய அடிப்படையானது மட்டுமல்லாது போட்டிப் பழங்குடி விசுவாசங்களால் விடுதலை இயக்கத்துக்குள்ள்ான பிளவு - மார்க்கோஸ் இப்பிரிவுகளை மிகவும் திறமையுடன் அதிகாரப் பங்கீட்டுக் கோரிக்கையை நிறுத்திவிடப் பயனாக்கினார்."
290

6 னினும் மூன்று நாட்களின் பின்னர் உடன்பாடு எட்டப்பட்ட ஜித்தாப் பேச்சுகளில் போதிய முன்னேற்றம் இருந்ததாக பிமென்டல் கருதினார். "எவ்வாறாயினும் அரசியலமைப்பு ஆணைக்குழு ஒரு சமாந்திர செயற்பாட்டில் ஈடுபட்டதுடன் மின்டானோவுக்கான பிராந்திய சுயாட்சிக்குரிய தனது சொந்த யோசனைகளை வெளியிட்டது. இந்த வடிவாக்கம் மாசியில் ஒரு பொது அபிப்பிராயக் கணிப்பினால் அங்கீகரிக்கப்படவிருந்தது. மோரோ தேசிய விடுதலை முன்னணித் தலைவர் நூர் மிசுவார் அரசியலமைப்பின் ஏற்பாடுகள் ஜித்தாப் பேச்சுடன் முரண்படுவதாகக் கருதிப் பொது அபிப்பிராயக் கணிப்பினைப் பின்போட அக்யூனோவைக் கோரினார். அரசாங்கம், எவ்வாறாயினும், அரசியலமைப்புச் செயற்பாட்டைத் தாமதப்படுத்த மறுத்ததுடன் முழு நடவடிக்கையும் முறிவுற்றன.
எப்படியாயினும், பிமென்டல் மின்டானோவாப் பிரச்சினையை மீள எடுத்துக் காட்டும் காங்கிரஸின் பெரு முயற்சியில் பங்காளன் ஆனார். மின்டானோவா விவகாரங்கள் தொடர்பான ஒரு செனட் குழுவின் தலைவரானார். அது பொருளாதார அபிவிருத்தி, ஒரு சுயாட்சிப் பிராந்தியம் ஏற்படுத்தல், சமாதானத்தையும் வழமையையும் மீள நிலைநாட்டல் போன்ற விஷயங்களை ஆராயும்.
பிமென்டல் மேலும் கூறினார் “பூகோள வேற்றுமைக்கும் சிக்கலுக்கு மத்தியிலும் பிராந்தியத்தில் பிலிப்பைன்ஸ் தான் மிகவும் மத்தியப்படுத்தப்பட்ட நாடுகளில் ஒன்றாகும். ஏழாயிரம் தீவுகள், நாற்பதாயிரம் கிராமங்கள், எழுபத்தி மூன்று மாநிலங்கள் என்பவற்றை அது கொண்டுள்ளது. பிராந்திய வேறுபாடுகளையும் சமத்துவ மின்மையையும் களைவதற்கு மலேசியாவில் உள்ள மாதிரியான ஒரு சமஷ்டி முறையிலான அதிகாரப்பகிர்வு எமக்குத் தேவை. அத்தகைய ஒரு செயற்பாடான அதிகாரப் பகிர்வு பல்வேறு மாநிலங்களில் பாரம்பரிய உயர்குழுக்களின் பிடிப்புக்களைப் பலவீனமாக்குவதுடன் சனநாயகக் கணிப்பீட்டிற்கும் வசதியேற்படுத்தும்.”
கம்யூனிஸ்க் கிளர்ச்சி தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுத்திய திண்டாட்டங்கள் போன்று கொர்டில்லேரா அல்லது மின்டானாவா பிரச்சினைகள் கோரி அக்யூனோவுக்கு ஏற்படுத்தியதில்லை. இந்த விஷயத்தில்தான் அருகி விட்ட சிவிலியன்-இராணுவ உறவும், சனநாயக நடவடிக்கைகளினதும், அமைப்புக்களதும் எதிர்காலம் தங்கியிருந்தது. புரட்சியாளர்களின் இணக்கப்பேச்சுக் குழுத் தலைவரான
291

