கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வித்தியானந்தம்: பேராசிரியர் சு. வித்தியானந்தன் மணிவிழா வெளியீடு 1984

Page 1


Page 2


Page 3

YA
வித்தியான ந்தம்
ஈழத்துத் தமிழ்ப் பண்பாட்டின் அமைப்புக் கோலம்
அமிசவிவரம் ஆகியன பற்றிப் பேராசிரியர் எழுதிய கட்டுரைகள் பத்தின் தொகுப்பு.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்
பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களின் அறுபதாவது பிறந்தநாள் வைபவத்தையொட்டி ஈழமுரசு அறிவூட்டக முதலாவது வெளியீடாக ' கலே இலக்கிய பத்திரிகை நண்பர்கள் ' நடத்திய மணிவிழாவில் வெளியிடப்பட்டது.
N
12 - 5 - 1984
/ H D : வெளியீடு : N
சாயிபாபா அட்வர்டைசிங் அசோசியேற்ஸ் 140, நாவலர் வீதி, யாழ்ப்பாணம்.

Page 4
WITHIANANT + {AM
A Collection of Writings on the pattern of a spects 6 SY La]k? . Tamil Culture by RPK offe SSOE Suppi ramaniam Withian anthan Vice Chance flor, University of Jaffna, Jaffna, Sri Lanka.
published as Eelamarasa Arivoodda kam Series' No. 1 on the occasion of his Sixtieth Birthday Celeberations, organised by the a Friends of Arts, Literature and Journalism." [2-5-1984
introduction by
„Karthigesu Siwatham by
Head, Department of Fine Arts
University of Jaffna, Jaffna.
Copy Right ( R ).
Published by
எல்லா உரிமைகளும் ஆசிரியனுக்கே
140, NAWA L AR FRQA 9. JAFFNA
 

MAMS S MeSsMSASMSM S eSeSeMSeSMSeSMSMSMAeSeSqM SeS SeMMeSeSeSTe Se S SSS SSSuu
ஆமலாதேவி வித்தியானந்தன்
( 1979 )
%sتصیححستصفح TAČSN AO AS
இந்த மணிவிழாவில் எவர் இல்லாக் குறை குத்திட்டுத் தெரிகிறதோ அவரின் நினைவுக்கு

Page 5

வித்தியானந்தன் எழுத்துக்களே .............................. frétT6irبیتھ (6) تقع کئع 6ITRAJ انگر6 ஈழத்துத் தமிழ்ப் பண்பாட்டின் அமைப்பு முழுமையை அறிந்துகொள்ள.
பேராசிரியர் சுப்பிரமணியம் வித்தியானந்தன் அவர்களின் அறு தாண்டு நிறைவைக் கொண்டாடும் வழிமுறைகள் பற்றி நண்பர் திருச்செல்வம் கலந்துரையாடிய பொழுது பேராசிரியரின் கட்டுரைத் தொகுதியொன்றினை வெளியிடுவதனுல் ஏற்படக்கூடிய நிலையான பயன் பாட்டினை வற்புறுத்திக் கூறினேன். நாட் சில சென்ற பின்னர் கட்டுரைத் தொகுதிக்கான தொகுப்பு முயற்சியை மேற்கொள்ளுமாறு நண்பர்
உரிமையுடன் வேண்டினுர்,
அறுபதாவது ஆண்டு நிறைவின் பொழுது வெளியிடப் பெறும் எழுத்துக் கோவை, எழுதியவரின் ஆளுமையையும், அந்த ஆளுமையின் அடிப்படையையும் விக்சிப்புக்களையும் சுட்டுவதாகவிருத்தல் அவசியம் என்ற எண்ணத் துணிபுடன் தொகுப்புக்கான ஆரம்ப முயற்சிகளிலிறங்
ஐந்து வருடங்களுக்கு முன் (1979) பேராசிரியர் யாழ். பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக நியமனம் பெற்றபொழுது யாழ்ப்பாணம் முத்தமிழ் வெளியீட்டுக் கழகத்தினர் வெளியிட்ட 'தமிழியற் சிந்தனே' எனது கடமையைச் சிக்கனப்படுத்திற்று. அதில் வெளிவந்தனவற்றை இப்பொழுது மீள் பிரசுரம் செய்வது தக்க செயலாகாது. மேலும் பேராசிரி யரின், பிரசித்தமான ஆராய்ச்சிக் கட்டுரைகள் சில (ஈழமும் தமிழிலக் கணமும், ஈழத்தின் கிராமிய நாடகங்கள், Tamil influences in Sinhalease, Tamil Studies in English in Ceylon.) or Si) 6 is 60 (66. வெளி வந்துவிட்டன. 1979-க்குப் பின், பதவிப் பொறுப்புக் காரணமாக ஆராய்ச்சி வெளியீடுகள் பெரிதும் குறைந்துவிட்டிருந்தன. 1979-க்குப் பின் மூன்று நான்கு ஆராய்ச்சிக் கட்டுரைகளே எழுதப்பட்டிருந்தன அவற்றுள்ளும் சில அச்சிடப்பட்டிருந்தன.
இந்த நிலையில், இரு முனைப்பட்ட செயற்பாட்டுடன் என் பணி நிறைவுக்கு முயலத் தொடங்கினேன். முதலாவது, 1953-ஆம் ஆண்டில் நான் அவர் மாணவனுகப் பேராதனையில் அவரைக் கண்டு கொண்டது முதல் அவர் எவ்வெப் புலமைத் தொழிற்பாடுகளில் ஈடுபட்டிருந்தா ரென்பதை மீள நினைவுறுத்தல், இரண்டாவது, அவரது எழுத்துக்களை இயன்றளவு நுணுகி நோக்கல்,

Page 6
மீள் நினைவுறுத்தற் செயற்பாட்டின் பொழுது, பராதனையிலும்,
கொழும்பிலும் அவர் வெளிப்படுத்திய தமிழின உணர்வெழுச்சி, இலக் கிய வரலாற்று விரிவுரையின் அடிநாதமாகக் கிடந்த திராவிட இயக்கக் கருத்து நிலைப்பாடு, முஸ்லிங்களின் தமிழிலக்கியத்திற் காட்டிய ஆய்வு ஈடுபாடு, கிறிஸ்தவப் பங்களிப்புக்குரிய கணிப்பு, நாடகத்தில் ஈடுபாடு: கூத்து மரபின் மீள் கண்டுபிடிப்பு முயற்சிகள், கலைக்கழகத் தமிழ் நாடகக் குழுவின் பன்முகப்பட்ட நடவடிக்கைகள், யாழ்ப்பாணத்துக் கல்வி உயர்ச்சி யிற் கவனம், மட்டக்களப்புக் கலைச்செல்வத்தை மீளக் கண்டுபிடித்தல் மன்னுர்ப் பகுதியின் கலைச் செல்வத்தை அறிதல் ஆதியன பற்றி ஆற அமரச் சிந்திக்க வேண்டியதை உணர்ந்தேன். அவரது எழுத்துக்களே மீள வாசிக்கும் பொழுது, அதிகாரப்பட்டு நிற்கும் விடயங்களை மாத்திர மல்லாது, அந்த விடயங்களைத் தெரிவு செய்த கருத்துநிலைக் கண் ணுேட்டம், அவ்விடயங்களை அணுகும் முறைமை ஆதியனவற்றை உன்னிப் பாகக் கவனித்துக் கொண்டேன்.
வித்தியானந்தன் அவர்கள் தமது எழுத்துக்களிலே கையாண்டுள்ள முக்கிய விடயங்களை ஏறுமுக முக்கியத்துவத்துடன் எடுத்துக்கூற விரும் பினுல் அவற்றை,
ஈழத்துத் தமிழிலக்கியம்
நாட்டார் வழக்கியம்
நாடகம் / கூத்து என வரிசைப்படுத்திக் கொள்ளலாம். ஆணுல் இவற்றை அவற்றின் அடிப்படையான கருத்துநிலை நோக்கிலும், இந்த எழுத்துக்களுக்கும், இவரது வாழ்க்கைச் செயற்பாடுகளுக்குமுள்ள இயைபு நிலை யி லு ம் வைத்து நோக்கும்பொழுது மேலே கூறப்பட்டுள்ள பிரத்தியட்ச விடய வட்டத்துக்குக் கீழே, அவை யாவற்றுக்கும் ஆதாரமானதான ஒர் "ஆழ் நிலைக் கட்டமைப்பு திண்ணிதாகக் கிடப்பது புலனுயிற்று.
ஈழத்துத் தமிழ்ப் பண்பாடு என்னும் கருதுகோளை சனநாயக, நிதர்சன முழுமையுடன் நோக்கும் தன்மையே, இவரது எழுத்துக்கள், செயற்பாடுகளிற் காணப்படும் அந்த "ஆழ்நிலைக் கட்டமைப்பு' (deep structure) ஆகும்.
ஈழத்துத் தமிழ் பேசும் மக்கள் சகலரையும் உள்ளடக்கும்
வகையிலும், பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலும் அமை யும் ஒரு பண்பாட்டுக் கோலத்தை விவரிப்பதும் அந்த விவரண அடிப்படையில் ஈழத்துத் தமிழ்ப் பண்பாட்டுக்கு ஒரு மீள் வரைவிலக்கணம் வழங்குவதுமே வித்தியானந் தன் அவர்களின் பணிகளின் உட்கிடக்கையாகும்.
-س- ii -سعه

பேராசிரியர் வித்தியானந்தனின் எழுத்துக்களின் முன்னரும், அவர் எழுதியவற்றைக் கணக்கிற் கொள்ளாது விடுமிடத்தும், ஈழத்துத் தமிழ்ப் பண்பாடு பற்றிய நமது கருத்துக்கள், நிலைப்பாடுகள் யாவை என்பதை
ரு புறமாக வைத்து, .i.i.i. எழுத்துக்கள் சுட்டும் ஈழத் துத் தமிழ்ப் பண்பாட்டுக் கோலத்தை அவற்றுக்கருகே வைத்து நோக்கும் பொழுதுதான் நான் இங்கு வற்புறுத்த விரும்பும் உண்மை புலனுகும்.
ஈழத்தின் இலக்கியப் பண்பாடு பற்றிய முக்கியமான கருத்துக்
பிரதானமாகச் 'சைவத் தமிழ்’ப் பாரம்பரியமே என்பது ஆறுமுக நாவலர் நிலைப்பாட்டின் வழியாக வரும் எடுகோளாகும். வித்தியானந்தன் இந்தச் சைவத்தமிழ்ப் பாரம்பரியத்தை எவ்விதத்திலும் மறுதலிக்க வில்லை. ஆனல் ஈழத்தின் தமிழிலக்கியப் LI It Uitbu rimu Iiiio முழுவதும் "சைவத் தமிழ்ப் பாரம்பரியமே என்பதனை ஏற்றுக்கொள்ளாது, ஈழத்தின் தமிழ்க் கிறிஸ்தவர்களும், தமிழ்ப்பேசும் முஸ்லிங்களும் ஈழத்து இலக் கியப் பாரம்பரியத்தின் உருவாக்கத்திலும், அப்பாரம்பரியப் பேணுகையி லும் சமமான முக்கியத்துவமுடையவர்கள் என்பதை வற்புறுத்தினுள்.
பாட்டுக்கும் உதவிய வகையை வன்மையாக எடுத்துக்கூறியுள்ளார். :ஈழநாட்டுப் @ Lifluff தமிழ்மொழிக்காற்றிய தொண்டு' எனும் 1949-ஆம் ஆண்டுக் கட்டுரையிலே இந்நோக்கின நாம் கண்டு கொள்ளலாம். ஈழத் தமிழிலக்கிய வளர்ச்சியிலும், இவ்விலக்கியச் சிந்தனைப் பாரம்பரியம் தென்னிந்தியத் தமிழ் வளர்ச்சிக்கு முன்மாதிரியாக அமைந்த முறைமை யிலும் கிறித்தவப் பாதிரிகளின் பங்களிப்பினைப் பே ரா சி ரி யார் கணபதிப்பிள்ளை தமது தவிசு ஏற்பு உரையிலே வற்புறுத்தியிருந்தார் , 1940 களில் அரசாங்க உயர் நிர்வாகத் துறைகளிலும், கல்வித் துறை உயர் நிர்வாகத்துறைகளிலுமிருந்த " தமிழ்ப் பெருமக்கள் ' கணபதிப்பிள்ளையின் கருத்துக்கள் பலவற்றை ஏற்கவில்லை. வித்தியானந் தன் தம் ஆசான் வழியே சென்றர். ஆணுல் கணபதிப்பிள்ளையைப் புறக்கணித்தது போன்று வித்தியானந்தனைப் புறக்கணிக்க முடியவில்லை. முடியவில்லையே தவிர முயலவில்லை என்று கூறிவிட முடியாது. ஐம்பது களில் அரசியல் நிலைமை மாறி, "கோமார்க்கே நாம் என்றும் மீளா ஆள்' என்ற குடியேற்றவாதப் பற்றுறுதியுடன், மற்றையோரைப் பார்த்து "நாம் (வேறு) ஆர்க்கும் குடி அல்லோம்' என்றிருந்த அடிமை மதர்ப்பு நிலை போய், மொழியபிமானம், நாட்டபிமானம் ஏற்பட்டன. அக் காலகட்டத்தில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் யாவ ரையும் தமிழராகக் காணும் பண்பு வளரத் தொடங்கிற்று. அப் பண்பு ஒர் அரசியற் கோட்பாடாகவே (தமிழ் பேசும் மக்கள்) பின்னர் வளர்த் தெடுக்கப்பட்டது. "வேதக்காரர்', 'தமிழர்" என்ற வேறுபாடே பேசப்பட்டு
- iii —
களை முதலில் நோக்குவோம். ஈழத்துத் தமிழிலக்கியப் பாரம்பரியம்
ஈழத்துக் கிறிஸ்தவர்கள் தமிழிலக்கியத்தின் விரிவுக்கும் நவீனமயப்

Page 7
வந்தப் சமுகப் பண்பாட்டுச் சூழலில், வித்தியானந்தன் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்களின் இலக்கிய, இலக்கண, கலப் பங்களிப்புக் களே வற்புறுத்தியதன் மூலம் 'தமிழர்' என்னும் கோட்பாட்டையே அகலப்படுத்திர்ை என்று கூறலாம்.
இந்த அகற்சியை முஸ்லிங்க?ளப் பொறுத்தவரையிலும் மிகச் சிறப் பாகச் செய்தும் ' தமிழ் பேசும் மக்கள் ' என்ற கோட்பாட்டுக்கான பண்பாட்டு அடித்தளத்தை வலிமைப்படுத்திய பெருமை வித்தியானந் தன் அவர்களைச் சாரும். கணபதிப்பிள்ளையின் வழிகாட்டலில் மேற் கொள்ளப்பட்ட, உவைஸ் அவர்களின் ஆய்வு முயற்சியை நெறிப் படுத்தும் புலமைப் பொறுப்புக் காரணமாக தமிழிலக்கியத்தில் முஸ்லிங் கள் பெறும் இடம் பற்றி ஆழமாகவும் ஆணித்தரமாகவும் எழுதும் வாய்ப்புக் கிட்டிற்று. 1953 இல் வெளிவந்த ' இலக்கியத் தென்றலில்' முஸ்லிங்களின் பங்களிப்பு வற்புறுத்தப்பட்டிருந்தது. தமிழிலக்கியப் பாரம்பரியத்தில் முஸ்லிங்களின் பங்களிப்பை எடுத்துக் கூறவந்த பிற் கால ஆய்வுகள் மேற்கூறிய முன்முயற்சி பற்றிக் குறிப்பிடத் தவறவில்லை.
ஈழத்துக் கிறித்தவ, முஸ்லிம் இலக்கியப் பாரம்பரியத்தை வற் புறுத்தியதன் மூலம் ஈழத்துத் தமிழிலக்கியம் பற்றிய ஒரு முழுமை யான நோக்கினே எடுத்துக்காட்ட இவரால் முடிந்தது. நாவலர் பாரம்பரி யத்தை இவர் வற்புறுத்திய பொழுதும் 'ஆறுமுகநாவலரும் பல்கலைக் கழகமும்' - இளங்கதிர் 1957 - 'தமிழகத்தை ஈழநாட்டவர்க்குக் கடமைப்படுத்திய பேருபகாரி நாவலர்’ நாவலர் நினவு மலர் 1969 யாழ்; * நாவலர் சாதனை ? - மத்திய மாகாணச் சைவ மகாசபை 1969; "நாவலர் நிலைநாட்டிய சாதனைகள்' -4வது தமிழாராய்ச்சி மாநாடு 1974) இவர் பிறமத, பண்பாட்டினே வெறுத்தொதுக்குபவராகக் கருதப் படவில்லே சைவம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மூன்று மதங்களும் ஈழத்துத் தமிழிலக்கியத்தின வளப்படுத்தியதை ஏற்றுக் கொண்டு அக் கருத்தைப் பரப்பியதன் மூலம் ஈழத்துத் தமிழிலக்கியப் பண்பாட்டினை ஒரு 'விரிந்த' கருதுகோளாக்கினுர்,
இதே போன்ற முக்கியத்துவமுள்ள இன்னுெரு பண்பாட்டு அகற்சி இலக்கியம் பற்றியதாகும், உயரிலக்கியங்களையே உண்மையான இலக்கியங் களாகக் கருதி வந்த ஒரு பண்பாட்டு வட்டத்தினுள் ' எழுதாக்கிளவி யான நாட்டுப் பாடலையும் நமது இலக்கியப் பாரம்பரியத்தின் பிரிக்க முடியாத அங்கமாகக் கொண்டாடியோருள் வித்தியானந்தனும் முக்கிய மானவர். இவருடைய இத்துறை நிலைப்பாடும் பேராசிரியர் க. கணபதிப் பிள்ளை வழிவந்த ஒன்றகும். கணபதிப்பிள்ளையோ பேச்சுத் தமிழையே இலக்கிய (நாடக) ஆக்கத்தின் தளமாக்கியவர். தி சதாசிவ ஐயர், வெள் ளவத்தை இராமலிங்கம் போன்றரும் இத்துறையிற் பணியாற்றினுள்கள். வித்தியானந்தன் அவர்கள் " மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள் " என்ற
- iv جیسے
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தொகுப்பில் தொல்ர்ே அகத்துறை இலக்கியத்துக்குரிய " காதலன் ாற்று " " காதலி கூற்று ' ' தாய் கூற்று' எனவரும் தொடர்களை ாட்டுப்பாடல்கள் மீது சார்த்தி வகுத்துள்ளார். நமது இலக்கியப் பண் பட்டின் சனநாயகப்பாட்டிற்கு இத்தகைய முன் முயற்சிகள் பெரிதும் உதவின. இதனேயும் அவர் நிறைவேற்றியுள்ள முறைமை போற்றற் குரியதாகும் ஈழத்தின் உயர் இலக்கிய இலக்கண மரபினைப் போற்று பவராக விளங்கிய அதேவேளையில் நாட்டுப்பாடல் மரபு சுட்டும் இலக்கிய மரபினேயும் போற்றினுள்
ஈழத்துத் தமிழ்ப் பண்பாட்டின் முக்கியமான சனநாயக விஸ்தரிப் பாக அமைந்தது, பேராசிரியர் வித்தியானந்தன் நாட்டுக்கூத்துக் கலைக்கு வழக்கிய முக்கியத்துவமாகும்.
யாழ்ப்பாணப் பண்பாட்டுப் பெறுமானப் பட்டியலில் நா ட கம் ! சத்து எனும் கலைகள் மிகக் குறைந்த ஒரிடத்தையே பெற்றிருந்தன. உண்மையான சைவ வாழ்க்கையைக் கொடுப்பனவற்றுள் நாடகம்/கூத் டுனேயும் ஆறுமுகநாவலர், தமது ' நல்லூர்க் கந்தசுவாமி கோயில்" என்ற துண்டுப்பிரசுரத்திற் குறிப்பிட்டுள்ளார். கேளிக்கை வெறுப்பையே மதச்செந்நெறியாகக் கொள்ளும் " பியூறிற்றணிச ' (Puritanist ) மனப்போக்கின நாவலர் புரட்டஸ்தாந்தம் வழியாகப் பெற்றிருந்தார். கூத்து நாவலரின் கோபக்கணக்கு ஆளானது உண்மையெனினும் அது சமூக ஒருமைப்பாட்டுக் கலைவடிவமாகவும் தொழிற்பட்டதால் அது நின்று நிலக்கத் தவறவில்லை. ஆணுல் அந்நிய ஆட்சி கையளித்த பண்பாட்டு விழுமியங்களும், ஆங்கிலக் கல்வியும் இவை வழியாக பாரம் பரியச் சமுதாயத்திலிருந்து அந்நியப்பட்டு நிற்கும் தன்மையும் நாட்டுக் கூத்தினை மிக இழிந்த ஒரு கலையாகவே தள்ளி வைத்தன. ஆங்கிலப் பரிச்சயம் வழியாக வந்து பார்ஸி மரபுடன் இணைந்து நின்ற பம்மல் சம்பத்த முதலியாரின் சபா நாடக மரபே யாழ்ப்பாணத்தில் ஒ ர ள வு சமூகக் கணிப்புப் பெற்றிருந்தது.
இத்தகைய ஒரு நிலையில் தான் இந்நூற்றண்டின் ஆரும் தசாப் தத்தில் நாட்டுக்கூத்து மரபை மீட்டெடுத்து அதனையே நமது பண்பாட் டுக் கோலத்துக்குரிய இயல்பான நாடக வடிவம் என்பதை வித்தியானந் தன் நிலை நிறுத்தினுர், பண்பாட்டு வரலாற்றசிரியனுக்குரிய மன நிலையுடனேயே இப்புத்துயிர்ப்புப் பணியில் வித்தியானந்தன் ஈடுபட்டி ருந் தாரெனினும், நாட்டுக் கூத்து மரபைச் செந்நெறி மரபாக நிலை நிறுத்தியதன் காரணமாக ஒரு முக்கியமான சமூகமாற்றம் ஏற்பட்டது. வித்தியானந்தன் அவர்களின் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பு முயற்சி காரணமாக, நமது சமூகத்தின் அடிநிலை அந்தஸ்துக்குரியவர் கள் என்று கருதப்படுபவர்களும் நவீன சமுதாயத்தோடிணையாது நிற்கும் பழைமையாளரெனவே கருதப்பட்ட அண்ணுவிமாரும் நமது
V

Page 8
பண்பாட்டு மறுமலர்ச்சி இயக்கத்தில் முக்கிய அமிசத்தினர் ஆகினர். கலேயரசு சொர்ணலிங்கத்தின் நாடக மேன்மையைப் போற்றிப் புகழ்ந்த அதே வேளையில் அதே ஈடுபாட்டுடனும் கடப்பாட்டு உணர்வுடனும் நடிகமணி வைரமுத்துவின் நாடக மேதாவிலாசத்தையும் வித்தியானந்தன் போற்றினுர், வளர்த்தார். வைரமுத்துவைப் போற்றும் அதே ஈடுபாட்டுடன் கூத்து அண்ணுவிமாரையும் போற்றினுர் கெளரவித்தார்.
இவரது இம்முயற்சிகளால் நாட்டுக்கூத்து உயர்கல்வி முயற்சியாக இடம்பெறத் தொடங்கிற்று. பொதுக் கல்வித் தராதர சாதாரண, உயர் தர வகுப்புக்கள் முதல் பட்டதாரி வ கு ப் பு வரை நாட்டுக்கூத்து கல்விப் பொருளாயிற்று. ஈழத்துத் தமிழ்ப் பண்பாட்டு வட்டம் விஸ்தரிக் கப்பட்டது. 鬣
நாட்டுப் பாடல்களையும் தமிழிலக்கியப் பாரம்பரியத்தின் அங்கமாகக் கொள்ளத் தொடங்கியமை காரணமாகவும், நாட்டுக்கூத்து மரபைத் தமிழரின் செந்நெறி நாடகமரபாகக் கொள்ளத் தொடங்கியமை காரண மாகவும், ஈழத்துத் தமிழ்ப் பண்பாட்டுப் பிரக்ஞையிலும், பண்பாட்டுத் தொழிற்பாட்டிலும் மிக, முக்கியமான ஒரு மாற்றம் ஏற்பட்டது:
ஈழத்துத் தமிழ்ப்பண்பாட்டை யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டி ஒன்ருகவே போற்றும் மரபு நீண்டகாலமாக இருந்து வந்துள்ளது. இப் பொழுதுங்கூட அக்கருத்து முற்றக அழிந்துவிடவில்லை. ஈழத்தில் வாழும் தமிழ் மக்களிடையே யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாழும் தமிழரே அந்நிய ஆட்சிக் காலங்களில் அரசபார்வைக்குள் வந்து தம்மைக் கல்வி, பொரு ளாதாரத் துறைகளில் வளர்த்துக் கொண்டனர். அப்படியாக வளர்த் தெடுக்கப்பட்ட ஒரு மேலாண்மை நிலை காரணமாக, யாழ்ப்பாண மரபு களையே “செந்தமிழ்' மரபுகளாகவும் மற்றைய தமிழ்ப் பிரதேச மரபு களே (இவை பொருளாதார வளர்ச்சியும் நவீனமயப்பாடும் அற்றன வாகவுமிருந்தன)க் கொடுந்தமிழ்' மரபுகளாகவும் கொள்ளும் ஒரு மேலோங்கிகள் (elites) மனப்பான்மையை வளர்த்தும் வந்துள்ளனர்.
ஈழத்துத் தமிழ் மக்களின் சமூக, அரசியல் ஒருமைப்பாட்டுக்கு வேண்டிய பண்பாட்டு வேர்கள் பற்றிய தேடலில் நாட்டார்நிலைக் கலை கள் முக்கியமாக, அதுகாலவரை தமிழ்ப் பண்பாட்டுத் தளங்களாகக் கொள்ளப்படாத பிரதேசங்களும் குழுக்களும் முக்கியம் பெறத் தொடங் கின. நாட்டுக் கூத்து மரபுப் புத்துயிர்ப்புக் காரணமாக மட்டக்களப்பு முக்கியமாயிற்று நாட்டுப் பாடல் மரபின் மேனிலைப்பாடு காரணமாக மட்டக்களப்பு, மன்ஞர் முக்கியமாகின. நாட்டுக்கூத்து மரபுப் புத்துயிர்ப்பு காலக்கிரமத்தில் வன்னிப் பிரதேசத்தையும் முக்கியமாக்கிற்று
vi -

ஈழத்துத் தமிழ்ப் பண்பாட்டின் வேர்கள் பற்றிவ ബ யாழ்ப்பாணம் இழந்தவை, மட்டக்களப்பு, மன்னுர், வன்னிப்பகுதிகளி லிருப்பது தெரியவந்தது. இக் கண்டுபிடிப்பு ஈழத்துத் தமிழ்ப் பண் பாட்டுப் பிரக்ஞையில் ஒரு பிரதேச சமத்துவத்தை ஏற்படுத்திற்று.
மேலும், நாட்டுக் கூத்து மரபுப் புத்துயிர்ப்பு முயற்சி காரணமாகக் கத்தோலிக்க நாடகப் பாரம்பரியம் மிக முக்கியமான ஒன்ருயிற்று மன்னு ரில் வங்காலேயும், பேசாலையும், யாழ்ப்பாணத்திற் குருநகரும் தமிழ்க் கூத்து மரபின் முக்கிய தளங்களாகின. பூந்தான் யோசேப்பின் பெயர் எல்லோர் வாயிலும் அடிபடத் தொடங்கிற்று.
இதே போன்று நாட்டுப் பாடல் போற்றப்பட்டமை காரணமாக முஸ் லிங்களின் ஈழத்துத் தமிழிலக்கிய முக்கியத்துவம் மேலும் வற்புறுத்தப் படலாயிற்று.
இலங்கையின் தமிழ்ப்பேசும் மக்களின் சமூக - அரசியல் ஒருமைப் பாட்டுணர்வின் முதற் குரல்களாக இவற்றைக் கொள்ளவேண்டும். ஈழத் துத் தமிழ்ப் பண்பாட்டு உருவாக்கத்தில் மட்டக் களப்புக்கும் மன்னுருக்குமுள்ள பெரு முக்கியத்துவத்தை வற்புறுத்திய இயக்கத்தில் பேராசிரியர் வித்தியானந்தனின் பங்கு மிகப் பெரியது.
கண்டிச் சைவ மகாசபைத் தலைமை மூலம் மலேயகத் தமிழர் தொடர்பையும் இவர் தம் ஆளுமையின் ஓர் அங்கமாக்கிக் கொண்டார்.
இவ்வாறு நோக்கும்பொழுது தான், பேராசிரியர் வித்தியானந்தனின் எழுத்துக்களும் முயற்சிகளும் ஈழத்துத் தமிழ்ப் பண்பாட்டு வட்டத்தை விசாலிக்கவும், சனநாயகப்படுத்தவும் உதவியுள்ளன என்பது தெரிய வருகின்றது. இன்று பின்னுேக்காகப் பார்க்கும் பொழுது தான் இலங்கையில் வாழுகின்ற தமிழ் மக்களேயும் உள் ளடக்கி நிற்கும் தமிழ்த் தேசீயவாதத்தின் முதற் பண் பாட்டுக் குரலாக, கலை, இலக்கியக் குரலாக வித்தியானந் தன் அமைந்துள்ளார் எனும் உண்மை நன்கு புலணு கின்றது.
மாறிவந்துள்ள சமூக அரசியற் சூழ்நிலைகள் காரணமாக, ஐயந் திரிபற்ற தமிழ்த் தேசியவாதமாக இன்று முகிழ்த்துள்ள தமிழரின் சமூகப் பிரக்ஞை நாற்பது ஐம்பதுகளில் திராவிட இயக்கத்துடன் பிணை பட்டுக் கிடந்தது. அக்காலகட்டத்தில் ஆரியமேன்மை எதிர்ப்பு, திராவிட
vii

Page 9
வாதத்தின் தளமாக அமைந்தது. 1940, 50 களில் பேராசிரியர் வித்தியானந்தன் திராவிட இயக்கக் கருத்து நிலைமையுடையவராக இருந்தார். பின்னர், 50, 60 களில் அக் கருத்து நிலையை விட்டாரெனி னும் தமிழின உணர்வைப் பிரதிபலிப்பவராகவே தொடர்ந்து காணப் பட்டார். ஈழத்துத் தமிழ் மக்களின் அரசியற் தலைவர்களாகவுள்ள பலர் தமது அரசியல்மயப்பாட்டில் வித்தியானந்தனின் ஆளுமைக்கும் இடமிருந் தது என்பதை எடுத்துக்கூறியுள்ளனர்.
ஈழத்துத் தமிழ் பேசும் மக்களின் மொழி நிலைப்பட்ட ஒரு  ைம ப் பாட்டை கலே, இலக்கிய வட்டத்தினுள் நின்று தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளமை காரணமாக, இன்று வித்தியானந்தன் சகல ஈழத்துத் தமிழ் பேசும் மக்கள் மட்டத்திலும் ஏற்புடையவராகக் காணப்படுகின்றர்டு
ஈழத்துத் தமிழ் பேசும் மக்களின் மொழி நிலைப்பட்ட ஒருமைப் பாட்டின் குரலாக அமைந்த வித்தியானந்தன் ஈழத்தின் அண்மைக் கால கலை, இலக்கிய வரலாற்றுக் கட்டங்களில் முற்போக்கான நிலைபாட் டையே மேற்கொண்டு வந்துள்ளார் என்பது முக்கியமான ஒருண்மை யாகும். 1950 களில் இல ங்  ைக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் முன்னின்று நடத்திய மரபுப் போராட்டத்திலும், நவீன இலக்கிய வடி வங்களின் இன்றியமையாமைப் போராட்டத்திலும் இவர் ஆக்க எழுதி தாளர்கள் பக்கமே நின்ருர், அத்துடன் மரபு என்பது பழைமையைப் பேணுவதற்கான ஒன்றன்று என்று ஆணித்தரமாக வாதிட்டார்.
முற்போக்கு இலக்கிய இயக்கம் மார்க்வலீயக் கருத்து நிலையை அடிப் படையாகக் கொண்டது. 1950, 60 களில் நிலவிய வரலாற்றுச் சூழலில் அது மேற்கொண்ட போராட்டங்கள் இருமுனைப்பட்ட முக்கியத்துவத்தை u|60}LUI60T.
முதலாவது இவ்வியக்கம் இலக்கியத்தின் சனநாயகப்பாட்டிற்குப் போராடியமையாகும்.
இரண்டாவது இச்சனநாயகமயப்பாட்டுக்கான போராட்டத்தின்மூலம் ஈழத்துத் தமிழிலக்கியப் பாரம்பரியத்தை மதச்சார்பற்ற ஓர் இலக்கிய பாரம்பரியமாக்க முனைந்தமையாகும்.
இந்த இரண் டு அமிசங்களும் வித்தியானந்தனுக்கு ஏற்புடைய அமிசங்களாகும். மார்க்வலியக் கருத்து நிலையை ஏற்காத வித்தியானந்தன் அவர்கள், கலை, இலக்கிய முற்போக்கு நடவடிக்கைகளை ஆதரித்தே வந்துள் ளார். இலக்கியத்துறையில், முற்போக்காளர்களின் ஆதரவாணராக விளங் கிய வித்தியானந்தன் (முற்போக்கு இலக்கிய இயக்கத்தைச் சார்ந்த பலர் இவர் மாணுக்கராவர்.) நாடகத்துறையில், (நாட்டுக் கூத்து மரபை மீள் கண்டுபிடிப்புச் செய்ததன் மூலம்) அத்துறையில் 1969, 70 களில் ஏற்
- Viii —
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பட்ட முற்போக்கான அபிவிருத்திகளுக்கு வழி வாய்க்காலாக விளங் கிஞர் தாசீசியஸ், சுந்தரலிங்கம், சிவானந்தன், மெளனகுரு ஆகியோரது முற்போக்கு நாடக முயற்சிகளின் ரிஷிமூலங்களில் வித்தியானந் தனும் ஒருவர்.
வித்தியானந்தனின் இந்தப் பண்பினை அவரது எழுத்துக்களோடு இணைத்து நோக்கும்பொழுதுதான் ஈழத்துத் தமிழ்ப் பண்பாட்டின் ஒருமைப்பாட்டுக்காக அவர் செயற்பட்டுள்ள முறைமை தெரியவரும்.
தமது கலாநிதிப்பட்ட ஆராய்ச்சியின் பின்னர், இவர், தான் சுயமாக மேற்கொண்ட ஆராய்ச்சி முயற்சிகள், எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் யாவுமே இலங்கைத் தமிழ்ப்பண்பாடு பற்றியனவே ஈழத்துத் தமிழ்நாடக மரபு, துரையப்பாபிள்ளையின் சமூக நோக்கு, ஈழத்து இலக்கண நூல்கள், தமிழ்பற்றிய ஈழத்துத் தமிழரது ஆங்கில எழுத்துக்கள் என வரும் ஆராய்ச்சிகள் இவ்வுண்மையை எடுத்துக் கூறுவனவாகவேயுள் 6T60
வித்தியானந்தனின் எழுத்துக்களின் மையக்கரு ஈழத்துத் தமிழ்ப் பண்பாட்டு அமைப்பு முழுமையே என நிர்ணயிக்க முயலும் இவ்வேளை யில் அவர் எழுதிய யாவும் இப்பொருள் பற்றியனவே என்று கூறி விடமுடியாது; கூறிவிடவும் கூடாது என்பதை வற்புறுத்தல் வேண்டும். அவரது ஆராய்ச்சிப் பெறுபேறன 'தமிழர் சால்பினை விட்டு நோக்கின லும், அவர் வேறு விடயங்கள் பற்றியும் எழுதியுள்ளாரென்பது தெரிய வரும். ஆயினும் அவை பெரும்பாலும் தமிழர் பண்பாடு, நாகரிகம் பற்றியனவேயாகும் என்பதை மனத்திருத்தல் அவசியம்.
ஆராய்ச்சித் துறையில் ஒருவர் ஒரு குறிப்பிட்ட விடயத்தைத் தமது விசேட ஆய்வுப் பொருளாகக் கொள்ளும் பொழுது அந்த ஆய்வுப் பொருளின் பின்னணியில் வருவன பற்றியும் அதன் புடைநிலைப் பொருட் கள் பற்றியும் கவனம் செலுத்துவது இயற்கையே, வித்தியானந்தன் அவர்களும் இவ்வகையிலேயே தமிழின் கலை, இலக்கிய வரலாற்று விடயங்கள் பற்றி எழுதியுள்ளார்.
III
வித்தியானந்தன் அவர்களின் எழுத்துக்களிற் காணப்படும் இந்த மையக் கருத்தை வெளிக் கொணரும் வகையிலேயே இத்தொகுதியில் வரும் கட்டுரைகள் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளன. 'தமிழியற் சிந்தனை? யில் வந்த கட்டுரைகள் இங்குள்ள சிலவற்றிலும் பார்க்க அதிக பொருத்த மானவை எனினும் தெரியப்படாது விடப்பட்டுள்ளன.
.است ix سیاسی

Page 10
" மட்டக்களப்புத் தமிழகத்தில் விஷ்ணு வழிபாடு 'ம் ' மன்னர், முஸ்லத்தீவு நாட்டுப் பாடல்கள் - ஓர் ஒப்பாய்வு'ம் பேராசிரியர் ஈழத்துத் தமிழ்ப் பண்பாட்டின் பிரதேச விசாலிப்பைச் சுட்டுவனவாகும். இவற்றுள் முதலாவது 1977 இல் வெளியான யூரீ வல்லிபுர ஆழ்வார் குடமுழுக்கு மலரில் வெளியானது மற்றது 1983 இல் முல்லைத்தீவில் நடைபெற்ற வன்னிப் பிரதேசத் தமிழாராய்ச்சி மகாநாட்டில் வா சி க்க ப் பெற்ற கட்டுரையாகும்.
கண்டிப் பெரஹரவும் கண்ணகி வழிபாடும்' எனும் கட்டுரை இங்க ளப் பண்பாட்டுக்கும் தமிழ்ப் பண்பாட்டுக்குமுள்ள மக்கள் நிலை இயைபினை எடுத்துக்காட்டுகின்றது. இக்கட்டுரை 1967இல் ' வீரகேசரி'யில் வெளி ILLI TIT 60Tg5
ஈழத்துத் தமிழ்ப் பண்பாடு தமிழ்பேசும் மக்கள் சகலருக்கும் உரிய தென்பதைச் சுட்டும். 'இஸ்லாமியரும் நாடோடிப் பாடல்களும் " 'ஈழத்துக் கிறித்தவரின் தமிழ்த் தொண்டு' ஆகிய கட்டு  ைர கன் முறையே, பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிசின் வருடாந்த வெளியீடான 'பல்கலைக்கழக மஜ்லிஸ்" (1959 - 60) இலும், பேராத 2னப் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்க வெளியீடான "இளங்கதிரி'லும் (மலர் 15, 1962-63) வெளியானவை "ஈழத்தில் தமிழிலக்கியம்" என் னும் கட்டுரை 'இளங்கதிர்' பத்தாவது ஆண்டு மலரில் (1957-1958) :ஈழத் தமிழகத்தில்' என்ற பொதுத் தலைப்பில் எழுதப்பட்ட பல் வேறு கட்டுரைகளில் ஒன்றன, ' இலக்கியமூம் சிற்பமும்' என்ற கட்டுரை யின் ஒருபகுதிவாகும். பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பற்றிய கட்டுரை 1980இல், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை நடத்திய இலங்கைத் தமிழ் நாட்டார் வழக்கியல் கருத்தரங்கில் "பேராசிரியர் கண பதிப்பிள்ளையும் இலங்கையில் தமிழ் நாட்டார் வழக்கியல் ஆய்வும்"
என்ற தலைப்பில் வாசிக்கப்பெற்ற தொடக்கவுரையாகும். வித்தியானந்தன் அவர்களின் ரிஷிமூலமாகிய பேராசிரியர் கணபதிப்பிள்ளை தனது முதல் மானுக்கன்மீது கொண்டிருந்த புலமைச் செல்வாக்கை இக்கட்டுரை மூலம் உணர்ந்து கொள்ளலாம். "நாவலர் சாதனை' பற்றிய கட்டுரை 1979ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நாவலர் நினைவு நூற்றண்டு விழாப் பேருரையின் கட்டுரை வடிவமாகும். நாவலர் சாதனைகளும் எம்மை எதிர்நோக்கும் இலட்சியங்களும்" என்ற தலைப்பிலேயே பேருரை வழங்கப்பெற்றது. 1974இல் பேராசிரியர் அவர்கள் யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழாராய்ச்சி மாநாட்டில் நிகழ்த்திய தலைமை யுரை அதன் முக்கியத்துவம் கருதி இங்கு மறுபிரசுரம் செய்யப் படுகின்றது.
பேராசிரியர் வித்தியானந்தனின் கட்டுரைத் தொகுதியெனில் அதில் ஈழத்துக் கூத்து மரபுகள் பற்றிய ஒரு கட்டுரை இடம் பெறுவது அத் தியாவசியமாகும், ஆயினும் இவ்விடயம் பற்றிய ஒரு முக்கியமான கட்டுரை
-- Χ --
 

