கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கையின் கல்வி வளர்ச்சி (கட்டுரைத் தொகுப்பு)

Page 1
... . *、
-
1Í..........j)፥
፳፻፵፫በካርmuû
s: 器邸
雌
ܪ ܢ .
፱፥፮፻፳፻፵፭
*。
---ー
****
Ε2: Ε.
ܬ ܢ .
AB. A. 42'yo i கல்வியியல் வி 6A502/04/l/ A
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரத்தொகுப்பு)
سے
7றுநிதி
Fa(Ce)/44,(e ரிவுரை/7ர் 606 406/p

Page 2


Page 3

്
இலங்கையின் கல்வி வளர்ச்சி
。、 、 リ "
21 ) ×
- மா. கருணாநிதி B. As DIP. IN Ed ICEy) M.A.; IC
36A-8 கோவிந்தன் சாலை, மேற்கு மாம்பலம், சென்னை-600 033,
○○にエA、」○。

Page 4
சூடாமணி பிரசுரம்
முதற் பதிப்பு * அக்டோபர் 1992,
பதிப்புரிமை (C) ஆசிரியருக்கே
Printing Point used 0 and 12 pts.
தயாரிப்பு 2 A அருணகிரி B.Com;
பதிப்பாளர் முகவரி;- Soodama ni PraSurañan 36 A18, Govindan Road, (First Floor) West Mambalam, MadraS-600 033. IBharathi Stores l'air Lisplb
能28
பக்கம்
விலை * @
PRICE
அச்சிட்டோர் :
கார்த்திக் பிரிண்டர்ஸ், 26/1, பாரதீஸ்வரர் காலனி, 2வது தெரு, கோடம் டாக்கம், சென்னை-600 024,

திரு. சோ. சநதிரசேகரன் கொழும்புப் பல்கலைக் கழக கல்விப் போதனா பீடத்தில் சிரேட்ட விரிவுரை யாளராகவும் சமூக விஞ்ஞான க ல் வித் துறை த் தலைவராகவும் பணியாற்றுபவர்.
பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கல்வியியல் துறையில் சிறப்புப் பட்டம் பெற்ற இவர் ஜப்பானில் ஒசாக்கா அயல்மொழிப் பல்கலைக் கழகத்திலும், ஹிரோசிமா ப ல் க  ைல க் க ழ க த் தி லும் பயின்று கல்வியியல் துறையில் எம். ஏ பட்டம் பெற்றவர்.
கல்வியியல் துறையில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ள இவர் இலங்கை வாழ் ம க் க ளி ன்

Page 5
4.
கல்வி வளர்ச்சி பற்றி விசேடமாக ஆராய்ந்து வருவதோடு, உலக நாடுகளின் கல்வி வளர்ச்சி பற்றிய ஆய்விலும் ஈடுபட்டு வருகிறார்.
இருபது ஆண்டு காலமாக பல்கலைக்கழக ஆசிரியராகப் பணியாற்றி வரும் இவர் இலங்கை இந்து சமய கலாசார இராஜாங்க அமைச்சரின் ஆலோசகராகவும் விளங்குகின்றார்.
இவரது தாய், தந்தையர் தமிழ்நாட்டின் இராமநாதபுர மாவட்டத்தைச் சேர்ந்த சிக்கல்
கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தேசிய நூலகப் វិធា மாநகர நூலக கேலிெ
திரு. மா. கருணாத oபாழுமபுப பல்கலைக் கழக, சமூக விஞ்ஞானத் துறையில் விரிவுரை பாளராகப் பணிபுரிபவர்.
அல்வாய் தெற்கினைப் பிறந்தகமாகக் கொண்ட இவர் தனது முதற் சிறப்புப் பட்ட த் தி னை ப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில், புவியியற்றுறை யில் பெற்றுக் கொண்டு, அதே பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணி புரிந்தார்.
பின்னர் நிரந்தர ஆசிரியர் நியமனத்தைப் பெற்ற காலத்தில் (பாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பு திப்புளோமாப் பயிற்சி நெறியில் சிறப்புத் தேர்ச்சியையும், கல்வியியலில் முதுகலைமாணிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டவர்.
நவரெலியா பரிசுத்தத் திரித்துவக் கல்லூரியில் சில வருடங்கள் அதிபராகக் கடமைபுரிந்து, முதலாம் தர அதிபர் நியமனமும் பெற்றவர்.

Page 6
முன்னுரை
பல்கலைக் கழகங்களிலும் கல்வியியல் கல்லூரி
களிலும் இடம் பெற்றுள்ள கல்வியியல் LJTL6J ňLITL to 6ö
கல்வி வரலாற்றுக்கும் கல்வி வளர்ச்சிக்கும் முக்கிய ஒரு இடம் அளிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளில் கல்வி பயிற்றும் ஆசிரியர்களும் கல்வித்துறை சார்ந்த உயர்பதவியாளர்களும் தமது நாட்டின் கல்வி வளர்ச்சியின் முக்கிய போக்குகள் பற்றியும் அவ்வளர்ச்சிக்கு ஏதுவாயமைந்த காரணிகள், சூழ்நிலைகள், க ல் வி க் கொள்கை, கல்வித் தத்துவம் என்பன பற்றி நுணுக்கமாக அறிந்திருத்தல் அவர்தம் தொழில்சார் வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்பதில் ஐயமில்லை.
கல்வியியல் மாணவர்கள் இத்துறையில் தமது அறிவை வளர்த்துக்கொள்ள போதிய நூல்கள் தமிழில் இல்லை.
ஆங்கில மொழியில் இத்துறை சார்ந்த விரிவான
"நூல்களும் ஆய்வுக் க ட் டு ரை க ளு ம் ஏராளம்
உண்டெனினும் அவை தமிழ்மொழி மூலம் பயிலும் மாணவர்களுக்குப் பெறும் பயன் அளிப்பதில்லை,
 
 

ஆங்கில மொழியில் வா சி ப் ப தி ல் ஊக்க மின்மையும் அ ம் மொ ழி யி ல் போதிய தேர்ச்சி யின்மையும் இதற்கு முக்கிய காரணங்களாகும்.
இம் மாணவர்களின் நன்மை கருதி இந்நாட்டின் கல்வி வளர்ச்சி பற்றிய நூல்கள் எழுதப்பட வேண்டிய
ஒரு முக்கிய தேவையொன்றுண்டு. அத் தேவையை ஒரளவு நிறைவு செய்யும் நோக்குடன் இச் சிறிய
நூலை வெளியிட யாம் முடிவு செய்தோம்.
இத் துறையில் மேலும் பல நூல்கள் எழ இச்சிறு b ஒரு முன்னோடியாக அமையும் என்றும்
இன்று, வளர்ச்சி பேதம், சித்தாந்த வேறுபாடுகள் என்பவற்றைக் கடந்த நிலையில் சகல நாடுகளுமே கல்வி வளர்ச்சியில் அக்கறை செலுத்துகின்றன.
சகல சமுதாயங்களினதும் எதிர்கால சமூக, பொருளாதார, பண்பாட்டு அபிவிருத்திக்கான முக்கிய திறவுகோல் கல்வி என்பதற்கு அதிக எதிர்க் கருத்தில்லை
1950களில் மேலை நாடுகளில் மேற்கொள்ளப் ..., கல்வியியல் ஆராய்ச்சிகள் பொருளாதார வளர்ச்சிக்கும் கல்வி வளர்ச்சிக்குமிடையிலிருந்த நருக்கமான தொடர்பை விஞ்ஞான ரீதியாக டுத்துக் காட்டின.

Page 7
8
இதனைத் தொடர்ந்து, 1960களில் வளர்முக நாடுகள் தமது தேசிய அபிவிருத்தித் தொடர்பான இலட்சியங்களை நிறைவு செய்ய கல்வி வளர்ச்சியில் அக்கறை செலுத்தின; அதற்கெனப் பல்வேறு கல்விக் கொள்கைகளை வகுத்தன.
அக்கல்விக் கொள்கைகளின் விளைவுகள் பற்றிய பரிசீலனை எதிர்கால கல்வி வள ர் ச் சி க் கா ன கொள்கைகளை வ கு ப் ப த ற் கு ப் பேருதவியாக அமையும்.
கல்வி வளர்ச்சி பற்றிய இவ்வாறான பரிசீலனை கல்வித்துறை சார்ந்தவர்கள், தாம் பணிபுரியும் கல்வி முறையைச் சரிவரப் புரிந்துகொண்டு பணியாற்றவும் துணைபுரியும்,
அத்துடன் நாட்டின் கல்விவளர்ச்சியில் அக்கறை செலுத்துகின்ற பல்வேறு தரப்பட்டவர்களும் கல்வி வளர்ச்சி பற்றி ஆழ்ந்து சிந்திக்கவும் இந்நூலில் தரப்பட்டுள்ள கருத்துகள் உறுதுணையாக அமையும் என நம்புகின்றோம்.
இவண்
தொகுப்பாசிரியர்கள், சோ. சந்திரசேகரன், சமூக விஞ்ஞான கல்வித்துறைத் தலைவர், கல்வி போதனா பீடம், கொழும்புப் பல்கலைக்கழகம்
மா. கருணாநிதி, கல்வியியல் விரிவுரையாளர், கொழும்புப் பல்கலைக்கழகம்,
 
 

இந்து சமய மறுமலர்ச்சியும் கல்வி வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பும்
பண்டைய மரபுவழிக் கல்விமுறையில் சமயங்களின் செல்வாக்குப் பெருகிக் காணப்பட்டது. கல்வி என்பது பெருமளவுக்குச் சமயக் கல்வியாகவே விளங்கியது, கல்விப் பொருள் அல்லது பாட ஏற்பாடு முற்றாகவே சமய தத்துவங்களைக் கருதியதாகவே அமைந்தது. மேலும்,
கல்வி
பொறுப்பானவையாகவும் வழங்கும் நிலையங்களாகவும் விளங்கின.
மேலைநாடுகளில் கூடத் தேசிய அரசுகள் திருச்சபையே கல்விப் பொறுப்பை வகிக்கப் பொருத்தமான நிறுவனம் எனக் கருதின. கல்வியை வழங்குவதற்கான செலவுகளை ஈடுசெய்ய மக்கள் மீது வரிவிதிக்கும் அதிகாரத்தை திருச்சபை பெற்றிருந்தது. அத்துடன் மேலைநாடுகளிலும் கீழை நாடுகளிலும் சமயத் துறவிகளே கல்வியை வழங்கும் ஆசிரியர் களாகக் காணப்பட்டனர் போதிய கல்வி அறிவும் அதனை வழங்குவதற்கான நேரமும் சமயத்துறவிகளிடமே இருந்தது.
ஒரு குறிப்பிட்ட சமயத்தைச் சார்ந்தவர்களுக்கு அச்சமய அறிவினை வழங்கி, அவர்கள் தமது சமயத்தில் போதிய

Page 8
70 இலங்கையின் கல்வி வளர்ச்சி
பற்றுறுதி உடையவர்களாக்க வேண்டியது சமய நிறுவனங் களின் முக்கியப் பணியாயிற்று. மடாலயப்பள்ளிகள் இவ்வாறு சமயப் பிரசார நிலையங்களாக விளங்கின. இந்நிலை இன்று கூட மறைந்து விடவில்லை. இன்று பாடசாலைப் பாட ஏற்பாடு பெருமளவுக்குச் சமயச் சார்பற்றதாக ஆக்கப்பட்டு நவீன சமூக அறிவியல், இயற்கை அறிவியல் பாடநெறிகள் கற்பிக்கப்படுகின்றன.
சமயச் சார்பற்ற பாட ஏற்பாடு இன்று நிலைகொண்டு விட்ட நிலையில் சமயக் கல்வியை வ ழ ங் கு வ த ற் கு ப் பாடசாலை அமைப்புக்கு வெளியே அறநெறிப் பாட சாலைகள், பிரிவேனாக்கள், ஞாயிறு பாடசாலைகள், மதரசாக்கள் என்பன உரு வா க் க ப் ப ட் டு ள் ள ன பா ட சா லை க ளி ல் சமயமும் இன்று ஒரு பாடமாகக் கற்பிக்கப்படுகின்றது.
இந்நிலையில், சமயச் சார்பற்ற உலகியல் கல்வியைச் சமூக அறிவியலை, இயற்கை அறிவியலை, கணிதத்தை மற்றும் தாய்மொழி, ஆங்கிலம் முதலிய பாடங்களைப் பல்வேறு சமயங்களைச் சார்ந்த பிள்ளைகளும் தத்தமது சமயச்சூழலில் பயில வேண்டும் என்ற கருத்து இலங்கையில் பெரிதும் விரும்பப்படுகின்றது.
இப்பின்னணியில் பெ ரு ம் பா லா ன பாடசாலைகள் ஒவ்வொரு சமயத்துக்குரிய பாடசாலைகளாக வளர்ச்சி பெற்றுள்ளன அப்பாட சாலைகளில் பெரும்பான்மையாகக் கல்விபயிலும் மாணவர்களுடைய சமயம் சார்ந்த விழாக்கள், வைபவங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன.
எடுத்துக்காட்டாக- இந்துப் பாட சா  ைல களி ல் நவராத்திரி விழாக்களும் குரு பூசைகளும் பிரார்த்தனைகளும் நடைபெறுகின்றன; இஸ்லாமியப் பாடசாலைகளில் மீலாத் விழாச்கள் கொண் டா ட ப் படுகின்றன; இது போன்றே

இலங்கையின் கல்வி வளர்ச்சி ή 1
பெளத்த, கிறித்தவப் பாடசாலைகளிலும் அவரவர் சமய விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
இவ்வாறான சமய விழாக்களைக் கொண்டாடுவத னாலும் ஒவ்வொரு நாளும் சமயப்பிரார்த்தனையின் பின்னர் வகுப்புகள் தொடங்கப்படுவதாலும் பாடசாலைகளில் ஒரு ச ம ய ச் சூழ்நிலை ஏற்படுத்தப் படுகின்றது. இவ்வாறான சூழ்நிலையை உருவாக்குவது ஒரு முக்கிய தேவை என்று இன்று கருதப்படுகின்றது.
இவ்வாறான ஒரு கருத்து இலங்கையில் சற்றே தீவிரமாக உருவானதற்கான பின்னணியையும், குறிப்பாகச் சென்ற நூற்றாண்டில் எழுந்த இந்து சமய மறுமலர்ச்சி கல்வித்துறை வளர்ச்சியில் ஏற்பட்ட தாக்கத்தையும் ஆராய்வதை இக் கட்டுரை நோக்கமாகக் கொண்டது.
பதினாறாம் நூ ற் றா ண் டி ல் ஐ ரோ ப் பியர் ஆட்சி
இலங்கையில் தொடங்கும் வரை நாட்டில் உள்ளூர் சமய
நிறுவனங்களே கல்வியை வழங்கி வந்தன. கல்வித்துறையில் இந்து, பெளத்த சமய மரபுகளே ஆதிக்கம் செலுத்தின.
இந்துக்களின் கல்வியைப் பொறுத்தவரையில், குறிப்பாக வட, கிழக்கு மா கா ண ங் க ளி ல் கல் வி யி ன் நோக்கம், கல்விப்பொருள் என்பனவற்றில் இந்து சமய தத்துவங்களின் செல்வாக்கே மேலதிகமாகக் காணப்பட்டது.
வான சாஸ்திரம், சோதிடம், இலக்கணம், தருக்கவியல் போன்ற பாடங்கள் கற் பிக் க ப் பட் டா லு ம் அவற்றைக் கற்பிக்கும் நிலையங்கள் ஆலையங்களாகவும் கற்பிப்போர் சமயத்துறவிகளாகவும் காணப்பட்டனர்.
இவற்றைவிட குருவின் இல்லத்தை அடைந்து அவருக்குச் சேவை செய்து, பல்வேறு கலைகளையும் கற்கும் குரு சிட முறையும் அக்காலத்திலிருந்தன.

Page 9
1 2 இலங்கையின் கல்வி வளர்ச்சி
வரலாற்றாசிரியர் அரசரத்தினம் தமது இலங்கை" என்ற நூலில் இந்துக்கல்வி மரபு பற்றிப் பின்வருமாறு கூறுவார்:
ஆரம்பகாலத்திலிருந்தே மக்கள் மத்தியில் கல்வி நன்கு பரவி எழுத்தறிவுள்ள சமுதாயமொன்று உருவாக்கப் பட்டிருந்தது. ஆலையப் பாடசாலைகளும் திண்ணைப் பாடசாலைகளும் கிராமப்புறங்களில் கல்வி வழங்கின. 15-ஆம் நூ ற் றா ண் டி ன் முடிவில் நல்லூரில் ஒரு தமிழிலக்கிய க ல் வி நி லை ய ம் அமைக்கப்பட்டது. இந்நிலையம் பழந்தமிழ் இலக்கிய நூல்களைச்சேகரித்துப் பாதுகாப்பதில் அரு ம் பணி ஆற் றி யது, இக்காலப் பகுதியில் சில வரலாற்று நூல்களும் எழுதப்பட்டன; சமஸ்கிருத நூல்கள் மொழி பெயர்க்கப்பட்டன.
அத்துடன் மருத்துவம், சோதிடம் ஆகிய துறைகளிலும் அறிவிற் சிறந்தோர் காணப்பட்டனர். யாழ்ப்பாணத்தில் சித்த ஆயுர்வேத மருத்துவம் சிறப்புற்றிருந்தது. 1621-ஆம் ஆண்டில் சங்கிலி மன்னன் ஆட்சி வீழ்ச்சியடைந்ததுடன் இந்துமதக் கல்வியும் ச ரி வ டை ய நேரிட் ட து. மிக்க ஆர்வமுள்ள இந்துக்கள்போர்த்துக்கேய ஆட்சியாளர்களுக்குத் தெரியாமல் இரகசியமாகத் திண்ணைப் பள்ளிகளை நடத்தி கல்வி அறிவைப் பர ப் பி ன ர், ஒல்லாந்தர் கா லத் தி லும் அடக்குமுறை இடம்பெற்றாலும் அக்காலத்திலும் இந்து இலக்கியங்கள் பல வெளிவந்தன.
பதினாறாம் நூற் றா ண் டு தொ ட க் க ம் ஏற்பட்ட போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகியோரின் ஆட்சியின் காரணமாக உள்ளூர் சமயங்களினுடைய கல்வி நிறுவனங்களும் அவை போற்றிப் பாதுகாத்து வந்த கல்வி மரபுகளும் விழுமியங்களும் பெரு வீழ்ச்சியடைந்தன.
போர்த்துக்கேயர் வர்த்தகத்துறையில் மட்டுமல்லாது தமது கத்தோலிய சமயத்தைப் பரப்புவதிலும் கூடிய அக்கறை

இலங்கையின் கல்வி வளர்ச்சி 】岛
காட்டினர். ஆட்சியாளருடைய ஆதரவுடன் பல சமயக் குழுவினர் நாட்டுக்கு வந்தனர். அவர்கள் அமைத்த பாட சாலைகளும் மேற்கொண்ட பாட ஏற்பாடும் உலகியற் கல்வியைக் கருத்திற் கொள்ளாது, கல்வியினூடாகத் தமது சமயத்தை விரிவாகப் பரப்பும் முயற்சியிலேயே ஈடுபட்டன.
ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் அரசாங்கமே நேரடியாகக் கல்வியில் ஈடுபட்டது பல்வேறு அதிகாரங்களைக் கொண்ட பாடசாலைச் சபை ஒன்று கிறித்த சமய குருமார்களின் தலைமையின் கீழ் அமைக்கப்பட்டது பாடசாலைகள் எந்த அளவுக்குக் கிறித்தவ சமய போதனையை வழங்குகின்றன; மாணவர்கள் எந்த அ ள வு க் குக் கிறித் தவ சமயத்தில் பற்றுறுதியுடன் இருக்கின்றனர்; அவர்களுடைய சமய அறிவு எத்தகையது என்பனவற்றை இப்பாடசாலைச் சபைப் பரிசோதகர்கள் பரிசீலித்தனர். கிறித்தவ சமயத்தவரே ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். கத்தோலிக்க சமயம் பெற்றிருந்த செ ல் வா க் கை அழிப் ப த ற் கு ஒல்லாந்தர் அரசாங்கம் கட்டாயக்கல்வி முறையைப் புகுத்தியது.
பாடசாலைகளுக்குக் கட்டாயமாகச் சென்ற மாணவர்கள்
மதமாற்றங்களுக்கு உள்ளாயினர். இவ்வாட்சியாளர்கள் காலத்தில் மத மாற்றத்தைச் செய்வதற்கான ஆற்றல் மிகுந்த நிலையங்களாகப் பாடசாலைகள் இருந்தன. உள்ளூர்
சமயங்களின் வளர்ச்சி அரசாங்க ஆதரவு அற்றநிலையில் வீழ்ச்சியுற நேர்ந்தது.
(ஆங்கிலேயர் ஆ ட் சி க் கா ல த் தி லும், ஆர ம் பம் தொடக்கமே சமயக்குழுவினர் கல்விமுறையில் ஆதிக்கம்
செலுத்தத் தொடங்கினர். றொபர்ட் பிரெளன்றிக் போன்ற தேசாதிபதிகள் இலங்கையில் ச ம ய க் குழுவினர் நி ைல கொள்வதற்குக் காரணமாயினர். அரசாங்கம் தனது கல்விப் பொறுப்பை சமயக்குழுவினரிடம் வழங்கியது. இலங்கையில்

Page 10
4 இலங்கையின் கல்வி வளர்ச்சி
சமயக்குழுப் பாடசாலை முறை ஒன்று தோன்றுவதற்கு முக்கியமாக பிரெளன்றிக் தேசாதிபதி கார ண மாக இருந்தார். 1830-ஆம் ஆண்டளவில் நாட்டில் பெளத்த, இந்து சமயப் பாடசாலைகள் என்று ஒன்றும் இருக்கவில்லை. 236 கிறித்தவ சமயக்குழுப் பாடசாலைகளும் 97 அரசாங்கப் பாடசாலைகளும் 640 த னி யார் பா ட சாலை க ளு மே இருந்தன.
1830-ஆம் ஆண்டின் கோல்புறுக் குழுவினர் கல்விமுறைச் சீர்திருத்தங்கள் பற்றிய தமது அறிக்கையில் நாட்டின் பாரம்பரிய, சமய கல்வி மரபுகள் பற்றி கருத்துத் தெரிவித்த போது சுதேச சமயக் குழுக்களால் கோயில்களிலும் மடாலயங்களிலும் கற்பிக்கப்படும் கல்வி கருத்திற்கொள்ளத் தக்கதன்று என்று கருத்துத் தெரிவித்தனர்.
இதற்கு மாறாகக் கி றி ஸ் த வ சமயக் குழுவினரின் பாடசாலைகளையிட்டு கோல்புறுக் குழுவினர் திருப்தி தெரிவித்தனர். கல்வி வசதிகளை வழங்கியமைக்காக இலங்கைமக்கள்சமயக் குழுவினருக்குப் பெரிதும் கடமைப்பட் டிருந்தார்கள் என்று அவர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
வட மாகாணத்தில் அமெரிக்கன் ச ம ய க் குழுவினர் ஆற்றிய கல்வித் தொண்டுகளை இக்குழுவினர் பலவாறு புகழ்ந்துரைத்தனர். ஆயினும் சமயக் கு மு வி ன ர் பாடசாலைகளினூடாக சமயமாற்றப்பணியில் ஈடுபட் டிருந்ததுபற்றிகோல்புறுக் குழுவினர் எதுவும் கூறவில்லை.
\கோல்புறுக் குழுவினர் பல்வேறு வழிகளில் ச ம ய க் குழுவினரின் கல்விப் பணிகளுக்கு ஊக்கமளித்தனர். சமயக் குழுவினரின் பாடசாலைகள் அமைந்திருந்த பகு தி க ளி ல் அரசாங்கம் LIT L5 T68) 3) BG) 6T அமைக்க வேண்டிய
அவசியமில்லை என விதந்துரைத்தனர்.\
 

G ...aحرRA
இதனால் அ ப் பகு தி க ளின்-கல்வி-வளர்ச்சி-3 குழுவினரின் ஏகபோக உரிமையாயிற்று. வேறு வழியின்றி பெளத்த இந்துப் பிள்ளைகள் ச ம ய க் குழு வி ன ரின் பாடசாலைகளிலேயே பயில வேண்டிய நிலை உருவாயிற்று.
1832 ஆம் ஆண்டில் நாட்டின் பாடசாலைகளை மேற் பார்வை செய்ய அமைக்கப்பட்ட பாடசாலை ஆணைக் குழுவில் அத்தியட்ச குருவும் திருச்சபைக் குருமாரும் அங்கம் வகித்தனர். உள்ளூர் சமயத்தவருக்கு இக்குழுவில் எதுவித இடமும் இருக்கவில்லை. ஆயினும் உள்ளூர் சமயங்களைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்களின் கல்வியை மேற் பார்வை செய்வதே இக்குழுவின் பணியாயிற்று. 1868 ஆம் ஆண்டில் இவ்வாறான மேற்பார்வை முறை கைவிடப்பட்டு அப்பணி புதிதாக உருவாக்கப்பட்ட பொதுப் போதனைத் திணைக்களத்திடம் ஒப்புவிக்கப்பட்டது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கிறித்த சமயக்குழுப் பாடசாலைகளுக்கு அரசாங்க உதவி நன்கொடை வழங்கும் முறையொன்றும் ஆரம்பிக்கப்பட்டது. ஆங்கி லத்  ைத ப் போதனா மொழியாகவும் மதகுருவை மேலதிகாரியாகவும் கொண்ட பாடசாலைகளுக்கே உதவி நன்கொடை வழங்கப் பட்டது. ஆயினும் இவ்வாறான பாடசாலைகள் கிறித்த சமயத்தைக் கற்பிப்பதைப் பொறுத் த வ  ைர யி ல் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.
பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் மாற்றுச் சமய போதனை பெறு வ ைத விரும்பாதவிடத்து அப்பிள்ளை பாடநேரத்தில் வெளியே செல்ல அனுமதிக்கப்படல் வேண்டும் என்பது ஒரு நிபந்தனை. இது ஒரு சி ற ந் த ஏற்பாடாக அமைந்த போதிலும் ஆங்கி லே யார் ஆட்சிக் காலத்தில் பெளத்த, இந்து சமயப் பிள்ளைகளுக்கு பெற்றோர் விரும்பி னாலும் விரும்பாவிட்டாலும் கிறித்தவ சமயம் கற்பிக்கப்

Page 11
16 இலங்கையின் கல்வி வளர்ச்சி
படக்கூடாது என்ற நேரடியான கட்டுப்பாடு கொ ன் டு வரப்பட நீண்ட காலம் ஆயிற்று.
1880 ஆம் ஆண்டளவில் அரசாங்கப் பாடசாலைகளும் சமயக் குழுவினரின் பாடசாலைகளும் சுயமொழிகளிலேயே கற்பித்து வந்தன. கோல்புறுக் குழுவினர் ஆங்கிலக் கல்வி வளர்ச்சிக்கு ஆதரவு வழங்கும் வகையில் விதந்துரைகளை செய்திருந்தனர். அரசாங்கப் பதவிகளில் ஆங்கிலம் தெரிந்த இலங்கையர்களும் அ ம ர் த் த ப் பட லா ம் என்று குழு விதந்துரைத்தது. இதனால் பாடசாலைகள் யாவும் ஆங்கில மொழியைப் போதனா மொ ழி யா க க் கொள் ள ஆரம்பித்தன.
ஜரோப்பியராட்சிக் க ர ல த் தி ல் கிறித்தவ சமயக் குழுவினர் அமைத்த பாடசாலைகளில் எ ப் பே ா து மே தாய்மொழிக் கல்விக்கே முக்கியத்துவம் வழங்கினர். சமயம் பரப்பும் பணியை ஆங்கிலக் கல்வியினூடாகச்செயவதைவிடச் சுயமொழிக் கல்வியினூடாகச் செய்வதே இலகுவானது என்று அவர்கள் கி ரு தி ன ர், சுயமொழியில் கற்பிப்பதற்கான ஆசிரியர்களையும் இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடியாது.
இவ்வகையில் சமயம் பரப்பும் நோக்கம் பிள்ளைகளில் போதனா மொழி எது என்பதைத் தீர்மானித்தது. ஆயினும் கோ ல் பு று க் குழுவினரின் விதந்துரையின் காரணமாக அரசாங்கப் பாடசாலைகள் தமது போதனா மொழியாக ஆங்கிலத்தைக் கொண்டமையால் சமயக்குழுப் பாடசாலை களும் அவ்வாறே செய்ய வேண்டியதாயிற்று.
சமயக்குழுவினர் அமைத்த உயர்கல்வி நிலையங்களும் ஆரம்பத்தில் பரந்த சமயச் சார்பற்ற உலகியற் கல்வியை வழங்காது கிறித் த வ போதகராகவும் உபதேசியாகவும் வரவிரும்புபவர்களுக்குத் தே  ைவ ய ர ன பயிற்சியையே

இலங்கையின் 46)6) 616 Tri žga 17
வழங்கின. வெஸ்லியன் மற்றும் திருச்சபை சமயக்குழுவினர். இவ்வாறான உயர் கல்வி நி  ைல ய ங் க  ைள  ேய அமைத்தனர். அமெரிக்கன் சமயக்குழுவினர் அமைத்த உயர்கல்வி நிலையங்களே சமயச் சார்பற்ற உலகியற் கல்வியை வழங்குவனவாக இருந்தன.
ஆங்கிலக் க ல் விக் கு முக்கியத்துவமளிக்கப்பட்டமை காரணமாகவும் ஆங்கிலத் தேர்ச்சியினூடாக அரசாங்க பதவிகளைப் பெற்று சமூகப் பொருளாதார அந்தஸ்தை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்பதாலும் பெளத்த, இந்து மக்கள் மத்தியில் ஆங்கில மொழி மூலம் கற்கும் ஆர்வம் அதிகரித்தது. ஆயினும் ஆங்கிலக் கல்வியைப் பெற உள்ளூர் சமயங்களைச் சேர்ந்தவர்கள் கிறித்தவ சமயக் குழுவினரின் பாடசாலைகளிலேயே சேர்ந்து பயில வேண்டியிருந்தது.
மாணவர்கள் தமது சொந்த சமயச் சூழலைக் கொண்ட பாடசாலைகளில் இரு க் க வி ல்  ைல மேலும் சமயக் குழுவினருடைய பா ட சா  ைல க ளி ன் பண்பாடும் விழுமியங்களும் உள் ளு ர் சமயத்தவருக்குப் பொருத்த மானவையாக இருக்கவில்லை.
ஆங்கிலேயர் ஆட்சிக் கால த் தி ல் சுய மொ ழி ப் பாடசாலைகள் பெருவளர்ச்சி பெறத் தொடங்கிய போது ஆங்கிலப் பா ட சா  ைல க ள் மிகக் குறைவாக இருந்தன. ஆட்சியாளர்கள் தெரிவு செய்ய ப் பட்ட ஒரு சிலருக்கு ஆங்கிலக்கல்வி, பாமரமக்களுக்குச் சுய மொ ழி க ளி ல் ஆரம்பக் கல்வி என்ற கொள்கையைக் க  ைட ப் பி டி க் கத் தொடங்கிய பின்னர் இந் நி ைல ஏற்பட்டது. ஏறத்தாழ 1870க்குப் பின்னரே சுயமொழிப் பா ட சா  ைல க ள் இவ்வாறான வளர்ச்சியைப் பெற்றன.
1929 ஆம் ஆண்டில் நாட்டில் கா ண ப் ப ட் ட 4941 பாடசாலைகளில் 267 பாடசாலைகள் மட்டுமே ஆங்கிலப்

Page 12
இலங்கையின் கல்வி வளர்ச்சி
பாடசாலைகளாக இரு ந் த ன, பாடசாலைக்குச் சென்ற
பிள்ளைகளில் 10 வீதமானவர்கள் மட்டுமே ஆங் கி ல ப் பாடசாலைகளுக்குச் சென்றனர். இது பிரித்தானியர்களின் கல்விக் கொள்கைக்கு ஏற்ப அமைந்தது. இக்காலப்பகுதியில் ஆங்கிலக் கல்வியை வழங்குவதில் அரசாங்கம் அ தி க ம் ஈடுபடவில்லை.
பெரும்பாலான ஆங்கிலப் பாடசாலைகள் கிறித்தவ சமயக் குழுவினரின் பாடசாலைகளாகவே இருந்தன 1929 இல் நாட்டில் காணப்பட்ட 267 ஆங்கிலப் பாடசாலைகளில் 251 உதவி பெறும் ச ம ய க் குழுப் பாடசாலைகளாக இருந்தன. எஞ்சிய 16 பாடசாலைகளும் அ ர சா ங் க ப் பாடசாலைகளாக இருந்தன.
இதனால் ஆங்கிலக் கல்வியை விரும்பிய பெளத்த, இந்து மாணவர்கள் சமயக் குழுவினரின் பாடசாலைகளில் பிற மதச் சூழ்நிலையில் பயில வேண்டியதாயிற்று.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் வளர்ச்சியுற்ற சுய மொழிகளிலான ஆரம்பக் கல்வியைப் பெறவும் பெளத்த, இந்துப் பிள்ளைகள் சமயக் குழுவினரின் பாடசாலைகளையே பெரும்பாலும் நாடவேண்டியிருந்தது. 1867 ஆம் ஆண்டின் மோகான் கல்விக் குழுவினரின் அறிக்கையில் சுயமொழிக் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் ஊக்கம் வழங்கப்பட்டது.
சுயமொழிக் கல்வியின் முக்கியத்துவத்தை அரசாங்கம் உணர்ந்திருந்த போதிலும் அரசாங்க சுய மொ ழி ப் பாடசாலைகள் மேல் மாகாணத்தில் மட்டுமே காணப் பட்டன. கோல்புறுக்குழு ஆங்கிலக் கல்வியைவலியுறுத்தியதுஆயினும், சமயக் குழுவினர் சமயம் பரப்பும் நோக்கினை நிறைவு செய்ய சுயமொழிக் கல்வியையே பெ ரி து ம்
 
 
 

இலங்கையின் கல்வி வளர்ச்சி 19
மோகான் குழு நாட்டின் மக்களில் பெரும்பாலோரின் அறியாமையைப் போக்கப் பரந்த அளவில் கல்வியை வழங்க வேண்டுமென்று விதந்துரைத்தது. ஆயினும் இவ்வாறான சுயமொழிக் கல்வியை வழங்கும் பணியில் பெளத்த, இந்து குருமார் ஈடுபடுவதை இக்குழுவினர் விரும்பவில்லை. கிறித்தவ சமயக்குழுவினரும் அரசாங்கமும் ஆர ம் பக் கல்வியைச் சுயமொழிகளில் வழங்க வேண்டும் என்பது குழுவின் கருத்தாக இருந்தது.
மோகான் குழுவினர் வழங்கிய ஊக்கத்தைத் தொடர்ந்து 1929 ஆம் ஆண்டளவில் 32 6 சுயமொழிப் பாடசாலைகள் நாட்டில் உருவாகியிருந்தன. இதே ஆண் டி ல் ஆங்கிலப் பாடசாலைகளின் தொகை 267 ஆக மட்டுமே இருந்தது. 3256 சுய மொழிப்பாடசாலைகளில் 2057 உதவி பெறும்
பாடசாலைகளாகவே இருந்தன. அதாவது சுயமொழிகளில் ஆரம்பக்கல்வி பெறவும் பெளத்த, இந்துப் பிள்ளைகள் பெரும்பாலும் சமயக்குழுப் பாடசாலைகளிலே தங்கியிருக்க நேரிட்டது.
சுருங்கக் கூறின், நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த கல்வித்துறையில் உளளுர் சமய நிறுவனங்களின் பங்களிப்பு அந்நியராட்சியின் தாக்கத்தின் விளைவாக மிகவும் பின்தங்க நேரிட்டது. உள்ளூர் சமயங்களுக்கு அரசாங்க ஆதரவு இருக்கவில்லை.
கிறித்தவ சமயக் குழுவினர் அரசாங்க ஆதரவுடனும் ஏனைய மூலவளங்களுடனும் ஆங்கிலக் க ல் வி யி லும் சுயமொழிக் கல்வியிலும் மேலாதிக்கத்தைச் செலுத்தி வந்தனர். பெளத்த, இந்துப் பிள்ளைகள் தமது சமயச் சூழ்நிலையை விடுத்துப் பிற சமயச் சூழ்நிலையில் கல்வி பயில நேரிட்டது.

