கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கல்வியில் புதிய சீர்திருத்தங்கள்: ஒரு விளக்க நிலை நோக்கு

Page 1

ëses 56060 நோக்கு
EI. Gagu IUT3FI

Page 2

கல்வியில் புதிய சீர்திருத்தங்கள் ஒரு விளக்கநிலை நோக்கு
An Elucidation of NeW Reforms in Education
கலாநிதி சபா.ஜெயராசா
& ஆசிரியத்துவ நோக்கு Y*

Page 3
21 as
ஆசிரியத்துவ நோக்கு
நூல் : கல்வியில் புதிய சீர்திருத்தங்கள்
ஒரு விளக்கநிலை நோக்கு
ஆசிரியர் : கலாநிதி. சபா ஜெயராசா
பதிப்பு : தை 2006
2ம் பதிப்பு: கார்த்திகை 2006
வெளியீடு: அகவிழி
3, டொறிங்டன் அவெனியூ கொழும்பு - 07
அச்சு : டெக்னோ பிரிண்ட்
55, ஈ.ஏ.குரே மாவத்தை, கொழும்பு - 06
 
 
 
 
 
 

&UT.GguJIT&T
பதிப்புரை
இன்றைய நடைமுறையின்படி ஒவ்வொரு நாட்டினதும் கல்வி முறையானது ஏதோவொரு கல்விச் சீர்திருத்த ஆலோசனைகளின் விளைவே என்று கூறலாம். கடந்த ஒரு நூற்றாண்டு காலப்பகுதியை மட்டும் வைத்து நோக்கும் பொழுது இலங்கை, இந்தியா போன்ற சகல வளர்முக நாடுகளிலும் ஏற்பட்ட சமூகப் பொருளாதார அரசியல் மாற்றங்களுக்கான பதிற்குறியாகவே பல கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
பொதுவாக கல்வி முறைமைகளை நவீனமயப்படுத்தல் அல்லது இற்றைப்படுத்தல் என்பவற்றில் கல்விச் சீர்த்திருத்தங்களே முக்கிய பங்கினை வகிக்கின்றன. ஒரு காலத்துக்குரிய கல்விச் சீர்திருத்தம் அப்போதைக்கு எவ்வளவு தான்பொருத்தமானதாக இருந்திருந்தாலும், கால வோட்டத்தில் சமூகப் பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்கள் அவற்றை காலாவதியாக்கி விடுகின்றன.
1972இல் பிரமாதமாகப் பேசப்பட்ட ஒன்றிணைக்கப்பட்ட சமூகக் கல்விப் பாடத்திட்டம் மூன்று தசாப்தங்களின் பின்னர் இன்று மாற்றங்களுக்கு உள்ளாகி வருகின்றது. 1960 களில் அரசாங்கக் கல்விமுறை ஒன்றை நிறுவுவது ஒரு அடிப்படையான கல்விச் சீர்திருத்தம். ஆனால் இன்று தனியார் கல்வி முறை வளர்முக நாடுகளில் மட்டுமன்றி பொதுவுடமை நாடுகளில் கூட முக்கியத்துவம் பெற்று வருகின்றது. இன்று விஞ்ஞான உண்மைகளே காலப்போக்கில் கேள்விக்குள்ளாகும் பொழுது கல்விச் சீர்திருத்தங்கள் எம்மாத்திரம்.
கல்வியில் மாணவர்கள் குறிப்பாக பாடசாலை ஆசிரியர்கள் வகுப்பறைக் கற்பித்தல் முறைகளோடு தமது கல்வி முறை அது

Page 4
கல்வியில் புதிய சீர்திருத்தங்கள்
வளர்ந்த வரலாறு, அவ்வளர்ச்சிக்குத் துணை புரிந்த கடந்த கால நிகழ்காலச் சீர்த்திருத்தங்கள் என்பன பற்றிய நிறைவான அறிவையும் பெற்றிருத்தல் வேண்டும்.
தமது கல்விமுறையின் அடிப்படைத் தத்துவங்களையும் இலக்குகளையும் அறியாத ஒருவர் தமது கற்பித்தல் பணிக்கு நியாயம் கற்பிக்க முடியாது.
பேராசிரியர் சபா ஜெயராசா அவர்கள் இது பற்றியெல்லாம் மிகுந்த ஆழமான சிந்தனைகளைக் கொண்டவர். அவருடைய நான்கு தசாப்தகால கல்வியியல் துறை அனுபவத்தின் அடிப்படையில் இக்கருத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து புதிய கல்விச் சீர்த்திருத்தங்கள் பற்றிய இந்நூலை வெளியிட்டுள்ளமை பாராட்டத்தக்கது.
இந்நூல் வெறுமனே கடந்தகால கல்விச்சீர்த்திருத்தங்களின் தொகுப்பாக அமையாது அவை பற்றிய விமர்சனங்களையும் கருத்துரைகளையும் உள்ளக்கியதாக அமைந்துள்ளது. ஆகவே இந்நூல் கல்வியியல் சார் வாசகர்களுக்கும் மற்றும் கல்வித்துறையில் பணியாற்றும் சகலருக்கும் பயனுடையதாக அமையும் என்பது எமது நம்பிக்கை.
இந்நூலை வெளியிடுவதற்குக் காரணமாக இருந்த பேரா.சபா.ஜெயராசா அவர்களுக்கு எமது நன்றி.
தெ. மதுசூதனன்
ஆசிரியர் - அகவிழி

1.
12.
பொருளடக்கம்
கல்விச் செலவுகளின் அதிகரிப்பும் சீர்திருத்தங்களுக்கான முனைப்பும்
புதிய கல்விச் சீர்திருத்தம்
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் பள்ளிக் கூடங்களை மீள்கட்டமைப்புச் செய்தல்
புதிய கலைத்திட்டமும் வாழ்க்கைத் தேர்ச்சிக்கான கல்வியும்
புதிய கலைத்திட்டச்சீர்திருத்தமும் செயற்பாட்டு அறை ஒழுங்கமைப்பும் தொடர் தொழில் ஆற்றுப்படுத்தலும் சீர்மியமும்
பள்ளிகூடமட்டக் கணிப்பீடு
பல்கலைக்கழக நுழைவும் உளச்சார்புத் தேர்வும்
பல்கலைக்கழக சீர்திருத்தங்கள்
புதிய மாற்றங்களுக்கு உந்துவிசையாக
அமையும் கல்விக்கோட்பாடுகள்
பாடசாலைக் கல்விச் செயற்பாட்டின் புதிய வளர்ச்சிகள்
2007ஆம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்படவிருக்கும் தரமேம்பாட்டுத்திட்டங்கள்
பக்கம்
17
23
30
37
42
47
52
57
62
65

Page 5
கல்வியில் புதிய சீர்திருத்தங்கள்
13: மாணவரும் மகிழ்நிலைக் கற்றலும் 68
14. புதிய சீர்திருத்தங்களும் ஆசிரியத்துவமேம்பாடும் 71
15. விஞ்ஞான பாடத்தில் இடம்பெறும்
கட்டுமானவியலும் (Constructivism) 5Eமாதிரிகையும் 75

கல்விச்செலவுகளின் அதிகரிப்பும் சீர்திருத்தங்களுக்கான முனைப்பும்
பொருளாதார முன்னேற்றம் என்பது அறிவும், ஆற்றலும், செயற்றிறன்களும் மிக்க மனிதவளத்திலே தங்கியுள்ளது. ஆசியா, மற்றும் இலத்தீன் அமெரிக்க அனுபவங்களின்படி வளர்ந்தோர் குடித்தொகையின் சராசரியான கல்வியறிவு மட்டத்தை ஓராண்டால் உயர்த்தியபொழுது மெய்த் தேசிய உற்பத்தியில் மூன்று தொடக்கம் ஐந்து சதவீதம் வரை அதிகரிப்பைக் abTņuļ6ir6.g5. (Lau, Jamison, Louat- 1990) பொருளாதார மேம்பாட்டின் முதலீடாகக் கல்வி அமைவதை மேலும் பல ஆய்வுகளில் இருந்து அறிந்து கொள்ள Cplgul D.
தனி மனிதர்களைப் பொறுத்தவரை அவர்களின் முன்னேற்றத்துக்குரிய நம்பகரமான முதலீடாக கல்வி இருப்பதை இலங்கையில் நிகழ்ந்த ஆய்வுகள் புலப்படுத்துகின்றன. (M.R.Fernando- 1993) கல்விக்கும் உழைக்கும் திறனுக்குமிடையே நேர் இணைப்புக் குணகம் காணப்படுகின்றது. இதனால் தனி மனிதர் ஒவ்வொருவரும் கல்விக்கென முதலீடு செய்வதிலே படிப்படியான அதிகரிப்பு ஏற்பட்டு வருகின்றது.
இலங்கையின் கல்விக்கான அரச நிதி முதலீட்டில் படிப்படியான அதிகரிப்பு காணப்படுகின்றது. முதலீடு, மனிதவள ஒதுக்கீடு முதலியவற்றை நோக்கும்பொழுது கல்வி என்பது இலங்கையின் ஒரு பெரும் கைத்தொழிலாக அமைந்துள்ளது. இலங்கையின் கல்விச் செலவுகள் விரைந்து அதிகரிப்பதற்குரிய காரணிகள் வருமாறு.

Page 6
கல்வியில் புதிய சீர்திருத்தங்கள்
மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பு ஆசிரியர் எண்ணிக்கை அதிகரிப்பு
உயர்கல்வி பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு. புதிய பல்கலைக்கழகங்கள் திறக்கப்படுதல். ஆசிரியர் கல்வி விரிவாக்கம் இலவச பாடநூல், சீருடை முதலியன புலமைப்பரிசில் பெறுவோர் எண்ணிக்கை கூட்டப்படுதல்.
கல்வி ஆளணியினரின் ஊதிய அதிகரிப்பு
முறைசாராக் கல்வி விரிவுபடுத்தப்படுதல். 10.பரீட்சைச் செலவுகள் கூடிச் செல்லுதல்.
இலங்கையின் குடித்தொகையில் பருமட்டாக 25% மாணவர்களாகவுள்ளனர். ஒவ்வொரு 400 மாணவர்களுக்கும் ஒரு பள்ளிக்கூடம் என்ற வகையில் நிலவரம் காணப்படுகின்றது. இலங்கையின் மொத்தப் பள்ளிக்கூடங்களில் பருமட்டாக நான்கு சதவீதமானவையே திருப்திகரமான உட்கட்டுமான வசதிகளைக் கொண். டுள்ளன. மிகுதி 96 சதவீதமான பள்ளிகூடங்களின் உட்கட்டுமானத்தை வளம்படுத்த முயலும்பொழுது நிதி மேலும் தேவைப்படும் என்பதை நினைவிற் கொள்ளுதல் வேண்டும்.
துறைசார்ந்த அலகு அடிப்படையிலே இலங்கையின் கல்விச் செலவுகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, பயனுள்ள பல தகவல்கள் கிடைக்கப் பெறுகின்றன.
1. இலங்கையின் ஆரம்பக் கல்வியில் ஓர் அலகுக்குச் செலவு செய்யப்படும் நிதியானது ஏனைய ஆசிய நாடுகளோடு ஒப்பிடும்பொழுது குறைவாகவே காணப்படுகின்றது. (M.R. Fernando - 1993)
2. இலங்கையின் இடைநிலைக் கல்வியிலும் ஓர் அலகுக்குரிய செலவு ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது குறைவாகவே காணப்படுகின்றது. ஆனால் உயர்கல்விக்குரிய ஓர் அலகுச் செலவு இலங்யிைல மிகவும் உயர்ந்ததாகக் காணப்படுகின்றது. ஆரம்பக் கல்விக்கான

Furt.ogurt&m
ஓரலகுச் செலவிலும் 15 மடங்கு அதிகமானதாகக் காணப்படுகின்றது. ஆரம்பக் கல்வியில் ஒராசிரியருக்குரிய மாணவர் விகிதம் கூடுதலாக இருப்பதனால் ஓரலகுச் செலவு குறைவடைய நேரிடுகின்றது.
குடும்பங்களுக்குரிய கல்விச் செலவை இலங்கையில் நோக்கும் பொழுது, இரண்டாம் நிலைக் கல்விக்கே ஒப்பீட்டளவிற் கூடுதலான பணத்தை இலங்கையிலுள்ள சராசரியான குடும்பங்கள் செலவு செய்கின்றன. குடும்பங்களின் கல்விச் செலவு அதிகரிப்பதற்குக் காரணம் பிரத்தியேகக் கல்வி வழங்குவதில் பெற்றோர் செலுத்தும் கூடுதலான அக்கறையாகும்.
பள்ளிக்கூட அபிவிருத்திச் சபைகள் நிதிதிரட்டல் நடவடிக்கைகளும் குடும்பங்களுக்குரிய கல்விச் செலவை அதிகரிக்கச் செய்துள்ளன.
அரசாங்கத்துக்கும் தனியாருக்கும் ஏற்பட்டுவரும் கல்விச் செலவின் அதிகரிப்பானது கல்வியிலே புதிய சீர்திருத்தங்களுக்கான தேவையைத் தூண்டிவருகின்றது.
இவ்வாறான பின்புலத்திலே பின்வரும் நடவடிக்கைகள் புதிய சீர்திருத்தங்களிலே முன்னெடுக்கப்பட்டுள்ளன. 1. கல்விக்கான செலவுகளில் இருந்த உச்சநிலையான
நன்மைகளையும் விளைவுகளையும் பெறுதல். 2. கல்விச் செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையாகப்
பள்ளிக்கூடங்களை மீள் ஒழுங்குபடுத்துதல். 3. கலைத்திட்டத்தினை வினைத்திறன் கொண்டதாக இயக்குதல். 4. கல்வியை வேலையுலகுடன் இணைப்பதற்குரிய நடவடிக்கை
களைப் பரவலாக்குதல். 5. தொழிற் கல்வியைப் பன்முகப்படுத்தல். 6. பல்கலைக்கழகக் கல்வியிலே பயன்மிகு மாற்றங்களைக்
கொண்டுவருதல். 7. கல்வி நிர்வாகத்தையும் முகாமைத்துவத்தையும் வினைத்
திறன்படுத்துதல்.

Page 7
கல்வியில் புதிய சீர்திருத்தங்கள்
8. ஆசிரியர் கல்வியை வினைத்திறன்படுத்துதல், இதன் பொருட்டு ஆசிரியர் கல்வி தொடர்பான தேசிய அதிகார சபை (NATE) உருவாக்கப்பட்டுள்ளது. 9. திறந்த பள்ளிக்கூடங்கள் போன்ற மாற்றுவகைச் செயற்பாடு
களை விரிவுபடுத்துதல். 10. கல்வியில் தனியார் பங்குபற்றலை விரிவுபடுத்துதல். 11. கல்வி நிறுவனங்களை, வருமானத்தைப் பிறப்பிக்கும்
நிறுவனங்களாக மாற்றுதல். இந்தப் புதிய நடவடிக்கைகளின் பின்புலத்தில், தனியார் மயப்படுத்துதல், செலவு நன்மைக் கண்ணோட்டம், திறந்த பொருளாதாரக் கண்ணோட்டம் முதலிய கருத்தியல்கள் வலிமை பெற்றிருப்பதைச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.
References: 1. M.R.Fernando, Financing of Education, Colombo - 1993.
2. Central Bank of Sri Lanka, Annual Reports. 3. Jee Peng Tan and Alain Mingat, Education in Asia, World Bank, 1992.
10

புதிய கல்விச் சீர்திருத்தம்
தேசிய கல்வி ஆணைக்குழுவின் விதந்துரைகளுக்கு அமைய பொதுக் கல்விக்கான கொள்கைகள் 1995 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டன. அதனை நடைமுறைப்படுத்துவதற்கென ஒரு செயற்பணிக் குழுவும் (Task Force) அமைக்கப்பட்டது. இக்குழுவினருக்கு உதவுவதற்கென 13 நுட்பவியற் குழுக்கள் அமைக்கப்பட்டு, பிரதான கொள்கைப் பரப்புக்கள் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றின் பெறுபேறாகப் புதிய சீர்திருத்தங்களும் நடைமுறைகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இலங்கையில் உள்ள அனைத்து மக்களையும் எழுத்தறிவுள்ள. வர்களாக மாற்றுதல், ஐந்து முதல் பதின்னான்கு வயது வரை அனைவருக்கும் கட்டாயக் கல்வியைத் தருதல் அதற்கென ஊக்கல்களையும், இயக்கங்களையும், வலுப்படுத்துதல் முதலானவற்றுடன் சீர்திருத்தங்கள் ஆரம்பமாகின்றன. பள்ளிக்கூடங்களுக்கு மாணவர்கள் செல்லாதிருப்பதற்கான காரணங்கள் பகுத்தாராயப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வறிய குழந்தைகளுக்கு உதவும் பொருட்டு அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்பும் பெறப்படும்.
பொதுவான பள்ளிக்கூடங்களுக்கு மேலதிகமாக, "செயற். பாட்டுப் பள்ளிக்கூடங்களும் (Activity Schools) அமைக்கப்படும். பதினான்கு வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு வெளியிலே கற்பதற்கு நெகிழ்ச்சிப் பாங்குடைய திறந்த பள்ளிக்கூடங்கள் (Open Schools) நிறுவப்படும். குழந்தைகள் செயலகத்தின் (Childrens Secretariat) வாயிலாக முன்பள்ளிக் கலைத்திட்ட மேம்பாட்டிலும் கவனம் செலுத்தப்படும். முன்பள்ளி ஆசிரியர்களைப்

Page 8
கல்வியில் புதிய சீர்திருத்தங்கள்
பயிற்றுவிப்பதிலும் உரிய கவனம் எடுக்கப்படும் என்று முன்மொழி விலே கூறப்பட்டுள்ளது.
இவ்வாறாகக் கல்வி வாய்ப்புக்களை விரிவாக்குதலோடு
ஆரம்பிக்கும் பொதுக் கல்வி சீர்திருத்தங்கள் ஐந்து பிரதான செயற்பரப்புக்களை உள்ளடக்கிக் காணப்படுகின்றன.
1. கல்வி வாய்ப்புக்களை விரிவாக்கல்.
2. கல்வித்தர மேம்பாடு.
3. ஆசிரியர் கல்வி. 4. தொழிநுட்பமும் மற்றும் செயற்றிறன் கல்வியும். 5. கல்வி முகாமைத்துவமும் வள ஏற்பாடும்.
புதிய கல்விச் சீர்திருத்தத்தின் வழியாகப் பின்வரும் தேசிய
குறிக்கோள் எட்டப்படும் என்று கருதப்படுகின்றது.
1.
தேசிய ஐக்கியம், ஒருமைப்பாடு, ஒருங்கிணைப்பு முதலியவற்றை அடைதல். சமூக நீதியை நிலைநாட்டுதல். பாராமரிக்கக்கூடிய வாழ்க்கைப் படி மலர்ச்சியை முன்னெடுத்தல். அதாவது, மாற்றமடையும் புதிய உலகச் சூழலில் நீடித்து வாழ்வதற்குரிய ஆற்றல்களை வளர்த்தல். வேலைவாய்ப்புக்களைப் பெருக்குதலும், தன்நிறைவும். சுயதிருப்தியும், கெளரவமான தொழில் பெறும் தகைமையையும் வளர்த்தல். மனிதவள விருத்தியை முன்னெடுப்பதற்குரிய வகைவகையான நிறுவன வாய்ப்புக்களை ஏற்படுத்தி அதன் வாயிலாக நாட்டின் திரண்ட வளர்ச்சிக்கு முன்னேறிச் செல்லுதல். ஒருவர் நலனிலே மற்றவர்கள் தொடர்ச்சியாகப் பங்கெடுத்தலையும், அதன் வழியாக நாடு தழுவிய வினைத்திறன் மிக்க பங்குபற்றலையும் ஏற்படுத்தி நாட்டு வளர்ச்சிக்கு உதவுதல். வேகமாக மாற்றமுறும் இன்றைய உலகில் மாற்றங்களுக்கு ஏற்றவாறு பொருந்தி வாழும் திறன்களை வளர்த்தல்: தானும், மற்றவர்களும் ஆற்றல்மிகு நன்மைகளைப் பெறக் கூடியவாறு தேர்ச்சிகளையும் ஆற்றுப்படுத்தலையும் ஒன்றிணைத்து வழங்குதல்.
2

suit.oguy IT&T
8. சிக்கலான சூழலிலே பாதுகாப்பும் உறுதியும் மிக்க நலன்
களை ஈட்டும் வகையில் ஆற்றல்களை வளர்த்தெடுத்தல். 9. சர்வதேச சமூகத்தில் கெளரவமானதும், பொறுப்பு வாய்ந்ததுமான நிலையை எய்துவதற்கான திறன் தகவுகளை வளர்த்தெடுத்தல். மேற்கூறிய குறிக்கோள்களை எய்துவதற்கான ஆரம்பப் பள்ளிக்கூடக் கலைத்திட்டம் பின்வருமாறு அமையும் :
ஆரம்பக் கல்விக் கலைத்திட்டம் மூன்று முதன்மை நிலைகளாக (Key Stages) வகுத்துக் கூறப்பட்டுள்ளது.
தரம் 1,2 - முதன்மை நிலை 1
தரம்3, 4 முதன்மை நிலை 2
தரம் 5 முதன்மை நிலை 3
மொழி, கணிதம், சமயம், சூழல்சார் செயற்பாடுகள் முதலிய நான்கு பாடங்கள் இக் கலைத்திட்டத்தின் பிரதான கூறுகளாக இடம்பெறும். தொழிற்பாடுகளுடன் இணைந்த பேச்சு ஆங்கிலம் தரம் ஒன்றில் அறிமுகப்படுத்தப்படும். இது இரண்டாம் தரத்திலும் தொடரும். தரம் மூன்றில் இருந்து அதாவது முதன்மைநிலை இரண்டிலிருந்து முறைமை சார்ந்த ஆங்கிலமும், இரண்டாவது தேசிய மொழியும் (தமிழ் அல்லது சிங்களம்) அறிமுகப்படுத்தப்படும்.
தரம் ஐந்தில், அதாவது முதன்மைநிலை மூன்றில் மாணவர்கள் தமது விருப்பத்துக்கும், மகிழ்ச்சிக்குமுரிய தெரிவுப் பாடம் ஒன்றினைத் தெரிவுசெய்து கற்பதற்கு வழிவகைகள் செய்யப்படும். பாடங்களை ஒன்றிணைந்த முறையிலும் செயல் அனுபவங்கள் வாயிலாகவும் கற்பதற்கு ஏற்பாடுகள் செய்து தரப்படும். தரம் ஒன்றில் விளையாட்டு வாயிலாகக் கற்றல் அதிக அளவிலும் எழுத்து வேலைகள் குறைந்த அளவிலும் ஒழுங்கமைக்கப்படும்.தரங்கள் உயர்ந்து, ஐந்தாம் தரத்தை அடையும் பொழுது விளையாட்டு மற்றும் இயக்கச் செயற்பாடுகள் படிப்படியாகக் குறையும். தரம் ஐந்தில் எழுத்து வேலைகளே ஒப்பீட்டளவிற் கூடுதலாக இருக்கும்.
தரம் ஒன்றிலே கற்கும் மாணவர்கள் தரம் ஆறில் கற்கும் மாணவர்களுடன் கலந்து உறவாடி இடைவினை கொள்வதற்கும் வாய்ப்புத் தரப்படும்.
13

