கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கல்வியும் பால்நிலைச் சமத்துவமும்

Page 1


Page 2


Page 3


Page 4

கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் Education and Gender equality
கலாநிதி.சபா.ஜெயராசா
ஆசிரியத்துவ நோக்கு

Page 5
ஆசிரியத்துவ நோக்கு
நூல் : கல்வியும் பால்நிலைச் சமத்துவமும்
ஆசிரியர் : கலாநிதி. சபா. ஜெயராசா
பதிப்பு : மார்ச் 2007
வெளியீடு : அகவிழி
3, டொறிங்டன் அவெனியூ கொழும்பு - 07
அச்சு : டெக்னோ பிரிண்ட்
55, டாக்டர். ஈ.ஏ.குரே மாவத்தை, கொழும்பு - 06
ISBN : 978-955-1674-00-7
*55%S נilspaף
îii
Rs
 

பால்நிலை அறிகையின் நுழைவாயில் நிற்போர்க்கு.

Page 6

முன்னுரை
கலாநிதி சபா.ஜெயராசா எழுதிய “கல்வியும் பால் நிலைச் சமத்துவமும்” எனும் தலைப்பிலான இந் நூலை வெளியிடுவதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். குறிப்பாக 2007 மார்ச் “சர்வதேச மகளிர் தினத்தை" யொட்டி இந்நூல் வெளிவருவது மிகப் பொருத்தமாகவும் உள்ளது.
பால்நிலையும் கல்வியும் தொடர்பான நுண்ணியதான ஆய்வுகள் தமிழில் அதிகம் வெளிவரவேண்டியுள்ளது. ஆனால் இத்துறையில் தமிழ் நூல்கள் போதியளவு வெளிவரவில்லை. ஆகவே இந்நூல் இத்துறையில் ஒரு ஆரம்ப முன்னோடி முயற்சி என்றே கூறலாம்.
காலனித்துவ காலத்தில் இருந்து பெண்களின் மேம்பாட்டுக்கு கல்வியும் பாடசாலைகளும் பெரும் பங்காற்றியுள்ளன. இதனால் சமூகத்தளத்தில் பெண்கள் பங்குகொள்ளும் சூழல் ஓரளவு படிப்படியாக அதிகரித்தது. தொடர்ந்து பின்காலனித்துவச் சூழலில் பெண்களின் சமூகத்தகுதி கல்வியினை அடிப்படையாகக் கொண்டு மேலும் மேலும் மேம்பாடு காணும் கலாசாரமாகவும் பரிணமித்தது.
இருப்பினும் சமூக நிலையிலும் பொருளாதார நிலையிலும் பெண்கள் ஆண்கள் மீது தங்கியிருப்பதற்கான கல்வியும் விழுமியங்களும் தான் தொடர்ந்து கையளிக்கப்பட்டு வருகின்றன. இன்று கல்வி வாயிலாக பெண்கள் பல்வேறு தொழில்களில் அமரக்கூடிய வாய்ப்புகளும் வசதிகளும் உள்ளன. ஆனாலும் ஆண்கள் செய்யும் வேலைகளோடு பெண்கள் செய்யும் வேலைகளை நாம் ஒப்பிட்டுப் பார்த்தால், அங்கு பால்நிலை அசமத்துவம் உறுதியாக நிலவி வருவதைக் காணலாம். அத்துடன சில தொழில்கள் பெண்களுக்குரித்தான தொழில்களாகவே கருத்தேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதற்கு ஆசிரிய வாண்மையினர், தாதியர் போன்ற தொழில்களை உதாரணமாகக் கூறலாம்.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 15

Page 7
இலங்கையில் ஆசிரியவாண்மையினரில் பெண்களே அதிகமாக உள்ளனர். ஆனால் இவர்கள் இங்கு தமது நலநோக்கில் தீர்மானிக்கும் பாத்திரமாற்றும் வகையில் இல்லை. அதாவது நடைமுறையில் பெண் ஆசிரிய வாண்மையினரின் நோக்கில் கல்வித் திட்டமிடல், பாடசாலை முகாமைத்துவம் முதலான எவையும் நோக்கப்படுவதில்லை. தொடர்ந்து காலாதி காலமாக செல்வாக்குச் செலுத்தும் ஆண் மேலாதிக்கவயப்பட்டே யாவும் நோக்கப்படுகின்றன. "ஆண் முகாமைத்துவ பண்பாடு” கல்விசார் செயற்பாடுகளில் முழுமையாக ஆதிக்கமும் அதிகாரமும் செலுத்துகின்றன. இன்று “பெண்ணியம்", அல்லது “பெண்ணிலைவாதம்” போன்ற கருத்தியல் சார்ந்த விழிப்பணர்வும் விவாதங்களும் புதிய பொருள் கோடல் மரபுகளும் உருவாகி பல்வேறு மட்டங்களில் செல்வாக்குச் செலுத்தத் தொடங்கியுள்ளன. இதற்கு கல்வித்துறையும் விதிவிலக்கல்ல. ஆகவே பால்நிலைச் சமத்துவத்தின் அடிப்படைகள் விழுமியங்கள் கல்வித்துறையிலும் மற்றும் கல்வியியலிலும் உள்வாங்கப்படுவது தவிர்க்கமுடியாது. இது காலத்தின் கட்டாயமும் கூட. அதைவிட மானுடத்தின் விடுதலை, விடுதலை அரசியல், விடுதலையியல் போன்ற உயர்ந்த நோக்கங்களை அடையும் பொருட்டு "கல்வியும் பால்நிலைச் சமத்துவமும்” குறித்து நாம் இன்னும் ஆழ்ந்து சிந்திப்பது ஒரு பண்பாட்டுச் செயற்பாட்டுத் தேவையாகிறது.
ஆசிரியவாண்மை பெண்ணியம் நோக்குவயப்பட்ட சிந்தனை முறைமையாகவும் செயல்வாதமாகவும் முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்கு கல்விப்பரப்பில் சாத்தியமான கருத்துநிலைத் தெளிவுகளை முன்வைக்க வேண்டும். இதற்கு உறுதுணையாகவே "கல்வியும் பால்நிலைச் சமத்துவம் எனும் இந்நூல் வெளிவருகின்றது.
இந்நூலின் அவசியத்தை உணர்ந்தவுடன் தானே பொறுப்பெடுத்து நூலை ஆக்கித்தந்த சபா.ஜெயராசா அவர்களுக்கு எமது நன்றிகள்.
கல்வியியல் தொடர்பான தமிழ்வழி நூல்களை வெளியிடுவதில் அகவிழி மிகுந்த அக்கறையுடன் செயற்படுகிறது. இந்தத் தொடர்ச்சியிலேயே இந்நூலையும் நாம் வெளியிடுகின்றோம். வழமைபோல் இந்நூலுக்கும் முழுமையான ஆதரவை யாவரும் வழங்குவீர்கள் என எதிர்பார்க்கின்றோம். அத்துடன் "பால்நிலைச்சமத்துவம்” கல்வி ஏற்பாடுகளில் முழுமையாகச் சாத்தியப்பட நாம் ஒவ்வொருவரும் விழிப்புடன் இருந்து செயற்படுவோமாக.
தெ.மதுசூதனன். ஆசிரியர் - அகவிழி
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 16

முகவுரை
பால்நிலையும் கல்வியும் தொடர்பான ஆழ்ந்த ஆய்வுகளைச் சமகாலக் கல்வியுலகம் வேண்டி நிற்கின்றது. கல்வி நிர்வாகமும், கல்வித்திட்டமிடலும் பால்நிலைச் சமத்துவத்தின் மீது கவனம் செலுத்தாத இடைவெளிகள் சுட்டிக் காட்டப்படுகின்றன. கல்விச் செயற்பாடுகள் பால்நிலை தொடர்பான சரியான புலக்காட்சியை ஏற்படுத்துவதில் பின்னடைந்து நிற்றலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பால் நிலைச்சமத்துவமும் கல்வியும் தொடர்பான ஆழமான நூலாக்கம் ஒன்றின் இன்றைய தேவையை நண்பர் தெ.மதுசூதனன் புலப்படுத்தியதுடன் தொடர்ந்து உற்சாகமளித்தும் வந்தார். இந்நூலாக்கத்துக்குத் தேவையான சமகால நூல்கள் அனைத்தையும் தேசிய கல்வி நிறுவகத்துப் பணிப்பாளர் அன்புக்குரிய மாணவர் திரு.உநவரட்ணம் தந்து உதவினார்.
வேண்டியபோது நூல்களையும் அறிக்கைகளையும் தந்துதவிய
விழுது நிறுவனத்தினரும் பெண்கள் ஆய்வு நிறுவனத்தினரும் நண்பர்களும் நன்றிக்குரியவர்கள்.
- கலாநிதி சபா.ஜெயராசா
இணுவில் 27/12/2OO6
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 17

Page 8
பொருளடக்கம்
பால்நிலையும் கல்வியும்
முன்பிள்ளைப் பருவக்கல்வியும் பால்நிலையும்
பால்நிலையும் இரண்டாம்நிலைக்கல்வியும்
ஆசிரியத்துவமும் பால்நிலையும் கற்பித்தலியலை மீளாய்வு செய்தல்
வினைத்திறன் கொண்ட கற்பித்தல்
அறிவொழுக்கமும் கற்பித்தலியலும் பால்நிலையும்
தன்முனைப்புக் கற்றலும்
சமகாலச் சூழலின் பிரதிபலிப்பும்
பிரச்சினைத் தளக் கற்றலும் பால்நிலைச் சமத்துவமும்
வறுமையும் வகுப்பறை மாற்று நடவடிக்கைகளும்
வளங்குன்றிய பாடசாலைகளும் வறிய பெண்களின் கல்வியும்
பெருந்தோட்டத்துறைப் பெண்களின் கல்வி
பால்நிலையும் இலங்கையின் கல்வியும்
மேலைப்புலத்துப் பெண்கள் கல்வியின் வளர்ச்சி
பால்நிலையும் உளப்பகுப்பு ஆய்வும்
பின்னவீனத்துவமும் பெண்கல்வி பற்றிய நோக்கும்
தன்னிலை உருவாக்கம்
மார்க்சிய மனிதமும் இருப்பிய மனிதமும்
புதிய ஆசிரியரும் புகுமலர்ச்சியும்
அண்மைக்காலப்போக்குகள்
ஆற்றல் மிகு மாணவர்களை
உருவாக்குவதற்குரிய ஆசிரியத்துவம்
பால்நிலையும் சீர்மியமும்
O9
2O
25
3.
34
42
47
53
59
64
71
77
81
87
92
98
O3
O8
4.
25
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 18

பால்நிலையும் கல்வியும்
பால்நிலை தொடர்பான கல்வி சமூக இருப்புடன் இணைந்து காணப்படுகின்றது. சமூக இருப்பு பொருளாதார முறைமையுடன் நேரடியான இணைப்புக் கொண்டது. ஐரோப்பாவில் நிகழ்ந்த தொழிற்புரட்சி பொருளாதார முறைமையையும் சமூக இருப்பையும் மாற்றங்களுக்கு உட்படுத்தியது. நிலமானிய உற்பத்தி முறைமையும், கிராமிய வாழ்க்கையும் சிதறடிக்கப்பட்டன. வீடுகளிலிருந்து உற்பத்தி நடவடிக்கைகள் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட பெண்கள் தொழிற்சாலைக்கு நகர்த்தப்பட்டார்கள். பிரத்தியேக நிலையில் இருந்த பெண்களின் வாழ்க்கை ஆண்கள் மயப்பட்ட பொது வாழ்க்கையாக மாற்றமுறலாயிற்று.
தமிழர்களது பண்பாட்டுச் சூழலில் நிலமானிய சமூகத்தோடு இணைந்திருந்த பிரத்தியேக வாழ்க்கை நிலப்பிரபுத்துவ இருமைத்தன்மையோடு இணைந்திருந்தது. அதாவது, நிலவளத்துக்கு உரிமை உடைய பெண்களின் பிரத்தியேக வாழ்க்கை வீட்டுடனும், வீட்டுடன் இணைந்த அயலுடனும் தொடர்புபட்டிருந்தது. இவர்களுக்குரிய கல்வி ஒழுங்கமைப்பாக மரநிழற்பள்ளிகள் இருந்தன. அதாவது வீட்டுச் சூழலில் இருந்த பெரிய மரத்தின் கீழ் உறவு முறைப் பெண்கள் ஒன்று கூடி, அனுபவம் மிக்க மூதாட்டியிடமிருந்து அறிவையும், குடும்ப நுட்பங்களையும் கற்றுக்கொண்டனர். தமிழ்நெடுங்கணக்கு, பழமொழிகள், உபகதைகள், வாய்ப்பாடு உட்பட்ட அடிப்படைக் கணிதம் முதலியவை பெருமளவில் வாய்மொழி வாயிலாகவே கையளிக்கப்பட்டன. தமிழ் நெடுங்கணக்கணக்கை மணலில் எழுதிக்கற்றலும் காணப்பட்டது. வீட்டுத் தொழில்நுட்பம், என்று கூறும்பொழுது, பன்னவேலை, மாலை கட்டல் முதலியவற்றை செய்முறை அனுபவங்களுடன் கற்றல் இடம் பெற்றது. ஆனால் உயர்குடி ஆண்களுக்கென நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட திண்ணைப் பள்ளிக்கூடங்கள் இயக்கப்பட்டன.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 19

Page 9
இருமைத்தன்மையின் அடுத்த பரிமாணம் என்னவென்றால், வயல்களிலே வேலைசெய்து பிழைக்கும் பெண்களுக்கும், ஏனைய தொழில்களில் ஈடுபட்ட ஒடுக்கப்பட்ட குடியினரான பெண்களுக்கும் அத்தகைய ஒரு கல்வி கிடைக்கப்பெறவில்லை. அவர்கள் பெற்ற அறிவும் அனுபவங்களும் நாட்டாரியல் (Folk Education) கல்வியின் வயப்பட்டவையாய் அமைந்தன.
பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கும் பெண்களின், கல்வி நுகர்ச்சி வேறுபாட்டுக்குமிடையே காணப்பட்ட தொடர்புகளை இந்தத் தோற்றப்பாடு ஒரு வகையிலே எடுத்துக்காட்டுகின்றது.
பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரித்தானியாவின் பெண்கள்நிலை "பெருவிரலின் ஆட்சி” (Rule of Thumb) என்ற எண்ணக்கருவினாற் புலப்படுத்தப்படும். (Jane Kelly, (2000). இதன் பொருள் என்னவென்றால் ஆண்கள் பெண்களுக்கு சவுக்கு அடி கொடுப்பதற்கு உரிமை உடையவர்கள். ஆனால் அந்தப் பிரம்பு அவர்களின் பெருவிரலிலும் கூடிய தடிப்புள்ளதாக இருக்கக் கூடாது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் கைத் தொழில் மயப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளிவர்க்கப் பெண்கள், மத்தியதரப் பிரிவு பெண்கள் என்ற பாகுபாடு நிலவியது. தொழிலாளி வர்க்கப் பெண்கள் தமது உழைப்பை விற்று வாழ்வோராய், தொழிற்சாலைகள், விற்பனை நிலையங்கள், விடுதிகள் முதலியவற்றிலே தமது வீட்டை விட்டு வெளிச்சென்று உழைப்போராய் வாழ்ந்தார்கள். ஆனால் மத்தியதரப் பெண்கள் வீட்டை விட்டு வெளிச் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.
இத்தகைய வேறுபாடுகள் கல்விச் செயல்முறையிலும் நேரடியான பிரதிபலிப்புக்களை ஏற்படுத்தின. உயர்கல்வி, மற்றும் பொதுக்கல்வி முதலியவை ஆண்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அதுவும் மத்தியதர வகுப்பினருக்கும் உயர் வகுப்பினருக்கும் மட்டுமே வழங்கப்பட்டது.
கலைத்திட்டச் செயற்பாடுகள், வரலாற்று நூல்கள் பாடநூல்கள் முதலியவற்றில் பெண்கள் பற்றிய தகவல்கள் இடம்பெறவில்லை.
மத்திய தரத்தைச் சேர்ந்த பெண்கள் தமது இல்லங்களிலே ஒருவித "ஒதுக்கல்" நிலையில் இருந்தமை அவர்களிடத்து
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 10

ஒரிஸ் ரீறியா நோய்குரிய அறிகுறிகள் (Hysterical Symptoms) வெளிப்பட்டமையை உளப்பகுப்பு ஆய்வாளர் சிக்மன் பிராய்ட் 1, ட்டிக் காட்டினார். ஒரே வேலையையே வீட்டில் செய்தல், பொருளாதாரம் மற்றும் சமூக பரிமாணங்களிலே தங்கியிருத்தல் ஆண்களின் ஒடுக்கற் செயற்பாடுகள் முதலிய பல காரணிகள் அவர்களிடத்து இந்த நோய் வெளிப்பாடுகளை ஏற்படுத்தின.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பெண்கல்வியைக் குவியப்படுத்தும் இயக்கம் வளர்ச்சி பெறலாயிற்று. எவ்வகையான கரண்டல்களிலும் இருந்தும் சிறுவர்கள், பெண்கள், தொழிலாளர்கள் விடுவிக்கப்படல் வேண்டுமென்ற மார்க்சிய சிந்தனைகளின் ஊடுருவல் விரிவாக்கம் பெறத் தொடங்கியது. அத்துடன் பிரித்தானியாவில் வளர்ச்சிபெறத் தொடங்கிய தொழிற்கட்சியின் கருத்துக்களும் பெண்கல்வி பற்றிய சிந்தனைகளை வளர்க்கலாயின.
இலண்டன் நகரில் மத்தியதரத்துப் பெண்கள் கற்பதற்கென புலமைநிலைக்கல்லூரி 1850 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. எமது சூழலைப் பொறுத்தவரை பெண்களுக்குரிய கல்லூரியாக உடுவில் மகளிர் கல்லூரி தோற்றம் பெற்றது. அமெரிக்க மிஷனரிமார் மேற்கொண்ட தாராண்மைக் கல்வி நடவடிக்கைகளின் வெளிப்பாடாக இக்கல்லூரி கிராமியச் சூழலில் அமைக்கப்பட்டது. பெண்களைக் குவியப்படுத்திய கலைத்திட்டமே அங்கு இயக்கப்பட்டது. தையல், பின்னல்வேலை, சமையற்கலை, குடும்பநலன் முதலிய பாடங்கள் கலைத்திட்டத்தில் இடம்பெற்றன.
சைவ சமயச் சூழலிற் பெண்களுக்கெனத் தனியான கல்லூரியை சேர். பொன் இராமநாதன் அவர்கள் இணுவில் கிராமத்தின் வடபகுதியில் அமைத்தார். பெண்களை மையப்படுத்திய கலைத்திட்டமே அங்கும் நடைமுறையிலிருந்தது. மாலைதொடுத்தல், கோலம்போடுதல், இசைபயிலல், குடும்பநலன், தையல் முதலிய பாடங்கள் கலைத்திட்டத்தில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. "நல்ல குடும்பப் பெண்ணாக வாழ்தல்” என்பதற்குரிய விழுமியங்களே மேற்கூறிய இரண்டு கல்லூரிகளிலும் கற்பிக்கப்பட்டன.
சமூக நிலையிலும் பொருளாதார நிலையிலும் பெண்கள் ஆண்கள் மீது தங்கியிருப்பதற்கான கல்வியும் விழுமியங்களும் கையளிக்கப்பட்டன. கூடிய அளவில் இது மத்திய தர வகுப்பினருக்குப் பொருந்துவதாக இருந்தது. பெண்கல்வி விரிவடைய பெண்
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 11

Page 10
களுக்குப் பெண்களே கற்பித்தல் வேண்டுமென்ற மரபுகாரணமாக மேற்குறித்த கல்லூரிகளிலே பயின்ற மத்தியதரத்தினர் குடும்பப் பெண்கள் என்ற நிலையிலிருந்து ஆசிரியத் தொழிலுக்கு நிலை மாற்றம் பெறலாயினர். மகப்பேறு மற்றும் குடும்பப் பராமரிப்பு ஆகியவற்றுக்கும் ஆசிரியத் தொழிலை மேற்கொள்வற்குமிடையே முரண்பாடு தோன்றியமையால் மத்திய தரவகுப்புப் பெண்கள் ஆசிரியத் தொழிலுக்குச் செல்லாது இடைநிறுத்தப்பட்டார்கள்.
இங்கிலாந்தில் வளர்ச்சிபெற்ற தொழிற்சங்க இயக்கங்கள் வேலைத்தலங்களிலே பெண்கள் சுரண்டப்படுவதற்கு எதிராகக் குரலெழுப்பினாலும் நடைமுறை அனுகூலங்களிற் பின்னடைவு களே காணப்பட்டன.
சோவியத் நாட்டின் 1917 ஆம் ஆண்டு சோசலிசப் புரட்சியைத் தொடர்ந்து சுரண்டலில் இருந்து பெண்களை விடுவிப்பதற்கான பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பெண்களின் பிரச்சினைகளைக் குவியப்படுத்தி பொல்ஸ்விக் கட்சியின் முக்கிய உறுப்பினராகிய அலெக்சாந்திரா கொல்லோண்தை (Alexandra Kolontai) மேற்கொண்ட முயற்சிகள் இவ்வகையிலே சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை.
மகப்பேற்றினுக்கு முன்னும் பின்னுமான லிவு, தேவை ஏற்படின் லீவை நீட்சி செய்யக்கூடிய ஏற்பாடு இக்காலத்தில் மேலதிக சம்பளம் வழங்குதல், உடலுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வேலைகளில் பெண்களை ஈடுபடுத்தாதிருத்தல், பெண்களின் வேலை நேரக்கட் டுப்பாடு போன்ற பல முக்கிய விடயங்கள் அவரால் முன்மொழி யப்பட்டன. இவற்றின் செல்வாக்கு விருத்தியடைந்த நாடுகளிலும் விருத்தியடையும் நாடுகளிலும் ஊடுருவின.
பொருளாதார விடுதலை பெண்களின் விடுதலைக்குரிய ஒருமுன் நிபந்தனையாகக் கருதப்படுகின்றது. கருவளப் பெருக்" கத்தைக் கட்டுப்படுத்துவதற்கென வளர்ச்சியுற்ற மருத்துவ நடவடிக்கைகள் மற்றும் பிரித்தானியாவில் உருவாக்கப்பெற்ற 1967 ஆம் ஆண்டின் கருத்தடைச் சட்டம் முதலியவை இத்துறையில் படிப்படியான முன்னேற்றங்களாகவுள்ளன.
கல்விவாயிலாக பெண்கள் ஈட்டும் தொழில்களை நோக்கினால்
ஆண்களோடு ஒப்பிடும்பொழுது நிலைக்குத்து நிலையிலும் குறுக்கு
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 12

ைெலயிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. நிலைக்குத்து ைெலயில் கூடிய சம்பள மீட்டும் தொழில்களில் ஆண்களே கூடுதலாக இடம் பெற்றுள்ளனர்.
கிடைநிலையில் பார்க்கும் பொழுது ஆசிரியவாண்மை, தாதியர் தொழில் முதலியவற்றில் பெண்களின் எண்ணிக்கையே கூடுதலாகக் காணப்படுகின்றது. அதிக பொறுமையுடனும், குறைந்த உாதியத்துடனும் மேற்கொள்ளப்பட வேண்டிய பாலர் கல்வி ஆசிரியத் தொழில் இலங்கையில் முற்றிலும் பெண்களுக்குரியதாக ஒதுக்கப்பட்டுவிட்டது. இது பாரம்பரியமான குடும்ப வகிபங்குடன் (1)omestic Role) இணைந்திருத்தல் குறிப்பிடத்தக்கது.
சுரண் டற் சமூகத்தில் உற்பத்தி நிறுவனங்கள் பணி ட உற்பத்தியிலே சிக்கன நடவடிக்கைகளை (Cost Effectiveness) மேற்கொண்டு மிகை இலாபத்தை ஈட்டுவது போன்று, குறைந்த செலவில் மனித வளத்தை உற்பத்தி செய்வதிலும் மீள் உற்பத்தி செய்வதிலும் பெண்கள் ஈடுபடுத்தப்படுகின்றார்கள். வீட்டுப் பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு என்பவற்றுடன், குடும்பத்திலே தோன்றும் உளவியல் நெருக்கீடுகளைத் தாங்கும் சுமைதாங்கிகளாகவும் பெண்கள் தொழிற்பட வேண்டியுள்ளது. புறத்தே காணப்படும் வேலையின்மை அழுத்தங்களைக்காட்டி, தொழில்புரியும் பெண்களின் வேதனம் இலகுவாகக் குறைக்கப்படும் நிலையில் இருத்தலும் குறிப்பிடத்தக்கது.
தொழிற்சாலை முகாமைத்துவம், பாடசாலை முகாமைத்துவம் ஆகியவற்றின் நிர்வாக நிலையிலும், ஆளணி நிலையிலும், தொடர்பாடல் நிலையிலும் ஆண்களின் புலக்காட்சியே மேலோங்கியுள்ளது. - இது "ஆண்முகாமைத்துவப் பண்பாடு” (Culture of Male Management) என்று விபரிக்கப்படும். தீர்மானங்கள் மேற்கொள்வதில் ஆண்களின் தரிசனங்களே மேலோங்கி நிற்கின்றன. பெண்களின் அணுகுமுறைகள் பழைமையானவை என்றும் மரபுவழிப்பட்டவை என்றும் பெண்கள் புதுமைகளுக்கு ஈடுகொடுக்க முடியாதவர்கள் என்ற கருத்துக்கள் ஆணி முகாமைத்துவப் பண்பாட்டின் உள்ளடக்கமாக அமைதல் உண்டு.
குடும்ப முகாமைத்துவத்திலும் பாலியல் ஈடுபாடு என்பதற்குக் கொடுக்கப்படும் விளக்கங்களும் வரைவிலக்கணமும் ஆண்களின் புலக்காட்சி சார்ந்தவையாகவே அமைகின்றன பாலியல் ஈடு
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா | 13

Page 11
பாட்டுக்கு விளக்கம் கொடுக்க முயன்ற மிசேல்பூக்கோ பாலியல் பற்றிய விளக்கக் கட்டுமானம் பண்பாட்டின் விளைபொருளாக அமைதலைச் சுட்டிக்காட்டினார். சமூக நியமங்களுடனும், விஞ்" ஞான அறிவு, சமய அறிவு, சட்ட அறிவு, சமூகத்தின் அதிகார முறைமை முதலியவற்றுடன் தனிநபர் இடைவினை கொள்வதன் வாயிலாக பாலியல் ஈடுபாடு பற்றிய விளக்கக்கட்டுமானம் ஏற்படுவதாகக் கூறுதல் இணைத்து நோக்குதற்குரியது. (Focaut, M (1984) The use of pleasure, Vol. 1 1-Histort of Sexuality, Harmondsworth: Benguin)
வீடுகளிலும் பாடசாலைகளிலும் ஆண்களுக்கும் பெண்களுக்குமுரிய வகிபங்குகள், பல பரிமாணங்களிலே கற்றுக் கொடுக்கப்படுகின்றன. மொழிப்பிரயோகம், ஆடைகள், அணி கலன்கள், விளையாட்டுப் பொருட்கள் முதலிய பல பரிமாணங்களில் ஆண் பெண் வேறுபாடுகளும், ஆண் - பெண் வகிபங்குகளும் கற்றுக்கொடுக்கப்படுகின்றன.
ஆண்களுடைய விளையாட்டுக்களிலும் நடத்தைகளிலும் "உடல் மூலதனம்” (Body Capital) மேலோங்கியிருக்கும். உடற்பலத்தை அதிகம் வேண்டி நிற்கும் றக்பி ஆட்டம் மற்றும் உதைபந்தாட்டம் முதலியவற்றை ஆணிகள் மேற்கொள்வர். இன்னொருபுறம் உடற்பலம் கூடிய ஆண்கள், உடற்பலம் குறைந்த ஆண் பிள்ளைகளிடத்து தமது ஆதிக்கத்தை செலுத்துதல் உடல் மூலதனத்தின் வெளிப்பாடு என்று கொள்ளப்படுகின்றது. இந்நிலையில் வயது குறைந்த சிறுவர்களின் உடற்பலம் தரக்குறைவாக மதிக்கப்படுகின்றது.
உடல் மூலதனத்தின் இன்னொரு பரிமாணம் ஆண்களின் உடற்பலத்துக்குப் பெண்கள் பயம் கொள்ளலாகும். இந்தக் கருத்தேற்றம் படிப்படியாக வளர்த்தெடுக்கப்படுகின்றது.
பாடசாலையிலே கட்டமைப்புச் செய்யப்பட்டுள்ள ஒழுங்கு முறைகளும், உடலாதிக்கம் மற்றும் வயது கூடியோர் மேற்கொள்ளும் செயற்பாடுகளும் பாலியல் தொடர்பான இணைப்பு அச்சத்தை அல்லது தொடுபயத்தை (Phobia) ஏற்பயத்தை ஏற்படுத்தி விடுதல் உண்டு. மனத்தாக்கத்தை உருவாக்கும் கேலிப்பேச்சுக்களும் (Bullying) இணைப்பு அச்சத்தை வளர்க்கும் வலிமை கொண்டவை.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 14

சமூகத்தின் நிரலமைப்பையும், அதன் உள்ளமைந்த பால்நிலை வேறுபாடுகளையும் பாதுகாக்கவல்ல வடிவமைப்பு வர்க்க சமூகங்களிலே உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கேற்றவாறான உத்தியோகபூர்வமான GlaFui uGib(upGOip (Official Process) Lu TL.-5FT GOOGvகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நடைமுறையிலுள்ள பொருளாதார ஒழுங்கமைப்பினுக்கு ஏற்றவாறு அறிவும், நடத்தை ஒழுங்கு" களும் கையளிக்கப்படுகின்றன. பொருளாதார ஒழுங்கமைப்பையும், பால்நிலை ஏற்றத்தாழ்வுகளையும் நியாயப்படுத்தும் படிமவாக்கங்கள் பாடசாலைக் கலைத்திட்டத்தின் வழியாக முன்னெடுக்கப்டுகின்றன. இங்கிலாந்தில் உருவாகி வளர்ச்சிபெறத் தொடங்கிய புதிய தாராண்மைவாதம் (Neo - Liberalism) ஒடுக்குமுறைகளை இறுகிய நிலையிலிருந்து தளர்த்தி நெகிழ்ச்சிப்படுத்திய வேளை அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தவில்லை என்பது மனங்கொள்ளத்தக்கது.
நவீன தொடர்பாடல் தொடர்பான ஆய்வுகளில் "எலத்திரன் காலனித்துவம் (Electronic Colonialism) என்ற எண் ணக்கரு முன்வைக்கப்படுகின்றது. இலத்திரன் காலனித்துவம் உருவாக்கித்" தரும் பெண் நிலைச் சித்திரிப்புக்களில் பெண் விடுதலை தொடர்பான போலிச் சித்திரிப்புக்களே மேலோங்கி நிற்கின்றன. ஒடுக்குமுறைக்கு எதிரான பெண் நிலைச் சித்திரிப்பு இரண்டாம் பட்சமாக்கப்பட்டு காதல் என்ற விடயத்தில் மட்டும் கட்டுப்பாடுகளைத் தகர்க்கும் பெண்கள் உருவாக்கப்படுகின்றார்கள். ஒருவகையில் பெண்களின் அறிகைநிலைப்பட்ட எழுச்சியைத்திசை திருப்பும் உள்ளடக்கமே மீளவலியுறுத்தப்படுகின்றது. நடப்பியல் வாழ்க்கையின் பொருளறிதல், எலத்திரன் காலனித்துவத்தில் புறந்தள்ளப்படுகின்றது.
தொலைக்காட்சியின் வழியான தொடர்பாடல் "மெகா தொடர் பித்து" (Mania) என்பதை ஏற்படுத்தி வருகின்றது. நெடுந்தொடர் நாடகங்களைப் பார்க்கும் செயல்முறை பெண்கள் தொடர்பான பாரம்பரிய அணுகுமுறைகளுக்குப் புதுமுலாம் பூசும் நடவடிக்கைக்கு உட்பட வைக்கும் பொறிகளுக்குள் சிக்க வைத்துவிடுகின்றது.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 15

Page 12
முன்பிள்ளைப் பருவக்கல்வியும் பால்நிலையும்
சமகாலக்கலைத்திட்ட ஆய்வாளர்கள் "விருத்திப் பொருத்தப்LJITLG) [56D (p6op” (Developmentally Approppriate Practice, Dap) என்ற கருத்தை முன்னெடுத்து வருகின்றனர் Lubeck (1998) child Education, Vol 75, No-5 pp 293-8) விருத்தி நிலைக்குப் பொருந்தக் கூடிய செயலனுபவங்களைக் கலைத்திட்டத்தில் ஒழுங்கமைத்தல் வேண்டுமென்பதை அறிகை உளவியலாளர் சிறப்பாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் சிறார் விருத்தி தொடர்பான பல ஆதாரமற்ற நம்பிக்கைகளும் நிலவி வருவதனைச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. முன்பிள்ளைப் பருவத்தினர் பால்நிலையை அறியாதவர்களாக இருக்கின்றார்கள் என்பது இவ்வகை ஆதாரமற்ற நம்பிக்கைகளுள் ஒன்றாகின்றது.
சிறார்கள் தமது பால்நிலை இனங்காணலை சமூக இடை" வினைகள் வாயிலாக உருவாக்கியும் நெறிப்படுத்தியும் கொள்கின்றார்கள். இப்பருவத்தில் பால்நிலை தொடர்பான கருத்தாடல்கள் முன்னெடுக்கப்படும் பொழுது தெளிவான கருத்தியல் அடிப்படை யினை ஆசிரியர் கொண்டிருத்தல் வேண்டும். சமூக நடைமுறைகளே ஆண் பெண் வேறுபாடுகளுக்குரிய ஆடை அணி கலன்கள், நடத்தைகள், சிந்தனைக் கோலங்கள், உணர்ச்சி முதலியவற்றை "உண்மை பற்றிய அதிகார அணி" (Re Gimes of Truth) உருவாக்கியும் பாதுகாத்தும் கொள்வதன் வாயிலாக தமது இருப்பை சமூக நிறுவனங்கள் தக்க வைத்துக்கொள்ளுகின்றன. (Facault.M. (1982) Beyond Structuralism and Hermeneuties, University of Chicago Press, Chicago pp 208-26) fpsT ii pél6OGvus?G3Gv 35 Gö 6î இச்செயலை மேற்கொள்ளத் தொடங்குகின்றது.
சமூக உலகம் ஒரு வியாக்கியானத்துக்கு மட்டும் உரியதல்ல - பல்வேறு வியாக்கியானங்களுக்கு உரியது என்று கூறும் பூக்கோ
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 16

இது சரி அது பிழை என்று கூறும் பொழுது அது குறிப்பிட்ட ஒரு வியாக்கியானத்தின் அடிப்படையாகவே முடிவு கொள்ளப்படுகின்றது. ஆனால் சரி பிழை என்பதற்கு வேறு நிலைகளில் வேறு வேறு வியாக்கியானங்களையும் கொடுக்கலாம். குறிப்பிட்ட நிலையிலே கற்பித்தற் சாதனங்களை ஒழுங்கமைக்கும் பொழுது உண்மை என்ற அந்தஸ்தை ஈட்டுவதற்கு ஏனைய ஒழுங்குமுறைகள் வெற்றி கொள்ளப்படுகின்றன.
உண்மைகளுக்கு நிறுவன நிலைப்பட்ட ஆதரவும், தனியாள் நிலைப்பட்ட ஆதரவும் வழங்கப்படுகின்றது. நிறுவன நிலைப்பட்ட ஆதரவு உண்மை பற்றிய அதிகார அணியின் ஆதரவைக் கொண்டுள்ளது. தனியாள் நிலைப்பட்ட ஆதரவு உண்மை பற்றிய அதிகார அணியின் அறநிலைச் சார்புடையது. இவை இரண்டும் ஒன்றிணைந்து ஒருவரது நடத்தை ஒழுங்கமைப்பைத் தீர்மானிக்கின்றன. இவ்வாறு உருவாக்கப்பட்ட நடத்தைகளுக்கு இசைந்து நடத்தல் இயல்பான (Normal) நடத்தை என்று ஏற்கப்படும். இவ்வாறான இயல்பான நடத்தையைக் கொண்டவர்களுக்கே கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களினதும் ஆதரவு கிடைக்கப்பெறுகின்றது. இந்நிலையில் தனிமனிதர் அரசியல் நிறுவனங்களின் அதிகார அணியோடு ஒன்றிணைக்கப்பட்டு விடுகின்றார்.
உண்மை ஒன்றே ஒன்று அல்லவென்றும். அது ஒன்றை ஒன்று போட்டியிடும் நிலையில் உள்ளதென்றும் பூக்கோ குறிப்பிடுகின்றார். இந்நிலையில் அதிகார ஏற்புடைமைகளுக்கு ஏற்ற உண்மை நிலை நிறுத்தல் பால்நிலைக்கல்வியில் சிறார் நிலையிலிருந்தே மேற்கொள்ளப்படுகின்றது.
சிறார் விருத்தி, விருத்திப் படிநிலைகள், முழுமையான சிறார்வளர்ச்சி, விருத்திக்குப் பொருத்தமான செயற்பாடுகள், இணைந்தகலைத்திட்டம் மாணவர் விருப்புக்குரிய நிகழ்ச்சித் திட்டங்கள், தனியார் ஆயத்தநிலை, தனியார் ஊக்குவிப்புக்கள் ஆகிய அனைத்தும் உண்மை பற்றிய அதிகார அணியின் இயல்புக்கு ஏற்றவாறே பாடசாலைகளில் உருவாக்கப்படுகின்றன. இதற்கு ஏற்பவே பால்நிலை பற்றிய அணுகுமுறைகளும் பாலர்கல்வியில் இருந்து வளர்த்தெடுக்கப்படுகின்றன. இதனால் நடைமுறையில் உள்ள பால்நிலை அணுகுமுறைகளுக்கு மாற்றீடுகள் முன்வைக்கப்படுவதில்லை. அவ்வாறு முன்வைத்தல் விலகல் அணுமுறையாகவும் விலகல் நடத்தையாகவும் கொள்ளப்படுகின்றது.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 17

Page 13
சமூகப் பெருநீரோட்டம் அநீதிகளையும், ஏற்றத்தாழ்வுகளையும், கொண்டிருக்கும் நிலையில் அவற்றுக்கு இணைந்து செல்லும் வழிமுறைக்கே ஆரம்ப நிலையிலிருந்து கல்வி அனுகூலமாக" வுள்ளது. குழந்தையை மையப்பொருளாகக் கொண்ட கலைத்திட்டம் சிறுவயதிலிருந்தே தனிமனித வாதத்தை வளர்க்கத் தொடங்குகின்றது. இதுவே மக்களாட்சி இசைவாக்கலின் கனவாகவுமுள்ளது. ஏற்றத்தாழ்வு கொண்ட தனிமனிதவாக்கத்தை உட்பொருளாகக் கொண்ட தனிமனித வாதம் பால்நிலைச் சமத்துவத்தை விலகல் நடத்தையாகக் கொள்ளுகின்றது. சமூக நோக்கிலிருந்து ஒருவரைத் தனிமைப்படுத்திவிடும் நடவடிக்கையாகவே குழந்தை மையக் கலைத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
பிறர் தம்மை ஒழுங்கமைத்தலை உள்வாங்கிக் கொள்ளல் வாயிலாக ஒருவர் தம்மை ஒழுங்கமைத்துக் கொள்கின்றார். சிறார் தம்மை உருவாக்கிக் கொள்ளும் செயல் அவர்களுக்குரிய கல்வியால் நெறிப்படுத்தப்படுகின்றது. தனிமனித வாதத்தை சிறார் உருவாக்கிக் கொள்ளலில் ஆசிரியரின் அணுகுமுறைக்கு வலிதான பங்கு உண்டு. அவர் ஏற்கனவே உருவாக்கப்பட்ட விதிமுறைகளுக்கும், வழிகாட்டிகளுக்கும் ஏற்றவாறு தொழிற்படும் பொழுது அது அதிகார வைப்பு முறைமைக்கும் அதனோடு இணைந்த பால் நிலை ஒடுக்குமுறைக்கும் துணைபோகும் செயற்பாடாகவே அமைந்து விடு" கின்றது. இந்நிலையில் மரபுவழியற்ற (Non- Traditional) அணுகு" முறைகள் தேவைப்படுகின்றன. இந்நிலையில் பால்நிலை தொடர்பான மரபு வழி ஏற்புடைமைகளில் இருந்து மறுப்புடைமைகளுக்கு (Dissensus) நகர்ந்து செல்லவேண்டியுள்ளது.
விருத்தி உளவியல் செயற்பாடுகளை ஆழ்ந்து நோக்கும் பொழுது, அது பால்நிலை ஒடுக்குமுறைகளுக்கு ஒத்துழைப்புச் செய்யும் நடவடிக்கைகளையே முன்னெடுத்து வருதல் நோக்கத் தக்கது. நிலைபேறுகொண்ட கருத்துக்களுக்குச் சாதகமான முறை" யிலும் இயல்பான முறையிலும் ஆண்களையும் பெண்களையும் உருவாக்கும் பொழுது, அக்கருத்துக்கள் பெண்ணிலை நோக்கில் எதிர்மறையான உள்ளடக்கங்களைக் கொண்டிருத்தல் நோக்குதற்” குரியது. ஓர் ஆண் எவ்வாறு ஆணாக வளர்ச்சிகொள்ள வேண்டும் என்றும் ஒரு பெண் எவ்வாறு ஒரு பெண்ணாக மலர்ச்சி கொள்ளல் வேண்டும் என்று கற்பிக்கும் முறைமை அவற்றினுள்ளே பொதிந்” துள்ள ஏற்றத் தாழ்வுகளுக்கு மீள் அழுத்தம் கொடுக்கின்றது.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 18

(Macnaughton, G(2000) Rethinking Gender in Early Childhood Education, London Paul Chapman Publishing, p225) G3LDGylf இனத்துவ அடையாளங்களைப் பெண்களின் நிலையில் இருந்து விளக்கும் மரபும் வளர்ச்சியடைந்துள்ளமை சுட்டிக்காட்டலுக்குரியது.
மரபு வழியான பெண்களின் வகிபங்குகள் (Roles) மாற்றமடைந்து வந்துள்ளமையைச் சிறார்க்குக் கற்பிப்பதன்வாயிலாக பால்நிலை தொடர்பான தெளிவான புலக்காட்சியினை அவர்களிடத்து ஏற்படுத்த முடியும். இதனால் பால்நிலை தொடர்பான எழுநிலைகளைச் சிறார் அறிந்து கொள்வர். குறுகிய தனிநபர் வாதத்தைக் கற்பித்தலின் வழியாக முன்னெடுக்காது திறனாய்வுப் பாங்குடைய கூட்டு வாழ்க்கையை வலியுறுத்தல் வேண்டும்.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 19

Page 14
பால்நிலையும் இரண்டாம் நிலைக்கல்வியும்
பால்நிலையும் (Gender) கல்வியும் அண்மைக்காலத்தைய கலைத்திட்டச் செயற்பாடுகளில் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளது. பால்நிலை என்பது உற்பத்திச் செயல் முறைகளை அடியொற்றி சமூகத்தாற் கட்டுமை (Construct) செய்யப்படுகின்றது. குழந்தைகளைப் பெற்று வளர்த்து மீள் உற்பத்தி நடவடிக்கை, குடும்ப நிலைப்பட்ட உற்பத்திமுறை மற்றும் வகிபாகம், தொழில்முறை சார்ந்த மற்றும் கல்விமுறை சார்ந்த சமூகப்புலக்காட்சி, நிலைபேறு கொண்ட மரபுகள் முதலியவை ஆண் - பெண் வேறுபாடுகளைப் பல நிலைகளில் உருவாக்கியுள்ளன. தீவிர சுரண்டல் அமைப்பைக் கொண்ட சமூகங்களிலே பெண்களின் நிலையும் கல்வியும் மேலும் அவலங்களையும், அநீதியான பறிப்புக்களையும் ஏற்படுத்தி வருகின்றன.
அனைவருக்கும் ஆரம்பக் கல்வி என்ற நிலையில் இருந்து மேலும் ஒருபடி முன்னேறி அனைவருக்கும் இரண்டாம் நிலைக்" கல்வி என்ற அறிதலைப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவற்றோடு இணைந்த பிறிதோர் எழுகையாக கல்வி தொடர்பாகப் பொது மக்களுக்குப் பொறுப்பியம் வழங்குதல் (Public Accountability) என்ற நடவடிக்கை தொடர்கின்றது. இரண்டாம் நிலைக்கல்வியுடன், தொடர்புடைய "உன்னதங்கள்", "தர உறுதிப்பாடு", "ஆற்றுகை”, "வினைத்திறன்", "நவீனப்படுத்தல்", "பொறுப்பியம்”, “பங்குபற்றல்", “தலைமைத்துவம்", "வினையாள்கை” (Empowerment) முதலாம் எண்ணக்கருக்கள் மீளவலியுறுத்தப்படுகின்றன. இந்த எண்ணக்கருத்துக்களை முன் வைத்து இரண்டாம் நிலைக்கல்விநிலையங்கள் தமது நோக்குபற்றியும் செயற்பணி (Mission) பற்றியும் சிந்திக்கத் தொடங்கியுள்ளன.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 20

