கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2011.08

Page 1
50வது ஆண்டை நொக்கி
கிழக்கிணி இல
மக்கத்துச் சால்
ஆகஸ்ட் 2011
 
 

SSSÈS , !
RA CLAS$2 ప్రత్తిఎA
க்கிய உதயம் -
வை ஹனிபா.
விலை 40/-

Page 2
விவரங்களுக்குத் தனிமனித நிறுவநர், 'சுயதெரிவுமுறை
முன்னோழ முத்த புகழ் பூத்த சர்வதேச சகலருக்கு மாண் திருமண் ஆலோசகர் / இற்றுப்படுத்துநர் குரும்ப கியூர் , மாயெழ வேல் முேதறுடன் திங்கள், புதன் வள்ளி மாலையிலோ, சனி, ஞாயிறு நண்பகலி லேயோ தயங்காது தொடர்புகொள்ளலாம்
$jià)6ზე08iiჭ: 48.73929, 236.0694,
8-3-3 மெற்றோ மாடிமனை (வெள்ளவத்தை காவல் நிலையத்திற்கு எதிாக நிலப் பக்கம், 339தம் ஒழுங்கை வழி) 55ம் ஒழுங்கை வெள்ளவத்தை கொழும்பு 00
சுலப மணமக்கள் தெரிவுக்குச் சிறந்த முறை சுயதெரிவு முறையே TTT LLLTTTTTT TTTT aaaT LLM a aaa LLTLLL LLLLTTLLL
 
 
 
 
 
 
 
 
 

'ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி ஆதியிணைய கலைகளில் உள்ளம் !
ஈன நிலை கண்டு துள்ளுவர்
$-60$ Lថ្ងៃអង្រង់ក្តៅ ម៉ាហ្វ្រងបណ្តាំន៉ា)(u, இலங்கை நாடாளுமன்றத்தில் மாத்திரம் தான் ஒர் இலக்கியச் சஞ்சிகை விதந்து டாரா ட்டப் பெற்ற பெறுமதி மிக்க சம்பவம் இடம் பெற்றுள்ளது. அங்கு பாராட்டப்பட்ட சஞ் சிகை மல்லிகை. இதனை நாடாளுமன்றப் பதிவேடான ஒறன்லார்ட் {04, 7, 2001) பதிவு செய்ததுடன் எதிர்காலச் சந்ததியினருக்காக ஆவணப்படுத்தியுமுள்ளது- அத்துடன் உலக வரலாற்றில் முதன் முதலில் சலு: ஒக்குள் இருந்து வெளிவந்த இலக்கியச் சஞ்சிகையும் மல்லிகையே தான்!
50 - ஆவது ஆண்டை நோக்கி. හිබ්‍රෝණimI”,
387 ഠർ/ഡീ ീഗ്ഗle
ഠ// ഭർഗ്ഗഢ
மல்லிகை அர்ப்பணிப்பு உணர்வுடன் வெ
வரும் தொடர் சிற்றேடு மாத்திரமல்ல- அ ஓர் ஆரோக்கியமான இலக்கிய இயக்க முLDHகும். - மல்லிகையில் வெளியாகும் எழுத்துக்களு க்கு எழுதியவர்களே பொறுப்பானவர்கள்!
201/4, Sri Kathiresan St, Colombo - 13.
Te: 2320721 济
mallikaijeevaGyahoo.com
(ဎ&ယဇ်ပ်ဇာa-ဂ်ဇံh
O o Q - Q 2.us, 2 Mayo binancin, Q్క!
6 of இன்றும் கூட, என்னைச் சந்தித்து, மனந்திறந்து உரையாடும் தறு வாயில் என்னை ஒருவித ஆச்சரியம் கலந்த அதிசயப் பார்வையுடன் உற்று நோக்கிய வண்ணம் முக்கியமாக கேட்கும் கேள்வி இதுவேதான்!
எப்படியப்பா, உன்னால இத்தனை ஆண்டுக் காலங்களாகத் தொடர்ந்து மல்லி கையை ஒழுங்காக கொண்டுவர முடி கின்றது?
நான் அந்தக் கட்டத்தில் எப்படியோ சிரித்து மழுப்பி விடுவேன்.
ஆறுதலாக இருந்து நான் எனது கடந்த மல்லிகைக் காலகட்டத்தை யோசித்துப் பார்ப்பதுண்டு.
உலக இலக்கிய வரலாற்றிலேயே இந்த நாட்டில், யாழ்ப்பான மண்ணில் நான் இரண்டு இலக்கியச் சாதனைகளை நிலை நாட்டியுள்ளேன். தனிபெரும் சாதனைகள்.
இது வெறும் தற்பெருமையல்ல. தற் புகழ்ச்சியல்ல வரலாற்று எதார்த்தம், இது.
ஒன்று யாழ்ப்பாணத்தில் ஒரு சவரக் கடைக்குள் தொழில் செய்துகொண்டே நூலெழுதி வெளியிட்டு, இலங்கையில் முதல் முதலாக படைப்பிலக்கியத்திற்கு 1960ல் சாஹறித்திய மண்டலப் பரிசைப் பெற்றுக் கொண்டுள்ளேன்.
அடுத்ததுதான் மிக மிக முக்கியமான தகவல். அதே சவரக் கடைக்குள் தொழில் செய்துகொண்டே, மல்லிகை என்ற பெய ருடன் இலக்கியச் சிற்றேடொன்றை ஆரம்

Page 3
பித்தேன். சலூனுக்கு வெளியே பெரிய கொட்டை எழுத்தில் மல்லிகை என்றும், ஆசிரியர் டொமினிக் ஜீவா என்றும் வண்ண எழுத்துக்களில் விளம்பரப் பலகை தொங்க, மல்லிகை மாத இதழை ஆரம்பித்து வைத்தேன்.
அன்றைய வடபுலத்து சூழலை இலக் கிய நண்பர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இது முக்கியம்.
கண்ட நிண்ட சாதிகளைக் கோவிலுக் குள் நுழைய விடவே மாட்டேன்! என ஓங்கிக் குரல் கொடுத்த வண்ணம் பெரிய படித்த சாதிக் கனவான் சுந்தரலிங்கம் பெரிய பொல்லுத் தடியுடன் மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் வாசலில் மதச் சண்டித்தனம் செய்து கொண்டிருந்த காலகட்டமது. சாதி வெறி தலை விரித்தாடிய காலமது.
இந்தக் காலகட்டத்தில்தான் மல்லிகை இதழ்கள், ஒரு சலூனுக்குள் இருந்து வெளி வந்து கொண்டிருந்தன.
வெளியே, பரவலாக உள்நாட்டு இன யுத்தப் பீதி ஆட்சி செய்துகொண்டிருந்தது. பலர் என் காதுபடவே வக்கணை பேசித் தமக் குள் சிரித்துக்கொண்டனர். இந்த வீம்புப் பிடி வாதம் எத்தனை நாளைக்குத்தான் செல் லும். நாமும்தான் பார்ப்போமே!’ என நக்க லடித்து பூரித்து மகிழ்ந்தனர்.
இன நெருக்கடி காரணமாக எத் தனையோ நெருக்கடிகள், இடையிடையே தலைகாட்டின. மிரட்டி ஓய்ந்தன.
போக்குவரத்துத் தடையால் பேப்பர் வரத்துத் துண்டிக்கப்பட்டது. மாணவர்களின் கொப்பிப் பேப்பரில் மல்லிகையை அச்சடித்து வெளிக்கொணர்ந்தேன்.
தபாற் தலை கிடைப்பதில்லை. பல சிரமங்களுக்கு மத்தியிலும் திட்டமிட்டபடி கொழும்புப் பிரயாணம். கடை கடையாக
சென்று நேரடி விநியோகத்தில் ஈடுபட்டேன். ஒன்றில் நீ என்னைத் தோற்கடி, அல்லது நானுன்னை வென்று காட்டுகின் றேன்' என்ற மனத் துணிச்சலுடன் கடமை யாற்றி வரத் தொடங்கினேன்.
இதற்குள் மல்லிகைப் பந்தல் என்ற புத்தக வெளியீட்டு நிறுவனத்தையும் தன்னம் பிக்கையுடன் தோற்றுவித்து, நூல்கள் பல வற்றை வெளியிட்டு வைத்தேன்.
ரஷ்யாவில் நடந்திருக்காதது, பாரிஸில் நினைத்துக்கூடப் பார்க்க முடியாதது, லண் டனில் நடைபெறாதது, வங்கத்தில் இடம் பெறாதது, கேரளத்தில் நடக்காதது, தமிழகத் தில் இதுவரை கூட இடம்பெறாதது, இந்தப் பெரிய உள்நாட்டு யுத்தச் சூழ்நிலையில் யாழ்ப்பாண மண்ணில் நடைபெற்றுள்ளது.
மாபெரும் உள்நாட்டு யுத்தச் சூழ் நிலைப் பின்னணியில், தினசரி இயல்பு வாழ்க்கையே ஸ்தம்பித்துப் போயிருந்த கால கட்டத்தில்தான் யாழ்ப்பாண மண்ணில் இந்த இலக்கிய அதிசயம் நிகழ்ந்தது.
மல்லிகை இலக்கியச் செடி ஊன்றப் பட்டது. வளர்த்தெடுக்கப்பட்டது.
இந்தத் தனிநபர் சாதனைக்காக எத் தனை இலக்கிய இதயங்கள் பெருமித மடைந்தன? குதூகலித்தன?
மாறாக, அவனுக்கென்ன ரஷ்யாக் காரன் காசு கொடுக்கிறான் என எனது அரசியல் பின்னணியைக் கொச்சைப்படுத்தி, எனது இலக்கிய நேர்மையைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் சூழ்நிலைதானே அன்று தென்பட்டது.
இவைகளைக் கண்டு மெய்யாகவே நான் கிறுங்கவில்லை. இன்றும் இயங்கிக் கொண்டிருக்கின்றேன்.
anwassmannamo

bpy5lu”p LDSTEMOfðIT SHıpřfrau’ņ5ù இருந்து - முகிழ்ந்து எழும்பியவர், இவர்
‘எங்கட' சிவத்தம்பி என்று சொல்லும்போதே மல்லிகை புழகாங்கிதமடைகின்றது. தமிழ் பெருமிதம் கொள்ளுகின்றது உண்மையிலேயே அவர் தமிழின் சொத்து. தனிப் பெரும் சொத்து
- தனிமனித விமரிசனத்திற்கு ஏற்ற இடமல்ல, இது.
நமது கைலாசபதி அறிஞன். படிப்பாளி. ஆய்வாளன். சிவத்தம்பியோ இந்த மண்ணின் தனி நுட்பச் சிந்தனையாளன். படிப்பதை விட, படித்ததை அடி ஆதாரமாகக் கொண்டு நோண்டி, நோண்டிச் சிந்தித்தவர். ஆழமாகச் சிந்தித்துக் கருத்துக்களை வெளியிடுவதினாலேயே, பேராசிரியர் சகலரினதும் கவனத்திற்கும் உட்பட்டு வந்தவர். புதுப் புதுக் கருத்துக்களைச் சொன்னவர்.
இவர் படித்ததை மாத்திரம் வைத்துத் தன்னை அறிவுலகில் பலப்படுத்திக் கொண்டவரல்ல. அதற்கும் மேலாக எதார்த்த வாழ்க்கை நடப்புகளைக் கூர் குறிப்பாகக் கேட்டு, அறிந்து தன்னைத் தமிழுக்குத் தத்தம் செய்து வாழ்ந்து வந்தவர்.
இவரது கருத்துக்களை முற்றாகப் புரிந்துகொண்டாலே போதும், ஈழத்துத் தமிழர் களின் சகல குணாம்சங்களையும் புரிந்து கொண்டதற்குச் சரி.
புதுப் புதுக் கோணங்களில் அர்த்தம் சொல்வார். அது சிந்திக்கச் சிந்திக்கப் புதுப்புது அர்த்தங்களைத் தந்துகொண்டேயிருக்கும்.
பல அறிவு மட்டங்களைச் சார்ந்தவர்கள் அவரை அடிக்கடி சந்தித்து உரையாடு வார்கள். அவர்களது அறிவுநிலை மட்டங்களை அவதானத்தில் எடுத்துக்கொண்டு அவர்களை அரவணைத்து உரையாடுவார். ஆலோசனைகளைத் தந்துதவுவார். தக்க ஆக்கபூர்வமான வழிமுறைகளைச் சொல்லி நெறிப்படுத்துவார்.
நம்முடன் நேற்றுவரையும் இருந்து, கதைத்து, உறவாடி மகிழ்ந்த பேராசிரியரின் இழப்பைக் காலம் போகப் போகத்தான் நாம் ஒவ்வொருவரும் எதார்த்தமாகப் புரிந்து கொண்டு, ஆழ்ந்த துயரடைவோம்.
காலம் செல்லச் செல்லத்தான் இவரது இலக்கியக் கனதி பொதுவாகப் பலருக்கும் விளங்கும். அதுவரையும் நாம் பொறுத்திருப்போம்.

Page 4
அட்டைப்படம்
- ஓட்டமாவடி வீஏ.ஜூனைத்
60களின் 9. JitbLJb...
இயற்கை தன் அழகிய இறக்கைகளுக்குள் ஊரை அடைகாத்துக் கொண்டிருந்த காலம் القتگ
அப்போதெல்லாம் எஸ்.எல்.எம். என்ற இலக்கிய விருட்சம் பற்றி நான் அறிந்திருக்க வில்லை. இந்த மண்ணில் முதன்முதல் தேசிய விருது வென்ற ஒரு குறுந்துார ஒட்ட வீரனாக மட்டுமே இவர் எனக்குள்ளே அறிமுகமாகி இருந்தார்.
விளையாட்டுப் போட்டி என்றால், எஸ்.எல்.எம். பற்றியே பேசிக்கொள்வார்கள். இவரின் வருகைக்காக எமது விளையாட்டு மைதானம் தவமிருந்த தருணங்கள் அற்புதமானவை.
வெள்ளை ஸ்போட்ஸ் பெனியன், நீல றன்னிங் சோர்ட்ஸ், அதே நிறத்தில் முள்ளுச் சப்பாத்து என்று ஒரு தேசிய வீரனுக்கே உரிய கம்பீர தோற்றத்தில் எஸ்.எல்.எம். களமிறங்கும் காட்சி, பிடரி மயிர் சிலிர்க்க ஆக்ரோஷம் கொண்டு எகிறிக் குதித்தபடி தன்னிரு முன்னங் கால்களையும் தூக்கி நிற்கின்ற ஒரு பந்தயக் குதிரையை ஞாபகமூட்டும்
மின்னல் பூட்டிய அசுரவேகத்தின் ஆரம்பம், நெடிதாய் எட்டிவைக்கும் இவனது ஒவ்வொரு எட்டிலும் மூர்க்கங்கொண்டு உச்சமடைகின்றபோது, நெஞ்சை முன்தள்ளி வெற்றிக் கோட்டை தொட்டு நிற்கும் அந்த அபூர்வத்தை ஒலிம்பிக் போட்டிகளில் தான் இன்று தரிசிக்க முடிகின்றது.
ஏ.எல் எழுதிவிட்டு வீட்டில் இருந்த காலத்தில் நூலகர் சமட் மூலம்தான் எஸ்.எல்.எம். என்ற அந்த எழுத்தாளன் எனக்குள் அறிமுகமானான்.
முதல் இரவு, முதல் முத்தம், முதல் சந்திப்பு. என்பார்களே, எஸ்.எல்.எம். அவர்களின் புத்தக அலுமாரிக்குள் நான் புகுந்துகொண்ட அந்த முதல் அனுபவம் கூட அப்படித்தான்.
படித்துக் கொண்டிருந்த புத்தகத்தைப் பாதியில் மடித்த கையோடு எழுந்து வந்து என்னை வரவேற்றார் எஸ்.எல்.எம்.
மல்லிகை ஆகஸ்ட் 2011 & 4

கல்கி, குமுதம், ஆனந்தவிகடன், கலை மகள், தீபம். என்று தென்னிந்திய கலை இலக்கிய வெளியீடுகள் மேசையிலும், கட்டி லிலும் மொய்த்துக் கிடந்தன. எஸ்.எல்.எம். இப்படியொரு தீவிரமான வாசகன் என்பதை அன்றுதான் அறிந்து கொண்டேன்.
”தம்பி ஜூனைது, எழுத பேனா தூக்க முந்தி, நிறைய நிறைய புத்தகங்களை தூக் கணுண்டா.”பேசிக்கொண்டே எழுந்துபோய் எஸ்.பொ.வின் புத்தகமொன்றைப் பக்கம் பிரித்து, வாசித்தபடியே நடந்து வந்தார்.
வாசிப்பும் தேடலுந்தான் நம்மிடையே புதிய அனுபவங்களையும், புதிய தரிசனங் களையும், புதிய விளக்கங்களையும், புதிய ஆர்வங்களையும், புதிய உற்சாகங்களை யும், புதிய ஞானத்தையும் கொண்டு வந்து சேர்க்கிறது.
சோத்தி கழன்ற அந்த வைர வரிகளுக் குள் எஸ்.பொ. அவர்களின் வித்துவ சூட்சுமங் கண்டு வியந்து போகிறேன்.
எஸ்.எல்.எம். அவர்களின் புத்தக அலு மாரிக்குள்ளிருந்து அன்று நான் எடுத்துச் சென்ற முதல் நாவல் பொன் விலங்கு, பின்னர் குறிஞ்சி மலர், மணிபல்லவம் அதைத் தொடர்ந்து அகிலனின் பாவை விளக்கு, வேங்கையின் மைந்தன், மு.வ. எழுதிய கள்ளோ காவியமோ. இப்படிப் பல.
சாண்டில்யன் எழுதி, குமுதம் பத்திரி கையில் வெளிவந்த கடல்புறா, யவனராணி, மன்னன் மகள், கல்கி எழுதிய சிவகாமியின் சபதம், அலையோசை, பொன்னியின் செல் வன் போன்ற அத்தனை நாவல்களையும், பத்திரிகைகளில் இருந்து பக்கம் கழற்றி, தன் கைப்பட தொகுத்து பைண்டிங் செய்திருப்பது மட்டுமன்றி, கலைமகள், தீபம் போன்ற மாசி
கைகளைக் கூட தொகுப்புகளாய் பைண்டிங் செய்து, தன் புத்தக அலுமாரியில் அடுக்கி வைத்திருக்கும் அபூர்வத்தை வேறு எந்த வொரு தமிழ் எழுத்தாளரின் வீட்டிலும் தரிசிக்க முடியாது.
அத்தனை தொகுப்புக்களையும் மூச்சும் கையுமாய், ஒன்றும் விடாமல் வாசிக்க முயன்று தோற்றுப் போய்விட்ட ஆற்றாமை யும், ஆதங்க உணர்வும் இன்னும் எனக்குள் இருந்து அறுக்கிறது.
சிறுகதைக்கு சரியானதொரு வரி வடி வம் கொடுத்த ஆரம்ப எழுத்தாளன் வ.வே.சு அவர்களின் குளத்தங்கரை அரசமரத்தில் இருந்து, புதுமைப்பித்தன், கு.ப.ரா, பிச்சை மூர்த்தி, மெளனி என்று மணிக்கொடி தலை முறைகள் ஈறாக அத்தனை படைப்பாளி களும் இவனது புத்தக அலுமாரிக்குள் அடங்கிப்போய்க் கிடக்கின்றனர்.
கி.ஜானகிராமனின் மோகமுள், அம்மா வந்தாள், சுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத் தின் கதை, ஜே.ஜே. சில குறிப்புகள், கி.ராஜ நாராயணனின் கோபல்ல கிராமம், தமிழ் தலித் நாவலின் முன்னோடி பூமணி எழுதிய பிறகு, வெக்கை, லா.சா.ராவின் அபிதா, ஜெய காந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், சில நேரங்களில் சில மனிதர்கள், எழுத்தாளர் அம்பையின் துடிப்பும், வெகுளித் தனமும், சினமும் நிறைந்த ஆரம்பகால எழுத்துக்கள். குறிப்பாக, நந்திமலைச் சார லிலே இவையெல்லாம் எஸ்.எல்.எம். தன் கைப்பட என்னிடம் எடுத்துத் தந்து, வாசிக் கும்படி கட்டாயப்படுத்திய எழுத்துக்கள்
இவன் போலவே, சமகாலத்தில் இப்பிர தேச மண்ணுக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருந்த மற்றுமொரு படைப்பாளி
மல்லிகை ஆகஸ்ட் 2011 & 5

Page 5
வை,அஹமத், இருவரும் இரட்டையர் போல இணைபிரியா நண்பர்கள் என்றாலும், இரு வேறு தளங்களில் நின்று இலக்கிய வேள்வி செய்தவர்கள்.
வை.அஹமத் ஒரு முன்கோபி. எழுத் துக்கள் கூட சுளிர் என்றிருக்கும். தன் இனம் சார்ந்த பகைப்புலத்திற்குள் நின்று, சமூக அவலங்களையும் அட்டூழியங்களையும் அழகிய சித்திரங்களாய் வடித்தவர்.
அப்படியான ஒரு குறுகிய வட்டத்துக் குள் எஸ்.எல்.எம். தன் எழுத்துக்களை முடக் கிக்கொண்டதில்லை. இன, மத முரண்பாடு களுக்கப்பால் நின்று, மனிதநேயம் பேசுகின்ற இவனது பேனாவுக்குள் சத்தியம் குடி கொண்டிருக்கிறது. அதனால்தான், தனி மனித உறவுகளையும், சமூகப் பிரச்சினை களையும் மட்டுமன்றி, இன உணர்வுகளை யும் கூட இவனால் பொதுமைப்படுத்திப் பார்க்க முடிகிறது.
காந்தமெனக் கவரும் மொழிநடை, மட்டக்களப்பு மண்வாசத்தில் புரட்டி எடுத்த வார்த்தைப் பிரயோகங்கள், கிராமிய மக்களின் ஒளிவுமறைவற்ற பேச்சுவார்த்தை களின் அபிநயங்களை எழுத்தில் அப்படியே வடித்துக் காட்டும் வல்லமை, பண்பட்ட ஒரு கலைஞனுக்குரிய கைமணம் வீசும் சித்திரிப் புக்கள். இத்தனையும் கொண்டு ஈழத்து தமிழ்ச் சிறுகதை இலக்கியப் படைப்பாளி களில் இவன் முன்வரிசைப்படுகின்றான்.
எஸ்.பொ.வின் வார்த்தைகளில் சொல்வதென்றால், இவன் பேனா காட்டிய வழியில் பாத்திரங்கள் நடக்கவில்லை, பாத்தி ரங்களின் அடிச்சுவடுகளையே இவன் பேனா புள்ளியிடுகின்றது.
எஸ்.எல்.எம். எழுத்துக்கள் இன்ஸான்,
இளம்பிறை என்று ஆரம்பித்து, வீரகேசரி வரையிலும் விரிந்து நின்ற காலகட்டம் அது.
மலையகத்திலிருந்து மலரன்பன், மாத் தளை வடிவேலன், மாத்தளை சோமு, தெற் கிலிருந்து திக்குவல்லை கமால், எஸ். ஐ.நாகூர்கனி, கலைவாதி கலீல், எம்.எச். எம்.சம்ஸ், மட்டக்களப்பிலிருந்து ஜோன் ராஜன், வை. அகமத், எஸ்.எல்.எம். என்று ஈழத்து தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் அப் போது ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பமாகி யிருந்தது.
எஸ்.எல்.எம். கதைகளைப் படித்து நயப்பதற்கென்றே ஊருக்குள் ஒரு வாசகர் வட்டம் மீராவோடை மார்கட் சந்தியில் தின மும் நாங்கள் ஒன்றுகூடுவோம். நூலகர் சமட் நடுநாயகமாக வீற்றிருப்பார். அவரைச் சுற்றி நான், கவிஞர் இஸ்மாயில், தலிபா, யூசுப், யூ.அவற்மட் என்று அந்த இலக்கிய சதஸ் கூடும். அங்குதான் எஸ்.எல்.எம். கதைகள் அரங்கேறும். இடையிடையே குறுக்கீடுகள், கருத்துக்கள், பாராட்டுக்கள். நேரம் போவதே தெரியாமல் போகும் எங்களுக்கென்றே திறந் தது போல அங்கு ஒரு தேநீர் கடை, முன் னால் ஒரு பூவரசு மரம். (மக்கத்துச் சால்வை யில் இடம்பெறும் பூவரச மரம்) மரத்தடியில் ஒரு நீளமான வாங்கு. பின்னேரமாகி விட் டால் முண்டியடித்துக்கொண்டு அங்கே மொய்த்திருப்போம்.
எஸ்.எல்.எம். எப்போதுமே கற்பனை யில் கதை எழுதிய வரலாறு கிடையாது. பழையகாட் சாறனும், வெள்ளை பெனி யனும், மக்கத்து சால்லையுமாய், அத்தர் வாசம் கமகமக்க. ஊருக்குள் ராஜாக்களாய் வாழ்ந்த போடிமார்களையும், ஹாஜிமார் களையும் இவர் தன் கதைகளில் ஆடை களைந்து அம்மணமாக்கி இருப்பார்.
மல்லிகை ஆகஸ்ட் 2011 $ 6

பெரிய இடத்து அந்தரங்கங்களையும், சமூக அவலங்களையும் மட்டுமன்றி, அநியா யங்களையும் அட்டூழியங்களையும் கூட இவரது எழுத்துக்களில் உரியாணமாய் பார்க் கும்போது, அந்த மறைமுகங்கள் மீது ஆத் திரம் ஆத்திரமாய் வரும். சிலவேளை அரு வருப்பாய்க்கூட இருக்கும். என்றாலும் அழகு தமிழில் வார்க்கப்பட்ட அற்புத சிருஷ்டி கள் என்பதால் எஸ்.எல்.எம். கதைகளை ஆர்வத்தோடு மீண்டும் மீண்டும் வாசிப்போம்.
இப்படி இலக்கிய தாகமும், சமூக வேட்கையும் கொண்டு, ஊரின் விடுதலைக் காக துடித்துக்கொண்டிருந்த எங்களையெல் லாம் அமைப்பு ரீதியில் ஓர் இலக்கிய வட்ட மாக ஒன்றுசேர்க்கும் முயற்சியில் எஸ்.எல். எம். வெற்றிகண்டார். 70களின் முற்பகுதியில் இது சாத்தியமாயிற்று.
எமது பிரதேசத்தின் முன்னோடி எழுத் தாளர் என்ற வகையில் ஊருக்குள் அப்போது ஒரு பிரளயத்தையே உருவாக்கிய பாட்டாளி பாவலர் கலை இலக்கிய வட்டத்தின் அங்கு JITTÜL6OOTés ösnu”.Lb 6 Tsino.66io.6 Tub. 56oo6uo6OLD யிலேயே கூடியது. வை.அஹமத் அவர்கள் இதில் போசகராய் இணைந்துகொண்டார்.
இதன் பின்னர் எமது இலக்கியப் பார்வையும் தொடர்புகளும் விரிவடையத் தொடங்கின. எனது எழுத்துக்களால் ஈர்க்கப் பட்ட எச்.எம்.பி.முகைதீன் கொழும்பு முற் போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் என்னை யும் இணைத்துக்கொண்டார். மட்டக்களப் பில் அப்போது இடதுசாரி போக்குடன் எழுதிக்கொண்டிருந்த சாருமதி, சுபத்திரன், வி.ஆனந்தன், சித்தி, செங்காவலன் போன் றோரின் தொடர்புகளும் உறவுகளும் எம்மைத் தேடி வந்தன. புதுவை இரத்தினம், பேராசிரியர் நித்தியானந்தன், அன்புடீன்,
ஏறாவூர் அனலக்தர், பாலமுனை பாறுாக், மருதூர்க்கனி போன்றோர் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர்.
காலப்போக்கில் இவர்களெல்லாம் எங் களுக்கு பழக்கப்பட்ட முகங்களாயினர். ஒன் றாய் உண்டு, ஒன்றாய் உறங்கி, ஒன்றாய்ச் செயற்பட்ட காலம் அது.
முற்போக்கு இலக்கியம் அப்போது தேசிய ரீதியில் புதிய பரிமாணம் எடுத்திருந் தது. மார்க்சீய கோட்பாடுகள் படைப்பிலக்கி யத் துறையில் பெரிதும் செல்வாக்குச் செலுத் தத் தொடங்கின. எமது இலக்கிய வட்டத்திற் குள்ளும் இந்தக் கோட்பாடு ரீதியிலான மாற்றம் ஊடுருவிக்கொண்டமை ஒன்றும் அப்போதைக்கு ஆச்சரியமான விடயமல்ல. சீன சார்புக் கொள்கை எமது வட்டத்தை ஆட் கொண்டிருந்தது.
இப்படிச் சமூக மாற்றத்தை வேண்டி நின்ற ஒரு புரட்சிக் கொள்கையின்பால் அன்று நாங்கள் ஈர்க்கப்பட்டமைக்கு எமது ஊரின் அன்றைய நிலச்சுவான்களினதும், முதலாளிமாரினதும் கிராமிய ஆட்சி அதி கார முறை மிகவும் சாதகமான ஒரு காரணி யாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வர்க்க முரண்பாட்டின் அடிப்படையில் சமூக ஒடுக்குமுறைக்குட்பட்ட ஒரு வரலாற் றின் பின்புலத்தில்தான் எமது இலக்கிய வட்டம் ஜனரஞ்சகமிக்க ஒரு பேரியக்கமாக ஊருக்குள் அப்போது செல்வாக்கு செலுத் தியது.
நாங்கள் கூட்டிய இலக்கிய கூட்டங் களும், கருத்தரங்குகளும், விவாத மேடை களும், விமர்சனக் கூட்டங்களும், கவியரங்கு களும் பெட்றோமெக்ஸ் வெளிச்சத்தில் நள்ளிரவைத் தாண்டியும் பொதுமக்களால் நிரம்பி வழியும்.
மல்லிகை ஆகஸ்ட் 2011 & 7

Page 6
நாங்கள் எழுதிய துண்டுப் பிரசுரங் களும், கவிதைத் தொகுப்புகளும், கை யெழுத்துச் சஞ்சிகைகளும் ஒவ்வொரு வீட்டி லும் ஆர்வமுடன் வாசிக்கப்பட்டன.
ஒருநாள் வை. அகமத் அவர்களின் புதிய தலைமுறைகள் அறிமுகத்தை, வெளி யீட்டு விழாவும், விமர்சன அரங்குமாக மீரா வோடை அல்-ஹிதாயா வித்தியாலய மண்ட பத்தில் ஒழுங்கு செய்திருந்தோம்.
எஸ்.எல்.எம். முதல் அமர்விற்கு தலைமை தாங்கியதாய் ஞாபகம். விமரசன அரங்கு வை.அகமட் தலைமையில், கவிய ரங்கிற்கு நான் தலைமை, சாருமதி, சுபத் திரன், வரதபாக்கியன், வி.ஆனந்தன், அன்பு டீன், பாலமுனை பாறுாக், பேராசிரியர் நித்தி யானந்தன், எஸ்.பொ. என்று பெரும் பெரும் இலக்கியவாதிகள்.
விமர்சன அரங்கில் முற்போக்கும், நற் போக்கும் மிகவும் காரசாரமாய் மோதிக் கொண்டன. கவியரங்கு முடிந்து இரவுச் சாப் பாட்டிற்காக எஸ்.எல்.எம். வீட்டுக்கு நாங்கள் சென்றபோது அதிகாலை இரண்டு மணியை யும் தாண்டியிருந்தது.
அந்த நடுநிசியிலும் கூட்டம் கூட்டமாக வெளியூர் இளைஞர்களும், பிரபலங்களுமாய் எங்களுடன் இழுபட்டுத் திரிந்த அந்த இனிய தருணங்களை எண்ணிப் பார்க்கும்போது மெய் சிலிர்க்கிறது.
இப்படித்தான் இன்னுமொரு நாள்.
அன்று எஸ்.எல்.எம். அவர்களின் மக் கத்துச் சால்லை வெளியீட்டு விழா, மேடை ஒழுங்குகளை எஸ்.எல்.எம். அவர்களின்
ஒரே மகன் பிரியமுடன் பொறுப்பெடுத்திருந் தார். நான், கவிஞர் இஸ்மாயில், வை. அக
மட் அடங்கலாக எமது வட்டத்தினர் எல்லோ ருமே எடுபிடிகளாய் நின்றும் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறிப்போய் 68 (SLIT b,
ஓட்டமாவடி பாத்திமா பாலிகா ஒன்று கூடல் மண்டபம் நிறைந்து, வெளிமுற்ற மெங்கும் மக்கள் வெள்ளம். விழாவுக்கு வந்தி ருந்த வேதாந்தி சேகு இஸ்ஸதீன் மலைத்துப் போனார். இரவு பத்துமணி தாண்டியும் அர சியல் கூட்டம் போல அசையாதுநின்ற அதே சனத்திரள்.
வழமை போல அன்றும் இரவுச் சாப் பாடு எஸ்.எல்.எம். வீட்டில்தான். மான் இறைச்சியும், இடியப்பமும் வயிறு முட்ட பிடித்துவிட்டு, விடிய விடிய கதையளந்து கிடந்தவர்கள், விடிந்த பின்பே படுப்பதற்காய் LITUij 6Sfëë tortuesi b!
70களில் பிரளயம் என்ற பெயரில் நாங்கள் எழுதிய கையெழுத்துப் பத்திரிகை மாதம் இரண்டு வெளியீடாக ஊருக்குள் உலாவந்தபோது, ஆளும் வர்க்கம் எங்களுக் கெதிராய் ஆவேசம் பெற்றெழுந்தது. எதிர்ப்பு களும், தர்க்கங்களும், கண்டனக் கூட்டங் களாகவும், துண்டுப் பிரசுரங்களாகவும் வெளிப்படத் தொடங்கின. ஊருக்குள் ஒரு பிரளயமே கருக்கட்டி நின்றது.
இப்படி, பலத்த எதிர்நீச்சலுக்கு மத்தி யில் அன்று நாங்கள் செய்த சமூகப் புரட்சி யானது, அயல் கிராமத்துத் தமிழ் இளைஞர் களையும் எங்களுடன் இணைத்துவிட்டதில் வியப்பொன்றுமில்லை.
இன விடுதலைக்கான ஆயுதப் போராட்டம், தமிழ் இளைஞரிடையே குறி கண்ட வருத்தமாய்க் கொடி பிடித்திருந்த காலம் அது. அந்த கருமாரி பாய்ச்சலுக்குள்
மல்லிகை ஆகஸ்ட் 2011 * 8