Page 9
கல்வியில் புதிய சீர்திருத்தங்கள்
கனிஷ்ட இடைநிலைக் கல்வி 6ஆம் 7ஆம் 8ஆம் 9ஆம் தரங்களை உள்ளடக்கியது. ஒன்பதாம் தரத்தின் நிறைவில் "கனிஸ்ட பள்ளிகூடத் தேர்ச்சித் தேர்வு" (Junior School Proficiency Examination) என்பது பள்ளிக்கூட மட்டத்தில் இடம்பெறும்.
கனிஷ்ட இடைநிலை மாணவரின் அடைவுகளைக் கணிப்பீடு செய்து சான்றிதழ் வழங்குதலே இத்தேர்வின் நோக்கமாகும். ஒன்பதாம் தரத்தோடு பள்ளிக்கூடத்தைவிட்டு விலகும் மாணவருக்கு தொழில்வாய்ப்புக்கும், மாற்றுவகைக் கல்விக்கும் இந்தத் தேர்வு துணைசெய்யும். இடைநிலைக் கல்வியை மேலும் தொடரும் மாணவர்க்குரிய தெரிவுப் பாடங்களை (Optional Subject) விதந்துரை செய்வதற்கும் இந்தத் தேர்வு பயன்படும். புதிய க.பொ.த (சாத) கலைத்திட்டத்துக்குப் பொருந்தும் வகையில் தரம் ஒன்பதுக்குரிய கலைத்திட்டம் மீளாய்வுக்கு உட்படுத்தப்படும்.
சிரேஷ்ட இடைநிலைக் கல்வி இரண்டு ஆண்டுகளை உள்ளடக்கிய இரண்டு மட்டங்களைக் கொண்டதாக அமையும். அவையாவன:
1. சிரேஷ்ட இடைநிலைக் கல்வி மட்டம் - சாதாரணம் (க.பொ.த. சாதாரணதரம்) இது பத்தாம், பதினோராம் தரங்களை உள்ளடக்கும்.
2. சிரேஷ்ட இடைநிலைக் கல்வி மட்டம் - உயர்தரம் (க.பொ.த உயர்தரம்) இது பன்னிரண்டாம் ப்தின்மூன்றாம் தரங்களை உள்ளடக்கும். க.பொ.த சாதாரண தரத்தில் அடிப்படைப் பாடங்கள் தெரிவுப் பாடங்கள் என்ற இரண்டு பிரிவுகள் ஏற்படுத்தப்படும். பின்வருவன அடிப்படைப் பாடங்களாகும்.
ćгиошио முதல் மொழி (சிங்களம் அல்லது தமிழ்) ஆங்கிலம் கணிதம் விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் சமூகக்கல்வியும் வரலாறும்
அழகியற் கல்வி
மேற்கூறிய அடிப்படைப் பாடங்களுடன் மாணவர்கள் தமது விருப்பத்துக்கும் உளச்சார்புக்கும் ஏற்றவாறு பின்வரும் பட்டியலில்
14

sum.Giguryment
இருந்து மூன்று தெரிவுப் பாடங்களைத் தெரிந்தெடுத்துப் படிக்கலாம்.
சிங்களம் / தமிழ் - இரண்டாம் மொழி
வரலாறு
புவியியல்
உடல் நலமும் உடற்கல்வியும் இலக்கியம் (சிங்களம் / தமிழ் / ஆங்கிலம்) நவீன அல்லது தொல்சீர் மொழி
அபிவிருத்திக்கல்வி தொழில் நுட்பப் பாடங்கள் (அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இருந்து தெரிவுசெய்யப்படல் வேண்டும்.)
க.பொ.த உயர்தரத்தில் நான்கு கற்கைநெறிகள் ஒழுங்கமைக்கப்படும். அவையாவன:
(அ) d560)6) (ஆ) வர்த்தகம் (இ) விஞ்ஞானம் (RF) தொழில்நுட்பம் தொழில்நுட்ப நெறியானது விவசாயவியல், பொறியியல், உற்பத்தியியல், சேவையியல் முதலிய துறைகளிலே நுழைவதற்கு வாய்ப்பளிக்கும்.
12ஆம் 13ஆம் தரங்களை உள்ளடக்கிய க.பொ.த உயர் தரத்தில் வரையறுக்கப்பட்ட மூன்று பாடங்களையும், ஓர் உளச்சார்புத் தேர்வையும் பல்கலைக்கழக நுழைவுக்கு மாணவர்கள் எடுத்தல் வேண்டும். பாடக் குறைப்பானது மாணவர்கள் மேலும் ஆழ்ந்து கற்பதற்கும், மேலும் வாசிப்புத் திறன்களை வளர்ப்பதற்கும், ஒப்படைகள், பரிசோதனைகள், செயற்றிட்டங்கள் முதலியவற்றைச் செய்வதற்கும் வாய்ப்பளிக்கும். க.பொ.த உயர்தரத்தில் உயிரியல், விரிந்த கணிதம் முதலியவற்றுக்குரிய புதிய கலைத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
திறனாய்வு :
புதிய கல்விச் சீர்திருத்தத்தை ஆழ்ந்து ஆராய்ந்து பார்க்கும் பொழுது, அதனை ஓர் அடிப்படை மாற்றம் என்றோ, புரட்சிகரமான
5

Page 10
கல்வியில் புதிய சீர்திருத்தங்கள்
மாற்றம் என்றோ கூறமுடியாதுள்ளது. இலங்கையின் பாரம்பரியமான கலைத்திட்டப் பண்புகள், 1972 ஆம் ஆண்டு புகுத்தப்பட்ட கலைத்திட்டப் பண்புகள் முதலியவற்றை இணைத்த ஒரு கலவையாகவே புதிய கலைத்திட்டம் அமைகின்றது. மேலும் வட - கிழக்கு மாகாண மக்களின் கருத்துக்களும், இங்குள்ள கல்விமான்களின் கருத்துக்களும் புதிய கலைத்திட்டம் தொடர்பாகப் பெறப்படவில்லை என்ற கருத்தும் உற்றுநோக்கப்பட வேண்டியுள்ளது.
"முன்பள்ளிகளுக்கு அரசாங்கமே நேரடிப் பொறுப்பு" என்பது புதிய கல்விச் சீர்திருத்தத்திலும் கைவிடப்பட்டுள்ளது. முன்பள்ளிகள் என்ற ஆதாரமின்றி ஆரம்பக் கல்வியையோ, இடைநிலைக் கல்வியையோ கட்டியெழுப்ப முடியாது.
மேலும் பள்ளிக்கூட மட்டத்தில் அதிகாரங்களைப் பகிர்ந்தளித்து, பள்ளிக்கூட மட்ட முகாமைத்துவத்தை (SBM)ப் பலப்படுத்தாது எத்தகைய கல்விச் சீர்திருத்தங்களையும் சிறப்புறச் செயற்படுத்த முடியாது என்பதையும் மனங்கொள்ளல் வேண்டும்.
பள்ளிக்கூடங்களுக்கான வளங்கள், சாதனங்கள், உபகரணங்கள் முதலியவற்றிலே ஏற்றத்தாழ்வு காணப்படும் பொழுது புதிய சீர்திருத்தங்களினால் வளங்குன்றிய பள்ளிக்கூடங்களே பெருமளவிற் பாதிப்புக்கு உள்ளாகும்.
கூடுதலான இடைவிலகல், பள்ளி' செல்லாமை, குறைந்த பங்குபற்றல் கொண்ட மக்கள் தொகுதியினருக்குச் சிறப்பாகக் குறித்துரைக்கத்தக்க வளமான மேம்பாட்டுத்திட்டங்கள் புதிய சீர்திருத்தங்களிலே காணப்படவில்லை என்பதையும் கருத்துன்றி நோக்கவேண்டியுள்ளது.
References :
1. National Education Commission, Reforms in General Educa
tion, Colombo - 1997.
2. National Education Commission First Report-1992.
3. Education Reforms and Restructure - Policy and Programmes
of Action - 1997.
16

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் பள்ளிக்கூடங்களை மீள்கட்டமைப்பு செய்தல் (Restructuring of Schools) 9Cs gloGOTITL6GSITées
இலங்கையின் இன்றைய பள்ளிக்கூடக் காட்டுருவானது ஐரோப்பியர் வருகையோடு அறிமுகமாயிற்று. ஐரோப்பியர் வருகைக்கு முற்பட்ட நிலையில் தமிழ்ப் பாரம்பரியத்தில் திண்ணைப் பள்ளி, குருகுலப் பள்ளி, கோயிற் பள்ளி, நிலாப்பள்ளி, மரநிழற்பள்ளி, மடாலயம், சங்கம் முதலிய பள்ளிக்கூட ஒழுங்கமைப்புக்கள் காணப்பட்டன. ஐரோப்பியரது சமூக பொருளாதார பண்பாட்டு நடவடிக்கைகளோடு இணைந்ததாக புதிய பள்ளிகூடக் காட்டுரு அறிமுகமாயிற்று. ஆங்கிலேயரது ஆட்சியில் சுதேசப் பள்ளிக்கூடங்கள், ஆங்கிலப் பள்ளிக்கூடங்கள் என்ற இருமைத் தன்மை தெளிவாகக் காணப்பட்டது. வாய்ப்பு வசதிகள் குன்றியோர் சுதேசப் பள்ளிக்கூடங்களிலும், வாய்ப்பு வசதிகள் மிக்கோர் ஆங்கிலப்பள்ளிக்கூடங்களிலும் கற்றநிலையில், சமூக நிரலமைப்பைப் பள்ளிக்கூடங்கள் மீள வலியுறுத்தின.
சுதந்திரத்துக்குப் பின்னர் சமூகந் தழுவிய அடிப்படை மாற்றங்கள் முன் எடுக்கப்படாவிடினும், பள்ளிக்கூட ஒழுங்கமைப்பில் பின்வரும் ஆக்க நடவடிக்கைகள் அறிமுகம் செய்யப்பட்டன.
1. பள்ளிக்கூடங்களிற் தேசிய மொழிகள் கல்வி மொழியாக்
கப்பட்டமை.
2. கிராமப்புறக் கல்வி மேம்பாட்டின் பொருட்டு மத்திய மகா
வித்தியாலயங்கள் திறக்கப்பட்டமை.
3. உதவி நன்கொடை பெற்ற பள்ளிக்கூடங்கள் அரசினாற்
பொறுப்பேற்கப்பட்டமை.
7

Page 11
கல்வியில் புதிய சீர்திருத்தங்கள்
நாடு முழுவதற்கும் பொதுவான கலைத்திட்டம் பள்ளிக் கூடங்களில் அறிமுகம் செய்யப்பட்டமை.
திறந்த பொருளாதாரக் கொள்கைக்கு ஏற்ப, சர்வதேசப் பள்ளிக்கூடங்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டமை. புலமைப்பரிசில் திட்டம் விரிவாக்கப்பட்டமை.
தேசியக் கல்வி ஆணைக்குழு பொதுக்கல்வியில் மாற்றங்களை
ஏற்படுத்துவதற்கு முன்மொழிந்த நடவடிக்கைகளுள் (1997) பள்ளிக்கூட மீள் ஒழுங்குபடுத்தல் ஒரு பிரதான பரிமாணமாக அமைகின்றது. புதிய நடவடிக்கைகளின்படி பள்ளிக்கூடங்கள் இரு கட்டமைப்புக்களாக வகைப்படுத்தப்படவிருக்கின்றன. அவை:
1.
முதலாம் தரம் தொடக்கம் ஒன்பதாம் தரம் வரையிலான கனிஷ்ட பள்ளிக்கூடங்கள் அல்லது இளநிலைப் பள்ளிக் கூடங்கள்
பத்தாம் தரம் முதல் பதின்மூன்றாம் தரம் வரையிலான சிரேஷ்ட பள்ளிக்கூடங்கள் அல்லது முதுநிலைப் பள்ளிக்கூடங்கள்.
முதலாம் தரம் தொடக்கம் ஒன்பதாம் தரம் வரையிலான
பள்ளிக்கூடக் கட்டமைப்பு ஏன் மேற்கொள்ளப்படுகின்றது என்பதற்கான மூன்று முக்கிய காரணங்களை தேசியக் கல்வி ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அவை வருமாறு:
1.
இலங்கையின் பள்ளிக்கூடச் செயல்முறையில் இடைவிலகலே பெரும் அறைகூவலாகவுள்ளது. முதலாம் வகுப்புத் தொடக்கம் ஒன்பதாம் வகுப்பு வரையிலான கல்வியை ஒரே பள்ளிக்கூடத்தில் தொடரும் பொழுது இடைவிலகலைத் தவிர்க்கக் கூடியதாக இருக்கும்.
பல்வேறுபட்ட வயது மட்டங்களைக் கொண்ட மாணவர்க்குப் பொருத்தமான பள்ளிக்கூடப் பண்பாட்டை (School Culture) மேலும் பொருத்தமாக அமைப்பதற்கு இது துணைசெய்யும். சிரேஷ்ட நிலைப் பள்ளிக்கூடங்களை மேலும் வளம்படுத்திச் சிறப்பார்ந்த கற்கை நெறிகளை வடிவமைப்பதற்குப் புதிய கட்டமைப்பு உதவக்கூடியதாக இருக்கும்.
தற்போது இலங்கையின் பள்ளிக்கூடக் கட்டமைப்பு பின்வருமாறு
அமைந்துள்ளது.
18

சபா.ஜெயராசா
7.
ஒன்று ஏ.பி வகைப் பள்ளிக்ககூடங்கள் இவை க.பொ.த உயர்தரம் வரை விஞ்ஞானம், கலை வர்த்தக வகுப்புக்களைக் கொண்டுள்ளன. இலங்கையில் இவ்வகைப் பள்ளிக்கூடங்கள் 583 காணப்படுகின்றன. ஒன்று “சி” வகைப் பள்ளிக்ககூடங்கள் இவை க.பொ.த உயர்தரம் வரை கலை, வர்த்தக வகுப்புக்களைக் கொண்டுள்ளன. இலங்கையில் இவ்வகைப் பள்ளிக் கூடங்கள் 1827 வரை காணப்படுகின்றன.
வகை இரண்டு என்ற பிரிவிலுள்ள பள்ளிக்ககூடங்கள் இவை க.பொ.த சாதாரணதரம் வரையிலான வகுப்புக்களைக் கொண்டிருக்கும். இவ்வகைப் பள்ளிக்கூடங்கள் 3668 வரை காணப்படுகின்றன. வகை மூன்று என்ற பிரிவிலுள்ள பள்ளிக்ககூடங்கள் இவை பெரும்பாலும் ஆரம்ப பள்ளிக்கூடங்களாகவே உள்ளன. இலங்கையில் மொத்தமாக 4029 பள்ளிக்கூடங்கள் இவ் வகையைச் சார்ந்தவை
தரங்களின் அடிப்படையில் இலங்கையிலுள்ள மொத்தப்
பள்ளிக் கூட எண்ணிக்கையை பின்வருமாறு பாகுபடுத்தலாம். மொத்த பள்ளிக்கூட எண்ணிக்கை 10, 107.
தரங்கள் பள்ளிக்கூட எணர்ணிக்கை
1-5 2777
1-6 23O
1-7 208
1-8 790
I-9 245
1 - 1 1 3558
6- . 1 27
- 13 1930
6-3 337
ஏனையவை 5
19

Page 12
கல்வியில் புதிய சீர்திருத்தங்கள்
மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையிலே பள்ளிக் கூடங்களின் எண்ணிக்கை பின்வருமாறு அமைந்துள்ளது.
LDIT600T61i பள்ளிக்கூட
எணர்ணிக்கை எணர்ணிக்கை
1-50 214
5-100 1383
O-200 1922
201-500 2967
50 - OOO 1654
OO - 500 559
150 - 2000 200
2001-25OO O5
250-3000 42
3OO-3500 29
3501- மேல் 32
மேற்கூறியவற்றைத் தொகுத்து நோக்கும் பொழுது இலங்கையின் பள்ளிக்கூடத் தொகுதி திட்டமில்லா வகையில் இயங்குகின்றது என்பதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுவர். (Eric, J.de.Siva- 1998) இவற்றுடன் உள்நாட்டு யுத்தத்தினால் பல பள்ளிக்கூடங்கள் இடம் பெயர்ந்தும், வளப்பற்றாக்குறைகளுடன் இயங்குதலும், புதிய கட்டமைப்பு பற்றிச் சிந்திக்கும் பொழுது கவனத்திலே கொள்ளப்பட வேண்டியுள்ளது.
திறனாய்வு
1. புதிய மாற்றங்களின்படி 2000க்கு மேற்பட்ட சிறிய பள்ளிக் கூடங்கள் கனிஷ்ட பள்ளிக்கூடங்களாகத் தரமுயர்த்தப்படும் பொழுது அவற்றுக்குரிய உட்கட்டுமானங்களை மேம்படுத்தாவிடில், பல இடர்களை எதிர்கொள்ள நேரிடும்.
2. தரம் ஒன்று தொடக்கம் தரம் பதினொன்று வரை இயங்கிய பள்ளிக்கூடங்கள் ஒன்று தொடக்கம் ஒன்பதாம் தரம்
2O

&UIT.Ggu)T&T
வரையிலான கனிஷ்ட பள்ளிக்கூடங்களாகக் குறைப்பு நிலை மாற்றம் செய்யப்படும்பொழுது குறித்த பள்ளிக்கூடங்களின் ஆளுமை பாதிக்கப்படும்.
3. ஒன்று தொடக்கம் 13ஆம் தரம் வரை இயங்கிவந்த பள்ளிக் கூடங்கள் கனிஷ்ட பள்ளிக்கூடங்களாக மாற்றப்படும். அல்லது சிரேஷ்ட பள்ளிக்கூடங்களாக மாற்றப்படும் இந்நிலையானது கட்டமைப்புத் தொடர்பான ஆளுமைப் பிளவை ஏற்படுத்தும்.
4. உலக வங்கியின் அவதானிப்பின்படி இலங்கையின் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதால், முதலாம் தரத்தில் பதிவுசெய்யும் மாணவரின் எண்ணிக்கை குறைந்து செல்லும் என்றும், அதனால் மேலதிகமான கட்டடங்களைப் பள்ளிக் கூடங்கள் அமைக்க வேண்டியதில்லை என்றும் கூறுதல் கல்வியை முற்றிலும் செலவு நன்மை அடிப்படையில் நோக்கும் குறுகிய கண்ணோட்டமாகும்.
5. இலங்கையின் கல்வி வரலாற்றில் கட்டமைப்புத் தொடர்பாக நிகழ்ந்த மாற்றங்கள் தமிழ் மக்களுக்குப் பாதகமாக அமைந்தன. உதவி நன்கொடை பெறும் பள்ளிக்கூடங்கள் தேசிய மயமாக்கப்பட்ட பொழுது தென்- இலங்கையில் நூற்றுக்கணக்கான த்மிழ்ப் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. யாழ்ப்பாணத்தில் இயங்கிய கொழும்புத்துறை, நல்லூர் முதலாம் திருச்சபைகளின் ஆசிரியர் கல்லூரிகளும் திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலையும் அரசாங்கத்தினால் மூடப்பட்டன.
6. பள்ளிக்கூட இடைவிலகலின் தேசிய வீதம் முதலாம் தரம் தொடக்கம் 9-ம் தரம்வரை 4.5% உள்ளது. ஆனால் தமிழர் வாழும் மாவட்டங்களில் இடைவிலகல் மிக அதிகமாக 9 6iróngi. (Daily News. 29-09-98)
யாழ்ப்பாணம் இடைவிலகல் - 7.56% மன்னார் இடைவிலகல் - 37.15% வவுனியா - இடைவிலகல் - 34.22% திருகோணமலை - இடைவிலகல் - 7.18%
இவை மட்டுமல்ல மாணவர் நிலை மாறும் வீதத்திலும் (Transition) மன்னார், வவுனியா, திருகோணமலை, முல்லைத்தீவு முதலாம் மாவட்டங்கள் பின்னடைவிலுள்ளன. இவற்றுக்குப்
21

Page 13
கல்வியில் புதிய சீர்திருத்தங்கள்
பரிகார நடவடிக்கைகளை மேற்கொள்ளாது பள்ளிக் கூடங்களை மீள் ஒழுங்குபடுத்துதல் அர்த்தமற்றதாகிவிடும்.
7. பள்ளிக்கூட மீள் ஒழுங்குபடுத்தலால் பள்ளிக்கூடப் பண்பாடு (School Culture) என்பதை வளர்க்க முடியும் என்று ஆணைக்குழு கருதுகின்றது. பள்ளிக்கூடப் பண்பாட்டை வளர்ப்பதற்குக் கட்டமைப்பிலும் (Structure) கவிநிலையே (Climate) முக்கியமானது என்பதை மனங்கொள்ளல் வேண்டும்.
8. புதிய கட்டமைப்பின் வாயிலாகச் சிரேஷ்ட நிலைப் பள்ளிக்கூடங்களில் (10-13) சிறப்பார்ந்த கற்கை நெறிகளையும் கூடுதலான அமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தமுடியும் என்று கருதப்படுகின்றது. பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கையைக் குறைத்து அமைப்பு வசதிகளைக் கூட்டும் பொழுது, அது வாய்ப்பு வசதிமிக்கோருக்கே அனுகூலமாக மாறும்.
9. சர்வதேசியப்பள்ளிக்கூடங்களை ஒழுங்குபடுத்துதல், அல்லது கட்டுப்படுத்துதல் பற்றி எந்தவிதமான அறிவுறுத்தல்களும் தரப்படவில்லை. அதாவது வாய்ப்பு வசதிகள் மிக்கோர் தொடர்ந்தும் தரத்தில் கூடிய கல்வியைப் பெற்று உயர்ந்தோர் குழாத்தினராக இயங்குவதற்குரிய வாய்ப்புகள் மீள வலியுறுத்தப்பட்டுள்ளன.
கல்வியில் நிகழ்த்தப்படும் மாற்றங்கள் அவசரப்பட்டு எடுக்கப்படும் முடிவுகளினால் முன்னெடுக்கப்படும்பொழுது வறியவர்களே கூடிய பாதிப்புக்குள்ளாவார்கள். புதிய கட்டமைப்பில் 400 பள்ளிக்கூடங்களை உலக வங்கியின் ஆலோசனைப்படி மூடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக The Sunday Leader செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையானது வறிய கிராமப்புற மக்களையே தாக்குவதாக அமையும். இத்திட்டமானது நடைமுறைப்படுத்தலுக்கு உட்படாது கைவிடப்பட்டது.
References : 1. Reforms in General Education National Education Commission
1997.
. Eric.J. de. Silva, Daily News 29-09-98. 3. Prof. Dayantha Wijeyesekera, Daily News 25-1 1-98.
The Sunday Leader. Vol: 5: No.25.
22

