கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வாழ்வகம்: அன்னை அன்னலட்சுமி சின்னத்தம்பி நினைவுச் சிறப்புமலர் 2008

Page 1


Page 2


Page 3


Page 4


Page 5
அன்னை அன்னலட்சுழி 6
 

சின்னத்தம்பி
لهما وان

Page 6
g56obOUL வாழ்வகம்,
அன்னை அன்னலட் நினைவுச்சிறப்பு மலர்
பிரதம ஆசிரியர் ஆ.ரவீந்திரன்
துணை ஆசிரியர்கள் : க.தர்மசேகரம்
சு.ழுநீகுமரன்
ബൈബിu്B வாழ்வகம்,
சுன்னாகம், இலங்ை
g) flooDLD வாழ்வகம்
பதிப்பு 2OO8
அச்சிட்டோர் கரிகணன் பிறிண்டேr காங்கேசன்துறை வீதி
Title Vaazhvaham,
Memory of Annai An
Chief Editor A. Raveendran
Sub Editors K.Tharmasekaram
S.Srikumaran
Copy Right Vaazhvaham
Edition : 2008
Published by : Vaazhvaham
Page
Printed by
Chuinnakam, Sri Lai
Viii -- 75
Harikanan Printers, K.K.S. Road, Jaffna.

ஈமி சின்னத்தம்பி
ஸ்,
யாழ்ப்பாணம்.
naluxmy Sinnathamby
ika.
ii

Page 7
இதழாசிரியர்
அன்புறவுகளே!
"வாழ்வகம்" சஞ்சிகை அனுஷ்டிக் கப்படுகி வெளிவருவதையிட்டு ப சூழ்ந்த தற்போதைய இ சஞ்சிகையினை வெளி ஒரு பணி என்பதனை அறைகூவல்கள் அனைத்துமே உரியமுறையி ஊக்கத்தையும் உத்வேகத்தையும் அளித் நல்லிதயங்களுக்கும் என்றுமே நாம் கடமைப்பட்டு
விசேட கல்வித்துறைசார்ந்த பல்நிலைப்பட் சேர்த்துக்கொள்ள முயன்றிருக்கிறோம். இவ்6 சார்ந்தோருக்கு மட்டுமன்றி ஏனைய தரப்பினர் நம்புகின்றோம்.
இச்சஞ்சிகையை நிறைவாக்கும் இற்கண இதற்கு மெருகூட்டியிருக்கலாம்" என்ற எண்ணே
எது எவ்வாறாயினும், எமது வாழ்வ விழிப்புலனற்றோரின் கல்வி வரலாற்றில் விபரிக் அமரர் அன்னலட்சுமி சின்னத்தம்பி அம்பை பச்சிலையாயேனும் இந்நூலைச் சமர்ப்பிக்கும் ! கொள்கின்றோம்.
இச்சஞ்சிகைக்கெனத் தரமான ஆக்கங் எமது மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்கி மகிழ்ச் ஆலோசனைகள், உதவிகள் வழங்கிய அனைத்து
இச்சஞ்சிகையை நல்லதோர் வடி அச்சகத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் எம
ஆ. ரவீந்திரன் :
s
 
 
 

பார்வையில்.
பின் சிறப்பிதழ் எமது நிறுவுநர் நினைவுநாள் ன்ற இந்த செப்ரெம்பர் மாதத்தில் |ட்டில்லா மகிழ்வெய்துகின்றோம். இந்த இடர் க்கட்டான காலகட்டத்தில் இது போன்றதொரு யிடுவது எத்துணைஅறைகூவல்கள் நிறைந்த அனைவருமே அறிவர். இருந்தபோதிலும் இந்த ல் எதிர்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான த எல்லாம்வல்ல இறைவனுக்கும் இனிய ள்ளோம்.
ட ஆக்கங்களை முடிந்தவரை இச்சஞ்சிகையிலே வாக்கங்கள் நிச்சயமாக விசேட கல்வித்துறை க்கும் ஏதோ ஒருவகையிற் பயன் தருமென்றே
த்திற்கூட "இன்னும், இன்னுமின்னும் அதிகமாய் ம எம்மனதில் எழுந்து நிற்கின்றது.
க நிறுவுநரும் முன்னைநாள் தலைவரும் க முடியாத அரும்பணிகளை ஆற்றியவருமான யார் அவர்களின் பாத கமலங்களில் ஒரு பாக்கியம் கிடைத்தமையையிட்டு மன நிறைவு
களை வழங்கி உதவியவர்களுக்கு முதற்கண் ன்ெறோம். அத்தோடு, எமக்கு ஆரோக்கியமான அன்புள்ளங்களுக்கும் எமது நன்றிகள்.
பில் நயம்பட ஆக்கித்தந்த கரிகணன் து நன்றிகள்.
லைவர், வாழ்வகம்.
1V1N1,Nanaa

Page 8
துனைவேற்
வாழ்வகம் விசேட தேவைகொண்ட எ
தெல்லிப்பழையில் அன்று வாழ்வகத் பசுமையாய் உள்ளன. தொடக்கமுதல் வாழ்வ
செல்வி அன்னலஷ்மி சின்னத்தம்பி.
சூழமைவின் நெருக்கடிகளிடையேயும் காத்துநின்ற கருணைத் தாயாரான அவரின் நி
ஆண்டுக்கான மலர் வெளிவருகின்றமை மனது
அன்னையின் அன்பான, அறிவான பல்கலைக்கழகக் கல்வி முதலாய் அனைத்து
தடங்கள் இன்று விரிந்துள்ளன.
பெருமைக்குரிய அன்னையின்
உருவாக்கத்திற்காய் உழைத்த அனைவரும்பா
வாழ்வகத்தினைக்காத்து அதன் அ அனைவரும் இணைந்திடுவோம்.
நல்வாழ்
Guyrirfliuir 6. gഞ്ഞrഖjpg
u IIIgůLIrooorů
حصفحصخصحاصصصصص
 
 

ந்தரின் செய்தி
ங்கள் பிள்ளைகளின் வாழ்வாதாரம்.
நதை ஆரம்பித்த நாட்கள் இன்னமும் நெஞ்சில்
கத்தின் அன்னையாய் எங்களுக்கு வாய்த்தவர்
ம் தளரா மனதோடு பிள்ளைகளைக் கண்ணெனக் னைவுகளைப் பதியும் ஏடாக வாழ்வகத்தின் இந்த க்கு நிறைவைத் தருகின்றது.
வளர்ப்பிலே வாழ்வுகண்ட பிள்ளைகள் பலர். துப் புலங்களிலும் வாழ்வகத்துப் பிள்ளைகளின்
நினைவுகளைக் காக்கும் இந்த இதழின் ராட்டுக்குரியவர்கள்.
புர்த்தத்தினை மேம்படுத்தும் காலக் கடமையில்
pத்துக்கள்
ான்.சண்முகலிங்கன்
ir
பல்கலைக்கழகம்.

Page 9
GefjĦE
"பண்புடையார் பட்டுண்டு உலகு" எ உதித்த பண்புடைய மனிதத் தெய்வம் அமரர் என்றால் மிகையாகாது. இப்பெருமாட்டி விழிய அர்ப்பணித்தவர். "வாழ்வகம்" என்ற கலங்கை இப்பெருமாட்டியின் பயனுள்ள வாழ்வைப் பல வாழ்வகச் செல்வங்கள் வெளியிடும்
ஆனந்தமடைகின்றேன்.
வாழ்வக வளாகத்தில் உடலால் உறங் அம்மையாரது நினைவாக வெளியிடப்படும் இம் வெளிவருவது பெருமைக்குரியது. வாழ்வகத் பிரதம ஆசிரியராக இருந்து ஆற்றுப்படுத்த, தி இணையாசிரியராகப் பணியாற்ற, வெளிவரும் இ வாழ்வியல்புக்கள் தொடர்பான கருப்பொரு6ை விடயமாகும். இம்மலர் எதிர்காலக் கல்வி ஐயமில்லை. துர்க்காதேவியின் திருவருளால் வ
வாழ்த்தி அமைகின்றேன். "யாவர்க்குமாம் என்று
செஞ்சொற்செல்வ தலைவர், முரீதுர்க் தெல்லிப்பழை - இ
 
 

செய்தி
ன்பது திருவள்ளுவர் கருத்து. இம்மண்ணில் அன்னை செல்வி அன்னலட்சுமி சின்னத்தம்பி பில் ஒளியில்லார்க்கு வழிகாட்டத் தன் வாழ்வை ர விளக்கை ஏற்றிவைத்து, வழிகாட்டிய மாதரசி. 0ரும் அறிவதற்காக அவரால் நேசிக்கப்பட்ட இம்மலருக்கு ஆசிகூறுவதில் மிகவும்
கியும், உள்ளத்தால் விழித்தும் உறைந்திருக்கும் மலர் ஆக்கபூர்வமான விடயங்களை உள்ளடக்கி தலைவர் திரு.ஆரவீந்திரன் (விரிவுரையாளர்) திரு.க.தர்மசேகரம், திரு.சுழரீகுமரன் ஆகியோர் இம்மலர், விசேட தேவைக்குரிய மாணவர் கல்வி, ா மையமாகக் கொண்டிருப்பது சிறப்புக்குரிய ஆய்வுக்கு மேலும் துணைசெய்யும் என்பதில் ாழ்வகப் பணிகள் மேலும் சிறக்கப் பிரார்த்தித்து றும் இன்னுரைதானே"
Iர் திரு.ஆறு. திருமுருகன், காதேவி தேவஸ்தானம், லங்கை
N1V1N1a1naloa
V

Page 10
blLIGUDLIDLÚ
ஈழத்திருநாட்டில் வடபுலமாம் மாவி புதுமைப்பெண், அன்னை, செல்வி அன்ன பிறந்தோம், வாழ்ந்தோம் என்பதல்ல வாழ் சமூகத்துக்காக என்ன செய்தோம் என்ற வில் அவ்வகையில் வையகமும், விண்ணகமும் அன்னலட்சுமி சின்னத்தம்பி அவர்களும் ஒ விழிப்புலனற்றவர்களைத் திறன்மிக்க மாந் அன்னலட்சுமி சின்னத்தம்பி அவர்களையே சாரு
உற்றாரால், உறவினரால், சமூகத்தா பிள்ளைகளைத் தேடிக் கண்டுபிடித்து ஒன்றுசே அமைப்பை உருவாக்கி, அதன்மூலம் அவர்களி பாடுபட்டார். இவரது அயராத உழைப்பால் விழி பிள்ளைகள் ஆசான்களாக, சிறந்த வழக்கறிஞர்
இவரது மாணவச்செல்வங்களுள் இசைத்துறைக்கு ஆற்றுப்படுத்தி, அதன்மூலமா பல்வேறு மட்டங்களிலும் பல தங்கப்பதக்க சமூகத்துக்கும் பெருமைசேர்க்க வழிசமைத் உருவாக்கப்பட்ட வாழ்வகம் இன்று சபாபதி இயங்கிவருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
பார்வையற்ற, பார்வைக் குறைட நல்வாழ்வுக்கான புறச்சூழலை வழங்கி, அகச் பெருமை மிகு அன்னையை பார்வைப்புலப்
மறந்துவிடாதிருத்தலே நாம் அவருக்குச் செய்யு
சாந்தி, சா
டாக்டர், செல்ல
 
 

குள்ேனை
ட்டபுரம், வீமன்காமப் பிரதேசம் பெற்றெடுத்த லட்சுமி சின்னத்தம்பி என்றால் மிகையாகாது. க்கை. எமது வாழ்க்கைக்காலத்தில் நாம் னாவுக்கு விடைகூறும்வகையில் வாழவேண்டும். போற்ற வாழ்ந்தவர்களுள் அன்னை, செல்வி ருவர் என்பதை யாரும் மறந்துவிட முடியாது. தர்களாக உருவாக்கிய பெருமை அன்னை
நம்.
ற் பலவழிகளாலும் ஒதுக்கப்பட்ட விழிப்புலனற்ற ர்த்து, தனித்து ஒரு பெண்ணாக வாழ்வகம் என்ற ன் ஞானக்கண்ணைத் திறப்பதற்கு அரும்பெரும் ப்ெபுலனற்ற நிலையிற் காணப்பட்ட எத்தனையோ
களாகத் திகழ்கின்றமையைக் காணமுடிகிறது.
ஒருவரான திரு.கு.ஜெகதீசன் என்பவரை ாக அவர் அகில இலங்கை ரீதியாகவும், இன்னும் கங்களைப் பெற்று வாழ்வகத்துக்கும் எமது தார். அன்னையின் அயராத உழைப்பால்
ப்பிள்ளை வீதி, சுன்னாகத்தில் மிகச்சிறப்பாக
ாடுடையோரை ஒன்றுகூட்டி, அவர்களின் நகண்ணுக்கு ஒளியைக் கொடுத்த இத்தகைய பாதிப்புடையோரும், ஏனையோரும் என்றும்
ம் சிறந்த கைமாறாகும்.
ந்தி, சாந்தி!
ஈஸ்வரி கந்தையா Þs'\s*\s*\nss
vi

Page 11
Giff
வாழ்வகம் இருபது வருட காலத்துக்கும் மே6
இவ்வில்லத்தை அமைத்து, சிறப்புற வழிநடத்திய சின்னத்தம்பி அவர்கள் விளங்கினார். இவரது
"கல்வியே ஒளி, கல்வியே வழி" என்ற ம
இன்று பெரு விருட்சமாய் வளர்ச்சிகண்டு வி தந்துகொண்டிருக்கின்றது.
இப்பேற்பட்ட அரும் சேவையாற்றிய பெரு 11.09.2006 அன்று அமரத்துவமெய்தியபோது சொல்லொணத் துயருற்றனர்.
தற்போது வாழ்வக வளாகத்தில் அன்னை அவரின் உருவச்சிலையும் வடிக்கப்பட்டு, மாணவ
கல்வி என்பது ஒவ்வொரு மனிதனதும் பிற முதல் பல்கலைக்கழகம்வரை கற்கின்ற விழிப்பு ஒழுங்குகள் அனைத்தையும் செய்து, அவர் உறுதுணைபுரிந்தார். அன்னாரின் மாணவ நிபுணத்துவம் பெற்று, சமூகப் பயன்பாடுள் அன்னையவர்களால் அமைக்கப்பட்ட அறிவ மத்தியிலும் சிறப்பாகத் தனது பணிகளை முன்ன்ெ நலன்விரும்பிகள் அனைவரது ஒத்துழைப்பே மெருகுபெற்றுவருகின்றன.
வாழ்வகத்தின் பணிகள் மேலும் சிறக்க
போமாக.
நன்
திருமதி பராசக்தி கொழும்பு இணை
صحصفحصحصحصصصم طص
V
 
 

ாத தீபம்
குடவாசகத்தைத் தாரக மந்திரமாகக் கொண்டு ாக அரிய சேவையினை ஆற்றிவருகின்றது.
பெருந்தகையாளராக அன்னை அன்னலட்சுமி அரும் முயற்சியால் உருவான இவ்வில்லமானது ழிப்புலனற்ற பல மாணவர்களுக்கு இன்நிழல்
மாட்டி, செல்வி. சின்னத்தம்பி அவர்கள் கடந்த
, வாழ்வக மாணவர்களும் ஏனையோரும்
யின் சமாதி அமைக்கப்பட்டுள்ளது. அத்தோடு, fகளால் போற்றப்பட்டு வருகின்றது.
]ப்புரிமை என்பதை நன்குணர்ந்து, பாலர் வகுப்பு ல வலுவிழந்த மாணவர்களுக்கு, ஏற்ற கல்வி கள் வாழ்வில் வளம்பெற அன்னையவர்கள் ர்கள் பலர் இன்று பல்துறைகளிலும் தேறி ள மனிதர்களாக வாழ்ந்து வருகின்றனர். ாலயமாம் வாழ்வகம் பல இடர்பாடுகளுக்கு ாடுத்து வருகின்றது. அன்பர்கள், ஆர்வலர்கள், ாடும் வாழ்வகத்தின் பணிகள் மேன்மேலும்
நாம் அனைவரும் ஒன்றிணைந்து கரங்கொடுப்
ாறி
கனகராஜேஸ்வரன், யாளர், வாழ்கம்.
i

Page 12
மலரின் இதழ்களாக.
1) பெருவாழ்வு தந்த பேரன்னை
2) தனக்கென வாழாப் பிறர்க்கென வாழ்ந்த ெ
3) விழிப்புல வலுவிழந்தோருக்கான உதவிகளு
4) மூளை விருத்தி குன்றியோரின் சமூக நிலை
5) FACTS
6) யாகைதடி நவீல்ட் பாடசாலையின் தோற்ற
7) யாழ் விழிப்புலன் அற்றோர் சங்கம்
8) மனவளர்ச்சி குன்றியோருக்கு மறுவாழ்வளி
9) வலுவிழந்தோருக்கு வலுவூட்டும் வலுவிழந்
10) உளநல ஆரோக்கியம்
1) சிவபூமி மனவிருத்திப் பாடசாலையின் தோ
12) விழிப்புலன் வலுவிழந்தோருக்கு வழிகாட்டு
13) வளர்ச்சிப் பாதையில் வாழ்வகம்
14) ஈழத்தின் அன்னை திரேசா
15) சிந்திக்கவைத்தி சில நிமிடங்கள்
16) சமூக முன்னோடிகள் சிலரின் பார்வையில்
அன்னை அன்னலட்சுமி சின்னத்தம்பி அவ

பருமாட்டி
நம் சீர்மியமும்
Uப்பாடு
மும் பணியும்
க்கும் ஆர்க் நிறுவனம்
தோர் புனர்வாழ்வுச் சங்கம்
ற்றமும் பணியும்
ம் செய்மதிகள்
ர்கள் .
viii
O1
13
6
22
27
28
34
37
39
42
44
48
56
62
64
76

Page 13


Page 14


Page 15
பெருவாழ்வு தந்த பேரண்க
"" --سسسسسسس
கணந்தோறும் இப்புவியில் ஆயிரமாயிரம் மனிதர்கள் பிறக்கின்றனர், இறக்கின்றனர். ஆனால், தன் வாழ்வையே மற்றவர்களின் வாழ்வுக்கு வளம் சேர்க்கின்ற ஒளசதமாய்
ஆக்கி, தனக்கென வாழாப் பிறர்க்குரியாளராய்
வாழும் அற்புதப் பிறவிகள் அரிதாய், மிகவும் அரிதாய்த்தான் இந்த அவனியிலே உதிக்கின் றார்கள். அந்த வரிசையிலே 11.09.2006 வரை எம்மோடு வாழ்ந்து இன்றும் நம் இதயங்களில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற அன்னை செல்வி அன்னலட்சுமி சின்னத்தம்பி அவர்களும் ஒருவர். விழிப்புலனற்றவர்கள் வாழ வழி தெரியாமல் தவித்துநின்றபோது, அவர்களுக்கு ஆதரவுக் கரம் கொடுத்து அவனியிலே அனைவர்க்கும் சமமானவர்களாய் அவர்களை ஆக்கும் அரும்பணியில் தன்னை முழுமையாய் ஈடுபடுத்தி, அதில் வெற்றியும் கண்டவர் இந்த பெருமைமிகு அன்னை. தனியொருவராய்
வாழ்வகம்
 

ーイ
ஆ. ரவீந்திரன், தலைவர், வாழ்வகம்.
நின்று இவர் ஆற்றிய கல்விப்பணிகள் விபரிப்புக்களுக்கு அப்பாற்பட்டவை. இலங்கை வாழ் தமிழ் பேசும் விழிப்புலனற்றோரின் கல்வி வரலாற்று ஏடுகளில் இருந்து இவ்வன்னையின் நாமத்தை அகற்றிவிடுவோமேயானால், அங்கு ஒரு பாரிய வெற்றிடத்தைத்தான் நம்மாற் காண முடியும். மனுக்குல சேவையை நேசிப்பவர்கள், மனிதநேயம், மனிதாபிமானம் பற்றிச் சிந்திப் பவர்கள், பேசுபவர்கள் ஒவ்வொருவரும் இந்த மாதரசி பற்றியும், அவர்தம் மாசற்ற பணிகள் பற்றியும் நிச்சயமாகச் சற்றேனும் அறிந்திருக்க வேண்டும்.
யாழ்ப்பாணத்தின் வடகோடியில் அமைந்துள்ள மாவிட்டபுரம் என்னும் எழில்மிகு கிராமத்திற் சின்னத்தம்பி, தையற்பிள்ளை தம்பதியரின் ஏழாவது மகளாய் 1937ம் ஆண்டு ஜனவரி மாதம் பதினோராம் திகதி அன்னை அவர்கள் அவதரித்தார். அந்த அழகிய குழந்தைக்கு அன்னலட்சுமி எனப் பெயர்சூட்டி மகிழ்ந்தனர் பெற்றோர். குடும்பத்தில் இளைய பிள்ளை; செல்லத்துக்குக் குறைவில்லை. இராசையா, சிங்கராஜா, கந்தையா ஆகிய மூன்று அண்ணன்மாருக்கும் இராசம்மா, தங்கரத்தினம், அன்னமுத்து ஆகிய மூன்று அக்காமாருக்கும் அருமைத் தங்கையாய் இனிதே வளர்ந்து வரலானார். "வளரும் பயிரை முளையிலே தெரியும்" என்பதற்கிணங்க நிதானமும் நல்லொழுக்கமும் புத்திக்கூர்மையும் அவரிடம் இயல்பாகவே குடிகொண்டிருந்தன.
தனக்குச்சரி என்று பட்டத்தைச் சொல்வ
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 16
தற்கோ, செய்வதற்கோ அவர் ஒருபோதும் தயங்கியதில்லை. மற்றவர்களுக்கு உதவுவதில் அவருக்கு எப்போதும் ஒரு அலாதிப் பிரியம். அவர் பாடசாலை மாணவியாக இருந்தபோது, ஒருதடவை சக மாணவன் ஒருவனுக்கு நாய் கடித்துவிட்டது. அங்கு நின்றிருந்த மாணவிகள் எ ல் லோரும் எட்டி நின்று வேடிக்கை பார்த்தார்கள். அனுதாபப்பட்டார்கள். ஆனால், அன்னையவர்களோ சற்றேனும் தாமதிக்காமல் ஒடிச்சென்று அந்த மாணவனுக்கு உதவினார். "பக்கத்திருப்போர் துயரத்தைப் பார்க்கச் சகிக்காத அன்னையின் உயர் பண்பு அப்போது அங்கிருந்த அனைவரையுமே வியப்பி லாழ்த்தியது.
வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அன்னை யவர்கள் ஒட்டப்போட்டியொன்றில் பங்குபற்றிக் கொண்டிருந்தார். அவருக்குப் போட்டியாக அருகிலே ஒடிக்கொண்டிருந்த சக மாணவி எதிர்பாராதவிதமாகக் கால் தடக்கி விழுந்து விடிவே, அன்னையவர்கள் தான் ஒரு போட்டியில் பங்குகொள்கிறேன் என்பதையும் மறந்து ஒடிச்சென்று விழுந்த அந்த மாணவி யைத் தூக்கினார். அதனால் வெற்றிக் கிண்ணத்தை இவர் இழக்க நேர்ந்தது. "மற்ற வர்கள் என்னவானாலென்ன? தான்மட்டும் வெற்றி பெற்றால் போது ம் என்று எண்ணுபவர்கள் மத்தியில் இப்படியும் ஒரு பிள்ளையா?" என அனைவருமே வியந்தனர். ஆனால், இந்தச் சிறுமி பிற்காலத்தில் பலரை வாழ்வில் கைதுக்கிவிடப்போகிறார் என்பது அப்போது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அன்னையவர்கள் தனது ஆரம்பக் கல்வியை காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியில் பெற்று, பின்னர், மாவிட்டபுரம் வீமன்காமம் மகாவித்தியாலயம், சுன்னாகம் இராமநாதன் கல்லூரி ஆகியவற்றில் தனது கல்வியைத் தொடர்ந்தார். 1958இல் திருநெல்வேலி
O O busTyp6lief LD

02
ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் இணைந்து ஆசிரியப் பயிற்சியினைச் சிறப்பாக மேற் கொண்டார். ஒருதடவை பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்கள் அவர் கற்பிப்பதை நன்கு கவனித்துக்கொண்டிருந்துவிட்டு அன்னையை அழைத்து, "உன்னுடைய பெற்றோர்கள் யாராவது ஆசிரியர்களாக இருக்கின்றார்களா" என்று கேட்டாராம். அன்னையவர்களிடமிருந்து "இல்லை" என்று பதில் வந்தது. "அப்படியானால் உன் சகோதரர் யாராவது ஆசிரியர்களாக இருக்கிறார்களா?" என்று வினவினார் பண்டிதமணி. அதற்கும் "இல்லை" என்றே பதில் வந்தது. "அப்படி யானால் நீ போன பிறப்பில் நிச்சயமாக ஒரு ஆசிரியையாகத்தான் இருந்திருக்க வேண்டும்" என்றாராம் பண்டிதமணி. அந்த அளவுக்கு அன்னையின் ஆசிரியத்துவம் பண்டிதமணியை வெகுவாகக் கவர்ந்திருந்தது.
01.06.1960இல் அன்னையவர்கள் களுத்துறை சாகிராக் கல்லூரியிலே தனது ஆசிரியப் பணியைப் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் 1963 தொடக்கம்
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 17
களுத்துறை சாகிரா ஆரம்பப்பாடசாலையில் தனது ஆசிரியப் பணியைத் தொடர்ந்தார். 01.07.1968 தொடக்கம் அன்னையவர்கள் கொழும்பு, கொட்டாஞ்சேனை விவேகானந்தா மகாவித்தியாலயத்தில் தனது ஆசிரியப் பணியினைத் தொடர்ந்தார். கொழும்பில் பணியாற்றிய காலத்திலேயே அன்னையவர் களின் வாழ்வில் ஒரு பாரிய திருப்பம் ஏற்பட்டது.
ஒருதடவை தற்செயலாக கண் பார்வையற்ற ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. அந்தக்கணமே அன்னையவர்களின் மனதில் இனம்புரியுரத ஒரு மாற்றம் நிகழ்ந்ததை அவர்
உணர்ந்தார். தன் இரு கண்களையும் இறுக மூடிக்கொண்டு ஒருகணம் சிந்தித்தார். "இருள் சூழ்ந்த இவர்களின் வாழ்வுக்கு ஒளியூட்டும் கைங்கரியத்தை நான் ஏன் செய்யக்கூடாது" என்ற வினா அவர் மனதில் ஓங்கியொலித்தது. அ த ன் வி  ைள வு , அ ன் று மு த ல் அன்னை யவர்களின் கண்கள் கண் பார்வையற்றோ ருக்காகப் பார்க் கத்
தொடங்கின. வாய் அவர்களுக்காகப் பேசத்
வாழ்வகம்
 

தொடங்கியது. தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அவர்களுக்காக அர்ப்பணிக்கத் துணிந்தார் அவர்.
29.01.1971 தொடக்கம் 31.12.1971 வரை மகரகம ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் விசேட கல்வி டிப்புளோமாக் கற்கைநெறியினை சிங்களமொழிமூலம் மேற்கொண்டார். அன்னை அவர்களின் கற்றல் ஆர்வமும், நற்பண்புகளும் அவருக்கு எல்லோர் மத்தியிலும் நன் மதிப்பைப் பெற்றுத்தந்தன.
இலங்கையிற் கண் பார்வையற்ற
மாணவர்கள் சாதாரண பாடசாலைகளிற் சாதாரண மாணவர்களோடு இணைந்து கல்வி கற்பதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் இலங்கை ஒருமுகப்படுத்தப்பட்ட கல்வித்திட்டம் 1972ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இலங்கை யின் தென்பகுதிகளிலே ஒருமுகப்படுத்தப்பட்ட கல்வித்திட்டத்தின் கீழ் பணியாற்று வதற்குப் பலர் முன்வந்தனர். ஆனால் யாழ்ப்பாணத்தில் இப்பணியினை முன்னெடுப்பதற்கு யாருமே
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 18
முன்வரவில்லை. இந்த நிலையிற்றான் நமது அன்னையவர்கள் 01.01.1972இல் யாழ்ப்பாணம் வந்து இவ்விசேட ஆசிரியர் பணியினைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அதுவரை இங்கிருந்த பார்வையற்றவர்களுக்கு, கைதடி நவீல்ட் பாடசாலையில் வெறுமனே ஆரம்பக் கல்வி மட்டுமே அளிக்கப்பட்டு வந்தது. அதையும் ஒரு சிலர் மட்டுமே பெற்றிருந்தார்கள். பெற்றவர்களும்கூட அதற்கு அப்பால் எதுவும் செய்ய முடியாதவர்களாய், கல்வியால் ஒரு மனிதன் அடையக்கூடிய எந்த ஒரு பயனையும் அடைய முடியாதவர்களாய் நாட்டுக்கும், வீட்டுக்கும் பயனற்றவர்களாய் நலிவுற்றுப் போயிருந்தனர். A.
இந்த நிலையிற்றான் அன்னையவர் களின் அரும் பணி ஆரம்பமாயிற் று. "பார்வையற்றவர்கள் சாதாரண பாடசாலை களிற் சேர்வதா?" "அங்கு அவர்கள் கல்வி கற்பதா?" "இது நடக்கக்கூடிய காரியமா?" எனப்பலர் ஏளனம் செய்தனர். எள்ளிநகை யாடினர். "இந்த வீண் முயற்சியை விட்டிட்டுப் போய் வேறை வேலையிருந்தாற் பார்" என்று அறிவுரையும் கூறினர். ஆனால் அன்னைய வர்கள் எதற்கும் அசைந்துகொடுக்கவில்லை. தான் வரித்துக்கொண்ட பாதையில் உறுதியுடன் நடைபோட ஆரம்பித்தார். அடைக்கப்பட்டிருந்த கல்விக் கதவுகளைப் பார்வையற்றவர்களுக்காக அகலத்திறக்கும் தனது அரும் பணியில் ஆர்வத்தோடு ஈடுபடலானார். fJITLOh கிராமமாய் வீடு விடாய்ச் சென்று பார்வையற்ற பிள்ளைகளைக் கண்டறிந்து, அவர்களை யெல்லாம் பாடசாலைக்கு அழைத்து வந்தார். போக்குவரத்து வசதிகள் அதிகமில்லாத அக்காலகட்டத்தில் நெரிசல்மிக்க பேரூந்து களிலும் பல சமயங்களிற் கால்நடையாகவும் சென்றே அவர் தன்பணிகளை ஆற்றவேண்டி யிருந்தது. ஆனால், இந்தச் சிரமங்கள்
13 - rܚ 6) Typellef, LD

எதனையும் அவர் எள்ளளவேனும் பொருட் படுத்தவில்லை. தன்பணி ஒன்றிலேயே கண்ணுங் கருத்துமாயிருந்தார். தன் சக்திக்கு மப்பால் மிகவும் அதிகமான மாணவர்களை அரவணைத்து, பல்வேறு சாதாரண பாடசாலை களில் அவர்கள் தமது கல்வியைத் தொடர வழிவகுத்தார். சாவகச்சேரி ட்றிபேக் கல்லூரி, சாவகச்சேரி இந்துக்கல்லூரி, பாஷையூர் புனித அந்தோனியார் பாடசாலை, யாழ். இந்துக் கல்லூரி, சுன்னாகம் இராமநாதன் கல்லூரி, தெல்லிப்பழை யூனியன் கல்லூரி, தந்தை செல்வா வித்தியாலயம், வீமன் காமம் மகாவித்தியாலயம், பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை, பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி என அவர் யாழ் குடாநாடு முழுவதையுமே ஏறத்தாழ சுற்றிவந்தார்.
அன்னை அவர்களின் அரும் முயற்சிகள் வீண்போகவில்லை. அவர்பணி ஆரம்பித்து ஏறத்தாழ எட்டு ஆண்டுகளிலேயே செல்வி
மங்களராணி கிறிஸ்தோபர் என்ற அவரது முதல்
மாணவி பட்டதாரியானார். அதனைத் தொடர்ந்து திரு.வொட்ஸ்வேத், திரு பகீரதன், செல்வி ஜோதீஸ்வரி, திரு.ரவீந்திரன், செல்வி.ரஞ்ஜினி, திருஇதயராஜன், திரு.சாள்ஸ்
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 19
என இப்பட்டதாரிகள் பட்டியல் நீண்டுசெல்லத்
தொடங்கியது. அன்னையவர்கள் அடைந்த பூரிப்புக்கு அளவேயில்லை. இன்னும் இன்னும் அதிகமான வேகத்தோடு பணியாற்ற முனைந் தார். ஆனால் அவரின் மனோவேகத்துக்கு அவரின் உடலால் ஈடுகொடுக்க முடியவில்லை. முதுமையும் அதனால் ஏற்பட்ட தளர்ச்சியும் மெல்லமெல்ல அவரை ஆக்கிரமிக்கத் தொடங்கின. அத்தோடு நாளுக்குநாள் மோசமடைந்து வந்த நாட்டுச் சூழ்நிலையும் அவரை வெகுவாக அலைக்கழித்தது.
எண்பதுகளின் இறுதிப் பகுதியில், தான் ஒய்வு பெறுகின்ற காலம் நெருங்கிவந்த நிலையில் தன்பணியைத் தொடரக்கூடிய வேறு ஆசிரியர்களை நியமிக்குமாறு அரசிடமும் வேறு தரப்புக்களிடமும் பல வேண்டுகோள்கள் விடுத்தார். ஆனால், பயனேதும் ஏற்படவில்லை. இந்நிலையில், பார்வையற்ற மாணவர்கள் தங்கியிருந்து தமது கல்வியை மேற்கொள்ளக் கூடிய கவிநிலைகொண்ட இல்லம் ஒன்றினை
அமைக்கவேண்டும் என்ற எண்ணம் அவர்
வாழ்வகம் 0
 

