கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கை மனித உரிமைகள் நிலை 1999

Page 1
聽
娜
 

சட்டத்திற்கும் சமுகத்திற்குமான் அறநிலையம்

Page 2
இலங்கை \ }1--حہ செம்மணி N
ལུགས་ལག་ FN அறிக்கை சம்பந்தமான ό y ༦ བོད་ . Nd, . Iாகான எல்லைகளும் சில பிரதான இடங்களும் ل
- ܚܟ` ̄f
४ À 2- المسرح فيདེ་སེམས་། குறிக்கப்பட்டுள்ளன.
བ་ཅི་ இரணைதீவு r ) * கிளிநொச்சி வூ முல்லைத்தீவு
Nğ
ஃேr بہتX--سے
一、// R , ) ༦༣༽ Y ‘மிகிந்தலை ནི་
ཡོད། ( `ܓܠ o S \56)(5LT
புததளம எபரவல பொலன்னறுவை \
வாறியபொல மட்டக்களப்பு
') R -λ ^ ’ ހ,~ހ{
4.
 
 

இலங்கை மனித உரிமைகள் நிலை 1999
இந்த அறிக்கை தைமாதம் 1998 தொடக்கம் மார்கழி மாதம் 1998 வரையான காலத்துக்குரியது.
சட்டத்திற்கும் சமூகத்திற்குமான அறநிலையம் 3, கின்சி ரெறஸ் கொழும்பு 8 இலங்கை

Page 3
O சட்டத்திற்கும் சமூகத்திற்குமான அறநிலையம் ஆடி 1999
ISBN - 955-9062-56-5

இந்த அறிக்கைக்குத் தூண்டுகோலாகச் செயற்பட்ட
கலாநிதிநீலன் திருச்செல்வத்தின் நினைவிற்கு
இவ்வறிக்கை சமர்ப்பணம்
அவரின் எண்ணங்களும் கனவுகளும் தொடர்ந்தும் எங்களை மனித உரிமைகளின் நோக்கத்திற்காக
உற்சாகத்துடன் செயற்படச் செய்யும்
சட்டத்திற்கும் சமூகத்திற்குமான அறநிலையச் சபையின் தலைமை உறுப்பினரும், பாராளுமன்றத்தின் அங்கத்தவருமான கலாநிதி நீலன் திருச்செல்வம் கொடுரமான, மிலேச்சத்தனமான முறையில் தற்கொலைப் படையாளி ஒருவரினால் 29 ஆம் திகதி ஆடி மாதம் 1999 ஆம் ஆண்டு வேலைக்குச் சென்ற வழியில் கொலை செய்யப்பட்டார். கலாநிதி நீலன் திருச்செல்வம் இலங்கையில் மனித உரிமைகளை ஊக்குவிப்பதில் களைப்பின்றிச் செயலாற்றினார்.

Page 4
அதிகார எழுத்தாளர்கள்
சுருக்க நோக்கு எலிசபெத்நிசான்
தனிநபர் நாணயம் சுமுது அத்தபத்து
அவசரகால விதி குரியா விக்கிரமசிங்க
மனித உரிமைகளுக்கு நீதித்துறை மூலம் பாதுகாப்பளித்தல் சுமுது அத்தபத்து
சிறுவர்களின் உரிமைகள் மெலோஷினி பெரேரா
பெண்களின் உரிமைகள்
சேபாலி கொட்டேகொட
இலங்கையில் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான சுதந்திரம் தீபிகா உடகம
நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாத்தல் இலங்கைச் சட்டத்தின் விமரிசன பகுப்பாய்வு கிஷாலி பின்ரோ ஜெயவர்த்தன
மானசீக சேமநலன் ஈ. கே. ரொட்ரிகோ
குற்றம், மனித உரிமைகள் மற்றும் அரச பொறுப்பு சி எஸ். டத்தாத்திரேயா

ஏனைய அபிவிருத்திகள் ஜ. கே. ஸ்னோபர்
பதிப்பாசிரியர் எலிசபெத்நிசான்
நிர்வாகி டமறிஸ் விக்கிரமசேகர
ஒப்பு நோக்குனர் சுபவினோதி முத்துக்குமாரசுவாமி
மூலாதார உதவி டமறிஸ் விக்கிரமசேகர, சுழுது அத்தபத்து, திலகா பெர்னாண்டோ, ஐ. கே. ஸ்னோபா, ரதினி ஜோசப் ஜானகி தர்மசேன, இரேஷா ரத்னாயக்க, லக்ஷி விஜேசேகர, ரசிக்கா விக்கிரமசிங்க, ருக்ஷன நானயக்கார, கிரான்யா விக்கிரமசேகர, மனித உரிமைகளின் படிப்புக்கான நடேசன் நிலையம்
மதிப்பீடு செய்தவர்கள் நீலன் திருச்செல்வம், ஜே. சி வெலியமுன, ரோகான் எதிரிசிங்கா, சிராந்தனி கோபல்லாவ இன்கிரிட் செய்தி ராதிகா குமாரசுவாமி ஆர். கே. டபிள்யூ. குணசேகரா, கரிணி அமரகுரியா
மொழிபெயர்ப்பாளர் லோறன்ஸ் துரைராஜா
அட்டை திருமதிநையிமா சித்திக்
அச்சுப்பதி விற்ஸ் அசோசியேற்ஸ்

Page 5
பொருளடக்கம்
முன்னுரை
கருத்துக் கண்ணோட்டம்
சிபாரிசுகளும், முடிவுகளும்
1 தனிநபர் நாணயம்
2.
3.
அவசர கால விதி
மனித உரிமைகளுக்கு நீதிமுறை மூலம் பாதுகாப்பளித்தல்
சிறுவர்களின் உரிமைகள்
பெண்களின் உரிமைகள்
இலங்கையில் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கான சுதந்திரம்
நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாத்தல்
மானசீக சேமநலன்
குற்றம், மனித உரிமைகள் மற்றும் அரச பொறுப்புடமை
ஏனைய அபிவிருத்திகள்
19
伯
20
21
22
24
27
28
28
29
30

o'i a.த்துக்கும், சர்க்த்தி ற்கான அறநிலையத்தின் இத்திட்டம் ஐரேiபிய சர்கத்திற்கான ஆணைக்குஆவின் "ořibbřithgi difeolštiningh gólů“ நிதியுதவியுடன் நடத்தப்படுகிறது. -

Page 6

லோர்க்கும்
řLm Gmrtů. U
சட்டத்துக்கும் சர்கத்திற்துமான அறநிலையத்தின் ébgúlti.ta.ŭo ĝ8j4lifluo diftehghgfhdhfl 12 biogranddboboflebi "abblibylah titatihab golů“ நிதியுதவியுடன் நடத்தப்படுகிறது.

Page 7

O
முனனுரை
இவ்வறிக்கை மனித உரிமைகள் அந்தஸ்து குறித்த ஆய்வு மற்றும், பல்வேறு அம்சங்கள் குறித்து நிலவி வருகின்ற, நிலைமையைப் பரிசீலனை செய்யும் ஒரு தனியான வெளியீட்டுக்கான அவசரத் தேவை காரணமாகவே உருவாக்கப்பட்டது. இந்த வெளியீடு இடம்பெறுவதற்கு முன்னர் இலங்கையில் மனித உரிமைப் பிரச்சினைகளை அறிக்கையிடும் பணியை பல்வேறு அமைப்புகளும், குழுக்களும் குறிப்பிட்ட பிரச்சினைகளில் கவனஞ் செலுத்துவதன் மூலம் நிறைவேற்றின. ஆயினும் நிலைமை குறித்த ஒர் அனைத்துமடங்கும் பார்வையை வழங்கும் விதத்தில் கிடைக்கக்கூடிய பல தகவல்களை முறையாக ஒழுங்குபடுத்தியமைக்கும் முயற்சிகள் இருக்கவில்லை.
இலங்கை:மனித உரிமைகள் நிலைமை அறிக்கை,இலங்கையில் தற்போது நிலவும் மனித உரிமைகள் அந்தஸ்துக் குறித்து விபரிக்கவும், இலங்கை தனது சர்வதேசக் கடப்பாடுகளுக்கு அமைய எந்த அளவுக்குத் தனது குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதில் தனக்குள்ள கடப்பாடுகளை நிறைவேற்றியுள்ளது என்பதை மதிப்பீடு செய்யவும் முயலுகின்றது. இதனால், இந்த அறிக்கை இலங்கையில் மனித உரிமைகள் குறித்த முக்கியமான உரைகல்லாக அமைகிறது. அரசியலமைப்பு ரீதியிலான உத்தரவாதங்கள், சட்டவாக்கங்கள், மற்றும் அடிப்படையுரிமைகள் தற்போது எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பது போன்ற விடயங்களும், அவற்றில் அடங்கியுள்ள கட்டுப்பாடுகளின் தாக்கங்களும் ஆராயப்பட்டுள்ளன.
"அரசியலமைப்பினால் பிரகடனஞ் செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் அரசாங்கத்தின் சகல அங்கங்களினாலும் மதிக்கப்பட்டு, நிலை

Page 8
நாட்டப்பட்டு, முன்னெடுக்கப்படல் வேண்டும்" என்று இலங்கையின் அரசியலமைப்பு பணிப்பாணை விடுக்கின்றது. இலங்கை, பல்வேறு சர்வதேச மனித உரிமைகள் சாதனங்களுக்குக் கையொப்பமிட்டுள்ளது. அத்தோடு அதன் உள்நாட்டுச் சட்டங்கள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் அதன் சர்வதேசக் கடப்பாடுகளோடு இணங்க வேண்டும். இந்த அறிக்கை, அரசும் சட்ட நிலை நுண்ணாய்வுக்கு உள்ளாகியிருக்கும் ஏனைய அரச-சார்பற்ற செயற்பாட்டாளர்களும் தமது சர்வதேச மற்றும் அரசியலமைப்புரீதியிலான கடப்பாடுகளை மதித்து, மனித உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்வதற்கான தொடர்ச்சியான போராட்டத்தில் ஒரு சிறு படியாகும். எலிசபெத் நிசான் அவர்களால் பதிப்பிக்கப் பெற்ற இலங்கை மனித உரிமைகள் நிலைமை 1999 இத் தொடரில் 6வது அறிக்கையாகும். அது, பின்வரும் அத்தியாயங்களைக் கொண்டு விளங்குகின்றது.
தனிநபர் நாணயம் (சுமுது அத்தப்பத்து)
9 அவசரகால விதி (சூரியா விக்ரமசிங்க)
மனித உரிமைகளுக்கு நீதித்துறை மூலம் பாதுகாப்பளித்தல் (சுமுது அத்தப்பத்து)
9 சிறுவர்களின் உரிமைகள் (மெலோஷினி பெரேரா)
பெண்களின் உரிமைகள் (சேபாலி கொட்டேகொட)  ேஇலங்கையில் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான சுதந்திரம் (தீபிகா
ஊடகம)  ேநீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாத்தல் : இலங்கைச் சட்டத்தின்
விமர்சன ரீதியான பகுப்பாய்வு (கிஷாலி பின்டோ ஜயவர்த்தன) 0 மானசீக சேமநலம் (ஈ.கே. ரொட்ரிகோ) 0 குற்றம், மனித உரிமைகள் மற்றும் அரசின் பொறுப்பு(சீ.எஸ். டத்தாத்திரியா)
ஏனைய அபிவிருத்திகள் (ஐ.கே.ஸனோபர்). இந்த அத்தியாயம் சூழல் குறித்த உரிமைகள், மனித உரிமைகள், ஒருங்கு கூடல் சுதந்திரம், அபிப்பிராய வெளியீடு, மற்றும் ஊடகச் சுதந்திரம், உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர், சுகாதாரத்துக்கான உரிமை, மற்றும் தொழிலாளர் உரிமைகள், என்பவை பற்றிய பூரண விபரங்களைத் தருகின்றது. இந்த அறிக்கையில், இலங்கை கைச்சாத்திட்ட சர்வதேச சாதனங்களின் நிரலும், இலங்கையினால் ஏற்பு அங்கீகாரம் வழங்கப்படவேண்டிய
2

சாதனங்களின் நிரலும் அடங்கியுள்ளன. இந்த அறிக்கைக்கான ஓர் அட்டவணையாக 1998 இல் உயர்நீதிமன்றம் அடிப்படை உரிமை மீறல் வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய வழக்குகளின் நிரலும் இணைக்கப்பட்டுள்ளன.
அனைத்துமடங்கும் பார்வையின் பூரண வாசகமும், ஒவ்வொரு அத்தியாயத்திலும் இடம்பெறும் சிபாரிசுகளும், முடிவுகளும் இங்கு பிரசுரிக்கப்படுகின்றன.
இந்த அறிக்கை இலங்கையில் மனித உரிமைகள் மேலும் பயனுள்ள வகையில் பாதுகாத்து முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் சிவில் சமூக நிறுவனங்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் உரையாடலைத் தொடர்ந்து இலகுபடுத்த உதவுமென்பது எமது நம்பிக்கையாகும்.
சட்டத்திற்கும் சமூகத்திற்குமான அற நிலையம் கொழும்பு ஜூலை 1999