இரண்டாம் நிலைக் கல்வியில் "பன்முகப்படுதல்", "நெகிழ்ச்சிப் பாங்கு” என்ற செயற்பாடுகள் உலகளாவிய முறையில் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றோடு இணைந்த வகையில் “விசைப்படுத்திய கற்றல், இலக்குகளை அடைவதற்கான குழு அமைப்பு, வேகப்படுத்தும் தடங்களை அமைத்தல் (Fast tracking) முதலிய செயற்பாடுகள் ஒழுங்கமைக்கப்படுகின்றன. வீட்டுக்கும் பாட சாலைக்குமுள்ள முரண்பாடுகளை நோக்குதல், பாடசாலை நேரத்துக்கு வெளியில் பயன்தரும் கற்றல் நடவடிக்கைகளைப் புதிய கோணங்களில் முன்னெடுத்தல், வேலைகளோடு இணைந்த கற்றற் செயற்பாடுகளை வழங்குதல், தகவல் தொழில்நுட்பத்திறன்களை ஏற்புடையதாக்குதல் முதலியவை பற்றிய நோக்கு வலுப்பெற்று வருகின்றது.
இரண்டாம் நிலைக்கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் "உயர்நிலைத்திறன்கள் கொண்ட ஆசிரியரின்” (Advanced Skils Teacher) a C56. It is slip LIGd567 p5). (Department of Education and Employment (1998) England) இதனோடு இணைந்த இன்னொரு நடவடிக்கையாக "கல்வி சார்ந்த வினைப்படும் வலயங்கள்" (Educational Action Zones) 2 (56. It is 5 LIG) 567 pg.T. 6 (5L LJ 60p ஆசிரியர்களின் வாண்மை சார்ந்த கட்டமைப்புக்களைச் சீர்திருத்தி அமைத்தல் உயர்நிலைத்திறன்கள் கொண்ட ஆசிரிய உருவாக்கத்தின் நோக்கமாகும். உள்ளூர் சமூகம் இணைப்பு ஆரம்பப் பாடசாலைகள், உள்ளூர் கல்வி நிர்வாகிகள், மற்றும், வியாபார விருப்பங்கள் முதலியவற்றை ஒன்றிணைத்து இரண்டாம் நிலைக் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் "கல்விசார்ந்த வினைப்படும் வலயங்கள்” உருவாக்கப்பட்டுள்ளன.
ஒவ்வோர் இரண்டாம் நிலைப்பாடசாலையும் தமது தனித்" துவத்தையும் தமது வெற்றிகளை முன்னெடுப்பதற்கான தந்திரோபாயங்களையும், தரமேம்பாட்டை ஈட்டுவதற்கான செயற்பாடுகளையும் ஈட்டுமாறு சமகாலச் கல்விச் செயற்பாடுகளில் உற்சாக" மளிக்கப்பட்டு வருகின்றது. இலங்கையின் இரண்டாம் நிலைப் பாடசாலை ஒழுங்கமைப்பிலும் செயற்பாடுகளிலும் பிரித்தானியாவின் செல்வாக்குகளே ஒப்பீட்டளவில் மேலோங்கியுள்ளன.
மார்க்சியம் மற்றும் தாராண்மைவாதக் கருத்துக்களின் செல்வாக்குகளினால் இரண்டாம் நிலைக்கலைத்திட்டத்தில் சமநிலைப்
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 21

Page 15
பண்புகள் மற்றும் ஒன்றிணைப்புப் பண்புகள் உருவாக்கப்பட்டன. நாட்டின் உழைப்பு வலுவின் தரத்தை உயர்த்துவதற்கு கல்வியின் தரம் உயர்த்தப்படல் வேண்டும் என்பது அகிலப் பொதுக் கருத்தாக வளர்ச்சியுற்று வருகின்றது. பலவகைப்பட்ட உற்பத்திப் பொருட்கள், பலவகைப்பட்ட நுகர்ச்சிப்பொருட்கள் பலவகைப்பட்ட சேவைகள் என்ற விரிந்த பன்முகப்பாங்கு வளர்ச்சியடைந்துவரும் நிலையில் அந்த மாறும் நிலைகளைக் கருத்திலே கொள்ளும் கல்விநடவடிக்கைகளின் மறுசீராக்கம் வற்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றது. கறாரான சிறப்புத்தேர்ச்சி என்ற எண்ணக்கரு கைவிடப்பட்டு நெகிழ்ச்சி கொண்ட சிறப்புத் தேர்ச்சி வலியுறுத்தப்LIG) digit p51. Jogin Beck and Mary Earl (ed) (2000) Key Issues in Secondary Education, London : Cassell) -9153605u gp60 LD கொண்டவர்களையே வேலை கொள்வோர் விரும்புகின்றனர்.
அனைத்து மட்டங்களிலும் தொழில் புரிவோரின் ஆற்றல்கள் கல்வியால் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளன. இந்நிலையில் பின்வரும் நடவடிக்கைகள் சமகாலக் கல்வியில் முன்னெடுக்கப்படுகின்றன.
தமக்குப் பொருத்தமான கலைத்திட்டத்தைத் தெரிவு செய்வதற்கும் உருவாக்குவதற்கும் மாணவர்களுக்கு சந்தர்ப்பம் தருதல். பாரம்பரியமான எழுத்துப் பரீட்சைகளை தொழில்களோடும் நடைமுறைகளோடும் இணைந்த எழுத்துப் பரீட்சைகளாக மாற்றியமைத்தல்.
படித்தவர்கள் தொழில் மாற்றங்களோடு இசைவுபட்டுச் செல்லக்கூடிய கொள்ளளவு ஆற்றலை வளர்த்தல். இரண்டாம் நிலைக்கல்விக்கும் மூன்றாம் நிலைக் கல்விக்குமிடையேயுள்ள இடைவெளிகளைச் சுருக்குதல். முழுநேரக்கற்கை பகுதிநேரக் கற்கைகள் முதலியவற்றை கலந்து கற்பதற்கான வாய்ப்புக்களை நெகிழ்ச்சியுடன் ஏற்படுத்துதல்.
கல்வி தொடர்பான கருத்துக்கள் மற்றும் புதிய கருத்துக்கள் என்ற முனைவுப்பாடுகளும் முரணி பாடுகளும் மேலெழத் தொடங்கியுள்ளன.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 22

மரபுவழிக் கருத்துக்கள் நடைமுறைகள் பற்றிச் சிந்திக்காத மேதாவித்தனத்தை வலியுறுத்த புதிய கருத்துக்கள் இணைந்த கற்கை நெறிகளின் மேலாண்மையை வலியுறுத்துகின்றன.
மரபுவழிக்கருத்துக்கள் கல்வியிலே தெரிவுச் சுதந்திரத்தை வலியுறுத்த நவீன கருத்துக்கள் சனநாயகப் பங்குபற்றலை வலியுறுத்துகின்றன
இவ்வாறான கருத்துக்கள் முன்வைக்கப்படும் வேளை சமூக oாற்றத்தாழ்வுகளும் பால்நிலை ஏற்றத்தாழ்வுகளும் ஏற்படுத்துகின்ற தாக்கங்களை நோக்குதல் சமூக நீதியாகின்றது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நோக்காது, ஆண்களின் அடைவுகள் பின்தங்கிய 1660)@60u -960Ldaipó07. (The Boys' Achievement Debate) 6T657p விவாதமும் மேலெழத்தொடங்கியுள்ளது. ஆண் வினையத்தின் நெருக்கடி (Crisis in Masculinity) என்றதொடரும் முன்வைக்கப்பட்டது. மொழிப்பாடங்களில் ஆண்மாணவர்கள் பொதுவான பின்னடைவுகளை எதிர்நோக்கியுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது. மொழிகள் மற்றும் அழகியற்பாடங்கள் பொதுவாகப் பெண்களுக்" குரியவை என்றும் கணிதம், பெளதிகவியல் போன்றவை ஆண்களுக்குரியவை என்ற கருத்துருவாக்கமும் நிலவுகின்றது. ஆசிரியர் இத்தகைய ஒரு மனோபாவத்துடனேயே கற்பித்தலும் முன்னெடுக்" கப்படுவதையும் ஆய்வாளர் சுட்டிக் காட்டுகின்றனர். (Kenway, and Willis, s(1998) Answering Back, London: Routledge) LITGöpilgogud, குருட்டுத் தன்மையோடு (Gender BlidneSS) மாணவர்களுக்குக் கற்பித்தல் பொருத்தமற்றது என்றும், பால்நிலையின் ஒத்தபண்புகளையும் முரண்படும் பண்புகளையும் தெளிவாக அறிந்து அதற்கு ஏற்றவாறு கற்பித்தலை ஒழுங்கமைத்தலே சிறந்தது என்றும் வலியுறுத்தப்படுகின்றது.
பாடசாலைகளின் கலைத்திட்டச் செயற்பாடுகள், இணைந்த கலைத்திட்டச் செயற்பாடுகள், மறைநிலைக் கலைத்திட்டச் செயற்பாடுகள் முதலியவை ஆண்களைக் கூடிய நிலையிலே பிரதிநிதித்" துவப்படுத்தல் (Over Represented) நிலைபேறு கொண்டுள்ளது.
மாணவர்களின் அடைவுகளைப் பகுத்தாராய்ந்து பார்க்கும் பொழுது வறுமையும் பால் நிலையும் தொடர்பான இருபரிமாணங்கள் வெளிப்படுகின்றன. (அ) வறிய சிறார்களின் அடைவுகள் பொதுவான பின்னடைவைக் காட்டுகின்றன. (ஆ) வறுமைநிலை
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 23

Page 16
யில் உள்ள பெண்களின் அடைவுகள் மேலும் பின்னடைவுகளைக் 35(TL G5).56ip607. (Teese et.al (1995) Who wins School, Department of Educaiton Polivy and Management, University of Melbourne) மூன்றாம் உலக நாடுகளில் வறுமை பால்நிலை என்பவற்றோடு இனக்குழும காரணியும் இணைந்து கொள்கின்றது. இனக்குழும (Ethnicity) நிலையில் கல்வி வளப் பகிர்வில் வேறுபாடுகள் காட்டப்படும் பொழுது, வறியநிலையிலுள்ள, இனக்குழும நிலையில் புறக்கணிப்புக்குள்ளான, பெண்களின் கல்வியே அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றது.
இரண்டாம் நிலைக் கல்வியை வளப்படுத்தும் கலைத்திட்டச் செயற்பாடாக பாலியலைக் கற்பிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்" கப்படுகின்றன. பாலியல் கற்பித்தலை பெற்றோரும் விரும்புகின்றனர், மாணவரும் விரும்புகின்றனர். 1980 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட பாலியற் கல்வியில் பல முன்னேற்றகரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக பால்நிலையிலே காணப்படும் சமத்துவமின்மையை விளக்குவதற்கு இது துணைநிற்கும் என்ற கருத்து மேலோங்கியது. ஆனால் இந்த நோக்கம் நடைமுறை எய்தியதா என்பது கேள்விக்" குரியதாக மாறியது. ஆண்களின் பதவிப்பங்குகளும், மற்றும் பெண்களின் குடும்பப்பராமரிப்புத் தொடர்பான மரபுவழி வகிபங்குகளுமே கற்பித்தலில் மேலோங்கின.
உலகெங்கும் வேகமாகப் பரவத் தொடங்கியுள்ள எயிட்ஸ் நோயின் காரணமாக சமகாலத்திற் பாலியற் கல்வி ஒர் அரசியல் பந்தாட்டமாக மாறியுள்ளது. பால்நிலை (Gender) பற்றிய கற்கை" களில் இருந்து விடுபட்டு பாலியல், நடத்தை நோக்கிய கற்றலும் வளர்ச்சியடையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் பிறழ்வான பாலியற் கல்வியை மேற்கொள்ளாதிருக்கும் சட்டவாக்கங்களும், சுற்றறிக்கைகளும் வழங்கப்பட்டுள்ளன. (Johnbeck, et.at (2000)
பால் நிலை தொடர்பான தெளிவான புலக் காட்சிகளை இரண்டாம் நிலைக்கல்வியில் ஏற்படுத்துவதற்குரிய திட்டங்கள் மேலைப்புலத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்தாலும் மூன்றாம் உலக நாடுகளில் இச்செயற்பாடுகள் முன்னேற்றம் பெறாதிருப்பதற்கு சமூகக் கட்டுமையே தலையாய காரணியாகின்றது. கல்வியை நவீனப்படுத்தும் செயற்பாடுகளில் பால் நிலைக்கற்கை உள்ளடக்" கப்படுதல் காலத்தின் தேவையாக முன்வைக்கப்படுகின்றது.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 24

ஆசிரியத்துவமும் பால்நிலையும்
"மாற்றமுறும் உலகிற்கு ஏற்றவாறு மாற்றமுறும் ஆசிரியத்துவம்" என்ற ஒலிப்பு மேலெழத் தொடங்கியுள்ளது. பிரித்தானியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் "கற்பித்தல்" (Teaching) என்ற சொல்லும் ஐ.அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் "போதனை” (Instruction) என்ற சொல்லும் வழக்கில் இருந்தாலும் மாற்றமுறும் கலைத்திட்டச் செயற்பாடுகளின் வெற்றி ஆசிரியத்துவ வினைத்திறனிலே தங்கியுள்ளது. மாறும் விசைகளினூடே பால் நிலை நோக்கில் ஆசிரியத்துவத்தின் பரிமாணங்கள் நோக்கப்பட வேண்டியுள்ளன.
மேலைப்புல ஆய்வாளர்கள் குறிப்பிடும் நவீனத்துவம் என்பது உற்பத்திப் பாங்கிலும், நுகர்ச்சிப்பாங்கிலும் வாழ்க்கை வசதிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தினாலும் ஆழ்ந்து உறைந்த சமூக அதிகார முறைமைகளிலும், பால்நிலை தழுவிய சமூகக் கட்டுப்பாட்டு முறைமைகளிலும், மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. இவை ஆழப்பதிந்த கட்டமைப்புக்களாகவேயுள்ளன. புதிய மாற்றங்கள் ஆரம்பம் மற்றும் இடைநிலை மட்டங்களில் பெண் ஆசிரியைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்தும், அவர்களின் வேலைப்பழுவை முன்னரிலும் கூடுதலாக்கியும் வருகின்றன. வேலைப்பழுவின் அதிகரிப்பு சமூக சமத்துவத்தை ஏற்படுத்துவதற்குப்பதிலாக சமூக ஏற்றத்தாழ்வுகளையே மீளவலியுறுத்தத் தொடங்கியுள்ளமை ஆசிரியர்களிடத்து ஒருவித அறிகை மயக்கத்தையும் (Confusion) ஏற்படுத்தி வருகின்றது.
புதிய மாற்றங்களுடன் இணைந்த கல்வி முகாமைத்துவ அழுத்தங்களும், பாடசாலைகளுக்கு மீள் வலுவூட்டும் செயற்பாடுகளும் பெண் ஆசிரியைகளிடத்து ஒப்பீட்டளவிற் கூடுதலான மனப்பதகளிப்புத் தோற்றப்பாடுகளை ஏற்படுத்தி வருகின்றன.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா | 25

Page 17
கல்வியின் பணியாட்சிவலு (Bureaucratic Force) பதகளிப்பு நிலையை மேலும் தூண்டுதலடையச் செய்கின்றது.
ஆசிரியரின் வேலைகளைக் கட்டமைப்புச் செய்வதில் நேரம் என்பது அடிப்படை மூலகமாக அமைகின்றது. (Giddenes , A (1984) The Constitution of Society, Cambridge, Polity Press) g5G)lb 1வேலைகளைப் பெண் ஆசிரியர்கள் மேற்கொள்வதனால், பாடசாலை நேரம், குடும்பநேரம் என்பனவற்றின் கூட்டு வடிவம் பெண் ஆசிரியைகளிடத்து பதகளிப்பை மேலோங்கச் செய்கின்றன.
மானிடவியலாளர்கள் நேரம் பற்றிய ஆய்வில் ஓரின நேரச் J L L35lb (Monochronic time Frame) Ligi) GS607 (Polychronic) நேரச்சட்டகம் என்ற எண்ணக்கருக்களை முன்மொழிந்துள்ளனர். (Hall, E.T. (1984) The Dance of Life, New York, Anchor Press)
ஓரினப் பண்பு நேரச் சட்டகத்திலே பின்வரும் பண்புகள் காணப்படும்.
ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டும் செய்தல்.
குறிப்பிட்டுத்தரப்பட்ட பட்டியல்களைச் செய்து முடித்தல்.
9 சூழமைவுகள் தொடர்பான குறைந்த உணர்ச்சித் துலங்கலை
வெளிப்படுத்துதல்.
செய்து முடிக்கப்பட்ட பட்டியல்கள் மீது கட்டுப்பாடுகளை நீடித்தல்.
பட்டியல்களையும் செயற்பாட்டு நெறிகளையும் அறிபரவற்படுத்தல்.
மேலைப்புலப் பண்பாட்டு உடைமையோடு இது தொடர்புடையது.
தொழிற்பாடுகள் மற்றும் வாணி மை நிலை தொடர்பான உத்தியோகத்தளங்களில் நிற்றல்.
பெரிய ஒழுங்கமைப்புக்குரிய நடத்தைகள்.
ஆண்வயப்பட்டவை.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா | 26

பல்லினப்பண்பு கொண்ட நேரச் சட்டகத்தில் பின்வரும் பண்புகள் காணப்படும்.
9 ஒரே நேரத்தில் பல வேலைகளைக் கையாளுதல்.
கொடுக்கல் வாங்கற் செயற்பாடுகளைச் செய்து முடித்தல்.
9 சூழமைவு தொடர்பான அதிக உணர்ச்சித்துலங்களை வெளிப்
படுத்தல்.
9 ஒழுங்குறத் தரப்பட்டவை மற்றும் செயற்பணிகளின் மதிப்பீடு
ஆகியவற்றின் மீது கட்டுப்பாடுகளை நீடித்தல். 9 மக்கள் மீதும் தொடர்புகள் மீதும் அறிபரவல் நடவடிக்கைகளை
மேற்கொள்ளல்.
இலத்தீன் அமெரிக்கா மற்றும் அமெரிக்க பண்பாடுகளுடன் இணைந்துள்ளது.
முறைசாரா செயற்பாடுகள் மற்றும் குடும்ப வாழ்க்கை தொடர்பான உத்தியோகம் சாரா தொடர்புகளை ஏற்படுத்துதல்.
9 பெண்களுக்குரியது.
கல்விச் செயற்பாடுகளைப் பொறுத்தவரை பெரும்பாலான பெண் ஆசிரியைகள் ஆண் நிர்வாகிகளினால் முகாமை செய்யப்படுதல் குறிப்பிடத்தக்க ஒரு தோற்றப்பாடாகவுள்ளது. பெண் ஆசிரியர்களிடத்து பல்லினப் பண்பு கொண்ட நேரச்சட்டக இயல்புகள் மிகையாகக் காணப்படுகின்றன. ஆனால் ஆண் நிர்வாகிகளிடத்து ஓரினப்பண்பு கொண்ட நேரச் சட்டகத்தின் இயல்புகள் மேலோங்கியுள்ளன.
3G3536) 1606T 'glio)/75i 5/Tavafiljg/6)/Lib” (Administrative Colonialism) என்ற எண்ணக்கருவும் கல்வி முகாமைத்துவத்தில் முன் வைக்கப்படுகின்றது. இது நாகரிகமான அடக்கு முறையினைக் கொண்டது. கல்விநிர்வாகத்திற் காணப்படும் காலனித்துவத்தினால் பெண் ஆசிரியைகளே கூடுதலான பாதிப்புக்கு உள்ளாகின்றனர். நிர்வாகத் தேவைகளின் நெருக்குவாரங்களுக்கு அவர்கள் உட்படுத்தப்படும் பொழுதுஆசிரியர்களின் ஆக்கமலர்ச்சி அடக்கப்பட்டு விடுகின்றது. இச்சந்தர்ப்பத்தில் கற்பித்தல் தொடர்பான விருத்திக்கும் சட்டங்களின் நடைமுறைப்பாட்டுக்கும் (implementation) ஆசிரி
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 127

Page 18
யர்களுக்குமிடையே உராய்வுகளும் முரண்பாடுகளும் ஏற்படுகின்றன.
சமூக வாழ்க்கையில் முன்புலம் (Front Region) பின்புலம் (Back Region) என்ற இருவகை எண்ணக்கருக்கள் விளக்கப்படுதல் உண்டு. தமது நடத்தைகளை நன்கு ஒழுங்கமைத்து தமது கற்பித்தற் செயற்பாட்டினை விலகாது மேற்கொள்ளல் மற்றும் நேரக்கட்டுப்பாடு முதலியவை முன்புலத்துச் செயற்பாடுகளிலே மேலோங்கி நிற்கும்.
பின்புலத்துச் செயற்பாடுகள் நெகிழ்ச்சி கொண்டவை, முறைசாரா உரையாடல்கள், பாலியல் சார்ந்த குறிப்புரைகள், நெகிழ்சி கொண்ட இருக்கை, புகைத்தல், மெல்லுதல், தரக்குறைவான பேச்சுக்கள் முதலாம் கிளர்ச்சியூட்டல்களுடன் இணைந்தவை.
பெண் ஆசிரியர் மீது முன்புலச் செயற்பாடுகளே வலியுறுத்திக் கூறப்படுகின்றன. அதேவேளை பின் புலச் செயற்பாடுகள், ஆண்களுக்கு உரியவையாக வலியுறுத்தப்படுகின்றன.
முன்திட்டமிடப்பட்ட அட்டவணைகளுக்கு ஏற்றவாறும் குறிப்பிட்ட படிமுறைகளைக் கையாளுமாறும் ஆசிரியர்கள் கூடுதலான கட்டுப்பாடுகளுக்குள் கொண்டுவரப்படுகின்றனர். (Apple, M (1989) Teachers and Texts, Newyork, Routledge and Kegan and Paul) ஆசிரியரின் தொழிற்பாடுகள் அதிக செறிவூட்டப்பட்டு வருகின்றன. தமது சுரண்டல்களுக்கு தாமே ஒப்புதல் அளிக்கும் நிலைக்கு பொதுவாக ஆசிரியர்களும், சிறப்பாக பெண் ஆசிரியை களும் தள்ளப்பட்டுள்ளனர். ஆசிரியத்துவம் எதிர்வாண்மைநிலையை நோக்கித்தள்ளப்பட்டு வருகின்றது. உடல் சார்ந்த உழைப்புப் போன்ற நிலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றது.
சமகாலத்து ஆசிரியத்துவ நிலையை விளங்கிக் கொள்ளுவதற்கு "செறிவூட்டல்" (Intensification) என்ற எண்ணக்கரு முன்மொழியப்படுகின்றது. செறிவூட்டலின் அடிப்படையான பரிமாணங்கள் வருமாறு: 1. வேலையின் பொழுது கிடைக்கப் பெறும் ஒய்வு நேரம் வெட்டிக்
குறைக்கப்படுதல்.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 128

தமது வேலையை வளம்படுத்திக் கொள்வதற்குப் போதிய கால அவகாசம் கிடைக்காமை.
2.
3. வேலைப்பழுவின் மிகையான அதிகரிப்பு. 1. வெளியே தயாரிக்கப்பட்ட கற்பித்தல் சாதனங்கள் மீது,
தங்கியிருக்கும் நிலை அதிகரித்தல். சுய கண்டுபிடிப்புக்கள், சுய முனைப்பு, சுய ஆக்கங்கள் ஊக்குவிக்கப்படாது வரண்டு விடுதல். 6. தொழிற்பாடுகளின் தரத்திலே வீழ்ச்சியை ஏற்படுத்தி பொறி
முறையான செயற்பாடுகளுக்கு வலுவூட்டுதல்
5
மேற்கூறிய சூழலில் ஆசிரியர்கள் முன்னர் தயாரிக்கப்பட்ட பொதிகளை அவிழ்த்துக் காட்ட முற்படுகின்றார்களேயன்றி தாமே தயாரிப்பதற்குரிய நேரத்தையும் உற்சாகத்தையும் இழந்து விடுகின்றனர். செறிவூட்டல் என்ற செயற்பாட்டினோடு "தொழில்நுட்பப்படுத்தல்" (Technication) என்ற தொழிற்பாடும், கல்வி முகாமைத்துவத்தில் இணைந்து கொள்வதன் தாக்கு முனைகள் ஆசிரியர்களை நோக்கியே திருப்பப்பட்டுள்ளன. கற்பித்தலிலும், கணிப்பீட்டிலும் கூடுதலான தொழில் நுட்பப்படுத்தும் நடவடிக்" கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மீநிலைக்கற்றல் அல்லது நிபுணத்துவத்தை நோக்கிய கற்றல் நிபுணத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட கற்பித்தலுடன் இணைந்” துள்ளது. கற்பித்தலின் உன்னதங்கள் ஆசிரியரின் மனவெழுச்சிகளுடன் இணைந்துள்ளன. ஆசிரியரின் மனவெழுச்சிகளுள் "குற்றவுணர்ச்சி" (Guit) என்பது ஆழ்ந்த ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றது. குறிப்பிட்ட பாட அலகை, அல்லது அனுபவத்தை மேலும் சிறப்பாகக் கற்பித்திருக்கலாம் என்ற சமூக நோக்கம் கொண்ட குற்றவுணர்ச்சி பொதுவாக ஆசிரியர்களுக்கும் சிறப்பாக பெண் ஆசிரியைகளுக்கும் ஏற்படுதல் உண்டு. இந்தக் குற்றவுணர்ச்சி மேலும் வினைத்திறனுடன் செயற்படுவதற்குரிய ஊக்கலை ஆசிரியர்களுக்குக் கொடுக்கின்றது.
ஆரம்பக்கல்வியில் பெருமளவில் பெண் ஆசிரியர்களே கற்பிக்கின்றனர். கற்பித்தல் பணியுடன் சிறார்களைப் பரிந்து அணைத்துப் பேணுகை (Caring) செய்தலிலும் ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் ஈடுபட வேண்டியுள்ளது. இந்தச் செயற்பாடு ஒருபுறம்
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 29

Page 19
அவர்களின் வேலைப் பழுவை அதிகரிக்கச் செய்தும் மறுபுறம் அவர்களிடத்து மனவெழுச்சித் தாக்கத்தையும் ஏற்படுத்திவருகின்றது. கல்வியை மீள் கட்டமைப்புச்செய்தல் என்ற தொனிப் பொருளில் பின்வரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 1. பாடசாலை மட்ட முகாமைத்துவம். 2. மாணவர்களது தெரிவுகளுக்கு கூடுதலான இடமளித்தல். 3. விளக்கங்களை முன்னெடுப்பதற்கான கற்பித்தல். 4. கற்போரின் தேவைகள் மீது கூடுதலான கவனம் செலுத்துதல். 5. கூட்டுறவுப் பாங்கானதும் கற்போரின் பண்பாட்டுடன் தொடர்புடையதுமானதும் தனியாள் திறன்களுக்கு அனுசரணை வழங்குவதுமான கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுத்தல். 6. நம்பகரமான பொறுப்பியத்தை (Accountability) வலுப்படுத்
துதல். 7. பங்குபற்றல் மிக்கதீர்மானம் மேற்கொள்ளலை ஏற்படுத்துதல். 8. ஆசிரியத்துவத்துக்கு வலுவூட்டல்.
மேற்கூறிய மீள்கட்டமைப்புச் செயற்பாடுகள் உலகளாவிய முறையில் மேற்கொள்ளப்படும் வேளை, பால் நிலை ஏற்றத் தாழ்வுகள் கருத்திற் கொள்ளப்படாமை சுட்டிக் காட்டப்படத்தக்க தோற்றப்பாடாகவுள்ளது. பால்நிலை ஏற்றத்தாழ்வுகள் அணுகப்படாமை போன்று பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் மீள் கட்டமைப்புச் செயற்பாடுகளில் அணுகப்படவில்லை.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா |30

கற்பித்தலியலை மீளாய்வு செய்தல்
கற்பித்தல் இயல் என்பது ஆய்வுக்கும் மீளாய்வுக்கும் தொடர்ந்து உட்படுத்தப்பட்டு வருகின்றது. கல்விச் செயல்முறையின் உள்ளீடாக கற்பித்தலியல் அமைகின்றது. கற்றல், ஊடுகடத்தல், மீள்வடிவமைத்" தல் என்ற செயல்முறைகளின் வழியாக மரபுவழித் தடத்திலிருந்து நவீனத்துவத்தை நோக்கிய நகர்ச்சியை கற்பித்தலியல் முன்னெடுக்கின்றது. ஆசிரியர் தொழில் சார் உளநிறைவும், திருப்தியும் கற்பித்தலியலோடு நேரடியான தொடர்புகளைக் கொண்டுள்ளன.
மனித உள்ளமும் கற்பித்தலியலும் தொடர்பான பின்வரும் மாதிரிகைகள் தரப்படுகின்றன:
1. பார்த்துச் செய்வோர்நிலையில் கற்போரை நோக்குதல். (Imita
tive Learners)
2. அறிகை விருத்தியுடன் இணைந்த கூறுகளை அறிந்தவர்
களிடமிருந்து கற்றுக்கொள்பவர்களாக நோக்குதல்.
3. கற்பவர்களைச் சிந்திப்பவர்களாக நோக்குதல்.
4. அறிவை முகாமைத்துவம் செய்யும் நிலையில் கற்போரைக்
கருதுதல்.
கற்றல் என்பது ஒரு சமூகச் செய்முறை. இந்த அடிப்படை விளக்கமின்றி கற்றற் செயற்பாட்டினை வினைத்திறனுடன் முன்னெடுக்கமுடியாது. இந்நிலையில் சமூகக் கட்டமைப்பை விளங்கிக் கொள்ளுதல் ஆசிரியத்துவத்துக்கு இன்றியமையாதது. கற்பவனின் கற்றல் கொள்ளலுடன் தொடர்புடையது. கற்றல் என்று கூறும் பொழுது உயிரியல் காரணிகளுடன் தொடர்புபடுத்திக் கூறப்பட்டாலும், அது சமூகத்தினால் பயன்படுத்தப்படாதவிடத்து உபயோகிக்கப்படாத வளமாகவே காணப்படும். எவ்வகையான
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 31

Page 20
மாணவராக இருந்தாலும் கற்றல் ஒரே வகையாகவே நிகழ்கின்றது என்ற கருத்து அடுத்தாக முக்கியத்துவம் பெறுகின்றது.
கற்பித்தல் அறிவுத் தளத்துடன் தொடர்புடையது. அறிவுத் தளம் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றது.
I. உள்ளடக்க அறிவு
கற்பித்தலியல் தொடர்பான பொது அறிவு
கலைத்திட்டம் பற்றிய அறிவு
கற்பித்தலியல் உள்ளடக்க அறிவு
கற்பவர் பற்றிய அறிவு கல்விச் சூழமைவு பற்றிய அறிவு கல்வியின் இலக்குகள் பற்றிய அறிவு
ஆசிரியரின் தனியாள் ஈடுபாடு, சுயத்துக்குரிய முதலீடு (n- vestment of Self) கருத்தியல் அர்ப்பணிப்பு முதலிய பலகாரணிகளுடன் கற்பித்தல் தொடர்பு கொண்டுள்ளது. ஆரம்ப மட்டங்க" ளிலே கற்பித்தல் உடல் உளவளர்ச்சிப் பின்னடைவுகள் கொண்ட" வர்களுக்குக் கற்பித்தல் அதிக சிக்கல் பொருந்தியதும், திறன்கள் பலவற்றை உள்ளடக்கியதும், தேவைகளுக்கும் உளநெருக்குவாரங்களுக்குமிடையே சமநிலையை உருவாக்குதலுடனும் இணைந்த செயற்பாடாகின்றது.
ஆசிரியர் கற்பித்தலைப் புலக்காட்சி கொள்ளல் போன்று மாணவரைப் புலக்காட்சி கொள்ளலும், தமது படிமத்தைப் புலக் காட்சிகொள்ளலும், தமக்குரிய கருத்தியலைப் புலக்காட்சிகொள்ளலும், வேலைதொடர்பான உளநிறைவின் மீது செல்வாக்குச் செலுத்துகின்றது. சிறார்கள் "நிரப்பப்பட வேண்டிய பொருட்கள் போன்றவர்கள்” என்று எண்ணும் பொழுது ஆசிரியர்கள் தாம் மேலாதிக்க வலுவுள்ளவர்கள் என்று புலக்காட்சி கொள்ளுகின்றனர். அதிகாரத்துடன் இணைந்த கற்பித்தல் என்ற செயற்பாடும், ஒழுக்கநெறிப்படுத்துனர் என்ற செயற்பாடும் உளநிறைவிலே பங்கு கொள்ளுகின்றன.
கற்பித்தலில் தொழில் சார் உளநிறைவு அல்லது தொழில்சார் திருப்தி ஆராயும் பொழுது பெண் ஆசிரியைகள் தனித்து ஆராயப்பட
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 32

வேண்டியுள்ளனர். உடல் உள வளர்ச்சியிலே பின்னடைவு கொண்ட சிறுவர்களுக்கான கற்பித்தலில் பெண் ஆசிரியைகளே ஈடுபடுத்தப்படுகின்றனர். அவ்வாறே ஆரம்பப் பாடசாலைக் கற்பித்தலிலும் பெருமளவிலே பெண் ஆசிரியைகளே அமர்த்தப்பட்டுள்ளனர். இந்தத் துறைகளிலே கற்பித்தல் மிகுந்த கடினமானதும், அதிக சிக்கல் பொருந்தியதுமான செயற்பாடுகளாகும். அதேவேளை அவர்கள் மீது பணியாட்சிக் கட்டுப்பாடுகளும் அதிக அளவிலே திணிக்கப்படுகின்றன.
மிகையான வேலைப்பழுவும் தொழில் சார்ந்த திருப்தியைப் பாதிக்கின்றது. ஒரே நிகழ்வு வேலையைச் (Routine Work) திரும்பத் திரும்பச் செய்யவேண்டியுள்ளமையால் சுயமாகத் தொழிற்படலும், ஆக்க மலர்ச்சியும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. ஆசிரியரின் பெறுமதி மிக்க நேரம், ஒரே வகையான பதிவுகளைச் செய்வதிலும் அறிக்கைகளை எழுதுவதிலும் வீணடிக்கப்படுகின்றது.
பொதுப் பரீட்சைகளில் அடைவுகளை ஈட்டித்தருதற்கு ஆசிரியர்களே பொறுப்பியம் (Accountability) ஆக்கப்பட்டுள்ளனர். இது ஆசிரியர்களிடத்துப் பதகளிப்பை ஏற்படுத்துகின்றது. சமூக நிர்ப்பந்தங்களுக்கு அதிக அளவிலே முகம் கொடுத்து வரும் பெண் ஆசிரியைகளே பதகளிப்பின் மிகையான தாக்கத்துக்கு உள்ளாகின்றனர். தரப்படும் முன்குறிப்புக்கு (Prescription) செயற்படும் தெறிப்பற்ற நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர்.
விழுமியங்கள் ஒதுக்கப்பட்டு, முற்றிலும் பொருளாதார எதிர்பார்ப்புக்களை நோக்கிய கல்வியே பாடசாலைகளில் முன்னெடுக்கப்படுகின்றன. முன்னைய ஆசிரியத்துவத்திலே கிடைக்கப்பெற்ற நிம்மதி இன்று கிடைக்கப்பெறுவதில்லை என்ற !,ü6)/(ypLçı6)/5615Lö 3 TL ül_1(5)élaöi p637. (Anastasia.D.VLA Chou, (1997) Struggles for inclusive Education, Buckingham, Open UniVersity Press) சமகால பொருளாதார மாற்றங்களும் அரசியல் மாற்றங்களும் ஆசிரியத்துவத்தின் மீது எதிர்விளைவுகளையே ஏற்படுத்தி வருகின்றன.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் | சபா.ஜெயராசா 33

Page 21
வினைத்திறன் கொண்ட கற்பித்தல்
ஆசிரியரது பாத்திரமேற்றலும், கற்பித்தலியலும், மாற்றமுறும் உலக நிலவரங்களுக்கும், கல்வி உளவியல் விசைகளுக்கும் ஏற்றவாறு மீள்வரைவிலக்கணப்படுத்தல் (Redefining) வேண்டுமென்ற கருத்துக்கள் மேலெழத் தொடங்கியுள்ளன. சமூகப்பின்புலத்துக்கு ஏற்றவாறும், மாணவரின் வளர்ச்சிப் படிநிலைகளுக்கு ஏற்றவாறும், பால்நிலை இயல்புகளுக்கு ஏற்றவாறும் ஆசிரியத்தை மீள் வரைவிலக்கணப்படுத்த வேண்டியுள்ளது.
அதிகார நிர்வாக முறைமையில் ஆசிரியர்களின் நிலை தாக்கமுனைவில் (Vulnerable) இருப்பதைச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. ஆசிரியர்கள் தனிமைப்படும் உளவியல் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். தமது தேவைகள் நிர்வாகத்தினால் பாராமுகமாக விடப்படுகின்றன என்ற கவலைக்கு ஆசிரியர் உள்ளாகின்றனர். உடனடி விளைவுகளே ஆசிரியர்களிடத்து எதிர்பார்க்கப்படுகின்றதேயன்றி நீண்டகால நலன்களில் ஆசிரியர்களின் பங்களிப்பு ஆழ்ந்து நோக்கப்படாதிருத்தலும் அவர்களுக்கு வேதனையாகவுள்ளது. பெண் ஆசிரியைகளே இந்த அவலங்களைக் கூடுதலாக அனுபவிக்கும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எவ்வளவுதான் ஆய்வுகள் வளர்ச்சியுற்றபோதிலும் கற்பித்தலிற் “தொழிற்சாலை மாதிரிகை” (Factory Model) நடைமுறையில் இடம் பெற்றுவருகின்றது. சமூக நிரலமைப்பை மீள் உற்பத்தி செய்தல், அதிகார நிரலமைப்பை மீள் உற்பத்தி செய்தல், பால் நிலை ஏற்றத்தாழ்வுகளை மீள் உற்பத்தி செய்தல் முதலியவற்றை வினைத்திறனுடன் மேற்கொள்ளுமாறு ஆசிரியர்கள் பல நிலைகளிலும் வலியுறுத்தப்படுகின்றனர். மனிதரிலும் பார்க்க விளைவுகளுக்கே இங்கு சிறப்பிடம் தரப்படுகின்றது. சந்தேகக்கண்களோடு நோக்கப்படும் தொழிலாளர்
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா | 34

களாகவே ஆசிரியர்கள் கருதப்படுகின்றனர். பெண் ஆசிரியைகள் மீதே இவ்வாறான சந்தேகம் கூடுதலாகத் திருப்பப்பட்டுள்ளது.
இடர்களுக்கும் நெருக்குவாரங்களுக்கும் மத்தியில் இயங்கும் தொழிற்பாடாகவே சமகாலக் கற்பித்தல் அமைந்து வருகின்றது. ஏனைய வாண்மைகளுக்குக் கிடைக்கும் சலுகைகளும் வசதிகளும் ஆசிரிய வாண்மைக்குக் கிடைக்கப் பெறுதல் இல்லை. இத்தகைய பின்புலத்தில் வினைத்திறன் மிக்க கற்றல் கற்பித்தலை முன்னெடுப்பதற்கான ஆய்வுகளும் தொடர்ந்த வண்ணமுள்ளன.
கற்பித்தலைப் பண்புநிலைமுன்னேற்றம் பெறச் செய்தல் தொடர்பாக தோமஸ் சேர்மன் மேற்கொண்ட ஆய்வுகள் இவ்வேளையிற் சுட்டிக்காட்டப்படத்தக்கவை (Thomas Sherman, Journal of Higher Education, 48-1) 6760601,55p67 (65T607 - Jibl 556) பல்வேறு சிக்கலான செயல்முறைகளைக் கொண்டுள்ளதுடன் ஒரு காரணி ஏனைய காரணிகளுடன் தொடர்புடையதாகவும் காணப்படுகின்றது. நடைமுறை வினைத்திறன் கொண்ட கற்பித்தலைத் தீர்மானிக்கும் காரணிகளாகப் பின்வருவன சுருக்கப்பட்டுள்ளன.
(1) உற்சாகம் (2) தயாரிப்பும் ஒழுங்கமைப்பும் (3) மாணவரின் சிந்தனையையும் விருப்புக்களையும்
தூண்டும் ஆற்றல். (4) கருத்துத் தெளிவு (5) உள்ளடக்க அறிவும் விருப்பும் கற்பித்தற்செயற்பாடு மாணவர் ஒவ்வொருவருக்கும் பொருந்” துவதாகவும், கற்றல் உள்ளடக்கத்தைத் தழுவிச் செல்வதாகவும், கற்றல் தேவைகளை நிறைவு செய்வதாகவும் இயைபு மிக்க போதனா வடிவமைப்பைக் கொண்டதாகவும் இருத்தலே ஏற்புடையது. அருவமான கூட்டுப்பொருட்களை அருவ நிலைக்கு ஆசிரியர்கள் உருவாக்கித்தர வேண்டியுள்ளது. 1. உற்சாகம் என்பது எளிமையானதும் அதேவேளை சிக்கல்மிக்கதுமான செயற்பாடாகும். உருவநிலை நடத்தைகளையும், குறிப்பிட்டுக் கூறத்தக்க கூர்வினைப்பாடுகளையும் (Strategies) உற்சாகம் கொண்டுள்ளது. மாணவர்க்கு வலுவூட்டும் செயற்
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா | 35

Page 22
பாடுகளுடனும், ஆபத்து முனைவில் இயங்குவதோடும் இது தொடர்புடையது. உற்சாக முன்னெடுப்பில் ஆசிரியர் உணர்ச்சிகளைக் கொப்பளித்து விடலாகாது. அதேவேளை சோகமூட்டம் கற்பித்தலுக்கு எதிரான செயற்பாடாகவே அமையும். கற்பித்தலின் பொழுது தொடர்பாடல் இடைவெளிகளையும் மொழியாட்சிக் குழப்பங்களையும் சோகமூட்டம் ஏற்படுத்தி விடும்.
. பாடத்திட்டம், பாடத்திட்டத்தின் வழியாக அடையப்பட வேண்டிய இலக்குகள், குறித்த அனுபவங்களை வளம்படுத்தக்" கூடிய சாதனங்கள், செயற்பாடுகள், வகுப்பறைக் கொள்கைகள் முதலியவற்றுடன் தயாரிப்பும் ஒழுங்கமைப்பும் இணைந்தவை. பொருத்தமானதும் ஒன்றிணைந்ததுமான தகவல்களைக் கோவைப்படுத்தும் பொழுது தகவல் மற்றும் தரவுகளின் போதாமை அல்லது "பஞ்சம்” ஆசிரியருக்கு இருத்தலாகாது. பாட உள்ளடக்கத்தை மலினப்படுத்தலும், மாணவர்களுக்குச் சலிப்பு ஏற்படும் வண்ணம் ஆசிரியர் "கீழிறங்குதலும்" பொருத்தமான தயாரிப்பு இன்மையின் வெளிப்பாடுகளாகும்.
கற்றற் செயற்பாடுகளை வடிவமைக்கும் பொழுது, மாணவரின் பலதரப்பட்ட கற்றல் நடவடிக்கைகள், வீட்டுவேலைகள், ஒப்படைகள், பரீட்சை மற்றும் செயற்றிட்டங்கள் முதலிய அனைத்" தையும் தொகுத்து நோக்குதல் வேண்டும். ஒப்படைகள் கற்றலை வளப்படுத்தவும் குறிப்பிட்ட துறையில் பாண்டித்தியம் பெறச் செய்யவும் வழங்கப்படுகின்றன. ஆனால் இந்த இரண்டு நோக்கங்களும் நழுவ விடப்பட்டு ஒப்படைகளுக்குரிய புள்ளிகளைத்திரட்டும் "குறுக்கு வழிகளை" மாணவர்கள் நாட முயல்கின்றனர். பரீட்சை மற்றும் கற்றல் செயற்பாடுகள் உரு” வாக்கப்படுவதிலே பால்நிலைவேறுபாடுகள் காணப்படுகின்றன. கற்பித்தலின் கூட்டு மொத்தமான நடவடிக்கைகள் நம்பிக்கை உறுதியை (Confident) ஏற்படுத்தத்தவறிவருதலை ஆய்வுகள் புலப்படுத்துகின்றன. (கள ஆய்வு: ஆனைக்கோட்டை 25-072004) இதிலிருந்து ஆண் ஆசிரியர்கள் இலகுவாகத் தப்பித்துக் கொள்ள முடிகின்றது.
செயலூக்கம் குன்றிய நிலையில் உள்ள மாணவர்களை செயலூக்கம் மிக்கவர்களாக "நிலைமாற்றம்” செய்யும் பொறுப்பை ஆசிரியர் ஆற்றலுடன் முன்னெடுக்க வேண்டியுள்ளது. நடை
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 36

