கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நீங்களும் எழுதலாம் 2008.07-08

Page 1
il_6) H6چ69 = g_HQ.65 ~్వస్త్ర క్రై "ఇg
தில்
 
 
 

[ܕܩܽܘܓ݂ܝܓ݂ ፲እሸዝ
مر
é.
歇
fନ୍ତୁ
鲁

Page 2
நீங்களும் எழுதலாம்-08
இருமாத கவிதை இதழ் யூலை-ஆகஸ்ட்-2008
ஆசிரியர் எஸ். ஆர்.தனபாலசிங்கம்
ALO 625) Laŭ ILI Vir Gyrfaits GM
தீபச்செல்வன் தீபன் ஏ.எம்.எம்.அலி பாரதிபுத்திரன் திக்கவயல் தள்மு நா.விஸ்வா 60086ᏙᏋx3II எம்.பீ.அன்வர் கனகிருஷ்ணராஜன் சூசை எட்வேட் தாமரைத் தீவான் ந.வினோதரன் பெரியஐங்கரன் க.அன்பழகன் ம.கம்வதி ஜெயதுகுலன் வி.கெளரிசங்கர் u.5'fuT கணேசமூர்த்திவினு லோ.ஜெயப்பிரதா ச.சிவகுமார் த.ஜெயசீலன் சூ.யுவன் ஜெயா தமிழினி சீனா.உதயகுமார் சுதர்ஷிகா எஸ்.ஆர்.தனபாலசிங்கம் த.ஜீவராஜ்
கவிதை இதழ்கள் மரித்து விடுகின்றனவேகலைவாதி கலீல்
அறிமுகக்ககுறிப்பு கவிதை பற்றிய சில கருத்தாடல்கள்நாச்சியாதீவு பர்வீன் கவிப்பூ ஒன்றின் மரணம் - முல்லை ஆழுதன் சுபத்திரன் கவிதை
வாசகர் கடிதம்
சஞ்சிகை அறிமுகம்
மூலமும் பெயர்ப்பும்
வடிவமைப்பு
எஸ். யசோதரன்
கே.எம். சிறிராம்,
ell" solú y Luió
ஓவியர். கே. சிறீதரன்
தொடர்புகளுக்கு, 'நீங்களும் எழுதலாம் 103/1 திருமால்வீதி, திருகோணமலை, 68 BIT ... (RL A: 026 2220398. E-maill:-in een kalisaya hoo.com
- 2 -

உற்பத்தி உறவும் கவிதைப்பயன் பாடும்
"உலக உணவுப்பொருட்களின் விலை 2012ம் ஆண்டுவரை தொடர்ந்து அதிகரித்துச் செல்லும் என உலக வங்கித்தலைவர் ரோபேட் சோலேலிக் எச்சரித்துள்ள நிலையில் உலக நாடுகள் LJ 6ò 6)ị tổ அதனை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் இலங்கை எதுவித திட்டமுமற்று போர்செய்வதிலேயே நாட்டமாக இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.
பாட்டு, கவிதை போன்ற கலைகள் மனிதனின் உணவு உற்பத்தியோடும் சமூக உறவோடும் நெருங்கிய தொடர்புடையவை. ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது' என்ற பாடலடி இதற்கோர் எடுத்துக்காட்டு.
மக்களை இயந்திரத்தனத்திலிருந்து விடுவிக்க கவிதை நல்லதொரு சாதனமாகும், அத்தோடு சிந் தையரினை ஒரு வழிப் படுத் தவும் , செம்மைப்படுத்தவும் வல்லது. அதே வேளை மொழியின் வளர்ச்சிக்கேற்ப அதன் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் பல்வேறு மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ளதாக கழிக்கவேண்டுமென மக்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்ற ஒரு ஆழ்நிலையில் மாற்றங்களை சரிவரப்புரிந்து கொண்டு படைக்கும் படைப்புக்களே மக்களை சென்றடையக்கூடியதாக இருக்கும். கூறியது கூறல்' போன்ற தவறுகளை தவிர்த்து பயன்மிக்கவையாக நமது படைப்புக்கள் அமையவேண்டும் அத்தோடு கவிதையில் புதிய பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்ளும் களமாக "நீங்களும் எழுதலாம்" அமைவதற்கு படை பாளிகளினதும் , வாசகர்களினதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்.
ஆம் நீங்களும் எழுதலாம்
அன்புடன் ஆசிரியர்.

Page 3
துண்டாடப்பட்ட சொற்கள்
0.
02.
தோல்வியின் வர்ணிப்பு நிரம்பிய
உனது குரல் எனக்கு கேட்க வேண்டாம்
துண்டிக்கப்பட்ட தொலைபேசிகளிலிருந்து எனது நகரத்தின் கண்ணிர் வடிகிறது
கம்பிகளின் ஊடாய் புறப்பட முயன்ற எனது சொற்கள் தவறி விழுகின்றன
மேலும் தோல்வி வருணிக்கப்பட்டு வரும் உனது குரல்
எனக்கு கேட்க வேண்டாம்
உனது கடிதம்
வந்து சேராமலிருந்திருக்கலாம்
எந்தக் கடிதத்தையுமே எழுதாமல் விட்டிருக்கலாம்
தபாலுறை நாலாய் கிழிந்திருந்தது முகவரிகளில் இராணுவம் முன்னேறிய குறியீடுகள் இருந்தன
நான் தேடி அலைந்தேன் கடிதம் எங்கும் வெட்டி மறைக்கப்பட்டிருந்த உன்னையும் உனது சொற்களையும்
மறைக்கப்பட்டிருந்த உனது சொற்களுக்கு
கீழாய் உனது முகம் நசிந்து கிடக்க தோல்வி வருணிக்கப்பட்டிருந்தது
தியச் செல்வன்.

அடிமைகள் நகரத்தின் தீபாவளி
இந்த அடிமைகளும் ஒரு தீபாவளி கொண்டாடினர்
வாகனங்கள் வீதியில் இறங்க நடுங்கிக் கொண்டிருந்தன ஒரு இராணுவ வண்டியின் நீளத்தினுள் முழு விதியும் அடங்கி நசிந்து கிடந்தது
நேற்றிரவு வெட்டி கொலை செய்யப்பட்டவர்களின் துண்டு துண்டு உடல்களும் சனங்களோடு வீதியில் ஒதுங்கி இருந்தன
அடிக்கடி அடிமைகள் நகரத்தினுள் கடல் நுழைந்து திரும்பியது
வீட்டிலிருந்து சனங்களை திறந்து வெளியில் விடுகிற சாவிக் காலை கறுப்பாகிக் கிடந்தது துண்டு துண்டாய் வெட்டி எறியப்பட்டு வீதியில் கிடந்தன குழந்தைகளின் தீபாவளி உடைகள்
அடிமைகள் நகரத்தில் தீபாவளி ஒன்று நடந்தது தான்
வெடிகள் தீர்க்கப்பட்டன ரவைகள் நிரம்பிய நகரத்தின் நடுவே குருதிப்புள்ளியிடப்பட்ட
.ങ്ങLടഞ്ഞുണ ബit திரும்பினர் சனங்கள் அடிவாங்கிப் போகிற சனங்களின் முதுகில் கிடக்கின்றன பலகாரங்கள்
வளைந்த சனங்களின் முதுகில் பீரங்கியைப் பூட்டி விடுகிறான் படையினன் இந்த அடிமைகள் குனிந்த படி தீபாவளி கொண்டாட அனுமதிக்கப்பட்டனர்.
தீபன்

Page 4
காதல் மெய்ப்படும்
பரியோ பசப்போ பகர்ந்த சொற்குன் தெரிவ தெதுவோ திண்ணமோ நொய்மையோ? அன்பி லூற்றோ அன்றேற் பாலையோ என்ப தறியா திருத்தலி லுள்ளேன்
ஊட்டம் மிகுந்த உனதிளஞ் சொற்களின் கூட்டம் என்னைக் கொஞ்சிய துண்மைதான் சிந்தை சிறப்பச் செப்பிய பதங்களில் உங்கள் கபடம் ஒளிந்துள தறிந்தனோ?
உன்னை நம்பிய ஒருத்திக் கேனோ பின்னை இந்தப் பெருந்துயர் தந்தாய் புழுவாய்த் துடிக்கும் பொழுதினை எனக்கு முழுதாய்த் தரமனம் முடிவெடுத் திட்டதேன்?
தேமாத் தமிழில் தினமும் சொன்னவை வேணாம் என இனி விளம்புதல் ஞாயமோ? ஏநாயே! என் இதயம் கடித்த நீ ஆணா? அலியா? அதுவும் இல்லையா?
- 6 -

