கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அறிவு மதி: கலாநிதி, கவிஞர் வி. கந்தவனம் பாராட்டு விழா மலர் 2002

Page 1
&478 கந்த
 


Page 2
Y 餐
உங்கள் இல்லங்களி வைபவங்களையும்
நடாத்தி முழக்க நகரி
50 பேர் முதல்
திருமணம், பூப்புனி பிறந்த நாள் மற் வைபவங்களுக்கு உணவுகளுடன் ஆடம் எம்மிடம் தகுந்த Pa
TEL: 416-4 416-4
3330 Pharmacy Av
(Pharmacy
 

rட்டி வறால்
Fü நிகழும் அனைத்து
சிறந்த முறையில் fais égypáSu udailuuib
த நீராட்டு விழா றும் எந்தவித தம் அறுசுவை பரமாகக் கொண்டாட ackage 2 605(6)
57.8224 92-5589)
2. Scarborough, ON I MeNicol)

Page 3
அறிவு
கலாநிதி கவிஞர்
அவர்கள்
பாராட்டு வி
பிரதம ஆசி பேரறிஞர் முருகவே பரமநா உதவி ஆசி திருமுறைச் செல்வர் சி
கவிஞரைப் பிரியமாய் வளர்த்துப் ெ தம்பியையா தம்பாப்பிள்ளைக்கும் மாமியா இம்மலர் சமர்
வெளியி
ஒன்ராறியோ இந்து சிவயோகசுவாமிகளின் சிவ த்ெ உலகச் சைவப் பேரை

மதி
வி. கந்தவனம f6dit
pIT D6)f
hীিu: ாதன் (ஆழ்கடலான்) Arfluus: வ. முத்துலிங்கம்
பாயவனாககய தாய் மாமன் ர் சின்னம்மா தம்பாப்பிள்ளைக்கும் ப்பணம்
lடு:
சமயப் பேரவை நாண்டன் நிலையம், கனடா வ - கனடாக் கிளை

Page 4
1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10
பொருள்
இறைவணக்கம்
கீதாசாரம் இதயங்கள் மலர்ந்தன இதழ்கள் விரிந்தன
கவிஞர் கந்தவனம் கலாநிதி
புவியியல் மேதை கவியியல் நாயகன் க்லாநிதி கர
வாழ்ந்திடுக! வாழ்ந்திடுக வரலாறாக பல் கோடி வாழ்த்துக்கள் ஆசிச் செய்தி நல்லூர்க் கந்தன் தேவஸ்தானம் ஆசிச் செய்தி - வித்துவான் கு. வி. மகாலிங்கம்
. வாழ்த்துரை - சிவதொண்டன் நிலையம்
1. வாழ்த்துச் செய்தி - உலகச் சைவப் பேரவை - க
32
2
3
4.
5
6.
7
8
9
. வாழ்த்துச் செய்தி - திரு. நா. சிவலிங்கம் . இலக்கியத்துறைக்கோர் புதிய கலாநிதி . வாழ்த்துச் செய்தி - சட்டத்தரணி திரு. மனுவல்
வாழ்த்துரை - உலகத் தமிழர் பண்பாட்டுக் கழக பிறந்த மண்ணுக்கு ஒன்ராறியோ இந்து சமயப் ே
. கவிஞர் கலாநிதி வி. கந்தவனம்
. கவியோகி கந்தவனம்
. தான் பெற்ற இன்பம்
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
உள்ளம் கவர்ந்த பெரியார்
யாக்கை நிலையாமை
கவிநாயகர் கந்தவனத்தின் சமயப் பணிகள்
கலைமாச் செல்வர் கவிஞர் நு. வி. க.
கலாநிதி கவிஞர் கந்தவனம்
எண் சிந்தை நிறைந்த கவிஞர்
கெளரவம்
கண்ணுாறு பெரிய புராணமும் சைவசித்தாந்தமும் சைவ வானில் ஒரு செவ்வான் ஒளி சைவம் பற்றிப் பேசும் பேனாக்கள் தேவை
ஆன்மா
. சிந்தித்துச் செயற்படு வாழ்வு சிறக்கும்

ஸ்மதிகள்
ந்தவனம் நலமெலாம் பெறுக
60TLIT 95606T
ஜேசுதாசன் 3ம், கனடா
பரவை செய்த நிதிப் பணிகள்
17-18
19
20-21
22-23
23
24-25
26-28
29
20
34-35
38شس 36
39-42
43-46
49
50
51-52

Page 5
இறைவ6
தென்பாரத நாட்ட திருவீடுகள் தென்மா னிக்க க சேர்க்கும் க அன்னதானக் கந்த தருளும் செ அசுவ முகம்போய்
அடையப் பா கன்னிக் கருள்மா
கடல்கால் வ கதிரோ னுதயகிரி
கவினார் விெ
தென்னங் கொக்கு சேயே சிற்றி தெள்ளு தமிழ்ச்சங் சிறியேஞ் சி
கொக்குவி
 
 
 

ணக்கம்
ாறுபடைத் போ லீழ மதில் ங்கைவளம் திர்காமம் நல்லூர் த னமர்ந் ல்வச் சந்நிதியே மனிதமுகம் "ண்டி வளநாட்டுக் விட்டபுரம் ருடுங் கந்தவனம்
மருவு வருகல் இவற்றுடனே நவிற் பதிசேர் ல் சிதையேலே ப் கத்தலைவா ற்றில் சிதையேலே.
பிள்ளைக்கவி வ. சிவராஜசிங்கம் ல் கிருபாகர சிவசுப்பிரமணியர் பிள்ளைத்தமிழ்

Page 6
கீதா
எது நடந்ததோ, அது நன்றாகவே
* எது நடக்கிறதோ, அது நன்றாக
எது நடக்க இருக்கிறதோ, அது உன்னுடையதை எதை இழந்தா எதை நீ கொண்டு வந்தாய், அ6 எதை நீ படைத்திருந்தாய், அது எதை நீ எடுத்துக் கொண்டாயே எதைக் கொடுத்தாயோ, அது இ எது இன்று உன்னுடையதோ, அ மற்றொருநாள், அதுவேறொருவ இதுவே உலகநியதியும் எனது
 

சாரம்
நடந்தது. வே நடக்கிறது. வும் நன்றாகவே நடக்கும். ய் எதற்காக நீ அழுகிறாய்? தை நீ இழப்பதற்கு?
வீணாவதற்கு? ா, அது இங்கிருந்து எடுக்கப்பட்டது ங்கேயே கொடுக்கப்பட்டது. புது நாளைக்கு மற்றவர் உடையதாகிறது.
உடையதாகும்.
படைப்பின் சாராம்சமும் ஆகும்.
- பகவான் பூரி கிருஷ்ணா

Page 7
மனைவியார் தவமணியுடன் கவிஞ
 

ர் கலாநிதி வி. கந்தவனம் அவர்கள்

Page 8
இதயங்கள் இதழ்கள்
“கவியெனக்கிடந்த கோதாவரியினை வீரர்
ஒரு நாட்டின் அமைப்பு எப்படியானது? சிறந்த ஆளுமைகள் எவை? காதலின் பெறுமானம் எ அச்சாணி என்ன? எண்பது போன்ற சமுதாய விழுமியம் மிக்கவையாகும். கல்வியின் இறு கடவுள் வாழ்த்து. இவற்றை நாம் ஒதுக்கியோ, நாட்டின் முக்கிய அம்சங்களில் ஒன்று தக்கா
தள்ளா விளையுளும் தக்காரும் த
செல்வருஞ் சேர்வது நாடு
தக்கோர் என்பதற்கு அறவோர் என்றுதான் ெ தாங்கி வைத்திருப்போர் இவர்களே. தக்காரி புகழாயும் இருக்கலாம். பெருமை நிறைந்த பிள் எனவே நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்ல ஆளுை கவிஞர் வி. கந்தவனம் அவர்கள். அவர் தகுதி வழங்கிக் கெளரவித்துள்ளது. இன்று அவர் கவிஞர் ஆனார். இஃது ஒரு வரலாற்று நிகழ்
வரலாறு படைக்கப்படுகிறது. வரலாறு வரலாற்றாளர் ஆகிறார்கள். பலர் வரலாற்றைப் வரலாறு காணாத சம்பவங்களும் உண்டு. ஒ( திகழ்கின்றனர். நம் சமுதாய வரலாற்றில் ஒ கதைஞராய், கலைஞராய், விமர்சகராய், திற பேச்சாளராய்த் திகழ்கின்றார். இப்படிப் பட்ை சைவம் கூறும் அதோமுகம். அது ஆத்மா Q தொடர்புடையன. நாம காணபது கமபன இர
நிலைதான். எவர் எப்படிப் புகழ்ந்தாலும்
%
{காணவேண்டுமாயின் அவர்தான் காட்ட வேண
* சிறந்த அகக் காட்சியுணர்வால் மேலோங்கி நி
NN A பிள்ளைத்திருநாமத்துள்ளேயே பிறவிக் கவிந
A y எவ்வளவு உண்மை.
५३ தென்மறவர் மணினிலே தவழ்ந்து, ெ
སྔོ་ பந்தயத்தில் வென்று, வலிகாமத்தில் இல்லறம்
பிரிக்காவிற் சிறந்து, கனடியப் பிரஜையானார் 穹。戮 அவர் தான் சார்ந்த மண்ணையும் மக்கள் K போல, மனிதநேயமும் நிறைந்தவர். நண்பன SY அன்பனாய்த் தனக்கென்றே ஒரு வழிசமைத்து இவருடைய பெருந்தன்மைகளைப் பாரா
நறுமலராக, நாணிமலராக இம்மலரை வெளி 莆 அவர்கள். இதற்குப் பல ஆண்றோர்கள் வாழ்த்து வடித்துத் தந்துள்னர். கனடா நாட்டில் இருந் அனுப்பியுள்ளனர். இவர்கட்கு நாம் மனமார் * ** திரு. மா. கனகசபாபதி அவர்கள். மலரை பூ 2ት துக்கும் நம் நன்றி உரியது. ஒன்ராரியோ இ சிவதொண்டன் நிலையம், உலகச் சைவப் போ
S. ! அவர்களின் பாராட்டுவிழாவின்போது வெளி
எங்கும்
என்று
 
 
 
 
 
 

மலர்ந்தன விரிந்தன
கண்டார்”
- கம்பன்
குடும்பமொன்று எப்படி அமைதல் வேண்டும்? தனிமனித த்தகையது? நல்ல ஆட்சியின் பெருமையாது? சமூகவியலின் க் கட்டமைவுகள் பற்றிக் குறளோவியம் பேசும் கருத்துக்கள் தி இலக்கு இறைவனை அடைவதேதான் என்று கூறுகிறது
இதிலிருந்து ஒதுங்கியோ வாழ்வது தக்க வாழ்க்கை ஆகாது. ர் என்பதை வள்ளுவம் சுட்டிக்காட்டுகின்றது.
ாழ்விலாச்
ாருள். எனவே தகுதிப்பாடுடைய தக்கார் நிறைந்த நாட்டைத் ன் கணிப்பு எச்சத்தாற் காணப்படும். எச்சம் இசையென்னும் ளைகளாயும் இருக்கலாம். இரண்டின் கலப்பாயும் அமையலாம். ம மிக்கவர்கள் தேவை. அப்படியான பக்குவம் உள்ளவர்தான் தி கண்டு உலகப் பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் சாக்கிரதீஸ் கூறியதுபோல் உலகப் பிரஜை ஆகி உலகக் ք6ւյ. து தானாகவும் உருவாகிறது. உருவாக்கப்படுகிறது. பலர் படைக்கிறார்கள். இன்னும் பலர் வரலாறு காணர்கிறார்கள். ரு சிலரே உண்மையை எழுதும் வரலாற்று ஆசிரியர்களாகத் ரு கதாநாயகர் - கவிநாயகர் எனலாம். அவர் கவிஞராய், னாய்வாளராய், சிந்தனையாளராய், எழுத்தச்சராய், திறமான ட திட்டிய பன்முகம் உடைய இரத்தினம் இவர். ஒரு முகம் வோடு இணைந்தது. மற்றவை எல்லாம் உலகியலோடு ாமனைப் பாடிய தோள்கண்டார் தோளே கண்டார் என்னும் நான் கந்தவனமேதான் என்று கூறும் கந்தவனத்தைக் ர்டும். அதுவே கந்தவனம் என்ற திருநாமம். புறக்காட்சியிலும் ற்கிறார். எனவே கருவிலே திருவுடையவர், பெற்றோர் சூட்டிய ாயகர் தென்படுகிறார். ஆம் கவிஞன் பிறக்கிறான் என்பது
தென் தமிழ்நாட்டிலே (நடை) பயின்று, ஈழத்திலே மாரதன் கண்டு, மலையகத்திற் பட்டொளி விட்டுப் பறந்து தென்னா . இவர் தன்னையறிந்த தலைமகன். ளையும், மொழியையும், பண்பாட்டையும் சமயத்தையும் மதிப்பது ாய், நல்லாசானாய், பண்பிலே சேவகனாய், பார்வையிலே து வாழும் தலைச்சன், சால்பு நிறைந்த சான்றோன். ட்டி, மதித்து அவரைக் கெளரவிக்கும் விழாவில் வெளியிடும் யிட முன்னின்று உழைத்தவர் அன்பர் சிவ. முத்துலிங்கம் ரை வழங்கி உள்ளனர். முப்பெருங்கவிஞர் மூவர் கவிதைகள் தும், தாயகத்தில் இருந்தும் அறிஞர்கள் பலர் கட்டுரைகள் ந்த நன்றியுடையோம். இம்மலரை எழுத்தமைப்புச் செய்தவர் அழகுற வடிவமைத்து அச்சடித்துத் தந்த விவேகா அச்சகத் ந்து சமயப் பேரவை - கனடா, கனடா சிவயோகசுவாமிகள் வை - கனடாக் கிளை சேர்ந்து நடத்தும் கலாநிதி கவிநாயக யிடப்பட்டது இம் மலர், அமைதி தழைக்கட்டும் மலர்க்குழு சார்பில் ம் சாந்தி கமழட்டும் முருகவே. பரமநாதன்
56

Page 9
கவிஞர் கந்த
நேரிசை
ஓம்! ஓம்!! ஓம்! என்றே
நாம், நாம் வழிஅடிமை ந கடைக்கணிக்க வேண்டுெ அடைக்கலமாம் ஊர்நுனா
கந்தவனம் செந்தமிழ்ப்பூங் தந்தவனம் பன்னூல்கள் த அஃதால் கலாநிதிச்சீர்! ஆ இஃதால் தமிழ்த்தாய்க்கின்
செஞ்சொற் சுவையழகு, ே மஞ்சத் தமர்பொருளின் மr அள்ளும் நயப்பழகு ஆங்கி கொள்ளும் கவியின் கு6ை
எண்சீர்க்கழிநெடி
தொல்லாள்கைச் சங்கமுத துறைபோய கந்தவன் நல்லாள்கைப் படைப்புகளி நாவல்லான் சொற்டெ வல்லான்கைப் பொருள்கே வாழ்வின்மேம் பாட்டி சொல்லாள்கைத் தேன்சிந்த சுரக்கின்ற தமிழ்நளி
வாணி அம்மைப் பூம்பதங்:
வாய்மடுத்துப் பக்தி தோணிதத்தி நூன்முந்நீர் ( துரந்தெடுத்த துகழ்த ஆணிப்பொன் பெருமகன்நீ அமிழ்தச்செந் தமிழ் ஏணிசெலுங் கவிபுனைவாய் ஏற்றமது! இனிமைய
பலபலவுர்க் கவியரங்கம்
பற்பலவாம் மேடைக அலகலகாய்ப் பொருட்பெரு அறிஞருளம் அழகழ இலகிலகாய்க் கவித்துவப் இனியநறும் பாமலர் கலகலக்கும் சபையுளங்கள் கந்தவனம் காட்சிதர

வனம், கலாநிதி
வெண்பா
ஒலிக்கும் சிவசத்தம் ட்தொட்டே - தாம்தாம் மைக் கண்ணுதலே! என்றே வில் ஆங்கு.
காவனமே பாமலர்த்தேன் ாம்மலர்ந்தே - வந்தவனம் ம், முன் கவிஞரெழில்
ULb.
சர்சீர் அடியழ(கு) அம் ண்பழகு - நெஞ்சகத்தை 5லரும் கந்தவனம்
.
ல் ஆசிரிய விருத்தம்
ல் தொடர்நூல் தேர்ந்து எத் தமிழ்த்து றைவன் ல் நவீனம் கொஞ்சும் பாழிவில் நயங்கள் தேங்கும் ாடல் வழங்கல் காணோம் ற்காம் வழிகள் நீளும் நிச் சிறந்து செல்லும் னம் இடையில் சேரும்.
5ள் வழுத்தி வாழ்த்தி Sக வழியச் சிந்தைத் தோய்ந்து தோய்ந்தே நீர்ந்த பொருள்கள் துய்க்கும்
அணிகள் சேர்த்தே ந்தாய்த்தாள் அலங்க ரிக்க
இளமை தொட்ட ஃது!! இறைமை யஃதே!!!
தலைமை பார்க்கும் ள் சொன் மாரி தோயும் க்கம் அலசிச் செல்லும் கே அவைகள் என்னும் பூங் கொடிகள் ஏறி ள் இதழ்வி ரிக்கும்
கவிஞர் ஏறாம் 5 கண்டு(உ) வந்தே.

Page 10
பாக்களிலே யாப்பணிகள் பாவி பாவியலின் காப்பளித்துப் நோக்கினிலே கவித்துவத்தின் நீ நெஞ்சங்கள் நிறைந்தேறித் ஆக்கஞ்செய் கந்தவன அறிஞன் அரசாங்கம் பாவினமே அ பாக்கியமே கலைத்தெய்வம் அ( பாலகனாய்க் கவிஞர் பல்
செந்தமிழோ டாங்கிலமும் தேர்ந் செம்புலமைக் கல்லூரி அ வந்தகந்த வனவளவன் வனப்பா வளர்த்தகலை யாலூர்கள் நந்திநந்தி இங்குசிவ நெறிகள்
நமசிவாய வாழ்கநம நமெ இந்த இந்த நாட்சமய நெறிநூல இறைபக்தி வளர்த்துவரல்
இழுமெனும்மென் ஒசையொலி ( இரும்புலவர் முச்சங்கத் த விழுமியதாம் பொருட்பெருக்கம்
வித்தகமார் இலக்கணத்தி தழுவுமெழில் கன்னிமைகொள்
தலையாய கலைகலாச் ச கெழுமியதாய் உலகப்பல் கலை
கிளருகலா நிதித்தகமை
செந்தமிழ்ச்சொல் மரபுநெறி சின
சிந்தைபோம் வடிவத்தில் முந்தையோர் எண்ணெழுத்தாம்
மொய்ம்பழியாப் புதியனவ தந்துபெரும் சான்றோர்நாற் சங்க தமிழ்வளர்க்க வேண்டுடை கந்தவனம் வாழ்கமனை மக்கள் கவிஞன்நீ கலாநிதிநீ வா
பெரும்

நின்றே பாவல் லோரின் ர்மை தோற்ற 5 திலங்க ளென்ன
ஆளும் திவல் லோன்எம் ருள்பா லிக்கும் லாண்டே வாழ்க.
தே சீர்த்த
திப ராகி
ர் ஆட்சி
வாழ்த்திப் போற்ற
வாழ்ந்து
lவன் றேத்த
b செய்து
ஏற்ற தொண்டே
இறைமை ஏற்றம் திருக்கை ஆழ்ந்து
விசும்பும் போற்றும் ன் விறன்மை தூய்மை தண்ட மிழ்க்குன் Fாரச் சேவை 0க்க ழகம் கொடுத்த தாமே.
தந்தே தத்தம் செல்லா தாகி முதுவ ரம்பின் ம் பொருந்தச் சேர்த்துத் b LDTÉgö மய! தமிழ்த்த கையோன்
வாழ்க! ழ்க ஊழி!
புலவர் சாத்வீகம். ச. குமரேசையா

Page 11
புவியியல் மேதை, ச கலாநிதி கந்தவனம்
கலாநிதி ஈழத்து சிகர மெனத் தமிழ்கொண்டு சிரமு
செந்தமிழாம் மஞ்சுமோதித் நகரவரும் நதிமூலம் நன்கிரிந்து ட நால்வருடை தேவார நயமுe பகரவல்ல கந்தவனப் பாவலரின்
பயன்பெருகி சிற்றாறாய்ப் ப அகரமது முதலென்னும் ஆடைநெ அரும்பாலின் பொருள் விள
பிரிந்தோடும் சிறுநதிகள் பெருகிடு பிணைவதுபோல் ஆகமங்கள் தரித்துலகில் சாற்றிடினும் சாகரத் தத்துவத்தைச் சொல்மழைய புரிந்திடவே பக்திநதி தானாகிப் ப புவியிலின் போக்குணர்ந்த 1 திரிவுபடா மனத்துாய்மை திடமான திலகமவன் தமிழன்னைத் த
நாவலர்போல் சைவத்தின் நவைய
நசைகொள்ளும் நன்னீரால் ஆவலுடன் பாய்ந்துவந்த ஆறது:ே ஆகமாஞ் சைவத்தின் அருட பாவலனாய் அடியார்க்குப் பாட்டா
பரப்பியபின் வழியெடுத்துப் காவலனே மும்மலமும் கடிவதுபே
கழனியென மனச்செழுமை
பாவிரித்து பகுத்தறிவு பலன்விளை பாரிலுள்ள மாந்தர்மனம் பக் காவிரிந்து வாழுகின்ற கானகத்தில் கரைபுரண்டு ஓடிவரும் நதிே பூவிரிக்கும் நந்தவனப் பொய்கைெ புகழுடையாய் கனடியக் கா நாவிரிக்கும் நாயகனே நாற்பதுநற் நயந்தளித்து ஓடிவரும் நதி
உலகப்பல் கலைக்கழகம் உணர் உயர்த்திநிதி ஆக்கிவைக்க நலஞ்செய்து பலகாலம் நாடறிய
நற்றமிழாந் தொண்டாற்றி ந புலஞ்சாரும் புவியியலால் புகட்டுக புகழ்பூண்டாய் புவிவாழும் ப நலங்காணும் வழிகாட்ட நயந்துபல நாவுதிர்த்து பல்லாண்டு நா

கவியியல் நாயகன் நலமெலாம் பெறுக! துப்பூராடனார்
}யர்ந்த சீராலே தேன்துளிகள் சிதறியதால் JTuUC56)
ரைக்கும் சொற்பொழிவாய் சொல்லமுதம்
ாய்ந்து பலதிசையும் ய் வள்ளுவனின் க்கும் அருமையது அற்புதமே.
ம்நல் பெருநதியாய் ர் பெருமானைப் பலபெயரால் தில் சங்கமிக்கும் பால் சகத்திட்டு மனிதகுலம் ாய்கின்ற புலமைகொண்ட கந்தவனம்
தீர்க்கமுள்ளான் திருநுதலில் திகழ்ந்திடற்கே.
கற்றி நயமுரைத்து நற்சமயக் குளமாகி வ ஆறுதல்போல் ப்பொருளைத் தேக்கிவைத்து லும் இசையாலும் பாய்ந்து வயல் செழிப்பாக்கும் ால் கழிவகற்றிக் கதிரறுக்கும் காவியமே.
ாத்து பாடகற்றிப் குவமே பெறுமிலக்காய் ன் உயிர்காத்து போல கவிகள் செய்து lயனக் கந்தவனப் ட்சிகளைக்கண் முன் காட்டும்
பனுவல்களை கடலைச் சாருமுன்னே
ந்தந்த நதிதன்னை க் கலாநிதியு மாகிமிக வாழியவே ல்லாண்டு வாழியவே கின்ற அறிவதனாற் )ாந்தர்கள் வாழ்க்கையிலே p கவிக்கனியை னிலத்தில் வாழ்ந்திடுமே!

Page 12
தன்னுயிர்க்கு வருந்துயரைத் தாங்கிக் கொண்டு
தானஏனை உயிர்களுக்குத் துயர் செய்யாமை மன்னுயிர்க்குச் சமயநெறி என்றார் அந்த
மாமுனிவர் வள்ளுவனார் அதனால் அன்றோ என்னுயிர்க்கும் தீங்கிழையா வழியில் வாழ்ந்து
எம்மோர்கள் மறைந்தார்கள் மதிப்புற் றார்கள்! இன்னுயிராய் யாவரையும் அவரைப் போன்று
இன்புடனே போற்றுகின்ற கவிஞர் வாழி!
கல்தோன்றி மண்தோன்றாக் காலந் தன்னில்
கடலோடும் கதிரோடும் காற்றி னோடும் சொல்தோன்றி வளம்பெற்ற மொழியாம் எங்கள்
சுவையூறும் தமிழ்க்கனியைப் பிளந்தே ஊட்ட நெல்தோன்றி வயலாடும் நுணாவில் தந்த
நித்திலமாம் கவிமகனார் நீண்ட காலம் இல்தோன்றி வாழ்ந்திடணும் இந்த நாட்டில்
இன்னுமவர் தேவையிங்கு வேண்டும் வாழி!
வாய்ப்பேச்சில் சிரிப்பிருக்கும் வரலா றென்றால் வலுவான சான்றிருக்கும் அவரின் பேச்சில் தாய் போன்ற அணைப்பிருக்கும் மாற்றான் கூடத்
தலையாட்டும் வனப்பிருக்கும் ஒன்றைச் சொன்னா காய்போன்ற தடிப்பிருக்கும் உறுதி உள்ளே
கனிபோலப் பொதிந்திருக்கும் உலக நீதி சேய்போன்று சொற்கேட்கும் கவிதை மேடை
சிறந்தோங்க நடைபோடும் கவிஞர் வாழி!
பல்கோடி வ
புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் நமது மொழி கலாச்ச வாழ்ந்து கொண்டு இருப்பவர் கவிஞர் திரு. வி. க அவர்களாலும் செல்வி அப்பாக்குட்டி தங்கம்மா அ போல வளர்ந்திருக்கும் கவிஞர் அவர்களுக்கு, உலக இலக்கிய சேவைக்காக வழங்கப்பட்டதில் ஆச்சரியட் பெருநிகழ்வாக அமைந்துள்ளது. அப்பெருந்தகை
இது அவருடைய தன்னடக்கத்தை வெளிப்படுத்து சேவையாற்ற எல்லாம் வல்ல சிவபெருமானை வணி
 

ந்திடுக, வரலாறா
ா சம்பந்தன்
நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் என்ற
நீதிவழி செல்வதுபோல் பாங்கு காட்டி முற்றித்தான் திரிபவர்கள் போடுங் கூத்தால் முகமிழந்து போனபல எழுத்து மாந்தர் பற்றித்தான் படர்வதற்குப் பந்த லாகப்
பலகாலம் துணையிருந்த பண்பாட் டாளர் சுற்றித்தான் எழுத்துலகம் சுகம் கொண் டாடும்
சுற்றமெலாம் அவரேதான் அதனால் வாழி!
படிப்பதற்கு உலகினிலே பாடம் உண்டு
பட்டங்கள் பெறவென்று வயதொன் றில்லை துடிப்பதற்கு இருக்கின்ற இதயம் போல
துன்பத்தையும் இன்பத்தையும் சமனாய் ஏற்கும் பிடிப்பொருவர்க் கிருந்துவிட்டால் பிறவி யென்ற
பேறதுதான் எனத்தானும் வாழ்ந்து காட்டி முடித்துவிட்டு நிற்கின்றார் பட்டம் ஏற்று
முடியாத துறையவர்க்கு எதுதான் உண்டோ!
இந்துமதம் இனியதமிழ் இதுவே வாழ்க்கை
இலக்கியத்தின் நண்பர்களே உற்றார்! அன்பை
சிந்துகின்ற புன்சிரிப்பே சொத்து கல்லாச்
சிறுமனிதர் பிழைபொறுத்தல் கடமை! வையப்
ால்
பந்துவெனும் நிலப்பரப்பில் படர்ந்து வாழும்
பைந்தமிழர் நல்வாழ்வே குறிக்கோள்! என்று வந்துதினம் பாடுபடும் கவிஞர் என்றும்
வாழ்ந்திடுக! வாழ்ந்திடுக, வரலாறாக!
வாழ்த்துக்கள்
ாரம் சமயம் வளர வேண்டும் என்ற ஒரே நோக்குடன் ந்தவனம் அவர்கள். மறைந்த ஆத்மஜோதி முத்தையா வர்களாலும் உற்சாகமூட்டப்பட்டு இன்று ஓர் விருட்சம் ப் பல்கலைக்கழகத்தால் கலாநிதிப் பட்டம் அவருடைய படுவதற்கு ஏதும் இல்லையென்றாலும் மகிழ்ச்சியூட்டும் இந்த விடயத்தை தம்பட்டம் அடிக்க விரும்பவில்லை. துகிறது. அன்னார் இன்னும் பலவருடங்கள் வாழ்ந்து ாங்குகின்றேன்.
10
சி. நித்தியானந்தம்

Page 13
ரொறன்ரோ நல்
Ligg
சிவத்திரு. பால
(
9boʻ{
கலிதீர்த்த கந்தப் பெருமானின் தி ஒன்று தமிழ்த் தெய்வம் என்பது. தமிழ்த் என்ற உயர்பட்டத்தைக் கவிநாயகர் எ இடமெல்லாம் சிறப்பு” என்ற பொன்மொழி தன்னுடைய பணியாகப் பெரும் சமயப் வழங்கிய கவிஞர் கலாநிதிப் படடத்ை அடைகின்றோம். காலத்தின் நாகரிகத்து பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” எ பரப்புதலால் தன் பணியை மேற் கொள்
அவர் வ
கவி
கவி கே
கந்தன் தமிழ்
கவிஞனுக்கு நல் என்ெ
சைவப்புலவர், சைவ
(5.
ஆசி கவிஞர், இலக்கிய கலாநிதி (டாக்டர் கவியரசு" ஈழம் கண்ணீரால் எம்மினம் தி சதுரப்பாட்டில் பேனா முனையில் எழுத ஐயாவின் ஆத்மஜோதி நூல் வெளியிடுவ ஆராய்ந்தமைவுடையகற்க” வேண்டி) நு பொன்னின் குடம் ெ
வாழ்க!
 

லூர்க் கந்தசுவாமி ஆலய நம குருக்கள் திருக்குணானந்த ஐயா வழங்கிய
சிச்செய்தி
ருவுளம் கொண்டு கந்தப் பெருமானின் திருப்பெயர்களில் தெய்வமான நல்லூர்க் கந்தன் நல்லருளோடு கலாநிதி ன்ற திரு. கந்தவனம் பெற்றார். “கற்றவர்க்குச் சென்ற அவர்களுக்கும் பொருந்தும். புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் பிரசங்கங்கள் சிறப்புப்பேச்சு, கவிதைகள், கட்டுரைகள் தைப் பெற்றதையிட்டு பெருமகிழ்ச்சியும் பெருமிதமும் பக்கேற்பவும் சபையோரின் பக்குவத்துக் ஏற்பவும் "நாம் னறாற்போல் கவிஞர் தமிழ், சமயம், இலக்கணத்திறனைப் ண்டு வாழ்கவென வாழ்த்துகிறோம்.
கவியோன் வாழ்க!
ரைந்த கவிகள் வாழ்க!
தந்த தந்தை வாழ்க!
ட்ட சபையோர் வாழ்க!
}காக்கும் கவியோன் வாழ்க!
லூர்க் கந்தனின் ஆசீர்வாதங்கள் றன்றும் உரித்தாகுக!
சித்தாந்த பண்டிதர், வித்துவான் வி. மகாலிங்கம்
வழங்கிய
O Pச் செய்தி ) கந்தவனம் அவர்கள் கந்தமுருகேசன் "திருவருள் னமும் அழுது கும்பிட்டபோது இக் கருணைக் கனடாவில் நியவர். முத்தான தொண்டர் “ஞானசுரபி" ஆத்மஜோதி துடன் புராணங்கள் திருமுறைகள் ஆதியாம் ("நுண்ணிதின் ால்களுள் எழுதும் சான்றோர் ஆவார். பாட்டு இட்டு அழகு செய்ய எம்மால் முடியுமா!
வளர்க! அறிவு அஃகம்.