ஏற்கனவே "தமிழியற் சிந்தனையில் வெளியிடப்பட்டு விட்டதால் இக்கட்டு ரைத் தொகுதிக்கென, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், மன்னர், மலே நாட்டுத் தமிழ்க் கூத்து மரபுகளை இணைத்து நோக்கும் ஒரு கட்டுரையினை எழுதித் தருமாறு பேராசிரியரை வேண்டினுேம், “ ஈழத்துக்கூத்து மரபு' (1984) இக்கட்டுரைத் தொகுதிக்கென எழுதப்பட்டதாகும்
வித்தியானந்தன் அவர்களின் கருத்துக்களிற் காணப்படும் மையக் கருத்தினை எடுத்துக் கூறுவதாக இந்நூலில் பத்துக் கட்டுரைகளும் ஈழத் துத் தமிழ்ப் பண்பாட்டின் பிரதேச இனப்பொதுமையைச் சுட்டும் அதே வேளையில் ஈழத்துத் தமிழ்ப் பண்பாடு பற்றிய சில நிலையூன்றிய கருது கோள்களின் நியாயமின்மையையும் மறைமுகமாக எடுத்துக்காட்டுவன வாகவுமுள்ளன. ஈழத்துத் தமிழ்ப் பண்பாடு பரந்துபட்டது. சனநாயக மரபொன்றினை உள்ளீடாகக் கொண்டது, ஈழத்துத் தமிழ்பேசும் மக்கள் சகலருக்கும் பொதுவானது, அவர்களைப் பிரதிபலிப்பது என்பதை இக்கட் டுரைகள் ஒருமித்து உணர்த்தும் என நம்புகின்றேம், வித்தியானந்தன் என்னும் புலமையாளனை விளங்கிக் கொள்வதற்கான திறவுகோல் இதுவேயாகும்.
IV
வித்தியானந்தன் அவர்களின் எழுத்துக்களின் கருத்தமைதி பற்றி இதுவரை ஆராய்ந்த நாம் அடுத்து அவரது எழுத்துக்களின் வெளியீட் டமைதி பற்றியும் சிறிது நோக்குதல் பொருத்தமுடைய முயற்சியேயாகும்.
பேராசிரியருடைய கட்டுரைகளினே அவற்றின் அமைப்பு நெறிகொண்டு நோக்கும் பொழுது ஆராய்ச்சிக் கட்டுரைகளாக அமைபவை சிலவே என்பது தெரியவரும். ஆராய்ச்சி மாநாடுகளிலும், ஆராய்ச்சிச் சஞ்சிகைகளிலும் வெளியான அவற்றின் புலமை வியாபிப்பும் பெரிதாகும். ஆணுல்பேரா சிரியர் இதுவரை (1984 ஏப்ரல்) எழுதியுள்ள 92 தமிழ்க்கட்டுரைகளில் 26 பல்கலைக்கழக மாணவர் சஞ்சிகைகளில் வெளிவந்தவையாகும். இளங்கதிர் 16,மஜ்லிஸ் 05, இந்துதருமம் 15) கல்லூரி மலர்கள் பலவற்றிற் பேராசிரியரின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவை யாவற்றிலும் பார்க்க முக்கியமான அமிசம் பேராசிரியரின் எழுத்துக்கள் ஈழத்தின் இலக்கியச் சஞ்சிகைகளில் வெளியாகியுள்ளமையேயாகும். மேலும் பேரா சிரியர் இதுவரை 35 நூல்களுக்கு முன்னுரை (33 தமிழ் 2 ஆங்கிலம்) எழுதியுள்ளார். இந்த விபரங்கள் பேராசிரியர் வித்தியானந்தன் எவ் வகையில், ஈழத்தின் தமிழ் நிறுவனங்களுள் ஒன்ருக அமைந்துள்ளார் என்பதையும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றர் என்பதையும் காட்டுவன வாகும். வித்தியானந்தன் அவர்கள் இத்தகைய ஒரு தமிழ் நிறுவனமாக அமைவதே அவரது இன்றைய பதவிக்கான நியாயப்பாடு ஆகும். இந் தப் பதவி காரணமாக இந்த இலக்கிய இன்றியமையாமை ஏற்படவில்லை.
Χ

Page 11
இந்நூலில் உள்ள கட்டுரைகள் வித்தியானந்தன் அவர்களின் முக்கிய மான இயல்பொன்றி?ன வெளிக்கொணருகின்றன. வித்தியானந்தனின் முக்கிய குறிக்கோள் தமிழ்ப் பிரக்ஞையின் பரம்பலேயாகும். தமிழ்ப் பிரக்ஞையைப் பரப்புவதே தமது எழுத்துக்களின் முக்கிய பணியெனக் கொண்டதாலேயே இவர் பல்கலக்கழக மட் டத்திற் பெரும்பாலும் மாணவர் சஞ்சிகைகளிலும், பொது மட்டத்திற் பெரும்பாலும் சஞ்சிகைகளிலும் விசேட மலர்களிலும் எழுதியுள்ளாரெனக் கொள்ளலாம். இந்தப் பண்பு காரணமாகப் பேராசிரியரின் எழுத்துக்களில் ஆராய்ச்சிப் பண்பு குறைவென்று கொண்டுவிடல் கூடாது. பேராசிரியரின் ஆராய்ச்சிப் பொருளான ஈழத்துத் தமிழ்ப் பண்பாட்டின் இனப் பிரதேசப் பொதுமை" தந்த கோபுரத்து முயற்சியன்று. அது மக்களுடன் பகிரப்படுவது; மக்களி டையே செய்யப்படுவது. மக்கள் பிரக்ஞை வளர்க்கப்படாது செய்யப் படமுடியாதது. தமிழ்பேசும் மக்களிடையே தமிழ்ப் பிரக்ஞையை ஏற்படுத் தியமை இவரது முக்கிய பண்புகளில் ஒன்றென்பதை நன்கு விளங்கிக் கொள்ளல் வேண்டும். இந்த உண்மையை விளங்கிக் கொள்ளும் பொழுதுதான் இவருக்கும்இலங்கையின்தமிழ்ப் புதினப்பத்திரிகைகளுக்கு முள்ள தொடர்பினையும் விளங்கிக்கொள்ள முடியும், இது வரையில் வித்தியானந்தனின் கட்டுரைகள் 148 ஈழத்து நாளிதழ்களில் வெளி யாகியுள்ளன. தினகரன், வீரகேசரி, தினபதி, ஈழநாடு, சுதந்திரன், ஈழமுரசு, ராதா ஆகிய இதழ்களில் அவை வெளியாகியுள்ளன. பேராசிரியர் சு. வித்தியானந்தன் இலங்கையின் முக்கிய தமிழ் நிறுவ னங்களில் ஒன்றக இருந்து வருகின்றர் என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டாகும்.
தமிழைப் படிப்பிக்கும் ஆசிரியன் தமிழின் சின்னமாகியுள்ளான், இதுவே வித்தியானந்தனின் பெருமை. இதற்கான உந்துதலை அவர்தம் ஆசிரியர்களிடமிருந்து அவர் பெற்றுக்கொண்டார். இந்த உணர்வையே தான் அளிக்கும் *முதுசொம்'மாகத் தனது மாணவர்களுக்குக் கையளிக்கின்றர்.
| V
தன்கு சிரியன் தன்னுெடு கற்ருேன் தன் மாணுக்கன் தகுமுரைகாரன் என்(று) இன்ஞேர் பாயிரம் இயம்புதல் கடனே" என்று கூறியிருப்பினும், தனது ஆசிரியனுடைய நூலொன் றுக்கு ம ஒருவன் * Tun Julio” செய்வது, அதுவும் இத்துணைப்
- xii -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புலமைச் சுதந்திரத்துடன் கருத்துக் கூறுவது சாதாரண வழக்கன்று இந்தப் பெருவாய்ப்பினைத் தந்த நண்பர் எஸ். திருச்செல்வத்துக்கு என் நன்றி.
1950 - 60 களில் மரபுப் போராட்டம் நடந்துகொண்டிருந்த பொழுது இலங்கைப் பல்கலைக்கழகத்துத் தமிழ்ப் பட்டதாரிகள் வரன் முறையான இலக்கிய மரபில் வந்தவர்களல்லர் என்று ஒருவர் கூற எத் தனித்தார். அப்பொழுது ஒருநாள் பேராசிரியர் கணபதிப்பிள்ளை "என் வழியால் நீங்கள் உடுப்பிட்டிச் சிவசம்புப்புலவர் பரம்பரையடா’ என்று கூறினுர், வித் தி ய ர ன ந் த ன் பரம்பரை ஈழத் தமிழிலக் கியத்தை ஆழப்படுத்தி அகலப்படுத்தியுள்ளது, வாழையடி வாழையாக வரும் ஒர் இலக்கிலப் பாரம்பரியத்தின் வாரிசுகள் நாம் என்னும் உணர்வு திருப்தியைத் தருகின்றது. எமது ஆசிரியருக்கு எமது வாழ்த்துக்கள். அவர் வல்லாண்டு வாழ வேண்டும் என்பதே எமது வேட்கை வேண்டுதல்.
கார்த்திகேசு சிவத்தம்பி
நடராஜ கோட்டம், வல்வெட்டித்துறை, 3-5-凰984
- xiii

Page 12
அணிந்துரை
இவ்வாண்டு துணைவேந்தர் பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களின் மணிவிழா ஆண்டு.
இச்சந்தர்ப்பத்தில் பேராசிரியரின் மணிவிழா மலரை வெளியிடும் முயற்சியில் நாம் தீவிரமாக ஈடுபட்டிருந்த வேளையிலேயே இந் த ஆலோசனையும் வந்தது. 蠶
துணைவேந்தரால் இதுவரை எழுதப்பட்ட கட்டுரைகளில் சிறந்த சிலவற்றை ஒன்று திரட்டி ஒரு நூலாக வெளியிடுதல் நல்லது என்ற யோசனையை அவரின் மாணவர்களில் ஒருவரான பேராசிரியர் கா. சிவத் நம்பி முன்மொழிந்தார். இதனை, துணைவேந்தரின் மற்ருெரு மாணவ ரான திரு இ. சிவகுருநாதன் வழிமொழிந்தார்.
இந்த அருமையான பணியைச் செய்த ஈழமுரசு அறிவூட் டகத்தினர் அவர்களின் கன்னிப்பிரசவமாக, 'வித்தியானந்தம்' வெளி வருகின்றது.
நல்லதொரு தமிழ்ப்பணியை, காலமறிந்து, கடமையெனக் கருதிச் செய்யும் ஈழமுரசு அறிவூட்டக நிர்வாக அதிபர் திரு. காவலூர் ம, அமிர்தலிங்கம் அவர்களுக்குக் குறிப்பிட்டு நன்றி கூறவேண்டியது எமது
II)
துணைவேந்தர் மணிவிழாவில், இவ்வரிய நூலே வெளியிட்டு வைப் பதில் நாம் மிகவும் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகின்ருேம்,
எஸ். திருச்செல்வம்
செயலாளர் ' கலே, இலக்கிய, பத்திரிகை நண்பர்கள் " i. 85.84.
 

வெளியீட்டுரை
' என்னை நன்ருக இறைவன் படைத்தனன் தன்னை நன்றயத் தமிழ் செய்யுமாறே '
என்பது திருமொழி, நல்லவை எஞ்ஞான்றும் பெரிதுவக்கப்படும்
என்ற நம்பிக்கையின்பாற்பட்டு எமது முதல் வெளியீடாக " வித்தியா
னந்தம்' மலர்கிறது. நல்லநூல்களைப் பதிப்பித்தல் காலத்தால் அவற்றை அழிய விடாது காக்கும் பெரு முயற்சியின் சிறு பங்களிப்பாகும்.
இப் பங்களிப்பு, தமிழ் கூறும் நல்லுலகிற்குப் பெருந் தொண் டாற்றியும், ஈழத்து மரபுவழி இலக்கியத் துறையிலும், பலர் மறந் திருந்த அல்லது கைவைக்கப் பயந்திருந்த நாட்டுக் கூத்துத் துறையை நுண்மான் நுழைபுலத்தோடு ஆராய்ந்து எமக்கு மீட்டுக் கொடுத்தவரு மான பேராசிரியர், கலாநிதி சு வித்தியானந்தன் அவர்களின் மணி விழாப் பேருக எமக்கு வந்தமைந்தது.
செயற்கரிய செய்தாரை அவர்தம் வாழ்நாளிலேயே கெளரவிப் போம் என்ற இலட்சிய நோக்கோடு பாடுபடும் 1 கலே, இலக்கிய, பத் திரிகை நண்பர்கள் ' பாராட்டிற்குரியவர்கள்.
இந் நூலின் நோக்கம் பாரியது. குறை களேந்து குணம் கொள்வர்
பெரியர் என்ற நம்பிக்கையோடு தமிழன்னையின் பாதங்களில் இந்நூலச் சமர்ப்பித்து பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்கள் இறையருளால் பல்லாண்டு வாழ்ந்து தமிழ்ப்பணி செய்யப் பிரார்த்திக்கின்ருேம்.
யாழ்ப்பாணம் ஈழமுரசு அறிவூட்டகத்தினர் 量2- $一感4

Page 13

g
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்
சு வித்தியானந்தன் அவர்கள்

Page 14

ஈழத்திலே தமிழர் வாழ்கின்ற பிரதேசங்களிலெல்லாம் கூத் அக்கள் ஆடப்பட்டு வந்துள்ளன. கூத்தே அன்றைய தமிழரது நாடகமாக இருந்தது. ஆடலும் பாடலும் இதன் அடிநாதமாகும். கூத்தாவது கதை தழுவிய ஆட்டம், என அடியார்க்கு நல்லார் கூறியுள்ளார். இக்கூற்றுக்கு இலக்கணமாக அமைந்த கூத்துக் களை ஈழத்தில் யாழ்ப்பாணம், மட்டக்கணப்பு, மன்ஞர் முல்லைத் திவு, மலைநாடு, சிலாபம் ஆகிய பிரதேசங்களிற் காணலாம். சில பிரதேசங்களில் இன்றும் செல்வாக்குடன் இம் மரபு நிலைத் துள்ளது. சில பிரதேசங்களில் அழிந்து விட்டது. இன்னும் சில இடங்களில் அழியும் நிலையிலுன்னது.
கூத்து மக்கள் வாழ்வோடு பிணைந்தது, ஊரின் சகல நட வடிக்கைகளோடும் இணைந்தது; சமயத்தோடு நெருக்கமான

Page 15
2. வித்தியானந்தம்
தொடர்பு கொண்டது. இன்றும் பல கூத்துக்கள் கோயில் வெளி யில் நேர்த்திக் கடனுக்காகவே ஆடப்படுகின்றன. விடிய விடிய ஆடப்படும் இக்கூத்துக்கள் செழுமையும், தனித்துவமும் வாய்ந் தவை. தமக்கெனப் பிரத்தியேகமான மேடையமைப்பு, உடை, ஒப்பனை, பாடல் வகைகள், ஆட்டமுறைகள் ஆகியவற்றையுடை
O 636 P.
வெகுவேகமான மாற்றத்திற்குள்ளாகி வரும் தமிழர் வாழ் வில் பண்டைய இக் கூத்துக்கள் இன்று அதிகம் கவனத்திற் கொள்ளப்படுவதில்லை. அவற்றின் பழைமை காரணமாகவும், சமூ இத்திற்கும் அவற்றிற்குமுள்ள இயைபின்மை காரணமாகவும் அவற்றின் பாமரத்தன்மை காரணமாகவும் இன்று இக் கூ க்துக் கள் புறக்கணிக்கப்படினும், கூத்தே நமது நாடக மரபு என் பதை நாம் மறந்து விடலாகாது. இந்தியக் கூத்து மரபு அதன் சகல பிரதேசத் தன்மைகளுடன் இன்றும் காணப்படுவதும் தென்கிழக்காசிய நாடுகளில் அவைகளின் கூத்து மரபு பேணப் படுவதும் சிங்களவர் மத்தியில் அவர்கட்குரிய கூத்து மரபு பேணப்படுவதும் வளர்ச்சியடைந்த ஜப்பான் போன்ற நாடு களிற் கூட ஜப்பானியக் கூத்து மரபுகள் பேணப்படுவதும் ஈழத்தமிழர் அறிய வேண்டியவையாம். நாமும் நமது கூத்து மரபைப் பேண வேண்டும்; வளர்க்கவும் வேண்டும். இக்கட் டுரை ஈழத்தில் வழங்கும் நமது கூத்து மரபுகளைக் கூறுகிறது
ஈழத்துக் கூத்து மரபு தென்மோடி, வடமோடி என்ற இரு பிரிவுகளையுடையது. ஆடல், பாடல் உடை ஒப்பனே, கதைப் போக்கு, கதைப்பொருள் ஆயுதங்களைக் கையாளும் முறை என் பவற்றில் இரண்டிற்குமிடையே பல வேறுபாடுகள் உள்ளன. இவ்விரு மரபுகளையும் இன்றும் பேணும் இடம் மட்டக்களப்பா கும். இரண்டு மோடிகளுக்கிடையேயுமுள்ள வேறுபாடுகளே மட் டக்களப்பிலாடப்படும் தென்மோடி, வடமோடி நாடகங்களைக் கொண்டு அறியலாம். மட்டக்களப்பிலாடப்படும் கூத்துகளில் நமது புராதன கூத்துக்குரிய பல அமிசங்கள் காணப்படுகின் றன. அந்நியத்தாக்கம் அதிகம் ஏற்படாமையும், இயற்கை அமைப்புக் காரணமாக ஏனைய பிர தே ச ங் க ஞ டன் அதிக தொடர்பற்றிருப்பதும் இக்கூத்து மரபு அழியாமல் அங்குப் பேணப்பட்டமைக்கான காரணங்கனாகும்.
வட்டமாக அமைக்கப்பட்ட மேடையைச் சுற்றிவரப் பார் வையாளர் அமர்ந்திருக்கப் பார்வையானரைப் பார்த்தபடி ஆடிப்

ஈழத்து நாட்டுக்கூத்து மரபு
பாடும் மரபு மட்டக்களப்பில் இன்றுமுண்டு. இம்மேடை கூத்துக் களரி என அழைக்கப்படும். இது 40 அடி விட்டமுள்ள வட்ட மாக இருக்கும். வட்டம் நிரம்ப மண்ணை உயர்த்தி மண் சிதரு மல் வளைத்து ஒலேகளினுற் கட்டி இம்மேடை ஆக் க ப் ப டு ம். வட்டத்தைச் சுற்றிப் பதினுலு கம்புகள் நாட்டப்பட்டு உச்சியில் அவை வளைத்துக் கட்டப்படும். அவற்றின் மேற்குடை விரித்தது போலச் சீலைகளைக் கொய்து தொங்க விடுவர். கனரியைக் சுற்றி நாட்டப்பட்ட ஒவ்வொரு காலுக்கும் இடையே வாழைக்குற்றி நாட்டி, தேங்காய்ப்பனதியை அதன்மேல் வைத்துத் தேங்காய் எண்ணெயில் நனைத்த சீலைத்திரனையைத் தேங்காய்ப்பாதியினுன் வைத்து விடிய விடிய எரிய வைப்பர் பெற்ருே மெக்ஸ் விளக் குகளும் மின்சார விளக்குகளும் வரமுன்னர் இதுவே மேடைக்கு ஒளியூட்டும் முறையாக இருந்தது. ஒவ்வொரு பாத்திரமும் மேடை லே தோன்றும் போது சீலை பிடிப்பார்கள். இது திரைபிடித் தல் எனப்படும். திரையின் மறைவில் வரவுக்குரியவர் நிற்க, அவரின் உறவினர் வெடி, மத்தாப்பு முதலியன கொளுத்துவர். இவ்வேளையிற் கலங்கை கட்டுதல், மோதிரம் கொடுத்தல் என் பன நடைபெறும் இங்கு கூத்து ஊரோடு இணைந்த ஒரு விழா வாக அமையும் தன்மையைக் காணலாம்.
கூத்தைப் பழக்கி நடத்துபவர் அண்ணுவியார் ஆவர். இவருக்கு உதவியாகத் தாளக்காரனும், ஏடுபார்ப்பேரனும், இரு பக்கப்பாட்டுக்காரரும் இருப்பர். இவரைச் சபையோர் என அழைப்பர். இவர்கள் வட்டமாக அமைக்கப்பட்ட களரியில் நின்று நாடகத்தை நடத்துவர். மட்டக்களப்புக் கூத்திற் பிர தான இடம் வகிப்பது ஆடலேயாகும். ஒவ்வொரு பாத்திரமும் மேடையிலே தோன்றுகையில் அதற்கெனச் சிறப்பான தாளக் கட்டு ஒன்று கூறப்படும். அத்தானக்கட்டு, பாத்திரத்தின் குணு திசயத்தைக் குறிப்பதாக அமையும். பின்னர் பாத்திரங்கள் பாடல்கள் மூலமாகக் கதையை வளர்த்துச் செல்லும், மத்ே ளமே கூத்தின் பிரதான வாத்தியம்: இதுதான் காட்சி மாற்றங் களையும் இடமாற்றங்களையும் குறிக்கின்றது. விடிய விடிய இக் கூத்து ஆடப்படும். விடிந்ததும் கோயிலுக்குச் சென்று ஆடி விட்டு வீட்டுக்குவீடு ஆடும் பழக்கமும் இன்று மட்டக்களப்பி லுண்டு. ܗ
கூத்துப் பழகும் மரபும் கவனிக்கத்தக்கது. ஆட்களைத் தெரிதல் (சட்டம் கொடுத்தல்), நாட்கூத்து, சதங்கை அணிதல்,
கிழமைக்கூத்து, அடுக்குப்பார்த்தல் (வெள்ளுடுப்பு ஆட்டம்), அரங்கேற்றம் என இக்கூத்தின் அரங்கேற்றம் வரை ஒரு படி

Page 16
4. வித்தியானந்தம்
முறை வளர்ச்சியுண்டு. இவற்றுள் சதங்கை அணிதலும், அரங் கேற்றலும் விழாவாகவே நடாத்தப்படும். சதங்கை அணிதல் பகலிலேயே நடைபெறும். இவ்விழாவிற்கு ஏனேய ஊரவரும் வருவர். இவ்விழா காலை 7 மணி தொடக்கம் மாலே 7 மணி வரை நடைபெறும். இப்படிமுறை வளர்ச்சியிற் கூத்தர்களோடு ஊராரும் இணைந்து செயற்படுவர். எனவே கூத்தரங்கேற்றம் ஊரின் விழாவாகவே அமைகின்றது.
இங்கு ஆடப்படும் வடமோடிக் கூத்துக்கள் வட இந்திய இலக்கியங்களான மகாபாரத இராமாயணக் கதைகளே உள் ளடக்கமாக உடையவை, தென்மோடிக் கூத்துக்கள் பெரும்பா லும் தமிழ்நாட்டுக் கதைகளைப் பொருளாகக் கொண்டவை. வட மோடிக்கூத்துக்கள் போர் நிகழ்ச்சியையும் அவலச்சுவையையும் கொண்டனவாக அமைய, தென்மோடிக் கூத்துக்கள் காதல் நிகழ்ச்சிகளையும் இன்பச்சுவையையும் கொண்டவையாக அமை, யும். வடமோடி ஆட்டங்கள் விறுவிறுப்பானவை; தென்மோடி ஆட்டங்கள் துணுக்கமானவை. அலங்காரமும், அதிக ஆட்டங் களுமுடைய தென்மோடிக்கூத்தர் வரவுத்தானமாடிக் களைத்து விடுவரானமையினுல் வரவுப் பாட்டிஃ ைஅவர்கள் பாடுவதில்லை; அண்ணுவியாரே பாடுவார். ஆட்டத்திற்குத் தக அவர்களின் உடைகளும் பாரம் குறைந்தனவாக இருக்கும். வடமோடியில் இவ்வாறில்லை. வரவுப்பாடலே நடிகரே பாடுவர். அத்தோடு பாரம் கூடிய கீரிடம் முதலியவற்றை வடமோடி ஆட்டக்காரர் சுமந்த எடுவர். இன்றும் இவ்வேறுபாடுகள் இருமோடிகளுக்கு மிடையே மட்டக்களப்பிற் பேணப்படினும், சிற்சில அம்சங் களே ஒன்றிலிருந்து ஒன்று பெற்றிருப்பதனையும் ஒரோவிடங் களில் அவதானிக்கக் கூடியதாயுன்னது. ஏனேய பிரதேசக் கூத் துக்களினின்றுமீ மட்டக்கணப்புக் கூத்துக்கன் தனித்துவம் பெறுவது அவற்றின் ஆட்டமுறைகளிஞலேயாம். இவ்வாட்ட முறைகளுக்கும் பரதநாட்டிய ஜதிகளுக்குமிடையே தொடர்பு களுள்ளன. இவற்றை இன்றைய தலேமுறையினர் மறந்து வரு கின்றனர். இவை காப்பாற்றப்படவேண்டியதுடன் அடுத்த தலே முறையினருக்கு இவை கையளிக்கப்படவேண்டியதும் அவசிய மானதாகும்.
மட்டக்கணப்பிற்கு அடுத்தபடியாகக் கூத்துமரபு உயிரீத் துடிப்போடு வழங்கும் இடம் மண்ணுர்ப் பிரதேசமாகும் மன் ஞர்க் கூத்துக்கள் மனதோட்டப்பாங்கு, யாழ்ப்பாணப் பாங்கு என இருபிரிவிற்குள் அடக்கக் கூடியவை. மனதோட்டப்பது ே

ஈழத்து நாட்டுக்கூத்து மரபு
கைத் தென்பாங்கு எனவும் தென்மெட்டு எனவும் யாழ்ப்பாணப் பாங்கை வடபாங்கு எனவும் வடமெட்டு எனவும் கூறுவதுண்டு. நாடகங்களின் சுருக்க ங் க னே வாசகப் பாக்கள் அல்லது வாசாப்புக்கள். எம்பரதோர் நாடகம், மூவிராசாக்கள் நாடகம் என்பன வடபாங்கிற்குரியவை. ஞானசவுந்தரி நாடகம், தென் பாங்கிற்குரியது. இவ்விருபாங்கிற்கும் அடிப்படையில் வேறு பாடுகள் உண்டு மாதோட்டப்பாங்கு நாடகங்கள் காப்பை வெண்பாவாகவுடையவை பாத்திரங்களுக்கு ஆடல்தரு பெரு தவை ஏனைய பகுதிகள் கவி, இன்னிசை மற்றும் பாவகைகள் ஆகியவற்ருல் ஆக்கப்பட்டுப் பெரும்பாலும் வல்லோசையுடைய வையாய் வருபவை. யாழ்ப்பாணப்பாங்கின் காப்பு, விருத்தத்தி குல் ஆக்கப்படும். தெய்வ வணக்கமும் செயற்படுபொருளும் சரிதச் சுருக்கமும் தோடயம் என்னும் பரவகையாற் கூறப் படும் தரு, சிந்து, வண்ணம் முதலியவற்ருற் கதை கூறப்படும். எல்லாவிதப் பாவினங்களும் பெரும்பாலும் மெல்லிசையாகவே
RC5b. ,
தென்பாங்கில் (மாதோட்டப் பாங்கில்) பாத்திரங்கள் தத்தம் நிகழ்ச்சி முடியப் போய்வரும் ஒரு பாத்திரம் எத்தனை முறை யும் போய்வரலாம். ஒவ்வொரு வரவிற்கும் செலவிற்கும் தனித் தனித் தருக்களும், சிந்துகளும் அவற்றிற்குரிய ஆடல் முறை களும் உண்டு. உதாரணமாக ஞானசவுந்தரி நாடகத்திலே தரு மர் ஏழு தடவையும் புலேந்திரன் பதிஞெரு தடவையும் தேனன் றுவர் வடபாங்கில் (யாழ்ப்பாணப் பாங்கு) ஒரு பாத்திரம் ஒரு முறையே வரவுக் கவியுடன் ஆடல் தருச் சொல்லி வ ர ல ச மீ அப்பாத்திர நிகழ்ச்சி முடிந்ததும் போகும் நியதியில்லை. அப் பாத்திரம் மேலும் தோன்ற வேண்டுமாயின் வரவில்லாமலே கலந்து கொள்ளும், கதை முழுவதும் தரு, சிந்து, வண்ணம் ஆகி பவற்ருற் பாடப்படும் கவி, இன்னிசை போன்ற பாவினங் கள் உள்ளூரக் கலந்து நிற்கும். ஒரே கதையை ஒருவர் மாதோட் டப் பாங்கிற் பாட இன்னுெருவர் யாழ்ப்பாணப் பாங்கிற் பாடு வர்ல் எண்றிக் எம்பரதோர் வரலாற்றைக் குருகுல நா ட் இ த் தேவர் மாதோட்டப் பாங்கிற் பாட, கீத்தாம்பிள்ளே யாழ்ப்பா னப்பாங்கிற் பாடினர்.
மன்ர்ைக் கூத்துப்பாக்கள் இலக்கிய நயம் மிக்கவை, கடின மான சொற்கள் இடையிடையே விரவி வருபவை. இத்தகைய சிறந்த இலக்கணங் கொண்ட நாடகங்களை இயற்றிய புலவரிற் காலத்தால் முந்தியவர் லோ றஞ்சுப் பிள்ளே என்பவர். இவரே இரதோட்ட முதல் நாடக ஆசிரியராகக் கொள்ளப்படுபவர் பதி

Page 17
வித்தியானந்தம்
னேழாம் நூற்றண்டின் முற்பகுதிக்குரிய லோறஞ்சுப்பிள்ளை இயற்றிய மூவிராசாக்கள் வாசகப் பாவே முதன்முதல் யாக்கப் பட்ட நாடக நூலெனக் கொள்வர். இது மனதோட்டப் பாங்கிலே ஆக்கப்பட்டது. இவரிடம் கற்ற மாணவருட் குறிப்பிடற்குரிய வர் கோதுகப்பித்தான் நாடகம் பாடிய சந்தியோ குப் புலவர், மரிகருதாஸ் பாடிய வெள்ளைப்புலவர், திருச்செல்வர் நாடகம் பாடிய குருகுல நாட்டுத் தேவர் முதலியோர். இவர்கள் யாவரும் தமது நாடகங்களைத் தென்பாங்கிற் பாடினர். லேனறஞ்சுப் பிள்ளையின் பேரணுகிய கீத்தாம்பின்ளே எருமைநாடகம், நொண்டி நாடகம், எம்பரதோர் நாடகம் ஆகியவற்றை யாழ்ப்பாணப் பாங்கெனப்படும் வடமெட்டிற் பாடினர். இந்நாடகங்களே விடத் தைரியநாதர் நாடகம், சித்திரம்பிள்ளே நாடகம், ஞானசவுந்தரி நாடகம், காஞ்ச நாடகம், சாந்தரூபி நாடகம், இலேளுள் கன்னி நாடகம், மத்தேசு அப்போத்தலர் நாடகம், அகினேசகன்னி நாடகம், நாய் நாடகம், என்ற பல நாடகங்கள் மாதோட்டப் புலவர்களாற் பாடப்பட்டன.
தாடங்களின் கருக்கங்களாக அமைவன வாசகப் பாக்கள். வ சக ப் ப ர என்ற சொல் வசனம் கலந்த பாட்டு எனப் பொருள்படும். ஒரே கதையை நாடகமாகவும், வாசகப்பாவாக வும் பாடுதல் உண்டு. உதாரணமாக அந்தோனியார் நாடகம், அந்தோனியார் வாசகப்பா, சந்தோம்மையார் நாடகம், சந்தொல் மையார் வாசகப்பா, மூன்றிராசாக்கள், நாடகம், மூன் றிரா ாக்கள் வாசகப்பா எனக் கூத்து நூல்கள் உள்ளன.
மன்ஞர்க் கூத்துக்களில் மட்டக்களப்புக் கூத்துக்களைப் போல ஆடல் பிரதான இடம் பெறுவதில்லை. இடைக் காலத்தில் கூத்திலிருந்து ஆடல் விலகிச்சென்றமைக்கு இக்கூத்துக்கள் உதா ரணங்களாகும். மன்னுர்க் கூத்துக்கள் கத்தோலிக்க மதம்சார்ந்த கதைக் கருத்துக்களைக் கொண்டிருப்பது இதன் இன்னுெரு தனித் துவமாகும். இடைக்காலத்தில் ஈழத் துக் கூத்து மரபு கிறித்த வரிகள் கைபட்டு வேருெ ரு நிலைக்குச் சென்றமையை இது காட் டுகிறது. மதம் பரப்ப இங்கு வந்த கிறித்தவர்கள் மக்களோடு தொடர்புடைய கூத்தையே தமது பிரதான ஊடகமாக அன்று கொண்டனர். இம் முயற்சி மன்னுரிற் செல்வாக்குப் பெற்றமை யிேைலயே மன்னுர்க் கூத்துமரபில் கிறித்தவம் சார்ந்த கதைகண் Yn yr awyr gair gan L., CB, Glen ffib peror.
மண்ணுருக்கு அடுத்து, கூத்து மரபை இன்றும் பேணும். பிரதேசம் யாழ்ப்பணமாகும். யாழ்ப்பாணத்திலே தென்மோடி

ஈழத்து நாட்டுக்கூத்து Լոուլ
வடமோடி மரபுகள் இருந்துள்ளன. வட்டுக்கோட்டைப் பகுதி யில் வழங்குக் கூத்து மரபு வடமோடிக்கு அண்மியதாக இருக்கி றது. யாழ்ப்பாணக் கரையோரப்பகுதிகளில் ஆடப்படும் கூத் துக்கள் தென்மோடிச் சாயல் உடையவை. இவை தா மீ மன் ஞர்ப்பகுதியில் யாழ்ப்பாணப் பங்கு என்ற பெயருடன் சென் றவையாய் இருக்க வேண்டும். மன்ஞரில் வழங்கும் யாழ்ப்பா ணப் பாங்கு என அழைக்கப்படும் கூத்துக்களுக்கும், பேரழிப்பா னக் கரையோரப்பகுதியிலாடப்படும் கூத்துகளுக்குமிடையே கதைப்பொருள். பாடல் வகைகள், நாடக அமைப்பு ஆகியவற் றிற் காணப்படும் ஒற்றுமைகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. யாழ்ப்பாணத்தில் இன்றும் இத்தகைய கூத்துக்கள் விடிய விடிய ஆடப்படுகின்றன. இன்று இத்தகைய கூத்துக்கள் கிறி தீ த வர் மத்தியிலேயே செல்வாக்குற்றிருப்பினும் முன்னர் இந்துக்கின் மத்தியிலும் இ க் கூ த் து க் கள் செல்வாக்குற்றிருந்தமைக்குச் சான்றுகள் உண்டு. வீர குமாரன் நாடகம், இராம நாடகம், அனுருத்திர நா ட க மீ என்பனவற்றைச் சைவப்புலவர்கள் எழுதியுள்ளனர். ஆறுமுக நாவலரின் தந்தை கந்தப்பிள்ளை ஒரு திட5 ஆசிரியராக இருந்தார். அவர் எ மு தி ய முற்றுப் பெருத நாடகம் ஒன்றினை ஆறுமுகநாவலர் முடித்து வைததார். வட்டுக்கோட்டையில் இன்றும் ஆடப்படும் சடாசுரன் வதை யும் இம் மரபிற்கு உதாரணமாகும். எனினும் பார்சி வழி நாடக மரபினுலும் ஆங்கிலக் கல்வி வருகையாலும் இக் கூத்து மரபு
:": வெகு காலத்திற்கு மு ன் ன ரே யே அருகி
விட்டது எனலாமி. ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்திலும் வட்டக் கனரி முறை இருந்திருக்க வேண்டும். பின்னுற் பார் சி வழி நடைக மரபின் காரணமாக வட்டக் களரி அமைப்பு மாறி முப் பக்கமும் அடைக்கப்பட்ட மேடையமைப்பு முறையுருவானது, கொட்டகை என அழைக்கப்பட்டது. இக் கொட்ட கையிலே கர்நாடக இசையிலமைந்த இசை நாடகங்கள் ந உ த் தப்பட்டன. இவ்விசை நாடகங்களில் அன்று இசைக்கு ஏற்ப ஆடல்களும் அமைந்திருந்தன. கொட்டகையில் நாடகம் நடத் தப்பட்டமையினுற் கூத்து மரபில் வந்த தமிழர் இதனைக் கொட்ட கைக் கூத்து' என அழைத்தனர். இம் மரபு இருபதாம் நூ ற் ரு ண் டி ன் ஆரம்பத்தில் ஈழத்திலேற்பட்ட புது மர ப கு ம். |5 till:ଓ କ୍ଷୁଦ୍ର ସ୍ଥିତ ଏf $u இந்நாடகத்தின் சிறப்பம்சமாகும். இம் மரபின் வருகையினல் ஆ ட ல் அமிசம் யாழ்ப்பாணக் கூத்தில் மெல்ல மெல்ல அ ரு இ லா யிற் று. பாடலே பிரதானமாயிற்று. இலங்கையின் மற்றப் பகுதிகளிலும் பார்க்க வடபகுதியிலேயே இம்மரபு ஓங்கி வளர்ந்தது. இந்நாடகத்தை நடத்துவோர் அண் குவியார் என அழைக்கப்பட்டார் தலைசிறந்த அண்ணுலிமார்

Page 18
8. MVA வித்தியானந்தம்
பலர் வடபகுதியில் தோன்றினர் அண்ணுவி ஆழ்வார் எ ன ப்
படும் எம். வி. கிருஷ்ணுழிவார். பபூன் செல்லேயா, இ னு வில்
நாகலிங்கம் முதலியோர் இம் மரபு வழி நாடகங்களிலே துறை போகிய கலைஞர்களாக அன்று கணிக்கப்பட்டனர்.
தமிழ்ப் பேசும் மக்கள் ஈழத்திலே பல நூற்ருண்டுகளாகப் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த பகுதிகளுள் வட மேற்குப் பகுதியும் ஒன்ரு கும் நீர்கொழும்பு தொடக்கம் புத்தனம் வரையுள்ள நிலப்பரப்பு பழங் காலத்திலே தமிழ் இந்துக்கள் வாழ்ந்த பகுதியாகத் திகழ்ந்தது. பண்டைக்காலத்தில் இந் நிலப்பரப்பில் தமிழ் முழங்கிக் கொண்டிருந்தது. மேன்மை கொள் சைவம் பொதுமக்களின் மதமாக இருந்தது. காலக் கிரமத்தில் இப்பகுதியிலே வாழும் மக்கள் தம் மதத்தையும் மொழியையும் மாற்றி அமைத்துக் கொண்டபோதும், இன்றும் ஆங்காங்குப் பல இடங்களில் தனித் தமிழ்க் கிராமங்களையும் இந்துக் கிராமங்களையும் காணலாம்.
இப் பகுதியில் வாழ்ந்த தமிழ் பேகம் மக்களின் வாழ்க் கையை உருப்படுத்தியது சிலாபத்திலுள்ள முனீஸ்வரம் என் னும் கோயிலாகும். இக்கோயிலின் கும்பாபிஷேகத்தைக் குளக் கோட்டு மகராசன் கி. பி. எட்டாம் நூற்ருண்டில் நடத்தினு னெனக் கூறுவர். இக்கோயிலைச் சேர்ந்த பூமிகள் 64 கிராமங் கனாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு கிராமத்தினரும் செய்ய வேண்டிய கடமைகள் வரையறுக்கப்பட்டன. ஒவ்வொரு கிரா மத்து மக்களும் செய்த பணிகளைத் தோம்புகளிலே காணலாம்.
இக்கோயிலில் இராப்பூசை முடிந்த பின்னர் நாடகப்பூசை நடைபெற்றது. கோயில் முற்றத்திலே கூடியிருந்த ஆயிரக் கணக்கான மக்கள் முன்னிலையிற் கூத்துக்களாடப்பட்டன. மருதங்குளத்திற் பாரதக் கதைப்படிப்பு, வசந்தன் அம்மானைப் படிப்பு நாட்டுக் கூத்துக்கள் ஆகியன தொன்றுதொட்டு வழங்கி வந்தன. நாட்டுக் கூத்துக்களில் முக்கியமாக வானபிமன் நாடகமும், மார்க்கண்டன் நாடகமும் ஆண்டுதோறும் கோயில் முன்றிலில் நடிக்கப்பட்டன. கோயில்களுக்கு அணித்தாயுஸ் ள வெளிப்புறங்களிலே களரி அமைத்துக் கூத்துக்கள் ஆடப்பட் டன. பழைய முறைப்படி ஆடவரே இப்பகுதியிற் பெண் வேடம் கட்டி ஆடுவர். இப்பகுதியில் ஆடப்பட்ட வாளபிமன் நாடகம் குறிப்பிடத்தக்கது. இப்போது கிடைத்துள்ள கூத்து நூல்களில் மிகப்பழையது இது பாவலர் சரித்திர தீபகம், ஈழநாட்டுப் புல