புதிய கலைத் திட்டமும் வாழ்க்கைத் தேர்ச்சிக்கான கல்வியும் (Life Competency)
Jெ/7ழ்க்கைத் தேர்ச்சி, அல்லது வாழ்க்கை அறிதகவு (Life Competency) என்பது புதிய கலைத்திட்ட ஒழுங்கமைப்பிலே ஒரு பாடமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாழ்க்கைத் தேர்ச்சிக்கும், குடும்பம், பள்ளிக்கூடம், சமூகம் முதலியவற்றிற்கும் நேரடியான தொடர்புகள் உண்டு என்பதை மனங்கொள்ளல் வேண்டும். இலங்கையில் அண்மைக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் இவ்வாறான பாட அனுபவத்தின் முக்கியத்துவத்தை மேலும் மீள வலியுறுத்தியுள்ளன.
பொதுவான இலங்கையின் கல்விச் செயற்பாடுகளிலும், கலைத்திட்டத்திலும் பல்வேறு போதாமைகளும், மட்டுப்பாடுகளும் கண்டறியப்பட்டுள்ளன. நாளாந்த வாழ்க்கையில் எழும் நெருக்கடிகளுக்கும், பிரச்சினைகளுக்கும், அறைகூவல்களுக்கும் முகம் கொடுக்கும் திறன் கல்விச் செயல்முறையால் வளர்த்தெடுக்கப்படவில்லை என்பது சுட்டிக் காட்டப்பட்டு வருகின்றது. கற்றவர்கள் தாம் யாரென்பதை அறியமுடியாதிருக்கின்றனர். தமது ஆற்றல்களை இனங்கண்டு வெளிப்படுத்த முடியாதிருக்கின்றனர். சுருக்கமாகக் கூறுவதானால் ஒருவரது சுய அறிதகவும், தற்பெருமிதமும் (Pride) கல்விச் செயல் முறையால் வெளிக் கொண்டு வரப்பட முடியாதிருக்கும் நிலை கவனஈர்ப்பைப் பெறுகின்றது.
குறித்துக் கூறுவதானால் திறனாய்வு மனப்பாங்கு , ஆக்க மலர்ச்சிச் சிந்தனை, சமூகநோக்கு, தற்பரிமாணங்கள், சுய முகாமைத்துவம், வளமுகாமைத்துவம், சுயசீர்மியம், சமத்துவத்தைப் பாதுகாத்தல், தரப்பாதுகாப்பு முதலாம் பண்புகள் கல்விச்
23

Page 14
கல்வியில் புதிய சீர்திருத்தங்கள்
செயல்முறையினால் வளர்த்தெடுக்கப்படவில்லை என்ற கருத்து (p65rGliptipuii Lil' (B6it6ngl. (Upali Gunasekara, Daily News, 16-12-98)
கல்விச் செயல் முறையினால் உருவாக்கப்படுபவர்கள், பரீட்சை எழுதுவதற்குரிய மனிதர்களாகத் தயாரிக்கப்படுகின்றார்களே ஒழிய வாழ்க்கை அறிதகவு கொண்ட மனிதர்களாக உருவாக்கப்படவில்லை. தேசிய கல்வி ஆணைக்குழுவின் முதலாவது அறிக்கையில் (Report-1 / NEC, 1992) இப்பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கான முன்மொழிவு ஒரு வகையிலே குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவான தேசிய குறிக்கோள்கள், பொதுவான திறன்தகவுகள் முதலியவை கற்றல், கற்பித்தற் செயன்முறையினுடாக வளர்த்தெடுக்கப்பட வேண்டுமென்ற முன்மொழிவு தரப்பட்டுள்ளது.
பொதுவான தேசிய குறிக்கோள்களில் தேசிய ஒருங்கிணைப்பு, தொழிற்சந்தர்ப்பங்கள் உருவாக்கல், மனிதவள விருத்தி, மாறும் சமூக பொருளாதார சூழலுக்கு இயைந்த பொருத்தப்பாடு, சர்வதேச நிலவரங்களுக்குரியவாறு எமது மாண்பை உறுதி கொள்ளச் செய்தல் முதலாம் தேசிய குறிக்கோள்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
பொதுவான தேர்ச்சிகள் அல்லது திறன் தகவுகள் என்ற பிரிவில் பின்வருவன குறிப்பிடப்பட்டுள்ளன.
(1) தொடர்பாடல் நிலைப்பட திறன் தகவுகள்.
இப்பிரிவில் எழுத்தறிவுடமை, எண்ணறிவுடமை, வரைபு முறைமை முதலியவை உள்ளடங்குகின்றன. சிந்தித்தல், கேட்டல், பொருத்தமான உரையாடல், கருத்துப் பொதிந்த வாசிப்பு, சரியானதும் தெளிவானதுமான எழுத்து, முதலாம் தேர்ச்சிகள் எழுத்தறிவுடமையிலே குறிப்பிடப்படுகின்றன. எண்ணிடல், காலம், இடைவெளி, கணித்தல், திட்டநுட்பமாக அளத்தல், முதலியவை எண்ணறிவுடமையிலே குறித்துரைக்கப்படுகின்றன. கருத்துக்களைப் பொருள் பொருந்திய காட்சிப்படமாக்கும் தேர்ச்சி வரைபு முறைமையும் இதில் அடங்குகின்றன.
(2) சூழலோடு தொடர்புடைய திறன் தகவுகள்.
பெளதீக, உயிரியல், சமூகச் சூழலோடு தொடர்புடைய ஆற்றல்கள் இப்பிரிவிலே குறித்துரைக்கப்படுகின்றன. வலுப்பொருள், எரிபொருள், உடை, உறையுள், உடல்நலம், போக்குவரத்து முதலியவை பெளதிக சூழலுடன் தொடர்புபடுத்தி விளக்கப்படுகின்றன.
24

sum.Giguryment
உயிர்வாழும் உலகம், சூழலியல், காடுகள், சமுத்திரங்கள், நீர்,வளி முதலானவை உயிரியல் சூழலுடன் தொடர்புபடுத்தி விளக்கப்படுகின்றன.
சமூக உறுப்பினராக இருத்தல், சமூகத்தொடர்புகள், புரிந்துணர்வு முதலியவற்றை ஏற்படுத்துதல், உரிமைகள், கடமைகள், பொறுப்புகள், சட்டம், ஒழுங்கு, நடத்தைகள் முதலானவை சமூகச் சூழலுடன் இணைத்து விளக்கப்படுகின்றன. இவ்வாறாகச் சூழலுடன் தொடர்புடைய வாழ்க்கைத்திறன் தகவுகளை வளர்த்தலும், வாழ்க்கைத் தேர்ச்சிக்கான கல்வியிலே கருத்திற் கொள்ளப்படும்.
(3) அறவொழுக்கம் மற்றும் சமயம் சார்ந்த திறன் தகவுகள்
அறவொழுக்கங்களைக் கடைப்பிடித்தல், விழுமியங்களை ஏற்று வாழுதல், சமய நடைமுறைகளைப் பின்பற்றுதல், நாளாந்த வாழ்வில் நல்லவற்றையும் பொருத்தமானவற்றையும் ஏற்று ஒழுகுதல் முதலாம் வாழ்க்கைத் தேர்ச்சிகள் இப்பிரிவில் இடம் பெறுகின்றன.
(4) விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குத் தொடர்புடைய
திறன் தகவுகள். விளையாட்டுக்கள், கலையாக்கம், ஆய்வு, முதலாம் துறைகளில் வாழ்க்கைத் தேர்ச்சியினை ஏற்படுத்துதல் இந்தத் தலைப்பின் கீழ்க் குறிப்பிடப்படுகின்றன. உடல், உள்ள மேம்பாட்டுக்கு இந்தத் திறன் தகவுகள் துணை செய்யும்.
(5) கற்பதற்காகக் கற்றல் தொடர்பான திறன் தகவுகள்.
மிகவேகமாயும், சிக்கலடைந்தும் வருகின்ற அறிவுத் தொகுதியை உள்வாங்கவும், தேர்ந்தெடுக்கவும், புதுபிக்கவும், முரண்பாடுகள் பற்றிய விளக்கத்தைப் பெறவும், சிறிய நுண்மையான விடயங்களிலே கூடக் கவனம் செலுத்தவும் வல்ல திறன் தகவுகளை வளர்த்தல் இப்பிரிவிலே குறிப்பிடப்படுகின்றது.
மேற்கூறியவற்றைக் கவனத்திற் கொண்டு 7ஆம், 8ஆம், 9ஆம் தரங்களிலே அறிமுகப்படுத்தப்படும் வாழ்க்கைத் தேர்ச்சிப் பாடப் பொருளின் நோக்கங்கள் பின்வருமாறு விளக்கப்படுகின்றன.
சுயவிளக்கம், தன்னைத்தானே இனங்காணும் பண்பு, தன்னியல் நிறைவு காணல், வாழ்க்கை பற்றிய நோக்கைக் கட்டியெழுப்புதல்.
25

Page 15
கல்வியில் புதிய சீர்திருத்தங்கள்
2. நேரான தொடர்புகளுடன் வாழவும் குழு உணர்வுடன்
தொழிற்படவும் வல்ல தேர்ச்சிகளை வளர்த்தல்.
3. வினைத்திறனுள்ள கற்றல் திறன்தகவை வளர்த்தல்.
4. தொழில் சார்ந்த விழிப்புணர்வுகளைக் கட்டியெழுப்புதலோடு, பொருத்தமான வாழ்க்கைத் தொழிலைத் தெரிந்தெடுத்தல்.
மேற்கூறிய நோக்கங்கள் மேலும் விரிவாக விளக்கப்படுகின்றன. அவற்றைப் பின்வருமாறு பகுத்தாராயலாம்:
(அ) சுய விளக்கம் :
உணர்ச்சிவசப்படுதல், தமது உணர்ச்சிகளை விளங்கிக் கொள்ளும் நிலை, தமது உணர்ச்சிகளால் விளையும் தாக்கங்களை இனங்காணும் நிலை, தமது மனவெழுச்சிக் கோலங்களைப் பகுத்தாராயும் திறன், தமது மனமுறிவுகள், நெருக்குவாரங்கள், முதலியவற்றை விளங்கிக் கொள்ளும் திறன், தமது உளப்பாங்குக்கும் சூழற்கவிநிலைக்குமுள்ள தொடர்புகளைத் தொடுத்தாராயும் திறன் அவற்றினூடே சரியானதும், புறவயமானதுமான முடிவுகளை எடுக்கும் திறன், சித்த வலுவைக் கட்டியெப்பும் ஆற்றல் முதலியவை சுய விளக்கத்திலே இடம் பெறுகின்றன.
மேலும் தமது ஆற்றலை அறியும் திறன், தமது பெறுமானங்களை உணரும் ஆற்றல், தமது படைப்பாக்க் ஆற்றலை வெளிப்படுத்தும் திறன், தமது செயற்பாடுகளால் தமக்கும் சமூகத்துக்கும் எத்தகைய நன்மைகள் தோன்றும், எத்தகைய எதிர்விளைவுகள் தோன்றும் என்பவை பற்றிய தெளிந்த அறிவு, தமது பாலியல் நிலை வளர்ச்சியினால் ஏற்படும் பொறுப்பு மிக்க செயல்களையும், கட்டுப்பாடுகளையும் அறிந்து கொள்ளல் முதலியனவும் சுய விளக்கத்தில் இடம்பெறும்,
(ஆ) நேரான தொடர்புகளுடன் வாழல் :
கருத்துப் பரிமாற்றம் செய்தல், பிறர் கூறும் பொருண்மை கொண்ட கருத்துக்களை ஏற்கப்பழகுதல், பொது நன்மைகளின் பொருட்டுக் கருத்துள்ள வகையிலே செயற்படுதல், வினைத் திறனுள்ள தொடர்பாடலை மேற்கொள்ளல், குழு உணர்வுகளைப் பராமரித்தல், தலைமைத்துவப் பண்புகளை வளர்த்தல், தலைமைத்
26

afum.Giguilt&nt
துவக் கட்டுப்படுத்தல், முரண்பாடுகளை முகாமை செய்யும் திறன்களை வளர்த்தல், வேறுபட்ட கருத்துக்களை மதிக்கப் பழகுதல், வேறுபட்ட பண்பாடுகளை மதிக்கப்பழகுதல் முதலியவை நேரான தொடர்புகளுடன் வாழும் வாழ்க்கைத் தேர்ச்சிக்கான கல்வியில் முக்கியத்துவம் பெறுகின்றன.
(இ) வினைத்திறனுள்ள கற்றற் பண்புகளை வளர்த்தல்:
கற்றலோடிணைந்த நேரமுகாமைத்துவம், வளமுகாமைத்துவம், சுயமுகாமைத்துவம், ஒழுங்கமைப்புத்திறன், பல்வேறு மூலகங்கள் வாயிலாக அறிவைத் திரட்டிக் கொள்ளும் திறன், அறிவை வாழ்க்கை மேம்பாட்டுக்குப் பயன்படுத்தும் முனைப்பு முதலியவை இப்பிரிவில் இடம்பெறுகின்றன.
(ஈ) தொழில் சார்ந்த விழிப்புணர்வையும் தொடர்
தொழிலையும் தெரிந்தெடுத்தல் : பொதுத்துறைத் தொழில்கள், தனியார் துறைத் தொழில்கள், சுயதொழில் முனைப்புக்கள் முதலியவை பற்றிய தெளிவான விளக்கம், பல்வேறு தொழில்களினதும் கட்டமைப்பு, இயல்பு, முதலியவை பற்றிய அறிவு, வாண்மைபற்றிய தெளிவு, பல்வேறு தொழில்களுக்குமுரிய அடிப்படை நுழைவுத்தகுதிகள், உள்ளமைந்த மேலுயர்ச்சி முதலியவற்றைத் தெரிந்திருத்தல், தமது ஆற்றலுக்குரிய தொடர் தொழில் ஒன்றை இனங்காணல் முதலியவை இதில் இடம்பெறுகின்றன. தமது உள்ளார்ந்த வலுவை இனங்கண்டு அதற்கேற்றவாறு பொருத்தமான தொழிலைத் தெரிவு செய்தலும், குறித்த நபருக்குச் சலிப்புதரும் தொழில்களில் அகப்பட்டு வேதனைப்படாதிருத்தலும் அறிந்து கொள்ளப்பட வேண்டியுள்ளன. தொழில் ஒன்றுக்கு நுழைவதற்கு முந்திய படிநிலைகள் பற்றியும் மாணவர்கள் அறிந்தும் உணர்ந்தும் கொள்ளப்பட வேண்டியவர்களாயுள்ளனர்.
கற்பித்தல் நுட்பங்கள்
கற்பித்தல் தொடர்பான இறுகிய மனோபாவங்களில் இருந்து மாறுதல், காலத்துக்கேற்ற பயன்கொள் அணுகுமுறையைப் (Pragmatic Approach) பின்பற்றுதல், வாழ்க்கைப் பிரச்சினைகளை எதிர்கொண்டு கற்பித்தலை ஒழுங்கமைத்தல் முதலியவை முதற்கண் வற்புறுத்தப்படுகின்றன.
27

Page 16
கல்வியில் புதிய சீர்திருத்தங்கள்
ஆசிரியர் ஓர் வழிகாட்டியாகவும், வளம் செய்பவராகவும் இருந்து கற்பித்தலை முன்னெடுத்தல் வேண்டும. வாழ்க்கை அனுபவம் என்ற பின்புலத்தில் வைத்து மாணவர் ஒவ்வொருவருக்குமுரிய தனித்துவமான திறன் தகவுகளை அறியச் செய்வதே பொருத்தமான நடவடிக்கையாகும்.
பள்ளிக்கூடங்களில் மாணவர் வினைப்படும் அறையை (Activity Room) அமைத்து செயல் அனுபவங்கள் வாயிலாக அவர்களின் உள்ளார்ந்த ஆற்றல்களை வெளிக்கொண்டுவருவதற்குத் துணை செய்தல் வேண்டும். பாடசாலைத் தோட்டம் இருப்பின் அதனை வினைப்படும் களமாகவும் அமைக்கலாம். பொருத்தமான கற்பித்தல் நுட்பவியலைத் தெரிவு செய்யும் உரிமை ஆசிரியருக்கே உரியதாகும். செயற்றிட்ட முறை, உற்று நோக்கல் முறை, செவ்விகாணல் முறை, விளையாட்டு முறை, நடிபாங்கு ஏற்றல், சுயகற்றல், களஆய்வு நிலைகாண் ஆய்வு (Exploration) ஆற்றுகை நிலைக் கற்பித்தல் முதலிய கற்பித்தல் முறையியல்களிலே பொருத்தமானவற்றை ஆசிரியர் தெரிவு செய்யலாம்.
கலைத்திட்ட ஒழுங்கமைப்பு
வாழ்க்கைத் தேர்ச்சியை நடைமுறைப்படுத்துவதற்குப் பல்வளங்களும், செயற்பாடுகளும் அனுபவவாய்ப்புக்களும் கொண்ட Gaf(p60LD GabiT60irl as60dsugg5'L(3LD (The Enriched Curriculum) பொருத்தமானது. இப்பாட அனுபவம் புதிதாக இருப்பதனால் பெற்றோரின் ஈடுபாட்டையும் சமூக நிறுவனங்களின் ஈடுபாட்டையும் ஏற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளையும் முன்னெடுத்தல் வேண்டும்.
எழுத்துத் தேர்வுகளைக் கைவிட்டு, முற்றிலும் மாணவர்களின் செயலியங்களை அடியொற்றியே அவர்களின் வாழ்க்கைத் தேர்ச்சிகளை மதிப்பீடு செய்தல் வேண்டும் என்பதை ஆசிரியர்கள் மனங் கொள்ளல் முக்கியமானதாகும். ஆசிரியர் மாணவர்க்குரிய வாழ்க்கைப் பிரச்சினைகளைக் கொடுத்துப் பின்வரும் பரிமாணங்களை அடியொற்றியதோர் மதிப்பீடுகளைச் செய்தல் வேண்டும்.
(அ) வாழ்க்கைப் பிரச்சினைகளை இனங்காணும் திறன்.
(ஆ) பிரச்சினைகளுக்குரிய தீர்வுகளைச் செயற்படுத்தும் திறன்
28

&Lum.ogurymeFIT
(3) உணர்வு நிலைத் துலங்கும் திறனும் நெகிழ்ச்சிப்படும்
திறனும். (FF) கூட்டுறவுப் பண்பும் தலைமைத்துவப் பண்பும் முகிழ்க்கும்
விதம். இலங்கையில் 1997 ஆம் ஆண்டைத் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டுவரும் புதிய கலைத்திட்ட மாற்றங்களுள் ஒன்றாக விளங்கும் வாழ்க்கைத் தேர்ச்சி அல்லது வாழ்க்கைத் திறன் தகவு என்ற பாடம் வெற்றிபெறுவதற்கு ஆசிரியர்கள், கல்வி நிர்வாகிகள், பெற்றோர்கள் என்ற முத்தரப்பினருக்கும் இது பற்றிய தெளிந்த புலக்காட்சி இன்றியமையாததாகும்.
References :
1. Report of the Presidential Commission on Youth - 1990.
2. First Report of the National Education Commission - 1992. 3. Reforms in General Education. NIE - 1997.
4. Ceylon Daily News, 16-12-1998.
29

Page 17
புதிய கலைத்திட்டச் சீர்திருத்தமும் செயற்பாட்டு அறை ஒழுங்கமைப்பும்
1997 ஆம் ஆண்டின் முன்வைப்பட்ட கலைத்திட்டச் சீர்திருத்தத்தில் 6 தொடக்கம் 9 ஆம் தரங்களில் மாணவரின் தொழிநுட்பத் திறன்களையும், செயன்முறைத் திறன்களையும் வளர்த்து மேம்படுத்த செயற்பாட்டு அறை (Activity Room) பள்ளிக்கூடங்களிலே ஒழுங்கமைக்கப்படல் வேண்டும் என்ற கருத்து முன் மொழியப்பட்டுள்ளது.
மாணவர்கள் யாதாயினும் ஒரு செயலில் ஈடுபட்டு அதன் வழியாக அறிவைத் தேடிக்கொள்வதற்குரிய வளமான சூழலை உருவாக்கிக் கொடுப்பதற்கு உதவுவதே செயற்பாட்டு அறையை அமைப்பதன் முதன்மை நோக்கமாகும். அதாவது, மரபுவழியான கற்றல் கற்பித்தல் முறைமைகளில் இருந்து வேறுபடுவதும், மாற்றம் வழிப்பட்டதுமான ஒரு வழி முறையாக இது அமைகின்றது. 11 வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்ட கட்டிளைஞர்கள் தத்தமது ஆற்றலுக்கும், விருப்பத்துக்குமேற்ப பல்வேறுபட்ட செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு வழியமைத்துக் கொடுத்தல் செயற்பாட்டு அறையை அமைத்தலின் பிறிதொரு நோக்கமாகவுள்ளது.
மாணவர்கள் தத்தமது ஆற்றல்களையும், படைப்பாக்கத் திறன்களையும் வளர்த்துக் கொள்வதற்கு வாய்ப்பளிக்கக்கூடிய சுயாதீனமான ஓர் இடமாக இந்த அறை அமையும். மிகவும் விரிவானதும் பரந்துபட்டதுமான அனுபவப் பரப்புக்களை வழங்கக் கூடியதாகவும் அறையின் கட்டமைப்பு மேற்கொள்ளப்படும்.
30

afurt.Glgum &m
பள்ளிக்கூடத்தில் தனியான ஒரு கட்டடத்தை இதற்கென ஒதுக்கலாம் அல்லது அருகருகே அமைந்த இரண்டு அல்லது மூன்று வகுப்புக்களை இணைத்துச் செயற்பாட்டு அறையை நிறுவலாம். ஒவ்வொன்றும் பருமட்டாக 49 சதுர மீற்றர்களைக் கொண்ட (7x7 மீற்றர்) இணைந்த இரண்டு அறைகளேனும் குறைந்த பட்சம் இதற்கு வேண்டப்படும்.
செயற்பாட்டறைச் செயற்றிட்டத்தில் விவசாயத் தொழில் நுட்பம் தனித்துவம் கொண்டதாக ஏற்றக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் பொருட்டு சுமார் 225 சதுர மீற்றர் நிலப்பரப்பு குறைந்தபட்சமாக வேண்டப்படுகின்றது.
இந்தச் செயற்றிட்டத்தின் குறிக்கோள்களைத் தேசிய கல்வி நிறுவகம் பின்வருமாறு விளக்கிக் கூறியுள்ளது. (கைநூல் 1998.ப.4)
l பரந்த வீச்சினுள், பொருத்தமான செயன்முறைகள் தொடர்
பான பயிற்சியையும் விளக்கத்தையும் பெறல்.
2. அதிக விருப்புடனும் திறமையுடனும் செயற்பாடுகளில் ஈடுபடக்கூடிய விடயப் பரப்புக்கள் சார்ந்த செயற்பாடுகளைத் தாமாகவே தெரிவுசெய்து கொள்வதற்கான வாயப்புக்களை ஏற்படுத்தல்.
3. மாணவர் மாணவியரது எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்து கற்பிக்கப்படும் வகையில் உபகரணங்கள், கருவிகள், சாதனங்கள், பொருள்கள் போன்றவற்றை உரியவிதத்தில் பயன்படுத்தலும், பராமரித்தலும்.
4. துரிதமாக மாற்றமடைந்து வருகின்ற சமூகக்கோலத்திலே தகவல்களின் முக்கியத்துவத்தை உணரச் செய்தல், தகவல்களைச் சேகரித்தல், நிரற்படுத்துதல் ஆகியவை தொடர்பான திறன்களை வளர்த்தல். பள்ளிக்கூடச் செயற்பாட்டு அறை வேலைத்திட்டமானது ஐந்து
பிரதான கூறுகளைக் கொண்டதாக அமையும். அவையாவன:
1. தகவல் ஒழுங்கமைத்தல் மற்றும் முயற்சி நடவடிக்கைகள்
ÖnsO).
2. உணவு மற்றும் விவசாயக்கூறு.
31