முறையில் பெரும்பாலான மாணவர்கள் செயலூக்கமும் உசாவல் விருப்பும் குன்றிய நிலையிலே காணப்படுகின்றார்கள். தம்மைத் தாமே ஊக்குவிக்க முடியாத நிலையில் இருக்கின்றார்கள்.
வினாக்கள் வாயிலாக மாணவர்களைத் தூண்டுதல் உலகளாவிய முறையில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நுட்பவியலாகும். வினாவுக்கும் விடைபெறுவதற்குமான நேர இடைவெளியின் முக்கியத்துவத்தை பல ஆசிரியர்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லை. வினாக்களை விடுக்கும் பொழுது ஆசிரியரின் சொல் சார்ந்த செய்திக்கும் மொழிசாராச் செயற்பாடுகளுக்குமிடையே முரண்பாடுகள் இருத்தலாகாது. வினா நுட்பங்களைப் பயன்படுத்தும் பொழுது மாணவர்களை கெடுதுரண்டல் (Intimidate) பண்ணலாகாது. பொதுவான வினா நுட்பங்களும் அணுகுமுறைகளும் பெண்களுக்குப் பாதகமாகச் செல்லும் நிலைகளே நடைமுறையிற் காணப்படுகின்றன.
வினாக்களின்போது விடை குவியப்படுத்தப்பட வேண்டுமேயன்றி மாணவரைக் குவியப்படுத்தலாகாது. விடைபிழையென்றால் மாணவர் பிழையென்ற நிலைக்கு ஆசிரியர் தள்ளப்பட்டு விட லாகாது. விடையையும் மாணவரையும் தனித்தனியே பார்க்கும் அணுகுமுறையினை வளர்த்துக் கொள்ளாவிடில் கற்றல் கற்பித்தல் வீழ்ச்சியடைந்து விடும். யாரும் பிழையான விடையைத் தரப்படக்கூடியவர்கள். சரியான விடைகளிலும் தவறான விடைகளே கூடுதலான அனுபவங்களைத் தரவல்லவை.
வினாக்களைப் போலவே கலந்துரைத்தலும் மாணவரின் இயக்கங்களைத் தூண்டவல்லவை. சுயமாகக் கற்றலையும், தேடலையும் இதனால் ஏற்படுத்த முடியும். கலந்துரைத்தலில் ஆசிரியரின் அதீத தலையீடு இருத்தலாகாது. இந்நிலையில் கலந்துரைத்தலின் எல்லை மீறப்பட்டு விரிவுரைப்பரப்புக்குள் ஆசிரியர் செல்லும் நிலை ஏற்படும். கலந்துரைகளின் போது பெண்களிடத்து "மெளனப்பண்பாடு” அல்லது "மெது வாகப் பேசும் பணி பாடே" எமது சூழலில் பெருமளவில் வளர்க்கப்பட்டு வந்துள்ளது. கலந்துரைத்தல் பண்பு நிலையிலும் அளவு நிலையிலும் மேம்" பட்டுச் செல்வதற்கு நிறைந்த வாசிப்பும் அனைவரது பங்குபற்ற
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா | 37

Page 23
லும் அடிப்படைகளாகின்றன. ஒரு சிலர் மட்டும் பங்குபற்றுதல் "உடைந்த" கருத்துரைத்தலாகவே அமையும், கலந்துரைத்தல் அறியாமையின் தடாகமாக மாறாது பார்த்துக் கொள்ளல் வேண்டும். ஆசிரியரிடமிருந்து கருத்துக்களைப் பெறுவதற்காக மாணவர்கள் மெளனமாக இருக்கும் நிலை சுயமான அறிவுத் தேட லைப் பாதிப்படையச் செய்யும். அறியாமையின் துன்பச் சூழலைத் தவிர்ப்பதற்கு ஆசிரியரின் தலையீடு அவசியமாகின்றது.
பெரும் கருத்துரைத்தலுக்கு முன்னேற்பாடாக "குறுங்கருத்துரைத்தல்" ஒன்றை தேவை கருதி குறுகிய நேரத்தில் அமைக்கலாம். மாணவரிடத்துக் கவனக் குவிப்பை ஏற்படுத்துவதற்கும், சிந்தனையைக் கிளறி இயக்குவதற்கும் குறுங்கருத்துரைத்தல் முன்னோடி நிகழ்ச்சியாக அமையும்.
கலந்துரைத்தலின் போது கருத்து ஒழுங்கை மீறி வழிதவறிச் செல்லும் சந்தர்ப்பங்களில் ஆசிரியரின் அறிவுத் தலையீடு வேண்டப்படும்.
கருத்துரைத்தலின் சிறப்பார்ந்த பரிமாணமாக அமைவது அதனை நிறைவு செய்து வைக்கும் நடவடிக்கையாகும். தொகுத்தல், குவியப்படுத்துதல், தூண்டுதல் என்பவை நிறைவித்தலில் மேற்கொள்ளப்படவேண்டியுள்ளன.
மாணவரின் தொழிற்பாடுகளைத் தூண்டுவதற்குக் குழுவேலைகளும் துணைசெய்யும். அறிவைத்திரட்டுதல், ஒழுங்கதைத்தல், செயற்படுத்துதல் முதலியவை குழுவேலைகளில் முன்னுரிமை" பெறும். குழுவேலையை வகுப்பறையிலும் பயன்படுத்தலாம். வகுப்பறைக்கு வெளியிலும் பயன்படுத்தலாம். குறைந்தளவு எண்ணிக்கையினரைக் கொண்ட குழுக்களில், பங்களிப்புச் செய்யாதவரைப் பங்குபெறச்செய்யும் அழுத்தங்கள் மிகையாகக் காணப்படும். இலக்குடைய செயற்பணியை நோக்கிய குவியப்பட்ட நிலையில் குழு இயக்கப்படல் வேண்டும்.
குழுக்களைக் கட்டமைப்புச் செய்யும் பொழுது ஆற்றலிலும், பால்நிலையிலும் சமத்துவம் பராமரிக்கப்படும் பொழுதுதான் உயரிய கல்வி விளைவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும். குழுவின் இயக்கங்கள் எதிர்மறையாகச் செயற்படாதிருத்தலை உரிய முறையிலே கண்காணித்து நெறிகை செய்யப்படல் வேண்டும்.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 138

4. வினைத்திறன் கொண்ட கற்பித்தல் கருத்துத் தெளிவைக் கொண்டிருத்தல் தவிர்க்க முடியாதது. தெளிவு என்பது "மலினப்படுத்தல் அன்று என்பதை மனங்கொள்ள வேண்டும். மாணவரது அறிவு வீச்சினுள் கற்றல் உள்ளடக்கத்தைக் கொண்டு, செல்லும் நடவடிக்கையாக "தெளிவுறுத்தல்" அமையும்.
தெளிவை ஏற்படுத்துவதற்கு உதாரணங்களைப் பயன்படுத்தும் பொழுது மிகுந்த எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும்.
உதாரணம் என்பது பார்வையைத் துரண்டும் சாளரமன்றி உள்ளடக்கமன்று. சாளரம் உள்ளடக்கமாகாது. நல்ல உதாரணம் தெளிவானதாயும், திட்டவட்டமானதாயும், கவர்ச்சியானதாயும், இடமாற்றம் செய்யப்பட்டத்தக்கதாயும் இருத்தலை மனங்கொள்ளல் வேண்டும். பெண்களை வலிந்திழுக்கும் உதாரணங்களைப் பெருமளவில் பயன்படுத்துதல் பால் நிலை ஆய்வாளர்களினாற் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொருத்தமற்ற உதாரணங்களின் பயன்பாடு அதிகரித்துச் செல்லலும் ஆய்வுகளின் வழியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. (Maryellen Weimer, (1996), Improving your Class room teaching. London, Sage Publishers). Gg Ghfla06)I GJ pLIGj5j6)15p(5 பலநிலை ஊடகங்களையும் பயன்படுத்தலாம்.
5. கல்வி உள்ளடக்கத்தில் விருப்பையும் காதலையும் ஏற்படுத்துதல் வாழ்க்கை முழுவதும் கற்பதற்குரிய தூண்டுதலை வழங்கும். மாணவரின் கற்கும் கோலங்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன.
(1) குவிநிலைக்கற்போர்: வினாவுக்குரிய குறிப்பிட்ட ஒருவழி முறை மற்றும் ஒரே விடை முதலியவற்றில் ஈடுபடுவோர் இப்பிரிவில் அடக்கப்படுவர்.
(2) விரிநிலைக் கற்போர் : வினாவுக்குப் பல வழிகளிலே பலவிடைகளை நோக்கி நகர்ந்து செல்வோர் இப்பிரிவில் உள்ளடங்குவர்.
(3) தன்மயமாக்கிக் கற்போர்: தமது அறிவின் இருப்பைப் பயன்படுத்தி பன்முகமான தோற்றப்பாடுகளை ஒன்றிணைத்துக் கற்றலை முன்னெடுப்பவர்கள் இப்பிரிவில் இடம்பெறுவர்
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 39

Page 24
(4) தன்னமைவாக்கிக் கற்போர் : பரிசோதனைகளையும், பட்டறிவையும் பயன்படுத்தி அறிவை விரிவாக்கிக் கொள்வோர் இப்பிரிவினராகின்றனர்.
மேற்கூறிய பிரிவினர் ஒவ்வொருவருக்கும் உரியவாறு கற்றலை வளம்படுத்தும் பொழுது கற்றல் உள்ளடக்கத்தில் விருப்பமும் காதலும் வளர்ச்சியடையும்.
ஆண்களின் கண்ணோட்டத்தில் பெண்கள் குவிநிலைக் கற்போராகவே வகைப்படுத்தப்பட்டுள்ளனர். கற்றல் - கற்பித்தலிலே பெண்களின் ஆளுமையைச் சுருக்கிவிடும் ஒரு நடவடிக்கையாகவே இக்கண்ணோட்டம் அமைகின்றது.
பொருத்தமான மதிப்பீடுகள் மற்றும் கணிப்பீடுகள் வினைத்திறன் கொண்டகற்றல் கற்பித்தலுக்கு அடிப்படையானவை. விளைவுகளையும் முன்னேற்றங்களையும் அறிந்து கொள்வதற்கு இவை துணை நிற்கின்றன. மாணவர் கற்றுக் கொண்டவற்றையும் மாணவரின் பன்முக ஆற்றல் களையும் கணிப்பீடுகள் வெளிப்படுத்துகின்றனவா என்பது கேள்விக்குரியதாகின்றது. பட்டப்படிப்பில் முதலாம் வகுப்பிலே சித்தியடைந்தவர்கள் தமது முனைவர்பட்டத்தைப் பெற முடியாது அறிகை நிலையில் இடர்ப்பாடு கொள்ளலும் கண்டறியப்பட்டுள்ளது.
தொடர்பாடலின் சிறப்பார்ந்த பரிமாணங்களுள் ஒன்றாகக் கருதப்படும் மொழி நடைச் சிறப்பு (Style) புறவயத் தேர்வு நுட்பங்களாற் கணிப்பீடு செய்யப்பட முடியாமலிருக்கின்றது. அமைப்பாக்கம் செய்யப்பட்ட கட்டுரைகளில் மாணவரின் நடைச்சிறப்பு வெளியீட்டுத்திறன் கட்டுப்படுத்தப்படுகின்றது.
ஆசிரியத்துவம் தொடர்பான ஆய்வில் "அறிகைச் சோம்பேறித்" தனம்”, “கற்பித்தற்சோம்பேறித்தனம்” ஆகிய எண்ணக்கருக்கள் முன்வைக்கப்படுகின்றன. மேலும் கற்றுக் கொள்ளலைப் பெரும் சுமையாகக் கருதுதல் அறிகைச் சோம்பேறித்தனத்தின் வெளிப்பாடு. கற்பித்தலைப் பழுவாக எண்ணுதல் கற்பித்தற் சோம்பேறித்தனம். இவற்றை உடைப்பதன் வாயிலாகவே வினைத்திறன் மிக்க கற்றல் கற்பித்தலை முன்னெடுக்க முடியும்.
கற்றல் கற்பித்தல் தொடர்பான அணுகுமுறைகளில் ஆண் நிலைப்பட்ட மதிப்பீடுகளே மேலோங்கியுள்ளன. ஆண்களாற்
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா | 40

கட்டுமை செய்யப்பட்ட பண்பாட்டுத்தளத்தில் நின்றே கல்வியியல் மதிப்பீடுகள் உருவாக்கப்படுதல் நிலைபேறு கொண்ட செயற்பாடாகவுள்ளது. கற்பித்தற்சோம்பேறித்தனம் என்ற அளவீட்டு முறைமையில் ஆண்கள் இலகுவாகத்தப்பிக்கொள்ளும் பண்பாடு கட்டமைப்புச் செய்யப்பட்டுள்ளது.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா | 41

Page 25
அறிவொழுக்கமும் கற்பித்தலியலும் பால்நிலையும்
"அனைவருக்கும் தரச்சிறப்புமிக்க கல்வி" என்ற செயற்பாட்டின் நகர்வு "அறிவொழுக்கம்" (Discipline) என்ற எண்ணக்கருவின் மீளாய்வுக்கு இட்டுச் செல்கின்றது. "பலதுறை அறிவொழுக்க Ga)/606" (Muliti disciplinary work) 26717.606007/7// -yof66/7(updath Go/606v" (Inter disciplinary work) "islikoa yo566/7(paid, Ga)/606v" 9|Giggs, "95.5 g/nf0%)/7(p53, Ga)/606" (Meta disciplinary work) என்றவாறான எண்ணக்கருக்கள் சமகாலக்கல்வியில் எடுத்தாளப்படுகின்றன. அறிவொழுக்கக் கையளிப்பு மீளாய்வுக்கு உள்ளாக்கப்படுகின்றது.
அறிவொழுக்கத்தின் பரிமாணங்களாக அறிவை விசாரணை செய்யும் முறைமை, எண்ணக்கருக்களின் பின்னலமைப்பு, கோட்" பாட்டுச் சட்டங்களின் அமைப்பு, முடிவுகளைப் பரிசீலிக்கும் நுண்ணுபாயங்கள், குறியீடுகளின் ஒழுங்கமைப்பு, இணைந்த பொருத்தமான படிமங்களின் வடிவமைப்பு, தொழில்நுட்பச் சொற்களஞ்சியம், உளமாதிரிகைகள் முதலியவை இடம் பெறுகின்றன.
மேற்கூறிய பரிமாணங்களை அடியொற்றி சூழலையும், சமூகத்தையும், மனிதரையும் குவியப்படுத்தி ஆராய்ந்து "உயிரியல்", "வரலாறு", உளவியல் என்றவாறு அறிவொழுக்கங்கள் உருவாக்கப்பட்டன. அறிவொழுக்கங்கள் வளர்ச்சியடைய அவற்றைக் கட்டமைப்புச் செய்யும் பரிமாணங்களும் கூர்மையாக்கப்படலாயின. இந்நிலையில் அறிவொழுக்க நிலைகள் என்பவை தொடர்ந்து இயக்கமுறும் வடிவங்களாகவுள்ளன. இயக்கத்தின்போதுஅவை கூர்ப்படையும் பணி புகளையும் கொண்டுள்ளன. இவற்றின் காரணமாக ஒர் அறிவொழுக்கப் பிரிவிலிருந்து வேறுபல அறிவொழுக்கக் கிளைகள் உருவாகிய வண்ணமுள்ளன.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா | 42

எல்லா அறிவொழுக்கங்களுக்குரிய பொதுவான பண்புகளும் உள்ளன. குறிப்பிட்ட அறிவொழுக்கத்துக்குரிய சிறப்புப்பண்புகளும் காணப்படுகின்றன. இந்நிலையில் பாடத்துக்கும் (Subject) அறி. வொழுக்கத்துக்கும் என்ன வேறுபாடு என்ற கேள்வி எழலாம். மாணவர் கற்க வேண்டிய குறிப்பிட்ட, ஒரினப் பண்பு கொண்ட உள்ளடக்கத்தின் தொகுதியே பாடம் என வரையறை செய்யப்படுகின்றது. ஆனால் அறிவொழுக்கம் என்பது அதற்கும் மேலான பொருள் கொண்டது. அது குறிப்பிட்ட சிந்திக்கும் முறைமையும், தரிசன முறைமையும், உலகை வியாக்கியானம் செய்யும் (Interpreting) முறைமையையும் உள்ளக்கித் தொடர்ந்து வளர்ச்சியுறும் செயல்முறையைக் கொண்டது.
"பாடப் பொருள் அறிவு” எண்ணக்கரு பல மட்டுப்பாடுகளைக் கொண்டது. மாணவர்கள் உள்ளடக்கத்தை மனனம் செய்தல், எண்ணக்கருக்களை நெட்டுருச் செய்தல், குறிப்பிட்ட அறிகைச் செயலில் மியாற்றல் பெறல், வகுப்பில் அல்லது ஆய்வு கூடத்தில் ஆற்றுகை செய்தல் முதலாம் தொழிற்பாடுகளுடன் "பாடம் பொருள் அறிவு” கட்டுப்பட்டு நிற்கின்றது. சரியான விடையை மாணவர்கள் தரும் பொழுது ஆசிரியரும் மாணவரும் இணக்கத்துக்கு வருகின்றனர். இந்நிலையிலே கற்றலின் இலக்கு எட்டப்பட்டதாக ஆசிரியரும் மாணவரும் மனநிறைவு பெறுகின்றனர். பாடப்பொருள் அறிவின் பிறிதொரு வடிவம் "கற்கை நெறி அலகு" எனப்படும்.
கேட்டல், பேசுதல், வாசித்தல் எழுதுதல் போன்றவை அறிவொழுக்கத்தை அடைவதற்குரிய பொதுவான கருவிகளாகின்றன. அனேகமான “பொது அறிவு” “பொருளற்ற அறிவாக” நடைமுறையில் மாறுகின்ற அவலம் தரமேம்பாடு பற்றிய அண்மைக்காலத்தைய அணுகுமுறைகளிலே கவனத்துக்கு எடுக்கப்பட வேண்டியுள்ளது. அறிவு என்பது பொருளற்ற அறிவாக காலவோட்டத்திலே மாறிய காட்சிகளைக் காண முடிகிறது. ஒருவரது வயது வளர்ச்சியோடும் இத்தகைய தோற்றப்பாட்டினைக் காண முடியும். அதாவது சிறுவயதிலே பொது அறிவாகக் காணப்பட்டது வளர்ந்த நிலையில் பொருளற்ற அறிவாகவும் மாறும்.
பொருத்தமான பொருளுடன் இடைவினை கொள்ளும் பொழுதும், சக மனிதருடன் உரைவினை (Discourse) கொள்ளும் பொழுg/lf (1/607 -9/of6%)/7(p553 (6-fulfil 17(6) (Proto disciplinary Activity)
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் | சபா.ஜெயராசா 43

Page 26
ஆரம்பமாகின்றது. அறிவொழுக்க அணுகுமுறைக்கு இவை ஆதாரமாகின்றன. ஆரம்பம் மற்றும் இடைநிலை மட்டங்களில் இத்தகைய செயற்பாடுகளை வளர்த்தெடுத்தலின் முக்கியத்துவம் அணி மைக் காலமாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இந்த அடிப்படைகளில் இருந்து மேம்பட்டு பல அறிவொழுக்கங்களின் இணைப்பு, ஊடிணைப்பு அறிவொழுக்கங்களின் தொடர்பு, அதீத அறிவொழுக்கம் பற்றிய தேடல் முதலியவற்றுக்கு நகர்ந்து செல்லல் வேண்டும்.
மார்க்சியச் சிந்தனைகள் பலவற்றின் இணைப்பு, ஊடிணைப்பு, அதீத அறிவொழுக்கத் தேடல் முதலாம் தளங்களை அடியொற்றி எழுச்சிகொள்ளலாயின. முன்னதாக மறுமலர்ச்சிக் காலச்சிந்தனைகளிலும் இவ்வாறான அணுகுமுறைகள் முன்னெடுக்கப்பட்டன. அறிவு வேகமாக வளர்ச்சியடைவதற்கு இந்த இணைப்பு ஏற்பாடு பல வழிகளிலும் துணைநின்றது. அறிவொழுக்கங்களின் ஒன்றி. ணைப்பு நவீன விஞ்ஞான வளர்ச்சிக்கும் தொழில் நுட்பவளர்ச்சிக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் துணைநிற்கின்றது.
அறிவொழுக்கச் சிந்தனைகள் மீது கவனம் செலுத்துதலும் அவற்” றின் இயல்புகள், அவற்றின் பலம், அதன் வரையறைகள், அவை எத்” தகைய இடைத் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. முதலாம் பண்புகளை ஆராய்தல் மீநிலை அறிவொழுக்கம் அல்லது அதீத அறி வொழுக்கம் எனப்படும்.
"அறிவொழுக்கத்தை விளங்கிக் கொள்வதைக் கற்பித்தல்” என்ற தலைப்பில் பல்வேறு ஆராய்ச்சிகள் சமகாலத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கார்ட்னர் (Gardiner) மற்றும் மன்சிலா (Mansia) போன்ற ஆய்வாளர்கள் இவ்வகையிலே சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களது ஆய்வுகளைத் தொடர்ந்து கற்பித்தலில் அறிவின் வகைப்பாட்டு அடிப்படைகள் விரிவாக நோக்கப்படுகின்றன. (Shulman, L. (1987) Knowledge and Teaching, Haward Educational Review, 58, 1-22)
சுல்மன் என்பவர் விளக்கியுள்ள பாடசாலைகளில் அறிவின் வகைப்பாட்டு அடிப்படைகள் பின்வருமாறு அமையும்.
1. அறிவின் உள்ளடக்கம்
2. பொதுவான ஆசிரியம் சார் அறிவு
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 44

கலைத்திட்ட இயக்கப்பாடுகள் தொடர்பான அறிவு சிறப்பு நிலை ஆசிரியம் சார்அறிவு. கற்போரின் இயல்புகள் பற்றிய அறிவு. கல்விச் சூழமைவு தொடர்பான அறிவு.
கல்வியின் நோக்குகள், இலக்குகள் விழுமியங்கள் பற்றிய அறிவு.
சமகால ஆசிரியவாண்மைப் பயிற்சி நெறிகளில் மேற்கூறிய அறிவின் அடிப்படைகள் தொடர்பான ஆழ்ந்த கல்வி வழங்கப்படுகின்றது. இந்தத்தளத்தில் நின்றே தரமான கல்வி வழங்கலை முன்னெடுக்க முடியும். மேற்கூறிய வகைப்பாட்டிலிருந்து ஆசிரியம் சார் வினைப்பாட்டின் மாதிரிகை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரிகை பின்வரும் அமைப்பைக் கொண்டது. 1. அறிவொழுக்கம் பற்றிய தெளிவான கிரகித்தலை ஆசிரியர்
கொண்டிருத்தல்.
2. நிலை மாற்றச் செயற்பாட்டை மேற்கொள்ளல். இதில் உள்ளடக்கத் தயாரிப்பு, பிரதிநிதித்துவப்படுத்தும் செயற்பாடுகள், அறிவைக் கையளிக்கும் வழிமுறைகளைத் தெரிந்தெடுத்தல், மாணவர் தனியாள் இயல்புகளுக்கு ஏற்றவாறு இசைவாக்குதல் முதலியவை இடம்பெறும். கற்பித்தலை நடைமுறைப்படுத்தல். கற்றற் புலப்பாடுகளை மதிப்பீடு செய்தல். மீளாய்வு செய்து தெறித்தல்.
புதிய கிரகித்தலை உருவாக்கிக் கொள்ளல்.
கற்றல் கற்பித்தலிலே தரமேம்பாட்டினை ஏற்படுத்துவதற்கு மேற்கூறிய படிநிலைகளைச் செறிவாகப் பயன்படுத்த வேண்டியதன் தேவை வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் விளக்கத்துக்குரிய கற்பித்தல் உருவாக்கப்பட்டுள்ளது. அறிவொழுக்க" மும் ஆசிரியமும் நேர்த் தொடர்புகள் கொண்டவை. கற்பித்தலியலிலும், கலைத்திட்டச் செயற்பாடுகளிலும் "விசையூட்டும் தலைப்புக்கள்” (Generative Topics) என்று தெரிவுச் செயற்பாடுகள் விளக்கத்துக்குரிய கற்பித்தலின் முதற்படிமுறையாக அமைகின்றன. தனது கற்பித்தல் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு பாடங்களிலும், அறிவொழுக்கங்களிலும் விசையூட்டும்
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் | சபா.ஜெயராசா | 45

Page 27
தலைப்புக்களை ஆசிரியர்கள் தெரிந்தெடுக்கலாம். இவை மாணவரிடத்து வினைத்திறன் கொண்ட ஈடுபாட்டினை ஏற்படுத்த வல்லவை. விளக்கத்துக்குரிய கற்பித்தலின் முதற் படியாக விசையூட்டும் தலைப்பு அமையும். இதனைத் தொடர்ந்து இலக்கு" களை விளங்குதல், விளக்கத்தின் ஆற்றுகைகளை அறிதல், நடை முறையிலுள்ள மதிப்பீடுகளின் விளக்கம் முதலியவை படிப்படியாக முன்னெடுக்கப்படும்.
இந்தப்படிமுறைகளின் அடிப்படையாகவே "விளக்கத்தை 67 dj/ /(55g/6/gp557607 3/5s flgigsay" (Teaching For Understanding) முன்னெடுக்கப்படல் வேண்டுமென அண்மைக்காலத்தைய கற்பித்த" லியலில் வலியுறுத்தப்படுகின்றன. விளக்கத்துக்குரிய கற்பித்தல் விரிவாக நோக்கப்பட வேண்டிய வாண்மைப் பொருளாக அமைகின்றது.
அறிவுத் தொகுதியும், அறிவைக் கையளிக்கும் நடவடிக்கைகளும் மிகுந்த சிக்கல் பொருந்திய நடவடிக்கைகளாகும் அவற்றுக்கு எளிமையான தீர்வுகள் தரப்படுமாயின் அந்தத்தீர்வுகள் தவறானவை யாக அமையும். அறிவுத் தொகுதி எத்துணை சிக்கல் கொண்டதோ அத்துணை சிக்கல்கொண்டதாக அறிவைக்கையளிக்கும் முறை அமையும்.
அறிவொழுக்கமும் கற்பித்தலியலும் பற்றி ஆராயும் பொழுது வகுப்பறையில் "இரு உலகங்கள்” நடைமுறைப்படுதலைச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. அவையாவன:
(1) ஆணர்பாலாரைத் து7ணர்டி வினைப்படுத்தும் உலகம் - அதாவது ஆண்பாலார் எழுந்து வினாக்களைக் கேட்டு, கலந்துரையாடல்களிலே பங்கு பற்றி இயங்குதலும், உற்சாகப்படலும் ஆண்பாலார் உலகின் நியதியாக அமைகின்றது.
(2) தூண்டிவிடப்படாத பெண்களின் உலகம். வகுப்பறையில் யாராவது ஒரு மாணவி எழுந்து வினாக் கேட்பவராக இருந்தால் அவர் "விலகிய" பெண்மாணவியாகவே கருதப்படுவார். பெண்கள் எழுந்து நின்று ஐயங்களைக் கேட்க வேண்டிய தவிர்க்க முடியாத சந்தர்ப்பம் ஏற்படுமாயின் ஆண்களைப் போல் துடிப்பாக எழுந்து நிற்காது பெளவியமாக மெல்லெழுந்து விநயமாகக் கேட்க வேண்டும் என்ற பண்பாடு கட்டுமை செய்யப்பட்டுள்ளது.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா | 46

தன்முனைப்புக் கற்றலும் சமகாலச் சூழலின் பிரதிபலிப்பும்
கற்றல் என்பது அறிவைக் கட்டுமை (Construct) செய்யும் செயலூக்கமுள்ள நடவடிக்கையாக இருக்கின்றதேயன்றித் தகவல்களை நெட்டுருச் செய்யும் நடவடிக்கை அன்று என்பதை முதலிலே மனங் கொள்ளல் வேண்டும். கட்டுமை செய்யப்பட்ட அறிவு பொருள் பொதிந்ததாகவும், புதிய தகவல்களை உள்வாங்கக் கூடிய வளமுடையதாகவும், இயக்கமுடையதாகவும் இருக்கும் நிலை, கற்றலின் நேர்வெளிப்பாடாகும். கட்டுமை செய்யப்பட்ட அறிவு வளம் மிக்கதாக இருக்கும் நிலையில் கூடுதலான அறிவைக் குறுகிய காலவீச்சினுள் திரட்டி உள்வாங்கக் கூடியதாக இருக்கும். இந்த அடிப்படைகளில் இருந்தே "தன்முனைப்புக் கற்றல்" (Selfdirected Learning) மேலெழுகின்றது.
பல்கலைக்கழக மருத்துவத்துறை மாணவர்களின் கற்றற் செயற்பாடுகளை ஆய்வுக்கு உட்படுத்தியதன் விளைவாக "தன் முனைப்புக் கற்றல்" விரிவாக விளக்கப்பட்டுள்ளது. (Williams, S.M (1993) Journal of the Learning Sciences, 2, 367-427) LDC55516). மாணவர்கள், சிக்கலான பல உள்ளடக்கங்களைக் கோட்பாட்டு நிலையிலும், செயலனுபவநிலைகளிலும் ஒன்றிணைத்துக் கற்க வேண்டியுள்ளனர். சிக்கலான விடயங்களை புலமைமிக்கோருடன் இணைந்து கற்கும் பொழுது தமக்குள்ளே காணப்படும் அறிவு இடைவெளிகளை இனங்கண்டு நிறைவிக்கக் கூடியதாக இருத்தல் தன் முனைப்புக் கற்றலை முன்னெடுக்கக்கூடியதாக இருந்தமை ஆய்வாளர்களினால் கண்டறியப்பட்டது. இச்செயல்முறை ஆசிரிய முனைப்புக் (Teacher Directed) கற்பித்தலிலும் வேறுபட்டது என்பது மனங்கொள்ளத்தக்கது.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 47

Page 28
தன்முனைப்புக் கற்றலிலே பின்வரும் இயல்புகள் விதந்து குறிப்பிடப்படுகின்றன.
இது பிரச்சினையை அடிப்படையாகக் கொண்ட கற்றலுடன் தொடர்புடையது. தமது அறிவின் இருப்பைப் பயன்படுத்தி பிரச்சினையை இனங்காணவும் தீர்வுகாணவும் மாணவர் உந்தப்படுகின்றனர். பிரச்சினையைப் புலக்காட்சி கொள்வதிலும், தீர்வுகாண்பதிலும் தமக்குரிய அறிவு இடைவெளிகள் மாணவர்களால் அறியப்படுகின்றன. சுயாதீனமான ஆய்வு முனைப்பு முன்னெடுக்கப்படுகின்றது. ஆய்வுக்குரிய வளங்கள் திறனாய்வு நோக்குடன் அணுகப்படுகின்றது. புதிய அறிவின் பிரயோகம் இடம் பெறுகின்றது. * சுயமுனைப்புக் கற்றலிலே கூட்டான தெறிப்பு ஏற்படுத்தப்
படுகின்றது.
பாரம்பரியமான கலைத்திட்டத்தில் ஆசிரியரால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் இங்கே கற்பவர்களினால் முன்னெடுக்கப்படுகின்றன.
தன்முனைப்புக் கற்றலில் அறிவை ஒரு கருவியாக்கி மேலும் அறிவைத் திரட்டிக் கொள்ளும் ஆற்றல் பெருக்கமடைகின்றது. குறிப்பிட்ட சூழமைவில் எது பொருத்தமான அறிவு? எது பொருத்தமற்ற அறிவு? என்று வேறுபடுத்தும் ஆற்றல் வளர்ச்சியடைகின்றது. தன் முனைப்புக் கற்றலின் முக்கியமான பரிமாணங்களுள் ஒன்றாகக் கருதப்படுவது சூழமைவுக்கு உட்படுத்தப்பட்ட அறிவுக் கட்டமைப்பு (Contextualised Knowledge Structure) D (56) IIT di 35 Lu@g5GosTG5lib. பிரச்சினை பற்றிய புலக்காட்சி கொள்ளலிலும், தீர்வுகளை முன்னெடுத்தலிலும் சூழமைவுக்கு உட்படுத்தப்பட்ட அறிவுக் கட்டமைப்பு முக்கியம் பெற்றதாக விளங்குதல் குறிப்பிடத்தக்கது. (Brans Ford, J.D. and Stein, B.S. (1993) The Ideal Problem Solver, Newyork: Freeman)
தன்முனைப்புக் கற்றல் சமூக பண்பாட்டுக் கோட்பாடுகளுடன் இணைந்தது. பிரச்சினைகள் சிக்கலாக இருக்கும் பொழுது,
தது (Լք
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா | 48

சமூகவளங்களின் உதவியையும், பிறரின் ஒத்துழைப்பையும் பெற வேண்டியுள்ளது. குறிப்பிட்ட துறைகளில் ஆற்றல் மிக்கோரிடம் நிகழ்த்தப்படும் கருத்து வினைப்பாடு (Discourse) அறிவின் கட்டுமைக்கு ஆதாரமாகின்றது. அறிகைச்சுமை (Cognitive Load) அதிகமாக இருக்கும் பொழுது அதனை குழுவாகக் கற்போரிடத்துப் பங்கீடு செய்து தீர்வுகளை எட்டுவதற்கும் சமூக பணி பாட்டு அணுகுமுறைகள் துணைநிற்கின்றன. சமூகக் கற்றற் கோட்பாடும் அதனோடிணைந்த தன் முனைப்புக்கற்றலும் மாணவரை பங்க" ளிப்புச் செய்து வழங்குனர் (Contributor) என்ற நிலைக்கு மேலுயர்த்துகின்றன. இதனால் மாணவரிடத்து "வழங்கு நிலை ஊக்கல்” எழுகின்றது.
கற்றலில் "தரவு இழுப்புத்திறன் முறை” (Data Driven Strategy) கருதுகோள் இழுப்புத்திறன் முறை (Hypothesis Driven Strategy) என்ற இருவகைப்பாடுகள் குறிப்பிடப்படுகின்றன. தரவு இழுப்புக் கற்றலே பாரம்பரியமான கலைத்திட்டச் செயற்பாடுகளில் முன்னெடுக்கப்பட்டது. தரப்பட்ட பன்முகமான உதாரணங்களில் இருந்து பொதுமையாக்கலை மேற்கொள்ளல் தரவு இழுப்புக் கற்றலில் மேற்கொள்ளப்படுகின்றது. ஆழமான பகுப்பாய்வுச் சிந்தனைகள் இங்கே முன்னெடுக்கப்படுதல் இல்லை. இணைந்த தோற்றப்பாடுகளை அறிதலே வலியுறுத்தப்படுகின்றது. இங்கு பொருத்தமற்ற எண்ணக்கருக்களையும் தரவுகளையும் இணைக்க முற்படுகின்றனர்.
இவற்றுக்கு மாறுபாடான இயல்புகளை கருதுகோள் இழுப்புக் கற்றல் கொண்டுள்ளது. தமது அறிவு இருப்பின் ஆட்சியை செயலுரக்கமுள்ள கற்றல் வினைப்பாடுகளுடன் இணைத்து பொருத்தமான தகவல்களை இனங்காணும் வாய்ப்பு உருவாக்கப்படுகின்றது. மருத்துவக் கல்வியில் நோயாளியின் பிரச்சினைகளை பொருத்தமான விஞ்ஞானக் காரணிகளுடன் இணைத்துப்பார்க்கும் திறன் கருதுகோள் இழுப்புக் கற்றலே முக்கியத்துவம் பெறுகின்றது. இதற்குமாறாக தரவு இழுப்புக் கற்றல் முறையைப் பயன்படுத்தி ஆசிரியர்தந்த குறிப்புத் தரவுகளை மீட்டெடுத்தல் வினைத்திறன் கொண்ட நடவடிக்கையாகாது. “கருதுகோள் இழுப்புக் கற்றல்” தெறித்தற் சிந்தனைக்கு வலுவூட்டுகின்றது. பொறிமுறையாகத் தொழிற்படுவதை விடுத்து ஆக்க நிலைத் தொழிற்பாடுகளுக்கு விசையூட்டுகின்றது. அறிவை எவ்வாறு பயன்படுத்திப் பிரச்சினை
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா | 49

Page 29
களுக்கு தீர்வு காணல் என்பதற்கு கருதுகோள்இழுப்புக் கற்றல் உரிய முறையிலே வழி வகுக்கின்றது.
sy
கற்றலின் இலக்குகள், "பாண்டித்திய இலக்குகள்,” “ஆற்றுகை இலக்குகள்” என இருவகைப்படும். தன்முனைப்புக் கற்றலிலே கற்பவர் தனது முன்னைய அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு இலக்குகளைத் திட்டங்களாக மாற்றுவர். அத்துடன் கற்றற் செயற்பாடுகள் உயர்நிலையான பிரக்ஞையுடன் முன்னெடுக்கப்படும். தொழிற்படும் நேரம், இடைவெளி முதலியவற்றைச் சுய ஒழுங்குடன் திட்டமிட்டுக் கற்றல் முன்னெடுக்கப்படும். இந்நிலை" யில் தன்முனைப்புக்கற்றல் அமைப்பாக்கத்தை வேண்டி நிற்கின்றது.
கற்றலும், கற்றலை இனங்காணலும் வேறுபடுத்த முடியாதவை. ஒரே தோற்றப்பாட்டின் பரிமாணங்களாக அவை அமைகின்றன. சுயவிருப்பும் சுய ஊக்கலும் கற்றலிலும், கற்றலை இனங்காணலிலும் செல்வாக்குச் செலுத்துகின்றன. கற்பவரின் பொருளாதார சமூகப் பின்புலமும் பால்நிலையும் கற்றலிலும் கற்றலை இனங்காணலிலும் நேரடியான செல்வாக்குச் செலுத்துவதை சிறப்பான கவனத்துக்கு எடுக்க வேண்டியுள்ளது. இத்தகைய பின்புலம் தொடர்பாக எழும் சவால்களை எதிர்கொள்வதற்கு தன் முனைப்புக் கற்றலை வளம்படுத்தி வலுவூட்ட வேண்டிய தேவை வற்புறுத்தப்படுகின்றது.
சமூக பொருளாதார இருப்பை நிராகரித்துக் கற்றலை ஒரு தன்னிச்சையான செயற்பாடாகக் கருதமுடியாது. சமூகத்துாண்டிகளின் செயற்பாடுகளுக்கு ஏற்றவாறு ஒருவர் தம்மைக் கட்டமைப்புச் செய்தல் சமூகக் கற்றற் செயல்முறைகளினால் விளக்கப்படுகின்றன. சமூகக் கற்றல் பற்றி விரிவான ஆய்வுகளை மேற்கொண்ட பந்துறா -96) lig56i (Bandura, A(1997) Self efficacy: The exercise of Control. Newyork: W.H. Freeman& Co.) Feup 3, 6) lid 3, G56) pil ITGS)- களையும், அவற்றின் அடிப்படையாக இயங்கிக் கொண்டிருக்கும் தீவிர சுரண்டற் கோலங்களையும், மனித உழைப்பின் பறிப்பையும் தமது சமூக உளவியல் ஆய்வுகளிலே ஒன்றிணைத்துப் பார்க்காமை அவரது ஆய்வுகளிலே காணப்படும் மிகப் பெரும் பின்னடைவு களாகும். சுரண்டலுக்கு உள்ளாகிய உளவியல் மனிதர் அவரது தரிசனங்களிலே இடம் பெறவில்லை.
தன் முனைப்புக் கற்றல் பின் வரும் செயற்பாடுகளைக் குவியப்படுத்தி நிற்கின்றது.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா | 50

1. எவற்றைக் கற்க வேண்டும் என்பதை வரையறை செய்தல். தமக்குரிய கற்றல் தேவைகளை ஒருவர் இனங்காணல்.
தமக்குரிய கற்றல் இலக்குகளை உருவாக்கிக் கொள்ளல்.
இலக்குகளை அடைவதற்கான கற்றல் திட்டத்தை இனங்காணுதலும், உருவாக்கிக் கொள்ளுதலும்.
5.
கற்றல் திட்டத்தை வினையாற்றலுடன் நடைமுறைப்படுத்தல். 6. கற்றலின் வினைத்திறனை சுயமதிப்பீடு செய்தல்.
எதிர்கொள்ளப்பட்ட கற்றற் பிரச்சினைக்குரிய தமது அறிவு இருப்பை மதிப்பீடு செய்தல், கற்றல் எழுபொருட்களை (Learning ISSues) உருவாக்குதல், இந்த எழுபொருட்களுக்கு ஏற்றவாறு திட்டங்களையும் நடைமுறைகளையும் உருவாக்குதல், பிரச்சினை விடுவித்தலுக்கு புதிய அறிவைப்பயன்படுத்துதல், இலக்குகளை அடைதலும் தெறித்தலும் என்றவாறு தன்முனைப்புக் கற்றல் விரிவடைந்து செல்லும். இங்கே "சுழலும் வட்டச் செயல் முறை” இயங்கிய வணிணமிருக்கும். முதல் முயற்சியிலே இலக்கு அடையப்படாவிடில் தொடர்ந்து மேலும் வினையாற்றல் கொண்ட ஆற்றுகையை முன்னெடுப்பதற்குரிய தன்னெறிப்பின்னூட்டல் அவசியமாகின்றது.
சமூக பொருளாதாரக் காரணிகளுடன் புலமையாளர் இழுப்புச் செல்வாக்குகள், குழு இழுப்புச் செல்வாக்குகள், தன்முனைப்புச் செல்வாக்குகள் முதலியனவும் இவ்வகையான கற்றல் செயற்பாடுகளிலே தாக்கம் விளைவிக்கின்றன.
பிரச்சினையை அடிப்படையாகக் கொண்ட கற்றல் தளத்திலே தன் முனைப்புக் கற்றல் வினைத்திறனுடன் இயக்கப்பட முடியும் என்பதை அண்மைக் காலத்தைய ஆய்வுகள் விரிவாக விளக்கு" daip607. (Dorothy, H.E. and Cindy, E.H. (ed) (2000) Problem based learning, Lorens Erlbaum Associates) 5ф цGvi sтi i fl, д. 6 i - ஒழுங்கமைப்பு, தன்னிலை மதிப்பீடு, தன்னிலைத் தெறிப்பு, தன் ஊக்கல், தன்னெறிப்பாடு, தன் - நப்பிக்கை முதலிய பரிமாணங்கள் தன்முனைப்புக் கற்றலிலே இடம் பெறுகின்றன.
தன்முனைப்புக் கற்றல் மரபுவழிக் கல்வியில் சிலவகைகளில் இடம் பெற்றிருந்தாலும் நவீன உளவியலில் அது நன்கு ஒழுங்கமைக்
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 151

Page 30
கப்பட்டு ஆற்றுகைக்கு உட்படுத்தப்படுகின்றது. சிறப்பாக டபிரச்சினையை அடிப்படையாகக் கொணர்ட கற்றலும், தன் முனைப்புக் கற்றலும் ஒன்றிணைக்கப்படும்பொழுது ஏற்படும் விசைகொண்ட செயற்பாடுகளைச் சமகால செயல்நிலை ஆய்வுகள் நன்கு வெளிப்படுத்துகின்றன. ஆனால் எமது கல்விச் சூழலில் தன் முனைப்புக் கற்றலைக் காட்டிலும், தங்கியிருக்கும், அல்லது சார்ந்திருக்கும் (Dependent Learning) கற்றலே பெருமளவில் முன்னெடுக்கப்படுதல் பின்னடைவுக்கே வழிவகுக்கின்றது. இத்தொடர்பில் மேலும் உரத்த சிந்தனைகள் வேண்டப்படுகின்றன.
அழகியற் பாடங்களிலே தன் முனைப்புக் கற்றலை மேற்கொள்ளுமாறு எமது சூழலிலே பெண்கள் பெருமளவிலே தூண்டப்படுகின்றார்கள். எடுத்துக்காட்டாக இலங்கைப் பல்கலைக்" கழகங்களில் இசை நடனம் போன்ற கற்கை நெறிகளில் தொண்ணுாற்று ஐந்து விழுக்காட்டிற்கு மேல் பெண்களாகவே காணப்படுகின்றனர். கலைப்பாடங்களைப் பொறுத்தவரையிலும் ஆண்களைக் காட்டிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருதல் குறிப்பிடத்தக்கது.
அழகியற் பாடங்களில் பெண்களின் ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்தலும், பொறியியற் பாடங்களில் ஆண்களின் ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்தலும் சமகாலச் சமூகத்தாற் கட்டுமை செய்யப்படுகின்றது.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா | 52