ஈழத்து நாட்டுக்கூத்து மரபு 9
வர் சரித்திரம், தம்பிமுத்துவின் சரித்திரம், யாழ்ப்பாணச் சரித்
திரம். சைமன் காசிச் செட்டியின் தமிழ்ப்புலவர் வரிசை
போன்ற நூல்களின் உதவி கொண்டு ஈழத்து நாடக வர லாற்றை ஆராயுமிடத்து, ஈழத்தில் நாடகங்களை முதலில் ஆக்கி யவர் கணபதி ஐயர் எனத் தெரிகிறது. வட்டுக்கோட்டையைச்
சேர்ந்த கணபதி ஐயர் இயற்றிய நாடகங்களுள் ஒன்று வாளபி
மன் நாடகம் அருச்சுனன் மகனுகிய அபிமன்னன் வாட்
போரினுல் பலராமனின் மகள் சுந்தரியை (சசிரேகையை)
அடைந்த வரலாற்றை இந்நாடகம் கூறுகின்றது. வாள் அபி மன்னன் என்பது, வாளபிமன் என மருவி வழங்கலா யிற்று ஈழத்தில் வழங்கும் கூத்துக்களிற் பல யாழ்ப்பாணத்துப் புலவர்களாற் பாட்ட்பட்டவை. சில மட்டக்களப்பு, மன்னர், சிலாபம் போன்ற இடங்களிலுள்ள புலவராற் பாடப்பட்டவை. இன்னும் சில அவ்விடங்களிலுள்ள புலவர்களினுல் மாற்றிச் சேர்க்கப்பட்டவை. இவ்வாறு சில மாற்றங்கனோடு அமைக்கப் பட்டதே சிலாபத்தில் வழங்கிய வாளபிமன் நாடகம். சிலசபப் பகுதிக் கூத்துக்கள் ஆடலும் பாடலும் உடையனவாயிருந்தன. இப்பகுதிக் கூத்துக்களின் ஆட்டம் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் போன்ற பிற பகுதி ஆட்டத்திலிருந்து சிற்சில வேறுபாடுடைய தாகக் காணப்பட்டப்ோதும் பெரும்பாலும் ஏனைய பகுதி ஆட் டத்தை ஒத் திருக்கின்றது. இம்மரபு இன்று சிலாபப் பகுதியில் அருகிவிட்டமை மனம் வருந்தற்குரியதே.
தமிழர் வாழும் வன்னிப் பிரதேசத்தில் முல்லைத்தீவுப் பகு தியிற் கூத்து மரபுகள் இன்றும் பேணப்படுகின்றன. யாழ்ப்பா னக் கூத்து மரபு அங்கு பல இடங்களிற் பரவியிருப்பினும் முல்லைத்தீவிற்குரிய கூத்து மரபினே அங்கு ஆடப்படும் கோவ லன் கூத்தி லேயே காணலாம். வற்ருப்பளை கண்ணகி அம்மன் கோவில் ஆண்டுப் பூசையில் இக் கோவலன் கூத்து ஆடப்படு கிற து தென்மோடிச் சாயலுடைய இக் கூத்து, ஆட்ட முறை யிலும், பாடல் அமைப்பிலும், உடை அமைப்பிலும் மட்டக்களப் புத் தென்மோடியை ஒத்தது. இக்கூத்தில் வரும் வஞ்சிப்பத்த னின் ஆட்டம் விறுவிறுப்பும் அழகும் நிறைந்தது. இவ்வாட்ட முறைகள் யாவும் அவசியம் பேணிப்பாதுகாக்கப்பட வேண் &&&&#e
ஆங்கிலேயர் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை ஆரம்பித்த பின்னர் தென்னிந்தியாவிலிருந்து இங்குத் தொழில் நிமித்தம் கொண்டு வரப்பட்டவர்கனே. மலைநாட்டுத் தமிழர்கள். அவர்கள் இங்கு வரும்போது தம்முடன் தமது கிராமியக் கலைகளையும் கொண்டு வந்தனர். கரகம், காவடி, தப்பு (மேனம்) அடித்தல் என் ணும் கிராமியக் கலைகளுடன் அருச்சுனன் தபசு காமன் கூத்து ஆகிய இரு கூத்துக்களையும் அவர்கள் ழைத்திற்குக் கொணர்ந்த

Page 19
வித்தியானந்தம்
னர். காமன் கூத்து மலைநாட்டுத் தமிழர் மத்தியில் நடைபெ றும் சமயச் சடங்கு சார்ந்த ஒரு நாடகமாகும். மன் ஐதனேச் சிவபெருமான் நெற்றிக் கண்ணுற் சுட்டெரிப்பதையும் ரதி சிவ னிடம் வரம் வேண்டுவதையும் இந்நாடகம் உள்ளடக்கமாகக் கொண்டது. காமனுக்குல் ரதிக்கும் இருவர் வேடமிட்டு அவர் ளுக்குத் திருமணம் செய்வது முதல் சிவன் மீது இக் காமன் சென்று அம்பு எய்வது, சிவன் அவனே எரிப்பது, பின்னர் க ம னி ன் அஸ்தியைக் கரைப்பதுண்டாக மறுநாள் ரதி சிவனேத் துதித்து வரம்வேண்டும்வரை இந்நாடகம் நடைபெறும். சிவனே வணங்கி மக்கள் அவருக்குக் கர்ப்பூர ஆரத்தி எடுத்தலும் உண்டு. இங்கு ஊரே மேடையாகவும் பார்வையாளர்களாகவும் அமைய இக் காமன் கூத்து நடைபெறும் மக்கள் ஒரே நேரத்தில் இந்நாட கத்திற் பார்வையான ராயும் பங்காளராயும் கடமை புரிவர்.
மலேநாட்டுத் தமிழர் மத்தியிலாடப்படும் இன்ஞெரு கூத்து அருச்சுனன் தபசு ஆகும். மட்டக்களப்புப் பகுதியிலாடப்படும் அருச்சுனன் தபசு நாடகத்திற்கும் இந் நாடகத்திற்குமிடையே அளிக்கை முறையிற் பலத்த வேறுபாடுகளுண்டு மட்டக்களப் பில் அருச்சுனன் தபசு நாடகம் முழுக்க முழுக்க ஒரு பொழுது போக்கிற்குரிய நாடகமாகவே அமைய, இங்கு அருச்சுனன் தபசு சமயச் சடங்கோடிணைந்த ஒரு நாடகமாக நடைபெறுகிறது. அருச்சுனன் தபசு செய்தல், சிவன் வரல், பஞ்சபாண்டவர் வரவு ஆகிய அம்சங்களை இக்கூத்துக் கொண்டுள்ளது. பஞ்சபாண்ட வருக்கும் சிவனுக்கும் ஆரத்த எடுத்துத் தீபம் காட்டி வணங்கி மக்கள் வரவேற்பர். இங்கும் மக்கள் பார்வையாளராயும் பங்காள ராயும் இருப்பதனையே காணுகிருேம். இவ்விரு நாடகங்களும் ஆடலும் பாடலும் நிரம்பியவை இரு நாடகங்களிலும் வரும் சிவன் ஆட்டம் குறிப்பிடற்குரியது. இந்நாடகத்திற்கு தப்பு என்ற மேளக்கருவி உபயோகிக்கப்படுகிறது. கம்பால் இத்தபபில் அடித்து எழுப்பப்படும் ஓ சைக்குத் தகவே சிவன் ஆடி வரு வார். திறந்த வெளியே மேடையாக அமைய முழு ஊரும் பங்கு கொள்ளும் வகையில் நடைபெறும் இம் மலே நாட்டுக் கூத்துக் களில் மக்கள் கொன் ஞம் பங்கு இந்துக் கோயில்களில நடை பெறும் சூரன் போரை நினைவூட்டுகிறது.
மேற்கூறிய தகவல்களிலிருந்து தமிழர் வாழும் பிரதேசங் களிலெல்லாம் ஒரு கூத்து மரபு பண்டு தொட்டு இருந்து வந் தது என்பதை அறிகிருேம். பார்சி வழி நாடக மரபினுல் வந்த கொட்டகைக் கூத்து மரபும், இந்தியத் தமிழர்களால் கொண்டு வரப்பட்ட காமன் கூத்தும் அருச்சுனன் தபசுக் கூத்து ಬಿಡಿ!T೩ಳಿ: ளும் ஈழத்து மண்ணிலே காலூன்றி ஈழத்துத் தமிழரின் கூத்து மரபுடன் இணைந்து விட்டமையையும் கண்டோம். ஈழத் தமிழ ரின் கூத்து மரபு சிங்களவர் மத்தியிலும் செல்வாக்குற்று

ஈழத்து நாட்டுக்கூத்து மரபு
அவர்களின் நாடக மரபும் வளர உந்து சக்தியாக அமைந்தது. சிங்கள மக்களின் நா கம எனும் நாடகவடிவத்திற்கு மூல ஊற்றுக்கள் ஈழத் துத் தமிழ்க் கூக் துக்களே பேராசிரியர் சரத் சந்திரா தமிழ்க் கூத்துக்கள் சிங்கள நாடகம் வரை உதவின என்று நன்றியோடு நினைவு கூருகிருர்,
மன்னர் மாவட்டத்தில் வழங்கும் நாடகங்களே இவ்வகையில் சிங்கள நாடகம'வைப் பாதித்த நாடகங்களாயிருக்க வேண் டும். ஏனெனில் நாடகம் என்னும் சிங்கள நாடக முறை மன்னுர் நாடகங்களின் அமைப்பைப் பின்பற்றியுள்ளது. தென் பாங்கு, வடபாங்கு என்ற பாகுபாடு சிங்களத்திற் காணப்படாதபோதும் நாடக அமைப்பும் பாவகைகளும் மண்ணுர்ப்பகுதிக் கூத்துக் கள் போன்றவையே. விருத்தம், இன்னிசை, கலிப்பன. கவி, கொச்சகம், வெண்பா, தோடயம் போன்ற பாக்களும் பாவி னங்களும் சிங்கள நாடகங்களிலும் அதே பெயர்களுடன் விளங் குகின்றன. தமிழிலேயுள்ள ஸ்தாக்கியார் நாடகம், மூவிராசாக் கள் நாடகம், ஞானசவுந்தரி நாடகம், முதலியன ஸ்தாக்கியர் ராஜதுங்கட்டுவ ஞானசவுந்தரி என்ற பெயர்களிலே தமிழ் நாட கங்களின் மொழி பெயர்ப்புக்களாக அமைந்துள்ளன. இவ்வகை யில் ஈழத்துத் தமிழ்க் கூத்து மரபு சிங்கள மக்களின் கூத்து மரபின் வளர்ச்சிக்கும் உறுதுணை புரிந்துள்ளது. s
இன்று வரை பல கூத்து நூல்கள் பதிப்பிக்கப்பட்டுள் ான 1952ஆம் ஆண்டிலிருந்து இக்கூத்துக்களைப் பாதுகாக்கவும், பேணவும் பல முயற்சிகள் அரசு மட்டத்திலும், அறிஞர் மட்டத்தி லும் ஆர்வலர் மட்டத்திலும் எடுக்கப்பட்டுள்ளன. மட்டக்களப் புக் கூத்துக்களேப் பற்றிப் பல ஆய்வுகள் வெளிவந்துள்ளன. அதேபோல மன்ஞர், யாழ்ப்பாணக் கூத்துக்கள் ப ற் றி யு மீ கட்டுரைகள் வெளிவந்துள்ளன. அந்நியத் தாக்கம் ஏற்பட்டும் இன்றும் மக்கன் மத்தியில் இக்கூத்து மரபு அழியாமல் இருப் பது இம்மரபு, மக்கள் வாழ்வுடன் பின்னிப்பிணைந்திருப்பதா
også G3 (3.
இன்றைய காலம் மாறிவரும் காலமாகும். அந்தியம் என்னும் பெருவென்னத்தினுல் எமது கலே, கலாசாரம் அடித்துச் செல்லப் பட்டு விடுமே என்ற ஐயப்பாட்டுடன் அறிஞரும், ஆர்வலரும் வாழும் காலம் இக்காலகட்டத்தில் நமது பாரம்பரியத்தின் வேர்களைத் தேடுவதும். அவற்றை வெளியே கொண்டு வருவதும், மக்கள் மத்தியிற் பரப்புவதும் அறிஞர் தம் கடமையாகுமீ. நமது எதிர்காலச் சந்ததியினர்க்கு நாம் கையளிக்க வேண்டிய மரபுகளுள் நமது கூத்து மரபும் ஒன் ருகும்.

Page 20
GIS ëIDËGJO
22000
இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் விஷ்ணு வழிபாடு சிறப்புற்று விளங்குவது மட்டக்கணப்புத் தமிழகத்திலாகும்
அங்குள்ள தமிழரிற் பெரும்பான்மையோர் சைவ சமயிகன பி ணும் அவர்கள் விஷ்ணுவையும் வழிபட்டு வருகின்றனர். ஆங் காங்கு பல விஷ்ணு கோயில்கள் காணப்படுகின்றன. வந்தாறு மூலே, திமில தீவு, குருக்கள் மடம், களுதாவளை, கல்லடி, காரைதீவு பழுகாம்ை, தம்பிலுவில் போன்ற இடங்களிலுள்ள விஷ்ணு கோயில்களிலே திருமணல் வழிபாடு இன்றும் முறைப்படி நடந்து வருகின்றது.
திருமாலுக்குச் சக்தி தங்கையாவன்; இதஞல், மட்டக்களப் பிலுள்ள கண்ணகியம்மன் உற்சவங்கள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, விஷ்ணு கோயில்களின் உற்சவங்கள் ஆரம்பமாகின் ா கிருஷ்ணனின் பிறந்த நட்சத்திரம் திருவோனம் 'ஒன்பது L T S T Mt tS OkutLttTT S T s BuO MOM0 sSZTu LBOZYS S yO OOuS
 
 

மட்டக்களப்புத் தமிழகத்தில் விஷ்ணு வழிபாடு
வென்னும் முகூர்த்தமதில்-சீரான செல்வத் திருவோண நாளே யிலே, பேராளன் வந்து பிறந்தான்' எனக் கிருஷ்ணனின் பிறப் பைக் கூறுகின்றது கஞ்சன் அம்மானை.
வைகாசித் திங்களில் வரும் அந்தத் திருவோண நாளிலேயே பெரும்பாலும் மட்டக்களப்பு மகாவிஷ்ணு கோயில்களில் உற் சவம் தொடங்குகின்றது. விஷ்ணு உற்சவத்தை மட்டக்கணப்பில், கிருஷ்னன் கோயிற் சடங்கு என்றே கூறுவர். கண்ணை யம்மன் உற்சவத்தைக் கண்ணகியம்மன் சடங்கு ' என்று குறிப்பிடும் வழக்குடன் இஃது ஒத்திருக்கின்றது. சடங்கு " என்ற சொல்லிற்குத் திருமணம் என்ற பொருள் உண்டு. விஷ்ணு கோயில் உற்சவத்தின் இறுதி ந ர னிற் கிருஷ்ணணுக்குத் திருமண வைபவமொன்றும் நிகழ்வகனுல் இவ்வுற்சவம் சடங்கு என்ற பெயராற் குறிக்கப்பட்டிருக்க வேண்டும். கண்ணகை உற்சவத்திலும் குளிர்த்திக்கு முன்னருள்ள இரவில் நிகழ்வது கலியாணச் சடங்கு எனப்படுகின்றது. விஷ்ணு கோயிலில் நிகழும் இச்சடங்கைக் கலியானப் படிப்பு என்று கூறுவது முண்டு. அன்றிரவு கஞ்சன் அம்மானையிலுள்ள உருப்பிணிக்கும் கிருஷ்ணனுக்கும் திருமணம் நிகழ்ந்த பகுதி படிக்கப்படுவதால் அன்றைய உற்சவம் இப்பெயர் பெற்றிருக்கலாம்.
பொதுவாக மட்டக்களப்பிலுள்ள கோயில்களின் உற்சவத் தொடக்கத்தைக் கதவு திறத்தல்" என்பர். கண்ணகையம்மன் கோயில்கள் ஆண்டு முழுவதும் பூட்டியே வைக்கப்பட்டிருக்கும். வருடத்தில் நடக்கும் ஒரேயொரு உற்சவத்துக்காகவே அங்கு வருடத்தில் முதன் முதலாகக் கதவு திறக்கப்படும். இதனும் போலும் எல்லாக் கோயில்களின் உற்சவத் தொடக்கமும் கதவு திறத்தல் என்ற பெயரால் வழங்கப்படுகின்றது.
மட்டக்களப்பு விஷ்ணு கோயில்களிற் கதவு திறக்கப்பட்ட நாளிலிருந்து உற்சவ இறுதிநாட் கலியாணச் சடங்குவரை, கஞ்சன் அம்மாஆன ஒவ்வொரு நாளும் தொடர்பாகக் கிரமமா st Lug šestu (883 pag. கஞ்சன் அம்மானை" ஏட்டுப் பிரதி கோயில்களிற் பயன்படுத்துவர் உற்சவ காலத்திற் படிக்கப்படும்போது, ஏட்டை வைப்பதற்கென, ஒரு பெட்டி உண்டு. அப்பெட்டி ஏட்டுப் பெட்டி என வழங்கப்படும் கடவுளுக்கு மடைவைப்பது போல, ஏட்டுப்பெட்டியிலும் ஒரு மடைவைக்கப்படுவது வழக்கம்

Page 21
வித்தியானந்தம்
மட்டக்களப்பிலுள்ள விஷ்ணு கோயில்களிலே தொடக்கக் ாலங்களில் வெறுஞ் சடங்குகளே நடந்து வந்தன. அப்போது திருவிழாக்கன் நிகழ்ந்தனவெனத்தெரியவில்லே அவிர்ப்பாகங்கள் படைக்கப்பட்ட பூசையோடு, நாள்தோறும் ‘கஞ்சன் அம்மானை'
டிக்கப்பட்டு வந்தது. 演
திமிலதீவு விஷ்ணு கோயில் உற்சவம் ஒரு தனியான அமைப்போடு நிகழ்வதை இங்குக் குறிப்பிட வேண்டும். வெறும் சடங்கு என்ற நிலையிலிருந்து வளர்ச்சி பெற்று, திருவிழாவாக மலர்ந்து, ஒரு தனித்தன்மையோடு அது அங்கு நிகழ்த்தப்படு கின்றது. கொடியேற்ற வைபவம் விஷ்ணு கோயில்களில் இல்லை. அங்கு முதல்நாள் நிகழ்ச்சி மாங்கனி பறித்தல் என்ற பெய ரோடு நடைபெறுகின்றது. "கஞ்சன் அம்மானை அன்று தொடக்கத்திலிருந்து படிக்கப்பட்டு, வேட்டைக்குச் சென்று மாங்கனி பறித்தலோடு நிறுத்தப்பட்டதும் திருவிழா தொடங் கும்; வாகனத்தில் விஷ்ணு எழுந்தருளிக் கோயில் வலம் வரு வர். அத்தோடு கஞ்சன் வேட்டைக்குச் சென்று மாங்கனி பறித் தலும், அதன்பின் முனிவன் வந்து சாபமிடுதலும் நடத்திக் காட்டப்படுகின்றன. கனி பறித்தல், பூதகி வதை, மருது கால் சாய்தல், கன்று கொண்டு கணிக்கெறிதல், கூத்தரைக் கொல்லு தல், கருகசூரன் வதை, கஞ்சசம்மாரம், கலியனனச் சடங்கு என்ற வரிசையில் நிகழ்ச்சிகளை எட்டு நாட்களாகத் திருவிழா வில் நடித்துக் காட்டுவர். கஞ்ச சம்மாரத்திலன்று பெருந் திரளான மக்கள் கூடுவர். கஞ்சன் போர் நிகழ்த்தப்பட்டு கஞ் சன் வெற்றிகொள்ளப்பட்டு, அவனது ஈமக்கிரியைகள் தத்ரூப மாகக் காட்டப்படும். இறுதி நாளிற் கலியாணச் சடங்கு மிக விமரிசையாக நடைபெறும் வரிசைக்கிரமமான கிரியைகளு டன் ஒர் இளம் வேப்பங்கன்றைக் கலியாணக் காலாக வெட்டி வருவார்கள். அதைக் கலியானப் பந்தலில் நட்டு, அடுக்கடுக் காகப் பல சேலைகளே அணிவர். பின்னர் ஒமம் வளர்த்துத் தாலி கட்டப்படும் கலியாணச் சடங்குடன் விழா முற்றுப் பெறும். அடுத்த நாள் அமுது கொடுக்கப்படுவதுடன் யாவும் இனிது நிறைவேறுகின்றன.
வந்தாறுமூலையிலுள்ள விஷ்ணு கோயிலில் விஷ்ணு வழி பாட்டின் முழுமையைக் காணலாம். விஷ்ணு அவதாரம் பற்றிய கூத்துக்கள் ஆடுவதும், உற்சவத்தின்போது விஷ்ணு வர லாற்றை வருணிக்குமுகமாக மக்கள் தம்மைக் கண்ணனது கோத்திரமாகப் பா வித்து ஆடல் பாடல்களில் ஈடுபடுவதும் அங்கு நடைபெறுகின்றன. அங்கு ஆணிப் பூரணையில் நடக்கு
 
 
 
 

15 மட்டக்களப்புத் தமிழகத்தில் விஷ்ணு வழிபாடு
தீர்த்தத்தின் போது தயிர்முட்டி விளையாட்டும் நடைபெறும் இதிலே ஆழ்வார் பாடல்கள் பாடப்படுகின்றன. பெரியாழ்வா கண்ணனைக் குழந்தையாகப் பாவித்துப் பாடிய பாடல்கள் சிறப் பகுப் பாடப்படும் தால், தொட்டில், சப்பாணியெனப் பாடல் கள் பாடுவர். பாடல் முடியக் கண்ணன் தயிர்முட்டி கனவெடுக் கச் செல்வதும், தாயார் அவனைக் கட்டுதலும், இறுதியில் அச் சோப் பாடல் பாடுவதும் இடம்பெறும்
வந்தாறுமூலையிலுள்ள பலர் தாமோதரன், பரசுராமன், அசோதை, தேவகி போன்ற பெயர்கள் தரித்திருப்பது அங்கு விஷ்ணு வழிபாட்டின் செல்வாக்கைக் காட்டுகின்றது. துன்னுலை வல்லிபுர ஆழ்வார் கோயிலைச் சுற்றியுள்ள கிராமங்களிலுள்ள வர்கள் பெயர்கள் ஆழ்வாப்பிள்ளை, இலட்சுமிப்பிள்ளை, பால ருஷ்ணன், நாராயணப்பிள்ளை, கோவிந்தர், கிருஷ்ணசாமி இராமநாதன், சீதை, கிருஷ்ணபிள்ளை, தாமோதரம்பிள்ளை, முகுந் தன் முரளி, யசோதை என அமைந்திருப்பதோடு இது ஒப் பிட்டு நோக்கற்பாலது.
மட்டக்களப்பில் நிலவும் விஷ்ணு வழிபாட்டினை நோக்கும்
போது, மாடு ஏராளமாக இருந்த பகுதிகளிலேயே தொடக்கக் காலத்தில் இவ் வழிபாடு இருந்திருக்கவேண்டுமெனறு தோன்று கின்றது. மாடுகளைக் காப்பவன் கண்ணன் என்ற அடிப்படை யிலே, மாடுகளே ஏராளமாகப் பேணிய பகுதிகளில் இவ் வழி பாட்டினை மேற்கொண்டிருக்கக்கூடும். வந்தாறுமூலையில் இன்.
றும் காணப்படும் வழக்கங்கள் இதற்கு ஆதாரமாக உள்ளன, மாட்டுப்பட்டியிலே முதன் முதற் கன்றினை அடைத்துப் பால் கறக்கும்போது, முதன் முதற் கறக்கும் பாற்பிரயோசனம் அனைத்தையும் கண்ணனுலயத்திற் படைக்கவேண்டும்; அன்றேல், : நடக்குமெனக் கூறுவர். வந்தாறுமூலையில்
அதிகமான மக்களிடம் மாடுகள் உண்டு அத்துடன் மிகத் தொன்மையான கோயில் அது என்றும் கூறப்படுகின்றது. மட்டை நம்பி வாழும் மக்கன் தொன்றுதொட்டுப் பழு கன
மத்திலும் இருந்து வந்திருக்கிருர்கள். இதனுலேயே அங்கும் ஆவணி அபரபக்கத் தி வேணத்தில் உற்சவம் தொடங்கிப் பதினுெரு நாட்களுக்குத் தி ரு விழா நடைபெறுகின்றது.
மட்டக்களப்பிலுள்ள பழமையான பல விஷ்ணு கோயில்கள் குளக்கோட்டன் காலத்திலே அமைக்கப்பட்டனவென மக்கள் கொள்கின்றனர். இதன் உண்மை எவ்வாருயினும், மட்டக் களப்புத் தமிழகப் பொதுமக்களின் சமய வாழ்க்கையில் விஷ்ணு வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பிடத்தைப் பெறுகிறை தென்பது வெளிப்படை,

Page 22
தோற்றுவாய்
யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே முல்லைத்தீவு வவு இணியா, மன்னுர், திருகோணமலை மாவட்டங்களை உள்ளடக்கி, புத் தனத்தின் சில பகுதிகள் வரை பரந்துள்ள வன் னி என்ற நிலப்பரப்பு, நாட்டார் வழக்கியல் தொடர்பான அடிப்படை ஆய்வுகளை எதிர்நோக்கி நிற்கும் பண்பாட்டுக் களமாகும். இப் பிரதேசத்தின் பல்வேறு கிராமங்களிலும் பயின்று வரும் நாட் டார் இலக்கியம், நாட்டார் கலேகன், கிராமிய வாழ்க்கைமுறை தொடர்பான அம்சங்கள் என்பவற்றைத் தொகுத் துப் பேணுவ தன் மூலமும் அவற்றை ஆய்வுக்குட்படுத்துவதன் மூலமுமே ஈழத்துத் தமிழர் பண்பாட்டின் ஒரு பகுதி வரலாற்றை நாம் கண்டறிய முடியும்,
நாட்டார் இலக்கியத்தின் ஒரு முக்கிய கூருக விளங்குவது நாட்டனர் பாடல்கள், இவை நாட்டுப் பாடல், கிராமியப் பாடல்
N
 
 

மன்னர் முல்லைத்தீவு நாட்டுப் பாடல்கள் - ஓர் ஒப்பியல் நோக்கு
முதலிய பெயர்களிலும் வழங்குவன. நாகரிகச் சாயம் பூச டாத கிராமியத்தின் இதயத் துடிப்புக்களேயும் எண்ணக் கோலங்க ளையும் இசையுடன் கலந்து வழங்கும் இவை வாய் மொழியாகப் பேணப்பட்டு வருவன. வன்னிப் பிரதேசத்தின் பல்வேறு கிரா மங்களிலும் இவ்வகைப் பாடல்கள் பயில்வதை இன்றும் அவதா னிக்கலாம்.
வன்னியில் இத்தகைய பாடல்களைத் தொகுத்து அச்சேற் È (prba 2ò a 67 (85 (66; sér (8 g (..) &m Lt. Á 6ót't- ## స్ట్రీ . என்பார். அருவிக்கிந்து,கதிரையம்பர்பன்ஞ,பண்டிப்பள்ளு குருவிப்பள்ளு என்ற தலைப்பில் அமைந்த ஒரு நூலைப் பதிப்பித்துள்ளார். இந் நூலின் வெளியீட்டாண்டு தொடர்பான தகவல்களின்படி இம் முயற்சி 1930ஆம் ஆண்டுக்கு முற்பட்டது, எனத் தெரிகின்றது. கீழ்க் கரவை வ. கணபதிப்பிள்ளை என்பவர் 1934 ஆம் ஆண்டில் வேலப் பணிக்கர் ஒப்பாரி என்ற நூலைப் பதிப்பித்தார். மன்னர் மாவட்ட நாட்டுப் பாடல்களைப் பதிப்பிக் கும் வாய்ப்பு 1954ஆம் ஆண்டில் எமக்குக் கிடைத்தது. மன்னுர் நாட்டுப் பாடல்கள் என்ற தலைப்பில் அத் தொகுப்பு அமைந்தது. 1980 இல் செல்லேயா மெற் ருஸ் மயில் என்பார் தொகுத்த வன்னிவன நாட்டுப்பாடல்கள் பெரும் பாலும் முல்லைத்தீவு மாவட்டப் பகுதிக் கிராமங்களிற் பயிலும் நாட்டுப் பாடல்களைக் கொண்டது. இவ்வாறு அமைந்த நாட்டுப் பாடல்கள் மூலம் நூல் தொகுப்புக்களை ஒப்பியல் நோக்கில் அணுகு வதன் மூலம் வன்னியின் இரு மாவட்டங்களின் நாட்டுப் பாட லிலக்கிய இயல்புகளைக் கொண்டுணர்வதே இவ்வாய்வுரையின் நோக்கமாகும். கி. ச அரியக்குட்டிபிள்ளேயின் தொகுப்பில் அமை த்த கதிரையப்பர் பன்ஞ, பிரபந்த இயல்புடையதாதலால் அதனைத் தவிர்த்து ஏனைய பாடற் பகுதிகளே நாட்டுப் பாடல்களாகக் கொள்ளப்பட்டு இங்கு நோக்கப்படுகின்றன.
2 = பொது அம்சங்கள்
நாட்டுப் பாடல்கள் எனப்படுபவை கிராமத்தின் சாதாரண பொது மனிதனின் தொழில் முறைகள், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், சடங்குகள் இன்ப துன்ப அனுபவங்கள் என்ப வற்றினடியாக எழும் இயல்பான உணர்வோட்டங்களைப் பொரு னாகக் கொள்பவை. குறிப்பிட்ட ஒருவரால் இயற்றப்பட்டவை யாக அமையாமல் மக்களின் வாய்மொழியாகவே பிறந்து செவி கருவியாக வாழ்ந்துவ ரும் இவை இசை நயம், பேச்சு வழக்கு மொழிப்பயிற்சி ஆகிய பண்புகள் பொருந்தியவை வன்னியின்

Page 23
18 வித்தியானந்தம்
மண்குர்-முல்லைத்தீவு மாவட்டங்களின் நாட்டுப் ப டல் க ள் மேற்படி பண்புகளுக்குச்சிறந்த எடுத்துக்காட்டுக்களாக அமைந் துன்னன. குறிப்பாக மருத நில வாழ்க்கை முறையின் வெளிப் பாடுகளாகத் திகழ்பவை.
விவசாயப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட மருத நில வாழ்க்கை முறையானது, விதை விதைத்தல், பயி ரைக் காத்தல், அருவி வெட்டிப் பயன் கொள் ஞ தல், ஓய்வு காலங்களிற் கலைச் சுவையிலே திளேத்தல் என்ற வட்டத்திற்குள் அமைவது. இவற்றேடு தொடர்புடைய செயல்கள் தம்பிக்கை கன், உணர்வு நிலைகள் முதலியன மருத நில நாட்டுப் பாடல் களின் பொருள்களாகின்றன. வன்னிப் பிரதேசத்தின் நனட்டுப் பாடல்களுக்கும் இவை பொருத்தமாக உள்ளன. குறிப்பாக மன்ஞர்-முல்லேத்தீவு மாவட்டங்களின் நாட்டுப் பாடல்கள் பல வற்றுக்கும் இவை பொது அடிப்படைகளாக உள்ளன.
பண்டிப்பள்ளு, அருவி வெட்டுப் பாட்டு ஆகியன இவ் வகைகளில் அமைந்தனவே. வன்னிவள நாட்டுப் பாடல்களில் ஒரு கூருக அமையும் பாடல்களுக்கும் வாழ்க்கை முறையின் நம்பிக்கைகளே அடிப்படை என்பது புலனுகின்றது.
முல்லைத்தீவு மாவட்டக் கிராமங்களிலே பண்டிப்பள்ளு என்ற பெயரில் வழங்கும் பாடல்கள் மன்ஞர் மாவட்டத்திலே பன்றிப் பாடல் என்ற பெயரில் வழங்குவதை அவதானிக்க முடிகின்றது. பன்றிகளால் விவசாயத்திற்கு ஏற்படும் அழிவுகளையும் அவற்றைத் தவிர்ப்பதில் விவசாயி படும் சிரமங்களையும் நகைச்சுவையாக வெளிப்படுத்தி நிற்கும் இந்நாட்டுப் பாடல் வகை வன்னிப் பிர தேசம் முழுவதற்குமான உற்பத்திப் பிரச்சினையைத் தொட்டுள் ளது:விவசாயியின் உடலுழைப்பின் திறனைச் சுட்டிக் காட்டுவதா வும் உள்ளது. விவசாயத்திற்கு அழிவு தேடும் பன்றிகளே கதா பாத்திரங்கனாக அமைந்த இப்பள்ளிலே தலைமைப் பன்றிக் கூற் (USAS,
'வனத்தை யறுத்து நெருப்பைக் கொளுத்தி
மரத்தின் தடிகள் பொறுக்கியே
வனத்து வேலி நிரைத்துக் கறுத்த வளர் நெல் வகைகள் துரவியே

மன்னர் - முல்லைத்தீவு நாட்டுப் பாடல்கள்- ஓர் ஒப்பியல் நோக்கு g
புனத்தில் அடரும் கரிகண்டுடனே புள்ளி மான் பல சாதிக்கும் பிரித்துக் கொடுத்துத் தனக்கு மிஞ்சிய பொருள் கொண்டேகும் மனிதரே'
எனவரும் பாடற்பகுதியில் விவசாயத் தொழில் முறைமையை யும் உற்பத்தி மட்டத்தையும் கண்டுணரலாம். பண்டிப் பள்ளிலே பன்றிகளைக் கதாபாத்திரங்களாகக் கொண்டு விவசாயிகளினது பிரச்சினைகள் நகைச்சுவையாகத் தொட்டுக் காட்டப்பட்டுள் னமை போலக் குருவிப்பள்ளிலே குருவிகளைக் கதாபாத்திரங்க |ளாகக் கொண்டு தொடுக்கல்பட்டுள்ளன. இத்தகைய பாடல்களே வன்னிப்பெரு நிலப் பரப்பின் குறிப்பிட்ட சில மாவட்டங்களுக்கு இட்டும் உரியவை என்று நாம் கொள்ளவேண்டியதில்லை. வன் னியின் பல்வேறு கிராமப்புறங்களிலும் இவை பல்வேறு பாட பேதங்களுடன் வாய்மொழியிற் பயின்று வரலாம்.
விவசாய வாழ்க்கையின் முக்கியமானதொரு தொழில் முறை அருவி வெட்டுதல், ஒரு கமக்காரனின் வயலில் பல தொழிலாளர் கள் இணைந்து நின்று அருவி வெட்டும் முறை 'பரத்தை' என வழங்கப்பட்டு வருவதை வன்னிப் பிரதேசத்தில் பரவலாக அவ தானிக்கலாம். இக் கூட்டு முயற்சியில் உற்சாகம் தரும் வகை யில் அருவி வெட்டுப் பாடல்கள் பயில்வன. முல்லைத்தீவு மாவட் டப் பகுதியிலே விளங்குமீ முருகையன் சிந்து என்ற பாடற் பகுதியில்,
"ஆத்திலே தண்ணீர் அலைந்து வருமாப்போல்
அதன் பிறகே புள்ளுத் துரந்து வருமாப்போல் சேத்திலே தண்ணீர் தெளிந்து வருமாப்போல்
செங்கவள நாரையினம் மேந்து வருமாப்போல் வன்னவரி வேங்கை மதத்து வருமாப்போல்
வீட்டிலே கடிநாய் வெருண்டு வருமாப்போல் சின்னப் புலி தன்னுடையை முறுக்கி வருமாப்போல்
நாட்டிலே வாழ்கின்ற நல்லிளந் தாரிமார் நணுகாமல் நிலேயருவி விளையாடிஞரே"2
என இவ்வருவி வெட்டுக் காட்சி அத் தொழில்முறைக்குரிய ஓசையுடன் பாடலாக வெளிப்படுவதைக் காணலாம்.
மன்னுரிற் பெரிய குலத்தைச் சேர்ந்தவரும், பதினெட்டு விருதுடையவரும் செல்வச் சிறப்பு மிக்கவருமாகிய சண்முகம்

Page 24
20 வித்தியானந்தம்
சவகதோர் என்பவருடைய மகன் தொம் அந்தோனி வயிரமுடி காத்த தேவன்; பரத்தைக்கு ஆட்களை அழைத்தலும் அருவி வெட்டுதலும், சூடு மிதித்தலும், அருவி வெட்டுப் ப ா ட் ட எ ல் கூறப்படுகின்றன. தெற்செய்கை வகை தொழிலாளிகள் வரு ணனே, கூட்டு முயற்சி, விருந்தோம்பல், போற்றுதல் முதலியன இவற்றுள் பொதிந்துள்ளன.
"அருவியதனைச் சினந்து மோதி
அறுத்துச் சென்னெலேக் குவித்திட அன்போடவர்க்குச் சம்பா அமுது
கொடுத்துக் கறியின் வகைகளும் வருகை சேர் பணியாரம் பாலுடன் வாய்த்த சீனி முக்கனிகளும் வந்தோர்க்களித்துச் சந்தோ சத்துடன்
வன்மை பாரடி பள்ளி ரே'
என வரும் பாடல் அரிவு வெட்டும் திறனையும் அவர்க்களிக் கும் உபகாரங்களையும் புலப்படுத்தி நிற்பது, மருதநில விவ சாய வாழ்க்கையின் தொழில்சனர் அடிப்படைகளிலான பொதுப் பண்புகளே அவதானிக்கின்ற அதே வேளையில் மன்னர் - முல் இலத்தீவு நாட்டுப்பாடல்களுக்கு இடையிலான குறிப்பிடத்தக்க வேறுபாட்டம்சங்களையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது: இவை அவ்வம் மாவட்டங்களுக்குச் சிறப்பாகவுரியவை ஆதலால் சிறப்பு அம்சங்கள் என்ற தலைப்பில் நோக்கலாம்.
3 - சிறப்பு அம்சங்கள்
மன்ஞர் மாவட்ட நாட்டுப் பாடல்களின் சிறப்பு அம்சமாக அவற்றின் காதற் பொருண்மையைக் கூறலாம், பெரும்பான்மை யான பாடல்கள் காதற் பாடல்களாகக் காணப்படுகின்றன. குறிப்பாக இவற்றில் களரவுக் காதலே வெளிப்படுத்தப்படுகின் றது. காதலன் காதலியைக் களவாற் கூடுவதோடு தொடர்பு டையனவும், காதலி காதலளுேடு உடன் போக்கு நிகழ்த்தத் துணிதலைப் பொருளாகக் கொண்டனவுமாகவே இவ்வகைப் பாடல்கள் அைேகின்றன. கன விற் கூட வந்த காதலன் காத லியை எதிர்பார்த்து நிற்றல், கன இலி காதலனை மணம் முடிக்கு மாறு வற்புறுத்தல் முதலிய வகைகளில் அமையும் இவ்வகைப் பாடல்கன் உலக மொழிகளின் நாட்டுப் பாடல் இன் பலவற்றி லும் பொதுவாகக் காணக்கூடியவை தாம் எனினும் மன்ஞர் மாவட்டக் கிராமப் புறங்களுக்கேயுரிய சிறப்பான கருப்பொருட்

மன்னுர் - முல்லைத்தீவு நாட்டுப்பாடல்கள்-ஓர் ஒப்பியல் நோக்கு 21
களில் இவை வெளிப்படுத்தப்பட்டுள்ளன என்பதே இவற்றின் தனித்தன்மையாகும்.
காதற் பாடல்களிலே ஒரு வகையாக அமையும் விைேசத்துரை
யிலான் பாடல்கள் உடன் போக்குத்துறைசார்ந்தவை. மன்னரி லுள்ள கட்டுக்கரைக் குளம் திருத்தம் பெறும் முன், அதன் சுற் ருடலில் இன்று குடியேறியுள்ள மக்கள், விடத்தல் வேம்பு, ஊற் றுப்புட்டி புல்லறுத்தான் கண்டல் முதலிய கிராமங்களில் குடி யேறியிருந்தனர். இப்புல்லறுத்தான் கண்டலே இவ்வரிசைதி துரை - மயிலான் பாடல்களிற் சின்னத்தரவை எனப்படுகின் றது. விடத்தல் வேம்பில் வாழ்ந்த வரிசைத்துரை தனது தாயா ரின் அண்ணன் மகள் மயிலான் மீது கொண்ட காதல் குடும்பத் தைச் சொத்துடைமைப் பங்கீடுகளால் நிறைவேற முடியாது தடைப்பட்டிருந்தது வரிசைத்துறை மயிலாளைத் தனியே கண்டு உள்ளத்தைக் திறந்து காட்டினன். அவனிடம் மனதைப் பறி கொடுத்த மயிலான் ஊரையும் உற  ைவ யு மீ விட்டு அவ ணுடன் போகத் துடிக்கிருள். இதனை வெளி ப்ப டு தீ தி நிற்கும் இப் பாடல்கள் மன்னர் வட்டாரத்தின் ஒரு கிராமப் புற சமூகத்தினைக் கண் முன்னே நிறுத்துவன. மயிலான் வரிசைத்துரையிடம்
“தாகுமென் கண்ணு வா என திட தாய் மாமன் புத்திரனே
சீவி முடியிறுக்க எனக்கொரு சீப்பொண்டு வாங்கித் தாரும்" எனக் கேட்க, 畿』礙視
*ஆனக் கொம்புச் சீப்பாம் அழகான கொண்டைக் குச்சாம்
விரமணிச் சேலே ஹவுக்கையும் வேண்டியே நான் தருவேன்' என்று
பதில் கூறுகிருன் கிராமப் புற இளம் பெண்ணின் அபிலாகூைடி களே இவை இயல்பாக உணர்த்தி நிற்கின்றன.
இன்னுர் மாவட்டத்திற் காணப்பெறும் இன்னெரு நாட்டுப் பாடல் வகை நடை வழிச் சிந்து. இது வழி நடைச் சிந்து எனவும் வழங்கும். மன்னர் இடை வீதியிலுள்ள உயிலங்குளம் என்னும் இடத்திலிருந்து தென் திசையாகக் செல்லும் செம்மண் பாதை பிலே ஒன்றரை மைல் தூரத்தில் வயல்கள் சூழ்ந்து காட்ட கத்தே நின்றிலங்கும் ஆலயம் தூய அந்தோணியார் பெயருடை

Page 25
22 வித்தியானந்தம்
யதாகும். இங்கு செவ்வாய் தோறும் பக்தர்கள் செல்வர். இவ் வாலயத்திற்கு முருங்கனிலிருந்து நேர்த்தி கொண்டுவருவதாக அமைந்திருக்கின்றது. நடை வழிச் சிந்து நடந்து செல்லும் வழி யிற் காட்சிகள் பற்றிய விவரணம் சுவையாக அமைந்துள்ளது. ஆற்றுப்படை இலக்கியங்களின் வழிவருணனைகளை நினைவுக்கு இட்டு வருவது. இச் சிந்துப் பாடல் மன்னுரி மாவட்டத்தின் கிறிஸ்தவ சமயவாழ்க்கையுடன் தொடர்புடையதென்பதும் இங்கு கவனத்திற்குரியது.
இவை தவிர ஆக்காட்டிப் பாட்டு, காக்காக் குஞ்சுக் கலிவானம் ஆகிய பாடல்கள் மன்னுர் மாவட்டத்திற்கு மட்டுமே உரிமை பூண்டனவல்ல. சிற்சில வேறுபாடுகளுடன் இடத்துக்கிடம் வேறு பட்டு வழங்கும் இயல்பினை உடையன.
மள்ளுர் மாவட்ட நாட்டுப் பாடல்களைப் போலக் காதலைப் பொருளாகக் கொண்ட தாட்டுப் பாடல்கள் முல்லைத்தீவு மாவட் டத்தில் வழங்கியதாகச் தெரியவில்லை. இதற்கான காரணம் சித் தனக்குரியது. இவ்வகைப் பாடல்கள் வழக்கில் இல்லை என்பதா? அல்லது தொகுக்கப்படவில்லை என்பதா? வழக்கில் இல்லையெ னில் அதற்கான காரணம் சமூகவியல் நோக்கில் ஆராயப்பட வேண்டியதொன் ருகும்.
முல்லைத்தீவு மாவட்ட நாட்டுப்பாடல்களின் சிறப்பு அம்சங்களா
கச்சிந்து என்னும் பெயர்களில் அமைந்த வழிபாட்டுடன் தொடர்பு டைய பாடல்களையும் வேலைப்பணிக்கர் ஒப்பாரியையும் சுட்டலாம். பிள்ளையார், பரமசிவன், நாகதம்பிரான், முருகையன், அம்மன், விகரமன், வயிரவர், ஐயஞர், வீரபத்திரன், அண்ணமார், வதன மார், நாச்சிமார், முறிகண்டியான் ஆகியவர்களின் பெயர்களில் அமைந்த சிந்துப் பாடல்கள் இம்மாவட்டத்தின் இந் து மதம் தொடர்பான பல்வேறு தெய்வங்கள், தேவதைகள் ஆகியவற்றி லான நம்பிக்கையுள்ள சடங்குகளையும் புலப்படுத்தி நிற்பன. குறிப்பாக அம்மன் சிந்து வற்ருப்பளேக் கண் ணகையம்மனது வழிபாட்டுடன் தொடர்புடையது. கண்ணகியம்மனின் வரலாற் றுச் செய்திகளை உன்னடக்கியது. ஐயஞர் சிந்து வன்னிப் பிர தேசத்தின் காவல் தெய்வமான ஐயனுரின் புராண வரலாறுகளே யும் அவரை வழிபடுவதில் வன்னிப் பகுதியில் நிலவும் முறை களையும் உணர்த் துவது. இவ்வாருண சிந்துப் பாடல்களிற் பல விவசாயத் தொழிலுடன் தொடர்புடையவை; வயல்களில் அருவி வெட்டும் காலங்களில் படிக்கப்படுபவை தொழிலுக்கும் தெய்வு

மன்னர்-முல்லைத்தீவு நாட்டுப்பாடல்கள் - ஓர் ஒப்பியல் நோக்கு 23
நமீபிக்கைக்கும் இடையிலான நெருக்கமான உறவை இவை உணர்த்திநிற்கின்றன.
வேலப்பணிக்கர் ஒப்பாரி ஒரு வரலாற்றுச் கதைப்பாடலாக அமைகின்றது. வன்னி மன்னர்களது ஆட்சிக்காலத்து நிகழ்ச்சி ஒன்றின் சோக நினைவாகத் தொடரும் இப் பாடற் பகுதி ஒரு வகையில் வன்னிப் பெண்மையின் ஆற்றலை உணர்த்துவ தாகவும் அமைகின்றது. மேலும் ஈழத்துத் தமிழ் மக்களின் பண் பாட்டு வரலாற்றிலே கவனம் செலுத்துபவர்களுக்குச் சுவையான கருவூலமாகத் திகழ்கின்றது.
குமுளமுனைக் கிராமத்திற்கருகில் கொட்டுக் கிணற்றடியில் கோவில் கொண்ட விநாயகரின் வரல்ாற்றைக் கூறும் கொட்டுக் கிணற்றடிப் பிள்ளையார் கும்மி சம்யத் தொடர்பான வரலாற்றுப் பாடலாகும். இவற்றை விடக் கமக்காரன், வயந்தன், வந்தனம் முதலிய பாடற் பகுதிகள் கோலாட்ட விளையாட்டு நிகழ்ச்சிக ளுடன் தொடர்புடையவை.
இறைவரை
மன்ஞர் - முல்லைத்தீவு மாவட்டங்களின் நாட்டுப் பாடல்கள் தொடர்பான ஒப்பியல் நோக்கிலே பெறப்படும் பொது அம்சங் கள் வருமாறு.
1. இரண்டு மாவட்டங்களிலும் மருதநில விவசாய வாழ்க்கை முறையின் அடிப்படிையிலேயே நாட்டுப் பாட ல் க ள் அமைந்துள்ளன.
2. பண்டிப்பள்ளு முதலிய சில முல்லைத்தீவு, மன்னர் உட் பட வன்னிப் பிரதேசமீ முழுவதுக்குமே பொது எனக் கருதத்தக்கன.
றப்பு அம்சங்கன்
1. மன்னுர் மாவட்டப் பாடல்களிற் காதற் பொருண்மை மிக்குக் காணப்படுகின்றது. முல்லைத்தீவுப் பகுதியில் காதற் பொருண்மையுடைய பாடல்கள் கிடைக்கவில்லை.
2. முல்லைத்தீவு மாவட்டத்தின் சிந்துகள்
வாழ்க்கை முறையையும் சமய உணர்வையும் இணைத்து நிற்பன.