Page 14
சிவதொண்டன் நிை
அரிது, அரிது மானிடராகப் பிறத்தல வாழ்க்கையை நடத்துவது அதற்கு ஒரு உ எங்கள் அன்பிற்கும். மதிப்பிற்குமுரிய கவி
கல்வி அறிவு, பண்பு, புரிந்துணர்வு கவிஞர் கந்தவனம் அவர்கள். இவரின் கருத்துக்களால் இணைக்கப்பட்டனவாகவே இ
இருப்பதும், எவராலும் பாராட்டத்தக்க ஒரு
கர்மவீரனும், நடமாடும் பல்கலைக்கி பெருமதிப்புக்கொடுத்து, கலாநிதிப்பட்டம் அ பகிரங்கமாக சூட்டிய ஒரு நற்சான்றாகும்.
கலாநிதி கந்தவனம் அவர்களுக்குப் கந்தவனம் அவர்களுக்கும், எங்கள் குருந வல்ல விநாயகப் பெருமானின் திருவருளும் மேன்மேலும் சிவதொண்டுகள் பல செய்வதற வாழ்த்துகிறேன்.
கனடா கந்தசாமி கோயில் ஆலய மண் நடத்திய வருடாந்த ஆயிலிய பூசையில் க அருகில் நிற்பவர் சிவதொண்டன் நிலை
 
 
 
 
 
 
 
 
 
 

லயம் - கனடா வாழ்த்துரை
ரிது. அதனிலும் அரிது, மண்ணில் மானிடர் நல்லவண்ணம் தாரண புருஷராக எங்கள் மத்தியில் ஒளியாக விளங்கும். நாயகர் கந்தவனம் அவர்கள்.
ஆகிய நற்குணங்கள் அலங்கரிக்கும் ஒரு பேரறிஞர் தான் பேச்சுவன்மையும், எழுத்துவன்மையும் மிகவும் நல்ல இருப்பதும், யாரும் எளிதில் விளங்கி நன்மை பெறக்கூடியதாக
தனிச்சிறப்பு
ழகமுமாகிய கவிநாயகருக்கு உலகப் பல்கலைக்கழகம் ளித்துக் கெளரவித்திருப்பது, அவர்களின் நற்பணிகளுக்குப்
), அவரது வாழ்க்கைத் துணைவியார் திருமதி. தவமணி ாதராகிய சிவயோக சுவாமிகளின் குருவருளும், எல்லாம் துணைபுரிந்து, நல்ல தேகசுகத்துடன், நீண்ட ஆயுள்கொண்டு 3கு அருட்கடாட்சம் துணைபுரிவதாகுக என்று மனப்பூர்வமாக
வணக்கம்!
தில்லையம்பலம் சிவயோகபதி
தலைவர்
சிவதொண்டன் நிலையம் - கனடா
పళ్ల டபத்தில் சிவயோக சுவாமிகளின் சிவதொண்டன் நிலையம் லாநிதி, கவிஞர் கந்தவனம் அவர்கள் சொற்பொழிவாற்றுகிறார். யத் தலைவர் திரு. தி. சிவயோகபதி அவர்கள்.
2

Page 15
உலக சைவப் டே
வாழ உலகமெல்லாம் சைவ சமயம் நீ பேரவை அமைக்கப்பட்டது. அப் பேர6ை தன் இளம் வயது தொடக்கம் தமிழு அல்லும் பகலும் அயராது உழைத்து வாழ்த்துவதில் பெருமை அடைகின்ே வியக்கத்தக்கது. அவர் எழுதிய நூல்கள் சுவடுகளும் காணப்படுகின்றன. ஈழத்திலு கவியரங்குகளினாலும் கவரப்பட்டவர்க சகல கலைகளும் கைவரப் ெ இலக்கிய கலாநிதிப் பட்டம் கொடுத் பெரியார் கலாநிதி திரு. வி. கந்த வாழ்ந்து எமது சைவசமயத்துக்கும் தமி எல்லாம் வல்ல நடராசப் பெருமானை
வாழ்
பேரறிஞர் கவிஞர் வி. கந்தவனம் அவருடன் இணைந்து பல மாநாடுகள், நமக்குக் கிட்டியுள்ளது. திரு. கந்தவ6 சேவையைப் பாராட்டி அமெரிக்காவின் கெளரவித்துள்ளதை அறிந்து பெருமகி
கலாநிதி கந்தவனம் அவர்கள் க பெரும் பங்காற்றி வருவது யாவரும் தாய்நாட்டிலும், தென் ஆபிரிக்காவிலு சொற்பொழிவுகளும் வழங்கியதுடன் ப இந்து ஆலயமும், மொன்றியால் முரு 1994ம் ஆண்டு நடத்திய அனைத்துல தலைமை தாங்கியதுடன் கனடாவில் ை செல்வமலை விநாயகள் பற்றி விநாயகரின் மற்றும் ஆலயங்களின் மீதும் பாக்கள் ஒன்றிணைந்து மக்களின் சமூக, சம அமைப்பை உருவாக்க பெருமுயற்சி (
கலாநிதி அவர்கள் பல்லாண்டு
தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழும் ந வேண்டும் என்று செல்வமலை விநாய
 

ஓம் நமசிவாய
பரவை (கனடாக் கிளை) த்துச் செய்தி நிலைத்து வாழ வேண்டுமென்பதற்காகவே உலக சைவப் பயின் கனடாக்கிளை சார்பில், தாயகத்திலும் கனடாவிலும் ழம் சைவமும் நிலைத்து வாழவேண்டும் என்பதற்காக க் கொண்டிருக்கும் கவிஞர் வி. கந்தவனம் அவர்களை றன். அவருடைய நல்ல நோக்கமுள்ள சிந்தனைகள் ரில் சைவ சித்தாந்தக் கருத்துக்களும் தமிழர் பண்பாட்டுச் லும் கனடாவிலும் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளினாலும் 5ள் பல ஆயிரம்பேர்கள். பற்ற ஒரு பேரறிஞருக்கு அமெரிக்க பல்கலைக்கழகம் தது சாலப் பொருத்தமே. வனம் பல்லாண்டு காலம் சகல செளபாக்கியங்களுடனும் ழ் மொழிக்கும் அரும் பெரும் தொண்டாற்ற வேண்டுமென
வேண்டி வாழ்த்துகின்றேன்.
டாக்டர் அ. சண்முகவடிவேல் தலைவர், உலகசைவப் பேரவை (கனடாக் கிளை)
}த்துச் செய்தி
) அவர்களுடன் சென்ற பதினைந்து ஆண்டுகளாகப் பழகி,
கருத்தரங்குகள், சமய விழாக்களை நடத்தும் பாக்கியம் னம் அவர்கள் தமிழ் மொழிக்கு ஆற்றியுள்ள அளப்பரிய உலகப் பல்கலைக்கழகம் கலாநிதிப் பட்டத்தை வழங்கிக் ழ்ச்சியடைகிறேன்.
னடா நாட்டிற் சைவமும், தமிழ் மொழியும் வளர்ச்சியடையப் அறிந்ததே. இப்பெரியார் கனடா நாட்டில் மாத்திரமன்றி, ம், ஐரோப்பிய நாடுகளிலும் ஆய்வுக் கட்டுரைகளும், ல நூல்களையும் வெளியிட்டுள்ளார். இரிச்மண்ட் ஹில் கன் கோவிலும், மற்றும் இந்து சபைகளும் இணைந்து க சைவசித்தாந்த மாநாட்டின் இறுதிநாள் நிகழ்வுகளுக்கு )சவசமயம் என்னும் ஆய்வுக் கட்டுரையையும் வழங்கினார். மீது பதிகம் பாடியுள்ளார். அதேவகையில் கனடாவிலுள்ள பாடியுள்ளார். கனடாவில் வாழும் சைவத்தமிழ் மக்கள் ய, கலாச்சார தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு ஓர் எடுத்துவருகிறார் கலாநிதி அவர்கள்.
வாழ்ந்து தமிழ்மொழியும், சைவசமயமும் கனடாவிலும் ாடுகளிலும் வளர்ச்சியடையப் பெரும்பணியாற்ற அருள்புரிய கப் பெருமானை வேண்டுகிறேன்.
நா. சிவலிங்கம் முன்னாள் அறங்காவலர் சபைத்தலைவர்
இரிச்மண்ட் ஹில் இந்து ஆலயம்

Page 16
இலக்கியத் துை
இந்து சமயப் பேரவையும் சி எடுக்கின்றனராம். யாருக்கு?
கவிஞர், கவிநாயகர், கலாநிதி எ ஏன் கொடுக்கிறார்கள்?
உலகப் பல்கலைக்கழகம் கவி தமிழுக்கும் ஓர் உலகளாவிய அங்கீக எடுக்கும் இவ்வேளையில். கலாநிதி கந்தவனம் அவர்களே:
நீங்கள் சைவசமயத்துக்கு இணை கற்றறிந்து அதனை எளிமைப்படுத்த அணுகுகிறீர்கள். அதேபோன்று, கவிை தடம்பதித்துள்ளிர்கள். அறிவாலும் அனு முற்றிப்பழுத்த கனியாகிப் பூரணத்துவப் உங்கள் பணி மேன்மேலும் தொ குழந்தைகளின் அன்பும் ஆதரவும் மேன்ே அன்பும் மதிப்பும் மேலோங்க - எல் வாழ்த்துக்களைக் கூறிக் கொள்கிறேன்.
வாழும்போதே பாராட்டப்படுதல் அதுபோல இந்துசமயப் பேரவையும் சி பாராட்டப் புறப்பட்டமைக்காக இவர்களு
வாழ்
கலாநிதி கவிஞர் கந்தவனம் அவர்
எதிர்த்தரப்பினரைக் கூடவும் கவர்பவர் சொற்பகாலம் அவரைப் பற்றி அறிந்தவ தூண்டும் ஆளுமை படைத்தவர்.
கவிஞர் அவர்களுக்கு, உலகப் ப அது அவரின் அறிவாற்றலை ஆராய்ந்து தமிழ்மொழிக்கும் தமிழ் மக்களின் மேலாக ஆற்றிவந்த சேவை மூலமாக இந்தப்பட்டத்தை அறிஞர்கள் தாமாக இ நமக்குப் பெருமை தருவது.
வாழும் காலங்களில் அறிஞர்கள் மனப்பாங்கை நானும் தூண்டுபவன். கவிஞர் கந்தவனம் அவர்களுக்கு மல சிறந்தது.
கலாநிதி கவிஞர் கந்தவனம் ! உலகிற் சரித்திரம் படைத்து, ஆன்மிக இறை அருளை இறைஞ்சுகிறேன்.
 
 

றக்கோர் புதிய கலாநிதி வதொண்டன் நிலையமும் சேர்ந்து ஒரு பாராட்டுவிழா
ன்றழைக்கப்படும் வி. கந்தவனம் அவர்களுக்குத் தானாம்.
ஞர்க்குக் கலாநிதிப்பட்டத்தை வழங்கிக் கவிஞருக்கும் ாரத்தை பெற்றுக்கொடுத்திருப்பதையிட்டு மகிழ்ந்து விழா
பற்ற சேவை செய்து கொண்டிருக்கிறீர்கள். சமயநூல்களைக் எழுத்துக்களாலும் சொற்பொழிவுகளாலும் மக்களை ந, கதை எனப் பலவடிவங்களில் இலக்கியம் சமூகம்பற்றித் பவத்தாலும்
) பெற்றுள்ளீர்கள்! -ர - நல்ல சுகபலதேகியாய் வாழ - மனைவி பிள்ளைகள் மேலும் தொடர - கலைஞர் சுவைஞர் சாமான்யர் என்போரின் லாம் வல்ல இறைவனை வேண்டி, தங்களுக்கு என்
சிறந்தது என இரசிகமணி கனகசெந்திநாதன் கூறுவார். வதொண்டன் நிலையமும் தகுந்த நேரத்தில் தகுந்தவாறு க்கும் எங்கள் வாழ்த்துக்கள்.
வாழ்க வளர்க!
குறமகள்
}த்துச் செய்தி
கள் தமது ஆழ்ந்த அறிவால் பலரையும் ஈர்ப்பவர், நீண்டகாலமாக அவரை அறிந்தவர்கள் மட்டுமல்ல,
ர்களும் அவர்மேல் அளவற்ற மதிப்பும் அன்பும் வைக்கத்
ல்கலைக்கழகம் கலாநிதிப்பட்டம் வழங்கியுள்ளது என்றால் அதை அங்கீகரித்து, தகுதி அடிப்படையில் வழங்கியுள்ளது. ஆன்மிக நல்வழிபாட்டுக்கும் அரைநூற்றாண்டு காலத்துக்கு அவர் வெளிக்கொணர்ந்த, அவரது அறிவாற்றலை அறிந்து வருக்கு வழங்கியது மகத்துவமானது. இது தமிழர்களாகிய
கெளரவிக்கப்பட வேண்டும், போற்றப்படவேண்டும் என்ற இந்தத் தோரணையின் இந்து சமயப்பேரவை கலாநிதி வெளியிட்டு, பாராட்டிக் கெளரவம் வழங்குவது சாலச்
புவர்கள் பல்லாண்டு காலம் வாழ்ந்து கலை இலக்கிய வாழ்விற் சுடரொளியாய்த் திகழ்ந்து அழியா வாழ்வு பெற
அன்புடன் மனுவல் ஜேசுதாசன் சட்டத்தரணி

Page 17
உலகத் தமிழ்ப் பண
International Movem
கலாநிதி கவிஞர் கந்தவனம் அவர்க பொதுநலன்களில் மிகுந்த ஆர்வமும் நெறியையும் வளர்ப்பதில் மிகுந்த ஆ இன்றுவரை இருந்து வருகின்றார். இ6 தமிழ் உலகம் முழுவதிலும்.
இவர் சிறந்த உள்ளம் கொண் மேடைப்பேச்சாளர், பத்திரிகையாளர், 8 பல சங்கங்களை உருவாக்கிய உத்த
படித்தவர், பண்பாளன், குணக் கடுமையாகக் கண்டித்து ஆக்குவிப்பா வேண்டிய இடத்தில் தூக்கி வாழ்த்தி
ஆறுமுகநாவலர் சி.வை. தாமோ அறிஞர்களையும், வேறு பல அறிஞர்கள் காப்பாளராகிய கந்தவனம் ஐயாவி அப்பெரியோர்களை நாம் இன்று காண்
இவர் கருத்துக் களஞ்சியம். த ததும்பி வழியும் செந்தமிழ் வாணராகவும் கி. விளங்குகின்ற பேர் அறிஞர். பிறமொழ போற்றுகின்ற, மதிக்கின்ற பெரும்தகை. 6%அவர் சேவைகளை பாராட்டுகின்ற, எழு
அடக்கமான, எளிமையான, அ வணங்குகின்றோம்! உலகத்தமிழ்பண் காலம் தொடக்கம் எமது இயக்கத்தின் 8 சிறந்த ஆரோக்கிய உடம்பையும், மனப் தாராளமாக அருள வேண்டும் என்று இ
6
6T
வாழ்
திருவள்ளுவர் ஆண்டு 2033 சித்திரை முதலாம் திகதி
15
 

பாட்டு இயக்கம் - கனடா 2nt for Tamil Culture - Canada
ள், சிறுவயது முதல் தமிழ், சைவம், சமூகம், பண்பாடு, பற்றும் கொண்டவர். தமிழ் மொழியையும் சைவசமய ர்வமும், அக்கறையும், கொண்டவராக அன்றுதொட்டு னிமேல்தான் இவருடைய விசேட பணி தொடரவுள்ளது.
ட தமிழன் மட்டுமல்ல, ஆசிரியர், அதிபர், கவிஞர், கலைஞர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர், நூலாசிரியர், மர், தமிழ் சைவ பல சங்கங்களின் காப்பாளர்.
கொழுந்து,எம்மைக் கண்டிக்க வேண்டிய நேரத்தில் ர். போற்ற வேண்டிய இடத்தில் போற்றி தூக்கிவிட வழிகாட்டுவார். காப்பாற்றுவார்.
தரம்பிள்ளை, விபுலானந்தர் போன்ற மாபெரும் தமிழ் ளையும் நாம் உயிருடன் காணவில்லை. ஆனால் எமது ன் கண்களால், எழுத்துக்களால், பேச்சுக்களால் கின்றோம்.
தமிழுணர்வும், தமிழ் மக்கள் பேரன்பும், சைவநெறியும், ), செயல்வீரராகவும், மறமாண்பு குன்றாத செம்மலாகவும் Sகளையும், பிறமதங்களையும், பிறசமுதாயங்களையும் அறிஞர்களை, சமுதாய சேவையாளர்களை போற்றி }துகின்ற அரும்பெரும் சிறந்த பண்பாட்டாளன்.
புரும்புலமையாளரைப் பாராட்டி, வாழ்த்துகின்றோம்! பாட்டு இயக்கம், கனடாவில் கிளையாக ஆரம்பித்த 5ாப்பாளராக இருந்து எம்மை வழிநடத்துகின்ற இவருக்கு பக்குவ அறிவு உறுதியையும் பொருள்ச் செல்வத்தையும் இயற்கை அன்னையை வேண்டுகின்றோம். ழ்க இவர் நாமம்! ழ்க இவர் சேவை! க தமிழர் பண்பாடு!
வாழ்க தமிழ்! நன்றி வணக்கம்
வேல் வேலுப்பிள்ளை தலைவர் உ. த. ப. கி. கனடா

Page 18
பிறந்த D ஒன்ராறியோ இந்து ச நிதிப் ட
1994ம் ஆண்டு பேரவை ஸ்தாபிக்கப்பட்ட காலம் ெ ஊடாக ஆத்மஜோதி முத்தையா சுவாமிகளால் வள 38,000 (முப்பத்தெண்ணாயிரம்) கனடிய டொலர்கள் ய ஆத்மஜோதி முத்தையா சுவாமிகளின் கையிலும் ஒப்ப
ஒன்ராறியோ இந்து சமயப் பேரவை செய்த மதிப்பிட சிறுவர் இல்லப் பிள்ளைகள் ஒழுங்காக வாழ்வதற்கு
தெல்லிப்பழை துர்க்கா தேவி ஆலயத்தில் துர்க்கா முயற்சியினால் நிறுவப்பட்ட ஆன்மீக நூல் நிலையத்தி பெரு முயற்சியினால் 1500 கனடிய டொலர்கள் சேர்க்கப்ப பொழுது அவரிடம் கையளிக்கப்படது.
ஆத்மஜோதி ஞாபகார்த்த சபையின் ஆதரவுடன் அமை ஆத்மஜோதி முத்தையா சுவாமிகள் பிறந்த கிராமமான வயிரவர் கோயிலுக்கு அருகாமையில் அவரின் ஞாபகா தீர்மானித்து பேரவையின் உதவியை நாடியபொழுது
சுவாமிகளின் அன்பர்கள் அடியார்களிடம் நிதி சேர்த்து உதவி செய்துள்ளது. மேற்படி மணி மண்டபத்திற உபயோகப்படக்கூடிய ஆன்மீக நூல்நிலையம் உரு பெரும் பணிக்கு முதற்கட்டமாக பேரவையின் வெளியீ
மேற் கூறப்பட்ட சகல பணிகளுக்கும் இன்றைய விழ அவர்களின் பாரிய உதவியும் வழிகாட்டல்களும் குறிப்
அருள்மிகு நல்லூர் முருகன் ஆலயத்தில் திரு பொழுது இந்து சமயப் பேரவைத் திருக்கூட்டத்
 

ண்ைணுக்கு மயப் பேரவை செய்த பணிகள்
தாடக்கம் 1997ம் ஆண்டு வரை இந்து சமயப் பேரவை ாக்கப்பட்ட சைவச் சிறுவர் இல்லப் பிள்ளைகளுக்காக ாழ்ப்பாணம் இந்துசமயப் பேரவைக்கு வங்கி மூலமாகவும் டைக்கப்பட்டது. கனடாவாழ் தமிழ் மக்களின் உதவியுடன் முடியாத பெரிய கைங்கரியத்தினால் இன்றும் சைவச் வழிசமைக்கப்பட்டுள்ளது.
துரந்தரி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் பெரும் ற்கு சைவப் பெரியார் கவிஞர் வி. கந்தவனம் அவர்களின் ட்டு திரு. ஆறுதிருமுருகன் கனடாவிற்கு வருகைதந்திருந்த
க்கப்பட்ட ஆத்மஜோதி மணிமண்டப சபை நிர்வாகிகள் ஏழாலையில் அவரின் குல தெய்வமான பாதாள ஞான ர்த்த மணி மண்டபமும் உருவச் சிலையும் நிறுவுவதற்குத் பேரவை ஆத்மஜோதி பத்திரிகை மூலம் ஆத்மஜோதி து 110,000 (ஒரு இலட்சத்து பத்தாயிரம் ரூபா) அனுப்பி ற்குள் ஏழை மக்களுக்கும் ஏழை மாணவர்களுக்கும் நவாக வோண்டுமென்ற பெரும் நோக்கத்துடன் அந்தப் டுகளில் 1000 நூல்களை அனுப்பிவைத்துள்ளது.
ா நாயகர் பேரவையின் காப்பாளர் திரு. வி. கந்தவனம் ப்பிடத்தக்கது.
வெம்பாவை காலத்தில் திருவாசகம் முற்றோதிய நினருடன் கலாநிதி கவிஞர் கந்தவனம் அவர்கள்.
16

Page 19
கவிஞர் கலாநிதி
கலாநிதி இ.
இருபதாம் நூற்றாண்டின் நடுப் பகுதியின் பின்னர் தமிழ் இலக்கியத்தில் புதுமை காண்பதிலும், இலக்கிய விமர்சனத்துறையில் யதார்த்தத்தை நிலைப்படுத்து வதிலும் ஈழத்தவர் முன்னணி வகுத்து வந்துள்ளனர். இவ் வகையில் கவிதைத் துறையில் சாதனை படைத்தவர்கள் மகாகவி, முருகையன், காசி ஆனந்தன், கவிஞர் கந்தவனம், நீலாவணன், திமிலைத்துமிலன் என வரிசை நீண்டு போகலாம்.
யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட யாழ் இலக்கிய வட்டம் இப் பணியில் இன்னுமொரு மைற்கல்லாக அமைகின்றது. கவி அரங்குகள், கருத்தரங்குகள், தமிழ் மாநாடுகள், பட்டிமன்றங்கள் முதலான கலை, இலக்கிய நிகழ்வுகளை முன்னின்று நடதத்தியவர்கள் யாழ் இலக்கிய வட்டத்தினரே ஆவர். யாழ் இலக்கிய வட்டத்தை உருவாக்கியவர்களில் எமது கவிஞர் கந்தவனம் அவர்களின் பங்களிப்பு முதன்மையானது. இப்பெரிய இலக்கிய அமைப்பில் எட்டாண்டுகள் தலைவராகச் செயற்பட்டு, யாழ்ப்பாணத்தில் புதுமை இலக்கியப் பாரம்பரியம் வளர்ச்சிபெற முன்னின்று உழைத்தவர் கவிஞர் கந்தவனம் ஆவார்.
கவிஞன் என்பவன் நாட்டுக்கு நல்லன சொல்ல வேண்டும், செய்ய வேண்டும், தமிழ் எழுத்தாளர்கள் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்ற உணர்வும் செயலும் கொண்டவராகக் கவிஞர் தம் இளமைக்காலம் முதலாகச் செயற்பட்டவர் என்பதற்கு அவர் 1964 இல் இயற்றி வெளியிட்ட ‘இலக்கிய உலகம்' என்ற நூல் சான்றாகும். யாழ் இலக்கிய வட்டத்தினுாடாகத் தம் கோட்பாட்டைச் செயற்படுத்தினார். அதன் தொடர்ச்சியாக இன்றும் கனடாவில் எழுத்தாளர் இணையத்தின் தலைவராகச் செயற்படுதலைச் சுட்டிக் காட்டுதல் பொருந்தும்.
இவர் எழுதிய எழுத்தாளன்’ என்ற நூல் தமிழ் ஆர்வலர் அனைவரும் படித்துச் சுவைக்கத் தக்கதொரு ஆக்கமாகும். மொழியின் உறுப்புக்களை அவர் உருவகப்படுத்தியிருக்கும் தன்மை ஒரு தனிப் பாங்கானது. மொழியைத் தாயாகவும் மொழிவழிப் பிறக்கும் பேச்சை மூத்த மகளாகவும், மொழியின் எழுத்துக்களை இரண்டாவது மகளாகவும் உருவகப் படுத்தியிருப்பது மொழியியல் நோக்குச் சார்ந்ததாகும். எழுத்தாளன் என்போன் எழுத்தை ஆள்பவன் என்பதால், எழுத்து = தலைவி, ஆளன் = கணவன். ‘எழுத்து

கந்தவனம்
பாலசுந்தரம்
| Υ
வளைந்து நெளிந்து குனிந்து குழைந்து தற்கொண்டான் சொற்படி நடக்கின்றது. எழுத்துமீது ஆராக்காதல் உடையவன் தலைவன். இருவரும் கூடிப் படைக்கின்ற படைப்பிலக்கியம். இத்தகைய விளக்கம் பல பிலக்கியவாதியின் அனுபவ ரீதியான வெளிப்பாடr கவிஞர் கந்தவனம் இலக்கிய நந்தவனம் ஆத இவ்வாறு விளக்கம் கூறினர் என்பதில் வியப்பில்6
கலாநிதி கந்தவனம் அவர்கள் மொழிப் பற் இலக்கியப் பற்றும் கொண்டவர். அவர் மே.ை பேச்சிலோ, கவிதையிலோ அல்லது எழுத்திலோ த6 கருத்தைத் தயக்கமின்றித் துணிந்து கூறு பாங்குடையவர். நவீனத்துவம் பேசும் இலக்கியவாதிக அல்லது இலக்கிய ஆர்வலர்களின் தமிழ் மீதா: அசமந்தப்போக்கைக் கடிந்து அவர் கூறும் கருத்துக்கல் படித்துச் சுவைக்கத்தக்கன:
சிலர் பழைய இலக்கியங்களைப் படிப்பதால் வரும் பயன் என்ன என்று கேட்கின்றனர். அவற்றின் பெருமைபற்றிப்பேசுவதும் எழுதுவதும் பிற்போக்குவாதம் எனக் கருதுகின்றனர். பழைய இலக்கியங்கள் இக் காலத்திற்குப் பயன் அற்றவை என்றும் வாதாடுகின்றனர். இது ஒரு வியாதி. இதற்குப் பெயர் தாழ்வுச் சிக்கல். தனது வீட்டில் ‘அம்பலவி மாம்பழம் இருந்தும் அடுத்தவன் வீட்டு அம்பலவிக்கு ஆசைப்படும் சிக்கல். ஒரு திருக்குறளை மேற்கோள் காட்ட விரும்பாது (தெரியாது) அதே கருத்துள்ள வேற்று நாட்டுப் பழமொழி ஒன்றை சொல்லிக் கொய்யகம் கட்டும் சிக்கல்’ (எழுத்தாளன் பக்: 27)
கவிஞர் கந்தவனம் அவர்கள் புதிய எழுத்தாளர்களைக் கைகொடுத்துத் தூக்கிவிடுபவர். எனினும் அவரது நக்கீரப் பார்வை வரவேற்கத் தக்கது. இக்கருத்தில் அவர் ஊறியவர் என்பதை 1964இல் அவர் வெளியிட்ட இலக்கிய உலகம் சான்றுபடுத்துகின்றது.
எழுத்தாளன் சமூக உணர்வுடையவனாக இருத்தல் வேண்டும் என்பதில் கவிஞர் கந்தவனம் மிகுந்த நம்பிக்கையடையவர். இன்றைய சூழலில் தாயகத்தில் மட்டுமன்றி, தமிழர் புலம்பெயர்ந்து வாழும் அந்நிய நாடுகளிலுள்ள எழுத்தாளர்கள் தமது இனத்திற்குப் பெருந்தொண்டு செய்யக் கடமைப்பட்டுள்ளனர். புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தமிழ்ப் பண்பாடு. தமிழ்மொழிப் பேச்சு வ GRÀlf sffffff;"

Page 20
சரிந்துகொண்டே போகிறது. இதனைப் பொதுமக்கள் உணரத் தவறுகிறார்கள். இத்தகைய சமூகக் கண்ணோட்டம் கவிஞர் கந்தவனம் அவர்களிடம் ஆழமாகப் பதிந்திருப்பதைப் காணலாம்.
புகுந்த நாடுகளில் தமிழ்மொழியைப் படிப்பதால் ஆகும் பயன்’ என்ன என்ற வாதத்தையும் எழுப்பு கின்றனர். தாய்மொழியைப் பயன்கருதி யாரும் படிப்பதில்லை. தாய்மொழியைப் பேசுவதும படிப்பதும் ஓர் ஒப்பற்ற உரிமை. தமிழ்மொழியின் மேன்மையை எடுத்துச் சொன்னால்தான் அதனை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வமும் மக்கள் மத்தியில் ஏற்படும். இவ்விடயத்தில் தமிழ் மக்களை வழிப்படுத்துவது எழுத் தாளருடைய தலையாய பணியாகிறது. (எழுத்தாளன்: LJ35.53)
ஈழகேசரிப் பத்திரிகை ஆசிரியர் இராஜ அரியரத்தினம் அவர்கள் கவிஞரை நன்கு அறிந்தவர் ஆவர். கவிஞரை அறிமுகப்படுத்தும்போது,
பள்ளிக் கூடத்தில் துள்ளி விளையாடும்போதே எழுத்துலகில் அடி எடுத்து வைத்த விநாயகர் கந்தவனம் சாவகச்சேரியைச் சேர்ந்த நுணாவில் மேற்கில் 1933இல் பிறந்தவர் என்றார். இவரது கவிதைகள் 1952லிருந்து ஈழகேசரியில் வெளிவரத்தொடங்கின. எழுத்தாளர்களை ஒன்றிணைக்கும் மனோபக்குவம் இளமை முதல் முதுமை வரை அவரிடம் வளர்ந்தோங்கியதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
சுமார் அரை நூற்றாண்டு காலமாக இலக்கிய உலகில் உலாவிவரும் கவிஞர் கந்தவனம் அவர்கள், சிறுகதை, கவிதை, கட்டுரை, நாடகம், விமர்சனம், சமயச் சொற்பொழிவு, வானொலிப் பேச்சு எனப் பல்வேறு துறைகளில் தனது முத்திரைகளைப் பதித்து வந்துள்ளார். 1993இல் கனடாவில் அவரது மணிவிழா வைக் கலை இலக்கிய நண்பர்கள் கொண்டாடினார்கள். அவர் கனடியத் தமிழ் வாசகர்களுக்கு உதயன், தமிழர் தகவல், நம்நாடு முதலான ஊடகங்களின் மூலம் தொடர்ச்சியாக எழுதிவருகிறார். அவரது எழுத்து வித்தியாசமானது. புலம்பெயர்ந்து வாழும் நாட்டுச் சூழலை நன்கு உள்வாங்கி, தமிழ் மக்களை நெறிப்படுத்தும் போக்குடையனவாக அவரது கட்டுரைகள் கவிதைகள் அமைந்திருத்தல் இயல்பு. கனடாவில் 1994ஆம் ஆண்டு முதலாக அவரது

எழுத்துக்களை உன்னிப்பாகக் கவனித்து வருபவன் என்ற அடிப்படையில் அவர்மீது எனக்குத் தனியான மதிப்புண்டு.
தமிழர் தகவலில் 'கனடியக் காட்சிகள் என்ற தலைப்பில் 1992ஆம் ஆண்டிலிருந்து எழுதிவரும் கட்டுரைத்தொடர் தமிழ் வாசகர்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன என்பது உண்மை. நுட்பமான அவதானிப்பு அவரிடம் காணப்படுகிறது. தாம் எழுதுவதை வாசகர் விரும்பிப் படிக்கவைக்கும் வகையிலான எழுத்து நடையும் புதுமைப்பித்தன் பாணியில் எதனையும் நாசூக்காகவும் நகைச்சுவை யாகவும் கூறிவிடும் தன்மையையும் அவரது எழுத்தில் அவதானிக்கலாம்.
ரொறன்ரோவில் சைவமுந் தமிழும் வளர்ப்பதில் முனைப்பாகச் செயற்படும் கவிஞர் அவர்கள் ஒன்ராறியோ இந்து சமயப் பேரவையின் காப்பாளராகவும், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் காப்பாளர்களில் ஒருவராகவும் செயற்படுகிறார். ஆத்மஜோதி முத்தையா அவர்களின் 'ஆத்மஜோதி மாதச் சஞ்சிகையை மீண்டும் பதிப்பித்து வெளியிடும் பணியும் போற்றத் தக்கதாகும். இவரது சமயச் சொற்பொழிவுகள் கேட்போர் பிணிக்குந் தகையனவாக உள்ளன. அவர் வானொலியில் நிகழ்த்தும் சமயச் சொற்பொழிவுகள் அருள்திரு கிருபானந்தவாரியார் அவர்களை நினைவூட்டுவதாக உள்ளன என்பதை அவருக்குப் பலமுறை எடுத்துக் கூறியுள்ளேன். இத் துறையில் அவர் தொடர்ந்து செயற்படின் சைவமும் தமிழும் ரொறன்ரோவில் வளம்பெறலாம்.
கனடாவில் சைவ சமயம் (2000) என்னும் நூல் அவரது ஆய்வு முயற்சிக்கு எடுத்துக் காட்டாகும். கனடாவில் சைவத் தமிழரது பண்பாடு கோயில்களின் ஊடாகவும், விழாக்கள், விரதங்கள், சமய அனுட்டானங்கள், சமய நம்பிக்கை என்பனவற்றின் வழியாகவும் எவ்வாறு பேணப்படுகிறது என்பதை விரிவாக ஆராய்ந்து எழுதியுள்ளார்.
நூலாக்கம், கவிதை, கட்டுரை, நாடகம், நடிப்பு, பேச்சு, நிர்வாகத்திறன் என்ற பல்வேறு புலமைமிக்க கவிஞர் கந்தவனம் அவர்களுக்கு அமெரிக்க அரிசோனா மாநிலத்தில் இயங்கும் ‘உலகப் பல்கலைக் கழகம் (World University) door Sg5 Jullub 6.jpsilasai கெளரவித்துள்ளமையைத் தமிழ் உலகு பாராட்டுகின்றது.

