கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கந்தமுருகேசன் முத்தமிழ் விழா மலர்

Page 1


Page 2


Page 3


Page 4


Page 5
Qu命u厅前
ஈழத்துப்
 

| - - - .
49 இழுவை
57 ஆ
இ,ை 7
O
IT)
தாத்த
) (β6, θ'
(தமிழ்த்
 ைர

Page 6


Page 7
;
10.
ll.
12.
I 3.
1 4.
1 5.
6.
17.
8.
19
20.
21.
• ہے تھے
23.
24.
25.
26.
27.
28.
பொரு 6
பதிப்புரை Greetings from the President, Kantl Greetings from T. Rajathurai Esqr. ஆசிச் செய்தி
தமிழ்ப் புலவர் கந்த முருகேசனர்
- மு. சிவ செந்தமிழ்க் கந்த முருகேசனர் சீர்த்
வானையழாவிடப் பல்லாண்டிசை கே
தமிழகத் தந்தை
கல்விக் கடல்
நான் கண்ட உபாத்தியாயர்
ஆம்! அவன் அமரன்
கலைககோயில் கந்தமுருகேசன்
கந்தமுருகேசன்
இப்பெரியார் யாரோ? நான் கண்ட கவிஞர் பிரான்
நான் கண்ட முருகேசனர்
கவிநயம்
இசைத் தமிழின் உயர்வு
ஈழத்துப் பெரியார்
(g
உன்னையே நீ அறிவாய், உன்னையே
இசையின் பெருமை
கலங்கரை விளக்கங் கண்டோம்
வாழ்த்துப்பா
H
முரண்பட்ட கொள்கையினரையும் அ
தேமதுரத தமிழோசை உலகமெலா - பண்டிதை ச. இலக்கிய உறவு
Greetings froııu S. Servanayagam Es வைர மணி விழா வாழ்த்துமாலை

ா ட க் கம்
ıa Murugesan Muthamil Vizha 4
- சேர் கந்தையா வைத்தியநாதன் 5
சிதம்பரம், பா. உ. (உடுப்பிட்டி) 6 தி வாழ்க! அல்வாயூர் கவிஞர் மு. செல்லையா 7 ால வான்குயிலே!
- உடுப்பிட்டி கா. நீலகண்டன் 8
- செல்வி ஆ. இரத்தினம்பாள் 9
- மு. கந்தப்பு, கீழ்கரவை 1
- தென்புலோலி வே. ஆறுமுகம் 12
- 96taurs, B. A.
- வ. மகாலிங்கம் 19
- சு. ஆழ்வாப்பிள்ளை 21
- செல்வி மு. க. தங்கம்மா 26
- 6nu. Ganu Utref 6ôr. B. A. (Hons.)
- ஆ. பொன்னையா 30
- ஆ. கந்தையா, எம. ஏ 3.
34
ாம. அம்பலவாணன், பி. எஸ்சி. 37 நீ மறப்பாய்
- கலையரசு க. சொர்ணலிங்கம் 39
- சங்கீத பூஷணம் க. நாகம்மா 41
- த. மாலோகமணி, கீழ்கரவை 42
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை 44 ஆட்கொள்ளும் வாத்தியார்
- என். கே. ரகுநாதன் 45 ம் பரவும் வகை செய்தல் வேண்டும் க்கியதேவி துரைசிங்கம்,நீர்வேலி 47
- V. 5 issuit frt. B. A. (Ceylon) 49 զr. 51
- உடுப்பிட்டி கா. நீலகண்டன் 52

Page 8
நாம் எம் அறிஞர்கள் உயிருடன் இருக் கும்ப்ோது அவர்களை உபத்திரவம் செய்கின்ருேம். இம்மனநிலை அவ் வறிஞர் இறந்ததும் சடுதியாக மாறுகின்றது. இம்மாற்றத்தினல் பல மணிமண்டபங்கள் அறி ஞர்களின் ஞாபகத்தின்பேரில் எழுப்பப்பட்டு விடுகின்றன. அவர் உயிருடன் இருக்கும்போது கல்லெடுத்து வீசிய கைகள் அவர் இறந்ததும் மணிமண்டபங் கட்ட கல்லெடுத்து உதவுகின் றன. அறிஞர் பெயரால் நடாத்தப்படும் விழா வுக்கு வருகின்ற மக்களை வா! வா!! என்றழைக் கின்றன. இந்த மனேநிலையை ஓரளவு மாற்ற எண்ணினேம். அதன் விளைவே கந்தமுருகேசனர் பெயரில் இம் முத்தமிழ் விழா.
கந்தமுருகேசனர்பற்றி அறியாத மக்கள் இன்று ஈழத்தில் இருக்கமாட்டார்கள் என நம் புகின்ருேம். காரணம் அவரிடம் படியாத வட மறவரில்லை, வட மறவரில்லாத ஊரில்லை, ஈழத் தில், அவரிடம் படித்த பலர் அவரைக் கண் னல் காணத, அவர் வாய்மொழியைக் கேளாத சிலரிடம் நம்மறிஞர் புகழை அவர்தம் தமிழ்த் தொண்டினையும் எடுத்துக் கூறி வருகின்றனர். இதனல் பருத்தித்துறையில் இருக்கும் கலங்கரை விளக்கைக் குறிகொண்டு செல்கின்ற பிறநாட் டுக் கப்பல்கள், பருத்தித்துறையைப்பற்றிய முழு மையும் தெரியாவிடினும் அக்கலங்கரை ஒளி கண்டு தம் பாதையறிந்து ஆய்ந்து தம் வழி செல்வதுபோல் எம் கந்தமுருகேசனர் சொற் கேளாத போதும் அவர் அறிநின்று ஒளிதனைப்
பட்டம் பெற்ற பலர் இருக்கின்றனர்.
கந்த முருகேசனர் தம் திண்ணைமேல் இருந்து கொண்டு இளம் சிறர்க்குத் தமிழ் ஆழியில் நீந் தக் கற்பித்துக்கொண்டிருக்கும் காட்சியைக் கண் 1.வர்க்கு கிரேக்க ஞானி சாக்கிரட்டீசின் ஞாப கம்தான் வரும். நீண்ட வெண்மையான தாடி, உயர்ந்த புருவங்கள், அன்பின் ஒளிதரும் கண் கள், தமிழ் இசைநாடும் செவிகள், மலர்ந்து புன் சிரிப்புடன் காட்சி தரும் முகம் இவையன்ருே முருகேசனர் இலக்கணம்.
தமிழ் ஆழியில் நீந்தப் பழகிய பின்னர் அங்கே விந்தை மாற பொருளை அறிய இச் டிார்க்கு ஆவலூட்டுவார். இதன் பயனல் நீ!

பு  ைர
தப் பழகிய குழந்தைகள் பருவம்வர ஆழ்கட லின் நீரில் மூழ்கப் பழகி தமிழ் முத்துக்கள் அத் தனையும் தம் அறிவுக்கும் வலிமைக்கும் ஏற்ப பெற்றுவிடுகின்றனர். கற்கச் சென்ற குழந்தை அவர் படலையால் வெளிவரும்போது தமிழ் ஆழி யின் தெளிவு பெற்று முத்துக்களாம் பட்டம் பெற்று குறள் வழி வாழக் காண்கின்ருேம்(சில பதர்களைத் தவிர)
"எம் உபாத்தியாயர்" அவர்கள் செய்த, செய்துகொண்டிருக்கின்ற தொண்டினை நாம் கூறப்புகின் ஒன்று இரண்டல்ல எனினும் கடமை குறித்து சில கூறிவிடுகிறேன். மக்கள் எல்லோ ரும் சமமானவர்கள். தாழ்ந்தோர் என்று ஒருவ ருமில்லை என்ற பேச்சைத் தம்மூச்சாக எண்ணி செயல்படுத்தி பொதுநலம் புரிந்த அறிஞர் கந்த முருகேசனுர். அவர் திண்ணையில் தாழ்த்தப் பட்ட வகுப்பினரும் மற்றை உயர்ந்த சாதி என்று தம்பட்டமடிக்கும் மக்களும் சரிநிகராக இருந்து தமிழறிவைப் பெற்று வருகின்றனர். கடவுளின் பெயரால் நடாத்தப்படுகின்ற ஏமாற்றங்கள் மூடக் கொள்கைகள், அட்டூழியங்கள் எல்லாவற் றையும் எதிர்த்தார். அறம் கடவுளின் பெய ரால் அறுக்கப்படுவதை அறிவின் சக்திகொண்டு எதிர்த்தார். இதனு ல் சிலர் இவரை நாத்தி கன் என்றனர். புத்தரை, யேசுவை, நபியை நாத்திகர் என்று கூறுவது போ ல. நாம் கட வுளை வணங்குவது கடவுளிடமிருந்து நன்மை களையோ அன்றி சலுகைகளையோ பெறவல்ல; ஆனல் நம்முடன் வாழும் மக்களிடமிருந்து நீதியை வாங்கித்தரவே என்பதற்காக என்ற உயரிய நோக்குள்ளவர்தான் உண்ண வழியில்லாக் காலத் தும் உணவு கொடுத்தும் பொருள் கொடுத்தும் உதவும் வள்ளல் எம் முருகேசனர். மாணவர் பலர் ஏழ்மைக் காரணத்தால் 'தமிழகம்" சென்று தங்கி தமிழ் கற்று இன்று பண்டிதன், வித்துவான் என்ற பட்டம் பெற்று இருக்கக் காண்கின்ருேம்.
உழவன் விதைப்பதை அறுவடை செய்து தம் வீட்டிற்கு எடுத்துச் சென்று மகிழ்கின்றன். ஆனல் தான் விதைக்கும் விதையின் பயனை அனு பவிக்க முடியாத நிலையிலிருக்கும் எம் உபாத்தி யாயர்பற்றி நினைக்கும்போது மிகவும் வருந்து கிருேம். தன் முற்றத்தில் தொல்காப்பிய வரம்பு கட்டி, குறளாம் நீரைப் பாய்ச்சி இனிய தமிழ் விதையை வளர்த்துவிட ஐம்பெரும் காப்பிட
2

Page 9
உரமிட்டு அந்த சூழில் செழித்து வளர்ந்த தமிழ் நாற்றை-விளையும் பருவம் வரும்போது வேறு வயல்களில் இருக்கக் கண்டும், அறுவடையாகும் போதும், நாற்று வளர்த்து உதவியதை ழறக் கக் கண்டும் மனம் வருந்தாது முயற்சி குன்ருது தமிழ் நெல்மணிகளை விதைத்து நீரிட்டு உர மிட்டு வளர்க்கும் பெருமை எம் உபாத்தியா ரைச் சார்ந்ததே.
நாம் ‘கந்தமுருகேசனுர் முத்தமிழ் விழா'வை மூன்று நாட்களாகப் பிரித்து இயல், இசை, நாடகம் என வரையறுத்துக் கொண்டாட எண் Eனுேம்; ஒழுங்குகள் செய்தோம். ஆனல் ஈழத்தின் அரசியல் குழ்நிலை காரணத்தாலும் இங்குள்ள எம்மைச் சார்ந்த சில தலைவர்களின் சலன மனப்பான்மையாலும் இவ்விழா வை ச் சிறப்பிக்க உடன்பட்ட தவப்பெருங் குன்றக்குடி அடிகளார் ஈழம் வருவது ஒத்திவைக்கப்பட்டது. இதனல் விழாவையும் ஒத்திவைக்க எண்ணிய எமக்கு ஊக்கம் தந்து விழாவை ஒரு நாளுக்குள் சுருக்கி நடத்த ஏற்ற நிகழ்ச்சி நிரல் செய்ய உத விய செல்வி புஸ்பா செல்வநாயகம் அவர்களுக் கும் “எதுவரினும் தயங்க வேண்டாம் தமிழ்ப் பெரியாரைக் கெளரவிக்க என்னுல் ஆனதுமட்டும் செய்கிறேன்-வ யதுதான் குன்றியதே தவிர மனதின் உரமும், வீர மும் குன்றவில்லை” யென்று வீராப்புடன் உத விய கலையரசு சொர்ணலிங்கம் அவர்களுக்கும் என் நன்றியும், எம் குழுவின் நன்றியும் உரித் தாகுக.
விழாவைச் சிறப்பிக்க ‘நான் பாடுகிறேன் அண்ணு” என்று உடன் இயைந்த தங்கை செல்வி நாகம்மா-சங்கீதபூஷணம் அவர்கட்கும், பேச இயைந்த திருமதி அமிர்தாம்பிகை சதா சிவம், திருமதி சத்தியதேவி துரைசிங்கம், திரு முதலியார் சின்னத்தம்பி, எம் மதிப்பிற்குரிய திரு. எஸ். ரி. குணநாயகம், திரு. ஆ. கத் தையா அவர்களுக்கும் எம் அன்பின் நன்றி. தலைமைப் பொறுப்பை ஏற்று விழாவினைச் சிறப் பிக்க உடன்பட்ட திரு. மு. சிவசிதம்பரம் அவர் களுக்கும் எம் நன்றி. ஒருநாள் விழாவென்ரு லும் முத்தமிழும் இடம்பெற மனம் உவந்து உதவிய கலையரசின் யாழ் நாடக நடனக் குழுவிற் கும் எம் பாராட்டும் நன்றியும் தெரிவிக்கக் கட மைப்பட்டுள்ளோம்.
நண்பர் திரு க. கார்த்திகேசு அவர்கள் நமக்கு ‘கந்தமுருகேசனர் அரங்கம்' அமைக்க

உதவியமைக்கும் திரு. க. நீலகண்டன் அவர்கள் அவ்வரங்கை அலங்கரித்தமைக்கும் எம் நன்றி.
மற்றும் நண்பர்கள் திருவாளர்கள் ரி. ராமச் சந்திரன், வே. ஆறுமுகம், இ. அட்சலிங்கம், கி. பாலசுப்பிரமணியம் அவர்களுக்கும் நாம் நன்றிகூறக் கடப்பாடுடையேம்.
விக்னேசுவரக் கல்லூரி அதிபர் க. சிவப்பிர காசம் எம் விழாவை நடாத்தக் கல்லூரி மைதா னத்தைத் தந்தமைக்கு நன்றியுடையவர்களா 6:Gdgւb,
இளம் சாரணர் படையினர் தமிழ் வளரச் செய்த அன்புமிக்க தொண்டினைக் கண்டு மிகவும் பூரிப்படைவதோடு, அவர்கள் இளம் நெஞ்சில் தமிழ்த் தொண்டு என்றும் மாருதிருக்க தமிழ் அன்ன ஆசி கிடைக்குமென நம்புகின்றேன்.
இவ்விழா என் அருமை நண்பன் திரு. மு. இராசரத்தினத்தின் முயற்சியின் பலன் என்று மிகவும் தாழ்மையாகவும் நன்றிப் பெருக்குடனும் அறிவிக்க ஆசைப்படுகின்றேன். நண்பர் திரு. கிருஷ்ணபிள்ளை, திரு. வி. வல்லிபுரம் (மகாத்மா தியேட்டர்) திரு ப. தங்கராசா அவர்கள் ஊர் வல ஒழுங்குகளை மிகவும் அபார முறையில் அமைத்து உதவியதைக் கண்டு மகிழ்கிருேம்.
மெய்கண்டான் பதிப்பக நிர்வாகிகளுக்கு நாம் என்றும் கடமைப்பட்டிருக்கின்ருேம். அவர் கள் குறுகிய காலத்தில் இம்மலரை அச்சிட்டு உதவியமைக்கு எமது நன்றி. விசேடமாக திரு. என். இரத்தினசபாபதி, ஆ. கந்தையா அவர்கள் உதவி மிகப் போற்றத்தக்கது. அத்துடன் தம் கண் சிரமம் பாராது கட்டுரைகள் தந்துதவிய அன்பர் கள் அனைவருக்கும் எம் நன்றி.
அன்று வீதிதோறும் விழாவெடுத்த தமிழி னம் விரைவில் அந்நிலையை அடையும் என்ற
உயரிய நோக்குடன் தங்களிடமிருந்து விடை பெறுகின்றேன்.
வாழ்க கந்த முருகேசன்!
க. விக்கினேசுவரராசா செயலாளன் கந்தமுருகேசன் முத்தமிழ் விழா.
உப சுங்க சேகரிப்பாளர்
பருத்தித்துறை 2-2 - 62

Page 10
GREE
It gives me great pleasure to se
patriot on the occasion of his Sashtiapi
the self sacrificing courage with wh
brought about by his illness, OME C311
providence which has for each of us ou
We Tamils are beset by great
bleak and hopeless, the life of our gr
in the belief that if we have faith in ol
the difficulties in our way, we will triu
independent and respected people.
★
SA0SL 0MeMYLML0JML0MML0eLeLMMLMLML0 L0LMLMLLLLLL 0SLL0SSLL0SSLL0SSMLe0LSLLA0MeSAS0SMLJ
 

പ്ര<<(~~~<<><><<~~~<>
TINGS
aboorthy Celebration. When one considers
ich he has surmounted great obstacles
only wonder at the inscrutable ways of
)
() () nd my humble greetings to our scholar 8 () () () s () ()
appointed destiny we have to fulfil.
difficulties and the outlook seems so
eat scholar only serves to encourage us
urselves and a determination to surmount
mph in the end and emerge as a proud,
M. TIRUCHELVAM, Q. C.
(President, Kanthamurugesan Mutha m i I Vizha).
JMS0eSJSL0MSMS0MSL0SLML0 eSLA MMMLMMqL MeLMLMMLMLML0MMM0eJSL0MML0MMeML0MMeeMLMSM0eLee eLeLML0eYM MMeSeY J

Page 11
The Vizha that has been org
Murugesan is but the outward expres
great Thanhil scholar and poet.
In these difficult and fateful da our past selfish deeds, it is necessary f to our glorious heritage, to the migh
words of wisdom that our great ones
Who can give us better guidance
younger generation with enthusiasm for
our goal of national regeneration, and Kantha Murugesan long life and years
 
 
 
 

TINOS
anized in honour of Thiru Kantha
ion of our love and esteem for this
is when we are reaping the reward of or us to turn for solace and inspiration y deeds of our forebears and to the have enshrined in our literature.
and inspiration and who can fire our service than our poets?
ate ourselves anew to the realization of may the Lord Shiva vouchsafe to Thiru
of useful service
T. RAJATHURA.

Page 12


Page 13
+రారాలాండారాలాంలాలారారాలాల 1211-11A/da/.
திரு. விக்கனேஸ்வரராசா,
கந்தமுருகேசன் முத்தமிழ் விழாச் செயலாள
முத்தமிழ் விழாச் சபை. புலோலி.
தமிழ்ப் புலமையும், பர வாய்ந்த தமிழறிஞர் கந்தமுருகேசன் ஈழத்துத் தமிழ் அறிஞர்கள் விழா:ெ றேன். இவ்விழாவைச் சிறப்பாக ந முக்கியமாகத் தமிழ் இளைஞர்களைப் ே
தமிழ்ப் புலவர்களையும், பின்பே, அவர்களின் அருமை பெரு விழா வெடுத்தும், மணிமண்டபம் அ தமிழறிஞர் கந்தமுருகேசன் அவர்க இருக்கும்போதே ஈழத்துத் தமிழ் அறி
கம் கண்டு பெருமையும், பேரானந்த
தமிழ்ப் பெரியார் கந்தமுருே ஆய்ந்து உணர்ந்து வாழ்பவர். இலக்ச யவர். அவரிடம் பாடங் கேட்கும் வா இன்று ஆழ்ந்த தமிழ்ப் புலமையுட6 அடைகின்றேன். அத்தமிழ்ப் பெரியா தமிழ்த் தொண்டு செய்ய திருக்கேதீச் டுகின்றேன்.
'கந்தமுருகேசன் முத்தமிழ் சரத்து இறைவனை வேண்டுவதோடு, பர்களைத் திரும்பவும் போற்றிப் பார
சே ‘செந்தில்?
பேதிரிஸ் ருேட்,
கொழும்பு-4. 6 - 2 - 6 2.

JAJSSMSYS0SLLSSeSLSLSSLSLSSLSLSSLSLSASSTLLS SSLSSSqS qMSqq SqqqSMSMML0eYL0JL0LYLMLS00J Coax
செய்தி
AMA/AA
த பண்பும், நிறைந்த உள்ளமும் அவர்களுக்கு முத்தமிழின் பெயரால் வடுப்பது அறிந்து பெரிதும் மகிழ்கின் டாத்த முன்வந்த தமிழ் அறிஞர்களை, பாற்றிப் பாராட்டுகின்றேன்.
அறிஞர்களையும் அவர்கள் இறந்த நமையைத் தமிழ் மக்கள் உணர்ந்து மைத்தும் போற்றியுள்ளனர். ஆனல் வின் பெருமையை அவர் உயிருடன் நிஞர்கள் உணர்ந்து அவரின் சேவை த்துச் சிறப்புச் செய்வதைத் தமிழுல மும் கொள்ளுமென்பது திண்ணம்!
கேசன் அவர்கள் தமிழ் இலக்கியங்களை iணத்தில் அழுத்தமான அறிவு உடை "ய்ப்பைப் பெற்ற மாணவர்கள் பலர் ன் விளங்குவது கண்டு பெருமகிழ்ச்சி "ர் இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து சரத்து இறைவன் இன்னருளை வேண்
விழா' இனிது நடைபெற கேதீச் இவ்விழாவை ஏற்பாடு செய்த அன் ாட்டுகின்றேன்.
ர் கந்தையா வைத்தியநாதன்.

Page 14
<><>>><<<<<<><><<<<<<<<>><<
தமிழ்ப் புலவர் :
கந்தமுருகேசனர் வாணியின் சுவை அளிக்கும் பேரியாழ். காலத் யாதவள் கன்னித் தமிழ். எழுப்பழு இருந்தாலும், இளமை பொலிந்து தமிழ்ப் புலவர் கந்தமுருகேசனவர்களு கிருர். ஆண்டு அறுபதைக் கண்டுெ இளைஞனுக இருக்கிருர்,
ஆரவாரமின்றித் தமிழுக்காசி இத் தலைமுறைக்குத் தெவிட்டாத கந்தமுருகேசனர். அத்தகைய பு 6 அவரிடம் கற்ற, அவரை அறிந்த கள். இந்த விழா அவருக்காகவல்ல, என்பது என் கருத்து.
()
()
Q
()
S
8 இலக்கணமும், தர்க்கமும் 6 கள்! எத்தனைபேர் தவங்கிடக்கிரு படுவதற்கு. மாருக இந்தப் பென் கட்டிக் குற்றேவல் புரிகிருர்கள் கந்
இவ்வேளையில், அந்த முது ! எல்லோருடனுஞ் சேர்ந்து ஆண்டு நமக்கெல்லாந் தொண்டு புரியத் த என் இதயங் கனிந்த வாழ்த்துக்களை
LLLSSMSLLMSLMLAeLSMSMLMLSMSLLSLSSSMLSMLSSLLSeLALLSLL00LLML0SMLSMSML0LMLML0MLSLLMeLL0L0MeML0LS

شمحبر
JL0JLLLLL0YLL0LLLL0LLLL0LLLLLL SLALALALLSALSLALLASLLALAq S LALA ALAAA Lq AA qSqM iqSqq S qqqqSqS S SSS iiLMSS
கந்தமுருகேசனர்
கையிலுள்ள வீணை ஆராத தமிழ்ச் ந்தினல், கயவர்களினல் அழிக்க முடி மும் வளர்ச்சியும் எய்திக்கொண்டே கொண்டிருக்கும் பண் புடையவள். ரும் அப்படித்தான் வாழ்கிருர் வளர் பிட்டாலும் கருத்தினல், பேச்சினல்
5 வாழ்வை அர் ப் பண ஞ் செய்து தமிழின்பமளிக்குந் தியாக மூர்த்தி 0 வருக்கு நன்றிக் கடன் செலுத்த தமிழ்ப் பெருமக்கள் விழா எடுக்கிருர் கன்னித் தமிழுக்கு எடுக்கும் விழா
சந்தமுருகேசனரின் காதல் மனைவியர்
ர்கள் இந்த உத்தமிகளின் வாடை
ாமணிகளிருவர் நல்லவர்களாய் கை
( X
தமுருகேசனரிடம்.
புலவனை, தமிழை வாழ்த்தும் உங்கள் பல வாழ்ந்து எல்லா இன்பமுங் கண்டு மிழ்த் தெய்வம் அருள்வாளாக என்று த் தெரிவிக்கிறேன்.
வணக்கம்!
மு. சிவசிதம்பரம். பா. உ. (உடுப்பிட்டி).
LMLMeLSL0LSLSLSL0SLSL0LSLSLLLLLSLLLMLMLSLLSLLL0SLMLMLeLSLSLeSYAeSASASASASASASS

Page 15
செந்தமிழ்க் கர்
சீர்த்தி
ஆக் ச் அல்வாயூர்: கவிஞ
பண்டை உரை ஆசிரியர் வன் பாங்குபெற ஒருருவாய தண்டமிழின் துறையெலாம்
தகுதிபெற நன்கூட்டுந் அண்டியொரு குருவடையா
அமைந்தமதி நுட்பத்த தெண்டிரை சூழ் புலோலிநகர் சிறீகந்த முருகேசன் 8
அரம்போலும் கூர்ந்தமதி நு ஐவகையா மிலக்கணமு மரம்போல வாழாது தன்மா வாய்ந்த பழம் பண்பகம் சிரம்போலும் சால்புபெறத்
சீர்த்தியுடைக் கந்தமுரு தரம்பேணு மறுபதா மாண்( தணிவிழா! தமிழ்த்தா
தன்னடையே ஊனமுற்ற டே தமிழன்னை விரைந்து ந சொன்னடையும் பொருணை தூய நடை, பயிற்றுவிச் கன்னலிடைத் தேன்பெய்து கற்பிக்கும் புகழிந்தக் மின்னெனவே நடக்கின்ற பு
மேன்மைதிகழ் கந்தமு(
நூறவதா னங்கள்புரிந் துலே நுண்மதியான் கதிரைே கூறவரு புலவனங் குமார க குலவுபுகழ் வேன்மயில் சாறயரும் புலோலியெனும்
தமிழ்ப்பீட மெனஅமர் தேறவரும் மாணுக்கர் மனஇ தீபமெனப் புகுந்திறவே
செந்தமிழின் துறையாய்ந்த
சேர்ந்த தமிழ்த் தெய்வ கந்தமுரு கேசனெனப் பூண்ட கடவுனெறி பூணுதோ அந்தமிலாத் தமிழ்த்தாயின்
அரியகுறள் நெஞ்சினிே எந்தவிதம் அருள் மறப்பார்
இங்கிதனை உற்றுணர்த

தமுருகேசனர் வாழ்க!
5 h :
ர் மு. செல்லையா
T66), D at Giantth ப் வந்தா லென்னத்
மாணக் கர்க்குத்
தன்மை மிக்கான் தியற்கை யாக ாற் தானே கற்றேன்! * வதியுஞ் செம்மல் சிறந்து வாழ்க!
ட்பம் வாய்ந்தோன் D மாராய்ந் திங்கு
ஞக்கர் ல வாழ்வி லூக்கிச் தேன்போ லூட்டுஞ் ந கேச ஞரின் திப் பூர்த்தித் ப்க்கு நனிவி ழாவே!!
பாது மெங்கள் ான்கு நடக்கும் வண்ணம் டயுந் துலக்கி வைத்தே $குந் தொன்ன வல்லோன்! கனியுங் கூட்டிக் காசி ரிைக்கண் துமை செய்தோன் ரு கேச னன்றே!
கோர் மெச்சும் வேற் பிள்ளை யோடு FfiTui (5) வா கண்ணுர் வாழ்ந்த பதியி லிந்நாள் ந்து தகுப ரீட்சை | ருட்குத் 0ான் சீர்த்தி வாழ்க!
மதுரைச் சங்கம் வமெனுஞ் சேயின் ந. - ஆசான்
னெனலும் நன்ருே! முடியே ஆன லே ஆழப் பெற்ருேன்
அவனி மீதே ல் ஏற்பு டைத்தே

Page 16
'வானையழாவிடப்பல்லாண்
உடுப்பிட்டி கா வெ6 கன்னற் றமிழ்க்கவிஞ6 மன்னறுப தாண்டு வ பல்லாண்டு கூறவருள் பல்லாண்டு வாழ்தமிழ் கட்டளைக் க பொன்னிலங் காபுரித் தண்ட மின்னிலங் காரிசை கண்ட பழ முன்னிலங் கார்தரு கந்த முரு மன்னிலங் காணப்பல் லாண்டி தண்டமிழ் சைவம் புரந்திட்ட கண்டன செந்தமிழ்க் கோவை கொண்ட லுயரிசைக் கந்த மு மண்டல மீதுபல் லாண்டிசை
திருப்பனை யந்தாங்கி செப்பிய பொருப்பனை யம்புவி யெங்குர் வருப்பனை யெங்கந்த மாமுரு நெருப்பனை வாழ்த்திப்பல் லா
தேனை யுகுத்தசெம் பொன்ன மானை வரித்தவன் கந்த முருே வான யழாவிடப் பல்லாண் காந்தள் குறிஞ்சியை நீத்தொ போந்த வினுேதப் புதுமையை மேந்தல் புலோலிப் பதிக்கந்த காந்தக வாகப்பல் லாண்டிகை
பெண்ணைச் சிறப்போதி மூவிட பெண்ணைச் சிறப்பாக்கி மற்ற விண்ணை யணுகச்செய் கந்த மு கெண்ணை யிகந்துபல் லாண்டி
ஒருநாட் குறிஞ்சி யொழுக்க தருநாட் டரசையும் வென்றவ திருநாட் டியமைந்தன் கந்த மு வருநாடக ளாகபபல லாணடி மடக்குச் சிலேடை யமகம் டெ மடக்கிச் செழுங்கவி யாக்கிச் வடக்குக் கதிர்மீனங் கந்த மு( திடக்குர லோடுபல் லாண்டின் இன்புட னென்றுந் தமிழ்ப்பன பொன்புகர் நேரு மதிக்குரு ட மின்றரு "பேணுட்ஷோ கந்த ( தின்னிசை யோடுபல் லாண்டி நண்பன் சிதம்பரப் பிள்ளைக்கு துண்மை யறிவினை யேற்றிய கண்ணிய வான்கந்த மாமுரு பண்ணெடுத் தேயிசை பல்லா
ଈJ வாழிய வாழிய தொன்மைப் வாழிய வாழிய வங்கார் த வாழிய வாழிய பொங்கெழி: வாழிய வாழிய கந்த முருே

ாடிசைகோலவான்குயிலே
. நீலகண்டன்
jo, Lurr
ன் கந்த முருகேச யசுநிறை - பொன்னளிற்
பாலிக்குந் தொன்மையுடன் முன் பால்.
லித்துறை மிழ் வாணர் பொலிந்துயரு ாம்பரை மேன்மையுற கேச முன்னவற்கு
சை சோலை வளர்குயிலே I
நாவல சற்குருமேற்
புனைந்தான் கவிபொழியுங் ருகேசக் கொற்றவற்கு
ராக வளக்குயிலே. 2
வாணனைத் திண்ணியதோட் தமிழ்மணம் புக்குறக்காண் கே சனை வீம்பினர்க்கு ண்டிசை நீல நிறக்குயிலே, 3 தேயெனை மீட்கவென்னுந் மலரன் றிருந்துதமிழ் கேச மாதவற்கு டிசைகோல வான்குயிலே. 4 வா நெய்தற் கடனிலத்துப் க் காட்டு புலவர்கட மாமுரு கேசனுக்கிங் F பூம்பொழி லார்குயிலே. 5
டக் கள்ளூறு பெட்புறலாற் ஃ துளம்வெள்கிப் பேதலித்து ருகேச மெய்க்கவிக்கிங் சை யங்கா விளங்குயிலே. 6
மிசைந்தந்த வொப்புயர்வில் னின்பத் தமிழனைக்குத் மருகேசத் திவ்வியற்கு சை பொற்றளிர் மாங்குயிலே, 7 ாற் சித்திரம் வண்ண மெல்லாம்
சுவையாரும் வல்லுனருள் நகேச மாகவிக்குத் சை கானச் செழுங்குயிலே. 8
னி செய்யு மியலுடையான் ல் வளப் பொன்னிலங்கை முருகேச மேதைக்குன சை மென்ரு திடைக்குயிலே. 9
மெற்கு நறுந் தமிழ்தந் வளள லுயாகுருநற
கேசக் கவிமணிக்குப் ண்டு சோ?லப் பசுங்குயிலே. ாழி
புலோலி வளநகரம் மிழக மாநிலையம் ) பூத்திடு வண்டமிழ்த்தாய் கச வான்கவியே.
8

Page 17
;~ தமிழகத்
LDனேன்மணிய ஆசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்கள் தமிழ்த்தாய் வணக்கத்தில்,
“கடல்குடித்த குடமுனி உன்கரை
காணக் குருநாடில் தொடுகடலையுனக் குவமை சொல்வதும்
வியப்பாமே?”
என்று தாயின் புகழைக் கூறுகின்ருர், இராமனது அழகைக் கூறும் கம்பர், ‘‘மையோ’’, ‘மரக தமோ’, ‘மழை முகிலோ’ ஐயோ, என்று முடிக்கின்றர். இஃது இப்படியாயின் கடலிலும் பரந்த புகழுடைய தந்தையின் சிறப்பை எப்படி எடுத்து அறைவேன்? சந்திரனைப் பார்த்து நாய் குரைத்த கதைதான். ஆனல் மதியாகிய தந்தை யைப் பார்த்து நான் குரைக்கவில்லை. அவருடைய புகழ்க் கடலில் ஒரு சிறு துளியை எடுத்து வெளி யுலகிற்குச் சிதற விரும்புகின்றேன், வெற்றியும் காண்பேன் என்ற நம்பிக்கையில். எனினும் யான் வரையும் இச்சிறு கட்டுரை தந்தையின் இவ்விழா விற்கு உவந்தளிக்கும் மலராக அமைய இறைவனை வேண்டுகின்றேன்.
கல்தோன்றி மண்தோன் முக் காலத்தே முன் தோன்றி மூத்த குடியின் தாய் மொழியாம் இனிய தமிழ் சங்கத் தொட்டிலிலே சீரும், சிறப்பும் பீடும், பெருமையும் பெற்று வளர்ந்தது. இச்சிறு குழவியை கண்ணை இமை காப்பதுபோலப் பேணி வளர்த்தார் எமது தமிழ்த் தந்தை. சங்கத் தொட் டிலிலே வளர்ந்த தமிழ்த் தாய் “தமிழகம்?" என்ற மடியில் மழலை மொழி பேசி மகிழ்கின்ருள் தந்தையின் அரவணைப்பில்,
இறைவன் உறைவது கோயில். அரசன் வாழ் வது கோவில். தந்தை அமர்ந்திருப்பது ‘கலைக் கோவில்’’. இறைவனிடம் பக்தர் முத்தி கருதிச் செல்வர். அரசனிடம் குடிகள் பொருள் வேண் டிச் செல்வர். ஆனல் எமது தமிழ்த் தந்தையிடம் அறியாமை என்ற இருளே யகற்றி அறிவொளி பெருக்கச் செல்வோர் எண்ணிக்கை கணக்கில டங்காது.
ஆடம்பரத்தை விரும்பாத தமிழ் அன்னை அடக்கமாக குடிசையில் வளர்ந்து வருகின்ருள். குப்பையில்தானே குண்டுமணி தோன்றும். குண மென்னும் குன்றேறி நிற்கும் தந்தை வீற்றிருக்