Page 26
24 வித்தியானந்தம்
3. ஒப்பாரி கதைப்பாடல் என்ற தனி வகையொன்று முல்
லைத்தீவு மாவட்டத்திற் காணப்படுகின்றது.
இத்தகைய வேறுபாடுகள் வன்னியின் இரு வேறு மாவட்ட மாந்தரின் வாழ்க்கையின் பொருளாதார அடிப்படை ஒன்ருக இருந்தாலுமீ உணர்வு நிலைகளில் வேறுபாடுகள் மிக்கிருப்பதைப் புலப்படுத்தி நிற்கின்றன என்று கொள்ளலாம். இத் தொடர்பில் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ள இடமுண்டு
அடிக் குறில்புகள். 1. திரு. செ. மெற்ருஸ் மயில் - வன்னிவன நாட்டுப் பாடல்கள்,
ஒட்டுசுட்டான் முல்லை இலக்கிய வட்டம், 1980 பக் ே
- L』『L@ - 17 - 18
2. மேற்படி பக் 29 பாடல் 2
3. திரு. சு. வித்தியானந்தன் ( பதிப்பாசிரியர் )
மன்னர் நாட்டுப்பாடல்கள் மன்னர் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் வெளியீடு 1964, பக் 38 பாடல் 10
4 மேற்படி - பக் 32 பாடல் 13
5. மேற்படி - பக் 33 பாடல் 14
 
 
 

கிண்ணகி பிறந்தது பூம்புகாரைத் தலைநகராகக் கொண்ட ரே ஈழ மண்டலத்திலே அவள் அரசியற் புரட்சி செய்து கொடுங் கோல் ஆட்சியை அழித்தது பாண்டிய மண்டலத்திலே; அவன் தெய்வீகத் தன்மையடைந்து கோயிலிற் குடிகொண்டது சேர. டீ எண் ட லத் தி லே ஆளுல், சோழ, பாண்டிய மண்டலங் இளைத் தன்னகத்தே கொண்ட தமிழகத்திலே கண்ணகி கோயில் ஒன்றேனும் இன்றில்லை. மாரியம்மன்' என்ற வேறு பெயரா லேயே இங்கு கண்ணகிக்குக் கோயில்கள் அமைந்திருக்கின்றன.
ஈழமண்டலத்திலோ எண்ணிலடங்காத பல கண்ணகி அம்மன் கோயில்கள் யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் இன்றும் இருக்கின்றன. வட மாகாணத்திற் பல இடங்களிற் கண்ணகி யம்மன் கோயில்கள் இருந்தபோதும், மட்டக்களப்புப் பிர தேசக் கிலேயே எல்லா ஊர்களிலும் கண்ணகி கோயில்கள் காணப்படுகின்றன. அங்குக் கண்ணகி விழா சிறந்த முறையில் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் நடந்து வருகின்றது.

Page 27
26 ܐܚܝ வித்தியானந்தம்
காரைதீவு, துறை நீலாவனை, கழுவாஞ்சிக்குடி, செட்டிப்பாளே யம், ஆரைப்பற்றை, மண்டூர் முதலிய இடங்களிற் கண்ணகை அம்மன் என்ற பெயரோடு இப்பத்தினித் தெய்வத்திற்கு ஒழுங் காக வழிபாடு நடந்து வருகின்றது. இவ்விழாவினேக்கண்ணகை யம்மன் சடங்கு என்றே அழைப்பர். ஆண்டு முழுவதும் பூட் உப்பட்டிருக்கும் கண்ணகி கோயில்கள் இவ்விழாக்காலத்திலே திறக்கப்பட்டு, கதவு நிறத்தல் விழாவோடு கண் ணகையம்மன் சடங்கு தொடங்கும். அதன் பின் ஒவ்வொரு நாளும் நண்பகலி லும் இரவிலும் சடங்கு நடைபெறும். அப்பொழுது அம்மன் காவியம், உடுக்குச் சிந்து என்பன பாடப்படும். கடைசி நாளிற் குளுத்தி விழா இடம்பெறும் அப்பொழுது, படிக்கப் படும் குளுத்திப்பாடல்கள் கன்னகையின் உள்ளக் குளிர்
சியை வேண்டிப் பாடப்படுபவையாகும்.
மட்டக்களப்பிற் கண்ணகை அம்மன் கோயில்களிற் படிக் கப்படும் பழைய கண்ணகி காவியமும் ஒன்றுண்டு கண்ணகி உரைத்த வழக்கின் பெயரால் அந்நூல் வழக்குரை' எனவும், 'வழக்குரை காவியம் எனவும் வழங்கும். கண்ணகி கூறிய வழக் கினைச் சிறப்பாக எடுத்துக்காட்டி மதுரையைக் தீக்கிரையாக் கியதோடு, நூல் முற்றுப்பெறுகின்றது. இவ் வழக்குரை காதை, வரம்பெறு காதை முதற் குளிர்ச்சிக்காதை ஈருகப் பதினுெரு காதைகளைக் கொண்டது.
கண்ணகையம்மன் சடங்கின் இறுதிநாளிற் பாடப்படும் குளுத்திப்பாடல்களோடு கொம்பு விளையாட்டும் வசந்தனுட லு & இடம்பெறும் கோவலன் கட்சி, கண்ணகி கட்சி என இரு கட்சியாக மக்கள் பிரிந்து, இரு வேறு வளைந்த தடிகளே ஒன்ருேடொன்று கொழுவி இழுத்துக் கோவலனதை முறித்துக் கண் ணகிக்கு வெற்றி காட்டி மகிழ்விக்க அத்தெய்வம் சினம் தணிந்து, உளம் குளிர்ந்து இடைச் சேரியை வாழ்த்திச் செல்வதாகக் கொம்பு விளையாட்டு அமையும். இவ்வாறு கண்ண கையின் புகழுரைப்பனவாய் வழக்குரை காவியம், குளுத்திப் பாடல்கள், கொம்டி விளையாட்டுப்பாடல்கள், வசந்தன் கவிகள், உடுக்குச் சிந்து முதலியன மட்டக்களப்பிலே இன்று வழங்கி வருகின்றன.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கண்ணகி வழிபாடு, சிங்கன மக்களிடையே "பத்தினி தெய்யோ வழிபாடாக இன்றும் பெரு வழக்காகப் பயின்று வருகின்றது. இவர்களிடையேதான் ஈழத் தில் மிகப் பழைய கண்ணகி வழிபாடு காணப்படுகின்றது.
 

கண்ணகி வழிபாடும் கண்டிப் பெரஹராவும் 27
பத்தினித் தெய்வ வழிபாடாகிய கண்ணகி வழிபாடு இந்தியா விலிருந்து சிங்கள மன்னனுற் கொண்டு வரப்பட்டதென "இரா சாவளி’ எனும் நூலும் சிலப்பதிகாரமும் கூறுகின்றன. கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன் சேர நாட்டிலிருந்து, திரும்பி லும் ஈழ நாட்டிற் கோயில் எடுப்பித்தரன் எனச் சிலப்பதி காரம் வஞ்சிக் காண்டம் கூறும் சிலப்பதிகாரத்திலுள்ள உரை பெறு கட்டுரையில்,
" அ துகேட்டுக் கடல்சூழ் இலங்கைக் கயவாகு என்பான் நங்கைக்கு நாட்பலி பீடிகைக் கோட்டம் முந்த றத்து ஆங்கு அரந்தை கெடுக்கு வரந்தரும் இவளென ஆடித் திங்க ளவையின் ஆங்கோர் பாடி விழாக்கோள் பன்முறை எடுப்பு மழைவீற் றிருந்து வளம் பல பெருகிப் பிழையா விளேயுள் நாடாயிற்று '
என வருவதனுற் சிங்கள மன்னன் இக்தெய்வத்திற்கு ஆடி ாதம் தோறும் விழாவெடுக்க இசைந்தானெனத் தெரிகிறது.
கயவாகு மன்னன் காலத்திலிருந்து ஆடி (எசலா) மாதப் பூரண தோறும் பெரஹரா என்ற பெயரில் இவ்விழா கண்டியில் நெைபற்று வருகின்றது. பெரஹரா என்பது பிரகாரம் என்னும் வடமொழிச் சிதைவு, ஊர்வலமாக வரும் திருவிழா என இதைத் தமிழிற் கொள்ளலாம். முதன் முதலிற் பெரஹரா கண்ணகிக்கே எடுக்கப்பட்டது. அதன்பின் நாக தெய்யோ (சிவன்), விட்டுணு தெய்யோ, கதிர்காமத்தெய்யோ முதலிய பல தெய்வங்களும் கலந்தன; பின் சீன நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த புத்த பிக்குகள் சிலரின் விருப்பத்திற்கமையப் புத்தர் பல்லேயும் கொண்டு சென்றனர். இதுவே இப்பொழுது கண்டிப் பெரஹரா என வழங்குகின்றது. N
கண்டியிலுள்ள தலதா மாளிகா வைக்குள் கண்ணகி கோயில் இருப்பதும் இங்குக் குறிப்பிட வேண்டியது. இக்கோயிலிலுள்ள கண்ணகி உருவம் சந்தனக்கட்டையாலாயது. கயவாகு மன்னன் சேரநாட்டிலிருந்து சந்தனக் கட்டையாலாக்கப்பெற்ற விக்கிர கத்தையும் சிலம்பையும் கொண்டுவந்தான் என்ற கூற்றினை இவ் வுருவம் மெய்ப்பிக்கின்றது. எனவே, கண்டி மாநகர், ஈழ துக் கடைசித் தமிழ் மன்னன் தலைநகர் மட்டுமன்று, கண்ணகி வழிபாட்டின் உறைவிடமுமாகும். கண்டியில் நடைபெறும் பெர ஹரா பத்தினித் தெய்வமாகிய கண்ணகிக்கு எடுக்கப்பட்ட

Page 28
செழிக்கையிலுள்ள செய்திகளே உள்ளபடியே எடுத்துக் காட்டுவன நாடோடிப் பாடல்கள். நாடு முழுவதிலும் உயிருடன் உலவும் பாடல்கள் இவை தொழிலாளர், குடிமக்கள், வேலே செய்யும் பெண்டிர் முதலியோர் தத்தம் வேலையினுல் உண்டா கும் அலுப்பைப் போக்கிக் கொள்னப் பாடும் பாட்டுக்கள் ஒரு வகை. குழந்தைகளைத் தொட்டி லிட்டுத் தாலாட்டி, நிலா க் a5 Faraʻ. ilgé# சோறுாட்டித் தலையை ஆட்டித் தோளே வீசச் செய்து விளையாட்டுக் காட்டித் தாய்மார்கள் குழந்தையோடு குழந்தையாய்ப் பாடும் தாலாட்டுப் பாடல்கள் ୭୯୭ ଈ! ୫୬ ଅଧି, சிறுமியாரும், சிறுவரும் தாம் ஆடும் பலவகை விளையாடல் களுக்குமிடையே பாடும் பாடல்கள் ஒருவகை குடும்பத்தில் நிகழும் திருமணம், இழவு வீடு முதலியவற்றிற் பாடும் பாடல் கள் ஒர் இசைமீ,
 
 
 
 
 
 
 
 
 
 
 

இஸ்லாமியர் நாடோடிப் பாடல்கள்
இவ்வாறு பல துறைப்பட்டு நிற்கும் நாடோடிப் பாடல்கள் ஈழக் கில் வாழும் இஸ்லாமியரிடையே பல இடங்களில் வழங்கி வருகின்றன. இக் மக்களின் தாய் மொழியாம் தமிழில் உள்ள இப்பாக்கள் இஸ்லாமிய மக்களின் எண்ணக் கருத்துக்களே, உள் னத் துடிப்புக்கனே, கலைப்பண்பைப் படம் பிடித்துக் காட்டுகின் றன. இப்பாடல்களில் ஓசையும் இனிமையும் மலிந்து கிடக்கின் றன நாடோறும் நிகழும் நிகழ்ச்சிகளை நாம் இவர்கள் இலக் கியத்திற் காண்கின் ருேம்.
ஈழத்தில் இஸ்லாமியர் நடமாடத் தொடங்கிய காலம் முதல் இப்பாடல்கள் பிறந்து வளர்ந்து வருகின்றன. ஈழத்தில் இஸ் லாமியர் வாழும் மூலே முடுக்குகளிலும், வயல் வெளிகளிலும் இப்பாடல்கள் உலாவுகின்றன. வயல் வெளியில் வழங்கும் பாட்டுக்களிற் சில பின்வருமாறு: கூலிக்கு வயல்களில் நாற்று நடுகின்ருர்கள் முஸ்லிம் ஆண்களும் பெண்களும். இவர்களுள் இருவர் மச்சரனும் மச்சாளும். மச்சரன் மீது அதிக அன்பு கொண்டவன் மச்சான். ஆணுல் பல நாட்களாகத் தனியே சந் தித்து உரையாட முடியவில்லே. நாற்று நடும்பொழுது பக்கத்தி லுள்ள மச்சாளோடு பாட்டில் உரையாடுகிருன்,
அன்புக் களஞ்சியமே
அழகொழுகுஞ் சித்திரமே கற்புக் கணிகலமே-உன்ஃன்க்
காணவென்று காத்திருந்தேன். என்று தொடங்கினுன் நாண மிகுதியால் அவனைப் பார்ப்பதும், நிலத்தைப் பார்ப்பதும், நாற்று நடும் ஏனேயோரைப் பார்ப் பதுமாக நின் ருள் அவன்,
மாமியட புள்ளே
மகிழம்பூ வாயுடையாள் பெருக்கப் பெருக்க-என்ணுேடு பேச மனஸ்தாப மென் ன, என்று வினவிஞன். பேசாமல் நின்ற அவள் ஒரு பக்கம் ஒதுங்கி, நாற்று நடத் தொடங்கினுள்
அன்ன நடையே
அலங்கரப் பெண்மயிலே உன்னுலே என்தேகம்
உருக்குலேந்து போகு தடி, என்ருன் அவன் மீண்டும். அவள் தொடர்ந்தும் மெனனம்
சாதித்தாள். உடனே,

Page 29
வித்தியானந்தம்
யே அம்புயமே சொல்லுக் கொரு நங்கனeே அந்தரித்த என்னை
அழைத்தாதரிக்க மாட்டாயா, எனமன்ருடினுன் அவனை அனைத்து ஆதரிக்க ஆசைதான். ஆளுல்ை, வயல் வெளியில் என்ன செய்வது. சொல்லாடாது நின் ருள்
கல்லும் உருகும்
காரணம்பசு கண்டீனும் மலேயும் உருகும்-கிளியார் உள் மனம் உருக வில்லையோகா,
எனமேலும் இரந்தான் காதலன். மச்சான் நாண மிகுதியால் நிலத்தைப் பார்த்த வண்ணமே நாற்றை நட்டுக் கொண்டி ருந்தாள். மச்சான் பயிரில்லாத இடத்தில் நடுவதற்குப் பயிர் உள்ள இடத்திலிருந்து ஒரு பயிரை ஊன்றி இழுத்தான். வேரு டன் வந்த அப்பயிரிலுள்ள மண், மச்சாளின் கண்ணுக்குள்னே தெறித்தது. கண் கலங்கத் தொடங்கியது. தன் சேலையின் தலேப்பால் கண்ணேத் துடைத்தாள். பக்கத்திலுள்ளவர்கள் கண்ணுக்குள்ளே என்ன? என்று கேட்டார்கள். அதற்கு அவள்,
கல்லால் எறிந்தால்
கலகம் வரும் என்றெண்ணி மண்ணுல் எறிந்து மச்சரன்
மச்சிமுறை கொண்டாடுகின்ருர், என்று வி.ை இறுத்தாள். எல்லோரும் கொல்லென்று சிரித்த னர். மச்சான் நிலை தடுமாறி, நாற்றை நடுவதற்குப் பதிலாக நட்ட நாற்றைப் பிடுங்கிக் கொண்டு நின்றன்.
இன்னுெரு காட்சி, மாலே நேரம் கழித்து நிலா எறிக்குங் காலம். வேலியருகில் ஒரு முடுக்கில் ஒரு பற்றை இருக்கின்றது. அதற்குள்ளே ஓர் உருவம் பதுங்கியிருக்கின்றது. ஆள் ஒலி கேட்கும் போதெல்லாம் அதன் தலை வெளியே வருவதும், பின்பு ஏமாற்றத்துடன் உள்னே போவதுமாய் இருக்கின்றது. நுளம்புக் கடி உயிரை வாங்குகின்றது. பற்றைக்கு வெளியே வந்தால், யாராவது கண்டு விட்டால், உயிருக்கே ஆபத்து என்ற பயத் தினுல் ஒரே ஏக்கம்; மச்சரளின் மானத்தைத் தூளாக்கி விடுவர் ஈன்ற பயம் மற்றொரு பக்கம். இவை போதர தென்று, நிலத்தி லுள்ள இல்லும் முள்ளும் குத்துகின்றன. மழையும் சாடை பாய்ப் பெய்கின்றது. ஆற அமர இருந்துகொள்ள இயலாது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இஸ்லாமியர் நாடோடிப் பாடல்கள் 3.
நேரமீ ஓடிக்கொண்டிருக்கிறது. துளிம்புக்கடி தாங்கமுடிய வில்லை. கால் விறைத்துப்போய் விட்டது பற்றைக்கு வெளியே வந்து, மரத்தருகே ஒட்டிக்கொண்டு நின் ரூன், தூக்கம் வந்து படுத்து விட்டானோ என்று எண்ணிஞன் சீழ்க்கை அடித்து அறிவித்தல் கொடுப்பதற்கு வாய்க்குள் இரு விரல்களைத் திணித் தான். ஆணுல், - கோடியிலே வந்து நின்று
கொக்காட்டை கொள்ளாதேகர வீடு நிறைந்த சனம் - எங்க உம்மாவுந் திண்ணையிலே, என்று காதலி சொன்னது ஞாபகத்திற்கு வந்தது எனவே சீழ்க்கை அடிக்கும் எண்ணத்தைக் கைவிட்டு ஆத்திர மிகுதி யினுல்,
ஆசையுள்ள தேன்கரும்பே
ஆடுகிறேன் பம்பரம் போல் நேசமிருந்தால் மச்சி-உனக்கு நித்திரையும் வந்து தாமோ, sy 6ör my U AU ல்ை, Ad amb Gafði gr ມ.ນ. & VT PÅ { 蠶*蠶證*蠶 Roż 。リ அறியாது,
கடித்த நுளம்பும் - நான்
கனத்திருந்த மூலையும் அடித்த மழையும் எனக்கொரு
ஆள்வேனும் சொல்லியழ, என அழு துகொண்டே தனது முதுகையும் தோள்களையும் தட விக்கொண்டு வந்த வழி திரும்பிஞன். 臀
மச்சாள் ஒருத்தி பக்குவமாகி விட்டாள். அவனைக்கண்டு பேசிக் காதல் மொழிகளைக் கொட்டி இன்பமணுபவிக்கும் வாய்ப்பு இல்லாமல் துடித்தான் மச்சசன் பல நாட்களாக, நாளும் பல முறை, அவளுடைய படலேயைத் தாண்டிப் போய்வருகின்றன். மாதங்கள் பல கழிந்தன.
வேலிக்கு மேலாலே உன்
வெள்ளை முகங் காணுமல் பாலேருச் செந்நெல்,
பதர்க்கடைபோ லானேனடி, என்று பாடியும் பார்க்கிறன். மச்சரின் நாள் தோறும் பல தடவை ஆேலிப்பக்கமாய்ப் போவதனுல் உண்டாகும் செருப்புச் சத்தம் அவளுக்கு ஒரு தனி இன்பத்தைக் கொடுத்தது நாள்தோறும் அவன் அவ்வழிச் செல்வது, வேலி எல்லைக்குள் செருப்பு மெல்ல மெல்ல அழுவது, வேலி எல்லேயைத் தாண்டுவதன் முன்னும்,

Page 30
வித்தியானந்தம்
பின்னும் செருப்பு விரைவாய் அழுவது-இவை அவள் கற்பனை யைத் துரண்டின. எனவே, செருப்புச் சத்தங் கேட்டதும் வேலிப் பக்கம் வந்து சோக உணர்ச்சியோடு,
மாசம் பதிஞலு
வளவு நிறைந்த நிலா சிற்றெழுங்கைக் குன்னாலோ இரண்டு
செருப்பழுது போகுதுகா, என்று பாடிஞள். மச்சானைப் பிடிக்க இயலாது. ஒரே மகிழ்ச்சி ஏற்பட்டது. அன்று தொட்டு விடிய முன் அவன் அப்பக்கம் வரத்தலைப்பட்டான். அவன் பாடமுன்பே அவள்,
சருகே பறந்து வர
தண்ணிரோ ஓடிவர காற்ருே அசைந்துவர-மச்சான்ரை
கால்பாதமி நேர குதுகா, என்று காணிக்குள்ளே நின்று பகிடியாகப் பாடிகுள் அவனும் வேலிக்கு மேலாலே எட்டிப் பார்த்து அவள் முகத்தைக் கண்டு விட்டான். அன்று தொடக்கம் காலையிலும் மாலையிலும் புதுப்புது உடை அணிந்து, படலேயாற் போய்வரத் தொடங்கி விட்டான்.
தனேக் கண்ட காதலி,
அந்தி விடிந்து
சந்தையால் போறமச்சான் நேரத்துக் கொருடுப்பு
நெய்கிறதோ வாங்கிறதோ, என்று கேலி செய்தாள். அவனுக்குத் துணிவு பிறந்தது.
கொண்டை அழகும் உன்
கூர் விழுந்த மூக்கழகும் நெற்றி அழகும் கண்ணே என்
நெஞ்சை விட்டு மாருதே, ாறு கதை தொடங்கின்ை காதலன். அடி மேல் அடி அடிக்க அம்மியும் நெகழ்ந்தது.
மாமி மகனோ என்ரை
மருக்கொழுந்து வெற்றிலேயே இன் பக்கடலோ எனக்கு
இரக்க மெல்லாம் உன் மேலே, ாறு மறுமொழி வந்தது இந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாது அவனும்
அப்படியாஞல் எந்தன்
ஆரணங்கே இராத்திரிக்கு தப்பாமல் நாமன்
சந்திப்ப தெவ்விடங்கா, ான்று எட்டிக் கேட்டான். அவன் உள்ள மீ உருகி,
鬣,、
 
 
 
 

இஸ்லாமியர் நாடோடிப் பாடல்கள்
அங்குமில்லே இங்குமில்லை என் வளவு மூலேயிலே கண்ணுண மச்சனன் - நான்
காத்திருப்பேன் நிச்சயமாய், என்று சொல்லிவிட்டு, உள்ளே போகத் தொடங்கினுள் காதல னுக்கு ஒரே ஏக்கம்.
வாசலிலே மாது விளை
வளைக்கு வரக் கொtய மரம் வலதுபுறம் வாழை மச்சி-நான் எங்காலே வந்திடட்டும், என்று இரந்தான். வில்லங்கமான சந்தர்ப்பங்களிற் சிக்கலைத் தீர்ப்பதிற் பெண்கள் கைதேர்ந்தவர்,
அட்டுவத்தின் கீழாலே
அவரைக் கொடியோரத்தால் கடப்பெடுத்து வைத்திருக்கேன் கட்டாயம் நீ வா மச்சான், என்று நகைப்போல் கூறினுள் அவன். இவ்வளவு மாதங்களாய் அலைந்தது போல, இன்னும் அலேய அவன் விரும்பவில்லை. அவளிடம் உறுதியான மொழியைப்பெறும் நோக்கத்துடன், கதைப்பாய் சிரிப்பாய் மச்சி
கல்லுரிகி நெல் விளைய-நீ சிரிப்பாய் கொடுப்பாலே - உன்
சொல்லேயுமோ நம்புறது, என்று கேட்டான் இன்னும் அதிக வேளை உரையாடிக் கொண் டிருந்தால் யாரிடமாவது அகப்பட நேரிடுமென்ற பயத்தில், அன்று வீட்டில் ஒருவரும் இருக்கமாட்டார் என்பதை மட்டும் கூற விரும்பியவளாய்,
தாயாருமில்லே மச்சரன்
தகப்பன் வெடிகாட்ட அண்ணன் திணைக் காவல் - என் ஆணிமுத்தே வர மயிலார், என்று அன்பொழுகப் பாடிக் கொண்டே வீட்டுக்குப் போய் விட்டாள். மச்சரனும் உள்னம் குளிர்ந்து அகன் ருன்.
இலக்கியத்திற்கும் தரடோடிப்பாடலுக்கும் ஒரு பெரிய வேற்றுமை உண்டு இலக்கியங்கள் பெரும்பாலும் இலட்சிய வாழ்க்கையையே குறிக்கோளாக உடையன. அதர்மத்தின் அழிவையும், தர்மத்தின் வெற்றியையும் இலக்கியம் வளர்க்க வே ண்டும். இல்லா விட்டால் அத்தகைய இலக்கியத்தாற் பய னில்லை என்பது பழங்கொள்கை. இலட்சிய வாழ்க்கைக்கும் வாழ்க்கைக்குமுள்ன துரம் பெரிது. குணங்க

Page 31
34. வித்தியானந்தம்
ளுக்கெல்லாம் இருப்பிடமாகக் குற்றமே இல்லாதவளுகக் காவிய நாயகனைப் படைக்க வேண்டுமென்பது அலங்கார சாத்திர விதி. இப்படி வளர்ந்து வந்த இலக்கிய முயற்சிகளுக்கிடையே உலக இயற்கையையும், மனிதனுடைய குறைபாடுகளையும், சமூகத்தின் ஊழல்களையும் உள்ளவாறே சொல்லும் வழக்கமும் மக்களிடையே இருந்துதான் வந்திருக்கிறது. மனிதனுடைய பெருமைகளையும், நன்னுேக்கங்களையும் புலவர்கள் காவிய இலக்கியமாகப் புனை கிருர்கள். அதே நேரத்தில் அவனுடைய குற்றங்களே நாடோடிப் பாடல்கள் வெளிப்படுத்திக் காட்டுகின்றன. உண்மை வாழ்க்கை யின் ஓவியமே நாடோடி இலக்கிலும்.
இந்நாடோடிப்பாடல்கள் இஸ்லாமிய மக்களிடையே அவர் தம் வாழ்க்கையோடு ஒன்றுபட்டுப் பிரிக்க முடியாமல் இருக் கின்றன. அவர்கள் வாயிலே தவழும் நாடோடிப்பாடல்கள் பல் லாண்டுகளாக இவர்களிடையே பயின்று வருகின்றன. பொருள் நிறைந்து நெஞ்சையள்ளும் தன்மை வாய்ந்தனவாய் விளங்கும் இப்பாடல்கள், இஸ்லாமியரின் தாய்மொழி வளத்தையும் ஈடு பாட்டையும் உலகறிய எடுத்துக் காட்டும் சான்றுகளாக என்றும் விளங்கும்.
 

4ಣ್ಯೀ
கிறித்தவர் ஈழநாட்டிற்கு வந்ததின் பயணுகத் தமிழ் மொழி பல துறையில் விருத்தியடைந்தது. கிறித்தவர் ஈழத்திற்கு வரும்
வரை இலக்கியத் துறையிலேயே ஆக்க வேலைகள் நடைபெற்றன. இவர்கள் வந்ததன் பின்பே விஞ்ஞான நூல்கள், சிறந்த பதிப் புக்கள், அகராதிகள், வசன நூல்கள், கண்டுப் பிரசுரங்கள், பத் திரிகைகள், பிரசங்கங்கள் போன்ற துறைகளிலே தமிழ் மொழி ஓங்கி வளர்ந்தது. அச்சியந்திரத்தை நிறுவியதே இவர்கள் செய்த சிறந்த பேருபகாரமாகும். ஆயிரக்கணக்கான த மி ழ் நூல்களை அழகிய எழுத்துக்களில் மிகச் சுருங்கிய காலத்தில் வெளியிட்டு நாட்டின் பல இடங்களிலும் பரவும்படி செய்து நூல் கள் அழிந்து விடாதபடி காப்பதற்கு அச்சியந்நிரம் நிறுவப் பட்டது.
வட இலங்கையில் முதன் முதல் அச்சியந்திரத்தை நிறுவிக் இல்வி விருத்திக்கும் சமய விருத்திக்கும் ஏதுவாயுள்ன பல நூல்

Page 32
வித்தியானந்தம்
களே அச்சிட்டு வெளியிட்டவர் அமெரிக்கமிஷனரிமாரே. 1821ஆம் ஆண்டிற் கறெற் என்பவர் அமெரிக்காவிலிருந்து அச்சியந்திரம் ஒன்றுடன் வந்திறங்கினர். இவ்வச்சகம் 1834ஆம் ஆண்டு மாணிப்பாயில் நிறுவப்பட்டு, அவ்வாண்டிலிருந்து பல நூல்களை வெளியிடத் துணையாக அமைந்தது. இம் மிஷனரிமாரின் அடிப்படை நோக்கம் தமது சமயத்தைப் பரப்புவதாக இருந்த போதும், தமிழ் மொழியும் தமிழர் கல்வியும் இவர்கள் முயற்சி யாற் பயன் அடைந்தன. யாழ்ப்பாணத்தில் ஆங்கிலக் கல்வியை யும் தமிழ்க் கல்வியையும் உயரிய முறையிற் கற்பித்து வந்தவர் கள் இவர்களே. வேதநூல், பூகநூல். விலங்கியல்நூல், வான நூல் கணிதம் முதலியவற்றைத் தமிழில் மாணவருக்குக் கற்றுக் கொடுக்க முதன்முதல் முன்வந்தவர்கள் இவர்களே.
OtuOT LGG GO tT S S TTTa ttL LSLLTTT S TTOG SLS TlLL tLLLLLLL T ான நூல் எழு திய"ே:ே : åíŽ னரிமார் மேலே நாட்டு விஞ்ஞான நூல்களைத் தமிழில் அளித்த னர். இத்தொண்டில் முதலிடம் பெறுபவர் கிறீன் வைத்தியர். மாணிப்பாய் வைத்தியசாலையிலிருந்து வைத்தியக் கல்வி புகட்டி வந்த கிறீன் என்பவர், மாணவருக்குத் தமிழ் மூலம் கற்பிக்கும் நோக்கத்துடன் மருத்துவ நூல்கள் பலவற்றைத் தமிழில் பெயர்க் கத் தொடங்கினுர், முதன் முதல் கற்றர் என்பவர் எழுதிய உடற் கூறும் உடல் நலமும் என்னும் நூலை 1856 ஆம் ஆண்டு மொழிபெயர்த்து வெளியிட்டார். இவருடன் சேர்ந்து இவர் மான வர்கள் பலர் மொழிபெயர்ப்பு வேலையை நடத்தி வந்தனர். அவர் களுட் சாப்மன், டன்போத், எவண்டஸ் என் போர் குறிப்பிடற்
குரியர்.
டன் போத் மொழி பெயர்த்த இரணவைத்தியம், சாப்மன் மொழி பெயர்த்த அங்கா திபா தம், வில்லியம் போல் மொழி பெயர்த்த வைத்திய காரம். கிறீன் மொழிபெயர்த்த கெமிஸ்தம், சாப்மன் மொழிபெயர்த்த இந் து பதார்த்த சாரம் ஆகிய நூல்கள் முறையே 1867, 1872, 1872, 1875, 1884 ஆகிய ஆண்டுகளில் அச்சி
கருேல் விஸ்வநாதபிள்ளை என்பவர் வீசகணிதம் என்னும் நூலை 1855 ஆம் ஆண்டு எழுதி யாழ்ப்பாணத்திற் பதிப்பித்தார். வில்லியம் நெவின்ஸ் (சிதம்பரப்பின்ளை) நியாய இலக்கணம் என்னும் இருக்க சாத்திரநூல் ஒன்றினை 1850 ஆம் ஆண்டில் யாழ்ப் பாணத்தில் அச்சிட்டு வெளியிட்டனர். வானசாத்திரமி, சுகரணவா தம், உற்பாலனம் என்னும் நூல்களும் யாழ்ப்பாணத்தில் அச்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஈழத்திற் கிறித்தவரின் தமிழ்ப்பணி 3
சிடப்பட்டன. நிலக்கணக்கியல், அளவைநூல் முதலிய துறை களிலும் நூல்கள் வெளிவந்தன. 鷺
எனவே, தமிழில் விஞ்ஞானக் கல்வியை முதன்முதல் அளித் தவர் கிறித்தவரே. தமிழ் மாணவருக்கு உயர்தரக் கல்வியைத் தமிழ் மூலம் போதிக்கும் பணியில் முதல் ஈடுபட்டவர் இவர்களே. இற்றைக்கு 125 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மூலம் விஞ்ஞா னக் கல்வி புகட்டியும் அக்கல்விக்கு ஏற்ற நூல்களை வெளியிட் டுமீ இவர்கள் ஆற்றிய தொண்டு அக்காலச் சூழ்நிலை காரண மனக வேரூன்றவில்லை உத்தியோக மோகத்திலுைம் ஆங்கிலேய அரசாங்கத்தின் கல்வித் திட்டத்திகுலும் ஆங்கிலக் கல்வி மக்கள் மனதைப் பெரிதும் கவர்ந்தது. தமிழ் மூலம் உயர்தரக்கல்வி கற் கும் முறை குறைந்து கொண்டே சென்றது. விஞ்ஞான நூல்கள் கிறித்தவரால் இயற்றப்பட்டன என்ற காரணத்தினுலும் பிற் பட்ட காலத்திற் புறக்கணிக்கப்பட்டன.
தமிழ் மொழி விருத்திக்கு இன்றியமையாத இன்ஞெரு துறை யிலும் அமெரிக்க மிஷனரிமார் தொண்டாற்றினர். ஐரோப்பிய முறையிலே தமிழ்மொழிக்கு அகராதி ஆக்கும் பணியில் இறங்கி னர். 1833ஆம் ஆண்டு தமிழ் ஆங்கில அகராதி ஆக்கும் திட்டம் உருவாக்கப்பட்டு 1842ஆம் ஆண்டில் வண. லெவி ஸ்போல்டிங் என்பவர் யாழ்ப்பாண அகராதி எனவும் மானிப்பாய் அகராதி என வும் விளங்கும் அகராதியை வெளியிட்டனர். சொற்கள் அகரவரி சையாய் அமைந்த இந்நூல் 58,500 சொற்களேத் தன்னகத்தே கொண்டு விளங்கியது. சாமுவேல் கச்சிங்ஸ் வரிசைப்படுத்தி ஆக் கிய ஆங்கிலத் தமிழ்அகராதியை 1842ஆம் ஆண்டில் வின்ஸ்லோப் பாதிரியார் வெளியிட்டார். இதனையே 1852 ஆம் ஆண்டில் ஸ்போல் டிங் பாதிரியார் புதுக்கியமைத்து வெளியிட்டார்.
 ைநற்றின் மேற்பார்வையில் 1833ஆம் ஆண்டில் தொடங்கிய தமிழ் ஆங்கில அகராதியை 1862 இல் வின்ஸ்லோப் பாதிரியார் சென்னையில் அச்சிட்டு வெளியிட்டார். இம் முயற்சிகளைத் தொடர்ந்து வேறு பல அகராதிகள் வெளிவந்தன. ஆகவே, தமிழ் வளர்ச்சிக்குப் பயன்படக் கூடிய அகராதிகளே வெளியிட்டு உதவிய மிஷனரிமாருக்குத் தமிழ்ப் பேசும் மக்கள் பெரிதும் கடமைப்பட்டுள்ளனர். 鷺
அமெரிக்க மிஷனரிமாரைப் பின் பற்றிக் கத்சோலிக்காகம் இந் கடக்களும் யாழ்ப்பாணத்தில் அச்சகங்கள் நிறுவித் தமிழ் வளர்ச்சிக்கு உதவினர். அக்காலத்தில் யாழ்ப்பான மேற்றிராணி

Page 33
38 வித்தியானந்தம்
யாராய் இருந்த பொன்சீன் ஆண்டவர் அச்சியந்திரம் ஒன்றினை யாழ்ப்பாணத்தில் நிறுவினுர் அண்டுறு என்பவர் முயற்சியால் அர்ச் சூசை மாமுனிவரின் கத்தோலிக்க அச்சியந்திரம் என் னும் பெயருடன் 1871- ஆம் ஆண்டிலிருந்து இவ்வச்சகம் பயன் படுத்தப்பட்டது. அச்செழுத்து வார்த்தல், பூகோளப்படங்கள் இயற்றுதல் முதலியனவும் அங்கு தடைபெற்றன. பாடசாலைத் தமிழ் உறுப்புகளே மாணவர் அளவு பிரமானத்துடன் எழுதிப் பழகக் கூடிய ஐங்கோட்டமைப்பும் முதன் முதல் இவர்களால் இயற்றப்பட்டது. மாணவருக்குத் தேவையான பல பாடப் புத்தகங்கள் இவ்வச்சகத்தில் அச்சிடப்பட்டன.
கிறித்தவர் தமது சமயக் கருத்துக்களேப் பரப்பும் சமய நூல் களையும் கருவி நூல்களையும் வெளியிடவும் அச்சியந்திரங்களைப் பயன்படுத்தியதைக் கண்ட இந்துக்களும் அச்சியந்திரங்களை நிறுவிப் பல நூல்களே வெளியிட்டனர். ஆறுமுக நாவலரும் கிறித்தவரைப் பின்பற்றியே வித்திய நூபாலன யந்திரம் எனப் பெரிய அச்சியந்திரத்தை 1849 ஆம் ஆண்டு வண்ணுர்பண்ணையில் நிறுவி மாணவருக்குப் பயன்படக் கூடிய பல நூல்களே வெளி யிட்டார். இதற்குப்பின் அச்சியந்திரங்கள் பல இடங்களில் நிறு வப்பட்டு, தமிழ்மொழி வளர்ச்சிக்குக் காலாக இருந்தன.
நூல்களைப் பதிப்பிக்கும் முறையும் கிறித்தவரிடம் பெற்றதே அக்காலக் கிறித்தவப் பதிப்பாசிரியருட் குறிப்பிடற்குரியவர் ஈழத்துத் தாமோதரம்பிள்ளை. தமிழில் இன்று கிடைத்துள்ள மிகப் பழைய இலக்கண நூ லா கி ய தொல்காப்பியம் முழுவதையும் முதன் முதலாகப் பதிப்பித்த தனிச்சிறப்பு இவருக்கே உரியது. இறையர்ை அகப்பொருன் உரை, வீரசோழியம், இலக்கணவிளக் கம், கலித்தொகை, சூனா மணி முதலிய நூல்களை இவரே பதிப்பித் தார். கிறித்தவரைப் பின்பற்றிப் பல இந்துக்களும் நூ ல் களை ப் பதிப்பத்தனர்.
இவர்களுள் ஆறுமுகநாவலர் பதிப்பித்த நூல்கள் பெரிதும் பாராட்டப்பட்டன. மாணவருக்கும் பொது மக்களுக்கும் பயன் படக் கூடிய நூல்களே இவர் பதிப்பித்தார் நாவலர் பதிப்பு என் ருல் நல்ல பதிப்பு என்று பாராட்டுப் பெறும் அளவுக்கு இவர் நூல் ளைப் பதிப்பிக்க முன்வந்தமைக்குப் பாதிரிமாரே வழிகாட் டினரெனின் அது மிகையாகாது.
 