பிரச்சினைத் தளக் கற்றலும் பால்நிலைச் சமத்துவமும்
“பிரச்சினை” என்பது கோட்பாட்டுச் செயல்முறையை உருவாக்கிக் கற்றலை விசைப்படுத்தி விடுகின்றது. மாணவரது அறிகைத்தளத்தை அடிப்படையாகக் கொண்டு பிரச்சினைகள் முன்வைக்கப்படும் பொழுது எத்தகைய தீர்வு எதிர்ப்பார்க்கப்படுகின்றது என்ற "ஊடுதெளிவு" (Transparency) மாணவர்களுக்கு இருத்தல் வேண்டும். தமது அறிவின் அமைப்புக்கும், பிரச்சினைக்குமிடையே இணைப்பை ஏற்படுத்தும் செயல்முறை கற்றலை முன்னெடுக்கத் துணை நிற்கின்றது.
பிரச்சினைத் தளக்கற்றல் (Problem Based Learning) ஏழு விதமான பாய்ச்சல்களை அடிப்படையாகக் கொண்ட செயற்பாடாகும். அவை:
1. பிரச்சினை விபரிப்பில் இடம் பெறும் தெரிந்திராத எண்ணக்
கருக்களைத் தெளிவுபடுத்தி விளங்கிக்கொள்ளல்.
2. பிரச்சினையை வரைவிலக்கணப்படுத்தல். விளக்கப்பட
வேண்டிய தோற்றப்பாடுகளைப் பட்டியலிடல்.
3. பிரச்சினையைப் பகுப்பாய்வு செய்தல். அறிவின் இருப்பைப் பயன்படுத்தி வேறு வேறுபட்ட விளக்கங்களை மூளை விசை (BrainStorm)ச் செயற்பாட்டின் வழியாக உருவாக்குதல்.
4. உருவாக்கப்பட்ட விளக்கங்களை திறனாய்வு செய்தலும்
பரிசீலித்தலும்.
5. தன்முனைப்புக் கற்றலுக்குரிய எழுபொருட்களை உருவாக்குதல்.
6. சுயகற்றல் வாயிலாக கற்பவர் தம்முள்ளே காணப்படும் அறிவு
இடைவெளிகளை நிரப்புதல்.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 153

Page 31
7. முடிவுகளைக் கற்றல் குழுவுடனும், ஆசிரியரிடமும் பகிர்ந்து கொள்ளல். கற்றல் முன்னோக்கி நகர்ந்துள்ளதா என்பதைத் தீர்மானித்துக் கொள்ளல்.
பிரச்சினைத்தளக் கற்றலிலே மூன்று விதமான மாறிகள் பங்கு கொள்ளுகின்றன. அவையாவன:
() உள்ளிட்டு மாறிகள் : மாணவர் இயல்புகள், ஆசிரியரின் நடத்தைகள், கற்றல் பொருட்கள் முதலியவை உள்ளிட்டு மாறிகளில் இடம் பெறுகின்றன.
(2) செயல்முறை மாறிகள்: மாணவரின் கற்றற் செயற்பாடுகள், கற்றலில் ஈடுபாடு கொள்ளும் நேர அளவு, போதான செயல்முறையின் இயல்புகள் முதலியவை செயல்முறை மாறிகளில் இடம் பெறுகின்றன.
(3) அறிகை வெளியீட்டு மாறிகள்: அடைவுகள், ஆற்றுகைகள், எழுச்சிப் புலப்பாடுகள் முதலியவை அறிகை வெளியீட்டு மாறிகளில் இடம்பெறும்.
ஒரு மாறியில் ஏற்படுத்தப்படும் வினை அதிகரிப்பு ஏனைய மாறிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மனங்கொள்ளத்தக்" கது. ஒரு பிரச்சினையின் தரச் சிறப்பு பல்வேறு பரிமாணங்களின் அடிப்படையில் நோக்கப்படும், பிரச்சினை தெளிவாக விளக்கப்பட்டுள்ளமை, ஒழுங்கமைந்த செயற்படி நிலைகளின் வழியாக அணுகப்படுவதற்கு பிரச்சினை பொருத்தமானதாக அமைதல், குழுச் செயற்பாடுகளைத் தூண்டக்கூடிய ஆற்றல் பிரச்சினையிலே போதுமான அளவிலே காணப்படுதல், கற்றல் இலக்குகளை வடிவமைப்பதற்குப் போதுமான சந்தர்ப்பங்களை பிரச்சினை வழங்கக் கூடியதாக இருத்தல், தன்முனைப்புக் கற்றலை உருவாக்கக்கூடிய போதுமான வளத்தைக் கொண்டிருத்தல் முதலாம் பரிமாணங்களின் அடிப்படையில் பிரச்சினையின் தரச்சிறப்பு அணுகப்படும்.
பிரச்சினைத்தளக் கற்றல் குழுநிலையிலே இயக்கப்படும் பொழுது குழு பின்வரும் இயல்புகளைக் கொண்டதாக இருப்பின் கற்றல் வினையாற்றலுடன் முன்னெடுக்கப்படக் கூடியதாக இருக்கும்.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 54

1. நேர்முகமான தங்கியிருத்தல் - அதாவது குழுவில் உள்ள ஒவ்வொருமாணவரும் குழுவின் ஏனைய உறுப்பினரின் ஆற்றுகையிலே கரிசனை கொண்டவர்களாக இருத்தல்.
2. தனியாளர் பொறுப்பரியம் :- (Accountability) ஒவ்வொரு உறுப்பினரதும் பாண்டித்தியம் அளவீடு செய்யப்படுவதுடன், ஒவ்வோர் உறுப்பினருக்கும் பின்னூட்டல் வழங்கப்பட்டு வகை கூறலுக்கு உள்ளாக்கப்படுவர்.
3. பன்முகப்பாங்கு - ஆற்றலிலும், தனியாள் பண்புகளிலும், பலவகைப்பாடு காணப்படுதல் வேண்டும். பன்முகப்பாட்டை வளப்படுத்தலே கற்றலின் உன்னத இலக்காகக் கருதப்படும்.
4. பரவலாக்கப்பட்ட தலைமைத்துவம்: குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களிடத்தும் தலைமைப் பொறுப்பை ஏற்படுத்தும் தேவை உருவாக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
5. சமூகத்திறன்கள் மேம்பாடு கொண்ட நிலையில் இருத்தல்:- ஒருவர் மீது மற்றவர் நம்பிக்கை கொள்ளல், தொடர்பாடல் திறன்கள் பெற்றிருத்தல், உளமுரண்பாட்டு முகாமைத்துவத் திறன்கள் கொண்டிருத்தல் முதலியவை இதில் அடங்கும்.
6. தெறித்தல் - தனியாள் மற்றும் கூட்டு செயற்றிறன்களை மதிப்பீடு
செய்தலும் செழுமையுறச் செய்தலும்.
ஆக்கத்திறன் கொண்ட சமூக மயமாக்கற் செயற்பாடுகளைக் கொண்ட சூழலிலே பிரச்சினைத் தளக்கற்றலை இங்கிதமாக முன்னெடுக்க முடியும்.
குழுச் செயற்பாட்டின் வினைத்திறன் குழுவின் அறிகைத் தொழிற்பாடுகளுடன் இணைந்தது. பிரச்சினையை விளங்குதலும், தீர்வுகளை நோக்கி நகர்தலும் உள்ளடக்கக் கட்டுமை (Content ConStruct) எனப்படும். குழுவின் மனநிலை, உணர்வுகள், உளப்பாங்கு" கள் முதலியவை எழுச்சிக்கட்டுமை (Affect Construct) எனப்படும். குழுவின் தொழிற்பாட்டுப் பண்பும் இயக்கப்பண்பும் செயல்முறைக்கட்டுமை (Process Construct) எனப்படும். உயர்ந்த நிலையில் இவை அமைக்கப்படும் பொழுது கற்றல் பொருத்தமான தொழிற்பாடுகள் சிறப்புற முன்னேற்றமடைந்து செல்லும்.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 55

Page 32
பிரச்சினைத் தளக் கற்றலை முன்னெடுப்பதற்குரிய பொருத்தமான குழு ஐந்து தொடக்கம் ஏழு மாணவர்களைக் கொண்டதாக இருத்தலே சிறந்தது. ஆசிரியர் வளப்படுத்துனராகக் குழுவிலே செயற்படுவாரேயன்றி தகவல்களை விநியோகிப்பவராக இருக்கமாட்டார். பிரச்சினை தொடர்பான விசாரணை செய்தலே தீவிரமாக முன்னெடுக்கப்படும். பிரச்சினையைக் குவியப்படுத்தி அறிகைச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். குழுவின் இயக்கமும் அறிவின் இயக்கமும் நேர்த் தொடர்பாக இருத்தல் வேண்டும்.
பிரச்சினைத்தளக்கற்றல் வினையாற்றலுடன் இயக்கமுற்றுச் செல்வதற்குப் பொருத்தமான கலைத்திட்ட ஆக்கம் இன்றியமையாததாகும். பிரச்சினையை மையப் பொருளாக வைத்துக் கலைத்திட்டம் ஆக்கப்படவேண்டிய தேவையை ஆய்வாளர் வலியுறுத்தி upGirGT60Tii. (Barrows, H.S and Kelson, A.M (1995) Problem fased learning a Total approach to education, Springfield IL. Suthern University School of Medicine) ஆரம்பத்தில் மருத்துவக்கல்வியிலே சிறப்பாக வலியுறுத்தப்படும் இந்த அனுபவம் ஏனைய கற்கைகளிலும் விரிவுபடுத்தப்படத்தக்க பலத்தைக் கொண்டுள்ளது.
பிரச்சினையே கற்க வேண்டிய தேவையைத் தூண்டுகின்றது. அறிவையும் திறன்களையும் நேரடியாகப் பயன்படுத்த வேண்டிய தேவையைக் கற்றலுக்குரிய பிரச்சினை கொண்டிருக்கும் அதேவேளை கருதுகோள் மயப்பட்ட விதிவருவித்தல் முறை பிரச்சினை விடுவித்தலுக்கு ஏற்புடையதாக அமையும்.
பிரச்சினை விடுவித்தற் கற்றல் தொன்மையான சடங்குகளில் இருந்தும் மாய வித்தைகளில் இருந்தும் தோற்றுவாய் கொள்கின்றது. அருவ நிலை ஒழுங்குபடுத்தற் கற்றலை நோக்கினால், கணித பாடமே பிரச்சினை விடுவித்தற் செயற்பாட்டைப் பரவலாக முன்னெடுத்து வந்தது. பிரச்சினைத் தளக்கற்றலுக்கும் வாழ்க்கை நீட்சிக்கற்றலுக்கும் இணைப்புக் காணப்படுகின்றது.
“பாட நூல் தழுவிய அறிவு" "பாடநூல் கடந்த அறிவு” என்ற இருவகைச் செயற்பாடுகளையும் முன்னெடுப்பதற்குரிய பொருத்த" மான பிரச்சினைகளைத் தெரிந்தெடுத்தல் வாயிலாக வாழ்க்கை நீட்சிக்கற்றலை வளம்படுத்தலாம். வாழ்க்கை நீட்சிக் கற்றல் புதிய அறிவை நோக்கி நீளும் கற்றலாக அமைக்கப்படல் வேண்டும். இந்நிலையில் அறிவிலே காலாவதியானவர்களை இல்லாதொழிக்கலாம்.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 156

பொருத்தமான பிரச்சினைகள் அறிவாதார உசாவல் விருப்பை (EpistemicCuriosity) தூண்டவல்லவை. இந்தச் செயற்பாடுகள் ஒருவரது அறிவு இருப்பில் நிலை மாற்றத்தை ஏற்படுத்த வல்லவை.
பிரச்சினைத் தளக்கற்றலில் ஆண்மாணவர்களுக்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களும் அணுகுமுறைகளும் பெண் மாணவிகளுக்கும் கிடைக்கப்பெறும் பொழுதுதான் பால்நிலைச் சமத்துவத்தைக் கல்வியில் ஏற்படுத்தமுடியும். பிரச்சினைத் தளக்கற்றலை ஆண், பெண் இணைந்த குழுநிலையில் இயக்கிய பொழுது பின்வரும் செயற்பாடுகள் கண்டறியப்பட்டன. (யாழ். பல்கலைக்கழக ஆய்வு, 27/02/2004)
1. ஆண்கள் சொல்வதை எழுதும் எழுதுவினைஞர்களாக பெண்
மாணவிகள் ஆக்கப்பட்டனர். 2. பெண் மாணவிகள் ஆணிகளாற் கவனக் கலைப்புக்கு
உள்ளாக்கப்பட்டனர்.
3. பொருளாதார வறுமைப் பின்புலத்தைக் கொண்ட பெண் மாணவி ஒருத்தி எவற்றிலும் பங்கு கொள்ளாத மெளன நிலையில் இருந்த வேளை அந்தப் பெண்ணைத் தூண்டி உற்சாகப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படாதிருந்தன. 4. பெண்களிடத்து அதீத பணிவும் ஆண்களிடத்து அடங்காத்
துடிப்பும் நிலை நிறுத்தப்பட்டிருந்தன.
ஆண் மாணவர்கள் பெண் மாணவிகள் மீது வெறுப்பைக் காட்டவில்லை. மாறாக, பெண்களை அடக்கி ஆள்வதற்குரிய தந்திரோபாயங்களைப் பயன்படுத்திய வண்ணமிருந்தனர். குழுச்செயற்பாடுகளின் போது பரவலாக்கப்பட்ட தலைமைத்துவத்துக்குப் பதிலாக ஆண்களின் தலைமைத்துவமே ஒப்பீட்டளவில் மேலோங்கிய நிலையிற் காணப்பட்டது. தொடர்பாடல் திறன்களைப் பொறுத்தவரை இங்கிதமற்ற மொழிப்பிரயோகங்களும் “கிண்டல் மொழிகளும்” ஆண்களிடத்துச் சார்பு நிலையில் மேலோங்கல் கொண்டிருந்தன.
குழு உறுப்பினர்களிடம் நிகழ்ந்த உரையாடல்கள் பெருமளவில் ஆண்களின் கட்டுப்பாடுகளுக்கே உட்பட்டிருந்தன.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 57

Page 33
பிரச்சினைத் தளக்கற்றலின் வெற்றியும் சிறப்பும் குறித்த கற்றல் இலக்குடைய அர்ப்பணிப்புடன் தொடர்புடையது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட குழுவில் அனைத்து உறுப்பினர்களிடத்தும் இந்த அர்ப்பணிப்புக் காணப்பட்டது. புதிய புதிய கருத்துக்களின் தேவையைக் குழு உறுப்பினர்கள் தெளிவாக உணர்ந்து கொண்டனர். பிரச்சினைத்தளக்கற்றலைத் தமது பரீட்சையுடன் தொடர்பு படுத்திப்பார்த்தலிலே மாணவர்கள் தீவிர விருப்பு காட்டினார்களேயன்றி, தமது ஆளுமை வளர்ச்சிக்கு அதனால் கிடைக்கப்பெற்ற நன்மைகளைப் பற்றிய மதிப்பீடு மேலோங்கிக் காணப்படவில்லை.
எமது கல்வி முறையும், சமூக இயல்பும், தனிமனித இலாபங்களையே மிகையாக மீளவலியுறுத்திவருகின்றமையால் பிரச்சினைத் தளக் கற்றலையும் மாணவர்கள் அதே கண்ணோட்டத்தில் எதிர் கொள்கின்றனர்.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா |58

வறுமையும் வகுப்பறை மாற்று நடவடிக்கைகளும்
வறுமைநிலையில் உள்ள பெண்கள் அனுபவிக்கும் உளவியல் நெருக்குவாரங்கள் அணி மைக் காலத்தைய ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துவருகின்றன. இந்த நெருக்கு வாரங்களைத் தீவிர ஆய்வுக்கு உட்படுத்துவதன் வாயிலாக அவர்களைக் கல்வி நிலையில் மீட்டெடுக்கும் வழிமுறைகளை வினையாற்றலுடன் முன்னெடுக்க முடியும் என நம்பப்படுகின்றது. பயன்மிக்க வினையீடுகளை (Intervention) முன்னெடுப்பதற்கும் இவை துணையாக இருக்கும்.
உணவு ஊட்டக்குறைவினால் உடல் வளர்ச்சிப் பின்னடைவு, நோய் எதிர்ப்பு வலுகுன்றியிருத்தல்; சோர்வு மற்றும் அயர்வு, அதீத மனவெழுச்சித்தளம் பல்களுக்கு உள்ளாதல், கவன ஈர்ப்புக்குன்றுதல், அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாமையினால் நலிவடைந்து நிற்கும் ஊக்கல் விசைகள், முரண்பாடுகளின் மோதல்களை அனுபவித்தல் முதலிய பொதுப்பண்புகள் ஆசிரியர்களினால் நோக்கப்பட்டுள்ளன.
தம்மைச் சுற்றிய ஒரு "மூடிய செயற்றொகுதியை" அவர்கள் வளர்த்துக்கொள்ள முற்படுகின்றனர். அவர்களை ஒன்றிணைக்கும் அறிகைப்பலத்தை பாடசாலைச் செயல்முறையினூடாக முன்னெடுக்க முடியாத நிலையே காணப்படுகின்றது. பாதிப்புக்கு உள்ளானவர்களை ஒன்றிணைப்பதால் ஏற்படும் பலத்தையும் அனுகூலங்களையும் திட்டமிட்டு வழங்காத பின்னடைவுபட்ட நிலையே காணப்படுகின்றது. மாறாக அவர்களைத் தனிமைப்படுத்திவிடும் செயற்பாடுகளே மேலோங்கியுள்ளன.
அதீத நெகிழ்ச்சிப்பாங்கு அல்லது அதீத முரண் நெகிழ்ச்சிப்பாங்கு என்ற வகையில் முனைவுப்பாடான நடத்தைக் கோலங்கள்
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா | 59

Page 34
அவர்களிடத்தே காணப்படுமிடத்து, அத்தகைய உளவியற் கோலங்களைத் தனித்தனியாகக் கையாண்டு ஆக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதிருப்பதற்கு ஆசிரியர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள மிகையான வேலைப்பழு தடையாகவுள்ளது.
வறுமையின் அழுத்தங்களும், எதிர்ப்பாங்கான சமூகச் சுமத்தல்களும் இந்த ஏழைப்பெண் மாணவிகளிடத்துத் தாமே தொடங்கும் ஆற்றலை (Personal Initiative) வீழ்ச்சியடையச் செய்து வருகின்றன. இதனால் அவர்களின் ஆற்றல் "உறங்கும் நிலைக்கு” த் தள்ளப்பட்டுள்ளது. சிறிய இலக்குகளைத் தானும் அவர்கள் அடைந்து கொள்ள முடியாத அளவுக்கு கல்வியில் நிகழ்த்தப்பட்டு வரும் போட்டி நிலைகள் தடைக்கற்களாகவுள்ளன.
பொருளாதார மேலோங்கல் நிலையில் உள்ளோரின் உயர்வுச் சிக்கல் அழுத்தங்களால் இப்பெண்களிடத்து ஆழ்ந்த அமைதி, கூச்சம், ஒருவிதபயம், முதலியவை கட்டுமை செய்யப்பட்டுள்ளன. தம்மை ஒத்த தெரிவு செய்யப்பட்டுள்ள ஒரு சிலரிடத்து மட்டுமே ஊடாட்டங்களை வைத்திருக்கும் நிலையும் காணப்படுகின்றது. அவர்களது உள்ளத்திலே புதைந்துள்ள போதாமை (Inadequacy) என்ற உளநிலையைக் களைந்து விடுவதற்குரிய கலைத்திட்டச் செயற்பாடுகள் பாடசாலையில் வறிதாகவுள்ளன. தாம் தாழ்ந்த அடைவுகளைப் பெறுவோர் என்ற உளக்கட்டுமை மேலோங்கியுள்ளது.
தாழ்ந்த அடைவுகளைப் பெறுவோர் தனித்த கவன ஈர்ப்புக்கு உட்படுத்தப்பட வேண்டியுள்ளனர். சிறிய சிறிய செயற்பணிகளைக் கொடுத்து வெற்றியீட்டச் செய்து ஊக்கலை அவர்களிடத்து ஏற்படுத்த வேண்டியுள்ளது. ஆனால் வறுமை நிலையிலும் தாழ்ந்த அடைவு நிலையிலுமுள்ள பெண்களைக் குவியப்படுத்திக் கற்பிக்கும் உளவியல் உபாயங்கள் போதுமான அளவில் முன்னெடுக்கப்படாதிருத்தல் குறிப்பிடத்தக்கது. தற்போது நடைமுறையில் உள்ள வழிகாட்டற் கட்டுமான அமைப்புக்கள் சமூக நிரலமைப்பில் மேலுயர்ந்தவர்களுக்கே சாதகமாகவுள்ளன.
மனத்திலே கொதிகலனைத்தாங்கியவாறு சூழலில் மேலோங்கி நிற்போரிடத்து அதீத அடக்கத்தையும் கீழ்ப்படிவையும் காட்டி நிற்கும் முரண்பாடான உளவியல் நிலை இம்மாணவிகளிடத்துக் காணப்படுகின்றது. பொருத்தமற்ற உணர்வுகளைத் தாங்கிச் சுமந்து தம்வயப்படுத்தும் உளவியல் நடத்தையாக இது அமைந்துள்ளது.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா | 60

இந்த அமைதியினதும் அடக்கத்தினதும் ஆழ்ந்த பொருளை ஆசிரியர்களும் கல்வி நிர்வாகிகளும் விளங்கிக் கொள்ளல்
வேண்டும்.
உணவு ஊட்டமின்மையும் பற்றாக்குறையும் காரணமாய் காலையிலேயே சோம்பல் நிலைக்கு இம்மாணவிகள் தள்ளப்பட்டு விடுகின்றனர். தொழிற்பாட்டுப் பின்னடைவுகள் இதனால் ஏற்படுத்தப்பட்டுவிடுகின்றன. நலன்புரிநிறுவனங்களுடன் இணைந்து இந்தப் பிரச்சினையை மனிதாபிமான முறையில் அணுக வேண்டியுள்ளது.
இவர்களிடத்து உருவாக்கப்படும் எதிர்நடத்தைகள் நிரந்தர நடத்தைகளாக மாற்றப்படாதிருத்தற்குரிய பொருத்தமான நட" வடிக்கைகளைப் பாடசாலைகளிலே மேற்கொள்ள வேண்டியுள்ளது. பாடசாலைச்சூழல் சிலசமயங்களில் எதிர்நடத்தைகளை நிரந்தர நடத்தைகளாக மாற்றிவிடுகின்றன. இந்நிலையிலே தன்னியல் நிறைவை அடையமுடியாத தாழ்ந்த நிலைத்தற் படிமத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர். தாழ்ந்த தற்படிமவாக்கம் கல்வி முன்னேற்றத்துக்கும், ஆளுமை மேம்பாட்டுக்கும் தடையாக இருத்தலை ஆசிரியர் விளங்கிக் கொள்ளல் வேண்டும்.
தனியாள் நிலைப்பட்ட தன்னியக்கச் செயற்பாடுகளை வறிய பெண்மாணவிகளிடத்து வளர்த்தெடுக்க வேண்டியுள்ளது. தமது உணர்ச்சிகள் ஆசிரியர்களால் விளங்கிக் கொள்ளப்படவில்லை என்ற நிலை இப்பெண்களிடத்து மேலும் உளவியல் சார்ந்த தாக்கங்களை ஏற்படுத்த வல்லது. இந்நிலையிலே கவனஈர்ப்பை ஏற்படுத்துவதற்குப் பெண்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்குத் தவறான விளக்கங்களும் வியாக்கியானங்களும் தரப்படுமாயின் நிலைமை மேலும் சிக்கலாக மாற்றடையும்.
தாம் அன்புக்குரியவர் அல்லர் என்றும் அரவணைப்புக்குரியவர் அல்லர் என்று எண்ணும்போது தற்படிமம், மேலும் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும். தன் நம்பிக்கை இழப்பு ஏற்படத் தொடங்கும். தம்மைப் பற்றிய தாழ்ந்த பெறுமானங்களைத் தோற்றுவிக்கும் செயற்பாடுகள் மேலெழுகை கொள்ளும். தன்னிலைத் தேய்மானம் (Self Depreciation) வளரத் தொடங்கும்.
இந்த மாணவிகளை ஒதுக்கிவிட்டுக் கற்பித்தலை மேற்கொள்ளும் காலனித்துவக் கற்பித்தல் முறைகள் கைவிடப்படல் வேண்டும்.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா | 61

Page 35
இவர்களிடத்துக் கற்பித்தலை மேம்படுத்தும் உளவியல் சார்ந்த வினைப்பாடுகள் தவிர்க்க முடியாத தேவைகளாகவுள்ளன. கற்பித்தற் செயற்பாட்டிலே தளராத நம்பிக்கை இருத்தலுடன், உடனடி வெற்றிகள் கிடைக்காதவிடத்து ஆசிரியர் மனஞ்சோர்ந்து தளர்ந்து விடலாகாது.
ஆசிரியமுயற்சிகளுடன் வகுப்பறை முகாமைத்துவத்திலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியுள்ளது. இதமான இசைவாக்கல் நடவடிக்கைகளையும், ஏற்புடைய ஊடாட்டங்களையும் உற்சாகப்படுத்தி இம் மாணவிகளிடத்து நம்பிக்கையை வளர்த்தல் வேண்டும். வெகுமதியளித்தலும் ஊக் கற்படுத்தலும் நேர்நடத்தைகளை முன்னெடுப்பதற்குத் துணை நிற்கும்.
வகுப்பறைச் செயற்பாடுகளில் இவர்கள் தவிர்க்க முடியாத உறுப்பினர்கள் என்பதை உணரச் செய்து பொறுப்புக்கள் வழங்கப்படும் பொழுது, இவர்களிடத்து இங்கிதமான மலர்ச்சி படிப்படியாக ஏற்படத் தொடங்கும். துணிவு மிக்க முயற்சிகளால் வறுமைக்கு எதிராகப் போரிடும் வினையூட்டல்களை மேற்கொள்ளும் பொழுது அவர்கள் தமது ஆற்றல்களைப் பலப்படுத்திக் கொள்ள முயல்வர். இந்த பணியினை வென்றெடுப்பதற்கு சமூகத்தில் உள்ள வள ஆளணியினரின் துணையைப் பெற்றுக் கொள்ளலாம்.
இம்மாணவிகளை அறிகை மற்றும் எழுச்சிநிலைகளிலே வலிமைப்படுத்துவதற்கும் கற்றலை அவர்களிடத்து வினைத்திற" னுடன் முன்னெடுப்பதற்கும் வகுப்பறைகளின் செயல்நிலை ஆய்வுகள் (Action Research) உறுதுணையாக அமையும் கற்பித்தல் உள்ளடக்கத்தின் மீது ஆசிரியர் எத்துணை கவனம் செலுத்துகின்றனரோ அத்துணை கவனக்குவிப்பைச் செயல் முறையின் மீதும் செலுத்துதல் வேண்டும்.
பெண்கள் தொடர்பாக சமூகம் மேற்கொண்ட கட்டுமையை மாற்றியமைப்பதற்குக் கல்வியும் கருத்தேற்றமும் வலிமையான சாதனங்களாகும்.
தாழ்ந்த அடைவுகளைக் கொண்ட பெண்களை வகுப்பிலுள்ள ஏனையோருடன் ஒப்பிட்டுப்பார்க்கும் மரபுவழி ஊக்கற் கணிணோட்டம் உடனடியாகக் கைவிடப்பட வேண்டியுள்ளது. இது ஒருவகை எதிர்மறை ஊக்குவிப்பு நடவடிக்கை என்பதை ஆசிரியர்
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா | 62

உணர்ந்து கொள்ளல் வேண்டும். இப்பெண்களுக்கு வரையறுக்கப்பட்ட ஆற்றுகைச் சந்தர்ப்பங்களை வழங்காது பரவலான ஆற்றுகைச் சந்தர்ப்பங்களை உருவாக்கி வழங்கல் வேண்டும்.
போட்டியற்ற வகுப்பறைக் கட்டமைப்பில் அவர்களது முயற்சியை அடிப்படையாகக் கொண்ட ஈட்டுப்புள்ளிகளை வழங்குதலே ஏற்புடைய நடவடிக்கையாகும்.
“பாடசாலைப் பண்பாடு” என்ற எண்ணக்கரு அண்மைக்காலமாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. மாணவரினதும் ஆசிரியர்களதும், முகாமை செய்வோரதும் நடத்தைகளை உருவாக்குவதிலே பாடசாலைப் பணி பாடு நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கங்களை உருவாக்கி வருகின்றது. ஆனால் பாடசாலைப் பண்பாட்டின் உருவாக்கம் ஆண்கள் நிலைப்பட்ட கண்ணோட்டங்களையே பெருமளவிலே தாங்கி நிற்கின்றது.
பாடசாலையைக் கணிப்புக்கு உள்ளாக்குதல் (Making School Count) என்ற எண்ணக்கரு அண்மைக்காலமாகக் கல்வி உளவியலாளரால் முன்வைக்கப்பட்டுள்ளது. மேலிருந்து கீழ் அழுத்தும் பாரம்பரியமான கல்வி நிர்வாக முறைமைக்குப்பதிலாக கீழிருந்து மேல் நோக்கிச் செலுத்தல் இந்த எண்ணக்கருவின் ஒரு சிறப்பார்ந்த பரிமாணம். மாணவருக்குப் பயன்விளைவிக்கும் செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுத்தல், வினையாற்றல் மிகு செயற்பாடுகளைப் பராமரிப்புச் செய்தல், உளவியல் ஆய்வுகளின் முடிவு: களை மாணவரின் நலன் கருதி எவ்வாறு பிரயோகிக்க முடியதும் எனத் தீர்மானித்தல் முதலானவை அதன் ஏனைய பரிமாணங்களாகும். இவற்றை அடியொற்றி ஏழ்மைக்கு உள்ளாகிய பெண்களுக்குரிய கல்வியை மீள்கட்டுமானம் செய்ய வேண்டியுள்ளது.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 163

Page 36
வளங்குன்றிய பாடசாலைகளும் வறிய பெண்களின் கல்வியும்
நகரங்கள், கிராமங்கள், மற்றும் பெருந்தோட்டத்துறை ஆகியவற்றிலே காணப்படும் வளங்குன்றிய பாடசாலைகளிலேதான் வறிய பெண்கள் கற்பதற்கென உள்வாங்கப்படக்கூடிய கள நிலவரங்கள் காணப்படுகின்றன. கட்டமைப்பு வசதிகள் மற்றும் கலைத்திட்ட வசதிகள் ஆசிரியவளம் முதலியவற்றிலே காணப்படும் வளங்குன்றிய நிலை "இல்லார்க்கு இல்லார்துணை” என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. வறுமை தொடர்பான சகிப்புத்தன்மையும், விளக்கமும் புரிந்துணர்வும் வளங்குன்றிய பாடசாலைகளின் உளவியற் கவிநிலையாகக் காணப்படுவதால் வறிய பெண்களுக்குரிய நெகிழ்ச்சிப்பாங்கு அங்கே காணப்படுகின்றன. ஆயினும் கள நிலவரங்களாற் பின்னடைவு கொண்ட கற்றல் கற்பித்தற் செயற்பாடுகளே வளங்குன்றிய பாடசாலைகளுக்குரிய (விதிவிலக்கு இருப்பினும்) பொதுப் பண்பாகக் காணப்படுகின்றது.
வளம்மிக்கதும் அனுகூலம் மிக்கோருக்கானதுமான பாடசாலைகளில் வறிய பெண்களின் பண்பாடு அங்கீகரிப்புக்கு உள்ளாக்கப்படுதல் இல்லை. வறிய பெண்கள் அத்தகைய பாட" சாலைகளில் விதிவிலக்காகச் சேர்க்கப்படுமிடத்து அவர்கள் எல்லைப்படுத்தலுக்கே (Marginalisation) தள்ளப்படுகின்றனர். வாய்ப்புவசதிகளும் ஊக்கலும் குன்றிய நிலையிலே வறிய பெண்களின் நிலை தாழ் அடைவினைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. பெண்களைப் பற்றி உருவாக்கப்பட்டுள்ளது. வார்ப்புநிலைப் f /u/(1/2)/gigssi Gas/7/ / //7(6) (Stereotype Threat Theory) gé Figsiliபத்தில் நோக்குதற்குரியது.
பெண்களின் படிப்பு அவர்களின் திருமணத்துக்கு உதவப் போதில்லை. மாறாக நெருக்கடிகளையே உருவாக்கும் என்ற
மனோபாவமும் வறிய பெண்களின் கல்விக்கு இடப்படும் நிதி
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா | 64

ஒப்பீட்டளவிலே பயனற்றது என்ற கருத்தும் சமகாலத்தில் நிலவிவரும் வார்ப்பு நிலைப்பயமுறுத்தல்களுட் குறிப்பிடத்தக்கவையாகும். எமது பண்பாட்டுச் சூழலியல் அமைப்பு (Cultural Ecology) பெண்களின் கல்விக்கு குறிப்பாக வறிய பெண்களின் கல்விக்குப் பாதகமாகவேயுள்ளது.
இச்சந்தர்ப்பத்தில் கருமை இனமக்களை அடிப்படையாகக் கொண்டு மேயேர்ஸ் மற்றும் பில்சன் உருவாக்கிய தண்மை முற்565uild, Gasnil ut(6) (Cool Pose Theory) (Majors, R and Billson, J.M., (1992) Cool Pose, The Dilemmasd Black Manhood in America, Newyork: Lexington Book) gaigo35u567 (gpg|L-g)|Lb gaO)6007:55, நோக்குதற்குரியது.
வறிய பெண்களின் கல்வியை ஆராய்வதற்கு கோட்பாட்டு அடிப்படைகளாக இஸ்ரீல் வழங்கிய (அ)வார்ப்பு நிலைப் பய(upg52si) Gas/71 / 17(6) (Steele, C.M(1997) American Psychologist, 55 pp 613-29) ஒக்பு என்பவரின் பண்பாட்டுச் சூழலியற் கோட்பாடு (Ogbu, J.U (1992) Educational Researcher 21 pp 5-14) GLDGuigi) மற்றும் பில்சன் வழங்கிய "தண்மை முற்கவிப்புக் கோட்பாடு” முதலியவற்றைச் சற்று விரிவாக நோக்கலாம்.
வார்ப்புநிலைப் பயமுறுத்தற் கோட்பாடு எதிர்மறையான வார்ப்புச் சிந்தனைகள் எவ்வாறு கற்றலிலும் அடைவுகளிலும் தாக்கம் விளைவிக்கின்றன என்பதை விரிவாக விளக்குகின்றது. மேலோங்கியோரால் உருவாக்கப்பட்டுள்ள "வார்ப்புச் சிந்தனைகள்” பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டவர்களிடத்து தாழ்வுணர்ச்சியை யும், பதகளிப்பையும் அடைவுகளிலே பின்னடைவுகளையும் ஏற்படுத்தி விடுகின்றது. இத்தாக்கம் கற்றலின் ஒவ்வொரு கட்டத்திலும், படிநிலையிலும் ஏற்பட்ட வண்ணமிருக்கும். கற்றலைத் தாழ்வாக மதிக்கும் இனங்காணற்கலையை (Disidentification) அது ஏற்படுத்தி கல்விச் செயல்முறைகளில் இருந்து இலகுவாக வறியவர்களை வெளியேற்றிவிடும். “பாடசாலைக்குச் செல்லல் புத்திசாலித்தனம் அற்றது” என்ற நிலையை மேலும் ஏற்படுத்திவிடும். அடுத்ததாக ஒக்பு என்பவர் வழங்கிய பண்பாட்டுச் சூழலியற் கோட்பாட்டை நோக்கலாம். இக்கோட்பாடும் நீக்ரோமக்களின் கல்வியை ஆராய்ந்ததன் வாயிலாக உருவாக்கப்பட்டது. இந்த அணுகுமுறையினைப் பெண்கள் கல்வியிலும் பிரயோகித்துப்
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 165

Page 37
பார்க்கலாம். தமக்குரிய சுயப்பெறுமானமானத்தைக் கல்வி நிலை மாற்றிவிடும் என்பது தொடர்பான ஐயப்பாடு பெண்களிடத்து ஏற்படுகின்றது.
கல்வியால் தாம் உயர்ந்து மேலெழ முடியும் என்ற உறுதிப்பாட்டில் ஐயங்கள் குறுக்கீடு செய்யும் உளவியல் அவலம் பெண்களிடத்துத் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. கல்வி உயர்ச்சியில் ஆண்களுக்குக் கிடைக்கும் அகல்விரி அங்கீகாரம் பெண்களுக்குப் பொதுவாகக் கிடைப்பதில்லை.
ஆண்களும் பெண்களும் சேர்ந்து கற்கும் பாடசாலைகளில் பெண்கள் இணைந்து கொண்டுள்ளார்களேயன்றி இசைவுபட 656.606). (Accommodation without assimilation) guó007(5) 65LDIT607 பண்பாட்டுச் சட்டகங்களுக்குள் தாங்கள் உட்பட்டிருப்பதான உணர்வு பெண்களுக்கு ஏற்படுகின்றது. ஒடுக்கு முறையும், ஆண்மை ஓங்கலும் பண்பாட்டுச் சட்டகங்களை ஏற்படுத்தியுள்ளன.
தண்மை முற்கவிப்புக் கோட்பாடும் நீக்கிரோக்களின் கல்விச் செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு ஐ.அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது. பால்நிலை தொடர்பான விளக்கங்களுக்கு இக்" கோட்பாடும் துணைபுரியக்கூடியது. ஆண்மாணவர்கள் பால்நிலை சார்ந்த தனித்துரைக்கக் கூடியதுமான தீவிர நடத்தைகளில் ஈடுபடுகின்றார்கள். இந்த நடத்தைக் கோலங்கள் பெண்களிடத்துப் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.
தண்மை முற்கவிப்பு நடத்தை என்பதன் பொருள் பாதிப்புக்கு உள்ளானவர்கள் தம்மை இதமாக்கிக் கொள்வதற்கு மேற்கொள்ளும் நடத்தைகளாகும். இந்த நடத்தைகள் நேர்விளைவுகளையும் உண்டாக்கும். எதிர்விளைவுகளையும் உண்டாக்கும். பெண்கள் மேற்கொள்ளும் இதமாக்கல் நடத்தைகள் ஆண்களின் பிழையான விளக்கங்களுக்கும் தவறான விளக்கங்களுக்கும் உள்ளாக்கப்படுதல் உண்டு.
காலங்காலமாக நிகழ்ந்து வந்த சமூக ஒடுக்கு முறையில் நிகழ்ந்த சமூக நோயின் வெளிப்பாடாகவே சமூகப் பிரச்சினைகள் தோன்றியுள்ளன. இந்நிலையில் எழும் உளமுரண்பாடுகள், உள நெருக்குவாரங்கள் முதலியவற்றை முகாமை செய்து கொள்வதற்குரிய ஓர் உளச் செயற்பாடாகவே "தண்மைநடத்தை”முன்னெடுக்கப்படுகின்றது. ஒருவருக்குரிய தனித்துவமான பெருமிதமான நிலை
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா | 66

சிதைக்கப்படும் பொழுது தன்மை முற்கவிப்பு நடத்தைகள் மேலெழும். பயமற்ற நிலையும், மனவெழுச்சிகளற்ற நிலையும் இங்கு ஊடுருவி நிற்கும்.
கல்வி முறைமை பற்றி ஆராய்ந்தவர்கள், ஆண்களின் விழுமியங்களை உள்வாங்கியே கல்வியும் கலைத்திட்டமும் உருவாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகின்றனர். பாடசாலைக் கலைத்திட்டம் “குழந்தை மையக் கலைத்திட்டம்” என்பதை விட்டு விலகி “ஆண்மைமய கலைத்திட்டமாகப் பெயர்ச்சி கொண்டு விட்டது என்று கூறப்படுதலை நிராகரிக்க முடியாதுள்ளது. கலைத்திட்டச் செயற்பாடுகளில் ஆண்கள் அளவுக்கு மீறிய பிரதி நிதித்துவம் செய்யப்படல் (Over Represented) இணைந்த கலைத்திட்டச் செயற்பாடுகளிலே காணப்படுகின்றது. இணைந்த கலைத்திட்டச் செயற்பாடுகளில் பொருளாதார வளம்மிக்க பெண்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புக்களும் அனுகூலமும் வறிய பெண்களுக்குப் பாடசாலைகளிலே கிடைப்பதில்லை.
கல்விமுறையில் தீவிரபோட்டியும், மேலாதிக்கமும் (Domination) பல நிலைகளிலே பரவியுள்ளன. ஆரம்பப் பாடசாலையில் முதலாம் வகுப்பில் ஆரம்பிக்கும் போட்டி நிலை ஐந்தாம் வகுப்புப்புலமைப் பரிசில் பரீட்சையில் உச்சவிதானத்துக்குச் சென்றுவிடுகின்றது.இதில் வசதிமிக்க பாடசாலைகளுக் கிடைக்கும் வளங்களும், வாய்ப்புக்களும் வறிய பாடசாலைக்குக் கிடைப்பதில்லை. எமது ஆய்வுகளின்படி வளங்குன்றிய ஆரம்பப் பாட சாலைகளின் புலமைப்பரிசில் பெறுபேறுகளில் வறிய பெண் சிறார்களின் அடைவுகள் அதிக பின்னடைவுகளைக் காட்டியுள்ளன.
கல்வி வளப்பகிர்வில் மேலாதிக்கப் பண்புகள் காணப்படுகின்றன. அனுகூலம் மிக்க பாடசாலைகளுக்கிடைக்கும் அமைப்பு வளம், நிதிவளம், ஆசிரியவளம் முதலியவை வறிய பாடசாலைகளுக்குக் கிடைப்பதில்லை. வசதிமிக்க பாடசாலைகளின் பெற்றோரும், பழைய மாணவர்களும் அழுத்தக்குழுக்களாக (Pressure Group) செயற்பட்டு அனுகூலங்களைப் பெற்றுக் கொள்கின்றார்கள். இனக்குழுமநிலையிலும் அழுத்தக் குழுக்கள் வலிதாகச் செயற்படுதலைக் காணமுடியும். வறிய பாடசாலைகளும் பெண்களின் கல்வியும் பற்றி ஆராயும் பொழுது இனத்துவக் காரணிகளைப் புறந்தள்ள முடியாதுள்ளது. இனத்துவ நிலையில் கல்விவளப்பகிர்வு
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா | 67

Page 38
நிகழ்வதை இலங்கையின் பிரதிக்கல்வி அமைச்சர் எம்.சச்சிதானந்தன் அவர்களாற் தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது (தினக்குரல் - வாரவெளியீடு, 5-11-2006) இந்நிலையில் வறிய தமிழ்ப் பெண்களின் கல்வி அதிக பாதிப்புக்கும், புறக்கணிப்புக்கும் உள்ளாகும் அவலமான நிலை காணப்படுகின்றது.
பாடசாலைகளில் பெண்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கும், ஆண்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்குமுரிய பயிற்சிகளே மிகையாக வழங்கப்படுகின்றன. இந்த நடவடிக்கை பெண்களின் கல்விச் செயற்பாடுகளையும், கற்றலையும் பாதிப்படையச் செய்கின்றன. மனவெழுச்சிகளையும் உணர்ச்சிகளையும் அடக்கி அழுத்தி வைத்தவாறு கற்றலிலே வினைத்திறனுடன் கவனக்குவிப்பை ஏற்படுத்த முடியாது.
ஆண்களாற் பிரதிபலிக்கப்படுகின்ற மனவெழுச்சிகளையும், அவர்களாற் பிரதிநிதித்துவம் செய்யப்படுகின்ற உணர்ச்சிகளையும் சுமக்க வேண்டிய முன்தாங்கிகளாகவும் (Buffer) பெண்கள் செயற்பட வேண்டியுள்ளது.
இலங்கையில் பெண்களுக்கென தனியான பாடசாலைகள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டவேளை அவற்றின் பயன்களையும் அனுகூலங்களையும் மத்தியதரவகுப்புப் பெண்களே பெற்றுக் கொண்டார்கள். ஆனால் ஆண்களுக்கென அமைக்கப்பட்ட கல்லூரிகளோடு ஒப்பிடும் பொழுது பெண்கள் பாடசாலைகள் வளங்குன்றிய நிலையிற் காணப்பட்டன. அத்துடன் பெண்களுக்கென அமைக்கப்பட்ட பாடசாலைகளின் கலைத்திட்டம் குடும்பப் பராமரிப்பு, குழந்தைவளர்ப்பு முதலியவற்றை வளமாக்கி வினைத்திறன்படுத்தும் செயற்பாடுகளை மீளவலியுறுத்தின.
தாய்மொழிக் கலவன் பாடசாலைகளே வறிய பெண்களுக்குக் கல்விப் புகலிடமளித்தன. இங்கும் பெண்களுக்கு இரண்டாம் நிலை மதிப்பே வழங்கப்பட்டன.
சுதந்திரத்துக்குப் பின்னர் ஏற்பட்ட கல்வி வளர்ச்சியை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, வறிய பாடசாலைகளிற் கல்வி கற்கும் பெண்களே அதிக இடைவிலகலுக்கு உட்படுதல் காணப்படுகின்றது. பாடசாலை வரவிலும் வறிய பெண்களே பின்னடைவுகளைக் காட்டும் நிலை காணப்படுகின்றது.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா | 68