ளும் வாழைச்சேனை செல்லத்துரை, கறு வாக்கேணி முத்துமாதவன், கிண்ணையடி குரூஸ் அண்ணன். என்று எங்கள் அங்கத் துவம் இன, மத முரண்பாடுகளை உடைத் துக் கொண்டு விரிந்து சென்றது.
புளுக்கை, மவுலா, அம்பட்டன், சக்கிலி யன், வண்ணான், நளவன் என்ற பேதமை எங்கள் வட்டத்திற்குள் கிடையவே கிடை யாது. மானுட உணர்வினை மட்டுமே மதிக் கும் ஓர் இளைஞர் சக்தியாக அன்று நாங்கள் உருவெடுத்திருந்தோம்.
கிண்ணையடி வண்ணார வெட்டை யிலும், காசான் புடார் நிறைந்த கறுவாக் கேணி வெம்புமணல் திட்டுகளிலும் பெளர்ணமி நிலவில் தமிழ்ச் சகோதரங் களுடன் எஸ்.எல்.எம். தலைமையில் நாங் கள் இலக்கியம் பேசிக் கிடந்த அந்த இனிய பொழுதுகள். இன்று நினைத்தாலும் கமுகம் பூ வாசம் போல் கமீரென்றடிக்கிறது.
காலப்போக்கில் மக்கள் சிந்திக்கத் தலைப்பட்டனர். ஊர்த் தலைமைத்துவங்கள் ஆட்டம் காணத் தொடங்கின. பள்ளிவாசல் களில் பரம்பரையான நிருவாக ஆட்சி முறை கவிழத் தொடங்கியது. அரசியல் ஏகபோகம் இல்லாமல் போகும் அபாயச் சமிக்ஞை ஆங் காங்கே வன்முறைகளாய் வெடித்தன.
இந்தக் காலகட்டத்தில்தான் தென் பகுதியில் சேகுவேரா என்று அப்போது அழைக்கப்பட்ட ஜே.வி.பி. புரட்சி வெடித்தது. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ஊர் நிர்வாகம், எமக்கும் அந்த இயக்கத் திற்கும் தொடர்பு இருப்பதாகக் காட்டி, எமது வெளியீடுகள் அனைத்தையும் சாட்சியங் களாகவும், ஆதாரங்களாகவும் ஆவணப்படுத் தினர். நூலகங்களில் இருந்து பிரளயம் சஞ்சி கைகள் புலனாய்வுப் பிரிவினரால் தடை
செய்யப்பட்டதோடு, பறிமுதலும் செய்யப் பட்டன. நாங்கள் தேடப்பட்டோம். பலர் ஊரைவிட்டும் தலைமறைவாயினர். சிலர் வெளிநாடு சென்றனர். எஞ்சியோர் ஒதுங்கிக் கொண்டனர். இதன் பின்னர் இலக்கிய வட் டத்தின் அமைப்பு ரீதியான செயற்பாடுகள் செயலிழந்து போயின.
70களின் ஆரம்பத்திலிருந்து 80களை அண்மித்தபோது, நாங்கள் வேறு வடிவம் எடுத்தோம். அப்போது எம்மால் உருவாக்கப் பட்ட பாலஸ்தீன விடுதலை ஆதரவு முன் னணியிலும் எஸ்.எல்.எம். அவர்களே எமக்கு வழிகாட்டியாய் எம்முடன் இருந்தார். ஒர் எழுத்தாளனாய் மட்டுமல்ல, புரட்சிச் சிந் தனையுள்ள ஒரு முற்போக்குவாதியாகவும் அவரை நாங்கள் ஆராதித்தோம்.
இப்படி, எமக்குள் ஒருவனாய் இருந்த எஸ்.எல்.எம். பின்னர் தீவிரமான ஒர் இன வாத அரசியல்வாதியாக மாறினார். சட்டத் தரணி எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களுடன் இணைந்து, ருநீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியின் ஸ்தாபக உறுப்பினரானார். இக்கட்டான ஒரு சூழ்நிலையில் தன் உயிரைப் பணயம் வைத்து மாகாண சபை உறுப்பினராகக் கிழக்கு மண்ணைப் பிரதி நிதித்துவம் செய்தார்.
யதார்த்தவாதி வெகுசன விரோதி என் பார்களே, அந்த வகையில் அரசியல் வாழ்க்கை இவருக்கு எப்போதுமே சரிப்பட்டு வராத ஒன்று. சத்தியமும் மனிதநேசிப்பும் இவரது எழுத்தில் மட்டுமல்ல, வாழ்க்கை முழுவதும் விரிந்து கிடப்பதால், அந்தக் கட்டுக்களை அறுத்துக்கொண்டு பொய்யும் ஏமாற்றும் நிறைந்த ஒரு போலி வாழ்க்கைக் குள் தன்னை புதைத்துக்கொள்ள எப்படி இவனால் முடியும்?
s மல்லிகை ஆகஸ்ட் 2011 & 9

Page 7
ஹனீபா செளந்தரிய தாசரல்லர். கலை கலைக்காக என்கிற மிதவாதியுமல்லர். அவர் மானசீகத்தின் பரமார்த்த உபாசகர். எல்லாக் கதைகளிலும் மனிதநேசிப்பு ஊடுபா வாக, சட்டென்று புரியாவண்ணம் மிக நொய்ப்ப நேர்த்தியில் நெசவாகி இருக்கிறது என்று எஸ்.பொ. அவர்களால் விதந்துரைக் கப்பட்டுள்ளது. இவரது மக்கத்துச் சால்வை என்ற சிறுகதைத் தொகுப்பில் இவர் தன் வாழ்க்கை அனுபவங்களைக் கண்ணிரில் மை தொட்டு படைத்திருக்கும் அழகு, கை தேர்ந்த ஒரு சிற்பியின் கலை வண்ணத்தை நினைவூட்டி நிற்கிறது.
அந்த வகையில் இவர் எழுதியுள்ள சிவப்புக்கல் மூக்குத்தி, அவளும் ஒரு பாற் கடல் போன்ற சிறுகதைகள் அற்புத மானவை. அவளும் ஒரு பாற்கடல் இவரது கதைப் புனைவில் ஒரு திருப்புமுனையாய் அமைந்த முத்திரைக் கதை, நவீன சிறு கதைப் போக்கின் ஓர் அபூர்வ வெளிப்பாடு என்றும் கொள்ளலாம். கதை வெளிவந்த பத்திரிகைக்கு நான் எழுதிய திறனாய்வுக் குறிப்பு ஒன்றில் இதுபற்றி விளக்கமாகக் குறிப்பிட்டிருக்கின்றேன். இவரது சிறுகதை கள் பற்றி முழுமையாக பேசுவதென்றால் ஒரு தனியுரை எழுத வேண்டும்!
பிழை என்று காணும்போது, தான் பிறந்த இனத்தைக் கூட நேர்மையுடன் சாடி நிற்கும் ஒர்மம். அண்மையில் அம்பை பற்றி தினகரனில் இவன் எழுதிய கட்டுரை ஒன் றின் இடைச்செருகலுக்குள் அது வெளிப் பட்டு நிற்பதை கட்டுரையைப் படித்தவர்கள் கண்டிருக்க முடியும்.
அண்மையில் கனடாவிலிருந்து வெளி வரும் ‘காலம்' சஞ்சிகை இவரது நேர்
காணலைப் பிரசுரித்தது. அங்கே இவரைப் பற்றி இவருடைய ஆத்மார்த்த நண்பன் உமா வரதராசன் இவ்வாறு குறிப்பிடுகிறார். 64 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் எஸ். எல்.எம். ஹனிபா ஈழத்தமிழ் இலக்கியத்தின் முக்கிய ஆளுமையாளர்களில் ஒருவர். இன் னமும் மூப்படையாத மனது. அவருடனான சம்பாசணைகள் அதை நிரூபிக்கும். ஊர்ப் பெண்டுகளின் நளினத்துடனும் இலாவகத் துடனும் குரலின் ஏற்ற இறக்கங்களுடனும் அமையும் அவருடைய பேச்சை இரசித்துக் கொண்டேயிருக்கலாம். எம். ஆர்.ராதாவை நினைவுபடுத்தும் இரட்டைக் குரல். சீராகப் பேசிக்கொண்டே வந்து இறுதியில் தொனி யைத் தாழ்த்தி, இரகசியமாக முடிக்கையில் பட்டாசு ஒன்று வெடிக்கும். அவர் ஒரு எழுத் தாளர் மட்டுமல்ல, எஸ். பொ.க்குப் பின்னர் இலக்கிய அரங்குகளை கலகலப்பாக்கும் ஒரு பேச்சாளர். சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு விவசாயி’ என்கிறார். அவரைப் பற்றிய அச்சொட்டான படப்பிடிப்பு.
தன் எழுத்துக்களால் பிறந்த மண் ணுக்குப் பெருமை சேர்த்து நிற்கும் இவன், தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிப்போக்கில், மட்டக் களப்புக் கதை வளத்தை மற்றுமொரு வளர்ச் சிக் கட்டத்திற்குள் இழுத்துச் சென்றவனும்
n.
அந்தவகையில் தென்னிந்திய தேவசி காமணி விருதும், இலங்கை அரசின் சாஹித் திய விருதும் பெற்ற எமது மண்ணின் மைந் தன் எஸ்.எல்.எம். அவர்களை மல்லிகை தன் முகப்பு அட்டையில் கெளரவப்படுத்தி, அவரது எழுத்து ஊழியத்தைப் பெருமைப் படுத்தும் நிகழ்வில் நாமும் இணைந்து பெருமை அடைகின்றோம்.
மல்லிகை ஆகஸ்ட் 2011 * 10

2Vrrgr Scouë2 3.12シー
மூலம் ஈ. கோடிவேல்
தமிழில் எம்.எம்.மன்ஸனர்
பொதுவாக எல்லோரும் தமக்குத் தபாலில் கடிதம் வருவதை விரும்புகின்றனர். ஸ்டீல் வோட்டர் எனும் நகரத்தில் வாழ்ந்த ரேய் பபின் என்பவரைப் போன்று தபாலில் கடிதம் வருவதை நேசித்தவர் வேறு எவரும் இல்லை எனலாம். என்றாலும் தபால் நிலையத்தில் உள்ள தபால் பெட்டியில் ஏனையவர்களின் தபால் பெட்டிக்கு வரும் கடிதங்களை விடக் குறைந்த கடிதங்களே வந்தன.
“நாயே சாப்பிடட்டும்.” நீண்ட சிறிய முகத்தில் இழையோடிய சோகத்தைச் சுமந்தவனாகக் கடைசியாகத் தபால் நிலையத்தை விட்டு வெளியேறும் ஒவ்வொரு தடவையும் சொல்லிக் கொள்வது அவனுக்குப் பழக்கப்பட்டு விட்டது. எதிர்பார்ப்புச் சிதைவதால் ஏற்படும் விரக்தியை வெளிக்காட்டிக் கொள்வான் இப்படி என்பது எவருக்கும் விளங்கக் கூடிய ஒரு காரணம். “இன்றும் கடிதம் இல்லை" என்றாலும் இன்னும் ஒரிரு தினங்களில் எப்படியும் தனக்குக் கடிதம் வரும் என நம்பினான்
அவன.
ரேய் பயினின் வாழ்க்கை இவ்வாறு தான் கழிந்தது. அவனுக்குக் கடிதம் எழுதுவ தற்கு என்று சொந்த பந்தம் எவரும் இல்லை. அவனது கடன்காரர்கள் கூட அவனுக்கு கடிதம் எழுதுவதில்லை. எப்படியாயினும் மாதாந்தம் எரிவாயு, மின்சார சபையில் இருந்து பாவனைப் பட்டியல் மாத்திரம் தவறாது வந்து சேரும். பொதுவாக அரசியல் அபேட்சகர்களிடம் இருந்து வரும் கடிதம் இருந்து ஒரு தடவை வரும். ஒவ்வொரு செப்டம்பர் மாதமும் வருடாந்த வரி அறவீட்டுப் பத்திரம் கிடைத்து வந்தது.
உண்மையில் அவனுக்கு உறவினர் எவரும் இல்லாததும், "ஸ்டீல் வோட்டர்’
நகரத்துக்கு வெளியே அவனைத் தெரிந்தவர்கள் எவரும் இல்லாததனாலும் கடிதம்
அனுப்ப வேண்டிய அவசியம் அவனுக்கு ஏற்படவில்லை. கடிதம் கிடைப்பதற்கும்
மல்லிகை ஆகஸ்ட் 2011 奉

Page 8
எதுவித காரணமும் காணப்படவில்லை. எனினும் நீண்டகாலமாகத் தனக்கு கடிதம் வரும் என்ற நம்பிக்கையில் காத்துக் கொண்டிருக்கிறான் அவன்.
. அப்பொழுது அவனுக்கு முப்பது வயதுதான். அக்காலத்தில் அந்நகரத்தில் இருந்த யுவதி ஒருத்திக்குக் கடிதம் ஒன்றை எழுதினான். தான் அப் பெண்ணை மிகவும் விரும்புவதாகவும், அவள் அழகில் சிறந்து காணப்படுவதால் தன்னைத் திருமணம் செய்துகொள்ள முன்வருமாறும் அக்கடிதத்தில் குறிப் பிட்டிருந்தான். எனினும் அவனது அந்தக் கடிதத்துக்குப் பதில் வரவேயில்லை.
ஏனைய சிறு நகரங்களையும் போலல்லாது "ஸ்டீல் வோட்டர் நகரத் தின் ஜனத்தொகை ஐநூற்றி ஐம்பது பேர் மட்டுமே. அந்நகரத்துக்கு ரயில் போக்கு வரத்து காணப்படாமையாலும், பிரதான பாதைக்கு அருகாமையில் அமையாத தால் தினமும் தபால் வருவது இல்லா விட்டாலும் ஒருநாளைக்கு ஒரு தடவையே தபால் வந்துசேருவது வழக்க மாக இருந்தது.
ஞாயிற்றுக் கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் நியூ ஒர்லியன்ஸில் புறப்படும் பஸ் வண்டி நகர சதுக்கத்துக்கு முன்னால் தபால் கந்தோரின் எதிரே நிறுத்தப்படும். கடிதம், சஞ்சிகைகள், பார்ஸல்கள் அடங் கிய இரண்டு அல்லது மூன்று தபால் பைகளை கையில் எடுத்துக்கொண்டு சாரதி உள்ளே நுழையும் போது மாலை 4.00 மணி ஆகிவிடும். தபால் பைகள் சில நிமிடங்களில் தபால் அதிபர் சிட் ஸ்டோனியால் பிரிக்கப்பட்டுக் கடிதங்கள் தரம் பிரிக்கப்பட்ட பின் கண்ணாடிக்
கதவுகள் பொருத்தப்பட்ட சிறிய அள விலான பெட்டிகளுக்குப் போடப்படும்.
ஒவ்வொரு நாளும் மாலை வேளை யில் ரேய் பஃபின் தனது வானொலி, கடிகாரம் திருத்தும் கடையைச் சாத்தி விட்டு, தபால் கந்தோருக்கு வருவான். அவன் தனது தபால் பெட்டி இலக்கம் 42ற்கு அருகே, தபால் அதிபரினால் கடி தம் கொண்டுவந்து இடப்படும் வரை ஆவலுடன் காத்துக் கிடப்பான். சிட் ஸ்டோனி கடிதம் தரம் பிரிக்க அதிக நேரம் எடுக்கிறது என ஒரு சிலர் அவர் மீது அலுத்துக் கொள்ளாமலும் இல்லை. அப்பொழுதெல்லாம் தனக்கு ஒரு நாளைக்கு ஒரு தடவைதான் தபால் கொண்டு வரப்படுவதால் சரியான முறை யில் அவற்றைத் தெரிவு செய்து தபால் பெட்டிகளில் இடச் சற்றுத் தாமதம் ஏற் படத்தான் செய்யும் என அவர்களுக்குச் சொல்லுவார்.
கடிதங்கள் தரம் பிரிக்கப்பட்டுப் பெட்டிகளில் இடும்வரையில் கூடி நிற்ப வர்கள் தமாஷாகக் கதைத்துக் கொண் டும், சிரித்துக் களித்துக் கொண்டும் இருப்பார்கள். ஆனால் ரேய் ஃபயின் மாத்திரம் எவருடனும் எதுவும் கதைக் காமல் எதிர்பார்ப்புடன் தனது 42ம் இலக்கத் தபால் பெட்டியையே நோட்டம் விட்டபடி இருப்பான். கடிதம் பகிரப் பட்டு முடிந்ததும் தனக்கு கடிதம் வர வில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டதன் பின்னர் ஏமாற்றத்துடன் தனது தபால் பெட்டியை ஏக்கத்துடன் பார்த்து விட்டு முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு திரும்புவான்.
மல்லிகை ஆகஸ்ட் 2011 & 12

"நாயிக்குப் போடட்டும்" திரும்பி நடக்கையில் தனக்கு மட்டும் கேட்கும்படி சொல்லிக் கொள்வான்.
திரும்ப வந்து தனது கடையைத் திறந்து வைத்துக்கொண்டு எவருடைய தாவது வானொலிப் பெட்டியை அல்லது கைக்கடிகாரத்தை எடுத்துக்கொண்டு நள் ளிரவு வரை திருத்தும் வேலையில் ஈடு படுவான்.
யாருடனாவது விளையாட்டு வித்தை கள் செய்யும் இருவர் அந்த நகரத்தில் இருந்தனர். ஹோக், ரல்ப்ஃ எனும் இரண்டு இளைஞர்கள்தான் அது. ரேய் பபிஃன் ஒரு மாலைப் பொழுதில் கடிதம் கிடைக்கும் வரை காத்திருப்பதை அறிந்த அந்த இளைஞர்கள் யாருடைய பெயரை யாவது குறிப்பிட்டு கையொப்பம் இடப் பட்ட கடிதம் ஒன்றினை அனுப்பி வைக்க முடிவு செய்து கொண்டனர். அவர்களது விளையாட்டு எவரையும் பாதிப்புக்கு உள்ளாக்குவதும் நோக்கம் அல்ல.
ரேய் பஃபினின் தபால் பெட்டிக்குக் கடிதம் ஒன்று வந்துசேரும் விதத்தைக் கண்டு களிக்கச் சகலரையும் வந்து ரகசிய மாக அவதானிக்கும்படி சொல்லி வைப்ப தற்கு அவர்கள் ஆலோசித்தார்கள். அக் கடிதம் காதல் கடிதமா? என்று கேட் பதற்கு ஒருவரை ஏற்பாடு செய்வதோடு, ஒருவர் அக்கடிதத்தைப் பறித்தெடுத்து உரத்து வாசிப்பதற்கும் ஏற்பாடாகி இருந்தது.
இந்தத் தீர்மானத்திற்கு வந்தததும் அவ்விருவரும் தொலைபேசி நிலையத் துக்கு அருகில் வந்தனர். அங்கு இரவு நேரக் கடமையில் கிரேஸ் புரூஸ் என்ற
பெண்மணி சேவையில் ஈடுபட்டிருந்தாள்.
பிரகாசிக்கும் தலைமுடியைக் கொண்டிருந்த அவள் பருத்த சரீரத்தைக் கொண்டவளாகவும், முதுமை வயதிலும் காணப்பட்டாள். உயர்கல்வியை முடித்துக் கொண்ட நாளில் இருந்து அவள் அங்கு தான் கடமையாற்றுகிறாள். இந்த நீண்ட காலத்தையும் அவள் திருமணமாகாமலே கடத்தி விட்டாள். இரவு நேரக் கடமை யாதலால் பகல் முழுக்க நித்திரையில் ஆழ்ந்து விடுவது அவள் திருமணம் முடிக்காமல் இருப்பதற்கான காரண மாகவும் இருக்கலாம். அதனால் தான் அவளைத் திருமணம் முடிக்கக் கூடிய ஆண்மகன் எவரும் அவளுக்குக் கிடைக்க வில்லை.
தொலைபேசி நிலையத்துக்கு வந்த அந்த இளைஞர்கள் இருவரும் ரேய் பஃபினுக்கு கடிதம் ஒன்று எழுதித் தரு மாறு கேட்டுக் கொண்டனர். பெண் ஒரு வரின் கையெழுத்தில் அது அமைய வேண்டியிருப்பதால் மறுக்காமல் எழுதித் தருமாறு வேண்டினர். ஆரம்பத்தில் மறுத்த அவள் சொன்னாள், "இதென் றால் ஒரு கெட்ட வேலை; எப்பொழுதும் இதுபோன்ற ஒரு வேலையை என்னால் செய்ய முடியாது.”
“இது ஒரு விளையாட்டுக்குத் தானே கிரேஸ்" ரல்ப்ஃ விளங்க வைக்க முயன்றான். “இது ஒரு விளையாட்டு மாத்திரம் தான். இதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படாது. மிட்ல், ஜோனி, ஃபலோரன்ஸ் என்பவர்கள் எவரிட மிருந்தும் கடிதம் ஒன்று கிடைத்தது என்று வைத்துக் கொள்வோம். அவள்
மல்லிகை ஆகஸ்ட் 2011 & 13

Page 9
நீண்டகாலம் அவரைக் காதலித்ததாகவும், மேலும் காத்திருக்க முடியாது என கடிதத்தில் எழுதியிருந்ததாகவும் வைத்துக் கொள்வோம். அப்பொழுது ரேயின் நட வடிக்கை எப்படியிருக்கும் என்பதை நினைத்தால் சோகத்தில் தொங்கப் போட் டுக் கொண்டிருக்கும் ரேயின் முகத்தில் ஒரு மலர்ச்சியைக் காணலாம்' என விளக்கினான்.
"இல்லை அது சரியில்லை." அவள் ஒரு கண்ணின் ஒரத்தில் குடிகொண்ட கண்ணீர்த் துளியை ஒரு விரலால் துடைத்துவிட்ட வண்ணம் மறுகண்ணை யும் துடைக்கும் போதே “எனக்கு என்ன கிடைத்தாலும் இத்தகைய ஒரு வேலை யைச் செய்ய மாட்டேன்” என மறுத்தாள். கிரேஸ் தனது முகத்தை ஒருபக்கம் திருப்பிக் கொண்டாள். அவளது கன்னம் வழியே வடிந்து வந்த கண்ணீரை அவள் மறைக்க எடுத்த முயற்சிகள் வீணாகியது.
'உலகத்தில் உள்ள எந்தப் பெண் ணிடமும் கொள்ளாத காதல் உங்கள் மீது எனக்கு ஏற்பட்டிருக்கிறது. அந்த அளவுக்கு நான் உங்களை நேசிக்கிறேன். திருமணம் முடிக்க முன்வருமாறு’ கேட்டு ரேய் பஃபின் அவளுக்கு எழுதிய கடிதம் இப்பொழுது நினைவுக்கு வந்தது. அப்பொழுது உயர் கல்வியை முடித்துக் கொண்டு சேவையில் இணைந்தபோது அவள் சுதந்திரப் பெண்ணாக இருப்பதற்கு விரும்பியதால் அந்தக் கடிதத்தைப் புறக்கணித்து விட் டாள். கடந்த பல வருடங்களாக இரு வரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும்போது நல் வாழ்த்துக்கள்
என்னைத்
தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவளைக் காணும் போதெல்லாம் ரேயின் முகத்தில் துக்கம் துள்ளிப் பாயும். அப்பொழுது ஒடிச்சென்று அவனது கடி தத்துக்கு பதில் எழுத முடியாமல் போன மைக்கு மன்னிப்புக் கோரி அவனது கழுத்தைக் கட்டிக்கொள்ள வேண்டும் எனப் பலமுறை எண்ணியிருக்கிறாள். அவன் எழுதிய கடிதத்ததுக்கு பதில் எழுதியிருந்தால் கடந்து சென்ற நீண்ட காலத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்திருக்க லாம். ஒருவருக்கு ஒருவர் தனிமைப்படுத் தப்பட்டு இருக்கமாட்டார்கள்.
“தயவு செய்து கிரேஸ், இந்தக் கடி தத்தை எழுதித் தாருங்கள். முடியா விட்டால் சொல்லுங்கள். நாங்கள் வேறு யாரிடமாவது செல்கிறோம்."
அவள் தனது கன்னங்களில் வடிந்த கண்ணிரைத் துடைத்துவிட்டுக் கொண்டு சொன்னாள், "அப்படிச் செய்ய வேண் டாம். நானே அதைச் செய்கிறேன். யாரா வது அந்தக் கடிதத்தை எழுதுவதை நான் விரும்பவில்லை" என்றாள்.
"அது ரொம்ப நல்லது கிரேஸ்." அவளது தோள்களைத் தொட்டு ரல்ப்ஃ சொன்னான். "நல்ல விளையாட்டுக்கு நீங்கள் விருப்பம் என்பது எனக்குத் தெரி யும். இப்பொழுது நாம் கடிதத்தை எப்படி எழுதுவது என்பது பற்றி யோசிப்போம். நீண்டகாலமாக நீங்கள் அவரை விரும்பு வதாகவும், தான் இன்னும் நெருக்கமாக விரும்புவதாகவும், தனிப்பட்ட விடயம் ஒன்று சம்பந்தமாக கதைக்க இருப்பதால் தான் சந்திக்க விரும்புவதாகவும் கடிதத் தில் எழுத வேண்டும். உண்மையிலே நீங்
மல்லிகை ஆகஸ்ட் 2011 率 14

கள் அவருடன் திருமணம் கொள்ள விரும்புவதாகவும் குறிப்பிட்டு இறுதியில் உங்களுக்கு விரும்பிய பெயரில் கை யொப்பம் இடுங்கள்."
"கடிதத்தை எப்படி எழுத வேண்டும் என்று எனக்குத் தெரியும். இன்று இரவே எழுதி காலையிலே தபாலில் சேர்த்து விடுகிறேன்" எனத் தலையை அசைத்த
வண்ணம் சொன்னாள்.
அவர்கள் தொலைபேசி நிலையத்தை விட்டுச் சென்றதன் பின்னால் நீண்ட நேரம் குலுங்கிக் குலுங்கி அழுதாள் கிரேஸ், அன்று இரவே ரேய் பஃபினுக்கு கடிதத்தை எழுதி மறுநாள் காலையிலேயே தபாலில் சேர்த்து விட்டாள்.
மறுநாள் மாலை 4.00 மணிக்கு ரல் பும் நண்பனும் ரேயின் வருகையை எதிர் பார்த்துத் தபால் கந்தோருக்கு வந்தனர். அந்நேரம் அதிகமானவர்கள் தபால் கந்தோருக்கு வருகை தந்திருந்தனர். நடக் கப் போவது என்ன என்பதை எல் லோரும் அறிந்து இருந்தனர். அவர்கள் ஒரக்கண் கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
நியூ ஓர்லியன்ஸில் இருந்து புறப் படும் பஸ்ஸில் கொண்டு வரப்படும் கடி தங்கள் தெரிவு செய்யப்படுவதற்கு முன் னதாகத் தனது தபால் பெட்டியில் கடிதம் ஒன்று இருப்பதைக் கண்டு நெடு நேரம் அதையே பார்த்துக் கொண்டிருந்தான். பின்னர் நடுங்கும் கைகளால் அக் கடிதத் தைப் பெற்று அந்த அறையின் ஒரமாக நின்று வாசிக்கத் தொடங்கினான்.
கடிதத்தைப் பிரித்தபோது எப் பொழுதும் இல்லாத பதற்றம் அவனைப்
பிடித்துக் கொண்டது. கடிதத்தைப் படிக்கும் போது முகத்தில் காணப்பட்ட கவலை மறைந்து முகமலர்ச்சி ஏற்பட் டது. ஒரு தடவை படித்த கடிதத்தை மீண்டும் படித்தான். கடிதத்தின் வாசிப் புக்கு ஏற்ப அவனது உதடுகள் அசைந் தன. பின்முகத்தில் ஒளிக்கற்றைகள் படர்ந்தன. கடிதத்தைப் படித்து முடித் ததும் சட்டைப் பைக்குள் அதனைத் திணித்துக் கொண்டு எவரும் எதுவும் கேட்பதற்கு முன்னர் தபால் கந்தோரை விட்டும் வெளியேறி விட்டான்.
நடந்த விடயத்தை ஊகித்துக் கொண்ட கய்யும், ரல்ஃபும் ரேயை மீண் டும் தபால் நிலையத்துக்கு வரும்படி அழைப்பதற்காக ஒடினர். எனினும் ரேய் தொலைபேசி நிலையத்தை நோக்கி ஓடி னான். சாதாரணமாக மாலை 6.00 மணிக் குத்தான் கிரேஸ் தொலைபேசி நிலை யத்துக்கு வருவது வழக்கம். என்றாலும் அன்று மாலை 4.00 மணிக்கே அங்கு
காணப்பட்டாள்.
இருவரும் எதுவும் பேசிக்கொள்ள வில்லை. கய்யும், ரல்ஃபும் அவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிய வில்லை. ரேய் கிரேஸின் கையில் பிடித் தான். அவள் எதிர்ப்புத் தெரிவிக்க வில்லை. எழுந்து சென்று ரேயின் தலை யில் முத்தமிட்டாள். அவளது கன்னம் வழியே கண்ணிர் வழிந்தோடியது.
கய்யும், ரல்ஃபும் தொலைபேசி நிலையத்தை விட்டு வெளியில் வந்தனர். இருவரும் ஒன்றும் பேசிக்கொள்ள வில்லை. “விளையாட்டு உண்மையாவ தும் உண்டு.” ரல்ப்ஃ தபால் நிலையத்துக் குத் திரும்பி வரும்போது கூறினான்.
மல்லிகை ஆகஸ்ட் 2011 & 15