Page 18
கல்வியில் புதிய சீர்திருத்தங்கள்
3. உற்பத்தி மற்றும் ஆக்கல்கூறு. 4. சித்திரிப்புத்திறன் மற்றும் கட்புலக் கலைக்கூறு. 5. ஆற்றுகைக் கலைகள் கூறு.
இவ்வாறாக ஐந்து முதன்மையான கூறுகளைக் கொண்ட செயற்பாட்டு அறையானது மாணவர்களது மனங்களைக் கவரும் வகையிலே ஒழுங்கமைக்கப்படுதல் வேண்டும். மாணவரின் படைப்பாக்கல் திறனைக் கிளறச் செய்யும் வகையில், சித்திரங்கள் பொன்மொழிகள், ஒளிப்படங்கள், மாதிரிகை வடிவங்கள், திட்டப்படங்கள், நூல்கள், கையேடுகள் முதலியவை இடம்பெறல் வேண்டும். படைப்பாக்கல் தொடர்பான மாணவர்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உதவக்கூடிய வகையிலும் அவை இருப்புச் செய்யப்படுதலே சாலச்சிறந்தது. காட்சிப் பொருள்கள் விளக்க எளிமை கொண்டவையாயும், பொருண்மை மிக்கதாயும் இருத்தல் விரும்பத்தக்கது.
செயற்பாட்டு அறையின் முதன்மைக்கூறாகத் தகவல் ஒழுங்கமைத்தல் மற்றும் முயற்சி நடவடிக்கைகள் கூறு அமையும். இதுவே அனைத்துக் கூறுகளினதும் கூட்டுமொத்தமான செயற்பாட்டுக்குப் பொறுப்பான முகாமைத்துவக் கூறாகவும் அமையும். ஒவ்வொரு கூறுக்குமுரிய தளபாடங்கள், உபகரணங்கள், பொருட்கள் முதலியவற்றை இருப்பியத்திலே எழுதுதல், பராமரித்தல், பயன்படுத்துவோர் தொடர்பான பட்டியல்களைப் பதிவுசெய்தல், பொருட் பாதுகாத்தல், பொருள் வழங்குநர்களின் விபரங்களை வைத்திருத்தல் முதலிய அனைத்தும் தகவல் ஒழுங்கமைத்தல் மற்றும் முயற்சி நடவடிக்கைகள் கூறின் பொறுப்பாக இருக்கும்.
உணவு மற்றும் விவசாயக் கூறானது உணவுப் பிரிவு. விவசாயப்பிரிவு என்ற இரண்டு துறைகளைக் கொண்டது. உணவுப் பிரிவில் மனைப்பொருளியலின் உள்ளடக்கமாக அமையும் உணவு தயாரிப்பு, உணவுப் பாதுகாப்பு, பரிமாறும் முறைகள், அலங்கரிப்பு முறைகள், மனை அலங்காரம், உபகரணங்களின் பயன்பாடும், பராமரித்தலும், உடைதைத்தல், உடை அலங்காரம் முதலியவை இடம்பெறும், குழாய் நீர் வசதி, சமையலறை உபகரணங்கள், அடுப்பு முதலியவை இந்தப் பிரிவில் வைக்கப்படுதல் வேண்டும்.
32

சபா.ஜெயராசா
விவசாயப் பிரிவில் விவசாயம் செய்வதற்குரிய குறைந்தபட்சம் 225 மீற்றர் பரப்பளவுடைய நிலமும், அதற்குரிய அடிப்படை உபகரணங்களும் வேண்டப்படுகின்றன. விவசாய எண்ணக்கருக்கள், திறன்கள், பிரச்சினைகள் முதலியவற்றை ஆராய்ந்து அவற்றிலே மாணவர்கள் ஈடுபடுவதற்கு உற்சாகமளித்தல் வேண்டும். விவசாயப் பிரிவானது பள்ளிக் கூடத்தின் அயற் சமூக இயல்புகளை உள்வாங்கி அமைக்கப்படுதலே சாலச் சிறந்தது. உதாரணமாக மீனவச் சூழலில் அமைந்துள்ள பள்ளிக்கூடம் மீன்பிடித் தொழிலோடு இணைந்த செயற்பாடுகளை முன்னெடுத்தலே விரும்பத்தக்கது.
விவசாயப் பிரிவில் பின்வரும் பாடப் பரப்புக்களுக்கு அமைவாக மாணவர் தத்தமது செயற்பாடுகளைத் தெரிவுசெய்து கொள்ளலாம்.
வீட்டுத் தோட்டம் பயிர்ச் செய்கை
பிராணி வளர்ப்பு மீனவத் தொழில் காடு வளர்ப்பு பூங்கனியியல் முயற்சி பண்ணை வளர்ப்பு விவசாய நுட்பவியல் சூழற் காப்பு பண்ணை உபகரணம் மற்றும் இயந்திரப் பராமரிப்பு
l
O
o
விவசாய உபகரண ஆக்கல். 12. விவசாயத்தோடிணைந்த கைத்தொழில்கள்.
இத்துறைகளில் பள்ளிக்கூட அயற் பிரதேசத்திலுள்ள நிபுணர். களதும், அனுபவசாலிகளினதும் பட்டறிவைப் பயன்படுத்தலும் வரவேற்கப்படுகின்றது.
உற்பத்தி மற்றும் ஆக்கல்கூறானது மரவேலைத் தொழில் நுட்பம், உலோகவேலைத் தொழில் நுட்பம், மின்- இலத்திரனியல் தொழில்நுட்பம், பொறியியல், நிர்மாணிப்பு, பிளாஸ்ரிக் வனைதல், தொழில் நுட்பங்கள் மற்றும் அலங்காரப் கைப்பணி நுட்பம் போன்றவற்றை உள்ளடக்கியதாக அமையும். இந்தப் பிரிவுக்குரிய
33

Page 19
கல்வியில் புதிய சீர்திருத்தங்கள்
மூலப்பொருள்கள், உபகரணங்கள் முதலியவற்றைச் சூழலில் இருந்து பெற்றுக் கொள்வதே சிறந்தது. கழிவுப் பொருள்களை இச் செயற்கூறின் மூலப்பொருள்களாகப் பயன்படுத்தலாம். பொருத்தமான நூல்கள், சஞ்சிகைகள், காட்டுருக்கள் முதலியவை இப்பிரிவில் இருத்தல் வேண்டும். அத்துடன் சூழலில் வாழும் திறமைசாலிகளின் பட்டறிவைப் பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்புக்களை உருவாக்குதலும் சிறந்த நடவடிக்கையாகும்.
சித்திரிப்பு மற்றும் கட்புலக் கலைகள் கூறானது சிறபம், சித்திரம், அச்சு ஆகிய ஊடகங்கள் வழியாக ஆக்கத்திறன்களை வளர்க்கும் பிரிவாக அமையும். மாணவர்கள் சுயாதீனமாகச் செயற்படக்கூடிய ஊக்குவிப்பு நடடிக்கைகள் இப்பிரிவில் ஒழுங்கமைக்கப்படும். இத்துறையோடு இணைந்த கலைப்பொருள்கள் காட்சிகள் உடனுதவும் நூல்கள் முதலியனவும் சேர்க்கப்படல் வேண்டும். இப்பிரிவுக்குரிய வண்ணங்கள், தூரிகைகள், களி, சார்ந்துக் கரண்டிகள், மற்றும் உபகரணங்களும் தயார் நிலையில் இருத்தல் வேண்டும். மாணவர்களின் ஆக்கங்களைக் காட்சிக்கு வைத்து அவர்களின் ஆக்கத்திறன்களை மேலும் தூண்டலாம். இத்துறை சார்ந்த கலைஞர்களோடு மாணவர்கள் இடைவினைகளை மேற்கொள்ளுதல் வரவேற்கத்தக்கது.
ஆற்றுகைக் கலைகள் கூறானது, ஆடல், பாடல், நடித்தல் முதலாம் பிரிவுகளைக் கொண்டிருக்கும். இதற்கென உரிய அமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்து, மாணவர்களது சுய விருப்பங்களை இத்துறையில் வளர்ப்பதற்கு உதவுதல் வேண்டும். கட்புல, செவிப்புல சாதனங்கள் வழியாக மாணவர்கள் தரமான ஆடல் பாடல்களைக் கேட்கும் வாய்ப்புத்தருதல் நன்று. இதற்கென உரிய மாதிரிச் செயற்பாடுகள் கீழே தரப்படுகின்றன.
1. இசைக்குரிய அசைவுகள்
2. நடனம், ஆக்கல்
3. இசை, தாளம், அடவு, அபிநயம், முதலியவற்றை
ஒன்றிணைத்தல்.
4. பாவனை நடனம்
5. முகமூடி நடனம்
34

சபா.ஜெயராசா
6. சூழல் வெளிப்பாட்டு நடனம்
7. நடிப்பு
8. கருவிசார் இசை
9. இசைசார்ந்த கருத்து வெளிப்பாடு
10. இசையமைத்தல் 11. இசைப்பாடல்கள் புனைதல்
12. கிராமிய இசையும் பாடல்களும்
ஆற்றுகைக் கலைஞர்களை அழைத்து மாணவர்களது
அனுபவங்களை வளமூட்டலும், கலைநிகழ்ச்சிகளை ஒழுங்கமைத்தலும் வரவேற்கப்படுகின்றன.
செயற்பாட்டு அறையின் ஒழுங்கமைப்பு முகாமைத்துவம்
தொடர்பான சில பயனுள்ள கருத்துக்கள் வருமாறு
1.
பள்ளிக்கூட நேரசூசிகையோடு இசைவுபடக் கூடியவாறு இதனை ஒழுங்கமைத்தல்.
இயக்கமும் தலைமைத்துவப் பண்பும்மிக்க பொருத்தமான ஆசிரியரைத் தெரிவு செய்து பொறுப்பு வழங்கல்.
நடைமுறைகளை ஒழுங்கமைத்து நெறிப்படுத்தும் செயற்குழு ஒன்றினை அமைத்தல். பள்ளிக்கூடத்தின் முழுமையான பங்களிப்பைச் சகல மட்டங்களிலும் ஈடுபடுத்துதல்.
5. அயற் சமூகத்தின் உதவிகளையும், வளங்களையும் பெறுதல்.
வாரத்துக்கு இரண்டு பாடவேளைகள் இதற்கென மாணவர்களுக்கு ஒதுக்குதல்.
திறனாய்வு :
செயற்பாட்டறைச் செயற்றிட்டமானது ஒரு புதிய கண்டு பிடிப்பு
அன்று. ஏற்கனவே எமது குருகுலக் கல்வி, காந்தியக் கல்வி, டுயியன்கல்வி, மார்க்சியக்கல்வி முதலியவற்றில் இக்கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. இலங்கையின் 1972 ஆம் ஆண்டுக்
35

Page 20
கல்வியில் புதிய சீர்திருத்தங்கள்
கலைத்திட்டத்திலும் செயற்பாடுகளுடன் இணைந்த கலைத்திட்டம் மீள வலியுறுத்தப்பட்டது.
போதுமான வள ஒதுக்கிடுகள் இன்றி இத்திட்டம் வெற்றியளிக்குமென எதிர்பார்க்க முடியாது. மேலும் வசதியுள்ள பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்க்குக் கிடைக்கும் செயற்றிட்டத் தெரிவு வாய்ப்புகள் போன்று வற்கட நிலையிலுள்ள பள்ளிக்கூடங்களுக்கும் கிடைக்குமா என்ற கேள்விக்குறியும் எழுகின்றது.
உசாத்துணை நூல்கள்
1. பேராசிரியர் லக்கூழ்மன் ஸயதிலக்கா அறிமுகம் - 03-09-1998
2. தேசிய கல்வி நிறுவகம் 6-9தரங்களுக்கான செயற்பாட்டறைச்
செயற்றிட்டம், 1998.
3. பேராசிரியர் சோ. சந்திரசேகரம், கல்விச் செயற்பாட்டில் புதிய செல்நெறிகள், வவுனியா தேசிய கல்விக் கல்லூரி 1999
4. கல்வியியல் ஆய்வு, மலர் 1, இதழ் 2 .
36

தொடர்தொழில் ஆற்றுப்படுத்தலும் சீர்மியமும்
புதிU கல்விச் சீர்திருத்தம் தொடர் தொழில் ஆற்றுப்படுத்தலிலும் (Career Guidance) 356ü6 glibpi LIGBg5565glib (Educational Guidance) சீர்மியத்திலும், (Counseling) கவனம் செலுத்தியுள்ளது. கல்விக்கும் தொழில் உலகுக்கும் உள்ள தொடர்புகளைச் சீர்படுத்தவும், பொருத்தமானவர்களுக்குப் பொருத்தமான தொழிலை பொருத்தமான காலங்களிலே அறிந்து கொள்ளச் செய்யவும் ஆற்றுப்படுத்தல் துணை செய்யும். இளைஞர் மத்தியிலே தோன்றும். கல்வி சார்ந்த விரக்திகளையும், தொழில் சார்ந்த விரக்திகளையும் தீர்ப்பதற்கு இந்நடவடிக்கை ஒர் உபாயமாக அமையும்.
இலங்கையின் கல்விச் செயற்பாடு பெரும்பாலும் பல்கலைக்கழக நுழைவை நோக்கியே இலக்குவைக்கப்படுவதாகவுள்ளது. பரந்துபட்ட தொழில்களை நோக்கிய உளப்பாங்கும் தொழில்களின் மகத்துவத்தை மேம்படுத்தும் கல்விசார் நடவடிக்கைகளும் உரிய முறையில் ஆற்றுப்படுத்தப்படவில்லை. ஏட்டுக் கல்விக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் செயன் முறைக் கல்விக்கும், சுயதொழில் முயற்சி முனைப்புக்கும் கொடுக்கப்படவில்லை.
புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பாக முன்மொழியப்பட்ட 13 அம்சங்களில் தொடர் தொழில் வழிகாட்டலும் சீர்மியம் அல்லது ஆலோசனைச் சேவையும் முக்கியமாக அமைந்துள்ளன. தமது உளப்பாங்கு, உளச்சார்பு, ஆற்றல்கள், சுயபடிமம் முதலியவற்றிற்குப் பொருத்தமான கற்கைநெறியைத் தெரிவுசெய்யவும், தொடர்
37

Page 21
கல்வியில் புதிய சீர்திருத்தங்கள்
தெர்ழிலைத் தெரிவு செய்யவும். மாணவர்க்கு உதவும் வண்ணம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி தரப்படும்.
இதன் பொருட்டுத் தொடர் தொழில் ஆற்றுப்படுத்தல் மற்றும் diuru -96 g5 (Career Guidance and Counselling Unit) u6) மட்டங்களில் அமைக்கப்படும், அதாவது கல்வி அமைச்சு மட்டம், மாகாணக் கல்வித்திணைக்கள மட்டம், வலயக் கல்வித் திணைக்கள மட்டம், முதலியவற்றில் மேற்கூறிய அலகு அமைக்கப்படும் நாட்டில் நிலவும் தொழிற்கோலங்கள், விரிவடையும் தொழிற்கோலங்கள் முதலியவை பற்றிய விளக்கங்கள் பள்ளிக் கூடங்களுக்கு வழங்கப்படும்.
அடுத்த சிறப்பார்ந்த செயற்பாடாக அகல்விரி சீர்மியம் மற்றும் தொடர்தொழில் ஆற்றுப்படுத்தற்சேவை (Comprehensive Counselling and Career Guidance Service) L16i 6faisan L (p60p60LDuísio கொண்டு வரப்படும். அனைத்து மாணவர்களுக்கும் பயன்படக் கூடிய வகையில் இது ஒழுங்கமைக்கப்படும். மாணவர் பல்வேறு விருத்தி சார்ந்த நெருக்கிடுகளை எதிர்கொள்கின்றார்கள். பல்வேறு மனவெழுச்சிக் குழப்பங்களுக்கு அவர்கள் முகம் கொடுக்க நேரிடுகின்றது. கற்றலிலும், கிரகித்தலிலும், நினைவில் நிறுத்தலிலும், அவர்கள் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொள்கின்றனர். பல்வேறு பொருத்தப்பாட்டுப் பிரச்சினைகள் (Adjustment Probleme) மாணவர்களால் எதிர்கொள்ளப்படுகின்றன.
இவ்வாறான பல்வேறு தாக்கங்களுக்கும், நெருக்கீடுகளுக்கும், குறுக்கீடுகளுக்கும், அவலங்களுக்கும், உள்ளாகும் மாணவர்களுக்குப் பள்ளிக்கூட மட்டத்தில் உதவுவதற்கு பொருத்தமானதும் நெகிழ்ச்சி கொண்டதுமான அமைப்புக்கள் இன்றைய பள்ளிக்கூட ஒழுங்கமைப்பில் இல்லை. இந்தக்குறைபாட்டை நீக்குவதற்கு அகல்விரி பண்புடைய சீர்மியம் மற்றும் தொடர் தொழில் வழிகாட்டற் சேவை துணைசெய்யும்.
இத்துறையில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி தருவதற்கான திட்டங்களும் முன்மொழியப்பட்டுள்ளன. முதலில் இத்துறைகளில் உளச்சார்பு கொண்ட ஆசிரியர்களைத் தெரிந்தெடுத்துப் பயிற்சி வழங்கப்படும். அவ்வாறு பயிற்சியளிக்கப்பட்ட ஆசிரியர்கள் வள அணியினராகச் செயற்பட்டு ஏனைய ஆசிரியர்களுக்குப் பயிற்சி தருவார்கள்.
38

சபா.ஜெயராசா
மேலும் தொடர் தொழில் சார்ந்த தகவல்கள் பற்றிய தரவுத் g56TD (Data based on Career Information) -960)LDgig56i G5ITLil JiróOT கருத்துக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. தொழிலின் இயல்புகள், அவற்றின் நுழைவுக்கான தகுதிகள், தொழில்களின் உள்ளே காணப்படும் மேல்நோக்கிய அசைவுகளுக்கான சந்தர்ப்பங்கள், புதிய தொழில் வாய்ப்புக்கள் முதலியவை பற்றிய விரிவானதும், புதுபிக்கப்பட்டதுமான தகவல்கள், தரவுத்தளத்தினால் பேணிப் பாகாக்கப்பட்டு உடனுக்குடன் பெறக்கூடிய தயார் நிலையில் வைக்கப்படும்.
தொடர் தொழில் ஆற்றுப்படுத்தல், சீர்மியம் முதலியவை அனைத்துப் பள்ளிக்கூடங்களுக்கும், அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கச் செய்தல் புதிய கல்விச் சீர்திருத்ததின் நோக்கமாகவுள்ளது. இதற்கென ஆசிரியர்களுக்குத் தேவையான தகவல்கள் வழங்குவதற்கும் நடிவடிக்கை எடுக்கப்படுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது. குழந்தை வளர்ந்து நிறைவுபெறும் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களது தேவைகளுக்குரிய பொருத்தமான கல்வி ஆற்றுப்படுத்தல், தொடர்தொழில் ஆற்றுப்படுத்தல், சீர்மியம் முதலியவை வழங்கப்படும். இவ்வாற்றல் மாணவர்கள் நல்ல சீராக்கங்களை முன்னெடுக்கவும், நெருக்குவாரங்களைத் தவிர்க்கவும் கூடியதாக இருக்கும். இந்தச் செயற்பாடு பெற்றோரது நெருக்குவாரங்களையும், பதகளிப்பையும் தணிப்பதற்குத் துணை செய்யும். மாணவர்களோடு இணங்கிச் செல்லக்கூடியதாக கல்வியை அமைக்கும் பொழுது மாணவரும் பெற்றோரும் உள நிறைவு அடைவர்.
எதிர்காலத்திலே தாம் பெறக் கூடிய தொழில் பற்றிய எண்ணக்கருவை உருவாக்குவதற்கும், அத்தொழில் பற்றிய அகல்விரி விளக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்கும், நூல்களை வாசிப்பதற்கும், தொடர் தொழில் ஆற்றுப்படுத்தல் நடவடிக்கை துணை செய்யும்.
ஒவ்வொருவருக்குமுரிய உளச்சாரத்தைத் துல்லியமாக மதிப்பீடு செய்வதற்குரியவாறும், எமது பண்பாட்டுக்குப் பொருந்தக் கூடியவாறும், அமையக்கூடிய உளச்சார்புத் தேர்வுகளை உருவாக்குதலும், மேம்படுத்தலும், பயன்படுத்தலும் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. அத்துடன் ஆற்றுப்படுத்தற் சேவையை வழங்குவதற்குப் பள்ளிக்கூட மட்டத்தில் ஆற்றலும்,
39

