கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாழ்ப்பாணத்து மரபுவழிக் கல்வி

Page 1


Page 2

யாழ்ப்பாணத்து மரபுவழிக் கல்வி
கலாநிதி சபா ஜெயராசா
வெளியீடு: போஸ்கோ பதிப்பகம், நல்லூர்,
2OOO

Page 3
நூற் பெயர்:
நூலாசிரியர்:
முகவரி:
பதிப்பு: பதிப்புரிமை
அச்சுப்பதிவும் வெளியீடும்:
முன் அட்டை
விலை:
Title:
Author:
Address:
Subject:
Edition:
Copy Right:
Printer and Publisher:
Cover Design:
Price:
யாழ்ப்பாணத்து மரபுவழிக் கல்வி
கலாநிதி சபா. ஜெயராசா
M.A. (Ed.) Ph.D.
கல்வியியல்துறை, யாழ். பல்கலைக்கழகம்
முதலாவது, 2000 நூலாசிரியர் போஸ்கோ - நல்லூர்.
ரமணி - வருகை விரிவுரையாளர், (சித்திரமும் வடிவமைப்பும்) யாழ். பல்கலைக்கழகம்.
ரூபா 100/-
YAALPANATHU , MARAPUVALI KALVI,
DR. SABA. JAY ARASAH
M.A. (Ed.) Ph.D.
DEPT OF EDUCATION UNIVERSITY OF JAFFNA
TRADITIONAL EDUCATION OF JAFFNA
FIRST, 2Ooo
AUTHOR BOASCO - NALLUR, JAFFNA. RAMANI, Visiting Lecturer in Art and Design, University of Jaffna.
Rs. 1 OO/-

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை அவர்கள் வழங்கிய
அணிந்துரை
எமது பிரதேசத்தின் கல்வி வரலாறு, இலக்கிய வரலாறு, தொழில்நுட்ப வரலாறு முதலாம் துறைகளில் ஆழ்ந்த ஆராய்ச்சிகளைச் செய்தலும், அவற்றை வெளிக் கொண்டு வருதலும் அறிவுத் தேடலிலும் அறிவுக் கையளிப்பிலும் சிறப்பார்ந்த நடவடிக்கைகளாக அமை கின்றன. நாட்டார் மரபுகளைச் சிறப்பு ஆதாரங்க ளாகக் கொண்டு எமது கல்வி மரபுகளை ஆராய்ந்துள்ள இந்நூலாசிரியரின் பணிகள் பாராட்டப்படவேண்டி யுள்ளன. . நுண்ணிதானதும் தனித்துவமானதுமான பல தகவல்கள் இந்நூலிலே வெளிக்கொண்டுவரப்பட்ட டுள்ளன. அறிவே ஒரு சமூகத்தின் பலமாக அமைகின் றது. அறிவுக்கும் சமூகக் கோலங்களுக்குமிடையேயுள்ள தொடர்புகளைக் கண்டறிதல் எமது பண்பாடு பற்றிய தெளிவான காட்சியை ஏற்படுத்துவதற்கும் துணை நிற்கும்.
பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை.
துணைவேந்தர் அலுவலகம்,
யாழ் பல்கலைக்கழகம், 27 - 0.2 - 2000

Page 4
நூலாசிரியரின் நன்றி
இந்நூலாக்கத்துக்கு ஆலோசனைகள் வழங்கியும் அவ்வப்போது உற்சாகமளித்தும் வந்த துணைவேந்தர் - பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை அவர்களுக்கும் மற்றும் பேராசிரியர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது நன்றி
உரித்தாகுக இந்நூலில் உள்ள சில கட்டுரைகளை ஆய்வுச் சஞ்சிகைகளிலே வெளியிட்ட பேராசிரியர் இரா. சிவச்சந்திரன் கலாநிதி அ.வி. மணிவாசகர் ஆகியோர் நன்றிக்குரியவர்கள். இந்நூலை அழகுற வடிவமைத்து வெளியிட்ட போஸ்கோ பதிப்பகத்தினருக்கும், ஒவியர் ரமணிக்கும் உளமார்ந்த நன்றி.
- சபா. ஜெயராசா.
இந்நூலின் உள்ளடக்கம் தொடர்பான கருத்துக்கள் நூலாசிரியரினால் வரவேற்கப்படுகின்றன.

பொருளடக்கம்
யாழ்ப்பாணச் சமூகக் கட்டமைப்பும் மரபுவழிக் கல்வியும் &
யாழ்ப்பாணத்து மரபுவழிப் பெண்கல்வி .
யாழ்ப்பாணத்து மரபுவழி அறிகைச் செயல்முறையில் சட்டம் ஒழுங்கும், கருவிக் கையாட்சியும் · ··
யாழ்ப்பாணத்து மரபுவழி இசைநடனக் கல்வி
உளவியல் மரபும், உள நெருக்கீட்டு முகாமைத்துவமும்
நாட்டார் மரபு வாயிலான அறிவுக் கையளிப்பு: எருதும் நரியும் நெருப்புச்சட்டிக் கதைகளும்
பக்கம்
O1
24
56
69
83
96

Page 5

யாழ்ப்பாணச் சமூகக் கட்டமைப்பும் மரபுவழிக் கல்வியும்
சமூகக் கட்டமைப்பாக்கம் அல்லது சமூக அமைப்பியம் (Social Formation) என்ப தற்கும் கல்விச் செயல் முறைக்குமிடையே இணைப்புக் கள் பல்வேறு பரிமாணங்களிலே காணப்படுதலுண்டு. ed) L155 (p60soGOLD (Mode of Production) Felpédi கட்டமைப்பாக்கத் தீர்மானிக்கும் அடிப்படை வலுவாக அமைகின்றது. கல்விமுறைமையும் அதற்கு இயைந்த வாறான மனித ஆற்றல்களை மீள் உற்பத்தி செய்யும் வண்ணமும் மீள்கிளர்ப்பு (Reactivation) ஆக்கும் வண்ணமும் உற்பத்தி முறைமை செயற்பட்டவண்ணம் இருக்கும்.
யாழ்ப்பாணச் சமூகக் கட்டமைப்பாக்கம் நிலம் சார்ந்த உற்பத்திக் கோலங்களையும், சாதியம்சார்ந்த தொழிற் பிரிவுகளையும் அடிப்படையாகக் கொண்டி ருந்தது. நிலம் பின்வருமாறு பாகுபடுத்தப்பட்டிருந்தது:

Page 6
1. வளவு - வீடும் அதனைச் சூழ்ந்த வருமானம் தரும் நிலமும் வளவு எனப்பட்டது. மா, பலா, கொய்யா, புளி, இலுப்பை முதலாம் வருமானம் தரும் மரங்களும், துரவடிக்கு அல்லது கிணற் றடிக்கு அண்மையாக வாழை, கமுகு, எலுமிச்சை, தென்னை, ஈரப்பலா முதலிய மரங்களும் அமைந்த நிலம், வளவு எனப்பட்டது.
2. வயல்:- நெல் விளையும் நிலம் ‘வயல்' என்று வகைப்படுத்தப்பட்டது. நெல் அறுவடைக்குப் பின்னர் சிலவயல்களில் சணலும் பயிரிடப்பட்டது.
காணி - மேய்ச்சல் நிலமும், பனைவளங் கொண்ட நிலமும் “காணி’ எனப்பட்டது. பனை மரங்கள் கூடுதலாக இருப்பின் அது 'பனங்காணி’ எனவும் அழைக்கப்பட்டது.
3.
4. தோட்டம்:- காய்கறிகள், சிறுதானியங்கள், கிழங்கு வகைகள், புகையிலை முதலியவை பயிரிடப்படும் நிலம் தோட்டம் அல்லது கமம் என்று அழைக்கப் பட்டது.
பெருநில உடமையாளர், சிறு நில உடமையாளர்,
நிலமின்றி தமது உடலுழைப்பில் தங்கி வாழ்வோர், அடிப்படைச் சேவைகளை வழங்கி வாழ்வோர், மீன் பிடிப்போர், சீவல் தொழிலில் ஈடுபட்டோர் என்ற
வாறான சமூக அமைப்பியல் யாழ்ப்பாணத்திற் காணப் பட்டது. பெருநிலச் சொந்தக்காரர் ‘உடையார்' என்றும் சிறு நிலச் சொந்தக்காரர் " " கமக்காரர்'
என்றும் அழைக்கப்பட்டனர். ஆட்டுமந்தை, பசுநிரை,
மாட்டு வண்டி முதலியவை நிலமுடையோருக்கு மேலதிக சொத்துக்களாக இருந்தன. சாதியப் பிரிவின் அடிப்படை யில் தொழிற் பிரிவு இருந்தது.
மரபுவழிக் கல்விச் செயல்முறையானது மேற்கூறிய சமூகக் கட்டமைப்பையும் சாதியத்தையும் உட்பொதிந்த
2 -

நடவடிக்கைகளைக் கொண்டிருந்தது. அக்காலத்தையக் கல்வியின் சமூக நோக்கங்களை ஆராயும்பொழுது இக் கருத்து மேலும் தெளிவாகும். கல்வியின் சமூக நோக் கங்கள் பின்வருமாறு குறித்துரைக்கப்படத்தக்கது.
1. சமூகத்தோடு இசைவுபட வாழவைக்க கல்வி
உதவுதல் வேண்டும்.
2. சமூக ஆசாரங்களைப் பின்பற்றும் திறன்கள் கல்வி
யினுரடாக வளர்க்கப்படல் வேண்டும்.
3. பயிர்ச்செய்கை ஏனைய தொழில்களிலும் மேலான
தாக எடுத்துக்கூறப்பட்டது.
4. தாம் செய்யும் குலத்தொழில்களை விட்டு மாறாது
இருத்தல் வலியுறுத்தப்பட்டது.
5. செய்யும் தொழிலே தெய்வம் எனப்பட்டது.
சமூகத்தின் தேவைக்கும் இயக்கத்துக்கும் ஏற்ப கருத்தியல் (Ideology) வடிவமைக்கப்பட்டிருந்தது. சமூகத்தில், இந்து சமயக் கருத்தியலாகிய (கர்மம்) ஆழ வேரூன்றியிருந்தது. ஒருவர் முற்பிறப்பில் செய்த நல் வினை தீவினைகள் என்பவற்றுக்குரிய பலாபலன்களை இப்பிறவியில் அனுபவிக்கின்றார் என்றும் இப்பிறவியில் அவர் செய்யும் நல்வினை தீவினைகள் அடுத்த பிறவி யிலும் தொடரும் என்பது கர்மக் கருத்தியலின் சாராம்ச மாகும். மரபுவழிக் கண்டியக் கிராமிய மரபிலும் இக் கருத்தியல் ஆழவேரூன்றியிருந்தமை ஆய்வுகளிலே சுட்டிக்
காட்டப்பட்டுள்ளது.1
ஒருவர் தமது ஏற்றத்துக்கும் தாழ்வுக்கும் கர்மத்தை எண்ணியே மகிழ்ச்சியும், கழிவிரக்கமும் கொள்ள வேண்டியுள்ளது. பொதுக் கல்வியிலும் சமயக் கல்வி யிலும் கர்மத்தின் வலிமையை வலியுறுத்தும் புராணக் கதைகள் அவரவர் உள ஆற்றல்களுக்கேற்பவும் அனுப வங்களுக்கேற்பவும் எடுத்துக் கூறப்பட்டன. ஒருவர்
- 3

Page 7
தமக்குத் தாமே உளச் சாந்தியை ஏற்படுத்திக்கொள்வ தற்கு இக் கோட்பாடு வலிமைமிக்க சீர்மியக் கருத்திய லாகவும் அமைந்தது.
கல்வி வாயிலாகத் தொழில் ஈட்டலும், கல்வி வாயிலான சமூக அசைவியக்கமும் ஐரோப்பியர் வருகை யைத் தொடர்ந்து நிகழ்ந்த சமூகத் தோற்றப்பாடுக ளாக அமைந்தன. இந்நிலையில் மரபுவழி யாழ்ப்பாணத் துக் கல்வியில் ஒருவர் ஏன் கற்கவேண்டும் என்பதற் கான ஊக்குவிப்புக்கள் சமூக இயல்புக்கேற்றவாறு கட்டி யெழுப்பப்பட்டிருந்தன. அவற்றுள் பின்வரும் ஊக்கு விப்புக்கள் விதந்து குறிப்பிடத்தக்கவை:
1. பொருட் செல்வம் அழியக்கூடியது; கல்விச் செல்வம் அழியாததும், பிறவிகள்தோறும் தொடர்ந்து வரும் என்பதான கருத்து. வீரத்தைப் பெருக்கவும், செல்வத்தைப் பெருக்க வும் கல்வியே அடிப்படையானது என்ற கருத்தின் வலியுறுத்தல்.
3. கற்றவர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்புக்
கிடைக்கும் என்ற முன்மொழிவு.
2
4. உடல் அழகிலும் கல்வி அழகே மேம்பாடானது
என்ற உறுத்தல். 5. ஊனக்கண்ணிலும், ஞானக்கண்ணே சிறப்புடையது
என்ற ஒப்புமை. 6. செய்யும் எந்தச் செயலையும் திருத்தமாகச் செய்
வதற்குக் கல்வி வேண்டும் என்ற வற்புறுத்தல். மேற்கூறியவாறு பல கருத்தியல் ஊக்குவிப்புக்கள் ஒருவரைக் கற்றலில் ஈடுபடச்செய்வதற்காக முன்வைக் கப்பட்டன. கிராமங்கள் தன்னிறைவை அடிப்படை யாகக் கொண்ட காலகட்டத்துக்குரிய கல்விச் செயற் பாட்டில் இரண்டு பெரும் விசைகள் தொழிற்பட்டன. அவை,
4 -

1. கல்வி ஒருவரது உளவளர்ச்சிக்கும், உள மேம்பாட் டுக்கும், உள அமைதிக்கும் வழிவகுக்கும் என்ற நம்பிக்கை. நவீன கல்விச் செயல்முறையிலே காணப்படும் தீவிர போட்டித் தன்மைகள் உருவாக்கும் உள உடைவுக்குப் பதிலாக உள ஒருங்கிணைப்பை வலி யுறுத்தும் விசைகள் கல்வி ஊடாக முன்னெடுக் கப்பட்டன.
2
கிராமியத் தன்னிறைவுப் பொருளாதாரத்திலும் அதன் கட்டமைப்பிலும் ஆசிரியத்துவம் அதிமுக்கிய இடத்தைப் பெற்றது. போட்டிச் சந்தைப் பொரு ளாதார அமைப்பில் ஆசிரியத்துவம் நுகர்வுப் பொரு ளாகவும், பிரதியீடுகள் உள்ள பொருளாகவும், மதிப்பீடு கள் செய்யப்படும் பொருளாகவும் மாற்றமடைந்தது.
ஆசிரியத்துவமும், திறனாய்வு மரபும்
மரபுவழி யாழ்ப்பாணச் சமூகக் கட்டமைப்பில் ஆசிரியத்துவம், சாதியக் கட்டமைப்பைக் கடந்த பொரு ளாகக் காணப்பட்டது. எல்லாச் சாதியத்தினரும் நீதி யின் வடிவமாகவும், ஆற்றலின் வடிவமாகவும் ஆசிரியர் களைக் கண்டனர். தம்மிடம் அறிவு பெற வருபவர் எந்தச் சாதியத்தினராயினும் பிரதியுபகாரம் கருதாது அறிவை வழங்கிய ஆசிரியத்துவ மரபு காணப்பட்டது.*
சமூக முரண்பாடுகள் சமூகத்தை இயக்கும் சிந்தனை களையும், சமூகத்தைத் திறனாய்வு செய்யும் சிந்தனை களையும் சமகாலத்தில் உருவாக்கியவண்ணமிருக்கும். சமூகம் பற்றிய திறனாய்வுச் சிந்தனைகளின் மூல ஊற்றாக மரபுவழி யாழ்ப்பாணத்து ஆசிரியத்துவம் விளங்கியது.
1. ஒருவரது நடத்தையினாலே அவரது உயர்வும்
தாழ்வும் தீர்மானிக்கப்படுகின்றது.
- 5

Page 8
2
நல்ல கருத்துக்கள், நற்செயல்கள் எந்தச் சாதியத்தி லிருந்து வந்தாலும் அவற்றுக்கு மதிப்புத் தருதல் வேண்டும். 3. பிறர் உழைப்பை அபகடத்துப் பண்ணுதல் அறத்
துக்கு விரோதமானது.
4. குந்தியிருந்து தின்றால் குன்றும் மாளும்,
மேற் கூறியவாறான திறனாய்வுக் கருத்துக்கள் நல்லாசிரியர்கள் வாயிலாகவே பரப்பப்பட்டன.
நீதியின் வழியும் சட்ட ஒழுங்குகள் வழியும் ஆசிரியர் செயற்பட்டமையால் ஆசிரியருக்கு “சட்டம்பியார்’ என்ற பெயரும் கொடுக்கப்பட்டது. திறனாய்வாளர் என்பதைக் குறிக்கும் சொல்லாக 'வீரகத்தியார்’ என்பது பயன்படுத்தப்பட்டது. ஆசிரியர்களை வீரகத் தியார் என்று அழைக்கும் மரபு சில கிராமங்களிலே மிக அண்மைக்காலம் வரை காணப்பட்டது. அறிவாகிய ஒளியை வழங்கியமையால் ஞானிகள் என்ற அடை மொழியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பெற்றது.3
நிலமுடையவர்களை 'உடையார்’ என்று அழைத் தமை போன்று ஆசிரியர்களை "ஏட்டுடையார்’ என்று அழைக்கும் மரபு காணப்பட்டது. ஆசிரியரைக் கண் போன்றவராகக் கருதி “கண்ணாட்டியர்' என்று கூறும் வழமையும் காணப்பட்டது. (இந்தப் பாரம்பரியத்தைப் பயன்படுத்தி திறனாய்வாளர் கனக. செந்திநாதன் பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்களை மூன்றாவது கண் என்று குறிப்பிட்டுள்ளார்).
திறனாய்வாற்றல் மரபுவழி ஆசிரியர்களிடத்து மேலோங்கியிருந்தமையால் அவர்கள் தலைசிறந்த உரை யாசிரியர்களாகவும் விளங்கினர். ஆசிரியர்களான ம. க. வேற்பிள்ளை, உடுப்பிட்டி அ. சிவசம்புப் புலவர், பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, பிரம்மபூரீ சி. கணே சையர், சு. நவநீதகிருஷ்ண பாரதியார் முதலியோர்
6 -

யாழ்ப்பாணத்து ஆசிரிய மரபில் வந்த உரையாசிரியர் களாயும், திறனாய்வாளராயும் விளங்கினர்.
சமூக முரண்பாடுகளின் மத்தியிலே ஆசிரியர்கள் வினையிகளாய் (Activist) இயங்கும் பண்பும் யாழ்ப் பாணப் பாரம்பரியத்திலே காணப்பட்டது. அந்தப் பாரம்பரியம் காரணமாகவே யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் அமைப்பில் திருவாளர்கள் ஹன்டி பேரின்ப நாயகம், கு. நேசையா, ஏ.ஈ. தம்பர் முதலாம் ஆசிரியர் கள் தீவிர ஈடுபாடு காட்டினர், இவைமட்டுமல்ல யாழ்ப் பாணத்தில் மார்க்சீய சிந்தனைகளை வளர்ப்பதில் நல்லாசிரியர்களான வி. பொன்னம்பலம், வி. வைத்தி லிங்கம், கொம்யூனிஸ்ற் கார்த்திகேசன் முதலியோர் ஈடுபட்டிருந்தமை மரபுவழி ஆசிரிய ஆளுமையின் வெளிப்பாடாகக் காணப்பட்டது. இவர்கள் யாழ்ப் பாணத்துச் சாதிய முறைமைக்கு எதிரான வினையிக ளாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண மரபுவழி சமூக ஆக்கத்தின் இயல்பு களையும், உட்பொதிந்த முரண்பாடுகளையும் உள்ளடக் கிய அறிவுக் கையளிப்பில் நாட்டார் கலைகள் பலம் பொருந்திய சாதனங்களாக விளங்கின. சிறப்பாக சமூக அடுக்கமைப்பின் தாழ்வீச்சில் உள்ளோர் மத்தியில் நாட்டுக்கூத்து, நாட்டார் இசை, நாட்டார் கலைப் பொருளாக்கம் முதலியவை மிகுந்த வளமுடையனவாகக் காணப்பட்டன. கரகம், கூத்து, சிலம்பாட்டம், ஒயிலாட் டம், முரசுக் கூத்து, காத்தான் கூத்து, தாளக் காவடி, மயிலாட்டம், பாம்பாட்டம், செடிலாட்டம் முதலிய வற்றை இதற்கு உதாரணங்களாகக் குறிப்பிடலாம். இவை இவற்றுக்கு முந்திய கூத்துவடிவமாகிய ஆண் களின் மல்லுக்கூத்திலிருந்து வளர்ச்சிபெற்ற தனித்தனி வடிவங்கள் ஆகும். ஆண்கள் ஆடிய மல்லுக்கூத்து இத்தனை செழிப்படைந்து வளர்ந்தமை போன்று பெண்களின் கூத்தாகிய பண்டக்கூத்து வளர்ச்சியடைய

Page 9
வில்லை. ஐரோப்பியர் வருகையைத் தொடர்ந்து நிகழ்ந்த உள்நாட்டுப் போர்களின் விளைவாகப் பெண் கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டமை பெண்களின் கூத்துக்கள் வளர்ச்சியடையாமைக்குக் காரணமாக இருக்கலாம்.
விழாக்களின் ஒழுங்கமைப்பும் கல்வியும்
நிலம் சார்ந்த உற்பத்தி முறைமையே மேலோங்கி யிருந்தமையால், பருவகால ஒழுங்கன்மப்பைப் பின் பற்றி விழாக்களும் கலை ஒழுங்கமைப்பும் நிலைபேறு கொண்டிருந்தன. “கோடையிற் கூத்து மாரியிற் பயில்வு" என்ற தொடர் மாரி காலத்தில் கலை வல்லாளராகிய அண்ணாவியாரிடம் கலைகளைக் கற்றலும், கோடை யில் அவைக்காற்றுதலுமான பண்பைச் சுட்டிக்காட்டி யது. இவ்வகைப் பண்பு பாரம்பரிய கிரேக்கர்களிடத் தும் ரோமர்களிடத்தும் காணப்படுதலை ஆய்வாளர் கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.4
கூத்துக்கும் இசைக்கும் அடிப்படையாக அமைந்த தாளம் என்பது காலம்’ என்ற பெயராலும் அழைக் கப்பட்டது. அதாவது காலக்கணக்கீட்டுக் கல்வி கலை களுக்கு அடிப்படையாக அமைந்தது. கலைகள், சமயம், தொன்மங்கள் என்பவை ஒன்றுடன் ஒன்றிணைந்து சிக்கலாகியிருக்கும் பண்பு தமிழர்களுடைய கல்வி மரபி லும் இந்தியக் கல்வி மரபிலும் காணப்படும் பொதுப் பண்பாகும்.
நிலத்தை வணங்குதல், சூரிய சந்திரர்களை வணங் குதல், திக்குகளை வணங்குதல், தெய்வங்களை வணங் குதல் என்பவற்றோடு கூத்தும், பாட்டும் தொடங்குதல், கலைகள், தொன்மம், சமயம் என்பவற்றுக்டையே யுள்ள இணைப்பைப் புலப்படுத்துகின்றது. கல்வி, கலை, சமயம் ஆகிய செயற்பாடுகள் இருமை நிலை அல்லது
مس، 8

முரண்பாடுகளைப் பிரித்தறியும் வண்ணம் ஒழுங்கமைக் கப்பட்டிருந்தன. சமூகத்தால் இனங்காணப்பட்ட சில முரண்பாடுகள் வருமாறு:-
நன்மை - &60) tD அன்பு - வன்பு தேவர் - நரகர் மழைவளம் - வரட்சி நன்மாந்தர் - அரக்கர் வளப்பெருக்கு - மலடு வீரம் - கோழை ஏற்பு - மறுப்பு அறிவு - அறியாமை எதிரிகள் - நன்பர்கள்.
மேற்கூறியவாறான முரண்பாடுகளும் இருமைத் தன்மைகளும் கலைகளின் ஆக்கத்துக்குத் துணைநின்றன. முரண்பாடுகளிடையே தோன்றும் ஏமக்குலைவு (Insecurity) அல்லது வாழ்வின் உறுதிக்குலைவு என்ற தாக்கத்திலிருந்து விடுபடவும், உள்ளத்துக்குப் பயிற்சி தரவும் கல்வியும், சமயமும் துணைநிற்க வேண்டும் என்ற கருத்து முன்னெடுக்கப்பட்டது.
எதிர் நிலைகளை உருவாக்கும் காரணிகள் பற்றி யும், விலங்குகள், பறவைகள், மனிதர்கள், அரக்கர்கள் பற்றியதுமான பயம் வாழ்நாள் முழுவதும் தொடரும் அச்சமாக இருந்தது. ‘தொடரும் அச்சம்' என்ற எண்ணக்கருவானது தமிழர்களது சிந்தனை இருப்பில் முக்கியத்துவம் பெற்றிருந்தமையால் ** தொடரும் அச்சம்” என்பது “தொடரும் கல்வி' என்ற எண்ணக் கருவால் எதிர்கொள்ளப்பட்டது.
கலைகளும், கல்வியும், சமயமும் உள்ளார்ந்த மகிழ்ச்சியைத் தரும் என்று நம்பப்பட்டது. அதனால்
அவற்றை வாழ்க்கையிலிருந்து பிரிக்கமுடியாது ஒருங்
- 9

Page 10
கிணைப்புச் செய்யப்பட்டிருந்தது. இந்த ஒருங்கிணைப்பு இயற்கையோடும் தொடர்புபடுத்தப்பட்டிருந்தது. கால நிலை, வானிலை வேறுபாடுகளுக்கு விலங்குகளும், பறவைகளும் துலங்குதல் போன்று மனிதர்களையும் துலங்கச்செய்வதற்கான கருத்தேற்றத்தைக் கலைகளும் கல்வியும் வழங்கின.
மனிதரிடம் உட்பொதிந்திருக்கும் பலவீனங்களி லிருந்து (Inherent Weakness) விடுபடவைப்பதற்குக் கல்வி உதவுதல் வேண்டுமென்ற உலகளாவிய சிந்தனை தமிழரசு மரபிலும் ஆழ்ந்து வேரூன்றியிருந்தது. உட் பொதிந்த பலவீனங்களிலிருந்து விடுதலை பெறுவதற்குச் சமய ஊக்கலும் கல்வி ஊக்கலுமே வேண்டுமென்று குறித்துரைக்கப்பட்டது. சிந்தனைவழி, செயல்வழி என்ற இரண்டு வழிகளையும் கல்வி, சமயம் ஆகியவை செப்பனிட்டுக் கொடுத்தன.
உலக நடப்பு, அழியா நடப்பு என்ற இரண்டு நடைகளில் கல்வி கருத்தூன்றி நின்றது. உலக நடப்பு மாறியவண்ணமிருந்தமையால் நிலைபேறான அழியா நடப்புப்பற்றிய வேட்கை எழுந்தது. அழியா நடப்போடு தொடர்புடைய அறிவுச் செயற்பாட்டு நிலை நுண்மதித் தொழிற்பாடாகக் கருதப்படுகின்றது. சடங்குகளில் இவை குறியீட்டு வாயிலாக எடுத்துக்காட்டப்பட்டன. தேங்காயின் கோளவடிவம் உலக நடப்பியலறிவையும் அதன் கூர்நுனி, மீ நுண்மதியாற்றலையும் குறித்து நின்றது. முடியில்லாத் தேங்காய் சடங்குக்குப் பயன் படுத்தப்படமாட்டாது.8 தேங்காயை உடைக்கும் பொழுது தோன்றும் வெண்பகுதி தூய்மை, அழகு, நன்மை முதலியவை நுண்மதியோடு இணைந்திருத்தல் வேண்டுமென்பதைப் புலப்படுத்தும். கல்வியோடு தொடர்புடைய 'தெளிவு" என்ற சொல் பொருண்மை கொண்ட ஒர் அமைப்பாக விளங்கியது. தெளிவுக்கு அழகு, தூய்மை, நன்மை, விளக்கம், ஆற்றல், ஊட்டம்,
I 0 is

அமைதி, சுத்தம், அறிவின் அடக்கம், எளிது, கசடறக் கற்றல், நல்லொழுக்கம் போன்ற பல பொருள்கள் வழங்கப்பெற்றன.
கல்விக்கும் அறிவுக்கும் ஒளி குறியீடாக அமைக்கப் பெற்றது. புறத்திலிருந்து செலுத்தப்படும் கல்வியானது அகவொளியாக மலர்கின்றது. அகத்தின் ஒளி புறத்தின் ஒளியையும், புறத்தின் ஒளி அகத்தின் ஒளியையும் ஏற்படுத்துகின்றது. ஒளி, வெளிச்சம், சுடர், பகல், விழிப்பு, விடிவு, அனல், தணல் போன்ற பல சொற் கள் அறிவுக்கு ஒப்பாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. அறியாமை என்ற இருள் மாசு, தீட்டு, அசுத்தம், தூக்கம் முதலிய சொற்களாற் குறிப்பிடப்பட்டது.
'திறந்த ஏடு மூடாதே
தீட்டுப்பட வைக்காதே’’
என்ற தொடர் கற்றலுக்கும் கல்லாமைக்கும் உள்ள முரண்பாட்டினைச் சுட்டிக்காட்டியது.
‘ஓலை மடக்கிய ஏட்டுப்பெட்டகம்
ஒன்பதினாயிரம் காட்டுக் குஞ்சரம்' என்பது அறிவுக்கும் பலத்துக்கும் அல்லது வலுவுக்கு முள்ள தொடர்பைச் சுட்டிக்காட்டியது. மேலைப்புல அறிவாய்வியலில் ‘அறிவே பலம்’ என்ற தொடர் பெரு வழக்காகவுள்ளமை ஈண்டு நினைவுகொள்ளத்தக்கது.
**வாக்குத் துடிக்குது வல்லவன் வாயிலே' என்ற தொடரும் இக்கருத்தினைப் புலப்படுத்தி நிற்கும்.
அறிவுக் கையளிப்பு
சமூக பொருளாதார ஆக்கத்துக்கு இசைந்த வகையிலே புதிய தலைமுறையினரை உருவாக்கும் பணி
முறை அமைப்புக்களினாலும், முறைசாரா அமைப்
- I

Page 11
புக்களினாலும் மேற்கொள்ளப்பட்டது. நிலம் அடிப் படை உற்பத்திக்காரணியாக அமைந்தமையாலும், நில உற்பத்தியை நம்பியே அனைவரும் வாழ நேரிட்டமை யாலும் கல்விச் செயல்முறையில் நிலமும், நீரும், பயிரும், உழவும் உன்னதமானவையாகச் சுட்டிக்காட்டப்பட் L607. fa05 Dfblu35 (Surplus Product) fila (p65) Luourt களுக்கே உரிமையாயிற்று, சமூக நடவடிக்கைகள் தொடர்பான தீர்மானிப்புவலு அவர்களிடமே விடப் பட்டிருந்தது.
அனுபவங்கள், உற்பத்திப்பெருக்கைத் தூண்டும் என்பதை நடைமுறைகளில் இருந்து மக்கள் அறிந்து கொண்டனர். இந்நிலையில் திரண்டெழுந்த அனுபவங் களைக் கையளிக்கும் கல்விச் செயல்முறை பற்றிய உணர்வு மக்களிடத்தே எழுந்தது. உற்பத்திச் செயல் முறை, பூர்வீகநிலையில் இருந்தமையால் தொழில்நுட்ப ஒழுங்கமைப்பிலும் அற ஒழுங்கமைப்பே பெரிதாக இருந்த பண்பைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. இது உலகத் தொல்குடியினரிடத்துக் காணப்படும் ஒரு பொதுப் பண்பு என்பதை ஆய்வாளர் சுட்டிக் காட்டியுள்ளனர்.8
நிலப் பிரபுத்துவப் பின்புலத்தில் வளமான ஒரு கல்விச் செயற்பாடு இருந்தமை யாழ்ப்பாண மரபிலே தோன்றிய புலவர்களாலும் உரையாசிரியர்களாலும் நன்கு புலப்படுகின்றது. யாழ்ப்பாணத்துக்கு வந்த கிறிஸ்தவ திருச்சபையினர் தமது கல்விப் பணிகளை வினைத்திறனுடன் மேற்கொள்வதற்கு இங்கு நிலவிய பரவலான கல்விக் கட்டமைப்பு அடித்தளமாக அமைந்த தென்றும் கூறலாம்.
உற்பத்திச் செயல்முறைகளிலே மெதுவாக மாற் றங்கள் நிகழ்ந்து வந்த வேளை, அவற்றால் உருவாக் கப்பட்ட புதிய கருத்துக்களும் விழுமியங்களும் பழைய விழுமியக் கட்டமைப்பின் உறுதிக்குச் சவாலாக இருக்
I 2 -

கும் நிலையில் அவற்றுக்கிடையே இசைவாக்கம் செய் தலைக் கற்போரிடையே வளர்த்தெடுக்க வேண்டி யிருந்தது. ஒழுக்கக் கட்டமைப்பின் ஒவ்வொரு கூறும் காரண காரியத் தொடர்பினதாயிருந்தன.
விலங்குப் பண்புகளை நீக்கி மனிதப் பண்புகளை வளர்த்தெடுப்பதற்குக் கல்விச் செயற்பாடுகள் பயன் படுத்தப்பட்டன. இதன் பிறிதொரு பரிமாணம் விலங்கு களிடத்து மனிதப் பண்புகளை இனங்காணலாக அமைந் தது. பசுவை ‘அம்மா’’ என அழைப்பதும் நாயைச் *செல்லப்பிள்ளை’ என அழைப்பதும் * குறிப்பிடத் தக்கவை ஆகும்.
வானும், கடலும், மரஞ்செடிகொடிகளும், மழை யும், தூறலும், புல்லினங்களும் பழங்குடி மக்களிடத்து அறிவிலும், உணர்வுகளையே கூடுதலாகத் தூண்டின என்பதை மானிடவியலரளர்கள் குறிப்பிட்டனர்.9 யாழ்ப்பாணத்து மரபுவழி அறிவுக் கையளிப்பில் அறிவு, உணர்ச்சி என்ற இரண்டு பரிமாணங்களும் முன்னெடுக் கப்பட்டன. இசை, கவிதை முதலியவை பிரபஞ்ச உணர்வுகளை முன்னெடுத்தன. காலக்கணிதம், மருத் துவம் முதலியவை பிரபஞ்ச அறிகையை வளர்த்தன.
இயற்கையை எதிர்ப்பொருளாகக் கருதாது தம்மை ஒத்த ஒரு பொருளாகக் கருதும் உளப்பாங்கு மாணவ ரிடத்தே வளர்க்கப்பட்டது. உதாரணமாக மழை பெய்யாவிடில் இரங்கிக் கேட்டால் மழை வரும் என்ற நம்பிக்கை கல்விச் செயல்முறையின் வழியாக முன் னெடுக்கப்பட்டது.
“காட்டுமடலிறங்கக்
கனத்த மழை பெய்யவேணும்
ஊசிபோல் காலிறங்கி
உலகமெல்லாம் பெய்யவேணும்’ என்பது மழைவேண்டல் பாடற் பகுதியாகும்.

