கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கல்வியும் மனிதவள விருத்தியும்

Page 1
squipų: puuįS (W Joad ? ubabaeaspaepubųO S 40, d.
트 NEWWdCT國A國C ED&miOS國준 NYMim후 CINY NC률』YDWDC록
 

கல்வியும் வள விருத்தியு
- چ ح (ڈیم) کے تھے۔
பராசிரியர் சோ. சந்திரசேகரன் பேராசிரியர் மா. சின்னத்தம்பி

Page 2

கல்வியும் மனிதவள விருத்தியும்
சோ. சந்திரசேகரன் இணைப் பேராசிரியர், கல்விப்பீடம்
கொழும்புப் பல்கலைக்கழகம்
மா. சின்னத்தம்பி முதுநிலை விரிவுரையாளர், கல்வித்துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

Page 3
Name of the Book :
Authors
Second Edition
First Edition
(C) To Authors
Education and Human Resource Development
: S. Sandarasegaran (University of Colombo)
M. Sinnathamby (University of Jaffna)
: January 2006 : March 2002
ISBN 955-1013-72-7
Distributors
நூலின் பெயர்
பொருள்
ஆசிரியர்கள்
இரண்டாம் பதிப்பு : முதற்பதிப்பு
உரிமை
விநியோகஸ்தர்
Lanka Book Depot, Colombo-12.
: கல்வியும் மனிதவள விருத்தியும் : கல்வியியல், கல்விப் பொருளியல், மனிதவளம்
; சோ. சந்திரசேகரன் (கொழும்புப் பல்கலைக்கழகம்)
மா. சின்னத்தம்பி (யாழ். பல்கலைக்கழகம்)
ஜனவரி 2006
: LDsTifji 2002
: ஆசிரியர்களுக்கு
: லங்கா புத்தகசாலை, கொழும்பு - 12.

எமதுரை
Lல்கலைக்கழக அமைப்பில் விரிவுரையாளராகப் பணியாற்றி வரும் யாம் எமது துறை சார்ந்த தமிழ் மொழிப் பாடநூல்கள், உசாத்துணை நூல்கள் என்பவற்றின்பற்றாக்குறை பற்றி எப்போதும் சிந்திப்பதுண்டு. கல்வியியல், மனிதவளச் சிந்தனை, கல்விப் பொருளியல் போன்ற துறைகளில் தமிழ்மொழிமூலம் உயர்கல்விமாணவர்கள் பயன்படுத்தக் கூடிய தகுதிவாய்ந்த நூல்களின்பற்றாக்குறை காரணமாக மாணவரின் கல்வித் தராதரங்கள் பாதிக்கப்பட்டு வருவதையும் யாம் அறிவோம். பயிற்றுமொழி தமிழ்; ஆனால் நூல்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இதுவே தற்போதைய நிலைமை. பாடசாலை நிலையில் முற்றாக வகுப்பு 1-13 வரை தமிழ்மொழியில் கற்று அம்மொழியிலேயே தமது சிந்தனை ஆற்றலையும் உளப்பாங்குகளையும் வளர்த்துக்கொள்ளும் தமிழ்வழி மாணவர்கள் (தமிழர்கள், முஸ்லீம்கள்) பல்கலைக்கழகம் நுழைந்ததும் ஆங்கிலத்தில் உசாத்துணை என்ற பழக்கமற்ற ஒரு புதிய கற்றல் கலாசாரத்துக்கு இசைந்து செல்ல வேண்டிய கட்டாயம், பல்கலைக்கழகத்தில் பயிற்றப்படும் பல்வேறு புதிய பாடநெறிகள், அப்பாடநெறிகளில் துரிதமாக வளர்ந்து வரும் புதிய சிந்தனைகள், கோட்பாடுகள், எண்ணக்கருக்கள் பற்றிய நூல்கள் எமது தாய்மொழியில் கிடைக்கப் பெறுவதில்லை. இதனால் மாணவன்விரிந்து வரும் அறிவுத் தொகுதியின் ஏராளமான பரிமாணங்களில் ஒரு சிறிய விழுக் காட்டையே விரிவுரைகளிலிருந்து பெறமுடிகின்றது. கடந்த நான்கு தசாப்த காலத்தில் கல்வியியல் உட்பட சமூக அறிவியல் துறைகளில் விரிவான முறையில் தமிழ் நூல்கள் எழுதி வெளியிடப்படவில்லை. இதற்கான காரணங்களை இவ்விடத்து ஆராய்வதற்கில்லை.
இப்பின்புலத்தில் கல்வியியல், முகாமைத்துவம், பொருளியல், மனித வளம் போன்ற துறைகளில் பயிலும் மாணவர்களுக்கு ஒரு சிறிய அளவி லேனும் உதவும் நோக்குடன் இந்நூலை எழுதி வெளியிட முற்பட்
டோம். மேற்கண்டதுறைசார்ந்த மாணவர்களும் பல்துறை அறிவைத்
கல்வியும் மனிதவள விருத்தியும் 3

Page 4
தமிழ் மொழியில் பெறவிரும்பும் அறிவு ஆர்வலர்களும் இந்நூலுக்குத் தமது ஆதரவை நல்குவர் என்பது எமது எதிர்பார்ப்பு. சோ. சந்திரசேகரன் கொழும்பு மா. சின்னத்தம்பி 10. 04. 2002
கல்வியும் மனிதவள விருத்தியும்

பொருளடக்கம்
கல்வி - மனிதவள இடைத்தொடர்புகள் . 7 பொருளாதார மாற்றங்களும் மனிதவளக் கல்வியும் . 30 வளர்முக நாடுகளின் கல்விமுறையும் மனிதவள நெருக்கடியும் . 42 கல்வி-பொருளாதாரவிருத்தி-மனிதவள விருத்தி பற்றிய மாற்றுக்கருத்துக்கள் . 5 முயற்சியாண்மையாளர் விருத்தியும் கல்வியும் . 67 இலங்கையின் மனிதவள அபிவிருத்தியும் கல்வியும் . 83 பெண் மனிதவளமும் கல்வியும் . 99
உலகமயமாக்கமும் வளர்முக நாடுகளில் மனிதவளவிருத்தியும் . 11
கல்வியும் மனிதவள விருத்தியும் 5

Page 5

அத்தியாயம் - 1
கல்வி - மனிதவள இடைத்தொடர்புகள்
1. மனிதவள அபிவிருத்தி
1950களில் மனிதவள அபிவிருத்தியானது கல்வி, பயிற்சி, திறன்களில் தேர்ச்சி, சிறந்த ஊழியர் நலமேம்பாடு என்பவற்றினை உள்ளடக்கும் என்று கருதப்பட்டது. இது மனித மூலதனம் பற்றிய ஒரு புதிய எண்ணக்கருவாகும். ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் (UNDP) 1990களில் வெளியிட்ட தனது பிரசுரங்களில் வளம் என்ற சொல்லை விடுத்து மனித அபிவிருத்தி என்ற சொல்லையே பயன் படுத்தியது. இப் புதிய எண்ணக்கருவானது மக்களுக்கான தெரிவுகளை விரிவுபடுத்தியது: அபிவிருத்தியை இயன்றளவு சனநாயகப்படுத்தி மக்கள் பங்கேற்புக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதாயும் விளங்கிற்று. 1988இல் ஜகார்த்தா மகாநாடு முன்வைத்த மனிதவளவிருத்திக்கான செயல்திட்டத்தில் 106 செயலாக்க ஆலோசனைகள் உள்ளடக்கப் பட்டிருந்தன. ஏற்கனவே கெயின்ஸ் போன்றோர் 'கோட்பாடு களிலிருந்து நடைமுறைக்கு வருதல்’ என்னும் கருத்தை முன்வைத் திருந்தனர். இந்த நிலைப்பாட்டிற்கு எதிராக நடைமுறைகளிலிருந்து மனிதவள விருத்தி பற்றிய ஒரு கோட்பாட்டை உருவாக்கும் வகையில் ஜகார்த்தா செயலாக்கத்திட்டம் அமைந்தது. அதன் பின்னர் உலகநாடு களில் தீர்மானங்களை மேற்கொள்ளும் பொறுப்புடையோர் மனிதவள விருத்தி பற்றிய எண்ணக்கருவில் மிதமிஞ்சிய அக்கறை காட்டத் தொடங்கினர்.
கல்வியும் மனிதவள விருத்தியும் 7

Page 6
அடிப்படை எண்ணக்கரு :
மனிதவள அபிவிருத்தி என்ற எண்ணக்கருவினூடாக மனிதன் என்ற உற்பத்திக்காரணி நோக்கப்படும் போது அவ் எண்ணக்கரு இருபெரும் முக்கியத்துவத்தைப் பெறுகிறது. 1. மனிதக் காரணியானது அபிவிருத்திக்குப் பயன்படும் ஒரு உள்ளீடாக வும் (Input) அபிவிருத்திச் செய்முறையின் தொடக்கக் கட்டமாகவும் நோக்கப்படும். இதன்படி மனிதன் ஒரு பொருளாதார முதலீடாக வும், பொருளாதாரப் பரிமாணம் கொண்டவனாகவும் நோக்கப்படு கின்றான். 2. அபிவிருத்திச் செய்முறையின் இறுதி நிலைக்கட்டமாக, அபிவிருத்தியின் விளைவாக வெளிவரும் நலன்களை நுகரும் பயனாளியாக மனிதன் கருதப்படுகின்றான். மனிதக் காரணியின் சமூகப் பரிமாணத்தை இது குறிக்கின்றது.
முதலீடு - நுகர்வு, முதல் நிலைப்பணி - இறுதிநிலைப்பணி, பொருளாதாரப் பரிமாணம் - சமூகப்பரிமாணம் என்னும் பல்வேறு சோடி நிலைகளை ஒன்றிணைப்பதாக மனிதவள அபிவிருத்தி எண்ணக்கரு அமைகின்றது.
உற்பத்திக் காரணி என்ற முறையில் மனிதன், அபிவிருத்திக்கு தனது பங்களிப்பை வழங்கி, அதன் பயன்களை அனுபவிக்கின்றான். இதனால் அவனது சமூகமட்ட வாழ்க்கைத் தரம் உயர்கின்றது. இப் பின்புலத்தில் அபிவிருத்தியில் சமநிலையைப் பேணுதல் அவசியம் என்ற மற்றொரு நிலைப்பாட்டை இவ்வெண்ணக்கரு வலியுறுத்து கிறது.
மனித உழைப்பின் பொருளாதாரப் பங்களிப்பு அதிகரிக்கும் போது சமூக அபிவிருத்தி முன்னேற்றம் அடைகின்றது. அப்போது தான் அபிவிருத்திக்கு உள்ளீடாக ஆற்றல் நிறைந்த மனிதக்காரணியை சமூகம் தடையின்றி தொடர்ந்து வழங்கமுடியும் என இவ் எண்ணக்கரு விளக்குகின்றது. உண்மையில் இவ் எண்ணக்கரு மனித மூலதன அணுகுமுறையுடன் தன்னை நெருக்கமாக, சமநிலை சிதைவுறாத வகையில் ஒன்றிணைக்கின்றது. தனிமனிதர்களதும் சமூகமும் தனது நலன்களை அதிகரிக்கவும், அதிகரித்த நலன்களைப் பேணவும் முயற்சிகளை மேற்கொள்ளும் போது பல தடைகளை எதிர்கொள்ள வேண்டி வருகின்றது. இத்தடைகளை வெற்றி கொள்வதற்கான ஊக்கத்தையும் ஆற்றலையும் மனிதவள அபிவிருத்தி அணுகுமுறை வழங்குகின்றது.
8 கல்வியும் மனிதவள விருத்தியும்

முன்னர் சமூக அபிவிருத்தி என்பது பொருளாதார செயற்பாடுகளின் எச்சவிளைவே என்று கருதப்பட்டது. இவ்வாறு சமூக அபிவிருத்தி யோடு தொடர்புடைய எச்சவிளைவு என்பது மனிதக் காரணி தொடர் பான பொருளாதார விளைவுகளுடனும் நெருக்கமாகத் தொடர்புபடு கின்றது.
முன்பு மனிதவலு (Man power) என்ற சொல் பொருளாதார, கல்வித் திட்டமிடலில் பயன்படுத்தப்பட்டது. அச்சொல்லுக்குப் பதிலாகவே மனிதவள அபிவிருத்தி என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. மனிதவலு என்ற சொல்லை விட மனிதவள அபிவிருத்தி என்ற சொல் பல்வேறு எண்ணக்கருக்களை உள்ளடக்கியுள்ளது.
பொருளாதார மற்றும் சமூகவாழ்வில் பயனுறுதிமிக்க மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய ஆற்றலைப் பற்றிக் குறிப்பிடும்போது மனிதவள விருத்தியில் அத்தகைய ஆற்றல் பல்வேறு நிலைகளில் உருவாக்கப் படுகின்றது. அரசியல்வாதிகள் புதிய கொள்கைகளின் மூலமாக நேரடியான மாற்றங்களை ஏற்படுத்த முற்படுகின்றனர். நாட்டின் சகல மக்களும் தாம் பெறுகின்ற கல்வி, மற்றும் பயிற்சியினூடாக உற்பத்திச் செய்முறையிலும் உற்பத்தித்திறனிலும் பயனுறுதிமிக்க மாற்றங்களை ஏற்படுத்துகின்றனர்.
ஒரு நாட்டின் உற்பத்திச் செய்முறைக்கு அறிவும் திறன்களும் மாத்திரம் போதுமானவையல்ல. அத்தகைய அறிவையும் திறனையும் சமூகநலனை முன்னேற்றக்கூடிய வழிமுறைகளில் மாத்திரமே பயன்படுத்தவேண்டும் என்ற உளப்பாங்கும் இணைந்திருந்தால் மட்டுமே மனிதவளம் முழுமையானதாக இருக்கும்.
மக்கள் தமது அறிவையும் ஆற்றலையும் முறையாக அமைக்கப் பட்டுள்ள தொழிற்சாலைகளில் மாத்திரம் பயன்படுத்துவதில்லை. வளர்முக நாடுகளில் வீடுகளில் உள்ள பெண்கள், சிறுவர், வளர்ந்தோர் முதலியோர் ஏராளமான உற்பத்திப் பணிகளில் ஈடுபடுகின்றனர். இத்தகைய 'முறைசாரா' மனிதவளத்தினால் தேசிய உற்பத்தியில் 20 சதவீதம் ஆக்கப்படுவதாக அறியமுடிகிறது. இத்தகைய 'மறைநிலை" மனிதவளமும் மேம்படுத்தப்படவேண்டியது அவசியம். வயல்களில் பணியாற்றும் கிராமப்புறப் பெண்களின் உழைப்பு கணிக்கப்படாத தாயினும் அதுவும் மனிதவளமேயாகும்.
எந்தவொரு நாட்டிலும் உழைக்கும் தகுதி, விருப்பம், ஆற்றல் என்பனவற்றைக் கொண்ட இளைஞர்கள் யாவரும் கொண்டிருக்கும்
கல்வியும் மனிதவள விருத்தியும் 9

Page 7
மொத்த ஆற்றல் 'இயலளவு மனிதவளம்' (Potential Resource) எனப்படும். அத்தகைய மனிதவளம் உற்பத்தி தொடர்பான செயல் முறைகளில் ஈடுபடுகின்ற மணித்தியாலங்கள் மனித மணித்தியாலங் கள் (Man Hours) எனப்படும். அவ்வாறான எட்டு மணித்தியாலங்கள் கொண்ட ஒரு நாள் மனிதநாள் (Man day) என்றழைக்கப்படும். அத்தகைய மனித நாட்களில் அளவிடப்படுகின்ற மனிதவளம் உண்மை யான வளம் (Actual Resource) எனப்படும். எந்தவொரு நாட்டிலும் இயலளவு மனிதவளத்திற்கு சமனாக உண்மை மனிதவளம் பயன்படு தற்கு கல்வியும் பயிற்சியும் உதவி செய்தல் வேண்டும். இச்சமனிலை பேணப்படாதபோதுதான், எத்தகைய முயற்சியிலும் ஈடுபடாத மனிதர்களும், வேலையின்மையும், குறைவான ஆற்றலை மாத்திரமே பயன்படுத்துகின்ற குறைவேலையின்மையும் அதிகரித்துச் செல்கின் றன. இத்தகைய நிலைமையை இல்லாதொழிக்கும் வகையில் கல்வி முறைமை தொழிற்படல் வேண்டும்.
உயர் கல்வி நிறுவனங்களில் கற்கும் ஆராய்ச்சி மாணவர்கள், பேராசிரியர்கள் புத்தாக்க சிந்தனைகளை ஊக்குவித்தும் உருவாக்கியும் வரவேண்டும். இதனால் உற்பத்தி தொடர்பாக மாற்றங்களும் ஏற்படும். மனிதவளத்தில் பரவல் விளைவுகள் ஏற்படும். மருத்துவம், பொறியி யல், இரசாயனவியல், பெளதிகவியல், விண்வெளியியல், சூழ்கடலி யல் போன்ற துறைகளில் ஆராய்ச்சி செய்வோர் நாட்டில் விஞ்ஞான, தொழில்நுட்ப, தொழில்நுணுக்கத் துறைகளில் சிறப்பான மனிதவள முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும்.
மனிதவள அபிவிருத்தி பற்றிய கவன ஈர்ப்புக்குள் 'மனிதவள விரயம்' கொண்டுவரப்படல் வேண்டும். போதைப்பொருள் நுகர் வோர், நீடித்த நோய்க்கு உட்பட்டோர், சிறைக்கைதிகள் போன்றோரை மீட்டெடுக்கும் செயல்திட்டங்களை வகுப்பதிலும், நடைமுறைப் படுத்துவதிலும் கல்விதனது பங்களிப்பைச் செலுத்தவேண்டும்.
2. கல்வி மனிதவள விருத்தித் தொடர்பு
மனிதனை பொருளாதார உள்ளிட்டுக்குரிய வல்லாண்மை உடையவ னாக மாற்றுவதில் கல்வி முதன்மையானதும் வலுவானதுமாகும். ஊட்டம், நலவசதி, குடிநீர், மற்றும் வீட்டுவசதி, பொழுதுபோக்கு போன்ற பலவும் மனிதவள இயலளவை நிர்ணயிக்கின்ற போதிலும் முன்னுரிமையில் இவை எல்லாவற்றையும்விட கல்வி சிறப்பானது.
IO கல்வியும் மனிதவள விருத்தியும்

கல்விமுறை, கல்வி நிறுவனங்கள், கல்விசார்செலவினங்கள், திட்ட மிடலிலான கல்விக்கான முன்னுரிமை என்பன மனிதனை நுகர்வுப் பக்கத்திலிருந்து முதலீட்டுப் பக்கத்திற்கு நகர்த்தும் வலிமை கொண் டவை. மனிதனின் பொருளாதார அபிவிருத்தி, சமூக அபிவிருத்தி தொடர்பான செய்முறைகளில் கூர்மையானதும், பயனுறுதிமிக்கது மான பங்களிப்பை வழங்கக்கூடிய விருப்பத்தையும், இயலுமையை யும், தகைமையையும் தரத்தக்கவை கல்வியும், பயிற்சியுமாம்.
தேசங்களின் செல்வங்களை உருவாக்குவதில் முதன்மையான பங்களிப்பு மனித வளங்களினாலேயே செய்யப்படுவதாக உலக வங்கி யின் (1996) மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
அட்டவணை ! வருமான மட்டங்களின்படி செல்வ உருவாக்கத்தில் பங்கு - கொள்ளும் காரணிகள் (1994)
ogs உயர் வருமான தாழ்வருமான
நாடுகள் நாடுகள்
உருவாக்கப்பட்ட சொத்துக்கள் 23.0% 20.0%
இயற்கை மூலதனம் 3.0% 22.0%
மனித வளம் 74.0% 58.0%
மொத்தம் 100.0% 100.0%
மூலம் : Finance & Development, December 1996
உயர்வருமான நாடுகளிலும் சரி, தாழ்வருமான நாடுகளிலும் சரி மனிதவளத்தின் பங்கு முதன்மையுடையதாக விளங்குகின்றது. தென்னாசிய நாடுகளின் தலா மொத்தச் செல்வம் (1994) ரூபா 21,704ஆக விளங்கியது.
அபிவிருத்தி என்பதில் கல்வியும், பயிற்சியும் பின்வரும் படிநிலை களுக்கூடாக ஊடுருவித்தாக்க விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன.
1. உருவாக்கப்பட்ட சொத்துக்கள் என்பன பெளதீக வளங்களை உற்பத்திக்கு உதவுகின்ற, உற்பத்தி வேகத்தை அதிகரிக்கின்ற, உற்பத்தி நுட்பங்களைப் பெருக்கிப் பரவலாக்குகின்ற பெறுமதி உடையனவாக விளங்கும் மனித ஆற்றலின் வெளியீடுகளேயாகும்.
கல்வியும் மனிதவள விருத்தியும் I

Page 8
இவற்றில் கடினமான உடல் உழைப்பை பொருத்தமான முறையில் வழிகாட்டி வடிவமைக்கக்கூடிய மனிதனின் விஞ்ஞான தொழில் நுட்ப, அதியுயர் தொழில்நுட்ப நிபுணத்துவ கல்வியின் பங்களிப்பே தலையானதாகும். சொத்து உருவாக்கத்தில் சிக்கனம், உற்பத்தித் திறன் என்பனவற்றை இவ்வாறான கல்வி உறுதிப்படுத்த வேண்டும்.
இயற்கை மூலதனம் என்பது விவசாய நிலங்கள், காடுகள், கனிமங்கள், உயிர்ச்சுவடுகள் என்பனவற்றைக் குறிக்கின்றது. இத்தகைய இயற்கையான கொடைகளைக் கண்டறிதலும், அவற்றைப் பொருளாதார முயற்சிகளுடன் ஒன்றிணைப்பதும் தொலைநோக்குடன் அவற்றைப் பேணுதலும் அவற்றுக்குச் சர்வதேச பெறுமானங்களைச் சேர்த்தலும், சூழல் அபாயங்களுக்கு உட்படாத வகையில் அவற்றைப் பாதுகாத்தலும் அவசியமாகிறது.
அவ்வாறான பணிகளை நிறைவேற்றல் என்பது அறிவும், நுட்பத் திறன்களும், ஆழமான தேசப்பற்றும் கொண்ட மனிதவளத்தை உருவாக்கக்கூடிய கல்விமுறைகளினாலேயே சாத்தியமாகும். பல ஆபிரிக்க நாடுகளில் தற்போதும் குடியேற்ற ஆட்சிக்காலத்தில் இந்தியாவிலும், அவ்வாறான மனிதவள உருவாக்கத்திற்கு உறுதுணையாக அமையக்கூடிய கல்வி ஏற்பாடுகளின்மையால் இயற்கை மூலதன அபிவிருத்திக்குரிய பங்களிப்பை கல்வி முறைகளினால் செய்ய முடியவில்லை.
மனிதவளம் என்பது நேரடியாகத் தேசிய தொழிற்படையின் பங்களிப்பு, முன்னேற்றம், தொடர்புநிலை வல்லாண்மை உருவாக்கம் என்பனவற்றின் மூலம் அபிவிருத்திக்குப் பங்காற்று கின்றது. இந்த மனிதவள விருத்தியில் கல்வியின் பங்களிப்பு பற்றிய சிந்தனை விருத்தி வரலாற்றுக் காலத்தினுரடாக வளர்ச்சி பெற்றுள்ளமை நோக்குதற்குரியதாகும்.
2.1 மனிதவள அபிவிருத்தி அணுகுமுறைகள்
மனிதவள அபிவிருத்தி முயற்சிகளை மேற்கொள்வதில் வளங்கள்
தொடர்பான தடைகள் முக்கியமானவை என்பதால் அவற்றுடன்
இணைந்த வகையில், நடைமுறைக்கு உகந்த, பயனுறுதிமிக்க
தந்திரோபாயங்களை உள்ளடக்கிய அணுகுமுறைகள் வடிவமைக்கப்
பட்டுள்ளன. இவை வரையறுக்கப்பட்ட வளங்களின் அடிப்படையில்
உச்சமான விளைவுகளை மனிதவள அபிவிருத்தி மீது ஏற்படுத்துமென
கல்வியும் மனிதவள விருத்தியும்

நம்பப்படுகிறது. செலவு - மற்றும் பயனுறுதித்தன்மை கொண்ட நடைமுறைப்படுத்தலுக்கான விதிகளினடிப்படையில் அமைந்த தந்திரோபாயங்களாக இவை அமைகின்றன. இவற்றை பின்வருமாறு விளக்க முடியும்.
அ. ஒன்றிணைந்த விடய அணுகுமுறை
(Sub Integrated - Thematic Approach) பொருளாதாரத் தேவை நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த அணுகுமுறை கல்வித் தொடர்பை உறுதிப்படுத்துகின்றது. எல்லாவகை யான கல்வியும், பயிற்சியும் மனிதவள அபிவிருத்தி தொடர்பான ஏனைய மூலகங்களுடன் இணைந்தும் இறுக்கமாக தொடர்புபட்டும் காணப்படுகின்றது. மனிதவள அணுகுமுறையில் பல்வேறு மாறிகளை ஒருங்கிணைக்கும் பிரதான காரணிகளைத் தீர்மானிப்பதில் கல்வியும், பயிற்சியும் பிரதான இடம் பெறுகின்றன.
கல்விக்கான நிதியை ஒதுக்கும்போது மனிதவள அபிவிருத்தியை நிர்ணயிக்கும் ஏனைய காரணிகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தி அவற்றினுடைய சமநிலையைப் பேணல் வேண்டும். கல்விநிதி ஒதுக் கீட்டில் அத்தகைய தொழில்வாய்ப்பு (Employment) போன்ற வற்றுக் கான ஒதுக்கீடுகளும் கவனமாக மேற்கொள்ளப்படல் வேண்டும்.
தொழிற்பாட்டுத் தேவைக்காக மூன்று தலைப்புக்களின் கீழ்
மனிதவள மூலகங்கள் பாகுபடுத்தப்படுகின்றன.
1) தொழில் வாய்ப்பும் மனிதவள அபிவிருத்தியும்
தொழில் வாய்ப்புக்களை உருவாக்குதல், அதனூடாக வருமானம் பெற உதவுதல், உற்பத்தித் திறனை உயர்த்துவதற்கு தொழில்சார் பயிற்சியும், மனிதவள அபிவிருத்தியும், திட்டமிடலும் போன்ற வற்றில் கவனம் செலுத்துதல் போன்றவை.
i) விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்
பல்வேறு மட்டங்களிலுமான தொழில்நுட்பங்களை ஈர்த்துக் கொள்ளத்தக்க மனிதவளத்தையாக்குதல். ஆரம்பக்கல்வி, விஞ்ஞான தொழில்நுட்பக்கல்வி என்பன இதில் அடங்கும். நாட்டின்அபிவிருத்தித் தேவையை ஈடுசெய்யக்கூடியதாக ஊழியருக் குரிய தொழில் நுட்பங்களைப் பின்பற்றுதல், புத்தகப்படிப்பில் ஈடுபடல் என்பனவற்றின் மூலம் சமூகத்தில் தொழில்நுட்ப கலாச்சாரத்தை முன்னேற்றுதல்.
கல்வியும் மனிதவள விருத்தியும் 13

Page 9
i) வாழ்க்கையின் பண்பு நலன்கள் பற்றிய அம்சங்கள்
வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தக்கூடிய பல்வேறு அம்சங்களாக எழுத்தறிவு, பல்வேறு மட்டங்களுக்குமான கல்வி, ஆரம்ப நலப்பராமரிப்பு, நலவாழ்வும் குடும்ப நலத்திட்டமிடலும், வீடமைப்பு, ஊட்டம், நகர்மயமாக்கம், கலாச்சாரம், சுற்றுச்சூழல் என்பன இதில் அடங்கும். இவை அனைத்தும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி உற்பத்தித் திறனையும் உயர்த்தக்கூடியன.
இந்த மூன்று விடயங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டு செயற்படுத்தப்படல் வேண்டுமென்று இந்த அணுகுமுறை குறிப்பிடுகின்றது. விஞ்ஞான தொழில்நுட்பக்கல்வி, தொழில்சார் கல்வி, பல்வேறு பயிற்சி முறைகள் மனிதவள அபிவிருத்திச் செயன்முறையில் மையவிசையாக செயற்படுவதை வலியுறுத்து கின்றது. கல்வி மனிதவள விருத்தியூடாக வாழ்க்கைப்பண்புநலன் களை உயர்த்துவதன் மூலம் மீண்டும் சுழல் முறையில் கல்வி மையவிசையாக செயற்படுவதை வலியுறுத்தி மனிதவள மேம்பாட்டைத்தூண்டுகிறது. இத்தகைய விடய அணுகுமுறை அபிவிருத்திக்கான நிதி தொடர் பான வினைத்திறனை உருவாக்க உதவுவதோடு சமூக பொருளாதார அபிவிருத்தி செலவுகளுக்கிடையே விரும்பத்தக்க இணைப்பையும் விருத்திசெய்ய உதவுகிறது. வளங்கள் நகர்ப்புறத்துறையிலிருந்து கிராமப்புறக்கல்விக்கும், மூன்றாம் நிலைக்கல்வியிலிருந்து ஆரம்ப மற்றும் இடைநிலைக்கல்விக்கும், முறைமையானகல்வியிலிருந்து முறைசாராக்கல்விக்கும் வளங்கள் மறு ஒதுக்கீடு செய்யப்படல் அவசியம் என்று இது வலியுறுத்துகின்றது. துறைகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக நிகழ்ச்சித்திட்டங்கள் தயாரிக்கப்பட்டு தனித்தனியாக நிறைவேற்றப்படுவது வழக்கமாய் உள்ளது.
ஆ. இலக்குக் குழு உபாயம்
(The Target - Group Strategy)
பெண்கள், சிறுவர் (5 வயதிற்குட்பட்டோர்) கிராமப்புற வறியோர், நகர்ப்புற வறியோர், பிற்படுத்தப்பட்டவகுப்பினர், பழங்குடியினர், தனிமைப்படுத்தப்பட்ட சமூகத்தினர் போன்ற நலன் பெறாப் பிரிவினரின் மனிதவள அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்குவதை வலியுறுத்தும் அணுகுமுறை இதுவாகும். இப்பிரிவினரின் வாழ்க்கைப் பண்புநலன்களை முன்னேற்றுவதன் மூலம் அவர்களது பொருளாதார
14 கல்வியும் மனிதவள விருத்தியும்

பங்களிப்பு மற்றும் உற்பத்தித்திறன் உயர்த்தப்பட வேண்டும் என்றும், மனிதவள அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இவர்களின் செலவு - பயனுறுத்தன்மையை முன்னேற்றுதல் அவசியமென்றும் இவ்வணுகு முறையை வலியுறுத்துகின்றது.
மனிதவள விருத்தி மற்றும் கல்வி தொடர்பானதும் ஏனையவற்றுக்கு மான செலவுகள் முழுசமூகத்தினருக்குமென பரவலாகச் செலவிடப் படாது தெரிவுசெய்யப்பட்ட குழுவினருக்கு மாத்திரம் செலவிடும் போது சிக்கனங்கள் அதிகரிக்க முடியும்.
பெண்கள் மீதான மனிதவள விருத்திக்குரிய பரவலான செலவுகள் உயர்வதைக் குறைக்க முடியும், பெண்கல்வி தொடர்பான செலவுகளை மேற்கொள்ளும்போது பிறப்புவீதம், சிசுமரணவீதம், ஆயுள் எதிர் பார்க்கை, நலப்பராமரிப்புத் தொடர்பான செலவுகளைக் குறைக்க முடிகிறது.
நலன் பெறாப்பிரிவினர் மீது மனிதவள அபிவிருத்தி இலக்குடன் கல்விசார் முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் இவர்களது வாழ்க்கைத் தரம் உயர்வதோடு, பொருளாதார வளர்ச்சிக்குதவும் வகையில் அவர்களது ஆற்றலை நீண்டகாலத்தில் முழுமையாகப் பெறமுடியும்.
இப்பிரிவினர் மீதான கல்வி, பயிற்சி என்பனவற்றை அதிகரிக்கும் போது நலத்துறை, ஊட்டம், குடும்பக்கட்டுப்பாடு என்பனவற்றை மேம்படுத்துவதன் மூலமாகவே மனிதவள விருத்திக்குரியவர்களாக அவர்களை முன்னேற்ற முடியும்.
மனிதவள விருத்தியில், முதலீடு செய்யக்கூடியவர்களுமிருப்பர். அவர்கள் தமது தேவைக்காக மட்டுமன்றி முன்னுரிமை வேண்டி நிற்கும் துறைகளின் அபிவிருத்திக்காகவும் முதலிடுவதன்மூலம் பெருக்கல் மற்றும் பரவல் விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவர்கள்.
கல்வி தொடர்பாக பல்வேறு பிரதான இலக்குக் குழுவினர்மட்டத்தில் சமத்துவம், சமூகநீதி, சமஉரிமை என்பனவற்றை உருவாக்க வேண்டும் என்றும் இந்த அணுகுமுறை வற்புறுத்துகின்றது.
இ. தேவை (கேள்வி) சார் உபாயம்
(The Demand - Oriented Strategy) நலன் பெறாப்பிரிவினர்மனிதவள அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் நன்மைகளைப் பெறமுடியாதவாறு பொருளாதார, சமூக, கலாசார,
கல்வியும் மனிதவள விருத்தியும் I5

Page 10
உளவியல், உடலியல் ரீதியான தடைகள் பல நடைமுறையில் காணப் படுகின்றன. அவ்வாறே மனிதவள அபிவிருத்திக்கான உட்கட்டமைப்பு தொடர்பான கொள்கை மற்றும் திட்டமிடற் பலவீனங்களால் நலன் பெறாப்பிரிவினரின் முன்னேற்றம் தொடர்ந்து தடைப்படுகின்றது. இத்தகைய பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண உதவும் துணைத் தந்திரோபாயமாக அமைவதே தேவைசார் உபாயமாகும்.
மனிதவள நிரம்பல் பக்கத்திற்கும் (Supply side) மனிதவள கேள்விப் பக்கத்திற்கும் (Demand Side) இடையிலான இடைவெளியைக் குறைத்து ஒரு சமநிலையை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். நலன் களுக்கும் வெளியே வாழும் மக்களிடையே தனிப்பட்ட மற்றும் சமூக ரீதியிலான நலன்களை பெறுதற்கான வாய்ப்புகள் பற்றியும் அவற்றை எவ்வாறு உரியமுறையில் பயன்படுத்துவது என்பது பற்றியும் விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் இந்த தந்திரோபாயம் அமைகின்றது. அவர்களது கல்வி வாய்ப்புக்கள், மற்றும் முன்னேற்றங் களை அழுத்தித் தடைசெய்யும் சமூக, கலாசார அம்சங்களிலிருந்து அவர்களை மீட்பதற்கான அணுகுமுறையாகவும் இது அமைகிறது.
ஜகார்த்த செயலாக்கத்திட்டம் (1998) மனிதவள அபிவிருத்தியில் இந்த அணுகுமுறையை கையாள்வதன்மூலம் துறைசார் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதலும், தேவை மற்றும் நிரம்பல் அம்சங்களை ஒரேசமயத்தில் ஒன்றிணைப்பதும் சாத்தியமாகின்றது என்கிறது. இச்செயலாக்கத் திட்டம் பொதுத்துறைமுகவர்களின் செயற்பாடுகளும், பங்காளர்களாக தனியார்துறை நிறுவனங்களும், அரசசார்பற்ற நிறுவனங்களும் இயங்குதலும் அவசியமென்றும் வலியுறுத்துகிறது. கல்விச் செயற்றிட்டங்கள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்களின் நடைமுறைப் படுத்தலின்போதும் இதே அணுகுமுறையைப் பின்பற்றுதல் வேண்டும். கீழிருந்து மேல்நோக்கிய திட்ட அணுகுமுறையானது கீழ்மட்ட மக்களின் பங்கேற்பு, அதிகாரப்பரவலாக்கம், பன்முகப் படுத்தல் என்பனவற்றை கல்விசார் மனிதவள அபிவிருத்தி செயற்றிட்டங்களின்போது கையாள்வது பயனுறுதித் தன்மையை அதிகரிக்கும் என விதந்துரைக்கிறது.
அலகுக்கான கல்விசார் செலவைக் குறைத்தல், நிதி மற்றும் சேவையை வழங்குதல் மூலமாக தனியார் ஊக்கத்தைத் தூண்டும் செயற்பாடுகளினூடாக கல்விசார் வளங்களை வினைத்திறனுடன் பயன்படுத்த முடியும். சமூக மற்றும் உதவி முறையிலான செயற்றிட்டங் களை மேற்கொள்வதன் மூலமாக விரயத்தைக் குறைத்தலும்
I6 கல்வியும் மனிதவள விருத்தியும்

சாத்தியமாகும். அரசசார்பற்ற நிறுவனங்கள் மலிவான தொழில்நுட்பங் களை கையாள்வதன் மூலமாக இழிவுமட்ட அலகுச்செலவில் கல்விச் சேவைகளில் பங்களிப்பை அதிகரிக்கமுடியும் என்றும் இந்த அணுகுமுறை வற்புறுத்துகின்றது.
நடைமுறையில் இத்தகைய அணுகுமுறைகள் பொருளாதார நோக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்டபோதிலும் இவை கல்வி நிகழ்ச்சித்திட்டங்கள், செயற்றிட்டங்கள், திட்டங்கள் என்பனவற்றின் மீது பிரயோகிக்கக் கூடியனவாகவேயுள்ளன. கல்வித்திட்டமிடல் குறுங்கால அடிப்படையிலன்றி நீண்டகால அடிப்படையில் தயாரிக்கப் படும் போது இத்தகைய அணுகுமுறைகள் கையாளப்படக் கூடியன வாகும்.
3. மனிதவள அபிவிருத்தி கல்வி தொடர்பான
சிந்தனை வளர்ச்சி 21ஆம்நூற்றாண்டு அறிவு - மைய, தகவல் - மையநூற்றாண்டு என்றும் அந்நூற்றாண்டின் சமூகம் அறிவுசார் சமூகம் என்றும் வர்ணிக்கப்பட்ட போதிலும் மனித வாழ்க்கையின் சகல அம்சங்களின் மேம்பாடும் முன்னேற்றமும் இறுதியில் கல்வியினாலேயே தீர்மானிக்கப்படும் என்ற சிந்தனை 20ஆம் நூற்றாண்டிலேயே வேரூன்றத் தொடங்கி விட்டது. 1920 ஆம் ஆண்டளவில் மேலைநாட்டுப் பொருளியல் சிந்தனையாளரான அல்பிரட் மார்ஷல் உற்பத்திக்கான சக்தி வாய்ந்த சாதனம் அறிவு என்றும் அதனைக் கொண்டே இயற்கையைப் பயன்படுத்தி மனிதனின் தேவைகள் நிறைவேற்றப்படல் வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தார். இந்தியாவில் அமெரிக்கத் தூதுவராகப் பணிபுரிந்த அறிஞர் கால்பிரேத் பண்டைய சமூகங்களில் உடல் வலுவுள்ளவனும் மானியமுறை சமூகத்தில் நில உடமையாளனும் முதலாளித்துவ சமூகத்தில் மூலதனத்தை உடையவனும் செலுத்திய செல்வாக்கையும், அதிகாரத்தையும் நவீன சமூகத்தில் கல்வியறிவுடைய வனே செலுத்துவான் என்று கூறினார்.
மனிதவளம் பற்றிய சூல்ட்சின் (TSchultz) கருத்து
பாரம்பரிய சிந்தனையின்படி நிலம், மூலதனம், உழைப்பு என்னும் காரணிகளே பொருளுற்பத்தியை நிர்ணயிப்பன. இந்த சிந்தனையின் படிநிலமானது அதிகரிக்கப்படமுடியாதது. வரையரைக்கு உட்பட்டது.
வளர்ந்துவரும் உலக மக்கள் தொகையின் உணவுத் தேவைகளுக்கேற்ப
கல்வியும் மனிதவள விருத்தியும் 17

Page 11
உணவு உற்பத்தியை அதிகரிக்க முடியாது. பழம் பொருளியல் சிந்தனை யாளர்களான ரிக்கார்டோ, மல்த்தஸ் போன்றோர் பொருள் உற்பத்தியில் நில மென்ற காரணிக்குரிய முக்கியத்துவத்தை மிகைப்படுத்திக் கூறியுள்ளதாகவே பிற்கால சிந்தனையாளர்களான சூல்ட்ஸ் போன்றவர்கள் (1979) எடுத்துக் காட்டினர். இவர்கள் ஒரு முக்கிய மாற்றுச்சிந்தனையை முன்வைத்தனர். மனிதன் விவசாய நிலங்களிலும் பாரம்பரிய விவசாயப் பொருளாதாரத்திலும்தான் தங்கியிருக்க வேண்டுமென்பதில்லை என்பதே அச்சிந்தனையாகும்.
"பொருள் உற்பத்தியைப் பொறுத்தவரையில் மிகவும் சக்தி வாய்ந்த கருவியாக விளங்குவது அறிவாகும். அறிவைக் கொண்டே நாம் இயற் கையைக் கட்டியாண்டு எமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள
(ՄԼգեւյլԻ.
Alfred Marshall, 'Principles of Economics' (1920)
‘அண்மைக்கால ஆய்வுகளின்படி, குறைந்த மற்றும் உயர்ந்த வருமானமுள்ள நாடுகளின் பொருளாதார முறைகளை நவீனமயப் படுத்துவதில் பண்ணை நிலத்தின் பொருளாதார முக்கியத்துவம் குறைந்து விட்டது; அதற்குப் பதிலாக மனித மூலதனத்தின் - அறிவு, திறன்களின் - பொருளாதார முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.
நிலவளத்துக்கு ஒரு வரம்பு உண்டு. எனவே அதிகரித்துச் செல்லும் உலக சனத்தொகைக்குத் தேவையான உணவைத் தொடர்ந்து உற்பத்தி செய்வது என்பது நிலத்தால் முடியாததொன்று இவ்வாறான ஒரு கருத்து உண்டு. இதற்கு மாற்றாக உள்ள மற்றொரு கருத்து மனிதன் தனது அறிவாலும் விவேகத்தாலும் ஆற்றலாலும் (அதாவது பயிற்சி பெற்ற மனித வளத்தால்) நிலத்திலும் மரபு வழி விவசாயத் திலும் தங்கி இருக்கும் நிலைமையைத் தவிர்த்துக்கொள்ள முடியும்.
T. W. Schultz, The Economics of Being Poor, Nobel Lecture, 1979.
நிலவளமும் மனித ஆற்றலும்
இவ்வாறு நிலத்தைச் சார்ந்திருக்கும் நிலைமையைக் குறைத்துக் கொள்ளும் ஆற்றலும் மதிநுட்பமும் மனிதனுக்கு உண்டு. இவற்றைக் கொண்டு மனிதன் உலக மக்கள் தொகைக்கு தேவைப்படும் உணவு உற்பத்திக்கான செலவைக் குறைத்துக்கொள்ளமுடியும் என்ற கருத்தைச் சூல்ட்ஸ் முன்வைத்தார். பழம் சிந்தனையாளரான ரிக்கார்ட்டோ
18 கல்வியும் மனிதவள விருத்தியும்

எதிர்பார்க்காத முறையில் இன்று ஆராய்ச்சிகளுக்கூடாக பயிர்செய்கை நிலங்களுக்குப் பதிலான மாற்று வழிமுறைகள் கண்டறியப் பட்டுள்ளன. பெற்றோர்கள் தமது வருமானங்கள் அதிகரிக்கும் போது குறைந்தளவிலான பிள்ளைகளையே விரும்புகின்றனர். உண்மையில் மக்களின் மனப்பாங்குகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை சிந்தனை யாளர்கள் மல்த்தஸ் கூட எதிர்பார்த்திருக்க முடியாது. உலக நாடுகளின் பொருளாதார வரலாற்றை நுணுகி ஆராயும்போது உணவு உற்பத்திக்கு ஒரு எல்லை உண்டு என்ற கருத்துப் பொருத்தமற்றது என்றே தோன்று கின்றது. அவ்வரலாற்றின்படி அறிவுத்துறையில் ஏற்படும் முன்னேற்றங் களைப் பயன்படுத்தி புதிய வளங்களை உருவாக்கிக் கொள்ளமுடியும் எனத் தெரிகின்றது. உண்மையில் மனித குலத்தின் எதிர்கால மேம்பாட்டை மட்டுப்படுத்தப்பட்ட நிலவளமும், சக்தி வளமும் தடைசெய்யமுடியாது. அவ்வெதிர்கால முன்னேற்றத்தை மனிதன்தனது மதிநுட்பத்தால் நிர்ணயம் செய்யமுடியும் என்ற மாற்றுக் கருத்தை சூல்ட்ஸ் வெளியிட்டார்.
உலகளாவிய ரீதியில் ஆபிரிக்க நாடுகளிலும் இந்தியாவிலும் விவசாயத்தை தொழிலாகக் கொண்ட சகல மக்களும் காலங்காலமாக வறியவர்களாகவே வாழ்ந்து வந்துள்ளனர். ஆயினும் அவர்கள் விவசாயம் செய்த அனைத்து நிலங்களுமே செழிப்பற்றவை எனக்
கூறமுடியாது.
விவசாய நாடுகளில் வாழ்ந்த மக்களின் ஏழ்மை நிலை எப்படிப்ப்ட்ட தாயினும் நவீன விவசாய ஆராய்ச்சி, மனிதனின் விவசாய முகாமைத்து வத்திறன்களின் முன்னேற்றம் என்பனவற்றைக் கொண்டு சிறந்த விவசாய உற்பத்திக்கு வழிகோலமுடியும். அறிஞர் சூல்ட்சின் கருத்தின்படி, செல்வந்த, வறிய நாடுகளின் பொருளாதாரமுறைகளில் நவீன மயமாக்கம் பற்றிச் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள், விவசாய நிலத்தின் பொருளாதாரப் பெறுமதியும் முக்கியத்துவமும் குறைந்து மனித மூலதனத்தின் அறிவு - திறன்களின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதையுமே காட்டுகின்றன.
நிலத்தின் பெறுமதியும் மாண்பும் அழிக்கப்படமுடியாதது என்ற ரிக்காடோவின் கருத்தை பின்வந்த பொருளியலாளர்கள் பலரும் ஏற்றுக்கொண்ட போதிலும் சூல்ட்ஸ் அதனை மறுத்துரைக்கிறார். அவருடைய கருத்துப்படி அபிவிருத்தியடைந்த கைத்தொழில் நாடுகளில் மட்டுமன்றி வளர்முக நாடுகளிலும் தேசிய வருமானத்தில் நிலவாடகையின் பங்கு குறைந்து வருகின்றது. நிலவுடமையாளர் களின் சமூக, அரசியல் முக்கியத்துவமும் வீழ்ச்சியடைந்து விட்டது.
கல்வியும் மனிதவள விருத்தியும் 19