Page 21
கவிதா யோகமும் ஆன்மீக ஞானமும் கல்வி அறிவும் ஒருங்கே அமையப்பெற்ற கவிஞர் கந்தவனம் யாழ்ப்பாணக் குடாநாட்டின் நுணாவில் கிராமத்திலே பிறந்து சைவமும் தமிழும் ஒருங்கே வளர்ந்த குரும்பசிட்டிக் கிராமத்திலே திருமணம் செய்து கொண்டார். ஆசிரியராக, உப அதிபராக, அதிபராகப் பல்வேறு வகைகளிற் கல்விப்பணி புரிந்து வந்தார். வயாவிளான் மத்திய மகாவித்தியாலயத்தில் உப அதிபராகவும், அளவெட்டி அருணோதயாக் கல்லூரியில் அதிபராகவும் கடமை யாற்றினார்.
இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு யாழ்ப்பாணக் குடாநாட்டில் நடைபெற்ற கவியரங்குகள் ஆசிரியர் கந்தவனம் இல்லாமல் நடைபெற்றது கிடையாது. ஜனரஞ்சகக் கவிஞனாக, மக்களின் உணர்வுகளைத் தொட்டுப்பாடும் கவிஞனாக அக்காலத்தில் கந்தவனம் அவர்கள் திகழ்ந்தார். தமிழரசுக்கட்சி மகாநாடுகளில் எல்லாம் தலைமைக் கவிஞனாக இருந்து அணிசெய்தார். குப்பிழான் கிராமத்தில் நாங்கள் இளைஞர்களாக இருந்த காலத்தில் ஒவ்வொரு வருடத்தின் மார்கழி மாதத்திலும் தமிழ் விழாக்களை நடத்தி வந்தோம். எங்கள் தமிழ்விழாவில் நடைபெறும் கவியரங்கத்தின் தலைமைக் கவிஞனாகக் கவிஞர் கந்தவனம் அவர்களே திகழ்ந்தார். வளர்ந்துவரும் இளைஞர்களை மட்டம் தட்டுதல், முளையிற் கிள்ளுதல் போன்ற செயற்பாடு களைச் செய்யும் கல்விமான்கள் பலர் இருந்த எங்கள் சமூகத்தில் இலக்கண வித்தகர் பண்டிதர் நமசிவாயம், கவிஞர் கந்தவனம் போன்றோர் இவர்களுக்கு விதிவிலக் காக இருந்து வாழ்ந்து வந்தார்கள். ஆற்றல் உள்ள இளைஞர்களைத் தட்டிக்கொடுத்து வளர்த்து விட்டார்கள். இவ்வாறு ஊக்கம் தந்து எங்களை வளர்த்துவிட்டவர்களில் கவிஞர் கந்தவனமும் ஒருவராகத் திகழ்ந்தார்.
கவிஞர் அவர்களுடைய உள்ளம் தூய்மையானது. சிந்தனை பரந்த நோக்குடையது. சிறியன சிந்தியாத தன்மை அவரிடம் குடிபுகுந்திருந்தது. சமூகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. நல்ல பணிசெய்பவர்களைப் பாராட்டும் தன்மை இருந்தது.
உதாரணமாகச் சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களுக்குத் துர்க்காதுரந்தரி பட்டம் அளித்துக் கெளரவிக்கப்பட்ட விழாவில் இளைஞராக நானும் பார்வையாளனாகக் கலந்து கொண்டிருந்தேன். அவரால் வாசித்து அளிக்கப்பட்ட வாழ்த்துப் பத்திரத்தில் ஒருபாடல் இன்றும் எனது நினைவில் அழியாமல் உள்ளது. நமது நாட்டில் அமைதியான சூழல் நிலவிய காலத்தில் கோயில் திருவிழாக்கள் மிகவிமரிசையாக நடைபெறும். தவில் நாதஸ்வர மேதைகளின் நிகழ்ச்சிகளைப் பெரிய மேளம் என்றும், இளம் பெண்கள் ஆடும் நடன நிகழ்வினைச் சின்ன மேளம் என்றும் குறிப்பிடுவார்கள்.
 

வானளாவிய சிகரங்கள் கோயில் வீதிகளில் அமைக் கப்படும். சுவாமி வீதிவலம் வரும்போது வாண வேடிக்கைகளும் இடம்பெறும். சைவசேனாதிபதியாகவும் சைவத்தின் காவலராகவும் திகழ்ந்த நாவலர் பெருமானால் நமது நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சைவப்பிரசங்க மரபைப் பேணி வளர்த்தவர்களில் சிவத்தமிழ்ச் செல்வி அம்மையார் சிறப்பிடம் பெறுகிறார். அம்மையாரின் சைவப் பிரசங்கப்பணியின் சிறப்பினைக் கவிஞர் கந்தவனத்தின் பின்வரும் பாடல் தெளிவாக விளக்குகிறது:
சின்னமேளங்கள் வேண்டாம் சிறுகளியாட்டம் வேண்டாம் வன்னவான் சிகரம் வேண்டாம் வாணவேடிக்கை வேண்டாம் மன்னுபேர் தங்கம்மாவை வரவழைத்திடுக என்பார் இன்னதோர் மாற்றம் நேர எழுந்தனை வாழி வாழி.
ஈழமணித்திருநாட்டில் இந்தச் சைவப்பிரசங்க மரபைப் பேணி வளர்த்தவர்களில் கவிஞர் அவர்களும் ஒருவராகத் திகழ்ந்தார். இவருடைய அறிவும் ஞானமும் சமயத்துறையில் திரும்புவதற்கு இவர் புகுந்த கிராமமாகிய குரும்பசிட்டிக் கிராமத்தின் சூழலும் ஒருகாரணமாக அமைந்திருந்தது. பிறசமய ஊடுருவல்களுக்கு எள்ளள வேனும் இடம்கொடுக்காமல் சிவநெறியைப் பாதுகாத்த கிராமங்களில் குரும்பசிட்டியும் ஒன்றாகும். இக்கிராமத்தில் வாழ்ந்த ஆத்மிக ஞானிகள் பலரின் கூட்டுறவும் இவருடைய சிந்தனைக்கு அடித்தளமாக இருந்தது.
எங்கள் நாட்டில் ஏற்பட்ட போர்க்காலச் சூழ்நிலை களின் தாக்கத்தினால் கவிஞர் கந்தவனம் அவர்களும் புலம்பெயர்ந்து கனடாவை வாழ்விடமாகக் கொண்டார். கனடாவில் நடைபெறும் பல்வேறுவகையான சமயப் பணிகளுக்கும் துணையாக இருந்து செயற்பட்டு வருகிறார். கனடா இந்துசமயப் பேரவையின் காப்பாள ராகவும், ஆத்மஜோதிப் பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்து செயற்பட்டு வருகிறார். தெய்வத் தமிழாகிய திருமுறை களின் பெருமையினைப் பரப்பும் பணியில் தீவிரமாகச் செயற்பட்டு வருகிறார். என்னால் வெளியிடப்பெற்ற திருமுறைச் செல்வத்தின் இரண்டாவது பதிப்பினைக் கனடா இந்துசமயப் பேரவையின் ஊடாக வெளியிடுவதற்குத் துணையாக இருந்து செயற்பட்டார். இவருடைய பலதரப்பட்ட ஆற்றல்களையும் பணிகளையும் அறிந்து கொண்ட அமெரிக்காவின் பல்கலைக்கழகம் கலாநிதிப் பட்டம் கொடுத்துக் கெளரவித்துள்ளமை உலகில் வாழும் சைவத்தமிழர்கள் அனைவருக்கும் கிடைத்த கெளரவ மாகவே போற்றப்படுகிறது. கவிஞர் கந்தவனம் அவர்கள் சகல செல்வயோக மிக்கப் பெருவாழ்வு பெற்று நிறைவான வாழ்வு வாழ எல்லாம் வல்ல பார்வதி சமேத பரமேஸ்வரப் பெருமானின் திருவருள் பூரணமாகக் கிடைக்க வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றேன்.
19

Page 22
தான் பெற்ற இன்பம் எல்( கலாநிதி கவிஞர் க
செ. சோமசுந்தரம், பொருள
இன்றைய உலகில் வெளிவரும் தொடர்புச் சாதனங்கள் எவற்றைப் பார்த்தாலும் செய்திகளைக் கேட்டாலும் கலாநிதி கவிஞர் கந்தவனம் அவர்களின் பெயரே கூடுதலாக ஒலித்துக் கொண்டு இருப்பதை அவதானிக்கலாம். அமெரிக்காவில் அரிசோனா மாநிலத்தில் அமைந்துள்ள உலகப் பல்கலைக்கழகம் கலாநிதி என்ற பட்டத்தை அவருக்கு வழங்கியமையே காரணம் என்பதை உணர் கின்றோம். புலம்பெயர்ந்து வந்து, உலகின் பலபாகங் களிலும் வாழும் நம்மத்தியில் அவர் நன்கு அறியப் பட்டவராயினும் அவரது பின்னணியைப் பலர் அறியார். அதனால் அன்னாரின் வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்ப்பது சாலச் சிறந்ததாகும்.
பழமை வாய்ந்த பல ஆலயங்கள் நிறைந்து சைவசமயம் தழைத்தோங்கித் திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் தமிழீழத்தில் பல சிறப்பான ஆன்றோர் களையும் சான்றோர்களையும் சமயப் பெரியார்களையும் உவந்தளித்த நுணாவிலே கவிஞர் பிறந்த பதியாகும். தந்தையார் வேலுப்பிள்ளை விநாயகர், தாயார் சின்னம்மா. பெற்றார் தங்கள் பிள்ளைகளுக்கு பசுபதி, மார்க்கண்டு, கந்தவனம், கணபதிப்பிள்ளை ஆகிய நாமங்களைச் சூட்டினார்கள். சைவசமயத்தில் பற்றுக்கொண்டு மரபு தவறாமல் வாழ்ந்த பெற்றார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வைத்த பெயர்களே அவர்களின் சமய உணர்வை வெளிப்படுத்துகின்றன.
மறுபுறம் தாயாரின் சமயப்பற்றைப் பார்க்குமிடத்து இவர் உடுப்பிட்டி அமெரிக்கமிஷன் பாடசாலையில் திறமையாகப் படித்துக் கொண்டிருக்கும் வேளையில் இவரை கிறீஸ்தவ சமயத்துக்கு மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சமயம் மாற விருப்பமில்லாது இரவோடு இரவாக விடுதியை விட்டு வெளியேறி வீடுவந்துசேர்ந்தவர் அவர்.
கவிஞரின் பெற்றோர்கள் நுணாவிலில் உள்ள வீரபத்திரர் ஆலயம், வீரகத்தி விநாயகா, கண்ணகி அம்மன் கோயில்களுடன் மிகவும் ஐக்கியப்பட்டவர்களாக வாழ்ந்தார்கள். அதனால் பெற்றோரின் வழி நடத்தலில் பிள்ளைகளும் சமயச் சூழலுடன் பின்னிப் பிணைந்து வாழ்ந்தார்கள்.
தந்தை மகற்கு ஆற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்' என்ற திருவள்ளுவரின் வாக்கிற்கிணங்க உரிய காலத்தில் வித்தியாரம்பம் செய்வித்து தொடர்ந்து உயர் கல்விவரை படிக்க வழிவகுத்தார்கள். இவர் ஆரம்பக் கல்வியைத் தனது சொந்த ஊரில் உள்ள கணேச வித்தியாசாலையில் கற்றார். ஒழுக்கசீலராகவும் சிறந்த சமயப் பெரியாராகவும் வாழ்ந்த தலைமையாசிரியர் சிவம் கந்தையா அவர்களும் சிரேஷ்ட உதவி ஆசிரியராக இருந்த காசிப்பிள்ளை கந்தையா அவர்களும் கந்தவனம் திறமை மிகுந்த மாணவராக வாழ வழிகாட்டினார்கள்.
 
 

லோரும் பெறவழிகாட்டிவர்
ந்தவனம் அவர்கள்
ாளர், இந்து சமயப் பேரவை
பாடசாலைக்குத் திருநீறு பூசாமல் செல்லமுடியாது. அத்து டன் பல தேவார திருவாசகங்களை மனப்பாடம் செய்வித் தார்கள். அதனால் இவர் சிறுவயதிலேயே ஏராளமான தேவார திருவாசகங்களை மனப்பாடம் செய்திருந்தார். சைவசமயிகளை கிறிஸ்தவத்துக்கு மாற்றுபவர்கள் இவரையும் கிறீஸ்தவனாக மாற்ற எவ்வளவோ முயன்றும் முடியாமல் போகவே இவரது சமயப்பற்றை மெச்சினார்கள். தொடர்ந்து உயர்கல்வி கற்று கவிஞர் சென்னை பல்கலைக்கழக புவியியல் பட்டதாரியாகப் பட்டம் பெற்று 1958ம் ஆண்டில் மாத்தளையில் ஆசிரியராகப் பணிபுரியத் தொடங்கினார். மாணவர் மத்தியில் தனக்கும் மாணவருக் குமிடையில் ஒருவித இன்பஊற்றை உண்டாக்கினார். மாணவரிடம் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் நிலைநாட்டுவதில் நிகரற்றவராய் இருந்தார். 1966ம் ஆண்டில் யாழ்ப்பாணத்துக்கு இடமாற்றலாகி, தமது ஓய்வு நேரத்தின் பெரும் பகுதியை இலக்கிய உலகத்திலேயே கழித்தார். இவர் இலக்கியத்துறைக்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியன. பேச்சுக்கலையோடு பக்கத்துணையாக எழுத்துக்கலையும் மற்றொரு சக்தியாகச் சேர்ந்து திகழ அருமையான பாடல்களை யாத்து வடித்து இனிமையாகப் பாடியும் காட்டினார். கல்வி மரபில் மரபுக்கவிதை, புதுக்கவிதை, வசன கவிதை என்று சகல துறைகளிலும் விளங்கி மக்களிடையே கவிஞர் ஆனார்.
யாழ்ப்பாணத்தில் செம்மண் வலயத்தில் அமைந்துள்ள குரும்பசிட்டி என்னும் அற்புத கிராமத்தில் சிறப்போடு வாழ்ந்த திரு. பொ. இளையப்பாவின் மகள் தவமணி என்னும் நங்கையை திருமணஞ் செய்து இல்லறத்தை நல்லறமாக்கி வாழ்ந்தார். அவர்களுக்கு வாணி, வாரணன் என்னும் பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களும் பெற்றோர்களின் நல்வழிப்படுத்தலில் கல்வி கற்று சிறந்தவர்களாக வாழ்கிறார்கள்.
‘பணிவுடையான் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற' என்பதற்கிணங்க பணிவு உடைய வனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவருக்கு அணிகலனாகும். மற்றைய அணிகள் அணிகள் அல்ல என்பதை உணர்ந்து எல்லோருடனும் அன்பாகவும் பண்பாகவும் வாழ்ந்து ஆசிரியப்பணியின் மகத்துவத்தை உணர்ந்து கடமையாற்றி வந்த கவிஞர் கொழும்பு பல்கலைக் கழகத்தில் கல்வியியலுக்கும் நாடகப்பிரிவுக்கும் தெரிவுசெய்யப்பட்டு தனித்தனியாக டிப்ளோமா படிப்பை மேற்கொண்டு கவிஞர், கவியரங்குக்கு ஓர் கந்தவனம் என்ற பட்டங்களுடன் இரண்டு டிப்ளோமா பட்டங்களையும் சேர்த்துக் கொண்டார். நாடகப் பயிற்றுநராகவும் கடமை ஆற்றி நாடகங்களை எழுதியும், சில நாடகங்களில் நடிகராக நடித்தும் காட்டினார். இலக்கியம், கவிதை ஆக்கம் மேடைப்பேச்சு சமய

Page 23
சொற்பொழிவு, கவிதையரங்கு என்று பலதுறைகளிலும் தன் ஆளுமையைப் பதித்து மக்கள் மத்தியில் பல பாராட்டுக்களைப் பெற்றார். இலக்கியத்துறையில் பலநூல்களை எழுதி வெளியீடு செய்ததோடு ஆங்கில GLDITsugib g560Tg5 5.360)LD60)u 12 Short Stories, Lasting Light என்ற நூல்கள் மூலம் வெளிக்காட்டினார்.
இலக்கிய வரலாற்றை மக்கள் உணர்ந்து பயன்பெற
மேடைகளில் இலக்கிய வாதியாகவும் சமூக சீர்திருத்த வாதியாயும் வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கழித்த இவர் பின்பு சமயத் தத்துவங்களை பண்டிதர் இ. நமச்சிவாய தேசிகரிடம் கற்றுத் தெளிந்தார். 'பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல் என்பதற் கிணங்க புலம்பெயர்ந்து வாழும் நம்மிடையில் கிறீஸ்தவ ஸ்தாபனங்கள் நம்மவர்களை மதமாற்றம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளை யில் எமது சமயத்தைப் பலர் விட்டுச் செல்வதற்கு அறியாமையே பிரதான காரணம் என்பதை உணர்ந்து இன்று சமயப்பணிக்கே தம்மை முற்று முழுதாக அர்ப்பணித்திருக்கிறார். தெய்வ சிந்தனையும், சமய அறிவும் மனப்பக்குவமும் எழுத்தாற்றலும் உள்ளவராலேயே சமய நெறிசார்ந்த தத்துவங்களை எழுதி விளக்க முடியும். விளங்க முடியாதபல இந்து சமய தத்துவங்களை சாதாரண மக்களும் விளங்கும் வகையில் எளிமையான இனிமையான வசனநடையில் விளக்கி வருகிறார். யாரையும் நோகச்செய்தோ, இகழ்ந்தோ, குறைசொல்லியோ பழக்கப்படாத இவர் மேடைகள் தோறும் புராண இதிகாசங்கள், சமய சொற்பொழிவுகள் என்ற பழுத்த பேச்சாளராக சமயப்பணிககுத் தம்மை முற்றுமுழுதாக அர்ப்பணித்து வருகிறார். இன்றைய சிறார்களுக்கு உகந்த வாறு எழுதுவதிலேயே தனது எழுதுகோலை பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றிற்குத் துணையாகவே ஆறுமுகநாவலர் எழுதிய சைவவினா விடையை புதுப்பித்து புதிய சைவவினாவிடை முதலாம் புத்தகம், இரண்டாம் புத்தகம் என்று இரண்டு நூல்களை இக்காலத்துக்கு ஏற்றவாறு ஆக்கி வெளியிட்டுள்ளார். தமிழர் பண்பாட்டையும் சமயத்தையும் காப்பாற்ற வேண்டிய ஒரு இக்கட்டான காலகட்டத்தில் இவரின் தொண்டு மிகவும் பாராட்டப்பட வேண்டியதொன்றாகும்.
சமய தத்துவம் விளங்க இவரால் பாடப்பட்ட பக்தி நூல்கள்
முறிகண்டிப் பத்து குரும்பசிட்டி விநாயகர் பத்து புன்னையம் பதிகம் செல்வமலைப் பிள்ளையார் பதிகம் நியுயோர்க் மகாவல்லப கணபதி திருப்பதிகம் கும்பழாவளை பிள்ளையார் பதிகம் அனலைதீவு பெரியபுலம் மகாகணபதிப் பதிகம் நல்லூர் நாற்பது
தில்லைச் சிந்து
6ï5'Tu 1851 UT
விநாயகர் விருத்தம்

விநாயகர் வெண்பா 6T60TL 60T
நல்லூர் நாற்பது என்ற நூல் ஈழத்திலே 1971ல் வெளியிடப்பட்டது. இன்றும் புலம்பெயர்ந்து வந்த சில அடியார்கள் அதனைத் தம்மோடு கொண்டு வந்து இங்கு தமது வீடுகளில் பாராயணம் செய்து வருகிறார்கள். இதனை அறிந்த இந்துசமயப் பேரவை உப செயலாளர் திரு. சிவ முத்துலிங்கம் அதனை மறுபிரசுரம் செய்வித்து இலவசமாக மக்களுக்கு விநியோகித்து வருவதோடு கூட்டுவழிபாடுகளிலும் பாடி வருகிறார்கள்.
அடுத்து விநாயகப்பா இவரது ஊராகிய நுணாவில் பிள்ளையார் மீது பாடப்பெற்ற பாடல் தொகுதியாகும். இதில் உள்ள பூசனைப் பதிகத்தைப் பாடி திருவிழாக் காலங்களில் சுவாமியை எழுந்தருளச் செய்யும் வழக்கத்தை இவரது ஆசிரியர் திரு. காசிப்பிள்ளை கந்தையா அவர்கள் ஏற்படுத்தியிருக்கின்றார். இவ்வகையான நூல்களை விட முத்தான தொண்டர் தங்கம்மா நான்மணிமாலை புதிய சைவவினாவிடை முதற்புத்தகம் புதிய சைவவினாவிடை இரண்டாம் புத்தகம் கனடாவில் சைவசமயம் சிவ வழிபாடு ஆகியவற்றையும் ஆக்கியுள்ளார்.
முத்தான தொண்டர் என்ற நூல் ஆத்மஜோதி முத்தையா அவர்களைப் பற்றிவெளிவந்த முதல் வரலாற்று நூல் ஆகும். இதில் அவர்களின் வரலாறும் மேம்பாடும் இடம்பெற்றுள்ளன. பெரியார் திரு. முத்தையா அவர்களால் வெளியிடப்பட்டு வந்த ஆத்மஜோதி என்னும் சமய இதழ் இன்று கனடாவில் இந்துசமயப் பேரவையால் பிரசுரிக்கப் பட்டு இலவசமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. இச்சஞ்சிகைக்கு கவிஞரே ஆசிரியராக இருந்து பிரசுரித்து வருகிறார். அன்புநெறி இதழுக்கும் சிறப்பாசிரியராகக் கடமை புரிகிறார்.
கலாநிதி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களால் சைவ சமயத்துக்கு தொண்டாற்ற ஈடுபடுத்தப்பட்ட இவர் அன்பின் அடிப்படையில் எதையும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கையோடு தொண்டாற்றி வருகிறார். அன்பு நேர்மையோடு வாழும் கவிஞர் மேல் மக்கள் பேரன்பு கொண்டிருப்பது ஆச்சரியமன்று என்றே கூறமுடியும்.
இன்றைய காலகட்டத்தில் எம்மத்தியில் உள்ள இளைய சமுதாயத்தவர்களிடையே சமய அறிவு ஏற்பட வேண்டும் என்ற ஆவலில் சைவப்புலவர் பரீட்சைக்கான வகுப்பை ஆரம்பித்துள்ளார். இதில் கவிஞரும் சைவப்புலவர் க. சிற்றம்பலம், சிவத்தமிழ்ச் செல்வர் செ. சத்தியமூர்த்தி, கலாநிதி இ. பாலசுந்தரம், பேரறிஞர் முருகவே பரமநாதன் ஆகியோர் கற்பித்து வருகிறார்கள். பெருமை வாய்ந்த தன்னலமற்ற கவிஞர் நீண்ட நோயற்ற வாழ்வைப் பெற்று எம்மத்தியில் மேலும் சிறப்புற்று வாழ இவரின் குலதெய்வமாகிய விநாயகரை வேண்டி இக்கட்டுரையை முடித்துக் கொள்கிறேன்.
மேன்மைகொள் சைவநிதி விளங்குகஉலகமெல்லாம்.

Page 24
மனித நாகரிகம் தொடங்கிய காலந்தொடக்கம் மனித சமுதாயத்தை நெறிப்படுத்தி ஒழுங்காக வாழ வைப்பதற்காகவும் திசைதடுமாறி நெறிகெட்டு வாழும் மக்களைச் சீர்ப்படுத்துவதற்காகவும் மக்களோடு மக் களாக பல உன்னதமான பெரியார்கள் பிறக்கின்றார்கள். எமது ஈழத் திருநாட்டிலும் எமது தமிழ்மொழியையும், தமிழர் பண்பாட்டையும், மிகுசைவத் துறையையும் விளங்கவைக்கப் பலபெரியார்கள், வழிகாட்டிகள் பிறந் திருக்கின்றார்கள். அவர்களில் ஒருவரே எனது உள்ளம் கவர்ந்த பெரியார் கவிஞர் வி. கந்தவனம் அவர்கள். அவருடைய பணி பும் உயர்ந்த சிந்தனையும் சகலதரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் மனப்பாங்கும் இறைபக்தியும் கருணை உள்ளமும், ஆழ்ந்த அறிவும் அவருடன் பழகத் தொடங்கிய காலம்தொடக்கம் என்னைக் கவர்ந்தவையாகும்.
என் சிறுவயது தொடக்கம் எனக்கு அவரைத் தெரிந்திருந்தும் கனடாவில் 1994ம் ஆண்டு தொடக்கம் திருவருட் பேற்றினால் பெரியாருடன் நெருங்கிப் பழகும் பேறுபெற்றேன். 1994ம் ஆண்டு நடைபெற்ற
சைவசித்தாந்த மகாநாட்டுக்கு வருகைதந்திருந்த
ஆத்மஜோதி முத்தையா சுவாமிகள் கனடாவில் இந்து சமயப் பேரவையை அமைத்தது யாவரும் அறிந்ததே. மேற்படி இந்து சமயப்பேரவையின் காப்பாளராகத் தொடர்ந்து செயலாற்றும் பெரியார் அவர்கள் பேரவையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்து, தான் இயங்குவது மாத்திரம் மட்டுமல்ல, சீராக மற்றைய உறுப்பினர் களையும் இயக்கிக் கொண்டும் வருகின்றார்.
எனது குருதேவர் ஆத்மஜோதி முத்தையா அவர்களுடன் அடியேன் ஒருநாள் உரையாடிக் கொண்டிருக்கும்பொழுது கனடாவில் தொடர்ந்து சமயப்பணியாற்ற வேண்டுமென்ற துடிப்புள்ள உங்களைப் போன்றவர்களுக்கு கவிஞர் ஒரு கலங்கரை விளக்கம் என்று கூறியிருந்தார். அந்த மகானின் சொல்லு வீண்போகவில்லை. கவிஞர் அவர்கள் அன்றும் இன்றும் கனடாவில், சைவத்தமிழ் வளர்ச்சிக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகவே செயற்பட்டு வருகின்றார். பெரியார் ஆத்மஜோதி முத்தையா அவர்கள் 1995ம் ஆண்டு மறைவதற்குச் சில நாட்களுக்கு முதல் அடியேனுடன் கவிஞர் அவர்களின் வீட்டுக்கு வந்திருந்தார். பலசமய வளர்ச்சித் திட்டங்களைப் பற்றி உரையாடியபின் 'கவிஞர் அவர்களே தாங்கள் பேரவையின் தலைமைப் பொறுப்பை எடுத்தேயாக வேண்டும். இது காலத்தின் கட்டாயம் என்று கூறியிருந்தார். அதற்குக் கவிஞர் அவர்கள் சிரித்துக்கொண்டே தேவையொட்டி நான் கவனித்துக்
2
 

n in ܢܓܐ܀ܠܬܐ܀ ܓ ఖత
கொள்ளுகின்றேன் என்று ஆத்மஜோதி அவர்களுக்குக் கூறியிருந்தார். அந்த வேண்டுகோளின் பின் மிகவும் அக்கறை எடுத்து இந்துசமயப் பேரவையை வழிநடத்தி வருகின்றார்.
ஒரு சிறந்த கவிஞராக, இலக்கியச் சொற் பொழிவாளராக, பட்டிமன்றத்தில் சொற்போர்வீரனாகப் பரிணமித்துவந்த கவிஞர் அவர்கள் துர்க்காதுரந்தரி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் வேண்டுகோளினாலும், வழிநடத்தலாலும் பிரபல சமயச் சொற்பொழிவாளராகப் பவனிவந்தார். கனடாவில் 1994ம் ஆண்டுக்குப் பின் மகான் ஆத்மஜோதி முத்தையாவின் அருட் பார்வை தீவிர சைவத்தின் காவலனாக மாற்றியிருக்கிறது. கவிஞர் அவர்கள் கருவினிலே திருவுடைய பெரியார் என்பதற்குச் சான்று பகவர்வன அவள் எழுதிய நூல்கள். அவருடைய கவிதை நூலாகிய விநாயகப்பா, நல்லூர் நாற்பது ஆகியன பல அடியார்களுக்கு மத்தியிற் தோத்திர நூல்களாகப் போற்றப்படுகின்றன. புதிய சைவவினாவிடை முதலாம் புத்தகம், இரண்டாம் புத்தகம் புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ்ச் சிறார்களுக்கு மத்தியில் சைவசமயபாட நூல்களாகத் திகழுகின்றன.
கனடா நல்லூர் முருகன் ஆலயத்தில் பெரியார் அவர்களினால் தொடர்ந்து நடத்தப்படும் பெரியபுராணத் தொடர் சொற்பொழிவினால் பல பக்தர்கள் பெரும் நன்மையடைகின்றார்கள். இன்று வெளிவரப்போகும் கந்தன்கதை என்னும் கந்தபுராண உரைநடை நூல் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கு மத்தியில் சைவக் கருத்துக்களைப் பரப்பப்போகின்றது. சைவம் நிலைத்து வாழ வேண்டுமென்பதற்காகத் தகுதிவாய்ந்த மாணவர்களைத் திரட்டி சைவப்புலவர் பாடத்திட்டத்தைச் சகசைவப்பெரியார்களின் ஒத்துழைப்புடன் பெரியார் அவர்கள் நடத்திவருவது ஒரு நல்ல திருப்பமே. P அவர் எழுதிய 'கனடாவில் சைவசமயம் என்ற நூல் கனடாவில் சைவ சமயம் எப்படி வளர்ந்தது என்பதற்கு ஒரு வரலாற்று நூலாகத் திகழுகின்றது. ஆத்மஜோதி முத்தையா சுவாமிகளின் வரலாற்று நூலாகிய முத்தான தொண்டரும், சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் பணிகளை விதந்துரைக்கும் தங்கம்மா நான்மணிமாலையும் தங்கள் வாழ்நாளில் சைவத்தைப் பேணி வளர்த்த சான்றோர்களின் பெருமையை எடுத்தியம்புகின்றன. ஆத்மீக வள்ளல் ஆத்மஜோதி முத்தையா அவர்களுக்கு “ஞானசுரபி' என்ற பட்டத்தையும் சைவப் பெரியார் முருகவே பரமநாதன் அவர்களுக்கு பேரறிஞர் என்ற பட்டத்தையும் கொடுத்து

Page 25
அவர்களின் தகைமைக்குமெருகூட்டியமை கவிஞர் அவர்களின் நுண்ணறிவுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்
மொத்தத்தில் பெரியார் அவர்கள் சிந்தித்தவற்றைச் சொல்லி அதற்கு செயல்வடிவம் கொடுத்துக் கனடாவாழ் தமிழ் மக்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாகத் திகழுகின்றார். பெரியார் அவர்கள் வாழும் காலத்தில் என் போன்றவர்கள் வாழுவதும் கடந்த எட்டு வருடங்களாகப் பெரியார் அவர்களுடன் சேர்ந்து சமயப்பணியாற்றுவதும் பெரியார் அவர்களைப் பிரதம ஆசிரியராகக் கொண்ட ஆத்மஜோதியின் உதவி ஆசிரியராக இருந்து செயற்படுவதும் நான்செய்த பூர்வபுண்ணியமும், குருவருளும் திருவருளுமேயாகும். பெரியாரின் புகுந்த கிராமமாகிய குரும்பசிட்டியின்
யாக்கை நி ழுநீலழுநீ ஆ
ஆன்மாக்களாகிய நமக்கு இந்த மனித சரீரம் எதன் பொருட்டுக் கடவுளாற் கொடுக்கப்பட்டது என்பதையும், இது எவ்வியல்பு உள்ளது என்பதையும் நாம் யோசித்தல் வேண்டும். நாம் கல்விகற்றுத் தரும நெறியினாலே பொருளைத் தேடி வறியவர்களுக்குக் கொடுத்து நாமும் மனைவி மக்கள் முதலிய சுற்றத்தார்களோடு உண்டுடுத்து வாழ்தற்கும், புகழ் புண்ணியங்களைச் செய்தற்கும், எவ்வுயிர்களிடத்தும் அன்புடையர்களாய் மனம் வாக்குக் காயங்களினாலே தம்மை வழிபட்டு நல்ல கதியை அடைதற்கும் ஆகவே கடவுள் மனித சரீரத்தை நமக்குத் தந்தருளினார்.
கடவுளையும் புண்ணிய பாவங்களையும், அவைகளின் பயன்களாகிய சுகதுக்கங்களையும் பகுத்தறியும் அறிவு மனிதர்களிடத்து இருத்தலால், அஃ தில்லாத விலங்கு பறவை முதலிய பிறப்புக்களிலும் மனிதப்பிறப்பு மிக உயர்ந்தது. நாம் கீழுள்ள பிறவிகளையெல்லாங் கடந்து இம்மனிதப் பிறப்பை அடைவது மிகுந்த அருமை. இந்த அருமையாகிய மனித சரீரமோ அழிவுள்ளது. ஆதலினால் இது உள்ள பொழுதே இதனாலே தேடற்பாலனவாகிய கல்வி செல் வங்களையும் புகழ் புண் ணியங்களையுந் தேடிக்கொள்ள வேண்டியது அத்தியாவசியமாம்.
பலவித செல்வங்களையும் பெற்று அநுபவித்துக் கொண்டிருக்கும் பொழுதே, மனிதர்களுக்கு மூப்பும் மரண வேதனையும் வருகின்றன. இவைகளோடு நோயும் வந்து சேர்ந்தால் இவர்கள் படும்பாட்டைச் சொல்லவும் வேண்டுமா! அப்பொழுது, பகுத்தறிவுள்ள மனிதர்கள் செய்வன இவை தவிர்வன இவை என்று அறியாது,