Page 12
ஐம்பூதங்களாகிய நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகியவற்றுடன் இணைந்த உறுப்பாக மனிதரைக் கருதும் அறிவுக் கையளிப்பு நிகழ்ந்தது. மரபுவழி முகிழ்த்தெழுந்த இக்கருத்துக்கும் வேதாந்த சாராம்சத்துக்குமிடையே தொடர்புகள் இருப்பதையும் சுட்டிக்காட்ட வேண்டி யுள்ளது. பூர்வீக மனிதர்கள் தத்துவ விசாரமுடையவர் களாகவே காணப்பட்டார்கள் என்ற கருத்து பாரம் பரிய தமிழ்க் கல்விச் செயல்முறையாக்கத்துக்கும் ஏற்புடையதாக இருந்தது. நவீன பண்பாட்டில் செயற்கையான நுகர்ச்சிப் பொருள்கள் மிகையாகக் காணப்பட, ஐரோப்பியர் வருகைக்கு முற்பட்ட யாழ்ப் பாணச் சமூகத்தில் இயற்கைப் பொருள்களின் நுகர்ச் சியே மிகையாகக் காணப்பட்டது. அந்நிலையில் இயற்கை தழுவிய ஆக்கச் சிந்தனை, தெறிகிந்தனை (Reflective Thinking) முதலியவற்றுடன் இயற்கையை தெய்வீகமாகக் காணும் மெய்யியற் சிந்தனைகளும் இளைய தலைமுறையினருக்குக் கையளிக்கப்பட்டன.
அறிவை ஒழுங்கமைக்கும் பணியில் முன் னின் றுழைத்த ஆசிரியர்கள் அதனை வகைப்படுத்தல், ஒழுங்க மைத்தல் முதலாம் ஆற்றலை இளைய தலைமுறை யினரிடத்தும் கையளித்தனர். மரபுவழி இலக்கணக்கல்வி வளர்வதற்கு இந்த ஆற்றல் பெரிதும் துணை செய்தது.
பாரம்பரியமான கல்வியானது தொழில்முறை சார்ந்ததும் குடும்பமுறை சார்ந்ததுமான ஒரு தொடர்ச் சியைப் (Continuity) பேணிக்காத்தது. நவீன கல்வி அந்தத் தொடர்ச்சியில் முறிவுகளை ஏற்படுத்திவருகின் றது. ஒரு குடியானவனின் மகன் எழுதுவினைஞராகின் றான்; ஒரு பண்ணையாரின் மகன் சட்டத்தரணியாகின் றான்; ஒர் இத்தாலியக் குடியகல்வாளன் அமெரிக்கப் பிரசையாகின்றான் - என்றவாறு நவீன கல்வியின் தொடர்ச்சி முறிவுகள் சுட்டிக்காட்டப்படுகின்றன.10 உலகளாவிய மரபுவழிக் கல்வி இயல்பு யாழ்ப்பாண மரபுடன் ஒப்புமை கொண்டிருந்தது. வாழ்க்கைத்
I4 -

தொடர்ச்சி, தொழில்முறைத் தொடர்ச்சி முதலிய வற்றுக்கும் மரபுவழிக் கல்விக்கும் நேரடியான இணைப் புக் காணப்பட்டது.
யாழ்ப்பாணத்து மரபுவழிக் கல்விக் கையளிப்பு செயல்வழிப்பட்டதாயும் பயன்கொள் பண்புடையதாக 6 lb (Pragmatic Character) 5IT600TLull-gil. g. Lig களும், விழாக்களும் இந்தப் பண்பை நன்கு எடுத்துக் காட்டின. நாட்டார் பாடல்களிலே இந்தச் செயல்வழி, பயன்வழிப் பண்புகள் தெளிவாகத் தெரிந்தன.11
"ஆடு மேயுது ஆலங்குளாய்
வெட்டையிலே மாடு மேயுது மல்வத்து வெட்டையிலே’ என்ற நாட்டார் பாடலிலே கவித்துவ அலங்காரங் களிலும் பார்க்க, செயல்வழிப் பண்புகளே மேலோங்கி உள்ளன.
*ஆத்தா உனக்குப்
பழம் பாக்கு வெத்திலை வைக்கிறன்
காத்தருள்வாயே" என்ற சடங்குப் பாடலிலும் பயன்வழிப் பண்புகள் முனைப்புப்பெறல் குறிப்பிடத்தக்கது.
அறிவுக் கையளிப்பில் “நீர்ப் பண்பாடு பேணல்”* சிறப்பார்ந்த இடத்தைப் பெற்றது. நீர் நிலைகளை அசுத்தம் செய்யாதிருத்தல், மழைநீரைக் கட்டிவைத்தல், நீரை வணக்கத்துக்குரிய பொருளாகக் கருதுதல் முதலி யவை காணப்பட்டன. நீருக்குத் தண்மை என்ற அடை மொழி கொடுத்து “தண்ணிர்* - “தண்ணி?? என்று அழைக்கும் மரபு இன்றும் உண்டு. கிணற்றைப் புனித மாகக் கருதியமையால் கிணற்றடி வைரவர்,கிணற்றடிப் பிள்ளையார் , கிணற்றடிப் பொங்கல் முதலிய வளர்ச்சி
- 15

Page 13
களும் ஏற்பட்டன. துடக்கு, தீட்டு முதலியவற்றுடன் கிணற்றில் நீரள்ளுதல் இன்றும் யாழ்ப்பாணத்துக் கிராமங்களில் ஒரு குழுமத் தடையாக (Taboo) உள்ளது.
சிறுவர்கள் தவறு செய்யும்பொழுது “தண்ணியும் ஒரு பிழை பொறுக்கும்” என்று கூறும் வழக்கு உண்டு. அழுக்கை நீக்கும் தண்ணிர் அழுக்கைத் தாங்கும் பொரு ளாகும். கருத்துக் கையளிப்பு மேற்கூறிய பழமொழி யினால் வற்புறுத்தப்படுகின்றது.
அறிவுக் கையளிப்பில் 'பிரச்சினை விடுத்தல்?? (Problem Solving) சிறப்பார்ந்த இடத்தைப் பெற்றது. மரபுவழிப் பேச்சில் பிரச்சினை என்பது 'முடிச்சு”* என்று கூறப்பட்டது. பிரச்சினை விடுத்தல் என்பது ""முடிச்சவிழ்த்தல்' எனப்பட்டது. சிறிய பிரச்சினை *சிறு முடிச்சு” எனவும் பெரிய பிரச்சினை “பெரு முடிச்சு" எனவும், சிக்கலாகிய பிரச்சினை “படுமுடிச்சு’ எனவும் குறிப்பிடப்பட்டது. சொல்சார்ந்த முடிச் சவிழ்த்தல், கருத்துச் சார்ந்த முடிச்சவிழ்த்தல், செயல் சார்ந்த முடிச்சவிழ்த்தல் முத்லியவற்றைத் தெரிந்து ஒருவரது முதிர்ச்சிக்கேற்றவாறு பிரச்சினைகள் ஒழுங் கமைத்துக் கொடுக்கப்பட்டன,
உண்ணும்போது “பகிர்ந்துண்ணல்" என்னும் மரபு ‘குழு உணர்வு’ என்ற உணர்வைத் தெளிவுபடுத்தியது. சாப்பிடும்பொழுது பிறருக்குக் கொடுத்துச் சாப்பிடும் மரபு, உண்ணும் முன்னர் காகத்துக்குச் சமர்ப்பித்த பின்னர் உண்ணும் குறியீட்டினாற் புலப்படுத்தப்படு கின்றது. உணவைப் பகிர்ந்துண்ணும் மரபின் இன் னொரு குறியீடாக அமைவது சமைத்த உணவை அடுப்பு நாச்சியாருக்குக் கொடுத்தலாகும். இம்மரபு இன்றும் வடமராட்சிப் பகுதியிற் காணப்படுகின்றது.
அடிப்படையான அறவொழுக்கங்களை உணவி லிருந்து கற்பிக்கும் மரபு காணப்பட்டது. எடுத்துக் காட்டுக்கள் சில வருமாறு:-
-ه 6 H

பகுத்துண்டு பலரும் வாழ்தல். பகுத்து உண்பதன் வாயிலாக அன்பையும், உறவை யும் பகிர்ந்துகொள்ளல். 3. உணவின் வழியாக சுகவாழ்வுப் பழக்கங்களைக்
கற்றுக்கொள்ளல். 4. உணவை உற்பத்தி செய்தோருக்கு நன்றி செலுத்
துதல் 5. உணவைத் தயாரிக்கும் பொழுதும் பரிமாறும் பொழுதும் அமைதியையும் சாந்தியையும்பேணுதல்." 6. சத்தியம், தர்மம் தவறினால் உணவு கிடைக்காமல்
விட்டுவிடும் என்று கூறுதல். 7. கொடுத்தார்க்குக் குறைவில்லை என்ற அறவழியை
விளக்குதல். 8. நலிந்தார்க்கு உதவுதல் - மெலிந்தார்க்கு உதவுதல்,
:
உணவிலிருந்தே அறக் கல்வியும் ஒழுக்கக் கல்வியும் முகிழ்த்தெழும் மரபினைக் காணமுடிகிறது. யாழ்ப் பாணத்து மரபுவழிக் கல்வியில் இது ஒரு தனித்துவ மான பண்பாகக் கருதப்படுகின்றது.
அறிவுக் கையளிப்பில் முதியோரைக் கனம் பண்ணு தலும், அன்புசெலுத்துதலும் சிறப்பாக மேற்கொள்ளப் பட்டது. விலங்குகளைக் குறியீடாக வைத்தும் இந்த அறிவுக் கையளிப்பு நிகழ்ந்தது. பசு, எருது, ஆடு போன்ற விலங்குகளில் மூத்த விலங்குகளுக்குக் கூடுத லான மதிப்பும், பராமரிப்பும் வழங்கப்பட்டது. பேச்சு வழக்கில் "மூத்தவி" என்ற பெயரும் அவற்றுக்குக் குறிக்கப்பட்டன. பால் தந்த பசு வயது முதிர்ந்து பால் தராவிடிலும் அதனை அன்புடன் பராமரிக்கும் குறியீட்டின் வழியாக வீட்டிலுள்ள உழைக்காத முதி யோரைப் பாதுகாத்தல் வேண்டுமென்ற உணர்வுக் கையளிப்பு நிகழ்ந்தது. ‘பால் வார்க்காவிட்டாலும் பால்வார்த்த பானையைப் பார்' என்ற அறம் வலி யுறுத்தும் பண்பு இன்றும் முதியோரிடம் காணப்படு கின்றது.
- I 7

Page 14
நூற்கல்வி ஒழுங்கமைப்பு
நூற்கல்வி பெறாதிருத்தல் வாழ்க்கையில் நிறை வெய்தாதிருத்தலாகக் கருதப்பட்டது. அறிவில் முழுமை பெறல் 'நிறைகுடம்' என்ற எண்ணக்கருவினாற் குறிப்பிடப்பட்டது. நூற்கல்வி பெற்றோரிடமிருந்து பலர் நன்மைபெறுதலால் அவர்களைக் “காய்க்கும் மரம் போன்றோர்’ என்றும் அழைத்தனர். இலக்கிய நடையில் கற்றோரைச் "சித்தமழகியார்’ என்று கூறும் மரபு காணப்பட்டது. அவர்கள் "அழகிய மாந்தர்' எனவும் அழைக்கப்பட்டினர்.
**வல்லவர்', 'வல்லவராயர்', 'மாப்பாணர்', *புலவர்', ‘நூலாசியர்', 'யோகியர்", "ஞானியர்* "வாணர்" போன்ற பல்வேறு அடைமொழிகள் நூற் கல்வி வல்லாருக்கு வழங்கப்பெற்றன. மக்கள் கூடும் சபைகளிற் கற்றோருக்கு முதலிடம் வழங்கப்பெற்றது. எத்தகைய ஒரு சமூக ஒன்றுகூடலிலும் முதலிடம் அவர்களுக்கே கிடைத்தது. நூற்கல்வி பெற்றவர்களின் உரை **நல்வாக்கு’ எனப்பட்டது.
கற்றவர்களே சமூக ஒழுங்கைப் பாதுகாக்கும் காவலர்களாகவும், முரண்பாடுகளைத் தீர்த்துவைக்கும் நடுவர்களாகவும் விளங்கினர். ‘அக்கத்துக்கும் பக்கத் துக்கும் மல்லிகைப்பூ - நடுவிலை ஓர் ஏட்டுடையார்' என்ற தொடர், 12 முரண்படும் இருசாராரையும் சம மாகவும் கெளரவமாகவும் நடத்தியமைக்குச் சான்றாக வுள்ளது.
ஒழுக்க நூல்களைக் கற்பவர்கள் ஒழுக்கமாகவே நடந்துகொள்வார்கள் என்ற கருத்து மக்கள் மத்தியிலே நிலவியது. இந்நிலையில் நூற்கல்வியும் நல்லொழுக்கமும் பிரிக்கத்தகாதவையாக அமைந்தன. நூற்கல்வி கற்றவர் நல்லொழுக்கமுடையவர், தவறுசெய்யாதவர், பிறர்மீது கருணை உடையவர், நீதி சொல்பவர் என்றவாறான
8 -

கருத்துக்கள் நிலவிவந்தன. கற்றல் தொடர்பான உயர்ந்த பெறுமானங்களைச் சமூகம் கொண்டிருந்தது.
சிந்தித்துப் பேசுதல், நிதானமாகப் பேசுதல், தளம்ப லின்றிப் பேசுதல், பண்டைய நூல்களை மேற்கோள் காட்டிப் பேசுதல், அமைதியாகப் பேசுதல், உணர்ச்சி வசப்படாது பேசுதல், தெளிவுபெறப் பேசுதல் முதலி யவை கற்றோருக்குரிய மொழி வெளிப்பாடுகளாகக் கருதப்பட்டன. உரத்த தொனியிலே சிரித்தல், வைதல், பிழைபடப் பேசுதல், அடக்கமின்றிப் பேசுதல், முரண் படப் பேசுதல் முதலியவை கற்றோரால் தவிர்க்கப் பட்டன.
ஆழ்ந்த அறிவுபெற்ற சான்றோர் வரன்முறையான கல்வியைத் தொடக்கிவைக்கும் நிகழ்ச்சி ‘ஏடு தொடக் கல்" எனப்படும். குழந்தைகளுக்குத் தாலாட்டும் பொழுது, ஏட்டுக்கல்வி பற்றிய கருத்துக்களைத் தொடர்புபடுத்திப் பாடும் மரபும் காணப்பட்டது.13
* "பாட்டன் படித்த ஒலை
பாலனுக்குத் துணையாகும் அப்பன் படித்த ஒலை அரசனுக்குத் துணையாகும்’
“ ‘பூட்டன் எடுத்துரைத்த பொன்கூர் எழுத்தாணி ஏட்டுக்குள் இருக்குதையா என் மணியே கண்வளராய்',
எழுத்தறிவையும் தாலாட்டையும் தொடர்புபடுத் தும் பாடல்கள் உலகின் வேறுபல பண்பாடுகளிலும் காணப்படுகின்றன.14
பசுமாடு கட்டிய பனை ஓலையின் சார்வுகளே படிப்பதற்குரிய ஏடுகள் செய்வதற்குத் தெரிந்தெடுக்கப் பட்டன. ஏடு பதனிடுவதற்கும், எழுதுவதற்கும் வளர்
- 9

Page 15
பிறை நாட்களே பொருத்தமெனக் கருதப்பட்டன. எழுதத் தொடங்குவதற்கு முன்னர் ஏட்டில் மஞ்சள் பூசப்பட்டது. அகர வரிசை எழுதும்பொழுது உயி ரெழுத்துக்களின் நிறைவில் எழுதப்படும் ஆயுத எழுத் தாகிய அகேனம் (ஃ) அறிவின் முடிவிலியாகும் பண்பை மாணவர்க்கு உணர்த்தியதென்ற கருத்தும் உண்டு. ஏடு தொடக்கிய நாளில் சிவபெருமானது அடிமுடி தேடிய கதையைச் சொல்லிக்கொடுக்கும் மரபும் காணப் பட்டது. கல்வி கரையிலத என்ற கருத்தைக் குறிப்பால் உணர்த்துவதற்கும் இந்தக் கதை பயன்பட்டது. ஏட்டுக் கல்வியின் தொடக்கம் இனிமையாக இருக்கவேண்டும் என்பதற்காக அரிச்சுவடியைச் சொல்வதற்கு முன் குழந்தையின் வாயில் கற்கண்டை அல்லது தேனைக் கொடுக்கும் வழக்கமும் நிலவியது.
கற்பித்தலில் மனன முறைக்கே ஒப்பீட்டளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தேடிக் கண்டுபிடித் துக் கற்கும் முறையியலும் வழக்கிலிருந்தது. உதாரண மாக, செய்யுளில் இடம்பெறும் ஒரு மலர் அல்லது மரம் பற்றி விளக்கும்பொழுது அதன் பண்புகளைக் க்கூறி, குறித்த இடத்திற்குப் போனால் அதனைப் பார்க்கலாம் என்று ஆசிரியர் குறிப்பிடுவார். அவ்விடத்திற்குச் சென்று அதனைத் தேடிக் கண்டுபிடித்து அதன் இலை, பூ முதலியவற்றை எடுத்துவந்து மாணவர்கள் ஆசிரிய ருக்குச் சமர்ப்பிப்பர்.
பாவனை செய்து கற்கும் முறையியலும் பின் பற்றப்பட்டது. ஆசிரியரது உச்சரிப்பைப் பின்பற்றி உச்சரித்தல், ஆரம்ப நிலைப் பாவனைக் கற்றலாக அமைந்தது. படிப்படியாக ஆசிரியரது இசையைப் பின் பற்றி வெண்பா, கலிப்பா, விருத்தப்பா முதலியவற்றைப் பாடும் மரபு வழக்கிலிருந்தது. "மறதி என்பது கற்ற லுக்கு எதிரான ஒரு விசையாகக் கருதப்பட்டது. செய் யுளுக்கு உரை சொல்லல் என்பது கற்றலின் வழியாக
20 -

வளர்க்கப்படவேண்டிய ஓர் அடிப்படைத் திறனாக முன் மொழியப்பட்டது. உரை சொல்லல் வாயிலாக உரை நடையாற்றல் வளர்க்கப்படலாம் என்ற நம்பிக்கை நிலவியது.
பேசும்பொழுது பேச்சின் உள்ளடக்கம் பற்றிய சிந் தனைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. கருத்தாழம் குன்றிய பேச்சு ‘வெட்டிப்பேச்சு”, “உப்பில்லாப் பேச்சு", *வைக்கோல் மோதகம்’, 'பசப்பல் முதலிய தொடர் களாற் குறிப்பிடப்பட்டது. ஏட்டுக்கல்வியின் முன்னேற் றம் ஒருவரது கருத்தாழம் கொண்ட பேச்சிலிருந்து அறியப்பட்டது.
தற்காலத்திலே காணப்படுதல் போன்று திட்ட வட்டமாக வரையறுக்கப்பட்ட கலைத்திட்ட ஏற்பாடு, மரபுவழிக் கல்வியிலே காணப்படவில்லை. ஆசிரியரது இயல்புக்கும் மாணவரது தனியாள் வேறுபாடுகளுக்கு ஏற்பவும் கற்றல் உள்ளடக்கம் வேறுபட்டுக் காணப் பட்டது. கற்பிக்கப்படும் நேரம் ஆசிரியரது தேவை களை அடியொற்றி மாற்றம் செய்யப்படத்தக்க நெகிழ்ச்சி கொண்டிருந்தது. விதைப்பு, அறுவடை, வேளாண்மை நிகழாத பருவங்களில் மாணவர்களுக்குக் கூடுதலான ஒப்படைகளை ஆசிரியர் வழங்கினர். பழைய ஏடுகளைப் படியெடுத்தல் ஒப்படைகளுள் முக்கியமான தாக விளங்கியது.
மெய்ப்பொருளைக் கண்டறிதல், ஒவ்வொரு செய் யுளிலும், வசனத்திலும், சொல்லிலும் மறைந்துள்ள உட்பொருளைக் கண்டறிதல் என்ற செயற்பாட்டில் மாணவரை ஈடுபடச் செய்தல் முதலியவை கற்பித்தலின் உன்னதங்களாகக் கருதப்பட்டன. அறிவறிந்து ஒழுகு தலே உயரிய நடத்தை என்ற கருத்து நிலவியது. செய் யுள்களின் உயரிய நோக்கம், யாப்பு, அணி, நயங் களைக் கற்றலிலும், அதிலிருந்து பெறப்படும் அற வொழுக்கப்படி ஒழுகலே சிறந்ததென்பதை ஆசிரியர் மீள வலியுறுத்தினர்.
-2J

Page 16
திண்ணைப் பள்ளிக்கூடங்கள், குருகுலப் பள்ளிக் கூடங்கள், இராப் பள்ளிக்கூடங்கள், நிலாப் பள்ளிக்கூடங் கள், மரநிழற் பள்ளிக்கூடங்கள், கோவில் மடப் பள்ளிக் கூடங்கள் என்றவாறு பலவிதமான ஒழுங்கமைப்புக்கள் ஏட்டுக் கல்வியை வழங்கி வந்தன. இலக்கியக் கல்வி, மருத்துவக் கல்வி, சோதிடக் கல்வி என்றவாறு ஏட்டுக் கல்வியிற் சிறப்பார்ந்த துறைகளை அவற்றுக்குரிய வல்லுநர்களிடம் கற்கும் மரபும் காணப்பட்டது.
தொகுப்பு
சமூக ஆக்கத்தோடும், பொருண்மிய நடவடிக்கை களோடும் ஏட்டுக்கல்வி இசைந்து சென்றமையால் "ஏடறிந்தார் நாடறிந்தார்’ என்று சிறப்பித்துக் கூறப் பட்டனர். "ஏட்டுக்கில்லைப் பூட்டு’ என்ற தொடர் சமூக நிரலமைப்பு வேறுபாடின்றி அனைவருக்கும் ஏட்டுக் கல்வி கிடைத்த செயற்பாங்கைக் குறிப்பிடுகின்றது.
கல்வியானது மனித மேம்பாட்டுக்கு உதவும் என்ற கருத்தியல் தளமும், செய்யும் தொழில்களை வளம் படுத்தும் என்ற நடைமுறைத் தளமும் சமூகத்திற் காணப்பட்டமையால், மேலைத்தேயக் கல்வி முறை யானது இலகுவிலே யாழ்ப்பாணச் சமூகத்தில் வேர் பதிக்கக்கூடியதாக இருந்தது.
22

Foot Notes:
.
0
姐1。
2.
3.
14.
Newton Gunasinghe, Changing Socio-Economic Relations in the Kandyan Countryside, Social Scientists Association, Colombo, 1990, p. 32.
எஸ். பரமசாமி, செவ்வி, இணுவில், 03.06.97.
மேலது.
Nirad C. Chaudhuri, Hinduism, A Religion to Live by, Oxford University Press, Delhi, 1996, p. 162.
Asthenia in Greek and Infirmit as in Latin
எஸ். பரமசாமி, மேலது.
மேலதுg
Robert Redfield, The Primitive world and its Transformations. Penguin Books, Middlesex, 1968, p. 35.
Margaret Mead, The Mountain Arapesh-Supernaturalism, Newyork, i940, pp .. 319—45 i.
• Robert Redfield op. cit, p. 126.
க, கந்தசுவாமி, செவ்வி, இணுவில், 25.12.96.
மேலது.
மேலது.
Margaret Mead, (ed.) Childhood in Contemporary
Cultures, The University of Chicago Press, 1995, pp. 122-23.
ld
2
3.