Page 154
சற்றேனினோ ஒக்கம்போ, என்.பி.ஏ.யின் அடிப்படைக் கோரிக்கைகள் "அடக்குமுறை" இராணுவத்தைக் கலைத்தல், காணிச்சீர்திருத்தம், அமெரிக்க இராணுவத்தளங்களை வெளியேற்றல் எனக் குறிப்பிட்டிருந்தார். தளங்களைப் பொறுத்தவரை கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்பது போலத் தெளிவாக உள்ளது. தற்போதைய உடன்படிக்கை காலாவதியாகிய பின்னர் தளங்களின் நிலைபற்றி மீளாய்வு செய்வதாகக் கோரி அக்யூனோ தெரிவித்தார். அணுவாயுதக் கருவிகளை ஏற்றிச் செல்லும் குண்டு வீச்சு விமானங்கள் பயன்படுத்துவதாக அறிவிக்கப்பட்ட கிளார்க் விமான நிலையத்தினதும் அணுவாயுத நீர்மூழ்கிகள் மற்றும் போர்க் கப்பல்களுக்கு ஒரு தளமாகக் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படும் சூபிக்குடாவினதும் எதிர்காலத்தையும் புதிய அரசியலமைப்பில் பிரகடனப் படுத்தப்பட்டிருக்கும் அணுவாயுத எதிர்ப்புக் கொள்கை பாதிக்கும்.
புதிய மக்கள் இராணுவத்துக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான அறுபது நாள் போர் நிறுத்தம், எவ்வகையிலும் குறிப்பிடத்தக்க அரசியல் முன்னேற்றங்களையும் அளிக்கவில்லை. அரசாங்கப் பேச்சாளர் ஒருமுறை "சனநாயகத்துக்கு சமாதானம் ஒரு முன் நிபந்தனையாகும்” எனப் பிரகடனப்படுத்தினார். சனாதிபதி அக்யூனோ தனது அமெரிக்க காங்கிரசில் ஆற்றிய உரையில் "அமைதி முறையிலேயே நான் பதவிக்கு வந்தேன். அதனை நான் காப்பேன். இது எனது மக்களுடனான எனது ஒப்பந்தம். கடவுளுக்கான எனது கடப்பாடு” எனத் தெரிவித்தார். மலாக்கனாங் மாளிகையில் எவ்வாறாயினும் நிலைமை இறுகியது. தியோடோரோ பெனிக்னோ “கம்யூனிஸ்டுகளுடன் இணக்கம் எதுவும் கிடையாது" என உறுதிபடக் கூறிவிட்டார். அத்தகைய ஒரு அணுகுமுறை இராணுவ மற்றும் பழைமைவாதி வர்த்தகக் குழுக்களை வலுப்படுத்தவும், பிலிப்பினோ சமுதாயத்தை மேலும் வேறுபடுத்தவும் செய்யாதா எனக் கேட்டபோது ஏதோ பொருத்தமற்ற விதத்தில் பெனிக்னோ "பிலிப்பினோ சமுதாயத்தில் வேறுபட்ட தன்மை கிடையாது" அடுத்தடுத்து தோல்வி கண்ட சதி முயற்சிகள் சிவிலியன் அதிகாரத்துக்கான ஒரு உறுதிப்பாடாம்" என வாதிட்டார். மக்கள் "சனாதிபதி G39;strf அக்யூனோவை ஆதரிக்கின்றனர். அவர்தான் பிலிப்பினோ தேசிய இனத்தின் மிகவும் உயர்ந்த இலட்சியங்களுக்கும், அபிலாசைகளுக்கும் சின்னமாவார்." "ஒரு சமுதாயத்தில் உள்ள சின்னங்களின் உயிரோட்ட ஆதிக்கத்துக்கே ஒரு போராட்டம் இருக்கின்ற வேளையில் சின்னங்களின் முக்கியத்துவத்தை நீங்கள் குறைவாக மதித்திட முடியாது” என்று
292

