கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கல்வியியல் கட்டுரைகள்

Page 1


Page 2


Page 3


Page 4

கல்வியியல்
கட்டுரைகள்
சோ. சந்திரசேகரன் B.Ed. (Hons) (Cey), M.A. (Japan).
பூபாலசிங்கம் புத்தகசாலை 340, செட்டியார் தெரு, கொழும்பு - 11.

Page 5
கல்வியியல் கட்டுரைகள்
முதற்பதிப்பு இரண்டாவது 1994, ஏப்பிரல்
பதிப்புரிமை பதிப்பாளர் அட்டை அச்சகம்
விலை
பிற நூல்கள்
:1991 டிசம்பர், சூடாமணி பிரசுரம், சென்னை
பதிப்பு (புதிய சில கட்டுரைகளுடன்)
: சோ. சந்திரசேகரன்
: பூபாலசிங்கம் புத்தகசாலை
: மா. மகேஸ்வரன்
; லங்கா ஏசியா பிறின்ற் (பிறைவேற்) லிமிரெட்
எஸ் - 26, மூன்றாவது மாடி, கொழும்பு மத்திய சிறப்பு அங்காடி, கொழும்பு - 11.
: (5un 1b.0/=
1. இலங்கை இந்தியர் வரலாறு 1989
(வைரவன் பதிப்பகம், மதுரை)
2. கல்வியியல் கட்டுரைகள் 1991
(சூடாமணி பிரசுரம், சென்னை)
3. இலங்கையின் கல்வி வளர்ச்சி 1992
- சோ. சந்திரசேகரன் - மா. கருணாநிதி (சூடாமணி பிரசுரம்,
சென்னை)
4. இலங்கையின் கல்வி. 1993
- சோ. சந்திரசேகரன் - மா. கருணாநிதி (சூடாமணி பிரசுரம்,
சென்னை)

பதிப்புரை
தமிழ் மொழியில் கல்வித் துறைசார்ந்த நூல்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. ஆனால் இந் நூல்களுக்கான தேவையோ மிக அதிகம். இத் தேவையினைப் பூர்த்திசெய்யும்பொருட்டு இத்துறையில் புலமைவாய்ந்த திரு.சோ. சந்திரசேகரன் அவர்கள் பயன்மிக்க ஆய்வுக் கட்டுரைகள் பலவற்றை எழுதியுள்ளார். இவை “கல்வியியல் கட்டுரைகள்" என்ற தலைப்பில் 1991 ஆம் ஆண்டு சென்னை சூடாமணி பிரசுரத்தால் வெளியிடப்பட்டன. தற்பொழுது தற்காலத்திற்குகந்த மேலும் சில கட்டுரைகள் சேர்க்கப்பட்டு இரண்டாவது பதிப்பாக இந்நூல் வெளியிடப்படுகிறது.
எளிய தமிழ் நடையில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரைகள் ஆசிரியர்களுக்கும் சிரியப் பயிலுனர்களுக்கும் பெற்றோர் களுக்கும் உயர்கல் மாணவர்களுக்கும் கல்வித்துறை ஆசிரியர்களுக்கும் மிக்க பயனளிக்கும். கொழும்புப் பல்கலைக் கழகத்தில் இரண்டு தஸாப்தங்களுக்கு மேலாகக் கல்வி போதித்துவரும் திரு.சோ. சந்திரசேகரன் அவர்களின் இந் நூலை வெளியிடுவதற்கு வாய்ப்பளித்தமைக்காக எமது நிறுவனம் அவருக்கு நன்றிக்கடன்பட்டுள்ளது.
எமது ஏனைய வெளியீடுகளைப் போலவே இந் நூலையும் தமிழ்கூறும் நல்லுலகு போற்றி வரவேற்குமென நம்புகிறோம்.
340, செட்டியார் தெரு R.P. பூரீதர சிங் கொழும்பு - 11. பூபாலசிங்கம் புத்தகசாலை ஏப்பிரல் 1994. யாழ்ப்பாணம் &கொழும்பு.

Page 6
முன்னுரை
கல்வியியல் கட்டுரைகள் என்ற எமது நால் இரண்டாவது பதிப்பாக வெளிவருதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம். இதனை வெளியிட முன்வந்த பூபாலசிங்கம் புத்தக நிறுவனத்தினர்க்கு நன்றி கூறுகின்றோம். அத்துடன் இதற்கான ஒழுங்குகளைச் செய்வதில் முன்னின்று உழைத்த எழுத்தாளர் திரு. ராஜ பூரீகாந்தன், கொழும்புப் பல்கலைக்கழக கல்விபீட விரிவுரையாளர் திரு.மா. ஆகியோருக்கும் எமது நன்றிகள்.
கல்வியியல் என்னும் பாடநெறி பல துறைகளைக் கொண்டது. கல்வித்தத்துவம், கல்விவரலாறு, கல்விஉளவியல் ஒப்பீட்டுக்கல்வி அளவிடும் மதிப்பீடும், கற்பித்தல் முறையியல் என்னும் துறைகளுடன் இன்னும் எத்தனையோ புதிய கல்வியியல் துறைகளும் இன்று உருவாகியுள்ளன. கல்வியியல் பயிற்சி நெறிகள் ஆசிரியர்களுக்குத் தொழிற் தகைமையையும் தொழிற்தேர்ச்சியையும் வழங்குவன . இன்று பயிற்சி நெறிகளை ஆசிரியர்கள் கட்டாயமாகப் பயில வேண்டும் என்ற தொழில் நிபந்தனையும் உண்டு. இப்பயிற்சிநெறியை வழங்குவதற்குப் பல நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கொழும்புப்பல்கலைக் கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம், யாழ்பல்கலைக்கழகம், திறந்தபல்கலைக்கழகம் ஆகியன பட்டமேற்படிப்பு நிலையில் கல்வியியல் பயிற்சி நெறிகளை வழங்குகின்றன. இப்பல்கலைக் கழகங்கள் சகலபட்டதாரி ஃகுேம் இப்பயிற்சி நெறியை வழங்கமுடியாத நிலையில் தேசிய கல்வி நிறுவகமும் இப்பயிற்சி நெறியை நடாத்தி வருகின்றது. இடைநிலைக் கல்வித் தராதரம் பெற்ற ஆசிரியர்களுக்குக் கல்வியியல் பயிற்சி நெறிகள் வழங்குவதற்குக் கல்வியியல் கல்லூரிகளும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் கல்வியமைச்சு தொலைக்கல்வி முறையைக் கையாண்டு இப்பயிற்சி நெறியை ஏராளமான ஆசிரியர்களுக்கு வழங்கி வருகின்றது. தமிழ் மொழிமூல ஆசிரியர்கள் சகல கல்வியியல் பயிற்சி நெறிகளையும் தமிழ்மொழிமூலமே கற்று வருகின்றனர், உயர்மட்டத்தில் முதுகலைமாணி, கலாநிதிப்பட்டப் பயிற்சி நெறிகளும் தமிழ் மொழியில் நடாத்தப்படுகின்றன.
இன்று பல்வேறு நிலைகளிலும் நடைபெறும் கல்வியியல் பயிற்சி நெறிகள் மேலை நாடுகளில் தோன்றி வளர்ந்த கல்வியியல் சிந்தனை அறிவுத் தொகுதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. கல்வியியல் பயிற்சிகளுக்கு உதவியாக ,நூல்கள், கட்டுரைகள், ஆராய்ச்சிகள் فu واح9él([5é5 65és gr கலைக்களஞ்சியங்கள் என்பன ஆங்கிலமொழியில் ஏராளமாக

உள்ளன . போதிய ஆங்கிலமொழித் தேர்ச்சியின்றி ஆசிரியர்கள் இவற்றைக்கற்று பயனடைய முடியாது. தமிழ்மொழி மூல ஆசிரியர்கள் பெரும்பாலானவர்கள் கல்வியியலில் தேர்ச்சிபெற வேண்டுமாயின் அதற்கான நால்கள் தமிழ்மொழியில் கிடைக்கப்பெறின் கூடிய பயனுடையதாக இருக்கும். ஆயினும் அவ்வாறான நிலையில்லை. பல்கலைக்கழக நிலையில் பட்டமேற்படிப்புப் பயிற்சி நெறிகள் 1970 களிலேயே தொடங்கின. இந்நிலையில் தமிழ்மொழியில் எழுதப்பட்ட கல்வியியல் நூல்களின் தேவை விரிவடைந்தது. இதன்ைக் கருத்திற்கொண்டு ஒரு சில கல்வியியல் அறிஞர்கள் சில நூல்களைத் தமிழ்மொழியில் வெளியிட்டனர். 1970 களில் வெளியான இந்நூல்கள் இன்று கிடைப்பதற்கில்லை. கலாநிதி. ச. முத்துலிங்கம், காலஞ்சென்ற பேராசிரியர் ப. சந்திரசேகரன் ஆகியோர் முறையே கல்வி உளவியல், கல்வித்தத்துவம் ஆகிய துறைகள் சார்ந்த பல நால்களை வெளியிட்டு முக்கிய தொண்டாற்றியுள்ளனர். முதுநிலை ஆசிரியர்களான அவர்களிடம் கல்வி கற்ற நானும் அவர்கள் வகுத்த வழிச் சென்று கல்வியியல் துறைசார்ந்த நூல்களை வெளியிட உத்தேசித்ததன் விளைவாக இந்நூல் முதற்பதிப்பாக வெளிவந்தது.
இந்நூலின் முதற் பதிப்புக்குப் பல்வேறு கல்வியியல் நிறுவனங்களில் பயின்ற ஆசிரியர்களின் ஆதரவு விரிவாகக் கிடைத்தது. அவர்கள் வழங்கிய ஊக்கத்தின் விளைவாகவே இன்று அந்நூலின் இரண்டாம் பதிப்பு வெளியாகின்றது. முதற்பதிப்பில் வெளிவந்த கட்டுரைகளும் மேலதிகமாக ஆசிரியர்களுக்குப் பயன்படக்கூடிய சில புதிய கட்டுரைகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. கல்வியியல் பயிற்சிபெறும் ஆசிரியர்களின் தொகை இன்று அதிகரித்துள்ளது. அத்துடன் எமது அனுபவத்தின்படி தமிழில் வெளிவரும் கல்வியியல் நூல்களைப் படிக்கும் ஆர்வமும் அவர்களிடம் மிகுந்துள்ளது. இந்நிலையில் இந்நூலுக்கும் போதிய ஆதரவு கிடைக்குமென நம்புகிறோம். இவ்வாதரவு மேலும் பல கல்வியியல் நூல்கள் பலரும் எழுதிவெளியிடத் தேவையான ஊக்கத்தை வழங்கும்.
இந்நூலை அழகிய முறையில் அச்சிட உதவிய லங்கா ஏசியன்
அச்சகத்தினர்க்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
சோ. சந்திரசேகரன் கொழும்பு பல்கலைக்கழகம்.

Page 7
6.
り。
10.
11.
12.
13.
14.
பொருளடக்கம்
வாழ்க்கை நீடித்த கல்வி; நோக்கங்களும் சிறப்பியல்புகளும்
தொலைக்கல்வி, திறந்தகல்வி; நோக்கங்களும் பயன்பாடும்
முறைசாராக்கல்வியின் சில அம்சங்கள்
வளர்ந்தோரின் கற்றற் செயற்பாடு
கல்வித்தொழில் நுட்பவியல்
விஞ்ஞானக் கல்விநெறியின் சமூக அம்சங்கள்
பாடசாலை சமூகத்தொடர்புகளும் கல்வி வளர்ச்சியும்
மரபுவழிப் பாடசாலைகளும் முற்போக்குப் பாடசாலைகளும்
கல்விமுறையின் வினைத்திறனும் விரயமும்
பாலர் கல்வி
ஆசிரியர்களின் உயர்தொழில் அந்தஸ்து
கல்வியும் வேலைவாய்ப்பும்
பல்பண்பாட்டுக் கல்வி
விழுமிய மையக்கல்வி
14
20
26
32
40
46
53
61
66
74
80
86

வாழ்க்கை நீடித்த கல்வி O நோக்கங்களும் சிறப்பியல்புகளும்
மனிதன் பாடசாலை சென்றாலும் செல்லாவிட்டாலும் வாழ்நாள் முழுவதும் எத்தனையோ கற்றுக்கொண்டே ருக்கிறான். ë பாடசாலை செல்லு முன்னரே மொழியைச் சற்று பயின்று கொள்கிறார்கள்; உணவு உண்ணவும் விளையாடவும் கற்கின்றார்க்ள்.
பாடசாலை செல்லாதவர்கூட பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, செய்திப்படம், சஞ்சிகைகள், கருத்தரங்குகள், பட்டிமன்ற்ம் சொற்பொழிவுகள் போன்ற வழிமுறைகள் மூலம் நாட்டு நடப்பு போன்ற பல விடயங்களைக் கற்கின்றார்கள். ஒரு பரந்த பொருளில் இவை அனைத்தும் கல்வி என்றே இன்று சொல்லப்படுகின்றது.
இவ்வாறான முறையில் கல்வியைப் பெறுபவர்கள் தாங்கள் தெரிந்தும் தெரியாமலும் தமது அறிவை வள்ர்த்துக் கொள்கின்றார்கள். ஆனால் இவ்வாறான ஒரு கற்றற் செயற் பாட்டை யாரும் ဓင်္ဂါချွံပျံမှန္တီးနီ கொள்வதில்லை; ஆராய முற்படுவதுமில்லை; ஆயினும் இவ்வாறான கற்றலில் ஒரு தொடர்ச்சியும் அமைப்பும் இருப்பதில்லை என்பது உண்மையே.
"வாழ்க்கை நீடித்த கல்வி" என்ற நவீன கோட்பாடு இவ்வாறான யல்பான கற்றலுக்கு ஒரு புதிய பரிமாணத்தை வழங்கு ன்றது; அத்துடன் கல்விகற்றலுக்கான புதிய குறிக்கோள்க ளையும் வழங்கி வாழ்நாள்முழுவதும் மனிதன் கல்வி கற்பதை இலகுபடுத்துகின்றது; இது இரண்டு வகையாக இடம்பெறலாம்.
(1) ஆசிரியர்கள் பாடங்களைத் திட்டமிட்டு மாணவர்களுக்குப்
பாடசாலை போன்ற நிலைமைகளில் கற்பித்தல்.
(2) தலையிடும் உதவியும் இன்றி மாணவன் கற்ற
ல் ஈடுபடல்.
எடுத்துக்காட்டாக -
வீட்டுத்தோட்டத்தை எப்படி அமைப்பது என்பது பற்றி ஒரு

Page 8
2 கல்வியியல் கட்டுரைகள்
போதானாசிரியர் மாணவர்களுக்கு விரிவுரையாற்றலாம். அல்லது இவ்விடயம் பற்றிய ஒரு கைநூலைக் கவனமாகத் தயாரித்து
சமூக நூல் நிலையங்களுக்கு விநியோகிக்கலாம். இவ்வாறு
செய்வது சிக்கனமானது என்று கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் ஒரு கைநூாலைக் கொண்டு எப்போது வேண்டு
மானாலும் பயின்று கொள்ளலாம்.
இன்று இலங்கையில் பாடசாலைகளில் 13 ஆண்டுகளுக்குக் கல்வி வழங்கப்படுகின்றது. 5-6 வயது தொடக்கம் 18-19 வயது வரை மாணவர்கள் பயிலுகின்றனர்.
உயர்கல்வி ஒரு சிறு தொகையானவர்களுக்கு -22000 பேருக்கு - 22-23 வயது வரை வழங்கப்படுகின்றது. இதற்கு அப்பால் வழங்கப்படும் வாழ்க்கை நீடித்த கல்வி பல சிறப்பியல்புகளைக் கொண்டது.
வாழ்க்கைக் கல்விக்கான ஏற்பாடுகள் இருக்கும் போது, மாணவர்கள் அடிப்படையான பாடசாலைக் கல்வியைப் பயின்று தொழில்களில் சேரமுடிகின்றது. ஏனெனில், பின்னர் மீண்டும் கல்வி பெறுவதற்கான வாய்ப்புகள் உறுதியாக உள்ளன. தமது ஆற்றல்களுக்கும் விருப்புகளுக்கும் ஏற்ற பயிற்சி நெறிகளில் பின்னர் சேர்ந்து பயில வாய்ப்புக் கிடைக்கின்றது.
இன்று விஞ்ஞான, தொழில்நுட்ப அறிவு நாளாந்தம் பெருகிவருவதை யாவரும் அறிவர். இந்நிலையில் முன்னர் பெற்ற பாடசாலைக் கல்வியை மட்டும் வைத்துக் கொண்டு நவீன உலகில் வாழ்ந்துவிடமுடியாது. வாழ்க்கைக் கல்வி ஏற்பாடுகள் வளர்ந்துவரும் அறிவுத்துறைகளில் பயிற்சி பெற வாய்புகளை வழங்குகின்றன.
மனிதர்களுக்கு ஒரு தொழில் வாழ்க்கை உண்டு. அத்துடன் அவர்களுக்கு சமூகரீதியான, குடும்பம் சார்ந்த பொறுப்புகளும் இருக்கின்றன. இவை விடுக்கின்ற சவால்களை எதிர்நோக்க மக்கள் தமது அறிவாற்றலை வளர்ப்பதற்கான வாய்ப்புகளை நீடித்த ஏற்பாடுகள் வழங்குகின்றன.
பாடசாலைகளில் முன்பு கல்வி கற்ற பழைய தலைமுறையினர், வரம்புக்குட்பட்ட துறைகளில் பெற்ற கல்வியும் பயிற்சியும், இன்றைய தேவைகளைப் பொறுத்தவரையில் போதுமானதாக இருக்க முடியாது. இன்றைய இளந்தலைமுறையினரின்

சோ.சந்திரசேகரன்
அறிவாற்றல் நிலையை எட்டிப்பிடிக்கவும் இன்று மாற்ற மடைந்துள்ள பொருளாதார சமூக சூழ்நிலைக்குப் பொருந்தி வாழவும், புதிய அறிவினைப் பெறவும் வாழ்க்கை நீடித்த கல்வி ஏற்பாடுகள் உதவுவன. இவை தலைமுறை இடைவெளியைக் குறைப்பதற்கான ஒரு வழிமுறை என்று கல்வியியலாளர்கள் கருதுவர்.
தனியாட்கள் தமது வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு புதிய விருப்புகளுக்கும் ஆர்வங்களுக்கும் அமைய செயற் படுவதற்கான வாய்ப்புகளை நீடித்த கல்வி வழங்குகின்றது.
இவ்வழிமுறையினூடாக பெற்றோருக்கான கல்வியையும் வழங்க முடியும். பெற்றோர்கள் தமது குமரப்பருவப் பிள்ளைகளை வளர்ப்பதற்கும் அவர்களுடைய நடத்தைகளையும் பிரச்சினை களையும் விளங்கிக்கொள்வதற்கும் தேவையான அறிவினைப் பெறவேண்டியுள்ளது. இவ்வாறான வாழ்க்கை நீடித்த கல்வி ஏற்பாடுகள் பிள்ளைகளின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும்.
பெற்றோருக்கான கல்வி ஏற்பாடுகள் பொதுவாகக் கருத்திற் கொள்ளப்படுவதில்லை என்பது அறிஞர் கருத்து. நூல்கள், களஞ்சியங்கள், நாளேட்டுக் கட்டுரைகள், விரிவுரைகள், கலந்துரையாடல்கள், மற்றும் தொழில்நுட்ப தொடர்புச் சாதனங்கள் போன்ற பல்வேறு வழிமுறைகள் மூலம் பெற்றோருக்கு உதவக்கூடிய அறிவையும் கருத்துக்களையும் u9 մu (Մ գ պլք.
சிறந்த அறிவாற்றலையும் உளப் பாங்குகளையும் வளர்க்க 5-6 வயது தொடக்கம் எட்டு ஆண்டுகளுக்காவது பிள்ளைகளுக்குப்
பாடசாலைக் கல்வி வழங்கப்படல் வேண்டும். இவ் வயதெல்லையில் உள்ள சகல பிள்ளைகளுக்கும் இவ்வாறான கல்வி வழங்கப்படாவிடில் அச்சமுதாயங்கள் 5Lo莎山
அபிவிருத்தியில் பின்தங்க நேரிடும் என்பது கல்வியியலாளர் கருத்து.
பல மூன்றாம் நாடுகளில் ஆரம்பக் கல்வி நிலையில் ஆகக் கூடிய மாணவர் சேர்வு வீதம் காணப்படுகின்றது. ஆயினும், அந்நாடுகளில் பல்வேறு சலுகையற்ற, பின் தங்கிய வகுப்பினரின் பிள்ளைகள் இவ்வாறான எட்டாண்டுக் கல்வியை முழுமையாகப் பெறுவதில்லை. சேரிகளிலும் பெருந்தோட்டங்க ளிலும் வாழுகின்ற பிள்ளைகளை இதற்கு எடுத்துக்காட்டாகக் esin p6vTLO.
இப்பிள்ளைகளின் கல்வி நிலை மேம்படுத்தப்படல் வேண்டும்

Page 9
4 கல்வியியல் கட்டுரைகள்
என்பதில் பொதுவாகக் கல்வி நிர்வாகிகள் அக்கறை செலுத்திவதில்லை.
“இப்பிள்ளைகள் பாடசாலைக் கல்வியினால் அதிக நன்மை ப்ெறப் போவதில்லை; இவர்களுக்குக் கல்வி வசதிகளை வழங்கப்போனால் அதிக செலவு ஏற்படும். வாழக்கை நீடித்த கல்வி வசதிகள் இருப்பதால் பின்னொரு காலத்தில் அப்பிள்ளைகளுக்குக் கல்வி வழங்கிவிடலாம் என்பது இவர்களுடைய வாதமாக உள்ளது. அதாவது ப்பிள்ளைகளின் கல்வி வாழ்க்கை இவ்வகையில் ஒத்திவைப்படுகின்றது. எழுத்தறிவின்மைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல பிள்ளைகளுக்கு ஆரம்பக் கல்வி வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு மில்லை. வாழ்க்கை நீடித்த கல்வி ஏற்பாடுகளைக் கருத்திற்கொண்டு இளஞ்சிறார்களின் கல்வியை அலட்சியப்படுத்துவதற்கில்லை.
மாணவர்களைப் பாடசாலைகளில் சேரச் செய்து விட்டால் மட்டும் போதாது. அவர்கள் சிறந்த கல்விச் சித்தி பெறுவதையும் உறுதி செய்ய வேண்டும். அதற்குக் குறிப்பான பின்தங்கிய வகுப்பினரின் பிள்ளைகள் மீது 蠶° கவனம் செலத்தப்படல் வேண்டும். முக்கியமாக ஆரம்பக்கல்வித் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்; ஆசிரியர், மாணவர் விகிதம் சாதகமானதாக இருத்தல் வேண்டும். ஆயினும் இவ்விடயத்தில் பொதுவாக அதிகக் கவனம் செலுத்தப்படுவதில்லை.
பேச்சாற்றல், எழுத்தறிவு, போன்ற திறன்களைப் பெறுகின்ற அதே வேளையில் கல்வியினூடாக மாணவர்களைப் போதிய தகவல்களை அறிந்தவர்களாக ஆக்குதல் வேண்டும். இவ்வகையில் ப்ொது மக்களையும் சமூக வாழ்க்கையின் சகல அம்சங்கள் பற்றிய தகவல்கள்களை அறிந்தவர்களாக ஆக்குவதற்கு அம்மக்களுக்கான கல்வி ஏற்பாடுகள் உருவாக்கப்படுதல் வேண்டும். நாட்டின் அபிவிருத்தி தொடர்பான பிரச்சனைகள், அபிவிருத்திக்கான வழிமுறைகள், உபாயங்கள் ஆகியன நாட்டில் ஒரு சிலரின் சொத்தாக மட்டும் இருத்தலாகாது.
வளர்முக நாடுகளின் அபிவிருத்தியைப் பொறுத்தவரையில் பொதுமக்கள் எப்பாதையில் செல்ல வேண்டும் என்பதை ஒரு சில செல்வாக்கு மிக்கவர்களும் கற்றறிவாளர்களும் நிர்ணயித்து வந்த காலம் ஒன்றுண்டு. அக்காலத்தின் பெறுபேறுகள் ஏமாற்றத்தினைத் தந்தவிடத்து, அதற்கு மாற்று ஏற்பாடாக

Bv T.v. bAlv6 wasvalt
அபிவிருத்திச் செயற்பாடுகளில் பொதுமக்கள் ஊக்கத்துடன் பங்கு கொள்ள வேண்டும் என்ற புதிய கருத்துத் தோன்றியது.
அபிவிருத்திப் பணியில் பொதுமக்கள் பங்காளர்களாக விளங்கி ஈடுபாட்டுடன் செயற்படுவதற்கு அவர்கள் ‘நவீன உலகம் பற்றிய போதிய தகவல்களையும் நவீன அறிவினையும் கொண்டவர்களாக இருத்தல் வேண்டும்.
இவ்வாறான கற்றறிந்த மக்கள்வட்டத்தினரை உருவாக்குவதற்கு சிறப்பான, வாழ்க்கை நீடித்த கல்வி ஏற்பாடுகள் பெரிதும் உதவும்.
அபிவிருத்திச் செயற்பாடுகளை இலகுபடுத்தும் நோக்குடன் வழங்கப்படுகின்ற வாழ்க்கை நீடித்த கல்வி ஏற்பாடுகளைப் பொறுத்தவரையில் இன்னும் இரு கல்விச் செயற்பாடுகளைப் பற்றியும் சிந்திக்க வேண்டும்.
பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறவர்கள் தமது தொழிற் பகுதிகளையும் திறமைகளையும் வளம்படுத்திக் கொள்வதற்கான கல்வி முதலாவது அம்சம்.
:ಣ அம்சம், தொழில் இல்லாதவர்கள் தமது தொழிற் றன்களை வாழ்க்கை நீடித்த கல்வியினூடாக மேம்படுத்திக் கொள்வது.
ஒரு நாட்டினுடைய தொழில் வகுப்பினரின் திறமைகளை மேம்படுத்துவதன் மூலமே அந்த நாட்டின் அபிவிருத்தி துரிதப்படுவதை உறுதிசெய்ய முடியும். தொழிற்திறன்களை ஆகக் கூடியளவுக்கு உயர்த்துவது என்பது வாழ்க்கை நீடித்த கல்வியின் ஒரு முக்கியத்தும் வாய்ந்த பணியாகும்.
தொழிற்திறமைகளை உயர்த்துவதற்குத் தேவையான அறிவு, றன்கள், உளப்பாங்குகள் என்பனவற்றை இனங்கண்டு அவை விருத்தி செய்யப்படுதல் வேண்டும்.
இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் வாழ்க்கை நீடித்த கல்வி ஏற்பாடுகளை செவ்வனே செய்துகொள்ள ஒரு முக்கிய வழி, நாடு முழுவதும் பரந்த ரீதியில் சமூக நூல் நிலையங்களை நிறுவுவதாகும். இவை சமூகத்தின் அறிவுவள நிலையங்களாக விருத்தி செய்யப்ப்டுதல் வேண்டும். ஏராளமான நூல்கள், சஞ்சிகைகள், ஒலிப்பதிவு-ஒளிப்பதிவு நாடாக்கள் போன்றவற்றைக் கொண்டவையாக இந்நிலையங்கள் அமைதல் வேண்டும்.

Page 10
6 கல்வியியல் கட்டுரைகள்
விரிவுரைகளையும் கலந்துரையாடல்களையும் நடாத்தவும் வானொலி, தொலைக்காட்சி, ஒளிப்பதிவு நிகழ்ச்சிகளைப் பார்க்கவும் தேவையான வசதிகள் செய்யப்பட வேண்டும். இளைஞர்களும் வளர்ந்தோரும் பங்கு கொள்ளக்கூடிய பல கற்றல் நிகழ்ச்சிகள் அங்கு இடம்பெறல் வேண்டும்.
விஞ்ஞானம், தொழில்நுட்பம் என்பவற்றோடு சமயக் கல்வி மற்றும் மனிதப் பண்பியல், அழகியல் துறைகளையும் உள்ளடக்கியவையாக இக்கற்றற் செயற்பாடுகள் அமைதல் வேண்டும். இவ்வாறான பல்துறைக் கல்வி மக்களின் முழுமையான ஆளுமை வளர்ச்சிக்குப் பெருந்துணை புரியும்.
எதிர்காலத்தில் உறுதியான, செல்வம்மிக்க ஒரு சமூகம் தோன்ற வேண்டுமாயின் அதற்கு முன் நிபந்தனையாக நன்கு கற்றவர்களாக பொதுமக்கள் மாற்றப்படல் வேண்டும். இதற்கு இன்றைய மரபுவழிக் கல்வியில் திருத்தங்களும் புனரமைப்பும் செய்யப்படுதல் வேண்டும். O

தொலைக்கல்வி, திறந்த கல்வி; நோக்கங்களும் பயன்பாடும்
இன்று இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் தொலைக்கல்வித் தத்துவங்களின் அடிப்படையில் 5 உயர்கல்விப் பயிற்சி நெறிகளை திறந்த கல்கலைக்கழகமும் தேசிய கல்வி நிறுவனமும், கல்வி அமைச் சும் நடாத்தி வருகின்றன. தொலைக் கல்வி, திறந்த கல்வி, அஞ்சல்மூலக் கல்வி என்ற வெவ்வேறு பெயர்கள் பெருமளவுக்கு ஒரே பொருளைத் தருகின்றன.
இன்று பெருந்தொகையானவர்கள் பல்வேறு பொருளாதார, சமூகக் காரணங்களால் பதின்மூன்றாண்டுப் பாடசாலைக் கல்வியை இடையில் நிறுத்தி விடுகின்றனர். முறைசார்ந்த பாடசாலை போன்ற நிறுவனங்களில் இவர்கள் பின்னொரு காலத்தில் மீண்டும் சேர்ந்து தமது கல்வியைத் தொடர - لکن آTللا ہوا P)
அப்படியாயின் அவர்கள் நிரந்தரமாகக் கல்வி வாய்ப்பற்றவர்களாக இருக்கவேண்டுமா? அவர்கள் மீண்டும் கல்வி பயில வாய்ப்புக்கள் வழங்கப்படக் கூடாதா?
இவ்வினாக்களுக்கு விடை அளிக்கும் முறையிலேயே இன்று தொலைக்கல்வி மற்றும் திறந்த கல்வி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இப்புதிய அணுகுமுறைகளினூடாக இளமையில் கல்வியைத் தொடர முடியாத ஏராளமானவர்களுக்குப் புதிய கல்வி வாய்ப்புகளை வழங்கக் கூடியதாகவுள்ளது. பொதுத் தொடர்புச் சாதனங்கள் இன்று நவீன முறையில் வளர்ச்சியடைந்துள்ள நிலையில் அவற்றின் உதவியுடன் கல்வி வாய்ப்புகளை வழங்குவது தொலைக்கல்வியின் ஒரு முக்கிய அம்சமாகும்.
தொலைக்கல்வி ஏற்பாடுகளின்படி ஆசிரியர்களும் மாணவர்களும் பெருமளவுக்கு விலகியே நிற்கின்றனர். ஒழுங்குறத் தயாரிக்கப்பட்ட பாடங்கள் மாணவர்களுடைய
இருப்பிடங்களுக்கு அனுப்பப்படுகின்றன; தொலைக்காட்சி, வானொலி போன்ற தொடர்புச் சாதனங்களின் மூலமும் பாடங்களுக்கு விளக்கமளிக்கப்படுகின்றது. இரண்டு அல்லது

Page 11
8 கல்வியியல் கட்டுரைகள் Nuwunami
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாணவர்களும் ஆசிரியர்களும் சந்தித்து மாணவர்கள் மேலும் விளக்கம் பெறும் ஏற்பாடுகளும் உண்டு.
சில தொலைக்கல்வி நிறுவனங்கள் பிராந்திய நிலையங்களை
ஏற்படுத்தி அவ்வப்பிராந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் பங்கு கொள்கின்றன. இதனால் மாணவர்கள் தொழில் புரிந்து கொண்டே கல்வி பயில வாய்ப்பு ஏற்படுகின்றது.
பொதுத்தொடர்புச் சாதனங்கள் பற்றிய தொழில்நுட்பம் இன்று பெருவளர்ச்சி பெற்றுள்ளது. அதனால், கற்போர் எந்த மூலை முடுக்குகளில் வாழ்ந்தாலும், அவர்கள் அறிவை வளர்த்துக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
శి கூட சில பொருளாதார, அரசியல், சமூக யதார்த்த லைமைகள் உலகளாவிய அறிவை சாதாரண மக்களும் பகிர்ந்து கொள்வதில் தடைகளை விதித்து வருகின்றன. ஆயினும் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் நூல்நிலையங்களும் தனியாட்களும் பொருத்தமான நவீன சாதனங்களைப் பயன்படுத்தி மக்களின் அறிவு வளர்ச்சிக்குத் துணை புரியலாம்.
கம்ப்யூட்டர், வீடியோ மற்றும் செயற்கைக் கிரகம் தொடர்பான தொழில்நுட்பம் இன்றும் வளர்ச்சியடைந்து வருகின்றது. மாற்றங்களுக்குள்ளாகியும் வருகின்றது.
இவற்றைப் பயன்படுத்தி ஒன்றுக்கொன்று மிகத் தொலைவில் உள்ள கல்வி நிறுவனங்களும் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள முடியும். தொடர்புச் சாதனங்களை அடிப்படையாகக் கொண்ட தொலைக்கல்வி வழிமுறைகளைப் பயன்படுத்தி தனியாட்கள் வீட்டிலிருந்துகொண்டும் தொழில் செய்துகொண்டும் கல்வி பயில முடியயும்.
கடந்த முப்பது ஆண்டுகளாக உலகளாவிய ரீதியில் தொலைக்கல்வி மீதான அக்கறை பெருகியுள்ளது. ஆயினும் சென்ற நூற்றாண்டிலேயே ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா போன்ற நாடுகளில், தூரப்பிரதேசங்களில் வாழ்ந்த மாணவர்களுக்கென அஞ்சல் மூலப்பயிற்சி நெறிகள் பயன்படுத்தப்பட்டன .
பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (பி.பி.சி.) கடந்த 60 ஆண்டுகளாக கல்வி ஒலிபரப்புச் சேவையை நடாத்தி வருகின்றது. 1960கள்ல் பொட்ஸ்வானா, மாளவி ஆகிய

சோ.சந்திரசேகரன்
நாடுகள் தமது ஆசிரியர்களைப் பயிற்றத் தொலைக்கல்வி முறைகளைப் பயன்படுத்தின.
1969 ஆம் ஆண்டு பிரிட்டனில் முதன் முதலாகத் திறந்த பல்கலைக்கழகமொன்று தொடங்கப்பட்டது. இது முன்பொருபோதுமில்லாத முறையில் தொழில் புரிபவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை வழங்கியது. இதன் பின்னர் பிற பொதுநல அமைப்பு நாடுகளும் இம்முன்மாதிரியைப் பின்பற்றின.
ஆந்திரப் பிரதேசத்தில் தொடங்கப்பட்ட திறந்த பல்கலைக்கழகம் 45,000 மாணவர்களைக் கொண்டு விளங்கியது.
இந்திராகாந்தி தேசிய திறந்த பல்கலைக்கழகமும் 1987இல் 40000 மாணவர்களுக்குக் கல்வி பயிற்றத் திட்டமிட்டது.
சீனா, தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் பெருந்தொகையான மாணவர்கள் இவ்வாறான பயிற் நெறிகளில் சேர்ந்தனர்.
உள்வாரி மாணவர்களைக் கொண்ட மரபுவழிப் பல்கலைக்கழகங்களும் தொலைக்கல்வி முறைகளைப் பின்பற்றத் தொடங்கின. நியூசிலாந்தின் uom Gogo பல்கலைக்கழகம் ஆஸ்திரேலியாவின் டிக்கன் பல்கலைக் கழகம் மற்றும் பல்வேறு கனேடிய பல்கலைக்கழகங்களும் இவ்வேற்பாடுகளை நிறுவின.
இப்பல்கலைக்கழகங்களில் சில மாணவர்கள் உள்வாரியாகச் சேர்ந்து சகல பாடங்களையும் படித்தனர்; வேறுசிலர் பாடங்களை உள்வாரியாகவும் மற்றும் சில பாடங்களை தொலைக்கல்வி முறைகள் மூலமும் பயின்றனர்; முதலாம் ஆண்டில் தொலைக்கல்வி மாணவர்களாகவும் இரண்டாம் மூன்றாம் ஆண்டுகளில் a. sin surrís மாணவர்களாகவும் பயின்றவர்களும் உள்ளனர்.
இவ்வாறான தொலைக்கல்வி ஏற்பாடுகள் இரு அம்சங்களைக் கொண்டிருந்தன.
1. தொலைக்கல்வி அணுகு முறைகள், கற்பித்தலை மக்கள் மத்தியில் நன்கு விரிவுபடுத்த உதவின.
2. தொலைக்கல்வி முறைகள் கற்பித்தலை விடுத்துக் கற்றலை

Page 12
10 கல்வியியல் கட்டுரைகள்
vgr
வலியுறுத்தின. தணியாள், தயாரிக்கப்பட்ட பாடங்களைத் தாமாகவே படித்து கல்வி அறிவை மேம்படுத்த வாய்ப்பு வழங்கப்பட்டது; தேவையானவிடத்து போதானாசிரியரின் உதவி பெறப்பட்டது.
தொலைக்கல்வி ஏற்பாடுகள் மாணவர்கள் தமது ஆற்றலுக்கேற்ப மெதுவாகவோ விரைவாகவோ கற்கும் வாய்ப்பினை வழங்கின; மேலும் தங்களுக்கு வசதியான நேரத்தில் அவர்கள் கற்றுக் கொள்ள முடியும்.
தொலைக்கல்வி முறைகள் இன்று பாடசாலைக்கல்வி, உயர்கல்வி, விவசாயம், சுகாதாரம், தொழிற்கல்வி, அரசியல் போன்ற முறைசாராக் கல்வி நிலைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அத்துடன் செயல் முறைக்கல்வி, மற்றும் நூற்கல்வி, கோட்பாடுகளைக் கற்றல் என்பனவும், தொலைக் கல்வி முறைகள் மூலம் சிறப்பாகக் கற்பிக்கப்படுகின்றன.
பாடசாலைகளுக்கும் கல்லூரிகளுக்கும் செல்லமுடியாத மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகின்றது; பாடசாலைகளில் கற்பித்தல் தராதரங்களை மேம்படுத்த உதவுகின்றன.
ஆசிரியர்கள் போன்ற தொழில் வல்லுனர்களுக்கு சேவைகாலப் பயிற்சியையும், சேவைக்கு முன்னைய பயிற்சியையும் வழங்கப் பயன்படுத்தப்படுகின்றன. அரசாங்கங்கள் நாடெங்கும் பரவிக் காணப்படும் தமது ஊழியர்களை பயிற்ற முடிகின்றது.
தொலைக்கல்வி முறைகள்மூலம் குறைந்த செலவில் சிறந்த பயிற்சியை வழங்க முடியும் என அரசாங்கங்கள் இன்று உணர்ந்துள்ளன.
இன்று பலரும் பகுதி நேரக்கல்வியை விரும்புகின்றனர். குடும்பப் பொறுப்புள்ள வளர்ந்தோர், உழைத்துக் கொண்டே தமது கல்வித் தகுதிகளை மேம்படுத்த விரும்புகின்றனர். ஒரு நிறுவனத்தில் முழு நேர மாணவனாகச் சேர்ந்து, நாள்தோறும் பயணஞ் செய்து படிப்பதை விட, விட்டிலிருந்து கொண்டே பயிலப் பலர் விரும்புகின்றனர்.
நைஜீரியாவில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்றின்படி விடுதி வசதியுடன் படித்த கலைப்பிரிவு பட்டப் படிப்பு மாணவரில் 50 விதத்துக்கும் மேற்பட்டவர்கள் தொலைக்கல்விப் பட்ட படிப்பு ஏற்பாடுகளையே விரும்பினர்.

