கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குழந்தைக் கல்விச் சிந்தனைகள்

Page 1

「여,

Page 2


Page 3

குழந்தைக் கல்விச் சிந்தனைகள்
கலாநிதி சபா. ஜெயராசா
போஸ்கோ வெளியீடு நல்லூர், யாழ்ப்பாணம்.
2OΟ

Page 4
நூற்பெயர்
நூலாசிரியர்
முகவரி:
பதிப்பு:
பதிப்புரிமை:
அச்சுப்பதிவு:
முன் அட்டை
விலை:
Title:
Author
குழந்தைக் கல்விச் சிந்தனைகள்
கலாநிதி சபா. ஜெயராசா M.A.(Ed) Ph.D.
கல்வியியல்துறை,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
முதலாவது, 2001.
நூலாசிரியர்.
Gum đỏ (335 T u$ Ủll 5 tD , நல்லூர்.
ரமணி
eburt 1 OO |-
KULANTA KALVI CHIN TANA I KAL
DR. SABA. JAY ARASAH, M.A. (Ed) Ph.D
Address: DEPT. OF EDUCATION, UNIVERSITY OF JAFFNA
Edition: FIRST, 200.
Copy Right: AUTOR
Cover Design: RA MAN .
Printer and Publisher: BOASCO PATIPPAGAV,
NALLUR, JAFFNA
PRICE: Rs. 100/-

Ko :برای 34წუმჯპუსჯა
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை
அவர்கள் வழங்கிய அணிந்துரை
கல்விச் செயல் முறையிலும் கருத்தியலிலும் விசைகொண்ட மாற்றங்களும் அபிவிருத்திகளும் நிகழ்ந்து வருகின்ற இன்றைய காலகட்டத்திலே இந்நூலகம் ஒரு பயன்மிக்க புலமைச் செயற் பாடாக அமைந்துள்ளது. குழந்தைக் கல்விக் கலைத்திட்டத்தை நன்கு கட்டமைப்புச் செய் வதற்குரிய சிந்தனைகள் பலவற்றை நூலாசிரியர் நன்கு திட்டமிட்டுத் தொகுத்துத் தந்துள்ளார். தமிழ் மரபில் குழந்தைக் கல்விச் சிந்தனைகள் பற்றி நன்கு ஆராய்ந்து விளக்கியிருக்கும் முறை மையும் பாராட்டுதற்குரியது. கலைத்திட்டத்தை வடிவமைப்பவர்களுக்கும், செயற்படுத்துபவர் களுக்கும் இந்த நூலாக்கம் மிக்க பயனுடைய தாகும். ஆய்வாளர்களுக்கு மட்டுமன்றி, பெற் றோருக்கும் இது ஓர் உபயோகமான நூலாக்க மாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை துணைவேந்தர் அலுவலகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,

Page 5
10 .
ll.
12.
3.
14.
15
6
7.
8.
9,
.
盛2,
பொருளடக்கம்
ஜோன் கென்றி பெஸ்டலோசி
(1746 - 1826)
ஜோன் பிரட்ரிக் கேரிபார்ட் xxx xx xxx 3.
(1776 - 1841) m
பிரெட்ரிக் புரோபல் • ო•ჯან: હજિન્મ જ
மரிய மொன்ரிசோரி அம்மையார்
ஜி. ஸ்ரான்லி ஹோல் * 88 R
அல்பிரெட் பீனே
ஜீன் பியாசே s» «es« 歌8x冷 sax-a-r
புறுனர் * * * 48 s
Lunt T5untíř и з» s» eaks
தேசிகவிநாயகம்பிள்ளை 象注 零
அழ. வள்ளியப்பா
சோமசுந்தரப்புலவர் w extázi
சிறாரைக் கேடுறுத்தல் தொடர்பான Fбурав உளவியற் காட்டுருக்களின் மதிப்பீடு
சிறார் கல்வி தொடர்பான மாற்றுவகைச் சிந்தனை a-a- a
புலன் தழுவிய கற்றல்
விளங்கும் திறன் வளர்ச்சி s
அசைவுக் கல்வி vko
பாலர் கல்வியில் இசையாக்கல் . சிந்தனையும் காரணங்காணலும் .
பேச்சுத்திறன்
மனவெழுச்சி நடத்தை & Ad
பாலர் கதைகள் 8 诊<铬 கலைச்சொற்றொகுதி
பக்கம்
O
O7
12
16
21
24
28
34
38
44
48
52
56
63
68
72
75
8O
84
86
89
92
97