Page 13
20 இலங்கையின் கல்வி வளர்ச்சி
இந்நிலையில் 1850-ஆம் ஆண்டளவில் நா ட் டி ல் பெளத்தர்கள், இந்துக்கள், முஸ்லீம்கள் ஆகியோரின் கல்வி வசதிகளும், தத்தம் சமய சூழ்நிலைகளில் கல்வி கற்பதற்கான வாய்ப்புகளும் நலிவடைந்து காணப்பட்டன. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அரை நூற்றாண்டுக் காலமாகச் சமயக் குழுவினர் நாட்டின் சகல பகுதிகளிலும் தமது கல்விப் பணிகளை விரிவு செய்திருந்தனர். சமயக்குழுவினரின் பாடசாலைகள் ஆற்றல் மிக்க மதமாற்றக் கருவிகளாக விளங்கின.
சமூக, பொரு ளா தா ர ந ன்  ைம க ரூ ட னு ம் மேம்பாட்டுடனும் தொடர்புபடுத்தப்பட்ட முறையில் உருவாகியிருந்த கல்விமுறை, சமயக்குழுவினரின் ஏகபோக உரிமையாகக் காணப்பட்டபடியால், அவர்களுடைய பாட சாலைகளுக்கே சகல மதப் பிள்ளைகளும் செல்ல வேண்டி யிருந்தது. இப்பிள்ளைகள் சமயக்குழுவினரின் சமயமரபுகளின் செல்வாக்கிற்குட்பட்டனர்.
இதனால் காலப்போக்கில் தமது சமய மரபுகளிலிருந்து அவர்கள் அந்நியப்படுத்தப்பட்டனர்; தமது சமயங்களில் செலுத்த வேண்டிய அக்கறையை அவர்களால் செலுத்த முடியவில்லை.
ஆயினும் 1850-களில் உள்ளூர் சமயத்தவர்கள் தமது பின்தங்கிய நிலையை உணர்ந்தனர். சமயக்குழுக்களின் ஆதிக்கத்துக்கு எதிராக தெற்கிலும் வடக்கிலும் குரல் எழுப்பப்பட்டது. வடக்கில் எழுச்சியுற்ற இயக்கத்துக்கு ஆறுமுகநாவலர் (1822-1879) தலைமை தாங்கினார்.
அவர் கிறித்தவ பாடசாலையில் கல்வி கற்றமையால் சமயக் குழுக்களின் நிர்வாக அமைப்பு, பிரசார முறைகள் என்பன பற்றி நன்கு அறிந்திருந்தார். அவர் சமயக்

இலங்கையின் 2 1
குழுவினரின் மொழி பெயர்ப்பாளராகப் பணி புரிந்தபோது, சமயக்குழுவினரின் சமயம் பரப்பும் நோக்கங்களுக்காகத் தாம் g2(15 கருவியாகப் பயன்படுத்தப்படுவதை உணர்ந்து அத்தொழிலைக் கைவிட்டார்.
அதன் பின்னர் கிறித்தவ சமயம் பரப்பப்படுவதை எதிர்த்து சைவ சமய வளர்ச்சிக்குப் பாடுபட்டார். பெளத்த பிக்குகளைப் போன்று அவரும் கிறித்தவர்களுடன் சமய விவாதங்களில் ஈடுபட்டார். அவருடைய வாழ்க்கையின் முப்பது ஆண்டுக் காலப்பகுதியில் அவர் இந்து மக்களுக்கு இந்து சமயத்தின் பெருமைகளை எடுத்துரைத்தும் LITLFITGO)6).568) (GT அமைத்தும், இந்து சமயத்துக்குப் புத்துயிரளித்தார். அவரமைத்த பாடசாலைகள் இந்து சமயத்தையும் தமிழ் மொழியையும் இலக்கியத்தையும் வளர்க்கும் நிலையங்களாக விளங்கின.
சமயக்கல்வியின் அவசியத்தையும் மனித வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு அதன் தேவையைப் பற்றியும் சமயக்குழுவினர் கொண்டிருந்த முடிவினை ஆறுமுகநாவலர் ஏற்றுக் கொண்டார். எனினும் மக்களின் தேவைக்கும் மகிழ்ச்சிக்கும் அவர்களுடைய பாரம்பரிய சமயமே உதவவேண்டுமேயன்றி மேற்கு நாட்டுச் சமயமன்று என்பது அவரது கருத்தாக இருந்தது.
இதனடிப்படையில் அவர் சமயக் குழுவினரின் மதமாற்ற முயற்சிகளைக் கடுமையாக எதிர்த்தார். மேலைநாட்டுக் கல்விமுறை இந்து சமய பாரம்பரியத்துக்கு முற்றும் முரணாக அ மை ந் த  ைம யா ல் அதனை எதிர்ப்பது அவருடைய வாழ்க்கையின் இலட்சியமாயிற்று ,
வடபகுதியில் இந்துப் பாடசாலைகளை அமைக்கப் போராடிய இயக்கத்துக்கு நாவலர் தலைமை தாங்கினார். இந்து மாணவர்களுக்குப் பயன்படும் பல நூல்களை

Page 14
இலங்கையின் கல்வி வளர் ச்சி
எழுதியதுடன் இந்து ச ம ய த் தி ன் சிறப்பு க்க ளை வெளிப்படுத்தும் பல சொற்பொழிவுகளை ஆற்றினார்.
வண்ணார்பண்ணையில் ஒரு ஆங்கிலப் பாடசாலையை அமைக்கப் பல முயற்சிகளை மேற்கொண்டார். சமயக் குழுவினர் பல தடைகளைச் செய்தபோதிலும் தமது அயராத உழைப்பினால் அங்குச் சைவப்பிரகாச வித்தியாசாலையை நிறுவினார்.
இப்பாடசாலை இன்றுவரை நின்று நிலவி இந்துமதக் கல்விக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியது. இணுவில், கோப்பாய் போன்ற இடங்களிலும் பாடசாலைகள் நிறுவப்பட்டன.
சமயக் குழுவினரின் சமய மற்றும் கல்விப் பணிகளால் நலிவுற்ற சைவத்தை மீண்டும் எழுச்சியுறச் செய்யுமுகமாகச் சைவப் பெரியார்கள் சிலர் ஒன்றுகூடி சைவ பரிபாலன சபை என்ற அமைப்பினை நிறுவினர். அக்கால இளைஞர் பலர் தமது சமய அ றி வைக் கா ட் டி லும் கிறித்தவ சமய அறிவினையே கூடிய அளவுக்குப் பெ ற் றி ரு ந் த னர். இந்நிலையைப் போக்கி அவர்களுக்கு வழிகாட்டும் முதல் முயற்சியாக ஒரு ஆங்கிலக் கல்லூரியை, சமயக்குழுவினரின் பலத்த எதிர்ப்புககிடையே நிறுவினர் இம்முயற்சியே இன்று யாழ்ப்பாண இந்துக் கல்லூரியாக விளங்குகின்றது.
அரசாங்கத்தின் இசைவோடு இச்சபை ஒரு குழுவினை நிறுவி இந்துக்கல்லூரி நிருவகிக்கப்பட்டது. இக்குழு தனது செயற்பாடுகளை விரிவுபடுத்தி யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் சமய ஆர்வம் கொண்டவர்களால் தொடங்கப் பட்ட க லா சா லை க ள் ப ல வ ற் றை த் தன் நேரடி மேற்பார்வையின் கீழ்கொண்டு வந்தது.
கிறித்தவ சமயக் குழுவினரின் பாடசாலைகளுடன் ந்தக்க வகையில் இப்பாட சாலைகள் நிருவகிக்கப்
 
 
 

இலங்கையின் கல்வி வளர்ச்சி 23
பட்டன. 1885-இல் 4 இந்துப் பாடசாலைகளும் 1895-இல் 30 பாடசாலைகளும் 1900-ஆம் ஆண்டில் 45 பாடசாலை களும் இந்து மாணவர்களுக்குக் கல்வி வழங்கின. 1900-ஆம் ஆண்டில் 5000 இந்து மாணவர்கள் இப்பாடசாலைகளில் பயின்றனர்.
வட இலங்கையில் ஆறுமுகநாவலரின் சமய மற்றும் கல்விப் பணிகளைத் தொடர்ந்து கிழக்கிலங்கையில் விபுலானந்த அடிகள் சமய மறுமலர்ச்சி இயக்கத்திற்கு வித்திட்டார். இவர் சமயத்தை அடிப்படையாகக் கொண்ட உயர்கல்வியிலும் அக்கறைகாட்டினார். கிழக்கு இலங்கையின் வரலாற்றில் ஒரு இக்கட்டான கால கட்டத்தில் கல்விப் பணியாற்றிய விபுலானந்த அடிகளார், மட்டக் களப்பில் சிவானந்த வித்தியாலயம், திருகோணமலை இந்துக் கல்லூரி மற்றும் பல சைவப்பாடசாலைகளை நிர்வகித்து கல்வி வளர்ச்சிக்குத் தொண்டாற்றினார். விவேகானந்தரின் ஆலய பிரசங்கங்களையும் பாரதியாரின் தேசிய பாடல்களையும், பயன்படுத்தி மக்கள் மத்தியில் சமய உணர்வையும் மொழிப் பற்றையும் தோற்றுவித்தார். காந்தியடிகள் கண்ட ஆதாரக் கல்வி முறையின் தத்துவங்களைத் தமது பாடசாலைகளில் அடிகளார் பரீட்சித்துப் பார்த்தார்.
ஐரோப்பிய ஆட்சியாளர்கள் தமது கு டி யேற்ற ஆட்சியின் தேவைகளுக்கு முதன்மை வழங்கியே தமது கல்விக் கொள்கையை வகுத்திருந்தனர். இவற்றிலிருந்து விடுபட்டுத் தேசிய அபிலாஷைகளையும் குறிக்கோள்களையும் கருத்திற் கொண்ட கல்வி முறையை உருவாக்கும் பணி சுதந்திரத்தின் பின் இன்னும் தொடர்கின்றது. ஆனால் அந்நியர் ஆட்சியின் அடக்கு முறையின் கீழும் சமயக் குழு வி ன ர் கல்வித்துறையில் பெற்றிருந்த ஏகபோக மேலாதிக்க நிலையின் கீழும் ஏற் பட் ட இந்து சமய மறுமலர்ச்சியும், அது இந்து சமய கல்வி வளர்ச்சிக்கு ஆற்றிய பெரும் பங்களிப்பும் இலங்கையின் இந்து சமய வரலாற்றிலும் இந்துக்களின் கல்வி வரலாற்றிலும் பெரும் முக்கியத்துவம் பெறுகின்றன.

Page 15
போதனாமொழி மற்றத்
1915 ஆம் ஆண்டளவில் இலங்கையின் கல்விமுறையில் இடம் பெற்றிருந்த ஒரு முக்கிய அம்சம் போதனா மொழி அடிப்படையிற் பாடசாலைகள் பிரிக்கப்பட்டிருந்தமையாகும். பிரித்தானிய ஆட்சியாளர் டி த் த கல்விக் தெரன் கைகளின் விளைவாக அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் நாட்டில் ஆங்கிலப் பாடசாலைகளும் சுயமொழிப் பாடசாலைகளும் தோன்றி வெவ்வேறு தரமான கல்வியை வழங்கிவந்தன.
1831 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட கோல்புறுரக் குழுவினரின் அறிக்கையிற் 95TT 60525T "i Li I. ʻ g . L. விதப்புரைகளின் விளைவாக அர சாங் கம் ஆங்கிலப் பாடசாலைகளை அமைப்பதில் முன்னைவிட அதிக ஊக்கம் செலுத்தியது. அவ்வறிக்கை, ஆசிரியர்களாக நியமனம் பெறுகின்றவர்கள்
ஆங்கிலத்திலே தேர்ச்சியுடையவர்களாகவும் அம்மொழியிற் கற்பிக்கககூடியவர்களாகவும் இருத்தல் வேண்டும் னெறு
விதந்துரைத்தது."
சுயமொழிப் பாடசாலைகளாக இருந்த அரசாங்கப் பாடசாலைகள் ஆங்கிலப்பாடசாலைகளாக மாற் ற ப் பட இவ்வறிக்கை வழிகோலியது. அதனை இலகுபடுத்தும் நோக்குடன் குழு ஆங்கிலமொழி மூலம் கல்வித்தகுதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இலங்கையின் 25
பெற்றவர்கள் எவ்வகுப்பைச் சேர்ந்தவர்களாயினும் அவர்கள் அரசாங்க சேவையிற் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்று கூறியது?
இவ்வாறு அரசாங்க சே  ைவ யி ல் இலங்கையர்கள் சேருவதற்கு இடமளித்த குழு அ ர சா ங் க சேவையிற் சேருபவர்கள் ஆங்கில மொழியிலே தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கவேண்டுமென்று விதித்தது. இதனால் அரசாங்க சேவையிற் சேரவிரும்பும் எவரும் ஆங்கிலக் கல்வியைப் பயில வேண்டியதாயிற்று
ஆங்கிலம் அரசகரும மொழியாக ஆக்கப்பட்டமையால் ஆங்கிலக் க ல் வி மு  ைற  ெய ர ன் று உருவாகி நாட்டிற் செல்வாக்குப் பெறுவது தவிர்க்க முடியாததாயிற்று. அரசாங்க நிர்வாகத்தை நடத்துவதற்கு ஆங்கில மொழி பயின்றவர்களை உள்ளூரிலேயே திரட்டுவது ஆட்சியாளரின் நோக்கமாக இருந்தமையால் அரசாங்கத்தின் ஆதரவுடன் ஆங்கிலப் பாடசாலை முறையொன்று நாட்டில் வளர்ச்சியடையத் தொடங்கியது
இலங்கையில் வளர்ச்சியுற்ற ஆங்கிலக் கல்விமுறை இரத்தத்திலும் நிற த தி லும் இலங்கையர்களாகவும் கருத்திலும் சுவையிலும் அறிவிலும் ஆங்கிலேயர்களாகவும் உள்ள புதிய ஒரு வகுப்பினரை உருவாக்கும் குடியேற்ற நாட்டுக் கொள்கைக்கு ஒப்ப அமைந்தது. 1843 ஆம் ஆண்டிற் பாடசாலைகளுக்கு அரசாங்கம் உதவி நன்கொடை வழங்கும் முறை செயற்படுத்தப்பட்ட போது, அரசாங்கம் நாட்டில் ஆங்கிலக் கல்வியை வளர்க்க விரும்பியமையால், நன்கொடை வழங்கும்போது ஆங்கிலப் பாடசாலைகளுக்கே முதலிடம் வழங்கப்பட்டது.

Page 16
26 - இலங்கையின்
கோல்புறுரக் குழுவினரின் விதப்புரைகளின் காரணமாகக் கிறித்தவ சமயக் குழுவினரின் பாடசாலைகளும் ஆங்கிலப் பாடசாலைகளாக மாற்றப்படலாயின. இப்பாடசாலைகள் தொடக்கத்தில் ஆரம்பப் பாடசாலைகளாக வளர்ச்சி அடைந்தன. உதவி நன்கொடையும் ஆங்கிலக் கல்விக்கான தேவையும் அதிகரித்தமையாற் சமயக் குழுவினர் பெரிய ஆங்கிலப்பாடசாலைகளை உருவாக்கினர்.
இப்பாடசாலைகள் படிப்படியாக வளர்ச்சியுற்று முன்பு ஆரம்பப் பாடசாலைகளுக்கிருந்த இடத்தைப் பெற்றன. சமயக் குழுவினரின் ஆங்கிலப் பாடசாலைகளிற் பெரும் பாலானவை இங்கிலாந்தில் நிலவிய செல்வந்தர் பாடசாலை அமைப்பைத் (Public Schools) தழுவியனவாக அமைந்தன.
இப்பாடசாலைகளின் பாடவிதானம் நூற்கல்விச் சார்புடையதாகவும், உயர்நிலையில் அதிக அளவுக்குச் சிறப்புப் பயிற்சி தருவதாகவும் அமைந்திருந்தது. பாட சாலைக் கல்வி பாடசாலை விடுகைச் சான்றிதழைப் பெறும் நோக்குடன் அல்லது பல்கலைக்கழகக் கல்விக்கு ஆயத்தம் செய்யும் நோக்குடன் அமைந்தது. கிறித்தவ சமயக் குழுவினர் இலங்கையிற் கல்விப் பணிகளை ஆரம்பித்த காலம் தொடக்கம் சுயமொழிக் கல்வி வளர்ச்சியிற் கூடிய ஆர்வம் செலுத்தி வந்தனர். நாட்டிற் சுயமொழிக் கல்வியைப் பரப்புவதற்காக அவர்கள் சுயமொழிப் பாடசாலை முறை ஒன்றை ஆரம்பித்தனர்.
இத்துறையிற் சமயக் குழுவினரின் பணி அரசாங்கத்தின் முயற்சியை விட அதிக அளவுக்கு வெற்றியளித்தது. சமயக் குழுவினர் அரசாங்கத்தை விடத் திறமையாகவும் சிக்கன மாகவும் சிங்கள தமிழ்மொழிகளிற் கல்வி வழங்கினர். கேல் புறுரக்குழுனர் தமதுஅறிக்கையில் ஆங்கிலேய சமயக்குழுவினர் தமது பாடசாலைகள் மூலமாக ஆங்கில மொழியைப்

PUEL 上場*
JAFFNA.
பரப்புவதில் உள்ள முக்கிய்த்துவத்தைப் பொதுவாக வரவேற்கவில்லை என்று கூறியிருந்தனர். இதிலிருந்து சமயக் குழுவினர் சுயமொழிக் கல்வியிலேயே ஆர்வம் காட்டி வந்தனர் என்பது தெளிவாகும்." 1841 ஆம் ஆண்டு அரசாங்கப் பாடசாலைகளை மேற்பார்வை செய்யவென நியமிக்கப்பட்ட மத்தியபாடசலை ஆணைக்குழு தேவையை நிறைவு செய்யும் அளவுக்கு ஆங்கிலக் கல்வி விரிவடைந் திருந்தது என்று கருதியமையால் எதிர் காலத்திற் சுயமொழிக் கல்வியையே முக்கியமாக விருத்திசெய்ய வேண்டும் என்று தீர்மானித்தது.
இலங்கையின் கல்வி வளர்ச்சி
எனவே ஆங்கிலத்தில் மட்டுமே கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்ற ஆரம்ப காலப் பிரித்தானியக் கொள்கை கைவிடப்பட்டுச் சுயமொழிக் கல்விக்குச் சார்பான ஒரு கொள்கை உருவாக்கப்பட்டது.
ஆனைக்குழு ஆங்கிலக் கல்விக்கு முன்னோடியாகச் சுயமொழிக் கல்வியை அறிமுகப்படுத்தத் தீர்மானித்தது. ஆங்கிலக் கல்வி பெறுவதற்கு முன்னாயத்தமாகச் சுயமொழி களில் ஒவ்வொரு ஆரம்பப் பாடசாலையிலும் போதனை வழங்கப்படவேண்டுமென்றும், அ த ன ல் ஆங்கிலக் கல்வியினாற் பெறக்கூடிய நன்மைகளை அறியாத இலங்க்ை யர்கள் தமது பிள்ளைகளை அரசாங்கப் பாடசாலைகளுக்கு அனுப்புமாறு துரண்டமுடியும் என்றும் ஆணைக்குழு கருதியது. 1841 ஆம் ஆண்டு தொடக்கம் 1847ஆம் ஆண்டு வரையும் அரசாங்கம் மத்தியபாடசாலை ஆணைக்குழுவி னுரடாகச் சிங்களப் பாடசாலைகளையும் தமிழ்ப்பாடசாலை களையும் ஆரம்பித்தது. இக் கால ப் பகுதியிற்றான் அரசாங்கம் மக்களுக்கு அவர்களுடைய சுயமொழிகளிற் கல்வி கற்பிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தது.
பிள்ளைகள் ஆங்கிலம் கற்பதற்கு முன்னர் தமது சுயமொழிகளில் வாசிக்கவும் எழுதவும் கற்றனர். முக்கிய

Page 17
28 இலங்கையின் கல்வி வளர்ச்சி
நூல்கள் சிங்களத்திலும் தமிழிலும் மொழிபெயர்க்கப்
பட்டன.
1880ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட கோப்பி நெருக்கடியின் காரணமாக உருவான நிதிப்பிரச்சினை சுயமொழிக் கல்வியை வளர்க்கும் அரசாங்கக் கொள்கையை ஊக்கு வித்தது. ஏனெனில் ஆங்கிலப் பாடசாலைகளின் வளர்ச்சிக்கு அதிகப்பணம் செலவிடவேண்டியிருந்தது. எனவே, ஒரு சில பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அரசாங்க ஆங்கிலப் பாடசாலைகள் யாவும் கிறித்தவ சமயக் குழுவினரிடம் ஒப்புவிக்கப்பட்டன.
έr Lρμ 1ό, குழுவினர் அரசாங்க நன்கொடையுடன் அப்பாடசாலைகளைப் பொறுப்பேற்று நடத்த ஆயத்தமாக இருந்தனர். அரசாங்கத்தின் கல்விப் பொறுப்பு 1886ஆம் ஆண்டளவில் கிறித்தவ சமயக் குழுவினரிடம் ஒப்புவிக்கப் பட்டது, சமயக் குழுவினரின் உதவிபெறும் சுயமொழிப் பாடசாலைகள் நாடெங்கும் பரந்து காணப்பட்டன. சிங்களப் பாடசாலைகள் சிங்களவர்கள் வசித்த பகுதிகளிலும் தமிழ்ப் பாடசாலைகள் தமிழர்கள் அதிகமாக வசித்த இடங்களிலும் காணப்பட்டன.
சுயமொழிப் பாடசாலைகள் ஆரம்பக் கல்வியை அல்லது இடைநிலைக் கல்வியை ஒரே பாடசாலையில் அல்லது வெவ்வேறு பாடசாலைகளில் வழங்கின. ஆரம்பப் பாட சாலைகள் ஐந்தாண்டுக் கல்வியை வழங்கின. இடைநிலைப் பாடசாலைகள் எட்டாம் தரம்வரை (கனிட்ட இடைநிலை) அல்லது பத்தாம் தரம் வரை (சிரேட்ட இடைநிலை) உள்ள வகுப்புக்களை மட்டும் கொண்டிருந்தன. இப்பாடசாலைகள் தமது மாணவர்களை ஆகக் கூடியது சிரேட்ட பாடசாலைப் பத்திர நிலைப் பரீட்சைக்கு ஆயத்தப்படுத்தின.
 
 
 

இலங்கையின் கல்வி வளர்ச்சி 罗9
சுயமொழிகளை மட்டும் கற்பித்த பாடசாலைகளை விட ஆங்கில சுயமொழிப் பாடசாலைகள் அல்லது இருமொழிப் LITLEITG) 60.567 (Bilingual Schools) 6Tairs) LDiGiorTCU வகைப் பாடசாலைகள் இருந்தன. இப்பாடசாலைகளின் ஆரம்ப வகுப்புக்களில் சுயமொழி போதனாமொழியாகவும், உயர்நிலைகளிற் படிப்படியாக ஆங்கிலம் போதனாமொழி யாகவும் இருந்தன.
இப்பாடசாலைகள் சுயமொழிக் கல்வியைப் பொறுத்த வரையிலான அரசாங்கக் கொள்கைக்கு ஒப்பவும் ஆங்கிலக் கல்விக்கிருந்த தே  ைவ  ைய நிறைவு செய்வனவாயும் அமைந்தன. பிற்காலத்தில் நாடெங்கும் சுயமொழிகள் போதனாமொழிகளாக்கப் பட்டதும் இப்பாடசாலைகளுக் கான தேவை மறைந்தது.
குடியேற்ற நாட்டுக் கல்வி முறையின் முக்கிய அம்சம் பெரும்பாலானவர்களுக்குத் தரத்திற் குறைந்த இலவச சுயமொழிக் கல்வியும், குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் தரத்திற் கூடிய ஆங்கிலக் கல்வியும் வழங்கப்பட்டமையாகும்.
மக்களின் அறிவு வளர்ச்சியைப் பொறுத்தவரையில் அரசாங்கத்துக்கிருந்த பொறுப்பைக் குறைந்த செலவில் நிறைவேற்றச் சுயமொழிப் பாடசாலைகளும், அரசாங்க நிர்வாகத்தை நடத்த ஆங்கிலம் தெரிந்த கற்றோர் வர்க்கம் ஒன்றை உருவாக்க ஆங்கிலப் பாடசாலைகளும் நிறுவப்
இவ்விரு கொள்கைகளையும் பிரதிபலிக்கும் வகையில் ஆங்கிலச் சுயமொழிப் பாடசாலைகளை அமைக்க நீடித்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் அம்முயற்சிகள் வெற்றி பெறவில்லை. 1928ஆம் ஆண்டுக்கும் 940ஆம் ஆண்டுக்குமிடையில் இப்பாடசாலைகளிற் பயின்ற

Page 18
30 இலங்கையின் கல்வி வளர்ச்சி
மாணவர்களின் தொகை குறைந்து வந்ததைப் பின்வரும் புள்ளி விபரம் காட்டும்?
ஆண்டு ஆங்கில சுயமொழிப் பாடசாலைகள்
மாணவர் தொகை
1928 37, 365
1938 . 20, 156
1939 9, 9 2
1940 II, 5, 9 i 7
எனவே, போதனாமொழிகளை அடிப்படையாகக் கொண்ட இரு வேறுபட்ட பாடசாலைகள் குடியேற்ற நாட்டாட்சி நிலவிய காலம் முழுவதும் நீடித்து இயங்கிவர நேர்ந்தது.
/ஆங்கில மொழி அரசகரும மொழியாகவும் வர்த்தகத் துறையில் நிர்வாக மொழியாகவும் இருந்தமையால் ஆங்கிலக் கல்வி பெரிதும் விரும்பப்பட்டது. கூடிய சம்பளங்களைக் கொண்ட பதவிகளை அடைவதற்கு ஆங்கில மொழிக்கல்வி பெரிதும் இன்றியமையாததாக இருந்தது,
எனவே, சிங்களவர்களும் தமிழர்களும் பொருளாதார சமூகப் பயன்பாடு கருதி ஆங்கிலமொழிக் கல்வியை நாடினர் சிங்களவர்களும், தமிழர்களும், டச்சுக்காரர்களும் ஒர் அந்நிய மொழியைக் கற்க வேண்டும் என்பதற்காகத் தமது தாய்மொழியை அலட்சியம் செய்ய நேர்ந்தது பற்றி எவ்வித மனக் குறைவும் அடைந்ததாகத் தெரியவில்லை.10
/ஆங்கிலக் கல்வித் தகுதிகளைக் கொண்டு அரசாங்கப் பதவிகளையும், அவற்றினூடாக உயர்ந்த பொருளாதார சமூக அந்தஸ்தையும் அடைவதற்காகப் போட்டியிட வேண்டிய நிலைமையிருந்தமையால் அவர்கள் பிரச்சினையைத் தேசிய நோக்குடனோ அல்லது கல்வித்

இலங்கையின் கவ்வி வளர்ச்சி s
தத்துவ உண்மைகளின் அ டி ப்ப  ைட யி லோ அணுக முயலவில்லை.
உண்மையிற் பொருளாதார, சமூக காரணங்களுக்காக இந்நாட்டு மக்கள் ஆங்கிலக் கல்வியை விரும்பியமையாலேயே
கூறியிருந்தனர்."
பொருளாதார நன்மைகள், பணவருவாய், உத்தியோக அந்தஸ்து முதலியவற்றைப் பெறுவதற்கான போராட்டத்தில் இந்நாட்டு மக்கள் தமது தேசிய தனித்துவத்தையும், சுயகெளரவத்தையும் பல காலமாகப் போற்றப்பட்டு வந்த பாரம்பரியத்தையும் தியாகம் செய்ய ஆயத் த மா க
சீர்கேடடையத் தொடங்கின.
சிங்களவர், தமிழர்கள் பலரின் இல்லங்களில் ஆங்கிலம் வீட்டு மொழியாகப் பயன்படுத்தப்பட்டது. உள்ளூர் மொழிகள் வீட்டிலுள்ள ஊழியர்களுடன் உரையாடுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டன.18 சுயமொழிகளில் ஒரு சொல்கூடத் தெரியாதவர்கள் உயர்ந்த பதவிகளையும், செல்வத்தையும், செல்வாக்கையும் பெறக்கூடியவர்களாக இருந்தனர். அத்துடன், சுயமொழி அறிவு எவ்வளவுதான் விரிவானதாக இருந்தபோதிலும் எந்தத் துறையிலும் தொழில் பெற முடியாத நிலையிலிருந்தது.*
சுயமொழிகளிற் :്റ്റ് கற்பதால் எதிர்காலத்திற் பொருளாதார, சமூக அந்தஸ்தினை உயர்த்திக்கொள்வதற்கு

Page 19
32 இலங்கையின் கல்வி வளர்ச்சி
எந்தவித வாய்ப்பினையும் பெற்றுக்கொள்ள முடியாத வகையிற் குடியேற்ற நாட்டுக் கொள்கை அமைந்திருந் தமையாற் சுயமொழிக் கல்வி நடைமுறை வாழ்க்கைக்குப் பயனற்றது என்ற கருத்து வலுப்பெற்றது.
* சுயமொழிகளைப் பயன்படுத்துவதால் ஏதேனும் பொருளாதார நன்மைகள் கிடைக்கும் என்று மக்கள் கருதா விட்டால், பற்றுணர்வின் காரணமாக அம்மொழிகளைப் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. சிங்களத்தில் அல்லது தமிழில் கல்வி பயிலும் குடிமகன் சுயமொழி அறிவைக் கொண்டு LOL (th தனது சீவனோபாயத்தைத் தேடுவதற்கும் பிறருடன் சமமாகப் போட்டியிடுவதற்கும் உயர்பதவிகளைப் பெறுவதற்கும் உத்தரவாதம் இருக்கவேண்டும்" என்று 1946-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசகரும மொழிகள் பற்றிய தெரிவுக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டது இங்குக் குறிப்பிடத் தக்கதாகும்."
மிக அண்மைக்காலம் வரை சிங்கள தமிழ் சிரேட்ட பாடசாலை தராதரப் பத்திரம் (சி.பா.த.ப) அரசாங்கப் பாடசாலைகளில் ஆசிரியர் பதவி தவிர்ந்த வேறு எந்தத் தொழிலையும் அல்லது அர சா ங் க ப் ப த வி யையும் பெறுவதற்கான தகுதிப் பரீட்சையாக அங்கீகரிக்கப்பட்டிருக்க வில்லை. 18 பொருளாதார, சமூக அந்தஸ்தை உயர்த்திக் கொள்வதில் மட்டும் சுயமொழிக் கல்வி ஆங்கிலக் கல்வியை விடப் பின்தங்கிய நிலையில் இருக்கவில்லை. உயர்கல்வியைப் பெறுவதற்கும் ஆங்கில அறிவு அல்லது வேறு ஏதேனும் ஐரோப்பிய மொழிஅறிவு தேவைப்பட்டது.
சிங்கள மொழியில் அல்லது தமிழ்மொழியில் உயர் கல்விக்குப் பயன்படத்தக்க நூல்கள் மிகவும் குறைவாகவே இருந்தன மொழிபெயர்ப்பதற்கு ஏற்படக்கூடிய செலவினை ஈடுசெய்யும் அளவுக்கு அத்தகைய நூல்களுக்கு அதிக

இலங்கையின் கல்வி வளர்ச்சி 33
தேவையும் இருக்கவில்லை. எனவே உயர்கல்வியை நாட விரும் பவர்கள் தவிர்க்க முடியாத வகை பில் ஆங்கிலத்தில் சிறந்த தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கவேண்டி நேர்ந்தது."
ஆங்கில மொழி மூலம் மட்டும் நடாத்தப்பட்ட புகுமுகப் i fl Foulsår பெறுபேறுகளைக் கொண்டு பல்கலைக் கழகத்துக்கு மாணவர்கள் தெரிவு (ரெழ்பூப்பட்டனர் சுய மொழிகளில் இப்ளோமாப் பட்டம் பெறுவோர் தவிர்ந்த ஏனையோர் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டனர் சிங்களம் அல்லது தமிழ்மொழி மூலம் மாணவர்களைப் பரீட்சித்துப் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்க எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே ஆங்கிலமொழி மூலம் கல்வி பயிலும் மாணவர்கள் மட்டுமே பல்கலைக்கழகத்தில் அனுமதி பெறக் கூடியதாக இருந்தது.'
சிங்கள/ தமிழ் சிரேட்ட பாடசாலைத் தராதரப் பத்திரம் பெற்ற எம் மாணவனும் உயர்கல்வியைப் பெற முடியாம லிருந்ததுடன் நாட்டிலிருந்த ஒரே ஒரு பல்கலைக்கழகத்திலும் அவனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இச் சூழ்நிலை சுயமொழிக் கல்வி தளர்ச்சியடையக் காரணமாக இருந்தது.'
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி தொடக்கம் இலங்கையில் கிறித்தவ சமயமும் ஆங்கில மொழியுமே உயர்கல்விக்கும், சமூகப் பெயர்ச்சிக்கும் இட்டுச்செல்லும் முக்கிய ஏதுக்களாக விளங்கின. பொருளாதார, சமூக நன்மைகளையும் உயர்கல்வி வாய்ப்புக்களையும் வழங்கிய ஆங்கிலக்கல்வி யாவருக்கும் கிடைக்கத்தக்கதாக இருக்க வில்லை. அரசாங்கமும் கிறித்தவ சமயக் குழுக்களும் ஆங்கில L.T.F.768)).356367 ஆர ம் பி த் த காலம் தொடக்கம், பொருளாதார வசதியுள்ளவர்கள் மட்டுமே தமிது பிள்ளைகளை அங்கு அனுப்பிக் கல்வி பயிலச் செய்யக் dial-Lig5 Tg இருந்தது."