Page 12
ரிக்கார்டோ எடுத்துக்கூறிய நிலவாடகை முக்கியத்துவமிழக்க முக்கிய காரணம் விவசாயம் நவீனமயமாக்கப்பட்டதுடன் நிலமானது அதன் இயற்கையான நிலையிலிருந்ததைவிட அதிக அளவுக்கு உற்பத்தியை வழங்கும் மூலவளமாகிவிட்டமையாகும். அத்துடன் விவசாய ஆராய்ச்சியானது பயிர்ச்செய்கை நிலத்துக்குப் பதிலாக பல மாற்று ஏற்பாடுகளை வழங்கிவிட்டது என சூல்ட்ஸ் விளக்கிக் கூறினார். இதற்கு அவர் பல உதாரணங்களை தந்துள்ளார். ஐரோப்பாவில் சில நிலப்பகுதிகள் தவிர எனையவை பொதுவாக வளங்குன்றியவை யாகவே இருந்தன. ஆனால், இன்று அவற்றின் உற்பத்தித்திறன் அதிகரித்துவிட்டது. பின்லாந்தின் நிலப்பகுதிகள் உண்மையில் சதுப்பு நிலங்களாக மாற்றப்பட்டு விட்டன.
ஜப்பானிய வயல் நிலங்கள் ஆரம்பத்தில் வடஇந்திய வயல் நிலங் களைவிட வளங்குறைந்தவையாகவே இருந்தன. இன்று அவை செழிப்புமிக்கவையாக மாற்றப்பட்டுவிட்டன. உலக நாடுகளின் பயிர்ச் செய்கை நிலத்துக்கான பதிலீடுகள் பயன்படுத்தப்பட்டதன் விளைவாக ஐக்கிய அமெரிக்காவில் சோளப்பயிர்ச்செய்கை நிலம் 1923 - 1979 காலப்பகுதியில் 33 மில்லியன் ஏக்கரால் குறைந்த போதிலும் சோள உற்பத்தி மும்மடங்காக அதிகரித்ததை சூல்ட்ஸ் எடுத்துக்காட்டினார்.
வறுமைக்கான பொருளாதாரக் காரணிகளைப் பற்றி ஆராய்ந்த இவ்வறிஞர், மக்களின் தராதரங்களை உயர்த்துவதற்காக முதலீடுகளைச் செய்வதன் மூலம் வறியவர்களின் பொருளாதார நலன்களை மேம்படுத்த முடியும் எனக்கூறினார். முக்கியமாக பாடசாலைக் கல்வி வசதிகளையும் சுகாதார வசதிகளையும் அதிகரிக்கும் வகையில் செய்யப்படும் முதலீட்டில் அவர் அக்கறை செலுத்தினார். வளர்முக நாடுகளில் இத்துறைகளில் செய்யப்பட்ட முதலீடுகள் வறிய மக்களை முன்னேற்ற உதவியதை அவர் எடுத்துக்காட்டினார்.
மக்கள்தமது வாழ்க்கைப் போராட்டத்தின் பல்வேறு சந்தர்ப்பங்களில் புதிய திறன்களையும் ஆற்றல்களையும் பெற்றுக்கொள்கின்றனர். இத்திறன்கள் யாவும் பாடசாலைக் கல்விமுறையினூடாகப் பெற்றுக் கொள்ளப்படாவிட்டாலும் பாடசாலைக் கல்வியானது தராதரங்களை மேம்படுத்த உதவுதை மறுப்பதற்கில்லை. மக்களின் திறன்கள் சமூகத்தின் பொருளாதாரவளங்களை அதிகரிக்க உதவுகின்றன. எனவே அவை அபிவிருத்திக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாகின்றன. இவ்வகையில் மக்கள் தொகையும் அபிவிருத்திக்கான ஒரு வளமாகின்றது.
20 கல்வியும் மனிதவள விருத்தியும்

மக்கள் தொகையை ஒரு பொருளாதார வளமாகக் கருத்தாக்கம் செய்வதைப் பலரும் ஏற்பதில்லை. கல்வியைத் தனிமனித ஆளுமை, பண்புக்கூறுகள் என்பவற்றின் விருத்திக்கே பயன்படுத்தலாம் என கருதுவோர் அதனை பொருளாதார வளமாகவே கருத்தாக்கம் செய்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து மனிதவள விருத்தி என்ற சொல்லும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இன்று மனிதவள விருத்தி யானது அபிவிருத்தியின் நோக்கமாகவும் அதற்கான வழிமுறையாகவும் கருதப்படுகின்றது. எனவேதான் அபிவிருத்தியைப் பொறுத்தவரையில் மனிதவளத்தின் தராதரங்களை மேம்படுத்த உருவாக்கப்படும் கல்விக் கொள்கைகள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.
சமூக அறிவியலாளர்கள் மக்களையும் பொருளுற்பத்திக்கு உதவும் பொருளாதார வளமாகக் கருத்திற்கொள்ளத் தயக்கம் காட்டியே வந்துள்ளனர். ஆயினும் அபிவிருத்தி ஆய்வுகளில் மனிதவளங்கள், மனிதவிருத்தி என்னும்,சொற்கள் இன்று தாராளமாக பயன்படுத்தப் படுகின்றன. பொருளாதார ஆராய்ச்சிகளில் பயன்படுத்தப்படும் புதிய சித்தாந்தங்களில் மனிதவள விருத்தியும் ஒன்றாகிவிட்டது. இதனைப் பலரும் புதுமையானதொன்றாகக் கருதுவதால், இக்கோட்பாடு அபிவிருத்திக் கொள்கையின் வரலாற்றின் ஒரு எதிர்புரட்சியாகவே கொள்ளப்படுகின்றது.
1920 ஆம் ஆண்டில் அல்பிரட் மார்ஷல் உற்பத்திச் செயற்பாட்டில் அறிவின் பங்களிப்புப் பற்றிக் கூறியிருந்த போதிலும் 1960களிலேயே அபிவிருத்தி பற்றிய ஆய்வாளர்கள் மனிதவள விருத்தியில் அக்கறை செலுத்தத் தொடங்கினர். உண்மையில் அறிஞர் சூல்ட்ஸின் "வறுமை யின் பொருளியல் பற்றிய நோபல் பரிசுச் சிறப்புரையின் (1979) பின்னரே மனிதவளவிருத்தி பற்றிய சிந்தனை உயர்ந்த புலமைசார் முக்கியத்துவம் பெற்றது. 1980 ஆம் ஆண்டின் உலக வங்கியின் உலக அபிவிருத்தி பற்றிய அறிக்கையில் 'மனித வளங்களும் அபிவிருத்தி யும்’ என்ற தலைப்பில் இவ்விடயம் கோட்பாட்டு ரீதியாகவும் ஆராயப்
பட்டது.
1984ஆம் ஆண்டு மெக்சிக்கோவில் நடைபெற்ற உலகமக்கள்தொகை மாநாட்டில் சூல்ட்ஸின்கருத்துக்கள் விரிவானமுறையில் ஆராயப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஏற்கனவே கூறப்பட்ட அவருடைய பின்வரும் முக்கிய கருத்துக்கள் இம்மாநாட்டில் ஒப்புதல் பெற்றன.
கல்வியும் மனிதவள விருத்தியும் 21

Page 13
0 மனிதகுலத்தின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் கல்வியறிவிலும் மக்களின் தராதர மேம்பாட்டிலும் இடப்படும் முதலீடு முக்கிய இடம்பெறும்.
0 இம்முதலீடுகளை கருத்திற்கொள்ளும்போது நிலம்சார் வளங்கள் காலப்போக்கில் குறைந்து போகும் என்ற வாதம் நிராகரிக்கப்பட்டு விடும்.
0 வறிய மக்களின் நலனை முன்னேற்ற உதவக்கூடிய உற்பத்திக் காரணிகள் நிலம், வலு, பயிர்ச்செய்கை நிலம் என்பவையல்ல. அதற்கான முக்கிய காரணிகள் கல்வியும் மக்களின் தராதரங்களில் ஏற்படும் பண்பு ரீதியான முன்னேற்றமுமே.
உண்மையில் சூல்ட்ஸ் விவசாயப் பொருளியல் துறைசார்ந்த அறிஞராக பணியாற்றிய போதே இத்தகைய ஆச்சரியமான முடிவு களையும் வாதங்களையும் முன்வைத்தார். ‘விவசாயத்தைப் பொறுத்த வரையில் கூட முக்கிய வளம் மனிதவளமேயன்றி, நிலமல்ல' என்ற வாதத்தை முன்வைத்தார். மெக்சிக்கோ மாநாட்டில் உயர்ந்த மக்கள் தொகை அதிகரிப்பு வீதங்கள் குறைக்கப்படல் வேண்டுமென ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் மக்களின் கல்வித்தராதரங்களும் நலப்பண்பு களும் அதிகரிக்கப்படல் வேண்டும் என்ற கருத்துக்கும் ஒப்புதல் கிடைத்தது. மனிதவளத்தளம் என்பது அடிப்படையானது. அதனை முன்னேற்றக் கல்வியின் மீதான முதலீடு பெரிதும் உதவும் என்னும் கருத்தைச் சகல உலக நாடுகளும் ஏற்றுக்கொண்டன.
கல்விமுதலிடும் வளர்ச்சியும்
மனிதவள விருத்தி பற்றிய கோட்பாடு ரீதியான சிந்தனையானது கல்விக்கும் பொருளாதார அபிவிருத்திக்குமிடையிலான தொடர்பு பற்றிய அடிப்படை எடுகோளாக விளங்கியது. ஊழியர்களின் உடல் நலம், திறன்கள், ஊக்கம் என்பனவற்றில் ஏற்படும் முன்னேற்றம் அவர் களது உற்பத்தித்திறனை பெருக்கும் என்பதே இச்சிந்தனையின் உட்கருத்தாகும். மக்களின் தனிப்பட்ட தராதரங்களை மேம்படுத்தக் கல்வி உதவும் அளவுக்கு கல்வியானது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முழுமையாகவும் உதவுமென இச்சிந்தனை வலியுறுத் தியது. பெருமளவுக்கு இச்சிந்தனை பொருளியலாளரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதற்கான பல ஆதாரங்களையும் அவர்கள் முன்வைத்தனர். கிராமப்புறங்களில் செய்யப்பட்ட31ஆய்வுகளின்படி, நான்கு ஆண்டுப் பாடசாலைக் கல்வியைப் பெற்ற விவசாயிகளின்
22 கல்வியும் மனிதவள விருத்தியும்

உழைப்பினால் உற்பத்தி 8.7 வீதத்தால் அதிகரித்தது, என அவர்கள் கண்டறிந்தனர். எவ்வாறாயினும் தொழிற்சாலை ஊழியர்களின் உற்பத்தித்திறனில் பாடசாலைக்கல்வி ஏற்படுத்தியதாக்கம் பற்றிய ஆய்வுகளை அதிகம் காணமுடியாதுள்ளது. ஆயினும் ஹட்டாட் (Haddad) என்பவரின் ஆய்வின்படி உயர்தரமான கல்வித்தேர்ச்சியின் விளைவாக, ஊழியர்கள் உயர்ந்த வருமானம் தரும் உயர்நிலைத் திறன்கள் தேவைப்படும் தொழில்களுக்கு மாறிச்செல்லும் வாய்ப்புக் களைப் பெற்றனர்.
கல்வியின் மீதான முதலீடு எவ்வாறு பொருளாதார வளர்ச்சிக்கு இட்டுச்செல்லும் என்பதை விளக்க விரிவான ஆதாரங்களையும் முன்வைத்த மற்றுமொரு ஆய்வாளர் சக்ராபோலஸ் (Psacharopoulos - 1990) என்பராவர். இவரது ஆய்வு 1973ஆம் ஆண்டளவில் 32 நாடுகளில் ஆரம்பிக்கப்பட்டு 1985 ஆம் ஆண்டளவில் 60 நாடுகளை உள்ளடக் கியது. இவ்வாய்வு கல்வியின் மீதான முதலீடுகளினால் ஏற்படும் விளைவு வீதம் (Rate of Return) பற்றியது. இவ்வாய்வின் முடிவுகளின் படி 27வளர்முக நாடுகளில் ஆரம்பக்கல்வியின் மீதான விளைவு வீதம் 27ஆகவும் இடைநிலைக்கல்வியின் விளைவு வீதம் 13ஆகவுமிருந்தன.
சக்ராபோலஸ் தமது ஆய்வுகளினூடாகக் கண்டறிந்த வேறு சில முடிவுகள் பின்வுருமாறு: 0 கல்வியின் மீதான முதலீடுகளின் விளைவாக சமூகம் அடைகின்ற நன்மைகளைவிடத் தனியாட்கள் அடைகின்ற நன்மைகள் கூடுதலானவை. )ெ ஆரம்பக்கல்வியில் இடப்படும் முதலீடானது உயர்கல்வியைவிட
அதிகமாக பயனைத்தருகின்றது. 0 கல்வியின் விளைவு வீதம் அதிகமானது. ஆனால், கல்வியின்மீதான
முதலீடு குறைவாகவே காணப்படுகின்றது. 0 கல்வி முதலீட்டில் ஆரம்பக்கல்விக்கே முன்னுரிமை வழங்கப்படல்
வேண்டும். 0 உயர்கல்வி நிலைக்கு வழங்கப்படும் கல்விமானியங்கள் அளவுக்கு
அதிகமானவை. 0 பெண்கள் கல்வி செயற்பாட்டில் அதிகளவில் பங்குபற்றும்போது ஏற்படும் விளைவுகளும் பயன்களும் ஆண்களின் பங்குபற்றலுடன்
ஒப்பிடக்கூடியவை.
கல்வியும் மனிதவா விருத்தியும் 23

Page 14
0 தொழில்சார்கல்வியில் செய்யப்படும் முதலீடுகளால் பெறப்படும் நன்மைகளைப் பொதுக்கல்வி மீதான முதலீட்டிலிருந்தும் பெறலாம்.
0 பொதுவாக பாடசாலைக்கல்வியின் மீதான முதலீட்டினால்
கிடைக்கும் விளைவு வீதமானது 10க்கும் அதிகமானது.
0 வளர்முக நாடுகளில் பொதுவாக கல்வியின் விளைவு வீதம் அதிகம். இதற்குக் காரணம் அந்நாடுகளில் பயிற்சி பெற்ற ஊழியர்களின் தொகையில் காணப்படும் பற்றாக்குறையாகும்.
வளர்முக நாடுகளில் கல்வியின் மீதான முதலீட்டின் விளைவு வீதம் பற்றிய ஆய்வுகளின்படி உயர்கல்வியைவிட ஆரம்பக்கல்வியின் சமூக விளைவு வீதம் மிக அதிகமானதாகும். புள்ளிவிபரங்களின்படி உயர் கல்வியின் விளைவு வீதம் 14: ஆரம்பக்கல்வியின் விளைவு வீதம் 27: ஆகும். வளர்முக நாடுகளில் உயர்கல்வித்துறையில் மிதமிஞ்சிய முதலீட்டைச் செய்துள்ளதையும் ஆரம்பக்கல்வியில் அக்கறை செலுத்த வில்லை என்பதையுமே இப்புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. எனவே வளர்முக நாடுகள் ஆரம்பக்கல்வியின் மீதான தமது முதலீடுகளை அதிகரிப்பதால் அதிக பயனை அடையமுடியுமென முடிவு செய்ய இடமுண்டு. பொருளாதார ரீதியாக பயனுறுதியுடைய அத்தகைய முதலீடுகளை விடுத்து மேலும் மேலும் உயர்கல்வியில் முதலீடுகளை அதிகரிப்பதால் வளர்முக நாடுகளின் வளர்ச்சி வேகம் குறையவும் வாய்ப்புக்கள் உண்டு வளர்ச்சியடைந்த கைத்தொழில் நாடுகளில் உயர்கல்வியில் மேலும் முதலீடுகளைக்கூட்டுவதால் அதிக பயனில்லை என முடிவு செய்யலாம்.
இவ்வாய்வுகளின்படி பொருளாதார வளர்ச்சியின் மீதான கல்வியின் தாக்கமானது, அவ்வந் நாடுகளின் அபிவிருத்தி மட்டத்திலும் ஊழியர் களின் வளர்ச்சி மட்டத்திலும் தங்கியுள்ளது. கற்றோரின் நிரம்பலானது மிதமிஞ்சியிருக்கும் போது சம்பளங்கள் குறையும். இதனால் குறிப் பிட்ட கல்வி நிலையங்களில் விளைவு வீதம் குறையும். ஒட்டுமொத்த விளைவாக இக்கல்வி நிலைகளை நாடுவோர் தொகையும் குறையும். பொதுக்கல்வி முறைகள் நன்கு வளர்ச்சி பெற்றுள்ள நாடுகளிலும் எதிர்கால வருமானங்களைப் பொறுத்து நிதிச்சந்தையில் கடன்பெற வசதியுள்ளநாடுகளிலும் கல்வியின் விளைவு வீதமானது பிற உற்பத்திப் பயனுடைய சொத்துக்களின் விளைவு வீதத்திற்குச் சமமானதாக இருக்கும் கல்வி வசதிகள் குறைவாகவுள்ள வளர்முக நாடுகளின்
24 கல்வியும் மனிதவள விருத்தியும்

நிதிச்சந்தைகளும் சரியாக வளர்ச்சி பெற்றிராது. மக்களின் வருமானங் களும் குறைவாக இருப்பதால் அவர்கள் தமது நாளாந்த செலவுகளைக் குறைத்துக்கொண்டு கல்வியில் முலீடுகளைச் செய்து கொள்ளமுடியும். சுருங்கக்கூறின், பின்வரும் நிலைமைகளில் கல்வியானது பொருளாதார வளர்ச்சியில் முக்கிய காரணியாக விளங்கும்.
)ெ மனிதவிருத்திக்கான முதலீடு குறைவாக இருக்கும் சந்தர்ப்பங்
களில்;
0 கல்வித்தேர்ச்சியுடைய, பயிற்சியுள்ள ஊழியர்களின் தொகை
பற்றாக்குறையாக இருக்கும் சந்தர்ப்பங்களில்;
)ெ கல்விமுறைகள் முழுமையாக வளர்ச்சி பெற்றிடாத சந்தர்ப்பங்
களில்;
இப்பின்புலத்திலேயே சூல்ட்ஸ் "பாரம்பரிய நிலமைகளைவிட நவீன நிலைமைகளிலேயே கல்வி முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பயனுள்ள தாகவும் விளங்கும்’ என்ற கருத்தைத் தெரிவித்தார்.
பல்வேறு பன்னாட்டு ஆய்வுமுடிவுகளும் பொதுவாக மனிதவள விருத்தியும் குறிப்பாக கல்விநாடுகளின் வளர்ச்சிவீதங்களிலும் தனியார் வருமானங்களிலும் வேறுபாடுகளை ஏற்படுத்துகின்றது என்பதற்கான சான்றாதாரங்களைத் தருகின்றன. க்ரூக்கர் (Krueger) என்பவர் ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஏனைய நாடுகள் பலவற்றுக்குமிடையே காணப் படும் தனியார் வருமான வேறுபாடுகள் பற்றி ஆராய்ந்தார் (1968). இவ்வாய்வுக்கு அவர் பயன்படுத்திய நுட்பமுறை ஊழியர் படையை அதன் வயது, கல்வி, கிராம - நகர வேறுபாடு என்பனவற்றின் அடிப் படையில் வகைப்படுத்துவதாகும். ஐக்கிய அமெரிக்காவைப் போன்று ஏனைய நாடுகளும் சம அளவிலான உற்பத்திக் காரணிகளைக் கொண்டிருந்தாலும் அந்நாடுகள் ஐக்கிய அமெரிக்காவின் தனியாள் வருமானத்தில் 50 வீதத்தை மட்டுமே பெறமுடியும் எனக் க்ரூக்கர் கண்டறிந்தார்.
அவருடைய ஆய்வின்படி ஏனைய50வீத வருமானமானது மனிதவள விருத்தியின் விளைவாக ஏற்பட்டதாகும். உலகநாடுகள் ஐக்கிய அமெரிக்காவுக்குச் சமனான மனிதவளத்துடன் தொடர்பற்ற ஏனைய காரணிகளைக் கொண்டு தம்மிடம் உள்ள தற்போதைய மனிதவளத் துடன் பெறக்கூடியதலாவருமானத்தை அவர் பின்வருமாறு மதிப்பீடு செய்தார்.
கல்வியும் மனிதவள விருத்தியும் 25

Page 15
அட்டவணை I
மனிதவள தலாவருமான தொடர்பு
2
ஜப்பான் 93.2 3.7
மெக்சிக்கோ 45.6 22.9
LDC86)dust 44.2 25.0
இந்தோனேசியா 37.3 32.2
தைவான் 46.5 21.6
இந்தியா 34.1 32.6
1. மனிதவள - தலாவருமானத் தொடர்பு தற்போதைய கல்வியில் காணப்படும் மனிதவள இடைவெளியால், பெறக்கூடிய தலாவருமானம்.
2. பெறக்கூடிய தலா வருமானத்தில் ஏற்படும் வீழ்ச்சி வீதம்.
ஆதாரம் க்ரூக்கர், 1968
ஐக்கிய அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது இந்த நாடுகளின் கல்வி முறையில் காணப்படும் இடைவெளிகள் காரணமாக, பெறக்கூடிய தலாவருமானம் என்ன வீதத்தில் குறையும் என்பதையும் அவர் மேற்கண்டவாறு மதிப்பீடு செய்தார். எடுத்துக்காட்டாக 1960இல் மெக்சிக்கோவின் தலாவருமானம் ஐக்கிய அமெரிக்க தலாவருமானத் தின் 14 வீதமாக இருந்தது. அந்நாடு ஐக்கிய அமெரிக்காவுக்கு சமமான நில, மூலதனவளங்களைக் கொண்டிருந்தால் இவ்வீதம் 46 வீதம் வரை மட்டுமே உயர்ந்திருக்க முடியும். எஞ்சிய54 வீதமான இடைவெளிக்குக் காரணம் மெக்சிக்கோவிற்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் மனிதவள விருத்தியில் காணப்பட்ட வேறுபாடு எனக்ரூக்கர் விளக்கினார்.
ஹிக்ஸ் (Hicks) என்பார் செய்த மற்றொரு பன்னாட்டு ஆய்வின்படி, துரிதமாக அபிவிருத்தியுறும் நாடுகளின் எழுத்தறிவு மட்டங்களும் மனித ஆயுள் குறிகாட்டியும் சராசரிக்கு அதிகமாகவே அடைந்த வளர்ச் சியை ஆராய்ந்தார். அந்நாடுகளின் எழுத்தறிவு வீதம், மனித ஆயுள் குறிகாட்டி என்பனவற்றைக் கருதிற்கொண்டார். இவ்வாய்வில் அவர் எழுத்தறிவிற்கும் நாடுகள் அடைந்த வளர்ச்சிக்குமிடையிலிருந்த தொடர்பினைக் கண்டறிந்தார். இச்சகலநாடுகளின் சராசரி வளர்ச்சி
26 கல்வியும் மனிதவள விருத்தியும்

வீதம் ஆண்டுக்கு 2.4 வீதமென்றும் 12துரித வளர்ச்சி நாடுகளின் வளர்ச்சி வீதம் 5.7 என்றும் அவர் கண்டறிந்தார். இத்துரித வளர்ச்சி நாடுகள் ஆரம்பத்தில் (1960இல்) சராசரிக்கு அதிகமாக எழுத்தறிவு வீதங்களைக் கொண்டிருந்தன.
ஹிக்ஸின் ஆய்வு முடிவுகளுக்கு முரணான முடிவுகளைத் தந்த வீலர் (Wheeler) என்பாரின் ஆய்வுகூட எழுத்தறிவில் ஏற்படும் மாற்றங்கள் உற்பத்தி வெளியீட்டில் முக்கிய தாக்கங்களை உண்டாக்கும் என்ற உண்மையை ஏற்றுக்கொண்டன. எழுத்தறிவானது கருவளத்தைக் குறைக்க உதவும் என்பதையும் அவரது ஆய்வுகள் சுட்டிக்காட்டின. கொச்ரென் (Cochrane) என்பாரின் ஆய்வுகளும் கல்வியும் கருவளக் குறைப்பும் இணைந்து செல்வதை எடுத்துக்காட்டின (1980).
நாடுகளின் வளர்ச்சியைக் கணக்கீடு செய்து (Growth Accounting) அவ்வளர்ச்சிக்கு கல்வியின் பங்களிப்பைப் பற்றி ஆராய்ந்தவர்களின் டெனிசன் (Denison) என்பவர் முக்கியமானவர். இவர் ஐக்கிய அமெரிக்காவின் வருடாந்த வளர்ச்சி வீதம் 3.87 என மதிப்பிட்டார். இவ்வளர்ச்சியில் 28 வீதம் ஊழியர் அதிகரிப்பாலும் 11 வீதம் அவர்கள் பெற்றிருந்த கல்வியாலும் ஏற்பட்டிருந்தது.
மொத்தத்தில் ஊழியர், மூலதனம் ஆகிய இரு காரணிகளையும் கொண்டு 60 வீதமான வளர்ச்சிக்கு விளக்கமளிக்கப்பட்டது. எஞ்சிய40 வீதமான அதிகரிப்புக்கு வள ஒதுக்கீட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் போன்ற காரணிகள் இனங்காணப்பட்டன. எனினும் இதில் 29 வீத வளர்ச்சியானது அறிவில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் விளைவு எனக் கண்டறியப்பட்டது. அறிஞர் டெனிசன், உற்பத்தியில் ஏற்பட்ட நீண்டகால, தொடர்ச்சியான அதிகரிப்புக்கு மிக மிக அடிப்படையான காரணம் கல்வியறிவில் ஏற்பட்ட முன்னேற்றமே எனக்குறிப்பிட்டார். முறையான ஆராய்ச்சி, அவதானம், அனுபவம் என்பவற்றால் கிடைக்கப்பெற்ற தொழில்நுட்ப முகாமைத்துவ அறிவு, முறைசாராக் கல்வி என்பனவற்றையே இது கருதியது. சுருங்கக்கூறின், கல்வி வளர்ச்சியின் நேரடி விளைவாக 11 வீதமான உற்பத்திப் பெருக்கமும் அறிவின் முன்னேற்றத்தின் காரணமாக மறைமுகமாக 29வீத உற்பத்திப் பெருக்கமும் ஐக்கிய அமெரிக்காவில் ஏற்பட்டதாக டெனிசன் மதிப்பிட்டார். ஒரு பரந்த கருத்தில் இவ்வுற்பத்தி அதிகரிப்பானது கல்வியினால் அல்லது மனித வளத்தினால் ஏற்பட்ட முன்னேற்றத்தி னால் ஏற்பட்டதாகவே முடிவு செய்யப்பட்டது.
கல்வியும் மனிதவள விருத்தியும் 27

Page 16
பவ்மான் (Bowman) என்பவரும் இவ்வாறான நாடுகளின் வளர்ச்சி பற்றிய கணக்கீட்டு ஆய்வுகளில் ஈடுபட்டார். 1950- 1962காலப்பகுதியில் 22 நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி பற்றிய அவரது ஆய்வு களின்படி (1980) ஆர்ஜென்டீனா, பெல்ஜியம், பெரிய பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகளில் ஏற்பட்ட வளர்ச்சியில் கல்வியின் பங்களிப்பானது 10 வீதத்துக்கு அதிகமானது. சக்ராபோலஸ் என்பார் 29 நாடுகளில் செய்த அளவீட்டின் படி (1985) மொத்த வளர்ச்சி யில் கல்வியின் பங்களிப்பு 8.7வீதமாக அமைந்தது.
பொருளாதார வளர்ச்சியில் கல்வியின் பங்களிப்புப் பற்றிய பல நுண்பாக (Micro-Level) ஆய்வுகளும் நடாத்தப்படுகின்றன. இவ்வாய்வு கள் ஊழியர்களின் கல்வித்தேர்ச்சியில் காணப்படும் வேறுபாடுகளை அவர்களின் உற்பத்தித்திறனுடன் தொடர்புபடுத்தி ஆராய்ந்தமையால் கூடிய முக்கியத்துவம் வாய்ந்தவை. லொக்ஹீடும் (Lockheed) அவரது சகாக்களும் பல வளர்முக நாடுகளில் மேற்கொண்ட அளவீடு ஒன்றில், விவசாயிகள் பெற்றிருந்த 4 ஆண்டுக் கல்வியானது அவர்களுடைய விவசாய உற்பத்தியை 7.4 வீதத்தால் அதிகரிக்க உதவியது (1980). நவீனமயத்துக்குள்ளாகாத மரபுவழி சமூகங்கள் பொதுவாக புதிய விவசாயமுறைகளையும் புத்தாக்க வழிமுறைகளையும் ஏற்றுக்கொள்வ தில்லை. இச்சமூகங்களில் 4 ஆண்டுக்கல்வியால் 1.3 வீத அதிகரிப்பே ஏற்பட்டது. ஆனால் நவீன மயமாக்கப்பட்ட சமூகங்களில் 9.3 வீத அதிகரிப்பு ஏற்பட்டது. வளர்ச்சியடைந்த நாடுகளில் செய்யப்பட்ட இது போன்ற ஆய்வுகளும் இத்தகைய முடிவுகளுக்கே வந்தன. எடுத்துக் காட்டாக, ஐக்கிய அமெரிக்காவில் செய்யப்பட்ட ஆய்வுகளின்படி (Griliches - 1964, Welleh - 1970) Gilla) i gTui].56íīair gcio6)'i)uildi) 3Jfbl u'll 10 வீத முன்னேற்றமானது விவசாய உற்பத்தியில் 3- 5 வீத அதிகரிப்பை ஏற்படுத்தியது. ஆனால் நிலம், பசளை, இயந்திர சாதனங்கள் என்பன வற்றில் ஏற்பட்ட 10 வீத அதிகரிப்பு விவசாய உற்பத்தியில் 1 - 2 வீத அதிகரிப்பையே ஏற்படுத்தியதாகக் கண்டறியப்பட்டது.
இவ்வாய்வுகளும் அளவீடுகளும் கண்டறிந்த முடிவுகளைப் பின்வரு மாறு தொகுத்துக் கூறலாம்.
0 மனிதவளத்தில் ஏற்படும் முன்னேற்றத்துக்கும் நாடுகளின் வளர்ச்
சிக்கும் நேரடித் தொடர்பு உண்டு.
0 மனிதவள மேம்பாட்டை ஏற்படுத்தக்கூடிய பிரதான காரணி கல்வியாகும். ஊழியர் பெறும் பயிற்சி, அனுபவம், உடல்நலம், போஷாக்கு என்பவையும் இம்மேம்பாட்டை ஏற்படுத்தக்கூடியன.
28 கல்வியும் மனிதவள விருத்தியும்

0 பொருளாதார வளர்ச்சியில் நாடுகளிடையே காணப்படும் வேறுபாடுகளை கல்வி வேறுபாடுகளைக் கொண்டு விளக்க முடியும். 0 கைத்தொழில் சாதனங்கள், இயந்திரத் தொகுதி என்பவற்றில் மிதமிஞ்சிய முதலீடு செய்யப்படுவதுபோன்று கல்வித்துறையிலும் மிதமிஞ்சிய முதலீடுகள் செய்யப்படலாம். 0 வளர்முக நாடுகளில் கல்வியின் விளைவுவீதம் அதிகமாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது. இதிலிருந்து அந்நாடுகளின் கல்வியில் செய்யப்படும் முதலீட்டில் அதிக பயனுண்டு. அத்தகைய முதலீடு கருத்துள்ளது என்ற முடிவுக்கு வரமுடியும். இந்நாடுகளில் கல்வி தேர்ச்சியுள்ள ஊழியர்களின் பற்றாக்குறை காரணமாக இம்முதலீடு முக்கிய தேவையாக உள்ளது. )ெ வளர்முக நாடுகளில் உயர்கல்வியில் மிதமிஞ்சிய முதலீடு காணப் படுகின்றது. ஆரம்பக்கல்வி மீதான முதலீட்டில் அதிக அக்கறை செலுத்தப்படவில்லை. 0 ஐக்கிய அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளின் உயர் கல்வியில் மிதமிஞ்சிய முதலீடு செய்யப்பட்டுள்ளமை ஒரு பிரச்சனையாக உருவாகியுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் உயர்கல்வி மாணவர் சேர்வு வீதம் (60%) சுவீடன், ஜப்பான்முதலிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இருமடங்காக உள்ளது. உயர் கல்விக்கு அதிக மானியங்களை வழங்கும் நாடுகளில் உயர்கல்வி மீதான மிதமிஞ்சிய முதலீடு ஒரு முக்கிய பிரச்சனையாக இருப்ப துடன் அந்நாடுகளில் உயர்கல்வியின் தனியாள்விளைவுவீதம் சமூக விளைவு வீதத்தைவிட கணிசமான அளவுக்கு அதிகமாவுள்ளது.
கல்வியும் மனிதவள விருத்தியும் 29

Page 17
அத்தியாயம் - 2
பொருளாதார மாற்றங்களும் மனிதவளக் கல்வியும்
மேலைநாடுகளில் சமூகங்களின் பொருளாதார முறைகளில் ஏற்பட்டு வரும் அண்மைக்கால மாற்றங்களைக் குறிக்க ஆய்வாளர் புதிய கருத்தாக்கங்களைப் பயன்படுத்துகின்றனர். அவையாவன: நிறுவனப் புரட்சி, தகவல் - சமூகம், சேவை சமூகம், கைத்தொழில் மயத்துக்குப் பிற்பட்ட சமூகம், பின் முதலாளித்துவ சமூகம், பின் நவீனத்துவ சமூகம் என்பனவாகும். பொருளாதார அபிவிருத்தி என்ற நிலைப்பாட்டி லிருந்து நோக்குமிடத்து அபிவிருத்தியடைந்த நாடுகளின் பொருளாதார முறைகளில் சில முக்கிய, புதிய அம்சங்களையும், பண்புகளையும் இனங்காண முடியும்.
சேவைத்துறை வளர்ச்சிகள்
அபிவிருத்தி அடைந்த நாடுகளில் பெரும்பாலான வேலைவாய்ப்புக் கள் இன்று சேவைத்துறையிலேயே காணப்படுகின்றன. இவ்வகையில் முதலாவது துறையான (Primary Sector) விவசாயமும், இரண்டாம் துறையான (Secondary) கைத்தொழிலும் வேலைவாய்ப்புக்களைப் பொறுத்த வரையில் செல்வாக்கிழந்துவிட்டன. இலங்கை, இந்தியா, வங்காளதேசம், பாகிஸ்தான் போன்ற தென்னாசிய நாடுகளின் வேலை வாய்ப்புக்களில் 40-60வீதமானவை இன்றும் விவசாயத்துறையிலேயே காணப்படுகின்றன. கனடா, ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நோர்வே, சுவீடன், நெதர்லாந்து முதலிய நாடுகளில் மொத்த வேலைவாய்ப்புக்களில் 70 வீதத்திற்கு அதிகமானவை சேவைத்துறை யிலேயே காணப்படுகின்றன (1993). பெல்ஜியம், டென்மார்க்,
30 கல்வியும் மனிதவள விருத்தியும்

பிரான்ஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகளின் மொத்த தேசிய உற்பத்தியில் (மொ. தே. உ) 70 வீதம் சேவைத்துறையிலிருந்தே பெறப்படுகின்றது. 15 அபிவிருத்தியடைந்த நாடுகளில் 1973 தொடக்கம் 1992 வரையில் மொத்தத் தேசிய உற்பத்தியில் சேவைத்துறையின் பங்கு ஆண்டுக்கு 0.5 வீதத்தால் அதிகரித்து வந்துள்ளது.
அபிவிருத்தி அடைந்த நாடுகளின் மொத்தத் தேசிய உற்பத்தியிலும் வேலைவாய்ப்புக்களிலும் சேவைத்துறையின் பங்கு இவ்வட்டவணை யில் தரப்பட்டுள்ளது.
அட்டவணை II
மொத்த தேசிய உற்பத்தியிலும் வேலை வாய்ப்பிலும் சேவைத்துறை பங்கு
மொ.தே. உற்பத்தியில் வேலை வாய்ப்பில் நாடுகள் சேவைத்துறையின் % சேவைத்துறையின் %
866 65.5 73.8
ஐக்கிய அமெரிக்கா 66.7 (1983) 3.2 அவுஸ்ரேலியா 67.4 71.0 ஜப்பான் 56.7 59.8 நியூசிலாந்து 66.9 66.0 பிரான்ஸ் 68.6 67.2 ஜேர்மனி 60.6 48.6 ஐக்கிய இராச்சியம் 65. 71.6 நோர்வே 62.4 71.3
ஆதாரம் : உலக வங்கியின் அறிக்கைகள் (1995)
இவ்வாறு விவசாயம், கைத்தொழில் ஆகிய துறைகள் முக்கியத்துவம் இழந்து சேவைத்துறை முதன்மை பெறுவதனால் பொருளாதார முறை மூன்றாம் நிலைமயமாகி செல்வதாக வர்ணிக்கப்படுகின்றது.
இவ்வாறான மாற்றம் பொருளாதார முறையில் ஏற்பட்ட வேறு பல மாற்றங்களுக்குக் காரணமாக உள்ளன. முதலில் பொருளாதார முறையானது அதிகளவில் அறிவுச் செறிவுடையதாக மாறி வருவதை இம்மாற்றம் குறிக்கின்றது. விவசாயப் பொருளாதாரம் ஊழியச் செறிவையும் கைத்தொழில் பொருளாதாரம் மூலதனச் செறிவையும் கொண்டது. தற்போதைய பொருளாதாரமானது அறிவு செறிவானதாய்
கல்வியும் மனிதவள விருத்தியும் 31

Page 18
உள்ளது. இரண்டாவதாக, வழமைக்கு மாறாக ஊழியர்கள் நேரடியாக வாடிக்கையாளர்களுடன் ஈடுபாட்டுடன் தொடர்புகொள்ளும் நிலை தோன்றியுள்ளது. தகவல் தொழில்நுட்பம் போன்ற புதிய தொழில் நுட்பங்கள் பொருளாதார முறையில் முக்கிய பங்கினை வகிக்கத் தொடங்கியுள்ளன.
தொழில்நுட்ப மாற்றம், துரிதமான தொழில்நுட்ப புத்தாக்கங்கள் நவீனமயமாக்கம் என்பன பொருளாதாரமுறையில் உடல் உழைப்பின் முக்கியத்துவத்தைக் குறைத்துவிட்டன. விவசாய பொருளாதார முறை களில் உடல் உழைப்பே முக்கியத்துவம் பெற்றிருந்தது. நவீன மேலை நாட்டுப் பொருளாதார முறைகளில் கணிப்பொறி, தன்னியக்கத் தொழில்நுட்பம் (Automation) தொலைத்தொடர்பு போன்ற தகவல் புரட்சியின் சாதனங்களாவன மனிதனின் அறிவு, திறன், விவேகம் (Brain power) என்பவற்றை முக்கியப்படுத்தியுள்ளன. தற்போதைய பொருளாதார முறைகளின் அடிப்படை அம்சங்கள் யாதெனில் இத்தொழில்நுட்பத் தொகுதிகள் பொருளாதார முறைகள் இயங்கும் முறையை மாற்றியமைத்துள்ளமையாகும். இப்புதிய தொழில்நுட்பங் கள் உற்பத்தியையும் வளர்ச்சியையும் வேலைவாய்ப்புக்களையும் பெருக்கி வருகின்றன.
அபிவிருத்தியடைந்த நாடுகளின் இப்புதிய தொழில்நுட்பங்கள் பல புதிய பிரச்சனைகளையும் ஏற்படுத்தியுள்ளன. ஒருபுறம் புதிய தொழில் நுட்பங்களால் வேலைவாய்ப்புக்கள் குறைந்து விடும் என்ற பயம் ஏற்பட்டுள்ளது. பயிற்சி குறைந்த ஊழியருக்கான தேவை குறைந்து வருவதுடன் பயிற்சி குறைந்த, பயிற்சியுள்ள ஊழியர்களின் சம்பள வேறுபாடுகளும் அதிகரித்து வருகின்றன. மறுபுறம் புதிய தொழில் நுட்பங்கள் தொழில் உற்பத்தியை அதிகரித்துள்ளன. அந்த அளவுக்கு குறிப்பிட்ட அளவான உற்பத்திக்கான ஊழியர் தேவையும் குறைந் துள்ளது. ஆயினும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் உற்பத்தித் தொழில்களின் செலவுகளும் குறைந்துள்ளன. இவ்வாறு புதிய தொழில்நுட்பமானது பொருட்களுக்கான சந்தையை விரிவடையச் செய்துள்ளது. அத்துடன் உற்பத்திப் பெருக்க வீதத்தைக் கூட்டவும் உதவியுள்ளது. மொத்தத்தில், புதிய தொழில்நுட்பங்கள் ஒரு புறம் வேலைவாய்ப்புக்களை அழிக்கின்றன. மறுபுறம் வேலை வாய்ப்புக்களை உருவாக்குகின்றன.
32 கல்வியும் மனிதவள விருத்தியும்

சேவைத்துறையின் எழுச்சி
1700களின் இறுதிப் பகுதியில் பிரித்தானிய ஊழியர் தொகுதியில் 50 சதவீதத்துக்கு அதிகமானவர்கள் விவசாயத்துறையில் தொழில் புரிந்து வந்தனர். இரு நூற்றாண்டுகளின் பின்னர் (1980களில் ஊழியர் தொகுதியில் 3 சதவீதமானவர்கள் மட்டுமே இத்துறையில் பணி புரிந் தனர். 1950ஆம் ஆண்டளவில் 50 சதவீத ஊழியர்கள் கைத்தொழில் தயாரிப்புத்துறையில் பணி புரிந்தனர். தற்போது இவ்வீதாசாரம் வீழ்ச்சியடைந்து வருகிறது. பிரான்ஸ், ஜேர்மனி, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளில் இவ்வீதாசாரம் முறையே 22, 32, 16 ஆக வீழ்ச்சி யடைந்துவிட்டது.
கைத்தொழில் மயத்துக்குப் பிற்பட்ட நவீன பொருளாதார முறை களில் வேலைவாய்ப்புகள் சேவைத்துறைகளிலும் தகவல் தொழில் நுட்பத் துறையிலுமே காணப்படுகின்றது. இத்துறைகளில் வேலை வாய்ப்புகளைப் பெற முகாமைத்துவம், தொழில்நுட்பம் (Hightech), சுகாதாரம், கல்வி போன்ற துறைகளில் உயர்கல்வித் தகுதியும் பயிற்சியும் தேவைப்படுகின்றது. மக்கென்சி ஆய்வாளர்களின்படி 2000ஆம் ஆண்டளவில் 0 ஐரோப்பாவுக்குத் தேவையான சகல விவசாயப் பொருட்களையும் ஐரோப்பிய மக்களில் 5 சதவீதமானவர்களே உற்பத்தி செய்து விடுவர் 0 20 சதவீத ஊழியர்கள் தயாரிப்புத் துறையிலும் 0 25 சதவீதமானவர்கள் உடல் உழைப்புத் தொழில்களிலும் 0 50 சதவீதமானவர்கள் மூளைப்பணியிலும் ஈடுபட்டிருப்பர்.
1972 - 1981 காலப்பகுதியில் அவுஸ்திரேலியாவில் சேவுைத் துறையில் வேலைவாய்ப்புகள் 850,000 ஆல் அதிகரித்தது.
கைத்தொழில்துறை வேலைவாய்ப்புகள் 100,000 ஆல் குறைந்தன; 1966-76 காலப்பகுதியில் சமுதாய சேவைத்துறையில் வேலை வாய்ப்புகள் 366,000 ஆல் அதிகரித்தன.
இத்தகைய பண்பினைக் கொண்ட பின் முதலாளித்துவ சமூகத்தில் பொருளாதாரமும் கல்வியும் ஒன்றிணைக்கப்படும் இப்பொருளாதார முறையில் தோன்றும் புதிய தொழில் துறைகள் தகவல் தொழில்
கல்வியும் மனிதவள விருத்தியும் 33

Page 19
நுட்பம் போன்றன) மிகக் கூடிய அளவுக்குக் கல்வியில் - கற்றவர்களில் - கல்விப் பயிற்சியில் தங்கி இருக்கும். குறிப்பாக இப்புதிய தொழில் துறைகளில் பணிபுரிய உயர்கல்வி பயின்றவர்கள் தேவைப்படுவர்.
Headley Bare and R. Slaughte Education for the Twenty - First Century, Routlege, London, 1993
புதிய தொழில்நுட்பங்கள் ஒழித்துக்கட்டிய வேலை வாய்ப்புக்களை விட உருவாக்கிய வேலைவாய்ப்புக்கள் அதிகம் என்பது ஆய்வாளர் 5(5gigs (untiis; : School Brief in "Economist" 15.11, 1995)
உற்பத்தி முறையை உயர்தொழில்நுட்பம் நோக்கி மாற்றிய நாடுகளில் அதிக வேலைவாய்ப்புக்கள் உருவாக்கியதாகப் பல ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.
இப் பின்புலத்தில், உருவாக்கப்படும் புதிய வேலை வாய்ப்புக்கள் சேவைத்துறையைச்சார்ந்தவை என அறியக்கிடைக்கின்றது. இப்புதிய நிலமை காரணமாக, வழமையான தொழில் பயிற்சிப் பாடநெறிகள் குறிப்பிட்ட சில திறன்களை வழங்குவதாக அமையும்போது பயனற்றுப் போகின்றன. இந்நிச்சயமற்ற நிலைமை காரணமாக, குறிப்பிட்ட திறன்களுக்கான பயிற்சி வழங்குதலே பயனுடையதாக அமையுமென ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
வளரும் போட்டி
அபிவிருத்தி அடைந்த பொருளாதாரமுறைகளின் மற்றொரு இயல்பு பல்வேறு முனைகளில் வலுப்பெற்று வரும் போட்டியாகும். அபிவிருத்தியடைந்த நாடுகளிடையேயும், அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கும் வளர்முக நாடுகளுக்குமிடையிலும் போட்டிகள் வலுப்பெற்று வருகின்றன. ஒவ்வொரு அபிவிருத்தியடைந்து வரும் நாடும் தனது தற்போதைய வாழ்க்கைத்தரங்களைப் பேணப் பொருளா தார உற்பத்தி, விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களையும் தொழில்நுட்ப இடமாற்றங்களையும் ஊக்குவித்தல், ஊழியர்களின் ஆற்றல்களை அதிகரித்தல், பொதுமக்களின் பழக்கவழக்கங்களையும் மனப்பாங்கு களையும் மாற்றுதல் ஆகிய விடயங்களில் புதிய கொள்கையை உருவாக்க வேண்டியுள்ளது.
அண்மைக் காலங்களில் சில வளர்முக நாடுகளும் கைத்தொழில் மயமாக்கலில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இவ் ஈடுபாடு அபிவிருத்தியடைந்த நாடுகளில் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. புதிய
34 கல்வியும் மனிதவள விருத்தியும்