உள்ளத் துடிப்பினை ஒவ்வொரு கணமும் சொல்லித் துடித்தெனை சூழ்ந்தாட் கொண்டனை கள்ள முடைய "கடையன்” என உனை வும்யான் எண்ணிய துண்டோ?
இக்கரும் புக்கு எக்கரும் பொக்கும் சொற்கரும் பூட்டிக் சுவையைத் தருகுதல் gbib5T 655LDT சதிபதி யாகுதல் எக்காலத்திலும் இன்பமாய் வாழ்தலே
கதியே நீயெனக் காலடி கிடந்தென் பதியே எனவுனைப் பணிந்து பயந்து நிதியே நின்றுன் நிழலில் தமக்கும் சதியே யானெனச் சந்ததம் நினைந்தேன்
ஒப்பிலா வாழ்வை உள்ளன் போடு தப்பா தமைந்திடும் தலைவ னாயிடின் சாவரை இருவரும் சந்தோஷ வாழ்வில் மேவிடும் காதலை மெய்ப்பிக் கலாமே! கிண்ணியா ஏ.எம்.எம்.அலி -
- 7 -

Page 5
அக்கினிக் குஞ்சுகளாய்..? அமைதிப் புறாக்கள் நாங்கள். அதற்காகவே பிறந்தவர்கள் நாங்கள். ஆதி மூலப் பறவைகளாய் உருவெடுத்தோம். அன்னை தமிழ் நிலத்திலேயே குச்சிகள் பொறுக்கி வந்து முற்றத்து மரங்களில் வசதிகள் பல பார்த்து வசந்த காலத்தில் உச்சிக் கிளைகளில் கூடுகள் பல கட்டினோம். குந்தி இருந்தோம். கூடிக் குலவினோம். கலவி இன்பத்தால் கனமுட்டைகள் இட்டோம். மிகவும் மெதுவாக முட்டைகள் மேலிருந்து இரவு பகலாக அமர்ந்திருந்து 9(560). DuJT35 அடை காத்தோம். குஞ்சுகள் பல பொரித்தோம். குஞ்சுகளையும் கூட்டிக் கொண்டு - பின்பு எமது நிலப்பரப்பெங்கும் எழுந்து சுதந்திரமாய்ப் பறந்து திரிந்தோம். அமைதியை அடிப்படையாகக் கொண்ட எங்கள் மேல் கழுகுகளும் பருந்துகளும் கறைகளையும் கனல்களையும் கக்கின. கக்கப்படும் நெருப்புக்கும் (H60DBU JITLJUBILD சுதந்திரங்களுக்கும் எதிராக நாங்களினி பாரதியின் அக்கினிக் குஞ்சுகளாய் ஆவேசம் கொண்டெழும்புவோம்.
-பாரதிபுத்திரன் -பாண்டிருப்பு
- 8

விசித்திரம்
இரண்டாவது உலக யுத்தம் இரண்டுபட்டது உலகின் பக்கம் முரண்டு பிடித்த ஹிட்லரின் கொலைகளால் அதிர்ந்தது உலகம்!
ஆனாலும் அணுகுண்டு ஜேர்மனி மீது (BLJTLČJUL (36) 366606)! போனால் போகட்டும் என்று போட்டார்கள் ஜப்பான் மீது
ஐரோப்பா மீது அணுகுண்டு போட்டால் வெள்ளைத் தோல்கள் கறுப்பாகக் கூடும் ஆதலின் போட்டனர் குண்டு ஆசியநாடொன்றின் தலைநகர் மீது!
ஆசியா வேறு ஐரோப்பா வேறு இருவேறு கொள்கை உலகினில் உண்டு இனிவரும் காலமும் இதையே சொல்லும் உலகம் என்பது இருவேறு என்று!
-திக்கவயல் தர்மு
அழுவதற்கு நேரமில்லை தூக்கணாங் குருவிக் கூட்டை துவம்சம் செய்து தூக்கியெறிந்த குரங்கு போல் என்மனதில்
காதல் விதை தூவி கட்டிய கோட்டையை உடைத்தாய் பணமெனும் பேயால்! அழுவதற்கு நேரமில்லை அலைகின்றேன் வேலை தேடி நா. விஸ்வா, கொம்மாதுறை
வங்கி மூலம் சந்தா செலுத்த விரும்புவோர் வருட சந்தா 200/= R.T ha na balasi nga m AAC N0: 106653402077 Sampath Bank, Trincoma lee என வைப்பிட்டு பற்றுச்சீட்டை அனுப்பிவைக்கவும் Q66flyby (6 US $ 10
- 9

Page 6
விழு,எழு அல்லது என்றுமே விழுந்து கிட
துரத்தி வந்த துயரங்களுக்கு துடுப்பாய் எதிர்த்து ஈடுகொடாது அடைக்கோழி போல் - நீ நடைப்பிணமாய் விழுந்து விட்டாய் !
அது வானவில் துண்டுகள் உதிர்த்து விடும் வண்ணக்கனவுகள் அல்லதுன்பத்தின் போர்வைக்குள் பதுங்கிக் கிடக்கும் எரிமலைகளின் பிரளயம் !
பளிங்கு மாளிகையில் நடக்கும் பாதங்களுக்கு இல்லை பெருமை பளிங்குகளுக்கு மட்டும்தான் நிலவுகளுக்கும் தேய்பிறைகள் இருப்பதனால்தான் பெளர்ணமிகள் பெருமைப்படுத்தப்படுகின்றன !
எல்லோரும் பூமாலைகள் அணிய யேசு முட்கள் அணிந்து கொண்டார் அதனால் தான் அவர் கடவுளாக மற்றவர் மனிதராகவே இருக்கின்றனர் !
கவலைகளுக்காய் நான் கண்ணிர் வடிப்பதில்லை ஒரு வகையில் இதுவும் ஒரு சுயநலம் தான் வேறு சில இரவல் கண்களில் வாடகை கண்ணிரை நான் வரவேற்பதில்லை !
ஆறறிவு இல்லாத தாவரங்கள் கூட நினைவுச்சருகுகுளை தினமும் உதிர்க்கப் பழகியிருக்க ஆறறிவு படைத்த நீ மட்டுமேன் சறுக்கி விழுப்புண்களையும் நினைவுச்சாக்கடைகளையும் சேமிக்கிறாய் ? தினமும் சூரியன் கூட புதிதாக ஆசைப்படுகின்றது என் தங்கை நிலவே உனக்குமட்டுமேன் பழைய அமாவாசை ?
سے 10 سہ

சோகப் பெருங்கடலில் தத்தளித்த நீ للا ارالٹرنیل (o0+رتی رہا 5 oii doo)) cbرتھرصلى الله عليه وسلم அதுவோ கை காட்டி விடை பெற்றது-ஆனால் உன்னைக் கை கூப்பி வரவேற்க இன்று ஆயிரம் இதயங்கள் காத்திருக்கின்றது !
புதிதாய் எதிர் நீச்சல்போட்டு-வெற்றிக் கம்பம் உன் கைக்கெட்டும் தூரத்தில்.
விழுந்து விட்டேன் என்று ஒதுங்கிவிட்டால் -உலகம் உன்னை நசுக்கி நாசப்படுத்தி விடும் எழுந்து விடு அல்லது என்றுமே விழுந்து கிட!
ஷைலஜா. மகாதேவன் (அனு) வவுனியா (அவுஸ்திரேலியா)
மரணம்
இதயம் இறுகியும். உடல் உறங்கியும். கண் பிதுங்கியும். எட்டுக் கால்களில்
சப்பாணியாக ஆறடி நிலத்தில் - நீ அநாதையாகும் பொழுதுகளில்.
இதய வாழ்வுகளில் இதமாக உறங்கியே
இடுப்பும்
காத்துக் கிடக்க. கால்களும் வலியெடுத்து விட
மின்னலென வீறுகொண்டு 661TL935Q6T6ü6)Tib
660LL6) “வீட்டோ பவர்" கொண்ட வேங்கையாக உன் நாடித் துடிப்பு உறைகிறதே.
எம்.பீ.அன்வர். காத்தான்குடி -03
- 11 -