சோ.சந்திரசேகரன்
மாளவி, சாம்பியா ஆகிய நாடுகளில் நிறுவப்பட்ட இடைநிலை மாணவர்களுக்கான தொலைக்கல்வி ஏற்பாடுகள் அவர்களைப் பெரிதும் கவர்ந்தன.
மிக முக்கியமாக ஆசிரியர் பயிற்சி போன்ற தொழிற்றுறைகளில் சேவைக்காலப் பயிற்சியாக தொலைக் கல்விப் பயிற்சி நெறிகள் பயன்படுத்தப்படுகின்றன. இலங்கையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் இவ்வாறான முறையில் பயிற்சிகள் நடாத்தப்படுகின்றன.
நைஜீரியாவில் 25,000 ஆசிரியர்களுக்கு இவ்வாறு பயிற்சி வழங்கப்பட்டது; தான்சானியாவில் யாவரும் ஆரம்பக் கல்வி பெறுவதைத் துரிதப்படுத்தும் நோக்குடன் 45,000 ஆசிரியர்களுக்கு தொலைக்கல்விப் பயிற்சி நெறிகள் 5.- s7 SELUL STOT .
சிம்பாவே நாடு சுதந்திரம் பெற்ற பின் உடனடியாக இப்பயிற்சி நெறிகள் மூலமே ஆரம்பநிலை ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கியது.
இடைநிலைக் கல்வியை விரிவு படுத்துவதிலும் தொலைக்கல்வி முறைகள் பயன்படுத்தப் படுகின்றன. இந்தியாவில் நிறுவப்பட்ட திறந்த பாடசாலை, சாம்பியாவில் நிறுவப்பட்ட தேசிய தொலைக்கல்விக் கல்லூரி என்பன இடைநிலைக் கல்விப் பயிற்சி நெறிகளை வழங்கின.
தொலைக்கல்வி நுட்ப முறைகளும் நிர்வாக ஏற்பாடுகளும் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. பிரித்தானிய திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வி ஒலிபரப்புகளை விட, அஞ்சல் லப்பயிற்சி நெறிகளே முக்கியத்துவம் பெறுகின்றன. கனடா, யூசிலாந்து ஆகிய நாடுகளிலும் இம்முறையே பின்பற்றப்படுகின்றது.
வளர்முக நாடுகளில் தொலைக்காட்சியையும் வீடியோவையும் விட, வானொலியும் ஒலிப்பதிவு நாடாக்களுமே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. தொலைக்காட்சி கவர்ச்சிகரமான சாதனமாயினும் யாவரையும் எட்டுவதில்லை. வானொலியை விட தொலைக்காட்சியின் பயன்பாடு மூன்று முதல் பத்து மடங்கு செலவினை ஏற்படுத்தும் என்று கண்டறியப் பட்டுள்ளது.
பல தொலைக்கல்வி நிகழ்ச்சித் திட்டங்களின் பயன்பாட்டு

Page 13
12 கல்வியியல் கட்டுரைகள்
அனுபவங்களின் படி மாணவர்களுக்கு நேரடியாக ஆசிரியர் கற்பிக்கின்ற வாய்ப்புகளும் இருத்தல் வேண்டும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
மாணவர்களுடன் கலந்துரையாடுவது, அவர்களுக்கு ஆலோசனை வழங்குவது, தனியாகக் கற்கும் மாணவர்களை ஊக்குவிக்கவும் கற்றலை மேம்படுத்தவும் உதவும். சிறந்த முறையில் வெற்றிபெறும் நிகழ்ச்சித் திட்டங்கள் பெரும்பாலும் இவ்வனைத்து முறைகளையும் பயன்படுத்துவனவாக உள்ளன.
கல்வி நிர்வாகிகள் பொதுவாக தொலைக்கல்வி முறைகளை விரும்பக் காரணம் அவை அதிக செலவை ஏற்படுத்துவதில்லை. அத்துடன் ஆசிரியர் மற்றும் வகுப்பறை, தளவாடப் பற்றாக்குறைகளை எதிர்நோக்க தொலைக்கல்வி ஒரு சிறந்த வழிமுறையாகும். ஓர் ஆசிரியரின் நன்கு திட்டமிடப்பட்ட
ரிவுரை அச்சடிக்கப்பட்டு எண்ணற்றோரால் பயன்படுத்தப்பட (Մկ) պtb- மேலும், மக்கள் தொலைவிலிருந்தே பயில நேரிடுவதால் அவ்வாறான கல்வி செலவு குறைந்ததாகவே இருத்தல் வேண்டும்.
பல்வேறு ஆய்வு முடிவுகளின்படி தொலைக்கல்வி மாணவர்கள் சிறப்புறக் கற்கின்றனர் என்றும் தொலைக்கல்வி முறைகள் திறன்மிக்கவை என்றும் அறியக் கிடக்கின்றது. தொலைக்கல்வி மாணவர்களும் உள்வாரி மாணவர்களும் பெற்ற பரீட்சைப் பெறுபேறுகள் ஒப்பிடத்தக்கவையாக அமைந்தன. ஆயினும் தொலைவிலிருந்து பயிலும் மாணவர்கள். அதிக அளவில் தமது கல்வியை இடைநிறுத்தி விடுவது மிகவும் குறைபாடான அம்சமாகும், தொடர்ந்து படிப்பவர்களும் பரீட்சைக்கு அமர்வதில்லை.
மாணவர்களின் ஆர்வத்தைத் தொடர்ந்து பேணுவதற்கு பல வழிமுறைகள் எடுத்துரைக்கப் பட்டுள்ளன. ஒரே கற்பித்தல்
முறையைத் தொடர்ந்து கையாளாது பல்வகைப்பட்ட முறைகளைக் கையாள்வதால் மாணவரின் ஆர்வம் தொடர்ந்து பேணப்படலாம். மாணவர்களுக்கு வழங்கப்படவேண்டிய
ஊக்குவிப்பும் முக்கியமானது.
பயிற்சி நெறிகளில் சித்தி எய்துபவர்களுக்கும் பதவி உயர்வு, சம்பள உயர்வு என்றிருந்தால் அவர்களுடைய ஆர்வம் பேணப்படும் என்பது சில ஆய்வுகளின் முடிவாகும். ஆசிரியர் பயிற்சி நெறிகளில் இவ்வாறான ஊக்குவிப்பு முறைகள் காணப்படுகின்றன.

சோ.சந்திரசேகரன் 13
இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள திறந்த பல்கலைக்கழகம் கல்வியியல், சட்டம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறைகளில் அஞ்சல்மூலப் பயிற்சி நெறிகளை வழங்கி வருகின்றது. பல்வேறு காரணங்களுக்காக உயர் கல்வியைத் தொடரமுடியாதவர்களுக்கு உயர்கல்வி வாய்புகளை வழங்கும் நிறுவனமாக இது விளங்குகின்றது.
இந்நிறுவனம்பற்றிப் போதிய தகவல்கள் நாட்டின் சகல பாகங்களுக்கும் சென்றடைந்தால், மக்களுக்கு அது மிகவும் பயனுடையதாக அமையும், குறிப்பாக, பல்கலைக்கழகம் சென்று உள்வாரியாக பயில முடியாத பட்டதாரி ஆசியர்களுக்கு இந்நிறுவனம் பட்டப்படிப்புத் துறையில் தொலைக்கல்விப் பயிற்சி நெறிகளை நடாத்தி வருகின்றது.
கல்வியைத் தொடரும் விருப்பு இருந்தும் பிற காரணங்களுக்காகக் கல்வியை இடை நிறுத்தியோருக்கு தொலைக்கல்வி ஒரு புதிய வாய்ப்பினை அளிக்கின்றது. O

Page 14
முறைசாராக் கல்வியின் சில அம்சங்கள்
"முறைசார்ந்த" கல்வி என்பது ஆரம்பப் பாடசாலை தொடக்கம் பல்கலைக்கழகம் வரையிலான நடைமுறையில் உள்ள கல் முறையைக் குறிக்கும்; குறிப்பிட்ட வயதெல்லையில் உள்ள மாணவர்கள் இங்கு பயிலுவர்; அத்துடன் முழுக்கல்வி முறையும் முதலாம் தரம் அல்லது முதலாம் வகுப்புத் தொடக்கம் தொடர்ச்சியான தரங்களாக அல்லது வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும்; அத்துடன் இவ்வாறான கல்விமுறையில் உள்ளடங்கும் ஏனைய முழு நேர தொழில்நுட்ப, உயர்தொழிற் கல்வி நிறுவனங்களும் "முறைசார்ந்த கல்வி" என்ற பாகுபாட்டில் அடங்குவனவாகும்.
"முறைசாராக் கல்வி” என்பது ஒவ்வொருவரும் வாழ்நாள் முழுவதும் தனது சூழல், குடும்பம், அயலவர்கள், நூல்நிலையம், பொதுத்தொடர்புச் சாதனங்கள் என்பவற்றுக் கூடாகப் பெறுகின்ற திறன்கள், உளப்பாங்குகள், வாழ்க்கைப் பெறுமானங்கள் என்பவற்றைக் கருதும்; அதாவது வாழ்நாள் முழுவதும் பெறுகின்ற நாளாந்த அனுபவம் வழங்குகின்ற கல்வி "முறைசாராக் கல்வி" என அழைக்கப்படுகின்றது.
எடுத்துக்காட்டாக சிறுவயதில் பிள்ளைகள் மொழியைக் கற்கின்றார்கள்; தந்தையிடமிருந்து சில தொழிற் திறன் களையும் சம வயது நண்பர்களிடமிருந்து சில உளப் பாங்குகளையும் கற்கின்றார்கள்.
இவ்வாறான "முறைசாராக் கல்விச்" செயற்பாடு ஒழுங்குபடுத்தப்படாத தன்மையுடையது என்பதை யாவரும் ཕྱི་ ஆயினும், படித்தவர்கள் உட்பட சகலரும்
இவ்வாறான முறைசாராக் கல்வியினூடாகவே ஏராளமான தகவல்களைப் பெற்றுக் கொள்கின்றார்கள். இவ்வகையில், பிற கல்விச் சாதனங்களுடன் ஒப்பிடும்போது பாடசாலை கல்வியின் முக்கியத்துவம் குறைந்து வருவதாகக் கல்வியியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.
 

சோ.சந்திரசேகரன் 15
இப்பின்னணியில் முறைசாராக் கல்வி என்பது நன்கு நிறுவப்பட்டுள்ள முறைசார்ந்த பாடசாலை அமைப்புக்கு அப்பால் இடம்பெறும் ஒழுங்குபடுத்தப்பட்ட கல்விச் செயற்பாடுகளைக் கருதுகின்றது; முறைசார்ந்த கல்வியின் ஓர் அங்கமாக அமையாத கல்வி நிகழ்ச்சிக் திட்டங்கள் யாவும் முறைசாராக் கல்வியின்பாற்படும்.
ஆயினும் அக்கல்விச் செயற்பாடுகளில் பயன்படுத்தப்படும் கற்பித்தல் முறைகள் சாதாரணமாகப் பாடசாலைக் கல்விமுறையில் பயன்படுத்தப்படுவன போன்று அமையலாம். முறைசாராக் கல்விப் பணிகள் மாலை வேளைகளிலும் வார இறுதியிலும் பாடசாலைகளிலும் இடம் பெறலாம்.
முறைசாரக் கல்விக்குப் பின்வரும் உதாரணங்களைக் கூறலாம்.
- பிள்ளைகளுக்கு நடாத்தப்படும் பாலர் கல்வி நிலையங்கள், குழந்தை பராமரிப்பு நிலையங்கள், பாடசாலை முன்னிலைக் கல்வி ஏற்பாடுகள்.
- இளையோர், வளர்ந்தோருக்கான எழுத்தறிவு வகுப்புகள்.
- இளம் விவசாயிகள் கழகங்கள், விளையாட்டுக் கழகங்கள்.
- பாடசாலைக்கு வெளியே இளைஞர்களுக்கு விவசாயம், கட்டிட நிர்மாணம் போன்ற துறைகளில் வழங்கப்படும் தொழிற்பயிற்சிகள்,
- பாடசாலையில் இடம்பெறும் சாரணியம் போன்ற பாட
ஏற்பாட்டுக்குப் புறம்பான செயற்பாடுகள்.
முறைசாராக் கல்வி நிகழ்ச்சித் திட்டங்கள் աn 6ւմ) ஆரம்பத்திலிருந்தே கல்வி சார்ந்தவை எனக் கருதப்படவில்லை. எழுத்தறிவு வகுப்புகள், அஞ்சல் மூலப் பயிற்சி நெறிகள், தொழிற்கல்விப் பயிற்சி நெறிகள் என்பன மட்டுமே கல்வி சார்ந்தவையாகக் கருதப்பட்டன.
இவை தவிர்ந்த ஏனைய முறைசாராக் கல்விப் பயிற்சி நெறிகள் சமூக சேவை, சுகாதார சேவை, சமுதாய அபிவிருத்தி, விவசாயம், கூட்டுறவு போன்ற துறைகளுடன் தொடர்புடை Tš ருந்தன. அதாவது, முறைசாராக் கல்வி பரந்த அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களையும் எழுத்தறிவு போன்ற கல்விசார் பயிற்சி நெறிகளையும் உள்ளடக்குகின்றது.

Page 15
16 கல்வியியல் கட்டுரைகள்
முறைசாராக் கல்வியினூடாக வாழ்க்கைக்குத் தேவையான யாவற்றையும் கற்றுவிட முடியாது. முறைசாராக் கல்விச் செயற்பாட்டை நன்கு திருத்தி அமைத்து மேம்படுத்தவே முறைசார்ந்த, முறைசாராக் கல்வி ஏற்பாடுகளை சமூகங்கள் உருவாக்கின. எனினும், நிறுவன ஒழுங்குகள், பாடவிடயம், பயில வருவோர் என்னும் அம்சங்களில் இவ்விரு கல்வி ஏற்பாடுகளும் வேறுபடுகின்றன.
1970களிலேயே முறைசாராக் கல்வி ஏற்பாடுகள் துரிதமாக நடைமுறைப்படுத்தப்பட்டன. ஆயினும் அதற்கு முன்னரே, 1950களில் பல்வேறு சமுதாய அபிவிருத்திக் கல்வி ஏற்பாடுகள் நடைமுறையிலிருந்ததாக யுனெஸ்கோ அறிக்கைகள் தெரிவிக்கின்றன . 1970ளில் எழுத்தறிவுப் பயிற்சி நெறிகளுக்கு முக்கியத்துவமளிக்கப்பட்டது.
இன்று அபிவிருத்திகளைத் திட்டமிடுவோர் முறைசாராக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். ஏனெனில் இதனூடாக இன்று நாட்டின் மனிதசாதனத்தை அபிவிருத்திக்கு உதவும் வகையில் பயிற்றலாம் என்று நம்பப்படுகின்றது.
1968 ஆம் ஆண்டில் வெளியான பேராசிரியர் பிலிப்கூம்ஸ் அவர்களின் "உலகக்கல்விப் பிரச்சினை" என்ற புகழ்பெற்ற ஆராய்ச்சி நூலில் கட்டாயப் பாடசாலைக் கல்வியினூடாக மட்டும் வளர்ந்து வரும் சமூகத்தின் பல்வேறு வகைப்பட்ட கல்வித் தேவைகளை நிறைவு செய்துவிடமுடியாது என்று கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
முறைசார்ந்த கல்வியினால் செலவு அதிகம் ஏற்படும்; அத்துடன் ஏராளமான ஆசிரியர் உட்பட ஊழியர்கள் அதற்குத் தேவைப்படுவர். ஆனால் முறைசாராக் கல்வி நிகழ்ச்சித் திட்டங்களை அதனை விடக் குறைந்த செலவில் நடைமுறைப் படுத்தலாம் என்று வாதிடப்பட்டது.
இன்று பல்வேறு உலக நாடுகளும் கல்வியின் மீதான செலவுகளைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் பாடசாலை செல்லும் வயதினர் யாவருக்கும் ஆரம்ப, இடைநிலைக் கல்வி வசதிகளை வழங்கிவிட முடியாது.
முறைசார்ந்த பாடசாலை அமைப்புக்கு அப்பாலும் கல்விச் செயற்பாடுகள் இடம்பெறலாம் என்பதை ஏற்குமிடத்து கல்வி நிதியை மறு ஒதுக்கீடு செய்து கல்வி வழங்குதற்கான மாற்று ஏற்பாடுகள் பற்றிச் சிந்திக்க இவ்வாறான ஒரு பின்னணியிலே

சோ.சந்திரசேகரன் 17
முறைசாராக் கல்வியின் மீது மேலதிக அக்கறை செலுத்தப்பட்டது.
முறைசாராக் கல்விக் கோட்பாடு ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் ஒரு வரையறுக்கப்பட்ட இடத்தில் வழங்கப்படும் நெகிழ்வற்ற முறைசார்ந்த கல்வி சமுதாயத்தின் தேவைகளுக்குப் போதுமானதல்ல என்ற கருத்தை முன்வைத்தது.
முறைசார்ந்த பாடசாலையின் மரபுவழிப் பாட ஏற்பாட்டைக் கண்டித்ததுடன் அதில் எப்போதுமே சமத்துவமின்மையும் சம வாய்ப்புகளின்மையும் முக்கிய அம்சங்களாகக் காணப்பட்டதைக் குறை கூறியது.
முறைசார்ந்த கல்வி வறியவர்கள், எழுத்தறிவற்றவர்கள், வேலையற்றவர்கள் போன்றோர்களின் ဇိရီန္တီး தேவைகளைக் கவனிப்பதில்லை; கல்வியினூடாக அவர்கள் தமது பொருளாதார சமூக அந்தஸ்தை மேம்படுத்தும் வாய்ப்புகளை முறைசார்ந்த கல்வி வழங்குவதில்லை.
பெரும்பாலான மாணவர்கள் இளமையிலேயே தமது பாடசாலைக் கல்வியை இடையில் நிறுத்தி விடுவதால் கல்வித்துறையில் விரயம் ஏற்படுகின்றது என்று பலவாறு முறைசார்ந்த கல்வி கண்டனத்துக்குள்ளானது.
இவ்வாறான கருத்துக்கள் வெளியிடப்பட்ட பின்னர், முறைசார்ந்த கல்விக்கு ஒரு மாற்று ஏற்பாடாகவும் அதற்கு மேலதிகமான ஒரு ஏற்பாடாகவும் முறைசாரர்க் கல்வி பெரிதும் கருத்திற் கொள்ளப்பட்டது.
முறைசார் கல்வியுடன் ஒப்பிடும்போது முறைசாராக் கல்வியில் ಟ್ಲಿ: குறைவு; இவ்வேற்பாட்டில் திறன்களைப் பயிற்றுவதற்குக் கூடிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
கல்வியின் இலக்குகளை உடனடியாக நிறைவேற்றுவதில் கூடிய கவனம் செலுத்தப்பட்டது; அத்துடன் நிர்வாகம் பெருமளவுக்குப் பன்முகமாக்கப்பட்டிருந்தது; உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ப கல்வி வழங்கப்பட்டது; செலவுகள் குறைந்து காணப்பட்டன.
முறைசாராக் கல்வி ஏற்பாட்டின் கற்பித்தல் முறைகளிலும் வேறுபாடுகள் காணப்பட்டன. கற்பித்தல் முறைகள் நெகிழ்ச்சியானவையாயும் மாணவர்களினுடைய வயது, ஆற்றல், விருப்பு, விவேகம் உளப்பாங்கு என்பவற்றைக் கொண்டவை யாயும் அமைந்தன.

Page 16
18 கல்வியியல் கட்டுரைகள்
மேலும் முறைசாராக் கல்வி, கோட்பாடுகளுக்கும் கருத்துப் பொருள்களுக்கும் முக்கியத்துவமளிக்காது திட்டவட்டமற்ற தாகவும் செயல்முறைப் பாங்கானதாகவும் அமைந்தது.
கற்போர் இதில் பங்கு கொள்ள வயது ஒரு தடை அல்ல. ஆர்வமும் வாய்ப்பும் உள்ள எவரும் முறைசாராக் கல்வியை நாடலாம். இதில் கல்வி வழங்கும் ஆசிரியர்களின்
கல்வித்தகுதிகள் கருத்திற் கொள்ளப்படாது, அவர்களிடமுள்ள ஆர்வம், அனுபவம், விருப்பு என்பனவற்றுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது.
முறைசார்ந்த கல்வி மாணவர்களின் அறிவுசார் வளர்ச்சிக்கு, குறிப்பாக வாசிப்பு, எண், எழுத்தறிவு என்பவற்றின் வளர்ச்சிக்குக் கூடிய அளவு பொருத்தமானது என்றும் முறைசாராக் கல்வி தொழில்நுட்பதிறன்களை வளர்க்கப் பொருத்தமானது என்றும் சில அறிஞர்கள் கருதுவர்.
முறைசாராக் கல்வியின் மற்றொரு முக்கிய அம்சம் உண்டு. முறைசார்ந்த பாடசாலை முறையைவிட முறைசாராக் கல்வி நேரடியாகவே பிற அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள், சுகாதாரம், போசாக்கு, குடும்பத்திட்டமிடல், மற்றும் சமுதாய வளர்ச்சிக்கான எழுத்தறிவு, நிகழ்ச்சித் திட்டம் என்பவற்றோடு இணைத்தே முறைசாராக்கல்வி பற்றி ஆராய்தல் வேண்டும்.
முறைசார்ந்த கல்வியும் முறைசாராக்கல்வியும் வெவ்வேறாக இயங்காது. இணைந்து இயங்குவதால் பல நன்மைகளைப் பெற முடியும். அவ்வாறு இணைந்து இயங்குவதற்கான வாய்ப்புகள் பல
SST is
TL&Fr6odu வழங்குகின்ற கற்றல் அனுபவங்களுக்கு மேலதிகமானவற்றை 7 முறைசாராக்கல்வி வழங்க முடியும்; பாடசாலைகளால் நிறைவேற்ற முடியாத நோக்கங்களை முறைசாராக் கல்வியினூடாக நிறைவேற்ற p ا إلا ہواb; பாடசாலைகள் கல்வியை வழங்கி முடிக்குமிடத்திலிருந்து முறை சாராக் கல்வி தொடர்ந்து பயிற்சியை வழங்க முடியும.
பாடசாலையால் கல்வி வழங்க முடியாத, எட்டமுடியாத பல்வே பின்தங்கிய பிரிவினர்களின் #####ခနိဇီနီ 岛 தேவைகளை முறைசாராக்கல்வி நிறைவேற்ற முடியும். அத்துடன் முறைசாராக்கல்வி பல்வேறு புத்தகங்களைப் பரிசோதனை செய்து வெற்றி காணுமிடத்து அவற்றை முறைசார்ந்த கல்வி முறைகள் பிரயோகித்துப் பயனடைய (Քկ) պճ.

சோ.சந்திரசேகரன் 19
vyry
அவ்வாறே றைசார்ந்த கல்வியயும் முறைசாராக்கல்வியும் நிகழ்ச்சித் திட்டங்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்ய (tptջ պճ. பாடசாலையில் பணிபுரியும் ஆசிரியர்களும் அலுவலர்களும் முறைசாராக்கல்வியில் பங்குபெற்ற முடியும்; பாடசாலையில் காணப்படும் பல்வேறு வசதிகளை முறை சாராக்கல்வி நிகழ்ச்சித்திட்டங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்நிகழ்ச்சித் திட்டங்களுக்கான ஆசிரியர்களைப் பயிற்றுவதில் ஆசிரியர் கல்லூரிகள் உதவி செய்ய முடியும்.
பல்கலைக் கழகங்களும் விவசாய மருத்துவ போதனாபிடங்களும் இவற்றுக்கான ஆராய்ச்சி திட்டமிடல், மதிப்பீடு என்பனவற்றில் பல்வேறு ஒத்துழைப்பினை வழங்க முடியும்; இத்துறையில் தலைமைத்துவப் பயிற்சியை வழங்கலாம்; இந்நிகழ்ச்சித் திட்டங்களில் பயன்படுத்தக்கூடிய கற்பித்தல் சாதனங்களை உருவாக்கி உதவலாம்.
சமுதாயத்தின் பல்வேறு கல்வித் தேவைகளை வழங்குகின்ற ஒரு முழுமையான கல்வி அமைப்பின் இரு முக்கிய அங்கங்களாக
முறைசார்ந்த கல்வியும் முறைசாராக்கல்வியும் கருதப்படல்
வேண்டும். அவ்வாறுசெய்யப்பட்டால் இருவகைக் கல்வி ஏற்பாடுகளும் மேலும் சிறந்த வகையில் ஒத்துழைப்பதற்கான புதிய வழிமுறைகளைக் கண்டறிய முடியும்.
ஆயினும், முறைசார்ந்த கல்வி முறையில் காணப்படும் நெகிழ்வற்ற தன்மையும் மரபுவழிக் கல்வியும் முறைசாராக்கல்வியின் புத்தாக்கச் சிந்தனையையும் நெகிழ்ச்சித் தன்மையையும் பாதித்து விடாதபடி கவனித்துக் கொள்ளல் வேண்டும்.
முறையியல் கல்வி - Informal Education (p.60 D FIT fiss as sus' - Formal Education (psMySommé süss) – Non-Formal Education

Page 17
வளர்ந்தோரின் கற்றற் செயற்பாடு
மனிதர்கள் பல்வேறு விடயங்களை, திறன்களை, உளப்பாங்குகளை எவ்வாறு கற்றுக்கொள்கின்றார்கள் என்பது பற்றிக் கடந்த ஐம்பது ஆண்டு காலப்பகுதியிலேயே ஓரளவுக்குத் தெரியவந்தது. இதுபற்றி விரிவான ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுப் பலநூல்கள் எழுதப்பட்டுள்ள போதிலும் இன்றும் கூட, மனிதர்கள் எவ்வாறு கற்கின்றார்கள் என்பதுபற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடியவில்லை.
இத்துறை பற்றிய ஆரம்பகால ஆராய்ச்சிகள் குழந்தைகளின் கற்றல் பற்றியதாகவே அமைந்தது. ஆயினும் அண்மைக் காலத்தில் வள்ர்ந்தோரின் கற்றல் செயற்பாடுகள் பற்றியும் ஆராய்ச்சிகள் நடாத்தப்பட்டன. குறிப்பாக, தொடர்பியல் Casmurf G (Communication theory) LoefgséegsSlso if usibisu ஆராய்ச்சிகள் (Group dynamics) இத்துறை பற்றியனவாக அமைந்தன.
தொடர்பியல் கோட்பாட்டு ஆய்வாளர்கள், கருத்துக்களும் சிந்தனைகளும் எவ்வாறு மக்களைச் சென்றடைகின்றன அல்லது மக்கள் அவற்றை எவ்வாறு அறியவருகின்றனர் என்பது பற்றி ஆராய்ந்தனர். மனிதக்குழு இயக்கவியல் பற்றிய ஆராய்ச்சிகள் எவ்வாறு மனிதக்குழுக்கள் இயங்குகின்றன என்பதை ஆராய்ந்தன.
வளர்ந்தோரால் கல்வி கற்க முடியுமா? பல்வேறு ஆராய்ச்சிகளும் முடியும் என்ற கருத்தைத் தெரிவிக்கின்றன. "இளமையிற் கல்வி சிலையில் எழுத்து” என்ற முதுமொழி வளர்ந்தோர் கல்வி கற்பதில் ஊக்கம் இழக்கச் செய்யக்கூடும். அவர்கள் தாம் முதுமை அடைந்துவிட்டோம், நமக்கு இனிமேல் படிப்பு வராது என்ற எண்ணத்துடன் இருப்பர் என்பதைச் சுட்டுகிறது. ஆனால் இது உண்மையல்ல என்று இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. வளர்ந்தோரின் கற்றல் செயற்பாடு, கல்வி கற்பதில் அவர்களுக்குள்ள ஆற்றல் என்பன பற்றி 1920 தொடக்கம் ஐக்கிய அமெரிக்காவில் பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டன. இந்த ஆய்வுகளின் படி 25 வயதின் பின்னர் கற்கும் ஆற்றலில்
 

சோ.சந்திரசேகரன்'
ஆண்டுக்கு ஒரு விதம் குறைகின்றது என்று கண்டறியப்பட்டது. ஆயினும் அதன் பின்னர் செய்யப்பட்ட ஆய்வுகளின் படி வயது போகப்போக கல்வி கற்கும் ஆற்றல் :: என்றும் கற்கும் வேகமே குறையும் என்றும் ரூபிக்கப்பட்டது.
கற்பதற்கான நேரம் கட்டுப்படுத்தப்படாத சில பரிசோதனை களும் செய்யப்பட்டன. அவற்றின் படி 40 வயதுக்கும் 70 வயதுக்கும் ا-الا-لاسه-- ஆண்களும் பெண்களும் இளைஞர்கள் கற்ற அளவைத் தாமும் கற்றனர். சகலரது கற்றல் ஆற்றலும் சமமானதாகக் காணப்பட்டது.
நேரம் கட்டுப்படுத்தப்பட்ட வேறு ஐந்து பரிசோதனைகளின் முடிவுகளின்படி ஆட்களின் வயது அதிகரிக்க அதிகரிக்க அவர்கள் பெற்ற புள்ளிகளும் குறைந்தன. ஆயினும் தொடர்ச்சியாகப் பல்வேறு கற்றல் அனுபவமுடைய வளர்ந்தோர்களினுடைய கற்கும் ஆற்றலில் எதுவித வீழ்ச்சியும் காணப்படவில்லை.
சுருங்கக் கூறின், கற்றலுக்கான ஆற்றல் வயது கூடக்கூட குறைந்து செல்வதில்லை; ஆயினும் கற்றல் சிறிதளவு தாமதாக நடைபெறலாம்.
இதிலிருந்து வளர்ந்தோருக்கு கல்வி கற்பதில் எதுவித பிரச்னைகளும் தடைகளும் இல்லை என்று முடிவு செய்துவிட
முடியாது.
எடுத்துக்காட்டாக, நீண்ட காலமாக அல்லது முற்றாகவே முறையான கல்வியைப் பயிலாதவர்கள், வயது வந்த பின் கல்வி கற்ப்து மிகவும் சிரமமாக இருக்கும். அவர்கள் தமது ஆற்றலில் சுயநம்பிக்கை அற்றவர்களgய் இருப்பர். இது அவர்களுடைய கல்வி முன்னேற்றத்தைப் பாதிக்கும்.
சிறந்த போதானாசிரியர்களும் வகுப்பறை நண்பர்களும் அவர்களுடைய இந்த இயல்புகளைப் போக்கி, ஊக்குவித்து உதவலாம்.
அத்துடன் சில உடலியல் காரணிகளும் வளர்ந்தோரின் கல்வி முன்னேற்றத்துக்குத் தடையாக S60 Lousum üb. கட்புல செவிப்புலக் குறைபாடுகள் இதில் அடங்குவன. ஆனால் இதனைப் பலர் விளங்கிக் கொள்வதில்லை.