Page 10
"நான் ரேய் பபிஃனைப் பார்த்து H
; : )
நன்றாகச் சிரிப்பதற்கு எண்ணியிருந் தேன். எனினும் என்ன நடந்தது? கிரேஸ்
目
புரூக்ஸ் தவறுதலாக தனது பெயரை கை யொப்பம் இட்டு விட்டாளோ? நான் அப் படித் தான் நினைக்கிறேன். என்றாலும்
அது தவறுதலாக இருக்க முடியாது." கய்யி சொன்னான்.3
Excellent Photographers Modern Computerized Photography For Wedding Portraits & Child Sittings
"நான் நினைக்கிறேன் அவர்கள் இருவரும் இடையில் நீண்டகாலமாக திருமணத் தேவை இருந்திருக்கும். நாம் இந்தக் கடிதத்தை விளையாட்டாக எழு தும் வரை அவர்கள் ஒரு முடிவுக்கு வந் திருக்க மாட்டார்கள். பரவாயில்லை.
C
p
p
у
--
இதற்குப் பிறகு விளையாட்டு விஷயங் களைச் செய்யும்போது விளையாட்டாகச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் எமக்கு விளையாட்டு வேடிக்கைகள் தெரியாது என மக்கள் நினைப்பார்கள்." ரல்ப்ஃ தலையை ஆட்டியபடியே
Photo Copies of
சொன்னான்.
Identity Cards (NIC), எப்படியிருந்த போதும் எமக்கு Passport & விருப்பமான முறையில் அவை நடப்பது Driving Licences
தான் நல்லது. இதற்குப் பிறகு ரேய் 9 () பபிஃனைச் நேரும் போதெல் Within 15 Minutes லாம் நான் நல்ல ஒரு காரியத்தைச் செய்தேன் என்ற நினைவு வரும். இனி மேல் அந்த சோகம் நிரம்பிய முகத்தைத் தபால் நிலையத்தில் காணமுடியாது. நாம் அப்படி எழுத முன்வராவிட்டால் ரேய்
300, Modera Street, Colombo - 15. Te: 2526345
எவ்வளவுதான் காலம் காத்திருந்தாலும் அப்படி ஒரு கடிதம் அவனுக்கு தபாலில்
கிடைக்கப் போவதில்லை.
. . . . t
彗
II
மல்லிகை ஆகஸ்ட் 2011 & 16

பெண்ணினம் பின்தங்கி இருப்பதற்கு, அவர்களது அயராத உழைப்பு மதிக்கப்படாமலி ருப்பதே முக்கிய காரணமாகும். மதிக்கப்படாவிட்டாலும் கூடப் பரவாயில்லை. பெரும்பாலான குடும்பங்களில் பெண்களினது உழைப்பு, கண்டுகொள்ளப்படுவதேயில்லை என்பதுதான் வேதனைக்குரியது. ஊதியமற்ற அவர்களின் உழைப்பு எவ்வளவு உன்னதமானது
ஆசிய ஆபிரிக்க நாடுகளில் பெண்கள் ஒய்வொழிச்சலின்றி உழைக்கின்ற போதிலும், அது அவர்களுக்கான கடமை என்பதாகவே இருந்து வருவதால் அதன் பெறுமதி எவருக்கும் புரிவதில்லை. பாரம்பரியமாகத் தொடரும் இத்தகைய செயற்பாட்டிற்கு ஆணாதிக்கத்தின் மனோபாவமே காரணம். இன்றும்கூட வீட்டு வேலைகள் அனைத்தையுமே - குறிப்பாக சமையலறை வேலைகளை அவர்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்ற நியதியே தொடர் கதையாக உள்ளது. அடுப்படியில் பெண்களை அடக்கி வைக்கும் நிலைக்கு இது வித்திடு கின்றது. ஆண்கள் சமையல் அறையை எட்டிப் பார்ப்பதே குற்றம் எனக் கருதுவது போல் ஒதுங்கிக் கொள்கிறார்கள். சமையல் வேலை மனைவிக்கு மாத்திரமே என்ற மனப்பான்மை யில் மாற்றம் ஏற்பட வேண்டியமை இன்றைய காலத்தின் தேவையாகும். உண்மையில் இது இருபாலருக்கும் உரிய வேலைதான்.
O சமையல் பெண்ணுக்கு மட்டுமே உரியது 9/ன்/கலின்) என்ற சிந்தனை உள்ளமையினால் இன்றும் கூட ஆண்களில் பலர் தேநீர் தயாரிக்கக் கூட தெரியாதவர்கள்ாக இருக்கிறார்கள். இன் 2ഞ്ഞുമ്രീഞ്ഞുU னொரு புறம் பெண்களில் சிலரும் அடுப்படி வேலை ஆண்களுக்குரியதல்ல என எண்ணு O கிறார்கள். இது பாரம்பரியமாக வந்த மன 67UV6(//é/ வுணர்வுதான். அதிகாலை முதல் சாமம் வரை வீட்டுக்காக உழைக்கும் பெண்கள் இன்றும் எம் O O சமூகத்தில் இருக்கிறார்கள். மதிக்கப் ஒரு பெண் மனைவியாக, தாயாக, இல் லாளாகச் செய்யும் பணிகள் அளப்பரியவை. 6 O O 2 காலா காலமாகத் தொடர்ந்தும் இந்தப் பணிகள் UVM) ഗ്രnnകനെ O யார் கண்ணிலும் படாமல் தொடர்ந்த வண் னமே இருக்கிறது. கணவன் தொடக்கம் சின் R சந்திரகாந்தா னஞ்சிறு குழந்தை வரை எப்பொழுதும் ஏதாவது கேட்டு நச்சரித்துக் கொண்டே இருப்பார்கள். (PUற்5T60மிதி0ெ சமயங்களில் ஒரே நேரத்தில் பலருக்குச் செவி சாய்க்க வேண்டிய நிலை! அம்மா, சப்பாத்தைப் பொலிஸ் பண்ணித்தா என்பான் மூத்தவன். அடுத்தவளோ சீருடையை அழுத்தித் தரும்படி கூப்பிடுவாள். அடுப்பில் பால் கொதிக்கும். குழந்தை மலம் கழித்துவிட்டு அழும். கணவனோ பேப்பர் பார்த்தபடி மனைவியை அழைப்பார்.
மல்லிகை ஆகஸ்ட் 2011 & 17

Page 11
எல்லோருக்கும் ஒடியோடிப் பணி செய்தே களைத்துப் போவாள் மனைவி. எனினும் அவள் மனம் கோணிச் சலிப்பது அரிது.
இத்தனைப் பணிகளையும் இயந்திர கதியில் செய்யும்போது யாரும் அதனைக் கண்டுகொள்வதில்லை. சில சமயங்களில் ஏச்சு வாங்க வேண்டியும் இருக்கும். எனினும் எந்தப் பெண்ணும் தனது குடும்பத்திற்காக உழைப்பதைச் சுமையாக எண்ணுவ தில்லை. தியாகம் என்றும் எண்ணுவ தில்லை. ஆனால் அவள் குடும்பத்திற்காகத் தன்னை அர்ப்பணிக்கிறாள். தனது ஓய்வை யும், அபிலாசைகளையும் புறம்தள்ளி விட்டு உழைக்கிறாள் என்பதை மற்றவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டுமல்லவா? ஆனாலும் பெண் அதைக் கூட எதிர்பார்ப்ப தில்லை.
பெண்களில் பலர் வேலைக்குச் செல் கிறார்கள். இவர்கள் வீட்டு வேலைகளையும் தனித்தே செய்திட வேண்டிய நிலை! சாதாரண தொழிலாளி முதல் பெரும் உத்தி யோகம் பார்க்கும் பெண்கள் வரை இதே கதைதான். குழந்தை வளர்ப்பும், சமையலும் பெண்களுக்கு மட்டுமே உரியது என்ற மனப் பான்மையிலிருந்து ஆண்கள் மட்டுமல்ல, ஆணாதிக்கத்தின் பாற்பட்ட பெண்களும் விடு பட வேண்டும்.
அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெ தற்கு என்ற காலம் மலையேறி இன்றைய பெண்கள் கல்வியில் அதிக நாட்டம் காட்டி வருகிறார்கள். பல இடங்களில் கல்விக்கான சம வாய்ப்புக் கிட்டியுள்ளது. இதன் மூலம் விழிப்புற்று வரும் பெண்கள், தமது நிலை பற்றி, தமது வாழ்வியல் நடைமுறையில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்துள்ளனர். அனைத்து குடும்பப்
பணிகளிலும் ஆண்களும் அன்றாடம் பங்கு கொள்ள வேண்டும் என நினைக்கிறார்கள். எனினும் இன்றைய நடைமுறையில் இன்ன மும் வேலைக்குப் போகும் பெண்கள்கூடத் தனித்தே அனைத்துப் பணிகளையும் செய்ய வேண்டிய நிலை பல வீடுகளில் தொடர்கின் றது. வேலையால் வந்த கணவன் ஒய் வெடுக்க, மனைவி மட்டும் தனித்து வீட்டு வேலைகளைச் செய்யும் நிலையில் மாற்றம் வேண்டும். இதுபற்றிச் சற்று சிந்திப்போமா?
இன்றைய ஆண்களில் கணிசமானோர் புரிந்துணர்வு மிக்கவர்களாக மாறி வருவ துடன், பெண்களின் சுமைகளில் பங்கு கொள்கிறார்கள். எனினும் தமது மனை விக்கு உதவி செய்வதாக நினைக்கிறார் களேயன்றி, பிள்ளை வளர்ப்பு, சமையல் போன்ற பணிகள் தமக்கும் உரியவை என எண்ணுவதில்லை. இந்த மனநிலையில் மாற்றம் ஏற்படும்போதுதான் உண்மையான சமத்துவம் ஏற்படும்.
பெண்களின் உழைப்பபை ஆணாதிக் கம் கண்டுகொள்வதுடன், அதில் பங்கு கொண்டு அவர்களின் சுமைகளைக் குறைக்க வேண்டும். இன்னொரு படி மேலாக வீட்டுப் பணிகள் கணவன் மனைவி இருவருக்குமானதே என்ற உணர்வு மேலோங்கிட வேண்டும். இதன் மூலம் பெண், குடும்பத்திற்காக மாத்திரமன்றித் தனக்காக வும் வாழவும் வாய்ப்புக் கிட்டும். பெண்களின் அபிலாசைகள், இலட்சியங்கள் நிறைவேற இது வாய்ப்பளிக்கும். பெண்ணின் சாதனை களை வெளிக்கொணர இது வாய்ப்பளிக்கும். குடும்பத்தில் ஆண்டான் அடிமை நிலையை மாற்றிக் கணவன் மனைவி இருவரும் குடும் பத்தின் சம பங்காளிகள் என்ற நிலை உரு வாகி பெண்ணியம் மேம்பட்டுச் சமத்துவம் உருவாகும்.
மல்லிகை ஆகஸ்ட் 2011 & 18

என் கனவுகள் புதைந்த நாட்களில் என் காதல் பொழுதுகள் விரிந்தன.
மெளனங்கள் உடைத்த எம்மில் போரின் நிகழ்கால வன்மம் உதித்தது.
நான் சேமிக்கின்ற சந்தோஷ விநாடிகளிலும் அதன் அழகிய தனிமையினதும்
நினைவுகளை நான் இழந்தேன்.
கண்ணிரும், இரத்தமும் என்னுள் பிரவகிக்க உயிர்மை கசிகின்ற எனது உடலின் வலுவை நான் இழந்தேன்.
நான் உரிமம் என்ற கதையாடலை நம்பினேன். அதன் அர்த்தபூர்வ அரசியலை நம்பினேன்.
ஆனால் எனது பரிதாபக் குரல் உனது செவி(ப்)ட்டறையை துளைக்கவில்லை.
நான் விழுந்த கணங்களில் உன் மிலேச்ச உணர்வுகள்
உயிர்த்தன.
கருநாங்க்க வர்த்தக
வலைடிக்
Ga5696)
- வளிம் அக்ரம்
என் அகிம்ச வானம் கறுத்தது உனது அதிகார ஆசனம் நிலைத்தது. எனது உரிமக் கொடி சுடப்பட்டது. நானோ மரணத்தின் நொடிகளில் நின்றேன்.
என்னை முத்தமிடக் காத்திருந்த குழந்தை - எனது பிணத்தின் கண்களில் எச்சமிட்டது.
மல்லிகை ஆகஸ்ட் 2011 & 19

Page 12
கைலாஷ் கைராசிக்காரன் எனக் கலியாணச் சந்தையில் கதை. அதனால் அவரிடம் வாடிக்கையாளர் அதிகம். ஆனால், என்னைப் பொறுத்தவரை அப்படி ஒரு மர்மமும் அவரிடம் இல்லை; இருப்பது கடும் உழைப்பு. இரவு பகல் பாராது, சோராது - ஓயாது, பம்பரம் போல் சுழன்றடித்து நேர்மையாக - நேர்த்தியாக உழைப்பவர் அவர்.
அவர் அனேகர் செய்யாத ஒன்றைத் திறம்படச் செய்து வருகின்றார்! இணையத்தளம், பத்திரிகை விளம்பரப் பகுதி முதலியவற்றில் தகவல் சேகரித்து - சம்பந்தப்பட்டவர்களை ஒருவாறு இனங்கண்டு - நடவடிக்கை எடுக்கிறார். சாதகக் குறிப்புத் தட்டுப்பாட்டைப் போக்கத் தரகர் வட்டங்களுடன் அடிக்கடி தொடர்பு கொண்டு வருகின்றார். அவரது அலுவலக ஊழியரும் உண்மையாக உழைக்கின்றார்கள்.
அதனால் அவரது திருமண சேவை நிலையத்தில் அதிகப்படியான கலியாணங்கள் நடைபெறுகின்றன!
அன்று, ஞாயிற்றுக்கிழமை. பிற்பகல். அவரது அலுவலகத்திற்கு நான் போயிருந்தேன். ஒரு நடுவயதுக் கனவான் வந்தார். யாழ். உயர்குல சைவ வேளாள - முப்பத்திநான்கு வயதான -5'5’- மெலிந்த - சிவந்த - அழகிய எக்கவுண்டன் மண மகளுக்குப் பொருந்தக் கூடிய - உயர் தொழில்சார் கல்வி பயின்ற வாலிபரின் சாதகக் குறிப்புத் தேவை எனச் சொல்லி, மண மகளின் சாதகக் குறிப்பையும், சுய விவரக் குறிப்பையும், புகைப்படத்தையும், பதிவுக் கட்டண ரொக்கத்தையும் கையளித் தாா. SS
குறுங்கதை
றாரு ஆறி
- வேல் அமுதன்
சுய விபரக் குறிப்பை மேலோட்டமா கப் பார்த்த கைலாஷ"க்கு முகம் கறுத்தது! ஆவணப் பிரதிகள் அத்தனையையும், கட்டுப் பணத்தையும் மீளக் கனவானி "நான் இப் படியானதுகளைச் செய்வதில்லை’
டமே கையளித்த கைலாஷ்
என்றார். 0 O
வாங்கிய கைலாஷ் எதிர்பார்ப்புப்
பார்வையிட்டுக் கொண்டிருந்த பகுதியை எரிச்சலோடு வாசித்தார். “எமது
எங்களுக்கோ ஆச்சரியம்..!
“ஏன் மறுக்கிறியள்? நான் ஒண்டும் பிழை விடவில்லையே?’ கனவான் விசாரித்தார்.
“ஒருக்கா சுயவிவரக் குறிப்பை நீங்களே படித்துப் பாருங்கோவன்’
அதனை அவதானமாக வாசித்தவர், “அப்பிடி ஒண்டுமே இல்லையே!’ என்றார்.
பிழையாக
சுயவிவரக் குறிப்பைத் திரும்ப
எதிர்பார்ப்பு : 56’க்கு மேற்பட்ட உயர - அழகிய - மதுபாவனை அற்ற - லட்சண மான மாப்பிள்ளை. சீதனம் : கொழும் பில் சொகுசு அப்பார்ட்மெண்ட், ரொக் கம். குறிப்பு : தீவகம் வேண்டாம்.”
கைலாஷ் கண்டிப்புத் தோரணையில் நாத்தழுதழுக்கச் சொன்னார், “நான் அசல் தீவான்; எனது பெற்றோர்களும் அசல் தீவார்! எங்கடை பூர்வீகமே தீவேதான்; ஏன் நீங்களும் தீவுதானே! - இலங்கையும் ஒரு தீவுதானே?”
மல்லிகை ஆகஸ்ட் 2011 & 20

எனது அண்மைக்கால நூல்கள்
- கே.எஸ்.சிவகுமாரன்
னெது அண்மைக்கால நூல்கள் சிலவற்றின் உள்ளடக்கங்களை வாசகர்களுக்குத் தெரி விப்பது அவசியமாகிறது. இது ஏனெனில் அவற்றுள் உள்ளடங்கியவை நமது எழுத்தாளர் களினதும், அவர்கள் படைப்புகளினதும் திறனாய்வு சார்ந்த எனது பார்வைகள் அவற்றில் அடங்கியிருப்பதுதான்.
குறிப்பிட்ட இந்நூல்கள் பற்றிய மதிப்புரைகளைச் சில நண்பர்கள் எழுதியுள்ள போதிலும், விரிவாக ஒவ்வொரு அம்சத்தையும் விரித்துரைக்க அவர்களுக்கு, அவர்கள் பயன்படுத்திய ஊடகங்களில் வசதி கிடைக்காமற் போயிருக்கக் கூடும்.
அதுபோக, எனது நூல்களில் தமது ஆக்கங்கள் திறனாய்வாகவோ, இரசனைக் குறிப்பு களாகவோ இடம்பெற்றிருப்பதை அவர்கள் தெரிந்திருக்கக் கூடிய வாய்ப்பு இல்லாமற் போயிருக்கக் கூடும்.
இதுவரை 24 தமிழ் நூல்கள் வெளிவந்துள்ளன. தொடர்ந்து 02 நூல்கள் அச்சில் உள்ளன.
கடைசியாக வெளிவந்த நூலின் பெயர் காலக் கண்ணாடியில் ஒரு கலை இலக்கியப் பார்வை. (மணிமேகலைப் பிரசுரம் 2010) இந்நூலின் 276 பக்கங்களில் 46 கட்டுரைகள் மூலம் தமிழ் இலக்கியம் தொடர்பான பலதரப்பட்ட விபரங்களும், ஆய்வுகளும், திறனாய்வுகளும், மதிப்புரைகளும், இரசனைக் குறிப்புகளும் அடங்கியுள்ளன.
உதாரணமாக எனது ஆங்கில மொழிக் கட்டுரைகளை மையமாக வைத்து, ஈழத்துத் தமிழ் இலக்கியம் தொடர்பாக சிங்கள மொழியில் பேராசிரியர் திஸ்ஸ காரியவாசம் ஒரு நீண்ட கட்டுரையை, "20-ஆம் நூற்றாண்டின் அடிச்சுவடுகள்’ என்ற சிங்கள மொழித் தொகுப்பில் சேர்த்துள்ளார். நன்றிக் கடனாக எனது பெயரையும் இணைத்து அதனை எழுதியுள்ளார். 40 பக்கங்களைக் கொண்ட இந்தக் கட்டுரையைத் தமிழில் மொழியாக்கித் தந்தவர் முகமது யாகூப் ஆவர்.
சுப்ரமணிய பாரதியாரின் ஆக்கங்கள் தொடர்பாக சீனி விசுவநாதனின் பங்களிப்புகளை ஒரு கட்டுரையும், Walt Whitman பற்றி பாதிரியார் பார்வை என்ன என்று மற்றொரு கட்டுரையும், T.S.சொக்கலிங்கம் /கு.அழகிரிசாமி தொடர்பான குறிப்புகளும், மேனாட்டு சாஸ்திரிய சங்கீதம் தொடர்பான ஜெயகாந்தன் குறிப்புகளும் சில பக்கங்களில் அடங்கியுள்ளன.
மல்லிகை ஆகஸ்ட் 2011 奉 21

Page 13
வேறு சில கட்டுரைகள் என் மனதில் நிற்கக்குடிய பயனுள்ள மேற்கோள்களாகத் தகவல்களைத் தருகின்றன.
தமிழ் புனைகதைகள் பற்றிய நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் இவ்வேளை யில், 1970கள் வரை வெளிவந்த நூல்கள் பற் றிய விளக்கக் குறிப்புகளைச் சில பக்கங்கள் விபரிக்கின்றன.
ஈழத்து வானம்பாடிகள் பாடும் கவிதை கள், 11 ஈழத்துக் கவிஞர்கள், ‘அக்னி’ என் றொரு கவிதை ஏடு, எம்.ஏ.நுஃமானின் கவிதைகள், இஸ்லாமிய பக்திப் பாடல்கள், கலைவாதி கலீலின் கவிதைகள், றவிடிமியின் கவிதைகள், அமரர் க.தா.செல்வராஜகோபா லின் பங்களிப்புகள் போன்ற கட்டுரைகளும் திறனாய்வுப் பார்வையில் இடம்பெற் றுள்ளன.
இவை தவிர, 1960களில் 'பத்தி எழுத்து’ என்ற இலக்கிய வடிவத்தை பிரக்ஞை பூர்வமாகத் 'தினகரன் வார மஞ்சரியில் (மீள்) அறிமுகம் செய்து, ‘மனத் திரை’, ‘கன பரிமாணம்’, ‘மேற்குக் கலை யுலகம்’ போன்ற பத்திகளில் தகவல்கள் அடங்கிய விஷயங்களை இரசனை ரீதியாக எழுதி வந்தேன். அவற்றுள் சிலவற்றையும் இந்நூலில் சேர்ந்திருக்கிறேன். இவை புதிய பரம்பரையினருக்குப் பயனளிக்கக் கூடிய தாய் இருக்குமென நம்புகிறேன்.
'இஸம்’களின் தமிழ் வணக்கம், கவிதையும் விமர்சனமும், சிறப்புச் சித்திராம் சங்கள், உடனிகழ்கால தமிழ் இலக்கியப் போக்கின் சில கூறுகள், மேலை இலக்கியம், மெய்ப்பொருள், இலக்கியத் தழுவல், ஆங்கிலத்தில் கவிதை எழுதும் பெண்மணி ஆகியன வேறு சில கட்டுரைகள்.
இவை தவிர, இளங்கீரன், ஜொஸிம் ஒமர், எதிரிவீர சரத்சந்திர போன்றோர் பற்றிய கட்டுரைகளும் தகவல் சார்ந்தவை யாய் அமைந்துள்ளன.
அந்நாளைய இலங்கை வானொலி யிலே (1966-1970) வர்த்தக ஒலிபரப்பு பகுதி நேர அறிவிப்பாளராகவும் அனுபவம் பெற்ற தன் நினைவுக் குமிழ்களாகச் சில கட்டுரை கள் இடம்பெற்றுள்ளன.
இந்த நூல் நிச்சயமாக உயர்வகுப்பு, பல்கலைக் கழக மாணவர்களுக்குப் பயனளிக்குமென நினைக்கிறேன்.
2. ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விரிவான பார்வை (மணிமேகலைப் பிரசுரம் - 2009)
இந்த 160 பக்கங்களைக் கொண்ட நூலிலே 25 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவை பத்தி எழுத்து வடிவில் இடம்பெற் றுள்ள நூல் நயங்களாகும்.
எட்டுப் பக்கங்களில் திறனாய்வு தொடர் பான சில விளக்கங்கள் இடம்பெறுகின்றன. அழகியல் ஒரு விளக்கம், ஈழத்தில் இலக் கியத் திறனாய்வு, நாட்டிய நாடகம் என்றால் என்ன? பொருள்முதல் வாத அடிப்படையில் திறனாய்வு போன்ற கட்டுரைகள், இவை தொடர்பான எனது பார்வையை விளக்கு
66.
இவை தவிர, அந.கந்தசாமி, ஏ.ஜே.கன கரத்னா, ஏ.இக்பால், கோகிலா மகேந்திரன், கனக சபாபதி, நாகேஸ்வரன், துரை மனோ கரன், எஸ்.முத்துமீரான், மாவை வரோத யன், கந்தையா சண்முகலிங்கம், மு.பொன் னம்பலம், நா.சுப்பிரமணிய ஐயர், நாச்சியா தீவு பர்வீன், நீர்வை பொன்னையன்,
மல்லிகை ஆகஸ்ட் 2011 & 22

மல்லிகாதேவி நாராயணன், தங்கம்மா அப்பாக்குட்டி ஆகியோரின் நூல்களையும், பங்களிப்புகளையும் மனதிற்கொண்டு அவர் கள் மீதான என் பார்வையைச் செலுத்தி யிருக்கிறேன்.
கொழுந்து, பண்பாடு, கோபுரம் போன்ற ஏடுகளின் குறிப்புகள், அமெரிக்காவில் பகுதி நேர ஆங்கில ஆசிரியனாக (2002-2004) நான் பெற்ற அனுபவங்கள் சிலவும் சுவாரஸ்ய மான தகவல்களைத் தருகின்றன.
03. அடுத்த நூல் ‘ஒரு திறனாய்வாளரின் இலக்கியப் பார்வை’ (மணிமேகலைப்
gab - 2008)
இருபத்தொன்பது கட்டுரைகள் அடங் கிய இந்நூல் 272 பக்கங்களைக் கொண்டது.
ஈழத்துத் தமிழ்த் திறனாய்வின் முன் னோடி சுவாமி விபுவானந்தரே என்பதை ஆதாரங்களுடன் காட்டும் ஆய்வுக் கட்டுரை யும், புனைகதையாளராகச் சுப்பிரமணிய பாரதியை நோக்கும் திறனாய்வும், மெளனி யின் 'அழியாச் சுடர்’ என்ற கதையின் பகுப் பாய்வும், சுந்தரராமசாமியின் ‘புளியமரத்தின் கதை பற்றிய இரசனைக் கட்டுரையும், இலங்கையர்கோன், இளங்கீரன், செ.கணேச லிங்கன், எஸ்.பொன்னுத்துரை, அ.ஸ்.அப் துஸ் ஸ்மது, தெணியான், காவலூர் ராச துரை, நீர்வை பொன்னையன், வ.அ.இராச ரத்தினம், டொமினிக் ஜீவா, வரதர் போன்றோ ரின் நூல்கள் பற்றிய திறனாய்வுகளும் இந் நூலில் இடம்பெற்றுள்ளன.
இவை தவிர திறனாய்வு தொடர்பான சில கட்டுரைகளும், க.கைலாசபதி, தொல் காப்பியர், சிதம்பர ரகுநாதன், மெளனகுரு, சித்திரலேகா, நுஃமான் ஆகியோர் எழுதிய
நூல்கள் பற்றிய திறனாய்வுக் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.
04. சொன்னாற் போல 03 (மணிமேகலைப் Sgab - 2008)
இந்த நூல் ‘சொன்னாற் போல’ வரிசையில் மூன்றாவது நூலாகும். இதில் 284 பக்கங்கள் உள்ளன. இலக்கியச் செல் நெறிகள், ஈழத்துக் கவிதை, இந்து சமயம், புனைகதை, ஊடகம், இந்தியா, சினிமா, குறு மதிப்புரைகள் ஆகிய தலைப்புகளில் 54 மதிப்புரைகள் இடம்பெற்றுள்ளன.
gsui sit (36T Post-Modernizam, பின் நவீனத்துவம் தொடர்பாகச் சபா ஜெய ராசா எழுதியுள்ள நூல், செ.கணேசலிங் கனின் நவீனத்துவமும், தமிழும், அழகியலும் அறமும், வை. சச்சிதானந்தன் எழுதிய மேலை இலக்கியச் சொல்லகராதி, கார்த்தி கேசு சிவத்தம்பி, சி.மெளனகுரு, மானா மக் கீன், தம்பு சிவசுப்பிரமணியம், பி.எம்.புண்ணி யாமின், 20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஈழத் துத் தமிழ்ப் புலவர் வரலாறு - முதலாம் பாகம், ஜின்னாவுற் வடிரிபுத்தீன், கிண்ணியா ஏ.எம்.எம்.அலி, முல்லை முஸ்ரிபா, டீன்கழர், ழுநீஸ்கந்தராஜா மனோஹரி, சடகோபன் போன்றவர்கள் நூல்கள் பற்றிய திறனாய்வு கள் அடங்கியுள்ளன.
டொமினிக் ஜீவா, விக்ரம், கம்பன் விழா, நீர்வை பொன்னையனின் ஆய்வரங்கு, இந்து சமயம் தொடர்பான கட்டுரைகள், ச.முருகானந்தன், எஸ்.உதயச்செல்வன், புலோலியூர் ஆ.இரத்தினவேலோன், பவானி சிவகுமாரன், பத்மா சோமகாந்தன், வீ.ஏ.சிவ ஞானம், பொ.சண்முகநாதன் போன்றோரின் நூல்கள் பற்றிய மதிப்புரைகளும் மேலும் இடம்பெற்றுள்ளன.
ମୁଁ,
மல்லிகை ஆகஸ்ட் 2011 & 23

Page 14
இளைய பரம்பரையினருக்கான சில se(36JITs6060Tsassit, Bridging Connection என்ற ஆங்கில நூலில் இடம்பெற்ற ஈழத்துத் தமிழ் சிறுகதைகளின் ஆங்கில மொழியாக் கம் பற்றிய இரசனைக் குறிப்புகள் இடம்பெற் றுள்ளன.
பின்வருபவர்களின் கதைகளை நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொடுத் தேன். வரதர் (கற்பு), க.சட்டநாதன் (திருப்தி), என்.எஸ்.எம்.ராமையா (மலைகளிடையே), செ.யோகநாதன் (ஆயிரம் பாதைகள்), தாமரைச் செல்வி (எங்கும், எந்நேரமும் நடக்க லாம்), ஐ.சாந்தன் (நன்றிகள்), எஸ்.ரஞ்ச குமார் (மோகவாசல்).
ரஜீவ விஜேசிங்க ஈழத்துத் தமிழ்ச் சிறு கதைகளை மொழியாக்கம் செய்து தரும்படி என்னிடம் வேண்டிய பொழுது, 10 கதை களை மொழிபெயர்த்துக் கொடுத்தேன். இவற் றுள் மூன்று கதைகளை ரஜீவ விஜேசிங்க ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த இடத்தில் இன்னொரு தகவலை யும் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். முன்னரும் A Lankan Mosaic என்றொரு நூலில் ராஜழுநீகாந்தன், சுதாராஜ் ஆகியோரின் கதைகள் ஆங்கிலத் தில் இடம்பெற்றுள்ளன. அவற்றை ஆங்கில மாக்கித் தந்ததும் நான்தான். இந்த விபரங் கள் சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களுக்கும் தெரியுமோ தெரியாது.
எனது சொன்னாற் போல - 03 என்ற நூலிலே இடம்பெற்றுள்ள ஏனைய கட்டுரை களும் வாசகர்களுக்குத் தகவல்களையும், மதிப்புரைக் கட்டுரைகளையும் தரவல்லன. என்.ழுநீரஞ்சன், தெ. மதுசூதனன், க.சண்முகலிங்கம் ஆகியோரின் நூல்களில் மதிப்புரைகள் வேறு சில. எனது இந்தியப்
பயணக் கட்டுரைகள், சினிமா பற்றிய கட்டுரைகள் இன்னுஞ் சில அம்சங்களாகும். மேலும் குறுமதிப்புரைகள் என்ற தலைப் பிலே இரா. சடகோபன், வீ.ஏ.திருஞான சுந்தரம், நீர்வை பொன்னையன், சா.இ.கமல நாதன், கமலா கமலநாதன், எஸ்.ஆர்.தன பாலசிங்கம், ரகுமான்-ஏ.ஜமீல், எஸ்.புஸ் பானந்தன், த.ஜெயசீலன், சக்திபால-ஐயா, வேல் அமுதன், எஸ்.சிவதாஸ், ஜெயவீரன், ஜெயராசா, செ.யோகராசா, ருரீ.எல்.ஆதம் பாவா, ப.பன்னீர்செல்வம், எஸ்.மோஸேஸ் நூல்கள் தொடர்பான கணிப்புகள் தரப்பட் டுள்ளன.
இந்தப் பதிவுகள் எமது வாசகர்கள், எழுத்தாளர்கள் கவனத்திற்குக் கொண்டு வரப்பட வேண்டுமென விரும்பியதாலும், இந் நூல்களைப் படிக்கும்படி வாசகர்களை வினயமாகக் கேட்டுக்கொள்ளவும் இதனைத் தந்துள்ளேன்.
மல்லிகை ஆகஸ்ட் 2011 奉 24
 

சுதந்திரம்
- உ. நிசார் -
மனித கரங்களைப் போலக் குளிரின் குரூரம் அச்சுறுத்த, தமது உள்ளார்ந்த நினைவுகளால்
உந்தப்பட்டு, பழைய பதிவுகளைப் பார்த்துணர்ந்து, சரணாலயங்களை நோக்கி கூட்டம் கூட்டமாகப் பறந்து வருகின்றன பறவைகள். அன்று. அணியணியாய் குடிபெயர்ந்து வந்த எமது மக்களைப் போல.
பயணக் களைப்பும் பசி, தாகமும் தீரச் சில காலம் உண்டு. சுகித்து. களித்து சந்ததிகளையும் பெருக்கிக் கொண்டு, சந்தோசம் நிறைய அவற்றுடன் மீண்டும். தமது பூர்வீகப் பூமியில்
பதிவுகளைப் புதுப்பித்துக் கொள்ள பறந்து செல்கின்றன அந்தப் பறவைகள் சுதந்திரமாக இன்று. குடியமரச் செல்லும் எமது மக்களைப் போலன்றி.
இவற்கைபுரம் மனிதனும்
காற்றை மண்ணை நீரை நெருப்பை உண்டு பருகிச் சுவைத்து, உருவாகிய உடலுக்கு ஆகாயம் நிழல் தர ஆசை வளர்கிறது மரமாக காதல் விரிகிறது மலராக காமம் எரிகிறது நெருப்பாக அன்பு ஊறுகிறது சுனையாக கற்பனை விரிகிறது கடலாகக் கருணை பொழிகிறது நிலவாக கோபம் வருகிறது சூரியனாக விரக்தி வெடிக்கிறது பூகம்பமாக இவையெல்லாம் போதாதா? மனிதனுக்குள் இயற்கையும் இயற்கைக்குள் மனிதனும் இரண்டறக் கலந்திருப்பதை எடுத்துக் சொல்ல.
மல்லிகை ஆகஸ்ட் 2011 率 25