Page 17
யாழ்ப்பாணத்து மரபுவழிப் பெண் கல்வி
எழுத்து வடிவிலமைந்த வரன்முறையான நேரடி ஆவணங்கள் கிடைக்கப் பெறாமையால் நாட்டாரியல், அறிகை மானிடவியல் (Cognitive Anthropology), felpd), LDraf L65ugi) (p565u i ஆய்வுப் புலங்களின் வழியாக யாழ்ப்பாணத்து மரபு வழிப் பெண்கல்வி பற்றி ஆராயவேண்டியுள்ளது. சமூகம் என்பது பல நிரலமைப்புக்களை உள்ளடக்கிய வடிவ மாதலால், உயர்ந்தோர் வழக்குகளை மட்டும் அடிப் படையாகக் கொண்டு மரபுவழிப் பெண் கல்வி பற்றி அறியமுற்படுதல் முழுமையாகாது. தமிழர் பாரம்பரியத் தில் நிகழ்ந்த கூட்டுமொத்தமான கல்விச் செயற்பாடு களை விளங்கிக்கொள்வதற்கு யாழ்ப்பாணச் சமூகத் தின் பல்வேறு தளங்களிலும் நிகழ்ந்த பெண் கல்விச் செயற்பாடுகளைத் தொகுத்து நோக்குதல் இன்றி யமையாததாகும்.
2 4 -

ஒழுங்குபடுத்தப்பட்ட நவீன கல்வி நிறுவன வடிவங் களை ஒத்த காட்டுருக்கள் யாழ்ப்பாணத்து மரபுவழிப் பெண் கல்வியிலே காணப்படாவிடிலும் அறிகைசார் கல்வி, எழுச்சிசார் கல்வி, உடலியக்கம்சார் கல்வி முதலியவற்றைப் பெண்களுக்கு வழங்குவதற்கான வினைத்திறன் பொருந்திய செயலமைப்புத் தொகுதிகள் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தமைக்குப் பரவலான சான்று கள் உள்ளன.
பெண்களை வலுவின் குறியீடுகளாகக் கருதும் பொது வான மரபு, கருத்தியல் வழியாகவும், செயல் வழியாக வும் இரு நிலைகளில் இணைப்பைக் கொண்டிருந்தது.1 எந்த ஒரு சமூகக் கட்டுமானமும் தனக்குரிய அறிவுக் கையளிப்பு, அனுபவக் கையளிப்பு,உணர்ச்சிக் கையளிப்பு முதலியவற்றைத் தொடர்ந்துவரும் தலைமுறையின ருக்கு வழங்குவதற்குரிய முறைசார் கல்வி முறைமையை யும், முறைசாராக் கல்வி முறைமையையும் இயக்கிய வண்ணமிருக்கும். கல்விச் செயல்முறையானது பெண்கள் உள்ளிட்ட அனைத்து வயதுத் தொகுதியினருக்குமுரிய உடல், உள ஆற்றல்களைச் சமூக இயல்புக்கு ஏற்ற வாறு முன்னெடுப்பதில் முனைந்து செயல்கொள்வது, சமூக இருப்புக்கு அவசிய்மானதாகும். எந்த ஒரு பண் பாட்டினதும் மரபுவழிக் கல்வியை ஆராயும்பொழுது, சில அடிப்படையான எண்ணக்கரு விளக்கங்களை ஏற்படுத்தவேண்டியுள்ளது. இதன் தொடர்பில் “எழுத் தறிவு' (Literacy) என்ற எண்ணக்கரு முதற்கண் முக்கியத்துவம் பெறுகின்றது. எழுத்தறிவு என்பது கல்விச் செயல்முறையின் ஒரு பிரதான பரிமாணம். ஆனால் எழுத்தறிவு இன்றியும் ஒருவர் கல்விச் செயல் முறையில் ஈடுபடமுடியும் என்பதை முதற்கண் மனங்கொள்ளவேண்டியுள்ளது. யாழ்ப்பாணத்து மரபு வழிப் பெண் கல்வி பற்றி ஆராயும்பொழுது இந்த எண்ணக்கரு விளக்கம் முக்கியமானதாகும். **செவி வழியாக மனப்பாடம் செய்தலும், ஒப்புவித்தலும், பிரயோகித்தலும்’ என்ற கல்விச் செயன்முறையானது
25

Page 18
எழுத்துத்திறன் சம்பந்தப்படாது யாழ்ப்பாணத்துப் பெண்களிடையே நிலவிவந்துள்ளது. யாழ்ப்பாணத்து
மரபில் 'மனக்கணிதம்', 'மனப்பாடம்’, ‘நினை வோலை’’, ‘வாய்ப்பாடம்' 'வாயெழுத்து' 'வாய் முறைப்பாடு", ஞாபகப்பெட்டகம்** முதலிய பல
தொடர்கள் எழுத்தறிவுசாரா மொழிவாயிலாக நிகழும் கற்றற் செயல்முறையினைப் புலப்படுத்துகின்றன. உலகில் வழங்கும் மொழிகள் சில இன்றுகூட வரிவடிவம் அற்ற மொழிகளாக இருத்தல் ஈண்டு நினைவுகொள்ளத் தக்கது.
பாரம்பரியமான யாழ்ப்பாணச் சமூக அமைப்பிற் காணப்பெற்ற பொருண்மிய முரண்பாடுகள் பெண் களின் நிலையில் ஏற்படுத்திய செல்வாக்குகளின் விளை வாக, அவர்களின் சமூகப் பரிமாணத்தில் இருமைத் தன்மைகள் காணப்பெற்றன. ஆய்வாளர்கள் இந்த இருமைத் தன்மைகளைத் தெளிவாகச் சுட்டிக்காட்டி யுள்ளனர்.? யாழ்ப்பாணத்துப் பெண்களின் சமூகப் பரிமாணம் ஒருபுறம் வலுவும், ஆற்றலும் பொருந்திய தாகக் காணப்பட்டது; மறுபுறம் நலிவுக்கும் அடக்கு முறைமைக்கும் உட்பட்டதாக இருந்தது.
பெண் கல்வி தொடர்பான கருத்தியல் முரண் பாடுகள் அராலியூர் இராமலிங்க முனிவரின் பாடல் களிலே (1649) தெளிவாகக் காணப்படுகின்றது.
‘பேதையர் தம்மைப் பெற்றனமென்று பேதுறன் மிகப் பெரும்பிழையே’ என்று இராமலிங்க முனிவர் சுட்டிக்காட்டினார்.3
பெண்களை ஏககாலத்தில் புகழ்ந்துரைத்தலும், இகழ்ந்துரைத்தலும், அறிவுக்கு எடுத்துக்காட்டாகச் சொல்லுதலும், அறியாமைக்கு எடுத்துக்காட்டாகச் சொல்லுதலும், எல்லாம் தெரிந்தவர்கள் என்று கூறு தலும், எதுவும் தெரியாதவர்கள் என்று கூறுதலும்
-۔ 236

முரண்பாடுகளை எடுத்துக்காட்டுகின்றன. யாழ்ப் பாணத்துத் தேச வழமைச் சட்டத்தை (S J. Thambiah, 1973) ஆராய்ந்து பார்க்கும் பொழுது பெண்களின் சொத்துரிமை தொடர்பான முரண்பட்ட பண்புகளைக் காணலாம். ஒருபுறம் பெண்களின் சொத்துக்குப் பாது காப்புத் தருகின்ற பண்புகள் காணப்பட்டாலும், மறு புறம் பெண்களின் சொத்துக்களுக்குரிய பாதுகாப்பு உறுதி போதாமையும் காணப்படுகின்றன.
மரபுவழி யாழ்ப்பாணச் சமூகத்தின் ஆண், பெண் உற்பத்தி முறைமை வேறுபாடுகளைப் பின்வருமாறு சுட்டிக்காட்டலாம்:
1. பெண்கள் இல்லம் சார் (Domestic) உற்பத்தியில் ஈடுபட, ஆண்கள் இல்லம் கடந்த உற்பத்திச் செயற் பாடுகளில் ஈடுபட்டனர். பொருள் உற்பத்தியும், இனப்பெருக்கமும் தொடர் பான மீநிலைக் கட்டுப்பாடு ஆண்கள் வசமிருந்தது. பொருள் உற்பத்தியிலும், இனப்பெருக்கத்திலும் பெண்களின் பங்குபற்றல் தவிர்க்கமுடியாதிருந்தது. 3. பொருண்மிய உற்பத்திச் சடங்குகளில் ஆண்களுக்கு முன்னுரிமை தரப்பட்டது. வளமியச் (Fertility) சடங்குகளில் பெண்களுக்கு முன்னுரிமை தரப் பட்டது.
2
4. அறிவுசார் தீர்மானங்கள் ஆண்களிடத்தும்,உணர்ச்சி சார் தீர்மானங்கள் பெண்களிடத்தும் விடப்பட்டன.
5. திருமணத் தொடர்பாடற் கண்ணோட்டத்தில் நோக்கும்பொழுது, செய்தியை அனுப்புதல், பெறு தல் முதலிய செயற்பாடுகளில் ஆண்கள் முக்கியத் துவம் பெற்றனர். பெண்கள் திருமண நிச்சயிப்பின் செய்திப்பொருளாக (Message) அமைந்தனர்.
6. ஆண்களின் உழைப்பு மதிப்பீடு செய்யப்பட்டதாயும் பெண்களின் உழைப்பு மதிப்பீடு செய்யப்படாத தாயும் அமைந்தது.

Page 19
7. குழந்தைகளின் வளர்ப்பும், அவர்களுக்கான கல்விக் கையளிப்பும் பெருமளவில் பெண்களுக்குரியவை யாக நிபந்தனைப்படுத்தப்பட்டிருந்தன.
8. சாதிய முறைமைக்கேற்ப பெண்களின் கல்விச்
செயற்பாடுகள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன.
மேற்கூறிய இயல்புகளுக்கும் கல்வி முறைமைக்கு மிடையே பல்வேறுதொடர்புகளையும் இணைப்புக்களை யும் காணமுடியும். பெண்களுக்கான கல்வியின் முக்கியத் துவத்தை சமூகம் பல்வேறு கோணங்களிலே வற்புறுத் தியது. கல்வி “வாக்கு' என்றும் குறிப்பிடப்பட்டது. சிறப்பு மிக்க கல்வி, ‘செல்வாக்கு” என்றும் குறிப் பிடத்தக்கது. உடல் அலங்காரத்திலும் மேம்பாடான தாகக் கல்வியைக் குறிப்பிடும் ‘கல்வி அழகே அழகு" " என்ற தொடர் வழக்கிலிருந்தது. “கமச்சி, இடைச்சி, உடைச்சி, வலைச்சி.’’ என்ற எல்லாப் பெண்களையும் *வாக்கு நகை போட்டு வடம்பிடிக்க வாருங்கடி' என்ற தொடர் வேறொரு பரிமாணத்தில் கல்வியின் முக்கியத் துவத்தை விளக்கியது. இங்கு '' வாக்கு நகை' என்பது கற்றலினால் நிகழும் சிறப்பைக் குறித்து நின்றது.4
யாழ்ப்பாணத்துக்கு ஐரோப்பியர் வருகையைத் தொடர்ந்து நிகழ்ந்த பண்பாட்டுச் செல்வாக்குகள் பாரம்பரியமான கல்வி ஒழுங்கமைப்பில் சமநிலைத் தளம்பல்களை ஏற்படுத்திய வேளை பெண்களுக்கு மேலைப்புல வடிவில் அமைந்த கல்வி வேண்டும் என்ப தும் வேண்டத்தகாது என்பதுமான முரண்பாடுகள் சமூகத்தில் ஏககாலத்திலே நிலவின. இந்நிலையில், பெண் கல்வியின் சிறப்பை நேரடியாகவும் மறைமுக மாகவும் வலியுறுத்தும் வழக்கம் மேலோங்கியது. சில எடுத்துக்காட்டுகள் வருமாறு:-
1. 'கல்லாள் - கல்லாள்' - அதாவது படிக்காதவள்
கல்போன்றவள் எனப்பட்டது.
28 -

2. "படியாள் - படியாள்" - படிக்காதவள் கற்படி போன்று மிதிக்கப்படுவள் என்று விளக்கப் பட்டது.
இந்துப் பாரம்பரியத்தில் பெண்களின் அந்தஸ்து, அவர்களுக்குரிய பொருளாதாரவலு, அவர்கள் வாழும் இல்லங்களுக்குரிய கூரிடர்கள் (Constraints), சுயமாகத் தீர்மானங்கள் எடுப்பதற்குரிய அதிகாரம், குடும்ப அந்தஸ்து முதலியவற்றால் தீர்மானிக்கப்படுதலை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால் யாழ்ப் பாணப் பாரம்பரியத்தில் இவற்றுடன் பெண்களுக்குரிய அறிவுத்திறன், மனப்பாங்கு என்பவை அவர்களின் அந்தஸ்தைத் தீர்மானிப்பதில் சிறப்பார்ந்த பண்புக ளாக அமைந்தன.
புலக்காட்சி கொள்ளல், அறிதல், சிந்தித்தல், உணர் தல், பெறுமானங்கொள்ளல் முதலிய செயற்பாடுகள் மரபுவழிக் கல்வியில் முன்னெடுக்கப்பட்டன. நடப் பியலை அறிவொழுங்குபடுத்தல் (Codification of Reality) என்ற செயற்பாடு பண்பாட்டுக் கோலங்களால் நெறிப்படுத்தப்படுகின்றது. தமிழரின் பண்பாட்டில் *பொட்டு' என்பது அறிதலின் குறியீடாக அமைந்தது. சிறு குழந்தைகள் தமது புலன்கள் வழியாகச் சூழலை உள்வாங்கும் புலன்சார் காட்சிகளை (Sense Perception) உருவாக்கும் செயற்பாடுகள் குறியீடுகளினாற் சுட்டிக் காட்டப்பட்டன. குழந்தைகளுக்குப் பெரிய கருமை நிறப் பொட்டிடலால் அவர்களுக்குரிய அறியும்திறன் குறிப்பிடப்படும். திருமணத்தின் பின்னர் சிவப்புநிறப் பொட்டிடுவர். வாழ்க்கை நிலையில் ஏற்படும் மாற்றம் (Existence), ஏற்படும் மாற்றம் உணர்வுநிலையில் (Consciousness) மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது அறியப்பட்டது.
“பொட்டு' என்பதற்குத் 'துவாரம்’ என்ற கருத்தும் உண்டு. யாழ்ப்பாணத்து வேலிகளில் பொட்டு
29 سم

Page 20
வைத்தல் என்பது துவாரம் வைத்தல் என்ற பொரு
Mons. 够 ● s ள்ாகும். வடமராட்சிப் பகுதிகளில் வேலிப்பொட்டு **கண்டாயம்** எனப்படும். “கண்டாயம்', 'பொட்டு?? முதலிய எண்ணக்கருக்கள் நுழைவாயிலைக் குறிப்பிடும். பொட்டு வைத்தல் என்பது அறிவுக்குரிய நுழை வாயிலைக் கண்டுகொள்ளலை அங்கீகரிப்பதாக அமை
கின்றது.
புலக்காட்சி கொள்ளலிலும் அறிவுபெறலிலும் களத் தில் தங்கியுள்ளோர், களத்தில் தங்கியிராத களவிடுதலை uSaori (Field Independent) 6T657 so go, LSifašaotif உள்ளனர். தனியாள் திறன்களை வளர்த்தல், தன் னம்பிக்கையை வளர்த்தல், தனியாள் ஆற்றல்களுக்கு மதிப்பளித்தல், ஒவ்வொருவருக்குமுரிய படைப்பாற் றலை வளர்த்தல், தனித்தன்மைகளுக்கு உற்சாகமளித் தல், உசாவல் விருப்புக்கு (Curiosity) ஊக்கமளித்தல் முதலியவை யாழ்ப்பாணத்துப் பாரம்பரியமான கல்வி யின் வழியாக வளர்த்து எடுக்கப்பட்டன. களத்தில் தங்கியிராதோராக ஆண்களையும் பெண்களையும் வளர்த்தெடுத்தல் கல்வியின் நோக்கமாயிற்று. ஆனால் மேலைத்தேயப் பொருளாதார முறைமையும், கல்வி முறைமையும் களத்தில் தங்கியிருக்கும் செயற்பாடுகளை வளர்க்கலாயின. இந்தக் கருத்து மேலும் ஆழ்ந்த ஆய்வுக்குரியது.
யாழ்ப்பாணத்துப் பாரம்பரிய பொருளாதார நடவடிக்கைகள் மந்தை மேய்த்தல், செறிவுமிக்க சிறு நில விவசாயம், மீன்பிடித்தல் என்ற முப்பெருந்துறை களை உள்ளடக்கியனவாகக் காணப்பட்டன. பொரு ளாதார நடவடிக்கைகளோடு இணைந்ததாகவும், வலு வூட்டுவதாகவும் கல்விச் செயல்முறைகள் தொழிற் பட்டன. கிராமியப் பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தும் ' தனியார் முயற்சியை வலுவூட்டாது, குடும்பம் என்ற அலகை முதன்மைப்படுத்தின. கல்விச் செயல்முறையும் குடும்பம் என்ற அலகினை மீளவலி
30 -

யுறுத்தும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. ஆயின் இங்கு அறிமுகமான மேலைத்தேயக் கல்வி முறைமை குடும்ப உறுப்பினர்களைத் தொழில் அடிப்படையிலும், இடநிலைய அடிப்படையிலும் அந்நியமாக்கியது.
மரபுவழி யாழ்ப்பாணத்துப் பெண் கல்வி முறைமை
யில் கல்வியின் தொழிற்பாடுகள் பின்வரும் துறைகளை முதன்மைப்படுத்துவனவாய் அமைந்தன.
1.
I 0.
சொல்சார் அறிவு, சொல்சாரா அறிவு முதலிய
வற்றைக் கல்விச் செயல் முறையின் வழியாக வளர்த்தல்.
உடலியக்கத்திறன்களை வளர்த்தல்.
மனவெழுச்சிகளுக்குப் பயிற்சி தருதல்.
சமூக இசைவாக்கத் திறன்களை வளர்த்தல்.
விளங்காதவற்றை விளங்க வைத்தல்.
மனப் பதகளிப்பைத் தணித்து கட்டுப்பாடுகளை வளர்த்தல்.
சமூக ஒழுங்கமைப்பைக் கல்விச் செயல்முறையின் வழியாகப் பாதுகாத்தல்.
பெண்களினால் ஏற்கப்படும் பல்வேறு நடிபங்கு களையும் (Role) திறம்படச் செய்வதற்குரிய ஆற்றல்களைப் பயிற்றுவித்தல்.
பெண் என்ற வகையில் மேற்கொள்ளப்படும் சடங்குகளைத் திறம்படச் செய்வதற்குரிய பயிற்சி களைத் தருதல்.
பெண்களுக்குரிய கலையாற்றல் திறன்களையும், கைவினைத் திறன்களையும் வளர்த்தல்.
- 31

Page 21
நாட்டார் வழக்கியல்களில் இருந்து மரபுவழி யாழ்ப்பாணப் பெண்களின் கல்விச் செயற்பாடுகளின் இயல்புகளை உதிரிகளாக அறிந்துகொள்ளக்கூடியதாக வுள்ளது. சில எடுத்துக்காட்டுகள் வருமாறு:-
அ) **கார்க் கர்ச்சி கருங்கண்ணி
கட்டிச் சோறு கட்டித் தாறன், படிக்க வேணுமெண்டால் பறந்துகாட்டு.”*
ஆ) “பெண் மூலம் நிர்மூலம்
பெருவழி ஞான மெண்டால், பெண் மூலம் அரசாளும்.'"
இ) * அவிட்டத்தில் பெண் படித்தால்
தவிட்டுப் பானையும் பொன்னாகும்.”*
ஈ) "கொத்தியாத்தை, கொத்தியாத்தை,
பெண்ணைக் காத்திடு கொத்தியாத்தை, படிக்க வைச்சிடு கொத்தியாத்தை."
உ) **கன்றுப் பனையோலை - அக்காளுக்கு
கணக்கெழுத நல்லோலை.”*
பெண்கள் படிக்கத் தொடங்கும் பொழுது பின் வரும் அடிகளைப் பாடும் மரபும் காணப்பட்டது 8
**விக்கினங்கள் தீர்க்கும்
விநாயகனே முன்நடவாய் கந்தனுக்கு முன்பிறந்த கணபதியே முன்நடவாய் - வல்ல கணபதியே வாக்குத் தொடுத்து வைப்பாய்’.
பாரம்பரியமான யாழ்ப்பாணத்துக் கல்வி முறைமை யில் குழந்தை நிலையிலிருந்தே பெண் கல்வி ஆரம்: மாவதைப் பின்வரும் கிராமியப் பாடல்களின் அடிகள் புலப்படுத்துகின்றன.9
ܗ 2 58

அ) ''சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
சாயக்குயிலே சாய்ந்தாடு குத்துவிளக்கே சாய்ந்தாடு கோவில் புறாவே சாய்ந்தாடு குயிலே மயிலே சாய்ந்தாடு'
ஆ) ‘கைவீசம்மா கை வீசு
கடைக்குப் போகலாம் கைவீசு'
இ) 'நாய்க்குப் படிப்பில்லை
நரிக்குப் படிப்பில்லை நான் பெத்த பெண்ணுக்குப் படிப்பு வா படிப்பு வா...'
ஈ) தோள் வீசம்மா தோள் வீசு
சுந்தரக்கிளியே தோள் வீசு வானே பூவே தோள் வீசு வாக்குப் பொலியத் தோள் வீசு.”*
இசைக்கல்வி
*பெண்ணுக்குப் பாட்டு’ என்ற தொடர் யாழ்ப் பாணத்தில் வழக்கிலிருந்தது. பெண்கள் பாடலில் வல்லவர்களாக வரவேண்டும் என்றும் எதிர்பார்க்கப் பட்டது. தாலாட்டிலிருந்து - ஒப்பாரி வரை மனித வளர்ச்சி மட்டங்களில் வரும் பாடல்களில் பெண்களே கூடுதலாகப் பங்குபற்றினர். இப் பாடல்களை ஆண்கள் பாடினார்கள் என்பதற்குச் சான்றுகள் இல்லை. இராகங் களைப் பெண்களுக்குப் பெயர்களாக வைக்கும் மரபும் காணப்பட்டது. பழந்தமிழ் இசையைக் குறிக்கும் ‘பண்" என்பதும் பெண்களுடன் இணைத்து வழங்கப்பெற்றது. பண்ணிச்சி, பண்ணாகத்தி, யாழி, துத்தி, இளிச்சி, விளரி, தாரம் முதலாம் பெயர்கள் பெண்களுக்கு வழங்கப்பெற்றன.

Page 22
துத்தம் என்பது இரண்டாம் சுரமாகிய ரிஷபத் தைக் குறிக்கும். துத்தத்தோடு பெண்பால் விகுதியாகிய “இ’ சேர்க்கப்படும்பொழுது துத்தியாயிற்று. ‘இனி" என்பது ஐந்தாம் சுரமாகிய பஞ்சமத்தைக் குறித்தது. 'இளி’ என்பது இளிச்சியாயிற்று. “விளரி" என்பது ஆறாம் சுரமாகிய தைவதத்தைக் குறித்தது. "தாரம்' என்பது ஏழாம் சுரமாகிய நிஷாதத்தைக் குறித்தது.
ஏழிசை மரபு பின்வருமாறு அமையும்:
குரல் துத்தம் கைக்கிளை -
உழை இளி விளரி தாரம்
பெண்களுக்கும் இசைக்கல்விக்குமுள்ள தொடர்பு ‘பாலை பாடும் வாலைக்குமரி' என்ற தொடரினால் மேலும் புலப்படுத்தப்படும். தமிழிசையில் ‘பாலை' என்பது வகுப்பு அல்லது வகையைக் குறிக்கும். பாலை யானது ஆயப்பாலை, வட்டப்பாலை, திரிகோணப் பாலை, சதுரப்பாலை என நான்கு வகைப்படும்.
யாழ் என்ற இசைக்கல்வியில் தேர்ந்தோர் “யாழி' எனவும் அழைக்கப்பட்டனர். பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ், நாரதயாழ், தும்புரு யாழ், கீசகயாழ் என்று யாழ் வகைகள் பாகுபடுத்தப் பட்டாலும், மருத்துவயாழ், தும்புருயாழ்,செங்கோட்டி யாழ் முதலியவற்றையே பெண்கள் பயன்படுத்தினார் கள் என்று கூறப்படுகின்றது. மருத்துவயாழ் ஒரு தந்தியை உடையது. தும்புருயாழ் ஒன்பது தந்திகளைக் கொண்டது. செங்கோட்டியாழில் இசைமீட்டும் நரம்பு கள் நான்கும், தாளம்மீட்டும் நரம்புகள்' மூன்றும் காணப்பட்டன. யாழுக்கு ‘கலம்’ என்ற சொல்லும்
34 -

இணையாகப் பயன்படுத்தப்பட்டது. நாளாந்தப் பயன் பாட்டிலுள்ள கலங்கள் யாழின் குடமாகப் பயன்படுத் தப்பட்டமையால் இந்தப் பெயர் இடம்பெற்றிருக்க லாம்.
பெண்களைக் "குயிலுவம்’ என்று அழைக்கும் மரபும் யாழ்ப்பாணத்தில் நிலவியது. மிடற்றிசைக்குத் துணையாக அமையும் இசைக்கருவிகளை அதாவது பக்கவாத்தியங்களை குயிலுவக் கருவிகள் என இசை ஆய்வாளர்கள் குறிப்பிடுவர்.1 பெண்ணை ஆண்களுக் குப் ‘பக்கவாத்தியம்” என்று கூறும் பேச்சுவழக்கு இன்றும் உண்டு.
ஆடற்கல்வி
உரையாடும்பொழுது கவிதை வடிவில் உரையாடு தலும், தொழில்புரியும்போது உடலசைவுகளை அழகி யல் அசைவுகளாக மாற்றிச் செயற்படுதலும் பெண்க ளிடத்துக் காணப்பெற்ற சிறப்புப் பண்புகளாக அமைந் தன. குழந்தைகளைத் தாலாட்டும்பொழுது மேற்கூறிய இரு பண்புகளும் இணைந்திருந்தன.
யாழ்ப்பாணத்துக் கூத்துப் பாரம்பரியத்தில் ஆண் கள் ஆடிய கூத்து "மல்லுக்கூத்து’ எனவும், பெண்கள் ஆடிய கூத்து “பண்டக்கூத்து' எனவும் அழைக்கப் பட்டது. மல்லுக்கூத்து வன்மையான அல்லது கடின மான தசைநார் அசைவுகளைக் கொண்டதாகவும், பண்டக்கூத்து இங்கிதமான அல்லது இலகுநிலை அசைவுகளைக் கொண்டதாகவும் அமைந்தது. பண்டக் கூத்தின் இன்னொரு பரிமாணம் பண்டங்களைக் கை களில் அல்லது தலையில் ஏந்தியவாறு ஆடுதலாகும். பாற்செம்பு, கடகம், கூடை, வைக்கோல், தனியக் கதிர், சுரைக்காய் முதலியவற்றைத் தலையில் ஏந்திய வாறு ஆடும் வழக்கம் இருந்தது. நெற்கதிர், குடம், சுளகு முதலியவற்றைக் கைகளில் ஏந்தியவாறு ஆடும் வழக்கமும் நிலவியது.12
- 35

Page 23
இன்றைய யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் காவடி யாட்டத் தொகுப்பில் "மல்லுக்கூத்து' , 'பண்டக் கூத்து" ஆகியவற்றின் எச்ச வடிவங்களைக் காணலாம். ஆண்கள் காவடியெடுத்து கடினமானதும், அதிக விரை வுள்ளதும், தசைநார் அசைவுகளை அதிரவைப்பதுமான ஆடல் வடிவங்களை மேற்கொள்வர். காவடி ஆடுபவரது தாய் அல்லது மனைவி அல்லது சகோதரி தலையில் பாற்செம்பை ஏந்தியவாறு மெதுவான காற்கோலங் களை (Foot work) ஏற்படுத்தி நெகிழ்ச்சியான அசைவு களை ஏற்படுத்தும் வழக்கம் இன்றும் உண்டு.
பண்டக்கூத்தோடு இணைந்த ஆடல் வடிவங்க ளாக இடித்தல், புடைத்தல், அளத்தல், தூற்றுதல், கழுவுதல், நிறைத்தல், அவித்தல் என்றவாறான நாட் டியச் சுட்டிகள் வளர்ச்சியடைந்தன. கைகளின் வாயி லாகக் கருத்தை வெளிப்படுத்தும் முறைமை “கைக்குறி" எனவும், முகவடிவங்களினால் கருத்தை வெளிப்படுத் தல் “முகக்குறி' எனவும் குறிப்பிடப்பட்டது.
நான்கு வகையான ஆடல் ஆற்றுகைகள் பெண் களிடத்துக் காணப்பட்டன. அவையாவன:-
1. உறுப்பாடல் - உறுப்புக்கள் சார்ந்தது. 2. சொல்லாடல் - மொழிநிலைப் பிரயோகம் 3. அணியாடல் - பொருத்தமான ஆடை அணி
கலன்களைப் பயன்படுத்துதல்.
4. மெய்ப்பாடு
ஆடலையும் மனவெழுச்சிகளை யும் இணைத்தல்.
ஐரோப்பியர் வருகையைத் தொடர்ந்து நிகழ்ந்த சமூக ஒழுங்கமைப்புக் குலைவும் (Social Disorgani - Sation) உள்நாட்டுப் போர்களும் பெண்களை வீட்டுக் குள் முடக்கி வைக்கவேண்டிய தேவையை வலியுறுத்தி யமை பெண்களுக்குரிய நாட்டியக் கல்வியை நேரடி யாகப்பாதித்தது.
36 -

அழகுக் கலை மரபு:
வீட்டு முற்றத்திலே மாக்கோலமிடல், மண்சுவர் களிலே சுண்ணத்தினாற் கோலம் வரைதல், பனை ஒலைகளினால் வண்ணப்பெட்டி, வண்ணப்பாய் இழைத் தல், கிலுகிலுப்பையும் கிளியும் செய்தல், களித்தன்மை கொண்ட குளத்து மண்ணிலே பொம்மைகள் செய்தல் என்றவாறான கலையாக்க மரபு பெண்களிடத்து நிலவியது. பூக்களில் இருந்து எண்பதுக்கு மேற்பட்ட மாலை வகைகளை ஆக்கும் திறன் பெண்களிடம் காணப் பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது.13
‘மாம்பூவோ
மாதுளம் பூவோ தேன்பூவோ வேணும்?*
என்று ஒரு பெண் கேட்பதும்,
*மாம்பூவும் வேண்டாம் தேன்பூவும் வேண்டாம் மாதுளம் பூவே வேணும்'
என்று இன்னொரு பெண் சொல்வதுமான விளை யாட்டுக்கள் காணப்பட்டன. பூக்களை அடுக்கி, பூக்க ளால் கோலமிட்டு விளையாடும் பொழுது பெண்கள் இவ்வாறு கேட்பதும் விடை சொல்லுவதுமான கருத் தாடல் நிகழும். இங்கு “உட்பொருள் கண்டுகொள்ளல்" என்பது சிறப்பிடம் பெறும். “மாதுளம்பூ' என்பது பெண்ணாகிய உனது மனமாகிய மலர் தான் வேண்டும் என்ற உட்பொருளைக் கொண்டது.
மணிகளால் அணிவண்ணங்கள் செய்யும் கைவினை யும் கிராமப்புறங்களிலே கற்பிக்கப்பட்டது. மணிகளால் சப்பறம் கட்டுதல், மணவறை அமைத்தல், திருவாசி கள் செய்தல், திருத்தொங்கல் கட்டுதல் முதலிய கலை யாக்கங்கள் இன்றும் வீரசைவப் பெண்களிடம் காணப் படும் கல்விச் செயல்முறையாகவுள்ளது.
7 3 سم

Page 24
"பச்சை குத்துதல்" என்ற ஒருவித அழகுக்கலைச் செயற்பாடும் நிலவி வந்தது. பச்சை நிறம் பொருந் திய சாயத்தில் ஊசியைத் தோய்த்தெடுத்து மனிதரின் தோலிலே குற்றி அழியாத வடிவங்களைப் பொறித்து வைத்தல் ‘பச்சை குத்தல்’ (Tatoo) எனப்படும். பச்சை குத்துவதனால் நோய்கள் வராதென்றும் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்றும் நம்பிக்கை நிலவியது. சீனாவிலே காணப்படும் 'அக்குபங்ஸர்” முறைக்கும் இதற்கும் தொடர்பு உண்டு என்று கருதுவோரும் உளர். ஆண்கள் தமது மார்பிலும் முதுகிலும் இவ்வாறு நிரந் தரமான வடிவங்களை வரைந்தனர். பெண்கள் தமது கைகளிலே கிளி, அன்னம், வாத்து முதலிய பறவை களை வரைந்தனர். பச்சைகுத்தும் கலையிலே கைதேர்ந்த பெண்கள் தமது கலையை இளந்தலைமுறையினருக்குச் சொல்லிக்கொடுத்தனர்.
மேலைப்புலக் கல்வியின் செல்வாக்கு இவற்றை *மூடநம்பிக்கை' என்று கருதும் கருத்தேற்றத்தை வழங்கியதால் இந்தக் கலையின் வளர்ச்சி தடைப் பட்டது.
நூலாச்சியர் மரபு
இலங்கைத் தமிழர்களின் தனித்துவமான கல்விச் செயல்முறையினை எடுத்துக்காட்டும் நூலாச்சியர் மரபு யாழ்ப்பாணத்தின் மேற்குப் பிரதேசங்களிலே காணப்பட்டது. அராலி, பொன்னாலை, பண்ணாகம், தொல்புரம் முதலிய இடங்களில் நூலாச்சியர் இருந் தமைக்குச் செவிவழிச் சான்றுகள் உள்ளன.14
கிராமப்புறங்களில் அறிவறிந்த பெண்கள் “நூலாச் சியர்' எனப்பட்டனர். நூலாச்சியர் பொதுவாக மூன்று வகையினராகக் காணப்பட்டனர். அவர்களுள் ஒரு வகையினர் இலக்கியங்களையும், நீதி நூல்களையும், தேவார திருவாசகம் முதலியவற்றையும் நெட்டுருச்
سه 8 3