Page 7
சூத்திரதாரியாக இருந்தாய்
உன்னை மனதார நேசித்தேன் உதட்டினிலே வைத்து பூஜித்தேன் உள்ளத்திற்கு புதுவகையான உணர்வைத் தந்தாய் தனிமைக்குத் துணையாய் வந்து தவிப்பைப் போக்கினாய் நடுங்கிடும் குளிருக்கு இதமாய் நற்றுணை புரிந்தாய் கருத்தாழமிக்கவை படைக்க கற்பனைக்குத் தூண்டியானாய் கன்னியரின் பார்வை என்மீது பட கவர்ச்சிப் பொருளானாய் தீர்க்கப்படாத பிணக்கினை தீர்த்திடும் வழிக்கு உதவினாய் புண்பட்ட மனம் திடப்பட புகை விட்டு ஆற்றினாய் சுவாசிப்பதில் சொர்க்கமே காண சூத்திர தாரியாக இருந்தாய் இத்தனை சுகத்திற்கும் பிரதி உபகாரமாய் இன்னுயிரை பறிக்க எண்ணியது ஏனோ?
-கண-கிருஷ்ணராஜன் -
தெருக்குரல்
அழகு ரசிக்க உணவு புசிக்க வாழ்க்கை முயற்சியோடிருக்க.
முட்டாள் மனைவியே ஆனாலும் யோசனைக்கு கட்டுப்படாதவன் பாடு திண்டாட்டமே.
வாயாலே கட்டுப்பாடில்லாது உண்ணும் உணவு நோயாலே வருந்த வைக்கும்.
காதலி காதலாயிருப்பாள் சிலகாலம் தாயானவள் பாசமாய் இருப்பதோ ஆயுள் பரியந்தம்.
கொலையும் செய்வாள் பத்தினி எப்போ விலைமாதை கணவன் வேண்டுங்கால்.
-சூசை எட்வேட்- அன்புவழிபுரம்
- 12

பராசக்தி
காணிநிலம் போச்சே! - பராசக்தி காணிநிலம் போச்சே நாணிக்கிடப்பதல்லால் - பராசக்தி நம்மாலெது முடியும்?
வீணில் அறம்நடத்தி - தோற்றுமே வீரமறம் நடத்தி ஆணிலும் பெண்ணிலுமாய் -போனதே ஆயிரம் ஆயிரமே!
கோனிய ஆட்சியினால் -குடும்பம் குலைந் தலைந்ததுவே! பாணிப்பலா, வாழை - தேமா பனைகள், தென்னையெல்லாம்.
கேணியுடன் பறந்ததே - குண்டுகள் கிண்டிய பள்ளமலால் தோணியுடன் இல்லையடி - பராசக்தி தொழிலும் இல்லையடி!
சம்பூர் குடும்பிமலை - வர்கரை தமிழர் தாயகங்கள், வம்பர் செயல்களினால் - பழையநம்
வாழ்வு பறந்ததடி
அம்புவி தேடவில்லை - மட்டுமோ, அயலான் நாடவில்லை! நம்மில் இளையவர்கள் - நடையால் நமக்கு முந்திவிட்டார்!
கும்பி கொதிக்குதடி பராசக்தி கொஞ்சம் இரங்காயோ? தம்பியர்க் கூட்டமளி! - இல்லையேல் சமதைத் தீர்வினைத்தா!
தும்பிலும் உள்ளாய் நீ! - பராசக்தி தூணிலும் உள்ளாய் நீ! நம்பிக் கிடப்போரை - பராசக்தி நட்டாற்றிலோ விடுவாய்? ாமரைத்திவானகளங்களை விரித்துள்ளோம் ஆக்கங்களை அனுப்புங்கள்
- 13 -

Page 8
சூனியம்
யாரால்..?
யாராலும்
யாருக்கு. o யாருக்கும் எச்சந்தர்ப்பத்தில். p அது அவசியமில்லை பெயர். p வாயில் வரும் பெயர் அல்லது ஏதாவது தமிழ் பெயராக. முகவரி. பெயருக்கு ஏற்றதாக. 6)u ......... 9 கைக் கணக்கில் போடும் நேரம். p நரசிங்கர்களா நேரம்பார்க்க எந்த நேரமெண்டாலென்ன நேரில் கண்டவர்கள். மனிதர்கள் முன்வரவில்லை மிருகங்கள் பேசமாட்டார்கள்
யாவர். p சத்தியமா மனிதர்கள் கடைசி வார்த்தை.
ஐயா! நானென்ன செய்தன் சொல்லிப்போட்டு செய்யுங்கோ (D96........ 9
முடிவு தான்.
ந.வினோதரன் - யாழ் .பல்கலைக்கழகம்
பிரேதம் "செல்" கூவிச் செல்லும் சத்தம் கேட்க வில்லையா
மெளனம்
"செல்” வெடித்த சத்தம் கேட்க வில்லையா?
மெளனம் “செல்” பட்டு காயப்படும் மனிதனின் மரண ஒலம்
கேட்க வில்லையா?
மெளனம் கண்களையும் வாயையும் இதயத்தையும் கறுப்புத் துணியால் மூடிக்கொண்டு மீண்டும் கல்லானது பிரேதம்
-பெரிய ஐங்கரன் -
- 14

கெட்டுப்போன வாழ்வு
கெட்டும் பட்டணம் வந்து பட்டது கொஞ்சமல்ல உறவுகளை மறக்கடித்தும் பொறாமை தீக்கு தீனி போட்டதும் தனிமை உணர்வை வளர்த்துக் கொண்டதும் தார்ட்பரியங்களாகின
ஏக்கர் காணி எல்லாம் பேர்ச் ஆனதும் எதிர் வீட்டாரை எதிரியாக நினைப்பதும் பக்கத்து வளவுக்காரனை பகைவனாகப் பார்ப்பதும் பட்டணம் எமக்கு கற்றுத் தந்த பாடங்கள்
சொந்த பந்தங்கள் தூரமாயின மந்த கதியிலே மனது கெட்டது உதவி செய்வது குறைந்து போனது பணத்தை சேமிக்கும் பக்குவம் வந்தது கணக்குப் பார்க்கின்ற
காரியம் மட்டுமே
குறுக்கு மூளையில் குறைவின்றி வளர்ந்தது
மனசு என்ற சொல் மறந்து போனது கிராமத்து மண்ணின் வாசனை குமட்டலைத் தந்தது எதையும் தள்க்கிக்கும் இதயம் வளர்ந்தது
எப்படி இக்கேட்டை இல்லா தொழிப்பது?
5
9.
ன்
s
ଈ,
கவிதைக்கான
பயில்களம் பரிசோதனைக்களம் காத்திரத்தின்களம் கருத்தாடற்க்களம் விளக்கக்களம் விமர்சனக்களம்
- 15

Page 9
கவிதை ஏடுகள் மரித்துப் போகின்றனவே!
கவிதைச் சஞ்சிகைகள் பல வந்திருக்கின்றன இந்த நாட்டில. சில வந்த சுவடே தெரியாமல் மறைந்திருக்கின்றன. வேறுசில ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் தாக்குப்பிடித்திருக்கின்றன. அந்தவகையில் அக்னி, கவிதை, பூபாளம் போன்ற ஏடுகளைக் குறிப்பிடலாம். இவையெல்லாம் இந்நாட்டின் புகழ்பெற்ற கவிஞர்களால் நடாத்தப்பட்டவை. தங்குதடையின்றி வெளிவந்து கொண்டிருந்த காத்திரமான கவிதைக்கான சஞ்சிகையான "யாத்ரா" இரண்டொரு மாதங்களாக யாத்திரை புரியவில்லை. என்ன நடந்ததோ. uUTLogľ3031 JTübl
இப்படியொரு சூழலில் “நீங்களும் எழுதலாம்" என்ற மகுடத்தில், கிழக்கிலிருந்து ஒரு கவிதை ஏடு தனது ஓராணி டுச் சிறப்பிதழை வெளியிட்டிருக்கின்றது. அதன் தோற்றமும் அமைப்பும் பரவாயில்லை. திருகோணமலையிலிருந்து இவ்வேடு வந்து கொண்டிருக்கிறது. இருமாத இதழாக வந்து கொண்டிருக்கும் "நீங்களும் எழுதலாம்",
கவிதைக் கான பயரிலி களமி , பரிசோதனைக்களம், காத்திரத்தின்களம், கருதி தாடற் களம், விளக்கக் களம் ,
விமர்சனக்களம் என்பவற்றைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. வெற்றிகரமாகத் தனது முதலாண்டு சிறப்புமலரையும் வெளியிட்டுள்ளது.
சபா.ஜெயராஜா, அ.கெளரிதாசன் , நந்தரினிசேவியர் , தாமரைத் தவானி , ஷெலி லிதாசன் , தரிக் கவயலி தர்மு, கலாவிஸ்வநாதனி , al Gaudí soufuu T ஏ.நஸ்புல்லாஹற் போன்ற பிரபல கவிஞர்களோடு ஏராளமான இளம் கவிஞர்களின் கவிதைகளைத் தாங்கி இவ்வேடு வெளிவந்து கொண்டிருக்கின்றது. இதுவரை சுமார் நூறு கவிஞர்களின் ஆக்கங்களை இவ்வேடு பிரசுரித்திருக்கின்றது. அல்லது அறிமுகப்படுத்தியிருக்கின்றது என்று கூறலாம். நல்ல முயற்சி. கவிதைகளை - கவிஞர்களை வளர்த்துவிட, வளர்த்தெடுக்க இம்முயற்சி வழிவகுக்கும் என்று திடமாக நம்பலாம்.
- 16