அயல்கிராமத்தில் பிறந்தநான் என் சிறுவயதிற் கவிஞ கந்தவனம் ஐயா அவர்களின் பரம இரசிகன். கனடாவில் பெரியாரின் அன்புக்குரிய மாணவன். அவரின் வழிகாட்டலில் இந்தச் சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய முனைபவன். உலகப் பல்கலைக்கழகத்தினாற் பெரியாருக்குக் கிடைத்த இலக்கிய கலாநிதிட் பட்டத்தினால் அந்தப் பட்டம் பெருமையடைகின்றது பலதுறைகளில் வல்லுநர் ஆகிய பெரியார் அவர்கள் சீரும் சிறப்புமாகப் பல ஆண்டுகள் வாழத் திருவருள் துணை நிற்க வேண்டுமென எல்லாம் வல்ல ஆடல்வல்லானை எங்கள் இந்து சமயப் பேரவையின் சார்பிலும் பேரவையின் சிவனடியார் திருக்கூட்டத்தினரின் சார்பிலும் வேண்டுகின்றேன்.
'606)u GOD
றுமுகநாவலர்
பிறருடைய சகாயத்தை விரும் பி, மிகுந்த வருத்தப்படுகின்றார்களே! மனைவி மைந்தர் முதலாயினோர் செய்யுஞ் சகாயங்கள் தாமும் அத்துயரத்தைத் தாங்கவல்லனவா! இல்லை இல்லை. இவ்வுடம்பின் நிலையாமையை நினைக்கும் பொழுதே நமக்கு ஏக்கம் உண்டாகின்றது. "நேற்றைக்கு இருந்தான் இன்றைக்கு இறந்தான்” என்று கேட்டவுடன் மனம் நடுங்குகின்றது. நேற்று மணமகன் இன்று பிணமகன் ஆதலையும் எங்கள் கண்களே காண்கின்றன. எத்தனையோ பெரிய அரசர்களுடைய சரித்திரங்களைக் கேட்டிருக்கின்றோம. எத்தனையோ பெரிய வித்துவான் களுடைய நூல்களைப் படிக்கின்றோம். இவர்கள் எல்லாரும் இறந்தவர்களேயன்றி உயிரோடிருந்தவர் ஒருவரும் இலர்.
இப்படி இந்த உடம்பு அநித்தியமும் துக்க மயமுமாயிருத்தலாலும், இதனாலன்றி வேறொன்றினாலும் நமக்கு ஈடேற்றம் இல்லாமையினாலும் யாவரும் இவ்வுடம்பு உள்ள பொழுதே கல்வி செல்வங்களையும், அவற்றினாலே புகழ் புண்ணியங்களையும் சம்பாதித்தல் வேண்டும். செல்வங்களைச் சம்பாதிக்கும்போது இறப்பில்லாதவர்கள் போலவும் தருமத்தைச் செய்யும் போது யமன் கையில் அகப்பட்டுக் கொண்டவர்கள் போலவும் எண்ணுதல் வேண்டும். இந்த நினைவிருந்தால் வாழ்நாள் வீணாகமாட்டாது. நிலையில்லாத மனித சரீரத்தாற் பயனை அடைந்தவரும் இவரேயாவர்.
நன்றி: சைவநிதி கொழும்பு
வெகுதானிய - வைகாசி

Page 26
O O கவிநாயகர் கந்தவனத்
துறை m
கவிஞர் கந்தவனம் தமிழ் பேசும் நல்லுலகம் யாவும் நன்கறிந்த கவிஞர். அவர் ஒரு பிறவிக் கவிஞர். இம்மென்றால் இருபது அம்மென்றால் அறுபது எனக் கவிகளை அள்ளித்தரக்கூடிய ஆற்றல் வாய்ந்தவர். அவர் கலைமகளின் கடாட்சம் நிறையப்பெற்ற கலைஞர். நாம் அவரோடு தொடர்பு கொண்டிருப்பது பூவோடு சேர்ந்த நாரை ஒக்கும். குறிப்பாகச் சைவ சமயத்திற்குக் கவிஞர் ஆற்றும்பணி பாராட்டத் தகுந்தது. வியக்கத் தக்கது. சைவர்கள் அவரின் சமயப்பணிக்கு என்றென்றும் கடமைப்பட்டவர்களே. ஈழத்து மாதா ஈன்றெடுத்த புலவர் வரிசையில் போற்றிப் புகழத்தக்க சிலரிற் கவிஞர் கந்தவனமும் ஒருவர். ஈழத்தின் இழப்பு கனடாவின் சிறப்பாயிற்று. கனடாவில் தாம் கவிஞர் தானெனக் கூறிக்கொண்டு திரிபவர் பலரின் மத்தியிலும் கவிஞர் கலங்கரை விளக்கமாக நின்று வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்.
கவிஞரது விநாயகப்பா’ என்ற நூலிற் காணப்படும் பதிகங்கள், திருநாவுக்கரசு நாயனார், திருஞானசம்பந்த நாயனார் போன்றோரின் பதிகங்களைப் போன்று பக்திச் சுவையும் சொற்சுவையும் மிளிர்ந்து விளங்குவதாக எழுதியுள்ளார், மறைந்த இலக்கிய வித்தகர் கலாநிதி க. செ. நடராசா. பாம்பின் காலைப் பாம்பறியும் என்பதுபோல் கவிஞரின் கவித்துவத்தை இன்னொரு கவிஞர் பாராட்டியிருப்பது போற்றத்தக்கது. கவிஞரின் பதிகங்களைப் படித்துப் பாராயணம் செய்ய வேண்டியதின் முக்கியத்துவம் பற்றியும க.செ. நடராசா "விநாயகப்பாவின் முன்னுரையில் எழுதியுள்ளார். அதுமட்டுமன்றி கவிஞரின் விநாயகப்பா பாடல் ஒன்றை சம்பந்தரின் பாடலொன்றோடு ஒப்பிட்டுக் காட்டி யிருக்கிறார். கவிஞரின் பாடல்கள் பக்திப் பரவசத்தால் பாடப்பட்டவை. நாயன்மார் கூட இறைவனின் மேன்மை யையும் பெருமையையும் நினைந்து மனமுருகி, அஞ்சலியஸ்தராகி, மெய்மறந்து பதிகங்களாகப்பாடினர் என நாம் பெரிய புராணத்தின் வாயிலாக அறிகிறோம். அவ்வாறான ஒருநிலையிலேயே நமது கவிஞரும் பக்திப்பாடல்களைப் பாடுகின்றார் என்றே எனக்குத் தோன்றுகின்றது. தந்தையுந் தாயுமாகி நின்று தனக்கு அருள்பாலித்த நுணாவில் வீரகத்திப் பிள்ளையார் மீது அவர் பாடிய பாடல்களைப் படிக்கும்போது இது நன்கு புலனாகின்றது. கீழுள்ள பாடலை நன்கு உற்று நோக்குங்கள்: "ஆரியவொரு பேரொளியாய் அமைந்தருள்வார்
அன்னையுமாய்த் தந்தையுமாய் அன்பு செய்வார்

தின் சமயப் பணிகள் -
பூரான்
உரியதுணை உடன்பிறப்பாய் உருகிநிற்பார்
உடனிருந்து தேவையறிந்துதவி செய்வார்.
அடுத்துக் கவிஞரின் ஆழ்ந்த சமய அறிவும் ஞானவிளக்கமும் ஆங்காங்கே பாடல்கள் அத்தனை யிலும் காணப்படுகின்றன. இது இவருக்கு இயற்கை யாகவே அமைந்துவிட்டதெனக் கொள்ள இடமுண்டு. சைவர்களாகப் பிறந்து நூல்கள் பல கற்றும் ஞான அறிவைப் பெறுவது இலேசான காரியமன்று. எத்தனையோ கருமங்களுக்கிடையில் ஞானஒளி ததும்பும் பதிகங்களைப் பாடுவதென்பது மிகவும் கடினமான காரியம். கவிஞர் இயற்கையாகவே அவ்வாறான இயல்பைப் பெற்றிருந்தார் என்பதை 1993ம் ஆண்டில் வெளிவந்த அவரது பாடல் களிலிருந்து அறியக்கூடியதாய் உள்ளது. உதாரணமாகக் கீழுள்ள பாடலைப் பாருங்கள்:
கரியநிறக் கவினழகள் கவர்ச்சியாளர்
கலைச்சங்குஞ் சக்கரமுங் கரங் கொள்சிலர்
அரியதிரு மகளமரு மன்பகத்தார்
அவதார மெடுத்தடியா ரல்லல்தீர்ப்பார்
இவ்வாறான பல பாடல்களை நாம் விநாயகப் பாவில் காணக்கூடியதாய் உள்ளது.
அடுத்துக் கவிஞரின் அண்மை வெளியீடான 'சிவ வழிபாடு' எனும் நூலில் எமது சமயத்தின் அருமை பெருமைகளையும் ஆழ்ந்த தத்துவங் களையும் எளிய நடையில் எழுதியிருக்கிறார். இக்கட்டுரைகள் கீதவாணி வானொலியில் "சைவ நற்சிந்தனை” என்ற தொடரில் ஆற்றிய உரைகளாகும். இவை எமது இளஞ்சந்ததி யினருக்கு நன்கு பயனுள்ள கட்டுரைகள். அத்துடன் பெற்றோருக்கும் பிள்ளைகளின் கேள்விகளுக்குப் பதில் கொடுப்பதற்கு நன்கு பயன்படும் கட்டுரைகள். ஏன், எதற்காகச் செய்கிறோம் என்று பிள்ளைகள் கேட்பது வழக்கமாகிவிட்ட இந்நாட்டில் இத்தகைய நூல்கள் கட்டாயம் தேவை. காலத்தின் தேவையறிந்து இந்நூலை எழுதியிருக்கிறார் கவிஞர். இதனை ஆங்கிலத்தில் எழுதினால் தமிழைப் புறக்கணிக்கும் எம்மவருக்கும் தமிழ் தெரியாத பிற இனத்தவருக்கும் நன்கு பயன்படும். கோயிற் பூசைகளின் முக்கியத்துவம் அதன் பலாபலன்கள் போன்ற இன்னோரன்ன தகவல்கள் சைவர்களுக்கு மிகவும் இன்றியமையாதன என்பது என் கருத்து. கோவிலுக்குச் செல்வது எதற்காக என்ற

Page 27
விளக்கமும் விருப்பமும் இல்லாத இளஞ் சமுதாயத் தினர் கட்டாயம் இந்நூலைப் படிக்க வேண்டும். எத்தனையோ பிறசமயத்தவர் சைவத்தின் சிறப்பையும் ஆழ்ந்த தத்துவங்களையும் நன்கு ஆராய்ந்து சைவர்களாக மாறிவரும் போது, சைவர்களாகவே பிறந்து சைவர்களாகவே வாழ்ந்து வரும் நாம் எமது சமயம் பற்றி அறியாதிருப்பது மடமையிலும் மடமை.
மேலும் கவிஞர் எழுதிய புதிய சைவவினாவிடை, தேவைக்கேற்ற திருமுறைத்திரட்டுப்போன்ற நூல்கள் சைவர்கள் யாவரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்களாகும். இதுவரைக்கும் 27 நூல்களை எழுதியுள்ள கவிஞர் சமயத்துக்கென 9 நூல்களையும் 10 பதிகங்களையும் ஆக்கியுள்ளார். இவை தவிர ஏராளமான தனிக் கவிதை ஸ், கட்டுரைகள், சமயப் பேருரைகள் எனப் பல ட களை ஆற்றிவருகின்றார். அவரது சமயக் கட்டுரைகளும் கவிதைகளும் கனடாவில் வெளிவரும் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளி வருகின்றன. "கனடாவில் சைவசமயம்" எனும் நூலில் கவிஞர், கனடாவின் பல்வேறு மாகாணங் களிலுமுள்ள சைவக் கோவில்களின் வரலாறுகள் பற்றி விளக்கமாக எழுதியுள்ளார். ஆங்காங்கே பல புகைப்படங்களையும் இந்நூலில் காணலாம். இது ஒரு அரிய போற்றத்தக்க முயற்சியாகும்.
ஈழத்துச் சித்தர் தவத்திரு யோகர் சுவாமியின் அடியார்களுள் கவிஞரும் ஒருவர். சிவதொண்டன் நிலையத்தின் ஆரம்பகால நிர்வாகசபை உறுப்பினரில் ஒருவராகப் பணியாற்றிப் பல தொண்டுகளைப் புரிந்து வருகின்றார். குறிப்பாக சுவாமியின் 125ம் ஆண்டு விழா மலரின் பதிப்பாசிரியராகப் பணிபுரிந்து தமது வித்துவச் சிறப்பை வெளிக்காட்டியுள்ளார். மேலும் கனடா இந்து சமயப்பேரவைக் காப்பாளராகப் பணியாற்றுவதோடு "ஆத்மஜோதி” என்ற பத்திரிகை யின் ஆசிரியராகவும் செயற்படுகின்றார். இவ்வாறான சமயப்பணிகளை வேறு சைவமன்றங்களுக்கும் செய்து வருவது இவரது பரந்த மனப் பாணி மையை எடுத்துக்காட்டுகின்றது. யார் அழைத்தாலும் மறுக்காமல் ஒன்ராறியோவின் மூலை முடுக்குகளுக் கெல்லாம் சென்று சமயப்பேருரைகள் ஆற்றி வருகின்றார். ரொறன்ரோவில் இடம்பெற்ற சைவ சித்தாந்த மாநாடுகளில் அரிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பித்துப் பலரது பாராட்டையும் பெற்றார்.
சமயக்கட்டுரைகள் கவிதைகள் மட்டுமன்றி,

இலக்கியம், இலக்கணம், நாடகம், சமூகவியல் போன்ற இன்னோரன்ன துறைகளிலும் இலக்கியம் படைக்கும் ஆற்றல் கைவரப்பெற்றவர் கவிஞர் கந்தவனம். இவர் சமயத்துறையில் இன்னும் பல படைப்புக்களைத் தரவேண்டுமெனச் சைவர்கள் பலர் எதிர்பார்க்கின்றனர். தமிழ்நாட்டிலுள்ள சைவஅறிஞர்கள் பலரோடு வைத்துப் பாராட்டும் அளவுக்குத் தகுதி வாய்ந்த கவிஞரை இன்னும் அவர் கல்வி கற்ற சென்னைப் பல்கலைக்கழகம் பாராட்டாமல் இருப்பது கவலையே. உரியவர்கள் இதற்காக வழிசமைப்பார்கள் என நினைக்கிறேன். கெளரவ கலாநிதிப் பட்டங்கள் தகுதியில்லாத சிலருக்கு வழங்கப்படும் இக்காலத்தில் தகுதிவாய்ந்த கவிஞருக்கு வழங்குவதில் தாமதம் ஏனோ தெரியவில்லை. வாழ்க கவிஞரின் சமயப் பணிகள்!
கவிஞரின் சமயநூல்கள் 1. நல்லூர் நாற்பது (1971)
2. விநாயகப்பா (1993) 3. முத்தான தொண்டர் (ஆத்மஜோதி நா
முத்தையாவின் வாழ்க்கை வரலாறுஇ. 1995) புதிய சைவவினாவிடை - முதற்புத்தகம் 1997 தங்கம்மா நான்மணிமாலை (1997) சிவபுராண தத்துவம் கனடாவிற் சைவசமயம் (2000) சிவவழிபாடு (2001) புதிய சைவவினாவிடை 2ம் புத்தகம் (2001)
10. தேவைக்கேற்ற திருமுறைத்திரட்டு (2001)
பதிகங்கள்
1. முறிகண்டிப் பத்து
2. குரும்பசிட்டி விநாயகர் பத்து
3. புன்னாலைக்கட்டுவன் சித்தி விநாயகர்மீது
இரு பதிகங்கள் கும்பழாவளைப் பிள்ளையார் பதிகம் செல்வமலைப் பிள்ளயைார் மீது இரு பதிகங்கள் கனடாக் கந்தன் திருவகவல் அனலைதீவு மகா கணபதிப்பிள்ளையார் பதிகம் நியூ யோர்க்கு மகாவல்லப கணபதித்
திருப்பதிகம்
நூலாக வராதவை
1. தில்லைச்சிந்து (ஆலயமணியில் வெளிவந்தது)
2. விநாயக வெண்பா (ஆத்மஜோதியில்
வெளிவந்து கொண்டிருக்கின்றது.)

Page 28
கலைமாச்செல்வர்
ஆழ்க
கோதைகள் சொரிவன குளிர்இள நறவம் பாதைகள் சொரிவன பருமணி கனகம் ஊதைகள் சொரிவன உயிர்உறும் அமுதம் காதைகள் சொரிவன செவிநுகர் கனிகள்.
- கம்பன்
இளநறவம் - புதுத்தேன்.
செவிகளால் ஆரநின் கீர்த்திக் கலயென்னும் கவிகளே காலப்பண் தேனுறைப் பத்துற்று புவியின்மேல் பொன்னெடுஞ் சக்கரத் துன்னையே அவிவின்றி யாதரிக் கும்என தாவியே!
- திருவாய்மொழி 3:8.6
கவிதையைக் கம்பன் செவிநுகள் கன என்கின்றான். பக்திமொழி வழி தெய்வீகக் கவிதையை நம்மாழ்வார் கீர்த்திக்கனியெனப் பேசுகிறார். கவிதையை அனுபவிக்க உபகாரியாய் இருப்பது செவி. வாயிலே வெல்லத்தைப் போட்டால் இனிக்கும். நாவிசைக்கும் பாமழையை அனுபவிப்பது காது. அதைச் செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் எனப்போற்றும் குறள். வள்ளுவர் தந்தவாய் மொழியில், கல்வியென்று ஓர் அதிகாரம் வகுக்கப்பட்டுள்ளது. அதையடுத்து அமைந்தவை கல்லாமை, கேள்வி என்னும் அதிகாரங்கள். இவற்றின் கடைசிக்குறள் இது.
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என்
- திருக்குறள் 420 கல்வியும் கேள்வியும் முக்கியம். ஒருவரின் தகுதிப்பாட்டை அறிய அவர் கல்வி கேள்வியில் எப்படி என விசாரிக்கிறோம். கற்றிலனாயினும் கேட்க என்பது வள்ளுவம் தரும் அறிவுரை, அறவுரையுமாம். எனவே கேள்வி ஞானத்தால் மேதை எனப் பலரை இவ்வுலகம் தந்திருக்கிறது. நாம் அவரைச்சந்தித்து, அறிந்து வியப்படைந்துமுள்ளோம். ஒழுங்குபடுத்தப் பட்ட இசைவடிவமே சங்கீதம். முறையாகச் சங்கீதம் கற்காத பலர் கேள்வி ஞானத்தால் இசைஞானிகள் ஆகி இருக்கிறார்கள். ஒசை நயத்தைச் செவியால் மடுத்து உயர்ந்த கவிதைகளை வடித்தும் உள்ளனர் பல பாவாணர்கள். இக்கவிதை நயம் எல்லா மொழிகளுக்கும் பொது, தமிழ் மொழிக்குச் சிறப்பானது. உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை.
இறைவனை வணங்கித் தோத்தரிக்க ஒன்பது மார்க்கங்கள் பெரியவர்களால் தரப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று கீர்த்தனம். கீர்த்தனம் என்றால்
 
 

டலான்
கவிஞர் நு.வி.க.
இறைவன் பெரும்புகழைப் பாடுவது என்று பொருள். அதனால் இன்று கீர்த்தனைகள் பிரமாணிக்கம் பெற்றுள்ளன.
நம்மாழ்வாரின அருட் செயல்களுள் ஒன்று திருவாய் மொழி. இதிலே 1101 திருப்பாசுரங்கள் அமைந்துள்ளன. திருவாய் மொழிபோலமைந்த திருவாசகத்தில் 656 பாடல்கள் உள்ளன. இதைத் தேனுாறும் வாசகங்கள் அறுநூறு எனச்செவ்வந்திப் புராணம் குறிப்பிடுவதுபோல நம்மாழ்வார் திருவாய் மொழிபற்றி எழுந்த சடகோபரந்தாதியில் ஆரா அமுதக்கவியோராயிரம் அவ்வரியினுக்கே எனக் கம்பர் பாடியுள்ளார். இப்பிரயோகம் திருவாய் மொழியில் எடுத்தாளப்பட்டுள்ளது. இப்படி
குழலில் மலியச் சொன்ன ஓரா யிரத்து விரிப்பத்தும் மழலை தீர வல்லார் காமர்
மானேய் நோக்கியர்க்கே
- திருவாய்மொழி 5:8:11
குழல் - கண்ணனின் புல்லாங்குழல். குழலின் புல்லாங்குழல் ஓசையைக் காட்டிலும் இனிமை யானவை இப்பாசுரங்கள் என்பது மேலேயுள்ள பாசுர அடிகளின் பொருள். எனவே புல்லாங்குழல் இசை எப்படியானது என்பதை இனிப் பெரியாழ்வார் வாக்காற் கேட்போம்.
புவியுள்நான் கண்டதோ ரற்புதங் கேளிர்
பூணி மேய்க்குமிளங் கோவலர் கூட்டத்து
அவையுள் நாகத் தணையான்குழ லூத
அமர லோகத் தளவுஞ்சென் றிசைப்ப
அவியுணா மறந்து வானவ ரெல்லாம்
ஆயர்பாடி நிறையப் புகுந்தீண்டி செவியுள் நாவின்சுவை கொண்டு மகிழ்ந்து
கோவிந்தனைத் தொடர்ந்து என்றும் விடாரே. - பெரியாழ்வார் திருமொழி 3:67
கண்ணனின் மாம்பழ வாயில் வைத்து ஊதிய புல் லாங்குழலிசையிற் கட்டுண்ட தேவர்களின் அனுபவிப்பை இப்பாசுரம் படம்பிடித்துக் காட்டுகிறது. பெரியாழ்வாரின் கவிதை வார்ப்பு அபூர்வமானது. கண்ணன் நாவின் நளினம் குழல்வழி சென்று, துவாரக் கைவிரல்வழி பிழியப்பட்டுக் காற்றில் மிதந்து காதையடைந்தது. அவ்வளவுதான். இதை ஆழ்வார் செவியுள் நாவின்சுவை கொண்டு மகிழ்ந்து ஒசைவழி

Page 29
கோவிந்தனைத் தொடர்ந்தனர் தேவர்கள் என்கிறார். தேவர்களைப் புலவர் என்றும் அழைப்பர். எனவே சுவைஞருமவர்களே.
ஆகவே கவிதை செவிநுகர் கனியேதான். கந்தவனமும் இவ் இலக்கியப் பட்டறையிலே உருக்கிவார்த்த கவிதைகள் அநந்தம். அதனால் அவர் கவிஞர் ஆனார். தன் சகோதரன் நினைவான ஒரு பாடல் போதும் அவிட்பதமாக.
குடியில்லை வெறியில்லைப் புகையு மில்லைக்
கூடாத உறவில்லைப் பகையு மில்லை வடிவாக நெடுங்காலம் தமிழர் போற்றி
வளர்த்தெடுத்த பெருவாழ்வுக் குகந்த பண்புப் படியெல்லை தாண்டாது பாது காத்துப்
பக்குவத்தார் பரிசொப்பப் பரந்த கொள்கைக் குடைதாங்கி வலம் வந்த கொற்ற வேந்தே
கோடிதவம் இருந்து குணம் பெற்றமைந்த.
சிறந்த கிராமியமட்டத்தில் பிறந்து வளர்ந்து, வாழ்ந்த ஒரு தமிழ்க் குடிமகனின் பணி பாட்டுக்கோலம் இப்பாடலிலே பளிச்சிட்டாலும் எம் தமிழ்ச் சமுதாய ஒன்றித்த மேம்பாடு, விஷமத்தனம் இல்லாத மனிசத்தனத்திலே கட்டியெழுப்பப்பட்டதென்பதையும் பறைசாற்றுகின்றது. தென்மராட்சியின் சிறப்பும் இதிற் சொட்டுகிறது. தெரிந்தெடுத்த கிராமங்களான கல்வயல், மட்டுவில், இடைக்காடு, புலோலி வல்லிபுரம் என்ற வரிசையில் நுணாவில மணி னும் மனிதம் நிறைந்ததுதான். வரலாற்றுப் புகழ்மிக்க வல்லிபுர மண்ணின் பெருமையை இலக்கிய கலாநிதி கந்தையா அவர்கள் இப்படிப் போற்றிப் பாடியுள்ளார்:
பூந்தலைச் சிறுகன்றினமொடு பெருகிப்
புனமேய்ந் தாடிவரும் பொலிகுல நல்லான் தொழுவும் உழவும்
புஷடிசந் துவடிடிக்காம் தீம்பல உதவுந் தாலமு மோம்பித்
தினமும் விருந்தோம்பிச் செம்மையில் நவநா கரிகத் தீம்புகள்
தம்மயல் மருவாமே பாம்பணை யாற்கே ஒம்படை நல்கிப்
பயிக்கத் தனமருவா இயற்கைநல் வாழ்வொளிர் வல்லிபுர த்தெம்
பாலா நின்னருள்தக் கோம்பழி மலையக் குதுகலமலையக்
கொட்டுக சப்பாணி கோமளத் திருவே சாமளத் துருவே
கொட்டுக சப்பாணி.
வல்லிபுரமாயவன் பிள்ளைத்தமிழ்
சப்பாணிப்பருவம் 8
2

இப்பாடலில் வரும் "தினமும் விருந்தோம்பிச் செம்மையில் நவநாகரிகத் தீம்புகள் தம் மயல் மருவாமே - பயிக்கத்தனம் மருவா இயற்கைநல்வாழ் வொளிர் வல்லிபுரம்’ என்ற பிரயோகத்தையும் கவிஞரின் கருத்தோவியத்தையும் ஒப்பிடும்போது கவிஞர்கள் பிறக்கிறார்கள் என்ற உண்மை தெற்றெனப் புலனாகும். எனவே கந்தவனம் ஒரு இயற்கைக் கவிஞன்தான். அவரது பாசையிற்சொன்னாற் கவித்துவம் என்பது ஒரு பரம்பரைச் சொத்து. அது கவிஞனின் இரத்தத்தோடு பிறந்ததுதான். தொண்ணுாறுகளின் முதல் முக்காற்காலம் நான் கண்டியில் வதிந்தபோது இருநூல்களைப் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. ஒன்று மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்களது வரலாறு. மற்றது உ. வே. சுவாமிநாதையரது என் சரித்திரம். இரண்டையும் தமிழ் உலகுக்கு எழுதி உதவியவர் டாக்டர் உ. வே. சு. தான். அண்மையிற் தேவைநோக்கிக் கவிநாயகள் கந்தவனம் என்ற ஒவியத்தையும் சுவைத்தேன். முன்னிரண்டும் சரிதம் சொல்லும் பேரிலக்கியங்கள் என்றால் இது ஒரு சிற்றிலக்கியம் எனலாம்.
தென்மராட்சி நுணாவிலிலே பிறந்த இவர் சாவகச்சேரி இறிபேக் கல்லூரியில் உயர்தரவகுப்பைப் படித்துத் தகுதி பெற்றதும், சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியிலும், கோவைக் கலைக்கலலூரியிலும் பயின்று கலைமாணிப்பட்டம் பெற்றார். ஆங்கில இலக்கியம், ஆங்கிலமொழி, புவியியல்-பொருளியல் இவரின் கற்கை நெறிகளாய் அமைந்தன. பட்டப் பிற்படிப்பிற் பலதுறை களிலே இவர் தகைமை பெற்றார். கல்வியியலில், நாடகம் படிப்பித்தலிலெல்லாம் இலங்கையில் டிப்ளோமாப் பட்டம் பெற்றார். இத்துடன் பிரிட்டனில் உள்ள கல்லூரி ஒன்றில் வெளிவாரி மாணவனாகப் படித்து ஆங்கிலமொழித் திறமையிலும் டிப்ளோமாப்பட்டம் பெற்றார். இவ்வாறு கல்வித் தகைமைகளையும் விஞ்சிய ஆளுமைகள் நிறைந்த அவர் ஆசிரியராக, உப அதிபராக, அதிபராக எல்லாம் சேவையாற்றி, கல்வித்திணைக்களப் பாடநூற்சபையிலும் வெவ்வேறு பகுதிகளிலும் தன் கடமைகளை நிறைவேற்றி, கடல்கடந்து தென்னாபிரிக்காவிலும் ஆசானாகிப் புகழை FFL Lq6OT Tst. ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்றோனாயும் திகழ்கிறார். ஒரு நதிமலையிலே உற்பத்தியாகிப் பல கிளைகளையும் இணைத்து ஏரி குளம் குட்டை துரவுதுறை ஓடைகளைத் தொட்டுப்பரந்து பாய்வது போலக் கவிஞர் கந்தவனமென்னும் சரயுநதி தொட்டுத்தடவாத துறைகளில்லை எனலாம்.
மறுமலர்ச்சியான போக்குடன் புதுவது புனையும் ஆக்க இலக்கியப் படைப்பாளியாகவும், மரபுக்கவிதை நவீன கவிதை வடிவங்களின் சேதுபந்தனமாகவும் விளங்கும் அவர் ஆங்கிலத்திலே நல்ல கவிதைகளையும் ஆக்கியுள்ளார். இளம்பராயத்திலேயே ஆங்கில நாவலொன்றின் பிரம்மாவாகவும் தன்னை இனம்

Page 30
காட்டியுள்ளார். தம்பிமுத்துவின் ஆங்கிலக் கவிதைகள் உலகப் புகழ்வாய்ந்தவை. கவிஞரோ இருமொழியையும் கவிதைக்கு நல்ல ஊடகமாகக் கையாண்டுள்ளார். கனடாவின் தேசிய கீதத்தைத் தமிழாக்கிய பெருமை இவரையே சாரும். சிறந்த தமிழ்க்கவிதை வடிவங்களின் புலவனாகத்திகழும் இவர் முத்தமிழ் விரகராயும் விளங்கக் காணலாம். ஈழப்பூமியில் இவர் தொட்ட தெல்லாம் பொன்தான். எனவே இவர் ஒரு (இ)ரசேசுவர சித்தர்தான். கனடாவில் இவரைத் தொட்டவர்கள் எல்லாம் பொன்னானார்கள். எனவே அவரொரு பரிசவேதியுமாம்.
கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியின் சந்திப்பு இவருக்கு ஒரு திருப்புமுனையாயிற்று. அதனாற் சமயத்துறைக்கு எழுத்தாலும் பேச்சாலும் சிந்தனை வளத்தாலும் தாயகத்திற் பெருந்தொண்டாற்றியதுபோற் கனடாவிலும் இவரது சைவசமயத் தொண்டு நிறையப் பெறுமதியும் காலத்துக்கு உகந்ததுமாகும். இந்து சமயப் பேரவைக்குக் காப்பாளராய் இருந்து அதன் பணிகளுக்கு உதவி வருகிறார். புதிய சைவவினாவிடை, முத்தான தொண்டர், கனடாவிற் சைவசமயம், சிவழிபாடு முதலிய நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். வெள்ளிவாரந்தோறும் நல்லைக் கந்தன் சந்நிதியிற் பெரியபுராணச்சொற்பொழிவை வழங்கியும் வருகிறார்.
கனடா கந்தசுவாமி ஆலயத்தில் முருகவே பரமநாத வழங்கப்பெற்றுக் ெ
 