செய்து வைத்திருந்தனர். தம்மிடம் பாடம் கேட்கச் செல்வோருக்கு அவற்றை அவர்கள் மனப்பாடமாகச் சொல்லிக்கொடுத்தனர். கரவெட்டிக் கிராமத்தில் நூலாச்சியர் கிடுகு பின்னியவாறு தொல்காப்பியம் ஒப்பித்துக்கொண்டிருந்த காட்சியை ' பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை நேரிலே கண்டு இன்புற்றார் என்ற தகவலும் உண்டு.19
வேறொரு வகை நூலாச்சியர் கைவினைவல்லாள ராகக் காணப்பட்டனர். அவர்கள் பன்னவேலை, வன்ன வேலை, திருகுவேலை, பாணிவேலை, சாயவேலை முதலியவற்றில் அறிவும் ஆற்றலும் உள்ளவர்களாக விளங்கினார்கள்.இன்னொருவகை நூலாச்சியர்,வாக்குச் சொல்வோராயும், காப்புக்கட்டுவோராயும், கிராமிய மருத்துவர்களாயும், மந்திரங்களில் ஈடுபடுவோராயும் இருந்தனர்.
மரநிழற் பள்ளிகள்
கிராமங்களில் சுற்றத்தவர்கள் சேர்ந்து வாழும் சமூக அலகு "அயல்’ அல்லது "அயலட்டை' எனப் பட்டது. ஓர் அயலில் வாழும் சிறுமிகள் அந்த அயலில் வாழும் அறிவறிந்த பெண்ணிடம் அவரது வீட்டின் அருகே அல்லது பின்புறத்தேயுள்ள மரநிழலில் பாடங் கேட்பதும், படிப்பதும், இயங்குதலும் மரநிழற் பள்ளி களின் செயற்பாடுகளாயின. ஆண்பிள்ளைகளுக்குரிய கிருமியப் பள்ளிக்கூட ஒழுங்கமைப்பாகத் திண்ணைப் பள்ளிக்கூடங்கள் விளங்கின. அதற்குச் சமாந்தரமான சிறுமியர்க்குரிய பள்ளிக்கூட ஒழுங்கமைப்பாக மரநிழற் பள்ளிகள் அமைந்தன. திண்ணைப் பள்ளிக்கூடங்களில் சிறுமியர் கற்றமைக்குச் சான்றாதாரங்கள் இல்லை.
மா, பலா, வேம்பு, ஆல், அரசு, புளி, நாவல் போன்ற பெருமரங்களின்கீழ் கற்றல் நிகழ்ந்தது. வரி வடிவங்களை மணலில் தமது சுண்டுவிரலால் மாணவி கள் எழுதினர். மணல்மீது எழுதிய எழுத்துக்களை
39 ۔

Page 25
'அழித்தல்' என்று அமங்கலமாகக் கூறும் மரபு காணப் படவில்லை. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேதான் *அழி', 'அழித்தல்', 'அழிறப்பர்?’ போன்ற எண்ணக் கருக்கள் அறிமுகமாயின. அழித்தல் என்பது “நிறைத் தல்' , 'அணைத்தல்' போன்ற சொற்களால் மங்கல
மாக மரநிழற் பள்ளிகளிலே கூறப்பட்டது.
சிறுமியர் மணலிலே பூனைவீடு கட்டுதல், கைகளாலும் கால்களாலும் கோலமிடுதல், தாளமிட்டுக் கெந்துதல். மரத்தைச் சுற்றிவந்து கும்மியடித்தல் முதலிய உடலி யக்கம் சார்ந்த கற்றல் தொழிற்பாடுகளும் நிகழ்ந்தன.
சில மரநிழற் பள்ளிகளில் ஊஞ்சல்கள் கட்டப்பட் டிருக்கும். ஆசிரியர் அமரும் ஊஞ்சல் "அன்ன ஊஞ்சல்* எனப்பட்டது. அவ்வூஞ்சலின் இருக்கை பலகையாற் செய்யப்பட்டிருக்கும். ஆசிரியர்களை gyair Gotlib' ** அன்னக்கா’’ என்று அழைக்கும் மரபும் நிலவியது. (அன்னம் நல்லவற்றை எடுத்துவிட்டு அல்லவற்றைத் தவிர்த்து விடுதல் போன்று ஆசிரியரும் செயற்படுவார் என நம்பப்பட்டது ) மாணவர்கள் ஆடும் ஊஞ்சலின் இருக்கை காய்ந்த பனைமட்டையினால் ஆக்கப்பட்டது. கவிதைகளை ஊஞ்சலில் இருந்து ஆடியவாறு ஆசிரியை யும் மாணவிகளும் பாடினர். ஊஞ்சலில் ஆடியவாறு கவிதை கற்றலும் பாடுதலும் மரநிழற் பள்ளிகளுக் குரிய சிறப்புப் பண்பாகும். யாழ்ப்பாணத்து மரபு வழிப் பெண் கல்வியில் அசைவுகள் சிறப்பார்ந்த இடத்தைப் பெற்றிருந்தன. அசைவுகள் வாயிலாகக் sibgilb '960) Faydis dias' (Movement Education) முறைமை பெண்கள் கல்வியில் ஒப்பீட்டளவில் மேலோங் கியிருந்தது.
இலங்கையின் கிராமிய வழிபாட்டு மரபில் வேம்பு, அரசு ஆல், நாவல் முதலியவை மிகுந்த முக்கியத்துவம்
பெற்றிருந்தமை வரலாற்று ஆய்வுகளிலும் சுட்டிக்காட் டப்பட்டுள்ளன.16
40 -

கணிதம் பெரும்பாலும் 'மனக்கணிதம்' என்ற வகையில் கற்பிக்கப்பட்டது. பிரச்சினைகளுக்கு மனத் தாலே கணித்துத் தீர்வுகாணல் மனக்கணிதத்தில் பெரு மளவில் முன்னெடுக்கப்பட்டது. பெருக்கல் வாய்பாடு மனனம் செய்தலை பெண்களுக்கு இன்றியமையாத உளத்திறனாகக் கருதினர். பெருக்கல் வாய்பாடு இருபது வரை வேகமாகச் சொல்வோருக்கு மணிமாலை பரிசாக வழங்கும் மரபும் காணப்பட்டது. அத்தகைய பெண்களை ‘கணக்கழகி’, ‘கணியழகி" என்ற சிறப்புப் பெயர்களாலும் அழைத்தனர்.
பெண்கள் தாம் படித்த கல்வியையும், பெற்ற அனுபவங்களையும் தமது நினைவுப் பதிவுகளில் இருந்து மீட்டெடுத்தல் நாட்டார் பாடல்களிலே சுட்டிக்காட் டப்படும் சான்றுகளும் உள்ளன.17
'மாமரத்து உச்சியிலே
மாங்காய்ப் பழம் உறங்கும் மாங்காய்ப் பழம் விழுந்தா மறைந்த நினைவு வரும்'
**கொய்யா மரத்துமேலே
கொப்புப் பழம் உறங்கும் கொப்புப் பழம் விழுந்தா கோலம்மா நினைவு வரும்'
‘'வேம்பு பழுக்கையிலே - சிறுக்கி
வேலன் கதை படிப்போம் நாவல் பழுக்கையிலே - சிறுக்கி நல்ல பாடம் படிப்போம் இலந்தை பழுக்கையிலே - சிறுக்கி இராமர் கதை படிப்போம்'
முதலிய கிராமியப் பாடல் அடிகள் மரம் சார்ந்த கற்றல் பண்பாட்டை ஒருவகையிலே சுட்டிக்காட்டு
கின்றன பெண்களின் திருமணச் சடங்குகளில் 'கன்னிக்
- 4: 1

Page 26
கால்” நடுதல் - அதாவது பச்சை முள்முருக்க மரத்தை நட்டுத் தழைக்கச் செய்தல் இன்றும் யாழ்ப்பாணத் திற் காணக்கூடிய குறியீடாகவுள்ளது. பெண்களுக்கும் மரத்துக்குமுள்ள தொடர்பு அதனால் வலியுறுத்தப் படுகின்றது.
திருமணமாகிய பின்னர் பெண்களின் முறைசார் கல்விச் செயற்பாடுகள் நின்றுவிடுகின்றன. ஆயினும் கற்றல் தொடரல் வேண்டும் என்ற கருத்து வலியுறுத் தப்பட்டது. திருமணமாகிக் குழந்தைப்பேறு கிடைக் காத பெண்கள் தாம் படித்த மரநிழலுக்குச் சென்று அந்த மரத்தின் அடிப்பாகத்தை வலம் வந்து சுற்றி பிள்ளை வரம் கேட்டலும் வழக்கிலிருந்தன. அதாவது தாம் கற்ற பழையவற்றை மீட்டெடுக்கும் பொழுது அறிவின் மீள் பிறப்பாக்கமும், உயிரின் மீள் பிறப் பாக்கமும் நிலவும் என்று கருதப்பட்டது.
மரநிழற் பள்ளி மிகவும் நெகிழ்ச்சி கொண்ட தாயும் சந்தர்ப்பங்களுக்கேற்ப மாறும் இயல்பினதாயும் அமைந்த ஒழுங்கமைப்பாகும்.
மருத்துவிச்சி மரபு
மரபுவழிப் பெண் கல்வியில் கை வைத்தியம் அல்லது மருத்துவிச்சி மரபு என்பதும் சிறப்பிடம் பெற்றிருந்தது. குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்படும் சிறுசிறு நோய்களைக் குணப்படுத்துவதற்கான கல்வி பெண்களுக்கு வழங்கப்பட்டது. கிராமத்து மூதாட்டி களிடமிருந்தும் மருத்துவிச்சி என்று அழைக்கப்படும் மருத்துவமறிந்த பெண்களிடமிருந்தும் இளம் பெண்கள் அடிப்படையான நலவியற் கல்வியைப் பெற்றனர்.19
பெண்களுக்கான நோய்கள், பொது நோய்கள், சிறுவர்க்கான நோய்கள், மகப்பேறு, முதியோருக்கான நோய்கள், விஷக்கடி, உணவு, ஊட்டம், குடிநீர் தயா ரிப்பு, எண்ணெய் காய்ச்சுதல், நோய் தணிக்கும் மந்திரங்
42 -

கள் போன்ற பல்வேறு துறைகளில் அடிப்படை அறி வினையும், செயல்வழி அனுபவங்களையும் மருத்துவிச்சி யர் வழங்கினர்.
இவ்வுலகம் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்ற பஞ்சபூதங்களால் ஆனதென்றும், அவற்றை அடி யொற்றி மருத்துவம் முப்பெரும் பிரிவுகளை உடைய அறிவியலாக முன்மொழியப்பட்டது. அவை வாதம், பித்தம், கபம் என மருத்துவிச்சியர் விளக்கினர். ‘வாதம்’ அதிக வாயுவோடு மற்றைய பூதங்களைச் சிறிய அளவிலும் கொண்டுள்ளது; "பித்தம்' அதிக தீயுடன் குறைந்த அளவு ஏனைய பூதங்களையும் கொண்டுள்ளது; “கபம்’ அதிக நீருடன் குறைந்த நிலை யில் பிற பூதங்களையும் கொண்டுள்ளது என்றவாறு பஞ்சபூதங்களோடு இணைந்த உறுப்பாக மனித உடலும் உடலியக்கங்களும் விளக்கப்பட்டன.
குடிநீர் தயாரித்தல் பெண்களுக்குரிய ஒர் அத்தியா வசியமான அறிவாகக் கருதப்பட்டது. சுரக்குடிநீர், வீக்கக் குடிநீர், விசசுரக் குடிநீர், வாதக் குடிநீர், இருமல் குடிநீர், சலரோகக் குடிநீர், கரப்பன் குடிநீர், கிருமிக் குடிநீர், சலக்கடுப்புக் குடிநீர், சுகபேதிக் குடிநீர், சளிக்காய்ச்சல் குடிநீர், தாகத்துக்குக் குடிநீர், வயிற்று வலிக் குடிநீர் முதலிய குடிநீர் வகைகள் எவ்வாறு தயாரிக்கப்படல் வேண்டும் என்ற அறிவு பெண்களுக்கு வழங்கப்பட்டது.
நாட்டார் வழக்கில் இடம்பெறும் மருத்துவிச்சி பாடலில் குடிநீர் தயாரிப்பதற்கான பொருள்கள் பல குறிப்பிடப்படுகின்றன. நெல்லுப்பொரி, மிளகு, வேர்க் கொம்பு, மஞ்சள், சீரகம், உள்ளி, மல்லி, பூடு, வெந்தயம் என்றவாறு குடிநீர்ப் பொருள்கள் குறிப்பிடப்படு கின்றன.
3 4 سے

Page 27
** கச்சான் அடிக்க
காலிரண்டும் கிடுகிடுக்க, மச்சாள் அறிவாளாம் மாமன்சளிச் சுரத்தை'
என்ற நாட்டார் பாடலில் நோயறியும் திறனுக்கும் பெண்களுக்குமுரிய தொடர்புகள் ஒருவகையில் சுட்டிக் காட்டப்படுகின்றன.
நோய்கள் உடற்பிணிகள் என்றும், உளப்பிணிகள் என்றும் வகைப்படுத்தப்படும். இவ்விருவகை நோய்கள் பற்றிய அடிப்படை அறிவும் அனுபவுங்களும் பெண் களுக்குக் கிடைக்கப்பெற்றன. ஒத்துணர்வு - சுகப்படுத் 956i) (Empathy and Healing) GTaö7 [D g)(1ỹ LIfìLDITGööĩ rất களும் பெண்களிடத்து நிலைபேறு கொண்டிருந்தன.
விளக்கேற்றல் மரபு
கிராமப்புற வழிபாட்டு நிலையங்களில் ‘விளக்கு வைத்தல்" என்ற மரபு இன்றும் காணப்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட நாளில் ஏற்றப்படும் விளக்கானது வேள்வி அல்லது வெளிமடை காணும்வரை அணையாது தொடர்ந்து சுடர்விட்டவண்ணமிருக்கும். கிராமப் புறத்துப் பெண்கள் விளக்கேற்றிய நாள் தொடக்கம் இறை சிந்தனையோடும், புராணங்கள் ஒதுதலோடும் ஈடுபட்டிருப்பர்.
விளக்குவைத்தல் என்பது கல்வியைத் தொடர் வதற்குக் குறியீடாகக் கருதப்பட்டது, பெண்தெய்வ வழிபாட்டோடு விளக்கு வைத்தல் நிகழ்ச்சி கூடிய தொடர்புகளைக் கொண்டிருந்தது. கண்ணகி, அருந்ததி, சீதை, காரைக்காலம்மை, வாசுகி, ஒளவை முதலாம் பெண்களின் கதைகள் பேசப்படும்பொழுது, பெண்ணின் வீர இயல்புகளை முதன்மைப்படுத்தல் சிறப்பிடம் பெறும். காளிவாளேந்தி வந்து துன்பம் தீர்த்தலும், மாரி படையோடு வந்து பாதகம் போக்கலும், அம்மன்
44 -

அரிமாவோடு வந்து தீமை துரத்தலும் என்றவாறு ஒருவித வீர உணர்ச்சியும், வன் நடத்தைக் கோலங் களும் விரவிய அறிகை மேம்பாடு கொண்டிருக்கும்.
அம்மன் அருகே வாள், வேல், ஈட்டி முதலிய கவசங்களை வைத்து வழிபடும் மரபு இன்றும் காணப் படுகின்றது. இந்தக் கல்விச் செயற்பாடு பெண்களுக்கு வீர உணர்வுதரும் வழிபாட்டு முறையாக அமைந்தது. உடல் உறுதி, மனவுறுதி, செயலுறுதி மூன்றும் விளக் கேற்றல் மரபோடு இணைந்திருந்தது.19
அகமேய்ப்பு மரபு
மந்தைமேய்ப்பு, அகமேய்ப்பு புறமேய்ப்பு எனப் பாகுபடுத்தப்பட்டது. ஆடு, மாடு, பசு முதலியவற்றை மேய்ச்சல் தரைகளுக்குச் சாய்த்துச் சென்று மேய்க்கும் பணி ஆண்களுக்கு விடப்பட்டது. வீட்டு வளவுக்குள் வந்ததும் அவற்றைப் பராமரிக்கும் பணியும், பால் கறக்கும் பணியும் பெண்களிடம் விடப்பட்டன. பால் காய்ச்சுதல், பரிமாறுதல், தயிர், மோர், நெய் செய்தல் என்ற அனைத்துப் பணிகளும் பெண்களுக்குரியனவாகக் கருதப்பட்டன. பாலம்மா, பாலக்கா, பாலாய்ச்சி போன்ற பெண்பாற் பெயர்களும் வழக்கில் இருந்தன.
தாமாக மேய்ச்சல் தரைகளுக்குச் சென்று மேய்ந்து வரும் கால்நடைகள் “கட்டாக்காலிகள்” எனப்பட்டன. கட்டாக்காலிகளும் வீட்டுக்கு வந்ததும் அவற்றைப் பராமரிக்கும் பணி பெண்களுக்கே விடப்பட்டன. சில கிராமங்களில் பசுக்களில் ஆண்கள் பால் கறத்தல் ஒரு குழுமத்தடையாக (Taboo) இருந்ததென்றும் சொல்லப் படுகின்றது. பசு, மறி முதலியவற்றை இறைச்சிக்காகக் கொல்வதும் குழுமத்தடையாக இருந்தது.
ஆடு வளர்ப்பு, மாடு வளர்ப்பு முதலியவை தொடர் பான நடைமுறை அறிவு மூத்த பெண்கள் வழியாக
- 45

Page 28
இளைய பெண்களுக்கு வழங்கப்பட்டன. ஆட்டுக்குட்டி, பசுக்கன்று முதலியவற்றை முதலில் பெண்களே தமது கைகளால் தூக்கவேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது.
பால் பெருகவேண்டுமெனில் பெண்கள் பாடிக் கறத்தல் வேண்டுமென்றும் கற்பிக்கப்பட்டது.??
'ஆலமரத்திலை பாலிருக்கு
அத்திமரத்திலை பூவிருக்கு பனைமரத்திலை பாலிருக்கு பட்டிமரத்திலை பூவிருக்கு பிலாமரத்திலை பாலிருக்கு புளியமரத்திலை பூவிருக்கு”.
இவ்வாறு பால்மரங்களையும் பூமரங்களையும் ஒப்பிட்டுப் பாடும் மரபு காணப்பட்டது. ‘முதலில் கறந்த பால் முன்னுள்ள தெய்வத்துக்கு’ என்பது பழமொழி. அதாவது வீட்டுக்குக் கிட்டவுள்ள கடவுள ருக்கு அதனைக் காணிக்கையாகக் கொடுப்பர்.21
'பால் கறவ்டி ஆத்தா
பட்டி கிடக்குது கம்மா பால் கறவடி ஆத்தா பிள்ளை கிடக்குது சும்மா’’.
வீடு என்ற அமைப்பினுள் பெண்கள் ஆண்களிலும் கூடுதலான உடலுழைப்பை வழங்கிவந்தார்கள். இந் நிலையில் வீடுசார்ந்த அனுபவக் கல்வியில் ஆண்களிலும் பெண்களே ஒப்பீட்டளவில் மேலோங்கியிருந்தனர். ஆயினும் அதிகாரி நிலையில் ஆண்கள் மேலோங்கியிருந் தமை ஒரு முரணுரையாகவுள்ளது.
திருமணமாகும்பொழுது பெண்ணுக்குப் பாதுகாவ லாக அவள் வளர்த்த கால்நடைகளைக் கொடுக்கும் மரபும் காணப்பட்டது. “பெண்ணுக்குக் காவல் பால் மாடு, பொருளுக்குக் காவல் கோர்க்காலி" என்ற தொடரும் வழக்கிலிருந்தது.
46...

தானியக் காவல் மரபு
விளைந்துவந்த தானியங்களை வீட்டிலே பாது காத்தலும், இடித்தலும், புடைத்தலும், பதனிடலும் பெண்களின் பொறுப்பில் விடப்பட்டன. பெண்களின் பெயர்கள் தானியங்களுடன் இணைத்தும் அமைக்கப் பட்டன. தானியலட்சுமி, பயிற்றங்கன்னி, அன்னலட்சுமி, அன்னபூரணி, நெற்கன்னி, கடலை ஆச்சி, திணையக்கை முதலிய பெயர்கள் குறிப்பிடத்தக்கவை.
தானியங்கள் அடுக்க வைக்கும் மேடை கோர்க் காலி எனப்பட்டது கோர்க்காலியிலுள்ள தானியங்களை அளந்து கணக்கிடும் குவளை ‘கொத்து' எனப்பட்டது. பெண்களின் பூப்புச் சடங்கில் அவர்களது கைகளில் கொத்தும், அது நிறைந்த நெல்லும் வழங்கும் குறியீடு இன்றும் நிலவிவருகின்றது. அதாவது தானியத்துக்குப் பெண்ணே காவல் என்ற அறிவுறுத்தல் அதனாற் குறிப்பிடப்படும்.
தானியங்களுக்குக் காவலாயிருக்கும் பெண், அனை வரையும் தாபரிக்கும் பொறுப்பையும், அதற்குப் பொருத்தமான அனுபவங்களையும் பெறவேண்டியிருந் தது. இதனை அச்சுவேலி தம்பிமுத்துப் புலவரின் {1857-1937) கவிதை ஒன்று குறிப்பிடுகின்றது.22
**பசித்தவர் சலித்தவர் தமைத் தாபரிப்பவள்
பரிவுடைய மொழி பகர்பவள்’’ என்றவாறு பெண்கள் அறிந்திருக்கவேண்டிய கடமை களைத் தம்பிமுத்துப் புலவர் குறிப்பிடுகின்றார்.
வசதிமிக்க குடும்பங்களிலே பெண்கள் எழுதிப் பழகுவதற்குத் தானியக் குவியல்களைப் பயன்படுத் தினார்கள் என்றும் அறியப்படுகின்றது. அதாவது, தாம் பாளத்திலே தானியத்தைப் பரவி தமிழ் நெடுங்கணக்கை யும், சொற்களையும் எழுதிப் பழகினார்கள். பெண்கள்
- 47

Page 29
எழுதிப் பழகும்பொழுது எழுதம்மா அழகம்மா’’ என்று பாடி வாழ்த்தும் மரபு காணப்பட்டது.
தானியங்களை இடிக்கும்பொழுதும், அரைக்கும் பொழுதும், புடைக்கும்பொழுதும் பெண்கள் பாடிய பாடல்கள், இளைய பெண் தலைமுறையினருக்கு உரிய முறையிலே கையளிக்கப்படாமையால் அவற்றை இன்று பெறுதல் கடினமாகவுள்ளது. பிரித்தானியர் ஆட்சியின் போது ஒழுங்கமைக்கப்பட்ட நவீன கல்விச் செயற்பாடு கள் பெண்களின் வாய்மொழிக் கல்விப் பாரம்பரி யத்தைக் கலைத்திட்டத்தின் வழியாகப் பாதுகாப்பதற் குரிய அமைப்புக்களைக் கொண்டு இருக்கவில்லை.
பெண்களின் மனங்களிலே கருத்தேற்றம் செய்யப் பெற்ற "மேலைத்தேய மயமாக்கல்' என்ற விசையானது வாய்மொழி மரபுகள் ஒருவகையிலே தாழ்ந்தவை என்ற உணர்வையும் ஏற்படுத்தியது.
விளையாட்டுக் கல்வி
தொழில் செய்யும்பொழுது உடற்களைப்பு நீங்க விளையாட்டுப் பண்புகளை உட்புகுத்துதல் பெண்க ளிடத்துக் காணப்பட்டது. ஆடியவாறு நீரள்ளுதல், அன்னநடை நடந்து நீர்க்குடத்தைத் தூக்கிவருதல், பாடியவாறு மாவிடித்தல், தாளத்தோடு உலக்கை போடுதல் என்றவாறு விளையாட்டையும் உற்பத்திப் பெருக்கத்தையும் ஒன்றிணைக்கும் கல்விச் செயற்பாடு கள் பெண்களிடத்துக் காணப்பட்டன. அதாவது விளை யாட்டுக்குரிய திறனுக்கும் (Skill) உற்பத்திக்குரிய திறனுக்குமிடையே ஒப்புமைகள் கண்டறியப்பட்டன. உடலியக்கங்களோடு மனவெழுச்சிகளை ஒன் றிணைக்கும் கல்விச் செயற்பாடுகளும் இடம்பெற்றன. தொழில்புரியும் பொழுது சொல்சார்ந்த முறையிலே மனவெழுச்சிகளைத் தூண்டும் செயற்பாட்டுக்கு ஒர் எடுத்துக்காட்டு வருமாறு:23
48 -

'வாழைக்காய் - வெண்டிக்காய்
வறுத்தெடுக்கச் சுண்டக்காய்".
வறுவல் செய்யும்பொழுது காய்கறிகள் சுருங்கிச் சிறிதாதல் நகைச்சுவைபட மேற்கூறிய பாடலிலே சுட்டிக்காட்டப்பட்டது.
விளையாட்டுக் கல்வியின் இன்னொரு பண்பு தசை நார்களுக்குப் பயிற்சி தருதலாகும்.
*கெந்தியடி பெண்ணே கெந்தியடி கால்கள் கடுத்திடக் கெந்தியடி’ என்று சொல்லியவாறு பெண்கள் கெந்தியடித்து தசை நார்களுக்கும் மூட்டுக்களுக்கும் பயிற்சிதந்தனர். “பெண் ணுக்குக் காலும் ஆணுக்குத் தோளும்” என்ற தொடரி லிருந்து பெண்கள் கால்மூட்டுக்குக் கூடுதலான பயிற்சி களையும், ஆண்கள் தோள்மூட்டுக்குக் கூடுதலான பயிற்சியையும் வழங்கினர்.
பல்லாங்குழி, சொக்கான் வெட்டல், தாயம், கண்பொத்தி விளையாட்டு, போன்ற சிறிய அசைவு களைக் கொண்ட விளையாட்டுக்கள் பெண்களிடத்தும், கிட்டி, தாச்சி போன்ற கடின அசைவுகளைக்கொண்ட விளையாட்டுக்கள் ஆண்களிடத்தும் காணப்பட்டன.
பெண்களின் விளையாட்டுக்களில் சொல்லாடலும் விரவியிருந்தது. உதாரணத்துக்குப் பின்வரும் கண் பொத்தி விளையாட்டு அடிகளைக் குறிப்பிடலாம்.
**எவடம்? எவடம்? புளியடி புளியடி எவடம்? எவடம்? பெண்ணடி பெண்ணடி**.
மறைபொருள்களைக் கண்டுபிடித்தலும் பெண்களின் விளையாட்டுக் கல்வித் தனித்துவமாகும். மணலிலும்,
449 ۔

Page 30
தானியங்களிலும் பொருளைப் புதைத்துவைத்து விளையாட்டு “தம்பலம்' எனப்பட்டது: ஒருவருக்குரிய சுயபலத்தைக் (தன்பலத்தை) கண்டறியும் விளையாட் டாக இது அமைந்தது.
**கீச்சுமாச்சுத் தம்பலம்
கீயா மாயாத் தம்பலம் மாச்சு மாச்சுத் தம்பலம் மாயா மாயாத் தம்பலம்’ என்று சொல்லிப் பெண் ஒருத்தி பொருளைப் புதைத் தலும்,
**எடடி பெண்ணே எடடி எடுத்த கைக்குப் பரிசு’ என்று சவால்விடுதலும் இந்த விளையாட்டின் சிறப்புப் பண்புகளாகும். உசாவல் விருப்பும், கண்டுபிடிக்கும் திறனும் இந்த விளையாட்டின் வழியாக முன்னெடுக்கப் பட்டன.
பெண்கள்ன் உளநலத்தை வளர்த்தெடுக்கவும், அவர்களுக்குச் சீர்மியம் (Counseling) வழங்கவும் வல்ல கதைகள் பெண்கல்வியில் இடம்பெற்றிருந்தன. ஒரு கதையை வளர்த்து அதன் முடிவைச் சொல்லும்படி கேட்டலும், ஒரு பிரச்சினையான கட்டத்தில் கதையை நிறுத்தி மிகுதியைக் கற்பனைசெய்யும்படி கூறுதலுமான 2-6T Gorbsidi sogdigit (Psycho Monitoring Stories) பெண்கள் மத்தியிலே நிலைபேறு கொண்டிருந்தன.
விழுமியக் கல்வி
சமூக அடிக்கட்டுமானத்தை (Base) கட்டிக்காக்கும்
வகையில் விழுமியங்களும், அறவொழுக்கங்களும் மூத்
தோரிடமிருந்தும் கையளிக்கப்பட்டு வந்தன. மூடிய
பொருளாதாரக் கட்டமைப்பிலே ஐரோப்பியர் கிராமங் களுக்குள் நுழையும்வரை பாரிய சிந்தனை மாற்றங்கள்
50 -

நிகழவில்லை. இன்சொல் பேசல், இசைவுபட வாழ்தல், மூத்தோரை மதித்தல், வாய்மை, பகுத்துண்டு வாழ்தல், அன்புடமை, சாதிய ஒழுக்கங்கள் என்று வரையறுக்கப் பட்டவற்றை வழுவாது கடைப்பிடித்தல், எதிர்மொழி கூறாமை, வன்னடத்தைகளைக் கட்டுப்படுத்தல், பாலியல் சார்ந்த ஒழுக்கங்களைக் கடைப்பிடித்தல் முதலியவற்றை சொல்லாலும் செயலாலும் மூத்தோர் வலியுறுத்தினர்.
9 9 ہس
**ஆசாரமறிந்த அருங்குலப்பெண்’ என்ற தொடர் வழக்கிலிருந்தது.24 பெண்களின் ஒழுக்கங்களை வலியு றுத்தும் பாடல்களும் காணப்படுகின்றன. அறம்,ஒழுக்கம் முதலியவற்றை வற்புறுத்தல் பெண்கள் மீதே மிகக் கூடுதலாகப் பிரயோகிக்கப்பட்டுள்ளது போன்று தெரி கின்றது.
பாரம்பரியமான ஒழுக்கக்கல்வியிற் பல சிறப்பியல்பு கள் காணப்பட்டன. அவை: 1) ஒழுக்கத்தை வலியுறுத்துபவர் தாம் வாழ்ந்து
காட்ட வேண்டியிருந்தது. 2) சிறுமிகள் ஆத்திசூடி, கொன்றைவேந்தன் முதலிய வற்றை மனனம் செய்யும்வண்ணம் வற்புறுத்தப் பட்டனர். 3) வளர்ந்த பெண்கள் நீதிவெண்பாக்களை மனனம்
செய்ய வேண்டியிருந்தது. இவ்வாறாக பெண்களின் முதிர்ச்சிக்கேற்றவாறு ஒழுக்க நூல்களைக் கற்றல் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.
4) பெண்களின் ஒழுக்க வாழ்வுக்கு முன்னுதாரண மாகவும், காவற்பெண்ணாகவும் “ஒளவை’ என்ற குறியீடு சுட்டிக்காட்டப்பட்டது. அதாவது ஒழுக் கங்களைப் புறக்கணிக்கும் பெண்கள் ஒளவை என்ற புனிதமான பெண்ணுக்கே முறையீடு செய்யப்பட்
டார்கள். ** ஒளவையே காணாய்' , ' “ஒளவையே
- 5 І