Page 15
மறைத்து வைத்தும்
4. (p (3a5. கொன்கு மரங்களை ஆட்சி செய்தது
அன்று. தமது oned. நீண்ட நெடிய கிளைகளை இன்று. மரம். வனம் ஆட்டி அசைத்து இரண்டையும் நீட்டி நிமிர்த்தி மனிதன் ஆட்சி செய்ய வனத்தில் ஆட்சி செய்தன வனத்துக்கு உள்ளே மரங்கள். இதமாக அருள் பாலித்த சில மரங்களை இயற்கையன்னை
உயர்த்தி வைத்தும் வனத்துக்கு வெளியே அலைகிறாள் சில மரங்களை
/
கோபம் கொண்டு.
மல்லிகை ஆண்டுச் சந்தாதாரராகச் சேருபவர்கள் கவனத்திற்கு.
ஆண்டுச் சந்தா 600/- தனிப்பிரதி 40/-
ஆண்டு மலர் 200/-
ஒராண்டுச் சந்தாவுக்குக் குறைந்தது ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. வங்கித் தொடர்புகளுக்கு: Dominic Jeeva 072010004231 - Hatton National Bank. Sea Street, Colombo - 11.
காசோலை அனுப்புபவர்கள் Dominic Jeeva எனக் குறிப்பிடவும். காசோலை அனுப்பு வோர் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, Dominie Jeeva என எழுதுவோர் இந்தப் பெயருக்கு முன்னாலோ பின்னாலோ வேறெதுவும் கண்டிப்பாக எழுதக் கூடாது. sTsiš8LL66T espLU6usrssit Dominic Jeeva. Kotahena, P.O. 6T60Tš (sallisl-G அனுப்பவும்.
தனித்தனி இதழ்களைப் பெற விரும்புவோர் 5, பத்து ரூபாத் தபாற் தலைகளையனுப்பியும் பெற்றுக் கொள்ளலாம்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 201/4, முறி கதிரேசன் வீதி, கொழும்பு 13. தொலைபேசி : 2320721 ノ
மல்லிகை ஆகஸ்ட் 2011 率 26
 

பேராசிரியர் சிவத்தம்பி
ஒரு பல்துறைப் புலமையாளன்
- எம்.ஏ.நுஃமான்
பேராசிரியர் சிவத்தம்பியோடு எனக்கு முப்பது ஆண்டுகளுக்கு மேலான பழக்கம். பன்னிரண்டு ஆண்டுகள் அவருடன் யாழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியிருக்கிறேன். அதன் பிறகும் நேரிலும் தொலைபேசியிலும் அடிக்கடி தொடர்பு கொண்டிருக்கிறேன். அவரது மரணச் செய்தியை நண்பர் குமரன் தெரிவித்தபோது ஒருகணம் நான் உறைந்து போனேன். அவர் சுகவீனமாய் இருக்கிறார் என்பது தெரியும், இன்னும் நீண்ட காலம் அவர் வாழ முடியாது என்பதும் தெரியும். எனினும், இவ்வளவு விரைவில், சடுதியாக அவர் மறைந்து விடுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
கடந்த மாதம் 18ஆம் திகதி அவரது எண்பதாவது பிறந்த நாளை ஒட்டி அவரது ஊரவர்கள், அவரது பள்ளித் தோழர்கள், கரவை விக்னேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர்கள் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் ஒரு விழா எடுத்தார்கள். ‘கரவை விக்னேஸ்வரா வழி வந்த ஒரு தமிழ் அறுவடை' என்ற பெயரில் பேராசிரியர் பற்றி ஒரு நூல் வெளியிட்டார்கள். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு நான் பேச வேண்டும் எனப் பேராசிரியர் பெரிதும் விரும்பினார். இரண்டு மாதங்களுக்கு முன்னரே தொலைபேசியில் தொடர்பு கொண்டு நீ கட்டாயம் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பின்னர் இடைக்கிடை நினைவூட்டினார். அது நட்புரிமையுடனான அவரது வேண்டுகோள். கூட்டத்துக்குச் சில நாட்களுக்கு முன் அவர் முதுகு வலி காரணமாக படுக்கையிலிருக்கிறார் என்று கேள்விப்பட்டு, தொலைபேசியில் தொடர்பு கொண்டு
மல்லிகை ஆகஸ்ட் 2011 率 27

Page 16
நலம் விசாரித்தேன். “நீங்கள் சுகவீனமாய் இருக்கிறீர்களே கூட்டம் ஒத்தி வைக்கப் LJGLDT?”
நடக்கும், நீ கட்டாயம் வா’
என்று கேட்டேன். “கூட்டம்
என்பது தான் அவரது பதில்.
கூட்டத்துக்கு அவரால் வரமுடியாது என்பதை அறிந்து, கூட்டம் தொடங்கமுன் அவரது வீட்டுக்குச் சென்று சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன். கட்டிலை விட்டு எழும்பி இருக்க முடியாது என்பதைத் தவிர அவர் வழக்கமான சிவத்தம்பி யாகவே என்னுடன் பேசினார். அவரது குரல், நினைவாற்றல், சிந்தனைத் தெளிவு என்பன வழக்கம் போலவே இருந்தன. அவரது முதுகு வலி தற்காலிகமானது, விரைவில் கட்டிலில் எழும்பி உட்கார்வார் என்ற எதிர்பார்ப்புடனேயே நான் கூட்டத் துக்குச் சென்றேன். அன்றையக் கூட்டம் சிறப்பாகவே நடைபெற்றது. சிவத்தம்பி யால் அங்கு வரமுடியாது போயினும், அவரது குடும்பத்தினர் மூன்று பெண் மக்களும் -
மனைவியும்
அங்கு சமூக மளித்திருந்தனர். பேராசிரியர் பற்றிய எனது கருத்தை சுருக்கமாகச் சுமார் இருபது நிமிடம் பேசியிருப்பேன். இரவே கண்டிக்குத் திரும்ப வேண்டி இருந்ததால் கூட்டம் முடியமுன் நான் புறப்பட்டு விட்டேன். அதன் பிறகு அவரைச் சந்திக்
கும் வாய்ப்பு இருக்கவில்லை. தொலை
பேசியில் பேச நினைத்தும் முடிய வில்லை. ஆறாம் திகதி காலை வேறு ஒரு விடயமாகப் பேராசிரியர் கனகரத் தினம் என்னுடன் தொடர்புகொண்டபோது பேராசிரியர் சிவத்தம்பியுடன் பேசுமாறு நான் அவருக்கு ஆலோசனை கூறினேன். அன்று பகலே தான் அவருடன் தொலை பேசியில் பேசியதாக அவர் தெரிவித் தார். ஆனால் அன்று இரவு எட்டரை மணிக்கு பேராசிரியர் காலமானதாகக் குமரன் தெரிவித்தபோது அது பேரதிர்ச்சி யாகவே இருந்தது.
மறைந்த பேராசிரியர் நண்பர் சோ.கிருஷ்ணராஜாவுக்கு எழுதிய அஞ்சலிக் குறிப்பு ஒன்றில் பேராசிரியர் சிவத்தம்பி பின்வருமாறு குறிப்பிட்டிருக் கிறார். “நான் இல்லாத பொழுது யார் யாரெல்லாம் என்னைப்பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேனோ, விரும்பி னேனோ அவர்கள் என்னை முந்திவிடு கிறார்கள், நான் தனிமைப்படுகிறேன்.” இப்பொழுது அவரது தனிமை முடிந்து விட்டது. அவரைச் சார்ந்தவர்கள்
தனிமைப்பட்டு விட்டார்கள்.
கடந்த சுமார் அரை நூற்றாண்டுக்கு மேலாக தமிழ் இலக்கிய உலகிலும், தமிழ்ப் புலமைத்துறையிலும் மிகப் பெரிய
மல்லிகை ஆகஸ்ட் 2011 & 28

ஆளுமைகளுள் ஒருவராகச் செயற்பட்டு வந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி. மறைந்த பேராசிரியர்கள் வையாபுரிப்பிள்ளை, தெ.பொ.மீனாட்சிசுந்தரம், வ.ஐ.சுப்பிர மணியம் போன்றவர்களின் பின்னர், வேறு ஒரு வகையில் உலகளாவிய நிலையில் தமிழியல்துறையில் பலரதும் கவனத்தை ஈர்த்த இரு தமிழ்ப் பேராசிரியர்கள் இலங் கையைச் சேர்ந்தவர்கள். ஒருவர் கைலா சபதி, மற்றவர் சிவத்தம்பி. கைலாசபதி தனது 49ஆவது வயதில் காலமானார். அவரை விட முப்பது ஆண்டுகள் அதிகம் வாழ்ந்து, சிக்கலான சமூக அரசியல் சூழலில் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் உயிர்ப்புடன் செயற்பட்டவர் பேராசிரியர் சிவத்தம்பி. 19ஆம் நூற்றாண் டில் ஆறுமுகநாவலர், சி.வை.தாமோதரம் பிள்ளை ஆகியோரைப் போல் 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இலங் கையைத் தாண்டி தமிழகத்திலும் ஆழ மான செல்வாக்குச் செலுத்தியவர்கள் பேராசிரியர்கள் கைலாசபதியும் சிவத் தம்பியுமே என்பது மிகையான கூற்று
அல்ல.
பேராசிரியர் சிவத்தம்பி 1932 மே மாதம் 10ஆம் திகதி கரவெட்டியில் பிறந் தார். இவரது தகப்பனார் பண்டிதர், சைவப் புலவர் கார்த்கேசு, ஒரு தமிழாசிரி
யர். தாயார் வள்ளியம்மை. சிவத்தம்பி
யின் ஆரம்ப, இடைநிலைக் கல்வி கர வெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியில் நிகழ்ந்தது. உயர் இடைநிலை அல்லது பல்கலைக்கழகப் புகுமுகக் கல்வியை அவர் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் பெற்றார். அப்போது கல்லூரி அதிபராக இருந்தவர் அறிஞர் ஏ.எம்.ஏ.அஸிஸ். “விக்னேஸ்வரா வளர்த்து விட்டது, ஸாஹிராவிலேயே நான் என்னை அடை யாளம் கண்டுகொண்டேன்’ எனத் தன் இளமைக் காலம் பற்றிச் சிவத்தம்பி அண்மையில் குறிப்பிட்டுள்ளார்.
ஸாஹிராவிலிருந்து 1954ல் தன் பட்டக் கல்விக்காக அவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் (இப்போதைய பேராதனைப் பல்கலைக்கழகம்) சேர்ந் தார். ஏனைய தமிழ்ப் பேராசிரியர் களைப் போல் தமிழை ஒரு சிறப்புப் பாடமாகப் பயின்றவர் அல்ல சிவத் தம்பி. பதிலாக, வரலாறு, பொருளியல், தமிழ் ஆகிய மூன்று பாடங்களைக் கற்று ஒரு பொதுப் பட்டதாரியாக 1956ல் வெளியேறினார். 1963ல் தமி ழில் எம்.ஏ. பட்டம் பெற்றார். 1970ல் பேர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஜோர்ஜ் தொம்ஸனின் வழி காட்டுதலில் ‘பண்டைத் தமிழ்ச் சமூகத் தில் நாடகம்' என்னும் பொருள் பற்றி ஆராய்ந்து கலாநிதிப் பட்டம் பெற்றார்.
மல்லிகை ஆகஸ்ட் 2011 & 29

Page 17
தான் கற்ற கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் ஒரு ஆசிரியராகவே 1956ல் அவர் தன் கல்விப் பணியைத் தொடங்கினார். வரலாறு, தமிழ் ஆகிய பாடங்களை அவர் அங்கு கற்பித்தார். இன்று இலங்கையில் பிரபல கல்வி யாளர்களாகவும் ஓய்வு பெற்ற அரச அதிகாரிகளாகவும் விளங்கும் பலர் அக்காலத்தில் சிவத்தம்பியிடம் கற்ற வர்களே. சிவத்தம்பி ஸாஹிராவில் கற்ற, கற்பித்த காலமே இஸ்லாம் பற்றியும் இலங்கை முஸ்லிம்களின் பண்பாடு, அரசில் பற்றியும் அவருக்கு இருந்த ஆழமான புரிதலுக்கு அடித் தளமாக அமைந்தது எனலாம். 1961ல் அவர் ஸாஹிராவில் இருந்து விலகி, இலங்கைப் பாராளுமன்றத்தில் சமகால மொழிபெயர்ப்பாளராக இணைந்தார். அவர் அங்கு பணியாற்றிய சுமார் ஐந் தாண்டு காலம் மொழிபெயர்ப்புத் துறை யில், கலைச்சொல் ஆக்கத்தில் அவ ரது அனுபவமும் ஆற்றலும் வளர்வ தற்கு துணையாக அமைந்தது.
பல்கலைக்கழக ஆசிரியராக அவ ரது பணி 1965ல் வித்தியோதய பல் கலைக்கழகத்தில் (இப்போதைய ymŷ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம்) விரி வுரையாளராக இணைந்ததுடன் ஆரம் பித்தது. இப்பல்கலைக்கழகம் மிகப்
பெரும்பாலும் சிங்கள மாணவர்களையும் ஆசிரியர்களையும் கொண்டது. முற்றி லும் பெளத்த பின்னணியில் உருவா கியது. இங்கு அவர் சிங்கள மாணவர்களுக்குத் தமிழ் கற் பித்தார். அக்காலத்தில் ஒரு இடதுசாரி யாக வளர்ச்சி பெற்றிருந்த சிவத்தம்பி
13 ஆண்டுகள்
சிங்கள சமூகத்தையும் அதன் அரசியல் அபிலாசைகளையும் இடதுசாரி நோக் கில் புரிந்துகொள்வதற்கும், தேசிய ஒருமைப்பாடு பற்றிச் சிந்திப்பதற்கும், சிங்கள மொழியைக் கற்றுக்கொள் வதற்கும் இக்காலகட்டம் அவருக்கு உதவியது எனலாம். இப்பல்கலைக் கழகத்திலேயே 1976ல் இணைப் பேரா சிரியராக அவர் பதவி உயர்ச்சி பெற் றார். இங்கு பணியாற்றிய காலத்தி லேயே விடுப்பில் இங்கிலாந்து சென்று தன் கலாநிதிப் பட்டக் கல்வியையும் பூர்த்தி செய்தார். விட்டு நீண்டகாலம் வெளியிலேயே 19786ů uUTypů
யாழ்ப்பாணத்தை
வாழ்ந்த சிவத்தம்பி பாணப் பல்கலைக்கழகத்தில் பணி யாற்ற வந்தார். 1996ல் ஒரு சிரேஷ்ட பேராசிரியராக தன் பணியிலிருந்து ஓய்வு பெறும் வரை அவர் அங்கேயே பணியாற்றினார். சிலகாலம் தமிழ்த் துறைத் தலைவராகவும் சிலகாலம்
நுண்கலைத்துறைத் தலைவராகவும்
மல்லிகை ஆகஸ்ட் 2011 辜 30

அவர் அங்கு பணிபுரிந்திருக்கிறார். அவ ரது பணி ஓய்வின்பின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அவரது தகுதியை யும் சேவையையும் கெளரவித்து தகை சார் ஓய்வுநிலைப் பேராசிரியராக (Professor of Emeritus (3d E60)6)5. சொல் அவரே உருவாக்கியது)) அவரை நியமித்தது. பணியிலிருந்து ஒய்வுபெற்ற பிறகு தானும் ஒரு புலம் பெயர்ந்தவராக மரணிக்கும் வரை அவர் கொழும்பிலேயே வாழ்ந்து வந்தார்.
தன் பல்கலைக்கழகப் பணிக் காலத்திலும், ஒய்வு பெற்ற பிறகும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல் வேறு பல்கலைக்கழகங்களில் அவர் வருகைதரு பேராசிரியராகவும், முது நிலை ஆய்வாளராகவும் பணியாற்றி யிருக்கிறார். இலங்கைக் கிழக்குப் பல் கலைக்கழகம், தஞ்சாவூர் தமிழ்ப் பல் கலைக்கழகம், சென்னைப் பல்கலைக் கழகம், கலி'போர்னியா பேர்கலி பல் கலைக்கழகம், இங்கிலாந்து கேம்பிறிஜ் பல்கலைக்கழகம், நோர்வே ஒஸ்லோ பல்கலைக்கழகம், சுவீடன் உப்சலா பல்கலைக்கழகம் என்பன இவற்றுட்
U.
3
1950களில் இலங்கையில் முற் போக்கு இலக்கிய இயக்கத்தைக் கட்டி எழுப்பியவர்களுள் சிவத்தம்பியும் ஒருவர். ஒரு முற்போக்கு இலக்கிய விமர்சகராக வும், இயக்கவாதியாகவும் 1950, 60களில் அவர் பரவலாக அறியப்பட்டார். தேசிய இலக்கியம், மண்வாசனை இலக்கியம், இலக்கியத்தில் மரபுவாதம் என்பன பற்றி அக்காலத்தில் எழுந்த இலக்கிய சர்ச்சை களிலும் விவதங்களிலும் அவரது பங் களிப்பு குறிப்பிடத்தக்கது. ‘இலக்கியத் தில் முற்போக்குவாதம் பற்றிய அவரது சிறு நூல் இப்பின்னணியில் எழுந்ததே. தமிழ் இலக்கிய உலகில் இன்றும் அவர் மார்க்சிய சார்புடைய இலக்கிய விமர்ச கராகவே அடையாளம் காணப்படுகிறார். எனினும் அவரது அடையாளம் ஒரு இலக்கிய விமர்சகர் என்பதற்குள் மட்டுப் படுத்தக் கூடிய ஒன்றல்ல.
மார்க்சிய சிந்தனையில் அவருக்கு இருந்த ஈடுபாடு பிற்காலத்தில் பல்துறை ஆய்வாளராக அவர் வளர்ச்சியடைவ தற்கு அடிப்படையாக அமைந்தது. இலக் கியம், பண்பாடு, சமூகம், அரசியல், வர லாறு என்பவற்றுக்கிடையே உள்ள தொடர்புகளையும் ஊடாட்டத்தையும்
அவர் தன் ஆய்வுகளில் விளக்க முயன்
மல்லிகை ஆகஸ்ட் 2011 & 31

Page 18
றார். சமுகவியல் வரலாற்றுப் பார்வை அவரது ஆய்வுகளின் அடிச்சரடாக உள் ளது. இந்தவகையில் தமிழியல் துறை யின் செழுமைக்குப் பேராசிரியர் சிவத் தம்பியின் பங்களிப்பு முக்கியமானது.
பெரும்பாலான மரபுவழித் தமிழறிஞர் களும் ஆய்வாளர்களும் தமிழையும, தமிழ் இலக்கியம், பண்பாடு ஆகியவற் றையும் தமிழ்த் தேசியக் கருத்துநிலைக் குள் இருந்தே பார்த்தனர். அவர்களது ஆய்வுகள் உள்முகப்பட்டதாக தமிழ்ப் பழமை, தமிழ்ப் பெருமை ஆகியவற்றைத் தேடுவதையே நோக்கமாகக் கொண்டிருந் தன. வையாபுரிப்பிள்ளையும், தெ.பொ. மீனாட்சிசுந்தரம், வ.ஐ.சுப்பிரமணியம் போன்ற மொழியிலாளர்களுமே தமிழியல் ஆய்வில் அறிவியல் பார்வையை முதல் முதல் பிரயோகித்தவர்கள் எனலாம். இவர் களைத் தொடர்ந்தே மார்க்சியத் தமிழறி ஞர்கள் தமிழியலாய்வை வேறு ஒரு கட் டத்துக்கு வளர்த்தொடுக்க முயன்றனர்.
கைலாசபதியும் சிவத்தம்பியும் அவர்,
களுள் மிக முக்கியமானவர்கள். சமூக, அரசியல், வரலாற்றுப் பின்புலத்தில் இவர் கள் தமிழியல் ஆய்வை முன்னெடுத்தனர். இவர்களது ஆய்வு முடிவுகள் சிலது பற்றி விமர்சனங்கள் இருப்பினும், இவர்களது ஆய்வுப் பார்வையின் முக்கியத்துவத்தை யாரும் நிராகரிக்க முடியாது.
இப்பின்னணியிலேயே பேராசிரியர் சிவத்தம்பியின் சங்க இலக்கிய ஆய்வு களை நாம் நோக்க வேண்டும். இவரது ஆய்வுகள் இலக்கிய ஆய்வுகளாக மட்டு மன்றிச் சமூகவியல் ஆய்வுகளாகவும் அமையக் காணலாம். இலக்கியத்தின் ஊடாகச் சமூகத்தை அல்லது சமூகத் தின் ஊடாக இலக்கியத்தை அவர் பார்க் கிறார். 'முல்லை சான்ற கற்பு’ என்பது இவ்வகையில் அவரது முக்கியமான
ஒன்று. பண்டைத் தமிழ்ச் சமூகம் பற்றிய ஆய்வு கள் என்னும் தலைப்பிலான இவரது
systisoo BJT6b (Studies in Ancient Tamil
ஆரம்பகாலக் கட்டுரைகளுள்
Society) இத்தகைய கட்டுரைகள் பல வற்றைக் கொண்டது. சங்க இலக்கியம்: கவிதையும் கருத்தும், சங்ககால வர லாறும் தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுகளும், பண்டைத் தமிழ்ச் சமூகம் வரலாற்றுப் புரிதலை நோக்கி, பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் நாடகம் முதலிய சிவத்தம்பி யின் நூல்கள் இவ்வகையில் மிக முக்கிய மானவை. சிவத்தம்பியை ஒரு இலக்கிய விமர்சகர் என்பதற்கு அப்பால் கொண்டு செல்பவை. சமூகவியல், வரலாற்றுப் பார் வையில் தமிழ்ப் பண்பாட்டை விளக்க முயன்ற ஒரு பண்பாட்டு ஆய்வாளராக, ஒரு இலக்கிப் புலமையாளராக அவரைக்
காட்டுபவை.
மல்லிகை ஆகஸ்ட் 2011 * 32

மிகப் பெரும்பாலான தமிழ்ப் பேரா சிரியர்கள் இரண்டொரு தமிழியல் துறை களிலேயே புலமை பெற்றிருக்கின்றனர். மிகச் சிலரே இதிலிருந்து வேறுபடுகின் றனர். மார்க்சிய ஆய்வாளர்கள் இதில் பிரதானமானவர்கள். இவ்வகையில் சிவத் தம்பியின் பார்வை தமிழியலின் (p(L960)LD யையும் உள்ளடக்கியது எனலாம். சங்க இலக்கியத்திலிருந்து தற்கால இலக்கியம் திராவிட இயக்கத்திலிருந்து தமிழ்ச் சினிமா வரை, சைவ சித்தாந்தத்
வரை,
திலிருந்து பின்நவீனத்துவம் வரை, நாட கத்திலிருந்து நாட்டாரியல் வரை, இனத் துவ அரசியலிலிருந்து இன நல்லுறுவு வரை அவரது ஆய்வுப் பரப்பு விரிந்து செல்கிறது. 1950களிலிருந்து இன்று வரை இத்துறைகள் சார்ந்து அவர் எழுதியவை ஏராளம். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக இதுவரை ஐம்பதுக்கு அதிகமான நூல் கள் எழுதியுள்ளார். அவரது ஏராளமான கட்டுரைகள் இன்னும் நூல் வடிவம் பெற வேண்டியுள்ளன.
கடந்த சுமார் 45 ஆண்டுகால அவ ரது பல்கலைக்கழகச் சேவையில் அவர் ஏராளமான மாணவர்களை உருவாக்கி யிருக்கிறார். தன் கல்விச் சேவைக்காக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அவர் அதிகம் பாராட்டிக் கெளரவிக்கப்பட்டிருக்
கிறார். அதே அளவு தனக்கு எதிரான
விமர்சனங்களுக்கும் அவர் ஆளாகியிருக் கிறார். விமர்சனத்துக்கு ஆளாகாமல் பொதுவாழ்வில் ஈடுபட்ட ஒரு மனிதரை நாம் உலகத்தில் காண்பது அபூர்வம். அவருடைய பங்களிப்பு எவ்வளவு தூரம் பயனுடையது என்பதைக் கொண்டே நாம் அவரை மதிப்பிட வேண்டும்.
சிவத்தம்பி பற்றிய விமர்சனங்கள் LJ 606 605 i UL L606). UGb LDL LF 5 அவற்றை மூன்று வகைப்பாட்டுக்குள் அடக்கி விடலாம். முதலாவது, தனியாள் É60D6DÜLJÜL60D6J (personal). BLĖ, 5 அரை நூற்றாண்டுக்கு மேலாக கைலாச பதி, சிவத்தம்பி இருவரையும் பற்றி எஸ்.பொன்னுத்துரை வெளியிட்டு வரும் கருத்துக்கள் இத்தகையவைதான். நான் அறிந்தவரை இவர்களுடைய எழுத்துக் கள், பங்களிப்புகள் பற்றி பொன்னுத்துரை முழுமையாக ஒரு கட்டுரைதானும் எழுதி யவரல்ல. அவர் எழுதியவை எல்லாம் தனிப்பட்ட தாக்குதல்கள்தான். கைலாச பதி, சிவத்தம்பி இருவரும் மெளனமாகப் புறக்கணித்தார்கள். ஆனால்
இவரை
இவரோ, அதற்குப் பதிலடியாக அவர்கள் மீது மூர்க்கமான வன்முறைத் தாக்கு தல்களை எழுத்து மூலம் தொடர்ச்சி யாகச் சலிப்பின்றிச் செய்துவந்திருக்கின் றார். அதன் மூலம் தன்னை ஒரு தூய இலக்கிய ஆளுமையாகக் காட்ட முயன்
மல்லிகை ஆகஸ்ட் 2011 தீ 33

Page 19
றிருக்கிறார். பொன்னுத்துரையை நெருக்க மாக அறிந்தவர்களுக்கு அவர் எப்படித் பற்றி ஒரு புராணத்தைக் கட்டமைத்து வந்திருக்கிறார் என்பது தெரி யும். பொன்னுத்தரையின் கருத்துக்கள்
தன்னைப்
பொருட்படுத்தத் தக்கன அல்ல.
இரண்டாவது வகை விமர்சனம் கோட்பாடு சார்ந்தது. இது மார்க்சியத் துக்கு, இலக்கியத்தில் முற்போக்குவாதத் துக்கு எதிரானது. இவ்வகையில் தளைய சிங்கம் முக்கியமானவர். பொன்னுத்துரை போலவே இவரும் இவர்களுடைய ஆக் கங்கள் பற்றி விரிவாக எதுவும் எழுதா விடினும், மார்க்சியம் ஒரு போதாத தத்து வம் என்ற கண்னோட்டத்தில் இலக்கியத் தில் மார்க்சியத்தைப் பிரயோகித்த இவர் களை விமர்சித்தார். மார்க்சியத்துக்குப் பதிலீடாக மெய்முதல் வாதம் என்ற புதுப் பெயரில் பழைய ஆன்மீக வாதத்தையே இவர் முன்வைத்தார். பொன்னுத்துரைபோல் முற்றிலும் ஒரு அல்ல. தன்
எனினும் இவர்
6J60DEFGbÙ (polemicist) தத்துவக் கண்னோட்டம் பற்றி விரிவான கட்டுரைகளும் விமர்சனங்களும் எழுதி னார். இதன் காரணமாகவே தமிழகத்தில் மார்க்சீய எதிர்ப்பாளர் மத்தியில் இவருக்கு ஒரு ஏற்புடமையும் மதிப்பும் கவர்ச்சியும் ஏற்பட்டது. எனினும் இவருடைய ஆன்மீக வாதம் சிவத்தம்பி முதலியோர் முன்
வைத்த மார்க்சீயத்துக்கு அறிவுபூர்வமான ஒரு மாற்றீடு அல்ல.
சிவத்தம்பியை கோட்பாட்டு அடிப் படையில் சற்று விரிவாக விமர்சித்தவர் பிறிதொரு மார்க்சீய எதிர்ப்பாளரான ஜெயமோகன். சமீபகாலமாக தன்னைப் பற்றிய ஒரு பிரம்மாண்டமான பிம்பத் தைக் கட்டமைத்திருப்பவர் இவர். வானத்தின் கீழ் தன் கைக்கடங்காத தத்துவங்கள் எவையும் இல்லை என்ப தான ஒரு பிம்பம் இது. “கோட்பாட்டின் வலிமையும் வழிச் சுமையும்: கா.சிவத் தம்பியின் இலக்கிய நோக்கு’ என்ற தலைப்பில் இவர் சற்று நீண்ட கட்டுரை ஒன்று எழுதியிருக்கிறார். ‘தமிழ் இலக் கியத்தில் மதமும் மானிடமும்', ‘இலக் கியத்தில் கருத்துநிலை’ ஆகிய சிவத் தம்பியின் இரண்டு நூல்களை மட்டும் அடிப்படையாகக் கொண்ட கட்டுரை இது. வெங்கட் சாமிநாதன், தளைய சிங்கம் பாணியில் “ஒரு இலக்கியக் கோட்பாட்டாளராகச் சிவத்தம்பியின் அடிப்படை நோக்கு மார்க்ஸிய இயந்திர வாதமேயாகும்” என்று மிக எளிதாக அவரால் தீர்ப்புக் கூறிவிட முடிகிறது. சிவத்தம்பி பற்றிய ஒரு நிதானமான மதிப்பீட்டைச் செய்ய முடியாமல் தான் வரித்துக்கொண்ட தூய இலக்கியம் பற்றிய அரூபமான வெளியொதுக்கல்
மல்லிகை ஆகஸ்ட் 2011 * 34

கோட்பாட்டின் வலிமையாலும் வழிச் சுமையாலும் தான் நசுங்குண்டு கிடப் பது பற்றிய பிரக்ஞை ஜெயமோகனிடம் இல்லை என்பது வருத்தத்துக்குரியது.
மூன்றாவது வகையான விமர்சனம் இலங்கையின் இனத்துவ அரசியல் சார்ந்தது. இந்த அடிப்படையில் மிகப் பரவலான விமர்சனத்துக்கு உள்ளாகி யிருப்பவர் சிவத்தம்பி. இதிலும் இரண்டு வகை உண்டு. ஒன்று உடனடியான அரசியல் நிலைப்பாடு பற்றியது. இவர் புலி ஆதரவாளரா? இல்லையா? செம் மொழி மாநாட்டில் கலந்து கொள்ளலாமா இல்லையா? என்பன போன்றவை. இந்த அடிப்படையிலேயே சிவத்தம்பி மிக அதிகமாக விமர்சிக்கப்பட்டிருக்கிறார். இதற்கான தீர்ப்பு ஒருவரின் அரசியல் நிலைப்பாடு சார்ந்தது. சிவத்தம்பியின் தேர்வு எது என்பதும், என்ன அடிப்படை யில் அவர் அத்தேர்வினை மேற்கொண் டார் என்பதும் அவரது சொந்த அரசியல் நிலைப்பாடு சார்ந்தது மட்டுமன்றி, அவரது உடனடி அரசியல் சூழலாலும் தீர்மானிக் கப்படுவது. என்னைப் பொறுத்தவரை இது அவ்வளவு முக்கியமானதல்ல. இதைவிட முக்கியமானது, சிவத்தம்பி ஒரு அரசியல் பிரக்ஞை உடைய ஆய் வறிவாளன் என்ற வகையில் 'கடந்த
முப்பது ஆண்டுகால இனத்துவ அரசியல்
பற்றி, அதன் வரலாறு பற்றி, அதன் பங்காளிகள் பற்றி, அதற் கான அரசியல் தீர்வு பற்றி அவர் என்ன சிந்தித்தார். எதை எழுதினார் என்பது. ஆய்வுகளாக வும் அரசியல் விமர்சனங்களாகவும் இது தொடர்பாக அவர் அதிகம் எழுதியுள்ளார். தமிழ்த் தேசியம் பற்றி அவர் ஆங்கிலத் திலும் தமிழிலும் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் ஏற்கனவே அச்சில் வெளி 6.bg,6f 61637. Northeastern Herald சஞ்சிகையில் அவர் எழுதிய அரசியல் 6îILDja#60Tais abL (B6ODJab6f Being a Tamil and Sri Lankan 6T6ö3 g560)6OÜ usiaid (bsTGơTab வெளிவந்துள்ளன. அதுபோல் தமிழில் தினக்குரல் வார இதழில் அவர் சில காலம் தொடர்ச்சியாகப் புனைபெயரில் அரசியல் விமர்சனங்கள் எழுதி வந்தார். அவை நூலாகத் தொகுக்கப்பட வேண் டும். இவற்றின் ஊடாக வெளிப்படும் அவ ரது சமூக, அரசியல் நிலைப்பாடு பற்றிய திறந்த விவாதங்கள் அவருடைய அரசி யல் பக்கத்தைப் புரிந்துகொள்ள நமக்கு உதவக் கூடும்.
நான் பேராசிரியர் சிவத்தம்பியின் நேரடி மாணவன் அல்ல. எனினும் அவரது எழுத்துக்கள் மூலமும் அவருடன் உரை யாடியதன் மூலமும் அவரிடமிருந்து பல விஷயங்களைக் கற்றிருக்கிறேன். எனக்கு
உடன்பாடில்லாத அவருடைய கருத்
மல்லிகை ஆகஸ்ட் 2011 & 35