Page 22
கல்வியில் புதிய சீர்திருத்தங்கள்
அனுபவமும், புலமையும், அர்ப்பணிப்பும் கொண்ட ஆசிரியகுழு அமைக்கப்படும். இந்நிலையில் ஆசிரியர்களுக்குரிய புதிய பரிமாணங்கள் வளர்வதற்கு வாயப்பு ஏற்படுகின்றது.
தொடர் தொழில் ஆற்றுப்படுத்தல், சீர்மியம் முதலியவற்றை வளம்படுத்தும் பொருட்டு, வினைத்திறன்படுத்தும் பொருட்டும் இணைக்கலைத் திட்டச் செயற்பாடுகள் பள்ளிக்கூட மட்டத்தில் விரிவுபடுத்தப்படவுள்ளன. குழுச் செயற் திட்டங்கள், கூட்டுறவு வேலைத்திட்டங்கள், தலைமைத்துவ மேம்பாட்டு நடவடிக்கைகள், மனச் சுகம் தரும் பொழுது போக்கு நடவடிக்கைகள், விழுமிய மேம்பாட்டுத் திட்டங்கள் முதலியவை இணைக்கலைத்திட்டத்தில் ஒழுங்கு செய்யப்படும்.
தொடர் தொழில் வழிகாட்டல் தொடர்பான நூல்கள், கையேடுகள், கண்காட்சிகள் முதலியவற்றைப் பள்ளிக்கூடங்களில் ஒழுங்கமைப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தொழிற்பரிமாணங்கள் மொழியுடனும், தொடர்பாடலுடனும் இணைந்தவை ஆதலால் ஆங்கிலத்திலும், தேசிய மொழியிலும் தேர்ச்சி பெறுவதற்குரிய ஒன்றிணைந்த நடவடிக்கைகள் பள்ளிக்கூடங்களிலே மேற்கொள்ளப்படும். ஆற்றல்களையும், திறன்களையும் மதிப்பிடுவதற்கும், விதந்துரைகள் வழங்குவதற்கும், திட்டநுட்பமான கணிப்பீட்டு நடைமுறைகளை நடைமுறைப் படுத்துவதற்கும், தேர்வுகள் தொடர்பான அகல்விரி நடவடிகைகளை மேற்கொள்வதற்கும் பரீட்சைகள் அதிகார சபை ஒன்றை அமைத்தலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
திறனாய்வு :
தொடர் தொழில் ஆற்றுப்படுத்தல், கல்வி வழிகாட்டல், சீர்மியம் முதலான துறைகளில் போதுமான வல்லுநர்கள் இல்லாத நிலையில் அவற்றை நடைமுறைப்படுத்துவதிலே பல இடையூறுகளை எதிர்கொள்ள நேரிடும். வழிகாட்டல், உளவளத்துணை ஆலோசனை, முதலியவற்றில் அடியாதாரமற்ற மேலைத்தேயக் கோட்பாடுகளை எமது ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் அறிமுகம் செய்வதனால் பல இடையூறுகளும் எதிர் விளைவுகளும் ஏற்படக்கூடியதாக இருக்கும்.
4O

surr.Ggunment
மேலை நாடுகளில் உளவளத்துணை, ஆலோசனை வழிகாட்டல் முதலாம் துறைகளில் உருவாக்கப்பட்ட பல கோட்பாடுகளும் நடைமுறைகளும் அந்த நாடுகளிலேயே நிராகரிக்கப்பட்டு வரும் நிலையில் அவற்றை எமது மக்கள் மீது திணிப்பது அவச் செயலாகிவிடும்.
எமது பாரம்பரியமான உளவளத்துணை நடவடிக்கைகள் மிகுந்த வலிமை கொண்டவையாக இருக்கின்றன. அவற்றை அகழ்ந்து தேடியெடுத்துப் பயனுள்ள வகையிலே வழங்குவதற்குமுரிய நடவடிக்கைகள் வறிதாகவேயுள்ளன.
சீர்மியம் மற்றும் தொடர் ஆற்றுப்படுத்தல் ஆகியவை மத்திய தர வர்க்கத்தினரது புலக்காட்சியினூடாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமூகத்தின் அடித்தள மக்கள் நிராகரிப்புக்கு உள்ளாகி ஒதுக்கப்பட்டோராய் இருக்கின்றனர்.
41

Page 23
பள்ளிக்கூட மட்டக் கணிப்பீடு
புதிய கலைத்திட்டச் சீர்திருத்தங்களில் பள்ளிக்கூட மட்டக் at 60ft fB (School based Management) g(5 flipsiuti figs நடவடிக்கையாக அமைகின்றது. பள்ளிக் கூட LD L. முகாமைத்துவம் வளரும் போது தான் பள்ளிக்கூடமட்டக் கணிப்பீடு செவ்வனே வளர்ச்சியடைய முடியும் என்பதை மனங்கொள்ளல் வேண்டும்.
பள்ளிக்ககூடமட்டக் கணிப்பீட்டின் சிறப்பார்ந்த நோக்கங்கள் வருமாறு
1.
பாரம்பரியமான தொகுத்த மதிப்பீட்டிற் காணப்படும் குறைபாடுகளை நீக்கிப் புதிய கணிப்பீட்டுப் பண்பாட்டை வளர்த்தல்.
கற்றல், கற்பித்தற் தொழிற்பாட்டின் பிரிக்க முடியா ததும் ஒன்றிணைந்ததுமான கூறாகக் கணிப்பீட்டை அமைத்தல்.
கற்றல் செயற்பாட்டிலே மாணவர் ஒருவர் தாம் வகிக்கும் நிலையை உணர்ந்து, தமது கற்றல் செயற்பாட்டை மேம்படுத்துவதற்கு உதவுதல்.
ஆசிரியரது கற்பித்தல் செயற்பாட்டிலே வினைத்திறனை மேம்படுத்துவதற்கு வாய்ப்பளித்தல்
கற்பித்தல் இலக்குகள் அடையப்பட்டனவா என்பதைத் துல்லியமாக அறிதல்.
42

சபா.ஜெயராசா
புதிய கணிப்பீட்டு முறைமை மாணவர்களையும் ஆசிரியர்களையும் கூடியஇயக்கமுள்ளவர்களாகவும் துடிதுடிப்புள்ளவர்களாகவும் மாற்றமுயல்கின்றது. கற்றல் சந்தர்ப்பங்களை ஒழுங்குபடுத்தி மாணவர்கள் கருத்துணர்வுடன் கற்பதற்குரிய முனைப்பு முன்னெடுக்கப்படுகின்றது. "சோதனை" என்ற பயத்திலிருந்து மாணவரை விடுவிக்கவல்ல நடைமுறைகளைப் பள்ளிக்கூட மட்டக் கணிப்பீடு கொண்டுள்ளது.
ஒவ்வொரு மாணவரும் குழு நிலைப்பட்ட வேகத்துடன் இணைந்து கற்பதற்குரிய ஏற்பாடுகள் புதிய கணிப்பீட்டிலே காணப்படுகின்றன. ஒவ்வொருபாட அலகிலும் ஒவ்வொரு மாணவரும் காட்டும் திறன்களையும், பின்னடைவுகளையும் எளிதிலே கண்டறிவதற்கு இது வாய்ப்பளிக்கின்றது. இதன் வாயிலாகப் பரிகாரக் கற்பித்தலை முன்னெடுக்கக்கூடியதாக இருக்கின்றது. பாடங்களோடு இணைந்த பன்முகமான தொழிற்பாடுகளில் மாணவர்கள் ஈடுபட நேரிடும் பொழுது "நெட்டுருக் கற்றல்" என்ற சலிப்பு நிலையிலிருந்து அவர்களால் விடுபட முடிகின்றது.
பள்ளிக்கூட மட்டக் கணிப்பீட்டிலே தவணைக்குப் பத்துக் கணிப்பீடுகள் என்ற எண்ணிக்கை பொதுவாகப் பின்பற்றப்படும். மாணவர்களது ஆளுமை வெளிப்பாடு,துலங்கல் வெளிப்பாடு, முதலியவற்றிலே கவனம் செலுத்தும் பொழுது மனவெழுச்சி அடிப்படையிலே பாதிக்கப்படாதிருத்தலையும் ஆசிரியர் கவனித்துக் கொள்ளுதல் வேண்டும்.
ஒவ்வொரு கணிப்பீட்டிலும் மாணவர் பெறும் புள்ளிகள் பின்வரும் நான்கு தொகுதிகளிலே வகைப்படுத்தப்படும்.
(அ) 81% தொடக்கம் 100% வீச்சில் ஒருவர் புள்ளி பெறும்பொழுது, அவர் குறித்த பாடத்தில் உன்னத தேர்ச்சியடைந்து "மிக நன்று" என்ற இடத்தைப் பெறுவார். இது சிவப்பு வண்ணத்தாற் சுட்டிக்காட்டப்படும்.
(ஆ) 61% தொடக்கம் 80% வீச்சில் ஒருவர் புள்ளி பெறும் பொழுது அவர் தேர்ச்சி மட்டத்தை அடைந்து "நன்று" என்ற இடத்தைப் பெறுவார். இது பச்சை வண்ணத்தாற் சுட்டிக்காட்டப்படும்.
(இ) 21% தொடக்கம் 60% வீச்சில் ஒருவர் புள்ளி பெறும்பொழுது, அவர் தேர்ச்சியடையவில்லை என்ற "குறைவு" என்ற சுட்டைப்
43

Page 24
கல்வியில் புதிய சீர்திருத்தங்கள்
பெறுவார். இது மஞ்சள் வண்ணத்தாற் சுட்டிக்காட்டப்படும். (ஈ) 0% தொடக்கம் 20% வீச்சில் ஒருவர் புள்ளிகள் பெறும்பொழுது தேர்ச்சியடையவில்லை என்ற நிலையில் "மிகக் குறைவு" என்ற சுட்டைப் பெறுவார். இது கறுப்பு வண்ணத்தாற் காட்டப்படும்.
ஒவ்வொரு பாடத்திலும் மாணவரது அடைவுகள் பதிவு செய்து வைக்கப்படும்.வகுப்பிலுள்ள அனைத்து மாணவரதும் அடைவுகள் வண்ணச் சுட்டுகளாலும் வரைபுகளாலும் தொகுத்துக் காட்டப்படும். மாணவரது அடைவுகள் அவரவர் அப்பியாசப் புத்தகங்களிலும் குறித்துக் காட்டப்படும். தமது அடைவுகளை வரைபடங்களிலே காணும் பொழுது தனது யதார்த்த நிலையை மாணவர் தாமே அறிந்து கொள்ள முடியும்.
வகுப்பறையின் பருமன் வரையறுக்கப்பட்டிருக்குமாயின் ஆசிரியருக்கு இப்பணி எளிதாக இருக்கும். ஆனால் முப்பதுக்கு மேற்பட்ட மாணவர் இருக்கம் பொழுது இப்பணியானது ஆசிரியருக்குக் கடிதாக இருக்கும் என்ற யதார்த்தத்தை ஏற்றல் வேண்டும்.
குறைவு, மிகக்குறைவு ஆகிய நிலைகளில் இருக்கும் மாணவர்கள் மீது ஆசிரியர் தனித்தனிக் கவனம் எடுத்தல் வேண்டும். அவர்கள் தேர்ச்சியை அடையும் வண்ணம் உளவியல் உபாயங்கள் தழுவிய கற்பித்தலை முன்னெடுத்தலே சாலச்சிறந்தது.
மேலும் பாட அடைவுகளை ஆசிரியர்கள் பல்வேறு பரிமாணங்களில் கணிப்பீடு செய்தலே பொருத்தமானது. குறுவிடை வினாக்கள், பல்தெரிவு வினாக்கள், கட்டுமானப்படுத்திய கட்டுரை, வாய்மொழி விடைபகரல், வரைபுகளாக விடை தருதல், பிரயோகமுறை விடை தருதல், விவரித்தல் முறை விடைதநதல் திறனாய்வுமுறை விடை தருதல் போன்ற பன்முகப்பட்ட உபாயங்களைப் பயன்படுத்துதலே சிறந்தது. குழுநிலையில் பொருத்தமான செயற்றிட்டங்களை வழங்கியும் அடைவைக் கணிப்பீடு செய்யலாம்.
பள்ளிக்கூடமட்டக் கணிப்பீடு இரண்டு பரிமாணங்களைக் கொண்டது என்பதை மனங்கொள்ளல் வேண்டும். அவையாவன:
(1) கோட்பாட்டுப் பரிமாணம்
(2) நடைமுறைப் பரிமாணம்.
44

&FLun.oguo TaFIT
கோட்பாட்டுப் பரிமாணத்தில் கல்விக் கருத்தியல், கல்வி இலக்குகளின் அறிகை, எழுச்சி, உடலியக்கம் முதலாம் பகுப்பாய்வ, தேர்வு உளவியல் முதலானவை உள்ளடங்கும். நடைமுறைப் பரிமாணத்தில் கோட்பாடுகளை அடைவதற்குரிய செயல்வழிகள், உபாயங்கள் முதலியவை உள்ளடங்கும். இவை பற்றிய தெளிந்த அறிவானது கணிப்பீட்டுச் செயல்முறையை வளம்படுத்தும்.
பள்ளிக்கூட மட்டக் கணிப்பீட்டின் சிறப்பார்ந்த பண்புகளுள் ஒன்றாக அமைவது ஆசிரியர்- பெற்றோர் தொடர்புகளை வலுப்பெறச் செய்து மேலும் சந்திப்புக்களைத் தொடர்ச்சியாக நிகழச் செய்வதாகும்.
பள்ளிக்கூட மட்டக் கணிப்பீடானது கற்றல் பெறுபேறுகளையும் மாணவரது ஆளுமையையும் மதிப்பிடும் ஏனைய செயல்களுடனும் தொடர்படையது. அவையாவன:
l. மாணவரின் அடிப்படைத் திறன் தகவுகளின் விருத்திபற்றிய
மதிப்பீடு.
2. மாகாணமட்டம், தேசியமட்டம் முதலியவற்றில் நடத்தப்படும்
பொதுக்கல்விப் பெறுபேறுகளின் மதிப்பீடு
3. மாணவர் செயற்பாட்டுப் பதிவேட்டுக்குரிய மதிப்பீடு
மாணவர் பதிவேடு (Pupil Portfolio) என்பது அவர்களது அனைத்து அடைவுகளையும், ஆற்றல்களையம் தொகுத்துக் காட்டும் ஆவணமாக அமையும்.
மேற்கூறிய அனைத்து மதிப்பீடுகளுடனும் பள்ளிக்கூட மட்டக் கணிப்பீடு தொடர்பு கொண்டுள்ளது.
திறனாய்வு :
பள்ளிக்கூட மட்டக் கணிப்பீடு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இருந்து பின்வரும் அவதானிப்புக்களைப் பெறக் கூடியதாக இருக்கின்றது.
(அ) மிகவும் வறிய மாணவர்கள் கூடுதலான கறுப்பு வண்ணங்களையே பெரும்பாலும் பெறுகின்றனர். அதாவது அவர்களின் பாடத் தேர்ச்சி 20% விழுக்காட்டிலும் குறைவாகவேயுள்ளது. அதாவது, வறிய மாணவர்கள் அடைவுகளிலே பின்
45

Page 25
கல்வியில் புதிய சீர்திருத்தங்கள்
தங்குகின்றார்கள் என்பதைப் பள்ளிக்கூட மட்டக் கணிப்பீடு புலப்படுத்துகின்றது.
வளங்குன்றிய கிராமப்புறப் பள்ளிக்கூடங்களில் மிக நன்று என்ற தேர்ச்சிக்குரிய சிவப்பு வண்ணத்தைத் தொடர்ச்சியாகப் பெற்ற மாணவர்கள் வசதிமிக்க நகரப் பள்ளிக்கூடங்களுக்கு மாறிச்சென்று கல்வியைத் தொடர்கின்றவேளை சிவப்பு வண்ணத்தைத் தொடர்ந்து பெறுதல் கடினமாகவுள்ள நிலவரங்களும் கண்டறியப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளிக்கூடமட்டக் கணிப்பீடு பள்ளிக்கூடங்களுக்குப் பள்ளிக்கூடம் வேறுபட்டு நிற்கின்றது என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
References :
1. 1995 ஒரு தேசிய கல்விக் கொள்கையை நோக்கிய செயல்
சார்ந்த விரகு, கொழும்ப, 1995
2. யாழ்ப்பாண விஞ்ஞான சங்கம் - புதிய கல்விச் சீர்திருத்தங்கள்,
1999.
3. Daily News 10-11-1998
4. Daily News 20-01-1999
5. ஆற்றுப்படுத்தலும் சீர்மியமும்
பட்டதாரி ஆசிரியர் வாண்மை அபிவிருத்தி அமைப்ப வெளியீடு, யாழ்ப்பாணம், 1997
46

பல்கலைக்கழக நுழைவும் உளச்சார்புத் தேர்வும்
Uல்கலைக்கழகத் தெரிவுக்கு க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றுடன் அனைவருக்கும் பொதுவான (Common General Test) ஒன்று அறிமுகப்படுத்தப்படுகிறது. இது பொது உளச்சார்புத் தேர்வு (Aptitude Test) என்று பரவலாக அழைக்கப்படுகின்றது. இத் தேர்வானது பல்கலைக்கழகத்தில் குறித்த ஒரு நெறியைக் கற்பதற்கான மாணவர்களின் பொருத்தப்பாட்டைப் பரீட்சிக்க உதவும்.
பழைய கலைத்திட்டத்தில் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குரிய மாணவர்கள் நான்கு பாடங்களைக் கற்றுவந்தனர். இம்முறைக்குப் பதிலாக மூன்று பாடங்களே புதிய கலைத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நான்காவது பாடமாக அனைவர்க்கும் பொதுவான தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் புதிய அறிமுகமானது மாணவர்களது பொது அறிவையும் உலக நோக்கையும் மேம்படுத்துவதற்கு உதவும் என்று நம்பப்படுகிறது. இன்றைய பட்டதாரிகள் மத்தியிலே பொது அறிவின் தரம் மிகக் குறைந்த நிலையில் இருப்பதை ஆய்வுகள் புலப்படுத்துகின்றன. தமது நெறிக்குப் புறம்பான துறைகளில் அவர்களின் பொது அறிவு மிகக் குறைவாகவே பல பட்டதாரிகளிடம் காணப்படுகின்றன. மேலும் அவர்களது பரந்த வாசிப்புத்திறனிலும் பின்னடைவுகள் காணப்படுகின்றது. புதிய கல்விச் சீர்திருத்தம் இந்த மட்டுப்பாடுகளைப் பற்றி ஆழ்ந்து நோக்கியது. அதன் பெறுபேறாகவே அனைவருக்கும் பொதுவான தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
47

Page 26
கல்வியில் புதிய சீர்திருத்தங்கள்
இந்த அறிமுகம் தொடர்பான இன்னொரு கருத்தும் உண்டு, பல்கலைக்கழகங்களிலே குறித்த பயில் நெறிகளைக் கற்கும் மாணவர்களிடத்து அந்தப் பயில் நெறி தொடர்பான உளச்சார்பு இல்லாமையும் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது பெற்றோரதும், சகோதரர்களதும் விருப்பத்துக்காகவே குறித்த பாடநெறியைத் தெரிவுசெய்ததாகவும், அந்தப் பாடநெறியில் தமக்கு உள்ளார்ந்த ஈடுபாடு இல்லை என்றும் சில மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த இடர்பாட்டைக் கண்டறிந்து ஆவன செய்வதற்கும் உளச்சார்புத் தேர்வு துணைசெய்யும்.
க.பொ.த உயர்தரத்தில் மூன்று புலமைப்பாடங்கள் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியானது. மாணவர்களின் வேலைப்பழுவைக் குறைக்குமென்றும் அவர்கள் கூடுதலான அளவில் இணைந்த கலைத்திட்டச் செயற்பாடுகளிலே பங்கு பற்றித் தமது ஆளுமையை வளர்த்துக் கொள்ள முடியும் என்ற கருத்தும் உண்டு.
அனைவருக்கும் பொதுவாக அமையும் உளச்சார்புத் தேர்வானது மாணவரின் நிறைவான ஆளுமை வளர்ச்சிக்குத் துணை நிற்குமென நம்பப்படுகின்றது. வெறுமே தகவல்களைப் பதிவு செய்து வெளியிடும் நாடாப்பெட்டிகள் போன்று மாணவர்கள் உருவாக்கப்படாது சூழலுக்குப் பொருத்தமாகத் துலங்கும் திறமைகளை வளர்ப்பதற்கு இந்தப் புதிய பொதுப்பாடம் உதவ முடியும்.
இத்தேர்வானது நான்கு கூறுகளைக் கொண்டதாக அமையும் என விளக்கப்படுகின்றது. அவையாவன
1. Guags Gjyuu (General Awareness)
மாணவர்களின் பொது அறிவு, உலக விவகாரங்கள், தேசிய விவகாரங்கள் முதலியவற்றை இது மதிப்பீடு செய்யும்.
2. Ú'aåá'cocð7 éiá6th Spöpað. (Problem Solving Ability) தரப்படும் பிரச்சினைக்கு ஒருவர் தமது உள அமைப்பிலிருந்து பொருத்தமான தீர்வைக் கண்டறிகிறாரா என்பது இப்பிரிவிலே பரீட்சிக்கப்படும்.
3. காரணங்காணல் அல்லது நியாயிக்கும் ஆற்றலி
(Reasoning Ability) இது எந்த ஒரு மாணவரிடத்தும் இருக்க வேண்டியதும், விருத்தி செய்யகூடியதுமான ஓர் ஆற்றலாகும். இந்த ஆற்றல் பல்வேறு நுட்பங்களைக் கையாண்டு மதிப்பீடு செய்யப்படும்.
48

afurt.GigurrafIT
4. கிரகித்தல் ஆற்றலும் தொடர்பாடல் ஆற்றலும்
(Comprehension and Communication Abilities) ஓர் எண்ணக்கருவை விளங்கிக் கொள்ளல், ஒர் எண்ணக் கருவை மற்றைய எண்ணக் கருவிலிருந்து வேறுபடுத்தி விளங்குதல், எண்ணக் கருவைத் தீர்மானிக்கும் பண்புக் கூறுகளை அறிதல், உள்ளடக்கக் கிரகித்தல், மொழிதாங்கிநிற்கும் சாராம்சத்தை அறிதல், ஒரு தொகுதித் தரவுகளின் படிமுறை வளர்ச்சியை அறிதல், கோலத் தொடர்ச்சியை அறிதல், சார்பு நிலைகளை அறிதல், கூர்மைநோக்கு, நுண்ணிய அவதானிப்பு முதலியவை கிரகித்தல் தேர்விலே பரீட்சிக்கப்படும்.
கருத்துக்களைத் தெளிவாக வெளிப்படுத்துதல், தகவல்களைத் தெளிவுபடச் சுருக்கிக் கூறுதல், உள்ளடக்கத்துக்குப் பொருத்தமான தலைப்பைச்சூட்டுதல், மொழிவழியாகப் பொருத்தமாகத் துலங்குதல், விளைவு தரும் கருத்துப்பரிமாற்றம் முதலியவை தொடர்பாடல் திறன்களிலே பரீட்சிக்கப்படும்.
இந்தப் புதிய பாடமானது மாணவர்களிடத்து மட்டுமல்ல ஆசிரியர்களிடத்தும் பொது அறிவை வளர்க்கத் துணைசெய்யும் என்றும் உலக அறிவு தொடர்பாக ஆசிரியர்கள் தொடர்ந்து தம்மைப் புதுப்பித்துக் கொள்வதற்கு உதவும் என்றும் கருதப்படுகிறது.
இந்தப் புதிய பாடமானது மாணவர்களிடத்து மட்டுமல்ல ஆசிரியர்களிடத்தும் பொது அறிவை வளர்க்கத் துணைசெய்யும் என்றும் உலக அறிவு தொடர்பாக ஆசிரியர்கள் தொடர்ந்து தம்மைப் புதுப்பித்துக் கொள்வதற்கு உதவும் என்றும் கருதப்படுகிறது. இவற்றுடன் கணினிசார் அறிவும் ஆங்கில அறிவும் இன்று மேலும் இணைக்கப்பட்டுள்ளன.
திறனாய்வு :
அனைவருக்கும் போதுமான இந்தத் தேர்வு, ஏனைய பாடங்களைப் போன்று மனனம் செய்யப்பட்டும், பயிற்சிகள் செய்யப்பட்டும் கூடிய புள்ளிகளைப் பெறக்கூடியதாக வளரும் நிலையைக் கொண்டுள்ளது. ஏற்கனவே பிரத்தியேகக் கல்வி நிலையங்கள் இதற்கான தயாரிப்பு வேலைகளை முடுக்கிவிட்டுள்ளன. இதற்கென அச்சடிக்கப்பட்டு வெளியிடப்படும் நூல்களிற் பல வழுக்களும்
49