சுதந்திரத்துக்குப் பின்னர் பெண்களின் எழுத்தறிவு வீதம் வளர்ச்சியடைந்து சென்றாலும், அந்த வளர்ச்சி குடும்ப ஆற்றுகைகளுக்கே அனுகூலமாக அமைந்தது. பாடசாலைகளிலே பெண்களின் கல்வி அடைவு மேம்பாடுகளை தமக்குரிய ஒரு பயமுறுத்தலாகவே (Threat) ஆண்கள் கருதும் நிலை காணப்படுகின்றது. பெண்களின் எழுத்தறிவு வீதம் வளர்ந்து சென்றாலும், பெண்களின் ஆற்றல் தொடர்பாக நிலைபேறு கொண்டிருந்த எதிர்மறைக் கருத்துக்களின் எச்ச விளைவுகள் (Residual Effects) தொடர்ந்த வண்ணமுள்ளன.
சிறிய வறிய பாடசாலைகளிலும் பெரிய பாடசாலைகளிற் காணப்படுதல் போன்ற அதிகார நிரலமைப்பும், பணியாட்சிப் பண்புகளும் காணப்படுகின்றன. மேலாதிக்க நிலையில் உள்ளோரைத் திருப்திப்படுத்தும் நடத்தைகளே பெண்களிடத்து உருவாக்கப்பட்டு வருகின்றன. சமத்துவமும் சமகணிப்பும் வறிய பெண்களுக்குக் கிடைக்காமற் போய்விடுகின்றன.
விலகல் நடத்தை அல்லது சமூக எதிர்நடத்தை என்ற மதிப்பீட்டில் பாடசாலைகளில் ஆண் பெண் வேறுபாடுகள் காணப்படுகின்றன. இத்துறையில் பெண்கள் மீது கறாரான அணுகுமுறை" களும் ஆண்கள் மீது அத்துணை கறாரான அணுகுமுறைகளும் பிரயோகிக்கப்படுதல் இல்லை. எடுத்துக்காட்டாக ஒர் ஆண் மாணவன் புகைபிடித்தலுக்கும் ஒரு பெண் மாணவி புகை பிடித்தலுக்கு" மிடையே சமூக உளப்பாங்கில் பெரும் வேறுபாடுகள் காட்டப்படுகின்றன. (கள ஆய்வு, கரவெட்டி, 27/4/2003) சமூக விலகல் நடத்தை சமூக எதிர்நடத்தை ஆகிவற்றைப் பொறுத்தவரை வசதியான பாடசாலைகளுக்கும் வறுமை நிலையில் உள்ள பாடசாலைகளுக்கு" மிடையே உளப்பாங்குநிலையில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.
வசதிமிக்க பாடசாலைகளில் பயிலும் மாணவர்கள் பிறந்தநாளைக் கொண்டாடாது விடுதல் விலகல் நடத்தையாகக் கருதப்படும். ஆனால் வறியபாடசாலைகளில் பயிலும் ஓர் ஏழைப்பெண் பிறந்தநாளை பாடசாலையிற் கொண்டாடுதல் ஏற்புடைய நடத்தையாகக் கொள்ளப்படுதல் இல்லை. வசதியான ஒரு மாணவர் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு வழங்கப்படும் ஊக்கல் வறிய பெண்களுக்குக் கிடைப்பதில்லை (கள ஆய்வு: உடுவில் 29/4/2003)
ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையே ஆபத்து விளிம்பில் (Atrisk) வேறுபாடுகள் காணப்படுகின்றன. உடற்காரணிகள்,
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா | 69

Page 39
சமூகக்காரணிகள், கற்றல் கற்பித்தலியற் காரணிகள் முதலியவை எதிர்மறையாக அமையும் பொழுது மாணவர்கள் ஆபத்து விளிம்புக்குத் தள்ளப்படுகின்றனர். உடலியற் குறைபாடு கொண்ட ஆண்கள் கற்பதற்குத் தரப்படுகின்ற ஊக்கல் பெண்களுக்குத் தரப்படுதல் இல்லை. உடலியற் குறைபாடு கொண்ட வறிய பெண்கள் பாடசாலைக் கல்வி இழந்தவர்களாகவே பெருமளவிற் காணப்படுகின்றனர்.
கற்றலிலும், அடைவுகளிலும் பின்னடைவுகள் ஏற்படுமிடத்து பெண்களின் கல்வி இயல்பாகவே இடைநிறுத்தப்படுகின்ற குடும்பச் சூழல் காணப்படுகின்றது. கற்றற் காரணிகள் பகுத்தாராயப்பட்டு ஊக்கல் வழங்குதலோ, தனியான சிறப்புக் கற்பித்தலை ஒழுங்" கமைத்தலோ வறிய குடும்பச் சூழலிற் கிடைப்பதில்லை (கள ஆய்வு, மல்வம் 30/3/2003)
வறிய பாடசாலைகளின் மாணவரது நடத்தை ஒழுங்கமைப்பில் பால்நிலை வேறுபாடுகள் காணப்படுகின்றன. பெண்கள் வரையறுக்கப்பட்ட சமூக இலக்குகளையும், வழிமுறைகளையும் (Means) உள்வாங்கி ஏற்று ஒழுகும் இணக்கமுறுவோராய் (Conformists) வாழ்வதற்குரிய பயிற்சிகளும் அனுபவங்களுமே பாடசாலைகளிலே தரப்படுகின்றன. வளமான பாடசாலைகள் மற்றும் வறிய பாடசாலைகளின் ஒழுக்காற்றுச் செயல்முறைகளில் ஆண்வினைப்பட்ட அறிகோடல் (Masculinised code) செல்வாக்கு" களே நடைமுறையில் மேலோங்கியுள்ளன.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா | 70

பெருந்தோட்டத்துறைப் பெண்களின் கல்வி
காலனித்துவ ஆட்சியின் உழைப்புச் சுரண்டலுக்கு பெருந்” தோட்டத்துறைப் பெண்களே மிகுதியாக உள்ளாக்கப்பட்டனர். பிரித்தானிய காலனித்துவம் தன்னிறைவுப் பொருளாதார நிலையைக் கொண்டிருந்த இந்நாட்டை ஏற்றுமதிப் பொருளாதார நாடாக நிலை மாற்றியது. மனித உழைப்பால் உருவாக்கப்பட்ட ஏற்றுமதிச் செல்வம் பிரித்தானிய கம்பனிகளுக்குச் சென்றடைந்தது. இத்தகைய பின்புலத்தில் பெருந்தோட்டத்துறையில் உருவாக்கப்பட்ட கல்விநடவடிக்கை சமூக ஒழுங்கமைப்புக்கும் பொருளாதார நடவடிக்கைகளுக்குமுரிய கட்டுப்பாட்டுக் கருவியாகப் பயன்படுத்தப்பட்டதேயன்றி மேல்நோக்கிய சமூக அசைவியத்தை ஏற்படுத்துவதாக அமைக்கப்படவில்லை. ஆனால் இலங்கையின் ஏனைய பகுதிகளில் வழங்கப்பெற்ற கல்வி சமூக அசைவியத்தை (Mobility) ஏற்படுத்துவதாய் அமைந்தமை அடிப்படை முரண்பாட்டை ஏற்படுத்தியது.
பெருந்தோட்டத்துறையின் கல்விநடவடிக்கை அங்கு நிகழும் உற்பத்திச் செயற்பாடுகளை மீள் உற்பத்தி செய்வதற்கு மட்டுமுரிய அறிவுக்கையளிப்பை நோக்கமாகக் கொண்டிருந்தது. (Beckford, G.L (1983) Persistant Poverty: London, Zedbooks) (6)_u(155G3g5TL"L_ĝ5துறையின் பொருளாதார நடவடிக்கைகளையும், சமூக வாழ்க்கை" யையும், குடும்ப வாழ்க்கையையும் ஒன்றிணைத்து நிலை நிறுத்தும் சமுதாயத்தை மீள் உற்பத்தி செய்யும் வகையிற் கல்வி ஒழுங்கமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
உழைப்பு வலுவைப் பெற்றுக் கொள்வதற்குரிய பயமுறுத்த" லாகக் கல்வி அமைந்து விடும் என்ற கண்ணோட்டம் தோட்ட முதலாளிகளிடத்து இருந்தமையால் இலங்கையின் ஏனைய பிரதேசங்களில் நிலவிய கல்விமுறைமையை பெருந்தோட்டங்களில்
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 171

Page 40
வினைத்திறனுடன் நிலைநிறுத்த அவர்கள் முயலவில்லை. அதேவேளை தமது குழந்தைகளின் எதிர்காலத்தைக் கல்வியால் முன்னேற்ற முடியும் என்ற ஆதங்கம் பெருந்தோட்டத் தொழிலாளர்களிடத்துக் காணப்பட்டது. கல்வி இலக்குகள் தொடர்பான இந்த முரண்பாடுகளுக்கிடையே தான் பெருந்தோட்டத்துறையின் கல்விச் செயற்பாடுகள் இயங்கிக் கொண்டிருந்தன. தொழிலாளர்களிடத்துக் கல்வி தொடர்பான உயர்ந்த இலக்குகள் காணப்பட்டாலும் பெருந்தோட்டக்கல்விக் கட்டமைப்பை உடைத்து முன்னேற முடியாது அவர்களின் வறுமை நிலை தடையாக அமைந்தது.
பெருந்தோட்டத்துறையில் நிகழ்ந்த பொருளாதாரச் செழிப்பின் நலன்கள் தொழிலாளர்களுக்குக் கிடைக்கப் பெறவில்லை. அதேவேளை பொருளாதார மந்தகால அழுத்தங்களைத் தாங்கும் சுமைதாங்கிகளாக தொழிலாளர்களும் குறிப்பாக தொழிலாளி வர்க்கப் பெண்களும் விளங்கினார்கள். தொழிலாளர்களுக்குரிய வேதனம் மிகவும் தாழ்ந்த நிலையிற் பராமரிக்கப்பட்டு வந்தது.
பெருந்தோட்ட முகாமைத்துவத்தின் உயர்மட்டத்திலும் இடைநிலை மட்டத்திலும் ஆண்களே இடம் பெற்றனர். இந்நிலை" யில் பெருந்தோட்ட முகாமைத்துவத்தில் ஆண்களின் புலக்காட்சியே மேலோங்கியிருந்தது. பெண் தொழிலாளர்களுக்கு ஆண்களிலும் குறைந்த வேதனம் வழங்கப்பட்டமை ஆண்களின் புலக்காட்சியின் ஒரு பிரதான பரிமாணமாகும். அதே வேளை வீடுகளில் நிலைபேறு கொண்டிருந்த தந்தை வழிக்கட்டுப்பாடுகளின் தாக்கங்களுக்கும் பெண்கள் உட்பட்டிருந்தனர். தொழிற்சாலை, குடும்பம் என்பவற்றுடன் சமூகத்தில் இடம் பெற்றிருந்த சாதியக் கட்டமைப்பும் பெண்களைத் தாழ்ந்த நிலைக்கு உட்படுத்தியிருந்தது.
பெருந்தோட்டக் கல்வியும் ஏனைய புலங்களைப் போன்று வரன் முறைக்கல்வி வரன்முறைசாராக்கல்வி என்ற இரு அமைப்புக்களைக் கொண்டிருந்தது. பெருந்தோட்டச் செயலாற்றுகையில் முக்கிய பிரிவினராக இருந்த கங்காணிமார் இரண்டுவிதமான பாடசாலை ஒழுங்கமைப்பை ஆரம்பத்தில் ஏற்படுத்தினர். (Gnanamuttu, G (1976), Education and the plantation workers in Sri Lanka, Colombo: Couneil of Churches) 69 (5 61605ust 607 பாடசாலைகள் கங்காணிமார், எழுதுவினைஞர்கள், முதலியோரின் பிள்ளைகள் கற்பதற்கென ஒழுங்கு செய்யப்பட்டன. எண், எழுத்து,
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா | 72

வாசிப்பு என்பவற்றுடன் ஒரளவு ஆங்கில அறிவும் இங்கே வழங்கப்பட்டது.
கங்காணிமார், எழுதுவினைஞர்கள் மற்றும் மேற்பார்வையாளர் முதலியோரின் ஆண் பிள்ளைகள் தமது தந்தையரின் தொழில்களைப் பின் தொடர்ந்து பெற்றுக்கொள்வதற்குரிய அறிவுக்கையளிப்பு இங்கு இடம்பெற்றது. இத்துறையிற் பெண்கள் புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது வகையான பாடசாலை ஒழுங்கமைப்பு "லைன்பாடசாலை" எனப்பட்டது. தொழிலாளர்களின் சிறார்கள் கற்பதற்கென இது ஒழுங்கமைக்கப்பட்டது. அடிப்படைத் தமிழ் அறிவை வழங்குதல் இப்பாடசாலைகளின் நோக்கமாக அமைந்தது. எழுத வாசிக்கத் தெரிந்திருத்தலும், "நல்ல" தொழிலாளர்களாகத் தொழிற்படுவதற்குரிய அறிவுக் கையளிப்பும் இங்கே நிகழ்ந்தது. இப்பாடசாலைகளில் யாழ்ப்பாணத்திலிருந்து வரவழைக்கப்பட்ட ஆண் ஆசிரியர்களே கற்பித்தலில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இங்கே ஒரு முக்கிமான தகவலைக் குறிப்பிட வேண்டியுள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் முதல் அரைக்கூற்றிலும், இந்து சமய நிறுவனங்கள், கத்தோலிக்க மற்றும் புரெட்டெஸ்தாந்து நிறுவனங்கள் ஆகியவற்றால் இயக்கப்பட்ட ஆசிரிய கலாசாலைகளிலே பயிற்சி பெற்றோர், பெருந்தோட்டப் பாடசாலைகளிலே கற்பிப்பதற்கு வரவழைக்கப்படவில்லை. மாறாக தோட்டத்துரைமாருக்கு ஏதோ ஒரு விதத்தில் அறிமுகமாகிய எட்டாம் வகுப்பு அல்லது எஸ்.எஸ்.சி தமிழ் மொழிமூலம் சித்தியடைந்தவர்களே யாழ்ப்பாணத்திலிருந்து ஆசிரியர்களாக குறைந்த சம்பளத்துக்கு வரவழைக்கப்பட்டனர். எதுவித பயிற்சியுமற்ற இவர்களால் வினைத்திறனுடன் கற்பிக்க முடியாமலிருந்தது. இந்த நிலை ஒருவகையிலே தோட்ட முதலாளிகளுக்கு அனுகூலமாகவும் இருந்தது. தொழிலாளர்களின் இயல்புகளைத் தொடர்ந்து பராமரித்தலும் தக்க வைத்தலுமே இப்பாட" சாலைகளின் தலையாய நோக்காக அமைந்தது. தொழிலாளர்களைத் தாழ்ந்த நிலையில் வைத்திருப்பதற்கென உருவாக்கப்பட்ட இக்கல்விமுறை தொழிலாளர்களின் விடுதலைக்கோ, அங்குள்ள பெண்களின் தளைநீக்கத்துக்கோ எவ்வகையிலும் பங்களிப்புச் செய்வதாக அமையவில்லை.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா | 73

Page 41
இதே வேளை தோட்ட நிர்வாகிகள் தமது ஆண்பிள்ளைகளை நகரங்களிலுள்ள பெரிய பாடசாலைகளுக்கு அனுப்பத் தொடங்கினர். பெருந்தோட்டத்துறையில் கல்வியால் ஈட்டப்படக் கூடிய அனுகூலங்களை இவர்களே அனுபவிக்கலாயினர்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கல்வியில் சிறப்பார்ந்த விசையாக அமைந்த வரன்முறை சாராக்கல்விச் செயற்பாடுகள் ஆய்வாளர்களின் கவன ஈர்ப்பைப் பெறுகின்றன. கலைச் செழுமைமிக்க நாட்டார் பாடல்கள், கதைகள், தொன்மங்கள் முதலியவற்றை முதிய ஆண்களும் பெண்களும் இளைய தலைமுறையினருக்குக் கையளிப்புச் செய்தனர். பெண்தொழிலாளர்கள் தமது நடைமுறைவாழ்க்கை அனுபவங்களைப் பாடல்களாக்கிப் பாடியமை எழுத்து வடிவில் இன்னமும் முழுமையாகத் தொகுக்கப்படாமை குறிப்பிடத்தக்கது. பெண்பாலார் பாடிய நாட்டார் பாடல்கள் தனித்துக் தொகுக்கப்படாமை தமிழியலிலே காணப்படும் ஒரு பொதுப்பண்பு. மேலும் பெண்பாலார் பாடிய குடும்பம் சார்ந்த பாடல்கள் தொகுப்புக்களில் ஒப்பீட்டளவில் மேலோங்கியுள்ளனவேயன்றி சுரண்டலுக்கு உள்ளான தொழில் வாழ்க்கைப் பாடல்கள் முழுமையாகத் தொகுக்கப்பட வேண்டிய தேவை புலப்படுத்தப்படுகின்றது.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து பெருந்தோட்டப் பாடசாலைகள் தனிப்பிரிவாகவே வகைப்படுத்தப்பட்டன. நாட்டிலுள்ள ஏனைய பாடசாலைகளோடு ஒப்பிடும் பொழுது குறைந்த நேர அளவிலும் எளிமையான பாடங்களுடனும் பெருந்தோட்டப் பாடசாலைகள் இயக்கப்பட்டன. இப்பாடசாலைகளில் மாணவரின் வரவில் ஒழுங்கீனம் காணப்பட்டது. பெண்மாணவிகளின் வரவு மேலும் பின்னடைவுகளைக் காட்டியது. பெண் சிறுமிகளுக்கு ஏற்பட்ட நோய்கள் அவர்களது கல்விக்குத் தடையாயிற்று.
கலாநிதி கன்னங்கரா அவர்களால் முன்மொழியப் பெற்ற (1944) இலவசக் கல்வித்திட்டத்திற் பெருந்தோட்டப் பாடசாலைகள் புறக்கணிப்புக்கு உள்ளானமை தொழிலாளர் வர்க்கக் கண்ணோட் டத்திலும் இனத்துவக் கண்ணோட்டத்திலும் நோக்கப்படவேண்டிய விடயமாகும். இவற்றின் தொடர்ச்சியும் வளர்ச்சியுமாகவே
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 174

வாக்குரிமை பறிப்பு, பெருந்தோட்டப் பாடசாலைகள் 1960 ஆண்டுக்குப் பின்னர் அரச முகாமைத்துவத்தின் கீழ் கொண்டுவரப்படாமை முதலியவை அரங்கேறின.
பெருந்தோட்டச் சிறார்களின் கல்விமொழியாக தாய் மொழியாகிய தமிழே இருக்க வேண்டுமென்பதை அமரர் எஸ்.பி.வைத்திலிங்கம், அமரர் செள.தொண்டமான் முதலியோர் திடமுடன் வலியுறுத்தினர். மேலும் பல தொழிற்சங்க வாதிகள் இக்கருத்துக்கு ஆதரவு வழங்கினர். 1970 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பெருந்தோட்டத்துறையில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்தச் சட்டம் உட்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் தோட்டத் தொழிலாளர் மத்தியில் அடிப்படையான முன்னேற்றங்களையோ அல்லது கல்வி நடவடிக்கைகளிலே பெரும்பாய்ச்சல்களையோ ஏற்படுத்தவில்லை.
1980 ஆண்டுகளுக்குப் பின்னர் பெருந்தோட்டத்துறைக் கல்வியில் படிப்படியான அபிவிருத்திநிலைகள் ஏற்படலாயின. பெருந்தோட்டத்துறைத் தொழிற் சங்கங்கள், மற்றும் அங்கு உருவாகிய ஆய்வறிவாளர்கள் தரம்மிக்க கல்வியின் தேவையை வலியுறுத்தினர். புதிய பாடசாலைக் கட்டடங்கள், தளபாடங்கள், இலவசபாடநூல், இலவச சீருடைகள், ஆசிரிய வளமேம்பாடு என்பவற்றுடன் தேசிய கல்வி வீச்சினுள் பெருந்தோட்டப் பாடசாலைகள் படிப்படியாக இணைக்கப்படலாயின.
பெருந்தோட்டத்துறையில் மூன்று தலைமுறையாக நிகழ்ந்த பெண்கல்வி முன்னேற்றத்தை பாட்டி, தாய், மகள் என்ற நிஜமான பாத்திரங்களைச் செவ்விகண்டு ஆய்வாளர் அஞ்யெலா டபிள்யு GSt Lai 656T35ugiratiti. (Little, A.W(1999). Labouring to Learn: London: Macmillan Prees Ltd.) GLC) is G5ITL L-35.60 pufai பெண்கள் கல்வியிலே படிப்படியான முன்னேற்றம் ஏற்பட்டு வருகின்றதாயினும், இலங்கையின் ஏனைய புலங்களோடு ஒப்பிடும் பொழுது பின்னடைவுகள் காணப்படுதல் குறிப்பிடத்தக்கது. பட்டப்படிப்புக்கள், பின்பட்டப்படிப்புக்கள், முதலியதுறைகளிலே பெருந்தோட்டத் தொழிலாளி வர்க்கப் பெண்களை மேலுயர்த்துவதற்குரிய ஒன்றிணைந்த கட்டமைப்புவசதிகளின் தேவைகள் இன்று உணரப்படுகின்றன.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா | 75

Page 42
தொழிலாளர்கள் பொருளாதார எல்லைநிலையில் வாழ்வதும், பெண்கள் குடும்பச் சுமையைத் தாங்குவோராய் இருத்தலும், பெண்களின் உயர்கல்வி முன்னெடுப்புக்களைப் பாதிப்படையச் செய்கின்றன.
பாடசாலைச் செயல்முறைக்குச் சமாந்தரமாக இன்று வளர்ச்சி பெற்றுவரும் பிரத்தியேகக் கல்வி நிலையங்களிலே கற்றல் பல்கலைக்கழக நுழைவுப் போட்டிக்குரிய தவிர்க்க முடியாத தேவையாக மாறி வருகின்றது. ஏழ்மை நிலையிலும் எல்லை நிலையிலுமுள்ள பெருந்தோட்டத்துறைப் பெண் மாணவிகளுக்கு தரம் மிக்க பிரத்தியேகக் கல்வியைப் பெற்றுக் கொள்ளல் ஒப்பீட்டளவிற் கடினமாகவுள்ளது.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 178

பால்நிலையும் இலங்கையின் கல்வியும்
பால் நிலையும் இலங்கையின் கல்வியும் தொடர்பான ஆய்வொன்று 1991ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது (SJayaveera, (1991) Colombo - Cenwor) புள்ளிவிபர அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வின் முடிவுகளை இலங்கை முழுவதற்கும் பொதுமைப்படுத்த முடியுமா என்ற கேள்வி முதற்கண் எழுகின்றது. மேலும் இலங்கையைப் பொறுத்தவரை எண்ணளவு ஆய்வுகளும் பண்பளவான ஆய்வுகளும் வேறுபட்ட முடிவுகளைத் தந்துள்ளமை" யும் குறிப்பிடத்தக்கது. எண்ணளவு ஆய்வுகள் கணிதநிலைத்திட்ட நுட்பங்களை வெளிப்படுத்திய அளவுக்கு மனவெழுச்சிநிலை வெளிப்பாடுகளுக்கும் உணர்ச்சிக்கோல மூட்டங்களுக்குமுரிய வெளிப்பாட்டு நுண்மைகளுக்கும் அழுத்தங்கொடுக்கவில்லை. உணர்ச்சிகளை எண்பெறுமானங்களுக்குக் கொண்டு செல்லல் சிலசமயங்களில் அபத்தமாகியும் விடுகின்றது.
ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கும் பாடசாலைகளின் அடைவு மட்டங்களைப் பொறுத்தவரை பால் நிலை வேறுபாடுகள் பொருண்மை கொண்டதாக அமையவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அப்பாடசாலைகளிற் பெண் மாணவிகள் எதிர்நோக்கும் உளநிலைப்பட்டதாக்கங்கள் உள்ளன. அவற்றைப் பண்பு நிலை ஆய்வுகள் வழியாக வெளிக்கொண்டுவர வேண்டியுள்ளது.
வறிய கலவன் பாடசாலைகள் வசதியான கலவன் பாடசாலைகள் என்பவற்றைப் பொறுத்தவரை பெண்களின் அடைவுகளில் வேறுபாடுகள் காணப்படுதல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தனித்து ஆண்கள் அல்லது பெண்கள் மட்டும் கல்வி கற்கும் பாடசாலைகளை எடுத்துக் கொண்டால் பால்நிலை தவிர்ந்த பிறகாரணிகளே அடைவுகளில் தாக்கம் விளைவித்தல் கண்டறியப்பட்டுள்ளது.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா | 77

Page 43
ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பாடசாலைகளின் பெண்களின் கல்வி அடைவுகளைப் பொறுத்தவரை ஒரே சீர்நிலை (Consistent) காணப்படாமையும் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. சிலரது ஆய்வுகளில் பெண்களின் அடைவுகள் உயர்நிலையில் காட்டப்படுகின்றன. வேறு சிலரது ஆய்வுகளில் ஆண்களின் அடைவுகள் மேலோங்கியுள்ளமை காட்டப்பட்டுள்ளது.
இடைநிலைக்கல்வியில் க.பொ.த (சா.த) பெறுபேறுகளை எடுத்துக்கொண்டால் பால்நிலை வேறுபாடுகள் பொருண்மை கொண்ட நிலையில் வெளிப்படவில்லை. ஆனால் மொழி மற்றும் அழகியற் கலைகளைப் பொறுத்தவரை பெண்களின் அடைவுமட் டங்கள் மேலோங்கியும் கணிதம், விஞ்ஞானம் முதலிய பாடங்களைப் பொறுத்தவரை ஆண் களின் அடைவு மட்டங்கள் மேலோங்கியும் காணப்படுகின்றன. ஆனால் கல்வியடைவுகளிலே பொதுவாக பின்தங்கிய சில பாடசாலைகளில் கணித பாடத்தில் பெண்களின் ஆற்றுகை ஆண்களின் ஆற்றுகையிலும் மேலோங்கிய நிலையிலே காணப்படுகின்றது.
உலகளாவிய முறையில் கல்வியும் பால்நிலையும் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் இலங்கையின் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குச் சில வழிகளில் உதவுவதாக" வும் அமையும். மொழிசார்ந்த ஆற்றல்களில் ஒப்பீட்டளவில் பெண்கள் மேலோங்கியிருத்தலும், கணிதம் விஞ்ஞானம் முதலாம் பாடங்களின் ஆற்றல்களில் ஆண்கள் மேலோங்கியிருத்தலும் பொதுவான தோற்றப்பாடுகளாகவுள்ளன. இந்த வேறுபாடுகளை உயிர்மரபுக் காரணிகளுடன் தொடர்புபடுத்தி முன்னைய ஆய்வாளர்கள் விளக்கினார்கள். பின்னர் இக்கருத்து தள்ளுபடிக்கு உள்ளாயிற்று.
பால்நிலை தொடர்பாக சமூகம் வடிவமைத்த பாத்திரச் செயற்பாடுகளே இந்த வேறுபாடுகளுக்குக் காரணம் என உறுதி செய்யப்பட்டது. சமூகம் உருவாக்கிய பால்நிலை தொடர்பான பாத்திரமேற்கும் செயற்பாடுகளைப் பாடசாலைகள் மீள வலியுறுத்தி உறுதிப்படுத்தி வருகின்றன. சமூக நியமங்களே கணிதத்தைப் புறக்கணிக்கும் பதகளிப்பு நிலையைப் பெண்களிடத்து ஏற்படுத்தி யுள்ளது. விஞ்ஞானிகளின் பட்டியலிலும் கணிதப்பேராசிரியர்களின் பட்டியலிலும் ஆண்களே மேலோங்கியுள்ளார்கள் என்று
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 178

பாடசாலைகளிலே சொல்லிக்கொடுக்கப்படுகின்றது. ஆனால் சந்தர்ப்பங்கள் எவ்வாறு ஆண்களுக்குச் சாதகமாக இருந்தன என்பது பாடசாலைகளிலே சொல்லிக் கொடுக்கப்படுதல் இல்லை.
ஆண்மைவினைச் (Masculinity) செயற்பாடுகளுடன் விஞ்ஞான பாடம் ஒன்றிணைந்துள்ளதான ஒருவித போலியான புலக்காட்சியை ஏற்படுத்துமாறு சமூகத்தாற் பெண்கள் தூண்டப்பட்டுள்ளனர். பெண் மை இயல்புக்கு அதுமாறுபாடானது என்ற கருத்தேற்றமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எமது கல்விச் சூழலில் நிகழும் சமூகமயமாக்கற் செயல்முறை விஞ்ஞான பாடங்களைப் பொறுத்தவரை ஆண்களுக்குச் சாதகமான நிலையையும் பெண்களுக்குப் பாதகமான பரிமாணங்களையும் கொண்டுள்ளது. வசதியான பாடசாலைகளிலே படிக்கும் பெண்களே மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளுக்கு மேல்நோக்கி உயரமுடிகின்றது.
இலங்கையின் கல்வியைப் பொறுத்தவரை பால்நிலையும், வர்க்கநிலையும் ஒன்றிணைந்து அடைவுகளிலே தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன.
பெண்களின் அரசியல் வட்டம் வெளியிட்டுள்ள கொள்கை விளக்க அறிக்கையில் (2005/6) கல்வி தொடர்பான முக்கிய கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இலங்கையைப் பொறுத்தவரை பெண்களினதும், பெண்பிள்ளைகளினதும் கல்வி எழுத்தறிவு மட்டம் சாதகமான நிலையில் அமைந்துள்ளதாயினும் பெருந்தோட்டத்துறையிலும் குறைந்த வருமானமுள்ள கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள பெண்களின் எழுத்தறிவு தாழ்ந்த நிலையிலேயே காணப்படுகின்றது. பெண்கள் பற்றிய எதிர்மறையான உளப்பாங்குகள் பாடசாலைகளிலும், மொழிப்பாடநூல்களிலும் இடம் பெற்று வருதல் அந்த அறிக்கையிலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (ப.21)
பால் நிலைப்பாரபட்சமற்ற வகையில் முதல் நிலை மற்றும் இடைநிலைக்கல்வி மட்டங்களை பெருந்தோட்டம், கிராமப்புறம், நகரப்புறம் ஆகியவற்றில் விரிவாக்குதல் வேண்டுமெனவும், பெண் பிள்ளைகளுக்குரிய கட்டாயக் கல்வியை நாடளாவிய முறையில் வலியுறுத்திச் செயற்படுத்த வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 179

Page 44
மேலும் பாடநூல்களில் பால்நிலைப்பாரபட்சம், பால்நிலை மேலாதிக்கவாதம், இனவாதம் இடம் பெறுதல் கூர்ந்து கணிகாணிக்கப்படல் வேண்டுமெனவும், பால் நிலைச் சமத்துவம் தொடர்பான கூருணர்வை பாடநூல்களிலும், பாடநெறிகளிலும் சேர்த்துக் கொள்ளல் வேண்டுமெனவும் கொள்கை அறிக்கையில் முன்மொழியப்பட்டுள்ளது.
வாழ்க்கைத் தொழில், தொழில்நுட்பம், விஞ்ஞானம், நவீன தொழில்நுட்பங்கள் முகாமைத்துவம் முதலியவற்றுக்கான பயிற்சித் திட்டங்களுக்குப் பதிவுகளை மேற்கொள்ளும் பொழுது பால்நிலைச் சமமின்மையைக் குறைத்தலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிறுவனங்களின் சிக்கனப்படுத்தல் நடவடிக்கைகளால் வேலை நீக்கப்பட்ட பெண்கள், தொழிலற்ற பெண்கள் மற்றும் எழுத்தறிவற்ற பெண்கள் ஆகியோருக்கு முதியோர்க்கல்வி, நடைமுறைத் தொழிற்பாடு சார்ந்த எழுத்தறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள் தொடர்பான செயற்றிட்டங்களை உருவாக்குதலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் யுத்தத்தால் இடம்பெயர்ந்” தும் இழப்புக்களை அடைந்தும் வாழும் பெண்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள் வழங்கப்படல் வேண்டுமெனவும் விதந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியரிடத்தும் பாடசாலை மாணவர்களிடத்தும் பல்கலைக்" கழக மாணவர்களிடத்தும் பால்நிலைச் சமத்துவம் தொடர்பான வாதவிடயங்கள் பற்றிய கூருணர்வை ஏற்படுத்தல் வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பால்நிலைச் சமத்துவத்தை நோக்கி இலங்கையின் கல்விச் செயற்பாடுகளைப் பல பரிமாணங்களில் முன்னெடுக்க வேண்டியுள்ளது. கல்வித்திட்டமிடல், கலைத்திட்டச் செயற்பாடுகள், இணைந்த கலைத்திட்டச் செயற்பாடுகள், கல்விநிர்வாகம், கல்விக்கான நிதி மற்றும் வளப்பங்கீடு, ஆசிரிய வாண்மை உருவாக்கம் போன்ற பல பரிமாணங்களினூடாகவும் முன்னெடுக்கும் பொழுதுதான் உரிய இலக்குகளை அடைய முடியும்.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 180

மேலைப்புலத்துப் பெண்கள் கல்வியின் வளர்ச்சி
சமூக நிறுவனங்களின் வளர்ச்சியோடு இணைந்த தோற்றப்பாடாக வரண்முறையான கல்வியமைப்பு வளரலாயிற்று. பெண்களுக்குரிய அறிவு மற்றும் அனுபவக்கையளிப்புக்களில் ஆரம்பநிலைகளில் வரன்முறைசாரா (Non formal) வழிமுறைகளே ஒப்பீட்டளவில் மேலோங்கியிருந்தன. வரன்முறையான கல்விநிறுவனங்கள் பெருமளவில் ஆண்களைக் குவியப்படுத்தியே கட்டுமை செய்யப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தன. தொண்மையான கிரேக்கக் கல்விமுறையிலிருந்தே இந்தத் தோற்றப்பாட்டைக் காணமுடியும்.
தொன்மையான கிரேக்க மரபில் ஆண்களுக்குரிய கல்வியில் தருக்க முறைமையைக் குவியப்படுத்தும் பாடங்களும் பெண்களுக்குரிய கல்வியில் தாய்மைக்குரியதும், குடும்பப் பராமரிப்புக்குரியதுமான பாடங்களும் இடம் பெற்றிருந்தன. சோக்கிரதீஸ் மற்றும் பிளேட்டோ ஆகியோர் அறிவு நிலையில் உண்மையைத் தேடிய வேளை கிரேக்க சமூகத்தில் பெண்களின் நிலை பாராமுகமாகவே விடப்பட்டுள்ளது. பெண்கள் ஆண்கள் மீது தங்கியிருப்போராய் வாழ்ந்தனர். (A.J.Grant, 1958)
நுண்மதியாளர்கள் ஆட்சியாளராக வரும் பொழுது நல்லாட்சி மேம்படும் என்றும், கல்வியால் சமூக அடித்தளத்திலிருந்து மக்கள் மேம்பட்டு உயர முடியும் என்று விளக்கிய பிளேட்டோ பெண்களின் நிலையை தமது கண்ணோட்டத்துக்குள் கொண்டுவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கிறிஸ்துவுக்கு முற்பட்ட அறிவாக்கங்களில் பெண்கள் “விடப்பட்டவர்களாகவே" காணப்படுகின்றனர்.
கிறீஸ்துவுக்குப் பின்னர் மேலைப்புல சமூக வளர்ச்சியிலும் கல்வி வளர்ச்சியிலும் ரோமன் கத்தோலிக்கதிருச்சபை வலிமைமிக்க நிறுவனக்கட்டமைப்பைக் கொண்டிருந்தது. பழைமை வாய்ந்த சமயச் சடங்குகள் திருச்சபையால் மிகுந்த கட்டுப்பாடுகளுடன்
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா | 81

Page 45
மீளவலியுறுத்தப்பட்டன. மாட்டின் லுTதர் (1517) ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் சமய நடைமுறைகளைத் திறனாய்வுக்கு உட்படுத்தினாலும், பால்நிலை தொடர்பான ஐரோப்பிய சமூகக் கட்டமைப்பு தொடர்ந்து வலிமையுற்ற நிலையிலே இயங்கிய வண்ணமிருந்தது.
பதினாறாம் நூற்றாண்டில் முகிழ்த்த கல்வி மற்றும் கலைகள் தொடர்பான மறுமலர்ச்சி (The Renaissance) நடவடிக்கைகள் திருச்சபையின் மரபுவழிச் செயற்பாடுகளுக்கும் நடவடிக்கைகளுக்" கும் வலுவூட்டின. தொண்மையான செவ்விய இலக்கியப் புதையல்களைத் தேடுதலும், தெளிதலும், கையளிப்புச் செய்தலும் மறுமலர்ச்சியிற் சிறப்பிடம் பெற்றன. இலக்கியம், ஒவியம், இசை, கட்டடக்கலை முதலாம் துறைகளில் ஆக்கவடிவங்கள் உருப்பெறலாயின. மறுமலர்ச்சியின் அறிகைச் செயற்பாடுகள் தந்தைமை ஆதிக்கப் பெறுமானங்களைத் தழுவியும், வலியுறுத்தியும் திடப்படுத்தியும் வந்தமை குறிப்பிடத்தக்கது.
பதினெட்டாம் நூற்றாண்டின் ஐரோப்பிய அறிவு மரபில் பகுத்தறிவு விசை மேலோங்கலாயிற்று. பகுத்தறிவுச் செயற்பாடுகள் கல்வி சார்ந்ததும் சமூகம் சார்ந்ததுமான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தலாயின. சமூக விழுமியங்களும், சமூக ஏற்றத்தாழ்வுகளும், ஆதிக்க நிலைகளும் பகுத்தறிவு விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டன. மாறுபட்ட அறிகை விவாதங்கள் வளர்க்கப்படலாயின.
பிரெஞ்சு நாட்டில் நிகழ்ந்த பதினாறாம் லூயி மன்னனின் கொடுங்கோலாட்சியில் பல நிலைகளிலும் மக்கள் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகினர். மன்னர் ஆட்சியை ஒழிக்கும் அறிவு வளர்ச்சியில் விடுதலை, சமநோக்கு, சமத்துவம் ஆகியவை வலியுறுத்தப்பட்டன. இக்கருத்துக்களை முதன்மைப்படுத்தி பிரெஞ்சுப் புரட்சி முன்னெடுக்கப்பட்டது. இப்புரட்சியில் ஆண்களுடன் பெண்களும் பங்குபற்றினார்களாயினும், அது பெண்களுக்கு விமோசனமளிக்காத புரட்சியாகவே அமைந்தது. பெண்களின் வாழ்க்கையிலும் நிலையிலும் இந்தப்புரட்சி எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. வால்டர், ரூசோ, திடராட் முதலியவர்களது எழுத்தாக்கங்கள், அறிவு நிலையிலே பிரான்சியப் புரட்சிக்குத் தூண்டுதலளித்தமை குறிப்பிடத்தக்கது. இவர்களுள் கல்வியும் கலைத்திட்டமும் பற்றிய கூடுதலான ஆக்கங்கள் ரூசோவினால் வெளியிடப்பட்டன. எமிலி
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா | 82

என்ற பாத்திரன் வழியாக ஆண்மை மேம்பாட்டுக் கலைத்திட்டக் காட்டுருவொன்றை ரூசோ முன்வைத்தார். புறத்தேயுள்ள இயற்கை" யின் வலிமைகளைத் தமக்குச் சாதகமாக்கி உடலையும் உள்ளத்தை" யும் வளம்படுத்தி வளர்க்கும் அனுபவங்களை உள்ளடக்கிய கல்விக்கு எமிலி உள்ளாக்கப்படுதல் முன்மொழியப்பட்டுள்ளது. அதே வேளை சோபி என்ற பெண் பாத்திரத்தின் வழியாக பெண்மைக்" கெனச் சமூகம் கட்டுமை செய்த அனுபவங்களை வழங்கும் கல்வி பற்றி அவர் விளக்கினார்.
ரூசோ வலியுறுத்திய இயற்பண்புநெறி ஆணும் பெண்ணும் இயற்கையிலே வேறுபட்டதன்மைகொண்டவர்கள் என்ற நிலையில் இருபாலாருக்கும் இடையே சமூகத்தால், நிலைநிறுத்தப்பட்ட ஏற்றத்தாழ்வுகளை ஏற்பதாகவும், அதற்குரிய கல்வி முறைமையைக் கட்டமைப்புச் செய்வதாகவும் அமைந்தது.
மக்களின் இறைமை தொடர்பான கருத்துக்களை வலியுறுத்திய ரூசோ ஆண் பெண் சமூக இயல்புகளைப் பகுத்து நோக்கவில்லை. பிரெஞ்சு சமூகத்தில் பெண்கள் பல நிலைகளிலும் ஆண்கள் மீது தங்கியிருப்போராய் வாழ்ந்த அவலங்கள் அவரின் எழுத்தாக்கங்களிலே வெளித்துலங்கல் கொள்ளவில்லை.
சமூகத்திலே இரண்டாம் பட்சமாக வாழும் பெண்களின் நிலை மாற்றப்படல் வேண்டும் என்பதை தமது எழுத்தாக்கங்களால் வலியுறுத்தியவர்களுள் ஆங்கிலப் பெண் எழுத்தாளர் மேரி 34656röGuit Got 5piti (Mary Wollstone Craft) dipliuit 53 (55. Iபிடத்தக்கவர். ஆண்களுக்குரிய உரிமைகள் பெண்களுக்கும் உண்டென வலியுறுத்திய அவர் பெண்களுக்குரிய குணவியல்குள் ஆண்களாற் கட்டுமை செய்யப்பட்டன என்பதை வெளிப்படுத்தினார்.
ஆண்களின் ஆதரவில் பெண்கள் வாழவேண்டிய நிலை காணப்படுவதனால் ஆண்களின் விருப்பங்களுக்கு ஏற்றவாறு வாழ வேண்டிய நடப்பியல் உருவாக்கம் பெற்றமையும் அவராற் சுட்டிக் காட்டப்பட்டன. இந்த அடிப்படையிலேதான் பெண்களுக்குரிய கல்வியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலை மாற்றப்படுவதற்கான கல்வியை உருவாக்கி தற்சார்பு உள்ளவர்களாகப் பெண்களை வாழச் செய்யவேண்டுமென்ற விசை கொண்ட சிந்தனை அவரால் வெளியிடப்பட்டது.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா | 83

Page 46
பிரான்சுப் புரட்சி மற்றும் அமெரிக்கப்புரட்சி ஆகியவை ஆண்களின் ஆதரவில் வாழும் பெண்களின் நிலையில் அடிப்படை மாற்றங்களை உருவாக்காத அரசியற் பரிமாணங்களையே கொண்டிருந்தன.
ஐரோப்பாவில் வளர்ச்சி பெற்று வந்த கல்வி நிறுவனங்கள் சமய நிறுவனங்களினால் உருவாக்கி வளர்க்கப்பட்டவையாக இருந்தன. குடும்பத்தைப் பராமரிப்பதற்குரிய கல்வி அனுபவங்களே பெண்கள் கல்வியின் உள்ளடக்கமாக அமைந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து பெண்களுக்கென தனியான கல்வி நிறுவனங்களை ஆக்கும் முயற்சிகள் வளர்ச்சி பெற்றனவாயினும், அவை பாரம்பரியமான கல்வி உள்ளடக்கத்தையே கையளிப்புச் செய்தன.
ஐரோப்பாவிலே உருவான தொழிற்புரட்சியின் தாக்கங்கள் மரபு வழிக்குடும்பக் கட்டமைப்பிலும் தொழிற்பாடுகளிலும் அதிர்வுகளையும் மாற்றங்களையும் ஏற்படுத்தியவேளை, பெண்கள் முன்னரிலும் கூடுதலான சுரண்டல் நிலைக்குத் தள்ளப்பட்டனர். பெண்கள் வீட்டு வேலைகளைச்சுமக்கும் மரபு வழித் தொழிற்பாடுகளுடன் தொழிற்சாலைக்குச் சென்று வாழ்க்கையை நடத்திச் செல்லவேண்டிய அவல நிலைக்கு உள்ளாக்கப்பட்டனர். தொழிற்புரட்சி குடும்பத்திலும் தொழிற்சாலையிலும் சுரண்டப்படும் நிலைக்கும் வறியபெணிகளைத் தள்ளியது. முதலாளித்துவத்தின் மிகக் கூடுதலான சுரண்டலுக்கு வறிய பெண்களே உள்ளாக்கப்பட்டனர். வயது குறைந்த ஆண்களும் பெண்களும் கல்விச் செயற்பாடுகளின்றி தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டனர்.
கல்விச் செயற்பாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சியாக மதம் மாற்றும் நடவடிக்கை கருதப்பட்டது. மதம் மாற்றுவதற்குக் கருவியாகக் கல்வி பயன்படுத்தப்பட்டது. பெண்களை மதம் மாற்றுவதன் வாயிலாக மத மாற்றச் செயற்பாடுகளைத் தீவிரப்படுத்தலாம் என்பதை புரொட்டெஸ்தாந்தின் உட்பிரிவில் ஒன்றாகிய எவாஞ்சலிசனத்தினர் உணர்ந்து பெண் கல்வியையும் மதமாற்றத் தையும் தீவிரப்படுத்தினர். பல்வேறு சமூக நலத்திட்டங்களுடன் இணைந்ததாக இவர்களது செயற்பாடுகள் அமைந்தன. இந்த இயக்கம் அமெரிக்காவிலே தாக்கம் விளைவித்த அளவுக்கு ஐரோப்பாவிலே தாக்கங்களை ஏற்படுத்தவில்லை என்பது
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா | 84