Page 31
கேளாய்', 'ஒளவையே சொல்வாய்' என்ற வாறான முறையீடுகள் பெண்கள் மத்தியிலே நிலவின. (ஆத்திசூடியை ஒளவையார் எழுதியமை யால் இந்தத் தோற்றப்பாடு தோன்றியிருக்கலாம்.)
5) கூடாவொழுக்கங்களைக் கைவிடல் வேண்டும் என் பதைக் காட்டும் குறியீடுகள் பெண்களுக்குரிய சடங்கு களில் இடம்பெற்றன. உதாரணமாகப் பெண்களின் பூப்புச்சடங்கில் ‘குப்பைத்தண்ணிர் வார்த்தல்" என்பது கூடாவொழுக்கங்கள் இருப்பின் அவற்றைக் கழுவிக் கைவிட்டுவிடவேண்டுமெனக் குறிக்கப் - الكساتناله
கல்விசார் அடைவுகளின் மதிப்பீடு:
மதிப்பீடுகள் முதியோராலும், மூத்தோராலும், சமவயதினராலும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவை நியமமான மதிப்பீடுகளாகவோ, ஆவணப்படுத்த லாகவோ அமையவில்லை. மதிப்பீடுகள் இரண்டு வகை யாக இடம்பெற்றன. அவை:
1) வாழ்க்கை மட்டத்தில் இடம்பெற்ற மதிப்பீடுகள்: பெண்கள் பூப்பு எய்தும்பொழுதும், திருமணமாகும் பொழுதும், பிள்ளைகளையும், உறவினர்களையும், விருந்தினர்களையும் பராமரிக்கும்பொழுது அவர்களது அறிவு, திறன், மனப்பாங்கு முதலிய பரிமாணங்கள் மதிப்பீடு செய்யப்படுதல் உண்டு. மதிப்பீட்டில் உயர் நிலையை அடையும் பெண்கள் சீமாட்டி, சீதேவி, சரசுவதி, தருமி, மகாலட்சுமி, ராசாத்தி என்ற அடை மொழிகளைப் பெற்றனர்.25
2) சமூக நியமங்களில் இருந்து ஒருவர் விலகும்போது மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகள்:
பெண்கள் சமூக நியமங்களில் இருந்தும் எதிர் பார்ப்புக்களில் இருந்தும் விலகிச் செல்லும்பொழுது அவர்களின் திறன்கள் மதிப்பீடு செய்யப்படுதல் உண்டு.
س- 52

இவ்வகை மதிப்பீடுகள் அதிக அகவயப் பாங்கானதாக வும் மனவெழுச்சிகள் கலந்தனவாகவும் அமைந்தன.
மூத்தோராலும், முதியோராலும் மேற்கொள்ளப் பட்ட மதிப்பீடுகளைவிட சமவயதினர், சகபாடிகள் முதலியோரால் அவ்வப்போது பெண்களின் திறன்களும் சாதுரியங்களும், சமயோசித புத்திகளும் மதிப்பீடு செய் யப்பட்டு உடனுக்குடன் பாராட்டுகளும், வெகுமதி களும் வழங்கப்பட்டன. இதமாகப் பேசும் சொற் களஞ்சிய மேம்பாட்டினைக் கொண்ட பெண்களுக்கு கற்கண்டு, தேன், கரும்பு, பனங்கட்டி முதலிய அடை மொழிகள் வழங்கப்பட்டன.
வீட்டிலுள்ள பாத்திரங்களைப் பார்த்துப் பெண் னின் ஆற்றல்களை மதிப்பீடு செய்தல், முற்றத்தின் அழகைப் பார்த்து பெண்ணின் செயற்றிறன்களை மதிப்பிடுதல், மெழுக்கைப் பார்த்து கைவண்ணத்தை மதிப்பிடுதல், சமைக்கும் சமையலைச் சுவைத்து ஆற்றல் களை மதிப்பிடுதல் என்றவாறு பெண்களின் உடலியக் கத் திறன்கள் கண்டறியப்பட்டன.
* பானையைப் பாத்துப் பெண்ணைச் சொல்லலாம்" ** அகப்பையைப் பாத்து அடுப்படியைச் சொல்லலாம்" * முத்தத்தைப் பாத்து முத்தம்மாவை அறியலாம்" **மெழுக்கைப் பாத்து மச்சாளை அறியலாம்"
போன்ற பல கிராமியத் தொடர்கள் வழக்கிலிருந்தன.
தொகுப்பு:
அ) தொகுத்து நோக்கும்பொழுது தொழிற் பிரிவுக் கேற்ப ஆண்களுக்கு ஒருவிதமான கல்விச் செயற் பாடும், பெண்களுக்கு வேறொரு விதமான கல்விச் செயற்பாடும் அமைக்கப்பட்டு இருந்தது.
- 53

Page 32
ஆ) பெண்களுக்குரிய கல்விக் கையளிப்பும், சாதியத் துக்கேற்ற வேறுபாடுகளைக் கொண்டிருந்தது.
இ) குடும்பம் என்ற சமூக அலகைப் பாதுகாத்தல், பராமரித்தல் தொடர்பான அனுபவக் கல்வி ஆண் களிலும் பார்க்க பெண்களுக்கே கூடுதலாக ஒழுங் கமைக்கப்பட்டிருந்தது.
ஈ) பெண்களுக்குரிய பொதுவான கல்வி ஏற்பாடுகள் * புலத்தில் தங்கியிருக்காமை' என்ற பண்புக்கு உற்சாகம் வழங்கின.
உ) சமூக முரண்பாடுகளின் வழி பெண்களின் சுயபடிமம் (Self Image) வளர்க்கப்படுவதற்கு ஆதரவும் ஆதர வின்மையும் ஏககாலத்திலே காணப்பெற்றன.
ஊ) பெண்களின் ஆளுமையை வளர்க்கக்கூடிய பரவ லானதும், அகல்விரிபண்பு கொண்டதுமான செயற் பாடுகளை யாழ்ப்பாணத்து மரபுவழிப் பெண்கல்வி ஒழுங்கமைப்புக் கொண்டிருந்தது.
தமிழ்ப் பண்பாட்டின் பல்வேறு பரிமாணங்களை விளங்கிக்கொள்வதற்கும், **ஆசிய முறைமை” (Asiatic Mode) என்று குறிப்பிடப்படும் எண்ணக்கருவை, மரபு வழிக் கல்விச் செயற்பாடுகளோடு தொடர்புபடுத்திப் பார்ப்பதற்கும், இவ்வகையான மேலும் பல ஆய்வுகள் முன்னெடுக்கப்படல்வேண்டும்.
அடிக்குறிப்புக்கள்
1. Susan S. Wadley (ed.) The Powers of Tamil Women
Syracuse University, 1980, p. 25. Keaeth David, " "Cultural and Socio-economic Accounts ef Jaffna Women"' Ibid - , p. 93. 3. ஆ. சதாசிவம் (தொ. ஆ.), ஈழத்துக் கவிதைக் களஞ்சியம்,
சாகித்திய மண்டலம், கொழும்பு, 1966, ப. 107.
2
54

1 -
123
3.
4.
எஸ். நடராசா, செள்வி, இணுவில், 29.02.96. A.W.Oak, Status of Women in Education, The Indian Publications, Ambala Cantt, 1988, p.22,
Serenda Nanda. Cultural Anthropology. D. Van Nostran Company, London, 1980, p. 36. க. கந்தசுவாமி, செவ்வி, இணுவில், 03-03-96.
மேலது.
மேலது. மு. ஆபிரகாம் பண்டிதர், கர்ணாமிர்தசாகரம், கருணாநிதி வைத்தியசாலை, தஞ்சாவூர், 1917, ப. 43, மேலது, பக். 49.
எஸ். நடராசா, முற்சுட்டியமை. கள ஆய்வு, இணுவில் தெற்கு, 04-03-96.
தா. அமிர்தலிங்கம், இணுவில் கிராமத்தின் கல்வி மரபு அணிந்துரை, இணுவில், 1998. எஸ். சிவலிங்கராசா, செவ்வி, யாழ். பல்கலைக்கழகம், 03-08-97,
சி. க. சிற்றம்பலம், யாழ்ப்பாணம் தொன்மை வரலாறு, யாழ். பல்கலைக்கழக வெளியீடு, 1993 , ப. 567.
. க. கந்தசுவாமி, முற்சுட்டியமை .
எஸ். பரமசாமி, செவ்வி, இணுவில் , 04.03.96. மேலது.
க. கந்தசுவாமி, முற்சுட்டியமை.
மேலது. ஆ. சதாசிவம் (தொ.ஆ.), முற்சுட்டியமை, ப. 362. க. கந்தசுவாமி, முற்சுட்டியமை, எஸ். பரமசாமி, முற்சுட்டியமை .
மேலது.

Page 33
யாழ்ப்பாணத்து மரபுவழி அறிகைச் செயல்முறையில் சட்டம் ஒழுங்கும கருவிக் கையாட்சியும்
அறிகை மானிடவியல் ஆய் வாளர்கள் ஒரு குழுமத்தினரது சட்டம் ஒழுங்குக்கும், கருவிக் கையாட்சிக்குமுள்ள தொடர்புகளை ஆழ்ந்து நோக்குதலுண்டு. யாழ்ப்பாணத்து மரபில் இவற்றுக் கிடையேயுள்ள தொடர்புகளை ஆராயும்பொழுது பல உபயோகமான தகவல்கள் கிடைக்கப்பெறுகின்றன.
** gypï0ay’’, "ஞானம்", "புத்தி", **மூளை", **சமயோசிதம்', 'படிப்பு", "பட்டறிவு", "சரசுவதி கடாட்சம்'', **கெட்டித்தனம்'', “சாத்திரம்", "செப்பம்', 'நுட்பம்', 'தெளிவு' போன்ற பல்
வேறு சொற்கள் அறிவுக்கு இணையாக மக்கள் மத்தி யில் பயன்படுத்தப்பட்டன. நடைமுறை வாழ்க்கையைக் கடந்து நிற்கும் மேலான அறிவு "ஞானம்' என்ற சிறப்புப் பெயரால் வழங்கப்பெற்றது. “ஞானம்’ என்பது ஆண்பாற் பெயராகவும் பெண்பாற் பெயராக வும் வழக்கிலிருந்தது.
من 6 4

செய்யும் தொழிலைத் திறம்படச் செய்து முடித் தல் * செப்பம்’ எனப்பட்டது. தொழில்களைச் செப்ப மாகச் செய்து முடித்தல் ஒருவரது ஊழ்வினை வலு வாலும் அவரது முயற்சியாலும் தீர்மானிக்கப்படுகின் றது என வற்புறுத்தப்பட்டது. யாழ்ப்பாண மரபிற் காணப்பட்ட இந்த நம்பிக்கை பொதுவாக இந்து மரபுக் குரிய ஒரு கருத்தியலாகவும் காணப்படுகின்றது. ஊழ் வினை என்பதற்கு இணையான பேச்சு வழக்குச் சொல் லாக "காலம்' (நல்ல காலம், கெட்ட காலம்) என்பது
அமைந்தது.
தம்மில் தாமே தங்கியிருத்தல், தன்னிறைவுப் பொருளாதாரம் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்புக்குப் பொருத்தமான கல்விச் சிந்தனைகள் மேற்கிளம்பின. தமது அறிவிலும், தாமே முயன்று பெறும் அனுபவங்களிலுமே ஒருவரது எதிர் காலம் தங்கியுள்ளது என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது. ஒரு கருமத்தை அறிந்து செய்தல், தெரிந்து செய்தல், அறிவுடையோர் சொற்படி செய்தல் என்பவை அதன் தொடர்பிலே முக்கியத்துவம் பெற்றன. பேச்சு வழக் கிலே காணப்பெற்ற 'கெடுவான் கேளான்” என்ற தொடர் இவற்றை நன்கு புலப்படுத்தும்.
கல்வியின் மேலான நோக்கம் பின்வருமாறு குறிப் பிடப்பட்டது:
செம்மைப்படுதல் விளப்பம் (விளக்கம்) பெறல் அறியாமையைக் கழுவுதல் அவலங்களில் இருந்து விடுபடல் மனச்சுகங் காணுதல் தெரிந்ததை மேலும் தெரிதல்
உண்மை உணர்தல்
உணர்ந்தே உண்மையெனக் கொள்ளல்
- 57

Page 34
9. புலன் நாட்டங்களைக் கட்டுப்படுத்தல் 10. சீரான நடத்தையும் மனத்தூய்மையும்
ஏற்படுத்துதல். அறிவு தேடலுக்குக் கோபக்கட்டுப்பாடு அல்லது சினக்கட்டுப்பாடு அவசியமென்று கருதினர்.
கல்விக் கையளிப்பிற் குடும்பம் அடிப்படையான அலகாக அமைந்தது. முறைசாரா வகையில் அறிவூட்டல், அனுபவங்களைக் கையளித்தல், மனவெழுச்சிகளை அனுபவித்தல், பங்கிடல் முதலிய செயற்பாடுகள் குடும் பத்தினால் மேற்கொள்ளப்பட்டன. அன்பு, பயம், வெறுப்பு, கோபம், பாதுகாப்பு, பாதுகாப்பின்மை, போதும், போதாமை முதலிய பல்வேறு மனக்கோலங் கள் குடும்ப வளர்ப்பு முறையுடன் இணைந்திருந்தன. குலம், குடி, கூட்டம், கோத்திரம், கொப்பு முதலிய சொற்கள் பேச்சு வழக்கில் குடும்பத்துக்கு இணையாகப் பயன்படுத்தப்பட்டவை. ஒருவருடைய ஒழுக்கமும், நடத்தையும் பிறழும்பொழுது குடும்பத்தின்மீதே குற்றம் சுமத்தப்படலாயிற்று. தொழிலும், சொத்துக் களும் குடும்பத்தின் வழிப்பட்டதாயிற்று.
சட்டம் ஒழுங்கு தொடர்பான அறிகை
சமூக-பொருளாதாரக் கோலங்களைப் பாதுகாக் கும் வகையில் சட்டம் ஒழுங்குகளைப் பாதுகாப்பதற் கான கல்வி நிலைபேறு கொண்டிருந்தது. சட்டமும் ஒழுங்கும் மரபுவழிப்பட்டவையாக இருந்தன. வாய் மொழி இலக்கியங்கள், சடங்குகள் போன்று சட்டங்க ளும் எழுதப்படாதவையாயும், விமர்சிக்கப்படாது பின் பற்றப்படுவனவாயும் அமைந்தன. பூர்வீக சட்டமும் ஒழுங்கும் மிகவும் சிக்கல் பொருந்தியதாக அமைந்த பண்பினை ஆய்வாளர் மலினோவ்ஸ்கி சுட்டிக்காட்டி யுள்ளார்.2 இவ்வகையான சிக்கல் பொருந்திய பண்பு யாழ்ப்பாணத்துப் பாரம்பரியத்திலும் இழையோடி யிருந்தது.
- 8 ژ

சட்டம் ஒழுங்குமுறைகளுக்கான கல்விச் செயல் முறையானது முறைசாரா வகையில் குழந்தை வளர்ப் பிலும், சமூக செயற்பாடுகளிலும், பொருளாதார நட வடிக்கைகளிலும் ஒன்றிணைக்கப்பட்டிருந்தது. பின் வரும் பிரதான பண்புகள் சட்டம் ஒழுங்குக்கான கல்வியில் உள்ளமைந்திருந்தன.
1. தன்னியக்கமாக ஒவ்வொருவரையும் சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளுக்குக் கட்டுப்படச் செய்தல். உட்கிளர் (Spontaneous) பண்பினதாக ஒவ்வொரு வரிடத்தும் ஒழுக்கப் பண்புகளை மேம்படுத்துதல். 3. சட்டம் ஒழுங்கு தொடர்பான உளக்கவியத்தை
(Mental Interia) 6/ibl_Gäg,5ób. 4. குழும ஒத்துழைப்பின் வழியாக ஒழுங்கு பேணப்
படுதல். 5. அதி இயற்கை அல்லது தெய்வீக தண்டனைகள் என்ற உணர்வூட்டல் வழியாக ஒழுங்கையும் கட்டுப் பாடுகளையும் உருவாக்குதல்.
2
ஊழ்வினைக் கோட்பாடு சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்துவதற்குரிய கருத்தியல் தளமாக அமைந்தது. சாதியத்தின் அடிப்படையில் தொழிற்பிரிவுகள் ஒழுங் கமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொருவருக்குமுரிய சமூகக் கடமைகள், தொழிற்கடமைகள் தெளிவாக்கப்படுவ தற்குரிய செயல்முறைகள் நிகழ்ந்தன. பண்டங்க ளைப் பரிமாற்றம் செய்துகொள்ளும்பொழுது பரி மாற்றம் செய்பவர்களுக்கிடையே பரஸ்பர விளக்கம் காணப்பட்டது. சேவைகளுக்குப் பதிலாக பண்டங்கள் பரிமாற்றம் செய்யப்படும்பொழுது அவற்றை ஏற்காது விடுதல் தவறென உணர்த்தப்பட்டது. பொதுவான பொருண்மியச் சட்டங்களில் இருமுக ஒழுங்கு (Reciprocity) கற்பிக்கப்பட்டது. இருமுக ஒழுங்குகள் சங்கிலித் தொடர் போன்று அமைக்கப்பட்டு அதன் வாயிலாக
・ 59

Page 35
சமூக ஒழுங்கு நிலைநிறுத்தப்பட்டது. சமூகத்தின் உள் ளார்ந்த சமச்சீர் (Inner Symmetry) அதன் வாயிலாக ஒழுங்கமைந்து நின்றது.
கொடுக்கல் வாங்கலின்போது ஒவ்வொரு பிரிவினரும், தாம் வழங்கும் சேவையையும், பெறும் ஊதியத்தையும் காவல் செய்யக்கூடியவாறு கல்வியும் அனுபவங்களும் வழங்கப்பட்டன. ஒரு தொழிலை அல்லது சேவையை ஒருவர் செய்யாது விட்டால் வேறொருவரால் அது செய்யப்படும் என்ற உணர்வு ஊட்டப்பட்டது. இழைக் கப்படும் குற்றத்திற்கு சமூக நியமங்களே பொறுப்பு என்பதும் உணர்த்தப்பட்டது.
**ஆமை பிடிப்பவர் மல்லாத்துவர்
நாமது சொன்னாற் பாவம்' என்ற தொடர் இன்றும் வழக்கில் உண்டு.
மிகை உழைப்பானது நிலச் சொந்தக்காரருக்கே செல்லவேண்டும் என்பதை வலியுறுத்தும் மூதுரைகள் நிலவிவந்தன.3
**விளைஞ்சாலும் விளையாட்டாலும் கமக்காரனுக்கு’’ **குடிமைக்கு கூழ் போதும்”* **கமக்காரனுக்கு கண்படக் கூடாது’’ (கண்படக்கூடாது என்பது திருஷ்டிபடக்கூடாது என்பது பொருள்).
மேற்கூறிய மூதுரைகள் மிகை உழைப்பு, நிலமுடைய வர்களுக்கே உரியது என்பதை நியாயப்படுத்தின. இவ் வாறான கருத்தேற்றச் செயற்பாடுகள் வாயிலாக உராய்வுகளற்ற தன்னியக்க இசைவியம் (Automatic Smoothness) சமூகத்திலே ஏற்படுத்தப்பட்டது.
மந்திரம், சடங்குகள் முதலியனவும் சட்டம் ஒழுங்கு தொடர்பான அறிவை மக்களுக்கு வழங்கின. மந்திரம், சடங்கு, மரபுகள், வளர்ப்பு முறைகள், சமூக உறவுகள்
60 .

என்பவற்றைத் தனித்தனிக் கூறுகளாக நோக்காது முழுப்பொருளாக நோக்கும் அறிகை முறைமை வளர்த் தெடுக்கப்பட்டது. சமூகத்தை மாற்றியமைத்தல் தொடர்பான திறனாய்வுச் சிந்தனைகளுக்குப் பெரும் பாலும் இடம் இருந்ததாகத் தெரியவில்லை. இந்நிலை யில் தருக்கநிலைக்கு முந்திய உளப்பாங்கு (Prelogical Mentality) நிலைபேறு கொண்டிருந்ததாகக் கருத (Մ)ւգԱյւb.
சட்டம் ஒழுங்கு என்பவை கூட்டுப்பொறுப்பாக வும், குழுமநிலை சார்ந்த பற்றியமாகவும் (Group sentiment) காணப்பட்டன. குழுமத் தடைகள் (Taboos) சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்குத் துணை செய்தன.
யாழ்ப்பாணத்துப் பாரம்பரியங்கள் பிற்காலத்திலே தேச வழமைச் சட்டங்களாகத் தொகுக்கப்பட்டன.
சட்டம் ஒழுங்கை விளையாட்டுக்களின் வாயிலாகக் கற்பிக்கும் மரபு யாழ்ப்பாணத்து அறிகைக் கையளிப் பிலே காணப்பட்டது.
விளையாட்டு மரபுகளையும், விதிகளையும் ஒருவர் பின்பற்றப் பழகுவதன் வாயிலாக சமூகத்தின் பொது வான மரபுகளுக்குக் கட்டுப்படுமாறு பயிற்றுவிக்கப் பட்ட கல்விச் செயற்பாடுகளைக் காணமுடியும். சமூக ஒழுங்குகளுடன் பொருளாதார உற்பத்தி முறைமை களையும் ஒருங்கிணைத்துக் கற்கும் மரபு விளையாட்டுக் களின் வாயிலாக முன்னெடுக்கப்பட்டது.
விளையாட்டுக்கள் வாயிலாக மனோபாவங்களை வளர்த்தல், வழமைகளை மதிக்கப் பழகுதல், மன வெழுச்சிகளுக்குப் பயிற்சி வழங்குதல், தொழில்களிலே ஈடுபடுவதற்கான ஆற்றல்களை உருவாக்குதல் முதலிய கற்றற் பண்புகள் முன்னெடுக்கப்பட்டன.
6

Page 36
யாழ்ப்பாணத்து மரபுவழி விளையாட்டுக் கல்வியை ஆராயும்பொழுது வாழ்க்கைத் தொழில் முறைகளுக்கும் விளையாட்டுக்களுக்குமிடையே நேரான தொடர்புகள் இருந்தமை புலனாகின்றது. இந்தத் தொடர்பு வேலைai?a06Turt Gj G6 i Li Lj (Work - play Relationship) என்றும் அழைக்கப்படும். இவைதவிர சிறுவர்கள் மத்தி யிலும் பெண்கள் மத்தியிலும் பாவனை விளையாட்டுக் கள் பெருவழக்கிலிருந்தன. பாவனை விளையாட்டுக் களிலும் தொழில்முறை சார்ந்த பாவனை விளையாட் டுக்களே பெருவழக்கிலிருந்தன. இவற்றின் வழியாக
வாழ்க்கை ஒழுக்கம் கற்பிக்கப்பட்டது.
தாச்சி விளையாட்டு யாழ்ப்பாணத்து மரபுவழி விளையாட்டுக்களில் முதன்மை பெற்றது. இந்த விளை !பாட்டு பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டது. கிளித்தட்டு, தம்பலம், சட்டத்தட்டு, கிளிக்கோடு, நீர்க்கோடு என அழைக்கப்பட்டது. இவ்விளையாட்டின் தள வடிவமைப்பை நுணுகி நோக்கினால் செறிவான வாழ்க்கைப் பயிர்ச்செய்கை முறையின் நீர்ப்பாய்ச்சற் கோடுகளுக்கும், தாய்ச்சிக் கோடுகளுக்குமிடையே நேர் நிலை இணைப்புக்கள் இருத்தலைக் காணலாம்.
தாய்ச்சியின் மையக்கோடு நீர்ப்பாய்ச்சலின் தலை வாய்க்காலை ஒத்தது. கிளைக்கோடுகள் கிளைவாய்க் காலுக்கு நிகரானவை. நீர் வாய்க்காலின் வழியாக உடைக்காது செல்லல் போன்று மறிப்பவர்களும் இயங்குதல் வேண்டுமென்று கொள்ளப்படுகின்றது. அடைவுப் புள்ளிகள் " பழம் ‘’ என்று குறிப்பிடப் படுதல், அறுவடையின் பெறுபேற்றினைச் சுட்டுவதாக அமைந்தது.
பனை மரத்தின் பயன்களும், பனை மரம் சார்ந்த தொழில்களும் பொருளாதாரக் கட்டமைப்பிலே சிறப் பார்ந்தவையாக இருந்தன. மரத்திலே விரைந்தேறும் தொழிற்பாட்டோடு இணைந்ததாக “நெய்க்கம்பம்
622 --

ஏறுதல்" அல்லது “எண்ணைக்கம்பம் ஏறுதல்” என்ற விளையாட்டு அமைந்தது. நெய் பூசப்பட்ட வழுக்கும் கம்பத்தில் விரைந்து ஏறி, மேலுள்ள பழத்தை அல்லது பரிசைப் பெறும் விளையாட்டு இன்றும் வழக்கில் உண்டு. பனை, தென்னை, கமுகு முதலிய மரங்களில் விரைந்து ஏறும் தொழிற்பாட்டுக்கும் இந்த விளையாட்டுக்கு மிடையே நேரடியான ஒப்புமை காணப்பட்டது. சில கிராமங்களில் இவ்விளையாட்டானது “சேற்றுக் கம்பம் ஏறுதல்' அல்லது ‘களிக்கமுகு ஏறுதல்" என்றும் குறிப்பிடப்பட்டது."
யாழ்ப்பாணத்துத் தொழிற் கோலங்களில் மந்தை மேய்த்தல் பிரதான இடத்தை வகித்தது. மந்தைகளைக் கலைத்துப் பிடித்தல், "கேள் பிடித்தல்’, ‘கேண் பிடித்தல் என்று குறிப்பிடப்பட்டது. விரைந்து ஓடுபவரைக் கலைத்துப் பிடிக்கும் “கேண் விளையாட்டு' அண்மைக் காலம் வரை பெருவழக்கிலிருந்தது. "கேள்’ அல்லது *கேண்‘ என்பது விலங்கைக் குறித்தது.
சிறுவர்கள், பெண்கள் முதலியோரிடத்தும் காணப் பெற்ற பழம் பொறுக்குதல், விதை பொறுக்குதல் முதலியவை திரட்டும் பொருளாதார நடவடிக்கை களோடு இணைந்திருந்தன.
கருவிக் கையாட்சி வாயிலான அறிகைக் கையளிப்பு
தொழில்முறை சார்ந்த கருவிகளைச் செய்தல், கருவிகள் செய்வதற்கான கருவிகள் செய்தல் முதலிய அறிவுக் கையளிப்பும் அனுபவக் கையளிப்பும் நீண்ட தொடர்ச்சியைக் கொண்டுள்ளன. அறிவியலின் பிர யோகப் பண்பினைக் கருவிகள் வெளிப்படுத்தின. இயற்கையை விளங்கிக்கொள்ளலும், கருவிக் கையாட்சி யும் உற்பத்தியிலும் அதிகரிப்பை ஏற்படுத்தின.
ஒவ்வொரு தொழில் புரிவோரும் இயற்கையை ஒவ் வொரு விதமாக விளங்கிக்கொண்டனர். பயிர்ச்செய்கை
- 6.3

Page 37
யில் ஈடுபட்டோர் மண் வளத்தையும் பயிர் வளத்தை யும் அடிப்படையாகக் கொண்ட விளக்கத்தைப் பெரு மளவில் பெற்றனர். மந்தை வளர்ப்பில் ஈடுபட்டோர் கால்நடைகளை அடிப்படையாகக் கொண்ட விளக்கத் தைக் கூடுதலாகப் பெற்றனர். இவ்வாறாக அறிவியற் கையளிப்பும், கருவிக் கையாட்சியும் தத்தம் தொழில் முறை சார்ந்த மீயாற்றலை (Mastery) வளர்க்கத் துணை செய்தன.
மண்கிண்டி மண்ணறிவான் மரங்கிண்டி மரமறிவான் பொன்கிண்டி பொன்னறிவான் புகழ்கிண்டி புகழறிவான் என்ற நாட்டார் வழக்குக் காணப்பட்டது.
பொருள்கள் பற்றிய அறிவு கருவிக் கையாட்சியில் இன்றியமையாததாகும். கல்,மரம், உலோகம், கிளிஞ்சல், எலும்பு, நார், களிமண் முதலியவற்றை அடிப்படை யாகக் கொண்ட கருவிகளின் ஆக்கம் நிகழ்ந்த வேளை கருவிகளின் இணைப்பினால் உற்பத்திப் பெருக்கம் நிகழ்ந்தமையை அறிந்தனர்.
சில உதாரணங்கள் வருமாறு:
1. உளியைத் தட்டுப்பொல்லுடன் இணைத்துச் செயற்
படுத்தும்பொழுது வினைத்திறன் அதிகரித்தமை
2. கலப்பையை மாடுகளுடன் இணைத்தபொழுது
வினைத்திறன் கூடியமை,
3. தயிர் கடையும் மத்தைக் கயிற்றுத்தாங்கியுடன் இணைத்துச் சுழற்றியபொழுது வினைத்திறன் ஏற்பட்டமை.
இவை "சோடிகட்டல்”, “சோடி கூட்டல்", “தொடுப்பு வைத்தல்”, “பட்டி இணக்கல்' என்ற
வாறு யாழ்ப்பாணத்து மரபில் அழைக்கப்பட்டன.
سے 644