Page 27
கல்வியில் புதிய சீர்திருத்தங்கள்
காணப்படுகின்றன. உலக விவகாரங்கள் வேகமாக மாறிவருவதனால் அவை உடனுக்குடன் புதுப்பிக்கப்படுதல் வேண்டும்.
உலக விவகாரங்களில் நாளாந்தம் பல புதிய எண்ணக் கருக்கள் உருவாக்கப்படுகின்றன. உதாரணமாக இதை எழுதிக் கொண்டிருக்கும்பொழுது "சூழலியற் சுற்றுலா" (Ecotourism) என்ற புதிய எண்ணக்கருவை தொலைக்காட்சி விளக்கிக் கொண்டிருக்கின்றது.
புதிய வளர்ச்சிகளை உடனுக்குடன் மாணவர்க்கு விளக்கிக் சுறாவிடில் அவர்கள் தேர்விலே பின்னடைவைச் சந்திக்க நேரிடும். மேலும் தொடர் மதிப்பீடு இன்றி ஒரேயொரு பரீட்சையை மட்டும் இப்பாடத்தில் வைத்து பெரும் முடிவை எடுப்பதனால் பல பிரதிகூலங்களும் தோன்றலாம்.
இப்பாடத்தின் கூறுகள் பெரும்பாலும் பொது அறிவினையும், நுண்மதியையும் பரீட்சிக்கின்றனவேயன்றி மாணவரின் புத்தாக்கத் திறனை (Creativity) மதிப்பீடு செய்யவில்லை. பல்கலைக்கழகத்திலே புதிய கண்டுபிடிப்புக்களைச் செய்வதற்குப் புத்தாக்கத்திறன் வேண்டப்படுகின்றது.
ஒருவரது பல்கலைக்கழகப் பாடநெறிகள் சார்ந்த உளச் சார்புகளைக் கண்டறிவதற்கு எமது பண்பாட்டுப் பின்புலத்துக்குரிய தனித்துவமான தேர்வுப் பொதிகளும் உருவாக்கப்படவில்லை. வெளிநாடுகளிலே தயாரிக்கப்பட்ட உளச்சார்புத் தேர்வுப் பொதிகள் எமது பண்பாட்டுக்குப் பொருத்தமற்றும் இருக்கலாம். எமது சூழலிலே விரிவான ஆய்வுகளைச் செய்து தான் பொருத்தமான உளச்சார்புத் தேர்வுகளை உருவாக்க முடியும்.
மேலை நாடுகளில் உருவாக்கப்பட்ட நுண்மதித் தேர்வுகளை அடியொற்றிய மாதிரிகளே இலங்கையின் பல்வேறு போட்டிப் பரீட்சைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. மேலைநாட்டு ஆய்வாளர்கள் நுண்மதி பற்றியும் நுண்மதித் தேர்வுகள் பற்றியும் பல்வேறு ஐயங்களை எழுப்பிவருகின்றார்கள்.
தனித்துவமான (Unique) திறன்படைத்த பலரை இத்தேர்வுகள் இனங்கண்டறியத் தவறிவிடுகின்றன என்ற பலமான கருத்தும் உண்டு. ஆனால் எமது நாட்டின் போட்டிப் பரீட்சைகளில் மேலைத் தேய நுண்மதித் தேர்வுகளே எத்தகைய விமர்சனங்களுமின்றித் தாராளமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
50

furt.Gguitaft
உசாத்துணை நூல்கள்
1.
பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை'சிரேஷ்ட இடைநிலைக் கல்விச் சீர்திருத்தங்கள்' - புதிய கல்விச் சீர்திருத்தங்கள் - 1999.
பேராசிரியர் வி.கே. கணேசலிங்கம், மேலது. பேராசிரியர் க.சின்னத்தம்பி, மேலது.
திரு. அ. பஞ்சலிங்கம், மேலது.
கலாநிதி சண்முகநாதன் பாராட்டுவிழா மலர், யாழ், பல்கலைக்கழகம், 1997 .
51

Page 28
பல்கலைக்கழகச் சீர்திருத்தங்கள்
பொதுக் கல்விச் சீர்திருத்தங்களோடு பல்கலைக்கழகச் சீர்திருத்தங்களும் ஒன்றிணைக்கப்பட்டு முன்னெடுக்கப்படும் பொழுதுதான் நாட்டின் கல்விச் சீர்திருத்தங்கள் முழுமை பொருந்தியவையாகக் கருதப்படும். பரந்துபட்ட வகையில் பல்கலைக்கழகச் சீர்திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. நாட்டிலுள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகங்களும் அவ்வப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தவிசாளர்களாகக் கொண்ட ஒரு சீர்திருத்த வினைநெறிகைக்குழுவை (Reform Steering Committee) அமைத்துச் செயற்படுத்த வேண்டுமென முதற்கண் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பல்கலைக்கழகத்தினதும் சீர்திருத்த நிகழ்ச்சித் திட்டம் பின்வருவனவற்றை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டுமெனக் குறித்துரைக்கப்பட்டுள்ளது. அவையாவன:
1. கற்கை நெறிகளைப் பன்முகப்படுத்தலும்
கலைத்திட்டச் சீராக்கமும். அ) பல்கலைக்கழகங்களது கலைத்திட்டங்களை மீளாய்வு செய்தலும், திருத்தியமைத்தலும், இதர வடிவக் கற்கை நெறிகளை அறிமுகப்படுத்தலும்.
ஆ) கற்கை நிெகளைப் பன்முகப்படுத்தலும், விரிவாக்குதலும், துறைகளினுடே ஊடு தொடர்புகளைப் பரிணமிக்கச் செய்தலும், பாடத் தெரிவுகளிலே பரந்துபட்ட நெகிழ்ச்சியை ஏற்படுத்தலும்,
இ) வருடமுடிவுப் பரீட்சைகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைக் குறைத்தலும், செயற்றிட்டங்கள், செயன்முறை
52

சபா.ஜெயராசா
அ)
ஆ)
g)
AE)
உ)
அ)
ஆ)
g))
AE)
வேலைகள் சுயாதீனமான ஒப்படைகள் முதலியவற்றுக்குப் பெறுமானங்களைக் கூட்டுதலும்,
தொழில் உலகோடு ஒன்றிணைப்புச் செய்தல் அரசாங்கம், தனியார்துறை, கைத்தொழில், வாத்தகம் மற்றும் விவசாயத் துறைகளுக்குப் பொருந்தக் கூடிய வகையிலே கற்கை நெறிகளை வடிவமைத்தல்.
பொருத்தமான செயன்முறை அறிபரவலையும், திறன்களையும் விருத்தி செய்தல்,
சமூகத்திறன்களை விருத்தி செய்வதற்கும் ஆங்கில மொழியைப் பயன்படுத்துவதற்கும் மாணவர்களுக்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தல்.
தொழில் செய்து கொண்டே இடையிட்டுக் கற்கும் கற்கை நெறிகளை வழங்குதல், மற்றும் பொருத்தமான வேலை அனுபவங்களுக்குப் பெறுமதி வழங்குதல்.
குறுங்கால, நெடுங்கால வீச்சில்தொழிற்சாலைப் பயிற்சித் திட்டங்களை ஏற்படுத்துதல்.
கைத்தொழில்களுக்கு உதவும் வகையில் ஆய்வுச் செயற் திட்டங்கள், உயர்நிலை ஆலோசனைச் சேவை மற்றும் பயிற்சித் திட்டங்கள், முதலியவற்றை வழங்குதல்.
மாணவர்களும், தொடர் தொழில் ஆற்றுப்படுத்தலும். புதிதாக வரும் மாணவர்க்குரிய அறிபரவல் (Orientation) நிகழ்ச்சித் திட்டங்களை ஒழுங்கமைத்து இசைவாக்கலுக்கு உதவுதலும், அவர்களுக்குரிய கடமைகள், பொறுப்புக்கள், உரிமைகள் முதலியவற்றை உணரச் செய்தலும்,
மாணவர்க்குரிய விளையாட்டுச் செயற்பாடுகளுக்குரிய வசதிகளை மேம்படுத்தல்.
ஒழுக்காறு தொடர்பான நடைமுறையிலுள்ள சட்ட திட்டங்களைத் தேவைப்படுமிடத்து மறு பரிசீலனை செய்தல்.
தொடர் தொழில் ஆற்றுப்படுத்தல் அலகுகளை (Career Guidance Units) i5g/656).
53

Page 29
கல்வியில் புதிய சீர்திருத்தங்கள்
மேற்கூறியவற்றுடன் நிதி தொடர்பான முன்மொழிவுகளும்
தரப்பட்டுள்ளன.
4.அ) நிதிதிரட்டல், செலவுகளை மீட்டெடுப்பதற்கான பொருத்த
ஆ)
மான நடைமுறைகளை வகுத்தல், செலவுகளைக் குறைப்பதற்கான வழிவகைகளைக் கண்டறிதல், வருமானம் பிறப்பாக்கும் செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தல்.
ஒவ்வொரு பல்கலைக்கழகமும் அரசாங்கம் வழங்கும் மானியத்துக்கு மேலதிகமாக வருமானத்தைத் திரட்டுவதற்கு SD Lu JiyÉ76Op6U sg), (86DITớF6OD607ở (363F6DD660Duu (Consultancy Service) அமைத்தல்.
இவற்றுடன் பணிசார் அணியை மேம்படுத்துவதற்கான முன்மொழிவுகளும் தரப்பட்டுள்ளன.
5. அ) ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் பணியணி மேம்பாட்டு
ஆ)
(3)
Ff)
உ)
67)
96ug (Staff Development Unit) 66öpisode,0T Bipiógb6i.
தகுதிகாண் நிலையிலுள்ள விரிவுரையாளர்கள் கற்றல் கற்பித்தல் முறையியல்களை உள்ளடக்கிய ஒரு பயிற்சி நெறியை முதலாம் ஆண்டிலே நிறைவேற்றுவதற்குரிய ஒழுங்குகளைச் செய்தல்.
கற்றல், கற்பித்தல் முறையியல்களில் முதுநிலை விரிவுரை. யாளர்களுக்குக் குறுங்காலக் கற்கைநெறிகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் முதலியவற்றை ஏற்படுத்திக் கொடுத்தல்.
பதவி உயர்வு, சம்பள உயர்வு, புலமைப்பரிசில் முதலியவற்றுக்குப் பயன்படக்கூடியவாறு பல்கலைக்கழக ஆசிரியர்களின் கற்றல் கற்பித்தல் ஆற்றுகையை வருடம் தோறும் மதிப்பீடு செய்தல்.
பகுதிபகுதியாக நிறைவேற்றப்படக்கூடிய கலாநிதிப்பட்ட நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்தல்.
பல்கலைக்கழக ஆசிரியர்களுக்குப் புலமை நிர்வாகத்திலும், முகாமைத்துவ நடிபங்குகளிலும் பயிற்சி தருதல்.
புலமைசாரா ஊழியர்களுக்குப் பயிற்சியளித்தல், புதிதாகச் சேர்க்கப்படுபவர்களுக்கு அறிவு பரவல் நிகழ்ச்சித் திட்டங்
54

Furt.Gguita-T
களை ஏற்படுத்துதல், முதுநிலைப் பணியணியினருக்குச் சேவைக்காலப் பயிற்சி வழங்குதல், ஆய்வுகூட நுட்பவியலாளருக்கு பயிற்சி வழங்குதல், மற்றும் நுட்பவியலாளருக்குப் பயிற்சி வழங்குதல்.
ஏ) புலமைசாரா ஊழியர்களின் ஆற்றுகையை ஆண்டுதோறும் மதிப்பீடு செய்து பதவி உயர்வுக்கும், சம்பள உயர்வுக்கும் புலமைப்பரிசில்களுக்கும் உதவுதல்.
இவற்றுடன் பல்கலைக்கழகங்களின் தலையாய கடமையாகிய ஆய்வை மேம்படுத்துவதற்கும், ஆய்வின் முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதற்கும், நெறிகை செய்வதற்கும் உரிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.
மேலும் புதிய பல்கலைக்கழகங்களை நிறுவுதல், பல்கலைக்கழகங்களின் தரத்தைப் பராமரித்தலும், மேம்படுத்தலும் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், பல்கலைக்கழகச் சட்டங்கள், தாபனக் கோவை முதலியவற்றை மீளாய்வு செய்தல் முதலாம் நடவடிக்கைகளைப் பல்கலைக்கழக மானிய ஆணைக் குழு மேற்கொள்ளும், உலகவங்கி உதவியுடன் பல்கலைக்கழகத் தொகுதிக்கென முகாமைத்துவத் தகவல் செயற்றொகுதி (Manage ment Information System) ?6őAÚ60D6OT JÉ5ņ6356i). LJ6übáb6OD6Dpģö தொகுதிக்கென முதுநிலை முகாமை, நடுநிலை முகாமை மற்றும், துணைப்பணியணி மேம்பாட்டுக்கென பணியணி மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டங்களை வகுத்தல், பல்கலைக்கழகத் தொகுதியின் திட்டமிடல் ஆற்றல்களை விரிவுபடுத்தல் முதலியன மேற்கொள்ளப்படும். மேலும் பிறநாடுகளில் மாநாடுகள் , செயலமர்வுகள், ஆய்வு நடவடிக்கைகள் முதலியவற்றிலே புலமைசார் உத்தியோகத்தர்கள் கலந்து கொள்வதற்குரிய வாய்ப்புகளும் விரிவுபடுத்தப்படும். பல்கலைக்கழகங்களின் உட்கட்டுமானங்களை விரிவுபடுத்துவதற்கும், பண்புநிலை மேம்பாட்டுக்குமெனக் கூடுதலான மானியங்களைப் பெறும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
1996ஆம் ஆண்டில் பல்கலைக்கழகக் கல்வி தொடர்பான தேசியக் கொள்கை ஒன்று உருவாக்கப்பட்டது. மாட்சிமை தங்கிய சனாதிபதி அவர்கள் இது தொடர்பான ஒரு செயற்பணிக் குழுவை (Presidential Task Force) 960upg95Ti. 1997 9, ub 9,60öttgób இச்செயற்பணிக் குழுவின் முதலாவது கூட்டத்தில், பல்கலைக்கழகச்
55

Page 30
கல்வியில் புதிய சீர்திருத்தங்கள்
செயற்றொகுதியிலுள்ள பிரதான செயற்பரப்புக்களைப் கண்டறி. வதற்கென ஒன்பது நுட்பவியற் குழுக்கள் அமைக்கப்பட்டன. அக்குழுவினர் வழங்கிய ஆய்வு அறிக்கைகளும் சமர்பிக்கப்பட்டன. அந்த அறிக்கையானது அனைத்துப் பல்கலைக்கழகப் பீடங்களுக்கும், மூதவைகளுக்கும் அனுப்பப்பட்டன. அவர்களது கருத்துக்கள் அனைத்தும் கலாநிதி கே.டி அருள்பிரகாசம் அவர்களினால் ஒன்றுதிரட்டப்பட்டன. அவையனைத்தும் சனாதிபதி செயற்பணிக் குழுவால் 1998 ஆம் ஆண்டில் விரிவாக ஆராயப்பட்டு பல்கலைக்கழகச் சீர்திருத்தங்களும் நடைமுறை வடிவங்களும் உருவாக்கப்பட்டன. அச்சீர்திருத்தங்கள் மேலே விளக்கப்பட்டன.
இச்சீர்திருத்தங்கள் மாறிவரும் சமூக, பொருளாதார, கல்வித் தேவைகளுக்கு முகம்கொடுக்கும் பொருட்டும், 21'நூற்றாண்டின் அறைகூவல்களை எதிர்கொள்ளும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றின் நடைமுறைகளில் இருந்துதான் இச்சீர்திருத்தங்களின் வெற்றியை அளவிட முடியும்.
பொதுவாக, பட்டதாரிகளை உருவாக்குவதற்குச் செலவிடப்படும் பொது நிதியானது அவர்களது தனிநலன் மேம்பாட்டுக்கே கூடுதலாக உதவுகின்றது. அந்தப் பொது நிதி உள்ளிட்டுக்குரிய சமூகப் பெறுகைகள் ஒப்பீட்டளவிற் குறைவாக இருத்தலும், எதுவிதப் பிணைப்புமின்றி அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுதலும் பரிசீலிக்கப்பட வேண்டியுள்ளன.
பல்கலைக்கழகங்கள் பல் தேசிய நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு செயற்படும் பொழுது பல ஆபத்துக்களையும் எதிர்கொள்ள நேரிடுகின்றது. பல்தேசிய நிறுவனங்கள் தமக்குரிய இலாபநோக்கிலே செயற்படும்பொழுது இயற்கை வளங்களும் மனித வளங்களும் இலாப நோக்கிலே சுரண்டப்படுவதற்கு பல்கலைக்கழகங்கள் துணைபோவதை அனுமதிக்க முடியுமா என்ற கேள்வியும் எழுகின்றது.
56

புதிய மாற்றங்களுக்கு உந்து விசையாக அமையும் கல்விக் கோட்பாடுகள்.
நடைமுறைப்படுத்தப்படும் புதிய மாற்றங்கள் பின்வரும் பரப்புக்களை உள்ளடக்கியதாக அமையும்.
(அ) ஒழுக்கத்தைக் கட்டியெழுப்பல் அல்லது சீலமேம்பாடு (ஆ) தேசத்தைக் கட்டியெழுப்பல் அல்லது தேசிய மேம்பாடு.
(இ) பொதுத் தேர்ச்சிகளை அல்லது தகைமைகளை மேம்படுத்தல்.
(ஈ) குறித்துரைக்கத்தக்க ஆற்றல்களை மேம்படுத்தல்.
(ஈ) குறித்துரைக்கத்தக்க ஆற்றல்களை மேம்படுத்தல் அல்லது
சிறப்பான ஆற்றல்களை விருத்தி செய்தல்,
"சமூகத்தில் மனிதர்" என்ற முக்கியத்துவம் இழக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மனிதப்பண்பைக் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. சமூகத்திலே தனியாள் அடையாளம் அற்றுப்போதல், (Depersonalization) போலியாகத் தொழிற்படுதல், முதலிய எதிர்மறைத் தாக்கங்களில் இருந்து பாதுகாக்க வேண்டியுள்ளது. சுய விருத்தியையும், சுயசீர்திருத்தத்தையும் கல்வியால் முன்னெடுக்க வேண்டியுள்ளது.
தேசத்தைக் கட்டியெழுப்பல் அல்லது நாட்டு மேம்பாடு என்ற விடயமும் கல்விக் கோட்பாட்டிலே முக்கியத்துவம் பெறுகின்றன. தேசத்தைக் கட்டியெழுப்புதலில் கல்வி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. தேசியப் பிணைப்பைக் கல்வியால் முன்னெடுத்தல், சமூக நீதியை நிலைநிறுத்துதல்.
57

Page 31
கல்வியில் புதிய சீர்திருத்தங்கள்
பராமரிக்கப்பட்ட (Sustainable) வாழ்க்கை முறையை ஏற்படுத்தல், தொழில் வாய்ப்புக்களைப் பெருக்கி சுயநிறைவை உண்டாக்குதல், மனித வள விருத்தியில் அனைவரும் பங்கு பற்றி தேசத்தின் கூட்டு மொத்தமான அபிவிருத்தியை முன்னெடுத்தல், ஒருவருக்கு ஒருவர் பிணைப்புற்றுவாழும் செயலை மேம்படுத்தல், மாறும் நிலைகளுக்கேற்றவாறு வாழக் கற்றுக் கொள்ளல் எதிர்பாராத நிலைமைகளைச் சமாளிக்கும் ஆற்றல்களை வளர்த்தல், சர்வதேச சமூகத்திலே கெளரவமான இடத்தைப் பெற்றுக் கொள்ளல் முதலியவை தேச மேம்பாட்டுக்குரிய கோட்பாடுகளாகக் கொள்ளப்படுகின்றன.
தேர்ச்சிகள் அல்லது தகைமைகள் என்பதில் தொடர்பாடல், சூழல், ஒழுக்கலாறு, சமயம், ஒய்வுநேரப் பண்பாடு முதலானவற்றை வளர்க்கும் இலக்குகள் உள்ளடங்குகின்றன.
புதிய கல்வி மாற்றங்களின் வழியாகக் கற்றலுக்கு கற்றல், (Learning to Learn) என்ற இலக்கு முன்னெடுக்கப்படுகின்றது. "எவ்வாறு கற்க வேண்டும் என்று கற்றுக் கொண்டவனே கற்ற மனிதன்" என்று கால்றேஜர்ஸ் ஒரு சமயம் குறிப்பிட்டார். கற்றவர்கள் சுய ஆசிரியர்களாக (Self Teachers) தம்மை மாற்றிக் கொள்ளுதல் வேண்டுமென்று எவ்வாறு கற்றுக் கொள்ள வேண்டுமென்ற கருத்தை வலியுறுத்திய ஆர்னோல்ட் ரொயின்பி சுட்டிக்காட்டினார். தாமாகவே செயற்பட்டுக் கற்கும் மனிதர்களை உருவாக்குதல் கல்வியின் பிரதான இலக்குகளுள் ஒன்றாக இன்று வலியுறுத்தப்படுகின்றது.
கற்பதற்காக கற்றலை விளங்கிக் கொள்வதற்கு முன்னதாக கற்றல் என்றால் என்ன என்பதை முதலில் விளங்கிக் கொள்ளுதல் வ்ேணடும். கற்றல் என்பது புறச்சூழலுக்கும் மனித மூளைக்குமிடையே நிகழும் தொடர்ச்சியான செயல் முறை. அது தொடர்ந்து நடத்தைகளிலே மாற்றங்களையும் முன்னேற்றங்களையம் ஏற்படுத்த முயல்கின்றது. அது சிந்தனைக் கோலங்களிலே மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. கற்றல் என்பது விளைவை (Product) நோக்கிய செயற்பாடு. அது ஒரு தொடர்ச்சியான செயல்முறை. அது ஒவ்வொருவருக்குமுரிய தனித்துவங்களுடன் தொடர்புடையது. அது கல்லாமை என்ற இருளிலிருந்து விடுபடவைக்கும் தொடர்ச்சியான யாத்திரை. மனித வளமேம்பாட்டுடன் கற்றல் தொடர்புடையது. கற்றல் என்பது அனுபவங்களின் திரட்டுதலாக அமைகின்றது.
58