Page 9
கருத்துக் கண்ணோட்டம்
1. அறிமுகம்
1998 பெப்ரவரியில், வட - கிழக்கில் தொடரும் மோதல்களின் பின்னணியில் இலங்கை பெரிய பிரித்தானியாவிலிருந்து சுதந்திரம் பெற்ற ஐம்பதாவது ஆண்டு விழாவைக் கொண்டாடியது. இந்த மோதல் தெளிவாகவே வட-கிழக்கு மக்களின் வாழ்க்கையை மிகவும் தீவிரமாகப் பாதிக்கும் அதேவேளையில், அது தீவின் ஏனைய பகுதிகளைச் சேர்ந்த மக்களின் வாழ்விலும் பாரதூரமாகப் பிரதிபலிக்கும் ஒன்றாகியுள்ளது. தேசிய சுதந்திரதினக் கொண்டாட்டங்கள் இடம்பெறவிருந்த கண்டி நகரில் புனித தந்தமுள்ள கோவிலில் (எ.ல்.ரீ.ரீ.ஈ) தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டதெனக் கூறப்படும் குண்டுத்தாக்குதல், இந்த உண்மையைத் தெட்டத் தெளிவாக நினைவூட்டும் ஒரு சம்பவமாகும். இதன் பின்னர் அவசர காலநிலைப்பிரமாணங்களின் கீழ் எல்ரீஈ இயக்கம் தடை செய்யப்பட்டது.
தொடரும் மோதல், இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் விடயத்தில் மிகப் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. 1998 இல் மீண்டும் யுத்த முயற்சி தீவிரப்படுத்தப்பட்டதோடு, வட - கிழக்கின் பொது மக்கள் பாரிய இடம்பெயர்வுகளுக்கு ஆளாகி, மனித கெளரவம் பாரதூரமாக மீறப்பட்டு, போரிடுவோர் மத்தியில் பாரிய உயிரிழப்புகள் ஏற்பட்டன. 1998 செப்டம்பரில் மட்டும் இருபக்கத்திலும் 2000க்கும் அதிகமான போராளிகள் கொல்லப்பட்டதாக மதிப்பீடுகள் தெரிவித்தன. சித்திரவதை, நீதிமுறை சாராக் கொலைகள், மற்றும் காணாமற்போதல் என்பவை தொடர்ந்தன. இவை தனிநபர் நாணயம் என்னும்
அத்தியாயத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கையில் முழு அளவிலான மனித உரிமைகள் பாதுகாப்பில் யுத்தத்தின் பாரதூரமான தாக்கத்தை வைத்து நோக்குகையில் சமாதானத்தை உருவாக்குவதற்கான வழிமுறைகளைக் காணுவது முக்கியமானதாகின்றது. ஆயினும், 1998ல் சமாதானத்துக்கான சாத்தியப்பாடுகள் தொலைவிலேயே இருந்தன.1997 அக்டோபரில் வெளியிடப்பட்ட பொதுஜனஐக்கிய முன்னணி அரசின் (பொ.ஜ.மு.)அதிகாரப் பகிர்வு யோசனைகளை நடைமுறைப்படுத்தும் அல்லது மேலும் அபிவிருத்தி செய்யும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லைஉ

எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, தீர்வுப் பொதிக்குத் தனது எதிர்ப்பைத் தெரிவித்து, தனது சொந்த மாற்றுத் திட்டமொன்றைச் சமர்ப்பித்தது. தமிழீழ விடுதலைப் புலிகளும் அதை ஆதரித்தது போலத் தெரியவில்லை. ஆயினும், நவம்பரில் இடம்பெற்ற "மாவீரர் வாரத்தின்" போது, எல்ரீஈ தலைவர், தான் சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கத் தயாரென்று கூறியதாக அறிக்கையிடப்பட்டது. பல வெளிநாட்டு அரசாங்கங்களும் தம்மை விரும்பி வேண்டிக் கொண்டால், தாம் உதவத் தயாரென்றும் அறிவித்தன.
சமூகத்தினுள்ளிருந்தும் சில முன் முயற்சிகள் எடுக்கப்பட்டன. இதில் இலங்கை வியாபாரத் தொழிற் குழுக்களின் இணைய மொன்றும் அடங்கியிருந்தது. அவர்கள், அக்டோபரில் சமாதானத்துக்கான அம்ச நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை முன்வைத்தனர். ஐக்கிய தேசியக் கட்சியுடனும் கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டன. பொ.ஜ.மு இந்தச் சமாதான முன்முயற்சியில் கலந்துகொள்ள நான்கு கீர்த்திமிக்க நபர்களைப் பெயர் குறித்தது. ஆயினும் ஐ.தே.க ஒத்துழைக்கவில்லை.
2. மோதலும், மனித உரிமைகளும்
மோதல் காரணமாக இடம்பெயர்ந்த மக்களின் நிலைமை தொடர்ந்தும் மோசமான நிலையிலேயே இருந்து வந்தது. இது இலங்கை குறித்த ஐ.நா.பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் குழுவின் அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. வடக்கு, மற்றும் கிழக்கின் பரந்த பிரதேசங்களில் வாழும் மக்கள் பிரத்தியேகமாக இன்றும் துஷ்பிரயோகங்களுக்கு இலகுவில் பலியாகக் கூடியவர்களாக இருப்பதோடு, நாட்டின் ஏனைய பல பகுதிகளில் வாழுவோர் அனுபவிக்கும் பரந்த அளவிலான உரிமைகளைத் தாம் அனுபவிக்க முடியாத நிலையிலேயே உள்ளனர். பல இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு இருப்பிடம், கல்வி, மற்றும் சுகாதார சேவைகள் கிடைக்காத நிலையோடு, மோதல் பிரதேசங்களில் பலவந்த உடலுழைப்புக் குறித்த அறிக்கைகளும் பெருமளவில் வெளிவந்த வண்ணம் உள்ளன. அரசாங்கம், இப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில், உள்நாட்டில் இடம் பெயர்ந்தோருக்கான ஐ.நா. செயலாளரில் ஐ.நா. விசேட பிரதிநிதி பிரான்சிஸ் டெங் அவர்களின் சிபாரிசுகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

Page 10
அவர் உள்நாட்டு மோதல்களுக்குச் சமாதானத் தீர்வுகளை முன்னெடுப்பது மூலம் இடம்பெயர்வின் மூலகாரணங்களை அகற்றுவதையும், உள் நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கு அபிவிருத்தியோடிணைந்த உத்திகளை உருவாக்குவதையும் வலியுறுத்தி உள்ளார். மேலும் 1998 பெப்ரவரியில், இப் பிரதிநிதி ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு "உள்நாட்டு இடம்பெயர்வுகள் குறித்த வழிகாட்டல் கோட்பாடுகளையும்" சமர்ப்பித்தார். அவற்றில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த நபர்கள் "தமது நாட்டிலுள்ள ஏனைய நபர்களைப் போன்று பூரண சமத்துவ நிலையிலே சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சட்டத்தின் கீழான சகல உரிமைகளையும் சுதந்திரங்களையும் அனுபவிக்க வேண்டும்" என்று வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது. மேலும், ஏனைய விடயங்களோடு, உள் நாட்டில் இடம்பெயர்ந்தோர் குறித்த தேசிய அதிகார சபைகளின் குறித்துரைத்த கட்டுப்பாடுகளும், இலகுவில் மீறப்படக்கூடியவையும், இடம்பெயர்வுக் காலத்தில் பாதுகாக்கப்பட வேண்டியவையுமான குறிப்பிட்ட உரிமைகள் குறித்து தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் அதிகார பீடங்களிலுள்ளோர் உள் நாட்டில் இடம்பெயர்ந்தோர் விடயத்தில் கடைப்பிடிக்கும் கொள்கையின் சகல அம்சங்களிலும் இந்த வழிகாட்டற்கோட்பாடுகளை ஒன்றிணைத்துச் செயற்படுவார்களென்பது எமது நம்பிக்கையாகும்.
இலங்கையில் பல வருடங்களாகவே மனித உரிமைகள் நிகழ்ச்சிநிரலில் தண்டனைப் பயமின்றிக் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் குறித்த பிரச்சினை உயர்நிலையில் இருந்து வருகிறது. சில நீதிமுறை சாராக் கொலைகளிலும், காணாமற் போனோர் விடயங்களிலும் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் விசாரணைகள் வருடக் கணக்காக இழுபடுவதோடு, இறுதியில் திருப்திகரமான தீர்ப்புகள் வழங்கப்படாதநிலையே உள்ளது. ஆயினும் 1998 ஜுலையில் கிருஷாந்திகுமாரசாமி வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு பரந்த பிரசித்தத்தைப் பெற்றது. ஆறு படை வீரர்களும், ஒரு ஒதுக்குப்படை பொலிஸ்காரரும் கிருஷாந்தியையும், தாயையும், சகோதரனையும், அயல்வீட்டுக்காரர் ஒருவரையும், கொலை செய்தமைக்காகக் குற்றத் தீர்ப்புப் பெற்றனர். ஒரு திருப்புமுனைத் தீர்ப்பாக வரவேற்கப்படும் இத்தீர்ப்பு, இந்த நாட்டில் தண்டனைப் பயமின்றிக் குற்றங்கள் புரியும் கலாசாரத்தின் முடிவின் தொடக்கமாக அமையுமென்று நம்புகிறோம். தனிநபர் நாணயம் குறித்த அத்தியாயத்தில் கலந்துரையாடியது போன்று 1998 முடிவிலும் இத்தகைய ஏனைய பல வழக்குகள் விசாரணையில் இருந்தன.

தண்டனைப் பயமின்றிக் குற்றம் புரிவோர் குறித்த பிரச்சினைகளுக்கு மிக நெருங்கியதான இன்னுமொரு விடயம் உள்ளது. காணாமற் போனோர் புதைக்கப்பட்டதாகக் கருதப்படும் பாரிய மனிதப் புதைகுழிகளைச் சட்ட மருத்துவத் துறையினர் தோண்டவுள்ள விடயமே இதுவாகும். யாழ்ப்பாணக் குடாநாட்டில் செம்மணியில் பாரிய மனிதப் புதைகுழி இருப்பதாகவும், 1996 இல் காணாமல் போனோரின் நூற்றுக்கணக்கான சடலங்கள் அதில் புதைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளமை, இப் பிரச்சினைகளை மீண்டும் முன்னணிக்குக் கொண்டு வந்துள்ளன. இத்தகைய அகழ்வுகள், உயர் வாழ்க்கைத் தொழில் நிலையினர் மட்டத்தில், எஞ்சிய எலும்புக் கூடுகளைத் தோண்டியெடுத்துப் பகுப்பாராய்வுசெய்வது குறித்து ஐ.நா. வழிகாட்டல்களுக்கமைவான முறைகளைக் கையாண்டு, இதில் சம்பந்தமுறும் பல்வேறு அரசாங்க முகவர் நிலையங்களுக்கு இடையில் முறையான கூட்டிணைப்பைக் கையாண்டு உறுதிப்படுத்தும் விடயத்தில், அரசாங்கம் தன்னாலியன்ற அனைத்தையும் செய்தல் வேண்டும். கிடைக்கும் சான்றுகளுக்கும் சாட்சிகளுக்கும் போதிய பாதுகாப்புத் தரப்படுதல் வேண்டும். தேடல் முடிவுகளைப் பொறுத்து இக் குற்றச் செயல்களுக்கு பொறுப்பானோர் வகையுத்தரவு சொல்வதையும்,பலியானோரின் குடும்பங்களுக்கு நட்டஈடு மற்றும் புனர்வாழ்வு அளிப்பதையும் அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.
இனத்துவ மோதல் நிகழ்வுத் தொடர்பில் அல்லது குற்றவியல் அல்லது சிவில் விடயங்களில் விசாரணைகளின்போது இலங்கையில் தொடர்ச்சியாகப் பரந்த அளவில் கைக் கொள்ளப்படும் சித்திரவதைகள் விடயத்திலும் தண்டனைப் பயமின்றிக் குற்றம் புரியும் போக்கே, முக்கிய காரணியாகும்.இலங்கை உயர்நீதிமன்றமும், சித்திரவதைகளுக்கெதிரான ஐ.நா. குழுவும், மற்றும் உள்நாட்டு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளும், தண்டனைப் பயமின்றிச் சித்திரவதைக் குற்றங்களில் ஈடுபடுவது முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென்று குரலெழுப்பியுள்ளன. ஆயினும், இன்றுவரை சித்திரவதைக் குற்றம் குறித்து எவருக்கெதிராகவும் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்படவில்லை. அரசாங்கம் சித்தரவதைக்கெதிரான ஐ.நா. குழு மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை என்பவற்றின் சிபாரிசுளிலுள்ள ஒரு அளவிலான நடவடிக்கைகளைக் கவனத்திற்கொண்டு இப் பிரச்சினையை விரைந்தும், அனைத்துமடங்கும் விதத்திலும் தீர்க்க வேண்டும். இவை தடுப்புக்காவல் குறித்த சட்டவாக்கங்களை மீள்பார்வை செய்தல், துஷ்பிரயோகத்துக்கெதிரான சட்டக் காப்பேற்பாடுகளை முழுமையாக
7

Page 11
நடைமுறைப்படுத்தலை உறுதிசெய்தல்,பொலிசார் தலையீடற்ற சுயாதீனமான ஒரு அமைப்பு, சித்திரவதை சம்பந்தமான முறையீடுகளை விசாரணை செய்தல், பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணங்களை வலுப்படுத்தல், மற்றும் சித்திரவதைச் செயல்களில் ஈடுபட்டோரை நீதியின் முன் நிறுத்தி தண்டனை வழங்குவதை உறுதிப்படுத்துதல், என்பவற்றை உள்ளடக்குகின்றன.
இந்த மோதல், நாட்டில் ஜனநாயக நடைமுறையிலும் தனது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணத்தில் 1980களுக்குப் பின்னர் இடம்பெறும் முதல் தேர்தலாக 1998 ஜனவரியில் 17 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் இடம்பெற்றது. இது மீண்டும் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட சிவில் நிர்வாகத்தின் விதைகளைத் தூவும் அரசாங்கத்தின் முயற்சியாகவிருந்தது. ஆயினும் மேயர் திருமதி சரோஜினியோகேஸ்வரன் மே மாதத்தில் எல்ரீ யினால் அரசியல் படுகொலை செய்யப்பட்டதோடு இந்த முயற்சி தோல்வியுற்றது. அவரைத் தொடர்ந்து பதவியேற்ற திரு.பொன்னுத்துரை சிவபாலன் நான்கு மாதங்கள் கழித்து யாழ்ப்பாணம், நல்லூர் மாநகர சபை அலுவலகத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். இதுவும் எல்ரீரீஈ யினால் செய்யப்பட்டதென்பது பரவலாகக் கூறப்பட்டது. அன்று தொட்டு, மேயர் பதவி வெற்றிடமாகவே உள்ளதோடு எல்ரீfஈ யிடமிருந்து எழும் பயமுறுத்தல்கள் மத்தியில் உள்ளூராட்சி சபைகளின்
செயற்பாடுகள் பாரதூரமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
தென்பகுதியிலும், இனத்துவமோதல் ஜனநாயக நியமனங்கள் சீரழிவதற்கான சாக்குப் போக்காக அமைந்துள்ளது. 1998 ஜூனில் பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சியில் மூன்றாவது தடவையாக அவசரகால நிலை அதிகாரங்களின் கீழ் பாதுகாப்பு சம்பந்தமான விடயங்களை அறிக்கையிடுதல், தணிக்கைக்குட்படுத்தப்பட்டது. இம்முறை, ஒரு இராணுவ உத்தியோகத்தர் தணிக்கையை அமுல்படுத்தும் தகுதி வாய்ந்த அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 1998 டிசம்பரில் ஒரு புதிய தகுதி வாய்ந்த அதிகாரி நியமனம் பெற்றார். மீண்டும்,தணிக்கைப்பிரமாணங்களின் நோக்கெல்லை சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் தேசிய பாதுகாப்புக் காரணம் குறித்து தணிக்கை அமுல்படுத்தப்படக்கூடிய சட்ட நிலைத்தகவுள்ள மட்டுப்பாடுகளை மீறிச் செல்லும் ஒன்றாகவேயுள்ளது.
1998 ஆகஸ்டில், அவசர காலநிலை அதிகாரங்களை உபயோகித்து ஐந்து மாகாண சபைகளுக்கு இடம்பெறவிருந்த தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் உயர்
8