கைத்தொழிலாக்க நாடுகளின் (தென்கொரியா, தைவான், ஹொங்கொங் போன்ற) உற்பத்திப் பொருட்களின் விலைகள் கணிசமான அளவு குறைவாயுள்ளன. இதனால் உலக சந்தையில் அபிவிருத்தியடைந்த நாடுகள் கடும்போட்டியை எதிர்நோக்குகின்றன. புதிய கைத்தொழில் நாடுகள் உற்பத்தி செய்யும் ஏராளமான நுகர்வுப் பொருட்கள் அபிவிருத்தியடைந்த நாடுகளைச் சென்றடைகின்றன. எனவே அபிவிருத்தியடைந்த நாடுகள் ஊழியர் செலவுகளைக் குறைக்க வேண்டியுள்ளது அல்லது தமது பொருளாதார முறையானது உயர்மதிப் புள்ள பொருட்களை உற்பத்தி செய்யும் வகையில் உயர்தொழில் நுட்பத்தையும் சிறந்த பயிற்சியுள்ள மனிதவளத்தையும் பயன்படுத்த வேண்டும். அபிவிருத்தியடைந்த நாடுகள் இவ்விரண்டாம் வழிமுறை யையே பெரிதும் விரும்புகின்றன. எனவே போட்டியை எதிர்கொள்ள இந்நாடுகள் உயர்தொழில்நுட்பம், ஏற்றுமதியை நோக்காகக் கொண்ட அறிவுமைய உற்பத்திச் செயற்றிட்டம் என்பவற்றிலேயே முதலீடு செய்யத் தீர்மானித்துள்ளன.
உலகமயமாதல்
அபிவிருத்திஅடைந்த மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் பொருளாதார முறைகள் தற்போது உலகமயமாக்கத்திற்கு உட்பட்டுள்ளன. சர்வதேச வர்த்தகத்தின்துரித வளர்ச்சி, உலகளாவிய ரீதியில் வர்த்தகம் தாராள மயப்படுத்தப்பட்டுள்ளமை, பன்னாட்டு நிறுவனங்கள் காரணமாக உற்பத்தி முறை உலகமயமாக்கப்பட்டுள்ள நிலைமை, நிதிச் சந்தைகளின் ஒன்றிணைப்புப் போன்றன உலகமய மாக்கத்தின் முக்கிய அம்சங்களாகும்.
உலகமயமாக்கத்தின் காரணமாகப் பயிற்சியற்ற ஊழியர்களுக்கான தேவை வீழ்ச்சியடைந்துள்ளது. அத்துடன் அபிவிருத்தியடைந்த நாடுகளின் பயிற்சியற்ற, பயிற்சியுள்ள ஊழியர்களுக்கிடையிலான சம்பள வேறுபாடுகளும் அதிகரித்துள்ளன. ஊழியர்களின் தராதரம், அவர்களுக்கான செலவு என்பவற்றுக்கேற்ப கம்பனிகள் தமது உற்பத்தி நிலைமைகளைத் தமது விருப்பம் போல் வெவ்வேறு நாடுகளுக்கு மாற்றிக் கொள்ளமுடியும். ஒரு நாட்டிலுள்ள உயர்தர, முகாமைத்துவத் திறன்களையும் மற்றொரு நாட்டிலுள்ள ஊழியர்களையும் அக்கம்பனி கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். இவை யாவும் உலகமயமாக்கத் தின் விளைவுகளாகும். அமெரிக்காவின் கணினி நிறுவனங்கள் தமது மென்பொருட்களை இந்தியாவின் பெங்களுர் மனிதவளத்தைக் கொண்டு உற்பத்தி செய்வது சிறப்பான உதாரணமாகும்.
கல்வியும் மனிதவள விருத்தியும் 35

Page 20
அபிவிருத்தி அடைந்த நாடுகளின் சனத்தொகை அமைப்பு மாறி வருவது வேலையின்மைப் பிரச்சனையும் தொடர்ந்து இருந்து வருவதும் இரு முக்கிய போக்குகளாகும். 1970 தொடக்கம் பிறப்பு வீதம் குறைந்து வருவதால் தொழில்களை நாடும் இளைஞர் தொகையும் குறைந்து வருகின்றது. இதன் காரணமாக கம்பனிகள் முன்பு அலட்சியம் செய்த குழுவினரையும் தற்போது கருத்திற்கொண்டு வேலைவழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட சிலரை மட்டும் வேலைக்குத் தெரிவுசெய்யும் நிலை இல்லை. அரசாங்கம் இளைப்பாறும் வயதெல்லையை மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது. புதிய நூற்றாண்டில் இவ்விடயங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. கல்வியின் நோக்கும் போக்கும் இதனால் வழிப்படுத்தப்படுகின்றது. 0 அதேவேளையில் வேலையின்மைப் பிரச்சினையும் அதிகளவி லிருந்து வருகின்றது. இப்பிரச்சனையின் தீவிரம் குறைக்கப்படக் கூடும் எனவும் கருத முடியாதுள்ளது. 1995 இல் 15 அபிவிருத்தி யடைந்த நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வுகளின்படி, 0 ஜப்பான், சுவிற்சலாந்து ஆகிய நாடுகளில் மட்டும் வேலையின்மை
வீதம் 5க்குக் குறைவாக இருந்தது. 0 பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், பெல்ஜியம் ஆகிய நாடுகளில் இவ்வீதம் 11க்கு அதிகமாக இருந்தது. (ஸ்பெய்ன் 22.7%, பெல்ஜியம் 14.5%, இத்தாலி11.8%) 0 இளைஞர் மத்தியிலும் குறைந்த கல்வித் தகுதியுடையோர் மத்தியிலும் வேலையின்மைப் பிரச்சினை அதிகமாவுள்ளது. உயர்ந்த கல்வித் தகுதியுடையோர் மத்தியில் வேலையின்மைப் பிரச்சினை குறைவு.
அட்டவணை IV
கல்வித் தகுதியும் வேலையின்மையும்
இடைநிலைத் தகுதி உயர்கல்வித் நாடு உடையோரில் தகுதியுடையோரில்
வேலையில்லாதோர் % வேலையில்லாதோர் %
66 15 5.2
ஐக்கிய அமெரிக்கா 13.7 2.9
பிரான்ஸ் 13.2 4.4
ஜேர்மனி 8.9 3.7
ஐக்கிய இராச்சியம் 2.3 3.6
சுவீடன் 4.6 2.0
ஆதாரம் : OECD அறிக்கைகள்
36 கல்வியும் மனிதவள விருத்தியும்

தனியார் மயமாக்கல்
அபிவிருத்தி அடைந்த நாடுகளின் பொருளாதார முறைகளில் மற்றொரு அண்மைக்காலப் போக்கு, தனியார் மயமாக்குதலாகும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதன் நோக்கங்
595GTFT6) / @?6T. 0 பொதுத்துறை தொழிற்சங்கங்களின் வலிமையைக் கட்டுப்படுத்தல். 0 அரசாங்கத்தின் பங்களிப்பையும் தலையீட்டையும் குறைத்தல். 0 மக்கள் மத்தியில் சொத்துடமையைப் பரவலாக்குதல். 0 அரசாங்க நிதித் தேவைகளை நிறைவு செய்ய அரச நிறுவனங்களை
விற்று நிதி திரட்டல். 0 தனியார்மயமாக்கலினால் சில முக்கிய விளைவுகள் எதிர்பார்க்கப்
படுகின்றன.
அறிவு ஒரு பொருளாதார வளம்
மரபுவழி மேலைநாட்டு, கீழைநாட்டுச் சிந்தனையின்படி அறிவு என்பது தனியாளின் ஆத்மீக, ஒழுக்க, அறிவுசார் வளர்ச்சியே அறிவின் பணி; அதாவது அறிவு என்பது தனியாளின் வளர்ச்சிக்கு உதவுவது. இது Self Knowledge எனப்படும். இன்று முறையான அறிவானது தனியாளுக்குரிய முக்கிய வளமாகவும் முக்கிய பொருளாதார வளமாகவும் விளங்குகின்றது. இன்று அர்த்தமுள்ள வளமாக விளங்குவது அறிவு மட்டுமே. மரபு வழி வந்த பொருளாதார வளங் களான நிலம், உழைப்பு, மூலதனம் என்பன இன்னும் மறைந்துவிட வில்லை. ஆனால் அவை இரண்டாந்தர வளங்களாகி விட்டன. அறிவைப் படைத்திருந்தால் இவ்வளங்களை இலகுவாகப் பெற்றுக் கொள்ளலாம். இப்புதிய கருத்தில் அறிவானது பயன்பாடுமிக்கது: பொருளாதார, சமூகப் பெறுபேறுகளையும் விளைவுகளையும் ஏற்படுத்துவது ஒரு பொருளாதார காரணியாக அறிவு எவ்வாறு தொழிற்படுகின்றது என்பது பற்றி நாம் சரியாக அறிய முடியவில்லை. இதனை விளக்கும் புதிய கொள்கையொன்று (Theory) தேவைப்படு கின்றது. அறிவுள்ளது பொருளாதார ரீதியாக எவ்வாறு செயற்படு கின்றது என்பது பற்றிய ஆய்வுகள் தற்போது வெளிவரத் தொடங்கி
யுள்ளன.
கல்வியும் மனிதவள விருத்தியும் 37

Page 21
1.
அறிவில் மூன்று வகைகள் உண்டு :
பொருள், செய்முறை, சேவைகள் என்பவற்றைத் தொடர்ச்சியாக முன்னேற்றுதல்; இதனைச் செம்மையாகச் செய்பவர்கள் ஜப்பானியர்கள். அவர்கள் இதனைக் Kaizen எனக் குறிப்பிடுவர். தொடர்ச்சியான பயன்பாடு; புதிய பொருட்களையும் சேவை களையும் செய்முறைகளையும் உருவாக்குதல் (Exploitation of Knowledge). புத்தாக்கப் பணிக்கு (Innovation) உதவுவது அறிவை மலிவாகப் பெற்றுக்கொள்ள முடியாது. அறிவை உருவாக்கிப் பரப்பும் பணியில் ஈடுபட்டுள்ள வளர்ச்சியடைந்துள்ள நாடுகள் தமது மொ.தே. உற்பத்தியில் (GNP) 20 சதவீதத்தை இப்பணிக்குச் செலவிடுகின்றன. - பாடசாலைக் கல்விக்கு GNPயில் 10 சதவீதம்; - தொழில் நிறுவனங்கள் தமது ஊழியர்களின் தொடர்
கல்விக்குச் செலவழிப்பது GNPயின் 5 சதவீதம் - ஆராய்ச்சிக்கும் அபிவிருத்திக்குமான செலவு (புதிய அறிவை
உருவாக்கச் செய்யப்படும் செலவு 3 - 5 சதவீதம்
ஜப்பான் நாட்டின் கல்வித் துறைச் செலவு பின்வருமாறு அமைகின்றது. - பாடசாலைக் கல்விச் செலவு GNPயில் 10.7 சதவீதம். - வளர்ந்தோருக்கான கல்வி ஏற்பாடுகளுக்கான GNP யில் 5.3
சதவீதம்.
ஒரு நவீன தொழில் நிறுவனம் பல்துறைப் பொறியியலாளர், உளவிய லாளர், புள்ளியியலாளர், திட்டமிடுவோர், கணக்கியல் நிபுணர், மனிதவள நிபுணர் என்று பலதரப்பட்ட 20 000 கற்றோரை வேலைக் கமர்த்தமுடியும்.
நவீன நிறுவனங்களைக் கொண்ட புதிய சமூகத்தில் அறிவே பிரதான வளமாகவும் சமூகத்தின் உண்மையான செல்வமாகவும் விளங்கு பூகின்றது.
- Peter Drucker, Post - Capitalist Society, Butterworth - Heinemann Ltd, 1993
38
கல்வியும் மனிதவள விருத்தியும்

அவையாவன :
0 பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டால் அவை பிற நிறுவனங்களுடன் போட்டியிடவேண்டும். இதனால் அவற்றின் வினைத்திறன் அதிகரிக்கும். D வேலைவாய்ப்புக்களை வழங்குவதில் அரசாங்கத்திற்குரிய
பொறுப்பு தனியார்துறைமுகாமையாளரிடம் ஒப்புவிக்கப்படும்.
0 தனியார் நிறுவனங்கள் முழுநேர வேலையை வழங்காது ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை அமர்த்த முடியும். சுயதொழில் புரியும் சிறு நிறுவனங்களையும் கொண்டு துணை ஒப்பந்த முறையில் தமது பணிகளைச் செய்து கொள்ளலாம். முன்னர் அரசாங்கத்துறை முழுநேர ஊழியர்களை அமர்த்தி ஏராளமான நன்மைகளை அவர்களுக்கு வழங்கி வந்தது.
இப்போக்குகள் உண்மையில் மேலைநாட்டு பொருளாதார முறை களுக்கு மட்டும் உரியனவன்று. உலகமயமாக்கச் செயற்பாடுகளில் வளர்முக நாடுகளின் பொருளாதாரங்களும் இணைக்கப்பட்டு வருவதால் அவையும் இப்போக்குகளின் செயற்பாட்டுக்கு உட்பட்டு வருவதைக் காணமுடிகின்றது.
மனித ஆற்றலின் நிலைமாற்றங்கள்
அபிவிருத்தியடைந்த நாடுகளின் மேற்கூறிய பொருளாதாரமுறையின் புதிய நோக்குகளுக்கேற்ப அந்நாடுகள் மனிதவள விருத்தியில் அக்கறை செலுத்த வேண்டியுள்ளது. வெவ்வேறு வகையான பொருளாதார முறைகள், வெவ்வேறு வகையான மனிதவளங்களை வேண்டி நிற்கின்றன. விவசாயப் பொருளாதார முறையில் விவசாயிகள் தமது குடும்பச் சூழலில் விவசாயத் திறன்களைப் பயின்றனர். சுதந்திரமான விவசாயிகளும் கைவினைத் தொழிலாளர்களும் தமது பணிகளைத் தாமே ஒழுங்கு செய்து கொள்கின்றனர். திறன்கள் பரம்பரையாகவும் கையளிக்கப்படுகின்றன. கைத்தொழில் பொருளாதார முறைகளில் உயர்தரமான எழுத்தறிவு, எண்ணறிவு, தொடர்பாடல், உயர்தரப் பகுத் தறிவுச் சிந்தனை போன்ற உயர் தகைமைகள் தேவைப்படுகின்றன. காலப்போக்கில் உயர்தரமான ஆக்கத்திறனும் தேவைப்படுகின்றது. சிறிய குழுக்களின்சுமூகமாகப் பணிபுரியும் ஆற்றல், நெகிழ்ச்சியுடைய திறன்கள், தகைமைகள் என்பனவும் இப்பொருளாதார முறைகள் சிறப்பாக இயங்கத் தேவைப்படுகின்றன.
கல்வியும் மனிதவள விருத்தியும் 39

Page 22
இன்றைய ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதாரமுறை தகவல் - மையப் பொருளாதாரம் எனப்படுகின்றது. எனவே அதற்கேற்ப புதுவகையான மனித வளம் தேவைப்படுகின்றது. முன்னைய பெரிய அளவிலான கைத்தொழிலில் பொருளாதாரத்தை நிர்வகிக்க20வீதமான ஊழியர்களுக்கு உயர்தகைமை தேவைப்பட்டது. அவர்கள் 80 வீதமான பிற ஊழியர்களை மேற்பார்வை செய்து கட்டுப்படுத்தினர். ஆனால் புதிய தகவல் - மையப் பொருளாதார முறையை இயக்கச் சகல ஊழியர் களும் சுயமாக இயங்க வேண்டியுள்ளது. அவர்கள் தமது பணிகளை தாமே நிர்வகித்துக் கொள்ளவேண்டும். சுயமாக இயங்கும் குழுக்களில் இணைந்து பணியாற்ற வேண்டும்.
இவ்வியல்புகளைப் பெற யாவருமே உயர்தரமான கல்வியைப் பெறவேண்டியுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் மனிதவள விருத்தி யானது இவ்வம்சங்களைக் கருத்திற் கொள்ளவேண்டியுள்ளது. அந்நாட்டின் பொருளாதாரம் பிறநாடுகளுடன் போட்டியிட வேண்டு மாயின் நெகிழ்வான திறன்களையும் பகுப்பாய்வுத் (analytical) திறன்களையும் கொண்ட ஊழியர்கள் தேவைப்படுகின்றனர். சிறந்த மொழியாற்றல், பகுப்பாய்வு தொடர்பான ஆற்றல்கள் என்பவற்றைக் கொண்ட ஊழியர்களைப் பயன்படுத்தியே புதிய தொழில்நுட்ப வேலைத்தளங்களை இயக்க வேண்டியுள்ளது.
ஐக்கிய இராச்சிய ஆய்வாளர்கள் அந்நாட்டுப் பொருளாதார முறைக்குத் தேவையான சில திறன்களையும் சில புதிய இயல்பு களையும் இனங்கண்டுள்ளனர்.
அவையாவன:
0 நெகிழ்ச்சியான பல்வகைத்திறன்களைக் கொண்ட ஊழியர்கள்
(Multi Skilled Workers);
0 சுயமாகவும் நம்பிக்கையுடனும் சேவைத்துறையில் பணிபுரியக்
கூடியவர்கள்;
0 வேலைத்தளத்தில் தொடர்ச்சியான பயிற்சி வழங்கப்படல்;
0 அறிவாற்றல் மிக்க ஏராளமான ஊழியர்கள்;
0 தொழில்நுட்ப மாற்றம் ஏற்படுவதால் தொழிற்சந்தையின் தேவை களில் நிச்சயமற்ற தன்மை, புதிய தொழில்நுட்பங்களின் அறிமுகம் என்பவை காரணமாக புதுவகையான திறன்கள் தேவைப்படல்.
gO கல்வியும் மனிதவள விருத்தியும்

தகவல்களைக் கையாளும் திறன் மற்றும் பல்வகைப்பட்ட திறன் களைக் கொண்ட ஊழியர்கள், நெகிழ்வுத்தன்மை வாய்ந்த வல்லுனர் கள், சமூகத்திறன்களையும் குழுவில் பணியாற்றும் உளப் பாங்கு களையும் கொண்ட ஊழியர்கள் போன்றோர் தேவைப்படுகின்றனர்.
அபிவிருத்தியடைந்த நாடுகளின் பொருளாதார முறைகள் மிக உடனடியாக இத்தகையோரை வழங்குமாறு கல்விமுறைகளை நிர்ப்பந்திக்கின்றன. மரபுவழிக் கல்விமுறை வழங்குகின்ற திறன் களுக்கும் பொருளாதார முறைகளுக்குத் தேவைப்படுகின்ற திறன் களுக்குமிடையே இடைவெளி காணப்படுவதனாலேயே இந்நிர்ப் பந்தம் ஏற்படுகின்றது. புதிதாக ஏற்படும் வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள புதிய திறன்களுடன் அதிக அளவான பாடசாலைக் கல்வியும் தேவைப்படுகின்றது. உதாரணமாக, கனடா நாட்டில் உருவாகும் புதிய வேலைவாய்ப்புக்களில் 70 வீதமானவை 12 ஆண்டு களுக்கு அதிகமான பாடசாலைக்கல்வியை வேண்டுகின்றன. அவற்றில் 50 வீதமான வேலைவாய்ப்புக்கள் 17ஆண்டுக்கல்வியை வலியுறுத்துவ தாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், பாடசாலைகள் வழங்கும் விசேட தொழிற்பயிற்சியைப் பொறுத்தவரையில் தொழில் வழங்கு வோர் குறிப்பான தொழிற்பயிற்சியை அதிகம் விரும்புவதில்லை.
கல்வியும் மனிதவள விருத்தியும் 4.

Page 23
அத்தியாயம் - 3
வளர்முக நாடுகளின் கல்விமுறையும் மனிதவள நெருக்கழயும்
ஐரோப்பிய குடியேற்ற ஆட்சியாளர்களிடமிருந்து சுதந்திரம் பெற்ற ஆசிய, ஆபிரிக்க நாடுகள் ஆரம்பத்தில் தேசிய அபிவிருத்திக்கு கல்வியின் அவசியத்தை உணர்ந்தமையால் கல்விக்கான சமூகத்தேவை அதிகரித்தது. அதன் காரணமாக ஏற்பட்ட நிர்ப்பந்தங்களாலும் பாடசாலைக் கல்வியை விரிவு செய்யும் கொள்கையை முன்வைத்து அந்நாடுகள் செயற்பட்டன. இலவசக்கல்வி, புலமைப்பரிசில் திட்டம், தாய்மொழியில் கல்விப்போதனை, தனியார் பாடசாலைகள் மீதான அரசின் கட்டுப்பாடு, கிராமப்புறங்களில் இடைநிலைப் பாடசாலை கள், இலவச பாடநூல், இலவச சீருடைத் திட்டங்கள் போன்ற புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நடைமுறையிலிருந்த பாடசாலைக்கல்வியை பரந்துவாழும் பின்தங்கிய மக்கள் பயனடையும் வண்ணம் விரிவுசெய்து கல்வியில் சமவாய்ப்புக்கள் வழங்குவதே முக்கியகொள்கையாக இருந்தது. இந்த நடவடிக்கைகளின் விளைவாக, எழுத்தறிவு வீதமும்; பாடசாலை மாணவர் சேர்வு வீதமும் மட்டுமன்றி அரசாங்கங்களின் கல்விச் செலவுகளும் அதிகரித்தன.
1970களில் இக்கல்வி விரிவின்தாக்கம் நன்கு உணரப்பட்டது. முக்கிய மாக கற்றோர் வேலையின்மை என்ற புதிய பிரச்சினையும் அதன் நேரடி விளைவாக இளைஞர் அமைதியின்மையும் அரசியல் ஸ்திரமின்மை யும் முக்கிய பிரச்சினையாயின. பொருளாதார அபிவிருத்திக்கு தேவையான பொருத்தமான பயிற்சிகளையும் பெற்ற மனிதவளத்தின்
42 கல்வியும் மனிதவள விருத்தியும்

பற்றாக்குறையும், நூற்கல்வி பயின்ற, வேலையில் அமர்த்தப் படமுடியாத, கல்வித்தேர்ச்சியுடைய இளைஞர்களின் மிகையான தொகையையும் கல்விமுறை பற்றிய புதியசிந்தனைகளுக்கு வழிவகுத் தன. பாடசாலை மற்றும் பல்கலைக்கழகக் கல்வியின் பாட ஏற்பாட்டின் பொருத்தப்பாடின்மை, செயல்முறைக் கல்வியின் பற்றாக்குறை போன்ற அம்சங்கள் முக்கிய குறைபாடுகளாக இனங்காணப்பட்டன. பாட ஏற்பாட்டைத் தேசிய அபிவிருத்தித் தேவைகளுடன் இணைந்து எவ்வித மாற்றங்களையும் செய்யாது மரபுவழியாக பொதுக்கல்வி, நூற்கல்விப்பாட ஏற்பாட்டைக் கொண்ட பாடசாலைக் கல்வி எதுவித சித்தாந்த அடிப்படையுமின்றிப் பரந்த அளவில் விரிவு செய்யப் பட்டமை பெரிதும் கண்டிக்கப்பட்டது. முறைசார்ந்த கல்வி என்றாலே நூற்கல்வி, பொதுப்பரீட்சைகள், கல்வித்தகுதிகள், கண்ணியமான அரசாங்கத் தொழில்கள் என்ற நிலைமை சமூகத்தில் நன்கு வேரூன்றி விட்டமையால், பாடசாலைக் கல்வியில் தொழில்சார் அம்சத்தை இலகுவாக அறிமுகம் செய்துகொள்ள முடியவில்லை. இடைநிலைப் பள்ளிநிலையில் வேலை அனுபவம், தொழில் முன்னிலைப்பாடம் என்ற பெயர்களில் இத்தொழில்சார் அம்சம் அறிமுகம் செய்யப் பட்டாலும் காலத்தால் முதிர்ந்துவிட்ட நூற்கல்விப் பாரம்பரியத்தின் ஆதிக்கத்தை முறியடிக்க முடியவில்லை. தொழில்சார்பாட ஏற்பாட்டை உருவாக்குதல், அதற்கான ஆசிரியர் பயிற்சி, நிதி ஒதுக்கீடு, பொதுப் பரீட்சை முறையுடன் அதனை இணைத்தல் போன்ற விடயங்களில் பிரச்சினைகள் எழுந்தன. நூற்கல்விக் கலாசாரத்தில் வேரூன்றிவிட்ட பாடசாலை முறையை உடனடியாக புதிய தொழில்சார் கல்விச் சிந்தனையுடன் ஒன்றிப்பது இலகுவானதாக இருக்கவில்லை. 1960களிலும் 1970களிலும் மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சிகள் உண்மையில் மனிதவள விருத்தி பற்றிய புதிய சிந்தனைகளை அடியொற்றியும் அமைந்திருக்கவில்லை.
மனிதவள விருத்தியை மேம்படுத்தும் நோக்குடையதாகக் கல்வியின் மீதான முதலீடு அமைதல் வேண்டும். மக்கள் தொகையின் தராதரங் களை உயர்த்துவதற்கு அம்முதலீடு பயன்படல் வேண்டும் என்ற சிந்தனையின் அடிப்படையில் கல்விமுறையையும், கல்விக்கான நிதி ஒதுக்கீட்டையும் மாற்றியமைக்கும் முயற்சி, வளர்முகநாடுகளைப் பொறுத்தவரையில் சர்வதேச நிறுவனங்களின் ஒத்துழைப்புடனேயே ஆரம்பித்தது. உலகவங்கி இதில் முக்கிய பங்குகொண்டது. 1960களிலும் 1970களிலும் உலக வங்கி கல்வி வளர்ச்சிக்காக நிதி உதவிகளை
கல்வியும் மனிதவள விருத்தியும் 43

Page 24
வழங்கியபோது 'மனிதவள விருத்தி என்ற சொல் பயன்படுத்தப்பட வில்லை. ஆயினும் அக்காலத்தில் உலகவங்கி கிராமப்புற வறியவர் களின்கல்வி வசதிகளிலும் சுகாதார வசதிகளிலும் அக்கறை செலுத்தியது.
தேசிய அபிவிருத்தியுடன் வருமான மறுபங்கீடும் அக்காலத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்தது. வறியவர்களின் கல்வி வசதிகளை அதிகரிக்கும் கொள்கை அபிவிருத்திக்கு சமவாய்ப்புக்களை வழங்கு வதற்கும் உகந்ததாகவே அமையும் என உலக வங்கி கருதியமையால் அதற்கேற்ப நிதி உதவிகளும் தீர்மானிக்கப்பட்டன. ஆயினும் 1980களில் கல்வி வாய்ப்புக்களைச்சமப்படுத்தும் நோக்கு படிப்படியாக மறையத் தொடங்கியது. கல்விமுறையை சமவாய்ப்புக்களை நோக்கி விரிவு படுத்தும் (Equity) நோக்கினை நிறைவுசெய்யும் சீர்திருத்தங்களுக்குப் பதிலாகக் கல்விமுறையின் செயற்திறனை (Efficiency) அதிகரிக்கும் நோக்குக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. கட்டடங்கள் மற்றும் பெளதீக சாதனங்களை (Physical Capital) விடுத்து நேரடியாக மக்களின் கல்வித்தேர்ச்சியில் முதலீடு செய்யும் கொள்கைக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டது. உலக வங்கி பொருளாதார காரணங்களைக் கூறி
இத்தகைய கொள்கை சரியானது என வாதிட்டது.
உலக வங்கியின் கல்வி பற்றிய கொள்கை ஆய்வுகளில் மனிதவள விருத்திச் சிந்தனையின் செல்வாக்கு 1980களில் படியத்தொடங்கிற்று. கல்வித்தகுதிகளையுடையோரின் தற்போதைய வருமானங்களும் வாழ்க்கைக் காலங்கள் முழுவதற்குமான வருமானங்கள் பற்றிய மதிப்பீடுகளும் தொடர்ச்சியாக அதிகமாக இருந்தமையால் உலக வங்கியின் புதிய கல்வி முதலீட்டுக் கொள்கைக்குப் போதிய ஆய்வுச் சான்றாதாரம் கிடைத்தது. தேசிய அளவில் கல்வியின் மீதான முதலீடுகள் தேசிய உற்பத்திக் கணக்குகளில் ஏற்படுத்தியிருந்த ஒட்டுமொத்த விளைவுகளும் கருத்திற் கொள்ளப்பட்டன.
1950 ஆம் ஆண்டு தொடக்கம் வளர்முக நாடுகளிலும் அபிவிருத்தி அடைந்த நாடுகளிலும் ஏற்பட்ட உற்பத்தி அதிகரிப்பில் ஊழியர் படை யின் கல்வித்தேர்ச்சியின் தெளிவான பங்களிப்புப் பற்றிய Psacharopoulos - Woodall ,,G) Gulu Tifaðir guiu Gļ5G5 lb (1985) ..GDJ5 வங்கியின் நோக்கில், கல்வியானது முக்கியத்துவம் பெறக்காரண மாயின. உலக வங்கியின் நோக்கில், கல்வியானது எதிர்கால உற்பத்திப்
பெருக்கத்துக்கான முதலீடு, சமூகமும் கல்வியை நாடும் தனியாட்களும்
44 கல்வியும் மனிதவள விருத்தியும்

இம்முதலீட்டினால் நன்மை பெறுவர். இம்முதலீட்டின் விளைவு களையும், நன்மைகளையும் முழுவாழ்க்கைக் காலத்தில் பெறப்படும் வருமானங்களைக் கொண்டு மதிப்பிட முடியும். அறிவும் திறனும் கல்வியின் விளைவாக ஏற்படுவது; ஊழியர்களின் உற்பத்தித்திறனை அவர்களுடைய ஊக்கம், முயற்சி, கடுமையாக உழைக்கும் பழக்க வழக்கம் என்பனவும் நிர்ணயிக்கும். மேலும் சிறந்த உடல்நலம், சிறந்த முகாமைத்துவம் ஆகிய காரணிகளும் பொருளுற்பத்தியை மேம்படுத்த உதவும். மனிதவள விருத்திச் சிந்தனையின் இவ்வம்சங்களை உலக வங்கி தனது கல்விக்கொள்கையை வகுப்பதில் நன்கு பயன்படுத்திக் கொண்டது. வளர்முக நாடுகளின் அண்மைக்காலக் கல்வி வளர்ச்சி பற்றிய ஆய்வுகளும் கொள்கைகளும் உலக வங்கியின் கல்விச் சித்தாந்தங்களைத் தவிர்க்கமுடியாதநிலை இன்று எழுந்துள்ளது.
இந்நாடுகள் எதிர்நோக்கியுள்ள பொதுவான முக்கிய கல்விப் பிரச்சினை கல்வி முறையைப் பேணிவளர்ப்பதற்கான நிதியைப் பொறுத்ததாகும். இந்நாடுகள் நாடுகின்ற வெளி உதவிகள் கல்வித் துறையைப் பொறுத்தவரை உலக வங்கியிடமிருந்தே வருகின்றன. 1985 இல் உலகவங்கி வழங்கிய மொத்தக்கடன்களில் 4% கல்வித்துறைக்கென ஒதுக்கப்பட்டது. 1995 ஆம் ஆண்டளவில் இவ்வீதம் 10 ஆக உயர்ந் துள்ளது. அத்துடன் வளர்முக நாடுகள் கல்வித்துறைக்கெனப் பெறும் வெளிநாட்டு உதவிகளில் உலக வங்கியின் பங்கு 25 வீதமாக உயர்ந் துள்ளது. உலகவங்கி இன்று ஆண்டுக்கு 200 கோடி டொலர்களை வளர்முக நாடுகளின் கல்வித்துறைக்கு வழங்கிவருகின்றது. இந்தியா, பெரும்பாலான இலத்தீன் அமெரிக்க நாடுகள், ஐரோப்பாவிலும் மத்திய ஆசியாவிலும் காணப்படும் முன்னைய சோசலிச நாடுகள் போன்றன, அதிகளவில் உலக வங்கியின் நிதி உதவியைப் பெற்று வருகின்றன.
உலகவங்கியும் ஒரு வணிக வங்கி போன்றே செயற்பட வேண்டி யுள்ளது. வளர்முக நாடுகளுக்கு இலகுவான நிபந்தனைகளின் அடிப்படையில் அவ்வங்கி கல்வித்துறை மேம்பாட்டுக்கு கடன்வசதி களையும் மானியங்களையும் வழங்கிவருகின்றது. உலக வங்கியும் சர்வதேச நிதிச்சந்தையில் கடன்களைத் திரட்டுவதால் வங்கிக் கலாசாரத்தை இறுக்கமாகப் பின்பற்ற வேண்டியுள்ளது. எனவே கடன்களை வழங்கும் போது அதிலுள்ள ஆபத்துக்களையும் நன்மை களையும் கருத்திற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே செலவு நன்மை
கல்வியும் மனிதவள விருத்தியும் 45

Page 25
(Cost - Benefit) ரீதியில் சரியான ஆதாரங்களை ஆராய்ந்த பின்னரே உலகவங்கிகடன்களை வழங்குகின்றது. கிடைக்கக்கூடிய நன்மைகளை பணப்பெறுமானத்துக்கு மாற்றியதும் அது திருப்திகரமாக இல்லை யாயின் செலவு - நன்மை ஆய்வு விளக்கங்களை உலகவங்கி நாடு கின்றது. இவ்வாறு இயங்கும் போது கல்வித்துறைக்கான கடன்களைப் பொறுத்தவரையில் உலகவங்கி பொருளாதாரப் பெறுமானமுடைய மனிதவள விருத்திச் சிந்தனை, விளைவு வீத அணுகுமுறை என்பவற்றைக் கைக்கொள்வது அதன் நிறுவன கலாசாரத்துக்கும் செயற்பாடுகளுக்கும் பொருத்தமானதாகவே உள்ளது.
மேலும் உலகவங்கியின் நிறுவன கலாசாரம் புதுப்பழம் (Neo-Classical) பொருளியல் சிந்தனையாளர்களின் செல்வாக்கிற்குட்பட்டுள்ளது. இச்சிந்தனையின்படி மனிதன் பகுத்தறிவுடன் செயற்படுபவன். தகவல்களின் அடிப்படையில் தீர்மானங்களைச் செய்ய விரும்புபவன்; செலவுகளையும் நன்மைகளையும் ஒப்பிட்டு ஆராய்பவன்; ஆழ்ந்து சிந்தித்தே முன்னுரிமைகளைத் தீர்மானிப்பவன், இச்சிந்தனையைப் பயன்படுத்திக் கல்விச் செயற்பாட்டை நோக்குமிடத்து தகவல் மற்றும் அறிவுசார் அம்சத்துக்கு முக்கியத்துவமளிப்பதாக அமையும் கல்வி முறை கூடிய பொருத்தமுடையதாகின்றது. இவ்விடத்து அழகியற் கல்வி, ஒழுக்கக்கல்வி என்பன அதிக முக்கியத்துவம் பெறுவதில்லை. இச்சிந்தனையானது ஆரம்பப் பாடசாலைக் கல்வி நிலையில் பகுத்தறி வுடைய மனிதனுக்குப் பொருந்தும் வகையில் மொழி, கணிதம், விஞ்ஞானம், தொடர்பாடல் போன்ற பாடநெறிகளை வலியுறுத்தும் உலகவங்கியின் சித்தாந்தத்துக்கு வழிவகுத்தது.
பொருளியலாளர்கள் கல்வித்துறையில் சமவாய்ப்புக்களின் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொண்ட போதிலும் அருமையாகக் காணப்படும் வளங்களைக் கொண்டு எவ்வாறு கல்விமுறையின் செயற்திறனை மேம்படுத்தலாம் என்னும் கேள்விக்கே விடைகாண முற்பட்டனர். அவர்களுடைய சிந்தனையின்படி செயற்திறன் வாய்ந்த கல்விமுறை என்பது பொருளுற்பத்திக்குப் பயன்படக்கூடிய அறிவை யும் திறன்களையும் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய கல்விமுறையே ஆகும். எனவே கல்விமுறையைப் பொறுத்தவரையில் பொருளுற்பத் திக்குச் சார்பான பொருளியல் மாதிரி பயன்படுத்தப்படுகின்றது (Production-Function model). கல்வித்துறைச் செலவுகளையும் நன்மைதரும், விளைவுகளையும் ஒப்பிடும் வகையில் 'செலவு- நன்மை மாதிரியும்’
46 கல்வியும் மனிதவள விருத்தியும்

பயன்படுத்தப்டும். செலவுகள், உள்ளீடு, வெளியீடுகளாக மாற்றப் பயன்படுத்தப்படும் கற்றல், கற்பித்தல் செய்முறைகள் (Processes) என்பவற்றில் எதுவித அக்கறையும் செலுத்தப்படுவதில்லை.
இத்தகைய பொருளியற் பாங்குகளையும் சிந்தனைகளையும் மாதிரிகளையும் கொண்டு செயலாற்ற விரும்பும் உலகவங்கி, வளர்முக நாடுகளுக்குக் கல்வித்துறையில் உதவி செய்யும் போது விளைவுவீத அணுகுமுறையைப் (Rate of Return) பயன்படுத்துவதில் எதுவித ஆச்சரியமுமில்லை. உலக வங்கியின் அண்மைக்கால கல்வி பற்றிய அறிக்கைகள் விளைவுவீத பகுப்பாய்வு முறையில் அதிக நம்பிக்கை கொண்டுள்ளதை அறிய முடிகின்றது. அதன் கல்விச் சீர்திருத்த அடிப் படைக்கான நியாயமாக முன்வைக்கப்படுவது விளைவுவீத அணுகு முறையேயாகும். எடுத்துக்காட்டாக, ஆரம்பக்கல்வியின் மீதான முதலீட்டின் விளைவு வீதம் சாதகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவித் தமையால் உலக வங்கி ஆரம்பக்கல்வியை வலுப்படுத்தி விரிவுசெய்யும் வகையில் ஆலோசனை வழங்கி வந்துள்ளது. இவ்வாய்வுகளின் படி இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்பவற்றின் விளைவு வீதம் ஆரம்பக் கல்வியின் விளைவு வீதத்தைவிடக் குறைவாக இருந்தது.
1950-1975 காலப்பகுதியில் உலகளாவிய ரீதியில் தொழில்சார் கல்வியானது தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வந்தது பற்றி Benavot என்பவரின் ஆய்வுகள் (1983) தெரிவித்தன. அக்காலப்பகுதியில் பாட ஏற்பாட்டு மாற்றங்களுக்குப் பதிலாக கல்வியில் சமவாய்ப்புக்களை நிலைநாட்டும் முயற்சிகளுக்கே முக்கிய இடம் வழங்கப்பட்டது. மேலும் Psacharopoulosஇன் ஆய்வுகள் (1985) தொழில்சார்கல்விக்கான விளைவு வீதங்கள் (12%) பொதுக்கல்விக்கான விளைவு வீதங்களை (16%) விடக் குறைவாக இருந்ததை எடுத்துக்காட்டின. 21ஆய்வுகளை ஆராய்ந்த ஒரு உலக வங்கியின் அறிக்கையானது பொதுக்கல்வியானது தொழிற்கல்வியைவிட செலவு குறைந்தது என்றும் தேவையான தொழில்நுட்பத்திறன்களை வழங்கத் தொழில்சார்கல்வி சிக்கனமான வழிமுறையாகக் (Cost effective) கருதமுடியாது என்றும் தெரிவித்தது. தொழில் நிறுவனங்கள் நடத்தும் குறுங்காலப் பயிற்சித் திட்டங்கள் இதற்கான சிறந்த மாற்று ஏற்பாடு எனவும் இவ்வறிக்கையில் கூறப் பட்டது.
இவ்வாய்வுகளின் அடிப்படையிலும் பின்தங்கிய பிரிவினரின் கல்வி உரிமைகளையும் சமூக நீதியை நிலைநாட்டவும் உலக வங்கி ஆரம்பக்
கல்வியும் மனிதவள விருத்தியும் 17

Page 26
கல்வியிலும் கீழ் இடைநிலைக்கல்வியிலும் அக்கறை செலுத்தியது. இப்பாடசாலை நிலைகளில் மொழி, கணிதம், விஞ்ஞானம் தொடர் பாடற் திறன்கள் முதலிய பாடங்கள் முக்கியத்துவம் பெறல் வேண்டும் என்பது உலக வங்கியின் நிலைப்பாடாக உள்ளது.
தொழிற்கல்வி
ஆரம்பத்தில் உலக வங்கி பாடசாலைக்கல்வியில் தொழிற்சார்புப் பாடங்களையும் தொழில்நுட்பத் திறன்களையும் வலியுறுத்தி வந்த போதிலும் 1990களில் தொழிற்கல்விக்கான அலகுச் செலவுகள் அதிகம் என்பதைக் கண்டறிந்தவிடத்து அதன்நிலைப்பாடு தொழிற் பாடசாலை களுக்கு எதிராகத் திரும்பியது. பாடசாலை மட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்ட விசேட தொழிற்பயிற்சி நெறிகள் தோல்வியுற்றதாக உலகவங்கி அறிவித்தது. குறிப்பாக அரசாங்கப் பாடசாலைகளில் தொழிற்கல்வி இடம்பெறுவது தற்போது விருப்பப்படுவதில்லை. பாடசாலைகளில் பொதுக்கல்வியே வழங்கப்படல் வேண்டும் என்பதும் உடல் உழைப்புத்திறன்களுக்கு முக்கியத்துவம் அளிக்காது பரந்த அளவிலான தொழில்நுட்பக்கல்வி வழங்கப்படலாம் என்பதும் உலகவங்கியின்கருத்தாக உள்ளது. சில நாடுகளில் பொது இடைநிலைக் கல்வியைவிட விசேட தொழில்சார் கல்வியின் விளைவு வீதம் அதிக மாக உள்ளதாக உலகவங்கி ஏற்றுக்கொண்டது. எவ்வாறாயினும் தொழிற்கல்வி பற்றிய உலக வங்கியின் சிந்தனையில் பல முரண் பாடுகள் இருப்பதையும் காணமுடிகின்றது.
அரசாங்கப் பாடசாலைகளில் தொழிற்கல்விப்பாட ஏற்பாட்டை அறிமுகம் செய்யவிரும்பாத உலகவங்கி பொதுக்கல்வி பெற்றபின் வேலைத்தளங்களில் சிறந்த முறையில் தொழிற்கல்வி வழங்கப் படலாம். என்றும் கூறுகின்றது. தொழிற்கல்விக்கான ஏற்பாடுகள், நிதிவழங்கல், நிர்வாகம் என்பவை தனியார் துறையின் பொறுப்பில் வரவேண்டியதன் அவசியம் பற்றி உலக வங்கியின் அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக பயிற்சிகளைப் பெறவேண்டு மாயின் அதற்கான முக்கிய முன்நிபந்தனை 9-10 ஆண்டுகாலப் பாடசாலைக்கல்வி என்பதை உலகவங்கி ஏற்றுக் கொள்கின்றது. பாடசாலைகளில் இடம்பெறக்கூடிய விசேட தொழில்சார், தொழில் நுட்பப் பயிற்சி நெறிகளுக்கான செலவுகள் அதிகமானவை. திறன் களைப் பயின்றுகொள்ள சிறந்த இடம் அவை நேரடியாகப் பயன்படுத் தப்படும் வேலைத்தளங்களேயாகும். இடைநிலைக் கல்வியில்
48 கல்வியும் மனிதவள விருத்தியும்

குறிப்பிட்ட தொழிலுக்குரிய பயிற்சியை வழங்க வேண்டியதில்லை. அந்நிலையில் அடிப்படை விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பப் பாடங்களைக் கொண்டு செயல்முறைச்சார்பான, பரந்த அளவிலான திறன்களை வழங்கும் பாட ஏற்பாடே பொருத்தமானது. குறிப்பிட்ட தொழில்களுக்கான பயிற்சியையும் திறன்களையும் வழங்குவதில் தொழில் உரிமையாளர்களே முன்னிற்க வேண்டும். தமது தொழில் நிறுவனங்களில் தேவைப்படும் விசேட திறமைகளுக்கேற்ப அவர்கள் தொழிற்பயிற்சியைத் திட்டமிடுவதே பொருத்தமானது. தேவைக்கு அதிகமானவர்கள் தொழிற்பயிற்சி பெறுவதை தடைசெய்யவும் இவ்வழிமுறை உதவும்.
உயர்மட்டங்களில் மனித வளவிருத்தியை ஏற்படுத்தக் கையாளப் பட்ட பிரதான அணுகுமுறை மனிதவலுத் திட்டமிடல் நுட்பங் களாகும். எதிர்காலத்துக்குத் தேவையான பயிற்சியுள்ள ஊழியர்களின் தொகைபற்றிய மதிப்பீடுகளைச் செய்து அத்தேவையை நிறைவு செய்யும் வகையில் குறிப்பிட்ட தொகையானவர்களை கல்வி முறையினூடாகப் பயிற்றுவதை இவ்வணுகுமுறை குறிக்கின்றது. 1960களிலும் 1970களிலும் கல்விமுறைகளைத் திட்டமிடுவதில் பயன்படுத்தப்பட்ட அணுகுமுறை இதுவாகும். குறிப்பிட்ட தொகை யான மருத்துவர்களையும் பொறியியலாளர்களையும் இதர பயிற்சி பெற்ற ஊழியர்களையும் உருவாக்கும் வகையில் கல்வி வாய்ப்புக்களை விரிவுசெய்ய இவ்வணுகுமுறை கையாளப்பட்டது. அக்காலத்தில் கல்வி முறைகளைத் திட்டமிடும் போது, நாட்டு மக்களின்கல்விக்கானசமூகத் தேவையை நிறைவுசெய்வதா? (சமூகத்தேவை அணுகுமுறை) அல்லது பொருளாதார முறைகளின் தேவைகளை நிறைவு செய்வதா? (மனிதவலு அணுகுமுறை) என்னும் விடயத்தில் பல கருத்து வேறுபாடுகள்எழுந்தன. பல வளர்முக நாடுகள் பொருளாதார வளர்ச்சி நிச்சயமாக ஏற்பட்டுவிடும் என்ற நம்பிக்கையுடன் கல்வி வாய்ப்புக் களை அதிகளவில் விரிவு செய்திருந்தன.
1970களின்நடுப்பகுதியில் பெரும்பாலானவளர்முக நாடுகளில் கல்வி முறைகளைத் திட்டமிடப்பயன்படுத்தப்பட்ட மனிதவலு அணுகு முறை தோல்விகண்டுவிட்டமை, கண்டறியப்பட்டது. எதிர்காலத்தில் தேவைப்படக்கூடிய ஊழியர்களின் தொகை பற்றிய மதிப்பீடுகளைச் சரியாகச் செய்துகொள்ள முடியாதிருந்தது. இந்நாடுகளில் ஏற்பட்ட சமூக, தொழில்நுட்ப மாற்றங்கள் காரணமாக எதிர்கால மனிதவலுத்
கல்வியும் மனிதவள விருத்தியும் 49