Page 20
34 இலங்கையின் கல்வி வளர்ச்சி
சுயமொழிப் பாடசாலைகள் இலவசக் கல்வியை வழங்கிய இடத்து ஆங்கிலப் பாடசாலைகள் கட்டணம் அறவிட்டமையால் ஆங்கிலக்கல்வி பொருளாதாரத் துறையில் சலுகை பெற்ற வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட தொன்றாகியது?
கல்லூரி நிலையிலான ஆங்கிலப் பாடசாலைகள் (Collegiate English Schools) sg gantig; is) Su7lalabibig உதவி நன்கொடை பெற்ற போதிலும், அவை பிள்ளைகளின் கல்விக்குக் கட்டணங்களைச் செலுத்தக்கூடிய பெற்றோர் சளுக்குரியனவாகவே விளங்கின. இப்பாடசாலைகளிற் கல்வி பெறுவதற்கு அதிகம் செலவு செய்ய வேண்டியிருந்தமையால், குறித்த ஒரு சிலருக்கான கல்வி நிலையங்களாக அவை விளங்கின. எனவே, இப்பாடசாலைகள் கல்வித்துறையில் யாவருக்கும் சமசந்தர்ப்பத்தை வழங்கவில்லை. இது இப்பாடசாலைகளுக்குரிய ஒரு குறைபாடான இயல்பாகக் கொள்ள முடியாது. முழுக்கல்வி முறையிலும் இவ்வியல்பு செறிந்து காணப்பட்டது?
எனவே, இலங்கையிற் கட்டணம் செலுத்திக் கல்வி பெறக் கூடியவர்கள் செல்லக்கூடிய ஒரு பாடசாலை முறையும், அதற்கான வழிவகைகள் இல்லாதவர்கள் செல்லக்கூடிய பாடசாலை முறையும் என இருவகையான பாடசாலை முறைகள் தோன்றி வளர்ச்சியுற்றன. ஒரு பாடசாலையிலிருந்து மற்றப் பாடசாலைக்கு மாறிச்செல்வது கடினமானதாக இருந்தது. எனவே ஏழைமையான பெற்றோர்களின் பிள்ளைகள் உயர்கல்வி பெறமுடியா திருந்தது.28
ஆங்கிலப் பாடசாலைகளில் பிள்ளைகளை அனுமதிப்
பதற்கு அவர்களுடைய உள்ளார்ந்த ஆற்றல்கள் கருத்தில் கொள்ளப்படாது பெற்றோர்களின் பொருளாதார நிலைக்கே
93.2

இலங்கையின் கல்வி வளர்ச்சி 55
முக்கியத்துவம் அளிக்கப்பட்டமையால், போதிய கல்வி வாய்ப்புகள் இன்றிப் பிள்ளைகளின் ஆற்றல்கள் தேசிய முன்னேற்றத்துக்காகப் பயன்படுத்தப்படாது விரயம் (o) Fuzaj LLM L’ILL "GÖT
அரசாங்க நன்கொடையாலும் பொருளாதார பலம் மிக்கவர்களால் வழங்கப்பட்ட கட்டணங்களாலும் ஆங்கிலப் பாடசாலைகள் சிறந்த பாடசாலைகளாக உருவாயின. அவை சிறந்த கட்டடங்களையும் சிறந்த உபகரணங்களையும் சிறந்த ஆசிரியர்களையும் கொண்டனவாக விளங்கின, இப்பாடசாலைகள் காலம் காலமாகக் கட்டணங்களை
அறவிட்டு வந்தன.
இக்கட்டணங்களையும் பிற நன்கொடைகளையும் கொண்டு, சிங்கள, தமிழ் பாடசாலைகளால் அமைத்துக் கொள்ளமுடியாத அளவுக்குச் சிறந்த கட்டடங்களையும் உபகரணங்களையும் அவை கொண்டு விளங்கின. அப்பாட சாலைகளின் அதிபர்கள் மேற்கு நாடுகளிலிருந்து வந்தவர் 0YOLOLLLLLL S Y YS YSLLLLLL O00L S L S SL00LLS
சிங்கள, தமிழ் பாடசாலைகளில் சேரும் ஆசிரியர்களை விட ஆங்கிலப் பாடசாலைகளிற் சேரும் ஆசிரியருக்கு அதிக தகுதிகள் தேவைப்பட்டன. ஆங்கில ஆசிரியர்கள் அதிகம் செலவு செய்து கல்வி பயின்றதாலும், அவர்களுடைய வாழ்க்கைத் தரம் உயர்ந்து காணப்பட்டமையாலும் அவர்களுக்கு அதிக சம்பளங்களை வழங்க வேண்டியிருந்தது.
ஆங்கிலப் பாடசாலைகளும் உயர்ந்த சம்பளங்களை வழங்க ஆயத்தமாக இருந்தமையாலே திறமைமிக்க
ஆசிரியர்கள் அப்பாடசாலைகளிற் சேர்ந்துகொண்டனர். அரசாங்கமும் பொதுவாக இருமொழிப் பாடசாலைகளையும்
சுயமொழிப் பாடசாலைகளையும் விட ஆங்கிலப் பாட

Page 21
36 இலங்கையின் கல்வி வளர்ச்சி
சாலைகளையே கூடிய அளவுக்கு ஆதரித்தது. ஆங்கிலப் பாடசாலைகளில் ஒரு ஆசிரியருக்கு இருபது மாணவர்களும் இருமொழிப் பாடசாலைகளில் முப்பது மாணவர்களும் சுயமொழிப் பாடசாலைகளிற் நாற்பது மாணவர்களும் 5 Ta007 E. L. E . . . GOTff.
ஒர் ஆண்டுக்கு ஒரு மாணவனுக்கான அரசாங்கச் செலவு ஆங்கிலப் பாடசாலை மாணவர்களுக்குச் சார்பானதாகவே அமைந்து காணப்பட்டது. (ஆங்கிலப் பாடசாலை ரூ. 36-00 இருமொழிப்பாடசாலை ரூ 25-8, சுயமொழிப்பாடசாலை ரூ. 18-70) எனவே பெரும்பான்மை மாணவர்களைப் பொறுத்தவரையில் அரசாங்கப் பணம் பாரபட்சமான முறையில் ஆங்கிலப் பாடசாலைகளுக்கே கூடுதலாகச் செலவு செய்யப்பட்டது.*
ஆங்கிலப் பாடசாலைகள் உயர்தரமான கல்வியை வழங்கிய சிறந்த கல்விக் கூடங்களாயும் எதிர்கால வாழ்க்கையிற் பொருளாதார, அதிகார பலத்தை வழங்கு வனவாயும், சமுதாயத்திலிருந்த சலுகை பெற்ற வகுப்பினருக் குரியனவாயும் விளங்கிய விடத்து, சிங்களப் பாடசாலைகளும் தமிழ்ப் பாடசாலைகளும் இவை எல்லாவற்றிலும் நேர் மாறான இயல்புகளைக் கொண்டனவாக விளங்கின.
பொதுவாகப் பிறநாடுகளிற் பாடசாலைகள் ஆரம்பப் பாடசால்ைகளாகவும் இடநிலைப் பாடசாலைகளாகவுமே பிரிக்கப்பட்டிருக்கும். ஆனால் இலங்கையில் அவை போதனா மொழி அடிப்படையில் ஆங்கிலப் பாடசாலைகளாகவும் சுயமொழிப் பாடசாலைகளாகவும் பிரிக்கப்பட்டிருந்தன.
எல்லாச் சுயமொழிப் பாடசாலைகளும் சுதந்திரத்துக்கு மிக அண்மைக்காலம் வரை ஆரம்பப் பாடசாலைகளாகவே விளங்கி வந்தன. எழுத்து, வாசிப்பு எண் முதலியவற்றுடன்

இலங்கையின் கல்வி வளர்ச்சி 3 7
சிறிதளவு முன்னேற்றமான கல்வியையே அவை கற்பித்து வந்தன.
நவீன கல்வியைக் கற்பித்த ஆங்கிலப் பாடசாலைகளை விட அவை எல்லாவிதத்திலும் தரத்திற் குறைந்தவையாகக் காணப்பட்டன.26 சுயமொழிக் கல்விக்கான வசதிகள் மிகவும் பின்தங்கிக் காணப்பட்ட அதே வேளையில் அக்கல்வியைப் பெறுவதற்கான ஊக்கம் ஆங்கிலக் கல்விக்கு வழங்கப்பட்ட போன்று வழங்கப்படவில்லை.
பாடசாலை சென்ற மாணவர்களில் 80 வீதத்துக்கும் அதிகமானவர்கள் சுயமொழிப் பாடசாலைகளுக்கே சென்ற போதிலும் அவர்களில் மிகக் குறைந்த வீதமானவர்களே ஆரம்பப் பின்னிலை (Post Primary) வகுப்புகளிற் கல்வி பயின்றனர் என்பதைப் பின்வரும் புள்ளி விபரங்கள் காட்டும் 28
ஆரம்ப நிலை, ஆரம்பப் பின்னிலை மாணவர் தொகை
மாணவர் தொகை
置94、 置94垒 ஆரம்ப நிலை 594,0ö互 G05。209 ஆரம்பப் பின்னிலை 62. 99 60, 802
குறைந்த வீதமானவர்கள் ஆரம்பப் பின்னிலைக் கல்வியைப் பெற்றதையும் அதனால் கல்வித்துறையில் கணிசமான அளவுக்கு விரயம் (Wastage) ஏற்பட்டதையும் இப்புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.27 1943 ஆம் ஆண்டை விட 1944 ஆம் ஆண்டில் ஆரம்ப நிலை மாணவர்களின் தொகை அதிகரித்திருந்த போதிலும், ஆரம்பப் பின்னிலை மாணவர்களின் தொகை குறைந்திருப்பது குறிப்பிடத்
தக்கது.

Page 22
38 இலங்கையின் கல்வி வளர்ச்சி
அரசாங்கத்தின் குடியேற்ற நாட்டுச் சார்பான மொழிக் (G); ITGST GOD 35 976ởT விளைவாக, சிங்களம் தமிழ் ஆகிய மொழிகளில் ஆரம்பப் பின்னிலைக் கல்வியைப் பயிலுவதாற் சமூக, பொருளாதார நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பதாலேயே இந்நிலை ஏற்பட்டது.
சுயமொழிகளில் இத்தகைய முன்னேற்றமான கல்வியைப் பயிலுபவர்கள் ஆசிரியர் சேவையில் மட்டுமே சேரக்கூடியதாக இருந்தது.28 நாட்டின் பொருளாதார நிலை சுயமொழிகளில் உயர்கல்வி பெறுவதை ஊக்குவிக்காது அம்மொழிகளிற் கல்வி பயிலுவதைத் தடைசெய்வதாக அமைந்திருந்தது.
போடசாலை மாணவர்களிற் பெரும்பாலோர் நாட்டில் வழக்கிலிருந்த சட்டங்களின்படி குறைந்த பட்சக் கல்வியை முடித்துக்கொண்டு தமது குடும்பங்களின் சிவனோபாயத்துக் காக உழைக்கச் சென்றுவிட, பாடசாலையிலே தொடர்ந்து பயிலுபவர்கள் தமது பெற்றோர்களுக்கு ஒரு சுமையாகவே விளங்கினர்.28
சிங்கள தமிழ் பாடசாலைகளில் ஐந்தாம் வகுப்பிற் சித்தியடைந்த மாணவர்களில் 64 வீதமானவர்களே ஆரம்பப் பின்னிலைக் கல்வி பெறச் சென்றனர். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு உயர் வகுப்பிலும் அவர்களுடைய எண்ணிக்கை குறைந்து சென்றது.
ஆரம்பப் பின்னிலைக் கல்விபெறச் சென்ற மாணவர் களிற் சிரேட்ட தராதரப் பத்திர வகுப்பு வரை சென்ற மாணவர்களின் வீதம் பின்வருமாறு 99 சிரேட்ட தராதர வகுப்பு வரை சென்ற மாணவர் வீதம் ஆண்கள் பெண்கள் வீதம் வீதம்
இங்களப் பாடசாலைகள் 11 25
தமிழ்ப் பாடசாலைகள் 30 5

ෆිසි,

Page 23
42 இலங்கையின் கல்வி வளர்ச்சி
/சிறுபான்மையினருக்கு ஆங்கிலக் கல்வியையும் பெரும் பாலானவர்களுக்குச் சுயமொழிக் கல்வியையும் வழங்குவதை வலியுறுத்திய குடியேற்ற நாட்டுக் கல்விக் கொள்கை இப் ஸ் விரி விபரங்களினாற் பிரதிபலிக்கப்படுகின்றது. இத்தகைய கல்வி முறையினால் ஏற்பட்ட சமூகப் பிரிவுகள் பற்றி அரசாங்க சபை உறுப்பினர் ஒருவர் பின்வருமாறு கூறினார்,
*மொழி அடிப்படையில் வேறுபட்டு அமைந்துள்ள எமது கல்விமுறை இரண்டு வேறுபட்ட நாடுகளையே ஏற்படுத்தி விட்டது. ஒரு நாடு சிங்களத்தையும் தமிழையும் கற்றுச் சிங்களத்தையும் தமிழையும் பேசி வருகின்றது. இன்னொரு நாடு ஆங்கிலத்தைக் கற்று ஆங்கிலத்தையே பேசி வருகின்றது. இந்நாட்டில் நடைபெற்று வந்த பிரித் தானிய ஆட்சிமுறையின் மிகவும் குறைபாடான அம்சம் இதுவாகும். எங்களுடைய மாணவர்களில் 95 வீத மானவர்கள் தமது தாய்மொழியிற் கல்வி கற்றமையால் ஆங்கில மொழிமூலம் நடாத்தப்படும் அரசாங்கத்தில் எந்தவித பங்கும் கொள்ள முடியாதுள்ளனர். எங்களுடைய பாடசாலைகளில் 5 வீதமானவை மட்டுமே ஆங்கில மொழி மூலம் கற்பிக்கின்றன. அங்கிருந்து கற்று வெளியேறுபவர்கள் பொதுமக்களுடன் எந்தவிதத் தொடர்பற்றவர்களாகவும் தங்களுடைய வரலாற்றையும் பழக்க வழக்கங்களையும் அறியாதவர்களாகவும் காணப்படுகின்றனர்.98
1943ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட விசேட கல்விக் குழுவினரின் அறிக்கை, போதனாமொழி அடிப்படையில் இருவகையான கல்விமுறை நிலவியதாற், சமூக அமைப்பில் ஆங்கிலம் கற்றவர், சுயமொழி கற்றவர் என்ற இரு வேறு பட்ட வகுப்பினர் தோன்றி, அவர்களில் ஆங்கிலம் கற்ற வகுப்பினர் சலுகை பெற்றவர்களாக இருந்ததை ஒரு குறைபாடாக ஏற்றுக் கொண்டது.

இலங்கையின் கல்வி வளர்ச்சி 43
அத்துடன் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் தாய் மொழியே இயற்கையான சிறந்த போதனாமொழி என்பதையும் ஏற்றுக்கொண்டது.
இருவகைப் பாடசாலைமுறை கல்வித்துறையில் நிலவிய சமவாய்ப்பின்மையைப் பிரதிபலித்தது என்பதையும் (Փ(Լք சுட்டிக் காட்டியது." இக் குறைபாடுகளைப் போக்குவதற்கு ஒரு வழியாகக் குழு எல்லாப் பாடசாலைகளிலுங் கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டுமென்று விதந்துரைத்தது.
மூன்றாம் நிலைக் கல்வி வழங்கும் உயர்கல்வி நிலையங் களிலும் இலவசக் கல்வி இடம்பெற வேண்டும் என்று குழு விதந்துரைத்தது 40 ஆற்றல்களும் தி ற ன் க ஞ ம் ஒரு குறிப்பிட்ட சமூக வகுப்புக்கோ அல்லது குழுவுக்கோ உரியன அல்ல; எச்சமூக அமைப்பும் அவை வெளியிடப்படுவதற்கு ஏதுவாகக் கல்வித்துறையிற் சமவாய்ப்புக்களை வழங்க வேண்டும்" என்னும் கருத்தைக் குழு ஏற்றுக்கொண்டது.
"சுதந்திரத்துக்கு முன் 1945ஆம் ஆண்டில் அரசாங்க சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இலவசக் கல்வித் திட்டம் 1951ஆம் ஆண்டளவில் முழுமையாக நடைமுறைப்படுத்தப் பட்டு அக்காலந் தொடக்கம் இலங்கையின் கல்வி வளர்ச்சிக் கான அடித்தளத்தை அமைத்தது
இன்னும்கூட எல்லாப் பிள்ளைகளுக்கும் சிறந்த கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் கிடைத்து விட்டதாகக் கூற முடியாதெனினுஞ் சிறந்த முன்னேற்றங் காணப்பட்டுள்ளதை மறுக்க முடியாது.
அத்துடன் கல்வித்துறையிற் சமவாய்ப்புக்களை வழங்கு வதைப் பொறுத்த வரையில் இலங்கையை வேறு எந்து அபிவிருத்தியுறுகின்ற ஆசிய நாட்டுடனும் ஒப்பிட முடியுமா என்பது ஐயத்துக்குரியதாகும்**

Page 24
44 இலங்கையின் கல்வி வளர்ச்சி
இலவசக் கல்விமுறை நடைமுறைக்கு வருவதற்கு முன்பே அரசா ங்கப் பாடசாலைகளும் உதவிபெறும் பாடசாலைகளும் சுயமொழிக் கல்வியை இலவசமாக வழங்கி வந்தன இலவசக் கல்விமுறை, கட்டணம் அறவிட்டு வந்த அரசாங்க உதவி பெறும் ஆங்கிலப் பாடசாலைகளையும், பல்கலைக்கழகம், தொழில் நுட்பப் பாடசாலை ஆகிய கல்வி நிலையங்களையும் சுயமொழிப் பாடசாலைகள் போன்று இலவசக் கல்வியை வழங்கும் நிலைக்குக் கொண்டு வந்தது.
எனவே, ஏழ்மையான பிள்ளைகள் ஆங்கிலக் கல்வி பெறுவதிலிருந்த பொருளாதாரத் தடைகள் ஒரளவுக்கு நீக்கப்பட்டன. சுயமொழிக் கல்வி பெற்ற பெரும்பாலான மாணவர்கள் ஏற்கனவே இலவசமாகக் கல்வி பெற்றமை யால் இலவசக் கல்வி முறை அரசாங்கத்தின் கல்விச் செலவிற் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தவில்லை,
இலவசக்கல்வி கல்விக் கட்டணமில்லாத கல்வி என்ற முறையிலேயே நடைமுறைப் படுத்தப்பட்டமையால் ஏழ்மை யான பிள்ளைகளின் நிலை தவிர மாற்றமடைந்ததாகக் 5H2AsOfOL-ULITT gilo
இலவசக் கல்விமுறை, போதனாமொழி அடிப்படையிற் குறைபாடுகள் நிறைந்து காணப்பட்ட இருவகைப் பாட சாலை முறையில், ஆங்கிலக்கல்வி பெறும் வாய்ப்புக்களை ஓரளவுக்கு விரிவுபடுத்திய விடத்து சுதந்திரத்தின் பின்னரும் அவ்விருவகைப் பாடசாலைமுறை நீடித்து நிலவியது.
கல்வித்துறையில் வழங்கப்பட்ட புதிய வாய்ப்புக்களை மக்கள் உற்சாகத்துடன் பயன்படுத்த முற்பட்டமையால் ஆங்கிலப் பாடசாலைகளில் அனுமதியை நாடும் பி ஸ்  ைளக ளி ன் எ ன் னி க்  ைக அ தி க ரித் த து:

இலங்கையின் கல்வி வளர்ச்சி 45
அரசாங்க ஆங்கிலப் பாடசாலைகளிலும் உதவிபெறும் ஆங்கிலப் பாடசாலைகளிலும் மாணவர்களின் தொகை அதிகரித்து, அனுமதியைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
சுயமொழிப் பாடசாலைகளிலிருந்த ஆரம்பப் பின் னிலைப் பிரிவுகள் தளர்ச்சியுற்று அவற்றிற் சில மறையத் தொடங்கின. புதிய Lir groogi அமைக்தப்படவேண்டும் என்ற கோ ரி க் கை களு ம் எழ ஆர ம் பித் தன. இலவசக் கல்வி முறையைக் காரணமாகக் கூறி ஆங்கிலப் L JITIL FIFT GOD GL) 35 Girl அமைக்கப்படவேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
எனவே 1945ஆம் ஆண்டில் ஆங்கில அரசாங்கப் பாட சாலைகளின் தொகை 15ஆக இருந்து, 1950ஆம் ஆண்டில் 289 ஆக அதிகரித்தது. 1945ஆம் ஆண்டில் 5 - 14 வயதுக் கிடைப்பட்ட பிள்ளைகளில் 50 வீதமானவர்கள் ஆங்கிலக் கல்வியையும் சுய மொழிக்கல்வியையும் கற்றனர். 1949ஆம் ஆண்டு இவ்வீதம் 63ஆக அதிகரித்தது.*
உண்மையில் விசேட கல்விக்குழு குறைபாடுடைய இருவகைப் பாடசாலை முறை அப்படியே இருக்கத் தக்கதாக இலவசக் கல்வி முறையின் மூலம் கல்வியை விரிவு செய்ய முற்பட்டது. பொருளாதார வசதிகள் உள்ளவர்களுக்குத் தான் பயனுள்ள ஆங்கிலக்கல்வி கிடைக்கும் என்ற நிலையில் ஒரளவு மாற்றம் ஏற்பட்டதெனினும் ஆங்கிலம் கற்றவர்கள் சுயமொழி கற்றவர்கள் என்ற இரு வகுப்பினரின் தொகை மேலும் அதிகரிப்பதில் மாற்றம் நிகழவில்லை.
ஆங்கிலக் கல்வியை வருமானங் குறைந்தவர்களுக்கு ரிவு செய்யும் உற்சாகத்திற் சமூக அமைப்பிற் புதிய சமூகப் பிரிவுகள் வளர்ச்சியுறுவதைத் தடுக்கும் முயற்சி தளர்ச்சி

Page 25
இலங்கையின் கல்வி வளர்ச்சி
யடைந்தது. பின்வரும் புள்ளி விபரம் 1944ஆம் ஆண்டு தொடக்கம் 1960ஆம் ஆண்டுவரை ஆங்கிலக் கல்வியும் சுயமொழிக் கல்வியும் விரிவடைந்ததைக் காட்டும்.4
邕 露G 靈碼「高ü sa Gibai エ 458 is . | ேேழில் மொழிப் #೯೬ರ್&ತಿ | L & ಟಿ ೯೬೯೯ಡಿ ü娜薇”磁影 S. 336:33, శgఫ్రికత' (క్లిడ్ కి డ్రిడ్గాQ | డిణీ தெ883 கலேகன் தொகை
& !ട്ടുട്ടു s வ
P 星94< 35堡臀989|53瞿密,94零星46 6、7、91843,896 384ಿ గ్రల్డ్ ,శ్రీ 8 リ,50g|4室*g| 7.5リ| 859|35,836 1948: 633 3, 23.664 శ్రీశ్రీశ్రీ ! g్ళ9 (9,997 968 145 ! *S**t: 6473, 59,356 望むg | 6,33.g37 94559,475 盟95霹65剑客。87,546 塞8金、翼翼。穹。卫夏g 9°4鹭。óg实 1954 676露。22.543 リ73 |型3, ö,9リ リgö,23? 1956 6793,34,733 荡、鲇,5、 &84柠9,9巫8 1955 7544,星3,278 έ 798 ή 4, 7ς, 5 1 2 8 79 1960 779,00,503 52拿7靶G,星雷。辜G 874
1984ஆம் ஆண்டில் ஆங்கிலப் பாடசாலை மாணவர் களின் தொகை 1982ஆம் ஆண்டைவிட 4 வீதத்தில் அதிகரித்திருந்தது. ஆனால் 1954ஆம் ஆண்டில் அம் மாணவர்களின் தொகை 1932ஆம் ஆண்டைவிட 8 வீதத்தால் அதிகரித்தது. தொகையளவில் 1938 ஆம் ஆண்டில் ஆங்கிலப் பாடசாலை மாணவர்களின் தொகை 1936ஆம் ஆண்டை விட 9662ஆல் அதிகரித்த விடத்து, 1948 ஆம் ஆண்டில் அம்மாணவர்களின் தொகை 1946 ஆம் ஆண்டை விட 1,12,679ஆல் அதிகரித்தது இது இலவசக் கல்வி முறையால் ஆங்கிலக் கல்வி பெறுவதற்கான வாய்ப்புகள் விரிவடைந்ததைக் காட்டும்.
இலவசக் கல்வி நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் சுயமொழிக் கல்வி பயிலும் மாணவர்களின் தொகையிலேற் பட்ட அதிகரிப்பு: ஆங்கிலக் கல்வி பயிலும் மானவர் தொகையில் ஏற்பட்ட அதிகரிப்பை விடப் பன்மடங்காக
 
 

இலங்கையின் கல்வி வளர்ச்சி 47
இருந்தது. 1936 ஆம் ஆண்டில் ஆங்கிலப் பாடசாலை மாணவரின் தொகை 1934 ஆம் ஆண்டைவிட 3,388 ஆல் அதிகரித்தவிடத்து, அதே காலப் பகுதியிற் சுயமொழிக் கல்வி பயிலும் மாணவர் தொகை 54,224 ஆல் அதிகரித் திருந்தது.
ஆனால், இலவசக் கல்வி நடைமுறைப் படுத்தப்பட்ட போது 1948ஆம் ஆண்டில் ஆங்கிலப் பாடசாலை மாணவர் களின் தொகை 1946ஆம் ஆண்டைவிட 1,12,679ஆல் அதிகரித்தவிடத்து, அதே காலப்பகுதியிற் சுயமொழிக் கல்வி பயிலும் மாணவர் தொகை 54,224ஆல் அதிகரித்திருந்தது. ஆனால் இலவசக் கல்வி நடைமுறைப் படுத்தப்பட்ட போது, 1948ஆம் ஆண்டில் ஆங்கிலப் பாடசாலை மாணவர் களின் தொகை 1946ஆம் ஆண்டை விட 1,12,679ஆல் அதிகரித்தவிடத்து அதே காலப்பகுதியிற் சுயமொழிப் பாட தரலை மானவர் தொகை, 148,625 ஆல் மட்டுமே அதிகரித்தது.
மேலும் 1944ஆம் ஆண்டில் ஆங்கிலப் பாடசாலை மாணவர் சுயமொழிப் பாடசாலை மாணவர் விகிதம் ஏறத்தாழ 1 : 6 என்று இருந்து 1956 இல் 13 4 ஆக மாற்றமுற்றது.
இப்புள்ளி விபரங்கள் இலவசக் கல்வி முறையின் விளைவாகப் பாடசாலை செல்லும் மாணவர்களின் வீதம் அதிகரித்ததைக் காட்டும் அதே வேளையில், ஆங்கிலக் கல்வி சுயமொழிக் கல்வியை விட வேகமாக விரிவடைந்ததையும் காட்டுகின்றது. கல்வி முறையில் இருந்த குறைபாடு, ஆங்கிலக் கல்வி யாவருக்கும் கிடைக்கத்தக்கதாக இருக்க வில்லை என்பது மட்டுமல்ல, போதனா மொழி அடிப் படையிற் கல்வி முறை பிரிவுபட்டு அமைந்திருந்தமையாற் சமூக அமைப்பில் எழுச்சியுற்ற புதிய சமூக வகுப்புப் பிரிவு

Page 26
48 இலங்கையின் கல்வி வளர்ச்சி
களும் ஒரு முக்கிய குறைபாடாகவே எடுத்துக் கூறப்பட்டன. போதனாமொழியை எல்லாக் கல்வி நிலைகளிலும் மாற்றாது இலவசக் கல்வி முறை அமுலுக்குக் கொண்டு வரப்பட்டமையால் ஆங்கிலத்தையும் சுயமொழிகளையும் கற்ற இரு வெவ்வேறு நாடுகள்? சுதந்திரத்தின் பின்னரும் வளர்ச்சியுறுவது தவிர்க்க முடியாததாயிற்று
இலவசக் கல்வி முறையினால், ஆங்கிலக் கல்வியை நாடிய யாவருக்கும் அது கிட்டியதாகக் கூறுவதற்கில்லை. சுயமொழிக் கல்வி பயிலும் மாணவர்களின் தொகை 1945ஆம் ஆண்டின் பின்னர் அதிகரித்துச் சென்றதைக் காட்டும் புள்ளி விபரம் இதற்குத் தக்க சான்றாகும்.
1946ஆம் ஆண்டில் 6,67,032 ஆக இருந்த சுயமொழிப் பாடசாலை மாணவர் தொகை, 1956இல் 13,02,834 ஆக அதிகரித்தது. இலவசக் கல்வி முறை நடைமுறையிலிருந்த போதிலும் இக்காலப்பகுதியிற் புதிதாகச் சேர்ந்த 6,35,802 மாணவர்கள் அவ்வசதியைப் பயன்படுத்தி ஆங்கில ப் பாடசாலைகளிற் சேரமுடியாதிருந்தது.
ஆங்கிலத்தின் முக்கியத்துவம் இக்காலப் பகுதியிலே தொடர்ந்து நிலைபெற்றிருந்ததாதலால், அவர்கள் விரும்பிச் சுயமொழிப் பாடசாலைகளிற் சேர்ந்திருப்பர் என்று கொள்ள முடியாது, இலவசக் கல்வி நடைமுறைக்கு வரு முன்னரே சுயமொழிப் பாடசாலைகள் இலவசமாகக் கல்வி வழங்கி வந்தன. உயர்தரமான ஆங்கிலக் கல்வியை வழங்கிய பாடசாலைகள் கட்டணம் அறவிட்டு வந்தன.
1945ஆம் ஆண்டில் இலவசக் கல்விக் கொள்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதும் உடனடியாக ஏற்பட்ட விளைவு என்னவெனில், இதுவரை ஆங்கிலக் கல்வியைப் பெறக் கட்டணம் செலுத்தி வந்த பொருளாதார வசதியுள்ள வகுப்பினர் இதன் பின் அதே கல்வியை இலவசமாகப்