நீதிமன்றம் இது அரசியலமைப்புக்கு விரோதமானதென்று தீர்ப்பளித்தது. வடக்கில் ஒரு தீர்க்ககரமான தாக்குதலில் இராணுவம் ஈடுபட்டிருந்த வேளையில் தேர்தல்கள் வைப்பதற்கு அவசியமான பாதுகாப்பை வழங்க முடியாதென்று அரசாங்கம் கூறியிருந்தது. ஆகஸ்ட்டில் நாடு முழுவதும் அவசரகாலநிலை மீண்டும்பிரகடனஞ் செய்யப்பட்டது.
அவசர காலநிலை அமுலிலுள்ள பிரதேசங்களில் மாற்றங்கள் ஏற்படும் போது அதன் தார்ப்பரியங்கள் அவசரகால நிலை குறித்த ஒரு முக்கிய பிரச்சினையாகும். உதாரணமாக, கைதுகள், மற்றும் தடுத்து வைத்தல்கள் குறித்த பிரமாணங்கள் அவசரகால நிலை, நாட்டின் குறித்துரைத்த பிரதேசங்களில் மட்டும் நடைமுறையிலிருந்த வேளையில் அறிமுகஞ் செய்யப்பட்டவையாகும். அவை, அப் பிரதேசங்களில் மட்டுமே அமுல்படுத்தப்பட முடியும். இப் பிரதேசம் விஸ்தரிக்கப்படும்போது, இப்பிரமாணங்கள் மீண்டும்பிரகடனஞ் செய்யப்படாவிடில் அவற்றின் நிலை என்ன? அவசரகால நிலை, நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு விஸ்தரிக்கப்படும் போது தற்போதுள்ள விதிமுறைக்கு மாறாக, புவியியல் எல்லைகளுக்கு அப்பாலும் அமுல்படுத்தப்படுகின்றது. இது நீதிமன்றங்களினால் தீர்மானிக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகவுள்ளது. பொது மக்கள், மற்றும் சட்ட அறிஞர்கள் பல வருடங்களாக இது குறித்து முறையீடு செய்தும் இந்த விதிப் பிரமாணங்களைப் பரிசீலனை செய்ய முடியாதிருப்பது,இந்த விதிப்பிரமாணங்கள் குறித்த இன்னுமொரு நீண்ட காலப்பிரச்சினையாகும். இவ்வாறாக, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இச் சட்டம் என்ன கூறுகின்றதென்பதை அறிந்து கொள்வது கஷ்டமாகவுள்ளது.
3. நீதித்துறையும், மனித உரிமைகளும்
மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் உயர்நீதிமன்றத்தின் நீதித்துறைச் சுதந்திரம் நீதி முறைச் செயற்பாடு குறித்த ஒரு நல்ல விடயமாகவுள்ளது. உயர் மட்டங்களில் யதார்த்த நிலைச் சுயாதீனம் இருப்பதையும் இது காட்டி நிற்கிறது. இதற்கு முந்திய அறிக்கைகள் அடிப்படையுரிமைகளைத் துடிப்பாகப் பாதுகாப்பதில் உயர்நீதிமன்றம் வகித்த முக்கியமான பாத்திரங்குறித்து வலியுறுத்தியிருந்த போதிலும், மனித உரிமைகள் நிலைமை அறிக்கையொன்றில், நீதித்துறை சார் சுதந்திரம் குறித்த பிரச்சினை நுண்ணாய்வுசெய்யப்பட்டது, இதுவே முதல் தடவையாகும். நிச்சயமாகவே
9

Page 12
இலங்கையில் நீதித்துறை சார் சுதந்திரத்தை மேம்படுத்தும் நிறுவன ரீதியான சீர்திருத்தங்களுக்கான தேவையும், சாத்தியமும் உள்ளன. ஆயினும், இலங்கையின் நீதித்துறை தனது சுதந்திரம் குறித்து மேலும் அதிகமாக கரிசனையுடன் செயல்பட்டு வருகின்றது. பாரதூரமான நிறுவன ரீதியான குறைபாடுகள் இருந்த போதிலும் நீதித்துறைப் பதவியில் ஒருவர் தமது சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்வது, நீதிமுறை சார் விழுப்பத்தின் உச்சிக்கே செல்வதாகும்.
மனித உரிமை மீறல்களுக்குப் பலியானோருக்குப் போதிய நிவாரணங்கள் உள்ளனவென்பது, இதன் கருத்து ஆகாது. அது உண்மையன்று. அடிப்படையுரிமைகள் குறித்த தீர்ப்புகளில் உயர் நீதிமன்றம் எவ்வளவு தான் நேர்மையாகச் செயலாற்றிய போதிலும், அவற்றினால் விரும்பிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. சித்திரவதை குறித்த வழக்குகள் நீதிமன்றத்தின் முன்பாகத் தொடர்ந்தும் கொண்டுவரப்படுகின்றன. மற்றும் சட்டவிரோதமான முறையில் தடுத்துவைத்தல், ஏனைய உரிமை மீறல்கள் தொடருகின்றன. 1997இல் தாபிக்கப்பட்ட மனித உரிமைகள் ஆணைக்குழு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அதன் பணிப்பாணை இன்னமும் நிறைவேற்றப்படாத ஒன்றாகவேயுள்ளது. "தனிப்பட்ட நிவாரணங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்வது முக்கியமானது, ஆயினும் அது போதாது. அதைச் செயற்படுத்துவதற்குத் தனிப்பட்டோர் முறைப்பாடுகளில் தங்கி நிற்காத ஒரு பயனுறுதியுள்ள வழிமுறையமைப்பு அவசியமாகும்."
வேறு அம்சங்களிலும், நீதி முறைமை எப்பொழுதுமே மனித உரிமைகளைப் பாதுகாக்கும் விதத்தில் செயற்படுவதாகத் தெரியவில்லை. பாரதூரமான மனித உரிமை மீறல் குற்றமிழைத்தோரெனச் சந்தேகிக்கப்படுவோரின் வழக்கு விசாரணைகளில் இடம்பெறும் மிக நீண்ட தாமதங்களேயாகும். குறிப்பாக, ஏற்கனவே கூறப்பட்டுள்ள வேறு வழக்குகளில்கூட, தாமதங்கள் மிகச் சாதாரணமானவை யாகவுள்ளன. உண்மையில், கீழ்மட்டங்களிலான நீதிசார் முறைமை பல அம்சங்களில் நீதியை வழங்க முடியாத ஒன்றாகவே கணிக்கப்படுகின்றது.
10

4. தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான
சுதந்திரம்
கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் குறித்து வாக்களிக்கப்பட்ட அனேகமான சகல சீர்திருத்தங்களைப் போலவே, தகவல் சுதந்திரம் குறித்த சட்டவாக்க முயற்சிகள் தேக்க நிலையிலுள்ளன. இலங்கையில் ஒரு திறந்த, பன்மைத்துவ ஜனநாயகத்துக்கான சூழலை உருவாக்குதெனில், அரசாங்கம் இவ்விடயத்தில் விரைந்து செயற்படுவது முக்கியமானதாகும். அதற்குப் பதிலாக, இந்த வாழ்வாதாரமான பிரச்சினைகள் எந்தவித தெளிவான நோக்கமுமற்ற பாராளுமன்றத் தெரிவுக்குழுச் செயல்முறையொன்றில், வெகு நீண்ட காலமாகச் சிக்கியுள்து.
5. குற்றச் செயல்களும், மானசீக சேமநலனும்
குற்றச் செயல்கள் இலங்கையில் ஒரு பாரிய சமூகப் பிரச்சினையென உணரப்பட்ட போதிலும், அது அனேகமான வேளைகளில் ஒரு மனித உரிமைச் சட்டத்துள் பரிசீலிக்கப்படாத நிலையிலேயே உள்ளது. இப்பாகத்திலுள்ள குற்றச் செயல்கள் குறித்த அத்தியாயம், இதைச் செய்யவே முயலுகின்றது. இப்பிரச்சினையைச் சரியான முறையில் கையாளுவதெனில் குற்றவியல் நீதிமுறைமையின் சகல அம்சங்களும் பூரணமாகத் திருத்தியமைக்கப்படுதல் வேண்டும் என்பதே, முடிவாகும். அறிக்கையில், இறுதியாக இலங்கையின் மானசீக சேமநலன் சேவைகள் குறித்த அறவே போதாத ஏற்பாடுகள் பரிசீலனை செய்யப்பட்டுள்ளன. பல வருட காலமாகப் பல்வேறு மானசீக சேமநலன் திட்டங்கள் வகுக்கப்பட்ட போதிலும், அவை நடைமுறைப் படுத்தப்படவில்லை. நோயாளர்கள் காவலில் இருக்கவேண்டுமென்ற உணர்வை விட, அவர்களின் உரிமைகளை மதிக்கும் அடிப்படையிலமைந்த விசேட சேவைகளை வழங்குவதற்கான தேவை இருந்த போதிலும், அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் அது ஒர் உயர் முன்னுரிமை விடயமாகத் தோன்றவில்லை.
11

Page 13
6. சர்வதேச அபிவிருத்திகள்
1998 காலப்பகுதியில் இலங்கை எவ்விதமான சர்வதேச மனித உரிமை சாதனங்களையும் அங்கீகரிக்கவில்லை. 1998 இல் சிறுவர் உரிமை குறித்த ஆணைக்குழுவுக்கு அது அறிக்கையிடவேண்டியிருந்த போதிலும் அவ்வாறு செய்யவில்லை. ஆயினும், பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் குறித்த ஐ.நா.ஆணைக்குழுவுக்கும், சித்திரவதைக்கெதிரான ஐ.நா. ஆணைக்குழுவுக்குமான அரசாங்கத்தின் அறிக்கைகள் 1998 காலப்பகுதியில் நுண்ணாய்வு செய்யப்பட்டு, மே மாதத்தில், சிறுவர் மற்றும் ஆயுதமோதல்களுக்கான ஐ.நா.பொதுச் செயலாளரின் விசேட பிரதிநிதி இலங்கைக்கு விஜயம் செய்தார்.
6.1 பொருளாதார, சமூக, மற்றும் கலாசார உரிமை
களுக்கான ஐ.நா.குழு
பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் குறித்த சர்வதேசப் பொருத்தனை சம்பந்தமான இலங்கையின் இணக்கச் செயற்பாடுகளை 1998 ஏப்ரல் மாதத்தில், இது குறித்த ஐ.நா.குழு நுண்ணாய்வு செய்தது. பொருளாதார, சமூக மற்றும கலாசார உரிமைகளுக்கான குழு, தனது இறுதி அவதானிப்புரைகளில் சர்வதேச மனிதாபிமான முகவர்நிலையங்களோடு இலங்கையின் ஒத்துழைப்பு குறித்தும், இதே விதமான வருமான வீதக் குழுவிலுள்ள ஏனைய நாடுகளோடு ஒப்பிடுகையில், உயர்வான மனித அபிவிருத்திச் சுட்டி பாராட்டுத் தெரிவிப்பதாகக் கூறியது. அரசாங்கத்துக்கும், எல்ரீfஈ யினருக்குமிடையில் தொடரும் மோதல்கள், தமது பிரதான அக்கறைக்குரிய விடயமாகுமெனக் குறிப்பிட்ட இக்குழு, வட-கிழக்கு குறித்த புள்ளிவிபரத் தகவல்கள் அரசாங்க அறிக்கையில் இடம்பெறாமை குறித்து தனது கவலையைத் தெரிவித்தது. மோதல் காரணமாக இடம்பெயர்ந்த இலட்சக்கணக்கானோரின் அவலங்கள் குறித்தும், காப்பிடங்களிலுள்ள இடம்பெயர்ந்த பெண்களும், சிறுவர்களும் சரியான உணவின்றித் துன்பமுறுவது, மற்றும் அரசாங்கம் உணவு விநியோக நிறுத்தத்தை ஒர் ஆயுதமாகப் பாவிப்பது பற்றிய அறிக்கைகள் குறித்தும் குழு பெரும் கவலையைத் தெரிவித்தது.
2