Page 20
துக்கள் பற்றி அவருடன் விவாதித்திருக் கிறேன். என்மீது அவருக்கும் மதிப்பும் நம்பிக்கையும் இருந்தது. தனக்குப் பிறகு நுட்மான் தான் என பல சந்தர்ப்பங்களில் அவர் பேசியும் எழுதியும் இருக்கிறார். அதனால் எனக்கு மகிழ்ச்சியோ சங்கடமோ இல்லை. அது அவருடைய கருத்து. ஆனால், அவருடைய அறிவு ஆளுமையில் அரைப் பங்குதானும் என் னிடம் இல்லை என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும்
பேராசிரியர் சிவத்தம்பி தமிழ்ச் சிந்தனை உலகில் நமக்குக் கிடைத்த மிக அரிதான ஆய்வறிவாளர்களுள் ஒருவர். தமிழ் மொழி, இலக்கியம், தமிழர்
பண்பாடு, அரசியல் என்று எத்துறை தொடர்பாகவும் ஆழமான கருத்துக் களைச் சொல்லக்கூடிய, ஆலோசனை சொல்லக்கூடிய ஒருவராகக் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைகளில் இருந்த தமிழ்ப் பேராசிரியர் அவர் ஒருவரே. பல்துறை ஆளுமை மிக்க அவரது மறைவு ஒரு பெரிய இடை வெளியை விட்டுச் சென்றுள்ளது என்பது சிவத்தம்பியைப் பொறுத்தவரை வழக்க
மாகக் கூறப்படும் ஒரு கூற்று அல்ல. அது பிறிதொருவரால்
(UDLQuJTg5g).
நிரப்பப்பட
மல்லிகை ஆகஸ்ட் 2011 & 36
 
 

பிட்டாம்பூச்சியின் பிரத்தில் பர்ரி
- நாச்சியாதீவு பர்வீன்
வெற்றுக் காற்றில் உலாவித்திரியும் வண்ணப் பூச்சி நான்
எல்லையில்லா வெளியெங்கும் பறந்தி திரிந்து அனுபவம் சேர்ந்து வாழ்க்கை நடத்தினேன்.
காற்று வெளி ஊடறுத்து பூக்கள் தோறும் வாசம் மொய்து காதல் கொடிகளில் அமர்ந்து இன்பம் நுகர்ந்து வாழ்க்கை ஒட்டினேன்.
இப்போது அடைக்கப்பட்ட பூமி என் பறத்தலில் இப்போது இன்பம் இல்லை.
சித்திரம் சுமந்த என் சிறகினை இரசிப்பதற்கும் என் பறத்தலின் மீதான உத்தரவாதத்தை நிரூபிப்பதற்கும் காலத்திடமே கையளித்து விட்டேன்.
மல்லிகை ஆகஸ்ட் 2011 தீ 37

Page 21
sẽ girl9ģ3Ilo quo@lio e q9đìgi | 1ņ9úııgıs@rtog spoliitori@-ıııúırı sıhıņGję
quodsi)cuocooooதுெ 1219府副ugi「크나na,田@-ıııúırı sıfıņúję
→- | 090909059~ırıņoņuốfinoqı"TŲılıQJ199đfi)
Ų9& ųTo1998 QQ9QT LIQoq9Ųloung1ņ9ńfnơi sẽσΠισιμι Ιιορ9ί3
qiođĩ)o9o0983(99Įođĩ) @@1(909119&qų99Řog) qi@@ơnqi-Isgillosgãđfi)
@girl9ĝo1009090Ūurig) logo uri-Ų9-ig)osfērog)|| @-ılıúırı sıfıņGūgę
oco0909ơi | 1,933||3||1009ú lạ9Ųnoco9șđìurts199gầqiiosuo@đĩ) usēąjuońsãąjoqi-Isgu Gjię9đfi)
|-----Q9xo9q9|59-IIIIIorguðsinsqITŲııııııąņ9ú@j
oco9sQ9Q9ơiqı@ņāl@j qi@gif@11109 uqĀ9cuo fuoco9uQŪlooe)qi-Isgulosofi)
9ú雷鸣电
/@ugų giặrısubspítī£yılgısąją sīlis
1ļgoliosifī sīļiņĝin ĝustīgo italioq@ıņoț¢ qiț¢010ā [quae] - qrızılto įgūĘugog qțiigig;
மல்லிகை ஆகஸ்ட் 2011 季 38
 

quo uchomoe) ış9únurnoã sẵgjorts
கரு9g9q90q18)-ion [Ŭıņ9@
sắgÍR9ĝoqnoqorņusā
டி90கிழி முற9யப் uqoq9ĪGĀĢIIGIH@odų919-q119
Q9c0909159-Trīņosgiðfirl9
qi-TŲılıQJ1ņ9đfi)
5)I009fרשתטדוq
qı-ıŲılıcı99ăđĩ)
qııırıg)ņ0ūsı įý oog) úg9rņusēsãh qı@ıąogi
Lý oog) úņ9og)ņāl19 quoq9rnrı
ocą999q9onQ919 GICQ910ņ9-ā
199úılgı@flog? spoliitori u9.co9ų95īņ@@đĩ) ởicų9Ųjlo டி9ஐயmg) மீஒெழபொ9கெ
1999ğqÍıo9uo@đĩ) 11@giuosíssãąją
@-ıııúırı sıfıņūtę ர ராயர்டி9ளி) qi-TŲIII~11099 ú@j
qi-Isgillosofi)
c 2011 & 39
ஸ்
ல்லிகை ஆக

Page 22
யார் என்ன சொன்னாலும் எப்படி நினைத்தாலும் நந்திகா பெரும் சிக்கலில் மாட்டியிருக்கிறாள். அது எனக்கு நன்றாகத் தெரியும்.
இந்த சம்பவத்தைத் தெரிந்துகொண்டால் நந்திகா சோரம் போய்விட்ட தாகவே எல்லோரும் சொல்வார்கள். இருந்தாலும் நந்திகா எந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறாள் என்பது எனக்குத் தெரியும். நந்திகா பெரும் சிக்கலில் தான் விழுந்து கிடக்கிறாள்.
சிங்களத்தில் ஜயதிலக கம்மெல்லவீர
către căr
தமிழில் திக்குவல்லை கமால்
கதையைச் சுருக்கமாகச் சொன்னால் நந்திகா மோசமான நடத்தை கொண்ட வள் என்று நீங்களும் சொல்வீர்கள். எந்தவொரு விடயத்தையும் முடிந்தளவுக்கு சுருக்கமாக அறிந்துகொண்டு, உடனடியாகத் தீர்ப்புக் கொடுக்கவே நாங்கள் இப்பொழுது பழகியிருக்கிறோம். யாராவது ஒருவர் பற்றித் தீர்ப்புக் கொடுப் பதில் எங்களுக்குள்ள அவசரம் காரணமாக நாங்கள் எவ்வளவு பிழையான முடிவுகளைச் சொல்கிறோம்? விசேடமாக அடுத்தவர்கள் பற்றி! எங்களைப் பற்றி ஒரு முடிவெடுக்க நேர்ந்தால் நாங்கள் மிகவும் நிதானமாக, அமைதியாக யோசிக்கிறோம். எவ்வாறாயினும் உடனடி முடிவெடுக்க முனைபவர்களுக்காக, நந்திகாவின் கதையை மிகவும் சுருக்கமாக இப்படித்தான் சொல்லலாம்.
நந்திகாவுக்கு வயது முப்பத்திரண்டு. அவள் கல்யாணம் செய்து இப் போதைக்கு ஆறு வருடங்கள். நந்திகாவின் குழந்தைக்கு ஆக இரண்டே வயது. வேலைக்குச் செல்லும் பஸ்ஸில் யாரோ ஒருவனுடன் சிநேகமாகி, நேற்று அவன் தங்கியிருக்கும் அறைக்கே சென்றுவிட்டாள்.?
இனி உடனடியாகவே ஒரு தீர்ப்புச் சொல்வதாயின், 'நந்திகா மிகவும் கெட்ட பெண்.”
'நந்திகா மோகவெறி பிடித்தவள்.” 'நந்திகா ஒரு வேசை. கெட்ட வேசை.”
மல்லிகை ஆகஸ்ட் 2011 率 a)

இதைத் தெரிந்துகொள்பவர்கள் எல் லோருமே இவ்விதமானதொரு முடி வையே சொல்வார்களென்று நந்திகா வுக்குத் தெரியும். ஆனால் உண்மை அது தானா? அவள் பெரும் சிக்கலில் தான் தவிக்கிறாள்.
அந்த மனிதன் நந்திகாவை ஏமாற்றிக் கொண்டானா? நந்திகாவின் கணவனைப் பற்றிப் அவளது மனதைக் குழப்பி பிழையான வழியில் இட்டுச் சென்றானா? அல்லது நந்திகா வைப் பயங்காட்டியோ எச்சரித்தோ பலாத் காரமாகத் தனது அறைக்குக் கூட்டிச் சென்றானா?
பொய் புனைந்து,
தான் அந்தப் பயணத்தை, பயத்தி னாலோ, ஏமாற்றப்பட்டோ மேற்கொள்ள வில்லையென்று நந்திகா அறிவாள்.
அப்படியென்றால் நந்திகாவின் குடும்ப வாழ்வு மகிழ்ச்சியற்றதாக இருக் கலாம். கணவன் குடிகாரனாக இருக்க லாம். நோயாளியாக இருக்கலாம். இல்லாவிட்டால் பாலியல் ரீதியாகக் குறைபாடுள்ளவனாக இருக்கலாம். அத னால், அந்தக் குறைபாட்டைப் பூரணப் படுத்திக் கொள்ள நந்திகா அவனை நாடி யிருக்கலாம்.
நன்றாக
உண்மையில் நந்திகா தனது விவாக புருஷன் சுஸந்தவுடன் மிகவும் மகிழ்ச்சி யாகத்தான் வாழ்ந்து வருகிறாள். சுஸந்த அப்படியொரு குடிகாரன் அல்ல. எப்போ தாவது ஒருநாள் பியர் கொஞ்சம் குடிப் பது பற்றி நந்திகா எந்த எதிர்ப்பும் காட்ட வில்லை. அஸந்தவுக்கும் நந்திகாவுக்கும் குடும்ப ரீதியாக எந்தப் பிரச்சினையுமே
கிடையாது. இருவருக்கும் பிரத்தியேக மான வீடுண்டு. தனிக் குடித்தனம். தங் களுக்குத் தேவையான விதத்தில் சாமான் கள் வாங்கி அனுபவித்துக் கொண்டு, தங்கள் பாட்டில் சுதந்திரமாக வாழக் கிடைத்துள்ளதையிட்டு நந்திகாவின் மன தில் பெரும் களிப்பே நிலவுகிறது. சுஸந்தவின் தாய்விடும் மிகவும் அருகி லுள்ளதால் பிள்ளையைப் பார்த்துக் கொள்வதில் ஒரு சிக்கலுமில்லை.
அப்படியென்றால் சுஸந்தவை விட அவன் அழகாக இருப்பான்.
அதுகூடச் சரியென்று நந்திகாவின் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. மெண்டி ஸின் முகத்திலோ உடலமைப்பிலோ அஸந்தவைவிட துலங்கித் தெரியக்கூடிய தாக எந்த அழகுமில்லை.
‘அப்படியென்றால் என்னதான் நடந்தது?
இப்படி யாராவது நந்திகாவிடம் கேட்டால், "ஐயோ எனக்கென்ன நடந்த தென்று எனக்கே தெரியல்ல" என்றுதான் பதில் சொல்வாள்.
இதனை யாராவது நெருக்கமான ஒருவரிடம் சொல்லி, என்ன நடந்த தென்பதை தெளிவுபடுத்திக் கொள்ளும் உதவியைப் பெறமுடியாமலிருப்பதுதான் நந்திகா எதிர்நோக்கியுள்ள மிகப் பெரிய பிரச்சினை.
சரி, இதனை எப்படி யாரிடம் சொல் வது? திருமணம் செய்து. அழகான குடும்ப வாழ்வை நடாத்திக்கொண்டு. பிள்ளை குட்டிகள் பெற்று வளர்க்கும் தாயொருத்தி. திடீரென்று இன்னொரு
மல்லிகை ஆகஸ்ட் 2011 & 41

Page 23
வனோடு. எப்படி இந்தக் கதையை பிறிதொருவருக்குச் சொல்லி உதவி கோருவது?
சுஸந்த திருமணம் செய்து, அவளை அழைத்து வந்து இந்த ஆறுவருடத்துள் ளும் எத்தனையோ பேர் நந்திகாவோடு தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள முனைந் தார்கள். சிலர் திருமணம் செய்தவர்கள். சிலர் முதிரா இளைஞர்கள். இருந்தும் அப்படியான எல்லா சந்தர்ப்பங்களிலும் ”மாடு திரும்புவது தென்னம்பிள்ளையைக் கடிக்கத்தான்” என்பதை பார்வையில். கண்ணசைவில். இரண்டொரு வார்த்தை களில் விளங்கிக்கொண்ட நந்திகா, இவ் வளவு காலமாகத் தன்னைப் பாதுகாத்துக் கொண்டு வந்தாள்.
தான் அவ்வாறு தப்பி வந்ததெல் லாம் முறையற்ற எண்ணத்தோடு நெருங்க முனைந்தவர்களிடமிருந்தல்ல, சலன மடையப் பார்க்கும் தனது மனதிட மிருந்தே என்பதை, இப்போது நந்திகா நினைத்துப் பார்த்தாள்.
மெண்டிஸின் பார்வைக்குள் மறைந் திருந்த தேவை என்னவென்பதை நந்திகா ஆரம்பத்திலேயே அறிந்துகொண்டாள். பதட்டப்பட்டுக் கொண்டு பஸ்ஸேறி எப் படியோ வீட் பிடித்துக்கொண்ட நிம்மதி யில் சுற்றுமுற்றும் பார்க்கும்போது அவன் அவளுக்குப் பக்கத்திலேயே அமர்ந்திருப்பான். இப்படி அடுத்தடுத்து நிகழ்ந்து வந்தபோது சுஸந்தவோடு இதைச் சொல்லிச் சிரிக்க வேண்டு மென்று அவள் நினைத்தாள்தான். ஆனால் என்ன காரணமோ தெரிய வில்லை, அவள் அதனைக் கணவனோடு பகிர்ந்துகொள்ளவில்லை. சனம் நிரம்பி
வழியும் பஸ்வண்டியில் காதருகே நின்று கொண்டு, மெண்டிஸ் கேட்ட விதவித மான கேள்விகளுக்கு இரண்டு வாரமாக முகத்தைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் தான் நந்திகா பதில் சொன்னாள்.
”உங்க கணவன் பெயர் சுஸந்த என்ன?”
ஒருநாள் பஸ்ஸில் வைத்து அவன் இப்படிக் கேட்டபோது நந்திகா வியந்து கடும் ஆள்தான். முயற்சியப் பாருங்க. எப்படியோ சுஸந் தவின் பெயரையும் தேடிக்கொண்டிருக் கிறான். இதை அன்றவள் பலதடவை இரைமீட்டிப் பார்த்தாள்.
தான் போனாள்.
ஏன் நான் அன்று சுஸந்தவுக்கு இந் தக் கதையைச் சொல்லவில்லை? இன்று நந்திகாவின் மனதில் மேற்கிளம்பும் அந்தக் கேள்விக்கு விடை தேடிக்கொள் வதற்குத்தான், அவளுக்கு யாரோ ஒரு வருடைய உதவி தேவை. இருந்தும் யார் தான் அவளுக்கு உதவப்போகிறார்கள்.
இன்னும் மூன்று நான்கு நாட்களின் பின்னர் மெண்டிஸ் கேட்ட கேள்வி அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
"உங்க பிள்ளையின்ர பெயர் ரஜின்த அல்லவா?”
இந்த விடயத்தையும்கூட நந்திகா சுஸந்தவுக்குச் சொல்லவில்லை. ஏன் சொல்லவில்லையென்று நினைவு மீட்டிப் பார்த்தபோது, அந்நாட்களில் தான் ஏதோ வொரு ரகசியத்தை பாதுகாத்து வந்தது போன்ற உணர்வு மேலிட்டது நந்திகா வுக்கு.
மல்லிகை ஆகஸ்ட் 2011 தீ 42

இன்னும் நாலைந்து தினங்களின் பின் மெண்டிஸ், நந்திகா வேலைசெய்யும் கந்தோருக்கு டெலிஃபோன் செய்தான்.
“உங்களுக்கு எப்படி எனது டெலி ஃபோன் நம்பர் கிடைத்தது? வியப்புடன் கேட்டாள், நந்திகா.
“தேடுபவனுக்கு கிடைக்குமென்று
சொல்வாங்க.” மெண்டிஸ் சொன்னான்.
”இனி எப்படி?”
"இருக்கிறம்.”
"நான் கதைத்தது உங்களுக்குத் தொல்லையா?”
“இல்லை”
அந்த ஒரே வார்த்தை வெளிப்பட்ட உடனேயே ஏன் நான் இல்லை என்று சொன்னேன்? என்று சிந்திக்க ஆரம்பித் தாள். இன்றும் நந்திகா அதுபற்றிச் சிந்திக்கிறாள். 'ஏன் நான் அன்று அவ னுக்கு, தயவு செய்து என்ர பாட்டில் என்னை இருக்க விடுங்கோ’ என்று சொல்லவில்லை.
மெண்டிஸ் தினந்தினம் தொலை பேசி விடுக்கத் தொடங்கினான். ஒரே கேள்வியைத்தான் ஒவ்வொரு நாளும் திரும்பத் திரும்பக் கேட்டான். பொய் யான வினாக்கள். ‘எப்படி? வேலையா? இன்று பஸ்ஸில் கடும் நெரிசல் என்ன? நேரத்துக்கு காரியாலயம் போனீங்களா?
நந்திகாவும் தன்பாட்டில் ஒம், இருக்கிறம், அதுதான், கொஞ்சம் சுணங் கினன் இப்படிச் சொல்லிக் கொண்டி ருந்தாள்.
ஒருநாள் மெண்டிஸின் வழக்கமான கோல் வரவில்லை. நந்திகாவுக்கு ஏதோ வொரு குறைபாடு நேர்ந்துவிட்டது போல் தெரிந்தது. என்ன அந்தக் குறை பாடு? அதைத்தான் அவளால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.
மெண்டிஸ் ஒவ்வொரு நாளும் பகல் பன்னிரண்டு நாற்பத்தைந்திற்குள்தான் கதைத்தான். மதிய உணவு வேளை என்ப தால் மேசைகளில் எவரும் இருக்கமாட் டார்கள். அன்று நந்திகா ஐந்தே நிமிடத் கில் சாப்பிட்டுவிட்டுத் தனது மேசையில் வந்தமர்ந்துகொண்டாள். ஒருமணி வரை காத்திருந்தாள். பன்னிரண்டு நாற்பத்தைந் திலிருந்து ஒருமணி வரை பத்துத் தடவைக்கு மேல் மணிக்கூட்டைப் பார்த் தாள். தலைமைக் கிளாக்கரின் மேசை மீதிருந்த டெலிஃபோன் அமைதி காத்தது. ஒருவேளை உடைந்திருக்குமோ? நந்திகா மெல்லப் போய் ரிஸிவரை எடுத்துக் காதில் வைத்துப் பார்த்தாள். உடைய வில்லை; அது உயிர்ப்போடிருந்தது.
இதென்ன அநியாயம்! நான் ஏன் அவனது கோல் வரும்வரை காத்திருக்க வேண்டும்? எனக்கென்ன பைத்தியமா? நந்திகா நினைத்தாள்.
அடுத்தநாள், “ஏன் நேற்றுக் கோல் எடுக்கவில்லை?” நந்திகா கேட்டாள்.
"நீங்க எடுத்திருக்கலாம் தானே?”
“எனக் கெப்படி உங்க நம்பர் தெரியும்?”
“சரி எழுதிக்கொள்ளுங்களன்.”
நான் ஏன் அவனுடைய தொலை பேசி இலக்கத்தைக் குறித்துக் கொள்
மல்லிகை ஆகஸ்ட் 2011 & 43

Page 24
ளணும்? பின்னர் நந்திகா யோசிக்கத் தொடங்கினாள். விடை தெரியா வினா
தான்!
நந்திகாவுக்கு அந்தப் பயணம். ஞாபகம் வரும்போது தன்மீதே ஒரு வெறுப்பு ஏற்பட்டது. ஏன் சென்றேன்? என்பதற்கென்றால் அவளிடம் விடையே இல்லை. கந்தோரில் அரைநாள் லிவு போட்டுக் கொண்டு நந்திகா பஸ் ஹோல் டுக்கு வந்தபோது, நான் போகும் இந்தப் பயணத்திற்கு என்ன அர்த்தம்? என்று யோசிக்கத் தொடங்கினாள். மீண்டும் போய் விடுமுறையை ரத்துச் செய்து விட்டு வேலை செய்யணும். இல்லை. நேரே வீட்டுக்குப் போகணும். தலையிடி ஏற்பட்டதால் அரைநாள் லிவு எடுத்துக் கொண்டு வந்ததாக சுஸ்ந்தவுக்குச் சொல்லணும்.
இப்படியெல்லாம் பஸ்ஸுஜூக்குள் இருந்தபடியே யோசித்துக் கொண்டு வந்த நந்திகா, மெண்டிஸ் எங்கு இறங்கச் சொன்னானோ அந்த இடத்தில்தான் இறங்கினாள். 'ஏன் நான் இந்த இடத்தில் இறங்கினேன்? பஸ்ஸிலிருந்து இறங்கிய வுடன் நந்திகா யோசித்தாள். ஆனாலும் அவள் இடதுபக்கமாகவுள்ள குறுகிய பாதையை நோக்கித்தானே திரும்பினாள்.
திடீரென்று சுஸந்த கந்தோருக்கு வந்துவிடுவாரோ? பிள்ளைக்கு காய்ச்சல், வாந்தியென்று அம்மா யாருக்காவது சொல்லி கந்தோருக்கு கோல் பண்ணிவிடு வார்களோ? அறிந்த, தெரிந்த யாராவது நான் இந்த ஹோல்டில் இறங்கி, குறுகிய பாதை நெடுகச் செல்வதைப் பார்த்து விடுவார்களோ? நந்திகாவின் கால்கள் மோதிக்கொண்டன. இதயத் துடிப்பின்
வேகம் உயர்ந்து சென்றது. இருந்த போதிலும் மெண்டிஸ் சொன்ன அடை யாளங்களைப் பார்த்துப் பார்த்து நந்திகா முன்னோக்கி நடந்தாள்.
'ஏன் நான் அன்று கால்களிரண்டும் நெஞ்சும் படபடக்கும் போதும் அந்தப் பயணம் சென்றேன்? சே. அதனால் எனக்கு என்னதான் கிட்டியது? எந்த வகையிலும் விளங்கிக்கொள்ள முடிய வில்லையே.
நந்திகா வரும்வரை மெண்டிஸின் கண்கள் விதியை மேய்ந்து கொண்டி ருந்தன. வியர்வையால் தோய்ந்து போன சேட்டுடன் அவன் ஆவல் ததும்ப நின்ற நிலையை நந்திகா கவனித்தாள். இருந்தும் நந்திகா அரைவாசி திறந்த கதவுக்கூடாக அந்த ஒழுங்கற்ற அறைக்குள் புகுந்து விடும்வரை கூட மெண்டிஸ் ஜூக்குப் பொறுமை இருக்கவில்லை. கதவைக்கூட மூடாத மெண்டிஸ் பரபரப்போடு நந்தி காவை அப்படியே கட்டியணைத்துக் கொண்டான். சூடான குறடொன்றுக்குள் அகப்பட்டுவிட்டது போல் அசைய முடிய வில்லை அவளுக்கு. மூச்சுவிடக்கூட முடியாமல் முத்தமாரி பொழிந்தபோது, சாடையாகக் கையை நீட்டி எப்படியோ கதவுத் தட்டை மூடிவிட்டாள் நந்திகா.
கட்டிலிலா. நீள வாங்கொன்றிலா? எதற்கு மேலால் அப்படியே தள்ளிச் சாய்த்தான்? நந்திகாவுக்கு நினைவில்லை.
கால்களில் அணிந்திருந்த செருப்பு களில் ஒன்று டக்கென்று கீழே விழுவது அவளுக்குக் கேட்டது. அடுத்த செருப்பு அவள் மீள எழும்பும் போதும் மறு காலில் இருந்தது. மெண்டிஸின் அவசரத்
மல்லிகை ஆகஸ்ட் 2011 $ 44

தில் அவளது பிளவுஸ் பொத்தான் ஒன்றும் கழன்று தெறித்தது. அந்தப் பிசாசு பல் அடையாளம் பதிய மார்பை
வேறு கடித்திருந்தான்.
அந்த அறையில் என்னதான் இருந் தது? கதிரை, மேசை, ரவல்றெக் இப்படி ஏதாவது இருந்ததா? நந்திகாவுக்கு ஞாபகமில்லை. ஒன்றேயொன்றுதான் ஞாபகம். அஸ்பெஸ்டஸ் கூரையின் கீழ் நிறையவே சிலந்திவலை பரவியிருந்தது.
அப்போது மெண்டிஸின் வாயிலி ருந்து விசியது சாராய நெடியாக இருக்க வேண்டும்.
சரியாக மூன்று நிமிடத்திற்கு மேல்
போகவில்லை. நந்திகா மீண்டும் விதிக் கிறங்கி நடந்தாள்.
“சீ. இதென்ன விசர்த்தனம்? என்ன தான் எனக்கு நடந்தது? எனக்கு என்ன நடந்ததென்று என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.
பஸ் ஹோல்டுக்கு வந்தபோதும் மெண்டிஸின் வியர்வை அவளது
சட்டையில் அப்படியே அப்பியிருந்தது.
இந்த மடத்தனம் அப்படியே கழுவப்பட்டுச் செல்ல, நாலைந்து முறை
சவர்க் காரம் போட்டு நன்றாகத் தேய்த் துக் குளித்துவிட வேண்டுமென்று நினைத்து நினைத்துத்தான், நடுநடுங்கிய படி நந்திகா வீட்டுக்கு ஓடினாள்.
மல்லிகை ஆகஸ்ட் 2011 季 45

Page 25
இரசனைக் குறிப்பு:
ID60flb (3|6II எழுத்தாளர் சுதாராஜ் சிறுகதைத்
6h35II-G5III: 9) பிரிக்கசிவு
- LDT.urteoarties b
Fழத் தமிழர் வரலாற்றில் 1976 தொடக்கம் 2008 வரையான காலப் பிரிவு சோகமயமான தென்பதை அகில உலகமும் அறியும். இக்காலத்தில்தான் ஏற்கனவே ஊன்றப்பட்டிருந்த பேரினவாத விதை ஓங்கி வளர்ந்து விஸ்வரூபமெடுத்துத் தமிழர், சிங்களவர்களுக்கிடையில் பெருஞ் சுவரை எழுப்பியது. பருத்தித்துறையிலிருந்து துந்திரா முனைவரை செறிந்த வாழ்ந்த தமிழன், தான் தேடிய தேட்டங்களையும், சொத்துக்களையும் இழந்து, உயிர் பிழைத்தால் போதுமென்ற அந்தரத்தில் சொந்த மண்ணுக்குப் படையெடுத்தான். இதன் வெளிப்பாடாக ஒரே வீட்டை இரு கூறாகப் பிரிக்கும் மனப்போக்கு ஈழமண்ணில் வேர்கொண்டது. உதவுவோம் என்ற முகங்காட்டி இங்கு வந்த வெளிநாட்டவர்களும், தம் நிலைப்பாட்டைப் பரத்தி ஏமாற்றினர். தொப்புள்கொடி உறவுகளின் பாசத்தையும் பற்றையும் ஈழத்தமிழன் சுருதி சுத்தமாக அறிந்து கொள்ள முடிந்தது. ஈழத் தமிழ் மண்ணில் பொருளாதாரத் தடை, ஊரடங்கு வாழ்வு, வேலை வாய்ப்பின்மை, மானுட சங்காரம், மனித பலியெடுக்கும் குண்டுகள், ஷெல் வீச்சுகள் சொந்த மண்ணிலேயே உரிமையோடு வாழ முடியாத அவல வாழ்க்கை என்பன திணிக்கப்பட்டன. இந்த அவலங்களிலிருந்து தப்ப முயன்ற ஈழத் தமிழர்கள் வெளிநாடுகளுக்குப் புலப்பெயர்வை மேற்கொண்டனர். சொந்த மண்ணில் நின்றோர் மரணத்தைத் தவிர்ப்பதற்காகச் சொந்த மண்ணிலேயே இடம்பெயர்ந்தனர்.
மல்லிகை ஆகஸ்ட் 2011 & 46
 