இலங்கையின் கல்வி வளர்ச்சி 49
பெற்றமையாகும். நீண்டகாலமாக இலவசமாக வழங்கப் பட்டு வந்த தரம் குறைந்த கல்வியையே வசதி குறைந்த வகுப்பினர் தொடர்ந்து பெற்றுவர நேரிட்டது.45 எனவே போதனாமொழி அடிப்படையிலான குறைபாடுகள் நிறைந்த இருவகைப் பாடசாலை முறை நீடித்து நிலவ நேரிட்டது.
இலங்கையின் கல்வி முறையிலிருந்த இம் முக்கிய குறைபாட்டைப் போக்குவதற்கு எல்லாப் பாடசாலை களிலும் சுயமொழிகளைப் போதனா மொழிகளாக்க வேண்டியிருந்தது. போதனாமொழி மாற்றம் நடைபெற்ற போது, ஆங்கிலத்திற்குப் பதிலாகச் சிங்களத்துக்கும் தமிழுக்கும் இடமளிக்கப்பட்டது. ஆரம்பநிலை, இடைநிலை, உயர்நிலை ஆகிய மூன்று கல்வி நிலைகளிலும் படிப்படியாக ஆங்கிலம் நீடிக்கப்பட்டபோது சிங்களத்துக்கும் தமிழுக்கும் இடமளிக்கப்பட்டது.
தேசிய நோக்கில் ஆங்கிலம் போதனா மொழியாக அமைவது ஒரு தவறான தெரிவு” என்றும் 'தாய் மொழிக்கு நாம் அளிக்கும் பெரும் முக்கியத்துவத்தை ஒரு சிறுபான்மையினருக்காகக் கைவிட ஆயத்தமாயில்லை" என்றும் கூறிய விசேட கல்வி ஆணைக்குழு (1943) ஆரம்பப் பாடசாலையிலே தாய்மொழியே போதனா மொழியாக இருக்க வேண்டும் என்று விதந்துரைத்தது.
மூன்றாம் வகுப்பிலிருந்து ஆங்கிலம் கட்டாயஇரண்டாம் மொழியாகக் கற்பிக்கப்பட வேண்டுமென்றும் குழு விதந் துரைத்தது." இவ்விதப்புரைகள் அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டன.
விசேட கல்விக் குழுவின் அறிக்கை எழு த ப் பட்டுப் பிரசுரிக்கப்பட்டபோது அரசாங்க சபை சிங்களமும்
தமிழும் அரசகரும மொழிகளாகுதல் வேண்டும் என்று

Page 27
50 இலங்கையின் கல்வி வளர்ச்சி
தீர்மானிக்கவில்லை. எனவே, குழு அரசாங்க மொழி ஒன்றாக இருக்க, கல்வி நிலையங்களிற் போதனாமொழி வேறொன்றாக இருப்பதால் எழக்கூடிய பிரச்சினைகளை எதிர் நோக்கியது. எல்லாவகையான கல்வி நிலைகளிலும் தாய்மொழியே போதனாமொழிகளாகிவிடும் என்பதை எதிர்பார்த்த விசேடகுழு ஆங்கிலம் நிர்வாக மொழியாக இருந்தமையால் அதனை யாவரும் கற்றல் வேண்டும் என்று விதந்துரைத்தது,
விசேட கல்விக் குழுவின் முக்கிய கொள்கைகள் அரசாங்க சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டதும் எல்லாக் கல்வி நிலைகளிலும் தாய்மொழியைப் போதனாமொழி யாக்கும் குறிக்கோள் அரசின் முக்கிய குறிக்கோளாக்கப் பட்டது.
1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதியும் செப்டம்பர் மாதம் 20 ஆந்திகதியும் அரசாங்கசபை உதவி பெறும் ஆங்கிலப் பாடசாலைகளுக்கான கல்விச் சட்டக் கோவையைத் (Education Code) திருத்தி 1945ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஐந்தாம் வகுப்பு வரை எல்லா வகுப்புக்களிலும் ஒவ்வொரு மாண வனுடைய தாய்மொழியும் போதனா மொழியாக அமைதல் வேண்டுமென்றும் மூன்றாம் வகுப்புத் தொடக்கம் எல்லாப் பாடசாலைகளிலும் ஆங்கிலம் கட்டாய இரண்டாம் மொழியாகக் கற்பிக்கப்பட வேண்டுமென்றும் விதித்தது.
இதன் விளைவாகக் கடந்த 130 ஆண்டுகளாகக் கல்வி முறையிற் காணப்பட்டு வந்த முக்கிய குறைபாடு நீக்கப் பட்டது," ரம்ப நிலை வகுப்புக்களைப் பொறுத்த வரையில் 369 பங்கிலப் பாடசாலைகள் 5,436 சிங்கள தமிழ்ப் பாடசாலைகளின் நிலைக்குக் கொண்டு வரப் பட்டன,
 

இலங்கையின் கல்வி வளர்ச்சி 5 I
தேசிய மொழிகளைப் பொறுத்தவரையிற் கல்வித் துறையிலே திட்டவட்டமான மாற்றங்கள் ஏற்பட்டவிடத்து அாசியற்றுறையிற் சுயமொழி இயக்கம் தேசிய விழிப்புணர்ச் சியின் வளர்ச்சியை ஊக்குவித்தது. 1932- ஆம் ஆண்டில் அரசாங்க சபையால் ஆரம்பித்த இயக்கத்தின் விளைவாகச் சிங்களத்தையும் தமிழையும் நாட்டின் அரசகரும மொழிகளாக்குவதுபற்றி ஆராய ஒர் அரசாங்கசபைத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது. இக்குழு சமர்ப்பித்த அறிக்கையை விவாதிக்கு முன்னர் அரசாங்கசபை கலைக்கப் பட்டது.
1947-ஆம் ஆண்டில் நாடு சுதந்திரமடைந்ததும் புதிய யுகமொன்று ஆரம்பமாயிற்று. இந்தியா இந்தி மொழியைத் தேசிய மொழியாகப் பிரகடனம் செய்தது,
பர்மாவும் இந்தோனேசியாவும் தக்கம் தேசிய மொழி களைப் பொறுத் தவரையில் இதேபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்தன.
ஒரு சுதந்திரமடைந்த சனநாயக நாடு அந்நிய மொழியைப் பயன்படுத்துவது மக்கள் பெற்றுக்கொண்ட புதிய அந்தஸ்துக்கு முரண்பட்டதாக இருந்தது.
தேசிய நிறுவனங்களுக்கும் தேசிய மொழிகளுக்கும் புத்துயிர் அளிக்க வேண்டும் என்ற மக்கள் கோரிக்கை வலுப்பெற்றது. இக்கோரிக்கை நியாயமானதாகவும் முறை யானதாகவும் இயல்பானதாகவும் விளங்கியது.
மக்கள் தொகையில் 6 வீதமானவர்களே ஆங்கிலத்தை விளங்கிக்கொள்ளக் கூடியவர்களாகவும், எஞ்சிய 94 வீத மானவர்களும் நாட்டின் சமூக, அரசியல், கல்வித்துறைகளில்
என்ன நடக்கின்றது என்பதை அறியாதவர்களாகவும்

Page 28
52 இலங்கையின் கல்வி வளர்ச்சி
இருந்த நிலையில் இம்மொழிக் கோரிக்கை தவிர்க்க முடியாத தாக இருந்தது
1931-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14-ஆம் திகதி கல்வி அமைச்சர் ஆறாம், ஏழாம், எட்டாம் வகுப்புக்களில் முறையே 1953, 1954 195 -ஆம் ஆண்டுகள் தொடக்கம் தாய்மொழியே போதனாமொழியாக அமைய வேண்டு மென்று விதித்தார்.
எனவே, இதுவரை ஐந்தாம் வகுப்புத் தொடக்கம் சி.பா.த ப. வகுப்புவரை ஆங்கிலத்தைப் போதனாமொழி யாகக் கொண்டிருந்த நகரப் பாடசாலைகள் கட்டாயமாகத் தேசிய மொழிகளைப் போதனா மொழிகளாக்க வேண்டிய தாயிற்று. இவ்விதி உண்மையில் ஆங்கிலத்திற் கல்விகற்ற 5 சதவீதமான பிள்ளைகளையே பாதித்தது. உண்மையிலே தேசிய மொழிகளைப் போதனா மொழிகளாக மாற்றும் பிரச்சினையை ஒரு சில நகரப் புறப்பாடசாலைகளே எதிர் நோக்கின.
1945-ஆம் ஆண்டில் இலங்கையில் ஆரம்பநிலைக் கல்வி #ിബിബേ தொடங்கிய போதனாமொழி மாற்றம் 1960இல் பல்கலைக்கழக நிலைவரை முன்னேறிச் சென்றபோதிலும் இன்னும் அது முழுமை பெற்று விடவில்லை 48 உயர் கல்வியையும் வேலை வாய்ப்புக்களையும் பொறுத்த வரையிலே தேசிய மொழிகள் நடைமுறையில் (1p(Լք இடத்தையும் பெற்றுவிடவில்லை.
போதனா மொழி மாற்றம் முக்கியமாக நாட்டிலிருந்த 10 சதவீதத்துக்கும் குறைந்த ஆங்கிலப் பாடசாலை களுக்கும் அப் பாடசாலைகளுக்குச் செல்லும் பிள்ளைகள் சார்ந்திருந்த வசதி படைத்த சமூக வகுப்புக்களுக்கும் எதிரான ஒரு போராட்டமாகவும், போதனாமொழி

இலங்கையின் கல்வி வளர்ச்சி 5 3
அடிப்படையிலான குறைபாடுகள் நிறைந்த இருவகைப் பாடசாலை முறையினாற் கல்வித் துறையிலும் சமூகத் துறையிலும் ஏற்பட்ட அநீதிகளைக் களைந்தெறியும் இயக்கமாகவும் விளங்கியது.
சலுகை பெற்ற சிறுபான்மை வகுப்பினர் ஆங்கிலக் கல்வியின் மூலம் பொருளாதார, சிேக அந்தஸ்தை உயர்த்திக் கொள்வதற்கும் உயர்கல்வி பெறுவதற்கும் இருந்த வாய்ப்புக்கள் சுயமொழிக்கல்வி கற்றவர்களுக்குக்
மொழி மாற்றம் விளங்கியது.
இலவசக் கல்விமுறை யாவருக்கும் ஆங்கிலக்கல்வி கிடைப்பதை உறுதிப்படுத்தாத போதிலும், உயர்கல்வி நிலையிற் படிப்படியாக ஏற்பட்ட போதனா மொழி LDIT.jp1) சுயமொழி கற்றவர்களுக்கு உயர்கல்வி பெறும் வாய்ப்பையும் உயர்கல்வித் தகுதிகளின் அடிப்படையில் வேலை வாய்ப்புக் களைப் பெறும் வசதிகளையும் வழங்கியதை மறுப்பதற் கில்லை,
குடியேற்ற நாட்டாட்சியின்போ து ஆங்கிலக்கல்வி பெறுவதற்கான வசதிகள் மிதக் சிறுபான்மையினருக்கே அளிக்கப்பட்டமையால் ஏற்பட்ட திங்கான சமூக விளைவு களும், பெரும்பாலானவர்கள் சுயமொழிகளிலேயே கல்வி கற்று வந்தமையும் பிள்ளைகள் கல்விபெறச் சிறந்த போதனா மொழி தாய்மொழியே? என்ற கல்வித்தத்துவ, ஆதாரங்களுடன் கூடிய உண்மை, போதனா மொழி மாற்றம் பற்றிய போராட்டத்திற் (ô).9)froỳ, 67 வேண்டி பங்கின் முக்கியத்துவத்தைக் குவிமத்து விட்டது.
குறிப்பு : போதனா மொழி மா ற் ந தி தி ன் பின்னணிக்கான அடிக்குறிப்புகள் (1 முதல் 49 வரை உள். ஆங்கிலப் பகுதி) இந்நூலின் இறுதிப் பகுதியில் காண்க
இத்துடன் இக்கட்டுரைக்கான REFERENCES pupil diff Giorgs

Page 29
இலங்கையில்
ஜனநாயகப்படுத்தும் சீர்திருத்தங்கள்
எல்லார்க்கும் கல்வி என்பது இன்று பரவலாகப் பேசப்படும் ஒரு பொருள் யாவருக்கும் ஆரம்பக்கல்வி, யாவருக்கும் இடைநிலைக்கல்வி என்ற நிலைகளினூடக இக் குறிக்கோளை அடைவதற்குரிய முயற்சிகள் பல நாடுகளிலும் மேற்கொள்ளப்படுகின்றன.
இக்குறிக்கோளை முன்னிட்டுக் கல்வியில் சமசந்தர்ப்பம், சமவாய்ப்பு ஆகிய அம்சங்களை நடைமுறைப்படுத்துவதிலும் கவனஞ் செலுத்தி வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபை தனது மனித உரிமைகள் பற்றிய பிரகடனத்தின் 26-ஆவது பிரிவில் இனம், மொழி, பொருளாதாரம், சமூக வகுப்பு வாழும் பிரதேசம் என்ற பாகுபாடின்றி யாவருக்கும் கல்வியை வழங்கவேண்டும் என வலியுறுத்துகின்றது.
இலங்கையிலும் எழுத்தறிவின்மையை முற்றாக இல்லாமற் செய்தல் வேண்டி, யாவருக்கும் எல்லா மட்டங் களிலும் கல்வியைப் பெறுவதற்குரிய சமசந்தர்ப்பம் வழங்கப் படவேண்டும் என நாட்டின் அரசியலமைப்பில் 27-ஆவது பிரிவில் கூறப்பட்டுள்ளது. இத்தகைய கருத்துகளின் அடிப் படையில் கல்வியை ஜனநாயகப்படுத்துதல் என்ற அம்சம் முக்கியம் பெறுகின்றது.

இலங்கையின் கல்வி வளர்ச்சி 55
அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளிலே கல்வியில் ளர்ச்சியடைந்த ஒரு நாடாக இலங்கை விளங்குகிறது. ஏறக்குறைய 87 சதவீத மக்கள் இங்கு எழுத்தறிவுடைய வர்கள். இத்தகைய உயர் நிலையை
அடைவதற்கு இலங்கையில் கல்வியை
ஜனநாயகப்படுத்துதல் என்ற கண்ணோட்டத்தில் காலத்துக்குக் காலம் வகுத்துக்கொள்ளப் பட்ட கொள்கைகளும், அவற்றின் செயற்பாடுகளுமே
இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னுள்ள காலப்பகுதி யிலிருந்து ஜனநாயகப்படுத்துதல் தொடர்பான L/6) அம்சங்களில் கவனஞ் செலுத்தப்பட்டுச் சுதந்திரமடைந்த பின், அவை துரிதப்படுத்தப்பட்டன.
குடியேற்றவாத ஆட்சியாளரால் நடைமுறைப்படுத்தப்
கல்வியமைப்பு இலங்கையின் சமூக-பொருளாதார | UFCUp0&55-5G) AT FIT UT அம்சங்களிலே சமத்துவமின்மையைத் தோற்றுவித்தது. ஆTசி தனியார், மதக்குழுக்கள் ஆகியோரால் நடத்தப்பட்ட பள்ளிக்கூடங்கள் ஆங்கிலக் கல்விக்கு முதன்மை வழங்கிவந்தன.
ஆங்கிலக் கல்வியின் பயனை இலங்கையின் கிராமிய விவசாயிகளும் அனுபவிப்பதற்குரிய வாய்ப்புகள் இடைக்க வில்லை. இலங்கையில் ஆங்கிலங் கற்ற ஒரு வகுப்பினர் ருவாக்கப்பட்டதுடன், சகல விடயங்களிலும் அவர் ளுக்கே சந்தர்ப்பமும் முன்னுரிமையும் வழங்கப்பட்டது. ஒரு சிலருக்கு உயர்தரமான ஆங்கிலக்கல்வி; பாமர மக்களுக்கு தரத்தில் குறைந்த ஆரம்பக்கல்வி; இதுவே குடியேற்றக்கால கல்விக் கொள்கையாக அமைந்தது.

Page 30
56 இலங்கையின் கல்வி வளர்ச்சி
இலங்கை பொருளாதார விடுதலையைப் பெறுவதற்கு முன் அரசியல் விடுதலைபெற்ற ஒரு நாடு 1931-இல் டொனமூர்க் குழுவினர் சர்வசன வாக்குரிமையை வழங்கினர். சர்வசன வாக்குரிமையைப் பெற்றுக்கொண்ட தால் இலங்கையரின் அரசியற் பிரவேசம், சமூக நோக்கிலான விழிப்புணர்வு பாராளுமன்ற ஜனநாயக ஆட்சியில் பங்கு கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் என்றவாறு மாறுதல்கள் உண்டாயின.
(இவ்வாறான மாற்றங்களுக்கு ஏற்ற ஒரு சமூகப் பின்னணியைக் கல்வியினூடாக ஏற்படுத்த வேண்டும் என்பதன் அவசியத்தை ஆங்கிலக் கல்வியைப் பெற்ற தேசிய வாதிகளும் சமூகவுடைமைவாதிகளும் வலியுறுத்தி வந்தனர். இதன் பிரதிபலனாக 1940-களில் கல்வியை ஜனநாயகப் படுத்துதல் தொடர்பான பல கொள்கைகளை அவர்கள் முன்வைத்தார்கள்)
கல்வியிலே சமசந்தர்ப்பம் சமவாய்ப்பு என்ற சிந்தனை 19-ஆம் நூற்றாண்டில் உதயமானது. ஆயினும் இதனை நோக்கமாகக் கொண்ட செயற்பாடுகள் 20-ஆம் நூற்றாண்டில் கைத்தொழில் மையமாதலுடன் ஆரம்ப LDfTu7607 GTGCTGUITL).
கைத்தொழில் மயமாதலின் விளைவாக ஒரு நாடு தன்னகத்தே நிலவும் சமூக-பொருளாதார வேற்றுமைகளை நீக்கவேண்டும் என்றும், அதற்கான வழிமுறைகளில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன் கல்வியை வழங்கும் நிறுவனங்களுக்கிடையேயுள்ள வேற்றுமைகளைக் குறைக்க வேண்டும் எனவுங் கருதப் படலாயிற்று.
\அதனால் கல்வி வசதிகளை எல்லாருக்கும் கிடைக்கச் செய்தல், கல்விச் செயற்பாட்டில் பங்குகொள்ளச் செய்தல்,

இலங்கையின் கல்வி வளர்ச்சி
இன, மொழி பிரதேச வேறுபாடுகளின்றிக் கல்விவசதிகளைப் பயன்படுத்துவதற்கான மனப்பாங்கினை வளர்த்தல் ஆகிய குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டு கல்வி வளர்ச்சியில் மாற்றங்கள் உருவாகின.
இலங்கையில் கல்வியை ஜனநாயகப்படுத்துவது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் பின்வருவன குறிப்பிடத் தக்கவை.
(அ) இலவசக் கல்வியின் அறிமுகம்
(ஆ) தேசியமொழி கல்வி மொழியாக்கப்படல்
(இ) பாடசாலைகள் யாவும் அரச பொறுப்பின் கீழ்
கொண்டுவரப்படுதல்
(ஈ) கலைத்திட்ட மாற்றங்களினூடாகக் கல்வித்தரம்
பேணுதல்
இலங்கையின் கல்வி வரலாற்றில் இலவசக்கல்வியின் அறிமுகம் ஒரு மைல் கல் என வருணிக்கப்படுகிறது. 1943இல் கலாநிதி CWW. கன்னங்கரா தலைமையிலான விஷேடக் கல்வி ஆணைக்குழு பாலர் வகுப்புத் தொடக்கம் பல்கலைக் கழகம் வரையில் கல்வியை இலவசமாக வழங்கவேண்டும் என விதந்துரைத்தது,
குறிப்பிட்ட காலப் பகுதியில் அரசாங்கம், மதக் குழுக்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கிடையே கல்வியை வழங்குவதில் நிலவும் வேறுபாடுகளை நீக்குவதற்கு சிறந்த வழிமுறையாக இலவசக்கல்வி விளங்கும் என இக்

Page 31
இலங்கையின் கல்வி வளர்ச்சி
முக்கியமாக ஆங்கிலம் கல்வி மொழியாக இருந்தமையும், கல்விமொழியை அடிப்படையாகக் கொண்டு கட்டணம் விதிக்கப்பட்டமையும், ஆங்கில, சுயமொழிக்கல்வி ஏற்பாடு களில் இரட்டைத் தன்மை உருவாவதற்கு ஏதுவாக இருந்தன. இது நீக்கப்பட்டுக் கல்வியில் சமசந்தர்ப்பம் நடைமுறைச் சாத்தியமாவதற்குரிய வழி இலவசக்கல்வியே என வற்புறுத்தப்பட்டது. எனவே 1945-ல் இலவசக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது.
இலவசக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில், அக்கொள்கைக்கு எதிராகப் பல கருத்துகளும் தெரிவிக்கப் பட்டன. இத்தகைய எதிர்க்கருத்துகள் நாட்டின் பொருளா தாரப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டிருந்தன. இலங்கையின் பொருளாதாரம் நலிவடைந்திருந்த காலத்தில் எல்லாருக்கும் இலவசக்கல்வியை வழங்குதல் இயலாத காரியம்; அது பொதுமக்கள் மத்தியில் அரசியல் செல் வாக்கைத் தேடும் முயற்சி எனச் சிலர் அபிப்பிராயம் தெரிவித்தனர்.
பொருளாதார வளர்ச்சியடைந்த யப்பான் போன்ற நாடுகள் கூட எல்லா மட்டங்களிலும் கல்வியை இலவசமாக வழங்க முற்படவில்லை. ஆனால் இலங்கையில் அவ்வாறு செய்ய முற்படுவது பெருஞ் செலவுக்குரிய விடயமாக இருக்கும் என்றும், மற்றும் இலவசக் கல்வியை வழங்க முற்படும் நிலையிலும், தனியார் பாடசாலைகள் இயங்கு வதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என இன்னொரு சாராரும் கூறினர்.
இவ்வாறான எ தி ர் க் கரு த் து க ள், விமரிசனங்கள் யாவற்றையுங் கடந்து இலவசக்கல்விக் கொள்கை ஏற்றுக் கொள்ளப்படலாயிற்று இதன் பின்னர் சகல தனியார் பாடசாலைகளையும் மதக்குழுப் பாடசாலைகளையும்

இலங்கையின் கல்வி வளர்ச்சி 59
அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதற்கு அடிப்படையாக ஒரு சட்டமூலம் 1960 களில் கொண்டுவரப்பட்டது.
இலவசக்கல்வியை வழங்கும் செயற்பாட்டின் பூரணத் துவம் இக்காலத்திலேயே ஏற்படுவதாகவும் கூறப்படுகின்றது. 1960 களில் இலங்கையின் கல்விபற்றி அரசாங்கம் மேற் கொண்ட நடவடிக்கைகளினால் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்ட மதசார்புடைய கல்வி நிறுவனங்கள் யாவும் அரச கட்டுப்பாட்டுக்குள் வந்தன. எனினும், இதற்கு அப்பாலும் சில பாடசாலைகள் தனியாக இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டன. அவை பின்னர் தனியார் பாடசாலைகளாக மாறின,
இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் அதன் உடனடி விளைவாக பாடசாலைக் கல்வியில் பங்கு பற்றுவோர் தொகையிலோ, அல்லது ஆரம்பக் கல்விக்கு அப்பால் கல்வியைத் தொடர்வோர் தொகையிலோ குறிப்பிட்டளவுக்கு அதிகரிப்பை ஏற்படுத்தவில்லை. மறு புறத்தில் ஆங்கிலமொழிப் பாடசாலைகளும் பல உடனடிப் பிரச்சினைகளை எதிர்நோக்கின.
ஆங்கிலப் பாடசாலைகளின் சூழலும், போதனாமொழி ஆங்கிலமுமாக இருந்த வேளையில் குறிப்பிட்ட பாடசாலை களில் கிராமியப் பிள்ளைகளும் சேர்ந்து படிப்பதற்குரிய வாய்ப்புகள் பெற்றுக் கொடுக்கப்படவில்லை. இன்னொரு கட்டத்தில் ஆரம்பக் கல்வியைத் தாய்மொழியிலே பெற்றுக் கொண்ட பிள்ளைகள் தொடர்ந்து இடைநிலைக் கல்வி பெறுவதற்கும் ஆங்கிலமொழிக் கொள்கைகள் தடைய,
ஆகவே 12 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளில் பலர் பாட சாலைக் கல்வியிலிருந்து விலகவேண்டி நேர்ந்தது; மற்றும்

Page 32
60 இலங்கையின் கல்வி வளர்ச்சி
கல்வி, நிருவாகம் போன்ற தேவைகளுக்கு வேண்டிய ஆளணி யினர் ஆங்கிலங் கற்றவர்களாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் ஆங்கிலக்கல்விக்குரிய வாய்ப்புகளற்ற பின் தங்கிய மக்களின் பிள்ளைகளுக்குப் பெரும் முட்டுக் கடடையாக இருந்தன.
இத்தகைய பிரச் சி  ைன க ஞ க் குத் தீர்வுகாண முற்படுகையில் கல்வியைத் தாய்மொழியிலேயே வழங்க வேண்டும் என்ற கருத்து மேலோங்கியது. ஆகவே ஆரம்ப மட்டத்தில் சிங்கள, தமிழ்ப் பிள்ளைகளின் கல்வி மொழி முறையே சிங்களமும் தமிழுமாக இருக்கவேண்டும் என 1945 ஆம் ஆண்டில் அரசாங்க சபை தீர்மானித்தது.
தாய் மொழிகளிலே கல்வியை வழங்கும் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டதன் விளைவாகச் éF(LD5 பொருளாதார நிலைமைகளிற் பின்தங்கிய பிள்ளைகளும் கல்வியைத் தொடர வாய்ப்புகள் உருவாயின.
கல்வியில் தேசியமொழிக் கொள்கையின் நடைமுறைப் பிரயோகம் 1960 ஆம் ஆண்டளவில் முழுமை பெற்றது. 1960 களின் ஆரம்பத்தில் பல்கலைக் கழக மட்டத்திலும் கலைத்துறைப் பாட நெறிகளைத் தாய்மொழியிற் பயிலு வதற்குச் சந்தர்ப்பம் உண்டானது.
காலப்போக்கில் விஞ்ஞானக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி ஆகியவற்றையும் தேசிய மொழிகளிலே கற்கக் கூடியவாறு மாற்றங்கள் ஏற்பட்டன. ஆகவே கல்வியை ஜனநாயகப் படுத்தல் என்ற விடயத்தில் தாய்மொழிக் கொள்கை பாரிய மாற்றங்களுக்கு வித்திட்டதெனலாம்.
இலவசக்கல்வியும் தாய்மொழிக்கல்வியும் நடைமுறைப் படுத்தப்பட்டதன்விளைவு,இலங்கையிலே பொதுக்கல்வியைப்

இலங்கையின் கல்விவளர்ச்சி 6.
பறுபவர்களின் தொகையில் அதிகரிப்பை ஏற்படுத்தியது, அதற்கு ஏற்பப் பாடசாலைகளின் தொகையும் அதகரித்தது.
1990 களில் பாடசாலைக்குச் செல்லும் வயதை அடைந் தவர்களில், 30 சதவீதத்தினர் பாடசாலைக்குச் செல்ல வில்லை; ஆனால் காலப்போக்கில் பாடசாலைக் கல்வியில் பங்குபற்றியோர் தொகை கிராம நகர வேறுபாடு, ஆண் பெண் வேறுபாடு இன்றித் துரிதமாக அதிகரித்தது.
1946 இல் இலங்கையில் பாடசாலைகளுக்குச் சென்ற மாணவர்கள் தொகை 9,36,358 ஆகவும் எழுத்தறி வுடையவர் 57.8 சதவீதமாகவும் இருந்தது.
1990 ஆம் ஆண்டில் பாடசாலைக் கல்வியைப் பெறு பவர்கள் தொகை 4 மில்லியனாகவும், எழுத்தறிவுடையவர் 87.2 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. குறிப்பாக இடைநிலை மட்டத்தில் 1960 இல் இருந்து 1990 இல் 23 0 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு பாடசாலைக் கல்வியைப் பெறுபவர் தொகை அதிகரிப்பதற்குக் கட்டாயக் கல்விக் கொள்கை துணை நின்றதா என்பது கேள்விக்குறியாகும். 1939 ஆம் ஆண்டின் கல்விக்கட்டளைச் சட்டமும் அதனைத் தொடர்ந்து வந்த சட்டத்திருத்தங்களும் 5-14 வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைகளுக்குக் கல்வி கட்டாயம் என எடுத்துக் கூறின.
இதன் பின்னர் 1959 இல் பாடசாலைக்குச் செல்லாத பிள்ளைகள் பற்றி ஆராய்ந்த குழுவும் 1961இல் தேசியக்கல்வி ஆணைக்குழுவும் அவற்றைத் தொடர்ந்து 1964, 1967ஆம் ஆண்டுகளின் வெள்ளை அறிக்கைகளும் கட்டாயக் கல்வி ற்றிக் கூறியிருந்தன. எனினும் கட்டாயக் கல்வியை வன்மை ாக நடைமுறைப் படுத்துவதற்கான சட்ட ஆக்கங்கள் ஒரு

Page 33
62 இலங்கையின் கல்வி வளர்ச்சி
போதும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படவில்லை என அறிக்கைகள் கூறுகின்றன. இந்த நிலையிலும் கல்வியைப் பெறுவதற்குக் காட்டப்பட்ட உற்சாகம் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமே,
இலங்கையில் பாடசாலைகளின் தொகை பின்வருமாறு அதிகரித்தது. 1946-5769 பாடசாலைகள், 1965-9471 பாடசாலைகள், 1986-9656 பாடசாலைகள், 1990-10212 பாடசாலைகள், பாடசாலைகளின் தொகை இவ்வாறு அதிகரிக்கப்படுவதற்கு ஆரம்ப காலங்களில் கடைப்பிடிக்கப் பட்ட பாடசாலை அனுமதிக் கொள்கைகளின் எதிர்மறைத் தாக்கமும் நகர கிராமப் பாடசாலைகளுக்கிடையே நிலவிய வேறுபாடுகளும் அடிப்படையாக இருந்தன.
சமூகத்தில் பின் தங்கிய பிள்ளைகளுக்கும் நல்ல சூழலிற் சேர்ந்து படிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட லேயே கல்வியில் சம சந்தர்ப்பம் உறுதிப்படுத்தப்படும் என்று தேசியக் கல்வி ஆனைக்குழு 1961 இல் குறிப்பிட்டதனை அடிப்படையாக வைத்துப் பாடசாலை அனுமதிக்கொள்கை சம்பந்தமாக எழுந்த பிரச்சினைகளுக்குச் சில இடைக்காலத் தீர்வுகள் முன்வைக்கப்பட்டன. அவற்றுள் ஒன்று வலய அடிப்படையில் பாடசாலைகள் அமைத்தல் என்பதாகும்.
தேசியக் கல்வி ஆணைக்குழுவின் ஆலோசனைப்படி ஆரம்பப்பாடசாலைகள் 1-8 வகுப்புகளை உடையனவாக இருக்கும். எனவும், புவியியற் பிரதேச அடிப்படையில் பொருத்தமான ஓரிடத்தில் அமைக்கப்படும் இடைநிலைப் பாடசாலைகளில் குறிப்பிட்ட பிரதேசத்தில் வசிக்கும் பெற்றோர் தமது பிள்ளைகளைச் சேர்த்துக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டன. இத்தகைய கருத்துகள் கூட ஒரு கட்டத்தில் நகரப்பிள்ளைகள் அனுபவிக்கும் வசதிகளைக் கிராமியப் பிள்ளைகள் அனுபவிக்கத் தடையாக இருக்கும் என்ற ஐயநிலையைத் தோற்றுவித்தது.

இலங்கையின் கல்வி வளர்ச்சி 63
ஆகவே பாடசாலைகளை அமைத்தல் என்பது சமூக பொருளாதார நிலை பற்றிய நோக்கிலிருந்து விலகி நாட்டிலுள்ள சகல பிள்ளைகளினதும் வீட்டு வாயில்களைத் தேடிக் கல்வி எடுத்துச் செல்லப்படவேண்டும் 6 TGÖST வலியுறுத்தப்பட்டது.
இதன் அடிப்படையில் 1964 இன் கல்வி வெள்ளை அறிக்கையில் ஆரம்பப்பாடசாலைகள் ஏறக்குறைய 2 மைல் தூரத்துக்குள் எல்லாப்பிள்ளைகளுக்கும் கிடைக்க வேண்டும் என எடுத்துக் காட்டியது. இவற்றினைப் பின்பற்றிய பாடசாலை அமைப்புக் கொள்கை ஒரு குறுங்கால நடவடிக்கையாகவே அமைந்தது.
இலங்கையில் பாடசாலைகளின் அமைப்பு வளர்ச்சியில் 1940 களில் ஏற்படுத்தப்பட்ட மத்திய மகாவித்தியாலயங் களும் பிரதானமானவை. கிராமப்புறத்தில் இருந்துவரும் திறமைமிக்க மாணவர்களும் நல்ல சூழலிற் சேர்ந்து கல்வி கற்பதற்கு ஏற்ற சந்தர்ப்பத்தை வழங்குதல் மத்திய மகா வித்தியாலயங்களின் குறிக்கோளாக இருந்தது.
ஆகவேதான் சமூகப் பெயர்ச்சியை ஏற்படுத்துவதற்குப் பொறுப்பாக இருந்த முதலாவது நிறுவனம் மத்திய மகா வித்தியாலயங்களே எனக் குறிப்பிடுகின்றனர். அதற்கு ஏற்ற வகையில் இப்பாடசாலைகள் பற்பல வசதிகளையும், புதிய கற்கை நெறிகளையும் படிப்படியாக அதிகரித்துக் கொண்டு வந்தன.
5 ஆம் 8 ஆம் வகுப்புப் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு மத்திய மகாவித்தியால யங்கள் அனும வழங்கிவந்தன. மற்றும் இங்குக் கல்வி கற்ற பலர் எதிர் காலத்தில் மிக உயர்ந்த நிலைக்கு வரவும் உதவின.