குழுவின் பிரதான கரிசனைக்குரிய விடயங்களில் இரண்டாவதாக இடம்பெற்றது, இலங்கையில் வசிக்கும் 85,000, சமீப கால இந்திய வம்சாவளித் தமிழர்களின் நிச்சயமற்ற நிலை குறித்த பாரபட்ச நிலையும் திருமணம் மற்றும் வாரிசுரிமை, குறித்த நியதிச் சட்டங்கள், மற்றும் வழமைச் சட்டங்களிலுள்ள ஏற்றத் தாழ்வுகளுமாகும். பெண்கள் மற்றும் சிறுபான்மைக் குழுக்கள், வேலைவாய்ப்பு விடயத்தில் பாரபட்சங்களுக்கெதிரான வழிமுறையமைப்புகள் இல்லாமையையும் குழு சுட்டிக் காட்டியது.
பெண்கள், மற்றும் சிறுவர்கள், குழுவின் பிரதான கரிசனைக்குரிய மூன்றாவது விடயமாக அமைந்தனர். சிறுவர்களைப் பொறுத்தவரையில், இலங்கையில் சிறுவரை வேலைக்கமர்த்துதல் குறித்த சட்டங்கள் பயனுறுதியுள்ள வகையில் நடைமுறைப் படுத்தப்படுவதில்லையென்பதையும், இலங்கைச்சிறுவர்கள் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளின் பாலியல் ரீதியான தொல்லைக்குள்ளாவதையும், குழு சுட்டிக் காட்டிக் கண்டனம் தெரிவித்துள்ளது. அரசு இப்பிரச்சினையின் பாரதூரங் குறித்த விபரமான தகவல்களையோ, இதை எதிர்த்துப் போராடுவதில் எடுக்கப்படும் முயற்சிகள் குறித்து திருப்திகரமான விளக்கத்தையோ தராமை குறித்து, குழு ஆழ்ந்த கவலையைத் தெரிவித்தது. மேலும், வேலை தேடி வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்த பெண்களின் குழந்தைகள் மீதான பாதகமான பாதிப்புக் குறித்து மதிப்பீடு செய்வதற்கு அரசாங்கம் எவ்வித தீவிர முயற்சியும் எடுக்காதது குறித்தும், பொருத்தமான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது குறித்தும், குழு கவலை தெரிவித்தது. இலங்கையில் நிலவும் உயர்வான இளைஞர் தற்கொலை விகிதத்தைப் பொறுத்த வரையில், உறுப்புரை 19க்கமைய குடும்பத்தைப் பாதுகாக்கும் கடப்பாடுகளிலிருந்தும், உறுப்புரை 12 க்கமைய இயன்றளவுக்கு உயர்வான உடல் மற்றும் மானசீக சேமநலன்களை எட்டுவதற்கான நடவடிக்கைகளை
13

Page 14
6.2
எடுக்கும் கடப்பாட்டிலிருந்தும், அரசு தவறிவிட்டது குறித்து, குழு தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியது.
சித்திரவதைக்கெதிரான ஐ.நா. குழுவின் அறிக்கை
1998 மே மாதத்தில் சித்திரவதைகளுக்கெதிரனா ஐ.நா. குழு, ஐ.நா சித்திரவதைப்பொருத்தனையோடு இலங்கை எவ்வளவுதூரத்துக்கு இணங்கியொழுகின்றது என்பது சம்பந்தமான நுண்ணாய்வைப் பூர்த்திசெய்தது. கடந்த கால, நிகழ்கால, மற்றும் எதிர்கால சித்திரவதைச் சார்த்துதல்கள் அனைத்தும் சுயாதீனமான, பயனுறுதியுள்ள வகையில் விசாரிக்கப்பட்டு, குற்றமிழைத் தவர்களுக்கு எதிராக, உடனடியான குற்றவியல் வழக்குகளும், ஒழுக்காற்று நடவடிக்கைகளும் தொடரப்படவேண்டுமென்று, குழு கோரியது. தண்டனைப் பயமின்றிக்குற்றமிழைத்தல் சகித்துக் கொள்ளப்படல் ஆகாது. நீதி வழங்குவதில், தாமதங்கள் குறைக்கப்படுதல் வேண்டும். உயர்நீதிமன்றம் தொடர்ச்சியாக எச்சரிக்கைகள் விடுத்த போதிலும், பாதிக்கப்பட்டோருக்கு நட்ட ஈட்டுத் தீர்ப்புகளை வழங்கியபோதிலும், இதுவரையில் மிகச் சொற்பமான குற்றவியல் வழக்குகளும், ஒழுக்காற்று நடவடிக்கைகளுமே இடம்பெற்றிருப்பது குறித்துக் குழு மிகவும் ஆழமான கவலையை வெளியிட்டது. அவசர கால விதிப் பிரமாணங்களின் கீழ் சித்திரவதை மூலம் பெறப்படும் ஒப்புதல் வாக்குமூலங்களின் ஏற்புடைய கருத்து குறித்தும், அது கவலை தெரிவித்தது. தொடரும் இனத்துவ முரண்பாடு நாட்டில் சித்திரவதைப் பொருத்தனையை நடைமுறைப்படுத்துவதில் தடங்கல்களை ஏற்படுத்தவதாகக் கூறப்பட்டாலும், பயங்கரவாதம் சித்திரவதைச் செயல்களுக்கு ஒரு சாட்டாக ஏற்றுக் கொள்ளப்பட முடியாது என்பதை வலியுறுத்தியது.
14

6.3 ஐ.நா. செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதியின் இலங்கை விஜயம்
சிறுவர் மற்றும் ஆயுதமோதல் குறித்த ஐ.நா.செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதி ஒலாரா ஒட்டுண்ணு, ஆயுத மோதல்களில் சிறுவரை உபயோகிக்கும் விடயங்களை விசாரணை செய்வதற்காக 1998 மே மாதத்தில் இலங்கைக்கு விஜயம் செய்தார். அவர், அரசாங்கத்தின் பிரதிநிதிகள், மனிதாபிமான முகவர்நிலையங்கள், பாதிப்புற்ற பிரதேசங்களிலுள்ள உள்ளூராட்சி உத்தியோகத்தர்கள், மற்றும் எல்ரீரீஈ அமைப்பினால் நியமிக்கப்பட்ட இரு சிரேஷ்ட பிரதிநிதிகள் என்போரைச் சந்தித்து உரையாடினார். அவரது விஜயமும், மோதலில் ஈடுபட்டுள்ள இரு சாராரும் அளித்த வாக்குறுதிகளும் சிறுவர் உரிமைகள் குறித்த அத்தியாயத்தில் கலந்துரையாடப்பட்டன. 18 வயதுக்குக் குறைந்த சிறுவர்களைப் போரில் ஈடுபடுத்துவதில்லையென்றும், 17 வயதுக்குக்குறைந்த சிறுவர்களைப் படைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதில்லையென்றும் எல்ரீரீஈ அமைப்புஅவருக்களித்தவாக்குறுதி, முக்கியமான வொன்றாகும். மேலும், வேறு விடயங்களோடு, எல்ரீஈ அமைப்பு நாடு முழுவதிலுமுள்ள ஜனத்தொகையை இலக்கு வைக்கும் தமது உத்திகள், தந்திரோபாயங்களை, மீள்பார்வை செய்வதாகவும் வாக்களித்தனர்.
7. (plg. 6) :
எப்பொழுதும் போலவே, இவ்வறிக்கையின் நோக்கம் மீள்பார்வைக்குரிய வருடத்தில் நாட்டில் ஒரு பரந்த அளவிலான மனித உரிமைகள் நிலைமை சம்பந்தமான ஒரு பொழிப்பை வழங்கி, விவாதத்துக்கு உணர்வூக்கமளித்து, ஆக்கபூர்வமான சீர்திருத்தங்கள் குறித்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகும். அரசாங்கம் கொள்கை வகுக்கும் சகல விடயப் பரப்புகளிலும் மனித உரிமைகளுக்கு மேலும் அதிகமான முன்னுரிமை வழங்குவதோடு, மனித உரிமைகள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள சகலரும் இப்பிரச்சினைகள், கட்சி, அரசியல் பேதங்களுள் அகப்படுவதை தடுக்க உறுதிசெய்தல் வேண்டும். சீர்திருத்தங்கள் இடம்பெற்றுள்ள
15

Page 15
விடயப் பரப்புகளில் பயனுறுதியுள்ள சீர்திருத்தங்கள் அனைத்தும் செய்யப்பட்டு விட்டனவென்று சிந்திக்கும் தவறையும் நாம் இழைத்து விடக் கூடாது. சட்டவாக்கத்தில் மாற்றங்களும், புதிய நிறுவனங்களை உருவாக்குவதும் உண்மையான சீர்திருத்தம் குறித்த நீண்டகாலச் செயல்முறையின் முக்கியமான பகுதிகளாகும். அவை, மக்களின் வாழ்க்கைத் தரங்களை மேம்படுத்தும் உண்மையான மாற்றத்துக்கான உந்து சக்தியை வழங்குவதெனில், சட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கும்,நிறுவனங்கள், முறையாக மூலவளங்கள் வழங்கப்பட்டு வலுவளிக்கப்படுவதற்கும் அர்ப்பண உணர்வு மிக்க தொடர்ச்சியான நிலைமாறா முயற்சி அவசியமாகும். உதாரணமாக, சிறுவரைப் பாதுகாக்கும் சட்டங்கள் இன்னமும் கடுமையாக அமுல்படுத்தப்படுதல் வேண்டும், இல்லையேல் அவற்றினால் எந்தத் தாக்கமும் ஏற்படப் போவதில்லை. மனித உரிமைகள் ஆணைக்குழு போன்ற புதிய நிறுவனமொன்றுக்கு முறையாக மூலவளங்கள் அளிக்கப்பட்டு, அதிகாரம் வழங்கப்படுவதோடு, அது தனக்கு வழங்கப்பட்ட முழு அளவிலான பொறுப்புக்களை பயனுறுதியுள்ள வகையில் நிறைவேற்றுவதற்கு அர்ப்பணவுணர்வு கொள்ளுதல் வேண்டும்.
இந்த அறிக்கை, விவாதத்துக்கு உணர்வூக்கமளித்து, இலங்கையில் வாழும் சகலரினதும் நன்மை கருதி, மனித உரிமைப் பிரச்சினைகளின் காட்சித் தோற்றத்தை உயர்வாக்குவதற்கு உதவுமென்று நம்புகிறோம். ஆவணங்களை வழங்குதல், மனித உரிமைப் பிரச்சினைகளின் பகுப்பாய்வு, பொதுமக்கள் விழிப்புணர்வு, மற்றும் சீர்திருத்தங்களை அதிகரித்தல், அரசுக் கொள்கை, மற்றும் அதை நடைமுறைப்படுத்தலில் விழிப்புணர்வு போன்ற விடயங்களில், சிவில் சமூக அமைப்புகளின் பாத்திரம் வாழ்வாதாரமான ஒன்றாகும். ஆயினும், இறுதி ஆய்வில் சகல கொள்கை வகுப்பிலும், நடைமுறையாக்கத்திலும், மனித உரிமைகளை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். பெண்கள், மற்றும் சிறுவர்கள் குறித்த விவாதங்கள், மற்றும் சீர்திருத்தங்கள் உட்பட, சில குறிப்பிட்ட கொள்கை விடயப் பரப்புகளில் உரிமைப் பிரச்சினைகளில் அதிகரித்து வரும் விழிப்புணர்வை நாம் அறிந்துள்ளோம். ஆயினும், இவ்வறிக்கை கூறுவது போன்று, இன்னமும் செய்யப்பட வேண்டியது, அநேகம் உள்ளது.
பிரான்சீஸ் டெங், உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் குறித்த ஐ.நா. செயலாளர்
நாயகத்தின் விசேட பிரதிநிதி, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 52வது
அமர்வில் சமர்ப்பித்த அறிக்கை. ஈ/சீஎன்4/1996/52(1996 பெப்ரவரி 22).இலங்கை
16

குறிப்புரை
மனித உரிமைகள் நிலைமை 1995 (சட்டம் மற்றும் சமூக நம்பிக்கைப் பொறுப்பு, கொழும்பு 1996) அத்தியாயம் X ஐயும் பார்க்கவும்.
மனித உரிமைகள், மற்றும் அடிப்படை சுதந்திரங்கள் என்பவற்றை மேலும் முன்னெடுத்து, ஊக்கப்படுத்துதல் - மனித உரிமைகள், பாரிய தொகையினர் வெளியேற்றம், மற்றும் இடம்பெயர்ந்த நபர்கள் குறித்த ஆணைக்குழுவின் நிகழ்ச்சித் திட்டம் மற்றும் பணிமுறைகள் உள்ளடங்கலாக ஈ/சீஎன் 4/1998/53/மேலதிக 2. 1998 பெப்ரவரி 11.
(இவை, வழிகாட்டல்கள் சட்டம் சாரா, தன்னிச்சையான, மற்றும் உடனடி மரண தண்டனை நிறைவேற்றம் என்பவற்றைப் பயினுறுதியுள்ள வகையில் தடுத்தல், மற்றும் விசாரணை செய்தல் குறித்த கைநூலிள்ள வழிகாட்டல்களாகும். ஐ.நா.வினால் வெளியிடப்பட்டviஅத்தியாயத்தைப் பார்க்கவும்)
"கடந்த கால மீறல்களின் விசாரணை"இலங்கை மனித உரிமைகள் நிலைமை 1994 (சட்ட, மற்றும் சமூக நம்பிக்கைப் பொறுப்பு கொழும்பு, 1995)
(சர்வதேச மன்னிப்புச் சபை, இலங்கை தடுப்புக் காவலின்போதான சித்திரவதை, சம சுட்டி எஸ்ஏ 37/10/99, 1999 ஜூன்)
(அவசர கால நிலை விதி, அத்தியாயம் 1 ஐயும், ஏனைய அபிவிருத்திகள் குறித்து அத்தியாயம் X ஐயும் பார்க்கவும்.
(பொருத்தனை உறுப்புரைகள் 16 மற்றும் 17 இன் கீழ் அரசுகளாற் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளைச் சீர்தூக்கிப்பார்த்தல்.
பொருளாதார, சமூக, மற்றும் கலாசார உரிமைகள் குறித்த ஆணைக்குழுவின் இறுதி அவதானிப்புரைகள் - இலங்கை, "ஈ/சீ, 12/1/மேலதிக 24, 1998 மே 13.
(இவ்விடயம் குறித்த மேலதிக விபரங்களுக்கு இலங்கை மனித உரிமைகள் நிலைமை 1998. "கருத்துக் கண்ணோட்டம்" (சட்டம் மற்றும் சமூக நம்பிக்கைப் பொறுப்பு, கொழும்பு-1998) பக்கம் 3-6 ஜப்பார்க்கவும்
17