நெம்புகோல் பற்றிய அனுபவம் செயல்முறைகளில் பரவலாக இருந்தபொழுதிலும் அவைபற்றிய கோட் பாட்டு உருவாக்கம், அவற்றுக்குரிய கணித அறிகை முதலியவை வளர்ச்சியடைந்தமைக்கு ஆதாரங்கள் கிடைக்கவில்லை. நடைமுறை வாழ்க்கையில் துலா, பாக்குவெட்டி, மண்வெட்டி, குத்துக்கால் நெம்பு, செக்கு முதலிய நெம்புகோல் செயற்பாடுகள் நடை முறையிலிருந்தன. "மல்லன் தூக்காததை மாங்குத்தி தூக்கும்** என்ற தொடர் இன்றும் வழக்கில் உண்டு. நெம்புகோலின் செயல் வலிமையை இத்தொடர் புலப் படுத்தும்.
தொழில்நுட்பத்தில் சில்லின் உபயோகமும் அறிகை யும் பலதரப்பட்டனவாய் அமைந்தன. சட்டி, பானை செய்வதற்கு தளச்சில்லு, வண்டிகளுக்குரிய குத்துக்காற் சில்லு, இராட்டினச் சில்லு, தேர்ச்சில்லு என்றவாறு பலவகையான அறிகை நிலவிவந்தாலும், உடல்வலு தவிர்ந்த ஏனைய காற்றுவலு, நீர்வலு முதலியவற்றைப் பயன்படுத்தி சில்லை இயக்கும் ஆற்றல் வளர்க்கப் பட்டமைகசூ ஆதாரங்கள் கிடைக்கப்பெறவிலலை. ஆயினும் சில்லின் வாயிலாகச் செயல்முறை எளிதாக கப் படலாம் என்ற கருத்து நிலவியது. “சில்லோட்டம்'', *சக்கரப் பெருக்கம்** முதலிய தொடர்கள் சில்லின் வாயிலாக அடையப் பெற்ற வினைத்திறனை விளகசூம்.
உற்பத்திச் செயல்முறையில் நெருப்பின் பரவலான உபயோகம் அறியப்பட்டது. சமையல் நெருப்பு, அடுப்பு நெருப்பு அல்லது அடுக்களை நெருப்பு எனப்பட்டது; உலோகங்களைக் காய்ச்சும் நெருப்பு கம்மாளை நேருப்பு அல்லது பட்டடை நெருப்பு எனப்பட்டது; மருந்துகள் செய்யப் பயன்படுத்தப்பட்ட நெருப்பு மருநதடுப்பு அல்லது மருந்து நெருப்பு எனப்பட்டது; வண்ணங்கள் தயாரிக்க உதவும் நெருப்பு சாயநெருப்பு எனப்படடது; அணிகலன்கள் செய்ய உதவும் நெருப்பு, சட்டி நெருப்பு எனப்பட்டது. மனித நாகரிகத்தின் வளர்ச்சியனது
- 65

Page 38
நெருப்பின் பன்முகப்பட்ட உபயோகங்களின் வளர்ச்சி என்பதை ஆய்வாளர் சுட்டிக்காட்டியுள்ளனர்.? யாழ்ப் பாண அறிகை மரபில் நெருப்பின் பல்வகைப் பயன்கள் அறியப்பட்டபொழுதிலும், வெப்ப அளவீட்டுக் கணித அளவுகள் வளர்க்கப்பட்டமைக்குரிய சான்றாதாரங்கள் கிடைக்கவில்லை.
உற்பத்திப் பெருக்கத்திலும், கருவிக் கையாட்சி யிலும் கணித அறிவு பெருமளவில் விரவியிருக்கா விடிலும், சோதிடம், கோள்களின் அசைவு, ராசிக் கணக்கு, நில அளவை, தூரம் கணித்தல் முதலியவற்றில் கணித அறிவு பயன்படலாயிற்று. கணக்கர், கணக்க ராயர், வட்டுக்கணக்கர், வில்வராயர், ஆரையர் , நூற் கணக்கர் முதலிய பல சிறப்புப் பெயர்கள் வழக்கிலிருந் தன. முக்கோணி முறையைக் கையாண்டு நிலமளத்தல், நிழல் அளந்து நேரம் கணித்தல், கடலில் வரும் தோணிகளின் தூரத்தைக் கணிக்கும் முறைமை முதலி யவை வழக்கிலிருந்தன.8
கட்டடக்கலையில் கணித அறிவு பயன்படுத்தப் பட்டமைக்குச் சான்றுகள் உள்ளன. நீர் மட்டம், மூலை மட்டம் , ஆரைமட்டம், துரக்குக்குண்டு, தளப்பலகை, சாந்தகப்பை, தொடுநூல் முதலாம் கருவிகள் பேச்சு வழக்கில் இருந்தன. அக்கருவிகளின் வாயிலாக கட்டட ஆக்கத்துக்குரிய பிரயோகக் கணித அறிவு பயன்படுத் தப்பட்டது.
கட்டடவாக்கத்தில் இன்று பயன்படுத்தப்படும் சீமெந்துக்குப் பதிலாக “சாந்து' என்ற ஊடகம் முன்னர் பயன்படுத்தப்பட்டது. கல்வீடுகள் “சாந்துக் கட்டடங் கள்’’ எனவும் அழைக்கப்பட்டன. யாழ்ப்பாணத்திற் பரவலாகக் கிடைக்கப்பெற்ற முருகைக் கற்களைச் சுட்டு நீறாக்கி, அவற்றுடன் வேறு பல கனிமங்களையும் சேர்த்துச் சாந்து செய்யப்பட்டது. பனங்களியும் பயன் படுத்தப்பட்டமைக்குச் சான்றுகள் உண்டு. இணுவில்
س 6 ij}

கந்தசுவாமி கோவிலின் முற்கோபுரம் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையானது என்று கருதப் படுகின்றது. சாந்தினாலும் முருகைக் கற்களினாலும் அந்தக் கோபுரம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.8
அழகியற் பொருட்களைச் செய்வதில் கருவிக் கையாட்சி மேலோங்கியிருந்தமை பின்வரும் கலைப் பொருளாக்க நடவடிக்கைகளாற் புலப்படுகின்றது:
கோவில் விக்கிரகங்க்ள்
மர வாகனங்கள்
மரச் சிற்பங்கள் தாம்பாளம், குத்துவிளக்கு போன்ற செப்பு வடிவங்கள மண் பொம்மைகளும், மட்கலங்களும் திரைச்சீலைகள்
தளபாடங்கள் புற்பாய்கள்
சப்பரம், மணவறை
சட்டம் ஒழுங்குகளை நிலைநாட்டும் பணிக்கும் கருவிக் கையாட்சிக்குமிடையே நேரடியான இணைப்பு உண்டு. இந்தத் தொடர்புகள் அறிகை மானிடவியலில் பல தளங்களிலே விளக்கப்படும். யாழ்ப்பாணக் கல்வி மரபினை விளங்கிக்கொள்வதற்கு இந்தத் தொடர்புகள் பற்றிய ஆய்வுகள் துணைசெய்யும், கருவிக் கையாட்சி எவ்வாறு சாதிய அடிப்படையில் பிரிந்து சென்றது என்பதை நோக்குதல் வாயிலாக மேலும் தெளிவான புலக்காட்சியைப் பெறமுடியும்,
Foot Notes:
1. Pandharinath H. Prabhu, Hindu Social Organization,
Popular Prakashan, Bombay, 1963, p.37.

Page 39
2 B Malinowski. Crime and Custom in Savage Society,
Kegan Paul, London, 1932, pp. 9-21.
3. க. நடராசா, செவ்வி, இணுவில், 03-04-1997,
4. மேலது.
5. எஸ். பரமசாமி, செவ்வி, இணுவில், 06.04.1997,
6. மேலது.
7. Benjamin Farrington, Gree Science, Pelican Books,
Middlesex, p. 22.
S , க. நடராசா, முற்சுட்டியமை
9. மேலது.
68 - *&

யாழ்ப்பாணத்து மரபுவழி இசைநடனக் கல்வி
பூர்வீக மந்திரங்களுடனும், சடங்குகளுடனும் இசை நடனக்கல்வி இணைந்திருந்தது. * கூத்து' என்ற அழகியற் செயற்பாட்டில் இசையும், தடனமும் இணைக்கப்பட்டிருந்தன. கூத்தாடுபவர் பாடும்பொழுதும், ஆடும்பொழுதும் அவரது ஆற்றல் மீப்பெருக்கு (Amplification) அடைகின்றது என்ற நம்பிக்கையும் நிலவியது. இவ்வாறான நிலை அவரது ஆளுமையையும், சமூக இசைவாக்கத்தையும் வளம் பெறச் செய்தது. ‘இசை? என்பதன் உட்பொருளாக 'இசைந்து வாழல்' கருதப்பட்டது. இசைக்கு இணை யான இன்னொரு சொல்லான 'பண்" என்பது பண் பறிந்து வாழலைக் குறித்தது.
கூத்து என்பதிலுள்ள கூ' என்ற வேர்ச்சொல் லானது பெருக்கம் அல்லது அறிவாற்றல் பெருக்கத் தைக் குறிப்பிட்டது. இசையோடு ஒத்த 'பா' என்பதும்
() 0] ܚ

Page 40
மீப்பெருக்கத்தைக் குறிப்பிட்டது. கூத்தும் பாட்டும் அறிவாற்றலைப் பெருக்கும் சாதனங்களாகக் கருதப் பட்டன. 'பாடறியான் பலமறியான்' என்ற தொடர் இன்றும் கிராமங்களில் வழங்கிவருகின்றது. மீ இயற்கை வலுவுடனும்,தெய்வீக வலுவுடனும் ஒருவரை இணைத்து வைப்பதற்கு இந்து மரபிலே கூத்து உதவுகின்றது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகின்றது."
யாழ்ப்பாணத்து மரபிலே கூத்தும் இசையும் "யோகப் பயிற்சி'கள் என்று கருதப்பட்டன. மூச்சுப் பயிற்சி, தசைநார்க் கட்டுப்பாடு, இயக்கக் கட்டுப்பாடு, மனவெழுச்சிப் பயிற்சி முதலானவை இசையிலும் கூத்தி லும் சடங்குகளிலும் இடம்பெற்றன.
கூட்டாக ஆடிய ஆடலும் பாடலும் குழுவினரது ஆற்றலை மிகைப்படுத்த துணைசெய்தன. உழுதல், பயிர் நடுதல், அறுவடை செய்தல், வீடு கட்டுதல், மழை வருவித்தல் போன்ற செயல்களைக் குழுவாக மேற் கொள்ளும் மரபு காணப்பட்டது. அவற்றோடு தொடர் புடைய ஆடலும், பாடலும் தொழிலாற்றல் மிக்க செயல் முனைவர்களை (Heroes) உருவாக்க வல்லதாக அமைந்தன. இது "வீரியம்' என்ற சொல்லினால் கிராமங்களில் வழங்கப்பெற்றது. 'வல்லவம்' 'வல்லி” போன்ற சொற்களும் வழக்கிலிருந்ததாகச் சொல்லப் படுகின்றது.2
மரபுவழிக் கல்வியில் இசையும் நடனமும் ஆக்க மலர்ச்சியோடு (Creation) இணைந்திருந்தன. இசைபாடு வோரும், நடனமாடுவோரும், உடல்நிலை, உளநிலை, மனவெழுச்சிநிலை முதலியவற்றிலே புதுத்தென்பும், புத்தூக்கமும் பெறுவதனால், புத்தாக்கம் எட்டப்படக் கூடியதாகவுள்ளது. தெய்வங்களைக் கூத்து வடிவிலே கண்டு வணங்கியமை ஆக்கங்களின் வேண்டுதலாகவும் கருதத்தக்கது. கூத்துக்கடவுள், நிருத்தியமூர்த்தி, குன்று
தோறாடல், கூத்தப்பிரான், ஆடலரசர், நடராசர்,
70 -

ー eesここ。 நடன சிகாமணி, நடனாம்பிகை, கூத்தாம்பாள் முதலிய பல சொற்கள் வழங்கப்பெறுகின்றன. ஆக்க மலர்ச்சி யைத் தெய்வீக வலுவுடன் இணைக்கும் கல்விச் செயற் பாட்டினை இவை எடுத்துக்காட்டுகின்றன. 'இசை யால் வசமாகும்', 'கூத்தால் இணங்கும் கோமான்' முதலிய தொடர்கள் ஆக்கச் செயல்முறையினைத் தொடர்புபடுத்துகின்றன.
நீர்ப்பண்பாட்டுக்கும் யாழ்ப்பாணத்து இசைநடனக் கல்விக்குமிடையே நெருங்கிய தொடர்புகள் காணப் பட்டன. மாரிஅம்மன், முத்துமாரி, முருகன், இலக்குமி, கிருஷ்ணர் முதலாம் தெய்வங்களை நீர்ச்செல்வத்தோடு தொடர்புபடுத்தும் அழகியல் மரபும் தெய்வீக மரபும். நிலவின. நீர்வளத்து க்குக் குறியீடாக *தாமரை : அமைக்கப்பட்டது. மழை, செல்வம், செழிப்பு, இசை, நடனம், வணக்கம் என்பவற்றுக்கிடையே தொடர்புகள் : உய்த்தறியப்பட்டன.3
醫
e
"முகிலாய் வந்திடுவாய் முத்துமாரி
முத்தாய்க் கொட்டிடுவாய் முத்துமாரி
பயிராய் வந்திடுவாய் முத்துமர்ரி %
பாதம் பணிந்திடுவோம் முத்துமாரி'
என்றவாறான மாரியம்மன் பாடல்கள் மேற்கூறிய தொடர்புகளை விளக்குகின்றன. ஆடலும் பாடலும் இணைந்த செறிவு கொண்ட வடிவங்களாக முத்து மாரி அம்மன் பாடல்கள் அமைந்தன.
இசையும் நடனமும் வளமியப் (Fertility) பெருக் கத்திற்கும், காவலுக்குமுரிய கலைகளாகக் கருதப்பட் டன. இவற்றுக்குரிய குறியீடாக நாகம் கருதப்பட்டது. பெண்களால் ஆடப்பெற்ற பண்டக்கூத்து, கருவளப் பெருக்கத்தையும் காவலையும் சுட்டும் பல ஆடல் வகைகளையும் கால அசைவுகளையும் கொண்டிருந்தன. யாழ்ப்பாண நாட்டுவளம் கூறும் ஆடல்களிலும் பாடல்
7 - 6 } [ {؟ އަ) 1

Page 41
களிலும் பாம்பாட்டமும் மகுடி இசையும் பிரதான உறுப்புக்களாக இருத்தல் குறிப்பிடத்தக்கது.
போர்த்துக்கீசர் யாழ்ப்பாணத்துக்கு வந்தபொழுது பல்வகைப்பட்ட இசைமரபுத் தடயங்களை அவர்களாற் கண்டுகொள்ள முடிந்தது. போர்த்துக்கீசர் வருகைக்கு முற்பட்ட காலத்தில் இங்கு மூன்று பெரும் இசை நியமங்கள் நிலவிவந்துள்ளன. அவையாவன:
1. உள்ளடக்கப் பன்முகப்பாடு: இது ** தொனிப் Guit (1565th LD TOLITGub' (Theme and Variations) என்று இசைக்கல்வியிற் குறிப்பிடப்படும். யாதாயி, னும் ஓர் ஒத்திசைவுடன் தொடங்கி சிக்கலான அமைப்புக்களை நோக்கி அசைந்து செல்லும் கோலத்தை இது குறிப்பிடும்.
2. தொடர் ஒத்திசைவுக் கோலம்: இசைக்கல்வியில் இது “தொடரியம்' (Suite) என்று குறிப்பிடப் படும். ஒன்றிணைந்த திரண்ட விளைவுகளை ஏற் படுத்துவதற்குத் தொடர்ச்சியான ஒத்திசைவுக் கோலங்களைச் சூழ வைக்கும் நடவடிக்கையாக இது அமையும்.
3. ஒத்திசைவு மாற்றுப் புள்ளியம்: இது இசைக்கல்வி யில் ஒன்றுக்கொன்று மாற்று நிலையில் மீண் டெழுந்து வரும் கோலங்களை (Rhythmic Counterpoint)க் குறிப்பிடும் பல்வேறு ஒத்திசைவுகளை ஏற்படுத்தும்பொழுது, ஒரே பண்புகளை உடைய ஒத்திசைவுகள் ஐக்கியப்படக்கூடிய கோலங்களை இது சுட்டிக்காட்டும்.
யாழ்ப்பாணத்துச் சமூக நிரலமைப்புக்கேற்றவாறு 'தனிநிலை இசை', 'கூட்டுநிலை இசை' என்ற இருமைத் தன்மைகள் வளர்ச்சியடையத் தொடங்கின. தனிநிலை இசை என்பது பாடுபவருக்கு மட்டும் மன வெழுச்சிக் கிளர்ச்சிகளைத் தூண்டவல்ல சொற்கட்டுக்
72 -

களைக் கொண்டதாக அமையும். இது பேச்சுவழக்கில் 'தன்னெடுப்பு”, 'தற்பாட்டு” எனப்பட்டது. பாடு வோர் தமக்குரிய ஆழ்மனக்கோலங்களுடன் இணைந்து செல்லக்கூடிய சொல்லழுத்தங்களும் தனிமனித உணர்வு களுக்கு இசைந்த நெகிழ்ச்சித்தன்மை கொண்ட பண்பு களும் தனிநிலை இசையிலே காணப்பட்டன. ஒரு வகை இணக்கல்தன்மை கொண்ட இசையாகவும் (Improvised Music) (?) gir 5 IT GOOTLÜLIL "LLigii. G3 Luj 5, வழக்கில் இதனை 'சொயம்போடுதல்', 'சொயம் பாடுதல்’ என்று குறிப்பிட்டனர். இவ்வகையான இசைக்கோலங்கள் ஆபிரிக்கப் பழங்குடி மக்களின் இசைமரபிலும் காணப்பட்டன.6
யாழ்ப்பாணத்துப் பேச்சுத்தமிழில் இசை விரவிய பண்பு காணப்படுதலை கர்ணாமிர்தசாகரம் ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்? “சுத்தமான தமிழ் பேசுகின்றவர்களென்று பலராலும் கொண்டாடப்படும் யாழ்ப்பாணிகளும், தமிழின் கிளைப் பாஷையாகிய மலையாளம் பேசும் மலையாளிகளும் பேசுவதை நம்மில் சிலர் கேட்டிருப்போம். அவர்கள் பேசும்பொழுது சங்கீதத்திற்குரிய சுரங்கள் முழுவதும் உபயோகிக்கப் பட்டு வருகின்றனவென்று நாம் காண்போம்?. யாழ்ப் பாணத்து மரபில் இசைக்கல்வி தொடர்பான பல்வேறு எண்ணக்கருக்கள் வழக்கிலிருந்தன. சரிகமபதநீச என்ற சுரவரிசை முறையே குரல், துத்தம், கைக்கிளை, உழை. இனி, விளரி, தாரம் என அழைக்கப்பட்டது. இசையின் பகுப்புவகை பாலை எனப்பட்டது. வலிவு, மெலிவு, சமன் என்ற மூவகை இயக்குப்பற்றிய செய்தி களும் காணப்பட்டன.
பண், பண்ணியம், திறம், திறத்திறம் என்றவாறு இராகங்கள் பாகுபடுத்தப்பட்டன. பண் என்பது ஏழு சுரங்களுள்ள நிறைவான இராகம். இது பேச்சுவழக்கில் ‘முழுமடை’ எனப்பட்டது. பண்ணியம் என்பது ஆறு சுரங்களுள்ள இராகம். இது "அறுமடை' எனப்பட்டது.
- 78

Page 42
திறம் என்பது ஐந்து சுரங்களுக்குள்ள இராகம். இது 'திருமடை’ எனப்பட்டது. 'திறத்திறம்" என்பது நாலு சுரங்களுள்ள இராகம், இது "நாற்காப்புமடை" எனப்பட்டது. 'மடை" என்ற சொல்லுக்குப் பதிலாகக் 'கண்டம்' என்பதும் வழக்கிலிருந்தது.
தாளம் என்பது "பாணி', 'தட்டு’, ‘தூக்கு" என்றவாறு பேச்சுவழக்கில் அழைக்கப்பட்டது. யாழ்ப் பாணத்துத் தாளமரபை ஆராய்ந்துபார்த்தால் உடல் அசைவுகள், பாரம் தூக்குதல், உடல்சார் தொழிற் படுதல் முதலியவற்றோடு தொடர்புடையதாக வளர்ந்த மானிடவியல் அறிகைமரபைப் புலப்படுவதைக் காண G) frth.
தாளத்தின் உறுப்புக்கள் 'கொட்டு', 'அசை”, 'துரக்கு', 'அளவு” என நான்கு வகையாக அமைக்கப் பட்டது. மாத்திரைக் கணக்கில் அவற்றைப் பின்வரு மாறு விளக்கலாம்:
கொட்டு அரை மாத்திரை அசிை ஒரு மாத்திரை தூக்கு - இரண்டு மாத்திரை ଧ୍ରୁଜୀ ଭା} spany மூன்று மாத்திரை.
வளமான ஒர் இசைமரபு யாழ்ப்பாணத்தில் நிலவியமைக்குரிய இலக்கியச் சான்றுகளாக போர்த்துக் கீசர், ஒல்லாந்தர் காலத்தில் எழுந்த பிரபந்தங்கள் விளங்கின.
ஆலய இசை, சடங்குகளில் இசை முதலியவற்றின் வளர்ச்சியோடு இணைந்த சேவையை வழங்கியோர் குருகுல முறையில் வரன்முறையான இசைக்கல்வியைப் பெற்றனர். அந்த மரபு தவில், நாதசுரக் கலைத் துறையில் இன்றும் நீடித்துவருகின்றது.
سے 4ھ 7

பாரம்பரிய யாழ்ப்பாணத்துப் பொருளாதார நடவடிக்கைகளில் கால்நடை மேய்ப்பு ஒரு பிரதான தொழிலாக அமைந்தது. வயல் உழுதல், விறகு வெட்டு தல், நீர் இறைத்தல் முதலிய மிகைநிலை உடலியக்கத் தொழில்களோடு ஒப்பிடும்பொழுது மேய்ப்பு நட வடிக்கைகளில் ஈடுபட்டோருக்குக் கிடைத்த ஒய்வு, அவர்களை இசையாக்கங்களிலும், கூத்துக்களிலும் ஈடுபடத் தூண்டியது.
மேய்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டோரது வாழ்க்கையின் ஒரு பகுதியாக இசையமைந்தது. மந்தை களை மேயவிட்டு, மரநிழலில் இருந்து தனியாகப் பாடுதல் 'சுயம்' என்று அழைக்கப்பட்டது. மூங்கிற் குழாய்களைப் பயன்படுத்தி ஒலிகளை எழுப்புதல் *இசைக்குழல்' எனப்பட்டது. மந்தை மேய்க்கும் பொழுது "பக்கச்செண்டை' என்ற தோற்கருவியைப் பயன்படுத் தியும் ஒலி எழுப்பி மகிழ்ந்தனர். பக்கச் செண்டை கஞ்சிராவை ஒத்த ஒரு தோல்வாத்திய மாகும். ஒருகையினால் அதனைத் தாங்கிப் பிடித்த வாறு இன்னொரு கையினால் அதனை வாசித்தல்
வேண்டும்."
தமது மூத்தோரிடமிருந்து மேய்க்கும் ஆற்றலை யும், இசையாற்றலையும் இளையோர் கற்றுக்கொண் டனர். அவர்கள் கற்றுக்கொடுத்தவற்றை மீளச் செய்வ தோடு இளையோர் தமக்குரிய புத்தாக்கங்களையும் மேற்கொண்டனர்.
யாழ்ப்பாணத்தில் எழுந்த பள்ளு, குறவஞ்சி, கும்மி முதலாம் பாடல்களின் புவியியற் பின்னணியை ஆராய்ந்து பார்க்கும்பொழுது அவை பெரும்பாலும் கால்நடை மேய்ப்புப் பிரதேசங்களை அடியொற்றி எழுந்த பண்பினைக் காணமுடியும்,
5 7 ܘܗ

Page 43
மந்தைமேய்ப்பில் ஈடுபட்டோர் பயன்படுத்திய காற்றுவாத்தியங்களில் எளிமையான சுரக்கோலங் களைப் பயன்படுத்தினர். ஒர் எடுத்துக்காட்டு வருமாறு:
Tk SATSA kELL SS S S reS
as Azif T i na A
* age dörf} ise 6:
இவற்றை மூன்று காலங்களிலும் வாசிக்கக் கற்றுக் கொண்ட பின்னர் படிப்படியாக அவற்றின் தொடர்ச்சி விரிவைக் கற்றனர். தொடர்ச்சி விரிவு பின்வருமாறு அமைந்தது:
AF 3F f GF ...A FF f" ffrif? 5ft, ff)
LDL DITt O g5351225 LDLDLD
இவற்றிலிருந்து மேலும் சிக்கலான சுரக்கோலங் களை அவர்கள் கற்றுக்கொண்டனர்.
ஒழுங்கமைக்கப்பட்ட இசைக்கல்வி தவில், நாதசுரக் கலைப் பாரம்பரியத்தில் நிலவிவர, கேள்வி ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட இசைக்கல்வி மேய்ப்பும் மரபில் இடம்பெற்று வந்தது.
நடனக்கல்வி:
நடனம் என்பது 'கூத்து' என்ற பெயரால் வழங்கப்பெற்றது. பூர்வீக சடங்குகள், விளையாட்டுக் கள், தொழில்கள், நடனம் என்பவற்றுக்கிடையே ஒன்றிணைந்த தொடர்புகள் காணப்பட்டன. தொழிற் திறன்களை வளர்க்கவும், மனவெழுச்சிகளுக்குப் பயிற்சி தரவும், நம்பிக்கையை வளர்க்கவும், குழு உணர்ச்சி களைப் பங்கீடு செய்யவும், வாழ்க்கையின் முரண்பாடு களை உணர்த்தவும், தெய்வங்களுக்கு மகிழ்ச்சியூட்டவும் நடனங்கள் பயன்பட்டன.
7 t .
 

அசதியாடல், அம்புலி அழைத்தல், அலவன் ஆடல், உலாவல், ஊசல், எண்ணிவிளையாடல், எதிரொலி கேட்டல், ஏறுகோள், கண்புதைத்து ஒளிந்தாடல், கவண், கழங்கு, குதிரை ஏற்றம், யானை ஏற்றம், குரவை, குறும்பு, சாம விளையாட்டு, சிறுசோறு, சிறு தேர், சிறுபறை சிற்றில் செய்தல், சுண்ணம்பந்து, பறவையாடல், பாம்பாடல், விலங்காடல், பாவை விளையாட்டு, மல், வட்டு, வள்ளைவில், வேட்டை, மேய்ப்பு, தாச்சி, கேன் முதலிய பல விளையாட்டுக்கள் யாழ்ப்பாணப் பாரம்பரியத்தில் நிலவிவந்தன. இவற்றுள் பல விளையாட்டுக்கள் பற்றிய செய்திகள் சங்கப் பாடல்களிலும் காணப்படுதல் குறிப்பிடத்தக்கது.19
உற்பத்தியைப் பெருக்குவதற்குரிய உடலியக்கத் திறன்களை வளர்த்தல், புலன்களுக்குப் பயிற்சி தருதல், சிந்தனைக்கும் உணர்ச்சிகளுக்கும் வளமூட்டுதல், குழுவுணர்ச்சியூட்டல், அறவொழுக்கம் கற்பித்தல் முதலியவை யாழ்ப்பாணத்து மரபுவழி விளையாட்டுக் களுக்கும் நடனங்களுக்குமுரிய பொதுப்பண்புகளாகக் காணப்பட்டன.
கூத்து மரபுக்கும், சித்த மருத்துவத்துக்குமிடையே நேரடியான இணைப்புக் காணப்பெற்றது. இரண்டும் ஒன்றிணைந்த வகையிலே உடலுக்கும், உள்ளத்துக்கும் சுகம்தர முயன்றன. உடலசைவுகள் வாயிலாக இயக்கச் சமநிலையை ஏற்படுத்துதல் ‘இசைவு' என்றும், சம நிலையைக் குலைத்தல் “வசைவு' என்றும் குறிப்பிடப் பட்டது. சமநிலையை நோக்கிய அசைவுகளும் சம நிலையைக் குலைக்கும் அசைவுகளும் மாறிமாறி இடம் பெறுதல் "வண்ணம்' எனப்பட்டது.
நிலம், நீர், தீ, காற்று, வானம் ஆகிய ஐம்பூதங் களும் சித்தமருத்துவத்துக்கு அடிப்படையாக அமைதல் போன்று கூத்துக்களுக்கும் அடிப்படையாக அமைந்தன. ஐம்பூதங்களையும் பாவனை செய்யும் கூத்து "ஐவரல்'
- 77

Page 44
எனப்பட்டது. நிலத்தளம் அசையாப் பொருளாகை யால், கால்களை அசைக்காது தரித்து நின்று, உட லசைவுகளினாலும், கண்ணசைவுகளினாலும், முக பாவனைகளாலும் காட்டும் நடனங்கள் நிலம் பற்றிய காட்சியை வெளிப்படுத்தின. நீர், தீ, காற்று ஆகிய வற்றை விளக்கும் நடனங்கள் "ஒலி எழுப்பி” (Voice . making Dances) நடனங்களாக அமைந்தன. நடன மாடுவோர் ஒன்று சேர்ந்து குரலெழுப்புதல் "ஒலி எழுப்பி' எனப்படும். ஆகாயம் சார்ந்த நடனங்கள் தொங்கி எழும் நடனங்களாக அமைந்தன.
இயற்கையை வசப்படுத்திப் பெருக்கவும், தீமைகளை விரட்டியடிக்கவும் இவ்வகை நடனங்கள் ஆடப்பட்டன.11
பஞ்சம் பறக்க வேணும் முத்துமாரி - நீ
பொன்மழையாய்க் காலிறங்கு முத்துமாரி
பட்டி பெருகவேணும் முத்துமாரி - நீ
புன்னை வயல் சோழகமாய் வந்து வீசு
அடுப்பு நிறையவேணும் முத்துமாரி - நீ
ஆலமரக் குடியில் ஆறவேணும் போன்ற பல பாடல்கள் இயற்கையை வசப்படுத்தும் ஆடலோடு இணைந்திருந்தன. இவ்வகை ஆடல்களுக் குரிய தோற்கருவியாக உடுக்கு விளங்கியது. அக்கினி யைக் குறிக்கும் குறியீடாகப் பெரும்பாலும் "அடுப்பு? என்பதே பயன்பட்டது.
பருவகாலங்களைப் பாவனை செய்யும் நாடகங் களும் வழக்கில் இருந்தன. அவை 'பாளையாட்டங்கள்" எனப்பட்டன. பருவங்கள் சுழன்று வருவதைக் குறிப் பிடும் வகையில் இந்நடனங்கள் வட்டச்சுற்றுகை, நீள் வட்டச்சுற்றுகை, பிறைச்சுற்றுகை கொண்டவையாக அமைந்தன. இலைதளிர்க்காலம் முழுவட்டச் சுற்றுகை யினாற் புலப்படுத்தப்பட்டது. இலையுதிர்காலம், அரை வட்டச் சுற்றுகையினாற் புலப்படுத்தப்பட்டது. அரை
ܚ ܲ78