Page 27
தேவை பற்றிய மதிப்பீடுகள் யாவும் குறைபாடுடையவை எனக் கண்டறியப்பட்டன. நடைமுறையில் அணுகுமுறைத் திட்டமிடலை விட கல்வியின் சமூகத்தேவை அணுகுமுறையே வலுவானதாக அமைந்தது. பயிற்சியுள்ள மனிதவலுவின் தேவையற்ற மதிப்பீடு களைச் செய்வதிலுள்ள சிரமங்கள் ஒருபுறமிருக்க வளர்முக நாடுகளின் அரசாங்கங்கள் மக்கள் மத்தியில் விரும்பிய கல்வி வசதிகளை அரசியல் காரணங்களுக்காக வழங்க வேண்டியதாயிற்று. சோஷலிச நாடுகளில் மட்டுமன்றி ஐந்தாண்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்திய இந்தியாவிலும் இறுதியில் கல்விக்கான சமூக தேவைக்கே மிகமுக்கிய இடமளிக்கப்பட்டது.
மனிதவலு அணுகுமுறையை விடுத்த சமூக தேவை முறைக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் காரணமாகப் பொருளாதார முறையின் மனிதவலுத் தேவைகளுடன் தொடர்பற்ற முறையில் கல்வி வாய்ப்புக் கள் விரிவடைந்தன. இதனால் கல்விமுறைக்கும் பொருளாதாரத்தின் தேவைகளுக்குமிடையில் இணைவின்மை (Mismatch) வளர்ச்சியுற்றது. இதனால் பாடசாலைகளிலும் உயர்கல்வி நிறுவனங்களிலும் நூற்கல்வி பயின்ற பெருந்தொகையானவர்கள் வேலைவாய்ப்புக்களைப் பெறமுடியாத நிலையில் வளர்முக நாடுகள் கற்றோர் வேலையின்மை என்ற புதிய பிரச்சினையை எதிர்நோக்கின. சுருங்கக்கூறின் கல்விக்கான சமூகத்தேவை அணுகுமுறை வளர்முக நாடுகளின் மனிதவளத்தை நன்கு விரிவுபடுத்தியபோதிலும் அதனை உற்பத்தி மேம்பாட்டுக்குப் பயன்படுத்திக்கொள்ளமுடியவில்லை. வளர்முக நாடுகளில் ஏற்பட்ட கல்வியின் விரிவானது எவ்வாறு அந்நாடுகளில் இறுதியில் 'சான்றிதழ் நோய் ஒன்று பரவக் காரணமாயிற்று. என்னும் கருத்து மற்றொரு பகுதியில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
50 கல்வியும் மனிதவள விருத்தியும்

அத்தியாயம் - 4
கல்வி-பொருளாதாரவிருத்தி-மனிதவள விருத்தி பற்றிய மாற்றுக்கருத்துக்கள்
1950 தொடக்கம் கல்விக்கும் பொருளாதார அபிவிருத்திக்கும் இடையிலான தொடர்புபற்றி பல வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வந்துள்ளன. 1950களிலும் 1960களிலும் பொருளாதார வளர்ச்சிக்கு கல்வியின் பங்களிப்பு பற்றி மிகச் சாதகமான கருத்துக்கள் நிலவின. ஆயினும் 1990களில் இப்பங்களிப்புப்பற்றி அவதானமான கருத்துக் களும் நம்பிக்கையின்மையும் வெளியிடப்பட்டன. ஒரு காலத்தில் கல்வி - பொருளாதார வளர்ச்சி பற்றி எளிமையான காரண-காரியத் தொடர்பின் அடிப்படையில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் 1990களில் இத்தொடர்புகளின் சிக்கலானதன்மை பற்றியனவாக மாற்றமுற்றன.
சில நவீன பொருளியலாளர்கள் கல்விக்கும் அபிவிருத்திக்கும் இடையிலுள்ள தொடர்பானது முன்னையகால பொருளியலாளர்கள் கூறியது போன்று அத்துணை நேரடியானதன்று எனக்கருதுகின்றனர். 1960களில் கூம்ப்ஸ் (Coombs - 1968) என்னும் அறிஞர் கல்வி வசதிகளை விரிவுசெய்து கொண்டு செல்லும்போது பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுவிடும் என்று கருதிவிட முடியாது. பொருத்தமில்லாத, பாரிய கல்விமுறைகளைப் பராமரிக்கச் செய்யப்படும் செலவானது பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் சந்தர்ப்பங்களும் உண்டு எனத் தெரிவித்தார். 1985இல் கூம்ப்ஸ் இதே கருத்தைச் சற்று சிக்கலான முறையில் வெளியிட்டாலும் தமது அடிப்படைக் கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை.
கல்வியும் மனிதவள விருத்தியும் 5I

Page 28
1970களில் இறுதியில் வெய்லர்(Weiler-1978) என்ற ஆய்வாளர் பழம் பொருளியலாளர்களும் அவர்களுக்குப்பின் வந்தவர்களும் கல்வி-பொருளாதார வளர்ச்சி பற்றி முன்வைத்த பல கருத்துக்களுடன் முரண்பட்டார். கல்வி வாய்ப்புக்களை விரிவுபடுத்துவதால் தானாக பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுவிடும் என்ற கருத்தை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அவருடைய நோக்கில், கல்விக்கொள்கையை உருவாக்கும்போது மூன்று முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
0 கல்வியின் சம வாய்ப்பும் சமூக நீதியும்
0 கல்விக்கும் உழைப்புக்கும் இடையிலுள்ள தொடர்பு
0 கல்விச் சீர்திருத்தம் தொடர்பான பிரச்சினைகள்
மேலும் அவருடைய நோக்கில், கல்வியின் மீதான முதலீடானது பொருளாதார வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும் என்பது தவறான ஒரு கருத்தாகும்.
கல்வி-பொருளாதார வளர்ச்சி பற்றிய சிந்தனை மீதான கண்டனங்கள் 1980களின் 1990களின் முற்பகுதியிலும் தொடர்ச்சியாக முன்வைக்கப் பட்டன. Blaug - (1985) என்ற அறிஞர் 1970களின் முற்பகுதியிலே கல்விப்பொருளியல் சிந்தனையின் 'பொற்காலம் முடிவடைந்து விட்டது என்றார். கல்விக்கும் அபிவிருத்திக்கும் இடையிலுள்ள தொடர்புகள் பற்றிச் செய்யப்படும் ஆய்வுகள் பொருளாதாரக் காரணி களை மட்டுமன்றி ஏனைய சமூகவியல் மற்றும் நிறுவனப் பாங்கான காரணிகளையும் கருத்திற்கொள்ளல் வேண்டும் என அவர் வலியுறுத் 5ιουτπή,
1960களில் பொருளியல் அறிஞர்களின் கல்விக்கும் பொருளாதார வளர்ச்சிக்குமிடையிலுள்ள தொடர்பினை தொகைரீதியான ஆதாரங் களுடன் நிறுவிய பின்னர் வளர்முக நாடுகளின் கல்வித்திட்டச் செயற்பாடுகளில் பொருளியலாளர்களின் மேலாதிக்கம் நிறைந்து காணப்பட்டது. 'சமூகத்தேவை அணுகுமுறை', 'மனிதவலு அணுகு முறை', 'விளைவு - வீதப்பகுப்பாய்வு போன்றவற்றின் சிறப்பியல்பு களைச் சுற்றியே கல்விமுறை பற்றிய சிந்தனைகள் அமைந்தன. பொருளியலாளர்களின் ஆலோசனைகளைப் பெற்றே உலகநாடுகளின் கல்வி அமைச்சர்கள் செயற்பட்டனர். எனவே தான் இக்காலப்பகுதி 'கல்விப் பொருளியற் பொற்காலம்’ என வர்ணிக்கப்பட்டது.
52 கல்வியும் மனிதவள விருத்தியும்

ஆயினும் 1970களில் கல்விக் கொள்கையை உருவாக்கும் பணியில் பொருளியலாளர்களுக்கு இருந்த செல்வாக்கும் பங்களிப்பும் பெரிதும் வீழ்ச்சியுற்றன. கல்விமுறையில் கல்வி வாய்ப்புக்களை தொகை ரீதியாக விரிவு செய்யும் நோக்கு கைவிடப்பட்டு கல்வியின் பண்பு ரீதியான (Qualitative) சீர்திருத்தங்கள் முக்கியத்துவம் பெற்றன.
பிள்ளைகளின் கல்வியை சமூகச் சுற்றாடலுடன் இணைத்தல், -96) isgiai 560560) LD Gubbu TG) (Competency - Based Development) சுயகற்றல் முறைகளை வளர்க்கும் கற்பித்தல் முறைகள் போன்ற கல்விச் சீர்திருத்தங்கள் முக்கியத்துவம் பெற்றன. பொருளியலாளர்கள் இவை பற்றி ஆலோசனை கூறும் தகுதியற்றவர்களாதலினால் அவர்களின முக்கியத்துவம் குறைய நேரிட்டது. கல்வியாளரும் கல்வி உளவியலா ளரும் முக்கியத்துவம் பெறத்தொடங்கினர்.
இத்தகைய மாற்றத்துக்கான முக்கிய காரணம் 1945 தொடக்கம் ஏற்பட்டுவந்த பாடசாலை மாணவர்தொகை அதிகரிப்பினால் கிடைத்த அனுபவம் எதிர்பார்த்த பொருளாதார நன்மைகளைத் தராமையாகும். கல்வி மாற்றங்களுடன் வருமான மறுபங்கீடு ஏற்படும். பின்தங்கிய பிரிவினர் புதிய தொழில் வாய்ப்புக்களைப் பெறுவர் என்ற முன்னைய எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றம் தந்தன. முதலாம், மூன்றாம் உலக நாடுகளின் கல்வியின் பொருளாதாரப்பயன் பற்றி எழுந்த ஐயங்களை வெளிப்படுத்தும் "சமத்துவமின்மை என்னும் முன்னோடி ஆங்கில நூலொன்றை (inequality) ஜேன்க்ஸ் (Jencks-1972) என்பவர் வெளியிட் டார். மேலும் ‘வாழக்கற்றல் (Learning to be) என்னும் தலைப்பிலான நூல் கல்வி முறையின் செயலிழந்த தன்மை பற்றியதாயும் ஒரு புதிய கல்வி ஏற்பாட்டினை பரிந்துரைப்பதாயும் அமைந்தது. அப்புதிய ஏற்பா டானது மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் பாடசாலைக் கல்வியிலும் வேலையிலும் மாறிமாறி ஈடுபடச்செய்வதாக அமைந்தது.
மேலும் தொடர்ச்சியாக 1950களிலும் 1960களிலும் ஏற்பட்ட கல்வி வாய்ப்புக்களின் விரிவின் காரணமாக உருவாகிய இளைஞர் வேலையின்மைப் பிரச்சினை, மிதமிஞ்சிய கற்றோர் நிலை மற்றும் பணவீக்க நிலைமை காரணமாக 1970களில் கல்விச் செலவைக் குறைக்கும் முயற்சிகளில் அரசாங்கங்கள் ஈடுபட்டன. வாழக்கற்றல் நூலின் புதிய பரிந்துரையின் பேரிலும் அக்கறை செலுத்தப்படவில்லை. இப்பின்னணியில் கல்விச் சீர்திருத்தங்கள், கல்வி முறைகளின் புனரமைப்பு ஆகிய விடயங்களில் பொருளியலாளர்கள் முக்கியத்துவம் குறையத்தொடங்கியது.
கல்வியும் மனிதவள விருத்தியும் 53

Page 29
ஏறத்தாழ 1970களின் இறுதிவளர கல்வி - பொருளாதார வளர்ச்சி என்னும் விடயத்தில் பணியாற்றிய பொருளியல் சிந்தனையாளர்கள் இத்துறை சார்ந்த முதலாந் தலைமுறைப் பொருளியலாளர் எனப் பட்டனர். மேற்கூறிய புதிய சூழ்நிலைகள் காரணமாக கல்விப் பொருளியல்துறை சார்ந்த புதிய இரண்டாம் தலைமுறையினர் தோன்றினர். இவர்கள்முதலாந்தலைமுறையினரிலிருந்து வேறுபட்ட முறையில் தமது பணியை ஆற்றத் தொடங்கினர்.
0 முதலாந்தலைமுறையினர்கல்வியின் தொகை ரீதியான விரிவுக்குப் பயன்படுத்திய சமூகத்தேவை அணுகுமுறையை (Social Demand Approch) இவர்கள் கைக்கொள்ளவில்லை.
0 கல்வி முறைகளைத் திட்டமிட முன்னர் பயன்படுத்தப்பட்ட மனிதவலுத்திட்டமிடல் (Man - Power Forecasting) அணுகுமுறை யையும் புதிய சிந்தனையாளர்கள் கைவிட்டனர். இவ்வணுகுமுறை ஒரிரு ஆண்டுகளுக்கு மட்டுமே திட்டமிட உதவியது. ஏனெனில் இவ்வணுகுமுறையின்படி கணிக்கப்பட்ட எதிர்கால மனிதவலுத் தேவைகளில் ஏராளமான தவறுகள் இருந்தன. மேலும் எதிர்கால நிலைமைகளில் வேலைவாய்ப்புக்கள், கல்வித்தகுதிகள் என்பவற்றுக்கிடையில் உள்ள தொடர்புகள் பற்றிப் பல பிரச்சினை களும் கேள்விகளும் எழுப்பப்பட்டன.
0 விளைவுவீத அணுகுமுறைப் பொறுத்தவரையில் முதலாந் தலைமுறைப் பொருளியலாளர்கூட முழுமனதுடன் அதைக் கையாளவில்லை எனப் ப்ளாக் (Blaug 1985) குறிப்பிட்டார். அரசாங்கங்கள் தமது கல்விக் கொள்கையை உருவாக்கும்போது இவ்வணுகுமுறை பயன்படுத்துவதை அவர்கள் முழுமையாக ஆதரித்ததாகக்கூறமுடியாது.
0 அதிகமானவர்கள் கல்வி பெறும்வகையில் கல்வி வாய்ப்புக்களை விரிவு செய்யும்போது; உயர்கல்வி கற்றோர் அனுபவிக்கும் உயர் வருமானங்கள் குறைந்து செல்ல நேரிடும். இதனால் கல்வி வாய்ப்புக்கள் விரிவடையும்போது வருமானங்கள் சமப்படுமென்று முதலாம் தலைமுறை பொருளியலாளர்கள் நம்பினர். புதிய தலைமுறையினர் இக்கருத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களுடைய நோக்கில், கல்விக்கான நிதியானது எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதைப் பொறுத்து, பாடசாலைக் கல்வியில் ஏற்படும் விரிவு உண்மையில் வருமானச் சமமின்மையை மேலும் அதிகரிக்கச் செய்யும்.
54 கல்வியும் மனிதவள விருத்தியும்

0 ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த பல புதிய, தீவிரவாதப் போக்குடைய பொருளியலாளர்கள், பாடசாலைக்கல்வியின் புதிய தொழில்சார் அம்சங்களையும் அறிவார்ந்த திறன்களையும் போதிக்கும் தொழிற்பாட்டை வலியுறுத்தாது, பாடசாலைக் கல்வியின்சமூகமயமாக்கத் தொழிற்பாட்டிற்கே கூடிய முக்கியத்துவ மளித்தனர்.
1976 giò,6ðITLņGio Samuel Bowles, Herbart Gintis -,6) Gulu Tri 6 TQLpgulu முதலாளித்துவ அமெரிக்காவின் பாடசாலைக்கல்வி (Schoolingin Capitalist America) என்ற நூல் இத்தீவிர நோக்குப் பொருளியலாளர்கள், சமூகவியலாளர்கள் ஆகியோரின் சிந்தனைகளை உள்ளடக்கிய தனிச் சிறப்பு வாய்ந்த நூலாக விளங்கியது. இந்நூலின் மையக்கருத்து முதலாளித்துவப் பொருளாதார முறையில் கல்வியின் பெறுமான மானது முன்னைய பொருளியலறிஞர்களால் மிகையாகவும், தவறாக வும் தீர்மானிக்கப்பட்டது என்பதாகும். முன்னைய பொருளியலறிஞர் கள் இப்பெறுமானத்தைத் தவறாகப் புரிந்து கொண்டனர் என இவ்வறிஞர்கள் எடுத்துக்காட்டினர்.
முன்னைய பொருளியலாளர்கள் தனியாட்களின் வருமானங்களும் பாடசாலைக் கல்விக்கும் இடையில் தொடர்பு இருந்ததாகக் கூறியிருந் தனர். கல்வித் தேர்ச்சியின் காரணமாக ஊழியர்கள் பெற்ற அறிவுத்திறன் களின் அடிப்படையில் இத்தொடர்பினை அவர்கள் விளக்கினர். ஆனால், இந்நூலாசிரியரின் நோக்கில் ஊழியர்கள் திறம்பட வேலை செய்யக் காரணம் அவர்களுடைய அறிவார்ந்த திறன்கள் அன்று. இவற்றுடன் தொடர்புபட்ட ஆளுமைக் கூறுகளே (Non - Cognitive Personality Traits) ஊழியர்களின் இச்செயற்றினை மேம்படுத்த உதவு கின்றன என்பதாகும். ஆயினும் இவ்வாளுமைக் கூறுகள் கல்விமுறை யினால் ஊக்குவிக்கப்படுவதை நூலாசிரியர் ஏற்றுக்கொண்டனர்.
ஊழியர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவக்கூடிய அறிவுத் தேர்ச்சி சாராத திறன்களைப் பின்வருமாறு பகுத்துக் கூறலாம். 0 கீழ்மட்ட வேலைகளில் சேரும் குறைந்த கல்வித் தகுதிகளைக் கொண்ட ஊழியர்களிடம் நேரம் தவறாமை, ஒருமுகப்படுத்தப் பட்ட கவனம், விடாமுயற்சி, கீழ்ப்படிவு, கட்டளைக்குப்பணிதல், பிறருடன் இணைந்து வேலைசெய்யும் ஆற்றல் போன்ற ஆளுமைப் பண்புகள் இருத்தல் வேண்டும்.
கல்வியும் மனிதவள விருத்தியும் 55

Page 30
0 உயர்மட்ட வேலைகளில் சேரும் உயர்கல்வி பயின்றவர்களிடம் தலைமை தாங்கும் ஆற்றல், தற்சார்புத்தன்மை (Self-reliance), சுய மதிப்பு (Self - esteem), பல்வகைத் திறன்கள் (Versality) போன்ற வேறுபட்ட ஆளுமைப்பண்புகள் காணப்படல் வேண்டும்.
சுருங்கக்கூறின் பொருளாதார அபிவிருத்திக்கும் மனிதவள அபிவிருத்
திக்கும் பாடசாலைக் கல்வியின் பாடஏற்பாடு அம்சங்கள் நேரடியாகப் பயன்படும். அதனால், உற்பத்தித்திறன் அதிகரிக்கும் என்ற முதலாம் தலைமுறையினரின் கருத்து மறுக்கப்பட்டு கல்விஅறிவு, பாடஅறிவுத் தேர்ச்சியுடன் தொடர்பற்ற ஆளுமைப்பண்புகளே உற்பத்தித்திறனை அதிகரிக்க அதிகம் பயன்படும் என்ற புதிய கருத்து முன்வைக்கப் பட்டது. மார்க்சிய தத்துவத்தின் அடிப்படையில் கல்விக்கும் பொருளா தார வளர்ச்சிக்கும் உள்ள தொடர்புபற்றியும் மனிதவள விருத்திக்கும் கல்வியின் பங்களிப்புப் பற்றியும் ஆராய்ந்தவர்கள் முதலாளித்துவ நாடுகளில் இவை தொடர்பாக நடந்த ஆய்வுகளின் முடிவுகளை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் கல்விமுறையானது இவ்வகையில் சாதகமான முறையில் தொழிற்படுவதில்லை என்றும் இதற்குமாறாகக் கல்விமுறையானது, முதலாளித்துவ அமைப்பில் காணப்படும் சமூக வர்க்க வேறுபாடுகள் தொடர்ந்து நிலைபெறச் செய்யும் வகையிலே தொழிற்படுவதாகவும் முறையிட்டனர். கல்வியின் இத்தகைய விளைவு கள் பொருளாதார வளர்ச்சிக்குப் பாதகமானவை என அவர்கள் வாதிட்டனர். இவ்வாறு சிந்தித்த ஆய்வாளர்களின்(Bowler, Gintis-1976, Carnoy , Levin - 1985) நோக்கில் கல்வியின் மீதான முதலீடானது பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்தவரையில் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்துவதன் காரணமாகப் பொருளாதார வளர்ச்சி கட்டாயம் ஏற்பட வேண்டும் என்பதில்லை. பொருளியலாளர் கள் இக்கருத்துக்களில் அக்கறை செலுத்தாது உருவாக்கமுற்படும் கல்விக் கொள்கைகள், பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க உதவாது புதிய பிரச்சினைகளின் தோற்றத்துக்கே வழிவகுக்கும்.
மாக்ஸிச ஆய்வாளர்கள் பாடசாலை பற்றிய தமது சிந்தனைகளைப் பின்வருமாறு விளக்கினர். 1. முதலாளித்துவ அமைப்பில் பாடசாலைகள் சிறுதொழிற்சாலைகள்
போன்று இயங்குகின்றன. தொழிற்சந்தையில் மதிக்கப்படும்
பெறுமானங்களை வளர்ப்பதே அவற்றின்பணி. 2. முதலாளித்துவ அமைப்பில் தொழிற்சாலைகள் ஒரு படிமுறை
ஒழுங்கில் (Hierachically Organized) அமைந்துள்ளது போலவே
56 கல்வியும் மனிதவள விருத்தியும்

முதலாளித்துவ அமைப்பில் தொழிற்சாலைகள் மத்திய அதிகார பீடத்துக்குக் கட்டுப்பட்டவை. பாடசாலைகளும் அவ்வாறே கட்டுப்படுத்தப்படுகின்றன. 3. முதலாளித்துவ தொழிற்சாலைகள் ஊழியர்களை அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களிலிருந்து ஒதுக்கி தனிமைப்படுத்துகின்றன (Alienate). அவ்வாறே பாடசாலைகள் மாணவர் தாம் கற்ற கல்வி யினால் பயனடையாத முறையில் தனிமைப்படுத்துகின்றனர். 4. தொழிற்சாலை ஊழியர்கள் தாம் செய்யும் வேலையின் பெறுமதி யைப் பொறுத்தன்றிதமக்கு வழங்கப்படும் வேதனங்களினாலேயே ஊக்கத்தைப் பெறுகின்றனர். அவ்வாறே பாடசாலை மாணவர்கள் தாம் பெறும் கல்வியின் சிறப்புக்களினாலேயன்றி பரீட்சைகளில் பெறும் புள்ளிகளினாலேயே ஊக்கத்தைப் பெறுகின்றனர்.
5. முதலாளித்துவ அமைப்பின்தொழிற்சாலைகளில் ஊழியர்மத்தியில் ஒத்துழைப்புக்கும் தோழமை உணர்வுக்கும் பதிலாக போட்டி, சுயநலம் போன்ற உணர்வுகளே ஊக்குவிக்கப்படுகின்றன. பாடசாலைகளிலும் மாணவர்கள் இவ்வுணர்வுகளின் அடிப்படை யில் செயற்படும் வகையில் ஊக்கம் வழங்கப்படுகிறது.
சுருங்கக்கூறுமிடத்து, இச்சிந்தனையின்படி முதலாளித்துவப் பொருளாதாரமுறைக்கும் பாடசாலைக்குமிடையில் திட்டவட்டமான பொருத்தப்பாடு காணப்படுகிறது. முதலாளித்துவ அமைப்பினமுக்கிய அம்சமான சமூக ரீதியான தொழிற்பிரிவு முறையையே பாடசாலை களில் நிலவும் சமூக உறவுகள் பிரதிபலிக்கின்றன, ஊக்குவிக்கின்றன. மொத்தத்தில் பாடசாலை முறையானது முதலாளித்துவ முறையினைப் பேணிப்பாதுகாக்கும் பணியைச் செய்கின்றது.
மாக்ஸிய ஆய்வாளர்கள், முதலாந் தலைமுறைப் பொருளியலாளர் கள் பாடசாலைகளின் பணிபற்றிக்கூறிய ஒரு முக்கிய கருத்தை நிராகரித் தனர். பாடசாலையின் ஒரு முக்கிய பொருளாதாரப் பணி அறிவுசார் விருத்தியையும் உள இயக்கத்திறனைகளை (Psychomotor) வழங்கு வதுமே என்ற கருத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
மாக்ஸிய சிந்தனையாளர்களின் இக்கருத்தில் பல உண்மைகள் உண்டு. நவீன பொருளாதாரமுறை வழங்குகின்ற வேலைவாய்ப்புக்கள் உயர்தரமான எழுத்தறிவையும் எண்ணறிவையும் வேண்டிநிற்கின்றன
என்ற சிந்தனையின் அடிப்படையிலேயே அறிமுகம் செய்யப்பட்டன.
கல்வியும் மனிதவள விருத்தியும் 57

Page 31
தொழில்சார் கல்வியும் மனிதவளமும்
பாடசாலைக் கல்வியை தொழில் மயப்படுத்தும் முயற்சிகளும் இச்சிந்தனையின் தொடர்ச்சியாகவே எழுந்தன. தொழில்சார் பாடசாலை மாணவர்களின் வேலைசெய்யும் ஆற்றலை மேம்படுத்து கின்றது. மனிதவள விருத்திக்கும் வேலைவாய்ப்புக்களுக்கும் வழிவகுக்கின்றது என்று நம்பப்பட்டது.
மேலோட்டமாக நோக்குமிடத்து தொழிற்கல்வியானது அபிவிருத்தி யுறும் பொருளாதார முறைக்குத் தேவையான தொழில், தொழில்நுட்பத் திறன்களை வழங்கக்கூடியதே கல்விப் புலமைசார்ந்த பயிற்சி நெறிகளில் சேர்ந்து கல்வித் தேர்ச்சி பெறச்சிரமப்படுபவர்களுக்கு இவ்வகையான கல்வி பொருத்தமானது என வாதிட முடியும். பாடசாலைக் கல்விக்கும் பொருளாதார முறைகளின் தேவைகளுக்கு மிடையில் காணப்பட்ட பொருத்தமின்மையை (Mismatch) அகற்றும் நோக்குடன் தொழிற்கல்விப் பாடநெறிகள் பரிந்துரைக்கப்பட்டன.
ஆயினும் அண்மைக்கால ஆய்வுகளும் அனுபவங்களும் தொழில்சார் கல்விபற்றிய பல எதிர்மறையான முடிவுகளையே தந்துள்ளன. a) நூற்கல்விப் பாட ஏற்பாடானது வேலைவாய்ப்புக்களை வழங்கு கின்றது என்ற காரணத்தால் சமூகத்தால் விரும்பப்படும்போது தொழிற்கல்விப் பாடசாலைகள் அபிவிருத்தி நோக்குகளை எய்தப் பயன்படமாட்டாது எனFoster என்ற ஆய்வாளர் முதன்முறையாகத் தெரிவித்தார்(1996). எனவே பல உலகநாடுகள் எதிர்நோக்கிய நீடித்த பிரச்சினை சமூகத்தின் கல்வித்தேவையை நிறைவுசெய்வதுடன், தொழிற்திறன்களையும் ஒருங்கே வழங்கக்கூடிய பாட ஏற்பா டொன்றை இனங்காணுவதாக அமைந்தது. b) நூற்கல்விப்பாட ஏற்பாட்டையும் தொழிற்கல்விப் பாட ஏற்பாட்டையும் ஒருங்கே வழங்குவதிலுள்ள முக்கியபிரச்சினை அவை இரண்டும் இரு வெவ்வேறு மாதிரியான தொழிற்துறை களுடன் தொடர்புள்ளன என்பதாகும். எனவே அவை ஒரு சமூகத்தின் சமமின்மைகளை நிறுவனமயப்படுத்திப் பேணும் தன்மையுடையனவாகும். விவசாயம், கைத்தொழில் ஆகிய இரு பொருளாதாரத்துறைகளின் வளர்ச்சிக்கும் தொழில்நுட்பத்திறன்கள் அவசியம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் கைத்தொழில்துறைக்கே அதிக சலுகைகள் வழங்கப்படுவதால் தொழிற்கல்வியை நிறுவும்
58 கல்வியும் மனிதவள விருத்தியும்

c)
d)
e)
முயற்சிகள் பல தடைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. கல்வி வாய்ப்புக்களை சமப்படுத்தல் என்பது நூற்கல்வி வாய்ப்புக்களைச் சமப்படுத்துவதாகவே அமைந்தது. மனிதவள விருத்திக்கு தொழில்சார்கல்வி முக்கியத்துவம் வாய்ந்தது என்றாலும் 1950-1975 காலப்பகுதியில் உலகளாவிய ரீதியில் தொழில்சார்கல்வி வீழ்ச்சியடைய நேரிட்டது (Benavot, 1975) கல்வி வாய்ப்புக்களைச் சமப்படுத்தும் சித்தாந்தங்களின் செல்வாக்கின் காரணமாக அந்நிலை தோன்றியது. பல நாடுகளின் அனுபவங்களிலிருந்து தொழில்சார், தொழில் நுட்பக்கல்வி பயின்று வெளியேறியோர் தொகை மிதமிஞ்சி விட்டது. கற்றோர் வேலையின்மையை எதிர்நோக்கிய பல உலக நாடுகள், தொழிற்கல்விப் பயிற்சி நெறிகளை அறிமுகம் செய்தன. இதனால் ஏற்பட்ட எதிர்விளைவு வேலையின்மைப் பிரச்சினை மேலும் தீவிரமடைந்தமையாகும். சர்வதேச ஒப்பீட்டு ஆய்வுகளின்படி (ILO) கல்லாதவர்களைவிட கற்றோரே அதிக வேலையின்மைப் பிரச்சினைகளை எதிர்நோக்கு கின்றனர். இந்தோனேசியாவில் கல்வி பயிலாதவர்களின் 7.8 வீதமானவர்களும் கற்றோரில் 14.3 வீதமானவர்களும் வேலை யற்றிருந்தனர் (1971). ஆரம்பக்கல்விபயின்றோரில் 9.8வீதமானவர் களும் இடைநிலைக் கல்வி பயின்றோரில் 14.5 வீதமானவர்களும் பல்கலைக்கழகப் பட்டதாரிகளில் 12.4 வீதமானவர்களும் வேலையற்றிருந்தனர்.
தன்சானியா, எகிப்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடு
களில் கல்வி, வேலையின்மை, பயிற்சி என்பன தொடர்பாகச் செய்யப் பட்ட ஒப்பீட்டு ஆய்வுகளின்படி தொழில்சார் கல்வி விரிவு செய்யப் பட்டமையால் கற்றோர் வேலையின்மைப் பிரச்சினை அந்நாடுகளில்
மேலும் தீவிரமடைந்தது. இவ்வாய்வுகளின்படி,
0 தொழிற் பாடசாலைகளில் பயின்றவர்கள் பொதுஇடைநிலைக் கல்வி பயின்றவர்களைவிட அதிககாலம் வேலைக்காகக் காத்திருக்க வேண்டியிருந்தது.
0 தொழிற்பாடசாலைகளில் பயின்றோர்களின் சராசரி சம்பளங் கள் குறைவாக இருந்தன. அவர்களுடைய தொழிற்கல்வித் தகுதியினால் பெறக்கூடிய வேலைவாய்ப்புக்களும் குறைவாக இருந்தன.
கல்வியும் மனிதவள விருத்தியும் 59

Page 32
f) தொழிற்கல்விபயின்ற மாணவர்கள் பெரும்பாலும் வறிய குடும்பங் களைச் சேர்ந்தவர்கள். இந்தத் தொழில் வாய்ப்புக்களைப் பெறும் வகையில் சிறந்த சமூகத் தொடர்புகளையோ அல்லது போதிய தகவல்களையோ அவர்கள் கொண்டிருக்கவில்லை.
g) அண்மைக்கால ஆய்வு முடிவுகள் பல தொழிற்கல்வி நெறிகளின் விளைவுவீதம் (12%)நூற்கல்வி கல்விப் பயிற்சி பெற்றோரை (16%) விடக்குறைவாக இருப்பதைச்சுட்டிக்காட்டுகின்றன.
h) மேலும் பொதுக்கல்வியைவிட தொழிற்கல்வி செலவுமிக்கது என்றும் தொழில்நுட்பத்திறன்களை வழங்க இவ்வழிமுறை சிக்கன மானது அல்ல எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
விளைவுவீத அணுகுமுறை
மனிதவள விருத்தியைக் கல்வியுடன் தொடர்புபடுத்தி ஆராய்ந்தவர் கள் கையாண்ட விளைவு வீத அணுகுமுறை பற்றியும் பல கண்டனங்கள் கூறப்பட்டன. கல்விகற்றவர்களின் வருமானங்களைக் கொண்டே குறிக்கப்பட்ட கல்வி நிலைகளின் (உதாரணம்: ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி) விளைவு வீதங்கள் கணிக்கப்படுகின்றன. ஆனால், எதிர்காலத்தில் தொழிற்சந்தைகளிலும் கற்றோர் தொகை களிலும் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இதனால் கடந்தகால வருமானங்களை வைத்துக்கொண்டு எதிர்காலம் பற்றி உய்த்துணர் வதில் தவறுகள் ஏற்பட இடமுண்டு. எடுத்துக்காட்டாக, உயர்கல்வி, இடைநிலைக்கல்வி என்பனவற்றுடன் ஒப்பிடும்போது ஆரம்பக் கல்வியின் விளைவுவீதம் அதிகம் என ஆய்வுகள்கூறுகின்றன. ஆனால், இத்தகைய கணிப்பு ஆரம்பக்கல்வி விரிவாக இல்லாத காலத்தில் அதனைப்பெற்றவர்களின்வருமானங்களைக் கொண்டு மேற்கொள்ளப்
பட்டதாகும்.
விளைவுவீத அணுகுமுறையைப் பயன்படுத்தி முக்கிய கல்விக் கொள்கைகள் தீர்மானிக்கப்படுகின்றன. இவ்வழுத்தங்கள் கணிப்பீடு செய்யப்பட்டு பின்னர் சரிபார்க்கப்பட்டு பல்வேறு பரிசீலனைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றன. ஆயினும் சமூகத்துக்கு நன்மை தரக்கூடிய முக்கிய முதலீடுகள் பற்றித் தீர்மானங்களை மேற்கொள்ள இவ்விளைவு வீதங்களையும் பிரதானமாகப் பயன்படுத்துவதில் பல வரையறைகள் இருப்பதையும் குறிப்பிடவேண்டும்.
6O கல்வியும் மனிதவள விருத்தியும்

தற்போது கல்வி தொடர்பான செயற்றிட்டங்களை வரைவதில் இவ்வணுகுமுறையை விரிவாகவும் முறையாகவும் பயன்படுத்தப் படுகின்றது. உலக நாடுகளின் அரசாங்கங்கள் இவ்வணுகுமுறையையே பயன்படுத்த வேண்டுமென்று உலகவங்கி ஆலோசனை கூறிவருகின் றது. இதன் பொருள் வளர்முகநாடுகளுக்கு இவ்வணுகுமுறை மிகவும் பயனுள்ளது என்பதாகும். ஆனால் உலக வங்கியில் செல்வாக்குச் செலுத்தும் செல்வந்தநாடுகள் தமது நாடுகளின் கல்வி முறைபற்றிய தீர்மானங்களை மேற்கொள்ளும் போது இவ்வணுகுமுறையைப் பின்பற்றுவதில்லை என்ற முறைப்பாடு உண்டு (Nicholas Burnett, 1996).
விளைவுவீத அணுகுமுறையானது ஒரு முக்கிய திட்டமிடல் வழிமுறைமட்டுமன்று, உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் பற்றிய சில பொதுக்கருத்துக்களைப் பெறவும் அடிப்படை யான ஒரு கணக்கீடாகவும் இது அமைந்துள்ளது. எடுத்துக்காட்டாக, 'கல்வி சமூக ரீதியாகப் பலன்தரும் முதலீடு, 'அடிப்படைப் பாடசாலைக்கல்வி அவசியமானது, 'தொழிற்கல்வியினால்அதிக பயனில்லை என்பதால் பாடசாலை நிலையில் ஒதுக்கப்பட வேண்டி யது. 'பல்கலைக்கழகப் பட்டதாரிகள் தமது கல்வியின் காரணமாக அதிக நன்மைகளைப் பெறுவதால் அவர்கள்கல்வி பெறக்கடன் வழங்கி அதனைத் திரும்பப்பெறும் திட்டம் தேவை' போன்ற கருத்துக்களும் ஏற்பாடுகளும் இவ்விளைவு வீத அணுகுமுறையைப் பயன்படுத்திப் பெறப்பட்டவையாகும். கல்விமுறையின் உலகளாவிய போக்குகளின் அடிப்படையில் செய்யப்பட்ட கணிப்புகளே இவையாகும். இப்போக்குகளை மறுபரிசீலனை செய்து பார்த்த ஆய்வாளர்கள் மேற்கண்ட முடிவுகளுக்கு அடிப்படையான விளைவுவீதக் கணிப்பீடு களில் பாரதூரமான தவறுகள் உண்டு என எடுத்துக் காட்டியுள்ளனர். (Nicholas Burnet, 1996).
கல்வியியலாளர் எதிர் பொருளியலாளர்
கல்வியினூடாக மனிதவள விருத்தி, பொருளாதார அபிவிருத்தி என்ற சிந்தனையின் முன்னோடிகள் பொருளியலாளர்கள் ஆவர். உலக நாடுகள் பொருளாதார அபிவிருத்திக்கே முன்னுரிமை அளித்தமையால் இச்சிந்தனை அந்நாட்டுத்தலைவர்களை பெரிதும் கவர்ந்தது என ஏற்கனவே கூறப்பட்டது. ஆயினும், கல்விமுறைகள், கல்வித்தத்துவம், குழந்தை உளவியல், கல்வி வளர்ச்சி போன்ற துறைகளில் சிறப்புத்
கல்வியும் மனிதவள விருத்தியும் 61

Page 33
தேர்ச்சிபெற்ற கல்வியியலாளர்கள், பொருளியலாளர்கள் முன்வைத்த பொருளாதார நோக்குடைய கல்வி ஏற்பாடுகளை எப்போதுமே விரும்பியதில்லை. இவ்விருசாராரின்கல்வி பற்றிய நோக்கும் சிந்தனை யும் முரண்பட்டனவாக அமைந்தன.
கல்வியாளர்கள் மனிதன், மனித வளர்ச்சி பற்றிக் கொண்டிருந்த சிந்தனைகள் பொருளியலாளர்களின் சிந்தனைகளிலிருந்து வேறு பட்டவை. மாணவர்களின் கல்வி அவர்களுக்குக் குறிப்பான கல்வி யாற்றலையும், திறன்களையும் வழங்கி மனிதவளமாக மாற்றப்படல் வேண்டும் என்ற சிந்தனையைக் கல்வியாளர்கள் ஏற்றுக்கொள்ள வில்லை. மாணவர்களின் உள்ளார்ந்த ஆளுமை, மனவெழுச்சி, அறிவாற்றல் மற்றும் உடல் சார்ந்த வளர்ச்சி என்பனவற்றிலும் அவர்களின் சிறந்த பண்பு ரீதியான வளர்ச்சி என்பவற்றிலுமே கல்வியாளர்கள் அக்கறை செலுத்தினர். கல்வியினூடாக அவர்களுடைய கல்விக் கோட்பாட்டில் கருத்திற் கொள்ளப்படாத ஒரு அம்சமாகும். கல்வியினுரடாக மாணவர்கள் பாடசாலைக்கு அப்பால் உள்ள வாழ்க்கைப் பிரச்சினைகளை எவ்வாறு நீக்கலாம் என்னும் விடயத் திலும் கல்வியாளர்களின் கருத்து வேறுபட்டிருந்தது. பொருளியலாளர் கள் பாடசாலைக்கு அப்பாலும் பாடசாலைக் காலத்துக்குப்பின்னரும் எழும்பிரச்சினையைப் 'பொருளுற்பத்தியும் அதனைத்திறம்படச் செய்தலும்’ என வரையறை செய்தவிடத்து கல்வியாளர்களின் சிந்தனை இவ்விடயத்தில் மிகவும் பரந்துபட்டதாக அமைந்தது.
மேலும் பொருளியலாளர்களின் சிந்தனை கற்பிக்கப்படும் அறிவாற்றல், திறன்கள் என்பனவற்றை உள்ளடக்கிய 'பாட உள்ளடக் கத்தில் (Content) கவனம் செலுத்தியவிடத்து இன்றைய கல்வியாளர்கள் பாட அறிவையும் மாணவர் கற்கின்ற முறைகளிலும் (Process of Learning) அக்கறை செலத்துகின்றனர். கல்வியென்பது பாடசாலையுடன் முற்றுப்பெறுவதன்று. வாழ்க்கை முழுவதும் நீடிப்பது, அதற்கான கற்றல் திறன்களை மாணவர்களுக்கு வழங்குவது பாடசாலைகளின் ஒரு முக்கியதொழிற்பாடு என்பது இன்றைய கல்வியாளர்கள் கருத்து. நவீன சமூகத்தில் புதிய அறிவை எவ்வாறு கற்றுக்கொள்வது? அதற்கான கற்றல் முறைகள்யாவை? கற்பதற்கு கற்றல் வேண்டும் (Learning to Learn) எனக் கல்வியாளர்கள் வலியுறுத்தினர்.
கல்வியாளர்கள் கல்வியை ஒரு தொடர் நிகழ்வான செய்முறையாக (Process) கண்டனர். ஒருவன் எதனைக் கற்கிறான் என்பதைவிட
62 கல்வியும் மனிதவள விருத்தியும்

எவ்வாறு, எப்படிக் கற்கிறான் என்பதே முக்கியமானது. கற்போனின் விருப்பங்கள், அவனுடைய சமூக மற்றும்; இயற்கைச் சுற்றாடல் என்பவற்றைக் கருத்திற்கொண்ட முறையிலேயே கல்வியின் குறிக் கோள்கள் நிர்ணயிக்கப்படல் வேண்டும். பிள்ளைகளை சுறுசுறுப்பாக இயங்கும் உயிர்கள்; அவர்கள் தமக்குள் இடைத்தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதுடன் ஒரு குறிப்பிட்ட சுற்றாடலில் வாழ்பவர் கள்; அதிலேயே முன்னேறுபவர்கள்; அவர்களுடைய இவ்வளர்ச் சியைத் தடைசெய்யும் முயற்சியில் ஈடுபடக்கூடாது. கல்வியின் குறிக் கோள் இத்தகைய வளர்ச்சியைப் பேணிப்பராமரிப்பது, கல்வியாளர் களின் இச்சிந்தனைகளைச் சகல நாடுகளில் அதிகாரபூர்வமான ஆவணங்களிலும் கண்டுகொள்ளமுடியும். முக்கியமாக 'பிள்ளைகளின் உள்ளர்ந்த ஆற்றல்களை முடிந்தளவுக்கு முழுமையாக விருத்தி செய்தல்" என்பது அவ்வாவணங்களில் எப்போதும் குறிப்பிடப்படும் முக்கிய கல்வியின் குறிக்கோள்களாகும். கல்வியாளர்களின் இச்சிந்தனையி லிருந்து பொருளியலாளர்களின் கல்வி பற்றிய பொருளுற்பத்திச் சிந்தனைமுற்றிலும் மாறுபட்டதாகும்.
கல்வியின் செய்முறை (Process) வலியுறுத்திய இக்கோட்பாட்டில் பெரிதும் மேன்மையான குறிக்கோள்களே எடுத்தக்கூறப்பட்டன. அக்குறிக்கோள்களும்கூடத் தம்மளவில் செய்முறைப் பங்கானவை யாகவே அமைந்தன. விரைவில் மறந்து போகக்கூடிய பாடநூல் அறிவைவிட இவ்வுயர்நிலைக் குறிக்கோள்கள் நீடித்து நிலைப்பன வாயும் பரந்த அளவில் பிரயோகிக்கக்கூடிய பயனுள்ள கற்றலைச் சுட்டுவனவாயும் விளங்கின. இதற்கான சில எடுத்துக்காட்டுக் களாவன: திறனாய்வுச் சிந்தனை, படைப்புத்திறன், சுதந்திரமாகச் சிந்தித்தலும் செயற்படலும், பிறருடன் ஒத்துழைத்தல், பொறுப் புணர்வு, கற்றலுக்கு கற்றல் போன்றன. கல்வியாளர்கள் அனைவருமே இவ்வுயர்நிலைக் குறிக்கோள்களை உறுதியுடன் வளர்க்கப் பரீட்சைகள் பயன்படாதென்றும் அவற்றில் குறைபாடுகளைக் கண்டவர்கள் கல்வியாளர்கள்.
சற்றுக்கடுமையான நிலைப்பாடொன்றை அவர்கள் மேற்கொள்வார் களாயின், தாம் ஆதரிக்கும் கல்வி பற்றிய செய்முறைக் கோட்பாட்டின் முக்கியத்துவத்தின் அடிப்படையில், பொருளியலாளர்களின் 'கல்வி உற்பத்திப் பெருக்கத்துக்கான ஒரு கருவி, வழிமுறை என்ற சிந்தனையை முற்றாகவே நிராகரித்துவிடுவர் என்பதே உண்மை,
கல்வியும் மனிதவள விருத்தியும் 63

Page 34
பொருளாதாரமுறையின் உற்பத்திப் பெருக்கத்துக்கான ஒரு உள்ளீடு (n- put) என்ற முறையில் கல்வி பற்றிச் சிந்திக்க அவர்கள் எப்போதும் ஆயத்தமாக இல்லை.
இத்தகைய கருத்துக்களின்படி, ஒரு சில பாடங்களில் தேர்ச்சியடையப் பாடசாலைக்கல்வியைப் பயன்படுத்துவது, அத்தேர்ச்சியை மதிப்பிடப் பரீட்சைகள்ை நம்புவது, உற்பத்திப் பெருக்கத்துக்கு உதவும் மனப் பாங்குகளை வளர்க்கும் நோக்குக்கு கல்விமுறையில் முக்கியத்துவம் அளிப்பது போன்ற பொருளியலாளர்களின் அணுகுமுறைகள் கல்வியின் உயர்தரமான நோக்குகளை மலினப்படுத்துவதற்கு ஒப்பானவை யாகும்.
கல்வியாளர்களின் இத்தகைய சிந்தனைகள் பொருளாதாரத்தில் பின்தங்கிய வளர்முக நாடுகளின் யதார்த்த நிலைமைகளைக் கருத்திற் கொள்ளவில்லை என்ற முறைப்பாடுகள் உண்டு. ஆயினும் பொருளிய லாளர்கள் முன்வைக்கும் பொருளியற்பாங்கான கல்வி ஆலோசனை கள், கல்வியாளர்களின் சிந்தனைகளைவிட அதிகளவில் யதார்த்த நிலைமைகளுடன் தொடர்பற்றவை என வலியுறுத்திக் கூறமுடியும். ஏனெனில் கல்வியாளர்களின் சித்தாந்தங்களுடன் ஒப்பிடும்போது பொருளியலாளர்களின் கல்வி ஆலோசனைகள் கல்விமுறை பற்றி ஆராய்ச்சிகளிலிருந்து உருவானவையல்ல.
பொருளியலாளர்கள் கற்றல் செயற்பாட்டின் ஒருசில உள்ளிட்டு அம்சங்களை மட்டும் ஆராய்ந்து தொகைரீதியான தரவுகளைத் தொகுத்து அவற்றினடிப்படையில் சிறந்த கல்விச் செயற்பாடுகள் எவையெனமுடிவு செய்கின்றனர். கல்வியாளர்கள் இம்முயற்சிகளை மிகுந்த ஐயத்துடன் நோக்குகின்றனர். முக்கியமாக பொருளியலாளரின் இம்முயற்சிகள்கற்றல் எவ்வாறு நடைபெறுகின்றது(Process) என்பதில் அக்கறை கொள்வதில்லை. மேலும் கல்வியாளர்கள் தமது தொழிற் துறையாகிய் கல்வி முறையில் வெளியார்களாகிய பொருளியலாளர் களும் முகாமைத்துவ நிபுணர்களும் ஊடுருவுவதை எதிர்க்கின்றனர். கல்விச் செயற்பாட்டை நுணுகி ஆராய்ந்து வரும் கல்வியாளர்கள், இத்தகைய ஊடுருவல்கள் தமது தொழில் அந்தஸ்த்தை மட்டம் தட்டுவதாகவே கருதுகின்றனர்.
கல்வித்துறைக்கு வெளியே பணியாற்றும் பொருளியலார்கள் கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பாக முன்வைக்கும் ஆலோசனைகளுக்கு
64 கல்வியும் மனிதவள விருத்தியும்