தந்தை ~}
S
ரத்தினும்பாள்) J1J~~
கும் குடிசையில் “கல்வி' என்ற கதிர் சுடர்விட்டு எரிகின்றது. தமிழ் அன்னை கந்த முருகேசன் என்ற உடலில் புகுந்து காட்சி கொடுக்கின்ருள். பண்டைக் காலத் தமிழர் மரபு அழியாமல் பழம் பெரும் குடியில் தோன்றிய தமது மூதாதையரின் பண்பாட்டிற்கு ஏற்ப "திண்ணைப் பள்ளிக் கூட மாக' அமைந்து வருகின்றது ‘தமிழகம்'. தமிழ் வேந்தனுக வீற்றிருக்கும் இவருடைய அடி யில் பாலர் முதல் பட்டதாரிகள் வகையைச் சார்ந்த இருபாலாரும் தவருது அறிவு வளர்ச்சியடைகின் றனர்.
தன்னலமற்ற பண்பும், பொது நோக்கமும், இரக்க எண்ணமும், செயலும் ஒருங்கே அமையப் பெற்றவர். மாணவர்களிடம் ஒரு தனி அன்பு கொண்டவர். இ வ. ரு டை ய பொறுமையைச் சோதிக்கும் மாணவர் பலர் உண்டு. மாணவர் என்ற முறையில் அவர்கள் எத்தனை கயவரா கவோ, உதவாக்கரைகளாகவோ இருந்தாலும் பசுமரத்தாணிபோல கல்வியையும் அன்பையும் ஒருங்கே சேர்த்து ஊட்டுவதில் சிறிதும் சலிப்புத் தட்டியது இல்லை. தவிர வறுமையின் கோரப் பிடியில் வருந்துவோர்க்கு இலவசக் கல் வி ப் பயிற்சி அளிக்கப்படுகின்றது. தந்தையிடம் அறி வுப் பிச்சை எடுக்கச் செல்லும் ஆசான்கள் ஆண் டியாகத் திரும்பியது கிடையாது. எல்லோரும் சிறந்த அறிவுடன் உயர்ந்த பதவிகளை ஏற்று வெற்றியுடன் வாழ்க்கை நடத்துகின்றனர்.
'ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு'
என்கிருர் வள்ளுவர் ஊ ரு க்கு ஊருணி நீர் பொது, உலகிற்குக் குரு சொந்தம். பொதுமக்கள் சொத்தாக விளங்கும் எமது தந்தை ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற உயர்ந்த பண் பாடு உடையவர். ஜாதி, மதம், உயர்ந்தோர், தாழ்ந்தோர் ஏழை, பணக்காரன் என்ற பாகு பாட்டிற்குத் தந்தையின் முன் இடமில்லை. இறை வன் படைப்பில் தோன்றிய அனைவரும் தந்தை யின் கண்முன் சமமாகவே கருதப்படுகின்றனர்.
'யான் பெற்ற பேறு பெறுக இவ்வையகம்'
என்பதே இவருடைய சிறந்த குறிக்கோள். எல் லோரும் வாழ வேண்டும் என்ற நோக்கத்திற்கு

Page 18
இடையூறு செய்யும் தீய நோக்கங்களைக் களைந்து உலகைத் திருத்தவேண்டும் என்ற பெரு நோக்கம் உடையவர். அத்தகைய நல்ல செயலுக்கு எத் தகைய இடையூறு ஏற்படினும் எதிர்த்துப்போரா டும் இயல்புடையவர். எனவே தன்னலமற்ற தந் தையின் வீர வாழ்க்கை,
‘‘உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து’’
என்ற வள்ளுவர் வாக்கிற்கு ஒர் எடுத்துக்காட் டாக அமைந்திருக்கின்றது.
தந்தையின் அங்கத்தில் ஒரு சிறு குறையுண்டு. ஆணுல் அவருடைய அறிவிற்குக் குறை கூற எவராலும் இயலாது. பரந்த நெற்றியும், அறி வொழுகும் கண்களும், தமிழ் ஒளி வீசும் மலர்ந்த முகமும், பவளம் போன்ற மேனியும், பாலை யும் வெல்லும் வெண்ணிறத் தாடியும் காண் போர் மனதைப் பித்தலாட்டம் ஆடச் செய்கின் நிறது.
தாமின்புறுவது உலகின்புறக் கண்டு காமு றும் கற்றறிந்தோர் பரம்பரையில் தோன்றிய தந்தை தாம் மகிழ்வது மட்டுமன்று; தம்முடன் உரையாட வருவோர் அனைவருடனும் நகைச் சுவை மலிந்த இனிய கருத்துக்கள் அமைந்த ரச மான கதைகள் சொல்லி மகிழ்விப்பார். ஏட்டுப் படிப்பு மட்டும் அன்று மாணவர் உலக அறிவும் ஒருங்கே பெற்றனர். அறிவே உருவாய் நகை முகம் காட்டி இலக்கியப் பூங்காவில் அமர்ந்திருக் கும் குரு வைக் கா னு ம் கல்லும் கனிந்து கவி பாடும் என்பதிற் சிறிதும் சந்தேகமில்லை.
தமது இன்ப வாழ்வையும், இனிய நேரத் தையும் பிறருக்காகத் தியாகம் செய்த ‘தியாகச் சுடர்' என்றே இவரை அழைக் க வேண் டு ம். நோய் வாய்ப்பட்டு வயது முதிர்ந்தபோதிலும் இரவு பகல் தமது தொண்டிற் கண்ணும் கருத்து மாக வாழ்ந்து வருகின்றர். இவரது உடல் நிலை குன்றக் காரணம் ஓயாத உழைப்பேயாகும். பாடசாலையில் பட்டத்திற்காக கல்வி பயின்றவ

ரல்லர். உண்மையறிவு தேடி பரீட்சை இன்றிப் பட்டம்பெற்று உழைப்பால் உயர்ந்த உத்தமர்.
இத்தனை சிறப்புற்றபொழுதும் பிறர் தம் புகழ்பாட விரும்பாதவர். கைமாறு கருதாது, புகழ் விரும்பாது, தானுண்டு தமது தொழில் உண்டு என்று வாழ்பவர். சங்க இலக்கியத்திற் கூறப்படும் ஏட்டுச் சுவடிகள் நூல்கள் அனைத்திற் கும் பொருள் கூறும் கடல் போன்ற விரிந்த அறிவு வன்மை பெற்ற தந்தையின் புகழ்பாடும் நூல்கள் ஒன்றும் கிடைக்கவில்லையே என்றுதான் கவலை. Jgsiisassa), "Great things are done in silence” என்று கூறு வர். இதனை ஒட்டி வாழ்கின்றர் தந்தை.
பார் புகழும் புலவர்களைத் தந்து புகழ் பாடு கின்றது உலகம். ஆனல் பரீட்சையின்றி பட்டம் பெற்று, புகழ் விரும்பாது விளம்பரத்தை வெறுக் கும் புலவர் பெருமக்களும் உண்டு என்பதை அறைகூவி அறிவிக்கின்றது புத்துயிர் பெற்றுவிளங் கும் புலோலி நகரம். கவிபாடும் புலவர் பெயர் கொண்டு நாட்டை அழைப்பது பண்டை மரபு. ஆனல் தந்தையின் மறைவுக்குப் பின்னுவது இத் நகர்க்குப் பெயர் வழங்குவார்கள் என நம்புகின் றேன்.
மிகுந்த எளிய வாழ்க்கையை மேற்கொண்டு பழந்தமிழ்த் தொண்டு செய்து தமிழ் அன்னையின் உயிர் நாடியாக விளங்கும் எமது தமிழ்த் தாத்தா பொய்யாமொழிப் புலவர் வள்ளுவர் வாக்கிற்கு ஏற்ப
*தோன்றிற் புகழொடு தோன்றுக
அஃதிலார் தோன்றலிற் தோன்ருமை நன்று'
என்பதை நிலைநாட்ட அறவாழ்க்கை வாழ்ந்து இனியும் பல்லாண்டு வாழ்க என வாழ்த்தி முடிக் கின்றேன்.
வாழ்க தமிழகம் !
ஓங்குக தமிழ் மொழி !!
வாழ்க கந்தமுருகேசன் !!!

Page 19
“கல்விக்
- மு. கந்தப்பு, g
நாத்திகம் பேசி நாத் தளும்பேறியவன் என்று இளவட்டங்களைச் சொன்னல் வயதுக் கோ ளாறு என்று ஒதுக்கிவிடலாம். இது கிழம். நாத் திகம் பேசுகிறது. ஆத்திகம் பேசுபவர் வாலாட்ட முடியாத ஆணித்தரமான தடைகள் போடுகிறது. இதை நான் சொன்னல், ஏளனம் பேசுகிறவர்கள் தைரியமிருந்தால், எங்கே ஒரு முறை போய்ப் பாருங்கள் அவரை. வாதில் வென்ருல் கழுவிலேற் றுங்கள். முடியாதவிடத்து நீங்கள் கழுவில் ஏரு தீர்கள். நீங்களும் உலகில் வாழவேண்டுமாகை யால் வாய் மூடித் திரும்பிவிடுங்கள்.
படித்தது தமிழ் நாலாம் வகுப்பு. படிப்பிக் கிறது வித்துவான் வகுப்பு வரையுள்ளவர்களுக்கு. புராணத்துக்குப் பயன் சொன்னது இப்போ அதற் குச் சொட்டை சொல்லுகிறது.
இலக்கியம், இலக்கணம், மதம், கணிதம், அரசியல் எது வேண்டுமானலும் புத்தகத்தை மூடி வைத்து விட்டே படிப்பிக்கிற பக்குவம் உண்டு. மதம் பலவும் தடவிய கை, அவர் கை. துளைத்துத் துருவி ஆராய்ந்த உள்ளம், அவர் உள்ளம். இந் தத் திறமைகள் எப்படி வந்தது என்ருல், கடவுள் கொடுத்தது என்று மட்டும் ஒப்புக் கொள்ளார். ஏனென்றல் 'தன்முயற்சிக்கு அளிக்கப்படும் பரிசு பறிக்கப்படும், ‘சாமி” வாழும் என்கிருர்,
உலக அனுபவம் நேரிற் கண்டறிந்து நாட் கள் அல்ல-வருடங்கள் பல சென்ற, கால் இயங் காத உருவம். உலக அனுபவம் இல்லையென்பீர்க ளாக்கும். உலகம் உயர்ந்தோர்மாட்டு என்றல், அந்த உலகம் வந்து, கண்டுபேசிப்போயிருக்கிறது: ஈழத் தமிழ்-வைதீகப் பேரறிஞர் திரு. சி. கண பதிப் பிள்ளை (பண்டிதமணி), காலஞ்சென்ற திரு. பொன். கந்தையா, திரு. பீட்டர்கெனமன், திரு. நாஞ்சில் கி. மனேகரன், T. K. சீனிவாசன் இன் னுேரன்ன பலர். இவர்கள் போனபின் சுட்டுவிரலை நாடியிற் சேர்த்து அதிசயப்பட்டார்களே தவிர, உதட்டைப் பிதுக்கிக் கேலி பேசியதில்லை.
சுவைகளிற் சிறந்த நகைச் சுவைக்கு ஊற்றி டம். “பகிடி’ உயிரைக் கொல்லும், உணர்வையள் ளும், உயர்ந்தோரைத் தன்பாற் கொள்ளும். ஐரிஸ்காரன் “பகிடி சொன்னல் லண்டன்காரன் அடுத்தநாள் சிரிப்பானம். விளங்கச் செல்லும் நேரமல்ல, 'பகிடி’யின் தரம்விளங்க ஒரு கதை இது. புலவர் பகிடி சொன்னல் சிலவேளை சில ஆண்டுகளுக்குப் பிறகு வேறு விண்ணன் ஒருவன்

கடல்"
ழ்கரவை -
விளக்க, விளங்கியதும் உண்டு. உடனே விளங்கிச் சிரித்துப் பல்வலி கண்டவர்களும் உண்டு.
இலக்கணத்துக்கு உதாரணம், இலக்கணப் புத்தகத்தில் உள்ளதையே சொல்லி வந்த பரம் பரை நமது ஆசிரிய பரம்பரை. புலவர் கதை வேறு. 1ஏறு பெட்டி, தள(ர்)நார், ஒடு கயிறு தான் வினைத்தொகைக்கு உதாரணங்கள்.
பல துறையிலும் புதுமை உண்டு. உதார ணமிது: "ஆகு பெயர் வினைத்தொகையாகுமா?’’ என்பார். நன்னூல், தொல்காப்பியந் தடவு வோம். சிரித்துக்கொண்டே, 'ஆனபெயர், ஆகிற பெயர், ஆகும் பெயர் என்ற மூன்று காலமுங் கரந்துபட ஆகு பெயர் இருப்பதால் வினைத் தொகை' என்பார். இது நமக்கு விளங்காமற் போனது நமது பழ வினைகளின் தொகைகளா லாக்கும் என்று நினைப்பதேயன்றி வெளியே சொன்னதில்லை. பழ வினையென்றலே படுசூடு கிடைக்கும் என்று தெரியாதா என்ன? புத்தகங் களுடன் வாழுபவர்களே ‘புத்தி பெற இவரிடம் போய்ப் பழகுங்கள்.
அவரிடம் ஒரு குறை. குரல், இனிமை மறந் தது. பாடினர் பாட்டு. பக்கத்தில் இருந்த பருத்த
வரே' என்று பழையதைச் சொன்னர். புலவர் உடனே, "அவன் வரட்டும் நீ மனிதன், சால் அல்ல என்று நான் சொல்லித் திருப்பியனுப்புகி றேன்’ என்ருர், சந்தானத்தைத் தாக்கின பகிடி இது. இப்படி ஒரு கோடி உண்டு.
தமிழ்ச் சொற்கள் அவருக்குக் கை க ட் டி ச் சேவகஞ் செய்கின்றன. ஒயாமற் சொற்களைவைத் துக்கொண்டு அவர் விளையாடுகிறபொழுது தமி ழுக்குள்ள சிறப்பு மட்டும் புரியவில்லை அவர் திற மையுந் தெரிகிறது.
இவர் எங்கே இருக்கிருர் என்று அறியாதார்தமிழ் அறியாதார்-உடனே புலவர் ஒலிமிக்க புலோலி தெற்கிலே ‘தமிழகம்’ என்னும் சிறு மணற் குடிசைத் திண்ணையிலே தாடியுடன் தவ முனிபோலிருக்கும் அவரைப் பாருங்கள்.
அறிஞர்க்குரிய வறுமை அங்குண்டு. அதனற் முன் கலை அங்கே வாழ்கிறது. அவர் இயற்றிய
அதை அச்சில் வர உதவினல் உயர் ந் த ஒரு கோவையைத் தமிழகம் சுவைக்க முடியும். செய் வீர்களா?
இது போன்றவற்றை வினைத் தொகைக் குறிப் பெனவும் விளக்கியே விடுவார்,
l

Page 20
நான் கண்ட
- தென் புலோலி
ரண்டாவது மகாயுத்தம் நடந்துகொண் டிருந்தது. தித்திக்கும் செந்தமிழ் பயில்வதில் ஆர் வங் குன்றி அந்நிய மொழியாம் ஆங்கிலத்தில் மோகம் உச்ச நிலையில் இருந்த காலம். தமிழ்ப் பாடசாலைகளில் உயர்தர வகுப்புகள் எல்லாம் காலியாகி ஆங்கிலப் பாடசாலைகளில் ஆரம்பவகுப் புகளெல்லாம் நிரம்பியிருந்தன. இளைஞரின் உள் ளத்திலெல்லாம் ஒரே ஆங்கிலக் கல்வி மயம். ஏனைய மாணவர்களைப் போன்று நானும் ஆங்கி லங் கற்றுக் கொண்டிருந்தேன்.
யுத்தம் காரணமாகப் பாடசாலைகளெல்லாம் அரை நாளுடன் முடிந்துவிடும். சாயங்காலத்தை விளையாட்டில் களிக்கும் மாணவர் கூட்டத்திற் சேரும் பாய்க்கியம் எனக்குக் கிட்டவில்லை. வறுமை என்னும் கொடும் பிணியினல் பீடிக்கப்பட்ட எண் ணற்ற குடும்பங்களுள் எமது குடும்பமும் ஒன்று. ஆகவே பொருளாதாரத்தை நிவர்த்தி செய்யும் பொருட்டு சாயங்காலத்தில் தோட்டத்தொழில் செய்யும் நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டிருந்தது. பாடசாலையிலிருந்து வீடு திரும் பியதும் நேரே தோட்டத்துக்குள் இறங்க வேண்டும். பெயரள வில் மாணவன். செயலளவில் ஏனைய தோட்டத் தொழிலாளிகளுள் நானுமொருவன்.
எனது நண்பனுெருவன் என்னைப்போன்ற பரிதாப நிலையிற் சேர்ந்தவனன்று. பாடசாலை முடிந்ததும் உல்லாசமாகக் களியாட்டங்களிலும் கூட்டங்களிலும் விவாதங்களிலும் ஈடுபடும் பேர் வழி. ஒழிந்த வேளைகளில் முருகேசு உபாத்தியாய ரிடம் போவது வழக்கம்.
வைகாசி மாதம். தோட்ட வேலை முடிந்து தொழிலாளர்இளைப்பாறும் காலம். ஆகவே சாயந் தரத்தில் எனக்கும் ஆறுதல்.
ஒருநாள்மாலை எனது நண்பனும் நானும் எங்களூர்ப் பிள்ளையார் கோவில் தேர்முட்டியில் சந்தித்தோம். எவ்வளவோ விஷயங்களை அளவ ளாவிக்கொண்டிருந்தோம். சம்பாஷணை மத்தியில் உபாத்தியாயரிடம் (முருகேசு உபாத்தியாயரை ‘உபாத்தியாயர்' என்று அழைப்பது வழக்கம்) போவதாக நண்பன் கூறினன். என்னையும் அழைத் தார். நானே உபாத்தியாயரிடம் போயிருக்க வில்லை. அவர் புகழ் மட்டும் கேள்விப்பட்டிருந் தேன். மாணவனுயிருந்த நான் அப்பெரியாரிடம் போகக் கூசினேன். நண்பன் என்னை விட்டபா
l

உபாத்தியாயர்
வே. ஆறுமுகம் -
டில்லை. உபாத்தியாயரை நன்கு அறிந்தவர். அவ ரின் அரும் பெருங் குணங்களைப்பற்றியும், அறி வாற்றலைப்பற்றியும் கல்வித் திறனைப்பற்றியும் ஒன்றன் பின் ஒன்ருக எடுத்துரைத்தார். எனது மனம் மாறிற்று. நான் அவரைப் பின்தொடரச் சம்மதித்தேன். புறப்பட்டோம்.
நண்பன் முன்செல்ல இயந்திரம்போல் நான் பின் சென் றே ன். உபாத்தியாயரைப்பற்றி நண்பன் சொன்னவை எல்லாம் எனது மனக் கண் ணில் ஒன்றன்பின் ஒன்ருகத் தோன்றி மறைந்தன. என்னேடொத்த அறிவு படைத்த ஒருவரிடம் போவதென்றல் நான் அஞ்சியிருக்க மாட்டேன். உபாத்தியாயரிடம் போகின்ருேம் என்ற நினைவு என் நெஞ்சைப் படபடக்கச் செய்தது. அப்பெரி யார் எப்படிப்பட்டவர்? என்ன குணம் படைத்த வர்? அவரின் பரந்த அறிவின் முன் நான் எம்மட்டு! இப்படிப்பட்ட கேள்விகளும் சந்தேகங்களும் என் உள்ளத்தில் எழுந்து வேதனை கொடுத்தன. மெளனமாகப் பின் தொடர்ந்தேன்.
பதினைந்து நிமிஷம் நடந்திருப்போம். கினியாத் தடிகளால் கட்டப்பட்ட ஒர் படலைக்கு முன் நண் பன் நின்றர். உள்ளிருந்து கொழுக்கி இடப்பட்டி ருந்தது அப்படலை. சிரமத்துடன் கொழுக்கியைக் கழற்றிப் படலையைத்திறந்தார்.
அதுதான் உபாத்தியாயரின் வளவு" என்று தெரிய அதிக நேரம் எடுக்கவில்லை. இலேசாக அடித்துக் கொண்டிருந்த என் இருதயம் உபாத் யாயரின் கொட்டிலை அணுகிவிட்டோம் என்ற எண்ணத்தில் வெகு வேகமாக அடிக்கத் தொடங்கி யது. பயம் பக்தி கிலேசம் இவையெல்லாம் நெஞ்சை அமுக்க, குற்றம் புரிந்த கைதி போல் மெல்ல மெல்ல அடிவைத்து நண்பனைப் பின் தொடர்ந்தேன்.
உபாத்தியாயரிடம் சென்று அவர் தர்சனம் பெற்றுத் திரும்பும் எத்தனையோ மேதாவிகளின் அறிவுப் பாரத்தாற்போலும் அவரின் கொட்டி லுக்கு அழைத்துச் செல்லும் பாதை இருபக்கங்க ளிலுமுள்ள புற்றரையைவிடப் பள்ளமாக இருந் தது. அப்பாதையில் ஒருவர் பின் ஒருவராக நடந் தோம். கொட்டிலை அடைந்தோம்.
வருபவர்களை உபசரிக்கவென்று அ ழ கா க அமைக்கப்பட்ட மல்லிகைப் பந்தலின் கீழ் நின் ருேம். எங்களை உபசரிப்பாரெவருமில்லை. அம்மல்
2

Page 21
லிகைக் கொடியே ஆசனந்தராது தனது நறுமணங் கமழும் பூக்களை எங்கள் சென்னிமேல் உதிர்த்து வாழ்த்தி உபசரித்தது. குழுமையான பந்தலின் கீழ் இருவரும் மெளனம் சாதித்தவாறு நின்ருேம்.
தமிழுலகம் போற்றும் அவ்வறிவுக் களஞ்சி பத்தின் தோற்றத்தைத் தரிசிக்க ஆவல் கொண்ட வணுய் ஒர் அடி எடுத்து முன் வைத்தேன். அப் SL ff) uIrr f 6öt திரு வுரு வங் கண் டே ன். தமிழுலகிற்கு வேதத்தை அளித்த வள்ளுவன், தமிழையும் சைவத்தையும் ஒருங்கே வளர்த்த நாவலர் பெருமான் ஆகியோரின் இருக்கை, செந் நிறம், சாந்தமான பொலிவுற்ற முகம், அகன்ற நெற்றி, ஒளி படைத்த கண்கள், அறிவைப் பிரதி பலிக்கும் நீண்ட நாசி, விஞ்ஞானியை ஒத்த தோற்றம், அவர் இலட்சியத்தை எடுத்துக்காட் டும் உடை. நிதானமாக உட்கார்ந்தவாறு மாணுக் கருடன் உரையாடிக்கொண்டிருந்தார் புரட்சி முனிவர்.
உபாத்தியாயரின் சம்பாஷணை முடிவுற்றது. மாணுக்கர் விடைபெற்றுச் சென்றர்கள். எங்களை நோக்கினர் உபாத்தியாயர்.
எதிரில் நின்ற எனது நண்பனை முதல் உபசரித் தார். பின் எனது பக்கம் தனது கூரிய கண்களைப் பாய்ச்சினர். அவர் பார்வையில் என்னே சக்தி! என் கண்கள் ஒளி மங்கின. அவரை நோக்க முடியாதவணுய்த் தலை குனிந்தேன்.
என்னை இதற்குமுன்தெரியாதிருந்தும் கூர்ந்த கல்வி அறிவு படைத்த அப்பெரியார் என் தோற் றத்திலிருந்து நான் யாரென்று குறிப்பாலறிந்தார் போலும்.
‘எப்படித் தம்பீ?' என்று எனது பெயரைச் சொல்லிக் கனிவுடன் வினவினர்.
எனக்கோ தூக்கிவாரிப்போட்டது. இதற்கு முன் தெரியாத என்னை எப்படி அடையாளங் கண்டுபிடித்தார் என்ற ஆச்சரியம். பதில் சொல்ல எத்தனித்தேன் குரல் கம்மியது. ஒருவாறு சமா ளித்து ‘நல்லது உபாத்தியார்' என்று மெல்லிய குரலிற்பதிலளித்தேன் தைரியத்தைவரவழைத்துக் கொண்டு.
எம்முன்னேரின் பழக்க வழக்கங்களைப் புறக் கணித்து மேனுட்டாரின் நாகரீகத்துக்கு அடிமைப் பட்டு வாழும் இந்நூற்ருண்டில் தன்னிடம் வரும் விருந்தாளிகள், மாணுக்கர் முதலியோருக்குத்தனது உறைவிடமாகிய கொட்டிலின் இருபக்கங்களிலு முள்ள திண்ணைமேல் ஒலைப்பாய் போட்டு உட்கார இடமளிப்பதென்ருல் அதிசயமாய்த்தானிருக்கும். வருவோர் எல்லோரையும் திண்ணையில் உட்காரும்
I

படி செய்வதாற் கற்ருேரும் கல்லாதோரும் உபாத் தியாயருக்குத் தலைவணங்கிச் செல்வார்கள்.
அவர் வீற்றிருந்த திண்ணையின் எதிர்த் திண்ணையிலுள்ள பாய்மீது உட்காரும்படி உத்தர விட்டார். நாமும் பணிந்தோம்.
அன்று ஆழ்ந்த கருத்துக்கள் கொண்ட விஷயங் கள் பேசவில்லை. எம்போன்ற மாணுக்கர்கள் ரசிக் கக் கூடிய விஷயங்களைப் பற்றியே பேசினர். ஆகவே நான் தைரியத்தை வ ர வ  ைழ த் து க் கொண்டு அவருடன் உரையாடினேன். தனது இலக்கண, இலக்கிய, தர்க்க சாஸ்திர, அரசியல் அறிவை வெளி வீசினல் அறிவிற் குறைந்த எம் போன்றவர்கள் அஞ்சிவிடுவார்கள் என்ற கார ணத்தாற் போலும் அவர் அவ்வகையில் நடந்து கொண்டார். அதிக நேரம் சம்பாஷிக்கும் வாய்ப் புக் கிட்டவில்லை. வேறு விருந்தாளிகள் அவரின் தரிசனத்துக்குக் காத்து நின்ருர்கள். ஆகவே முதல்நாட் பழக்கத்தை ஒருவாறு முடித்துக் கொண்டு வீடு திரும்பினுேம்.
அன்று கொண்ட தொடர்பு இன்றுமட்டும் வளர்ந்து கொண்டே வருகிறது,
அரசியல் எனது பொழுது போக்கு. உபாத்தி யாயர் முற்போக்குள்ள ஓர் அரசியல் வாதி. ஆகவே ஒய்வுள்ள நேரங்களில் அவரிடம் போய் அரசியல்பற்றி விவாதித்து அவருக்குத் தெரிந்த விஷயங்களைக் கற்றுக்கொள்வதும், இருவருக்குமி டையில் கருத்து வேற்றுமை ஏற்பட்டால் விவா திப்பதும், ஈற்றில் அவரின் கருத்தையே ஏற்றுக் கொள்வதும் இப்போது சகஜமாகிவிட்டன.
*எல்லோரும் இன்புற்றிருக்க வழி வகுப் பதே' எமது இலட்சியமாக இருக்கவேண்டும் என்று நான் வாதாடுவேன். அவரும் ஆமோதிப் பார். எங்களினத்தின் நலனையும் கருத்தினில் வைக்கவேண்டுமென்று புத்திமதி சொல்வார். அதையும் ஏற்றுக்கொள்ளாமலிருக்க எப்படி முடி யும்?
தமிழ்க் கல்வியில் மட்டும் பாண்டித்தியம் உள்ளவர் என்ருல் அது தப்பு. ஆங்கிலத்திலும் அறிவு படைத்தவர். தமிழில் இலக்கணம், இலக் கியம் கல்லாதவர்கள் அவரிடம் ஆங்கிலம் மூலம் தமிழ் கற்க முடியுமென்ருல் அவரின் ஆங்கி ல அறிவை அளவிட்டுக்கொள்ளலாம். முக்கியமாக அரசியல் பற்றி வி ள க் கம் தரும்போது, எம் போன்றவர்களுக்கு குறள் மூலமோ, வேறு பண் டைத் தமிழ் இலக்கியம் மூலமோ விளக்கினல் பயனில்லை என்ற உண்மையை நன்கு அறிவார். ஆகவே அவ்வப்போது விளக்கும் தறுவாயில் கடும் தமிழ் இருப்பின் அவைக்குச் சரியான ஆங்கிலப்
3

Page 22
பதங்களைத் தந்து நன்கு விளக்குவார். என்னே அவர் அறிவு!
தமிழ் கற்பிக்கும் ஆசிரியர் என்ற ஹோதா வில் தமிழுலகிற்கு அறிமுகமானர். முற்போக் கான அரசியல்வாதி என்ற ஹோதாவில் அர சியல் உலகிற்கே அறிமுகம் கொடுத்தார். முற் போக்குக் கொள்கைகளுள்ள மாபெரும் அரசியற் கட்சிகளின் தலைவர்கள் கூட உபாத்தியாயரின்
 

4
நட்பைத் தேடினர்களென்ருல் அவரின் பெரு மையை என்னென்று கூறுவது.
எ ல் லா த் துறைகளிலும் பாண்டித்தியம் பெற்றுத் துலங்கும் பெரியார் இன்னும் அனேக ஆண்டுகள் வாழ்ந்து எந்தெந்தத் துறையில் எவ ரெவர் சந்தேகந் தீர்க்க நாடுகிருர்களோ, அந்தந் தத் துறையில் அவரவர்களுக்குத் தமது அறிவைச் சொரிந்து அவர்களை முன்னேறச் செய்வதால் எமது நாட்டையே முன்னேற்றமடையச் செய் வாரென்று நம்புகிறேன்.

Page 23
kWWWWWWWWWwww.wVV-WW ஆம், அவ
(இளவர
அப்பிரதேசம் இயற்கையன்னையின் அழகுப் படைப்பு நீண்டு வளர்ந்த பனை மரங்கள்; அவை ஏந்தி நிற்கும் மதுக் குடங்கள்; அவைகளை யொட் டியே செல்லும் நடைபாதை அதி லே அன்ன நடைபோட்டு, வண்ணக் குடமேந்தி ஆணழகன் எண்ணத்தைப் பறித்துவிடும் மங்கை யர் க ள் இதற்குமடுத்து சற்றுத் தூரத்தில் வரப்பொடு அணைந்து கிடக்கும் வயல்கள் அங்கு நெற்றி வியர்வை நிலத்திற் கொட்ட நித்தமுழைக்கும் உழவர் கூட்டம்-இத்தகைய அமைப்போடுதான் அந்தக் கிராமம் காட்சி தருகிறது. ஆம், அந்தக் கிராமந்தான் காலம் போற்றுங் கலை வ ல் லா ன் கந்த முருகேசனுரை நமக்கீந்த புலோலி.
என் வாழ்க்கைப் பாதையில் ஒருநாள் நடை பாதை வழியாகச் சென்றேன். ஒட்டியுலர்ந்த வயிறுபோலக் கட்டிக் காக்கப்படும் ஒரு ஒலைக் குடிசையைக் கண்டேன். அங்கு முல்லைக் காதலன் முல்லைக் கொடியின் மோகனச் சிரிப் பழகி ல் மெளனத்தில் மூழ்கிக் கிடந்தான். குள்ளமான உருவம்; உயர்ந்து அகன்று பரந்த நெற்றி எடுப் பான மூக்கு; கண்டோரைக் கட்டியணைக்கும் காந் தக்கண்கள், பருத்த உதடுகள் குழந்தையுள்ளத் தைப்போல் கறைபடியா முத்துப் பற்கள்; குள்ள மான பருத்த கழுத்து களங்கமற்ற தமிழகத் தைக் காட்டும் முகம்; இருக்குமிடத்தால் எழுந்தி ருக்கக்கூடாதெனப் புரட்சி செய்து தடுத்து நிறுத் துங் கால்கள்-இவைதாம் முல்லைக் காதலன் கந்த முருகேசனின் புறத்தோற்றம்.
அவர், பள்ளிப் பருவத்தில் துள்ளித் திரிந்து துடுக்கு நடைபோட்டு பள்ளியிலே பலநாட் பயில வில்லை; பட்டம் பெறவுமில்லை; ப த வி யேற்று நடிக்கவுமில்லை; ஆரம்பத்தில் ஆசிரியரானர். புராண இதிகாசங்களோடு புரண்டெழுந்தார். பக்தகோடிகள் பரவசமடைந்தனர்; வாயாரப் புகழ்ந்தனர்; வரவேற்றனர். ஆம்! போற்றிப் புகழ்ந்தனர். இவனல்லவா பக்தன் என ஏற்றி எத்திசையும் புகழ்ந்தனர். அவர்களுள்ளத்தில் அவரொரு படித்த அறிஞன் எனினும் அவர்களி டந் திங்கள்தோறும் ரூபா 15 ஊதியம் பெற்ற வறிஞன். சொற்ப வருமானமென்னும் நீர்நிலை யிலும் அவர் வாழ்க்கைப் படகு எழிலுடன் நகரச் செய்தது. வந்தது விபத்து. புயல் அடித்தது.