வட்டச் சுற்றுகையானது பிறைச்சுற்றுகை எனவும் குறிப் பிடப்பட்டது. பாதங்களைப் பின்னோக்கி வைத்து ஆடுதல் 'பிற்காற்புலப்பாடு' எனப்பட்டது, தேய் பிறை, பின்பணிக்காலம் முதலியவற்றைக் காட்டுவதற் குப் பிற்காற்புலப்பாடு பயன்படுத்தப்பட்டது.
அரைமண்டி ஆட்டங்கள் வாயிலாக மாரிகாலம் புலப்படுத்தப்பட்டது. நீர் நெளிவுகளைக் காட்டும் கையசைவுகள் “அலை அசைவுகள்" எனப்பட்டன. தீச்சுவாலைகள் தாவல் ஆட்டங்களினாற் குறிப்பிடப் பட்டன. தாவல் ஆட்டம் 'தாவடி' என்றும் குறிப் பிடப்பட்டது.
விலங்குகள், பறவைகள் முதலியவற்றை உற்று நோக்கலும், அவைபற்றிய அறிகைகளும் நடனங்களிலே செல்வாக்குச் செலுத்தின. மனவெழுச்சிகளை வெளிப் படுத்தும் பொருட்டு விலங்குகளும் பறவைகளும் நடனம் ஆடுகின்றன என்ற நம்பிக்கை நிலவியது. விலங்குகளி டமிருந்து பெறும் பயன்களை அதிகரித்தல், அவற்றின் கருவளத்தைப் பெருக்குதல், விலங்குகளைக் காவலுக்கு அழைத்தல், அவற்றின் உடற்பலத்தைப் பெற்றுக் கொள்ளல் முதலிய தேவைகளின் பொருட்டு நடனங் கள் இயற்றப்பட்டன; மான் ஆட்டம், மயிலாட்டம், பாம்பாட்டம், மீன் ஆட்டம், கொம்பன் ஆட்டம், குரங்காட்டம், குதிரையாட்டம் என்ற வகையான ஆட்டங்களிலே ஒன்று சேர்ந்து பல குரல் எழுப்புதல் (Chorus) இடம்பெற்றது. பல குரல் எடுப்பு விலங்கு களின் ஒலிகளைப் பிரதி செய்வதாக அமைந்தது.
'பாம்பாட்டம்' நாக வணக்கத்துடன் இணைந்த தாக அமைந்தது. பண்டைய கிரேக்க, உரோம பாம்பு நடனங்களில் நடனம் ஆடுவோர் பாம்புகளைக் கையில் gig 15L607th gig. Gorri (Walters Art Gallery, Baltimore): ஆனால் யாழ்ப்பாணத்துப் பாரம்பரியத்தில் நடனம் ஆடுபவரே பாம்பாகப் பாவனைசெய்து ஆடும் வழக்கம்
... 79

Page 45
நிலவியது. அதற்குரிய இசைவடிவமாக 'மகுடி' அமைந்தது. இவ்வகை ஆட்டங்களுக்குப் பாம்பாட்டிச் சித்தர்களின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டன. பிறப்பு, இறப்பு, மீள்பிறப்பு, கருவளப் பெருக்கம் முதலிய எண்ணக்கருக்கள் பாம்பு நடனங்கள் வாயிலாக எடுத் துரைக்கப்பட்டன.
'உரியாட்டம்' என்ற தனித்துவமான நடனம்
இங்கு நிலவியமைக்குச் சான்றுகள் உள்ளன. விலங்குக
ளது தோலைக் கையில் ஏந்தியவண்ணம் விரித்தும், சுருக்கியும், வீசி எறிந்து ஏந்தியும், போர்த்தும் ஆடுவது 'உரியாட்டம்' எனப்பட்டது. இதுவே பிற்காலத்தில் வளர்ச்சிபெற்ற ஒயில் ஆட்டத்துக்குத் தளமாக அமைந் திருக்கலாம். கிழ விலங்குகள் தொடர்பான பாவனை நடனங்கள் நகைச்சுவைத் தூண்டலுக்குப் பயன்படுத்
தப்பட்டன. குரங்கு ஆட்டமும் நகைச்சுவைக்குப் பயன்படுத்தப்பட்டது. இவ்வகை ஆட்டங்களில் முகமூடி களும் பயன்படுத்தப்பட்டன. ஆடுபவர் யாரென்று அறியாதிருக்க முகமூடிகள் உதவின. ஆடுபவரை இனங் காட்டாது ஆடும் நடனம் 'உலைமூடி' எனப்பட்டது.
பானை, குடம், சுளகு, கூடை, தானியக் கதிர்கள் முதலியவற்றை ஏந்தி ஆடும் நடனம் 'பண்டக்கூத்து" எனப்பட்டது. பண்டக்கூத்து பெண்களுக்கு மட்டும் உரிய நடனமாகப் பெரும்பாலும் அமைந்தது. தானியங் களை நிறைத்தல், அளத்தல், பகிர்தல் முதலியவை பண்டக்கூத்தின் கருப்பொருளாக அமைந்தது. இக் கூத்திற்குப் பிரதியீடு செய்யும் வகையில் ஆண்கள் ஆடிய நடனம் 'மல்லுக்கூத்து ' எனப்பட்டது. கம்பு, வேல், சூலம், வாள், அம்பு முதலியவற்றை ஏந்தி ஆடல் மல்லுக்கூத்து எனப்பட்டது. பண்டக்கூத்தோடு இணைந்த ஆடல் வடிவங்களாக இடித்தல், புடைத்தல், அளத்தல், தூற்றுதல், கழுவுதல், அவித்தல், உலர்த் தல் என்றவாறான தொழில்முறை நடனச்சுட்டிகள் வளர்ச்சியடைந்தன. கைகள்வாயிலாகக் கருத்தை
په 80

வெளிப்படுத்தும் முறைமை "கைக்குறி' எனவும், முகவடிவங்களினாற் கருத்தை வெளிப்படுத்துதல் "முகக்குறி' எனவும் குறிப்பிடப்பட்டது.12
வழிபாட்டிடங்களில் பெண்கள் ஆடிய கூத்து 'வங்கை’ எனவும், ஆண்கள் ஆடிய கூத்து "சிங்கை' எனவும் குறிப்பிடப்பட்டது. வழிபாட்டிடங்களில் இடம் பெற்ற கூத்துக்கள் கதை சொல்லும் கூத்துக்களாகக் கூர்ப்பு அடைந்தன. கதை சொல்லும் கூத்துக்களில் முதற்கண் ஆடுகளம் பற்றிய வணக்கம் விருத்தமாகப் பாடும் மரபு காணப்பட்டது.
"பூமகளே பொன் சொரியும் திருவடியைச்
சிறுகையாற் போற்றுகின்றோம் வான்மகளே நீர் சொரிந்து வயல் நிறைந்து கால் நடைகள் பால் சொரிந்து பொலியக்கான ஆடலொடு பாடலுமாய் வருவாய் அம்மா',
ஒருவகையில் நிலமானிய சமூக அமைப்பின் பொருண் மிய விழுமியங்களை விளக்கும் வகையிலும், தாய்த் தெய்வ வழிபாட்டை முன்னெடுக்கும் வகையிலும் கரு வளப் பெருக்கைக் குறிப்பிடும் வகையிலும் இந்த விருத்தப்பா அமைந்தது.
அடிக்குறிப்பு:
1. Heinrich Zimmer, Myth and Symbol in India a Art and Civilization, Harper Torch books, New york, 1962, p. 15.
2. எஸ். சிதம்பரேஸ்வரன், செவ்வி,
- 81
s
- G鼬

Page 46
0.
A .
مے 892
மேலது.
கிருஷாந்தி ரவீந்திரா, யாழ்ப்பான நாட்டுவள நடனம், யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்புவிழா நடன நிகழ்ச்சி, 1997.
சபா. ஜெயராசா, ஈழத்தமிழரின் பூர்வீக இசைப்பாரம்பரியம், வட - கிழக்கு மாகாண தமிழ் மொழித்தின விழா மலர் 1995, p. 68.
மேலது.
ஏபிரகாம் பண்டிதர், கர்னாமிர்தசாகரம், கருணாநிதி வைத்தியசாலை, தஞ்சாவூர், 1917, p, 936
எஸ். நடராசா, செவ்வி.
சு. சிவகாமசுந்தரி, தன்னனானே, நாட்டுப்புற 5959ngmy Lijst டுக்கள் சிறப்பிதழ், பெங்களூர், 1996, p. 68,
எஸ். நடராசா, செவ்வி :
மேலது.

உளவியல் மரபும் உள நெருக்கீட்டு முகாமைத்துவமும்
நேர்நிலையானதும் எதிர் நிலையானதும் ஆன சமூக வலுக்களுக்குள் சிக்கி, உள அழுத்தங்களை அனுபவிக்கும் நிலை, “உள நெருக்கீடு' (Stress) எனப்படும். இது நடத்தைக் கோலங்களில் மாற்றங்களை அல்லது குலைவை வருவிக்கும். மாற்றங் கள் நேர்மாற்றங்களாக இருக்கலாம் அல்லது எதிர் மாற்றங்களாக இருக்கலாம். நடத்தை ஒழுங்குக் குலை வும் நேர் நெறிப்பட்டதாக இருக்கலாம் அல்லது எதிர் நெறிப்பட்டதாக இருக்கலாம்.
தமிழர் உளவியல் மரபில் தற்கால உளவியலாளர் குறிப்பிடும் 'உள நெருக்கீடு' என்பதற்குரிய இணை யான எண்ணக்கருவாக 'மூட்டம்” என்பது அமைந்தது. கிராமிய வழக்கில் இன்றும் இந்தச் சொல் நிலவி வருகின்றது. மூட்டம் என்பது நடத்தை ஒழுங்குக் குலைவுகளை ஏற்படுத்தும்போது 'சுழிமூட்டம்' எனப்பட்டது.
- 8 3

Page 47
தமிழர்களுடைய பாரம்பரியத்தில் உருவாக்கப் பட்ட மூட்டம் பற்றிய கருத்துக்கும், மேலைத்தேய உளவியலாளர் குறிப்பிடும் உள நெருக்கீடு பற்றிய கருத்துக்குமிடையே பல ஒப்புமைகள் காணப்படுகின் றன. நல்விளைவுகளை உண்டாக்கும் உள நெருக்கீடு (Eustress) என்றும், எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் உள நெருக்கீடு (Distress) என்றும் இரண்டு வகையான பகுப்பியலை உளவியலாளர் சுட்டிக்காட்டுகின்றனர். நல்விளைவுகளை ஏற்படுத்தும் உள நெருக்கீடு மகிழ்ச்சி, ஆக்க உந்தல்கள், இங்கிதமான பொழுதுபோக்குகள், விளையாட்டு உந்தல் முதலியவற்றை உண்டாக்கும். எதிர் விளைவுகளை உருவாக்கும் உள நெருக்கீடுகளி னால் உளத் தளர்வு, மனமுறிவு, கோபம், வன் நடத்தை முதலியவை உருவாக்கப்படுகின்றன.
நெருக்கீடு என்பது உடலியல் தழுவியதாகவும் எழலாம்; உளவியல் தழுவியதாகவும் உருப்பெறலாம். பெரும் விபத்துக்கள், ஆழ்ந்த தீக்காயம், கடும் நோய் முதலிய உடலியல் காரணிகள் நெருக்கீடுகளை ஏற் படுத்துதலுண்டு பயம், பதகளிப்பு, அழுத்தம், கவலை, மிகுவியப்பு, மனவெழுச்சி, முரண்பாடுகள் முதலிய உளவியற் காரணிகளும் நெருக்கீடுகளை உண்டாக்கும். இவை தற்காலிகமான தோற்றப்பாட்டுடன் மங்கிவிடும் பொழுது ஆபத்துக்கள் ஏற்படுவதில்லை. ஆனால் அவை ஆழ்ந்து வேரூன்றி ஆழ்மனத்தில் அழுத்தங்களை ஏற்படுத்துதல் பெருமளவிலே கவன ஈர்ப்பைப் பெறு கின்றன. தமிழர்களின் உளவியல் மரபில் மூட்டங்கள் ஆழ்மனத்தில் தாக்கங்களை ஏற்படுத்தும் செயற்பாடு *விழுது வைத்தல்' எனப்பட்டது.*
நவீன உளவியலில் இது மேலும் விரிவாக ஆராயப் படுகின்றது. உள நெருக்குவார ஒழுங்குக் குலைவினை மருத்துவ உளவியலாளர் பின்வரும் கட்டங்களை உள்ளடக்கிய வளர்ச்சியாக விளக்குவர்:
س 4، 8

so. GTubártir su "...) ø 6IIt'll Naoðflg: Tri g;t't th பிணிசார் கட்டம்
@
கல்வி உளவியலாளரும், முகாமைத்துவ உளவிய
லாளரும் உளம்சார் கட்டத்தில் நிகழும் நடத்தை மாற்றங்கள் பற்றிய விரிவான ஆய்வுகளை மேற் கொள்ளுகின்றனர். பொதுவாக, உள நெருக்கீட்டின் எதிர்நிலை வயப்படும்பொழுது பின்வரும் நடத்தைக் கோலங்கள் வளர்ச்சியடையத் தொடங்கும்:
0.
பிறருடன் இணைந்து செயற்படுதல் கஷ்டமாக
இருக்கும்.
பாதுகாப்பின்மை, போதாமை, புறக்கணிப்பு
முதலாம் உணர்வுகள் மேலோங்கும்.
தவறுகளைக் கூடுதலாக விடும் வாய்ப்பு ஏற்படும். ஞாபக மறதி ஏற்படும். மனவெழுச்சி வெளிப்பாடுகள் அளவுக்கு அதிக
மாக இருக்கும். சக நண்பர்கள்மீது நம்பிக்கை இன்மை தோன்றும்.
பொருத்தமற்ற பொருள்கள் பற்றிய பேச்சு
மிகும்.
கூறியவற்றை மீண்டும் மீண்டும் கூறல் வளர்ச்சி யடையும்.
சிறந்த முடிவுகளைத் தெரிவுசெய்யாது, தமக்குச்
சாதகமான முடிவுகளை மேற்கொள்ளல் முனைப் புப் பெறும். புகைத்தல் அல்லது மது அருந்துதலில் திடீர் அதிகரிப்பு ஏற்படும்.
乳
உடலங்களின் தாக்கநிலை, ss>し5cし○ー

Page 48
ஒருவருக்குரிய சாதாரண நடத்தைகளிலே திடீர் மாற்றங்கள் தோன்றுதல் தமிழர்களின் பாரம்பரிய மான உளவியல் அவதானிப்பிலே எண்ணக்கருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. சங்க இலக்கிய அகத்தினைப் பாடல்களில் இவை தொடர்பான பெருமளவு செய்தி கள் இடம்பெற்றுள்ளன. பொது நடத்தைகளில் ஏற் பட்ட திடீர் மாற்றங்கள், "மம்மர்', 'மாமை' போன்ற எண்ணக்கருக்களாற் புலப்படுத்தப்பட்டன. பாலியல் தொடர்பான நடத்தைகளில் ஏற்படும் திடீர் மாற்றம் ‘பசலை' எனப்பட்டது.8
பொது நடத்தைகளில் ஏற்படும் மாற்றங்களை அவதானித்த தற்கால உளவியலாளர் பின்வரும் கோலங்களைச் சுட்டிக்காட்டுகின்றனர்:
1. திறமையாகச் செயற்படும் ஒருவர் ஏனோதானோ
என்று செயற்படும் நிலைக்கு மாறுதல், 2. பிறருடன் பொதுவாக நன்றாகப் பழகுபவர்,
தனித்து அந்நியமாதல், 3. தாமே தனித்துச் செயற்பட்ட ஒருவர் எதற்கும்
பிறரின் உதவியை நாடுதல், 4. நேர்மையாக நடந்த ஒருவரிடத்து நேர்மை
குன்றிய இயல்புகள் முகிழ்த்தல், மகிழ்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தொழிற்பாடு கள் மகிழ்ச்சி அற்றவையாகத் தோன்றுதல்.
5
6. அதிக உலோபியாக மாறுதல் அல்லது மீச்செல
வாளியாக மாறுதல்.
7. எவற்றிலும் ஆழ்ந்து கருத்தூன்றமுடியாது மனம்
சஞ்சலப்பட்டு அலைதல்.
தமிழர்களது பாரம்பரிய உளவியற் கருத்துக்களில் நெருக்கீடு என்பது உடல் சார்ந்ததும் உளம் சார்ந்தது மான தளம்பல் நிலைகளைக் குறித்து நின்றது. இந்
ܕܚ 6 8

நிலையில் மனவெழுச்சிக் குழப்பங்கள் மிகுந்து காணப்
படும். 'தளம்பல்', 'சூறல்’, 'பலகணி யாட்டம்”, *கட்டுடைப்பு’, ‘இடைச்சதிரி', 'துலாவியம்' போன்ற
பல சொற்கள் அவற்றை விளக்குவதற்குப் பயன்படுத்தப்
பட்டன.4 மனவெழுச்சிச் சமநிலைக் குழப்பங்களில்
இருந்து விடுபடும் நிலையானது 'நிழல்' என்றும்
'வீடு' என்றும் குறிப்பிடப்பட்டது.
உறுப்புக்களால் ஆக்கப்படும் மனித உடலைக் * கருவுடல்' அல்லது பிண்டம் என்று கூறினர். கரு வுடலைச் சூழ்ந்து, மருவுடல், பெருவுடல், அறிவுடல், திருவுடல் என்றவாறு உடல் என்ற எண்ணக்கரு தமிழர் மரபில் விளக்கப்பட்டது. சித்தர்கள் உடலை "ஒடு" * கூடு' என்ற எண்ணக்கருக்களினாற் குறித்தனர். *கருவோடு', 'மருவோடு", 'பெருவோடு", 'அறிவோடு', 'திருவோடு' என்றவாறு சித்தர் மரபில் உடல் பற்றிய எண்ணக்கரு விபரிக்கப்பட்டது. வட இந்தியாவின் சிந்தனை மரபிலும் இதற்குரிய ஒப்புமை களைக் காணலாம். உடல் ஐந்து வகையான கோசங் களைக் கொண்டது என்றும் அவை அன்னமயகோசம், பிராணமயகோசம் மனோமயகோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமயகோசம் என்றவாறு குறிப்பிடப் பட்டுள்ளது.
தமிழர்களுடைய மரபில் உள்நெருக்குவாரத்தை முகாமை செய்யும் உபாயம் கருவுடலில் இருந்து ஆரம் பிக்கின்றது. உடல் உறுப்புக்களின் செயற்பாடுகளைச் செம்மைப்படுத்துதல், தசைநார் மூட்டுக்களில் ஏற்பட்ட விறைப்பினைத் தளர்த்தல் முதற்கண் வற்புறுத்தப்படு கின்றது. 'நானேறிய மூட்டின் நாணிறக்கல்’ என்று சித்தர்கள் அந்தத் தோற்றப்பாட்டினை விளக்கினர்.
மூச்சை ஒழுங்கமைத்தலும் உள நெருக்கீட்டு முகாமைத்துவத்தில் எடுத்துக் கூறப்படும் ஒரு பாரம் பரியமான முறையியலாகும். வடமொழியில் இது
87

Page 49
மூச்சு ஒழுங்கமைப்போடு சுகம் காணப்படக்கூடிய பிராணாயம" என்று குறித்துரைக்கப்பட்டது. உடல் உளச் சமநிலை குன்றியிருக்கும்பொழுது மூச்சு ஒழுங் கமைப்பும் பாதிக்கப்படும். 'மூச்சு ஒழுங்கு - மூலத்தின் ஒழுங்கு' என்றவாறு தமிழர் உளவியலிலே விளக்கப் பட்டது. 'பேச்சு ஒழுங்கு - மூச்சு ஒழுங்கு' என்ற தொடர்கள் வழக்கிலுள்ளன. பேச்சிலும் மூச்சிலும் ஒழுங்கமைப்புக்களை ஏற்படுத்துவதன் வாயிலாக உள நெருக்கீட்டின் முகாமை எடுத்துக்கூறப்பட்டுள்ளது.
மூச்சு ஒழுங்கமைக்கப்படும்பொழுதும், பேச்சு ஒழுங்கமைக்கப்படும்பொழுதும் உளம் ஒருவித ஒய்வை அனுபவிக்கத்தொடங்குகின்றது.நவீன உளவியலில் உளச் சுகம் தரும் ஒய்வு "தன்னிசைவியம்" (Relaxation) என்று இது குறிப்பிடப்படும். "ஆலோ லம் பாடி அடங் காத குருவி ஆலங்குடிலுக்குள் அணைத்த சுகம் கண்டேன்' என்ற தொடர் ஒய்வு வழியாக நெருக் கீட்டு முகாமைத்துவம் வெற்றியடையும் என்ற கருத்தை மீள வலியுறுத்துகின்றது. ஒய்வு என்பது சோம்பல் (Laziness)தனம் அன்று என்பதைக் குறிப்பிடவேண்டி யுள்ளது. "சோம்பல் சுழிக்கும்" என்பதும் “சோம்பித் திரிவாரடி - குதம்பாய், சுகங்காண வழியில்லை' என்ப தும் சோம்பல் எதிர்மறையான தாக்கங்களை ஏற். படுத்தும் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது.
உளநெருக்கீட்டுக்கும், சோம்பலுக்கும் 'அறியாமை' ஒரு பிரதான காரணியாகக் கருதப்படுகின்றது. 'சில் லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே சொல் லொன்றும் காணன்' என்பது அறியாமையின் அவலத் தைக் குறியீடுகள் வாயிலாகச் சுட்டிக்காட்டுகின் து. அறியாமையில் இருந்து விடுபடும்பொழுது சுகம் கிடைக் கும் என்பது 'அறிவாய் அறிவறிய நெஞ்சமே" என்ற தொடரால் விளக்கப்படுகின்றது.
உளவியலாளர் உள நெருக்கீடுகளின் மட்டங்கள் (Stress Levels) பற்றியும் ஆராய்ந்துள்ளனர். சாதாரண
88 -

நெருக்கீடுகள் 'தாழ்நிலையில்' உள்ள நெருக்கீடுக ளாகக் கருதப்படும். அதற்கு அடுத்த கட்டத்தில் அமைந் துள்ள நெருக்கீடுகள் தியானம் அல்லது ஆழியின் வழியாக நீக்கப்படக்கூடியவை. தியானம் என்ற வடமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லாக 'ஆழி' விளங்கியது. உளத்தை ஒடுக்கி ஆழ்ந்து செல்லும் ஒரு செயற்பாடாக அது விளங்கியமையால் 'ஆழி' எனப் பட்டது. ஆழ்ந்த மூச்சை உட்கொண்டு வெளிவிடுதலும் ஆழி என்ற எண்ணக்கருவினாற் புலப்படுத்தப்பட்டது. **ஆழி சிறகடிக்க அல்லல் பறந்ததடி' என்ற தொடர் மேற்கூறிய கருத்துக்களை மீள வலியுறுத்துகின்றது. 'ஆழி சிறகடிக்க' என்ற தொடர், மூச்சு உள்வாங்கல், வெளிவிடல் என்ற செயற்பாடுகளினோடு பொருத்த மான உடலசைவுகளையும், பயிற்சிகளையும் மேற் கொள்ளல் வேண்டும் என்பதைப் புலப்படுத்துகின்றது.
தமது ஆற்றல்களையும், அதேவேளை மட்டுப்பாடு களையும் ஒருவர் அறியாதிருக்கும் 'தன்னிலைப்பட்ட அறியாமை உளநெருக்குவாரத்தைத் தீர்மானிப்பதற் குரிய தடையாகவுள்ளது. தன்னை உணரச்செய்தல் பிரச்சினையின் அரைவாசித் தீர்வுக்கு வழி வகுத்து GiớG6) Gör pogii (Recognition is Half the Solution). தமது அறியாமை பெரும்பாலானோரிடத்து விரவி யுள்ளது. அவர்கள் தமக்குரிய ஆற்றல்கள் பற்றியும், உள்ளார்ந்த வலு பற்றியும் உணர்ந்துகொள்வதில்லை. தமது ஆற்றல்களை உணர்ந்துகொள்வோரும் தமது உளச்சுகத்திற்கென அவற்றைப் பிரயோகிப்பதில்லை. 'ஒட்டுக்குள் இருக்கும் ஒளடதத்தைக் காணாமல் காட்டுக்குள் அலைவாரடி' என்ற அடிகள் இந்தக் கருத்தைப் புலப்படுத்துகின்றன.
தம்மை நிராகரித்து, தமது ஆற்றல்களை நிறுவி மேம்படுத்தாது உயர்ந்த நிலைக்கு நகர்ந்து செல்லல் இயலாது என்ற கருத்தும் இதன் தொடர்பிலே வலி யுறுத்தப்பட்டது.
() 8 سا

Page 50
"தாவாரமில்லை
தனக்கொரு வீடில்லை தேவாரம் ஏதுக்கடி ?,
இந்நிலையானது உளநெருக்கீடுகளுக்கான சுய
(upg|T60 LD55161 lb (Self Management of Tension) என்ற சமகால உளவியற் கருத்துக்களுடன் ஒப்புமை கொண் டிருத்தலைக் குறிப்பிடல் வேண்டும்.
உளநெருக்கீடுகளுக்கான முகாமைத்துவம் அறிவு
ணர்வின் தொடுசுட்டிகளுடன் (Pointers of Awareness) இணைந்துள்ளது. தொடுசுட்டிகள் பின்வரும் வகைப் படும்:
"
உடல் சார்ந்தவை உளம் சார்ந்தவை மனவெழுச்சி சார்ந்தவை மெஞ்ஞானம் சார்ந்தவை இறை சார்ந்தவை.
இறுகிய தசைநார்களைத் தளர்த்தி நெகிழச் செப் தல், மூச்சு ஒழுங்கமைப்பு ஒய்வு, ஆழ்ந்த ஓய்வு முதலிய தொடுசுட்டிகளால் உள நெருக்கீடுகளுக் கான முகாமைத்துவத்தை மேற்கொள்ளலாம். உளம்சார்ந்த தொடுசுட்டிகளாய் அமையும் 'ஓம்' என்ற ஒலி, உள்ளத்தை வருடும் இசை, அமைதி தரும் நிலக்காட்சிகள், ஒவியங்கள், சிற்பங்கள், பரதநாட்டியம் முதலியவற்றைப் பயன்படுத்தலும் மனச்சுகம் தரும் நேர்நிலைமாற்றங்களை ஏற் படுத்தும். மேற்குறிப்பிட்ட தொடுசுட்டிகளை மனவெழுச்சி சார்ந்த தொடுசுட்டிகளாகவும் பயன்படுத்தலாம். ஆக்கக் கற்பனை, தெய்விகக் கற்பனை, ஞான நூல்களைக் கற்றுத் தெளிதல் முதலிய மெய் ஞானம் சார்ந்த தொடுசுட்டிகள் உள நெருக்
 

கீட்டுக்கான சுய முகாமைத்துவத்தில் பெரிதும் பங்குகொள்ளக்கூடியவையாகும்.
5. உள்ளார்ந்த அறியுணர்வை ஆழ்ந்து மேம்படுத்து
தல், இறைசார்ந்த தொடுசுட்டியாகும்.
அறியுணர்வை வினைத்திறன்படுத்தி மேலும் அனு
கூலங்களைப் பெறமுடியும் என்ற கருத்து தமிழர்களின்
உளவியல் மரபிலே காணப்பட்டது.10
*அறிவிக்க வந்த பொருள்
ஆழ்கடலாய் விரிந்ததடி - ஆழ்கடலாய் விரிந்த பொருள் அகப்பைக்குள் வந்ததடி'.
அறியுணர்வானது கவனத்துடன் ஆரம்பிக்கின்றது. ஆக்கநிலையில் அறியுணர்வைக் கூர்மைப்படுத்தல் * செங்கூர்மை' எனப்பட்டது. அறியுணர்வை நேர்க் கோட்டில் நெறிப்படுத்திச் செல்லல் "நேரிய அறி யுணர்வு' (Linear Awareness) என்று நவீன உளவிய லிற் குறிப்பிடப்படும். நேரிய அறியுணர்வு ஆழ்ந்து செயற்படும்பொழுது, பிரச்சினையின் பல்வேறு தளங் களை அறியும் செயற்பாடு முகிழ்த்தெழும். இந்நிலை யானது தளநிலை அறியுணர்வு (Surface Awareness) எனப்படும். தளநிலை அறியுணர்வு மேலும் ஆழ்ந்த கவனத்துக்கும் புலக்காட்சிக்கும் உட்படுத்தப்படும் பொழுது அது முப்பரிமாண அறியுணர்வாக மலர்ச்சி யுறும்.
மேற்கூறிய கருத்துக்களை காட்சி வடிவில் விளக்கு வதாயின் தொடுசுட்டி அறியுணர்வு ஒரு புள்ளியாக அமையும் - நேரிய அறியுணர்வு என்பது அந்தப் புள்ளி யில் இருந்து நீழும் கோடாக வளரும் - நேரிய அறி யுணர்வானது இரு பரிமாணங்களைக் கொண்ட அடித் தளமாக வளருகின்றது. அது தளநிலை அறியுணர் வாகும். இரு பரிமாணங்களைக் கொண்ட தளநிலை
- 9

Page 51
அறியுணர்வு வியாபித்து மூன்று பரிமாணங்களை எடுக் கும் நிலை, முப்பரிமாணஅறியுணர்வாக அமைகின்றது.
* முப்பரிமாணக் காட்சியானது தமிழரது பாரம்பரியத்தில்
“முகலி' எனப்பட்டது. சாதாரண மனிதர்கள் முகலி உணர்வை அனுபவிக்கும்பொழுது, உள நெருக்கீட்டி லிருந்து விடுபட முடியும். சித்தர்கள் “முகலியில்’ இருந்து நகலிக்கு' நகர்ந்தனர் என்று கொள்ளப்படுகின்றது. 'நகலி' என்பது நான்காவது பரிமாணமாக இருக்கலாம்.
உள நெருக்கீட்டை இசைவாக்கம் செய்வதற்குரிய உபாயங்களுள் ஒன்றாக இயற்கையோடு இணைந்து guit(556) (Progress in Tune Nature) (515 LSL" படுகின்றது. அதாவது இயற்கையோடு அகமும் புறமும் இசைவுகொண்டு வாழும்பொழுது, உடல் நலமும் உள நலமும் மேலோங்கிச் செல்லும். நாளின் சுழற்சி, பருவ காலங்களின் சுழற்சி முதலிய இயற்கை நிகழ்ச்சிகள் *சென்றது வருதல்' என்ற செயலை வட்டப்பாய்ச்ச லாக நிகழ்த்துகின்றன. இவ்வாறான சுழற்சிச் செயல் முறை அல்லது வட்டச் செயல்முறையை மனிதரும் பின்பற்றும்பொழுது, உடற் சமநிலையும், உளச் சம நிலையும், சீராக்கற் சமநிலையும் ஏற்படுத்தப்படும் என நம்பப்பட்டது. சூரியவலு, காற்றுவலு, நீர்வலு முதலிய மீண்டெழும் வலுக்களை மனிதர் பயன்படுத்தும் பொழுது இயற்கைச் சமநிலை பாதிப்படைவதில்லை.
மனிதரும் மீண்டு ஆக்கங்களை வருவிக்கும் செயல் களை வட்டப்பாய்ச்சலாகப் பிறப்பிக்கும்பொழுது, எதிர்நிலைச் செயற்பாடுகள் வலுவிழந்து நேர்நிலை ஆக்கங்கள் மேலோங்கும். பயிர்ச்செய்கைப் பண்பாடு வளர, தாழ்நிலை இயற்கைத் தாவரங்கள் தானியச் செய்கையின் பொருட்டு அழிக்கப்பட்டன. அந்நிலையில் இயற்கைத் தாவரங்கள் அழிக்கப்படாத நிலங்களாக மலைப்பாங்கான பகுதிகளே விளங்கின.
92 -