Page 34
6 4. இலங்கையின் கல்வி வளர்ச்சி
இலவசக்கல்வி, தாய்மொழிக் கல்வி, பாடசாலைகளின் தொகையை அதிகரித்தல் என்பவற்றின் மத்தியிலும் கல்வியில் பங்குபற்றுதலைப் ஊக்குவித்தலின் பொருட்டு வேறும் பல நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துக் கொண்டது. பாடசாலைப் பிள்ளைகளுக்கு மதிய உணவு வழங்குதல், இலவசப் பாடநூல் விநியோகம் என்பன அவற்றுள் முக்கியமானவை,
மதிய உணவு வழங்கும் திட்டம் முதலில் வழிய குடும்பச் சூழலில் இருந்துவரும் பிள்ளைகளின் போஷாக்கினை அதிகரிக்கச் செய்யும் நோக்குடன் அமுல்படுத்தப்பட்டிருந்த வேளையிலும், 1953 ஆம் ஆண்டில் கைவிடப்பட்டு மீண்டும் 1956 இல் வழங்கப்படலாயிற்று மதிய உணவு வழங்குதல் குறித்து நிலவிய கஷ்டங்களும், நிதி நெருக்கடிகளும் இத்திட்டத்தை மீண்டும் கைவிடச் செய்தது. பின்னர் சமூக நலன் பேணல் என்ற அடிப்படையில் மதிய உணவு வழங்கு வதன் முக்கியத்துவம் உணரப்பட்டு 1989 இல் இருந்து உணவு முத்திரைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இத்திட்டத்தின் பெறுபேறுகள் எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன என்பதை அறிவதும் அவசியமானதே.
இலவசக்கல்வியின் முழுப்பயனையும் அடைவதற்குப் பாடநூல்களையும் இலவசமாக வழங்கவேண்டும் என்ற ஒரு கருத்தும் 1950களில்இருந்து உருப்பெற்று வந்தது, ஆனாலும் அதன் செயல்வடிவம் 1980 இல் ஏற்பட்டது. சகல பாட சாலைட் பிள்ளைகளுக்கும் இலவசமாகப் பாடநூல்களை வழங்குவதற்கு அதிக செலவுக் குரிய ஒன்றாயினும், வறுமையின் நிமித்தம் பாடசாலை நூல்களைப் பெற முடியாத பிள்ளைகளுக்கு இது ஒரு வரப்பிரச்ாதமாக அமைந்து இடைநிலைக் கல்வியின் வளர்ச்சியில் நல்ல மாற்றங்கள் ஏற்படுத்துவதற்கும் பேருதவியாக விளங்கியது.

தேசிய நூலகப் பிரிவு மாநகர நூலக சேவை, இலங்கையின் கல்வி வளர்ச்சிறப்பாணம் 65
இலங்கையின் கல்விவளர்ச்சி பற்றிய அண்மைக்கால நிலையை நோக்கும்பொழுது, யாவருக்கும் ஆரம்பக்கல்வி என்ற குறிக்கோள் நிறைவேறி வருகிறது. இடைநிலைக் கல்வியில் பங்குபற்றுவோர் தொகையிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சிப்போக்குக் காணப்படுகிறது.
ஏனைய ஆசிய நாடுகளில் இல்லாத அளவுக்குக் கல்வி கற்கும் பெண்களின் தொகையில் அதிகரிப்பு ஏற்பட்டது. ஆரம்ப இடைநிலை மட்டங்களில் கல்வியில் பங்குபற்றும் ஆண்கள் பெண்களிடையேயான வேறுபாடு மிக மிகக் குறைவாக இருப்பது இன்னொரு விஷேட அம்சமாகவும் குறிப்பிடலாம்.
அடுத்து உயர்கல்வி தொடர்பான நடவடிக்கைகள்
பிரதான இடத்தை வகிக்கின்றன. இலங்கையில் உயர்கல்வி எனக் கூறும்பொழுது, அது பெருமளவுக்குப் பல்கலைக்கழகக் கல்வியுடன் தொடர்புபட்டுள்ள பல்கலைக்கழகக் கல்வியை ஜனநாயகப் படுத்துதல் பல்வேறு நடைமுறைப் பிரச்சினைகளுடன் தொடர்புடையது.
1942 ஆம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக்கழம் ஆரம் பிக்கப்பட்ட வேளையில், அங்குக் கல்வி பயிலுவதற்குரிய வாய்ப்புகள் ஆங்கில அறிவுடையவர்களுக்கு உரியதாக இருந்தது. இடைநிலைக் கல்வியைத் தாய்மொழியில் வழங்க ஏற்பாடுகள் செய்தபின் பல்கலைக் கழகக் கல்வியை நாடுவோர் தொகையும் விரைவாக அதிகரித்தது.
1962 ஆம் ஆண்டில் பல்கலைக்கழகக் கல்வி தொடர்பாக ல்கலைக்கழகக் கல்விபற்றி ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையொன்றில் இக் கல்வியைப் பெறத் தகுதியுடைய எவருக்கும் தடையோ அல்லது மறுப்போ தெரிவிக்கப்படக் கூடாது என்ற கருத்தை வெளிப்படுத்தியிருந்தது. இக்

Page 35
66 இலங்கையின் கல்வி வளர்ச்சி
கருத்துக்குச் சாதகமான முறையில் பல்கலைக் கழகங்களின் தொகையை அதிகரிக்க வேண்டியது இன்றியமையாததாய் இருந்தது.
கலைத்துறைக் கல்வியைத் தாய்மொழி மூலம் வழங்கு வதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டபின் கிராம மட்டத்தி லிருந்தும் பல்கலைக்கழக அனுமதி கோருவோர் தொகை பெருகியது. மறுபுறத்தில் பல்கலைக்கழகக் கல்வியை நிறைவு செய்து வெளியேறுவோரைத் திருப்திப்படுத்தக் கூடிய வகையில் வேலைவாய்ப்பு வசதிகளை ஏற்படுத்தக்கூடிய நிலை இலங்கைப் பொருளாதாரத்திற்கு இருக்கவில்லை.
எனவே கற்றவர் மத்தியில் வேலையின்மை பாரிய பிரச்சினையாக உருவெடுத்தது. இக் கட்டத்தில் வேலை யற்றோர் தொகையைக் கட்டுப்படுத்தும் முகமாகப் பல்கலைக்கழகக் கல்விக்கு அனுமதி கோருவோர் தொகை யைக் கட்டுப்படுத்த வேண்டும் எனத் தேசிய உயர் கல்விக் குழுவானது தீர்மானமொன்றை மேற்கொண்டது. இத்தீர் மானமானது எதிர்காலத்தில் இளைஞர் மத்தியில் பல பிரச் சினைகள் ஏற்படுவதற்கு அடிகோலியது எனவும் கூறலாம்.
முதலாவதாக பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப் படும் மாணவர் தொகையில் நிலவும் பிரதேச அடிப்படை வேறுபாடு ஒரு பாரிய பிரச்சினையாகக் கருதப்பட்டது இவ் வேறுபாடுகளுக்குப் பின்தங்கிய பிரதேசங்களில் காணப்பட்ட ஏற்றதாழ்வுகள் அல்லது குறைபாடுகள் 5Π Π 600TA DIT 5 அமைந்தன.
ஏறக்குறைய 75 சதவீதமான மாணவர்கள் கொழும்பு யாழ்ப்பாணம் போன்ற ஒரு சில மாவட்டங்களிலிருந்தே வந்தனர். அதே நேரத்தில் வேறு சில மாவட்டங்களில் இருந்து வந்த தொகை குறிப்பிட்டுக் கூறமுடியாத அளவிலும்

இலங்கையின் கல்வி வளர்ச்சி 67
இருந்தது. இன்னொரு நோக்கில் தேசியமட்டத்தில் பெரும் பான்மை இனமாணவர்களின் வீதாசாரமும் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தது எனவும் சுட்டிக்காட்டப்பட்டது
எனவே மேற்குறித்த பிரச்சினைகளுக்குரிய தீர்வின் முதற்கட்டமாக 1971 இல் பல்கலைக்கழக அனுமதியில் மொழியடிப்படையில் புள்ளிகளைத் தரப்படுத்தல் முறை அறிமுகமானது. இக் கொள்கையானது மொழியடிப்படைச் சிறுபான்மையினரிடம் பல அதிருப்தியையுண்டுபண்ணியது. கல்வி வசதியடிப்படையில் நிலவிய பிரதேச வேறுபாடுகளைக் கருத்திற்கொண்டு, பின்தங்கிய பிரதேசங்களுக்கும் சந்தர்ப் பத்தை ஏற்படுத்துவதற்காக 1974 ஆம் ஆண்டில் மாவட்டப் பங்கீட்டு முறையைக் கொண்டுவந்தனர்.
மாவட்டப் பங்கீட்டு முறையினால் முற்று முழுவதாகத் திறமையடிப்படையில் இடம்பெற்ற நிலைமாறி 35 சதவீதத் தினர் மட்டும் அவ்வாறு தெரிவு செய்யப்பட்டார்கள். மிகுதியில் 60 சதவீதம் மாவட்ட அடிப்படையிலும் 5 சதவீதம் பின்தங்கிய மாவட்டங்களுக்கும் என ஒதுக்கப் பட்டது. இந்த அனுமதிக் கொள்கையும் திறமையிலிருந்தும் புறக்கணிக்கப்பட்ட இளைஞர்களிடத்துப் பல்வகைப்பட்ட எழுச்சிகளுக்கு வித் திட்டது.
ஆகவே, திறமையுள்ள மாணவர்களுக்குக் கூடிய சந்தர்ப் பத்தை வழங்கவேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, திறைமைச் சித்தி, மாவட்ட அடிப்படை பின்தங்கிய மாவட்டம் என்பன முறையே 40; 55: 5 என திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களாக க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுள் ஏறக்குறைய 5 சதவீதத் தினரே பல்கலைக்கழக அனுமதியைப் பெற்று வந்துள்ளனர்.

Page 36
68 இலங்கையின் கல்வி வளர்ச்சி
இதனால் உயர்கல்வியைப் பெற த் தகுதியுடைய பலர் பல்கலைக்கழக அனுமதி பைப் பெற முடியாமல் இருப்பது உயர்கல்வியை ஜ ன நா ய க ப் ப டு த் து த ல் என்ற கோட்பாட்டுக்கு முரணாக உள்ளதால் பல்கலைக் கழகக் கல்விச் சந்தர்ப்பத்தை விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
தற்பொழுது மொத்தமாக 18 உயர்கல்வி நிறுவனங்கள் இலங்கையில் இருக்கின்றன. அவற்றுள் 7 ப ல் க  ைல க் கழகங்களும் 1 பல்கலைக்கழக வளாகமும், பல்கலைக் கழகக் கல்லூரியும், 1 திறந்த பல்கலைக் கழகமும், தனியார் மருத்துவக் கல்லூரியும் 7 பட்டப் பின் படிப்பு நிறுவனங்களும் அடங்கும் இவற்றை விட அண்மையில் மாகாணப் பல்கலைக் கழகக் கல்லூரிகளும் திறக்கப்பட்டு வருகின்றன.
கல்வியின் பல்வேறு அம்சங்களிலும் உயர் விளைவுகளை ஏற்படுத்துவதற்குக் க ல் வி  ைய ஜனநாயகப்படுத்துதல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக
இருந்தமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்
கல்வியை வழங்குவதன் மூலம் இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு அ டி கோ ல ப் பட்டதனால் எத்தகைய வேறுபாடுமின்றி யா வ ரு ம் கல்வியைப் பெறச் சந்தர்ப்பங்கள் உருவாயின. இருப்பினும் ஜனநாயகப்படுத்தற் கோட்பாட்டோடு தொடர்புடைய செயற்பாடுகள் பூரணத்துவம் பெறுவதில் எதிர்நோக்கப் படும் பிரச்சினைகளையும் இங்குக்குறிப்பிட வேண்டியுள்ளது.
மு த லா வ த ர க, மிகப்பரந்த அளவில் கல்விச் சந்தர்ப்பத்தை வழங்க முற்பட்ட வேளையில் கல்வித்தர வளர்ச்சி பற்றி அதிகம் கவனத்திற் கொள்ளப்படவில்லை. கிராம நகரப் பாடசாலைகளுக்கிடையேயும் பெரிய-சிறிய

இலங்கையின் கல்வி வளர்ச்சி 69
பாடசாலைகளுக்கிடையேயும் இவ்வேறுபாடு நன்கு புலப்
இலங்கைப் பாடசாலைகள் தற்பொழுதும் அவற்றிற்கு வேண்டிய பெளதீக ஆளணி வளங்களைப் பெற்றுககொள்ள அரசாங்கத்தின் உதவியையே பெரிதும் நம்பியிருக்கின்றன. வளங்கள் பகிர்ந்தளிக்கப்படும்போது இப்பொழுதும் நகரப் பாடசாலைகளுக்கே முதன்மை வழங்கப்படுவது கிராமப் புறப் பாடசாலைகளினதும், சிறிய பாடசாலைகளினதும் வளர்ச்சியில் நலிவுத் தன்மை ஏற்படுத்துகிறது.
வசதியான வகுப்பறைக் கட்டிடங்கள், சுகாதார வசதி, விஞ்ஞானக் கூடங்கள், விளையாட்டு மைதானம், நூலகம் போன்ற அத்தியாவசியத் தே  ைவ க ள் அநேகமான பாடசாலைகளில் இல்லை.
அடுத்து ஆசிரியர் பற்றிய விபரங்களை நோக்கும்போது, இதுவும் பற்றாக்குறையான ஓர் அம்சமாகக் காணப்படுகிறது. இன்றைய நிலையில், ஆசிரியர்களை அவர்கள் பெற்றிருக்கும் கல்வித்தர அடிப்படையில் பாகுபடுத்தும் பொழுது 20.2 சதவீகத்தினர் பட்டதாரிகளாகவும் 57.9 சதவீதத்தினர் பயிற்றப் பட்டவர்களாகவும், 5.4 வீதத்தினர் தராதரப் பத்திரமுடையவர்களாகவும், 16.5 வீதத்தினர் தராதரப் பத்திரமற்றவர்களாகவும் உள்ளனர். இவர்கள் குறிப்பிட்ட ஒவ்வொரு பிரதேசத்தின் தேவைக்கு ஏற்ற அளவிலும் வகையிலும் சமனாகப் பரம்பி இருக்கவில்லை.
பின் தங்கிய பிரதேசப் பாடசாலைகளில் கடமை யாற்றுவோரில் பலர் கல்வித்தரம் குன்றியவர்கள் நம் தொழில் சார் பயிற்சி பெறாதவர்கள். இவர்கள் கையாளும் கற்பித்தல் அணுகுமுறைகள் பழையன மற்றும் கணிதம்

Page 37
இலங்கையின் கல்வி வளர்ச்சி
விஞ்ஞானம், தொழில்நுட்பப் பாடங்கள், அழகியற் கல்வி
பான்ற பாடங்களுக்குப் போதிய ஆசிரியர்கள் இல்லை.
இத்தகைய போக்கினால், பிரதேச ரீதியாக ஆசிரிய, மாணவர் விகிதமானது நவரெலியா மொனறாகலை கல்முனை, அ ம் ப ா  ைற போன்ற மாவட்டங்களில் உயர்வாகவும், கண்டி, மாத்தளை, குருனாகலை போன்ற மாவட்டங்களில் குறைவாகவும் காணப்படுகின்றது. ஆசிரியர் பற்றாக்குறையின் விளைவு பிரதேச ரீதியான கல்வித் தர வேறுபாட்டுக்கும் ஒர் அடிப்படைக் காரணமாய் அமை கின்றது.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் மாவட்ட ரீதியான கல்விப் பெறுபேற்று நிலைப் புள்ளி விபரங்களை ஒப்பிடும்போது, கொழும்பு மாவட்டம் 57.34 சதவீதத்தை யும், மாத்தளை, நவரெலியா ஆகியவை 43 68 சதவீதத்தை யும் வெளிப்படுத்துகின்றன. குறிப் பா க க் கணிதம், விஞ்ஞானம் போன்ற பாடங்களில் பெறுபேற்றுச் சுட்டி முறையே 55 சதவீதம் 41 சதவீதமாக அமைகிறது.
பாடசாலைக் கல்வியைப் பெறுபவர் தொகை சில பிரதேசங்களில் குறைந்து வருகின்றது. அநுராதபுரம், பொல நறுவை, மொனறா கலை மற்றும் பெருந்தோட்டத் தமிழ் மொழிப்பாடசாலைகள் ஆகியவற்றில் பாடசாலை செல்லும் வயதை அடைந்தவர்களில் ஏறக்குறைய 10 சதவீதத்தினர் பாடசாலைக்குச் செல்வதில்லை. மேலும் 15 சதவீதத்தினர் கல்வியை இடைநிறுத்தம் செய்து விடுகின்றார்கள்.
பாடசாலைக்குச் செல்லாதிருப்பதற்கான காரணங்க ளாக வறுமை, போஷாக்குக் குறைவு. அதிகரித்து வரும் கல்விச் செலவினங்கள் பெற்றோரது கவனமின்மை, மீண்டும்
 
 

இலங்கையின் கவ்வி வளர்ச்சி ?直
ஒரே வகுப்பில் கற்றல், பாடசாலைகளின் கவர்ச்சியற்ற நிலை என்பன கூறப்படுகின்றன பாடசாலை இடை விலகல், மீண்டும் ஒரே வகுப்பில் தங்கியிருத்தல் ஆகியன மிகுதியாக ஆரம்பக் கல்வி மட்டத்தில் இடம் பெறுவதால், அவை கல்விச் செலவினங்களில் வீண் விரயத்தை ஏற்படுத்து கின்றன.
இலங்கையின் பொதுக்கல்விப் பாட ஏற்பாட்டு ஒழுங் கமைப்பில் பொது உலக வாழ்க்கைக்குப் பிள்ளைகளைத் தயார் செய்யாது, பரீட்சையைக் குறியாகக் கொண்டிருப்ப தாலும் (கல்வி பொதுத்துறை) க.பொ.த சாதாரண தரம், க.பொ.த உயர்தரம் ஆகிய மட்டங்களில் கல்வியை நிறைவு செய்பவர்கள் தகுந்தவழி காட்டல் இன்மையால் பல பிரச் சினைகளை எதிர் கொள்கின்றனர். இவர்களுடைய தேவை களுக்கு ஏற்றவாறு பாடசாலை முறைமைக்கு வெளியேயுள்ள கல்வி வசதிகள் விரிவு பெறவில்லை.
இறுதியாக, இலங்கையிற் கல்வியை ஜனநாயகப் படுத்துவது தொடர்பான நடைமுறைகளில் சில சந்தேகங்கள்
கருத்து முரண்பாடுகளுடன் கூடியவையாக எழுந்துள்ளன குறிப்பாகத் தாய்யொழிக் கல்வி, அறிமுகப்படுத்தப்பட்ட சந்தர்ப்பம், இலவசக் கல்வியின் உள்ளார்ந்த நோக்கு என்பன எடுத்தாளப்படுகின்றன. தாய்மொழிக் கல்வி அறிமுகமான போது அதன் விளைவு பாரிய மாற்றங்ளை ஏற்படுத்தின வெனக் கருதப் படவில்லை.
காரணம் அக்காலத்தில் சில நகர்ப்புறப் பாடசாலை களும், மதக்குழுப் பாடசாலைகளையும் தவிர ஏனைய கிராமிய உள்ளூர்ப் பாடசாலைகள் எல்லாம் தாய்மொழி யிலேயே கல்வியை வழங்கிக் கொண்டிருந்தன. எனவே ஆங்கில அறிவுப் பின்னணியில் தாய்மொழியில் கற்ற மாணவர்கள் மேலும் கல்வியில் முன்னேற வாய்ப்பு ஏற்பட்டது.

Page 38
ή 2 இலங்கையின் கல்வி வளர்ச்சி
இலவசக்கல்வி என்ற வகையில் வழங்கப்பட்ட சந்தர்ப் பங்கள் யாவும், தேசிய நோக்கில் சமூக - பொருளாதார நிலையில் பின்தங்கிய மக்களைக் கருத்திற் கொண்டிருந்த போதிலும், இவர்களால் இலவசக்கல்வி வாய்ப்புகள் பயன் படுத்தப்பட்டதிலும் பார்க்க நகர உயர் மத்திய தரப் பாடசாலைகள் அவற்றைப் பயன்படுத்தி மேலும் வளர்ச்சி யடைந்தமையை நாம் காண்கின்றோம்.
கல்விக்குரிய வசதிகளை வழங்குவதிலும் இப்பாடசாலை களுக்கே முதன்மை உண்டு. கல்வித்தரத்தில் நிலவும் பாரிய வேறுபாடுகளும் இன்னும் நீக்கப்படவில்லை எது எவ்வாறா யினும் ஆசிய நாடுகளில் கல்வி வளர்ச்சியில் முதன்மை நிலையை இலங்கை பெற்றுக் கொள்வதற்குக் கல்வியை ஜனநாயகப் படுத்துதலே காரணமாய் இருந்தது என்பதை மறுக்கவும் முடியாது.
 

இலங்கையில் பாட ஏற்பாட்டு
சீர்திருத்தங்கள்
இலங்கையின் கல்வி வளர்ச்சியில் பாடஏற்பாட்டு மாற்றங்களும் அவற்றின் விளைவுகளும்
பாடஏற்பாடு என்பதற்குப் பல்வகைப்பட்ட வரைவிலக் கணங்கள் தரப்படுகின்றன. அவ்வரைவிலக்கணங்கள் யாவும் பாடசாலை முறைமையின் கீழ் அறிவையும் அனுபவத்தையும் வழங்குவதன் மூலம் குறிப்பிட்ட இலக்கிணை அடைவதன் பொருட்டு, ஒவ்வொரு தனிமனிதனையும் சமூகப்பொருத்தப் பாடுடையவனாக ஆக்குவதற்குரிய வழிகாட்டும் திட்டம் என்ற பொதுக் கருத்தினைத் தருகின்றன.
பாட ஏற்பாட்டு வளர்ச்சியில் ஒவ்வொரு நாடும் தனித் தனியாக வரலாற்றைக் கொண்டிருக்கின்றன அது நாட்டின் அரசியல் வரலாற்றுப் பின்னணியையும் பண்பாட்டு tDՄLվ களையும் அடியொற்றியவையாகத் தீர்மானிக்கப்படுகிறது.
இ-5

Page 39
இலங்கையின் கல்வி வளர்ச்சி
மூன்றாம் உலக நாடுகளின் பாடஏற்பாட்டில் சமயக் கல்வியும் மரபு வழிக்கல்வியும் கற்பித்தல் முறைகளிலும், கல்வியின் ஏனைய அணுகுமுறைகளிலும் செல்வாக்குச் செலுத்தி வந்திருக்கின்றன.
(மூன்றாம் உலக நாடுகள் பல குடியேற்ற வாத ஆட்சிக்கு உட்பட்டிருந்தன. இந் நா டு களி லே குடியேற்றவாத ஆட்சியாளரது கொள்கைகள் பாட ஏற்பாடுகளை வகுப்ப தற்குப் பின்னணியாக இருந்துள்ளன) பாடங்களை அடிப் படையாகக் கொண்ட அல்லது பாடங்களின் தரரீதியான வளர்ச்சிபற்றிச் சிந்திக்கின்ற திட்டமிட்ட அடிப்படையிலான பாடஏற்பாட்டுக் கொள்கைகள் ஆசிய, ஆபிரிக்க நாடுகளிலே 1960-ஆம் ஆண்டு வரையில் இடம் பெற்றிருக்கவில் ல எனக் கருதப்படுகின்றது . இந்த நாடுகளில் கல்விமொழி தாய்மொழியாக மாற்றப்பட்ட பின்பே பாடஏற்பாட்டிலும் புதிய அணுகுமுறைகளும் அம்சங்களும் பரவலாக இடம்பெற வேண்டும் எனப் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இலங்கையில் பாடஏற்பாட்டு அமைப்பும் அதன் விரிவாக்கமும் பற்றிய கருத்துகள் 1940களில் துரிதமாக நடைமுறைப்படுத்தப்பட்டன எனக் கூறப்படுகின்றது. (பிரித்தானியர் ஆட்சிக்கால இலங்கையின் கல்வியமைப்பில், பாடசாலை அமைப்பு, பாடசாலை நிருவாகம் போன்ற துறைகளில் நிலவிய இரட்டைத்தன்மை பாட ஏற்பாட்டிலும் காணப்பட்டது;
/சுதந்திரத்தின் முன் இலங்கையருக்குக் கல்வியை வழங்கும் பொறுப்பை அரசாங்கம், மதக்குழுக்கள், தனியார் ஆகியோர் ஏற்றிருந்தனர். ஆயினும் பாடசாலைகள் யாவும் ஒரே மாதிரியான பாட ஏற்பாட்டைப் பின்பற்றக் கூடிய வகையில் 1928-ஆம் ஆண்டில் இலங்கையின் கல்வித் திணைக்களமானது பாடசாலைகளுக்கான பாடத்திட்டம்,

இலங்கையின் கல்வி வளர்ச்சி *5 கற்கை நெறிகள் தொடர்பான (The Scheme Of Studies & Syllabus For School) 63) gbum G3 696 (06) ofiu .g. ருந்தது. *
இப்பாட ஏற்பாடானது பல பாடங்களைக் கொண்ட ஒரு பட்டியலாகவும், விரிவான முறையில் தயாரிக்கப்பட்ட தலைப்புகளுமாகவே இருந்தன. இவ்வமைப்பில் ஒரு சில மாற்றங்களுடன் கூடியதாகத் திருத்தியமைக்கப்பட்ட பாடத் 5. "Lb (A Revised Scheme Of Studies and Syllabus) என்ற தலைப்போடு பாட சாலைகளுக்கு வழங்கப்பட்டது.
இவையாவும் கல்வியியலாளர்களிடத்திலும், ஏனைய தேசிய நலன் பற்றிச் சிந்தித்தவர்களிடத்திலும் எதிர்பார்த்த அளவுக்கு திருப்தியைக் கொடுக்கவில்லை. ஆகவே மேன்மேலும் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
1943-இல் இலங்கையில் அமைக்கப்பட்ட சிறப்புக்கல்வி ஆணைக்குழுவானது, இலங்கைக் கல்வியை ஜனநாயகப் படுத்துவது தொடர்பாக முன்வைத்த விதந்துரைகளில் ஒன்றான 'தாய்மொழிக் கல்வி பற்றிய கருத்துகள் பிற்காலத்தில் ஏற்படவிருந்த பாடஏற்பாட்டு மாற்றங் களுக்கு அடிகோலியது.
1940க்கு முன்னர் இலங்கையில் இருந்த ஒவ்வொரு பாடசாலையும் அவை வழங்கிவந்த கல்விமட்டத்திற்கு ஏற்ப, ஆரம்பப் பாடசாலைகள், கனிஷ்ட இடைநிலைப் பாடசாலைகள், சிரேஷ்ட இடைநிலைப்பாடசாலைகள், கல்லூரி நிலைப்பாடசாலைகள் என நான்காக வகுக்கப் பட்டிருந்தன. இவையொவ்வொன்றும் வெவ்வேறு வகைப் பட்ட பரீட்சைகளுக்கு மாணவர்களை ஆயத்தம் செய்தன. அதற்கு ஏற்றார்போலக் கல்விமொழியும் பாடவிடயங்களும் அவ்வப் பாடசாலைகளிலே இடம் பெறலாயின.

Page 40
76 இலங்கையின் கல்வி வளர்ச்சி
ஒர் ஆரம்பப் பாடசாலையிலே மொழி, எண், சூழல், சித்திரம், கைவேலை, பாட்டு, நடனம், உடற்பயிற்சி ஆகியவை கற்பிக்கப்பட்டன. உயர் சமூக வகுப்பினைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு மேலதிகமாகப் புவியியல் வரலாறு போன்ற பாடங்களும் இடம் பெற்றன.
பின்னாரம்பக் கல்வி மட்டத்தில் சிங்கள, தமிழ்மொழிப் பாடசாலைகளின் பாடஏற்பாடு மொழியும், இலக்கியமும், எண்கணிதம், சித்திரம், வரலாறு, உடற்பயிற்சி, தையல் வேலை ஆகியவையும் சில பாடசாலைகளிலே புவியியல், சமயம், சுகாதாரம், உடற்கூற்வியல் ஆரம்ப விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்களும் கற்பிக்க அனுமதிவழங்கப் பட்டிருந்தது.
அதுபோலவே சில பெரிய ஆங்கிலப்பாடசாலைகளில் பெளதிகம், இரசாயனம், கணிதம் ஆகியனவும், சிங்களம், தமிழ், பாளி, இலத்தீன், கிரேக்கம், பிரெஞ்சு முதலிய மொழி களும் கற்பித்தார்கள்.
இலங்கையின் கல்விவரலாற்றில் மத்திய பாடசாலை களின் தோற்றமும் பிரதான பங்கினை வகித்தது. 1940-ஆம் ஆண்டில் ஆரம்பமான மத்திய பாடசாலைகள் பிரதானமான இலக்குகள் சிலவற்றை அடிப்படையாகக் கொண்டிருந்தன. அவற்றுள் ஒன்று மத்திய பாடசாலைகள் பண்பாட்டு அறிவுக்கும் செயல்முறைப் பயிற்சிக்கும் இடமளிக்கக் கூடியவாறு பாடஏற்பாட்டினைக் கொண்டிருக்க வேண்டும்; பண்பாட்டு அறிவையூட்டக் கூடிய வகையில் சித்திரம், சங்கீதம், செயல்முறை விஞ்ஞானம் ஆகியனவும், செயல்முறைப் பயிற்சிக்கு ஏற்றவாறு விவசாயம் வர்த்தகம் கைவேலை, மனையியல் போன்ற பாடங்களையும் பாட ஏற்பாடு உள்ளடக்கியிருந்தது.
 