மனதில் உதயமாயிற்று. அதன் பயனாய் 1988இல் வாழ்வகம் உதயமாயிற்று. இவ் அரும் முயற்சிக்கு அன்னையவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியவர்களுள் சிவத்தமிழ்செல்வி, அமரர் தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையாரும் ஒருவராவார்.
1990இல் அன்னையவர்கள் தன் ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வுபெற்றது முதற்கொண்டு, தன்னை முழுவதுமாகவே வாழ்வகத்துக்கே அர்ப்பணித்து, அதன் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டார்.
எத்தனையோ இன்னல்கள், இடப்பெயர்வுகள், அத்தனைக்கும் தனியொருவராய் நின்று ஈடுகொடுத்தார். ஈற்றில் வாழ்வகத்தை அதன் சொந்த வதிவிடத்தில் நிலைநிறுத்துவதிலும் வெற்றிகண்டார்.
அன்னையவர்கள் எதையும் ஆழமாய்ச் சிந்தித்து தீர்க்கமாய் முடிவெடுப்பார். அவர் ஒரு முடிவெடுத்துவிட்டாற் பின்பு அதை யாராலும் மாற்ற முடியாது. தான் தன் உயிரைவிட மேலாக நேசிக்கின்ற வாழ்வகத்தைத் தனக்குப்பின் யார் நிர்வகிப்பது என்பது பற்றியும் அவர் தீர்க்கமாக முடிவெடுத்திருந்தார். அவர் எண்ணிய யாவுமே எண்ணியவாறு ஈடேறின.
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 20
அம்மாவும், அடியேனும்
அது 1978 ஆம் ஆண்டு அப்போது நான் கைதடி நவீல்ட் பாடசாலையில் கற்றுக் கொண்டிருந்தேன். ஏதோ ஒரு அலுவலாக அங்கு வந்த அம்மா என்னைக் கண்டு கொண்டார். என் கையைப்பற்றி, “தம்பி, உங்களுக்கு நோமல் ஸ்கூலிலை சேர்ந்து படிக்க விருப்பமா?” என்று அன்பு ததும்பக் கேட்டார். நான் எதையும் சிந்திக்காமலே “ஆம்”, என்றேன். அம்மாவின் முயற்சியால் அந்த ஆண்டே நான் யாழ் இந்துக் கல்லூரியில் சேர்ந்துகொண்டேன். அந்த முதல்நாள் நினைவுகள் இப்போதும் மனதில் பசுமையாய் விரிகின்றன. அம்மா என்னைத் தன்னோடு நடந்துவருமாறு கூறினார். நான் தட்டுத் தடுமாறி அம்மாவின் கையைர் பிடிக்க முயன்றேன். “ஒரு பயமுமில்லை. தைரியமாய் நடந்துவாரும்” என்றார் அம்மா. அந்த வார்த்தை இன்று என்னை நம்பிக்கையோடு வாழ வைத்துக் கொண்டிருக்கின்றது என்பது இப்போது எனக்குப்புரிகிறது.
எங்கள் பூர்வ புண்ணியப் பயனோ
என்ன வோ அம்மா வுக் கும் எங்கள் குடும்பத்துக்கும் மிக நெருக்கமான உறவிருந் தது. 1988 ஆம் ஆண்டு தெல்லிப்பழையில் வாழ்வகம் ஸ்தாபிக்கப்பட்டபோது என் பெற்றோர்களையே அவ்வில்லத்துக்கு முதலில் பால் காய்ச்சுமாறுபணித்தார்.1997ஆம் ஆண்டு வாழ்வகம் மானிப்பாயில் தனது பணிகளை
வாழ்வகம் (
 

ஆரம்பித்தபோது என் பெற்றோர்களையே
முதலிற் பால் காய்ச்ச அழைத்தார். பின்னர் 2002 ஆம் ஆண்டு வாழ்வகம் சுன்னாகத்திலுள்ள தனது சொந்த வதிவிடத்தில் கால் பதித்த போதுங்கூட, என் பெற்றோர்களே அங்கும் பால் காய்ச்சி அந்த இல்லத்தின் செயற்பாடுகளை ஆரம்பித்துவைக்கும் பேறுபெற்றனர். அது மட்டுமல்ல 2004 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப் பட்ட எங்கள் இல்லத்திற்கூட (காப்பாளர் இல்லம்) என் பெற்றோர்களே முதலிற் பால் காய்ச்சினர்.
தனக் குப் பின் வாழ்வகத்தைத் தொய்வேதுமின்றி நடத்தக்கூடிய ஒருவரைத் தேடி அம்மா அங்குமிங்கும் அலைந்ததும் சதா அந்த சிந்தனையிலேயே ஆழ்ந்து தவித்ததும் எனக்கு நன்கு தெரியும். ஏனோ ஈற்றில் அம்மாவின் கவனம் என் மீது குவிந்தது.
அன்றொருநாள் மானிப்பாய் சத்தியசாயி சமித்தியினரால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த ஆன்மீகக் கண் காட்சி யொன்றைப் பார்வையிட்டுவிட்டு, நானும் என் மனைவியும் மகனும் அம்மாவைப் பார்க்க வாழ்வகம் சென்றோம். தன் வழமையான புன்முறுவலோடு எங்களை வாய் நிறைய வரவேற்றார். நாம் வந்த களை ஆறமுன்னமே அம்மாவின் வாயிலிருந்து அந்த வார்த்தைகள் வந்தன. 'ரவி எனக்குப்
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 21
பிறகு வாழ்வகத்தை நீங்கள்தான் நடத்த வேணும். நான் முடிவெடுத்திட்டன்’ என்றார். நான் அதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. “என்னம்மா சொல்லிறீங்கள்.” என்று ஏதோ சொல்ல வாயெடுத்தேன். “ஒண்டும் கதைக்கவேண்டாம். நான் முடிவெடுத்திட்டன்”
என்றார் அம்மா.
2002 ஆம் ஆண் டு வாழ்வகம் சுன்னாகத்திற் கால்பதித்தபோது, அம்மா முழுமூச்சோடு முயன்று இரண்டு ஆண்டுகளி லேயே காப்பாளர் இல்லத்தைக் கட்டிமுடித்தார். “என்ரை உடல் நலத்திலை எனக்கு நம்பிக்கை யில்லை. நான் இருக்கிறபோதே நீங்கள் வந்து பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள வேணும்” என்று விடாப்பிடியாய் நின்றார். நானுண்டு என் குடும்பமுண்டு என்று ஆனந்தமாய், சுதந்திரமாய் வாழ்ந்துவந்த அம்மாவின் வார்த்தையை அத்துணை இலகுவாய்த் தட்டிக் கழிக்கவும் முடியவில்லை. வேறு வழியேதுமின்றி நான் 2004 பெப்ரவரி மூன்றாம் திகதி தொடக்கம் அம்மாவின் நிழலில் என் குடும்பத்தோடு குடியேறினேன்.
அம்மாவின் அன்பு மழையில் நனைந்த அந்த நாள்களை எப்படி மறக்கமுடியும்? என்ன உணவு சமைத்தாலும் அதில் எங்களுக்குமொரு பங்கு அனுப்புவார். தன்னிடம் வருகிறவர்கள் போகிறவர்கள் எல்லோருக்கும் “இவர்
வாழ்வகம் C
 

என்னுடைய மாணவன் வாழ்வகத்தின் வருங்காலத் தலைவர்” என்று வாய் நிறைய அறிமுகப்படுத்துவார்.
மாலை நேரங்களில் எதிரெதிராய் அமர்ந்திருந்து அம்மாவோடு மணிக் கணக்காகப் பேசிய அந்த நாள்கள். தன் அனுபவங்கள், தன் ஆலோசனைகள். தன் பட்டறிவு எல்லாவற்றையும்கூறி, அம்மா என்னை அற்பு த மா ய் ஆற்றுப் படுத் தினார், திடப்படுத்தினார் என்றுதான் சொல்ல வேண்டும். வாழ்வகம்பற்றி அம்மா கண்ட கனவுகள் ஒன்றல்ல இரண்டல்ல. உதிக்கின்ற சிந்தனைகளையெல்லாம் உடனேயே என்னிடம் வந்து சொல்லுவார். “நான் மறந்தாலும் நீர் மறந்துபோகாதையும்” என்பார்.
எனது வீட்டுத் தேவைக்காக ஒரு கணினி யை வாங்கி, அதிற் பேசும் மென்பொருளை இணைத்து, அம்மாவிடம் காண்பித்தபோது அம்மா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. “கெதியாய் இதைப்படியும், உந்தப் பேப்பர்கள் பயில்களையெல்லாம் ஒரு மூலையிலை கட்டிவைச்சிட்டு, கொம்பியூட்டறில் தான் இனிமேல் வாழ்வகத்தின் ரை வேலையளையெல்லாம் செய்யவேணும்” அம்மா உணர்ச்சி பொங்கக் கூறியது இன்று போலுள்ளது. “அம்மா, இன்று வாழ்வகத்தில்
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 22
ஒரு கணினி அலகு உருவாகிவிட்டது. உங்கள்
பிள்ளைகள் இப்போது கணினி கற்கிறார்கள். உங்கள் மூத்தபிள்ளை கணினியை நன்றாகவே பயன்படுத்த ஆரம்பித்துவிட்டான். உங்கள் கனவுகள் எதுவுமே வீண்போய்விடவில்லை.”
ஆரம்பத்தில் அம்மாவை நான் "ரீச்சர்” என்று தான் அழைத் தேன். ஆனால் பிற்காலத்தில் “அம்மா’ என்று அவூழக்கத் தொடங்கிய நாள்முதல் மறந்துங்கூட, நான் "ரீச்சர்” என்று அழைத்ததில்லை. அம்மா, அம்மா, அம்மா வேதான். அம்மாவோடு எப்போதும் நான் சிரித்துப் பேசிக்கொண்டுதான் இருந்தேன் என்பதில்லை. சிடுசிடுத்திருக் கிறேன். முரண்பட்டிருக்கிறேன், சத்தமாய் சண்டைபிடித்திருக்கிறேன், ஏசியிருக்கிறேன், அம்மாவிடம் நிறைய ஏச்சு வாங்கியுமிருக் கிறேன்.
* எதுவானாலும், அடுத்த நிமிடமே “பிள்ளை, இஞ்சை வாரும்.” என்பார் அம்மா, அதுதான் அம்மா. அதுதான் அம்மாவுக்கும் எனக்குமிடையே இருந்த உறவு.
தன் இறுதி நாள்கள் நெருங்கிவருவதை அம்மா உணர்ந்திருந்தாரோ என்னவோ? “நான் இன்னும் இருக்கப்போறது ஒரு நாளோ ஒரு கிழமையோ ஒரு மாதமோ” என்று அடிக்கடி
வாழ்வகம்
 

கூறிவந்தார். “எனக் கேதுமெண்டால் அங் கையிஞ்சை கொண்டு திரிஞ்சு கஷ்டப்படாதேங்கோ. உதுக்குள்ளை எங்கை யாவது ஒரு மூலையிற்போட்டு விடுங்கோ என்று கூறிவந்தார். அந்த வாய்மொழி வெறும் வார்த்தைகளல்ல என்பது சில நாள்களிலேயே புரிந்தது.
09.09.2006 அம்மாவால் அரவணைக்கப் பட்ட பிள்ளைகள், அவரின் அன்பர்கள் அனைவருமே அதிர்ந்து அலறிய அந்த நாள்.
அன்றும் வழக்கம் போல் அம்மா அதி காலையிலேயே எழுந்துவிட்டார். சமையல் உட்பட அனைத்துப்பணிகளிலும் தனக்கே உரிய சுறுசுறுப்புடன் ஈடுபட்டார். மதியம் தனது பிரியமான மாணவர்களில் ஒருவரான திரு.இதயராஜனுடன் (கல்விமுதுமாணிக் கற்கை நெறியினை மேற்கொள்வதற்காக மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்திருந் தார்) பேசியவாறே மதிய உணவருந்திவிட்டு சற்று அசதியா யிருப்பதாகக் கூறிப் படுக்கைக்குச் சென்றார். அவ்வளவுதான்; அதன் பின்னர் அம்மா எழுந்திருக்கவேயில்லை. மாலை ஆறு மணியாகியும் அம்மா எழுந்திருக்க வில்லை என்று பார்த்தபோது நெஞ்சே உறைந்து போனது. தரையிலே உணர்வின்றிக் கிடந்தார். அம்மா. சத்தமின்றி வந்த பக்கவாத நோய் அன்னையை மெல்லமெல்ல விழுங்கிக் கொண்டிருந்தது. அவரின் பிள்ளைகள் காலடியிலே நின்று “அம்மா, அம்மா’ என்று அழுதனர். அம்மாவிடமிருந்து ஒரு வார்த்தை யாவது வராதா என்று ஏங்கிக் கதறினர். அம்மா மிகவும் நேசித்த வாழ்வகக் குழந்தை சதுரிக்காவை அழைத்துவந்து “அம்மா சது வந்திருக்கிறாள். கண்ணைத் திறந்து பாருங்கோ” என்று கதறினர். ஆனால், ஒன்றும்
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 23
ஆகவில்லை. கனத்த மெளனமே அம்மா விடமிருந்து பதிலாகக் கிடைத்தது.
ஊரடங்குச் சட்டம் ஒருபுறம். மின்வெட்டு மறுபுறம் தொலைபேசிகள் சரிவர இயங்காமை மற்றொரு புறம் எப்படியோ ஒரு அம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அம்மா மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அம்மா மீண்டும் வருவார். அந்தக்குரல் வாழ்வகத்தில் மீண்டும் கேட்கும் என்று எல்லோருமே எண்ணினர்
ஏங்கினர். ஆனால், எதுவுமே நடக்கவில்லை.
11.09.2006 மதியம் அம்மா அமைதியாய்
ஆண்டவன் பதம் சேர்ந்தார்.
“இன்றுதான் நாம் கண்ணிழந்தோம்” என்று அவரின் பிள்ளைகள் கதறிப் புலம்பினர். “எங்களுக்குக் கண் தெரியாதெண்டு இவ்வளவுநாளும் நாங்கள் உணரேல்லை. இப்பத்தான் அது தெரியிது.”
புலோரன்ஸ் நைற்றிங்கேல், அன்னை திரேசா போன்ற அற்புதப் பெண்மணிகள் வரிசையில் நிச்சயமாக எங்கள் அன்னையும் இடம் பெற வேண்டிய வர் (கலா நிதி திருநாவுக்கரசு கமலநாதன்)
g, /* pi f) { தமிழ்ச்ی (ه
வாழ்வகம் 09
 

சுத்தம் நமது அன்னையவர்களின் சொத்து. அவரது அறையில் மருந்துக்குக்கூட ஒரு அழுக்குத்துணியைக் காணமுடியாது. தான் எப்போதும் சுத்தமாக இருப்பார். தன்
பிள்ளைகளையும் சூழலையுங்கூட எப்போதும் சுத்தமாகவே வைத்துக்கொள்வார். சமையல் கலையில் அம்மாவுக்கு நிகர் அம்மாவேதான். புடலங்காயிற்கூட அதி அற்புதமான கறி சமைக்க அம்மாவுக்கு மட்டும்தான் தெரியும். விதம் விதமாய் சமைத்து, தானே முன்னின்று அவற்றைப் பரிமாறி, மற்றவர்கள் மகிழ்ந்து உண்ணுகின்ற அழகைக் கண்டு உள்ளம் பூரிக்கின்ற உன்னதப் பிறவி அவர். மணக்க மணக்க அம்மா சுடுகின்றதோசையை பொங்கிப் பூரித்துப் பூவாய் இருக்கின்ற அந்த இட்டலியை சுவைத்தவர்களுக்குத்தான் அருமை புரியும். “இன்னுமொரு தோசை போடிறன். சுடச்சுட நல்லாயிருக்கும்.” அம்மா தருகின்ற அந்தத் தோசை எந்தக் காலத்திலும் இனிக் கிடைக்காது. யாருக்காவது இருமல், சளி என்று வந்து விட்டால் போதும்; தூதுவளை, கற்பூரவள்ளிதொடக்கம் வேர்க்கொம்பு, கொத்த மல்லிவரை எதையெதையோ எல்லாம் தேடி அம்மா ஒரு குடிநீர் தயாரித்துவிடுவார். அவ்வளவுதான் சளியும் இருமலும் வந்த வழியாலேயே சென்றுவிடும்.
சங்கம்
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 24
சேவைக்கு இலக்கணமாய் வாழ்ந்தவ எங்கள் அம்மா. அவரைத்தன் தேவைக்காகத் தன்னோடு அழைத்துக்கொண்டான் இறைவன் வேராக மறைந்து வாழ்ந்து நாமெல்லா விருட்சங்களாய் நிமிர்ந்து நிற்கத் துணை செய்தவர் எங்கள் அம்மா. இந்த ஊருள்ளவை உலக முள்ள வரை நிச்சயம் அம்ம நினைவுகூரப்படுவார்.
ஆண் ட வன் சந் நிதி யிலிருந் அம்மாவின் அருண்மழை நம் அனைவர் மீது பொழிவதாக,
9
வாழ்வகம்
 

ஒளியிழந்த கண்களுக்கு
ஒப்பற்ற கல்வியெனும்
விலையில்லா ஒளிகொடுக்கும்
வேள்வியதை வாழ்வாக்கி
நிலைபெற்ற புகழ்கொண்ட
நேசத்தாய் நிமிர்வோடு
மலைபோல நிலைநிற்கும்
О d d மான்புடைய மங்கையிவர்
கொழும்பு கம்பன் கழகம் 2005ஆம் ஆண்டு நமது அன்னையவர்களுக்கு விருது வழங்கிக் கெளரவித்தபொழுது தன்மதிப்பினை மேன்மேலும்
உயர்த்திக்கொண்டது.
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 25
மறைந்த கெளரவ பாராளுமன்ற உறுப்பி
வாழ்வகம்
 

ார் தி.மகேஸ்வரன் அவர்களுடன் அன்னை
11
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 26
O1.
O2.
O3.
O4.
O5.
O6.
O7.
O8.
1O.
11.
13.
14.
15.
16.
17.
18.
19.
参 bungp605LD
suLoir disfirmGT shifGTSuL'afidi fiùT ഖrgഖ| sui] d
செல்வி,மங்களராணி கிறிஸ்தோபர் சிறப்புக்கலைமானி ஆசிரியர் (தற்போது அ திருவோட்ஸ்வேத், இசைக்கலைமானி இசைநடனக்கல்லூரி. திரு.ப.பகீரதன் சிறப்புக்கலைமானி. செல்வி.ஜோதீஸ்வரி வைத்திலிங்கம் திரு தற்போது கனடாவில் வசிக்கிறார். திருஆரவீந்திரன் பொதுக்கலைமானி விரிவுரையாளர், யாழ்ப்பாணம் தேசிய கல் செல்விரஞ்ஜினி விஜயரட்ணம், பொதுக்க திருஆபரமேஸ்வரன், பொதுக்கலைமான திருநா.இதயராஜன், பொதுக்கலைமாணி.அ திரு.ப.கமிலஸ், சிறப்புக் கலைமாணி, உத்தியோகத்தர். திரு.க.ஆனந்தராசா, பொதுக்கலைமானி, ஆ
திரு.ப.பூரீகமலன், முதுமானி, தற்போது கன
திருரகௌரீசன். செல்வி, பெனடிக்ரா செபமாலை, ஆசிரிய தொழிலதிபர், இங்கிலாந்தில் வசிக்கிறார். 6 உதவிகள் வழங்கி வருகின்றார். திரு.க.தருமசேகரம், சிறப்புக்கலைமா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். திருதுயசிந்தன், பொதுக்கலைமாணி, சமூக செல்வி, நகுலாம்பிகை கந்தர், பொதுக்கலை திரு.ஏ.ரீ.பிரபாகரன், இசைக்கலைமானி திரு.ஸ்ரனி அற்புதராஜ், சட்டமானி. தமிழ்பேசும் விழிப்புலனற்றோரில் முதல் தனதாக்கிக்கொண்டார்.
இவர்களைவிட இன்னும் பல மாணவர்க
பயனடைந்துள்ளனர்.

ாத்தம்பி அவர்களின் அரும் முயற்சியாற் Harfis Trist.
(திருமதி.மங்களராணி சுப்பிரமணியம்) அமரராகிவிட்டார்) விரிவுரையாளர், மட்டக்களப்பு விபுலானந்த
மதி.ஜோதீஸ்வரி பிரபாகரன்), பொதுக்கலைமானி,
1. கல்வி டிப்ளோமோ, கல்வி முதுமானி, வியியற்கல்லூரி, தலைவர், வாழ்வகம். லைமானி, ஆசிரியர். ரி, கலாசார உத்தியோகத்தர், மட்டக்களப்பு. அரச உத்தியோகத்தர்,கொழும்பு.
விழிப்புலனற்றோருக்கான அபிவிருத்தி
ஆசிரியர், கிளிநொச்சி. டாவில் வசிக்கிறார்.
jff, D6óT6OTTńf.
பாழ்வகத்துக்குத் தொடர்ச்சியாகப் பல்வழிகளில்
னி, முன்னாள் தற்காலிக விரிவுரையாளர்,
சேவை உத்தியோகத்தர் மானி, சமூகசேவை உத்தியோகத்தர்
ாவது சட்டத்தரணி என்ற பெருமையினைத்
ள் வெவ்வேறுமட்ட நிலைகளிற் கல்வி கற்றுப்
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 27

(uəųɔeəL) ÁųļueuụsỊux's'suwi :ļuəsq\/
‘ueųļussef Law oueuexoseuueųL'X'uw oueueųəəaeg'X'Auw a'r ueueunxeassos'uw : Buļpuess Áue:wsə3'X''Goss/W (suəpssəud əɔ|A)uempuəəaeg? Wosuw
'(juepisodd) ueupuɔɔAeg ov ww (Aueņaupəs) qeseueųqueueŝo,suW '(uəunseəul)ueųąeueỊeuue), od su W. : (8-1) Buļļļļs

Page 28


Page 29
தனக்கென வாழாப் பிறர்க்கி
.—
இந்த உலகம் தோன்றி நின்று அழிந்து கொண்டிருக்கிறது. தோன்றுதலும், நிலை நிற்றலும், அழிந்து போதலும் என்றும் சங்கிலித் தொடர்போல நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. அதனால் இந்த உலகை நில்லா உலகு என்று
பெரியோர் சொல்வர்.
மனித வாழ்வும் அத்தகையதே. பிறத்தலும், சிறிது காலம் வாழ்தலும், பின்னர் இறத்தலும் இயற்கையே. இறத்தல் அல்லது மறைதலில் உடல் மட்டுமல்ல, அவரது நினைவும் இல்லாது மறைந்து போகின்றது. ஆனால், பல்லாயிரத்தில் ஒருவர் மட்டும் என்றும் இறவாப் பெரு வாழ்வு பெற்றோரா யிருப்பதை அறிகின்றோம். இது எப்படிமுடிகின்றது.
புறநானூறு என்னும் அறநூல் இதற்கு விடை தருகின்றது. தனக்கென வாழ்பவர் நினைவு நீர்மேல் எழுத்துப்போல அவர் இறந்ததும் மறைந்துவிடும். பிறர்க்கென வாழ்பவர் நினைவும் வாழ்வும் எக்காலத்தும் கல்மேல் எழுத்துப் (கற்சாசனம்) போல நிலைத்திருக்கும். தனக்கென வாழாப் பிறர்க்குரியாளராய் வாழ்பவரே பிறவாப் பெருவாழ்வு வாழ்வோராவர். இதனைப்
Վ{DIETցgյIII]]
"தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர் உண்மையின்
உண்டால் அம்ம இல்வுலகு"
என உணர்த்துகின்றது. அப்படிப் பட்டோராற்றான் இந்த உலகும் அழிந்து ஒழிந்து
arrissuesis

கன வாழ்ந்த பெருமாட்டி
ーイ சண்முகம் சிவகுமாரன், J.P இளைப்பாறிய கிராம அலுவலர்
போகாமல் நிலைபெற்றிருக்கிறது என்பது
உண்மை.
எங்கள் கண்முன்னே பிறர்க்கென வாழ்ந்து இறவாப் பெருவாழ்வு பெற்றவர் வாழ்வக அன்னை அன்னலட்சுமி சின்னத்தம்பி அவர்கள். இவர் விழிப்புலன் இழந்தோர்க்காக வாழ்ந்து, அவர்களை வாழவைத்த செயற்கரிய செயல் செய்த பெருமாட்டி என்பதில் எவர்க்கும்
மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.
விழிப்புலன் இழந்த பிள்ளைகளைப் பொறுப்பேற்று அவர்களுக்கு இருப்பிடமும், கல்வியும், கலையும், ஒழுக்கமும், தியாக வாழ்வும் பயிற்றி வாழவைத்த செயல்; மற்றவர்கள் நினைக்கவும் கற்பனை பண்ணவும் முடியாத
பெருமைக்குரியது.
கண்பார்வையுள்ளவர்களுக்கே கல்வியும், ஒழுக்கமும், நல் வாழ்வும் பயிற்றமுடியாமல் திண்டாடுகின்ற இந்த உலகில், கண்பார்வை இல்லாத பிள்ளைகளுக்கு இத்தனையும் செய்ய வல்லவர் ஒருவர் இருந்தார் என்றால், அவர் என்றும் இறவாப் பெருவாழ்வு உடையவரே. உ+ம்: வாழ்வக அன்னை அன்னலட்சுமி
சின்னத்தம்பி
ஆரம்பத்தில் விழிப்புலன் இழந்த பிள்ளைகளுக்குக் கல்வி புகட்டுதலையே தொழிலாகக் கொண்ட இவர், LS6iT6OTf
3
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 30
அவர்களை வாழவைத்தலையே தன் வாழ்வாகக்
asrar m.
இன்று பல்கிப் பெருகிப் பெருநிலப் பரப்பிற் பெரிய பெரிய கட்டடங்களுடன் காட்சிக் கும் கருத்துக்கும் விருந்தாகத் திகழ்கின்ற வாழ்வகம்; அன்று அன்னை சின்னத்தம்பியின் உள்ளத்தில் உருவாகி, ஒருவராக நின்று உருவாக்கி, இப்பணியின் பெருமையை அறிந்த பல பெரியார்களின் துணைகொண்டு வளர்ந்த
நிலையம் ஆகும்.
"இப்பணிக்கெனவே பிறந்த தியாகப் பிறப்பு, ஆடம்பரமற்ற எளிமையான வாழ்வு, அதிகாரமில்லாமல் அன்பு செலுத்துகின்ற இயல்பு, சொன்ன சொல்தவறாத வாய்மை, கருணையும், கண்டிப்பும் நிறைந்த அணுகு முறை" இப்பண்புகள்தான் அன்னையின் செயற்கரிய இப்பெரும் பணிக்குக் காரண
மாயமைந்தன.
விழிப்புலன் உள்ளவர்களாயிருந்தும், வாழும் வழிதெரியாமல் தடம்புரளும் இவ்வுலகிற் புறவிழி இல்லாதபோதும் அகவிழியைத் திறந்து வாழும் வழிதெரிந்து வாழ்கின்ற, மற்றவர் களையும் வாழவைக்கின்ற அபூர்வமான மனித மாணிக்கங்களைக் காணவேண்டுமென்றால் வாழ்வகத்துக்குச் சென்று பார்க்கவேண்டும். அத்தனை பேரும் அன்னை சின்னத்தம்பியால் பட்டைதீட்டப்பட்ட மாணிக்கங்களாய் ஒளி
வீசுவதைக் காணலாம்.
கல்வியிலே, கலைகளிலே, பண் பாட்டிலே, வாழ்வுமுறையிலே; எந்தத்துறையிலும் தமது கண்ணைத் திறக்கவைக்கும் ஆற்றல் உள்ளவர்கள் அவர்கள்.
வாழவகம

அன்னையின் பணியை ஆயிரமாக விரிக்கலாம். அத்தனைக்கும் கீழ்க்கானும் ஒரேயொரு உதாரணம் மட்டும்போதுமானது.
எங்கள் நாட்டில் எத்தனையோ ஆதரவற்றோர் இல்லங்கள் இயங்குகின்றன. அவற்றினால் உருவாக்கப்பட்டவர்கள் நல்ல நிலையில் வாழ்கிறார்கள். அதனைக்கண்டு
மகிழ்கின்றோம் பாராட்டுகின்றோம்.
ஆனால் அந்த இல்லங்களினால் உருவாக்கப்பட்டவர்கள் யாராவது பின்னாளில் அவற்றைப் பொறுப்பேற்று நடத்துகின்றார்களா என்றால், விடை காண்பதரிது. தாங்கள் வாழ்கின்றார்களேயன்றித் தம்மை வாழ வைத்தவர்களைப்போலத் தாம் பிறரை வாழ
வைப்போரைக் காணல் அரிது.
வாழ்வகத்தில் மட்டும் இந்த அரிய செயலைக் காணலாம். அன்னை சின்னத்தம்பி அவர்களால் உருவாக்கப்பட்ட விழிப்புலன் இழந்த ஒருவரே கல்விமானாகி, கல்வியியற் கல்லூரி விரிவுரையாளராகி, வாழ்வாங்கு வாழ்ந்துகொண்டு, இன்று வாழ்வகத்தின் தலைவராயிருந்து, மற்றவர்களை வாழவைத்துக் கொண்டிருக்கிறார்.
அவர் தான் பிறர் எ வர்க் கும் முன்மாதிரியாகத் திகழும் இன்றைய தலைவர் திரு.ஆ.இரவீந்திரன் அவர்கள்.
அன்னை யின் பெருமை க்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மற்றுமோர் விடயத்தை இங்கு எழுதவேண்டிய கடப்பாடு எனக்கு உள்ளது. தான் உயிருடன் இருக்கும்
பொழுதே தன்னால் உருவாக்கப்பட்டு, தானே
14
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 31
தலைமைதாங்கித் திறம்பட நடாத்திவந்த வாழ்வக நிர்வாகத்தைத் தனது அரவணைப்பில் வளர்ந்த ஆ.இரவீந்திரன் அவர்களைத் தலைவராக்கி அவரிடம் முழுபொறுப்பையும் கையளித்துவிட்டு, அவரது நிர்வாகத்தின் திறமையைக்கண்டு ஆனந்தக் கண்ணிர்
சொரிந்து அவரை வாழ்த்திய பெருமை, நான்
அவரைப் போற்றி நாமும் முயற்சி செ
- لا
கலாசாலைத்தோழியருடன் அன்னை
வாழ்வகம் 1:
 

அறிந்தவரையில் வாழ்வக அன்னையைத் தவிர, வேறு எவருக்குமே பொருந்தாது.
தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளராக வாழ்ந்த பெருமாட்டி அன்னை அன்ன லட்சுமியின் தியாக வாழ்வே வாழ்வு. அவர் வாழ்வகத்திலே தெய்வமாக வாழ்கிறார்.
அவர் வழியிலே வாழ ய்வோம்.
காப்பாளர் இல்லத் திறப்புவிழாவில்
அன்னையவர்கள்
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 32
விழிப்புல வலுவிழந்தோருக்
உதவிகளும் சீர்மியமும் 一ー us
முன்னாள் உ
விழிப்புல வலுவிழந்தோர் எனப்படுவோர் யார்? 20 சென்ரி மீற்றருக்கும் 200 மீற்றருக்கும் இடையில் உள்ள பொருள்களை மூக்குக் கண்ணாடியின் துணைகொண்டும்கூடத் தெளிவாகப் பார்க்கமுடியாதோரும், பார்வைக் கோணம் 20யை விடக் குறைவாக இருப்போரும் சட்டப்படி விழிப்புல வலுவிழந்தோர் அல்லது
மாற்றுவலு உடையோர் என அழைக்கப்படுவர்.
உலகத்திலே பல வகையான குருடர்கள் இருக்கின்றனர். எந்த வகையான தொழிலும் செய்து சம்பாதிக்க முடியாதவர்களைப் பொருளாதாரம்சார் குருடர்கள் எனலாம். ஒரு தொழிலிற்கூட நிலைத்துநின்று பணிபுரிய முடியாதவர்களைத் தொழில்சார் குருடர்கள் எனலாம். சாதாரண பாடசாலைக் கற்றல் முறைகளிற் கற்க முடியாதவர்களைக் கல்விசார் குருடர் எனலாம். ஆயினும் சமூகம் இவர்கள் யாரையும் குருடர்' என அழைப்பதில்லை. எ வரும் உடல் உறுப்பில் ஒரு குறை உடையோரையே அவ்வாறு அழைக்கிறது. ஆகவேதான் ஒரு நாகரிக சமூகத்தில் அவர் களைச் சுட்டுவதற்கு அந்தச் சொல் பயன் படுத்தப்படாமல், விழிப்புல வலுவிழந்தோர் அல்லது மாற்று வலுவுடையோர் என்ற சொற் றொடர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
மிக ஆரம்ப காலத்தில் வலுவிழந்தோரைச்
சமுதாயம் ஒருவகைப் பயத்துடன் பார்த்தது. சிறிது காலத்தின் பின்னர் அவர்களை
வாழவகம