Page 18
22 கல்வியியல் கட்டுரைகள்
w
3(5 சிறந்த போதானாசிரியர் இக்குறைபாடுகளின் அறிகுறிகளாகக் கண்டறிந்து தமது வாய்மொழித் தொடர்பு களையயும் கட்புல சாதனங்களையும் மேலும் தெளிவாகப் பயன்படுத்தலாம்.
பாடசாலைப் பிள்ளைகள், வளர்ந்தோர் ஆகியயோரின் கற்றல் ஆற்றலைப் ஒப்புநோக்குமிடத்து பாடசாலைப் பிள்ளைகளுக்கு அப்படியொன்றும் சாதகமான நிலை அதிகமில்லை என்பதே கல்வியியல் கருத்து. பாடசாலைப் பிள்ளைகளைப் பொறுத்த வரையில் பாடசாலைகள் அவர்களுக்கு முறையாகக் கற்கும் பழக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது உண்மையே. அத்துடன் கல்வி பயிலப் போதிய நேரமும் அவர்களுக்கு உண்டு.
ஆயினும் பாடசாலைப் பிள்ளைகளுக்குப் பொதுவாக தெளிவான, திட்டவட்டமான குறிக்கோள்கள் இருப்பதில்லை. பெற்றோர்கள் அனுப்புவதன் காரணமாகவே அவர்கள் பாடசாலைக்கு வருகின்றனர். அத்துடன் பாடசாலைப் பிள்ளைகள் தாம் பெறும் கல்விக்கும் நாளாந்த வாழ்க்கைக்கும் ஏதேனும் பொருத்தப்பாடினைக் காண்பதில்லை.
ஆயினும், நன்கு கல்விப் பயிற்சிபெறும் வளர்ந்தவர்கள் தாம் கற்கும் விடயம் தமது நாளாந்த வாழ்க்கையின் பிரச்னைகளை எவ்வாறு தீர்க்க உதவும்; தமது குடும்பம், தொழில் நிலையம் தொடர்பான பிரச்னைகளில் எவ்வாறு உதவும் என்பதை நன்கு உணர்ந்திருப்பர். கல்வி பயிலுவதால் பல்வேறு தகவல்களைப் பெறுவது மட்டும் அவ்வாறு வேறு பல நன்மைகளும் உண்டு என்பதை அவர்கள் விளங்கிக் கொள்வர். கல்வியினூடாகத் தமது கல்வித்தகைமைகளை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்றும் தமது உளப்பாங்குகளை மாற்றிக்கொள்ள முடியும் என்றும் அவர்கள் உணர்வர்.
இதன் காரணமாக, கல்வி கற்கும் வளர்ந்தோர்கள் தமது சொந்த வழிகாட்டலில் பலவற்றைக் கற்கும் ஆற்றலையும் தகுதிைேஃ பெற்றவர்கள் எனக் கல்வியியலாளர் கருதுவர்.
நாம் கற்கும்போது மூளை எவ்வாறு செயற்படுகின்றது என்பது எமக்குத் தெரியாமலிருக்கலாம். ஆயினும் இரு அடிப்படையான செயற்பாடுகளை இனங்காண முடியும். முதலாவதாக கற்போர் பல தகவல்களையும் கருத்துக்களையும் “பெற்றுக்" (receive) கொள்கின்றனர். இரண்டாவதாக அவர்கள் அத்தகவல்களையும் கருத்துக்களையும் "கிரகித்துக்" கொள்கின்றனர் அல்லது

Gese mr. s báy CSF s var 23
“உள்வாங்கிக்" (assimilate) கொள்கின்றனர்.
இவ்வாறு உள்வாங்கப்பட்ட தகவல்களும் கருத்துக்களும் மாணவர்கள் ஏற்கனவே கற்றவற்றுடன் ஒன்றிணைந்து அவற்றை மேலும் செம்மைப்படுத்துகின்றன. ஆயினும் "பெறப்பட்ட" தகவல்கள், சிந்தனைகள் அனைத்தும் கிரகித்துக்கொள்ளப்படுவதில்லை என்பதையும் வலியுறுத்திக்கூற வேண்டும். அதாவது அச்சந்தர்ப்பத்தில் உண்மையான கற்றல் நடைபெறுவதில்லை.
வளர்ந்தோர் எவ்வாறு பல்வேறு புலன்களினூடாகத் தகவல்களைப் பெறுகின்றார்கள் என்று நோக்குவோம். பல்வேறு நிலைமைகளில் பல்வேறு வளர்ந்தோரும் சராசரியாக அல்லது அண்ணளவாக எப்புலன்களினூடாக 6T6 OT அளவைக் கற்கின்றார்கள் என்பது பற்றிய சில ஆய்வு முடிவுகள் உண்டு.
தகவல்களை முறையாகக் கற்றுக் கொள்ள சிறப்பாக உதவுவது கட்புலனாகும்; செவிப்புலனினூடாகக் கற்பதை விட ஆறுமடங்கு அதிகமாக கற்புலனினூடாகக் கற்க முடியும். அத்துடன் பிறபுலனுணர்வுகளான தொடுதல், சுவைத்தல், முகர்தல் என்னும் இவை யாவற்றினூடாகக் கல்வி கற்பது செவிப்புலனால் கற்பதற்குச் சமமானது. ஆயினும் வளர்ந்தோர் கல்வி ஆசிரியர் கட்புலனை முற்றாக அலட்சியம் செய்து விட்டு முற்றாகவே தமது வாய்மொழியினூடாக கற்பிப்பதுண்டு.
இம்முறையின் முக்கிய குறைபாடு, விரைவில் கேட்போரின் கவனம் சிதைக்கப்பட்டுவிடும் என்பதாகும். சிறந்த வளர்ந்தோர் கல்விப் போதானாசிரியர் நன்கு தெரிவு செய்யப்பட்ட கட்புல சாதனங்களைப் பயன்படுத்திக் கற்றலை மேம்படுத்தலாம்.
தொடர்பியல் கோட்பாட்டு ஆய்வாளர்களும் நாம் எவ்வாறு தகவல்களையும் கருத்துக்களையும் பெற்றுக் கொள்கிறோம் என்பதை ஆராய்ந்துள்ளனர். அவர்களுடைய கருத்தின்படி, ஆசிரியர் தாம் வழங்குகின்ற தகவல்கள், கருத்துக்கள் மிகச்சரியாக மாணவர்கள் பெற்றுக் கொள்வர் என்று ஒருபோதும் கருதக்கூடாது. தொடர்பியல் கோட்பாடு ஆய்வாளர்கள் இச்செயற்பாட்டில் நான்கு அம்சங்களை இனங்கண்டுள்ளனர்.
- தகவலையும் கருத்துக்களையும் அனுப்புபவர் (போதனாசிரியர்)
(SENDER)
- செய்தி (தகவல்களையும் கருத்துக்களையும் கொண்ட பாட

Page 19
24 கல்வியியல் as Gerasa
உள்ளடக்கம்) (MESSAGE) - வழிமுறை விரிவுரையோடு கரும்பலகையைப் பயன்படுத்துதல்
(METHOD) - செய்தியைப் பெறுபவர்கள் - அதாவது மாணவர்கள்
(RECEIVERS)
ஒரு பாத்திரத்தில் உள்ள நீரைக் கொண்டு பல குவளைகளை நிரப்பிவிடுவது எளிது. ஆனால் ஒரு கருத்தை அல்லது தகவலை பலருக்கு தெரியப்படுத்துவதும் அதனை அவர்கள் கிரகிக்கச் செய்வதும் ஒரு கடினமான பணி. அவ்வகையில் கற்பித்தல் என்பதும் ஒரு கடினமான பணியாகவே அமைகின்றது.
எற்கனவே கூறியபடி பெரும்பாலான தகவல்கள் கட்புலனி னுாடாகவே கிரகிக்கப்படுகின்றன. அவ்வகையில் செவிப்புலன் அத்துணை முக்கியமானதல்ல. கருத்துக்களையும், சிந்தனைக ளையும் கிரகித்துக்கொள்ளும் ஆற்றலைப் பொறுத்தவரையில் அவ்வாறு கிரகிப்பதற்கு பயன்படுத்தப்படும் வழிமுறைகள் முக்கியத்துவம் வாய்ந்தவவை. இக்கற்றல் வழிமுறைகள் பற்றி மேலும் விரிவாக நோக்க முடியும். இவ்விடயம் தொடர்பான சில ஆய்வு முடிவுகளைக் கொண்டு அவ்வழி முறைகளை விளக்க முடியும்.
சகல ஆராய்ச்சியாளர்களும் கூறுவதாவது; செவிப்புலனின் to LTasés கிரகிக்கப்படும் விடயங்கள் விரைவில் மறக்கப்படுகின்றன. விரிவுரையின் ஊடாகக் கேட்கப்படும் விடயத்தில் 20 சதவீதமே நினைவில் நிற்கும்; அத்தகவல்களை கட்புலனின் ஊடாக மட்டும் கிரகிக்கும்போது 30 சதவீதம் நினைவில் இருத்தப்படுகின்றது; கட்புலனையும் செவிப் புலனையும் பயன்படுத்திக் கற்கும்போது 50 சதவிதமும் அத்துடன் இணைத்து-அதாவது கட்புலனுடனும் செவிப் புலனுடனும் கலந்துரையாடல் முறையை இணைத்துக் கற்கும்போது கற்பவற்றில் 70 சதவீதம் நினைவில் இருத்தப் படுகின்றது.
இவை அனைத்தோடும் செயல்முறைப்பயிற்சியும் கற்றதைப்
பிரயோகித்துப் பார்க்கும் வாய்ப்பும் இருக்குமிடத்து கற்றவற்றில் 90 சதவீதமான விடயம் நினைவில் நிற்கின்றது என்பது
இவ்வாராய்ச்சிகளின் முடிவாகும்.

சோ.சந்திரசேகரன் 25
நினைவில் இருத்தலும் கற்றல் முறைகளும் அவையாவன :-
கற்றல் முறைகள் நினைவில் நிற்கும் வீதம் (1) செவிப்புலன் மட்டும் 20 சதவீதம் (2) கட்புலன் மட்டும் 30 சதவீதம் (3) கட்புலன் + செவிப்புலன் 50 சதவீதம் (4) கட்புலன் + செவிப்புலன் +
கலந்துரையாடல் 70 சதவீதம்
(5) கட்புலன் + செவிப்புலன் +
கலந்துரையாடல் + செயல்முறைப் பயிற்சி + பிரயோகம் 90 சதவீதம்
இவ்விடயம் தொடர்பாக பண்டைய சீன நாட்டு முதுமொழி யொன்று உண்டு; “நான் எதனையேனும் ဓမ္ဘီရှီချို့ဂြိုဂျီ கேட்டால் மறந்து விடுவேன்; அதனைக் கண்கள்ால் பார்த்தால் ஞாபகத்தில் வைத்திருப்பேன்; அதனைச் செய்து பார்த்தால் அதனை நன்கு விளங்கிக் கொள்வேன்."
இவ்வாறான பல்வகைப்பட்ட கற்பித்தல் முறைகளைப் பயன்படுத்துவதால் வளர்ந்தோர் கல்வி மட்டுமல்லாது பாடசாலைக் கல்வியும் மாணவர் தேர்ச்சியும் நன்கு மேம்பட வாய்ப்புகள் உள்ளன.

Page 20
கல்வித் தொழில்நுட்பவியல்
மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்குத் தொலைக்காட்சியும் வானொலியும் பரந்த அளவில் பயன்படுத்தப்படத் திட்டமிடப் பட்டுள்ள இன்றைய நிலையில் வளர்முக நாடுகளின் கல்விப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இச்சாதனங்கள் எவ்வாறு உதவும் என்பதை நோக்குவது பொருத்தமாகும்.
இன்றைய வளர்முக நாடுகள் பின்வரும் சில பொதுவான கல்விப் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளன :
1. ஒரு மாணவனுக்கான கல்விச் செலவில் ஏற்பட்டுள்ள
அதிகரிப்பு.
2. கிராமப் பிள்ளைகளுக்குப் போதிய பாடசாலைக் கல்வி
வாய்ப்பின்மை.
3. தரம் குறைந்த கல்விப் போதனை-இதனால் வளர்முக நாடு
களின் பிள்ளைகளின் அறிவாற்றல் வளர்ச்சிக் குறைவு.
4. அபிவிருத்தி நோக்கங்களுக்குப் பொருத்தமற்ற கல்விமுறை.
5.வருமானப் பங்கீட்டில் பாதகமான விளைவு. இதற்குக் காரணம் வசதிமிக்க பிள்ளைகள் கூடிய கல்வி வாய்ப்புகளைப் பெற்று முன்னேற, மற்றவர்கள் அவ்வாய்ப்புகளைப் பெறாமையாகும்.
இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பல்வேறு வழிமுறைகள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. சில அறிஞர்களின் கருத்துப்படி இப்பிரச்சினைகளை முழுமையாகத் தீர்த்துவிட முடியாது; எனவே அரசியல் ரீதியாக சமாளிக்கக்கூடிய அளவுக்குக் கல்விச் செலவைக் குறைத்து விடவேண்டும்.
வேறு சில அறிஞர்களின் கருத்துப்படி இன்று முறையாக நிறுவப்பட்டிருக்கும் பாடசாலைக் கல்வி நிறுவனங்களுக்கு
 

சோ.சந்திரசேகரன் 27
வெளியே "முறை சாராத கல்வி" ஏற்பாடுகளை நன்றாக விரிவு செய்து இப்பிரச்சினைகளைத் தீர்த்துவிடலாம். இன்னொரு நிலைப்பாட்டின்படி கல்வி முறையில் பல சீர்திருத்தங்களை அறிமுகம் செய்து ஓரளவுக்கேனும் இக்கல்விப் பிரச்சினை களைத் தீர்த்து விடலாம்.
கல்வித் தொலைக்காட்சி, வானொலி என்பவற்றின் இன்றைய சர்வதேச வைத்து நோக்குமிடத்து, இத் தொழில்நுட்பவியல் சாதனங்களைப் பயன்படுத்துவதால் கல்விச் செலவுகளைக் குறைத்து, கல்வித் தராதரங்களை மேம்படுத்தி கல்வி வாய்ப்புகளைப் பெருக்க முடியும். பல நாடுகள் இத்தொழில்நுட்ப சாதனங்களைக் கல்வி வளர்ச்சிக்குப் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளன. இவ்வெற்றிகளின் காரணமாக எதிர்கால கல்வி வளர்ச்சியைத் திட்டமிடுவதில் இச்சாதனங்களுக்கு முக்கிய இடம் அளிக்க வேண்டியுள்ளது.
இச்சாதனங்கள் பாடசாலைகளில் இடம்பெறும்
முறை 8ffff கல்வியின் வளர்ச்சிக்கும் வெளியே இடம் பெறும் g கல்வி மேம்பாட்டிற்கும் நன்கு உதவ (Մն) պմ).
கல்விப் போதனையை வழங்கும் தொழில்நுட்ப சாதனங்களை மூன்றாக வகைப்படுத்திக் கூறலாம்.
1. கல்வித்தரத்தை மேம்படுத்துதல், பொருத்தமான கல்வியை
வழங்குதல் என்பவற்றுடன் தொடர்புள்ளவை.
2. கல்விச் செலவைக் குறைப்பதுடன் தொடர்புள்ளவை.
3. கல்வி வாய்ப்புகளைஅதிகரிப்பதுடன் தொடர்புள்ளவை.
கல்வித்தர மேம்பாடு
தொழில்நுட்பச் சாதனங்களைக் கல்வி மேம்பாட்டுக்குப் பயன்படுத்த முற்பட்ட ஆரம்ப காலக் கல்வியியலாளர்கள் இச்சாதனங்கள் நிச்சயமாகக் கல்வித்தரத்தை அதிகரிக்க உதவும் என நம்பினர். ஆயினும் பல்வேறு ஆய்வுகள் இவ்விடயத்தில் ஏமாற்றத்தையே அளித்தன. இவ்வாய்வு முடிவுகளின்படி ஆசிரியரின் வகுப்பறைக் கற்பித்தலினாலும், அதே ஆசிரியர் இச்சாதனங்களைக் கொண்டு கற்பித்தலினாலும், மாணவர் களின் கல்வித் தேர்ச்சியில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படவில்லை. எனவே இச்சாதனங்களைப் பயன்படுத்துவதால் கல்விப் போதனையின் தரம் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரிக்காது என்பதையே இந்த முடிவுகள் காட்டின.

Page 21
28 கல்வியியல் கட்டுரைகள்
எனினும் இவ்வாய்வு முடிவுகள் இரு முக்கிய உண்மைகளைச் சுட்டிக்காட்டின .
முதலாவது, இருவகையான கற்பித்தலுமே, சமமான முறையில் பயனுள்ளதாயின், தொழில்நுட்ப சாதனங்களைக் கொண்டு கற்பித்துக் கல்விச் செலவைக் குறைக்கும் வாய்ப்புகள் உண்டு என்பதாகும்.
இரண்டாவது, தொழில்நுட்பச் சாதனங்கள் கல்வி போதிப்பதில் பயனுள்ளவையாக அமைந்துள்ளமையால், குறிப்பிட்ட பாடங்களைக் கற்பிக்கப் போதிய பயிற்சியுள்ள ஆசிரியர்கள் இல்லையாயின் இச்சாதனங்களைப் பயன்படுத்த முடியும் என்பதாகும்.
தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், சீனா போன்ற நாடுகளில் ஆங்கிலம் கற்பிக்க இச் சாதனங்கள் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டன . விஞ்ஞானம், கணிதம் போன்ற பாடங்களைக் கற்பிக்கப் போதிய ஆசிரியர் இல்லாதவிடத்து தொழில்நுட்பச் சாதனங்களைப் பயன்படுத்தலாம்.
ஆசிரியர் தாமே வகுப்பறையில் கற்பிப்பதாலும், தொழில்நுட்பச் சாதனங்களைக் கொண்டு கற்பிப்பதாலும், சமமான பயனே கிட்டுகின்றது என்பது ஒரு பொதுவான ஆய்வு முடிவாகும்.
வேறு சில குறிப்பான ய்வு முடிவுகளின்படி மரபுவழியான வகுப்பறைக் கற்பித்தலைவிட தொழில்நுட்ப சாதனங்களைக் கொண்டு கற்பிப்பதால் அதிக பயன் கிட்டுகின்றது என அறியக் கிடக்கிறது. நிக்காரகூவாவிலும் மெக்சிக்கோவிலும் செய்யப்பட்ட ஆய்வுகள் இம்முடிவைத் தெரிவிக்கின்றன.
இத்துறை சார்ந்த அறிஞர்களின் கருத்தின்படி தொழில்நுட்ப சாதனங்களின் கற்பித்தல் ஆற்றலைப் பற்றிய ஆய்வுகள் மேலும் பெருகும்போது, அவற்றின் பயன்பாட்டால் மாணவர்களின்
கல்வித்தராதரங்களை அதிகரித்திருப்பது தெரியவரும்.
கல்விச் செலவினைக் குறைத்தல்
இன்றைய பாடசாலைக் கல்வி முறையில் செலவுகள் பெரிதும் அதிகரித்து வருகின்றன. தொழில்நுட்ப சாதனங்களைக் கல்விச் செயற்பாட்டில் பயன்படுத்திக் கல்விச் செலவுகளைக் குறைக்க முடியுமென இன்று வாதிடப்படுகின்றது.

சோ. சந்திரசேகரன்
வளர்முக நாடுகளில் பாடசாலைகளில் மாணவர் சேர்வு அதிகரித்து வருகின்றது; அதனால் செலவுகளும் அதிகரிக்கின்றன; சகல நாடுகளிலும் ஒரு பிள்ளையைக் கற்பிப்பது என்பது ப்ெரும் செலவுமிக்க விடயமாக விளங்குகின்றது.
மாணவர்களுக்கான கல்விச் செலவு அதிகரித்தாலும் பாடசாலைக் கல்வியின் தராதரம் அதிகரிப்பதில்லை; இதற்கு மாறாக கல்வித் தராதரம் மாறாதிருக்கின்றது அல்லது சில் வேளைகளில் வீழ்ச்சியடைகின்றது.
கல்விச் செலவு அதிகரிக்கக் காரணம் கல்வி முறையின் தொழில்நுட்பம் (கற்பித்தல் முறை போன்றன) இன்னும் குடிசைக் கைத்தொழில் நிலையிலேயே உள்ளது என கல்வியியலாளர் கூறுகின்றனர். பொருளாதார முறையின் பிறதுறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், தொழில் நுட்பத்தின் தாக்கம் ஏனோ கல்வி முறையில் ஏற்படவில்லை.
பிற துறைகளில் தொழில்நுட்பம் முன்னேற அங்கு பணிபுரிவோரும் தொழில்நுட்ப அறிவு மிக்கோராக உள்ளனர். அப்படியானவர்களே தொழிலில் அமர்த்தப்பட்டு உயர்ந்த சம்பளங்கள் பெறுகின்றனர். ஆனால் கல்வித் துறையில் இவ்வாறான நிலையில்லை; பழைய கல்வித் தகுதிகளை யுடையோருக்கும் அதிக சம்பளங்கள் வழங்க வேண்டியுள்ளது.
«AK ப்பிடும் பொருளாதாரத் துறையின் முன்னேறிய துறைகளுடன் ஒபபீடு
கல்வித்துறையை முன்னேற்ற வேண்டுமாயின் அதன கற்பித்தல் தொழில்நுட்பத்தில் புதுத்தாக்கங்கள் ஏற்பட வேண்டும்.
令 செலவுகள் பல்வே ஆய்வுகளின்படி, ஆசிரியருக்கான
திரீக்கும் என்றும் தொழில்நுட்ப சாதனங்களின் பயன்பாட்டுக்கான செலவுகள் மாறாதவை அல்லது குறையும எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலைகளில் வானொலி, தொலைக்காட்சி என்பனவற்றின் உபயோகமும், அஞ்சல்மூல தொலைக்கல்வி ஏற்பாடுகளும் செலவுகளைக் குறைத்துள்ளன என்றும் ஆய்வுகள் சுட்டிக காட்டுகின்றன.
29

Page 22
30 கல்வியியல் கட்டுரைகள
வாய்ப்புகளைப் பெருக்குதல்
தொழில்நுட்ப சாதனங்களின் உதவியுடன் கிராமங்களிலும் நகர்ப்புறங்களிலும் காணப்படுகின்ற பின்தங்கிய மக்களின் கல்வி வாய்ப்புகளை அதிகரிக்க முடியும் மரபுவழிப் பாடசாலைகளை அமைக்க ஆசிரியர்கள், பாடநூல்கள், கட்டடங்கள், தளவாடங்கள், மின்சார வசதி, போக்குவரத்து வசதி என்பன தேவை. வானொலிகளைப் பயன்படுத்தும்போது இவ்வாறான விரிவான் வசதிகள் தேவையில்லை; இன்று தொழில்நுட்ப சதனங்களைக் கொண்டு தொலைக்கல்வி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன .
மரபுவழியான இடைநிலைக் கல்விக்கு ஏற்படும் செலவைவிட தொலைக்கல்விக்கு ஏற்படும் செலவு மிகக் குறைவாகும். மரபுவழி முறையைவிடத் தொலைக்கல்வி முறையில் எராளமான மாணவர்களை அணுக முடியும்.
எப்போதுமே உயர்நிலைப் பாடசாலைகள் மக்கள் தொகை கூடிய நகர்ப்புறங்களிலேயே அமைக்கப்பட்டு வந்துள்ளன; இப்பாசாலைகளைச் சிக்கனமாக நடாத்த பெருந்தொகையான மாணவர்கள் தேவை. இதனால் கிராமப்புறப் பிள்ளைகளுக்கு இடைநிலைக்கல்வி வாய்ப்புகள் கிட்டவில்லை; அல்லது ಲಿ. தூரம் பயணஞ் செய்து பாடசாலை செல்ல வேண்டியதாயிற்று. தொலைக்கல்வி முறையில் இப்பிரச்சினைகள் இல்லை.
கல்வித்துறையில் தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்துவது பற்றி சில இலத்தீன் அமெரிக்க நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வுகளின்படி தொலைக்காட்சியைப் பயன் படுத்துவதைவிட, வானொலியைப் பயன்படுத்துவதால் செலவுகள் குறையும்; தொலைக்காட்சி அப்படியொன்றும் வானொலியை விட கல்விப்பணியில் அதிக பங்களிப்பினைச் செய்துவிட முடியாது; அத்துடன் தொலைக்காட்சியைப் பயன்படுத்துவதில் பல சிக்கல்கள் உண்டு. இவ்வாய்ப்புகளின்படி குறைந்த வருமானமுள்ள நாடுகளில் கல்விப்பணிக்கு தொலைக்காட்சிகளைப் பயன்படுத்தாமலிருப்பது நல்லது. எங்காவது தொலைக்காட்சிக்கான செலவுகள் மிகக் குறைவாக இருந்தாலோ அல்லது கற்றலின்போது கட்புல சாதனங்கள் (படங்கள், அட்டவணைகள், வரைபடங்கள், மாதிரிகள்) என்பனவற்றைக் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டியிருந்தால் மட்டும் தொலைக்காட்சியைப் பயன் படுத்தலாம்.

சோ.சந்திரசேகரன் 31 gapsar
மேலும், இவ்வாய்வுகளின்படி E, y lou இடைநிலைப்
பாடசாலைகளில் வானொலியைப் பயன்படுத்திக் கல்வித் தரங்களை மேம்படுத்தலாம்; அத்துடன் தொலைக்கல்வி ஏற்பாடுகள் செலவைக் குறைத்து இடைநிலை, உயர்நிலைக் கல்வி வாய்ப்புகளை அதிகரிக்க உதவும்; வளர்ந்தோர் வேலையில் இருந்தபடியே கல்வி செறமுடியும். சுருங்கக் கூறின் தொழில் நுட்ப சாதனங்களைப் பயன்படுத்துவதால் கல்விச் செலவு குறையவும் கல்வித் தரம் மேம்படவும் வாய்ப்புகள் உண்டு. O

Page 23
விஞ்ஞானக் கல்வி நெறியின் சமூக அம்சங்கள்
பாடசாலைக் கல்விப் பாட ஏற்பாட்டில் ஒரு முக்கிய அம்சமாக விளங்குவது விஞ்ஞானக் கற்கை நெறியாகும். மனித சமுதாயத்தின் தேவைகளை நிறைவுசெய்வதற்கு இயற்கைச் சூழலில் மாற்றம் தேவை; அம்மாற்றத்தை ஏற்படுத்த இயற்கையை மனிதன் அறிந்து கொள்ளவேண்டும். அவ்வாறு இயற்கையை அறிந்துகொள்ள உதவுவதே விஞ்ஞானக் கல்வியின் முக்கிய நோக்கமாகக் கூறப்படுகின்றது.
அத்துடன் இயற்கைச் சூழலில் காணப்படும் மென்மையான
சமச்சீர்நிலை பாதிக்கப்படாது பாதுகாக்கப்படவும் விஞ்ஞானக் கல்வி உதவ வேண்டும். இவ்வகையான கல்வியினூடாகவே அறிவு தேடும் விழிப்புடையோரையும் துருவி ஆராயும் ஆர்வம்மிக்கவர்களையும் உருவாக்க முடியும்.
சிறந்த விஞ்ஞானக் கல்வியைப் பெறுவோர் எதனைப் பற்றியும் கேள்விகள் கேட்போராயும், முழுமையாக அறிந்து கொள்ளவும் சகல விபரங்களையும் திரட்டிக்கொள்ளவும் விரும்புவோராயும் இருப்பர். அத்துடன் அவர்கள் எதனையும் தர்க்க ரீதியாக
நோக்குவதை விரும்புவர். இவ்வாறானவர்களை உருவாக்க சகல நிலைகளிலும் கற்பிக்கப்படும் விஞ்ஞானக் கல்விக்குப் புதிய
அணுகுமுறையொன்று தேவை என்பது அறிஞர். கருத்து.
விஞ்ஞானக் கல்வி விவசாய அபிவிருத்திக்கும் கைத்தொழில் உற்பத்திக்கும் விஞ்ஞான ஆராய்ச்சிக்கும் உதவும் ஒரு முக்கிய கற்கை நெறியாகும்.
மூன்றாம் உலக நாடுகளுக்கு விஞ்ஞான நோக்கினையும் ஆய்வுமனப்பாங்கின்ையும் புத்தாக்கச் சிந்தனையையும் மாற்றத்தை நாடும் உளப்பாங்கினையும் கொண்டவர்கள் தேவைப்படுகின்றனர்.
உலக விஞ்ஞானிகளிடம் பொதுவாக புத்தாக்கச் ந்தனையும் மாற்றத்தை நாடும் உளப்பாங்கும் குறைவு. பிற
 

சோ.சந்திரசேகரன் 33
rs
நல்ல அம்சங்கள் அவர்களிடம் காணப்படுகின்றன. அவர்கள் இயற்ஓகயைப்பற்றி நன்றாகப் படித்துள்ளார்கள்; ஆனால் அதன்ை மாற்றும் சிந்தனை அவர்களிடமில்லை என்று மூன்றாம் உலக விஞ்ஞானிகள் விமர்சிக்கப்படுகின்றனர்.
விஞ்ஞானி என்பவன் நுணுகி ஆராய்கிறவன்; பொறியியலாளன் எனப்படுபவன் ஏற்கனவே இல்லாத ஒன்றைப் புதிதாகப் படைப்பவன்; தொழில்நுட்பவியலாளன் கருத்துக்களையும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்துபவன்; அத்துடன் சமூகம் தொடர்பான தனது பொறுப்புகளையும் கடமைகளையும் உணர்ந்தவன். விஞ்ஞானக்கல்வி இம்மூன்று இயல்புகளையும் மாணவர்கள் பெறும்வகையில் ட்டமிடப்படல் வேண்டும் என்பது கல்வியாளர் கருத்து, போசாக்கின்மை, நோய், பிணி, எழுத்தறிவின்மை, வேலையின்மை, சமத்துவமின்மை என்பவற் றைப் படிப்படியாக குறைத்து, இறுதியாக இல்லாதொழிப்பது அபிவிருத்தி எனப்படும். இவ்வாறான முன்னேற்றத்தை ஏற்படுத்தி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான போராட்டம் வெற்றியடைய விஞ்ஞானக்கல்வி உதவ வேண்டும்.
எக்கல்வி முறையும் அடிப்படை எண்ணறிவையும் எழுத்தறிவையும் ಖ್ವಸ್ಥೆ நோக்கமாகக் கொண்டுள்ளன. ஆயினும் கல்வி பயிலும் பிள்ளைகள் குறிப்பாகத் தமது சுற்றாடலுடன் தொடர்புபடுத்திய முறையில் எளிமையான விஞ்ஞான தொழில்நுட்ப அறிவைப் பெறல் வேண்டும் என்று இன்று ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.
மாணவர்கள் suLoresš சிந்திப்பதற்கான பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஆரம்பநிலை, இடைநிலை விஞ்ஞானம் அமைதல் வேண்டும். பாடநூல்களில் தரப்படும் விஞ்ஞானத் துறை சார்ந்தவரை விளக்கங்களை மனனம் செய்வது இன்று ஊக்குவிக்கப்படவில்லை.
மாணவர்கள் சுயமாகக் காரண காரியத் தொடர்புகளை அறியவேண்டும்; சுயமாகப் பரிசோதனைகளைச் செய்து முடிவுகளைக் காணவேண்டும் என்பதே நவீன விஞ்ஞானக் கல்வியின் குறிக்கோளாக அமைந்துள்ளது.
நாடும் நாட்டு மக்களும் தம்மிலேயே தங்கியிருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியவர் தான்சானிய நாட்டு ஜனாதிபதியாவர். இதற்கு மனனம் செய்தலும் விடய அறிவைப் பெறுவதும் போதவே போதாது. ஒரு விஞ்ஞானி போன்று

Page 24
34 கல்வியியல் கட்டுரைகள்
செயற்படுவதன் மூலமே இந்நிலையை அடைந்து கொள்ள (Մ կ) պճ.
1960 களிலும் 1970 களிலும் பல்வேறு நாடுகளில் ஆரம்பக்கல்வி நிலை, இடைநிலைக்கல்வி நிலை என்பவற்றுக்குரிய விஞ்ஞான பாட ஏற்பாடு பல முக்கிய மாறுதல்களுக்குள்ளானது. இம் மாற்றம், வளர்ச்சியடைந்த நாடுகளில் முதலில் தொடங்கியது. பின்னர் படிப்படியாக இம்மாற்றம் வளர்முக நாடுகளிலும் பரவியது. இந்நாடுகளில் விஞ்ஞானக் கல்வியை நவீன மயப்படுத்தும் பல செயற்றிட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
மேலும், சகல பாடசாலை மாணவர்களுக்கும் விஞ்ஞானக் கல்வியை விரிவு செய்யும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு முன்னர் விஞ்ஞானக் கல்வி, நூற்கல்வியை நாடும் வசதி படைத்த ஒரு சிலருக்கே வழங்கப்பட்டது.
புதிய விஞ்ஞான பாட ஏற்பாடு பல முக்கிய அம்சங்களைக் கொண்டிருந்தது. விஞ்ஞானம் கற்பதில் ஆய்வுகூடச் செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இவை விஞ்ஞானக் கல்வியின் மையமாக அமையவேண்டும் என்று கருதப்பட்டன. அத்துடன் இயற்கை உலகம் பற்றிய நவீன விளக்கங்கள் இடைநிலைப் பாடசாலை விஞ்ஞானக் கல்வியின் உள்ளடக்கமாக விளங்குதல் வேண்டும் என்றும் வலியுறுத்தப் - ل83 مباسالا
விஞ்ஞானிகள் எவ்வாறு தமது அறிவை விருத்தி செய்து அதனை எவ்வாறு பெளதீக, உயிரியல் மற்றும் உலகின் பிரச்சினைகளில் பிரயோகித்துப் பார்க்கின்றார்களோ அவ்வாறான அறிவாற்றல் செயற்பாடுகளைக் கொண்டதாய் புதிய ஆரம்பநிலை விஞ்ஞான பாட ஏற்பாடு அமைதல் வேண்டும் என்பது புதிய சிந்தனையாய் அமைந்தது.
இளஞ்சிறார்கள் துருவி ஆராய்தல், பகுப்பாய்வுசெய்து வகைப்படுத்தல், அளந்து மதிப்பிடல், ஊகித்தல் மற்றும் பிரச்சினைகளைத் தீர்த்தல் முதலாம் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு இயற்கை உலகின் தோற்றப்பாடு பல சிறந்த வாய்ப்புக்களைக் கொண்டதாக விளங்குகின்றது என்பது புதிய விஞ்ஞானக் கல்விச் சிந்தனையாகும்.
இவ்வாறான வளர்ச்சிப் போக்கில் இரசாயனம், பெளிதிகம், உயிரியல் போன்ற பாடங்கள் உயர் வகுப்புகளில் தனிப்பாடமாகவே கற்பிக்கப்பட்டு வந்தன. ஆயினும் பின்னர்