ஓராண்டுச் சிறப்பிகழ் க ைகனைக் ககர்க்கு தகவுகளைக் கே !
ఈస్టోut எஸ்.ஆர். கனபாலசிங்கம்
2003 பாங்குனி
கவிதை இதழ் - 03
wawo :*
தாமரைத்தீவானின் "கவிதை அன்றும் இன்றும்" என்ற சிறிய ஆய்வுக்கட்டுரை (?) ஒன்று பிரசுரமாகி இருக்கின்றது. இதனைப்படித்தபோது பெரிய கட்டுரைக்கான ஆய்வு அல்லது மேடைப்பேச்சு ஒன்றுக் குக் குறிப்பெடுத்தது போலவே அமைந்திருந்ததைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். இத்தகைய கட்டுரைகள், வாசகர்கள், எளிதில் (ஓரளவு) புரிந்து கொள்ளத்தக்க வகையில் வடிவமைக்கப்படவேண்டும். மொத்தத்தில் தனி மனிதனாக நின்று செயல்படும் இதன் ஆசிரியர் எஸ்.ஆர் தனபாலசிங்கம் பாராட்டப்பட வேண்டியவரே.
"நீங்களும் எழுதலாம்" தொடர்ந்து வெளிவரவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
- கலைவாதி கலீல் - நவமணி வாரப்பத்திரிகை 08.06.2008
நீங்களும் எழுதலாம் கவிதை இதழி
பற்றிய குறிப்புக்களை பிரசுரித்து இதழின் வளர்ச்சிக்கு உதவி வரும் தினக்குரல், வீரகேசரி, சுடர் ஒளி, ஆகரிய பத்திரிகைளுக்கும், ஒலிபரப்புச் செய்யும் லண்டன் ஐ.பீ.சீ வானொலிக்கும் (காலைக் 85 60 GF நிகழ்ச்சி தொகுப்பாளர் எண் .செல்வராஜா, நூலகவியலாளர் அவர்களுக்கும்) “நீங்களும் எழுதலாம்" தனதுமனப் பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
أر - 17

Page 10
பயில் களம் மாணவர்களுக்கானது
புதுமைப் பெண்ணாகு அடுப்படி அடுப்படி என அடைந்து கிடக்கும் பெண்னே
996)Du ITul el9ul (6 அடைபட்டு வாழ்ந்தது போதும் பண்பு இலா பாவியர் சிக்கி பாடாய்ப் பட்டதும் போதும்! அரிசியில் கல்லைத் தேடும் நீ அரசியலை கொஞ்சம் ஏன் அலசிப் பார்க்கக் கூடாது மேற்குப் பெண்ணின் சாதனை சோதனைகளைத் தாண்டியது தானி. வெட்கித் தலை குனிவதை விட்டு வெளியுலகை எட்டிப்பார். தடைகளைத் தகர்த்து தகவுகளைத் தேடி வா. அடுத்த சாதனை உன்னுடையதாகத்தானிருக்கும். அதற்காய் பெண்ணெனும் பண்பை விட்டுவிடச் சொல்லவில்லை. பயத்தையும் பத்தாம் பசலித் தனத்தையும் விரட்டி விடச் சொல்லுகிறேன். இன்றுடனாவது புலம்பித் திரிவதை விட்டு விட்டு பதுமைப் பெண் அல்ல பாரதி கண்ட புதுமைப் பெண் என்றாகு . ம.கர்வுரி வ/சைவப்மிரகாச மகளிரி கல்லூரி,வவுனியா. அதனால் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா வீராப்பு வார்த்தைகளுக்கும் பஞ்சமில்லைத் தமிழா நிலவை ரசித்தாய் கால் பதிக்க முடிந்ததா? வானூர்தி என்றாய் சமைக்கும் வல்லமை உள்ளதா? கங்கை கொண்டாய் கடாரம் வென்றாய் என்கிறாய் கதியற்றிருக்கின்றாய் இன்றோ ஏன் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை மறந்தாய் அதனால் ’ ஜெ.யதுகுலன் தி/கோணேஸ்வரா.இ.க.
- 18
 
 
 
 

அன்பின் ஆழம் சாதனைகளுக்கும் அதிசயங்களுக்கும் மத்தியில் நீ நாட்களின் உதிர்வுகளில் தவிப்புகளும் தான் மரணிக்கும் இடத்திலும் மறக்க முடியா வேதனை.
மெளனம் சாதிப்பினும் உன் கண்கள் என்னோடு பேசுவதுண்மைதான் ஊமைப்பாஷையில் தேர்வெழுதும் போது நெருங்கும் நம்பிரிவும். அன்று உணர்வாய் அன்பின் ஆழம்
வி. கெளரிசங்கர் தி/புனித.ஜோசப் கல்லூரி
விஷ விருட்சம்
விஷ விருட்சத்தின் கீழேயே வருஷம் பூராவும் வாழ்க்கை நகள்கின்றது விருட்சம் இதனை வேரோடு வெட்டி வீழ்த்தவும் விஷத்தினை முற்றாக வெட்டிப்புதைக்கவும் வேளை இன்னும் வரவில்லை. சேவல்கள் கூவியும் எங்களின் "செகம்" இன்னும் விடியவில்லை இருட்டுக்குள்ளேயே இன்னுமின்னும். ஓ.உரத்துச்சொல்கிறேன் ஒடி வாருங்கள் எல்லோரும் ஒற்றுமை எனும் உய(யி)ள் விருட்சத்தை வளர்ப்போம்
கணேசமூர்த்தி வினு, வின்சன் தேசிய பாடசாலை மட்டக்களப்பு.
من 19 م.

Page 11
யுத்ததத்தின் பிடியில்
உறவுகளை இழந்து உயிர்களைத் துறந்து உரிமையற்ற அகதியானோம் நாம் இருந்ததோ பூந்தோட்டம் இப்போ திருப்பதோ கண்ணிர்க் கோட்டம் எமது அழுகையின் ஒசை யுத்த விரும்பிகளுக்கு ஒரு மெல்லிசைப் பாடல்தான் பிணங்கள் வாங்கும்
நாடுகள் இருந்தால்
எமது நாடும் கூட
செல்வந்த நாடுதான்
இறைவனே
வருகை தருவாயா?
எம்மை காப்பவன்
நீ மட்டும் தான்
uf. Fifluor
தி/அலி-ஹமிரா முஸ்லிம் ம.விஇறக்ககர்ைடி
மாணவர்களே உங்கள் ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன
DLD605 LDTGift (36Gr உன் இரத்த தாகம் திர உடன் பிறந்தவர்களையல்லவா பதம் பார்க்க விளைகின்றாய் முரன்பாட்டிற்கு மரணமே தீர்வென்றால் இத்தீவில் ஏது.?
மனிதனுக்கு மனிதன் வார்த்தைகளால் பேசிய வரலாற்றுக்கு சவக்கிடங்கு வெட்டிவிட்டு ஆயுதங்கள் பேசும் காலத்தை மாலையிட்டு வரவேற்கின்றாயா? வேற்று நாட்டவள் யாவரும் வேற்றுக்கிரகம் செல்வதற்காய் சாவி தேடி அமர்க்களப்படுகையில் சோதரனே பற்றுவை மானிடத்தின் மீது அற்றுப் போகும் உன் LDLD60:5ig560GTub லோ, ஜெயப்பிரதா, வரோதயநகர்
- 20
 
 