TT
ーイ கோகிலா மகேந்திரன், தவிக்கல்விப் பணிப்பாளர். வலிகாம கல்வி வலயம்
அனுதாபத்துடன் அணுகியது. மேலும் நாகரிகம் வளர வளரச் சமூகம் அவர்களை ஏற்றுக் கொண்டது. அதன்பின் அவர்களுக்கு அளவுக்கு மீறிய மதிப்புக் கொடுக்கத் தொடங் கியது.
நாங்கள் மாற்று வலுவுடையோரைச் சகல விதத்திலும் சமத்துவத்துடன் ஏற்றுக் கொள்வதே சிறந்தது என்பது உளவியலாளர் களின் கருத்தாகும். விழிப்புல வலுவிழந்தோர் பலர் மற்றவர்களில் தங்கியிருப்பதற்குக் காரணம் சமூகம் அவர்களை நடத்தும் முறைமையே தவிர, அவர்களின் வலுவிழப்பல்ல என்பது ஊன்றிக் கவனிக்கவேண்டிய உண்மை யாகும். உணர்வுகள், மொழி, அசைவுகள் ஆகிய வற்றின் முதல் ஆசிரியர்களான பெற்றோர் இவ்விடயம் தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தவேண்டும். விழிப்புல வலுவிழந்த பிள்ளை ஒன்று குடும்பம் ஒன்றிற் பிறக்கும் போது அக்குழந்தை மற்றைய குழந்தைகளைப் போலவே சொந்தக்காலில் நிற்கக்கூடியது என்ற நம்பிக்கை பெற்றோர்களுக்கு ஏற்பட வேண்டும். கற்றலுக்கான போதிய தூண்டல்கள் அன்புடன் வழங்கப்படல் வேண்டும். எந்த வகையிலும் அக்குழந்தை புறக்கணிக்கப்படக் கூடாது. எல்லாக் குழந்தைகளையும் போலவே உணவு, நீர், ஒட்சிசன், நித்திரை, புலன்தூண்டல், அன்பு, பாதுகாப்பு, கணிப்பு என்ற அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் பெற்றுக் குழந்தை வளர்ந்து வரவேண்டும். புலன் தூண்டல் தேவை
தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படலாம்.
16 நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 33
இக்குழந்தை விழிப்புலன் தூண்டலைப் பெற முடியாது என்பதால் ஏனைய புலன்களான காது, மூக்கு, நாக்கு, தோல் என்பவற்றின் உணர் திறனைச் சிறப்பாக வளர்த்தெடுக்க உதவலாம்.
தொடர்ந்து வளரும் இப்பிள்ளை முன் பள்ளிக்கும் பாடசாலைக்கும் செல்லும்போது இப்பிள்ளைக்கான கல்வி விசேட முறையில் வழங்கப்படும். அதே சமயத்தில் பிள்ளையின் சுய கணிப்பு உயர்வில் மிக முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும். பாடசாலையில் நடைபெறும் எல்லாவிதமான இணைபாட விதானச் செயற்பாடுகளிலும் இப்பிள்ளை கலந்துகொள்ளச் சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும். அதே சமயத்திற் விழிப்புல வலுவிழந்த பிள்ளை என்ற அனுதாபத்திற்காகப் பரிசு வழங்குவது தவிர்க்கப்படவேண்டும்.
மொத்தமான விழிப்புல வலுவிழப்புக்களில் 49% ஆனவை பிறப்பிற்கு முன்பான காரணி களில் தங்கியுள்ளன. பிறக்கும்போதே அந்த நிலையில் இருக்கும் பிள்ளை, இருந்த ஒன்றை அல்லது அனுபவித்த ஒன்றை இழந்துபோன, இழப்புத் துயரைப் பெறுவதில்லை. அது அனுகூலமான விடயம். கர்ப்பமாக இருக்கும் தாய் ஜேர்மன் சின்னமுத்துவாற் பாதிக்கப் படுதல், குழந்தை பிறக் கும் போதே வலுவிழப்பைக் கொண்டிருப்பதற்கு ஒரு முக்கிய காரணியாகும். குழந்தை பிறந்த பின்னர், கண்ணிற் காயமேற்படுதல், கண் நஞ்சூட்டப் படுதல். மூளை, விழித்திரை, கபச்சுரப்பி ஆகிய வற்றில் ஏற்படக்கூடிய கட்டிகள், மைய நரம்புத் தொகுதியில் ஏற்படும் சில நோய்கள் போன்றவை விழிப்புல வலுவிழப்புக்குக் காரண மாகலாம். ஆயினும் மேலும் பலரது விழிப்புல வலுவிழப்புக்குக் காரணம் தெரியாமலும்
உள்ளது.
வாழ்வகம்

ஆகவே ஒரு தாய் கர்ப்பமுற்றிருக்கும்போது ஜேர்மன் சின்னமுத்துவுக்கு எதிராக நிர்ப்பீடனம் செய்து கொள்வதும், கர்ப்பிணித் தாயும் பிறந்த பின் குழந்தையும் வேறு தொற்று நோய்கள் தொடர்பாகப் போதிய தவிர்த்தல் வழிகளைப் பின்பற்றிக் கொள்வதும், பிறந்த வுடன் குழந்தையின் கண்ணை நன்கு பரீட்சித்துப் பார்த்துக் கொள்வதும். பின் காலத்திற்குக் காலம் கண் பார்வையை மதிப்பிட்டுக் கொள்வதும், கண்ணிற் காயங்கள் ஏற்படுமிடத்து உடனேயே விசேட கண் வைத்திய நிபுணரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வதும் விழிப்புல வலுவிழப்புக்கான நிகழ்தகவைப் பெருமளவு குறைக்க உதவும் வழிமுறை களாகும்.
குறிப்பிட்ட சில ஆயுதங்கள், விளையாட்டுப் பொருள்கள், வெடிமருந்துகள் போன்றவற்றைக் குழந்தைகள் பாவிக்கமுடிய்ாத வகையிற் சட்ட ரீதியாகத் தடைசெய்வதும் இவ்வகையில் உதவலாம். ஆய்வுகூடத்தில் மாணவர்கள் பரிசோதனைகளைச் செய்யும்போதும், வளர்ந்தவர்கள் தொழிற்சாலைகளிற் பணி புரியும்போதும் கண் பாதுகாப்புக் கவசங்களை அணிதலும் சட்டபூர்வமாக உறுதிப்படுத்தப்
UL6)ITth.
குறும்பார்வை, நீள்பார்வை, அஸ்ரிக் மற்றிசம், வெள்ளெழுத்துப் போன்ற பிரச்சினை கள் பார்வைக் குறைபாடுகள் எனப்படும். கண் வைத்திய நிபுணர் ஒருவர் சிபார்சு செய்யும் மூக்குக் கண்ணாடியால் இவை சரி செய்யப் படலாம். இவை விழிப்புல வலுவிழப்பு என்ற பதத்தினுள் அடக்கப்படுவதில்லை.
வேறு சிலர் வேறு பிரித்து அறிய முடியாதவர் களாக இருப்பர். இது பராம்பரியத்துடன்
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 34
தொடர்புடைய ஒரு குறைபாடு. இதுவும் மற்றும் மாலைக்கண்,வாக்குக்கண் போன்ற பிரச்சினை களும் கண்ணில் வரக்கூடிய பல்வேறு நோய் களும் விழிப்புல வலுவிழப்பு என்ற பிரிவுக்குள் வருவதில்லை. ஆயினும் கண்ணில் ஏற்படும் சில நோய்கள் விழிப்புல வலுவிழப்பை ஏற்படுத்தலாம் என்பதை மறந்துவிட முடியாது.
சில மனிதர்களுக்கு இருள், ஒளி இயை பாக்கம் கடினமானதாக இருக்கலாம். செறிவு கூடிய ஒளியில் இருந்து ஒளிச் செறிவு மிகவும் குறைந்த இடத்திற்குச் செல்லும்போதோ அல்லது மறுதலையாக வரும்போதோ சிறிது நேரத்திற்குப் பார்வை இல்லாது போவதான உணர்வு ஏற்படலாம். ஆயினும் சிறிது நேரத்தின் பின் அந்த இயைபாக்கம் நடந்துவிடும். வேறு சில மனிதர்கள் ஒளி அச்சம் உடையவர்களாக இருப்பர். ஒளி இருக்கும் இடங்களை இவர்கள் தவிர்க்க முனைவதால் பார்வையிற் பிரச்சினை இருப்பது போன்ற தோற்றப்பாடு காணப்படலாம். ஆயினும் இவையும்கூட விழிப்புல வலுவிழப் புடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் இல்லை எனக்
கொள்ளலாம்.
குழந்தை ஒன்று பிறந்தவுடனேயே ஒளிக்கு உணர்வுள்ளதாக இருக்கும். ஏறத்தாழ எட்டாவது வாரத்தில் உலகம் முழுவதையும்
கண்களால் அளக்கும்.
விழிப்புல வலுவிழப்பு ஆரம்பிக்கும்போது அல்லது இருக்கும்போது அவதானிக்கக்
கூடியவை
ஒருவருக்கு விழிப்புல வலுவிழப்பு இருக் கலாம் என்ற ஊக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சில
அவதானங்கள் பின்வருமாறு:-
வாழ்வகம்

1. நடத்தைசார் அவதானங்கள்
1). கண்களை அடிக்கடி துடைத்தல் அல்லது
கசக்குதல். i). ஒரு கண்ணை மூடுதல், தலையைத் திருப்பிப் பார்த்தல் அல்லது தலையை முன்ன்ே தள்ளிப்பார்த்தல். ii)அடிக்கடி கண்வெட்டுதல். iv).புத்தகத்தை மிகக் கிட்டப்பிடித்து
வாசிக்க முனைதல். V) கண்ணைச் சுருக்குதல்.
vi). சிறு பொருள்களில் தடக்கி விழுதல்.
2. தோற்றம்சார் அவதானங்கள்:-
1). கண்மூடி இருத்தல் i). கண் சிவந்திருத்தல் ii) கண்மடல் வீங்கி இருத்தல் iv). நீர்ப்பிடிப்புள்ள கண்ணாக இருத்தல்.
3. சம்பந்தப்பட்ட நபர் சொல்லக்கூடிய முறைப்
untGessit:-
i) கண்கடித்தல் அல்லது எரிதல்.
i) முற்றாகப் பார்க்க முடியாதிருத்தல்
அல்லது தெளிவுகுறைந்துவருதல்.
ii) தலையிடி அல்லது தலைச்சுற்று
iv). வயிற்றுப்புரட்டல்
V). பொருள்கள் இரண்டு இரண்டாகத்
தெரிதல்.
மேலே கூறப்பட்ட அவதானங்கள் விழிப் புல வலுவிழப்பின்போது காணப்படலாமாயினும், இந்த அவதானங்களைக் கொண்டிருப்போர் எல்லோருக்கும் விழிப்புல வலுவிழப்புத்தான் பிரச்சினை என்ற தவறான முடிவுக்கு வந்து விடக்கூடாது. உதாரணமாகத் தலையிடி ஒருவருக்குப் பல்வேறு காரணங்களில் ஏற்
படலாம். ஆகவே தலையிடி உள்ள எல்லோரும்
18 நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 35
கண் பிரச்சினை உடையவர்கள் என்று
முடிவுக்கு வந்துவிடக் கூடாது.
விழிப்புல வலுவிழப்பு இருக்கும்போது
ஏற்படக்கூடிய பிரச்சினைகள்
எமது உடலின் முக்கிய புலன் அங்கங் களான கண்; காது, நாக்கு, மூக்கு, தோல் ஆகியவை பார்வை, கேட்டல், சுவைத்தல், மணத்தல், தொடுகை, அமுக்கம், குளிர், சூடு, நோ ஆகியவற்றை உணர்தல் ஆகிய தூண்டல் களின் வழி செய்திகளை நரம்புத் தொகுதிக்கு அனுப்பும். கற்றல், கற்பித்தல் செயற்பாட்டில் இந்தத் தூண்டல்கள் முக்கியமானவை. மேலே கூறப்பட்டவற்றிற் பார்வை, கேட்டல், தொடுகை ஆகிய மூன்றும் கற்றலில் மிக முக்கியம் பெறும். விழிப்புல வலுவிழப்பு உடையோருக்கு இந்த மூன்றில் ஒன்று கிடையாது போகிறது. அதனாற்றான் அவர்கள் அசைதல், வாசித்தல் அறிவைப் பெறுதல் போன்ற சில விடயங்களிற் சவாலை எதிர்கொள்கின்றனர். ஆயினும் அவை
சவால்களே தவிர, முடியாத விடயங்கள் இல்லை.
ஏனைய மனிதர்களோடு ஒப்பிடும்போது பார்வை வழி வரக்கூடிய அனுபவங்களின் பரப்பும் வகையும் குறைதல். அசைவுக் குறை வினாற் சூழலை அறிதல் குறைவாக இருத்தல், சூழலுடன் தொடர்பு குறைவாக இருத்தல், தற்செயலாகவும், சுயமாகவும் நடைபெறும் கற்றல் அனுபவங்கள் குறைவாக இருத்தல். சமூக ஊடாட்டங்களின் எண்ணிக்கை குறை வாக இருத்தல், மனிதர்களின் முகக் குறிப்புகள், உடல் மொழிகள், அசைவுகள் போன்றவற்றாற் பெறப்படும் செய்திகள் கிடையாது போதல், நிற வேறுபாடு தெரியாது இருத்தல் போன்ற இடர்களை இவர்கள் எதிர்கொள்ள நேரிடலாம்.
வாழ்வகம்

ஆயினும் இவையாவும் பொருத்தமான முறையிற் கையாளப்படக்கூடிய பிரச்சினை
களேயாகும்.
கல்வி தொடர்பான ஆலோசனைகள் :-
விழிப்புல வலுவிழந்த பிள்ளைகள் சாதாரண பாடசாலைகளில் அவர்களின் வயதுக் குரிய வகுப்பில் அனுமதிக்கப்பட வேண்டும். பிள்ளை கேட்கும்போது மட்டுமே விசேட உதவி
வழங்கப்பட வேண்டும்.
பாடசாலையில் ஒரு விசேட தேவைக்குரிய பயிற்சிபெற்ற ஆசிரியர் இருக்கவேண்டும். அவர் பிள்ளைக் குத் தேவையான விசேட பொருள்களை வழங்கவேண்டும். ஏனைய ஆசிரியர்கள் இப்பிள்ளைக்கான கற்பித்தலை எவ்வாறு செய்யவேண்டும் என்ற விடயத்தில் அவர் ஏனைய ஆசிரியர்களுக்கு வழிகாட்ட வேண்டும். அதேநேரத்தில் விசேட பயிற்சிபெற்ற ஆசிரியர் இப்பிள்ளையை அடிக்கடி தரிசித்துக் குறைகளைக் கேட்டறிந்து பொருத்தமான
உதவிகளைச் செய்யலாம்.
உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் விழிப்புல வலுவிழந்த பிள்ளைகள் ஏறத்தாழ எல்லாக் கற்கை நெறிகளி லும் ஈடுபடுகிறார்கள். பல்கலைக்கழகக் கற்கை நெறி தொடங்கும்போதே இவர்களுக்கென விசேடமான ஆரம்ப நிகழ்வுகள் நடத்தப் படுகின்றன. இந்நிகழ்வுகளின்போது இவர் களது பொருளாதாரப் பிரச்சினைகள் பற்றி ஆராயப்பட்டு, பொருத்தமான சமூக நிறுவனங் களோடு தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்கப் படுகிறது. அத்துடன் வாசிப்பு மொனிற்றர், குளிர் ஒளிவிளக்கு, தட்டச்சுப்பொறி, பிறேயிலர், சுருக்கெழுத்துப் பிறெயிலர், ஒலிப்பதிவுக் கருவி,
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 36
ஒலிப்பதிவுக் கருவிப் பிரதி எடுப்பான் போன்ற விசேட உபகரணங்களுக்கான வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்படுகின்றன. இதை விடவும் அவர்களுக்கு உதவும் தொண்டர் மாணவர்களும் நியமிக்கப்படுகிறார்கள். வெவ்வேறு வகுப்புக்களுக்கும், நூல் நிலையங் களுக்கும் ஆய்வு கூடங்களுக்கும் செய்வதற்கு இந்தத் தொண்டர்கள் உதவுகிறார்கள். அதேபோல நூலகத்தில் இவர்கள் தமக்குத் தேவையான நூல்களைப் பெற்றுக் கொள்ளவும் அவற்றிலிருந்து பொருத்தமான பகுதிகளைப் பிரதிசெய்து கொள்ளவும் பகுதிகளை வாசித்துக் காட்டத் தேவையான வாசிப்பாளர்களும் நியமிக்கப்படுகிறார்கள். விழிப்புல வலுவிழந்த மாணவர்களுக்கு எவ்வாறான உதவி வழங்கப்படுகிறது என்ற தகவலும் பல்வேறு பல்கலைக்கழகங்களாலும் வருடந்தோறும்
விளம்பரப்படுத்தப்படுகின்றன.
விழிப்புல வலுவிழந்த பிள்ளைகள் சிறு வயதில் ஒரு தனியான விசேட பாடசாலையிற் கற்பிக்கப்படலாம். அப்படிப்பட்ட ஒரு பாடசாலை யிற்பிள்ளை தங்கியிருந்தும் கற்கலாம். ஆயினும் சாதாரண பாடசாலைக்குச் செல்வதை விட இது
சிறந்தது என்பதற்குச் சான்று இல்லை.
சீர்மியர் கவனிக்கக்கூடியவிடயங்கள்:-
பிள்ளையின் உடலும் கண்ணும் குறிப்பிட்ட காலத்துக்கொருமுறை பரீட்சிக்கப்படுவதைச் சீர்மியர் உறுதிப்படுத்தலாம். உடல் சம்பந்தமாக வருகின்ற நோய்களோ அல்லது உணர்வு களுடன் தொடர்புடைய பிரச்சினைகளோ உடனுக்குடன் அணுகப்பட்டுத் தீர்க்கப்பட வேண்டும். இல்லாவிடில் ஒரு நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நெருக்கீடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த விடயத்திற் சீர்மியரின்
6LITypbue, LD
2

பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்க வேண்டும். கோபம். பயம். கவலை போன்ற சிறு உணர்வுப் பிரச்சினைகள்கூட உடனுக்குடன்
கவனிக்கப்படுவது அவசியம்.
பிள்ளையின் கல்வி நிலையும் அடிக்கடி மதிப்பிடப்பட வேண்டும். அதில் ஒரு சரிவு காணப்படுமானால், பிள்ளையின் உளநலத்தில் ஏதாவது தாக்கங்கள் இருக்கின்றனவா என்பது குறித்து அவதானிக்கப்பட்டுப் போதிய உதவி வழங்கப்பட வேண்டும். பிள்ளையின் தனிப்பட்ட வாழ்க்கைச் சரிதை, சமூக நிலை, பெற்றோரின் விருப்பங்கள் ஆகியவற்றையும் சீர்மியர் அறிந்து வைத்திருந்தால் உதவி செய்வது சுலபமாக இருக்கும்.
பிள்ளையின் கருத்துருவாக்கம், மொழி விருத்தி, மொழிக்கையாட்சி ஆகிய விடயங் களிற் குறைபாடு இருக்கிறதா என்பதைச் சீர்மியர் அருகிருந்து ஆசிரியர்களோடு சேர்ந்து அவற்றைச் செம்மைப்படுத்தலாம்.
சாதாரண பிள்ளைகள் போலவே இவர்களின் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். முக்கியமாக உடற்பயிற்சிகொடுக்கப் பட வேண்டும். ஆபத்தற்ற பாதுகாப்பான சூழலில் ஒடுதல், பாய்தல், எறிதல் என்பன செய்யப்படலாம். உடல் ஆரோக்கியம் சிறக்கும் போது உளச் சமநிலையைப் பேணுவது சுலப மாகும். இவர்களைத் தூர இடங்களுக்கு அழைத்துச் சென்று முகாமிடுவதும். வெளிக் களச் செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதும் நன்று.
இவர்களின் உற்றுக் கேட்கும் ஆற்றலையும், தொடுகைப் புலன் ஆற்றலையும் நன்கு விருத்தி செய்யலாம். அதற்கான தூண்டல்களும்
O நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 37
சந்தர்ப்பங்களும் தாரளமாக வழங்கப்பட
வேண்டும்.
தமது வாழ்வில் தம்முடன் வாழ்ந்த பெற்றோர்கள் அல்லது முக்கிய நபர்களைப் போலவே தமது உணர்வுகளை இவர்கள் வெளிப்படுத்துவர். தமது எதிர்காலம், தொழில், திருமணம், குழந்தைகள் போன்ற விடயங்களில் இவர்கள் அதிக பதற்றத்துடன் காணப்படலாம். அவ்வா று சீர்மியர் அவதானிக்குமிடத்து, வழமை யான சீர்மிய நுண்திறன்களையும், சாந்தவழி முறைப் பயிற்சிகளையும் பாவித்து அவர்களை ஆற்றுப்படுத்தவேண்டும். அவர்களைப் பதற்றப் படுத்தும் விடயம் தொடர்பான இலக்குகளை நிர்ணயம் செய்யச்செய்து பொருத்தமான
தீர்வுகளை அவர்கள் காண வழிப்படுத்தலாம்.
பிறப்பில் இருந்தே பார்வை இல்லாமல் இருப்பவர்களைவிட, இடையிற் பார்வை இன்றிப் போனவர்களும், முற்றாகவே பார்வை இல்லாத வர்களைவிடச் சிறிதளவு பார்வை இருப்பவர்
களும் அதிக உளப்பாதிப்பு அடைவது
o O SUTypbluesD
 

அவதானிக்கப்பட்டுள்ளது. இருந்த பார்வை இல்லாது போவது ஒருவகையில் இழப்புத்துயர். சீர்மியர் பொருத்தமான இழப்புச் சீர்மியப்படி முறைகளினூடு அவர்களை அழைத்துச் செல்ல வேண்டும்.
இவற்றைத் தவிர சாதாரண மனிதர்களுக்கு வருகின்ற எந்த ஒரு உளப்பிரச்சினையோ, உள நோயோ இவர்களுக்கும் வரலாம். அப்படி வரும் போது வழமை போலவே அவை இனங்காணப் பட்டுப் பொருத்தமான சீர்மிய உதவி வழங்கப்பட வேண்டும் அல்லது உள வைத்திய நிபுணரிடம் பாரப்படுத்தப்பட வேண்டும். இவர்களால் நிறங்களை இனங்காண முடியாது என்பதாற் (fifty & fláà 60); 6Du (Art Therapy) இவர்களுக்கு வழங்குவது கடினமாக இருக்கலாம். ஏனைய அனைத்துச் சிகிச்சை
முறைகளையும் வழமைபோலவே வழங்கமுடியும்.
மாற்று வலுவுடையோர் அனைவரும் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வதை உறுதி
செய்வோம்.
வாழ்வகப் பிள்ளைகளிற்குத் தன் கையாலேயே உணவூட்டி மகிழ்வது அன்னையவர்களின்
அன்றாட வழக்கங்களுள் ஒன்று
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 38
மூளை விருத்தி குன்றியோ
一丁 wana
சமூகம் என்பது பல்வேறுபட்ட குணநல வடிவங்களையும் மாதிரிகளையும் கொண்ட மனிதர்களை உள்ளடக்கிய ஒரு அமைப்பாகக் காணப்படுகிறது. உலகிற் பிறந்த ஒவ்வொரு மனிதனும் தன்னளவில் நிறைவுத்தன்மை கொண்டவன் எனக் கூறிவிட முடியாது. இந்த நோக்கிற் சிந்திப்போமாயின் சமூகத்தில் வலுவிழந்தவர்களும் அங்கத்தவர்களாக இணைந்து தம் வாழ்வியலைக் கொண்டு நடத்திவருகின்றனர். வலுவிழந்தோர் எனும் வகைப்பாட்டினுள் மூளை விருத்தி குன்றி யோரும் அடக்கப்பட்டிருக்கின்றனர். இத்தகைய வர்கள் ஒவ்வொரு சமூகத்திலும் கணிசமான
அளவு காணப்படவும் செய்கின்றனர்.
மூளை விருத்தி குன்றியோர் தொடர்பான ஆய்வுநிலை நோக்கு உளவியற் புலத்தில் இன்று மிகத் தீவிரமான நிலையில் முன்னெடுக்கப் படுகின்றது. வரை விலக்கணத்தின் படி குறிப்பாகப் புத்தியின் செயற்பாடு நியம நிலைக்குக் குறைவாகவும், அதேவேளை சந்தர்ப்பங்களுக்கேற்ற நடத்தைக் குறைபாடும், பிள்ளையின் வளர்ச்சிச் சார்பில் ஒரு நிலையான தன்மை அற்றதுமான நிலை காணப்படுதலை யும் உள்ளடக்கியிருத்தலே மூளை விருத்தி குன்றிய நிலை எனப் பார்க்கப்படுகின்றது. "Diagnostic statistical manual of mental disorders" (D.S.M) 6Tsirl) 60.855.Tsi) L155 வளர்ச்சி குன்றிய அல்லது சீரற்ற நிலை பதினெட்டு வயதின் முன்னரே ஆரம்பிப்பதாகக்
O O ای burypsie, LD كه

ரின் சமூக நிலைப்பாடு
7-ר
க.தர்மசேகரம். நிர்வாக அங்கத்தவர் வாழ்வகம்.
கூறுகிறது. ஆகவே பதினேழின் பின்பு இவ்வகை அறிகுறிகள் செயற்பாடுகளில் தோன்றினால் அதனை ஒருவித நோயாக Dementia - loss of mental power 6T60Ti, கொள்ளப்படும் என்றும் கூறுகிறது. அமெரிக்கா வில் 60-68 இலட்சம் பேர் இத்தகைய மூளை விருத்தி குன்றிய நிலையிற் காணப்படுவதாக ஆய்வுகள் வெளிக்காட்டுகின்றன.
மேலைச் சமூகங்களோடு ஒப்பிடும்போது கீழைச் சமூகங்களில் மூளை விருத்தி குன்றியோர் தொடர்பான அறிவும் போதிய விழிப்புணர்வும் குறைவாகவே காணப் படுகின்றன. இதனால், கீழைச் சமூகங்களில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற மூளை விருத்தி குன்றியோர் மிகவும் பின்தங்கிய நிலையிலும் உரிய கவனிப்புக்கள் அற்ற நிலையிலும் வாழ்ந்து வருகின்றார்கள் என்றே பொதுவாகக் கூறப்படுகின்றது. இங்கு காணப்படும் வறுமை, போதிய கல்வியறிவின் மை போன்ற இன்னோரன்ன விடயங்கள் மூளை விருத்தி குன்றியோர் தமது பிரச்சினைகளை எதிர்கொள் வதற்குப் பெரிதும் காரணிகளாகின்றன. மூளை விருத்தி குன்றிய ஒரு பிள்ளை எமது சமூகத்தில் தோன்றிவிட்டால் அதை ஒரு சுமையாகவும் வேண்டத் தகாத அல்லது தீண்டத்தகாத நிலையிலும் அப்பிள்ளையை வைத்துப் பார்க்கின்ற ஒரு அவலமான நிலை பொது வாகவே காணப்படுகின்றது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ச்சியடைந்த
22 நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 39
நாடுகளில் இவர்களுக்கான விஷேடத்துவமான கல்வி வாய்ப்புக்களும், கவனிப்புக்களும் உயர்தரமான முறையில் வடிவமைக்கப்பட்டு அவர்களின் நல உரிமைகளைப் பேணுவதற் கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதன் காரணமாக இவர்களிற் பெரும்பாலானோர் கூடுமானளவு சமூகத்தோடு இணைவதற்கான ஏதுநிலை இருக்கின்றது. ஆனால் ஆபிரிக்க மற்றும் ஆசிய நாடுகளில் வாழ்கின்ற சமூகங் களிடையே இது வேறுமாதிரியாக அமைந்து காணப்படுகின்றது. மேற்கண்ட வாய்ப்புக்களை ஏற்படுத்துவதில் இருக்கின்ற சிக்கல்கள் காரணமாக ஆபிரிக்க மற்றும் ஆசிய நாடுகளிற் பிறப்பெடுக்கின்ற மூளை விருத்தி குன்றிய பிள்ளைகளிற்கும் சமூகத்திற்குமான இடை வெளி அதிகமாக இருக்கிறது என்றே கூற
வேண்டும்.
மூளைவிருத்தி குன்றியோர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம் இத்தகையவர்களை நான்கு பிரதான வகையீடு களிற்குள் வைத்து நோக்கப்படுகின்றது. I.Q புள்ளியை அடிப்படையாகக் கொண்டே இந்த வகைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருக் கின்றது என்பது இங்கு கவனித்தற்குரியது. 1. Q புள்ளி 52-67ற்கும் இடைப்பட்ட அளவிலிருப்போர் Mild என்ற வகையீட்டிற்குள் வருகின்றனர். மூளைக் குறைபாடோ உடற் பாதிப்போ இவர்கள் மட்டில் வெளிப்படையாகத் தெரிவதில்லை. ஆனால் தம் செயல் விளைவு களை முன்கூட்டியே அறியும் ஆற்றலற்றவர் களாகக் காணப்படுவர். இருப்பினும் உரிய பராமரிப்பும் விஷேடத்துவமான கல்வியும் அவர்களுக்கு வழங்கப்படுமிடத்துத் தம் திறன்களுக்கேற்ப முன்னேற்றமடைந்து சுயமாக
வாழ்வு நடத்த வல்லவர்கள். வளர்ந்தோர் மட்டத்
வாழ்வகம்

தில் ஒப்பிடுகின்றபோது 8-16 வயது உடையவர் போன்று செயற்படுவர். பொருத்தமாகச் செயலாற்றுவதிலும், தீர்மானங்கள் எடுப்பதிலும் அவர்களின் குறைபாடு வெளிப்படும். மூளை விருத்தி குன்றியோரிற் பெரும்பான்மையினர் இந்த வகையீட்டினுள்ளேயே காணப்படு கின்றனர். இவர்கள் கற்பிக்கப்படக் கூடியவர்கள். Educable எனக் கருதப்படு கின்றது.
1.Q புள்ளி 36-51 க்கும் இடைப்பட்டவர்கள் Moderate mental - retardation 6T6örp வகைப்பாட்டினுள் அடக்கப்படுகின்றனர். ஓரளவிற்கு எழுதவும் வாசிக்கவும் இவர்களைப் பயிற்றுவிக்க முடியும். சிந்தித்தல், செயற்படுதல் ஆகியவற்றில் மட்டுப்படுத்தப்பட்டளவில் இருப்பதால் நுணுக்கமான முறையிலும் இவர் களை அணுகுதல் வேண்டும். பொறுமையுடனும் அணுகுதல் வேண்டும். உடலுறுப்புக்களின் அசைவுகள் ஒத்தமையாமல் மந்தமான உடலியக்கப் பழக்க வழக்கங்களுடன் விகாரத் தோற்றம் அல்லது களையற்ற வெறிச்சோடிய முகத்தோற்றம் காணப்படும். எனினும் இனிய நட்புள்ளங்கொண்ட ஆளுமை இவர்களிடம் தேறிக் காணப்படுவது இயல்பு ஆரம்பத்திலே எடுக்கின்ற கவனமும் தனிப்பட்ட விஷேடத்துவ மான பாதுகாப்பும், பயிற்றுவித்தலில் ஒழுங்கான தன்மையும் பேணப்படும்போது நாளாந்த சுய தேவைகளைத் தாமாகவே கவனிப்பதற்கு அவர்களைத் தயார்ப்படுத்தலாம். இவர்கள் பயிற்றுவிக்கப்படக் கூடியவர்களாகக் (Trainable) காணப்படுகின்றனர். இந்த வகைப்பாட்டினில் இருக்கின்ற 44 வயதை உடைய ஒரு நபர் 7 வயதுப் பிள்ளை
யின்அறிவையே சராசரியாகப் பெற்றிருப்பார்.
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 40
இவர்கள் சுய தேவைகளை நிறைவேற்றுவதில்
தரம் குறைந்த தன்மை காணப்படும். (Clumsy)
மூன்றாவது வகைப்பாட்டினுள் அடங்கு (36), Tif Severe mental retardation 9,55 காணப்படுகின்றனர். உடற் சுகாதாரத்தைப் பேணுதலிற் பெரிதும் மட்டுப்பாடான தன்மை காணப்படும். இவர்கள் பிறர்மீது பெரிதும் தங்கி வாழ வேண்டியவர்களாக இருக்கின்றனர். 6T6CT (6) gais, it Dependent retarded People ஆகக் காணப்படுகின்றனர். ஆனால் விஷேட கவனத்துடனும், பொறுமையுடனும் அளிக்கப் படும் பயிற்சிகளினாற் பெரும்பான்மை யினருக்கு ஒரளவு தம்மைப் பேணும் திறனும், சிறு செயற்பாடுகளில் ஈடுபடும் ஆற்றலையும் கைவரச் செய்யலாம். இவர்களது IQ புள்ளி மட்டமானது 20-35 வரையாகக் காணப் படுகின்றது. இம்மட்டத்திலுள்ளோருக்குப் பராமரிப்பு இல்லங்கள் நல்ல முறையிற் கைகொடுக்க முடியும். பயிற்சி மூலம் செயற்பட வைப்பதற்கு இதற்கென வடிவமைக்கப்பட்ட நிறுவனங்கள் சிறந்த முறையிற் பணியாற்ற
6)T.
நான்காவது வகைப்பாட்டினுள் அடங்குப வராக 1.Q புள்ளி 20ற்கும் குறைவாக உள்ள Profound mental retardation 6.j605uS60Ti காணப்படுகின்றனர். இவர்கள் உயிரைத் தாங்கி வாழும் ஓர் உயிரி போன்று இயங்குவர். வாழ்நாள் முழுமையுமே பிறரில் தங்கி வாழவேண்டிய நிர்ப்பந்தமான நிலைக்கு இவர்கள் உள்ளா disit p 60Tii. (Life supported retarded அநேகமானோர் ஒத்த இசைவாக்க நடத்தையிற் (Adaptive behaviour) Gufg|th UrgâlûLöp6)Iri களாகக் காணப்படுவர். சிறிய செயலைக்கூட
செய்வதற்கு இயலாதவர்கள். பேச்சு விருத்தியும்
O O ରାmypରୋ&ld