Page 16
("சித்திரவதைகளுக்கெதிரான குழு, இலங்கை அறிக்கை குறித்து வழங்கிய முடிவுகளும், விதந்துரைப்புகளும்" எச்.ஆர்/சீஏரீ/98/24/1998 மே 19,
("எல்எஸ்ரீ மீள்பார்வையில் மீள் பிரசுரம் செய்யப்பட்ட அறிக்கையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பகுதிகள். பாகம் 9, வெளியீடு 133 (சட்டம் மற்றும் சமூக நம்பிக்கைப் பொறுப்பு, கொழும்பு, 1998 நவம்பர்) பக். 37
(சிறுவர், மற்றும் ஆயுதமோதல் குறித்த செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதியின் அலுவலகம், பத்திரிகை அறிக்கை, எஸ்ஆர்எஸ்ஜி - சீஎசீ /Sigi/4, 1998 GLO 28
பெண்கள் சட்டம், மற்றும் அபிவிருத்திகுறித்த ஆசியா பசுபிக் அரங்கு/சட்டம் மற்றும் சமூக நம்பிக்கைப்பொறுப்பு
பெண்களுக்கெதிரான வன்முறை குறித்த ஐ.நா. விசேட அறிக்கையாளருடன் பிராந்திய கலந்தாலோசனை.
இலங்கை 1999 ஆகஸ்ட் 21-22")
18

சிபாரிசுகளும், முடிவுகளும்
1. தனிநபர் நாணயம்
பாதுகாப்புப் படையினர், தமது நடத்தையில் மேலும் பொறுமையைக் கடைப்பிடித்து, சர்வதேச மனிதாபிமான நியமங்களையொட்டி ஒழுகுவது போலத் தோன்றிய போதிலும், சிவிலியன் மரணங்கள் குறைந்துள்ளதாக ஒருவர் வாதிட முடியுமென்ற போதிலும், மீறல்கள் இன்னமும் இடம்பெற்றுள்ளன (சர்வதேச மனிதாபிமான நியமங்கள் குறித்து பாதுகாப்புப்படையினருக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது) மறுபுறத்தில், எல்.ரீ.ரீ.ஈ அதிகரித்த பலத்தைப் பிரயோகிப்பது, தகவல் வழங்குவோரைக் கொல்லுவது, மற்றும் சிறுவர்களைப் போரில் ஈடுபட ஆட்சேர்ப்புச் செய்வது போன்ற விடயங்களைத் தொடர்ந்தன.
இந்த மோதலில் ஈடுபட்டுள்ள கட்சியினர், சிவிலியன்களையும், சிவிலியன்களுக்குரிய இடங்களையும், பிரத்தியேகமாக வணக்கத்தலங்கள் மற்றும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் தாக்காதிருக்க வேண்டும். அவர்கள் மனிதாபிமானக் கோட்பாடுகளுக்கெதிராகப் பழிவாங்கும் தாக்குதல்களை நடத்துவதிலிருந்து விலகியிருத்தல் வேண்டும்.
ஆட்கள் காணாமல் போகுதல், மற்றும் சித்திரவதை, என்பன தொடருவது கவலைக்குரிய ஒரு விடயமாகும். துல்லியமான தகவல்கள் இல்லாமையால் அவற்றின் மீள் திறனை மதிப்பீடு செய்வது கஷ்டமாகவுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமுள்ள புள்ளிவிபரங்களும்,உறுப்புரை1இன் கீழ் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மனுக்களின் தொகையும் சித்திரவதைகள் இன்னமும் இடம்பெறுவதையே காட்டுகின்றன. சட்டமா அதிபர், இறுதியில், 1994ம் ஆண்டின் சித்திரவதைக்கெதிரான உடன்பாட்டுச் சட்டத்தின் கீழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கெதிராக ஏழு குற்றச் சாட்டுதல்களைச் செய்துள்ளமை தெம்பளிப்பதாகவுள்ளது. உயர் நீதிமன்றம், இவர்களுக்கெதிராக நஷ்ட ஈட்டுக் கொடுப்பனவுத் தீர்ப்புகளை வழங்கியுள்ளது. இது சார்த்துதல் செய்யப்பட்ட சித்திரவதை, மற்றும் கொடுரமாக நடத்துதல் குறித்த நிகழ்வுகளின் எண்ணிக்கையில், ஒரு சிறு விகிதாசாரமாகவே இருந்த போதிலும், சட்டவாக்கம் இடம்பெற்று ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னரே குற்றஞ் சுமத்துதல் இடம்பெற்ற போதிலும், இந் நடவடிக்கை, இலங்கையில் தண்டனைப் பயமின்றிச் செயற்படும்
19

Page 17
கலாச்சாரத்தை இல்லாதொழிப்பதற்குப் பங்களிப்புச் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. அரசாங்கம், எந்தச் சூழ்நிலையின் கீழும் தண்டனைப் பயமின்றிச் செயற்படுதல் சகித்துக் கொள்ளப்படமாட்டாதென்னும் தெளிவான செய்தியை விடுத்தல் வேண்டும்.
நாம், எமது முந்திய அறிக்கைகளிற் செய்திருந்த விதந்துரைப்புக்களை இங்கு மீள வலியுறுத்துதல் வேண்டும். ஆயுதப்போராட்ட நிகழ்வுத் தொடர்பில் பல மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவது இரகசியமானவிடயமல்ல. இனப்பிரச்சினைக்கு ஒரு சமாதானத் தீர்வு காணப்படாத வரையில் இந்த மீறல்கள் தொடர்ந்தும், இடம்பெறுவதோடு, உள்நாட்டில் இடம்பெயர்வோர் தொடர்ந்தும் பல்வேறு
கஷ்டங்களுக் உட்படுவர்.
மனித உரிமைகளின் பாதுகாவலன் என்ற வகையில் அரசு, குறிப்பாகப் பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கைகள் உட்பட்ட அதன் உபநிலைக் கிளைகளும் மனித உரிமைகளை மதித்து, ஒளிவுமறைவின்றிக் செயற்படுவதை உறுதிசெய்தல் வேண்டும். மனிதஉரிமைகள் குறித்த அடிப்படைநியமங்களையும் மனிதாபிமானச் சட்டங்களையும் மீறுவோர், கடுமையாகத் தண்டிக்கப்படுதல் வேண்டும்.
1998ம் ஆண்டு,சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தை அங்கீகரித்த ஐம்பதாவது ஆண்டு நிறைவைக் குறித்தது. இது அதன் ஏற்பாடுகள் குறித்து ஆழமாகச் சிந்திக்கக்கூடிய ஒரு தருணமாகும். அது குறித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட அர்ப்பணப் பொறுப்புணர்வுகள், கடதாசிக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட மாட்டாது என்று மக்களுக்கு வாக்குறுதி அளிக்கும் தருணமும் இதுவேயாகும்.
2. அவசர கால விதி
1998ம் ஆண்டின்போது, பெரும்பாலும் அதற்கு முன்பிருந்த நிலைமையே காணப்பட்டது. ஐந்து மாகாண சபைத் தேர்தல்கள் பின்போடப்பட்டமை, மற்றும் எல்.ரீ.ரீ.ஈ தடை செய்யப்பட்டமை போன்ற ஒரு சில புதிய விடயங்கள் இருந்தன. சென்றவருடத்தில் நடைமுறையிலிருந்த அவசரகாலப்பிரமாணங்கள் நீக்கப்படாமல், தொடர்ந்தன.
20

அவசர கால ஒழுங்குப் பிரமாணங்களின் கீழ், கைது செய்தல், மற்றும் தடுத்து வைத்தல் குறித்து வழங்கப்பட்ட நீதித்துறைத் தீர்ப்புகள் ஏக காலத்தில் ஆறுதலளிப்பவையாகவும், பீதியளிப்பவையாகவுமிருந்தன. அதிகாரத் தரப்பினர் பல்வேறு வகையான சூழ்நிலைகளின் கீழ் நபர்களின் சுதந்திரத்தைப் பறித்தெடுப்பதை நியாயப்படுத்தும் வகையில் முன்வைத்த சந்தேகத்துக்கிடமான வாதங்களை உயர்நீதிமன்றம் தொடர்ந்தும் நிராகரித்தமை ஒரு புறத்தில் தைரியமளிப்பதாகவிருந்தது. ஆயினும், இந்த நிகழ்வுகளினால் பாதிக்கப்பட்டோர் நீதிமன்றத்திற்கு செல்லக் கூடியதாகவிருந்தது ஒரு சில சந்தர்பப்ங்களில் மட்டுமேயாகுமென்பது, மிகவும் வேதனையளிக்கக்கூடிய ஒரு உண்மையாகும். அவை ஒரு பொதுவான மனப்பான்மை, மற்றும் நடைமுறையை எந்த அளவுக்குப் பிரதிபலிக்கின்றன என்பது குறித்த ஒரு சஞ்சலத்தையும் மேற்பரப்பின் கீழ் இன்னும் எத்தனை உண்டோ என்னும் அச்சத்தையும் ஏற்படுத்துபவையாக உள்ளன. தனிப்பட்டோர் விடயங்களில் பரிகாரங்களை வழங்குவது முக்கியமானதாகும். ஆயினும் இது போதாது. கைது, மற்றும் தடுத்து வைக்கும் அதிகாரங்களின் பிரயோகத்தை தொடர்ச்சியாக சுயாதீனமாக மீள்பார்வை செய்து கட்டுப்படுத்துவதற்குத் தெளிவான ஒரு தேவை உள்ளது. இவை செயற்படுவதற்குத் தனிப்பட்டோரின் முறையீடுகளில் தங்கியிருக்காத வழிமுறையமைப்புக்கான தேவை
உள்ளது.
3. மனித உரிமைகளுக்கு நீதிமுறை மூலம் பாதுகாப்பளித்தல்
அரச நடவடிக்கை காரணமாக அடிப்படை உரிமைகள் மீறப்பட்ட சம்பவங்களில் பாதிப்புற்றோருக்கு நீதிமன்றம் தொடர்ந்தும் நிவாரணம் வழங்கிய அதேவேளையில், பராயமடையாத மகன் ஐ.சி. அபேசூரியவுக்கு அடுத்த நண்பராக ஆஜராகிய எம்.ஜே. அபேசூரிய, எதிர் ரீ.பீ. தமுனுபொல, அதிபர், ஆனந்தா கல்லூரி மற்றும் ஏனைய ஆறுபேர் தொடுத்த வழக்கு, இந்த உரிமை துஷ்பிரயோகம் செய்யப்படக்கூடாதென்பதற்கு எச்சரிக்கையாக அமைந்தது. இந்த வழக்கில் மனுதாரர் தமது மூத்த மகன் ஆனந்தக் கல்லூரியில் அனுமதி பெற்றுள்ளபோதிலும் இளைய மகனுக்கு அனுமதி கிடைக்கவில்லையென்னும் 12(1) உறுப்புரையின் கீழ் மனுதாரர்களுக்குச் சட்டத்தின் முன்னிலையில் சமத்துவம் மறுக்கப்பட்டதாகவும் சார்த்துதல் செய்திருந்தார். வழக்கு விசாரணையின்போது மனுதாரரும், அவரது
21

Page 18
கணவரும் பொய்யான கூற்றுக்களைச் செய்திருந்தார்களென்பது வெளியாகியது. ஒர் அரசாங்க உத்தியோகத்தரிடம் பொய்யான கூற்றொன்றைச் செய்தமைக்காக மனுதாரரின் கணவருக்கெதிராகவும், நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு சத்தியக் கடதாசியில் பொய்யான கூற்றைச் செய்தமைக்காக மனுதாரருக்கெதிராகவும் பொருத்தமான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படக்கூடிய விதத்தில் தீர்ப்பின் ஒரு பிரதியை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்குமாறு நீதிமன்றம் பதிவு காரருக்குப் பணிப்புரை விடுத்தது. இது பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் ஆயுதப்படை உறுப்பினர்கள் பொய்யான சத்தியக் கடதாசிகளைச் சமர்ப்பிப்பதை, பிரத்தியேகமாக நீத்தா திசாநாயக்கவின் வழக்கில் (3) இடம்பெற்றது போன்று இத்தகைய தவறான நடத்தை பிரத்தியேகமாகவே பணிக்கெனத் தெரியும் சந்தர்ப்பங்களில் நடைபெறுவதாகத் தெரியவில்லை. பிரத்தியேகமாக சித்திரவதை குறித்த விடயங்களில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் உத்தியோகத்தர் பொய்யான சத்தியக் கடதாசிகளைச் சமர்ப்பிப்பதை நீதிமன்றங்கள் வெகுபாரதூரமாக நோக்குதல் வேண்டும்.
நீதிமன்றங்கள் பல தடவைகள் கடுமையான கண்டனங்களைச் செய்த போதிலும், சித்திரவதையென்பது தொடர்ச்சியாக இடம்பெற்றுவருவது கவலைக்குரிய ஒரு விடயமாகும். சம்பந்தப்பட்ட தற்போதுள்ள சட்டவியலை உபயோகிக்கத் தவறுதல் மூலம் அரச உத்தியோகத்தர்கள் தொடர்ந்தும் அதே தவறுகளை இழைத்துவருகின்றனர். 1998 மனித உரிமைகள் நிலை அறிக்கையில் மீறல்களை இல்லாமற் செய்வதற்கு நீதிமன்றத் தீர்ப்புகள், அரச அதிகாரிகளின் பயிற்சியில் ஒரு பகுதியாக இடம்பெறுதல் வேண்டுமென்று விதந்துரைப்புச் செய்திருந்தோம். தற்பொழுது இத்தகைய மனுக்களின் எண்ணிக்கை கணிசமான அளவு பெருகி வருவது போலத் தோன்றுகிறது. இது மக்கள் தமது உரிமைகள் குறித்து விழிப்புணர்ச்சியோடுள்ளனர் என்பதைக் காட்டுவதோடு, உயர்மட்டத்தில் மீறல்கள் தொடர்ந்தும் இடம்பெறுவதையும், நீதிமன்றத் தீர்ப்புகள் அனேக தடவைகளில் உதாசீனம் செய்யப்படுவதையும் காட்டுகின்றது.
4. சிறுவர்களின் உரிமைகள்
1998 இன் நிகழ்வுகள் சிறுவர் உரிமைகளைப் புரிந்து கொள்வதற்கும் உயர்வாக மதிப்பதற்கும் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்தை எதிர்த்துப் போராடுவதற்குமான
22