அடிப்படையான நியாயங்களைக் கல்வியாளர்கள் ஐயத்துடனேயே நோக்குகின்றனர். அவற்றில் சில வருமாறு: )ெ கல்வி நிலையங்களைத் தனியார்மயப்படுத்தல்; )ெ கல்வி வாய்ப்புக்களை விரிவுபடுத்துவதற்குப் பதிலாகக் குறைந்த
செலவுடன் திறமையாக இயங்கச்செய்தல்; 0 முன்னாரம்பக்கல்வியில் (Pre School Education) அரசாங்கம் ஈடுபட
வேண்டிய அவசியமில்லை என்ற ஆலோசனை; 0 கல்விக்கட்டணங்களை உயர்த்துதல்; )ெ அதிக மாணவர்களைக் கொண்ட பெரிய வகுப்பறைகளை
அமைத்தல். இத்தகைய ஆலோசனைகளின் பின்னணியில் கல்வித்தத்துவத்துடன் தொடர்பற்ற வேறு சித்தாந்தங்கள் இருப்பதாகவே கல்வியாளர்கள் கருதுகின்றனர். எடுத்துக்காட்டாக, இன்று உலகவங்கி பல்வேறு பொருளாதாரத்துறைகளில் தமது கட்டுப்பாட்டையும் ஈடுபாட்டையும் அரசாங்கம் குறைத்துக்கொண்டு தனியார் துறைக்கு இடமளிக்க வேண்டுமென்ற சித்தாந்தத்துடன் செயற்பட்டு வருகிறது. இதனாலேயே கல்வித்துறையிலும் தனியார் மயத்தை வலியுறுத்தி வருகின்றது. ஆபிரிக்க நாடுகளில் தனியார் மயமாக்கப்பட்டுள்ள தொழில்சார் கல்வியை ஆராய்ந்த அறிஞர்களின் கருத்தின்படி, உலக வங்கியின் இவ்வாலோசனை நிச்சயமாகத் தனியார் நிறுவனங்களுக்கு நன்மை யளிக்கக்கூடியது. குறிப்பாக, தொழில்நுட்பத்துறையில் ஏற்றங்கண்ட வெளிநாட்டுக் கம்பனிகளே பொருளியலாளரின் இந்த ஆலோசனை களால் அதிக நன்மைகளை அடையவில்லை தொழில்நுட்பத் திறன் களைவிருத்திசெய்ய இவ்வாலோசனை பயன்படவில்லை. பின்தங்கிய பொருளாதார முறைகளைக் கொண்ட நாடுகளில் சகல ஊழியர்களின் திறன்களையும் மேம்படுத்த வேண்டுமாயின் அரசாங்கத்தின் ஈடுபாடும் தலையீடும் அவசியமானது என்பதே கல்வியாளர்களின் கருத்தாகும். எவ்வாறாயினும் சர்வதேச நாணய நிதியம் (MF) முன்வைக்கும் நிபந்தனைகளின் அடிப்படையிலான கல்விச் சீர்திருத்தங்களுக்குச் சரியான மாற்று ஆலோசனைகளைப் பரிந்துரைக்கும் நிபுணத்துவம் கல்வியாளர்களிடமும் இல்லை என்ற கருத்தும் நிலவுகின்றது.
பொருளியலாளர்களினதும் கல்வியாளர்களினதும் கல்வியற்றிய சிந்தனைகளும் கோட்பாடுகளும் இவ்வாறு முரண்பட்ட மைந்த
கல்வியும் மனிதவள விருத்தியும் 65

Page 35
போதிலும் இவ்விரு சாராரும் தமது சித்தாந்தங்களில் பிடிவாதமான ஈடுபாடுடையவர்கள் என்று கொள்வது தவறானதாகும். அவர்கள் பரஸ்பரம் கலந்துரையாடி ஒருவரிடமிருந்து மற்றவர் கற்றுக்கொள்ள ஏராளமுண்டு. விடாப்பிடியான கருத்துக்களை மாற்றுவதற்கான வாய்ப்புக்களைஇரு சாராரும் ஏற்படுத்திக்கொள்ளலாம். இரு சிந்தனை களின் இணைப்பில் உருவாகும் புதிய சிந்தனைளானது கல்வி மேம் பாட்டில் புதிய பரிமாணங்களுக்கு வழிவகுக்கும் என முழுமையாக
நம்புகிறோம்.
66 கல்வியும் மனிதவள விருத்தியும்

அத்தியாயம் - 5
முயற்சியாண்மையாளர் விருத்தியும் கல்வியும் (Entrepreneur Development and Education)
நாடுகளின் முன்னேற்றங்களுக்கு உதவக்கூடியதான மனிதவளத்தை விருத்தி செய்வது கல்வித்துறையின் பொறுப்பும் கடமையுமாகும்
பெளதீகவளம், நிதிவளம் இருக்கும் நாடுகள் மாத்திரம் முன்னேற்ற மடைந்து விடுவதில்லை. அவ்வாறு காணப்படும் வளங்களைப் பூரண மாகவும் சிக்கனமாகவும் உச்ச பயனுறுதித்தன்மையுடனும் பயன்படுத்த வேண்டும். நீண்டகாலத்தில் அடுத்த தலைமுறையினருக்கு இழப்பு இல்லாத வகையில் பயன்படுத்தவேண்டும். இத்தகைய ஆற்றல் உடையவர்களே முயற்சியாண்மையினர்.
தமது எண்ணங்களை வளங்களின் உதவியுடன் செயல்வடிவமாக்கும் துணிவும், புத்தாக்க சிந்தனையும் தன்னம்பிக்கையும் உடையவர்கள் முயற்சியான்மையினராவர். சூழலைப் புரிந்து கொள்ளக்கூடியவர் களாகவும், வளங்களைச் சாதுரியமாகத் திரட்டக்கூடியவர்களாகவும், சரியான நேரத்தில் உண்மையான தாக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடிய முடிவுகளை மேற்கொள்ளக் கூடியவர்களாகவும் இருப்போரே முயற்சியாண்மையினராவர். தொடர்புகளின்றிக் காணப்படும் வளங் களிடையே தொடர்பை உண்டாக்கிதாமும் பயன்பெற்று சமூகத்தேவை களை நிறைவேற்றும் வல்லாண்மையுடையவர்களே முயற்சி யாண்மையாளர். பிறர் தொழில் தரவேண்டும் என்ற எதிர்பார்க்கையை விட பிறரை எவ்வாறு பயன்படுத்திக்கொள்வது என்று சிந்தித்து அதன்படி புதிய தொழில்முயற்சிகளைத் தொடக்குவோராயும், விரிவுபடுத்துவோராயும் உள்ளவர்களே முயற்சியாண்மையினராவர்.
கல்வியும் மனிதவள விருத்தியும் 67

Page 36
மனிதவளம் என்பதில் ஊழியத்தை வழங்குவோர், பணியாளராகவும் முகாமையாளராகவும் செயற்படுவோர் ஒரு தொகுதியினர். மற்றொரு தொகுதியினர்அத்தகைய ஊழியத்தையே உள்ளீடாகப் பயன்படுத்துவது பற்றிய புத்தாக்க சிந்தனையும் செயற்பாட்டுத்துணிவும் உடையோ
ராவர்.
முயற்சியாண்மையாளர்கள்தாமாக உருவாகிறார்கள், பிறக்கின்றார் கள், கல்வியினாலும் பயிற்சியினாலும் உருவாக்கப்படுவதில்லை. குறிப்பிட்ட பரம்பரை வழியாக அவ்வாற்றல் விருத்தியடைகின்றது என்பன போன்ற கருத்துக்கள் நீண்டகாலமாக இருந்து வருகின்றன.
ஆனால், இன்று விஞ்ஞான ரீதியிலான சிந்தனையின்படியும், அனுபவங்களின்படியும் கல்வி, பயிற்சி என்பவற்றால்தான் முயற்சி யாண்மையாளரை மேலும் வினைத்திறனுடையவர்களாக்கும் ஆற்றல் கல்விக்கு உண்டு என்று உலகம் முழுவதும் இன்று பரவலாக நம்பப்படு கின்றது.
பொருத்தமான சூழ்நிலைகளை உருவாக்குவதாலும் கவனமாக வடிவமைக்கப்பட்ட முயற்சியாண்மைக் கல்வியை வழங்குவதாலும் நாடுகளில் முயற்சியாண்மையாளரை உருவாக்க முடியும், அதிகரிக்க முடியும் என்று நம்பப்படுகின்றது. குடும்ப செல்வாக்கினால் பெறப் பட்ட அநுகூலங்களைத் தரும் கலாசாரமூலதனத்துடன் (Cultural Caption) தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்குமான தொடர்புகளை வலுப் படுத்துகின்ற சமூக மூலதனத்தையும் (Social Caption) ஒன்றிணைக்கும் முறையில் கல்வி ஏற்பாடுகள் ஒழுங்கமைக்கப்படும்போது முயற்சி யாண்மை வளர்ச்சியடையும். இதற்கேற்ற கல்வி ஏற்பாடு அவசியம்.
இத்தகைய பின்னணியில் முயற்சியாண்மைக்கல்வி விரிவுபடுத்தப் படுவது அவசியம், இதன் மூலம் முயற்சியாண்மையாளர் என்ற விஷேடமான - வல்லாண்மைமிக்க மனிதவளத்தை உருவாக்கலாம். GLITG) Gamo Toiv Gör (Paul Holden), 67фgi LopПL" (Victor Pratt), grПТп 36)JubGTi (Sara Krelmer), Glg96oflui gól Gl – (Jennifer hidde), gy6v6öI ஜிப் (Alan Jibb) போன்ற பலர் இவ்வாறு முயற்சியாண்மைக் கல்வியின் மூலமாக முயற்சியாண்மையாளரை அதிகரிக்க முடியுமென விளக்கு கின்றனர்.
68 கல்வியும் மனிதவள விருத்தியும்

முயற்சியாண்மைக்கல்வி
முயற்சியாண்மையாளர்களை அதிகரிப்பதற்கு ஏற்ற கல்விச் செயற்பாடுகளை மேற்கொள்வது பற்றித் திட்டமிடுவோர் கவனம் செலுத்தவேண்டும்.
அதிகரிக்கும் போட்டி நிலைமை, நிலவுகின்ற நிச்சயமின்மை, சிக்கலான பண்பு என்பவற்றை விளங்கிக் கொள்வதற்கும் புதியன வற்றை உருவாக்குவதற்கும் மாற்றங்களை ஏற்படுததுவதற்குமான திறன்களை விருத்தி செய்யும் கல்வி மற்றும் பயிற்சிச்செயன்முறைகள் அனைத்தும் முயற்சியாண்மைக் கல்வி எனப்படுகின்றது.
இக்கல்வியானது கைத்தொழில் பற்றிய விழிப்புணர்வு, வியாபார முகாமைத்துவம், புதிய முயற்சி உருவாக்கம், தனிநபர் மற்றும் சமூகத்திறன்களை விருத்தி செய்தல் போன்ற எல்லா அம்சங்களையும் உள்ளடக்குவதாயமையும். இத்தகைய முயற்சியாண்மை தொடர்பான அறிவை வழங்கினாலும் அவை தொடர்பான திறன்களைகல்வியூடாக உருவாக்க முடியுமா? அவை மரவுவழியாகப் பெறப்படுவனவல்லவா? என்ற கேள்விகளும் எழுகின்றன. நடத்தைகளை மாற்றுவதில் செல்வாக்குச் செலுத்தும் வலுமிக்க செய்முறையே கல்வி என்பது குறிப்பிடத்தக்கது.
தனிநபர் மற்றும் கூட்டுமுறை என்ற இரு நிலைகளிலும் போட்டி, நிச்சயமின்மை, சிக்கலான தன்மை காணப்படும் சூழ்நிலைகளிலும் புதியனவற்றை உருவாக்கி மாற்றத்தை ஏற்றுச் செயற்படுவதற்கான நடத்தை, திறன்கள் உளச்சார்பு என்பவற்றை விருத்தி செய்வதற்கான கலைத்திட்டமே முயற்சியாண்மைக் கல்விக்குப் பொருத்தமானதென Tப் (Gibb 1998) கருதுகிறார்.
முயற்சியாளர்கள் தனியே இலாப நோக்குடனான வியாபார, கைத்தொழில் முயற்சிகளில் மட்டும் காணப்படுவதில்லை. மாறாக சமூக முயற்சியாண்மையினர், எனப்பல துறைகளிலும் காணப்படு கின்றனர். இதனால், முயற்சியாண்மைக்கல்வி பரவலானவகையில் சமுதாயத்தினால் வேண்டப்படுகிறது.
இத்தகைய முயற்சியாண்மைக்கல்வி பின்வருவனவற்றை விருத்தி செய்தல் வேண்டும்.
கல்வியும் மனிதவள விருத்தியும் 69

Page 37
1. முயற்சியாண்மை நடத்தை
2. முயற்சியாண்மை உளச்சார்பு
3. முயற்சியாண்மைத் திறன்கள்
முயற்சியாண்மை நடத்தை
(Entrepreneurial Behaviour)
முயற்சியாண்மையாளருடன் தொடர்புபட்ட நடத்தைகள் பலவகைப்
படுகின்றன. இவை ஆளுக்கு ஆள்வேறுபடக்கூடியன. தாம் விரும்பிய
வேலைகளைசமயோசிதமாகத்திட்டமிட்டு, வளங்களைக் கவனமாகக்
கருத்திற்கொண்டு, தமது விருப்பப்படியே செய்து முடிக்கும் நடத்தையே விரும்பப்படுகிறது.
பொதுவாக முயற்சியாண்மையாளரிடம் பின்வரும் நடத்தைகள் விருத்தி செய்தல் அவசியம்.
1. சூழ்நிலைகளைச்சரியாக அவதானித்தல்.
முயற்சி எடுத்தல்.
பிரச்சினைகளைஆக்கபூர்வமான முறையில் தீர்த்தல்.
தன்னியல்பாக சமநிலையடைதல்.
பொறுப்புக்கள் ஏற்றலும் சொத்துக்களை உடைமை ஆக்குதலும்.
உண்மை நிகழ்வுகளினூடாக (Facts) நோக்குதல்.
தொடர்புடையவற்றை பயனுறுதிமிக்கதாக செயற்படவைத்தல்.
எல்லா அம்சங்களையும் ஒன்றிணைத்தல்.
எதிர்பார்க்கும் இடர்களை எதிர்கொள்ளுதற்குப் பொருத்தமான முடிவுகளை எடுத்தல்.
முயற்சியாண்மை உளச்சார்பு
(Entrepreneurial Attributes)
முயற்சியாண்மையாளரின் நடத்தைகளைத் தீர்மானிப்பவை
அவர்களது உளச்சார்புகளே. இவை பெருமளவுக்கு இயற்கையாகவே
அமைவன. இவற்றை விருத்தி செய்யமுடியுமா என்று சந்தேகிக்கப்
படுகிறது. புதியனவற்றை உருவாக்கவும், மாற்றங்களை ஏற்படுத்தவும்
முடியும். பின்வரும் உளச்சார்புகள் முயற்சியாளருக்கு அவசியமான
தாகும்.
7O கல்வியும் மனிதவள விருத்தியும்

1. சாதனைகளை விரும்புகின்ற இலட்சியமிருத்தல்
சுய நம்பிக்கையும் சுயவியாபகமும்
விடாமுயற்சி
தன்னிச்சையான கட்டுப்பாட்டு உணர்வு
செயற்படுத்தும் ஆர்வம் செய்வதன் மூலமாக கற்றுக்கொள்ளுவதை விரும்புதல்
கடின உழைப்பு
மனத்துணிவு
ஆக்கத்திறன்
முயற்சியாண்மைதிறன்கள்
(Entrepreneurial Skills)
உளச்சார்புகளைப்போலன்றி முயற்சியாளருக்கானதிறன்கள் விருத்தி
செய்யப்படக்கூடியனவாகும். இவை முயற்சியாளர் நடத்தைகள்
மற்றும் உளச்சார்புகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டனவாகவும்
விளங்குகின்றன.
அவ்வாறான திறன்களைப் பின்வருமாறு குறிப்பிடலாம்.
1. ஆக்கபூர்வமான முறையில் பிரச்சினையைத் தீர்த்தல்
தொடர்ந்து செயலாற்றல்
முன்மொழிதல்
2
3. கலந்துரையாடுதல்
4 5. வியாபாரம், செயற்றிட்டம், தொழில்நிலைகள் என்பவற்றை
நிதானமாகக் கையாளுதல்
6.
தந்திரோபாயமான சிந்தனைகள்
7. நிச்சயமற்ற சூழ்நிலைகளில் உள்ளுணர்வுடன் முடிவுகளை
மேற்கொள்ளல்
8. தொடர்புகளை விருத்தி செய்தல்
இவ்வாறான எல்லாவற்றையும் விருத்தி செய்வதில் கவனம் செலுத்த
வேண்டும்.
கல்வியும் மனிதவள விருத்தியும் 71

Page 38
பல்வேறுவகையான முயற்சியாண்மை
முயற்சியாண்மை என்பது வியாபாரம் அல்லது உயர்தொழில் சார்ந்த நிர்வாகத்தை குறிப்பிடமாட்டாது. முயற்சியாண்மை தனியான பண்பு கள் கொண்டதாகும்.
தற்போது உலகரீதியாக சிறுதொழில் முயற்சியாண்மை, சிக்கலான தன்மைகள் அதிகரிப்பதாலும், நிறுவன ஒழுங்க மீளமைப்பு, அரசாங்க மீளமைப்புச்செயற்பாடுகள், உலகரீதியாக நிகழ்ந்துவரும் அழுத்தங்கள் காரணமாக பெரிய நிறுவனங்கள்கூட தம் அளவுகளைச் சிறிதாக்கு கின்றன அல்லது இயன்றளவு பன்முகப்படுத்துகினறன. நிறுவனங் களில் பணியாற்றும் இளைஞர்கள் பெருமளவு முயற்சியாண்மை அணுகுமுறையையும் பெற்றுக்கொள்ளமுயலுகின்றனர்.
இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் நவீன கூட்டுநிலைய பணிக் குழு நிர்வாகமுள்ள முயற்சியாண்மை ஒருபுறம், சிறிய தொழில்களை ஏராளமாகக் கொண்ட முறைசாராத துறை (Informal sector) சார்ந்த முயற்சியாண்மை மறுபுறம் காணப்படுகின்றன. பல தெற்குலக வளர்முக நாடுகளில் மட்டுமன்றி கிழக்கு ஐரோப்பாவில் நிலைமாறிய பொருளாதாரங்கள் பலவற்றிலும்கூட இத்தகைய நிலைமை காணப் படுகின்றது. இரு துறைகளிடையிலுமான நம்பிக்கை, புரிந்துணர்வு, ஒற்றுமை என்பவற்றைக் கட்டியெழுப்புவது கடினமாயுள்ளது. இத்தகைய ஒற்றுமை ஏற்படாவிடில் உற்சாகமாக இயங்கும் திறமை கொண்ட முயற்சியாண்மையை வளர்ப்பது கடினமாகும்.
பல நிலைமாறும் பொருளாதாரங்களில் பல்வேறு உட்கட்டமைப்பு களும், கல்வித்துறையும் முயற்சியாண்மைக்கு ஊக்கமளிக்கத்தவறும் நிலையில், முயற்சியாண்மை சாராததுறைகளிலேயே வளரவேண்டிய நிலை காணப்படுகின்றது.
பொருளாதாரங்களில் முயற்சியாண்மைக்குரிய கலாசாரத்தைக் கல்வியினாலேயே ஏற்படுத்த முடியும். எல்லாத்தனிமனிதர்களுக்கும் முயற்சியாண்மைக்கல்வி வழங்கப்படுவது இன்றியமையாததாகி யுள்ளது.
எந்தவொரு விடயத்தையும் நோக்குவது, மேற்கொள்வது, தொடர்பு கொள்வது என்பன தொடர்பாக ஒரு தொகுதியான விழுமியங்கள், நம்பிக்கைகள் முயற்சியாண்மையாளரால் விளங்கிக்கொள்ளப்பட
72 கல்வியும் மனிதவள விருத்தியும்

வேண்டியதாயுள்ளன. முயற்சியாண்மைக்கல்விமுயற்சிகள் இவற்றைக் கருத்திற்கொள்ள வேண்டும்.
தனிநபர்களிடையில் கைமாற்றப்படுகின்ற நடத்தைகள், திறன்கள், உளச்சார்புகள் என்பவற்றிலிருந்து முயற்சியாண்மை சார்ந்த நடத்தை களும், திறன்களும் உளச்சார்புகளுடன் வேறுபட்டவை.
கல்விமுறையில் காணப்படுகின்ற முயற்சியாண்மைச் செயற்பாடுகள் உண்மையான முயற்சியாண்மைப் பண்புகளைக் கொண்டிருப்ப தில்லை. பாடசாலைகளில் காணப்படும் வேலை அனுபவங்கள் உண்மையான முயற்சியாண்மைப் பண்புகளைக் கொண்டவைகளல்ல. பாடசாலைகளில் பல்வேறு புதிய முயற்சிகள் சார்ந்த நிகழ்ச்சித்திட்டங் கள் இருந்தாலும் அவையெல்லாம் முயற்சியாண்மைப் பண்புகளுடன் இணைந்தவகையில் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கவில்லை. முயற்சி யாண்மை நடத்தைத் திறன்கள், உளச்சார்புகள் என்பவற்றை மிகச்சரி யாக கைமாற்றக்கூடியதாக பாடசாலை மட்ட விசேட நிகழ்ச்சித் திட்டங்கள் வடிவமைக்கப்படுதல் வேண்டும்.
முயற்சியாண்மைக்கல்விக்கான தேவை
இன்று எல்லா நாடுகளிலும் முயற்சியாண்மை பற்றிய கல்வியை வழங்கவேண்டிய கட்டாய நிலைமை ஏற்பட்டுள்ளது. எமது வாழ்வில் எல்லாப்பக்கங்களிலும் ஏதோ ஒருவகையான முயற்சியாண்மையின் செல்வாக்குத் தெரிகின்றது. சர்வதேச ரீதியில் வளர்ந்துவரும் புதிய நெருக்கடிகளின் காரணமாக முயற்சியாண்மைக்கும், முயற்சி யாண்மைக்கல்விக்கும் ஊக்கமளிக்கவேண்டிய கட்டாய நிலைமை அரசாங்கங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அரசியல் ரீதியான கொள்கைகளை இதற்குச்சார்பாக மேற்கொண்டும் வருகின்றன.
முயற்சியாண்மை என்ற சிறப்பான தனித்தன்மை வாய்ந்த மனித வலுவை விருத்திசெய்வதில் கல்வித்துறையை வற்புறுத்தும் நிலைமை களைப் பின்வருமாறு விளக்கமுடியும்.
1. உலகரீதியிலான அழுத்தங்கள்
அரசியல் பிரிவினைகள், வர்த்தகத் தடைகள் நீங்குதல், தகவல் தொழில்நுட்பத்தின் அசாதாரண வளர்ச்சிக்கு ஏற்ப மிகவேகமாக உற்பத்தித் தொழில்நுட்பப் பண்புகள் கைவிடப்படல், பரவலான உற்பத்தி வேறாக்கம், வியாபாரத்திற்கான சர்வதேச நியமங்கள்
கல்வியும் மனிதவள விருத்தியும் 73

Page 39
போன்றன முயற்சியாண்மைக் கல்வி வழங்கப்படவேண்டுமென வற்புறுத்துகின்றன.
உலகரீதியாக சுற்றுலாத்துறை பல்முனைகளிலும் வளர்ந்துவருதல், தனியார் வருமானங்கள் நாடுகளுக்குக் கைமாற்றப்படுதல், ஆங்கிலக் கல்வியின் பயன்பாடு அதிகரித்தல், சர்வதேச ரீதியில் மூலதன அசைவு கள் கூடிச்செல்லுதல் போன்ற பல்வேறு காரணிகளும் புதிய முயற்சி யாளருக்கான கேள்வியை அதிகரிக்கச் செய்யும்போது அத்தகைய ஆற்றல்களை ஒழுங்கு முறையிலமைந்த முகாமைத்துவக்கல்வியூடாக வளர்க்க வேண்டிய தேவையும் பெருகியுள்ளது.
2. சமூகமட்ட அழுத்தங்கள்
சமூகமட்டத்தில் நிச்சயமின்மைகளும், குழப்பமானநிலைமைகளும் பல்வேறு காரணிகளால்தூண்டப்பட்டுள்ளன. நாடுகளில் எல்லைகள் அகன்று பிராந்தியக் கட்டமைப்புகள் உருவாகுதல், அரச செலவினை அதிகரிக்க முடியாதிருத்தல், தனியார்மயமாக்கல், பொதுச்சேவைகளில் சந்தைகளை உருவாக்குதல், அரசாங்கத்துடனான பங்குடமை முயற்சி கள் அதிகரித்தல், இலாபமற்ற நிறுவன வளர்ச்சி போன்றன சமூக மட்டத்தில் தொழில்முயற்சியாண்மைக்கான ஆர்வத்தைத் தூண்டும் போது, முயற்சியாண்மை 'கல்வி' யாக போதிக்கப்படவேண்டு மென்று கூறப்படுகிறது. அழுத்தக்குழுக்கள் வளர்ச்சியடைந்தமை, சூழல் பற்றிய அக்கறை அதிகரித்தமை, சிறுபான்மை மக்களின் உரிமை கள்வலியுறுத்தப்படல் சட்டம் பல கட்டங்களில் எதிக்கப்படல் போன்ற நிலைமைகளும் முயற்சியாண்மைக்கல்வியை முதன்மைப்படுத்தின.
3. நிறுவன மட்ட அழுத்தங்கள்
வியாபார, உற்பத்தி நிறுவனங்கள் பல நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்ததால், அவை தம்தன்மைகளைபலவாறு மாற்றவேண்டி ஏற்பட்டது. நிறுவனங்கள் தம் அளவுகளைக் குறைத்தன; பன்முகப் படுத்தின; வளர்ச்சியைத் தாமதப்படுத்தின; மீள்உருவாக்கம் செய்தன. இயன்றளவு அதிகமான துணை ஒப்பந்தங்களை மேற்கொண்டன; புதிய பங்காளர்களைத் தேடின; அசைவைத் தூண்டின. இவை யெல்லாம் புதிய முயற்சியாண்மைச் சிந்தனைகளைக் கிளர்ந்தெழச் செய்தன.
ஊழியர் படையிலும் விட்டுக்கொடுக்கும் தன்மை அதிகரித்தது. ஆளணியிலும் அசைவியக்கம் அதிகரித்தது. உயர்தொழில்புரிவோர்
74 கல்வியும் மனிதவள விருத்தியும்

முன்னேற்றமடைந்தனர். நிறுவனங்களில் பெளதீகச் சொத்துக்களை விட மூளை மேலாதிக்கம் பெற்றது. இத்தகைய மாற்றங்கள் முயற்சி யாண்மைக் கல்வியை வற்புறுத்தி வருகின்றன.
4. தனிநபர் மீதான அழுத்தங்கள்
உலக, சமூக, நிறுவனரீதியில் அழுத்தங்களை ஏற்படுத்தி காரணிகள் பலவும் கூட்டாகவும், தனித்தனியாகவும் தனிநபர் தொழில்முறை தொடர்பாகப் பல நெருக்கடிகளையும் வெகுமதிகளையும் வழங்குவன வாயமைந்தன. இவற்றைப் பூரணமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய தேவையும், அவசரமும் தனியாருக்கு ஏற்பட்டது.
பகுதி நேரத்தொழில் வாய்ப்புக்கள் பெருகின. ஒப்பந்தத்தொழில் வாய்ப்புக்கள் அதிகரித்தன. பல புவியியற் பிரதேசங்களிடையில் தொழில் வாய்ப்புக்காக நகரவேண்டி ஏற்பட்டது. வேலைத்தளத்தில் அதிக வேலைச்சுமை, அதனால் உளவியல் அழுத்தங்கள் ஏற்பட்டது.
வீட்டிலும், தனிப்பெற்றோராக (Single Parent) வாழும் நிலை ஏற்பட்டது. பொது சமூக்ப்பாதுகாப்பு குறைதல், சொத்து, காப்புறுதி உரிமைபேணுதல், கடன்களைச்சமாளித்தல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டனர். பன்முகப்படுத்தப்பட்டுள்ள உற்பத்திப் பண்டங் களிடையே தெரிவுகளை மேற்கொள்வதிலும் சிக்கல்களை எதிர் கொண்டனர்.
இத்தகைய எல்லா நிலைகளையும் கவனமாக எதிர்கொண்டு சமாளித்து வாழ்வதற்குரிய முகாமைத்துவ நடத்தைகளை விருத்தி செய்தல் வேண்டும். இதற்கு ஏற்றதாக நன்கு வடிவமைக்கப்பட்ட முயற்சியாண்மைக்கல்வி வழங்கப்படவேண்டியுள்ளது.
5. அடிப்படை மாற்றம்
தற்போது பாடசாலை மட்டத்தில் முயற்சியாண்மை விருத்தி தொடர்பானவை என்ற பெயரில் சில கலைத்திட்டச் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. உண்மையில் அவை வெற்றியளிக்கப் போவதில்லை. முயற்சியாண்மைக்கல்விக்கு அடிப்படையான சூழலை விருத்தி செய்தல் வேண்டும். இதற்கு வகுப்பறைகள் மாற்றியமைக்கப்படல் வேண்டும். ஆசிரியர்களின் திறன்களையும் அதிகரிக்க வேண்டும்.
பன்முகப்படுத்தல், வல்லாண்மையை அதிகரித்தல் என்பன முயற்சியாண்மையைப் பொறுத்து முக்கியமானவை. பாடசாலையில்
கல்வியும் மனிதவள விருத்தியும் 75

Page 40
முயற்சியாண்மையைக் கற்பிப்பதாயின் பின்வருவனவற்றைப் பின்பற்ற வேண்டுமென அலாம் ஜிப் (Alam Gibb) விளக்குகிறார். 1. தனியார் சொத்துரிமை உணர்வு, தனிநபர்நடவடிக்கை, அத்தகைய வற்றுக்கான விளைவுகள் என்பன பற்றிய உணர்வை வலுவாக வளர்த்தல் வேண்டும். 2. வேலைகளைச் செய்துமுடிப்பதற்கான தனிநபர்ஆற்றல், சுதந்திரம்
பற்றிய உணர்வை வளர்த்தல், 3. பல்வேறுபட்ட பரந்தளவிலான பணிகளைதனிநபர்பொறுப்பேற்ப
தற்குரிய வாய்ப்புக்களை அதிகம் வழங்குதல். 4. அலுவல்களை நிறைவேற்றுவதற்கான பொறுப்புணர்வு பற்றிய
கருத்தை வலியுறுத்தல்.
5. பிரதான பங்காளர் நோக்கில் திறமை என்பதை பாடசாலை
தெளிவாக வரையறை செய்தல். 6. பாடசாலை உபாயத்துடன் இணைந்ததாக அலுவலர் தம்
பங்களிப்பை விருத்திசெய்வதற்கு ஊக்கமளித்தல். 7. திறமையான பங்களிப்பைச் செய்வோருக்கான வெகுமதியை
வழங்குவதன் மூலமாக திறமையை அதிகரித்தல். 8. கற்றல் தொடக்கநிலைகளில் தெளிவின்மை, தவறுகள் என்பவற்றை
கருத்திற்கொள்ளுதல். 9. முறைசார்ந்த திட்டமிடலை மேற்கொள்ளுவதன் முன் தந்திரோ
பாய சிந்தனையை கொள்ளுதல். 10. சம்பிரதாய பூர்வமான தொடர்புகளைப் பேணுவதைவிட, முகாமைத்துவ அணுகுமுறையில் தனிநபர் மீதான நம்பிக்கைத் தன்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தல். 11. பொதுவான கலாசாரத்தை வளர்க்கும் வகையில் பல்வேறு குழுக்கள், பிரிவுகளுக்கிடையிலான இடைவெளிகளைத் தீவிர மாகப் பேணவேண்டியதில்லை. முறைசாராவகையில் ஒருவரின் கடமைகளில் ஒரு பகுதியை மற்றொருவர் மேற்கொண்டாலும் ஓரளவு அனுமதித்தல் வேண்டும். 12. அலுவலர் அபிவிருத்தி செயற்பாடுகள் மூலமாக, வேலை சார்ந்து
கற்கும் முறைகளை உருவாக்குதல்.
76 கல்வியும் மனிதவள விருத்தியும்

பாடசாலை அல்லது கல்லூரி இத்தகைய நடைமுறை சார்ந்த முயற்சியாண்மை அம்சங்களைக் கற்பித்து வந்தால் இடர் ஏற்கும் துணிவு அதிகரிக்கும். முயற்சியாண்மை நிறுவன முறையை ஊக்கு விக்கும்போது ஆசிரியர் புதிய உள்நோக்குகையைப் பெற்றுக்கொள்வர்.
6. வகுப்பறைச் செயற்பாடுகள்
மாணவர்கள் முயற்சியாண்மை பற்றிய எண்ணக்கருவைக் கற்றுக் கொள்வதைவிட உணர்ந்து கொள்வதும் அனுபவங்களின் வழியாகத் தெரிந்துகொள்வதற்கும் வாய்ப்பளிப்பதற்குமாக வகுப்பறைச் செயல்களைமாற்றியமைத்தல் வேண்டும். கற்பித்தல் முறையியலையும் மாற்றியமைத்தல் வேண்டும். இதனைச் செய்வதன் மூலமும் தமக் கிடையே கருத்துக்களையும் உணர்வுகளையும் பரிமாறிக் கொள்வதன் மூலமும், பரிசோதனைகளின் ஊடாக அறிந்து கொள்வதன் மூலமும் கற்றுக்கொள்ள இடமளிக்க வேண்டும். சாதகமான வகையில் இடர்களை ஏற்பதற்கும், பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். சமூகத்துடனான தொடர்பு மூலமாகவும், பாத்திரமேற்பதன் மூலமாகவும் மாதிரிகளைக் கையாள்வதன் மூலமாகவும் பாடசாலையின் உள்ளேயும் வெளியேயும் தாராளமாக மாணவர் பழக அனுமதிப்பதன் மூலமாகவும் பலவற்றைக் கற்றுக் கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும்.
இத்தகைய அணுகுமுறைகளை ஆசிரியர்கள் மிகவும் பரந்துபட்ட முறையில் கையாள முன் வரவேண்டும். முன்னேற்றமாக இத்தகைய முறைகளில் மாணவர்களை சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் செயற்பட அனுமதிப்பதன்மூலம் அவர்களின்ஆற்றலை முழுமையான அளவுக்குஉயர்த்த முடியும். "மரபுவழிக்கற்பித்தல் ஒழுக்கம்’ என்பதில் மாற்றம் ஏற்பட்டால்தான்முயற்சியாண்மைக்கல்வி வெற்றியளிக்கும். பொருத்தமான மரபுவழிக் கற்பித்தல் முறைகளை மாத்திரம் தெரிந்து கையாளவேண்டும். சிறந்த பரீட்சைப் பெறுபேறுகளுடன் முயற்சி யாண்மைத் திறன்களை விருத்தி செய்தல் அவசியம். இங்கிலாந்தின் வணிகப்பாடசாலைகள் பலவற்றில் இத்தகைய முறைகள் வெற்றியளித் துள்ளன. திறமை மிக்க ஆசிரியர்கள் இத்தகைய கற்பித்தல் முறைகளை கல்வியின்மையைச் செயற்பாடாகக் கொள்வர். மாணவர் உரிமையை உறுதிப்படுத்துவதோடு தேவையான அளவுகட்டுப்படுத்தும் கலையை யும் ஆசிரியர் தெரிந்திருக்க வேண்டும். கலந்துரையாடிக் கற்றல், மாணவர் தொடர்புமுறையை வலுப்படுத்தல்,ஊக்கத்தை அதிகரித்தல்,
கல்வியும்.மனிதவள விருத்தியும் 77

Page 41
விடயங்களை உள்ளபடியே நோக்குதல், கவனமாக இடர்களை ஏற்றல், பேசுதல், செய்தல் ஆகியவற்றில் புதிய அம்சங்களைப் புகுத்துதல், கற்றலை மேம்படுத்த தனிப்பட்ட பொறுப்புக்களை ஏற்கத் தயாராதல் போன்ற பல அம்சங்களைக் கற்றல், கற்பித்தல் தொடர்பாக ஆசிரியர் கவனத்திற் கொள்ளவேண்டும்.
7. நெருக்கடிகள்
முயற்சியாண்மைக்கல்வியைப் பயன்தரும் வகையில் கற்பிப்பதாயின் பல்வேறு பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டும். அத்தகைய கவனத்துக்குரிய அம்சங்களில் பின்வருவன முக்கியமானவை.
நோக்கங்கள்
பாடசாலை மட்டத்தில் இக்கல்வியை இதற்கே உரித்தான முறையில் கற்பிப்பதாயின் தற்போது இயங்குகின்ற கைத்தொழில்கள் மற்றும் சமுதாய நிறுவனங்களுடனான தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும். இதனை நடைமுறைப்படுத்துவதாயின் வேறு பல விடயங்களில் கவனம் செலுத்தவேண்டும்.
0 மிகப்பொருத்தமான அணுகுமுறையைத் தீர்மானித்தல்.
0 விஷேட நிகழ்ச்சித் திட்டமாகவா அல்லது பொதுவான கலைத்
திட்டத்தின் பகுதியாகவோ பராமரித்தல் எனத் தீர்மானித்தல்,
0 கலைத்திட்டம் தொடர்பாக எதிர்பார்க்கப்படுவன பற்றி தெளிவான முடிவுகளை மேற்கொள்ளவேண்டும். புதிய தொழில் முயற்சி, சிறிய தொழில்முயற்சி, பொதுவான தொழில் பற்றிய புரிந்துணர்வு, தனிநபர்சுயாதீனமான தொழில்கள் போன்றவற்றில் எது முக்கியம் என்பதைத் திட்டவட்டமாகத் தீர்மானித்தல் வேண்டும்.
0 இத்தகைய கல்வியை எந்த அமைவிடத்தில் (Location) வழங்குவது என்பது பற்றியும் தீர்மானித்தல் வேண்டும். பாடசாலை, தொழிற் பயிற்சிப் பாடசாலை, உயர்கல்வி நிறுவனம், வியாபார மையம் என்பவற்றில் எது உகந்ததெனத் தீர்மானித்தல்வேண்டும்.
0 நிகழ்ச்சித்திட்டத்தின் அணுகுமுறையையும் தீர்மானித்தல் வேண்டும். விஷேடமான வியாபார நிகழ்ச்சித்திட்டம், எல்லாப் பாடங்களையும் புலமைசார் முறையில் கற்பித்தல், புறக்கலைத் திட்ட நிகழ்ச்சித்திட்டம் போன்றவற்றில் எதனைத் தெரிவு செய்வ தென்பதும் முக்கியமானது.
78 கல்வியும் மனிதவள விருத்தியும்

)ெ இத்தகைய கல்வி ஏற்பாட்டினால் மாணவரிடம் எத்தகைய மாற்றம் எதிர்பார்க்கப்படுகிறது என்பதிலும் தெளிவாக இருத்தல் அவசியம். புதிய தொழில் முயற்சியைத் தொடங்க வேண்டுமா, சிறிய நிறுவனத்தில் பயனுறுதி மிக்கவகையில் பணியாற்ற வேண்டுமா, மாற்றங்கள் கொண்ட ஊழியர் சந்தையில் திறமையாகச் செயலாற்ற வேண்டுமா, தனிப்பட்ட முயற்சியாண்மை ஆற்றலை விருத்தி யடையச் செய்யவேண்டுமா என்பது பற்றித் தெளிவாகத் தீர்மானித் தல் வேண்டும். பல சந்தர்ப்பங்களில் மேற்கூறிய அம்சங்கள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டும் கலந்தும் காணப்படும்; என்பதைக் கருத்திற் கொள்ள வேண்டும்.
மாணவர் தேவைகள்
குறிப்பிட்ட நாட்டின் கல்விமுறையில் பல்வேறுபட்ட தேவைகள் கொண்ட வெவ்வேறு மாணவர் குழுக்கள் இருப்பர். அவர்கள் ஒவ்வொருவரும் முயற்சியாண்மைக் கல்வியினால் பல்வேறு மாறுபட்ட பயன்களை எதிர்கொள்வர்.
பாடசாலை மட்டத்தில் பாடசாலையிலிருந்து விலகியோர், குறைந் தளவு கல்விப் பெறுபேறுகளைப் பெற்றோர், இடைவிலகியோர், மிக உயர்ந்த கல்விச் சாதனை புரிவோர், வேலையின்மையை எதிர்கொள் வோர், உயர்கல்வியை நாடுவோர் போன்ற பல்வகையினர் காணப் படுவர். அவ்வாறே தனிப்பட்ட வசதியீனங்களால் குடும்ப வேலை களில் ஈடுபடுவோர், உடல்ஊனமுற்றோர், விஷேடகவனிப்பு தேவைப் படுவோர், பெண்கள், இனத்துவ சிறுபான்மையினர் போன்ற பலவகை இயல்புகளையுடையோர் இருப்பர். இவர்களின் கல்வி மட்டமும் வேறுபடலாம். அதற்கேற்ப முயற்சியாண்மைக் கல்வி ஏற்பாடுகளை வடிவமைக்க வேண்டும்.
கலைத்திட்ட வழிமுறைகள்
கற்பித்தலில் எத்தகைய செய்முறைகளையும் முயற்சியாண்மை அம்சங்களைஅறிமுகப்படுத்தமுடியும் என்பவற்றை முடிவுசெய்தாலும் அவற்றைக் கலைத்திட்டத்தினுள்ளே அடக்குவது என்பது நெருக்கடி யானதாகும். அந்நிலையில் பின்வரும் விடயங்களைக் கருத்திற்கொள்ள வேண்டும்.
கல்வியும் மனிதவள விருத்தியும் 79

Page 42
பல்வேறு வகை மாணவரினதும் தேவைகள். அவர்களின் முன்னுரிமைகள். தற்போதைய கலைத்திட்ட வெளிப்பாடுகள்.
கவர்ச்சி தொடர்பான எடுகோள்கள்.
புறக்கலைத்திட்டமாக ஒன்றிணைப்பதா அல்லது பாடசாலைக் கலைத்திட்டத்தினுள் அம்சமாகவே இணைத்துவிடுவதா என்பது பற்றிய முடிவு மேற்கொள்ளல், ஒவ்வொரு பிரதேச அடிப்படை யிலும் மாணவர்தன்மை, எதிர்பார்க்கை, தேவை என்பனவற்றின் அடிப்படையிலும், இவை தொடர்பான முடிவுகளை எடுப்பது சிக்கலானதாகவே காணப்படும்.
மதிப்பீடும் அங்கீகாரமும்
தொடக்கத்தில் முயற்சியாண்மை தொடர்பான நடத்தைகள், திறன்கள், உளச்சார்பு என்பவற்றை எவ்வாறு மதிப்பீடு செய்வது என்பது தொடர்பாகப் பல பிரச்சினைகள், அவநம்பிக்கைகள் காணப் பட்டன. திட்டவட்டமான ஒரே மதிப்பீட்டு அளவுமுறைகளைக் கையாளவேண்டியதில்லை என்றும் பொருத்தமான சில முறைகளை பயன்படுத்த முடியும் என்றும் தற்போது நம்பப்படுகின்றது.
நிறுவன ரீதியான முயற்சியாண்மை, ஆற்றலை மாத்திரமன்றி தனிநபர் ஆளுமை விருத்தி தொடர்பான மாற்றங்களையும் அளவிடல் வேண்டும். வளர்ந்தோர் செயற்பாடுகளை அளவிடுவதுபோல் பாடசாலை மாணவர் செயற்பாடுகளை அளவிடுவது திருப்திகர மானதா என்ற பிரச்சினையும் உண்டு. திருப்திகரமான அளவீடுகளை அடையாளம் காணவேண்டியதேவையும் பிரச்சினையும் இருக்கின்றன என்பதையும் மறுக்கமுடியாது.
பாடசாலையும் தொழிற்துறையும்
முயற்சியாண்மைக்கல்வியை தனியே தற்போது நிலவும் பாடசாலை ஒழுங்கமைப்புமுறையின் கீழ் வழங்க முடியாது. பல்வேறு நாடுகளின் அனுபவங்கள் இதனை வெளிப்படுத்தியுள்ளன. முயற்சியாண்மைக் கான கல்வி என்ற பெயரில் ஏற்கனவே பல நாடுகளின் பாடசாலைக் கலைத்திட்டத்தில் இவை சார்ந்த பல அம்சங்கள் உள்ளடக்கப்பட்டு கற்பிக்கப்பட்டு வருகின்றன. இவ்வம்சங்கள் கனடா, அவுஸ்திரேலியா,
80 கல்வியும் மனிதவள விருத்தியும்

அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளிலும் ரஷ்யக்குடியர சிலும் கற்பிக்கப்படுகின்றன. மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் வளர்முக நாடுகளான இந்தியா, மலேசியா, லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இவ்வம்சங்கள் கற்பிக்கப்படு கின்றன.
பாடசாலைகள், ஏனைய தொழில்நிறுவனங்கள், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் போன்ற பலவும் முயற்சியாண்மைக் கல்வியை பரவலாக்குவதில் நாட்டம்கொண்டு செயற்படுகின்றன.
இளைஞர்களிடையே பொருளாதார விழிப்புணர்வைத்தூண்டுவதும் கைத்தொழில், வியாபாரம், முகாமைத்துவம் பற்றிப்பரந்த அறிவை ஏற்படுத்துவதும் அவசியமாகியுள்ளது. சிறப்பாக, சிறிய தொழில்கள், அவற்றின் முகாமைத்துவம் பற்றிய விளக்கத்தை அதிகரிக்க வேண்டி யுள்ளது. பாடசாலைகளில் பாவனை (Simulator) முறையில் தொழில் முயற்சியைத்தொடங்குவது பற்றிய ஆர்வத்தை வளர்த்தல்வேண்டும். தொடர்பாடல், சமர்ப்பித்தல், கலந்துரையாடல், பிரச்சினைதீர்த்தல், தகவல் தொழில்நுட்பம் போன்ற பல செயன்முறைகள் சார்ந்த திறன்களையும் அபிவிருத்தி செய்தல் வேண்டும். ஒருவரின் வாழ்க்கைத் தொழில் பற்றிய (Career) திட்டமிடலுக்குரிய வழிகாட்டல்களையும் வழங்க வேண்டும். மாணவர்களுக்கு மட்டுமன்றி ஆசிரியருக்கும் தொழில் நிறுவன வேலைப் பயிற்சியை வழங்குவதற்கு உரிய வழிமுறைகளைத் தீர்மானிக்க வேண்டும்.
இவையெல்லாவற்றையும்விட முயற்சியாண்மைக் கல்வி விருத்திக் கும் பாடசாலைகளுக்கும் - தனிப்பட்ட நிறுவனங்களுக்கும், பாடசாலைகளுக்கும் - நிறுவனத் தொகுதிகளுக்கும், சிறிய பாடசாலை களுக்கும் - பெரிய கல்லூரிகளுக்குமான தொடர்புகளை ஒழுங்கு படுத்துதல் அவசியம்.
முயற்சியாண்மைக் கல்வி மூலமாக முயற்சியாண்மையாளர் என்ற விஷேடமான மனிதவளத்தை விருத்தி செய்ய வேண்டுமாயின் பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகளிலும் தொழில் நிறுவனங்கள் ஆர்வத்துடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். பாடசாலை
முறைமையை குழப்பாமல், தேவைக்கேற்றதாக முயற்சியாண்மைக் கலைத்திட்டத்தைத் தொழில் நிறுவனங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். பா சாலை மற்றும் வகுப்பறை ஏற்பாட்டிற்கு வெளியே
கல்வியும் மனிதவள விருத்தியும் 8.