ஈழத்திற் கிறித்தவரின் தமிழ்ப்பணி
ஈழத்திலே தமிழிற் கண்டன நூல்களும் துண்டுப் பிரசுரங்க
ளும் வினு விடைகளும் வெளிவருவதற்குக் காலாக இருந்தவரும்
கிறித்தவரே. ஒல்லாந்தர் இலங்கையைக் கைப்பற்றிய போது
கத்தோலிக்க சமயத்தை அழிக்கப் பல முயற்சிகள் செய்தனர். இதனைக் கண்ட கத்தோலிக்க குருமார் ஒல்லாந்தர் சமயத்துக்கு மாருகப் பல கண்டன நூல்களே வெளியிட்டனர். அவற்றுள்
யக்கொமெ கொன்சல் வாஸ் என்பவர் எழுதிய வாத்தியாரும் குடி
யானவனும் தர்க்கித்துக் கொண்ட தர்க்கம், நவதர்க்கம், முசல் மான்வேதம், நாலு வேதம் என்பன முக்கியமானவை.
R பின்னர் அமெரிக்க மிஷனரிமாருக்கும் நாவலருக்கும் ஏற் பட்ட சமயப்போரில் இத்தகைய நூல்கள் வெளிவந்தன. பாதிரி மார் போன்று ஆறுமுகநாவலரும் தமது அச்சியந்திரமீ மூலம் கிறித்து மதக் கண்டன நூல்களையும் துண்டுப் பிரசுரங்களையும் வெளியிட்டார். பாதிரிமார் முதலாம் வேதவிஞவிடை, இரண் டாம் வேதவினு விடை, எழுதிப் பரப்புவதைக் கண்டு தரமும் முதலாம் சைவவிஞவிடை, இரண்டாம் சைவ விகுவிடை முதலி யவற்றை மாணவருக்கு இயற்றினர். 嫣
இத்தகைய நூல்கள் வெளிவந்ததன் பயனுகத் தமிழ் உரை நடை இலக்கியமும் விருத்தியடைந்தது. ஈழத்திலே தமிழ் மொழியில் தனி வசன நூல்களை உண்டாக்கியவரும் கிறித்தவரே கிறித்தவர் வெளியிட்ட மதச் சார்பான வசன நூல்களைக் கண்ட இந்துக்களும் இந்துமதச் சார்பான நூல்களையும் புராண இதி காசங்களையும் வசனமாக எழுதி வெளியிட்டனர். கிறித்த சம யத்தைக் கண்டித்தும் நூல்களை வெளியிட்டனர். இ வ. ற் றி ன் பயனுக வசன நடை ஈழத்திலே வேரூன்றி வளரத் தொடங்கி àಟ್ರಿ!
செய்தித்தான், கிழமைப் பத்திரிகை, மாதப் பத்திரிகை முத லிய வெளியீடுகளும் கிறித்தவத் தெ இண்டிஞலேயே முதன்முதல் ஈழத்திலே தோன்றின. உதயதாரகை எனும் பத்திரிகையே யாழ்ப்பாணத்தில் முதன் முதல் வெளிவந்த பத்திரிகையாகும். 1841ஆம் ஆண்டில் அமெரிக்க மிஷன் சார்பாகத் தொடங்கிய இப் பத்திரிகையின் ஆங்கிலப் பகுதிக்கு என்றி மாட்டீன் என்பவரும் த மி ழ் ப் பகு தி க்கு சுெத் டேசன் என்பவ தம் முதன் முதல் பத்திராசிரியரசக இருந்தனர். ஈலியர்நேசன் மரணுக் கரின் பொருட்டு 1859ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணத்தில் நடை பெற்று வந்தது. ஈழத்துக் கத்தோலிக்கர் சீடர்பாகக் கத்தோ

Page 34
வித்தியானந்தம்
லிக்கப் பாதுகாவலன் என்னும் மாதம் இருமுறை வெளியீடு பொன்சீன் என்பவரால் 1876 இல் தொடங்கப்பட்டது. 1877இல் இலங்கைக் கத்தோலிக்கச் சபையார் இதனை ஏற்று நடத்தி னர். 1878 முதல் இது கிழம்ைப் பத்திரிகையாக மாற்றப்பட் டது. இப் பத்திரிகைகளேத் தொடர்ந்து பல தமிழ்ப் பத்திரிகை கள் ஈழத்தில் வெளிவந்துள்னன.
தமிழில் வழங்கும் பழமொழிகளைத் திரட்டி வசன வடிவில் முதன் முதல் வெளியிட்டவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பேர் சிவல் பாதிரியாரே. முன்பு சமணர் வெண்பா யாப்பில் பழ மொழி நானூறு என்னும் நூலை இயற்றிப் போந்தனர், அதற் குப் பின் வெளிவந்த நூல் பேர்சிவல் பாதிரியார் யாழ்ப்பாணத் தில் 1843ஆம் ஆண்டில் திரட்டி வெளியிட்டதாகும்.
முதலாவது தமிழ் நாவலெனக் கொள்ளப்படும் பிரதாப முத லியார் சரித்திரத்தை எழுதிய வேதநாயகம்பிள்ளையைப் போல, ஈழத்தின் முதலாவது தமிழ் நாவலை எழுதிய இன்னுசித்தம்பி யும் கத்தோலிக்கராவர். கிறித்தவப் பின்னணி கொண்டு இவ ரால் எழுதப்பட்ட 'ஊசோன் பாலந்தை கதை" என்பதே ஈழத் தின் முதல் தமிழ் நாவலாகும். திருகோணமலையைச் சேர்ந்த இவ் வாசிரியர் எழுதிய நூல் 1891ஆம் ஆண்டில் எஸ். தம்பிமுத்துப் பிள்ளை அவர்களால் பதிப்பிக்கப்பட்ட்து. இவரே மேக வர்ணன் தாமோதரன், இரத்தின சிங்கம், என்னும் நூல்களைப் பதிப்பித் தார். தா மும் இரு நூல்களே எழுதியுள்ளனர். எனவே, ஈழத்தில் நாவலிலக்கியத் துறையில் முதலிற் கவனத்தைச் செலுத்தியவர் கிறித்தவர்கள். அவர்களேப் பி ன் பற் றி யே பிற்காலத்திற் சிருஷ்டி இலக்கியத்தை ஈழத்திற் பலர் படைத்தனர்.
தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களுக்கு முன்னுேடியாக அமைந்துள்ள தமிழ் புளூற்ருக் என்னும் நூல் தமிழ்ப் புலவர் களைப் பற்றிக் கூறும் சிறந்த நூலாகும். இதனைச் சைமன் காசிச்சிட்டி 1859ஆம் ஆண்டில் வெளியிட்டார். தமிழரிடையே சாதிமரபுகள், பழக்கவழக்கங்கள், இலக்கியம் என்ற வரலாற் றுக் கண்ணுேட்டமுள்ள நூலை எழுதியவரும் இவரே. சதாசிவக் பிள்ளை (ஆர்னுேல்டு) அவர்கள் 1886 இல் பாவலர் சரித்திர தீப கம் எனப் பெயரிய நூலே வெளியிட்டனர். இந்நூல்களே பிற் இாலத்தில் எழுந்த தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களுக்கு வழிகாட்டிகளாக வினங்கின.
 

ஈழத்திற் கிறித்தவரின் தமிழ்ப்பணி
பழங்காலத்து இலக்கண நூல்கள் வடமொழிப் பண்பைப் பின்பற்றிச் சூத்திரங்களால் இயற்றப்பட்டவை. எனவே, யாவ
கிறித்தவராற் பல நாடக நூல்களும் ஈழத்தில் இயற்றப் பெற்றன. பூதத்தம்பி நாடகம், அலேசு நாடகம், என்றிக்கு எம்பிறதேர் நாடகம், யோசேப்பு டிருமா, மூவிராசாக்கள் டி ருமா,
ஈழத்திலே த மி ழ் மொழியைப் பிரசங்கத்திற்குப் பயன்
படுத்தி அதற்கேற்ற மொழியாக வளர்த்த பெருமையும் கிறித்த வருக்கே உரியது. சைவரைக் கிறித்தவராக மதம் மாற்றவும் கிறித்த சமய உண்மைகளை யாவரும் எளிதில் அறிந்து கொள் வதற்கும் கிறித்தவப் பாதிரிமார் தெளிவான முறையிற் பிரசங் கங்கள் செய்தனர். இவர்களைப் பின்பற்றியே ஆறுமுகநாவவர் அவர்களும் சைவ சமயத்தைப் பற்றியும் சமய சூரவரைப் பற்றி யும் விரிவுரைகள் ஆற்றினர் நாவலர் என்ற பட்டம் இவர் பெறு வதற்கு இவ்விரிவுரைகள்ே அடிப்படையாக இருந்தன. புறம் பான பொருள் பற்றி விரிவுரை நிகழ்த்தக் கூடிய நிலையைத் தமிழ் மொழி கிறித்தவராலேயே பெற்றது.
பல வகையிலே தேங்கிக் கிடந்த தமிழிலக்கிய உலகிலே புதுமை வேட்கையையும் திறய்ைவு நோக்கினேயும், பரந்த மனப் பான்மையினையும் புகுததிப் புது யுகத்தின் தலைவாயிலில் எம் மைக் கொண்டு வந்து நிறுத்தியவர் அவரே.
இவ்வாறு தமிழ் மொழி வளர்ச்சிக்கு வேண்டிய பல துறை களில் ஈழத்துக் கிறித்தவ பெரியார் தொண்டாற்றியிருக்கின் றனர் இத்தொண்டின் பயனுகவே, தமிழ் மொழி பல புதிய அம்சங்களைப் பெற்று இன்று பொலிவுடன் விளங்குகின்றது.

Page 35
தமிழ் மொழியின் முன்னேற்றத்திற்கு இன்றியமையாத பல துறைகளில் ஈழநாட்டுப் பெரியார் தமிழ் நாட்டவர்க்கு வழிகாட்டியிருக்கின்றனர். தமிழ்நாடு தமிழின் உயர்வினை மறந்த காலங்களில் அதனை நினைவூட்ட ஈழத்திருந்தே அறி ஞர் தோன்றினர். கடைச்சங்கத்தில் தமிழ் வளர்த்ததும், அதன் பின்பு சங்கம் நிறுவியும், கவிச்சுவை நிரம்பிய இலக்கியங்களை யாத்தும் தொண்டாற்றியிருக்கின்றனர் தமிழர். இவர்களுட் குறிப்பிடத்தக்கவர் ஈழத்துப் பூதந்தேவனுர், பரராசசேகரன், செகராசசேகரன். சின்னத்தம்பிப் புலவர் சேஞ திராய முதலி யார், நா. கதிரைவேற்பிள்ளை, உடுப்பிட்டிச் சிவசல்புப் புலவர், நவாலியூர் சோமசுந்தரப்புலவர் முதலியோர்.
கடைச்சங்க காலத்திலே ஈழநாட்டிலிருந்து தமிழகத்திற்குச் சென்று அங்கு நிறுவப்பட்ட சங்கங்களில் நூல்கள் அரங்கேற் றியவருள் ஒருவர் ஈழத்துப் பூதந்தேவஞர். இவர் செய்யுட் களே தற்றிணை, குறுந்தொகை, அகநானூறு என்னும் மூன்று
 

தொகை நூல்களிற் காணலாம். இச்செய்யுட்களிலிருந்து இவர் அகப்பொருட்டுறைகளே அமைத்துச் செய்யுள் பாடுவதில் வல் லுநர் என்பது கெரிகின்றது. பன்னிரண்டாம் நூற்றண்டில் யாழ் நகரிற் சங்கமொன்று நிறுவித் தமிழ் வளர்த்த ஆரியச்
ஈழத்தில் தமிழ் இலக்கியம் 4.3
சக்கரவர்த்திகள் மரபிலே தோன்றிய பரராசசேகரன், செகராச சேகரன், என்போர், தம்பெயரால் முறையே பரராசசேகரம், செகராசசேகரம் என்னும் நூல்களே இயற்றினர். பரராச சேகரனின் மருகர் அரசகேசரி, மகாகவி காளிதாசன் குரீஇ தத்திற் பாடிய இரகுவமிசமீ என்னும் காவியத்தைத் தமிழிற் பாடிஞர்.
மருதப்பக் குறவஞ்சி என்னும் நூலைப் பாடியவர், ஒல்
லாந்தர் காலத்து வாழ்ந்த டிைெல்லோ என்னும் தமிழ்ப் புல
வர். தேசவழமை என்னுமீ நியாயப் பிரமான நூலைத் திருக்தி அமைத்த வில்லவராய முதலியாரின் மகன் சின்னத்தம்பிப் புலவர். இவர் இளமையிலேயே கலேவாணியின் அருள் சிறக்கப் பெற்று, மறைசையந்தாதி, கல்வனேயந்தாதி, கரவைவேலன் கோவை, பாண் விநாயகர்பள்ளுப் போன்ற நூல்கள் இயற்றி னர். வேதாரணியத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் மீது பாடிய அந்தாதியே மறைசை அந்தாதி. சண்டிருப்பாயிலுள்ள கல்வளை என்னும் ஊரிற் குடிகொண்டுள்ள விநாயகர் மீது
பாடப்பட்ட அந்தசதி கல்வளை அந்தாதி. கரவை வேலன்
கேனவை யாழ்ப்பாணத்துக் கரவெட்டியிற் செல்வராய்த் திகழ்ந்த வேலாயுதம்பிள் இனமேற் பாடப்பட்ட கோவைப் பிரபந்தமாகும். பருளையிற் கோயில் கொண்ட விநாயகப் பெருமான் மேற் பாடப்பட்ட பள்ளுப் பிரபந்தமே பருளே விநாயகர் பள்ளு.
ஆறுமுகநாவலரின் ஆசிரியர் இருபாலேயைச் சேர்ந்த
சேகுதிய முதலியார் புராண விரிவுரைகள் செய்து பிற
ருக்கு வழிகாட்டிய பெருமை இவருக்குரியது. நல்லூர் கந்த சாமிக் கடவுள் மீது நல்லை வெண்பா, நல்லே அந்தாதி, தல்லேக் குறவஞ்சி முதலிய பிரபந்தங்களும், நீரா வியடிப் பிள்ளையார் மீது ஒரு கலிவெண்பாவும் பல தனிக் கவிதைகளும் இவர் பாடியுன்னார் மாவிட்டபுரம் சுப்பிரமணியக் கடவுள் மீ இம் ஊஞ்சற் பதிகம் முதலியனவும், வேறு பல தலங்கள் மீது ஊஞ்
சற் பதிகங்களும் பாடியவர் இவரே. மேலும் மானிப்பாயில்
அச்சிடப்பட்ட தமிழ் அகராதி தொகுத்தபோது முதல்வரா யிருந்து இவரே தொகுத்தனர்.

Page 36
44. வித்தியானந்தம்
வடமொழியிலும் தமிழ் மொழியிலும் வல்லுநராக விளங் கியவர் மேலப்புலோலி நா. க திரைவேற்பிள்ளை. சென்னையிற் பல ஆண்டுகள் வாழ்ந்து, அங்கு பல இடங்களுக்குச் சென்று பிரசங்கங்கள் செய்து, தமக்கு ஈடாகப் பேச வல்லார் இல்லாது இவர் விளங்கினுர், 'மாயாவாத தும்ச கோளரி" என்ற பட் டத்தைப் பெற்ற இவர், ஆரணி நகர் சமத்தான வித்துவானுக வும் இருந்தார் இவரியற்றிய நூல்கள் கூர்மபுராண விரிவுரை, பழனித்தல புராணவுரை, சைவசந்திரிகை, சைவசித்தாந்தச் சுருக்கம், சிவாலய மகோற்சவ விளக்கம், சுப்பிரமணிய பராக் கிரமம் என்பன ஒரு தமிழ் அகராதியையும் தொகுத்து வெளி
ஈழத்திலே பிரபந்தம் பாடியவருள் அதிகமான பிரபந்தங் கள் பாடியவர் உடுப்பிட்டிச் சிவசமீபுப் புலவர். இராமநாத புரம் இரவிகுலமுத்து, விஜய இரகுநாத பாஸ்கர சேதுபதி மகா ராசாவின் மீது கல்லனடக் கலித்துறையும், நான்மணி மாலையும், இரட்டை மணிமாலேயும் வேறு தனிக்கவிகளும் பாடினர். பாண்டித் துரைத் தேவர் மீதும் ஒரு நான்மணி மாலை பாடினர். மேலும் இந்தியாவிலும் ஈழத்திலுமுள்ள கோயில்கள் சிலவற் றின் மீதும் வேறு பிரபுக்கள் மீதும் பிரபந்தங்கள் பாடியுள் ளார். இவர் இயற்றிய பிரபந்தங்கள் ஏறக்குறைய அறுபது இருக்கும். பாடும் திறமை நோக்கி இவருக்குப் புலவர் என்னும் பெயரை வழங்கினர்.
செந்தமிழ்த் தாயைத் தெய்வக்கோலத்திற் கண்டு உள்ளம் உருகப் பாடிய பெருமை ந பாலியூர்ச் சோமசுந்தரப் புலவர்க்கு உரியது. பதினைந்தாம் வயதிற் பாடத் தொடங்கிய இப்புலவர் பதினேயாயிரம் பாக்கள் வரை பாடியுன்னார். இவர் இயற்றிய நூல்களில் இப்பொழுது அச்சிடப்பட்டு வெளியாகியுள்ள நூல் கள் உயிரினங் குமரன் நாடகம், கந்தவனக் கடவை நான்மணி மனலே, கந்தப் புராண நுண்பொருள் விணக்கம், நல்லே முருகன் திருப்புகழ், நல்லையந்தாதி, சுகாதாரக் குமி, மருதடி விநாய கரீ பாமாலே, கந்தவனநாதர் திருப்பள்ளியெழுச்சி, கல்லுண் டாய் வைரவர் பதிகம், செந்தமிழ்ச் செல்வி ஆற்றுப்படை, சிறு வர் செந்தமிழ், நாமகள் புகழ் மாலே, இலங்கை வளம், தால விலாசம் முதலியன இவற்றுள் இலங்கை வளமும் தாலவிலாச ழும் சிறந்த இலக்கியப் படைப்புகளாகக் கருதப்படுகின்றன.
புகழ் மாலே செந் தமிழ்த் தாயை த்தேடி அழைத்து உன் ரேம் குழைந்து பாடிய நூல், சிறுவர் செந்தமிழ்க் குழந்தை உள்ளத்துடன் எழுதப்பட்ட இலக்கியம்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஈழத்தில் தமிழ் இலக்கியம் 45
ஈழத்திலே நாடக இலக்கியம் எக்காலத்தில் முதன் முதலா கத் தோன்றியதென வரையறுத்துக் கூற இயலாது கிடைத் துள்ள நாடகங்களைக் கொண்டு பதினேழாம் நூற்றண்டுக்குப் பின்பே இவை தோன்றியிருக்கக் கூடுமெனக் கொள்ளலாம். இதற்கு முன்னரும் இருந்திருக்கக் கூடும்; ஆனல் நூல்களோ சான்றுகளோ கிடைத்தில ஈழத்தில் நாடகங்களே முதன்முதல் இயற்றியவர் கணபதி ஐயர் எனச் சிலர் கொள்வர். இவர் இயற்றிய நாடகங்கள் நான்கு அவையாவன: வாளபிமன் நாட கம், அலங்காரரூப நாடகம், மலைய கந்தினி நாடகம், அதி ரூபவதி நாடகம். இவற்றுள் வாளபிமன் நாடகம் அர்ச்சுனர் மகன் அபிமன்யு, பலராமன் மகன் சுந்தரியை மணம் முடித்த தை விவரித்துக் கூறும்.
ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தை ஆண்ட இறுதிக் காலங்கவி
லிருந்தவர் இணுவிற் சின்னத்தம்பி என்பவர் இவர் கோயிற் சட்டம்பியாய் இருந்து தொண்டி நாடகம், அநிருத்தன் நாடகம், கோவலன் நாடகம், என்னும் மூன்று நாடகங்களைப் பாடியுள் ளார். இவற்றுள் நொண்டி நாடகம் பெரிதும் போற்றப்பட்டு வந்தது. அதிருத்தன் கிருட்டினரின் பேரன்; கமனின் மகன்; பானுசுரன் மகள் உஷை என்பவள் இவனைக் காதலித்து அத ஞல் அடையும் இன்னல்களை அநிருத்தன் நாடகம் கூறும் இக் கதை தென்மோடி நாடகமாகவே எழுதப்பட்டிருக்கிறது. வட்டுக் கோட்டையிற் பிறந்து அச்சுவேலியில் வாழ்ந்த விசுவநாத உடையார் மகன் இன்னு சித்தம்பி பாடிய வசை நாடகம் ஆறு முகச் செட்டியார் நாடகம் ஆகும். வண்ணுர்பண்ணையிலிருந்த தனவாஞன ஆறுமுகச் செட்டியாரைப் பற்றி எழுந்த இந் நாடகம் குத்தகைக்காரர் கொடுமையை எடுத்துக் காட்டும். பத்தொன்பதாம் நூற்ருண்டின் தொடக்கத்தில் வண்ணுர்பண் ணைச் சிதம்பர உடையார் மகன் இராமசுந்தரம் என்பவர் எழு திய து விசயதர்ம நாடகம். இதில் மாந்தையைப் பற்றிப் பல செய்திகள் கூறப்படுகின்றன.
இராம நாடகம், தருமபுத்திர நாடகம் என்ற பெருமை மிக்க இரு நாடகங்களேயும் இயற்றியவர் மானிப்பாயைச் சேர்ந்த சுவாமிநாதர் நாடக சுவாமிநாதர் என்ற பெயரும் இவருக்குண்டு இராமாயணத்திலுள்ள இராமரது வரலாற்றை யும், பாரதத்திலுள்ள தருமபுத்திரராசனது வரலாற்றையும் இவர் இந்த நூல்களில் நாடகமாக அமைக் துள்ளார். இராமநாட இத்
தைப்பதிப்பித்தவர் சண்டிலிப்பாயைச்சேர்ந்த முருகேசு உபாத்தி

Page 37
46。 வித்தியானந்தம்
யாய தாமபுக்கிர நாடக கீதை அச்சுவரகனமீ ஏற்றியவர் அச்சுவேலி தம்பிமுத்துப் புலவர்.
பூகக் கரீபி விலாச கைப் பாடியவர் ஜாகோட்டக் கச் YS t t TtL S S TT Tu u ul ZY uuuuu S SS T L S S S uuuuu S SZB Ttu LYSL LZ S TuS MMLLLLSSSS YY TLu Y கொடர்பான ககையை அடிப்படையாகக் கொண்டது. பூகக் * 府*L* * பெயரிய இன்னொரு நாடக மீ பரிமளம் என்ற பல வரால் 183இல் பாடப்பட்ட காகவும் கறவர். இது எவ்வாயினு, பூகக் கமீபி விலாசமீ மகன் முகலாக 1888-ம் ஆண்டில் ஆர்சேற்றப்பெற்ற இ. தெல்லிப்பமைவாசி பார் குமார குலசிங்காத தவியாரால் இயற்றப்பட்ட து பகிவிாகை விலாசமீ என் னும் நாடகம், 1889 ஆம் ஆண்டளவில் அரங்கேற்றப்பட்ட இந் நாடகக்கை 1909 ஆம் ஆண்டில் சுகேச நாட்டிய இச்சியந்திர சர்லேயில் சுகேச நாட்டியப் பத்திரிகை ஆசிரியர் திரு க. வேலுப் பின்ளே அவர்கள் பதிப்பித்தார்.
மதுரைக் கமிமீச்சங்க அகராதி இயற்றிக்கந்த உவைமன் கதிரவேற்பிள்ளையின் தந்தையரான குமாரசாமி (மதலியார் பாடி மது இந்திரகுமார நாடகமீ. அர்ச்சுனன் சுபத்திரையை மனம் முடித்த பாரகக் கதையே நாடகமாக அமைந்துள்ளது இந்நா பகம். முதன் முதல் அச்சுவேலியிலும் பின்னர் ஊர்காவற்றுறை யிலும் ஆடப்பட்டது. சொல் நயம், பொருள் நயம் மிக்க பாடல் களைக் கொண்டது. இ னை அச்சேற்றியவர் அச்சுவேலித் தம்பி முக்கப் புலவர். தம்பிழக்குப்பிள்ளை தாமும் பல நாடகங்களை இயற்றியுள்ளார். பல நாடகங்கனைப் பழக்கியும் உள்ளார். இவர் இயற்றிய நாடகங்கள் எஸ் தாக்கியார் நாடகம், எஸ்தாக்கியார் சபா, ஞான செளந்கரி நவரச சபா, சந்தியே குமையோர் சகாய சபா, அலசு சரித் தினசபா, சங்கிலி ஜானகன் டிறமா, யோசேப்பு டிருமா, தாமரத நாடகம் என்பன. இவர் புதுக்கியும், திருத்தியும் வெளியிட்ட நாடகங்கள் பல அவை வேதசகாயம்பிள்ளை நாடகம் சுவீன கன்னிசபா, பிலோமிஞ கன்னி டிருமா , வரப்பிரகாசன், நாடகம், ஆட்டு வணிகன் நாடகம், ஞானதச்சன் நாடகம், தரும புத்திர நாடகம், இந்திரகுமார நாடகம் முதலியன.
இவை போன்று இன்னும் பல நாடகங்கள் நாட்டுக் கூத்து முறையில் எழுதப்பட்டன. அவற்றுள் தியாகராசையரின் சாவித் திரி நாடகம், க கிராமர் கனகசபை எழுதிய நற்குணன், வட்டுக் கோட்டை க, சிதம்பரநாதன் எழுதிய மனையாட்சி வினைமாட்சி, ஞானச் சகோதரர் யோன் மேரி எழுதிய புனித சீலி, சுகுணவனச ஆன், கனவிற் கண்ட மாளிகை முதலியன குறிப்பிடத்தக்கவை:
 

ஈழத்தில் தமிழ் இலக்கியம் 47
வசனமும் பாட்டும் விரவி ஆங்கில முறைப்படி செய்யப்பட்ட டிருமா நாடகங்களில் ஆரோக்கியம் டியஸ் விதானே எழுதிய ஆரோக்கியநாதர் டிருமா, பூலோகசிங்கம் எழுதிய வர்த்தகன் டிருமா, இன்னுசிமுதகு எழுதிய மூவிராசாக்கன் டிருமா முதலி
பன அடங்கும்.
விலாசங்களுள் இராமலிங்கம் பிள்ளை எழுதிய மாணிக்க வாச கர் விலாசம், நளச் சக்கரவர்த்தி விலாசம்,ஏரம்பையர் எழுதிய மிரு காவதி விலாசம், தா. சின்னத்தம்பி எழுதிய மதனவல்லி வலாசம், கொடிகாமம் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை எழுதிய அரிச்சந்திர விலாசம், ஆனைக்கோட்டை வை. இராமலிங்கம் எழுதிய தமயந்தி விலாசம், அளவெட்டி கணபதிப்பிள்ளை எழுதிய மதன காம விலாசம், மானிப்பாய் சொர்ணலிங்கம் எழுதிய நல்லதங்காள் விலாசம் முதலியன குறிப்பிடத்தக்கன.
வசன நாடகங்களும் பல ஈழத்துத் தமிழரால் எழுதப்பட்டன அசோகமாலாவும் நவமணியும் மு. இராமலிங்கம் எழுதியவை இடாககுத்தர் சின்னேயா அரியநாயகம், சிவானந்த முதலியார் பின்ளே ததாச்சி நாடகம், காமாளே நுளம்பு நாடகம் முதலிய நூல் களை இயற்றினர். அவனுவதி அல்லது உபகாரியான உருவச் சிலை சா. வை. மு. விசுவரத்தினம் என்பவரால் எழுதப்பட்டது. பொன் ளுலே கிருஷ்ணபிள்ளை கண்ணகி தேவி, கற்பகத்தரு நாடகம், மாருதப் புரவீகவல்லி என்னும் நாடகங்களை இயற்றினர் கண்டி சு. செல்வநாயகம் காதலின் வெற்றி கமலகுண்டலம் என்னும் நாடகங்களே வெளியிட்டார். இணுவில் சி. ஆறுமுகதாசன் எழுதிய நாடகங்கள் திருநீலகண்டநாயஞர், பக்த சக்குபாய், மாமனுக வந்து வழக்குரைத்த படலம் முதலியன நமசிவாயம் அல்லது நான் யார் என்பது மட்டுவில் க. இராமலிங்கம் அவர்களாலும், நல்லதங்காள் மானிப்பாய் சொர்ணலிங்கம் அவர்களாலும், பளை இரணசன் நாடகம் S.D.தம்பு அவர்களாலும் இயற்றப்பட்டவை J, S, ஆழ்வாப்பிள்ளை என்பவர் திருஅவதாரம், ஊதாரி, இளைய மகன் பக்த யோபு, அக்கினி மூர்த்திகள், கண்டியரசன் நாடகம், ஒட்டக முனிவர் முதலிய நாடகங்களே எழுதினர்
பேச்சு வழக்குத் தமிழில் நாடகங்களை எழுதிப் பிறருக்கு வழி காட்டிய பெருமை பருத்தித்துறையைச் சேர்ந்த பேராசிரியர் க. கணபதிப்பிள்ளே அவர்களுக்கு உரியது இவர் எழுதிய உடையார் ಸ್ಥಿ முருகன் திருகுதாளம், கண்ணன் கடத்து, நாட்டவன்
நகர வாழ்க்கை என்னும் நான்கும் நானுட கம், என்னும் பெயரு டனும், பொருனோ பொருள், தவருண எண்ணம் என்னும் இரு

Page 38
48 - வித்தியானந்தம்
நாடகங்கள் இரு நாடகம் என்னும் பெயரிலும் வெளிவந்துள்ளன: சுந்தரம் எங்கே, துரோகிகள் என்னும் நாடகங்கள் இன்னும் அச்சில் வரவில்லை. இந் நாடகங்கள் யாவும் இலங்கைப் பல்க லேக்கழக நாடக அரங்கிலும் வேறு இடங்களிலும் நடிக்கப்பட்டுப் புகழ் பெற்றுள்ளன. மாணிக்கமாலை என்னும் நூல் வசனமும் செய்யுளும் விரவ எழுதப்பட்ட நாடகம், யாழ்ப்பாணத்து அர சன் சங்கிலியின் வரலாற்றையும் இவர் நாடகமாக அமைத்துள் ளனர். இது உயர்ந்த செந்தமிழ் நடையில் யாக்கப்பட்டது.
ஈழத்துத் தமிழ்ப் பெரியார் பலர் பழைய இலக்கண நூல் களேப் பதித்தும், அவற்றிற்கு உரையெழுதியும், புதிய இலக் கண நூல்கள் எழுதியும் சிறந்த தொண்டாற்றியிருக்கின்ற னர். தமிழ் மொழியின் சீர் குலேயாமல் இருப்பதற்குத் தமிழ் இலக்கண நூல்கள் சிலவற்றை அச்சு வாகன மேற்றி அவற்றை மக்களுக்குப் பயன்படும் வண்ண்ம் செய்தவருள் தலே சிறந்த வர் சி. வை. தாமோதரம்பிள்ளை இலக்கண நூல்களைப் பொது மக்கள் கற்கமாட்டார். அந் நூல்கள் விலை போவதும் மிகக் குறைவு என்ருலும் தமிழ் மேல் உள்ள பற்றினுல் இவர் அச் சிடப் பெருத அருமையான பழந் தமிழ் நூல்கள் பலவற்றைப் பனையோலைச் சுவடிகள் கொண்டு பரிசோதித்து வெளியிட் டார். தமிழின் தொன்மைக்கும், செம்மைக்கும் ஒரு தனிச் சான்ருக நிற்பது தொல்காப்பியம். இதல் நச்சிஞர்க்கினியர் உரையெழுதிய எழுத்ததிகாரத்தையும், ஐந்தியல் நச்சிஞர்க் கினியர் உரையையும் ஏனைய பேராசிரியர் உரையுமாயுள்ள பொருளதிகாரத்தையும் இவர் பதிப்பித்தார். ஆறுமுகநாவல ராற் பரிசோதிக்கப்பட்ட சொல்லதிகாரம் சே ஞ வ  ைர ய ர் உரையையும் ப தி ப் பித் தா ரீ தொல்காப்பியம் முழுவதை யும் முதலிற் பதிப்பித்த தனிச் சிறப்பு இவருக்கே உரியது பழங்காலத் தமிழ் உரைநடைக்கு ஒர் எடுத்துக்காட்டாக உள்ள இறையனுர் அகப் பொருள் உரையும் இவர் பதிப்பித் ததே. இடைக்கால இலக்கியத்திற்கு இலக்கணம் என்று கருதப் படும் வீரசோழியத்தையும் இவரே பதிப்பித்தார். புதுக்கோட் டையில் நீதிபதியாக இருந்தபோது இவர் அச்சிட்ட இலக்கண விணக்கமீ குட்டித் தொல்காப்பியம் எனக் கற்றறிந்தோர் போற்றுதற்குரிய ஏற்றம் வாய்ந்தது.
இலக்கண நூற்பதிப்பாசிரியருள் அடுத்தபடியாக குறிப் பிடத்தக்கவர் யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர்.

ஈழத்தில் தமிழ் இலக்கியம் 49。
தொல்காப்பியம் சேனுவரையர் உரை, இலக்கணக் கொத்து, தொல்காப்பிய சூத்திர விருத்தி, பிரயோக விவேகம், நன் னுளில் விருத்தியுரை முதலியன இவர் பதிப்பித்த இலக்கண நூல்கள் இவர் பேரால் வழங்கும் நன்னூற் காண்டிகையுரை இன்று கற்ருேரால் போற்றப்பட்டு வழக்கிலிருந்து வருகின்றது. நாவலர் பதிப்பு என்ருலேயே நல்ல பதிப்பு என்று தமிழ் நாடு முழுவதும் கூறும் பெருமை வாய்ந்தவர் இப் பெரியார். திரு
கோணமலையைச் சேர்ந்த தி. த. கனகசுந்தரம்பின்ளே அவர்க
ளால் ஏட்டுப் பிரதிகள் பல கொண்டு ஆராய்ந்து சூத்திரங்கள் சில திருத்தப்பட்டு உரையிலுள்ள உதாரணங்களுக்கு இடங் காட்டப் பட்டுள்ள தொல் காப்பியம் எழுத்ததிகாரம் நச்சிஞர்க்
கினியர் உரையும் சொல்லதிகாரம் சேஞவரையர் உரையும்
சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகத்தனரால் வெளியிடப்பட் டுள்ளன. சுன்னுகம் அ. குமாரசாமிப் புலவரோடு சேர்ந்து நம் பியகப் பொருளுக்கு ஒர் உரையும் இவர் எழுதி வெளியிட்டனர்.
புலோலியைச் சேர்ந்த வ. குமாரசாமிப் புலவர் "இலக்
கணக்கொட்டர் எனப்பட்டம் பெற்றவர். இருவரும் நன்னூற் காண்டிகை உரையைத் திருத்தி அச்சிட்டனர். யாப்பிலக் கணம் கூறும் யாப்பருங்கலக்காரிகையைப் பதிப்பித்தவர்
உடுப்பிட்டிச் சிவசமீபுப் புலவர். தமிழ் வாணருள் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாது விளங்கும் சி. கணேசையர்
தொல்காப்பியம் முழுவதையும் தனது விளக்கவுரைக் குறிப் புக்களுடன் எழுதித் தமிழ் அன்னைக்குத் தொண்டாற்றியுள் ளார்.
இலக்கண நூல்களைப் பரிசோதிக் துப் பதிப்பதோடு நில்
லாது இலக்கண நூல்களுல் எழுதிஞர் ஈழத்துப் பெரியார்கள். பழங்காலத்தில் எழுதப்பட்ட இலக்கண நூல்கள் வட மொழிப் பண்பினைப் பின்பற்றிச் சூத்திரங்களால் இயற்றப்பட்டவை.
எனவே, யாவரும் எளிதில் கற்றறிவதற்கு ஏற்ற உரைநடை
யில் இலக்கண நூல் எழுத முன்வந்தார் ஆறுமுகநாவலர். இவர் எழுதிய இலக்கணச் சுருக்கம் மாணவரிடையே பெரிதும்
பயின்று வருகின்றது. இலக்கண விஞ விடையும் இவரால் இயற்றப்பட்ட நூலாகும். சங்குவேலியில் வாழ்ந்த சிதம்பரம் பிள்ளை (உவில்லியம் நெவின்சு) என்பவர் இலக்கண விதிகள் சிலவற்றைத் திரட்டித் தமிழ் வியாகரணம் என்னும் நூலே இயற் றினர். இந் நூலின் மூன்ரு 6 பருவமாகிய வசன இலக்கணம் வரக்கியங்களை எழுதுவேனருக்குப் பெரிதும் பயன்படும்.