இலங்கையின் முயற்சிகளைக் காட்டுவனவாக அமைந்தன. இம்முயற்சிகளுக்குத் தடையாக அமையும் பிரச்சினைகள், முதலில் நடவடிக்கைக்கு காரணமாக அமைந்த அடிப்படைப் பிரச்சினைகளே ஆகும். சிறுவர் உரிமைகளைப் பூரண நிலைகளாக்க முடியாத பாரிய பிரச்சினைகள் நிதி சம்பந்தப்பட்டவையாகும். மூலவளங்களை ஒதுக்கியளித்தல் மற்றும் இனப் பிரச்சினை போன்ற தற்போதைய தேசிய முன்னுரிமைகளே இவையாகும். முற்று முழுதான ஒரு சட்டக் கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஏற்படுத்தப்பட்டமை, தண்டனைச் சட்டக் கோவை, மற்றும் சிறுவர் குறித்த ஏனைய சட்டங்களில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டமை, இந்த வருடத்தில் போதியளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஒருவரை நினைக்கத் தூண்டும். ஆயினும், சட்டவாக்கம் உதாசீனம் செய்யப்படும் போதும், கோட்பாடுகள் மற்றும் கடப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான வழிமுறையமைப்புகள் இல்லாதபோதும், சட்டங்கள் புத்தகங்களில் இருந்து மாத்திரம் எவ்விதப் பிரயோசனமும் இல்லை. ஆகவே, சட்டவாக்க மாற்றங்களில் அடங்கியுள்ள கோட்பாடுகளை உண்மையாக நடைமுறைப்படுத்தும் கடினமான பணி இன்னமும் ஆரம்பமாகவில்லையென்றே கூற வேண்டும்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரச் சபையை செயற்படுத்துவதற்கு ஒதுக்கியளிக்கப்பட்ட நிதிகள் அதற்கு வழங்கப்படுவதோடு, இந்த நிறுவனம் விரைவில் பணியாற்றுவதற்கு அரசாங்கம் உதவு வேண்டும். சிறுவர் துஷ்பிரயோக நிகழ்வுகளில் பாதிப்புற்றவர்களுக்கான நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதை விரைவுபடுத்துவதில் இந்த நிறுவனம் தீர்மானகரமான பாத்திரமொன்றை வகிக்க வேண்டியுள்ளது. விழிப்புணர்வை ஏற்படுத்தி, இயைபுள்ள அமைப்புகளிடையே கூட்டிணைப்பை உருவாக்குவதன் மூலம் சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுக்கும் முக்கியமான பொறுப்பும் இந்த நிறுவனத்திற்குண்டு.
தற்போதைய அவசரத் தேவை என்னவென்றால், சிறுவர் குறித்த சட்டச் செயல்முறைகள் சம்பந்தமான சில அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதாகும். தற்போது, புதிய சட்ட ஏற்பாடுகளுக்கான தேவை குறைவாகவே உள்ளது. பல உயர் வாழ்க்கைத் தொழில் வல்லுநர்களும், கல்விமான்களும் இதை மீண்டும், மீண்டும் சுட்டிக் காட்டியுள்ளனர். நீதிமுறைமை, சிறுவர் உரிமைகளைப் புரிந்து கொண்டு அவற்றைப் பாதுகாப்பதெனில் அது பூரணமாக மாற்றியமைக்கப்பட்டு,
23

Page 19
நவீனமயப்படுத்தப்படல் வேண்டும். இத்தகைய ஒரு சீர்திருத்தம் இல்லையெனில் புதிய சட்டவாக்கங்கள் வாத்தின் முதுகில் தண்ணிர் ஊற்றியது போலாகும். இந்த முறைமை, சிறுவர் குறித்து எவ்வித கருமப்பாடுமற்ற ஒன்றாக விளங்குவதோடு, அதன் சேவைகளை நாடும் வளர்ந்தோருக்கும் பிரயோசனமற்றதொன்றாக உள்ளதென்று கூறலாம். ஆயினும், சிறுவர் குறித்த செயல்முறைகளையாவது, நாம் சீர்திருத்த ஆரம்பிக்கலாம். பொலீசார், சட்டவறிஞர்கள், நீதிபதிகள் மற்றும் சிறுவர் நன்னடத்தைப் பாதுகாப்பு உத்தியோகத்தர் போன்ற சிறுவர் நீதி நடைமுறைப்படுத்தலில் சம்பந்தமுள்ள அனைவரும் சிறுவருக்கு ஏற்ற பல்வேறு நியமங்கள் குறித்து அறிந்து கொள்ளவேண்டிய அவசியமுள்ளது. நீதிச்சேவைகள் ஆளணிக்குழு, வழக்கறிஞர்கள் சங்கம், மற்றும் சிறுவர் நன்னடத்தைப் பராமரிப்பு ஆணையாளர் அவர்களின் நடைமுறையைக் கண்காணித்து, கட்டுப்படுத்த வேண்டிய தேவையும் உள்ளது. இச் செயல் முறையில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு தனிநபரும், சிறுவரின் ஆகச் சிறந்த நலன்கள் குறித்த வழி முறைகளைப் புரிந்து கொண்டு, நடைமுறையில் செயற்படுத்தினாலேயே அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்துவது சாத்தியமாகும். சட்ட வடிவத்தில் மாத்திரமன்றி, குறித்துரைத்த சூழ்நிலைகளில், நீதிபதிகளின் தீர்ப்பு வடிவத்திலும் முன்நிகழ்வு உதாரணங்கள் உருவாக்கப்படுதல் வேண்டும்.
அரசு, தனது சர்வதேசக் கடப்பாடுகளுக்கு இணங்க சிறுவர் உரிமைச் சாசனம் குறித்த ஐ.நா. குழுவுக்குநேர காலத்துக்கு அனுப்பிவைப்பதை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். சிறுவர் உரிமைகள் குறித்து தற்போது வழங்கி வரும் நிலையை மதிப்பீடு செய்வதற்கு இவ்வறிக்கை மிகவும் பயனுள்ள ஒரு வழிவகையாகும். அரசாங்கத்தைத் திருப்திப்படுத்தும் வகையில் அறிக்கையை எழுதுவதற்குப் பல்வேறு நிறுவனங்களிலுள்ள நிபுணர்களை உபயோகிப்பதற்குப் பதிலாக, அறிக்கையின் இயைபுள் பகுதிகளைத் தயாரிக்கும் பொறுப்பு சிறுவர் நலன் குறித்துப் பணியாற்றும் தனியார் அரசு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுதல் வேண்டும். இது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் ஈட்டப்பெற்ற முன்னேற்றத்தை அவர்கள் அறிந்து கொள்ளவும், ஒப்பிட்டுப் பார்க்கவும் எதிர்காலத்துக்கான இலக்குகளை ஏற்படுத்திக் கொள்ளவும் உதவும். இதன் பின்னர், அவர்கள் பொருத்தமான இடங்களில் தமது உத்திகளை உறுதிப்படுத்தவோ, மீள்பார்வையோ செய்ய முடியும். அறிக்கையிடுதலில் புறநிலை யதார்த்தங்கள் நோக்கத்தை உறுதி செய்வதற்கு அரசு சார்பற்ற நிறுவனங்களும், சிறுவர் உரிமைச் செயற்பாட்டாளர்களும்
24

அவர்கள் தயாரித்த அறிக்கை குறித்து கருத்துரை வழங்கவும் வேறு விடயங்களைச் சேர்க்கவும் சந்தர்ப்பம் வழங்கப்படுதல் வேண்டும்.
இலங்கை ஒரு முழுத் தலைமுறையையும் யுத்தம், துஷ்பிரயோகம் மற்றும் சமூக உதாசீனம் போன்ற விடயங்களுக்குத் தாரை வார்த்துக் கொண்டிருக்கும் இச் சந்தர்ப்பத்தில் எமது சிறு சாதனைகள் குறித்து எம்மையே மெச்சிக்கொள்வதை நிறுத்தி, சிறுவரின் வாழ்வில் ஐயத்துக்கிடமற்ற, ஆக்கபூர்வமான மாற்றங்களை ஏற்படுத்தும் மிகச் சிறந்த பெறுபேறுகளை ஈட்டுவதற்கு முயலுதல் வேண்டும். அரசாங்கமும் பொது மக்களும் எமது சமூகத்தின் தரத்தை உயர்த்துவதில் சிறுவர்களின் விசேட சூழ்நிலைகள் வகிக்கும் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளும் போது, நாம் இதைச் சாதிக்க முடியும்.
5. பெண்களின் உரிமைகள்
இலங்கையின் சமூக அபிவிருத்திச் சுட்டிகள் பொதுவாகவே உயர்நிலையில் இருந்த போதிலும், பாற்பிரிவினை குறித்த எண்ணங்கள், பெண்கள் நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் தமது பூரண உரிமைகளை அனுபவிப்பதை மட்டுப்படுத்துபவையாகவுள்ளன. மேலும், அதிகமான பெண்கள் வருமானம் தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள போதிலும் தொழிற் சந்தையின், கீழ் மட்டங்களில் மாத்திரமே செறிவாகக் காணப்படுகின்றனர்.
வீட்டு வேலைகளினால் தேசிய பொருளாதாரத்துக்கு பெண்களின் பங்களிப்புத் தொடர்ந்தும் கவனிக்கப்படாமலே உள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முயற்சிகளால் வெளிநாடுகளில் தொழில் புரியும் பெண்களுக்கு ஒரளவிலான பாதுகாப்பு கிடைத்துள்ள போதிலும் பணி கொள்வோரினால் ஏற்படும் உடல் மற்றும் உள அதிர்ச்சி வடுக்கள் இருக்கவே செய்கின்றன. பெண்களுக்கெதிரான குற்றங்களைப் புரிவோருக்கு மேலும் கடுமையான தண்டனைகள் விதிக்கும் தண்டனைச் சட்டக்கோவை திருத்தங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், அவை அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இது பெண்களின் உரிமைகளை பாதுகாக்கும் சட்டங்களை அமுல் படுத்துவது சம்பந்தமான அரசின்இயலுமை, மற்றும் அர்ப்பணவுணர்வு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. வட கிழக்கில் தொடரும் போர், பெண்கள் வாழ்வில் பிரத்தியேகத் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள், உத்தியோகபூர்வ மட்டத்தில், அவர்களின் உரிமைகள்
25

Page 20
அங்கீகரிக்கப்படாத போதிலும், குடும்பத் தலைவர்களாகப் பரிணமித்துக் கொண்டிருக்கின்றனர். எல்ரீஈயினரின் தற்கொலைத்தாக்குதல் படைப்பிரிவுகளில் பெண்கள் உள்ளதின் காரணமாக, அரசு பாதுகாப்பு இயந்திரம், தமிழ் சிவிலியன் பெண்கள் மீது அழுத்தங்களைஅதிகரித்துள்ளது.
விதந்துரைப்புக்களின் சுருக்கம் பின்வருமாறு:
வேலைவாய்ப்பு, மற்றும் சம்பளங்களைப் பெற்றுக் கொள்வதில் பெண்களின் பேரம் பேசும் வலிமையை அதிகரிக்கும் சம வாய்ப்புக்களுக்கான சட்ட ஏற்பாடுகள்
அவசியமாகும் (4)
ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையில் நிலவி வரும் பாற்பிரிவினை வேறுபாடு குறித்த பாகுபாட்டு எண்ணங்களை நீக்குவதை நோக்கமாகக் கொண்ட பாற்பிரிவினை வேறுபாட்டு அதியுணர்வுக் கல்விப் போதனா விடயங்கள் வகுத்தமைக்கப்பட்டு,பயிற்சி ஆசிரியர்களுக்கும் பாடசாலைப்பாடப்புத்தகங்களிலும் இடம்பெறுதல் வேண்டும்.
1993 ஆம் ஆண்டின் பெண்கள் சாசனத்தில் ஆலோசனை முன்வைக்கப்பட்டவாறு பாற்பிரிவினை, வேறுபாட்டு முதலீடுகள் அலகு ஒன்றை நிறுவக்கூடிய வகையில் பெண்களுக்கான தேசியக் குழுவலுப்படுத்தப்படுதல் வேண்டும். இது பாற்பிரிவினை பாகுபாட்டு அடிப்படையில் பாதிப்புற்ற பெண்களுக்கு நிவாரணம் கிட்ட வழிசெய்யும், இப்பொழுது அத்தகைய ஏற்பாடு எதுவுமில்லை.
பாதிக்கப்பட்ட பெண்களுக்குச் சட்ட நிவாரணம் கிட்டக்கூடிய வகையில் பெண்களுக்கெதிராக வீடுகளில் இடம்பெறும் வன்செயல்கள் குறித்த சட்டமொன்றை வகுத்தமைப்பதற்கு ஆதரவு தேடும்பிரசாரம் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.
பெண்கள் வீடுகளில் தமது ஈடுபாடுகள் மற்றும் நடவடிக்கைகள் மூலம் தேசியப் பொருளாதாரத்துக்கு ஆற்றும் பங்களிப்பை அரசு அங்கீகரித்தல் வேண்டும். வீட்டுவேலைகளில் ஈடுபடும் பெண்கள் நாட்டின் தொழிலாளர் சக்தியினுள் உள்ளடக்கப்படுதல் வேண்டும்.
பெண்கள், விவசாயிகள் என்ற வகையில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுதல் அரசினால் அங்கீகரிக்கப்படுதல் வேண்டும்.
26