குறிப்பிடத்தக்கது. இதேவேளை மதம் மாற்றும் இயக்கங்கள், காலனித்துவ நாடுகளின் பெண்கல்வி விரிவாக்கத்தைத் தூண்டின.
உலக அனுபவங்களைப் புறநிலைப்படுத்தி அறிகை நிலைக்கு உட்படுத்திய மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் ஆகியோரின் எழுத்தாக்கங்கள் "சுரண்டல்” என்ற எண்ணக்கருவுக்கு சமூக நிலைப்பட்டதும், அறிவு நிலைப்பட்டதுமான விளக்கங்களைத் தந்தன. பேரண்ட நிலையிலும், நுண்பாக நிலையிலும் நிகழும் சுரண்டலின் ஆழ்ந்த வேர்களை மார்க்சிசம் சுட்டிக்காட்டியது. சுரண்டலை ஒழிப்பதற்குரிய அறிகைத் தளத்தையும் மார்க்சிசம் வழங்கியது.
பெண்களின் தளை நீக்கத்துக்குரிய விசைகளையும் பெண்கல்வி விரிவாக்கத்துக்குரிய நடவடிக்கைகளையும் மார்க்சியம் முன்னெடுத்தது. ரூசியா மற்றும் சீனாவில் நிகழ்ந்த சோசலிசப் புரட்சிகள் சுரண்டலில் இருந்து பெண்களை முற்றாக விடுவிக்கவில்லை என்ற திறனாய்வும் முன்மொழியப்பட்டுள்ளது. மார்க்சியத்தை விரிவாக்குவதற்கும் விசை கொள்ளச் செய்வதற்கும் இந்த முன்மொழிவைப் பரிசீலித்தல் அவசியமெனக் கருதப்படுகின்றது.
மார்க்சியத்தின் செல்வாக்கு ஐரோப்பிய நாடுகளிலே விரவிப்பரவ பெண்கள் கல்வி, பெண்களின் உரிமைகள், பெண்களைத் தொழிலுக்கு அமர்த்துதல், போன்ற துறைகளில் சட்டவாக்கங்கள் இடம் பெறத் தொடங்கின. ஆனால் இந்தச் சட்டவாக்கங்கள் நடைமுறையில் பெண்களின் தளைகளை நீக்கியுள்ளனவா என்பதும் கேள்விக்குரியது.
படித்த பெண்களிடத்தும், தொழிலாளர் கழகங்களில் இணைந்த பெண்களிடத்தும் மார்க்சியம் ஏற்படுத்திய செல்வாக்குகளின் விளைவாக பெண்கள் வாக்குரிமைப் போராட்டங்களில் ஈடுபட்டனர். பெண்களிடத்து பலதுறைகளிலும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய கல்விச் செயற்பாடுகளிலும் எழுத்தாக்கங்களிலும் ஈடுபாடு ஏற்படலாயிற்று. பெண்களுக்குரிய பருவ இதழ்கள், பெண்களுக்குரிய நலன்புரிக் கழகங்கள் முதலியனவும் வளர்ச்சியடையத் தொடங்கின.
தனி நபர் சொத்துரிமையை அகற்றுதல் என்ற மார்க்சியக் கோட்பாட்டுக்கு வறிய நிலையில் இருந்த பெண் தொழிலாளர்களிடத்து இதயபூர்வமான ஆதரவு கிடைக்கப்பெறலாயிற்று.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 85

Page 47
இதேவேளை மார்க்சியக் கருத்துக்களைத் திரிபுபடுத்திக் கூறும் கல்வி நடவடிக்கைகளும் ஐரோப்பிய நாடுகளிலே வளர்ச்சிபெறலாயின. மார்க்சியம் பெண்களுக்கு எதிரானதென்ற திரிபுபடுத்தும் பரப்புரைகள் இவ்வகையில் குறிப்பிடத்தக்கவை.
முதலாளித்துவ வளர்ச்சிக்கும் பெண்களின் சீர்கேட்டுக்குமுள்ள தொடர்புகளை விளக்கும் ஏங்கல்சின் எழுத்தாக்கங்கள் ஐரோப்பியப் பெண்களுக்குப் பரவலாகக் கிடைக்கப் பெறாதிருந்தமை கல்வி வரலாற்று ஆய்வாளர்களினாற் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
உற்பத்திச் சாதனங்கள் ஆண்களின் கட்டுப்பாட்டில் இருந்தமையால் பெண்கள் இலகுவாக ஒதுக்கிவைக்கப்படும் நிலையில் இருந்தார்கள். உற்பத்திச் சாதனங்களின் உடைமையாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் தொடர்பு ஊடகங்களும் இருத்தலால் பெண்களை இலகுவாக ஒடுக்கிவிடக் கூடியதாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஊடகங்கள் உடமையாளரின் கருத்தியலையே கையளித்தல் தவிர்க்க முடியாதுள்ளது.
இருபதாம் நூற்றாண்டில் விரிவாக்கம் பெற்ற கல்வி வளர்ச்சி மாற்றுவகையான அறிவைப் பெண்களுக்குக் கிடைக்கச் செய்ததுடன் குடும்பத்தை விட்டு நீங்கிய வெளியுலக ஊடாட்டங்களையும் ஏற்படுத்தியது. இந்த விரிவாக்கம் பால்நிலைச் சமத்துவத்தை நோக்கிய செயற்பாடுகளைத் தீவிரப்படுத்தியது.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 186

பால்நிலையும் உளப்பகுப்பு ஆய்வும்
உளப்பகுப்பு ஆய்வுக்குரிய தளம் சிக்மன்ட் பிராய்டினால் உளவியலில் வடிவமைக்கப்பட்டது. நனவு உள்ளம், நனவிலி உள்ளம் என்றவாறு உள்ளத்தைப் பகுத்தாராயும் நிலையில் நனவிலி உள்ளத்தின் வலிமையையும், அதன் ஊக்கலையும், சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது அது வெளிப்பாடு கொள்வதையும், பாலியலை அடிப்படையாகக் கொண்டு பிராய்ட் விளக்கலானார். கனவுகளைப் பகுத்தாராய்தல், கனவுகளிலே காணப்பெறும் குறியீடுகளுக்கு வியாக்கியானமளித்தல், கருத்தேற்ற நித்திரை அல்லது மனோவசிய நித்திரைக்கு உள்ளாக்கி நனவிலி மனத்தைத் துளாவி அறிதல் முதலாம் ஆய்வு முறைகளை அவர் பயன்படுத்தினார்.
குழந்தை நிலையிலிருந்தே நிறைவேறாத பாலியல் வேட்கைகள் நனவிலி மனத்திலே அடக்கியும் அழுத்தியும் வைக்கப்படுகின்றன. இவ்வாறான அழுத்தங்களே ஒருவரது நடத்தைகளையும் வாழ்க்கை இலக்குகளையும் தீர்மானிப்பதிலே விசை கொண்டு இயக்கமுறுவதாக அவர் குறிப்பிட்டார்.
பாலியல் இன்பங்களை அடைவதற்கு சமூகம் பல நிலை" களிலும் பலபரிமாணங்களிலும் கட்டுப்பாடுகளை விதிக்கின்றது. சமூகம் கட்டுப்பாடுகளை விதிக்கின்றது என்று கூறும் பொழுது அங்கு ஆண்களின் அழுத்தங்களே மேலோங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆண்கள் துய்ப்பவர்களாகவும் பெண்கள் துயக்கப்படும் பொருளாகவும் கட்டுமை செய்யப்பட்டிருத்தல் குறிப்பிடத்தக்கது.
ஆண்மை, பெண்மை பற்றிய முரண்பாடுகளே பிராய்டின் ஆய்வில் மேலோங்கி நிற்கும் விசையாகும். முரண்பாடுகளின் எதிர் எதிர்ப் பண்புகளின் ஈர்ப்பிலும் இழுவிசையிலும் நடத்தைகளும், கற்பனைகளும், இலக்குகளும் உருவாக்கம் பெறுகின்றன.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா | 87

Page 48
உடற்கூற்று நிலையிலே காணப்படும் மாறுபாடுகள் உளவியல் நிலைகளிலே செல்வாக்குச் செலுத்தி எதிர்ப்பால் ஈர்ப்பைத் தூண்டுகின்றன. எதிர்ப்பால் ஈர்ப்பு இயல்பான நடத்தையாகவும் அதற்கு மாறுபாடான நடத்தைகள் உள நோய்கள் என்றும் பிராய்ட் கருதினார். பெண்குழந்தைகளிடத்து ஏற்படும் ஆண் உடற்கூற்றுப் பொறாமை ஹிஸ்டீரியா போன்ற உளநோய்க்கு அடிப்படையாக அமைவதாகவும் பிராய்ட் கருதினார். இவரது ஆய்வுகள் பெருமளவில் ஊகங்களை அடியொற்றியே உருவாக்கப்பட்டன.
பிராய்ட் உருவாக்கிய ஆளுமைக் கட்டமைப்பில் மூன்று பரிமாணங்கள் அமைந்துள்ளன. அவை (1) இட் (id) என்ற பரிமாணம். பாலியல் மற்றும் மிருக இச்சைகளை உள்ளடக்கிய நனவிலி உள்ளத்தோடு இது தொடர்புடையது. கட்டுப்பாடுகளின்றி இச்சைகளை உடனடியாக நிறைவேற்றி விடவேண்டுமென இது விழைகின்றது. (2) ஈ.கோ (ego) என்ற பரிமாணம். மிருக இச்சைகளைச் சமூக ஏற்புடைமைகளுக்கு ஏற்றவாறு ஒழுங்கமைக்க முயலும் பரிமாணமாக இது அமைகின்றது. இது நனவு உள்ளத்தோடு தொடர்புடையது. (3) மேலான ஈகோ (Super Ego) என்ற பரிமாணம். ஆய்வறிவையும், உயர்நிலையான சிந்தனைகளையும், இது உள்ளடக்கிநிற்கின்றது. சமூகம் குறித்து நிற்கும் மேலான விழுமியங்களை இது அரவணைத்து நிற்கின்றது.
மனித உணர்வுகள் (ConsciousneSS) அல்லது உளவூற்றுக்கள் மேற்குறித்த மூன்று கட்டங்களில் நிகழ்வதாக பிராய்ட் கருதினார். ஒவ்வொரு குழந்தையும் தனது உடலின் தன்மையை பிறரது உடலின் தன்மைகளில் இருந்து பிரித்தறிய முயலுகின்றது. இதன் அடிப்படையாக தனக்கும் பிறருக்குமிடையே வெளியை உருவாக்கிக் கொள்கின்றது. தாயிலிருந்து தான் உடற் கூற்று நிலையில் வேறுபட்டு நிற்பதை ஆண்குழந்தை உணரும்போது தாய் மீது அன்பு சொரிந்து இழப்பை ஈடு செய்ய முயலும் பொழுது எழும் குழப்பமான உளவியல் நிலை "ஈடிப்ஸ் சிக்கலாக" மாறுகின்றது.
பெண் குழந்தை தனது உடற்கூற்றினைத் தந்தையின் உடற் கூறுகளோடு ஒப்பிட்டு இல்லாமையை (Lack) அனுபவிக்கத் தொடங்குகின்றது. இந்த இழப்பால் உருவாக்கப்படும் மாறுபாடான உளநிலை "எலெக்ரா சிக்கலாக” வளர்ச்சியடைகின்றது.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 88

பிராய்ட்டின் ஆய்வுகளில் ஆண் ஆதிக்கப் பண்பு மேலோங்கியிருந்தமையை பின்வந்த உளப்பகுப்பு உளவியலாளராகிய கோர்னி என்ற பெண் ஆய்வாளர் வெளிப்படுத்தினார். பிராய்ட்டின் கருத்துக்கு முரண்பாடான வகையில் "கருவறைப் பொறாமை” (Womb Envy) என்ற எண்ணக் கருவை முன்வைத்தார். ஒரு குழந்தையை தம் உடலின் உள்ளே வைத்திருக்க முடியாத இழப்பை உணரும் பொழுது கருவறைப் பொறாமை ஆண்களிடத்துத் தோன்றுவதாக கோர்னி மறுப்புரை செய்தார். ஆண்பாலாரின் நிராகரிப்புக்கும், மேலோங்கலுக்கும் எதிரான மாற்றுக் கருத்தாக இது முன்வைக்கப்பட்டது.
“ஏதோ குறைபாடு கொண்ட ஆண்கள்” என்ற சிக்கலான நிலைக்கு பெண்கள் தம்மைப் பற்றிய படிமத்தை உருவாக்கிக் கொள்வதாக பிராய்ட் கூறுதல் ஆண் ஆதிக்க உளப்பாங்கினை வெளிப்படுத்துகின்றது. ஒரு பெண் குழந்தை தனக்கு ஆண் பிறப்பு இல்லை என்ற எதிர்மறை அடையாளத்தை உருவாக்கிக் கொள்வதாக அவர் மேலும் விளக்கினார். (Sigmund Freud Collected Works) இவ்வாறாக ஆணை மையப்படுத்திய வாதத்தையே அவர் முன்மொழிந்தார். ஐரோப்பிய ஆண்மை ஓங்கற் பண்பாட்டிலிருந்து அவரால் மீளமுடியாமற் போய்விட்டது. பிராய்டின் ஆணர் - முதன்மைக் கோட்பாட்டினை கோர்னியைத் தொடர்ந்து வேறு பல ஆய்வாளரும் தீவிர திறனாய்வுக்கு உட்படுத்தினர்.
உளப்பகுப்பு ஆய்வினை பிராய்டின் அடிச்சுவட்டில் இணைந்” தும் மாறுபட்டும் வேறுபல ஆய்வாளர்கள் முன்னெடுத்துச் சென்றனர். அவர்களுள் கார்ல் யுங் மேற்கொண்ட ஆய்வுகள் குறித்துரைக்கப்பட வேண்டியுள்ளன. மனிதரது உளவியற்கோலங்கள் பாலியல் அடிப்படையால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை என யுங் குறிப்பிட்டார்.
நனவிலி உள்ளம் பற்றிய ஆய்வை மேலும் விரிவுபடுத்திய யுங் (Yung) -96) isGir Jol Gib6076,765. 9 676th (Collective Unconsciousnes Mind) பற்றிய கோட்பாட்டை முன்வைத்தார். கலையாக்கங்களை - சிறப்பாக தொன்ம ஆக்கங்களை - ஆராய்ந்து இவர் இக்கோட்பாட்டினை உருவாக்கினார். படைப்பாக்கங்களை காட்சி நிலைப்பட்டவை (Visionary Mode) என்றும் உளவியல் நிலைப்பட்டவை என்றும் இரண்டு வகையாக இவர் பாகுபடுத்தினார். இவற்றுள் உளவியல் நிலைப்பட்ட ஆக்கங்களே அதிசயிக்கத்தக்க ஆழமான
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 189

Page 49
உண்மைகளைப் புதைத்து வைத்திருக்கும் பண்பைக் கொண்டுள்ளன என்று அவர் விளக்கினார்.
பிராய்ட் தனிமனித நனவிலி உள்ளத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்த யுங் கூட்டு மனிதத்தத்துவத்தையும் கூட்டு நனவிலியையும் வலியுறுத்தினார். மனித வாழ்க்கைத் தொடர்ச்சியோடு கூட்டு நனவிலி உள்ளமும் தொடர்ந்த வண்ணமேயுள்ளது. அதாவது தொண்மையான நனவிலி உள்ளம் இன்றும் தொடர்ந்த வண்ணமுள்ளது. கூட்டு நனவிலியின் வளமான கலை வெளிப்பாடுகளாக தொன்மங்கள் (Myths) அமைவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
உலகெங்கும் நிலவுகின்ற தொணி மங்களை ஆராய்ந்து பார்த்தால், அவற்றின் உட்கிடையாக பால் நிலைப்படிவுகளும் ஆண்நிலை மேலோங்கலும் இருத்தல் தெளிவாகின்றது. ஆண் பெண் சித்திரிப்புவழியாக ஆணி மைக் கருத்தாக்கங்களே மறைமுகமாகக் கருத்தேற்றம் செய்யப்படுகின்றன.
உளப்பகுப்பு ஆய்வுகளின் வழியாக முன்வைக்கப்பட்ட நனவிலி உள்ளம் மற்றும் நனவிலி அழுத்தங்கள் முதலாம் கருத்துக்களுடன் இணைந்து தமது ஆய்வை முன்னெடுத்துச் சென்ற நவ உளப்பகுப்பு வாதியாக லகான் (Jacques Lacan) விளங்குகின்றார். பிராய்டின் கருத்தில் நனவிலி மனத்திலே புதைந்திருப்பவை அமுக்கப்பட்ட விடயங்களாகும். (Repressed Materials) ஆனால் குறிப்பிட்ட விடயங்களுக்கு முன்பதாக மொழியே நனவிலியில் அமுக்கப்படுகின்றது என்பது லகானுடைய கருத்து.
மரபு வழி உளப்பகுப்பு ஆய்வில் நனவிலி உள்ளம் இயல்பூக்க உந்தல்களுக்கு உட்பட்டவகையில் ஒழுங்கற்ற முறையிலே கட்டுமை செய்யப்பட்டது என்றும் மொழிக்கு முற்பட்டது. என்றும் குறிப்பிடப்பட்டது. ஆனால் லகான் "நனவிலி உள்ளம் மொழி போன்று அமைப்பாக்கம் செய்யப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டார்.
வெளியே உணர்த்தப்படும் மொழி நனவிலி மனத்திலே அமுக்கி வைக்கப்பட்டுள்ள மொழியின் பதிலீடாகவே அமையும் என்பது இவரது துணிபு. வெளிவரும் மொழி இன்னொரு மொழிக்குப் பதிலீடாக வருவதனால் அது உறுதி குன்றிய மொழியாகவே இருக்கும். தன்னிலை அல்லது சுய இயல்புக்கும் நிகழ்வு உலகி. னுக்குமிடையே பிளவும் விலகலும் மொழியால் ஏற்படுத்தப்பட்டுவிடுகின்றது.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா | 90

லகானுடைய உளப்பகுப்பு ஆய்வில் இல்லாமை அல்லது குறைபாடு என்ற பரிமாணம் சிறப்பார்ந்த இடத்தைப் பெறுகின்றது. மனித வளர்ச்சிக் கட்டங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட இழப்புக்களைக் கொண்ட குறைபாட்டுடன் தொடர்புடையது. பிறப்பின்போது குழந்தை தாயிடம் இருந்து பிரிக்கப்படுதலோடு குறைபாடு ஆரம்பமாகின்றது. தொடர்ச்சியாக நிகழும் குறைபாடுகளை ஈடுசெய்வதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தாக்கத்துக்கு உள்ளாகும் பொழுது அவை நனவிலி மனத்தில் அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டு அடக்கி வைக்கப்படுகின்றன.
குழந்தை வளரும் பொழுது தமது உறுப்புக்கள் யாவை, எந்த உறுப்புக்களால் மகிழ்ச்சி தூண்டப்படுகின்றது முதலியவற்றைத் தாயின் பராமரிப்பு முறையால் அறிந்து கொள்ளுகின்றது என்று லகான் குறிப்பிடுகின்றார். உடல் உறுப்புக்களைக் கழுவிச் சுத்தப் படுத்தும் பொழுது உடல் வலுவை ஒழுங்கமைத்து பண்பாட்டு இயல்புகளுக்கேற்றவாறு குழந்தையை தாய் வழிப்படுத்துகின்றாள். லகானுடைய "தாய்” பற்றிய இந்தக் கண்ணோட்டம் மரபுவழியான குடும்ப ஆற்றுகைக்குள் தாயைச் சிறைப்படுத்தி வைக்கும் சமூக இயல்பை வலியுறுத்திக் காட்டுவதாக அமைகின்றது.
மனிதரின் தன்னிலை ஆக்கம் அல்லது சுயபடிமவாக்கத்தில் மொழியின் முக்கியத்துவத்தை விளக்குகின்றார். சமூக நிலையில் மொழிப்பண்புகள் ஆண்மை ஓங்கலின் பரிமாணங்களைப் பிரதி பலித்து நிற்றலை அவரால் துல்லியப்படுத்த முடியாமற் போய்விட்டது.
உளப்பகுப்புவாத சிந்தனா மரபிலே வந்த பிறிதோர் ஆய்வாளராக எறிக்புறோம் விளங்குகின்றார். பிராய்டிசத்துக்கும் மார்க்சிசத் துக்குமிடையே பலநிலைகளில் இணக்கப்பாடுகளைக் கண்டறியும் விதத்தில் இவரது ஆய்வுகள் அமைந்தன. நனவிலி மனத்திலே உணர்வுகளை அழுத்தி வைப்பதற்கு சமூக விசைகளே காரணமாக அமையும்தளத்தை அடிப்படையாக வைத்து பிராய்டிசம் மற்றும் மார்க்சிசம் என்பவற்றின் இணைக்கப்படக் கூடிய முனைகளை புறோம் வெளிப்படுத்தினார்.
மனித ஆளுமையை வாழ்தல் நயப்பு (பயோபிலி) வாழ்தல் மறுப்பு (நெக்டோபிலி) என்றவாறு பாகுபடுத்தும் இவரது ஆய்வுகளிலே பால்நிலைப்பட்ட சுரண்டல்கள் ஆழ்ந்த கவனக்குவிப் பைப் பெறாதிருத்தல் குறிப்பிடத்தக்கது.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 191

Page 50
பின்னவீனத்துவமும் பெண்கல்வி பற்றிய நோக்கும்
பின்னவீனத்துவம் என்பது தனித்த ஒருவரின் சிந்தனை வீச்சுக்குள் சிறைப்பிடிக்கப்பட்ட ஒரு கோட்பாடு அன்று என்பதை முதற்கண் மனங் கொள்ளல் வேண்டும். வியாபித்து வளர்ந்து புதிய புதிய செயல் வடிவங்களை முனைப்பாக்கஞ் செய்யும் சமகால உலக முதலாளியத்தின் வேர்களுடனும் கிளைகளுடனும் இணைந்து அவற்றுக்குவலுவூட்டும் எழுநிலைகளையும் பின்னவீனத்துவம் சுமைதாங்கி நிற்கின்றது. பலநிலைகளிலும் பல பரிமாணங்களிலும் முதலாளியத்தை மறுதலிக்கும் மார்க்சிய சிந்தனை வளர்ச்சியை எதிர்க்கும் கூட்டுக் களரியில் பின்னவீனத்துவ வாதிகள் பலர் ஒன்றிணைகின்றனர்.
பின்னவீனத்துவ சிந்தனைக் களரியில் நிற்போர் வரிசையில் லியோதார்த் (Lyotard) தெரிதா (Derrida) பிஸ் (Fish) பேண்ஸ்ரைன் (Bernstein) Lgla)IT53I (Baudrlard) 96öGSlipppJLb 6)ITä5si (Ashley and Walker) ஆகியோர் சிறப்பிடம் பெறுகின்றனர். பூக்கோ (Foucault) அவர்களையும் இப்பட்டியலிலே சேர்த்துக் கொள்ளமுடியும். பின்னவீனத்துவத்துடன் பூக்கோ சில சமயங்களில் இணைந்தும் சில: கால் விலகியும் செல்லும் போக்குடையவராகக் காணப்படுகின்றார்.
பின்னவீனத்துவம் ஒரு கோட்பாடல்ல. அனைத்துக் கோட்பாடுகளையும் நிராகரித்தலே அதன் தலையாய நோக்கம் - என்று முன்மொழியப்படுகின்றது. இந்த அடிப்படையில் மார்க்சிசம், மற்றும் பால் நிலை முதலாம் கோட்பாட்டு வடிவங்களை இது நிராகரிக்கின்றது. அதாவது தருக்க பூர்வமாகக் கட்டுமானம் செய்யப்பட்ட கோட்பாடுகளை இது கேள்விக் குறியாக்குகின்றது. எதையும், நிலையற்றதாகவும் நிச்சயமற்றதாகவும் நோக்குதலும், நம்பிக்கை வரட்சியை ஏற்படுத்துதலும் பின்னவீனத்துவத்தின் இலக்குகளாய் அமைகின்றன.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 192

அளவை நெறிகளும் தருக்கமும் வன்முறைகள் என முன்வைக்கப்படுகின்றது. அறிதலுக்குத் தருக்கம் ஒரு சிறந்த கருவியாகத் தொழிற்படுகின்றது. ஆனால் எல்லாவற்றையும் தருக்க வழிமுறைகளினால் அறிந்து கொள்ளமுடியாது என்பதை நினைவுபடுத்த வேண்டியுள்ளது.
தனிமனிதரின் தன்னிலையான அனுபவங்கள் தருக்கத்தின் பாற்படாது பலரது அனுபவங்களின் பொதுமைப்பாட்டிலிருந்தும் தருக்கம் உருவாக்கப்படுகின்றது. இவ்வாறான தருக்க முடிவுகள் எப்பொழுதும் சரியாக இருக்கும் என்ற கட்டாயம் இல்லை.
ஏற்கனவே உருவாக்கப்பட்ட விதி ஒழுங்குமுறைகளை மீறி அல்லது புறந்தள்ளி உண்மைகளை அறிதலே உண்மையான அறிவு என்கிறது பின்னவீனத்துவம்.
பெரும் கோட்பாடுகளையும் பெரும் உரையங்களையும் (Grand Narratives) நிராகரித்தல் பின்னவீனத்துவத்தின் உள்ளடக்கங்களில் முக்கியமானதாக அமைகின்றது. விலக்கப்பட்டவற்றை, நிராகரிக்கப்பட்டவற்றை, முக்கியமற்றது என்று புறந்தள்ளப்பட்டவற்றை, சமூக நியமங்களின் எதிர்ப்புக்கு உள்ளானவற்றை, எல்லை நிலையில் உள்ளவற்றைக் கருப்பொருளாக்கல் வேண்டும் என்பது இவர்களின் வாதம் - பேசாப்பொருளைப் பேசுதல் இங்கே வலியுறுத்தப்படுகின்றது. எவற்றை நாம் பேசாமல் விடுகின்றோமோ அவைதான் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது பின்னவீனத்துவம். இவர்களது கண்ணோட்டத்தில் முடிந்த முடிபு என்றோ, மாறான நிலையான முடிபு என்றோ எதுவுமில்லை.
மையத்தில் உள்ளவற்றை மையத்திலிருந்து நீக்கிவிடுதல் (Decentering) என்பதன் வாயிலாக முதன்மையானவற்றையும் முழுப்பொருள்களையும் இவர்கள் பின்தள்ளி விடுகின்றனர். கட்டுமானம் செய்யப்பட்டவற்றைக் கட்டுடைத்தும் (Deconstruction) உரைத்தும் பார்த்தல் வேண்டும்.
ஏற்கனவே நிறுவப்பட்டவற்றை நிராகரித்துத் தள்ளி வரும் எதிர் அடிநிலைவாதம் (Anti Foundationalism) இவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது. கருத்துக்களின் அதிகார மேலோங்கல் ஒரு நூலாசிரியரை மேல்நோக்கி உயர்த்துகின்றது. அந்நூலாசிரியர் உருவாக்கிய அறிபொருளை மேலானதாக்கி விடுகின்றது. இதனை மறுதலிக்கும் பின்னவீனத்துவ வாதிகள் நூலாசிரியரின் இறப்பு நூற்பொருளின்
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 93

Page 51
gpi'il (Death of Author and Death of the Subject) (upg5GTLh 9 Jags குரல்களை முன்வைத்துள்ளனர்.
மொழியின் ஆதிக்க நிலையும் இவர்களாற் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. சரி என்பதும் பிழை என்பதும் தெரிந்தது என்பதும் தெரியாதது என்பதும் மொழியின் ஆதிக்கத்தினாலே தீர்மானிக்கப்படுகின்றன. மொழியால் உருவாக்கப்படும் கருத்துக்களும் நிலையானவை அன்று.
நூலியம் (Text) என்பது வாசிப்புக்கும் மறுவாசிப்புக்கும் உட்பட்டது. நிலைத்த பொருள் என்று ஒன்று இல்லை நிறைவு நிலையான பூரணத்துவம் என்ற ஒன்றுமில்லை. வாசிப்பு என்பது ஒரு விளக்கத்தை மட்டும் கொண்ட செயற்பாடு அன்று. வாசகன் மேற்கொள்ளும் வேறுவேறுபட்ட விளக்கங்களும், புரிதல்களுமே முக்கியமானவை. வாசகன் தனது அறிகைக்கு ஏற்றவாறு நூலியத்துக்கு வியாக்கியானம் கொடுக்கலாம்.
பால்நிலைக்கல்வியைப் பொறுத்தவரை பின்னவீனத்துவம் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது என்பதை அடுத்ததாக நோக்கலாம். பன்முகமாக அழுத்தங்களில் இருந்தும் சுரண்டல்களில் இருந்தும் பெண்களை விடுவிப்பதற்கும் மேற்கொள்ளப்பட்ட பெரும் எடுப்புக்களின் தோல்விகளும், பெரும்கோட்பாட்டுக் கட்டமைப்புக்" களின் தோல் விகளும் ஒருவகையில் பின்னவீனத்துவத்தின் உரையாடல்களுக்கு உந்து விசைகளாக அமைந்திருக்க முடியும்.
பெரும் கோட்பாடுகள் என்ற பிரிவில் மார்க்சியம் உள்ளாக்கப்படுதல் கேள்விக்குரியதாகின்றது. மக்களாட்சித்தத்துவம், மானிட வாதம், தாராண்மைவாதம் முதலியவை பொதுமக்களை அரவணைத்தும், சுரண்டலை முலாம் பூசி மாற்றியமைத்தும் உரு” வாக்கப்பட்ட பெரும் தத்துவங்களாக இருக்கும் நிலையில் நடப்பியற் பிரச்சினைகளை அணுகுவதில்அவை தோல்வி கண்டன. ஆனால் மார்க்சிசத்தை இவற்றோடு இணைத்தல் அடிப்படையிலே தவறான ஒரு கண்ணோட்டமாகும்.
குடும்பம், கல்வி நிறுவனங்கள், கல்வி நிர்வாகக் கட்டமைப்புக்கள், முதலியவை பெண்களுக்கு இழைத்து வரும் அழுத்தங்களை அறிகை நிலையில் இனங்காண்பதற்கு பின்னவீனத்துவம் உருவாக்கியுள்ள எதிர் நிறுவன (Anti Establishment)க் கண்ணோட்டம் சில பரிமாணங்களிலே துணையாகவுள்ளது.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 194

ஆண்மை ஓங்கற் சமூகத்தினால் கட்டுமை செய்யப்பட்டுள்ள சமூகப் பெறுமானங்கள், சமூக விழுமியங்கள், சமூக சடங்குகள் முதலிய மேலோங்கற் கருத்துக்களை அடியோடு நிராகரிப்பதற்குரிய கருத்து வினைப்பாடுகளையும் பின்னவீனத்துவம் பலப்படுத்தியுள்ளது.
மையத்திலிருந்து நீக்கிவிடுதல், கட்டுடைத்தல் முதலாம் எண் ணக்கருக்கள் ஆணி நிலை மேலாதிக்க சட்டங்களைத் திறனாய்வு செய்வதற்குரிய திறனாய்வுத் துணிக்கைகளை வழங்கியுள்ளன.
மொழி, இலக்கியம், திறனாய்வு, நுண்கலைகள், வரலாறு, குடிமைஇயல், அரசியல், கட்டடக்கலை, ஆடை அணிகலன்கள் ஆக்கும் கலை, குடும்பப் பராமரிப்புக்கலை முதலாம் பாடநெறிகளில் பின்னமைப்புவாதத்தின் செல்வாக்குகள் மேலை நாடுகளில் ஊடுருவி வருகின்றன. இவற்றின் செல்வாக்குகள் பெண்கள் பற்றிய கண்ணோட்டத்திலே செல்வாக்குகளை ஏற்படுத்தியுள்ளதாயினும் பால்நிலைச் சமத்துவத்தை ஏற்படுத்துவதிலே பங்களிப்புக்களைச் செய்துள்ளனவா என்பது கேள்விக்குரியதாகின்றது.
பின்னவீனத்துவத்தின் செல்வாக்கு கல்வியிலும் கலைத்திட்டத்” திலும் பன்முக நோக்கைத் தூண்டியுள்ளது. கல்வி அனுபவங்கள் ஒடுங்கிய பாய்ச்சலாகச் செல்லாது பல துறைகளில் அறிவைத் திரட்டுதல், பன்முக ஆற்றுகைகளை வளர்த்தல், பாராமுகமாக விடப்பட்டவற்றின் மீது அறிவைத் திருப்புதல் முதலிய அறிவுச் செயற்பாடுகளை பின்னவீனத்துவம் மீளவலியுறுத்தி நிற்கின்றது.
எவற்றையும் அடிப்படையான மறுபரிசீலனைக்கு உட்படுத்தும் கல்விச் செயற்பாடுகளுக்குப் பின்னவீனத்துவம் உந்துதலும் ஊக்குவிப்பும் வழங்குகின்றது. சொல்லுக்கும் - செயலுக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் உண்மைக்கும் நடைமுறைக்கும் இடையேயுள்ள தொடர்புகளின் இடைவெளிகளை மறுபரிசீலனை செய்வதற்கு இக்கோட்பாடு உற்சாகமளித்து வருகின்றது.
சமூகத்தில் நிலவும் பன்முகப்பட்ட சொல்லாடல்களையும், கருத்து வினைப்பாடுகளையும் ஆழ்ந்து ஆராய்ந்து அவற்றின் முக்கியத்துவத்தை உய்த்தறியும் அணுகுமுறைகளைப் பின்னவீனத்துவம் வளர்த்து வருகின்றது. சமூகத்தை ஒட்டு மொத்தப்படுத்தும்
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 195

Page 52
சொல்லாடல்களில் இருந்து விடுபட்டு, விடுபட்டோர் மற்றும் நலிவுற்றோர் பெண்கள் முதலியோரது சொல்லாடல்களைக் கல்வி நோக்கில் அணுகுவதற்கு இக்கோட்பாடு தூண்டுதலளித்து வருகின்றது.
கல்வியும் பெண்கள் மீதான வன்முறையும் இடையுறவு கொண்டுள்ள முறைமையைப் பகுத்தாய்வதற்கும் இடமளிக்கப்பட்டு வருகின்றது. காலங்காலமாகப் பெண்மை பற்றி உருவாக்கப்பட்ட படிமங்கள் மீள்பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய கல்வித்தேவை உணர்த்தப்பட்டு வருகின்றது. பெண்மையம் (Women Hood) பற்றி சமூகம் கட்டுமை செய்துள்ள கருத்துக்களும், நடத்தை விதிமுறை" களும், பெண்கள் தொடர்பாக உருவாக்கப்பட்ட குழுமத்தடைகளும் (Taboo) விமர்சனத்துக்கு முன்னெடுக்கப்படுகின்றன.
கல்வியைப் பொறுத்தவரை பெண்கள் இரட்டை நிலைச் சுரண்டலுக்கு உட்படுகின்றார்கள் உலகெங்கும் விரிந்து நேர்நிலைக் கூர்ப்புடனும், மறைமுக நீட்டல்களுடனும் வளர்ந்து வரும் நவமுதலாளிய கல்விச் சுரண்டலுக்குப் பெண்கள் உள்ளாக்கப்படுகின்றனர். கல்விக்கட்டமைப்பில் தீர்மானங்களை மேற்கொள்வோர், மற்றும் நிர்வாக மேலாளர் ஆண்களாக இருப்பதனால் அவர்களின் வரிப்புக்கு பெண்கள் உள்ளாக நேரிடுகின்றது. பால்நிலையில் நிர்வாகம் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றதோ அவர்க" ளுடைய கண்ணோட்டத்திலேதான் தீர்மானங்கள் கட்டுமை செய்யப்படும். கல்வி நிர்வாகத்திலே காணப்படும் மேலாதிக்க வலிமை (Hegemonising) பெண்களிடத்து எதிர்விளைவுகளையே ஏற்படுத்துகின்றது.
கல்வியியல் சார்ந்த கருத்து வினைப்பாடுகள் பேச்சுவடிவிலும் எழுத்து வடிவிலும் முன்னெடுக்கப்படும் பொழுது சொல்லுக்கும் பொருளுக்குமிடையேயுள்ள இடைவெளிகளை இனங்கண்டு கொள்வதற்கு தெரிதாவின் அணுகுமுறைகள் தூண்டுதலளிக்கின்றன. சிறப்பாக ஆண்மைய நூலியம் கட்டுமானக் குலைப்புக்கு (Decon Struction) உள்ளாக்கப்படுகின்ற அறிவுத்துணிவு துTணி டப்பட்டுள்ளது.
அறிவின் உற்பத்தி பெண்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் வகையில் உருவாக்கப்பட்டும் நெறிப்படுத்தப்பட்டும் வருகின்றது. மறைபொருளாயிருந்த இந்த இருள் நிலையை வெளிப்படுத்து
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா | 96

வதற்கும் பின்னவீனத்துவ சிந்தனைகள் கல்வியிலே தூண்டுதலளித்து வருகின்றன.
சமூகத்தாற் கட்டுமை செய்யப்பட்டுள்ள பெண்கள் தொடர்பான திடப்பட்ட தத்துவங்களை உடைத்து உருக்கி விடுவதற்குரிய கருத்துக்கள் பின்னவீனத்திலே பொதிந்திருந்தாலும், பொல்லாமை" யினை மாற்றியமைப்பதற்குரிய விசைகொண்ட வழிகளை மார்க்சியம் காட்டியிருத்தல் போன்று பின்னவீனத்துவத்தினாற் காட்டமுடியாமற் போயுள்ளது.
பின்னவீனத்துவம் குதறி வெளிப்படுத்தியுள்ள கோட்பாட்டுப் பிரச்சினைகள் மார்க்சியத்தினால் ஏற்கனவே எழுப்பப்பட்டுள்ளன. கல்விக்கும் அறிவுக்கும் கோட்பாடுகளுக்கும் பின்னால் சுரண்டும் சக்தி இயக்கமுறுவதை மார்க்சியம் முற்கூட்டியே சுட்டிக்காட்டி கட்டுமை அறிவின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கிவிட்டது. இதனை ஒரு வித்தியாசமான மொழிவீச்சில் பின்னவீனத்துவ வாதிகள் வெளியிட்டுள்ளனர். மார்க்சியம் போலவே பின்னவீனத்துவம் தனிமனிதத்தை நிராகரித்துள்ளது. ஆனால் பின்னவீனத் துவம் புதிய சொற்களஞ்சியத்தைப் பயன்படுத்திக் கருத்தாடலை முன்னெடுத்துள்ளது.
மரபுவழி மெய்யியலுக்குள் அடக்கப்படாத அறிவுத் துறைகளை மார்க்சியம் மெய்யியலுக்குள் சிறைப்பிடித்துக்காட்டியது. இதனை அடியொற்றியே பின்னவீனத்துவ உரையாடல் மேலெழுகின்றது. எல்லை நிலையில் மற்றும் சுரண்டல் நிலையில் வாழும் மக்கள் மீது மார்க்சியம் ஏற்கனவே கவனக்குவிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை வித்தியாசமான சொல்லாடல் வாயிலாக பின்னவீனத்துவம் விளக்குகின்றது.
சமூக நோக்கும் சமூக உணர்வும் கொண்டவர்கள் சமூகத்தை மாற்ற வேண்டும். இந்த வகையில் பின்னவீனத்துவம் கைகொடுக்க முடியாத நிலையிலுள்ளது. இந்நிலையில் சுரண்டலுக்கு பின்னவீனத்துவம் நேரடியாகவும் மறைமுகமாகவும் கருத்து நிலையில் முண்டு கொடுக்கத் துணைநிற்கும்.
மாறுபடும் உறவுகளுக்குப் பின்னவீனத்துவம் கொடுக்கும் முக்கியத்துவம் மாற்றப்பட வேண்டிய உலகுக்குக் கொடுக்கப்பட வில்லை என்பதை மனங்கொள்ள வேண்டியுள்ளது.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 197

Page 53
தன்னிலை உருவாக்கம்
தன்னிலை (Self) உருவாக்கம் சமூகச் செயல்முறையோடும் சமூக மயமாக்கலோடும் இணைந்த ஒரு தோற்றப்பாடு. பிறருடன் மேற்கொள்ளப்படும், உடல் சார்ந்ததும், உளம் சார்ந்ததும், மனவெழுச்சி சார்ந்ததுமான ஊடாட்டங்கள் தன்னிலை உருவாக்" கத்தை ஏற்படுத்துகின்றன. இவற்றின் தொடர்ச்சியும் வளர்ச்சியுமாகவே தற்படிமம் (Selfimage) அல்லது சுயபடிமம் மற்றும், ஈகோ எனப்படும் தன்னோங்கல் முதலியவை முகிழ்த் தெழுகின்றன.
ஒவ்வொருவரையும் செயலுTக்கத்துடன் இயங்கவைக்க சமூகமே வலிமையான சாதனமாக அமைகின்றது. தனது தேவைகளை நிறைவேற்றுதல், தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தல் முதலியவற்றை உருவாக்குவதில் குடும்பம் என்ற சமூக அலகே முதல் நிலைத் தீர்மானிப்பு வலுவை வழங்குகின்றது. தாய்மீது தந்தை மேற்கொள்ளும் உரையாடல்களும் அணுகுமுறைகளும் ஒரு பெண் குழந்தை தன்னிலையை உருவாக்கிக் கொள்வதில் ஆற்றலுள்ள பங்களிப்பை ஏற்படுத்துகின்றது.
பெண்கள் மற்றும் ஆண்களுக்குரிய நடத்தை ஒழுங்குகள், உணர்வு வெளிப்பாடுகள் முதலியவை ஆரம்பநிலையில் குடும்பத்தி னால் உருவாக்கப்படுகின்றன. தன்னிலை என்பது சமூக அனுபவங்களில் இருந்து உருவாக்கப்படுகின்றது. சமூகத்தாற் கட்டுமை செய்யப்படுகின்றது. அது இயல்பாகவோ இயற்கையாகவோ உருவாக்கம் பெறுதல் இல்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
தன்னிலை உருவாக்கத்திலே பொதுமையாக்கம், சிறப்பார்ந்த பாங்கினை வகிக்கின்றது. பெண்களின் நடத்தைப் பொதுமையாக்கத்தோடு தமது நடத்தைகளை இயைபாக்கிக் கொள்ளுமாறு ஒவ்வொருவரும் வற்புறுத்தப்படுகின்றனர். இது அறிகை நிலையில் அருவச்சிந்தனைகள்அல்லது சூக்கும சிந்தனைகளுடன் இணைந்த"
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 98

தாகவும், உணர்ச்சிநிலையில் உள்ளொழுங்குகளுடன் தொடர்புபட்டதாகவும், வெளியீட்டு நிலையில் அறநியாயித்தலுடன் தொடர்புடையதாகவும் அமையும். புலப்படும் வெளிப்பாடுகள் புலப்படாத வெளிப்பாடுகள் என்ற இருபரிமாணங்களை தன்னிலை கொண்டிருக்கும்.
"நான்” “எனக்கு” “என்னை” முதலிய எண்ணக்கருக்கள் தன்னிலையைப் புலப்படுத்தி நிற்கும். பிறர் வழங்கும் தூண்டிகளின் தெறிப்பாகவும், தம்மை ஒழுங்கமைத்துக் கொண் டமையின் வெளிப்பாடாகவும் இந்த எண்ணக்கருக்கள் உருவாக்கம் பெறும். தன்னிலை என்பது நிலைத்த பொருளன்று. புதிய அனுபவங்கள், புதிய நிகழ்ச்சிகள் முதலியவற்றை எதிர்கொள்ளும் பொழுது அது இசைவாக்கம் செய்தும் மாற்றமடைந்தும் செல்லும்.
y» te sy K
பிறரின் அங்கீகாரத்தைப் பெறும் பொழுது தன்னிலை உயர்வு நோக்கி உந்தப் பெறுதலும், பிறரின் நிராகரிப்புக்கு உள்ளாகும் பொழுது தாழ்வு நோக்கித் தள்ளப்படுதலும் உண்டு. இவற்றால் மனத்திலே சிக்கல் நிலை உருவாக்கப்படும் பொழுது உயர்வுச்சிக்கல் அல்லது தாழ்வுச் சிக்கல் வளர்ச்சியடையும்.
பிறரின் அங்கீகாரத்தைப் பெறுதல் குழந்தை நிலையில் இருந்தே செயற்பாடு கொள்ளத் தொடங்குகின்றது. இந்த அங்கீகாரத்தைப் பெறுவதற்கான தொழிற்பாடுகள், மொழித் தொடர்பாடல் வடிவிலும், உணர்ச்சி வெளிப்பாட்டு வடிவிலும், கூட்டுமொத்தமான நடத்தை வடிவிலும் இடம் பெறும். இவற்றுடன் தொடர்புடையதாக தன்னிலை மனக்கட்டுப்பாடுகள் வளர்ச்சியடையத் தொடங்கும்.
சூழல் நிலைமைகளினால் மனப்போராட்டங்கள் எழும் பொழுது அவற்றைக் கட்டுப்படுத்துதல் ஆண்களிலும் பார்க்கப் பெண்களுக்கே கூடுதலாக வழங்கப்படும் சமூக நிலை காணப்படுகின்றது. தன்னிலும் மேலானவர்கள், தனக்குச் சமமானவர்கள், தமக்குக் கீழானவர்கள் என்ற நிரலமைப்பைச் செயற்படுத்திக் கொண்டிருக்கும் சமூகத்தில் அதற்கு இசைந்தவாறே தன்னிலையாக்கமும் இடம் பெறும். இந்தச் செயற்பாட்டின் பொழுது மூன்று நிலைகளிலும் பெண்கள் ஆண்களிலும் தாழ்ந்தவர்களாகவே மதிப்பீடு செய்யப்படுகின்றார்கள். அதாவது தம்மிலும் உயர்ந்தவர் களுள் ஆண்கள் முதலிடம் பெற பெண்கள் இரண்டாமிடம் பெறுவர். தம்மோடு ஒத்தவர்களில் ஆண்கள் முதலிடம் பெற
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் | சபா.ஜெயராசா 199