'மாங்காய்ப்பாலுண்டு மலை மேலிருப்போர்க்கு தேங்காய்ப்பால் ஏதுக்கடி'1' என்ற அடிகளில் மேற் குறித்த இயற்கைத்தாவர முரண்பாடு சுட்டிக்காட்டப் படுகின்றது. 'நாவிலே கலையைப் போலு நகுந்திருப் பொதிகைக் குன்றம்"12 என்றவாறு சித்தவைத்திய நூலாகிய கண்ணுச்சாமியத்தில் குன்றின் சிறப்பு கூறப்படுகின்றது. பொருள் பொதிந்த இயற்கையின் ஒத்திசைவுகளோடு பொருந்தி வாழும்பொழுது, உள நெருக்குவாரங்களிலிருந்து விடுபடமுடியும் அல்லது எதிர்நிலை உள நெருக்குவாரங்களை நேர்நிலை நெருக்கு வாரங்களாக மாற்றியமைக்க முடியும்,
நீராடல் - அதாவது இயற்கையான நீர்நிலைகளிலே குளித்தல்; மணலாடல் - அதாவது தாதுப்பொருள்கள் நிறைந்த மணலை உடலெங்கும் பூசிக்குளித்தல்; புல் லாடல் - அதாவது அறுகுபோன்ற மூலிகைப் புல் வகைகளை உடலிலே பூசிக்குளித்தல்; பழமாடல் -
அதாவது கனிகளை உடலிலே பூசி நீராடல் போன்ற
புறநிலை இயக்கங்கள் வாயிலாக அகநிலைச் சுகத்தை முகிழ்த்தெழச் செய்யமுடியும் என நம்பப்பட்டது.
இயற்கைச் சமநிலை பற்றிய சிந்தனை போன்று
உள நெருக்கீட்டின் சமூகத்தளம் பற்றிய சிந்தனையும் மேலோங்கியிருந்தது. ஊரலர், வம்பமாக்கள், கம்பலை
மாந்தர், ஊர்வாய்குதப்பல் போன்ற பல தொடர்கள் சமூகத் தளம்பலின் சொல்சார்ந்த குறியீடுகளாக
இடம்பெற்றன. உள நெருக்கீட்டு முகாமைத்துவம்
என்பது, சமூக இசைவாக்கம், சமூக மீள்கட்டுமானம்
முதலியவற்றுடன் இணைந்துள்ளது. தாவரச் சமநிலை,
விலங்குச் சமநிலை, சமூகச் சமநிலை முதலியவற்றுடன் இணைந்து, அனைத்து உயிர் பொருள்களையும் தழுவிய தாக அமைக்கப்படவேண்டுமென்ற பரந்த நோக்கு
மேலும் பெயர்ச்சியடைந்து, இறைசங்கமத்துடன் இணைக்கப்பட்டது.
93

Page 52
"யாவர்க்குமாம் இறைவற் கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக் கொரு வாயுறை யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே?13 என்றவாறு பரந்துபட்ட அமைப்பியலுடன் தனிமனித இசைவாக்கம் இணைக்கப்படுதல் தமிழ் மரபின் விரிந்த புலக்காட்சியைப் புலப்படுத்துகின்றது.
போதைமருந்தால், மாயப்பொருட்களால், புகைத் தலால், சுவைத்தலால் உளநெருக்கீட்டைத் தீர்த்தல், மேலும் சிக்கல்களை உருவாக்கும் என்பதும் உய்த் துணரப்பட்டது. -
* மெய்ப் பொருள் கண்டு விளங்கும்
மெய் ஞானிக்குக் கற்பகங்கள் ஏதுக்கடி. 14
மனவெழுச்சி உறுதி, உள மேம்பாடு, உடலுறுதி, சூழலுடன் சமநிலைகொள்ளல் முதலியவற்றுடன் ஒத் திசைவு கொண்டு திரண்டெழும் ஒர் ஆக்கச் செயல் முறையாகவும், நெருக்கீடுகளின் சீரிய முகாமைத்துவச் செயல்நெறியாகவும், * மெய்ப்பொருள் காணல்" விளங்குகின்றது.
அடிக்குறிப்புக்கள்
1. Selye, H., Stress Without Distress, New American
Library Publications, 1975.
23 பண்டிதர் க. கந்தசாமி, செவ்வி, இணுவில்,
32 பேராசிரியர் நா. சுப்பிரமணியன், செவ்வி, யாழ்டு பல்கலைக்
கழகம்,
 

4. பண்டிதர் க. கந்தசாமி. முற்சுட்டல்,
20
2.
3.
温4。
மேலது.
மேலது.
Nagendra and Nagaratna, New Perspectives in Stress Management, Vivekananda Kendra, Bengalore, 1988,
p 49.
த. கோவேந்தன், சித்தர் பாடல்கள், பூம்புகார் பிரசுரம், சென்னை, 1976, ப. 245.
• Nagendra and Nagar afna. Op : Cit, pp 75 - 78
பண்டிதர் க. கந்தசாமி, முற்சுட்டல்,
த. கோவேந்தன், முற்சுட்டல், ப. 245.
கண்ணுசாமியம், இரத்தினநாயகர் அன்ட் ஸன்ஸ், சென்னை , u. 9.
த கோவேந்தன், முற்சுட்டல், ப. 7.
மேலது. ப. 242.
56 {8 سنة

Page 53
நாட்டார் மரபு வாயிலான அறிவுக் கையளிப்பு: எருதும் நரியும், நெருப்புச்சட்டிக் கதைகளும்
கல்விக் கையளிப்பில் விலங்கு , பறவைகள் முதலியவற்றைக் குறியீடுகளாகப் பயன்படுத்துதல் பண்டைய பண்பாடுகளில் விரவி யுள்ள ஒரு பொதுப் பண்பாகும். சிறுவர்களுக்கு அறிவை யும், அனுபவங்களையும், அறவொழுக்கங்களையும் மன வெழுச்சிகளுடன் கலந்து வழங்குவதற்கு யாழ்ப்பாணக் கல்விப் பாரம்பரியத்தில் பயன்படுத்தப்பட்ட விலங்கு களில் எருது, நரி ஆகிய இரு பாத்திரங்களும் சிறப்பிடம் பெற்றிருந்தன.
#6T
யாழ்ப்பாணத்துப் பயிர் பண்பாட்டோடு இணைந்த கடின உழைப்புச் செயல்முறையில் எருது சிறப்பார்ந்த இடத்தைப் பெற்றது. சுமை இழுத்தல், உழுதல், சூடடித்தல் முதலாம் கடினமான செயற்பாடுகளில் எருது இணைந்திருந்தமையும், எருது நந்தியாக வணங்கப்படுதலும் இப்பண்பாட்டிற் குறிப்பிடத்தக்க
سے 96
 

பண்பாக இருந்தது. சிறுவர்க்கான கல்விக் கையளிப்பில், எருதை விரிவாகப் பயன்படுத்திய நாட்டார் மரபுகள் பரவலாகக் காணப்படுகின்றன.
எருது என்பது ஏறு' என்ற உயர்ந்த சொல்லாற் குறிப்பிடப்பட்டது. ஏறு போன்ற கடின உழைப்பு, முன்னேற்றத்துக்கு அடிப்படையானது என்பது உணர்த் தப்பட்டது. கல்விக் கையளிப்பில் இடம்பெற்ற 'ஏறு' என்ற எண்ணக்கரு அதனை ஒரு தெய்விகப் பிராணி யாக விபரித்தது. தன்னம்பிக்கை, பயமின்மை, உறுதி, பலம், கடின உழைப்பு, ஒழுக்கம், நுண்மதி போன்ற பல பண்புகளை உடையதாக நாட்டார் கதைகளில் எருது குறிப்பிடப்பட்டது.
மீயாற்றல்கள் கொண்ட தெய்விக விலங்காக எருது விளக்கப்பட்டது. மீயாற்றல்கள் கொண்ட தெய்விக நிலையில் அது 'இடபம்' எனவும் அழைக்கப் பட்டது. எருதின் ஆற்றல்களை விளக்கும் பல எண்ணக்
கருக்கள் நாட்டார் மரபிலே காணப்பட்டன. 'வெள்ளையன்', 'சிகப்பன்', 'சுட்டியன்', 'துள்ளன்' 'துணையன்', 'நாட்டன்’ என்றவாறு வீரம், தீவிர
தொழிற்பாடு, ஒத்துழைப்புத்தரும் பண்பு முதலியவை சொற் குறியீடுகளினால் உரைக்கப்பட்டன. "வெள்கைக் கில்லை கள்ளக் கடிப்பு' என்ற தொடரும் வழக்கி லிருந்தது.
டுவள்ளை மாடே வெள்ளை மாடே எங்கை போறாய்? வெட்டை வெளிப் புல் கடிச்சு மேயப் போறன்; வெள்ளை மாடே வெள்ளை மாடே எங்கை போறாய்? வேளைக்கொரு சுமையிழுக்கத் துடங்கப் போறன்' என்றவாறு அதன் சுறுசுறுப்பை விளக்கும் பல உதிரிப்
பாடல்கள் இன்றும் நிலவிவருகின்றன.2
- 97

Page 54
மாடுகளுக்கு முக்குறியிடும் மரபு இன்றும் நிலவி வருகின்றது. கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு வாழப் பழகுதலை அது குறித்து நின்றது. முக்குறியோடு சொத்துடமைக் கூட்டத்தின் குறியும் மாடுகளுக்கு இடப்பட்டது. எருதைக் குலவிருதாகக் கொள்ளும் கூட்டத்தினரும் வாழ்ந்தனர்.
மாட்டுவேலர் கூட்டம், மாட்டுமாணிக்கர் கூட்டம், மாட்டுச்சுப்பர் கூட்டம் முதலியவை ஈண்டு நினைவிற் கொள்ளத்தக்கன.
எருதின் குணவியல்புகளுக்கு மாறுபாடானதாக நரியின் பண்புகள் அமைந்தன. உழைக்காது உண்ணுதல், பிறர் உழைப்பை அபகடத்துப் பண்ணுதல், நேர்மை யின்றி நடத்தல் முதலியவற்றுக்குக் குறியீடாக நரி சுட்டிக்காட்டப்பட்டது. சமூகத்தில் காணப்பட்ட முரண்பாடுகள் இவ்விரு பாத்திரங்களினாலும் சித்திரிக் கப்பட்டு சிறுவர்க்கான அறிவுக் கையளிப்பு நிகழ்த்தப் பட்டது. நரி வணக்கத்துக்குரிய வாகனமாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. நரியும் நண்டுகளும், வாலறுந்த நரி, நரியும் நாயும், முதலிய நாட்டார் கதைகளில் நரியின் எதிர்மறையான ஆளுமைப் பண்புகள் எடுத்துக் கூறப்பட்டன.
மேய்ச்சல் நிலங்களிலே திரியும் எருது நல்ல வற்றையே எண்ணியது. நரியைச் சந்திக்கும்பொழுது அதனை அன்புக்குரிய சகோதரனாகவே கருதியது. தீயவர்களிடத்தும் அன்பாகப் பழகி இசைவை ஏற்படுத்த வேண்டும் என்பது இத்தகைய நிகழ்ச்சிகளால் சிறுவர் களுக்கு எடுத்துக்கூறப்பட்டது.
எருது நல்லன செய்யும்; ஆவிகளை இனங்காணும்; நல்ல அதிர்வுகளோடு தன்னை இணைத்துக்கொள்ளும். தம்மைச் சூழ்ந்திருப்போருக்கு அது மங்களத்தை உண் டாக்கும். தீமைகளைக் கண்டு எருது ஒதுங்கிக்கொள்ள,
98 -

நரி அதற்குள் அமிழ்ந்திவிடும். அத்தகைய இக்கட்டான நிலைமைகளில் நரி எருதினால் காப்பாற்றப்படும்.
எருது எஜமானாருக்குக் கட்டுப்பட்டு நடத்தல் பற்றிய புனைவுகள், சிறுவர்களும் தந்தையருக்குக் கட்டுப்பட்டு நடத்தல்வேண்டும் என்பதைக் குறிப் பாலும், உணர்வாலும் புலப்படுத்தின. கட்டுப்பாடு களுக்கு உட்பட்டு வளர்க்கப்படாத விடலைகள், *சரியாக நாணயம் பூட்டப்படாதவர்கள்' என்று குறிப்பிடப்படும் நாட்டார் மரபுத்தொடரும் உண்டு. (எருதுகளை நெறிப்படுத்தும் கயிறு நாணயக்கயிறு என அழைக்கப்பட்டது.)
'ஏறு போல் நட
ஏறு போல் இரு ஏறு போல் உழை ஏறு போல் வாழ்' போன்ற பல நாட்டார் மரபுத் தொடர்கள் வழக்கில் தானப்பட்டன.
செல்வத்தின் குறியீடாக மாடு விளங்குதலைச் சுட்டிக்காட்டும் நாட்டார் பாடல்களும் காணப்படு கின்றன. ஒர் எடுத்துக்காட்டு வருமாறு:8
* மாட்டுச் சலங்கை யெல்லாம்
மணி மணியாய்க் கொட்டுதடா வீட்டுக் கோர்க்காலி விளைஞ்ச நெல்லைச் சுமக்குதடா' , (நெல்லை அடுக்கி வைக்கும் உறுதியான மரச்சட்டம் 'கோர்க்காலி' எனப்பட்டது).
மனிதரின் மேம்பட்ட உணர்வுகளுக்கு எருது குறி யீடாகவும், கீழ்த்தரமான விலங்கு உணர்வுகளுக்கு நரி குறியீடாகவும் அமைக்கப்பட்டு சிறுவர்களுக்கான அறிவுக் கையளிப்பு மேற்கொள்ளப்பட்டது. சிறுவர்களின் சிந்தனை ஒழுங்கின்றிச் செல்லும்பொழுதும், அவர்கள்
() 9 سب

Page 55
கனவு கண்டு திடுக்குறும்பொழுதும் 'நரிவெருட்டல்" என்ற தொடர் நாட்டார் வழக்கிற் பயன்படுத்தப்படு கின்றது. சிறுவர்கள் ஒழுங்காக நடக்காத சந்தர்ப்பங் களில் 'நரி வருகுது' என்று கூறி எதிர்மறை மீள வலியுறுத்தல் மேற்கொள்ளப்படுதலுமுண்டு.
தனக்கென்று பயன்கருதாத உழைப்பை வழங்குதல் எருதைத் தெய்விக நிலைக்கு இட்டுச்செல்கின்றதென் றும், புத்தியைக் குறுக்கு வழிகளிலே பயன்படுத்திச் சிறிய நன்மைகளைப் பெறும் நரிக்கு அது கிட்டுவ தில்லை என்றும் கூறப்பட்டது. மாட்டின் நேர்மையான நடத்தையை மீள வலியுறுத்தும் பொருட்டு ' காகம் திட்டி மாடு சாகாது' என்ற கிராமியத் தொடர் நிலைபேறு கொண்டது. 4 சாதாரணமாக ஒருவரால் உணரப்படாத உணர்வுகளை மாடு உணர்ந்துகொள் கின்றது என்றும், துர் ஆவிகளைக் காணும்பொழுது அது வெருண்டெழுந்து பாயும் என்றும், வீட்டிலுள் ளோருக்குத் துன்பம் வருமாயின் அது முன்னரே உணர்ந்து, உணவருந்தாது ஒருவிதசலனத்துடன் இருக்கு மென்றும் கிராமிய அனுபவங்களிலே குறிப்பிடப்படு கின்றன,
எமது மரபிலே எருதுக்கு தெய்விகம் சார்ந்த உன்னத இடமளிக்கப்படுதல் போன்று சீன அறிவுக் கையளிப்பு மரபில் 'மந்திக்குரங்கு' விளங்குகின்றது. சிறுவர்க்குரிய அறிவூட்டலில் மந்திக்குரங்கு என்ற தொல் சீர் ஆக்கம் இன்றும் சிறப்பார்ந்த இடத்தைப் பெறு கின்றது.
எமது மரபில் எருது, நரி, காகம், கழுதை முதலிய வற்றைக் குறியீடுகளாகக்கொண்டு சிறுவர்களுக்கான அறிவு அனுபவங்களைக் கையளிக்கும் செயல்முறையில் *நெருப்புச்சட்டிக்கதைகள்' சிறப்பாகச் சுட்டிக்காட் டத்தக்கவை. நெருப்புச்சட்டிக்கதைகள் 'தீச்சட்டிக்
I 0) () --
 
 

கதைகள்', 'புகைச்சட்டிக்கதைகள்' என்றும் குறிப் பிடப்பட்டன. மழைக்காலத்தில் நெருப்புச்சட்டிக் கதைகள் சிறப்பிடம் பெற்றிருந்தன. மழைக்கால இரவு களில் ஒரு பெரிய சட்டியில் நெருப்புத்தணலை இட்டு அதன் மீது காய்ந்த வேப்பம் விதைகளைத் துரவிக் குளிர் காயும் வழக்கம் நிலவியது. வேப்பம்புகை மணத்திற்கு நுளம்பும் வராதிருந்தது. நெருப்புச்சட்டியைச் சுற்றி யிருக்கும் சிறுவர்களுக்கு முதியோர் கதைகள் சொல்வர். அக்கதைகள் நெருப்புச்சட்டிக்கதைகள் எனப்பட்டன.
யாழ்ப்பாணத்தில் மறக்கப்பட்டுவரும் பண்பாட்டுக் கூறுகளுள் நெருப்புச்சட்டிக்கதைகளும் குறிப்பிட்டுக் கூறக்கூடியவையாகும். கிராமத்து மக்களின் பட்டறிவு நெருப்புச்சட்டிக்கதைகள் வாயிலாகச் சிறுவர்களுக்குக் கையளிக்கப்பட்டன.
அறிவுக்கையளிப்பில் மறைபொருட் கலைகளும், மந்திரங்களும்
தென் ஆசியாவின் அறிவுக்கையளிப்பு மரபில் மறை பொருட் கலைகள் (Occultatt) சிறப்பார்ந்த இடத்தைப் பெற்றுவந்துள்ளன. மீ இயற்கை வலுவுடன் (Supernature) தொடர்புகொள்ளும் கலைகள் மறைபொருட் கலைகளாகக் கருதப்படும். சித்தர்கள், சித்துக்காரர்கள், வாலாயக்காரர்கள், மாந்திரிகர்கள், உரு ஆடுபவர்கள், தந்திரிகள், ஆண்டிகள், சவுக்கர்கள் என்றவாறு பல பெயர்களினால் மீ இயற்கை வலுவுடன் தொடர்புடைய வர்கள் யாழ்ப்பாண மரபில் அழைக்கப்பட்டார்கள்.
மறைபொருள் சார்ந்த வலுக்களாகப் பின்வருவன குறிப்பிடப்படுகின்றன:
1. அற்புதங்கள் நிகழ்த்தும் அறிவு 2. சாதாரண மனிதர்களால் அறியப்படமுடியாத
அறிவையும் காட்சியையும் பெறுதல்,
7 (0 7 ܗ

Page 56
3. முற்பிறப்பை அறிதலும், பிற்பிறப்பை எதிர்வு
கூறலும்.
கூடுவிட்டுக் கூடுபாய்தல். பிறர் உள்ளங்களில் உட்புகுதல். $5.5 Gugy (Will Power)
பிணி நீக்கல். வரவிருக்கும் ஆபத்துக்களைத் தடுத்தல். ஆற்றல் பெருக்குதல்.
பாரம்பரியமான கல்வி நிறைவுபெறவேண்டுமாயின் மறைபொருளறிவு இன்றியமையாததாகக் கருதப்பட் டது. கிராமிய மக்களின் நாளாந்த வாழ்க்கைப் பிரச் சினைகளின்போதும், சமூகப்பிரச்சினைகள் எழும் போதும், மழைவளம் குன்றுதல், வெள்ளப்பெருக்கு முதலியவற்றின்போதும், தொற்றுநோய்கள் பரவுதலின் போதும் மறைபொருட் கல்வியாளர்களின் ஆலோசனை களும் ஆதரவும் பெறப்பட்டன. இந்திய மரபில் மறை பொருளறிவு ஒர் ஒழுங்கமைந்த பயில்துறையாக, பூர்வீக தக்ஸில பல்கலைக்கழகத்தில் (Taxila University) பயிற்றுவிக்கப்பட்டமைக்குச் சான்றுகள் உள்ளன.6 யாழ்ப்பாண மரபில் ஒழுங்கமைந்த ஒரு பயில்துறை யாக இக்கலை இடம்பெற்றமைக்குச் சான்றுகள் கிடைக்கவில்லையாயினும் ஒரு குருவின் கீழிருந்து இளைய தலைமுறையினர் இவற்றைக் கற்றுவந்த மரபு காணப்பட்டது.
ஐம்பூதங்களை வழிபடல், தெய்வங்களை வழிபடல், குருவை வழிபடல் முதலியவற்றால் தாம்வேண்டும் சித்திகள் கிடைக்கப்பெறும் என்ற நம்பிக்கை நிலவியது. கல்வியின் ஒரு செயற்பாடு எதிர்மறைத் தாக்கங்களைத் தாங்கும் திடத்தை வளர்ப்பதாகும். யாழ்ப்பானத்து மறைபொருட் கலைகளில் இது 'கட்டுக்காவல்' என்று குறிப்பிடப்பட்டது. காவல் தெய்வங்களை வழிபட லுடன் கட்டுக்காவல் ஆரம்பமாகும். பிள்ளையாரும்,
 
 

..." " リ*
வைரவரும், காளியும் காவல் தெய்வங்களிலே சிறப்பிடம் பெற்றனர்.
தெய்வங்கள் மக்களுடன் கிராமங்களில் வசிக்கின் றன என்ற நம்பிக்கை யாழ்ப்பாணத்தில் நிலவியது. மக்களுக்கு நன்மை செய்யும் வலுக்கள் 'தெய்வங்கள்' என்றும், தீமைசெய்யும் வலுக்கள் "பேய்கள்' என்றும் பகுத்துரைக்கப்பட்டன. பயன்தரும் மரங்களிலே தெய் வம் வாழும் என்றும், பயன்தரா மரங்களிலே பேய்கள் வாழும் என்றும் கருதப்பட்டன. இதனால் பயன்தரு மரங்கள் வெட்டப்படுதலோ தறிக்கப்படுதலோ குழுமத் தடையாக அமைந்தது.
தெய்வங்களுக்கும், பேய்களுக்குமுள்ள வேறுபாடு மக்களின் வேறுபட்ட நடவடிக்கைகளினாற் புலப்படுத் தப்பட்டன. தெய்வங்கள் மனிதரின் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்ட சக்தி என்பது உணரப்பட்டபொழுதும் மந்திரங்கள், சடங்குகள் முதலியவற்றால் தெய்வங்களின் கருணையைப் பெறலாம் என்று நம்பப்பட்டது. தெய் வங்களுக்குரிய சடங்குகளில் நிறைவு, பெருக்கம், கூட்டல் முதலிய குறியீடுகள் பயன்படுத்தப்பட்டன. உதாரண மாக 'வளர்ந்துகட்டல்”, “பொங்கல்”, “படையல்', 'மடை', 'குளிர்த்தி முதலிய தொடர்கள் இடம் பெற்றன. ஆனால் பேய்கள், துர் ஆவிகளுக்குரிய அர்ப்பணங்கள் 'கழிப்பு', 'கழிப்புக் கழித்தல்' முதலிய எண்ணக்கருக்களால் விளக்கப்பட்டன. தெய்வங்களுக் குப் படைத்த உணவு உண்ணப்பட்டது; கழிப்புக்குப் படைத்த உணவு உண்ணப்படுவதில்லை. நல்லனவும் அல்லனவும் யாழ்ப்பாணத்துச் சடங்கு மரபுகளினாலும் உணவுமுறைகளினாலும் புலப்படுத்தப்பட்டன.
போல்டேயஸ் பாதிரியாருடைய நூலில் மந்திரவாதி கள் பரவலாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த செய்திகள் காணப்படுகின்றன. அந்த மந்திரவாதிகள் பயன்படுத் திய ஏடுகளும், எழுதிய ஏடுகளும் காணப்படுகின்றன.
125 6 ے- I 0( ته

Page 57
wታ*
செய்வினை, சூனியம் போன்ற பழக்கங்களும் தாராள மாகக் காணப்பட்டன. மந்திரங்களால் நோய் மாற்று தல், கிரிகைகளால் நோய் மாற்றுதல், இழந்த பொருட் களை மீளப்பெறுவதற்கு மாந்திரிகர்களை நாடுதல் முதலியன இடம்பெற்றமையும் போல்டேயஸ் பாதிரி பாரின் நூலிலே குறிப்பிடப்படுகின்றன. கண்ணுரறு, நாவூறு முதலியவற்றிலும் மக்கள் நம்பிக்கை கொண் டிருந்தனர். கண்ணுறு, நாவூறு முதலியவற்றைத் துடைக்கும் ஊடகங்களில் பூசினிக்காய், எலுமிச்சங் காய் முதலியவை சிறப்பிடம் பெற்றிருந்தன.
மந்திரச் செயற்பாடுகளில் ஆண்களும், பெண்களும் ஈடுபட்டனர். "மாந்திரி' என்ற சொல் ஆண்களுக்கும், பெண்களுக்குமுரிய பொதுப்பாற் சொல்லாக விளங் கியது. நன் மந்திரங்கள் பின்வரும் வாழ்வியல் நோக்கங் களுக்காகப் பயன்படுத்தப்பட்டன.
1. நோய் மாற்றுதல்
நோய் வராது தடுத்தல் 3. கருவளப் பெருக்கைக் கூட்டுதல்
திருமண நிச்சயம் செல்வப் பெருக்கை ஏற்படுத்துதல் 8ர்மியம் அல்லது உளவளத்துணை செய்தல்,
குடும்பத் தேவைகளுக்கான எளிய மந்திரச் செயற் பாடுகள் மூத்தோரால் மேற்கொள்ளப்பட்டன. மந்திரங் களைப் பிறர் அறியும்படி சொன்னால் 'சித்திக்காது ? என்று நம்பப்பட்டது. மந்திரம் சொல்வோர் சிலவகை யான உணவுக்கட்டுப்பாடு, நடத்தைக் கட்டுப்பாடு, சொற்கட்டுப்பாடு முதலியவற்றை மேற்கொள்ள வேண்டி இருந்தது.
தீய மந்திரங்கள் மீது ஒருவித பயமூட்டற் கல்விச் செயற்பாடு நிகழ்த்தப்பட்டது. தீய மந்திரங்கள், செய்ய வருக்கே மீண்டும் வந்து தாக்கலாம் என்ற கருத்தேற்றம்
04 as

செய்யப்பட்டது. தீயமந்திரங்கள் இரவிலும், நல்ல மந்திரங்கள் பகலிலும் பொதுவாக மேற்கொள்ளப் பட்டன.
நம்பிக்கைகள், மந்திரங்கள், சடங்குகள், LD60sD பொருட் கலையாக்கங்கள் முதலியவற்றின் வாயிலான அறிவுக் கையளிப்பில் 'சூழற்பாதுகாப்பு: என்ற பரிமாணமும் சிறப்பிடம் பெற்றிருந்தது. தாவரப் பாதுகாப்பு, நீர்நிலைகளின் பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு, வதிவிடப் பாதுகாப்பு முதலியவை தொடர்பான அறிவுக் கையளிப்பு நிகழ்ந்தது. மாசு என்பது "தீட்டு' என்ற சொல்லாற் குறிப்பிடப்பட் டது. நீரினால் தீட்டு நீக்கப்படக்கூடும், உருவாக்கப் படக்கூடும் என்ற கருத்து நிலவியது.
மந்திரம், சடங்கு முதலியவற்றின் வாயிலாக அறிவுக் கையளிப்பு அகல்விதி பண்பு கொண்டதாக இடம் பெற்றது. சமூக இசைவாக்கம் செய்தல், வாழ்வின் ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு கட்டத்திற்கு நகரு தல் முதலியவற்றுக்கு உதவும் வகையில் அனுபவங்கள் கையளிக்கப்பட்டன. வாழ்க்கைச் சூழலில் இருந்தே பெருமளவு அனுபவங்கள் திரட்டிக்கொள்ளப்பட்டன. அவ்வாறு திரட்டிக்கொள்ளப்பட்ட அனுபவங்கள் எளிமையான குறியீடுகள்வழியாக இளைய தலைமுறை யினருக்குக் கையளிக்கப்பட்டன. ,
உளத்தாக்கங்களை வெளியிட்டு ஒருவர் சுகமான இசைவாக்கம் செய்வதற்கு உரு ஏறுதல், உரு ஏற்றுதல் என்ற உபாயம் மரபுவழி, மந்திர மரபுகளிலே கையாளப் பட்டது. பாரம்பரியமான சீர்மிய முறையிலாக அமைந்த உருவேற்றம் பற்றிய பல பாடல்கள் $(tତ0୪til') படுகின்றன.
குறளியாட்டக் குறளியாட்டக் குங்குமத்தைத் தலையிற் போட
5 (0 ji ܚܸܗ

Page 58
தலைக்கு வந்த பாரமெல்லாம் தடக்கி விழுந் தோடுதடி
குறளியாட்டக் குறளியாட்டக் குரவை வைச்சு ஒத்தூத தலைக்கு வந்த பாரமெல்லாம் தடக்கி விழுந் தோடுதடி'.
உடலுறுதியும், மனவுறுதியும் தரும் கல்விக்
கையளிப்பு நாட்டிார் மரபுகளினூடாக வழங்கப் பட்டது.
அடிக்குறிப்புக்கள்
1. எஸ். பரமசாமி, செவ்வி, இணுவில்,
2. மேலது.
3. எஸ் நடராசா, செவ்வி, இணுவில்
4. மேலது.
5. Maregret Mead and Martha Wolfenstein (ed.) Childhood in Contemporary Cultures. The University of Chicago Press, pp. 246-252.
6. Sanjiwi Jataka - I, pp. 78-79.
7. Baldaeus, Phillipus, pp. 373-374
A True and Exact Discription of the Great Island of Ceylon, A New and Uunabridged Translation from the Edition of 1672. Printed in Ceylon Historical Journal, Vol. VIII, July 1958 - April 1959, Nos - 14 Dehiwala.
8 ச. ஜெயராசா, உளநெறிக்கதைகள், அம்மா வெளியீடு,
gyp 666ão, o 1997, pp. 83 - 86.
106 - 123cm 6
Vエ)と、マー - 〔-


Page 59
. . .