அவை பொது விஞ்ஞானம் அல்லது இணைந்த விஞ்ஞானம் என்ற பாடத்தில் துணைப்பிரிவுகளாகக் கற்பிக்கப்பட்டன. ஆரம்பநிலைக் கல்வியில் இவ்வேறுபாடுகளும் படிப்படியாக மறைந்தன. ஏனெனில், இந்நிலையில் துருவி ஆராய்தல், பகுப்பாய்வு செய்தல் போன்ற விஞ்ஞான செய்முறைத் திறன்களே கற்றலின் இலக்குகளாக வலியுறுத்தப்பட்டன.
விஞ்ஞானக் கல்வியில் இவ்வாறான மாற்றங்கள் இடம் பெற்றபோது விஞ்ஞானத்துடன் தொடர்புடைய வேறு (5 முக்கிய இயக்கங்கள் செல்வாக்குப் பெறத் தொடங்கின. இவற்றில் முதலாவது சூழல் பற்றிய இயக்கமாகும்.
உலகின் பெளதீக-உயிரியல் சுற்றாடலிலேயே நாகரிகமும் மனித சமுதாயமும் நிலைபெற்றுள்ளன; இச் சுற்றாடலிலேயே மனித சமுதாயமும் உணவு, உறையுள், சக்தி மற்றும் நுகர்வுப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. ஆயினும் இவ்வாறான பாரிய முக்கியத்துவம்வாய்ந்த மனிதனின் பெளதீக - உயிரியல் சுற்றாடல் பாரதூரமான சீர்கேட்டுக்குள்ளா கியுள்ளது என்பதை இச் சுற்றாடல் இயக்கம் உலகுக்கு எடுத்துக் காட்டியது.
1972ஆம் ஆண்டு ஸ்டோக்ஹோமில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித சுற்றாடல் பற்றிய மாநாட்டில் இக் கருத்துக்கள் தெளிவாக விளக்கப்பட்டன. இதன் பின் அனேகமாக, சகல உலக நாடுகளும் தாம் ஒரு சுற்றாடல் பிரச்சினையை எதிர்நோக்குவதாக ஏற்றுக்கொண்டன.
சூழல் மாசடைதல், நீர் மாசடைதல், மண் சேதமடைதல், மூலவளங்களின் அழிவு, உயிரினங்கள் எதிர் நோக்கும் அபாயம் பிரச்சினைகள் விஞ்ஞான அறிவின் பயன்பாட்டிலும் பிரயோகத் தாலும் உருவானவை என்று இன்று கருதப்படுகின்றது.
விஞ்ஞானம் இப்பிரச்னைகளின் தோற்றத்துக்கு 3(5 காரணியாக அமைந்துள்ள ن) ہوg வேளையில் இப்பிரச்னைகளுக் EST 6 தீர்வும் விஞ்ஞானத்திலேயே பொதிந்துள்ளது. அறிவை விவேகமுடனும் குறிப்பிட்ட சில உபாயங்களுடனும் பயன்படுத்தி இப்பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும்.
இரண்டாவது புதிய இயக்கம் "விஞ்ஞானமும் சமூகமும்" எனப்படுவது. 1950 ஆம் ஆண்டு தொடக்கம், சேர்த்து வைக்கப்பட்டுள்ள அணுசக்தி எப்போதாவது மாபெரும்
சோ.சந்திரசேகரன் 35

Page 25
36 கல்வியியல் கட்டுரைகள்
མའི་ வழிவகுக்கும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டது. புதிய புதிய ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது இந்த அச்சம் மேலும் அதிகரித்தது. s நாடுகளின் விஞ்ஞானிகளில் 50 வீதமானவர்கள் இராணுவத் துறையில் பணிபுரிகின்றனர் என்பது உண்மையாகும். இதனால் விஞ்ஞானம் உலகளாவிய அழிவுகளோடு தொடர்புபடுத்தி நோக்கப்படுகிறது.
1960களின் இறுதியில் மருந்தாக்க விஞ்ஞானம் பல்வேறு அபாயகரமான மருந்துகளின் உற்பத்திக்குக் காரணமாக இருந்தது என்று எடுத்துக்காட்டப்பட்டது; அத்துடன் இன்றைய விவசாய விஞ்ஞானம் பயன்படுத்தி வரும் பல்வேறு வகையான களைக்கொல்லிகள், மற்றும் J & WjT6OT உரங்களின் தீயவிளைவுகள் பற்றியும் உணரப்பட்டது.
கைத்தொழில் விரயப் பொருட்கள் எவ்வாறு சூழலை மாசுபடுத்துகின்றன என்பதும் கண்டறியப்பட்டது. இவை யாவுமே விஞ்ஞான தொழில்நுட்பச் செய்முறைகளின் விளைவுகள் என்றே மக்கள் விளங்கிக் கொண்டனர்.
விஞ்ஞான சமூக இயக்கத்தின் கருத்தின்படி நவீன விஞ்ஞான அறிவு சரியாகப் பயன்படுத்தப் படவில்லை; சரியாக நிருவகிக்கப்படவில்லை; விஞ்ஞான அறிவு எவ்வாறு பிரயோகிக்கப்படல் வேண்டும் என்பதில் பொறுப்புணர்வுமிக்க அணுகுமுறை தேவை என்பதையும் இவ்வியக்கம் எடுத்துக் காட்டியது.
பாடசாலையின் விஞ்ஞானப் பாட ஏற்பாடு தொடர்பான சீர்திருத்தங்கள் μπειψίο முக்கியமாக விஞ்ஞான உள்ளடக்கத்தையும் விஞ்ஞான ஆராய்ச்சிகளையும் கருத்திற் கொண்டனவாக இருந்தன. அச்சீர்திருத்தங்கள் புதிய விஞ்ஞான அறிவினை பாட ஏற்பாட்டில் அறிமுகஞ் செய்ய முற்பட்டன.
விஞ்ஞானம் என்ற சுற்றுவட்டத்துக்கு அப்பால் வெளியே காணப்பட்ட சமூகம் அச்சீர்திருத்தங்களில் செல்வாக்குச் செலத்தவில்லை. விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதாரண மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றங்களை ச் சீர்திருத்தங்கள் கருத்திற் கொள்ளவில்லை. சுருங்கக்கூறின் சமூகத்தோடு தொடர்பற்ற நிலையில், சமூக வெற்று நிலையில் விஞ்ஞானம் கற்பிக்கப்பட்டு வந்துள்ளது.

சோ.சந்திரசேகரன் 37
விஞ்ஞானக்கல்வியின் சமூக அம்சங்கள் பற்றி சில அறிஞர்கள் ஆராய்ந்துள்ளனர். சில நாடுகளின் விஞ்ஞானக்கல்வியில் இவ்வம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. வேறு சில நாடுகளில் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இதில் முதலாது அம்சம் விஞ்ஞான செயற்பாட்டின் சமூக இயல்பாகும். அதாவது, மனிதர்களின் வரலாற்று ரீதியான ஆராய்ச்சிகள், பரிசோதனைகள் என்பவற்றின் விளைவே விஞ்ஞானமாகும்; விஞ்ஞான அறிவு என்பது மனிதனின் மிகச் சிறந்த கண்டுபிடிப்புகளின் பெறுபேறாகும்.
விஞ்ஞான அறிவு வளர்ச்சி பல்வேறு நாடுகளைச் சார்ந்த அறிஞர்களின் தகவல் பரிமாற்றத்தில் பெரிதும் தங்கியிருந்தது. மேற்கைரோப்பாவில் 18 ஆம், 19 ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட விஞ்ஞான வளர்ச்சிக்கு இவாறான சுதந்திரமான கருத்து, தகவல் பரிமாற்றம் காரணமாக இருந்ததென்று பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அத்துடன் தேசிய எல்லைகள் யாவற்றையும் கடந்து விஞ்ஞான ஆய்வாளர்கள் இயற்கையை ஆராய்ந்ததில் ஒரு பொது அணுகுமுறையைக் கையாண்ட மையும் விஞ்ஞான வளர்ச்சிக்குக் காரணமாயிற்று.
இவ்வாறு விஞ்ஞான வளர்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்து காணப்படும் மனித, சமூக அம்சம் பாடசாலை விஞ்ஞானக் கல்வியில் பிரதிபலிக்க வேண்டும் என்று வலியுறுத்தப் படுகின்றது.
இது சமூக அம்சம் விஞ்ஞானத்தின் சமூகப் ரயோகமாகும். கைத்தொழில் மற்றும் பண்பாட்டுப் பாரம் பரியங்களிலும் மக்களின் சமூக, தனிப்பட்ட வாழ்வில் எவ்வாறு விஞ்ஞான அறிவு பயன்படுத்தப்படுகின்றது என்பதை இவ்வம்சம் புலப்படுத்துகின்றது.
மூன்றாவது அம்சம் சமூக சித்தாந்தம் என்பதாகும். விஞ்ஞானத்தின் பிரயோகத்தை மக்கள் அனுபவிக்கின்ற அதே வேளையில் அதன் பெறுமதியை மக்கள் மதிப்பீடு செய்ய வேண்டும் என்பதை இது வலியுறுத்துகின்றது. விஞ்ஞானத்தின் பிரயோகம் மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்துகின்றது; வாழ்க்கைத்தரத்தை உயர்த்துகின்றது என்றால் விஞ்ஞானம் உண்மையானது 6s (pl.6 Glgo tijuusurto. toU) սկ) պլք விஞ்ஞானம் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்துகின்றது என்றால் அது தீமையானது என்று முடிவு செய்யலாம்.

Page 26
38 கல்வியியல் கட்டுரைகள்
1964 தொடக்கம் 1974 வரை அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளில் பின்பற்றப்பட்ட இடைநிலை விஞ்ஞான பாட ஏற்பாட்டில் இவ்வாறான சமூக அம்சம் மிகக் குறைவாகக் காணப்பட்டதாகக் கண்டறியப் . لزي-اسالا
இங்கிலாந்திலும் (1980) அவுஸ்திரேலியாவிலும் (1940-1980)
நடாத்தப்பட்ட இடைநிலை விஞ்ஞான பரீட்சைகளின் கேள்விகளை ஆராய்ந்தவிடத்து; அவை விஞ்ஞானத்தின் பயன்பாடு, பிரயோகம் என்பனபற்றிய விளக்கங்களைக்
கொண்டிருக்கவில்லை என அறியப்பட்டது.
1970களிலும், 1980களிலும் விஞ்ஞானக் கல்வியாளர்கள் சமூக அம்சங்களில் கூடிய அக்கறை செலுத்தத் தொடங்கினர். அதன் பின்னரே சுற்றாடல் விஞ்ஞானக் கல்வியின் முக்கியத்துவம் உணரப்பட்டது.
இக்கல்வி ஒரு பிரச்சினை தொடர்புள்ளது; யதார்த்த நிலைமைகளைக் கருத்திற் கொள்வது; நிலைமைகளுக்குப் பொருத்தமான மாற்று ஏற்பாடுகளைக் கொண்டது; பாடசாலையின் உண்மையான சுற்றாடலையும் அதன் அயற் புறங்களையும் கருத்திற் கொள்வது; மாணவர்கள் தமது சுற்றாடல் நிலைமைகளை மேம்படுத்தத் தேவையான ஆற்றலை வழங்குவது என்று சுற்றாடல் விஞ்ஞானக் கல்வியின் பல்வேறு தன்மைகள் இனங்காணப்பட்டன.
பல நாடுகள் பின்வரும் முறையில் தமது விஞ்ஞானக் கல்வி ஏற்பாட்டில் இச்சமுக அம்சத்தையும் சுற்றாடல் விஞ்ஞானத் தையயும் புகுத்தின.
- 1975ற்குப்பின் தாய்லாந்தின் ஆரம்ப, இடைநிலைக் கல்விப்
பாட ஏற்பாடு .
- 1970 இல் அவுஸ்திரேலியா விஞ்ஞானக் கல்விச் செயற்
திட்டம்.
- இங்கிலாந்தின் பாடசாலைப் பேரவையின் ஒன்றிணைக்கப்
பட்ட விஞ்ஞான செயற்திட்டம்.
யுனெஸ்கோவின் சுற்றாடல் கல்விச் செயற்திட்டம்
சீனத்தொகை, உணவு, மூலவளம், சக்தி, சூழல் ஆகிய ஐந்து

சோ.சந்திரசேகரன்
விடயங்களைத் தெரிவு செய்தது. இவை யாவும் மனிதன் எதிர்நோக்கும் பல்வேறு சுற்றாடல் பிரச்சினைகளுடன் தொடர்புள்ளவை. 1970 களில் வளர்முக நாடுகள் தமது விஞ்ஞான பாட ஏற்பாட்டில் இவ்வம்சங்களை இணைத்துக் கொண்டன.
1982 ஆம் ஆண்டில் சைப்ரஸில் கூடிய பாட ஏற்பாட்டு வல்லுனர் மகாநாட்டில் எமது பிரபஞ்சம் மனித உடல், சுகாதாரம், போசாக்கு, உணவு, மூலவளங்கள், சனத்தொகை, சூழல் மாசடைதல், சக்தியின் பயன்பாடு, வாழ்க்கைத்தரம் போன்ற விடயங்களும் விஞ்ஞானக்கல்வியில் அடங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
1983 இல் யுனெஸ்கோவின் ஆசிய பிராந்திய அலுவலகம் "யாவருக்கும் விஞ்ஞானம்” என்ற செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தியது; விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சமூக வாழ்க்கையினதும் பண்பாட்டினதும் இணைந்த கூறுகள் என்ற கருத்தினடிப்படையில் விஞ்ஞானக்கல்வியை மறு சீரமைக்கும் முயற்சியில் இச்செயற்திட்டம் ஈடுபட்டது.
தேசிய மட்டத்தில் சுகாதாரம், போசாக்கு, விவசாயம், கைத்தொழில், சுற்றாடலைப் பாதுகாத்தல் என்பனவற்றில் மனிதப் பிரச்சினைகளைத் தீர்க்க விஞ்ஞானக்கல்வி ஒரு வலிமைமிக்க கருவியாகப் பயன்படுத்தப்படலாம் என்பதை இச்செயற்திட்டம் வலியுறுத்தியது. மேலும் விஞ்ஞானக் கல்வி மக்கள் அனைவரையும் விஞ்ஞானப்பயிற்சிபெற்ற குடிமக்களாக் குவதில் முக்கிய பங்கினை ஆற்றவேண்டும் என்றும் கருதப்
• لg5-االا
இவ்வாறு முக்கியமாக 1980களில் விஞ்ஞானக் கல்விப் பாட ஏற்பாட்டில் சமூக அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்ற கருத்து நிரந்தர இடத்தைப் பெறத் தொடங்கியது. O
39

Page 27
L TIL SFT 6006) சமூகத் தொடர்புகளும் கல்வி வளர்ச்சியும்
பாடசாலைகள் மற்றொரு அரச திணைக்களம் போன்றே பெற்றோர்களாலும் சமூகத்தாலும் நோக்கப்படுகின்றன. சமூகத்துக்கும் பாடசாலை அலுவலர்களுக்குமிடையில் குறைந்த அளவான சுமூக உறவே காணப்படுகின் • LfTL-SFPT66N) நிகழ்ச்சித் திட்டங்களின் பிரதான சமூகத்துடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணுவது; ஆயினும் பாடசாலைகள் தமது சூழலிருந்து தம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளன; சமூகமும் பாடசாலைச் செயற்பாடுகளில் அக்கறை காட்டுவதில்லை என்ற கருத்தைப் பலரும் எடுத்துக் கூறியுள்ளனர்.
எனவே, பாடசாலைகளை நடாத்துவதில் பெற்றோர்களும் நலன் விரும்பிகளும் பங்கு பெறச் செய்யும் வகையில் பாடசாலை முகாமைச் சபைகளை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் இலங்கையில் அரசாங்க மட்டத்தில் இன்று ஏற்பட்டுள்ளது. இவற்றை அமைப்பதற்கான சட்ட ஃே தற்போது தயாரிக்கப்பட்டுள்ளன.
இச்சபைகளில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், சமூக உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோர் இடம் பெறுவர். இச் சபைசகள் ஆரம்பத்தில் US T66 நிர்வாகத்தில் நேரடியாகத் தலையிடாது ஆலோச ைண வழங்கும் சபையாகவே தொழிற்படும் என்று கூறப்படுகின்றது. எதிர்காலத்தில் இச்சபைகளின் செயலாற்றல் களையும் அனுபவங்களையும் ஆராய்ந்து மேலும் அதிகாரங்களை வழங்கும் எண்ணமும் அரசுக்கு உண்டு.
இலங்கையில் uT L-SFT 6U 6èë Flypassés தொடர்புகளை வலுப்படுத்தும் வகையில் கடந்த காலங்களில் s நடவடிக்கைகள். மேற்கொள்ளப்பட்டன.
- 1960களில் வேலை அனுபவம் என்னும் நிகழ்ச்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது unt L&F nr 60d6uů பிள்ளைகளில்
 

சோ.சந்திரசேகரன் 41
சமூகத்தின் பல்வேறு வேலைத்தளங்களுக்குச் சென்று அனுபவம் பெற வேண்டியிருந்தது.
- 1972 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட தொழில் முன்னிலைப் பாடமும் இன்று நடைமுறைப்படுத்தப்படுகின்ற வாழ்க்கைத் திறன்கள் நிகழ்ச்சித் திட்டமும் பாடசாலையை சமூகத்துடன் பிணைக்கும் அம்சங்கள் கொண்டவை.
- இன்று கல்வி அமைச்சினால் நடாத்தப்படுகின்ற முறைசாராக் கல்வி நிகழ்ச்சித் திட்டங்களால் நன்மை பெறுபவர்கள் வளர்ந்தோரும் பாடசாலையை விட்டு இடையில் விலகியோரும் ஆவர். இந்நிகழ்ச்சித் திட்டங்கள் பாடசாலைகளை மையமாகக் கொண்டவை; பாடசாலை ஆசிரியர்களுடைய உதவியுடன் நடாத்தப்படுபவை.
- பாடசாலை நிர்வாகத்தைப் பயன்படுத்தும் நோக்குடன் பாடசாலைக் கொத்தணிகள் அமைக்கப்பட்டன. இவ்வாறான பன்முகப்படுத்தும் நடவடிக்கைகள் பாடசாலைகளுக்கிடையே ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தும்; மூலவளங்களைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்புகளை ஏற்படுத்தும்; அத்துடன் சமூகத்துடனும் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்க்பட்டது.
-1984 இன் பின் பாடசாலை மட்டத்தில் அபிவிருத்தித் திட்டங்களை உருவாக்க வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இவற்றில் ஒர் அம்சம் பாடசாலை - சமூக உறவுகளை மேம்படுத்து வதாகும். பாடசாலை அபிவிருத்திக்கான செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது சமூகத்தைச் சேர்ந்த சகலருடைய ஆதரவும் உதவியும் பெறப்படல் வேண்டும்.
- 1982 ஆம் ஆண்டில் ஒவ்வொரு பாடசாலையிலும் பாடசாலை அபிவிருத்திச் சங்கங்கள் அமைக்கப்பட்டன. இவற்றின்
நோக்கம் பெற்றோர், மாணவர்கள், உள்ளூர் சமூகம் ஆகியோரின் கல்வி அபிலாசைகளை நிறைவு செய்வதாகும். அத்துடன் பாடசாலைகள் சமூகத்தின் சமூக, பொருளாதார, கலாசார வாழ்க்கையின் மேம்பாட்டுக்குத் தேவையான பங்களிப்பினை வழங்கச் செய்வதும் மற்றொரு நோக்கமாகும்.
- 1979 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பெற்றோர் சாசனமும் பாடசாலைக் கல்வியைப் பொறுத்தவரையில் பெற்றேர்களின்

Page 28
42 கல்வியியல் கட்டுரைகள்
கடமைகள், உரிமைகள் பற்றித் தெளிவுற எடுத்துக் கூறியது. அச்சாசனத்தின்படி முறையாகப் பெற்றோர்களின் ஒத்து ழைப்பைப் பெறுவதற்கான ஒரு கருவியாக பாடசாலை அபிவிருத்திச் சபை விளங்குதல் வேண்டும்.
- 1976 ஆம் ஆண்டில் 100 பிள்ளைகளையும் ஒரு அல்லது இரு ஆசிரியர்களைக் கொண்ட சிறிய பாடசாலைகளின் அபிவிருத் திக்கான நிகழ்ச்சித்திட்டம் செயற்படுத்தப்பட்டது. த் திட்டப்படி இப்பாடசாலைகளின் வளர்ச்சிக்கு சமூகத்தின் ஆதரவு திரட்டப்பட்டது. சமூகத்தின் பல்வேறு செயற் பாடுகளுக்காக பாடசாலை வசதிகளைப் பயன்படுத்துவதும் இந்நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கமாகும்.
ஆசிரியயர் பயிற்சித் திட்டங்களிலும் ஆசிரியர்கள் கிராமிய சமூகத்தின் அபிருத்தியில் பங்கு கொள்ளும் வகையிலும் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் முகவர்களாகச் செயற்படவும் ஏற்ற முறையில் பயிற்சி நெறிகள் அறிமுகம் செய்யப்பட்டன.
- 1977 ஆம் ஆண்டு தொடக்கம் ஆசிரியர் கல்லூரிகளின் பாட ஏற்பாட்டில் "மக்கள் கல்வி" என்ற அம்சம் சேர்க்கப்பட்டது. இக்கல்லூரிகளின் மூலவளங்களையும் வசதிகளையும் சேர்த்து, இவ்வாறு பாடசாலை சமூகத் தொடர்புகளை மேம்படுத்து தற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் உண்மையான டாக்கம் பற்றிச் சரிவரத் தெரியவில்லை ஆயினும் பல்வேறு நன்மைகளைக் கருதியே இத்தொடர்புகள் ஊக்குவிக்கப்பட்டன.
முக்கியமாக, பாடசாலைகளைத் திறமையுடன் இயங்கச் செய்ய சமூகத்தில் காணப்படும் நிதி, மனிதவளம் மற்றும் பல்வேறு மூலவளங்களை ஒன்று திரட்டும் நோக்குடனேயே தொடர்புகள் ஊக்குவிக்கப்படுகின்றன. பல நாடுகளில் ாடசாலை வளர்ச்சிக்கு சமூகத்தின் நிதி உதவி வேண்டப் பருகின்றது. பாடசாலைகளின் முழுச்செலவையும் அரசாங் கங்கள் வழங்கமுடியாத நிலையும் உள்ளது. சமூகத்தின் நிதி விரிவாகப் பயன்படுத்தும்போது, TT sids வழங்கும் கல்வியின் பெறுமதியும் அதிகரிக்கின்றது.
பாடசாலை - சமூக ஒத்துழைப்பின் காரணமாக பெற்றோர்கள் பாடசாலை நிர்வாகத்தில் பங்கு கொள்ளும் வாய்ப்புகளும் கிட்டுகின்றன; அவர்கள் t.JTL-85 TT 6)ổU தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதிலும் பங்கு கொள்ள முடிகின்றது. இதனால் பாடசாலைக் கல்வியின் பரந்த

சோ.சந்திரசேகரன் 43
நோக்கங்கள், அவற்றை அடைவதற்கான செயற்பாடுகளில் பாடசாலை நிர்வாகமும் பெற்றோரும் ஒருமித்த கருத்தைக் கொள்ள முடிகின்றது. மேலும் பெற்றோர்கள் கல்வியின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வையும் பெறுகின்றனர்.
TL&FT 6596) சமூகத்தொடர்பு மாணவர்களின் கற்றல் செயற்பாட்டையும் பல்வேறு வழிகளில் மேம்படுத்தப் படுகின்றது. பாடசாலைகள் எவ்வளவு உயர்தரமான கல்விப் பயிற்சியை வழங்கினாலும் பிள்ளைகளின் வீட்டுச் சூழல் கல்வியறிவு வளர்ச்சிக்குப் பொருத்தமாக அமைய வேண்டும். பிள்ளைகள் நன்கு படிப்பதற்கு எவ்வாறு பெற்றோர் உதவலாம்? எவ்வாறு வீட்டில் தகுந்த சூழ்நிலையை ஏற்படுத்தலாம் என்பது பற்றிப் பாடசாலைகள் பெற்றோருக்கு அறிவுறுத்த முடியும்,
ஆசிரியர்கள் மாணவர்களின் குடும்பச் சூழலை அறிந்து அதற்கேற்பத் தமது கற்பித்தல் முறைகளைத் திருத்தி அமைத்துக்கொள்ள முடியும். பாடசாலைகளுடன் ஊடாடுவ தனால் பெற்றோர்கள் கல்விக் கொள்கை, பாட ஏற்பாடு பற்றியும் அறிந்து கொள்ள முடியும்.
பாடசாலை - சமூகத் தொடர்பின் காரணமாக பாட ஏற்பாட்டை மக்களின் தேவைகளுக்கும் பிரச்சினைகளுக்கும் ஏற்ப திருத்தி அமைத்துக் கொள்ள முடியும். பாடசாலைகள் சமூகத்தை நன்கு அறியும்போது சமூக நோக்கங்களை நிறைவு செய்யும் வகையில் பாட ஏற்பாட்டை உருவாக்க முடியும். பொருத்தமான பாட ஏற்பாடு என்பது பிள்ளைகளை உழைக்கும் உலகுடன் தொடர்புபடுத்துவதாகும். முழுமையான நூல்சார் கல்வி முறையில் மாற்றம் கொண்டுவர இது உதவும்.
சமூகத்தின் தேவைகளைப் பொறுத்த வரையில் பாடசாலைகள், சமூகத்திலுள்ள வளர்ந்தோருக்கும் பாடசாலையை விட்டு விலகியோருக்கும் கல்வி வழங்க முடியும். பேரு, இங்கிலாந்து, தான்சானியா, ஆகிய நாடுகளில் பாடசாலைகள் இவ்வாறான பணிகளைச் செய்து வருகின்றன.
தான்சானியாவில் சகல ஆரம்பப் பாடசாலைகளும் ஆரம்பக் கல்வி வழங்குவதுடன் வளர்ந்தோர் கல்வி நிலையங்களாகவும் விளங்குகின்றன. இங்கிலாந்திலுள்ள சில பாடசாலைகள் Udst 606V நேர வகுப்புகளை வளர்ந்தோரின் கல்வி மேம்பாட்டுக்கென நடாத்துகின்றன.

Page 29
44 கல்வியியல் கட்டுரைகள்
பாடசாலைகள் தமது சமூகத்தின் வளர்ச்சியில் கூடிய அக்கறை செலுத்தும்போது அவை சமூகத்தின் தீவிரமான ஆதரவைப் பெறமுடியும். தான்சானியாவில் ஆசிரியர்களும் மாணவர்களும் உணவு, சுகாதாரம்; விவசாயத்தின் 'ရှိို என்பவற்றின் முக்கியத்துவத்தை கிராமங்கள் தோறும் பரப்புகின்றன; மலேசியாவில் சமூக மேம்பாட்டுக்கான செயற்திட்டங்களில் மாணவர் ஈடுபடுத்தப்படுகின்றனர். சமூகத்தின் தேவைகளை நன்கு விளங்கிக் கொள்ளக் கூடிய ஒரு நிறுவனம் பாடசாலையாகும்.
பாடசாலைக் கட்டிடங்களும் பல்வேறு வழிகளில் சமூகத்துக்கு உதவலாம்; கூட்டங்கள், விழாக்கள், வைபவங்கள் என்பவற்றை நடாத்த இவை பயன்படும். வளர்ந்தோர் கல்வி வகுப்புகளுக்கு பாடசாலைச் சாதனங்கள் பயன்படுத்தப்படலாம். இது பாடசாலையையும் சமூகத்தையும் நன்கு பிணைக்க உதவும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.
பல நாடுகளில் பாடசாலைகளைக் கட்டுவதற்கு சமூகம் பேருதவி புரிந்து வருகின்றது. தாய்லாந்தில் பாடசாலைகளின் மூலதனச் செலவு, நடைமுறைச் செலவு, என்பனவற்றை சமூகம் வழங்குவது இப்போது ஒரு வழக்கமாகிவிட்டது. நேபாளத்தில்; சமூகம் நிலத்தை மானியமாக வழங்குகிறது; சமூக -றுப்பினர்கள் பாடசாலைகளைக் கட்டுவதற்கு இலவசமாகத் தமது உழைப்பை வழங்குகின்றனர்.
- பாடசாலை - சமூக ஒத்துழைப்பினுடைய வெற்றி
ஆசிரியர்களிலும் தங்கியுள்ளது. ஆசிரியர்கள் பாடசாலையைச்
சூழ உள்ள சமூகத்தைச் சேர்ந்தவர்களாயின் சிறந்த
பாடசாலைத் தொடர்புகள் ஏற்பட முடியும். மேலும் ஆசிரியர்கள் தொடர்ந்து நீண்டகாலமாக இடமாற்றம் பெறாது பணியாற்றும் பாது சிறந்த பாடசாலை-சமூகத் தொடர்புகள் ஏற்பட
(ջնչպմ).
- சில ஆய்வுகளின்படி இத்தொடர்புகளைச் சிறப்புற
ஏற்படுத்துவதில் பாடசாலை நிர்வாகத்திற்கும் முக்கிய
பங்குண்டு. நிர்வாகிகளின் சில தனிப்பட்ட குணாதிசயங்கள்
சமூகத்தினுடைய ஒத்துழைப்பைப் பெற உதவி புரிகின்றன.
அவர் நேர்மையாகவும் நம்பிக்கைக்குப் பாத்திரமாகவும் சினேக பூர்வமாக நடக்குமிடத்து பாடசாலை சமூகத் தொடர்புகள்
மேம்பட இடமுண்டு.
- பாடசாலையும் சமூகமும் சிறந்த முறையில் தொடர்புகளை

சோ.சந்திரசேகரன் 45
ஏற்படுத்துவதில் சில பிரச்சினைகளும் உண்டு. ஆசிரியர்கள் போதிய பயிற்சியும் நேரமும் இல்லாதவிடத்தும், அவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இடையே சமூக ரீதியான, உளவியல் ரீதியான இடைவெளி காணப்படுமிடத்தும் அது ஒரு தடையாக Ց|6DLDպմ). ஆசிரியர்கள் சமூகத்தினுடைய பல்வேறு செயற்பாடுகளில் பங்கு கொள்ளாதவிடத்து பாடசாலை சமூகத்துடன் சிறந்த தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியாது; பெற்றோர் ஆசிரியர்களிடம் யதார்த்த பூர்வமாக எதிர்பார்புகளைக் கொண்டிருந்து பின்னர் ஏமாற்ற நிலையை அடைவதும் இவ்வாறான தடைகளில் ஒன்று.
சில சந்தர்ப்பங்களில் கல்வி நிர்வாகமும் இதற்கான ஒரு தடையாக அமையும். கல்வி நிர்வாகிகள் சில வேளைகளில் பாடசாலை-சமூகத் தொடர்புகளின் முக்கியத்துவத்தைக் கருத்திற் கொள்வதில்லை. நிதி தொடர்பான விடயங்களில் பல்வேறு சிக்கலான விதிமுறைகள் இருப்பது சமூகம் பாடசாலையின் முன்னேற்றத்தில் பங்கு கொள்வதைத் தடுக்கின்றது. வெளியார்கள்; பாடசாலை வசதிகளைப் பயன்படுத்துவதைச் சில நிர்வாகிகள் விரும்புவதில்லை. O

Page 30
மரபுவழிப் பாடசாலைகளும் முற்போக்குப் பாடசாலைகளும்
மரபுவழிப் பாடசாலைகள் "முறைசார்ந்த பாடசாலை" என்றும் முற்போக்குப் பாடசாலைகள் "முறைசாரா" பாடசாலைகள் என்றும் அழைக்கப்படுவன. இவ்விரண்டும் முற்றாகவே வெவ்வேறானவை என்று கூறுவதற்கில்லை. ஒருவகைப் பாடசாலையின் சில அம்சங்கள் மற்றப் பாடசாலையிலும் காணப்படுவதுண்டு. முறைசார்ந்த மரபு வழிப்பாடசாலையில் தொடர்ச்சியாகப் பாடப் பயிற்சிகளும் மனனம் செய்தலும் முறையான ஆசிரியர் வழிகாட்டலும் பாடச் சோதனைகளும் இடம்பெறும்.
ஆசிரியர் தலைமைதாங்கி வகுப்பறைப் பாடத்தை நடாத்தும் “முறைசார்ந்த வகுப்பில்" மேசைகள், நாற்காலிகள் என்பன ஒழுங்குசெய்யப்பட்டிக்கும். முழு வகுப்பறைச் செயற்பாடும் ஆசிரியரை மையமாகக் கொண்டிருக்கும்; பாட ஏற்பாட்டின் ஒவ்வொரு அம்சத்தையும் கற்பித்து முடிக்க சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்; முழு வகுப்பையும் ஒன்றாக வைத்துக் கற்பிப்பதற்கு முழு முக்கியத்துவம் வழங்கப்படும்.
கல்வியின் இலக்குகளை அடைதல், மாணவர்களின் மேம்பாடு, இதற்கான கால அட்டவணையை ஒழுங்கு செய்தல், கற்பித்தல் முறைகளைத் தெரிவு செய்தல், தேவையான கற்பித்தல் சாதனங்களையும் துணைக் கருவிகளையும் தெரிவு செய்தல் என்பன யாவும் ஆசிரியர்களின் பொறுப்பில் விடப்படுகின்றன. மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கான இயக்குனர் என்ற முறையில் ஆசிரியர் பங்களிப்பினைச் செய்கின்றார்.
மரபுவழிப் பாடசாலையில் ஆசிரியரின் நேரடியான கல்விப் போதனையே பிரதான அம்சமாக அமைகின்றது. இதனால் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டை ஆசிரியர் தொடர்ச்சியாக மேற்பார்வை செய்வது அவசியமாகிறது. மேற்பார்வை செய்யப்படாத மாணவர்கள் பாடங்களில் குறைந்த சித்திகளைப் பெறுவதாகப் பல கல்வியியல் ஆய்வுகள் சான்று பகருகின்றன.
 