Page 54
பெண்கள் இரண்டாமிடம் பெறுவர். தம்மிலும் தாழ்ந்தவர்களுள் பெண்களே மிகவும் தாழ்ந்தவர்கள் என்றவாறான நிரற்பாட்டினைச் சமூகம் வலியுறுத்தி நிற்கின்றது. சமூகம் தொடர்பான உளநிலையாகச் செயல்முறை சமூகமயமாக்கல் இயக்கத்தினால் மீள வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
தம்மிலும் மேலானவர், தம்மோடு சமமானவர், தம்மிலும் தாழ்ந்தவர் என்பது சிறுவயதில் வயது நிலையோடு இணைந்து நின்று பின்னர் சமூக நிலைநோக்கித் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கும். சமூகமயமாக்கலின்போது உருவாக்கப்படும் தன்னிலையானது தமக்கு மேலானவர்களின் கருத்துக்களுக்கு அடிபணிதலுக்கு ஒப்பீட்டளவிலே கூடிய முக்கியத்துவத்தை வழங்குகின்றது. தருக்க பூர்வமாக நியாயித்தலைக் காட்டிலும் அடிபணிந்து செயற்பட வைத்தலே இங்கு மேலோங்கி நிற்கும். தம்மிலும் மேலோங்கியோர் 9/5/55/f)-issil / / felp3LOLLO/7d5365.9/3/6/6/i (Official Socialiser) என்ற நிலையிலே பராமரிக்கப்படும் பண்பு காணப்படுகின்றது.
சமூகமயமாக்கற் செயற்பாட்டிலே பால்நிலை வேறுபாடு துல்லியமாகப் புலப்படுகின்றது. ஆண்களுக்கு ஒருவிதமான சமூகமயமாக்கற் செயற்பாடும் பெண்களுக்கு வேறொரு விதமான சமூகமயமாக்கற் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டு வரும்பொழுது அந்த இயல்புகளுக்கு ஏற்றவாறே ஆண்களுக்குரிய தன்னிலையும் பெண்களுக்குரிய தன்னிலையும் உருவாக்கம் பெறுகின்றன. பாலியலைப் பொறுத்தவரை பெண்களுக்கு வலிதான சமூக நியமங்களும் ஆணர்களுக்கு நெகிழ்ச்சியான சமூக நியமங்களும்
உருவாக்கப்பட்டுள்ளன.
தன்னிலை உருவாக்கத்திலே வலிமை கொண்ட விசையாகக் கல்வி செயற்படுகின்றது. சம காலக்கல்வியிலே காணப்படும் தீவிர போட்டிநிலை சார்ந்த இயல்புகள் தன்னிலையாக்கத்திலே பொறாமைப் பரிமாணங்களை உட்புகுத்தி விடுகின்றன. பொறாமை மனவெழுச்சியாக்கம் மனித உடலமைப்பினால் உருவாக்கப்படுவதில்லை மாறாக சமூகத்தாலும் சமூகம் உருவாக்கும் கல்வியாலும் சமூகம் உருக்கொடுக்கும் பெறுமானங்களாலும் கட்டுமை செய்யப்படுதலை மனங்கொள்ளவேண்டியுள்ளது.
கல்வியால் உருவாக்கப்பட்டு வரும் சிறப்புத் தேர்ச்சிகள் சமூக ஒருங்கிணைவை ஏற்படுத்துவதற்குப் பதிலாக தனிமனித வாதத்தைப்
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா | 100

பலப்படுத்தும் வகையில் கட்டமைப்புச் செய்யப்பட்டுள்ளன. சிறப்புத் தேர்ச்சிக்கல்வியின் ஒழுங்கமைப்பானது தன்னிலையாக்கத்தை முற்றிலும் தனிமனிதக்கோணத்தில் முன்னெடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தனிமனித வாதத்தின் வளர்ச்சி பெண்களுக்கு எப்பொழுதும் பாதகமான நிலைமைகளையே ஏற்படுத்தி வந்துள்ளது. தனிமனித வாதம் ஆண் நிலை ஓங்கலுடன் சங்கமமாகி வளர்ச்சியுற்றுள்ளது.
ஒவ்வொருவருக்குமுரிய பாத்திரமேற்கும் பணிகளை சமூகம் ஒழுங்கமைத்துக் கொடுக்கின்றது. பாத்திரமேற்றலும், பணிகளை மேற்கொள்ளலும், தன்னிலையாக்கத்துடன் தொடர்புபட்டுள்ளன. பாத்திரமேற்றலில் ஆண் பெண் வேறுபாடுகள் துலக்கமுற்று நிற்கின்றன. மனித மீள் உற்பத்தியோடும் பராமரிப்போடும் தொடர்புடைய பாத்திரங்கள் பெண்களுக்குரியவையாக நியமம் செய்யப்பட்டுள்ளன. பெண்களின் தன்னிலையாக்கம் இவ்வாறான பாத்திரங்களைச் செயலாற்றும் வகையிலே கட்டமைப்புச் செய்யப்பட்டு வருகின்றது.
பெண்கள் உடல் நிலையான முதிர்ச்சியை எட்டுவதற்கு முன்னரே பெண்நிலைப் பாத்திரங்களை ஏற்பதற்குரிய அறிவு முதிர்ச்சியை வழங்கும் ஆதங்கத்தோடு சமூகம் தொழிற்பட்டு வருகின்றது. அதாவது பெண்களைப் பொறுத்தவரை உடல் முதிர்ச்சிக்கும் உள முதிர்ச்சிக்குமிடையே முரண்பாடான நிலைகளையே சமூகம் ஏற்படுத்திய வண்ணமுள்ளது.
கட்டிளமைப் பருவத்தைத் தொடர்ந்துதான் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உடல் முதிர்ச்சி மேம்பாடு பெறத் தொடங்குகின்றது. பெண்களைப் பொறுத்தவரை கட்டிளமைப் பருவமடைவதற்கு முன்னரே பெண்களுக்குச் சமூகம் ஒதுக்கிய பாத்திரங்களை ஏற்றல் தொடர்பான அறிவுக்கையளிப்பு நிகழ்த்தப்படுகின்றது. இதனால் பெண்களின் சமூக முதிர்ச்சி ஆண்களைக் காட்டிலும் முன்னேற்றகரமாகவுள்ளது என்ற கருத்தேற்றமும் இடம்பெற்றுள்ளது.
சமூக இயல் போடு இணைந்து இசைந்து வாழ்வை முன்னெடுக்கும் செயல்முறையைச் சடங்குகள் மீள வலியுறுத்தி நிற்கின்றன. அறிவுக்கையளிப்பிலும் விழுமியக்கையளிப்பிலும் சடங்குகளின் பங்கு முக்கியமானது. தன்னிலை உருவாக்கத்திலே சடங்குகள் தமக்குரிய சமூக வலிமையோடு தொழிற்படுகின்றன.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 101

Page 55
மரபுவழிச்சடங்குகள் பெண்களுக்குரிய பாத்திரமேற்றலை வினைத்திறன்படுத்தும் உட்பொருளைக் கொண்டிருத்தல் குறிப்பிடத்தக்கது. தன்னுள்ளே தெறித்தல் மற்றும் வெளித்தெறித்தல் என்ற இரண்டு தெறித்தல் நிலைகள் தன்னிலையைக் கட்டமைப்புடன் தொடர்பு கொண்டவை. இந்நிலையில் தன்னிலை என்பது பொருளாகவும் அதேவேளை பொருள் கோடலுக்கு உட்படுத்தலாகவும் மாற்றமுறுகின்றது.
தன்னிலையை அடிப்படையாகக் கொண்டே ஒருவர் தன்னை மதிப்பீடு செய்யும் நிலை காணப்படுகின்றது. அதேவேளை தன்னிலையை அடிப்படையாகக் கொண்டே பிறரை மதிப்பீடு செய்தலும் இடம் பெறுகின்றது. தன்னை மதிப்பீடு செய்வதிலும் பிறரை மதிப்பீடு செய்வதிலும் அளவு கோல்கள் வேறுபடலாம்.
தம்மைப் பற்றி பிறர் எவ்வாறு மதிப்பீடு செய்வார்கள் என்பதை முன்னெடுக்கும் பொழுது தன்னிலையானது பொருள் கோடலுக்கு உள்ளாக்கப்படுகின்றது. தன்னிலை என்பது பொருளாதலும், பொருள் கோடலுக்கு உள்ளாகுதலும் முற்று முழுதாக சமூக நியமங்களால் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதனை வேறுவிதமாகக் கூறுவதானால் ஒருவருக்குரிய தன்னிலையானது சமூக இருப்பினால் நிர்ணயிக்கப்பட்டு வருகின்றது.
பெண்கள் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படும் சமூக இருப்பில் பெண்கள் தமக்குரிய தன்னிலையாக்கத்தை ஊறுபட்ட வகையில் உருவாக்கிக் கொள்ளும் நெருக்குவாரங்களே நீடித்து நிற்கும். தன்னிலையமைப்பு சமூகச் செயல்முறையின் தனியாள் நிலைப்பட்ட வடிவம்.
சமூக இருப்பை அடியொற்றி வாழ்க்கை கோலங்களை உருவாக்கும் இயலுனர்களாக விளங்குபவர்களுள் ஆண்களே முதன்மை நிலையில் அமைந்துள்ளனர். தன்னிலைச் செயல்முறை
யினை இயக்க நிலையில் வைத்திருப்பதற்கு இந்த இயலுனர்களே தூண்டிகளாகச் செயற்படுகின்றனர்.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா | 102

மார்க்சிய மனிதமும் இருப்பிய மனிதமும்
மனிதம் தொடர்பான மரபு வழி அறிகைக் கோலங்களுக்கு மாற்று வகையாகவும் மாறுபட்ட வகையிலும் மார்க்சியக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. மனிதம் பற்றிய மார்க்சியக் கருத்துக்கள் மரபுவழி உலோகாயதக் கருத்துக்களிலும் வேறுபட்டவை என்பதை முதற்கண் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. மார்க்சியம் மனிதரை வெறும் சடப் பொருளாக மட்டும் கருதவில்லை.
மனிதரின் இயல்பை “உழைப்பு” என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு மார்க்சியம் விளக்குகின்றது. மனித சாராம்சமே உழைப்புத்தான். உயிரினங்களில் இருந்து வேறுபட்ட இயல்புகளைக் கொண்டு மனிதர் முகிழ்த்தெழுவதற்கு உழைப்பே ஆதாரமாகவும் அடிப்படையாகவும் அமைந்தமை ஏங்கெல்சினால் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. முள்ளந்தண்டை நிமிர்த்தி மனித உடலாக்கம் வலிமை பெற்றமை, கைவிரல்களால் இலாவகமான திறன்களை ஆற்றக்கூடிய ஆற்றல்களைப் பெற்றமை, மூளையின் பன்முக ஆற்றல்களை வளர்த்துக் கொண்டமை முதலியவை மனித உழைப் போடு இணைந்த செயற்பாடுகளாகும். மொழியும், சிந்தனையும் தருக்க அறிமுறைகளும் உழைப்பின் பெறுபேறுகளாக மேலெழுந்தன.
உழைப்பினால் மனிதர் இயற்கையை மீளமைக்க முடிந்தமை, உழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது. உழைப்பினால் மனிதர் தம்மைத்தாமே மீளமைத்துக் கொள்ள முடிந்தமை மேலும் முக்கியத்துவம் பெறுகின்றது.
உழைப்பு சமூகப்பண்பு கொண்டது. இவ்வாறு சமூகப் பண்பு கொண்டதாக இருப்பதன் காரணமாகத்தான், ஒருதலைமுறையினர் உருவாக்கிய விளைவுகளை அடுத்த தலைமுறையினர் அனுபவிக்கக்
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா | 103

Page 56
கூடியதாக இருக்கின்றது. இந்தச் சமூகப் பணி பே ஒருவரது உழைப்பை இன்னொருவரின் பறிப்புக்கு அல்லது சுரண்டலுக்கு உள்ளாக்குகின்றது. இந்தப் பண்பே உழைப்புத் தொடர்பான ஆண் - பெண் வேறுபாடுகளையும் கட்டுமை செய்தது.
மனித உழைப்பும், உழைப்பினால் உருவெடுக்கும், கட்டமைப்புக்களும் இயங்கியற் பண்பு கொண்டவை. தரப்பட்ட சூழலை மாற்றியமைக்கும் திறன் கொண்டதாக உழைப்பு அமைகின்றது.
உழைப்பும் சமூகச் செயல்முறையும் மனித சாராம்சமாக அமைகின்றன. மீள மீளப் புதுப்பிக்கப்படும் எல்லையற்ற திறன்களை உழைப்பு உருவாக்கித் தருதலை மனிதர் நடைமுறை வாழ்க்கையில் அறிந்தும் உணர்ந்தும் கொள்ளுகின்றனர்.
சுரண்டல் அல்லது பறிப்பு நிகழும் சமூகக்கட்டமைப்புக்களில் மனிதர் தமது சாராம்சத்தை இழந்து வாழும் நிலை ஏற்படுகின்றது. இவ்வாறான சமூகக் கட்டமைப்பில் உழைப்புக் கருவிகளும் சாதனங்களும் உழைப்பவர்களின் உடைமைகளாக இருப்பதில்லை யாதலால், உழைப்பவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கும் அவர்கள் உரிமை கொண்டாட முடியாத நிலையில் உள்ளது. இந்” நிலையில் மனித சாராம்சம் இழக்கப்படுகின்றது. இந்த அவலமான நிலையை "அந்நியமாதல்" என்று மார்க்ஸ் குறிப்பிட்டார்.
அந்நியமாகிய மனிதர் உழைப்புத் தொடர்பாகவும், சமூகம் தொடர்பாகவும், குடும்பம் தொடர்பாகவும் "சிதைந்த” பார்வையை உருவாக்கிக் கொள்கின்றனர். உழைப்பின் மாண்பு வெறுப்புக்கு உள்ளாக்கப்படுகின்றது. பலநிலைகளில் வெறுப்பையும், அதிருப்தியை யும், உளவியல் நிலைப்பட்ட அவலங்களையும் அந்நியமாதல் தூண்டியவண்ணமிருக்கும் உளநிறைவும் உற்சாகமும் அற்ற ஏனோ தானோ என்ற நிலையை அது ஏற்படுத்திவிடும். அனைத்திலும் ஏற்" படும் வெறுப்பான உணர்வுகளும், நம்பிக்கை வீழ்ச்சியும் தன்மீது தானே வெறுப்புக் கொள்ளும் மனித சாராம்ச இழப்புக்குத் தள்ளி விடுகின்றது.
மார்க்ஸ் முன் மொழிந்த அந்நியமாதல் என்ற எண்ணக்கரு பின்வந்த உளவியல், சமூகவியல், கல்வியியல், மெய்யியல், திற" னாய்வியல் போன்ற பல துறைகளின் கவன ஈர்ப்புக்கு உள்ளானது. பால்நிலை ஆய்வுகளிலும் இந்த எண்ணக்கரு எடுத்தாளப்பட லாயிற்று.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா | 104

ஆனால் பின்வந்த ஆய்வாளர்களில் ஒருசாரார் அந்நியமாதலில் இருந்து விடுபடுவதற்கு மார்க் ஸப் முன்மொழிந்த சமூகச் செயல்முறை மீது சுரண்டல் மற்றும் பறிப்பை அடியோடு நீக்கும் வழிமுறை மீதும் தமது கவனத்தை நழுவ விட்டுச் சென்றனர்.
மனிதம் பற்றிய கருத்து வினைப்பாட்டில் உருவான இருப்பியமும் சமகாலத்துச் சிந்தனையாக்கங்களிலே தாக்கங்களை ஏற்படுத் தலாயிற்று.
உலகின் இருப்போடு இன்மையும் இணைந்துள்ளமை (Being and NothingneSS) சார்த்தரால் விளக்கப்பட்டுள்ளது. பொருட்களின் உலகத்தைத் தன்னிலையில் உள்ள இருப்பாக (Being in itself) அவர் விளக்குகின்றார். அதேவேளை உணர்வு கொண்ட மனிதரின் இருப்பை தனக்காகவுள்ள இருப்பு (Being fortSelf) என்று அவர் குறிப்பிடுகின்றார். இவை இரண்டும் ஒன்றிலிருந்து பிரிந்து தனித்திருக்க முடியாது என்பது அவரது கருத்து. உலகுக்கும் மனிதருக்குமிடையேயுள்ள உறவுகளைத் துல்லியமாகக் கண்டறி வதற்கு அருவப்படுத்தல் (Abstraction) என்ற உளச் செயற்பாடு தடையாகவுள்ளது. உலகு என்பது உணர்வு அற்றது என்றும் மனிதர் உணர்வு உள்ளவர் என்று கொள்ளும் அருவப்படுத்தல் அறிகை இரு கூறுகளும் இணைவதைத் தடுத்து விடுகின்றது.
இருப்பு என்பது இன்மையால் உணர்த்தப்படுவதாகவும் அவர் விளக்கினார். இன்மை என்பது மறுத்தலாகின்றது. நேர்மறைகளை அறிவதற்கு மறுத்தலே துணை நிற்கின்றது. இன்மை என்பதனால் மட்டுமே மனித உடன்பாட்டுத்தன்மை உடைக்கப்படுகின்றது. காரணகாரியத் தீர்வுகளை "இன்மை" உடைத்து விடுகின்றது. மனித இருப்போடு இன்மையும் குடிகொண்டுள்ளது. மனிதத்துவத்தோடும் சுதந்திரத்தோடும் “இன்மை" இணைந்துள்ளது. இன்மையே அனைத்தினதும் முதன்மையான பண்பு ஆகின்றது.
மனித சாராம்சம் என்பது "இன்மையே" ஆகும். இருப்பியத்தின் மையக் கருத்தாக மனிதம் அமைகின்றது. ஒன்றுமில்லா இன்மை" நிலையில் இருந்துதான் மனிதர் தமது இருப்பைத் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. பிறப்பால் உருவாக்கப்பட்டு திணிக்கப்படும் எவற்றையும் மனிதர் ஏற்காது புறக் கணிக்கும் நிலையின் முக்கியத்துவம் இருப்பியத்தில் வலியுறுத்தப்படுகின்றது.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா | 105

Page 57
பத்தொன்பதாம் இருபதாம் நூற்றாண்டுகளில் உலகின் பொருளாதார மாற்றங்கள் முதலாளியத்தின் பன்முகமாகிய வடிவங்கள், தொடர்பாடல் வளர்ச்சிகள், முதலியவற்றின் அழுத்தங்கள் மனிதம் பற்றிய மரபு வழிச் சிந்தனைகளை மீளாய்வுக்கு உட்படுத்தின.
கார்ல் மார்க்ஸ் (1818-1883) மனித சாராம் சத்தை மரபு வழிக்கண்ணோட்டங்களில் இருந்து விலகிப் புதிய நோக்கிலே தரிசித்தார். மனிதத்தை வியாக்கியானம் செய்வதோடு நின்று விடாது மாற்றியமைக்கும் வழிமுறைகள் பற்றிய வலுவான கருத்துக்களும் அவரால் முன்வைக்கப்பட்டன.
பெண் நிலை சார்ந்த சுரண் டல் நிலைகள் மீது கூரிய அணுகுமுறைகளைக் குவியப்படுத்தாது விட்டாலும் அனைத்து வகைச் சுரண்டல்களில் இருந்தும் உழைப்பவர்கள் விடுவிக்கப்படல் வேண்டும் என்ற முனைப்பு மார்க்சியத்தில் மேலோங்கி நிற்கின்றது. ஆனால் இவ்வகையான ஒரு தெளிவு நிலை இருப்பியத்திலே
காணப்படவில்லை.
அறம், ஒழுக்கம் என்ற தலைப்புக்களில் சமயம் மற்றும் சமூக அமைப்புக்களிற் காணப்பட்ட ஒடுக்குமுறைகளையும் வன்முறைகளையும் நீட்சே (1844-1900) கண்டனங்களுக்கும் திறனாய்வுக்கும் உட்படுத்தினார். மனிதரின் விருப்பாற்றல்கள் தமது வலிமையைக் காட்டி மேலுயர்ந்து செல்லப் போராடிய வண்ணமுள்ளன. அதன் ஆற்றல் குன்றும்பொழுதுஅதனிலும் வலிமை கொண்ட வேறொரு விருப்பாற்றல் ஆட்சிக்குவரும். ஒவ்வொரு விருப்பாற்றலும் தம்மை மிஞ்சிச் செல்லமுடியாத மாமனித நிலையை (The Super man) அடையப் போராடிய வண்ணமிருக்கும். பிறரை அடக்கி ஒடுக்கி ஆட்சி செய்பவர் மாமனிதர் அல்லர். அறிவு, ஆற்றல், நன்மதிப்பு ஆகியவற்றின் ஒன்றிணைப்பால் மாமனிதர் உருவாக்கம் பெறுகின்றார்.
மனித இனம் மாமனித இனமாக மாறவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்திய நீட்சே அதனுTடாகப் பெண் களை அடிமைப்படுத்தும் கருத்தியலை ஆழ வலியுறுத்தினார். ஆண்களின் மேலாதிக்கத்தை வலியுறுத்தும் எழுத்தாக்கங்களை முன்வைத்தார். ஆண்கள் உடல் வலிமை மிக்க போர்க்குணமுள்ளவர்களாக உருவாக்கப்படல் வேண்டும் என்பதே அவரது தலையாய எதிர்பார்ப்பாக இருந்தது. திருமணத்தை தீர்மானிக்கும் பொறுப்பும் பெண்களைத்
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா | 105

தெரிவு செய்யும் பொறுப்பும் ஆண்களுக்கே உரியது என வலியுறுத்தினார்.
பெண்கள் வலிமை குன்றியவர்கள் பலவீனமானவர்கள், நம்பத்தகாதவர்கள் என்ற கருத்துக்களை மிகுந்த ஆரவாரத்தோடு கூறிய நீட்சே அவர்கள் ஆண்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமென மீள வலியுறுத்தினார். பெண்களை அடக்கவும் அடிமைப்படுத்தவும் அறிவியல் ஆதாரங்கள் அற்ற தமது அகவயமான கருத்துக்களை அவர் முன்மொழிந்தார்.
சொந்த வாழ்வில் அவர் அனுபவித்த பால்நிலைப்பட்ட தோல்விகளும், மணமுறிவும், அவருக்கு நேர்ந்த உடல் உள நோய்களும் பெண்கள் மீது அவருக்கு வெறுப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என்ற கருத்தும் முன்மொழியப்பட்டுள்ளது.
மனித சாராம்சம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட எதிரெதிர்த் துருவப்பாடுகள் கொண்ட கருத்துக்களாக மார்க்சியமும், இருப்பியமும் வடிவமைந்துள்ளன. பால்நிலை தொடர்பான கருத்தியலை முன்னெடுப்பதற்கு முன்னோடியாக நிகழ்ந்த அறிகைப் பதிவுகளில் மார்க்சியம் வலிமையுடன் மேலெழுந்துள்ளமையைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
சோசலிசப் புரட்சிகள் பெண்கள் மீதான சுரண் டலை முற்றுமுழுதாக விடுவிக்கவில்லை என்ற தீவிரமான கருத்தும் முன்மொழியப்பட்டுள்ளது. இது ஒருவகையில் கோட்பாட்டுக்கும் நடைமுறைக்கும் இடையேயுள்ள வெளியைத் தான் வெளிப்படுத்தி நிற்கின்றது.
மனித இருப்பை மாற்றியமைக்கும் வினைத்திறன் கொண்ட உழைப்புச் செயற்பாட்டிற் கல்வியின் பங்கு முக்கியமானது. சமூகத்தினதும் பெண்களினதும் இருப்பை மாற்றியமைக்கும் கல்விச் செயற்பாடு "தளமாற்றுகைக்கல்வி" எனப்படும்.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் | சபா.ஜெயராசா | 107

Page 58
புதிய ஆசிரியரும் புகுமலர்ச்சியும் அண்மைக்காலப் போக்குகள்
ஆசிரியர்களுக்கான புகுமலர்ச்சிக் கற்கை நெறிகள் (Teacher Induction Courses) அண்மைக்காலமாக செயல்முனைப்புடனும் கோட்பாட்டுச் சட்டகத்துடனும் வடிவமைக்கப்பட்டு வருகின்றன வெகுசனப் பாடசாலைகளின் பெருக்கத்தின் மத்தியில் உருவாகும் பன்முக எதிர்பார்ப்புக்களினூடே சமகால ஆசிரியத்துவம் மேலெழவேண்டியுள்ளது. பல்வேறு விதமான முரண்பாடுகள் மத்தியில் ஆசிரியப்பணி மேற்கொள்ளப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. காலங்கடந்த தேவைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆசிரியர்கள், மாறிவரும் புதிய தேவைகளுக்கும் புதிய அறைகூவல்களுக்கும் முகம் கொடுக்க வேண்டிய நிலையிலுள்ளனர். கல்விக்களத்தில் எழும் சமூக பொருளாதார முரண்பாடுகளையும், பால்நிலை முரண்பாடுகளையும் ஆசிரியர் நேரடியாக எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்நிலையில் ஆசிரியர்களுக்கான புகுமலர்ச்சிக்கற்கைத் திட்டமிடல் அதீத கவன ஈர்ப்பைப் பெறத் தொடங்கியுள்ளது.
உலகளாவிய முறையில் ஆசிரிய எண்ணிக்கைப் பெருக்கம் ஒரு பொதுவான தோற்றப்பாடாக இன்று காணப்படுகின்றது. சீனாவில் மட்டும் ஒருகோடி ஆசிரியர்கள் கற்பித்தற் பணிகளில் FFG6)Lu(Bjg5 Lull (B)6ir GMT GOT fi. (Lo, L (1999) International Conference of Teacher Education, Chinese University of Hong Kong) ஆசிரியத்துவமும் கல்வியும் முன்னரிலும் கூடுதலான வேண்டு தல்களை எதிர்நோக்கிய வண்ணமுள்ளன. இந்நிலையில் "சேவைக்கு முந்திய பயிற்சி” என்ற பழைய எண்ணக்கரு கைவிடப்பட்டு "புகு" மலர்ச்சி” (Induction) என்ற எண்ணக் கரு முன்மொழியப்பட்டுள்ளது. இது வெறுமனே பெயரளவில் நிகழும் மாற்றமன்று. உள்ளடக்க நிலையிலும் மாற்றங்களை இது தாங்கி நிற்கின்றது.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா | 108

மரபுவழித் தேவைகளுக்குரிய கல்வியை சேவைக்கு முந்திய பயிற்சி உள்ளடக்கி நின்றமை குறிப்பிட்டுக் கூறக்கூடிய ஒரு பரிமாணமாகும். விரைந்து மாற்றமுறும் நவீன சந்தை விசைகள் உருவாக்கும் நிச்சயமற்ற தளங்களின் மத்தியில் ஆசிரியத்துவமும் கல்வியும் அறைகூவல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றன. இந்நிலையில் கற்பித்தல் தரத்தினை இனங்காணுதலும் முகாமித்தலும் தொடர்பான மீள் கருத்துக்கள் மேலெழத் தொடங்கியுள்ளன.
சமகால உலகில் எதிர்பார்க்க முடியாத மாற்றங்களைப் பின்னைய முதலாளியம் ஏற்படுத்திய வண்ணமுள்ளது. மனித எதிர்பார்ப்புக்கள் ஆபத்துக்களுடன் (Risks) இணைக்கப்படுகின்றன கல்வி தொடர்பான சந்தை நிலவரங்கள் முன்னரிலும் கூடுதலான தளம்பல்களுக்கு உள்ளாகி நிற்கின்றன.
இவற்றின் பின்புலத்தில் ஆசிரிய அந்தஸ்து பெயர்ச்சியடையத் தொடங்கியுள்ளது. ஆசிரியத்தில் இருந்து கொண்டு அந்த வேலையைக் கற்றுக் கொள்ளும் நடைமுறைக்கும் இலட்சிய வாண்மை ஆற்றுகைக்குமிடையே உராய்வுகள் எழத் தொடங்கி யுள்ளன. ஆசிரியர்களுக்குத் தரப்படும் புதிய பொறுப்புக்கள் சிக்கலாகும் தன்மைகளைக் கொண்டுள்ளன. புதிய புதிய கற்றல் உள்ளடக்கங்களைக் கையாளும் நிலை தோன்றியுள்ளது.
ஆசிரியத்துவ நடைமுறைகள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படாது செயற்படுத்துவதற்குரிய திட்டங்கள் மேற்கொள்ளப்படுதல் கல்வி நிலையிலும், கற்பித்தல் நிலையிலும் தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன. கல்வி நிர்வாகம் ஆசிரியத்துவக் கண்ணோட்டத்திலே உருவாக்கப்படாது நிர்வாகிகளின் அல்லது பணியாட்சியாளரின் கண்ணோட்டத்திலே கட்டுமை செய்யப்பட்டு வருகின்றது. இதனால் ஆசிரியர்களின் மனப்பதிவுகள், அனுபவங்கள், தெறிப்புக்கள் பின்தள்ளப்பட்டு விடுகின்றன. கல்விக்கொள்கை உருவாக்கம் பணியாட்சிமயப்பட்டதாக இருக்கின்றதேயன்றி ஆசிரிய மயப்பட்டதாக அமையவில்லை.
ஆசிரிய வாண்மைக்கல்வி மற்றும் புகுமலர்ச்சிக் கற்கை தொடர்பான விரிவான ஆய்வுகளும் அவற்றை அடியொற்றிய நடைமுறைப் பரிந்துரைகளும் இங்கிலாந்தின் ஆசிரிய பயிற்சி (p56 IU60) LDLL flat (TG) (Teacher Training Agency) (6616full liபட்டுள்ளன.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா | 109

Page 59
இங்கிலாந்தின் கல்விச் செயற்பாடுகளை அடியொற்றி வெளி
யிடப்பட்ட அவர்களது அனுபவங்கள் சமகாலத்தில் வளர்ச்சியுற்றுவரும் உலக நிலவரங்களுக்கு ஏற்புடையதான கண்ணோட்டத்தைப் புலப்படுத்துகின்றன. அவர்கள் வெளியிட்ட விரிவான பட்டியலின் சுருக்கம் கீழே தரப்படுகின்றது. (TTA, 1999)
I.
வகுப்பிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் பயன்படக்கூடிய வகையில் வினைத்திறன் கொண்ட கற்றபித்தலை தரப்பட்ட நேர அளவினுள் ஆற்றுகை செய்து இலக்குகளை அடையச் செய்தல். சிறந்த கற்றலை மேற்கொள்வதற்குரிய வினையீடுகளையும் நெறிப்பாடுகளையும் முன்னெடுத்தல். இலக்குடன் செயற்படும் கவிநிலையை வகுப்பில் ஏற்படுத்துதல். விளைவு கொண்ட செயற்பாடுகள் வாயிலாகவும், வகுப்பறைத் தொடர்புகள் வாயிலாகவும் உயர்ந்த இலக்குகளை அனைத்து மாணவர்களிடத்தும் ஏற்படுத்துதல். அனைத்து மாணவர்களிடத்தும் நம்பிக்கையையும், பாதுகாப்பையும் உருவாக்கிக் கற்றலை மேம்பாடு கொள்ளச் செய்யும் சூழலை வடிவமைத்தல். அனைத்து மாணவர்களையும் கவரச் செய்யும் கற்பித்தல் முறையியல்களை நடைமுறைப்படுத்தல். வகுப்பில் உள்ள எல்லா மாணவர்களும் எதிர்பார்க்கப்பட்ட இலக்குகளை எட்டியுள்ளனரா என்பதைப் புறவயமாகக் கணிப்பீடு செய்தல். மாணவர்களைத் தொடர்ச்சியாகக் கணிப்பீடு செய்வதுடன் ஆசிரியர் தம்மைத்தாமே தீவிர கணிப்பீட்டுக்கு உள்ளாக்கல்.
ஆசிரிய வாண்மைக்குரிய அறிவுக்கையளிப்பில் இலங்கையிற்
பல இடைவெளிகள் காணப்படுகின்றன. உலகக்கல்வி நடவடிக்" கைகள், உலகக் கல்விச் சட்டங்கள் ஒடுக்கு முறையிலிருந்து மீண்டெழுவதற்கான கல்வி உபாயங்கள் முதலியவை ஆசிரியர்களுக்கும், கல்வி நிர்வாகிகளுக்கும் போதுமான அளவிலே கையளிக்கப்படாதிருக்கும் இடைவெளிகள் இலங்கையிலே காணப்படுகின்றன. இதனால் சிறுவர் பாதுகாப்பு, பால்நிலைச் சமத்துவம், பிரதேசப் பாகுபாடின்மை, இனத்துவப் பாகுபாடு இன்மை முதலியவற்றை
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா | 110

முழுவீச்சில் உறுதிப்படுத்த முடியாமலிருக்கின்றது. இவற்றைப் பற்றிய அறிவைப் புகுமலர்ச்சிக் கற்கையில் வளமாக ஒன்றிணைக்க வேண்டியுள்ளது. கல்வியின் சமூகக் கட்டுமானப் பணிகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டியுள்ளது.
நமது கல்விமுறையில் ஓங்கி நிற்கும் தனிமனிதவாதம் பால் நிலையிலும், சமூக நிலையிலும் தாக்கங்களை ஏற்படுத்திய வண்ணமுள்ளது. இதற்கு மாற்றீடான கோட்பாடுகளையும் கருத்தியல்களையும் ஆசிரியப் புகுமலர்ச்சி உள்ளடக்கத்திலே சேர்க்க வேண்டியுள்ளது.
(1) கோளம் சார்ந்தவை
(2) பால்நிலை சார்ந்தவை
(3) சமூகம் சார்ந்தவை என்ற நிலைகளில் தெளிவானதும், நிலைமாற்றம் செய்யக் கூடியதுமான கோட்பாடுகள் கையளிப்புச் செய்யப்பட வேண்டியுள்ளன.
ஆசிரியரதும் மாணவரதும் திறன்களையும், ஆற்றல்களையும் மேம்படுத்துவதற்குரிய உளவியலறிவுக் கையளிப்பு அடுத்ததாக முக்கியத்துவம் பெறுகின்றது. எமது நாட்டு உளவியற் பாடத்திட்டங்களில் நடத்தை உளவியலுக்கும் அறிகை உளவியலுக்குமே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை விரிவடைந்து செல்லும் மார்க்சிய நவமார்க்சிய உளவியலைக் கற்பித்தல் வறிதாகவுள்ளது.
பின் கட்டமைப்பியல் (Post Structuralism) உளவியற் கருத்துக்கள் ஆசிரியப் புகுமலர்ச்சிப் பாடத்திட்டங்களிலே சேர்க்கப்பட வேண்டியுள்ளன.
ஆசிரியரது அறிவுக் கொள்ளளவு மாணவரது அறிவுக் கொள்ளளவைத் தீர்மானிக்கும் அடிப்படையாக இருப்பதனால் வளர்ந்து வரும் உலக அறிவுப் பெருக்கை திரட்டிக் கொள்ளும் பரிமாணங்களை ஆசிரியவாண்மையிற் புகுவோரிடத்துப் பதியச் செய்ய வேண்டியுள்ளது. அறிவுக் கொள்ளவை அதிகரிப்பதன் வாயிலாகவே ஆசிரியரின் வாண்மை நிலையை மேலோங்கிச் செல்லமுடியும். தரமான கற்பித்தலை உருவாக்க முடியும்.
ஆசிரியரது அந்தஸ்து நிரலமைப்பை ஆய்வு செய்தோர் பின்வரும் படிநிலை அமைப்பைத் தந்துள்ளனர். (Dreyfus, Hand
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 111

Page 60
Dreyfus, M (1986) Mind over Machine, Newyork, The Freepress)
(1) புதிதாக ஆசிரிய வாண்மைக்கு அறிமுகமாவோர் (Novice)
(2) முன்னேற்றகரமான தொடக்க நிலையாளர். (Advanced Be
ginners)
(3) திறன் தகவு கொண்டோர் (Competent)
(4) (35iářsf) (635TGoořG3. Ti (Proficents)
(5) மேதாவிகள் அல்லது புலமைமிக்கோர் (Experts)
சேவை மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை மேலுயர்த்திச் செல்வதற்குரிய திட்டம் வகுக்கப்பட்டிருப்பது போல் அறிவாற்றல் நிலையிலும் ஆசிரியர்களை மேலுயர்த்திச் செல்லும், திட்டம் அவசியமாகின்றது. அறிவாற்றல் நிலையில் ஆசிரியர்களை மேலுயர்த்தும் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் பொழுது, இளம் ஆசிரியர்களுக்கு ஏற்படும் வாண்மை சார்ந்த மனமுறிவை நீக்க முடியும்.
பெண் ஆசிரியைகளின் வாண்மை நிலைப் பிரச்சினைகளைக் குவியப்படுத்தி புகுமலர்ச்சிக் கற்கை நெறிகள் உருவாக்கப்பட7திருத்தலைக் குறிப்பிட வேண்டியுள்ளது. பெண் ஆசிரியைகளின் தன்னம்பிக்கை வளர்ச்சி வேண்டுமென்றே ஆழ்ந்த பாதுகாப்பு இன்மைக்கு (Insecurity) உட்படுத்தப்படுகின்றது. அவர்களது சுய இனங்காணலிலே குழப்பங்களை இந்நிலை ஏற்படுத்துகின்றது. (Lestickle, (2000) Teacher Induction The way ahead, Buckingham, open university press)
ஆரம்பநிலை ஆசிரியத்துவத்தைக் குவியப்படுத்துதல் புகுமலர்ச்சியில் முக்கியமானது. அதன் பரிமாணங்களாவன: (அ) ஆசிரிய நியமனத்தைத் தொடர்ந்து உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் (ஆ) கற்பித்தலை மேற்கொள்வதற்கு முன்னோடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் (இ) கலைத்திட்ட இயக்கத்தோடும் பாடசாலை முகாமைத்துவத்தோடும் இணைந்த செயற்பாடுகள், (ஈ) கற்பித்தலியல் தொடர்பான நவீன அறிவுக் கையளிப்பு. புதிய ஆசிரியர்களுக்கு அறிவாற்றுனரின் (Mentor) ஆதரவு தொடர்ச்சியாக வேண்டப்படுவதை நினைவிற் கொள்ளல் வேண்டும்.
கடின உழைப்பை வழங்கிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கான ஊக்குவிப்புக்கள் சமகாலக் கல்விக்கட்டமைப்பில் வறிதாக"
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா | 112

வுள்ளன. ஆர்வத்துடன் ஆசிரியவாண்மையில் நுழைவோரை மனமுறிவுக்கு உள்ளாக்கும் சந்தர்ப்பங்கள் பரவலாகவுள்ளன. இறுகி உறைந்த மரபுக்கட்டமைப்பு புதிதாக வரும் ஆசிரியர்களுக்கு வழங்கும் எதிர்வினைகளே மிகையாகவுள்ளன. பெண் ஆசிரியர்களே இவற்றின் தாக்கங்களுக்குக் கூடுதலாக உள்ளாக்கப்படுகின்றனர்.
தன்னிலைப்பட்ட பெறுமானத்தேய்வுக்கு ஆசிரியர் உள்ளாக்" கப்படும் பொழுது கற்றல் கற்பித்தற் செயற்பாடுகள் நேரடியான பாதிப்புக்களுக்கு உள்ளாகின்றன. கல்வி மூலதனத்தின் திரட்டல் ஆசிரிய வாண்மையின் ஆக்கத்துடன் நேரடியாகத் தொடர்புடையது என்பதை மனங் கொள்ளல் வேண்டும்.
முழுமையான ஆசிரியவாண்மையுடன் இணைய வைக்கும் ஆரம்ப நடவடிக்கையாக அமையும் புகுமலர்ச்சியை நன்கு திட்டமிட்டு ஒழுங்கமைக்கும் பொழுதுதான் ஆசிரிய வாண்மை" யாக்கத்தை தரச்சிறப்புடன் முன்னெடுக்க முடியும். இது ஒருவகை" யிலே "பாலம்" அமைக்கும் செயற்பாடாகும். ஆசிரிய வாண்மையின் முதலாண்டை முக்கியமாகக் குவியப்படுத்தி இது உருவாக்" கப்படுதலே பொருத்தமான நடவடிக்கையாக இருக்கும். வாண்மைச் சமூகமயமாக்கும் இந்த நடவடிக்கையின் வெற்றி எதிர்கால ஆசிரிய வாண்மை முன்னேற்றத்துக்கு அடிப்படையான நுழைவாயிலாக அமையும்.
கற்பித்தலில் ஈடுபடும் முதல் ஆண்டுக்குரிய அமைப்பு நிலை ஆதரவு (Structural Support) வாணி மை முன்னெடுப்புக்கு அடிப்படையாகின்றது. அமைப்பு நிலை ஆதரவு வாணிமை முழுவதும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் பொழுதுதான் கற்றல் கற்பித்தலிலே தரமேம்பாடுகளை வருவிக்க முடியும். போதுமான அமைப்பு நிலை ஆதரவை வழங்காது ஆசிரியர் மீது குற்றஞ்சுமத்தும் எதிர்மறை அணுகுமுறைகள் மேலோங்கியிருத்தலைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. அமைப்பு நிலை ஆதரவு கிடைக்கப்பெறாத நிலையில் ஆசிரியரின் தற்கருத்தும் (Personal Meaning) பாதிப்புக்கு உள்ளாகின்றது.
உலகம் முழுவதிலும் ஆசிரியர் தொகையில் பெண்களின் எண்ணிக்கையே அதிகரித்து வருகின்றது. ஆனால் ஆசிரிய வாண்மைப் பயிற்சித் திட்டங்கள் ஆண்களினாற் பெருமளவில் மேற்கொள்ளப்படுகின்றன.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா | 113

Page 61
ஆற்றல் மிகு மாணவர்களை உருவாக்குவதற்குரிய ஆசிரியத்துவம்
வெற்றிகரமான மாணவர்களை உருவாக்குவதற்குரிய தேடல்கள் உளவியல் எழுச்சிக்கும், சோசலிசப் பரவலுக்கும் பின்னர் தீவிரமடையத் தொடங்கியுள்ளன. மாணவரின் வாழ்க்கைத் தரவேறுபாடுகள், பாடசாலைகளின் வளவேறுபாடுகள், இடநிலைய வேறுபாடுகள், தனியாள் உளநிலைவேறுபாடுகள் என்ற அனைத்தையும் கவனத்துக்கு உள்ளாக்கி வெற்றிகரமான மாணவர்களை உருவாக்கு" வதற்குரிய ஆசிரியத்துவ ஆக்கம் பற்றிய கருத்துக்கள் கல்வியியலிற் கூர்ந்து நோக்கப்படுகின்றன.
இவை தொடர்பான முன்னோடி ஆய்வுகள் சிலவற்றை டேவிட் செசிடெக்கர் மற்றும் வில்லியம் பிறீமன் (1999) மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆசிரியத்துவ வினைத்திறன் தொடர்பான அணி மைக் காலத்தைய ஆய்வுகள் முதற் கணி ஆசிரியத்துவ ஆளுமை நோக்கியே திரும்பியுள்ளது. தனித்துவமான ஒர் ஆசிரிய ஆளுமையை வரையறை செய்து விளக்குவதற்கு உளவியலாளர் இன்னமும் சிரமத்துக்கு உள்ளாகி நிற்றலை முதற்கண் குறிப்பிடவேண்டியுள்ளது. ஏனெனில் வேறு வேறுவித மான ஆளுமைக் கூறுகளைக் கொண்டோர் வெற்றிகரமான மாணவர்களை உருவாக்கி வருதல் உண்டு.
அதே வேளை வெற்றிகரமான மாணவர்களை உருவாக்கு" வதில் பால்நிலை வேறுபாடுகள் காட்டப்படுதல் கள ஆய்வுகளில் இருந்து பெறப்பட்ட இன்னொரு தகவல் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
ஒரே ஆளுமைப்பண்பு எல்லா மாணவர்களாலும் விரும்பப்படும் என்று கூறமுடியாதுள்ளது. மாணவரின் பன்முகப்பாடு காரணமாக ஒவ்வொரு மாணவரதும் உளப்பாங்குகள் வேறுபட்டு
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா | 114