Page 39
வித்தியானந்தம்
磊、
கன்னகத்துக் குமாரசுவாமிப் புலவர் நடவா, மடிசி முத லாக நன்னூலார் வகுத்துக் கூறிய இருபத்துமூன்றிற்றுள்ளும் அடங்கிய வினைப் பகுபதங்களுக்கும் அவ்வவற்றின் அடியாகப் பிறந்த பெயர்ப் பகுபதங்களுக்கும் பகுதி, விகுதி முதலிய உறுப் புக்களைப் பகுத்துக் காட்டி, ஒரு நூல் இயற்றி அதனை 'வினைப் பகுபத விளக்கம்" என்னும் பெயரோடு அச்சிட்டு வெளியிட்டார். ஆறுமுகநாவலரின் தமையனின் மகனுகிய த கைலாசபிள்ளை
அவர்கள் வசன நடை எழுதுவோர்க்கு உதவியாக ஒரு வசன இல்க்க்ண நூல் எழுதி அச்சிட்டார். பவணந்தி முனிவரது சூத் திரங்களைத் தழுவி இலகுவான உரைநடையில் இலக்கண நூல் எழுதினர் கெளரவ. திரு. பொன்னம்பலம் இராமநாதன். இது செந்தமிழ் இலக்கணமென விளங்கும். பன்மொழி அறிஞரும், தமிழ் மொழியே உலகம் தோன்றிய போது உண்டான மொழி யென்று வாதாடியவருமான நல்லூர்ச் சுவாமி ஞானப்பிரகாசர் தம்து பரந்த அறிவின் துணைக்கொண்டு "தமிழ் அமைப்புற்ற வரலாறு" என்ற நூலே எழுதினர்:சொற்பிறப்பு ஆராய்ச்சி என்ற நூலேயும் இவர் தன்னந் தனியாக எழுதிவந்தார். 'சொற்கலைப்
புலவர்" என்ற பட்டமும் பெற்ருர்
இலக்கண நூல்களை வெளியிடுவதோடு நில்லாது வேறு பல நூல்களையும் பதிப்பித்து தமிழின் அரும் பெருஞ் செல்வங்களைக் காத்து வந்தனர் ஈழத்துத் தமிழர் அவர் களு ட் சி. வை. தாமோதரம்பிள்ளை எட்டுத் தொகை நூல்களில் ஒன்ருகிய கலித் தொகையையும், திரிசொற்களால் யாக்கப்பட்ட தணிக்கைப் புராணத்தையும், ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்ருகிய சூளா மணியையும் பதிப்பித தார். ஆறுமுகநாவலரும் இத்தகைய நூல்களைத் திருத்தி வெளியிட்டார். அவை கந்தபுராணம், பெரிய புராணம், சேது புராணம், திருக்குறள், பரிமேலழகர் உரை திருக்கோவை உரை முதலியன.
ஆறு முகநாவலரே கல்லா தாரும் எளிதில் விளங்கக்கூடிய தெளிவான, முறையில் முதன்முதல் செந் தமிழ்ச் சொல்லமைந்த வசனநடையைக் கையாண்டனர் நாவலரின் சிறப்பும், பெருமை யும் ஆற்றலும் கட்டுரை வரைவதிலேயே புலப்பட்டன. சமயப் போட்டியிலே அவர் விடுத்த துண்டுக் கட்டுரைகளே அவரின் வசன நடைக்கு அடிகோலின நாவலர் காலத்திற்கு முன் வசன நடையில் நூல்கள் இயற்றுவது மிக அருமை. மேலும் அவர் காலத்தில் வசனநடையில் எழுத முன்வந்த ஆசிரியர்கள் பொருள்மயக்கத்தினை உண்டாக்கும் கடுஞ்சொற்களை வழங்கினர்,
 

ஈழத்தில் தமிழ் இலக்கியம்
சங்கதச் சொற்களே மிகுதியாக அமைத்தும் இலக்கணப் புணர்ச் சிகளேப் போற்றியும் பிறருக்குப் பொருள் விளங்காத வண்ணம் எழுதி வந்தனர். அத்தகைய கட்டுரைகள் பொதுமக்களுக்கு எத் தகைய பயனும் அளிக்கவில்லை. 、
ஆளுல் ஆறுமுகநாவலர் அத்தகைய உரைநடையைக்கையாள வில்லை. அவர் கட்டுரை எழுதியது சைவசமயத்தைப் பாது காத்தற்பொருட்டு கற்றறிந்தோரிலும் கல்லாத பொதுமக்க ளுக்கே சமயக் கல்வியறிவு புகட்டவேண்டியிருந்தது. இந்நோக் கத் துடனேயே நாவலர் எழுதியமையால், யாவரும் எளிதில் விளங் கிக் கொள்ளக்கூடிய தெள்ளிய முறையில் பெரும்பாலுஞ் செந் தமிழ்ச் சொல் நிறைந்த உரைநடையில் எழுதினர். மேலும் பொருளில் தெளிவு கருதி மேனுட்டார் வழங்கிவரும் முழுத் தரிப்பு முதலிய குறியீடுகளையும் கையானத் தொடங்கிஞர். முதன் முகல் தமிழில் குறியீடுகளைக் கையாண்டவர் ஆறுமுகநாவலரே.
இக்காரணங்கள் பற்றியே பரிதிமாற் கலைஞரும் நாவல  ைஏ ‘வசன நடை கைவந்த வல்லாளர்" எனப் போற்றிச் சென்றனர்.
தென்னிந்தியவரலாறு, திராவிட நாகரிக வரலாறு தமிழ்ப் புலவர் வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு, இசை வரலாறு முதலி யவற்றுக்கு அடிகோலி வழிகாட்டியவரும் ஈழ நாட்டவரே, தமி ழரின் பண்டைக்கால நாகரிகச் சிறப்பினைத் தமிழ் நூல்களின் ஆதரவு கொண்டு ஆராய முன்வந்தோர்க்கு முன் மாதிரியாகத் திகழ்ந்தவர் திரு வி கனகசபைப்பிள்ளை, ஈழநாடு தமிழ்க் கல்வி யின் இருப்பிடம் என்ற புகழை வளர்த்தவருள் ஒருவராகிய யாழ்ப்பாணத்து மல்லாகத்தைச் சேர்ந்த விசுவநாதபிள்ளையின் மகன் இவர் சேர். இராமநாதன், சேர். பொன்னம்பலம் முத லியோருடன் சென்னை அரசாங்கக் கல்லூரியிற் கற்று சிறு வய திலேயே கலைமாணிப் பட்டம் பெற்றனர் இவரைப் பலரும் பட்ட தாரிப் பையன்' என்பர் தமது தமிழ்க் கல்வி அறிவு, தேசவர லாற்று உணர்வு சமுதாயவரலாற்று அறிவு, சாசன ஆராய்ச்சி, ஆங்கிலக் கல்வித்திறன் ஆகியவற்றையெல்லாம் பயன்படுத்திச் சிறந்த நூல் ஒன்றினை எழுதினர்.
இந்நூல் ஆயிரத்து எண்ணுறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்" எனப் பெயரியதாகும். இந்நூலில் தமிழ், நாட் டின் நிலை, அதன் எல்லேப்புறத்திலுள்ள நாடுகளின் நிலை, தமிழ் நாடு பிறநாடுகளுடன் நடத்திய வணிகத்தின் நிலை, சேர சோழ
பாண்டியர், குறுநில மன்னர் ஆகியோர் வரலாறு, தமிழர் பண்

Page 40
வித்தியானந்தம்
பாடு முதலியவற்றை விரிவாக ஆராய்ந்து கூறியுள்ளார். பொது மறை நூலாகிய திருக்குறள், பெருங்காப்பியங்களெனச் சிலர் கருதும் சிலப்பதிகாரம்,மணிமேகலை ஆகிய இவற்றின் தன்மையை யும், சங்கப் புலவரின் வரலாறு, தமிழர் பண்பாடு முதலியவற்றை யும் விரிவாக ஆராய்ந்து கூறியுள்ளார்.பொதுமறை நூலாகியதிரு க்குறள், பெருங்காப்பியங்களெனச் சிலர் கருதும் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இவற்றின் தன்மையும், சங்கப் புலவரின் வரலாறு, தமிழ் நாட்டில் வழங்கிய சமயங்களின் நிலை, தமிழ் மக்களின் வாழ்க்கை இயல்புகள் ஆகியனவும் மிகவும் தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளன. பிற்காலத்தில் எழுந்த ஆராய்ச்சிக விற் பல இந்நூலிற் கண்ட கொள்கைகளையே அடிப்படையா கக் கொண்டன.
கனகசபைப்பின்னே எழுதியதை மொழிபெயர்த்தும், பின் னிருந்த புலவர் வரலாறுகள் சிலவற்றைச் சேர்த்தும் சதாசிவம் பிளளே என்பவர் பாவலர் சரித்திர தீபகம் என ஒரு நூல் வெளி யிட்டார் அபிதான சிந்தாமணி முதலிய கலைக்களஞ்சிய நூல் கள் இந்நூலிலிருந்தே புலவர் வரலாறுகள் பலவற்றை எடுத் தாண்டுள்ளன. சதாசிவம்பிள்ளைக்குப் பின்னர் சுண்ணுகம் குமான சுவாமிப் புலவர் தமிழ்ப் புலவர் சரித்திரம்" என்னும் நூலை வெளியிட்டார். இது புலமை சான்ற தமிழ்ப் பெரியாரின் வர லாற்றைக் கூறும் சிறந்த நூலாகும். இதில் ஏறக்குறைய நானூறு புலவர்களின் வரலாற்றைக் கூறியுள்ளார். புலவர்களின் ஊரும் பேரும் குல மும், செயலும், தெளிந்த அளவிற் காலமும் கூறப் பட்டுள்ளன. சிற்சில புலவர் பாடிய அருஞ் செய் யு ட் கரு ம் காட்டப்பட்டுள்ளன. இந்நூல் தமிழ் இலக்கிய வரலாற்றிற் சிறந்த இடம் பெறுகின்றது. தமிழ்ப் புலவர் சரித்திரம் எழுதுவது மிக வும் பொறுப்பானது. ஏனெனில் புலவர் சிலருடைய நகர், குலம், சமயம், காலம், நூலுரிமை, கவி, கவிப்பாடம், கதை முதலிய வற்றில் சரித்திரகாரர் பலர் தம்முன்ளே முரணுவர். இவற்றை யெல்லாம் முறைப்படி ஆராய்ந்து பிழையற்ற வரலாற்றை எழு துவது பொறுப்பானதே அத்தகைய ஒரு வரலாற்றினையே குமார சுவாமிப் புலவர் தமது புலவர் சரித்திரம் மூலம் தந்துள்ளார்.
ஏனைய சிறப்பு வாய்ந்த மொழிகள் போலன்றி இக்கதை வரம் பிலும் கனவிபச் சிறப்பிலும் அருட்பாப் பெருமையிலும் வட மொழிக்கு இணையரக விளங்கும் தமிழ் மொழியில் உள்ள நூல் களிற் சிறந்தவற்றைச் செவ்வையாக விளக்கி, அவற்றின் முறை மையையும், பயனையும் எடுத்துக் காட்டும் நூல் திராவிடப் பிர காசிகை. இதனை இயற்றியவர் யாழ்ப்பாணத்திலே பிறந்து தமிழ் நாடெங்கும் புகழ் கொண்ட சபாபதி நாவலர் அவர்கள்

ஈழத்தில் தமிழ் இலக்கியம் 5
இந்நூல் தமிழின் தெய்வப் புலமை மரபியல், இலக்கண மர பியல், இலக்கிய மரபியல், சாத்திர மரபியல், ஒழிபியல் என ஐவகைப் பிரிவு பெற்று விளங்குகின்றது. இவற்றுள் முகல் இய லுள் எழுத்து ஒலிக்கும் இசை ஒலிக்கும் உள்ள வேற்றுமை யும், தமிழ்" "தென்மொழி என்பவற்றின் மெய்ப்பொருட் பணி யும், தமிழன் தெய்வங்கன்  ைஐயும் விளக்கப்பட்டுள்ளன. அகத் திய மீ தொல்காப்பியம் ஆகியவற்றின் சீரும், முச்சங்க வரலா றும் ஏனைய சிறந்த இலக்கண நூல்களின் பான்மையும் இலக்கண மரபியலில் இடம் பெறுகின்றன. தமிழ் நூல்களை அநேகமாகத் தொகுத் தும் விரித் தும் கூறுவது இலக்கியமரபியல், பதினெட்டு வித்தைகள் இவையென்றும், மற்றும் வைதிக சாத்திரம் வேதாந்த சாத்திரம் சைவசித்தாந்த சாத்திரம் முதலிய நூல்கள் இவை யென்றும், சனத் திர மரபியல் கூறும் கல்விப் பயிற்சியே மக் களுக்கு இன்றியமையாத அழியாச் சிறப்பு என்பதனைப் பல வாறு வலியுறுத்துகின்றது ஒழிபியல். இத்தகைய அரிய பெரிய வரலாற்று நூலைத் தமிழ் நாட்டிற்கு அருளினர் ஈழத்துச் சபாபதி நாவலர்.
鷺 தமிழே உலகத் தாய்மொழி என்று பறையடித்தேனதிய பன்மொழிப் பண்டிதர் என்று பாராட்டப்பட்ட சுவாமி ஞ ணப் பிரகாசர் மாணிப்பாயிற் பிறந்தவர். இவருக்குப் பதினெட்டு மொழிகளில் நல்ல ஞானம் இருந்தது. இந்தப் பரந்த அறி வினைக் கொண்டு 'தமிழ் அமைப்புற்ற வரலாறு' என்ற நூலே எழுதினுர், யாழ்ப்பான வரலாற்றில் ஈடுபட்டுள்ள இவர் எழுதிய நூல்கள் யாழ்ப்பாண வைபவ விமர்சனம்" "யாழ்ப்பாண அரசர்கள்" என்பவையே.
தமிழ் இலக்கிய வரலாற்றைச் சங்க காலம், சங்க மருவிய காலம், பல்லவர் காலம், சோழர் காலம், நாயக்கர் காலம் ஐரோப் பியர் காலம் எனக் காலப் பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு காலப் பகுதியையும் வரையறுத்து அக்காலப் பகுதியின் சரித்தி ரம், சமய நிலை, இயற்றப்பட்ட நூல்கள், அவற்றின் பண்புகள் முதலியவற்றை முறையாக வகுத்துக் கூறித் தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூலே எழுதிப் பிறருக்கு அத்துறையில் வழி காட்டிய பெருமை இலங்கைப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த திரு. வி. செல்வநாயகம் அவர்களுக்கு உரியது. தமிழ் உரை நடை வரலாற்றையும் காலவரையறைப் படுத்தி மேற்கோளு டன் விளக்கந்தந்து தமிழ் உரை நடை வரலாறு என்னும் நூலே யும் அண்மையில் இப்பெரியார் வெளியிட்டுத் தமிழ் அன்னைக்கு அரும் பெருந் தொண்டாற்றியுள்ளார்.

Page 41
54. வித்தியானந்தம்
இசைத் தமிழுக்கு ஒப்பிலாப் பணி செய்தவர் உயர்திரு. விபுலானந்த அடிகள். திலல்யின் எல்லேயிலுள்ள அண்ணு மலேப் பல்கலைக் கழகத்தின் முதல் தமிழ்ப்பேராசிரியராகவும், ஈழத்துப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராகவும் அமர்ந்து தமிழ் மொழிக்குப் புத்துயிர் கொடுத்த இப் பெருந் தகை, மட்டக்களப்பு காரைதீவு என்னும் பகுதியிற் பிறந்தவர். துறவு பூணுமுன் இவரின் பெயர் மயில்வாகனம் என்பதாகும் இவர் ஆராய்ந்து வெளியிட்ட நூலே யாழ் நூல். பன்னெடுங் காலமாகத் தமிழ் இசையையும், தமிழ் இசைக் கருவிகளையும் தமிழ் மக்கள் கையாண்டிருந்தனர் என்பதை இந் நூலிற் பல சான்று கொண்டு நிறுவியுள்ளார். வடிவு கூடத் தெரியாதபடி மறைந்த பண்டைய யாழின் நுட்பங்களே யெல்லாம் உலகறிய வைத்தது இவர் செய்த தொண்டாகும். சிலப்பதிகாரத்தில் அரங் கேற்று காதையினுள்ளே யாழ் ஆசிரியரின் அமைதி கூறும் இரு பத்தைந்து அடிகளுக்கு ஏற்றதொரு விரிவுரையாக இந்நூல் அமைந்துள்ளது. இசைத்தமிழ் நூல்களெல்லாம் வழக்கற்று மறைந்தன எனப் பழைய வரலாறு கூறி இரங்கிய கவற்சியை இந் நூல் நீக்கிற்று. பல காலமாகச் சிலப்பதிகாரத்தைப் பயில் வோர் அதன்கண் கூறப்பெற்ற இசைப் பகுதிகள் நீங்கலாகப் பயில்வது வழக்கம். அங்ஙனம் ஒதுக்கப் பெற்ற இசை நூற் பொருள்களை விளங்க எடுத்துரைக்கும் இசைத் தமிழ் முதல் நூலாக யாழ் நூல் அமைந்துள்ளது. இசைத்தமிழுக்குப் புதிய இலக்கணம் வகுத்து, அதனை விஞ்ஞான முறையில் எடுத்துக் காட்டிய விபுலானந்த அடிகளுக்குத் தமிழ் கூறும் நல்லுலகம்
என்றென்றும் கடமைப்பட்டுள்ளது:
இவ்வாறு பண்டைத் தமிழ்ச்சங்க நூல்களை அரங்கேற்றியும், யாழ்ப்பாணத்திற் சங்கம் நிறுவி நூல்கள் யாத்தும், கவிச் சுவை த இம்பும் பாடல்களே இயற்றியும், தமிழ் மொழியின் முன்னேற் றத்திற்கு இன்றியமையாத பல துறைகளில் வழிகாட்டியும், தமிழ் இலக்கியத்தை விருத்தி செய்து தமிழ் அன்னைக்கு அழியச்
சிறப்பு அளித்துள்ளார் ஈழத் தமிழர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ീ7` ബി
என்னை ஆளாக்கிய பேராசான், தனக்கென ஒரு மாணவர் பரம்பரையை அமைத் துச் சென்றவர் நாடக அரங்கம் பேச்சு மொழியை உரையாடலில் வழங்கலாமா என்ற ஐயம் தோன் |றிய இாலத்திலே, மக்களைப்பற்றி மக்களுக்காக ஆக்கப்படும் நாடகங்களில், மக்கள் மொழி கையாளப்பட வேண்டுமென்பதை தமது நாடகங்கள் மூலம் நிலை நாட்டிய நாடகவித்தகர். தமிழை ஒரு மொழியமைப்பாக, இலக்கியக் கோவையாக, நாகரிக முறை யாக விளக்கி, கனம் கல்விமான்களால் புரியப்படாதவர். பல் கலைக்கழக மாணவனுக்கும் ஆசிரியனுக்குமுள்ள உறவு அத்தி யந்த அறிவு நிலை நட்பு என வற்புறுத்திய பெருமகன்; நாட் டுப் பண்புமி நாட்டு வாழ்வும் இலக்கியத்தில் இடம்பெற வேண் டும் என்பதைச் செயலிற் காட்டியவர்- இவர் தன் எங்கள் பேரா சிரியர் கணபதிப்பிள்ளே, உரிமையுடன் கூறுகின்றேன் எனது குரு மட்டுமல்லர், இங்கும் மற்றும் பல்கலைக்கழகங்களிலேயும் தமிழ்ப் பேராசான்களாக விளங்குபவரின் குரு அவர் -i.

Page 42
56 வித்தியானந்தம்
குருசீடப்பரம்பரையை அவர் காதலி ஆற்றுப்படையிலே தெளிவாக விளக்குகின்ருர், இவர் காட்டும் குருபக்தி - இன்று பல இடங்களில் காணப்படாதது கவலைக்குரியது,
"ஆரியந் தன்னி னனப்பரு மாக்கடல் அருந்தமிழ்க் கலைக்கோர் வரம்பர யுயர்ந்தோன் வயங்கு செந்நாவின் வசையில் புலவோன் ஆகம பண்டிதன் அருமறைக் குருமணி முத்துக் குமார சுவாமி யெனும் பேர் மூ தறிவாளன் முறையுட னடையும் மாணவர் தமக்கு வளம்பெறு முகில்போற் போதமெய்க் கலைகள் பொழிந்திடும் வன்னால் மசசி லந்தணன் மாப்பெரும் தோன்றல் சிவனடி பரசுந் தவநெறி ஆாளன் கடைய னேனையும் பொருளெனக் கருதி யறிவு கொளுத்தி யாட்கொள்ளும் பெரியோன்'
என்னும் பகுதியில் பேராசிரியரின் குருபக்தியும் அடக்கமுடை மையுங் காணப்படுகின்றன.
நாட்டுப்புற மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் மக்கள் இலக்கியமாக வாய்மொழி இலக்கியம் உலகமெங்கணும் பரந் துள்ளது. மக்கள் பண்பாடு அளவு கோல்கனாகிய இவ்வகை இலக்கியங்கள் பற்றிய ஆய்வுகள் உலகநாடுகள் யாவற்றிலும் விரிவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கற்ருேரிடையே செல்வாக்குப் பெற்றுள்ள உயரிய இயக்கங்கள் பற்றிய ஆராய்ச் சிகள் தமிழ் மொழியிலே மேற்கொள்ளப்பட்டமை போல எல்லா வித மக்களிடையேயும் பரவியுள்ள வாய்மொழி இலக்கியங்க ளைப் பற்றிய ஆய்வுகள் முழுமையாகத் தமிழிலே மேற்கொள் ளப்படவில்லை. அண்மைக்காலங்களிலே வளர்முக நாடுகளிலே நாட்டார் பண்பாட்டியல் பற்றிய ஆராய்ச்சிகள் துரித கதியிலே நடைபெறுவது போலத் தமிழ் நாட்டுப் பல்கலைக்கழக ஆராய்ச்சி யாளராலும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தினராலும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
நாட்டுப்புற மக்களுடைய வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் மக்
கள் இலக்கியமே வாய்மொழி இலக்கியமாகும். கிராமங்கள் பொது மக்கள் கலைப்பீடமாக விளங்கின. அவர்களுடைய தொழிலோ இம் சமயத்தோடும் கிராமியக் கலேகன் பின்னிக் கிடந்தன.
 
 

பேராசிரியர் கணபதிப்பிள்ளையும் பண்பாட்டு விழிப்புணர்வும் 57
அவற்றுட் சில இப்போதும் வழக்கில் இருக்கின்றன. சில வழக் கில் இல்லாது போய்விட்டன.
இவற்றிற்குரிய காரணங்கள் யாவை? கிராம வாழ்க்கை இன்று பலவகையிற் சிதைவுற்றுக் காணப்படுகின்றன. ஆங்கிலக் கவிஞ ரான கிறே" என்பவர் ஒரு கிராம இடுகாட்டில் நின்று, ஒரு இரங் கற்பா -
'மிக்க ஒளி பொருந்திய விலைமதிக்கப்படாத எத்தனையோ மாணிக்கங்கள், ஆழமறிய முடியாத கடற்குகைகளின் அடியில் மறைந்து கிடக்கின்றன. சுகந்த மனத்தோடு கூடிய மெல்லிய மலர்கள் வனந்தரங்களில் மலர்ந்து அவற்றின் வாசனையை யாரும் நுகராமலே வாடி உதிர்ந்து விடுகின்றன. அதே போன்று கவிதை உள்ளம் படைத்த பலர் இக்கிராமத்தில் பிறந்திருக்க லாம். சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் அவர்கள் கவிதையுள் ளத்தை உலகிற்குத் திறந்து காட்டும் வாய்ப்பை அளிக்கவில்லை. ஆகவே, அவர்கள் மாண்டு மடிந்து இங்கு புதையுண்டு போயி ருக்கலாமீ" என இரங்கிக் கூறினர்.
。 அக்கவியின் கூற்று எமது கிராமிய மக்களைப் பொறுத்தமட் டிலும் உண்மையாகும் எமது கிராமங்களிற் சிதறிக்கிடக்கும் கவிதை உள்ளம் படைத்தவர்கள், பல கலைகளிலும் வல்லுனர் பலர், இருந்திருக்கின்றனர். நிரம்பித் ததும்பும் அவர்களின் உணர்ச்சி வெளியீட்டைச் சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் அணு மதிக்கவும் ஏற்கவும் மறுத்தன. நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற் றங்களும், பிறநாட்டார் ஆட்சியும், ஆங்கிலக் கல்வியும் நாட்டார் கலைகளின் வளர்ச்சியைத் தடைசெய்தன. இவை Logu மோடியன; இக்கால நாகரீகத்திற்கு ஒவ்வாதன என்ற எண்ணங் கொண்டு பலர் இவற்றை ஒதுக்கினர். இளைஞர் இவற்றில் ஈடு படத் தயங்கினர்; இவற்றை இகழ்ந்தனர்.
கல்விகற்ருேர், வளம் பெற்றவர் இவற்றை ஒதுக்கவே இவற் றிற் புதிதாக ஈடுபட முன்வருவோர் தொகை குன்றியது: இவற்றில் ஈடுபாடுடைய முதியோர் ஆதரவற்று ஏங்கிக் கிடந்த னர். இக்கலைகளை ஊக்கி வந்த பெரியோர்களும் இக் கலைகளைக் கைவிட்டனர். அக்காலத்தில் விதரனே, உடையார், மணியம், கோயில் மணியம் போன்றவர்கள் கிராமியக் க்லைகளை முன் னின்று நடத்தினர். இப்போது அவர்களுக்கும் கலைக்கும் வெகு தூரம்" அவர்கள் அரசாங்க சேவையாளரேயொழிய கலைப் பணியாள ரல்லர்.

Page 43
60 வித்தியானந்தம்
டையேயும் பரவியுள்ள வாய்மொழி இலக்கியங்களைப் பற்றிய ஆய்வுகள் முழுமையாகத் தமிழிலே மேற்கொள்ளப்படவில்லை. அண்மைக் காலங்களில் வளர்முக நாடுகளிலே நாட்டார் பண் பாட்டியல் பற்றிய ஆராய்ச்சிகள் துரித கதியிலே நடைபெறு வது போலத் தமிழ் நாட்டுப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாள ராலும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தினராலும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தவகையிலே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துத் தமிழ்த்துறை தொடர்ந்து மேற்கொள்ள விருக்கும் ஆராய்ச்சிகளுக்கு முன்னுேடியாக நாட்டார் பண் பாட்டியல் பற்றிய இவ்வாய்வரங்கினை ஒழுங்கு செய்துள்ளமை எமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றது.
iii.
பேராசிரியர் கணபதிப்பிள்ளே அவர்களின் நினைவாக இவ் வாய்வரங்கு நடைபெறுவது சாலவும் பொருத்தமானது எமது நாட்டுப் பல்கலைக் கழகங்களின் தமிழாராய்ச்சிப் பாரம்பரியத் துக்கு மூல வித் தாகவும் வழிகாட்டியாகவும் விணங்கிய வர் பேராசிரியர் ஆராய்ச்சி அறிஞராகவும் ஆக்க இலக்கிய கர்த்தாவாகவும் விளங்கிய பேராசிரியர், மொழியியல், சாசன வியல், நாடகவியல் போன்ற பல துறைகளில் ஈடுபட்டாலும் நாட்டுப்பண்பாட்டியலில் நிரம்பிய ஈடுபாடு கொண்டவர். ஈழத்து வாழ்வும் வளமும் என்ற பேராசிரியரின் கட்டுரைத் தொகுப்பு இதற்குத் தகுந்த சான் ருகும். யாழ்ப்பாண வாழ்வில் ஊறித் திளேத்த பேராசிரியர் ஈழத்து வாழ்வின் பெருரசிகளுகவும், சிறப் பாக யாழ்ப்பான வாழ்வின் பேரபிமானியாகவும், விளங்கி ஈழத்து வாழ்வையும் வளத்தையும் நம்நாட்டவர்க்கும் பிறநாட் டவர்க்கும் காலந்தோறும் உணர்த்தி வந்தார்.
இலங்கைப் பல்கலைக்கழகத்திலே கடமையாற்றிய இருபத் தொன்பது ஆண்டு கால எல்லையில் இருபத்தாறு ஆண்டு களாகத் தமிழ்த்துறைத் தலைவராக இருந்த பெருமை பேராசிரி யர் கணபதிப்பிள்ளைக்குரியது. இலண்டன் பல்கலைக்கழகத்தினர் நடத்திய கலைமாணித் தேர்வில் சங்கத மொழியைச் சிறப்புப் பாடமாகவும், துணைப் பாடமாகவும் பயின்று 1930 ஆம் ஆண்டு முதலாவது வகுப்பில் தேர்ச்சி அடைந்தவர் பேராசிரியர், மேஞடு சென்று தமது ஆராய்ச்சியைத் தொடங்கு முன்னர் அண்ணுமலைப் பல்கலேக் கழகத்தில் முறைப்படி தமிழ் பயின்ற இவர் பேராசிரியர் ரேனரிடம் இலண்டன் பல்கலைக்கழகத்தில் மொழியியல் பயின்ருர் ஏழாம் எட்டாம் நூற்றண்டுத் தமிழ்ச்

பேராசிரியர் கணபதிப்பிள்ளேயும். பண்பாட்டு விழிப்புணர்வும் 61
சாசனங்களை ஆராய்ந்து திராவிட மொழியியல் வல்லுனராக
மாறினர். தொடர்ந்து இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில்
தமிழ் விரிவுரையாளராகவும் தமிழ்த்துறைத் தலேவராகவும்
1936 ஆம் ஆண்டு நியமனம் பெற்றர். 1947 ஆம் ஆண்டிலே
தமிழ்ப் பேராசிரியராகத் தெரிவு செய்யப்பட்டுப் பதினெட்டு ஆண்டுகள் சிறப்புடன் பேராசிரியராகக் கடமையாற்றித் தமிழ்த் துறையை விருத்தி செய்து 1965ஆம் ஆண்டில் ஓய்வு பெற் ரூர். இன்றைய தலைமுறையினரும் இளஞ்சந்ததியினரும் பேரா சிரியரின் ஆளுமையையும் பங்களிப்பின் மகத்துவத்தையும் அறிந்து கொள்வதும் நினேவு கொள்வதும் அவசியமாகும்.
தமிழுக்கும் தமிழைக் கற்றவருக்கும் இகழ்ச்சி பெருகிக் கொண்டு சென்ற காலத்தில் தமிழ்த் துறையை உயிர்த்துடிப் புடன் இயங்கச் செய்தி பெருமை பேராசிரியர் கணபதிப்பின் இளக்
குரியது. சிறப்புக்கலே வகுப்பில் இடையிடையே ஒருவர் அல்
லது இருவரும் பொதுக் கலை வகுப்பில் ஏழு எட்டுப் பேருமே தமிழை ஒரு பாடமாக ஒரு காலத்திற் கற்றனர். தமிழைப் படிப்பவர் 'பனங்கொட்டைகள்' என இகழப்பட்ட காலம்
அது அண்ணு லேப் பல்கலைக்கழகத்திலே உலகின் முதலாவது
தமிழ்ப் பேராசிரியராகப் டெருமை பெற்ற எமது ஆசான் இவர் மி விபுலானந்த அடிகள், 1944 ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக் கழகத்தின் முதலாவது தமிழ்ப் பேராசிரியராக நியமனம் பெற் ரூர், இலண்டனுக்குப் போகுமுன் தன்னிடம் அண்ணுமலைப் பல்கலைக்கழகத்தில் ஈராண்டிலே வித்துவான் பட்டம் பெற்ற தனது அன்புக்குரிய மாணவன் பேராசான் கணபதிப்பிள் இன யிடம் பெருமதிப்புக் கொண்டிருந்த சுவாமிகள் தாம் பேராசிரி யராக இருந்த போது தமிழ்த் துறையை நடாத்தும் பொறுப் பினைப் பேராசிரியர் கணபதிப்பிள்ளேயிடம் ஒப்படைத்தார். சுவாமிகள் இலங்கைப் பல்கலைக்கழகத்திற்குப் பேராசிரியராக வந்தபோது நோய் வாய்ப்பட்டிருந்தார். கணபதிப்பிள் ஆள அவர்களையே முதலாவது தமிழ்ப் பேராசிரியராக நியமித்திருக் கலாம் என்று அவர் பல தடவை கூறியதுண்டு.
அக்காலத்தில் இந்தியப் பல்கலைக்கழகங்கள் செய்யத் துணி யாத கருமங்கள் பலவற்றை இலங்கைப் பல்கலைக் கழகத்திலே பேராசிரியர் அறிமுகப்படுத்தினுர், நவீன இலக்கியங்களை வெறுத் தெர துக்கிய காலத்தில் அவற்றைப் பல்கலைக் கழகப் பாட விதானத் துட் சேர்த்தது மட்டுமன்றி ஈழத்துத் தமிழ் இலக்கிய மரபையும் எமது பண்பாட்டு மரபையும் எமது சமு

Page 44
62 s வித்தியானந்தம்
தாயம் உணரும் வகை செய்தார். பழைய இலக்கியங்களைப் பகிர்வதோடு புதிய இலக்கியங்களைப் படைக்கவும் மாணவரைத் துரண்டிஞர். தாமே புதிய இலக்கியங்களைப் படைத்து வழியும் காட்டினுர்,
கிராமிய வாழ்க்கையிலும் கிராமியக் கலைகளிலும், கிராமிய வழிபாட்டு முறைகளிலும் இவருக்கு அதிக ஈடுபாடு நீண்டகால மனக இருந்தது. பழைய பழக்க வழக்கங்கள், உடைகள், உணவு கள், ஆபரணங்கள், கலைகள், வழிபாடுகள் ஆகியவற்றைப் பற்றி இவருடன் பேசுவது தனியின்பம். இவர் இலங்கைத் தமிழரின் உணவு, உடைகள், அணிகள் ஆகியவற்றைப் பற்றி அவர் கட்
டுரை ஒன்றை எழுதித் தினகரன் ஆசிரிரியடம் கொடுக்கும் படி என்னிடம் தந்தார். கொடுத்தேன். அவர்கள் என்னுடையபெயரில்
வெளியிட்டு விட்டார்கள். தவறினை அடுத்த ஞாயிறு இதழில்
திருத்துவோம் என்றேன் டேய், நீயும் நானும் சேர்ந்து தானே எழுதினுேம் ஆனபடியாற் பேசாமல் இரு" என்ருர் என்ன
பரந்த மனப்பான்மை. கிராமியப் பண்பாட்டுக் கவர்ச்சியினுலே தான் இவர் சாதாரண மக்களுடன் தொடர்பு கொள்வதைப் பெரும்பேருகக் கொண்டனர். அவர்களேயெல்லாம் தமது நாடகங் களிலும் நாவல்களிலும் முக்கிய பாத்திரங்களாக அமைத்தார். எளிமையையும், அடக்கத்தினையும் பரந்த மனப்பான்மையினையும் கொண்ட பேராசிரியர் காலமாற்றத்தினை அனுசரித்து எவ்வாறு சிந்திக்க முற்பட்டார் என்பதை 'அன்றும் இன்றும் என்ற தமது கட்டுரையிலே பின்வருமாறு கூறுகின் ருர்:
'கடந்த ஐம்பது ஆண்டுக் காலம் உலகம் முழுவதற்கும் ஒரு புதிய நிலையை உண்டாக்கி இருக்கின்றது. ஆறுதலாக ஒரு குறித்த வேகத்தில் சுழன்று வந்த காலச்சக்கரம் இக்கால வெல்லேயிற் கண்டுபிடித்த வானூர்தி போல முன்னுெரு போது மில்லாத மிகுந்த வேகத்தோடு ஒடிக்கொண்டிருக்கின் றது. அதனுல், உலகத்தினர் வாழ்க்கை முறைகளுள்ளும் பலப்பல மாற்றங்கள் உண்டுபட்டுள்ளன'
எனக் காலச்சக்கரத்தின் வேகத்தை உணர்ந்த பேராசிரியர் பழைமையை மறக்க முயன்ற எமது சமூகத்திற்குப் பண்பாட்டை பும், பாரம்பரியத்தையும் உணர்த்தி உயிரூட்ட விரும்பினர். சிறிது சி மிதாய்ப் பேராசிரியர் சிந்தித் துச் செயலாற்ற விரும்பி பவை யாவு b அவருடைய பல்வேறு ஆக்கங்களிலும் செறிந்து
பருப்பதை நாம் உணர்ந்து கொள்வது அவசியமாகும். தமிழரா
 

பேராசிரியர் கணபதிப்பிள்ளையும். பண்பாட்டு விழிப்புணர்வும்
கப் பிறந்து ஆங்கிலத்தைக்கற்று அரை ஆங்கிலேயராக வாழ முற்
ட்ட தமிழ் மக்களுக்குச் செந்தமிழ்ப் பாடம் பல்கலைக் கழகத்தில்
வேம்பாக இருந்தது. அந்த வேம்பினைக் கரும்பாக்கியவர் பேரா சிரியர். 'தூவுதும் மலரே என்ற தமது பாடல் ஒன்றிலே,
கவியல பொழிந்தன ஒருபால் காவியம் நிறைந்தன ஒருபால் உரைகள் செறிந்தன ஒருபால் உரைநடை மலிந்தன ஒருபால் சொற்பொழி வெழுந்தன ஒருபால் - 。 சொற்போட்டி நிகழ்ந்தன ஒருபால், எனக் கூறத் தொடங்கி சட்டின் போக்குகளேயெல்ல்ாம் அடுக்கிச் சென்ற பேராசிரியர்,
பழைமை நாட்டிய தொருபால் புதுமை ஓங்கிய தொருபால்
எனக் கூறும் வரிகள் பேராசிரியரின் உள்ளத்தை நன்கு ாட்டுவதாகும். நாட்டார் பண்பாட்டில் தமக்கிருந்த ஈடுபாட்டினை ாளுடகம் முன்னுரையிலே பேரவாவுடன் கூறியுள்ளார். மலும் இதனைப் பூஞ்சோலே என்ற நாவலிலே வரும் சாம்பசிவம்
அழகசுந்தரன் ஆகியோர் உரையாடலின் மூலம் தமது இதயத்தின் குரலாக வெளிப்படுத்தி உள்ளமை ஈண்டு குறிப்பிட வேண்டிய
"அப்படிச் சொல்லாதீர்கள். பல்லாயிரக் கணக்கான ஊர்கள் தோறும் வாழும் பன்னூற் ருயிரக் கணக்கான மக்கள் மனதிற் சிக்குண்டு அங்கிருந்து தாமாகவே ஊற்றெடுத்து வெளிப்பாய்கின்றவை. அவ்வண்ணம் பாயும் போது மக்கள் உணர்ச்சி மேலீட்டினுல் அவற்றைப் பாடித் தம்மையும் மறந்து இன்புறுகின்றனர். வாழ்க்கையில் தாம் செய்யும் வேலைகளினுல் உண்டாகும் கணேப்பை ஆற்றுதற்கும், இன்புறும் நேரங்களில் தம் இன்பத்தைப் பெருக்குதற்கும் துன்பு

Page 45
64. வித்தியானந்தம்
றும் நேரங்களில் அத் துன்பத்தை வெளிப்படுத்துதற்கும், புரியும் போது வீரத்தை ஊட்டுதற்கும் பச்சின& குழந்தைகளைத் தாலாட்டிக் கண்துயில் வைப்பதற்கும், நகை இழிவரல் ஆகிய மெய்ப்பாடுகளைப் பெருக்கிப் புலப்படுத் துதற்கும் நம் நாட்டு ஆடவரும் மகளிரும் அவற்றை ஏற்ற இசையுடன் பாடிப் பெரும் பயன் அடைகின்றனர்."
என நாட்டார் இலக்கியத் தோற்றம் பற்றியும் இயற் கைப் பண்பு பற்றியும் ஆழ்ந்த உணர்ச்சியோடு கூறிய பேரா சிரியர் நீங்கள் எப்பொழுதாவது நாட்டுப்புறங்களுக்குச் சென் றிருக்கிறீர்களோ என்ற கேள்விக்குறியுடன் பல கேள்விகளை ஒன்றன் மேலொன்ருக அடுக்கிச் செல்கின்ருர் நாட்டுப்பாடல் களையும், நாட்டார் வழக்குகளையும், வெறுமனே கட்டுரைகளாக எழுதாது அவற்றை உயிர்த் துடிப்புடைய நாடகங்களில் எழுதிப் பதிவு செய்த பெருமையும் பேராசிரியருக்கு உண்டு.
துணிந்து நாட்டார் மொழியைத் தமது நாடகங்களிலே கையாண்ட பேராசிரியர் நாளர்ந்தம் பொதுமக்கள் தமது உரை பாடலில் வழங்கி வரும் சொற்களையும் சொற்ருெடர்களேயும் நாடக அபிமானிகளாகிய நாம் நாடகத்தில் எதிர்ப்படும் போது அவற்றிலே தனி இன்பம் காணுகின்ருேம் காத்தாலே, என்ரை, இங்கினை, இஞ்சை, இஞ்சாரும், அதோடை, வேறை, மோனே, நாம்மாளை, நயிந்தை, இவடத்துக்கை, இரவல் போன்ற சொற்கள் எம்மை இறுகப் பிணைக்கின்றன. | |||||||||||||||||||||||||||||||||||||||||||NORES
。 பேச்சு வழக்கில் வரும் சில சொற்ருெடர்களும் நாடகத்திற் கையானப்படும்போது ஆற்றல் பெறுகின்றன. "கதையோட கதை? குழந்தை குஞ்சு, பெண்புரசு, ‘வெட்டுக் கொத்து, "த8லக் கறுப்பு, நெய்ப்பிடிக்கோழி, "சொல்வழி பறைவழி, ஒட்டமூம் பாட்டமும் நரயமாய்க்கிடக்கு, போன்றவை எமது வாழ்க்கை யோடு தொடர்புடைய தொடர்கள். இவற்றை நாடகப் பாத் திரங்கள் வழங்கும் போது இவற்றிற்குக் தனி ஆற்றல் உண்டு. பேச்சு வழக்கிற்கையாளும் பழமொழிகளையும் பேராசிரியரது நாடகங்களிற் காணலாம். பெட்டைக்கோழி கூவியும் பொழுது ‘விடியிறதே? "கோழியைக் கேட்டே ஆணங்காச்சிறது? நிலவுக்கு ஒளிச்சுப் பரதேசம் போறதே?, பூவில்லாமல் மாலை முடியிறது? நெருப்பில்லாமல் புகையி தே? முதலிய வாய்மொழிகளே இன்றும் கிராமப்புறங்களிலே தாம் கேட்கலாம்.
 