சோ.சந்திரசேகரன் 47
ஆசிரியரின் நேரடிக் கற்பித்தலோடு இணைந்து காலத்துக்குக் காலம் மாணவர்களின் கல்வித் தேர்ச்சி ஒழுங்காக மதிப்பீடுசெய்யப்படுகின்றது. இதற்குத் தரப்படுத்தப்பட்ட பரீட்சைகளும், “ஆசிரியர்கள் தயாரிக்கும் பரீட்சைகளும் பயன்படுத்தப்படுகின்றன. மாணவர்களுடைய தேர்ச்சி, மதிப்பீடு செய்யப்பட்டு உடனடியாக அவர்களுடைய குறைபாடுகளை நீக்குவதற்கான முறையில் அவர்களுக்குத் திரும்பவும் ಕ್ಲೌ மாணவர்கள் கல்வியில் மேம்பாடு அடைகின்றனர் என்பது சில கல்வியியல் ஆய்வுகள் கண்டறிந்த முடிவாகும்.
முறைசார்ந்த வகுப்புகளில் மாணவர்கள் மதிப்பீடு செய்யப்பட்டு புள்ளிகளும் தரங்களும் வழங்கப்படுவதால் மாணவர் மத்தியில் போட்டியும் ஊக்குவிக்கப்படுகின்றது. மாணவர்களின் கல்வித் தேர்ச்சிபற்றிய மதிப்பீடுகள் ಸಸಿ இலக்குகளுடன் தொடர் புள்ளவை. கல்வி நிர்வாகம், பாட ஏற்பாட்டைத் தீர்மானித்து அதற்கான கல்வி இலக்குகளைத் தெளிவுற வகுக்கின்றது; மாணவர்கள் இவ்விலக்குகளை அடைந்துகொள்ள ஆசிரியர் அவர்களுக்கு உதவுகின்றார். இவ்வாறான இலக்குகளைத் தெரிவு செய்வதிலும் உருவாக்குவதிலும் அவற்றை மதிப்பீடு செய்வதிலும் மாணவர்களுக்கு எதுவித பங்குமில்லை.
முறைசார்ந்த வகுப்பறைகளில் மாணவர்கள் தாம் நினைத்தவாறு உலவித் திரிய முடியாது; தமக்குள் பேசிக் கொள்ளவும் அனுமதிக்கப்படமாட்டார்கள். வகுப்பறை கவனமான முறையில் நிருவகிக்கப்படுவதும் அங்கு ஒழுங்கான சூழல் நிலவுவதும் இம்முறைசார்ந்த பாடசாலையின் மற்றும் சில முக்கிய இயல்புகளாகும்.
மாணவர்கள் சுதந்திரமாக இயங்குவதற்கு எவ்வித வாய்ப்பும் இல்லை; கற்றலோடு தொடர்புள்ள செயற்பாடுகளில் மட்டுமே அவர்கள் ஈடுபட முடியும். மாணவர்களுடைய கவனம் எப்போதுமே ஒருநிலைப்பட்டதாக இருக்க வேண்டும் என்று எப்போதுமே வலியுத்தப்படும்; ஆசிரியர்களுடைய வினாக்கள் நேரடியானவையாகவும் கச்சிதமானவையாயும் இருக்கும்; விடைகளும் அவ்வாறே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும்.
இவ்வாறான மரபுவழி வகுப்பறைகளினால் சில அனுகூலங்கள் உண்டு.
மரபுவழி வகுப்பறைகளில் கற்பித்தல் இலக்குகள் திட்டவட்டமானவையாக அமையும்.

Page 31
48 கல்வியியல் கட்டுரைகள்
- எனவே, அதற்கேற்ற கற்பித்தல் முறைகளைத் தீர்மானித்துக் கொள்ள முடியும்.
- மாணவர்களுடைய கற்றல் இலக்குகளும் வகுப்பறைச் செயற்பாடுகளும் ஓர் அமைப்புக்குள் அடங்குவதால், வகுப்பறை திறமையாகச் செயற்படும் சில மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக இந்த ஏற்பாடு கற்றலை இலகுபடுத்தும்.
- பரீட்சையில் மாணவர்கள் தேர்ச்சியுறுவதை உறுதிசெய்ய அவர்களுடைய குறைகளை முறையாகக் கண்டறிந்து, ஆய்வு செய்து, சரிசெய்ய போதிய ஏற்பாடுகளைக் கொண்டதாக முறைசார்ந்த பாடசாலை விளங்குகின்றது.
நெறிப்படுத்தப்பட்ட செயற்பாடுகள், மற்றும் பயிற்சிகளினூடாக அறிவாற்றல் திறன்கள் நன்கு வளர்க்கப் படுகின்றன. முறைசார் பாடசாலையில் சில குறைபாடுகளும் உண்டு
- இப்பாடசாலைகள் இளஞ்சிறார்களுக்குக் கவர்ச்சிகரமான் வையாக அமைவதில்லை.
மாணவர்களுடைய சமூக வளர்ச்சி, மன வளர்ச்சி என்பன வேறுபட்டனவாக இருக்கும். மரபுவழிப் பாடசாலை குறிப்பாக மாணவர்களில் காணப்படும் தனியாள் வேறுபாடுகளுக்கு ஏற்ப நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையற்றது.
- பாடங்களைக் கற்றுத் தேர்வில் சில விசேட பிரச்சினைகளை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு மரபுவழிப் பாடசாலை அதிகம் பொருந்துவதில்லை.
- அறிவாற்றல் தவிர்ந்த ஏனைய கல்விக் குறிக்கோள்களை மரபு வழிப்பாடசாலை திறம்பட நிறைவேற்ற முடியாது. பல்வேறு துறை சார்ந்த அறிவினை வழங்குவதில் தீவிர அக்கறை செலுத்தப்படுவதனால் மாணவர்களுக்குத் தேவையான சிறந்த உளப்பாங்குகளை வழங்குவதில் இப்பாடசாலைகள் தவறி
விடுகின்றன.
முறைசார்ந்த பாடசாலைகளுக்குப் பதிலாக "முறைசாரா பாடசாலைகள்" அல்லது "திறந்த கல்வி" என்ற கோட்பாட்டை (p6ir வைத்தவர்கள் முற்போக்குக் கல்வியாளர்கள் எனப்பட்டனர். இவர்களுடைய கருத்தின்படி வகுப்பறைகள் நெகிழ்ச்சியுடையனவாய் இருத்தல் வேண்டும்.

சோ.சந்திரசேகரன் 49
fT L T SD 6) அமைப்பு, ஆசிரியர் கற்பித்தல், மாணவர்களினுடைய செயற்பாடுகள் என்பவற்றில் திட்டமான விதிமுறைகள் இருக்கக்கூடாது; ஒரு குறிப்பிட்ட முறைசார்ந்த வகையில் இவை அமையக்குடாது; முறைசாரா பாடசாலையில்
கட்டிட அமைப்பு வேறுபட்டதாக அமைய வேண்டும். திறந்த பாடசாலைகளில் வகுப்பறைகளைப் பிரிக்கும் நிரந்தரமான சுவர்கள் இருக்கக் கூடாது. வகுப்பறைக்கு உள்ளேயும் வெளியேயும் இடம்பெறும் கற்றல் செயற்பாடுகளை ஒன்றிணைக்கும் வகையில், வகுப்பறையின் வடிவமைப்பு அமைந்திருத்தல் வேண்டும். மாணவர்கள் தனித்திருந்து கற்பதற்கான சிறு அறைகள் இருத்தல் வேண்டும்.
பல்வேறு திறந்த பாடசாலைகளும் மாணவர்களை மையமாகக் கொண்ட கற்றல் சூழ்நிலையை வலியுறுத்தும்வகையில் synsnuoff sor கலைப்பொருட்களையும் செவிப்புல-கட்புல சாதனங்களையும் பாட ஏற்பாட்டுத்துணைக் கருவிகளையும் கொண்டனவாக இருக்கும்.
முறையான வகுப்பறையில் ஆசிரியர் கற்றற் செயற்பாட்டின் மையமாக அமையுமிடத்து முறைசாரா வகுப்பறையில் கல்விப் போதனை மாணவர்களை at Lou Dress கொண்டு நடைபெறுகிறது. மாணவர்களுடைய சொந்த முயற்சிகளின் அடிப்படையில் கற்றல் அனுபவங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன; உருவாக்கப்படுகின்றன.
மாணவர்கள் சுதந்திரமாக, மேற்பார்வை எதுவுமின்றி தனியாகக் கல்வி பயில வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. திறந்த வகுப்பறையில் மாணவர்கள் நேரத்தில் பல்வகைப்பட்ட பணிகளில் ஈடுபட்டிருப்பர். முறைசார்ந்த வகுப்பிற் போன்று சகல மாணவர்களும் ஒரே கற்றல் பணியைச் செய்வதில்லை. மாணவர்களினுடைய பல்வேறு வகைப்பட்ட பணிகளுக்கேற்ப வகுப்பறைகளில் மாணவர் அமரும் ஒழுங்கும் மாற்றப் பட்டிருக்கும்.
இவ்வாறான பல்வகைப்பட்ட கற்றல் பணிகளுக்கு இடமளிக்கப் படுவதனால் வாசிப்பு, கணிதம் போன்ற கல்விசார் பாடங்களுக்கு போதிய நேரம் ஒதுக்கப்படுவதில்லை.
முறைசாரா பாடசாலையில் மாணவர் சுதந்திரம் வலியுறுத்தப்படுகின்றது, கண்டுபிடிப்புகளையும் பல்வகைப்பட்ட அனுபவங்களையும். சுயமரிகக் கற்றலையும்-ஆக்குவிக்கக்கூடிய

Page 32
50 கல்வியியல் கட்டுரைகள்
கற்றல் சூழ்நிலையை வகுப்பறையில் உருவாக்குவது ஆசிரியர் பணியாகும்.
மாணவர்கள் தமது கற்றற் செயல்பாடுகளைத் தாமே சிந்தித்து உருவாக்கவும் தம கற்றலுக்குத் தாமே பொறுப்பேற்கவும் தேவையான சூழ்நிலைகளை ஆசிரியர்கள் தமது அறிவை மட்டுமன்றி தேவையான உளப்பாங்குகளையும் வளர்த்துக் கொள்வர்.
முறைசார்ந்த பாடசாலையிலு போட்டி அம்சம் முக்கியத்துவம் பெறுதில்லை. கற்றல் செயற்பாடுகளில் மாணவர் கூடிய அளவுக்கு ஒன்றிணைந்து, ஒத்துழைத்துப் பணிபுரிகின்றனர். பெரும்பாலான வகுப்பறைப் பணிகள் விளையாட்டுக்கள் போன்றும் மாணவர்களின் சுய வெளிப்பாட்டுக்கு இடமளிப்பன வாகவும் அமையும்.
முறைசார்ந்த பாடசாலையில் தனிப்பட்ட மாணவனின் பல்வேறு வகைப்பட்ட விருத்திக்கான சூழலை ஏற்படுத்துவதும் அதனை மேம்படுத்துவதும் ஆசிரியர் பணியாக அமைகின்றது. முறைசாரா பாடசாலை அமைப்பை ஆதரிக்கும் அறிஞர்கள் இவ்வாறான DIT (STSA விருத்தியை அடைந்துகொள்ள மாணவர்களுடைய சிந்தனைகளையும் கருத்துகளையும் பயன் படுத்திக் கொள்ளமுடியும் என்பர். அவர்களுக்குப் போதிய கற்றல் சாதனங்களையும் செயற்பாடுகளையும் வழங்கி அவர்களுடைய சுயமாக இயங்கும் ஆற்றலை மேம்படுத்தி தமது பிரச்சினைகளைத் தாமே தீர்த்துக் கொள்ளும் திறன்களை வழங்கலாம் என்பது இவ்வறிஞர் கருத்தாகும்:
மாணவர்களால் தெரிவுசெய்யப்பட்ட கற்றற் பணிகளில் ஆசிரியர்களும் பங்கு கொள்கின்றனர்; மாணவர்கள் ஒழுங்கு செய்த செயற்றிட்டங்களிலும் பரிசோதனைகளிலும் விளையாட் டுகளிலும் ஆசிரியர்கள் தமது பங்களிப்பை வழங்குகின்றனர்.
ஆசிரியர்கள் பல்வேறு வகைப்பட்ட வினாக்களை எழுப்பி அவற்றுக்குப் பல்வேறு விடைகளையும் விளக்கங்களையும் பெறுகின்றனர்.
இவ்வாறு முறைசாரா பாடசாலையில் தனிப்பட்ட மாணவன்மீது மிகுந்த அக்கறை காட்டப்படுகின்றது; ஆயினும் அவனுடைய கல்வித் தேர்ச்சியயும் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படுவதில்லை. இந்நிலையில் மாணவனின் கற்றல்

Frassérie as rair 5
சூழ்நிலையில் ஓர் ஒழுங்கு முறை இருப்பதில்லை. மாணவர் களுக்குத் தொடர்ச்சியாக ஆசிரியர் வழிகாட்டுவதில்லை. இதனால் பல மாணவர்கள் கூடிய அளவுக்குப் பதட்டம் அடைய நேரிடுவதாகச் சில ஆய்வுகள் கூறுகின்றன.
இவ்வாய்வுகளின்படி, முறைசாரா பாடசாலைகளில் நோக்கங்கள் தெளிவற்றிருப்பதும் ஆசிரியர்களின் வழிகாட்டலின்மையும் E. கல்வித்தேர்ச்சி குறைவதற்குக் காரணமாக உள்ளன. அத்துடன் அறிவுசார் நோக்கங்களில் அதிக அக்கறை செலுத்தப்படுவதில்லை.
மொழி, கணிதம், சமூக அறிவியல் ஆகிய கல்விசார் பாடங்களுடன் தொடர்பற்ற செயற்பாடுகளிலேயே இப் பாடசாலைகள் கூடிய அக்கறை செலுத்தின. இன்ன பாடங்கள் இன்ன நேரத்தில் கற்பிக்கப்படும் என்ற வரையறை எதுவுமின்றி கற்றல் பணி நடைபெறுகின்றது. முறையில் பாடசாலைகளின் பாட ஏற்பாடு ஒன்றிணைக்கப்பட்டது என்று கூறப்படுகின்றது.
அதாவது கல்விசார் பாடங்களுக்கென்று விசேடமாக நேரம் ஒதுக்கப்படுவதில்லை. கற்றல் செயற்பாடுகள் பல்வேறு பாட உள்ளடக்கங்களைக் கொண்டனவாக அமைகின்றன. மாணவர்கள் தாம் விரும்பிய பாட விடயத்தில் வேண்டிய அளவு நேரத்தைச் செலவிட அனுமதிக்கப்படுகின்றனர்.
இவ்வாறான முறைசாராக் கல்வி கூடிய அளவுக்கு மனித இயல்புகளுக்கு முக்கியத்துவம் தருவதாகவும் மாணவரை மையமாகவும் கொண்டமைந்த போதிலும் வகுப்பறைகளில் ஆசிரியரின் நேரடியான போதனை அதிகம் இடம் பெறுதில்லை. இம்முறையில் வகுப்புகளில் டம்பெறும் பல்வேறு செயற்பாடுகள் மாணவர்களின் வாசிப்புத்திறன், கணித அறிவு என்பவற்றில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை.
முறைசாரா பாடசாலைகளுக்காக வாதிடுபவர்கள் முறைசாரா கல்வியின் இலக்குகளையும், ஒழுங்குற அமைக்கப்படாத வகுப்பறைகளின் கல்விசார் விளைவுகளையும் நேரடியாக அளந்து கொள்ள முடியாது என்பர்; அவற்றை நீண்ட காலத்திலேயே உணர்ந்துகொள்ள (տկչպմ, என்பது அவர்களுடைய கருத்து.
எவ்வாறாயினும் முறைசாரா பாடசாலைகள் தமது நெகிழ்ச்சித் தன்மையையும் தனித்தன்ம்ையையும் கைவிடாது, கல்வியின் இலக்குகளை தெளிவுற வகுத்து அதற்கேற்ப பாட ஏற்பாட்டைத்

Page 33
52 கல்வியியல் கட்டுரைகள்
தயாரிக்க வேண்டும் என்றும் வாதிடப்படுகின்றது. மாணவர்களுக்குச் சுதந்திரம் வழங்குதல், வகுப்பறை ஒழுங்குகளில் நெகிழ்ச்சித்தன்மை, மாணவர்களுடைய தேவை களுக்கு முக்கியத்துவம் வழங்குதல் போன்ற விடயங்களில் அதிக அக்கறை செலுத்துவதால், முறைசாரா பாடசாலைகள் மாணவர்களுக்குப் பொருத்தமான கல்விக் குறிக்கோள்களைத் தயாரிப்பதில் தவறிழைக்கின்றன என்பது சில அறிஞர்களின் கருத்தாகும்.
முறைசார்ந்த UTSTs) முறைசாரா UT : 7 6Để என்பனவற்றின் தன்மைகள் பற்றி இவ்வாறு திட்டமாக வேறுபடுத்திக் கூறமுடியும். ஆயினும் நடைமுறையில் இயங்கிவரும் பாடசாலைகளை இவ்வாறு இரு வகையாகப் பிரித்துக் கூறமுடியுமோ என்பது ஐயத்துக்குரியதாகும். தனிப்பட்ட வகுப்புகளை நிதானமாக ஆராயும் போது இவ்விரு வகைப்பட்ட பாடசாலைகளின் இயல்புகளையும் அங்கு காணமுடியும்; வை பற்றிய ஆய்வுகள் இவ்வியல்புகளை இனங்கண்டு பிரித்தறிந்துள்ளன.
அதனால் முறைசாரா பாடசாலைகள் எனக் கூறப்படுபவை மேலும் பயனடையும் நிலையில் உள்ளன. அவை தமது கல்விக் குறிக்கோள்களை மேலும் நன்கு தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் மாணவர்கள் மேலும் சிறந்த முறையில் மதிப்பீடு செய்யப்படவேண்டும் என்பதும் முறைசாரா பாடசாலைகளுடைய மேம்பாட்டுக்கு உதவக் கூடிய கருத்துக் களாகும்.

கல்வி முறையின்
வினைத்திறனும் விரயமும்
கடந்த சில தசாப்தங்களாக ஆசிய வளர்முகநாடுகளில் கல்வி வசதிகள் நன்கு விரிவுபடுத்தப்பட்டு, ஆரம்பக்கல்வி மாணவர் தொகை 30 ஆண்டுகளில் இருமடங்காயிற்று. "யாவருக்கும் ஆரம்பக்கல்வி" எனும் நோக்கினை அடையும் வகையில் கல்விக்கான தேவைகளை நிறைவுசெய்ய பாடசாலை கட்டிடத் தொகுதிகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டன. புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். கல்விக்கான நிதி அதிகரிக்கப்பட்டது. இவ்வாறான முயற்சிகளுக்கிடையில் இந்நாடுகளின் மக்களில் usuf தேநீே காணப்படுகின்றனர் என்பதும் உண்மையே.
இந்நிலையில் இந்நாடுகளின் கல்வி நிர்வாகிகள், உருவாக்கப் பட்டடுள்ள சகல கல்வித்துறை மூலவளங்களும் முழுமையாக பயன்படுத்தப்பட்டால் மட்டுமே பாடசாலை வயதுப் பிள்ளைகள் அனைவரையும் பாடசாலைகளில் சேரச் செய்ய முடியும். அவர்கள் இடையில் விலகாது பாடசாலைக் கல்வியின் முழுக் பயன்களையும் அடைந்து குறைந்தபட்சம் எழுத்தறிவுள்ளவர் is sits ஆகவேண்டுமென்பதில் அதிக அக்கறை செலுத்துகின்றனர். அண்மைக்கால யுனெஸ்கோ ஆய்வுகளின் (1989) படி ஆசிய நாடுகளில் 540 லட்சம் பிள்ளைகள் பாடசாலைகளில் சேராதவர்கள்; 240 லட்சம் பிள்ளைகள் இடையில் விலகுவோர் என்று கண்டறியப்பட்டுள்ளது. இப்பிரச்சினைகளுடன் மாணவர்கள் ஒரே வகுப்பில் திரும்பத் திரும்பக் கற்கும் பிரச்சினையும் உண்டு. இவை யாவும் கல்வி மூலவளங்கள் தொடர்ந்து விரயமாக்கப்படுவதையும் கல்விமுறைகளின் வினைத்திறன் குறைபாட்டையும் (ineticiency) எடுத்துக்காட்டுகின்றன.
கல்வித்துறையில் விரயம் (wastage) என்பது இரு அம்சங்களை
உள்ளடக்கும்.
- ஒரே வகுப்பில் மாணவர்கள் திரும்பத் திரும்பக் கற்கும்
s)).

Page 34
54 கல்வியியல் கட்டுரைகள்
- பாடசாலைகள் முடிவைடையும் முன்னர் மாணவர்கள் இடை
யில் விலகுவது.
- திரும்பக்கற்றல், இடையில் விலகுதல் தொடர்பான வீதாசார ங்கள் கல்விமுறையின் வினைத்திறன் - செயற்றிறனை - மதிப்பிட உதவுகின்றன.
மனிதனின் மேம்பாடுபற்றிய ஒரு பரந்த கருத்தில், கல்வித்துறை விரயம் என்பது பின்வரும் நோக்கங்கள் தோல்வியுற்றமையைக் கருதும்.
- பாடசாலை வயதெல்லையிலுள்ள பிள்ளைகள் அனைவரையும்
பாடசாலையில் சேரச் செய்தல்.
- பாடசாலைக்கல்வி முடிவடையும் வரை அவர்கள் தொடர்ந்து
கற்பதை உறுதி செய்தல்,
- அவர்களுக்குத் தேவையான கற்றல் திறன்களையும் சமூக
மனப்பாங்குகளையும் வழங்குதல்.
- கிடைக்கக்கூடிய மூலவளங்களை உச்சமாகப் பயன்படுத்தல்.
இவ்விடயங்களைப் பொறுத்தவரையில் வருகைதராமை, ஒழுங்கற்ற வரவு நீண்டகாலத்துக்கு நீடிப்பது போன்ற நிகழ்
வுகள் கல்வித்துறையின் விரயத்திற்குப் பங்களிப்புச் செய்கின்றன. இதன் காரணமாகவே மாணவர்கள் ஒரே வகுப்பில் திரும்பக் கற்க நேரிடுகிறது. தொடர்ந்து திரும்பக் கற்கும் மாணவர்களே கூடிய அளவுக்குப் பாடசாலையிலிருந்து இடையில் விலகுகின்றனர் என்பது ஆய்வாளர்கள் முடிவு.
கல்வியாளர்கள் மாணவர்களின் கல்வித் தேர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள். அவர்களின் நோக்கில் அக்கல்விச் செயற் பாடும் வாசிப்பு, எழுத்து, கணக்கு போன்ற அடிப்படைத் திறன்களையும் அறிவு, ஆக்கத்திறன் சிறந்த உளப்பாங்குகள் என்பவற்றை வழங்குபவையாய் இருத்தல் வேண்டும். இல்லாவிடில் அக்கல்விச் செயற்பாடு வினைத்திறன் அற்றதாகும்.
மனித சாதன விருத்தி எனும் நோக்கிலிருந்து பார்க்குமிடத்து கல்வி முறைக்கும் உழைக்கும் உலகுக்கும் \ தொடர்பிருத்தல் வேண்டும், அதாவது பயிற்றப்படும் மாணவர்கள் பொருளாதார முறையின் மனிதவலுத் தேவைகளை நிறைவுசெய்பவர்களாக

GIFT. Is išly GF es y air 55
ருத்தல் வேண்டும், கல்வி கற்றோர் வேலையற்றிருக்கும்
லை, அவர்களுடைய உற்பத்தித்திறன் குறைந்திருத்தல் என்பனவும் கல்வி முறையில் ஏற்படும் விரயத்தையே கருதுவதாகும்.
பொருளியலாளரின் நோக்கில் பாடசாலைகள் பயன்படுத்தும் மூலவளங்கள், காலம் என்பவற்றுக்கேற்ப அவை கற்றோரை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் உருவாக்க வேண்டும். இல்லாவிடில் கல்விமுறையில் விரயம் ஏற்படுவதாகவே கருதமுடியும். சில சந்தர்ப்பங்களில் அளவுக்கதிகமான முதலீடு, மூலவளங்கள் முழுமையாகப் பயன்படுத்தாமை என்பனவும் கல்வித்துறையில் விரயத்தை ஏற்படுத்தும்.
கல்வித்துறையில் ஏற்படும் விரயம் பற்றிய ஆய்வுகள் பின்வரும் அம்சங்களில் கூடிய கவனம் செலுத்தின.
மாணவர்கள் பாடசாலையில் சேர்ந்து பயிலாத நிலை. ஒரே வகுப்பில் திரும்பக் கற்றல்.
பாடசாலையிலிருந் இடையில் விலகல். குறைந்த கல்விச் 醬 op கல்விக்கான மூலவளங்கள் குறைவாகப் பயன்படுத்தப்படல்.
கடந்த இரு தசாப்தங்களில் ஆசிய நாடுகளில், குறிப்பாக வங்காள தேசம், இந்தியா, இந்தோனேசியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் ஆரம்பக்கல்வி மாணவர் தொகை இருமடங்காக அதிகரித்துள்ளது. ஆரம்பநிலையில் பெண்கல்வி ஊக்குவிக்கப்பட்டமை இதற்கு ஒரு முக்கிய காரணமாகும். குறிப்பாக வங்காள தேசத்தில் ஆரம்பநிலையில் பெண்களின் சேர்வுவீதம் 33 இலிருந்து 44 வீதமாகவும் இந்தியாவில் 32 இலிருந்து 40 விதமாகவும் அதிகரித்தது.
சனத்தொகை அதிகரிப்பு வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்ட நாடுகளில் ஆரம்ப பாடசாலை மாணவர் தொகை அதிகரிக்க வில்லை, சீனாவில் 1980 இல் 146 மில்லியனாக இருந்த ஆரம்பப்பள்ளி மாணவர் தொகை 1990 இல் 124 மில்லியனாகக்
றைந்தது. இந்தோனேசியாவிலும் தாய்லாந்திலும் இவ்வாறான லைமை காணப்படுகின்றது, பிற ஆசிய நாடுகளிலும் எதிர்காலத்தில் இந்நிலைமை தோன்றலாம்.
1990 ஆம் ஆண்டளவில் பல ஆசிய நாடுகளில் பெருமளவுக்கு எல்லாப் பிள்ளைகளும் ஆரம்பக் கல்வி பெறக்கூடிய நிலை ஏற்பட்டு விட்டது. சீனா, இந்தோனேசியா, மலேசியா,

Page 35
56 கல்வியியல் கட்டுரைகள்
இலங்கை, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் சேர்வு வீதம் 90இனைக் கடந்து விட்டது. 2000 ஆம் ஆண்டளவில் இவ்வீதம் 100 ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தூரப்பிரதேச மக்கள் கல்வியில் பின்தங்கிய பிரிவினர் ஆகியோருக்கான கல்வி வாய்ப்புகள் 90களில் விரிவு செய்யப்பட்டு இவ்விலக்கு அடையப்படலாம். அதற்கு இந்தியாவில் 25 மில்லியன், பாகிஸ்தானில் 8 மில்லியன், வங்காளதேசத்தில் 3.5 மில்லியன் மாணவர்களுக்குப் பாடசாலை இடவசதிகள் ஏற்படுத்தப்படல் வேண்டும். இந்நாடுகள் ஒப்பீட்டு ஆய்வுகள் மூலம் பின்தங்கிய பிரதேசங்களை இனங்
காண முயன்று வருகின்றன. உதாரணமாக இந்திய ஆய்வுகளின்படி ஆந்திரப்பிரதேசம், பீகார், காஷ்மீர்; மத்திய பிரதேசம், ஒரிஸ்ஸா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் கல்வியில் பின்தங்கியனவாக இனங்காணப் பட்டுள்ளன .
இன்று சீனா, இந்தியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகள் 8 அல்லது 9 ஆண்டு கட்டாயக்கல்வியை வழங்கும் நிலைமையை எட்டியுள்ள .
மாணவர்கள் ஒரே வகுப்பில் திரும்பக் கற்கும்போது முக்கியமாக கல்வித்துறை விரயம் ஏற்படுகின்றது. முன்னைய ஆண்டில் அவர்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட மூலவளங்கள் பயனற்றுப் போகின்றன. புதிய மாணவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய இடங்களை அவர்களே தொடர்ந்து பயன்படுத்துகின்றனர்.
மேலும் திரும்பக் கற்போரே பெரும்பாலும் இடையில் கல்வியைக் கைவிட்டு விலகுகின்றனர். ஆசியாவில் பூட்டானிலும் மியான்ம்ாரிலும் இப்பிரச்சினை தீவிரமாக உள்ளது. ஒவ்வொரு வகுப்பிலும் 20 விதமானவர்கள் திரும்பக் கற்கின்றனர். வங்காள பிரதேசம், சீனா, இந்தோனேசியா, இலங்கை ஆகிய நாடுகளிலும் இவ்விதம் சற்று அதிகம் (6 - 10 வீதம் வரை) மலேசியாவில் யாவரையும் வகுப்பேற்றம் செய்யும் முறை உண்டு. இந்தியாவிலும் தாய்லாந்திலும் 5 வீதமானவர்கள் மட்டும் திரும்பக் கற்கின்றனர். பாடசாலைக் கல்வியைப் பெறத் தேவையான ஆயத்தநிலைமையின்மையாலும் ஆரம்ப நிலையில் கற்பதில் ஏற்படும் பிரச்சினைகளாலும் மாணவர்கள் திரும்பக் கற்க நேரிடுகின்றது.
திரும்பக் கற்பது விரயம் தொடர்பான முக்கிய பிரச்சினை யாயின், இதுவே மற்றொரு விரயமாகிய இடைவிலகலுக்கும்

சோ.சந்திரசேகரன் 57
இட்டுச் செல்கின்றது. சீன நாட்டு ஆய்வுகளின்படி இடைவிலகுவோரில் 70 வீதமானவர்கள் ஒரே வகுப்பில் திரும்பக் கற்றவர்கள், மேலும் வங்காள பிரதேசம், பூட்டான், இந்தியா, மியான்மா ஆகிய நாடுகளில் இவ்விடைவிலகல் ஒரு முக்கிய பிரச்சினையாகும். 1980 களில் ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் 15 விதமானவர்கள் இடையில் விலகினர். இவ்வாறு நிகழும் போது ஆரம்பக்கல்வி நிலையிலிருந்து விலகி விடுகின்றனர். சீனாவிலும் இந்தோனேசியாவிலும் 5 விதமானவர்கள் ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் விலகுகின்றனர். சீனாவில் 1989 இல் 35 இலட்சம் மாணவர்கள் இவ்வாறு இடையில் விலகினர். மலேசியா, இலங்கை, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து ஆகிய நாடுகள் இடைவிலகல் வீதத்தைக் குறைப்பதில் முன்னேற்றங் கண்டுள்ளன . இந்நாடுகளில் ஆண்டுக்கு ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் 2 வீதமானவர்கள் மட்டுமே விலகி விடுகின்றனர்.
வகுப்புவாரியாக நோக்குமிடத்து முதலாம் ஆண்டிலும் ஐந்தாம் ஆண்டிலும் இடைவிலகல் வீதம் அதிகம்; ஐந்தாம் ஆண்டின் பின் பாடசாலையில் சித்தியின்மையால் இடைநிலைக்கல்விக்கு செல்ல முடியாததால் இந்நிலை ஏற்படுகின்றது. இந்தியா, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இந்நிலை காணப் படுகின்றது.
நகர்ப்புற பாடசாலைகளில் இடைநிறுத்த வீதம் அதிகம். சீனாவில் செய்யப்பட்ட ஆய்வுகளின்படி இடைநிறுத்த வீதத்திற்கும் உள்ளூர்பகுதியில் சமூக, பொருளாதார நிலைமைகளுக்கும் தொடர்புண்டு என்று தெரிய வந்துள்ளது. மற்றொரு ஆய்வின்படி இடையில் விலகியோரில் 48 வீதமானவர் பண்ணைத் தொழிலும் 38 விதமானவர்கள் வீட்டிலும் இருந்தனர்.
மியான்மாரில் பரீட்சை முடிவுகளின்படியே வகுப்பேற்றம் நடைபெறுவதால் திரும்பக்கற்போர் வீதம் அதிகம், இதனால் இடையில் விலகுவோர் வீதமும் அதிகம், மலேசியாவில் தொடர் மதிப்பீடு செய்யப்பட்டு எல்லா மாணவர்களும் வகுப்பேற்றம் செய்யப்படுவதால் அங்கு இடைவிலகல் வீதம் மிகக் குறைவு.
பிள்ளைகள் 5 ஆம் வகுப்பு வரை கற்று முடிந்தால் எழுத்தறிவு பெற்றுவிடுவர் என்று நம்பப்படுகிறது. எனவே ஐந்தாம் வகுப்பு வரை யாவரும் இடையில் விலகாது கற்றால், அக்கல்வி முறை வினைத்திறன் வாய்ந்தது என்று கருதப்படுகின்றது. ஆசியாவில் மலேசியா, இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளில் முறையே 96, 93, 90 வீதமான மாணவர்கள் 5 ஆம் வகுப்புவரை

Page 36
58 கல்வியியல் கட்டுரைகள்
தொடர்ந்து கற்பது குறிப்பிடத்தக்கது. பிற நாடுகளுக்கான
புள்ளிவிபரங்கள்: வங்காளதேசம் 39%, சீனா 80%, இந்தியா
52%, பாகிஸ்தான் 50%, இந்தோனேசியா 64%, வங்காளதேசம்,
இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் ஆரம்பக்கல்வி முறைகள் மிகக் குறைந்த வினைத்திறனுடன் இயங்குவதை
இவ்விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
ஆசியாவில் இலங்கை தவிர்ந்த ஏனைய பல நாடுகளில் கல்வித்துறை விரயம் இடைவிலகலாயே ஏற்படுகின்றது. இந்நாடுகளில் திரும்பக்கற்றலினால் ஏற்பட்ட இழப்பு பன்மடங்கு அதிகமாகும். உதாரணமாக வங்காளதேசத்தில் இடைவிலகினால் 1615 மாணவர் ஆண்டுகளும் திரும்பக்கற்றலினால் 236 மாணவர் ஆண்டுகளும் (1988இல்) இழக்கப்பட்டன.
அரசாங்கங்கள் எவ்வாறான விரயங்களைக் கட்டுப்படுத்த முயலவேண்டும் என்பதை இவ்விபரங்கள் காட்டுகின்றன .
கல்வியில் மாணவர்கள் பெறும் குறைந்த தேர்ச்சியும் கல்விமுறையில் காணப்படும் வினைத்திறமையின்மையைக் காட்டுவதாகக் கல்வியியலாளர் கொள்வர். இதுவும் கல்வியில் ஏற்படும் விரயத்தின் ஒரு முக்கிய அம்சமாகும்.
இலங்கை ஆய்வுகளின் படி 50 விதமான மாணவர்கள் மொழியிலும் 54 வீதமானவர்கள் கணிதத்திலும் குறைந்த தேர்ச்சி பெறுகின்றனர். கிராமப்புறப் பிள்ளைகளில் 60 விதமானவர்களும் நகர்ப்புறப் பிள்ளைகளில் 30 விதமானவர் களும் போதனா மொழியில் தேர்ச்சி குறைந்தவர்கள். கணித பாடத்திலும் கிராமப்புறப் பிள்ளைகள் தேர்ச்சி குறைந்தவர்கள், பெண்கள் பாடசாசைகளின் கல்வித்தேர்ச்சி கலவன் பாடசாலைகள், ஆண்கள் பாடசாலைகள் என்பவற்றை விட அதிகம் என்றும் கண்டறிப்பட்டுள்ளது.
தாய்லாந்திலும் கணித பாடங்களில் மாணவர்களின் தேர்ச்சி குறைந்து வருகிறது.
- இந்தோனேசிய ஆய்வுகளின்படி கிராமப்புற மாணவர்களின் கணித பாடத் தேர்ச்சி மிகக் குறைவு. உயர் வருமானப் பின்னணியுள்ள பிள்ளைகளின் கல்வித் தேர்ச்சி அதிகம்.
- சீன நாட்டு ஆய்வுகளின்படி இடையில் விலகிய மாணவர்களில் 45 விதமானவர்கள் சீன மொழியிலும் கணித பாடத்திலும் சித்தி எய்தவில்லை.