VV=^VV -x
s
O 60I 9ILDJ60 н В. А.) o-oo.oပန်
படகு கவிழ்ந்தது. கால்கள் வலுவிழந்தன. சோர் வடைந்திலர். மன்னுதி மன்னர்களும் மகுடாதி பதிகளும் மாண்டுவிட்டால் ஒருபிடி மண் மண் பெருன்ம மிக்கதுதான்; அம்மண் திண்ணைக்கு மன்னனர். எல்லோரும் இந்நாட்டு மன்னரென்ற இலக்கணத்திற்கியைய வறியவர்களும் மன்னரா கிருர்களே. ஆம்; அந்த மன்னர்களுள் மன்னரா னர் கந்த முருகேசனர். காலத்தின் வேகமும், சமூகத்தின் அமைப்பும் அவர் வாழ்வில் மாபெருந் திருப்பத்தை யேற்படுத்தின. பக்தர்கள் அவரைக் கைவிட்டனர் புராணங்களுக்குப் பயன் சொல்ல அவர் பயனற்றவரென உணர்ந்து.
பண்பட்ட உள்ளம் புண்படுமா? அவருள்ளம் மகிழ்ந்தது. நண்பர்கள் கிடைத்தனர். எவருமல் லர்; மாபெரும் அறிஞர்களின் கருத்துரைகளை ஏந்தி நிற்கும் ஏட்டுச் சுவடிகள்தான். இரவு பக லாகப் படித்தார். சிந்தனை வளர ஆரம்பித்தது. கோவை கோவையாகச் சிந்திக்கலானர்; சிந்தனை யாளராணுர்.
உலகத்தறிஞர்கள் சிந்தித்தார்கள்; ஆம், அவர்கள் சிந்தித்தார்கள். நாம் அதன் பயனைத் துய்க்கிருேம். ஒரு கால் மார்க்ஸ் சிந்தித்தான். பொதுவுடமையின் பயனை அந்நாட்டு மக்கள் அனுபவிக்கிருர்கள். ஒரு வள்ளுவன் சிந்தித்தான். அவன் வாழ்க்கை யிலக்கணத்திற்கு நம் வாழ்வை இலக்கியமாக்குகின்ருேம். ஒரு கந்த முருகேசனர் சிந்திக்கின்ருர், அதன் விளைவை நாம் அனுபவிக் கின்ருேம். சிந்தனையின் முடிவாகுஞ் சீரிய முடி வைக் கையாள ஆரம்பித்தார். பழ மை யி ல் வாழ்ந்த இவர் புதுமைப் பித்தனனர். வந்தன எதிர்ப்புக்கள். 'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என்ற பாரதியின் பாடல்களைப் படிப்பார். தம்பி வடிவில் ஒரெதிர்ப்புத் தோன்றி தகாதுன் வார்த் தைஎனச் சொல்லி மடியும். பல ஜாதிப் பிள்ளை களை ஒன்றுகூட்டிச் சமத்துவம் பாராட்டுவார். திண்ணையிலிருந்து அண்ணனென்ற முறையில் ஒரெதிர்ப்புத் தோன்றும். அதுவுஞ் செத்து மடி யும். புராண இதிகாசங்கள் புரட்டென இவர் கூறின், புத்திமான் வேடத்தில் ஒரு பக்திமா னென ஒரு எதிர்ப்புக் கிளம்பும். இவர் கழுத்தைப் பிடித்து நெரிக்கக் கரம் நீட்டும். இவர் கழுத்துந் தப்பித்துக் கொள்ளும். வறுமையில் வாடிய இவர்,

Page 24
பணம் படைத்தோரின் பார்வைக்கு ஒரு பயங்கர உருவமாகத் தோற்ற வாரம்பித்தார். பக்த கோடிகள், பேய், பூதம், பசாசு அ வை பற்றி ப் படித்துப் பயந்துள்ளனரே யென்று பார் த் துப் பயங்கொள்வதில்லை. அவர்களின் கண்களுக்கு இவர் ஒரு அறிவுப் பூதமாகக் காணப்பட்டார். சிந்தனையற்றுத் தெளிவற்று உண்மை புரியாது உழலும் பாமர மக்களிடையே தம்மைப் படித்த வர்கள்-பட்டதாரிகள் - பக்திமான்கள் - பண்டி தர்கள்- வித்துவ சிரோன்மணிகள் எனப் போலி மதிப்புக் கொண்டு வாழ்ந்தவர்கள் - வாழ்வோர் கந்தமுருகேசன் என்னும் நாமங் கேட்டுக் கலங் கினர்.
கலக்கத்திற்குக் காரணம் அவர் விவாதிக்குந் திறமை யென்பதை எவரும் மறைப்பதுமில்லை; மறுப்பதுமில்லை. நிறை குடந் தளம்பாது. சிக்க லான காரியம் சிந்திப்பது என்பர். சிக்கலான காரி யமா? அதுதான் சிந்தனைக்கு விருந்தென நகுவர். சிந்திக்க மறுத்த நண்பர்கள் இவரை விட்டுப் பிரிந்தார்கள். அவர் எவரையும், எக்காலமும், எக்காரணங் கொண்டும் வெறுத்திலர். சிந்தியுங் கள், சிந்தித்ததாற்ருன் றெளிவேற்படும். அம் முடிபைச் செயற்படுத்தினுல் செம்மையான ஒரு பாதை நம் பார்வையிற் படும். அப்பாதையைப் பயன்தரும் முறையில் பக் கு வ ப் படுத் தின ல் செழிப்பும் வனப்பும் மிக்க சமுதாயத்தையடைய லாம். புதுவாழ்வு கிட்டும். வளம் பெருகும். மணி தன் மனிதனுகத் தன் மானவுணர்ச்சியோடு வாழ லாம். சமதர்மம் ஓங்கும். சமத்துவம் மலரும். பேதங்கள், வேற்றுமைகள், ஜாதிச் சண்டைகள் அத்தனையும் அறவே அழிந்துவிடும். அன்பு அல ரும். அறிவு மலரும். சுவர்க்கம் எங்கே? எங்கே? என்று தேடுபவர்கள், இன்று வாழும் நரக வாழ்வைவிட்டு வாழும் நாட்டை சுவர்க்கமாக்க முடியும். எனவே “சிந்தியுங்கள்’’ என்பதே அவர் எவருக்குங் கூறும் பொன்மொழிகள்.
அவர், வினவிற்கு எதிர் வினக் கேட்கும் வன் மையாளர்? மாணவர்கள், ஐயப்பாடுள்ளதாயின், கேள்வி கேட்பர். மாணவர்கள் கேட்டவினவிற்கு விடை மாணவர்களே எழுதித் தரும் முறையில் சங்கிலிக் கோர்வைபோல் தர்க்கமுறையில் எதிர் வினுக்கள் எழுப்புவார். மாணவர்களே. தாம் முன் கேட்ட வினக்களுக்குத் தக்க விடை தருவார் கள். தன் மாணவர்களின் புலமைகண்டு பூரிப்ப டைவார். ‘இருட்டறையில் உள்ளதொரு கல்லு அதைச் சுற்றிச் சுற்றி வ ல ம் வ ரு த ல், ஏன் சொல்லு?’ என்பர். ‘உள்ளம் இறையானல், உவர்க் கல்லை நாம் வளம் வருதல் உன்மத்தம்* என நகைப்பார். மொட்டையடித்து, முழு மஞ்

சள் தான் பூண்டு பிச்சையெடுப்பவனைக் காட்டி, *அவன் தன்னிச்சைகளைமொட்டையடித்தான?* என முறுவலிப்பர். அயல் வீட்டில் பிள்ளைகளை, தன் வீட்டிற் பெண்ணைத் தரித்திரத்தோடு உற வாட விட்டுக் கால் வீங்கக் கண் வீங்கக் கதிர்கா மம் போகும் பெரியோனே! ‘உன் மகவின் புன் சிரிப்பில் உறைகின்ருன் ஈசன் உணர்ந்தாயா நீ?’’ என இடித்துரைப்பார். ‘நாட் பார்த்தான்; நட் சத்திரமும் பார்த்தான். அச்செல்வன். எனினும் அவன் மகள்தான் விதவையானுள். வேடிக்கை யல்லவா!-விந்தை யிது’’ என உரைப்பார். காத லனுக்குக் காதலியின் குழைவான பேச்சும், அழுஞ் சேய்க்கு ஆருயிரன்னையின் தாலாட்டும் இனிமை யும் மகிழ்வுந் தருகின்றன. அஃதேபோல் அறியா மைச் சகதியில் தத்தளிக்கும் எண்ணற்ற வாலிபர் களுக்கும் வனிதையர்களுக்கும் ஈழத்துப் பெரியார் கந்த முருகேசனர் அறிவுப் பசிப்பிணியை நீக்கிக் கருத்துணவை ஊட்டுகின்ருர்,
ஆசியாக் கண்டம், உலகத்திற்கு உண் மையை, அன்பை, அகிம்சையைப் போதித்துள் ளது என்னும் எண்ணம் உள்ளத்தில் எழும்போது. நாம் பெருமைப்படுகிருேம். புத்தர் தோன்றினர். வாழ்க்கைப் பெருங்கடலைத் துன்ப ஆழி என நினைத்த அவர், வறுமை, பிணி, மூப்பு ஆகிய வற்றை உலகத்திலிருந்து நீக்க தகுந்த மார்க்க மொன்றைத் தந்தார். பெளத்த மதந் தோன்றி யது. மக்கள் பயனடைந்தனர். ஆனல் அவர் வாழ்வு வளம்பெற்றதா? அவர் வாழ்ந்த சமுதா யம் அவரை வரவேற்றதா? இல்லையென்றுதானே கூறமுடியும். அதையடுத்து ஜீசஸ் கிறைஸ்ட் வாழ் நாளையெல்லாம் தன்னினத்தின் ஆத்ம விடுதலைக் காகப் பலியிட்டார். அக்காலத்து மக்கள் பலர் அவருக்குக் கசையடி தந்து, அதுவும் போதா தென்று அவரைக் கற்சிலுவையில் அறை ந் து மகிழ்ந்தனர். அவர் சிந்திய உதிரத்தில் மக்கள் ஆத்மீக விடுதலையடைந்தனர். எனினும் அவர் வறுமையில் வாழ்ந்தார். போர்த்துக்கேயர், ஒல் லாந்தர், ஆங்கிலேயர் ஆகிய மூன்று சாகியத்தா ரிடமும் ஆண் டு க் கணக் கில் அடிமைகளாக வாழ்ந்த இந்தியருக்குச் சுதந்திர வாழ்வைத் தந் தார் அண்ணல் காந்தி. சுதந்திரந்தந்த மகானுக்கு தரப்பட்ட பரிசு சுடுகாடு. அஃதேபோல் எல்லா முணர்ந்த பண்டிதர்கள், வித்துவ சிரோன்மணி கள், ஈழத்துப் பெரியார் கந்த முருகேசனரை சும்மாவா விடுவார்கள். அவர்கள், அவருக்குத் தந்த பட்டம் நயவஞ்சகன், நாத்திகன், உன்மத் தன், உலுத்தன் என்பன. வறுமையில் புலமை அழிவதில்லை. வையகம் உயிருடன் வாழ்த்துவ தில்லை. இந்த வரலாற்றுண்மையை அவரால்
16

Page 25
இலகுவில் புரிந்து கொள்ளவா முடியாது. புரிந்து கொண்ட அவர் வறுமையிற் செல்வனுக வாழ் கின்ருர்,
தனித்து வாழ்ந்து உள்ளம் சோர்வடை யுமா? புரட்சிகரமான இவர் கருத்தைப் புரட் டெனக்கொண்ட சீமான்கள் சீற்றமும் பீதியுங் கொண்டனர். மந்த புத்திக்காரர் ம்ருட்சிகொண் டனர். கதிரவனைக் கார்முகில் மறைப்பதில்லை. காளையரைக் கன்னியர்கள் மறுப்பதில்லை? கவி னெழுகும் கவிதைதனில் சுவை குன்றுவதில்லை. ஈழத்துப் பெரியாரின் இணையற்ற இயற்கைத் தமிழ்ப் புலமை அழிவதில்லை. ஏட்டுப் பாவலர் கள் கிள்ளைமொழி பேசுங் கொச்சைத் தமிழ் நாவலர்கள் இவ்வியற்கை இணையிலாளை எள்ளி நகையாடினர். ஆல்போல் தளைத்து அறுகுபோல் வேர்விட்டு வளர்ந்த இவர் கொள்கைகள்-சிந் தனை விருந்துகள்-நல்லுரைகள் அவ்வீணர்களின் விருப்புக்குப் பலியாகிவிடுமாயின் அ வை கள் பொய்யாமொழிகள் அல்லவே! அவர் வளர்த்த பகுத்தறிவு விருட்சம் ஆழ வேர்விட்டு அக ல க் கிளை பரப்பி காய் தந்து கணிதந்து களிகொள்ளச் செய்கிறது. கனியுண்ட காளையர்கள்-கன்னியர் கள் சதையுண்டு விதையிட்டு நாட்டிற் பவனி வருகின்ருர்கள்.
ஈதல் அறம் ஈய்ந்தார் அவர் இரந்திலர். பாரியும், ஒரியும் பசிப்பிணி நீக்கினர். பசி தீர்ந் தது. வளங்கப்பட்ட செல்வமுஞ் சிதைந்தது. பசி மீண்டும் வந்தது. அவரீய்ந்தார்; அறிவுப் பசி நீங் கிற்று; ஆனல் மீண்டும் அப்பசி இரவலனை வருத் திலது. பச்சிளங் குழந்தைகளை, அன்னை பாலூட் டிச் சீராட்டுவது போல் இவர் அறிவுப் பாலூட் டிச் சீராக்குகின்றர். பண ம் பெறுவது அவர் நோக்கமன்று; நோக்கமாயின், இன்று அவர் கோடி பெற்றிருப்பார். அவர் அந்தக் குழந்தை களின் சிரிப்பொலியிலே இன்பத்தைக் காண் கிருர், குழந்தைகளோடு குழந்தையாக மாறி அவர் பேசும் மழலைக்கு வையகத்தின்பமெல்லாம் ஈடாகுமா? அளந்து கொடுக்காது வறுமையில் வாடும் பள்ளிச் சிருருக்கு அறிவை அ ள வா து கொடுக்கும் அவர் பண்புதான். என்னே!
மருந்தேயாயினும் விரு ந் தோ டு ன் பார். பொங்கலோ பொங்கல் என்று பள்ளிப் பிள்ளைக ளூக்கு அள்ளிக்கொடுப்பார் பொங்கல். அங்கு முல்லை மலர்களின் அழகு பொங்கிமலரும். அம் மலர்களின் கீழ் பள்ளிப் பிள்ளைகளின் உள்ளமும் பொங்கி மலரும். அது கண்டு அவருள்ளம் ஆனந் தக் கூத்தாடும். அவரும் உண்பார். பிள்ளைகளும் உண்பார்கள். உங்கள் களிப்பிலே எனக்கும் ஒரு பங்கு என்று ஒருபிடியன்னம் வாயிலிடுவார்.

உண்டு கொடுத்து, கொடுத்துண்டு பகிர்ந்துண் ணும் அவரை எனக்கெங்கே யென் பங்கு என வருவோர் கேட்டால் பாங்காகப் பேசிப் பின் உரை நிகழ்த்தி 'அப்பப்பா மறந்துவிட்டேன் உன் பங்கை நீட்டு உன் கரத்தை யென்பார். கரங் கொடுத்துக் காத்து நின்ருல் மிக மகிழ்ச்சியெனக் கூறி நகத்தின் மேற்றசையைக் கிள்ளிவிட்டுச் *சரிதானே உன் பங்கு," என நகுவார். அவர் மகிழ்வார்; நாம் மகிழ்வோம்.
அவர் குழந்தைக்கு ஒரு குழந்தை மாணவ னுக்கு ஒரு மாணவன்; ஆசிரியனுக்கு ஒரு ஆசிரி யன் தந்தைக்கோர் தந்தை அரசியல்வாதிக் கோர் அரசியல்வாதி; சீர்திருத்தச் செம்மலுக் கோர் சீர்திருத்தச் செம்மல், அவரவர் நிலைக்கேற் ருற்போல் நின்று அவரவர் பிரச்சினைகளை அலசி யாராய்ந்து, அவர் தரும் முடிவுகள் முக்காலமும் பயன் விளைவிப்பனவாகும். சுருங்கக் கூறின் ஆண் டாண்டுகாலம் அடிமை வாழ்க்கை நடத்திய மக் களின் அடிமைத் தளைக்கான காரணங்களையும், உலகத்தில் பல்வேறு காலங்களில் பல்வேறு புரட் சிகள் நடைபெறுவதற்கான காரணங்களையும் அடக்கத்துடனும் அமைதியுடனும் அலசியா ராய்ந்து உலகுக்கு ஈய்ந்த கால் மார் க் வின் ஆராய்ச்சித்திறன் - அடங்காப்பிடாரியான தன் மனைவி ஜான்திப்பே சாக்கடை நீர்கொண்டு தலை தன்னில் ஊற்றியதையும் பொறுமையுடன் மன் னித்து நாட்டிற்குழைத்த மந்த மதி படை த் தோரை அறிஞராக்கிய நாட்டின் அறிவுக் கண் ணைத் திறந்ததற்காக நச்சுக் கோப்பையைப் பரி சாகப் பெற்ற சாக்கிரடீசின் சிந்தனைத் திறன்சமூகக் குறைபாடுகளைத் தைரியமாகவும் தெளி வாகவும் எடுத்துக்காட்டி, தமது நாடகங்களில் வழிகளை வகுத்துத் தந்த இங்கிலாந்தின் இணை யற்ற நாடக வாசிரியன் பெர்னுட் ஷாவின் பேர றிவு-மதம் மக்களுக்கு அபி ரி என்று கூறும் அள விற்குச் சீர்கெட்ட மதக் கொள்கைகள் மலிந்து கிடந்த இத்தாலியை மாற்றியமைத்து, ஆஸ்திரி யர்களின் மூட நம்பிக்கைக்கும் அறியாமைக்கும் ஆழமான குழிதோண்டிப் புதைத்து நாட்டு மக் களை ஆற்றலும் வனப்பும் வளமும்மிக்க ஆக்கப் பாதையில் அழைத்துச் சென்று அறிவுபெற்று வாழச் செய்த சாலன்ருேலாவின் சாதுரியம்சீர்திருத்தி நாட்டையமைக்கவேண்டும்-மக்கள் மனிதர்களாக வாழவேண்டும், மக்களின் பொய் யும், புரட்டும் மலிந்துள்ள வாழ்வைப் பொசுக்கி நல்வாழ்வு தர ஆருது அயராதுழைத்த மகாத்மா, ஜான்ஹன் என்ற தத்துவஞானியின் தைரியம், கீர்த்திமிக்க கிரேக்கத்தில் பிறந்து கொடுங்கோலை முறித்தெறிந்து, ஆணவக்காரரின் அகம்பாவத்தை அடக்கி யொடுக்கி ஆனவ ஆட்சியின் அதர்மப்
7

Page 26
போக்கை மாற்றியமைத்து, கிரேக்க மக்களுக்கு அநீதிக்கும் நீதிக்குமுள்ள வேறுபாட்டை எடுத்துக் காட்டிப் பிறந்த பொன்னுட்டுக்குப் பெருமை தந்த பேரறிஞன் பிடாட்டோவின் பெருந் தன்மை-ஆண்டான் அடிமை, ஏழை பணக்கா ரன், என்று வாழ்ந்த ஜெனிவா சமூதாயத்தை மாற்றியமைத்து, சீரும் சிங்காரமுங் கொண்ட செம்மை வாழ்வு வாழச் செய்த தீவிரவாதி திரு சோவின் ஞானம்-பிள்ளைகளிடம் அன்பு காட்டு, அவ்வன்பை பிள்ளைகள் உனக்குக் காட்டும் என்ற உயரிய சித்தாந்தத்தை உலகறிய எடுத்துரைத்து ஏறுநடை போட்ட இங்கர்சாலின் அன்பு-சீனத் தில் ஷியாங்கே ஷேக்கின் செருக்கடக்கி சமதர்மப் பூங்கா கண்ட 1ா-சே-துங்கின் மாண்பு-மாளிகை வாசியை மகிழ்ச்சிதரும் மதுவையும் மங்கையர் களையும் பாடாது ஓட் டை க் குடிசை, ஒட்டி யுலர்ந்த வயிறு, தட்டிவிட்டால் விழுந்து விடும் நடை, இந்நிலையில் வாழும் கிராம மக்களின் வாழ்க்கைப் பாதையில் ஏற்படும் இன்னல்களை எடுத்துரைத்த தோமஸ் கிரேயின் கவிதை த் திறன்-ஜார்கால ரூசியாவின் ஜனநாயகத்தின் தன்மையையும் அவனைத் தழுவி வாழ்ந்த செல்
8

வச் சீமான்களையும் அவர்களின் சர்வாதிகாரச் செயல்களையும், அவைகளினல் அவதியுற்ற பாட் டாளி மக்களின் வாழ்க்கை முறையினையும், தான் தன்னுள்ளத்தில் எழுந்தவாறு கற்போரும் உண ரச் செய்யும் எழுத்தோவியங்களை ஈன்றெடுத்த ரூஷிய ஞானி டால்ஸ்டாயின் எளிய வாழ்க்கை பேரழகுமிக்க காதல் காவியம் "எண்டிமிய"னைத் தந்து, இலக்கியத்திற்காகவே தன்வாழ்வை அர்ப்ப னித்த இன்னிசைக் கவி கீற்சின் இலக்கியப்பற்று அத்தனை பண்புகளும் நிரம்பப்பெற்ற பண்பாளன் யார்? அவர்தான் ஈழத்துப் பெரியார் கந்த முரு கேசனர்.
பாமரர், பண்டிதர்-பாவலர், காவலர்-கன் னியர், காளையர்-படித்தோர், பட்டம் பெற்றேர்உற்ருர், உறவினர், கல்லாதார்,இல்லாதார்-பகுத் தறிவாளர், பண்புடையாளர்-அனைவருள்ளத்தி லும் அழியா அமரதீபமாய் அமர்ந்துவிட்டார். ஆம், ஈழத்துப் பெரியார் கந்தமுருகேசனர். என் னுள்ளத்திலும், ஏனையோருள்ளங்களிலும் தமிழ கத்திலும் அமரணுகி விட்டார். வாழ்க! அவர் பணி; ஆண்டுகள் பல அவர் வாழி!

Page 27
கலைக்கோயில்
“கந்தமுருகேசன் கல்வியறிவு படைத்தவர். என்ருலும் கர்வமுடையவர். தமிழ்ப் பண்பை அறிந்தவரென்ருலும், தனிப்பட்ட வா ழ் வில் அதை அனுட்டிக்காதவர்.'
இது தமிழ்த் தாத்தா கந்தமுருகேசனரைப் பற்றி எனது மனதிற் பதிந்த முதல் அபிப்பிரா
Li fò.
சாதாரண குடிசை. அங்குள்ள ஒரு திண்ணை மீது அமர்ந்திருந்த அவரை முதலில் நான் சந் தித்த போது க ரங் கூப்பி வணங்கினேன். தமிழ் ஓர் உருவம் பெற்று இருந்தது போன்ற கந்தமுரு கேசனுரை எனது முழு மனத்துடனும், ஆழ்ந்த அன்புடனும் வணங்கியபோது, அந்தக் கர்வம் பிடித்த மனிதன் பதிலுக்குக் கரங் கூப்பவில்லை.
'நல்ல மனிதன், மரியாதை தெரிந்தவர், பண்டாடு' என்றெல்லாம் இந்தக் கிழவனைப் பற்றி என்னிடம் வானளாவப் பேசியவர்கள் மீது ஆத்திரம் வந்தது. எனினும் இத் ‘தலைவீங்கி' யின் பாதாரவிந்தங்களின் கீழ் அமர்ந்துதானே பண்டிதனுக முடியுமென்ற எண்ணம் தோன்றிய போது , எனக்கு வந்த ஆத்திரம் மறைந்தது.
நாட்கள் சில பறந்தன. சில நாட்களில் வழக் கத்துக்கு மேலாகச் சில மணி நேரம் தொடர்ந்து தாத்தா எனக்குத் தமிழறிவிப்பார். ஒருநாள் அவரைப் பசி பற்றி க் கொண் டது. பழஞ் சோற்றை வரவழைத்து உண்ண ஆரம்பித்தார். அப்பொழுதுதான் அவர் கரங்களை உயர் த் த முடியாத நிலைமையை உணர்ந்தேன். கால்கள் மடங்கியபோல், கைகளும் விறைத்து மேலெழ முடியாத நிலையில் இருந்தன.
எனது ஆத்திரத்திற்காக வெட்கமுற்றேன். துக்கமடைந்தேன்.
மாதமொன்று பறந்தோடியது. தமிழறிவிக் கும் தாத்தாவுக்கு எனது சன்மானமாக ரூபா முப்பதை அவரிடம் கொடுத்தேன். அவர் அதில் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு மிகுதி யைத் திருப்பித் தந்தார். தான் மட்டும் உண்டு
 
 
 

கந்தமுருகேசன்
டுத்துறங்குவதற்கா அந்தப்பணம்? தமிழுக்கும், தன்னையண்டிய இளைஞருக்கும், உதவி நாடும் உற்றவருக்கும் தாத்தாவின் வருமானம் செறிந்து பரவுவதை நான் நன்ருக, நேரடியாக, சந்தேக மற அறிந்தேன்.
கந்தமுருகேசனரின் சிறு குடிசைக்குத் ‘தமி ழகம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. அதைக் "'கலையகம்' என்று அழைப்பதே சாலப் பொருந் தும். தமிழ் மட்டுமா அவர் போதிக்கிருஜர்? தமிழ், ஆங்கிலம், கணிதம், தருக்கம், பூமி சாத்திரம் முதலிய பாடங்களும் அவராற் போதிக்கப்படு கின்றன. பாலர் கழகந்தொட்டுப் பண்டித வகுப் புகள் ஈருக வகுப்புகள் நடைபெறுகின்றன. கிரம மான நேரகுசி, இடாப்புகள், ஒழுங்கு, கட்டுப் பாடு, அன்பு, அமைதி அத்தனையும் அங்குக் காணலாம்.
தாத்தாவிடம் நான் கண்ட பண்புகள் சில என் உள்ளத்தை மிகவும் கவர்ந்துள்ளன. கண் டிப்பான பேச்சு, அஞ்சாத நெஞ்சம், சந்தர்ப்ப வாதத்தைக் கண்டால் சண்டமாருதமாகும் உள் ளம். எல்லாவற்றிலும் மேலாக தமிழில் அளவு கடந்த அன்பும், ஆராய்ச்சியும்.
தாத்தா நூற்றுக்கு நூறு வீதம் உலோகா யுதவாதி. கடவுள், மதம், மோட்ச வீடு-இவை அவரது அகராதியில் அர்த்தமற்ற எழுத்துக் கூட் டங்கள். ஆணுல் மாணவருக்குச் சமய பா ட ம் போதிக்கும் போது, சிறந்த மதவாதிகளே மூக்கில் விரல் வைப்பரென்பது திண்ணம். அ வ் வ ள வு தூரம் சமய பாடத்தில் ஆழ்ந்த நுட்பமான அறிவு,
முன்னுள் பருத்தித்துறைப் பாராளுமன்ற உறுப்பினரும், தலைசிறந்த சோஷலிச மேதையு மாகிய காலஞ் சென்ற திரு. பொன். கந்தையா அவர்கள், தாத்தாவின் அருமைத் தம்பி. உறவு முறையாலல்ல, உள்ளத் தொடர்பால், ‘கற்ரு ரைக் கற்ருரே காமுறு வர்' என்பதற்கிணங்க கந்தையாவில் கந்தமுருகேசனரும், கந்தமுருகேச
9

Page 28
னரில் கந்தையாவும் வைத்த மதிப்பும், அன்பும் மதிப்பிடற் கரியது.
1956-ம் ஆண்டுப் பாராளுமன்றத் தேர்த லின் கடைசிக் கட்டம். அன்றைய தினம், இன் றும் என் நினைவிதழில் பொறிக்கப்பட்ட ஒரு புதுமை. கம்யூனிஸ்ட் கட்சித் தலைவருள் ஒரு வரான திரு. பீற்றர் கெனமன் அன்று காலைதான் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார். வட்டுக் கோட்டை, யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஆகிய தொகுதிகளில் தேர்தற் கூட்டங்களிலும், வாலி பர் சங்கக் கூட்டங்களிலும் கெனமன் கலந்து கொள்ளவேண்டியவர். அன்றிரவே கொழும்புக் கும் திரும்பவேண்டும். ஆனல் அந்த நெருக்கடி யான நிலைமையிலும், கந்தமுருகேசனுரைக் கண்டு போகவேண்டுமென்று கெனமன் விடாப்பிடியாக நின் ருர், கந்தையா மறுக்கவில்லை. நானும் திரு வாளர்கள் கெனமனும், கந்தையாவும் கந்தமுரு கேசனரின் குடிசையை நோக்கிப் பறந்து சென் ருேம். ஒரு மகன், தனது அன்புத் தந்தையிடம் செல்வது போல, திரு. கெனமன், தாத்தாவின் திண்ணை மீது அமர்ந்தார். பேசினர். பேசினர். பேச்சுக்கு முடிவேயில்லை. தாத்தாவுக்கு ஆங்கிலத்
 

திலும் பயிற்சி இருந்தது அன்றுதான் எனக்குத் தெரியவந்தது. பின்னர் திரு. கெனமனிடம் நான் விசாரித்தபோது, தான் யாழ்ப்பாணம் வருங் காலங்களில், தாத்தாவைக் காணும் சந்தர்ப் பத்தை இழப்பது குறைவு என்ருர். ஊரறிந்த இந்த "உபாத்தியாயர் ஒரு முற்போக்குவாதி மட்டுமல்ல, ஒரு புரட்சிவாதியுங்கூட.
தங்கள் அறிஞர், புலவர், இறந்த பின்னரே அவர்களைக் கெளரவிக்கும் பாரம்பரியம் தமிழ கத்தின் தனியுரிமையாக இதுவரை இருந்து வந் துள்ளது. இந்தப் பாரம்பரியத்திலிருந்து விலகி உயிருடன் வாழ்ந்து, மொழிக்கும், அறிவுத் துறைக்கும் உழைக்கும் அறிஞருக்கு விழாவெடுக் கும் புனித கைங்கரியத்தைத் தமிழகம் இன்று மேற்கொண்டுள்ளது, வரவேற்கத்தக்கது, மகிழ்ச் சிக்குரியது, பெருமைப்படக்கூடியது. பாரதியைப் பட்டினியிற் சாகவிட்ட தமிழகம் மீண்டும் அந்தத் தவறைச் செய்யுமா?
தாத்தா இன்னும் பல காலம் வாழ்ந்து தமி ழுக்கும், அறிவுத் துறையின் அபிவிருத்திக்கும்
உழைப்பாராக.

Page 29
责令令+++++++++++++++++→+++→+++→++++++++++++++
“கந்தமுரு
今本今一争伞伞伞→令一个令令今令令→+一伞今→令一伞令令今一伞令令令本今令伞伞伞伞令令令令令伞°
சு. ஆழ்வ
‘நான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக’ என்றேர் அறிஞன் வாழ்த்தினர். அவர் வாழ்த்தோடு மட்டும் நின்ருர், வாழ்க்கையில் வரும் பெரும் புயலெல்லாம் வேதனைப் படுத்தவும் உடல் வருத்தத்தையும், மனவருத்தத்தையும், பொருட்படுத்தாது தமிழுக்குத் தொண்டு செய் வதே தம்நோக்கமென அதற்காகவேஉயிர்வ்ாழும் -இருக்கை முடம், ஆனல் அறிவினுல் முடமன்றுஅறிவை யளவிடமுடியாத அளவு அறிஞன். வாழ் வும் தாழ்வும் ஒருவன் பங்கல்ல. வாழ்வில் எப் பொழுதும் மாற்றமுண்டு, விதி கன்மம், என்ப தொன்றில்லை.இப்படியானதத்துவங்களைஆராய்ந் தறிந்து பொது மக்களுக்குத் தொண்டு செய்பவர் தான் திரு கந்தமுருகேசன் அவர்கள்.
தோற்றத்தில் ஒர் கவர்ச்சி, அழகு தெரியும் விழிகள். அவ்வழகு உடலழகல்ல. அவரைப் பார்த் தாலே ஒர் தத்துவ ஞானிபோற் றெரியும். ஆனைக்கு இரு விழிகள் இருப்பது போல, ஆசிரி யர்க்கு இரு சிறு விழிகள். வெண்தாடி வேந்தர் ஈ. வே. இராமசாமிப் பெரியார் போல் இவர் தாடியும் வெண்மையாக இருக்கும். இவர் சாதார ணமாக மாணவர்கட்குப் படிப்பிக்கும் போதே உதாரணங்களை விளங்கக் கூடியதாகச் சொல்லு வார். ஓர் நாள் நான் ஆசிரியர் வீட்டிற்குப் போயி ருந்தேன். அப்போது ஆசிரியர் முதலாம் வகுப்பிற் குப் பாடம் சொல்லிக் கொடுக்கும்படி ஏர்வினர். எனக்கு உள்ளத்து ஓர் நடுக்கம் ஏற்பட்டது. ஆசிரி யர் முன்பு நான் சொல்லிக்கொடுக்கும்படி ஏவிய பாடம் சிறு பிழையாயிருந்தாலும் என்னை வைவாரோவென்று அஞ்சியபடி ஆரம்பித்தேன்.
அவ்விலக்கியப் பாடத்தில் 'பல நாட் பசி யோடிருந்த புலவர்க்கு ஒர் உழவன் வயற்கரை யிலே பழைய சோறும் கறியும் சேர்த்துக் கொடுக் கிருன், ‘* அப்போது புலவன் ‘ஆகா! தேவாமிர் தம் போலேயிருந்தது என்ருர். அப்போ நான் மாணவர்கட்கு தேவாமிர்தம் அவ்வளவு சுவை யான உணவு தேவருலகில் உள்ளது என்றேன். நகைச்சுவை பேசும் எம்மாசிரியர்ைக்கடைக் கண்

++→令→令令令++++令+→今令+令令→今++++→^++++++++→+++→
டுகேசன்'
++4令+令令今+4++令+++今+++一令令+++++今→+++→伞→今→++++
ாப்பிள்ளை
ணுற் பார்த்தேன். அவா சிரித்தபடியே பேச ஆரம்பித்தார். "என்ன தம்பி! இப்படியெல்லாம் இவர்கள் எழுதும் முறை எனக்குப் பிடிக்கவே யில்லை; உதாரணம் எதற்காக நாம் கையாள வேண்டும்? மற்றவர்களுக்கு விளங்காத ஒன்றை விளக்குவதற்குத் தானே உதாரணம் சொல்லுகி ருேம். அப்படியானுல் இங்கே புலவன் குறிப்பிட்ட தேவாமிர்தம் யாருக்குத் தெரியும். சொல்லிய புலவர்க்கோ அப்படி ஓர் உண்டி இருப்பதோ, அதன் சுவையோ தெரியா' தென்ருர்
'ஒனறை நாம் விளக்கும் போது, ஒர் இடத் தைக் குறிப்பிடுவதானல் யாழ்நகர் பட்டினம் போல இருக்கும் என்ருல் எல்லோருக்கும் விளங் கும். அல்லாமல் சொர்க்கலோகம் போல இருக்கு மென்ருல் யாருக்கு விளங்கும்’ என்று சிரித்தார். அங்கிருந்த எல்லோரும் சிரித்தோம். ஆசிரியர் இயற்கையாகவே கதைக்கும் போது பொருளடக் கும், இலக்கியச் சுவையும், நகைச்சுவையுமுடை யதாகவே யிருக்கும். கேட்கும் கேள்வி கட்கு ச டு தி யா க வே மற்றவர்கள் தி ண றும் படி ப தி லிறு ப் பார். அன்னருடன் அடிக்கடி பழ கிய எனக்கு அன்னரைப் போலவே பேசவேண்டும் என்ற ஆவலேற்பட்டது. எனவே அப்படி ஆசிரிய ருடனேயே ஓர் நாள் ஆசிரியர் கருத்திற்கு மாரு கச் சிலவாதங்களைக் கிளப்பிக் கேள்வி கேட்டேன். சடுதியாகவே பதிலைக் கொடுத்தார். பலர் முன்னி லையில் எனக்கு வெட்கமுங் கோபமும் வேதனையுந் தோன்றியது. நான் மெளனமாக இருந்தேன். இன்னேர் நண்பன், 'ஏன் நண்பா! நீ கேட்டகேள் விகட்கு மறுமொழியை ஆசிரியர் படார் படார் என்று சொல்லி விட்டார். நீயென்ன பெட்டியில் பாம்பு போல. *’ என்றிழுத்தான்.
இவவளவு பேருக்கு முன்னலே மானம் ப்ோச்சேயென்ற ஆத்திரத்தில் உபாத்தியாயரைச் சாட வேண்டுமென்பதற்காக ஒட்டணியாக "குறைகுடந் தள்ம்பும், நிறை குடந் தளம்பாது’ என்றேன். அப்போ ஆசிரியர் சிரித்தபடியே 'தம் பி! நீ சொன்னபடி பார்க்கின் உன்னைவிடப்பெரிய
l