 
 
 
 
 
 
 

பேராசிரியர் கணபதிப்பிள்ளையும். பண்பாட்டு விழிப்புணர்வும் 65
ஊரிலே நாம் சந்திக்கும் சில பேர்வழிகளை ஊரிலே நாம் குறிப்பிடும் முறையிலேயே ஆசிரியரும் அடைகள் கொடுத்துக் குறிப்பிடுவது கவர்ச்சியானது. மடத்தடிப் பிறக்கிருசியார், பொழுது முளைச்சான் பொன்னுத்துரை, வாக்குச் சாத்திரி, அஞ்சு புளியடியிற் கொடுப்புச்சப்பிச் சண்முகம், பனை வெட்டி ஆழ்வார்,பழைய விதாணேயார், கிராமக் கோட்டடி இயமன் பெரன் னம்பலம் போன்ற பேர்களே நாம் வாழ்நாளில் கண்டிருக்கிருேம்.
இவ்வாறு இவர்களுக்கு அடை கொடுத்துக் குறிப்பிடும் போது தமக்குத் தெரிந்த பேர்வழிகளைத் தான் குறிப்பிடுகின் ருர் கள், என்ற ஓர் உணர்ச்சி தோன்றுகிறது.
பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் நாடகங்களிருந்து நாம் இன்னெரு உண்மையை அறிந்து கொள்ளலாம். அவர் நாடகம் எழுதிய நாட்களில் ஆங்கிலச் சொற்களைப் பொதுமக்கள் எவ் வர து தமிழ்ப்படுத்தினுர்கன் என்பதே. அதே உறுவா, இறைவர், இடாக்குத்தர், கோச்சு, கவுஞ்சில், வசு, சுப்பிறயந்தண்டல், சுப் பிற யங்கோடு, இராணி அப்புக்காத்து, ஏசண்டுத்துரை, இறயித் தார் முதலியன இதற்கு நல்ல உதாரணங்கள்
பேராசிரியரின் நாடக பாத்திரப் படைப்புத் தனிச் சிறப்பு வாய்ந்தது. பணமும் பதவியும் பெற்று மிடுக்குடன் வாழுமி உடையார், ஊர்க் கதை பேசும் அம்மபட்டர், தமிழ்க் கொலை செய்யும் ஏசண்டர், கமக்கட்டிற் பிடியொடிந்த குடையு டன் ஒரு ைகயிற் செருப்பும் மற்றக் கையிற் சாதகக் கெடுப்பியு மாக திருகுதாளம் செய்து திரியும் கலியாணத் தரகர், காப்பிக் கிளப்பு இராமையர், கள்ளு இறக்கும் நாகன், இணைப்பாறிய ஒவசியர், 'கதை முடிந்து விடும், கிராமத்துப் பண்டிதர், சுருட் டுக்கு வழக்குப் பேசும் பிறக்கிருசியார், இருட்டுச் சந்தை வியா பாரி, தவருண கொள்கைகள் கொண்ட உடையாருக்கு ஏற்ற உடைச்சி, அரசியல்வாதிகள், காசடித்த ஒவசியர், பெண் சாதி, செல்வச்செருக்கிஞல் கணவனைத் துரக்கியெறிந்து நடக்கும் மனைவி, இரத்த பாசத்தால் பிணக்குகளை மறந்து விடும் மைத் துணி, மாதர் முன்னேற்றவாதிகள் போன்ற பரத்திரங்கள் வாழ்க்கையில் நாம் நாளாந்தம் காணக்கூடியவையாம். இப் பாத்திரங்களைப் பேராசிரியர் படைத்திருக்கும் முறையில் அலம் பல் சிலம்பற் பாத்திரங்களைப் படைக்கும் இக்காலச் சமூக நாடக ஆசிரியர் போலன்றி அவரைப் போல நாடகங்களிற் பேச்சு மொழியைக் கையாண்டவர் வேறெவருமில்லை.

Page 46
வித்தியானந்தம்
பேராசிரியர் கணபதிப்பிள்ளை அறிவு பூர்வமான ஆராய்ச்சி முறைப் பயிற்சி நிரம்பியவர். ஆணுல் நாட்டாரிலக்கியத்திலே பேராசிரியர் கொண்டிருந்த ஆர்வமும் அக்கறையும் உணர்ச் சியை மையமாகக் கொண்டே எழுந்தவை. இளமைக்காலத்தின் பசிய உணர்வுகளின் ஊடேயும் பேராசிரியர் உணர்ச்சி மய மான கிராமிய வாழ்க்கையில் அழுந்தி எழுதியுள்ளமை சகல் நூல்களிலும் எழுத்துக்களிலும் காணும் பொதுப்பண்பாகும். ஈழத்து மக்கள் வாழ்க்கையை அனுதாபத்துடனும் மனிதாபி மானத்துடனும் நோக்கி ஆத்ம திருப்திகாண முற்பட்டவர் பேராசிரியர் நாட்டாரியல் பற்றிய இன்றைய ஆய்வுகளுக்குரிய எத்தனையோ தரவுகளையெல்லாம் அனுயாசமாகவும், உணர்வ நு பவத்தோடும் உயிர்த்துடிப்ளோடும் தந்தவர் பேராசிரியர் என் பது சாலப் பொருந்துவதாகும்.
நன்னுனே நாக்கு வெட்டி நான் கொடுத்த பாக்குவெட்டி பொன்னுலே காசுக்கட்டி போட்டுக் கொள்ளடி ஆசைக்குட்டி,
※ 影
சுன்னுகச் சந்தையிலே - பறங்கி சுங்கானைப் போட்டு விட்டான் பார்த்துக் கொடுப்பவர்க்குப் - பறங்கி
பாதிச் சுங்கான் கொடுப்பான்
போன்ற பல பாடல்கள் பேராசிரியரின் ஆக்கங்களில் இடைக்கிடையே வருகின்றன. பொதுமக்களிடம் நிலவும் கதை களிலும், பழமொழிகளிலும், விடுகதைகளிலும் பேராசிரியருக்கு நிரம்பிய ஈடுபாடு இருந்தது. 'பொருளோ பொருள்' என்ற நாடகம் 'மெத்தையிலே வைத்தாலும் செத்தைக்கை போறது. செத் தைக்கை தான்' 'பாவிக்கொட்டை போட என்ன கரைக்கொட்கை மூளைக்குமே,” என்ற இரு பழமொழிகளையும் மதிப்பீடு செய்வ தாக அமைகிறது. இது போலவே நீரர மங்கையர் என்ற கதையின் முன்னுரையில் வரும் 'அந்த நாட்டிலே உள்ள நாட்டுப் பாடல்கள் போல இக் கதைகளும் நாட்டு மக்களின் கற்பனைக் கேணியினின் று பெருகிப் பாயும் வற்ருத ஊற்றுக்கள்' என்ற வாசகங்கள் பேராசிரியரின் நாட்டார் வழக்கு ஈடு பாட்டைத் தெரிவிப்பதாகும். நொடி சொல்லி அவிழ்ப்பது பேராசிரியரின் சுவையான பொழுது போக்குகளில் ஒன் ருகும்.
 

பேராசிரியர் கணபதிப்பிள்ளையும். பண்பாட்டு விழிப்புணர்வும் 67
பேராசிரியர் கணபதிப்பிள்ளை தமது எழுத்தாலும் லும் செயலாலும் எமது நாட்டுக் கல்விப்பாரம்பரியத்திலும், இலக்கிய மரபிலும் ஏற்படுத்திய பாரிய தாக்கங்களைச் செவ்வனே மதிப்பீடு செய்வதும் நினவு கொள்வதும் மாணவர் பரம்பரை யின் தலையாய கடனுகும். இன்று எமது பல்கலேக்கழகங் களிலே பேராசிரியராகவும், விரிவுரையாளர்களாவும் விளங்கும் பலரும் பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் வழிவழி மரபினர் என்று சொல்லிக் கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடை கிறேன். பேராசிரியர் மாணவர்களிடம் அன்பாகப் பழகுவார். அதிலே அடி உள்ளத்தில் இருந்து முளேத்து எழுந்த அன்பு நிறைந்து இருக்கும். அதிலே நடிப்பு இல்லே, பேராசிரியர் எல் லோருக்கும் இனியவர். மாணவரிடம் அவர் கொண்ட அன்புப் பண்பையே நானும் என து வாழ்க்கையில் பின்பற்றினேன். பேராசிரியருடைய மாணவ பரம்பரையைச் சொல்வதே ஒரு தனி உரையாக அமையும் தாம் எழுதியது மட்டுமன்றி தமது மன்னவர் பரம்பரையையும் எழுதத் தூண்டியவர் பேராசிரியர். எழுதுவதன் மூலமும் பேசுவதன் மூலமும் கல்வி பயிற்று வதன் மூலமும் ஆத்ம திருப்தி கண்டவர் பேராசிரியர் இதனைத் துவும் மலரே என்ற பாடல் தொகுதி முகவுரையிலே பின்வரு மாறு அவரே கூறுகிருர்,
*இக்காலத்திலே நாவல், சிறுகதை முதலியவற்றின் மூலம் சமுதாய ஊழல்களையும், ஒழுக்க நெறியையும் எழுத்தாளர் உலகத்தாருக்குத் துலக்கிக் காட்டுவது போல நானும் சமு தாயத்தில் காணும் உயரிய பண்புகளை மட்டுமன்றித் தாழ்ந்த நிலைகளையும் இன்ப துன்பங்களையும் பாட்டிலே தீட்டிக் காட்டுவதில் உள்ள நிறைவு கண்டேன். பாட்டின் மூலம் சிரிக்கலாம். பாட்டின் மூலம் அழலாம். சிரிப்பதி லும் பார்க்க அழுதலே கூடிய சுவையைக் கொடுக்கும். என் வாழ்வில் நகையும், அழுகையும் அதிகமாக எழுந்த காலங்களில் தீட்டி வைத்தவையே பாடல்கள். இவை எனக்கு இன்பத்தை ஊட்டின; இன்றும் ஊட்டுகின்றன."
W பேராசிரியர் காதலியாற்றுப்படையிலே சமுதாய வரலாறு பருத்தித்துறைப் பிரதேசத்தைப் பின்னணியாகக்கொண்டு நன்கு வடிக்கப்பட்டுள்ளதைப் பலர் இன்று உணர்வதில்லை. நாட்டனர் பண்பாட்டியல் ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள பலரும் காதலியாற்

Page 47
8 வித்தியானந்தம்
றுப்படையை நன்கு படிக்க வேண்டும், என்பது எனது விருப்ப மாகும். காதலியாற்றுப்படையிலே ஆராய்ச்சியாளருக்கு உரிய தரவுகளும், உணர்வனுபவம் நிரம்பிய ஒருவரின் அவதானிப்பு களும், ஒருங்கே காணப்படுகின்றன. இந்நூலுக்கு நான் முன் னுரையும் குறிப்புரைகளும் எழுதி புதிய பதிப்பொன்று வெளி வரவேண்டுமெனப் பேராசிரியரிடம் கூறினேன். இது கைகூட வில்லை. இனியாதல் செய்யலாமென எதிர்பார்க்கிறேன்.
காதலியாற்றுப்படையிற் பருத்தித்துறையை "ஈழமண்டலத் திலங்குறு தலையங்கப் பல்வன மல்கிய பருத்துறையெனும் பதி யெழுவறியாப் பழம்பதி” என வருணிக்கும் ஆசிரியர் அன்னுட் டாரின் உணவு வகைகளைக் கூறும் போது வாயூறுகின்றது.
பனங்காய்க்களியுடன் சாமை மாக்குழைத்து வனைபந்தினைப் போல் நெய்யில் போட்டுத் தட்டுத் தட்டாய்ச் சுட்டுமே எடுத்துச் சுனகிற் பரப்பி விலையது கூறுங் கமழ்தரு செம்பனங் காய்ப்பணியாரமும் அரு விலே கொடுத்தே அரக்கு மாந்தும் மாந்தர் வாய்க்கு வெங்கறிப்பாக வளமுற உதவும் வடையும் கடகமும் முறுக்கு நல் வாய்ப்பன் மோதகமிட்டலி பிட்டுத் தோசை புகழ் இடியப்பம் எள்ளும் கட்டியும் இடித்து நன்கெடுத்து நெய்பிணியாகின் நிகரில் திரணையும் பாணிப்பனுட்டும் பகர் பனங்கட்டியும்
என வரும் அடிகனேக் காண்க.
கந்தவனம் எனும் தலத்திற்குச் செல்வோரைப் பற்றிக் கூறுவது எங்களுக்குப் பழம் நினைவுகளை வரச் செய்கின்றன. அவர் கூறுகிருர்,
பழுத்த செல்வச் சந்நிதி தனக்குங் கந்தன் மகிழ்ந்து கருத்துடனுறையுங் கந்த வனமெனுங் கவின் பெறு பதிக்கும் நேர்த்திக் கடன்கள் நிறைவுறும் பொருட்டு வளைவுறச் செய்து கலிங்கம் வெய்வது நாற்பா விறகு நலமுறக் கட்டிக் கைமுன்ந் தியற்றிருங் காவடி யெடுத்துத்
 

தோன்றுமே வெற்றித் தோமற வைத்த நிகரில் கீதம் நேர்பட வியல அதற்கினை மத்தனம் அதிர்ந்து முழங்க அனவிலனுபவத் தண்ணுவி தானம் அமைவுறப் போடும் அவர்க்கிணையாய்க் காலினை அசைத்துக் காவடி சுழற்றி மயில்போ லசைவுற் றியல்பாகுடும் ஆட்டம் காலடி யெடுப்போ ரொருபுறம் காதற் பெண்களோடு ஆடவர் கப்பல் ஏறுவதை,
விண்ணுெளிர் மதியம் ஒண்ணிலா விரிப்பச் சித்திர வேலை பொற்பொடு செய்து நீரிடை போகா வள்ள மீதிற் தண்டினைப் பற்றித் தகவோடு நீரை ஏலேயேலோ வெனப்பண்ணிசைத்துக் காளையர் வலித்துக் கவித்திடு மோசையும்
எனக் குறிப்பது அந்நாட்டார் காதல் வாழ்வை எடுத்துக் கூறுகி
றது. பருத்தித் துறையில் வாலாக் கொடி விடுவது வழக்கம்.
இதனை ஆசிரியர்,
மூங்கி லெடுத்து முறையோடு கட்டிக் கடதாசி கட்டிக் குஞ்சம் புனேந்த கொக்குக் கொடியுங் கோதறு பருந்துமீ வனமீபெறு வாலாவசையில் சந்திரன் எட்டு மூலையுங் கட்டுக்கொடியும் உறற் கொடி மீன் கொடி யுயராட் கொடியும் விண்ணே யனாவி வெகுவாய்ச் சாடிக் கரணம் பலமுறை எழுந்தெழுந் தடித்தும் பூட்டிய விண்கள் பொலிவோடு கூவக் காற்றேடு சேண்புகு மாண்புடை யோதையும்
எனப்பாடும்போது நேரிலே இக் கொடிகள் பறப்பதைக் காண் பது போல இருக்கின்றது.
யாழ்ப்பாணத்திலிருந்து பருக்கித் துறைக்கு sargas ஆற்றுப்படுத்தும் போது இடையிலேயுள்ள ஊர்களை வருணிப்பது அந் நாட்டுப்பகுதிகளின் இயல்பைக் காட்டுவது போல இருக்
கின்றது.

Page 48
。 70 " 'வித்தியானந்தம்
நீர்வேலி: 。
நீர்வேலி யென்பேர் நீள்பதி வழியிற் சேரிரு புறமுந்தண்னென் றிருக்கும் வாழைக் குழாங்கள் வளர்ந்தினி தோங்கி மாழைமென் குேக்கி வாளே யளவிடும்.
அச்சுவேலி நாய்களேப்பற்றிக் கூறும் போது,
வீட்டு வாயிலின் நீட்டியே காலுடன் வளர்துயி லயின்று வழி மேற்செல்லும் மாந்தர் காலடிப் போந்த மணந்தான்
தரகு காக்கு முருகெழு நாய்போல் விரைவுட னெழுந்து துரிதமாய்ப் பாய்ந்து குதிரைபோ னின்று குரைத்திடு நாய்கள்
உன்றனே நோக்கி உறுமி யெதிர்த்திடின்
ਜੇ ਏਹ வயிரவன் றன்னை மனதினி னினைத்தவன் றுயில் தீர் மந்திரத் தெரிவுறக் கிளப்பின் காலுக் கிடையின் வாலேக் குரைத்துக் களிமிக வடைந் துன் காலடி முகந்து முறையா படங்கி முகத்தினை நோக்கும் நாய் கடித்த பயம் திரும்பி வருகின்றது.
வல்லே வெளியாற் போவது இப்போதும் அவ்வழியாற் பேசவோருக்குப் பெரும் பயம், அதனேப் பின்வருமாறு நயம்பட எடுத்துக் கூறுகிருர்,
புறப் பொறுக்கி யாலென் பெருமரந் தன்னைத் தன் வாழ் பதியெனக் கொண்ட வல்லே முனியும் வாரிரு சங்கிலி சல சல வென்னப் பலபல வொலியோடு தன்பரி வாரஞ் சார்ந்து சூழப் பாதி யாம வேளை தன்னிற் கூ கூ வென்று குழறிக் குமுறிப் பற்பல வுே நவோ டெழுந்து திரிந்தும் இராவழி போந்திடு மாந் தரை யடித்துந் தொல்லே செய்யும் பொல்லா தனியிடம்
தோட்டங்களிலே களவிளேத் தடை செய்ய வெருளிகளே வைப்பது வழக்கம். அதனை ஆசிரியர் மிகச் சுவைபட இயம்பு கிருர்,
 

பேராசிரியர் கணபதிப்பிள்ளையும். பண்பாட்டு விழிப்புணர்வும்
மந்திகை யென்பேர் மாபதி யடையக் கத்தரி யடர்ந்து காய்த்திடு வளமுடைத் தோட்டத்துள்ளே திட முற நின்று பூட்டிய வில்லுப் பிடித்த கையின வெள்ளேச் சட்டை மேலே யணிந்து தலேயிற் ருெப்பி பொலியப் போட்டுத் துள்ளு மீசை தோன்று முகத்தின் நெரித்த புருவத்துருத்த கோபக் கனலெழு கண்ணிற் குறித்த பார்வையர் மாக்களே வெகுட்டு மரபுடை வீரன் தம்மைக் கண்டு தடுதடுப் புற்று நெஞ்சு நடுங்கி நீ பயமெய்தேல் கத்தரித் தோட்டங் காத்திடு முறையினர் x வெருளி யென்னும் பெருமையாளர் இப்படி எத்தனையோ நாட்டார் வழக்குகள் இந்நூலில்
மலிந்து ತವರು... றன.
பேராசிரியர் கணபதிப்பிள்ளை குருபக்தி நிரம்பியவர். தமது ஆக்கங்களுக்கும் உணர்வுக்கும் வழிகாட்டியாக விளங்கிய சுவாமி விபுலானந்கரை நன்றியோடு பல்வேறு கட்டுரைகளிலும் சிறப் பாக மாணிக்கமாலை முகவுரையிலும்'என்னே மேலும் இப்பணியில் ஊக்கிய அடிகளின் அன்பு மொழிகள் இன்றும் என் உள்னத்தை உருக்கா நிற்கும் எனக் கூறியுள்ள வாசகங்கள் நினைவுபடுத்த வேண்டியவை; தம்மை ஆளாக்கிய அறிஞர்களையும், அன்பர் களையும் தமது ஆக்கங்களில் நன்றியுடன் பேராசிரியர் நினைவு கூர்ந்துள்ளமை அன்ஞரது பெரும்பண்பை எடுத்துக் காட்டு வதாகும். அழக சுந்தர தேசிகர் மீது தாம் கொண்டிருந்த பேரன்பையும் பல்வேறு இடங்களில் உணர்த்தியுள்ளார்.
அக்காலத்து யாழ்ப்பாணத்து அறிஞர்கள் பலர் பேராசிரி யர் கணபதிப்பிள்ளேயின் பெருமையினை உண ர வில் லை யாழ்ப்பாணத்துத் தமிழறிஞர் பலர் தம்முள் வளர்க்க முயன்று "தமிழ்ச்சாறு" காண முயன்ற காலத்திலே பேராசிரியர் கணபதிப்பிள்ளை 1951 ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை எழுதிய கட்டுரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துத் தமிழ்த்துறை நடாத்தும் நாட்டார் வழக்கியல் கருத்தரங்கின் போது நினைவு படுத்துவது தவிர்க்க முடியாததொன் று. இதே வளவிலே தான் 1951 ஆம் ஆண்டு தமிழ் மகாநாடு நடைபெற்

Page 49
72 வித்தியானந்தம்
றது. அது ஒரு பெரிய கதை. அதன் எதிரொலியாகப் பேரா சிரியர் தினகரனில் எழுதியவை ஒரு கணம் நினைவு கூரப்படு வது சுவையாகவும் நிறைவாகவும் இருக்கும் எனக் கருதுகிறேன்.
*னன்னே தமிழ் படும் பாடு. இக்காலத்துத் தமிழ் முன் னேறுகிறது; அதனை வளர்க்க நாம் முன்வந்துள்ளோம், என்று மார் தட்டிக் கொடுக்குக் கட்டி மீசை முறுக்கி நிற் கும் தமிழ்ப் புலிகள், கலைக்களஞ்சியச் சிங்கங்கள், கலா மவிர்சகர்கள், காற்சட்டைத் துரைமார், ஆங்கிலத் தமிழர், பிரபல பட்டதாரிகள், அரசியற் சந்தர்ப்பவாதிகள், அரசி யற் பிரமுகர்கள் இந்த விசித்திர நிலையை நோக்குவராக, மூத்தமிழ் நாளுக்கு நான் உருக்குலைகிறது."
என எழுதியுள்ன கட்டுரையிலே நாட்டார் வழக்கை உன ராது இயங்கிய பலரைப் பேராசிரியர் வெளிப்படையாகக் கண் டித்துள்ளனர். பேராசிரியரே கூறியுள்ளது போல காலச்சக்கரம் சுழல்கிறது, முப்பது ஆண்டுகளின் பின்னர் பேராசிரியரையே மதிக்க மறந்த மறுத்த இடத்தில் பேராசிரியர் ஞாபகார்த்தக் கருத்தரங்கு நடைபெறுகிறது.
பேராசிரியரின் மாணவர்கள் வாழ்க.
(இலங்கைத் தமிழ்நாட்டார் வழக்கியற் கருத்தரங்குத் தொடக்க வுரை - 1981)
 
 

ഗ്ഗ് W[7é%Ìಿತ್ಲೆ
பூரீலர் ஆறுமுகநாவலர் பெருமான் எமைவிட்டு மறைந்து ஒரு நூறு ஆண்டுகள் கழிந்துவிட்டன. நூறு ஆண்டுகளில் ஏற் பட்ட மாற்றங்களின் பின்னணியில் நாவலரை மதிபபீடு செய் வதற்கு வாய்ப்பான சூழ்நிலை இன்று ஏற்பட்டுள்ளது. அதற் கான களம் எமது பல்கலைக்கழகத்திலேயே அமைந்துள்ளது. நாவலர் நினைவைப் பேணும் விழாவிலே நினைவுப் பேருரை ஆற் றும் வாய்ப்பு ஏற்பட்டமை எனக்குப் பலவகைகளிலும் மகிழ்ச் சியை அளிக்கின்றது.
முதலாவது இந்த நிகழ்ச்சி இராமநாதனின் கனவுக் கரு வூலமாகத் தோன்றிய யாழ்பபாணப் பல்கலைக் கழகத்து இராம நாதன் மண்டபத்தில் நடைபெறுவதில் ஏற்பட்ட பொருத்தப்பாடு நினைவுப் பேருரையை நிகழ்த்தும் உரிமை எனக்கு உ ைடென் றும் கரு துகின்றேன் ஆறு முகநாவலரின் மருமகன் கைலாய பின்ளேயின் மகளே மனம் முடிததவரும், பரமேஸ்வரக கலலூ

Page 50
வித்தியானந்தம்
ரியின் முன்ஞன் அதிபருமாகிய முத்துக்குமாரு எம். ஏ. அவர் ள் எனது பெரிய தகப்பனுர் ஆவார். இந்த வகையிலே நானும் ாவலர் பரம்பரையைச் சேர்ந்தவன் எனக் கூறுவதில் பெருமை டைகின்றேன்.
குறிப்பாக இந்த மண்டபத்திலேதான் நாவலர் பரம்பரையில்
வந்த பண்டிதமணி கணபதிப்பின்ளே அவர்களுக்கு இலக்கிய லாநிதிச் சான்றிதழ் வழங்கும் பெருமையும் எனக்குக் கிட்டி
ஆர்.
இரண்டாவது இராமநாதனுக்கும் ஆறுமுகநாவலருக்குமுள்ள நெருங்கிய தொடர்பு ஆகும். இராமநாதனைச் சட்ட சபை உறுப் பினராகத் தெரிவு செய்ய வேண்டுமென முன்னின்று உழைத்த வர் ஆறுமுகநாவலர் சட்ட சபையில் ஆறுமுகநாவலரே இந் துக்களின் சீர்திருத்தவாதி-வீரன் எனப் பாராட்டியவர் பொன்னம்
லம் இராமநாதன்.
வைரம் பாய்ந்த வைதீகப் பற்றுடனும் தீர்க்க தரிசனத்துட ணு 8 இயங்கிய நாவலரின் இலட்சியங்களும், தியாக மும், செய லாண்மைத்திறனும் எமது இளைய தலைமுறையினரின் இதயங்க ளில் பதியும் வகையிலே நாவலர் சபையாற்றும் பணிகள் எமது மனதிற்கு நிறைவைத் தருகின்றன.
6. Φ
. என்ணுேடு இங்கிலீஷ் கற்றவர்களுள்ளும் எனக்குப் பின் இங்கிலீஷ் கற்றவர்களுன்ஞம் அநேகர் தங்கள் சாதிக் கேற்ற உத்தியோகம் பெற்று வாழ்ந்திருக்கக் கண்டும், நானும் என் சக்திக்கேற்ற உத்தியோகத்தின் பொருட்டு முயற்சி செய்யின், அது தப் பாது சித்திக்குமென்றறிந் தும், அஃதில்லாமையால் விளையும் அமைதிப்பைப் பார்த் தும் உத்தியோகத்தை விரும்பவில்லை. தமிழ்க் கல்வித் துணை மரத்திரங் கொண்டு செய்யப்படும் உத்தியோகம் வலிய வாய்த்த பொழுதும் அதையும் நான் விரும்பவில்லை."
என்ற வாசகங்களைத் தமது நாற்பத்தைந்தாவது வயதில் தாம் வெளியிட்ட விஞ்ஞாபனத்தில் நாவலர் இலட்சிய வேட்கை யோ டு எழுதி வைத் துள்ளார். சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு அமையும் வகையிலே தமது வாழ்க்கையை இலட்சியமயப்படுத்தி வாழ்ந்த நாவலர், சென்ற நூற்ருண்டில் சைவத் தமிழ்மக்களின் பல்வேறு வளர்ச்சிப் படிகளிலும் பதித்த முத்திரைகள் சர்வ வியாபகம் கொண்டவை. எனது மதிப்புக்குரிய நல்லா சான்
 
 
 
 
 
 
 
 
 

நாவலர் சாதனைகளும் நம்மை எதிர்நோக்கும் பணிகளும் 75
விபுலானந்தர் நாவலரை ‘ஈழநாட்டின் இணையிலாப் ருநிதியனையான்' என்று கூறியதோடு அமையாது.
'நல்லூர்த் தமிழ்மன்னர் மடித்தலத்திலிருந்து வினேயாடித் தவத்தின் மிக்க முனிவருரைத்த ஞானமொழி கேட்டு மகிழ் வெய்தி வரகவிவாணரோடு உடனுறைந்து களிமகிழ் வெய்திய தமிழ் யாழ்ப்பாணம் என்னுமி நாடக மேடையில் தனது பூரண வனப்புத் தோன்ற நடித்தகாலம் ஆறுமுக நாவலர் காலமாகும்"
னவும் கூறி இலங்கைத் தமிழ் வரலாற்றில் நாவலர் பெறும்
த்தைச் சுவைபட எடுத்துக் கூறியுள்ளார்.
தான் வாழ்ந்த காலத்தில் மட்டுமன்றித் தொடர்ந்துபோம்" ாலமெல்லசம் தனது சுவடுகளைப் பதிக்கவல்ல செயலாண்மைத் றன் பொருந்தியவராக நாவலர் வாழ்ந்தார். நாவலரை ஒரு ல்லேக்கோட்டுள் மடக்கிக் குருபூசை மட்டும் நடத்திய காலம் ாய், நாவலராய்வுகள், நாவலரியலாக மலர்ந்துகொண்டிருக் மீ இன்றைய சூழலிலே, எம்மை விழிப்புறச் செய்த நாவலரை னங்காணுவது அவசியமாகும். 1877 ஆம் ஆண்டு இலங்கை நசன் பத்திரிகையிலே "கருணை" என்ற புனைபெயரில் எழுதிய ற்றை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
"இது நல்ல சமயம் சைவருக்கும் நல்ல சமயம் வைஷ் னவருக்கும் நல்ல சமயம் கிறிஸ்தவருக்கும் நல்ல சமயம் ஒரு சமயமும் இல்லாதவருக்கும் நல்ல சமயம்! எல்லா ருக்கும் நல்ல சமயம் ஒருவரும் சந்தேகிக்காத சமயம்! சொன்னேன்! சொன்னேன்! இந்தச் சமயத்தை நழுவ விடாதேயுங்கள்"
எனத் தனது காலத்துக் கற்ருேரை மட்டுமன்றி மற்ருேரை யும் நோக்கி அறை கூவும் வாசகங்கள் இனமத மொழிக்கப் பாற்பட்ட பரந்த நோக்கினைக் காட்டுவனவாகவுள் ளன.
பதினரும் நூற்றண்டிலிருந்து நான்கு நூற்றண்டு காலமாக ஏற்பட்ட மேனுட்டாதிக்கமும், போலி வாழ்க்கை மோகமும் எமது சமூக அமைப்பைச் சீர் குலைத்தது. பத்தொன்பதாம் நூற் ருண்டுச் சமுதாயத்தில் வீருர்ந்த பொதுநோக்கோடு பரநத இலட்சியங்களை உள்ளடக்கிச் செயற்பட்டவர் நாவலர்.

Page 51
76 வித்தியானந்தம்
எதையும் லட்சியம் செய்யாது சுழன்றுகொண்டிருக்கின்ற காலச் சக்கரத்தைக் கோயில் மனேச்சர்மார் சிலரும், பெரும் புள் ளிகளும், ஆங்கிலங்கற்ற துரைத்தனத்தாரும், கிறிஸ்தவ பாதிரி மார்களும் தத்தம் போக்கிலே இயக்க முற்பட்ட சூழலிலேயே நாவலர் வெகுண்டெழுந்தனர். நாவலர் கிறிஸ்தவ மணர்க்கத்தவரின் கேலிக்கெல்லாம் சரட்டையடி கொடுத்தது மட்டுமன்றித் தமது சமூகத்தின் எழுச்சிக்கு அயராது பாடுபட்டார். நாவலரின் இயக் கம் உலக சிந்தனையற்றவர்களாகவிருந்தவர்களே உலகசிந்தனை யுடன் இயங்கச் செய்தது; விழிப்படையச் செய்தது. திண்ணைப் பள்ளிக்கூட மரபு இருந்த சூழலிலே, கல்வி வாய்ப்பு அற்றேர் அக்காலத்திலே பலர் இருந்தனர். இந்நிலையிலே பாதிரிமாரின் சூழலே நோக்கித் திரும்பிய மக்களை நாவலர் திருப்பி ஒருமுகப்
படுத்தினுர்,
நாவலர் காலத்தில் வாழ்ந்த கார்த்திகேயப் புலவரின் (18191898) அனுபவமும் அதனையொட்டிப் பிறந்த இரு பாடல்களும் இச் சூழலை நன்கு விளக்குகின்றன. கிறிஸ்து மார்க்கத்தினர் கார்த்திகேயப் புலவரைப் பின்வருமாறு பரிகசித்தனர்:
'பிறந்த போது பூணு நூல் குடுமியும் பிறந்ததோ பிறந்துடன் பிறந்ததோ பிறங்கு நூல் சடங்கெலாம் மறைந்த நாலு வேதமும் மனத்துளே உதித்ததோ நிலம் பினந்து வானிழிந்து நின்றதென்ன வல்லிரோ"
இதைக் கேட்ட புலவர்
"உதித்த போது சட்டைதொப்பி தானுங் கூடவுற்றவோ மதித்த ஞான ஸ்நானமும் வலியவந்து தேர்ந்ததோ விதித்த பைபிலான துங்கள் மெய் உளக் து உதித்தவோ கதித்த பேச்சை விட்டு அனுதி கடவுளைக் கருதுமே”
- என்ற பாடலைக் கூறிப் பரிகசித்தார். பாதிரிமாரின் கலிகளுக்கு எதிர்க்குரல் கொடுக்கும் சண்டமாருதமாக இயங் (), V
நம்முடைய கோயில் மனேச்சர்மாருக்குப் பூமிசாஸ்திரம் தெரியாது. உலகத்திலுள்ள குடி சனத்தொகை தெரியாது. சமயங்களுடைய தொகை தெரியாது. தெற்கே கொழும் புக் கும் வடக்கே சிதம்பரத்துக்கும் போய் வந்து விட்டால் உலகம் முழுவதும் சுற்றிக்கொண்டு வந்து விட்டோமென்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாவலர் சாதனைகளும் நம்மை எதிர்நோக்கும் பணிகளும் 77.
பார்கள் புறச் சமயிகள் இங்கிலீஷ் முதலிய பாஷைகளிலே எவ்வாறு பழிக்கின் ருர்கள் என்பது அவர்களுக்குத் தெரி யாது. அவர்கள் தமிழிலாயினும் இங்கிலீசிலாயினும் பத்தி ரிகையே வாசிக்கிறதில்லை ஐந்தாறு கிறிஸ்தவர்களும் முஸ் லிங்களும் நீங்க மற்றெல்லோரும் உலகத்திலே சைவர்க ளென்பது அவர்கள் துணிபு. இவ்வளவு அறிவுடையவர் கன்தாம் நம்முடைய பூர்வ சென்மத் தத்துவத்தால் மனேச் சர்கனாயிருக்கிருர்கன்"
-என 1890 ஆம் ஆண்டு இந்துசாதனத்தில் 'அவதானி ருவர் கூறியுள்ள மேற்போந்த நிலேயே அக்காலத்தில் நிலவி யது. இதுபோன்ற சூழலிலேயே நாவலர் பணிகளும் தொடர்ந் தன. நாவலரின் பணி சைவக் காவலுக்கும் சைவச்சீர்திருத்தத்
அக்கும் வழிவகுத்தது.
நாவலருடைய பணிகள் வெறுமனே சமய இயக்கமாக மட்டு மன்றித் தமிழிலக்கியப் பாரம்பரியத்தையும், பண்பாட்டுத் தொடர்ச்சியையும் அறுத்து விடாமற் காப்பாற்றிய பேரியக்கம் என்ற உண்மையை விளங்கிக் கொள்வது அவசியம்.
அந்நியராட்சியில் ஆங்கிலம் மூலம் பெற்ற கல்வியை பேடிக் கல்வி என மகாகவி பாரதியார் கூறிஞர்.
'நரியு பிர்ச்சிறு சேவகர், தாதர்கள்,
நாயெனத் திரியொற்றர் உணவினைப் பெரிதெனக்கொடு தம்முயிர் விற்றிடும்
பேஜயர், பிறர்க்கிச் சகம் பேசுவோர், கருதுமிவ்வகை மாக்கள் பயின்றிடுங் கலை”
, எனப் பாரதியார் இழித்துரைக்கின் கு.
தமிழ் மக்களின் ஆன்மீக உணர்வினையும், ஆன்ம கெளரவத் தையும் பேணும் கல்வி முறையென்ன்றின் அவசியத்தைப் பத் தொன்பதாம் நூற்றண்டில் வலியுறுத்தியவர் ஆறுமுகநாவலர். முக்கிய கிராமங்களில் வித்தியாசாலைகளே நிறுவுவதன் மூலமும் சைவப்பிரசாரஞ்செய்வதன் மூலமுமே தமது லோகோபகாரமான பணிகளைச் செய்தார் நாவலருக்குச் சமயம் உயிர்; மொழி உடல், உயிர் நிலபெறுவதற்கு உடல் நல்ல முறையிற் பேணப் படல் வேண்டும். எனவேதான் சமயத்தை வளர்ப்பதற்கான கல்வி விருத்தியைத் தமது தலையாய பணியாகக் கொண்டார்.

Page 52
வித்தியானந்தம்
மாணவர்கள் பாரம்பரியப் பண்பாட்டுச் சூழலை உணர்ந்து யிலத்தக்க வகையில் நூல் வெளியீட்டு முயற்சிகளிலும் பாடதி ட்டங்களே அமைக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டார். சிதம்பரத் ப் பாடசாலை பற்றி அவர் விடுத்த விஞ்ஞாபனமும், தமது யாழ்ப்பாணத்துப் பாடசாலையின் அமைப்பு, வளர்ச்சி நோக்குப் பற்றி அரசாங்கத்துக்கு விடுத்த மனுவும் இன்றைய சூழ்நிலை யிலே ஒரு பல்கலைக்கழகத்திற்கான அடித்தளச் சிந்தனையைக் கொண்டனவாகக் காணப்படுகின்றன. அவர் சிதம்பரத்தில் றுவிய பாடசாலேயே பிற்காலத்தில் அண்ணும்லேப் பல்கலைக் கழகம் நிறுவுவதற்கு வழிகாட்டியாக அமைந்தது.
இவ்வேளையில் நாவலர் ஆங்கிலக்கல்வியால் வரும் அறிவி இனக் கொண்டு சைவப் பாரம்பரியத்தையும் அதன் வழியாகத் தமிழ்ப் பாரம்பரிய தீதையும் எவ்வாறு துல்லியமாக்கிஞர் என் தை நாம் விளங்க வேண்டும். இவற்றை இன்றைய உயர்கல்வி நாக்கங்களுடன் இயைத்து நோக்கும்போது பாரம்பரியத்தை யும் சமகால சமூகத் தேவையையும் அடித்தளமாகக் கொண்டே உயர்கல்வி அமையவேண்டும் என்ற உண்மை நன்கு இலங்கு கின்றது எனக் கூறலாம்.
நாவலர் அக்காலத்திலேயே ஆங்கிலக் 66 யத்தை உணர்ந்தார் என்பதை நாம் இன்றைய சூழ்நிலையில் மனதிற்கொள்ள வேண்டும்.
கல்வி நிலையங்களிலே நல்லொழுக்கமும் விவேகமும், கல்வி யில் ஆர்வமும் விருப்பமும், உடையவர்களே ஆசிரியர்களாக நியமிக்கப்படவேண்டும் என நாவலர் வற்புறுத்திஞர். எனவே தமிழ்க் கல்விக்கு நாவலர் செய்த முதற்ருெண்டு குருகுல முறை யில் சிலருக்கு மட்டும் பயன் பட்ட கல்வியை யாவருக்கும் பயன் படக்கூடிய வகையில் வித்தியாசாலைகளே நிறுவிச் செயற்பட்ட மையேயாகும். தமது பாடத் திட்டத்தில் சைவ சமய நூல்கள், பூகோன நூல், வைத்தியம், சோதிடம், வேளாண்மை நூல் வணிக நூல் முதலிய அறிவியற் கலைகளைப் புகுத்தியமை மற் றைய தீட்சண்யம் பொருந்திய தொண்டாகும்.
இன்று நாம் விஞ்ஞானத்துறை மாணவர்களேயும் கலைத் துறை மாணவர்களேயும் பயிற்றி வருகின்ருேம் தாய்மொழியிற் பயிலும் எமது மாணவர் ளுக்குப் பாரம்பரிய முறையைத் தழு வித் தமிழ்க் கல்வியை நாம் இன்னும் தெளிவாகப் பயிற்ற வேண்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாவலர் சாதனைகளும் நம்மை எதிர்நோக்கும் பணிகளும் 19
டும். விஞ்ஞான மாணவர்கள் தமிழை நன்கு பயில வேண்டிய தேவை உருவாகியுள்ளது. கலை மாணவர்கள் வளர்ந்து வரும் அறிவியல் வளர்ச்சிகளையும், உலகின் வேகமான வளர்ச்சியையும் உணரும் வகையில் ஆங்கிலக் கல்வியில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் மாணவர்கள் ஆங்கிலத்தையும் தமிழையும் நன்கு பயில வேண்டுமென்பதைத் தீர்க்கதரிசனத்துடன் உணர்ந்து, ஆறுமுகநாவலர் அன்றைய கால நிலையிற் செயற்பட்டார். இதுவே இவருடைய கல்விமுறையின் தீர்க்கதரிசனம் பொருந் திய செயலாகும். 臀
ஆறுமுகநாவலரின் இத்திட்டங்கள் சுவாமி விபுலானந்தரைப் பிற்காலத்தில் நன்கு கவர்ந்தன. அவரின் வாசகங்களிலேயே இதனை அவதானிக்கலாம்:-
'கல்விச் சாலைகள் பல நமது நாட்டிலிருக்கின்றன. இவற் றுட் பெரும்பாலன புற மதத்தாரால் நடாத்தப்படுவன. புற மதத்தாருடைய முதல் நோக்கம் தமது மதத்தைப் பரப்புவது அதற்குக் கல்விச்சாலைகள் கருவியாகவும் நிலைக்களஞகவும் இருக்கின்றன. ஆதலால் நமது சிறுவரை நமது சமய நெறியிற் பயிற்றுவதற்கு நமக்கென்று கல்விச் சாலேகள் வேண்டும் என்பதை முதன் முதலில் எடுத்துக் கூறியவரும் அதற்காக வேண்டுவனவற்றைச் செய்தவரும் காவலரும் பாவலரும் புகழும் பெருந்தகைமையும் வாய்ந்த பூரீலறி ஆறுமுக நாவலரேயாவார். அவர் காட்டிய நன் முன்மாதிரியைக் கடைப்பிடித்தே நமது சைவத் தமிழ் வித்தியாலயங்களும் எழுந்தன. சமயக் கல்விக்குத் தமிழ் இன்றியமையாதது. ஆதலாலே தமிழை வளர்ப்பவர் சைவத்தை வளர்த்தவராவார். இம் முயற்சி ஒருவராலாவ தன்று." N
எனக் கூறுகின்ருர், நாவலர் பேர்சிவலுக்குத் தமிழ்ப் பண்டி தராக இருந்துகொண்டே 1846 இலிருந்து தக்க மாணவருக்கு இரவிலும் காலேயிலும் இலவசமாகக் கல்வி கற்பித்து வந்தார். அதன்பின் 1848 இல் வண்ணுர்பண்ணைச் சைவப்பிரகாச வித்தியா சாலையை ஆரம்பித்தார். இருபது ஆண்டு காலத்துக்கு மேலாக அரசாங்கப் பண உதவி கிடையாமலே பாடசாலையை நடாத்தி வந்தார் பிடியரிசி தண்டி அதனை விற்று ஆசிரியர்களுக்குச் சம் பளம் கொடுத்தே கல்வியை வளர்த்தார்.
"நல்லொழுக்கமும், விவேகமும், கல்வியில் விருப்பமும், இடையரு முயற்சியும், ஆரோக்கியமும் உடையவர்களாய் பரீட்