வேட்டியும் சால்வையும் அணிந்துவரும் இவர் போக்கு அவரது இனசமயப் பண்பாட்டுப் பிடிமானத்தைத் துலாம்பரப்படுத்துகிறது. இவ்வண்ணம் சமுதாயநலக் கண்ணோட்டம் நிறைந்த கந்தவனம் ஒரு சுகந்தவனமே தான். தமிழகத்திலே திருவி.க என்றால் தமிழ்த்தென்றல் திருவாரூர் வி. கல்யாணசுந்தரமுதலியாரையே குறிக்கும். ஈ.வே.ரா. என்றால் ஈரோடு வெண்தாடி வேந்தர் பெரியாரைக் குறிக்கும். திறனாய்வுத் தென்றல் தி.க.சி. என்றால் திருநெல்வேலி கணபதி சிவசங்கரனைக் குறிக்கும். நம் தாயகத்தில் நுணாவில் தந்த வி. கந்தவனம் அவர்களை கவிஞர் நு.வி.க. என்று அழைப்பதும் சாலப்பொருத்தமே. மேதகு கலைமாச் செல்வர்க்கு உலகப் பல்கலைக்கழகம் கலாநிதிப் பட்டம் வழங்கிய கெளரவம் ஈழத்தமிழினத்துக்கே கிடைத்த பெரிய கெளரவமாகும். அன்னாரும் மனைவி மக்களும் வாழ்நாள் பூராவும் மனதுக்கினிதாக வாழ எல்லாம் வல்ல கண்ணபிரானின் திருவருளைப் பற்றி வணங்கி வாழ்த்துகிறோம்.
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.
- திருக்குறள் 443
-*Kప
ன் (ஆழ்கடலான்) அவர்கள் பேரறிஞர் என்ற பட்டம் களரவிக்கப்படுகிறார்.
28

Page 31
கலாநிதி கவிஞ சிவ. ( சட்டத்தரணி
தமிழ்ப் பேசும் இனத்திற்கு "இன்பம் பயக்கும் வினை" செய்த செம்மல்களில் செம்மாந்து விளங்குபவர் கலாநிதி கவிஞர் கந்தவனம். அவர் நாநலம் தமிழ்மாநிலம் போற்றும். அவர் கவிநயம் கவின் தமிழர் உவந்து ஏற்றுவர். அவர் உரைநடை தமிழ்த்தரை உலகெங்கும் உயர்ந்து நிற்கும்.
அவையறிந்து ஆராய்ந்து சொல்லும் சொல்லின் செல்வர். சொல்லின் தொகை அறிந்த தூய்மையாளர். அதனால் கற்றாருள் கற்றார் எனப்படுவர். தமிழ் பேசுவோர் நெஞ்சங்களில் நெடிது வாழ்பவர். அறன் அறிந்த மூத்த அறிவுடையார். விநாயகப் பெருமான் மீது பேரன்பு நிறை பக்தி மிக்கவர். விநாயகர் தந்த கந்தவனம் அவர்கள். செல்வமலை விநாயகர் மேல் செந்தமிழின்பம் சொட்டச்சொட்ட ஏற்றிய கவிமலர்ச்சரம் கவிஞரின் கவித்துவத் தரம் சாற்றும். தமிழுக்கும் சைவத்திற்கும் தவத்தொண்டு புரியும் தாய் தங்கம்மா பற்றிய பாமாலை அருள்நயம், பொருள் நயம் செந்தமிழ்ச் சொல் நயம் மிகுந்து விளங்குகின்றது.
இன்னோரன்ன பற்பல ஆக்கங்களைத் தந்து தமிழ்த்தாயக வழிபாடு செய்வதில் தலைமகனாகத் திகழ்கின்றார் கவிஞர். கவிஞர் தாங்குவதால் கலாநிதிக்குக் கெளரவத்தை அளிக்கின்றார் என்பது சாலப் பொருந்தும்
சைவம் பற்றி யாத்த கவிகள், ஆற்றிய உரைகள், ஆக்கிய ஆய்வு நூல்கள் புதிய சைவவினாவிடை 1ம், 2ம் புததகங்கள் கனடாவிலே சைவசமயம், சிவவழிபாடு போன்றவை உலகுள்ள வரைக் கும் நின்று சைவசமயிகளுக்கும் ஏனையோருக்கும் ஞானஒளி நல்கும் என்பது திண்ணம்.
சைவத்தவர் செய்வித்த மாதவத்தால் தெய்வீகத்தைச் சிறப்பாக போற்றிவரும் சிவத்தமிழ்ச் செல்வி, துர்க்காதுரந்தரி, "துவிஜோத்தமி", கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி மேல் சாற்றிய நான்மணி மாலை கவிஞரின் தெய்வீகத்தினை தெற்றென

ஞர் கந்தவனம் முறிதரன்
29
தெளிவாக்குகின்றது. "தங்கம்மா நான்மணிமாலை” ஊனை உருக்கும், உயிரைப் பெருக்கும், தேனைச்சுரக்கும் செந்தமிழ் மலர்ச்சுோலை.
அருட்துணிவுடனும், பொருட்பணிவுடனும் உய்த்து, உணர்ந்து உரைக்கும் உன்னத உள்ளம் உடைய கந்தவனப் பெரியோர் மேலும் பற்பல அருட்சமயத் தொண்டுகள் ஆற்ற எல்லாம் வல்ல விநாயகப் பெருமான் அருள் இறைப்பாராக.
கனடாவில் கந்தவனம் என்ற நல்லார் இருப்பதனாலே அவர் பொருட்டு தமிழர்க்கும் சைவர்க்கும் நல்லவாழ்வு கிட்டியது என்றால் அது மிகையன்று.
சைவமும் தமிழும் தம் இரு கண்களெனப் போற்றும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் சிறப்பாகவும் ஏனைய தமிழ் பேசும் இனத்தோர் பொதுவாகவும் பேரன்புடன் மதிக்கும் பெருந்தகை கவிஞர் கந்தவனம்.
அரிய நூல் பல ஆக்கி பெரிய சைவத்தத்துவங்களை தமிழர் பண்பாடுகளை இலகுவில் புரிய வைத்த புண்ணியர்.
உயர்தமிழ்ப் புலமையும், பெருஞ்சைவ அருட்பக்தியும் அன்னாருக்குச் சித்திவிநாயகர் அளித்த சக்தி ஆகும். தான் பெற்ற பேரருள் இன்பம் இவ்வையகத்தோரும் பெற்றிட வேண்டும் என்ற பெருநோக்குடன் செயலாற்றிவரும் பெரியார்.
அன்னார் ஆங்கிலத்திலும் அரும்பதங்களால் பெரு இதம் பல்கும் பாக்கள் சிறுகதைகள் செய்தமை உற் நோக்கற்பாலது.
தெய்வ அம்சம் ததும்பும் பற்பல நூல்களை ஆக்கி இறைசேவையின் நிறைதேவையினை நேர்த்தியாகப் பூர்த்திசெய்த அருளாளர் அய்யா கந்தவனம் மேலும் பல நூல்களை அளிக்க மகாகணபதி கடாட்சம் பொலிந்து மல்க ஞானக் கொழுந்தனைப் போற்றுதல் செய்வோமாக.

Page 32
என் சிந்தை நி மருதையின்
தமிழுக்கும் சைவத்துக்கும் தங்கள் புலமையைத் தானமாகத் தந்து கொண்டிருக்கும் பெரியார்தான் கவிஞர் கந்தவனம் அவர்கள்.
கவிஞர் அவர்கள் நம் தாயகத்தில் கடந்த 40 வருடத்துக்கு முன்பே இலக்கியத்துறையில் கவியரங்கு இலக்கிய வட்டம் போன்ற பல நிகழ்ச்சிகைளயும் நடத்திப் பல அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர்.
இவர் பிறந்த கிராமமான நுணாவில் பிள்ளையாரை குலதெய்வமாக நினைந்து சிறுவயது தொடக்கம் தொண்டுகள் புரிந்து வணங்கி கல்விகற்று வந்ததால் இப்படியொரு அறிஞராகத் திகழ்கிறார்.
இவர் தன்குல தெய்வத்தின் பெயரால் விநாயகப்பா என்ற பாவையும் பாடி மேலும் விநாயகரின் அருள் பெற்றதால் இன்னும் பல சைவசமய கருத்துக்களைக் கொண்ட நூல்களையும் சமுதாய சீர்திருத்தச்சிறுகதை களையும் எழுதினார்.
இவர் வெளிநாடுகளில் வாழ்ந்த காலத்திலும் தமிழுக்கும் சைவத்துக்கும் தொண்டு செய்வதைக் கைவிடவில்லை. இவர் கனடாவிற்கு புலம்பெயர்ந்து வந்தும் இடைவிடாது சைவத்திற்கும் தமிழுக்கும் தன்னை அர்ப்பணித்து சேவையாற்றுகிறார்.
இவர் ஆங்கிலத்தில் சிறுகதை நூல்களையும் கவிதைகளையும் எழுதி வெளியிட்டார்.
இவர் நற்குணங்களில் சில
இவர் நன்கு ஆங்கிலத்தில் பேசத் தெரிந்தும் எவருடனும் தமிழிலேயே பேசுவார்.
எளிமையான உடை, அமைதியான நடை, சாந்தமான தோற்றம், தயாளகுணம், சினமே இல்லாத பேச்சு என்பன இவரது இயல்புகள். இவை யாவும் அமைந்தது வித்தக விநாயகரை சரண் அடைந்ததால்தான் என்று எண்ணலாம்.
ஆத்மீக வள்ளல் ஆத்மஜோதி முத்தையா அவர்கள் நிறுவிய இந்து சமயப் பேரவையில் காப்பாளராக இருந்து வழிநடத்தி வருகிறார். இவருக்கும் இந்து சமயப் பேரவைக்கும் ஆத்மஜோதியின் முத்தான தொண்டராக திருமுறைச்செல்வர் சிவமுத்துலிங்கம் அவர்கள் செயற்பட்டு வருவதால் இந்துசமயப் பேரவை சைவசமய வளர்ச்சிக்கு பல வகையாலும் தொணி டாற் றரி வருகிறதை காணக்கூடியதாக இருக்கிறது.
கடந்த எட்டு வருடங்களாக திருமுறைச் செல்வர் சிவமுத்துலிங்கம் அவர்கள் கவிஞர் வழிகாட்டுதலில் நாயன்மார்களின் குருபூசைகள் திருமுறை முற்றோதல், திருவாசக முற்றோதல் சிவயோகசுவாமிகள் அருளிய நற்சிந்தனை முற்றோதல்களை இங்குள்ள ஒவ்வொரு ஆலயங்களிலும் பல சிவனடியார்களுடன் சேர்ந்து வழிநடத்தி வருகிறார்.

றைந்த கவிஞர்
ாார் சிவசாமி
தற்போது நல்லூர்க் கந்தசாமி கோவிலில் கவிஞர் அவர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பஜனையின் பின்னர் பெரியபுராண விரிவுரையும் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கீதவாணி வானொலியிலும் கவிஞர் அவர்கள் பெரியபுராணம் படிக்க டாக்டர் சண்முகம் அவர்கள் பயன்சொல்வதும் தெரிந்ததே.
இவரிடம் உள்ள பெருந்தன்மையான குணம் எதுவெனில் தன்னை மற்றவர் மதித்து நடக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. ஆனால் தன்னோடு சேர்ந்து தொண்டாற்றும் சமயத் தொண்டர்களை மதிக்கும் பண்பை இவரிடம் காணலாம்.
சிறப்பாக ஆழ்கடலான் திரு. முருகவே. பரமநாதன் அவர்களுக்கு பேரறிஞர் என்ற பட்டத்தையும் இந்து சமய பேரவை செயலாளர் திரு. சிவமுத்துலிங்கம் அவர்களுக்கு திருமுறைச்செல்வர்' என்ற பட்டத்தையும் சூட்டி இவர்களின் சமயத்தொண்டைப் பாராட்டிக் கெளரவித்தது இவரின் பெருந்தன்மையான பணி பை மேலும் உயர்த்துகிறது.
இவர் எப்பொழுதும் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை. இருந்தும் தமிழகத்தில் கலைஞர் என்றால் எப்படி மக்கள் கருணாநிதி என்று அழைப்பார் களோ அதேபோல் கவிஞர் என்றால் கந்தவனம் என்று ஈழத் தமிழ்மக்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள்.
மன்னனும் மாசு அறக்கற்றோனும் சீர் தூக்கின் மன்னரில் கற்றோர் சிறப்புடையன் - மன்னற்குத் தன்தேசம் அல்லால் சிறப்பில்லைக் கற்றோர்க்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு
என்பதற்கு அமெரிக்காவில் உள்ள சர்வகலாசாலையில் கவிஞருக்குக் கொடுத்த டாக்டர் பட்டமும் ஒரு எடுத்துக்காட்டு.அத்துடன் புலம்பெயர்ந்த நாடுகளில் கிடைத்த பாராட்டுகளும் தொடர்கின்றன. கல்விக்கு அழகு கசடற மொழிதல் என்பது கவிஞருக்குப் பொருத்தமானதே.
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்று.
தேவர் பிரார்த்தனைத் திவ்விய மூர்த்தியை யாவர் ஒருவர் அறிவார் அறிந்த பின் ஒதுமின் கேள்மின் உணர்மின் உணர்ந்துடின் ஓதி உணர்ந்தவர் ஓங்கி நின்றாரே - திருமந்திரம்

Page 33
திருவெம்பாவைக் காலத்தில் அருள்மிகு நல்லூர் ( முற்றோதிய அடியார்களுக்கு திரு. வி. கந்த
2001 լb ஆண்டு நாகபூசணி تیمهای ஆலயத்தில் திருமுறை முற்றோதல் பூர்த்தி விழாவின்போது தலைமைவகித்து உரையாற்றுகிறார்.
 
 

முருகன் ஆலயத்தில் பத்து நாட்களும் திருவாசகம் வனம் அவர்கள் சான்றிதழ் வழங்கும் காட்சி.
திரு. சிவ முத்துலிங்கம் அவர்கள் திருமுறைச் செல்வர்
என்னும் பட்டம் வழங்கப்பெற்று-திரு. வி. கந்தவுடினம். அவர்களால் பொன்னாடை ேேழித்திச் **-

Page 34
"ஆத்மஜோதி இதழ் வெளியீட்டின் போது உரையாற்றுகிறார்.
புதிய சைவ வினாவிடை (இரண்டாம் புக்தக
 
 

முன்னாள் இந்துக் கல்லூரி ஆசிரியர் சங்கீத பூஷணம் திரு. க. மாணிக்கவாசகள் அவர்களைக் கெளரவித்துப் பொன்னாடை போர்க்கும் காட்சி.
), நல்லூர் நாற்பது நூல் வெளியீட்டின்போது.
2

Page 35
கலாநிதி கந்தவனம் அவர்களின் இல்ல ஆத்மஜோதி முத்ன
 

பேரப்பிள்ளைகள் கிருஷ்ணா வித்தியா ஆகியோருடனும் மனைவி தவமணியுடனும்,
த்தில் நடைபெற்ற கூட்டுவழிபாட்டின் பின் தயா சுவாமிகளுடன்.
33

Page 36
ஒரு சாதாரண மனிதனின் சிந்தனையில்.
“கெள
இது சிவாஜி அவர்கள் நடிப்பில் வெளிவந்த திரைப்படத்தின் கதை என்று எண்ணிவிடாதீர்கள். எது கெளரவம் என்று பார்ப்போம்.
ஒரு துறையில் அல்லது பல துறைகளில் தமது வாழ்க்கையை அர்ப்பணித்து அந்தத் துறைகளில் போற்றக் கூடிய வகையில் உழைத்து அந்தத் துறைக்கும் தனக்கும் பெருமை தேடிக் கொண்டவர் களைக் கெளரவிப்பது என்பது பண்டைய காலம் தொட்டு நடைபெற்று வரும் நடைமுறையாகும். தருமி "பொற்கிழி’ பெற்ற கதை. திருவிளையாடல் திரைப் படம் மூலம் எம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் அறிந்து கொண்ட ஒரு கதையாகும். முன்னர் அரசர்களும் பின்னர் அரசாங்கங்களும் அவற்றைத் தொடர்ந்து கெளரவமான அமைப்புக்களும் விருதுகளும் பட்டங்களும் கொடுத்து வருகின்றன. தனிநபர் முதலாக பல அமைப்புகள் வரை கெளரவப் படுத் துவதன் மூலம் கொடுக்கும் விருதுகளுக்கும் பட்டங்களுக்கும் பெறுபவர்களுக்கும் கொடுப்பவர்களுக்கும் பெருமை சேர்த்துக் கொண்டனர். இன்று தொலைக்காட்சியைத் திருப்பினால், போகும் வழியில் தடக்கி விழுந்தால் ஒரு விருதும் பட்டமும் கொடுக்கும் இந்தக் காலகட்டத்தில், உண்மை என்ன என்று இந்தச் சாதாரண மனிதன் அறிய விரும்பியபோது கிடைத்த தகவல்களை, கிடைத்த விடயங்களை இங்கே தருகின்றேன்.
உண்மையில் உரியவர்களுக்குத்தான் இந்த விருதுகளும் பட்டங்களும் தரப்படுகின்றனவா? நாம் நம்பிக்கை வைத்துஉள்ள வெகுஜனத் தொடர்பு சாதனங்கள் தரும் செய்திகளை எடுத்து நோக்குவோம். இவை உண்மை போலத் தோன்றினாலும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் உண்மை அற்றது என்பது கண்கூடு. நாம் ஆராய்ந்து பார்க்கும்போது குறிப்பிட்ட விருது கொடுப்பதில் முடிவு எடுக்கும் சில மனிதர்களுக்கு உரிய குணங்களாகிய பித்தலாட் டங்கள், சுயலாபங்கள் போன்றவற்றிற்கு முக்கியத் துவம் கொடுத்தே முடிவு எடுத்து விருதுகளும் பட்டங்களும் வழங்குகிறார்கள் என்பது தெரியவரும். இதன் காரணமாக சில வேளைகளில் கெளரவத்திற்கு உரியவர்களே புறக்கணிக்கப்படுகிறார்கள். சில எடுத்துக்காட்டுகள்:
நோபல் பரிசு என்பது ஒவ்வொரு வருடமும் உலக சமாதானம் முதலாக இலக்கியம், விஞ்ஞானம்,

ாரவம்’
9
LJub G.
பொருளாதாரம் என்ற துறைகளுக்கு வழங்கப்படுகிறது. அந்தத் துறைகளில் மிக அரிய பங்களிப்புச் செய்தவர்களுக்கு வழங்கப்படும் இவ்விருது எங்களில் அனேகமானோருக்குப் பரிச்சயமான ஒரு விருது ஆகும். மகாத்மா காந்தி அவர்கள் இந்தியா மற்றும் தென்னாபிரிக்க விடுதலைப் போராட்டத்திற்கு அகிம்சா வழியினைப் பின்பற்றினார். இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்தது. அவர் இறப்பதற்கு முன் அவரது மேன்மைக்காக மூன்று தடவைகள் அவருக்கு நோபல் விருது கொடுக் கப்பட இருந்தது. இருந்தும் இந்தியாவை அந்தக் காலகட்டங்களில் ஆண்டு வந்த பிரித்தானியாவுக்கும் தமக்கும் இருந்த நல்ல உறவு முறை பாதிக்கக் கூடாது என்பதற்காகவே அவ் விருதைக் கொடுக்காமல் தவிர்த்து விட்டனர். இன்று அந்த மகாத்மாவிற்கு விருது கொடுத்து அந்த விருதுக்குப் பெருமை சேர்த்துக் கொள்ளவில்லை என்பது நோபல் விருது கொடுக்கும் அந்த அமைப்பிற்கு இருக்கும் ஆதங்கமாகும்.
சிவாஜி என்கின்ற தன்னிகரற்ற தமிழ் நடிகர், வெளிநாடொன்றில் நடிப்பிற்காகப் பரிசு பெற்றுத் தமிழ் மொழிக்கும் இந்திய மண்ணிற்கும் பெருமை சேர்த்தார். அந்தப் பிறவி நடிகனுக்கு இந்தியாவை ஆண்ட அரசுகள் விருது வழங்க மறந்துவிட்டன. அவர் பச்சோந்தியாக இல்லாமல் இருந்தமைக்காகவே "பாரத இரத்தினா” பட்டத்தைக் கொடுக்காமல் தவிர்த்து விட்டன. இந்த இரண்டு உதாரணங்களுமே போதும் மற்றைய விருதுகள், பட்டங்கள் கொடுப்பதற்குள் எவ்வளவு தில்லு முல்லுகள் இருக்கும் என்பதை உணர்ந்து கொள்வதற்கு.
பாரதியின் பாடல்களா, பாரதிதாசன் பாடல்களா சிறந்தவை என்று பட்டி மன்றங்கள் நடப்பதுண்டு. ஆனால் பாரதியையும் நான் விஞ்சி விடுவேன் என்று இன்றைய காலகட்டக் கவிஞர்கள் சிலர் தலைக்கணம் கொண்டுள்ளனர். மறைந்த கவிஞர்களை விஞ்சி விட்டோம் என்று எண்ணி மகிழ்ந்து “கவியரசு” அதையும் வென்ற “கவிப் பேரரசு” போன்ற பட்டங் களை ஏற்றுக் கொள்ளும் கவிஞர்கள் போலல்லாது பாரதியின் தாசனாகத் தன்னை ஆக்கிக் கொண்ட அந்த சுப்புரத்தினத்தின் செயல்தான் கெளரவம், GU(560)LD.
பாரதிதாசனின் தாசனாகத் தன்னை வரித்துக் கொண்டு சுப்புரத்தினம் தாசனாக மாறிய கவிஞர்

Page 37
சுரதாவின் செயல்தான் பெருமை, கெளரவம். கவியரசு, கலையரசு போன்ற பட்டங்கள் அந்தப் பட்டங்களை முதலில் பெற்றவர் களின் பெயர்களுடனேயே ஒட்டிக்கொள்கின்றன. அவர்களை மிஞ்சக்கூடிய வகையில் மதிக்கப்பட வேண்டும் என்ற எளிய மனித மனங்களில் ஆசை வருவதில் தவறொன்றுமில்லை. அதைச் செயலிலே காட்ட வேண்டும். மக்கள் அங்கீகரிப்பார்கள். அதைவிட்டு பேரரசாக மாறுவதும் பட்டங்களை ஏற்றுக் கொள்வதும் சிறுமை என்பது இந்தச் சாதாரண மனிதனின் தாழ்மையான எண்ணம்.
“பண்டிதமணி” என்ற பட்டத்தைப் பெறறவரும்
அருள்மிகு நல்லூர் முருகன் ஆலயத்தில் முற்றோதிய அடியார்களுக்கு
 

அதற்குத் தகுதியானவராகவும் ஒருவர் இருந்தார். ஆனால் அந்தப் பட்டம் தமிழ்ப் பெரியார் கணபதிப்பிள்ளைக்குரியது என்று அந்தப் பட்டத்தைத் தனது பெயருடன் அவர் இணைத்துக் கொள்ள விரும்பவில்லை. அவர்தான் எனது மானசீக தமிழ்க் குரு வி. கந்தவனம் அவர்கள். இச்செயல் அவர் மேல் எனக்கு இருந்த மதிப்பை இன்னும் உயர்த்தியது. அதுதான் கெளரவம். விருதுகளையும் பட்டங்களையும் கொடுப்பதற்கும் பெறுவதற்கும் ஒரு (இக்கட்டுரை கவிஞருக்கு கலாநிப்பட்டம் கிடைப்பதற்கு
முன்னதாகவே எழுதப்பெற்றது.15-11-2001 உலக தமிழோசையில்
வெளியிடப் பெற்றது.) நன்றி. உலக தமிழோசை
திருப்புகழ் விழாவின் பொழுது திருப்புகழ் சான்றிதழ் வழங்கும் காட்சி
35

Page 38
கந்தபுராணத்தினாலே தமிழும் சைவமும் ஓங்கி வளர்ந்து வருகின்ற யாழ்ப்பாணத்துக்கு ஒரு நாள் கண்ணுாறு உண்டானது.
மிலேச்சர்களான பறங்கியர்கள் யாழ்ப்பாணத்தை எட்டிப்பார்த்தார்கள்.
அன்றே நமது நாட்டுக்கு வந்தது நாசம். தமிழ் அரசு மறைந்தது.
தமிழரசர்கள் யாழ்ப்பாணத்து நள் லே ஒரு தமிழ்ச்
சங்கம் தாபித்திருந்தார்கள்.
இரகுவம்சம் என்கின்ற இலக்கியம், பரராசசேகரம் என்கின்ற ஒப்புயர்விலலாத வைத்தியம், செகராச சேகரம் என்கின்ற சோதிடம் அந்தச் சங்கத்தின் பெறுபேறுகள். தமிழரசுடன் சங்கமும் தொலைந்தது. காக்கைவன்னியன் என்கின்ற கோடரிக்காம்பு பறங்கியரை வரவேற்றான். திருக்கேதீச்சரம் திருக்கோணமலை ஆகிய தேவாரம் பெற்ற புண்ணிய ஸ்தலங்களும் மற்றும் சைவாலயங்களும் தரைமட்டமாயின. பெரிய பெரிய புள்ளிகளெல்லாம் “தொன்சுவான்"கள் ஆயினர். பிரசித்திபெற்ற நல்லூர்க் கந்தசுவாமி கோயில் எசமான் கூடத் தமது பெயருக்கு முன் ஒரு பிரணவம் சேர்த்துத் தொன்சுவான் இரகுநாத மாப்பாணமுதலியார் என்று எழுத நேர்ந்தது. தலைப்பாகை வைக்க வேண்டு மென்பது சட்டம். வாழையிலையில் சாப்பிடுவதே சமயத்துரோகம். பசுக்கொலை பெரிய புண்ணியம். இந்தக் கொடுமைகளைச் சகிக்காமல் திருநெல்வேலி யிலிருந்த ஞானப்பிரகாசர் போன்ற மகான்கள் பிறவிக் கடலை நீந்துகிறவர்கள் போன்று, பாக்கு நீரிணையை நீந்தி வேதாரணியக்கரையை அடைந்து தாய்நாட்டிற் சரண்புகுந்தார்கள். இவ்வாறே நூற்றைம்பது வருடகாலம் கழிந்தது. அதன்மேல் ஒல்லாந்தர் கண்வைத்தார்கள். அவர்களும் பறங்கியர் போலவே நூற்று முப்பது வருடம் யாழ்ப்பாணத்தைத் தலைகீழ் செய்தார்கள். ஏறக்குறைய முந்நூறு வருடகாலம் யாழ்ப்பாணத்தின் துரதிஷ்ட காலம்.
“முந்தொரு காலத்தில் மூவுலகந் தன்னில் வந்திடும் உயிர்செய்த வல்வினை அதனாலே அந்தமில் மறையெல்லாம் அடிதலை தடுமாறிச் சிந்திட முனிவோருந் தேவரும் மருளுற்றார்”
என்று கந்தபுராணம் கூறுகின்ற அடிதலை தடுமாறற நிலையை அன்று யாழ்ப்பாணம் அடைந்திருந்தது. இன்றைக்குப் பிரிவினை என்கின்ற தீவினையினாலே
 

தாய்நாட்டிற் சில பகுதிகள் படுகிறபாட்டை அன்றைக்கே யாழ்ப்பாணம் பட்டது. அம்மை நோய் வந்தவர்களின் முகம்போல ஈழநாட்டின் முகமாகிய யாழ்ப்பாணம் அழகு குலைந்து கிடந்தது. ஆனால், யாழ்ப்பாணத்தின் அகத்தே தமிழரசர் காலத்திலே சைவாலயங்களில் ஆரம்பித்து வைத்த கந்தபுராண ஊற்று நரம்புத் துய்கள் தோறும் குமுறிக் கொண்டிருந்தது. அந்தச் சந்தர்ப்பத்தில் வந்து சேர்ந்தார்கள் வெளிக்கு நல்ல பிள்ளைகளான வெள்ளையர்கள். யாழ்ப்பாணம் இரு கரங்களையும் விரித்து அவர்களை வரவேற்றது. அவர்கள் சர்வசமய சுயாதீனம் தமது இலட்சியம் என்று வாய்மலர்ந்தார்கள். தரைமட்டமான சைவாலயங்கள் தலைநிமிர்ந்தன. கந்தபுராணம் முன்னையிலும் மேலோங்கியது. "பிரிந்தவர் கூடினாற் பேசவும் வேண்டுமோ!” சைவமுந் தமிழும் கந்தபுராண மூலம் தலைநிமிர்ந்தன. வெள்ளையர்கள் “ஒகோ” என்று திகைத்தார்கள். அவர்கள் கசக் கிருமிகள். பறங்கியர் ஒல்லாந்தர் அன்றறுக்கிறவர்கள். இவர்கள் நின்றறுக் கிறவர்கள். வெள்ளையர் மிக மிக நல்ல பிள்ளைகளாய் நமது சந்ததிக்கு இரங்குகிறவர்கள் போன்று கல்வியைக் கிறிஸ்தவப் பாதிரிகளிடம் ஒப்பித்தார்கள். அவர்கள்,
"நல்லவழி காட்டுவோம் உடுபுடைவை சம்பளம்
நாளுநாளுந் தருகுவோம் நாம் சொல்வதைக் கேளும்”
என்று மருட்டித் தமது நாட்டுக் கல்வியைப் பரப்ப ஆரம்பித்தார்கள். கந்தபுராணம் தாண்டவம் ஆடுகின்ற திண்ணைப் பள்ளிக்கூடங்கள் ஒதுங்கி மறைந்தன. கந்தபுராண கலாசாரத்துக்கு மெல்ல மெல்ல வெந்நீர் விடத் தொடங்கினார்கள். அந்த அந்தச் சமயத்தவர் களுக்கு அவ்வச் சமயத்தில் அவர்கள் வைத்திருக்கும் விருப்பைக் குலைப்பதே வெள்ளைக் கல்வியின் அடிப்படை நோக்கமாயிருந்தது. மூலவேரில் வேலை செய்தார்கள் ஆங்கிலேயர்கள். யாழ்ப்பாணத் தலைவர்களின் உயர்தர வாழ்க்கை உத்தியோக மேன்மைகள் பாதிரிமாரின் கைக்கயிற்றில் தங்கியிருந்தன. யாழ்ப்பாணமாகிய பாவையை வேண்டியவாறு கூத் தாட்டிக் கொண்டிருந்தார்கள். காரியந் தெரிந்தவர்களின் உள்ளங் கொதித்தது. அந்தக் கொதிப்புக் கந்தபுராணக் கொதிப்பு. அக்கொதிப் பினின்றும் ஒரு குழந்தை யாழ்ப்பாணத்து நல்லூரிலே கொதித்துக் கொண்டே உதயம் செய்தது. வெள்ளையர்களின் சூழ்ச்சியைக் குழந்தைப் பருவத்திலேயே உணர்ந்து கொண்டது.