கூறினார். ஒரு சூட்சுமமான வெளிநாட்டு நிருபர் பெனிக்னோ அக்யூனோவின் அடிக்கடி கூறப்படும் வாக்கியமான "ஒரு பிலிப்பினோ இறப்பதற்கு அருகதையானவன்” என்பது ஒரு வெளியாளுக்கு அலுத்துப் போன வாசகமாகத் தோன்றினாலும், அது புதிய நிர்வாகத்தின் தலைப்பாகி விட்டது." தசாப்தங்களாக அறிவு கலாசாரத் துறைகளில் தங்கியிருத்தல் பிலிப்பினோ மனச்சாட்சியைத் திரித்து விட்டது. தனது பிலிப்பினோ உதவியாளரிடம் ஒரு பிலிப்பினோ எழுத்தாளரின் ஒரு முக்கிய இலக்கியப் படைப்பினைத் தனக்குக் குறிப்பிடுமாறு நிருபர் கேட்டதும், கபிரியேல் கார்ஸியா மார்குவெளின் "நூறு ஆண்டுகள் தனிமை” யை உடனே அவர் கூறினார்.
அக்யூனோ கூட்டணியில் அங்கம் பெற்ற காரணத்தை அடிப்படையாக்கிய குழுக்களும், சிவில் விடுதலை வீரர்களும் உணர்வுப் புனிதத்தின் துரதுவர்கள் எனக் குறிப்பிடப்பட்டனர். அமைச்சரவையின் சமீபத்திய மாற்றியமைப்பு தெளிவாக வலது சாரிப்பக்கத்துக்கு திசை திரும்பியதோடு நிர்வாகத்திலிருந்து கூடுதலாக இலட்சியவாத, சீர்திருத்தவாதச் சக்திகளை நீக்கி விட்டது. ஆனால் கிளர்ச்சிக்கு எதிரான “போர்வாளை” அக்யூனோ கையேந்தியிருப்பதால் அவர் "உணர்ச்சிப் புனிதத்தின் தூதுவர்களை" மேலும் அந்நியப்படுத்தும் ஆபத்தைத் தேடிக் கொண்டார். இராணுவத்தின் கசப்பைக் கட்டுப்படுத்த அதே சக்திகளின் ஆதரவு அவருக்குத் தேவையாக இருந்தது.
293

Page 155
மியன்மார் பற்றிய தீர்மானம் மீதான உரை
தனிப்பட்ட உறுப்பினர்களின் பிரேரணை யாவும் தீர்மானங்களாக வேண்டிய அவசியமில்லையெனினும் அவை சனநாயக விழுமியங்கள், மனித உரிமைகள் ஆகியவற்றின் அபிவிருத்தி மற்றும் ஒரு குடியியல் சமுதாயத்தினை வலுப்படுத்தல் ஆகியவற்றில் செல்வாக்குச் செலுத்தும் சர்வதேச நிகழ்வுகள் தொடர்பாக அபிப்பிராயங்களை வெளியிட இச்சபைக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்குகிறன. பல வருடங்களுக்கு முன்னர் றொபின் தீவில் சிறையிலடைக்கப்பட்டிருந்த ஒரு கைதியை விடுதலை செய்ய வேண்டும் என்ற பிரேரணை இச்சபையில் முன்மொழியப்பட்டது. இக்கைதி தான் இன்று தென்னாபிரிக்க சனாதிபதியாகப் பத்வியேற்றிருக்கும் திரு. நெல்சன் மண்டேலா, அநீதி எங்காவது நடைபெறின் அது எல்லா இடங்களிலும் நீதிக்கான போராட்டத்தைத் தோற்றுவிக்கிறது என்பதில் இச்சபை எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளது. மியன் மார் தொடர்பாக இப் பிரேரணையானது இச்சபையின் இருபகுதி உறுப்பினர்களும் மியன்மாரில் நடைபெற்றுவரும் அரசியல் அபிவிருத்திகளை அவதானித்து அணுகும் இருகூறான உணர்வுகளுக்கு இன்னுமொரு உதாரணமாகும்.
மியன்மார் தொடர்பான விடயம் இன்று உலகளாவிய ரீதியில் உருவாகி வரும் கருத்தொருமிப்புக்கு வடிவம் கொடுக்கும் ஒரு எளிய முயற்சியாகும். அத்துடன் கடந்த ஏழு வருடங்களாக எவ்வித விசாரணையுமின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கிழக்கின் மண்டேலாவான ஆங் சான் சூ கியூ அவர்கள் மீது நாம் கொண்டுள்ள கரிசனையின் வெளிப்பாடாகவும் அமையும். இலங்கையும் இந்தச்
294