Page 53
வித்தியானந்தம்
சிக்கப்பட்ட பிள்ளேகள், அன்னம், வஸ்திரம் முதலியவை கொடுத்து உயர்வாகிய இலக்கண இலக்கியங்களேயும், ଔନ୍ଧ ଓ ଶuଥF୩ # திரங்களேயும் கற்பித்தல் வேண்டும். அவர்களுள்னே தேர்ச்சி யடைந்தவர்களே உபாத்தியாயர்களாகவும், சைவப் பிரசாரகரீக னாகவும் நியோகிக்கலாம்' என்று தமது விஞ்ஞாபனம் ஒன் றிலே கூறியுள்ளார். சென்ற நூற்றண்டிலே தர்மாவேசத்து டன் இயங்கிய நாவலரை இலவசக் கல்வியின் தந்தை எனக் கூறுவதே முற்றிலும் பொருத்தமானதாகும். கைம்மாறு கரு தாத நிஷ் காமியப் பணியாகவே கல்வியை நாவலர் நோக்கிஞர். நான்காம் பாலபாடத்திலே "செல்வம்' என்ற பாடத்தில் வரும் பின்வரும் வாசகங்கள் அவதானிக்கத்தக்கன:
'பொருள் சம்பாதிக்கும் நெறிகளாவன: வித்தைகற்பித்தல், உயிர்க்கு உறுதி பயக்கும் நூல்களையும் உரைகளேயும் செய்து வெளிப்படுத்தல், வேளாண்மை, வாணிகம், இராச சேவை, சிற்பம் முதலியவைகளாம். ஞான நூலை வேதனத் தின் பொருட்டு கற்பித்தலாகாது; கற்பித்தவர் நரகத்தில் வீழ்ந்து வருந்துவர்.'
இது கல்வியை மதமாகவும் மதத்தைக் கல்விவழி வருவ தாகவும் கொண்டவரது நிலபாடாகும். இன்றைய காலத்தில் இது பொருந்தாவிடினும் நாவலரின் இலட்சிய வேகத்தையே இவ்வசனங்கள் எமக்குக் காட்டுகின்றன. நாவலர் பாதிரிச் சூழலில் ஆங்கிலக் கல்வியைப் பெற்றவர். ஆங்கிலக் கல்வியின் அவசியத்தை உணர்ந்தவர். எனினும் தாய்மொழி மூலம் கல்வி பெறுவது மாணவனே முழு மனிதனுக்கும் என்று போலும் நாவ லர் தமது பாடத்திட்டத்தைப் பரந்த அடிப்படையிலே அமைக்க முற்பட்டார். தேவை யேற்பட்டபோது வண்ணுர்பண்ணையில் ஆங்கிலப் பாடசாலையையும் ஆரம்பித்து நடாத்தினர். இது
அக்காலப் பாதிரிமார்களுக்குப் பெருந்திகிலேக் கொடுத்தது. நாவலரது பதிஞன்கு வருடக் கிறிஸ்தவ அநுபவத்தின் வாயி லாக, அவர் கொண்ட முடிவு யாதெனில், தமிழ் மூலம் கல்விப் போதனை அமைவதாக இருந்தாலும் ஆங்கிலக் கல்வியும் தேவை என்பதாகும். இதனையே நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் இன் றைய கல்விமான்களும் வற்புறுத்துகின்றனர்.
நாவலர் கல்வியை வெறுமனே சிவபுண்ணியமாக மட்டும் கருதியவரல்லர் கல்வியை வெகுசனங்களுக்குக் கொடுப்பதன் மூலம் யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றித் தமிழ் கூறும் நல்லுல இத்தையே தலைநிமிர வைக்கவேண்டுமென்ற வேனவாவுடன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாவலர் சாதனைகளும் நம்மை எதிர்நோக்கும் பணிகளும் 8.
நாவலர் இயங்கினர். அநேகர் இடையூறில்லாமல் கல்வி, சரஸ் திரங்களைப் பயின்று வல்லராகும்பொழுது நமது சமூகம் உய் யும் நெறி ஏற்படுமென்பதை நன்கு உணர்ந்து செயலாற்றிய வர் நாவலர் பெருமான். "யாவரும் சித்த சமாதானத்தோடு சிந் திக்கக் கடவர்கள் ' என்ற இறுதிக் கூற்ருேடு தமது பிரகட னத்தை நிறைவு செய்கின்றர். இதுவே நாவலர் 'போம் பொழுது அருந்துணை புரிந்த புண் ணியம்' என நான் கருதுகின்றேன்.
நாவலரது பதிப்புக்களும் உரைகளும் நாவலரின் கல்விப் பணியின் அடுத்த அமிசமாகும். சைவ நூல்களை வெளியிடு வதில் மட்டுமே முதலில் ஆர்வம் கொண்ட நாவலர் இலக்கிய இலக்கணங் களை வெளியிட வேண்டிய தேவையை உணர்ந்து இயங்கினர். நாவலர் திருக்கோவையார் பதிப்பின் பின்னிணைப் பிலே தமது சமய வரம்பு கடந்த தமிழார்வத்தைப் புலப்படுத்தி யுள்ளார்.
"முற்காலத்தில் உள்ள மகிமை பொருந்திய புலவர்க எாலே தமிழிற் செய்யப்பட்ட நூல்களுள்ளும், உரைக ளுள்ளும் அளவில்லாதவைகள் அச்சிற் பதிப்பிக்கும் வழக் கம் இன்மையால் இறந்து போயின?
என மணங்கவன்ற நாவலர், அப்பழைய நூல்களைப் பரி சோதித்துப் பதிப்பிக்கும் பாரிய தொண்டின் தேவையை, உணர்த்தியுள்ளார். இறையஞர் அகப்பொருள் உரை, வீர சோழியவுரை, நேமிநாதவுரை, பாரதம், கல்லாடம், சீவகசிந்தா மணியுரை, சிலப்பதிகாரவுரை, மணிமேகலை, வளையாபதி, கலித் தொகையுரை, புறநானூறு , போன்றவற்றையும் வெளியிட வேண்டுமெனச் செய்துள்ள பிரகடினம் சமயவரம்பு கடந்த உணர்வினேயே காட்டுகின்றது. நாவலரின் நூற்பதிப்புமுயற்சிகள் ாடசாலை மாணவர்களின் தேவைகளை மட்டுமன்றி உயர்கல்விக் ான தேவைகளையும் நிறைவு செய்யும் வகையில் அ மையலாயின
இன்று புற்றீசல்போல வெளிவந்து கொண்டிருக்கின்ற லிவுப் பதிப்புக்களையும் ஏனைய பதிப்புக்களையும் நோக்கும் போது ஒரு குறிப்பைக் கூற விரும்புகின்றேன். சொற்களைப் பிரித்து எழுதும் பொழுது, சந்திபிரித்து பொருள் சிதையும் வகையில் தவருண முறையிற் பதிப்பிக்கின்ருர்கள். பதிப்புக் இருமம் எவ்வளவு கவனமாகச் செய்யப்படவேண்டும் என்ப தைப் பலர் உணர்வதில் 60. நாம் தமிழ் பயிற்றும்பொழுது சில பதிப்புக்களைப் பார்க்கவேண்டாம் என்று மாணவர்களுக்குக் கூறு

Page 54
82 יה R வித்தியானந்தம்
வதுமுண்டு. நாவலர் பதிப்புக்களின் மகிமை எத்தகையன் என் பதை இன்றைய பதிப்புக்களோடு ஒப்பிட்டு நோக்கும்போது நாம் கூருமலே நீங்கள் விளங்கிக் கொள்ளமுடியும் இன்று வெளிவரும் பதிப்புக்கள் பலவற்றைத் தூக்கிக் குப்பையில் எறியவேண்டும். அப்போதுதான் மாணவர்களைக் காப்பாற்றிக் GOSAF cair GVT GRÖTT LÊ.
நாவலரின் உரைநடைப்பணி கல்விப்பணியின் தொடர்ச்சி யாக அதன் வழிவந்தவொன் ருகும். *。 'நம்முடைய சைவசமய நூல்களே எல்லார்க்கும் எளிதின் AnGu#ötbrāb பொருட்டு வெளிப்படையாகிய வசன நடையிற் செய்து அச்சிற் பதிப்பித்து வெளிப்படுத்துவது" தமது நோக்கம் எனக் கந்தபுராண முகவுரையிற் கூறியுள் ளார். பெரியபுராண முகவுரையில் நாவலரே தமது உரைநடை பற்றிப் பின்வருமாறு கூறுகின் ரூர்-ே
'நிறைந்த கல்வி அறிவுடைய வித்து வான்களும், குறைந்த கல்வியறிவுடைய பிறரும் ஆகிய யாவரும் எக்காலத்தும் வாசித்து உணரும் பொருட்டும், கல்வியறிவில்லாத ஆட வரும் பெண்களும் பிறரைக்கொண்டு வாசிப்பித்து உண ரும்பொருட்டும், பெரும்பான்மையும், இயற்சொற்களும் சிறுபான்மையும் அவசியம்ாகிய வட சொற்களும் பிர யோகிக்கப்படும் சத்தியரூபமாகச் செய்து வாசிப்பவர் களுக்கு எளிதிலே பொருள் விளங்கும்படி பெரும்பான்மை யும் சந்தி விகாரங்கள் இன்றி அச்சிற் பதிப்பித்தேன்'
நாவலரது உரைநடையின் சமூக நிலைபாடு பற்றி அறிந்து கொள்வது அவசியம். தமது வாணுளின் பிற் கூற்றிற் பொதுமக் களே நோக்கி விஞ்ஞாபனங்களும், வேண்டுகோள்களும் எழு திய நிலையிலே எளிமையான பொதுமக்கள் விளங்கும் நடையைப் பயன்படுத்தினுர், தமிழ்ப்புலவர்களும் கல்வி மான்களும் சம்பிர தாயமான பிரபந்தங்களையும் தலபுராணங்களையும் யாப்பு நுணுக் கங்களுக்கு முதன்மை கொடுத்து எழுதிக்கொண்டிருந்த காலத் திலே தமிழிலக்கிய வளர்ச்சிக்கு உரைநடை முக்கியம் என்பதை உணர்ந்த ஆறுமுகநாவலர் தானே அதற்கு வழியும் காட்டி
நாவலருடைய தனிப்பண்பு இலக்கணச் சிதைவில்லாமல் எழுதியமையும், பிறமொழிச் சொற்களைத் தமிழ்மரபுக்கு அமை

நாவலர் சாதனைகளும் நம்மை எதிர்நோக்கும் பணிகளும் 83
யக் கையாண்டமையும் ஆகும். இன்று கலேச்சொற்களைத் தொகுக் கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் அனைவரும் நாவ லர் கருத்துக்களை ஆழ்ந்து சிந்தித்தல் வேண்டும். நாவலர் மொழித்தூய்மையைப் பேணியவர் மொழிமரபைச் சிதையா மற்
காப்பாற்றியவர். நாவலர் பதிப்பு சுத்தமான பதிப்பு நாவலர் எழுத்து சுத்தமான எழுத்து நாவலர் வழி எமது எழுத்தாளர் களுக்கும் தமிழ் அறிஞர்களுக்கும் வழிகாட்டியாக அமைந்துள் ாேது. இதனையுணராது, சொற்சிதைவுகளை அபரிமிதமாகப் பயன் படுத்தும் இன்றைய எழுத்தாளர்களைப் பற்றிச் சிந்திக்கும் பொழுது தமிழார்வம்கொண்ட எம்மனுேர் வலைப்படாமல் இருக்கமுடியாது. 鷺
நாவலரின் கல்விப்பணியோடு தொடர்புகொண்ட அமிசங்கள் பற்றி இதுவரை கூறினேன் கல்வியைத் தொடருதல், கல்வி யைப் பரப்பல் ஆகிய இரண்டும் தியாக மனப்பான்மையினைக் கொண்டவர்களால் மாத்திரமே மேற்கொள்ளப்படுபவை என்
பது நாவலர் வரலாற்றினுலும் அவர் போன்ற பிற கல்வி வழி
காட்டிகளின் வரலாற்றினுலும் எமக்குத் தெரியவருகின்றது என் பதனை நாம் மறந்துவிடலாகாது. இன்னல்கள் பலவற்றுக்கி ை யிலேயும் நாவலர் தமது சமயப் பணியையும் கல்விப் பணியை யும் ஆற்றிஞர். அவற்றை நாம் இன்று கிளேப்படுத்தியோ, பன் முகப்படுத்தியோ நோக்கினுலும் அடிப்படையிலே செம்மை
சேர் வாழ்க்கையும் வாழ்க்கை கொண்டோரே அப்
பணியினைச் செய்யத் தகுந்தவர் என்னும் அடிப்படை உண்மை. புலனுகின்றது.
நாவலரின் செயலார்வத்திற்கும், செயலாண்மைக்கும் பின் னணியாக அமையும் இன்னுமொரு அமிசத்தை இங்கு காட்டு வது பொருந்தும் 'உரு உட்காகும்" என்பது தொல்காப்பியச் சூத்திரம். பகைவர்களும் கண்ட மாத்திரத்தில் மனம் உட்கித் தம்வசமிழந்து அடிபணியும் தன்மையினை உரு எனக் குறிப் பரீ உரையாசிரியர். இதன் பொருள் உட்கு' என்பதாகும் மனம் உட்கத்தக்க தன்மையே குணம் ஆகும். இந்த உரு என்ற குணம் நாவலர் அவர்களின் தோற்றத்திலும், முகத்திலும், வெகு சிறப்பாக அவர்களுடைய பார்வையிலும் இருந்தது என்பர். இதனை இலக்கிய கலாநிதி பண்டிதமணி கணபதிப்பிள் ஃன "நீங் இன் ஒருக்கால் போய்ப் பாருங்கள்" என்ற கட்டுரையில் விளக்கி யுள்ளார். 鬣 V

Page 55
வித்தியானந்தம்
கந்தையா மாப்பாணர் அடிக்கடி வண்ணுர்பண்ணையிலிருக் கும் தாசி வீட்டிற்குப் போகும் வழக்கமுடையவர். அதிகாலையில் திரும்பி வரும்பொழுது நாவலர் பாடசாலைத் தெருவால் வருவார். அப்பொழுது நாவலர் வேப்பம் குச்சியால் பல் ஆலக்கியவண் னம் முற்றத்தில் உலாவுவார். நாவலரைக் கண்டவுடன் தோளால் சால்வையெடுத்து மரியாதை செய்து விட்டுப் போவார். நல்லூர்ப் பிரமுகராகிய இவரை அக்காலக் கந்தமடப் பிரபுக்கள் அலர் குாற்றிக் கேலி செய்தனர். அப்பொழுது கந்தையா மாப்பாணர் கூறிய வாசகங்கள் தான் "நீங்கள் ஒருக்கால் போய்ப் பாருங் *ள்' என்பது. இது நாவலருடைய ஆளுமையின் தனிச் சிறப் பினே விளக்கு தாகும். நாவலரைக் கண்டமாத்திரத்தே எத் ஆணே பெரிய எதிரியும் தலைகுனிந்து பெணவியமாக வணக்கம் செய்யும் வழக்கம் இருந்து வந்தது. நாவலர் இந்தியாவிற் பிர சிங்கம் செய்த காலத்திலும், நாவலர் வீட்டில் இல்லேயென்பதை அறிந்திருந்தபோதும், அவரின் விரோதியாகிய மாப்பாணர் கலே குனிந்து சால்வையைத் தோளால் எடுத்து வணக்கம் செய் தாரென்ருல் நாவலரின் ஆத்ம சக்தி, ஆளுமை வலு @ଈuj ଓ ଅଶୀ வ்வளவிற்கு ஆட்டி வைத்தது என்பதை உணர்ந்துகொள்ள a) so ab. -
நாவலர் மறைந்த நூற்ருண்டை நாம் இன்று நினைவு கூரு கின் ருேம். இழப்புக்கள் எப்பொழுதும் ஈடுசெய்ய முடியாதவை. நாவலர் மறைந்தபொழுது இலங்கை நேசன் பத்திரிகை எழு திய வாசகங்கள் மனதைத் தொடுபவை:
'தமிழ்நாடு தன் சிரமிழந்தது நாமகளும் தன் மாங்கல்யம் இழந்தான். ஆயின் யாழ்ப்பாணம் அனைத்தும் தன் அங்கம் பங்கம் பெற்றது. . . திராவிட சாகரம் வற்றியது. தற் கால வேதாகம போதஞ சமுத்திரம் வரண்டது. கொடை மேகங்கள் யாவும் ஒட்டெடுத்தன.”
என்றும், ஆறு முக நாவலர் என்னுமிப் புண்ணிய ஆன்மா விகு லன் ருே தமிழ்மொழி மதுரம் பெற்றது. இருளில் கிடந்த ஆயிரம் கோடி தமிழ் நூல்கள் வெளிவந்தன. சைவசமயம் இத்தகைய தென்பது உலகறிய வந்ததும் இவராலன் ருே”
என்றும் பிரலாபித்தது வாழ்ந்த காலத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து தமது ஆளுமையின் தி ற னெ ல் ல ள மீ தங்கால வளர்ச்சி யிற் பிரதிபலிக்கும் வண்ணமி இயங்கிய நாவலரின் பெருமையை
 

நாவலர் சாதனைகளும் நம்மை எதிர்நோக்கும் பணிகளும் 85
அக்காலம் நன்குணர்ந் திருந்தது. அரசியற்றலைவர்களின் இழப் பிலும் மேலாக நாவலரின் மறைவைக் கொண்டாடியது.
நாவலரின் பெருமையை எடுத்துக்கூற விரும்பிய சேர் பொன். இராமநாதன், சட்டசபையிலே, சேர். ஆர்தர் ஹ மில்ட்டன் கோடன் என்ற தேசாதிபதியின் கேள்விக்குப் பதி sor as "The Champion reformer of the Hindus' start" Lysis கூறினர். இந்துக்களின் தலைமைசால் சீர்திருத்தவாதியாகிய நாவலரின் இலட்சியங்களையும் செயலாண்மைத் திறனையும் முன் மாதிரியாகக் கொண்டு தமிழ் இனம் முன்னேற வேண்டும் என் பது எமது வேணவனவாகும். நாவலரின் கல்விப்பணிகளின் கரு, விருட்சமாகிக் கினைகள் பரப்பி, இன்று பல்கலைக்கழகம் என்ற பெருநிறுவனமாக வியாபித்துள்ளது. யாழ்ப்பாணப் பல் கலைக்கழகத்தின் எத்தனையோ முயற்சிகளுக்கு ஆதர்ச புருட ராக நாவலரைக் கொள்ளுவது பொருந்தும். கல்விப்பணி, சமூ கப்பணி, தேசப்பணி என வரிசையை நீட்டிச் சொல்லலாம்.
அச்சு வாகனத்தை நாவலர் நன்கு பயன்படுத்திஞர், யாழ்ப் பாணப் பல்கலைக்கழகத்திற்கு ஒரு அச்சகம் தேவை எமது கல்விப்பணியின் கருவூலங்கள் முழுமையடைய அச்சிடுதல், வெளிப்படுத்தல் எத் துணை அவசியமானது? எமது எதிர்கால இலட்சியங்களை நெறிப்படுத்தும் சிந்தனைகளை எமது பேராசிரி யர்களும், விரிவுரையாளர்களும், மாணவர்களும் வெளியிடவேண் டுத், உலகம் வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கின்றது. கால மாற்றத்திற்கேற்பக் கருத்துக்களும் போக்குகளும் மாறுவதை ஏற்று எமது அடிப்படைச் சிந்தாந்தமாக உழைப்பும், தியாக மும், பயன்கருதாது பணி செய்யும் பாங்கும் அமையும் வகை யில் உழைத்தல் வேண்டும். அப்பொழுது தான் எமது இலட்சியங் கள் பூரணத்துவம் நிறைந்தனவாக அமையும். இது நாவலர் வாழ்ந்த புண்ணிய பூமி எனக் கூறிக்கொண்டு வாளா விருந் தால் எதையும் சாதிக்கமுடியாது.
(நாவலர் நினைவு நூற்றண்டு விழாப் பேருரை - 1979)

Page 56
1 O
தமிழ் மன்னர் சங்கம் நிறுவித் தமிழ் ஆராய்ந்த யாழ்ப் பாணத்திலே, ஈழத்துப் பூதந்தேவனுர் தொடக்கம் பண்டிதமணி கணபதிப்பிள்ளைவரை தமிழ் வளர்த்த தமிழர் தலைநகரிலே, தமிழ் ஆராய்ச்சி நடத்த வந்துள்ள பேரறிஞர்களையும், பொதுமக்களை யும் அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மன்ற இலங்கைக் கிளே யின்
சார்பிலே வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகின் ருேம்; பெருமை
கொள்கின்ருேம். உங்கள் யாவரினது வரவும் நல்வரவாகுக. மகா நாடு முடிந்து நீங்கள் போய்வருகின்ருேம் என்று கூறும்போது கூட, நாம் 'போய் வசருங்கள் என்று கூருமல் வரப்போறியனா' என்றுதான் கேட்போம். -
தமிழகத்திற்கு அடுத்தாற்போலத் தமிழாராய்ச்சி மகாநாடு நடத்துவதற்கேற்ற தகுதியும், உரிமையும் யாழ்ப்பாணத்திற்கே உரியது. "யாழ்ப்பாணம் வீறுபடைத்த தமிழர் நிலம்; அதற்குச் சொற்றிறனும் உண்டு; விற்றிறனும் உண்டு. ஆதிமுதலே
 

நான்காம் தமிழாராய்ச்சி மகாநாட்டுத் தலைமையு 87
அது அந்நியர் அட்டூழியங்களே எதிர்த்து எதிர்த்து வந்திருக் கின்றது யாழ்ப்பாணத்தமிழர் மற்றவாகக்குச் சளைத்தவர் அல்லர்; எல்லாத் துறைகளிலும் அவர்கள் முந்தி நிற்கிருகன்' என்று தமி ழகத்து யோகி சுத்தானந்தர் அவர்களே கூறியிருக்கின்றர்கள். இம்மகாநாடு தொடர்பாக டாக்டர் சாலை இளந்திரையன் அவர் கள் எமக்கு எழுதிய மடலிற் குறிப்பிடுகின் ரூர்: "தமிழ்நலன்
தமிழ் உணர்ச்சி என்பவற்றிலே தாய்த் தமிழகத்தைவிட ஈழத் தமிழகத்தவரே ஆர்வமி மிகுந்தவர்கள் என்பது என் கணிப்பு. அங்குள்ள அரசியல் மற்றும் சமுதாயச் சூழ்நிலைகளும் இதற்கு ஒரு காரணம் என்ருலும், ஈழத்தின் ஆர்வப் பெருக்கை யாரும் குறைத்து மதிப்பிடமுடியாது.’ இவ்வாறு தமிழகத்தாரே பெரு மிதம் அடையும் வகையில் தமிழ் ஆர்வமும் தமிழ்ப்பற்றும் கொண்ட நாம், யாழ்ப்பாணத்திலே தமிழ் ஆராய்ச்சி மகா நாடு நடத்துவது பொருத்தமானது; ஏற்றமானது; உரிமை யானதும் கூட, உண்மைத் தமிழ் உணர்ச்சியுள்ள எவரும், ஈழத் துத் தழ்மிபேசும் மக்களின் பாரம்பரியத்தையும் தமிழ்த்தொண் டையும் அறிந்த எவரும் இதனை வரவேற்பர். 鷺
ஈழத்துத் தமிழ்பேசும் மக்கள் தமிழ் மொழிக்காற்றிய தொண்டு சாலப்பெரிது. தமிழ்மொழி வளர்ச்சியிற் பல துறை களில் ஈழநாட்டுப் பெரியாரே வழிகாட்டி உதவியுள்ளனர். இறக்கும் நிலையிலிருந்த ஏட்டுச் சுவடிகளுக்கு உயிர் கொடுத்த வர் ஈழநாட்டவரே, தெளிவான நடையில் வசன நூல் பல எழுதி யும் பழந்தமிழ் நூல்கள் பலவற்றைப் பதிப்பித் கம் வழிகாட்டிய வர் ஈழத் து ஆறுமுகநாவலரே. தமிழ் மக்களின் பண்பாட்டை யும் நாகரிகச் சிறப்பையும் முதன் முதல் புலப்படுத்தித் தமிழ் இலக்கியப் பெருமையைத் தெளிவாக உணர்த்தித் தமிழர் வர லாற்று ஆராய்ச்சிக்கு அடிகோலியவர் ஈழநாட்டுப் பெருமகன் ஒருவரே. தமிழில் முதன் முதல் வெளியிட்ப்பட்ட கலைக்களஞ் சியத்தின் ஆசிரியர் யாழ்ப்பாணத்தவர். மேனுட்டு முறையில் முதன் முதல் தமிழ் அகராதி இயற்றிய தமிழர் ஈழதாட்டவர் ஒருவரே. இசைத்தமிழ் வரலாற்றைத் தமிழ் உலகிற்கு வழங்கிய வர் ஈழத்து விபுலானந்த அடிகளே. அவரே தமிழகத்தில் பல் கலைக்கழக முதற்றமிழ்ப் பேராசிரியராகவும் விளங் கிஞர். விஞ் ஞான நூல்கள் பல எழுகியும் விஞ்ஞானக் கல்வியைத் தமிழிற் போதித்தும் வழிகாட்டிய பெருமை ஈழத்திற்குரியது. பேச்சு வழக்குத் தமிழை எழுத்திற் பொறித்து நாடகங்களை எழுதிய வரும் ஈழநாட்டுப் பேராசிரியர் ஒருவரே. இது போன்ற பல துறைகளில் வழிகாட்டித் தமிழ் அன்னேக்கும் கைகொடுத்து அவளைத் தாங்கி வந்திருக்கின்றது ஈழநாடு

Page 57
வித்தியானந்தம்
சுருங்கக்கூறின், 19 ஆம் நூற்ருண்டிலும் 20ஆம் நூற்ருண் டின் முற்பகுதியிலும் தமிழ்த்தொண்டிலே முன்னணியில் நின்ற வர்கள் ஈழத்தவர்களே கடந்த 25 ஆண்டு காலத்திற்கூட புதிய துறைகளாகிய சிறுகதை, நாவல் போன்றவற்றிலும் கவி இதையிலும் ஈழத்தவர் பெருஞ்சாதனைகளை நிலைநாட்டியுள்ளனர் கிலங்கைப் பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரை, தமிழ் இலக் 'ம், இலக்கணம், மொழியியல் ஆகிய துறைகளிலும், தமிழர் வரலாறு, தொல்பொருளியல், பொருளாதாரம், புவியியல்போன்ற துறைகளிலும் பல ஆராய்ச்சிகள் வெளிவந்துள்ளன. இலங்கைப் பல்கலைக்கழகத்துப் பல துறைகளையும் சேர்ந்த தமிழ் அறிஞர் கள் நிகழ்த்திய ஆராய்ச்சிகள் மிகவும் உயர்ந்த தரமானவை எனப் பிறநாட்டறிஞர்கள் பாராட்டிப் போற்றியிருக்கின்றனர்.
மேலும் தமிழகத்திற்கு அடுக்ததாக ஈழத்திலேயே தமிழ் மொழி உயிர்த் துடிப்புடன் விளங்குகின்றது. தென்னிந்தியா இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பர்மா, மொரேசியஸ், இந்தோ னிசியா, வியந்தாம். பீஜி, தென்னுபிரிக்கா, ருெடீசியா, குடெ லொட் மாற்றிணிக், றியூனியன், றினிடாட் போன்ற தேசங் ளிலே தமிழர் வாழ்கின்றனர். ஆஞல், அத்தேசங்கள் பலவற் றில் அவர்கள் தமிழராக வாழவில்லை. தமிழிற் பிறர் பேசுவது வினங்கினுலும், தமிழிற் பேசமுடியாது தவிக்கின்றனர். சிலர் பெயரளவிலேயே இங்குள்ள சிலர் போல-தமிழராக இருக்கின் றனர். இந்நிலையிலேயே தமிழகத்திலும் ஈழத்திலுமே தமிழ் வாழு கின்றது; உயிர்த்துடிப்புடன் விளங்குகின்றது. ஈழத்திலே பல் கலைக்கழகத்திற் போதனுமொழியாகவும் இடம் பெற்றுள்ளது. இத்தகைய சூழலில் இங்கு தமிழாராய்ச்சி மகாநாடு கூடுவது பொருத்தமாேைத.
இச்சந்தர்ப்பத்திலே அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மன் றத்தின் தோற்றம் பற்றியும் வளர்ச்சி பற்றியும் சிந்தித்தல் அவ சியமாகின்றது: அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்திற்கு இன்னும் 4 நாட்களிற் பத்து வயது முடிகின்றது. 1964ஆம் ஆண்டு சனவரி மாதத்திற் புதுதில்லியில் நடைபெற்ற அனைத்த லகக் கீழைத்தேய அறிஞர் மகாநாட்டின் போது, சனவரி மாதம் 7ஆம் நாள் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம் நிறுவப்பட்டது: பதினைந்து நாடுகளிலிருந்து அறிஞர்கள் கூடி இம்மன்றத்தினை
பிள்ளையும், மலேசியாவின் பிரதிநிதியாக வணக்கத்திற்குரிய தனிநாயக அடிகளும், பண்டிதர் இரத்தினமும் இத்தொடக்க
 

நான்காம் தமிழாராய்ச்சி மகாநாட்டுத்தலைமையுரை 89
விழாவிற் பங்குபற்றினர். அதன்பின் அம்மன்றம் மலேசியாவி லும், இந்தியாவிலும் பிரான்சிலும் மூன்று தமிழாராய்ச்சி மகா நாடுகளை நடத்தியது. இ8மன்றம், தனது பத்தாம் ஆண்டுப் பிறந்த தின விழாவை அடுத்த திங்கட்கிழமை 7ஆம் திகதி நான்காம் மகாநாட்டின்போது யாழ்ப்பாணத்திற் கொண்டாட இருக்கின் ADSs
பத்தாண்டுகாலமாக இம்மன்றம் சாதித்தவை யாவை? முத லாவதாகத் தமிழ் இலக்கியம் பற்றியோ மொழிபற்றியோ, அரா யும் உரிமை தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவருக்கே உரி யது என்ற கொள்கையை இது தகர்த்தெறிந்துவிட்டது தமிழ் ஆராய்ச்சி குறுகிய எல்லேக்குட் கட்டுப்பட்டிராது. பரந்து விரிந்து பல துறைகளில் விருத்தியடைந்துள்ளது. தமிழ் இலக் கியe பற்றியும், இலக்கணம் பற்றியும் உள்ள ஆராய்ச்சி மட்டும் தமிழாராய்ச்சி என்ற நிலைமாறி, தமிழர் பண்பாடு, தமிழர் வர லா று, தமிழர் தொல்பொருளியல், சமூகவியல் போன்ற துறை களிலும் ஆராய்ச்சி விரிந்து சென்றிருக்கின்றது. தமிழ் இலக்கி பத்தின் சிறப்புப் பற்றியும் பண்பாட்டின் வணர்ச்சி பற்றியும் தொன்மை பற்றியும், மொழியியல் பற்றியும் பல உண்மைகள்
வெளிவந்துள்ளன. இவை யாவற்றையும் ஒன்று திரட்டிப் பல
நாடுகளிலும் தமிழாராய்ச்சி செய்கின்ற அறிஞர் தமது ஆராய்ச்சி
முடிபுகளைப் பொதுமன்ற மொன்றிற் சமர்ப்பித் துப் பயன் பெறத்
தமிழாராய்ச்சி மன்றம் வழிவகுத்திருக்கின்றது. இது ஒரு பெருஞ் சாதன என்றே கூறவேண்டும்.
ஆராய்ச்சி மகாநாடுகளில் அறிஞர்களைக் கருத்துப் பரிமா றச் செய்ததோடு, பார்வையாளராகக் கலந்து கொண்ட பலரைத் தமிழாராய்ச்சியில் ஈடுபடவும் ஆராய்ச்சி மகாநாடுகள் காலாக இருந்துள்ளன. ஒவ்வொரு மகாநாட்டின் பின்பும் தமிழ் ஆராய்ச்சி இசய்வோர் தொகை பெருகிக்கொண்டு வந்திருக்கின்றது. கடந்த மூன்று மகாநாடுகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் படித்தோர் பெயர்களையும், நான்காம் மகாநாட்டிற் கலந்து கொள்வோர் பெயர்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இவ்வுண்மை புலப் படும் ஒவ்வொரு மகாநாட்டிலும் பழைய பிரதிநிதிகளுடன் பல புதிய அறிஞர்களும் கலந்து கொள் வகை அவதானிக்கலாம். எனவே, இம்மகாநாடுகள் தமிழ் ஆராய்ச்சியில் அறிஞரை ஈடு படத் தூண்டியதோடு, ஆராய்ச்சியாளர் தொகையையும் விரியச்
செய்திருக்கின்றது.

Page 58
வித்தியானந்தம்
மேலும், இன்று பிறநாடுகள் பலவற்றிலுள்ள பல்கலைக் கழ கங்களிலே தமிழை ஒரு பாடமாக அமைப்பதற்கும், தமி ழாராய்ச்சியில் அப்பல்கலைக்கழகப்பேராசிரியர்களே ஈடுபடச்செய் வதற்கும் இம்மன்றமே காலாக இருந்துள்ளது. ஒரு காலத்தில் மேனுட்டுப் பல்கலைக்கழகங்களிற் சமஸ்கிருதம் பற்றியும், இந்தோ ஆரிய மொழி பற்றியுமே ஆராய்ச்சி செய்து வந்தனர் இப்பொழுது அந்நிலை மாறி, தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், தமி ழர் வரலாறு, தமிழர் பண்பாடு முதலியன பற்றியும் ஆராய்ச்சி செய்கின்ற நிலை அப்பல்கலைக் கழகங்களில் உருவாகி வளர்ச்சி பெற்றிருக்கின்றது. முன்பு பிறநாட்டவர் சமயப் பிரசாரத்திற் கும், வணிகப் பெருக்கத்திற்கும், அரசியல் ஆதிக்கத்திற்கமே தமிழைப் பெரும்பாலும் கற்றனர். ஆல்ை, இன்று ஆராய்ச் சிக்காகவும், தமிழ்மொழியின் சிறப்பியல்புகளுக்குமாகவே தமிழை அவர்கள் கற்கின்றனர். அவர்களின் தமிழ்ப்பற்றையும். அபிமானத்தையும், அவர்கள் தமக்கும் தமது பிள்ளைகளுக்கும் தமிழ்ப்பெயர்கள் வைப்பதிலிருந்து மதிப்பிடலாம் ரஷ்யா விலுள்ள அறிஞர்கள் செ ம்பியன், ஐங்குன்றன் என்று தமிழ்ப் பெயரைத் தமக்குச் சூட்டிக்கொள்ளும் அளவிற்கு தமிழபி மானம் கொண்டுள்ளனர். செக்கோசிலவக்கியாவிலுள்ள தமிழ் ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் மகளுக்கு கண்ணம்மா 5rঞ্জী অন্য பெயரிட்டுள்ளார். நாம் எமது பிள்ளைகளுக்குத் தமிழ்ப்பெயர் கள் வையாது, சினிமா நட்சத்திரங்களின் பெயர்களைச் சூட் டித் தமிழ் இனத்தின் மானத்தை வாங்குவதை எண்ணும் போது தலைகுனியவேண்டியிருக்கின்றது. இவர்கள் தாம் இறந்த பின்பு தமது கல்லறையில் தமிழ் மாணவர் எனப் பொறிக்க வேண்டுமென விரும்புகின்றனர். தமிழயிமானம் கொண்ட இவர்களே, மறுபிறப்பெடுத்தால் தமிழராகப் பிறக்க விரும்புகின்ற இப்பிற நாட்டவரை, இம்மகாநாட்டிற்கு வர விட வேண்டாமென எம்மிடையே சிலர் வற்புறுத்தியதை நினைக்கும்
போது தலைநிமிர்ந்து நிற்க முடியாமலிருக்கிறது.
இவ்வாறு பிறநாட்டவரிடையே தமிழார்வத்தையும், தமிழக ராய்ச்சியையும் வளர்த்த மன்றத்தின் தொண்டினே மதிப்பிடும் போது, இம்மன்றத்தின் தாபகர் வண. தனிநாயக அடிகளே நரம் பாராட்டவேண்டியவர்கள் ஆகின்ருேம். தனிநாயக அடிகள் தமிழ்த்தூதர்; உலக ஆசைகளைத் துறந்திருப்பினும், தமிழ் ஆசை யைத் துறவாதவர். தன் மீ செல்லும் நாடுகளிலே தமிழ்த் துரத ராய் விளங்கித் தமிழின் மேன்மையையும், தொன்மையையும் பற்றிச் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும், கட்டுரைகள் எழுதியும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்ற ஆங்கில முத்திங்கள் இதழ் ஒன்றைத் தோற்றுவித்து அதன் ஆசிரியராகவும் பணி செய்தவர். இத்தொண்டுகள் யாவற்றிலும் மேலாக, இதுவரை யாரும் செய்திராத பெரிய அள வில் ஐரோப்பா, ஆபிரிக்கா, ஆசியா முதலிய எல்லாக் கண்டங் களிலுமுள்ள தமிழறிஞர்களே ஒன்றுகூட்டி அனேத்துலகத் தமி ழாராய்ச்சி மன்றத்தினை நிறுவியவர்.
எனவே, இம்மன்றம் அவரின் குழந்தையாகும். இக்குழந்தை யைக் கடந்த பத்தாண்டாகச் சீராட்டித் தாலாட்டி வளர்த்து அதன் பத்தாண்டு நிறைவு விழாவினை, பிறநாட்டுப் பேரறிஞர்க ளும் கூடியுள்ள இவ்வரங்கிலே, உள்ளம் குளிரக் கண்டு மகிழ் கின்ருர் குழந்தை வளர்ப்பு எவ்வளவு கடினமானது என்பதை நீங்கள் அறிவீர்கள் இந்தக் குழந்தைக்குப் பத்தாவது ஆண், டிறுதியில் ஒரு தத்து ஏற்பட்டது. அப்போது குழந்தையைத் தவிக்க வைத்து ஓடிவிட்டார் என்று அடிகளார்மீது பலர் பழி சுமத்த முயன்ருர்கள் குழந்தைத் துரோகம் அறியாத தமிழ்ப் பண்பாட்டின் காவலர் அவர் எனவே தான், தத்திலிருந்து குழந் தையைத் தப்ப வைக்க எம்மோடு சேர்ந்து உழைத்தார். இக் குழந்தையின் வளர்ச்சியே தமது இலட்சியம் என்பதை நான்கள் வது மகாநாட்டைத் திறந்து வைக்க முன்வந்ததிலிருந்து உலகறி பச்செய்திருக்கின் ருர், அவருக்கு நாம் பெரிதும் கடமைப்பட்டுன்
இம்மகாநாடு, குறுகிய தமிழ் விழா அன்று. அனைத்துலகத்
தமிழாராய்ச்சி மகாநாடு என்பதை நிலைநாட்டுவதற்காக தமக்கு
ஏற்பட்ட இன்னல்களையும் தடைகளேயும் பொருட்படுத்தாது
இந்தியா, மலேசிய , இங்கிலாந்து, இத்தாலி, சுவீடன், சுவிற்சர்
லன்ட், அமெரிக்கா, கனடா கங்கேரி, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து இங்கு வந்து சமுகமளித்துள்ள பிறநாட்டுப்
பிரதிநிதிகளுக்குப் பெரிதும் நன்றியுடையோம்.
இம்மகாநாடு தமிழ் இனவாதத்தை வளர்க்கும் மகாநாடன்று; தேசிய மகாநாடு ஆகும் என்பதை எடுத்துக்காட்டும் முகமாக இம்மகாநாட்டிற் பிரதிநிதிகனாகவும், பார்வையாளராகவும் கலந்துகொள்ளும் சிங்கள, முஸ்லிம் அறிஞர்களே யும் நாம் பணி வுடன் வரவேற்கின் ருேம் ஈழத்திலே மட்டக்கணப்பு, திரு கோணமலே, மலைநாடு வவுனியா, மன்ஞர், முல்லைத்தீவு போன்ற

Page 59
வித்தியானந்தம்
பிரதேசங்களிலிருந்து இங்கு குழுமியுள்ள அன்பர்களுக்கும். எமக்கு உறுதுணையாக இருந்து இம்மகாநாடு திட்டமிட்டபடி நடப்பதற்குப் பலவகையிலும் உதவிய பொதுமக்களுக்கும் நாம் தலை வணங்குகின்ருேம்.
ஈழத்திலே இத்தகையதொரு மகாநாடு மொழிக்கென நடை பெறுவது இதுவே முதல் தடவையாகும். மகாநாடு தொடங்கு வதற்கு முன்பே அது உலகப் பிரசித்தி பெற்றுவிட்டது; முடிந்த பின்னர் இன்னும் பன்மடங்கு உலகப்பிரசித்தி பெறுமென்பதில் ஐயமில்லை. எனவே, வேறென்றுமில்லாத வகையிலே உலகின் கவ ன த்தைக் கவர்ந்துள்ள இம்மகாநாட்டினே வெற்றியுடன் நடத்தி முடிப்பதற்கு உங்கள் யாவரினதும் ஒத்துழைப்பை நாடுகின் ருேம்.
இறைவன் எம்மை நன்ருகப் படைத்தான் தன்னை நன்ருகத் தமிழ் செய்யுமாறு.
ܐܬܐ 1974 ܕܝܼܚܝܼܵ
qMAMSASAeSTS qSqAAMArAqAMSAEMqS SMqSqTMqMqSqMMMAeMSA Sr கலேவாணி அச்சகம், யாழ்ப்பாணம்,
 


Page 60


Page 61