Page 39
குழந்தை வளருகின்றது. குழந்தையின் சூழல் பொல்லாத கிறிஸ்தவச் சூழல். ஆயினும் அக்குழந்தை கந்தபுராண உதிரத்தில் பிறந்து கந்தபுராணத்தில் வளர்ந்தது. இருபத்தாறு வயசு நிரம்பி இருபத்தேழாம் வயசு தொடங்குகின்றது. குழந்தை வாலிபனாய் விட்டது. அந்த வாலிபருக்குச் சிவஞான சித்தியாரிலிருந்து ஒரு பாட்டோ சிவஞானபோதத்திலிருந்து ஒரு சூத்திரமோ சொல்லி வைத்தற்கு அப்பொழுது இங்கே மருந்துக்கு ஒரு ஆளில்லை. “பைபிள்” போதிக்க மாத்திரம் எத்தனையோ ஆட்கள் இங்கு உண்டு. வாலிபருக்குப் “பைபிள்” முழுவதும் நல்ல வாய்ப்பாடம். அந்த வாலிபர் ஆர்?
இருபத்தாறு வயசு நிரம்பிய கெம்பீரமான ஒரு வாலிபர் கந்தபுராண உணர்ச்சி வீறுகொள்ள இந்த யாழ்ப்பாணத்திலிருந்து தாய்நாட்டை நோக்கி நடக்கின்றார். அங்கே சைவத்துக்கும் தமிழுக்கும் உறைவிடமான திருக்கைலாச பரம்பரைத் திருவாவடு துறை ஆதீனம் அந்த வாலிபரை வரவேற்கின்றது. சித்தியாருக்கு உரை கண்டவருள் ஒருவரான ழரீலழரீ சுப்பிரமணிய தேசிகள் அவ்வாலிபரை ஒரு உபந்நியாசம் செய்யும்படி குறிப்பிடுகின்றார். வாலிபர் புட்கலாவர்த்த மேகமாய் மாறிப் பிரசங்கமழை பொழிகின்றார். அவருடைய பேச்சு அதியற்புத அதிமதுரச் சுத்தச் செந்தமிழாயிருந்தது. பேச்சின் கருத்துச் சுத்தாத்துவித சைவசித்தாந்தத்தின் சிகரமாய் மிளிர்ந்தது. ஆதீனம் ஆராமை மிக்கு அந்த இளம் வாலிபரை "நாவலர்” என்று வாழ்த்தியது. நாவலருக்குச் சைவசித்தாந்த உணர்ச்சி எங்கிருந்து வந்தது? கந்தபுராணத்திலிருந்தே வந்தது. அதை அவர் அறியாமலே இருக்கலாம். கந்தபுராணம் நாவலர் இரத்தத்தில் ஊறியிருந்தது. நாவலர் மீண்டு யாழ்ப்பாணத்திற்கு வந்தார். அன்றைய சூழல் நாவலரை ஒரு சீர்திருத்த புருஷர் ஆக்கியது. சைவத்தையும் தமிழையும் வளர்த்தற்கென்று நாவலர் தம்மை அர்ப்பணஞ் செய்தார். தாய் நாட்டையும் இந்தச் சேய்நாட்டையும் ஒப்பிட்டு நோக்கிச் சீர்திருத்தங்களை ஆரம்பித்தார். அப்பொழுது தாய்நாட்டிற் காணாத ஒரு அநுகூலக்காற்று இங்கு தோன்றாத் துணையாய் உதவுவதை நாவலர் கண்டார். அந்த அநுகூலக் காற்று யாது என்பதை நாவலர் கூற்றிலிருந்தே காண்போமாக.
அநுகூலக்காற்று: இந்தியாவிலே சைவசமயிகளுக்குள்ளும் சைவ சமயத்தில் உட்பற்றில்லாதவர்கள் பலரேயாகவும், இவ் வியாழ்ப்பாணத்திலே கிறிஸ்து மதத்திற் புகுந்தவர்களுள்ளும் சைவசமயத்தில் உட்பற்றற்றவர் அரியர் ஆதலாகிய இத்துணை விசேடத்துக்குக் காரணந்தான் என்னை என்னிற் கூறதும்:
“எத்துணைக் காலந் திருப்பித் திருப்பிப் படிக்கினும் கேட்பினும் எட்டுணையுந் தெவிட்டாது தித்தித்தமுதுாறும் அதியற் புத அதிமதுரத் திவ்விய வாக்கியம்

கந்தபுராணத்துள்ள பதியிலக்கணத் திருவிருத்தங்களைக் கேட்டல் சிந்தித்தல்களினாலே இவர்கள் உள்ளத்து ஊற்றெடுத்த மெய்யுணர்வேயாம்.”
"பாதிரிமார்கள், கிறிஸ்துமதம் எத்தேசத்திற் பரவினும் பரவும் யாழ்ப்பாணத்தில் உள்ளபடி பரவாது என்று அந்தரங்கதிற் புலம்புகின்றார்கள்.
"இந்தியாவிலே சிவபுராணப் பிரசங்கம் செய்யும் கோவில்கள் மிக அரியன. இத்தேசத்திலே அது செய்யப்படாக் கோயில் இல்லை. இந்தியாவிலோ வித்துவான்கள் சைவசமயக் குருமார் முதலியோர் களுள்ளும் கந்தபுராணம் முதலியன அறிந்தவர் சிலர். இத்தேசத்திலோ பெண்களுள்ளும் அவை அறியாதார் இலர்.
"இப்போதும் இருக்கின்ற ஒரு கிறிஸ்து சமய உபதேசியார் ஏறக்குறைய இருபத்தெட்டு வருஷங் களுக்கு முன் நம்முள்ளே நால்வருடன் அந்தரங்கத்திற் கலந்து பேசியபோது “பைபிள்” வசனங்களெல்லாம் ஒருங்கு திரணி டுங் கந்தபுராணத்து அவை புகுபடலத்தினும் அமைச்சியற் படலத்தினும் உள்ள பதியிலக்கணத் திருவிருத்தங்களுள் ஒன்றனது ஒரடிக்குத் தானும் ஆற்றாது! ஆற்றாது! என்ன அற்புதம்!” என்று கண்ணிர் வார உரோமஞ் சிலிர்ப்ப மிக்க ஆராமையோடு சொல்லினர்.
"இவ்வியாழ்ப்பாணத்திலே நெடுங் காலம் வாசஞ்செய்து கொண்டு சைவசித்தாந்த பண்டிதர்களோடு பலகாலும் சமயவாதஞ் செய்து சைவசித்தாந்த உண்மையை அறிந்த சில பாதிரிமார்களுக்கு உட்பற்றுச் சைவசமயத்திடத்தேயாம். இவ்வுண்மையை அவர் களோடு அந்தரங்கத்திற் கலந்து சம்பாவித்த விவேகிகளுக்கு இனிது விளங்கும். அப்பாதிரிமார்கள் நமது பெரியபுராணத்துச் சாக்கிய நாயனார் போலக் காலம் விட்டார்கள்; விடுகின்றார்கள்; விடுவார்கள். மனத்திலே பதிருப கிறிஸ்து மதப் பிரசங்கம்!!! சைவசித்தாந்திகளுடைய மணமும் வீசப்பெற்றறியாத மற்றைய பாதிரிமார்கள் யாது செய்வார்கள்! பாவம்!! UT6Lib!!!'
"பாதிரிமார்கள் எதிரே முழங்காற் படியிடுதல், இராப்போசனம் எடுத்தல் முதலிய கிரியைகளினாலும் கோடுகளிலே விவிலிய புத்தகம் எடுத்துப் பிரமாணம் பணி ணுகையினாலும் கிறிஸ்தவர்கள் போல நடிக்கின்றார்கள். ஆயினும் தங்கள் தங்கள் வீடுகளிலே விபூதி தாரணம் அநுட்டானம் செய்து கொண்டும், சைவசமயக் கோயில்களிலே செய்யப்படுகிற பூசை திருவிழா முதலியவைகளுக்கு வேண்டும் திரவியங்கள் கொடுத்தனுப்பிக் கொண்டும், தாங்கள் அங்கே போய் மறைவாகத் தரிசனஞ் செய்து கொண்டும், தங்கள் மனைவியரை அங்கே அனுப்பிக் கந்தபுராணம் கேட்பித்துக் கொண்டும், தங்களுக்கும் தங்கள் பெண்டிர் பிள்ளைகளுக்கும்வியாதி வந்தபொழுது பிாா^”

Page 40
ரிடத்திலும் குருக்கண்மாரிடத்திலும் பணங்கொடுத்து அவரைக் கொண்டு சிவபூசை கிரக செபம் முதலியன செய்வித்துக் கொண்டும் வருகின்றார்கள்.
“சைவசமயத்தை இகழ்ந்துங் கிறிஸ்து சமயத்தைப் புகழ்ந்தும் பற்பல புத்தகங்கள் எழுதி அச்சிற் பதிப்பித்துப் பரப்பிய எத்தனையோ கிறிஸ்தவர்கள் இப்பொழுது வெளிப்பட விபூதி தரித்துத் தாங்கள் முன்னே எழுதியவைகள் எல்லாம் அபத்தம் அபத்தம் என்று மறுத்துச் சைவ சமயமே மெய்ச் சமயம் என்று பாராட்டிக்கொண்டு திரிவதை அறியாதவர் யாவர்!”
இந்த வசனங்கள் அநுபவமுதிர்ச்சியில் 1872ல் நாவலர் அவர்கள் எழுதி வெளியிட்ட யாழ்ப்பாணச் சமயநிலை என்ற புத்தகத்தில் உள்ளவை.
கந்தபுராண கலாசாரம் அருஞ் சந்தர்ப்பத்தில் நமக்கு ஒரு நாவலரைத் தந்தது. அன்றி நாவலர் எடுத்த முயற்சிகளுக்குத் தோன்றாத் துணையாய் அநுகூலமும் செய்தது. நாவலர் அவர்கள் எடுத்த முயற்சிகளைப் போலிச் சைவர்கள் எதிர்த்தார்கள். கிறிஸ்தவர்கள் எதிர்க்கவில்லை. அப்பொழுது "இஃது என்ன ஆச்சரியம்!” என்று நாவலர் அவர்கள் ஆச்சரியப் பட்டார்கள். பிறகு ஆச்சரியப்படவில்லை. கிறிஸ்தவர்கள் எதிர்க்காமையின் மூலகாரணத்தை நாவலர் அவர்கள் பின்பு கண்டு கொண்டார்கள்.
இத்தேசத்தில் கிறிஸ்து சமயத்தைப் பரப்புதற்கு மேலைத்தேசத்திலிருந்து வந்தவரும், "பைபிளின் தமிழ் மொழிபெயர்ப்பை நாவலர் அவர்களைக்கொண்டு திருத்துவித்தவரும் ஆகிய பார்சிவல் பாதிரியார் யாழ்ப்பாணத்துத் தமிழ்க் கிறிஸ்தவர்களைப் "பஞ்சாட்சரக் கிறிஸ்தவர்கள்” என்று சிலேடையாகச் சொல்லுவாராம்.
சிவயோகசுவாமிகளி
* உலகத்தை திருத்துவதிலும் நம்மைத் திருத்துவோமா * ஒருவனிடமுள்ள பத்து நல்ல குணங்களை விட்டுட்டு
எவ்வளவு பேதமை. * தொல்லைகளில் இருந்து நன்மை பிறக்கும் நன்ை * ஒளவையார் மொழிகளில் எல்லா உண்மைகளும்
படித்தால் போதும். * நோயும் ஒரு வரப்பிரசாதம். நோய் ஏற்படுவதாலே * எங்கள் செயலாவது ஒன்றுமில்லை. எல்லாம் எப்ப * வினைபோகும் வினையோடு வந்த உடல்போகும்.
இருப்பதே சமயவாழ்வு. * அன்பினால் அடிக்க வேண்டும். * நினைத்தால் தான் காணலாம் நினையாது விட்டால்
அவற்றை எப்போதாவது அடைந்தே தீருவீர். * தகுதியற்றவர்களைப் பார்த்து இரங்காதே. அது உ * மகான்களின் சகவாசத்தினால் பெறும் அனுபவம் * இறைவன் அறிய முடியாதவர். அவரின் அரும்பெ(

"சம்பளம்” என்ற வார்த்தையில் ஐந்து அட்சரங்கள் உண்டு. பஞ்சாட்சரம் என்பதற்குப் பாதிரியார் சொல்லுகிற ஒரு கருத்து (சம்பளம்) இது. மற்றக் கருத்து வெளிப்படை
பார்சிவல் பாதிரியாரைத்தான் "நமது சாக்கிய நாயனார் போலக் காலம் விட்டார்கள். விடுகின்றார்கள்’ என்று நாவலர் அவர்கள் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்பதிற் சந்தேகமே இல்லை. பார்சிவல் பிற்காலத்தில் பாதிரி யுத்தியோகத்தையே பரித்தியாகம் செய்துவிட்டார். யாழ்ப்பாணக் கலாச்சாரம் அவரை அப்படிச் செய்யச் செய்ததுபோலும். சி. வை. தாமோதரம்பிள்ளை சைவ மகத்துவம் எழுத நேர்ந்ததும், கறொல் விசுவநாதபிள்ளை பொன்னுசி காய்ச்சி நாவிற் சுட்டுச் சைவத்துக்குத் திரும்பியதும் பிரசித்த வைபவங்கள் இன்னும் எத்தனையோ வைபவங்கள் நடந்திருக்கின்றன. சமீபத்தில் காலஞ்சென்ற கிறிஸ்தவ போதகர் ஒருவர் சிவஞான சித்தியாரை வசனஞ்செய்து வைத்துப் போயிருக்கின்றார். அவ்வசன நூலில் ஓர் இடத்தில் முன்பின் அதிக இயைபு இல்லாமலே "கலியுகத்தில் கந்தசுவாமி உபாசனையே விசேஷம்" என்ற கருத்து வருகின்றது. கந்தபுராண கலாசாரம் அவர் தம் வசமிழந்து அப்படி எழுதும்படி செய்வித்துவிட்டது. இது நிற்க.
கந்தபுராணப் படிப்பு நாவலர் காலத்திலே உச்ச நிலையை அடைந்தது. அவருக்கு ஒரு மருமகள் உரை சொல்லுதற்கென்றே பிறந்தவர். அப்பொழுது சைவாலயங்கள் தமிழும் சைவமும் வளரும் சர்வகலாசாலைகள் ஆயின.
நன்றி: சைவரீதி கொழும்பு
‘ன் அருள்மொழிகள்
க. துட்டகுணங்களைப் பற்றி விழிப்பாயிருக்க வேண்டும்.
இரண்டொருகுறைகளை மாத்திரம் எடுத்துப் பேசுதல்
மக்கும் தொல்லை வரும்.
உபநிடதகாரமும் உள்ளது. அவற்றையே மனிதர்
கடவுளை நினைக்கின்றோம். வோ முடிந்த காரியம்.
எல்லோரோடும் சமாதானமாகவும் சந்தோஷமாகவும்
வராது. எது எது வேண்டுமென்று நினைக்கின்றீர்களோ
னக்கு கேடுவிளைக்கும்.
நூல்களை வாசித்து பெறுவதிலும் சாலச் சிறந்தது. நம் அடியார்கள் மூலமே அவரே அறியலாம்.

Page 41
பெரியபுராணமும் ( கலாநிதி செல்வி தங்க தலைவர்: துர்க்கா தேவி தே
“இறைவரோ தொண்டருள்ளத் தொடுக்கம் தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே'
என்பது ஒளவையாரின் வாக்கு. நினைபபவர் மனம் கோவிலாய்க் கொண்டவன் பெருமான். இதனாலேயே அடியவர்களின் பெருமை ஆண்டவனின் பெருமையிலும் பார்க்க விஞ்சி நிற்கிறது. இத்தகைய பெருமை யுடையவர்களைப் பற்றி பேசிய புராணம் பெரியபுராணம் என்று போற்றப் படுகிறது. முதற் பதினொரு திருமுறைகளும் இறையின்பத்தின் நிலைமையை எடுத்தோதுவன. ஈற்றிலுள்ள பன்னிரண்டாந் திருமுறை மாத்திரந்தான் இறையின்பத்தில் திளைத்த அடியார் களைப் பற்றிக் கூறுவது.
“காலையும் மாலையும் கைதொழு வார்மனம் ஆலய மாமே அரநெறி யார்க்கே"
என்னும் திருமுறைக்கேற்ப அடியார்களின் உள்ளமே ஆண்டவனுக்குரிய இடமாகும். இறைவன் திருவருள் எங்கும் நிறைந்திருந்தாலும் சிறப்பாக வெளிப்பட்டு விளங்குவது சிவனடியார்களிடத்திலேதான் என்று அறிகிறோம். இதனை நீதிவெண்பா என்ற நூல் அழகான முறையில் விளங்குகிறது. வெப்பமானதாகிய சூரியனது கிரணத்தில் நின்றாலும் நிற்கலாம். அக்கிரணத்தைப் பெற்று வெப்பமாக விளங்கும் மணலின்மேல் நிற்றல் முடியாது. அதே போன்று இறைவனுடைய அருளாற்ற லிலும் பார்க்க அவ் வருளைப் பெற்று நிற்கும் அடியவர்களின் அருளாற்றல் வியத்தற்குரியதாகும்.
"ஈசனெதிர் நின்றாலும் ஈசனருள் பெற்றுயர்ந்த நேசரெதிர் நிற்ப தரிதாமே - தேசுவளர் செங்கதிர்முன் நின்றாலும் செங்கதிர் வன்கிரணம் தங்குமணல் நிற்பதரிதே தான்.”
இவ்வாறு நீதிவெண்பா என்ற நூல் அழகாக விளங்குகிறது.
சேக்கிழார் நற்பணி
தோத்திரங்களுக்கும் சாத்திரங்களுக்கும் இடைப்பட்ட ஒரு காலத்திலேயே சேக்கிழார் சுவாமிகள் வாழ்ந்தார். மெய்கண்ட தேவநாயனாருக்கு எழுபது வருடம் முந்திவாழந்தவர் இவர். காலத்தை நோக்கி இவர் ஆற்றிய இந்தச் சேவையினால் சைவத் தமிழுலகம்
 
 
 

சைவசித்தாந்தமும் கம்மா அப்பாக்குட்டி வஸ்தானம், தெல்லிப்பழை
மூன்று பெரும் பயன்களை அடைந்ததெனலாம். முதலாவது ஆட்சிபீடத்திலே சைவத்தை ஏற்றி வைத்த பெருமையாகும். இரண்டாவது நாயன்மார்கள் வரலாற்றை உலகுக்குக் காட்டிய சிறப்பாகும். மூன்றாவது சைவசித்தாந்த சாத்திரங்களில் எட்டு நூல்களை ஆக்கிய உமாபதிசிவாச்சாரியார் அவர்கள் சேக்கிழாருக்கு ஒரு தனிப்புராணம் இயற்றினார். மாதவச் சிவஞான சுவாமிகளும் “எங்கள் பாக்கியப் பயன் சேக்கிழார்” என்று போற்றினார். இன்னும்
"தூக்கு சீர்திருத் தொண்டத் தொகைவிரி வாக்கினாற் சொல்ல வல்ல பிரான்” என்று குறித்தருளினார்.
நூலின் தோற்றம் அரசன் அநபாயசோழன் திருமுறை முதலிய நூல்களில் ஈடுபட்டுத் திருவருளைப் பெற்று உயப்யாமற் சீவகசிந்தாமணி போன்ற காப்பியங்களிலே ஈடுபாடு கொண்டு சுவைப்பதைச் சேக்கிழார் உணர்ந்தார். இந்த ஈடுபாட்டை மாற்றவேண்டுமென்று கருதி அரசனுக்குச் சிவகதைகள் பற்றிச் சுருக்கமாக விளக்கினார். இதனால் திருத்தொண்டர் களது வரலாற்றை விரிவாகப் பாடித்தரும்படி அமைச்சராகிய இவரை அரசனே வேண்டிக்கொண்டான். அவனது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு திருத்தொண்டர்களது வரலாற்றை எடுத்துப்பாடுவதில் பெருமகிழ்ச்சியடைந்தார். ஆனால் பாடுவதற்குத் தனக்குத் தகுதியுண்டா என்று எண்ணி, ஏங்கி இறைவனை நினைந்தார்.
"ஊனக்கண் பாசம் உணராப் பதியை ஞானக் கண்ணினிற் சிந்தை நாடி"
என்னும் சைவசித்தாந்த விளக்கப்படி இறைவனே தனக்கு உள்நின்று உணர்த்த வேண்டுமென்று நினைத்தார். தில்லையே நோக்கிச் சென்றார். அதன் எல்லையிலே வீழ்ந்து வணங்கினார். திருக்கோவிலில் புகுந்து வலம் வந்து கனகசபையிலே சுத்தப் பெரு மானைக் கண்டு வணங்கி “எம்பெருமானே! உன்னடியார் களது பெரும்புகழைப்பாட அடியேனுக்கு அடியெடுத்துக் கொடுத்தருளல் வேண்டும்” என்று வணங்கினார்.
உலகெல்லாம் தில்லையம் பலவன் திருவருளால் அப்பொழுது

Page 42
“உலகெலாம்” என்ற பேரொலி அசரீரியாக எழுந்தது. இதனை அறிந்து கொண்ட தில்லைவாழ் அந்தணர்கள் சேக்கிழாரது திருவருட் பெருமையை வியந்து கூத்தப் பெருமானது திருமாலையைத் திருநீற்றுடன் அவருக்கு அளித்துப் பரிவட்டங்கட்டி வாழ்த்துக்கூறி நின்றார்கள். அவையனைத்தையும் ஏற்றுக்கொண்டு ஆயிரங்கால் மணி டபத் தையடைந்து “உலகெலாம்” என்ற அச்சொல்லையே முதலாகக் கொண்டு புராணத்தைப் பாடதொடங்கினார்.
உலகெலாம் முணர்ந் தோதற் கரியவன் நிலவுலாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.
கூத்தப் பெருமான் எடுத்துக் கொடுத்த இந்த உலகெலாம் என்ற தொடரை முதலாகக் கொண்டு பாடிய சேக்கிழார் இறைவனது திருவடியையே அதன் பொருளாகக் கொண்டு முதற் பாடலை பாடிமுடித்தார்.
முதற்பாடல் தரும் சித்தாந்த விளக்கம்
உலகு என்பது உயிர்களைக் குறித்து நிற்கின்றது. இறைவன் உயிர்களின் சொல்லையும் நினைவையும் கடந்தவன். அதனாலேயே கடவுள் எனப்படுகிறான். பாச ஞானங்களுக்கும் பசு ஞானங்களுக்கும் அப்பாற் பட்டவனாகிய இறைவனை அரியவனாகக் காட்டிய அடிகள் உணர்தல் என்பதால் மனத்தையும், ஒதுதல் என்பதால் வாக்கையும் காட்டி வாக்கு மனாதிதன் என்பதை விளக்குகிறார். இது இறைவனுடைய சொரூபநிலை யாகும். ஆனால் உணர்வதற்கு அரியவனாயினும் எளியவனாக உருவந் தாங்கி நிற்றலால் இரண்டாவ தடியில் "நிலவுலாவிய நீர்மலி வேணியன்” என்கிறார். எனவே இது இறைவனது தடத்த நிலையைக் கூறுகிறது. அத்தடத்த நிலையில் அனந்தசக்தி உயிர்களைப் பஞ்சக்கிருத்தியம் செய்து உயப் விப்பதை விளக்கி “அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்” என மூன்றாமடியில் அருளுகிறார். மலர்சிலம்படி என்பதால் எல்லாப் பொருள்களும் அவனது திருவடியினின்றே தோன்றுவது உணர்த்தப்படுகிறது. பக்குவமுள்ள அன்பர்களின் உள்ளத்திலே மலர்கின்ற சிலம்படி இதுவாகும். நினைத்தல், வாழ்த்தல், வணங்கல் ஆகிய முக்கரண வழிபாட்டையும் சிலம்படிக்குக் கூறித் தொடங்குகிறார். கூத்தப்பெருமான் எடுத்துக் கொடுக்க "உலகெலாம்” என்பதை முதலாகக் கொண்டு தமது வியாபாரத்தை நன்கு செய்தார் என்று மீனாட்சி சுந்தரம்பிள்ளை பாடிச் சேக்கிழாரைச் சிறப்பிக்கின்றார். இவ் வாக்கினை முதல் , நடு, முடிவு என்னும் மூன்றிடத்திலுஞ் சிறப்பாக அமைத்து முடித்திருக்கிறார். திருஞானசம்பந்தர் இறைவன் அளித்த முத்துச்

40
சிவிகையை ஏற்று அதனை வலம் வந்து வணங்கி அஞ்செழுத்து ஓதி அதன் மீது அமர்ந்தார் என்பதை எடுத்துக்காட்டிய இடத்தில்
சோதி முகத்தின்சிவிகை சூழ் வந்துபார் மீது தாழ்ந்துவெண் ணிற்றொளி போற்றி நின்(று) ஆதியார் அருள் ஆதலின் அஞ்செழுத்(து) ஒதி ஏறினார் உய்ய உலகெலாம்
எனப் பாடியுள்ளார். நாலாயிரத்து இருநூற்று எண்பத்தொரு பாடல்களில் ஏறக்குறையப் பாதி அளவில் மேற்காட்டிய பாடல் அமைந்து நடுவில் "உலகெலாம்” என்பது விளங்குகிறது. திருத்தொண்டத் தொகையை அருளிய சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கும் திருவாரூர்ப் பெருமானே அடியெடுத்துக் கொடுத்தார். 660)85 நூலாகிய திருத்தொண்டர் திருவந்தாதிக்கும் திருநாரையூர்ப் பிள்ளையார் அருள் அளித்தார். விரிபாடிய சேக் கிழாருக்கும் அம்பலவாணனே அடியெடுத்துக் கொடுத்தார்.
சுத்தாத்துவித சைவசித்தாந்தப் புதையல் சைவத்தின் குலக் கவிஞராகிய சேக்கிழார் சித்தாந்த உண்மைகளைத் தெளிவுபட இந்நூலில் விளக்கி யுள்ளார். திருமந்திரமும் ஞானாமிர்தம் போன்ற சித்தாந்த சாத்திரங்களும் தோன்றியிருந்த போதிலும் சித்தாந்தத்தின் முப்பொருள் உண்மைகளையும் சாதனம், பயன், முதலிய இயல்புகளையும் சரியை, கிரியை, யோகம், ஞானம், என்னும் விளக்கங்களையும் மிகச் சிறப்பாக விளக்கிய பெருமை சேக்கிழார் சுவாமிகளுக்கே உண்டு. உயிரின் இயல்புகளையும் பசு, பாசஞானங் களின் இயல்புகளையும் பதிஞானத்தின் உயர்வையும், அணைந்தோர் இறைவனுடன் இரண்டறக் கலந்த தன்மையையுந் தெளிவுற விளக்கியுள்ளார்.
இருவகை ஞானம் திருத்தோணிபுரத்தில் ஞானப்பாலூட்டப்பட்ட சந்தர்ப் பத்தில் தவமுதல்வர் சம்பந்தர் ஞானம் பெற்ற தன்மையை விளக்குமிடத்திற் பாடிய,
சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம் பவமதனை யறமாற்றும் பாங்கினிலோங்கிய ஞானம் உவமையிலாக் கலைஞானம் உணர்வாரிய
மெய்ஞ்ஞானம் தவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தா ரந்நிலையில்
என்ற பாட்டில் விளக்கிய ஞானவாய்மையே சிவஞான சித்தியாரில் அப்படியே அடியொற்றி கூறப்படுகிறது. "கேட்டலுடன் சிந்தித்தல் தெளிதல் நிட்டை கிளத்தலென வீரிரணி டாங் கிளக்கின் ஞானம்” என்கிறார்

Page 43
அருணந்திசிவம். கேட்டல், சிந்தித்தல் இரண்டும் நூல் பற்றியதாகையால் அபரஞானம் என்றும் தெளிதல், நிட்டை இரண்டும் நூல் பற்றாததாகையால் பரஞானம் என்றுங் கூறப்படும். உவமையில்லாக் கலைஞானம், உணர்வரிய மெய்ஞ்ஞானம் என்றும் பிரித்துச் சேக்கிழார் காட் டியபடியே அருணநிதி சிவமும் பிரித் து விளக்கியுள்ளார்.
திருப்பாசுர விளக்கம் திருஞானசம்பந்தர் சமணருடன் புனல்வாதஞ் செய்யச் சித்தங்கொண்டு சைவத்தின் பெருமையை உலகிற்குக் காட்டி அருளிய பதிகம் திருப்பாசுரமாகும். இது ஞானபாத முடிவாய சிவஞானபோதத்தின் விளக்கமாய் அமைந்துள்ளது. முதல் மூன்று பாட்டுக்களும் பொதுவகையிலும், பின்பாட்டுக்கள் சிறப்பு வகையிலும் அமைந்துள்ளன. “வாழ்க அந்தணர்” என்ற பாட்டின் விளக்கத்தில் சங்காரக் கடவுளாகிய சங்கரனே முதல்வன் என விளக்கி வேள்விகள் அர்ச்சனைகள் வழிபாடுகள் யாவும் அவனுக்கே உரியதெனக் காட்டுகிறார்.
அந்தணர் தேவர் ஆனினங்கள் வாழ்கவென்று
இந்தமெய்ம் மொழிப்பயன் உலக மின்புறச் சந்தவேள் விகள்முதற் சங்க ரர்க்கு முன்
வந்த வர்ச்சனை வழிபாடு மென்னுவாம்
எனக் கூறி அடுத்தபாட்டில் “உரிய அன்பின்றி காண்பவனிற் குண்மையாம், பெரிய நல்லடையாளங்கள் பேசினார்” என விளக்கி இறைவன் உண்மையன்பர்க்கே காட்சி கொடுப்பான் என்பதையுங்கூறி பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப் படர்ந்த பெருமையையும் விளக்கியுள்ளார். சிவஞானபோதம் 8ம் சூத்திரப் பொருளைச் சேக்கிழார் மெய்கண்டாருக்கு முன்னமே கூறிப்போந்தார்.
தம்மையே சிந்தியா வெனுந் தன்மைதாய் மெய்ம்மை யாகி விளங்கொளி தாமென இம்மையே நினை வார்தம் இருவினைப் பொய்ம்மை வல்லிருள் போக்குவா ரென்றதாம்.
இவ்வாறு பல சைவசித்தாந்தக் கருத்துக்களை எடுத்து விளக்கும் திட்பத்தைத் திருப்பாசுர விளக்கத்திற் காட்டியுள்ளார்.
மும்மலங்கள் பற்றிய விளக்கம்
சைவசித்தாந்த சாத்திரங்கள் மும்மலங்கள் பற்றி விளக்கி நிற்கின்றவெனினும் அவற்றுக்கெல்லாம் முன்னோடியாக நின்று விளக்கந் தந்தவர் சேக்கிழார், நாவுக்கரசரைக் கல்லோடு கட்டிக் கடலிலே போடுகிறார்கள். "கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்

41
நற்றுணையாவது நமச்சிவாயவே” என்ற பதிகம் பாடுகிறார். கல் மிதக்கிறது. தெப்பம் போல் அதன்மேல் உட்கார்ந்து வருகிறார் நாவரசர். இந்த இடத்திற் சேக்கிழார் அதிசயத்தோடு உணர்ந்த ஒரு உணர்வைத் தருகிறார். "இருவினைப் பாசமும் மலக்கல் ஆர்த்தலின், வருபவக் கடலில் வீழ் மாக்கள் ஏறி, அருளும் மெய்யஞ்செழுத்து” என்று கூறி வினையாகிய கர்மம், பாசமாகிய மாயை, மலம், எனப்பட்ட ஆணவம் மூன்றையும் இணைத்து பிறவியென்னும் சக்தி திருவைந்தெழுத்துக்கு உண்டு என்பதை விளக்கி அத்தகைய ஐந்தெழுத்து திருநாவுக்கரசரை ஒரு கல்லோடு பிணிக்கப்பட்டபோது கரையேற்றாமல் இருக்கமுடியுமா என்கிறார். கண்ணப்பநாயனார் புராணத்தில் இன்னும் சிறப்பாக மும்மல விளக்கத்தைக் காண்கிறோம்.
முன்புதிருக் காளத்தி முதல்வனார் அருள்நோக்கால் இன்புறுவே தத்திரும்பு பொன்னானாற் போல் யாக்கை தன்பரிசும் வினையிரண்டும் சாருமல மூன்றுமற
அன்புபிழம் பாய்த்திரிவர் அவர்கருத்தின் அளவினரோ.
திருக்காளத்தி அப்பரைத் தரிசித்த மாத்திரத்திலே திண்ணனரிடத்திற் காணப்பட்ட மாற்றங்களைக் கூறுகிறார். யாக்கை தன்பரிசு என்பது மாயையாகும். மும்மலக்கழிவு குறித்துக் சிவச்சார்பு பற்றி நின்றதைக் காட்டுகிறார். அன்புப் பிழம்பாகிய அடியவரின் மலநாசத்தினால் ஏற்பட்ட மாற்றம் இரசவாதத்தால் இரும்பு பொன்னானாற் போன்ற பெருமாற்றமாகும். பேணுதத்துவங்களென்னும் பெருகுசோ பனமேறி, ஆணையாம் சிவத்தைச்சாரச் சென்றவர் அவர். இங்கே தத்துவங்களின் படிமுறையினையும் தசகாரியம் எனப்படும் சோபன முறையையுஞ் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கின்றார். கூன்பாண்டியன் வெப்புநோய் காரணமாக அல்லலுற்ற நேரத்தில் ஞானசம்பந்தர் பாண்டியனுக்குத் திருநீற்றினைப் பூசிப் பதிகம்பாடி வெப்பை நீக்கிய இடத்திலும் இக்குறிப்பு வருகிறது.
தென்னவன் மாறன் தானும் சிவபுரத்தலைவர் தீண்டிப் பொன்னவில் கொன்றை யார்தம் திருநீறு பூசப் பெற்று முன்னைவல் வினையும் நீங்கி முதல்வனை
யறியுந்தன்மை துன்னினான் வினைகள் ஒத்துத் துலையென நிற்ற
லாலே.
ஞானசம்பந்தரால் நோக்கம் பெற்றவுடனேயும் அவர் நாமம் கேட்டவுடனேயும் திருநீறு பூசப்பட்டுப் பரிசதீட்சை பெற்றவுடனேயும் முன்வினை நீங்கி இறைவனை அறியுந்தன்மையை அடைந்தான் பாண்டியன் எனக் காட்டுகிறார். இளையான் குடிமாறநாயனார் தமது

Page 44
வீட்டுக் கொல்லையில் உள்ள கீரைவகைகளைப் பிடுங்கிச் சிவனடியாருக்குத் திருவமுதுாட்ட நின்ற சமயத்தில் "குழிநிரம் பாத புன்செய்க் குறும்பயிர் தடவிப் பாசப் பழி முதல் பறிப்பார் போலப் பறித்தவை கறிக்கு நல்க”
என்பதால் நாயனாருடைய பாசம், பழிபாவங்கள் அனைத்தையும் வேரோடு களைவது போல அங்கிருந்த குறும்பயிரைக் களைந்ததெனக் கூறப்பட்டுள்ளது.
உய்வானுளன் சாக்கியநாயனார் புராணத்தில் மற்றொரு சைவசித்தாந்தக் கருத்தைக் காண்கிறோம் சாக்கியநாயனார் புத்தர்களது அறத்தின் வழியைச் சார்ந்து நல்ல ஞானமடைவதற்குப் பலவழிகளையும் ஆராய்ந்து அச்சமய முடிவுகளெல்லாம் உண்மைப் பொருளை உணர்த்தாவென்றும் ஈற்றில் சிவநன்னெறியே மெயப் ப்பொருளாவதென்றும் உணர்ந்தார். சிவனை அடைவதே உய்யும் வகை என்றும் உணர்ந்து கொண்டார்.
செய்வினையும் செய்வானும் அதன்பயனும் சேர்ப்பானும் மெய்வகையா னான்காகும் விதித்தபொரு ளெனக்
கொண்டே இவ்வியல்பு சைவநெறியல்லவற்றுக் கில்லையென உய்வகையாற் பொருள்சிவனென் றருளாலே
உணர்ந்தறிந்தார்.
அதாவது செய்யும் வினை ஒன்று, செய்பவனாகிய கருத்தா ஒன்று, அதன் பயன், அதனைக் கொடுத்து ஊட்டுபவனாகிய முதல்வன் ஒன்று என எண்ணப்படும் நான்குமே உண்மைக் கூறுபாட்டால் துணியப்பட்ட பொருள் எனக் கொண்டு இந்தச் சிறப்பு சைவநெறிக்கே உண்டென்றும் ஏனையவற்றுக்கு இல்லையென்றும் துணிந்து திருவருளால் உண்மைப் பொருள் சிவனெனத் தெளிந்தார் என்பதாம். உமாபதிசிவம் திருவருட் பயனில் இக்கருத்தின் விளக்கமாகவே
"செய்வானும் செய்வினையும் சேர்பயனும் சேர்ப்பவனும் உய்வா னுளன் என் றுணர்
என்கிறார்.
(up q660) திருமுறைகளின் இறுதியாக விளங்கும் இப்பெரிய புராணமும் சிவஞானபோதத்தின் இறுதிச் சூத்திரமும் பொருத்திக் காட்டும் உண்மைப்பொருள் யாதெனில் சிவனடியாரையும் சிவாலயங்களையும் சிவனெனவே கண்டு வழிபடுதல் வேண்டும்.