Page 30
அறிவாளியொருவன் இருக்கிறன்' என்ருர். இன் னுமோர் நண்பன் 'யாரந்த அறிவாளி?' என் முன், அப்போது ஆசிரியர், "மந்திகையில் ஓர் தேனீர்க் கடையில் ஒருவன் இருக்கிருனே அவன்' என்ருர், எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார் கள். எனக்குக் கோபமோர் புறமிருந்தாலும், ஆசி ரியரின் உடன் பதிலும் நகைச் சுவையான மறு மொழியும் என்னைத் திணறவைத்தது. காரணம் அக்கடையில் இருப்பவர் வாய்பேச முடியாத
237 63 LfS
அப்பொழுது எல்லோரும் என்னேயும் ஆசிரிய ரையும் மாறி மாறிப் பார்த்தார்கள். அப்பொ ழுது என்னுள்ளத்தில் படித்த பாடலொன்று ஞாபகத்திற்கு வந்ததும், "மாசற்ற நெஞ்சுடை யார் வன் சொல்-இனிது-ஏனையவர் பேசுற்ற இன் சொற் பிறிதென்க' என்ற வெண்பாவை பாடிவிட்டு ஆசிரியரிடம் விடைபெற்றேன். ஆசிரி யரும் சந்தோசமாகப் போய்வாவென்று தலைய சைத்தார்.
உலகத்தில் எத்தனையோ மக்கள் துன்பங் கார ணமாகத் தற்கொலை செய்திருக்கிருர்கள். பலர் தற்கொலைசெய்ய அஞ்சியிருக்கிருர்கள். பலர்உண் டிக்காக உயிருடன் வாழ்கிறர்கள். இன்னும் சிலர் உயிருடன் இருப்பதற்காக உண்டியைக் கொள்கி ருர்கள். சிலர் நாட்டின் தொண்டிற்காக இடுக்க ணையும் பொருட்படுத்தாது உயிருடன் வாழ்கிறர் கள். இப்படியான மனித வர்க்கத்தில் நாட்டிற் காக வாழ்பவர்தான் கந்த முருகேசன். அவருடன் நெருங்கிப் பழகி அவருடைய சில குணங்களை நான் அவதானித்தேன்.உடற்கோளாறுஉள்ள சில சமயங்களிற் கூட பிள்ளைகளின் எதிர்காலத்தில் கண் ணு ங் க ரு த் து மாய் ப் பாடம் சொல்லிக் கொடுப்பார். பண்டித, வித்துவான்வகுப்புகட்குப் படிப்பிக்கும்பொழுது மிகவும் நுணுக்கமாகப்படிப் பிப்பார். ஓர் சமயம் நன்னூல் படிக்க நானும் வேறுசில மாணவர்களும் சென்றிருந்தோம். ஆசிரி யரும் என்னையே வாசிக்கத் தூண்டினர். அந்நூல் சங்கர நமச்சிவாயரால் எழுதப்பட்டு சிவஞான முனிவரால் திருத்தம்செய்யப்பட்டது. உரைநடை கடுவலானது. வாசிக்க ஆரம்பித்த நான் எண் ணுக் கணக்கற்ற பிழைகள் விட்டேன். ஆசிரியர் சிரித்து விட்டு "கண்தெரியாதவன் தடியூன்றிக் கற்றெருவால் போகிறதுபோல இருக்கிறது" என்றர்.
படிப்பதை நிறுத்தியவுடன் ஆசிரியர் நூலைப் பாராமலே வாசிப்பதுபோல் சொல்ல ஆரம்பித்து விட்டார். அப்பொழுது இன்னுேர் நண்பன் இதையெல்லாம் எப்படி மனனம் செய்தீர்கள் என்(?ர். 'அதுதான் கூடாத பழக்கம். மனனம்

செய்யவே கூடாது. தான் படிப்பதனலடைந்த இடர்களை யெல்லாம் சொல்லுவார். 'இலக்கண நூல்களைச் சிறுவயசிற் கற்கும் போது பல சந்தே கங்கள்ஏற்படும், அச்சந்தேகங்களைத் தீர்ப்பதற்குப் புத்தகப் பட்டியலைப் பார்த்து இந்தியாவிலிருந்து
வேறு புத்தகங்களை எடுத்துப் பார்ப்பேன். பின்பு
சந்தேகங்களைத் தீர்ப்பதற்கென எடுத்த நூல்களி லேயே இன்னும் பலநூறு சந்தேகங்கள் ஏற்படும், இப்படியே ஒரே தலையிடியாய் இருக்கும்,' என் றெல்லாம் சொல்லுவார்.
இவர் ஆசிரியர் முருகேச பிள்ளையிடம் கந்த தபுராணமும், நன்னூற் காண்டிகையுரையில் பத வியல் வரையுமே மாணவனுக இருந்து கற்ருர், இவ்வளவு என்று சொல்ல முடியாத விவேகமும் அறிவும் இருப்பதற்கு முதற்காரணம், நன்னூல், யாப்பருங் கலக்காரிகை போன்ற சிற்றிலக் கணங் களையும், தொல்காப்பியம் போன்ற பேரிலக்கண நூல்களையும், தானகவே எவருடைய உதவியு மின்றிப் படித்தமையே யாகும். சில சமயங்களில் அவர் மற்றவர்கட்குக் கூறும் பதில் கன்னத்தில் அறைவதுபோலச் சுடச் சுட இருக்கும். இவர் இந்தியத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளை நடை முறையிற் கொண்டுள்ளார். இதையறிந்தஓர் அரசியல் வாதி ஆசிரியரைத்தான் வாதத்தில் வெல்வதென்ற கருத்தோடு வந்தார். அவர் பெரிய அரசியல் வாதியாக இன்று விளங்கு கின்ருர். அவரை நேரடியாகச் சொல்லி அவர் உள் ளத்தை உடைத்தெறிய நான் விரும்பவில்லை. அவர் வந்தவுடனேயே “என்ன உங்கள் திராவிட முன்னேற்றக் கழகம்? உங்களில் எத்தனை பேருளர்? அதற்குப் பெறுமதி சைபர்' என்ருர் . ஆசிரியருக்கு வேதனை தாங்க முடியவில்லை. இவர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லமுன் ஒரு சுடு வார்த்தை பேசினர். "நீங்கள் படித்த ஒருவ ராயிருந்தும் மூளைக்கும் வாய்க்கும்சம்பந்தமில்லா மல் கதைப்பதை நினைந்து வருந்துகிறேன்" எ ருர், அதன்பின் கேள்விகட்குப் பதில் கூறினர்:
1. 'தி. மு. க. ஓர் சமூக சீர்திருத்தத்தோ
டான அரசியற் கட்சி.
2. தொகையைப் பார்த்து நீங்கள் ஒன்றை மதிப்பதானுல் இந்தஉலகத்தில் கோளாங் கற்களோ அதிகம்? இரத்தினக் கற்களோ அதிகம்?
3. உங்களுக்கு சைபருக்குரிய பெறுமதி என்ன என்றே தெரியாது. ஓர் இலக்கத்து டன் பத்துச்சைபரைப் போட்டுப்பாரும். பின் ஓர் இலக்கத்துடன் புள்ளியிட்டு முன் பக்கத்திலும் போட்டுப் பாரும். அப்பொ

Page 31
ழுது எவ்வளவு வித்தியாசம் உண்டு என் பதைக் கவனியும்" என்ருர்,
வந்தவர் ஒரு பட்டதாரி. அவருடன் இன்று பாராளுமன்றப் பிரதிநிதியாக இருக்கும் வேறு இருவரும் வந்தார்கள். எல்லோரும் சிரித்தனர். அந்த வாயாடியின் உள்ளம் என்ன பாடுபட்டி ருக்குமோவென நானும் அனுதாபப் பட்டேன். அவர் அன்றுதான்; பின் வந்ததாக ஆசிரியர் சொல்லவேயில்லை. இப்படிப்பட்ட ஆசிரியர் தூய அன்பும், இரக்கமும் உள்ளவரென்பது முண் மையே. அடிக்கடி நான் சொல்லுவேன். "இக் காலத்தில் யேசுநாதர் சொல்லியது போல நாங் கள் நடக்கக் கூடாது. அவ்வளவு பொல்லாத உல கம், கன்னத்தில் ஒருவன் அறைந்தால் நாமுந் திருப்பி அறையவேண்டுமென்பேன்." "அதுதவறு தம்பி! தீமை செய்தவனுக்குத் தேடி நன்மையே செய்யவேண்டும். அப்பொழுதுதான் அவன் உணரு வான். வள்ளுவரின் "இன்ன செய்தாரையொறுத் தல், அவர் நாண நன்னயஞ் செய்துவிடல்" என்ற குறளிலும் பார்க்க "இன்ன செய்தார்க்கும் இனி பவை செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு' என்ற குறளையே நான் பெரிதும் விரும்புகிறேன். காரணம்: 'இன்னு செய்தவரை யொறுத்தல் என் பது தண்டித்த லென்ற பொருள். இன்ன செய்த வரை ஒறுத்தல் என்றதை நான் விரும்பவில்லை. அது ஓரளவில் மற்றவர்களைப் பழிவாங்குவது போலப் படுமாதலால். அந்த ஒறுத்தல் என்றே சொல் வாராத மற்றைய குறளையே நான் அதி கம் விரும்புகிறேன்' என்பார். அவ்வளவு தூரம் பண்பட்ட உளமுடையவர்.
ஆசிரியரிடம் கல்வி கற்ருேர் பலர். இவர்க ளில் முக்கியமாகத் திகழ்பவர்கள். சி. சிவபாதம்; சி. கணபதிப்பிள்ளை B.Sc. (Hons); சி. கதிர்காமர் B. Sc.; க. விக்கினேஸ்வர ராசா: மு. இராசரத் தினம்; பொ. இராசையா வித்துவான் S. R. கந்தசாமி வித்துவான் சுப் பிர ம ணியம்; ஏகாம்பர நாதன் B. A. (Tamil Hons): T. இராச லிங்கம் M A. சென் சோசெப் கல்லூரி, தெய் வானந்தம் பிள்ளை M. A. யாழ்-மத்திய கல்லூரி உதவித் தலைமை ஆசிரியர் ஈசுவரபாதம் B. A. London; S. T. FIT (p.Gaudi B. A.; S. g6Taipra, B.A. H. சின்னத்தம்பி B. A. சிவஞான சுந்தரம் B.A. W. N. S. JITCupGaudi) B. A. London; sisprits st B. A. (Hons); 9ouTT56úlius Lb B. A. (Hons); V. Dort Gólisi B. A.; 5-TT&rt B. A. Principal; K. V. p5L-gits. It B. Sc. Ceylon. B. Sc. London! நடேசபிள்ளை B. A. சு. உலோகநாதன் B. A. ; சிதம்பரப்பிள்ளை B. A. London; செல்வி சிவபாக் கியம் சின்னத்தம்பி B. A., செல்விகள், சிவநேசம் B. A. London ; லோகநாயகி சிதம்பரப்பிள்ளை B. A. திருமதி ஜெயமணி சுப்பிரமணியம் B. Sc., சுப்பிரமணியம் B. Sc. இப்படியே இன்னும் எத்
2.

தனையோ பண்டிதமணிகள் இவர்களுடைய மாண வராவர். எத்தனையோ ஆஸ்திகப் பெரியோர்கள் வந்து சிவஞான சித்தியாரிலுள்ள ஐயங்களை அகற் றிச் செல்வர். இன்னும் ஆசிரியரிடம் பாடங்கேட் காத பண்டிதர்களும் வித்வான்களும் தொல்காப் பியம் நன்னூல் போன்ற இலக்கண நூல்களிலுள்ள மயக்கங்களைத் தெளிவுபடுப்பித்துச் செல்வர்.
இலக்கணங்களிலுள்ள சந்தேகங்களைத் தீர்ப் பதில் விளக்கங் கொடுப்பதில் ஆசிரியர்க்கு நிகர் ஆசிரியரே. அன்னர் புதுப் புது உதாரணங்களை யெல்லாம் எடுத்துப் பேசுவார். சாதாரணமா கப் படிப்பிக்கும்போதே மாணவர்களின் முழுக் கவனத்தையும் படிப்பிற் செலுத்துவதற்காக நகைச்சுவைக் கதைகளைச் சொல்லிப் படிப்பிப் பார். இவரிடம் கற்ற மாணவனன வித்வமணி சுப்பிரமணியம், ஆசிரியர்க்குப் பாடலொன்று பாடியனுப்பினர். அப்பாடல் ஆசிரியரிடம் அவர் வைத்திருக்கும் நன்மதிப்பை நன்று காட்டுவதா கும். அவ் வெண்பாவின் சில பகுதி பின்வரு LDTgpj: —
"கல்வி தருமே கணகம் கொழிக்குமே புல்லர்தமைப் புலவர் ஆக்குமே.
கந்த முருகேசன் கழல்
இவ் வெண்பாவைப் பார்த்த ஆசிரியர் கந்த முருகேசன் தன் மாணவன் பாற் கொண்ட அன் பினல் தானுமோர் வெண்பாவைப் பாடி அனுப் பினர். அப்பாடல் வருமாறு:-
'அன்பு வரும்வருமால் ஆசிரியன்பாற்பணிவு பொன்பு கருநேர் புலம்வருமால்-என்புகழார் மாணுக்கன் சுப்ர மணியற் கவனனையார் மாணக்க ராரோ மதி'
ஒருமுறை திருநெல்வேலி சைவசாரிய கலா சாலை தமிழ்ப் பேராசிரியரான பண்டித மணி திரு சி. கணபதிப்பிள்ளையவர்கட்கு ஒர் பாராட்டு விழா நடந்தது. அவருடைய பாராட்டு விழாவை நடத்தியவர்கள் மறந்த காரணத்தாலோ அன்றி வேறு என்ன காரணத்தாலோ ஆசிரியர் க்கு அறிவிக்கவில்லை. இந்தச் செய்தி ஆசிரியர்க்கு எட் டியதும் ஆசிரியர் சில பாக்களை இயற்றி அனுப்பி ஞர். காரணம் கற்ருரைக் கற்ருரே காமுறுவர், என்பதனுலே அன்றியும் பண்டிதமணி முன்பு ஒருமுறை வந்து அளவளாவி அன்பு பாராட் டிப் போனதுண்டு. கற்ருேரை மதிக்கும் குணம் அவரிடமுண்டு, அடிக்கடி பண்டிதமணி கணபதிப் பிள்ளையவர்கள் தேன் சொட்டச் சொட்ட இலக் கியப் பேச்சுப் பேசுவார் என்று எம்மாசிரியர் சொல்வதுண்டு. வித்வமணி கணேசையரவர்க
3.

Page 32
ளும்; பண்டிதமணி கணபதிப்பிள்ளையவர்களும் ஈழத்தில் இலக்கணத்திற்கும் இலக்கியத்திற்கும் முறையே எழுந்த இருதூண்கள் என்று சொல் லுவர். ஆசிரியர், பண்டிதமணி அவர்களுடைய பாராட்டு விழா நடந்ததென்பதை யறிந்தபின் எழுதிய பாடல்கள் உள்ளத்தைக் கொள்ளைகொள் ளுவனவாகும்.
1. முன்னேர்தம் பாக்கனியின் முன்னும்
பொருட்சர்றறை பின்னேர் சுவைக்கப் பிழிந்துாட்டு
நன்னவை யீழத்திற் கோர்பண் டிதமணிநீ
யேறலெவ
(ழைப் புதைத்தேனுள் ளார்த்து
2. கண்டே னெருநாட் கலந்தொருமத்
தே மகிழ்வு கொண்டே னுளத்தைக் குழைத்ததனைக்கொண்டே
யகன்ருய் தகுமோ வணைந்துதமிழ்
மாலை (ப்)
புகன்றே தருவாய் புரிந்து
3. ஒரு நாட் குறிஞ்சி ஒழுக்கம்பின் பாலை
தகுநீர் தகவோ. (மிகுதி ஞாபகமில்லை)
இப்படியான நற்கவிதைகளைப் பாடி அன் ஞர்க்குச் சமர்ப்பித்தார். இதற்குப் பண்டிதமணி யவர்களும் இலக்கிய, நகைச்சுவை யுளவர்க வரைந்தனுப்பினர். இப்படியே ஆசிரியர்க்கும் பெரிய மனிதர்களுடைய தொடர்பும், அரசியல் தலைவர்களுடைய தொடர்பும் அதிகம் உண்டு. வல்லிபுரக் கோவிலுக்குப் போக வந்த பண்டித மணியவர்கள் தாம் கண்ட ஆசிரியரான எம்மாசி ரியரை ஒர் கிரேக்க ஞானிபோலக் கண்ணுக்குத் தெரியுந் தோற்ற முடையவரென்றும் மறைந்த ஆசிரியரின் (க. முருகேசபிள்ளை, கந்தமுருகேசரின் ஆசிரியர்) கழிவிரங்கல் நூலொன்றில் சிறப்பாக எழுதியுள்ளார்
தமிழகத்திலிருந்து வரும் பிரபல பேச்சாளர் கள் எம்மாசிரியரிடம் வந்து உரையாடிப் போவ துண்டு. 1959ம் ஆண்டு, தி. மு. க. மகாநாட் டின் தலைவராய் விளங்கிய T, K, சீனிவாசன் அவர் கள் நேரடியாக ஆசிரியருடன் கதைத்து நட்புப் பாராட்டியிருக்கிருர், நாஞ்சில் நாட்டின் புதல் வன் கி. மனேகரன் M. A.அவர்களும் வந்து ஆசி ரியர்க்குக் கைத்தறியாடை போர்த்து.உரையாடி மகிழ்ந்தார். இதைப் பார்க்க வந்த ஊர்மக்கள் ஒவ்வோர். சந்தர்ப்பத்திலும் புகைப்படம் ப்ல பிடித்தார்கள். சரஸ்வதி ஆசிரியர் விஜயபாஸ்

கரன் அவர்களும் வந்து ஆசிரியருடன் உரையா டிச் சென்றுளர்.
இவருடைய அன்பர்களில் பண்டித்ர் திரு, க. கிருஷ்ணபிள்ளையுமொருவர். ஆசிரி ய ரின் குணத்தை யறிந்த பெரியோர்களும் ஆசிரியரைப் போலவே, நகைச்சுவை ததும்பக் கதைப்பார் கள். பண்டிதர் ஒருவர் வரும்போது பழைய சோறு சாப்பிட்டுக்கொண்டிருந்தார். வந்த் பண் டிதர் அவர்கள் 'என்ன வாத்தியார்நட்க்கிறது?’’ என்ருர். ஆசிரியரவர்கள் 'பழம் சோறு சாப்பி டுகிறேன்’ என்ருர். உடனே பண்டிதரவர்கள் “என்ன வாத்தியார்? அப்படியென்ருல் பழம் சோறு உம்மைத் தொகையா? அன்றிப் பண்புத் தொகையா?" என்ருர், நாமெல்லோரும் சிரித் தோம்.பின்புஆசிரியர்' பண்புத்தொகையென‘’ப் பதிலளித்தார். இதிலே இருந்தவர்களில் இரண் டொருவர் சிரிக்கவேயில்லை, அப்பொழுது நான் கேட்டேன் 'இதிலிருப்பவர்கட்கு நகைச் கவை தெரியவில்லையோவென?' ஆசிரியர் சொன்னர். **இதற்கொரு உபாயமிருக்கிறது. ஒரு ஊரில் ஒரு இராசா இருந்தார், அவருக்கு அறிவாற்றலெதுவு மில்லை. யாராவது கற்ருேர் வந்து கதைத்தால் நகைச்சுவைவுள்ள இடத்துப் பேசாமலிருப்பார். நகைச்சுவையில்லாவிடத்துச் சிலசமயம் விழுந்து விழுந்து சிரிப்பார். ஆனல் அவருடைய அமைச் சர் மிகவும் திறமை வாய்ந்தவர். அரசனிட மிருக்கும் அறியாமைக்கு வருந்தினர். பின்னர் பலத்த யோசனையின் பலனுய் ஒர் வழியைக் கையாண்டு இராசா மந்த குணமில்லாதவரென்று காட்டினர். இராசாவின் காலில் ஒர் கயிற்றை மாட்டி யாருக்குந் தெரியாதபடி தன் இருக்கை யில் பிணைத்தார். புலவர்கள் யாராவது நகைச் கவையுள்ள கதைகள் சொன்னவுடன் மந்திரி கயிற்றை இலேசாக இழுப்பார் உடனே இராசா சிரிப்பார்' என்ருர் . நாமெல்லோரும் மூச்சுத் திணறச் சிரித்தோம். எம் நண்பரொருவர் *அப்படி யென்ருல் இங்குள்ள இரண்டொரு வர் காலிலே நீங்கள் கயிற்றைக் கட்டி நீங்களே கையில் வைத்துக் கொள்ளுங்கள்’’ என்ருர்.
‘அதற்காகவா? இப்படிக் கதையைச் சொன் னேன் மகனே?’ என்ருர் . இப்படி அவர் வீட் டிற்குப் போயிருந்தால் நேரம் போவதே தெரி யாமலிருக்கும். அங்கே கவலையில்லாமல் போயி ருக்கலாம். காரணம் பசித்தால் உண்பண்டம் அதிகம் அங்கேயிருக்கும். உளுத்தம் மாவு, அரிசி மாவு, பிஸ்கட் வகைகள் எல்லாமிருக்கும். கேட்க வேண்டிய அவசியமில்லை. எங்க -ளெண்ணப் படியே தேங்காயைத் துருவ வேண்டியது சீனி யையும் “திழுத்தம்மான்வயும் எடுக்க வேண்டி
24

Page 33
யது கலக்க வேண்டியது, இறுதியில் உண்ண வேண்டியதுதான். அங்கு வரும் மாண வர் க ளெல்லாஞ் சொல்லுவார்கள் 'இத் தமிழ க ப் பொருட்களெல்லாம் பொது’’ என்று இப்படிச் சொல்லிச்சொல்லி வேடிக்கை நடக்கும். தாகமேற் பட்டால்கூட அங்குவரும் பெரும்பான்மை மாண வர்கட்கு தண்ணிர்த் தாகமாக இருக்காது அது ஊறுகாய்த் தாகமாக விருக்கும். ஏதாவது புது விதக் கறிகள் சமைத்தால் ஆசிரியர், எல்லோ ரையும் கூப்பிட்டு "எடே சாப்பிட்டுப் பாருங் களடா. முடியுமானல் என்ன கறியென சொல்
லுங்கள்' என்பார்.
ஆசிரியரின் சிறந்த குணம் என்னவெனில் இளைஞரைக் கண்டால் தானுமோர் இளைஞனுக மாறிவிடுவார். கதைக்கும் கதைகளெ ல் லா ம் பதினறு வயதினனின் போ ன் றிருக்கு ம். ஆணு ல் 60 வயது ஸ் ள ஒரு வரை க் கண்டால் அவர் 95 வயதுள்ள வயோதிகக் கதை கதைப்பார். இது இரண்டும் பெ.ாய்யென்பது எனது கருத்து. இவர் இளைஞனுமன்று. வயோ திகனுமன்று. ஐந்து ஆறு வயதுள்ள குழந்தை என் பதுதான என கருதது. ஏதும நாம குழபபடி செய்தால் 'டேய் ! டேய்! என்னடா திருவடித் தீகூைடிபெறப் போகிருயா?' என்பார். ஒருநாள்
 

'அது என்ன வாத்தியார்?' என்றே ன். 'காலால் அடி வேண்டப்போகிருய்' என்ருர்,
‘செந்தமிழ்ச் செல்வி’, ‘சமூக முன்னேற்றம் என்பவற்றில் ஆசிரியர் சில ஆராய்ச்சிக் கட்டு ரைகள் எழுதியுள்ளார். ‘செந்தமிழ்ச் செல்வியில் 'தமிழர் மணமுறை’ என்ற கட்டுரையும் "சமூக முன்னேற்றத்தில் “விதிகன்மம்' என்ற கட்டு ரையும் மிகச் சிறப்புடையன.
பொதுவாக ஆசிரியர் எல்லாச் சமயங்களி னறிவு முடையவர், சைவம்"  ைவணவம், பெளத்தம், சைனம், இஸ்லாம், கிறித்துவம், இவற்றை அலசி அலசிப் படித்த அனுபவமுண்டு. நாங்கள் சமயங்களில் மதங்களைப்பற்றி அபிப் பிராயங்கேட்போம். “கடவுளிருக்கிருரில்லை என்ற பிரச்சனை வேறு. நான் இராமலிங்க அடிகளைப் போல் 'மதமென்னும் பேய் பிடியாதிருக்க வேண்டும்' என்ற எண்ணக் கருத்துடையவ' னென்பார், (புரட்சிக் கவிஞன் பாரதிதாசன் , கனக சுப்புரத்தினமவர்கள் பாடிய "மத ஒடத்தி லேறிய மாந்தரே, பலிபீடத்திற் சார்ந்தீரே' என்று பாடுமோர் பகுத்தறிவாளனக எம்முன் காட்சியளிப்பார். இவர் இலட்சிய விரர்.

Page 34
இப்பெரியார் யாரோ?
(செல்வி மு. க. தங்கம்மா)
Tெப்பொழுது நியாயம் நிலை குலைந்து அநியா யம் தலை தூக்குகிறதோ, தர்மம் தலைகவிழ அதர் மமோங்குகிறதோ, அறமேக மறம் வருகை தரு கிறதோ, அப்பொழுது ஞ்ானிகள் தோன்றி மக் களைக் காப்பாற்றுவதாக அனுபவ வாயிலாக அறிந்த அறிஞர்கள் கூறுகிறர்கள். அது போன்றே மூவாத் தமிழ் மொழியின் சாவாத்தன்மை, உயி ரூட்டுமுணர்வுமிக்க யினிமை, ஆழ்கடலினமைதி யிலே காணுந் தெளிவு ஆழம். இவை மங்கிய காலத்தில், தமிழ் மொழியைக் கற்ருலே மானம் போய்விடும் என்ற நேரத்தில், ஆங்கில நாகரீகத் தின் அரவணைப்பில் மக்கள் போலிக் கெளரவம் செலுத்திய நேரத்தில் ஒரு மகான் தனித் தமிழ் முனிவராய்த் தோன்றினர்.
பால் வடியும் பாலகன் முதற் கொண்டு பட் டங்கள் பல பெற்ற பட்டதாரிகளிருக பாடங் கேட்க வருவார்கள். குழந்தைகட்குச் சிரிபூட்டும் கதைகள் சொல்லி, கல்வியிற் கருத்தூன்றச் செய் வார். அவர்களோடு தாமும் குழந்தையாகுவர். மற்றை யெ வர் க் காயினும் பாடம் சொல்லிக் கொடுக்கும் பொழுது மாணவர்கள் சிறிது உற் சாகங் குன்றினல் சிரிப்பு வரும் சிறு கதைகள், சிலேடைக் கே ள் விகள், விகடத் துணுக்குகள் சொல்லிச் சோர்வைப் போக்கி ஊக்கமளிப்பார்.
துடுக்குத்தனத்தால் துள்ளித் திரியும் பிள்ளை கட்கு அறிவூட்டி, அவர்களை நல் வழிப்படுத்து வார். முறிந்த மனமுடையவர்க்கு முன்னே நின்று புத்திமதிகள் புகட்டுவார். இவரிடம் கல்வி கற்க வந்தவர்கள் வெறும் ஏட்டுப் படிப்பை மட்டும் படித்துச் செல்லவில்லை. அதோடு, பொறுமை இரக்கம், வாழ்க்கைப் பண்பு, முதலிய குணங் களையும் கற்றிருக்கிருர்கள். 'பிள்ளைக்ளே! உல கம் விரித்து வைத்த புத்தகம். கண்ணு லே யே பார்த்துப் படிக்கலாம். ஆனல் மற்றவை மூடி யிருக்கும் புத்தகங்கள் திறந்தே படிக்கவேண்டும். பின் மூடி வைக்கவேண்டும்' என்று அடிக்கடி அவ்வறிவுரு கூறுவதுண்டு.
இருந்த இடத்திலிருந்தே தமிழகமெங்கும் அறிவொளி வீசும் ஞான சூரியனைக் காணவேண் டுமா? இதோ வாருங்கள். புலவர்களின் ஒலிகள் நிரம்பிய, கானமழை பொழியும் ஊரின் தெற்கே பெரிய விசாலமான காணி. யாழ்ப்பாணக் கற்பக தருக்கள் கனகுவியாக வளர்ந்து நுங்குங் காயும் நிறைந்திருக்கின்றன. அதன் மத்தியில் ஒரு வீடு. அதன் முகப்பில் தாவிப் படர்ந்த பெரிய முல்லை

ம்ல்லிகைப் பந்தல். எந்நேரமும் மொட்டும் ம6 ருமாய் நிறைந்திருக்கும். மல்லிகை வெண்பை யைத் தோற்கடிக்கக் கீழே வெண்மணற் பரப்பு வீட்டுத் திண்ணையிலே கிழக்கு நோக்கி ஒரு திரு வுருவம் அமர்ந்திருக்கிறது. தூய வெண்ணிறத் தாடி. அறிவுக் கற்றை களை வீசி மக்களின் அறியா மையிருளைப் போக்குகின்ற அறிவு முகம். அதிலே தவழும் புன்சிரிப்பு. அதனல் எகுகின்ற தமிழ் மூச்சு இத்தனையுங் கொண்ட அத்தவ முனியார்?
மூன்று நான்கு பெண்கள் காணியுள் நுழை கின்றனர். ஞானத் தவக்கொழுந்தைக் கண்டதும் "ஆயிரமாயிரம் ஆண்டுகட்கப்பாற்பட்ட இத் தாலிய நாட்டுத் தத்துவ ஞானியோ?’’ வென அவர்கள் வாய் முணுமுணுக்கிறது.
பந்தலடியிற் செல்லும் போதே ‘வாருங்கள் மக்காள் வாருங்கள்’’ என்ற இனிய தமிழ் மொழி அவர்களை வரவேற்கிறது. ஆமாம் இவர் இத் தாலிய நாட்டுத் தத்துவ ஞானியல்லர். செந் தமிழ் நாட்டுச் செம்முனி ‘என்ன தலையைத் தடவுகிறீர்கள், வளை தலையிலிடித்து விட்டாதா? தமிழுக்குத் தலைவணங்காத எவரும் தண்டிக்கப் படுவர். பரவாயில்லை யினிமேலாயினும் அப்பழக் கத்தை யேற்படுத்திக் கொள்ளுங்கள்."
திண்ணையிலமர்ந்தால் நேரம் போவதே தெரி யாது. நாழிகையாகி விட்டதென வென் மே ல் கோபிக்காதீர்கள். அத்திண்ணை தமிழ்த் திண்ணை, அப்பாய் தமிழ் நாட்டுப் பாய், அம்முல்லை தமிழ கத்து முல்லை. அங்கு வீசும் தென்றலில் முல்லையின் நறுமணமும், தமிழின் குழுமையும் கலந்து நிரம்பி யிருக்கும். எல்லாம் தமிழ் மயம். அங்கு வீற்றிருப் பவர் தமிழ்த் தந்தை. புருவும் சிறகடித்துச் சிரிக் கிறது. தமிழ்த் திண்ணையிலமர்ந்து அறிவுரை யாடுங்கள். உரையாடலிலே அறிந்துவிட்டீர்களா இப்பெரியார் யாரென? அவர்தான்-த மி ழ் க் கடல், தமிழகத் தந்தை-தரணி புகழ் தவமுனிஉயர்திரு "கந்தமுருகேசனுரவர்கள்.'
சந்தன மரத்தைச் சார்ந்த பிற மரங்களும், அதன் நறுமணம் பெறுவது போன்று; இமயம் சேர்ந்த காக்கையென, பசுந்திண்ணையிலமர்ந்து பேராசிரியரின் அறிவுரையிலான ந்திக் கையில் மனம், நால்வரது வாயும் இன்னிசை யெழுப்பு கின்றது. இதோ கேளுங்கள். 'நக்கீரா னகத்தியன் சங்கந் தந்த
நாவலரும் பாவலரும் மற்று ளோரும் செக்கர் வான்நிற ஈசன் கந்தவேளும்
நின்தனக் கொப்பாவா ருளரோ சொல்லாய் மிக்க துயர் தந்திடுமே யிந்த வாழ்வு
மிகக் கொடுமை யென்றெண்ணி
யிளமைதனில் சிக்கிடாமற் றப்பிவிட்ட பெரியோர் நீதான்
நானிலத்தில் நல்வாழ்வு கண்டாய் ஐய!" வணக்கம்! வணக்கம்!! வணக்கம்!!!