&LIT.Giguoment
கற்பவருக்குக் கற்றல் என்பது ஒரு செயற்பாடாகவும் (Activity) அமைகின்றது.
அடுத்ததாக கற்றலை உருவாக்கும் நிலவரங்கள் பற்றி நோக்குதல் வேண்டும். முதலாவதாகக் கற்றலின் தேவையை உணர்ந்து கொள்ளல் வேண்டும். அடுத்ததாகக் கடந்த கால அறிவு மற்றும் அனுபவங்களின் அமைப்போடு பொருண்மை கொண்ட வகையிலே கற்றலை இணைத்தல் வேண்டும். கற்றலாற்பயனுண்டு என்பதைக் கற்றவர் உணர்ந்து கொள்ளும் பொழுது கற்றல் வெற்றிபெறும். கற்கும் கவிநிலை மகிழ்ச்சியூட்டுவதாகவும் உற்சாகமளிப்பதாயும் சுதந்திரமான செயற்பாடுகளுக்கு இடமளிப்பதாயும் இருத்தல் வேண்டும்.
கற்பவர்கள் பல்வேறு தேர்ச்சிகளை (Competencies) கற்றலின் வழியாகத் திரட்டிக் கொள்ளுதல் வேண்டும். அவையாவன: கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல், கிரகித்தல், தொகுத்தல், மதிப்பிடுதல், சிந்தித்தல், ஆய்தல், இலக்குஉருவாக்குதல், புறவயப்படுத்தல், தெளிவுபடுத்தல், பெறுமானப் படுத்துதல், வெளியிடுதல், பங்கிடுதல், தீர்மானம் எடுத்தல், தீர்ப்புக் கூறல், பொறுப்பேற்றல், முகாமை செய்தல், காரணங்காணுதல், ஆற்றுகை செய்தல், திட்டமிடல், இடர்தாங்கல், தன்னுணர்வு கொள்ளல், விழுமியங் கொள்ளல், பின்னூட்டல் கொள்ளல் என்றவாறு கற்றலோடு இணைந்த தேர்ச்சிகள் விதந்துரைக்கப்படுகின்றன.
1. நாளாந்தம் அனுபவங்களில் இருந்து வரன்முறையாகக்
கற்றுக்கொள்ளல்.
2. அறிவுமிக்கவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளல்.
3. பொதுசனத் தொடர்புச் சாதனங்களிடமிருந்து கற்றுக்
கொள்ளல்.
4. கணினிப்பதிவுகளில் இருந்து கற்றுக் கொள்ளல்.
5. உள்ளுணர்வுகளில் இருந்து கற்றுக் கொள்ளல். (Learning
Through Intutions)
கல்வி முறைமைக்கும் தேசியவாழ்க்கை சம்பந்தமான ஏனைய
துறைகளுக்கும் இடையிலான இணைப்புக்களும் இலங்கையின்
கல்விக்கோட்பாட்டில் ஒன்றிணைப்புப் பெற்றுள்ளன. தேசியக்கல்வி
59

Page 32
கல்வியில் புதிய சீர்திருத்தங்கள்
முறைமையானது இயலுமான அளவு பொருளாதார வளர்ச்சியின் இலக்குகளை அடைவதற்கான இலக்குகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தொகுப்பு :
இலங்கையின் சமகாலக் கல்விக் கொள்கைகள் பின்வருவன. வற்றை அடியொற்றி விளக்கப்படுகின்றன.
1. கல்வி வாய்ப்புக்களை விரிவாக்குதல்.
இப்பிரிவில் 5 வயது தொடக்கம் 14 வயதுவரை கட்டாயக் கல்வியை வழங்குதல், முறைசார் கல்விக்குள் நுழையத் தவறியவர்களுக்கும், இடைவிலகியோருக்கும் உரிய கல்வி வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுத்தல், முறைசாராக் கல்வியமைப்பு மற்றும் மாற்றுவகைக் கல்வியமைப்பின் வாயிலாகத் தொடர் கல்வியை வழங்குதல்.
2. கல்வித்தர மேம்பாட்டை முன்னெடுத்தல்.
முன்பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தல், அவற்றின் கலைத்திட்டத்தை வளம்படுத்துதல், வழிப்புணர்வை உண்டாக்குதல், ஆரம்பக்கல்வியின் தரத்தை உயர்த்துதல், கற்பித்தல் தரத்தை உயர்த்துதல், கற்பித்தல் தரத்தை மேம்படுத்துதல், தரமேம்பாட்டைப் பராமரிப்பதற்குரிய நிர்வாகத்தை வளர்த்தல், இடைநிலைக் கல்வியின் கலைத்திட்டத்தை மாற்றியமைத்தல், மதிப்பீட்டில் மாற்றங்களைக் கொண்டுவருதல், சிறப்பார்ந்த கல்வியிலே கவனம் செலுத்துதல், கல்வி வளங்களை விரிவாக்குதல் முதலியவை இதில் இடம்பெறுகின்றன.
3. ஆசிரியர் கல்வியை வளம்படுத்துதல்
ஆசிரியர் கல்வியில் மூன்று பிரதான இலக்குகள் வலியுறுத்தப்படுகின்றன. அவையாவன:
அ) பள்ளிக்கூடத் தொகுதிக்குரிய திறன்தகவும் அர்ப்பணிப்பும்
கொண்ட ஆசிரியர்கள் தேவையை நிறைவேற்றுதல்.
ஆ) ஆசிரியர்களின் வாண்மை விருத்திக்கும் தனிநல மேம்பாட்
டுக்கும் உதவுதல்.
SO

Furt.ogurynefit
இ) ஆசிரிய வாண்மையின் தரமேம்பாட்டை வளப்படுத்துதல் இதன்பொருட்டு கல்வியியற் கல்லூரிகள், ஆசிரியர் கல்லூரிகள், தேசியகல்வி நிறுவனம், பல்கலைக்கழகங்கள் முதலியவற்றின் ஆசிரியர் கல்வி நிகழ்ச்சித்திட்டங்கள், ஆசிரியர் கல்விக்கான தேசிய அதிகாரசபையால் ஒழுங்கமைக்கப்படும், பயிற்சிபெறாத அனைத்து ஆசிரியர்களுக்கு அடுத்த நூற்றாண்டுக்குள் பயிற்சி வழங்கப்படும். பல்கலைக்கழகங்களில் கல்விமானிப் பட்டப்படிப்பு ஆரம்பிக்கப்படும். ஆசிரிய கல்வியாளர்களின் சேவை ஒன்று நிறுவப்படும்.
4. கல்வியிலே தொழில்நுட்பம் மற்றும் செயன்முறைத்
திறன்களை வளர்த்தல்.
கனிஷ்ட இடைநிலை க.பொ.த (சாதாரண) தரம், உயர்தரம் முதலியவற்றின் கலைத்திட்டங்கள் இதன்பொருட்டு விரிவுபடுத்தப்படும்.
5. கல்வித் தொகுதியை ஒழுங்கமைத்தலும் முகாமை
செய்தலும்.
பள்ளிக்கூடங்களை மீள்கட்டமைப்புச் செய்தல், வலுவூட்டுதல், பள்ளிக்கூடமட்ட முகாமைத்துவத்தை (SBM) வளர்த்தல், அதிபர்களுக்குப் பயிற்சி தருதல், சுயமதிப்பீடுகளை வளர்த்தல், கல்வி நிர்வாக அலகுகளை வினைத்திறன் படுத்துதல், பொருத்தமான சட்டங்களை உருவாக்குதல் முதலியவை இப்பிரிவில் எடுத்துக் கூறப்பட்டுள்ளன.
References :
1. National Education Commission, Reforms in General Education.
2. Reports.
61

Page 33
பாடசாலைக் கல்விச் செயற்பாட்டின் புதிய வளர்ச்சிகள்
1. பண்புசார் விருத்திகளை முன்னெடுக்கும் நடவடிக்கைகள்
மனித மூலதனத்தை மேம்படுத்துவதற்கு கல்வியின் பண்புசார் விருத்தி அடிப்படையாகின்றது. பாடசாலைக்கல்வியின் வழியாக மனித மூலதன மேம்பாட்டுக்குரிய தேர்ச்சிகளை வளர்த்தல். பாடசாலைக் கல்வி முடிவில் உயர்கல்வியை, அல்லது தொடர் தொழில்களில் இணைதல் என்பவற்றுக்கான செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுத்தல் பண்புசார் விருத்தி நடவடிக்கைகளாகின்றன.
முழுமைத்தர முகாமைத்துவம் பற்றிய கருத்தியலின் முன்னோடிகளுள் ஒருவராகிய ஒட்வேட் டேமிங் கூறிய இரண்டு கருத்துக்கள் இங்கே சிறப்பாகச் சுட்டிக் காட்டப்படத்தக்கவை. அவை வருமாறு:
(1) தரம் தொடர்பான பொறுப்பில் 85%- 95% அளவு குறிப்பிட்ட
நிறுவனத்தையே சார்ந்தது. (கல்வியைப் பொறுத்தவரை அது
பாடசாலையை அல்லது பல்கலைக்கழகத்தைச் சார்ந்தது.)
(2) செயல்முறையின் மீது கவனம் செலுத்தினால் உற்பத்திப் பொருள் தன்னைத்தானே கவனித்துக் கொள்ளும் (Look after the process - The product will lock after itself) 95T6).gif கல்விச் செயல் முறையின் மீது கவனம் செலுத்தினால், மாணவர் தமது மேம்பாட்டைத் தாமே கவனித்துக் கொள்வர்.
எமது கல்வி வழங்கற் தொகுதியின் மனித உள்ளிட்டினராக ஆசிரியர், அதிபர், கல்வி நிர்வாகிகள், கல்வியியலாளர்கள் மற்றும்
62

சபா.ஜெயராசா
அனுசரணையான ஆளணியினர் இடம் பெறுகின்றனர். இவர்களது தரமேம்பாட்டுக்குரிய பாரம்பரியமான நடவடிக்கைகளை நவீனப்படுத்த வேண்டியுள்ளது. பாரம்பரியமான கடமைப்பட்டியல் (Duty List) பணி விபரங்கள் , (Job Description) முதலியவற்றுடன் மட்டும் திருப்திப்படாதிருத்தல், கடமைக் கூறுகளை வினைத்திறன் படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்தல் முதலியவற்றிலே கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
ab6b65u56, g5T67(Ibgig5 (Quality improvement) ULLJ6ör blabifவோராகிய மாணவரின் திறன்தகவுகளை (Competencies) வரைந்து மேம்படுத்தலாகும். இதன் பொருட்டு தனித்தனி மாணவரைகூட குவியப் படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். மனித உள்ளிட்டினரும், பெளதீக உள்ளிடுகளும் முன்னரிலும் கூடிய வளப்படுத்தலுக்கும் பொருத்தமான உள்ளிடுகளைத் தெரிந்தெடுத்தல், ஆளணியினருக்கு பயிற்சியளித்தல், செயலமர்வுகள் மேற்கொள்ளல் முதலியவை முன்னெடுக்கப்படும்.
மானிட உள்ளீடுகள் மற்றும் பெளதிக உள்ளிடுகள் கடந்தகாலங்களிலே கணிசமான அளவு அதிகரிக்கப்பட்டு வந்துள்ளன. போட்டி நிலவரங்களால் மனிதப்பண்புகள் உதிர்ந்துவிடுதலும், மாணவர்களிடத்து ஒழுக்க வீழ்ச்சிகள் ஏற்படுதலும், பண்பு சார் விருத்தியின் பின்னடைவுகளையே எடுத்துக்காட்டுகின்றன.
கல்வியின் தரவிருத்தி அத்தியாவசிய மட்டத்திலிருந்து மேதகு மட்டம் (Excellence) வரை நீண்ட வீச்சுக் கொண்டது. பட்டங்களையும், உயர் வகுப்புச் சித்திகளையும் மட்டும் கட்டளைகளாகக் கொண்டு நியமன ஒழுக்கங்கள் மீளாய்வு செய்யப்பட வேண்டியுள்ளன. ஆளணியினரது ஆற்றுகைத் தேர்ச்சிகளையும் (Performance Competencies) கருத்திற் கொள்ளுதல் கல்விநிறுவனங்களில் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளன. பொருத்தமான கலைத்திட்டச் செயற்பாடுகளும் பயனுறுதிமிக்க மதிப்பீட்டுத் திட்டங்களும், தரமேம்பாட்டுக்குத் துணை செய்யும்.
2001 ஆம் ஆண்டில் இருந்து ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் செயற்படுத்தப்பட்டு வரும் இரண்டாம் நிலைக்கல்வியை நவீனப்படுத்தும் திட்டம், 2004 ஆம் ஆண்டிலிருந்து கல்வி அமைச்சில் உருவாக்கம் பெற்ற முகாமைத்துவம் மற்றும் தர உறுதிப் பாட்டுக்கான அலகு, அதிபர், ஆசிரியர், திறன்தகவு மதிப்பீட்டுத்திட்டங்கள்.
63

Page 34
கல்வியில் புதிய சீர்திருத்தங்கள்
சுய்மதிப்பீட்டுத் திட்டங்கள் முதலியவை பாடசாலைகளின் பண்புசார் விருத்தியை முன்னெடுப்பதற்கு அறிமுகம் செய்யப்பட்டன.
முகாமைத்துவ தர உறுதிப்பாட்டு அலகு தனக்குரிய நோக்கு செயற்கூறு ஆகியவற்றைப் பின்வருமாறு விளக்கியுள்ளன.
நோக்கு :
அனைவரதும் வாழ்க்கையில் பண்பு சார் தன்மைகளைத் தொடர்ந்து விருத்தி செய்து உன்னதமான தொரு சமூகத்தை உருவாக்கும் சிறப்பு நிலையை இலங்கை மக்கள் அடைவதைத் தூண்டும் கல்விச் செயற்பாடுகளை வலுவூட்டுதலாகும்.
செயற்பணி :
கல்வித் தொகுதியின் சகல ஆளணியினரதும் திறன் தகவுகளையும் அனைத்துப் பெளதிக வளங்கள் மற்றும் முகாமைத்துவ செய்றபாடுகளினதும் தர உறுதிப்பாட்டையும் விருத்தி செய்து சமூகத்தின் உதவியுடன், திறன்தகவுகளை முன்னெடுக்கும் மாணவர்களை மையப்படுத்தும் கல்விச் செயற்பாடுகளை எதுவித பேதங்களுமின்றி உருவாக்கிச் செயற்படுத்துவதற்கான பாடசாலை முகாமைத்துவத்துக்கு உதவுதல்.
64

6.
2007ஆம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்படவிருக்கும் தரமேம்பாட்டுத் திட்டங்கள்
மாணவரின் திறன் தகவுகளைக் கலைத்திட்டத்தின் வாயிலாக மேம்படுத்துதல்.
செயல்முறைகளை அடிப்படையாகக் கொண்ட கற்றல்
ஆக்கத்திறன், பிரச்சினை விடுவித்தல், சமூகத்திறன், கற்பனையாற்றல் முதலியவற்றை முன்னெடுத்தல்
தேவையற்ற பழுக்களை அதிகரிக்காது பயனுள்ள அடிப்படைகளைக் கற்கச் செய்தல்.
நெருக்கீடுகளை விடுவித்து பிள்ளை நேயச் சூழலை உருவாக்குதல்.
குழந்தை நட்புக் கற்றற் சூழலை ஏற்படுத்தல்,
ஆரம்ப நிலைக் கலைத் திட்ட முன்னெடுப்புக்கள் :
முதன்மை நிலைகள் தொடரும்
விளையாட்டுச் செயற்பாடுகளும், மேசைவேலைகளும் மேலும் வலிதாக்கப்படும்.
வகுப்பறைகள் மேலும் தரமுயர்த்தப்படும். முதலாம் வகுப்பிலிருந்து ஆங்கிலக் கல்வி வலிதாக்கப்படும்.
ஆங்கிலக் கல்வி கணிதப்பாடத்துடன் இணைத்து விரிவாக்கப்படும்.
65

Page 35
8 -
கல்வியில் புதிய சீர்திருத்தங்கள்
முதலாம் வகுப்பிலிருந்து தமிழ் பேசுவோருக்கு சிங்களப் பேச்சும், சிங்களம் பேசுவோருக்குத் தமிழும் அறிமுகமாகும். ஆரம்நிலையில் கணினி மற்றும் தகவல் தொழில் நுட்ப எண்ணக்கருக்கள் அறிமுகமாகும்.
பாடசாலை மேம்படுத்த தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் துணைவாசிப்பு நூல்கள் உருவாக்கப்படும்.
6ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்புவரை :
1 -
2 -
பொதுக் கலைத்திட்டம் தொடரப்படும்
ஆறாம் வகுப்பில் சுற்றாடற் கல்விக்குப் பதிலாக விஞ்ஞானம், வரலாறு, புவியியல் வாழ்க்கைத் தேர்ச்சிகள் முதலியவை தனிப்பாடங்களாகக் கற்பிக்கப்படும்.
செயற்றிட்டங்கள் ஒன்றிணைக்கப்படும். எல்லா இடைநிலைப் பாடசாலைகளுக்கும் விஞ்ஞான ஆய்வு கூடம், செயற்பாட்டு அறை, நூலகம் முதலியவை வழங்கப்படும்.
10ஆம் 17ஆம் வகுப்புக்களுக்கு :
ஐந்து உள்ளிட்டுப் பாடங்களும் ஐந்து தெரிவுப்பாடங்களுமாக மொத்தம் பத்துப் பாடங்களைத் தெரிவு செய்தல் வேண்டும்.
உள்ளிட்டுப் பாடங்கள் சமயம், சிங்களம் அல்லது தமிழ், மொழியும் இலக்கியமும், கணிதம், ஆங்கிலம், வரலாறு
தெரிவுப் பாடங்கள் ஐந்தினைப் பின்வரும் மூன்று தொகுதிகளில் இருந்தும் தெரிவு செய்தல் வேண்டும்.
தொகுதி ஒன்று பெளதிகவியல், இரசாயனவியல், உயிரியல், பொது விஞ்ஞானம், புவியியல், குடியியலும் ஆட்சியியலும்
தொகுதி இரண்டு சித்திரம், நடனம், இசை, நாடகமும் அரங்கியலும், ஊடகமும் தொடர்பாடலும், இரண்டாம் மொழியாக மொழிகள்
தொகுதி மூன்று
66

afum.agunafrt
தகவல் தொழில்நுட்பம், விவசாயமும் கால்நடைவளர்ப்பும், வர்த்தகமும் கணக்கீட்டுக் கல்வியும், உயிர்வளத் தொழில் நுட்பம், கட்டுமானத் தொழில் நுட்பம், மின்மற்றும், எலத்திரன் தொழில் நுட்பம், கைவினை, வேகளழுத்து, விளையாட்டும் உடற்கல்வியும்.
தொகுதி ஒன்றில் மூன்று, ஏனையவற்றில் ஒவ்வொன்றையும் தெரிவு செய்யலாம்.
அல்லது தொகுதி ஒன்றில் இரண்டையும் ஏனைய தொகுதிகளை உள்ளடக்கி மூன்றுபாடங்களையும் தெரிவு செய்யலாம்.
12ஆம் 13ஆம் வகுப்புக்கள் :
2
3
4
5
மூன்று பாட அமைப்பு தொடரும்
பொது ஆங்கிலம் கட்டாயமாக்கப்படும்
பொது தகைமைப் பாடம் மேலும் திருத்தி அமைக்கப்படும்.
பொது தகவல் தொழில் நுட்பம் 12 ஆம் வகுப்பில் தனியாகக் கற்பிக்கப்பட்டுப் பரீட்சிக்கப்படும்.
ஆங்கில மொழி மூலக் கற்கைகள் மேலும் விரிவாக்கப்படும்.
கலை, வர்த்தகம் கற்போருக்கு நவீன தொழில் நுட்பப் பாடங்கள் அறிமுகம் செய்யப்படும்.
க.பொ.த (உ.த) பரீட்சை முறையில் மாற்றங்கள் - முதலாம் வினாத்தாள் இரண்டு மணிநேரமுமத் நாற்பது புள்ளிகளைக் கொண்டதாகவும் இரண்டாம் வினாத்தாள் மூன்று மணி நேரமும் அறுபது புள்ளிகளைக் கொண்டதாகவும் அமையும்.
67

Page 36
மாணவரும் மகிழ்நிலைக் கற்றலும்
இலங்கையில் மேற்கொள்ளப்படவிருக்கும் புதிய கல்வி சீர்திருத்தங்களின் பரிமாணங்கள் மகிழ்ச்சி மிக்க கற்றல் கற்பித்தல் அனுபவங்களுக்கான ஊன்றுகோல்களால் விளக்கப்படுகின்றன.
இவற்றின் பிரதான நோக்கங்கள் சமகால நிலைமைகளைப் பகுத்தாராய்ந்து எதிர்கால இலட்சியங்களை ஆக்கபூர்வமாக வடிவமைத்து முன்னேறிச் செல்லல் ஆகும்.
இலங்கையின் பொதுக்கல்வியை நிறைவேற்றிக் கொண்டு அடுத்தகட்டத்துக்கு நிலைமாறும் மாணவரிடத்து பின்வரும் மட்டுப்பாடுகள் காணப்படுவதாகச் சுட்டிக் காட்டப்படுகின்றன. 0 தருக்க பூர்வமாகச் சிந்திக்கும் ஆற்றல் குன்றிய நிலையில்
இருத்தல்.
0. ஆக்க பூர்வமாகச் சிந்திப்பதில் வறுமை காணப்படுதல்.
0. விமர்சனப்பாங்கான சிந்தனை வளர்ச்சி பெறாதிருத்தல்.
d தீர்மானங்களை மேற்கொள்ளலிலும் முடிவுகளை எடுப்பதிலும்
இடர்களை எதிர்கொள்ளல்.
0. பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண பதில் வினைத்திறன்குன்றிய
தொழிற்பாடுகளை வெளிப்படுத்துதல்.
0 குறித்த தனிப்பட்டதிறன்களிலும் வெளிப்பாடுகளிலும்,
பின்னடைவுகள் காணப்படல்.
0 மாற்றங்களுக்கு இசைவாக்கம் செய்வதில் இடர்ப்பாடுகளை
எதிர்நோக்கல்.
0. புத்தாக்க முனைப்பும், தொடங்கும் ஆற்றலும் குன்றியிருத்தல்.
68