“செம்மலர் நோன்றாள் சேர வொட்டா அம்மலங் கழிஇ அன்பரொடு மரீஇ மாலற நேயம் மலிந்தவர் வேடமும் ஆலயந் தானு மரனெனத் தொழுமே
என்னும் 12ம் சூத்திரப் பொருளுக்கு இலக்கியமே பெரியபுராணம் என்று கூறினால் அதில் மிகையொன்று மில்லை. இறைவனுடைய சிவந்த தாமரைமலர்கள் போன்ற திருவடிகளை அடையவிடாது தடுத்து நிற்கும் மலத்தினின்றும் விடுபட்டுச் சிவனடியார்களோடு மருவி மேலும் மயக்கம் நீங்குவதால் சிவனடியார்களின் திருவேடத்தையும் திருக்கோயிலையும் சிவபிரானே எனக் கண்டு தொழுது நிற்பர் என்பது சூத்திரப் பொருளாகும். இத்தகைய நிலையில் சீவன்முத்தர்களாக வாழ்ந் தவர்களே நாயன்மார்கள். இவர்களைப் பற்றி எழுதப்பட்ட இந்நூலுக்கு "மாக்கதை” என்ற பெயர் குறிக்கிறார் சேக்கிழார்.
எடுக்கும் மாக்கதை இன்றழ்ச் செய்யுளாய் நடக்கும் மேன்மை நடக்கருள் செய்திடத் தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக் கடக்க ளிற்றைக் கருத்து ளரிருத்துவாம்.
பக்திச்சுவை சொட்டச் சொட்டப் பாடப்பட்ட இச் சிவனடி யார் சரித்திரத்தைப் படிப்பவர்களுக்கும் கேட்பவர் களுக்கும் பிறவியிலிருந்து மீளக்கூடிய பெரும்பேறு கிடைக்கும் என்பதையே முதலடியில் "எடுக்கும்” மாக்கதை என்பதால் விளக்குகிறார். "எடுக்கும்” என்பது பிறவிக் கடலிலிருந்து தூக்கி எடுக்கும் என்னும் பொருள் விளக்கத்துக்குரியது. "எடுக்கும் மாக்கதை” என்று இதனைக் குறிப்பிடுவதால் மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமல் உய்தியளிப்பது இந்நூல் என்று புலனாகிறது.
இத்திருவருட் காவியத்தில் எக்கருத்தை எடுத்துக் கொண்டாலும் சைவசித்தாந்த அடிப்படையிலேயே அவை கூறப்பட்டுள்ளன. "தோடுடைய செவியன் என்று ஓங்காரத்தில் தொடங்கி "உலகெலாம்” என மகர ஒற்றில் முடிக்கிறார். இதனால் திருமுறைகள் அனைத்தும் ஓங்காரத்தின் விரிவாதல் விளங்கும். ஆண்டவன் பெருமையில் திருமுறைகளின் தொகுப்பிற் காண்கிறோம். திருமுறைகளை எமது உயிராகப் பேணி இறைகளோடு இசைந்த இன்பமும், இன்பத்தோடு இசைந்த வாழ்வும் வாழ்ந்து நற்பயனடைவோமாக.
என்றும் இன்பம் பெருகும் இயல்பினால் ஒன்று காதலித் துள்ளமும் ஓங்கிட மன்று ளராடி யாரவர் வான்புகழ் நின்ற தெங்கும் நிலவி உலகெலாம்.

Page 45
சைவ வானில் ஒரு
ஆறுமுக நாவலரை அவர்தம் அன்பர்கள் ஐந்தாவது சமய குரவராகக் கொண்டாடினர். ஆனால் நாவலரோ தம்மைச் சமய குரவர் வரிசையில் வைத்துப் போற்றுவது உபசாரமின்றி அபசாரமே என்று எண்ணினார். ஒருமுறை தம்மை ஐந்தாவது சமயகுரவர் என விளம்பரப்படுத்திய துண்டுப் பிரசுரத்தைக் கண்ணுற்று அதனை வெளியிட்டவரைக் கொண்டே எரிப்பித்தார். ஆயினும் அவர் சிவநெறி காத்த சீலத்தை எண்ணி அவரை ஒரு சமய குரவராகவே சைவ உலகு போற்றுகின்றது. இன்றும் கொண்டாடப்படும் நாவலர் குருபூசை இதற்குத் தக்க சான்றாகும். நாவலரைச் சீர்திருத்தவாதி, தேசியவீரர், சாதி சமய அபிமானி எனப் பலவாறாக நோக்குவோரும் உளர். இவ்வாறு பல கோணங்களில் நோக்கப்படுவது அவர் சாமானியரல்லாத பெரியார் என்பதற்குச் சான்றேயாம். அவரைச் சைவப்பிரகாசராகக் காண்பதும் உண்டு. அவர் தம்பெயரை வெளிப்படுத்துவது தக்கதன்று எனக் கருதிய தருணங்களில் இந்தச் சைவப் பிரகாசர் எனும் புனை பெயரைச் சூடி நின்றார். அவர் சில சமயங்களில் சைவப்பிரசாரகர் எனும் பெயரையும் சூடி நின்றார். இப்பெயரும் சைவப்பிரகாசர் என்பதனுள் அடங்குதற் குரியதே. அன்றியும் சைவப்பிரகாச சபை, சைவப்பிரகாச வித்தியாசாலை எனும் அவர் தம் பணிகளும் சைவப்பிரகாசமே அவர்தம் உயிர்மூச்சு என்பதை உணர்த்தி நிற்கின்றன. ஆதலால் சைவப்பிரகாசர் என்பதில் அவரது மூர்த்திகரம் நன்கு விளக்கம் பெறுகின்றது என்பது தெளிவு.
சைவாசார வார்ப்பு:
திருவருளானது அவர் ஓர் சைவப்பிரகாசராகத் திகழத்தக்கவகையில் சைவாசாரம் என்னும் அச்சிலே அவரைச் செப்பமாக வார்த்தெடுத்தது என்றே தோன்றுகின்றது. அவர் தாம் திருத்தமாகப் பதிப்பித்த கந்தபுராண நூலிலே சைவசமயியின் அகப்புற இயல்புகளாக இருபத்துமூன்று இலக்கணங்களைக் கூறுகின்றார். இவ்விலக்கணங்கள் யாவும் பொருந்திய சைவ ஆசார சீலராக அவர் விளங்கினார். அவரது அப்பழுக்கற்ற நிறைவான சைவ ஒழுக்கம் அறிவுணர்ச் சியின் விளைவாகும். அறிவு என்ற கல்வியின் விளைவு. கல்வி, வேதம் சிவாகமம் ஆதிய நிரம்பிய நூற் பயிற்சியால் பெருகியதாகும். வேத சிவாகமம் ஆகிய இத்திருநூல்கள் சிவபிரானாலும், பசுகரணம் நீங்கப் பெற்றுச் சிவகரணம் எயப் திய உணிமை நாயன்மார்களாலும் அருளப்பட்டன. ஆதலால் இவை சிவவாக்குகளின்படி ஒழுகும் சிவபக்தியே அவரது

ந செவ்வான் ஒளி
சைவாசாரத்துக்கு அத்துணைச் செம்மையைத் தந்தது.
சைவப் பிரகாசத்துக்கான அவதாரம்:
வேதம், இதிகாசம், சிவாகமம், புராணம், தருமசாத்திரம், சைவத்திருமுறை, சித்தாந்த சாத்திரம் மற்றும் பைபிள் ஆகியவற்றை ஆழ்ந்து கற்ற பரந்த நூலுணர்ச்சியாலே மறுசமய ஒழுக்கங்கள் யாவும் சைவத்துள் அடங்கி யிருக்கும் அழகினைக் கண்டு கொண்டார். அச்சமயங்களிற் சொல்லப்படாத உயர்படித்தான சன்மார்க்க உண்மைகள் சைவத்தின் சிறப்பாயமையும் வகையினையும் நயந்தார். ஆதலால் மறு சமயங்களை யெல்லாம் சோபான முறையில் ஏற்று அவற்றுக்கெல்லாம் மேம்பட்டு இராசாங்கத்திருக்கும் சைவம் என்பது அவர் துணிவாயிற்று. இத்தகைய சைவமாம் சமயம் சார்தல் பெரும் பேறன்றோ ! இப்பெற்றியதான சமயத்தைச் சார்ந்தோர் ஏன் சைவ ஒழுக்கம் குன்றிக் காணப் படுகின்றார்கள்? உத்தியோகம் முதலிய அற்ப ஆசைகளின் பொருட்டு மதம்மாறுவது எவ்வளவு சிறுமை! சன்மார்க்க நெறியான சைவத்தை மறுசமயத்தார் அஞ்ஞானிகளின் சமயம் எனக் கூறுவது எத்துணைக் கொடுமை! இவ்வாறெல்லாம் சிந்தித்ததன் விளைவாய் சைவாசாரத்தைச் சைவர்களிடம் நிலைபெறச் செய்தலும், பரசமய இருளைப் போக்குவதும் தமது கடனெனத் துணிந்தார். திருவருளானது, சைவத்துட் புகுந்துவிட்ட மாசுகளைப் போக்கியும், சைவத்தைச் சூழும் பரசமய இருளைப் போக்கியும் பிரகாசிக்கச் செய்யவே தன்னை இவ்வுலகில் உலவவிட்டுள்ளது என உறுதி கொண்டார். ஆதலால் இத்திருவருட் பணிக்காகவே தம் வாழ்க்கையை அர்ப்பணிக்கத் துணிந்தார்.
சிறுபள்ளத்திலே நெடுநாள் அழுகும் கெட்ட பாசியை எற்றிவிடும் பெருவெள்ளம்:
நாவலர் எனும் சைவாசாரவார்ப்பு சைவாசார வரம்புக்கு உட்படாத அனைத்தையும், பயமோ பரிவோ இன்றி கடிந்து ஒதுக்குவதில் முனைந்து நின்றது. அவர், சைவராய்ப் பிறந்த பலர் சைவநுாலுணர்ச்சியின்றி இருப்பது குறித்துக் கவலை கொண்டார். இப்பாமரர் களுக்கு சமய அறிவினை ஊட்டும் கடப்பாடுடைய சைவகுருமார்கள் "அந்தியேட்டிப் பட்டோலை தானும் எழுதும்" அறிவில்லாதவராய் இருப்பது கண்டு சீற்றமுற்றார். ஆலயங்களிலே நிகழும் சிவநிந்தையான கேளிக்கைகள் குறித்தும் கடும் சினம் கொண்டார். நம்பியாரூரர் அருளிய திருத்தொண்டத் தொகையில் முதற்பொருளாய் சிறப்பிக்கப்பெற்ற தில்லைவாழந்தனர் களேயெனினும், சிவாகமங்களுக்கும் பத்ததிகளுக்கும்.

Page 46
திருமுறைகளுக்கும் உரிய இடம் கொடுக்கத் தவறுவாரேல் அவர்களை நேர்நேராகக் கண்டித்தார். ஆகம சம்பந்தமில்லாத கண்ணகி வழிபாட்டினை அவர் வெறுத்தார். கண்ணகியைச் “சமணச்செட்டிச்சி” என இழித்துரைத்தார். நல்லூர் மூலவர் பற்றிய கருத்துக்கள் மிக உறைப்பானவை. அவர் வேலும் மயிலும் துணை என்றிருப்பவரே. ஆனால் வேலாயுதத்தை மூலத் தானத்தில் பிரதிட்டை செய்வது ஆகம சம்மத மில்லாததால் அதனை எதிர்த்தார். திருச்செந்தூர், பழனி ஆகிய திருப்பதிகளிலுள்ள மூலவர் போல நல்லூரிலும் திருமேனி பிரதிட்டை செய்யப்டுதலே முறை என எடுத்துரைத்தார். சமயாதீதப் பொருளான சோதிப்பிரகாச வேலவரின் சாந்நித்தியம் நாவலரின் உரைகளைப் பொருட்படுத்தாது இன்றும் நல்லூரில் அருளொளி பரப்புகிறது உண்மையேயெனினும், ஆகமசீலரான ஆறுமுகநாவலரால் அவ்வாறுதான் கூறமுடியுமென்பதும் மெய்மையே. திருவருளானது ஆகம நெறிமுறையில் அணுவும் பிசகாது உறைத்து நிற்றற் பொருட்டு சமயாதீதமான அநுபூதி ஞானத்தை அவருக்கு மறைத்து வைத்தது போலும். நன்மை தீமையைக் கடந்த அநுபூதிச் சுவையை உணர்வரேல் சமயாசார அச்சில் உறைத்து நிற்றற்கு இயலாது போய்விடும் அன்றோ! இவ்வண்ணம் சைவத்துட் புகுந்திருந்த மாசுகளை அகற்றுவதிலே சிறு பள்ளத்திலே நெடுநாள் அழுகும் கெட்ட பாசியை எற்றிவிடும் பெருவெள்ளத்தைப் போல அவர் திகழ்ந்தார்.
வானவெளியினை ஒத்த பிரகாசமான சைவத்தை மறைத்து, இருள் மேகம் போல கவிந்து நின்ற மறுசமயங்களைச் சிதறடிப்பதில், அவர் பெரும் சூறாவளியாகத் திகழ்ந்தார். நன்கு ஒழுங்கு படுத்தப் பட்டதும், நிதிப்பெலமும், பயிற்றப்பட்ட உபதேசிமாரை உடையதுமான உவெஸ்லியின் மிஷன், அமெரிக்கன் மிஷன் என்பன ஆங்கிலேய ஆட்சியாளரின் அனுசரணையுடன் உத்தியோகம், செல்வாக்கு மிக்க வாழ்க்கை ஆகிய ஆசைகளைக் காட்டிச் சமய மாற்றம் செய்து திரிந்த வேளையில், அவர் தனியொருவராகத் தீரத்துடன் எதிர்த்து நின்றார். கிறிஸ்தவருக்கு ஆட்சியாளரின் ஆதரவு இருந்தாலென்ன? தமக்கு அரசர்க்கரசான இறைவனின் துணையுள்ளது என்ற உறுதி அவருக்கு இருந்தது. ஒருகால் தமக்குப் படமுடியாத துயரம் நேருமேயெனினும் சிவநிந்தையைப் பொறுக்காது மேற்கொண்ட சிவபணியின் பொருட்டு அத்துயரைத் தாங்கிக் கொள்வதே முறையெனக் கொண் டார். "நாமார்க்கும் குடியல் லோம்." "வானந்துளங்கிலென் மண்கம்ப மாகிலென்." ஆகிய தேவார மொழிகள் நாவலரின் தாரகமாயின. அவர் கிறிஸ்தவ மத்தக்களிற்றின் முன் ஆண்மை விஞ்சிடும் அற்புதச் சிங்கமாய்க் கர்ச்சித்தார். அவரது கர்ச்சனை நேர்மையுள்ள கிறிஸ்த்தவர்களே மெச்சும்படியானதாக

இருந்தது. பார்சிவல் பாதிரியார் அவரை எப்போதும் மதித்து வந்தார். இங்கிலாந்து உவெஸ்லியன் மிஷன் ஆண்டறிக்கை ஒன்று அவரது சைவதுாஷணை பரிகாரம் எனும் நூல் குறித்துப் பின்வருமாறு குறிப்பிட்டது.
"இவ்வாண்டின் மகத்தான சம்பவம் சைவதுாஷணை பரிகாரம் என்ற தமிழ் நூல். அது அசாதாரணமான இலக்கியம். கிறிஸ்து மதத்தை எதிர்த்து ஆணித்தரமாகச் சைவக்கோட்பாடுகளை நிலைநிறுத்தும் நூல். அது முற்றிலும் புதிய தந்திரத்தைக் கையாண்டு நமது சமயத்தைத் தாக்குகின்றது. அது, கிறிஸ்து மதம் முறையற்றது, பயனற்றது என்றும் சொல்லவில்லை. சைவத்தின் சடங்குகளை தூக்கிப் பேசவில்லை. இரணி டிற்கும் நடுவே இரு சமயங்களையும் எதிரெதிரேவைத்து கிறிஸ்து ஆகமத்திற்கு சரியான சைவாகமங்களைக் காட்டி அதற்கு இது குறைவொன்று மில்லையே, சைவத்தை விடக் கிறிஸ்து மதத்தில் என்ன விசேஷம் இருக்கிறது என்பதை எடுத்து அலசித் தருகிறது. முழுக்கு, தீர்த்தம், பிரார்த்தனை, விரதம், யாத்திரை, லிங்காராதனை எல்லாம் நம்மிடமும் உள்ளதென்று பைபிள் ஆதாரத்துடன் காட்டுகின்றது. இருபது விஷயங்களை இது அலசுகிறது. முதல் தரமான மூளைதான் இதை எழுதியிருக்க வேண்டும். இந்நூல் எமக்கு பெருங்கெடுதல் செய்கிறது.”
என்றும் நின்று நிலவும் சைவ ஒழுக்கங்கள்:
சைவத்துட் புகுந்துவிட்ட ஆகம சம்மதமில்லாத அநுசாரங்களை அகற்றுவதில் பெருவெள்ளத்தைப் போன்றும், மறுசமய இருட்டிரைகளை அகற்றுவதில் சண்டமாருதம் போன்றும் அமைந்த அவரது செயல்கள் காலதேவைக்கேற்ப செய்யப்பெற்ற நன்மைச் செயல்கள். இந்நன்மைச் செயல்களிலே அவர் ஓர் உக்கிர மூர்த்தமாகவே தோன்றுகின்றார். அவர் நம்மனோர் மீது கொண்ட பேரன்புப் பெருக்கினாலே, நம்மவர் மத்தியில் சைவ ஒழுக்கத்தை நிலைநிறுத்தும் பொருட்டு மேற்கொண்ட நடவடிக்கைகளிலோ, தாயிற்சிறந்த தயாவுடைய செந் தண்மை பூண்ட சீலராகவே தோன்றுகின்றார். செந்தண்மை பூண்ட இச்செயல்கள் காலங்கடந்து என்றும் நிலவும் பெற்றியனவாயுள்ளன.
திருமுறைப் பற்று:
இப்பணிகளுள் ஒன்று சைவத் திருமுறைப் பற்றை நம்மனோர் மத்தியில் ஏற்படுத்த மேற்கொண்ட நடவடிக்கையாகும். கல்லினாலும் செம்பினாலும் ஆன இறைவனின் திருமூர்த்தங்களை அவர் இறைவனாகவே காண்பவர் என்பதில் ஐயமில்லை. ஆனால் திருமுறைப் பாக்களான இறைவனின் மந்திரத் திருமேனியின் சாந்நித்தியம் முற்சொல்லிய திருமூர்த்தங்களிலும் மேல் என்று அவர் எடுத்துரைத்தனர். உலோகங்களாலான திருமேனிகள் மந்திரங்களால் உருவேற்றிய பின்னரன்றோ

Page 47
தெய்வீக சாந்நித்தியம் பெறுகின்றன. மந்திரரூபமான தேவாரங்களோ இயல்பிலேயே இறை சந்நிதானமாக விளங்குகின்றன என அவர் விளக்கினார். தமிழகத் தினின்றும் ஒதுவார் பலரை அழைத்து வந்து, நல்லூர்த் திருவிழாக் காலத்திலே பெருமான் வீதியுலா வரும்போது பண்ணுடன் ஒதிவரச் செய்த அவரது செயல் மக்கள் மத்தியிலே நன்கு பதிந்துவிட்ட ஒன்றாகும். பஞ்சபுராணம் ஒதும் முறையின் ஆரம்பத்தை அறிஞர் பலவாறு கூறுவர். அம்முறைக்கான முதல் ஆவணமாக இருப்பது நாவலர் தொகுத்த "அருட்பா" எனும் தலைப்பிலான திருமுறைத் தொகுப்பே. அருட்பா எனும் நூலில் அகத்தியர் தேவாரத் திரட்டு, திருவாசகம் (முழுவதும்), திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, தெரிந்தெடுத்த பெரிய புராணப் பாடல்கள் என்பன அடங்கியிருந்தன. இவ்வாறு தொகுப்பதற்கு ஆதாரமான கருத்தை அவர் "திருக்கோவையாருண்மை” எனும் நூலிலிருந்து பெற்றாரெனத் தெரிகிறது. திருக்கோவையாருண் மையிலே இப்பஞ்ச புராணத்தைச் சைவர்கள் நியமமாக ஒதிவரவேண்டும் எனக் குறிப்பிடப்பெற்றிருப்பதை அருட்பா முகவுரையில் நாவலர் சுட்டிக் காட்டியிருப் பதினின்றும் அதனை அறியலாம். ஆறுமுகநாவலர் உள்ளன்பு மேலிட்டால் பஞ்ச புராணத்தை ஒதும் ஒழுக்கத்தை நிலைநிறுத்த மேற்கொண்ட முயற்சி இன்று ஒர் உறுதிமிக்க மரபாக நிலைத்துவிட்டதன்றோ!
புராண படனத்துக்குப் புத்துயிர்ப்பு:
நாவலரது நற்பணிகளுள் இன்னொன்று அவர் புராணபடனத்துக்கு ஊட்டிய புத்துயிர்ப்பு ஆகும். கந்தபுராணமானது கச்சியப்பசிவாசாரியார் காஞ்சி புரத்தில் அரங்கேற்றிய அக்காலத்திலேயே யாழ்ப் பாணத்திலும் பரவலாயிற்று. நாளாக நாளாக தமிழகத் தையும் விட யாழ்ப்பாணத்திலே கந்தபுராணபடனம் சிறப்பிடம் பெறலாயிற்று. யாழ்ப்பாணத்துக் கலாச்சாரம் கந்தபுராணக் கலாசாரம் என்று கூறும் படியாக கந்தபுராணம் நம் மக்கள் உள்ளத்தில் செறியலாயிற்று. இதனை நாவலர் பெருமான் நன்கு உணர்ந்து கொண்டார். அவர் தமிழகத்தினும் யாழ்ப்பாணத்திலே சைவஉணர்ச்சி மேலோங்கியிருப்பதற்கான காரணம் கந்தபுராணப் படிப்பே என்பதை மேல் வருமாறு தெரிவித்தார்:
“எத்துணை காலம் திருப்பித் திருப்பிப் படிப்பினும் கேட்பினும் எட்டுணையும் தெவிட்டாது தித்தித்து அமுதூறும் அதியற்புத, அதிமதுர திவ்விய வாக்கிய கந்தபுராணத்திலுள்ள பதி இலக்கணத் திருவிருத் தங்களைக் கேட்டல் சிந்தித்தல்களினால் இவர் களுள்ளத்து ஊற்றெடுத்த மெய்யுணர்வேயாம்.”
ஆகவே கந்தபுராணத்தினடியாகச் சைவப்பிரசாரம் செய்வது எளிதென அவர் மனத்தில் தோன்றியமை இயல்பே. இதன் பொருட்டுக் கந்தபுராணத்தைத் திருத்தமாகப் பதிப்பித்தார். அந்நூலிலே சிவபுராணப்

படன விதி பற்றியும் குறிப்பிட்டார். சிவபுராணங்களை ஒதுதல் கேட்டல் எனும் ஒரு இலக்கணம் மற்றைய சைவ இலக்கணங்கள் பொருந்துதற்கும் காரணமாயமை வதால் அதுவே சைவசமயியின் முக்கிய இலக்கணம் எனவும் விதந்துரைத்தார். கந்தபுராணம் மாத்திரமின்றி பெரியபுராணம், திருவிளையாடற் புராணம் ஆகிய சிவபுராணங்களையும் பதிப்பித்து வெளியிட்டார். பெரியபுராணத்தைச் செய்யுள் நூலாகவும், பாமரரும் படித்தும் கேட்டும் பயனடையக்கூடிய உரைநடை நூலாகவும் வெளியிட்டார். பெரிய புராணம் சைவ ஒழுக்கக் களஞ்சியம் என்று சொல்லக்கூடிய ஓர் நூலாகும். சைவ நாயன்மார்களது வரலாறு சைவ ஒழுக் கங்களிலே உறைத்து நிற்றற்கான உயிர்ப்புள்ள எடுத்துக்காட்டாகவும் உள்ளது. நாயன்மார்களைப் பூசித்துப் பெரிய புராணத்தைப் பத்தியுடன் ஒதுவதால் சைவாசாரத்தை நிலைபெறச் செய்ய முடியும் என்ற உண்மை என்றும் நின்று நிலவவல்ல உண்மையேயாம்.
சைவப்பிரகாச வித்தியாசாலை:
சைவப்பிரகாச வித்தியாசாலைகள் அமைத்தல், பிரசங்கங்கள் செய்தல் ஆகிய இன்னும் பல வகைகளினாலும் சைவ ஒழுக்கத்தை நிலைநிறுத்த அவர் முயன்றார். அவரது முயற்சிகளுக்கு ஓர் விளக்கமாக சிதம்பரம் வித்தியாசாலை பற்றி அவரது கருத்துக்களின் ஒரு பகுதியை அவ்வாறே தருகின்றோம்.
சிதம்பரம் வித்தியாசாலை:
யாதாயினும் ஒரு சமயத்தை மெய்யென்று நம்புகிறவன் அந்தச் சமயத்தில் ஒழுகும் ஒழுக்கம் இல்லாத பொழுது பயன் பெறான். அந்தச் சமயத்திற்குரிய கடவுள் இவரென்பதும் அவருடைய இலக் கணங்களும் அவரால் விதிக் கப்பட்ட புண்ணியங்களும் விலக்கப்பட்ட பாவங் களும் அந்தப் புண்ணிய பாவங்களின் பலன்களாகிய சுகதுக்கங்களும் அவரை வழிபடும் முறைமையும் அந்த வழிபாட்டினாலே பெறப்படும் பிரயோசனமும் ஆகிய இவைகளை அறியும் அறிவு உதியாத பொழுது அந்த ஒழுக்கம் உண்டாகாது. சற்குரு முகமாக விதிப்படி பெறப்படுஞ் சமய நூற்கல்வி விதிப்படி பெறப்படுஞ் சமய நூற்கல்வி கேள்விகள் இல்லாதபொழுது அந்த அறிவு உதியாது. ஆதலால் கல்வியும் அறிவும் ஒழுக்கமும் ஆகிய இந்த மூன்றும் வேண்டும். இது எல்லாச் சமயத்தாருக்கும் ஒத்ததாகும். கல்வி கேள்விகள் இல்லாதவர்கள் கடவுளை அறிந்து வழிபட்டு உய்யமாட்டார்கள் என்பது “கல்லார் நெஞ்சில் நில்லா னிசன்” என்றும் “கற்றல் கேட்டலுடையார் பெரியார்கழல் கையாற் றொழு தேத்த” என்றும் ‘கற்றவர் தொழுதேத்துஞ் சீர்கறை யூரிற் பாண்டிக்கொடுமுடி நற்றவா! என்றும் “கற்றவள் விழுங்கும் கற்பகக் கனியைக் கரையிலா கருணைமாகடலை மற்றவரறியாமாணிக்க மலையை’ என்றும் வரும்

Page 48
உண்மை நாயன்மார் திருவாக்குகளாலும் அறிக.
கிறிஸ்து சமயிகள் பெரும்பாலும் தங்கள் சமய நூலைத் தாங்கள் கற்றும் வெகுதிரவியங்களைச் செலவழித்துப் பாடசாலைகளை ஸ்தாபித்துப் பிறருக்குக் கற்பித்தும் தங்கள் ஆலயங்களிலும் பிறவிடங்களிலும் யாவருக்கும் போதித்தும் வருகிறபடியினாலே அவர்கள் சமயம் எத்தேசங்களிலும் வளர்ந்தோங்கி வருகிறது.
நம்முடைய சைவசமயிகள் சைவ நூல்களைக் கல்லாமையினாலும் எங்கேயாயினும் சிலர் கற்றாலும் எளிதில் அறிந்து உய்யும்படி சமயாசாரங்களைப் போதித்தலும் இல்லாமையாலும் நமது சற்சமயமாகிய சைவசமயம் வரவரக் குன்றுகிறது.
ஆதலால் நமது தமிழ்நாடெங்கும் பாடசாலை களைத் தாபித்து பிள்ளைகளுக்குச் சமயநூல்களையும் அவர்களுக்கு வேண்டும் கருவிநூல்களையும் முனிவரும் மன்னரும் மன்னுவ பொன்னால் முடியும் என்றும் வறியார் இருமையறியார் என்றும் திருக்கோவையாரில் அருளிச்செய்தபடி இம்மை மறுமைப் பயன்களுக்குத் துணைக்காரணமாய் உள்ள பொருளை ஈட்டுதற்கு வேண்டும் இலெளகீக நூல்களையும் கற்பித்தலும் திருக்கோயில்கள் தோறும் சனங்களுக்குச் சமய நெறி யைப் போதித்தலும் மிக மேலாகிய புண்ணியங்களாம். எல்லாத் தருமங்களையும் அறிந்து விதிப்படி சிரத்தையுடனேயே செய்து பயன்பெறுவதற்கு சமயநூல் உணர்ச் சியே ஏதுவாதலால் அப் படிப் பட்ட சமயநூலுணர்ச்சியை வளர்த்ததாகிய இந்தத் தருமமே எல்லாத் தருமங்களிலும் மிக மேலானது என்பதும் எல்லாத் தருமங்களுக்கும் மூலம் என்பதும் சொல்ல வேண்டுமா?
வேதாகமங்களை ஒதுதலும் அறிவு நூல்களைப் பிறர்க்கு விரித்துணர்த்துதலும் தர்மங்களை எடுத்துப் போதித்தலும் பள்ளிக்கூடங்களைக் கட்டுதலும் பெரும் புண்ணியங்கள் என்பது ஞானாமிர்தம் என்னும் ஞானநூலில் வகுத்துச் சொல்லப்பட்டது.
இன்னும் கன்மயாகம் தபோயாகம் செபயாகம் தியானயாகம் ஞானயாகம் என ஐவகை யாகங்கள் உண்டு. அவைகளுள் கன்மயாகம் ஆவது சிவனை விதிப்படி பூசித்து அக்கினிகாரியம் முதலியன செய்தல். தபோயாகமாவது சரீரம் வாடச் சாந்திராயணம் முதலிய விரதங்களை அனுட்டித்தல். செபயாகமாவது மந்திரங்களை விதிப்படி உச்சரித்தல், தியானயாகமாவது மனசை வேறொருவிடயத்திலும் பொருந்தாத வண்ணம் நிறுத்தி சதாசிவ விக்கிரகங்களை அன்பினாலே தியானித்து அந்தத் தியானத்திலே இடைவிடாது கலந்து நிற்றல். ஞானயாகமாவது சிவனை அறிவிக்கும் திவ்வியாகமங்களைத் தாம் ஓதுதலும் பிறரை ஒதுவித்தலும் அவைகளிலே சொல்லப்படும் பொருளைத் தாம் தெளிதலும் பிறரைத்தெளிவித்தலும் அந்தப் பொருளை நாடொறும் மறவாமல் மனசிலே தரித்தலுமாம். இந்த ஞானயாகமே பக்குவான்மாக்களுககு வைப்புமாய்ப்

பிறவிநோய்க்கு மருந்துமாய் உயர்வொப்பின்றி நிற்குந் தலைமையுடையது.
எல்லாத. தர்மங்களுக்கும் மூலமாய் அவ்வெல்லாத் தருமங்களுக்கும் மேற்பட்டு விளங்கும் இச் சிவதருமம் நமது தமிழ்நாடெங்கும் வளர்ந்தோங்கல் வேண்டும் என்னும் பேராசையானது எண் சிறுவயதில் என்னுள்ளத்திலே தோன்றி நாடோறும் பெருகிப் பெருகி இப்பொழுதும் அவ்வுள்ளத்தை விழுங்கித்தான் மேற்கொண்டு நிற்றலால் நான் என் மேன்மையை நினைந்து நினைந்து தடைப்படாமல் உயிர்க்கு உயிராகிய சிவனது வன்மையை "ஆட்டுவித்தலாரொருவ ராடாதாரே”, “பாட்டுவித்த லாலொருவர் பாடாதாரே", "பணிவித்தாலாரொருவர் பணியாதாரே”, “காண்பார் யார் கண்ணுதலாய் காட்டாக்காலே" என்னும் அருமைத் திருவாக்கு வழியாக நினைந்து நினைந்து அவருடைய திருவருளை முன்னிட்டு நின்று முன்னே சிவத்தலங்கள் எல்லாவற்றுள்ளும் பொதுவாயுள்ள சிதம்பரத்திலே சில முயற்சிகள் செய்யக் கருதுகின்றேன்.
அருக்கோதயமும் அருணோதயமும்: இவ்வாறாக நாவலர் பெருமான் பெருக்கெடுத் தோடச்செய்த சைவாசாரப் பெருவெள்ளத்தால் சைவ மக்களது உள்ளம் பண்பட்டது. இப்பண்பாடு சிவஞான உணர்ச்சியுறுதற்கான பக்குவர்களை உருவாக்கியது. இத்தகைய பக்குவர்களாலேயே தம்மத்தியில் மானுடப் போர்வை சாத்தி உலவுகின்ற சற்குருவை இன்னான் இவனென்று அறிதல் இயலும். மற்றையோர் தம்மைப் போன்ற சாமானிய மனிதனென்றே கருதுவர். சற்குரவரும் இத்தகைய பக்குவர்கள் உள்ள இடத்திலேயே நடமாடுவார். நாவலர் சைவாசாரத்தால் பக்குவப் படுத்திய வண்ணத்தையும், பின்னர் சிவயோக சுவாமிகள் எனும் ஞானகுரவர் தோன்றி ஞானவிளக்கம் செய்து திரிந்தமையும் சிந்திக்கும் இடத்து நாவலரின் சைவப்பிரகாசம் யோகசுவாமிகளது ஞானப்பிரகாசத் துக்கான ஆயுத்தப்படுத்தலாக இருந்ததெனவே எண்ணத் தோன்றுகின்றது. அவரது சைவப்பிரசார முழக்க உள்ளார்ந்த தொனி யோகசுவாமிகளது வரவுணர்த்தும் கட்டியம் எனவே கூறத்தக்கது. யோகசுவாமிகள் ஈழத்துச் சைவவானிலே அருக்கோதயத்தை நிகர்த்தவராயுள்ளார். இவ்வருக்கோதயத்துக்கு முந்திய அருணோதயத்தை ஒத்தது நாவலர் மூர்த்தம்.
(அருக்கோதயம் - சூரிய உதயம், அருணோதயம்சூரியோதயத்துக்கு முந்திய கீழ் வான் செவ்வொளி. இச் செவ்வான் ஒளியை வேதகால இருடிகள் கூடிஉஷாகூடி எனும் தேவதையாகப் போற்றிப் பரவினர்.)
நன்றி - சிவதொண்டனி, யாழ்ப்பாணம் மலர் 62 இதழ் 9-11-12

Page 49
28&
மிசிசாகா சைவ சித்தாந்த மன்ற நிகழ்ச்சியில் மன்
கலாநிதி கவிஞர் வி.
1994ம் ஆண்டு சாவகச்சேரி மக்கள் ஆத்மே வரவேற்பு உபச
 
 

றத் தலைவர் திரு. தி. விசுவலிங்கம் அவர்களுடன்
கந்தவனம் அவர்கள்
ஜாதி நா. முத்தையா அவர்களுக்கு வைத்த ாரத்தின் போது.