நிற்கும் என்ற கருத்தை அடியொற்றி மேற்கூறிய கருத்து முன்வைக்கப்
பட்டுள்ளது. ஆனால் ஒடுக்கு முறைக்கும் சுரணி டலுக்கும்
உள்ளாகும் மாணவர்களிடத்து குறிப்பிட்ட சில ஒத்த பண்புகள்
மேலோங்கிநிற்கும் என்பதை மறுக்க முடியாது.
மாணவர்களது கண்ணோட்டத்தில் ஒரு சிறந்த ஆசிரியரிடத்
துப் பின்வரும் ஆளுமைப்பண்புக் கூறுகள் இருத்தல் வேண்டும்
என்பது கண்டறியப்பட்டுள்ளது.
(1) அறிவாற்றல் மேலோங்கி நிற்றல்
(2) பொறுமை காத்தல்
(3) பயமுறுத்தும் பண்பு இல்லாமை
(4) ஊக்கல் வழங்கல்
(5) அறிவுசார் அறைகூவல் விடுத்தல்
(6) நேர்ப்பண்புகளுடன் தொழிற்படல்
(7) செறிவுடன் தொழிற்படல்
(8) புத்தி சாதுரியம் கொண்டிருத்தல்
(9) அர்ப்பணிப்பு
(10) நேர்மை
(11) மாணவர் பிரச்சினைகளை விளங்கிக் கொள்ளல்
(12) மாணவர் நலன் பேணல்
(13) நட்புப் பண்பு
(14) நகைச்சுவைப் பண்பு
(15) புத்தாக்கப் பண்பு
(16) மகிழ்ச்சியுடன் தொழிற்படல்
(17) சுறுசுறுப்பு
(18) வியப்பூட்டும் பண்பு
(19) பெறுபேறுகளை உருவாக்கும் பண்பு
(20) பால்நிலைவேறுபாடுகள் மற்றும் சமூக நிலை வேறுபாடு முதலியவற்றை வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ காட்டப்படாதிருத்தல். மேற்கூறிய பண்புக் கூறுகளை ஒன்றிணைக்கும் ஆசிரியரால்
வெற்றிகரமான மாணவர்களை உருவாக்க முடியும்.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 115

Page 62
பாடசாலையைப் பொறுத்தவரை மாணவர் ஒவ்வொருவரையும் வெற்றிபெறச் செய்வதற்கு இணையான செயல்கள் வேறெதுவும் இல்லை. வெற்றியை உருவாக்குதல் நான்கு பெரும் பரிமாணங்களாகப் பகுத்து நோக்கப்படுதல் உண்டு.
1. இலக்குகளைப் பகுப்பாய்வு செய்தலும், குறித்த இலக்குகள் எட்டப்பட்டுள்ளனவா என்பதைத் தெளிவாகக் கணிப்பீடு செய்தலும். 2. ஆசிரியவாணி மைப் பெருமிதத்தை நிலைநாட்டுதலும்
இயக்குதலும். 3. இந்த இரண்டாவது பிரிவிலே கற்றல் கற்பித்தல் செயல்முறையின் வினைப்பாடு, தீவிர ஊக்கல் நடவடிக்கைகள், ஆபத்துக்களைத் தாங்கி மேலெழல், மாணவர்களை வினைத்திறனுடன் தொழிற்படவைத்து வேலை வாங்குதல் முதலியவை இடம்பெறும். 3. 6 1606Tuggj6ir 6 IT!pai (Living in the Loop) 351 boia T 96Tவியலிற் பயன்படுத்தப்படும் ஒரு சொற்றொடராகவுள்ளது.
இந்த மூன்றாவது பிரிவாகிய "வளையத்துள் வாழ்தல்” விரிவாக நோக்குதற்குரியது. மாணவர்கள் பல்வேறு சமூகநிலை, பொருளாதார நிலை, முதிர்ச்சிநிலை, ஆற்றல்நிலை மற்றும் பால்நிலை ஆகியவற்றில் வேறுபாடுகளையும் தனித்துவங்களையும் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். இந்த வேறுபாடுகளை விளங்கி நெகிழ்ச்சிப்பண்புடன் தொழிற்படுதல், கல்விச் செயல்முறையோடு நெகிழ்ச்சி கொண்டு இயங்குதல் முதலிய குணவியல்புகளோடு வினைத்திறனுடன் தொழிற்படுதல் வளையத்துள் வாழ்தலின் ஒரு சிறப்பார்ந்த பரிமாணம். கல்வி செயற்பட்டுக் கொண்டிருக்கும் வளையம் பல்வேறுபடிமுறைகளை உள்ளடக்கி நிற்கின்றது. திட்டமிடல், செயற்படுத்துதல், உரைச்சுருக்கக் குலைத்தல் (Debieting) மீள் திட்டமிடல், என்றவாறான பல படிமுறைகள் கல்வி வளைப் புள் இடம் பெறுகின்றன. ஒவ்வொரு படிமுறையும் முழுவளையத்தின் இருப்பையும் முக்கிய கூறான அமைப்பியற் பண்பையும் கொண்டுள்ளன. இந்தச் செயற்பாட்டுத் தொகுதியுள்ளே ஆற்றலுடன் வாழ்தல் வளையத்துள் வாழ்தலாகின்றது.
பொதுவான கல்வித் திட்டமிடல் மாணவரின் பன்மையான இயல்புகளைக் கருத்திலே கொள்ளாதவையாயும், பால்நிலைச்
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 116

சமத்துவத்தை முனைப்பாகக் கொள்ளாதவையாயும் அமைந்துள்ளன. இவ்வாறான குறைபாடுகளை நீக்கும் வகையில் கல்வியைத் திட்டமிடல் வேண்டும். மாணவர்களால் ஈட்டப்பட வேண்டிய பிரதான இலக்குகளையும் துணை இலக்குகளையும் தெளிவாக்கி கலைத்திட்டத்தை இயக்கமுறச் செய்யும் நெறியாள்கை ஆசிரியருக்குரிய தலையாய செயற்பாடாகின்றது.
இலக்குகளை அடைவதற்குரிய பாடங்களைத் திட்டமிடல், அனுபவங்களை ஒழுங்கமைத்தல், கணிப்பீடுகளைச் செய்தல் முதலியவற்றிலே தீவிர கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஒவ்வோர் அலகிலும் ஒவ்வொருமாணவரும் மீயாற்றல் (Mastery) பெறுமாறு கவனமெடுத்தல் வேண்டும்.
மாணவர் எதிர்நோக்கும் தோல்விகளை ஆசிரியரும் மாணவரும் சேர்ந்து தமக்குரிய சவால்களாகக் கருதுதலே ஏற்புடையது. தோல்விகளைக் குற்றச் சாட்டுக்களாக நிலைமாற்றாது அறைகூவலாக்குதலையே நவீன கல்வி முன் மொழிந்து நிற்கின்றது. தோல்விகள் தொடர்பான குறித்துரைத்தலை மாற்றுதலே "உரைச் சுருக்கக்குலைத்தல்" (Debrieting) என்ற எண்ணக்கருவால் வெளிப்படுத்தப்படுகின்றது. மாணவரின் பன்முகப்பாங்கை அடியொற்றி உருவாகும் வளையம், பொருத்தமான மீள் திட்டமிடலுடன் நிறைவை அண்மிக்கின்றது.
மாணவரை வெற்றியடையச் செய்யும் தொழிற்பாட்டில் மாணவரதும் ஆசிரியரதும் பங்குடைமை வலியுறுத்தப்படுகின்றது. "ஆசிரியருக்காக மாணவர் தொழிற்படுதல்” என்ற நிலை மாற்றி யமைக்கப்படல் வேண்டும். தோல்வியால் எழும் எதிர்கால நம்பிக்கை வீழ்ச்சி வறிய பெண்களிடத்தே கூடுதலாகத் தூண்டிவிடப்படுதலை ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. (கள ஆய்வு, மானிப்பாய் 25-03-2005)
மாணவர்களிடத்து வெற்றியை ஏற்படுத்தும் செயற்பாட்டில் உயர்ந்த எதிர்பார்ப்புக்கள் சிறப்பான இடத்தை வகிக்கின்றன. இந்நிலையில் மாணவர்களது எழுச்சிச் செயல்முறைகளோடும் அறிகை வளர்ச்சியோடும் ஆசிரியர் சங்கமித்து நிற்றல் வேண்டும். உயர்ந்த எதிர்பார்ப்புக்கள் பின்வரும் எழுநிலைகளுடன் தொடர்புபட்டு நிற்கும்.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் | சபா.ஜெயராசா | 117

Page 63
(1) எதிர்பார்ப்புக்களைத் தீர்மானித்தல். (2) இடர்களை இனங்காணல். (3) எதிர்பார்ப்புத் தொடர்பாடல். (4) புறநிலைப்படுத்தலையும், தொடர்ச்சியை நிலைநிறுத்தும்
பண்புகளையும் பராமரித்தல் (5) மன்னிப்புக்களை அகற்றுதல்.
எமது பண்பாட்டில் கல்வியால் எட்டப்படக்கூடிய உயர்ந்த எதிர்பார்ப்புக்களில் பெணகளும், வறியவர்களும் டபின்னடைவுகொள்ளும் செயற்பாடுகளே ஒப்பிட்டளவில் மேலோங்கியுள்ளன. உயர்ந்த எதிர்பார்ப்புக்களே தொடர்ச்சியான ஊக்கலைத் தூண்டிய வண்ணமிருக்கும் என்பதை மனங்கொள்ளல் வேண்டும்.
ஆசிரியர்களிடத்தும் உயர்ந்த எதிர்பார்ப்புகள் நிலைபேறு கொண்டிருக்கும் பொழுதுதான் மாணவர்களை வெற்றிப்பாதையில் அழைத்துச் செல்ல முடியும்.
எதிர்பார்ப்புக்களைத் தீர்மானித்து வரையறை செய்தல் பின்வரும் பரிமாணங்களுடன் தொடர்புடையது.
(1) நல்ல தரிசனங்களை உருவாக்கல். (2) திட்டங்களை வடிவமைத்தல். (3) நெகிழ்ச்சியைப் பராமரித்தல். (4) மூலாதாரங்களை அங்கீகரித்தல்
(1) நல்ல தரிசனங்களை உருவாக்கும் பொழுது கல்வியின் நோக்கை ஒடுங்கிய ஒரு கோணப்பாதையில் இருந்து விடுவித்து பன்முக முன்னேற்ற வழிகளை மாணவர்களுக்கு அறி. முகம் செய்தல் வேண்டும். இலங்கையைப் பொறுத்தவரை அரசாங்கம் நடத்தும் க.பொ.த. (சாதாரணதரம்) மற்றும் உயர்தரப்பரிட்சைகளுக்குச் சமாந்தரமான வேறு பரீட்சைகள் கட்டமைப்புச் செய்யப்படாமலிருத்தல் கல்விச் செயற்றொகுதியிலே காணப்படும் பாரிய குறைபாடாகும். இவற்றுக்குச் சமாந்தர கணிப்புடைய வேறு பரீட்சைகளைக் கட்ட" மைப்புச் செய்தல், மாணவர்களிடத்தே தோன்றும் உளவியற் பிரச்சினைகளைத் தணிப்பதற்குத் துணையாக அமையும்.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 118

நெடுங்கோட்டு நிலையில் வறிய மாணவர்கள் மேலெழும் வாய்ப்புக்கள் அரிதாக இருத்தலும், இருக்கும் வாய்ப்புக்கள் பற்றிய தகவற் பரிமாற்றங்கள் தாழ்ந்த நிலையில் இருத்தலும், வறிய மாணவர்களிடத்து மனமுறிவை ஏற்படுத்தத் துணை நிற்கின்றன. இந்நிலையில் ஆசிரியராலும் மாணவராலும் உருவாக்கப்படக் கூடிய எதிர்காலத் தரிசனங்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன.
இலங்கையின் இரண்டாம் நிலைக் கல்வியோடு ஒப்பிடும் பொழுது மூன்றாம் நிலைக் கல்வி சுருங்கிய நிலையிலே காணப்படுகின்றது. இந்நிலையில் மாணவரது எதிர்பார்ப்புக்களை உருவாக்குவதில் ஆசிரியர்கள் இடர்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
க.பொ.த உயர்தர வகுப்புக்களில் கணிதம் விஞ்ஞானம் முதலியவற்றைக் கற்பிக்கும் பாடசாலைகள் மொத்தப் பாடசாலைத் தொகுதியில் ஆறு விழுக்காட்டைக் கொண்ட நிலையே காணப்படுகின்றது. (Daily News, 02-12-2006) இப்பாடப் புலங்களிலே பயிலும் பெண்களின் எண்ணிக்கை ஆணர்களோடு ஒப்பிடும் பொழுது குறைவடைந்தே காணப்படுகின்றது.
இலங்கையின் கல்வித் தரமேம்பாடு மேல்மாகாணத்தை நோக்கிக் குவியப்படுத்தப்பட்ட அளவுக்கு ஏனைய மாகாணங்களை நோக்கிக்குவியப்படுத்தப்படவில்லை. கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் முதலாம் பாடங்களில் மட்டுமன்றித் தாய்மொழி அடைவுகளிலும் மேல்மாகாணமே மேலோங்கியுள்ளது. நிர்வாக நிலையிலும், அரசியல் நிலையிலும், அந்தஸ்து நிலையிலும் மேல் மாகாணமே ஆசீர்வதிப்புக்கு உள்ளான மாகாணமாகவுள்ளது. மேல் மாகாணத்திலும் வறிய பிள்ளைகளின் அடைவுகளிலே தொடர்ச்சியான பின்னடைவுகளே காணப்படுகின்றன. மாணவர்களது எதிர்பார்ப்புக்களை உருவாக்குவதில் பெற்றோர், மாணவர், ஆசிரியர், கல்விப்பணியாட்சியினர், அரசியல் வலுவுடையோர் முதலியோரிடத்துக் காணப்படும் முரண்பாடான நிலைகள் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளன.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா | 113

Page 64
(2)
(3)
(4)
(5)
மாணவரின் உள ஆற்றல், மனவெழுச்சி இயல்புகள், ஆற்றுகைத் திறன்கள், உளப்பாங்குகள் முதலியவற்றை விரிவாக ஆராய்ந்த பின்னரே எதிர்பார்ப்புக்களை உரிய முறையிலே கட்டமைப்புச் செய்ய முடியும். இவற்றை அடிப்படையாகக் கொண்டே பொருத்தமான திட்டங்களை உருவாக்கி, தந்திரோபாய நிலையிலும், நெடுங்கோட்டு நிலையிலும் வேண்டியவிடத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வெற்றி பெறச் செய்ய முடியும்.
எதிர்பார்ப்புக்களை உருவாக்குவதிலும், செயற்படுத்துவதிலும், எதிர்கொள்ளப்படும் தடைகளை இனங்காணல் முக்கியமானதாக அமைகின்றது.
எதிர்பார்ப்புத் தொடர்பாடல், பல பரிமாணங்களைக் கொண்டது. கற்கை நெறிகள், பாடங்கள், உயர்கல்வி வாய்ப்புக்கள், தொழில் உலகம் முதலியவை முக்கிய பரிமாணங்களாகும். இவை பற்றிய சரியான தொடர்பாடல்கள் நிகழ்த்தப்டாதவிடத்து போலியான எதிர்பார்ப்புக்களே மேலோங்கும்.
புறநிலைப்படுத்தலையும், தொடர்ச்சியை நிலைநிறுத்தலையும் ஏற்புடைய முறையிற் பராமரித்தல் அடுத்ததாக முக்கியத்துவம் பெறுகின்றது. அனைத்துமாணவரிடத்தும் உயர்நிலையான எதிர்பார்ப்புக்களை உருவாக்குதல், தொடர்ச்சியாக அந்தச் செயற்பாட்டினைப் பராமரித்தல், வெகுமதிகள், ஊக்கல்கள், தண்டனைகள் முதலியவற்றை அந்தஸ்து வேறுபாடின்றி வழங்குதல். தரமுடைய புறநிலை நோக்கை முன்னெடுத்தல், முற்சாய்வின்றித் தொழிற்படல், தெளிவான எதிர்காலப் புலக்காட்சி கொள்ளல் முதலியவை இந்நிலையில் முக்கியத்துவம் பெறுகின்றன.
மன்னிப்புக்களை அகற்றும் செயற்பாடு அடுத்ததாக முக்கியத்துவம் பெறுகின்றது. பரீட்சைத் தோல்வியின் மன்னிப்புக்களை அகற்றுதலே இதன் பொருளாகும்.
முடியாதது, இயலாதது, கடினமானது, பாதகமானது என்ற பேச்சுக்களுக்கு இங்கே இடமில்லை. யதார்த்த நிலையில்
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 120

மாணவர்களுக்கு வலுவூட்டலே சிறப்பார்ந்த செயற்பாடாகக் கருதப்படுகின்றது. மாணவர்களிடத்து நலன்களை உருவாக்கும் செயற்பாடுகளில்
தொடர்பாடல் திறன்கள் அடுத்ததாக முக்கியத்துவம் பெறுகின்றன. பின்வருவன சிறந்த தொடர்பாடல் திறன்களாகக் கற்பித்தலிலே முன்மொழியப்பட்டுள்ளன. 1. சிறந்த அளிக்கைத்திறன்களைப் (Presentation Skis) பயிற்சி
செய்தல். உயர்ந்த ஈடுபாட்டு மட்டத்தினைப் பராமரித்தல். குழு இடைவினைகளை மேற்கொள்ளல்.
தனியாள் இடைவினைகளை மேற்கொள்ளல்.
தொடர்பாடல் நடைமுறைகளோடு கற்பித்தல் நடைமுறைகளை
வினைத்திறன்மிக்க அளிக்கைத்திறன் பயிற்சிகளை ஆசிரிய வாண்மைக் கல்வியில் வளமாக ஒன்றிணைக்க வேண்டியுள்ளது. நடைமுறையில் உள்ள தொடர்பாடலில் ஆண்பால் விளிப்புக்கள் மேலோங்கியிருத்தல் பால்நிலைச் சமத்துவத்தைப் பாதிக்கின்றது.
எடுத்துக்காட்டாக சிலவற்றைக் குறிப்பிடலாம் - முயற்சியாண்மை, செயலாண்மை, ஒலிப்பான், அசைப்பான், கவனக் கலைப்பான், புத்திமான் முதலியவை.
அளிக்கைத் திறன்கள் பின்வருவனவற்றை உள்ளடக்கும். (1) கேட்கப்படவும் விளங்கப்படவும் கூடியதாக இருத்தல். பின்வரிசைகளில் இருப்போரும் கேட்கக் கூடியதாக உரத்துப் பேசுதல், தெளிவான உச்சரிப்பு, வாக்கியத்தின் இறுதிப் பகு" தியை விழுங்காதிருத்தல் முதலியவை இங்கு முக்கியத்துவம் பெறும்.
(2) ஒரே வகையாகப் பேசாது தேவைக்கேற்றபடி குரல் ஒலிப்புக்களை மாற்றிப் பேசுதல். அதாவது ஒரே தொனிப்பிலிருந்து (Monotone) விடுபடல். (3) கவனக்கலைப்பு விசைகளை இல்லாதொழித்தல். பின்வருவன உடல்சார்ந்த கவனக்கலைப்பு விசைகளாக அமையும்.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா | 121

Page 65
(அ) பொருத்தமற்ற நிலையில் உணர்ச்சிவசப்படல். (ஆ) விரும்பத்தகாத சைகைகள்.
(இ) ஒரே அசைவினை மீள மீளச் செய்தல்.
(ஈ) தமது உடை, தலை, மற்றும் மேசையில் உள்ள பொருட்களுடன் விளையாடுதல்.
ஒலிசார்ந்த கவனக்கலைப்பு விசைகளாகப் பின்வருவன அமையும்.
(அ) பொருத்தமற்ற சொற்களும் தேவையற்ற ஒலிப்புக்களும்
(ஆ) வாய் உழறல், மற்றும் தடுமாறல்
(இ) வாய் உறுஞ்சுதல் (ஈ) ஒரே சொல்லை அல்லது தொடரை மீள மீளச் சொல்லுதல்.
(4) பொருத்தமான புதிய புதிய சொற்களை அறிமுகம் செய்தலும்
அளிக்கையை வளம்படுத்துவதாக அமையும்.
உயர்ந்த ஈடுபாட்டு மட்டத்தைப் பராமரித்தலும் தொடர்பாடலிலே முக்கியத்துவம் பெறுகின்றது. தொடர்பாடல் சோர்வு தருவதாக இருத்தலாகாது. மகிழ்ச்சியையும் வியப்பையும் தொடர்பாடல் தூண்டி நிற்றல் வேண்டும். சகிக்க முடியாத எதிர்ப்பண்புகளை கொண்டிருத்தலாகாது. பொருத்தமான வினாக்களை மாணவர் கேட்பதற்கும் ஈடுபாடு கொள்வதற்குமுரிய தூண்டிகளை தொடர்ச்சியாக வழங்குதல் வேண்டும். மாணவர்களது வினாக்களுக்கு ஏற்புடைய விடைகளைத் தருவதுடன், மேலும்தேடுவதற்குரிய உபாயங்களை இணைத்துக் கூறுதல் வேண்டும்.
மாணவரின் அறிவுக்கும், செயற்பாடுகளுக்கும் பொருத்தமான துTணி டல் அறைகூவல்களை வழங்குதல். தொடர்பாடலை வளம்படுத்தும் ஆசிரியரின் ஆக்கத் தொழிற்பாடுகளும் தன்னிலை மலர்ச்சியும் (Originality) மேலோங்குதல் சிறந்த தொடர்பாடலின் பரிமாணங்களாகும். அது மாணவர்களுக்கு மகிழ்புலமாக (Entertainment) இருத்தல் வேண்டும்.
தொடர்பாடல் திறன்களுள் அடுத்ததாக குழு இடைவினைகள் சிறப்பிடம் பெறுகின்றன. குழு இடைவினைகள் கூட்டுறவுக் கற்றலை
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 122

வளம்படுத்தும். அதனூடாக கற்றல் விளைவுகள் அதிகரிக்கப்படும். நன்கு ஒழுங்கமைக்கப்படாத குழு கற்றலில் வீழ்ச்சியை ஏற்படுத்தும். திட்டமிட்ட வகையில் குழு இடைவினைகளை ஒழுங்கமைக்கும் பொழுது பின்வரும் நடவடிக்கைகள் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். (1) கற்கவேண்டிய பொருளைத் தெளிவாக இனங்காணுதல். (2) எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்பதை வடிவமைத்தல்.
(3) கற்பிப்பதற்கு முன்னதாக மேலோட்டமான ஒத்திகையை
மேற்கொள்ளல்.
(4) பொருத்தமான கட்புல செவிப்புல சாதனங்களை இணைத்தல் (5) கணிப்பீட்டுத் திட்டங்களை வடிவமைத்தல். (6) பரிகாரக் கற்பித்தற் செயற்பாடுகளை உருவாக்கல். (7) வளமாக்கும் செயற்பாடுகளை உருவாக்குதல்.
குழு இடைவினையில் தரக்கட்டுப்பாடு முக்கியமானதாகும். முன்னைய குழு இடைவினைகளின் மட்டுப்பாடுகளை அறிந்து பின்னைய இடைவினைகளை வினைத்திறன்படுத்தல் வேண்டும். மாணவர் வேறு திசையில் இழுபட்டுச் செல்லும் செயற்பாடுகளுக்கு இடமளித்தலாகாது.
தனியாள் இடை இடைவினைகளை மேற்கொள்ளும் போது ஆசிரியர் மாணவர் மீது அந்தஸ்து வேறுபாடுகாட்டுதல் தவறானது பரஸ்பர நம்பிக்கையை உருவாக்குதல் வேண்டும். மாணவர் கூறுபவற்றை அலட்சியமின்றிச் செவிமடுக்கும் திறன் ஆசிரியருக்கு இன்றியமையாதது.
தொடர்பாடல் நடைமுறைகளோடு கற்பித்தற் செயற்பாடுகளை ஒன்றிணைத்தல் அடுத்ததாக முக்கியத்துவம் பெறுகின்றது. தொடர்பாடல் பன்முகப்பட்ட வடிவில் இடம் பெறுவதுடன் நம்பகத்தன்மை கொண்டதாகவும் அமைதல் வேண்டும். இவற்றைத் தொடர்ந்து ஆசிரியர் வகுப்பறையையும், சூழலையும் உரியமுறை" யில் ஒழுங்கமைத்துக் கொள்ளல் வேண்டும்.
கற்பித்தலில் உன்னதங்களை முன்னெடுத்தல் ஆசிரியருக்குரிய தலையாய பணியாகின்றது. உன்னதங்களை அடைவதற்குரிய
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 123

Page 66
பலமான தளத்தில் நின்று படிப்படியாக ஊக்கல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லல் வேண்டும்.
“பரீட்சையைக் கற்பித்தல்" (Teaching the test) என்ற செயற்பாடு அண்மைக்காலத்தைய கல்விச் செயற்பாடுகளில் மேலோங்கத் தொடங்கியுள்ளது. கடந்தகால அனுபவங்களில் இருந்து பரீட்சை எவற்றை உள்ளடக்கிநிற்கும் என்பவற்றைக் கற்பித்தல் பரீட்சையைக் கற்பித்தலாகின்றது. பரீட்சை வார்ப்பு நிலையில் மாற்றங்கள் வரும் போது மாணவர்களை அவலங்களுக்குள் அகப்படுத்திவிடும் ஆபத்தான முறையாகவும் இது அமைந்து விடுகின்றது.
ஆற்றல் மிகு மாணவர்களை உருவாக்குவதற்குரிய ஆசிரியத்துவச் செயற்பாட்டில் வினைத்திறன் கொண்ட வகுப்பறை முகாமைத்துவம் சிறப்பிடம் பெறுகின்றது. மாணவர்களிடத்து வளர்க்கப்படும் ஆற்றல்கள் வெற்றிகளை நோக்கிய அசைவுகளை ஏற்படுத்தும் வண்ணம் கட்டமைப்புச் செய்யப்படல் வேண்டும். பால்நிலைச் சமத்துவப்பாதிப்புக்கள் இன்றி வெற்றிகளை அனைவருக்கும் கிடைக்கச் செய்தலே உன்னத ஆசிரியத்துவமாகின்றது.
எவ்வாறு கற்றல் என்பதைக் கற்பித்தலிலும், பயமுறுத்தற் சந்தர்ப்பங்களை இல்லாதொழித்தலிலும் ஆசிரியர் கவனம் செலுத்துதல் மாணவரின் உள்ளமைந்த சிறப்புக்களை வெளிக்கொண்டு வருவதற்குத் துணை செய்யும்.
தீர்க்கமுடியாத பிரச்சினைகளைக் குவியப்படுத்துதலே கல்வியின் சிறப்புப் பணியாகின்றது.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா | 124

பால்நிலையும் சீர்மியமும்
சமகாலச் சீர்மிய (Counseling) நடவடிக்கைகள் பல நிலைகளிலே திறனாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான சீர்மிய முன்னெடுப்புக்கள் மத்திய தரவகுப்பினரைக் குவி. யப்படுத்தியிருக்கின்றனவேயன்றி, சமூகத்தின் அடிநிலை மாந்தருக்குப் பொருத்தமானதாக அமைக்கப்படவில்லை என்பது முதலாவது திறனாய்வு. மேலும் எமது பண்பாட்டோடு இணக்கமுறாத மேலைத்தேய சீர்மியக் கோட்பாடுகளைத் திணிக்கும் செயற்பாடுகள் இரண்டாவது திறனாய்வாக முன்வைக்கப்படுகின்றன. சீர்மிய அணுகுமுறைகளிலும் உரையாடலிலும் மொழிக் களஞ்சியத்திலும் ஆணாதிக்கப் பண்புகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் மேலோங்கியுள்ளமை மூன்றாவது திறனாய்வாக முன்வைக்கப்பட்டுள்ளது.
(அ) வீட்டு வேலைகளைச் செய்யாதிருக்கும் ஒரு பெண் விலகல் நடத்தை கொண்டவளாகக் கருதப்பட்டு அவள்மீது மேற்கொள்ளப்படும் திணிப்புக்களால் அவளுடைய மனம் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றது.
(ஆ) பெண்கள் தமது மன அழுத்தங்களைக் கட்டுப்பாடின்றி வெளிப்படுத்தும் பொழுது அவர்கள் ஒதுக்கிவைக்கப்படும் பணி பாட்டுக் கோலம் கட்டுமை (Construct) செய்யப்பட்டுள்ளது.
(இ) நடை உடைபாவனை சமூக நடத்தை தொடர்பாக ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கே கூடிய அழுத்தங்கள் கிராமப்புறங்களில் வழங்கப்படுகின்றன. இவற்றினால் பெண்களே கூடுதலான உளப் பாதிப்புக்களுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள்.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 125

Page 67
(ஈ) ஊக்கற் செயற்பாடுகள், மற்றும் சமூக மயமாக்கற் செயற்பாடுகள், எதிர்கால இலக்குகளை உருவாக்குதல் போன்றவற்றில் வறிய பெண்களுக்குப் பாதகமான நிலைகளும், அனுகூலமற்ற நிலைகளுமே காணப்படுகின்றன.
(உ) பாதிப்புக்கள் இழப்புக்கள் முதலியவற்றின் சுமைகளையும் அழுத்தங்களையும் பெண்களே கூடுதலாகச் சுமப்பதற்குரிய ஏற்புடைமைகள் சமூகத்திலே கட்டுமை செய்யப்பட்டுள்ளன.
(ஊ) பாலியல் தொடர்பான தவறுகள் நிகழும் பொழுது ஆண்களால் இலகுவாகத் தப்பித்துக் கொள்ள முடிவது போன்று பெண்களால் தப்பித்துக் கொள்ள முடியாத இறுகிய சமூகக் கட்டமைப்புக் காணப்படுகின்றது.
(எ) பாடசாலை மாணவிகள் பொது வீதிகளிலே சுதந்திரமாகச் செல்ல முடியாத நிலை சிலவிடங்களிலே காணப்படுகின்றது. பெண் மாணவிகள் மொழிசார்ந்த பாலியற் பறிப்புக்கு (Verbal Sexploitation) உள்ளாக்கப்படுகின்றனர். ஒருவிதமான மொழிக் காலனித்துவத்துக்குப் பெண்கள் உள்ளாக்கப்படுகின்றனர். (பெண்கள் திருமணமாகும் பொழுது பெண்ணைக் "கட்டிக் கொடுத்தல்” என்ற தொடரே பயன்படுத்தப்படுகின்றது. ஆண்களுக்கு இத்தொடர் பயன்படுத்தப்படுதல் இல்லை. பெண்கள் மீது செலுத்தப்படும் மொழிக்காலனித்துவத்திற்கு இது ஒர் எடுத்துக்காட்டு.
பெண்கள் எதிர்கொள்ளும் மேற்கூறிய சில பிரச்சினைகளைத் தொகுத்து நோக்கும் பொழுது அவர்களுக்குரிய தனித்துவதுமான சீர்மிய நடவடிக்கைகள் அவசியமென்பது புலனாகின்றது. இதே வேளை கல்விப்புலத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு புலக்காட்சியைத் தெளிவுக்குக் கொண்டு வரும் தேவையும் எழுந்துள்ளது. பால்நிலைச் சமத்துவம் பற்றிப் பேசுதலும் இயங்குதலும் ஆண்களுக்கு எதிரான ஒரு நடவடிக்கை அன்று என்பதை மனங்கொள்ளல் வேண்டும். மேலும் பால் நிலை என்பதை ஆண்கள் கண்ணோட்டத்திலே கட்டுமை செய்தலும் தவறானதாகும்.
இயற்கை மீதும் சமூகத்தின் மீதும் அறிவாதிக்கம் (Mastery over) செலுத்துவதில் பெண்களைக் காட்டிலும் ஆண்களே வல்லவர்கள் என்றவாறான சமூகமயமாற் செயல்முறை மீளவலியுறுத்தப்பட்டு வருகின்றது. ஒருசாரார் இன்னொரு சாரார்மீது மேலாதிக்கம்
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா | 128

செலுத்திக் கொண்டு சார்பு இணக்கநிலையை (Mutuality) ஏற்படுத்த முடியாது.
சீர்மியம் என்பது ஆண்களை முதல்நிலைப்படுத்தி நிறுவனமாக்கப்பட்ட செயல்முறையைக் கொண்டுள்ளது. சீர்மியம் மட்டுமல்ல உளமருத்துவமும் ஆணாதிக்க நிறுவனமயப்பட்டிருத்தலை பிலிப்செஸ்லர் என்பார் "பெண்களும் பைத்தியமும்" என்ற தமது [5/IGó]G36) (95ịóìirLýì (3)6ì GTTĩ. (Philip Chesler, (1972) women and madness) பெண்களைத் தாழ்மைப்படுத்தி வைத்துக் கொண்டு ஏதோ உதவி செய்வது போன்ற சீர்மியச் செயற்பாடுகள் இடம் பெற்று வருகின்றன. பெண் சீர்மியர்களும் இதே கருத்தேற்றத்துக்கு உட்பட்ட நிலையிலேயே தொழிற்படுகின்றனர். இந்நிலையிலேயே பெண்களைக் குவியப்படுத்தும் மாற்றீடான சீர்மிய ஆய்வுமுறைகளும் உருவாக்கப்பட வேண்டிய தேவை உணர்த்தப்பட்டுள்ளது. சீர்மியருக்கும் சீர்மிய நாடிக்குமிடையே பெண்களின் பெறுமானங்களை உணர்த்தி வலுவூட்டல் அவசியமெனக் கருதப்படுகின்றது.
வறிய பெண்களுடன் சீர்மிய உரையாடலை மேற்கொள்ளும் பொழுதுசிர்மியர்கள் மத்திய தரவர்க்கத்தினருக்குரிய மொழி நடையைப் பயன்படுத்தும் நிகழ்ச்சிகள் கண்டறியப்பட்டுள்ளன. மத்திய தர வகுப்பினரது மொழி நடை தந்தை வழி ஆதிக்க உரைப்பாங்கினையே பெருமளவில் உள்ளடக்கிக் காணப்படுகின்றது. இந்நிலையில் வறிய பெண்களுக்குரிய சீர்மியம் பாதிப்புக்கு உள்ளாகின்றது.
இயற்கையின் கூடுதலான அழுத்தங்களுக்கும் சமூகத்தின் கூடுதலான பயமுறுத்தல்களுக்கும் பெண்களே அதிக அளவில், தாக்கமுறுவதை சீர்மிய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தமது கவனத்துக்கு எடுக்க வேண்டியுள்ளது. பயமுறுத்தல், உடல்நிலை, உளநிலை மனவெழுச்சிநிலை என்ற பலநிலைகளிலே ஏற்படுகின்றது.
பெண்கள் மீது ஒடுக்குமுறைகளைத் திணிக்கும் மேலாதிக்கப் பண்புடன் உளமருத்துவம் நிறுவனமாக்கப்பட்டுள்ளமையால் "எதிர்உள மருத்துவம்" (Antipsychiatry) என்ற மாற்று எண்ணக்கருவும் முன்வைக்கப்பட்டுள்ளது. (ThomaSSZaSa, 1974, 1977, 1987) உளமருத்துவத்தின் மீது, தொடுக்கப்பட்ட இந்த விமர்சனக்கணைகள் சீர்மியத்தின் மீதும் விரிவுபடுத்தப்படலாயிற்று.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா 127

Page 68
ஆண்கள் உலகத்திலே பெண்கள் வாழ்வதற்கான இசைவாக்கலைச் செய்யும் செயற்பாடாக "சமூகமயமாக்கல்” இடம் பெற்று வருகின்றது. இதற்கு ஏற்றவாறே பெண்களுக்குரிய சடங்குகள், உடைகள், விளையாட்டுக்கள், நட்புமுறைமை, உறவுமுறைமை முதலியவை கட்டுமை செய்யப்பட்டுள்ளன. பெண் ஏதோ விதத்திற் போதாத நிலையில் இருப்பதான (Woman as Lack) கருத்தேற்றம் செய்யப்படுகின்றது. இதேவேளை இன்னொருவிதமான கருத்தேற்றமும் இடம்பெற்று வருகின்றது. அதாவது மத்திய தரத்துப் பெண்களிலும் பார்க்க தொழிலாளர் வகுப்புப் பெண்கள் மேலும் போதாத நிலையிலே தாழ்ந்து இருப்பதாகவும் கருத்தேற்றம் செய்யப்படுகின்றது. இந்நிலையில் சீர்மிய நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு சீர்மிய உளவியல் அறிவுமட்டுமன்றி சமூக இருப்புப் பற்றிய தெளிவான அறிவும் வேண்டப்படுகின்றது.
மேலாதிக்கமும் ஒடுக்குமுறையும் நிலவும் சமூக இருப்பில் "6) /600iasóf 2 / 67.5" (Woman as Body) 62(65.57 6.5) / / /l (56fளார்கள். அதாவது பெண்கள் தமக்கே உரியவர்கள் (For Herself) என்ற நிலை இல்லாமற் செய்யப்பட்டுள்ளது. இதற்கு உலகம் முழுவதும் பல எடுத்துக் காட்டுக்களைக் கூறமுடியும். பழைய சீனாவில் பெண்கள் நடப்பதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு அவர்களின் குதிக்கால்கள் ஒடுக்கி இறுக்கப்பட்டன. நவீன ஐரோப்பாவில் பெண்களின் உடற் கவர்ச்சியை மீள வலியுறுத்துவதற்கான சத்திர சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இது ஒரு வகையில் பெண்கள் மீது ஆண்களாற் சுமத்தப்படும் நாகரிகமான ஒடுக்கு முறையாகவுள்ளது. இதன் செல்வாக்குகள் எங்கள் நாட்டிலும் ஊடுருவத் தொடங்கியுள்ளன.
"தமக்கே உரியவர்கள்அல்லர்” என்ற நிலை பெண்களிடத்து வளர்க்கப்படுவதால் தம்மையும் மீறி பிறர் மீது கரிசனை கொள்ளலும் இரக்கப்படுதலும் பெண்களிடத்து ஒப்பீட்டளவிற் கூடுதலாக வளர்க்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு எவை தேவைப்படுகின்றனவோ அவற்றைப் பற்றிச்சிந்திப்பவர்களாக (thinking About what others need) மாற்றப்படுகின்றார்கள். இந்நிலையானது அவர்களிடத்து மிகையான பதகளிப்பையும் உளத்தாக்கங்களையும் ஏற்படுத்தி விடுகின்றது. பெண்களுக்கான சீர்மிய நடவடிக்கைகளை மேற்கொள்வோர் இந்தப் பரிமாணங்களை நோக்காது விடில் வினைத்திறன் மிக்க சீர்மிய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா | 128

புற விசைகளின் மத்தியிலே தாக்குப் பிடித்தல்" (Resistance) என்ற உளச் செயற்பாட்டை பெண்கள் மிகையாக மேற்கொள்ளுமாறு தூண்டப்படுகின்றனர். பெண்களால் மேற்கொள்ளப்படும் "தாக்குப்பிடித்தல்" உளவியற் செயற்பாட்டினை ஆழ்ந்து பகுப்பாய்வு செய்யாது சீர்மியச் செயற்பாடாகிய ஒத்துணர்வை வளர்த்துக் கொள்ள முடியாது.
பெண்களுக்குரிய தனித்துவமான புலக்காட்சிகள், தனித்துவமான தரிசனங்கள், தனித்துவமான எதிர்பார்ப்புக்கள் முதலியவற்றை ஆழ்ந்து நோக்குவதற்குரிய வழிமுறைகளை முன்னெடுப்பதற்குரிய மாற்றுவகையான சீர்மியச் சிந்தனைகள் வேண்டப்படுகின்றன.
அதிகாரத்தின் எல்லைகளைச் சீர்மியம் கடந்து வர வேண்டியுள்ளது. சீர்மியமே அதிகாரமாக மாறிவிடலாகாது.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா | 129

Page 69
GENERAL REFERENCES
Bash, L., Coulby, D. and Jones, C. (1985) Urban Schooling. London:
Holt, Rinehart as Winston.
CATE (Council for the accreditation of Teacher Education) (1985) Criteria for the ACCreditation of Courses Of Initial Teacher. Training, London. CATE.
CNAA (Council for National Academic Awards) (1984) Multi Cultural
Education. Discussion Paper, LOndon. CNAA
CNAA (1985) Multi - Cultural Education, (Document reference 0148E)
London. CNAA.
Craft, M (ed) (1981 a) Teaching in a Multi Cultural Society, London.
Falmer Press.
Craft, M. (1981 b) "Recognition of need", in craft, M. (1981 a) Teaching
in a Multi Cultural Society. London. Falmer Press.
Culbertson, J (1971) Macroeconomic Theory and Stabilization Policy
Newyork. Wiley.
DES (Department of Education and Science) (1981) West Indian Chil
dren in Our Schools (The Rampton Report), London. HMSO.
DES (1985a) Better Schools: London HMSO.
DES (1985b) Education for All, (The Swann Report) Chand 94.53, LOn
dOn: HMSO.
DES (1987) Quality in Schools, the Initial Training of Teachers, LOn
don: HMSO.
Grace, G. (1984) Education and the City, London. Routledge & Kegan
Paul.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா | 130

Jenkins, R. (1986a) Racism and Recruitment. Managers, Organisations and Equal Opportunities in the Labour Market, Cambridge. Canbridge University Press.
Jenkins, R. (1986b) “Education, employment and policy: 'Racial" disadvantage in the United Kingdom . in Weis, L. (1986) Race Class (und Schooling, Buffalo, NY Comparative Education Centre, SUNY.
Jones, C. and Kimberley, K. (eds) (1986) InterCultural Education. CollCept, Context, Curriculum Practice, Strasbourg: Council of Ett · rope.
Jones, C. and Street- Porter, R(1980) Education Disadvantage. Implicaltions for the Initial and In-service Education of Teachers. Manchester: Center for Educational Disadvantage.
Jones, C. and Street-Porter, R. (1983) Anti-racist teaching and teacher
education, in Multi Cultural Teaching l no 3.
Robinson, C. (1983) Black Marxism. The Making of the Black Radical
Tradition, London. Xed Press.
Select Committee on Race Relations and Immigration (1969) Report. The Problems of Coloured School Leavers, Cmnd 413 iv, London. HMSO.
Smith, D (1974) Racial Disadvantage in Employment London. Politi
cal & Economic Planning Broadsheets,
Smith, D. (1981). Unemployment and Racial Minorities, London. Policy
Studies Institute.
Street- Porter, R. (1978) Race, Children and Cities. Milton Keynes. Open
University Press.
Street -Porter, R. (1985) Initial Teacher Training and the port'; in Multi cultural Teaching, l l l L no 2.
Weis, L. (ed) (1986) Race, Class and Schooling, Buffalo, NY Compara
tive Education Centre, SUNY.
கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் சபா.ஜெயராசா | 131

Page 70


Page 71


Page 72


Page 73
கலாநிதி சபா.ஜெயராசா கல்வியியல் துறைசார் எழுதி அத்துறைசார் வி முதன்மையான பங்கு வி ფილა, (ფ) იატაქმuun, so one எனப் பல்வேறு துறைச აიrt_finnus) რიცხეს 16ი,ii, GNoი || மற்றும் அறிவு ஆய்வு
புலமைமரபு எத்தகை தனித்துக் துல்லியமாக ே மேலும், கலை தத்துவம் ഖിTഞ്ഞ്, ജൂഖബ !, பணியில் முழுமையாக வைப்பதுடன், கல்வியில் சார்ந்து புதிய புதிய அர் நோக்கிக் கவனம் குவிக் தொடர்ந்து புதிய ஆய்வு BestreisSumma ionistro G0,5)
დაიწეთილი Isთეn მაიზი“) და ისაა:
曇 Goss
6765 ti
 

ყbuჩმყმის த நூல்கள் பல
த்தியில்
கித்து வருபவர் வியல் தத்துவம். புலங்களுடன் றின் செழுமை ாவும் இவரது து என்பதைத் வளிப்படுத்தும் பற்றிய தொடர் ய அறிவுருவாக்கப்
Gl
பொருள்கோடல் $IGബ
வும் செய்கிறது.
களங்கள் ள்ளத் தூண்டுகிறது.
ல் கலாநிதி
Éle) கின்றார்.