6. இலங்கையில் தகவல்களைப் பெற்றுக்
கொள்வதற்கான சுதந்திரம்
அரசாங்கத்தின் வசம் இருக்கும் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் உரிமை, சட்டவாக்கத்தை வழிநடத்தும் பிரதான கோட்பாடாக விளங்குதல் வேண்டும். இதனால் தான் இவ்வுரிமையை அரசியலமைப்பினுள் சேர்த்துக் கொள்ளுவது உகந்ததாகும். இத்தகைய அரசியலமைப்புக் கோட்பாடு பணிப்பாணையொன்றை விடுப்பதாக அமையும். அது அரசாங்கத்தின் வசமுள்ள தகவல்களை வெளியிடுவது சம்பந்தமான அரசுக் கொள்கைக்கு வழிகாட்டியாக விளங்கும். இத்தகைய ஒரு கோட்பாடு, மூன்றாம் தரப்பினரிடமிருந்து பொதுமக்கள் தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் உரிமையில் குறுக்கீடு செய்யாதிருக்கும் கடப்பாட்டை அங்கீகரிப்பற்கு ஓர் வழியாகும்.
சுவீடிஷ் மற்றும் தென்னாபிரிக்க அரசியலமைப்புகள் இத்தகைய அரசியலமைப்பு ஏற்பாடுகளுக்கான உதாரணங்களை வழங்குகின்றன. சுவீடிஷ் அரசியலமைப்பு பத்திரிகைச் சுதந்திரச் சட்டம், அரசாங்கத்தின் வசமுள்ள தகவல்களைப் பெறுவது குறித்து விபரமான ஏற்பாடுகளை தன்னகத்தே கொண்டு விளங்குகின்றது. சமீபத்தில் ஏற்று அமைத்துக் கொள்ளப்பட்ட தென்னாபிரிக்க அரசியலமைப்பு பின்வரும் விடயங்களைப் பெற்றுக்கொள்ள அனைவரினதும் அடிப்படை உரிமையை அங்கீகரிக்கின்றது. இச்சட்டம் (அ) அரசு வைத்திருக்கும் தகவல்கள் மற்றும் (ஆ) உரிமைகளைப் பிரயோகிப்பதற்கு அல்லது உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அவசியப்படுபவையும், வேறொரு நபரின் வசம் உள்ளவையுமான தகவல்கள், தேசிய சட்டவாக்கம் இவ்வுரிமைக்கு இடமளிக்கும் வகையில் செய்யப்படல் வேண்டுமென்றும் கூறுகின்றது. தென்னாபிரிக்க அரசியலமைப்புமாதிரி இலங்கை பின்பற்றவேண்டிய ஒரு சிறந்த சட்டமாக விளங்குகின்றதென்பதை இவ்விடத்தில் சொல்ல வேண்டும்.
அரசாங்கத்தின் வசமுள்ள தகவல்களைப் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளுவது குறித்த ஓர் அனைத்துமடங்கும் தகவல் சுதந்திர நியதிச் சட்டம் இருத்தல் வேண்டும். இத்தகைய ஒரு நியதிச் சட்டம் ஊடகச் சட்ட சீர்திருத்தக் குழுவின் விதந்துரைப்புகளோடு இணங்குவதாக அமைதல் வேண்டும். பொது மக்கள், தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் உரிமை மீது கட்டுப்பாடுகளைக் கொண்டுவரும் அவசர காலநிலைப் பிரமாணங்கள் ஜொஹன்னஸ்பேர்க் கோட்பாடுகளினடிப்படையில் வகுத்தமைக்கப்படுதல் வேண்டும்.
27

Page 21
7. நீதித்துறையின் சுதந்திரத்தைப்
பாதுகாத்தல்
கலாநிதி.என்.எம். பெரேரா 1978 அரசியலமைப்பில் நீதித்துறைச் சுதந்திரம் குறித்த ஏற்பாடுகளை விமர்சிக்கையில் நிறுவன ரீதியான பங்களிப்பு மனிதப் பலவீனங்களுக்கும், வக்கிரபுத்திக்கும் பரிகாரமாகாது என்று சரியாகக் குறிப்பிட்டார். நீதித்துறைப் பதவியொன்றில், மோசமான நிறுவனக் குறைபாடுகள் இருந்த போதிலும் ஒருவர் தனது சுதந்திரத்தைப் பேணிப்பாதுகாத்துக்கொள்வது நீதிமுறை சார் விழுப்பத்தின் உச்ச நிலையை எய்துவதாகும். உத்தேச அரசியலமைப்பின் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், அவ்வாறு செய்யப்படாவிட்டாலும், 1998ம் ஆண்டில் இலங்கையின் நீதித்துறை தனது சுதந்திரத்தைப் பிடிவாதமாகக் காப்பாற்றியதென்று கூறலாம். இந்த விடயத்தில் பொதுமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் நீதித்துறை வகித்த முக்கிய பாத்திரம் பொதுமக்களால் மெச்சப்பட்டது. சட்ட உயர் வாழ்க்கைத் தொழில் நிபுணர்கள் நீதித்துறையின் சுதந்திரம் குறித்து பெரிதும் அக்கறை காட்டி ஆதரவு வழங்கியமையும் குறிப்பிடத்தக்கவையாகும்.
8. மானசீக சேமநலன்
மானசீக சேமநலன் குறித்த அவநம்பிக்கை வாதம் இப்போது மாறிக் கொண்டு வருவதற்கான அறிகுறிகள் உள்ளன. கொள்கை வகுத்தல் சம்பந்தமாக சுகாதார அமைச்சில் சில குழப்பங்கள் உள்ள போதிலும், மிக விரைவில் மானசீக சேமநலன் குறித்த சேவைகளில் மாற்றங்கள் நிகழக்கூடும். கொள்கை வகுப்போர், மற்றும் சுகாதார நிர்வாகிகள் மத்தியில் உளப்பாங்குகள் மாற்றமடைவதற்கு அரசு சார்பற்ற நிறுவனங்களும், தனிப்பட்ட மனோவைத்தியர்களும் செய்துள்ள பங்களிப்பு கணிசமானதாகும். இதற்கு முந்திய மானசீக சேமநலன் திட்டமிடல் பிரேரணைகள் செவிமடுக்கப்படாத நிலையில் இருந்த போதிலும், இப்பொழுது நிலைமை நம்பிக்கையூட்டுவதாகவுள்ளது. தேசிய மட்டத்தில், மானசீக சேமநலன் குறித்த தேசிய மதியுரைச் சபைக்கு மேலாக சுகாதாரத்துக்கான ஜனாதிபதி பனிக்குழுவின் கீழ் தாபிக்கப்பட்ட மானசீக சேமநலன் சீர்திருத்தக்குழு பிரேரணைகளை மேலும் வினைத் திறனுள்ள வகையில் நடைமுறைப்படுத்தக்கூடும். உத்தேச, மானசீக சேமநலன் சேவை சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான தேசிய மதியுரைச் சபையின் இயலுமை குறித்துப் பலராலும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதை
28

இவ்விடத்தில் கூறுவது பொருத்தமாகும். இதுவரையில் இச் சபை சாதித்தது எதுவுமில்லை. இந்த அமைப்பு அல்லது இதையொத்த குழு அல்லது ஆணைக்குழு அங்கீகாரமளிக்கப்பட்டு, அதற்குப் போதிய மூலவளங்கள் வழங்கப்படுவதன் மூலம் மானசீக சேமநலனின் சேவைச் சீர்திருத்தங்கள் உறுதிப்படுத்தப்படல் வேண்டும். மானசீக சேமநலன் கொள்கை திட்டமிடல் குறித்த இரு சமமான அமைப்புகள் இருத்தல் சில குழப்பங்களையும், உரசல்களையும் ஏற்படுத்தக்கூடுமெனினும், இவை நாட்டின் மானசீக சேமநலன் சேவைகளின் எதிர்கால அபிவிருத்தியைப் பாதிக்கும் பாரிய தடைக் கற்களாக விளங்கமாட்டாவென்பது சம்பந்தப்பட்ட அனைவரினதும்
நம்பிக்கையாகும்.
"அபிவிருத்தியுறும் நாடுகளில் மானசீக சேமநலன்" என்னும் தலைப்பிலான தனது அறிக்கையில் உலக சுகாதார ஸ்தாபனம் 1994 இல் செய்திருந்த விதந்துரைப்புகள் இலங்கையைப் பொறுத்த வரையில் இன்னமும் பொருத்தமும், இயைபும் கொண்டவையாகும். வெகு விரைவில், ஒரு தேசிய மானசீக சேமநலன் கொள்கை வகுத்தமைக்கப்படவுள்ளதோடு, அரசு, பின்வரும் விடயங்களையும் செய்யவுள்ளது. ஒவ்வொரு அமைப்பு மட்டத்தினாலும், பிரத்தியேகமாக ஜனசக மட்டத்தில், மானசீக சேமநலன் கவனப் பராமரிப்பை மேம்படுத்த நடவடிக்கையெடுத்து, சுகாதார ஆளணியினருக்குப் பொருத்தமான மானசீக சேமநலன் பயிற்சியை வழங்க வேண்டும். முதனிலை சுகாதாரக் கவனப்பராமரிப்புப் பணியாளருக்கு, முன்னுரிமை மன நோய்களுக்குச் சிகிச்சை வழங்குவதற்கு அவசியமான மருந்துகளை வழங்கி, தகவல் மற்றும் மதிப்பீட்டு முறைமையை அபிவிருத்தி செய்ய வேண்டும். பல்வேறு வகையான மனநோய்கள் தொடர்பில் பல்வேறுவகைப்பட்ட சேவைகளின் பயனுறுதி குறித்த மதிப்பீடு செய்வதற்கான ஆய்வு நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்ய வேண்டும்.
9. குற்றம், மனித உரிமைகள் மற்றும்
அரச பொறுப்புடமை
குற்றவியல் நீதி முறைமையைப் பாதிக்கும் கேடுகள் ஆழமானவையென்பதோடு, பாரதூரமானவையென்பதும் தெளிவாகும். குடிமக்களுக்கு நியாயமான, விரைவான, நீதியான, மற்றும் வினைத்திறனுள்ள குற்றவியல் நீதி முறைமையை அளிக்க வேண்டிய பொறுப்பில் அரசு தவறியுள்ளது. சட்டத்தை அமுல்படுத்தும் நிர்வாகங்கள்
29

Page 22
அரசியல் மயமாக்கப்பட்டுள்ளமையால், அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் தமது அரசியல் உயிர் வாழ்வைப் பற்றியே பிரதானமாகக் கவலைப்பட்டமையால், இந்த நிலைமை தோன்றியிருக்கக் கூடும். இலங்கையில் தற்போது நிலவி வரும் சூழ்நிலைகளிலிருந்து சில பரந்த முடிவுகளை ஒருவர் எடுக்கலாம்.
குற்றவியல் நீதி நிர்வாகத்துக்கென ஒதுக்கப்படும் மூலவளங்கள் வேறு விடயங்களுக்குத் திருப்பப்படுவதால் குடிமக்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறைந்துள்ளது.
பொலிஸ் - குற்றவாளி-அரசியல்வாதி, வலையமைப்புகள் நிலவுவது, பொலீஸாரின் கருமப்பாட் டைக் குறைத்துள்ளதோடு, அவர்கள் மீது பொது மக்கள் நம்பிக்கை வைப்பதும் பெருமளவுக்குக் குறைந்துள்ளது.
பொலிஸ் படை முகாமைத்துவம் குறித்த பல நிர்வாக நடைமுறைகள், பொலிசாரின்
சுயாதீனத்தை அடகுவைப்பவையாக உள்ளன.
பல்வேறு காரணங்களினால் குற்றச் செயல்கள் அதிகரிப்பது குறித்து சட்டத்துறையின் பிரதிவிளைவு திருப்தியற்றதாகவுள்ளது.
குற்றங்கள் எனப்படும் பாரிய விடயத்தோடு சம்பந்தமுறையில் சிபாரிசுகள் பொதுவான விதத்தில் வகுத்தமைக்கப்படுவது ஒரு வேளை தவிர்க்க முடியாத ஒன்றாகவிருக்கலாம். இது முதனிலையில் பிரச்சினைகள் முறைமை சார்ந்தவையென்ற புலனறிவைப் பிரதிபலிப்பதாகவும், மீள் பார்வைகள் மற்றும் சீர்திருத்தங்கள் சகல மட்டங்களிலும் இடம்பெற வேண்டுமென்பதைக் காட்டுவதாகவும் அமைந்துள்ளது.பேராசிரியர் எஸ்.ரி.ஹெட்டிகே கூறியவாறு, சட்டம் மற்றும் ஒழுங்கில் ஏற்பட்டுள்ள சீர்குலைவுக்குக் காரணம், நாட்டில் இடம்பெற்றுவரும் பாரிய சமூக பொருளாதார மாற்றங்களினால் சமூக தார்மீக ஒழுங்கு சீரழிவுற்றதேயாகும். சக, பொருளாதார மாற்றங்கள் தவிர்க்க முடியாதவையென்பதோடு அவை ஊக்குவிக்கப்படவும் வேண்டும். ஆனால், இத்தகைய மாற்றம் ஒரு பிரமாணப்படுத்தப்பட்ட சட்டத்தினுள் இடம்பெறுவதை உறுதி செய்தல் வேண்டும். மேலும், இச் செயல்முறை விரைவாக மாற்றியமைக்கப்பட முடியுமாவென்பது குறித்து அவர் தமது சந்தேகத்தை வெளிப்படுத்தினார்.
30