நுணங்கைக் கூத்து
உன்னதம் மிகு மனிதம் உருவியெறிந்து
வெளிமுழுதும் உதறிப் போடப்பட்டிருக்கும் வாழ்வு குறித்து சரிகமபதறி நிறுத்திய. நுணங்கை கூத்தின் அரங்கேற்றம் இங்கிப்போது.
ஜெயித்த தோரணையில் அதிகாரம் பல்லிளிக்கும் தீர்வுப் பொதிக்குள் வாழ்வு சூன்யம் அடரும்.
நீட்சிபெறும் நுணங்கை கூத்தின் தாளக் கட்டுக்கு
g56)6L60)3Flg. உயிர்வாழ்தலின் உறுதிப்பத்திரம்
குருதி வழியும் அதிகாரத்தின் பாடலில் வாழ்வின் இயல்பு மறக்கப்பட்டிருக்கிறது
ஓ. என் கடவுளரே உங்கள் ஆனந்த தாண்டவத்தின் இடைவேளையில் அதிகாரத்தின் நுணங்கைக் கூத்தை அரங்கேற்ற யார் அனுமதித்தது? நீ இல்லையெனில் அந்தச் சாத்தான் எனக்கும் கடவுளாகட்டும்.
-சண்முகம் சிவகுமார் -கொட்டகல
கடிதவழி தனிஇதழைப்பெற விரும்புவோர் 5/= Gugguofurant ggpGypaetzlappfassapor அனுப்பவும் வருட சந்தா ரூபா.200/ க(தபார்செலவு உட்பட) அனுப்ப வேண்டிய தபாலகர்-திருகோணமலை முகவரி:எஸ்.ஆர்.தனபாலசிங்கம் 103/1 திருமால் வீதி திருகோணமலை - 21 -

Page 12
கற்பனைச்சுகம்
நனவுகளைப் பார்க்கக் கனவுகளே சுகம் பலர்க்கு நாளும் வதக்கிவிட கனவுகளில் குளிரைத் தென்றலினைக் கண்டு மகிழும் மனங்கள் வீதிக்கு வீதியுண்டு யதார்த்தக் கொடுமையினை மறைக்க அதிதக் கற்பனை மது மயக்கில் கணமும் தெம்படைந்தெழுந்து நிற்பவர்கள் சொல்லும் நியாயத்தில் வலுவிருக்கு >நடைமுறை வாழ்க்கையில் முடியாஅனைத்தினையும் கற்பனையில் அடைந்தமெனக் - குதுகலித்து தன்மனதுக்கேற்ற தலைவனுடன் நாயகனும் தன்விருப்பு வெறுப்புகளைப் பிரதிபலித்திடையில் தன்பாரம் குறைந்து தான் வெற்றி கண்டதுவாய் எண்ணிமகிழ்தல்
எட்டுக்கு ஏழுபேரின் உள்மனதில் ஒளிந்திருக்கு போலியான கற்பனையில் அள்ளக் குறையா ஆசைக்கனவுகளில் தன்னை மறக்கத். தருணம் 865 எங்கே கிடைத்தாலும் எடுத்து அவற்றினது போதைச் சுகங்களிலே பொழுதைச் செலவழிப்போர் வீதந்தான் இந்த வியனுலகில் அதிகமாச்சு
- த.ஜெயசீலன்
படைப்புக்களில் வரும் கருத்துக்களுக்கு படைப்பாளிகளே பொறுப்பாளிகள். \ படைப்பினை செவ்வைப்படுத்த
ஆசிரியருக்கு உரிமை உண்டு.
- 22 -

அறிமுகக் குறிப்பு துவாரகனின் (சு.குணேஸ்வரன்)
மூச்சுக் காற்றால் நிறையும் வெளிகள்" கவிதைத் தொகுப்பு `ஓடிய சைக்கிளில் இருந்து இறங்கி நடந்து. எல்லாம் சரிபார்த்து மூடப்பட்ட
கைப்பை
மீளவும் திறந்து திறந்து." கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற மீளவும் மரங்களில் தொங்கி விளையாடலாம்.' என்ற கவிதையின் வரிகள் தமிழ் மக்களது இன்றைய அவல நிலையை அழகுறச் சித்தரிக்கின்றன. அழகுற வடிவமைக்கப்பட்ட இத் தொகுப்பில் குறியீட்டுத் தன்மையான உத்தி முறைகள் கையாளப்படுவதும் பல விடயங்களை பேச முற்பட்டிருப்பதும் சிறப்பம்சங்களாகும்.
"சமூக இயல்பை அதன் இருப்பை ஏற்ற இறக்கங்களை அழகுறச் சுமந்து கவிதைகளைப் பிரசவித்துள்ள அவரது கவிதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விடயத்தைப் பேசுகின்றன.சில வெளிப்படையாக சில குறியீடாகப் பேசுவதை இக் கவிதையைப் படிப்பவர் உணர்வோர் குணேஸ்வரன் கவிதை என்ற வாகனத்திலே பவனி வருவது நல்லது என்று நான் கருதுகிறேன்"என்று பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா அணிந்துரையில் குறிப்பிடுவது நோக்கத்தக்கது.
தொடர்பு-புத்தகக்கூடம் இல:172,இராமநாதன் வீதி,திருநெல்வேலி,யாழ்ப்பாணம்
கடவுள் எழுதிய கவிதை கண்களை மூடி கைகளைக் கூப்பியிருந்தான் அவன் இதயம் மட்டும் திறந்திருந்தது எதிரே நிற்கும் எழிலின் இமைகள் திறக்கும் எப்போதென்று தன்னைத் தியானிப்பவன் கொஞ்சம் தவமும் செய்யட்டுமே என்று எல்லாம் தெரிந்திருந்தும் இறுக்கி மூடியிருந்தாள் இமைகளை அவள் எதுவுமே தெரியாத சில்ையாக த.ஜீவராஜ், தம்பலகாமம்
- 23

Page 13
கருத்தாடற் களம்
கவிதை பற்றிய சில கருத்தாடல்கள்
-நாச்சியாதீவு பர்வீன்
கவிதை என்பது ஒரு சிக்கலான பின்னமாகும். தமிழ்க்கவிதை வரலாறு மிக நீண்டதாகும். அது தமிழ் மொழியின் வரலாற்றுடன் தொடர்புபட்ட ஒன்றாகவும், மொழியியல் வளர்ச்சியில் இன்றியமையாத ஒரு கூறாகவும் கருதப்படுகின்றது.
சங்ககாலம், சங்கமருவியகாலம், என்று வரலாறு தொட்டுக்காட்டுகின்ற எல்லாக் காலங்களிலும் தமிழ் இலக்கியம் இருந்திருக்கின்றது. இந்த இலக்கியப் பரப்பில் ஒரு தவிர்க்க முடியாத தொகுதியாக கவிதையும் வளர்ச்சியடைந்து வந்துள்ளது என்பது மறக்க முடியாத g) 60860). DuJT (5LD.
திருவள்ளுவர். இளங்கோ, கம்பன் என்று அவ்வவ் காலங்களில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள் ஏதோ ஒரு வடிவத் தரில் இந்த கவிதையரினை ஊடுகடத்திவந்துள்ளனர். ஆனால் அவர்களின் கவிதைகள் மதம் சார்ந்த, இனம் சார்ந்த, குலம்சார்ந்த உள்ளிடுகளுடன் தாம் வாழ்ந்த காலத்தில் அரசனை துதிபாடி அவனது சரித்திரத்தை கவிதையாக்கி அல்லது அவனைப் புகழ்ந்து பரிசுபெற்றுக் கொள்ளும் ஒரு நிலையே அனேகமாக அவதானிக்க முடிகின்றது.இதற்கு விதிவிலக்குகளும் இல்லாமலில்லை.
ஒரே மரபில் வேகமாக ஊடுகடத்தப்பட்டு வந்து கொண்டிருந்த கவிதை இலக்கியத்திற்கு ஒரு கல்லை வைத்து புதிய பாதையை வகுத்தவன் பாரதி என்கின்றனர் ஆய்வாளர்கள். பாரதியின் கவிதை மிக எளிமையானது. அரசசபைகளிலும், ஆளும் அரங்குகளிலும், ராஜபட்டையை சுமந்து பயணித்த கவிதையின் வரலாற்று மரபைத் தகர் த து, ஏழைகளும் பாமரர் களும் பட்டிக்காட்டுமக்களும் உணர்ந்து ரசித்து புரிந்து கொள்ளக்கூடிய ஒரு புதிய பாதையை கவிதை உலகில் உருவாக்கியவன் பாரதி என்றால் அது மிகையாகாதுதான்
- 24 -