சபையும் மியன்மார் தொடர்பாக அக்கறை கொள்வதற்கு விசேட காரணங்கள் உள்ளன. 11 ஆம், 12 ஆம் நூற்றாண்டுகளிலிருந்து இரு நாடுகளும் உறுதியான வரலாற்று, சமயத் தொடர்புகளைக் கொண்டுள்ளன. பொலன்னறுவையை ஆண்ட மன்னர்களான முதலாம் பராக்கிரமபாகு, முதலாம் விஜயபாகு ஆகியோர் முன்னர் ரமன்னா எனப்பட்ட பர்மாவுடன் மிகவும் நெருக்கமான அரசியற் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். அத்துடன் இத் தொடர்புகள் இலங்கையும், பர்மாவும் கொண்டுள்ள தேரவாத பெளத்த மரபுகளினால் இன்னும் பலப்படுத்தப்பட்டன. விஜயபாகு சங்கத்தை மீளமைக்கப் பர்மாவின் உதவியை நாடினான். இத்தகைய சமய கலாசாரத் தொடர்புகள் பல்லாண்டுகளாக வளர்ச்சியடைந்துள்ளன. அத்துடன் ஆங்சான் தலைமையிலான பர்மாவின் விடுதலைப் போராட்டத்தின் போது இன்னும் அதிகமாகப் பலப்படுத்தப்பட்டுள்ளன. தமது நீண்ட பிரச்சினைகள் நிறைந்த வரலாற்றில் பர்மிய மக்களின் வீரம், சகிப்புத்தன்மை ஆகியவற்றுக்காக இலங்கை மக்கள் அவர்கள் மீது கொண்டுள்ள அன்புக்கும், மதிப்புக்கும் இப்பிரேரணை ஓர் அடையாளமாகும். இந்த அடிப்படையில்தான் 1992 வெசாக் தினத்தில் மியன்மாரின் சம்பந்தப்பட்ட சகல தரப்பினர்களும் 1990 ஆடி மாதத்தில் நடைபெற்ற தேர்தல் தீர்ப்புகளை மதித்து நாட்டில் உடனடியாகச் சனநாயக ரீதியான மாற்றத்தைக் கொண்டு வருமாறு இலங்கையிலுள்ள ஒரு மனித உரிமைச் செயற்பாட்டுக் குழுவினர் கோரிக்கை விடுத்தனர்.
இப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டதானது உப கண்டத்தில் சங்கிலித் தொடரான நிகழ்ச்சிகளை உருவாக்கியுள்ளது. சித்திரை மாதத்தில் பாகிஸ்தானில் யுனெஸ்கோவும், மனித உரிமை ஆணைக் குழுவும் ஒன்றிணைந்து நடாத்திய மாநாட்டின் இறுதிப் பிரேரணையில் இப் பிரேரணை பற்றி குறிப்பிடப்பட்டது. இம் மாநாட்டைத் தொடக்கி வைத்த பிரதமர் பெனாசிர் பூட்டோ, ஆங் சான் சூ இனை உடனடியாக விடுதலை செய்யுமாறு மிகவும் தைரியமாகக் கோரிக்கை விடுத்தார். சில நாட்களின் பின்னர் சர்வதேச விளக்கத்துக்கான கெளரவமிக்க நேரு ஞாபகார்த்த விருது ஆங் சான் சூ சீக்கு வழங்கப்பட்டது. நான் இதனைக் குறிப்பிடுவதற்கான காரணம் உள்ளது. அதாவது மனித விழுமியங்கள் பற்றிய போராட்டத்தில் மிகச் சிறிய முனைப்பும் கூட சிற்றலைகளை உருவாக்கி நமது நாட்டுக்கு அப்பாலும் செல்லக்கூடிய பேரலைகளை உருவாக்கக் கூடும்.
295