பூரணமற்ற மட்டத்திலேயே காணப்படும். உடலும் கடும் விகாரம் உடையதாய் அமைவுற்றிருக்கும். நரம்புமண்டல மையத்திற் காணப்படும்பாதிப்புக் காரணமாக உடல் வளர்ச்சி குன்றிப்போயிருக் கும். வலிப்புப் போன்றவற்றாற் பாதிக்கப்பட்டுப் பேச முடியாதவர்களாகவும், செவிப்புலனற்ற அல்லது குறைந்த தன்மையுடையவர்களாகவும், வேறுபல உடல் உபாதைகளினாற் பீடிக்கப் பட்டவர்களாகவும் இவர்கள் காணப்படுகின்ற னர். முதல் இரு மட்டத்தினரும் ஆரம்பத்தில் அடையாளம் காணப்படுதலில் இருக்கின்ற சிரமங்கள் காரணமாக அவர்களுக்கான பயிற்சி மற்றும் கவனிப்பு உரிய காலத்திற் கிடைக்கப் பெறாததாற் சிக்கல்கள் ஏற்படும். ஆனால் பின்னிரு மட்டத்தினரின் குறைபாடுகள் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டாலும் கூட, அவர்களை மேம்படுத்துதலில் எழுகின்ற பிரச்சினைகளால் அவர்களது வாழ்வியலைச் செப்பனிடுதலிலும் சிரமமாகின்றது. இத்தகைய மூளை விருத்தி குன்றியோரது வகைப்பாடு பற்றிய ஆழ்ந்த அறிவு சமூகத்தவரிடையே ஏற்படுத்தப்படுவது மிகவும் அவசியமானதாகும்.
மூளை விருத்தி குன்றியோரை நிறுவனங் களில் வைத்து அவர்களுக்கான கல்வியூட்டல் மற்றும் சுய கருமங்களை ஆற்றுவதற்கான பயிற்சி முதலானவற்றை வழங்குகின்ற முயற்சி 17ம், 18ம் நூற்றாண்டு காலப் பகுதியிலேயே தோற்றம் பெற்றுவிட்டது. எனக் கூற முடியும். நிறுவன மயமாக்கலின் ஊடாகவே (Institutionalization) (96) is (655 (5th சமூகத்திற்குமான இடைவினையில் விருத்தி நிலை தோன்றுமென ஆரம்பத்தில் நம்பப்பட்டது. சில விடயங்களில் இந்த எண்ணக்கரு பல சாத்தியப்பாடுகளை ஏற்படுத்தினாலும் மூளை விருத்தி குன்றியோருக்கும் ஏனைய மக்களிற்கு
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 41
மான தொடர்பை நிறுவனமயமாக்கலானது குறைக்கின்ற அல்லது மட்டுப்படுத்துகின்ற வகையில் அமையப்பெற்றுவிட்டது என்பதும் சில ஆய்வாளர்களின் கருத்தாகும்.
எது எவ்வாறிருப்பினும், இலங்கை போன்ற குறைவிருத்தி நாடுகளில் இவர்களுக்கெனச் செயற்பட்டுவரும் நிறுவனங்களின் பங்கும், பணியும் வேண்டப்படுகின்றதொன்றாகவே காணப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் ஆர்க், சிவபூமி, மட்டக்களப்பில் ஒசானம், கொழும்பில் இராமகிருஷ்ண மடம் போன்ற நிறுவனங்கள் மூளைவிருத்தி குன்றியோரின் நல உரிமை களுக்காகக் காத்திரமான பணியாற்றி வருகின்றன.
யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி மூளை விருத்தி குன்றியோர் தொடர்பாக மேற் கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் இருந்து சில அம்ஸங்களைப்புரிந்துகொள்ள முடிகின்றது. * இத்தகைய பிள்ளைகளைக் கொண்ட தந்தையர்களில் 48.2% மானோர் இப்பிள்ளைகள் பற்றிய எந்தவிதமான பிரக்ஞை அற்றவர்களாகவும், அழுத்தமோ பாதிப்போ இல்லாதவர்களாகவும் காணப்படுகின்றனர். * தாய்மாரைப் பொறுத்தவரை 47.1% மானவர்கள் ஒரளவு தாக்கத்திற்குள்ளான
வர்களாகக் காணப்படுகின்றனர்.
* 41.1% தாய்மார் அதிக தாக்கத்திற்கு உள்ளானவர்களாக இனம் காணப் பட்டுள்ளனர்.
மூளைவிருத்தி குன்றிய நிலை தோன்று
வதற்கான காரணிகளாகப் பின்வரும்
சிலவற்றை நாம் பட்டியலிட முடியும்.
வாழ்வகம்

1. நிறமூர்த்தங்களும் மரபணுக்களிற் காணப்
படுகின்றகுறைபாடுகளும்
2. Infections and toxicagents Gigirig
நோய், மதுபோதைப்பழக்க வழக்கங்கள்
3. வைரசால் வரும் நோய்கள் (Viralence
Phalitis) 4. குறைப் பிரசவ மும் அதிர்ச்சியும்
(Prematurity and trauma)
5. கதிர்வீச்சு
6. தாயின் உளவியற் பாதிப்புக்கள், பிறந்த பின்னும் ஏற்படும் விபத்துக்கள் போன்றன.
மூளை விருத்தி குன்றியோர் எனப்படுவோர் யார்? அவர்களை எவ்வாறு இனம் காண்பது? மூளை விருத்தி குன்றிய நிலை ஏற்படுவதற் கான காரணிகள் என்ன? எந்தவிதத்தில் அவர்களைப் பயிற்றுவிக்கலாம் போன்றவை தொடர்பான பூரண அறிவைச் சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் ஏற்படுத்துதல் அவசியமானதாகும். வானொலி, தொலைக் காட்சி, பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்ற தொடர்புச்சாதனங்கள் இந்தப் பணியை ஆக்கபூர்வமாகச் செய்யமுடியும். அத்தோடு மூளைவிருத்தி குன்றியோரைச் சமூகத்தில் இணைத்தல் என்ற விடயத்திற் குடும்பம், பாடசாலை, சமூகத்தின் பிறதொண்டர் நிறுவனங்கள் போன்றனவும் காத்திரமான பங்களிப்பை நல்கமுடியும். அதுமட்டுமன்றி மூளைவிருத்தி குன்றிய நபர் சார்ந்திருக்கும் குடும்பத்திற்கும் அல்லது பராமரிப்பாளருக்கும் போதிய அறிவூட்டலும் பொருளாதார வசதிகளும், கிடைக்கப்பெறும் வகையில் அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள் தமது பணிகளை விரிவாக்கம் செய்தலும் இங்கு அவசியமாக
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 42
வேண்டப்படுகின்றது. எமது சமூகத்தைப் பொறுத்தமட்டில் மூளைவிருத்தி குன்றியோர் தொடர்பான விழிப்புணர்வு போதுமானளவு இல்லாதிருப்பதன் காரணமாக அவர்களின் சமூக நிலைப்பாடு சராசரி மட்டத்திற்கும் குறைவானதாகவே காணப்படுகின்றது. இது பொதுவிற் கீழைத்தேச சமூகங்கள் அனைத்திற் கும் உரித்தானதாகவே அமைந்திருக்கின்றது. மேலைச் சமூகங்களில் மூளை விருத்தி
உசாத்துணை
01."Human behaviour in the social environmel 02. "Understanding Psychology"
- Robert S.Feldom
03. "Children" - John W.Santrock 04. Report of the research project (2002) su
Faculty of Medicine, University of Jaffna.
-
அன்னையவர்களுக்கு விருது வ
g elityblue, LD
 

குன்றியோருக்காக ஏற்படுத்தியிருக்கின்ற வசதிகளையும், வழங்கியிருக்கின்ற வாய்ப்புக் களையும் நாம் கற்றுக்கொண்டு, எமது சமூகப்புற நிலைகளுக்கேற்ப, அவற்றை நாம் வடிவமைத்துக் கொள்வோமாயின் மூளை விருத்தி குன்றியோரது சமூக நிலைப்பாட்டில் ஒருவித நேர்நிலையான வளர்ச்சிப் பாய்ச்சலை
நாம் காணமுடியும்.
lt"
bmitted to the dept of community medicine,
ழங்கி கெளரவிக்கும் றோட்டறிக்கழகம்
26 நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 43
Braille Translations impressive list of clien includes tho House of Commons, Oded Cinemas, Krispy Creme Doughnuts, City Cruis and some London councils. He believes th
more organisations will need his services in th future, particularly since the recent changes the Disability Discrimination Act. Ghow plans to add more services in the futur He says, "My personal goal is to create a ful inclusive environment where disabled peop have complete accessibility. My key ambitic is to build the business and create as many Jc opportunities for blind and partially sighte people and people with disabilities"
Whe asked about how Braille Translatio reached its position at the top of Google, Gho replied, "We did a Google advert campaig Sometime back. That proved to be quite worth We surely have a very healthy click rate C Google and it helps us maintain our position the top" Commenting on his success Ghow says, "I hop to inspire people to follow their dreams ar regardless of whatever obstacles one mu overcome in life, press for ward wit determination and a smile".
F or m or e in for m at i on em a
ghowG) brailletranslations.co.uk or call 07OC
860169.
Visit www.brailletranslations.co.uk http://www.pera.com http://www.princes-trust.org.uk
வாழ்வகம் 2

FACTS
An estimated quarter of a million back and minority ethnic Londoners of working age are disabled.
In 2001/02, only 35 percent were in employment, a lower proportion than white disabled people (49 percent).
The unemployment rate for black and minority ethnic disabled people was nearly 19 percent, compared with 11 percent of nondisabled black and minority ethnic people and more than twice as high as white disabled people.
Source: Disabled people and the labour market, and analysis of Labour Force Survey data for London 2001/02, GLA DMAG briefing 2003/1, January 2003.
Curtesy: Engage magazine
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 44
யா/கைதடி நவீல்ட் பாடசா6
தோற்றமும் பணியும் 一ー
"ஒருமைக்கண் தா எழுமையும் ஏமாப்
யா/கை த டி நவீல்ட் பாடசாலை இரத்மலானையில் உள்ள செவிப்புலன்விழிப்புலன் இழந்தோர் பாடசாலைகளுடன் இணைந்த ஒரு சகோதரப் பாடசாலை ஆகும். எனவே நவீல்ட் பாடசாலையின் ஆரம்ப வரலாறு என்பது இரத்மலானையில் உள்ள அப் பாடசாலைகளோடு இணைந்த ஒரு வரலாறா கும். இப்பாடசாலைகள் மூன்றும் "இலங்கை செவிப்புலன், விழிப்புலன் இழந்தோர் UITLFT606u" (Ceylon School for the deaf and bind) என்ற அமைப்பின் பெயரில் "அங்கிலிக்கன் திருச்சபை" கொழும்பு ஆதீனத் தால் நிருவகிக்கப்படுகிறது.
பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் "griiéfâAGOT sig f6(5ěřGF6ODLu" (Church of England) யினர், நமது நாட்டின் பல பகுதிகளிலும் கல்விச்சாலைகளை அமைத்து மக்களின் அறிவு வளர்ச்சிக்கு அளப்பரிய தொண்டாற்றி யுள்ளனர். இவ்வகையில் இலங்கையில் விசேட கல்விப் பணியையும் முதலில் ஆரம்பித்த பெருமையும் "இங்கிலாந்துத் திருச்சபை Gls 60TGOTITL6696OTf Frisis (Church of England Zennana Missionary Society) gild, G8, உரியதாகும்.
செல்வி மேரி எவ்.சாப்மன் பாடசாலை
ஆரம்பித்தல் இங்கிலாந்துத் திருச்சபையின் செனனா
மிஷனரி சங்கத்தின் மிஷனரியான செல்வி மேரி
வாழ்வகம்

DGubula
曝但
ப.சந்திரசேகரம், ஒய்வு பெற்ற ஆசிரியர், கைதடி நவீல்ட் பாடசாலை
ன் கற்ற கல்வி ஒருவற்கு l உடைத்து"
எவ்சாப்மன் (Ms.Mary.F.Chapman) 6T6irus) if நற்செய்தியாளர் பணியேற்று 1910 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்துள்ளார். இவர் கண்டியில் "ஹில் வூட் கல்லூரி"யில் தங்கியிருந்த காலத்தில் இலங்கையில் உள்ள புலனிழந்த சிறுவர்கள் கல்வியைப் பெறாமல் ஒதுக் கப்பட்ட நிலையில் வாழ்வதை அவதானித்தார். இதனால் புலனிழந்தவர்கள் கல்வி கற்பதற்காக, ஒரு பாடசாலையை ஆரம்பிக்கவேண்டும் என விரும்பி "செனனா மிஷனரி" சங்கத்தினரிடம் உரிய அனுமதியைப் பெற்றார். செல்வி மேரி எவ்.சாப்மன் அவர்கள் புலனிழந்தவர்களின் கல்விக்காக, தெகிவளை யில் வாடகைக்கு ஒரு வீட்டைப் பெற்றுச் செவிப்புலனிழந்த மூன்று சிறுவர்களுடன் 1912 ஆம் ஆண்டு ஒரு பாடசாலையை ஆரம்பித்து, அவர்களுக்கான கல்வியை செல்வி சப்மன் அவர்களே ஆசிரியராக இருந்து போதித்தார். பின்னர் நிரந்தரமான பாடசாலையை அமைப்பதற்காக இவரால் இரத்மலானையிற் காணி பெறப்பட்டு, பாடசாலைக்குரிய கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டன. இதனால் தெகிவளையில் இயங்கிவந்த பாடசாலை 1914 களில் இரத்மலானைக்கு மாற்றப்பட்டு விசேட கல்விப்பணி தொடர்கிறது. அந்நாட்களில் விசேட கல்வி ஆங்கில மொழி மூலமே கட்டணம் எதுவும் பெறாமல் இலவசக் கல்வியாகப்
போதிக்கப்பட்டது. இன்றும் இப்பாடசாலைகளில்
28 நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 45

SLLLLLLLSZSLLSZSYLLLLLSZSLLSLLLLLLLLLSY 0LSLLLSLLLLLL LL LsYSLLLLL
'origoo oonyos lieto oseyosoap oặềummo@jo uosog ‘igerweapog uogo ugoog SLEKLLrS SLLLLSLLLL SL0L0LLS SLLLLLLLLLL LLLLLSL0 LLLLSLLLLYYSLLSĠ) - golynaeceği aligog@gs gesnegesyre$1) ($ sẽqimor, ugi ospeto ureosto ogroșaeấus, ugi o uaeaeaeụn:11· ELrSLLLL LLL SLLLLLLLLLLLLLLLL LL sLLL LLLLLLL LLLLLLLSLLLLLLSL SLLLLLSL LLLZSL LLLLYLL LLLLLLYLLLL LSY SLLLLS0SLL SLL SLLLLL LLL LLLLL LLLLL sựrensoog) væg) oặ809 og ugas@naeesdae, 00L0S0LL SLLLLLS LLLLL LLL LLLLS LLLLL LLLLLLS LLLLLY0 LSYSLLLLL LLSZ
|-

Page 46


Page 47
மாணவர்களின் கல்விக்காகக் கட்டணம்
எதுவும் பெறப்படுவது இல்லை. இப்பாடசாலை களில் 1943 களிலிருந்து தமிழ்/சிங்களம்
இரண்டாவது மொழியாகக் கற்பிக்கப்பட்டன.
9 யாழ்ப்பாணத்தில் விசேட கல்விக்கான
பாடசாலைக்குமுன்மொழிவு
யாழ்ப்பாணத்தில் உள்ள புலனிழந்த சிறுவர்கள் அக்காலத்தில் இரத்மலானைக்குச் சென்று கல்வியைக் கற்று வந்தனர். வசதி குறைந்த பெற்றோரின் புலனிழந்த சிறுவர்களை பெற்றோர் இரத்மலானைக்குக் கூட்டிச் செல்வதில் உள்ள பண வசதியீனம் உட்படப் பிற வசதியீனங்கள் காரணமாகப் பல சிறுவர்கள் கல்வியைப் பெற முடியாதவர்களாகக் காணப் பட்டனர். இந் நிலையை உணர்ந்த "அங்கிலிக்கன் திருச்சபை" ஆதீன சங்கத்தின் செயலாளரும், இரத்மலானை செவிப்புலன் விழிப்புலன் இழந்தோர் பாடசாலையின் அதிபராகவும் பணியாற்றிய செல்வி 6Tth.6.6th.8, stillair (Miss M.O.M.Carter M.B.E) அவர்களால் தமிழ் மக்களின் புலனிழந்த சிறுவர்களின் கல்விக்காக வட இலங்கை யாழ்ப்பாணத்தில் ஒரு விசேட பாடசாலை ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற தனது கருத்தை ஆளுநர் சபையிடம் முன்வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர் சபையின் தலைவரும், கொழும்பு ஆதீனத்தின் பேராயருமாகிய அதி. வண. கலாநிதி ஏ.ஆர்.ஹிரகம் ஹாம்பெல் (The Rt. Rev. Dr. A. R. Graham Gampbell) அவர்களின் தலைமையில் வட இலங்கை யாழ்ப்பாணத்தில் விசேட பாடசாலை ஆரம்பிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் நோக்கத்தையும் பற்றிய விளக்கக் கூட்டம் 1955
2
வாழ்வகம்

ஆம் ஆண்டு யாழ்.பரியோவான் கல்லூரியில்
நடைபெற்றது. இக் கூட்டத்திற் பல சான்றோர்கள் கலந்துகொண்டனர்.
* கைதடியில் நவீல்ட் பாடசாலை
உருவாகுதல் பாடசாலையை ஆரம்பிப்பதற்குப் பெரும் ஆதரவு கிடைத்தது. யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.எம்.ழரீகாந்தா அவர்களால் தென்மராட்சியில் உள்ள கைதடிக் கிராமத்திற் பாடசாலை அமைப்பதற்காக நிலம் வழங்கப்
பட்டது.
இங்கிலாந்து நாட்டுப் பெருந்தனவந்தரான "E6sso' Myu" (Lord Nuffield) stsöru6)If 1936 களில் இலங்கைக்கு வந்தபோது இரத்மலானை யில் உள்ள பாடசாலையைப் பார்வையிட்டார். அங்கு நடைபெறும் பணிகளை அவதானித்த தனால் அப்பாடசாலை வளர்ச்சிக்காக ரூபா 70,000 /= ஐ அப்பொழுது நன்கொடையாக வழங்கினார். இவர் வழங்கியிருந்த நிதியின் உதவியினால், கைதடியிற் பாடசாலைக்கான கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தமிழ் மக்களின் புலனிழந்த சிறுவர்களின் விசேட கல்விக்கான பாடசாலை 1956 ஆம் ஆண்டு மாசி 20 ஆம் நாள் (20.02.1956) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இப்பாடசாலையே இலங்கையில் தமிழ்மொழி மூலமான கல்விக்கென ஆரம்பிக்கப்பட்ட முதலாவது பாடசாலை ஆகும். நவீல்ட் பிரபுவின் நன்கொடையால் இப்பாடசாலை உருவாக்கப் பட்டபடியால் - ஆளுநர் சபையினரால் "நவீல்ட் பாடசாலை" எனப் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு விசேட
கல் விக் காக ஒரு பாடசாலை யை
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மல'

Page 48
யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கும்படி தமிழ் மக்கள் முன்வந்து கேட்டுக்கொள்ளாதபோதும், அங்கிலிக்கன் திருச்சபை தமிழ் சிறுவர்களின் நலன் கருதி, இப்பாடசாலையை உருவாக்கி விசேட கல்வி பெறும் வாய்ப்பைப் புலனிழந்த சிறுவர்கட்கு அளித்தமைக்கு நாம் பெருமை அடைகிறோம்.
இரத்துமலானையில் இயங்கிய தமிழ்
பிரிவு கைதடியில்
பாடசாலையிற் ஆரம்ப நாளன்று (20.02.1956) இரத்மலானைப் பாடசாலையில் இருந்து மாற்றப்பட்ட கேள்விக் குறைபாடுடைய 09 மாணவரும், பார்வைக் குறைபாடுடைய 03 மாணவரும் அன்று புதிய வரவாகச் சேர்க்கப்பட்ட 14 மாணவர்கள் உட்பட 26 மாணவர்களுடன் வகுப்புக்கள் ஆரம்பமாகின. இப்பாடசாலையின் முதல் அதிபர் திரு.1.N.இராமநாதன் அவர்களாவர். இம் மாணவர்கட் குக் கற்பிப்பதற்காக, இரத்மலானைப் பாடசாலையில் தமிழ்பிரிவில் ஆசிரியர்களாகப்பணியாற்றிய04 ஆசிரியர்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டு, தமது பணியினை நவீல்ட் பாடசாலையில் தொடர்ந்தனர். (இவ் ஆசிரியர்களில் திரு.க.பசுபதி அவர்கள் சிறந்த பேச்சாளரும். எழுத்தாளரும், கவிஞரும் ஆவார். இவர் "யாழ்ப்பாணக் கவிராயர்" என்ற புனை பெயரில் எழுதிய கவிதைகள் - ஆக்கங்கள் ஈழத்துப் பத்திரிகைகளிலும், தமிழகப் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. பொதுவுடைமைவாதியான இவர் தனது 40வது வயதில் 1965 இல் காலமாகிவிட்டார்.
1956 களில் கேள்விக் குறைபாடுடைய மாணவர்கட்குச் சாதாரண பாடங்களுடன்,
உதட்டு வாசிப்பு, பேச்சுடன் சைகை மொழியும்
O buryp6.165LD

கற்பிக்கப்பட்டன. பார்வைக் குறைபாடுடைய மாணவர்கட்கு "பிறெயில்" எழுத்து, வாசிப்பு, கணிதம், உடற்கல்வி, இசைக்கல்வி ஆகிய பாடங்களுடன் நடமாடும் பயிற்சியும்
அளிக்கப்பட்டன.
கேள்விக் குறைபாடு உடையோருக்குப்
பேச்சு முறைக்கல்வி
1960 களில் திரு.டி.எஸ்.அம்பலவாணர் அவர்கள் பாடசாலையின் அதிபரானார். இவர் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள "கிளார்க்" கல்லூரியில் கேள்வித் திறன் குறைந்தோருக் கான விசேட கல்வியிற் பயிற்சி பெற்றவராவார். "கிளார்க்" கல்லூரிப் பயிற்சி நெறி வாய்மொழி மூலக் கல்வி முறையாகும். இக்கல்வி முறை உலகின் பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது. இம்முறையை அடியொற்றி நவீல்ட் பாடசாலையிலும் கற்பித்தற் பணி நடைபெற்றது. 1962 களிற் கேள்விக் குறைபாடுடை யோருக்கான பேச்சுப் பயிற்சி அளிக்கும் கருவி, வளையப் பண்பலைக் கேள் கருவிகள் ஆகியன பெறப்பட்டு, பேச்சு முறை மூலக் கல்வி அளிக்கப்
பட்டது.
பார்வைக் குறையாடுடையோருக்கு ஒன்றிணைந்த கல்வி விழிப்புலன் இழந்த மாணவர்கள் தமக்குரிய "பிறெயில்" எழுத்துமூலக் கல்விப் பயிற்சியைப் பெற்றதுடன், இடைநிலை வகுப்பு மாணவர்கள் கைதடியில் உள்ள சீ.எம்.எஸ். (C.M.S) பாடசாலைக்குச் சென்று அங்கு சாதாரண மாணவர்களுடன் ஒன்றிணைந்து கல்வியைப் பெற வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. செவிப் புலனிழந்த மாணவர்கள் - சாதாரண
30
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 49
மாணவர்களுடன் பாடசாலைகளுக்கிடையே நடைபெறும் சித்திரம், மெய்வல்லுநர், கிரிக்கட், உதைபந்தாட்டம், வலைப்பந்தாட்டம் முதலிய போட்டிகளிற் பங்குகொண்டு வெற்றிபெற்று பரிசில்களைப் பெற்றுள்ளமையும், பார்வைத் திறன் குறைபாடுடைய மாணவர்கள் சாதாரண மாணவர்களுடன் பேச்சு, இசைப் போட்டிகளிற் பங்குகொண்டு முதலிடப் பரிசில்களைப் பெற்றமையையும் மறக்கமுடியாது. அதிபரால் ஆசிரியர்க்ட்கு விசேட கல்வியிற் பயிற்சிகள் அளிக்கப்பட்டதால் ஆசிரியர்களின் கற்பித்தற் செயற்பாடுகள் உயர்வடைந்த நிலையிற் காணப்
பட்டன.
புலனிழந்தோருக்கான விசேட
கருவிகள் - கட்டடங்கள்
1974 ஆம் ஆண்டு திரு.ஜே.எஸ்.டேவிட் அவர்கள் அதிபராகப் பணியேற்றார். இவரும் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள "கிளார்க் கல்லூரி"யில் கேள்விக் குறைபாடுடை யோருக்கான விசேட கல்வியிற் சிறப்புப் பயிற்சி பெற்றவராவர். இவரது பணிக்காலத்திற் பாடசாலைக்குத் தேவையான விடுதிக் கட்டடங் கள், விழிப்புலனிழந்த மாணவர்களுக்கான வகுப்பறைக் கட்டடங்கள், விடுதிகள், கலை அரங்க மண்டபம், ஆரம்பக் கல்விப் பிரிவுக்கான வகுப்பறைகள், நூலக மண்டபம் அடங்கிய வெள்ளி விழா மாடிக் கட்டடம்; சிற்றாலயம் ஆகியவை அழகுற நிர்மாணிக்கப்பட்டுப் புதுப் பொலிவுடன் பாடசாலை வளாகம் தோற்றம் பெற்றது. கேள்விக் குறைபாடுடையோருக்கான நவீன கற்பித்தற் சாதனங்கள், கேள்வி g|6TT6óGuh (Audio Meter) 85(561) 6T6TLIGOT6nyuh, ஆற்றல் மிக்க குழுக்களுக்கு உதவிடும் கருவிகளும் பெறப்பட்டமையோடு, ஆசிரியர்
O ாழவகம

களுக்கு விசேட கல்வியில் அதிபரால் தொடர்ந்து பயிற்சிகள் வழங்கப்பட்டதால், நவீன கற்பித்தற் சாதனங்களின் துணையுடன் ஆசிரியர்களின் கற்பித்தல் பணி மிகவும் உயர்நிலை பெற்றது. இதனால் மாணவர்கள் பெரும் பயன் அடைந்தமையைக் காண முடிந்தது. விழிப்புலனிழந்த உயர் வகுப்பு மாணவர்கள் ஒன்றிணைந்த திட்டத்திற் கல்வியைப் பெற வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன. எனவே இம்மாணவர்கள் உயர்தரப் பரீட்சையிற் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுப் பட்டதாரிகளானார்கள். பலர் அரச துறைகளிற் சிறப்பான நிலைகளிற் பணியாற்று கின்றனர். இவர்கள் இசைத் துறையில் மிகவும் உயர்நிலை பெற்றவர்களாவும் காணப் படுகின்றனர். பாடசாலை நிகழ்ச்சிகளில் இம்மாணவர்களால் வழங்கப்படும் இசையின் இனிமையைக் கேட்டுணர்ந்த அனைவரும் சிறப்பாகப் புகழ்ந்துரைப்பது குறிப்பிடத்தக்கது.
போர்க்காலம் பாடசாலையின் தாக்கம்
(1983 களிலிருந்து விடுதலைப் போராட்டம் முனைப்புப் பெறத் தொடங்கியது) 1987 களில் இந்திய அமைதி காக்கும் படை வடக்கு-கிழக்கு மாகாணங்களில் நிலை கொண்டது. அப்பொழுது ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை யால், சில மாதங்கள் பாடசாலைகள் இயங்க முடியவில்லை. எமது பாடசாலைக்கும் இந்நிலை ஏற்பட்டது. 1988 களில் நிலைமைகளில் மாற்றங்கள் ஏற்பட பாடசாலை மீண்டும் தனது இயல்புநிலையில் இயங்க ஆரம்பித்தது. ஆனால் அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக 1900 பங்குனி இந்திய அமைதிப்படை வெளி யேறியது.
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 50
9 பொருளாதாரத் தடை பாடசாலை
இயங்காமை
இதனைத் தொடர்ந்து யாழ் மாவட்டத்தில் 1990 ஆனிமாதம் போர்ச் சூழ்நிலை உருவானது. இதனால் (பொருளாதாரத் தடை, உணவு, எரிபொருள் தட்டுப்பாடு, மருத்துவ வசதியீனங் கள், வாகனப் போக்குவரத்துக்கள் தடைப் பட்டன. குடாநாட்டு மக்கள் பைசிக்கில்களையே நீண்டதுாரப் பயணத்துக்கும் பயன்படுத்தினர். இப்படிப் பல இன்னல்களைக் குடா நாட்டு மக்கள் எதிர்கொண்டதோடு - மக்களின் இடப்பெயர்வுகளும் ஏற்பட்டதோடு, பாடசாலை களும், இயங்கமுடியாத நிலை ஏற்பட்டது) நவீல்ட் பாடசாலையும் 1990 ஆவணியிலிருந்து இயங்க முடியவில்லை. பாடசாலையிற் கல்வி கற்றுவந்த வெளிமாவட்ட மாணவர்கள் அதிபர் திரு.ஜே.எஸ்.டேவிட் அவர்களால் 1990 புரட்டாதி பாதுகாப்பாக ஏ-9 வீதி வழியாகக் கொழும்புக்குப் பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டுப் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப் பட்டனர். 1990 களில் 30 ஆசிரியர்கள் கற்பித்தற் பணியிலிடுபட்டிருந்தனர். அந்நாட்களிற் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டிருந்த 44/90இல், சுற்று நிருபத்துக்கு அமையக் குடாநாட்டுப் போர் சூழ்நிலை காரணமாக, அதிபர் உட்பட, 11 இளம் ஆசிரியர்கள் தமது பணியிலிருந்து ஓய்வு பெற்றனர்.
9 பாடசாலையின் உடைமைகள்
பாதுகாக்கப்படல் 1991 மூன்றாம் பருவ காலத்திருந்து 10-15 மாணவர்கள் வரையில் வர ஆரம்பித்தனர். அப்பொழுது பிரதி அதிபராகப் பணியாற்றிய திரு.கே.கோபாலகிருஷ்ணன் அவர்கள் பதில்
அதிபராகக் கடமை ஏற்றார். மிகக் கூடிய வசதிக்
O Surry6851D

குறைபாடுகள் மத்தியிலும், எறிகணை வீச்சுக்கள், விமானக் குண்டு வீச்சுக்கள் இடம்பெற்ற பொழுதும், பாடசாலை வளாகத்தை விட்டு வெளியேறாமல், மன உறுதியோடு தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்து விசேட கல்வி தேவையுடைய மாணவர்கட்கான கற்றல், கற்பித்தற் செயற்பாடுகளுக்குரிய பெறுமதி மிக்க இலத்திரனியற் சாதனங்களையும், பாடசாலையின் வரலாற்றுக் குறிப்புப் பதிவேடு கள் உட்பட அனைத்துச் சொத்துக்களையும் பாதுகாத்துள்ளார். இவர் 1998களிற் பணியி லிருந்து ஒய்வு பெற்றார். பாடசாலை தொடர்பாக இவரது பொறுப்பு வாய்ந்த பணி எப்பொழுதும்
சிறப்புடையதாகக் காணப்பட்டது.
கற்றல்-கற்பித்தலுக்கான கருவிகள் ஆவணங்களை இழத்தல், வள
அழிவுகள்
1997 களில் இருந்து மீளக் கட்டியெழுப்பப் பட்ட கல்விச் செயற்பாடுகள், 2000 ஆம் ஆண்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமைகளால் பெரும் பாதிப்புக்கு உட்பட்டன. நவீல்ட் பாடசாலை யாழ்.பரியோவான் கல்லூரி தொழில் நுட்பப் பிரிவுக் கட்டடத்தில் இயங்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது. 2001 ஆம் ஆண்டு பாதுகாப்புப் படையினரிடம் விசேட அனுமதி பெற்றுப் பாடசாலைப் பொருட்களை எடுத்துவரக் கைதடிக்குச் சென்றபோது, பாடசாலை வளாகக் கட்டடங்கள் அனைத்தும் யுத் தத்தின் அ கோரத் தாக் குதல் களுக்குள்ளாகிப் பெரும் சேதமடைந்திருந்தது. கற்றல்-கற்பித்தலுக்குரிய பெறுமதி மிக்க இலத்திரனியற் சாதனங்கள், பார்வைக் குறைபாடுடையோருக்கான கற்றலுக்குரிய
அனைத்துச் சாதனங்கள் உட்பட, பாடசாலை
32
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 51
யின் வரலாற்றுக் குறிப்புப் பதிவேடு, ஏனைய முக்கிய ஆவணங்கள் அனைத்தும் காணப்பட வில்லை. இவைகள் அனைத்தையும் பாடசாலை இழந்துவிட்ட காலத்தில் திருமதி. ச.பத்மபாலன் பொறுப்பாக இருந்தார்.
பாடசாலை மீள் நிர்மாணம், மீள
இயங்குதல் 2002ம் ஆண்டு திரு.த.சாம்சன் லூர்தீஸ் அவர்கள் பாடசாலையின் அதிபராக நியமனம் செய்யப்பட்டார். 2002 ஆம் ஆண்டில் தென்மராட்சி மீள் குடியேற்றத்திற்கு அரசு, அனுமதி வழங்கியது. இவ்வேளையில் திரு.த.சாம்சன் லூர்தஸ் மேற்கொண்ட பெருமுயற்சி காரணமாகப் பாடசாலை வகுப்பறை, கட்டடங்கள், விடுதிகள் மீள் நிர்மாணம் செய்யப்பட்டதுடன், 2003 பங்குனி மாதம் கைதடியிற் பாடசாலை மீள இயங்க ஆரம்பித்தது. கற்றல்-கற்பித்தலுக்கான துணைச் சாதனங்கள் யாவும் இழந்த நிலையிற் கற்றல் - கற்பித்தற் செயற்பாடுகள் நன்றாகவே நடைபெற்றன. 2004 ஆம் ஆண்டுகளிற்
பாடசாலையின் ஏனைய வகுப்பறைகளுக்கான
வாழ்வகம் 3 ܨܲܦܵܕ݂
این شبه قت به مفهوریه ۶۶۰
*** أتليتيتي
 

கட்டடங்கள், விடுதிகள், உணவு மண்டபம், கலை அரங்க மண்டபம் அனைத்தும் அரசின் எவ்வித நிதி உதவிகளுமின்றி மிகவும் தரமான வகையிற் பாடசாலையின் ஆளுநர் சபையால் மீள் நிர்மாணம் செய்யப்பட்டன. நவீல்ட்
பாடசாலையின் வளங்கள் 300 மாணவர்கள்
விடுதியில் தங்கியிருந்து கல்வியைப் பெறுவதற்கான வசதிகளை உடையதாகும். 1990 களின் பின் குடாநாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக வெளி மாவட்டங்களில் உள்ள புலனிழந்த சிறுவர்கள் நவீல்ட் பாடசாலைக்கு வரமுடியாதவரானார் கள். தற்பொழுது இம்மாவட்டத்தை வதிவிடமாக உடைய 140 சிறுவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.
இப்பாடசாலையின் முகாமையாளராக. 1997 களிலிருந்து யாழ்பல்கலைக்கழகக் கிறிஸ்தவ நாகரிகத் துறை விரிவுரையாளருமான வண.கலாநிதி. ஈ.ஜே.ஜெயரத்தினம் அடிகளார்
சிறப்புடன் சேவையாற்றுகின்றார்.
நவீல்ட் கல்விப்பணி சிறந்தோங்குக!
புலனிழந்தோர் வாழ்வில் ஒளிவீசுக!
அன்னையின் இறுதிப்பிறந்தநாள் விழாவிற் செஞ்சொற் செல்வர் ஆறு. திருமுருகன் உரையாற்று கிறார்.
சைவப்புலவர் சு.செல்லத்துரை, வாழ்வக முன்னாள் செயலாளர் அ.இராமநாதன், வாழ்க வத் தலைவர் ஆ.ரவீந்திரன் ஆகியோ
ருடன் அன்னை.
3
சங்கம்
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 52
யாழ் விழிப்புலன் அற்றே
us -------سسسسسسس
விழிப்புலன் அற்றோரின் மறுமலர்ச்சிக்கு முதன்மைப்படியாக விளங்குகின்றது யாழ் விழிப்புலன் அற்றோர் சங்கம்.
யாழ். விழிப்புலனற்றோர் சங்கம் 1976 ஆம் ஆண்டு மே மாதம் 23ம் திகதி ஆரம்பிக்கப் பட்டது. நாடு எங்கிலும் பரந்து வாழும் பார்வை யற்றவர்களை ஒருமுகப்படுத்தி அவர்களின் வாழ்வு மலர்ச்சியடைய கல்வி, பொருளாதார, சமூக நிலைகளால் அவர்களும் முன்னேற்றம் பெற, சமூகத்தின் சாதாரண அங்கத்த வர்களுடன் சமமமாக வாழ, மதிக்கப்படக் கூடிய ஒரு நிலையை உருவாக்க வேண்டுமாயின் இவர்கள் யாவரையும் ஒரு முகப்படுத்த வேண்டும். ஏதாவது ஸ்தாபன மயப்படுத்த வேண்டும். என்ற திரு. காசிநாதர் விஜயராஜசிங்கம் அவர்களின் எண்ணக்கருவுக்
கமையத் தோற்றம் பெற்றதே இச்சங்கமாகும்.
திரு கா. விஜயராஜசிங்கம் அவர்களின் முன்மொழிதலை ஏற்றுச் செயற்பட்ட திரு. சீனிவாசன் தருமராசா, திரு. இராஜசூரியர் சிவகுமாரன் ஆகியோரின் முயற்சிக்கமையக் கைதடி, நவீட் பாடசாலையில் அன்னாளில் அதிபராக இருந்த திரு. J.S.டேவிட் அவர்களின் பூரண ஒத்துழைப்புடனும் வழிகாட்டலுடனும் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது.
1976ம் ஆண்டுவரை தமிழ் பேசுகின்ற பார்வையற்றவர்களுக்காக இயங்கிவந்த ஒரே
参 burypbued