Page 35
“இவை போன்ற சித்திரக் கவிகள் இயற்றக்
கூடிய கவிஞர்கள் இக்காலத்திலும் வாழ்கின்றர் களா?' என உங்களுக்குக் கேட்கத்தோன்றுகின்ற தல்லவா? நீங்கள் சந்தேகம் கொள்வது நியாயந் தான். வசன கவிதை என்றும், எளிய நடைப் பாட்டென்றும் சொல்லிக்கொண்டு சிவசம்புப் புலவர் கூறியது போல வாசிக்கவும் தெரியா வம் பர் த லைப் பட் டு க் 'காசுக் கைஞ்ஞாறு கவி' பாடும் இக்காலத்திலும் "இப்படியான வித்துவான் களும் உண்டோ?’ என நீங்கள் எண்ணுவதில் தவ ருென்றுமில்லை. மேலுள்ள பாடல்களையும் இவை போன்ற அற்புதக் கவிகளையும் புனைந்துள்ள கவி ஞரைக் காணவேண்டுமா? அப்படியானல் என் னைப் பின்தொடருங்கள்.
கிரேக்க ஞானி சோக்கிறதீசரின் விசாலமான நெற்றியும் வங்க க் கவி தாகூரின் தீட்சண்ணிய மான கண்களும், ஆங்கில இலக்கிய மேதை பெர் ஞட் ஷோவின் வெள்ளிய தாடியுங் கொண்ட பொலிவு பூத்த முகம் படைத்த உருவமொன்று சிறிய திண்ணையில் காட்சி தருகிறது. இன்னும் யார் என்று தெரியவில்லையா? ஒகோ! நீங்கள் முன்பு காணவில்லைப் போலும்-கண்டோர் அவ் வுருவினை உள்ளக் கிழியில் எழுதி வைத்திருப் பாரே-எழுதவேண்டாம். அவ்வுருதானே வந்து அழுந்தி நிற்குமே - இவ்வுருவம் தாங்கிய பெரு மகன்தான் கவிஞர் பிரான் கந்தமுருகேசனர். ஆம், பன்னசாலை போன்று அமைந்தவீட்டு முன்
 

பக்கமுள்ள திண்ணையில் கிழக்கு நோக்கிய வண் ணமாய் அளக்கலாகா அளவும் பொருளுமான கிரணங்களெறிப்ப, ஞான பானுவாய்க் காட்சி தருபவர்தான் கந்தமுருகேசனர். பள்ளிப் பிள்ளை களும், பண்டிதர்களும், அறிவு வேட்கையுடையா ரும் சூழ்ந்திருப்ப வீற்றிருப்பவர்தான் நம் கவிஞர் பிரான். தேன் வதையில் வண்டுகள் மொய்த்திருப் பது ஒன்றும் ஆச்சரியமில்லையே! அப்படியே நம் கவிஞர் பிரானிடம் மாணவர்.
உயர்திரு கதிரைவேற்பிள்ளை பிறந்த இடமல் லவா புலோலி. அவர் மிதித்த இடமெல்லாம் மூச்சுப்பட்ட இடமெல்லாம் தமிழ் மணக்குமே! அப்படியாயின் அவர் பிறந்த இடத்தில் புலமை மணப்பது ஒன்றும் வியப்பல்லவே? ஒரே சட்டி யில் வார்த்த தோசைகளை ஒப்ப, ஒரே மாதிரி யான பாட்டுக்களைப் பாடிக் குவிப்பவர் போலாது, பிசைந்த மாவையே பிசைவது போன்று ஒன் றையே திரும்பத் திரும்பப் பாடி மகிழும் (ஆனல் படிப்போர்க்குச் சலிப்பைக் கொடுக்கும்) கவிஞர் என்று பட்டுக்குஞ்சங் கட்டிய சிலர் போலாது பொருளற்ற ப்ாடல்களாம் பண்டங்களை உற்பத்தி செய்யும் உலைக்கூட மொத்த புல வர் க ள் போலாது, எவ்விதப் பொருளையும். எவ்வகைச் செய்யுளினும் அமைத்துப் பாடுவதில் பிற்காலப் புலவர்களுள் மகா வித்துவான் மினுட்சி சுந்தரம் பிள்ளையை ஒப்பர் நம் கவிஞர் பிரான் என்று கூறு வது ஒரு சிறிதும் உயர்வு நவிற்சியா காது.
7

Page 36
'நினைத்தவற்றை நினைத் த போ தெ ல் லா ம நினைத்த வழியே தமிழ்ச் சொற்கள் ஏவல் கேட்ப, வருத்த மின்றி விளையாட்டாகக் கவி பாடும் திறமை எல்லாருக்கும் வாய்ப்பதன்று. அத்த கைய திறமையுடைய கவிஞரை மற்றப் புலவர்க ளோடு ஒருங்கெண்ணுதல் தகாது. அவர்கள் பிற வியிலேயே கவித்துவ சக்தியுடன் பிறந்தவர்கள். அவ்வகைக் கவிஞர் வரிசையில் சேர்ந்தவரே நம் மகாகவி. '' இவ்வாறு மீனட்சி சுந்தரம் பிள்ளை யவர்கள் கவிதா சக்திபற்றி சுவாமிநாதையரவர் கள் கூறியவை. நம் கவிஞர் பிரான் விடயத்திலும் எழுத்துக்கு எழுத்து உண்மையென்பதை, அவர் பாடல் இயற்றும்போது பக்கத்திலிருந்து கேட்கும் பேறு பெற்றேர் அறிவர். சிறியேனும் அறிவேன். உதாரணமாக ஒன்றிரண்டு தருகின்றேன்.
ஒருநாள் மாலைப்போது, மாணவர்கள் பாடம் முடிந்து வீடு செல்லும் நேரம். கவிஞர் பிரானேடு கலந்துரையாடுவதைச் சிறந்த பொழுது போக்கா கக் கொள்ளும் சில இளைப்பாறிய உத்தியோகத் தர் அங்கிருந்தனர். நிலத்தில் பரந்து கிடந்த வெண்மணல் போல் மல்லிகைக் கொடி பூக்களைச் சொரிந்திருந்தது. இவ்வழகிய காட்சியைக் கண்ட ஒருவர் இதனைப் பாட்டில் அமைத்துத் தரும்படி வேண்டினர். ஆசிரியரின் கொவ்வைச் செவ்வா யில் குமிழ் சிரிப்பு முகிழ்த்தது. பாட்டுப் பிறந் தது. இதோ:
வெள்ளியுருக் கிப்பரப்பி மேன்முத்து
நாண்மீனுங் கொள்ளக் குயிற்றியதோர் கோலங்
காண் - தெள்ளுதமிழ்க் கந்த முருகேசன் கன்னித் தமிழ்த்
தொண்டன் சொந்தமதா முன்றிலெனச் சொல்.
சனிக்கிழமை காலை. ஆசிரியர் முழுகுவதற்கு எ ல் லா ஏற்பாடுமாயிற்று. ஸ் நா னத்தை த் தொடங்கியவர் இடையில் ச வர் க் காரத்தைத் தேடினர்; காணப்படவில்லை. பக்கத்தில் நின்ற ஒருவர்-(அவர் மைத்துனர்) "இதோ நான் கொண்டு வருகின்றேன்' என்று கூறிக் கடையை நோக்கி இராம பாணமாய்ச் சென்ருர். போன வர் வந்தபாடில்லை நாழிகை பல வா யிற் று. பொறுத்துப் பார்த்த ஆசிரியர் ஒரு கவியையே தூதாகத் தொடுத்து விட்டார். அது:
கணபதிப் பிள்ளாய் சோப்புக்
கையுடன் வருவே னென்ருய் மணமது கூடி னயோ மாதரைக்
கண்டாய் கொல்லோ

8
குணமதுக் கொண்டாய் கொல்லோ
குளிர்முக மின்னுங் காணேன் பிணமதாய்ப் போகவேண்டாம் பேசாம
லோடி வாராய்
கவி, புலவர் பேச்சிலுந் தோன்றும் ஏச்சிலுந் தோன்றும் என்பதற் கொப்பச் சவர்க்காரம் வரத் தாமதமாகியதற்கும் ஒரு செய்யுள். சவர்க் காரம் வாங்கச் சென்றவர் காலதாமதஞ் செய்த தற்காக அவருக்கு எமது மனமார்ந்த நன்றி. இவை போன்ற சுவை நிறைந்த தனிச் செய்யுட் களும் அவை யெழுந்த சந்தர்ப்பங்களும் எத்த னையோ,
ஆமாம். சவர்க்காரம் என்றவுடன் இன் னெரு விடயம் ஞாபகத்திற்கு வருகிறது. ஆசிரி யர் பாடியுள்ள "'நாவலன் கோவை'யில் வரும் தலைவன் தலைவிக்குக் கையுறையாகச் சவர்க்காரத் தைக் கொண்டு செல்லும் புதுமை யைத் தான் குறிப்பிடுகிறேன். இது போன்ற பல புதுமைகள் நிறைந்த "நாவலன் கோவை'யினைப் படித்து மகிழும் நன்னுள் நமக்கு வெகு தூரத்திலில்லை. ஆயினும் அந்நூல் பற்றிய உங்கள் ஆவலை ஒர ளவு அறிய முடிகிறதாகையால் ஓரிரு பாடல்க ளைத் தருகிறேன்.
இடையுறு கிளத்தல் என்னும் கிளவிக்கமைந்த பாடலிது:
நாவல ஞம்பே ரதுயோக ரூடி
நலமுடையோன் பாவலர் மெச்சு மறுமுக னற்பதிப்
W பாலுறைவீர் தூவலர் காந்தள் குறிஞ்சி துறந்து
துணுக்குறுத்து மேவலர் வென்ற கடலை யடைதலென்
னேவியப்பே.
'நாவலனென்ற பெயரைக் காரண விடுகுறி யாகவுடையவரும், பாவலரால் மெச்சப்படுகின்ற வருமாகிய ஆறுமு கனரின் நல்லையிலிருப்பீர்! தேனைத் தூவுகின்ற காந்தள் மலர் தனக்குரிய குறிஞ்சியை விட்டு நடுக் கத் தை ச் செய்கின்ற ஏவையும் அலரையும் வென்ற கடலை அடைதல் என்ன வியப்பு' என்பது பொருள்.
(காந்தள்-கை, கடல்-கண், குறிஞ்சி-முலை) கைகள் மார்பினை விட்டு நீங்கிக் கண்களைப் புதைத்ததென்னே என்ற தலைவனின் வினவில் அவ்வத் திணைக்குரிய கருப்பொருட்களினலே தலை வியின் உறுப்புகளைக் குறித்த திறன் சுவை

Page 37
தொறும் நயமுறுத்துவதாயுள்ளது. காந்தட்பூ குறிஞ்சி நிலத்தை விட்டு நெய்தல் நிலத்தை யடைந்தது வியப்பென வேறுமோர் தொனிப் பொருள் காண்க.
இன்னுமோர் பாடலைப் பார்ப்போம்: ஆனையிருக்க வரியு மிருக்க வடவிதிரி வான விடஞ்சே ரரவ மறைந்தே
யிருக்கமலை மானை யசத்தைப் புணர்தே மதநா
வலனலையீர் மீனை யெடுத்தது சாறுவைத் தேயெனை
மீட்கவென்றே.
ஆனை வெளியே இருக்கவும், சிங்கம் வெளியே இருக்கவும் அடவியிற் றிரிவதும் வாலையும் வருத்து கின்ற விடத்தை யுடையதுமான பாம்பு மறைந் திருக்கவும், மலை மானையும் ஆட்டினையும் பொருந் திய தெய்வமாகிய சிவஞர் மதங் கொண்ட நாவ லனுடைய நல்லையிலுள்ளீர். “மீனையெடுத்தது சாறு வைத்து எனக் காம மயக்கத்தினின்று மீட் கவா?’ எனத் தலைவன் வினுப் பொருளில் அமைந் துள்ளது பாடல்.
 

(ஆனை-முலை, அரி-இடை, அரவம்-அல்குல், மீன்-கண், சாறு-விழா, காமவிழா
'நீர் புலாலுண்ணு நாவலன் நல்லையிலுள் ளிர். அங்ங்னமாகவும் மீனை எடுக்கலாமா? அவ் வாறெடுத்தது என் மீதுள்ள அருளாலென அறிந் தேன்' என்னும் குறிப்புப் பொருள் அமைந்தின் பஞ் செய்வதை யறிக. 'ஆனை, அரி, பாம்பு என் பன சாறு வைக்க உதவா. அதனுல் மீனையெடுத் தீர் போலும்’ எனப் பொருள் பயந்து நிற்றலை யும் ஒர்க.
இவை நாவலன் கோவையாம் கவிதைப் பாற் கடலில் தெறித்து வீழ்ந்த இருதுளிகள். முழு நூலுஞ் சுவைக்கும் பேற்றினைக் 'கந்தமுருகேச ஞர் முத்தமிழ் விழா'க் கொண்டாடும் நினைவு முகிழ்த்த பெரியோர் தமிழுலகிற்கு அளிப்பாராக.
குறிப்பு: மேலுள்ள சித்திர கவிகளின் விளக்கம் வி ரிவஞ்சியும், ஆர்வமுடையார் தாமே பொருள் காண முனையவேண்டும் என்பது பற்றியும் தரப்பட்டிலது.

Page 38
<>محم>-محم>ح<>سحم><م><م>محمس<م>سیج>خے۔ حمتح>سج>حم><م><م><><م>حم>ح>X۔
{}
நான் கண்ட
f1 لGolL • ونچی۔ حم>حمحم>حم>حم>حمسج>ح>حم><چ>حم>ج>ج>حمح>ح>
வடபகுதிக்குள் திலகம் போன்று விளங்கு கின்ற வடமறவர் ஆட்சிப் பகுதி. ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்ருேர் பலர் வாழும் புலோலியூர். வளமிகு தமிழ் மொழி தங்குமோர் இல்லம். தவக்குடில் மனை. வரிசை வரிசையாக இருந்த மாணவச் சிருர்கள் மனனம் செய்யும் காட்சி. அவர்களுக்கு மத்தியில் ஒரு சந்தனப் பிழம்பு நிறத்திலே ஒரு பெரியவர் உட்கார்ந்திருக் கின்றர்.
நெடு நாளைய ஆசை. தமிழ் மொழி வளர்க் கும் ‘தமிழ்த் தாத்தா'வைக் காண வேண்டும் என்று. நான் வீட்டிலிருந்து ஒரு பெரியவரைக் காணப் போகின்றேன், எப்படி நடந்து கொள்ள வேண்டும்? எப்படியெல்லாம் அவரிடம் பேச வேண்டும்? என்றெல்லாம் கற்பனைசெய்து கொண் டேன். அவர் என்னிடம் எப்படிப் பழகுவார் என்றெல்லாம் எண்ணிக்கொண்டே எனது மிதி வண்டியில் போய்க்கொண்டிருந்தேன். கற்பனைச் சிறகடித்து பறந்து சென்றேன். என் எண்ணமெல் லாம் முருகேசனுரையே சுற்றி வட்டமிட்டு கொண்டிருந்தன. “எப்படியெல்லாம் இருப்பார்? எப்படியெல்லாம் காட்சி தருவார்?' என்று எண்" ணிக் கொண்டே அவர் உறையும் புனிதமனையில் நுழைந்தேன். என் மனம் உருகிக் குறுகி மயங்கி செயலிழந்து நின்றது. பேசு வ தற்கு நாவெழ வில்லை. கரங்கள் இரண்டும் குவிந்தெழுந்து கூப் பின. 'வணக்கம்' என்று வாய் முணுமுணுத்தது. சத்தம் வெளிவர மறுத்துவிட்டது. கண்ணனை நினைந்து திரெளபதி "கோவிந்தா கோவிந்தா' என்று கூறிக் குளிர்ந்தவள் போல் என் மனமும் 'கந்த ழுருகேசன்' என்று வினடிக்கு வினடி கூறிக் குளிர்ந்து கொண்டிருந்தது.
'தம்பி! இப் படி உட்காருங்கள்' என்று திண்ணையில் ஒரு பகுதியைக் காட்டினர். எனக்கோ

G-e-o-o-o-o-o-e-o-o-o-e-el-el-e-o-o-o-o-o-o-
{}
முருகேசனர்
ملا ج>ههجحمتح>چچتح>ح>حمحم>محمح>حمحمح>۔ T60Tul ITف6
எண்ணிய எண்ணங்களெல்லாம் எங்கோ பறந்து போய்விட்டன. இருக்கவும் அச்சமாக இருந்தது. நான் அவர் காட்டிய இடத்திற்குச் சிறிது தூரம் கீழேயிருந்த-சிறு படிபோன்றிருந்த திண்ணையில் அமர்ந்தேன். அவரும் நானும் சிறிது அளவளாவி னுேம். என் ஊர் பெயர் முதலிய விபரங்களைக் கேட்டறிந்தார். நான் வந்த நோக்கத்தையும் சொன்னேன். அவர் அதற்கு மறுப்பு வர்ர்த்தை கூருமல் ஒப்புக்கொண்டார். 'தம்பி! நீர் முன்பு யாரிடம் பாடம் கேட்டீர்' என்று கேட்ட்ார். நான் முன்னமே சொல்ல வேண்டுமென்றெண்ணி யது. என் நினைவிற்கு வந்தது. “நான் தங்க ளுடைய மாணவர் பண்டிதர். க. வீர்கத்தியிடம் பாடம் கேட்டேன். தொடர்ந்தும் கேட்டு வருகின் றேன்" என்று கூறி என் சந்தோஷத்தைத் தெரியப் படுத்தினேன். அவர் அதற்கு மிக்க மகிழ்வு கொண்டார்.
'நீங்கள் இன்று போய் நாளை வாருங்கள் தொடர்ந்து "பாலபண்டிதம் படிப்போம்' என் ருர், நானும் அதற்குடன்பட்டுச் சென்றேன்.
காலங்கள் கடந்தன. பாடம் கேட்டேன். பகுத்தறிவையும் சிந்தனைத் தேனையும் குழைத்துத் தந்தார். 'கற்பனைக் கடல் மூலம் கவிதை மழை பொழிந்து தந்தார். காவியம் பாடவும் செய்துவிட் டார். அன்பன், கந்த முருகேசன் அறிவுக் கடலா னர். அவர் ஆழத்தை என்னலும் என் போன்ற ராலும் அளக்க முடியாது முயல்தலும் கை கூடாது. அவர் தம் பெருமை செப்பும் தரமன்று. 'தமிழ்த் த்ாய்’ விரும்பிக் களிநடம் புரியும் நாவினைக் கொண்டுள்ளார் என்ருல் மிகையா காது. வாழ்க அவர் புகழ்! வளர்க அவர் ஆயுள்!! வாழ்க தமிழ்மொழியன்னை!!!
வணக்கம்!

Page 39
ap
MM-M
MordonéVa
NONVM
NSPNPav
kകയ്പ 9 ന്ദ്ര, ഷ, , ,
சிறந்த கவிதைகள் கற்போரின் கருத்திற்கு நல் விருந்தாகும். கவி நயத்தைப் பெற்றுச் சுவைக்க வேண்டுமானல் கவிதைகளில் ஈடுபாடு கொண்டு கற்க வேண்டும். கவிதையைப் புனைந்த கவிஞணுக மாறி நின்று அவன் கண் கொண்டு கவிதைகளைக் காண்போமானல் அங்கே சொல் நயத்தைக் காணலாம்; ஒசை நயத்தை அனுப விக்கலாம்; கற்பனை வளத்தையும், பொருள் நயத்தையும் கண்டு களிக்கலாம்; விழுமிய உணர்ச்சி, இயற்கை நிகழ்ச்சி என்பனவற்றில் ஈடுபாடு கொண்டு தெவிட்டாத கவியின்பத்தைப் பெற்று மகிழலாம். இவ்வகைக் கவிநயத்தினை கவிதைகளிலே காண்பாம். கவிதையில் வரும் சொற்கள் தமக்குரிய நேரடியான பொருளை மட் டுமல்லாமல் வேறுசில பொருள்களையும் கொண் டுள்ளன. கவிஞன் தன் கவிதையில் இரண்டு பொருள்களைக் கூறுகின்றன். ஒன்றைச் சொற் களின் ஒசையாலும், மற்றென்றைச் சொற்க ளின் நேரடியான பொருளாலும் அறிவிக்கின் முன். இதனைக் கம்பன் கவிதை யொன்றிலே காண்பாம்.
கும்பகருணன் உறங்கிக்கொண்டிருக்கின்றன். இராவணன் ஏவலால் அங்கு வந்த நூற்றுக்கணக் கான வீரர்கள், உறங்குகின்ற கும்பகருணனைத் துயில் எழுப்புகின்றனர். இரும்பு உலக்கைகளால் இடித்து இடித்து அவன் தூக்கத்தைக் கலைக்கின் றனர். அவ்வாறு அவர்கள் இடிக்கும் ஒலியைமாறிமாறி இடிக்கும் ஒலியைக்-கவிஞன் நமக் குப் பாடலில் ஒசை மூலம் காட்டுகின்றன் :
'உறங்கு கின்ற கும்ப கன்ன உங்கள் மாய
வாழ்வெலாமீ இறங்கு கின்ற தின்றுகாண் எழுந்திராய்
எழுந்திராய் . கு போல விற்பிடித்த காலதூதர்
கையிலே உறங்குவாய் உறங்குவாய் இனிக் கிடந்து
உறங்குவாய்"
படலை மனத்துள் படித்துப் பார்த்தால் சொற் களின் பொருள் தெரிகின்றது. செய்யுளை உரக்
3.

LLLLSLLLLLSLLLLLSLLLSLSLLLLLSLLLLSLLALLLLSLLLSLSLSSLSLSSLSSLS
u if
ngbu T 6TD. 6). alooooooo-k
கப் படித்தால் ஒரு புதிய தன்மை வெளிப்படு வதை உணர்கின்ருேம். எப்படி? செய் யு ளி ன் முதல் இரண்டு அடிகளைக் கும்பகருணனின் ஒரு புறத்தில் நிற்பவர் சொல்லி அவன்மேல் உலக் கைகளால் இடிக்கப் பின்னிரண்டு அடிகளை மறு புறத்தில் நீற்பவர் சொல்ல இடிக்கும் ஒசை காதில் விழுகின்றதல்லவா? இதனைக் கவிஞன் எப்படிக் கூறினன் சொற்களாலா? இல்லை. பயன் படுத்திய ஒசையால் புலப்படுத்தி வி ட் டா ன். நமக்கு அடிகளில் நாற்பது வல்லின எழுத்துக் களைப் பயன்படுத்திக் கூறிவிட்டான். இவ்வாறு சொல்நயமும், ஒசைநயமும் கவிதை களி ல் காணப்படுவதை நாம் காண்கின்ருேம்!
கவிஞன் தன் மனத்துள் தோன்றிய உணர்ச் சியை அப்படியே எமக்குக் கவிதையாகத் தரு கின்ருன், அவ்வாறு அவன் தன் உணர்ச்சியை வெளியிடுவதைக் கவிதையின் ஒசையும், ஒலிக் குறிப்பும் இனிது புலப்படுத்தும். சொற்கள் செய்ய இயலாத சிலவற்றை ஓசை செய்வதைக் காணலாம்.
கலிங்கப்போர் முதற் குலோ த் துங் கன் படைத் தலைவனகிய கருணுகரன் தலைமையில் சோழர் படையும், அனந்தபத்மன் தலைமையில் கலிங்கச் சேனையும் போர்புரிகின்றன. இறு திறத்து வீரர்களும் குதிரைப்படை, யானைப்படை களை ஏவிப் போர் புரியத் தொடங்குகின்றனர். இதனைக் கவிஞன் கவிதையிலே ஒசைநயத்தால் புலப்பட வைக்கின்றன். எடு மெடு மெடும்’ என்றும், "விடும் விடும் விடும்’ என்றும் வீரர்கள் எழுப்புகின்ற ஓசையைக் கவிதையிலே காட்டு கின்றன் கவிஞன் !
'எடுமெடு மெடுமென வெடுத்ததோர்
இகலொளி கடலொவி யிகக்கவே
விடுவிடு விடுபரி கரிக்குழாம்
விடும்விடு மெனுமொளி மிகைக்கவே'
செய்யுளைப் படிக்கின்ற பொழுதே சேணுவீரர் போர்க்களத்திலே போரிடுவதுபோன்ற உணர்ச் சியினை நாம் பெறுகின்ருேமல்லவா? ஒசையின்

Page 40
உதவியால் கவிஞன் கரிக்குழாத்தை நம் கண் முன்னே காட்டுகின்ருன், குதிரைப் படையை அகக்கண்முன் நிறுத்துகின்ருன், இகல் ஒளியைக் கடல் ஒளிபோலக் கேட்க வைக்கின்ருன். இவ் வாறு சயங்கொண்டாரின் கவிதை ஒசைநயத் தால் சிறப்புற்றுக் கற்போரின் உணர்ச்சியைத் தட்டி எழுப்ப வல்லதாக அமைந்து விளங்கு கின்றது.
சில கவிதைகள் சொல்லமைவால் சிறப்புப் பெற்றுத் திகழும். ஒரு சில சொற்களை வைத் துக்கொண்டு பல உண்மைகளைக் கவிஞன் புலப் படுத்தும் திறமை உடையன். சுருங்கக் கூறி விளங்க வைக்கின்ற ஆற்றல் அவனுக்கு இயல் பாக அமைந்ததொன்று. கும்பகருணன் தன் அண்ணனன இராவணனுக்குப் புத்தி கூறுகின் ருன், இராம இலக்குவரின் உயர்வையும், இரா வணன் ஆதியோரின் தாழ்வையும் எடுத்துரைக் கின்றன் மனம், வாக்கு, காயம் என்பவற்ருல் இராம இலக்குவர் புனிதமானவர் என்றும், வஞ் சம், பாவம், பொய் என்பனவற்றில் வல்ல தாம் அவர்களுடன் ஒப்பாகார் என்றும் கவிதையிலே கவின் பெற அமைத்துக் காட்டுகின்றன்.
தஞ்சமும், தருமமும், தகவு மேயவர் நெஞ்சமும், கருமமும் உரையுமே நெடு வஞ்சமும் பாவமும் பொய்யும் வல்லநாம் உஞ்சுமோ வதற்கொரு குறையுண்டாகுமோ? என்பது கம்பன் சொற் சித்திரம்.
இராமர் முதலியோருக்கு நெஞ்சம், தஞ் சம், கருமம், தருமம், உரை, தகவு. இராவண ஞதியோருக்கு நெஞ்சம், வஞ்சம், கருமம், பாவம், உரை, பொய் என்று இரண்டாமடியி லுள்ள மூன்று சொற்களுக்கும் முதலடியில் மூன்று சொற்களையும் மூன்ருமடியில் எதிரான மூன்று சொற்களையும் அமைத்துக் கவிதையை வடித்த கம்பனின் கவித்திறன் போற்றுதற்குரி தாகும்.
கவிஞர்கள் உணர்ச்சி நிறைந்த வர் கள். எனவே உணர்ச்சிக்கு உடந்தையாகி உச்சநிலைக் குச் சென்று தம்மை மறந்து அலறியோ, குழ றியோ, கவிதைகளைப் புனைந்து விடுகின்றனர். அத்தகைய கவிதைகளில் ஈடுபாடு கொள்ளும் பொழுது நாமும் கவிஞனைப்போல் வாய்விட்டு குழறி விடுவோம் என்பது திண்ணம்.
தந்தையின் கட்டளையைத் த லை மே ற் கொண்ட தனையன் நாட்டைவிட்டுக் காட்டிற் குச் செல்கின்றன். சீதையும் இலக்குவனும் தன்

52
பின்னே வர, இராமன் முன்னே செல்கின்றன். இராமனின் அழகிய வடிவைக் கற்பனைக் கண்க ளால் கண்டு வியப்படைகின்றன் கவிஞன். இராமனின் அழியாத அழகில் ஈடுபாடு கொண்டு உணர்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்தோட அழியா அழகிற்கு உவமைகளை ஒன்றின்பின் ஒன்ருக அடுக்கிக் கவிதையைப் புனைகின்றன்.
"மையோ மரகதமோ மறிகடவோ கழை
முகிலோ ஐயோ! இவன் வடிவு என்பதோர் அழியா அழகுடையார்'
இராமனின் அழகிற்கு மையையும். மரகதத்தை யும், மறிகடலையும், மழைமுகிலையும் உவமை யாக எடுத்துரைக்கின்றன் கம்பன். ஆணுல் அவன் கவிதையுள்ளம் அவ்வுவகைகளை ஏற்க மறுத்து விடுகின்றது. மையென்ருல் அது அவன் வண்ணத்திற்கு ஒப்பாகவில்லை; மரகதம் என் ருல் அது அவன் திறத்திற்கு உவமை யாக வில்லை; மறிகடல் அவன் வடிவுக்கு ஈடாகவில்லை; ஏன்? மழை முகில் தானும் இராமனின் அழகை உள்ளவாறு புலப்படுத்தவில்லையே? கம்பன் கவி தையுள்ளம் குமுறியது. உணர்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்தோடத் தன்னையே மறந்து உச்ச நிலைக்குச் சென்று ஐயோ! என்று அலறிக் கவி தையைக் கம்பன் புனைந்து விடுகின்றன்.
"மையோ மரகதமோ மறிகடபோ
மழைமுகிலோ ஐயோ! இவன் வடிவு.
என்பது கம்பன் சொல்லோவியம். இங்கே கவி ஞனின் உச்சநிலையை (Climax)க் காண்கிருேமல் Gyau TP
கவிஞன் தான் படைக்கும் பாத்திரங்களாக மாறி நின்று கதைப்பதையும் கண்ணிர் வடிப்ப தையும் காணலாம். அவ்வாறு கவிஞன் கலங்கி நின்று தீட்டுகின்ற கவிதைகளில் விழுமிய உணர்ச்சி கவிதையின் உயிராக இருப்பதை அக் கவிதையில் ஈடுபடுவோர் இன்று உணர்வர். இவ் வகைக் கவிநயத்தைக் கம்பன் கவிதையொன் றில் காண்பாம்.
இராவணனுக்கு உறுதிமொழிகள் வழங்கிய கும்பகருணன் இறுதியில் அண்ணனைப் பிரிந்து போருக்குப் புறப்படுகின்றன். 'அண்ணு! இன்று வரை யான் ஏதாவது குற்றங்கள் செய்திருந் தால் அவற்றை யெல்லாம் பொறுத்துக்கொள். நின் முகத்தில் யான் விழித்தல் இன்ருேடு முடிந் தது' என்று கூறி விடைபெறுகின்றன். அவன்

Page 41
பிரிவு மலைபெயர்ந்தாலும் நிலைபெயராத இரா வணனைக் கலங்க வைக்கிறது. தன் தம்பியின் பிரிவை எண்ணி எண்ணி ஏங்கிஅழுகின் முன் இரா வணன், ஆம். இராவணனுடைய இருபது கண் களிலிருந்தும் கண்ணிர் இரத்தத்தோடு கலந்து பெருகுகின்றது. கும்பகருணன் பிரிந்து சென்ற சோகக் காட்சியையும், கண்களில் இரத்தக் கண் ணிர் பெருக இராவணன் நின்ற உருக்கமான நிலையையும் கம்பன் கற்பனையிலே கண்டான்; கலங்கினன்; கண்ணிர் வடித்தான் சோகக் காட் சியைச் சொற்களால் புனைகின்றன்.
*அவ்வழி இராவணன் அனைத்து நாட்டமும் செவ்வழி நீரொடுங் குருதி தேக்கினுன் எவ்வழி யோர்களும் இரங்கி ஏகினர் இவ்வழி யவனும் போய் வாயிலெய்தினன்'
என்பது கம்பன் தீட்டிய சோகச் சித்திரம். கவி தையில் ஈடுபாடு கொள்ளும்போது கம்பன் இரா வணனைக் கண்ணிர் பெருகும் கண்களோடு நம் கண்முன்னே காண்கின்ருேம். அவன் கலங்கிய நிலையைக் கண்டு நிற்போர், இரங்கி ஏங்கி நிற் பதையும் பார்க்கின்ருேமல்லவா? ஆம். கம்பனு டைய சோகச் சித்திரத்தில் ஈடுபடும் போது நமது கண்களும் கலங்குகின்றன; உள்ளமும் இரங்சி ஏங்குகின்றது!
கற்பனை உலகிலே நின்று காப்பியத்தைச் செய்த கம்பன் கும்பகருணன் தனது அண்ணனை விழுந்து வணங்குவதைக் கண்டான். உயரமும் உறுதியும் உள்ள கும்பகருணனின் உடற்தோற் றம், கவிஞனுக்கு முகிலினை முட்டும் மலையினை நினைவுக்குக் கொண்டு வந்தது. எனவே, அவன் விழுந்து வணங்கிய முறையைக் 'கும்பககுணன் ஒர் மலை கிடந்ததுபோல விழுந்து வணங்கினன்' என்று சொற்களால் கவிதையிலே தீட்டிக் காட் டுகின்ருன். விழுந்து வணங்கிய தப் பியை இரா வணன் மார்போடு அணைத்தான்; ஆரத் தழுவி அன்பு காட்டினன். அக் காட்சியைக் கம்பன் கற்பனைக் கண்களால் கண்டு வியப்படைகிருன். நடந்து வந்த மலை ஒன்றை நின்ற மலை ஒன்று தோழாரத் தழுவிற்று என்று எடுத்து உரைக் கின்றன். அண்ணனும் தம் பி யும் தழு விய காட்சி இரண்டு மலைகள் ஒன்றை ஒன்று கட் டித் தழுவுவதுபோலக் கம்பன் கற்பனைக் கண்க ளுக்கு தோன்றிற்று. கற்பனைக் கண்களால் கண்ட அக் காட்சியை:
'நின்ற குன்று ஒன்று நீள்நெடுங் காலொடுஞ்
சென்ற குன்றைத் தழுஇ யன்ன
செய்கையான்'

என்று கவிதையிலே புனைந்தான் கம்பன். இங்கே கம்பனின் விழுமிய கற்பனையைக் காண்கின் ருேம். ஆழ்ந்த அவனின் உணர்ச்சிப் பெருக் கையும் உணர்கின்ருேம். அண்ணன் தம்பி இரு வரையும் முகிலினை முட்டும் மலையினைக்கு ஒப் பிட்டு, அன்புக் கண்ணிர் பெருகிக் கவிதை யைக் கம்பன் தீட்டுகின்ற திறன் கற்போரின் கருத்துக்கு நல் விருந்தாக அமைந்துள்ளது.
இயற்கை நிகழ்ச்சிகளின் வாயிலாகக் கவி ஞர்கள் தம் உள்ளக் கிடக்கையைக் கவிதை வடி விலே வெளியிடுகின்ருர்கள். தம் உள்ளக் கவ அலயுையும், களிப்பையும் இயற்கை நிகழ்ச்சி
களின் மேல் ஏற்றிக் கூறி ஆறுதலும், அமை தியும் அடைகின்றனர்.
தந்தையின் கட்டளை  ைய த் தலை மே ற் கொண்ட இராமன் நாட்டை விட்டுக் காட்டிற் குச் செல்கின் முன், இராமனின் பின்னே அயோத்தி மாநகரமே செல்கின்றது. ஆம், அயோத்தி மக் கன் கண்ணிரும் கம்பலையுமாகக் காட்சி கொடுக் கின்றனர். இராமனின் செலவு காப்பியத்தைச் செய்த கம்பனையே கலங்க வைத்தது. இராமன் அயோத்தியிலிருந்து சென்றதைக் கற்பனையிலே கண்டபோது கம்பன் கண்ணிர் விட்டுக் கதறி அழுதிருப்பான் என்பது திண்ணம். இராமனின் செலவைப் பொறுக்க முடியாத உள்ள நிலையில் கம்பன் கதிரவனைக் கண்டான். அப்போது கதிர வன் குடதிசையில் மறைந்து கொண்டிருந்தான். எனவே இயற்கையாக அஸ்தமிக்கும் கதிரவன் செயலிலே கம்பன் தன் கவலையை ஏற்றிக் கூறிக் கவிதையைப் புனைகின் முன்
'மீன் பொலிதர வெயில ஒதுங்க மேதியொடு ஆள் புகக் (கதிரவன் அத்தம் புக்கனன்
கான் புகக் காண்கிலேன் என்று கல்லிடைத் தான் புகமுடுகினன்) என்னும் தன்மையான்'
'இராமனுடைய பிரிவைப் பொறுக்க இயலாத வணுய்க் கதிரவன் கல்லிடைப் புகுந்தான்’ என்று கூறிய கம்பன் தன் கவலையையும் அந்த இயற்கை நிகழ்ச்சியின் வாயிலாகத் துடைத்தான் என்பது தண்ணம்.
இதுவரை சொல் நயத்தையும் ஓசை நயத் தையும் கம்பன் கவிதை ஒன்றிலே கண்டோம். மேலும், ஒசையும் ஒலிக்குறிப்பும் கொண்டு கவி ஞன் தன் உள்ளத்துணர்ச்சியைக் கவிதையிலே தீட்டும் முறையினையும் பார்த்தோம். இன்னும், சொற்களைக் கொண்டு கவிதையைக் கவினமிக அமைக்கும் கவிஞனின் கவித் திறனையும், உச்ச நிலைக்குச் சென்று கவிதையைப் புனையும் சிறப் பினையும் நோக்கினுேம், மேலும், விழுமிய உணர்ச்சியும், கற்பனையும் கவிதைகளை உயிரும் உணர்வும் உள்ளனவாக வாழ வைக்கும் என் பதனையும் கண்டோம். இறுதியாக இயற்கை நிகழ்ச்சிகளின் மேல் ஏற்றிக் கூறிக் கவிஞன் தன் கவலையையும் களிப்பையும் காட்டும் திற னையும் பார்த்தோம்.
! ጃ