அவலமான இக்கண்ணிர்க் கதை களைப் புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்றோரால் சுதந்திரமாக எழுதிப் பிரசித் தப்படுத்த முடிந்தது. இருந்தும் ஊடக சுதந் திரம் மறுக்கப்பட்ட நிலையிலும், ஈழத்தில் வாழ்ந்த தமிழ்ப் படைப்பாளிகள் இக்காலத் துயர்களை உணர்ச்சிபூர்வமாகப் படைப் பாக்கித் தந்தனர். இதன் மூலமாகத் தமிழி லக்கியப் பெரு விருட்சத்தில் மூன்று கிளை கள் கிளைத்தன. புலம்பெயர்ந்தோர் இலக் கியம், போர்க்கால இலக்கியம், போர்க்கள இலக்கியம் என்பவையே அம்மூன்றுமாகும். இதில் மூன்றாவதைப் படைத்தோர் யுத்த முனையில் ஆள் கொல்லிக் குண்டு, ஷெல் ஆகியவையின் மத்தியில் வாழ்ந்த படைப் பாளிகளென்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மூன்று தசாப்தங்களுக்கும் சற்று மேலான, ஈழத் தமிழினத்தைக் கண்ணிரில் வாழ வைத்த இக்காலகட்டத்தில்; தான் படைத்த 60 சிறுகதைகளைத் தொகுத்து; நாடறிந்த எழுத்தாளர்கள் சுதாராஜ் - 'உயிர்க் கசிவு என்ற பெயரில் 703 பக்கங் களையுடைய மெகாச் சிறுகதைத் தொகுப் பொன்றை தமிழிலக்கியத்துக்குத் தந்துள் ளார். மல்லிகை, சிரித்திரன், வீரகேசரி, தினக்குரல், தினகரன், ஞானம், கலாவல்லி, தமிழ்நயம் (றோயல் கல்லூரி வெளியீடு), ஆனந்த விகடன் ஆகிய இதழ்களில் வெளி வந்தவையே இச்சிறுகதைகளாகும். இதில் மல்லிகை இதழில் வெளியானவை அதிக
d666.
கதைஞர் சுதாராஜ் எழுத்தாளர், பொறி யியலாளர். இத்தகைமைகளால் கர்வம் கொண்டு, எதுவித பந்தாக்களையும் வெளிப் படுத்தாது - அனைவரோடும் மனித நேயத் தோடு ஊடாடும் சிறப்பியல்பினர். இலக்கியத் தையும் இலக்கியவாதிகளையும் நேசிப்பவர்.
சீமெந்து தயாரித்து விநியோகிக்கும் நடமாடும் தொழிற்சாலைக் கப்பலொன்றில் உயரதி காரியாகக் கடமை புரிந்தவர். தனது தொழி லின் நிமித்தம் இவர் காலத்துக்குக் காலம் இடம்பெயர்வதுண்டு, அந்த வகையில் குவைத், இந்தோனிவழியா, யேமன் போன்ற நாடுகளுக்கும் செல்பவர். அத்தோடு அடிக்கடி தன் சொந்த மண்ணிலும் காட்சி தருவார்.
எழுத்தாளனின் சொந்த அநுபவங்களே ஒர் இலக்கியப் படைப்பின் உள்ளிடாகுமென இலக்கியத் தத்துவாச்சாரிகள் கருத்துரைப் பர். அதற்குத் தானும் பாத்திரமானவதென் பதை கதைஞர் சுதாராஜ் 'உயிர்க்கசிவு தொகுப்பின் மூலம் அத்தாட்சிப்படுத்தியிருக் கிறார். இச்சிறுகதைகள் அநுபவ விளைச்ச லேயன்றி, கற்பனையில் ஊறியவையல்ல யென்பது ஆழ்ந்து வாசித்த போது தெரிய வந்தது.
பாரிய இத்தொகுப்பினுள் நுழைந்த போது, கண்டறியாத, கேட்டறியாத பல விடயச் சித்திரிப்புகளை வாசிக்க முடிந்தது. சீமெந்து தயாரிக்கும் ஒரு கப்பலின் தொழிற் பாடுகள் தமிழ் வாசகருக்கு அந்நிய மானவை. இதில் தேச, இன சங்கமங்கள் ஏற் படுகின்றன. இனமான, தேசாபிமானக் கரி சனைகள் வெளிப்படுத்தப்படுகின்றன. இத் தகைய விடயங்களைக் கதைஞர் தனது அநு பவ முதிர்ச்சியில் - இலக்கிய நயத்தோடு வெளிப்படுத்துகிறார், வட யேமன் துறை முகத்தில் தரித்து நின்ற கப்பலைத் தப்ப வைக்க எடுத்த நடவடிக்கைகளின் சித்திரிப்பு பிரமாதமானது
தமிழ் மக்கள் எழுச்சியை அடக்க, ஈழத் தின் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் தொடுக்கப்பட்ட யுத்ததத்தால் ஏற்பட்ட பாரிய இடப்பெயர்வு தமிழ் மக்களை எப்படிச்
மல்லிகை ஆகஸ்ட் 2011 & 47

Page 26
சீரழித்ததென்பது நெஞ்சை நெகிழ வைக் கின்றது. நகர முடியாத முதியோரை யுத்த களத்தில் விட்டு விட்டு, எதிர்காலத்தில் மற்று மொரு வீரப் பரம்பரையை உருவாக்கக் கூடிய குழந்தையைக் காப்பாற்றுகின்றனர்.
.தண்ணிர்த் தாகத்தைச் சகிக்க முடி யாமல், இடம்பெயர்ந்து கொண்டிருக்கும் போது கொட்டிய மழையில் துணிகளை நனைத்து, பிழிந்து முதியோர்கள் நாவரட்சி யைத் தீர்த்திருக்கின்றனர். குடையால் வழிந் தோடிக் கொண்டிருந்த மழைநீரைக் குடித்துக் கூடத் தாகசாந்தி செய்து கொண்டிருக் கின்றனர்.
தொழில் முடக்கத்தாலும், பாதுகாப்புக் காகவும் சொந்த மண்ணை விட்டகன்று, வெளிநாடுகளில் வாழும் - கல்யாணமாக மலே குடும்பஸ்தர்களாக வாழும் முதிர் கன்னிகள் - பாலை நிலத்தில் காமத்தை தீர்க்க எத்தனிக்கும் இலங்கை வாலிபர் களால் உடலுறவு கொள்ள அழைக்கப்பட்டி ருக்கின்றனர். ஆனால் யுத்த களத்தில் அவ லங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கும் தமது குடும்பங்களின் பொறுப்புகளை சுமந்து புகலி டத்தில் சம்பாதித்துக் கொண்டிருக்கும் இம் முதிர்கன்னிகள் அந்த அழைப்புகளை நிரா கரித்துத் தப்பித்துக் கொள்கின்றனர்.
சிங்களம் மட்டும் சட்டத்தின் (1956) பின் ஈழத் தமிழருக்கு இலங்கையில் அரசாங்க உத்தியோகம் எட்டாக் கனியானது. இருந் தும் கஞ்சிக்குள் பயறாக உத்தியோகம் பார்ப் போர் கிடைக்கும் குறைஞ்ச சம்பளத்துக் குள், தமது வாழ்வின் தேவைகளை நிறை வேற்றப்படும் பெரும்பாடுகள் யதார்த்தமாகச் சிறுகதைகளில் சொல்லப்படுகின்றன. தபால், யாழ்தேவி, உத்தரதேவி ஆகிய புகை யிரதங்களில் - நினைத்தவுடன் ஹாய் ஆக
வடபுலம் சென்றுவந்த யாழ்ப்பாணத் தமிழ் அரசாங்க ஊழியன் அநுராதபுரத்தில் தொழில் புரிய அஞ்சிப் படபடத்துச் செல் கிறான். பேச வாய் திறக்கப் பயப்படுகிறான். கொழும்பு விடுதிகளில் சம்பளம் போதாமை யால் விடுதிக் காசு கொடுக்க, குடும்பத்துக்கு அனுப்பத் திண்டாடுகிறான். இந்த இலட் சணத்தில் திடீர் விருந்தாளிகளும் வருகின் றனர். தங்க வசதி கேட்கின்றனர். இத் தகைய இடைஞ்சல்களுக்கு மத்தியிலும் சிறு கச் சிறுகச் சேமித்து, வங்கியில் கடன் பெற்று கட்டிய வீட்டை ஷெல் பதம் பார்க்கிறது.
கூரை தரையில் கிடக்கிறது. வீடு கட்டு வதற்குப் பட்ட கடன் தலைமேல் கிடக்கிறது. தலையில் கையை வைத்துக் குமுறுகிறான், யாழ்ப்பாணத்து அரசாங்க ஊழியன்.
கோழி, முயல், பாம்பு, பறவைகள் என்ப வற்றையும் கதை மாந்தராக்கியிருக்கிறார் கதைஞர் சுதாராஜ், ஜீவகாருண்ய அணுகு முறை கடைச் சாப்பாட்டால் வாடி யாழ்ப் பாணம் வந்த அண்ணனுக்குச் சத்தான உணவு கொடுக்க, வளர்த்த கோழியைக் கலைத்துப் பிடித்துக் கறியாக்குகிறாள் அம்மா. அண்ண வந்த குவழியில் திரிந்த குட்டியன் படுத்து விடுகிறான். அவனது பிஞ்சு மனது வீட்டில் வளர்த்த கோழியை இப்படிக் கொன்று சமைத்ததை ஏற்கவில்லை. சாப்பிட அழைத்த அம்மாவின் அழைப்பை மறுதலிக் கிறான். அண்ணையை இனி கொழும்புக் குப் போக வேண்டாமென்று சொல்லுங்கோ (பக் 178) என அம்மாவைக் கோருகிறான். கொழும்புக்கார அண்ணன் வந்தால்தானே வீட்டுக் கோழியை வெட்டிச் சமைப்பார்கள் இந்த ஜீவகாருண்ய சிந்தை அந்த வீட்டுப் பெரிசுகளுக்கு ஏற்படவில்லை, பிஞ்சு மனம் ஏன் கலங்கியது? கோழியைத் துரத்திப் பிடிப்
மல்லிகை ஆகஸ்ட் 2011 率 48

பது தனிக்கலை என்பதைக் கதைஞர் எழுத் தில் பதிக்கிறார். கலவரத்தில் இப்படித்தான் பேரினவாதிகள் கலைத்துப் பிடித்து கொன் றனரென்பதை நினைவுபடுத்துகிறார்.
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பது நாம் கற்ற உண்மை, கசிப்புக் குடித்த வன் பாம்பை அடித்துக் கொன்று தீயிலிடு கிறான். பாவம். அப்பா. அந்தப் பாம்பு எவ் வளவு நேரம் ஒரு பக்கமும் தப்பிப் போக வழி யில்லாமல் நிண்டது. அதை அடிச்சுக் கொண்டது பாவந்தானே? (பக் 647) எனப் பாம்புக்காக இரக்கப்படுகிறான் இக்கதை யிலும் ஒரு பாலகன்,
தொங்கல், பாம்பு ஆகிய சிறுகதை களில் கோழியையும் பாம்பையும் குறியீடு களாக்கி, எமது தமிழ்ப் போராளிகள் போரிடப் பட்ட பாடுகளை அழுத்தி வாசகருக்கு நினைவுபடுத்தியிருக்கலாம்! கதைஞர் ஏனோ தவறிவிட்டார்! ஆழ்ந்த வாசிப்பைச் செய்யும் வாசகன், இந்த உள்ளிட்டைத் தனது நுட்பமான வாசிப்பின் மூலமாக அறிந்து கொள்வான்!
சின்னஞ்சிறு வடலிகளின் மனதில் ஆழப் பதியும் இவைகள், எதிர்காலத்தில் ஈழத் தமிழரது பிரச்சினைகளுக்குப் பரிகாரந் தேட அவர்களைத் தூண்டலாம்.
வர்க்க முரண்பாட்டிலும் கதைஞரின் தீட்சண்யமான பார்வை சென்றுள்ளது. தேநீர்க் கடையில் பணிபுரியும் ஊழியன் தனது மனைவிக்கும் மகனுக்கும் கடையில் விற்பனை செய்யும் வடைகளைக் கொண்டு போய்த் தின்னக் கொடுக்க ஆசைப்படு கிறான். முதலாளியின் சம்மதத்தோடு வடை களைச் சரையாக்கிக் கொண்டு போகிறான். முதலாளியின் தாராள மனதை எண்ணிப் பாராட்டுகிறான். ஆனால் முதலாளி எடுத்துப்
போகும் வடைகளுக்குரிய கணக்கை ஊழி யனின் கணக்கில் பதிந்து கொள்கிறான். மாத முடிவில் ஊழியனின் சம்பளத்தில் இத் தொகை துண்டு விழும். முதலாளியத்தின் இரக்கமற்ற கல் மனதை, தயவுசெய்து கை போடாதீர்கள் சிறுகதை பளிங்கு போல் காட்டுகின்றது. தொழிற்சாலையில் கடமை யில் ஈடுபட்டிருந்தபோது விபத்தில் சிக்கிய தொழிலாளியை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற சக தொழிலாளி வேலை நீக்கம் செய்யப்படுகின்றான். நாம் உதிரிகள் அல்ல என்பதை தொழிலாளிகள் தொழிற் சாலை நிருவாகத்துக்கு உணர்த்து கின்றனர்.
'அக்கிரமங்கள் தலைதுாக்கும் பொழுது அவற்றை அழிப்பதற்காகப் பயன்படுத்தப் படும் ஆயுதம்தான் பலாத்காரம் என கீதை உபதேசிக்கின்றது. தொகுப்பின் முதல் சிறு கதை நாணயக் கயிறு அந்த உண்மை யைப் பிரசித்தப்படுத்துகிறது. தவறான நிரு வாகந்தான் பலாத்காரம், பயங்கரவாதம், அத்துமீறல் என்பவைகளுக்கு அடிச்சரடு. பத்தோ பன்னிரண்டோ வயது மதிக்கத்தக்க சிறுவன் சுந்தரத்தை தகுந்த முறையில் நிரு வகித்து வேலை வாங்கத் தெரியாது, அவனை ஒரு மாட்டைப் போல் வீட்டு எஜ மானி அம்மாள் நடத்துகிறாள். அவளுடைய ஆய்க்கினைகளைத் தாங்க முடியாத அந்தக் குருத்து தூ. மிருகங்கள் எனக் கிளர்ந்து அவள் முகத்தில் எச்சிலை உமிழ்கிறது. இது எந்தளவுக்கு வெட்கக் கேடானது. அராஜகம் செய்யாது அவனை நிருவகித்து அவனிடம் வேலையைக் கறந்திருந்தால் அவன் உயி ருள்ள வரை அவளுக்கு வேலைக்காரனா கவே இருந்திருப்பானல்லவா! நலிந்தோருக் கும் சுயமரியாதை, மானம் உண்டென்பதை அதிகாரப் பலம் கொண்டோர் மறக்கக்
மல்லிகை ஆகஸ்ட் 2011 奉 49

Page 27
கூடாது! அல்லாவிடில் சுந்தரம் போன்ற பழைய கலாசார, பண்பாட்டுக் கட்டுகளை நிர்மூலமாக்கும் பயங்கர, தீவிரவாதிகள் தோன்றவே செய்வர். இவர்கள் உலகைக் கூடத் திருப்பிப்போடக் கூடியவர். இச்சிறு கதை இன்று ஆட்சியின் நாணயக் கயிற்றைப் பிடித்துக் கொண்டிருக்கும் அனைத்து அதி கார மையங்களுக்கும் பொருத்தமானது. அதைத்தான் பகவத் கீதையும் புகட்டுகிறது.
கணவனே தன் கண் கண்ட தெய்வம் எனப் பதிபக்தி கொண்டவள் தமிழ் மாது. பெண்ணியவாதிகளுக்கு இது கசப்பாக இருக்கலாம் இருந்தாலும் இந்த விழுமியத் தைக் கண்டு கொள்ளாமலிருக்க முடியாது! தொகுப்பின் தலைப்பும் இறுதிச் சிறுகதையு மான உயிர்க் கசிவு அதைத்தான் உரத்துப் பேசுகிறது. ஈழத்து மனிதத்தைக் கருமைப் படுத்திய 1983 கறுப்பு ஜூலைத் தமிழ்ச் சங் காரத்தில், காணாமல் போன தன் கன வரை, இன்றுவரை (கதை படைக்கும் வரை) தான் காண்பதெல்லாவற்றிலும் கண்டு கொண்டிருக்கிறாள் ஒரு மூதாட்டி. அவள் தங்கி வாழ்வோரே அவளுக்கு மனநோய் என முத்திரை குத்துகின்றனர். இருந்தும் அவள் மனதில் கணவனின் நினைவு பசுமையாக இருக்கிறது. உண்மையில் இச்சிறுகதை ஒரு தமிழ் மனைவியின் உயிர்க்கசிவுதான். தமிழ் மனையாளின் மகாத்மியத்தைப் பேசுகிறது.
பரீட்சை மண்டபம், புகையிரதம் என்ப வற்றில் இளைய தலைமுறைக்கு ஏற்படும் எதிர்ப்பால் ஈர்ப்புகளையும், மோகங்களை யும் ஜனரஞ்சகமாகச் சில சிறுகதைகள் வெளிப்படுத்துகின்றன.
'மாடு என்ற சிறுகதைக்கு பசு என்ற தலைப்புப் பொருத்தமானது. கோமாதா எங்கள் குலமாதா மானுட வாழ்வுக்கு பசு உதவுகரமாகவே இருக்கிறது.
அடைப்புக்குறிக்குள் விடயங்களைத் தருவதைத் தவிர்த்திருக்கலாம் வாசிப்பில் தெய்வை ஏற்படுத்துகிறது.
கதைஞர் சுதாராஜின் சிறுகதை எடுத் துரைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் காணமுடியவில்லை. தனது படைப்புகள் மக் கள் இலக்கியமாக இருக்க வேண்டுமென் பதுக்காக அவர் புத்திஜீவித்தனங்களுக்கு விலைபோகாதிருந்திருக்கலாம்.
சீக்காய், விருத்தெரிந்த, மசியாமற்தான், பிராக்குகளில், மாய்ந்து, சிலவு சித்தாயம், வாயோறியாய், நாண்டு கொண்டு, பூந்திப் பூந்தி இன்றைய உரையாடல்களில் கேட்க முடியாத இத்தகைய வழக்கொழிந்த சொற் கள் சிறுகதைகளுக்குள் காணப்படுகின்றன. இது கதைஞரின் உரைகளிலும் வருகின் றது. தமிழ் மொழியியல் ஆராய்ச்சியில் ஈடுபடு வோருக்கு இவைகள் உதவும்.
சாதீயம் சம்பந்தமான சிறுகதைகளை ஏனோ கானமுடிவில்லை! இவைகள் படைக்கப்பட்ட காலத்தில் ஈழத் தமிழ் மண் னில் சாதி ஒடுக்குமுறை இருக்கவில் லையா? ஆக, படைக்கப்பட்ட காலத்து ஈழத் தமிழரது வாழ்வின் நகர்தலை இச்சிறுகதை கள் மூலமாகத் தனது கருத்தியலுக்கு ஏற்ற வாறு கதைஞர் சுதாராஜ் அற்புதமாக வெளிப் படுத்தியுள்ளார். இவைகள் வாசகரது மன தில் புத்தெழுச்சியை ஏற்படுத்தக் கூடியவை. அத்தோடு, பட்டம் பெறுவதற்காக ஆராய்ச் சிக் கட்டுரைகள் எழுதும் இளம் ஆய்வாளர் கள், இத்தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு, சுதாராஜின் எழுத்து வல்லமை, அவரது படைப்புகளின் அடிச்சரடுகளை ஆய் வுக்குட்படுத்தி ஆராய்ச்சி கட்டுரை சமர்பிப் பதற்கு இத்தொகுப்பு உதவத்தக்கது. இதைத் தகுந்த முறையில் பயன்படுத்துவது தமிழுல கின் கடமையாகும். எழுத்தாளர் சுதாராஜனக்
குப் பாராட்டுக்கள்.
மல்லிகை ஆகஸ்ட் 2011 $ 50

ஆ G
ஒல்ல ទ្រខ្សន៍ g៩៤វិទ្យុទ្រ
- ஆனந்தி
மாதவி உள்ளூரச் சிதைந்து போகாத ஒரு தனிக்கம்பீரத்துடன், கட்டிலின் மீது நிலை தளும்பாது அமர்ந்திருந்தாள். எப்போதுமே நிலைதவறாத, அறிவு சார்ந்த விழிப்புடன் திகழ்வதால், அவளின் உயிர் வார்ப்பான உள்மனதையே பிரதிபலிப்பதாய், அந்தக் கம்பீரம் அவளிடம் ஒரு மறைபொருள் உண்மை ஒளி போல், மின்னி ஒளிர்ந்தது. அவளுக்கு இப்போது கல்யாணக் களை கட்டுகிற நேரம். அவள் கண்கள் கனவு லயித்துக் கிடப்பது போல், இறுக மூடியிருந்தன. பொதுவாக, அவளுக்குக் கனவுகளே வருவதில்லை. கனவென்பது உயிரோட்டமான வாழ்வின் நினைவுப் பிரக்ஞைக்கு அப்பாற்பட்ட தெளிவற்ற ஒரு காட்சிச் சுவடுதான். நேர்முகமாக வாழ்க்கையின் யதார்த்த அனுபவங்களைப் பெறும்போது கூட, அவள் அதில் உணர்ச்சி வசப்பட்டு, இயல்பான ஆளுமை மங்க எடுபடுவதில்லை. அப்படியிருக்கக் காட்சி மெய்யில்லாத கனவு மயக்கம் எங்கே எடுபடும்.
அவள் அக்கனவுகளுக்குள் வசப்படாத புறம்போக்கு நிலையிலேயே இன்னும் இருந்தாள். அப்படியென்றால் அந்த மூடிய கண்கள்...? சும்மாதான் அதை அவள் மூடிவைத்துக் கொண்டிருந்தாள். அறைக் கதவு திறக்கிற சப்தம் கேட்டு, விழித்துப் பார்த்தாள். அம்மா உள்ளே வருவது தெரிந்தது. நாளைக்கு வருகிற சங்கதியை நினைத்து, அவள் பரபரப்புக்குள்ளாகியிருந்தாள். கல்யாணம் நல்லபடியாக முடிய வேண்டுமென்ற, கவலை அவளுக்கு. மாதவியின் கல்யாணம்தான். நாள் அவள் இன் னொருவன் மனைவி. அந்த இன்னொருவன், புது மாப்பிள்ளை எப்படியிருப்பான்? வெறும் ஊகமாய்க்கூட அதை அறிய முடியவில்லை. அப்பா விசாரித்து அறிந்த அளவில், அவன் சுத்தத் தங்கமென்று கேள்வி.
மாதவி எல்லா நிறைவும் பெற்று நன்றாக இருப்பாள். அவளுக்கு ஒரு குறையும் வராது. வரக் கூடாது. அதெப்படி உறுதியாக நம்புவது? நன்றாகப் பழகிய உறவே சில சமயம், கழுத்தறுத்து விட்டுப் போகிறது. வரப்போகிறவனோ, முழுவதும் அறியாத ஒரு புது மனிதன். எதிர்முரணான துருவத்தில் இருந்து வருகிறவன். இதிலே ஒத்த பண்பு இருக்குமென்று எப்படி நம்புவது? இதிலே உண்மையான மாதவியின் ஒளிவு மறைவற்ற அன்புதான் எடுபடுமா? ஒன்றும் புரியவில்லையே.
மல்லிகை ஆகஸ்ட் 2011 * 51

Page 28
அம்மாவுக்கு வயிற்றைப் பிசைந்தது. மாதவி இன்னும் காலையிலிருந்து ஒன் றுமே சாப்பிடவில்லை. நாளைக்குக் கல்ய ாண ஆரவாரத்தில் அவளுக்குப் பசி எடுக் காது. இப்போது சாப்பிட்டால்தான் உண்டு. அம்மா கையோடு சாப்பாட்டைக் கொண்டு வந்திருந்தாள். ஒவ்வொரு உருண்டையாகக் குழைத்துக் கொடுக்க ஆரம்பித்தாள். மாதவிக்குத்தான் இறங்க மறுத்தது.
'அம்மா! எனக்குப் பசிக்கேலை.
விடுங்கோ’
“இன்று ஒருநாள் தானே. நாளைக்கு நீ வேறு இடத்தில்தானே.”
"அப்ப திரும்ப வரமாட்டேனா?”
"ஆருக்குத் தெரியும்?”
என்ன அம்மா இப்படிச் சொல்லி விட்டாள்? கல்யாணமென்றால், வெறும் காட்சிப்படுத்தல் மட்டும்தானா? இந்தச் சடங்கு, வேள்வி, கூறையும் தாலியுமான காரியங்கள். அத்தோடு முடிந்ததா வாழ்க்கை? இல்லையே. களத்திலே இறங்கி, அனுபவித்தால்தானே வாழ்க்கை யென்றால் என்னவென்று புரியும். மாதவிக்கு இப்பொழுதே ஆயாசமாக இருந்தது. கண்ணைச் சுழட்டியது. ஒளி பளிட்டபடி, அவன் நினைவு விளிம் பிலே தோன்றினான். அவன் அக்கரையில் நின்று வாவென்று அழைப்பது போல்
உணர்ந்தாள்.
அவனை அந்த நந்தனை ஒருமுறை தான் பார்த்த ஞாபகம். எழுத்தன்று பெரிய சுற்றம் சூழ வந்திருந்தான். எத் தனை அழகு அவன். வாட்டசாட்டமான
கம்பீர அழகு அவனுடையது. மாதவி அவனுக்குத் தோள்வரை கூடத் தேற மாட்டாள். அதிலும் அவனைப் போல், அதிக வெள்ளையில்லாத சுமாரான அழகு. அவளைக் கூடுதல் பளபளப்புத் தேவதையாகக் காட்ட நேற்று முழுக்கப் பேஷியல் செய்தார்கள். அவளுக்கு அதில் இஷ்டமில்லை. அப்பாவிடம் முறையிட் டுப் பார்த்தாள். அவர் ஒரு அனுபவ ஞானி. வாழ்க்கையைத் தெளிவாகப் புரிந்துகொண்டிருக்கிற கண்ணோட்டத் தில், ஆத்மார்த்தமாக, நிறைய விட யங்கள் சொல்வார். அவள் கேட்பாள்.
’அப்பா, நான் இயல்பாகவே இருந்து விடுகிறேனே. இந்த வெளிப் பூச்சு, மாய அழகு அவசியமே? சொல்லுங்கோ.”
”உனக்கு அவனைப் பிடிச்சிருக்கு. அதுபோல் அவனுக்கும் உன்னைப் பிடிக்க வேணுமே. இதுக்கு கூடுதல் ஈர்ப் பான புற அழகு முக்கியமல்லே.”
"பிடிக்காவிட்டாலென்னப்பா? நான் எப்படியோ இருந்திட்டுப் போறனே. இதை நான் ஒரு சவாலாக எடுத்துக் கொள்கிறேனே?”
"வாழ்க்கையே சவாலானால் உன் நிலைமை என்னவாகும்? நீ வாழ வேண்டும் மகளே.”
"அப்ப இதுக்கு என்னதான் முடிவு?
”நீ அவனுக்குப் பிடிச்ச மாதிரியாக வேணும். அதுக்குத்தான் இதெல்லாம். நீ நல்லபடி வாழவேணும்.”
“என்னவோ நடக்கட்டுமப்பா! நான் என்ரை இருப்பைப் பற்றி யோசிக் கிறன்?”
மல்லிகை ஆகஸ்ட் 2011 தீ 52

அவளுடைய இருப்பு என்ன? எதையோ யோசித்து மனம் குழம்பி அவர்
சொன்னார்,
”கல்யாணமென்கிறது விளையாட் டில்லை. ஏதோ செய்து பார்ப்பம். சரி வந்தால், உன்ரை அதிர்ஷ்டம். இதுக்கு மேலே பேச என்ன இருக்கு?
நந்தனின் அப்பா கடும்போக்காளர். அவர் வைத்ததுதான் சட்டம். முகூர்த்தம் முடிந்து, முதலிரவை மணமகள் வீட்டி லேயே வைக்க வேண்டுமென அவர் கூறியிருந்தார். அதற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. நந்தனுக்கு கல்யாண மாகாத வயதில், ஒர் அக்கா இருக்கிறாள். அப்படியிருக்க ஏன் இந்தக் குளறுபடி? முறைமை தவறிய கல்யாணம்? அவருக் குக் காசு முக்கியம்? பெண் வீட்டிலிருந்து ரொக்கமாகச் சீதனம் வருகிறதே. இதற்கு மாதவியே பலிக்கடாவாக்கப்பட்டிந்தாள்.
முகூர்த்தம் முடிந்து கால்மாறுவதற் காக மாதவி நந்தனுடன் ஊர்வலம் வந்து, அவன் வீட்டில் இறங்கும் போது இருட்டி இடறிற்று. வெறும் மண்ணெண்ணெய் விளக்குத்தான். அதிலும் குப்பி விளக்கு. மிகவும் வறுமைப்பட்ட குடும்பச் சூழல் அவர்களுடையது. தகப்பன் வெறும் புகையிலைத் தரகர்தான். பத்துப் பிள்ளை கள். ஆண்பிள்ளைகளில் தலைமகன் நந்தன்தான். அவனை நம்பியே அவர்கள் குடும்பம் இருக்கிறது. கச்சேரியில் கிளார்க் வேலை அவனுக்கு. சொற்ப வருமானம்தான். இந்த லட்சணத்தில் மாதவி ஒரு வேண்டா விருந்தாளிதான்.
அவள் களையிழந்த முகத்துடன் கரை ஒதுங்கி நின்றிருந்தாள். அவளு
டைய வருங்கால மாமனார் திருமணப் பரிசாக ஒர் ஐநூறு ரூபாவை, அவர் கை யில் திணித்தார். வாங்கியது மட்டுந்தான் அவளுக்கு ஞாபகம். வரும்போது மறந்து போய்க் கட்டிலின் மீது வைத்துவிட்டு வந்துவிட்டாள்.
முதலிரவன்று அபசகுனமாக ஒரு நிகழ்ச்சி. அவன் அவளுடன் அதைக் கொண்டாடுவதற்காக அறைக்குள் தனிமையில் இருந்தபோது, திடீரென்று கேட் வாசலில் கார் வந்து நிற்கிற சத்தம் கேட்டது. அது என்னவென்று பார்ப்பதற் காக கதவைத் திறந்துகொண்டு அவசர மாக அவன் வெளியே போனான். அவள் பின் தொடர்ந்தாள். அப்பா அதை வேடிக்கை பார்க்க வாசலருகே வந்து நின்றிருந்தார். அவர்கள் எதிர்பாராத வித மாகக் காரிலிருந்து ஒரு பட்டாளமே இறங்கிற்று.
அவனுடைய அம்மா மட்டும் பிள்ளைகளெல்லோரையும் கூட்டிக் கொண்டு தனியாகப் புறப்பட்டு வந்திருந் தாள். அவள் முகம் பேயறைந்து கிடந் தது. அவர்கள் உள்ளே வந்ததும் வழி மறித்து அவன் கேட்டான்,
“என்னம்மா இந்த நேரம் வந்திருக் கிறியள்?
"அங்கை, கொப்பர் பெரிய சண்டை யாய் கிடக்கு. துணிமணியெல்லாம் எரிச் சுப் போட்டார். நீதான் வந்து, அவரைச் சமாதானப்படுத்த வேணும்.”
“என்ன சொல்லுறியளம்மா? இந்த நேரத்திலை நாங்கள் வர ஏலுமே?”
மல்லிகை ஆகஸ்ட் 2011 & 53

Page 29
”அப்ப அடிபட்டு எங்களைச் சாகச் சொல்லுறியே? எல்லாம் உன்ரை மனுவி செய்த வேலை. அந்தாள் குடுத்த காசை இப்படி எறிஞ்சு போட்ட வந்திட்டாளே. எல்லாம் நீ சொல்லித்தானாம். இப்பபே இப்படியென்றால், பிறகு என்ன நடக்குமோ என்ற பயம், அவருக்கு வந் திட்டுது. நீ இல்லாமல் அங்கை ஒன்றும் நடக்காது.”
சரிதான். இப்பவே புயல் கிளம்பி விட்டது.
சாத்தானைக் கண்டு பயந்து, ஒடுகிற நிலைமையா அவளுக்கு? காசை மறந்து விட்டு வந்தது, அவள் குற்றம்தான். அதற் குப் போய், இவரை ஏன் சந்தேகிக்கிறார்? இது எங்கே போய் முடியுமோ? தான் சாத்தானை உள்வாங்கிக் கொண்டிருப்ப தாக, அவள் பீதியுடன் உணர்ந்தாள். நன்மையே ஒழிந்துபோன மாதிரி இருட் டிலே தான் தனித்து விடப்பட்டிருப்பது உணர்வு தட்டிற்று. இந்த இருட்டை எப்படி ஒழிப்பது? வறுமை யிலே செல்லரித்துப் போன இருட்டு அது. அப்படி இருட்டு சூழ்ந்தால், சாத் தான்களே தலையெடுக்காமல் வேறென்ன செய்யும். முதலிரவன்றே, இப்படியொரு அவப்பொழுதா? இதை எங்கே போய் முட்டிக் கொள்வது? இவ
போல,
ரும் எப்படி மனம் மாறுவாரோ தெரிய வில்லை. தெரியாமல் செய்த ஒரு
சின்னத் தவறு.
“எப்படிப் பூகம்பமாய் வெடித்துப்
பூத மாய் கிளம்பியிருக்கிறது. நானென்ன
செய்வேன்? அவன் கேட்டான்.
“என்ன முழிக்கிறாய்? உனக்குத் திமிர். எல்லாம் பணத் திமிர். நான் சொல் லியே, இதை நீ செய்தனி? சொல்லு.
”இல்லை. நித்திரைக் கலக்கத்திலை, ஏதோ தெரி யாமல் நடந்து போட்டுது.”
என்ரை பிழைதான்.
"இதை அங்கை வந்து சொல்லு.”
முதலிரவாக வேண்டிய நேரத்தில் என்னவொரு அவச்சாவு. இதிலே மன மொழிந்து போன விரக்தி அவளுக்கு மட்டுந்தான். அவன் கொம்பு முளைத்த ஆண்மகன். அப்பா சொல் கேட்டு, எது வும் செய்யக்கூடிய நிலை அவனுக்கு. அப்படித்தான் அவன் இருக்க முடியும். அவனின் வம்சப் பெருமை, சாத்தானின் வழிவந்த கோலம். ஒரு சாத்தானை எதிர் கொள்ள நேர்ந்த துர்ப்பாக்கியத்தால், அவள் வெகுவாக இடிந்துபோய் இருந் தாள். முதல் நாளே, அவள் புனிதத்திற் குச் சோதனை வந்த மாதிரி, அப்பா முன்னிலைக்குப் போய்த் தீக்குளிக்க வேண்டுமாமே அவள். என்னவொரு வக்கிர நினைப்பு. என் ஆத்மாவுக்கே சவால் விடுகுழரிற மாதிரி, என்னவொரு பிற்போக்குத்தனம். இந்தச் சாத்தானையே ஜீரணித்து, ஜீரணித்து எனக்குள்ளும் சாத்தான் கிளம்பினால், என்ன செய்வது? வேண்டாம், அப்படியொரு பயங்கரம் நேரவே கூடாது. அதற்குப் பதிலாக இந்த முதலிரவே இல்லாதொழிந்து போகட் டும். இரவுகள் விடியாமலே, என் வாழ்க்கை விடியட்டும். இது என் வயிற்றுக்காக, வாழ்வின் பிறப்புக்காக,
மல்லிகை ஆகஸ்ட் 2011 * 54