TĤ FIĤI5Lb ーイ
கா. விஜயராஜசிங்கம், அங்கத்தவர், யாழ் விழிப்புலன் அற்றோர் சங்கம்.
ஒரு நிறுவனம் நவீட் பாடசாலையேயாகும். இது ஒரு கல்வி ஸ்தாபனமாக மட்டுமே இயங்கி வந்தது. எனினும் விழிப்புலனற்றோருக்கான முழுமையான கல்வி இங்கு வழங்கப்படவில்லை. குறிப்பிட்ட வயதைக்கடந்தவர்கள் தாம் பெற்ற ஒரளவு கல்வியுடன் மீண்டும் தத்தமது வீடுகளுக்குச் சென்று வாழவேண்டிய நிலையே அதுவரை இருந்தது. அவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகவே இருந்தது. நவீல்ட் பாடசாலை விடுதியால் ஒன்றாகப் பழகிய மாணவர்கள் இவ்வாறு பிரிந்து சென்று தனித்தனியே வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையிலிருந்து விடுவித்து மேற்படிப்பு வரை கல்வியைத் தொடரவைக்கவும் பின் தகைமைக் கேற்பப் பொருத்தமான வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்கவும், கல்வியைத் தொடர முடியாமற் போனவர்களுக்குச் சுயதொழில் துறைகளிற் பயிற்சி வழங்கி எத்துறைகளால் தொழில்களை மேற்கொண்டு அதன்மூலம் பெற்ற வருமானத்தைக் கொண்டு தாமே தம்மையும் தமது குடும்பங்களையும் பராமரிக்கக் கூடிய நிலைமையும் உருவாக்கி, அதன்மூலம் பார்வையற்றவர்களும் சமூகத்திற் சமமான அங்கத்தவர்கள் என்ற நிலையை உருவாக்கு வதையே நோக்கமாகக் கொண்டது யாழ் விழிப்புலனற்றோர் சங்கம்.
இவ்வாறு அன்று 18 பார்வையற்ற வர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இச்சங்கத்திற்
பின்னர், நாடெங்கிலும் பரந்துபட்டு வாழும் 240
34
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 53
பார்வையற்றவர்கள் அங்கம் வகித்திருந்தனர் எனினும், தற்கால சூழ்நிலை காரணமாக அனைவருடனும் தொடர்புகொள்ள முடியாத நிலையிலும் சுமார் 155 அங்கத்தவர்கள்
இன்னமும் தொடர்பில் உள்ளனர்.
யாழ். விழிபுலனற்றோர் சங்கத்தில் 1976ம் ஆண்டிலிருந்த சங்கத்தின் முதலாவது தலைவராக இருந்துவந்த திரு.S.தர்மராசா, சட்டத்தரணி K.V. மகாதேவா, திரு.R. சிவகுமாரன், திரு. K. விஜயராஜசிங்கம், திரு.A.ரவீந்திரன், திரு.A. மகேந்திரன், ஆகியோரின் அயராத உழைப்பின்போது இன்று யாழ். விழிப்புனற்றோர் சங்கம் வளர்ச்சியுற்று அரும்பணிகளை ஆற்றி வருகின்றது. பல நிதியதவிகளையும் வழங்கிவருகின்றது. 1. பல்கலைக்கழக மாணவர்களாக இருக்கும் பார்வையற்றவர்களுக்கு மாதாந்த உதவு தொகையை வழங்கிவருகின்றது. 2. அவசியப்படும் பட்சத்தில் ஏனைய பார்வை யற்ற மாணவர்களின் கல்விக்கும் நிதியுதவி வழங்குகின்றது. 3. பார்வையற்ற அங்கத்தவர்களின் பிள்ளை
களின் கல்விக்காக நிதியுதவி 4. மற்றும் எந்தத் தொழிலிலும் ஈடுபடமுடியாமல் இருக்கும் பார்வையற்றவர்களுக்குக் கருணை நிதி வழங்குகின்றது.
யாழ் விழிப்புலனற்றோர் சங்கத்தின்
நோக்கங்கள்
1. பார்வையற்றவர்களை கல்விநிலையில்
மேம்படச் செய்தல்
இச்சங்கம் திறமையிருந்தும் கல்வியைத்
தொடரமுடியாத நிலையில் இருந்த அங்கத்துத்
O 6QImyp6bluef5LD

தவர்களுக்கு ஊக்கமும், ஒத்துழைப்பும் வழங்கி பலர் பட்டதாரிகள் ஆவதற்கும் பெருந்துணை புரிந்துள்ளது. இவர்கள் தற்பொழுது பலதுறை களில் உத்தியோகம் வகிப்பது. குறுப்பிடத் தக்கது. 6 மாணவர்கள் தற்பொழுது பல்கலைக் கழகத்திற் கல்வி பயில்கின்றனர். இதைத்தவிரப் க.பொ.த சாதாரண, உயர்தரத்திற் பார்வையு டைவர்களுக்குச் சமகாகவும் பலர் கல்வி கற்று
வருகின்றனர்.
ஒருமுகப்படுத்தப்பட்ட கல்வித் திட்டத்தின் கீழ் கல்வி பயிலும் மாணர்களுக்காக யாழ். மாவட்டத்தில் "வாழ்வகம்" என்ற நிறுவனமும், கிழக்கில் "தரிசனம்" என்ற நிறுவனமும் யாழ் விழிப்புலனற்றோர் சங்க ஆதரவுடன் ஆரம்பிக்
கப்பட்டன.
வேலைவாய்ப்பு:-
பார்வையற்றவர்களுக்கு வேலைவாய்ப் புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் சங்கத்தின் பெருமுயற்சியின் பயனாகப் பார்வையற்றவர் களிற் பலர் சமூக மாந்தர்களாக வாழ்ந்து வருகின்றனர். ஒரு சில பார்வையற்றவர்கள் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பதும் யாழ். விழிப்புலனற்ற சங்கத்தின் சாதனை களுக்குச் சான்றாகி வலுச்சேர்க்கின்றது.
இச்சங்கத்தின் நிர்வாகத்தை முற்று முழுதாகப் பார்வையற்றவர்களே மேற்கொள் கின்றனர். இச் சங்கமானது 1976ம் ஆண்டிலிருந்து இன்றுவரை தனது பணிகளை வெற்றிகரமாக ஆற்றிவருகின்றது. சங்க வளர்ச்சிக்காக ஒத்துழைப்பு வழங்க முன்வரும் நலன் விரும்பிகளும், ஆதரவாளர்களும் இச் சங்கத்திற் பார்வைப்புலன் உடைய அங்கத்த
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 54
வர்களாக உள்ளனர். அன்பளிப்புக்கள் மூலமா கவும், பொதுமக்களிடமிருந்து சேகரிக்கும் நிதிமூலமாகவும் இச்சங்கம் தனது செயற்பாடு களை வெற்றிகரமாக நிறைவேற்றி வருகின்றது.
1976ம் ஆண்டு மே மாதம் 23ம் திகதி அன்று சாசனவடிவம் பெற்று சங்க ஸ்தாபனம் ஸ்தாபிக்கப்பட்ட அதே மண்டபத்திற் சமூகமளித்திருந்த பல பெரியார்களாற் பரியோ வான் கல்லூரியின் முன்னாள் ஆசிரியராகவும் பின்னர் அதிபராகவும் இருந்த காலஞ்சென்ற திரு. தனபாலன் அவர்களும், அதே கல்லூரியில் ஆசிரியராக இருந்த திரு. அலெக்ஸ் தம்பிராசா அவர்களும் வழங்கிய நிதியே எமது சங்கத்தின் வளர்ச்சிக்கான ஆரம்ப நிதியாகும். சங்கம் தொடர்ந்து எடுத்து வந்த முயற்சியின் காரணமாக சங்கத்தின்
நிர்வாகச் செயற்பாடுகளுக்கும் பிறைல்நூலகம்
O
மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ெ
வாழவகம
 

ஒன்றினை அமைப்பதற்கும், தொழிற்பயிற்சி களை வழங்குவதற்குமான கட்டடம் அமைப்பதற்காக அரசாங்கத்திடமிருந்து காணித்துண்டு ஒன்று பெறப்பட்டது. அத்துடன் கைதடியிற் கட்டடமும் அமைக்கப்பட்டது.
எனினும் இந்நோக்கங்களை நிறைவேற்று வதற்குத் தேவையான உபகரணங்கள், தளபாடங்கள் போன்றவற்றைப் பெற்றுக் கொள்ளுவதிற் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதால் அதற்காக நலன் விரும்பிகளின் உதவியை நாடிநிற்கின்றது. மேலும் வீடுகளில் இன்னமும் முடங்கியிருக்கும் பார்வையற்றவர்களையும் வெளிக்கொணர்ந்து முன்னேற்றுவதற்குச் சங்கம் தொடர்ந்தும் முயற்சி எடுக்கின்றது. எனவே இதற்கும் பொதுமக்கள் மற்றும் நலன் விரும்பிகளிடமிருந்தும் ஒத்துழைப்பையும் யாழ் விழிப்புலனற்றோர் சங்கம் நாடி நிற்கின்றது.
கெளரவ நரவிராஜ் அவர்களுடன் அன்னை
36
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 55
மனவளர்ச்சி குன்றியோருக்
ஆர்க் நிறுவனம் t
ஆசிரி
மனவளர்ச்சி குன்றியவர்கள் வீடுகளில் முடங்கியிருந்த காலம் ஒன்றிருந்தது. அவர்கள் பெற்றோருக்கும் ஏனையோருக்கும் சுமையாக இருந்தனர். சமூகத்தின் ஏனைய பிரஜைகள் அனுபவிக்கும் உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. சமூகப் பொருத்தப்பாடு அற்றவர்களாக, ஏனையவர்களாற் கவனிக்கப் படாதவர்களாக, கல்வி வழங்கப்படாதவர்களாக
அவர்கள் வாழ்ந்தனர்.
உடுவில் கிராமத்தைச் சேர்ந்த ஜேக்கப் தம்பதியினரின் மகளும் மனவளர்ச்சி குன்றியவ ராகக் காணப்பட்டார். ஆயினும் அவர்கள் தமது பிள்ளைக்குக் கல்வியறிவூட்ட எண்ணினர். தமது பிள்ளைக்கு மட்டுமல்ல, அவரைப் போன்ற ஏனைய பிள்ளைகளுக்கும் கல்வியறிவூட்டும் நோக்குடன் விசேட பாடசாலையொன்றை உருவாக்குவதற்குத் தமது காணியையும் வீட்டையும் உபகரித்து அப்போதைய யாழ் மறை மாவட்ட ஆயர் மேதகு தியோகுப்பிள்ளை
ஆண்டகையிடம் வேண்டினர்.
ஆண்டகையின் ஆலோசனையுடன் யாழ்.திருக்குடும்பக் கன்னியர் மடம் ஆர்க் என்ற பெயரில் மனவளர்ச்சி குன்றியோருக் கான பாடசாலையை ஆரம்பித்தது. கன்னியர் மடத்தின் மாகாணத் தலைவி அருட்சகோதரி யூலாலி அவர்களால் பொறுப்பேற்கப்பட்டு 02.02.1978 அன்று இப்பாடசாலை வைபவ ரீதியாக உடுவில் மகளிர் கல்லூரியின்
வாழ்வகம் 3

கு மறுவாழ்வளிக்கும்
-ருெகுமரன்
யர், பண்டத்தரிப்பு பெண்கிள் உயர்தர பாடசாலை.
பின்புறமாக ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பகாலத் தில் 17 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இவர்களை நெறிப் படுத்தும் முகமாக அருட்சகோதரிகள். மில்றேட், பற்றீசியா ஆகிய இருவரும் காலி மாவட்ட அன்புக் கன்னியர் சபையினரால் நடாத்தப்படும் சுப்பெம் உயன்ன என்ற பாடசாலையில் விசேட பயிற்சிகளைப் பெற்றனர். இவர்களுடன் ஐந்து பராமரிப்பாளர்களும் இணைந்து பணியாற்
றினர்.
மனவளர்ச்சி குன்றியோருக்குக் கல்வியும், பயிற்சியும் அளிக்கும் பணியை வடபகுதியிலே முதன்முதலாக ஆரம்பித்த பெருமை ஆர்க் நிறுவனத்துக்கே உள்ளது. இதுவரை 380 ற்கும் அதிகமான பிள்ளைகள் இங்கு பயிற்றுவிக்கப் பட்டு நன்னிலையடைந்துள்ளார்கள். 30 ஆண்டுகளைப் பல நெருடல்கள் மத்தியில் நிறைவு செய்துள்ள இந்நிறுவனம் தொடர்ந்தும் தனது செயற்பாட்டைப் புது உத்வேகத்துடன் மேற்கொண்டுள்ளது.
தற்போது ஆர்க் நிறுவனம் அருட்சகோதரி டனியலா அவர்களின் வழி நடத்தலில் இயங்கி வருகின்றது. ஆர்க் பாடசாலையின் அதிபராக அருட்சகோதரி மெற்றில்டா வசந்தி அவர்கள் செயற்படுகிறார். இவரது நிர்வாகத்தின் கீழ் ஆறு ஆசிரியர்கள் விசேட கல்வியினை அளித்து வருகின்றனர். தற்போது இங்கு 34 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். சிலர்
7
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 56
வீடுகளிலிருந்து வந்து கற்றுச் செல்கின்றனர். பலர் ஆர்க் நிறுவன விடுதிகளில் தங்கியிருந்து கற்கின்றனர். இவர்களுக்கான வசதிகளை
நிறுவனம் வழங்கிவருகின்றது.
மனவளர்ச்சி குன்றிய சிறாரை அன்போடும் கருணையோடும் வரவேற்று, அவர்களது ஆற்றல்களை இனங்கண்டு, அர்ப்பணிப்புடன் அவர்களது தேவைகளை நிறைவேற்றி மகிழ்வான மனநிலையுடன் அவர்களை வாழ வழிகாட்டுதலும், சமூகப் பயன்மிகு பிரஜை களாக அவர்களை மாற்றுவதுமே ஆர்க் நிறுவனத்தின் முதன்மை நோக்கமாகும். இங்கு பயிலும் மாணவர்களுக்கு நாளாந்த அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான பயிற்சி களும் வழிகாட்டல்களும் கற்பிக்கப்படுகின்றன. வீட்டுச் சுத்தம் பேணல், உடைகளை அணியும் பயிற்சி, உணவுகளை உண்ணும் பயிற்சி, தோட்டப் பராமரிப்பு, காகித உறைகள், கால்துடைப்பம் முதலியவற்றைச் செய்யும் கைப்பணிப் பயிற்சி என்பனவும் இங்கு வழங்கப்
படுகின்றன.
அடிப்படை எண்களையும், எழுத்துக் களையும் இனங்கண்டு வாசித்து, எழுது வதற்கும், படங்கள் வரைந்து வர்ணம் தீட்டு வதற்கும், களிமண்ணில் உருவங்கள் செய் வதற்குமான பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.
விளையாட்டு மூலம் மாணவர்களின் மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் வளர்ப்பதுடன் அவர்களுக்கான திறன் விருத்திப் பயிற்சியும் அளிக்கப்படுகின்றது.
வாழ்வகம்

தமிழ், ஆங்கிலப் பாடல்களுக்கான அபிநயங்கள், நடிப்பும் பயிற்சிகள் அளிக்கப் படுவதுடன் நடனங்களும் நாடகங்களும் ஆற்றுகை செய்யப்பட்டும் வருகின்றது. யோகாசனப் பயிற்சி பிரதானமாக வழங்கப் படுகிறது. அத்துடன் உபகரணப் பயன்பாட்டின் மூலம் பிள்ளைகளின் நடத்தை மாற்றத்துக் கான வழிப்படுத்தல்களும் செய்யப்படுகின்றன.
அர்ப்பணிப்புள்ள சேவை, அன்பான அரவணைப்பு, அமைதியான சூழல் இவையனைத்தும் கொண்டதாக ஆர்க் பாடசாலை மனவளர்ச்சி குன்றிய மாணவர்
களுக்கான இனிய சோலையாக விளங்கு
கின்றது.
நடைமுறை உலகத் தேவைகளுக்கு ஏற்ற வகையிற் பயிற்சி அணுகுமுறையில் மாற்றங்கள் கொண்டுவருவதும், இங்கு கல்வி பயின்று வெளியேறும் பிள்ளைகளுக்குச் சொந்தக் காலில் உழைக்கக்கூடிய சுயதொழில் முயற்சிகளுக்கு ஊக்கமளித்து உதவுவதும் ஆர்க் நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்களாக
உள்ளன.
மனவளர்ச்சி குன்றியோரின் வாழ்வில் நம்பிகை ஒளியை ஏற்றி, அவர்களை நல்மணி தராக்கும் பெரும் பணியை ஆர்க் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இப்பணிக்கு நல்லுள்ளங்களின் ஆதரவை அது வேண்டி நிற்கிறது.
38
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 57
வலுவிழந்தோருக்கு வலுவு
வலுவிழந்தோர் புனர்வாழ்க
lu
இயற்கையின் மனிதகுலப் படைப்பின் போது, நோய், யுத்தம், விபத்து போன்றவற்றின் விளைவாகப் பகுதியளவாக அல்லது முழுமை யாக உடல், உள ரீதியாகப் பாதிக்கப்பட்டு வலுவிழக் கின்ற ஒரு நிலையிலேயே ஒருவர் வலுவிழந்தோர் ஆகின்றார்.
இவ்வாறு வாழ்வு பாதிக்கப்பட்டு, தினமும் உடல், உள தாக்கங்களுக்கு உட்பட்டு எதிர் காலம் கேள்விக்குறியாக்கப்பட்டு வாழ்வோர்
ஏராளம்.
ஆயினும் மனதில் ஊனம் ஏற்படாதவரை வலுவற்றவர்களால் இவ்வுலகில் சாதனைகளும்
பல நிகழ்த்த முடியும்.
சமூகத்திற் பொறுப்பு வாய்ந்த உறுப்பினர் கள் என்ற வகையில் நாம் அவர்களது மன வலிமையை அதிகரித்து, அவர்கள் சொந்தக் காலில் நிற்பதற்கு உதவவேண்டியது அவசிய மாகும்.
அந்த வகையில் வலுவிழந்தோரின் புனர்வாழ்விற்காக உருவாக்கப்பட்டதே
வலுவிழந்தோர் புனர்வாழ்வுச் சங்கம் ஆகும்.
வலுவிழந்தோர்களின் நலனுக்காக யாழ்ப்பாணத்தில் இயங்கும் இந்த ஸ்தாபனம் 1990ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் முதலாவது
வாழ்வகம் 3

I'[Bib
புச் சங்கம்
-1
வைத்திய கலாநிதி N.சிவராஜா,
தலைவர் ஊனமுற்றோர் புனர்வாழ்வுச் சங்கம்
த  ைல வ ரா க வைத் திய கலா நிதி
எஸ்.சண்முகலிங்கம் செயற்பட்டார்.
இச்சங்கம் கீழ்வரும் நோக்கங்களை
அடிப்படையாகக் கொண்டு, மாற்று வலுவுடை
யோர்களிற்கான பல செயற்பாடுகளைச் செய்து
வருகின்றது.
0.
மாற்று வலுவுடையோர்களின் முழுத் திறமை களையும் வெளிக்கொணர்ந்து சமூகத்திற் சுயமரியாதையுடன் வாழ வழிசெய்தல். அரசாங்க, தனியார் நிறுவனங்களில் அவர்களுக்குப் பொருத்தமான வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள உதவுதல். சமூக மட்டத்தில் சுகாதார வசதிகளை விருத்திசெய்வதன் மூலம் வலுவிழந்த சமுதாயம் உருவாகுவதைத் தடுத்தல். மாற்றுவலுவுடையோர்களின் நலனுக்காக வேறு நிறுவனங்களின் உதவியுடன் வேலைத்திட்டங்களை மேற்கொள்ளுதல். மாற்று வலுவுடையோர்களைக் குடும்ப, சமூக மட்டத்திற் பாகுபாடின்றி நடத்தி சம அந்தஸ்துடன் வாழவழிசெய்தல். சமூகப் பொருளாதாரக் கலாச்சாரச் செயற்பாடுகளை மாற்று வலுவுடையோர் மத்தியில் உருவாக்குதல்,
மேற்படி நோக்கங்களினை அடிப்படையாகக்
கொண்டு பல சேவைகளை மாற்று
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 58
வலுவுடையோர்களுக்காக வழங்கி வருகின்றது.
அவையாவன:
1. மாற்று வலுவுடையோர்களுக்கான சுய
தொழிற்பயிற்சி வழங்குதல்.
9 தையற்பயிற்சி
கடிதஉறை ஒட்டுதல்
9 கைவினை வேலைகள்
9 மாலை கட்டுதல் (பூமாலை, மொட்டு
மாலை, நாகசடம்) கேக் ஐசிங் தயாரித்தல் கதிரைபின்னுதல் விளக்குமாறு, தும்புத்தடி தயாரித்தல் மணவறை அலங்காரம் வாழ்த்துமடல் தயாரித்தல் சிற்றுண்டி உணவு தயாரித்தல் பூமரங்கள் உற்பத்திசெய்தல்
புத்தகம் கட்டுதல்
போன்ற சுயதொழிற் பயிற்சிகள் மாற்று
வலுவுடையோர்களுக்கு இலவசமாக வழங்கி
சமூகத்திற் சுயமாகவாழ வழியேற்படுத்தப் படுகிறது. நாளாந்தம், இப்பயிற்சிகளிற் பல
பங்குபற்றிப்பயனடைகின்றனர்.
2. வலுவிழந்தோர்களின் இன்றியமையாத
தேவைகளைக் கருத்திற் கொண்டு
வலுவிழந்தோர்களாற் பயன்படுத்தப்படுப்
வலுவிழந்தோர் உபகரணங்களையும் பெற்று
வழங்கி வருகின்றது.
அவ்வகையில்,
9 சக்கர நாற்காலி, * முச்சக்கரவண்டி
நடக்கும் சட்டம்,
9 ஊன்றுகோல்,
O O வாழவகம

40
1 GasTGunn,
9 வெள்ளைப் பிரம்பு,
* பிரையில் கடதாசி என்பன வழங்கப்
படுகின்றன.
3.வறிய குடும்பங்களிலுள்ள மாற்று வலுவுடை யோருக்கு மாதாந்த உதவுத்தொகை வழங்குதல். 4. போசாக்குக் குறைவாக உள்ள மாற்று வலுவுடைய பிள்ளைகளுக்குச் சத்துணவு வழங்கலும், சத்துமருந்து வழங்கலும். 5. வறிய குடும்பங்களிலுள்ள மாற்று வலுவுடைய மாணவர்களின் கல்விக்கான உதவிகள், கற்றல் உபகரணங்கள் வழங்குதல். 6. சுயதொழில் ஆரம்பிப்பதற்கான கடன்
வசதியைப் பெற்றுக் கொடுத்தல். 7. சுயதொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்
கொடுத்தல். கணினிப்பயிற்சி வழங்குதல் 9. மாற்று வலுவுடையோர்களுக்கான பொழுது போக்கு நிகழ்ச்சிகளையும், கலைநிகழ்ச்சி களையும் நடாத்துதல். 10. குறிப்பிட்ட சில மாற்றுவலுவுடையோர் களுக்குச் சுயதொழில் வேலைக்காகத் தங்கியிருப்பதற்கான வசதிகளைச் செய்து கொடுத்தல். 1. மாற்று வலுவுடையோர்களின் பயிற்சிக் காலத்தில் தங்கியிருப்பதற்கான வசதிகள் செய்து கொடுத்தல். 12. மாற்று வலுவுடையோர்கள் பற்றிய
அடிப்படைத் தரவுகளைத் திரட்டுதல். 13. மாற்று வலுவுடையோர்களிற்கான சிகிச்சை நிலையத்தை வாரத்தில் ஒருமுறை நடாத் தப்பட்டு வருதல். 14. இயன் மருத்துவசேவை வழங்குதல்.
நிறுவுனர் நினைவுச்சிறப்பு ம

Page 59
எதிர்காலத் திட்டங்கள் யாவற்றையும் இச் சங்கம் கொண்டுள்ளது. குறிப்பாக,
9 சுயதொழிற் பயிற்சி வகுப்புக்கள் விரிவு
படுத்துதல். 9 மாற்று வலுவுடையோர்களின் உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்துவதற்
Zவலுவிழந்தோர்களின் வாழ்வில்
வலுவிழந்தோர் புனர்வாழ்வுச் ஆதரவளிப்பது சமூகத்தின் பொறுப்
மகரகம ஆசிரியர் பயிற்சிக் 6b 6U) TI GFT 6) நெறிப்படுத்துகிறார்.
ഖൻഖeb 4)
 

கான நிலையமொன்றை நிறுவுதல். விடுதி வசதிகளை விரிவுபடுத்துதல். 9 ஆளணி மற்றும் நிதி உதவிகளை
அதிகரித்தல். என்பவற்றை எதிர்காலத்
தில் மேற்கொள்ள இச்சங்கம் திட்டமிட்
டுள்ளது.
வளஞ்சேர்க்கும் உன்னதப் பணியை சங்கம் ஆற்றுகின்றது. அப்பணிக்கு பாகும்.
லயில் கலைநிகழ்ச்சி ஒன்றை அன்னை
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 60
உளநல ஆரோக்கியம்
ms "" --سسسسسس
ஆதார
"ஒரு நாட்டின் சமூக பொருளாதார அபிவிருத்தியை அளவிடுகின்ற அளவுகோல்
அந்நாட்டு மக்களின் உள, உடல் மேம்பாடு"
ஒரு நாடும் சமூகமும் சிறந்து விளங்க வேண்டுமாயின், அந்நாட்டு மக்களின் ஆரோக்கியம் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆரோக்கியத்திற்கு ஊன்று கோலாக அமைவது சுகாதார பழக்க வழக்கங்களும், உரிய முறையில் மேற்கொள்ளப்படும் மருத்துவ பராமரிப்பும் ஆகும். அறிந்தும் அறியாமலும் மேற் கொள்கின்ற தீய பழக்க வழக்கங்களும், உரிய நேரத்திற் கிடைக்கப்பெற வேண்டிய சிகிச்சை கிடைக்காமையும், தவறான சிகிச்சையும், சுகாதாரக் கேடுமே தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும், தன்னருகிலிருப்பவர்களை யும் நோயாளிகளாகவும், வலுவிழந்தவர்களாக வும் ஆக்கும்.
குறிப்பாக ஒரு கசநோயாளி, உரிய வைத்திய சிகிச்சை மேற்கொள்ளாமலும் மற்றவர்களின் முன்னே இருமுவதும், சுவாசிப்பதும் கூட அடுத்தவர்களை நோயாளிகளாக்குகின்றது. கண்ட கண்ட இடங்களில் துப்புததுல், மூக்கு சிந்துதல், உணவுப் பராமரிப்பு சிறந்த முறையில் மேற்கொள்ளாமை, தவறான உறவுகள் என்பன தன்னையும் கெடுப்பது மட்டுமல்லாமற்
சமூகத்தையும் சீர்கெடுக்கிறது.
தவறான அல்லது உரிய முறையில் அளிக்கப்படாத சிகிச்சை மனிதனை இன்னும்
வாழவகம

ーイ
வைத்திய அதிகாரி அ.ஜெயகுமரன், வைத்திய அதிகாரி, தெல்லிப்பழை வைத்தியசாலை
நோயாளி ஆக்கும். உதாரணமாக, அளவுக்கு அதிகமாகப் பாவிக்கும் பனடோல் (panodo), பரிசிற்றமோல் மாத்திரை கூட நஞ்சாக மாறுகின்றது. இது பெரியோரைக் காட்டிலும் சிறுவர்களுக்கு நஞ்சாகி ஈரலை பாதிக்கின்ற அபாயத்தை தோற்றுவிக்கின்றது (leaver failier) உதாரணமாக 3 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 6 மணிநேர கால இடைவெளி இன்றியும், 3 மாதத்திற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நாலு மணித்தியால இடைவெளி இன்றியும் கொடுப்பது ஆகாது. குறிப்பிட்ட கால எல்லைக்கு உள்ளாகப் பனடோல், பரிசிற்றமோல் குளிகை அல்லது பாணிகொடுத்தல் தவறு.
உடல் வெப்பநிலை குறையவில்லை என்பதற் காகக் குளிகையுடன் சேர்ந்து பாணியையும் (இருமடங்காக) கொடுத்தல் அபாயமானது.
சிறுபிள்ளைகளிற்கான பனடோல் அல்லது பரிசிற்றமோல் அளவு
10 - 15 மி.கி. /கி.கி உதாரணமாக 8 கி.கி உடல் நிறையுடைய குழந்தைக்கு 90மி.கி ஐ விட கூடுதலாக ஒரு தடவையில் கொடுத்தல்
கூடாது.
ஒரு நாளுக்கு கொடுக்கக் கூடிய ஆகக்கூடிய அளவு 60 மி.கி/கி.கி/நாள்
உ+ம்: 8 கி.கி குழந்தைக்கு 480 மி.கி விட கூடுதலாக ஒரு நாளிற்கு கொடுக்கக்கூடாது.
42
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 61
- 1 தேக்கரண்டி பனடோல் (பரசிற்றமோல்
UIT600f- 56.65 = 1206.u
- பனடோல் (பரசிற்றமோல்) குளிகை=500மி.கி
- ágyúliT606T U60TGLITij (paetiatric panadol
80mg)
இவற்றிற்கு மாறாக மேற்கொள்ளப்படும் சிகிச்சையால், உட்கொள்ளப்படும் மருந்து
நஞ்சாகும் தன்மை ஏற்படுகின்றது.
மண் ணெய், பெற்றோ ல் , அமிலம் உட்கொண்டால்.
இவ்வாறான அரிப்பை உண்டாக்குகின்ற பொருட்களை உட்கொண்டால் நஞ்சு அருந்தினாற் செய்வது போன்று வாந்தி எடுக்கச் செய்யக்கூடாது. காரணம் வாந்தியாக திரும்பி வரும்போது மறுமுறையும் உணவுக் கால்வாயிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும். அதேவேளை சுவாசப் பாதையினுTடும் சென்று சுவாச நோய்களையும் ஏற்படுத்தும். எனவே, வாந்தி எடுக்கச் செய்யாது உடனடியாக
மருத்துவரின் உதவியை நாடுவதே சிறந்தது.
O
வாழ்வகம் தற்காலிகமாக உடுவிலில் இய
O ഖനൃഖ6b
4
 

கற்பவதிகள் தமது கற்ப காலத்தில், தங்கள் ஆரோக்கியத்தையும் தமது உதரத்தில் இருக்கும் சிசுக்களின் ஆரோக்கியத்தையும் கவனத்திற் கொண்டு உணவுப் பழக்கங்களை மேற்கொள்ளவேண்டியது அத்தியாவசிய மாகிறது. கற்பம் தரிக்கின்ற ஆரம்ப காலக் கட்டத்திலிருந்தே உரிய மருத்துவ ஆலோசனை யைப் பெற்றுக்கொள்வதுடன், தமக்குரிய போஷாக்கு மருந்துகளை உட்கொள்வதும் தமக்குரிய உள, உடல் நோய்களிற்கான சிகிச்சையைத் தகுந்த மருத்துவரிடமிருந்து பெற்றுக்கொள்வதும் அவசியமாகின்றது.
இவை தவிர்த்து, கருக்கலைப்பு நடவடிக்கை களில் ஈடுபடுதலும், மருத்துவரின் ஆலோசனை இன்றி மருந்துகளை உட்கொள்ளலும் போஷாக்கு குறைகளும், உளஉடல் ஆரோக்கிய இன்மையும், பிறக்கின்ற குழந்தைகளை அங்கவீனர்களாகவும், வலுவிழந்தவர்களா கவும், மூளை வளர்ச்சி குன்றியவர்களாகவும் உருவாக்குகிறது. எனவே சுத்தம், சுகாதாரம் தகுந்த சிகிச்சைகளைப் பேணுதல் மக்களின் உடல் நலத்தை மேம்படுத்தி நாட்டினை வளப்படுத்த உதவும்.
O
ங்கியபோது மாணவர்களுடன் அன்னை
3
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 62
சிவபூமி மனவிருத்திப் பாடக தோற்றமும் பனரியும்
la=-T s
தோற்றம்
யாழ்ப்பாணத்தில் மாற்று வலுக் கொண்டவர்களின் நல்வாழ்வுக்காக பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த வகையில் சிவபூமி சிறுவர் மனவிருத்திப் பாடசாலையின் பணியும் காத்திரமான இடத்தைப் பெற்று சமூகத்தின் கணிப்பிற்குரிய தொன்றாக மாறியிருக்கின்றது. மனவளர்ச்சி குன்றியவர்கள் உரிய கவனிப்பின்றிய நிலையி லும், சமூகத்தவர்கள் இத்தகையவர்களைச் சுமையாகக் கருதும் மனோபாவம் கொண்டவர் களாகவும், பலர் இவர்களைக் கேலிக்குரியவர் காளாகப் பார்க்கின்ற இழிநிலையைக் கண்டு வேதனையுற்ற அறப்பணியாளரும், யாழ் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் அதிபருமாகிய செஞ்சொற்செல்வர் ஆறு. திருமுருகன் அவர்களால் இப்பாடசாலை 2004.04.02ஆம் திகதி கோண்டாவில் திருவூரில் ஸ்தாபிக்கப்
பட்டது.
மேற்குலக நாடுகளில் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு மதிப்பும், அவர்களைக் கடவுளின் பிள்ளைகளாகக் கருதி நடாத்தும் மனோபாவமும், உரிய பாதுகாப்பும் இருப்பதைத் தனது ஆன்மீகப் பயணத்தின் பயனாகக் கண்டு உணர்ந்த இப்பெருமகனார், இத்தகைய ஒரு நிலை இலங்கை போன்ற குறைவிருத்தி நாடுகளில் இல்லாமையை எண்ணி மனம் வருந்தினார். மேற்குலக நாடுகளில் இத்தகைய பிள்ளைகளுக்கிருக்கின்ற வசதி வாய்ப்புக்களிற்
சிலவற்றையாவது இங்கு வாழும் பிள்ளை
burypbesid