பாரதியின் கவிதையில் புதுமையிருந்தது. எளிமையிருந்தது. சுவையிருந்தது. இதனால் மக்கள் மனங்களை இலகுவில் சென்றடையக்கூடிய மிகக் காத்திரமான நடத்தைக் கோலத்தை அது கொண்டிருந்தது. பாரதியின் தடம் ஒட்டியவர்களாக பலநூறு கவிஞர்களை பிற்காலத்தில் கவியுலகம் கண்டது.
மரபு நிலைக் கொள்கை மெல்ல மெல்ல காலாவதியாக புதுக்கவிதை எனும் புதுவடிவம் பூத்துக்குலுங்கத் தொடங்கியது. படித்தவர்களும், பண்டிதர்களும் மட்டுமே கவிதை எழுத முடியும் என்ற மரபுப் பாலத்தை உடைத்து புற்றீசல்களாக புதுக்கவிஞர்கள் புறப்படத்தொடங்கினார்கள். நிறையப்பே புதுக்கவிதைத் தடத்தில் பயணப்படத் துணிந்தாலும் ஒரு சிலர் மாத்திரமே நிறைவான கவிதைகளைத் தந்தவர்கள். கவிதை உலகத்தில் நிலைத்து நிற்பவர்கள். தான் சார்ந்த சமூகத்தில் தான் கண்டதை கேட்டதை உள்வாங்கி உணர்ந்ததைப் பகிர்ந்து கொள்ளும் ஓர் இலகுவழிப் பாதையாக இந்தக் கவிதை இலக்கியத்தைக் கொள்ளலாம் அந்த வகையில் உணர் ச் சியே இல் லாத வெறும் சொல்லடுக்குகளை கவிதைகள் என்று கூறுகின்ற சிலருக்கு மத்தியில் கால ஓட்டத்தை கருத்திற் கொண்டு வளமான கவிதைகளை படைக்கின்ற நிறையப் பேரை அடையாளம் காணமுடிகின்றது.
ஒரு நல்ல கவிதை வாசித்த மாத்திரத்தில் மனதின் மர்மப் பிரதேசத்தில் "நச்” சென்று தைத்துவிடும் அந்த வகையிலான கவிதைகள் மூலந்தான் சமூகத் தன் 3 IT 61 ULs வாசகனுக் கு திறக்கப்படுகின்றது. கவிஞனின் புதிய அணுகுமுறையில் வாசகன் ஆனந்தப்படுகின்றான்.
"அவள் அழகாயில்லை எனக்கு தங்கையாகிவிட்டாள்" - என்ற ஹைக்கூ வகையிலான இந்தக் கவிதையில் மெய்யுணர்ச்சியை இரசிக்க முடிகின்றது. இவ்வாறே"நள்ளிரவில் வாங்கினோம் இன்னும் விடியவில்லை" என்ற ஒரு இந்தியக் கவிஞனின் ஆதங்கமும், வலியும், கிண்டலும், நன்மையும் மெல்லமாய் நகைக்க வைக்கின்றது. இந்திய சுதந்திரத்தை இத்தனை இலாவகமாய் மொழியை வைத்து விளையாடிய
- 25 -

Page 14
பலர் இருக்கின்றனர். அவர்களில் அப்துல் ரஒற்மானும் குறிப்பிட்டுக் கூறக்கடியவர். இதோ இன்னொரு கவிதையும் இப் படிச் சொல்கிறது.எங்களது சாவிகள் தான் கைமாறியுள்ளன
பூட்டுக்கள் இன்னும் திறக்கப்படவில்லை”
சுதந்திரம் வெறும் வார்த்தைகளில் மட்டும் தான் ஆராதிக்கப்படுகின்றன. என்கிற அவலத்தை இது உணர்த்துகின்றது. ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுபட்டு சுதந்திரம் பெற்றுவிட்ட இந்தியா இன்னும் மெய்யான சுதந்திரத்தை நுகரவில்லை என்பதைப் புலப்படுத்துகிறது இது.
வெற்றுச் சொல் லடுக் களால கவிதை பேசப்படுவதில்லை, கவிதை ஓர் அழகியல் போக்குக் கொண்ட சொற் சித்திரமாகும். நல்ல கவிதை எழுத நிறைய வாசிக்க வேண்டும் வெறும் ஒரு சில வரிகளில் கவிதை பற்றிய கருத்தாடல்களை புரியப்படுத்துவது, அல்லது விவாதிப்பது இயலாத காரியமாகும். ஆனால் கவிதை இனிமையான அனுபவப் பகிர்வாகும். புரிந்துணர்வையும் சமாதானத்தையும் யாசிக்கின்ற கவிதைகளே இன்றைய காலத்தின் தேவையாகும்.
கருத்தாடற் களத்திற்கு உங்கள் கருத்துக்களும் ஆக்கங்களும் வரவேற்கப்படுகின்றன.
புனை பெயரில் எழுதுவோர்
தங்கள் சொந்தப்பெயர் முகவரியினையும்
குறிப்பிடுதல் வேண்டும்.
வாசகர்களே, “நீங்களும் எழுதலாம்" இதழின் வளர்ச்சிக்கும் தொடர்ச்சிக்கும் உங்களது ஆதரவை எதிர்பார்க்கிறோம். சந்தாதாரர் ஆவதோடு உங்களது நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தி உதவுங்கள்.
- 26
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மென்மைத் தளைகள்
மென்மைத் தளைகளில் இருந்து விடுபட நினைக்கின்றேன் முடியவில்லை என்னைச்சுற்றிலும் வன்முறையின் விலங்குகள்
மெளனமாய் இருக்கின்றேன் ஆனால் விடுகிறார்களில்லை இரைச்சலை அதிகமாக்கி மெளனம் கெடுக்கிறார்கள்
660) u கை நீட்டுகிறேன் கை தட்டிவிட்டு
ஆயுதம் தருகிறார்கள்
இயற்கையை ரசிக்கிறேன் இடையூறு செய்கிறார்கள் இன்பம் உனக்கு வேண்டாம் இரத்தச் சகதியில் குளி என்றார்கள்
மென்மை இங்கே வெறும் பேச்சுதான் நானும் நிமிர்கிறேன் வன்முறையாளனாய் -சூ.யுவன் -
தூள்களுக்குள் துகள்களாகும்.
ஒயாப் போர் முழக்கத்தின் எதிரொலியாய் கேட்கும் மரண ஒலங்கள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணாமல் போனோர் பட்டியல் புழுதி பறக்க வைக்கும் பொருளாதார விஷச் சக்கரம் கலைந்து போன கருக் குடும்பங்கள் 36ft 3idsenLOTuj கல்விக்கூடங்கள் சிதறிப்போகும் சமூகமயமாதல் படிக்கட்டுக்கள் - இதனால் தூள்களுக்குள் துகள்களாகும் இளம் சிட்டுக்கள்.
ஜெயா தமிழரினி - திருகோணமலை.
- 27 س

Page 15
பொய்க் கோபம் அவள் கோப்ததுக கொண்டாள் மனித குலத்தில் எவராவது தும்மின் நீண்டகாலம் வாழ்கவென வாழ்த்துவது மரபு என் நாயகியின் வாழ்த்து கிடைக்கும் என்ற நப்பாசை எனக்கு நான் தும்மினேன் எவளோ ஒருத்தி உங்களை நினைக்கிறாள் நான் இருக்க இன்னொருத்தி எப்படி? முக்கு வீங்கும் கோபத்துடன் கேட்டாள் அவள் அன்பே ஆருயிரே என்ன சொல்கிறாய் நீ யாரையும் விட உன்மீதே காதல் அதிகமெனக்கு என்றேன் நான்
யாரையும் விட. இதன் அர்த்தம்.?
9........ அப்படியென்றால் மொத்தமெத்தனை? உருளும் விழிகளை உருட்டி உருட்டி கேட்டாள் சற்று அமைதியாக நிதானித்து சொன்னேன் என் இதயக் கனியே இப்பிறவியில் பிரிவில்லை நமக்கு என்பதை நம்பு என்றேன் கெஞ்சலாக அடுத்த பிறவியில் பிரிந்து விடுவோம் அப்படித்தானே
அதட்டினாள் . அழுதாள் ஒருமுகம் இராணுவ அதிகாரி! மறுமுகம் காவிய நாயகி அவள் ஒருத்தியே இருவேடம் கொண்டு உலுப்பினாள் அடிபாவி உன்னை மட்டும்தானே நினைத்தேன் என்றேன் என்னை மறந்தும். கேட்டாள் வலுவேகமாக அடபாவமே உன்னோடு நான் படும்பாடு இப்படி என்னை நானே எரித்தேன் அடுத்த கணத்தில் குளிர்ந்தேன் குளிர்ச்சியில் கெஞ்சினேன் என்னே அதிசயம் இத்தனை நேரமும் இமயமலையினை
- 28