Page 156
மியன்மாரின் வரலாற்றில் தற்போதைய குழப்பநிலை 1988 புரட்டாதி 18 ஆம் திகதி பர்மிய இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டதுடன் தொடங்குகிறது. பர்மிய ஆயுதப் படைகளின் தலைவரான ஜெனரல் சோ மாவுங் இராணுவம் பதிவியேற்றத்தையும் சகல குடியியல் அரசாங்க நிறுவனங்களும் கலைக்கப்பட்டதையும் அறிவித்தது. இராணுவமானது 19 உறுப்பினர்களைக் கொண்ட இராணுவ ஆட்சிக் குழுவை அமைத்தது. இது அரச சட்டம் மற்றும் ஒழுங்குகளைப் பாதுகாக்கும் கவுன்சில் (StateLaw &OrderRestoration Council) எனப்பட்டது. இக் கவுன்சிலின் ஆணையின் படி பர்மாவில் கிளர்ந்தெழுந்த சனநாயக சார்பு இயக்கங்கள் யாவும் இராணுவத்தினரால் ஒடுக்கப்பட்டன. ரங்கூன் உட்பட பல இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் சுட்டு வீழ்த்தப்பட்டனர். மக்களது ஆர்ப்பாட்டங்கள் தடை செய்யப்பட்டன. இதனை மீறிய மாணவர்கள், அரசியல்வாதிகள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பெளத்த குருமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 1989 இல் உருவாக்கப்பட்ட இன்னுமொரு நடவடிக்கையின் விளைவாக ஆங் சான் சூ சீ உட்பட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இவ்வாறான அரசியல் அடக்குமுறை இருந்த போதிலும் 1990 வைகாசி 27 இல் நடைபெற்ற தேர்தலில் சனநாயக சக்திகள் பெற்ற பாரிய வெற்றி இராணுவ ஆட்சிக்கு எதிரானி அரசியல் எதிர்ப்பைப் பறைசாற்றின. தேசிய சபையின் 485 ஆசனங்களில் 392 ஆசனங்களை என்.எல்.டி. கைப்பற்றியது. இராணுவ ஆட்சிக்குச் சார்பான என்.யு.பி. க்கு 10 ஆசனங்கள் LD L G6) G3 LD கிடை தி தன . இத் தேர்தல் பெறுபேறுகள் கெளரவிக்கப்படவில்லை. அத்துடன் அதிகாரம் குடியியல் ஆட்சிக்கு மாற்றப்படவுமில்லை.
6 ஆடி, 1995
296


Page 157


Page 158


Page 159
நீலன் திருச்செல்வம் பாராளுமன்ற உறுப்பின சட்டத்தரணியுமாவார். இ இலங்கைப் பல்கலைக் கழகத்திலும் ஹாவாட் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். தற்போது இ ஆய்வுகளுக்கான சர்வே நிலையத்தின் பணிப்பா சட்ட சமூக நம்பிக்கை பணிப்பாளராகவும் பணி புரிகின்றார்.
COLOMBO
இனத்துவ ஆய்வுகளுக்கான ச
கொழும்பு
PRINTED BY UNIE ARTS (PVT) LTD
 

ர்வதேச நிலையம்
N955-580.018.9
—
TEL - 330195.