FTGD6upulsůT
i _سمصے
வ.சசிகுமார், ஆசிரியர்.
களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் என்று, இவருக்குள் எழுந்த பேரவாவின் வெளிப் பாடே சிவபூமிமனவிருத்திப்பாடசாலையாகும்.
சிவபூமி மனவிருத்திப் பாடசாலையின் தோற்றம் பற்றிச் செஞ்சொற்செல்வர் அவர்கள் குறிப்பிடுகின்றபோது "ஆன்மீகப் பயணம் ஒன்றை மேற்கொண்டு சிங்கப்பூர் சென்ற யான் அங்கு சீனப் பெண்மணி ஒருவரால் நடாத்தப்படுகின்ற மனவிருத்திப் பாடசாலை ஒன்றைத் தரிசிக்கும் வாய்ப்பைப்பெற்றேன். அந்த வாய்ப்பு யாழ்ப்பாணத்திலும் இத்தகைய தொரு பாடசாலையை ஸ்தாபிக்கவேண்டும் என்ற எனக்குள் இருந்த விருப்பத்தை மேலும் தீவிரப்படுத்தியது. அங்குபெற்ற அந்த அநுபவம் சிவபூமிப் பாடசாலையின் கட்டமைப்பிற்குப்
பேருதவிபுரிந்திருக்கின்றது" என்கிறார்.
மாணவர்கள்
பதினொரு மாணவர்களுடன் ஆரம்பிக் கப்பட்ட இப்பாடசாலையில் தற்போது 181 மாணவர்கள் பயின்று கொண்டிருக்கின்றார்கள். 5 வயதிலிருந்து 22 வயது வரையானவர்கள் இங்குள்ளனர். இவர்களிடமிருந்து எத்தகைய கட்டணமும் அறவிடப்படுவதில்லை. இவர் களுக்கென்று சிறுவர் பாதுகாப்பு நிதியத்தால் வான் வண்டி (Van) ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இதைப்பயன்படுத்தி வீட்டிலிருந்து வருகின்ற மாணவர்களிடமிருந்து மட்டும் சிறிய தொகைப் பணம் அறவிடப்படுகின்றது.
44
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 63
வளங்களும் சேவைகளும்
கண் வைத்திய நிபுணர் குகதாஸன் அவர்கள் தமது உறவினர் ஒருவரிடமிருந்து இலவசமாகக் காணியைப் பெற்று இப்பாடசாலை அமைவதற்கான அடிப்படையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். புலம்பெயர்ந்து இலண்டனில் வாழும் திரு.ஜெயசீலன், திரு.அருளானந்தம், திரு.இ.பாலசிங்கம் கனடாவில் வதியும் திரு.சிறிஸ்கந்தராஜா போன்ற அன்பர்கள் வழங்கிய ஆரம்பநிதி கட்டட நிர்மானிப்புக்கு உதயிருக்கின்றது. சகல வசதிகளுடன் கூடிய 3 மாடிக் கட்டடம் இவர்களுக்காக அமைக்கப் பட்டுள்ளது. மாணவர்களின் விளையாட்டு முற்றமாக அங்கு விளையாட்டுக்கூடம் ஒன்று அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு நவீன விளையாட்டு உபகரணங்கள், உடற் பயிற்சிச் சாதனங்கள் உள்ளன. இம்முற்றத்தில் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் விளையாடிக்
களிப்பதை அங்கு காணக்கூடியதாக உள்ளது.
இந்தியாவிலிருந்து கொழும்புக்கு வருகை தந்திருந்த "மனவிருத்தி குறைந்தவர் களைக் கையாளுதல் தொடர்பான துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களால் வழங்கப்பட்ட சிறப்புப் பயிற்சியைப் பெற்று, கொழும்பு மிலேனியம் என்னும் மனவிருத்தி பாடசாலையிற் பணியாற்றிய திருமதி சண்முகராசா என்பவர் சிவபூமி மனவிருத்திப் பாடசாலையின் முதல் அதிபராகப் பொறுப்பேற்று ஆசிரியர்களுக்குப் பயிற்சிகளையும் வழங்கியுள்ளார். தற்போது திருமதி கலைவாணி குகதாஸன் அவர்கள் (உய தலைவர், சிவபூமி அறக்கட்டளை) இப்பாட சாலையின் முழுநேரக்கடமையை பொறுப்பேற்று, அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றார். இப்பாடசாலையில் தற்போது பதின்நான்கு
ஆசிரிர்கள் சிறப்பான சேவையை வழங்கி
வாழ்வகம்

வருகின்றனர். இதுதவிர, கல்வியியல் கல்லூரிகளிலிருந்து விசேட கல்வித்துறையிற் பயிற்சிபெற்று உள்ளகப்பயிற்சியின் பொருட்டு வருகின்ற ஆசிரியர்களின் சேவையும் பெற்றுக்கொள்ளப்படுகின்றது.
இப்பாடசாலை சிவபூமி அறக்கட்டளையி னாற் பரிபாலிக்கப்படுகின்றது. அன்பர்கள், ஆர்வலர்கள் வழங்குகின்ற அன்பளிப்புக்களும் உதவிகளும் பாடசாலை சிறப்பாகச் செயல் புரிவதற்குப் பேருதவி புரிகின்றன. குறிப்பாக லண்டனில் வதியும் இசைவித்தகி திருமதி சிவசக்தி சிவனேசன் அவர்கள் வருடம் தோறும் சிவபூமியின் பெயரால் தாமும் தம்முடைய மாணவிகளும் இணைந்து நடாத்தும் இசை நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் பணத்தை ஆசிரியர்களின் வேதனத்திற்காக வழங்கி வருகின்றார். இதனைவிட, சிவபூமி அறக்கட்டளையின் நிர்வாக உறுப்பினரும் அறக்கட்ளையின் லண்டன் இணைப்பாளரு மாகி திரு.ஜெயசீலன் அவர்களும் குறிப்பிடத் தக்க தொகையினை ஆசிரிய வேதனத்திற்காக வழங்கிப் பேருதவி புரிகின்றார். இவர்களோடு, வேறுபலர் புலம்பெயர் அன்பர்களும், உள்நாட்டில் வாழுகின்ற கொடையாளர்களும் வழங்கி வருகின்ற நல்லாதரவினாற் சிவபூமி பாடசாலை யின் பணி வலுப்பெற்று வருகின்றது. அத்துடன் வெளிநாட்டு உள்நாட்டு ஊடகங்கள் இப்பாடசாலை தொடர்பாக வெளியிடும் செய்தி களாலும் இதன் பணிவிருத்திபெறுகின்றது.
போசாக்கும் பயிற்சிகளும்
மாணவர்களுக்குக் காலையில் தேநீரும், சிற்றுாண்டியும் வழங்கப்படுகின்றது. மதியபோசனத்திற்காக கொழும்பிலுள்ள மனிதநேயம் என்ற அமைப்பு உதவி புரிகின்றது.
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 64
கூடவே அன்பர்கள் தங்கள் வீட்டு நிகழ்வுகளை நினைவுகூரும் முகமாக வழங்குகின்ற நிதியுதவிகளும் மதிய போசனத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றது. மாணவர்களுக்கு முதற்படியாக, நாளாந்த கருமங்களை ஆற்றுகின்ற பயிற்சி இங்கு வழங்கப்படுகின்றது. வீடுகளில் இக் கருமங்களை ஆற்றிக் கொள்ளமுடியாதிருந்த பல மாணவர்கள் இங்கு வழங்கப்படுகின்ற பயிற்சிகளாற் பயன்பெற்றுச், சுகமாக அன்றாடக் கருமங்களை ஆற்றும் திறனைப் பெற்றுள்ளனர். இதனை நேரடி அநுபவமாகக் கண்டுணர்ந்த பெற்றோர்களும் ஏனையோரும் மகிழ்ச்சிபெற்றுள்ளனர்.
மகரகமவில் இயங்கும் தேசியக் கல்வி நிறுவகத்தினால் (NIE) நடாத்தப்பட்டு வரும் பயிற்சிகளுக்காக இங்கிருந்து ஆசிரிர்கள் சிலர் சென்று வந்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழல் காரணமாக இது தற்போது தடைப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து இத்துறைசார் நிபுணர் ஒருவரை வரவழைத்து ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிப்பதற்கான எத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாணவர் திறன் வெளிப்பாடு
சிவபூமி மனவிருத்திப் பாடசாலை
மாணவர்கள், விளையாட்டுப் போட்டியில் 1ஆம்
O O வாழவகம d
 

இடத்தினைப்பெற்றுப்பாடசாலைக்கும் தமக்கும் பெருமையினைச் சேர்த்துள்ளனர். * மாற்றுவலுக் கொண்டவர்களுக்காக நடாத்தப்பட்ட பேச்சுப் போட்டிகளிலும் இம்மாணவர்கள் கலந்து கொண்டு திறன்களை வெளிக்காட்டியுள்ளனர். * அனுராதபுரம் வரை சென்று போட்டிகளிற் பங்குபற்றி இம்மாணவர்கள் பரிசில்கள் பல பெற்றுள்ளனர். A இப்பாடசாலையில் 3 நாட்கள் பெரிய அளவிலான கல்விக்கண்காட்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இதனை ஆயிரக்கணக் கான மக்கள் பார்வையிட்டு மாணவர்களின்
திறன்கண்டு வியந்துள்ளனர்.
எதிர்காலத்திட்டங்கள் A இப்பாடசாலையிற் பயில்கின்ற மாணவர் களின் எதிர்கால நல்வாழ்வுக்காகச் சிவபூமி மன விருத் திப் பாடசாலை தனது கவனத்தைத் தொடர்ந்தும் செலுத்தும். * கடித உறை ஒட்டுதல், பைகள் (Bags) தயாரித்தல், பட்டிகளை (labels) உரிய இடங்களில் ஒட்டுதல் போன்ற பயிற்சிகளை வழங்கி அதனூடாக அவர்களைத் தொழில் களில் ஈடுபடுத்திப் பயனுள்ளவர்களாக அவர்களை மாற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதற்கான நவீன உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற் கான வாய்ப்புக்கள் இருந்தும் நாட்டின் சூழ்நிலை காரணமாக அவற்றை இங்கு தருவிப்பதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. A மேலை நாடுகளிலுள்ள நல்ல திட்டங்களை ஆராய்ந்து எமது நாட்டிற்குரித்தான நிலையில் அவற்றைப் பிரயோகிப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 65
* வங்கிகணக்குகளைக் குறித்த மாணவர் களின் பெயர்களில் திறந்து, பொருளாதார நிலையில் அவர்கள் நன்நிலை பெறுவதற் கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுப் பதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
* இத்தகையவர்கள் தொடர்பாக சமூகத்தில்
விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்கான
ஆழிப்பேரலை அனர்த்தத்தில் அல்லலுற்றோரு
O O bustypbuild 4
 
 

முயற்சிகளைச் சிவபூமிப் பாடசாலை மேற் கொண்டு வருகின்றது. A மனவளர்ச்சி குறைந்த பிள்ளைகளின் சமூக மேம்பாட்டிற்காகச் சிவபூமிப் பாடசாலையின் பணி தொடர்ந்தும் நிலைபெற்றிருக்கும். இப்பாடசாலையின் பணிகள் தொடர்ந்து செல்வதற்கு நாமும் எம்மாலான பங்களிப்
பினை நல்குவோமாக.
க்கு அன்புக்கரம் நீட்டும் அன்னை
வை நாளில் சிவத்தமிழ் செல்வியுடன் அன்னை
47
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 66
விழிப்புலன் வலுவிழந்தோரு
一ー t
விரிவுரையாளர்
மனித குலத்தில் ஒருசாரருக்கு அதிகம் நன்மை பயக்கும் ஒரு நவீன விண்வெளிசார்
தொழில்நுட்பம் - ஒர் அறிமுகம்.
செய்மதிகள் பற்றியும் அவற்றின் பயன்பாடுகள் பற்றியும் கேள்விப்பட்டிருக் d5(SiOTh. GaftiLD5a56ir (Earth Resource Satellite) பூமியைப் படம் (Imageries) எடுப்பதற்கும், காலநிலை அவதானிப்புக்களை மேற்கொள் வதற்கும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அஞ்சல் செய்வதற்கும், தொலைத்தொடர்பு பரிவர்த்தனையை மேற்கொள்வதற்கும் (Geostationary Satellites) gly stgog)6) (55606). களை ஒட்டிய வேவு பார்க்கின்ற விடயங் களுக்கும் பயன்படுத்தப்படுகின்றமையைப் பலரும் அறிந்திருக்கலாம். ஆனால் மேற்குலக நாடுகளில் விழிப்புலன் வலுவிழந்தவர்களுக்கு பூமியிலிருந்து 22500 கிலோ மீற்றர் உயரத்தில் விண்ணில் சுற்றிக் கொண்டிருக்கின்ற செய்மதிகள் வழிகாட்டுகின்றன என்ற செய்தி வியப்பானதாகவிருக்கலாம். உண்மையில் கண்பார்வை இழந்தவர்களைச் செய்மதிகள் வழிகாட்டக்கூடிய அளவுக்கு விண்வெளி சார்ந்த தொழில்நுட்பம் மேற்குலகில் வளர்ச்சி கண்டுள்ளது. இத்தொழில் நுட்பத்தை உலகின் எப்பாகத்திலும் பயன்படுத்தக்கூடியவாறு செய்மதிச் சமிக்ஞைகள் உலகம் முழுவதும்
கிடைக்கிறன.
இத்தொழில்நுட்பம் பூகோளம் சார் gulfSri GOOTLU (p60p60)LD (Global Positioning
O O வாழவகம 4

க்கு வழிகாட்டும் செய்மதிகள் -1
எஸ்.ரவீந்திரன், புவியியல்துறை யாழ்ப்பாண பல்கலைக்கழகம்.
System -GPS) என அழைக்கப்படுகின்றது. இந்தத் தொழில்நுட்பத்தை முதன்முதலில் அமெரிக்கா தான் 1978 ஆம் ஆண்டு கண்டு பிடித்து பயன்படுத்தத் தொடங்கியது. அமெரிக்க urgist L15560)6OOT556TGun (US Department of Defense) இத்தொழில்நுட்பத்தை வடிவமைத்து பயன்படுத்தத் தொடங்கியடதுடன், இன்றும் அதன் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. 1978 ஆம் ஆண்டு முதலாவது செய்மதித் தொகுதி விண்ணுக்கு அனுப்பப்பட்டதுடன், இத்தொழில் நுட்பம் பயன்பாட்டுக்கு வந்தது. பூகோளம்சார் இடநிர்ணய முறைமைத் தொழில்நுட்பம் 1978 ஆம் ஆண்டுமுதல் அமெரிக்காவினாற் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், 1990களின் பின்னரே அதுவும் அத்தொழில்நுட்பத்ைைத வளைகுடா யுத்தத்திற்கு அமெரிக்கா பயன்படுத்தும்போதே அது உலகிற்கு தெரிய வந்தது. அதுவரைக்கும் அது அமெரிக்காவின் இாா னுவ தேவைகளுக்கு அதியுச் ச
Figure: 1 One of the Phases 1 GPS Satellite Launched in 1978
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 67
இரகசியமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இத்தொழில்நுட்பத்தைத் தற்போது பொதுமக்களும் பயன்படுத்தக் கூடிய அளவுக்கு அமெரிக்கா அனுமதித்துள்ளது. இதிலும் முழுத் தொழில் நுட்பமும் இன்னமும் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை. செய்மதிச் சமிக்ஞை 56fsio (Satellite Signals) gly 6doTG) 6608, பயன்பாட்டில் உள்ளன. ஒன்று P Code Lngb60)pug C/A Code genubglas C/A Code மாத்திரம் பொதுமக்கள் பாவனைக்குக் கிடைக் கிறது.
இப்பூகோளம்சார் இடநிர்ணயத் தொழில் நுட்பத்தை மூன்று பிரிவாக வகுக்கலாம்.
1. Space Segment
2. Control Segment
Figure:2 GPS satellite Orbits -24. Satellites in Equally Spac to Equator (Both figures explains same concept)
இவ்வாறு சுற்றிக்கொண்டிருக்கும் செய்மதிகள் இடநிர்ணயத்தை மேற்கொள்ளக் கூடிய FL65,6065560)6T (Satellite Signals) 6T6b5urT5 திசைகளிலும் எந்நேரமும் அனுப்பிய வண்ணம் இருக்கும். இந்த சமிக்ஞைகளைப் பெற்று, ஒர் இடத்தின் அமைவிடத்தினை அகல நெடுங்கோட்டு அடிப்படையில் கணிப்பிட்டு காட்டக்கூடிய GPS Receivers ஐ பயன்படுத்தியே ஒர் இடத்தின் அமைவிடம் அறியப்படுகின்றது.
buls) 9 6irGIT (56).jri (5 GPS Receiver 9
வைத்திருப்பாராயின் இவ்வாறு அனுப்பப்படு
ଶ୍ରେurType!$ID 4
 

3. User Segment
ggio Space Segment gi p 6T6IT செய்மதித் தொகுதிகளில் (Satellite Constelation) 24 செய்மதிகள் காணப்படு கின்றன. இச் செய்மதிகள் குறிப்பிட்ட திசைகளில், குறிப்பிட்ட தூர இடைவெளியில் பூமியைய் சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. (They have been placed in six equally, spaced orbital planes which have inclined 55"to equator) Figure 2. பூமியில் எந்தப் பாகத்தில் உள்ள ஒருவருக்கும் வருடத்தில் எந்த நேரத்திலும் ஆகக் குறைந்தது 5-8 செய்மதிகள் G56óTUL35, lugsiT645(5 (Visibility above the horizon) gig Bisig LIT6055 56Trilósóir (Orbital Planes)திட்டமிடப்பட்டிருக்கின்றன.
ed (60') 6 Orbital Planes each 55' Inclined
கின்ற Signals ஐ கணிப்பிட்டு இட அமைவினை g|G56u G (5G)si (öö5 TG (Longitudes and Latitudes) அடிப்படையில் காண்பிக்கும். ஒர் இடத்தின் அமைவிடத்தினைக் கணிப்பிடு வதற்கு ஆகக்குறைந்த 3 செய்மதிகளிலிருந்து வரும் சமிக்ஞைகளை GPS Receiver பெற்றுக் கொள்ள வேண்டும் ஒர் இடத்தின் உயரத்தையும் சேர்த் துக் கணிப் பி டு வ தற்கு 4 செய்மதிகளிலிருந்து சமிக்ஞைகளை Receiver பெற்றுக்கொள்ள வேண்டும்.
49 நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 68
Figure: 3 Show the 4 satellite signals and Navigat
The global Festigahan Systenas Kec, zničar.
敘簽靈
&
gGust 5 gig. GPS Receivers files& சிறிய அளவுகளில் தயாரிக்கப்பட்டு, பாவனைக்கு விடப்பட்டுள்ளன. சாதாரணமாக கையடக்கத் தொலைபேசியின் அளவிற்கூட GPS Receiver பயன்பாட்டில் உள்ளன. தற்போது பயன்பாட்டில் இருக்கின்ற விலையுயர்ந்த கையடக்கத் தொலைபேசிகளிற்கூட தற்போது g505 Tsouth (GPS Enabled Hand Phones) இணைக் கப்பட்டுள்ளது. இத்தகைய வினைத்திறன் மிக்க உலக தரம் வாய்ந்த GPS Receiver 56061T Trimble, Leica, Garmin, Magalan போன்ற முன்னணி அமெரிக்க நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன.
Figure: 4-Hand Held GPS Receivers
இந்த GPS தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில் உச்சமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இராணுவத் தேவைகள், நில g! 6T 60) 6). Li Lu so (Survey ing), 6 5 1 போக்குவரத்து, விமானப் போக்குவரத்து (Air
வாழவகம
 
 

tions with the assistance of GPS
Lavigation), 5 truff GUT 35(56). Jjig) (Ship Navigation), 556tuTG6) isf gyrtiétée, it (Space Explorations). 656 leftTub, 55J SLL6L6) LDibh (p65(T60LD556).jh (Urban Planning and Management), வனவள முகாமைத்துவம், உள் கட்டுமானத் திட்டமிடல் மற்றும் (ype351T60)Lnğg|6. Itin (Infrastructure Planning and Management) போன்ற பயன்பாடுகள் சிறந்த உதாரணமாகும்.
பூகோளம்சார் இடநிர்ணய முறைமை பல்வேறு செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடிய தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது.
அவையாவன: * ஒர் இடத்தின் அமைவிடத்தினை அகல நெடுங்கோட்டு அடிப்படையிற் காட்டுதல் * ப ய ண ம் செய்யும் பா  ைத யின்
வரைபடத்தினை வரைதல் * பயணம் செய்யும் திசையைக் காட்டுதல் * பயணம் செய்யும் வேகத்தைக் காட்டுதல் * பயணம் செய்யக்கூடிய வழிகளைக்
காட்டுதல் * பயணம் செய்யவேண்டிய வழியைக்
காட்டுதல் * போய்ச் சேரவேண்டிய இடத்தின் திசையைக்
காட்டுதல்
50
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 69
* போய்ச் சேரவேண்டிய இடத்தின் தூரத்தைக்
காட்டுதல் * நிற்கின்ற இடத்தின் சுற்றுப்புறச் சூழலில்
உள்ள விடயங்களைக் காட்டுதல். இவ்வாறான பூகோள ரீதியிலான இடநிர்ணய தொழில்நுட்பமானது கண்பார்வை அற்ற மனிதர்களுக்கும் பயன்படக்கூடியதாக தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பத்திலும் அமெரிக் காவே முன்னிலை வகிக்கின்றது. தற்போது இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகளும் கண்பார்வை அற்றவர்களுக்கு பயன்படக்கூடிய GPS Receiver களை வடிவமைத்துள்ளன.
பார்வை அற்றவர்கள் தமக்குப் பரிச்சயமான சூழலில் இலகுவாக நடமாடவும், தமக்குரிய காரியங்களைச் செய்யவும் முடியும். இதில் அவர்களுக்குப் பரிச்சயமான இடம்தொடர்பான கற்பனைப்படம் நினைவில் இருக்கின்றமை யினால், இவை இலகுவாகிவிடுகின்றன. ஆனாற் பரிச்சயமற்ற சூழலிற் கண்பார்வை அற்றவர்கள் நடமாடுவது கடினம். இவர்கள் வெள்ளைப் பிரம்பிலோ, அல்லது பழக்கமான மனிதர்களின் உதவியிலோ, அல்லது பழக்கப்பட்ட நாயின் உதவியிலோ அல்லது பழக்கம் இல்லாத மனிதர்களின் உதவியிலோ தங்கியிருக்கின்றவர்களாகவே உள்ளனர்.
இதனாற் கண்பார்வை அற்றவர்கள் பல
Figure 5 - Blind Persons who are traveling with S
வாழவகம
 

சமயங்களில் ஆபத்துக்களை எதிர்நோக்க நேரிடுகின்றது. அத்துடன் அநாதரவான நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். இவர்களின் நடமாட்டம் பெருமளவிற் கட்டுப்படுத்தப் படுகின்றது. இவர்களின் வினைத்திறனும் பெரிதும் மட்டுப்படுத்தப்படுகின்றது. பரிச்சய மற்ற சூழலிற் பயணிக்கும்போது பயணிக்கும் சூழல் தொடர்பான தகவல்கள் அதாவது வீதிகளின் பெயர்கள், சந்திகளின் பெயர்கள், வர்த்தக நிலையங்கள், சேவை நிலையங்கள் போன்றவைபற்றிப் பெருமளவில் தெரியாது போய்விடுகின்றது.
இதுபோன்ற நெருக்கடிகளுக்குத் தீர்வு காணுகின்ற விதமாக அமெரிக்காவின் (p6óT60T60of Sp660Túb g6óTpl Sendero GPS Receiver ஒன்றை வடிவமைத்துள்ளது. அமெரிக்காவின் Sendero என்னும் நிறுவனமே இத்தகைய அளப்பரிய கண்டுபிடிப்பை தொழில் நுட்ப வடிவமைப்பை மேற்கொண்டிருக்கின்றது. இந்த Sendero நிறுவனத்தின் தலைவராகவும் நிர்வாக பணிப்பாளராகவும் இருப்பவர் Michael G. May என்கின்ற கண்பார்வை அற்ற ஒருவர். இவர் வெள்ளைப்பிரம்புடன் (White Cane) உலகம் முழுவதும் பயணம் செய்து வருபவர் மட்டுமல்ல, உலகப்புகழ்பெற்ற சிறந்த தடகள விளையாட்டுவீரரும் ஆவார்.
endero GS and Braille Note
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 70
இந்த Sendero GPS தொழில்நுட்பத்தில் இரண்டு தொகுதிகள் உண்டு. ஒரு தொகுதிSendero GPS Receiver upsi)6Opugil Braille Note 6T60TUGelsörs) தொகுதியும் ஆகும். இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைத்தே பயன்படுத்தப் படுகின்றன. இவையிரண்டும் Serial portஊடாக அல்லது Bluetooth தொழில்நுட்பத்தின் ஊடாக
இணைக்கப்படும்.
Sendero GPS Receiver 6T situgil (5 சாதாரண GPS Receiver தான். இதில் வரைபடங்களையும் (Maps) இடம் சார் 5,6556Tril 5,6061T Lih (Spatial Database) கையாளக்கூடிய விசேடமாக வடிவமைக்கப்பட்ட Software instal i Lu6oT 6OOT ủuş (5ë g5 üb (9 5TIJ600Th Terrasync Version 1.52) gjë5 GPS Receiver ம் செய்மதிகளில் இருந்து வருகின்ற சமிக்ஞைகளை வாங்கி குறிப்பிட்ட இடத்தின் அமைவிடத்தினைக் கணிப்பிட்டுக் காட்டும். அதனைவிடச் சாதாரணமான GPS Receiver செய்கின்ற மேலே சொல்லப்பட்ட அனைத்துத் தொழிற்பாடுகளையும் மேற்கொள்ளக்கூடியது. இந்த GPS Receiver உடன் இணைக்கப்பட்டி ருக்கின்றமற்றைய தொகுதிBraile:Note ஆகும். Braille Note 6T6TLugi (5 Personal Digital Assistant (PDA) gjejh. Personal Digital Assistant (PDA) எனப்படுவது ஒரு கைக்கு
Figure: 6 Below shows a MPower Model Braille
Speake
Backspace
Spaceboar
6լյուք61&tD
 
 

g|L& thin T 6OT 560of 6of 60 Li (Palm Top Computer)யே குறிக்கின்றது. இதற்குரிய 5'L606T56ïT LUT6gh Braille Keys elp6uGLn 6 grid, LIGh. BrailleNote gait Keyboradgsi 6 Braile குற்றெழுத்து KeyS உள்ளது. அவற்றை 6L l Backspace Key, 1 Enter Key, 1 Thump Key, 1 Space Bar (UITsiTp60T6) IT(5th. GPS Receiver இன் காட்சிப்படுத்தல்கள் (Display) இரண்டு வழிகளில் பார்வையற்ற பாவனையாளர்களுக்கு தெரியப்படுத்தப்படும்.
1. Braile Dots (Embossed Cells in the Braile
Display Area) 2. Built in Speaker (Earphones can be plugged)
GPS Receiver g6óT 560tyushi 35msdorLS35s படும் விடயங்கள் அனைத்தும் இவ்விரண்டு (Up 60) spelp 600ph Braille Note g) GOTT 6ü வெளியிடப்படும். ஒவ்வொரு செயற்பாட்டிற்கான தேவையின்போதும், கட்டளைகளை (Commands) Braille Keys ep6uth Braille Note gibe, Geist G.55, Braille Note 9,60T5 GPS gibe, அதை அனுப்பும். GPS ஆனது அதற்கான பதிலை Braille Note இற்கு அனுப்பி வைக்கும். Braille Note 9 jugsO)6) Braille Dots ep6)(ph Speaker மூலமும் வெளிப்படுத்தும். சாதாரண மான கணினிக்கு கொடுக்கக் கூடிய Short Cut Key GeFLubUITG856ir 960)6OT55th Braille Key மூலம் Braile:Note இற்கு கொடுக்க முடியும்.
Note
52
r r
།
Thumb keys
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 71
Braille Note 2 L6ór 660)50Tu Peripheral devi
1
. Earphone Jack 2. Microphone Jack
3. Modem Jack
4. Serial Port (9 Pins)
5. USB Port
6. MiniUSB Client port 7. Power Adapter Jack
8. Infrared Port 9. SD Slot (Secure Digital) 10. CF Slot (Compact Flash)
11. Blue Tooth
Figure: 7 Shows the interfaces of the BrailleNote
r11 modem jack
USB Serial ports port
PC Type2 Card slot
GPS தொகுதியில் வீதி வரைபடத் தரவுத்தளமும் (Street Map Database) (5606JLUT60T 9|bgrilló, Gir தொடர்பான இடம்சார் தரவுகள் அடங்கிய gy 61556|Typh (Point of Interest Database such as
hotels, restaurants, banks, schools, religious place, famous shops, companies etc)
வாழ்வகம் 5
 
 

es இணைக்கக்கூடிய Post காணப்படுகின்றன.
SD and CF memory card slots
AC power adaptor socket
Mini USB client port
Eject button
சேமிக்கப்பட்டிருக்கும். இவற்றை அடிப்படையாக வைத்தே வழிகாட்டும் செயற்பாடுகள் இலகு படுத்தப்படுகின்றன. மேற்படி இடம்சார் தரவுகளைக் கையாளக்கூடிய Software GPS
இல் instalபண்ணப்பட்டிருக்கும்.
3
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 72
Figure: 8 Shows a sample StreetMaps
* {&!* ; ॐ१४ 兹|然5 §?
3. 3. 杀 滚撰袋
ॐ द्वे :; i ;& ; १४ 爱菲 23棋漫目芝 岔}8酵822|纷排极袭 šį &si: || 64 s
இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ள BrailleNote un Sendero GPS Receivenuqún பயன்படுத்திப் பார்வையற்ற ஒருவர் தனக்குப் பரிச்சயம் இல்லாத பெரிய நகரங்களிலும், கிராமப்புறப் பிரதேசங்களிலும் நடமாட முடியும். தான் பயணிக்கும் பாதையின் பெயர், எதிரே வருகின்ற சந்தியின் பெயர், Different Transit Note போன்றவற்றைத் தெரிந்து கொள்ளலாம். தான் நிற்கின்ற இடத்திலிருந்து குறிப்பிட்ட சுற்று வட்டாரத்தினுள் அமைந்துள்ள முக்கியமான இடங்கள், கடைகள், விடுதிகள், உணவு விடுதிகள், பாடசாலைகள், பல்கலைக் கழகங்கள், சமய ஸ்தலங்கள், அரச திணைக் களங்கள், விளையாட்டு மைதானங்கள், பொழுதுபோக்கு மையங்கள், போன்றன அமைந்துள்ள இடம், அமைந்துள்ள தூரம், அமைந்துள்ள திசை போன்றவற்றினை அறிந்து கொள்ளமுடியும். இவ்வாறு அறிந்துகொண்ட விபரங்களின் அடிப்படையில் ஏதேனும் ஒரு இடத்துக்குச் செல்ல வேண்டுமாயின், உதாரணமாக ஒரு உணவு விடுதிக்குச் செல்ல வேண்டுமாயின் அதனைத் தெரிவுசெய்ய வேண்டும். தெரிவுசெய்த பின்னர் அவ்விடத் துக்குச் செல்வதற்கான பாதையைத் தெரிவு
வாழ்வகம்
 