Page 50
நாகபூசணி அம்பாள் ஆலயத்தில் 2001ம் ஆண்டு நடைபெற் ஸ்தாபகர் சிவபூரீ கந்தசாமி குருக்கள், உதவி அர்ச்சகர் -
திருவாசகம் முற்றோதிய அடியார்கள் சிலருடன் கல
நல்லூர் முருகன்
 
 
 
 
 
 

ந து ைத தலை வகு ஆலய ஆகியோருடன் கலாநிதி கவிஞர் வி. கந்தவனம் அவர்கள்.
22
ாநிதி கவிஞர் வி. கந்தவனம் அவர்களும், அருள்மிகு ஆலயக்குருக்களும்
48

Page 51
சைவம் பற்றிப் பேசும்
சிங்கைய
ஆதியிலே ஆற்றோர நாகரிக நாடுகள் தம் கருத்துகளைக் களிமண் பலகைகளிற் சித்திரமாகத் தீட்டின என வரலாறுகள் பேசுகின்றன. பைப்பிரஸ் என்ற புல்லினாற் செய்த ஒரு அமைப்பில் எழுதும் முறையின் வளர்ச்சியே பேப்பர் என்ற வழக்குக்கு மாறிற்று. ஒலை, இலை போன்றவற்றில் ஆதியில் எழுதினர். எழுத்தாணி, பறவையின் இறகு எழுதுகோலாய் அமைந்தன. இப்படியே எழுத்தமைப்பு, எழுதுகருவி, எழுதும் இடம் வளர்ந்து விஞ்ஞான முயற்சியால் எவ்வளவோ மாற்றம் கண்டன. மையில் தொட்டு எழுதும் பழையமுறை பெளண்டன் பேனாவாகி, இப்போ களிப்பேனை நடைமுறையில் இருக்கிறது. அச்சடிக்கும் துறைகூடத் துரிதகதியில் பாரிய மாற்றங்கண்டு நுட்பமான நவீன முறையில் நூல்கள் அச்சடிக்கப்படுகின்றன. இயந்திரமயமான வாழ்வில் மென்மையான, குறுகிய வாசிப்பையே மக்கள் பெரிதும் விரும்புகின்றனர்.
இன்றைய எழுத்துத்துறை பன்முக வளர்ச்சி யுள்ளன. இதிற் சிறப்பாக படைப்பிலக்கியங்கள், நாடகங்கள், நவீனங்கள், விமர்சனம், திறனாய்வு, புதிய கவிதை வடிவங்கள், சமுதாயப் புரட்சிகள், நவீன சித்தாந்தங்கள் போன்றதுறைகளில் தமிழ் பெரிதும் மாற்றம் கண்டுள்ளது. சினிமா இயல் பெரிதும் மக்களைக் கவர்கிறது. சினிமாக் கலைஞர்கள், கவிஞர்கள் பெரிதும் பிரபல்யம் அடைந்துள்ளனர். இத்துறை சார்ந்தோர்க்குச் சுவைஞர்கள் மத்தியிலே நல்ல செல்வாக்கும் மதிப்பும் உண்டு. இப்படி ஒப்பீடு பண்ணும்போது, மனிதநாகரிகப் பிறப்பிடமான நதிக்கரைவாழ்விற் துவங்கிய கடவுட் கோட்பாட்டோடு இணைந்த சைவசமயம் சார்ந்த எழுத்தாளர்கள், கொத்தர்கள், பேனா மன்னர்கள், சிருஷ்டி கர்த்தாக்கள், தமிழில் நிறைய இருந்த காலம்போய், இப்போ அத்துறையினர் மற்றவர்களோடு ஒப்பிடும்போது குறைந்த பட்சமாகவே காணப்படு கிறார்கள். இருப்பவர்களும் தம்மைச் சமயத்துறைக்கு வழிநடத்துவதும் குறைவு.
முன்னொரு தசாப்தத்திற் சமயச் சான்றோர்கள் ஈழமண்ணிற் கிராமந்தோறும் வாழ்ந்தனர். அவர்களின் ஆளுமைத் திறங்கள் மக்கள் மத்தியிலே சைவத் தொய்வு ஏற்படாமல் பேணப் பெரிதும் சுமைதாங்கி கள் ஆயின. பண்டிதர்களாயும், சைவப்புலவர் களாயும், வித்துவான்களாயும் பலர் திகழந்தார்கள். இந்தக்காலம் போய் இன்று பல்கலைக்கழக மட்டத்திலே தான் இந்துசமயம் படிப்பிக்கப்படுவதாற் குறிப்பிட்ட சிறுவிழுக்காடுதான் சமய அறிஞர்களைக் காண முடிகிறது. இவர்கள் தொழில் நாட்டம் நிறைந்து, கற்கை
 
 
 

) பேனாக்கள் தேவை
பாழியான்
கற்பித்தல் நெறியில் தம்ம்ை ஈடுபடுத்துகின்றனர். எனினும் சந்தர்ப்ப சூழலுக்கமைய எழுத்தாளர்களாகவும் திகழ்கிறார்கள். இன்றைய பொதுஜன ஊடக உள்ளகங் களில் சைவத்தில் நல்ல புலமையுள்ள எழுத்தாளர்களின் சேவை, பங்களிப்பு வெகுகனதியும் காத்திரமானதுமாம். பேசும் பேனாவின் வல்லமை பெரிது. பேனை தீட்டியன சொற் சித்திரங்கள் மெளனத்தோடு எழுதும் கரம் மனத்தோடும், சிந்தனையோடும் தொடர்புடையது. மனக்கோலங்கள் எழுத்தில் வடிவமும் வண்ணமும் வளமும் எழிலும் பெறுகின்றன. இச்சிந்தனைக் கருவூலங்கள், மக்கள் தொடர்பு சாதன ஊடகங்கள், இணையங்கள், சைவசஞ்சிகைள், நூல்கள் வாயிலாகச் சைவசமுதாயத்தின் முன்வைக்கப்பட வேண்டும். முழுநேரச் சமய எழுத்தாளர்களாகவும், பகுதிநேர எழுத்தாளர்களாகவும் தொழிற்பட்டுக் காலத்துக்கேற்ற கருத்துக்களைச் சுவையாக, கவரும்படி மக்கட் சமுதாயத்துக்கு வழங்க வேண்டும். இது ஒரு ஊதியம் கருதா உயர்ந்த சேவையாம். பத்திரிகை ஆசிரியர் களாகவும் துணையாசிரியராகவும் கடமைசெய்யலாம். பரந்துபட்ட நுண்ணறிவு சமயச் சாயத்துடன்
விஞ்ஞானக் கண்ணோட்டத்துடன் எழுதும் ஆக்கங்களை இன்றைய இளந் தலைமுறையினர் புரியும் படி இலகுநடையிலும் கருத்துப்பரிமாற்றம் மேற்கொள்ளல் சாலச்சிறந்ததாகும்.
புறச் சமய ஊடுருவல் , சமய மாற்றம் , இளஞ்சந்ததியினர் சமயநாட்டமின்றி இருத்தல், கிறித்தவராதல் போன்ற சமகால நிகழ்வுகளால் நம்சமயம் நலியாமற் காக்க நல்ல பேனா மன்னர்கள் தேவை. பானைபிடித்த காலம் மலையேறிவிட்டது. இன்று பேனை பிடித்த பெண்களே பாக்கியசாலிகள். தமிழகச் சிவசங்கரியையும் ஈழத்து கோகிலா மகேந்திரனையும் பாருங்கள்.
எனவே காலத்தின் கட்டாயத்தைக் கருத்திற்
கொண்டு, வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் சைவசமயிகள் பெலவீனமடைய விடாமல் சைவசமயப் பேனா மன்னர்களே விழிமின், எழுதுமின்! மக்கள் சேவையே கடவுட்சேவை.
சேரவாரும் ஜெகத் தீரே!
உறங்காதீர்கள் விழிப்படையுங்கள்!
இறையோடியைந்த இன்பம் இன்பத்தோடியைந்த வாழ்வு முக்கியம்.

Page 52
ஆன்மாக்கள் நித்தியமாய், வியாபகமாய், சேதனமாய், பாசத்தடையுடையவைகளாய் சரீரந்தோறும் வெவ்வேறாய், வினைகளைச் செய்து வினைப்பயன்களை அனுபவிப்ப வைகளாய், சிற்றறிவும் சிறுதொழிலும் உடையவை களாய், தங்களுக்கு ஒரு தலைவனை உடையவை களாய் இருக்கும்.
ஆன்மாக்கள் நல்வினை தீவினையென்னும் இருவினைக்கு ஈடாக, நால்வகைத் தோற்றத்தையும், எழுவகைப்பிறப்பையும் எண்பத்துநான்கு நூறாயிரயோனி பேதத்தையும் உடையவைகளாய்ப் பிறந்திறந் துழலும். நால்வகைத் தோற்றங்களாவன: அண்டசம், சுவேதம், உற்பிச்சம், சராயுசம் என்பவைகளாம். அவைகளுள், அண்டசம் முட்டையிற்றோன்றுவன. சுவேதசம் வேர்வையிற்றோன்றுவன. உற்பிச்சம் வித்துவேர் கிழங்கு முதலியவைகளை மேற்பிளந்து தோன்றுவன. சராயுசம் கருப்பையிற்றோன்றுவன. எழுவகைப் பிறப்பக்களாவன: தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்பவைகளாம். தாவரங்களென்றது மரம் செடி முதலியவைகளை.
கருப்பையிலே தேவர்களும், மனிதர்களும், நாற்கால் விலங்குகளும் பிறக்கும். முட்டையிலே. பறவைகளும், ஊர்வனமும் நீர்வாழ்வனவும் பிறக்கும். வேர்வையிலே கிருமி கீடம் பேன் முதலிய சில ஊர்வனவும், விட்டில் முதலிய சில பறவைகளும் பிறக்கும். வித்தினும் வேர் கொம்பு கொடி கிழங்குகளினும் தாவரங்கள் பிறக் கும் . தாவர மென் றாலும் நிலையிற் பொருளென்றாலும் , அசரமென்றாலும் பொருந்தும். தாவரமல்லாத மற்றை ஆறு வகைகளும் சங்கமங்களாம். சங்கமமென்றாலும், இயங்கியற் பொருளென்றாலும், சரமென்றாலும் பொருந்தும்.
தேவர்கள் பதினொரு நூறாயிரயோனி பேதம். மனிதர்கள் ஒன்பது நூறாயிரயோனி பேதம். நாற்கால் விலங்கு பத்து நூறாயிர யோனிபேதம். பறவை பத்து நூறாயிர யோனி பேதம். நீர் வாழ்வன பத்து நூறாயிர யோனி பேதம், ஊர்வன பதினைந்து நூறாயிர யோனி பேதம். ஆகத்தொகை எண்பத்து நான்கு நூறாயிர யோனி பேதம்.
ஆன்மாக்கள், தாம் எடுத்த சரீரத்துக்கு ஏற்ப, மெய், நாக்கு, மூக்கு, கண், செவி என்னும் ஐம்பொறிகளினாலும் சித்தத்தினாலும் அறியும் அறிவின் வகையினாலே, ஓரறிவுயிர் ஈரறிவுயிர் மூவறிவுயிர், நாலறிவுயிர், ஐயறிவுயிர் ஆறறிவுயிர் என அறுவகைப்படும். புல்லும் மரமும் முதலியவை பரிசத்தை அறியும் ஓரறிவுயிர்கள். இப்பியும் சங்கும் முதலியவை அதனோடு இரசத்தையும் அறியும் ஈரறிவுயிர்கள். கறையானும் எறும்பும் முதலியவை அவ் விரணி டினோடு கந்தத்தையும் அறியும்
 

முகநாவலர்
ரூவலா_,
மூவறிவுயிர்கள். தும்பியும் வண்டும் முதலியவை அம்மூன்றினோடு உருவத்தையும் அறியும் நாலறி வுயிர்கள். விலங்கும் பறவையும் அந்நான்கனோடு சத்தத்தையும் அறியும் ஐயறிவுயிர்கள். தேவர்களும் மனிதர்களும் அவ்வைந்தினோடு சித்தத்தாலறியும் அறிவுமுடைய ஆறறிவுயிர்கள்.
ஆன்மாக்கள், தாம் பூமியிலே செய்த நல்வினை தீவினையென்னும் இருவகை வினைகளுள்ளும் நல்வினையின் பயனாகிய இன்பத்தைச் சுவர்க்கத்திலும் தீவினையின் பயனாகிய துன்பத்தை நரகத்திலும் அநுபவிக்கும். அப்படி அநுபவித்துத் தொலைத்துத் தொலையாமல் எஞ்சி நின்ற இரு வினைகளினாலே திரும்பவும் பூமியில் வந்து பிறந்து, அவைகளின் பயன்களாகிய இன்பதுன்ப மிரண்டையும் அநுபவிக்கும். இப்படியே நமக்கு ஒரு நிலைமை இல்லாத கொள்ளி வட்டமும் காற்றாடியும் போல கடவுளுடைய ஆஞ்ஞை யினாலே கருமத்துக்கு ஈடாக, மேலே உள்ள சுவர்க்கத் திலும், கீழே உள்ள நரகத்திலும் நடுவே உள்ள பூமியிலும் சுழன்று திரியும்.
இப்படிப் பிறந் திறந்துழலும் ஆன்மாக்கள் தாவர யோனி முதலிய கலீழுள்ள யோனிக ளெல்லாவற்றினும் பிறந்து பிறந்திளைத்து, புண்ணிய மேலீட்டினாலே மனிதப் பிறப்பிலே வருதல் மிகுந்த அருமையாம். அவ்வருமை ஆராயுங்காலத்து, கடலைக் கையினாலே நீந்திக் கரையேறுதல் போலும். இத் தன்மையையுடைய மனிதப் பிறப்பு எடுப்பினும், வேதாகமங்கள் வழங்காத மிலேச்ச தேசத்தை விட்டு அவை வழங்கும் புண்ணிய தேசத்திலே பிறப்பது மிகுந்த புண்ணியம்.
இவ்வருமையாகிய மனிதப் பிறப்பை உண்டாக் கியது உயிர்க்குயிராகிய கடவுளை மனம் வாக்குக் காயங்களினாலே வழிபட்டு அழிவில்லாத முத்தியின் பத்தைப் பெற்று உய்யும் பொருட்டேயாம். சரீரம் கருப்பையில் அழியினும் அழியும். பத்து மாதத்திற் பிறந்தவுடனே அழியினும் அழியும். பிறந்த பின் சில காலம் வளர்ந்து அழியினும் அழியும். மூன்று வயசுக்குமேற் பதினாறு வயசுவரையிலுள்ள பாலாவத்தை யில் அழியினும் அழியும். அதற்கு மேற்பட்ட விருத்தாவத்தையின் அழியினும் அழியும். எப்படியும் இந்தச் சரீரம் நிலையின்றி அழிவது உண்மையாமே.
அழியுங் காலமோ தெரியாதே. இப்பிறவி தப்பினால்
எப்பிறவி வாய்க்குமோ யாது வருமோ அதுவும் தெரியாதே. ஆதலால் இந்தச் சரீரம் உள்ள பொழுதே இதனது நிலையாமையை அறிந்து பெருங் கருணைக்கடலாகிய கடவுளை வழிபட்டு உய்ய வேண்டும். (நன்றி: சைவநீதி, கொழும்பு)

Page 53
சைவசமயம் பிறவி வேண்டாம் வேண்டாம் எனத்தான் சொல்லுகிறது, சொன்னது. வைணவம் சொல்லிக் கொண்டே இருக்கிறது. அதேவேளை பிறவியை அழிக்க வந்த பிறவிதான் இப்பிறவி எனவும் கோடிகாட்டி, இறைவனை அடைவதே பிறவிப்பயன் எனவும் நெஞ்சுக்கு உபதேசமும் செய்கிறது. கைமேலே தந்த இப்பிறவியிலே மனிசத்தனங்களை இழக்கிறோமா, வளர்க்கிறோமா, பாதுகாக்கிறோமா, மெருகூட்டுகிறோமா, மேட்டிமைப்படுத்துகிறோமா என்று கிஞ்சிற்றேனும் சிந்தித்தோமா? எம் ஆத்மாவுக்காக ஒருநாளில் எத்தனை நாழிகைகளைச் செலவு பண்ணினோம். வெளியழகைப் பார்க்கிறோமேயன்றி அக அழகைப் பார்த்தோமா? எதைவிட்டு விட்டுப் போகிறோம், எதைக்கொண்டு போகப் போகிறோம்? இப்படியாதல் எம்மை உரைத்து நிறுத்துப் பார்க்கவும் தவறிவிட்டோமே. நாளை நாளை யென்றோமே. இப்படி இப்படிச்சொல்லிச் சொல்லி நம்மை நாம் சுத்தமாய் ஏமாற்றுவதுதான் கண்ட மிச்சம். உலகை ஏமாற்றினாலும் உன் ஆத்மாவுக்குத் தாக்கம்.
நீ மனிதன் என்று சொல்லிக் கொள்கிறாய். மனித சுபாவம் உன்னை விட்டுக் கழலாமல் நீ பேணத்தவறிவிட்டாய். ஒன்றும் வேண்டாம் உன் வாழ்நாளை இப்படிப் பகுத்துப்பார். உனக்குச் சராசரி வயசு அறுபது எனக் கணக்குவை. இதிலே நீ நித்திரை கொள்வது எவ்வளவு காலம். சுமார் பாதிநாட்கள் தூக்கத்திலே போய்விடுகின்றன. நீ சவலையாய்ப் பிறந்து வளர்ந்து இளைஞனாகி, உன்னை உணர்ந்து, உன்காலால் நடக்க ஒரு பதினைந்து வயதைப் போட்டுப்பார். இப்படிச் சொல்ல முந்தியே நாற்பத்தைந்து வயது காற்றாய்ப் பறந்து விட்டது. மீதி இருப்பது பதினைந்து வயது. இப்பதினைந்து ஆண்டுகளில் எத்தனை தொல்லைகள். எத்தனை வில்லங்கங்கள். கடைசியிற் கண்டதென்ன? வெறுங்கையோடு இந்த ஆத்மா மீண்டும் ஒரு பயணம் மேற்கொள்ளப்போகிறது. எண்ணிப்பார் இப்படி:
வேதநூல் பிராயம் நூறு
மணிசர் தாம் புகுவ ரேலும் பாதியு முறங்கிப் போகும்
நின்றதில் பதினை யாண்டு பேதைபா லகன தாகும்
பிணிபசி மூப்புத் துன்பம்
s
 

ஆதலால் பிறவிவேண்டேன்
அரங்கமா நகருளனே.
- தொண்டரடிப்பொடிஆழ்வார் திருமங்கை யாழ்வார் இதை மாறிப் போட்டுக் காட்டுகிறார்:
தெரியேன் பாலகனாய்ப்
பலதீமைகள் செய்துமிட்டேன் பெரியே னாயினபின் く
பிறர்க்கேயுழைத் தேழையானேன் கரிசேர் பூம்பொழில்சூழ்
கனமாமலை வேங்கடவா அரியே வந்தடைந்தேன்
அடியேனையாட் கொண்டருளே.
பெரியதிருமொழி 1:97
நாள்களான வாள்கள் நம்மை அரிந்து கொண்டே போகின்றன. ஒரு நாள் மரமாகிய உடல் வீழ்ந்து போம். இதை நீ இன்னும் உணர்ந்து உன்னை வழிப் படுத்தியதாயும் இல்லை. அப்பர் அடித்துச் சொன்னாரே. “வாய்த்தது நந்தமக்கிதோர் பிறவி மதித்திடுமின்” என்று. உன் பிறவியை மதி முதல், அடுத்து ஆண்டவனை மதித்து ஒவ்வொரு கணமும் தொழு. நீ உண்ணும் போது அவனை நினைந்தாயா? உனக்குச் சோறு போடுகிறவன் அவன் தானே. அவனுக்கு அந்நேரம் ஆதல் நன்றி சொல்ல வேண்டாமா. நீ நன்றிகெட்டவனா. அற்பபிராணி நீ வளர்த்த நாயகூட உனக்கு வாலைக்குழைத்துத் தன் நன்றியை வெளிப்படுத்துகிறதே. உறங்கப்போகும் போதாதல் உன்னவனை நினைத்தாயா. நாளை நீ எழுந்திருப்பாய் என்பதற்கு என்ன திராணி. திராணி யற்ற மனிதா! தினமும் உன்வாழ்க்கையைப் போட்டடி யாதே. அதைப் பேணி உன்னை வழிநடத்து. சேரமான் என்ன சொல்கிறார் என்பதை ஒருமுறை படித்துப் பார்.
வேண்டிய நாள்களிற் பாதியும் கங்குல்மிக அவற்றுள் ஈண்டிய வெந்நோய் முதலது பிள்ளைமை மேலது.முப் பாண்டின அச்சம் வெகுளி அவா அழுக் காறிங்களே மாண்டன சேரும் வளர்புன் சடைமுக்கண் மாயனையே
பொன்வண்ணத்தந்தாதி 99

Page 54
பார்த்தாயா? வாழ்க்கையை நிலைபரமென்றெண்ணாதே! என்றும் நிலையான பரம்பொருளை நினை! நீ நல்லவனாய் வாழப்பழகு. உன்னிடம் உள்ள கொடிய குணங்களை வேரோடு கெல்லிஎடுத்து வீசியெறிந்து நல்ல குணங்களை அந்த இடத்திலே நட்டு அன்புநீர் பாய் ச் சு. அறுவடை நிகர லாபம் தரும் . உலகியலையும் உன்னையும் ஒருதரம் நோட்டம் விடு. பெரியார்களோடு, நல்லவர்களோடு - கனவான்களோடு - கல்வி வல்லார்களோடு - கண்ணியவான்களோடு உன்னை ஒப்பிட்டுப்பார். நீ உயர்ந்து வாழ்கின்றாயா - தாழ்ந்து வாழ்கின்றாயா. தயவு செய்து உன்னை உரைத்துப் பார். உரைத்துப் பார்க்கையில் உன்தட்டு சமமாய் இல்லையாயின் - தேவையான அருங்குணங் களை உனதாக்கிக்கொள்.
ஒழுங்கும் ஒழுக்கமும் ஒவ்வொருவருக்கும் முக்கியமானது. ஒழுக்கம் விழுப்பம் தரும். ஒழுங்கு உயர்வும் மதிப்பும் தரும். நீதி பட்டைபோடும் ஒருவனை வாழ்வின் ஒவ்வொரு அம்சங்களிலும் நீதியென்னும் பண்பை நெகிழ விடாதே. மனச்சாட்சி தவறி நடவாதே. மனிதன் மனிதனாகவே வாழ வேண்டும், வாழ்ந்து காட்டவும் வேண்டும். பேச்சிலும் செயல் மேலானது. எதையும் சாதனைப்படுத்து. சமுதாயத்தில் நீ ஒரு நல்லவனாய் வாழவேண்டும். மற்றவர்களுன்னை நல்லவன் எனப்போற்ற வேண்டும்.
தினக் கடமைகளைச் செவ்வனே ஆற்று. தன்கருமம்
"யோகிராம் சுரத்குமார் நூல் வெளியீட்டின் பொ
5
 

செய்வதே தலையாய கடமை. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஒவ்வொருவருக்கும் அவசியம். நீ சேர்ந்த குடும்பப் பெருமையை எப்போதும் காப்பாற்று. குடிகாரன் என்ற பெயர் எடுக்காதே. மறந்தும் பிறர்க்குக் கெடுதல் செய்யாதே. கேட்டிலும் உறுதியாய் இரு இன்பமும் துன்பமும் இயற்கை. துன்பத்தைக் கண்டு துவளாதே. இன்பம் கண்டு பெருமிதப்படாதே.
உன் பெற்றாரை, பெண்களை, மனைவியை மதித்து வாழ். அவர்கள் மனம்நோகாமல் நட நாணயமும் நிதானமும் தவறாதே. நாணயம் போல நாநயமும் முக்கியம். ஊருக்கு உபதேசம் பண்ணாதே. உனக்கு உபதேசம் பண்ணு. உத்தமனாய் - உத்தமியாய் இரு கல்வியிலே வல்லவனாய் உன்னை வளர்த்துக் கொள். நீ சமயங்களை மதி. ஆனால் நீ பிறந்த சமயக் கட்டுக்கோப்பு நெகிழாமல், உன்னையும் சேர்ந்தோரையும் வழிநடத்து. நீயொரு சைவசமயி, அதனால் சமயநூல்களையும் கற்று அதன்படிவாழ். சீர்திருத்தக் கண்ணோட்டம் முக்கியம். கண்மூடிப் பழக்க வழக்கங்கட்கு இடம்கொடாதே. முன்னேற்றப் பாதையில் உன்னை இட்டுச்செல். ஒரு நல்ல சமுதாயத்தைக் கட்டியெழுப்பு. இப்படி நல்லவற்றைச் சிந்தித்து நல்ல வாழ்வை மேற்கொள். மனிதத்து வத்தை இழந்து விடாதே. மகாதேவனையும் மறந்து விடாதே!
ழது அடியார் ஒருவருக்கு நூல் வழங்கும் காட்சி

Page 55
TEXTILES, JEWELLERY, G
IMPORTERS, WHOLE புத்தம் புதிய டிசைன்களில் வெளியூரில் இருந்து * மங்கையர், ஆடவர், சிறுவர், சிறுமியருக்கான ரெ * வகைகள், லங்கா சூட், நக்மா சூட் இப்படிப் பல. * 22 கரட் தங்க நகைகள் * துரித பணமாற்றுச் சேவை * அன்பளிப்புப் பொருட்கள் * ஆண்கள், பெண்களுக்கான கைக் கடிகாரங்கள் * வீடியோ, ஒடியோ விற்பனைக்கும் வாடகைக்கும் * சுமித் மெசின், ரொட்டி மேக்கர், றைஸ் குக்கர், ச * சில்வர் ஸ்ரயின்லஸ் பொருட்கள் * இன்னும் பல எழுத்து வடிவில் கொண்டுவர முடிய * பொருட்கள் மகி மிக மலிவு விலையில்
εσΠιδί Θ6.
1884 B KENNEDY ROAD(At TEL: (416). 298 - 1598
கனகாம்பிகை
வூ உங்கள் அனைத்து தங்க நகைகை விைைலயில் பெற்றுக்கொள்ளலாம்
sపత్త2 சிங்கப்பூரில் வடிவமைக்கப்பட்ட புத
விற்பனையாகின்றன.
இயூ எங்களிடம் அனைத்து 22 24 கரட் * வேலைப்பாடுகளுடன் பெற்றுக்கொ
အဲ့လိုမႝား ராசிக்கற்கள் உங்கள் ராசிக்கேற்ப
ஆ. பழைய தங்க நகைகளை உருமாற்ற
செய்து தரப்படும்
உங்கள் நகைத் திருத்த வேை
"КатqqаатbiK
3160 Eglinton Ave. East, Unit
Tel: (41 6)

s: SONs
FT ITEMS & FANCY GOODS SALES & RETALERS
இறக்குமதி செய்யப்பட்ட பலவித பொருட்கள் டிமேற் உடுப்புக்கள், சாறி
ைெறண்டர் இன்னும் பல.
ாத எண்ணிலடங்காப்
AY AA な
OT F60)T6O
Ellesmere) SCARBOROUGH
FAX: (416) 298 - 2849
യa, Iഞ്ഞ
ளயும் நம்பிக்கை, உத்தரவாதத்துடனர்நியாயமான
ய டிசைனர் நகைகள் அனைத்தும் மலிவு விலையில்
தங்க வைர நகைகளை உங்கள் மனங்கவரும் ள்ளலாம்.
ரிசோதித்துப் பெற்றுக்கொள்ளலாம்.
புத்தம் புதிய டிசைனர்களில் புது எழிலுடன்நகைகள்
லகள் எதுவானாலும் எம்மை நாடுங்கள்
ai Gold House
3, Scarborough, ON. MJ 2H3
269-71.98

Page 56
Real Estatelm
வீடு விற்கவும் வாங்க ஆலோச6ை
Nel Ketha B.Sc.(Ag) Sales Representative
R/MSX Crossroads Realty Inc., Realtc
1055 McNicol AVenue
Toronto, Ontario M1W 3W6 Independently Owned and Operated
N.B.: Free Market Analysis and fre
 

formation Centre
வும் அதுபற்றிய இலவச னகளுக்கும்!
Office: 416-491-4002 Direct: 416-677-4707
ܐ݇ܬܐܡܘܢ܂
r
!e mortgage arrangements for all clients