என் இதயத்தில் சுமத்தியவளா. இப்படி என்று அதிசயித்தேன் கொஞ்சல் வேண்டுமென்றால் என்னிடம் நேரடியாக. ஊடல் கொண்டு காமம் கொள்வதே பேரின்பம் தரும் நல்ல சிற்றின்பம்" என்றாள் இனி வேறென்ன நான் சொல்ல
சீனா உதயகுமார், சமரபாகு
அன்புடன் அரசிற்கு.
நலம் பெற ஆவல் - நிற்க நம் நலமுடன் சில வேண்டுதல்களும் வழமைபோல் எரிய மாட்டோம் என்று அடம்பிடிக்கும் சுட்ட எலும்புக்கூடுகள் நாம் எமக்கென்னவோ செங்கட்டிகள் என்றுதான் நினைப்பு ஒன்று யோசியுங்கள் எம்மை - நீங்கள் எப்போதும் போல் மண்ணாய் மட்டும் தான் பார்க்கிறீர்களா? இல்லை மனிதர்களாயும் தானா? உரசிப்போட்டு விட்டீர்களா? கருகிக் கொண்டிருக்கிறோம் எப்பொழுது எமக்கு தலைப்பிரசவம் வேதனை கடக்கப் பயந்ததில் வீணாகிப் போனோம் உயர் நீதிமன்றம் என்றீர்கள் அண்ணாந்து பார்த்ததில் எங்கள் பரிணாமம் ஒட்டகமாயிற்று இனியென்ன - எமக்கு சொந்த ஊர் பாலைவனம் தானே தெரிந்தும் ஒரு நப்பாசை நாம் நாமாய் வாழ்ந்து நம் மண்ணில் மரித்துப் போக ஆவன செய்யுங்கள் - அரசே! ஆவலுடன் இருக்கிறோம். இப்படிக்கு - பழகிப்போனவர்கள்
சுதர்ஷரிகா, வவுனியா கல்.கல்லூரி
- 29

Page 16
மண்ணின் பூத்த கவிப்பூ ஒன்றின் மரணம் சாவகச்சேரியிலுள்ள கல்வயல் எனும் கிராமத்தில் 16.08.1933ல் அமரர் தாமோதரம்பிள்ளை அமரர் சின்னப்பிள்ளை ஆகியோருக்கு மகனாகப் பிறந்த கவிஞர் தா.இராம லிங்கம் அவர்களின் கவிஆளுமை எம்மை எல்லாம் வியட்புற செய்தது.
சாவகச்சேரி இந்துக்கல்லுாரியில் படித்த கவிஞர் தன் பட்டப்படிப்பை கல்கத்தா. சென்னைப் பல்கலைக் கழகங்களில் முடித்துள்ளார். இலங்கையில் இரத்தினபுரி சென் லுாக்ஸ் கல லுரி ரியரிலும் மீசாலை வீர சிங் கம் மகா விதி தியாலயத் தரிலும் தன் ஆசிரியத்தொழிலைத் தொடர்ந்தார். பின்னர் மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயத்தில் அதிபராகப் பதவி உயர்வு பெற்றார். இவர் மீசாலையைச் சேர்ந்த மகேஸ்வரியை தன் வாழ்க்கை துணைவியாக்கிக் கொண்டார். இவர்களுக்கு அமரர் கலைச் செல் வன். வைத் தரிய கலாநித அருட் செல் வன் பொறியியலாளர் தமிழ்ச்செல்வன். திருமதி இசைச்செல்வி குகருபன் (B.A), வைத்தியகலாநிதி கதிர்ச்செல்வன் ஆகியோர் மக்கட் செல்வங்களாகப் பெற்றுக்கொண்டனர்.
இவரின் கவிதைகள் எளிமையானவை.
இவரின் கவிதையின் தெளிவை சிறப்புற நமது வாசிப்புக்கு புதுமெய்க் கவிதைகள்' (1964) "காணிக்கை' ( 1965) நுால் கள் மூலம் கிடைக்கிறது. 1960ல் இருந்து கவிதைகள் எழுதத் தொடங்கிய கவிஞர் அலை, சமர் போன்ற சிற்றிதழ்களில் எழுதிய கவிதைகளில் சில திரு. அ. யேசுராசா, திரு. பத்மநாபஐயர், உ. சேரன், மயிலங்கூடலுார் சி. நடராஜன் போன்றோர் தொகுத்த மரணத்துள் வாழ்வோம்" (1985/1996) தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
நீண்டநாட்களாகவே இறந்துவிட்ட கவிஞர்பற்றி நண்பர் யேசுராஜாவிடமும், ராதையனிடமும் கேட்டிருந்தும் அப்போது பதில் கிடைக்கவில்லை. கவிஞரின் ஆழ்ந்த மெளனம் எமக்கு அதிர்ச்சியைத் தந்ததில் வியப்பில்லுை

பாடசாலை அதிபராக இருந்த இவரின் சமூக நோக்கு, ஆழ்ந்த புலமை, மனித நேயம் இவற்றிக்கும் மேலாக தமிழ்த் தேசியம் மேலான அதித அக்கறை இவரின் கவிதைகளில் தெரிந்தாலும் நிறைய இன்னும் எழுதியிருக்கலாமே என்ற ஏக்கம் எம்மிடம் உண்டு. தனக்கான கவிவாரிசை உருவாக்கியிருக்கலாம் தான்.
"ஞாபகமறதி" நோயினால் தன்னை மறந்த நிலையில் வாழ்திருக்கிறார் என்பதை அவரது மகன் மூலம் அறிந்த போது வேதனையாக இருந்தது. இன்றைய இளைய கவி ஆர்வலர்கள் கவிஞரின் கவிதைகளை தேடிப் படித்தல் வேண்டும்.
25.08.2008ல் அமரத்துவமடைந்த கவிஞரின் உடலம் கிளிநொச்சி மண்ணில் 26.08.2008 தகுந்த மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டுள்ளது.
மரணம் நிஜம் எனினும் வாழ்தலுக்கான உறுதிப்பாடு இல்லாத சூழலில் அவரின் மரணம் பல செய்திகளை சொல்லிச் செல்கிறது. அவர் எழுதிய முழுக் கவிதைகளையும் தொகுத்து வெளியிடுவது தான் இலக்கிய உலகம் அவருக்குசெய்யும் சமர்ப்பணமாகும்.
முல்லை அமுதன் - லண்டன்
கவிதை சம்பந்தமான தறிப்புக்கள், கட்டுரைகள், விமடிசனங்கள் போன்ற பல்வேறு விடயங்களோடு மொழி பெயடிப்புக் கவிதைகளும் உங்களிடமிருந்து eróls ume hasíuGóarpar.
(இறிமுகக்குறிப்பில் உங்கள் கவிதைதி\ தொகுப்பு இடம்பெறவேண்டுமாயின் ஒரு பிரதியை அனுப்பிவையுங்கள். 2007 ற்கு முன் வெளியானவை அறிமுகக்குறிப்பில் இடம்பெறமாட்டாது
一ノ ܢ
-31 -

Page 17
ஆடுகளும் ஓநாய்களும்
ஆடுகள் நனைகின்றனவென்று அழுவதுண்டாம் ஓநாய்கள் சில இடங்களில்
ஆடுகள் தம் காவலுக்கு ஒநாய்களை நியமித்து விடுவதுமுண்டு அந்தளவுக்கு இந்த ஓநாய்கள் அலங்கரித்துக் கொண்டும் அதிநவீன விஞ்ஞானச் செழிப்பால் பூரித்தும் உள்ளன
நனையும் ஆடுகளுக்கு இந்த ஓநாய்கள் அவ்வப்போது ஆடுகளின் தோல்களையே குடைகளாக்கி அன்பளிப்பதுண்டு இறுதியாக கொடுத்திருக்கும் உலகமயமாதல் பெருங்குடை ஐம்பொறிகளுக்கு தீனிபோட்டு ஐக்கியப்படுத்தி விடுகின்றது
தினமும் ஓநாய்களின் உபதேசங்களைக் கேட்டுக் கேட்டு ஆடுகளும் ஓநாய்கள் போலாக ஆசைப்படுகின்றன வழிகாட்டிகளும் வழங்கப்பட்ட குறிப்புகளும் வரப்பிரசாதங்களாக. சேவகம் செய்வதன் மேன்மை குறித்த பிரமிப்புகளும் புளகாங்கிதங்களும்
ஆடுகள் வகைப்படுத்தப்பட்டு வண்ணங்கள்
அப்பப்படுகின்றன வண்ணங்களுக்கேற்ற கூடுகளும்
இப்போது ஆடுகள் தமக்குள் அடிபட்டுச் சாகின்றன
ஒநாய்கள் புனிதர்களாக. ஆடுகள் ஆடுகளையே படையலிடுகின்றன
எஸ்.ஆர். தனபாலசிங்கம்
-۔ 32 ہے