Page 43
அதை செயற்படுத்த உதவவேண்டும். தேவைக்கேற்ப பாடசாலையின் வகுப்பறையை மீள்வடிவமைக்க உதவுதல் வேண்டும். ஆசிரியர் களிடம் தேவையான திறன்களை விருத்தியடையச் செய்வதிலும் தொழில் நிறுவனங்கள் ஊக்கத்துடன் உதவி செய்தல் வேண்டும்.
முயற்சியாண்மைக் கல்வி நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதில் எதிர்கொள்ளக்கூடிய பல்வேறு பிரச்சினை கள் பற்றியும் கல்வி நிறுவனங்கள் தொழில் நிறுவனங்களுடன் கூட்டிணைந்த வகையில் கலந்துரையாடிதீர்வுகளைத்தேடவேண்டும்.
பாடசாலை மாணவர் மற்றும் ஆசிரியர்களுக்கும் பயிற்சி மற்றும் வழிகாட்டல்களை வழங்கக்கூடிய தகைமையை கைத்தொழில், வியாபார, மற்றும் சேவைத்துறை பெரிய நிறுவனங்கள் வளர்த்துக் கொள்வதும் அவசியமாகின்றது.
புதிய ஆயிரமாம் ஆண்டுக்கான புதிய கண்ணோட்டமும், நம்பிக்கையுமுள்ள இளம் முயற்சியாண்மையாளரை வளர்த்தெடுப்ப தற்கு பாடசாலை முறை தொழிற்துறையுடன் இணைந்து செயற் படுவதே சிறந்த வழியாகும்.
82 கல்வியும் மனிதவள விருத்தியும்

அத்தியாயம் - 6
இலங்கையின் மனிதவள அபிவிருத்தியும் கல்வியும்
லங்கையில் பொதுக்கல்வி தொடர்பான அரசாங்கத்தின் கொள் கையைத் திட்டமிடுவதும், நடைமுறைப்படுத்துவதும் கல்வி யமைச்சின் பொறுப்பாகும். தொழில்நுட்பக் கல்வியைப் பொறுத்த வரையில் உயர்தொழில்நுட்பக் கல்லூரிகள் உயர்கல்வி அமைச்சின் கீழ்விடப்பட்டுள்ளன. தொழில்சார்கல்வி கல்வித்தொழில் அமைச்சின் கீழ்விடப்பட்டுள்ளன.
புதிய அரசாங்கம் 1977இல் உருவாக்கப்பட்ட போது கல்வியமைச்சு புனரமைக்கப்பட்டது. ஏற்கனவே கல்விச்சேவைகள் அமைச்சு என்ற பெயரில் இயங்கிவந்த செயற்றிட்ட அமைச்சுநீக்கப்பட்டது. அவற்றின் பெரும்பாலான பணிகள் மாகாணங்களுக்குப் பன்முகப்படுத்தப்
பட்டன.
மனிதவள அபிவிருத்தி
இலங்கையில் மத்திய மனிதவள அபிவிருத்தி பற்றிய கருத்துநிலை வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. மனிதவள அபிவிருத்தி பற்றிய முழுமை யான தந்திரோபாயம் எதுவும் காணப்படாததோடு மனிதவளம் என்ற பதமும் கொள்கை வகுப்போர், திட்டமிடுவோர் ஆகியோரிடையே மிகவும் அரிதாகவே பயன்படுத்தப்பட்டிருந்தன.
1985இல் சுவிடிஷ் சர்வதேச அபிவிருத்தி நிறுவனம் (SIDA) இத்தகைய நிலைமையை அவதானித்துத் தெரிவித்த சிபார்சுக்கு அமைய 1988
கல்வியும் மனிதவள விருத்தியும் 33

Page 44
பெப்ரவரி 18இல் மனிதவள அபிவிருத்திக் கழகம் (Human Resourece Development Council) ஒன்று உருவாக்கப்பட்டது. இந்தக் கழகம் மனிதவளத் திட்டங்கள், நிகழ்ச்சித் திட்டங்கள் என்பவற்றின் அபிவிருத்தி தொடர்பாகவும் மந்திரிசபை அமைச்சர்களுக்கு உதவியை யும் ஆலோசனைகளையும் வழங்கும் அமைப்பாக உருவாக்கப்பட்டது. இதன் பிரதான தொழிற்பாடுகளாகப் பின்வருவன அமைந்திருந்தன. a. கல்வியை விஞ்ஞானரீதியில் நியாயப்படுத்தல், ஒருங்கிணைத்தல், மனிதவளக் கொள்கைகள் என்பவற்றை உள்ளடக்கிய தேசியக் கொள்கை பற்றி அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்குதல். b. தேசியக் கொள்கைக்கிணங்க மனிதவள அபிவிருத்திக்கான நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பாக அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்குதல். C. அரசாங்கத்தினால் அனுமதிக்கப்படும் மனிதவள அபிவிருத்தித் திட்டங்கள், நிகழ்ச்சித் திட்டங்கள் என்பனவற்றின் நடைமுறைப் படுத்தற் செயற்பாடுகளைக் கண்காணித்தல். d. தேசிய நோக்கங்களுக்கு அமைவாக அரசாங்க முகவர்களினால் தயாரிக்கப்படும் கல்வித்திட்டங்கள் என்பவற்றை மதிப்பீடு செய்தலும். e. கல்வி, பயிற்சி, செயலமைப்புத் தொடர்பாக மதிப்பீடு செய்தலும்
மீள்நோக்குச் செய்தலும்.
1988 ஆகஸ்டில் கல்விச்சேவை ஒழுங்கமைப்பு மீதான ஆசிய அபிவிருத்தி வங்கியின் அறிக்கையானது மனிதவள அபிவிருத்தித் தந்திரோபாயம் தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தியதோடு, கல்வித்துறை தனக்குரித்தான கொள்கைகளையும் தந்திரோபாயங்களும் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்கிறது. நிகழ்ச்சித் திட்டங்கள், செயற்றிட்டங்கள், கல்விச் சேவைகள் என்பவற்றை முன்னேற்றும் வகையில், புதிய மனிதவள அபிவிருத்தித் திட்டங்களை அதிகரிப்ப திலும் பார்க்கக் கல்வி, பயிற்சித்துறைகளில் திறன்களை விருத்தி செய்தல் அவசியம். உள்நாட்டில் புதிய மாதிரித்திறன்களை விருத்தி செய்வதன் மூலமாக உள்நாட்டில் புதிய தொழில் வாய்ப்புக்களையும், புதிய தொழில் முயற்சியாளர்களையும் வெளிநாடுகளில் இலங்கை யருக்குப் பெருமளவு தொழில் வாய்ப்புக்களையும் உருவாக்க முடியும்.
கல்வியமைச்சும், கல்விப்பயிற்சி விடயங்களில் ஈடுபடும் ஏனைய அமைச்சுக்களும் மனிதவள அபிவிருத்தித் தந்திரோபாயங்களை
84 கல்வியும் மனிதவள விருத்தியும்

மிகவும் திறமையாக நடைமுறைப்படுத்துமிடத்து தேசிய மனிதவள அபிவிருத்தி தொடர்பான திட்டங்கள், நிகழ்ச்சித் திட்டங்களின் கொள்கை உருவாக்கம், மீளாய்வு, கண்காணிப்பு, நடைமுறைப் படுத்தல் என்பன தொடர்பாக மனிதவள அபிவிருத்திக்கழகத்தின் பங்கு மிகவும் முக்கியமானது. நாட்டிலுள்ள பல்வேறு அமைச்சுக்கள், முகவர்கள் ஆகியோரின் கல்விக் கொள்கைகள், திட்டங்கள் என்ப வற்றை ஒருங்கிணைப்பது மட்டுமன்றி பல்வேறு துறைசார்ந்த அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், தனியார்துறை நிறுவனங்கள் போன்ற பலவற்றிடமிருந்து எத்தகையதொரு தகவலை யும் திரட்டுவதற்கான அதிகாரம் கொண்டு செயற்படுகின்றது.
1989காலப்பகுதியில் இக்கழகம் பல்வேறு விடயங்கள் பற்றிஆராய்வ திலும் அவை தொடர்பான தேசியக் கொள்கைகளை உருவாக்குவ திலும் ஈடுபட்டிருந்தது. கல்விச் செயலமைப்புப் பற்றி ஆய்வு செய்வதிலும், நிலவுகின்ற பயிற்சி வசதிகள், கொடுகடன் வசதிகள், ஊழியர் சட்டம், தொழில்வாய்ப்பு, தொழில்வாய்ப்பு முன்னேற்றம் தொடர்பான கொள்கை உருவாக்கத்திலும், மாகாணமட்டத்தில் மனிதவளத்திட்டமிடல், மனிதவள அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் தயாரித்தல் போன்றவற்றிலும் பங்கேற்றது.
1981ஆம் ஆண்டு கல்விக் கொள்கை அறிக்கை கல்விக்கொள்கை தொடர்பான புத்தாக்கங்கள், ஒருங்கிணைப்புச் சார்ந்த பணிகளில் ஈடுபடத்தக்கனவாக தேசிய கல்விக்கழகம் (National Education Council). கல்வி அபிவிருத்திச்சபை (Education Development Board) என்பவற்றை உருவாக்குவது பற்றிக் குறிப்பிட்டிருந்தது. தேவைக்கேற்ப ஆசிரியர் கல்வி, கலைத்திட்டம், பாடநூல்கள்தொடர்பான குழுக்கள் பலவற்றை நியமிக்கக் கூடியதாயும் கல்வி அபிவிருத்திச் சபை அமையமுடியு மென்றும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டியது.
1981ஆம் ஆண்டுக் கல்விக் கொள்கை அறிக்கையில் பல சிபார்சு செய்யப்பட்டிருந்தாலும் 1989 வரை அதன் சிபார்சுகள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
எனினும் 21 ஆம் நூற்றாண்டில் ஏற்படக்கூடிய பொருளாதார விரிவாக்கத்திற்குத் தேவையான திறன்கள், மனப்பாங்குகள் கொண்ட மனிதவளத்தினை விருத்தி செய்யும் வகையில் கல்விமுறையைச் சீர்திருத்த வேண்டும் என்ற இலட்சியத்துடன் பணியாற்றுவதற்கு
கல்வியும் மனிதவள விருத்தியும் 85

Page 45
ஜனாதிபதியின் துரித செயலனி (Presidential Task Force) 1996இல் உருவாக்கப்பட்டது. 1991இல் அமைக்கப்பட்ட தேசியக் கல்வி ஆணைக்குழு கல்விக் கொள்கையை இலங்கையின் மனிதவள அபிவிருத்திக்கு ஏற்றதாகவும் மாற்றியமைத்தது. ஜனாதிபதியின்துரித செயலணியும் தேசியக் கல்விஆணைக்குழுவும் சேர்ந்து 1997இலிருந்து புதிய கல்விச்சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன.
மக்கள் புதிய தேவைக்கு முகங்கொடுக்கவும், புதிய நூற்றாண்டுப் பொருளாதார மற்றும் தொழிநுட்ப மாற்றங்களுக்குப் பொருந்தக்கூடிய மனிதவளமாக இலங்கையரை மாற்றவும் இப்புதிய சீர்திருத்தங்கள் முனைந்து வருகின்றன. 1999இலிருந்து நாடளாவிய ரீதியில் இச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. மனிதவள விருத்திக்குப் பொருத்தமான வகையில் பொதுக்கல்வியை மட்டுமன்றி தொழினுட்பக் கல்வியையும், தொழிற்கல்வியையும் மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மனிதவளப் பரம்பலும் கல்வியும்
மனிதவளம் என்பது தொழிற்படையை மையமாகக் கொண்டது என்பதால் தேசிய உற்பத்திக்கு மனிதவலுவை நிரம்பல் செய்யும் தகுதியும் விருப்பமும் கொண்ட மக்கள் தொகுதியை மேம்படுத்து வதற்கான அதீத கவனமும், திட்டமும், நிதிஒதுக்கீடு, நிறைவேற்றும் திறமையும், தொடர் செயல் ஒழுங்கும், மதிப்பீடுகளும் அவசியமா கின்றன.
மனிதவளம் என்பதில் உடல்சார்ந்த வலுவை உள்ளீடாகச் செய்யும் ஊழியர்கள் முக்கியமானவர்கள். முதல் நிலைத்துறையான விவசாயத் திலும், இரண்டாம் நிலைத்துறையான கைத்தொழில்களிலும் இவர்கள் பங்கு மரபு வழியாக முதன்மை பெற்றுக் காணப்படும். அண்மைக் காலங்களில் பொருளாதாரக் கட்டமைப்பு மாற்றங்களுடன் இசைவு உடையதாக சேவைத்துறைகளில் பணியாற்றும் உடல் உழைப்பு ஊழியர்கள் முதன்மை பெற்று வருகின்றனர்.
இலங்கை போன்ற விருத்தியடைந்து வருகின்ற தாழ், நடுத்தர வருமானத்திற்கு உரிய பொருளாதாரம் ஒன்றில் செயற்படும் மனித வளம் பின்வருமாறு பாகுபாடு செய்யப்படுகின்றது.
O LDJL16) is 676.15 (Tuís Git (Traditional Farmers) O 6TCupdig uplb 656) is TuS56it (Emerging Farmers)
86 கல்வியும் மனிதவள விருத்தியும்

O 6.160f5Lou Li Gibr60607gi GagstplayTGTi56it (Commercial Farm Work
ers)
0 நகர்ப்புறத் தொழிலாளர்கள் (Urban Sector Workers)
0 மீனவத்துறைத் தொழிலாளர்கள் (Fisheries Sector Workers)
மரபுவழி விவசாயிகளின் உழைப்பாற்றல், தொழில்முறை அறிவு என்பன முறையில் கல்வி (Informal education) ஒழுங்கு முறையில் பெறப்பட்டு வருகின்றது. குடும்ப ஊழியமாகப் பிள்ளைப் பருவத்தி லிருந்தே அறிமுகமாகும் அறிவையும் பயிற்சியையும் ஆரம்பக் கல்வி அறிவுடன் இணைந்த வகையில் ஊழிய ஆற்றலை அவர்கள் விருத்தி செய்து கொள்கின்றனர். சிறுநில உரிமையாளராகவோ கூலி விவசாயி களாகவோ இலங்கையின் விவசாயக் கிராமங்களில் இவர்கள் காணப் படுகின்றனர். விவசாய விரிவாக்கத் திணைக்களத்தின் விவசாயப் போதனாசிரியர்கள் மூலமாகக் காலத்துக்குக் காலம் வழங்கப்படும் அறிவுறுத்தல்கள், கையேடுகள், பயிற்சிகள் மூலமாக இவர்களது மனிதவளம் விருத்தி செய்யப்படுகின்றது. பெண்கள், சிறுவர்கள் ஆகியோரும் இதில் குறிப்பிடத்தக்க தொகையாகவுள்ளனர். இத் தொகுதி விவசாயிகள் பிழைப்பூதிய (Subsistance) ஊழியமாகவே காணப்படுகின்றனர் / இவர்களுக்குரிய ஆரம்பக்கல்வியை நான்கு வருடங்களினால் அதிகரிக்குமிடத்து பிழைப்பூதிய விவசாயம் 8.7% அதிகரிக்குமென உலகவங்கி மதிப்பிட்டுள்ளது. சரியான கல்விக் காலத்தை ஒரு வருடத்தினால் அதிகரிக்கும்போது மொத்த உள்நாட்டு உற்பத்தி 3% அதிகரிக்க முடியுமென்று அதிகரிக்க முடியுமென்று அது குறிப்பிடுகின்றது. தேசிய உணவுற்பத்தி கைத்தொழில் உள்ளீட்டு நிரம்பல், கிராமியத் தொழில் வாய்ப்பு, கைத்தொழில் உள்ளீட்டு நிரம்பல், கிராமியத் தொழில் வாய்ப்பு, நகர்ப்புறத்துக்கான மக்கள் பெயர்ச்சியைக் கட்டுப்படுத்தல் போன்ற பொருளாதார மற்றும் சமூக இலக்குகளை நிறைவேற்ற வேண்டுமானால் மரபுவழி விவசாயி களுக்கு அவர்கள் மட்டத்திலான கல்வி ஏற்பாடுகளில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். இந்தியாவில் மேற்கொள்ளப்படும் வயல் வெளிப் பள்ளிகள், மகளிர் விவசாயப் பள்ளிகள், வானொலி வேளாண்மை நிகழ்ச்சித் திட்டங்கள் போன்றவற்றின் அனுபவங்களை இலங்கையின் கிராமிய முறைமை, கலாசாரப் பண்பு என்பவற்றிற் கேற்ப பயன்படுத்துதற்குரிய கல்வி நிகழ்ச்சித் திட்டங்கள் போன்ற வற்றிற்கேற்ப பயன்படுத்துதற்குரிய கல்வி நிகழ்ச்சித் திட்டங்கள் வடிவமைக்கப்படுதல் அவசியம். இலங்கையில் விவசாயத்துறை
கல்வியும் மனிதவள விருத்தியும் 87

Page 46
45%மான தொழில் வாய்ப்புக்களை வழங்குகின்றபோதும், விவசாயம் சார்ந்த தொழில்களை ஏற்கும் விருப்புணர்வுடையோர் அண்மைக் காலங்களிலும் கூட 0.5%மானோர் தான் காணப்படுகின்றனர். (B.M.Kiribanda: 1997: 246) தொழில்பற்றிய ஆர்வத்தை இலங்கையில் சம்பளவிகித வேறுபாடுகள் சமுதாயப் பெறுமானங்கள், கல்விமுறை என்பன தீர்மானிக்கின்றன. அவை பெரிதும் அத்தியாவசியதுறைக்குள் ஊழியம் நகர்தற்கு மாறான திசையில் தான் செயற்பட்டு வருகின்றன. பல்கலைக்கழக மட்டத்தில்கூட விவசாய பீடத்துக்கு அனுமதி பெறுவோர் விகிதம் ஒப்பீட்டு ரீதியில் மிகவும் குறைவாகும்.
மரபுவழியான விவசாயத்தில் ஈடுபட்டிருப்போர் புதிய நுட்பங் களையும் திருத்திய விவசாய நடைமுறைகளையும் கையாளுமிடத்து அவர்கள் எழுச்சியுறும் விவசாயிகளாகின்றனர். மகாவலி, உடவளவை போன்ற ஆற்று அபிவிருத்திச் செயற்றிட்டங்களில் குடியேறிய விவசாயிகளில் இத்தகைய மாற்றங்கள் தென்படுகின்றன. எனினும் 70%இற்கு மேலான விவசாயிகள் இலங்கையில் புதிய நுட்பங்களைக் கையாள்வதில் நாட்டமற்றவர்களாக இருப்பதாக மதிப்பீடுகள் தெரிவிக் கின்றன. புதிய தகவல் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் அனுகூலங் களை விவசாயப் பொருட்களை சந்தைப்படுத்துவோர் பயன்படுத்தும் போது விவசாயிகள் அவற்றிலிருந்து துண்டிக்கப்பட்ட நிலையில் இருப்பதால் அவர்களது வாழ்க்கைத் தரமும் அத்துடன் இணைந்து மனிதவளமும் உரிய முறையில் விருத்தி செய்யப்படுவதில்லை. இலங்கையின் பல்கலைக்கழகங்களின் அனுமதியில் மிகக்குறைவான எண்ணிக்கையினர்அனுமதி கோரும்துறையாக விவசாயக்கற்கை நெறி இருப்பது கவனிக்கத்தக்கது. பல்கலைக்கழகம் விவசாயப் பயிற்சிக் கல்லூரிகள் இணைந்த செயற்றிட்டங்கள் மேலும் வினைத்திறனுடைய தாக்கப்படும் போது எழுச்சியுறும் விவசாயிகள் தொகையை அதிகரிக்க முடியும்.
பண்ணைத் தொழில்சார் ஊழியர் விருத்தி குறிப்பிடத்தக்களவில் வளர்ச்சியடையவில்லை. இறைச்சி, பால், கனிவகை என்பவற்றின் உற்பத்தியில் குடும்ப மட்டநிறுவனமயமாகாத ஊழியம் ஈடுபடுவதால் வினைத்திறன், பயனுறுதித்தன்மை என்பன அதன் இயலுமை மட்டத் திற்கு அதிகரிக்கவில்லை. நகர்ப்புறங்களிலான ஹோட்டல்கள், சுற்றுலா மையங்கள் சார்ந்த உணவகங்கள் மாத்திரமே பண்ணைத் தொழிலின் கேள்வியைப் பராமரிக்கின்றன. ஏற்றுமதிக்கும் நகர்ப்புறத் தேவைக்குமானபூங்கனிச்செய்கை ஒரளவு அதிகரித்துள்ளன. பூக்களின்
88 கல்வியும் மனிதவள விருத்தியும்

உற்பத்தியிலான மனிதவள விருத்தி வெற்றிடமாகவே காணப்படு கின்றது. இந்தியாவில் மல்லிகை, சூரியகாந்தி மலர்ச்செய்கை பெரியதொரு வணிகமயத்துறையாக வளர்ச்சி பெற்றிருப்பதால் அதில் வணிக மயப் பண்ணைத் தொழிலாளர்கள் வினைத்திறனுடன் செயற்படுகின்றனர். ஒப்பந்தப் பண்ணைத் தொழில் திட்டம் சிலோன் டுபாக்கோ கொம்பனியால் 1940களில் தொடங்கப்பட்டிருந்தாலும் 1980களின் பிற்பகுதியிலிருந்து ஒழுங்கான முறையில் செயற்பட லாயிற்று. 1993இல் பலவத்தை சீனிக்கைத் தொழில் நிறுவனம் 1372 குடியேற்றவாசிகள் உள்ளடக்கியமாக ஒப்பந்தப் பண்ணைமுறையில் கரும்புச் செய்கையில் ஈடுபட்டது. இலங்கைச் சீனிக்கூட்டுத்தாபனம் ஒப்பந்தப்பண்ணை முறையில் கரும்புச் செய்கைக்கென 3427(1990ல்) குடியேற்றவாசிகளையும் பயன்படுத்தியது. 1980களில் கறீன் /பாம், ஹெயின்ஸ், எய்ட்கன்ஸ்பென்ஸ், ஜோன்கீல்ஸ் போன்றனவும் சிறியளவில் இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டிருந்தன. இவை நிறுவன முறையில் கிராமியமட்ட பண்ணைத் தொழிலாளர் செயற்படுதற்கு வாய்ப்பளித்திருந்தன. இவை நன்கு வளர்ச்சியடைந்ததால் பண்ணைத் தொழில்களுக்கான ஒழுங்குமுறையான மனிதவளத்திற்கான கேள்வி யும் ஏற்பட்டு மனிதவள விருத்தி நிகழ்ச்சித் திட்டங்களும் வளர்ச்சி பெற்றிருக்கும். ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையில் இத்துறைசார்ந்த மனிதவள விருத்தி நன்கு கவனிக்கப்படாமலும் ஒழுங்குபடுத்தப்படா மலுமே காணப்படுகின்றது. இலங்கையின்கல்வி, பயிற்சி ஏற்பாடுகள் இத்தகைய மனிதவள விருத்தியில் அக்கறை செலுத்த வேண்டியதன் முக்கியத்துவம் உணரப்படல் வேண்டும்.
நகர்ப்புறத் தொழிலாளர்கள் என்னும்போது இலங்கையில் காணப் படும் (பத்திலும் குறைவான) நகரங்களில் காணப்படும் தொழிற் சாலைகள், வியாபார நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள் போன்ற வற்றில் பணியாற்றும் தொழிலாளர்களைக் குறிப்பிடுகின்றது. இவர்கள் 'நகர்ப்புற வறியோர்' வகுப்புக்குட்பட்டவர்களாகவும் கிராமங் களிலிருந்து நகரும் தொழிலாளர்களாகவே உள்ளனர். தொழிற்சங்கங் களும் தொழில் வழங்குவோரும் இவர்களது மெய்வருமானம்பற்றி விவாதிக்குமளவுக்கு இவர்களது வினைத்திறனை மேம்படுத்தும் வகையிலான மனிதவள விருத்தி பற்றி அக்கறை செலுத்தி வரவில்லை. கைத்தொழில் அமைச்சின் கீழ்வரும் தொழிற்பயிற்சி நிறுவனங்கள், தொழினுட்பக் கல்லூரிகள், அனுசரணையுடனான தொழிற்பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் போன்றவற்றின் மூலமாக மனிதவளவிருத்தி
கல்வியும் மனிதவள விருத்தியும் 89

Page 47
தொடர்பான பயிற்சித்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. பல்கலைக்கழகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் என்ற தொடர் ஒழுங்கில் கல்வி, பயிற்சித் திட்டங்கள், செயற்திட்டங்கள் என்பன உயர்கல்வி, மற்றும் தொழிலாளர் கல்வி துறைகளில் வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இலங்கையில் தொழில்சார் ஆர்வம் பற்றிய நிலைமையை விளக்கும் 1995ஆம் ஆண்டுக்கான ஊழியப்படை ஆய்வு கைத்திறன்கள் தொடர் பான தொழில்களில் 28.0 வீதமான வேலையற்றோர் நாட்டம் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. (Kiribanda 1997:246). வேலை யின்றி இத்தகைய தொழில்சார் நாட்டமுள்ளவர்களுக்கு ஏற்றதாக கல்விமுறையில் உரிய மாற்றங்கள் செய்யப்படுவது அவசியமே. தாய்வான்நாட்டின் பொருளாதாரக் குறிக்கோள்களுக்கமைய விவசாயத் துறைப் பொருளாதாரம் கைத்தொழில் துறைகளுக்கு (1960 - 1970) மாற்றமடைந்தபோது அதற்கேற்ற தகுதி மனப்பான்மையுடன் ஊழியர் உருவாக்கக் கூடியதாக கல்வி மாற்றப்பட்டது. கைத்தொழிற் பயிற்சி வழங்கக் கூடிய தொழில்சார் பாடசாலைகளும் (Vocational Schools). கைத்தொழில்சார் கலைத்திட்டமும் ஐந்துவருட கல்விக் காலமும் கொண்ட கனிஷ்டக் கல்லூரிகளும் (Junior Colleges) உருவாக்கப் பட்டன. 1960-1970 காலப்பகுதிகளில் ஏற்றுமதி பதப்படுத்தப்படும் வலயங்களில் ஊழியச் செறிவான தொழில்களுக்குரிய திறன் மிக்கோருக்கு ஏற்பட்ட கேள்வியை ஈடுசெய்ய 1965-68காலப்பகுதியில் இத்தகைய தொழிற்பாடசாலைகளும், கனிஷ்டகல்லூரிகளும் அதிகரிக் கப்பட்டு 1972 காலப்பகுதிவரை தொழில்சார் கல்வியிலான பட்டதாரி களின் விகிதமும் அதிகரிக்கப்பட்டிருந்தது. (Flora F.Tien: 1996: 14) இலங்கையில் 1978இலிருந்து ஏற்றுமதித்தயாரிப்பு வலயங்கள் உருவாக் கப்பட்டு 95% மான தொழில் வாய்ப்புக்களை வழங்குகின்றன. இவ் வலயங்களில் 1980இல் 10,538 பேரும் 1999இல் 104.220 பேரும் தொழில் 6)JITülJL'yū (o)Lupp67i. (Premachandra Athukorala: 1996: 411) 5) pait மிக்கோரையும், கூட்டுத் தொழிலுக்கான முயற்சியாண்மையோரையும் அதிகரிக்கும் வகையிலான மனிதவளப் பயிற்சிகள் இலங்கையில் மேற்கொள்ளப்படவில்லை. கல்விமுறை இத்தகைய புதிய மனிதவளக் கேள்வியை ஈடுசெய்யத்தக்கதாக இலங்கை ஊழியர்களை மாற்றி யமைப்பதிலும் முன்னேற்றுவதிலும்துரிதகதியில் செயற்படவில்லை. 1991வரை 131வெளிநாட்டு நிறுவனங்கள்முதலீடு செய்திருந்தபோதும் உலகின் மிகப்பெரிய பல்தேசிய நிறுவனங்களான சிமென்ஸ்,நாஷனல் செமிகொண்டாக்டாஸ், மோட்டரோலா, ஹிட்டாச்சி, கீகேற்,
90 கல்வியும் மனிதவள விருத்தியும்

நிக்ஸ்டோஃப் போன்ற நிறுவனங்களை இலங்கையினால் ஈர்க்க (plgu6)76o606v. (Premachandra Athukorala: 1996:406) Gl Dngfjørðu6v, குவாத்தமாலா, எல்சல்வடோர், டொமினிக்கன் குடியரசு போன்ற நாடுகளில் காணப்படும் வேலையின்மை மட்டத்திற்குச் சமமான தொழில் வாய்ப்புக்களை ஏற்றுமதிப்படுத்தும் வலயங்கள் அங்கு உருவாகியிருந்தன. அத்தகைய தொழில் வாய்ப்புப் பெருக்கத்தை இலங்கை மேற்கொள்ள முடியாதிருந்தமைக்கு மனிதவளவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களில் கல்விமுறையானது அதிக கவனக்குறைவுடன் செயற்பட்டமை காரணமாகும்.
இலங்கையில் 10,000 மீன்பிடிக் கிராமங்கள் உள்ளன. ஏராளமான குடும்ப ஊழியம் ஒழுங்குபடுத்தப்படாமல் ஈடுபட்டு வருகின்றது. மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் பயிற்சி நிலையங்களே இதில் அதிக அக்கறை காட்டி வருகின்றன. மீன்பிடித்துறைப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டு, தீவு முழுவதும் வளாகங்களை நிறுவி செயற் பட்டால் இத்துறையில் மனிதவள விருத்தி ஏற்படும்.
மனிதவளப் பயன்பாடு அண்மைக் கால நடவடிக்கைகள்
பொருளாதார விருத்தித்துறைகளின் தேவைகளுக்குப் பொருத்தமான மனிதவளத்தைத் தயார்செய்ய வேண்டிய பொறுப்புணர்வுடன் கல்வித் துறை செயலாற்ற வேண்டும் என்ற எண்ணக்கரு கல்வித் துறையில் வலிமை பெற்று வருகின்றது. கல்வி உள்ளீடு என்ற அடிப்படையில் சிறப்பாகச்செயற்படவேண்டும். கலைத்திட்டம், கற்பித்தல் முறைகள், பயிற்சி ஏற்பாடுகள், மதிப்பீட்டு முறைகள் என்பவற்றை உற்பத்தித் திறன்மிக்க ஊழியத்தை உருவாக்கும் வகையில் வடிவமைக்க வேண்டும் என வற்புறுத்தப்படுகின்றது.
இந்த அடிப்படையில் பொருளாதாரத்துறைகளுடனும், பிரச்சினை களுடனும் மக்களைப் பொருந்தச் செய்யும் பணியைக் கல்வித்துறை ஆற்ற வேண்டும் என்று வலுவாக நம்பப்படுகின்றது. நாட்டில் கற்றோர் தொழிலின்மை அதிகரிக்கும்போது அது பொருளியலாளர்களின் குறைபாடு என்பதைவிட கல்வித்துறையின் பவீனம் என்றவாறும் விளக்கமளிக்கப்பட்டும் வருகின்றது.
பொருளியல் வளர்ச்சி, கல்வி அபிவிருத்தி ஆகிய இரண்டுக்கும் தேசிய ரீதியில் பொறுப்புடையவர்-வகை சொல்ல வேண்டியவர்என்ற வகையில் அரசாங்கம் மனிதவள அபிவிருத்தியைக் கல்வியுடன் தொடர்புபடுத்தும் பல நடவடிக்கைகளை அண்மைக் காலங்களில் மேற்கொண்டு வருகின்றது.
கல்வியும் மனிதவள விருத்தியும் 9.

Page 48
வேலையின்மையைக் குறைத்தல்
இலங்கையினது வேலையின்மை 1994இல் 13.1%மாயிருந்தபோதும் 1998இல் இது 8.8%மாக வீழ்ச்சியடைந்தது. இலங்கையின் ஊழியப் படை 1998இல் 6.7 மில்லியனாயிருந்தது. தொழில் செய்யக்கூடிய அறிவு, ஆற்றல், விருப்பம் என்பவற்றுடன் தொழில் செய்யும் வயது வீச்சுக்குள் உள்ள மக்கள் தொகுதியே ஊழியப்படை எனப்படுகின்றது. இதில் தொழில் செய்வதற்கான அறிவு, திறன்கள், மனப்பான்மை, ஊக்கம் என்பவற்றை மேம்படுத்தும் பயிற்சி கல்வித்துறையினுடையதாக விளங்குகின்றது. வருடாந்தம் இத்தகைய தகுதியுடன் 125,000- 150,000 பேர்வரை ஊழியப்படையில் சேர்ந்த வண்ணம் உள்ளனர்.
கடந்த நான்கு வருடங்களில் அரசாங்கம் 700,000 புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்கியுள்ளது. இத் தொழில் வாய்ப்புக்கள் பின்வரும் துறைகளில் உருவாக்கப்பட்டன.
1. அரசாங்கத்துறை
2. தனியார்துறை 3. வெளிநாட்டுத் தொழில்வாய்ப்பு 4. சுயதொழில் முயற்சி
இத்தகைய எல்லாத்துறைகளிலும் வேண்டப்படும் மனப்பான்மை களை உடையோரை உருவாக்கும் வகையில் அண்மைக் காலத்தில் கல்விச்சீர்திருத்தங்கள் (1997) நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இலங்கையின் மக்கள் தொகை 18.8 மில்லியன்; சந்தை விலைப்படி தனிநபர் வருமானம் ஆண்டுக்கு US$ 823; ஊழியர் படையின் பங்கேற்பு 51.9% (1998) கற்றோர் வேலையின்மைப் பிரச்சினை காரண மாகப் பலமுறை இளைஞர் கிளர்ச்சிகளை (1971-1987 - 89) நாடு கண்டது. வடபகுதிக் கிளர்ச்சிக்கு இதுவும் ஒரு காரணி என்று கூறப் படுகின்றது. 1998 வேலையற்றோரில் 49% மானவர்கள் 15-25 வயதுக்கு இடைப்பட்டவர்கள். வேலையற்றோரில் 27% மானவர்கள் க.பொ.த உ/த பயின்றவர்கள் 23.4% மானவர்கள் பட்டத் தகுதிகளைக் கொண்டவர்கள்;
பொருளாதாரத் தாராளமயக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் இலங்கையின் பொருளாதாரமுறை பழைய ஏற்றுமதி - இறக்குமதிப் பாணியைக் கைவிட்டு கைத்தொழில் ஏற்றுமதியில் அக்கறை செலுத்தத் தொடங்கியது.
92 கல்வியும் மனிதவள விருத்தியும்

இதன்பின்னர் நாட்டின் தொழில் வாய்ப்புக்களில் சில அடிப்படை மாற்றங்கள் நிகழ்ந்தன. விவசாயத்துறை வேலை வாய்ப்புக்கள் 30.4% இருந்து 21.3%மாகக் (1978 - 98க்கிடையில்) குறைந்தன.
சேவைத்துறை வேலைவாய்ப்புக்கள் 44 சதவீதத்திலிருந்து 53 சதவீத மாக அதிகரித்தன. கைத்தொழிற்துறை வாய்ப்புக்கள் 18.5% இருந்து 16.5 சதவீதமாகக் குறைந்தன. முக்கியமாக, அரசாங்கத்துறை வேலை வாய்ப்புக்கள் 70%இருந்து 15%த்துக்கு வீழ்ச்சியடைந்தன. இந்நிலை யில் வேலை வாய்ப்புக்களை வழங்குவதில் தனியார் துறையே முன்னிற்கின்றது.
கடந்த நான்கு தசாப்த காலமாகப் பல்கலைக்கழகப் பயிற்சிநெறி களும் பாடத்திட்டமும் அப்போது பொருளாதாரத்துறையில் மேலாதிக் கம் கொண்டிருந்த அரசாங்கத்துறை வேலை வாய்ப்புக்களைப் பெறும் வகையில் மாணவர்களுக்குக் கல்விப் பயிற்சியை வழங்கின. இன்று அரசாங்கம் 15 சதவீத வேலைவாய்ப்புக்களையும் தனியார் துறை 35சதவீத வேல்ை வாய்ப்புக்களை வழங்குகின்றன.
தனியார்துறை நிறுவனங்கள் அரசாங்கத்தின் திறந்த சந்தைக் கொள்கையால் ஊக்கப்படுத்தப்பட்டு சர்வதேச வர்த்தகத் தொடர்பு களைப் பேணிவருகின்றன. இதற்கு ஆங்கிலம் கற்ற, கணினிப் பயிற்சியுடைய ஏராளமான இளைஞர்கள் தேவைப்படுகின்றனர். இவ்விரு துறைகளிலும் போதிய தேர்ச்சியற்ற இளம் பட்டதாரி களுக்குத் தனியார்துறை வேலைவாய்ப்புக்கள் கிட்டுவதில்லை. 9166T60)LD55|T6) glu G6JT6örbsiTulq (Employment Survey, Chamber of Commerce, 1999) பட்டதாரிகளுக்குத் தேவைப்படும் திறன்களும் ஆற்றல்களும் பின்வருமாறு. 1. ஆங்கிலத்தில் தொடர்பாடற்திறன் 2. வெவ்வேறு ஆட்களுடன் குழுக்களுடன் இணைந்து சுமுகமாகப்
பணிபுரியும் ஆற்றல் | 3. ஒரு குழுவுக்குத் தலைமை தாங்கிச் சிறந்த பெறுபேறுகளைப்
பெற்றுக் கொடுத்தல் 4. காலத்தைப் பயன்தரும் முறையில் திட்டமிடல்
சுயமுயற்சியை மேற்கொள்ளல் இடர்களைத் (Risks) தயங்காது எதிர்கொள்ளல்
கல்வியும் மனிதவள விருத்தியும் 93

Page 49
மற்றவர்களிடம் தெரியாததைக் கற்றுக்கொள்ளும் திறந்த மனப்பாங்கு கணினிப் பயிற்சியும் அடிப்படை கணக்கீட்டுத் திறனும் பொதுஅறிவு (உலக விவகாரங்கள் பற்றிய அறிவு) உடைஅணிதல், தோற்றம் பற்றிய நல்லுணர்வுகள், பண்பான பழக்கங்களும் பேச்சும்.
95Tjib : Development Forum - Paris 2000
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் 1997
புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு இரு நோக்கங்கள் உண்டு:
1. கல்விமுறையின் தராதரங்களை அதிகரித்துப் பாடசாலை மாணவர்களுக்கு வலுவூட்டி தொழிற்சந்தையில் தகைமையையும் தேர்ச்சியையும் வேலை செய்யும் ஆற்றலை உடையவர்களாக (employable) ஆக்குதல், இன்று பொருளாதாரத்துறையில் இணைந்துகொள்ள இப்பண்புகள் தேவை.
2. பிள்ளைகளுக்குப் பாடசாலைக் கல்வியினூடாக மனித விழுமியங் களை வழங்குதல் இதனால் அவர்கள் இரக்கம், கருணை அக்கறை என்னும் பண்புகளைக் கொண்ட சமூகப் பொறுப்புள்ளவர்களாக வளர்ச்சி பெறுவர்.
சுயசிந்தனை, படைப்பாற்றல், புத்தாக்க முயற்சி, பகுப்பாய்வுத் திறன் கள், பிரச்சினைதாங்கும் ஆற்றல்கள் என்பவற்றைக் ஊக்குவிக்கும் புதிய கல்விச்சீர்திருத்தங்கள் நவீன மனிதவள விருத்தியை நோக் காகக் கொண்டவை. பரீட்சையின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டு, கிரகித்தல், பிரச்சினை தீர்த்தல், பகுப்பாய்வுத்திறன் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன.
தனியார் துறையினர் இன்று ஆங்கிலத்தில் தேர்ச்சி, தகவல் தொழில் நுட்பம் ஆகிய இருதுறை ஆற்றல்களை வேண்டிநிற்கின்றனர். இவ்வாற்றல்கள் இன்று அரசாங்கத்துறையிலும் தேவைப்படுகின்றன. மனிதவள விருத்திக்குத் தேவையான ஆங்கிலக் கல்வியையும் தகவல் தொழில்நுட்ப அறிவையும் பாடசாலைக் கல்வியினூடாக வழங்குவது இலங்கைக் கல்விஅமைச்சின் 2001ஆம் ஆண்டுக்கான முக்கிய கொள்கை முயற்சிகளாகும்.
ஆதாரம் : தாரா டி மெல், Education and Higher Education, Conflictcauses and consequencas, 2002.
94 கல்வியும் மனிதவள விருத்தியும்

கல்விச் சீர்திருத்தங்கள்
அண்மைக்காலங்களில் தொழிற்துறைகளில் ஏற்பட்டு வரும் போட்டிநிலை, முன்னேற்றங்கள் என்பவற்றுடன் பொருந்தக்கூடிய மனிதவளத்தை உருவாக்கவேண்டிய தேவையை நிறைவேற்றும் வகையில் 1997இல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கல்விச் சீர்திருத்தங் கள் விளக்குகின்றன.
அரசாங்கம் நேரடியாக உற்பத்தித்துறைகளில் முதலீடு செய்வதைக் கைவிட்டு, தனியார்துறை முதலீட்டை ஊக்குவிக்கக் கூடியதான உட்கட்டமைப்பு துறைகளில் (Infra Sturcture) முதலீடு செய்யும் கொள்கையுடன் செயற்படுகின்றது. பொருளாதார முதலீடுகளைத் தனியார்துறை மேற்கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கப்படுவதால் தொழில்வாய்ப்புக்களை உருவாக்குவதிலும் அவர்களே இன்று முதன்மையானவர்கள். இதனால் தனியார்துறையின் தேவைக்கேற்ற மனிதவளத்தை உருவாக்கும் உட்கட்டமைப்புத்துறைகளில் ஒன்றாகக் கல்வித்துறை நோக்கப்படுகின்றது. அந்த அடிப்படையில்தான் இப்போது புதிய கல்விச்சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்விச்சீர்திருத்தங்களுடன் தொழில்சார் பயிற்சி (Vocational training) தொடர்பான சீர்திருத்தங்களும் அறிமுகப்படுத்தப் படுகின்றன. பரந்துபட்ட புதிய தொழில் வாய்ப்புக்களைப் பெறக்கூடிய வழிமுறைகளிலும் கவனம் செலுத்தப்படுகின்றது.
தொழில்சார் பயிற்சி (Vocational Training Facilities)
தேசிய மட்டத்தில் மட்டுமன்றி, மாவட்ட மற்றும் கிராமிய மட்டங் களிலும் தொழில்சார் பயிற்சி வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கென தொழில்சார்பயிற்சி அதிகார சபை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சமூகரீதியில் மிகவும் குறைந்த இளைஞர்களை- க.பொ.த (சாதாரணம்) அல்லது அதனிலும் குறைந்த கல்வித் தராதரம் கொண்ட இளைஞர்களைத் தொழில் தகுதியுடைய வர்களாக்கும் நோக்குடன் இவ்வதிகாரசபை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
1997இல் 137 கிராமிய தொழில்சார் பயிற்சி நிலையங்கள் (Rural Vocational training Centre) செயற்பட்டன. 1999 - 2000 காலப்பகுதியில் மேலும் 275 தொழில்சார் பயிற்சி நிலையங்களும், 12 மாவட்டத் @g5 Tf626iváFIT ii luuîpið6F 6760) Gavu uši 5GB lib (District Vocational training Centres) நிறுவப்படும். இவையனைத்தும் குறைந்தது 80,000 பேருக்குப் பயிற்சி வழங்கும் என்று கூறப்பட்டது.
கல்வியும் மனிதவள விருத்தியும் 95

Page 50
இத்துடன் நன்கமைந்ததுறை (FormalSector), நன்கமையாததுறை (n- formal Sector) என்பவற்றில் சுயதொழில் முயற்சிகளில் ஈடுபட்டிருப் போருக்கான தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 1997ஆண்டின் இறுதிவரை 12 தனியார் நிறுவனங்களின் அனுசரணையுடன் 9,535பேர் இவ்வாறு பயிற்றப்பட்டிருந்தனர்.
சுற்றுலாத்துறை
இலங்கையில் கல்விகற்றோருக்குமான புதிய தொழில் வாய்ப்பு வழங்கும் துறையாக சுற்றுலாத்துறை வளர்ந்து வருகின்றது. 1997ஆம் ஆண்டளவில் 81,644பேர் இத்துறையில் தொழில் வாய்ப்புப் பெற்றனர். சுற்றுலாத்துறைக்கு வேண்டிய மனிதவளத்தை விருத்தி செய்யும் நோக்குடன் ஹோட்டல் செயல்திட்டம் (Hotel Project) ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வருடாந்தம் 1500பேருக்கு பயிற்சி வழங்கும் இலக்குடன் இச்செயற்றிட்டம் செயற்பட்டு வருகின்றது. பாடசாலைப் பொதுக்கல்விக்குப் பின்னர் இப்பயிற்சி மூலம் தாமதமின்றி, உயர்ந்த வேதனத்துடன் தொழில் பெறுவதற்கு இப்பயிற்சி உதவுகின்றது.
வெளிநாட்டு முதலீட்டு முயற்சிகள்
இலங்கையில் முதலீட்டுச்சபை (Board of Investment) யினால் வழங்கப்படும் பல்வேறு ஊக்குவிப்புக்களினால் உற்பத்தி முயற்சிகளில் மட்டுமன்றிக் கல்விமுயற்சிகளிலும் அநேக நிறுவனங்கள் ஈடுபடு கின்றன. 1996 அல்லது இம்முதலீட்டுச் சபையின் கீழ்பதிவு செய்து தொழிற்படும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கான வரிச்சலுகையும் வரிவிடுதலைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. தொழில்நுட்ப அறிவை யும் திறன்களையும் இலங்கையர்க்கு வழங்குவதில் அதிகம் அக்கறை காட்டுவனவாக இந்நிறுவனங்கள் காணப்படுகின்றன. இவை தொடர் பான முதலீடுகளினால் 20,000 தொழில் வாய்ப்புக்கள் உருவாகின. அத்துடன் பட்டதாரிகளுக்கு விஷேடமான வரிச்சலுகைகளும் வசதி களும் வழங்கப்பட்டுள்ளன.
பயிற்சித் திட்டங்களுக்குரிய ஊக்குவிப்புக்கள் 1998ஆம் ஆண்டு வரவு - செலவுத்திட்டம்
விஷேடமான முன்னுரிமைத்துறைகளில் பல்வேறு வசதிகளை வழங் கும் நிறுவனங்களுக்குஐந்துவருட வரிவிடுதலை வழங்கப்பட்டுள்ளது.
96 கல்வியும் மனிதவள விருத்தியும்