Page 42
★** *令令令令令+令今++今+令令令++令令令令令令*令今→令++令今→令→今今令
இசைத்தமி
**令令令令今→令令*→今+命一令令一伞今夺令一争令令今→今→令++一命令令令令<>个令+令一
சி. அ. ரா
உலகத்தின் முதன் மொழி தமிழ் என்பர். அதனை ஆதிமொழி எனலாம். மற்ற மொழிகள் எதுவும் வளர்ச்சியடையாத நிலையிலிருந்த காலத் திலும், தமிழ் மொழி ஒப்பற்ற உயர்நிலை பெற்று திகழ்ந்தது.
தமிழ் மொழியை தெய்வ மொழியென்றும் கூறுவர். சங்க காலம் தொடங்கி ‘‘கண்ணுதற் கடவுளும் கழகமோடமர்ந்து பண்ணுற ஆய்ந்த மையால்’’ மட்டும் தமிழை தெய்வீக மொழி என்று நாம் பாராட்டவில்லை. அதற்கு மற்றும் பல காரணங்களும் உண்டு.
நமது பழம் பெரும் மூதாட்டியாகிய ஒளவை யார் ஒரு தமிழ் மேதை. இற்றையத் தமிழை வளர்த்த தாய் ஒளவையாரே எனினும் அது பொருந்தும். அவ்வம்மையாருக்கு வேழ முகத் தோன் மீது தனி பக்தி உண்டு. தமிழ் பொக்கிவு மாகிய ஒளவையார் கணபதியை நோக்கி ‘நான் உமக்கு பால், தெளிதேன், பாகு, பருப்பு ஆகிய நான்கு இனிய பொருள்களைக் கலந்து தருகிறேன். அதற்கு பிரதியாக தாம் எனக்கு மூன்று தந்தால் போதும். அதாவது பண்டைமாற்ருக முத்தமி ழைத் தரவேண்டும் என்று வேண்டி நின்றர்.
அருணகிரிநாதரும் 'முத்தமிழடைவினை முற் படுகிரிதனில் முற்பட வெழுதிய முதல்வோனே' என்று கரிமுகனைப் பாடி பரவியிருக்கின்றர். முத் தமிழை எழுதுவதற்கு விநாயகப் பெருமான் தமது கொம்பில் ஒன்றை எழுத்தாணியாக கொண்டருளி னர் என்பதிலிருந்தே மூலப் பொருளாகிய கணப திக்கும் தமிழில் அதிக ஈடுபாடு உண்டென்பதுவும் தெளிவாகிறது.
சிவபெருமானின் திருவுளப்படி அகஸ்தியர் பொதிகை மலையில் வந்தமர்ந்தபோது அவர் முரு கக் கடவுளின் அருளினல் பூரண தமிழ் ஞானம் பெற்ருரென்பது அத் தமிழ் முனிவரைப் பற்றி அறிந்தவர்க்கு தெரியாததன்று.
இவ்வித காரணங்களால் நமது பண்டைத் தீந்தமிழின் தோற்றத்திற்கு பரமேஸ்வரன் மட்

ழின் உயர்வு
+4+今令伞今令今令+→令+++4令今→令令今+令→今++一++今今令→→令→+++→
மச்சந்திரன்
டுமேயன்று விக்னேஸ்வரனும் கந்தவேளும் இணைந்து ஈடுபட்டிருக்கிருர்கள் என்பது தெளிவு.
தமிழ் மொழிக்கு அரிய தெய்வீக சக்தி உண் டென்பதற்கு நமது பழந்தமிழ் இலக்கியங்களிடை பல சான்றுகள் மலிந்து கிடக்கின்றன. தமிழை நன்கு கற்று மேதைகளாகித் திகழ்ந்தவர்களின் மூலமும் தமிழின் சக்தியை நாம் தெரிந்து கொள் ளலாம்.
பொன்னி என்னும் தாசி தான் தேடிய செல் வத்தையெல்லாம் கம்பர் கையில் கொடுத்து அவ ரால், அவள் ஒருபாதி வெண்பா பாடப்பெற்ற தும் அதனல் பொன்னி தரித்திர நிலைமைக்கு ஆளானதும் தெரிந்ததே! பின்னர் ஒளவையார் அந்த வெண்பாவின் மறு பாதியாகிய
'அம்பொற்சிலம்பி அரவிந்தத்தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு'
என்று பாடிய அளவில் வெற்றுக்காலோடு நின்ற பொன்னியின் கால்களில் செம் பொற் சிலம்பு அணியும்படியான பெருஞ் செல்வம் அவளுக்கு உண்டாயிற்று. மேலும் கூழைப் பலாமரத்தை தழைக்கும்படி ஒளவையார் பாடியதுமே பலா மரம் தழைத்து காய்த்து நின்றதும் ஒளவையா ரின் சரித்திர மூலம் தெரியலாம்.
காள மேகப் புலவர் திருமலைராயன் சபையில் ஆசனமின்றி நின்றபோது, 'அரியாசனத்தி லரச ரோடென்னைச் சரியாசனத்தில் வைத்த தாய்' என கலைமகளை நோக்கிப் பாடவும் அரசனுடைய ஆசனம் நீண்டு புலவருக்கு இடம் கொடுத்தது. புலவர் திருமலைராயன் பட்டணத்தில் மண்மாரி பெய்யப் பாடியபோது விண்மாரியற்று மண் மாரிபெய்யவில்லையா?
தில்லையில் பாம்பு கடித்து இறந்த பிள்ளையை உயிர்ப்பிக்க கம்பர் தமது ராமாயணத்திலிருந்து சில பாடல்களைப் பாடியபோது அப்பிள்ளை உயிர் பெற்று எழுந்ததன்றே? ஒட்டக் கூத்தர் செங்குந் தர்களின் எழுபது தலைகளையும் உடலுடன் இணை
4

Page 43
யுமாறு "தலையாவி கொடுத்திடும் செங்குந்தர் உயிர் பெற்றிட நீ தயை செய்வாயே’’ என்று கலைவாணியைப் பாடவும் அற்றதலைகள் எழுபதும் உரிய உடல்களோடு பொருந்தி உயிர் பெற்ற னவே! பொய்யா மொழிப் புலவர் கம்பங்கொல்லை யில் மேய்ந்த காளிங்க ராயனின் குதிரை மாளும் ப டி யா க 'காய்த்த கதிரை, மாளத்தின்னும் காளிங்கனேறும் குதிரை மாளக் கொண்டு போ' என்று பாடவும் அக் குதிரை மாண்டு விழுந்தது. அதனைக் கண்டு பதறிய பொய்யா மொழியின் ஆசிரியரின் வேண்டுகோளுக்கிணங்க அவர் அப்பா டலின் கடைசி இரண்டு வார்த்தைகளை மாற்றி 'மீளக் கொண்டுவா’ எனப் பாடவும் உயிரற்ற குதிரை உயிர் பெற்ற நிலையையும் குறிப்பிடலாம்.
சிவபக்தர்களாகவும் வைஷ்ணவ பக்தர்களாக வும் உள்ள பல பெரியார்கள் தமது தமிழ்ப் பாடல் களின் மகிமையால் நிகழ்த்தியுள்ள அதிசயங்களை விரிவாக இங்கு குறிப்பிடுவதானுல் இச்சிறிய ஏடு இடங்கொள்ளாது. இவை போன்ற அதிசயப் படும்படியான அரிய பெரிய நிகழ்ச்சிகள் தமிழ் மொழியின் தெய்வீக சக்தியால் நிகழ்ந்திருக்கின் றன.
தமிழ் மொழியை சங்க காலம் தொட்டு இயல், இசை, நாடகம் என முப்பகுதிகளாக பிரித்துள்ளார்கள். இவற்றில் இசைத்தமிழ் இம் மூன்றினுள்ளும் அமரத்துவம் பொருந்தியதாகும். பழந்தமிழ் நூல்களிலிருந்து இயல் அல்லது நாட கம் என்றபகுதிகள் நமக்குக்கிடைப்பது அரிதாகவி ருக்கிறது. இதற்குக் காரணம் இயல் அல்லது நாட கத் தமிழாலாகிய நூல்கள் இசையைப் போல் நீடித்துநிலைக்கக்கூடியவைகளாகத்தோன்றவில்லை. கர்ணபரம்பரையாக ஒருவர் சொல்லி மற்றவர் எளிதில் கிரகித்துக் கொள்ளக் கூடிய இயல்பு இசைத் தமிழுக்கே பெரிதும் உண்டு.
இயல், நாடகம் ஆகிய மற்ற இரண்டு வகைத் தமிழிலும் இயற்றப்பட்ட பாகங்களை மனனம் செய்வது கடினமானது. அவ்விதம்அவைகளை நாம் நினைவுக்குக் கொண்டுவர முயற்சித்தால் அது படிப்படியாக மாறி அதை மனனம் செய்பவரின் சொந்த நடையாகத் திருந்திவிடும். இதனுலேயே நமது பழந்தமிழர் இசைத் தமிழுக்கு முக்கியத்து வம் கொடுத்து பல அரிய நூல்களை எதுகை மோனைச் செறிவுடன் இசைத்தமிழ் வடிவில் இயற்றித் தந்திருக்கிருர்கள். இதனுல் பல் வேறு ஞான நூல்களும் சரித்திரங்களும் புராண இதிகா சங்களும் வைத்தியம், சோதிடம் முதலிய பலதரப் பட்ட நூல்களும் செய்யுள் ரூபம்தாங்கி இசைத் தமிழில் நம் முன் காணக்கிடக்கின்றன.
忍

இசையானது பண்புடன் இணைக்கக்கூடியது "இசை" என்ற வார்த்தை அதன் பொருளைப் போல் அதில் இசைவு இருப்பதால் அதை இசைத் தமிழ் என்றனர் போலும். எனவே அது முத்தமி ழின் வரிசையில் நடு நாயகமாக விளங்குவதற் குரிய உயர்வு பெற்றிருக்கிறதெனலாம்.
இசையானது அழியாத்தன்மை பெற்றிருப்ப தோடு அதில் அமரத்தன்மையும் கலந்திருக்கிறது. இசையினல் சேதனப் பொருள்களும் அசேதனப் பொருள்களும் வசமாகின்றன. உயிரற்ற இசைக் கருவிளுகம் இசையுடன் ஒன்றி விடுகின்றன. அதி கம் சொல்வானேன்? இசையானது மனிதனை ஈச னுடன் இணையச் செய்கிற தென்றலும் பொருந் தும்.
இராவணேஸ்வரன் ஒரு இசை மேதை. அவன் வடமொழியிலுள்ள சாம வேதத்தை சாம ராகத் தில் இசைத்துப் பாடியபோது ஈசனும் தன்னை மறந்து இராவணனின் விருப்பத்திற்கு இசைவரா யினர். அதனல் இராவணனுக்குப் பல வரங்கள் கிடைத்ததோடு அவனும் பெருமிதங்கொண்
டான்.
அக்காலத்தில் தெய்வீகதிருவருள் பெற்று முத் தமிழ்வித்தகராகத்திகழ்ந்த அகஸ்தியர் பொதிகை மலையில் வீற்றிருந்து தமிழ் மண்டலத்தைக் காத்து வந்தார். இதனையே பாரதியார்,
"முத்தமிழ் மாமுனி நீள்வரையே நின்று மொய்ம்புறக் காக்கும் தமிழ் நாடு’ என்று குறிப் பிட்டார்.
இராவணன் பொதிகமலையில் வதிந்த தமிழ் முனிவராம் அகஸ்தியரையும் தனது இசைத் திற மையால் வசமாக்க முயன்றன். ஆனல் அகஸ்தி யரோ அதில் அகப்படாமல் தனது யாழை மீட்டி சாம கானத்திலும் மேம்பாடாக அதில் இனிய தமிழ் மொழியை இசைத்து கானமிர்தம் பெருக் கினர். அப்போது கற்பாரையும் கசிந்து இளகிய இராவணனும் தன்வயமிழந்து ஆனந்த பரவச மானன். இந்த இசைப்போட்டியின் விளைவாக அகஸ்தியரை வசீகரிக்க நினைத்த இராவணேஸ்வ ரன் அகஸ்தியருக்கு அடிபணிந்தான். இந்த வாய்ப் பைக் கொண்டு அகஸ்தியர் இராவணனை அவன் தமிழ்நாட்டின் எல்லைக்குள் எவ்வித தீய செயலை யும் செய்யாதிருக்கும்படி வேண்டிக் கொண்டார், அதன் பயணுக தமிழ்நாடு இராவணனின் அட்டூளி யத்தினின்றும் காக்கப்பட்டதாக கொல்காப்பியம் தெரிவிக்கிறது.
முத்தமிழை இனிய பாகிற்கு ஒப்பிட்டால் இசையை அப்பாகில் விழைந்த கற்கண்டு என லாம். நமது நாட்டில் தொட்டிலில் கிடக்கும்

Page 44
நமது தமிழிசை ஒலிக்கத் தொடங்குகிறது. குழந்தை மழலை மொழி பேசத் தொடங்கும் காலத்தில் 'நிலா நிலா வா வா’ என்றும், 'காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா’’ என் றும் இயற்கை அற்புதங்களை இளங் குழவிகளுக்கு பாலுடன் அமுதாக இசைத்து ஊட்டுகிருேம். அவர்கள் சற்று பெரியவர்களாகி ஓடி விளையாடத் தலைப்பட்டதும் சிறுவர்களுக்குப் பல்வேறு விளை யாட்டுக் கிசைந்த பாடல்களையும் சிறு பெண்க 'ளுக்கு அம்மானை, கழல் கோலாட்டம், கும்மி முத லிய விளையாட்டுகளுடன் இசையும் கருத்தும் இணைந்து ஒலிக்கும் பாடல்களையும் பாடி மகிழ்கின் றனர். இனி பெரியவர்கள், தொழில் துறைகளில் ஈடுபடுகிறவர்கள், ஏற்றப்பாட்டு ஒடப்பாட்டு, நடுகைப்பாட்டு, கழனிப்பாட்டு முதலிய பாடல்க ளாக வேலையின் களைப்புத் தோன்ருமல், ஊக்கமும் உற்சாகமும் தருகின்ற பாடல்களைப் பாடி மகிழ்கி ருர்கள். தெய்வ வழிபாட்டில் ஈடுபடுகிறவர்கள் தமது வயதிற்கும் தமிழறிவுக்கும் பொருந்திய விதமாக, முளைப்பாட்டு, வில்லுப்பாட்டு, மகுடப் பாட்டு வழிநடைச் சிந்து, காவடிச் சிந்து, தேவா ரம், திருவாசகம், திருப்புகழ், திருவாய் மொழி ஆகிய பாடல்களால் கடவுளை வாழ்திப்பாடி பக்தி ரசத்தால் மூழ்கி பரமனது அருளைப் பெறுகிருர் கள். சுருங்கச் சொன்னல் பிறந்த நாள் தொட்டு அந்திய காலம்வரை இசைத்தமிழில் ஈடுபடும் பண் புடைய நாடு நம் தீந்தமிழ் நாடு.
முற்காலத்தில் கடவுளால் வளம்பெற்ற தமிழ் இடைக்காலத்தில் அரசர்களால் போற்றப் பட்டது. அதன்பின் கடந்த பல நூற்ருண்டுகளாக தமிழ் நாடு அந்நியர் ஆட்சிக்கு அடிமைப்பட்டி ரு ந் த கா லத் தி ல் நம் மி ட மிருந்த இயல், நாடகம் ஆகிய இரண்டும் அழிந்தன. எஞ்சிநின்ற இசையின் உயிர்த்துடிப்பினலேயே நம் தமிழ் இந்த அளவிலாவது நம்மிடையே நிலைத்தி ருக்கிறது.
 

இவ்வாறு அந்நிய நாட்டாரின் ஆட்சிக்குட் பட்டு நாமும் தமிழகமும் அந்நிய மொழிகளுக்கு வசப்பட்டிருந்த காலத்திலும் ஆங்காங்கு இடைக் கிடையே தமிழ் அறிஞர்கள் தோன்றியதனலேயே இடைக்காலத்திற்கும் நமக்கும் அவ்வப்போது இணைப்புகள் ஏற்பட்டு வந்திருக்கின்றன.
இவ்வித இணைப்புக்கும் தமிழின் மறுமலர்ச்சிக் கும் ஈழநாட்டு புலோலி திரு. கந்தமுருகேசனர் அவர்கள், ஒருசாதனமாகச் சிறப்போடு முத்தமிழ் அமுதை நமக்கு ஊட்டி வரும் திறமையும், தகுதி யும் பெற்றிருக்கிருர், அவர் தமிழ் மொழியே யன்றி ஆரியத்திலும் ஆங்கிலத்திலும் போதிய பாண்டித்தியம் பெற்றிருப்பதால் அந்த மொழிக ளின் சிறப்போடு தமிழ் மொழியின் உயர்வை ஈழ நாட்டு மக்களிடை இனிது போதிக்கும் ஆற்றலும் பெற்றிருக்கிறர். அவர் இயற்றிய அரிய நூல்கள் பலவிருந்தபோதிலும் அவைகளே வெளியிட அவர் இதுவரை அனுமதி வழங்காததால் அந்த நூல்கள் குடத்தினுட் தீபம் போல வெளியிடத்து மக்களின் முன் பிரகாசிக்காமலிருக்கின்ற்ன. திரு. கந்த முரு கேசனின் தமிழ்த் தொண்டு ஈழநாட்டிற்கு ஓர் வரப்பிரசாதமாகும். அவரது ஒப்பற்ற தமிழ்த் தொண்டைத்தமிழுலகம் முழுவதும் பரவிப்பிரகா சிக்கச் செய்ய வேண்டுவது நமது கடமையாகும். அதற்கான அனுமதி தருவது அவரது கடமை.
திரு. கந்த முருகேசனின் அறுபதாவது ஆண்டு நிறைவு விழாவில் இந்த சந்தர்ப்பத்தை முன்னிட்டாவது அவர் தமது காவியங்களை வெளி யிட அனுமதி தந்தருள்வாராக! திரு. கந்த முரு கேசன் அரோக திடகாத்திரராய் நம்மிடை பல் லாண்டு வாழ்ந்து முத்தமிழிலும் பல்வேறு காவி யங்களை மேலும் மேலும் இயற்றித்தந்து நாடெங் கும் தமிழ்மணம் கமழச் செய்ய பூரீ செந்தில் கந்த முருகேசனைப் பிரார்த்திப்போமாக-வாழ்க திரு. கந்த முருகேசன்! கமழ்க தமிழ் மணம் எங் ங்ணும் ! ஓங்குக அவர் புகழ்!

Page 45
ஈழத்துப்
(சோம அம்பலவா
வெண் மணல் பரந்த வெளிப்பரப்பு: மருத நிலத்தின் மங்காத சூழ்நிலை; தென்றல் தேனருவி சொரியும்; சவுக்க மரங்களின் இசையும் இளந் தென்னைமரங்களின் இனிய நாதமும் அடியார்க ளுக்கு அமுதமாக விளங்கும். இச்சூழ்நிலையில் தான் வல்லிபுர ஆழ்வார் குடிகொண்டிருக்கும் கோவில். பருத்தித்துறையிலிருந்து சுமார் நான்கு மைல்களுக்கு அப்பால் குடிகொண்டிருக்கும் இக் கோவிலுக்குள் நுழைந்து தரிசனம் செய்த பின் அடியார்கள் மனநிம்மதியுடன்வெளிவருவதில்லை. ஆண்டவனின் அருளைப் பெற்ற இவர்கள் அறி ஞன் ஒருவனுடன் அளவளாவிச் சென்ற பின்தான் நிம்மதி அடைகிருர்கள்.
யார் அந்த அறிஞன்? “கிரேக்க ஞானியைப் போன்று தோன்றுகிருர்?' என்று கூறுகிருர் பண் டிதமணி கணபதிப்பிள்ளை. வங்காள மகாகவிக் கும் இவருக்கும் வித்தியாசம் கிடையாது என்று சொல்வார் சிலர். இவர்கள் கற்பனையின் எல் லையை மீறிவிட்டார்கள் என்றே நான் கூறுவேன்.
அறுபது வயதை எட்டிப்பிடித்த முருகேசன ருக்கு, இளமையுணர்ச்சியும், இரும்பு நெஞ்ச மும் அடியோடு மறைந்துவிடவில்லை. ஒலையால் வேயப்பெற்ற அச்சிறு குடிசையில் அவரைக் கண்டபோது கோவிலுக்குள் செல்வது போன்ற உணர்ச்சி பெற்றேன்.
ஒலை வீட்டின் மேல் சுற்றிப் பிணைத் துப் படர்ந்த மல்லிகைப் பந்தரின் கீழ் வெண் மணல் பரப்பப்பட்டிருந்தது. சுமார் அறுபதுக்கு மேற் பட்ட இளம் வட்டங்கள் நாலு மூன்று இளம் ஆசி ரியர்கள் துணையுடன் கூட்டங் கூட்டமாகப் பாடங் கேட்டுக்கொண்டிருப்பர். இச்சூழ்நிலையை மகா கவி கண்ட 'சாந்தி நிகேதன்’ என்று கூறுவதில் பிழையாகாது. அச்சிறிய குடிலில் ஆத்தி சூடி தொடக்கம் தொல்காப்பியம் வரை உரையாடிக் கொண்டிருப்பர் மாணவர்.
ஆசிரியர் அவர்கள் சிறப்பு வாய்ந்த குடும்பத் தில் பிறந்தாலும், புலவர்களுக்கு உரித்தான வறிய சூழ்நிலையில்தான் உதித்தார். உலகம் கை கூப்பித் தொழும் உழவன் பரம்ரையில் அவர் தோன்றினர் என்ருல் மிகையாகாது. இளமை

பெரியார்
ணன், பி. எஸ்சி.)
தொட்டே எதையும் சீர்தூக்கிப் பார்க்கும் சிந் தனையும் முற்போக்கெண்ணம் g) Gotti Jaipufrés வும் காணப்பட்டார். ஆசிரியராகப் பணியேற்ற இவர் ஆண்டவன் மீது அன்புடையவராகத் திகழ்ந்தார். புராணங்களைப் படித்தும், படிப்பித் தும், பயனுரை கூறியும் வாழ்ந்த பண்புடையா ளர், காலப்போக்கில் ஏற்பட்ட மறுமலர்ச்சி காரணமாக, தன் வாழ்விலும் தாழ்விலும் போக் கிலும், நோக்கிலும் தளராது புதுநடை போட ஆரம்பித்தார். இதனுல் இவரை வெறுத்தவர் பலர்; வியந்தவர் சிலர் விரும்பி ஊக்கம் அளித்த வர் ஒருசாரார். மாற்றம் மாற்றம்தான். அன்று தொடக்கம் இன்றுவரை முற்போக்கு வாதியாக, சிந்தனைச் சிற்பியாக வழிகாட்டியாக, இலட்சிய வீரராக, கடமை, கண்ணியம் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்துகொண்டிருக்கிருர்,
தன்னலம் விரும்பாத்தன்மையரான இவர் இலவசமாகப் பாடஞ் சொல் லி க் கொடுத் து தமிழ்ப் பணி புரிவதைப் போற்ருதவர் இல்லை. சாதிக் கொடுமையைச் சாடி மனிதர்கள் தொழி லால் வேறுபட்டவர்களே யன்றி வேறு வகையில் ஒருவருக்கொருவர் மாறுபட்டவர்கள் அல்ல என் பதைச் செயலாற் காட்டியவர். ஆசிரியர் வீட் டுத் திண்ணையில் மாணவர் எல்லோரும் இனம், மதம் அனைத்தையும் மறந்து சிந்தை மகிழப் படித்துக்கொண்டிருந்த காட்சி யை, பாரதி, பாரதிதாசன் போன்றவர்கள் காண்பதற்கு க் கொடுத்து வைக்கவில்லைப்போலும்.
புதுமையை நோக்கிப் புறப்பட்ட ஆசிரியர், தன்னிடம் விளங்கும் தமிழறிவுச் செல்வத்தால், ழாறுபட்ட கொள்கையுடையோர்கள் கூட வியக் கும் வண்ணம், அவர்களின் உள்ளங்களில் அழியா இடம் பெற்றிருக்கிருர். இவர் வீட்டின் முன் செந் நெற்றி பூண்ட அந்தணர் ஒருவர் நன்னூல் படித் துக்கொண்டிருக்கிருர்; வெண்ணிறு அணிந்த சைவர் ஒருவர் பெரிய புராணத்திற்கு உரை கேட் டுக்கொண்டிருக்கிருர்; பொது வுடமை வாதி யொருவர் தேர்வுக்காக திவ்வியப்பிரபந்தத்திற்கு விளக்கவுரை கேட்கிருர்; கடமை, கண்ணியம், கட்டுப்பாடுடன் வாழவிரும்பிய இளைஞர் ஒருவர் அயோத்தியா காண்டத்திற்குப் பொழிப்புரை
7

Page 46
கேட்கிருர், ஆசிரியர் முன்னிலையில் இங்கர்சால், இராமலிங்க அடிகள், அறிஞர் அண்ணு, பெட்ரம் ரஸ்ஸல்ஸும், சேக்கிழார் போ ன் ரு ரு டை ய நூல்கள் சிதறுபட்டுக் கிடக்கின்றன. இம்மனித னைப்பற்றி எழுதும்போது ஒருகாலத்தில் வாழ்ந்த அரேபியத் தளபதி லோறன்ஸ் (Lowrence) தான் நினைவுவரும்.
L–IT j – i um Gör 5. Görg) j (g5 (Dr, Johnson) இருக்கவேண்டிய நினைவு சக்தி, வோட்ஸ்வோர் திற்கு (Wordsworth) நிறைந்திருந்த கற்பனை வளம், பிரவுனிங்கிடம் (Browning) காணவேண் டிய இலட்சியம், செல்லி (Shelley) யிடம் பிறர் காணும் தளராத நம்பிக்கை இவர் எழுதிய சில நூல்களில், பிறர் நூல்களுக்குக் கொடுத்த முன் னுரைகளில், கல்வெட்டுகளில் நாம் காணலாம். எங்கு தமிழ்ப் பணியும், சமூக ப் பணி யும் நடக்கிறதோ, அங்கெல்லாம் அவரைப் பற்றிப் பேசுவார்கள், அல்லது அவர் அனுப்பிய தொண் டர்கள் தமிழ்ப்பணி புரிந்துகொண்டிருப்பார்கள்.
காலஞ் சென்ற புலவரேறு ”ஈழமணி" யாசிரி யர் முருகேசு வாத்தியார் இவரின் ஆசிரியராவர்.
 

காலப்போக்கில் கருத்தில் மாறுபட்ட போதிலும், குரு பக்தி நிறைந்தவராய்க் காணப்படுகிருர், தன் ஆசிரியருக்கு அறுபதாம் ஆண்டில் பொன்னுடை போர்த்து விழாக் கொண்டாடி மகிழ்ந்த காட் சியைத் தமிழுலகம் மறந்துவிடாது. இன்றும் தமி ழையும், தன்னசிரியரையும் போற்றி வாழ்வதை நாம் எளிதில் மறக்க முடியாது.
பிற்காலத்தில் வாழ்வில் குறைவின்றி வாழ்ந்த போதிலும் நோயினுல் சிலவேளை போராடவேண் டியிருக்கும். பிரமச்சாரியான இவருக்கு உறுதுணை யாக மாணவர் ஒருசிலரின் உதவி வேண்டி நிற் கிருர், அவரைச் செவ்வனே பேணுது வி ட் டா ல் தமிழ் அன்பர்கள் பலர் ஈடு செய்ய முடியாத நஷ் டத்தை அடைவர். ஆசிரியருக்கு யாம் இன்றும், இற ந் த பின்னும் சிலை செய்யவேண்டியதில்லை. பொன்னும் மணியும் கொடுத்துப் போற்றவேண் டியதில்லை. பாவலருக்குப் பழந்தமிழ் மன்னர் வறு மையில் வாடவிடாது உண்டியும் உறையுளும் கொடுத்தது போலவே, தமிழ் மக்கள் வலுவிழந்த தமிழறிஞனைத் துன்பம் நேராவண்ணம் போற்ற வேண்டும். நூற்ருண்டுவிழாவின் போதும் அவரை நாம் உள்ளத்தால் இளைஞராகக் காணவேண்டும்.

Page 47
உன்னையே நீ அறிவாய்
(கலையரசு க. ெ
“உன்னையே நீ அறிவாய்', 'உன்னையே நீ மறப்பாய்' இவ்விரு வாக்கியங்களையும் என்னி டத்தில் நடிக்கப் பழகவரும் மாணவர்களுக்கு நான் திரும்பத் திரும்பச் சொல்லுவது வழக்கம். மேல் நோக்காகப் பார்க்கும்போது இவ்விரண்டும் இரு வேறு அர்த்தங்களை எடுத்துரைப்பதுபோல் தோன் றும். ஆனல் ஆராய்ந்து பார்த்தால் இரண்டும் ஒரு கருத்தையே வலியுறுத்துகின்றன.
*உன்னையே நீ அறிவாய்' அதாவது மேடை யில் தோன்றும் ஒவ்வொருவரும் தங்கள் தோற் றம் (உடை, ஒப்பனை) நிலை, நடை, பாவனை, அங்க அசைவுகள், பேச்சு, பாடல்கள் எவ்வாறு மற்றவர்களின் கண்களிலும் மனதிலும் படிகின்ற னவோ, எவ்வாறு மற்றவர்கள் அவைகளை ரசிக் கின்றனரோவென்று அறிந்து கொள்ளக்கூடிய திறமையை அடையக் கற்றுக்கொள்ளவேண்டும். 'உன்னையே நீ அறிவாய்’ என்ருல்தன்னைத்தான் அறியவேண்டும். அதாவது ‘நான்' என்பதை நமது மனதிலிருந்து நீக்கி, நாம் செய்வதை மற்ற வர்கள் எவ்வாறு ரசிக்கிருர்கள் என்பதையே பிர யாசைப்பட்டாவது அறிந்து கொள்ள முயல வேண்டும். இன்றைய இளம் நடிகர்கள் இந்தக் கொள்கையை மனதில் கொள்ளும்படி செய்வதே மிக முக்கியம். என் அனுபவத்தில் நான் கண்டது, காண்பது: ஒரு குருவிடமிருந்து தக்கபடி நடிக்கக் கற்ற சிலரைவிட ஏராளமானவர்கள் தாம் எல் லாம் அறிந்த நடிகர் என்று எண்ணிக்கொண்டு மேடையில் தோன்றுவது மாத்திரமல்ல மற்றவர் களுக்கும் கற்பிக்க ஆரம்பித்து விடுகிறர்கள். மற்றவர்கண்களில் எவ்வளவு கேவலமாகத்தோன் றுகின்றனர் என்பதை உணர்வதேயில்லை. கார ணம் தன்னைத்தான் அறியாதிருப்பதே. தன்னைத் தான் அறிவதும், தன்னைத்தான் மறப்பதும் சுலப மான காரியங்களன்று. தவத்தால் மேம்பட்ட மகான்களுக்கு இது சாத்தியமாகக் கூடும். ஆனல் ஒரு நடிகனைப் பொறுத்தவரையில் தன் அயராத ஈடுபாட்டாலும் அனுபவத்தாலும் ஓரளவிற்கா வது புரிந்து கொள்ளும் அறிவை உண்டாக்கலாம்.
ஒரு நடிகன் “கற்றது கை மண்ணளவு, கல்லா தது உலகளவு" என்னும் எண்ணத்துடன் செயலில் ஈடுபட வேண்டும். ஒரு புத்தகத்திலிருந்து படித்து புகழ்பெற்ற நடிகன் ஆகலாம் என்பது கனவு.
தேடிப் படிக்கவேண்டும், கேட்டுப் படிக்க வேண்டும், பார்த்துப்படிக்க வேண்டும. அதுதான்
3.

உன்னையே நீ மறப்பாய்
Fார்ணலிங்கம்)
நான் அனுபவத்தில் கண்ட உண்மை. இந்த விஷ யத்தில் நான் கைக்கொண்ட வழிவகைகளைச் சொல்லுகிறேன். அவை பிரயோசனமானவை யெனக் கருதுபவர்கள் தாங்களும் அவற்றைக் கைக்கொண்டு பயனடையட்டும்.
நான் ஒர் பாத்திரத்தை ஏற்றவுடன் அப்பாத் திரத்தின் பாகங்களை மாத்திரமின்றி முழுநாட கத்தையுமே பல முறை வாசித்து என் பாத்திரத் தின் குணங்களையும் எவ்வாறு மற்றும் பாத்திரங்க ளுடன் அதன் தொடர்பு இருக்கின்றது என்பதை யும் ஆராய்ந்து அறிந்து என்பாத்திரத்தை மன திற் கற்பனை செய்து கொள்ளுவேன். அதன்தோற் றம் (உடை, ஒப்பனை) நிலை, நடை, பாவனை,பேச்சு குரல் இவைகளெல்லாம் எவ்வாறு அமையப்பட வேண்டும் என்பதைக் கற்பனை செய்து கொண்டு தான் வசனங்களை மனப்பாடம் செய்வேன். அது வும், என்னுடைய பாகங்களை மாத்திரமின்றி, என் னுடன் கூட நடிக்கும் ம ற் ற வர் களு டை ய பாகங்களையும் சேர்த்தே மனனம் செய் வேன். மனப்பாடம் ப ண் ணு ம் டோ தே அதற்கேற்ற உணர்ச்சியுடனும் நான் உப யோகிக்கப் போகும் குரலே அமைத்துக் கொண்டு தான் செய்வேன், “உபயோகிக்கும் குரல்" என் ருல் பாத்திரத்துக்கேற்ற குரலாய் இருக்க வேண் டியது அவசியம். எப்பாத்திரங்களிலும் ஒரே குர லுடன் பேசினல், பொருத்தமாய் இருக்குமா? சில நாடகங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பாத்தி ரங்களை நடித்திருப்பேன். ஒரே குரலாய் இருந் தால் எவரும் ஒரே நடிகர்தான் பலதையும் நடித் தார் என அறிந்து கொள்வார்கள். ஒப்பனை எத் தனை தத்ரூபமாகச் செய்திருந்தாலும் பாத்திரங்க ளுக்கேற்ற குரல், நிலை, நடை, அங்க அசைவு முத லானவும் பொருத்தமாக அமைந்தால்தான் பாத் திரம் சிறப்பாக விளங்கும். வசனங்கள் பாடமா னவுடன் இரவு வேளைகளில் நிலைக்கண்ணுடிமுன் நின்று முகபாவனைகளைக் கற்றுக்கொள்ளுவேன். அன்றியும், வாழ்க்கையில் தெருக்களிலோ அல்லது வேறு இடங்களிலோ யாராவது ஒருவரிடம் என் பாத்திரத்துக்கு ஏற்ற சாயலைக் கண்டால் அதை அவதானித்து அமைத்து ஒத்திகை வேளையில் என் நண்பர்களுக்குச் செய்து காட்டி அவர்களின் அபிப் பிராயங்களின்படியே நடந்து கொள்ளுவேன். இப் படிப் பல பேர்களிடமிருந்து அவதானித்த சாயல் களை ஒன்ருகச் சேர்ந்ததே எனது பாத்திரங்கள்.