பேராசிரியர் க.சிவத்தம்பி அவர் ஒரு களின் மரணச் செய்தி கிடைத்த போது, முதலில் தோன்றிய எண்ணம், தமிழில் ) இவ்வாறு ஆளுமை பொருந்திய ஒரு சகாப்தத்தின் அறிஞரை இனி மேல் பார்க்க முடியுமா? என்பதாகத்தான் இருந்தது. கடந்த அரை நூற்றாண்டின் தமிழ் ஆய்வுத் துறையில் அவரது, பங்களிப்பு செலுத்தாத ஆய்வு நிறைவு என்று ஏதாவது உண்டா? தமிழறிஞர் கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம் எழுதப் (பேராசிரியர் கா.சிவத்தம்பி படவில்லை என்றால், தமிழின் தகுதி என்ன என்பது உலகத்திற்கே தெரியா அவர்களின் மரணத்திற்கு மல் போயிருக்கும். தமிழை உலக இந்தியக் கம்யூனிஸ்ட் அளவில் எடுத்துச் சொல்ல வேண்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் ਫਰ தமிழ் ಡಿ...
L16ზა60)Lp நதாலதான, அதனை சாத குழு தனது இரங்கலைத் யப்படுத்த ಇಂr தமிழின் ஆய்வுகளை தெரிவித்துக் கொள்ளுகின்றது.) உலக அளவில் சர்த்தியப்படுத்திக் காட்டி
யவர்தான் நமது பேராசிரியர்.
- சி.மகேங்கிான்
ઈી.Lo(8 ந்திர பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்
துணைச் செயலாளர் தமது 79ஆம் வயதில் கொழும்பிலுள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி. தனது இல்லமான தெவுநிவளை வெண்ட வர் பிளேஸ் என்னும் இடத்தில் கால மானார். த.பி.கார்த்திகேசு, வள்ளியம்மை ஆகிய தம்பதியினருக்கு, கரவெட்டி என்னும் இடத்தில் இவர் மகனாகப் பிறந்தார். இவர் தந்தை கார்த்திகேசு அவர்கள் சைவப்புலவர். பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் துணைவியார் பெயர் ரூபாவதி. இவர்களுக்கு மூன்று பெண் மக்கள் இருக்கின்றனர். ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் விக்னேஷ்வரக் கல்லூரியில் கற்ற இவர், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டத்தை யும், இதன் பின்னர் இதே பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றார். இவரது ஆராய்ச்சிக் கல்வி, பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் அமைந்தது.
1978 முதல் 17 ஆண்டுகள் யாழ். பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணி யாற்றினார். இதன் பின்னர் மட்டக்களப்பிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் கெளரவப் பேராசிரியராகப் பணியாற்றினார்.
தமிழகத்திலுள்ள தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்,
மல்லிகை ஆகஸ்ட் 2011 * 55

Page 30
சென்னைப் பல்கலைக்கழகம் போன்ற வற்றில் இவருடைய ஆய்வு பங்களிப்பு முக்கியமானதாகும். இங்கு வருகைப் பேராசிரியராகவும் வருகை தந்து சிறப் பித்துள்ளார். இங்கிலாந்து, ஜெர்மனி முத லான நாடுகளின் புகழ் மிக்க பல்கலைக் கழகங்கள் பலவற்றில் வருகைப் பேரா
சிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
பேராசிரியர் சிவத்தம்பி, தமிழின் ஆய்வுத் தனிதனித் தன்மைகளை உலக அளவில் விவாதப் பொருளாக மாற்றியவர். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் அவருக்கு அமைந்த இவரால் இதனை G & մյա முடிந்தது. பேராசிரியர் சிவத்தம்பியின்
Կ6Ն 60» լOun 6ն,
வெற்றிகரமாகச்
மரணம் உலக அளவில் தமிழுக்கான ஆய்வு அரங்கில் ஒருவித வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. புதிய தலைமுறை யினர், இந்த இடத்தை இட்டு நிரப்புவதற் கான தங்கள் பணியை உடன் தொடங்கு வதுதான் அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்க
Աpւգսյւb.
சென்ற நூற்றாண்டின் அறுபது களில், இலங்கைத் தீவில் பொது வுடமைத் தோட்டத்தில் பூத்த இரண்டு புகழ் மிக்க செம்மலர்களாக இருவரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அதில் ஒருவர் கைலாசபதி. மற்றவர் சிவத்தம்பி. இரு வரின் அறிவுசார் செயல்பாடுகளும் விரிந்த எல்லைகளைக் கொண்டவை. பல் கலைக்கழகங்கள், பட்டங்களை மட்டும்
பெற்றுச் செல்லும் இடங்கள் என்ற நிலை
யிலிருந்து, சமூக மாற்றத்திற்கான கருது கோள்களைக் கொண்ட மாணவ தலை முறையை உருவாக்கும் இடம் என்ற அளவில், இவர்களது ஆசிரியர் பணி அமைந்திருந்தது.
யாழ். பல்கலைக்கழகத்தில் இவர் களிடம் பயின்ற மாணவர்கள், இன்று உலகின் பல பாகங்களில் விரிந்து வாழும் தனிச் சிறப்பைப் பெற்றுள்ளார்கள். இவர்கள் அனைவரையும் உற்றுக் கவனித்தால் இந்தப் பேராசிரியர்களின் சிறப்பு எத்தகையது என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். அன்றைய காலத்தில், பல்கலைக்கழகப் பணியில் தொடர்ந்து கொண்டே நான் ஒரு பொது வுடமைக்காரன்தான் என்று இவர்களால் வெளிப்படையாகவே கூறிக்கொள்ள முடிந்தது. அந்த அளவிற்கு ஆளுமை மிகுந்தவர்கள். இரட்டையர்கள் என்று அழைக்கப்பட்ட இவர்களில் கைலாசபதி யின் மறைவுக்குப் பின்னர், பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் தன்னுடைய பணி யைத் தொடர்ந்தார்.
தமிழ் சமூகத்தின் தேக்க நிலை உடை பட வேண்டும் என்பதில் இவருக்கு மிகுந்த அக்கறை இருந்தது. ஒருபுறம் பழம் பெருமைக்குள் தமிழை மூழ் கடிக்கும் முயற்சிகளும், மறுபுறம் தமிழ் தனித்துவத்தையும், ஒரு தொன்மையான பண்பாட்டு அடிப்படைகளையும் முற்றாக நிராகரிக்கும் போக்குகளும் ஒருவிதமான தேக்க நிலையை இங்கு உருவாக்கி வைத்திருந்தன. இதன் இயங்கு மையம்
4 மல்லிகை ஆகஸ்ட் 2011 & 56

எங்கு இருக்கிறது என்பதில் மட்டுமே பேராசிரியர் கவனம் செலுத்தி வந்தார். இவருடைய ஆய்வுக் களங்கள் ஒவ் வொன்றும் இதைப் பற்றியதாகவே அமைந்திருந்தது.
பேராசிரியரை நெறியாளராகக் கொண்டு, திராவிட இயக்கம் பற்றிய கருத்தரங்கம் ஒன்று 1980ம் ஆண்டு சென்னையில் நடைபெற்றது. முப்பது ஆண்டுகளுக்கு பின்னர் எவ்வாறான பிரச்சனைகளை திராவிட இயக்கங்கள் எதிர்கொள்ளப் போகின்றன என்று பேரா சிரியர், எதை முன் வைத்தாரோ அந்தப் பிரச்சினைகளை திராவிட இயக்கம் இன்று எதிர்கொண்டிருப்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. திராவிட இயக் கத்தைப் போலியான இயக்கம் என்று கூறும் கருத்துநிலையை அவர் முற்றாக நிராகரித்தார். தமிழ் சமூகத்தின் ஒடுக்கு முறை எதிர்ப்புப் போராட்டத்தில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பையும், சுயமரி யாதை இயக்கத்தின் பங்களிப்பு என்ன என்பதையும் இவரது ஆய்வுரை தெளிவு படுத்தக் கூடியதாக இருக்கின்றது. திராவிட இயக்கத்தில் பண்பாட்டுக்கு எதிரான எதிரிடை நடவடிக்கைகள் குறித்த இவருடைய ஆய்வுகளும் முக்கிய மானவையாகும்.
விடுதலைக்குப் பிந்திய தமிழக அரசி யலுக்கும், திரையுலகத்திற்கும் ஆழமான தொடர்பு இருக்கிறது. தமிழகத்தில்தான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த ஐந்து பேர் தமிழ் திரையுலகைச் சார்ந்த
வர்களாக இருக்கிறார்கள். அரசியலுக் கும், திரையுலகத்திற்குமான சமூகப் பின் புலத்தை தமிழ் சார்ந்த ஆய்வாக முதலில் தொடக்கி வைத்தவர் சிவத்தம்பி என்றுதான் கூறவேண்டும். மதுரை யில் நடைபெற்ற உலகத் தமிழ் மா நாட்டில் இதற்கெனத் தனியாக ஆய்வு அறிக் கையை முன்வைத்திருந்தார். அண்ணா, கலைஞர் காலம், எம்.ஜி.ஆர். காலம் என்று ஒவ்வொன்றின் தனித் தன்மைகள் பற்றியும் இவர் உருவாக்கிய ஆய்வுரை கள் மிகவும் முக்கியத்துவம் உடைய தாகும். தமிழ் பண்பாட்டில் சினிமா என்னும் நூல் இதில் குறிப்பிடத்தக்க தாகும்.
அடிப்படையில் மார்க்சீய ஆய்வாள ரான இவர், இலங்கை கம்யூனிஸ்டு கட்சி யின் அரசியல் தலைமைக் குழு உறுப் பினராக செயல்பட்டவர். 1970களில் சோசலிச நாடுகள் பலவற்றிற்கும் சென்று பல்வேறு கருத்தரங்குகளில் தன்னு டைய ஆழமான கருத்துக்களை முன் வைத்தவர். ஆரம்ப காலத்தில் இலங்கை கம்யூனிஸ்டு கட்சி, தமிழ் மக்களின் உரிமையில் மிகுந்த அக்கறை கொண்டி ருந்தது. 1956ம் ஆண்டு சிங்கள மொழி மட்டுந்தான் படிக்க வேண்டும் என்று சட்டம் வந்தபோது, ஒரு மொழிதான் என்று நீங்கள் அறிவித்தால், இந்த நாடு இரண்டாக உடைபடுவதை யாராலும் தடுக்க முடியாது. இரு மொழி என்று ஏற்றுக்கொண்டால் மட்டும் தான் நாடு ஒன்றாக இருப்பதற்கு சாத்தியம் இருக்
மல்லிகை ஆகஸ்ட் 2011 * 57

Page 31
கிறது என்று கம்யூனிஸ்டு கட்சி நாடாளு மன்றத்தில் பேசியது.
இதைப் போலவே இலங்கைக்கு 1948ல் பிரிட்டிஷ்காரர்களால் சுதந்திரம் வழங்கப்பட்டது. இதற்கு முன்னரே இலங்கை கம்யூனிஸ்டு கட்சி தமிழ் மக்களுக்கு சுய நிர்ணய உரிமையுடன் கூடிய மாநில உரிமை வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை இயற்றி இருந்தது. கால வெள்ளத்தில் இலங்கையின் இடது சாரிகள், தமிழ் மக்களின் உரிமைகளில் அக்கறையற்று செயற்படத் தொடங்கி னார்கள். பேராசிரியர் கொஞ்சம் கொஞ்ச மாக கம்யூனிஸ்டு கட்சியின் செயற்பாடு களிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். ஆனால் இந்தியக் கம்யூ னிஸ்டு கட்சியின் செயற்பாடுகளில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். இறுதிவரை கட்சியின் தலைவர்களோடு மிகுந்த தோழமை கொண்டிருந்தார். இலங்கை தமிழ் மக்களுக்கான தாயக உரிமைப் போராட்டத்திற்கான முழு ஆதரவையும் வெகுவாகப் பாராட்டினார். நியூசெஞ்சுரி புத்தக நிலையத்தோடு மிக வும் ஆழமான தொடர்பையும் கொண்டி ருந்தார்.
தான் பிறந்த மண்ணின் மீது ஆழ மான ஈடுபாட்டைக் கொண்ட இவர், யாழ்ப் பான சமூகம் பற்றிய எழுதிய நூல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. சாதி சமூகத்திற்குள் கட்டப்பட்ட ஒடுக்குமுறை அம்சங்களைப் பற்றிய இவருடைய ஆய்வு
கள் பலவும் சாதிய அடிப்படை கொண்ட
இந்திய சமூகத்தை விளங்கிக் கொள்ள பெரிதும் உதவி செய்யக்கூடியவை. சாதி ஒழிப்புப் போராட்டங்களில் இவரே நேரடி யாகப் பங்கேற்றுள்ளார். காலனிய காலத் தில் இலங்கையின் தமிழ் சமூகங்களுக்கு மத்தியில் ஏற்பட்ட பல்வேறு நிகழ்வுகள் இலங்கை தமிழ் மக்களுக்குச் சிறந்த தெளிவை உருவாக்கக் கூடியவை. இந் தக் கண்ணோட்டங்கள் மக்களிடம் சென் றடைய வேண்டும் என்று பெரிதும் பாடு
பட்டார்.
இலங்கைத் தமிழ் மக்களின் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்ற காலங்களில், உயிருக்கே ஆபத்தான சூழ்நிலையிலும் கொள்கையை விட்டுக் கொடுக்காமல் இவர் செயற்பட்டதை யாரும் எளிதாகக் கருதிவிட முடியாது. இலங்கை அரசாங்கத்தின் இனவெறிப் படுகொலை இவருடைய மனதை வெகு வாகப் பாதித்திருந்ததை நாம் அறிவோம். தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் பின்னடைவை அடையாமல் இருந்திருந் தால் இன்னமும் சிறிது காலம் இவர் வாழ் வதற்கான வாய்ப்புக் கிடைத்திருக்கும். உலகத் தமிழரின் தலைமகனை நாம் இழந்திருக்கிறோம். தோழர் ஜிவா, தொ.மு. சி.ரகு நாதன் பாரம்பரிய நீண்ட நெடும் பரப்பில் அவர் ஆற்றிய தமிழ்ப் பணிகள் அனைத்தும் நம்மைச் சுற்றிக் குவிந்து கிடக்கிறது. ஒரு சகாப்தம் போல் வாழ்ந்த தலைமகனுக்கு நமது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
(நன்றி : ஜனசக்தி - சென்னை)
மல்லிகை ஆகஸ்ட் 2011 * 58

சிறுகதைத் தொகுப்பு
புகலிடத்தின் குடும்ப நிஜங்களுக்கான ஆவணம்.
- மேமன்கவி
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற தமிழ் பேசும் மக்கள்ன் கலை இலக்கிய முயற்சிகள் பற்றிய இன்றைய கணிப்பீடு என்பது, அக்கலை இலக்கியங்கள் பேசுகின்ற விடயங்கள் இலங்கையைச் சார்ந்ததா? என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, அப்படி அவை இலங்கையை பற்றிய விடயங்கள் பற்றி பேசாவிடத்து, அவை இலங்கையைச் சார்ந்தவர்களால் படைக்கப்படுவதால் அவை ஈழத்து கலை இலக்கிய வளர்ச்சியில் ஒன்றிணைத்து பார்க்கலாம் என்றும் சொல்லப்படுவதுண்டு. ஆனால் எது எப்படியாயினும் அப்படைப்புகள் தமிழ் பேசும் மக்களால் படைக்கப்படுவதனால் அவை தமிழ் கலை இலக்கிய வளர்ச்சியில் வைத்து பார்ப்பது என்பது யாரும் ஏற்றுக்கொள்ளகூடிய ஒன்றாகும். இவ்வாறாக உலகின் பல பாகங்களில் புலம்பெயர்ந்த தமிழ் பேசும் மக்களால் படைக்கப்படும் கலை இலக்கியங்களால் உலகத் தமிழ் கலை இலக்கியம் தோன்றவும் அல்லது அவ்வாறாக அடையாளப்படுத்தவும் அப்படைப்புகள் உருவாகி இருக்கின்றன.
இத்தகைய சித்தனைகளை பின்புலமாகக் கொண்டு இலங்கையிலிருந்து கனடா வுக்கு புலம்பெயர்ந்த பூரீரஞ்சனி விஜேந்திராவின் ”நான் நிழலானால்” எனும் இவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பை அணுக வேண்டியிருக்கிறது. நாம் மேலே சொன்னது போல் இன்றைய புகலிட இலக்கியங்களின் பாடுபொருள் இலங்கையை விட்டுத் தூரம் போய்விட்ட நிலையில், மேற்குறித்த கேள்விகள் எழுவதற்கு சாத்தியம் உண்டு. ஆனால், புலம்பெயர்ந்த நிலையிலும், ரஞ்சனியின் கதைகளில் சில இலங்கை யைப் பற்றி பேசுகின்ற படைப்பு என்ற வகையில் ஈழத்து சிறுகதை வளர்ச்சியில்
மல்லிகை ஆகஸ்ட் 2011 * 59

Page 32
பங்காற்றும் பெண் படைப்பாளி என்ற நோக்கிலும் பார்க்க வேண்டி இருக்கிறது. ரஞ்சனி விஜேந்திரா ரஞ்சனி’ என்ற பெயரில் இலங்கை மற்றும் தமிழக, புக லிட பிரசுர களங்களில் எழுதி வருகிறார். பேராதனை பல்கலைக்கழக விஞ்ஞானப் பட்டதாரி.
பொதுவாக இத்தகைய நூல்களைப் பற்றிய மதிப்பீடுகளின் போது, அந்த நூலில் அமைந்துள்ள படைப்புக்களைச் சொல்லுமிடத்து, அப்படைப்புகளில் தென் படும் குறைகளைக் கூறி, அதன் பிறகு அப்படைப்புகளில் வெளிப்படும் சிறப்பு அம்சங்களை எடுத்துக் காட்டுவதுண்டு. ஆனால் நான் ரஞ்சனியின் இத்தொகுப்பில் அமைந்துள்ள படைப்புகளை பற்றிய என் வாசிப்பின் பொழுது எதிர்கொண்ட குறை களை முதலில் எடுத்து சொல்லலாம் என நினைக்கிறேன். அதற்குக் காரணம் ரஞ்சனி தன் படைப்புகளில் சொல்லியி ருக்கும் விடயங்களானது, அவ்விடயங் கள் இதுவரை காலம் சொல்லப்பட்ட விதத்திலிருந்து வேறுபட்ட முறைமை யில் அவர் சொல்ல முயற்சித்திருக்கும் காரணமாக ஈழத்து மற்றும் புகலிட பெண் படைப்பாளிகிளிருந்து மேற்குறித்த குறை களையும் கடந்து அவர் வேறுபட்டு நிற் கிறார் என்பதை அழுத்திச் சொல்வதற்கே அவரின் படைப்புகளில் நான் கண்ட குறைகளை ஆரம்பத்தல் சொல்லி இருக் கிறேன்.
குறைகள் என்கின்ற பொழுது,
1. இவரது பெரும்பாலான கதைகள் வேகமாக நகர்த்தப்படுவதனால் அவரை அறியாமலே சில கதைகளில் ஒரு வகை யான கட்டுரைத் தன்மை வந்துவிடுகிறது.
2. ஒரே கதையை மீண்டும் மீண்டும் எழுதுதல். அதன் காரணமாக வாசக அனுபவம் படித்ததை மீண்டும் படிகின்ற ஒரு சலிப்பு ஏற்படுகிறது. (அத்தகைய கதைகள் எவையென பின்வரும் குறிப்பு களில் தெரிய வரும்)
இத்தகைய குறைபாடுகளை கடந்து பார்க்குமிடத்து, அவரது ஒட்டு மொத்த மான கதைகள் என்ன சொல்ல முயல் கின்றன என பார்தோமானால்,
புகலிட வாழ்வுச் சூழலிலும், பிரிந்து வந்த மண்ணுடன் அறுக்க முடியாத தொடர்பின் காரணமாகவும் குடும்பம் என்ற கட்டமைப்பில் ஏற்படும் உரசல்கள், சிதைவுகள், முரண்பாடுகள், அதிர்வுகள் ஆகிவற்றை பல்வேறு வழிகளில் பேசு கின்றவையாக அவரது கதைகள் அமைந் துள்ளன. இந்த பார்வையின் அடிப்படை யில் இவரது படைப்புகளை உள்வாங்கும் பொழுது, அவ்விடயத்தை அவர் பின் வரும் வழிகளில் தன் கதைகள் மூலம் முன்வைக்கிறார்.
1. புகலிட வாழ்வில் குடும்ப கட்டமைப் பில் ஏற்படும் அதிர்வுகள், கணவன் மனைவிக்கிடையிலான பிரச்சினைகள், பெற்றோர் குழந்தைகள் இடையிலான முரண்பாடுகள், தாம்பத்திய வாழ்வில் ஆண் - பெண் இடையிலான போராட்டம், அடுத்து நல்ல அப்பாவை அம்மாவை தேடுகின்ற தேடல்கள் போன்ற விடயங் களை பேசுகின்றன.
அவ்வாறான கதைகளாக சொல்வது என்றால் புகலிடம் தேடி', 'நெருடல்கள், உறவுகள் ஊமையானால், "ஏமாற்றங் கள்', 'இழை ஒன்று அறுந்து போகின் றதா', 'முந்தி நிற்கும் சுவடுகள், நிசி
மல்லிகை ஆகஸ்ட் 2011 & 60

கிழித்த மென்குரல் போன்ற கதைகளைச் சொல்லலாம். இத்தகைய சூழல்களைக் கடந்து போராடி இதற்கு மேல் தாங்காது என்று முடிவுக்கு வருகின்ற பெண்கள் தான். இனி நாம் அடுத்ததாக சொல்ல போகும் பெண் விடுதலையைப் பற்றி பேசுகின்ற அல்லது அவ்வாறு செயற்படு கின்ற பெண்களாக மாறுகிறார்கள். அதே வேளை குடும்ப கட்டமைப்புக்குள் குழந்தை வளர்ப்பு என்று வருகின்ற பொழுது, அவர்களின் வளர்ப்பை பாதிக் கின்ற விடயத்தில் ஆண்களின் நடத்தை கள் பெரும் பங்கினை வகிப்பதை குறிப் பாக ரீரஞ்சனி உணர்த்த முயற்சிக் கிறார். அதாவது குடும்பம் என்ற அமைப் பில் பெரும்பாலாக அப்பா என்ற பாத் திரத்தின் நடத்தையானது குழந்தைகளின் வளர்ப்பில் பெரும் எதிர்மறையான தாக் கத்தை ஏற்படுத்துகிறது என்பதை உணர்ந்த ரஞ்சனி, ஒர் அப்பா பாத்திரத் தின் வழியாகவே (நெருடல் கள் ) அதனை எடுத்துச் சொல்லுகிறார். இதுவும் ரஞ்சனியின் கதைகளின் ஒரு சிறப்பு அம்சம் எனலாம்.
2. பெண் என்ற ஜூவி தான் எதிர் கொள்கின்ற அனுபவங்களின் மூலம் சுய pLD Lí565) a5u 65 (Self confidence) வாழ்வை எதிர்கொள்ளல்.
இத்தொகுப்பில் அமைந்துள்ள நான் நிழலானால்', 'எரிமனம் சிவந்து, நீயே நிழலென்று', 'இது அதே நிலவல்ல (நீயே நிழலென்று என்ற கதையும் இதே கதை தான்) போன்ற பிரச்சினையை நேரடியாக பேசுகின்ற கதைகள் எனலாம்.
ஆனாலும் தான் எதிர்கொள்ளும் அனுபவங்களின் வழியாகத் தம்மை தக்க வைத்துக்கொள்ளும் பெண்கள் என்
னும் பொழுது, இவரது பெரும்பாலான பெண்கள் மத்திய வயதினர் (அதாவது முதுமை நோக்கிச் சொல்லும் வயதினர்) என்பது இங்கு குறிப்பிடதக்க அம்சம். இந்த அம்சத்தை நான் குறிப்பிடதக்க அம்சமாக சொல்வதற்கு காரணம், பெண் என்ற ஜீவியின் உணர்வுகள் பிரிந்துக் கொள்ளப்படாமல் அவள் நிராகரிக்கப் படும் சூழல்களை பிறரின் அனுபவம் வழியாகவும். தன்னிலை அனுபவம் வழி யாகவும் அறிந்து கொள்ளும் அப்பெண் கள், பெண் விடுதலை என்பதை ஓர் இயக்கம் சாராது. சுயமான நிலையில் பெண் விடுதலையை பற்றி சிந்திக்கிற வர்காளகவும், அவ்விடுதலையைப் பிறக் கின்ற பெண் குழந்தைக்கு காதில் ஒதும் வேதமாக போதிப்பதும், வளர்ந்த பெண் ணுக்கு அதற்கான சுதந்திரத்தை வழங்கு வதன் மூலம் அவ்விடுதலையை மேற் கொள்கிறார்கள், இதுவே ரஞ்சனி கூறும் பெண்களின் தனித்துவம் எனலாம். அதே வேளை தமக்கான விடுதலையை குடும் பம் என்ற கட்டமைப்புக்குள் பட்டு மாய்ந்து, முதுமை வயதின் பொழுது இன்னொருவரில் தங்கி இராது (அது ஆண் என்றாலும் என்ன பெண் என்றாலும் என்ன) தன் சொந்த காலில் நின்று தன் சுயத்தைப் பேணத் தொடங்கும் பெண் களாகவும் இப்பெண்கள் திகழ்கிறார்கள். இதுவே ரஞ்சனி காட்டும் பெண்களின் விசேட அம்சங்கள் எனலாம்.
3. பிரிந்து வந்த மண்ணுடான தொடர் பும், சாதியம் மற்றும் கலாசாரத்தின் பேரிலான அறியாமைகள். இத்தகைய விடயங்களைப் பற்றி பேசுகின்ற கதை கள் என்று சொல்வதானால் விடை பெறும் கானல் தடம்’, நெற்றி வழி
மல்லிகை ஆகஸ்ட் 2011 3 61

Page 33
மனம்’, ‘வலி போன்ற கதைகளைச் சொல்லலாம். இக் கதைகளில் பிரிந்து வந்த மண்ணுடனான தொடர்பு மானசீகமாக தொடர்கின்ற ஒரு நிலையை வலி' என்ற கதை மூலம் உணர்த்துகிறார். அங்கு வாழும் நம் சொந்தங்கள் எதிர்கொள்கின்ற துயரங் களில் தாமும் பங்கு கொள்ள வேண்டும் என்ற உணர்வுடன் இயங்கும் மாந்தர் களும் புகலிட சூழலில் இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறார். நிசி கிழித்த மென் குரல் என்ற கதையில் ஒரு நல்ல அம்மா பற்றி பேசுகின்ற அதேவேளை தான் பிறந்த மண்ணிண் அவலத்தில் பங்கேற் கும் ஒரு பெண்ணை இக்கதையில் எடுத்துக் காட்டுகிறார். சீதனம் என்று தொடர்கின்ற (சொந்த மண்ணின் நினைவு களுடன் நகரும் கதை "நெற்றி வழி மெளனம் கொடுமைக்கு பலியாகி, பின் வந்த காலங்களில் அதை பற்றி யோசிப் பதும், அதிலும் ஒரு நல்ல அப்பாக வாழ முடியவில்லை என்ற ஏக்கத்தை அந்த கதையில் காட்டுகிறார். அதேவேளை என் வாசக அனுபவத்தில் அந்த அப்பா சிந்திக்கும் ஒர் இடம் இடறியது, அக் கதையில் இறுதியில் அவன் இப்படி நினைக்கிறான்.
மெளனம், சிக்குண்ட
வளரும் நேரத்தில் வழங்க வேண் டிய மரபுகளை, வழிமுறைகளைப் போதிக்காமல், என் வாழ்வு முடிந்து விட் டது என்ற தவிப்பில், நான் பெத்த பிள்ளைகளின் வாழ்க்கையை அழிச் சிருக்கிறேன்’ என யோசிக்கிறான். அது என்ன மரபுகள், வழிமுறைகள். அவனு டைய பிள்ளைகளின் வாழ்க்கையை எப்படி அழிச்சான்? கதையில் விபரம் இல்லை. அடுத்து சொந்த மண்ணிலே
சாதிய கட்டுபாட்டை மீறுகின்ற ஒரு தைரியமான பெண்ணையும் அவர் காட்ட தவறவில்லை. (விடை பெறும் கானல் தடம்) கலாசாரம், சடங்கு என்ற பெயரில் பெண் அலைகழிக்கப்படும் (அது புலம் பெயர் சூழல் என்ன? சொந்த மண் என்றால் என்ன?) நிலையையும், அதனை எதிர்க்கின்ற ஒரு தலைமுறை உருவாகி வருவதையும் சிக்குண்ட மனம' எனும் கதையில் அடையாளப்படுத்துகிறார்.
ரீரஞ்சனியின் கதைகளில் துணிச்ச லான கதை என்று சொல்வது என்றால் ‘பனியுலவும் தெரு நீளம் என்ற கதையை சொல்வேன். கே (Gay) என்ற ஒரு பாலி னம் பற்றிய கதை என்ற வகையில் அத் gᏏ60Ꭰ ᏧsᏓᏗ ] வகுப்பினரை பற்றிய ஒரு வெறுப்புணர்வுடன் அல்லாது அத்தகைய ஒருவரது நேர்மையை பற்றி பேசி யிருப்பது கவனத்திற்குரிய ஒரு வித்தி யாசமான முற்சியாக எனக்குப் படுகிறது
மொத்தத்தில் ரஞ்சனியின் கதைகள் புகலிட தளத்தில் நின்று, ஈழத்து பெண் படைப்பாளி ஒருவரின் பார்வையின் அடிப் படையில் குடும்பம் என்ற கட்டமைப்பின் உள்ளார்த்த பல்வேறு பிரச்சினைகளை பற்றி தன் அளவான கலையம்சத்துடன் தந்திருக்கிறார். அத்தகைய அவரது பணி யில் இதுவரைகால ஈழத்து பெண் சிறு கதைப் படைப்பாளிகளிலிருந்து தன்னை வித்தியாசமாக வெளிப்படுத்துவதற்கான எத்தனிப்பு அவரது படைப்புகளில் கணிசமான அளவில் வெளிப்படுகிறது என்ற வகையில் பூரீரஞ்சனியின் நான் நிழலானால்’ என்ற இச் சிறுகதைத் தொகுப்பு கவனத்தில் எடுக்க வேண்டிய ஒரு தொகுப்பு என்பதே என் கணிப்பு.
மல்லிகை ஆகஸ்ட் 2011 $ 62