தைத்தஆடை, இரத்தினக்கல், தங்கநகை, மின்சாரப் பொருட்கள், கணிப்பொருட்கள், கணிப்பொறி, மென்பொருட்கள் போன்றன இத்தகைய முன்னுரிமைத்துறைகளாக விளங்குகின்றன.
1999இன் வரவு - செலவுத் திட்டத்திலும் திறன் விருத்திநிதியம் (Skils Develoment Fund) உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டின் உற்பத்தித் திறனை உயர்த்தக்கூடிய மனிதவள உருவாக்கத்திற்கு உதவக் கூடியதாக புதியவர் களையும் ஏற்கனவே தொழிலில் இருப்போரையும் பயிற்றுவிக்கும் தொழில் வழங்குனர்களுக்கு உதவி வழங்குவதாக இந்த நிதி செயற்படு கின்றது. இந்நிதியத்திற்கு முதலில் 100மில்லியன் ரூபா ஒதுக்கப் பட்டுள்ளது.
1994இலிருந்து இலங்கை அரசாங்கம் வெளிநாட்டு வேலை வாய்ப்பை ஊக்குவிப்பதில் தீவிரகவனம் செலுத்தி வருகின்றது. இதற்கு உதவக்கூடிய கல்வி மற்றும் பயிற்சித்திட்டங்களிலும் அக்கறை செலுத்தி வருகின்றது.
ஆடைத் தொழில், தாதித்தொழில், வியாபாரச் சிப்பந்தித் தொழில் போன்றவற்றுக்கான பயிற்சி வழங்கும் நிறுவனங்களும் செயற்பட்டு வருகின்றன.
விஞ்ஞானத்துறைசார்ந்த அலுவலகத்தில் பணியாற்றும் உயர்அதிகாரி ஒருவரைப் பயிற்றுவிக்க ரூபா 10 இலட்சத்தை அரசாங்கம். செலவிடு கின்றது. ஆனால், ஆடை அல்லது தாதித் தொழிலில் ஒருவரைப் பயிற்றுவிக்க ரூபா ஒரு இலட்சம் போதுமானதாயுள்ளது.
வெளிநாட்டுத் தொழில் வாய்ப்புக்குரிய பயிற்சிச் செலவுகளுக்கென வழங்கப்பட்டிருந்த 2மில்லியன் அமெரிக்க டொலர்கடந்த காலத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.
வேலைவாய்ப்புப் பணியகம், வெளிநாட்டு அமைச்சு, பல்கலைக் கழகங்கள், தொழில் அமைச்சு, வெளிநாட்டுத் தூதரகங்கள் என்பன ஒன்றிணைந்து வெளிநாட்டு வேலை வாய்ப்புக்குப் பொருத்தமான மனிதவளத்தை விருத்தி செய்வதற்கான கல்வி மற்றும் பயிற்சித்திட்டங் களைக் கவனமாக வடிவமைத்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உணரப்பட்டுள்ளது. 1995ஆம் ஆண்டு 170,000பேர் வெளிநாட் டில் தொழில் புரிந்து வந்தனர். இவர்கள் 40,000 மில்லியன் ரூபா அந்நியச்செலாவணியையும் ஈட்டித்தந்தனர்.
கல்வியும் மனிதவள விருத்தியும் 97

Page 51
பட்டதாரிகளுக்குரிய தொழில் வாய்ப்பு
பட்டதாரிகள் பல்கலைக்கழகக் கல்வி பெற்றபின்னர் தொழில் வாய்ப்புப் பெற்றால் மாத்திரமே மனிதவள விரயத்தைக் குறைக்க முடியும் என அரசாங்கம் வலுவாக நம்புகின்றது. இதனடிப்படையில் 1994இல் மாத்திரம் 6,800 பட்டதாரிகளுக்கு நிரந்தரத் தொழில் வாய்ப்பு வழங்கப்பட்டது.
தனியார்துறையில் பட்டதாரிகளின் தொழில்வாய்ப்பைப் பெறுவ தற்கு உதவும் வகையில் வேலையற்ற பட்டதாரிகளுக்குப் பயிற்சி யளிக்கும் வகையில் 'தருண அருண’ நிகழ்ச்சித்திட்டம் (Tharuna Aruna Programme) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொடக்கத்தில் இதற்கு விண்ணப்பித்த 5000 விண்ணப்பதாரிகளில் 1600பேர்தனியார்துறையில் தொழில் வாய்ப்புப் பெற்றனர். இத் 'தருண அருண" தொழில்சார் Lluís)3 fastbdiggi Sl'Liig, 6061T (Vocational Training Programme) பட்டதாரிகளுக்கென நடத்துகின்றது. இச்செயற்றிட்டத்துக்கென அரசாங்கம் 250 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
பட்டதாரிகளை நேரடியாக அரசாங்கத்துறைகளில் அமர்த்துவதற்கான அமைச்சரவை அனுமதியின் பேரில் மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 8000பட்டதாரிகள் அபிவிருத்தி உதவியாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலை நூலகங்களுக்கான நூலகராகவும், மீன்பிடி மற்றும் கூட்டுறவு முகாமைத்துவத் திட்டங்களுக்கும் அதிகளவு பட்டதாரிகள் அமர்த்தப்பட்டுள்ளனர்.
எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்குரிய கலைத்திட்டம் இவை பற்றியும் கருத்திற் கொண்டு செயற்படுத்தப்பட்டால் மனிதவள விருத்தியிலான கல்வியின் பங்களிப்புக்கூடியளவு பயனுறுதியுடையதாய் அமையும்.
98 கல்வியும் மனிதவள விருத்தியும்

அத்தியாயம் - 7
பெண் மனிதவளமும் கல்வியும்
(Woman Human Resource and Education)
உலகின் சமூகப் பொருளாதார அபிவிருத்திச் செய்முறைகளில் முக்கிய பங்களிப்பினை பெண் மனிதவளம் வழங்கி வருகின்ற போதிலும் அதன் முக்கியத்துவம் மிகச்சரியாக அங்கீகரிக்கப்பட வில்லை.
உலகின் மொத்தக் குடித்தொகையில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் பங்கு அரைவாசியாக உள்ளது. எனினும் ஊழிய வேலை மணித்தி யாலங்களில் மூன்றில் இரண்டு பங்கினை அவர்களே வழங்குகின்றனர். ஆனால் உலகின் மொத்த வருமானங்களில் பத்தில் ஒன்றையும், உலகின் சொத்துக்களில் நூறில் ஒன்றையும், மாத்திரமே பெண்கள் பெறுவதாக ஐ.நா அறிக்கையொன்று குறிப்பிடுகின்றது.
குழந்தைகளைப் பெறுதல், பேணுதல் என்ற பொறுப்புக்களினடிப் படையில் பெண்களின் குடும்ப, சமூக, பொருளாதாரத்தொடர்பு ஆண்களைவிட வேறுபட்டதாயும் முக்கியமானதாயும் விளங்குகின்றது.
இந்த நிலையில் பெண்களின் மனிதவளவிருத்திக்கான நடவடிக்கை களில் கல்வி, பயிற்சி தொடர்பான செயற்பாடுகள் அதிகளவில் இணைக் கப்பட வேண்டுமெனப் பெண்ணிய கோட்பாட்டாளர் வலியுறுத்தி வருகின்றனர்.
பெண்களின் மனிதவள மேம்பாட்டில் அவர்களது ஊட்டம் சேமநலம், சுகாதாரம் என்பவற்றுடன் ஒன்றிணைந்த அம்சம் கல்வியும்
தொழிற்பயிற்சியுமாகும்.
கல்வியும் மனிதவள விருத்தியும் 99

Page 52
நைரோபி, வியன்னா, கெய்ரோ, கொபன்ஹேகன், பீஜிங் ஆகிய நகரங்களில் இடம்பெற்ற மகாநாடுகள் உலகளாவிய ரீதியில் பெண் களின் மீட்கப்பட வேண்டிய உரிமைகள், முன்னேற்றம் என்பன பற்றிய உலக அபிப்பிராயத்தை உருவாக்குவதில் அக்கறை செலுத்தி வருகின்றன.
அரசாங்கங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் (NGO) வெகுசன தொடர்புச்சாதனங்கள் போன்றனஇவற்றில் முனைப்புடன் செயலாற்றி வருகின்றன.
வளங்களை மகளிருக்கெனச்சமமாக பகிர்ந்தளித்தல், உற்பத்தித்துறை களில் நியாயமான வாய்ப்புக்களை வழங்குதல் பொதுநிதி, கடன்நிதி என்பவற்றில் நியாயமான ஒதுக்கீட்டினை மேற்கொள்ளல் என்பவற் றின் மூலம் மகளிரை முழுமையான மனிதவளமாக விருத்தி செய்யக் கூடிய சட்டங்களை அரசாங்கங்கள் இயற்றுகின்றன. இந்தியாவில் பாராளுமன்றத்தில் மகளிர் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க முயற்சிகள் தொடங்கியுள்ளன. டிரினிடாட் - டொபாகோவின் தேசிய வருமானக் கணக்குகளில் பெண்களின் வேதனம் பெறாத உழைப்பின் பெறுமதியை சேர்த்துக்கொள்ள வகைசெய்யும் சட்டமொன்று நிறைவேற்றப் பட்டுள்ளது.
அரச சார்பற்ற நிறுவனங்கள் பெண்களின் வறுமை ஒழிப்புச் செயற்றிட்டங்களில் கவனம் செலுத்துவதன் மூலமாகவும், அவர்களின் சுகாதாரம், நலத்துறை, கல்வி என்பவற்றை மேம்படுத்துவதன் மூலமாகவும் சிறந்த பெண் மனிதவளத்தை விருத்தி செய்ய முனைந்து செயற்படுகின்றன.
'அபிவிருத்தி பற்றிய ஆய்வுநூல்களில் மாற்றத்துக்கான முகவர் என்ற முறையில் பெண்கள் பற்றி முற்றாகவே எதனையும் காணமுடியாது. இந்தியாவில் இந்நிலை மேலும் மோசமாக உள்ளது. இன்று இந்தி யாவில் பெண்களின் பின்தங்கிய நிலை பற்றிய புதிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. பெண்கள் சமூகமாற்றத்துக்கான முகவர் என்ற அங்கீ காரத்தைப் பெறவேண்டும். பெண் என்ற செயற்றிறன் மிக்க முகவரூ டாகவே சமூகநீதி நிலை நாட்டப்படல் வேண்டும். பெண்கள் சமூக, பொருளாதார அரசியல் வாழ்க்கையில் பங்கேற்பது தடை செய்யப் படுவதால் இடையூறுகளுக்குள்ளாபவர்கள் பெண்கள் மட்டுமல்ல; சகல மக்களுமே! பெண்களின் விடுதலை பெண்களின் பிரச்சினை மட்டுமல்ல; சமூக மேம்பாட்டுடன் ஒன்றிணைக்கப்பட்ட ஒரு விடயமே பெண் விடுதலை
- பேராசிரியர் அமர்த்தியா சென் (நோபல் பரிசு பெற்றவர்)
OO கல்வியும் மனிதவள விருத்தியும்

பெண் மனித அசைவியக்கம்
பெண்கள் சமுதாயத்தின் இன்றியமையாத பிரிவினராக செயற்பட்டு வருகின்றனர். குடும்பங்கள் அடிப்படையிலான வாழ்வு இலக்குகள், தேவைகள் என்பவற்றை நிறைவேற்றுவதில் அவர்கள் பங்கு பிரதான மாக இருந்து வந்துள்ளது. தற்போது வீட்டுக்கு வெளியே சமூக பொருளாதார செயற்பாடுகளிலும் அவர்களின் பங்கு அவசியமா யுள்ளது. தேசிய மனித வளத்தில் அல்லது தொழிற்படையில் அவர்கள் பங்களிப்பு எல்லாநாடுகளிலும் முக்கியமானதாகிவிட்டது. வரலாற்றுக் காலத்தில் குடும்பத்துடன் இணைந்த உற்பத்திச் செய்முறையில் பெண்ஊழியம் முதன்மை பெற்றிருந்தது. அவ்வாறே கிராமியமட்ட உற்பத்தியிலும் சிலவகையான உற்பத்திச் செய்முறைகளில் பெண்கள் ஈடுபட்டனர். கைத்தொழிற் புரட்சியின் பின் நகர்ப்புற தொழிற்சாலை களுக்கான ஊழிய நிரம்பலிலும் பெண்கள் பங்கேற்றனர். அண்மைக் கால தகவல் புரட்சியின் பின் சேவைத் தொழில்களிலான மனிதவளத் தில் பெண்களின் பங்கேற்பு விகிதம் சடுதியாக அதிகரித்து வருகின்றது.
பெண்கள்முதலில் வீட்டிலிருந்து தோட்டங்களுக்கு தொழில் தேவைக் கான நகர்ந்தனர். பின் நகரங்களுக்கு நகர்ந்து தனிநபராக வாழவும் உழைக்கவும் கூடியவராயினர். அதற்குத் தேவையான பலவகைப்பட்ட நம்பிக்கைகளையும், துணிவையும், அறிவையும் திறன்களையும் பெற கல்வித்துறையை நோக்கி அவர்களுடைய எதிர்பார்க்கைகள் வலுப் பெற்றன. இதற்கு மேலாகக் கடந்த மூன்று தசாப்தங்களாக நாடுவிட்டு நாடு நகர்ந்து தொழில் செய்யும், இடம் பெயர் பெண் மனிதவளம் என்பது முக்கியமானதாய் வளர்ச்சி பெற்றது. குடியேற்றவாத காலத்தில் செம்மைப்படுத்தப்படாத உழைப்பை வழங்கும் அடிமைக் கூலிகளாக பெண்கள் நகர்ந்த போக்கிலிருந்து தற்போதைய இடம்பெயர் மனித வளம் வேறுபடுகின்றது. சாதாரணமான, ஓரளவு பயிற்சியுடனும் கல்வியுடனும் இணைந்த மனிதவளமாக பெண்கள் பலநாடுகளுக்கு இடம்பெயர்கின்றனர். இதற்குரிய அறிவையும் திறன்களையும் வழங்குவதாக கல்வி ஏற்பாடுகள் மாற்றப்பட வேண்டியதாயிற்று.
உலகளாவிய ரீதியில் மூலதனமும், முயற்சியாண்மையும் சுதந்திர வர்த்தக வலயங்களை நோக்கி நகர்ந்தபோது பெண் மனிதவளத்தின் பங்கேற்பும் முதன்மை பெற்றது. கைத்தொழில் வலயங்களினதும், சுற்றுலா நிறுவனங்களினதும், தகவல் நிலையங்களினதும் வளர்ச்சி பல்தேசிய மட்டத்தில் பல்தேசிய நிறுவனங்களினால் ஊக்குவிக்கப் பட்டபோது பெண் மனிதவளத்தின் நகர்வும் ஊக்குவிக்கப்பட்டது.
கல்வியும் மனிதவள விருத்தியும் IO

Page 53
இத்தகைய புதிய தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கட்டுப் பாட்டுடன் கல்வி நோக்கங்களும், செய்முறைகளும், நிறுவனங்களும் மாற்றப்பட்டு வருவது அவதானிக்கத்தக்கது.
இவ்வாறே பலநாடுகளில் புதிய வளங்கள் கண்டுபிடிக்கப்பட்டதன் தொடர்விளைவாக பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்திகள் புதிய மாதிரிகளில் ஏற்பட்டன. இந்த நிலையில் அந்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம், நாளாந்த பணிகளிலும் மேல்நோக்கிய அசைவுகளுக் குள்ளாகின. இந்தச் சமூகப் பொருளாதாரமட்ட அசைவியக்கத் தினாலும் கீழ்மட்ட - முதல்நிலைமட்டத் தொழில் வாய்ப்புக்கள் பெண் களுக்குரிய தொழில்வாய்ப்புக்களாக வளர்ச்சி பெற்றன. மத்தியகிழக்கு நாடுகளிலான வீட்டுப் பணிப்பெண்களுக்கான தொழில் வாய்ப்புக்கள் இவ்வாறானவையே.
இத்தகைய புதிய தொழில் உலகத்தேவைகளுக்குரியதான கல்வியை யும் பயிற்சியையும் வழங்குவதான செயற்திட்டங்கள் முதன்மை பெறலாயின. மனிதவள விருத்திக்கான கல்வி என்பதில் பெண்மனித வளவிருத்தி என்ற அம்சமும் முனைப்புப் பெற்று வளர்ந்து வருகின்றது.
பெண்கல்வியும் மனிதவளமும்
கல்வியியலாளர் பிள்ளையின் வளர்ச்சியை மனதிற்கொண்ட கல்விச் செய்முறையே முக்கியத்துவமுடையதென வலியுறுத்தி வருகின்றனர். இதனடிப்படையில் பெண்களுக்குரிய ஆரம்பக் கல்வி, குடும்ப உறுப் பினரின் ஊட்டம், நலவாழ்வு, ஒழுக்கம் என்பவற்றை மேம்படுத்தி, அவ்வாறே குடும்ப அளவுகளைச் சிறிதாக பேணுதற்கான குடும்பக் கட்டுப்பாட்டை வலியுறுத்தவும் பெண்கல்வி வலியுறுத்தப்பட்டது. பொருளியலாளரின் பொருளாதாரக் கொள்கை, செயற்பாட்டு ஆற்றல் என்பவற்றின் பலவீனங்களை குறைநிரப்புச் செய்ய இத்தக்ைய வெளிவாரி நோக்கங்கள் பெண்கல்வியில் வற்புறுத்தப்படலாயின.
குடும்பமட்ட நிதிவளங்களைப் பேணுதல், பங்கிடுதல் மற்றும் குடும்பமட்ட சுயதேவை உற்பத்தி முயற்சிகளை நிர்வகித்தல் தொடர் பான அறிவையும் ஆற்றலையும் ஏற்படுத்தவும், மேம்படுத்தவும் பெண்களுக்கான ஆரம்பக்கல்வி வலியுறுத்தப்பட்டது. ஊட்டவிய லாளர், சுகாதாரப் பராமரிப்பாளார், முறைசாரா உற்பத்தி அலகு முகாமையாளர் போன்ற பல பதவி நிலைகளுக்கான ஆற்றல்களை ஆரம்பக்கல்வி வழங்குவதாக அமைந்தது. வளர்முகநாடுகளில்
102 கல்வியும் மனிதவள விருத்தியும்

முறைமைகள் பாடசாலைக்குச் செல்ல - அதற்கான நேரத்தை ஒதுக்கீடு செய்ய வீடுகள் அவர்களை விடுவிக்க அதிகம் விரும்புவதில்லை. இதனால் ஆரம்பக்கல்வி பெறாத பெண்கள் தென்னாசியாவில் அதிகமாகவுள்ளனர்.
பெண்களின் கல்வியின் மீதான செலவு, முதலீடாகவன்றி ஒரு சமூகநலச் செலவாக - நுகர்வுச் செலவாகவே - கருதப்படுகின்றது. இதன் காரணமாக உலக நிதி நிறுவனங்கள் வலியுறுத்தும் தனியார் மயக் கொள்கைகளின் காரணமாக, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் பெண்களின் கல்வி பாதிக்கப்படுகின்றது. பெரிய அளவில் கட்டணஞ்செலுத்தி தமது பெண்களுக்கு மனித வளவிருத் திக்கான கல்வியை வழங்க இக்குடும்பங்கள் ஆயத்தமாக இல்லை.
'பெண்கள் பிரச்சினை பற்றிய மார்க்சிய நோக்கின்படி, பொருளாதார உற்பத்தி நடவடிக்கைகளிலிருந்து அவர்கள் விலக்கி வைக்கப் பட்டிருந்தமையினாலேயே அடக்குமுறைக்கு உட்பட நேர்ந்தது. தொழிற்படையில் அவர்கள் சேர்க்கப்பட்டு மனிதவளம் என்ற அந்தஸ்தைப் பெறும்போது அவர்கள் அடக்குமுறையிலிருந்து விடுதலை அடைகின்றனர். தொழிற்படையில் நேருவதால் அவர் களுக்கும் சமூகத்துக்கும் கிடைக்கும் நன்மைகள் பலப்பல. எனவே தொழிற்சந்தைதான் பெண்களில் பெருமாறுதல்களை ஏற்படுத்தக் கூடிய மாபெரும் சக்தி.
- Nelly P.Stromcuist in Comparative Education, 1999
உலகளாவிய ரீதியில் பெண்களின் கல்விநிலை திருப்தியாக இல்லை. இது அவர்களது மனிதவள விருத்தியை வெகுவாகப் பாதிக்கின்றது.
தொழில் உலகும் பெண்கல்வியும்
தொழில் வாய்ப்புக்கான தகுதியை மேம்படுத்துவதற்கான பிரதான உள்ளீடாகவே கல்வி கருதப்பட வேண்டுமென்று பொருளியலாளர் கருதுகின்றனர். தரமான வினைத்திறன் மிக்க மனித ஊழியத்தை வெளியீடாகப் பெறுதற்கான உள்ளீடாகக் கல்வி விளங்க வேண்டு மென்பது கல்வியில் பொருளியலாளர்கருத்தாகும்.
இதன்படி பெண்களிடமிருந்து உழைப்பை வினைத்திறனுடன் தேசிய உற்பத்தித்துறைகளுக்கென பெறவேண்டுமானால் கல்வி உள்ளீட்டை அவர்களுக்கும் வழங்க வேண்டியுள்ளது. ஆனால் அதற்குரிய பூரண
கல்வியும் மனிதவள விருத்தியும் O3

Page 54
உரிமையையும், வாய்ப்பையும், வசதிகளையும் ஆண்மேலாதிக்க சமுதாயம் வழங்குவதில்லையென பெண்நிலைவாதிகள் வற்புறுத்தி வருகின்றனர்.
தொழில் உலகு தொடர்பாக பெண்கள் பின்வரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
1. பெண்களின் சம அந்தஸ்த்து அங்கீகரிக்கப்படவில்லை.
2. பெண்களின் கல்வி மற்றும் தொழில் தொடர்பான முடிவுகளை
பெண்கள் எடுப்பதில்லை.
3. உற்பத்தி, சேவைமுயற்சிகளில் ஊழியர் பங்கேற்புக்கு தேவையான தன்னம்பிக்கை வளர்க்கக்கூடிய கல்வி ஏற்பாடுகள் போதியளவில் இல்லை. 4. பெண்களின் முழுஆற்றலையும் பயன்படுத்தக் கூடிய மனிதவள விருத்திக்குரிய கல்வி ஆலோசனைகள் மேற்கொள்ளப்படவில்லை.
5. பெண் முயற்சியாண்மை, பெண்முகாமையாளர், பெண்உயர் நிர்வாகிகள் போன்ற பதவி மற்றும் தகைமை நிலைவிருத்திக் குதவும் கல்வித்திட்டங்கள் இல்லை.
உலகில் 13கோடி சிறுவர் (1993) ஆரம்பப் பாடசாலைக் கல்வியைப் பெறுவதில்லை. இவர்களில் 8.1 கோடிப்பேர் பெண்களாவர். ஒவ்வொரு நான்கு பெண்பிள்ளைகளுக்கு ஒருவர் என்ற விகிதா சாரத்தில் பள்ளி செய்வதில்லை. வளர்முக நாடுகளில் 45கோடி பெண்கள் சிறுபருவ போஷாக்கின்மையினால் பாதிக்கப்படும் நிலைமையும்
சேர்ந்து கல்வி ஊக்கத்தைத் தடைசெய்கிறது.
சிறுமிகள் தொழில் செய்வதற்குரிய குறைந்த பட்ச வயதெல்லையை அடையுமுன்பே இழிவான மனஅழுத்தம் தரக்கூடிய, சுரண்டலுக்குட் படும் துறைகளில் சட்டபூர்வமற்ற முறையில் பயன்படுத்தப்படுவ தாலும் பெண் மனிதவளதுஷ்பிரயோகம் அதிகரிக்கின்றது. கட்டாயக் கல்வி ஏற்பாடுகளினால்தான் இத்தகைய மனிதவள விரயத்தை தடுக்க முடியும்.
பெண்களின் கல்வி முன்னேற்றம், அதன் வழியான பெண்மனிதவள மேம்பாடு தொடர்பான அபிப்பிராயங்களை உருவாக்கி, சமூக ஆதரவைத் திரட்டுவதிலும், அரசாங்கங்களை வற்புறுத்துவதிலும் வெகுசன தொடர்புச் சாதனங்கள் பெரும்பங்கு வகித்து வருகின்றன.
IOt கல்வியும் மனிதவள விருத்தியும்

ஒலிபரப்பு மற்றும் செய்தித்துறைகளில் பெண்களின் பங்கு உலகரீதியில் திருப்திகரமானதாயில்லை. ஐரோப்பாவில் பத்திரிகைத்துறையில் 30%மும் பெண்கள் உள்ளனர். ஆசிய ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள 200வெகுசன தொடர்புச்சாதனங்களில் 7தாபனங்களில் மாத்திரமே பெண்கள் தலைமை தாங்குகின்றனர். இத்தகைய போக்கினால் பெண்கல்வி - மனிதவள விருத்தி தொடர்பாக சமூக மனசாட்சி மாற்றுவது கடினமாயுள்ளது.
இந்தியா போன்ற உலகின் மிகப் பெரிய சனநாயக நாட்டில் ஆண் பெண் விகிதம் 1000:935என்று காணப்படுகின்ற நிலையிலும் தொழில் வாய்ப்பில் 21% மே பெண்களுக்குக் கிடைத்துள்ளது. தொழில் நிறுவனம், தொழிற்சுற்றாடல் என்பவற்றில் ஆண்களைப் போல் சுதந்திரமான தனி ஊழியராக பெண்கள் நோக்கப்படுவதில்லை. இது பெண்மனித வளவிருத்திக்குதடையாயுள்ளது.
அதிகாரம், அந்தஸ்து, உயர்ந்த வேதனம் கொண்ட உயர் தொழில் களுக்குள் நுழைந்ததற்கான கல்வி ஏற்பாடுகள் பெண்களுக்கு அதிகம் வழங்கப்படுவதில்லை. வளர்முக நாடுகளில் இவற்றைத் தெளிவாகக் காணமுடியும். இந்தியாவில் 1980களின் நடுப்பகுதி வரை இதில் வரையறைகள் அதிகம் இருந்தன.
தொழிற்துறைகள், தொழில் வாய்ப்புக்கள் தொடர்பாக பல்வேறு தடைகள் பெண்களுக்கு விதிக்கப்பட்டன. 1. தொழிலிடத்துக்கு அதிகளவுக்குசமூகம் கொடுக்க முடியாதிருந்தது.
வரவின்மை பெண் ஊழியரிடம் அதிகமிருந்தது. 2. பெண்களின் பதவியுயர்வுகள் தாமதமாகின. பல தடவைகளில்
ஆண்களால் தடைசெய்யப்பட்டன. 3. தொழில்சார்பான இடமாற்றங்களில் சுதந்திரமாக செயற்படக்கூடிய
வசதிகள் வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. 4. தீர்மானம் மேற்கொள்ளக் கூடியதும், கொள்கை வகுப்பதுமான உயர்நிலை தொழில் வாய்ப்புக்களுக்குப் பெண்கள் செல்வது பெருமளவில் தடைசெய்யப்பட்டது. 5. தொழில் செய்யுமிடங்களில் நேரடியான மற்றும் மறைமுகமான பாலியல்துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர். சுயபாதுகாப்பு
தொழில் நம்பிக்கை, உத்தரவாதங்கள் உறுதிப்படுத்தப்படவில்லை.
கல்வியும் மனிதவள விருத்தியும் 05

Page 55
இத்தகைய தீர்க்கப்படாத தொல்லைகள் தொழில் உலகில் நீடிப்பதால் தொழில் உலகில் சம உரிமையுடன் பங்கேற்பதற்கான கல்வி கற்கும் ஊக்கம் உரிய அளவுக்கு அதிகரிக்கவில்லை.
பெண்களின் கல்வி உள்ளீட்டுக்குப் பெற்றோர் செலவிடும் பணத்திற்குப் பயனாகக் கிட்டும் வருமானத்தைத்தாம் பெறமுடியா தென்ற உணர்வுகளும் தொழிற் தகைமைக்கான கல்வி மேம்பாட்டுக் கான பெண்களின் ஆர்வத்தை மட்டுப்படுத்துகின்றன.
தொழில் உலகுக்குப் பொருத்தமானவகையில் பெண் மனிதவளம் விருத்தி செய்யப்பட வேண்டுமானால் கல்வி தொடர்பாக பின்வரும் அம்சங்களில் கவனம் செலுத்தப்படல் வேண்டும். 1. பெண்கள் புலமை சார்ந்தவராகவும், ஒழுக்கம், உளவியல், கலாசார, சமூக, பொருளாதார அடிப்படைகளில் தகைமை மிக்கவராக்கப் படல்
2. பல்வகைப்பட்ட தொழிற்பாடுகளிலும் ஈடுபடக் கூடிய திறன்கள்
விருத்தி செய்யப்படல்
3. தொழில்நிறுவன கலாசாரத்திற்குப் பொருந்தக்கூடியவராக்குதல் 4. நாட்டின் பெளதிக, நிதி மற்றும் அறிவியல் வளங்களுடன் நெருக்க
மான தொடர்புடையவராக்கப்படல் 5. பெண்களுக்கான தொழில் நிறுவனங்கள், பெண்களுக்கான உயர்தொழிற் பயிற்சி நிறுவனங்கள் என்பன அதிகளவில் உருவாக்கப்படுதலும், நவீனமயமாக்கப்படுதலும் 6. பெண்முயற்சியாண்மையாளர் தனியாளாகவும், குழுவாகவும் வளர்ச்சியடையும் வகையில் வல்லாண்மை பெறச் செய்யும் கல்வி நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் செயற்றிட்டங்கள் வடிவமைக்கப் படல்
7. பெண்மனிதவளம் தொடர்பாக அடையாளம் காணப்படுகின்ற பல்வேறு பிரச்சினைகளிலும் அதிக சிரத்தையுடன் கவனம் செலுத்துவதோடு அவற்றை நிறைவான முறையில் அகற்றும் நடவடிக்கைகளிலும் அக்கறை காட்டவேண்டும். இதற்கான உட்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு, பேணப்படல் 8. பெண்களின் உற்பத்தித்திறனை மட்டுமன்றி தொழில் தொடர்பான சமூக அந்தஸ்தையும் உயர்த்தக் கூடிய கல்வி மற்றும் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் உருவாக்கப்படல்
፱06 கல்வியும் மனிதவள விருத்தியும்

பெண்மனிதவள விருத்திக்கான கல்வி நிகழ்ச்சித்திட்டங்கள்
பெண்கள் ஆண்களுக்கு சமனான மனிதவளம் என்பதை ஆண்கள் அறிவு ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதனைக் கல்விநிறுவனங்கள் தமது செயற்திட்டங்கள் மூலமாகவே நிறைவேற்ற முடியும்.
தொழில் புரியும் பெண்கள் தொடர்பாக உருவாக்கப்படுகின்ற தவறான எண்ணக்கருக்கள் மாற்றப்பட வேண்டும். பெண்கள் அமைப் புக்கள் மட்டுமன்றி, தேசிய மட்டக்கல்வி நிறுவனங்களும் பொது மக்களுக்கு கல்வியூட்ட வேண்டும். முறைசாரா ஏற்பாடுகள் மூலம் அதிகளவில் இதனை மேற்கொள்ள வேண்டும்.
கல்வி மற்றும் பயிற்சி தொடர்பாக பின்வரும் நிகழ்ச்சித்திட்டங்கள் தயாரிக்கப்பட்டு நிறைவேற்றப்படல் வேண்டும். - பயனுறுதிமிக்க குழுத்தொழிற்பாடு - மிகச்சிறந்த முடிவுகளை மேற்கொள்ளும் ஆற்றல் விருத்தி - பிரச்சினைக்குத் தீர்வுகாணும் ஆற்றல் - தலைமைத்துவ விருத்தி
- நிர்வாகத்திறன்கள் - தொழிநுட்ப அறிவும், திறனும் - தொழில்சார் உளப்பாங்கு மாற்றம் - உற்பத்தித்திறன் உயர்ச்சி - பெண்களுக்கான தொழிற்சங்க வளர்ச்சி - புதிய விஞ்ஞான, நுட்பமாற்றங்களுடன் இசைவடையச் செய்தல். - விஞ்ஞான மற்றும் முகாமைத்துவ கல்வியில் சமஉரிமை - பல்தேசிய, சர்வதேசிய உயர்தொழில்களில் பங்கேற்கும் ஆற்றல்
விருத்தி - ஒலிபரப்பு, ஒளிபரப்பு செய்தித்துறைகளில் தலைமைப் பொறுப்புக்
களில் இடமளித்தல்
இத்தகைய பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களுக்குமான அராசங்க ஒப்புதல்கள் தாமதமின்றி பெறப்பட வேண்டும். அவற்றை நடை முறைப்படுத்தும் செயலனிகளில் பெண்களின் அங்கத்துவம் அதிகரிக்கப்படல் வேண்டும்.
கல்வியும் மனிதவள விருத்தியும் O7

Page 56
தேசிய ரீதியில் பரவலாக இவற்றை நடைமுறைப்படுத்தக்கூடியவாறு உட்கட்டமைப்புக்கள் விருத்தி செய்யப்படல் வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக இச்செயற்றிட்டங்களுக்குரிய வளங்களை தேசிய வரவு செலவுத் திட்டத்திலிருந்தும், அரச சார்பற்ற நிறுவனங் களிடமிருந்தும், வெளிநாட்டு உதவி வழங்குனரிடமிருந்தும் ஒதுக்குதல் வேண்டும்.
இத்தகைய பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களுக்கிடையிலும் பொருத்த மான தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான அமைப்புக்களும் உருவாக்கப்பட்டதால்தான் பெண்மனித வளவிருத்தி வினைத்திறனும், பயனுறுதியும் கொண்டதாக ஏற்படும். புதியனவும் அதிக வருமானமும் பாதுகாப்பும் அதிகாரமும், சமூக அந்தஸ்தும் கொண்ட தொழில் வாய்ப்புக்கள்தரும் கற்கை நெறிகளின் பெண்களுக்கென திறந்துவிடப் பட வேண்டும்; உரிய விகிதத்தை அவர்கள் பெறுவது உறுதிப்படுத்தப் படல் வேண்டும்.
திருமணம், குடும்பவாழ்வு என்பவற்றால் ஆண்களின் தொழில் முன்னேற்றங்கள் தடைப்படுவதில்லை. அதே போல் பெண்களின் தொழில்சார் உயர்ச்சி பாதிக்கப்படாதவாறு குடும்பமட்ட சேவைக ளைப் பகிர்ந்து பொறுப்பேற்கக்கூடிய நிறுவன ஏற்பாடுகளில் அரசாங்க மும், அரசசார்பற்ற நிறுவனங்களும், பெரிய கைத்தொழில் நிறுவனங் களும் கவனம் செலுத்த வேண்டும். உதாரணமாக குழந்தை பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு நிலையங்கள், விருந்தகங்கள், குடும்ப சேமநல பராமரிப்பு நிலையங்கள் உருவாக்கப்படலும், விரிவாக்கப்படலும் அவசியம்.
தொழில் நிறுவன தலைமைத்துவ திறன்களை விருத்தி செய்வதற்கு அடிப்படையான உளவியற் பலத்தை அதிகரிக்கும் வகையிலும் தாழ் வுணர்ச்சியை அகற்றும் வகையிலும் உளவியல் வழிகாட்டல் நிறுவனங் களும் அதிகரிக்கப்படுவது வளர்முக நாடுகளின் தேவையாகும்.
இவை அனைத்தும் ஒழுங்காக, ஒருங்கிணைந்த வகையில் நடை முறைப்படுத்தினாற்தான் பெண்மனிதவளவிருத்தி சாத்தியமாகும்.
'ஆடைத் தொழிற்சாலைகளிலும் பெருந்தோட்டத்துறையிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் வேலை செய்யும் பெண்களின் உழைப்பின் மூலம் ஈட்டப்படும் வருமானம், இன்றைய இலங்கைப் பொருளா தாரத்தில் பிரதான இடத்தைப் பெறுகின்றது.
- ஒரு மூத்த அரசியல்வாதி
108 கல்வியும் மனிதவள விருத்தியும்

இலங்கையில் பெண் மனிதவளம்
இலங்கையின் ஊழியப்படையில் பெண்கள் சேரும் விகிதம் வேகமாக அதிகரித்து வந்துள்ளது. பெண்களின் எழுத்தறிவு வீதம் இலங்கையில் 1946இல் -43.8%மாயிருந்து 1981இல் 83.2%மாக அதிகரித்தது. அத்துடன் பொதுவான கல்வி மட்டத்திலும் அதிகரிப்பு ஏற்பட்டது. ஆசிரியர், நலத்துறை, எழுதுவினைஞர், நிதித்துறை போன்ற பல சேவைத் துறைகளின் விரிவாக்கத்தினதும் பெண்களின் தொழில் வாய்ப்பு அதிகரித்தது. 1980-1990 காலப்பகுதியிலான சுதந்திர வர்த்தக வலய தொழில்களினதும் தொழில்வாய்ப்பு அதிகரித்தது. மகாவலி ஆற்று அபிவிருத்திச் செயற்திட்டம் சார்ந்து மரபு வழியான நெல்லுற்பத்தி யிலும் பெண்களின் தொழில் வாய்ப்பு பெருகியது. ஆரம்பக் கல்வி மேம்பாடு இத்துறையில் 27%மான உற்பத்திப் பெருக்கத்தை ஏற்படுத்தக் கூடியதென்ற கருத்தும் நோக்குதற்குரியது.
1977 இலிருந்து இலங்கையின் மனிதவளவிருத்தி, வளர்ச்சி என்பவற்றில் பெண்களின் பங்கு அதிகரித்தமைக்கு இலங்கையில் பெண்கல்வி தொடர்பான சிறப்பான முன்னேற்றம் அடிப்படையாகும். இந்த வளர்ச்சிப் போக்கிற்கேற்ப தொழில்வாய்ப்பு விரிவடையாத போது பெண் மனிதவளம் தொடர்பான வேலையின்மை அதிகரித்தது. க.பொ.த உயர்தரத்துடன் தொழிலின்றி இருந்தோர் சதவீதம் (1995) ஆண்களைப் பொறுத்து 12%மாயிருந்தபோது பெண்களைப் பொறுத்து இது 25%மாகக் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சுதந்திர வர்த்தக வலயத்தில் பெண்களுக்கான தொழில் வாய்ப்பு திருப்திகரமான அளவுக்கு பெருகவில்லை. கட்டுநாயக்க, பியகம, கொக்கல சுதந்திர வர்த்தக வலயங்களில் மொத்தத் தொழில் வாய்ப்புக்களில் 80% - 95% பெண்களுக்குரியதாயிருந்தது.
வெளிநாடுகளின் தொழில் வாய்ப்புக்காக ஆண்களைவிடப் பெண்கள் அதிகமாக வெளியேறும் நிலை 1979 இலிருந்து ஏற்பட்டது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப்பணிப் பெண்களாக அதிகம் வெளி யேறினர். இதில் முஸ்லிம் பெண்கள் முன்னுரிமை பெற்றிருந்தனர். திருமணமாகிய 35வயதுக்கு மேற்பட்ட முஸ்லீம் பெண்களுக்குரிய தொழில் வாய்ப்பு அதிகரித்தமை சிறப்பானது. இவர்களுக்கான கல்வி ஏற்பாடுகள் இலங்கையில் திட்டமிடப்பட்டிருக்கவில்லை. இதனால் பெண்மனிதவள உழைப்பின் நலன்களை உறுதிப்படுத்த
கல்வியும் மனிதவள விருத்தியும் 109

Page 57
முடியவில்லை. உள்நாட்டில் தொழில் வாய்ப்பு நெளுக்கடிகளை எதிர் கொள்ளும் நிலையில் கல்விஏற்பாடுகள் வெளிநாட்டுத் தொழிலைப் பெறும் வகையில் ஒழுங்கமைக்கப்படல் வேண்டும். இலங்கையில் ஊழியப்படையில் சேர்த்துக் கொள்ளப்படாத பகுதியினரான பெண்களே பணிப்பெண்களாக வெளியேறிப் புதிய மனிதவள பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர்களது மொழிவிருத்தி, திறன்விருத்தி, நடத்தை நெறிமுறைகள் என்பவற்றை முன்னேற்றக் கூடிய முறைசாராக்கல்வி ஏற்பாட்டில் கவனம் செலுத்துவதே பெண்மனிதவள விருத்திக்கான வழிமுறையாகும். இத்தகையோருக்கான தொழிற்பயிற்சிக்கு வழங்கப்பட்ட அரசமானிய மான2மில்லியன் டொலர் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.
வெளிநாடு செல்லும் பெண்களுக்கான கற்கை நெறிகளை மேற்கொள் வதில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஈடுபட்டுள்ளது. 1995இல் உருவாகிய 170,000 தொழில் வாய்ப்பில் 66% பெண்களுக் குரியதாகக் காணப்பட்டது. மத்திய கிழக்கிலிருந்து பயிற்சியற்ற ஊழியத்தின் மூலம் 24,000 மில்லியன் ரூபாய்கள் இலங்கைக்குக் கிடைத்தது. மொத்த வெளிநாட்டு சம்பாத்தியம் 120,000மில்லியன் (2001) என்பதும் தொடர்புபடுத்தி நோக்கத்தக்கது.
இலங்கையின் பெண்மனித வளத்தின் வெளிநாட்டுத் தொழில் வாய்ப்பும் வருமானமும் கல்வி, பயிற்சி என்பவற்றுடன் எதிர்மறை யான தொடர்பைக் கொண்டிருப்பது ஒரு சிறப்பான அம்சமாகும்.
IIO கல்வியும் மனிதவள விருத்தியும்

அத்தியாயம் - 8
உலகமயமாக்கமும் வளர்முக நாடுகளில் மனிதவளவிருத்தியும்
ன்று பொருளாதாரம், வர்த்தகம், கைத்தொழில், கலாசாரம் போன்ற விடயங்களை மட்டுமன்றி கல்வி, மனிதவளவிருத்திக்கான கல்வி ஏற்பாடுகள் என்பவற்றைத் தெளிவுற விளங்கிக்கொள்ள உலகமயமாக்கம் என்ற எண்ணக்கருவின் வரையறை பல முக்கிய விடயங்களை உள்ளடக்குகின்றது. 0 உலகளாவிய ரீதியில் சமூகங்கள் நெருங்கிய தொடர்புகளைக்
கொண்டுள்ளன. )ெ தூரப் பிரதேசங்களுக்கிடையிலான தொடர்புகளை ஏற்படுத்து
கின்றன. 0 பொருட்களையும் சேவைகளையும் உற்பத்தி செய்வதில் இன்று ஏற்பட்டு வரும் பிரதான மாற்றங்களைப் பொருளாதார உலக மயமாக்கம் குறிக்கின்றது. 0 சர்வதேச தொழிலாளர் பிரிவு முறையானது ஒன்றிணைக்கப்
பட்டுள்ளதையும் இது குறிக்கும்.
தேசிய பொருளாதார முறைகள் இன்று தமது தேசியத்தன்மையை இழந்து பிராந்திய அமைப்புக்களுடன் இணைக்கப்பட்டு வருகின்றன. இவ்வொன்றிணைப்பை ஒன்றுபடுத்தவே தகவல் தொழினுட்பக் கருவிகள் உதவுகின்றன. ஒருவர் செயற்கைக்கோள் ஊடாகத்துரிதமாக இலகுவாக முழுவதுடன் பொருளுற்பத்தியின் பல்வேறு கட்டங்களை இணைத்து முழுப்பொருளையும் இலகுவாக உருவாக்க முடிகின்றது.
கல்வியும் மனிதவள விருத்தியும் III

Page 58
அத்துடன், தொழில் வாய்ப்புக்களைப் பெறவும் உலகப் பொருளாதார முறையில் இணைந்து கொள்ளவும் இன்று ஆங்கிலமொழி அவசிய மாக உள்ளது. மேலைநாடுகளில் ஆங்கிலத்தையும் கணினியையும் கற்றுக்கொள்ளுங்கள்’ என்னும் சுலோகம் பரவலாகப் பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றது.
இவ்வாறான உலக மயமாக்கம் விரிவான முன்னேற்றத்திற்கும் அபிவிருத்திக்கும் வழி வகுக்கும்; கம்பனிகளுக்கு விரிவான சந்தை வசதி கிடைப்பதால் அவை சிக்கனமாக இயங்க முடியும்; வறிய நாடுகள் செல்வந்த நாடுகளைவிட வளர்ச்சியடைய முடியும்; இக்கொள் கையின் வெற்றி நிச்சயம் என்பதை வலியுறுத்தும் உலகமயமாக்கக் கொள்கையின் ஆதரவாளர்கள் எதிர்காலத்தில் தேசிய அரசுகளின் முக்கியத்துவம் குறைந்த உலகக் கிராமம் பெருவளர்ச்சி பெற்று சந்தைப் பொருளாதாரம் செல்வச்செழிப்பை ஏற்படுத்தும் என வலியுறுத்துவர். சுருங்கக் கூறுமிடத்து, பொருளாதார உலக மயமாக்கம் வர்த்தகத் தடைகளை நீக்கிப்பரந்த உலகச் சந்தையொன்றையும் தொழில் நிறுவனங்களுக்கிடையிலான போட்டியையும் ஏற்படுத்துவதால் உலகளாவிய ரீதியில் உற்பத்திப் பெருக்கம், நிறுவனச் சிக்கனம், வேலைவாய்ப்பு, வருமான அதிகரிப்பு என்பன ஏற்பட வாய்ப்புண்டு. இவ்விதத்தின் படி வளர்முக நாடுகளின் வருமானம் செல்வந்த நாடுகளைவிட அதிகமாகப் பெருகும். உலக மயக்கோட்பாட்டைப் பின்பற்றினால் ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றி சித்தாந்த ரீதியாகப் பலவாறு கூறப்பட்டாலும், இக்கொள்கை பற்றிய பல விமர்சனங்களும் கண்டனங்களும் உண்டு. இப்பகுதியில் உள்ள பெட்டிகளில் அவை தொகுத்து சுருக்கமாகத்தரப்பட்டுள்ளன.
மார்க்சிய ஆய்வாளர்கள் உலகமயமாக்கம் என்பது முதலாளித்து
வத்தின் இறுதிக்கட்டம் என வர்ணிப்பர். லெனின் இப்போது
இருந்தால் இந்நிலைமையை முதலாளித்துவத்தின் வளர்ச்சியாகவே
கருதியிருப்பார். முதலாளித்துவம் சர்வதேச மயமாக்கப்பட்டுள்ளமை யையே உலகமயமாக்கம் சுட்டுகின்றது என்பது அவருடைய கருத்தாக
இருந்திருக்கும்.
உலக மயமாக்கத்தின் பல சீர்கேடுகளை அவதானிக்கமுடியும்; உதாரணமாக :
0 இன்று 300 கோடிமக்களின் நாளாந்த வருமானம் 250 ரூபாவுக்கும்
குறைவேயாகும்.
12 கல்வியும் மனிதவள விருத்தியும்