54
செய்யவேண்டும். பாதையைத் தெரிவுசெய்த பின் அப்பாதையைப் பின்பற்றிச் செல்ல வேண்டும். பாதையைப் பின்பற்றிச் செல்லும் போது செல்லவேண்டிய திசை, செல்ல வேண்டிய தூரம் என்பவற்றை அறிந்து கொள்ளலாம். பாதையைவிட்டு விலகிச் சென்றால் GPS Receiver சமிக்ஞை மூலம் எச்சரிக்கையிட்டுக் காட்டும். பயணிக்கும் போது திசை தொடர்பான விடயங்களை வலம், இடம் என்ற அடிப்படையி லும், மணிக்கூட்டு முள்ளின் குறிப்பிட்ட நேரத்தைக்காட்டும் நிலையின் அடிப்படையிலும் தெரிவிக்கப்படும்.
குறிப்பிட்ட ஒரு பார்வையற்ற நபர் பல மைல்களுக்கு அப்பால் உள்ள தனது நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் செல்லவேண்டுமாயின் அவர் போய்ச் சேரவேண்டிய இடத்தினை GPS இல் குறிக்க வேண்டும். இவர் போய்ச்சேர G6j stit 19 u g Lub Way Point 6T 60T அழைக்கப்படும். குறித்ததன் பின்னர், போய்ச் சேர்வதற்கான இடத்திற்கான பாதை தெரிவு செய்யப்படும். இப்பாதைத் தெரிவு இரண்டு வழிகளில் மேற்கொள்ள முடியும்.
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 73
1. Automatic Route 2. Manual Route
Auto Route என்பது குறிப்பிட்ட நபர் நிற்கின்ற இடத்திலிருந்து போய்ச்சேர வேண்டிய இடத்தின் புள்ளிக்கு இடையேயுள்ள பாதையை GPS Receiver தானாகவே தேர்ந்தெடுக்கும் (Automatically) இது தூரம் குறைவானதாகவும், வேகமாகச் சென்றடையக்கூடியதுமானதாக இருக்கும். இத்தெரிவு ஏற்கெனவே இருக்கின்ற வீதி வரைபட வலைப்பின்னல் தரவுத்தளத்தி 655i,G5 (Street Map Database) (SuniGlassfiróT படும். தெரிவு செய்யப்பட்ட பாதைவழியே Gunibel 55 Buff GPS Receiver g) sit உதவியுடன் பயணிக்கமுடியும். பயணிப்பவர் நிர்ணயிக்கப்பட்ட பாதையைவிட்டு விலகினால், GPS ஒலிமூலம் அல்லது Braille மூலம் தெரிவிக்கும். இதனைப் பயன்படுத்தி பயணிப்பவர் பயணிக்கவேண்டிய திசை பயணிக்க வேண்டிய தூரம் போன்றவற்றை Braille Key மூலம் கட்டளைகளை வழங்கி அறிந்து கொள்ளலாம். அத்துடன் பயணிப்பவர் தான் பயணிக்கின்ற சூழலில் உள்ள அம்சங்களை அறிந்தவாறு பயணிக்கலாம். Manual Route 6T6örugi Juu6OcfůLJ6Irif gömt söT நிற்கின்ற புள்ளியிலிருந்து போய்ச்சேர வேண்டிய இடத்திற்குரிய பாதையைத் தானே தெரிவு செய்வதாகும். இப்பாதை ஏற்கெனவே இருக்கின்ற வீதி வலைப்பின்னல் வரைபடத்தின் அடிப்படையில் அமையாது. இதிலும் ஆரம்பப் புள்ளி இடைநிலைப்புள்ளிகள் போய்ச் சேரவேண்டிய இடத்தின் அமைவிடம் என்பன GPS இற்கு வழங்கப்பட வேண்டும். இம்முறை பெரும்பாலும் வீதி வலைப்பின்னல் இல்லாத விளையாட்டு மைதானம், பல்கலைக்கழக
References *o Hofmann Wellenhof. B, Lichtenegger. H and Collins. .
Springer, 5th edition. 0 Pratap Misra and Per Enge, (2001) Global Positioning S
Jamuna Pr, 0 James Bao-Yen Tsui, (2004), Fundamentals of Global F Series in Microwave and Optical Engineering), Wiley-l * Karen Steede-Terry, (2000) lintegrating GISand the Glo
0 Casey Larijani. L. (1998). GPS for Everyone: How the
Interface Corporation.
O
g O 6Typbuild

வளாகங்கள் போன்றவற்றினுள் நடமாடுவதற்கு பயனுள்ளது.
இவற்றின் பயன்பாடு இலங்கையில் சாத்தியமாகுமா என்று சிந்தித்தால் தற்போதை க்கு உடனடியாக சாத்தியம் குறைவென்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இந்த GPS Receiver இல் பயன்படுத்தப்படும் வீதி வரைபடம் (Street Map) இலங்கையிற் கொழும்பு நகரிற்கு கூடகிடையாது. இவை நில அளவைத்திணைக் களத்தினால் அல்லது நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் தயாரிக்கப்பட வேண்டி யவை. இரண்டாவது தேவையான இடங்கள், கட்டடங்கள், திணைக்களங்கள், விடுதிகள், உணவு விடுதிகள் பேர்ன்றன தொடர்பான gullhefni 5,6556Th (Spatial Database) திருப்திகரமானதாக இல்லை. ஆனால் மேற்கு நாடுகளில் இவை மிகவும் திருப்திகரமான முறையில் முழுமையாக இருக்கின்றன. மற்றையது இலங்கையில் வீதி ஒழுங்குகள் பாதுகாப்பானவையாக இல்லை. சீரானதாக இல்லை. பூரணமான வீதி வரைபடம் பாதுகாப்பான வீதிப்போக்குவரத்து ஒழுங்குகள் இருக்குமாயின், இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும். தற்போதைய சூழலில் தனிநபர் ஒருவர் GPS ஒன்றை வைத்திருப்பது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். இலங்கையைப் பொறுத்தவரையிற் கண்பார்வை உள்ளவர்களே பாதுகாப்பாக நடமாட முடியாத சூழலிற் கண்பார்வை அற்றவர்கள் GPS இன் உதவியுடன் நடமாட இன்னும் பல ஆண்டு களுக்குமேல் எடுக்கும் என்பது என்னுடைய கணிப்பீடு.
, (2006) Global Positioning System: Theory and Practice,
/stem: Signals, Measurements and Performance, Ganga
ositioning System Receivers: A Software Approach (Wiley terscience, 2 edition.
ba
|Positioning System, ESRI Press.
Global Positioning System Can Work for You, American
5
O
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 74
வளர்ச்சிப் பாதையில் வாழ்வ
一丁 un
தி
கண் பார்வையற்ற மற்றும், பார்வைக் குறைபாடுடைய வர்களின் வாழ்வை வளம்படுத்தும் நோக்குடன் இயங்கிவரும் ஒரு தர்ம ஸ்தாபனமே வாழ்வகமாகும். வாழ்வக மானது 1988ஆம் ஆண்டு தெல்லிப்பழையில் ஆரம்பிக்கப்பட்டது. அமரர் அன்னலட்சுமி சின்னத்தம்பி அவர்களின் விடாமுயற்சியின் பயனாகவும் நல்லிதயம் படைத்த பல அன்பர்கள் வழங்கிய தொடர்ச்சியான உதவிகள் ஒத்துழைப்புக்கள் காரணமாகவும் தெல்லிப்பழை காசி விநாயகர் ஆலயத்துக்கு அருகாமையில் வீடொன்று வாடகைக்குப் பெறப்பட்டு, பதின் மூன்று மாணவர்களுடன் அங்கே வாழ்வகத்தின் பணிகள் ஆரம்பமாயின.
வாழ்வகம் மெல்ல மெல்லத் தனது பணிகளை முன்னெடுத்து விரிவுபடுத்தி வந்த அந்த வேளையில், 1990ஆம் ஆண்டு இடம் பெற்ற இராணுவ நடவடிக்கை காரணமாகத் தெல்லிப்பழையிலிருந்து இடம்பெயர நேர்ந்தது. எனினும், இந்த இடப்பெயர்வைக் கண்டு யாரும் மனம் தளர்ந்துவிடவில்லை. 1992ஆம் ஆண்டு உடுவிற் பிரதேசத்திலுள்ள மல்வம் எனும் கிராமத்தில் வீடொன்று வாடகைக்குப் பெறப் பட்டு, அங்கு வாழ்வகத்தின் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன எனினும், சோதனைகள் நின்றபாடாயில்லை. 1995இல் மீண்டும் ஒரு பாரிய இடப்பெயர்வினைச் சந்திக்க நேர்ந்தது. அதுமாத்திரமன்றிப் பெருமளவு பொருளிழப்புக் களுக்கும் முகங்கொடுக்க வேண்டியதாயிற்று. இதன் காரணமாக வாழ்வகத்தின் பணிகள்
ஸ்தம்பிக்கும் நிலையை அடைந்தன. இருந்த
O வாழவகம

கம்
ーイ
ருமதி மோ.ரவீந்திரன்,உபதலைவர், வாழ்வகம்.
போதிலும், அன்னை செல்வி. சின்னத்தம்பி
அவர்களும் அவருக்குத் தோள் கொடுத்து நின்ற அன்பர்களும் மனம் தளர்ந்துவிடவில்லை.
மானிப்பாய் பூரீசத்யசாயி சமித்தியினரின் உதவியோடு 1997ஆம் ஆண்டு மானிப்பாயிலே மீண்டும் வாழ்வகம் தனது பணிகளை முன்னெடுக்க ஆரம்பித்தது. இவ்வேளையில், செஞ்சொற்செல்வர் திரு.ஆறு.திருமுருகன் அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் பயனாக இலண்டனிலுள்ள தமிழ் அனாதைகள் நம்பிக்கை நிதியத்தினர் நன்கொடையாக வழங்கிய ஒரு தொகைப் பணத்தைக்கொண்டு, தற்போது வாழ்வகம் அமைந்துள்ள 3212பரப்புக் காணித்துண்டு வாழ்கத்துக்கெனக் கொள் வனவு செய்யப்பட்டது. (தமிழ் அனாதைகள் நம்பிக்கை நிதியத் தலைவர் திரு.பொன். தெய்வேந்திரம் அவர்கள் இன்றுவரை வாழ்வகத்தின் வளர்ச்சிக்குப் பல்வழிகளில் உதவிபுரிந்து வருகின்றார்). இக்காணியிலே அடிப்படைக் கட்டட வசதிகளை வட பிரதேசத் துக்கான புனர்வாழ்வு புனரமைப்பு நிறுவனம் ஏற்படுத்தித்தந்தது. இந்நிலையில், 09.03.2002 ஆம் ஆண்டு வாழ்வகம் தற்போதுள்ள தனது சொந்த வதிவிடத்தில் இயங்க ஆரம்பித்தது.
தற்போது வாழ்வகம் சபாபதிப்பிள்ளை வீதி, சுன்னாகம் என்ற முகவரியிலுள்ள தனது சொந்த வதிவிடத்தில் கம்பீரமாய்த் தலைநிமிர்ந்து நிற்கின்றது. வாழ்வகத்திலே பயின்ற பிள்ளைகள் பலர் கல்வியிலே சிறந்து இன்று வளமோடு வாழ்ந்துகொண்டிருக்கின்
56
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 75
றனர். விரிவுரையாளர்களாகவும் ஆசிரியர் களாகவும், சட்டத்தரணியாகவும் இன்னும் பல பொறுப்பு வாய்ந்த பணிகளை மேற்கொள்பவர்
களாகவும் தற்போது இவர்கள் உள்ளனர்.
இப்போது எமது வாழ்வகத்தில் 34 பிள்ளைகள் உள்ளனர். ஒருவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் இரண்டாம் ஆண்டிற் பயில்கின்றார். இரு மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியை எதிர்பார்த்துள்ள னர். இருவர் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி பெறுபேறுகளை எதிர்பார்த்து கொண்டி ருக்கின்றனர். ஒருவர் க.பொ.த உயர்தரம் பயில்கின்றார். ஏனைய மாணவர்களுள் ஆண்கள் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியி லும், பெண்கள் சுன்னாகம் இராமநாதன் கல்லூரியிலும், குழந்தைகள் உடுவில் மகளிர் கல்லூரி முன்பள்ளியிலும் சிறப்பாகக் கல்வி
பயின்று வருகின்றனர்.
11. 09.2006 அன்றைய தினம் வாழ்வகத்தின் வரலாற்றில் மறக்கமுடியாத துயர் படிந்த ஒரு நாளாகும். வாழ்வகத்தைக் காத்து வழிநடத்திவந்த நமது அன்னை செல்வி அன்னலட்சுமி சின்னத்தம்பி அவர்கள் இறைபதம் எய்திய நாள் அது. அன்னையவர் களின் திடீர் மறைவால் வாழ்வகமே ஒருகணம் அதிர்ந்து போனது. "நாம் ஏதிலிகளானேமே"
O blurrypbef LD
5
 

என்ற உணர்வுதான் எல்லோர் மனதிலும் எழுந்தது. ஆனாலும் அன்னையர்கள் செய்து வைத்த முன் ஏற்பாடும், அவ்வப்போது அவர் கூறிவந்த அறிவுரைகளும் "அவர் இன்னும் எம்மோடுதான் இருக்கிறார்" என்ற நம்பிக்கை யும், எல்லாவற்றுக்கும் மேலோக அவர் ஆண்டவன் நிழலிலிருந்து வழங்கிய ஆசிகளும் வாழ்கவத்தின் தடையற்ற இயக்கத்துக்குத் துணை நின்றன.
அன்னையவர்களின் விருப்பம்போலவே அவரது முதன்மை மாணாக்கர்களுள் ஒருவரான திரு. ஆ.ரவீந்திரன் அவர்கள் 17.09.2006 அன்று வாழ்வகத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். அன்னைக்கு வழங்கிய அதே ஆதரவினை அவரது பிள்ளைக்கும் வழங்கித்துணை நின்றனர் ஏனைய நிர்வாக அங்கத்தவர்கள். வாழ்வகம் தொய்வேதுமின்றித் தன் பணிகளை தொடரலாயிற்று.
வாழ்வக வளாகத்திலுள்ள வெளிக்கள gái) Guth (Out House) 9 Def p 565uL6óT
புனரமைக்கப்பட்டு விஸ்தரிக்கப்பட்டது. அடுத்த ஆண்டின் ஆரம்பப்பகுதியிலேயே அதாவது 2007ஆம் ஆண்டின் தைப்பூசத் தினத்தன்று அன்னைவர்களின் புனித சமாதி அமைந்திருக்கும் இடத்திற் பிரார்த்தனை
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 76
மண்டபம் ஒன்றினை அமைப்பதற்கான
அடிக்கல் அன்னையவர்களால் தன் பிள்ளை
யாகவே நேசிக்கப்பட்ட செஞ்சொற் செல்வர்
திரு. ஆறு. திருமுருகன் அவர்களால் நாட்டப்பட்டது. அன்னையவர்கள் அமரராகி
ஓராண்டு நிறைவில் 11.09.2007 அன்றைய தினம் அன்னை யவர்களின் திருஉருவச் சிலை வாழ்வகத் தலைவர் திரு.ஆ. ரவீந்திரன் அவர்களால் திரைநீக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து நிறுவுநர் நினைவுநாள் நிகழ்வுப் பேருரையினை திரு.மா. சின்னத் தம்பி (முதுநிலை விரிவுரையாளர், கல்வியியற்றுறை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்) அவர்கள்
நிகழ்த்தினார்.
அதே ஆண்டில் அன்னையவர்களால் முன்பு அடிக்கல் நாட்டப்பட்டு, அத்திவாரமிடப் பட்டிருந்த வாழ்வக அலுவலகக் கட்டடத்
வாழவகம
 
 

தொகுதியின் சுமார் ஐந்து மில்லியன் ரூபா பெறுமதியான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வாழ்வகத்தில் தங்கியிருந்து கல்வி பயின்று கொண்டியிருக்கும் மாணவர்களைக் காட்டிலும் இன்னும் பன்மடங்கு அதிகமான மாணவர்களை உள்ளீர்த்து அவர்களது வாழ்வையும் வளம் படுத்த வேண்டிய பெரும் பொறுப்பு s வாழ்வகத்துக்குண்டு என்ற சிந்தனையின் அடிப்படையில்அன்னையவர்களின்பிரியமான மாணவர்களுள் ஒருவரும் வாழ்வகத்தின் ஆரம்ப கால மாணவருமான திரு.நா.இதய ராஜன் அவர்களால் முன்பு அடிக்கல் நாட்டப்பெற்றி ருந்த ஆண்கள் விடுதியின் இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
வெறுமனே பெளதிக வளங்களை மட்டும் அதிகரிப்பதோடு மட்டும் வாழ்கத்தின் பணிகள் முற்றுப்பெற்றுவிடாது. மாணவர்களின் கல்வி மேம்பாட்டிலும் அதி உச்ச கவனம் செலுத்தப்பட
வேண்டும் எனும் நோக்கோடு வாழ்வக நிர்வாகத்தால் இவ்வாண்டு கல்வி மேம்பாட்டுக்
குரிய ஆண்டாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
அன்னையவர்களின் பிறந்த நாளான ஜனவரித் திங்கள் பதினொராம் திகதி பரிசுத்த தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு, முதலாவது பரிசுத்ததினம் 11.01.2007 அன்று சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. பிள்ளைகளின் கல்வி நிலையினை மேம்படுத்துவதற்கான பல்வேறு
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 77
முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரத்தியேக வகுப்புக்கள் பல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேவைகளேற் படும் பட்சத்தில், தனியார் கல்வி நிலையங் களுக்குச் சென்று கல்வி கற்பதற்கான வாய்ப்புக்களும் அளிக்கப்படுகின்றன.
வலிகாமம் கல்வி வலயத்தோடு இணைந்து "காட்சியும் கருத்தும்" என்னும் விழிப்புணர்வுக் கருத்தரங்குப் பாடசாலைகள் தோறும் நாடத்தப்பட்டு வருகின்றன. அத்தோடு, ஆசிரியர்களுக்கான பல்வேறு கருத்தரங்கு களும் வாழ்வகத்தில் இடம்பெற்று வருகின்றன. அத்தோடு கல்வி வலயத்தால் அனுட்டிக்கப் படுகின்ற மாற்று ஆற்றலுடையோர் தின நிகழ்வுகளிலும் வாழ்வகம் பெரும் பங்கினை வகித்து வருகின்றது. வலிகாமக் கல்வி
வலயத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட "விசேட தேவை உடையோருக்கான மெய்வல்லுநர்
O O busyble, LD
 
 

போட்டிகளில்" 2007இல் வாழ்வகம் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டது. இவ் வாண்டு முதலாமிடத்தைப் பெற்று வெற்றிக் கிண்ணத்தைச் சுவீகரித்துக்கொண்டது.
கடந்த 2103.2008 அன்று கணினி அலகு ஒன்று திறந்துவைக்கப்பட்டு, மாணவர் களுக்கான கணினிக் கல்வியும் அளிக்கப்பட்டு, மாணவர்களுக்கான கணினிக் கல்வியும் அளிக்கப்படு வருகின்றது. அதனைத் தொடர்ந்து 05.07.2008 அன்று வாழ்வகத்தின் இணைய தளமும் திறந்து வைக்கப்பட்டது. (www.vaazhvaham.org) LDIT600T6) Irfö56floit fpig, ஆளுமை விருத்திக்கு அடித்தளமிடும் வகையில் தைப்பொங்கல் தினம், சர்வதேச வெள்ளைப் பிரம்புதினம், வாணிவிழா, ஒளிவிழா போன்றன சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
1్ళఙాస్త్ర భ్రభ
25.08.2008இல் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் பாதுகாப்பு நிதியத்தினரின் அனுசரணையுடன் மூன்று மாத விசேட ஆங்கில வகுப்புத் தொடரொன்று ஆரம்பித்து வைக்கப் பட்டு, தற்போது வகுப்புக்கள் நடைபெற்று வருகின்றன. -
வளர்ந்துவரும் ஒரு நிறுவனம் என்ற வகையில் வாழ்வகத்துக்குப் பல தேவைகளும் இருக்கத்தான் செய்கின்றன. வாழ்வகத்தின்
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 78
இன்றைய உன்னத நிலைக்குக் காரணமாயி ருந்தவரும் பார்வையற்றோரின் நல்வாழ்வுக் காகத் தன் வாழ்வை அர்ப்பணித்தவருமான அன்னை அமரர் அன்னலட்சுமி சின்னத்தம்பி அவர்களின் புனித சமாதி வாழ்வக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அவ்விடத்தில் அமைக்கப்பட உள்ள பிரார்த்தனை மண்டபம் இன்னும் அடிக்கல் நாட்டப்பட்ட நிலையிலேயே உள்ளது. போதிய நிதி வசதியின்மையே இதற்குக் காரணம். வாழ்வகத்தின் அலுவலகக் கட்டடம், ஆண்கள் விடுதி ஆகிய இரு கட்டடங்களும் இன்னும் பூர்த்தியாக்கப்படாத நிலையிலேயே உள்ளன. இவற்றுக்கும் பெருமளவு நிதி தேவைப்படுகின்றது.
தற்காலத்திற் பார்வையற்றோரும் விளையாட்டுத்துறையில் பல சாதனைகளைப் படைத்து வருகின்றனர். உதாரணமாக, அண்மைக்காலங்களிற் பார்வையற்றோர் களுக்கான கிரிக்கட் விளையாட்டு எமது பிரதேசத்திலும் அறிமுகமாகி வருகின்றது. இவ்விதமான விளையாட்டு வாய்ப்புக்கள் தமக்கும் கிடைக்காதா என்ற ஏக்கத்துடனேயே வாழ்வக மாணவர்கள் இன்னும் உள்ளனர். இவர்களுக்கான ஒரு விளையாட்டு மைதானத் தைத் தேடி அதிலே இம் மாணவர்களுக்கான விளையாட்டுப் பயிற்சிகளை வழங்கவேண்டிய பெரும் பணியும் வாழ்வகத்தின் முன்னே விரிந்து கிடக்கின்றது.
O O வாழவகம
 

50
வாழ்வகத்துக்கான உள்ளகத் தொலை பேசி அமைப்பொன்று அமைக்கப்படவேண்டியது மிகவும் இன்றியமையாததாக உள்ளது எனினும், இன்னமும் இவ்வுள்ளகத் தொலைபேசி அமைப்பு ஏற்படுத்தப்படாமலேயேயுள்ளது. வாழ்வக சிறார்களுக்கு வசதியான சாப்பாட்டறை இல்லாதது ஒரு பெரும் குறையாகவே உள்ளது.
வாழ்கத்தின் பணிகள் மேன்மேலும் விரிவுபடுத்தப்பட்டடு அங்கு வதியும் மாணவர்கள் திறன்மிக்க நற்பிரசைகளாக உருவாக்கப்பட வேண்டியது மிகமிக அவசிய மானது. அத்தோடு, வாழ்வகத்துக்கு வெளியே உள்ள இன்னும் பன்மடங்கு அதிகமான விழிப்புல வலுவிழந்த மாணவர்களும் உள்ளீர்க்கப்படவேண்டியதும் மிகவும் இன்றி யமையாதது. இவை அனைத்துக்கும் சமுதாயத்திலுள்ள நல்லிதயம் படைதோரின்
அன்பையும் ஆதரவையுமே வாழ்வகம்
நாடிநிற்கின்றது. நம் அன்னையவர்கள் அனுதினமும் கட்டிக்காத்த, தன் ஆத்மாவையும் விட அதிகமாகவே நேசித்த வாழ்வகத்தை வளம் கொழிக்கும் சோலையாய் வாண்மைமிகு பிரஜைகளை உருவாக்கும் வலுமிக்க கல்விச் சாலையாய் ஆக்குவதே அவருக்கு நாம் ஆற்றக்கூடிய வரிய கைமாறாக அமையும்.
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 79
f சான்றோன்
எனக்கேட்டதாய்
வாழ்வகத்தின் நீண்டநாள் பொருளாளர் திரு.பொன்
பதவியிலிருந்து ஓய்வுபெற்றபோதுவாழ்வகத்தால் மு
வாழ்வகம் 6
 
 
 

அன்புகாட்டி ஆதரிக்கும் அன்னை
கமலநாதன் அவர்கள் கொக்குவில் இந்து அதிபர் ன்னெடுக்கப்பட்ட சேவைநலன் பாராட்டு
1
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 80
ஈழத்தின் அன்னை திே
us - - --سسسسسسس
முன்னாள்
மனிதர்கள் பிறக்கின்றார்கள். வாழ்ந்து மறைகின்றார்கள். அவர்கள் வாழ்ந்த காலத்துள் எவ்வாறு வாழ்ந்தார்கள்? எதனைச் சாதித் தார்கள் என்பதிலேதான் அவர்கள் நினைவு
வரலாறாகி வாழ்ந்துகொண்டிருக்கும்.
அவர்கள் வாழ்வின் சமூகத்திலுள்ள மற்றவர் களுக்குப் பயன்படும்போது, சிறப்பாக ஏதிலி களுக்காக அர்ப்பணமாகும்போது அவர்கள் வரலாறு புனிதமாகிப் போற்றப்படும். வணக் கத்துக்குட்படும்.
அமரர் சின்னத்தம்பி அம்மாவின் வாழ்வு இத்தகைய புனிதத் தன்மை கொண்டதுதான். பார்வையற்ற பல மாணவர்களுக்கு அவர் பார்வையாகவிருந்து ஆற்றிய சேவை இந்த உலகம் உள்ளவரை போற்றி மதிக்கப்பட வேண்டியதொன்று. யாழ்ப்பாணம் இந்துக்கல் லூரியில் நான் ஆசிரியராகக் கடமையாற்றிய காலத்தில் அங்கு பயின்ற திரு. இரவீந்திரன், திரு.கெளரீசன் போன்ற மாணவர்களுக்கு பயிற்சியளிப்பதற்காகச் சின்னத்தம்பி அம்மா
அவர்கள் கல்லூரிக்கு வருகை தருவார்கள்.
அவரது இயல்பான புன்னகை ததும்பும் முகமும், மாணவர்களுடன் பழகும் கனிவும், சக ஆசிரியர்களுடன் உறவாடும் பாங்கும் உயர்வானவை. போற்றி மதிக்கத்தக்கவை. அவையனைத்தும் இன்றும் என் மனக்
கண்ணில் நிழலாடுகின்றது.
o O வாழவகம

JEFT
ーイ
கலாநிதி தி.கமலநாதன், டாதிபதி, யாழ்ப்பாண தேசிய கல்வியியற் கல்லூரி
அவரது அரவணைப்பால், கனிவு நிறைந்த வழிகாட்டலால் கற்று உயர்வடைந்த எத்த னையோ மாணவர்களை நானறிவேன். கல்வியி யற்றுறை போன்றவற்றில் அவர்கள் உயர் பதவி யினை வகித்து வருகின்றார்கள். அவர்கள் அனைவரும் அம்மாவின் நாமத்தை உச்சரித் தாலே அவர்களை அறியாது கைகூப்பித் தொழுது நிற்பர்.
அண்மையிற்கூட இலண்டன் மாநகரி லிருந்து இலங்கை வந்திருந்த அம்மாவின் மாணவரொருவருடன் உரையாடியபோது, இதனை அவதானித்தேன். இதற்கெல்லாம் அம்மாவின் பரிவும், கனிவும், கருணையும்
காரணமென்றால் அது மிகையான கூற்று அல்ல.
அமரர் சின்னத்தம்பி அம்மாவின் சேவை களுக்கெல்லாம் மகுடம் வைத்ததுதான் அவர் பலநாள் முயற்சிசெய்து நிறுவிக்கொண்ட பார்வையற்ற குழந்தைகளுக்குக் காப்பகமான "வாழ்வகம்" என்ற நிறுவனம். அங்கு பார்வை யற்ற குழந்தைகள் நம்பிக்கையுடன் வாழ்ந்து, கற்று, தமது கடமைகளைத் தாமே ஆற்றி வருவதை நேரிற்கண்டேன். அந்தளவுக்கு அவர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. அது அம்மாவின் தளராத முயற்சிக்குக் கிடைத்த வெற்றி.
சுனாமியாற் பாதிக்கப்பட்ட 3 வயது நிரம்பிய
பெண் குழந்தையொன்றைத் தனது கைகளி
62 நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 81
லேயே தூக்கி வளர்த்த விதமும், அக்குழந் தையும் அவரை விட்டுப் பிரியாது அவருடன் ஒட்டியிருந்த உறவும் சொந்தத்தாய் பிள்ளை களிடம்கூடக் கண்டிருக்க முடியாத பாசப்
பிணைப்பு, அன்பின் அரசாட்சி
அன்னை திரேசா அவர்களின் தன்னிகரற்ற சேவை பற்றிக் கற்றிருக்கின்றேன். ஆனால்
அவரைக் காணவில்லை சின்னத்தம்பி அம்மா
வடிவில் அவரைக் கண்டேன். அம்மா மீது மாறா
வாழ்வகம் 6
 

மதிப்பும் மரியாதையும் கொண்டேன்.
உள்ளத்தால் வணங்கினேன்.
அவர் மறையவில்லை. எம்முடன் வாழ்ந்து
கொண்டிருக்கிறார்.
வாழ்வகப் பிள்ளைகளுக்கும் அவர்கள்
போன்றவர்களுக்கும் வழிகாட்டிக் கொண்டே
யிருப்பார்.
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 82
சிந்திக்க வைத்த சில
---------صسس
விரிவுரையாளர்,
"புற்றுநோய் சிகிச்சை நிபுணர்பாக்டர் நடராஜ
மருத்துவ சேவை மிகவும் புனிதமானது. மாண்பு மிக்கது. மரணத்தை வெல்ல முடியாதென்று தெரிந்தும் மார்புயர்த்திநின்று அதனோடு சதா போராடுகின்ற மகோன்னதமான சேவையது. இதனாற்றான் நாம் கடவுளுக்கு அடுத்தபடியாக மருத்துவர்களை நம்புகின்றோம் ஏன்? பல சந்தர்ப்பங்களில் அவர்களையே கடவுளாகத்
துதிக்கவும் செய்கின்றோம்.
இந்தக் கூற்றின் உண்மையை நாம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இருபத்தாறாம் வார்ட்டுக்குச் சென்றால் நேரில் காணமுடியும். அந்த மனிதர் வார்ட்டுக்குள் நுழைவதைப் பார்த்துவிட்டால்போதும் "ஐயா வாறார்" டொக்டரையா வாறார்", பெரியையா வாறார்", ஜெயக்குமார் வாறார்", ஜெயக்குமாரையா வாறார்" என்று எத்தனை குரல்கள். வாடிக் கிடக்கும் பயிர்கள் வான் மழையைக் கண்டது போல அந்த முகங்களிற்றான் எத்தனை மகிழ்ச்சி, மலர்ச்சி, நம்பிக்கை. இதனை வெறும் வார்த்தைகளால் வர்ணிப்பது அத்துணை எளிதான காரியமன்று. இத்தனைக்குமுரிய அந்த மனிதர்தான் டாக்டர் நடராஜா ஜெயக்குமார் அவர்கள் யாழ்ப்பாணத்தில் பணியாற்றுகின்ற முதலாவது புற்றுநோய்ச் சிகிச்சை நிபுணர் என்ற பெருமைக்குரிய இவர் எந்தவித ஆர்ப்பாட்டமுமின்றி அமைதியாய், அடக்கமாய் அரும்பணி ஆற்றிவருகின்ற ஓர்
வாழ்வகம்

நிமிடங்கள்.
ーイ
ஆரவீந்திரன்
தேசிய கல்வியியற் கல்லூரி, கோப்பாய்.
2ா விஜயக்குமார் அவர்களுடனான ஒரு வசவ்வி"
அற்புத மனிதர். இவரைச் செவ்வி காண்பதன்
மூலம் புற்றுநோய் தொடர்பான பல அரிய
தகவல்களை நாம் தெரிந்துகொள்ளவும் அதன்மூலம் பயனடையவும் முடியும் எனும் நோக்கோடு அவரை அணுகியபோது, தனது மிகுந்த வேலைப் பழுக்கள் மத்தியிலும் என்
வேண்டுகோளை மறுக்காது ஏற்றுக் கொண்
LITff.
கேள்வி புற்றுநோய் என்றால் என்ன
பதில்
நமது உடலின் கட்டுப்பாட்டுக்கப்பால் ஏற்படக்கூடிய வளர்ச்சிகள் அல்லது அதனால் ஏற்படக்கூடிய கட்டி களை யே நாம் புற்றுநோய் என்கின்றோம். இது வயது, பால் வேறுபாடின்றி யாருக்கும் உடலின் எப்பகுதியிலும் ஏற்படலாம். ஆங்கிலத்திலே இது "Cancer" எனும் இலத்தீன் சொல் லால் அழைக் கப்படுகின்றது. இக் சொல் நண்டைக் குறிக்கின்றது. நண் டின் நடுவில் ஒரு கட்டிபோன்ற தசைப் பகுதியும் அதனைத் தொடர்ந்து பல கிளைகள் போன்ற பகுதிகளும் காணப்படும். அதுபோலவே இந் நோயும் உடலின் ஏதாவது ஒரு பகுதி யில் ஆரம்பித்துப் பின்னர் ஏனைய பகுதிகளுக்குக் கிளைவிட்டுப் பரவக்
ծiւկչացil.
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 83
கேள்வி:
கேள்வி:
கேள்வி:
இது ஒரு தொற்றுநோயடி நிச்சயமாக இது ஒரு தொற்று நோயல்ல. எனவே புற்றுநோயாளர்க ளோடு நாம் எவ்வித அச்சமுமின்றிப் பழகவோ அன்றி அவர்களுக்குப் பணிவிடை செய்யவோ முடியும்.
இதனை ஒரு பரம்பரை நோயாக நாம் கொள்ள முடியுமா?
எல்லாவகையான புற்றுநோய்களும் பரம்பரையாக ஏற்படுவதில்லை. எனினும், சில வகையான மார்புப் புற்று நோய், குடற்புற்று நோய், சில வகை யான தைரோய்ட் புற்றுநோய்கள், சில வகை இரத்தப் புற்றுநோய்கள் போன் றவை பரம்பரையாக ஏற்படக்கூடி யவை என்பது கண்டறியப்பட்டுள்
ளது.
இவ்விதமாக ஒருவருக்குப்புற்றுநோய் ஏற்படுவதற்கு என்ன காரணம் என் பதைச் சற்றுவிளக்க முடியுமா? எமது உடலில் ப்ரோட்டோ ஒண்கோ ஜீவன், பியூம் சப்ரஸ்ஸ ஜின் (Proto onco gcans, humo suprcsc gcans) 6T6IOT இருவகை ஜின்கள் காணப் படுகின் றன. இந்த ப்ரோட்டோ ஒண்கோ ஜின் தூண்டப்பட்டால் அல்லது செயற்படு நிலைக்குக் கொண்டுவரப்பட்டால் எமது உடல் புற்றுநோய் நிலையை நோக்கிச் செல்லும். அதாவது இந்த இரு ஜிவன் களுக்கிடையேயுள்ள சமநிலையில் ஏற்படுகின்ற குழப்பமே ஒருவருக்குப் புற்றுநோய் ஏற்படக் காரணமாகிறது.
ഖ്ഖb
6