Page 48
கூனியின் குரல் ஒரு கிழவியிடமிருந்துதான் நான் கற்றுக் கொண்டேன். தலை நடுக்கம், சிரிக்கும் போது வாய் கோணுவது, கோபிக்கும்போது மூக்கு விரிவது, கூனல்நடை இன்னும் மற்றவை எல்லாம் வெவ்வேறு கிழவிகளிடமிருந்து நான் அவதானித்து அமைத்தவையே. நான் நடிக்கும் பாத்திரங்கள் என் சொந்த சிருஷ்டி (Original) என்று சொல்வார்கள். ஆனல் அது சரியல்ல. மற் றவர்களிடமிருந்து நான் பொறுக்கிச் சேர்த்தவை கள்தான். அன்றியும், அனேகத்தை என் நண்பர்க ளிடமிருந்தும் கேட்டு அறிந்து அமைத்துக் கொள் வேன். இப்பொழுது நான் இளைஞர்களுடன் நடித்து வருகிறேன். என்ருலும் ஒப்பனை முடிந்த வுடன் நிலைக்கண்ணுடியில் பார்த்துவிட்டு மற்றும் நடிகர்களை அழைத்து நான் உபயோகிக்கும் நிலை, நடை, முகபாவம் முதலியவற்றை அவர்கள்முன் செய்துகாட்டி அவர்கள் அபிப்பிராயத்தைக் கேட் டேதான் மேடைக்குப் போவேன். அதன்மூலம் ம ற் ற வர் களு க் கு என் நடிப்பு எப்படிப் பிடி க் கி ற தென் ப தை அறிய முடி கி றது. இ ன் று பல ரு க் கு இரு ப் பது போல் ‘'நான் செய்வது சரிதான்; என்னிலும் பார்க்க யாருக்குக் கூடத் தெரியும்?' என்ற எண்ணம் ஏற் படவே கூடாது. நாடகம் பார்க்க வந்தவர்களிட மும் அபிப்பிராயம் கேட்பேன். படித்தவர்கள், முதியோர், இளைஞர், பாலர் யாவரிடத்திலும் தான் கேட்பேன். ஏனெனில் மண்டபத்தில் இருப் பவர்கள் பல்வேறு ஞானமுள்ளவர்களாயிருப்பார் கள். அவர்கள் யாவரையும் ரசிக்கச் செய்வது ஒரு நடிகனின் கடமை.
தன்னைத்தான் அறிவதற்கு இன்னுெரு வழியும் உண்டு. அதாவது நாம் மேடையில் செ ய் வதை ப் பார் த் து க் கொண் டி ரு ப் ப வர்களின் முகபாவத்தில் இருந்து, நாம் செய்வது எவ்வாறு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள லாம். மண்டபத்திலிருப்பவர்களின் முகபாவங் கள் நாம் நடிப்பதைப் பிரதிபலித்துக் காட்டும் நிலைக்கண்ணுடிகள் என்றும் சொல்லலாம். கொஞ் சம் மேடை அனுபவம் ஏற்பட்டபின்தான் இதை அறிந்துகொள்ள முடியும். இதுபற்றி அனேகம் சொல்லலாம், ஆனல் விரிவஞ்சி விடுக்கப்பட்டது.
இந்நாட்களில் சினிமாவைப் பின்பற்றி நாட கம் நடக்கும்போது மண்டபத்தைப் பூரண இருட் டாக்கிவிடுகிறர்கள். யாராயினும் மண்டபத்

தில் இருக்சிருர்களா? என்றுகூட சந்தேகம் வந்து விடுகின்றது. காட்சிகளை நன்முகத் துலங்கச் செய் வதற்கு மண்டபம் சற்று மங்கலாக இருப்பது நல் லதுதான். முற்றிலும் இருளாக இருப்பதால்தான் சில சமயங்களில் நடிகர்கள் உணர்ச்சியற்று விடுகி ருர்கள். இதுபற்றிஒருஎச்சரிக்கையும்செய்யவேண் டியிருக்கிறது. ஒருவர் நடிக்கும்போதோ, பாடும் போதோ அதிருப்தி கொண்ட சபையோர் சிலசம யங்களில் கரகோஷம் செய்து தங்கள் வெறுப்பைக் காட்டுவதும் உண்டு. அச்சந்தர்ப்பங்களில் "நான்’ குடிகொண்டிருப்பவர்கள் தங்களை மெச்சுகின்றர் கள் என்று மகிழ்ந்து இன்னும் கூடுதலாகச் செய்து ஏளனத்துக்கு ஆளாவதும் உண்டு. ஆகவே, தன் னைத்தான் அறியவேண்டும். 'உன்னையே நீ 3j pól 6.JTü" (Know thyself)
இதுவரை ‘உன்னையே நீ அறிவாய்' என்பது பற்றி கூறினேன். இனி ‘உன்னையே நீ மறப்பாய் என்பதுபற்றிச் சிந்திப்போம். அதாவது ஒரு நடிகன் தன்னை மறந்து நடிக்க வேண்டும் என்பதே. ‘ஒரு வன் தன்னை மறந்திருக்கும்போது அவன் கையில் வாள் இருப்பின் மற்றைய நடிகரின் கதி என்ன?’’ என்று இப்படிப் பலர் ஏளனமாய்ப் பேசியும் எழு தியும் வருவதை நான் அறிவேன். தன்னை மறப் பது என்ருல் மெய்மறக்க வேண்டும் என்றல்ல, "நான் சொர்ணலிங்கம் நடிக்கிறேன்" 6 நினை யாது நாம் நடிக்கும் பாத்திரத்தின் உணர்ச்சிகளை உணர்ந்து நடிப்பதே; அந்தப் பாத்திரமாகவே நம்மை மாற்றிக்கொள்ளவேண்டும், ஆங்கிலத் S6iv (live that Part) GT6örgy GoIFT G Gy Tri 55 Gir. எங்கள் சுய உணர்ச்சியை மறந்து விடவேண்டும். (forget your selfconsciousness) 's) sir? TGSu g5 LD pluTui' (forget your self and not forget yourself) இதைப் புரிந்துகொள்ளாதவரே கேலி மொழி பேசுவார். சுய உணர்ச்சி இருக்கும் வரையில் பாத்திரத்தை உணர முடியாது. சுய உணர்ச்சி இருக்கும்போது நாம் செய்வது சரியோ? தவருே? அல்லது நாம் பார்த்த நடிகர்போல் நடி க்க வேண்டும் என்பனபோன்ற எண்ணங்கள் எங் கள் மனதில் ஊசலாடிக் கொண்டே இருக்கும். அந்நிலையில் பாத்திரத்தின் குணங்களை உணர்வ தோ சித்தரித்துக் காட்டுவதோ சாத்தியமாகுமா? இல்லை. நடிகர்கள் கற்கவேண்டிய முதல்பாடம் தன்னைத்தான் மறப்பதே. என்னிடம் பயில வருப வர்களுக்கும் இதைத்தான் வலியுறுத்துகிறேன்.
40

Page 49
சங்கீதபூஷண
தமிழ்: இயல், இசை, கூத்து என மூன்று பிரிவினையுடையதாகும். இசை இயலுக்கும் கூத் துக்கும் இன்றியமையாச் சிறப்புடையதாக இருத் தல்பற்றி இயலுக்கும் கூத்துக்கும் நடுவே வைக்
கப்பட்டது.
இசையின் இன்பத்துக்காகத் தெய்வம் அருள் செய்தமைக்கும், அஃறிணை உயிர்க்கும் இசை இன் பத்தில் மகிழ்வதற்கும் சான்றுகள் உள்ளன. இரா வணன் ஆணவத்தாற் கைலைமலையை முதலில் பெயர்த்துப் பின்னர் பரமசிவனுல் துன்புறுத்தப் பெற்று இரங்கற் பண்ணுகிய கவிதை பாடி உய் தமை இலக்கியமூலம் அறிய முடிகிறது
ஒரு குறமகள் குறிஞ்சிப் பண்ணைப் பாட ஒரு யானை தினைக் கதிரை உண்ணுமலும் அவ் விடம் விட்டுச் செல்லாமலும் மனமுருகி நின்று உறங்கியது என்பது:
* ஒலியல் வார்மயி ருளலினர் கொடிச்சி பெருவரை மருங்கிற் குறிஞ்சி பாடக் குரலுங் கொள்ளாது நிலையினும் பெயராது படா அப் பைங்கண் பாடுபெற் ருெய்யென மறம் புகன் மழகளி லுறங்குநாடன்'
என்னும் அகபபாட்டால் விளங்கு கி றது. பாம்பு இசையின்பத்துக்கே கட்டுப்படும் என் பது யாவரும் அறிந்ததே.
பண்டு தொட்டு மக்கள் இசை வளர்ச்சிக் குப் பாடுபட்டு ஆர்வத்தோடு உழைத்து வரு வதே மக்களின் இசை விருப்பத்துக்குச் சான் ருகும்.
 

ம் க. நாகம்மா
ஒரு குழந்தை பிறந்தவுடன் தாலாட்டு என்ற முறையில் இசையைக் கேட்கிறது. குழந்தைப் பருவத்தைக் கடந்தவர்கள் தாம் இன்பம் விரும் பும்போதெல்லாம் இசை கேட்டு மகிழுகின்றனர்.
இறக்கப்போகும் நேரத்திலும் தேவார திரு வாசகங்களைப் பிறர் இசையோடு பாடக் கேட் கிருன். ஒருவன் இறந்த பின்னரும் மகளிர்தம் துயரை ஒப்பாரிமூலம் இசையுடன் தெரிவிக்கின் றனர். எனவே இசை மனிதனுடைய வாழ்வின் எல்லாப் பகுதிகளிலும் பங்குகொள்கிறது.
இத்தகைய சிறப்புடைய இசை வாய்ப்பாட் டாகவும் இசைக் கருவிகளின் ஒலியாகவும் வளர்ந் தது. குழல், யாழ், வீணை, முழவு, மத்தளம், சல்லிகை போன்ற பல கருவிகள் இசையின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்டன. காலப் போக்கில் இவற்றுடன் வேறும் பல இசைக் கரு விகள் சேர்ந்துகொண்டன.
அக்காலத்தில் இசையையே தொழிலாகக் கொண்டு மன்னர் முதலியவரிடம் சென்று பாடிப் பரிசில் பெறும் மக்கள் தமிழகத்தில் வாழ்ந்த னர். அச்சாதியினர் பாணர் என அழைக்கப் பெற்றனர். அவர்கள் பெரும்பாணர், சிறுபாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர் எனப் பல பிரி வினராக இருந்தனர்!
இசையின் வரலாற்றை நோக்குமிடத்து இசை எவ்வுயிர்க்கும் இன்பம் அளிக்கும் ஒன்று என் பதும் தொன்மை நிறைந்தது என்பதும், தமிழ ரால் போற்றி வளர்க்கப்பட்டது என்பதும், இய லுக்கும் நாடகத்துக்கும் இன்றியமையாதது என் பதும் இன்றும் வளர்ந்துகொண்டு இருப்பது என் பதும் அறிய முடிகின்றது.

Page 50
ŽКžКžКŽKYŽNYR
கலங்கரை விள.
- த. மாலோகம
1. ஊழ்வினை ஊறுசெய்த உட தாழ்வினை யகற்றித் தன் பா
ஏழ்மையும் பயனு டைத்த தேர்வில்ை பட்டந் தேடா
2
புகழ் சிறந் தோங்கு கின்ற
அகழ்ந்தெடுத் தருமை நூல் தலைபெறும் புலவ னுகித் த விலையிலா வறிஞர் போற்றும்
3. கோள் நிலை திரித்திட்டாலுங் ஆழ்வினை யுடைய அண்ணள் வாழ்நிலை வறிஞணுகி வருவ6 சால்பினைப் பெற்ற புண்யன்
4. பந்தம தகன்ற வாழ்வால்
சொந்ததன் கடமை யாகச் வந்தநல் மாக்கட்கெல்லாம்
கந்தமுரு கேச தாசன் கவி
5. உடல்நிலை தளர்ந்த போது அடங்கலும் வாழும் மக்கள் நுடங்குத லின்றி நாளும் நூ கடல்கலைச் செல்வப் பேழை
8. அறுபது ஆண்டு நாளும் அ
நறுந்தமிழ் நாற்றம் நாலா உறுதமிழ் தெய்வமாக உண் மறுகலை சேராத் தூயோன்
4
 
 
 
 

க்கங் கண்டோம்
னி "கீழ்கரவை” -
லதைத் தாங்கி யுள்ளத் “ல் தாவிடும் மாணவர்க்கு ாம் எழிற்கலை. யூட்டும் வள்ளல் தீந்தமிழ் புவவன் கண்டோம்!
புலோலியம் பதியில் வந்தே )க ளகத்தின லமரக் கற்றே
னிப் பெருங் கவிஞ ணுகி
வித்துவப் பெரியோன் கண்டோம்!
கொள்கையிற் றிரித லில்லா ஸ் அருந்தமிழ் பண்பின் சின்னம் ரை அறிஞ ராக்கும்
ா சற்கலைப் பண்டிதன் கண்டோம்!
பரமனின் சேவை தன்னைச்
சோர்விலா தேற்றுத் தன்டால் வளர்கலைப் பயிரை நாட்டுங்
ன் தமிழ் செல்வன் கண்டோம்!
தமிழ
ம் உளநிலை தளர்வு ருமல்
ஆர்வமாய் வாரச் சற்றும் நூற்கலை நுவலும் வல்லான்
கந்தமுரு கேசன் கண்டோம்!
ருந்தமிழ் பணிக்கே யீந்து பக்கமும் விசச் செய்த rமையிலுழைத்த பண்பன்
மாண்புடை மாரன் கண்டோம்!

Page 51
0.
.
2.
3,
විද්l2lංඛ්‍යදිදං
மானிடப் பிறவி தன்னின் தானுடம் பெடுத்த நாளாய் ஊனுடல் வாழ்வி னுண்மை
வானுடைத் தமிழ் வளர்க்கு
கிட்டின ரியலின் முட்டைத் மட்டிலா வறிவைக் காலும் எட்டினு ரில்லை யென்றும் எ நட்பனர் நாடு மன்பன் நற்
புலத்தினில் களங்கமாதைப்
விளக்குறும் ஒவியம்போல் தீ தலத்தினில் மேவிக் காட்சி ( கலக்குறும் மதியி னுர்க்குக்
சொந்தநல் லறிவி ஞலே சுரு சிந்தனை சிறந்த வல்லோன் 8 சந்ததந் தளர்வுற் ருலும் ச கந்தமுரு கேசன் கண்டோம்
புட்டளை மேவ வந்த புலவஞ புட்டளை மேவிவந்து புகலிட புட்டளை இதயம் பூண்ட டே புட்டளைத் துரிசு போக்கும்
அவரவ ரறிவிற் கேற்க அை இவரவ ரென்று நோக்கா இ கவருண ரிதயம் பூண்ட கலை தவகுரு வேற்ற நீரன் கந்தழு
மானிட உருவி விந்த மறுவு ஊனுட லூறு பெற்றும் உள தானுடைக் கலைக ளியுந் தண் மானிடன் கந்தன் தானே ம
கந்தமுருகேசன் முத்தமிழ் விழா ஆண்டு மல
4 y
 

RRRRRRRR్య
கத்தான \சேவை தன்னைத் த் தளர்வின்றி யாற்றும் வல்லான் உயர்நிலை யுணர்ந்தோன் புலோலி
ம் வளங் கெழு எழிலி கண்டோம்!
தீர்த்திடுங் குருகோ னுகி
அறிஞன யோங்கச் சார்ந்தோர் ன்றுணர் வொப்பா னென்றும் றமிழ் காவே கண்டோம்! புலவனுய்த் துரியந் தீட்ட ட்டிடும் விமலன் புற்றளைத் கொடுத்தொளி காட்டி நிற்கும் கலங்கரை விளக்கங் கண்டோம்! ருக்கமாய் விளங்க வைக்கும் ரிேய உணர்வு நல்லோன் ார்ந்தவ ரிடரைப் போக்கும்
கருணையங் கடலைக் கண்டோம்!
ய்ை மகுடஞ் சூடிப்
மின்றிக் கற்கப் ாதைசேர் மாணவர்க்குப்
புண்ணிய நாதன் கண்டோம்!
மவுரை யாடு மண்ணல் இயலெடுத் துணர்த்துஞ் செல்வன் ஞணு மறிஞர் நோக்கும் முரு கேசன் கண்டோம்!
டல் தாங்கி வந்தே நிலை யூறுருமல் னடமிழ் செல்வ னிந்த தியொளிர் கலைஞன் கண்டோம்! ரிற்கு இதை அர்ப்பணஞ் செய்கின்றேன்.

Page 52
<<۔
حياتي
KMN KM
vo
KAMNIKS
1-12aadata
KOMINKOM
K2 KM
as a
*-ա- سمبر
வாழ்த்
கந்தமுரு கேசனுர்க் கன
பைந்தமிழின் கல்விப் ட
ஒருருவ மெய்தியதென்
வாருருவ முளபுகுநத
கலாசாலை வீதி, திருநெல்வேலி. 1 1 - 1-62.
kr<><2M4-M4S4O4SM4><>>< لے حصے خۓ حے۔ .. . . . : بی خ3 بغ مهت . بر به: . . . . . . بے حیخخ - سیخ
( ( { ( (
(
{
{
(
t

Page 53
முரண்பட்ட கெர்
ஆட்கொள்ளு
Tெத்திய Tர் ஞானக்கடல். அந்த ஆழ க் கடலின் மேற்பரப்பிலே முங்கி எழுந்தும், நீச்ச லடித்தும் களிப்பவர் பலர். அதைக் குடைந்து சுழியோடி முத்தெடுத்து, அந்த ஒளியிலே மிளிர் பவர்களும் சிலர் இருக்கிறர்கள். நான் எதற் கும் அருகதையில்லாதவன். கடலில் இறங்கிய வுடனேயே கரையில் ஒதுங்கிவிட்டேன். உள்ளத் திலே கவிதைச் சுடர் தெறிக்காமல், யாப்பை யும் அணியையும் கரைத்துக் குடித்துக் கவிஞகை எண்ணி, அந்தக் கரையை அடைந்தேன். கால் களை அலைகள் வந்து தழுவினலும், மனம் வெளிக் காட்சிகளிலேயே லயித்துவிட்டது. 'உனக்குப் ப டி ப் பு வராது மோனை, அடிக்கடி சும்மா வந்து போ!' என்று கடல் கட்டளை இட்டு விட்
நானும், வீட்டிலே 'சும்மா' இருந்த காலம் அது. எனவே அந்தக் கட்டளைக்குப் பணிந்து "சும்மா’ போய் வந்ததில், வாத்தியாரிடமுள்ள சில தனித் தன்மைகளை அவதானிக்க முடிந்தது. வாத்தியார் ஈ. வே. ரா. பெரியாரின் பரம பக்தர், சுத்த சுயம்புவான நாத்திகர் என்பது உலகறிந்த விஷயம். ஆனல், அவர் பிறந்து, வளர்ந்து, ஆசிரமம் அமைத்துள்ள தென் புலோ லியூர் அதற்கு முற்றிலும் நேர் விரோதம். கட வுட் பக்தி, சைவ-ஆசார அனுஷ்டானம் நிறைந்த வைதீகப் பெருமக்கள் வசிக்கும் கிராமம். சுத்த சுயம்புவான இந்த நாத்திகருக்கு, அசல் வைதீ கர்களான ஊர்ச் சனங்கள், எ ப் படி மதிப்புக் கொடுக்கிருர்கள்? எந்த விஷயத்திலும், எவ்வாறு அவர் முடிபுக்குக் காத்திருக்கிறர்கள்? என்பது புரியாத புதிர்.
ஊரிலே ஒரு கல்யாணப் பேச்சா, சாமர்த்தி யச் சடங்கா அல்லது ஒரு அமங்கலமா எதுவா யிருந்தாலும், வாத்தியாருடைய ஆலோசனைக்கே முதலிடம் தரப்படுவதைக் கண்டு நான் ஆச்சரி
 
 
 

“ள்கையினரை
ம் வாததியாா
யப்பட்டேன். இந்த ச் சடங்குகளுக்கெல்லாம், யார் யாருக்கு, எப்படி யெப்படியெல்லாம் அறி விக்கவேண்டும் என்பன போன்ற சின்ன விஷயங் களைக்கூட முடிவுசெய்ய வாத்தியாரிடமே வரு கிருர்கள். இதில் வேடி க் கை யெ ன் ன வெ ன் ருல், அப்படி வருபவர்கள், நடமாட முடியாத வாத்தியாரிடமே அந்தப் பொறுப்புக்களையெல் லாம் ஒப்படைத்துச் செல்கிருர்கள். சண்டை , சச்சரவுப்பட்டுக்கொண்டவர்கள் கூட தாமாகவே வாத்தியாரிடம் வந்து தங்கள் தகராறைத் தீர்த் துக்கொண்டு போகிருர்கள். தனிப்பட்ட சின்ன விஷயங்களில் மட்டுமல்ல, ஊரொத்துச் செய்ய வேண்டிய பொது விஷயங்களிலும் வாத்தியார் முடிவே ஊர் முடிவாகிறது. முக்கியமாகத் தேர் தல் காலங்களில், வாக்களிக்கச் செல்லாத வாத் தியார் வீட்டில் பறக்கிற கொடியே ஊர் முழு தும் பறக்கிறது.
கோயில்களில் நடைபெறும் திருவிழாக்கள், மற்றும் கொண்டாட்டங்கள் பற்றிய ஆலோசனை கள் வாத்தியார் வீட்டில் நடைபெற்றதை நான் அறியவில்லை. ஆனல், கோயில்களிலிருந்து வந்த பிரசாதம், மோதகம், வடை போன்றவற்றை வாத்தியாருடன் சேர்ந்து சாப்பிட்டிருக்கிறேன்.
தென் புலோலியூர் மக்கள் இதனைப் படித் துக் குறைப்படமாட்டார்கள்: ஆசார அனுஷ்டா னங்களில் மேலோங்கி நின்ற அவர்கள் அந்த ஆசார அனுஷ்டானங்களோடு உடன் பிறந்த "தீண்டாமை யை அனுஷ்டிப்பதிலும், சுமார் பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை சிறந்து விளங் கி ன ர் க ள். அந்தக் காலத்தில் அயற் கிராமங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சகோதரர்கள், அந்தக் கிராமத்துள் பிரவேசிப் பதாயிருந்தால் அ ப் படி ப் பிரவேசிப்பவர்கள் அரையில் கட்டியிருக்கிற துண்டு, குறைந்த அள வுக்குக்கூட வெள்ளேயாயிருக்கக் கூடாது. அத்து
45

Page 54
டன் குறைந்தபட்சம் முழங்காலிலிருந்து இரண்டு மூன்று அங்குலத்துக்குக் கீழே இறங்கக்கூடாது. அப்படியானல் மேலங்கியைப் பற்றியும், சால் வையைப் பற்றியும் பேசவேண்டியதே யில்லை!
இந்த மூடத்தனமான கோட்பாட்டுக்கெதி ராகக் காலம் எங்களை உந்தித் தள்ளிற்று. சுய மரியாதை இயக்கப் பத்திரிகைகள், புத்தகங்கள் மூலமாகப் படித்தறிந்த சமுதாய அறிவு துணை நிற்க, எங்க ளிற் சிலர், கல்லூரி வாசனையோ அன்றி நாகரிகமோ கற்றுத் தந்த கோலத்தில்அந்த ஊர் மக்கள் விரும்பாத கோ லத் தி ல்அங்கு சென்ற பல தடவைகளில் வழிமறிக்கப்பட் டிருக்கிருேம்.
‘எங்கே போருய்?"
"வாத்தியார் வீட்டுக்கு!"
“Dilth.................... p
உண்மையிலே, சற்று விறைப்பாக "ஹாம்!"
என்று ஒலி க் க வேண்டிய குரல், மெலிந்து அல்லது மென் மை யடைந்து ஒலித்து வழி

விடுவது ஆச்சரியந்தான். இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது? இந்த ரசவாத வித்தைக்குக் கார ணஸ்தர் யார்? என்பதை யெல்லாம் அன்றும் உணர்ந்து பெருமை கொண்டேன்; இன்றும் நினைத்துப் பெருமையடைகிறேன்.
வாத்தியாருடைய உயர்ச்சிக்கும், புகழுக்கும் காரணம் அவருடைய ஆழ ங் கா ண முடியாத அறிவுமட்டுமல்ல; அவரிடத் தி ல் பொலிந்து விளங் கி ய, அளவிடற்கரிய ஆளுமையுமாகும். இந்த ஆளுமையினுல்தான், முரண்பட்ட கருத் துக்கள், கொள்கைகளின் மீதும், அவரால் ஆட்சி செலுத்தி வெற்றிகாண முடிகிறது என்பது எனது அபிப்பிராயம். அவர், தனியொருவராயினும், எல்லாராகவுமே யிருக்கிருர்: எ ல் லாமா கவுமே இருக்கிருர்,
காலத்தின் தேவை வாத்தியாராக வந்தது. வாத்தியார் தன்னுலியன்றவரை, கல்விப் பணிக ளுக்கூடாக அதனைப் பூர்த்தி செய்துள்ளார். இன் னும் தொடர்ந்து செய்வதற்கு, அறுபதாண்டுப் பூர்த்தி, அவருக்கு உதயசூரியனுகட்டும்!

Page 55
தேமதுரத் தமிழோ பரவும் வகை கெ
}لاحم><م۔
(பண்டிதை சத்தியதேவி
ஒருவர் தங்கருத்துக்களைப் பிற ர் க் கு வெளிப்படுத்தவும் பிறர் கருத்துக்களைத் தாமறி யவும் மொழிகள் பயன்படுகின்றன; அதனல் எல்லா மொழிகளும் சமமானவை எனப் பலர் கருதுகின்றர்கள். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர் பலரிடத்தும் இந்த உணர்ச்சி புகுந்திருப்பது வருந்தத்தக்கதாகும். கருத்துக் களைப் பரிமாறிக்கொள்ள மொழி கருவியாயிருந் தாலும், அந்த ஒரு அம்சத்துடன் மொழியின் சிறப்பு நின்றுவிடவில்லை.
மனித சமுதாயத்தின் இலட்சியம், தூய ஆத்மீக வாழ்வு; இவற்றின் சாயல் மொழியில் அமைய வேண்டும். மொழியில் அமைந்துள்ள தண்மை இலட்சியத்தின் ஒரு பகுதியாக வேண் டும்.
இந்த அடிப்படையில் உலக மொழிகன் யாராய்ந்த அறிஞர்கள், தமிழ் மொழியின் உன் னத பெருமைகளை ஒப்புக்கொண்டுள்ளார்கள். சரித்திர மனப் பழக்கம் மிக்கவரும், சிறந்த சிந் தனசீலரும் ஆகிய பாரதப் பிரதமர் நேருஜி, 'தமிழ் மொழியும், தமிழருடைய புராதனப் பண்பாடுகளும் தனிப்பட்ட சிறடபுவாய்ந்தவை' என்றும். 'தமிழர்கள் மிக மிகப் பழங்காலந் தொட்டே வாழ்ந்து, அனுபவசாத்தியமான பண் புகளையும் கலைகளையும் வளர்த்துள்ளார்கள்' என் றும் பாராட்டியிருக்கின்ருர். இருபதுக்கு மேற் பட்ட மொழிகளை நன்கறிந்த வினுேபா அடிக ளும், மேல்நாட்டறிஞர்களும் அவ்வாறே தமி ழைப்பற்றிப் புகழ்ந்து கூறியிருக்கின்றனர்.
சிந்தனையாளர்களின் மனத்தைத் தமிழ் மொழி கவர்ந்தமைக்கு முக்கிய காரணங்கள் உள. ஒரு மொழியானது, சத்தியமாகிய மெய்ப் பொருளை எவ்வளவில் ஆராய்ந்திருக்கிறதோ, அம் மெய்ப் பொருளையடைவதற்கு எவ்வளவில் வழிவகுத்திருக்கிறதோ அவற்றிலேதான் அதன் பெருமை தங்கியுள்ளது.
பொருளிலக்கண மென ஓரிலக்கணம் வகுத்து மெய்ப்பொருளை நாடும்படி வாழ்க்கையை நெறிப் படுத்திய பெருமை தமிழ் மொழி யொன்றற்கே
4.

சை உலகமெலாம் Fய்தல் வேண்டும.
-O-O- துரைசிங்கம், நீர்வேலி)
உண்டு. நாகரிக நூற்ருண்டு என வருணிக்கப் படும் இந்த இருபதாம் நூற்றண்டிற்கூட மனித சமூகம் வாழ்க்கையையும் சிந்தனையையும் ஒரு நெறிப்படுத்தவியலாது திணறுகின்றது. சரித்திர காலத்துக்கெட்டாத மிகப் பழங் காலத்திலேயே தமிழினம் அறமும், அன்பும், நீதியுமாகிய அடித் தளங்களை வகுத்து, அவற்றின்மேலே வாழ்வு என்ற வீட்டையமைத்து அதற்கு இலக்கியமும் இலக்கணமுங் கண்டது.
தமிழிலுள்ள பொருளிலக்கணம் மேலைத் தேசப் பொருளியலை யொத்ததன்று, தமிழினம் பொருளையாராய்ந்த வழி தனி வழியாகும். அவ் வழி சிறந்த பொருளைக் காட்டியது.
'அறம்புரி சுற்றமொடு கிழவனுங் 27-تےہ
கிழத்தியுஞ் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே'
என்பது தொல்காப்பியம். ஒருவன் செயற்கரி யனவற்றைச் செய்து தேட வேண்டிய முக்கிய பொருள் சத்தியமாகிய கடவுளே. அதுவே இலட் சியம். அதைப் பெறுதற்கான சாதனங்களும், வழியடைக்குங் கல்லாகாமல் மேலேறிச் செல்ல உதவும்பொழுது, பொருள் எனப்படும். இறை வன யடைதற்குச் சாதனம் நெஞ்சுகலந்த, பிரி வற்ற அன்பேயாம். அவ்வன்பே தமிழில் ஆரா யப்பட்டது. அவ்வன்பு, பிறப்பை யறுத் துப் பேரின்பத்தை விளைவிக்கும். ‘அன்பு நிலையே அது’ என்பது திருவருட்பயன்.அறிவு இவ்வன் புக்கு வழி செய்ய வேண்டும்.
பிறப்பென்னும் பேதமை நீங்கச்
சிறப்பென்னும் செம்பொருள் காண்பதறிவு
என்பது திருக்குறள்.
தூய அன்பு நெறியை அடைவதற்குத் தூய சாதனங்கள் இன்றியமையாதன. அனுபவ ப் பொருள்களைத் தூய்மை செய்து அறங்காக்க, நீதிவழுவாத நல்லரசு செயலாற்ற வேண்டும். அதனலேயே நல்ல அரசியலையும் அறவழியிற் கிடைத்த செல்வத்தையும் "மெய்த்திரு” என்கின் முர் கம்பர். மெய்த்திரு-மெய்ப்பொருள்.
7

Page 56
தமவும் பிறபோற் பேணி ஈட்டிய செல் வம், தன்னுயிர்போல் மன்னுயிர் பேணும் அரசு, நெஞ்சுகலந்த அன்பு, அன்புகனிந்த அருள், அருள் முதிர்விற் காணும் பரம்பொருள் என்கின்ற மெய்ப்பொருள்களை முறைப்படுத்தியாராய்ந்தது தமிழ்ப் பொருளிலக்கணம்.
அக்காலத்தில் ஆர வார ம் வேகம் முதலி யன குறைவாயிருந்திருக்கலாம்; ஆனல் வாழ் வில் இனிமையும், சாந்தியும் இருந்தன. "நாமி ரப்பவை பொருளும் பொன்னும் போகமும் அல்ல, அருளும் அன்பும் அறனும் மூன்றும்' எனச் சிந்திக்கும் பேரறிவாளர் பலர் இருந்தனர்.
இக்காலத்தில், உயிரை உயிர், இனத்தை இனம், நாட்டை நாடு துன்புறுத்திப் பொரு

ளல்லவற்றைப் பொருளாகக் கொண்டு அப் பொய்ப் பொருள்களை யீட்டும் வழிகளையாராய்ந்து தடுமாறுகின்றது. புது உலகம் பொருள்கள் நிறைய இருக்கின்றன; மக்கள் பறக்கின்றனர்; ஆனல், வாழ்வில் இனிமையும் இல்லை. சாந்தி யும் இல்லை.
எனவே இப்புது உலகத்தின் காதுகளிலும், கருத்துக்களிலும் வாழ்க்கைத்துறைகளிலும் இனி மையும் சாந்தியும் நிலைபெறத் "தேமதுரத் தமி ழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' கூடலின் ஆய்ந்த ஒண் தீந்தமிழின் துறைகளில் நுழைந்து அவற்றிற் புதுமை காண இளம் உள்ளங்கள் துடித்தல் வேண்டும்.
தமிழ் வாழ்க! தமிழினம் வாழ்க!!
ރހީމް

Page 57
~ இலக்கிய
പപ്പെ~~~~ திரு. V. தங்கராசா
“இலக்கியம் என்பதென்ன?' எல்லோரும் கேட்டார்கள், ஏதேதோ சொன்ஞர்கள். நாமும் சொல்லுகிருேம்.
"இலக்கியம் என்பது இலட்சியம் என்பதன் திரிபு என்பவர் ஒருசாரார். இலட்சியம் என்ப தைக் குறிப்பிட, தமிழில் ஒரு சொல் இல்லையென் ருே தமிழருக்கே இலட்சியமே இல்லையென்றே அவர்கள் கருதி விட்டார்களோ? தெரியவில்லை.
இலகு என்ற சொல்லில் இருந்தே இலக்கியம்
என்பது தோன்றி இருக்கலாம் என்பவர்கள் LETTER GT6ör Lugối) g(55G355 LITERATURE என்பது பிறந்ததென்ற கருத்தைக் காட்டி வலியு றுத்துவதும் தள்ளிவிட முடியாததே.
இலக்கு-நல்லிலக்கு எது வெனக்காட்ட எழுந் தன இலக்கியங்கள் என்பதையே நாம் நமது கருத்தாக ஏற்றுக் கொள்ளுகிருேம்.
உயரிலக்குக் காட்டுவதனை இலக்கியம் என் பது பொருந்துவதொன்றேயாம். அந்த இலக்கி யம் உண்மை, நன்மை, அழகு என்பவற்றினூடே நின்று மிளிர்வது எல்லோரும் ஒப்பும் ஒரு கருத் தானது.
உண்மையின் வடிவாக, நன்மை பயப்பதாக, அழகு செறிந்ததாக அமைவது இலக்கியம். வர லாறு-இதிகாசம் போல இருந்ததை இருந்தபடி சொல்வதுடன் திருப்தி காணுதது இலக்கியம். தோள் பருமையுடையது என்று சொல்ல விரும் பிய புலவன் ‘மலையன்ன திண் டோள்" என்று சொல்லி ஒரு ஆறுதல் காணுகிருன். அதே புல வன் பெண்ணின் இடை சிறிது என்று கூற முற் பட்டு, 'பொய்யோவெனுமிடை" என்று சொல்லி இடையே இல்லைவென்றும், இடையுண்டு என்பது பொய் யென்றும் ஒரு பொய்யைச் சொல்லி வலியு றுத்துவதில் மகிழ்வடைகிறன். இதுவும் ஒரு விபத்தா? அரியலூரிற் புகைவண்டி தடம்புரண்ட போது ஏற்பட்டதே ஒரு விபத்து, அதற்கு இது உறை போடவுங் காணுதே என்கிறர்களே சிலர். உயிர்-உடைமை சேதமாகும்போது கவலைப்பட நேர்ந்தாலும், சோகத்தை அனுபவிக்கும் போது அதனுடைய தொகை, தோற்றம் அதிகரிப்பது சிறப்பாகப் படுவது வேண்டப்பட்டிருக்கிறதல் : ayant fr?