இத்தகைய சூழ்நிலைகளின் கீழ்,பின்வரும் சிபாரிசுகள் செய்யப்படுகின்றன.
குற்றவியல் நீதி நிர்வாக வழிமுறையமைப்பில் உபயோகிக்கப்படும் மூலவளங்கள், தொழில்நுட்பத்திறன்கள் மற்றும் மனித வளத்துறைத் தேர்ச்சியை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித் திட்டமொன்றை ஆரம்பிக்க வேண்டும்.
மேலும், நியாய விளக்கத்தோடு கூடிய, அனைத்துமடங்கும் குற்றத் தீர்ப்பளிப்பு, வழிகாட்டல்களை உருவாக்கும் விதத்தில் குற்றத் தீர்ப்பளிப்புக் கொள்கையை மீள்பார்வை செய்ய வேண்டும்.
பொலிஸார் அல்லது வேறு சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் தவறிழைக்கும் போது சட்டத்துறை கண்டனங்களை வெளியிடுதல் ஊக்குவிக்கப்படல் வேண்டும்.
குற்றச் செயல்களில் பாதிப்புற்றோரின் மனக்குறைகளைத் தீர்க்கக்கூடிய, பாதிப்புற்றவருக்கு உதவும் வழிமுறையமைப்புகள், வகுத்தமைக்கப் படவேண்டிய அவசியமுள்ளது.
இறுதியாக, சட்டத்துறை அதிகாரி ஒருவர் கூறியது போன்று குற்றச்செயல்கள் அரசாங்கத்துக்குப் பொருளாகவும், ஏனைய வடிவங்களிலும் பெரும் அளவு செலவை ஏற்படுத்துகின்றது. ஆகவே அது சட்டங்களைப் பயனுறுதியுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யும் வகையில் பொலிஸையும், சட்டத்துறையையும் ஒழுங்கமைப்பதில் கூடிய முதலீட்டைச் செய்ய வேண்டியுள்ளது.
10. ஏனைய அபிவிருத்திகள்
10.1 சூழல் உரிமைகளும், மனித உரிமைகளும்
இலங்கையில் சூழல் மாசடைதல் இடம்பெறுவது, பிரதானமாக அதிகார சபைகள் இயைபுற்ற சூழல் பிரமாணப்படுத்தல் கொள்கைகளைச் சரியாக நடைமுறைப்படுத்தத் தவறுவதன் காரணமேயாகும். அரசாங்கமும், மற்றும் இயைபுற்ற அதிகார சபைகளும் "இலங்கை மனித உரிமைகள் நிலைமை - 1997" இல் செய்யப்பட்ட சிபாரிசுகளுக்கு இணங்கும் விதத்தில் சூழலைப்
31

Page 23
பாதுகாக்க அவசியமான சகல நடவடிக்கைகளையும் எடுப்பதோடு, சூழல் கொள்கைக்கு மனித உரிமைகள் அணுகுமுறைக் காப்பு ஒன்றையும் உறுதிசெய்து கொள்ளல் வேண்டும்.
10.2 கூட்டம் கூடும் சுதந்திரம்
1980ம் ஆண்டின் 31ஆம் இலக்க, தொண்டர் சேவை அமைப்புகள் (பதிவு மற்றும் மேற்பார்வை) திருத்தச் சட்ட ஏற்பாடுகள் காரணமாக கணிசமானளவு விமர்சனங்களை அரசு சார்பற்ற நிறுவனங்கள் வெளிப்படுத்தின.அவை, தமது கூட்டங்கூடும் உரிமையில் தலையீடு செய்வதாகவும், தமது சுதந்திரத்துக்குப் பலமான அச்சுறுத்தலாக விளங்குவதாகவும், வாதிட்டன. அவை அரசாங்கத்தை விமர்சிக்கும் அரசு சார்பற்ற நிறுவனங்களின் நடவடிக்கைகளைக் கையேற்க அல்லது சீர்குலைக்க ஒரு சாட்டாகப் பயன்படுத்தப்படக்கூடுமென்பதால் அவை உடனடியாக இல்லாதொழிக்கப்படல் வேண்டுமென்று கோரின.
கூட்டம் கூடும் சுதந்திரம் குறித்த அரசியலமைப்பு ஏற்பாடுகள் சர்வதேச மனித உரிமை நியமங்களுக்கு இணங்கக்கூடிய வகையில் திருத்தியமைக்கப்படுதல் வேண்டும். அரசியலமைப்பு வரைபு - அது என்றாவது சட்ட வடிவம் பெறுமெனில், உதாரணமாக, அதன் பாதுகாப்பைத் தற்போதைய "குடி மக்களில்" இருந்து "சகல நபர்களுக்கும்" என விஸ்தரிப்பதன் மூலம், கூட்டம் கூடும் சுதந்திரம் குறித்த தற்போதைய அரசியலமைப்பு ஏற்பாடுகளை மேம்படுத்த உதவும். ஆயினும், பல பிரச்சினைகள் தொடர்ந்தும் இருக்கவே செய்யும். இவை, பிரத்தியேகமாக, புதிய அரசியலமைப்புக்கு முந்திய எழுதப்பட்ட மற்றும் எழுதப்படாத சட்டங்கள். அவை அரசியலமைப்பு ஏற்பாடுகளோடு ஏற்புடையனவாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், தொடர்ந்து வலுவுள்ளவையாக விளங்குமென்னும் ஏற்பாட்டையும் உள்ளடக்கும்.
32

10.3 கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரமும், ஊடக
சுதந்திரமும்
இலங்கையில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரமும் ஊடக சுதந்திரமும் பொது மக்களின் அக்கறைக்குரிய தீர்மானகரமான விடயங்களாக விளங்குகின்றன. தனிநபர்களும், சிவில் சமூக அமைப்புகளும் ஊடக சீர்திருத்தம் குறித்த பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்குச் செய்த எண்ணிறைந்த கருத்துச் சமர்ப்பணங்கள் எவ்வளவு தூரத்துக்குப் பொதுமக்கள் இவ்விடயத்தில் கரிசனை காட்டுகிறார்களென்பதை நிரூபித்தன. 1998 ஏப்ரலில், ஊடக சுதந்திரம் மற்றும் பொறுப்புணர்வு குறித்த கொழும்புத் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டமையும் இதையே காட்டுகின்றது.
இப் பிரகடனம் ஊடான சீர்திருத்தம் குறித்த பரந்த அளவிலான பிரேரணைகளை முன் வைத்ததோடு, பொருத்தமான அமைப்புகள் அவற்றைப் பரப்பவும், ஏற்றுக் கொள்ளவும், நடைமுறைப்படுத்தவும் நடவடிக்கை எடுத்தல் வேண்டுமென்று சிபாரிசு செய்தது. சிபாரிசுகளுள், பின்வருபவையும் அடங்கியிருந்தன. பிரத்தியேகமாக ஐசீசீபீ ஆர் குறித்த இலங்கையின் சர்வதேச சட்டக் கடப்பாடுகளுக்கு இணங்கும் விதத்தில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் சம்பந்தமான இலங்கையின் அரசியலமைப்பு உத்தரவாதங்கள் விளங்க வேண்டும். கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், அபிப்பிராய சுதந்திரம், மற்றும் தகவல் சுதந்திரம் என்பவற்றை வளர விளங்கப்படுத்தும் வார்த்தைகள் ஐசீசீபீஆர் உணர்வில் மேலும் சிறந்த வகையில் வகுத்தமைக்கப்படல் வேண்டும.
நிச்சயமாகவே, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை வரையறை செய்யும் ஒரு சட்டநிலைத் தகவுள்ள காரணமாக அமைந்த போதிலும், இந்த வரையறைகள் துஷ்பிரயோகம் இடம்பெறாத வகையிலும் வேறு நோக்கங்களுக்கு உபயோகப்படாத வகையிலும், மிகவும் குறுகலான அடிப்படையில் வரையப்படுதல் வேண்டும். கருத்து வெளிப்பாட்டு மற்றும் ஊடக
33

Page 24
சுதந்திரம் குறித்த சட்டவாக்கங்கள் இலங்கை கையொப்பமிட்டுள்ள ஐசீசீபீஆர் ஏற்பாடுகளுக்கு இணங்கக்கூடிய வகையில் அமைதல் வேண்டும்.
1994 இல் தற்போதைய அரசாங்கம் பதவியேற்றபின்னர் உறுப்புரை 19 அமைப்பு கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைப் பாதுகாத்து, முன்னெடுப்பது குறித்த ஒரு தொடரான விதந்துரைப்புகளைச் செய்தது. இத்தகைய சீர்திருத்தங்கள் இலங்கையின் எதிர்கால அமைதி, ஒர் உண்மையான ஜனநாயக, பல்லின அரசியல் கலாசாரத்தின் வளர்ச்சி என்பவற்றுக்கு வாழ்வாதார முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.
10.4 உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர்
இலங்கையில் இடம்பெயர்ந்தோரின் வாழ்க்கைத் தரம் 1998 இல் மிகவும் மோசமாகவிருந்தது. சுகாதாரம், மற்றும் கல்வி வசதிகள் மிகவும் கவலைக்கிடமான நிலையிலும், ஏனைய சேவைகள் மோசமான தரத்திலும் இருந்தன. இப்பிரதேசங்களில் மருந்துகளுக்குப்பற்றாக்குறையும், ஏனைய அத்தியாவசியமருத்துவ சேவைகளின் போதாமையும் நிலவின. இலகுவில் பாதிப்புறும் இந்த மக்களுக்கு இதைவிடச் சிறந்த ஒரு வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்யும் விதத்தில் அரசாங்கம் சாத்தியமான சகல நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். பலரும் அனுபவிக்கும் மீண்டும், மீண்டும், இடம்பெறும் இடம்பெயர்வு அனுபவங்களை இல்லாதொழிப்பதெனில், ஆயுதப்போருக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். ஆயுதப் படைகளினாலும், எல்ரீஈ யினராலும் மீறப்பட்ட இடம்பெயர்ந்தோரின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படல் வேண்டும்.
யுத்தத்தின் மொத்தப்பொருளாதார, மற்றும் மனிதப் பளுவை, வட - கிழக்கு மக்களே பெரிதும் தாங்கி வந்துள்ளனர். யுத்தம் குறித்த அவசியத் தேவைகள், மற்றும் செயற்பாடுகள் காரணமாக நல்லாட்சி முறைக்கான இயலாமை சீரழிந்துள்ளது. யுத்தம் தொடருமானால்
34

இந்த நாசகார விளைவுகள் தீவிரமாகி எதிர்காலத் தலைமுறைகளைப் பாதிக்கும். மோதல்கள் காரணமாக, வட - கிழக்கில் 90,000 க்கு அதிகமான சிறுவர்கள் பாதிப்புற்றிருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
சென்ற வருட இலங்கை மனித உரிமை நிலைமைகள் அறிக்கை உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் குறித்து ஒரு தொடரான சிபாரிசுகளைச் செய்திருந்தது. இலகுவில் பலியாகக் கூடிய வகைப்பிரிவைச் சேர்ந்த இந்த மக்களைப் பாதுகாத்து அவர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதில் தீவிர கவனஞ் செலுத்தி, பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்த வேண்டுமென்று நாம் மீண்டும் வலியுறுத்துகின்றோம்.
10.5 சுகாதாரத்துக்கான உரிமை
1998ல் வட -கிழக்குப் பிரதேசங்கள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் சுகாதார நிலைமைகளில் மேம்பாடு காணப்பட்டது. இராணுவ நடவடிக்கைகள் காரணமாகச் சென்ற வருடமும் யுத்தப் பிரதேசங்கள் அதிகாரிகளால் உதாசீனஞ் செய்யப்பட்டன. புதிய சுகாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுக்கும் முன்முயற்சிகள் இப் பிரதேசங்களில் வாழும் மக்களின் தேவைகளைப்பூர்த்தி செய்யவில்லை.
10.6 தொழிலாளர் உரிமைகள்
தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவதோடு, அவர்களின் நலன்கள் குறித்த தீர்மானங்களை எடுக்கும் செயல்முறையில் அவர்கள் பங்கேற்றல் வேண்டும் தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகள் பாதுகாக்கப்படும் அதேவேளையில், தமது உரிமைகளின் பிரயோகம் தமது கடமைகளோடு சமநிலைப்படுத்தப்படுவதை அவர்களே உறுதிசெய்துகொள்ளுதல் வேண்டும். அஞ்சல் தொழிற்சங்க வேலைநிறுத்தம், ஓய்வூதியம் மற்றும் சம்பளங்கள் தாமதம், பரீட்சைகள் பின்போடப்படல், மற்றும்
35

Page 25
அன்றாட வாழ்க்கை முறையில் சீர்குலைவு போன்ற பொதுமக்கள் அனுபவித்த பல்வேறு கஷ்டங்களை வெளிச்சமிட்டுக் காட்டியது. அரசாங்க மருத்துவ உத்தியோகத்தர் சங்க தொழிற்சங்க நடவடிக்கைகள், உயர் செலவு காரணமாக, தனியார் மருத்துவ மனைகளில் மாற்றுச் சிகிச்சையை நாடமுடியாத அப்பாவி மக்களுக்குப் பெரும் துன்பத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது. இவ்வாறு, தொழிற்சங்க நடவடிக்கைகளை நாடும் உரிமை, பொதுமக்களின் உரிமைகளைப் பாதிக்காத வகையில் பெரும் பொறுப்புணர்வோடு பிரயோகிக்கப்படுதல் வேண்டும்.
36


Page 26
இலங்
மனித உரிமைக
இது நாட்டில் 1998 ஆம் ஆண் குறிக்கும் இலங்கையின் மனித
விளக்கமாகும்.
இந்த அறிக்கை சமூக, அர பூரணத்துவத்துடன், அவசரகால சட் மனித உரிமைகளின் பாதுகாப்புடனும் தனித்தனி அத்தியாயங்களில், சிறு உரிமைகள், தகவல் பற்றிய சுத நீதித்துறையின் சுதந்திரம், குற்றமும் பரிசீலிக்கப்பட்டுள்ளன. இதனால், இ உரிமைகள் தொடர்பாக முக்கிய உை
a
சட்டத்திற்கும் சமூகத்தி
3. கின்சிரெறஸ்
இலங் தொலைபேசி இல. 691228 e-mail St Website htt/vy
ISBN - 9 SS
 

6) is
நிலை 1999
டில் இடம் பெற்ற சம்பவங்களைக் உரிமைகள் பற்றிய விபரமான
சியல் உரிமைகளை மனிதனின் டத்துடன், நீதிமுறை சம்பந்தமான தொடர்புபடுத்தி ஆராய்ந்துள்ளது. ர்களின் உரிமைகள், பெண்களின் ந்திரம், உளவியற் சுகாதாரம், அரச பொறுப்பும், ஆகிய விடயங்கள் ந்த அறிக்கை இலங்கையில் மனித கல்லாக அமைந்துள்ளது.
684845 FX: 686843
(a) Stilk w.laws.st.lk
9062-54-9