&um.Gguynt&m
0
பொறுப்புக் கூறலும் பொறுப்பேற்றலும் தொடர்பான தனிப்பட்ட திறன்களில் பின்னடைவுகள் ஏற்பட்டிருத்தல், சுய ஒழுக்கத்திலும், கற்றலுக்காகக் கற்றலிலும் பின்னடைவுகள் இடம்பெறல்.
பொதுக்கல்வியினுடாக சமூகத்திறன்களும் ஆற்றல்களும் வினையாற்றல் மிக்கவகையில் வளர்த்தெடுக்கப்படவில்லை என்றும், அவற்றிலே பின்வரும் பலவீனங்கள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புறக்கருத்துக்களை உள்வாங்குதலிலும் செவிமடுத்தலிலும் காலதாமதம் காட்டுதல்.
கூட்டுறவுடன் குழுவாகத்தொழிற்படமுடியாது இடர்ப்படல்.
கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் முதலாம் தொடர்பாடல்திறன்களிலே பின்னடைவுகள் காணப்படல்.
ஆளிடைத் தொடர்புகளில் இங்கிதமற்ற உராய்வுகள் இடம்பெறுதல்.
தலைமைத்துவ வளர்ச்சியில் தேக்க நிலைகள் இடம்பெறல்.
மாணவர்களின் இன்றைய நடப்பியல் நிலையும், நாளை எங்கே
நகர்ந்து செல்லல் வேண்டும் என்ற முன்மொழிவுகளும் புதிய கற்றல் அனுபவ ஊன்று கோல்களாகத் தரப்பட்டுள்ளன.
இன்றைய நடப்பியல் நிலவரங்களாகப் பின்வருவன
குறிப்பிடப்படுகின்றன.
0.
தெரிந்தவற்றை இருப்பில் வைத்து அறிந்தவற்றைப் பேணல், (Retaining the known)
ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவற்றை மட்டும் கற்றல். (Learning the Pre determined)
நடைமுறையில் எவை காணப்படுகின்றனவோ அவற்றையே Liangjib abilgou (pilusi). (Constructing What is)
இந்த மட்டுப்பாடுகளில் இருந்து நாளை எங்கே செல்லவேண்டும் என்ற முன்மொழிவும் தரப்படுகின்றது.
g)60)6) LIT6)6OT:
69

Page 37
கல்வியில் புதிய சீர்திருத்தங்கள்
0. வேண்டிய நிலமைகளுக்கு ஏற்றவாறு அறிந்தவற்றை மாற்றியமைத்தலும் மீள் கட்டமைப்புச் செய்தலும். (Revising the known)
0. தீர்மானிக்கப்படாத விடயங்களை நோக்கிய ஆய்வுகளும் அறிந்தவற்றை ஏற்புடையவாறு மாற்றியமைத்தலும் (Exploring the Undetermined)
0 எவ்வாறு எதிர்காலத் தேவைகள் என்பவற்றை ஆய்ந்தறிந்து இதுவரை "கண்டு பிடிக்காதவற்றைக் கட்டுமானம் செய்தல்" (Constructing What might be)
மகிழ்நிலைக் கற்றலை நோக்கி நகர்வதற்கு மேற்கூறிய அணுகுமுறைகள் பயனுள்ள ஊன்றுகோல்களாக அமையும் என வலியுறுத்தப்படுகின்றது.
70

புதிய சீர்திருத்தங்களும் ஆசிரியத்துவமேம்பாடும்
புதிய எதிர்பார்ப்புக்களின் அடிப்படையில் ஆசிரிய வகிபாக
மாற்றம் மூன்று T மாதிரிகையால் விளக்கப்படுகின்றது. அவை:
1.
"அறிவை ஊடுகடத்தும்" பாத்திரமேற்றல் முதலாவதாகக் gólůLLůu6á56jpg5. (Transmission Role) Gg5TLi bg5 புதுப்பிக்கப்பட்ட வண்ணமிருக்கும் அறிவை ஆசிரியர் கையளிப்புச் செய்யும் செயற்பாடு இங்கே முன்னெடுக்கப்படுகின்றது.
இரண்டாவதாக ஆசிரியர் மேற்கொள்ளும் "இடைவினை கொள்ளல்" பாத்திரம் விளக்கப்படுகின்றது. இது ஆசிரியரின் பரிமாறும் வகிபாகமாகக் குறிப்பிடப்படும் (Transaction Role) மாணவர்க்குக் கற்றுக் கொடுப்பதும், மாணவரிடமிருந்து கற்றுக் கொள்ளலும், கலந்துரையாடுதலும் இச்செயல் முறையில் முக்கியத்துவம் பெறும். இங்கு ஆசிரியர் நலம் செய்பவராகவும், வசதி செய்பவராகவும், சீர்வழங்குனராகவும் (Facilitator) கற்றல் கற்பித்தற் செயற்பாட்டை முன்னெடுப்பவராகவும், உதவும் தலையீடு செய்பவராகவும் இயக்கம் கொள்வார்.
ஆசிரியரின் பாத்திரமேற்றற் செயற்பாட்டில் மூன்றாவதாக முக்கியத்துவம் பெறுவது நிலைமாறும்" வகிபாகம் (Transformation Role) இங்கு ஆசிரியர் வளம் தருனராக, அனுபவங்களின் அடிப்படையில் கற்பித்தலை மீள் ஒழுங்குபடுத்துனராக, செயலறிவைக் கோட்பாட்டு அறிவாகவும், கோட்பாட்டு அறிவை செயலறிவாகவும் நிலைமாற்றஞ் செய்பவராகவும் குறிப்பிடப்படுகின்றது. இங்கு
71

Page 38
கல்வியில் புதிய சீர்திருத்தங்கள்
பயன்மிக்க வளவாளராக செயற்படுதலும், பயனுள்ள தலையீடுகளை மேற்கொள்ளலும் விளக்கப்படுகின்றன.
ஒவ்வொரு பாடங்கள் தொடர்பான சிறப்புத் தேர்ச்சிகளையும்,
பொதுத் தேர்ச்சிகளையும் இனங்கண்டு அவற்றை உரிய முறையிலும் உன்னதமாக வளர்க்கக் கூடியதும் காட்சிப்படுத்தக் கூடியதுமான செயற்பாடுகளை ஆசிரியர் கட்டியெழுப்பல் வேண்டும்.
தேர்ச்சி மட்டத்தை அடிப்படையாகக் கொண்ட கற்றல்
கற்பித்தற் செயற்பாட்டில் பின்வரும் நலன்கள் எட்டப்படுகின்றன.
0.
விடயங்களைக் கண்டுபிடிக்கும் சந்தர்ப்பங்களை அதிகரிக்கச் செய்தல் வாயிலாக மாணவர்களை நடுநாயகப்படுத்திக்கற்றலை முன்னெடுத்தல் பல்வேறு தேர்ச்சிகளை பெறுவதற்கு பரவலான சந்தர்ப்பங்களை வழங்குதல்.
கற்றல் கற்பித்தல் இலக்குகள் தெளிவுமிக்க தாக்கப்படுதல். ஆசிரியர் இலக்கு குறிப்பிட்டுக் கூறக் கூடிய தெளிவானதாயும் அடையப்படக் கூடியதாகவுமுள்ளன. மாணவரின் ஒவ்வொரு தேர்ச்சி மட்ட அளவுகளைக் கணக்கிடக் கூடியதாக இருப்பதால் வேண்டிய பின்னூட்டல் வேலைகள் எளிதாகின்றன. மாணவர்களுக்கு வேண்டப்படும் எண்ணக்கருக்களும். கோட்பாடுகளும் வினைத்திறனுடன் பெற்றுக் கொடுக்கப்படுகின்றன.
நிலைமாற்றச் செயற்பாட்டுக்கு ஆசிரியர் தம்மைத் தயாரித்துக்கொள்ள முடிகின்றது. நிலைமாற்றம் செய்யும் பாத்திரமேற்றலை ஆசிரியர் வெற்றி
கரமாகச் செய்வதற்குரிய ஏற்பாடுகளை ஐந்து E மாதிரிகைக்கு ஏற்றவாறு திட்டமிடலாம். ஐந்து E தொடர்பான செயற்பாடுகள் பின்வருமாறு அமையும்.
{0
செயற்பாடுகளுடன் மாணவர்களை ஈடுபடவைத்தல். (Engagment)
72

&Lum.Gigurymrit
0 தேடல் அல்லது கண்டறிகை வினைப்பாடுகளை
(p67GoorG945256). (Exploration)
0 விளக்கி விபரித்து உரைத்தல். (Explanation)
0. கருத்துக்களை விரிவுபடுத்தி மேலும் பொருத்தமான
அலகுகளுடன் தொடர்புபடுத்தல். (Blobration)
0 பொருத்தமான மதிப்பீடுகளை மேற்கொள்ளல் (Evaluation)
கணிப்பீட்டை ஆசிரியர் ஒர் உந்தல் நடவடிக்கையாக மேற்கொள்ளல் வேண்டும். வகுப்பில் உள்ள எந்த மாணவரும் குறைந்தபட்சம் அண்மிய தேர்ச்சி மட்டத்தை எட்டாதிருந்தால் அதனை ஆசிரியர் தமக்குரிய அறை கூவலாகக் கொள்ளல் வேண்டும். மாணவரின் குறைபாடுகளையும், பலவீனங்களையும் கண்டறிந்து அவற்றைக் குறைப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளல் ஆசிரியரின் வாண்மைப் பணியாகின்றது.
கணிப்பீட்டின் போது இரண்டு வகையான செயற்பாடுகளை ஆசிரியர் மேற்கொள்வார். அவைாயாவன:
1. pg.org/Tulla) (Feed Forward)
பலங்களையும், இயலுமைகளையும் ஆசிரியர் இனங்காணும் பொழுது அவற்றை மேலும் வினைத்திறன்படுத்தி முன்னேற்றம் பெறச் செய்ய மேற்கொள்ளும் அறிவுரைகள் முன்னுரட்டலில் இடம்பெறும் 2. jaoignt'LG) (Feed Back)
பின்னடைவுகளையும், பலவீனங்களையும் இனங்காணும் பொழுது அவற்றை வேரனுத்து வெற்றிபெறச் செய்ய ஆசிரியர் வழங்கும் அறிவுரை பின்னூட்டலில் இடம்பெறும்.
மாணவரின் தேர்ச்சி தொடர்பான மூன்று மட்டங்கள் விளக்கப்பட்டுள்ளன. அவையாவன:
1. தேர்ச்சி விளைவை அல்லது நிபுணத்துவத்தை அடையாத
|B606). (No Proficiency)
புள்ளிகள் 00-60 வரை
2. தேர்ச்சி விளைவை அல்லது நிபுணத்துவத்தை அண்மித்த
|B606). (Near Proficiency)
புள்ளிகள் 61-80 வரை 73

Page 39
கல்வியில் புதிய சீர்திருத்தங்கள்
3. தேர்ச்சி விளைவை அல்லது நிபுணத்துவத்தை
960Libgfis06u. (Proficiency)
புள்ளிகள் 80-100 வரை
கணிப்பீடு மற்றும் மதிப்பீடு ஐந்து பொது நியதிகளின் கீழ் இடம் பெறும் அவையாவன:
1. அறிகை மேம்பாடு காரணமாக ஏற்படும் நடத்தை மாற்றத்தை
முன்வைக்கும் நியதி.
2. மனப்பாங்கில் ஏற்படும் மேம்பாடு காரணமாக மேலெழும் நியதி.
3. திறன்களில் ஏற்படும் முன்னேற்றம் காரணமாக
வலியுறுத்தப்படும் நியதி.
4. நான் காம் ஐந்தாம் நியதிகள்
5. கற்றல்-கற்பித்தலுடன் இணைந்தவை. நடைமுறை வாழ்வில் வெற்றி பெற்று ஒழுகுவதற்குத் தேவைப்படும்திறன்களை
மாணவரிடத்து விருத்திசெய்தல் இந்த இரண்டு பிரிவுகளிலும் இடம் பெறும்.
மாணவரிடத்து எதிர்கால வாழ்க்கைக்கான பயிற்சிகளையும் நேர்நடத்தைகளை உரிய முறையிலே கட்டியெழுப்பும் நோக்குடன் kASP என்ற மாதிரிகை பயன்படுத்தப்படும்.
K - Knowledge - 956
A - Attitude - உளப்பாங்கு
S - Skill - திறன்
P - Practice - பயிற்சி
இவற்றுடன் ஆளிடைத்தொர்புகளை இங்கிதமாக வளர்த்து சமூகத்திலே பெறுமானம்மிக்கவராக வாழ உதவுதல் வேண்டும்.
74

விஞ்ஞான பாடத்தில் இடம்பெறும் கட்டுமானவியலும் (Constructivism) 5E மாதிரிகையும்
"கிட்டுமானவியல் என்ற எண்ணக்கருவின் பொருளை முதலிற் குறிப்பிடல் வேண்டும். விஞ்ஞானக் கோட்பாடுகளையும் அதனோடிணைந்த இயல்புகளையும் தமது செயற்பாடுகளின் வழியாக தாமே விளங்கிக் கட்டமைப்புச் செய்யும் தொழிற்பாட்டினை இது குறிப்பிடுகின்றது.
5E மாதிரிகை விஞ்ஞானம் கற்பித்தலுக்குரிய ஒரே ஒரு வழி முறையன்று. வேறும் பல வழி முறைகள் உள்ளன என்பதை முதற்கண் ஆசிரியர்கள் மனங்கொள்ளல் வேண்டும். ஆனால் கட்டுமானவியலை முன்னெடுப்பதற்கு இந்த வழிமுறை மிகவும் பொருத்தமானதாகவும் வளமானதாகவும் அமைகின்றது.
கட்டுமானவியல் மாணவரதும் ஆசிரியரதும் கூடுதலான செயற்பாடுகளை எதிர்பார்க்கின்றது. கற்றலுக்குரிய பல்வேறு நடிபங்குகளை மாணவரும் ஆசிரியரும் மேற்கொள்ளல் வேண்டுமென இது வலியுறுத்துகின்றது. கூடுதலான தெறித்தலையும் இடைவினைகளையும், ஆய்வு விசாரணைகளையும் முன்னெடுத்தல் வேண்டுமென கட்டுமானவியலிற் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட ஒரு பாடம் விதிவிலக்கின்றி அனைவராலும் கற்று விளக்கமுறப்பட்டிருக்கும் தளத்தில் எல்லா மாணவரும் ஒன்றிணைந்து நிற்றல் வேண்டும். கற்றலும் கற்பித்தலும் மிகுந்த சிக்கலான சுற்று வட்டங்களைக் கொண்ட செயற்பாடுகள் என்பதை கட்டுமானவியல் ஏற்றுக் கொள்கின்றது. கட்டுமானவியல்
75

Page 40
கல்வியில் புதிய சீர்திருத்தங்கள்
அணுகுமுறையினை விஞ்ஞானம் தவிர்ந்த வேறுபாடங்களுக்கும் பயன்படுத்தி கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுக்க முடியும் என்பதை கற்பித்தல் செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுக்க முடியும் என்பதை கற்பித்தலியல் தொடர்பான ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.
ஆய்வுகளின் வழியாக ஐந்து B மாதிரிகை ஏழு E மாதிரிகையாக விரிவாக்கப்பட்டுள்ளது.
SE Model
1. Engagement
ஈடுபடுத்துகை
2. Exploration - (850860).5
3. Explanation - 667Táisgj6035 4. Elobaration - 6îuflá5605 5. Evaluation - upg5ul (B60).5
மேற் கூறிய மாதிரிகை ஏழு உருக்கொண்ட மாதிரிகையாகப் பின்வருமாறு அமைக்கப்படுகின்றது.
முதலாம் பிரிவில் ஈடுபடுத்துகைக்கு முன்னதாக தூண்டுகை (ELICIT) என்பது சேர்க்கப்பட்டுள்ளது. -
4+5 இறுதியில் விபரிக்கை, மதிப்பிடுகையைத் தொடர்ந்து விரிவக்குகை (Extend) என்பது இணைக்கப்பட்டுள்ளது.
1. ஈடுபடுத்துகையில் பின்வரும் செயற்பாடுகள் இடம்
பெறுகின்றன.
1.1 உசாவல் விருப்பை உருவாக்குவதற்குரிய சூழலை
அவதானித்தல்.
1.2 நடப்பியல் உலகம் பற்றிய வினாக்களை எழுப்புதல். 1.3 வினாக்களுக்குரிய பொருத்தமான விடைகளை ஏற்றல். 1.4 எதிர்பார்த்த தோற்றப்பாடுகளைக் குறித்துக்கொள்ளல்.
1.5 மாணவரின் பாடம் தொடர்பான புலக்காட்சிகள் வேறுபட்டு
நிற்கும் சந்தர்ப்பங்களை இனங்காணல்,
76

ағuп.Сgштеп
2.
2.3
2.4
2.5
2.6
2.7
2.8
2.9
2. O
2.
2. 12
2.13
3.
3. 1
3.2
3.3
3.4
3.5
3.6
3.7
3.8
தேடுகையில் இடம்பெறும் செயற்பாடுகள் வருமாறு.
குவியாக்கப்பட்ட விளையாட்டுகளில் ஈடுபடுத்துதல்.
மூளை விசையை (Brain Storm) வேண்டியவிடத்துப் பயன்படுத்துதல்.
பொருட்களுடன் பரிசோதனை செய்தல். குறிப்பிட்ட தோற்றப்பாட்டை உற்றுநோக்கல். காட்டுருவொன்றை உருவாக்கல். தரவுகளைத் திரட்டலும் ஒழுங்கமைத்தலும். பிரச்சினை விடுவித்தல் உபாயங்களை முன்னெடுத்தல். பொருத்தமான வளங்களைத் தெரிந்தெடுத்தல். பிரச்சினைக்குரிய தீர்வுகளைக் கலந்தாலோசித்தல். பரிசோதனைகளை வடிவமைத்தலும் செயற்படுத்தலும்.
தெரிவுகளை மதிப்பிடல். விளைவுகளையும் ஆபத்துக்களையும் இனங்காணல் விசாரணைக்குரிய அளவுச் சட்டங்களை வரையறுத்தல். விளக்குகையில் பின்வருவன முன்னெடுக்கப்படும். கருத்துக்களையும், தகவல்களையும் கையளித்தல். மாதிரிகை ஒன்றை வடிவமைத்தலும் விளக்குதலும். புதிய விளக்கம் ஒன்றை வடிவமைத்தல். தீர்வுகளைத் திறனாய்வுப்படுத்தல். சகபாடிகள் தரும் மதிப்பீடுகளைப் பயன்படுத்தல். பலவுள் விடைகளை ஒன்று சேர்த்தல், சரியான முடிவுகளைத் தீர்மானித்தல், மனதின் அறிகைக் கட்டமைப்போடு தீர்வுகளைப் பகுப்பாய்வு செய்தல்.
தரவுகளைப் பகுப்பாய்வு செய்தல்.

Page 41
கல்வியில் புதிய சீர்திருத்தங்கள்
4+5 விரிவாக்குகையில் இடம்பெறும் செயற்பாடுகள் வருமாறு: 1. தீர்வுகளை உருவாக்கல்.
2. அறிவையும் திறன்களையும் வேறு அறிவொழுக்கங்களுக்கு
(Disciplines) பிரயோகித்தல்.
3. அறிவையும் திறன்களையும் இடமாற்றம் செய்தல்.
4. பேச்சு மற்றும் எழுத்து வழியாக தகவல்களைப்
பகிர்ந்தளித்தல்.
5. புதிய வினாக்களைக் கேட்டல்.
6. விளைவுகளை உருவாக்கி கருத்துகளை முன்னெடுத்தல்.
7. தீர்வுகளைக் கண்டறிவதற்குரியதும் கருத்துக்களை
ஏற்பதற்குமுரியதுமான மாதிரிகளை உருவாக்குதல்.
8. மேலும் விசாரணைகளை நடத்துதல்.
9. வேறு அறிவொழுக்கங்களிலே செயற்பாடுகளை
முன்னெடுத்தல். அறை கூவல்கள் கொண்ட நவீன உலகை ஆக்கபூர்வமாக எதிர்நோக்கும் மாணவர்களையும் ஆசிரியர்களையும், சமூகத்தையும் உருவாக்க வேண்டிய கருத்தியல் வலிமையுடன் இணைந்த கல்விச் செயற்பாடுகள் கட்டியெழுப்பப்பட வேண்டியுள்ளன.
கல்வியின் பணியாட்சிவலு (Bureaucaratic Force) அவர்களாற் LJu6öruGBg55. ILGBlb gif607 (8b.jöfðft'Lab (Monochronic Time Frame Work) நடவடிக்கைகள், கல்வி முகாமைத்துவத்தில் மேற்கொள்ளப்படும் செறிவூட்டல் (Intensification) செயற்பாடுகள் முதலியவற்றின் பாதிப்புக்களுக்குச் சமகால ஆசிரியர்கள் உள்ளாகின்றனர்.
கல்விச் செயலமைப்பு சிக்கல் பொருந்திய பிரச்சினைகளை உள்ளடக்கிய பெருந் தொகுதியாகும். அப்பிரச்சினைகளுக்கு எளிமையான தீர்வுகள் முன்வைக்கப்படலாம். எளிமையான தீர்வுகள் பிழையான தீர்வுகளாகவே இருக்கும்.
78


Page 42


Page 43
பேராசிரியர் சபா.ஜெயராக கல்வியியல் துறைசார்ந்த எழுதி அத்துறைசார் விரு முதன்மையான பங்கு வகி கலை இலக்கியம், உளவி எனப் பல்வேறு துறைசார் ஊடாடி வருபவர். இவற் மற்றும் அறிவு ஆய்வு யா "புலமைமரபு எத்தகைய தனித்துக் துல்லியமாக ெ மேலும், கலை தத்துவம் விசாரணை, இவரை புதிய பணியில் முழுமையாக ஈ வைப்பதுடன், கல்வியின் சார்ந்து புதிய புதிய அர்த் நோக்கிக் கவனம் குவிக்க தொடர்ந்து புதிய ஆய்வுக் நோக்கியும் கவனம் கொள்
இ இ இன்றுவரை கல்வி உலகில் சபா ஜெயராசா உயிர்ப்பு ராகவே திகழ்கின்றார்.
தெ மதுனன் பிரதம ஆசிரியர் 鬆 WE ।ழி
 

ா தமிழில் நூல்கள் பல தியில்
து வருபவர் ல் தத்துவம். புலங்களுடன் ன் செழுமை
ib GB ngriffurf Gör என்பதைத் ளிப்படுத்தும் ற்றிய தொடர்
அறிவுருவாக்கப்
un பாருள்கோடல் ப்பாடுகளை ம் செய்கிறது. gori:Egi67 ளத் தூண்டுகிறது.
பேராசிரியர் கு புலமையாள