இலங்கையின் கல்வி வளர்ச்சி 7 Ꮴ
இவ்வாறமைந்த பாடஏற்பாடுகளை உற்றுநோக்கும் பொழுது, இலங்கையில் சுதந்திரத்தின் முன் நிலவிய கல்வியமைப்பானது பிரித்தானியராட்சிக்கால நிருவாக அமைப்புக்கும், வர்த்தக நிறுவனங்களுக்கும் ஏற்றவாறு இளைஞர்களை ஆயத்தம் செய்வதனையும், சில பரீட்சை களை முன்வைத்து, அப்பரீட்சைகளில் உயர்தரமான பெறு பேற்றைப் பெறக்கூடியவாறு மாணவர்களுக்கு வழிகாட்டு வதனையும், அவ்விதம் தேர்ச்சி பெற்றவர்களுக்குப் பிரித்தானியப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி வாய்ப்பு களைப் பெற்றுக் கொடுப்பதையும் நோக்கமாகக் கொண்டிருந்தமையைக் கண்டுகொள்ளலாம்
默
மத்திய பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்பட்ட பாட ஏற்பாடுகள், கல்வியானது மாணவர்களது திறமையையும், அவர்களது வாழ்விடச் சூழலிற் காணப்படும் தொழில் களையும் கருத்திற்கொண்டு வாழ்க்கைத் தேவையை நிறைவு கொள்ளக் கூடியவர்களாக அவர்கள் உருவாக்கப்பட வேண்டும் என்னுங் குறிக்கோளையுடையதாய் இருந்தன. இதனைக் குறித்துக் கன்னங்கரா குழுவினரின் அறிக்கையின் படி ஆரம்பக்கல்வியின் பின் பிள்ளைகள் ஒரு தெரிவுப் பரீட்சைக்கு அமர்வதன் மூலம், ஒன்றில் பல்கலைக்கழகக் கல்விக்கு இட்டுச்செல்லும் அறிவுசார் கல்விக்கும், அல்லது தொழில் நுட்பக்கல்வியைப் பெறக்கூடிய உயர்நிலைக் கல்லூரிகளுக்கும் அல்லது செய்முறைப் பயிற்சியைப் பெறக் கூடிய விவசாய, வர்த்தகக் கல்லூரிகளுக்கும் செல்லக்கூடிய வகையில் மாற்றங்களை ஏற்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டிருந்தன. ஆயினும் இவ்வகையான ஏற்பாடுகளைக் கொண்ட பாடசாலை அமைப்பு வெற்றி காண்பதற்குப் பல காரணங்கள் தடையாக விளங்கின.
முதலாவதாக அறிவுசார் கல்வியைப் பெறக்கூடிய வாய்ப்பு ஒப்பீட்டளவில் சமூகத்தின் மேல்நிலையினருக்கே

Page 41
78 இலங்கையின் கல்வி வளர்ச்சி
சாதகமாக அமையும். இதனால் பின்தங்கிய கிராமியப் பாடசாலைகளில் தாய்மொழியில் கல்வியைப் பெறுவோரின் அறிவுசார்கல்விக்குரிய சந்தர்ப்பங்கள் குறைவாகவே இருக்கும்.
அடுத்து, அறிவுசார் கல்வியைப் பெறத்தவறியவர்கள் தொழிற்கல்விக்கே தகுதியுடையவர்கள் என்ற கருத்து வலுப்பெற்றால் சமூக வகுப்புபேதத்தைப் போக்கக் கல்வி உதவிபுரியாது எனவும் இசுட்டிக்காட்டப்பட்டது. தொழிற் பசிற்சியை வழங்குவதற்கு உதவியாகப் போதிய ஆசிரியர்கள் இருக்கவில்லை.
தொழிற்கல்விப் பாடங்களுக்குரிய ஆசிரியர் மாணவர் விகிதம் உயர்வாக இருந்தது. தொழிற்பயிற்சியை வழங்கும் ஆசிரியர்களுக்கு, அவர்களை ஒத்த ஏனைய பாட ஆசிரியர் களிலும் பார்க்கக் குறைந்த சம்பளமே வழங்கப்பட்டது. எனவே கன்னங்கரா அறிக்கையில் விதந்துரைக்கப்பட்ட மூவகைப் பாடசாலை முறை குறைபாடுடையதாக விளங்கும் என எடுத்துக்காட்டப்பட்டது.
இவ்வாறாக இலங்கையின் பாட ஏற்பாட்டு மாற்றங்கள் பற்றிய வளர்ச்சியில் பின் வரும் அறிக்கைகள் முக்கியம் பெறு கின்றன.
-1950 ஆம் ஆண்டின் கல்வி வெள்ளையறிக்கை,
-1956 ' ஆண்டின் 43ஆம் இலக்கச் சட்டம்,
-1963 ' ஆண்டின் 1 ஆம் இலக்கச் சட்டம்,
-1967 ° ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டம்,

இலங்கையின் கல்வி வளர்ச்சி 79
இக்கல்விச் சட்டங்களின் மூலம் பொதுக் கல்விப் பாட ஏற்பாட்டில் கொண்டு வரப்பட்ட மாற்றங்கள், இலங்கையில் நிலவி வந்த கல்வியமைப்பில் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்ற கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1972ஆம் ஆண்டின் பாட ஏற்பாட்டு மாற்றங்கள்
1972ஆம் ஆண்டு இலங்கையின் பொருளாதாரம், சமூகம் என்பனவற்றைப் பற்றிக் கடுமையாகச் சிந்திக்கபட்ட காலம், இலங்கையின் கல்வி வளர்ச்சியிலே இதற்கு முன்னைய மூன்று அல்லது நான்கு தசாப்தங்களில் அதன் இடைநிலைக் கல்வியின் அடிப்படைப் பண்புகளில் மாற்றங்கள் நிகழாமையால் கிடைக்கப் பெற்ற கசப்பான அனுபவங்கள் பல சமூக பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு வித்திட்டன; இதற்குத் தீர்வு காண்பதன் பொருட்டுக் கல்வியையும் உள்ளடக்கிய ஐந்தாண்டுத் திட்டம் ஒன்று (1972-1976) வகுக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கல்வி சார்ந்த முக்கிய நோக்கங்களில் ஒன்றாக, கல்வியானது வாழ்க்கைத் தேவைகளை நிறை வேற்றக் கூடிய முன்னறிவையும், அனுபவங்களையும் பாட சாலை மட்டத்திலேயே வழங்க வேண்டும் என்பதாக இருந்தது,
1972 இன் பாட ஏற்பாட்டு மாற்றமானது மூன்று பிரதான அம்சங்களைக் கருத்திற் கொண்டிருந்தது. அவை யாவன,
-g ஆண்டுகளுக்குப் பொதுக் கலைத் திட்டம்.
-தொழில் முன்னிலைப் பாடம்

Page 42
80 இலங்கையின் கல்வி வளர்ச்சி
--தேசிய உயர் கல்விச் சான்றிதழ் பரீட்சை,
இவையாவும் முற்றிலும் புதுமையான அம்சங்களாக இருந்தமையால், 1972 ஆம் ஆண்டு இலங்கையின் கல்வி வரலாற்றில் பிரதான காலகட்டமாகக் கொள்ளப்படு கின்றது.
புதிய பாட ஏற்பாடுகளை நடைமுறைப் படுத்துதற்கு ஏற்ற வகையில் பாடசாலை ஒழுங்கமைப்பிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. 1-5 வகுப்புகள் ஆரம்பமட்ட மாகவும், 8-9 கனிஷ்ட இடை நிலை மட்டம் எனவும், 10-11 வகுப்புகள் சிரேஷ்ட இடைநிலை மட்டம் எனவும் அவ் ஒழுங்கு அமைந்தது. பாடசாலையில் சேர்ந்து கொள்வதற்கான வயது மட்டமும் 6 வயதாக உயர்த்தப் பட்டது
இதற்கு முன்னைய கல்வி ஏற்பாடுகளினால் ஆரம்ப மட்டத்தில் கல்வியை இடை நிறுத்துவோர் தொகை அதிக மாக இருத்தல், மற்றும் பாடசாலை செல்லும் வயதை அடைந்தவர்கள் பலர் பாடசாலைக்குச் இருத்தல் ஆகிய பிரச்சினைகள் நிலவின.
பாடசாலை மட்டத்தில் மேற்காட்டிய பிரச்சினை களுக்குரிய காரணங்களாக ஆசிரியர் மனப்பாங்கு கற்பித்தல் முறைகளில் கடைப்பிடிக்கப்பட்ட மரபு முறைப் போக்கும், கவர்ச்சியற்ற வகுப்பறைச் சூழல் என்பவற்றைக் கல்வியிய லாளர்கள் வெளிப்படுத்தினர்.
இவ்வாறான நிலைமைகளிலிருந்து மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். குறிப்பாக மாணவர்களை மையமாகக் கொண்ட செயல் முறைக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் எனக் கூறினர். கற்பித்தல் துறையிலே ஆராய்ச்சிகளையும் பரிசோதனைகளையும் செய்வதற்கு ஆசிரியர்களுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டது. வ குப் பறை ச் சூழலைக்

இலங்கையின் கல்வி வளர்ச்சி 81
கவர்ச்சிகரமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருப்பதற்குரிய ஆலோசனைகளைத் தெரிவித்தார்கள், மறறும் முதலாம் வகுப்புத் தொடக்கம் நான்காம் வகுப்புவரையில் தன்னிச்சை யான வகுப்பேற்றத்துக்கும் இடமளிக்கப்பட்டது.
கனிஷ்ட இடைநிலை மட்டம் நான்கு ஆண்டுகளுக்குரிய தாகவும், அதற்குரிய பாட ஏற்பாடுகளும் யாவருக்கும் பொதுவானதாகவும் மாற்றியமைக்கப்பட்டன. 1972க்கு முன்னர் இருந்த பாட எற்பாட்டின்படி, எட்டாம் வகுப்பின் பின்னர் மாணவர்கள் கலை, விஞ்ஞானம், வர்த்தகம் எனத் துறை ரீதியாகப் பிரிக்கப்பட்டார்கள்.
இவ்வாறு பிரிக்கப்பட்ட போதிலும் எந்தத் துறையின டிப்படையிலும் கல்வி பொது அறிவை வழங்குவதாகவும், பரீட்சையை முதன்மை நோக்காகவும் கொண்டிருந்தது ஒரு குறைபாடான அம்சமாகக் காணப்பட்டது.
விஞ்ஞானக் கல்விக்குரிய சந்தர்ப்பங்களும் இக்காலப் பகுதியின் முன்னர் இலங்கை முழுவதிலும் பரவலாக்கப் பட்டிருக்கவில்லை. ஆயிர த் தி லு ம் (560) [D6)JIT607 பாடசாலைகளே விஞ்ஞானக் கல்விக்குரிய வசதிகளைக் கொண்டிருந்தன
எனவே, துறை ரீதியாக மாணவர்கள் பிரிக்கப்பட்ட நேரத்தில் மிகக் குறைந்த தொகையான மாணவர்களுக்கே விஞ்ஞானக் கல்வியைப் பயிலக் கூடிய வாய்ப்புகள் இருந்தன. இத்தகைய பண்பிலும் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியது அவசியமாயிற்று.
ஆகவே 1972 ஆம் ஆண்டின் புதிய பாட எற்பாடுகள் பல புதிய விட்டங்களை உள்ளடக்கியவையாக வெளிவந்தன. அவை பின் வருமாறு.

Page 43
82 இலங்கையின் கல்வி வளர்ச்சி
1. முதன் மொழி
2. இரண்டாம் மொழி
3. gildulh
4. கணிதம்
5. விஞ்ஞானம்
6, சமூகக் கல்வி
7, அழகியற் கல்வி
8. சுகாதாரமும் உடற் கல்வியும்
9. தொழில் முன்னிலைப் பாடம்
10. தொழில் முன்னிலைப் பாடம் 11
இப்புதிய முறையிலமைந்த பொதுக் கல்விப் பாட எற்பாடுகளினால், மாணவன் ஒருவன் அறிவுத் திறன், மனப்பாங்கு என்பவற்றைப் பெறுவது அடிப்படைக் குறிக் கோளாக இருக்க வேண்டும் என்பதுடன், பாடங்கள் யாவற்றையும் ஒன்றிணைந்த அணுகுமுறையில் கற்பிக்கப் படுவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
கனிஷ்ட இடைநிலை மட்டத்தின் முடிவில் தேசிய கல்விச் சான்றிதழ், பொதுப் பரீட்சை (NCGE) நடத்தப் பட்டது. இப்பரீட்சையின் மதிப்பீட்டு முறைகளில் மற்றொரு பிரதான விடயமாகச் சமூகக் கல்வி, தொழில் முன்னிலைப் பாடம்என்பவற்றிற்குத் தொடர்மதிப்பீடு அறிமுகமானதைக்

இலங்கையின் கல்வி வளர்ச்சி 85
குறிப்பிடலாம். ம ற் றெ ல் லா ப் பாடங்களிலும் பார்க்கத் தொழில் முன்னிலைப் பாடத்திற்குக் கூடிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.
சிரேஷ்ட இடைநிலைக் கல்வியைத் தொடர விரும்பும் ஒருவர் தேசிய கல்விச் சான்றிதழ் பொதுப் பரீட்சையிலே இப்பாடத்தில் ஆகக் குறைந்தது ஒரு சாதாரண சித்தியை யேனும் என விதிக்கப்பட்டதிலிருந்து அம்முக்கியத்துவம் உணரப்படுகின்றது.
சிரேஷ்ட இடைநிலை மட்டத்தில் பாட ஏற்பாட்டு மாற்றங்கள் பின் வருமாறு அமைந்தன. பாடப் பரப்பானது பிரதான பாடங்கள், விருப்பத் தெரிவுக்குரிய பாடங்கள் என இருவகைப்பட்டனவாக இருந்தன. பிரதான பாடங்கள் பின்வருமாறு.
1. முதன் மொழி
2 இரண்டாம் மொழி
3. கலாசாரப் பாரம்பரியமும் இலங்கையின் சமூக
பொருளாதாரப் பின்னணியும்
4. புள்ளி விபரவியலின் அ டி ப் ப  ைட க ளு ம்
முகாமைத்துவமும்
5. சோஷலிசத் தத்துவங்கள்
விருப்பத் தெரிவுக்குரிய பாடங்கள் பின்வருமாறு:
1. விஞ்ஞானம்
2. வர்த்தகமும் வியாபாரமும்

Page 44
84 இலங்கையின் கல்வி வளர்ச்சி
3. சமூக விஞ்ஞானம்
4. மொழிகள், மனிதப் பண்பியல், அழகியற்கல்வி
5. விவசாய விஞ்ஞானம் மணைப் பொருளியல்
6. தொழில் நுட்ப விஞ்ஞானம்
இவற்றோடு யாவருக்கும் பொதுவாகச் செயல் திட்டம் ஒன்றும் அறிமுகமாகியது. இரண்டாண்டுகளைக் கொண்ட இப்பாடஏற்பாடு தேசிய உயர்கல்விச்சான்றிதழ்ப்பரீட்சையை இலக்காகக் கொண்டிருந்தது (HNCGE) Higher National (Certificate General Education) 3)3560) su Li Gui gibig-ii களை உள்ளடக்கியதாக இருந்த போதிலும் 1962 ஆம் ஆண்டின் பாட ஏற்பாடுகள் வெற்றியளிப்பதற்குப் பல காரணங்களும் தடையாக இருந்தன.
எனவே புதிய ஏற்பாடுகளை நடைமுறைப் படுத்து வதற்கு ஏற்றவை இலங்கையின் கல்வி நிருவாக முறையை அரசாங்கம் மாற்றியமைத்தது. ஆயினும் அவை பாடசாலை மட்டத்தில் எதிர்பார்த்த நன்மைகளைக் கொடுக்கவில்லை.
குறைந்த செலவில், இடைநிலை மட்டத்தில் யாவருக்கும் விஞ்ஞானம்" என்ற கோட்பாட்டினை நடைமுறைப் படுத்து வதில் பல்வேறு பிரச்சினைகள் எதிர்நோக்கப்பட்டன. குறிப்பாக விஞ்ஞானக் கல்வியானது ஒன்றிணைந்த அணுகு முறையில் கற்பிக்கப்பட வேண்டும் என விதிக்கப்பட லாயிற்று
இது தொடர்பாக, 1972க்கு முன்னைய காலப்பகுதியில் பல பாடசாலைகளில் விஞ்ஞானக் கல்வி இடம் பெற்றிருக்க வில்லை; விஞ்ஞானக் கல்விக்குரிய வசதிகளும் வழங்கப்பட வில்லை. இக்கட்டத்தில்சகலபாடசாலைகளிலும் உடனடியாக

இலங்கையின் கல்வி வளர்ச்சி
விஞ்ஞானக் கல்வியை அறிமுகம் செய்ய முற்பட்ட வேளையில் விஞ்ஞான ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை பல்கிப் பெருகியது. விஞ்ஞான ஆசிரியர்களை நியமிப்பதற் குரிய வாய்ப்புகளும் அப்போது இருக்கவில்லை.
இது போலவே உடனலக் கல்வி, உடற்கல்வி அழகியற் கல்வி தொழில் முன்னிலைப் பாடங்கள் என்பவற்றைச் சிறப்புறக் கற்பிப்பதற்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் பற்றாக்குறையும் எதிர்பார்த்த வெற்றிகளை ஈட்டத் தடையாய் அமைந்தன.
தொழில் முன்னிலைப் பாடம் பல வசதியீனங்களால் பாதிப்படைந்தது. இப்பாடங்கள் (25T605ulai) 995lDirű இருந்ததுடன் அவற்றைத் திருப்திகரமாகப் பயில்வதற்கும், பயிற்றுவிப்பதற்கும் ஏற்ற கையேடுகள் உபகரணங்கள் ஏனைய பெளதிக வளங்கள் ஆகியன கிடைக்கவில்லை.
மேலும் இப்பாட ஏற்பாட்டின் தோல்விக்கான காரணங் களை ஆராய்வு செய்த சந்தர்ப்பத்தில், தொழில்நுட்பப் பாடங்களைப் போதிப்பதற்கு ஏற்ற ஆயத்தங்கள் உடைய வர்களாக ஆசிரியர்கள் இருக்கவில்லை எனவுங் கண்டு கொள்ளப்பட்டது.
1977 ஆம் ஆண்டில் இலங்கையின் பொதுக்கல்விப் பாட ஏற்பாடுகளில் மீண்டும் சிறிய மாற்றங்கள் ஏற்பட்டன. இவ் ஆண்டிலே புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்கக் கொள்கைக்கு ஏற்ப 1972 இன் ஏற்பாடுகளின்படி, வெகு 62 JT55, g56ởioTigš5'ü uz "La NCGE, HINC GE ஆகிய பரீட்துை முடிவுகளுக்குப் பதிலாக மீண்டும் க.பொ.த சாதாரண தரம், க.பொ.த உயர்தரம் எனப் பரீட்சைகள் மாற்றியமைக்கப் பட்டன. ஆனால் பாட ஏற்பாட்டு உள்ளடக்கத்தில் பாரிய மாறுதல்கள் ஏற்படவில்லை.

Page 45
86 இலங்கையின் கல்வி வளர்ச்சி
1981 இல் பாட ஏற்பாட்டு மாற்றங்களிக்கான ஆலோசனைகள் :-
இலங்கையின் கல்வியமைப்பிலிருந்து பெறப்பட்ட முன்னையகால அனுபவங்களிலிருந்து பொதுக்கல்வி முறை யில் அடிப்படை மாற்றங்கள் சிலவற்றைக் கொண்டு வர வேண்டும் என்பது 1981 ஆம் ஆண்டுக் கல்வி வெள்ளை யறிக்கையின் பிரதான குறிக்கோளாகும். இக்குறிக்கோளுக்கு ஏற்ப பாடசாலை அமைப்பு பாட ஏற்பாடுகள் ஆகியன பற்றி வரவேற்கத்தக்க கருத்துகளைக் கல்வி வெள்ளை யறிக்கை முன்வைத்தது.
புதிய ஆலோசனையின்படி பதினொரு வருடங்களைக் கொண்ட பொதுக்கல்வி அமைப்பு 3 பகுதிகளாகத் திருத்தி யமைக்கப்பட்டது.
(அ) ஆண்டு 1-5 வரை ஐந்து ஆண்டுகள் =
ஆரம்பக் கல்வி
(ஆ) ஆண்டு 5-8 வரை - மூன்று ஆண்டுகள்.
கனிஷ்ட இடைநிலைக்கல்வி.
(இ) ஆண்டு 9-11 வரை - மூன்று ஆண்டுகள்=
சிரேஷ்ட இடைநிலைக்கல்வி
பதினோராம் ஆண்டின் இறுதியில் தேசிய மட்டத்தில் நடைபெறும் பொறுப் பரிட்சையின் மூலம் கல்லூரி நிலைக் கல்வியைத் தொடர ஏற்பாடுகள் இருந்தன.
ஆரம்பக் கல்விப் பாட ஏற்பாடுகள் முற்றிலும் புதிய கோணத்தில்பிள்ளைகளை அணுகமுற்பட்டனபிள்ளையையும்
 
 

இலங்கையின் கல்வி வளர்ச்சி 87
அவனது சூழலையும் அடிப்படையாகக் கொண்டு பல புதிய அனுபவங்களை வழங்குவதன் மூலம் பிள்ளைகளின் ஆளுமையை விருத்தி செய்வது ஆரம்பக் கல்வியின் குறிக்கோ ளாகுப். எனவே பிள்ளைகள் சுயமாகப் பல விடயங்களைக் கற்றுக்கொள்ள வழி வகுக்கப்பட்டது.
கனிஷ்ட இடைநிலை கல்விப் பாட ஏற்பாடுகள் ஆரம்ப நிலையிலே பிள்ளைகள் பெற்றுக் கொண்ட அறிவு, திறன் ஆகியவற்றின் தொடர்ச்சியாக அமைந்தன. இதனுடைய பிரதான நோக்கம் பிள்ளைகளை வேலையுலகுக்கு அறிமுகம் செய்வதாகும். இலங்கையின் சமூக-பொருளாதார அபி விருத்திக்குரிய தேவைகளை அறிவதும், தேசிய ஒருமைப் பாட்டுக்கான பயிற்சியை வழங்குவதும் இன்னொரு நோக்க மாக இருந்தது. இந்த நிலையில் எல்லாமாக ஒன்பது பாடங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.
1 முதன் மொழி
2. FLDULLİ)
3. கணிதம்
4. ஆங்கிலம்
5. விஞ்ஞானம்
6. சமூகக் கல்வி
7. வாழ்க்கைத்திறன்
8. அழகியற் கல்வி

Page 46
88 இலங்கையின் கல்வி வளர்ச்சி
9. சுகாதாரமும் உடற்கல்வியும்
இப்பாடங்களுள்ளே வாழ்க்கைத்திறன் பிரதான இடத்தை வகிக்கிறன்து.
கனிஷ்ட இடைநிலை மட்டத்தின் முடிவிலும் (ஆண்டு 8 இல்) ஒரு பரீட்சை நடத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் இருந்தன. இப்பரீட்சையானது மாணவர்களைக் கலை, விஞ்ஞானம், வர்த்தகம் என்ற துறை ரீதியாகப் பிரிப்பதற் கான ஒர் அடிப்படையாகவன்றிப் பெற்றோர் ஒவ்வொரு வரும் தமது பிள்ளைகளைப் பற்றி அறிய இப்பரீட்சை களின் அடைவு மட்டம் ஏதாவது இருக்கும் என அறிக்கை தெ ரி வி த் து ஸ் ள து இப் ப ரீ ட் சை கொத்தணி மட்டத்தில் நடத்தப்படும்; முதன்மொழி, கணிதம் ஆகிய பாடங்களுக்கான வினாப் பத்திரங்கள் தேசிய மட்டத்தில் தயார் செய்யப்படும்; விடைத்தாள் மதிப்பீடு கொத்தணி மட்டத்தில் செய்யப்படும் எனவுங் கூறப் பட்டுள்ளது.
அடுத்து,சிரேஷ்ட இடைநிலைமட்டப் பாடஏற்பாடுகள், ஆரம்ப, கனிஷ்ட நிலைகளின் தொடர்ச்சியாக இருந்தன. இங்கும் 9 பாடங்கள் ஏற்பாட்டில் இடம் பெற்றிருந்தன. அவை பின்வருமாறு
1 முதன் மொழி
2. g:LDu Jlb
கணிதம்
4. ஆங்கிலம்
5. விஞ்ஞானம்

இலங்கையின் கல்வி வளர்ச்சி 89
6. சமூகக்கல்வி
7. அழகியற்கல்வி
8. தொழில் நுட்பப்பாடங்கள்
9. சுகாதாரமும் உடற்கல்வியும்
சிரேஷ்ட இடைநிலைக்கல்வியின் பிரதான நோக்கம் குடியியற் பண்புக்குரிய பயிற்சியை வழங்குவதாகும் 1912, 1977 ஆம் ஆண்டுகளில் பின்பற்றப்பட்ட தொழில் முன் முன்னிலைப் பாடங்களுக்குப் பதிலாகத் தொழில் நுட்பப் பாடங்கள் இங்குப் புதிதாக அறிமுகமாயின. இப்பாடங்களில் மரவேலை, உலோக வேலை, விவசாயம், மனையியல் முதலியன பிரதானமானவை.
இப்பாடங்களின் ஒழுங்கு, மாணவர் விருப்புக்கேற்ற வாறு தெரிவு செய்யும் வகை பில் ஒழுங்கு செய்யப்பட்டிருந் தன. சூழலில் உள்ள தொழில்களையும், அவற்றின் பின்னணி யையும் அத்தொழில்களுக்கான திறன்களையும் வழங்குவது தொழில் நுட்பப் பாடங்களின் நோக்கமாகும்.
சிரேஷ்ட இடைநிலையின் இறுதியாண்டில் (ஆண்டு 11) க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நடைபெறும். இப் ரீட்சையிலே முதன் மொழி, கணிதம், ஆங்கிலம், ஞ்ஞானம், சமூகக்கல்வி ஆகிய பாடங்கள் இலங்கைப் ரீட்சைத் திணைக்களத்தினால், தேசிய மட்டத்திலும், ற்றைய பாடங்கள் மாவட்ட மட்டத்திலும், சுகாதாரமும டற்கல்வியும் கொத்தணி மட்டத்திலும் நடத்துவதற்கு ற்பாடுகள் இருந்தன.
இ-6

Page 47
90 இலங்கையின் கல்வி வளர்ச்சி
மறு றத்தில் தொடர்மதிப்பீட்டு முறைகளும் அறிமுக மாயின. பின்தங்கிய பிரதேசப் பாடசாலைகளில் நிலவிய ஆசிரியர் பற்றாக் குறையும், வளப்பற்றாக்குறையும் தொடர் மதிப்பீட்டு முறையைத் தொடர இடமளிக்கவில்லை. எனவே இத்திட்டம் இடையில் கைவிடப்பட்டது.
இலங்கையில் கல்விமொழி தாய்மொழியாக மாற்றப் பட்டபின் ஆங்கிலக்கல்வி அதன் முக்கியத்துவத்தை இழக்க லாயிற்று, ஆங்கிலக் கல்வியின் தரம் பாடசாலை மட்டத்தில் வீழ்ச்சியடைந்தது. காலப்போக்கில் ஆங்கிலக் கல்வியின் முக்கியத்துவம் உணரப்பட்டு, மீண்டும் ஆண்டு 3 இல் இருந்து அதனைக் கற்பிக்கப் பாட ஏற்பாட்டில் ஒழுங்குகள் செய்யப் பட்டன. மேலும் பாடப்புறச் செயல்களிலும் மாணவருடைய ஈடுபாடுகள் அதிகரிக்கப்படவேண்டும் என வலியுறுத்தினர்.
இலங்கையில் பாட ஏற்பாட்டு மாற்றங்களை வெற்றி கரமாக நடைமுறைப் படுத்துவதில் பல பிரச்சினைகள் தடை யாக உள்ளன. புதிய மாற்றங்களுக்கு ஏற்ற வகையில் பாட நூல்களை எழுதும் பொறுப்பு பாடவிதான அபிவிருத்தி நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது பாடவிதான அபி விருத்திச் சபை இன்று தேசியக்கல்வி நிறுவனத்தின் பிரதான பிரிவாகும். பாடநூல்களையும் அவற்றுக்கான செயல் திட்டங்களையும் ஆயத்தம் செய்வதற்குப் போதிய ஆளணியினர் இல்லை.
அடுத்தது பாட ஏற்பாடுகளை முகாமைத்துவம் செய்தல் பற்றியதாகும் புதிய மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து, அவற்றைத் திட்டமிட்டு, வகுப்பறைமட்டத்தில்நடைமுறைப் படுத்தக் கூடிய தொழிற் பயிற்சியையுடைய ஆசிரியர்களுக்கும் பற்றாக்குறையுண்டு. இன்னமும் பாடசாலை அதிபர்கள் பலர் பாட ஏற்பாட்டு மாற்றங்களை முகாமைத்துவம் செய்தல் பற்றி அறியாமலும் உள்ளனர். மற்றும் அதிகமான

இலங்கையின் கல்வி வளர்ச்சி 9
பாடசாலைகளில் மாணவர்களுக்குக் கவர்ச்சியையும் ஆர்வத் தையும் கொடுக்கக்கூடிய துணைச்சாதனங்கள் இல்லை. இவை பாட நூல்களையும், செயல் நூல்களையும் மட்டுமே பயன்படுத்துகின்றன.
இறுதிப் பிரச்சினை தற்பொழுது வெளியிடப்படும் பாட நூல்கள் தொடர்பாக, அவற்றைப் பரவலான பயன் பாட்டுக்கு விடப்படுவதற்கு முன்னர் அவை மாணவர்களின் தகுதிக்கு ஏற்றனவாக உள்ளனவா என்பதைப் பரிசீலனை செய்து பார்க்க வேண்டும், அவை மாணவர்களின் அறிவுத் தேவைகளை, நுண்ணறிவுத் தேவைகளை நிறைவு செய் கின்றனவா எனக் கவனிக்க வேண்டும் இலங்கைப் பாட சாலைகளிடையே தர வேறுபாடு நிலவுகின்றமையால், நிச்சயமான ஒரு தரத்தைப் பேணத்தக்கவாறு பாட நூல்களை எழுதும் வாய்ப்புகள் இல்லை. இத்தகைய பிரச் சினைகளின் மத்தியிலும் தனது வினைத்திறமையை உறுதி செய்யப் பாட ஏற்பாடுகள் முயற்சிக்கின்றன.
கல்வியும் வேலையுலகும்
இலங்கையில் கல்வியை வேலையுலகுடன் இணைப்பது தொடர்பாகப் பல சந்தர்ப்பங்களில் பாட ஏற்பாட்டு மாற்றங்களின்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இலங்கையில் படித்த இளைஞர்களிடையே வேலையின்மை ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுத்ததனால், அவர்கள் புரட்சிப் போக்குடையவர்களாக மாறக்கூடிய சந்தர்ப்பங்கு
இந்நிலையிலிருந்து இளைஞர்களை மீட் டெ டு த் து வேண்டிய நிலமை உண்டாயிற்று, பாடசாலை மிட்டத்தில் வேலையனுபவங்களை வழங்குவதே இதற்குரிய மாற்றுவழி

Page 48
92 இலங்கையின் கல்வி வளர்ச்சி
என்றுங் கருதப்பட்டது. கல்வியை வேலையுலகுடன் இணைத் தல் என்ற நோக்கில் இரண்டு பாட ஏற்பாட்டு மாற்றங்கள் முக்கியத்துவமுடையவை.
முதலாவதாக 1972 இல் பாட ஏற்பாடுகளில் தொழில் முன்னிலைப் பாடம் கட்டாயமாக்கப்பட்டமையும் அடுத்து 1981 இல் வாழ்க்கைத்திறன் கல்வியின் அறிமுகமும் குறிப் பிடக் கூடியவை. இந்த இரண்டு பாட ஏற்பாடுகளும் குறிக் கோள்களில் ஒன்றையொன்று ஒத்தவையாக உள்ளன.
கடந்த இரண்டு தசாப்தங்களாகப் பல மூன்றாம் உலக நாடுகள் கல்வியைத் தொழில் மயப்படுத்துதல் என்னுங் குறிக்கோளுக்கு முக்கியத்துவமளித்துள்ளன. இது கால வரையில் யாவருக்கும் கல்வியை வழங்கும் நோக்கில், இந்த நாடுகள் தமது நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி, ஆரம்ப இடைநிலை மட்டங்களில் கல்வி வாய்ப்புகளை அதிகரித்தத னால், ஒவ்வொரு நாட்டிலும் கற்றோர் வீதாசாரத்தில் அதிகரிப்பு உயர்வு ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் கல்வியை ஜனநாயகப் படுத்துதல் என்னுங் குறிக்கோள் தொடர்பாக 1945இல் இலவசக் கல்வியின் அறிமுகம் தொடக்கம், 1989 இல் இலவச மதிய உணவு வழங்குதல் வரையில் படிப்படியாகப் பல்வேறு சாதனை களைப் புரிந்துள்ளதன் காரணமாக இலங்கையில் எழுத்தறி வுடையவர் வீதம் 87.5 சதவீதமாக உயர்வடைந்துள்ளது இருந்தாலும் நாட்டின் சமூக பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளில் இவர்களுடைய பங்களிப்புக் குறைவாக இருப்பதும்,கல்விஅமைதியான வாழ்க்கைப் போக்குக்கு உதவி யாக இல்லை என்பதும் பெருங் குறைபாடாகத் தெரிவிக்கப்
படுகிறது.