கழதம்
Dல்லிகையைக் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாகவே நான் மாதா மாதம் ஆழ்ந்து படித்து வருகின்றேன்.
நான் பழைய சரஸ்வதி, வாசகன்.
அந்தக் காலகட்டங்களில் நீங்கள் சரஸ்வதியில் தொடராகச் சிறுகதைகள் எழுதி வந்த காலகட்டத்தில்தான் உங்களையும், உங்களது எழுத்துக்களையும் படித்து, தொடர்ந்து ரசித்து வரப் பழக்கப்பட்டவன்.
மெய்யாகச் சொல்லுகின்றேன், நீங்களும் மல்லிகையும் யாழ்ப்பாணத்தை விட்டு இடம்பெயர்ந்து போனது மிகப் பெரிய நஷ்டம் நம் பகுதிக்கு. இதற்கு நீங்கள் சொல்லப் போகின்ற சமாதானமும் எனக்குப் புரியாததல்ல,
இருந்தும் யுத்த நாசத்தால் புண்படுத்தப்பட்ட இந்த மண்ணில் நீங்கள் தனியாக மல்லிகையைக் கொண்டுத் தெருத் தெருவாக விற்றிருந்தாலே எமக்கெல்லாம் அது கொஞ்சம் ஆறுதலாக இருக்குமே!
உங்களுக்கு 85 வயது என்பதை, உங்களது பிறந்தநாள் கொழும்பில் கொண்டாடப்பட்ட செய்தியை பத்திரிகை மூலம் தெரிந்து கொண்டேன்.
நல்லாப் பழுத்துக் கனிந்த இலக்கியப் பழம் இது!’ என மனசுக்குள் மெல்லச் சொல்லிக் கொண்டேன். மெல்லிய சிரிப்புத்தான் வந்தது.
இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் ஆயிரம்தான் சொல்லட்டுமே, நீங்கள் தனியே வெறும் படைப்பாளி மாத்திரமல்ல, இத்தனை உள்நாட்டு யுத்த நெருக்கடிக் கஷ்ட காலத்திலும் கூட, அயராது நின்று மல்லிகையை மாதா மாதம் வெளிக்கொணர்ந்த துணிச்சல் மிக்க இலக்கியச் சாதனை ஒன்றே போதுமே
வயது போகப் போகத்தான் மனிதர்களுக்கே பற்பல நெருக்கடிகளும், உடல் உபாதை களும் இயல்பாகவே வந்து சேரும்.
நீங்கள் எத்தனை தூரம் விண்ணாதி விண்ணன் என்றாலும், கூட, இந்த இயற்கையின் இயல்பான தாக்கங்களுக்கு ஏற்றமாதிரி எதிர்காலத் திட்டங்களை, இப்போதே செயற்படுத்த முனையுங்கள்.
இத்தனை பாரிய இலக்கிய அநுபவமும் வயதும் முழுமையடைந்த உங்களுக்கு நான் இனிமேல் சொல்லித் தரவா வேண்டும்?
நல்லூர். ஆர்.ராஜேஸ்வரன் மல்லிகை ஆகஸ்ட் 2011 & 63

Page 34
மாறாக மதிய உணவைக் கன்ரீனில் சாப்பிட்டு விட்டு வந்து உட்காருகின்றேன். இன்றும் காரியாலய வேலைகள் குவிந்துபோய்க் கிடக்கின்றன. இந்த வருடத்துக்கான அரையாண்டு அறிக்கை தயார் செய்ய வேண்டும். கோவை களில் நிறைந்துபோய்க் கிடக்கும் வவுச்சர்களைச் சரிபார்த்து நிதிக் கிளைக்கு அனுப்ப வேண்டும். இவற்றுக்கிடையில் நாளைய ஆசிரியர் செயலமர்வுக்கு உரிய ஒழுங்குகள் எனத் தலைகொள்ளாத வேலைகள் காத்துக் கிடக்கின்றன.
இவை எதிலும் மனம் ஒருப்படாமல் குழம்பிப் போயிருக்கிறேன். எல்லா வற்றையும் மீறிக்கொண்டு வீட்டில் நடந்த சம்பவம் தான் துருத்திக்கொண்டு நிற்கிறது. வேதனை தந்தபடி இருக்கிறது.
சே. நான் அப்படி நடந்திருக்கக் கூடாது தான். அதை நினைக்க குற்ற வுணர்வு ஈட்டியாகப் பாய்ந்து ஆழங்கொள்கிறது.
அப்படி நிகழ்ந்து விட்டதற்கு எனது இயலாமையா? அல்லது சமூகத்தின் மீதான வெறுப்புணர்வா? எது காரணம்?
என்னைக் கரம் பற்றியதால் விளைந்த நெருக்கடிகள், சவால்கள், வேதனை களையெல்லாம் முகங்கொண்டு ஒக்கலித்துப் போனவள், அவள் யாரிடமும் அதிர்ந்து பேசி அறியாதவள்.
அப்படிப்பட்ட வாசுகியா இன்று.!
மல்லிகை ஆகஸ்ட் 2011 奉 64
 
 
 
 
 

இந்தச் சமூகத்தில் சொஸ்தமாக்க முடியாத நோய்க் கூறுக்காக, இப்படி உணர்ச்சிவசப்பட்டு, அவளைத் தண் டித்திருக்கத் தேவையில்லை என மனம் எண்ணிக்கொள்கின்றது.
சிறிய ஒரு பிரச்சினை. மனம் விட்டுப் பேசி தீர்மானத்துக்கு வந் திருக்கலாம். இதைப் போய் பூதாகர மாகப் பெருப்பித்து மன அவசத்தைத் தேடிக்கொண்டது தான் மிச்சம்.
மனச்சாட்சி நியாயம் கற்பிக்க முற்படுகிறது. காரியாலயத்தில் வேலைச் சுமை தருகின்ற அழுத்தத்தி லிருந்து விடுபடக் கிடைக்கின்ற ஒரே ஆறுதல் மதியவேளை வீடுபோய், முகம் மலத்தி நின்று வரவேற்கும் அவளைப் பார்த்துப் பேசி பசியாறி வருவது தான்.
மனதில் இதங்கொள்ளும் அந்த ஆறுதல் அரவணைப்பு இன்று கிடைக் காமல் போயிற்று. அந்தச் சம்பவம் மனதை ஆக்கிரமித்தபடி விரிகிறது.
மதியவேளை சாப்பிடுவதற்காக உச்சி வெயிலில் சைக்கிளை வலித் துக்கொண்டு வீடு நோக்கி வரு கிறேன். அதுவும் இறுகிப் போய் நகர முடியாமல் இதமற்று உருண்டு வரு கிறது. பசியில் வயிறு காய்ந்து உடல் வெடவெடக்கிறது. காது கன்னங்கள் அடைத்துக்கொண்டு வருகிறது. இரத் தத்தில் சுகரின் வீச்சு கூடியிருக்க வேண்டும். விதியில் பயணிப்பவர்கள், சாடைமாடையாக மங்கித் தெரிகிறார் கள். ஏதேனும் சாப்பிட வேண்டு
மென்ற அகோரப்பசி, பிரயத்தனப் பட்டுக்கொண்டு வீடு வந்து கிறேன்.
சேர்
வியர்வையில் நனைந்து போன உடைகளை மாற்றி விட்டு, மேல் கழுவி சாப்பாட்டு மேசைக்கு வரு
கிறேன்.
இளைய மகள் சுகி அப்போது தான் நேசரி வகுப்பிலிருந்து வந் திருக்க வேண்டும். கதிரையில் இருந்து கொண்டு ஏதோ படத்துக்கு நிறந்தீட்டிக் கொண்டிருக்கிறாள். வாசுகி குசினிக்குள்ளிருந்து எதிர்ப் படுகிறாள். வழமைக்கு மாறாக, முகம் இறுகிப்போய் களை இழந்து இருக் கிறது. என்னைக் கண்டவுடன் குற்றப் பத்திரிகை வாசிக்கத் தொடங்கி விடுகிறாள்.
‘போயும் போயும் இந்த இடத்திலை வீடு எடுத்திருக்கிறியள்.
என்ன..?
அதிர்ந்துபோய் அவளைப் பார்க் கிறேன்.
"ஏனப்பா. இப்ப என்ன நடந்து போச்சு!”
"இனி என்ன நடக்க வேண்டும்?”
”சொல்லுமன்” ஆர்வமாக கேட் கிறேன்.
“உங்கட செல்லங்கள் இப்ப பக் கத்தில் நிக்சன் வீட்டுப் பிள்ளைய
மல்லிகை ஆகஸ்ட் 2011 & 65

Page 35
ளோடை விளையாடப் போகுதுகள்.”
அதுக்கென்ன..? பிள்ளையெண் டால் விளையாடத்தானே செய் யுங்கள்.”
”அதுகள் வந்து சொல்லிய கதை களைக் கேட்க எனக்கே வெக்கமாக
இருக்கு.”
"ஏன் அப்படி என்ன கதைக் குதுகள்.”
“சீ... படு தூசனங்களெல்லே பாட மாக்கி வச்சிருக்குதுகள்’ அசூசை
யோடு கூறுகிறாள்.
'அவன் நிக்சன் குடிச்சுப் போட்டு வந்து கதைக்கிறதுகளை அப்படியே சொல்லுதுகள்.”
"ஆ. இது சின்ன விசயமப்பா. இதுக்குப் போய் கத்திக்கொண்டு நிற்கிறாய்.”
"நாங்கள் எப்படியும் வீடுமாற வேணும்.” மனதில் எதையோ மறைத் துக்கொண்டு பேசுவது விளங்குகிறது.
'காலமை பேச்சியம்மன் கோயில் தே ருக்குப் அங்கை பார்வதி மைச்சாள் என்னைக்
கண்டுவிட்டு பேசினவ.”
போனனாலெல்லே,
GrøðIGðra) III tið?
“இந்த ஏரியாவிலை கண்ட கண்ட சனங்களும் இருக்கினமாம்.
ஏரியா முழுக்க அவைதானாம். எனக்கு
வெக்கமாப் போச்சு.”
”சரி. வீடு மாறுவம். இப்ப எனக்கு பசிக்கிது. சாப்பாட்டை போடுமப்பா...' கழுவி கையில் வைத்துக்கொண்டு அமைதியாகக் கேட்கிறேன்.
கோப்பையைக்
'நீங்கள் எங்கை இதுகளைக் கவனிச்சால்தானை, வேலையால் வந் தால் வீட்டிலை இருக்கிறேல்லை. கூட் டம் அது இது எண்டு கண்டது களோடையும் திரியிறதுதானை வேலை.”
ஆவேசப்பட்ட அவளது பேச் சைக் கேட்டு அதிர்ந்து விடுகிறேன்.
“என்ன சொல்லுகிறாய்?"
“என்ன சொல்லுகிறது. உங் கடை ஊர் சுத்துற குணத்தை.”
“என்னடி நான் ஊர்கத்தி திரிகிற காவாலி மாதிரி.”
அந்தக் கணத்தில் கோபம் மேலிட பளார். பளார் எனக் கன்னத்
தில் கைநீட்டுகிறேன்.
அலுத்துக் களைத்து வந்த என்னை ஒரு குற்றவாளியைப் போல நிறுத்தி தோரணையில் பேசுவது தாங்க முடிய வில்லை.
வைத்து விசாரிக்கும்
மல்லிகை ஆகஸ்ட் 2011 率 66

விடே அதிரும்படியாக வாயில் வந்தபடி திட்டி விட்டு அலுவலகம் திரும்புகிறேன்.
இந்த வீட்டுக்கு வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. அடிக்கடி வீடு காரியமா? அதுவும் இப்ப இருக்கிற நிலைமையில் வீட்டுக்கு கிராக்கி அதிகம்.
மாறுவது என்ன இலேசான
போர் ஓய்ந்து சகஜ நிலைக்கு வந்ததுதான் தாமதம். கம்பனிகள், வங்கிகள், என்.ஜி. ஒ. க்கள் என போட்டி போட்டுக்கொண்டு இங்கை இதை விட, வடக்கு மாகாணத் திணைக்களங்கள் வேறு. வீடுகளில் இருக்கிற சனத் தையும் தடாலடியாக எழுப்பிவிட்டு
படையெடுக்கினம்.
சுளை சுளையாகப் பணம் சம்பாதிக்
கிறார்கள்.
சனம் தெருத் தெருவா வீட்டுக்கு அலையுதுகள். அட்வான்சும் இலட்சக் கணக்கில் ஏறிவிட்டது. சொந்த வீடுள் ளவன் பாக்கிய வான் என்கிற
நிலைமை இப்போ.
இந்த வீடும் ஒருவருட அவகாசத் தில்தான் வாடகைக்குத் தந்திருக்கிறார் கள். அட்வான்ஸ் கூட என்னிடம் வாங்கவில்லை. அதுவும், நான் தனது அண்ணன் திருவின் தோழன் என்கிற தகுதியின் கிடைத்திருக்கிறது.
அடிப்படையில்தான்
விளங்கிக்
கொள்ளாமல் பேசிவிட்டாளே.
இதையெல்லாம்
நேரம் நாலுமணியைத் தாண்டு கிறது. உருப்படியாக எதுவும் நடக்க வில்லை. எல்லாம் அப்படி அப்படியே கிடக்கின்றன. யன்னலூடாக பார்க் கின்றேன். எல்லோரும் வீடு திரும்பும் ஆரவாரத்தில் நிற்கிறார்கள். சிலர் வெளியேறிக் கொண்டிருப்பது தெரி கிறது.
நானும் பாடசாலையில் காத்து நிற்கும் மகளை அழைத்துவரப் போக வேண்டும். கதவைச் சாத்திவிட்டு வெளியேறுகிறேன்.
பாடசாலையை அண்மிக்க சைக் கிளை நிறுத்தி காலை ஊன்றுகிறேன். சுகன் ஓடிவந்து, பற்றிக்கொண்டு ஏறுகிறான்.
என் கைகளைப்
அவன் என்னைப் ஸ்பரிசித்த போது இயல்பு நிலைக்கு மீள்கிறேன்.
எனக்குள் கவிந்திருந்த இறுக்கம் மெல்ல மெல்ல நெகிழ்ந்து வருவது போன்ற உணர்வு எனக்குள் தலை தூக்குகிறது. மகன் அடிக்கடி "அப்பா' என விழித்து இன்று பாடசாலையில் நிகழ்ந்தவற்றைக் கதை கதையாகப் பேசிக்கொண்டு வழியில் வருகிறான்.
வீட்டை அண்மிக்க அண்மிக்க, அவளை எப்படி எதிர்கொள்வது என்
மல்லிகை ஆகஸ்ட் 2011 * 67

Page 36
கிற குற்றவுணர்வு மனதில் கிளர்கிறது.
தெம்பை வரவழைத்தபடி வாச லில் கால் வைக்கின்றேன்.
சுகன் எனது கையை விடுவித்துக் கொண்டு அம்மாவிடம் ஒடுகிறான்.
அவளும் ஆதரவாக அவனை அணைத்தபடி புத்தகப்பையை வாங்கு கிறாள்.
பின் அவனது பிஞ்சுக் கால்களை சப்பாத்துக்களை
வருடிக்கொண்டு, கழற்றுகிறாள்.
எனது சப்பாத்தைக் கழற்றிக் கொண்டு நிமிர்கிறேன்.
எதிரில் பாக்கியம் மச்சாள். சோபாவில் அமர்ந்தபடி பேப்பர் படித்துக் என்னைக் கண்டவுடன் பரபரத்தபடி,
கொண்டிருக்கிறாள்.
'தம்பி உங்களட்டைதான் அப்பன் வந்தனான்’ என பவ்வியமாகக் கூறு
கிறாள்.
6. ११
“என்ரை மகள் கவிதா குடும்பம் திருகோணமலையிலிருந்து மாற்றலாகி வருகினமாம். அவரும் உங்கடை ஒவ் வீசுக்குத்தான் வாறாராம். அவைக்
கொரு வீடு பாக்கோணும் தம்பி.
எங்கையெண்டாலும் பரவாயில்லை.
வசதியாயிருந்தால் சரி.”
எதையும் சாமர்த்தியமாகப் பேசி தன் காரியங்களை சாதித்து விடுபவள் என்ற அபிப்பிராயம் உறவுகளுக்குள் இருப்பதை உறுதிப்படுத்துவது போல, அவளது பேச்சில் இலாவகம், குழைவு வெளிப்படுகிறது.
"அதுக்கென்ன. ஏன் மச்சாள் இந்த வீட்டை எடுங்கோவ்ன்.' வேண்டுமென்றே அழுத்தமாகக் கூறி விட்டு வாசுகியைப் பார்க்கிறேன்.
அவள் தலையைக் குனிந்தபடி மெதுவாகச் சொல்கிறாள்,
'நீங்கள் என்ன கதைக்கிறியள் அப்பா! இந்த ஏரியாவிலை இருக் கிறதுகள் கண்ட கண்ட எளிய சனங்கள். இந்த இடம் மச்சாளுக்குப் பிடிக்காதெண்டு உங்களுக்குத் தெரி யாதே'
é { 33
"உதெல்லாம் ஆறுதலாகப் பேசு வம். முதலிலை மேலைக் கழுவிக் கொண்டு வாங்கோ. சாப்பிடுவம்,
s & 8 9% எனக்கும் நல்ல பசி.
மச்சாள் திகைத்துப்போய் இருக் கிறாள்.
மல்லிகை ஆகஸ்ட் 2011 & 68

- Gnal SSi Sala
ΣΚ. மறைந்த பேராசிரியர் சிவத்தம்பி அவர்களைப் பற்றி, உங்களது மெய்யான கருத்து என்ன?
அனுராதபுரம். நுஹகா
இ பேராசிரியர் சிவத்தம்பி, சிந்தனையாளன். கைலாசபதி அறிஞன். கரவெட்டி மண்ணுக்கே தனி உருத்தான தோண்டிதோண்டிக் கிழறிப்படித்தவற்றையும் அநுபவ அறிவையும் ஒப்புநோக்கிச் சிந்தித்துத் தன்னை தயார்நிலைப்படுத்தியவர், சிவத்தம்பி. புதிய பரம்பரையை உருவாக்கியவர்களில் முதல்வர், அவர். போகப் போகத்தான் அவரது இழப்பின் கனதி தெரியும்
அவர், இந்த மண்ணில் செய்துவிட்டுப் போன மகத்தான சாதனைகள் இரண்டு. ஒன்று சகோதரர் டானியல். அடுத்தது நான். பஞ்சமர் குலத்தில் உதித்தவர்களான எம் இருவரையும் இந்த மண்ணுக்கு இனங்காட்டி விட்டுப் போனாரே, ஈழத்தின் இலக்கிய வரலாற்றில் எவருமே செய்திருக்க முடியாத மாபெரும் இலக்கியச் சாதனை, இது! - வரலாற்றுப் பதிவும் கூட!
○ ○ ○ X தமிழக சினிமா நடிகர்களை அரசியல் அதிகாரம் நெருங்குவதற்கு அடிப்படைக் 65îTJGODTib Gr6ûTGOTro
மன்னார். உபைதுல்லாவற்
RS, வெகுசனப் பிரபலம்தான் அடிப்படைக் காரணம். எம்.ஜி.ஆரின் அரசியல் வரவு இதற்குக் கால்கோளிட்டது. அந்தப் பிரபலக் காலகட்டம் இனிமேல் தோன்றும் சினிமா பிரபலங்களுக்கு வரவே, 6lIIIgl.
இனிச் சும்மா பம்மாத்துக் காட்டுகிறவர்களெல்லாம் அரசியல் தலைவர்களாகி விடமுடியாது. மக்களின் நம்பிக்கையையும் அபிமானத்தையும் பெற்றவர்க்ள்தான் அரசியல் உலகில்பிரகாசிக்க முடியும்.
ぐ> ぐ> ○
மல்லிகை ஆகஸ்ட் 2011 & 69

Page 37
* மல்லிகை இதழின் முதலாவது
அட்டைப்படத்தை வரைந்து உதவியவர்
u umro ćelоuЈgi Guuuff orebroor?
நாச்சியாதீவு. நுஸ்கான்
இ யாழ்ப்பாணத்தில் ஓவியக் கல்லூரியில் முதலாவது ஆண்டு மாணவன் வரன்’ என்ற பெயரில் வரைந்து தந்த சித்திரம்தான் மல்லிகை அட்டையை அன்று முதன்முதலில் அலங்கரித்தது.
கொத்துக் கொத்தாகப் பூத்துக் குலுங்கும் மல்லிகைப் பூக்களின் சங்கமத் தொகுதிதான் ஓவியமாக அன்று முன் அட்டையை அலங் கரித்தது. அந்த முதல் ஒவியத்தைப் பெரிதுபண்ணி இன்றும் மல்லிகை நிறுவனத்தின் முன்பக்கத்தில் 56FETTI FILÓSCB, EGITf Giririr Erträs கக் காட்சிக்கு வைத்துள்ளேன்.
ぐ> ○ ○
ΣK எழுத்தாளர் எஸ்.பொ. ஈழத்து
இலக்கிய வானில் ஒரு தொடர் வியாதி
என்பது எனது எண்ணம். அவரை ஒரு சிலர், தாக்கிப் பிடித்து நிலை நிறுத்த
முனையம் போது, வேடிக்கையாக
வல்லவா இருக்கிறது?
LD66T6OTrrir. 3leopéesor
S இலங்கை இலக்கியவாதிகளிடையே பேரா சிரியர்களை விட்டு விடுங்கள். திரு. எஸ்.பொ. எனது இளமைக்காலப் பழைய கூட்டாளி. வார்த் தைகளுக்குள் அடங்க முடியாத அளவிற்கு என் மீது அந்தக்காலத்தில் அவதூறு பொழிந்துதள்ளி யவர். நான்பதிலேதும் எழுதியதுமில்லை. பேச்சில்
பேசியதுமில்லை. அட்டைப்படம் போட்டேன்!
சில ஆண்டுகளுக்குப்பின்னர், சென்னையில் அவர் ஒரு விழாவினை ஏற்பாடு செய்திருத்தார். தி.க.சி., அசோகமித்திரன், வல்லிக்கண்ணன் உட் பட என்னையும் அழைத்திருந்தார். நான் அவரது கைப்பட கடிதம் எழுதினால் வந்து கலந்துகொள்வ தாகப் பதில் எழுதினேன். சொன்னபடியே நேரிடை யாகவே எனக்கு கடிதம் எழுதிக் கூப்பிட்டார்.
நானும் மனப்பூர்வமாக அவரது விழாவில் கலந்துகொண்டு, சிறப்பித்தேன்.
திரு. எஸ்.பொ. தனது தனிப்பட்ட ஆற்றலி னாலும், இலக்கியத் திறமைகளினாலும் எங் கேயோ இருக்க வேண்டியவர். இது உண்மை. இள வயதில் தன்னை நெறிப்படுத்தி, ஒழுங்கு படுத்தி தனது ஆற்றலைச் செம்மைப்படுத்தாத காரணத்தால், அவர் இருக்க வேண்டிய இடத்தி லிருந்துதானாகவே ஒதுங்கிக்கொண்டார். இந்த மண்ணுக்குப் பெரிய இலக்கிய இழப்பு இது
○ ぐ> ぐ>
区 இன்றைய தமிழ்நாட்டு அரசிய லின் போக்கு - நோக்கைப் பற்றி என்ன கருதுகின்றிர்கள்?
புத்தளம். எஸ்.ஜெயந்தன்
& தமிழ்நாட்டில் இன்று அரசியலாநடக்கிறது? அரசியல் சடு-குடு விளையாட்டல்லவா நடைபெறு கின்றது.
காமராஜர், ஜீவா, நல்லகண்ணு, கக்கன், கல்யாணசுந்தரம் போன்ற மகத்தான தலை வர்கள் நடமாடிய அந்த மண்ணில், இன்று கருணாநிதியின் முழுக் குடும்பமல்லவா பணச் சடுகுடு விளையாட்டு ஒன்றை நடத்திவருகின்றது.
மல்லிகை ஆகஸ்ட் 2011 & 70

ஒன்றை மட்டும் நாங்கள் புரிந்து аранфgђlair($општip.
35LÊpos IDö56ir D&DLuiras(oa]r:1âba! 3°f யான தீர்ப்பையே முடிவில் கூறிவிட்டார்கள்!
○ ぐ> ○
X மல்லிகை ஓர் இலக்கிய ஆவணம். அதனை இந்த மண்ணில் இயங்கி வரும் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள், பொத நாலகங்கள் ஆகியவற்றிற்கு ஏதாவது 956njff ébigoj &F DJ GoocouTu9cio grupfäjé55 Té5 அனுப்பி வைததால் என்ன?
sourful b. சலீமா
x ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். மல்லி கையை நாம் அச்சிட்டு வெளியிடலாம். அதற்குத் தபாலில் சேர்க்கும் தபாற்தலைகளையும் எம்மால் அச்சிட முடியாதே புரிந்துகொண்டால் நல்லது.
○ ぐ> ぐ>
* உண்மையைச் சொல்லுங்கள். மல்லிகையை இத்தனை ஆண்டுக் காலம் தொடர்ந்து நடத்தவேன் என ஆரம்பகாலத்தில் நீங்கள் எண்ணிப் பார்த்ததுண்டா?
கேகாலை. எஸ்.ஈஸ்வரன்
& நான் மல்லிகை இதழை ஆரம்பிக்கும் கால கட்டத்திலேயே ஒரு முடிவுடன்தான் வேலைகளைத் தொடங்கினேன். விஜயபாஸ்கரனின் சரஸ்வதி இதழ்நின்றுபோன காலகட்டத்தில் அவருக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதியதாக ஞாபகம். எனவே, சும்மா ஒப்புக்காக மல்லிகைச் சஞ்சிகை வெளி
யீட்டை நான் ஆரம்பிக்கவில்லை. ஓர் அடிப்படை இலக்கிய நோக்கத்திற்காகவே நான் திட்டமிட்டு உழைத்தேன் - உழைத்து வருகின்றேன்.
ஒன்றை மட்டும் நீங்கள் புரிந்து கொள்ளுங் கள். சிற்றிலக்கிய ஏடுகளின் வரலாற்றில் IDiasa) is fair Lifiabaffi நானில்லாத காலத் திலும் விதந்து பேசப்படும். இது சர்வ நிச்சயம்!
○ ぐ> ○
ΣΚ. தமிழ்ச் சங்கம் அடிக்கடி மிகப் Glt Jrflu J SGuð5ðslu Já, Glgs'Lsr Gflupmé5ð5Gognr நடாத்துகின்றதே, அதைப் பற்றிய உங் a6omrgij ćelцSULSTпшLib Grobro orР
வெள்ளவத்தை, ஆர்.சிவதாஸன்
& நீண்ட நெடுங்காலமாகவே தமிழ்ச் சங்கத் துடன் இலக்கியத் தொடர்புகளைப் பேணி வருகின் றவன்,நான். சமீபத்தில் மூன்று நாட்கள்தொடர்ந்து நடைபெற்று முடிந்த திருவள்ளுவர் விழாவிலும் மூன்றாம் நாள் முடிவுவரை இருந்து அவர்களினது செயலை நெஞ்சார ரசித்து மகிழ்ந்துள்ளேன்.
இத்தனை தேசிய நெருக்கடிகளுக்கு மத்தி யிலும் தமிழ் மக்களைச் சோர்வடைய விடாமல், ஆரோக்கியமான மனநிலையில் பாதுகாத்து வரும் தமிழ்ச்சங்கத்தினர் அனைவரையும் நெஞ்சுநிறையப் LIETTITĽig DaffairGp3ör.
- மூன்றுநாள் விழாக்களும் உச்சம்!
○ ぐ> ぐ>
ΣX நீங்கள் ஏன் அந்தக் காலத்தி லிருந்தே உங்களுக்கென்றொரு புனைப் பெயரைச் சூடிக்கொள்ளவில்லை?
வல்வெட்டித்துறை. ச.சிழுநீஸ்கந்தராசா
மல்லிகை ஆகஸ்ட் 2011 & 71

Page 38
^இ அந்தக் காலத்தில் கொழும்பிலிருந்து சுதந்திரன் என்ற வாரப் பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது. அதன் ஆசிரியர் எஸ்.ரி.சிவ 5:TII35ïp. 256ï6),ffusif: f(ëTïDë. 613löfgPT சுக்கட்சித்தலைவர் செல்வநாயகம் அவர்களினது சொந்தப் பத்திரிகை.
அந்த வாரப் பேப்பரில், எஸ்.பொன்னுத் துரை புரட்சிப் பித்தன் என்ற பெயரிலும், நண்பர் டானியல் புரட்சிதாஸன் என்ற பெயரிலும், நான் புரட்சி மோகன் என்ற புனைப் பெயரிலும் எழுதி வந்துள்ளோம்.
இது நிற்க, ஒரு சிற்றிலக்கிய ஏட்டில் பல கட்டங்களில் பல்வேறு புனைப் பெயர்களில் எழுதி புள்ளேன். இதுவும் பத்திரிகைத் தேவைக்கு உட் LILLC.g5!
○ ぐ> ぐ>
X எந்தக் கட்டத்திலேயாவது நீங்கள் இந்தத் துறைக்கு வந்ததற்காக மனச் GFGSÜU 6łGooLögsögāJGdoTLTP
வவுனியா. ஆர்.தேவேந்திரன்
& யாழ் கோட்டைக்குள் ராணுவம் முடக்கப்பட்ட காலகட்டமது. அடிக்கடி ஷெல் கணைகள் ஊருக் குள் ஏவப்பட்ட காலம், ஒருநாள் சாயங்காலம் மல்லிகை இயங்கிவரும் அந்தக்குச்சொழுங்கைக் குள் இருந்துநானும் உதவியாளர் சந்திரசேகரும் இயங்கிக் கொண்டிருந்தோம்.
காதே செவிடுபட்டு விடும் ஒசையில் பக்கத்தே ஷெல் ஒன்று விழுந்து வெடித்தது. அவசர அவசர மாக இடத்தைக்காலிசெய்துவிட்டு, இருவரும் வீடு நோக்கிப்புறப்பட்டோம். அவர் மேற்குப்பாதையால்
சைக்கிளைத் திருப்பினார். நான் கிழக்குப் பக்க மாகச் சைக்கிளை உருட்டி வந்தேன்.
ஒழுங்கை முகப்பில் ராஜாதியேட்டர் மூலை. 22உடல்கள்தாறுமாறாகச் சிந்தித் சிதறிப்போய் இரத்த வெள்ளத்தில் காட்சி தந்தன. போர் (gpapa Tä d6TLöf.
இரவு தூக்கமே வரவில்லை. ஒரே மனச் சலனம். அடுத்தநாள் வாகனத்தில் அதே ஒழுங்கை முகப்பைத் தாண்டி, மல்லிகையின் படிக் கட்டுகளில் ஏறி, தினசரிக் கடமைகளை எந்தவித மான மனப் பேதலிப்புமின்றிச்செய்து முடித்தவன், நான்.
உலக வரலாற்றில் உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக அதிகமதிகமான நேரடி விலை கொடுத் தவன்தான், இந்த மல்லிகை ஆசிரியன்!
ぐ> ぐ> ぐ>
ΣK இன்றைய காலகட்டத்தில் இந்த மண்ணில் இருந்து எழுதிக்கொண்டி ருந்த கணிக்கப்படத்தக்க எழுத்தாளர் கள் பலர் இன்று பல தேசங்களிலும் பரந்த வாழ்கின்றனர். அவர்களுடன் DĚJe5 göės g5 Cb5JugUU TGOT Gg5 Tuffa5řT
26.doLTP
கண்டி. எம்.ரமேஷ்
ÀSÀI GITTLIET GlāFarp FIDJIÏD BIDg DairaMofar எழுத்தாளர்கள் பலரை நேரடியாகக் கண்டு கதைத்துள்ளேன். அவர்களுக்கோ அங்கு வாழ்க் கைப் பிரச்சினை, மொழிப் பிரச்சினை. புது மண் னில் ஒட்டி, உறவாடி, தினசரி வாழ்ந்து வரவேண் டிய நிர்ப்பந்த நிலைப்பாடு. இருந்தும் பலர் தொலைபேசியில் வாரா வாரம் தொடர்பு கொள்
NIETřebsit. absDBůLITĩabốir.
201/4, ருரீ கதிரேசன் வீதி, கொழும்பு 13 முகவரியில் வசிப்பவரும், மல்லிகை ஆசிரியரும், வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக, கொழும்பு விவேகானந்த மேடு, 193A, இலக்கத்திலுள்ள Lakshmi Printers அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.

நீங்கள் தரமான இலக்கியச்சுவைஞரா?
'மல்லிகைப்பந்தல் வெளியீடுகளைத் தொடர்ந்துபடியுங்கள் ہے نہ ہبہ وہ کYھ / 724 بھی ضاTسم سس۔
கடந்த ஆேண்டுக்ேகுல்ாகநங்ைேணச்சர்ந்த LCCTTCCCCLLLTTTLTTTLLLLLLL LTTTLLLLLLL LLMGMLTTS வருகின்றது மல்லிகைப்பந்தல் நிறுவனம்
燃 ல்லி கப்பந்தல் வெளியீடுகளை நீங்கள் வாங்கும் போது அதனது ஆதரவு மல்லிகை மாத இதழுக்கும் சுவறுகின்றது என்பதை ஞாபகத்தில் கொள்ளுங்கள்
மல்லிகைப் பந்தல் @gmap69&ຍຫົກ 232072t

Page 39
229-114, Santhosh Plazasíst floor, MainStreesoolombo11.