Ga T. a sáv Gees var
இவையாவும் கல்வித்துறையில் ஏற்படும் விரயத்தை நன்கு சித்திரிப்பன.
கல்வித்துறையில் பெரும்பாலான மனித, நிதி பொருள் மூலவளங்கள் பயன்படுதப்படுகின்றன. ஆயினும் இவை வினைத்திறனுடன் முறையாகப் பயன்படுத்தப்படுவதில்லை. ஆய்வுகளின் படி குடித்தொகை குறைந்த பிரதேசங்களில் 40 மாணவர்களுக்குரிய வகுப்பறைகள் 20 Lρπ δυοτςλμή θ, διι που பயன்படுத்தப்படுகின்றன. அதே வேளைகளில் நகர்ப்புறங்களில் மேலதிகமான மாணவர்கள் காணப்படுகின்றனர். இதனால் கற்பித்தல் முழுமையான பயனைத்தருவதில்லை, மாணவர்கள் கல்வித்தேர்ச்சி பெறுதில்லை, மாணவர்கள் இடைவிலகல் அதிகரிக்கின்றது. கிராமப்புறங்களில் ஆசிரியர் தட்டுப்பாடு,
பிரச்னைகள் தோன்றுகின்றன .
- இலங்கை மதிப்பீடுகளின் படி கொழும்பில் 6000 ஆசிரியர்கள் மேலதிகமாகக் காணப்படுகின்றனர்.
- தாய்லாந்தில் ஆரம்பக்கல்வி நிலையில் மாணவர் சேர்வு
குறைந்து செல்வதால் பாடசாலை வசதிகள் முழு அளவில் பயன்படுத்தப்படுவதில்லை, வகுப்பறைகளில் மாணவர்களில்லை,
ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்பட்ட இல்லங்களில் எவரும் வசிக்கவில்லை. இவ்வாறான நிலைமை இந்தோனேசியாவிலும் காணப்படுகின்றது.
- வங்காளதேசத்தில் ஆரம்பநிலையின் உயர்வகுப்புகள் முழுமையாகப் பயன்படுதப்படுவதில்லை. ஏனெனில் ஆரம்ப நிலை மாணவர்களில் பெரும்பாலோர் இடையில் விலகி
விடுகின்றனர்.
ஆசிய நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வுகளின் படி, பல்வேறு காரணங்களால் மாணவர்கள் பாடசாலைகளில் சேருவதில்லை, வகுப்புகளில் திரும்பக்கற்கின்றனர், இடையில் விலகுகின்றனர். கல்வியில் குறைந்த தேர்ச்சி பெறுகின்றனர், கல்வி மூலவளங்கள் சரியாகப் பயன்படுத்தப்படுவதில்லை; இக் காரணங்களில் பல கல்வி முறையோடு தொடர்புள்ளவை. அத்துடன் சில வெளிநிலைக்காரணிகளும் உண்டு.
சில ஆய்வு முடிவுகளின்படி மாணவர்கள் ஒரே வகுப்பில் திரும்பக் கற்பதற்கும், குறைந்த கல்வித் தேர்ச்சியைப் பெறுதற்கும் காரணம் பாடசாலையுடனும் ஆசிரியர்களுடனும்

Page 37
60 கல்வியியல் கட்டுரைகள்
சம்பந்தப்பட்டது; மாணவர்கள் இடைவிலகுவதற்கும், பாடசாலையில் சேராமல் இருப்பதற்குமான காரணங்கள் அவர்களுடைய குடும்பம், சமூகம், சுற்றாடல் சம்பந்தப்பட்டது.
கல்விக்கான மூலவளங்கள் சரியாகப் பயன்படுத்தப்படாமைக்கும் மேலதிகமாகப் பயன்படுத்தப்படுவதற்குமான காரணங்கள் பாடசாலை வசதிகள் அமைந்துள்ள இடங்களோடும் கல்வித் தேவைகளுடன் தொடர்பற்ற முறையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதோடும் தொடர்புள்ளவையாகும். பல ஆசிய நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வுகளின்படி நகர்ப்புறப் பாடசாலைகளில் மிதமிஞ்சிய மாணவர்கள் காணப்படுகின்றனர்; இதனால் பாடசாலைகள் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை வெவ்வேறு மாணவர்களுக்கா இயங்குகின்றன; அதேவேளையில் கிராமப்புறப் பாடசாலைகளில் வகுப்புகளின் g; Jrt g if மாணவர் தொகை 25ற்குக் குறைவாகும். பாடசாலைகள் ஒரு நாளில் மும்முறை இயங்கும் போது பாடசாலை வசதிகள் நன்கு பயன்படுத்தப்படுகின்றன; ஆனால் கற்றலில் மாணவர் பெறும் தேர்ச்சி திருப்தியாக இல்லை. கல்வித்துறையில் இடம்பெறும் விரயங்களை அகற்றும் வழிமுறைகளைப்பற்றிச் சிந்திக்கும் கல்வி நிர்வாகிகள் இவ்வம்சங்களைக் கருத்திற்கொள்ள வேண்டும்.

பாலர் கல்வி
பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்லு முன்னர் ஐந்து அல்லது வயதுக்கு முன்னர் பெறுகின்ற முறைசார்ந்த {{ل رنگ நிறுவனரீதியான கல்வியைப் பாலர் கல்வி என்போம். இன்று நகர்ப்புறங்களில் மத்திய வகுப்பினருக்கென எராளமான பாலர் கல்வி நிலையங்கள் தோன்றியுள்ளன . ஆயினும், நகர்ப்புறப் பின் தங்கிய வகுப்பினர், கிராமப்புறத்தவர் பெருந்தோட்ட மக்கள் ஆகியோரின் பிள்ளைகளுக்கென ஒழுங்கான பாலர் கல்வி ஏற்பாடுகள் இல்லை எனலாம்.
இப்பிரிவினர்களுக்கான பாலர் கல்வி ஏற்பாடுகள் பற்றிய முறையான கொள்ளைகளும் வகுக்கப்படவில்லை. ஆரம்ப இடைநிலைக்கல்வி ஏற்பாடுகளை அரசாங்கம் விரிவான முறையில் செய்துள்ளது. ஆயினும் பாலர் கல்வியில் அரசாங்கம் ஒருவகையான தலையிடாக் கொள்கைகளையே கடைப் பிடிக்கின்றது. பாலர் கல்வி நிலையங்கள் தனியாரால் நடத்தப்படுகின்றன. அந்நிலையங்களை முறைப்படுத்தும் ஒழுங்கு விதிகள் இருப்பதாகக் கூறமுடியாது எவ்வாறாயினும் பிள்ளைகளின் விருத்தியிலும் கல்வி வளர்ச்சியிலும் பாலர் கல்வி முக்கியத்துவம் வாய்ந்ததென்பது கல்வி ஆய்வாளர் முடிவாகும்.
பாடசாலைகளில் பல "உள்ளிடுகள்’ உண்டு. பாடசாலைக் கட்டிடம், ஆசிரியர்கள், தளபாடங்கள் மற்றும் வசதிகள் உள்ளீடுகள் எனப்படும். பாடசாலையில் அனுமதி பெறும் பிள்ளைகளும் அவ்வாறான ஒரு முக்கிய உள்ளீடாகும். பிள்ளையாகிய உள்ளீட்டைக் கற்பித்து, பயிற்றுவித்து தேர்ச்சிபெறச் செய்து வெளியேற்றுவது பாடசாலைகளின் தொழிற்பாடாகும். சமூகத்தில் இணைந்து வாழவும் தொழில் புரியவும் தேவையான திறன்களையும் ஆற்றல்களையும் வழங்கி பிள்ளைகளைப் பெறுமதி மிக்கவர்களாக்குவது பாடசாலையின் கடமையாகும.
அதாவது பிள்ளையாகிய உள்ளீட்டைப் பயனுள்ள 9 (5 வெளியீடாக்கும் வகையில் பாடசாலை பணி புரிகின்றது என்று கல்வியாளர்கள் கூறுவர். இவ்வாறான முக்கிய வெளியீட்டுப்

Page 38
62 கல்வியியல் கட்டுரைகள்
பணியைப் பாடசாலை திறம்படச் செய்வது எதில் தங்கியுள்ளது? பல்வேறு ஆய்வு முடிவுகளின்படி இது முற்றாக பிள்ளைகளின் இயல்பிலேயே தங்கியிருக்கின்றது.
பிற உள்ளீடுகளான பாடசாலை ஆசிரியர்கள் அவர்களுடைய தகைமைகள், ஆற்றல்கள் என்பன இவ்விடயத்தில் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவையல்ல பொருத்தமுடையனவுமல்ல என்பது ஆய்வாளர் கருத்து.
பாடசாலை செல்லாத பாலர்களின் கல்வித் தேர்ச்சியில் கவனம்செலுத்தவேண்டிய ஒரு முக்கிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் எதிர்காலத்தில் குறைந்த வருமான வகுப்பினர்களின் பிள்ளைகள் பெருந் தொகையினராகப் பாடசாலைகளில் அனுமதி பெற உள்ளனர். அத்துடன் பல்வேறு ஆய்வு முடிவுகளின் படி வளர்முக நாடுகளில் பின்தங்கிய வகுப்பினரின் சிறு பிள்ளைகள், உயர்வருமான வகுப்பினரின் பிள்ளைகளுடன் ஒப்பிடும் போது பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதில்லை. மேலும் மருத்துவத்துறை சார்ந்த நூல்களின்படி வளர்முக நாடுகளின் பெரும்பாலான பிள்ளைகளின் உள இயக்கமும் செயற்பாடும் போசாக்கின்மை காரணமாகப் பெரிதும் பாதிக்கப்படுகின்றது.
கல்வியியல் மற்றும் உளவியல் ஆய்வு நூல்கள் மற்றுமொரு முக்கிய கருத்தையும் தெரிவிக்கின்றன. பிள்ளைகளினுடைய விவேக அளவினை நிர்ணயிப்பதில் பரம்பரை அம்சம் முக்கிய இடத்தைப் பெற்றாலும் பிள்ளைகளின் சூழலும் இவ்விடயத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக குழந்தைப் பருவத்தில் அவர்களுடைய விவேக வளர்ச்சியை நிர்ணயிப்பதில் சூழல் முக்கியத்துவம் பெறுகின்றது என்பது ஆய்வாளர் முடிவு.
இந்நிலையில் வளர்முக நாடுகளில் பாடசாலைகளில் சேருகின்ற பிள்ளைகளில் பெரும்பாலானவர்கள் குறைந்த வருமான வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதால் அந்நாடுகளின் ஆரம்பக்கல்வி சீர்கேடான ஒரு நிலையையே எதிர் நோக்கக்கூடும். மாற்று ஏற்பாடாகப் பாடசாலைக்கு அனுமதி பெறு முன்னரே பிள்ளைகள் பல்வேறு வழிகளில் நுணுக்கமாக கல்விரீதியாக கவனிக்கப்பட வேண்டிய முறையில் புதிய கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டிய தேவை ஒன்று உள்ளது.
இங்கு வலியுறுத்திக்கூறப்படுவது பாலர் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமுமாகும்.

சோ. சந்திரசேகரன் 63
இதனை மேலும் விளக்கிக் கூறமுடியும். அதற்கு நீண்ட காலமாகச் செய்யப்பட்டு வந்த ஆய்வுகளின் முடிவுகளைக் கருத்திற் கொள்ளலாம். இவ்வாய்வுகள் அறுபது ஆண்டு காலமாகச் செய்யப்பட்டவை. ஐக்கிய அமெரிக்காவின் பல பாகங்களில் பல்வேறு பிரிவினரிடம் பல்வேறு காலப்பகுதியில் வெவ்வேறு ஆய்வாளர்களால் செய்யப்பட்ட ஆய்வுகளிலிருந்தே சில முக்கிய முடிவுகளைப் பெறக் கூடியதாக உள்ளது.
இம் முடிவுகளின்படி பதினேழு வயதில் அளக்கப்படும் மாணவர்களின் விவேகத்தில் 20 வீதம் ஒரு வயதிலேயே விருத்தி பெறுகின்றது. நான்கு வயதில் 50 வீதமான விவேகம் விருத்தியுறுகிறது. அவ்வாறே 8 வயதில் 80 வீதம் 13 வயதில் 92 விதமான விவேக விருத்தி ஏற்பட்டு விடுகிறது.
புளும் என்ற ஆய்வாளரின் இம்முடிவு சிறுவயதில் பிள்ளைகளின் வளர்ச்சியில் செலுத்தப்பட வேண்டிய கூடிய அக்கறையை வலியுறுத்துகின்றது. சிறு வயதிலேயே விவேக
வளர்ச்சிக்கு
ஏற்ற முறையில் வீட்டுச் சூழலும் பாலர் கல்வி ஏற்பாடுகளும் ஒழுங்கு படுத்தப்பட வேண்டிய அவசியத்தை இவ்விடத்து உணர்ந்து கொள்ள முடியும்.
பிள்ளைகளின் விவேக மட்டத்தை நிர்ணயிப்பதில் பரம்பரைக் காரணிகளின் முக்கியத்துவம் முற்றாக நிராகரிக்கப்படவில்லை. இன்றைய ஆய்வாளர்களின் கருத்தின்படி விவேகத்தில் 45 வீதம் மட்டுமே பரம்பரைக் காரணிகளால் நிர்ணயிக்கப்படுகின்றது. அவர்கள் பரம்பரையோடு தொடர்பற்ற சூழல் சார்ந்த காரணிகள் விவேக மட்டத்தை நிர்ணயிப்பதில் முக்கிய பங்களிப்பைச் செய்வதாகக் கருதுகின்றனர். அரசாங்கக் கொள்கைகள் இச்சூழல் சார்ந்த காரணிகளைக் கருத்திற்கொண்டு உருவாக்கப்படுமிடத்து, பின்தங்கிய வகுப்புப் பிள்ளைகளின் விவேக வளர்ச்சிக்குத் துணைபுரிய முடியும்.
பிள்ளையின் விவேக வளர்ச்சியில் ஒரு முக்கிய அம்சம் உணவுப் போசாக்கு பற்றியதாகும். இது சூழல் சார்ந்த ஒரு காரணியாகும். போசாக்கின்மையாலும் உயர்தரமான புரதச்சத்துக்களற்ற உணவை உண்ணுவதாலும் சிறுபிள்ளை களின் உள இயக்கம் பாதிக்கப்படுகின்றது. போசாக்குக் குறைபாடு பிள்ளைகள் நரம்புத் தொகுதியைப் பாதிக்கின்றது.
ஏனெனில் பிள்ளைப் பருவத்தில் ஏற்படும் மூளை வளர்ச்சி

Page 39
64 கல்வியியல் கட்டுரைகள்
பெருமளவுக்கு புரதத்தை உட்கொள்வதின் விளைவாகும். விலங்குகளில் செய்யப்பட்ட பல பரிசோதனைகள் இதனை நிரூபித்துள்ளன. அத்துடன் பல்வேறு புதிய ஆய்வுகளின் படி கடுமையான போசாக்கின்மையின் காரணமாக பிள்ளைகளின் மூளைக்கலங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.
பிள்ளைகளின் கல்வி விருத்தியில் இது பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை எளிதில் உணர முடியும். பல்வேறு ஆய்வு முடிவுகளின்படி ஆற்றல்கள் பிள்ளைகளின் கற்றல் வளர்ச்சிக்கு மிக அத்தியாவசியமானவை. அதாவது குழந்தைப் பருவத்தில் போசாக்கின்மையால் பாதிக்கப்படும் பிள்ளைகள் தமது பிற்கால பாடசாலைக் கல்வியில் பின்னடைய வேண்டி நேரிடும். எடுத்துக் காட்டாக, போசாக்கின்மையால் ' கண்பார்வை, கேட்டல் போன்றவற்றில் குறைபாடுகள் ஏற்படுமிடத்து பிள்ளைகளினுடைய வாசிப்பு ஆற்றல் பாதிப்படைய நேரிடும். அத்துடன் போசாக்கின்மை காரணமாக இளம்பிள்ளைகள் தொற்று நோய்க்கு ஆளாக வேண்டி நேரிட்டு அதன் காரணமாக அவர்களுடைய அறிவுசார் வளர்ச்சி பாதிப்படைய நேரிடும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பிள்ளைகளின் ஆரம்பகால வாழ்க்கைச் சூழல் அவர்களுடைய பிற்காலக் கல்வித் தேர்ச்சியை எவ்வாறு பாதிக்கின்றது என்பது பற்றியும் ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. ஆயினும் வளர்முக நாடுகளில் இவ்வாய்வுகள் விரிவாகச் செய்யப்படவில்லை. பிள்ளைகளின் வாழ்க்கைச் சூழலுள் ஒன்று, வீட்டுச் சூழல். இவ்விருவகையான சூழல்களின் இயல்புகளில் மாற்றங்களை ஏற்படுத்தல் வேண்டும் என்றும் ஒரு குறிப்பிட்ட சூழலில் பிள்ளை செலவிடும் நேரத்திலும் மாற்றம் தேவை எனவும் இவ்வாய்வுகள் தெரிவிக்கின்றன.
பிள்ளை வளர வளர விட்டுக்கு வெளியிலேயே அதிக நேரத்தை செலவிடுகின்றது. பிள்ளையின் விவேக விருத்திக்கு ஏற்றவாறு அதன் வெளிச்சூழல் நிலையை மாற்ற வேண்டுமாயின் விரிவான பாலர் கல்வி ஏற்பாடுகள் செய்யப்படல் வேண்டும். இவ்வாறான பின்னணியில் ஐக்கிய அமெரிக்காவில் 3-5 வயதுடைய பிள்ளைகளுக்கு இவ்வாறான எற்பாடுகள் செய்யப்பட்டன .
பின்தங்கிய வகுப்பினரின் பிள்ளைகளுக்கு மரபு வழியான விளையாட்டு முறை மூலமான பாலர்கல்வி அதிகம் பயன்தருவதில்லை. ஆயினும் அறிவுசார் திறன்களையும் நேரடியாகவோ அல்லது விளையாட்டுகளினூடாகக் கற்பிப்பதனால் அதிக பயன் உண்டு என அமெரிக்க ஆய்வுகள்

சோ. சந்திரசேகரன் 65
தெரிவிக்கின்றன. அத்துடன் பாலர் கல்வியை மிகப்பிந்திய
வயதில் வழங்குவதாலும் அதிக பயன் இல்லை. ஏனெனில் 3 அல்லது 4 வயதில் பிள்ளை தனது குடும்ப வாழ்க்கையில் காணப்படும் சூழல் குறைபாடுகளால் நிபந்தனைப்படுத்தப்பட்டு
விடுகிறது. எனவே மிகக் குறைந்த வயதிலேயே பிள்ளையைக் குடும்பச் சூழலிலிருந்து அகற்றிப் பாலர் கல்வி நிலையச் சூழலுக்கு இடமாற்றுவது பயன்தரும் என்பது மேலைநாட்டு கல்வியியலாளர் கருத்து.
கொலம்பியா நாட்டில் செய்யப்பட்ட ஓர் ஆராய்ச்சியின்படி பின்தங்கிய வகுப்பினரின் மூன்று வயதுப் பிள்ளைகளின் போசாக்கில் கவனம் செலுத்தப்படுமிடத்து அவர்களுடைய குறிப்பான உளக்குறைபாடுகளைக் களைய முடியும். இதனால் பிற்கால கல்வித் தேர்ச்சியை உறுதி செய்ய முடியும்.
மூன்று வயதுக்குக் குறைந்த பிள்ளைகள் வளர்க்கப்படும் முறையினால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டன. பிள்ளைகள் இரண்டு வயது வரை தமது தாயுடன் கொள்ளும் தொடர்பு பிற்காலத்தில் பாடசாலையில் பயிலும் போது பிள்ளை கல்வியில் செலுத்தும் ஊக்கம் கல்வித் தேர்ச்சி பற்றிய அதன் எதிர்பார்ப்பு, அறிவுசார் வளர்ச்சி என்பவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற அடிப்படையைக் கருத்திற் கொண்டு இவ்வாய்வுகள் செய்யப்பட்டன. இப்பின்னணியில் தாய்க்கும் பிள்ளைக்கும் இடையேயான தொடர்புகளில் மாற்றம் செய்யப்படல் வேண்டும் என இவ்வாய்வுகள் தெரிவித்தன.
ஒரு குறிப்பிட்ட ஆய்வுச் செயற்திட்டத்தின் முடிவின்படி, விசேட பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் வீட்டில் தாயுடனும் பிள்ளையுடனும் இணைந்து பணி புரிந்த போது பிள்ளைகளின் உளவளர்ச்சியில் முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டன. இவ்வாய்வு முடிவுகள் யாவும் பாடசாலை செல்லுமுன் பிள்ளைகளின் விவேக வளர்ச்சி, உளவளர்ச்சி என்பவற்றில் விசேட கவனத்தைச் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன. பாலர் கல்வி பற்றிய புதிய கொள்கைகள் இவ்வம்சங்களைக் கருத்திற் கொண்டமைதல் வேண்டும்.

Page 40
ஆசிரியர்களின் உயர் தொழில் அந்தஸ்த்து
மானியமுறை சமுதாயத்துக்கு முற்பட்ட பண்டைய சமுதாயத்தில் உடல்வலு மிக்கவர்கள் அதிகாரமிக்கவர்களாகவும் செல்வாக்கு செலுத்துபவர்களாகவும் காணப்பட்டனர். மானியமுறை சமுதாயத்தில் நிலவுடைமையாளனாக விளங்கியவன் இவ்வாறான அதிகாரத்தைப் பெறக்கூடியதாக இருந்தது. முதலாளித்துவ சமுதாயத்தில் பெருமளவு
மூலதனத்தைக் கொண்டிருந்தவன் இவ்வாறான செல்வாக்கையும் அதிகாரத்தையும் பெற்றிருந்தான்.
இன்று நாம் எதிர்நோக்குவது அதிக நவீன விஞ்ஞான தொழில்நுட்ப சமுதாயம். வளர்ச்சியடைந்த கைத்தொழில் நாடுகள் இந்நிலையை இன்று எட்டிவிட்டன, வளர்முக நாடுகளிலும் இன்று கைத்தொழில், விவசாயம், வர்த்தகம் என்பவற்றில் விஞ்ஞான தொழில்நுட்ப மயத்தை நாம் காண முடியாது. இவ்வாறான நவீன சமுதாய அமைப்பில் மிக்க உயர்தரமான விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் சமூகவியல், மனிதப்பண்பியல் அறிவினைப் படைத்தவர்கள் சமூகத்தில் அதிகாரத்தையும் செல்வாக்கையும் செலுத்துகின்ற புதியதொரு சூழ்நிலை தோன்றியுள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.
அதாவது பல்வேறு நவீன அறிவுத்துறைகளில் அறிவாற்றல் மிக்கவர்களின் தலைமையில் சமுதாய முன்னேற்றம் எற்படக்கூடிய ஒரு காலப்பகுதியில் நாங்கள் வாழுகின்றோம். இவ்வாறான ஒரு அறிவாற்றல் மிக்க குழுவினரை, சமுதாயத்தில் அதிகாரமும் செல்வாக்கும் மிக்கோராக விளங்க விருக்கின்ற ஒரு வகுப்பினரை உருவாக்குவதில் மிக முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பினை வழங்குபவர்கள் ஆசிரியர்களாவர். இவ்வகையில் மனித சமுதாயத்தில் ஆசிரியர்கள் வகிக்கின்ற முக்கிய பங்கினை உய்த்துணர முடியும்.
கல்வி முறைகளினுடைய செயற்திறன் பற்றியும் கல்விச் சீர்திருத்தங்களினுடைய வெற்றி பற்றியும் செய்யப்பட்ட
பல்வேறு ஆய்வுகளின் முடிவுகளின் படி இச்செயற்றிறனுக்கும்
 

சோ. சந்திரசேகரன் 67
வெற்றிக்கும் ஆற்றலுக்கும் தமது தொழிலில் மிகுந்த ஈடுபாடுமிக்க ஆசிரியர்கள் ஒரு முக்கிய காரணமாகும். கல்வி அமைப்பில் பல்வேறு காரணிகளையும் நிலைகளையும் மட்டங்களையும் நாம் இனங்காண முடியும்.
எடுத்துக்காட்டாக கல்வி அமைச்சில் பணிப்பாளர் நாயகம், அதிபர், ஆசிரியர் என்று பல மட்டங்கள் இருக்கின்றன . கல்விக் கொள்கைகள் கல்வி நிர்வாகங்கள் போன்றவை உயர்மட்டத்தில் உள்ளவர்களால் உருவாக்கப்பட்டாலும் அவற்றை வகுப்பில் நடைமுறைப்படுத்துபவர்கள் ஆசிரியர்களே , அவர்கள் தமது தொழிலைச் சரிவரச் செய்யாவிட்டால் கல்விக் கொள்கைகள் மற்றும் நிர்வாகங்கள் அனைத்துமே சீரழிந்து போய்விடும். இவ்வகையில் கல்வி அமைப்பின் அச்சாணியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள் எனலாம்.
பல்வேறு நாடுகளில் கல்விச் சீர்திருத்தங்களும் கல்வித்துறை புத்தாக்கங்களும் ஆசிரியர்களுடைய ஒத்துழைப்பின்றி தோல்வி கண்டுள்ளன . இந்தக் கல்விச் சீர்திருத்தங்களுக்குப் பின்னணியாக அமைகின்ற கல்வித் தத்துவத்தையும் "கல்விச் சித்தாந்தங்களை'யும் மேல்மட்டத்தில் இருக்கின்றவர்கள் புரிந்து கொள்கின்ற அளவுக்கு வகுப்பறையில் பணியாற்றுகின்ற ஆசிரியர்கள் புரிந்து கொள்ள முடியாத நிலைமை ஒன்று உண்டு. அதாவது இச்சித்தாந்தங்களும், தத்துவங்களும் முறையாக ஆசிரியர்களைச் சென்றடைவதில்லை. இந்நிலையில் சரியான தெளிவுடனும் ஈடுபாட்டுடனும் ஆசிரியர்கள் பணியாற்றாமையால் கல்விச் சீர்திருத்தங்கள் தோல்வியடைய நேரிடுகின்றன . எனவே கல்வியமைப்பில் ஆசிரியர்கள் வகிக்கின்ற முக்கியத்துவம்வாய்ந்த பங்கினை உணர்ந்து அவர்களுடைய ஒத்துழைப்பினைப் பெறுவதற்கு 5F55U முயற்சிகளும் உயர்மட்ட நிர்வாகத்தினால் செய்யப்படுதல் வேண்டும்.
இன்று பல்வேறு தொழிற்துறையினர் உயர் தொழில் வகுப்பினர் (Professional ClaSS) என அழைக்கப்படுகின்றனர். எடுத்துக் காட்டாக மருத்துவர்களையும் வழக்கறிஞர்களையும் குறிப்பிடலாம். இவ்வாறு சில தொழில்துறையினர் உயர்தரமான அந்தஸ்தைப்பெற எதேனும் விசேடமான காரணங்கள் உண்டா? ஆசிரியர்களும், மருத்துவர்களையும் வழக்கறிஞர்களையும் போன்று உயர் தொழில் அந்தஸ்தினைப் பெறுவதற்குத் தகுதியுடையவர்களா என்பதனை நுணுகி நோக்க வேண்டும்.
ஒரு தொழில் வகுப்பினர் என்ற உயர் தொழில் அந்தஸ்தைப்

Page 41
68 கல்வியியல் கட்டுரைகள்
பெறுவதற்கு சில நிபந்தனைகள் உண்டு. ஒரு கருத்தின்படி மனித சமுதாயத்தின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த விடயம் தொடர்பாக 5UD函 பங்களிப்பினை வழங்குகின்ற தொழில்துறையினர் இவ்வாறு உயர் தொழில் அந்தஸ்தைப் பெற முடியும். மருத்துவர்கள் மனிதனின் உடல் நலத்தோடு தொடர்புள்ளவர்கள். உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் நோயாளிகள் மருத்துவர்களின் அறிவாற்றலினால் உடல்நலம் பெற முடிகின்றது. இதேபோன்று வழக்கறிஞர்கள் உரிமைகளுக் காகவும் சமூக நீதிக்காகவும் வழக்காடு மன்றங்களில் போராடுபவர்கள். இந்த வகையில் மருத்துவர்களும் வழக்கறிஞர் களும் உயர்தொழில் அந்தஸ்தைப் பெறுகின்றனர்.
இவ்வகையில் நோக்குமிடத்து ஆசிரியர் சமூகம் ஆற்றுகின்ற கல்விப்பணியும் சமுதாய முக்கியத்துவம் வாய்ந்தது. இன்று அபிவிருத்தியடைந்த சமுதாயங்களும் வளர்முக சமுதாயங்களும் கீழை நாடுகளும் மேலைநாடுகளும், சகல சமயத்தவர்களும் கல்வி வளர்ச்சியினூடாகவே தத்தமது மக்கள் முன்னேற முடியும் என்று ஏற்றுக் கொள்ளுகின்றனர்.
எடுத்துக்காட்டாக 1960களில் மேற்கு ஐரோப்பாவிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் செய்யப்பட்ட பல்வேறு ஆய்வுகளின்படி கல்வி வளர்ச்சி-சமூக அறிவியல், மனிதப் பண்பியல், விஞ்ஞான தொழில்நுட்பம் என்னும் கல்வித்துறைகளில் ஏற்படும் வளர்ச்சி சமுதாய உறுப்பினர்களுடைய கல்வித் தரத்தை மேம்படுத்தி அதனூடாக பொருளாதார வளர்ச்சிவீத அதிகரிப்பிற்கும் காரணமாக அமையும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இதன்பின்னரே சுதந்திரம் பெற்ற ஆசிய ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் மக்களின் கல்வி வளர்ச்சியில் மிகுந்த ஆர்வம் காணப்பட்டது. இந்நாடுகளின் கல்வி வளர்ச்சியை பிரிவு செய்வதற்கான பல விரிவான நிகழ்ச்சித் திட்டங்கள் தீங்கான விளைவுகளினின்று விடுபட்டு 9 (5 புதிய சமுதாயத்தை அமைக்கும் நோக்குடன் திட்டமிடப் பட்டுள்ளதுன .
குறிப்பாக இலங்கையில் ஒரு சிலருக்கே தரம் வாய்ந்த
ஆங்கிலக்கல்வி, பாமர மக்களுக்கு சுயமொழிகளில் தரத்தில் குறைந்த ஆரம்பக்கல்வி என்ற குடியேற்ற நாட்டு கல்விக் கொள்கை கைவிடப்பட்டு, பல்வேறு சமூக வகுப்பினருக்கும் கல்வி வாய்ப்புகளையும் கல்வித்துறையில் d சந்தர்ப்பங்களையும் வழங்கும் நோக்குடன் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன .

சோ.சந்திரசேகரன் 69
20-ம் நூற்றாண்டில் யாவருக்கும் ஆரம்பக்கல்வி, யாவருக்கும் இடைநிலைக்கல்வி என்ற சுலோகங்கள் எழுந்தன. ஐக்கிய அமெரிக்காவில் ஒரு சிலருக்கான உயர்கல்வி (From elitist higher education to universal higher cducation) 6T 6ör JD 660d6U
நீங்கி யாவருக்கும் உயர்கல்வி என்ற கோட்பாடு முன்வைக்கப்படுகின்றது. இன்று உலகளாவிய ரீதியில் "யாவருக்கும் கல்வி” என்ற கோட்பாடு முன்வைக்கப்
பட்டுள்ளது. 1960ம் ஆண்டில் கராச்சியில் நடைபெற்ற கல்வி மகாநாட்டின் பின்னர் தென்னாசியப் பிராந்தியத்தில் கூடியவிரைவில் சகல பிள்ளைகளும் 10 ஆண்டு பாடசாலைக் கல்வியாவது பெறல் வேண்டும் என்ற முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன . இவ்வாறு மனித வரலாற்றிலேயே இந்தளவுக்கு முதன் முதலாக கல்வி வளர்ச்சிக்குப் பாரிய முக்கியத்துவம் அளிக்கின்ற ஒரு காலப்பகுதியில் நாம் வாழ்கின்றோம்.
இவ்வாறு உலகளாவிய ரீதியில் கல்வி வளர்ச்சிக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தின் தாக்கத்தை நாம் இலங்கையிலும் உணரமுடிந்தது. பிற எந்த வளர்ச்சியடைந்த சமுதாயங்களிலும் இன்று சமூக நகர்வுக்கான முக்கிய கருவியாக கல்வியும் கல்வித் தகுதிகளும் கருதப்படுகின்றன. அதேபோன்று இன்று இலங்கையிலும் சமூக வகுப்பு
வேறுபாடின்றி பெரும்பாலானவர்கள் தமது சமூக - பொருளாதார நிலைமைகளையும் அந்தஸ்தையும் மேம்படுத்திக் கொள்ள கல்வியையே முக்கிய கருவியாகக்
கொண்டிருக்கின்றனர். ஏறத்தாழ 1940ம் ஆண்டு தொடக்கம் அதிகரித்து வந்துள்ள கல்விக்கான சமூகத் தேவையை நிறைவு செய்ய அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதாயிற்று.
இலவசக் கல்வித்திட்டம், தாய்மொழி போதனா மொழியாக்கப்பட்டமை, தேர்தல் தொகுதிகள் தோறும் மத்திய பாடசாலைகள் அமைக்கப்பட்டமை, 1960 to ஆண்டில்
பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்றமை, பாடசாலை களின் தொகை அதிகரிக்கப்பட்டமை, இலவச பாடநூல் விநியோகம், மதிய உணவுத்திட்டம், சீருடை விநியோகம், பல்கலைக்கழகங்களின் தொகை அதிகரிக்கப்பட்டமை, திறந்த பல்கலைக் கழகம் அமைக்கப்பட்டமை, ஐந்தாம் வகுப்பு புலமைப் பரிசு மகாப்பொல புலமைப் பரிசு என்பவற்றின் அறிமுகம் போன்ற இன்னோரன்ன கல்விச் சீர்திருத்தங்கள் இவ்வாறான நடவடிக்கைகளுள் சிலவாகும்.