0 80 நாடுகளில் தனியாள்வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது.
0 1990 தொடக்கம் 30 நாடுகளில் மக்களின் ஆயுட்காலம் குறைந்
துள்ளது.
0 இயற்கை வளங்கள் அபிவிருத்திக்குக் கண்மூடித்தனமாகப் பயன்படுத்தப்படுவதால் சுற்றாடல் சீரழிவு ஒரு முக்கிய பிரச்சினை யாகியுள்ளது.
0 தாராளமயக் கொள்கையால் வளர்முக நாடுகளுக்கு வந்து சேர்ந்த பல் தேசியக் கம்பெனிகள் சனநாயக அரசாங்கங்கள் மீது மேலாதிக்கம் செலுத்துகின்றன.
இன்று அனைத்துலக ரீதியாகப் பேசப்பட்டும் நடைமுறைப்படுத்தப் பட்டும் வரும் உலகமயமாக்கச் சிந்தனை, உலக நாடுகளின் கல்வி முறைகளிலும் மனிதவள விருத்திச் செயற்றிட்டங்களிலும் பல தாக்கங் களையும் மாற்றங்களையும் ஏற்படுத்தி வருகின்றது. குறிப்பாக உலக மயமாக்கத்தின் முக்கிய அம்சங்களான சந்தைத் தத்துவம், தனியார் மயமாக்கல் என்பன கல்வித்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
கல்விமுறைகளின் மரபுவழி நோக்கங்களை நோக்குமிடத்து, நவீன உலகமயமாக்கத்தின் அம்சங்கள் இன்றைய கல்வி முறையுடன் பொருந்தி வசாதன போல தோன்றும். 0 காலங்காலமாக கல்விமுறைகள் உலகளாவிய ரீதியில் சமூகத்தின் பண்பாட்டையும் விழுமியங்களையும் தொடர்ந்து பேணிவந்தன. 0 அவற்றை இளந்தலைமுறையினருக்கு உணர்த்தி, அவர்களைச் சமூகத்துடன் இசைந்து வாழச்செய்யவும் கல்வி நிறுவனங்கள் பாடுபட்டு வந்தன. 0 ஜேர்மன் நாட்டுச் சமூகவியலாளர்கள் Durkhim வலியுறுத்திக் கூறிய சமூகமயமாக்கம் இன்றும் கூட பாடசாலைக்கல்வியின் முக்கிய குறிக்கோளாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.
இந்நிலையில் இன்று உலகமயமாக்கத்தின் விளைவாக தேசியக்கல்வி முறைகள் தமது தனித்துவ அம்சங்களை இழந்து உலகளாவிய கல்வி முறைகளை ஒத்த அம்சங்களைப் பெற்று வருகின்றன. தேசியப் பாடசாலைகளில் காணப்பட்ட சுதேச அம்சங்கள் மங்கி வருகின்றன. கல்வியின் நோக்கங்கள், கொள்கைள், கல்வித்துறையில் முதன்மையும் முன்னுரிமையும் பெறும் அம்சங்கள் என்பன உலகளாவிய கல்வி முறைகளை ஒத்தனவாய் ஒரு சீர்தன்மையைப் பெற்று வருகின்றன.
கல்வியும் மனிதவள விருத்தியும் 13

Page 59
0 இதுவரை காலமும் கல்விமுறைகளில் ஏகபோக உரிமையைக் கொண்டிருந்த அரசாங்கங்கள், இன்று கல்வித்துறையிலிருந்து பின்வாங்கி வருகின்றன. பாடசாலைகளைதனியார்மயப்படுத்தும் செயற்பாடு மேலோங்கி வருகின்றது.
)ெ அரசாங்கப் பாடசாலைகள் வர்த்தக, தொழில் நிறுவனங்கள் போன்று சந்தைக் கேள்விகளுக்கு பெற்றோர்களின் கோரிக்கை களுக்கு (Market demands) ஏற்பத் தம்மை மாற்றி வருகின்றன.
0 வர்த்தக நிறுவனங்கள் போன்று பாடசாலைகளும் நுகர்வோரைக் (பெற்றோர்களைக்) கவரும் முறையில் போட்டித்தத்துவத்தை ஏற்றுக்கொண்டுள்ளன.
ஒருகாலத்தில் பாடசாலைக்கல்வியின் முன்னேற்றங்கள் பற்றிய ஆய்வுகள் உள்நாட்டுப் பிரதேசங்கள்/ மாகாணங்கள்/ மாவட்டங்கள் என்பவற்றுக்கிடையிலான ஒப்பீட்டு ஆய்வுகளாக (Intra-Country orinter-district) விளங்கின. ஆனால் இன்று உலகமயமாக்கத்தின் விளைவாக ஒரு நாட்டின் கல்வித்தராதரங்களை ஏனைய உலக நாடுகளின் கல்வித் தராதரங்களுடன் ஒப்பிடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உதாரண மாக இலங்கையின் கல்வித் தராதரங்கள் இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா முதலிய நாடுகளின் தராதரங்களை எட்டி யுள்ளனவா என்று ஆராயவேண்டியுள்ளது. புதிய தொழிற் சந்தையில் மட்டுமன்றி சர்வதேசிய தொழிற்சந்தையில் வேலைவாய்ப்புக்களுக் காகப் போட்டியிட வேண்டிய நிலையை உலகமயமாக்கம் உருவாகி யுள்ளது. இதனால் மனிதவள விருத்திக்கான பாடசாலைக் கல்வியானது முதலில் பின்வரும் அம்சத்தில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. 0 மாணவர்கள் உலகப் பிரஜைகளாகும் வகையில் பாடசாலைக்கல்வி அமைதல் வேண்டும்; தமது அயல்நாடுகள் பற்றிய அறிவை மேலும் பெருக்கிக்கொள்ள வேண்டும்; தனது பிராந்தியத்தின் புவியியல், வரலாறு அரசியல் பற்றியும் பிராந்திய மொழிகள் பற்றிய அறிவும் இதிலடங்கும்.
திறந்த பொருளாதாரக் கொள்கையும் அதன் விளைவாக வளர்முக நாடு களுக்கு வந்து சேர்ந்துள்ள பன்னாட்டுக் கம்பெனிகளும் உள்நாட்டில் வளர்ச்சி பெற்றுள்ளதனியார்துறை நிறுவனங்களும் வேலைவாய்ப்புக் களை உருவாக்கி இருப்பதும் உண்மையே! ஆனால் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களின் வேலைவாய்ப்புப் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. புதிய பொருளாதார ஒழுங்கு முறை
14 கல்வியும் மனிதவள விருத்தியும்

வேண்டிநிற்கும் திறன்கள் அவர்களிடம் காணப்படவில்லை. சந்தைப் பொருளாதாரத்திற்குப் பொருத்தமான, தேவையான திறன்களை வழங்கும் முறையில் வளர்முகநாடுகளின் மனிதவள விருத்திக்கான கல்விமுறை மாற்றப்பட வேண்டிய அவசியம் உண்டு.
மரபுவழியான நூற்கல்வி தேவையான திறன்களை வழங்கித் தொழிற்தராதரங்களை மேம்படுத்தத் தவறிவிட்டது. கல்விமுறை யானது இளைஞர்களுக்குப் பொதுக்கல்வியை வழங்குவதுடன் நின்றுவிடாது, அவர்களை மனித வளமாக விருத்திசெய்ய வேண்டும் என்பது புதிய உலகமயமாக்கம் விதிக்கும் நிபந்தனையாகும்.
ஒருநாட்டில் கிடைக்கப்பெறும் தரமான ஊழியர்களும் அவர்
களுடைய தொழிற் தேர்ச்சியும் இரு வகையான முக்கியத்துவத்தைக்
கொண்டவை:
1. ஊழியர் தராதரங்கள் (Labour quality) என்பது கல்விமுறையின் வெளிநிலை வினைத்திறனை (external efficiency) கல்விகற்று வெளியேறுபவர்கள் பிரதான பொருளாதார நடவடிக்கைகளுடன் தம்மைப் பொருத்திக் கொள்வதைக் குறிக்கும். இன்றைய கல்வி முறையானது இவ்விடயத்தில் தோல்விகண்டுவிட்டது.
2. சிறந்த ஊழியர் தராதரங்கள் வெளிநாட்டு மூலதனத்தைக் கவரு
வதற்கு அவசியமானவை.
வளர்முக நாடுகள் "கல்வியும் மனித வள விருத்தியும் என்ற அம்சத்தைக் கருத்திற்கொள்ளவில்லை. திறந்த சந்தைப் பொருளாதாரம் வளர்முக நாடுகளின் ஊழியர்களைப் பயன்படுத்தி முதலீடுகளை ஊக்குவிப்பதுடன் வளர்முக நாடுகளுக்குத் தேவையான ஊழியர் களையும் வழங்கி உதவுகின்றது. இவ்வாறு குடியகலும் ஊழியர்கள் வளர்முக நாடுகளுக்கு ஏராளமான வெளிநாட்டுச் செலாவணியைச் சம்பாதித்துக் கொடுக்கின்றனர். ஆயினும் குடியகன்று செல்லும் ஊழியர்களின் தொழிற்தேர்ச்சி மிகவும் குறைவானதே! வளர்முக நாடுகள் மிகச் சாதாரணமான, மலிவான ஊழியர்களை வைத்துக் கொண்டே வெளிநாட்டு மூலதனத்தைக் கவர முயலுகின்றன.
இலங்கையில் தனியார்துறை நிறுவனங்கள் இளைஞர்களிடம் எதிர்பார்க்கும் மனிதவளத் திறன்கள் : 0 ஆங்கிலமொழித் தேர்ச்சி
0 தகவல் தொழிநுட்பத் தேர்ச்சி
கல்வியும் மனிதவள விருத்தியும் 15

Page 60
சிறந்த தொடர்பாடற் திறன் தலைமை தாங்கும் திறன் குழுவால் சுமுகமாகப் பணியாற்றும் திறன் பிரச்சினை தீர்க்கும் திறன் புத்தாக்கச் சிந்தனை இடர்களை எதிர்நோக்கும் ஆற்றல்
புதிய கருத்துக்களை ஏற்கும் மனப்பாங்கு
ஆதாரம் : இலங்கைத் தனியார்துறையினரிடம் செய்யப்பட்ட ஆய்வுகள்.
க.பொ.த சா.நி, உநிபரீட்சைகள் மனனம் செய்தல் போன்ற குறுகிய நோக்குகளை முக்கியத்துவப்படுத்தப்படுகின்றன. பிரச்சினை தீர்க்கும் திறன், இடமாற்றம் செய்யக்கூடிய திறன்கள் என்பவற்றை வலியுறுத்துவதில்லை. பல்கலைக்கழகப் பட்டதாரிகள் வேலையில் அமர்த்தப்பட முடியாதவர்கள் (Unemployable). கம்பனிகளின் உயர்நிர்வாகப் பதவிகளில் உண்டு. பல்கலைக்கழகப் பட்டதாரி களிடம் உயர்தொழிநுட்ப அறிவு உண்டு. ஆனால் அவற்றைப் பிரயோகிக்கும் ஆற்றல், பகுப்பாய்வுத்திறன், மனிதத் தொடர்புத் திறன் என்பன அவர்களிடம் இல்லை. அண்மையில் 2002, மே பெறதோட்டையில் நடைபெற்ற இலங்கை வர்த்தக களம் நடாத்திய
கல்வி மகாநாட்டில் கூறப்பட்டவை.
வளர்ச்சியுறும் பொருளாதாரமுறைகளின் ஊழியர் தராதரங்கள்
சிறப்பாக அமையுமானால் :
0 ஊழியர்களுக்கு உயர்ந்த வேதனங்கள் கிட்டும் 0 கற்ற இளைஞர்களுக்குத் தொழில் வாய்ப்புக்கள் கிட்டும் 0 உயர்தொழினுட்பக்கம்பெனிகள்கவர்ந்திழுக்கப்படும் 0 பொருளாதார மாற்றமும் வளர்ச்சியும் இலகுபடுத்தப்படும்.
வளர்முக நாடுகளின் பாடசாலைக் கல்வியும் பல்கலைக்கழகக் கல்வியும் மனிதவள விருத்தியை ஏற்படுத்தி புதிய உலகமயமாக்கச் சூழலுக்கு, குறிப்பாகத் தனியார் துறை, பல்தேசிய நிறுவனங்கள் வழங்கும் வேலைவாய்ப்புக்களுக்குப் பொருத்தமான இளைஞர்களை
உருவாக்கக் கருத்திற்கொள்ள வேண்டிய திறன்களைச் சுருக்கமாக
நோக்குவோம்.
I6
கல்வியும் மனிதவள விருத்தியும்

ஆங்கில மொழித் தேர்ச்சி
புதிய பொருளாதார ஒழுங்குமுறையானது ஆங்கிலத்தின் உலகளாவிய தேவையை உறுதிப்படுத்தியுள்ளது. முன்னொருபோதும் இல்லாதவாறு சீனா, தென்கொரியா, தாய்லாந்து, இந்தோனேசியா, மொசாம்பிக், வியட்னாம் முதலிய நாடுகளில் ஆங்கிலம் கற்போர் தொகையும் கற்பிக்கும் நிலையங்களும் அதிகரித்துள்ளன. ஆங்கிலக் குடியேற்றங்களாக இருந்த இலங்கை போன்ற நாடுகளில் ஆங்கிலக் கல்விக்கு ஊக்கமளிக்கப்படவில்லை. சுயமொழிகள் போதனா மொழிகளாக்கப்பட்டு அதன் பயனாகப் பொதுக்கல்வியும் எழுத்தறிவும் மக்கள் மத்தியில் துரிதமாகப் பரவிற்று. ஆனால் இன்று ஆங்கிலம் ஒரு முக்கிய தேவையாகிவிட்ட நிலையில் இலங்கை போன்ற நாடுகள் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றன. இன்று ஆங்கில மொழிக் கல்வியில் புதிதாக அக்கறை செலுத்தப்படுகின்றது. இலங்கை போன்ற நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும் வறுமை ஒழிப்புத் திட்டங் களும் மனித வள விருத்திக் கொள்கைகளும் ஆங்கிலக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியுள்ளது. இலங்கையில் இத்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய முயற்சிகளாவன:
சகல ஆசிரியர் கல்வி நிலையங்களிலும் ஆங்கிலப் பாடத்தைச் சகல ஆசிரியர் பயிலுனர்களும் பயில வேண்டும்.
பாடசாலைகளில் தரம் 1 இலிருந்து ஆங்கில மொழி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
க.பொ.த உ/நி வகுப்புக்களில் சகல மாணவர்களும் ஆங்கில மொழியைப் பயில வேண்டும்.
க.பொ.த உ/நி வகுப்புக்களில் விஞ்ஞானப் பாடங்களை ஆங்கில மொழியில் கற்பிக்க அனுமதியுண்டு.
பல்கலைக்கழக மட்டத்தில் ஆங்கில மொழி வழிப் பயிற்சி நெறிகளுக்கு ஊக்கம் வழங்கப்படுகின்றது.
தொழில்நுட்பம்
தொழிநுட்ப அறிவின்துரிதமான வளர்ச்சியின் காரணமாக, வழமை
யான எண்ணறிவு, எழுத்தறிவு என்பன எதிர்காலத்துக்குப் பொருத்த மற்றனவாகிவிட்டன. ஆயினும் வளர்முக நாடுகளின் அடிப்படைக்
கல்வியும் மனிதவள விருத்தியும் 17

Page 61
கல்வியில் தொழில்நுட்பக் கல்விக்கு எதுவித இடமும் அளிக்கப்பட வில்லை. மேலைநாட்டுத் தொழில்நுட்பத்தை வளர்முக நாடுகளில் பரவச்செய்ய பாடசாலைக் கல்வியேதுணையாக அமையும்.
தொழில்நுட்பத்தின் வளர்ச்சியானது தொடர்பாடலை இன்று பெரிதும் துரிதப்படுத்தியுள்ளது. பூகோளக் கிராமம் என்னும் எண்ணக் கரு இன்று நடைமுறையில் சாத்தியமாகிவிட்டதென்றால் அதற்குத் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டதுரிதமான மாற்றங்களே முக்கிய காரணம்.
எதிர்காலத்தில் மரபுவழிப்பரீட்சைகளில் உயர்சித்தி பெற்ற எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் கூடத் தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அறிவைப் பெறாவிடில் அவர்களும் எழுத்தறிவற்றவர் களின் நிலைமையையே எதிர்நோக்க வேண்டிவரும். புதிய தகவல் மைய, அறிவுமைய உலகு வழங்கும் நன்மைகளை இவர்களால் பெற்றுக்கொள்ள முடியாது. வளர்முக நாடுகளில் உயர்வகுப்பினர் மட்டுமே நவீனதகவல் தொழில்நுட்ப அறிவைப் பெற்று வருகின்றனர். இன்றைய நிலையில் சகல பிள்ளைகளுக்கும் ஒன்பதாண்டுக் கட்டாய இலவசக் கல்வியை வழங்கச் சிரமப்படும் தென்னாசிய வளர்முக நாடுகள் தகவல் தொழில்நுட்பக் கல்வியை எவ்வாறு விரிவான முறையில் சாதாரண கிராமப்புற மக்களுக்கு வழங்க முடியும் என்பது ஒரு முக்கிய பிரச்சினையாகும். கிராமப் புறங்களில் மின்சார வசதிகள் அற்ற நிலையில் தகவல் தொழில்நுட்ப மாற்றங்களைக் கருத்திற் கொண்டு புதிய மனிதவள விருத்திச் செயற்றிட்டங்களை வரைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. புதிய தகவல் தொழில்நுட்பங் களால் வளர்முக நாடுகள் நன்மை பெற வேண்டுமாயின் அந்நாடுகள் மரபுவழியான எழுத்தறிவிற்குப் புதியதொரு வரைவிலக்கணத்தை உருவாக்கி அதில் பிரதான தகவல் தொழில்நுட்பத் திறன்களை உள்ளடக்க வேண்டும்; சாதாரண மக்களும் புதிய தகவல் சமூகத்தில் செயற்றிறன்மிக்க உறுப்பினர்களாக இம்முயற்சி உதவும்.
நவீன மாற்றங்கள் சில
İnformation Superhighways 6T60Tülu(GBüb ğ556u6o(yp60pp Gpb(6Büb பாதைகள் இன்று ஜப்பான், தென்கொரியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் ஏற்படுத்தப்பட்டு வருகின் றன. இந்திய செயற்கைக் கிரகங்கள் புதிய தகவல் யுகத்தைத் தென்னாசியாவிற்குக் கொண்டுவர உள்ளன.
II.8 கல்வியும் மனிதவள விருத்தியும்

ஹொங்கொங்கின் மோட்டொரோலா 1995ஆம் ஆண்டு கம்பி யில்லாத வலைத் தொகுதியை (Max) உருவாக்கியுள்ளது. இதனால் கைக்கு அடக்கமான கணினியினூடாக இ.அஞ்சலையும் (e-mail) தொலைநகலையும் (Fax) அனுப்பமுடியும்.
எதிர்காலத் தொழில்நுட்பவியலான மக்களற்ற அலுவலகங்கள், 'அலுவலகமற்ற ஊழியர்கள்', 'காகித ஆவணங்களற்ற அலுவலகங் கள்’ என்பவற்றை உருவாக்கவுள்ளன.
சிங்கப்பூரின் மதிநுட்பத்தீவு (Intelligent Island) ஒவ்வொரு இல்லத் திலும் நவீன தகவல் தொழில்நுட்பக் கருவிகளைப் (Fiber opticaled) பொருத்தி நிர்மாணித்து வருகின்றது; தென்கொரியா 5800 கோடி US டெலர் செலவில் நிர்மாணித்து வரும் பல்லூடகத் தொகுதி (Fiber - Optimultimedia network) 2010.9, b 96 TLq6) 9bbsTL-60L (up(p60)LD யான தகவல் சமூகமாக மாற்றிவிட உள்ளது.
இலங்கையில் தகவல் தொழில்நுட்பம் (IT)
இலங்கை பாடசாலை முறைமையில் கணினிக்கல்வி 1983ஆம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது. ஆயினும் கல்விஅமைச்சின் நோக்கில் இலங்கையில் தகவல் தொழில்நுட்பத்தின் விருத்தியானது இலங்கை போன்ற பொருளாதார வளர்ச்சியுடைய ஏனைய நாடு களுடன் ஒப்பிடும்போது பின்தங்கியேயுள்ளது. புதிய தகவல் மையப் பொருளாதாரத்தின் வளர்ச்சியானது ஒரு நாட்டின் தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி மட்டத்திலேயே தங்கியிருக்கின்றது. மேலும் அதற்கு முழுச்சமூகமும் தகவல் தொழில்நுட்ப அறிவை (IT Literacy) பெற்றிருக்க வேண்டும் என்பது ஒரு முன்நிபந்தனையாகும். இந்நோக்கை அடைந்துகொள்ளப் பாடசாலைக்கல்வியின் துணை நாடப்படல் வேண்டும்.
1983இன் பின்னர் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன்கணினி வளநிலையங்கள் ஏற்படுத்தப்பட்டது. இன்று 73 நிலையங்கள் தீவளாவிய ரீதியில் இயங்குகின்றன. இந்நிலையங்கள் பாடசாலை மாணவர்களுக்கு (க.பொ.த சா/நி, உ/நி) விடுமுறையின்போதும் பாடசாலைக்கல்வி முடிந்த பின்னரும் கணினி அறிவை (MS Office, and Programming க்கு அறிமுகம்) வழங்கி வருகின்றன.
ஆயினும் முறையான பாடசாலைப் பாட ஏற்பாட்டில் இன்னும் IT என்ற ஒரு பாடம் இல்லை. ஆயினும் புதிய கல்விச்சீர்திருத்தங்களின்படி
கல்வியும் மனிதவள விருத்தியும் 19

Page 62
(1997/98) அமைக்கப்பட்டுள்ள செயற்பாட்டறையில் (Activity Room) சில கணினிப் பயிற்சிகள் இடம்பெற்று வருகின்றன. கனிஷ்ட இடை நிலை வகுப்புக்களில் கற்பிக்கப்படும்business Studies என்று பாடத்தில் ஒரளவு IT அம்சங்கள் உண்டு.
பாடசாலைக்கல்வியில் IT பற்றிய தேசியக் கொள்கையான இலங்கை யின் இளந்தலைமுறையியளாளருக்கு நவீன IT அறிவை வழங்க வேண்டியது அரசின் பொறுப்பு எனச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 21ஆம் நூற்றாண்டின் சவால்களை இளைஞர்கள் எதிர்கொள்ளும் வகையில் அவர்களை ஆயத்தம் செய்ய வேண்டியது அரசின் கடமை என கொள்கை ஆவணம் வலியுறுத்தியுள்ளது. தேசிய ரீதியாக வளர்ச்சியடைந்துள்ள பொது எழுத்தறிவுக்கு இணையான முறையில் IT அறிவும் விருத்தி செய்யப்படவுள்ளது. 2002 - 2007 காலப்பகுதியில் இக்கொள்கை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இத்தேசிய T கொள்கையின் நோக்கு (vision) பின்வருமாறு:
"புதிய தலைமுறையினரான இலங்கையர்கள் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப அறிவினால் வலுப்படுத்தப்படுவர்."
இக்கொள்கையின் இலக்குகளாவன :
0 தகவல் தொழில்நுட்பக்கல்வியின் எதிர்கால உலகளாவிய சவால் களை உணர்ந்து, அச்சவால்களை எதிர்கொள்ளத் தேவையான மனிதவளவிருத்திக்கான அடித்தளத்தை உருவாக்குதல்.
0 தகவல் தொழில்நுட்பத்தை ஒரு கற்றல் கருவியாகப் பயன்படுத்தும்
நிலைமைகளைப் பாடசாலைகளில் ஏற்படுத்தல்.
0 பாடசாலைகளைவிட்டு வெளியேறும் சகல மாணவர்களும் தகவல்
அறிவைப் (Information literacy) பெற வழிவகை செய்தல்.
0 பாடசாலை முறைமையானது நாட்டுப் பிரஜைகளின் வாழ்க்கை
நீடித்த கல்வியில் ஈடுபடத் தேவையான ஏற்பாடுகளைச் செய்தல்.
0 ஆசிரியர்கள், ஆசிரியர்களைப் பயிற்றுவோர் ஆகியோர் தகவல்
தொழில்நுட்ப அறிவைப் பெறும்வகை செய்தல்.
பாடசாலை மட்டத்தில்.
0 பாடசாலைகளில் ITசங்கங்களை ஏற்படுத்தல்
0 பாடசாலைச்சங்கங்களில் வலையமைப்புக்களை (Websites)
ஏற்படுத்தல்
20 கல்வியும் மனிதவள விருத்தியும்

0 ஆசிரியர்கள் சொந்தமாகக் கணினிகளை வைத்திருப்பதை
ஊக்குவித்தல்
0 தகவல் தொழில்நுட்பக் கல்வி மாநாடுகள் / கருத்தரங்குகளை
ஊக்குவித்தல்
0 தகவல் தொழில்நுட்பக்கல்வியில் விசேட ஊக்கங்காட்டுவோருக்கு
விருதுகள் வழங்கல்
ustidss: (WWW.moes.org) g)-győFGv : itunit @ molesl. org
விடயம் : “பாடசாலைக் கல்வியில் IT பற்றிய தேசியக் கொள்கை'National Policy on IT in school Education - Government of SriLanka'
பாட ஏற்பாட்டில் - IT
0 முக்கிய குறிக்கோள்
சகலநிலைகளில் பயிலும் மாணவர்களுக்கும் தகவல், தொடர்பாடல் தொழில்நுட்ப அறிவையும் திறன்களையும் வழங்குதல்.
0 செயற்பாடு
10-11, 12-13, 6-9, 1-5 வகுப்புக்களுக்கான IT பாடஏற்பாட்டைத் தயாரித்தல்.
0 முறையியல்
தொழில் வழங்குவோர், பல்கலைக்கழக ஆசிரியர், உயர் தொழில் அமைப்புகள் என்பவற்றைக் கருத்திற் கொண்டு IT யின் தேவை பற்றிய ஆய்வொன்றை(needanalysis) செய்தல் பிறநாடுகளின் பாடஏற்பாடுகளை ஆராய்ந்துதராதரங்களைத் தீர்மானித்தல் (இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா)
0 பாட ஏற்பாட்டைத் திட்டமிட்டு, வரைதல்
சில பாடசாலைகளில் பரிசோதனை முறையில் கற்பித்துப் பார்த்தல் (கிராமப்புறப் பாடசாலைகள் 3, நகர்ப்புறப் பாடசாலைகள்2)
ஆசிரியர்களுக்கான வழிகாட்டிகளைத்தயாரித்தல் பாடசாலைகளின் பாட ஏற்பாட்டை நடைமுறைப்படுத்தல் நடைமுறைப்படுத்தலை மேற்பார்வை செய்தல்
தகவல் தொழிநுட்பத்தை ஒரு பரீட்சைப் பாடமாக ஆக்குதல்
கல்வியும் மனிதவள விருத்தியும் 2.

Page 63
தேசியக் கல்வி நிறுவனமானது (NIE, மஹரகம) பல்கலைக்கழகங் களுடனும் ஆசிரியர்களுடனும் தனியார் துறையினருடனும் சிறப் பறிஞர்கள் இணைந்து இப்பணியைச் செய்ய வேண்டும் என்று கல்விக் கொள்கை வகுப்பாளாரால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மனிதவள விருத்தித்திட்டத்தில் இடம்பெற வேண்டிய ஏனைய திறன்கள்.
புதிய பொருளாதார ஒழுங்கில் இணைந்து வாழ பாடசாலைக் கல்வியின் மனிதவள விருத்தித் திட்டத்தினூடாக வளர்க்கப்பட வேண்டிய திறன்களை சுருக்கமாக நோக்குவோம்.
வாழ்க்கைத் திறன்கள்
இவை உடல்விருத்திக்கும் வினைத்திறனுடன் கூடிய வாழ்வுக்கும்
தேவையானவை:
உடல், சுகாதாரம் பேணல்திறன்கள்
போஷாக்கு, நிறைகட்டுப்பாடு, மனஅழுத்தங்களை முகாமை
செய்தல், ஒய்வுநேரச்செயற்பாடுகளைத் தெரிவு செய்தல் என்பன.
சுயஅடையாள விருத்தித்திறன்கள் 0 தனியாள் அடையாளத்தை விருத்தி செய்யத் தேவையானதிறன்கள், சுய மேற்பார்வை, சொந்தச்சுற்றாடல் பாதுகாப்பு, விழுமியங்களை யும் ஒழுக்கங்களையும் கற்றல்.
மனித தொடர்பு / தொடர்பாடல் திறன்கள் 0 சொல்கலந்த, சொல்சாராத் தொடர்பாடற் திறன்கள், கருத்துக்
களைத் தெளிவாக வெளியிடல் என்பன. பிரச்சினை தீர்த்தல் / தீர்மானம் மேற்கொள்ளும் திறன்கள் )ெ தகவல்களைத் தேடிப் பகுப்பாய்வு செய்து மதிப்பிடும் திறன்கள், பிரச்சினையை இனங்கண்டு தீர்வுகளைத் தீர்மானித்து நடை முறைப்படுத்தும் திறன்கள், நேரமுகாமைத்திறன்கள்.
சமூகத் திறன்கள்
ஒருவர் தனது உரிமைகள், தேவைகள், கடப்பாடுகள் என்பவற்றை நிறைவு செய்ய மற்றவர்களுடைய இதே விடயங்களைப் பாதிக்காதபடி கொள்ளும் தொடர்பாடல் 'சமூகத்திறன்' என வரையளவு செய்யப் படும். சமூகத்திறன் என்பது பிறருடன் சுமுகமாகப் பழகுவது மட்டு மன்று; அது ஆக்கபூர்வமாகவும் இருத்தல் வேண்டும்.
I22 கல்வியும் மனிதவள விருத்தியும்

கூட்டுக்குடும்பங்கள் சமூகமயமாக்கத்திற்கும் சமூகத்திறன் வளர்ச்சிக்கும் அதிக வாய்ப்புக்களைத் தந்தன. இன்றைய சிறுகுடும் பங்களில் இவ்வாய்ப்புக்கள் குறைவு. பிள்ளைகள் பெற்றோரை முன்மாதிரியாகக் கொள்ளாது தொலைக்காட்சிகளில் வரும் கற்பனைப் பாத்திரங்களையே பின்பற்ற முயல்கின்றனர்.
இன்றை பரீட்சை மையக்கல்வியில் பிள்ளைகளின் சமூக ஊட்டத் துக்கு அதிக இடமில்லை. வகுப்பறை, பாடநூல்கள், தனியார் போதனை, பரீட்சை என்பவற்றின் ஆக்கிரமிப்பு அதிகமாகிவிட்டது. கல்வியின் பெயரில் சமூக அம்சம் பாடசாலையிலும் வீட்டிலும் இல்லாதொழிகின்றது.
சமூகத்திறன்கள் / சமூகமயமாக்கத் திறன்கள் தொடர்பாடல் திறன் விருத்தியையே குறிக்கின்றன. நவீன உலகில் பல்வேறு பண்பாடு களுடன் சர்வதேச உலகுடனும் பிற சமூகங்களுடன் தொடர்பினை ஏற்படுத்த இத்தொடர்பாடற் திறன்கள் தேவை. வெளிநாட்டு மொழி களின் அறிவு இவ்விடயத்தில் பிள்ளைகளின் உலகை விரிவுபடுத்து கின்றது. இவ்வகையில் வெளிநாட்டு மொழிகளின் அறிவும் சமூக மயமாகத்திறன்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
தொடர்பாடற் திறன்கள் 0 மொழியைப் பயன்படுத்துவதன் நோக்கம் தொடர்பாடல் வினைத்
திறனுடன் அமைய வேண்டும் என்பதாகும். 0 இன்று தொடர்பாடற் தகைமைகள் (Competence) பற்றிப்
பேசப்படுகின்றது. அவையாவன: உரையாடலை எவ்வாறு தொடங்கி, எவ்வாறு முடிப்பது? தமது கருத்தை எவ்வாறு புரிய வைப்பது? மற்றவர்களுடைய கூற்றுக்களுக்கு எவ்வாறு விடையளிப்பது? எவ்வாறு கவனித்துக் கேட்பது? கல்வியானது ஆரம்பநிலையிலிருந்தே இத்தகைமைகளை வளர்க்க வேண்டும்.
0 சிறுகுழுக்களில் (குடும்பம், சகபாடிகள், ஊழியர் குழுக்கள்)
வெற்றிகரமாக உரையாடும் திறன் வளர்க்கப்பட வேண்டும். 0 பெரிய குழுக்களுக்குப் பேசும்போது சொல் தெரிவு, பேச்சுத்
தெளிவு, உரையாடல் பாணி என்பன முக்கியமானவை.
கல்வியும் மனிதவள விருத்தியும் 123

Page 64
)ெ தூர இடங்களுக்குச் செய்திகளை அனுப்பும் திறன், எழுத்துத்திறன், தொலைகருவிகளைப் பயன்படுத்தும் திறன் (Telephone) என்பன வும் முக்கியமானவை.
0 தகவல் யுகத்துக்குத் தேவையான திறன்கள்: தொலைபேசித் தொகுதியினூடாக உலகவலைத் தொகுதி, இணையம் என்ப வற்றைப் பயன்படுத்தித் தொடர்புகொள்ளமுடிகின்றது.
தொலைத்தொடர்பு ஊடகங்கள் வளர்முக நாடுகளில் சிறப்பாக நிர்வாகம் செய்யப்படவில்லை. அந்நாடுகளின் மக்கள் இவ்வூடகங் களின் வினைத்திறனையும் பயனையும் நன்கு அறிந்தவர்களாகவும் இல்லை. கணினித் தொழில்னுட்பம், தொலைத் தொடர்பு ஊடகங்கள் என்பவற்றைப் பயன்படுத்திப் புதிய திறன்கள் தேவைப்படுகின்றன. வளர்முக நாடுகளின் கல்விமுறைகள் இத்திறன்களைக் கருத்திற் கொள்ள வேண்டும். இவற்றுக்கு முன்னுரிமையும் வழங்கப்படல் வேண்டும். இப்புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தப் புதிய நெறிமுறைகளும் ஒழுங்குவிதிகளும் தேவைப்படுகின்றன. ஊடகங்கள் தவறாகவும் பயன்படுத்தப்படுவதால், கல்வியினூடாகப் பயன்படுத்து வோரின் தராதரங்களும் (User Quality) மேம்படுத்தப்படல் வேண்டும்.
அறிவுசார் திறன்கள்
அறிவுசார்ஆற்றல்களை இன்றைய அறிஞர்கள் சிந்தனைத்திறன்கள் (Thinking Skils) எனக் கூறுகின்றனர். நூற்கல்வியை விட சிந்தனைத் திறன்கள் வளர்க்கப்படல் வேண்டும் என்பது அமெரிக்க அறிஞர் கருத்து. வெறும் எழுத்தறிவு போதாது; தொழில்நுட்ப அறிவே (Technological literacy) தேவையானது என்பது அவர்கள் கருத்து. 1987இல் இத்தகைய திறன்களின் பட்டியலொன்று வெளியிடப்பட்டது: - கூற்றுக்களைப் பகுப்பாய்வு செய்தல் - வகைப்படுத்தலும் கூறுபடுத்தலும் - அனுமானங்களை ஆக்குதல் - சொற்களை வரையறை செய்தல் - எண்ணக்கருக்களை விருத்தி செய்தல் - மாற்றுக் கருத்துக்களை/வழிமுறைகளைக் கண்டறிதல் - விளக்கங்களைத்தயாரித்தல்
- தொடர்புகளை ஒப்பிடல்
I24 கல்வியும் மனிதவள விருத்தியும்

- வினாக்களை உருவாக்குதல் - பொதுமைப்படுத்துதல் - எதிர்வுகூறல் என இப்பட்டியல் விரிந்து செல்லும்.
இவற்றைச் செய்வதற்கு பிள்ளைகள் தமது விவேகத்தைப் பிரயோ கிக்க / இடமாற்றம் செய்ய வேண்டும். விவேக ஆற்றலானது ஒரு பணியைச் செம்மையாகச் செய்ய உதவுகின்றது. வழமையான கல்வி முறை இவ்வம்சத்தைப் புறக்கணித்துவிட்டது. சகல மனிதப் பணிகளும் உயர்சிறப்புடன் அமைய இவ்விவேக இடமாற்றம் தேவைப்படு கின்றது.
கணிதத்திறன்கள் பாடசாலைக்கல்வியில் வலியுறுத்தப்பட்டாலும் அவை எவ்வாறு பயன்படுத்தப்படல் வேண்டும் என்பதைக் கற்பிப் பதும் முக்கியமானது. வாழ்க்கைத்திறன்கள், பொருளாதாரத்திறன்கள், செயற்றிட்டப்பணி என்பவற்றுடன் கணிதபாட விடயம் இணைக்கப் படல் பயன்தரும் முயற்சியாகும்.
உள்இயக்கத்திறன்கள்
உடலும் உள்ளமும் இணைந்து செயற்பட்டுப் பணிகள் ஆற்றப் படுவதை உள இயக்கத்திறன் குறிக்கும். ஆரம்ப வகுப்புக்களில் இத்திறன்கள் பயிற்றப்படுகின்றன. இடைநிலைக்கல்வியில் அதிக முக்கியத்துவம் பெறுவதில்லை; நூற்கல்விச் சுமையே அதிகம் என ஆய்வாளர்கள் கூறுவர். அறிக்கை சார் ஆற்றல்கள் (Cognitive abilities) பற்றிய வகைப்பாட்டை Bloom செய்தது போன்று (கிரகித்தல், மதிப்பீடு, பிரயோகம், தொகுப்பு போன்றன) உள இயக்க ஆற்றல்கள் (Psycho-motor abilities) எவராலும் வகைப்படுத்தப்படவில்லை; அதன் காரணமாகக் கல்விச் செயற்பாட்டில் இவ்வாற்றல்கள் அதிகம் கருத்திற் கொள்ளப்படவில்லை.
மாணவர்கள் ஒரு செயற்பாட்டை சரியாக, முறையாக, வினைத் திறனுடன் செய்யக்கூடியவர்களாக இருத்தல் வேண்டும். உளஇயக்கத் திறன்கள் வெற்றிகரமான செயலாற்றத்துக்கு உதவுவன. கல்வியில் இவை முக்கியத்துவம் பெறும்போது நூற்கல்வியானது பெருமாற்றத் துக்கு உள்ளாகும். இத்திறன்களைப் பெறுவோர்வேலைவாய்ப்புகளுக் கானதகுதிகளைப் பெறுவர்; வேலை உலகுடன் இணைந்து கொள்ளும் ஆற்றலைப் பெறுவர். இடைநிலைக்கல்வியில் விளையாட்டு, நீச்சல், வாகனம் ஒட்டல், கிரிக்கெட், கால்பந்து என்பன கட்டாயமாகக்
கல்வியும் மனிதவள விருத்தியும் 125

Page 65
கற்பிக்கப்படலாம். இவை எதிர்காலத்துக்குத் தேவையான அடிப் படைத் திறன்களை வழங்கும். இதே போன்று பாடுதல், நடித்தல், வாத்தியம் வாசித்தல், மேடைப் பேச்சு, தலைமைத்துவப் பயிற்சி என்னும் திறன்களும் பாடசாலைகளில் வழங்கப்படலாம்.
இவ்வாறு நுகர்வோருக்குரிய திறன்கள், சந்தைப்படுத்தல் திறன்கள், பொருளாதாரத் திறன்கள், முயற்சியாளர் திறன்கள், பணம்சார் Spairs, Gir, 5L6576 Luplub Spair 56ir (Money skills and Credit skills)
என்பனவும் வலியுறுத்தப்படுகின்றன.
நுகர்வோர் சந்தைப்படுத்தல் முயற்சியாளர் பொருளாதாரத் திறன்கள் திறன்கள் திறன்கள் திறன்கள் புதிய கடன் கணக்கியல் 88ങ്ങഖ5ഞണ് யாவருக்கும் பெறுமுறையை திறன்கள் வழங்கும் மனைப்பொருளியல் அறிதல் திறன்கள் திறன்கள் பொதுவசதி பொருள் சேவைத்தொடர்பு வீட்டைப் பேணல் களை சிக்கன கணக்கிடும் களை ஏற்படுத்தல் துப்புரவு செய்தல் மாகப் பயன் திறன்கள் படுத்தும் திறன்
முகாமைத் வாழ்க்கையாளர் அவசர சுகாதாரத் திறன்கள் களை கவனிக்கும் திறன்கள் விற்பனைத் திறன்கள் திறன்கள்
தோட்டம் தொடர் பான திறன்கள் தைத்தல் முதலுதவித் திறன்கள் சிக்கனத் திறன்கள்
வேறு சில பயனுள்ள நவீன திறன்கள்
O Jeps' Guit p5uSugi Spairs Git (Social Engineering Skills) geups நிறுவனங்கள் கூடிய திறமையுடன் இயங்கச் செய்ய அவற்றை மறுசீரமைக்கும் திறன்கள்.
வறுமை, நீர் உறைவிடம், சுகாதாரம், சுற்றாடல், கல்வி, போக்கு வரத்து, சந்தைகள், சமூகநலன் தொடர்பான நிறுவனங்களில் மாற்றங் காணுந் திறன்கள்.
26 கல்வியும் மனிதவள விருத்தியும்

உலகமயமாக்கத்தின் அறிமுகத்துடன் இந்நிறுவனங்களின் அமைப் பில் மாற்றங்காண வேண்டியுள்ளது.
இந்நவீன திறன்களில் சிவில் பொறியியல் திறன்கள், மின்சாரம் தொடர்பான திறன்கள், ஊடகத்திறன்கள், பொறிமுறை (Mechanical) திறன்கள், பரிசோதனைத் திறன்கள் (உதாரணம் : மாற்றுச் சக்தி வலுக் களைக் கண்டறிதல்)
இலத்திரன் தொடர்பானதிறன்கள் என்பன புதிய உலகமயப்படுத்தப் பட்ட பொருளாதார முறைகளுக்கும் வேலை உலகுக்கும் அவசிய மானவை. இதனால் வளர்முக நாடுகளின் மனிதவளவிருத்திச் செயற்றிட்டங்கள் வழமையான நூற்கல்விக்கும் பொதுக்கல்விக்கும் வழங்கும் முக்கியத்துவத்தைக் குறைத்து இந்நவீன திறன்களைப் பாடசாலைக்கல்வியிக்கூடாக வழங்க முற்பட வேண்டும்.
C 'உலகமயமாக்கமும் வளர்முக நாடுகளில் மனிதவள விருத்தியும்
பற்றிய இக்கருத்துகள் பற்றி மேலும் அறிய பார்க்க:
1. Sedere Upali M. Reforming Education The Crisis of Vision. Univer
sal Publishers, USA, 2000
2. g60600Tugig, GTLb WWW : upublish.com/books / Sedera.htm
3. SCANS - Secretary Commision on Achieving Necessary Skills:
ஐக்கிய அமெரிக்க தொழிற்துறை (Labour) செயலாளர் அமைத்த ஆனைக்குழு Scans எனப்படும், இவ்வாணைக்குழு திறன்களை விரிவான முறையில் வகைப்படுத்தியுள்ளதைக் காண நாடவேண்டிய g)60600Tuig, 6tb: http://www.advedspe.Com
கல்வியும் மனிதவள விருத்தியும் 27

Page 66
Reference
1.
28
Gurbachan & Bhata (1996) Development Process and Female Participation - some implications for Human Resource Development P 76 - 85 Deept Deep Publications
New Delhi
Human Resource Development in India.
Neela Roh Metra (1996) Women as a Human Resource P.89 - 95 Deept Deep Publications New Delhi
Peoples Bank (1996) Economic Review, January (P28-36) Peoples Bank, Colombo.
World Bank (1992) Human Development Report 1992 New York. P 57
கல்வியும் மனிதவள விருத்தியும்

உசாத்துணை நூல்கள்
Beavet A, The Rise and decline of vocational education Social. Educ. 56 (2) 1993.
Blaug M, where are we now in the economics of education? Econ. Edu. Rev 4 (1): 17-28
Bowles. S.Gintis, H, Schooling in capitalist America, basic books, New York, 1976.
Burnett, N. Priorities and strategies for education, a World Bank review, Int Jour. Edu. Deve. Vol 16, No 3, 1996
Carnoy M, Levin H, Schooling and work in, the democratic State, Stanford University press California, 1985.
Coombs P. H, the world educational crisis: a systems analysis, oxford university press New York, 1968.
Coombs P. H, the world crisis education: a view from the eighties, oxford university press, 1985.
Denison, E.F. why growth rates differ: post war experience in nine countries, brooking institute, Washington D. C, 1967.
Griliches Z. research expenditures, education, and the aggregate agricultural, production function, Ame. Econ. Revi. 54, 1964.
Hadded W.D., Carnoy M, Rinaldie; Regal O, education and development, Evidence for New Priorities, World Bank, 1990.
Psacharopoulos. G, Rerurns to Education: a further international update and implications. Journal of human resources 20; 1985.
Psacharoboulos. G. Woodhall M, education for Development: An analysis of Investment choices, Oxford University press, New York, 1985.
Schultz T. W. investment in human Casrital, American Economic review, 51, 1-17, 1961.
Schultz, T. W, the value of higher education in Low income countries:
கல்வியும் மனிதவள விருத்தியும் 129

Page 67
An economist's view, int. Ins. Of Education. Planning, Paris, 1979.
Schultz, T. W., the Economics of being poor, Blackwell, oxford, U.K, 1993.
UNESCO, Educational Planning: a world survey of problems and prospects, UNESCO, Paris, 1970.
Vaizey. John, the political economy of education, Duck borth publishing co, 1970.
Weiler H. N., Education and Development from the age of innocence to the age of Scepticism, comp. Education. (14)3, 1978:
Welch F. Education in Production, Jour. Poli. Econ. 78,35—59, 1970.
130 கல்வியும் மனிதவள விருத்தியும்


Page 68
606) : ரூபா 200.00
ISB
 
 
 
 
 
 

N955-1013-72-7 ।
955 1 0 13721