இலங்கையின் கல்வி வளர்ச்சி 98
பாட ஏற்பாட்டுப் புனரமைப்புகளிலே மாணவர்களுடைய செயன்முறைக் கல்விக்கு ஊக்கமளித்தல் என்ற எண்ணம் முதன் முதலாக 1950 ஆம் ஆண்டுக் கல்வி வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றது. இடைநிலை மட்டம் பாட ஏற்பாடுகளில் கைவேலை, மரவேலை, உலோக வேலை ஆகிய பாடங்கள்சேர்க்கப்பட்டிருந்தன 11 வயது தொடக்கம் 14வயதுவயதுக்கு இடைப்பட்டமாணவர்களில்நூற்கல்வியைப் பயில்வதற்கெனத் தெரிவு செய்யப்படாத மாணவர்கள் மேலே குறிப்பிட்ட வேலைகளைப் பயில்வதற்குரிய பாட சாலைகளில் சேர்ந்துகொள்ளலாம் என வழிகாட்டப்பட்டது
மேலும் 1961 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கம் இடைநிலைமட்டத்தில் விவசாயம், தொழில் நுட்பவியல் விஞ்ஞானம், கலையும் வர்த்தகமும் என்ற நான்குவகைப் பாடநெறிகளை வழங்குவதன் மூலம் வேலையனுபவத்தைக் கொடுக்க முற்பட்டது.
1964 ஆம் ஆண்டு வெள்ளையறிக்கையிலே சிரேஷ்ட இடைநிலைப் பாடசாலைகளில் இரண்டுவகையான தொழில் நுட்பப் பாடங்களையும், கனிஷ்ட இடைநிலை மட்டத்தில் விவசாயமும் வேலை அனுபவமும் என்பதையும் கட்டாய மாக்கியது.
இவ்வாறு கொண்டுவரப்பட்ட திட்டங்கள் யாவும் கல்வி யினூடா வேலையனுபவம் என்ற கொள்கைக்கும் பெற் றோரும் பிள்ளைகளும் வெளிப்படுத்திய சாதகமற்ற மனப் பாங்கினால் தோல்வியடைந்தன.
1972 ஆம் ஆண்டுப் பாட ஏற்பாட்டு மாற்றங்கள் சில அடிப்படை நோக்கங்களை முதன்மையாகக் கொண் டிருந்தன. அவையாவன:

Page 49
94. இலங்கையின் கல்வி வளர்ச்சி
(அ) பிள்ளைகளிடையே மறைந்திருக்கும் ஆற்றலை வெளிக்கொணர்வதற்கும், அவர்களைச் சமூகத் துடன் ஒன்றிணைக்கச் செய்வதற்கும் கல்வியே சிறந்த சாதனமாக அமையும்
(ஆ) நாட்டின் உற்பத்தித் துறையையும், பொருளா தாரத்தையும் இணைக்கத் தக்கவகையில் பாட ஏற்பாட்டு மாற்றங்கள் அமையவேண்டும்.
(இ) நூற்கல்வியிலும் பார்க்கச் செயல்முறைக் கல்விக் குக் கூடிய முக்கியத்துவம் வழங்கப்படவேண்டும்.
இந்த வகையில் தொழில் முன்னிலைப் பாடத்தின் வாயிலாக அடிப்படைத்திறன்கள் சிலவற்றில் மாணவர்களுக்குப் பயிற்சி யளிக்கவும், பாடசாலையையும் சமூகத்தையும் நெருங்கிய தொடர்பு கொள்ளச் செய்யவும் முயலப்பட்டது எனலாம்.
பாடசாலை மட்டத்தில் தொழில் முன்னிலைப் பாடத்தை நடைமுறைப்படுத்தும் பிரதான பொறுப்பு பாட சாலை அதிபருக்கும் ஆசிரியருக்கும் கொடுக்கப்பட்டது. அவர்கள் உள்ளுரில் இயங்கிவந்த உற்பத்தி நிலையங்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் பாடசாலைக்குப் பொருத்த மான பாடவிடயங்களைத் தெரிவு செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. அதனால் தொழில் முன்னிலைப் பாடம் சம்பந்தமான ஏற்பாடுகளைக் குறிப்பிட்ட பாட ஆசிரியரே செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டார்.
இவ்வாறு தயார் செய்யப்பட்ட பாட ஏற்பாடுகள் பின்னர் வட்டார மட்டத்திலும் மாவட்ட மட்டத்திலும் கலந்துரையாடப்பட்டும், திருத்தியமைக்கப்பட்டும் அமைச் சிடம் சமர்ப்பிக்கப் பட்டன. இவ்வாறு மொத்தமாக 1068 பாடங்கள் தயார் செய்யப்பட்டன. பின்னர் அத்தொகை படிப் படிப்படியாக 8 2 ஆகக் குறைக்கபபட்டது.

இலங்கையின் கல்வி வளர்ச்சி 95
தொழில் முன்னிலைப் பாடத்தைப் பயிற்றுவிப்பதற்காக 6 பாட வேளைகள் நேரசூசியில் ஒதுக்கப்பட்டன. அவற்றுள் 4பாட வேளைகள் செயல்முறைப் பயிற்சிக்கும் 2 பாட வேளைகள் கோட்பாட்டு விளக்கத்திற்கும் உரியவை. இலகு வான முறையில் பயிற்சியை வழங்குவதற்கு ஆசிரியர்களுக்குக் குறுகிய கால முன் சேவைப் பயிற்சி வகுப்புகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
இருப்பினும் இப்பாடம் தொடர்பாகக் கொடுக்கப்பட்ட விளக்கங்களும், வழி காட்டல்களும் அநேகமான அதிபர்கள், ஆசிரியர்களின் சக்திக்கு அப்பாற்பட்டிருந்தன. தொழில் முன்னிலைப் பாடம் என்ற யிற்சி நெறி தோல்வியைத் தழுவிக் கொண்டமைக்குப் பல காரணங்கள் கூறப்பட்டன.
முதலாவதாகத் தேவைக்குப் போதிய அளவில் ஆசிரி யர்கள் இருக்கவில்லை கற்பித்தற் பணியை மேற்கொண்ட வர்களுள்ளும் பலர் பயிற்சி பெற்றவர்களாக இருந்தனர். பாடத்தினைக் கற்பிப்பதற்குரிய வளங்களில் பற்றாக்குறை நிலவியது. சூழலில் கிடைக்கக் கூடிய இயந்திர சாதனங் களையும், வளங்களையும் பயன்படுத்துவதில் உற்சாகம் காட்டுமாறு ஆசிரியர்கள் வேண்டப்பட்டார்கள் மற்றும் சமூக ரீதியாக, பெற்றோர்கள் நூற்கல்விக்குக் காட்டிய அளவுக்கு மிஞ்சிய மதிப்பு, தொழிற் கல்வியை ஏற்பதைத் தடை செய்திருந்தது எனவே இயல்பாகவே அவர்களிட மிருந்து தொழில் முன்னிலைப் பாடம் சம்பந்தமான விமர் சனங்கள் எழுந்தன. பாடங்களைத் தெரிவு செய்வதில் நகர கிராமப் பாடசாலைகளுக்கு இடையில் வேற்றுமைகள் நிலவின.
நகரப் பாடசாலைகள் இயல்பாக உயர் தொழில் நுட்பங் களுடன் இணைந்த பாடங்களான புகைப்படப் பிடிப்பு,
இயந்திரம் பழுது பார்த்தல், வானொலித் தொழில் நுட்பம்

Page 50
96. இலங்கையின் கல்வி வளர்ச்சி
முதலியவற்றைத் தெரிவு செய்த வேளையில், கிராமியப் பாடசாலைகள், விவசாயம், மட்பாண்டம், உலோக வேலை, நெசவுத் தொழில், மீன் பிடித் தொழில் போன்ற JITLší களைத் தெரிவு செய்தன.
ஆகவே தொழில் முன்னிலைப் பாடத்தின் நடைமுறைச் செயற்பாடுகள் வகுப்பு பேதம், சாதி முறை ஆகியவற்றை நிலை நிறுத்தும் ஏற்பாடாக அமையக் கூடும் எனக் கண்டிக்கப்பட்டது. அத்துடன் சமூக வகுப்பு அமைப்பில் கீழ் நிலையில் உள்ளவர்கள் உயர் கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்புக்களைப் பெறத் தடையாகவும் இருக்கும் என எடுத்துக் காட்டினர். இதனால் 1978 ஆம் ஆண்டளவில் இலங்கையின் பாட ஏற்பாடுகளில் இருந்து தொழில் முன்னிலைப் பாடங்கள் இடை நிறுத்தஞ் செய்யப்பட்டு அதற்குப் பதிலாகத் தொழில் நுட்பப் பாடங்கள் அறிமுக
1980இல் வாழ்க்கைத்திறன் கல்வி:-
1881ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கல்விச் சீர் திருத்தத்துக்கான ஆலோசனைகள் பற்றிய அறிக்கையின் 14ஆவது பிரிவில் தொழில் நுட்பப் பாடங்களுக்குப் பதிலாக வாழ்க்கைத் திறன் கல்வியைச் சேர்த்துக் கொள்வது சம்பந்தமாகப் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
-பிள்ளைகளிடத்திலே வேலையுலகம் பற்றிய சில சாதகமான மனப்பாங்குகளை ஏற்படுத்துதல்
-உள்ளுகுக்குரிய திறன்களைப் பெறுதல்-சூழலில் இருந்து பெறக் கூடிய பொருட்களையும், எளிய உபகரணங்களையும் பயன்படுத்தக் #೩೬.!! அறிவைப் பெறுதல்.
-பல்வேறு தொழில்களைப் பற்றியும், அவற்றுக்
குரிய முன்னிலைத் திறன்களையும் பெறுதல்,

இலங்கையின் கல்வி வளர்ச்சி 97
-நூல்சார் கல்வியிலே தேர்ச்சி பெறாதவர் களுக்கும் வழிகாட்டக் கூடியவாறு செயன் முறை அடிப்படைக் கல்வியை வழங்குதல்,
வாழ்க்கைத் திறன் கல்வியானது தொழில் முன்னிலைக் கல்வியிலும் பார்க்கப் பல்வேறு வழிகளிலே வித்தியாசமாகக் காணப்பட்டது. வாழ்க்கைத் திறன் கல்வியிலே அவற்றின் பிரதான, துணை நோக்கங்கள் தெளிவாக வரையறுக்கப் பட்டிருந்தன, குறிப்பிட்ட தொழில்களுடன் நேரடியாகத் தொடர்பு படுத்தப் பட்டிருந்தன இப்பயிற்சிக்குரிய ஏற்பாடுகளை உடனடியாக நாட்டிலுள்ள சகல பாடசாலை களிலும் அறிமுகப் படுத்த முற்படாமல், ஆரம்பத்தில் 300 பாட சாலைகளில் முன்னோடித் திட்டமாக நடைமுறைப் படுத்தப்பட்டது. தேசிய மட்டத்தில் 1988ஆம் ஆண்டிலேயே ஆரம்பிக்கப்பட்டது.
முதன் முதலில் ஏழாம், எட்டாம் ஆண்டுகளில் வாழ்க்கைத் திறன் கல்வியை வழங்கிய போது, அது பற்றிய கற்றல் நிகழ்ச்சியினைத் தெரிவு செய்வதற்குரிய சுதந்திரம் ஒவ்வொரு பாடசாலைக்கும் இருந்தது. வழங்கப்பட்ட கற்றல் நிகழ்ச்சிகளுக்குரிய வழி காட்டிகள் நன்கு திட்ட மிட்ட முறையில் தயார் செய்யப்பட்டு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டன. ஆசிரியர்களுக்கும் முன்னோடிப் பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. கருவிகள், உபகரணங்கள், சில உப கரணங்களைப் பெற்றுக் கொள்வதற்கான நிதி வசதி ஆகியன உரிய நேரத்தில் பாடசாலைகளுக்கு வழங்கப் பட்டிருந்தன.
இதன் அடிப்படையில் கற்றல் நிகழ்ச்சியின் முடிவிலே மாணவர்கள் கையில் பல முடிவுப் பொருட்கள் கிடைத்தன. அப்பொருட்கள் அழகியல் ரீதியாகவும் பிள்ளைகனையும் ஆசிரியர்களையும் கவர்ந்தன. பிள்ளைகள் தமது

Page 51
@8 இலங்கையின் கல்வி வளர்ச்சி
ஆக்கங்களைக் கொண்ட பொருட் காட்சிகளைப் பாடசாலை களில் நடத்தி இன்புற்றனர். இவற்றுடன் வாழ்க்கைத்திறன் கல்வியின் 7ாடசாலை மட்ட முகாமைத்துவத்தில் தரமும் உயர்வாக இருந்தது. இவ்வகையில் முகாமைத்துவப் பற்சியியை வழங்குவதற்கு "யுனி செப்' நிறுவனம் முயற்சிகளை எடுத்தது.
இவ்வாறான நன்மைகளுடன், சில தடைக்காரணி களும் வாழ்க்கைத் திறன் வளர்ச்சி போக்கினைக் கட்டுப் படுத்தின. பிரதானமாக ஆசிரியர்களும், ஆசிரியர்களுடைய பயிற்சியும் பற்றாக் குறையாக இருந்தன. சில பிரதேசங் களில் 3 அல்லது 4 நாட்கள் நடைபெற்ற சேவைக் காலப் பயிற்சியுடன் அவர்கள் போதிக்க அனுமதிக்கப்பட்டார்கள். மற்றும் மாணவர்களை மதிப்பீடு செய்வதற்கு ஏற்ற பொருத்தமான மதிப்பீட்டு முறைகள் விருத்தி செய்யப் படாமல் இருந்தன. ஆனாலும் வருடத்துக்கு இரண்டு முறை பாடசாலை மட்ட மதிப்பீடுகளைச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது,
சில பாட சாலைகளிலே வாழ்க்கைத் திறன் கல்விக்கென விஷேட பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாத நேரத்தில், வேறு பாடங்களில் தேர்ச்சி பெற்ற, ஆனால் சில கற்றல் நிகழ்ச்சிகளில் ஈடுபாடுள்ள ஆசிரியர்களிடம் கற்பித்தல் பொறுப்புகள் வழங்கப்பட்டிருந்தன. அப்படியான ஆசிரி யர்கள் இடம் மாறிச் சென்ற பொழுது, வாழ்க்கைத் திறன் கல்வியும் பாதிக்கப்பட்டது மிக முக்கிய குறைபாடாக எட்டாம் ஆண்டின் பின்னர், வாழ்க்கைத் திறன் கல்வியின் தொடர்ச்சி பாட எற்பாட்டில் இடம் பெற்றிருக்கவில்லை.
எனவே, மாணவர்களுடைய ஆர்வம் மீண்டும் மரபு வழி யமைந்த தொழில் நுட்பப் பாடங்களுக்கு மாற்றப்பட்டதால் மழுங்கடிக்கப்பட்டது. இந்தப் போக்கு 1991 வரையில் நீடித்தது.
 
 

இலங்கையின் கல்வி வளர்ச்சி 99
இளைஞர் பிரச்சினைகளைப் பற்றி ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவானது கல்விக்கும் வேலையுலகுக்குமான இணைப்பை இடைநிலை மட்டத்திலிருந்தே வழங்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என எடுத் துக் காட்டியதைத் தொடர்ந்து 1991இல் ஆண்டு ஒன்பதில் தொழில் நுட்பக் சல்விச் சான்றிதழ் என்ற பயிற்சி நெறி (Certificate Course in Technical Education) (33Friğgö; Q3TGİTGİTL'ıl Jı'l-ğı.
விவசாயம், கைத்தொழில், மனைப் பொருளியல் வர்த்தகம், தொழில் நுட்பவியல் என்ற பிரதான பகுதி களையும், அவற்றுள் பல உப பகுதிகளையும் கொண்ட இப் பாட ஏற்பாட்டில், மாணவர் விருப்புக்கு ஏற்ப, பாடசாலை யிலும், சுற்றுப் புறங்களிலும் கிடைக்கக் கூடிய வளங்களைப் பயன்படுத்தி பயிற்சியைப் பெற்றுக் கொள்ளக்கூடியவாறு ஒழங்குகள் செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கற்றல் நிகழ்ச்சிக்குரிய கையேடுகளும் வழிகாட்டிகளும் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதனுடைய வெற்றித் தோல்விகளைச் சிறிது காலம் தாழ்ந்தே கண்டு கொள்ளலாம் மாறிவரும் தொழில்நுட்ப உலகுக்கு ஏற்ப இலங்கைப் பிள்ளைசளும் பாடசாலை மட்டத்தில் இருந்து சில அனுபவங்களைப் பெறத்தக்க வகையில் இலங்கையின் பாட ஏற்பாடுகள் முயற்சித்து வருவது வரவேற்கத்தக்க ஓர் விடயமாகும்.

Page 52
இலங்கையில் கல்வி நிருவாகச்
சீர்திருத்தங்கள்
கல்வித்துறை ஏனைய சமூக விஞ்ஞானத் துறைகளைப் போலப் பல புதிய அம்சங்களை உள்ளடக்கி வளர்ந்து வருகிறது. கைத்தொழில், வர்த்தகம் போன்ற துறைகள் தமது வினைத் திறன் அதிகரிப்பதற்கு, நிருவாக நடைமுறை களிற் சீர்திருத்தம் அவசியமெனக் கருதி, அதற்கேற்ப நிறுவனமட்டத்தில் பல்வேறு மாற்றங்களுக்கு இடமளிக் கின்றன. அவற்றை அடியொற்றிக் கல்வித்துறையும் நிறுவாகச் செயல்முறைகளைப் பயன்தரு தன்மையினதாக விளங்கப் பல ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
ஐரோப்பிய நாடுகளில் கடந்த மூன்று தசாப்தங்களாகக் கல்வித்துறைகள் நிருவாகச் சீர்திருத்தங்கள் பெருவளர்ச்சி கண்டு வருகிறது. அச்சீர்திருத்தங்களிலே நிருவாகப் பன்முகப் படுத்தலும் அதிகாரப் பரவலாக்கமும் வலியுறுத்தப்படு கின்றன. கல்வியின் தரரீதியான வளர்ச்சிக்கு இவை பெரிதும்

இலங்கையின் கல்வி வளர்ச்சி 101
உதவும் எனக் காண்பதனால், பல அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளும் அவற்றை நடைமுறையில் விரிவுபடுத்தி வருகின்றன.
இலங்கையிலே குறிப்பாக 1960 களில் கல்வி நிருவாகச் சீர்திருத்தங்களுக்கானதேவை அவசியமெனக் கருதப்பட்டது. இலங்கையின் கல்வியமைப்பு ஆசியாவிலேயே மிகப்பெரிய மத்தியப்படுத்தப்பட்ட கல்வியமைப்பாகும் எனக் கருதப் பட்டது. 1948 இல் இலங்கையின் சுதந்திரத்தின் பின்னர் கல்வியில் சமசந்தர்ப்பம்சமவாய்ப்புஎன்பனவற்றை வழங்குவ தற்கு இலங்கை அரசாங்கம் பல சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
ஆரம்ப வகுப்புத் தொடக்கம் பல்கலைக்கழகம் வரை இலவசக்கல்வியை வழங்குதல், தாய்மொழி போதனா மொழியாதல், இடைநிலைக் கல்வியில் விஞ்ஞானக்கல்வி அறிமுகமாதல், பாடவிதானத்தில் ஒன்றிணைந்த அணுகு முறையை இடம்பெறச் செய்தல் ஆகியன நிகழ்ந்தன. 1960-ஆம் ஆண்டில் ஏறக்குறைய 95 சதவீதமான பாட
சாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்றது. இதன் 595 TT UT GOOTILDATE#5 இலங்கையின் கல்வியமைப்பு விரிவு
பெறலாயிற்று.
இன்றைய நிலையில் ஏறக்குறைய 10,000 பாட சாலைகள், 40 இலட்சம் மாணவர்கள், 170 ஆயிரம் ஆசிரியர்கள், 6000 பல்கலைக்கழக ஆசிரியர்கள், 2,000 தொழில்நுட்பக் கல்லூரி ஆசிரியர் க ள் ஆகியோரை உள்ளடக்கிய மிகப்பாரிய அமைப்பாகக் கல்வி முறையுள்ளது. இப்பாரிய அமைப்பினை மத்தியப்படுத்தப்பட்ட அமைப் பொன்றின்மூலம் நிருவாகம் செய்வது உயர்வினைத் திறனுடையதாக இருக்குமெனக் கருதமுடியாது.

Page 53
10 και இலங்கையின் கல்வி வளர்ச்சி
இலங்கையின் கல்வியமைப்பில், மத்தியப்படுத்தப்பட்ட நிருவாக முறையின் நிலவிய சில பண்புகள் பின்வருமாற மைந்தன. கல்வி நிருவாக நிறுவனங்கள் ஒரு படிமுறையமைப் புடன் கூடியனவாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. தொடர்புகள் மேலிருந்து கீழ்நோக்கியும், தீர்மானம் மேற்கொள்வதில் மையநிலைப் போக்கின் அதிதீவிரத் தன்மையும், மனித உறவுகளைப் பேணுவதில் சில தடைகளும் நிருவாக நடவடிக்கைகள் நெகிழ்ச்சியற்றன வாகவும் இருந்தன. மறுபக்கத்தில் பாடசாலைகளின் வளங்கள், ஆளணிவளங்கள், 4.Jf F” 3 ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றிலே பிரதேச வேறு பாடுகள் காணப்படுகின்றன.
பாட ஏற்பாடுகளை ஒழுங்குசெய்வதில் பாடவிதான அபிவிருத்திச் சபைக்கு வழங்கப்பட்ட அளவு முக்கியத்துவம் பாடசாலைகளுக்குக் கொடுக்கப்படவில்லை. ஆசிரிய மையக்கல்வி நடைமுறையிலிருந்தது. கல்வி அபிவிருத்தியை மேற்பார்வை செய்வதற்கெனக் கல்வி அதிகாரிகள் நியமிக்கப் பட்டிருந்தார்கள். அவர்களுடைய கவனம் கல்வி நடவடிக்கை களிலும் பார்க்கப் பாடசாலை நிருவாக நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதாகவே அமைந்தது. ஆசிரியர்களும் சகியான ஊக்குவிப்பைப் பெறாமையால், i-fi left goal) நேரத்துக்கு அப்பால் பாடசாலையில் தங்கள் நேரததைச் செலவிட விரும்பவில்லை.
இவ்வாறான காரணங்களால் இலங்கையின் கல்வியில் தரரீதியான வளர்ச்சியைக் கொண்டு வருவதற்குக் கல்வி நிருவாக அமைப்பில் மாற்றம் அவசியம் என்பது தெளிவாகியது.
இலங்கையின் கல்வி நிருவாக வளர்ச்சியை வரலாற்று
ரீதியாக நோக்கும்போது 1369-ஆம் ஆண்டு பிரதானமானது. இந்த ஆண்டிலேயே மோர்கள் குழுவினரின் விதந்துரையின்

இலங்கையின் கல்வி வளர்ச்சி 103芷
பேரில் இலங்கைப் பாடசாலைகளை ஒருமுகப்படுத்தப்பட்ட நோக்கில் நிருவகிக்க வழியமைத்துக் கொடுக்கும் வகையில் பொதுப்போதனைத் திணைக்களம் அமைக்கப்பட்டது. இதற்கு முன்னைய காலங்களில் கல்விப் பொறுப்பை ஏற்று நடத்திவந்த தனியார், மதக்குழுக்கள் ஆகியவற்றின் கல்வி பற்றிய சுதந்திரமான செயற்பாட்டுக்கு பொதுப்போதனைத் திணைக்களத்தின் ஆரம்ப ம் ஒரு முற்றுப்புள்ளியாக விளங்கியது.
அரசாங்கத்தின் சார்பில் கல்வி நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யும் முழுப்பொறுப்பு இத்திணைக் களத்திற்கு வழங்கப்பட்டது. இவ்வமைப்பின் கீழ் வினைத் திறனுடைய நிருவாகம் என்பது மேலதிகமாக உதவி நன்கொடைகள் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளனவா எனப் பரிசீலனை செய்வதும், சலுகைகள் சம்பளங்கள் வழங்கப்படுவதில் சட்டங்களும் ஒழுங்குவிதிகளும் சரியாகப் பிரயோகிக்கப்படுகின்றனவா என்பதைக் கவனிப்பதுமே எனக் கருதப்பட்டது.
இலங்கைக் கல்வி நிருவாக அமைப்பில் பொதுப் போதனைத் திணைக்களத்தின் செல்வாக்கு ஒரு நூற்றாண்டுக்கு மேல் நிலவியது. 1960-களில் இலங்கைப் பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்ற பின் அவற்றை நிருவகிக்க ஒரு கல்வித் திணைக்களத்தையும் நிறுவியது. அக்காலத்தில் இயற்றப்பட்ட சட்டப்படி கல்வித்திணைக்கள நிருவாக ஒழுங்கிலும் நடைமுறைகளிலும் சீர்திருத்தங்களைச் செய்ய முற்பட்டது.
u. 6öT LET 9 61606IT és sebGál Los ITFSIT G.
1962 ஏப்பிரலில் பண் டார வ  ைள யி ல் ஒரு கல்வி மகாநாடு கூட்டப்பட்டது. இம்மகாநாட்டில் மேற்கொள்ளப்

Page 54
104 இலங்கையின்
பட்ட தீர்மானங்கள் கல்வி நிருவாகச் சீர்திருத்தங்களில் 'நிருவாகப் பன்முகப்படுத்தல்" என்ற கருத்துக்கு வலு வூட்டுவதாக அமைந்தது.
இந்த மகாநாட்டிலே கலந்துகொண்ட கல்வியதிகாரி களும் கல்வித்திணைக்கள உத்தியோகத்தர்களும் நடை முறையிலிருந்து வந்த மத்தியப்படுத்தப்பட்ட நிருவாக முறையை மாற்றியமைக்க வேண்டும் என எடுத்துக் காட்டினர். இதனடிப்படையிலே பல மாற்றங்கள் நிகழலாயிற்று. மகாநாட்டின் பிரதான தீர்மானம் பின் வருமாறமைந்தது. 23 பிரதேசக்கல்வி அலுவலகங்களை நிறுவி, அவற்றுள் 10 கல்விப் பிரதேசங்களுக்கு பொறுப்பாக உதவிப்பணிப்பாளர்களும், 13 மாவட்டக்கல்வி அலுவலங் களுக்குப் பொறுப்பாகக் கல்வி அதிகாரிகளும் நியமிக்கப்பட வேண்டும்,
பிரதேசக்கல்வி அ லு வல கங்களுக்கு மேலதிக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் கொள்கையாக்கமும் அதனுடன் இணைந்த அம்சங்களையுந் தவிரப் பிரதேசம் தொடர்பான ஏனைய நடவடிக்கைகள் யாவும் பிரதேச வாரியாகப் பன்முகப்படுத்தப்பட வேண்டும். இதனைத் தொடர்ந்து பல சீர்திருத்தங்கள் நிகழ்ந்தன.
1966-இல் நிகழ்ந்த சீர்திருத்தங்களின்படி கல்விப் பிரதேசங்களின் தொகை 14 ஆக உயர்த்தப்பட்டு அவை பொவ்வொன்றும் பூரண அதிகாரங்கொண்ட அரசாங்கத் திணைக்களங்களாக அங்கீகரிக்கப்பட்டன கல்விப் பிரதேசங் களுக்குப் பொறுப்பாகக் கல்விப் பணிப்பாளர்கள் நியமிக்கப் பட்டார்கள். மாவட்டக்கல்வி அலுவலகங்களின் தரம் உயர்த்தப்பட்டது. அவை பிரதம கல்வியதிகாரியின் பொறுப்பில் விடப்பட்டன.

இலங்கையின் கல்வி வளர்ச்சி 105
இத்தகைய மாற்றங்களால் கல்வியதிகாரிகளும் கல்வித் திணைக்கள உத்தியோகத்தர்களும் பாடசாலைகளுடனும், பொதுமக்களுடனும் ஒரளவுக்குத் தொடர்புகளை வைத்திருக்கக் கூடிய வசதிகள் உண்டாயிற்று. எனவே நிருவாக நடைமுறைகளும் ஒரளவுக்கு ஏற்றுக்கொள்ளப் படத்தக்க இயல்பான போக்கைப் பெற்றுக் கொண்டது.
இதே காலப்பகுதியில் இடம்பெற்ற இன்னொரு பிரதான மாற்றமாகக் கல்வியமைச்சும் கல்வித் திணைக்களமும் இணைந்து செயற்படுவதற்கு வழிகோலப்பட்டமையைக் குறிப்பிடலாம். இவையிரண்டினையும் இணைப்பதற்கு முன்னர் கல்வியமைச்சுக்குக் கல்வியமைச்சரும் பாராளு மன்றச் செயலாளரும் தலைமை வகித்தனர். அவர்களுடன் பல நிரந்தரச் செயலாளர்களும் உதவிச் செயலாளர்களும் பணிபுரிந்தனர் பிரதேசக் கல்வித்திணைக்களம் நிறுவப்பட்ட பின்னர் கல்விப் பணிப்பாளர் என்றும் பதவிக்குப் பதிலாகக் கல்விப்பணிப்பாளர் நாயகம் என்ற பதவி ஏற்படுத்தப் பட்டது.
1970-1980 காலப்பகுதியில் ஏற்பட்ட மாற்றங்கள்
இலங்கையின் கல்வியமைப்பிலே 1972-இல் கொண்டு வரப்பட்ட சீர்திருத்தங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. புதிய சீர்திருத்தங்கள் கல்வியமைப்பிலும் படி உள்ளடக்கத்திலும் (6) மாற்றங்களை ஏற்படுத்த முனைந்தன. பாடஏற்பாடுகளை முகாமைத்துவம் செய்வது தொடர்பாக 1972க்கு முன்னர் நிகழ்ந்த சீர்திருத்தங்கள் எவையும் வினைத்திறனுடைய தீர்வுகளைக் கொடுக்க

Page 55
O6 இலங்கையின் கல்வி வளர்ச்சி
இதனைக் கருத்திற்கொண்டு பாட ஏற்பாடுகளை ஒழுங்கு செய்வதற்குப் பொறுப்பாகவிருந்த பாடவிதான அபிவிருத்தி நிலையம் அதிகாரம் வாய்ந்த ஒரு நிறுவன மாகச் செயற்படும் வகையில் புணரமைப்புச் செய்யப்பட்டது. பாடவிதான அபிவிருத்திச் சபைக்குப் பொறுப்பாக ஒரு கல்விப் பணிப்பாளரும் நியமிக்கப்பட்டார்.
1972 ஆம் ஆண்டிலேயே இலங்கையின் கல்விச் சேவை முறையும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இலங்கைக் கல்விச் சேவை உத்தியோகத்தர்கள் 5 தரங்களில் நியமிக்கப் பட்டார்கள். அந்த 5 தரங்களும் கல்விப்பணிப்பாளர், பிரதம கல்வி அதிகாரி, வட்டாரக்கல்வி என்ற ஒழுங்கில் இருந்தன. இச்சேவைக்கான ஆட்சேர்ப்புக் குறித்துச் சில விஷேட ஏற்பாடுகள் இருந்தன. அதன்படி பாடசாலை மட்டத்தில் அதிபர்களும் இச்சேவையிற் சேர்ந்து கொள்வதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கல்விச் சேவை முறை ஆரம்பிக்கப்பட்டதன் பிரதி பலனாகக் கல்வி அபிவிருத்தி நடவடிக்கைளில் பொது மக்களும் பங்குகொள்ளக் கூடிய வகையில் தொடர்புகளைப் பேணக் கல்வி அதிகாரிகளுக்குச் சந்தர்ப்பம் உண்டானது. 1972 ஆம் ஆண்டின் புதிய பாட ஏற்பாட்டு மாற்றங்களைச் செயற்படுத்தப் பெற்றோர், பொதுமக்கள் ஆகியவர்களின் தொடர்பு உதவுமெனக் கருதப்பட்டது.
இதற்கு முன்னைய காலப்பகுதியில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வந்த கல்வி நிருவாக அமைப்பில் மத்தியப்படுத்தப் பட்ட ஒழுங்கு வலுப்பெற்றிருந்தமை எடுத்துக் காட்டப் பட்டுள்ளது. கொள்கையாக்கம், நிதி, பாடஏற்பாடு, அபிவிருத்தி ஆசிரியர் பயிற்சி ஆகியவற்றில் கல்வியமைச்சு தீர்மானங்களை மேற்கொண்டது. கல்வி நிறுவனங்கள் சமூக நிறுவனங்களுடன் கொண்டிருந்த தொடர்புகள் குன்றிக்

இலங்கையின் கல்வி வளர்ச்சி A 07
காணப்பட்டன. பாடசாலையின் வளர்ச்சியில் பெற்றோரும் உள்ளூர் நிறுவனங்களும் அக்கறை காட்டவில்லை.
இதனால் முன்னைய அநுபவவாயிலாகக் கல்வி நிறுவாக அலுவலர்கள் பயன்தரு திட்டமிடல், திட்டங் களைச் செயற்படுத்தல் என்பன சம்பந்தமான பூரண அறிவைப் பெற்றிருக்கவில்லை. பாடசாலை மட்டத்திலும் அதிபர்களிடம் நிருவாக சம்பந்தமான அறிவு குன்றிக் காணப்பட்டது. நிருவாக நடைமுறைகளை ஆசிரியர் களுக்குத் தெரியப்படுத்தப் பெரும்பாலான அதிபர்கள் விரும்பவில்லை. இக்காரணங்களால் மீண்டும் நிருவாகச் சீர்திருத்தங்கள் அவசியமானவையென ஆய்வாளர்கள் எடுத்துக் காட்டினர்.
1980 களில் கிருவாகப் பன்முகப்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் :
1981 இல் வெளிவந்த கல்வி வெள்ளையறிக்கையில் எடுத்துக் கூறப்பட்ட ஆலோசனைகளின்படி, கல்வி நிருவாகப் பன்முகப்படுத்தல் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகள் 1981-1905க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் நடைமுறைக்கு வந்தன. குறிப்பாகக் கல்வியமைப்பில் அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டுமானால் நிருவாக ஒழு ங் கி லு ம் மாற்றங்கள் ஏற்பட வேண்டியது அவசியமாயிற்று.
பாட ஏற்பாட்டு அபிவிருத்தி, கற்பித்தல் முறைகளில் முனனேற்றம், ஆசிரியர் கல்வியும் ஆசிரியர் பயிற்சியும், மேற்பார்வையும் கட்டுப்பாடும் போன்ற விடயங்களுக்குக் கூடிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது; இதன் காரண மாகவே கோட்டக் கல்வி அலுவலகம், கல்வி வலயம்,