Page 42
70 கல்வியியல் கட்டுரைகள்
நாட்டின் பல்வேறு அபிவிருத்திகளில் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கல்வித் துறை மனித சமுதாயத்தின் ஓர் இன்றியமையாத அங்கமென்பது இதிலிருந்து தெளிவாகும். எக்கல்வி முறையினுடைய வெற்றிகரமான அமுலாக்கத்துக்கும் அடிப்படையான பங்களிப்பினைச் செய்ய வேண்டியவர்கள் ஆசிரியர்களாவர். அவர்களுடைய நிறைவான ஒத்துழைப்பும் புரிந்துணர்வும் இல்லையாயின் கல்விச் சீர்திருத்தங்கள் வெற்றி தரமாட்டா என்பது பலநாடுகளினுடைய அனுபவங்களிலிருந்து தெரிந்து கொள்ள முடியும்.
குறிப்பாக கல்வித்துறையில் அறிமுகம் செய்யப்படும் புத்தாக்கங்கள் நடைமுறைப்படுத்தப்பட முன்னர் ஆசிரியர் களினுடைய அனுசரணையும் ஒப்புதலும் இருப்பின் நன்று. இவ்வகையில் நோக்குமிடத்து ஆசிரியர்கள் மனித சமுதாயத்தின் இன்றியமையாத ஓர் அம்சத்துடன் தொடர் புள்ளவர்கள் என்ற முறையில் அவர்கள் உயர்தொழில் வகுப்பினர் என்ற அந்தஸ்தைப் பெறக்கூடியவர்களாவர்.
பல்வேறு தொழிற் துறையினரும் இவ்வாறான உயர் தொழில் அந்தஸ்தைப் பெறுவதற்கான இன்னொரு நிபந்தனையும் உண்டு. இவ்வெவ்வேறு துறைகளுக்கென்றே விரிவான, பரந்த, ஆழமான ஓர் அறிவுத் தொகுதி இருத்தல். எடுத்துக்காட்டாக மருத்துவம், சட்டம் போன்ற துறைகள் இன்று அறிவுத் துறைகளாக விரிவடைந்துள்ளன. இத்துறைகளுக்கான நூல்களும் ஆராய்ச்சிகளும் எண்ணற்றவை. இதன் காரண மாகவும் மருத்துவர்களும் சட்ட அறிஞர்களும் உயர் தொழில் அந்தஸ்தைப் பெறுகின்றனர். இந்த நிபந்தனையினை ஆசிரியர்கள் தொடர்பாக ஒப்புநோக்குதல் வேண்டும்.
ஆசிரியர்களின் அறிவுத் துறையான கல்வியியல் இன்று பரந்த ஓர் அறிவுத் துறையாக வளர்ச்சியடைந்துள்ளது. பொருளியல், சமூகவியல், வரலாறு, உளவியல், மானிடவியல், அறிவு ஆராய்ச்சியியல் மொழியியல், அறிவியல், நிர்வாகவியல் போன்ற இன்னோரன்ன துறைகள் சார்ந்த கோட்பாடுகளும் தத்துவங்களும், கல்வியியல் வளர்ச்சிக்கான மூலாதாரங்களாக விளங்கியுள்ளன. இப்பல்வேறு அறிவுத்துறைகளின் வளர்ச்சியின் அடிப்படையில் கல்வியியல் ஓர் அறிவுத் தொகுதியாக வளர்ச்சியுற்றிருந்தாலும் இன்று கல்வியியல் தனக்கே உரிய சில தனித்தன்மைகளைக் கொண்ட ஒரு தனிப்பெரும் அறிவுத்து றையாக வளர்ச்சி பெற்றுள்ளதை மறுப்பதற்கில்லை.

சோ. சந்திரசேகரன் 71
கல்வி, உளவியல், கல்வித் தத்துவம், கல்வி நிருவாகம், கல்வி வரலாறு, ஒப்பீட்டுக் கல்வி, கல்வி அளவீடு, குடித் தொகைக் கல்வி, கற்பித்தல், முறையியல், கல்வித் திட்டமிடல், கல்வி சமூகவியல் போன்ற பல ஆய்வுத்துறைகளாகவும், அறிவுத்துறை களாகவும் இன்று கல்வியியல் வளர்ச்சிபெற்றுள்ளது. இத்துறைகளைச் சார்ந்த எண்ணற்ற பாட நூல்களும் ஆய்வு நூல்களும் இன்று வெளிவந்துள்ளன. உலக நாடுகளின் கல்வி அமைச்சுக்கள் கல்வியியல் ஆராய்ச்சிக்கென்று நிதியை ஒதுங்குகின்ற்ன. பல்கலைக்கழகக் கல்வியியல் துறைகளும் பல அரசாங்கச் சார்பற்ற நீங்களும் இக்கல்வியியல் ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன.
இவ்வாறான விரிவான பரந்த அறிவுத் தொகுதிகளும் அவை சார்ந்த கல்வி, பயிற்சி நெறிகளும் ஒன்றையொன்று தழுவிச் செல்வன. கல்வி, பயிற்சி நெறிகளின் வளர்ச்சியும் இவ் அறிவுத்துறைகளின் வளர்ச்சிக்கும் காரணமாயின. எடுத்துக் காட்டாக மருத்துவக்கல்வி பயிற்சி நெறியின் வளர்ச்சியின் காரணமாக அத்துறை சார்ந்த பாட நூல்கள் ஆராய்ச்சிகளில் வெளிவந்தன எனலாம். ஆயினும் இவ்விரண்டும், அதாவது கல்வி, பயிற்சி நெறிகளும் அவை சார்ந்த அறிவுத் தொகதியும் பெருமளவு சமாந்திரமான முறையிலேயே வளர்ச்சிகண்டன бт 5йї 9)üb இவ்விரண்டின் வளர்ச்சியும் ஒன்றிலொன்று தங்கியிருந்தன என்றும் அமைதி காணமுடியும்.
கல்வியியல் அறிவுத்தொகுதியின் விரிவான வளர்ச்சியோடு ஆசிரியர்களுக்குப் பொருத்தமான கல்வியியல் பயிற்சி நெறிகளும் இன்று பெரு வளர்ச்சி பெற்றுள்ளன. இவ்வாறான பயிற்சி நெறிகளைப் பயின்று உரிய தராதரங்களையும் தகுதிகளையும் பெற்றவர்கள் மட்டுமே இன்று பிற நாடுகளில் ஆசிரியர் நியமனங்களைப் பெறுகின்றனர். வளர்ச்சியடைந்த நாடுகளிலும் வளர்முக நாடுகளிலும் இவ்வாறான நிலைமையயை இன்று காணமுடியும். வளர்ச்சியடைந்த மேலை நாடுகளில் கல்வியியல் துறை உயர்பட்டம் பெற்றவர்கள் பாடசாலைகளில் ஆரம்ப நிலை வகுப்புகளில் பாலர்களுக்குக் கற்பிப்பதனைக் காண முடியும்.
வளர்ச்சியடைந்த நாடுகளில் ஆசிரியர் நியமனத்தைப் பெறுவோர் கல்வியியல் துறையில் பல்கலைக்கழகப் பட்டம்
பெற்றிருக்க வேண்டும். ஓர் ஆசிரியருக்கு தான் கற்பிக்கவிருக்கும் பாடவிடயம் பற்றிய அறிவும், ஞானமும் இருந்தால் மட்டும் ஓர் சிறந்த ஆசிரியராகிவிட முடியாது.

Page 43
72 கல்வியியல் கட்டுரைகள்
கல்வியியல் சார்ந்த அறிவையும் பெற்றாற்தான் ஒருவர் சிறந்த ஆசிரியராக முடியும். இன்று இலங்கையில் ஏறத்தாழ 50 விதமான ஆசிரியர்கள் கல்வியியல் பயிற்சி இன்றி ஆசிரியப் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களினுடைய கல்வியை தரரீதியாக மேம்படுத்துவதற்கு அனைத்து ஆசிரியர்களும் கல்வியியல் தகுதிகளைப் பெறுதல் வேண்டும்.
இன்று ஆசிரியர்களுக்குக் கல்வியியல் தகைமைகளை வழங்க எற்பாடுகளை இலங்கைக் கல்வியமைச்சு செய்துள்ளது அனைத்து ஆசிரியர்களும் இத்தன்மைகளைப் பெறல் வேண்டும் என்ற உணர்வு கல்விக்குப் பொறுப்பானவர்கள் மத்தியில் மேலோங்கிநிற்கின்றது. பட்டதாரிகளுக்கான பட்டப் பின்படிப்பு, உள்வாரிப் பயிற்சி நெறிகளை கொழும்புப் பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திறந்த பல்கலைக்கழகம் ஆகியன நடாத்தி வருகின்றன. உள்வாரிப் பயிற்சி என்பதால் பெருந்தொகையானவர்களுக்குப் பயிற்சி அளிக்க முடியாத நிலை உள்ளது. தேசிய கல்வி நிறுவனமும் இவ்வாறான பயிற்சி நெறிகளை நடாத்தி வருகின்றது.
இவை தவிர நாட்டில் பல ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளும் கல்விக் கலாசாலைகளும் பல்வேறு கல்வியியல் பயிற்சி நெறிகளை நடாத்தி வருகின்றன . குறிப்பாக கல்வியியல் கலாசாலைகள் ஆசிரியர் சேவையில் சேர்வதற்கு முன்னரே மூன்றாண்டுப் பயிற்சியை வழங்கி வருகின்றன. கொட்டகலையில் அமைக்கப்பட்டுள்ள கல்வியியல் கலாசாலை தமிழ்மொழி மூலமான பயிற்சி நெறிகளை நடாத்திவருகின்றது.
கல்வி அமைச்சின் தொலைக்கல்விப் பிரிவினரும் இவ்வாறான பயிற்சிகளை நடாத்தி வருகின்றனர். அத்துடன் சேவையிலுள்ள ஆசிரியர்களுக்கும் பல்வேறு பாடங்களில் அவர்களது கற்பித்தல் திறனை மேம்படுத்த விசேட சேவையாளர் கருத்தரங்குகள் நடாத்தப்பட்டு வருகின்றன.
கல்வித்தர மேம்பாட்டைப் பொறுத்தவரையில் அனைத்து ஆசிரியர்களும் முறையான கல்வியியல் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் என்பது ஒரு முன் நிபந்தனையாகும். இது இலங்கையில் இன்று நன்றாக உணரப்பட்டுள்ளது எனலாம். அத்துடன் ஆசிரியர்கள் தமது உயர் தொழில் அந்தஸ்தை மேம்படுத்திக் கொள்ளவும் கல்வியியல் தகுதிகள் பெருந்துணையாக அமையும்.

சோ.சந்திரசேகரன் 73
சகல ஆசிரியர்களும் தமது நாற்கல்வி மற்றும் தொழிற் கல்வித்தகைமைகளை மேம்படுத்திக் கொள்வதற்குத் தேவையான ஊக்குவிப்புகளை அரசாங்கம் வழங்குதல் வேண்டும். தமது தகுதிகளை உயர்த்திக்கொள்ள முயலு வோருக்குத் தேவையான விடுமுறைகளை வழங்கி கல்வி நிலையங்களில் பயிலச் செய்யலாம். இவ்வாறான தகுதிகளைக் கருத்திற் கொண்டு பதவி உயர்வுகளையும் வழங்கலாம். எவ்வாறாயினும் இவை யாவும் ஆசிரியர்கள் தமது தொழில் அந்தஸ்தை உயர்த்திக் கொள்ளப் பெரிதும் உதவும்.
மருத்துவம், சட்டம் போன்ற உயர் தொழில் துறைகளில் பணிபுரிவோருக்கென வுள்ள திட்ட வட்டமான ஒழுக்கக் கோவைகளும் அவற்றை முறையாகக் கடைப்பிடிக்கும் ஒழுங்கும் இத்துறைகள் உயர் தொழில் அந்தஸ்தைப் பெற மற்றொரு முக்கிய காரணமாகும். ஆசிரியர் சேவையிலும் இவ்வாறான ஒழுக்கக்கோவைகள் உருவாக்கப்பட்டுள்ளமை ஒரு முக்கிய முன்னேற்றமாகும். ஆசிரியர் சமூகத்தவர் இவ்வொழுக்கக் கோவையை நன்கு அறிந்திருப்பதுடன் அதற்கமைய சீராக ஒழுகுமிடத்து ஆசிரியர்களின் உயர் தொழில் அந்தஸ்து மேம்பட வாய்ப்புண்டு.

Page 44
கல்வியும் வேலைவாய்ப்பும்
1950களில் வளர்முக நாடுகளில் உயர்தரமான, இடைத்தரமான பயிற்சி பெற்றோர் மிகக் குறைவாக இருந்தனர். இதனால் இந்நாடுகளில் பொருளாதார வளர்ச்சி தடைபடும் என பொருளியலாளர்கள் கருதினர். இதன் காரணமாக எதிர் காலத்தில் தேவைப்படும் கல்வி பயிற்சியுடையோரின் தொகையைக் கருத்திற் கொண்டு கல்வி முறை விரிவு செய்யப்பட்டது.
பொருளியல் நோக்கில், கல்விமுறை எதிர்கால மனிதவலுத் தேவைகளின் அடிப்படையில் திட்டமிடப்பட்டது. விரிவு செய்யப்பட்டது. ஆயினும் ஏறத்தாழ இருபது ஆண்டுகளின் பின்னர் பெரும்பாலான வளர்முக நாடுகள் தீவிரமான வேலையின்மைப் பிரச்சினையை எதிர்நோக்க நேரிட்டது. தொழில் புரியக்கூடிய வயதெல்லையினரின் கல்வித் தராதரங்கள் உயர்ந்தன; அதேவேளையில், கல்வித் தேர்ச்சியுடையோரில் வேலையற்றோரின் தொகையும் அதிகரித்தது. வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் அறிகுறிகள் தென்படவில்லை. அதேவேளையில் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்யக்கூடிய கல்வித் தகுதிகளை உடையோரின் தொகை முன்னை விட அதிகரித்திருந்தது.
இதற்கு ஓர் எடுத்துக்காட்டைக் கூறலாம்; இலத்தீன் அமெரிக்க நாடுகளில் 1950 - 1965 காலப் பகுதியில் வேலையற்றோர் வீதம் 6 இலிருந்து 11 ஆக ஏறத்தாழ இருமடங்காக அதிகரித்தது. இந்நிலைமை வேலைவாய்ப்புத் தொடர்பான ஒரு நெருக்கடியாக வர்ணிக்கப்பட்டது; அதே வேளையில் ஆசிய வளர்முக நாடுகளின் பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள் வேலை வாய்ப்புளை அதிகரிக்க உதவவில்லை; தொழில்புரியக் கூடியவர்களின் அதிகரிப்புக்கு ஏற்ப வேலை வாய்ப்புகள் விரிவு பெறவில்லை.
மேற்காபிரிக்க நாடுகளில் ஆரம்பக்கல்வி முடித்தோர் மத்தியில் 1960 ஆம் ஆண்டளவிலேயே வேலையின்மைப் பிரச்சினை
 

சோ. சந்திரசேகரன் 75
காணப்பட்டது; அந்நாடுகள் சுதந்திரம் அடைந்த பின்னர் கல்வி விரிவு பெற்றது; அதன் விளைவாக இடைநிலைக்கல்வி, பல்கலைக்கழகக் கல்வி கற்றவர்கள் கூ வேலையின்மைப் பிரச்சினையை எதிர்நோக்க நேர்ந்தது. இலங்கையில் பல்கலைக்கழக கல்வி பயின்று வெளியேறுவோர் சிறு தொகையினர்; உயர்கல்வி பெற வேண்டிய வயதெல்லையினரில் (18 -23) ஒரு வீதமானவர்களே பல்கலைக்கழகக் கல்வி பெறுகின்றனர்; அவர்கள் மத்தியிலும் வேலையின்மைப் பிரச்சினை நிலவுகின்றது.
வேலைவாய்ப்புப் பெறுவோரும் தமது கல்வித் தகுதிகளுக்குக் குறைந்த வேலை வாய்ப்புகளையே பெறுகின்றனர். இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் விவசாயத்துறை சாராத, புதிய தொழில்களை வேலை வாய்ப்புகளை துரிதமாக விரிவாக்க முடியாத நிலையொன்று உண்டு. அதே வேளையில் பல ஆராய்ச்சி முடிவுகளின் படி, கல்வித் தேர்ச்சி பெற்றோர் உடல் உழைப்புத் தொழில்களிலோ அல்லது விவசாயம் சார்ந்த தொழில்களிலோ சேர விரும்புவதில்லை.
வேலைவாய்ப்புப் பற்றாக்குறை பிரச்சினை முதலாளித்துவப் பொருளாதார வளர்ச்சியின் இயல்பான விளைவா? அல்லது முதலாளித்துவ வளர்சியின் குறைபாடுகளின் விளைவா? இவ்வினாக்களுக்கு விடைகண்டால் மட்டும் வேலையின்மைப் பிரச்சினைக்கான தீர்வுகளைக் கண்டறிய முடியும்.
கைத்தொழில் துறையில் ஆர்வம் காட்டும் வளர்முக நாடுளில் முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கின் இயல்பான விளைவே வேலையின்மைப் பிரச்சினை என்பதற்கான சில உறுதியான
வாதங்கள் உண்டு.
தொழில்துறையில் முதலீடு தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்பவர்கள் பணமுதலுக்கு உரிமையாளர்களாவர்; அவர்கள் மனித உழைப்பைப் பயன்படுத்த அதிகம் விரும்புவதில்லை; தொழிலாளர்களை வேலைக்கு அதிக அளவில் அமர்த்தும் போது பல மனிதத் தொடர்புப் பிரச்சினைகள் ஜான்றுகின்றன: இவை பொருளுற்பத்தியை மேம்படுத்தி
6U) fT LU
மீட்டுவதில் தொழில் உரிமையாளர்களுக்குப் பல பிரச்சினை களைத் தோற்றுவிக்கின்றன.
இயந்திரங்கள் வேலைக்குத் தாமதமாக வருவதில்லை;

Page 45
76 கல்வியியல் கட்டுரைகள்
தொழிற்சங்கங்கள் அமைப்பதில்லை. வேலை நிறுத்தம் செய்வதில்லை. தமது பாதகமான வேலைச் சூழல் பற்றிப் போராட்டம் நடத்துவதில்லை. கிளர்ச்சி மனப்பாங்குடைய தொழிலாளர்களை முற்றாகத் தவிர்த்து, தொழிற்சங்கங்களை நடத்தும் விருப்பம் உரிமையாளர்களுக்கு உண்டு. இவ்வுரிமை யாளர்கள் முதலீடு பற்றித் தீர்மானிக்கும்போது தொழிலாளர் களை விட தொழில் ருட்பத்தையே விரும்புகின்றனர். இந்நிலையில் கற்றோர் வேலைவாய்ப்பின்மையால் சிரமமுற நேரிடுகின்றது.
கற்றோரில் அதிகமானோர் வேலையற்றிருப்பது தொழில் உரிமையாளர்களுக்கு ஒருவகையில் சாதகமாகவும் உள்ளது. வேலை செய்யும் ஊழியர்களின் சம்பளங்களை அதிகரிக்காமல் வைத்திருக்க இந்நிலைமை அவர்களுக்கு உதவுகின்றது; அவ்வூழியர்களுக்குப் பதிலாக வேலை செய்யப் பலர் வேலையின்றிக் காத்திருக்கின்றனர்; இதனால் வேலை செய்யும் ஊழியர்கள் உறுதியுடன் உயர்ந்த ‘சம்பளங்களைக் கேட்டுப் போராட முடியாத நிலைமையும் உண்டு.
வேலைவாய்ப்புப் பற்றாக்குறைப் பிரச்சினையைத் தீவிரமாக எதிர்நோக்கிய மெக்சிகோ, பியூட்டோரிக்கோ போன்ற நாடுகள் இப்பின்னணியில் உயர்ந்த பொருளாதார அபிவிருத்தி
வீதங்களைக் கண்டன .
இலங்கையிலு:ள் 5ா தனியார் பாடசாலைகளுடன் இன்று செல்வந்த வகுப்பிருக்கான சர்வதேசப் பாடசாலைகளும் வர்த்தக ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவை பல்வேறு நவீன வசதிகளையும் கற்கை நெறிகளையும் வழங்குவதுடன் ஆங்கில மொழி மூலம் கல்வியை வழங்குகின்றன. இவ்வாறான கல்விக் கூடங்களில் மாணவர்கள் பெறுகின்ற வளமிக்க அனுபவங்கள் மொழித் தேர்ச்சி, இன்றைய பொருளாதார மற்றும் வர்த்தக நிறுவனங்களின் தேவைக்கு உகந்த நடத்தைப் பாங்குகள் போன்றவற்றைப் பின் தங்கிய வகுப்பினரின் பிள்ளைகள் தாம் பயிலும் சேரிப் பாடசாலைகளில் பெற்றுக் கொள்ள முடியாது.
இப்பிள்ளைகள் பயிலும் பாடசாலைகள் எப்பொழுதுமே பல்வேறு வசதிகளில் மிகப் பின்தங்கிக் காணப்படுகின்றன. தொழில் உரிமையாளர்களின் மனப்பாங்குகள் பற்றி ஆராய்ந்தவர்கள், அவர்கள் எப்பொழுதுமே வசதி படைத்த பாடசாலைகளில் கல்வி கற்றோரையே வேலைக்கமர்த்த விரும்புகின்றனர். மேலும் வறுமையான குடும்பங்கள் தொழில் நிறுவனங்களுடன் எவ்வித

சோ.சந்திரசேகரன் zク
செல்வாக்கும் இல்லாதவர்கள் . இந்நிலையில் பின்தங்கிய வகுப்பினர் உயர்ந்த கல்வித் தகுதிகளைப் பெற்றாலும் சிறந்த வேலைவாய்ப்பினைப் பெற முடியாமல் உள்ளது. இதன் காரணமாக அவர்களுடைய சராசரி வருமானம் குறைந்த நிலையில் உள்ளது.
உலகளாவிய ஆய்வுகளின் படி மிகச் சிறந்த கல்வித் தகுதிகளைப் பெற்றவர்கள் அதிக நேரம் வேலை செய்கின்ற
வாய்ப்புகளைப் பெறுகின்றனர். அதிக வருமானத்தைப் பெறக்கூடிய தொழில் வாய்ப்புகளையும் பெறுகின்றனர். ஐக்கிய அமெரிக்காவில் செய்யப்பட்ட பல்வேறு ஆய்வுகள்
தனியாட்களின் வருமானங்கள் அவர்கள் பெற்றிருக்கின்ற கல்வித் தகுதிகளுக்கேற்ப வேறுபடுகின்றன என எடுத்துக் காட்டியுள்ளன .
வேலையின்மைப் பிரச்சினைக்குப் பல்வேறு தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. பல பொருளியலாளர்கள் அதிக மனித உழைப்பை பயன்படுத்தக்கூடிய உற்பத்தித் தொழிலாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படல் வேண்டும்; வளர்முக நாடுகளில் மனித உழைப்பை மலிவாகப் பெற்றுக் கொள்ளலாம்; அதற்கு ஏற்ற தொழில்நுட்ப வகைகளையே பொருளுற்பத்தியில் பயன்படுத்தப்படல் வேண்டும். இவ் வழிமுறை ஏராளமான வேலை வாய்ப்பை உருவாக்கும் என்பது அவர்களது கருத்து . ஆயினும் இவர்களது கருத்து நடைமுறைக்குப் பொருந்தாது. முதலாளித்துவத் தொழில் உரிமையாளர்கள் முதலீடு பற்றிய தீர்மானங்களை மேற்கொள்ளும் போது மனித உழைப்புக்கு அன்றி நவீன தொழில் நுட்பத்துக்கே முக்கியத்துவம் தருகின்றனர். இந்நிலையில், மனித உழைப்பை மட்டும் தான் பயன்படுத்த வேண்டுமென வலியுறுத்திக் கூற முடியாது.
வேலையின்மைப் பிரச்சினையைத் தீர்க்க பாடசாலைப் பாட ஏற்பாடு நாட்டிலுள்ள தொழில் வாய்ப்புகளுக்கும் பொருத்தமான தாவும் தொழிற்சார்புடையதாகவும் 960) Duu வேண்டும் என ஆலோசனை கூறப்படுகின்றது. இதற்குக் காரணம் இளைஞர்கள் வேலையற்றிருப்பதற்கும் பாடசாலைகள், நாட்டில் கிடைக்கக்கூடிய தொழில்களுக்கான திறன்களையும் பயிற்சியையும் வழங்குவதில்லையென நம்பப்படுவதாகும். இதனால் பல்வேறுபட்ட ஏற்பாட்டு மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. கிராமப் uTu-9T sosus sin கிராமப்புற வாழ்க்கைக்கும் கிராமியத் தொழில்களுக்கும் ஏற்றவாறு L6GT is 60) besetsuuLL 60T .
ஆயினும் பல்வேறு காரணங்களால் பாடசாலைப் பாட

Page 46
78 கல்வியியல் கட்டுரைகள்
எற்பாட்டில் செய்யப்படும் பெரிய மாற்றங்கள் கற்றோர் வேலையின்மைப் பிரச்சினையைத் தீர்க்க உதவுவதில்லை. நாட்டில் நிலவும் தொழில்களுக்கும் பாடசாலைகள் வழங்கும் பயிற்சிகளுக்குமிடையேயுள்ள பொருத்தப்பாட்டின் மையே இப் பிரச்னைக்குக் காரணம் என ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு ஆய்வு ரீதியான ஆதாரங்கள் இல்லை.
வளர்முக நாடுகளில் கற்றோர் வேலையின் மைக்கு முக்கிய காரணம் புதிய தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதும் அதனால் கற்றோர் செய்யக்கூடிய தொழில்கள் குறைந்து காணப்படுவதுமாகும். இளைஞர்களுக்குக் கல்விப்பயிற்சியை வழங்கினால் மட்டும் போதாது. அவர்களுடைய உழைப்புக்கான தேவையும் அதிகரித்தல் வேண்டும்.
ஆரம்பப்பள்ளி மாணவர்களை எந்தக் குறிப்பிட்ட தொழிலுக்கும் பயிற்றுவிக்க முடியாது என்ற கருத்தும் உண்டு. அவ்வாறான முயற்சிகள் செலவுகளை அதிகரிக்கச் செய்துவிடும். வேலை வாய்ப்புகளைப் பொறுத்த வரையில் பாடசாலைக்கு “உள்ளே” உள்ள வேறுபாடு போன்றனவற்றை நோக்குவதை விடுத்துப் பாடசாலைக்கு வெளியேயுள்ள பொருளாதார நிலைமைகளைக்
ருத்திற் கொள்வது பயன் தரும் என்பது ஆய்வாளர் கருத்து.
olதாழில்சார் கல்வியை வழங்குவதன் மூலம் இளைஞர்களை ஒரு குறிப்பிட்ட தொழிலில் சேர்ந்து கொள்ளுமாறு ஊக்குவிக்கலாம் என்ற கருத்தும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. கல்வி ஆய்வுகளிலிருந்து இதற்கான ஆதாரங்களைப் பெறமுடியாதுள்ளது.
`ரித்தானியர்கள் சென்ற நூற்றாண்டில் ஆபிரிக்க நாடுகளில் ட சாலைக் கல்வியினூடாக இளைஞர்களை விவசாயத் தொழில்களுக்கு ஆயத்தம் செய்தனர். ஆனால் அவ் விளைஞர்கள் அத்தொழில்களை விட அலுவலகத் தொழில்களே கூடிய பணவருவாய் தந்தமையால் அவற்றையே நாடினர். தொழில்கள் குறைந்த வருமானம் தருவனவாயும் குறைந்த சமூக மதிப்புடையனவாயும் அமையும் போது பாடசாலைகளினூடாக அத்தொழிலைச் செய்யும் மனப்பாங்கினை ஏற்படுத்தி விட முடியாது என்பது ஆய்வாளர் கருத்து.
சமூக மதிப்புமிக்க நூற்கல்வியைப் பயில்பவர்கள் பெரும்பாலும் உயர் சமூக வகுப்பினர். பிற சமூக வகுப்பினரும் இவ்வாறான கல்வியையே நாடுகின்றனர். அதன் காரணமாக நூற்கல்வி பயனற்றது; அதில் தொழில்சார்பு தொழிற்பயிற்சி என்பன

சோ. சந்திரசேகரன் 79
இல்லை; எனவே கல்வி, தொழில் மயமாக்கப்படல் வேண்டும் என்று கூறப்படுகின்றது. உண்மையில் நூற்கல்வியும் தொழிற்சார்புடையதேயாகும். மிக உயர்ந்த வருமானம் தரக்கூடிய, சமூக மதிப்பு மிக்க தொழில்களை, நூற்கல்வித் தகுதிகளினூடாகப் பெற்றுக்கொள்ள முடியும். இதன் காரணமாக நூல்கல்வியை உயர் சமூக வகுப்பினருக்குத் ஒதுக்கிவிட்டு பின்தங்கிய வகுப்பினருக்கு தொழிற்கல்வியை வழங்கும் சித்தாந்தங்கள் இன்று முன்வைக்கப்படுகின்றன.
வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்போது ஒரு மானப் பங்கீட்டிலும் மாற்றம் ஏற்படுகின்றது. அதாவது அதிக கல்வித் தகுதிகளை உடையோருக்கும் குறைந்த கல்வித் தகுதிகளை உடையோருக்கும் இடையிலான வருமான இடைவெளி குறைந்தது. இவ்வாறு வேலையின்மைப் பிரச்னை கூர்மையடையும் போது கல்விக்கான தேவைகளும் குறைய நேரிடுகிறது. எடுத்துக்காட்டாக ஐக்கிய அமெரிக்காவில் வேலை வாய்ப்புப் பிரச்சினை உச்ச நிலையை அடையும்போது பாடசாலை மாணவர் தொகை அதிகரிக்கின்றது. வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் போது மாணவர் தொகை குறைந்ததாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இரண்டாம் உலகப்போரின் பின் குறைந்த வருமானம் உடைய நாடுகளில் வேலை வாய்ப்பு பிரச்சினை தீவிரமடைந்தது. இதனைத் தொடர்ந்து பாடசாலைக் கல்வியும் உயர்கல்வியும் மிகவும் விரிவடைந்தன. இக்கல்வி நிலையங்களிலிருந்து வெளியேறியவர்களும் வேலைவாய்ப்புப் பிரச்சினையையே எதிர்நோக்க நேர்ந்தது. உயர்நிலைப் பள்ளியிலிருந்து கற்று முடித்து வெளியேறுவோர் வேலையின்மைப் பிரச்சினையை எதிர்நோக்கியவிடத்து அவர்களுடைய தேவை காரணமாக உயர்கல்வி நிலைகளை நாட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. 9

Page 47
பல்பண்பாட்டுக்கல்வி
இன்றைய பெரும்பாலான உலக நாடுகளைப் பன்மைச் சமுதாயங்கள் என அழைக்கலாம். வளர்முக நாடுகளிலும் வளர்ச்சியடைந்த கைத்தொழில் நாடுகளிலும் இவ்வாறான சமுதாயங்கள் காணப்படுகின்றன. பன்மைச் சமுதாயம் என்பது பல்வேறு வகைப்பட்ட பண்பாடுகளைக் கொண்ட பல்வேறு இன, மத, மொழிபேசும் மக்களைக் குறிக்கும்.
பல்வேறு நாட்டவர் வேறொரு நாட்டில் சென்று குடியேறுதல்; வர்த்தகம், தொழில் வாய்ப்பு காரணமாக வேறு நாடுகளுக்குக் குடி பெயர்தல்; கைப்பற்றப்பட்ட ஒரு நாட்டின் அரசு தனது மக்களை அந்நாட்டில் குடியேற்றுதல் போன்ற பல்வேறு காரணங்களால் இவ்வாறான பன்மைச் சமுதாயங்கள் தோன்றின.
பன்மைச் சமுதாயங்களில் வாழுகின்ற ஒவ்வொரு இனத்தவரும் தமது மொழி, கலை, இலக்கியம் உட்பட பண்பாட்டுத் தனித்துவத்தைப் பேணி வளர்க்க முற்படுகின்றனர். இது தவிர்க்கப்பட )للا واطrآgلق என்பதுடன் அரசாங்கங்களே இவ்வாறான பன்மைப் பண்பாட்டு வளர்ச்சிக்கு ஊக்கத்தையும் உதவிகளையும் வழங்க வேண்டியுள்ளது. இன்று வளர்முக நாடுகளிலும் இவ்வாறான நிலை காணப்படுகின்றது.
வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒரு பொது மொழியையும் பொதுப் பண்பாட்டையும் ஏற்று பெரும்பான்மை மக்களுடன் கலந்து விடுவதால் சிறுபான்மையினருக்குப் பல பொருளாதார வாய்ப்புகள் கிடைத்தபோதிலும் அந்நாடுகளிலும் சிறுபான்மை யினர் தமது தனித்துவத்தைப் பேணவே முற்பட்டனர்.
ஐக்கிய அமெரிக்காவில் வாழும் ஸ்பானிய, கனேடிய பிரஞ்சு மக்கள் சோவியத் யூனியனின் சிறுபான்மையினர் என்று இதற்குப் பல உதாரணங்களைக் கூறமுடியும்.
இவ்வாறு பல்வகைப்பட்ட பண்பாட்டு வளர்ச்சிக்கு இடமளிக்கும்
 