கேள்வி:
கேள்வி:
இவ்விதமாக, பரம்பரையான புற்று நோய்த் தாக்கத்துக்கு உட்படக்கூடிய ஆபத்துநிலையிலுள்ளோர் எவ்வித மான பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றவேண்டும்?
இவர்கள் சீரிய வாழ்க்கை முறையி னைக் கொண்டிருக்க வேண்டும். நாற்பது வயதின் பின் ஆண்டுக் கொரு தடவை மருத்துவப் பரிசோ தனை செய்துகொள்ள வேண்டும். தவிரவும் தங்கள் உடலில் யாதேனும் மாற்றங்கள் தென்பட்டால் உடனடி யாக மருத்து ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளவேண்டும். குறிப் பாகப் பெண்கள் மாதமொரு தடவை தங்கள் மார்பகங்களைச் சுயபரி சோதனை செய்துகொள்ள வேண்டும். ஒரு கண்ணாடியின் முன்னே நின்று வலது மார்பை இடது கைவிரல்க ளாலும் இடது மார்பை வலது கைவிரல் களாலும் பரிசோதித்துக் கொள்ள
லாம்.
மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகள் என்னவாக இருக்கக்கூடும்? மார்பகத்தில் கட்டி காணப்படல், இரு மார்பகங்களிடையேயும் பருமன் வேறு பாடு காணப்படல் அல்லது ஒரு மார் பகம் சரிந்து காணப்படல், மார்பகத் தோல் தடித்துக் காணப்படல், முலைக் காம்பு உள்ளி ழுக்கப்பட்டிருத்தல், முலைக்காம்பின் வழியே யாதேனும் திரவம் வெளிவரல் போன்ற ஏதாவ தொரு அறிகுறி தென் படுமாயின் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும்.
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 84
கேள்வி
கேள்வி:
பதில்
உறவுமுறைத் திருமணங்களால் பரம்பரையாக ஏற்படக்கூடிய புற்று நோய்த் தாக்கம் அதிகரிக்க வாய்ப் lsdorLIT?
ஆம், நிச்சயமாக உண்டு, எனவே, இவ்வுறவுமுறைத் திருமணங்களைத் தவிர்த்துக்கொள்வது மிகவும் சிறந்
ჭნჭjl.
புற்றுநோய் ஒருவருக்கு ஏற்படுவதற் கான காரணங்கள் என்ன? மூன்றிலொரு பங்கினர்க்கு அவர் களது வாழ்க்கை முறை, பழக்க வழக் கங்களால் இந்நோய் ஏற்படலாம். மேலும் மூன்றிலொரு பங்கினர்க்குப்
பரம்பரைக் காரணங்களால் இந்நோய்
கேள்வி:
வாழ்வகம்
ஏற்படலாம். மேலுமொரு மூன்றிலொரு பங்கினர்க்குக் காரணம் கூறமுடியாத நிலையிலும் இந்நோய் ஏற்படக்கூடும்.
எவ்விதமான பழக்கவழக்கங்கள் இந்நோய்க்கு ஏதுவாக அமைகின்
றன.
புகை பிடிப்பவர்களுக்குச் சுவாசப் பையிலும், உதட்டிலும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புண்டு. சுண்ணாம்பு, புகையிலை என்பவற்றை வாயில் போட்டுக்கொள்பவர்களுக்கு வாய் தொண்டை புற்றுநோய் ஏற்பட வாய்ப் புண்டு. பொதுவாக இலங் கையைப் பொறுத்தமட்டில் வாய்த் தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரே மிகவும் அதிகமாகக் காணப்படுகின் றனர். மேலும் புகை பிடிப்பவர்களுக்கு அண்மையில் இருக்கின்றவர்களின்

நுரையீரல்கூட பாதிப்புற்று புற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. மேலும், மது அருந்து வோரிடையே ஈரல் புற்றுநோய், களப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புண்டு. அதிலும் புகைப்பழக்கம், மதுப் பழக்கம் இரண்டுமுடை யோருக்கு இந்நோய் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் மிக மிக அதிகம்.
கேள்வி எவ்வாறான உணவு முறைகள்
இந்நோய்க்கு ஏதுவாகின்றன?
பதில் கொழுப்பு, காரம் அதிகமாக உள்ள உணவுகள், குறிப்பாக மாமிச உணவுகள், இந்நோய்க்குக் காரண மாக அமைகின்றன. குடற்புற்றுநோய், மார்ப்புப் புற்றுநோய் என்பன அதிக கொழுப்பால் ஏற்படுகின்றன என்பதை நாம் மனதிற்கொள்ளவேண்டும். மேலும், தீயிலே வாட்டப்பட்ட உணவு கள், ரோஸ்ற்செய்யப்பட்ட உணவுகள், பாதுகாப்பதற்காக உப்பிடப்பட்ட, புகையூட்டப்பட்ட உணவுகள், செயற்கை நிறமூட்டப்பட்ட அல்லது இரசாயனங்கள் சேர்க்கப்பட்ட உணவுகள், தகரத்தில் அடைக்கப்பட்ட உணவுகள் போன்றவற்றாலும் இந்நோய் ஏற்படவாய்ப்புண்டு. அத் தோடு நன்கு உலராத ஒடியலில் பூஞ் சணம் ஏற்படுத்துகின்றது. இப்பூஞ் 5600T55Gau (Aflo Toxin) usi Gaust ராக்சின் எனப்படுகின்ற ஒரு வகை நச்சுப் பதார்த்தம் காணப்படுகின்றது. இதன் காரணமாக இவ்விதமான பூஞ்சணம் பிடித்த ஒடியலை நாம் உட்கொள்ளும்போது, இரத்தப் புற்று
წ6 நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 85
கேள்வி
bung65LD
நோய், ஈரல் புற்றுநோய் ஏற்பட வாய்ப் புண்டு. இதுமட்டுமல்ல, களப்புற்று நோய், இரைப்பைப் புற்றுநோய் என்பனவும் இந்த நச்சுப் பதார்த்தத் தால் ஏற்பட வாய்ப்புண்டு. இவற்றுக் கப்பால் சீற்றவாய் சுகாதாரம், உணவுகள், சரியாகச் செய்யப்படாத கட்டுப் பற்கள், உடைந்த பற்கள் என் பவற்றால் ஏற்படுகின்ற தொடர்ச்சி யான உறுத்தல், பெண்கள் ஒமோன் களைப் பயன்படுத்துதல், சூரியனிலி ருந்து வருகின்ற புற ஊடாக் கதிர்கள் போன்வற்றாலும் இந்நோய் ஏற்பட வாய்ப்புண்டு.
தாவர உணவுகள் மற்றும், நார்த் தன்மை உடைய உணவுகளைப் பயன் படுத்துவதன் மூலம் இந்நோயி லிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் எனக் கூறப்படுவது உண்மையா?
முற்றிலுமான உண்மை. இருந்த போதிலும், இன்று நமது விவசாயிகள் பலவிதமான பீடைகொல்லிகளைப் பயன்படுத்துகின்றனர். பல சந்தர்ப் பங்களில் அனுமதிக்கப்பட்ட அள விலும் அதிகமாகவே பயன்படுத்து கின்றனர். இப்பீடைகொல்லிகளைப் பயன்படுத்தியதன் பிற்பாடு குறித்த ஒரு காலப்பகுதியின் பின்னரே நாம் அறுவடையினை மேற்கொள்ள வேண் டும். ஆனால், பல சந்தர்ப்பங்களில் நமது விவசாயிகள் இதனைக் கருத்திற்கொள்ளாது பீடை கொல்லி பயன்படுத்தப்பட்டு மிகவும் குறுகிய

கேள்வி:
கேள்வி:
கால இடைவெளிக்குள்ளாகவே காய்கறிகளைப் பறித்து விற்பனையும் செய்துவிடுகின்றனர். இதனால் நச்சுத்தன்மை முற்றாக அகலாத நிலையில் இவற்றை நாம் உட்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படு கின்றது. இதனால் தாவர உணவை உட்கொள்பவர்கள்கூட புற்றுநோய்த் தாக்கத்துக்குட்பட வேண்டிய அவல நிலை ஏற்படுகின்றது.
செயற்கை வளமாக்கிகளை அதிகள விற் பயன்படுத்துவதும் புற்றுநோய் அதிகரிப்புக்கு ஒரு காரணமாக அமைகின்றதா?
ஆம், நாம் எமது நீர்த்தேவைக்குப் பெருமளவு நிலத்தடி நீரையே நம்பி யிருக்கின்றோம். வளமாக்கிகளை அதிகளவிற் பயன்படுத்தும்போது அவை நிலத்தடி நீரை அடைகின்றன. இதனால் அந்நீரில் நைத்திரேற்றின் அளவு அதிகரிக்கின்றது. மேலும் எமது மலசலகூடக் கழிவுகளும் நிலத்தடியில் செலுத்தப்படுவதால் அவையும் பல சந்தர்ப்பங்களில் நிலத்தடி நீரோடு கலக்கின்றன. இதன்போது நிலத்தடிநீரின் நைத்தி ரேற் அளவு அதிகரிக்கின்றது. இவ்விதமாக நைத்திரேற் அதிகமாக உள்ள நீரை நாம் பருகுவதும் புற்று நோய் ஏற்பட ஒரு காரணம்ாக
உள்ளது.
புற்றுநோய்க்கான அறிகுறிகள் பற்றி &#fb63gp &ĥ_gpupigu|LDIT?
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 86
கேள்வி:
பதில்
கேள்வி:
புற்றுநோய்கள் பலவகைப்படும். அதுபோலவே அவற்றுக்கான அறி குறிகளும் பலதரப்பட்டவை யாகவே காணப்படுகின்றன. பொதுவாக உடலில் யாதேனுமொரு இடத்தில் கட்டிகள் அல்லது தளும்புகள் ஏற் படுதல், ஆறாத புண்கள் காணப்படல், தொடர்ச்சியாக இருமல், மெலிதல், பசியின்மை, உணவை விழுங்குவதில் சிரமம், பெண்களைப் பொறுத்த மட்டில், அதிகமான உதிரப்போக்கு, வெள்ளைபடுதல் காணப்படுமாயின் ஒருவர் உடனடியாகவே மருத்துவரை நாடித் தகுந்த ஆலோசனை பெற்றுக் கொள்ளவேண்டும்.
இலங்கையைப் பொறுத்தமட்டில், வாய்த்தொண்டைப் புற்றுநோயே அதிகமாகக் காணப்படுவதாகக் கூறினீர்கள். இதன் அறிகுறிகள் என்னவாக இருக்கும்.?
வாயிற் புண்கள் காணப்படல், நாவை மடிப்பதில் சிரமம், விழுங்குவதில் சிரமம், குரலில மாற்றம் தென்படல் வாய்க் குழியில் செந்நிற வெண்ணிறப் படலங்கள் காணப் படல் போன்றவற் றினை வாய்தொண்டைப் புற்றுநோய்க் கான அறிகுறிகளாக நாம் கொள்ள
லாம்.
எமது பிரதேசத்திலுள்ள புற்று நோயா ளர்களுக்கு எவ்வாறான சிகிச்சை
வசதிகள் வழங்கப்படுகின்றன?
பதில்: ஆரம்பகாலத்தில் எமது மக்கள்
O O 6JTypbueñLD
புற்றுநோய், சிகிச்சைக்காக மகரகம

கேள்வி:
கேள்வி:
புற்றுநோய் வைத்தியசாலைக்கே செல்ல வேண்டியதாயிருந்தது. ஆனால் 2004ஆம் டிசம்பர் மாதம் யாழ் போதனா மருத்துவமனையில் ஒரு உள்ளகச் சிகிச்சைப் பிரிவும், தெல்லிப் பழை ஆதார மருத்துவமனையில் ஒரு கதிர்வீச்சு சிகிச்சைப் பிரிவும் ஆரம் பிக்கப்பட்டதன் பயனாக எமது மக்கள் தமக்குத் தேவையான சிகிச்ச்சை களை உடனுக்குடன் பெறக்கூடியதாக
உள்ளது.
யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவுக்கான ஆரம்ப பணிகள் எப்போது முன் னெடுக்கப்பட்டன? 1981ஆம் ஆண்டு இப்பிரிவுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போது நான் எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந் தேன். பின்னர். நான் ஒரு மருத்துவராக வந்து இப்பணியை ஏற்கும்வரை எந்த ஒரு வைத்திய நிபுணரும் இங்கு வந்து பணியாற்ற
வில்லை.
சுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதியில் இயங்கிவருகின்ற புற்றுநோயாளர் காப்பகம்பற்றிக் கூறமுடியுமா?
ஆம், நிச்சயமாக இதுபற்றி நான் இங்கு கூறவேண்டும். இலண்டனி jirgit (Cancer aid for north east) எனப்படுகின்ற தொண்டு நிறுவனத் தால் இந்நிறுவனம் நடத்தப்படு கின்றது. ஆதரவற்ற புற்றுநோயாளர் களுக்காக இந் நிறுவனம் ஆரம்பிக்
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 87
கேள்வி:
surrouesi
கப்பட்டது. எனினும், தற்போது இது புற்றுநோயாளர்கள் தமது சிகிச்சைக் காலத்தில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்ற ஒரு நிலையமாக இயங்கி வருகின்றது. தற்போது டாக்டர் சிவராஜா அவர்கள் இதன் தலை வராகப் பணியாற்றி வருகின்றார். அத்தோடு, இந்நிறுவனத்தை ஆரம்பிப்பதிலும், இயங்குவதிலும் செஞ்சொற்செல்வர் திரு.ஆறு. திருமுருகன் அவர்கள் ஆற்றிய, ஆற்றி வருகின்ற பணிகளையும் நாம் ஒருபோதும் மறந்துவிட முடியாது.
இந்த நோயாளரர்களுக்குப் பொது வாக இன்று எவ்விதமாக சிகிச்சை கள் அளிக்கப்படுகின்றன?
ஆரம்பநிலையில் வருகின்ற நோ யாளர்களைப் பொறுத்தமட்டில், புற்று நோயாற் பாதிக்கப்பட்ட பகுதிகளை அறுவைச் சிகிச்சைமூலம் அகற்றுதல், அல்லது அந்தப்பகுதிக்குக் கதிர்வீச்சு சிகிச்சையை வழங்குவதன் மூலம் அதிலுள்ள புற்றுநோய்க் கலங்களை அழித்தல் போன்ற சிகிச்சை முறைகளை மேற்கொள்ளுகின்றோம். இவை குறித்த அந்தப் பகுதியில் மாத்திரம் மேற்கொள்ளப்படுகின்ற சிகிச்சையாகும் நோய் சற்றே பரவிய நிலையில் அல்லது உடலின் ஏனைய பாகங்களுக்கும் பரவக்கூடும் என்ற ஏதுநிலையுடன் வருவோருக்கும் éâIGLDITġ göIJS (humo therap.) 6T6óTgpyuh மருத்துவச் சிகிச்சையினை அளிக்க வேண்டியிருக்கும், இதற்குமப்பால்

கேள்வி:
கேள்வி:
மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அதாவது எவ்வித சிகிச்சையுமளிக்க முடியாத நிலையில் வருவோருக்கு அவர்களின் வலியைத் தணிக்கக் கூடியவலி நிவாரணிகளை வழங்கு கின்றோம். அத்துடன் அந்த நோய் நிலையை எதிர்கொள்ளக்கூடிய சக்தியை உடலுக்கு அளிக்ககூடிய சில வகைப் போசாக்குத் திரவங்களை இரத்தம் மூலமாக வழங்கி அவர்களை ஒருவிதமாய் ஆற்றுப்படுத்த முயல் கின்றோம்.
புற்றுநோயை முற்றாகக் குணப்படுத்த (լplgպԼՈn? ஆம், ஆரம்பதில் கண்டுபிடிக்கப்பட் டால் இந்நோயை முற்றாகக் குணப் படுத்த முடியும். ஆனால் துரதிஷ்ட வசமாக எம்மிடம் வருகின்ற நோயா ளர்களிற் பெரும்பாலானோர் நோய் முற்றியநிலையிலேயே இங்கு வருகின் றனர். இது உண்மையிலேயே விசனத் துக்குரியது.
இப்புற்றுநோய் சிகிச்சை தொடர்பாக மேல்நாடுகளில் யாதேனும் மேம்பட்ட சிகிச்சை முறைகள் காணப்படு கின்றனவா?
ஆம், நாம் இங்கு பயன்படுத்துகின்ற கோபோல்ற் கதிர்வீச்சு சிகிச்சை முறைக்குப் பதிலாக அவர்கள் "High energy X-ray" 6T60T uGósir D ஒருவகையான நவீன கதிர்வீச்சு சிகிச்சையினை வழங்குகின்றனர். இதற்கான லீனிய அக்சிலரேற்றர்
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 88
கேள்வி
கேள்வி:
பிரிவு வெகுவிரைவில் அதாவது இவ்வாண்டுக்குள் மகரகம புற்று நோய் மருத்துவமனையில் ஆரம்பிக் கப்படவுள்ளது. காலக் கிரமத்தில் எமக்கும் இச்சிகிச்சைப் பிரிவு கிட்டும் என நம்புகின்றேன்.
இந்த நவீன சிகிச்சையின் அனு கூலங்கள் எவை? பொதுவாக கோபோல்ட் கதிர்வீச்சு சிகிச்சையின்போது புற்றுநோய்க் கலங்கள் மாத்திரமன்றி அருகிலுள்ள ஏனைய சாதாரண உடற்கலங்களும் சேதமாக்கப்படுவது அல்லது அழிக்கப் படுவது தவிர்க்க முடியாததாகின்றது. ஆனால் இந்த நவீன சிகிச்சையின் போது ஏனைய உடற்கலங்கள் பாதிப் புறுவது வெகுவாகக் குறைக்கப்படும். அத்தோடு குறித்த இடத்தைத் துல்லியமாக இனங்கண்டு அதில் கூடுதலான கதிரைப்பாய்ச்ச முடியும். இதனால் நோயாளிக்கு அதிக பயன்கிட்ட வாய்ப்புண்டு.
மிகவும் வசதிகள் குறைந்த எமது பிரதேசத்தில் பணியாற்றுகின்ற தாங்கள் எதிர்கொள்கின்ற பிரச் சினைகள் புற்றி சற்றே கூறமுடியுமா?
போக்குவரத்துப் பிரச்சினைகள் காரணமாக நாம் வெளியிற் செல்வது கடினமாக உள்ளது. இதன் காரணம ாக முக்கியமான கருத்தரங்குகள், அல்லது மகாநாடுகளுக்குக்கூட சில சமயங்களில் செல்லமுடியாதநிலை
காணப்படுகின்றது. அதுமாத்திர

மன்றி, எமது நோயாளர்களுக்கான சில மருந்துகளைப் பெற்றுக்கொள் வதில் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதைவிட இங்கு மிகக்குறைவான ஆளணியினர் காணப்படுவது ஒரு பெரும்பிரச்சினை யாக உள்ளது. என்னோடு இணைந்து பணியாற்றுவதற்கு வேறு புற்று நோய்ச் சிகிச்சை நிபுணர்கள் யாருமில்லாத நிலையே இன்றுவரை காணப்படுகின்றது. மேலும் கதிர்வீச்சு சிகிச்சைப் அளிப்பவரும் ஒருவர் மட்டுமே இருக்கின்றார். அவரும் தற்போது ஒப்பந்த அடிப்படையிலேயே பணியாற்றிவருகின்றார். அத்தோடு கதிர்வீச்சு சிகிச்சைக் கணிப்பாளர் அல்லது மருத்துவப் பெளதிக விய லாளரும் ஒருவர் மட்டுமே உள்ளார். இவ்விதமாக ஒவ்வொரு பிரிவிலும் ஒருவர் மட்டுமே இருந்து யாழ்ப்பாணத் தில் இச்சிகிச்சைப் பிரிவினை நாம் இயக்கிவருகின்றோம்.
கேள்வி. எமது மக்களுக்கு அதி உன்னதமான ஒரு சேவையை ஆற்றி வருகின்ற தாங்கள் இச்சேவையில் மன நிறைவு கொள்கின்றீர்களா?
பதில்: ஆம், மகரமவுக்கு ஒரு நீண்ட பயணத்தை மேற்கொண்டு சிகிச்சை பெறுவதற்கு எம்மவர்கள் எதிர் கொண்ட இன்னல்கள், இடையூறு களை நான் நேரிற்கண்டு இந் நிலையை மாற்ற வேண்டும் என எண்ணியதன் காரணமாகவே இங்கு
பணியாற்ற வந்தேன். தற்போது
70 நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 89
கேள்வி:
வாழ்வகம்
எம்மவர்களின் இந்தக் கஷ்டத்தை என்னால் பெருமளவு நீக்க முடிந் துள்ளது. இது எனக்கு மிகுந்த மன நிறைவைத் தருவதாகவே உள்ளது. இன்னும் இரண்டு மூன்று ஆண்டு களில் மேலும் ஓரிரு புற்றுநோய்ச் சிகிச்சை நிபுணர்களும் ஏனைய ஆளணியினரும் இங்கு வருவார்களே யானால் நாம் எமது பணிகளைப் பன் மடங்குவிஸ்தரிக்கக்கூடியதாக இருக் கும் இந்நோயை மிகவும் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குண மாக்குதல், இந்நோய் ஏற்படக்கூடிய ஏதுநிலைகளுக்குட்பட்டிருப்போரை இனங்கண்டு அதிலிருந்து மீட்டல், சிகிச்சைபெற்ற நோயாளர்களைத் தொடர்க்கண்காணிப்பில் வைத்திருத் தல், இன்னும் இந்நோய் தொடர்பான விழிப்புணர்வினை மக்கள் மத்தியில் ஏற்படுத்துதல் போன்ற பல்தரப்பட்ட பணிகளை ஆற்றமுடியும் (இந்த நல்ல உள்ளத்தின் எதிர்பார்ப்பு நலமேநிறை வேற வேண்டும். அதனால் நம்மவர்கள் நலம்பெற வேண்டும்" என்று இறைவனை மனதார
வேண்டிக் கொண்டேன்.)
எமதுமக்களுக்கு உதவக்கூடிய வேறு எவ்வகையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளீர்கள்?
எமது மக்களின் பலர் இங்குள்ள சிசிக்சைப் பிரிவுக்கு வருவத்ற்கே வசதியற்றவர்களாக உள்ளனர். இவர்களுக்காக நாம் வாரந்தோறும் சுற்றயல் கிளினிக்குகளை நடத்தி

கேள்வி
வருகின்றோம். மாதத்தின் முதலாவது புதன்கிழமைகளில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும் இரண்டவாது புதன்கிழமைகளில் சாவகச்சேரி வைத்தியசாலையிலும் மூன்றாவது புதன் கிழமைகளில் சங்கானை, காரைநகர் வைத்திய சாலைகளிலும் எமது கிளினிக் குகளை நடத்தி நோயாளர்களை இனங்கண்டு தேவையானவர்களை இங்கு அழைத்து சிகிச்சை வழங்கு கின்றோம். இதன் மூலம் எமது மக்களின் பெருமளவு பிரச்சினை களைக் குறைக்கக்கூடிய தாக உள்ளது. நான்காவது புதன்கிழமை களில் நாம் முன்பு கிளிநொச்சி சென்றோம். ஆனால் ஏ9 பாதை மூடப்பட்டதால் இப்போது இது தடைப்பட்டுள்ளது.
எமது சமூகத்துக்கு நீங்கள் என்ன கூறவிரும்புகின்றீர்கள்? சமூகத்திலுள்ள அனைவரும் புற்று நோய் பற்றிய விழிப்புணர்வைப் பெற றிருக்கவேண்டும். அது ஏற்படக்கூடிய காரணிகளைத் தவிர்க்கப் பழகி கொள்ளவேண்டும். வீட்டுத்தோட்ட அமைக்கும் பழக்கத்தினை நா ஒவ்வொருவரும் ஏற்படுத்திக்கொள்ள முயல வேண்டும். மேலும் எமது விவசாயிகள் பீடை கொல்லிகள்
வளமாக்கிகள் என்பவற்றப்ை பயன் படுத்தும் போது மிகுந்த பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும். விவசாயப்
போதனா சிரியர்களின் ஆலோ
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 90
கேள்வி:
வாழ்வகம்
சனைகளை ஏற்று நடக்க முன்வர வேண்டும். முடிந்தவரை இவ்விதமான இரசாயனங்களின் பயன்பாட்டைத்
தவிர்க்க முயலவேண்டும்.
உங்களது இந்தப் பணிவாழ்வில் மறக்கமுடியாத சம்பவங்கள் ஏதாவது இருந்தால் கூறமுடியுமா?
எம்மிடம் வருகின்ற மிகவும் மோச மான நிலையிலுள்ள நோயாளிகள் உதாரணமாக மூளையில் பாதிப் பேற்பட்டு மயக்கமடைந்து கைவிடப் பட்ட நிலையில் வருவோர் குரல் அடைபட்டுப் பேச முடியாத நிலையில் வருவோர் எல்லாம் எமது சிகிச்ை சயின் பயனாகக் குணமடைந்து மீண்டு வருகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பமும் என்னைப் பொறுத்த மட்டில் மறக்கமுடியாத நிகழ்வுகள் தான், மேலும் நாம் அவ்வப்போது எம்மிடம் சிகிக்சை பெற்றவர்களுக்கு சத்துணவுப் பொருட்கள், மற்றும் சில அத்தியாவசியப் பொருட்களை

72
வழங்குவதுண்டு இவ்விதமான சந்தர்ப்பங்களில் ஏறத்தாழ அறுநூறு எழுநூறு பேர் ஒன்றுகூடி மகிழ்ச் சியாகச் சிரித்துப் பேசி அளவளாவிச் செல்கின்ற காட்சியைக் காணும்போது ஏற்படுகின்ற மன நிறைவு சொற்க ளால் விபரிக்க முடியாதது. இவ்வித மானஒவ்வொரு நிகழ்ச்சித் திட்டங் களுங்கூட என்னைப் பொறுத்த மட்டில் மறக்கமுடியாத நிகழ்வுகள் தான்.
இவர்களைப் போன்ற இனிய மனிதர்கள் நம் மத்தியில் வாழ்ந்து கொண்டிருப் பதால் தான் இன்னும் மழைபெய்கின்றது. மலர்கள் மலருகின்றன.காய்கள் கணிகின்றன. "இறைவா இரவு பகல் பாராது ஈடில்லாப் பணியாற்றும் இந்த இனிய மனிதருக்கு என்றும் நீ உறுதுணையாயிரு. வேண்டுவ வேண்டி யாங்கு வழங்கு, எண்ணிய எண்ணியாங்கு ஈடேற்று' என்று உளமாரப் பிரார்த்தித்துக் கொண்டு அவரிடமிருந்துவிடைபெற்றேன்.
நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 91
சமூக முன்னோடிகள் சிலரின் c667 TGDGOT (616 TGOTGaoL'Eilifil difler TGI
arabuoanalb
ஓம் பூஜி ராமகிருஷ்ணா பூனி ராமகிருஷ்ண சேவாச்சிரமம் Sri Ramnakrishna Sevashrarnam தாவடி,கொக்குவில்,யாழ்ப்பாணம்
മr്ട്- بطلمیه نمادگی مونوگاوا بویه هلالیا స్టీ 4/7عبہ 7ہجتماعی §ද් : JARe le రీగా ஜ t له موثيمولوديو وجہ 2ఖjnu శ్లో அஃவி #### TASiATAAAASTAM ATAeeTeT OM or%" മe G് 强مكگې (e ویتاللهه^0 پھینکیمپویتر بح چھپنے دہنچ چھ صنم گkئیrھ^حملہ آئی శ్రీరూటల్ల ஃதி }ہعہ بھی ہے به 26 ویلیام؟ ::: نوحہ عملی کےحہر ھشتہہ{* منصورتی نگہبع3یخ .os%کھتی ہے کہا کہ ہٹصoلقہلے
مناب{ கெனச்ல இணைச்ச்ெbலசனர் ரீ இராமகிருஷ்ணா சேவாசிரா சங்கம் (இலங்கை) தtாடி வடக்கு, கோக்குவில் மகிழ்ப்பாணம்,
வ
ORGANIZA
Our Ref : Your Ref:
Regc No: Wour 1 isosto06.
வாழ்வகம்
 

ImrňGUDGnuulileib ாத்தம்பி அவர்கள்.
இலங்கை)
(Ceylon)
o&sm (AsGasvæGaGDOM
visa's لا که باله را
ഴ്e്ക്*
( ♔ 8 ثلة شينجسون ويصه , را 6 (که حاوی قیصر ثمرونيمو ميفعله ألهمنجميع بھیڑھreeمہ یہ تش
லுவிழந்தோர்புனர்வாழ்வு நிறுவனம்
Gu66öflur 1nnaIt'Ltíð TION FOR REHABILITATION OF THE HANDICAPPED
VAVUNIYA DISTRICT (ORHAN)
9584-F. 1st Lane,
Soosaiyappar Road.
Vepparkulan,
wawuniya,
Sri Šarka.
fe : 0.24490.0484 محتوجه
Fæx : O24 22:1894 E-mail: orharsaf83sitnetik
லயின் சுந்தாபகரும் அதிபரும் மிகநீண்டகாலம் விழிபபுலனற்றவர்களின் கல்விக்காக விசேட சிரியராக தன்னை அர்ப்பணித்திருந்தவருமான செல்விஅசின்னத்தம்பி அவர்கள் இயற்கை அஜித்து தாழ் சொல்லொன்னா அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கின்றோம். பிறப்பு உண்டெனில் டன்பது ஓர் இயற்கை நியதியாக இருப்பினும் கூட சில இறப்புக்களின் துயரத்தை எம்மால் ள முடிவதில்லை. அத்தகையதொரு இழப்பையே நாம் சந்தித்திருக்கின்றோம். தமிழ் பேசும் கரின் கல்வியின் கலங்கரை விளக்கமாகத்திகழத்த ஒரு சோதி அனைத்துள்ளது. அவரால் ரப்பட்ட அண்ணற்ற விழிப்புலனற்றவர்கள் இன்று உதாரண புருஷர்களாக சுடர்விட்டு கொண்டிருக்கின்றார்கள். வேறு விசே, ஆசிரியர்கள் எவரும் இன்ஜி தனியொருவராக கும் பிள்ளைகளின இஸ்லத்திற்கும் பேருத்தில் பயணம் செய்து யாழ் மாவட்டத்தில் சவுை வேறு எந்தவொரு சேவையுடனும் ஒப்பிடமுடியாதது. படிக்க மறுத்தவர்களிை கல்வியின் வழிநடத்தி மீடிவதrக மதத்தவர்களை கண்டிப்புடன் வழிகாட்டி பல வரை அனுப்பிய பெருமை அவர் ஒருவருக்கே வித்தாகும் தன் விருந்து ஓய்வுபெற்ற பின்னரும் சமூகப்பணியில் ஓய்த்திலt. வாழ்வகம் எனும் ருக்கான விதிவிடக்கல்வியகத்தை ஸ்தாபித்து நடாத்திச்சென்த பேதுே அவர் சத்தித்த ண்ைடேன். ஏராளமான நிதி நெருக்கடிகளுக்கும் தாரளமான ஐழியர் பிடிக்குகளுக்கும் ரசியல் கொந்தழிப்புக்கும் நடுவில் வாழ்வகம் எனும் தீபம் அனைத்துவிடாது பாதுகாக்க LLSSTTTLLLLL LLLLLGG YTTTTeeT TTeeTTTT LLLTTTTTLLSLLLS
ജൂ, هو مثير عربهای، بیتی ۶ چانه
്(്. 多宅ベーぶ。 - ───ག་ཁམས་ 2 کہ نہ تر لامحترمہ zہ حمزہبی تھی۔ »ني"»
an - - - - -
73 நிறுவுனர் நினைவுச்சிறப்பு மலர்

Page 92
RAMAKASHINA MISSôN P
n lon Branch) 4KO, Rarruakrahrvardad, Cokorronbo6.
துயருற்றோதிக்ம்ெ, தீக்க ിത് #်ဖဲဆော့ဖံ " فسهu سخه ۶هٔ نیها نتوانی ரே: 2 &لو ثر ہی محو ہ صی محنف .5 G unr( iદ્ધ ત્રિન્ઝિાતે 46તે 2. شدہ G کے صا . بنrدونچھ 65 یوS & 2 8ોત્રજોતr ܫܹܗܪܐܢ،ܘܶܘܵܲܘܐtqtܟܗܗܗܬ݂ܰ ܕ݁ܚܶ
வாழ்வகம்
 

帕ng-$25符战的755f3895 mfas-fkroeyeureksk rkTikalancaccornik
મvતક્રિ', حید جع7ح ترین لکھ - سكسة rYtris (7-GSv6 ്6്yം خا لوہ6 ۔
m് ഋജ
ڈس<جم جسیموم ۔۔ ?వి ہستن بھی حجت.................ہویجہ ܝܺܘ݂ ܨܹܝܕ݂ܦ݁ܳܢ ܨܳzܝܵܣܸܝܼܘ ܬܹܐ܂ ܣܰܕ݂pp ܐܶܣܛܝ̈ܣܛܠܶܐ ܢܶRܝܙܩܸ حج جو بیراجھسہ بنتا 6....... ہم پیج نتیجہ: ریحء دمہ: ھ 'ہم به د پیو&ھیجی ترجم ہیں جولائی ۔ہا ئی بھٹو بھیجے.
2. . .* a .ara is as 3. A ڈ؟ن جسم کے
s * v & .
حسن چلاجتبهجھےfنرخهيونيوهجومهgانجیگاه چ?
- ملاح خدمات نیز به لاش. این برمیم می پلا6 "
f. אל
خالویه به مهاجمشی مطلقعمل چسبید میکند. به بدیع سه ست... . . . . ܨܒܒ لم يهتلقيحة يحكم صحي يجيد من تسليحهم". 芷效 عبحقع هالة خیعنی ہتھے ۔ اثنا 45 چہ بینک کي يعl با پدیای که مهره جهت کم عمقی بمانده ه تا علاقه هم - جب ہم رنگ بنہانے تحتسلیم کنجاہ وہ بعد ہلالتحفہ نہ کوہ - ہالینی بینک: دبئی معاشیا6 ھلامیہ ملسو;bم و مذہب برہمچا .n ... حے۔ ن۔ مجھے جب یNچینلام کیمیایی
تمثمرة حياته - جSSت تیمهای 。今家* بو محسینٹنڈنا۹۔ ;- &یہ بھلاlستنه ܘ̈ܳܟ݁ܶܝܟ݁ܰܬܒܪܝܥܹܒܕܘܟ݁ܳܝܟ݁ܳܬ ض<چ
هیل ܪܶܟ݂ܝܼܕ݂ܗܒ݂ܫܽܦܺܝܛܭܰ
۔۔۔۔۔۔۔۔ کمlکوکس', sتھیے: پوچھ محs. چینیم علی WW - نعم ب - در A میبینیم ینیتا سيحميهايدلوالدغيدة
ನಿ' یہ بحیرہ ہی 2۔ نطشےk !
3. it بوی نام در ط
الكعصمميمهجود عصا "طفيلدكه كــه سـمـسـ ماهه... به تعداrlعها سلمہیبر ومعانع علم............ ............................ ۔ ... نہ معہم مہ-حم^****^’’
நிறுவுனர் நினைவுச்சிறப்புமலர்

Page 93
  

Page 94


Page 95


Page 96

சுத் தினமும் 2D og