Page 56
108 இலங்கையின் கல்வி வளர்ச்சி
கொத்தணிப் பாடசாலை முறை என்பன தோற்றுவிக்கப் பட்டன.
முதலாவதாக 1981 ஆம் ஆண்டில் 24 பிரதேசக்கல்வித் திணைக்களங்களும் 7 உபபிரதேசக் கல்விக்காரியாலயங்களும் நிறுவப்பட்டன. இந்தத் தொகை 1983இல் முறையே 25 ஆகவும் 6 ஆகவும் மாற்றப்பட்டது. இம்மாற்றம் நிருவாகப் பன்முகப்படுத்தலுக்கான முக்கிய ஒழுங்காகவும் காணப் பட்டது.
கல்வி அபிவிருத்தித் திட்டங்களை விரைவாகச் செயற் படுத்துவதற்காக பிரதேசக் கல்வி அலுவலக நிருவாக முறையில் பல மாற்றங்கள் ஏற்படவேண்டிய தேவை யிருந்தது இதனால் பிரதேசக் கல்வி அலுவலகங்களுக்கு ஐந்து பிரதான கடமைகள் ஒதுக்கப்பட்டன. அவையாவன,
1. கல்வி அபிவிருத்தி
2. பொது நிருவாகம்
3. நிதி
4. கல்வி நிருவாகம் 5. பாடசாலைக் கட்டிட வேலை
மேலும் கல்விச்சேவை உத்தியோகத்தர்களின் கடமை களையும் அதிகாரங்களையும் வினைத் திறமையுடைய தாகவும, பயன்பாடுடையதாகவும் மாற்றுவதன் பொருட்டு 1972இல் ஆரம்பித்து வைக்கப்பட்ட இலங்கைக் கல்விச் சேவையின் பிரிவுகள் இக்காலக் கட்டத்தில் 3 பிரிவுகளை யுடைதாகத் திருத்தியமைக்கப்பட்டது.
இத்தகைய ஒழுங்கு மாற்றத்தால் பிரதேசக் கல்விப் பணிப்பாளருக்குச் சுமத்தப்பட்டிருந்த வேலைப்பழ உப

இலங்கையின் கல்வி வளர்ச்சி 109
பிரதேச மட்டத்தில் பகிர்ந்தளிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டது இது காலவரை பாடசாலை நிருவாகம், மேற்பார்வை ஆகிய விடயங்களில் முக்கிய பொறுப்பை ஏற்றுவந்த வட்டாரக் கல்வி அதிகாரியின் பொறுப்புகள் குறைக்கப்பட்டு, கல்வி வட்டார முறையும் ஒழிக்கப்பட்டது.
பிரதேசக் கல்வி அலுவலகமும் மாவட்டக் கல்வி அலுவலகமும்
பிரதேசக் கல்வி அலுவலகமானது 1981 ஆம் ஆண்டின் ஆலோசனையின்படி மாவட்டக்கல்வி அலவலகம்' என அழைக்கப்படும் என்றும், அதற்குப் பொறுப்பாக இருக்கும் பிரதேசக் கல்விப் பணிப்பாளர், மோவட்டக் கல்விப் பணிப்பாளர்' எனவும் அழைக்கப்படுவார் எனக் கூறப் பட்டது. பிரதேசக் கல்வி அலுவலக முறையில் நிலவிவந்த முக்கிய குறைபாடு, நிருவாகக் கடமைகள் யாவும் மிகையாக மத்தியப்படுத்தப்பட்டிருந்தமையாகும். இவற்றைப் பகிர்ந் தளிக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. எனவே அவருடைய கடமைகள் 3 ஆகக் குறைக்கப்பட்டன.
மாவட்டக் கல்விப் பணிப்பாளர் ஒரு திட்டமிடுபவராக அவற்றை அபிவிருத்தி நோக்கில் செயற்படுத்துபவராக, மதிப்பீடு செய்பவராக இருக்க வேண்டும். மூன்று பிரிவுகளும் பின்வருமாறு :
1. திட்டமிடற் பிரிவு
2. மேற்பார்வைப் பிரிவு
3. சேவைப் பிரிவு

Page 57
110 இலங்கையின் கல்வி வளர்ச்சி
இந்த மாற்றத்தினால், பிரதேசக் கல்வி அலுவலகத்தின் நிருவாகச் சுமை இப்பொழுது கோட்டக் கல்வி அலுவலகங் களுக்கு மாற்றப்பட்டது.
கோட்டக் கல்வி அலுவலகம்
உப பிரதேச அடிப்படையில் அமச்ைகப்பட்ட கல்வி அலுவலகங்கள் கோட்டக் கல்வி அலுவலகங்கள்" என அழைக்கப்படலாயின. கோட்டக் கல்வி அலுவலகமானது மாவட்டக் கல்விப் பணிப்பாளரின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் இவ்வலுவலகத்துக்குப் பொறுப்பாகக் கோட்டக் கல்வி அதிகாரி இருப்பார். 100 அல்லது 150 பாடசாலை களுக்கு இவ் அலுவலகம் பொறுப்பாக இருக்கும். சில பிரதேசங்களைப் பொறுத்துப் பாடசாலைகளின் தொகை யில் வேறுபாடு இருக்கலாம். கோட்டக் கல்வி அலுவலகம் 4 பிரிவுகளையுடையது. அவையாவன :
1. கல்வி அபிவிருத்திப் பிரிவு,
2. கல்வி நிருவாகப் பிரிவு,
3. நிதிப் பிரிவு.
4 பொது நிருவாகப் பிரிவு, என்பன.
கோட்ட மட்டத்தில் கடமைகளை இலகுபடுத்துவதற்கு ତ୍ବ୯୬ இணைப்புக்குழு அமைக்கப்படும் இந்த இணைப்புக்குழுவுக்கு கோட்டக்கல்வி அதிகாரி தலைமை வகிப்பார்.
கல்வி வலயம்
1984இல் ஏற்பட்ட இன்னொரு பிரதான அம்சம் கல்வி வலயங்களின் தோற்றமாகும். கல்வி அபிவிருத்தித்

இலங்கையின் கவ்வி வளர்ச்சி 11.
திட்டமிடலுக்கு கல்வி வலயங்கள் அமைக்கப்படுவது நன்மை தரும் எனக் கருதப்பட்டது. பாடசாலைகளின் விருத்திக்குக் குறிப்பிட்ட வலயங்களில் காணப்படும் வளங்களை உச்ச மட்டத்திற் பயன்படுத்துவது வலய அமைப்பின் குறிக்கோ ளாகும். கல்வி வலயங்களை அமைப்பதற்குப் புவியியற் பிரதேசம் கருத்துக்கு எடுக்கப்பட்டாலும், கிராம சேவகர் பிரிவினடிப்படையில் அமைக்கப்படுவது உசிதமானது எனக் கொள்ளப்பட்டது.
ஒரு கல்விவலயம் சராசரியாக 15 பாடசாலைகளை உள்ளடக்கியிருக்கலாம். பிரதேச, நகர, கிராம நிலைமை களைப் பொறுத்து, வலயப் பரப்பும், பாடசாலைகளின் தொகையும் வேறுபட்டிருந்தன. இருப்பினும் இவற்றை வகுப்பதிலே பிரதேசக் கல்விப் பணிப்பாளரின் வழிகாட்டல் அவசியமாக இருந்தது. மற்றும் ஆரம்ப, கனிஷ்ட இடை நிலை, சிரேஷ்ட இடைநிலை மட்டக் கல்வித் தேவைகளை யும் அது கருத்திற் கொண்டிருந்தது. தற்பொழுது பாடசாலைகளின் பெளதிக வள ரீதியான அபிவிருத்தித் திட்டங்கள் வலய அடிப்படையிலே, வகுக்கப்பட்டு அவற்றுக் கான நிதி ஒதுக்கீடுகளும் செய்யப்படுகின்றன.
பாடசாலைக் கொத்தணிகள்
இலங்கையில் கொத்தணிப் பாடசாலை முறை பற்றி போகொ ட பிரேமரத்தின குழுவினரால் விதந்துரைக்கப் பட்டது. பின்னர் இவை பற்றிய கருத்துக்கள் கல்வி வெள்ளையறிக்யிைலும் எடுத்துக் கூறப்பட்டன. பாடசலை முகாமைத்துவ ஒழங்கில் அதி கூடிய வினைத்திறன் கொண்ட மிகச்சிறிய நிருவாக அலகாகக் கொத்தணிமுறை அமையும் என்ற நோக்கு இருந்தது. பாடசாலைகளுக்கிடையே

Page 58
I 2 இலங்கையின் கல்வி வளர்ச்சி
நிலவிவந்த கல்வித்தர வேறுபாடுகள், வசதி வேறுபாடுகள் ஆகியன கொத்தணி முறையினால் நீக்கப்படக்கூடியன என்றும் கருதப்பட்டன.
கொத்தணி முறைமையை இலக்கையில் முழுமையாக அறிமுகம் செய்வதற்கு முன் 1983 இல் பத்து கல்விப் பிரதேசங்களில் 241 பாடசாலைகளை உள்ளடக்கிய 21 கொத்தணிகள் நிறு வ ப் பட்ட ன. ந வ ரெலிய பண்டாரவளை, இரத்தினபுரி, கண்டி, யாழ்ப்பாணம், கம்பகா, குருனாகலை, தங்காலை, மாத்தறை, களுத்துறை என்பனவே அப்பத்து கல்விப் பிரதேசங்களாகும். பின்னர் படிப்படியாக ஏனைய பிரதேசங்களிலும் அறிமுகப்படுத்தப் பட்டு: 1988 அளவில் இலங்கை முழு வ தி லும் நடைமுறைக்கு வந்தது.
வட்டாரக்கல்வியதிகாரிகளுக்குப் பா ட சா  ைல யி ன் மீதிருந்த பொறுப்புகள் யாவும் கொத்தணியதிபருக்கு மாற்றப்பட்டன. கொத்தணியதிபர் மு த ல் நி  ைல முகாமையாளர் என்ற வகையில், அங்கத்துவப் பாடசாலை அதிபர்களுடன் கூட்டாகச் சேர்ந்து, பாடசாலைகளின் வள, கல்வி அபிவிருத்தி பற்றிய சிறந்த தீர்மானங்களை மேற்கொள்ள இவ்வமைப்புச் சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இருந்தாலும் நடைமுறையில் அவை எதிர்பார்த்த வெற்றியைத்தரவில்லை எ ன் ப த ல், கொத்தணியமைப்பு முறையின் புணரமைப்புக் குறித்துச் சில ஆலோசனைகள் இப்பொழுது முன்வைக்கப்பட்டுள்ளன.
மாகாண சபைகளும் கல்வி நிர்வாகமும்
இலங்கையில் 1988- ற்குப் பின்னர் நிகழ்ந்த கல்வி நிருவாகச் சீர்திருத்த நடவடிக்கைகளிலே, கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகளைக் கவனிக்கும் பொறுப்பு 4. DIT BESTGOT
 

இலங்கையின் கல்வி வளர்ச்சி 3
சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. 1988 இல் இலங்கையின் அரசியல்யாப்பின் 13 வது பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தத்தின் காரணமாக 8 மா கா ன ச  ைபகள் இப்பொழுது இயங்கி வருகின்றன. நிருவாகப் பன்முகப் படுத்தல் என்ற அம்சத்தின் வளர்ச்சிப்படியில் அதிகாரங்கள் மாகாணமட்டத்தில்பரவலாக்கப்பட்டிருப்பதும் முக்கியமான அம்சமாகும் இவற்றுள்ளே கல்வி நிருவாகமும், கல்விப் பொறுப்பும் குறிப்பிடத்தக்கது.
கல்வி நிருவாகப் பரவலாக்கம் செய்யப்படும் பொழுது வெவ்வேறு நாடுகளிலும் வித்தியாசமான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. கனடா, சுவிற்சலாந்து, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளின் உள்ளூருக்குரியபொறுப்புகள் மிகையாகவும், பிரான்ஸ், பிலிப்பைன்ஸ், அவுஸ்ரேலியா முதலிய நாடுகளில் தேசிய அரசின் பொறுப்புகள் மிகையாகவும், இங்லாந்து, வேல்ஸ், சுவீடன், இந்தியா போன்ற நாடுகளில் தேசிய அரசாங்கமும், உள்ளூர் அரசாங்கங்களும் பொறுப்புகளைப் பகிர்ந்துள்ளன.
சோவியத் ஒன்றியம், சீனா, ஆகென்ரீனா போன்ற நாடுகளில் தேசிய அரசாங்கமே பிரதான பொறுப்பை ஏற்கின்றன. இதில் இலங்கையைப் பொறுத்தமட்டில், நாடளவிய முக்கிய கொள்கைகளை ஆக்குகின்றது. அதற்கு உட்பட்ட சில உபகொள்கைகளையும், மாகாண ரீதியான சில சிறப்புக் கொள்கைகளை ஆக்குவதற்கும், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரங்களையும் மாகாண சபைகள் பெறுகின்றன.
மாகாண சபைகளில் கல்வியமைச்சு ஏற்படுத்தப் பட்டுள்ளதால், மத்திய அரசாங்கத்தின் கடமைகள் பல மாகாணசபைக்கல்வியமைச்சுக்குப்பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது

Page 59
14 இலங்கையின் கல்வி வளர்ச்சி
இதனால் மத்திய அரசாங்கத்தின் கல்வியமைச்சு பெரும்பாலும் கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகளில் கவனஞ்செலுத்தும், மேலும் மாகாண மட்டத்தில் கல்வி விரிவாக்கம், கல்வி முன்னேற்றம், உயர்கல்வி தரத்தைப் பேணல், ஆராய்ச்சிகளில் ஈடுபடுதல், கட்டுப்பாடும் வழிகாட்டலும், திட்டமிடல் போன்ற கடமைகளை நிறைவேற்றும் அதிகாரம், அதற்குரிய தலைமைத்துவம் என்பன வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு செய்யப்படுவதால் கல்வி நிருவாக நடவடிக்கைகளிலே தர ரீதியான மா ற் ற ங் களு ம் எதிர்பார்க்கப்படுகின்றன. மாகாணக் கல்வியமைச்சின் மேம்பாட்டுக்கு மத்திய கல் வி ய  ைம ச் சு ஆளணிப் பயிற்சியையும், கணணி பேன்ாற சாதனங்களையும்
வழங்கிவருன்றது.
மாகாணக் கல்வியமைச்சின் நிருவாகக் கடமைகள் பின்வருமாறு:
1. திட்ட மிடல்
2. நிகழ்ச்சித் திட்டங்களை வகுத்தலும்
மதிப்பீடு செய்தலும் இயைதபடுத்யுலும்
3. தீர்மானம் மேற்கொள்ளலும் மேற்
பார்வை செய்தலும்
4. மனிதவள முகாமைத்துவம்
5. நிதி கணக்கீடு, கணக்காய்வு

இலங்கையின் கல்வி வளர்ச்சி 5
6. பொறியியற்றுறைச் சேவைகள்
மாகாணக் கல்வியமைச்சின் ஒழுங்கமைப்பை நோக்கும் போது மாகாணம் சம்பந்தமான கல்வி நடவடிக்கைகள் சகலவற்றிற்கும் மாகாணக் கல்வி அமைச்சரே பொறுப்பாக இருப்பார். இவருக்கு உதவி நல்கவும் ஆலோசனை வழங்கவும் ஒரு மாகாணக் கல்விச்சபை நிறுவப்படும். இச்சபையைவிடத் திட்டமிடல் மீளாய்வுக்குழுவும், இணைப்புச்சபை ஒன்றும் இடம்பெறும். இந்த இணைப்புச்சபையில் மாகாணக் கல்வித் திணைக்களம், கோட்டக் கல்வி அதிகாரிகள் பாடசாலைக் கொத்தணிச் சபையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட தலைவர்கள் ஆகியோர் இடம் பெறுவர்.
இச்சபை கல்விப் பிரச்சினைகளை ஆராய்தல்,நிருவாகப் பிரச்சினைகளைப் பரிசீலனை செய்தல், அப்பிரச்சினை களுக்குப் பொறுத்தமான மாற்று வழிமுறைகளை மேற்கொண்டு நிலைமைகளைச் சீர் செய்தல் என்பவற்றைக்
குறிக்கோளாகக் கொண்டுள்ளன:
மாகாணக் கல்வியமைச்சின் அதிகாரங்கள் பன்முகப் படுத்தப்படுவதனால், இதற்கு முன்னர் கோட்டக் கல்வி அதிகாரிகள் வசித்துவந்த பங்கிலும் பணியிலும் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. மாகானக் ல்வியமைச்சு மட்டத்தில் நிறைவேற்றப்படும், தீர்மானங்களையும் வகுக்கப்படும் கொள்கைகளையும் கோட்டமட்டத்தில் நடைமுறைப்படுதுத்வது முதன்மையாக எதிர்பார்க்கப்படு கிறது. அதனால் கோட்டக் கல்வி அதிகாரி பிரதான இணைப்பாளர் என்ற பொறுப்பை இப்பொழுது
ஏற்றுக்கொள் கின்றார்.

Page 60
16 இலங்கையின் கல்வி வளர்ச்சி
மேலும் பாடசாலையின் வளர்ச்சியில், பாடசாலையைச் சூழவுள்ள சமூகத்தின் பங்களிப்பு உயர்மட்டத்தில் எதிர் பார்க்கப்படுவதனால் கோட்டக்கல்வி அதிகாரி சமூகத்துக்கும் பாடசாலைக்குமிடையே ஒரு பாலமாக விளங்கவேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறார். எனவே கோட்டக் கல்வி அதிகாரி இப்பொழுது ஒரு முகாமையாளர், மேற்பார்வையாளர், கல்வி நடவடிக்கைகளைத் திட்டமிடுபவர், முன்மாதிரி ஆசிரியர் இணைப்பாளர் எனப்பல்வேறு பொறுப்புகளை வகிக்க வேண்டியவராகின்றார்.
மிக அன்மையிலே, பாடசாலை மட்டத்திலும், மாகாண மட்டத்திலும் கல்வி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்கும் வண்ணம் பாடசாலை அபிவிருத்திச் சபைகளும், மா கா ன க் கல்வி ச் சபையும் அமைக்கப்படுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பாது காப்புக் கட்டளைச் சட்டத்தின் 5ஆம் பிரிவின் கீழ் இச்சபைகளை அமைப்பதற்கான ஒ மு ங் குவிதிகள் ஜனாதிபதியால் ஆக்கப்பட்டன.
பாடசாலை அபிவிருத்திச் சபை அமைப்பதற்கான நோக்கம், ஒரு பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பிலான கருமங்களில், பாடசாலையின் அதிபருக்கு ஆலோசனை அளிப்பதும், உதவி செய்வதுமாகும். தேசியக் கல்விக் கொள்கைகளைப் பெற்றே ரா ரு க் கும் பா ட சா  ைல மாணவருக்கும் எடுத்துரைத்தல் பாடசாலைக் கொள்கையை
வகுத்தல், கல்வித்திட்டமிடல், அமுலாக்கல், பாடசாலை

இலங்யிைன் கல்வி வளர்ச்சி 7
இணைப்பாடவிதான, மேலதிக பாடவிதானச் செயற் பாடுகளை ஒழுங்குபடுத்த உதவுதல், மாணவர் ஒழுக்க மேம்பாட்டுக்கு உதவுதல், பாடசாலையின் பெளதிக வளங்களைப்பேணல், மதிய உணவு வழங்குவதில் உதவுதல் பாடசாலையை விட்டு விலகும். மாணவர்களுக்குரிய வாழ்க்கைத் தொழில்சார் மனப்பாங்குடைய பயிற்சித் திட்டங்களைத் தயாரித்தலிலும் அமுலாக்குவதிலும் உதவுதல் என்ற பல்வேறு நோக்கங்களைக் கொண்டதாக இச்சபை
விளங்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோலவே, மாகாணத்தின் பிரதம அமைச்சரின் அங்கீகாரத்துடனும், அ மை ச் ச ரி ன் விருப்பத்துடனும் மாகாணக் கல்விச் சபை தாபிக்கப்படவேண்டும் என எடுத்துக் கூறப்பட்டுள்ளது. இச்சபையிலே மாகாணக் கல்வி யமைச்சரால் நியமிக்கப்படும் நியமன உறுப்பினர்களும் பதவி வழி உறுப்பினர்களும் என இருவகையினரைக் கொண்டிருக்கும்.
நியமன உறுப்பினர் என்றவகையில் பாடசாலை அதிபர்கள் இருவர், மாகாணத்திலுள்ள ஆசிரியர் இருவர், மாகாணத்திலுள்ள அபிவிருத்திச்சபை உறுப்பினர்கள் இருவர், வியாபார, கைத்தொழில் நிறுவனங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர் ஒருவர், மாகாணத்திலுள்ள கல்வித் துறையைச் சாராத ஏனைய துறைகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர் ஒருவர் எனப் 10 பேரும், பதவி வழி உறுப்பினர்களாக மாகாணக் கல்வியமைச்சரின் அமைச்சுக் கானசெயலாளர், மாகாணக் கல்விப்பணிப்பாளர்,மாகாணச்
சுகாதாரக் கல்விப் பணிப்பாளர், மாகாணக்கமத்தொழில்

Page 61
I, II, 8 இலங்கையின் கல்வி வளர்ச்சி
பணிப்பாளர், பிரதான LDTof 60öTL i பொறியியலாளர் ஆகிய 5 பேரும் அடங்குவர்.
மாகாணக் கல்விச் சபை, பொ ரு த் த மா ன சந்தர்ப்பங்களிலே மாகாணக் கல்வியமைச்சருக்குக் கல்வி, கல்வி வசதிகளை அளித்தல், அத்துடன் கல்வித்தரத்தை விருத்தி செய்தல் என்பன தொடர்பான சகல கருமங்களிலும் ஆலோசனை வழங்கும் மற்றும் கல்வி அபிவிருத்தித் திட்டம், வருடாந்த அமுலாக்கல் திட்டம், மாகாணத்துக்கெனப் பெளதிக, கல்வி, அறிவியல், புதிய பாடசாலைகளை அமைத்தல், பாடவிதானத்தில் தேசிய கல்வி நிறுவனத்தின் அங்கீகாரத்துடன் வேறுபாடுகளைச் செய்தல் மற்றும் முறை சாராக்கல்வி, முதியோர்கல்வி, எழுத்தறிவு நிகழ்ச்சித்திட்டம் என்பவற்றையும் ஆசிரியர், மாணவர் நலன்புரி வசதிகளைக் கவனித்தல் என்பவற்றையும் இச்சபை கவனிக்கும்.
மாகாணக் கல்விச் சபையானது எதிர்பார்த்தவகையில் செயலாற்றவில்லையெனில் அ த் த  ைக ய சபையைக் கல்வியமைச்சர், பிரதம அமைச்சரின் அனுசரணையுடன் கலக்கலாம். இந்த வருடம் (1992) முதல் பாடசாலைகளில் பாடசாலை அபிவிருத்திச் ச  ைப க ள் அமைக்கப்பட்டு
வருகின்றன.
இலங்கையின் கல்விச் சீர்திருத்தம் பற்றிய வரலாற்றை நோக்கும்போது, இலங்கையின் கல்வி நடவடிக்கைகளில் ஏற்பட்ட விரிவாக்கமானது, ஒவ்வொரு காலகட்டத்திலும் குறிப்பிட்ட வகையான கல்வி நிருவாகச் சீர்திருத்தங்களுக்கு அடிகோலியிருந்தமையைக் கண்டு கொள்கின்றோம்.

இலங்கையின் கல்வி வளர்ச்சி 119
1960 களின் பின் கல்வி நடவடிக்கைகளில் ஏற்பட்ட துரித மாற்றங்கள், காரணமாக மத்தியப் படுத்தப்பட்ட நிருவாக அமைப்பிலிருந்து படிப்படியாக வேலைப் பகிர்வு, அதிகாரப் பரவலாக்கம் என்பன இடம் பெற்றன. மற்றும் கல்வியமைச்சு, கல்வியலுவலகங்கள், பாடசாலை மட்டம் ஆகியவற்றில் எல்லாம் அதிகாரங்கள் பன்முகப்படுத்தப் பட்டன ஆயினும்
இவையாவும் போதிய மனித வளமின்மை அனுபவக் குறைவு, பன்முகப்படுத்தல் என்ற வகையில் காணப்படும் செயலிழந்த தன்மை முதலியவற்றினால் எதிர்பார்த்த
வெற்றியையடைவதில் சில தடைகள் உள்ளன.

Page 62
1 2 0 இலங்கையின் கல்வி வளர்ச்சி
குறிப்புகளுக்காக:
பார்வைக்கு
இரண்டாவது கட்டுரைக்கான அடிக்குறிப்புகள், REFERENCES ஐயும் அடுத்த பக்கத்தில் இருந்து
காண்க: -
 

7.
9.
10.
1.
2.
3.
போதனாமொழி மாற்றத்தின் பின்னணி
அடிக்குறிப்புகள்
சுயமொழிகள் என்பன சிங்களம், தமிழ் ஆகிய இரு தேசிய மொழிகளையும் குறிக்கும்.
Ceylon, Colebrooke Commission Report, 1831. P. 31
bid P. 29
bid P. 30
Ceylon, Sessional Paper X 1956. Final Report of the Commission on Higher education in the National Languages P. 6
Mulder Wallace R. School For a New Nation, Colombo 1962 P. 32-33
Ceylon, Colebrooke Commission Report, 1831. P.32
Ruberu, Ranjit T. "Church and State in Education in Ceylon: an historical survey', World Year book of Education 1966, London, 1966 P. 123
Ceylon Sessional Papers XXIV 1943. Report of the Special Committee on Education P. 22
Ceylon Sessional paper X Op. Cit. P. 7
Rubert, Ranjit, T. Education in Colonial Ceylon Colombo P. 253
Ceylon Sessional Paper X 1956 Op. Cit P. 7 Ceylon Sessional Paper XXIV 1943. Op. Cit P. 40
இ-8

Page 63
14.
15.
6.
17.
18.
9.
20.
21.
22.
23.
24.
25.
26,
27.
28.
29.
122
Ceylon Sessional Paper XXII 1946 Report of Official Languages P. 11
Ibid P.
Ceylon Sessional Paper X 1956 Op. Cit P. 19 Ceylon Sessional Paper XXIV 1943 OP, Cit. P. 22
Ceylon Sessional Paper X 1956 P. 16
Ibid. P. 19
Ceylon Sessional Paper 1943 Op. Cit P. 23
Jayasuriya T. L. Education in Ceylon before and
after independence 1939-1968 Colombo, 1969. P. 5
Ruberu, Ranjiit T, 1966. OP. cit. P. 121
Ceylon Sessional Paper XXIV 1943 P. 23
bid
Jayasuriya T. B. Op. Cit. P. 5
Mendis G. C. 'Adult Franchise and Educational Reforms' University of Ceylon Review II 1-2 Oct. 1944 P. 39
Ceylon Administrative Report, 1944 Part IV. P. A. 8
bid
Ceylon Administrative Report, 1945 Part IV P.A. 11
 

30.
3.
32.
33.
34.
35.
36.
37.
38.
123
Ceylon Administrative Report, Part IV P. A. 5
Ibid
Arulnandhy K. S. Ceylon Year Book of Education 1952 London, 1952 P. 535
Wriggins, Howard. W. Ceylon, Dilemma of a new nation Princeton University Press, New Jersey, 1960s P. 30
Ames Mickal, M. The impact of Western Education on Religion and Society in Ceylon, Pacific Affairs, Vol. XL 1 & 2 1967. P. 31.
bid
Mills, Lennex. A. Ceylon under British Rule 1975
1932 Colombo, 1964. P. 265.
Ceylon Administrative Report 1930 Part IV. P. A 45
· sa 1932 Part IV P. A 61
姆罗 , 934 Part IV P. A 68
隐》 ”” 1936 Part IV P. A 80)
狮懿 99. , 1938 Part IV P. A 54
翻說 曾曾 , , 1944 Part IV P. A 17
豫例 莺 , , 1946 Part IV P. A 23
Ceylon, Hansard (State 6 ouncil) 24, January, 1945, Col. 485, 486.

Page 64
39.
40.
41.
42,
43.
44.
45.
46.
47.
48.
49.
124
Ceylon, Sessional Paper, XXIV 1943 Op. Cit P. 138.
bid P. 66
Ibid P. 64
Jones, Gairn, S. Population Growth and Educational Progress in Ceylon Colombo. 1971 P. 1
Arulnandhy, K. S. Op, Cit. P. 539
Ceylon Administrative Report 1944 Part IV A 17
罗多 p , 1946 Part IV A 25
99. , 1948 Part IV A 30
1950 Part IV A 21
1952 Part IV A 30
霹曾 *》
99. 99.
1954 Part IV A 32
s O 99.
1956 Part IV A 38
1958 Part IV A 127
臀疗 29
*剑 Ps p
93. ,, 1960 Part IV A 130
Jayasurya, J. E. Op. Cit. P. 85.
Ceylon Sessional Papers, XXIV, 1943 Op. Cit P. 40
?罗 - , , XXIV, 1946 Op. Cit. P. 36
- X, 1956 Op. Cit. P. 8
s ag Ο Ο
Jayasuriya, J. E. Op. Cit. P. 200.

References
Arasaratnam, S, Ceylon, New Jersey, 1964.
Jayasekara, U. D. Early History of Education in Ceylon, Dept. of Cultural Affairs Colombo, 1969.
Jayasuriya, J. E. Education in Ceylon before and after Independence, 1939-1968 Colombo, Associated Educational Publishers 1969.
Jayaweera, Swarna, Religious organisation and the State in Education. Comparative Education Review (New York), 12 (2) June, 1968.
Jayaweera, Swarna, The Morgan Report, JNESCs 21, 1972.
Jayaweera Swarna, British Educational Policy in the 19th Century, Paedagogica historica, International Journal of the History of Education 9 (1), 1969,
Keay, F. E. Indian Education in Ancient and Later Times, London, 1938.
Ruberu T. Ranjit, Early British Educational Activities, Educaticn in Ceylon, 1969, Part II
Sathasivam, A, (Ed). A collection of Tamil Verse in Sri Lanka, Colombo, 1960.
Sirisena, U. D. I., Ancient Systems of Learning in Ceylon, Ceylon Today, 18 (1-6) 1970.
Somasegaram, S. U. The Hindu Tradition, Education in Ceylon (1969) Part 3.

Page 65
Bibliography (நூற்பட்டியல்)
ARIYADASA, K. D. Management of Educational Reforms in Sri Lanka. The Unesco press, Paris, 1976.
BKAS. C. SANYAL (et, el) University Education and Graduate employment in Sri Lanka. The Marga Institute, UNESCO, PARIS, COLOMBO 1983.
BARY MARK, Education and Decentralization in less developed countries. - A comment on trends, issue & problems, (1985)
DE SILVA. C. R., Education, Sri Lanka : A Survey: Ed. by K. M. D. Silva, London, Hurst, 1977.
De Silva, W. A., Chandra Gunawardena. ideational policies and change 1977-1986. Nationa Institute of Education., Sri Lanka, 1989.
DIYASENA, W. Pre-vocational Education in Sri Lanka, UNESCO-1976.
DORE, RONALD. P., The Diploma disease, Education, qualification and development, Eondon, Allen & un vin., 1976.
Education proposals for Reform-General, university and tertiary (Vocational, Technical and professional) Ministry of Education in collaboration with the Ministry of Higher Education and the Ministry of Youth Affairs & Employment 1981.
QARR "/ 2

9. Education in Sri Lanka: New Horizons. Ministry
of Education, Colombo-1972.
127
10. Educational Consultants India Limited (1989). Education and Training Sector Study, Second Interim Report. April, 1989.
11. International Labour Office, Geneva, Matching employment opportunities and expectation, a programme of action for Ceylon, Geneva 1972.
12. Jayasuriya, J. E. Education in Ceylon Before & After Independence. Associated Educational Publications, Colombo, 5.
13. Jayaweera Swarna, Education and Socio Economic Development in Sri Lanka, Comparative Education Centre, College of Education, University of Maryland-1976.
14. Jayaweera, Swarna, Education. Modern Sri Lanka : A society of Transmition; Ed by Tissa Fernando & R. N. Kearuey Sqracuse, Maxwell school of citizenship and public affairs. 1979.
15. JAYAWEERA, SW ARNA. Educational policies and change from the mid twentieth centurary to
1972. National Institute of Education, Sri Lanka, 1988,
16. Medium Term Plan for the development of Education, 1973-77. Planning and programming division, Colombo -1973.
17. Ministry of Education. (Sri Lanka) (1982) Towards relevance in education, Report of the education reforms committee, 1979.

Page 66
28
18. Ministry of Educatiola. (Sri Lanka) 1981, Proposals for Reform. Colombo. Department of Govt. Printing.
19. NEIL FERNANDO, Management for educationa
development in Sri Lanka. University of Education, Sep. 1984.
20. Sessional paper XXiv of 1943. Report of the Special Committee of Education, Ceylon Govt. press.
21. Sessional paper 1 of 1962, Interim Report of the National Education commission 1961. Govt, press. Colombo.
22. Sessional paper x of 1963-Report of the commission of inquiry on Technical Education. Govt. press. -1963
23. SUMATHIPALA, K. H. M. History of Education. .1973-Sri Lanka, Tisara, Dehiwala-Sri Lanka مهم.
Sunesco, the decentraliation of educational .1982 ,Administration, UNESCO, Banghok ܣܛܢ N White paper 1966 - Proposals for Reforms in
General and Technical Education, Govt. Press . 1966.
White paper 1964, Proposals for a National System. of Education, Govt. Press, 1964.
White paper-Government proposals for educas tional reforms 1950, Ceylon Govt. Press.
9 32
 


Page 67


Page 68

த  ைல வ ர். 1ல் ஒசாக்கா அயல் பல்கலைக்கழகம், திமா பல்கலைக் இரண்டிலும் பயின் இலங்கை இந்து ாசார இராஜாங்க Fரின் ஆலோசக ருந்து வருபவர் ட்டு கல்வி இயல் களை ஆ ழ் ந் து து வருகின்றார்.
மா. கருணாநிதி
வர் யாழ்ப்பாணம் யில் பிறந்த வர் ம்புப் ப ல் கலை க்
தில் கல்வியியல் பில் பணியாற்றும் * நவரேலியா
தத் தி ரித் துவ க் Pயின் ஆசிரி ய ர |ா s அதிபராகவும் ாற்றியவர்.