சோ.சந்திரசேகரன் 81
அதே வேளையில் நாட்டின் ஒருமைப்பாடு, இனங்களுக் கிடையிலான ஒற்றுமை, தேசியவாதம் என்பற்றையும் வலிறுத்த வேண்டிய அவசியம் பல நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது.
தீவிர இனத்தேசியவாதம் நாட்டின் பலதரப்பட்ட வளர்ச்சிக்குப் பாதகமாக அமையும் என்பதால் பண்பாடுகளின் வளர்ச்சிக்கும் இனத் தனித்துவத்திற்கும் இடமளிக்கும் அதே வேளையில் வேற்றுமையில் ஒற்றுமை காணவேண்டும் என்ற கருத்தும் வலியுறுத்தப்பட்டது.
சிறுபான்மைப் பண்பாட்டுக் குழுவினர் வாழ்ந்த பல்வேறு நாடுகளிலும் பல்வேறு துறைகளில் தமக்குப் பாரபட்சம் இழைக்கப்படுவதாகவும் அவர்கள் முறைப்பாடுகளைச் செய்தனர். குறிப்பாகக் கல்வித் துறை வசதிகளிலும் வாய்ப்புகளிலும் பாரபட்சம் காட்டப்படுவதாக அவர்கள் எடுத்துக் காட்டினர் .
இவ்வாறான பின்னணியில் "பன்மைப் பண்பாட்டுக்கல்விச் சிந்தனை” இப்பிரச்சினைகளுக்கான ஒரு தீர்வாக முன் வைக்கப்பட்டது. இச்சிந்தனையில் இரு அம்சங்கள் அடங்கும்.
1. சிறுபான்மைக் குழுவினர்களின் கல்வி மேம்பாட்டுக்காக வரையப்பட்ட கல்வி நிகழ்ச்சித் திட்டங்களும் செயற்பாடுகளும் பன்மைப் பண்பாட்டுக் கல்வி எனப்பட்டன.
2. சிறுபான்மை இனக்குழுவினரின் பண்பாடுகள், அனுபவங்கள் என்பவற்றை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கற்பிப்பதும் பன்மைப் பண்பாட்டுக் கல்வியின் மற்றொரு அம்சமாகும்.
இச் சிந்தனை தோன்றிய மேலைநாடுகளான ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா, அவுஸ்திரேலியா என்பவற்றில் பல இனக்குழுவினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் யாவரும் அச் சமுதாயங்களுடன் முற்றிலும் ஒன்றிணைந்து வாழுகின்றனர் என்று கூறுவதற்கில்லை.
இந்நாடுகளில் பின்பற்றப்படும் ஜனநாயக சித்தாந்தம் சகல மக்களும் பொருளாதார, சமூக, கல்வித் துறைகளில் சமத்துவ வாய்ப்புகளைப் பெறும் உரிமைகளை உறுதிசெய்கின்றன. ஆயினும் இவ்வாறான சித்தாந்தங்கள் கொள்கையளவில் சிறப்பியல்புகளைக் கொண்டிருந்த போதிலும் நடைமுறையில் இச் சிறுபான்மைக் குழுவினர்களுக்குப் பாதகமான,

Page 48
82 கல்வியியல் கட்டுரைகள்
பாரபட்சமான கொள்கைகளே கடைப்பிடிக்கப்பட்டன.
இந்நாடுகளின் ஜனநாயக அரசியல் கோட்பாடுகளும் மக்களின் கிளர்ந்தெழுந்த அபிலாசைகளும் பல்வேறு U TJULigës கொள்கைகளும், மேற்குநாடுகளில் 1960களிலும் 1970 களிலும் குடியியல் உரிமை இயக்கங்களும் இனங்களின் தனித்துவத்தைப் பேணும் இயக்கங்களும் தோன்றக் காரணமாயின.
பாடசாலைக் கல்விச் சீர்திருத்தம் இவ்வியக்கங்களின் முக்கிய இலட்சியமாயிற்று. ஐக்கிய அமெரிக்காவில் வாழ்ந்த ஆப்பிரிக்கர்களும், ஐக்கிய இராச்சியத்தில் வாழ்ந்த ஆசியர்களும், கனடாவில் வாழ்ந்த இந்தியர்களும், பாடசாலைகள், தமது பண்பாட்டைப் பற்றியும் வரலாற்றைப் பற்றியும் மேலதிகமாகக் கற்பிக்க வேண்டும் என்றும் பாடநூல்களில் ஓர் இனத்தவருக்குச் சார்பாகக் காணப்பட்ட அம்சங்கள் நீக்கப்படல் வேண்டும் என்றும் கோரிக்கைகளை விடுத்தனர். அத்துடன் சிறுபான்மை இனக்குழுவினர்களின் மொழிப் பாரம்பரியங்களையும் அவர்களுக்கே உரிய தனித்துவப் பண்புகளையும் பிரதிபலிக்கும் மொழிக்கல்வி நிகழ்ச்சித் திட்டங்களையும் அறிமுகம் செய்யுமாறு அவர்கள் வேண்டினர்.
இதனைத் தொடர்ந்து ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியயா ஆகிய நாடுகள் இக்கோரிக்கைகளுக்குச் செவி சாய்த்து பல புதிய பாடசாலை நிகழ்ச்சித் திட்டங்களும் பயிற்சி நெறிகளும் அறிமுகஞ் செய்யப்பட்டன .
இவ்வாறான பல்வகைப்பட்ட கல்வி நிகழ்ச்சித் திட்டங்களுடைய நோக்கங்களும் உள்ளடக்கங்களும் அவற்றின் பெயர்களும் பல்வேறு வகைப்பட்டனவாக அமைந்தன.
எடுத்துக்காட்டாக,
- இனக்குழு ஆய்வுகள்
(ethnic studies)
- பல இனக்கல்வி
(Multi ethnic education)
- இருமொழி, இரு பண்பாட்டுக் கல்வி (Bilingual and Bicultural Education)
கலப்புப் பண்பாட்டுக் கல்வி என்ற பெயர்களில் இந்நிகழ்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

சோ. சந்திரசேகரன் 83
வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும் இவ்வனைத்துக் கல்வி நிகழ்ச்சித் திட்டங்களும் "பன்மைப் பண்பாட்டுக் கல்வி" எனப் பொதுவாக அழைக்கப்பட்டன. ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும் இப்பொதுப் பெயர் கையாளப்படுகின்றது.
ஐக்கிய அமெரிக்காவில் பன்மைப் பண்பாட்டுக் கல்வி என்பது ஒரு பரந்த கருத்தில் சிறுபான்மை இனக்குழுவினர்கள், உடற்குறைபாடுடைய பிள்ளைகள், சமயப்பிரிவினர்கள், குறைந்த சமூக பொருளாதார வகுப்பினர் போன்றோர் தொடர்பான சீர்திருத்தங்களைக் கருதும்.
இவ்வாறு பரந்த பொருளில் இச்சிந்தனை பயன்படுதத்தப்படும் நாடுகளில் சிறுபான்மை இனக் குழுக்களின் கல் மேம்பாட்டுக்கான நிகழ்ச்சித் திட்டங்கள் “பல இனக்கல்வி" (Multi ethnic education) எனப் பெயர் பெறுகின்றன; சிறுபான்மை இனக் குழுக்கள் பற்றிய விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சிகள் “இனக்குழு ஆய்வுகள்” எனப்படுகின்றன.
பன்மைப்பண்பாட்டுக் கல்விச் சிந்தனையாளர்கள் சிறுபான்மை யின மாணவர்களின் கல்வித் தேர்ச்சியை மேம்படுத்தப் பாடசாலைகள் உதவ வேண்டும் என்றும் இவ்வினத்தவர்களின் பண்பாடுகளைப் பற்றிப் பெரும்பான்மையின மாணவர்கள் மேலும் அறிவு பெற வழிவகை செய்தல் வேண்டும் என்றும் கூறுவர். ஆயினும் இந்நோக்கங்களை எவ்வாறு அடைந்து கொள்ள முடியும் என்பது குறித்து இவர்களிடம் ஒத்த கருத்து இல்லை.
ஒரு சாரார் இனக்குழுக்களின் பண்பாடு பாட ஏற்பாட்டில் முக்கியத்துவம்வாய்ந்த, ஒன்றிணைந்த அம்சமாக இருக்க வேண்டும் என்பர். மற்றொரு சாரார் இவ்வம்சத்தை அதிகமாக வலியுறுத்தினால் தேசியப் u6sTUT (Gud (560) udů umT (E6) o பாதிக்கப்படும் என்றும் இனங்களுக்கிடையே பிரிவு மனப்பான்மை வளர நேரிடும் என்றும் கூறுவர்.
பன்மைப் பண்பாட்டுவாதிகள் இனத் தனித்துவத்தைச் சுட்டிக் காட்டும் அடையாளங்கள் நவீன சமூகங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும் இவையே இனக்குழு உறுப்பினரின் நடத்தைகளில் முக்கிய செல்வாக்கைச் செலுத்துகின்றன என்றும் வாதிடுவர். இக்கருத்தின்படி நவீன சமூகங்களில் சமூக பொருளாதார முன்னேற்றத்துக்காக ஒவ்வோர் இனக்குழுவினரும் போட்டியில் ஈடுபடுகின்றனர்.
எனவே தனியாட்கள் தமது இனக்குழுக்களில் ஈடுபாட்டை

Page 49
84 கல்வியியல் கட்டுரைகள்
வளர்த்துக் கொள்வது முக்கியமமானது; சமூக, அரசியல் சீர்திருத்தங்களுக்காகச் செயற்படும் வகையில் தமது றன்களையும் உளப்பாங்குகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இப்பன் மைக்கோட்பாட்டு வாதிகளின் கருத்தின்படி இனக்குழுக்களின் அரசியல், சமூக அபிலாசைகள், பண்பாடுகள் மரபுவழி அறிவுச் சிந்தனைகள் என்பவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் பாடசாலைப் பாட ஏற்பாட்டில் அடிப்படையான சீர்திருத்தங்கள் செய்யப்படல் வேண்டும்.
இனக்கலப்புவாதிகள் (assimilationist) எனப்படுவோர் பல்வேறு இனங்களும் தமது தனித்துவத்தை இழந்து பெரும்பான்மை யினத்துடன் கலந்து ஓரினமாகிவிட வேண்டும் என்ற கருத்தை முன்வைப்பவர்கள். இவர்களுடைய சிந்தனை நாடுகளில் இனத்துவம், இனத்தனித்துவம் என்பன வலிமை வாய்ந்தன என்ற கருத்தை ஏற்பதற்கில்லை; இதற்கு மாறாக வளர்ந்து வரும் நவீன சமுதாயங்களில் இனத்துவம் சார்ந்த அபிமானங்கள் தற்காலிகமானவை; நவீன மயமாக்கம், கைத்தொழில் மயமாக்கம் என்பவற்றின் விளைவாக இனத்தனித்துவமும் இன வேறு பாடுகளும் மறைந்து போகும்.
கைத்தொழில் மயமாக்கப்பட்டுள்ள நாடுகளில் தனியாட்கள் வர்க்கச் சார்புடையவர்களாக இருப்பார்களேயன்றி இனச்சார்புடையவர்களாக இருக்கமாட்டார்கள் அதி நவின சமுதாயங்களில் பல இனத்துவங்களுக்கும் குறுகிய இனச்சார்புகளுக்கும் இடமில்லை.
தேசிய அரசுகளின் உயரிய இலட்சியங்களை அடைந்துகொள்ள ஒரே வழி சகல இனத்தவர்களும் தனியாட்களும் பொதுவான தேசிய பண்பாடொன்றைப் பெறும் வகையில் முழுமையான சமூகமயமாக்கத்துடன் (full Socialisation) உள்ளாக்கப்படல் வேண்டும்; எனவே அவர்களுடைய கருத்தின்படி, பாடசாலைகள் இவ்வாறான முறையில் மாணவர்கள் 9 (5 பொதுப் பண்பாட்டைக் கைக்கொள்ளும் வகையில் கல்வி வழங்கும் நிறுவனங்களாக மாறவேண்டும்.
இவ்விரு சிந்தனைகளுக்கும் இடைப்பட்ட கருத்துக்களைக் கொண்டோராக விளங்குபவர்கள் பல்லினக்கோட்பாட்டு sumas rts. (multi ethnic theorists) gsusebs)Lu கருத்தின்படி, நவீன சமுதாயங்களில் இனத்தனித்துவம் (ethnic identity) geot 55 suid (ethnicity) என்பனவற்றின்

சோ.சந்திரசேகரன் 85
செல்வாக்கினை மிகைப்படுத்திக் للاوامرا) ( صلة fT لو . இச் சமுதாயங்களில் SunT (? Üld பல்வேறு சிறுபான்மை இனக்குழுக்களும் முற்றாக பொதுத் தேசியப் பண்பாட்டை (Common national culture) - g5 55 56f 6f 65u () 56 flig) 6) இயல்புகளுடன் (Individuality) sumps glou 6) Gu; g(35 வேளையில் தனியாட்கள் இனச் சார்புடை யோராய் இருப்பதையும் நவீன சமூகங்களில் இனத்துவத்தின் தனித்துவத்தையும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. இச்சமுதாயங்களில் வாழ்வோர் இனத்துவத்தில் மட்டுமல்லாது நாட்டுப்பிரசைகள் என்ற முறையில் தேசிய பண்பாட்டிலும் ஈடுபாடு கொண்டவராக உள்ளனர்.
இந்நிலையில் மாணவர்கள் தமது இனக் குழுவில் மட்டுமன்றி தேசிய பண்பாட்டிலும் இணைந்து வாழ்வதற்குத் தேவையான உளப்பாங்குகளையும் திறன்களையும் வளர்த்துக் கொள்வதற் கான முறையில் பாடசாலைகள் பாட ஏற்பாட்டை ஒழுங்கு செய்தல் வேண்டும்.
இவ்வாறான பன்மைப் பண்பாட்டுக் கல்வி தொடர்பான பல்வேறுபட்ட முரண்பட்ட கருத்துக்கள் பாடசாலைப் பாட ஏற்பாட்டுச் சீர்திருத்தங்களில் தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன.
ஆயினும் பன்மைப் பண்பாட்டுக் கல்வி, பாட ஏற்பாட்டில் வலுவான இடத்தைப் பெற்ற பின்னர் இவ்வாறான கருத்து முரண்பாடுகள் குறைந்து ஒரு பொதுக் கருத்து ஏற்பட வாய்ப்புண்டு என்பது இத்துறை சார்ந்த அறிஞர் கருத்தாகும். ச

Page 50
விழுமிய மையக் கல்வி
கீழைத்தேயக் கல்வி மரபில் ஒழுக்கக்கல்வி வலியுறுத்தப் பட்டதுடன் தனிமனித சமூக வாழ்க்கை நிலைமைகளில்
போற்றிப் ப்ேணவேண்டிய பெறுமானங்களும் விழுமியங்களும் முக்கிய இடம் பெற்றன; பண்டைய கல்விச் சிந்தனையும்
செயற்பாடுகளும் விழுமியங்களை மையமாகக் கொண்ட கல்வி எனக் கொள்ளப்படலாம்; ஆயினும் ஐரோப்பியக் கல்வி
மரபுகளின் செல்வாக்கிற்குட்பட்ட வளர்முக நாடுகளின்
கல்விமுறைகள், இநங்நாடுகள் சுதந்திரமடைந்த பின்னர்
தேசிய அபிவிருத்திக்கான கருவிகளாகத் திட்டமிடப்பட்டன. பொருளாதார அபிவிருத்திக்குத் தேவையான அறிவையும் திறன்களையும் வழங்கி சாதாரண மனிதனை, உற்பத்திக்கு உதவக்கூடிய மனித சாதனமாகப் பயிற்றுவித்தன; கல்வியின் அபிவிருத்தி நோக்கு, விழுமிய மையக்கல்வியின் முக்கியத்து வத்தைக் குறைத்தது.
மேலும், கடந்த தசாப்தத்தில் ஆசியாவின் வளர்முக நாடுகள் நவீன தொழில்நுட்பவியல், தொலைத்தொடர்பு சாதனங்கள் என்பவற்றின் அறிமுகத்தால் பல்வேறு மாற்றங்களுக்குள்ளாயின. இக்காலப்பகுதியில் மேலைநாட்டுப் பண்பாட்டு அம்சங்களின் செல்வாக்கும் மிகுந்தன; விஞ்ஞான தொழில்நுட்ப முன்னேற்றங்களால் மக்கள் வாழ்க்கையின் சகல அம்சங்களும் மாற்றங்களுக்குள்ளாயின. பொருளாதார வளர்ச்சி, வாழ்க்கை முறை, சமூக மனப்பாங்குகள், நம்பிக்கைகள், விழுமியங்கள், மக்களின் ஒழுக்க விருத்தி என்பன அத்தகைய அம்சங்களுள் சிலவாகும்.
கைத்தொழில் வளர்ச்சி நோக்கிய மாற்றங்களின் காரணமாக மக்களின் வாழ்க்கைப்பாணி, வாழ்க்கைப் பெறுமானங்கள், உளப்பாங்குகள் என்பன மாற்றமுற்றன; நவீனமயமாக்கமும் நகரமயமாக்கமும் புதிய நகர்ப்புற வாழ்க்கைப் பாணிகளை அறிமுகம் செய்துள்ளன; இவை பாரம்பரிய கிராமிய வாழ்க்கைமுறைகளிலிருந்து வேறுபட்டவை; தனியாளின் சிந்தனைகளுக்கான அங்கீகாரம், போட்டி உணர்வு, பொழுது போக்குகளுக்கு முக்கியத்துவம், பொருள் நுகர்வில் கூடிய
 

சோ.சந்திரசேகரன் 87
நாட்டம் என்பன புதிய அம்சங்களாகும். விஞ்ஞானம், பொருளாதார வாய்ப்புகள் என்பவற்றை முக்கியமாகக் கருத்திற்கொண்டு கல்விமுறைகளும் திருத்திய மைக்கப்பட்டன; இந்நிலையில் கல்விமுறை வலியுறுத்த வேண்டிய மனித அம்சங்களும் பண்பாட்டு மற்றும் அறவொழுக்க அம்சங்களும் முக்கியத்துவமிழக்க நேரிட்டது; இதனால் மக்களின் பண்பாட்டு ஒழுக்க நடவடிக்கைகள் சீர்கேடடைய நேரிட்டன.
மனித விழுமியங்களுக்கு ஒரு வரையறை உண்டு. மனிதர்கள் உலகுடன் இணங்கி இசைந்து வாழ உதவுவன மனித விழுமியங்களாகும். அன்பு, சகோதரத்துவம், பிறரை மதித்தல், நேர்மை, உண்மை, அஹிம்சை உணர்வு, சகிப்புத்தன்மை, ஒத்துழைப்பு மனப்பாங்கு, பொறுப்புணர்வு போன்றன அத்தகைய விழுமியங்களுட் சிலவாகும். கல்வி இவ்வாறான விழுமியங்களை உள்ளடக்கியது; அத்துடன் கல்வி என்பது எதிர்கால தலைமுறையினர் பெற்றிருக்க வேண்டிய விழுமியங்களையும் உள்ளடக்கியது. மனிதர்களிடம் இவ்வாறான விழுமியங்களை வழங்குவதற்கான ஆற்றல் மிக்க ஊடகமாக விளங்குவது கல்வியாகும்.
கீழைநாடுகள் மட்டுமன்றி மேலைநாடுகளும் விழுமியமையக் கல்வியின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்துள்ளன. 1988 இல் பாரீஸில் கூடிய ஐரோப்பிய கல்வி அமைச்சர்களின் மகாநாட்டில் விழுமியமையக் கல்வியின் முக்கியத்துவம் ஆராயப்பட்டது; அவர்களின் கருத்தின்படி கல்வி முறைகள் மனித விழுமியங்களைப் பேணுவதில் அக்கறை செலுத்தவில்லை; இதனால் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்று கருதிய மகாநாடு கற்பித்தற் செயற்பாடு மனித விழுமியங்கள் பற்றிய உயரிய கருத்தோட்டத்தை மாணவர்களுக்கு வழங்க வேண்டுமென்றும் கல்வியின் மனித, பண்பாட்டு, சர்வதேச பரிமாணங்கள் ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டும் என்றும் விதந்துரைத்தது. 1974 ஆம் ஆண்டிலேயே யுனெஸ்கோ நிறுவனம் தனது 0 Փյնւ நாடுகள் இவ்வாறான நிலைப்பாட்டினைக் கருத்திற் கொள்ளவேண்டுமென்றும், பல்வேறு கல்வி நிலைகளில் பல்வேறு பண்பாடுகள், அவற்றின் பரஸ்பர செல்வாக்கு பற்றிய ஆய்வுகள் இடம் பெறவேண்டும்; இவற்றினூடாகப் பண்பாட்டு வேறுபாடுகளைப் புரிந்து வரவேற்கும் மனப்பாங்கு வளர்க்கப்படல் வேண்டும் என்று வேண்டிக் கொண்டது.
பன்மைப் பண்பாட்டு நிலைமைகளை வலியுறுத்தும் நோக்கும்

Page 51
88 கல்வியியல் கட்டுரைகள்
அம்சங்களும் இலங்கைக் கல்வி முறையில் காணப்படாததன் காரணமாக இந்நாட்டில் இனக்கசப்பும் ஒற்றுமையின்மையும் வளர நேரிட்டது என்பது பல அறிஞர்களின் கருத்து. புவியியல் ரீதியான வாழ்விடங்கள் இனங்களைத் தனித்து வாழச் செய்யுமிடத்து இன ஒற்றுமைக்கு இவ்வாறான கல்விசார் அணுகுமுறைகள் தேவை. 1970 களில் செய்யப்பட்ட பாடநூல் ஆய்வுகளின் படி இலங்கையில் தேசிய ஒருமைப்பாடு, பன்மைப் usiTurt'G நிலைமை என்பன சிறுபான்மையினருக்கே வலியுறுத்தப்பட்டன . பெரும்பான்மையினரைப் பொறுத்த வரையில் பெருமளவுக்கு இந்நாடு அவர்களுடையது; சிறுபான்மையினத்தவர்கள் அந்நியர்கள் என்ற முறையில் பாடநூல்களில் சித்திரிக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்; அதாவது தேவையான விழுமியங்கள் கல்வி முறையில் வலியுறுத்தப்படவில்லை.
இன்று பல்வேறு ஆசிய நாடுகளும் கல்வியில் ஒழுக்க
விழுமியங்களின் அவசியத்தை ஏற்றுக்கொண்டுள்ளன. இந்திய அறிஞர் இராதாகிருஷ்ணன் கருத்தின் படி நாகரிகம் என்பது கல்லாலும் உருக்கு இயந்திரத்தாலும் உருவாக்கப்படுவதல்ல; மனிதன் அதாவது பண்பாடு, நற்குணங்கள் என்பனவே
நாகரிகத்தை உருவாக்குகின்றன. இந்திய கல்விமுறையை ஆராய்ந்த சேர்த்தாகி ஆணைக்குழுவும் இக்கருத்தை ஏற்றது.
அத்தியாவசிமான விழுமியங்களைக் கற்பிக்காத கல்விமுறை
நாட்டில் பாரதூரமான சமூகப் பிரச்சினைகளை உருவாக்கும்; எனவே கல்விமுறை விழுமியங்களைக் கருத்திற் கொண்டு அமைய வேண்டும் என்பது இவ்வாணைக் குழுவின் கருத்தாக அமைந்தது .
இவ்வாணைக்குழுவின் விதந்துரைகளாவன; - சகல கல்வி நிலையங்களும் தமது கல்விச்செயற்பாட்டில் சமூக, ஒழுக்க ஆன்மீக விழுமியங்களுக்கு இடமளிக்க
வேண்டும். - ஆசிரியர்களும் மாணவர்களும் இவைபற்றி அறிய விசேட
பாடநூல்கள் எழுதப்படல் வேண்டும்.
மனிதர்களின் வளர்ச்சிக்கான ஒரு முன்நிபந்தனை இவ்வாறான விழுமியங்களின் விருத்தியாகும்; இந்திய சமூகம் விஞ்ஞான தொழில்நுட்ப அறிவுத்துறைகளில் மட்டுமன்றி அதன் சமூக, பண்பாட்டு அம்சங்களிலும் நவீன மயப்படுத்தப்படல் வேண்டும் என்பது இக்குழுவின் கருத்தாகும்.
பிலிப்பைன்ஸிலும் விழுமியக்கல்விக்கு முக்கியத்துவம் வழங்கப்

சோ. சந்திரசேகரன் 89
படுகின்றது . அந்நாட்டின் கல்வி அமைச்சு அதற்கான நிகழ்ச்சித் திட்டங்களை வரைந்துள்ளது. சமூக மாற்றத்தில் மக்கள் வெற்றிகரமாகப் பங்குகொள்ள அவர்களுடைய விழுமியங்கள், மனப்பாங்குகள், நடத்தைகள் பற்றிய மறுபரிசீலனை தேவை என்ற கருத்து அங்கு நிலவுகின்றது. விழுமியக்கல்விச் செயற்பாடுகள் கல்விமுறையின் SF SS நிலைகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன; விழுமியங்கள் கருத்தியல் நிலையில் இருப்பது மட்டுமன்றி செயல்வடிவமும் பெறவேண்டும் என்பது இவ்வேற்பாடுகளின் நோக்கமாகும்.
தாய்லாந்தில 1990, 1991 இல் நிகழ்ந்த தேசிய கல்விக் கருத்தரங்குகளில் இவ்விடயம் விரிவாக ஆராயப்பட்டது; கல்வி வெறுமனே பொருளாதாரப் பயனுடையதாக அமையக்கூடாது; அதற்கு அப்பால் சென்று அடிப்படையான மனிதநேய, ஒழுக்க விழுமியங்களையும் கல்விச் செயற்பாடு கருத்திற் கொள்ள வேண்டும் என்று இக்கருத்தரங்குகளில் தீர்மானிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து யாவருக்கும் கல்வி வழங்குவது தொடர்பாக வரையப்பட்ட தேசிய நீடத்தில் யாவருக்குமான அடிப்படைக்கல்வியின் அம்சங்கள் வரையறை செய்யப்பட்டன; யாவருக்குமான அடிப்படைக்கல்வி வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற வேண்டும்; மக்களின் ஒழுக்க விழுமியங்களை
மேம்படுத்த வேண்டும்; மாறிவரும் சமுதாயத்தில் சமாதானத்தைப் பேண உதவ வேண்டும்; மக்கள் தொடர்ச்சி யாகக் கற்பதற்குத் தேவையான திறன்களையும்
ஆற்றல்களையும் வழங்க வேண்டும்; எதிர்கால மாற்றங்களுக்கு இசைந்து வாழ மக்களைப் பயிற்ற வேண்டும்; உழைக்கும் ஆற்றலை வழங்க வேண்டும்; பொறுப்பான பிரசைகளை உருவாக்க வேண்டும்; அவர்களின் சுயதிறன்களை வளர்க்க வேண்டும் என்று வரையறை செய்யப்பட்டது.
பல்வேறு ஆசிய நாடுகளிலும் சமயக்கல்வி, குடியியல் ஆகிய பாடங்களினூடாக விழுமியக்கல்வி வழங்கப்பட்டு வந்தது; ஆயினும் இவை விஞ்ஞானம், கணிதம், மொழிகள் பெற்ற முக்கியத்துவத்தைப் பெறவில்லை. அண்மைக்காலங்களில்தான் விழுமியங்களை நேரடியாகக் கற்பிக்கும் பாடங்களுக்குப் பாட ஏற்பாட்டில் சமமான முக்கியத்துவம் வழங்கப்பட்டது.
மலேசியாவில் 1982 தொடர்ச்சியின் ஆரம்பப்ப்ள்ளி நிலையில் நற்பிரசைக் கல்வியும் ஒழுக்கக்கல்வியும் வழங்கப்பட்டு வருகின்றது; மலேசியா பல இனமக்களைக் கொண்டநாடு என்பதால் இவ்வகையான கல்விக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது; கல்வியினூடாகத் தேசிய நாட்டுப்பற்று,

Page 52
90 கல்வியியல் கட்டுரைகள்
பல்வேறு இனக்குழுக்கள் சுய ஆற்றலில் தங்கிநிற்பதை விரும்புதல் என்பன நற்பிரசைக்கல்வியின் நோக்கங்களாக அமைந்தன; முதல் மூன்று வகுப்புகளில் கற்பிக்கப்பட்ட விழுமியங்களாவன: உள, உடல் தூய்மை, அனுதாபம், நிதானம், நன்றியுணர்வு, நேர்மை, அன்பு, பரஸ்பர மரியாதை, அடக்கம், சுதந்திரம் என்பனவாம்.
இந்தோனேசியாவின் நற்பிரசைக்கல்வி, அரசுக்கோட்பாடான பஞ்ச சீலங்களின் அடிப்படையில் அமைந்தது. கடவுளில்
நம்பிக்கை, பண்பாடான மனிதநேயம், இந்தோனேசிய
ஒற்றுமை, சனநாயக உணர்வு, சகல மக்களுக்குமான சமூக நீதி என்பன வலியுறுத்தப்பட்டன. 1975 இல் பஞ்சசீல ஒழுக்கக்கல்வி அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது.
1991 ஜூன் மாதம் டோக்கியோவில் கூடிய ஒரு பிராந்திய ஆய்வு மகாநாட்டில் கலந்து கொண்ட பல ஆசிய நாடுகளின் கல்வியாளர்கள் விழுமியக்கல்வி தொடர்பான பிரச்சினைகளை ஆராய்ந்தனர்; இவ்விடயத்தில் தமது நாடுகளில் பல சாதகமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்று அவர்கள் தெரிவித்தனர்; சில நாடுகளில் விழுமியக்கல்விக்கென தனியான கற்கை நெறிகள் உள்ளன; வேறு சில நாடுகளில் இவ்விடயம் பிற பாடங்களுடன் இணைந்து கற்பிக்கப்படுகின்றது.
இவ்வாய்வாளர்கள் சுட்டிக்காட்டிய சில பிரச்சினைகளாவன : - நகர்ப்புறங்களில் கூட்டுக்குடும்பங்கள் சிதைவடைந்து சிறு சிறு குடும்பங்கள் தோன்றுவதால் குடும்ப அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள். - விஞ்ஞான, தொழில்நுட்ப முன்னேற்றத்தால் ஆன்மீக உணர்வில் ஏற்படும் சிதைவு, - கைத்தொழில் மயமாக்கம், நவீன மயமாக்கம் என்பனவற்றால் ஏற்படும் கைத்தொழில் சார்ந்த மனநிலை. இதனால் சமூகத்தில் ஏற்படும் பதட்டநிலை. - பல நாடுகளின் ஒழுக்கச் சீர்கேடுக்குப் பாடசாலைகளே காரணம், ஆயினும் ஒழுக்கக் கல்விக்குப் பாடசாலைகள் முழுக்கப் பொறுப்பும் ஏற்பதில்லை என்பதை நினைவிற்கொள்ள வேண்டும். மறுபுறம் பாடசாலைகளில் கற்றவை குடும்பத்தாலும் சமூகத்தாலும் நிராகரிக்கப்படும் நிலை. - இளையோருக்குத் தேவையான விழுமியங்களை வழங்குவதில் பெற்றோர்களின் செல்வாக்குக் குறைந்து வரும் நிலை. அவர்களுடைய விழுமியங்களை உருவாக்குவதில் பொதுத்தொடர்புச் சாதனங்கள் செலுத்தும் செல்வாக்கு.

சோ. சந்திரசேகரன் 9
இம்மாநாட்டில் முறைசார்ந்த, முறைசாராக் கல்விமுறைகளில் எவ்வாறு மனிதநேய, ஒழுக்க, பண்பாட்டு விழுமியங்களை அறிமுகம் ச்ெய்யலாம் என்பது பற்றி ஆராயப்பட்டது. பல்வேறு ஆசிய நாடுகளின் அனுபவங்களின் அடிப்படையில் இதற்கான சில அணுகுமுறைகள் கண்டறியப்பட்டன .
- விழுமியங்களைக் கற்பிப்பதற்கான தனியான கற்கை நெறிகளையும் பாடங்களையும் உருவாக்குதல்.
-- சமூகக்கல்வி, இயற்கை விஞ்ஞானம் போன்ற பாடங்களினூடாக விழுமியங்களைப் போதித்தல். - குடும்பம் மற்றும் சமூகவழிமுறைகளினூடாகக் கற்பிக்க ஏற்பாடுகள் செய்தல். விழுமிய மையக்கல்வியில் மிக அக்கறை கொண்ட நாடுகள் இம்மூன்று அணுகு முறைகளையும் பயன்படுத்தலாம் எனக் கருதுகின்றனர்.
விழுமியங்களுக்கு ஒரு சமூகத் தொழிற்பாடு உண்டு. பொதுவாகப் பின்பற்றப்படும் விழுமியங்கள் குடும்பங்களையும் சமூகங்களையும் நாடுகளையும் உலகத்தையும் இணைக்கின்றன. நீதி, சமாதானம், சுதந்திரம், சமத்துவம், அன்பு, பிறரை மதித்து வாழ்தல் போன்ற மனித விழுமியங்கள் நாடுகள் மக்கட் குழுவினர்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்துகின்றன . எனவே பல்வேறு அணுகுமுறைகளைக் கொண்ட விழுமியக் கல்வி, பிள்ளைகளுக்கு வழங்கப்படுவது அவசியமானது; இதனால் அவர்கள் மற்றவர்களுடன் இணங்கி வாழ்வதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்வர்; பல்வேறு வேறுபாடுகளைக் கொண்ட பல இன, பன்மொழிச் சமூகங்களில் சிறந்த உறுப்பினர்களாகும் மனப்பாங்கைப் பெறுவர்.

Page 53


Page 54


Page 55
śl(5. (35 m.
இவர் கெ கழகக் கல் தின் சமூக துறையின்
யாற்றுகிறா 61 (5. 55:ت |TT} ஆசானாகக் இலங்கையி பட்டத்தைப் ஜப்பானிய
மொழிப் ப ஹிரோஷிம திலும் LIL கொண்டு
துறையில்
தைப் பெ துறையில் 6 களை எழுதி
Gaaf SG
பூபாலசிங்கம் புத்த
340, செட்டியார்
கொழும்பு 1
 
 
 

நூலாசிரியர் சந்திரசேகரன்
ாழும்புப் பல்கலைக் விப் போதனா பீடத் விஞ்ஞானக் கல்வித் தலைவராகப் பணி இருபத்தொரு SULD LUGU 5 6096U355 235 சேவைபுரிந்தவர்.
SEGü 65 DIT GÖTÖrfi பெற்ற பின்னர் ஒசாக்கா அயல் ல்கலைக்கழகத்திலும் ா பல்கலைக்கழகத் டப்பிற்படிப்பை மேற் ஒப்பீட்டுக் கல்வித் முதுமாணிப் பட்டத் ற்றவர். கல்வியியற் ரராளமான கட்டுரை
யுள்ளார்.
}Ꭶ5Ꭶ IᎢ 6Ꭷ Ꭷu தெரு,