ஏரெடுத்து நாம் வயலில் எழுதும் போது
ஏடெடுத்து நீயுந்தா னெழுதுகிறாய். வேரெடுத்து கல்லெடுத்து எறியும்போது விடிவிளக்கு நியெடுத்துப் பயிலுகின்றாய் போரெடுத்து நாம் சூடு போடும் போது பரீட்சையிலே நீ குனிந்து எழுதுகின்றாய் காரெடுத்து அப்பால் நீ ஓடும் போது கையெடுத்து நாம் வணங்க வேண்டுமடா?
நாலடுக்கு மாளிகையில் நீ புகுந்தாய் நான்தானே உனக்கு அதைக் கட்டித்தந்தேன் ஈழத்தாய் பெற்றெடுத்த கல்லும் மண்ணும் எடுத்துத்தான் நானதனை எழுப்பித் தந்தேன் மூளையினால் நீ உண்ட அனைத்து மெங்கள் முழு உழைப்பால் உருவான எங்கள் சொத்து மூளைகளே நாமுனக்குச் சோறு போட்டு உடையுடுத்திப் படிப்பித்து விட்ட சீலர்
சர்வகலா சாலையிலே நீ அரிந்த சவங் கூட எம்முடைய சவந்தான் இங்கே கர்வமுடன் நீ சுமக்கும் கோட்டும் சூட்டும் சட்டமென நியெழுதி வைத்ததாளும் பர்வதமாய் நாம் குவித்த உழைப்பு .ரத்தம் பட்டதை நீயெடுக்க வெட்கப்பட்டு சர்வ கறுப் பாய்போர்த்திச் செல்லுமந்தச் சட்டைகளும் எம்முடைய உழைப்பின் பிள்ளை
பெரும்பதவி பெற்றதனாற் பெரிய சொத்தும் பெட்டையுடன் பொக்ஸ் வகனும் இலட்சம்
காசும்: தருமுனது மாமாக்கு இவற்றையள்ளித் தந்துதவும் அழுக்கற்ற முரட்டுக் கைகள் எருமைகளே இத்தனைக்கு மப் பாலின்னும் திருடுதற்கும் நிர்வாண ஒட்டம் பார்த்து வருவதற்கும் இங்கிலாந்து பறந்து செல்லும் வம்பர்களே உங்களுக்கு மன்னிப்பு இல்லை.
சுபத்திரன் குறிப்பு: 1979 இல் அகால மரணமடைந்த க.தங்கவடிவேல் என்ற இயற்பெயர் உடைய கவிஞர் சுபத்திரன் மாக்சிய சார்புடன் கவிதை படைத்து வந்தவராவர்.
-33

Page 18
வாசகர் கடிதம்
"நீங்களும் எழுதலாம்" கவிதை ஏடு கிடைத்தது. படித்து மகிழ்ந்தேன், தங்களது முயற்சி பாராட்டுக்குரியது. கவிதை என்பது சந்தமும் கற்பனையும் இணைந்தது. கவிதைத் தெரிவில் கூடிய கவனம் செலுத்துக, மரபுக் கவிதைகள் .குறைவாகவுள்ளன ܓܟܠ
^சூலாநிதி க. குணராசா (செங்கை ஆழியான்)
"நீங்களும் எழுதலாம்" கவிதை இதழ் கவித்தேன் சுவையோடு, என் நண்பன் இளையநிலா யூனுசின் மூலமாக என்கரம் கிட்டியது. இன்றைய அவசர கால உலகில், இவ்வாறான சிற்றேடுகள் மூலமாக கவிதைகளைப் பிரசுரித்து, யதார்த்த உணர்வுகளுக்கு களம் அமைத்துக் கொடுப்பதோடு மாத்திரமன்று, கவிஞர்களை நாடறியச் செய்து கொண்டிருக்கும் இவ் அரிய சேவைக்கும் அயராது உழைக்கும் ஆசிரியர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும். -எம்.பீ.அன்வர்(பிரகாசக் கவி) காத்தான்குடி - 03
"நீங்களும் எழதலாம்" கவிதைச் சஞ்சிகைப் பிரதிகள் கிடைத்தன. ஏலவே பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா அவர் களிடமிருந்த பெற்றுப்படித்துள்ளேன். இளங்கவிஞர்களுக்கான ஆரோக்கியமான களத்தை "நீங்களும் எழுதலாம்" தருவது மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது. பல பிரதேசங்களிருந்தும் ஆர்வத்தோடு கவிஞர்கள் கவிதைகளை எழுதியுள்ளனர். அவர்களது சமூகப் பிரச்சினைகள், மனமுரண்பாடுகள், அக மனவுணர்ச்சிப் போராட்டங்கள் யாவும் சுவையாக இக்கவிதைகளில் பதிவாகியுள்ளன. தங்களது
பணி சிறப்புற வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்.
ச.குமரன். தமிழ்த்துறை விரிவுரையாளர் யாழி பலகலைக்கழகம்
சாதாரன ஒரு ஆழ்நிலையில் ஒன்றைச்செய்வது பெரிய விடயமல்ல. பிரச்சினைகள், நெருக்கடிகள் நிறைந்த சூழ்நிலையில் ”நீங்களும் எழுதலாம்” வெளிவருவது சாதனைக்குரிய ஒரு விடயமே. வாழ்த்துக்கள். கோவை அன்சார் -கொழும்பு
-34 -

"திருமலை மண்ணிலிருந்து எங்கள் கவிதையை ஆரோக்கியமான திசையில் இட்டுச்செல்லல்" என்பதை சாத்தியப்படுத்த முனைகின்ற தங்களுக்கு எனது பாராட்டுக்கள் எழுத்துச் சூழல் எம்மிடையே ஆபத்தாகிக் கொண்டிருக்கின்ற பொழுதுகளில் நாங்கள் எல்லோரும் ஒன்றாகக் கைகோர்த்து எமது இருப்புக்காகக் கவிதை செய்வோம்.
ந.வினோதரன் (யாழி, பலி, மாணவன்) மிருசுவில்
சஞ்சிகை இனிய நந்தவனம் (உலகத் தமிழர்களிடையே உலாவரும் மக்கள் மேம்பாட்டு இதழ்)
ஆசிரியர்: த.சந்திரசேகரன் இந்திய விலை:500
(Gg5TLİL; INIYANANDAVANAM
05, New Street, OPP, CSI Hospital Woraiyur, Trichy
Tamil Nadu, South India
& &്.
த.சந்திரசேகரன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவரும் இனிய நந்தவனம்" மாத இதழ் பல சுவை அம்சங்களோடு வெளிவந்து கொண்டிருக்கிறது அந்தனி ஜீவா (இலங்கை), பரீகந்தராசா (அவுஸ்திரேலியா) பேன்ற பல நாடுகளைச்சேர்ந்த ஆலோசகர்களை கொண்டு வெளிவரும் இனியநந்தவனம்" உலகத்தமிழர்களை பிறதநிதித்துவப்படுத்தும் மக்கள் மேம்பாட்டு இதழாக கடந்த பத்துவருடங்களாக வெளிவந்து கொண்டிருப்பதும் மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
a 35 -

Page 19
மூலமும் ெ
“A book of Verses un A jug Wine, a loaf o Beside me singing i Oh, Wildness were
மூலம்: .பிட்ஸ் ஜெரா
வெய்யிற்கேற்ற நிழலு வீசும் தென்றற்காற்றுை கையில் கம்பன் கவிய கலசம் நிறையமதுவுன தெய்வகீதம் பலவுண்டு தெரிந்து பாட நீயுண்டு
(ԹԼiս ifւնւկ-1
கவிமணி தேசிக விநாயகம்பிள்
மாதவிப் பூங்கொடி நி மணிக் கவிதை நுா6ெ திதறு செந்தேன் மதுவு தீங்கனியும்- பக்கத்தில் காதலி நீ பாட்டிசைத்து கனிவோடு கூடுவையே ஏதுமினிக் கவலையில் இதுவன்றோ பரமபதம்!
பெயர்ப்பு-2 சு.து.க. யோகி
=ص-------------س---------ساس--سے (“நீங்களும் எழுத கணனி மயப்படு ஆர்.நித்தியா (E உவர்மலை), அவர்க அச் சிட் டு 2 - 35 பதிப்பகத்தினருக்கு எழுதலாம் " தன: தெரிவித்துக்கொள்கின்
ISBN 80 -36
 
 
 
 
 
 
 

பெயர்ப்பும்
derneath the Bough if Bread-And Thou Ba the Wilder mees Paradise enow.”
ல்டின்
ম্লে08 iGs புண்டு i (6
@隨窟
ழலில்
Tរើព្លយ៉ា
ଛୈ
}
DIGE NETT Cafe ளூக்கும் அழகுற »f U. I அஸ் ரா ம், “நீங்களும்