உறவு -
B. A. (Ceylon) - كلاه
சுண்டைக்காயை விட்டு, சூரத்தனத்தைச் சுவைப்பது இயல்பு. ஆகவே இருந்ததை இருந்த படியே சொல்வதுடன் திருப்தி காணுது கூட்டியோ குறைத்தோ சொல்வதை இலக்கியம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.
எட்டுச் சுவைகளும் விரவிவர, இன்னுெருவர் சொன்னது போலில்லாமல் முற்றிலும் புதிய ஒரு கோணத்திலிருந்து படம் பிடித்து ஒன்றை ஒருவர் காட்டும் போது சுவைக்க வேண்டித்தானே இருக் கிறது.
நிலவைப் பற்றிப் பலபுலவர் பலவேறு சந் தர்ப்பங்களிற் பாடியிருக்கிருர்கள். ஒவ்வொன்றி லும் ஒவ்வொரு புதுமையைக் காணுகிறேம். சுவைக்கிருேம்.
இலக்கியம் என்ருல் அது கவிதை வடிவானது என்று சிலர் கருதும் தவறன கருத்தை முதற்கண் தவிர்த்துக் கொள்ளக் கேட்கிருேம். செய்யுளோ. கவிதையோ அவையெல்லாம் இலக்கியமுமல்ல. வசன நடைகள் எல்லாம் இலக்கியமல்லவுமன்று.
தனித்த வெண்ணிலவை, இளங்கதிரை, மலர்ப்பொழிலை, மயிலாடலை, சுனையை, சுரும் பசைவையெல்லாம் இலக்கியமாகக் கொள்வ தில்லை. இவை இலக்கியத்துக்கு உபகாரமாக நிற் பவை. இவை தனித்து நிற்கும்வழி எந்த உயர் இலக்கையும் காட்டாவாகையால் இலக்கியமாதல்
இல்லை.
அறத்தின் வழி நடந்த இராமன் மறத்தின் வழி நடந்த இராவணனை அழித்தான் என்னும் போது, இராம-இராவணர்கள் பற்றி நமக்குக் கவலையில்லை. நீதி அநீதியை வென்றது. நீதி நிலைக் கும் என்ற உயர் இலக்கு நமக்கு வலியுறுத்தப்பட் டது. தனக்கு முறைமையில் உரித்தாகக் கிடைக் காத அரசைத் துறந்து தன்னவன் தனக்கு முன்ன வணுன இராமனைத் தேடி, அவனை மன்னவனுகக் கேட்பதே தன் கடன் என்று கண்ட பரதன் பண்பு உயர் இலக்குக் காட்டுகிறது.
"உயிர் போவதாயினும் வாய்மை தவறேன்' என்று கொண்ட அரிச்சந்திரன் வாழ்வு உயரிலக் குக் காட்டுகிறது.
கொண்டானே தெய்வமெனக் கொண்டொ ழுகிய பெண்டான கோப்பெருந்தேவி மன்னவன்
49

Page 58
மாண்டதும் உயிர்துறந்து உயரிலக்குக் காட்டி னள். இவளது முடிவும் உயர்வுடையதா என் போருண்டானல் அது கட்டுரைக்குப் புறம்பான வாதமென விடுத்து அப்பாலே தொடருவோம். கண்ணகி, நளாயினி கற்பு, பெண்கள்-ஏன் அண்களுக்குமே ஒரு இலக்காகட்டும் ,
அம்பினை எய்ய ஆயத்தமாகும்போது எதிரி கண்ணிமைத்தால், எய்வதைத் தவிர் என்று வீரத் துக்கு-ஆண்மைக்கு இலக்கணம் காட்டப்படுவதும் உயரிலக்கே.
இப்படியே எந்த இலக்கியமும் உயர்வான ஒரு இலக்கை நமக்குக் காட்டவே எழுந்தன. திருக் குறள் மிக உயர்ந்த இலக்கியம்.
அது மற்ற இலக்கியங்களைவிட ஆழமானது. மிக உயர்ந்த புலமை கைவந்தவர்களால் அனுப விக்க முடிவது அது. மற்றவர்கள் வாழ்க்கைச் சட் டமாக அதை எண்ணும்படி, நந்தி முடங்கிக்கிடப் பதுபோல இரண்டடியுடன் முடங்கிக் கிடக்கிறது. இலக்கியம் சுவைக்கிறது; இனிக்கிறது. சுவைக்க, இனிக்க ஒரு பக்குவம் கைவர வேண் டும்
முப்பட்டைத் திரையிற் காட்டப்படும் "சினி மா'வைப் பார்க்க ஒரு வகைக் கண்ணுடி போட் டுக் கொள்ளவேண்டும். அதுபோல இலக்கியத் தைச் சுவைக்க அத்ற்கேற்ற மனப்பக்குவமென் கிற கண்ணுடி போட்டுக் கொண்டாக வேண்டும், அது இலகுவிற் சம்பாதிக்க முடியாதது. அந்த நிலை கைவந்து விட்டால் இலக்கிய உறவைக் கை விட முடியாத உன் மத்தணுகிவிட நேரும். அது பொழுதுபோக்கு, உழைப்பு, இறுதி இலக்கு எல் லாமாக அமைந்துவிடும்.
அலெக்சாந்தர் போருக்குப் போகும்போ தெல்லாம் ஹோமர் எழுதிய 'இலியட்' என்ற இலக்கியத்தையும் உடன் கொண்டு செல்வாராம்.
ஒரு சமுதாயம் முன்னேறி இருக்கிறதென் முல் அங்கே இலக்கியம் முன்னேறியிருக்கிறது என்பது கருத்து.
நாடாளும் மன்னன் முதலாக நடைபாதைப் பஞ்சைவரை வேண்டப்படுவது இலகுவில் அனுப விக்கக் கூடியது இலக்கியம். இலக்கியம் எளிமை யாக இருக்க வேண்டும் என்பது ஒரு சிலர் கருத்து.
f

ஒரு சில சந்தர்ப்பங்களில் இலகுவான சொல் லாட்சி இருப்பினும் சிலேடை, யமகம், அந்தாதி, முதலியவை "சொற்களைப் பிரித்துக் கிாணும் போது கருத்துப் புலன கும் படி அமைக் கப்படுகின்றன. ஆழ்ந்து, முயன்றபோது கிடைக் கும் பலனில் ஒரு எல்லை கடந்த இன்பம் கிடைப் பது போல இவற்றிலும் கிடைக்கும்.
நமது பழந்தமிழ் இலங்கியங்கள் வழக்கிழந்த சொற்கள் பல விரவியிருப்பதனற் புரிந்து கொள்ள முடியாது போக, கஞ்சன் பொருள் போல எவருக்கும் பயனற்றுக் கிடக்கின்றன.
கவிதைகள் மண்ணஞ் செய்யப்படவேண்டிய தில்லை யென்று கூறும் இன்றைய கல்விக்கொள் கையாளர் வலுவுடையராய் இருக்கும் வரைபழை யஇலக்கியங்கள் ஒதுக்கப்பட்டனவாகத்தானிருக் கும். பழைய காலத்தில் மாணவர்கள் மனனஞ் செய்தும் கிரகித்தும் அறிவைப் பெற்றுக் கொண்ட காரணத்தால் கையிலே வைத்திருந்த புத்தகங் கள் மிகக்குறைவு. இன்றுள்ள மாணவர் எதையும் மனனஞ் செய்யாமல் இருப்பதாற் கைநிறைந்த புத்தகங்களைக் காவுகிருர்கள்: இவர்களை அணுக இலக்கியம் அஞ்சுகிறது.
இலக்கிய ஆசிரியர்களும் இலக்கியத்தைக் கற் பிக்கத் தவறிவிடுகிருர்கள். பதவுரை பொழிப் புரை சந்தர்ப்பம் முதலியவற்றைக் கூறிவிட்டால் இலக்கியம் கற்பிக்கப் பட்டதாக எண்ணப் பட லாம் என்பது அவர்கள் முடிவு.
இலக்கியத்தின் கருவை அறிமுகஞ் செய்வது நோக்கமாக இருக்க வேண்டும். பேதி மருந்தை வாழைப் பழத்துள் வைத்துக் கொடுப்பது போல இலக்கியக் கருவை, சுவையிடைப் பெய்து கொடுக் கும் இலக்கிய ஆசிரியர்கள் உருவாக வேண்டும். அல்லது பழைய போக்காளர் பாதைமாற முயல வேண்டும்.
காலத்தாற் கருகாதை, உயரிலக்கைக் காட்டு கின்ற சிரஞ்சீவி இலக்கியங்கள் மாணவருக்கு அறி முகப் படுத்தப்பட வேண்டும்.
இது நாம், புலோலியூர்ப் புலவர் கந்தமுருகே சனர் அவர்களது அறிவுத் ‘தமிழகத்திற் பெற்றுக் கொண்ட முடிவு.

Page 59
8
qSASASSMLSSSLSLSL A SLM AALLSLLLLSSASLSSASSLLMLMLSSSLLLSLLSLLSASLLLSAALLSSLSLSSLSLSSLSLSSLLLSSASSLLM LLLLLSSLLLLSLSqS SLLLLSiiLSLSLLSLSASASLMSASASLLLLSAA
GREE
WrNaaaaaaan.
Mr. K. VigneSWarcrajah,
Secretary,
“Kantha Murugesan Muthamil Vizha,
Puloly.
It is with great pleasure that I am occasion of the sixtieth-birth-day celebrati
teacher Kantha Murugesan.
I am indeed sorry to disappoint y requesting me to contribute an article " release on the day of the celebration. In 1 must confess that the notice given to me article for publication. I must ask you to disappointment. I would have been too h
been possible.
I would have been too glad to re during the last world war and my conn Chandra Bose in the Sovenir, But 1 ver:
I, however, hope that I would be in a po
I thank you once again for your kini
attend the celebration scheduled for Sunday
I have heard with great satisfa Murugasan, one of the greatest scholar Literature. It is indeed fitting that we all jo
I wish him long life and happiness
S.S.
ExNetaji Sub
ASMSSLSSSS S SAASAAAASLSASASLSALSLSSSSSASASASLSSASSASSASLSSASSASeeLS AAAAAALLS AAALSL AAAASLLM SASASAMSASSLMSSSASLSASSSLSL AASLeLSLSASSLLMLL AeLeLMSLA S

HSiSMSTSSiLSSASSLiLMMTSSLiLMMTkL SLiMMMSATSSiLMSTSLS iqSTSiS S SqSqS iiSkkS SLLSkS iLSSMSSi LSM Si LLSTSSSS SSSSSSMSSS qqSSSS iiSS SSS SSSS
TINGS
151, Temple Road. Nallur, 12. 2. 62.
sending you my humble greetings on the
on of a great scholar and your former
ou in regard to your generous invitation to the Souvenir you have undertaken to
thanking you for your kind invitation,
accept my heartfelt aypology for the appy to have obliged you if only it had
:count some of my experiences in Malaya action with tine immortal Netaji Subhas y much regret for my inability to do so.
sition to do so in a not too distant date.
d invitation to me and to my daughter to
| next.
ction the services rendered by Kantha
s of our times to the course of Tamil
in in honouring a great man.
Yandyagam) Minister in the Cabinet of has Chandra Bose (During I. N. A. fame.)
S S S S. : S
S
S was far too short to write an acceptable :
S S
S S s
~~~~~േ~~~~പ്പ~\~~~~ീ.

Page 60
தென் புலோலிச் ெ
கந்தமுருகேசஞ வைர மணிவிழா
(உடுப்பிட்டி, கா
வெண்
கந்தமுரு கேசக் கவிஞனெ வந்தவய சோங்கி மலர்நா வாழ்த்துமணி மாலை வழங் வாழ்த்தியருள் நல்கும் மகி
கலித்
திருவாழ்வு குன்ற வியற்றென் பெருவாழ்வு வாழ்ந்த பெருங்கு குருவாழ்வு பெற்றவன் கந்த மு வருவாழ்வு பல்லாயிரவாண் டுக பாவல ருள்ளகக் கோவிலில் ை நாவல ரின்றமிழ்க் கோவை யில் காவய னல்லியற் கந்த முருகே நாவல ஞர்புகழ் போலென்றும்
ஈழத் தமிழ்ப்புல வோர்புகழ் மு தாழத் தடையாம லன்னதை ே வாழத் தருதிறற் கந்தமுருகேச வாழத் தரும்பல வாண்டுக ளின்
பொன்னக ரன்ன புலோலிப் ப மன்னக மெல்லாம் புலவொளி பன்னக மன்னவன் கந்த முருே தன்னக மாகப்பல் லாண்டுகள்
கலைவிலை முற்ரு யறிந்தவ ருள் மலைநிலை யாக வளரியல் பெற்ற
நிலைகுலை யாதவன் கந்த முருே லுலைவலை வாவன வின்றிப்பல்
அரைகுறை யாகப் படித்தவர்
நிரைகுறை யாம னிலவு மிழிநி கரைகுறை யாக்கடல் கந்த மு வரைகுறை யாமற்பல் லாண்டு
புலவொலி மாருப் புலோலியில் நலவொலி யின்றமிழ் நாடெல குலவொலி யாரிசைக் கந்த மு( நிலவொலி யோடுபல் லாண்டுக தஞ்சமென் ருரடைந் தாலு ம பஞ்சமென் ருேதாம லீயுந் தய கொஞ்சமென் ருலுமில் கந்த மு விஞ்சமென் ருேதப்பல் லாண்டு

சந்தமிழ்த் தாத்தா றர் அவர்களின்
வாழ்த்து மாலை
நீலகண்டன்)
If
ரு பத்தாறு
ளிற்-செந்தமிழில்
குதற்குச் செந்தமிழ்த்தாய்
ழ்ந்து
துறை
புலோலி சிறந்துயரப்
டி வந்தவன் பேரறிஞன்.
ருகேசக் கொற்றவற்கு
ளாய் வளர்ந்திடுமே
வத்துப் பராவிடுசீர்
னிக்க நவின்றருளுங்
சன் காசினிமேல்
வாழ்க நனிசிறந்தே
மற்ற பிரிவுற்றழிந் யோம்பி யணிபுனைந்து ன் மாநிலத்தில் ன்புடன் வண்டமிழே 3.
தியினன் புன்மையிருள் யேற்று வளக்கவிதை கச பானுவிசை
வாழ்க தமிழெனவே 4 ாக் கருத்தரங்கில் ) மதிப்புலவன்
கச னிணிலத்தி லாண்டுக ளோங்குகவே
முற்ரு யறிந்தவர்போல் லை நீக்குமியற் ருகேசன் காலமெனும் கள் வாழ்க மகிழ்வுடனே 6
வாசன் புதியதமிழ் ா மேவ நனிபரப்பிக் ருகேசக் கோசுகங்கள் ள் வாழ்க நிறைவுடனே 7 வற்குயிர்த் தண்டமிழ்த்தேன் ாளன் பழித்தொதுக்கல் முருகேசக் கோன்பிணிநோய்
புலோலியில் மேவுகவே g
52

Page 61
பூவிற் கமலந் தருவிற் பண்புகழ் தேவிற் சுரேந்திர ஞவிற் கபிலை நாவிற் சிறந்தவன் கந்த முருசே பூவிற் சிறப்புட ஞண்டுபல்லாண்
அன்பிற் பெரிய னறவிற் பெரிய தின்பிற் பெரிய னிசையிற் பெரி வன்பிற் பெரியனெங் கந்த முரு வின் பிற் குறைவில ஞகப்பல் லா
படைபட்ட மேதி தடுமாறி வீழ் நடைகெட்ட பாப்புனை புல்லர் தடையிட்ட வேந்தனெங் கந்த
மெடைமுட்ட வாழ்கபல் லாண்டு
வான்வெளி தன்னில் மனிதனை றேன்வெளி யாந்தமிழ் வானச் வான்வெளி யார்பகல் கந்த மு( னுான்வெளி யாமுட லோடுபல்
காவிய மோரைந் திலக்கணந் த மேவிய தொல்லிதி காசம் புரா நாவிய லானவன் கந்த முருகே சீவிய மித்தரை மீதுபல் லாண்(
கற்றவ ரேத்துங் கலித்தொகை
சுற்றவ ரேத்துங் கவிக்குல வேர் மற்றவ ரீடிலாக் கந்த முருகேச பெற்றவ ளுகப்பல் லாண்டுக ளி
அள்ளி முகக்க முகக்கத் தெவிட தெள்ளி முதிர்ந்திடு செங்கவிக்
துள்ளி யெழுந்திடு கந்த முருகே வெள்ளி மலைபல வாண்டுக ளிங்
மலரிடை யன்ன மரிகரி யின்ன மலரிடை யாக வருநடை தாங் மலரிடை மென்பொழிற் கந்த
பலரிடை யேருய்ப்பல் லாண்டு
தருவழி வந்தகை மன்னவர் சt தெருவழி வந்தவர் கையடை தருவழி நாலவன் கந்த முருகே வருவழி மேவப்பல் லாண்டுகள்
புத்தகக் காவிடைச் செந்தமிழ்க வித்தகக் காவலர் சூடு மணியா பித்தகக் காவலன் கந்த முருே நத்தகக் காவல ஞகப்பல் லால்
அவிச்சுவை யாயுஞ் சுரரு மிழி செவிச்சுவை தோயுந் திருவின கவிச்சுவை யீபவன் கந்த முரு புவிச்சுவை பாயுந் தருவாய்ப்ப
அன்புரை சொல்லி யறிவுரை
மன்புரை கொல்லி யருந்தமிழ் துன்புரை யில்லியெங் கந்த மு மின்புரை யில்லிடை யாண்டுப நீதிப் பிழவுகள் மல்கிட மக்கள் சாதிப் பிழவுக டம்மை யறி:ெ மோதிப் பிழவுசெய் கந்த முரு சோதிப் பிழம்பென வாழ்கபல்ல
 

ப் பொன்னிலம்வாழ் செழும்புலமை சன் நாடுபுகழ்ப் டு பொருந்துகவே.
னருந்தமிழோ ப னிகழ்ச்சிசொலா கேசன் மல்குசுக ண்டிங் கிலங்குகவே.
ந்து படர்ந்ததென்ன குலத்தினர் நாவடக்கித் முருகேசன் சம்பத்தின
பல் லாண்டிவ் விருநிலத்தே.
விட்டோர் வளர்புகழ்போற்
செழுமதி சிந்தனையென் நகேச மாபுலவ
லாண்டிங்ந னேங்குகவே.
ர்க்கங் கணிதம்வள ணமெய்ச் சாத்திரங்கள் ச நாவலனுர் டுக டேங்குகவே.
போலக் கவின்றமிழ்பே த னுரைநடையில் ன் வாழ்க்கைச்சுகம்
1ங்குப் பெருகுகவே.
டலில் லாமற்சுவை கங்கை திரைபுரட்டித் கசன் ருென்மைமிகு பகு விளங்குகவே.
வருநடையு கு மருங்கவிகள் முருகேசன் வண்கவிஞர்
கள் வாழ்க படித்தலத்தே.
ங்கந் தருதமிழைத் பாமற் சிறந்ததொண்டு சன் றக்கசுகம்
வாழ்க! * கந்தம் பொருந்தமுகர் "ய் விளங்குதமிழ்ப் கசன் பேணுசுகம் ண்டு நனியுறவே. ந்தவ ராமெனக்கொள் ரின்பிற் செறிந்தமிழக்
கேசன் காண்சுகமாம்
ல் லாண்டு பொருந்துகவே.
யெல்லி யகநிறைந்தோர் புல்லி மறுத்தொதுக்குந் ருகேசன் ருே?ய்ந்துசுக
ல் லாண்டு விளங்குகவே.
ா நிலைகுலைக்குஞ் வனுஞ் சாட்டையினுல் கேசன் மொய்க்குஞ்சுக
ாண்டிந்தத் தொன் னிலத்தே.
13
14
I 5
16
7
8
19
20
21
}

Page 62
நேத்திர மூன்றுற லாலறி வம் காத்திர மாறுறக் கான்முட ே பாத்திர னேர்தரு கந்த முருே காத்திர தேகஞ யாண்டுபல் 6
அரும்பா மலருற லாற்சுவைத்
பெரும்பா வலனுயர் கந்த மு( லிரும்பா மெனுமுட லோடுமுை தரும்பா லகளுகப் பல்லாண்டு
தருக்கினை வென்ருன் றமிழக திருக்கினை யொன்முன் புகழகக் யுருக்கினை யன்ருனெங் கந்த மு பெருக்கினை நன்ருக வுண்டுபல்
சிலம்பொலி கேட்கும் வளையெ நலம்பொலி வாருமொண் குண் புலம்பொலி வாருளக் கந்த மு தலம்பொலி வுற்றிட வாண்டுப
தன்னிடங் கல்வி பெறவரு வே மன்னிடுங் கொள்கை தனைப்புல பொன்னிடங் கொண்டவன் க துன்னிடப் பெற்றுப்பல் லாண்(
மாணவர் தங்க ளியல்பினுக் ே மாணமர் கல்வி திரிபைய மோ மேணமர் வுற்றவன் கந்த முரு மாணவ ருள்விளக் காகப்பல் ல கம்பனுக் குப்பின் பெரியவ ஞ( சம்பனுக் குள்ள மெனுங்கோவி செம்பணு வற்றுறைக் கந்த முரு செம்பணு வல்புனைந் தாண்டுபள்
செந்தமிழ் சைவ முரணுற வா வந்தமர் வுற்ற பொதுவுடை ை சிந்தனைச் சிற்பியெங் கந்த முரு சந்தத மின் புட னண்டுபல் லா
அறிவு நிலைக்கள மான வரணு செறிவு நிலைக்கவி கந்தையன் ம முறிவு நிலைக்குற்ற கந்த முருே
செறிவு நிலைக்கள மாகப்பல் ல
உற்ற தனதுளக் கொள்கைக்கு
முற்ற வதிலார் குறைநிறை சே பெற்ற பெருந்தகை கந்த முரு முற்ற வடைந்துபல் லாண்டுகள்
செந்தமிழ் மன்றங் கவியூறு குை கொந்தல ரின்பொழி லெண்ண வந்துயர் செங்கதிர்க் கந்த முரு வந்தனை நாடொறுஞ் செய்துப நாட்டை மொழியைக் கலையை பாட்டை மறந்து தமிழோ ருற கோட்டை யமைத்தவன் கந்த
தேட்டை யுடையவ ளுகப்பல் ல
ஊருக்கு நல்லவ னுற்ருர்க்கு ந சீருக்கு நல்லவன் சேவைக்கு ந போருக்கு நல்லவன் கந்த முரு பாருக்கு நல்லவ னுகப்பல் லா
5

பர நிற்றலினுற் மவலாற் காடுறையும கசன் பல்குந்திட ாண்டு களிப்புறவே. 22
தேனுற லாற்பொழில்நேர் நகேசன் பேருலகி ாத்தோடு மேற்றமெலாந்
வாழ்க தழைத்தினிதே. 23 மன்முன் சதிகொதியாந்
குன்ருன் றெளிந்தசிந்தை மருகேச னேங்குசுகப்
லாண்டு பிறங்குகவே. 24
ாலி யேறுந் திகழுமணி டல மாடுநன் மேகலைமின் ருகேசன் பூவெனுமித் ல் லாண்டு தழைக்குகவே 25 ார்க்குத் தனதுளத்து னர்த் தாத மதியுடையான் ந்த முருகேசன் பொற்பனைத்துந் டுகளின்பிற் றுலங்குகவே. 26
கற்புற வந்திறங்கி டும் வகையளிக்கு கேச னேற்றமுறு
ாண்டு வளருகவே. 27
மெனக் கண்டசிவ
லீந்து தமிழ்வளர்க்குஞ் ருகேசன் றேங்குசுவைச் 0 லாண்டு திகழுகவே. 28
காச் செழுமையுடன் மக்கரண் மாதிறலோன் கேசன் சீருயரச் ண்டு தழைக்குகவே. 29
மகன்றதென்று ாழ்வினிற் செப்பியுள்ள நசன் மொய்த்தபுகழ்ச் ாண்டு திகழுகவே. 30
மாரு யுளதெனினு ாடா துரைக்குமியல் கேசன் பெட்பனைத்து
வாழ்க முதன்மையொடே. 31
ாறஞ் சிறந்தகலைக் லச் சாகரங் கோதகல கேசன் வான்றIழ்த்தாய் ல் லாண்டுகள் வாழுகவே 32
மதத்தை நறுந்தமிழ்ப்பண் ங்கப் பரிந்திவைக்கோர் முருகேசன் கூடுசுகத் ாண்டு திகழுகவே. 33 ல்லவ ஞேங்குதமிழ்ச் பலவன் சேர்தமிழர் கேசன் பொற்பமையப் ண்டு படருகவே. 34

Page 63
சந்த வரைத்தமிழ்ச் சிந்து வரமு வெந்த வுளத்தின ளாந்தமிழ் து கந்த முருகேச ஞகவந் தானவன் வந்த முருகேச ஞகப்பல் லாண்
திருவீர கத்தி சிதம்பரப் பிள்ளை பொருவீர கத்திக ளென்ன வறி குருவீர கத்தினன் கந்த முருகே தருவீா கத்தினற் பல்லாண்டு 6
போற்றும் பழமைக் கொருகா தோற்றும் புதுமைக் குயரா தர மேற்றம் படைத்தவன் கந்த மு போற்றும் புகழுடனண்டுபல் 6 பேச்சுந் தமிழ்க்குள முந்தமிழ்க்
னேச்சுந் தமிழ்க்குள பொன்னுற் மூச்சுந் தமிழ்க்குள கந்த முரு.ே வீச்சுந் தழுவிப்பல் லாண்டுபல்
தாசன் றமிழுக்கு நேசன் புலவ போசன் கலைகட்கு நாசன் மயg தேசன் புகழுக்குக் கந்த முருகே வாசன் சுகத்துட ஞண்டுபல் ல சாதி யெனும் பேய்க்குக் காஞ்சி யோதி யிருந்தமி ஞட்டி னிருெை சோதி விரிபுலக் கந்த முருகேச மாதி வளம்பல வுற்றுப்பல் லா
மூடப் பழக்க வழக்கங்க ளெல்ல வாடப் பிடுங்குதல் வேண்டுமெ பீடப் புலமையன் கந்த முருகே நாடப் பலசுகம் வாழ்கபல் லா
அலக்க ணலக்கண மென்று தப புலக்க ணனிது திறந்தவட் கா நலக்க ணCறுவியற் கந்த முருசே நிலக்க ணCலவுக வாண்டுபல் ல
தண்டமிழ்த் தாய்க்கு வருதுயரி கொண்டவன் வேறு துயரின் பு கொண்டவன் றிண்ணியன் கந்த மண்டல மீதினி லாண்டுபல் ல
தொல்காப் பியமுத லான வில பல்காப் பியமெல்லாந் தானே னெல்காப் புலமுற்று கந்த முரு ழ்ெல் காப் பியனுக வாண்டுபல்
மண்காட்டிப் பொன்பெண் ைெ யுண்மாட்டிக் கொண்மத நீத்து புண்பாட்டிற் கொண்டவன் கர் பண்பாட்டிற் காணவ ஞகப்பல்
தனித்தமி பூழின்பிற் றிளைத்தவன் யினித்தமி ஞட்டிற்கு மீழுவ ே பணித்தமி ழார்துயர்க் கந்த மு றணித்தமி ழோம்பியிங் காண்டு மாணிக்க ஞனவன் மன்மத ஞ பேணிக்க ளாரளி கண்ணு டிக வாணிக்க ளுக்கிடு கந்த முருே ழேணிக்க ணுச்சியி லாண்டுபல்
5
 

மணி தான்திரும்ப துன்பம் விடுவித்திடக் ண் காமருசீர்
டுகள் வாழுகவே. 35
செழுந்தமிழ்க்கூர்ப் வுெ புகட்டியவன் சன் கொள்ளச்சுகந் வாழ்த்துச் சகத்தினிரே, 56
வலன்சீர்ப் பொலிவுடனே ாவு துணிந்தளிக்கு ருகேச னெண்டிசையும் லாண்டு பொருந்துகவே. 37
குற்ற பெருஞ்செயலி
தமிழ்க்கரி துற்றவுயிர் கசன முநதுசுக லாண்டிங்கு மேவுகவே. 38 ர்க்குத் தாருவன லுக்குப் போயொழியாத் சன் செய்ப்புலோலி ாண்டு வளருகவே. 39
9 தமிழிற் றதும்பச்சுவை ா யுருக்குலைத்த
ன றுனனுசுக "ண்டுக ளாருகவே. 40
லா முளையினிலே ன் றெம்மை வழிப்படுத்து சன் பேருலகில் ண்டு நனிசிறந்தே. 4
பிழை யழிப்பவர்தம் ன பொலிவழகு
*ச நாவலனிந் ாண்டு நிறைககத்தே. 42
ன் புக டன்னவென்று ணுதவன் கொள்கைநிலை 5 முருகேசன் கொற்றமுடன் ாண்டுற வாழுகவே. 43
க்கணந் தொக்கசுவைப் தனித்துப் படித்தவற்றி கேசன் பொங்குபுக லாண்டிங் கிலங்குகவே. 44
னனுமிவை காட்டி மயக்கிவலை
விடுதலென் ருேவெனவுள் த முருகேசன் பொங்கு புகழ்ப் ) லாண்டு படருகவே. 45
வேதா சலத்துறவி தன்றுகொ லென்றுவிழி ருகேசன் பாசமுடன் பல் லாண்டு தழைக்குகவே. 46
க மலர்களெலாம் ாாம் பெருவித்தையை கசன் மங்காப்புக
லாண்டிங் கிலங்குகவே. 47

Page 64
பிறையா யிரங்காண் பெரியோரு துறையா யிரம்படிந் தின்றமிழ்க் கறையா யிரங்களை கந்த முருகே நிறையா யிரஞ்சிறப் பாரப்பல்
தத்துவ ஞான தகுக்கங் கடிதத் வித்துவ மாகத் தனித்தமி பூழிற்ே தத்துவ சாகரங் கந்த முருகேசன் மொத்துவ மாகப்பல் லாண்டுகள்
மிகுபுக ழார்ய திராவிட பாஷா தகுதிக ளுற்றிடச் சோதனை யா வெகுதக வோடுசெய் கந்த முருே தொகுதிக ளார்ந்திட வாண்டுபை
ஊறு விராவிட வார்ய குலத்தே கேறு திராவிட முன்னேற்ற நற் வீறு விராவரி கந்த முருகேசன்
தேறு தராதரத் தோடுபல் லான
முத்துக் குமார சுவாமிக் குருக்க வித்துக் குமார சுவாமிப் புலவன் முத்துக் குமாரனெங் கந்த முரு சத்துக் குமாரனென் ருண்டுபல்
வானத் தருக்கு நினைந்தன நல்கு மீனத் தருவென வோங்கு பனை மானத் தருபுலக் கந்த முருகேச வானத் தருவட மீனெனப் பல்ல
அன்பு வரும்வரு மாலென வேளி யென்பு முருகிடும் வண்ண மு.ை பொன்பு கருநேருங் கந்த முருே வின்பு மருவுற வாண்டுபல் லான நந்தமிழ் நாட்டர சாக விளங்கி சிந்தையில் வைத்து வழிபடு வே வந்திடில் மாற்றியற் கந்த முரு முந்துற நற்சுகம் வாழ்கபல் லா சித்திரம் நல்ல சிலேடை மடக்கு மித்திரம் பூண்டவ னுவிற் றவழ் புத்திர னெண்டமிழ்க் கந்த மு( பத்திர மாகப்பல் லாண்டு புகழி பொங்கலு மேன்சுவைப் புற்கை பொங்கன லோடெழு வீர்வரு ( மெங்கணு மார்த்திடு கந்த முரு சிங்கமென் ருண்டுபல் லாண்டுக
குலையா தொழுகும் பிரமச் சரிய தலையா மொழுக்க மொருநாட்
நிலையா னலிபவன் கந்த முருகே மிலையா மெனப்பல வாண்டுகள்
காந்தள் குறிஞ்சியை நீத்துக் கட் மேந்து வனமுலை மீன்சாறு வை: மாந்த வெமைவிடு கந்த முருகே மாந்த ரினமணி யாகப்பல் லான
செந்தமிழ் வாழி! தமிழ்க்குலம் வந்துற வாடு புலோலிப் பதிவா சிந்துயர் மேகமெங் கந்த முருகே சிந்தையி லின்புடன் பல்லாண்டு
முற்று
s

மேத்து பெரியவனப்த் குள்ளுறத் தொண்டுஞற்றிக் சன் கண்ணியமா லாண்டு நிலவுகவே. 48
தகுவழியால் செய்து வெற்றிபெறு ண் சால்பனைத்து ஸ் வாழ்க வுவகையொடே 49
விருத்திச்சங்கந் ளணுச் சார்ந்துபணி கசன் வீங்குபுகழ்த் ல் லாண்டு துலங்குகவே. 50
தா ருழுத்தகொள்கைக் கழ கத்திருக்கும்
மேவுசுகந்
ண்டு திகழுகவே. 51
iள் முது புலமை
ன் விளங்குகுல கேசன் முத்தமிழ்க்கோர்
லாண்டுகள் சாருகவே. 53
ம் வனமரமு மர மேன்மையெலா ன் மாபுகழின் பாண்டு வாழுகவே. 53
பரு மாசியுரை ரத்தவ னெம்முளத்தான் கசன் பொங்குசுக ண்டிங் கிலங்குகவே. ó4
ய நாவலனைச் ானவன் சீர்க்கிழுக்கு கேசன் வாழ்க்கையிலே ண்டு முதன்மையொடே. 55
நடன் சேர்ய மகம் ந்து விளையாட்டுறு ருகேசன் பூண்டுசுகம் ற் பயிலுகவே. S 6
பு மேன்றமிழ்ப் போர்புரியப் வீரெனப் போர்முரச கேச னேறு வலிச் ள் வாழ்க சிறப்புடனே, 57 பன் குறிஞ்சிக்குள பயின்று தவிப்படையு ச னேரெவரு
வாழ்க விருஞ்சுகத்தே. 58
டனிலங் கண்டதுவு
த்த வெழிலதுவு சன் மாண்புசெறி ண்டு வளருகவே. 59 வாழி! சிறப்பனைத்தும் ழி! வான்கவிதை கசன் சேமமிகச்
வாழி! திருவுறவே. 60
ம் ,

Page 65


Page 66
غلامی و . . ഉsite' ?
- ? فلسفے
மெய்கண்டான் அச்சியந்திரசாலே,

6 செட்டியார் தெரு, கொழும் பு