ஜோன் கென்றி பெஸ்டலோசி
(1746-1826)
சிறுவர்களுக்கான உளவியல் மயப்பட்ட கல்விச் செயற்பாடுகளை மூன்மொழிந்தவர்களுள் பெஸ்டலோசி தனிச்சிறப்புப் பெற்றவர். ஐரோப்பாவில் ஏற்பட்ட கைத்தொழில்களின் படிப்படியான வளர்ச்சியும் அத னால் நிகழ்ந்த ஏழ்மையும், கல்வி நிராகரிப்புக்களும் இவரின் கல்விச் சிந்தனைகளிலே பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தின. ரூசோவின் இயற்பண்பு நெறி பெஸ் டலோசியின் மீது கருத்தியல் சார்ந்த நேர்நிலைகளை யும் எதிர்நிலைகளையும் பிறப்பித்தது. ஐரோப்பிய சூழலில் அரும்பத் தொடங்கிய மக்களாட்சிச் சிந்தனை கள் அவருடைய கல்விச் சிந்தனைகளில் வலிதாக ஊடுருவி நின்றன.
இவர் தமது கல்விச் சிந்தனைகளை வெறுமனே எழுத்து வடிவில் மட்டும் கூறாது, அவற்றின் நடை முறைப் பரிமாணங்களையும் விரிவாக ஆராய்ந்தார்.

Page 6
ஸ்ரான்ஸ் (Stanz), பேர்க்டோர்ப் (Burgdorf), வேர்டன் (Yverdon) முதலாம் ஊர்களில் பரிசோதனைப் பள்ளிக் கூடங்களை நிறுவி தமது கோட்பாடுகளின் நடை முறை நுட்பங்களையும் கண்டறிந்தார்.
பெஸ்டலோசி எழுதிய பின்வரும் நூல்கள் அவரது கல்வித் தரிசனத்தின் பரிமாணங்களைப் பலவகைகளில் விளக்குகின்றன.
1) *எனது அனுபவங்கள்’’ 2) "அன்னப் பறவையின் கீதம்' 3) “ஒரு துறவியின் மாலைப்பொழுது’’ 4) “லெனோர்ட்டும் யேர்ரூட்டும்' 5) "கிறிஸ்தோப்பரும் எலியாவும்’ 6) "இயற்கையின் அருள்மலர்ச்சியில் மனித உளறலின் வளர்ச்சி பற்றிய பரிசீலனை' 7) "யேர்ரூட் தமது குழந்தைகளுக்கு எவ்வாறு
கற்பிக்கின்றார்’. பெஸ்டலோசியின் கல்விச் செயல்முறையில் குடும்பத்தின் முக்கியத்துவம் மீள வலியுறுத்தப்படுகின் றது. அவரின் வாழ்நிலை அனுபவங்களே இந்த நிலைக்கு அடித்தளமிட்டன. அவர் பிறந்த சுவிற்சலாந்து சூரிச் நகரின் வாழ்க்கையிலும் குழந்தை வளர்ப்பிலும், கல்வி யிலும் குடும்பங்கள் உன்னதமான இடத்தை வகித்தன. பெஸ்டலோசி சின்னஞ்சிறுவனாயிருக்கும் பொழுதே தமது தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தார். கல்வி கற்பிப்பவர்களுக்குத் தாயின் குணவியல்புகள் அவசியமானவை என்பதை அவர் கண் டறிந்தார்.
பல்கலைக்கழகக் கல்வியை முடித்துக் கொண்ட தும் இவரது கல்விப் பணிகள் ஏழை விவசாயக் குழந் தைகளைத் தழுவியதாய் அமைக்கப்பட்டன. 1764-ம் ஆண்டில் அநாதைகளாய் விடப்பட்ட குழந்தைகளுக் கென ஒரு பள்ளிக்கூடத்தை நிறுவி செயல் அனுபவங் கள் தழுவிய கல்வியை வழங்கினார்.
2 -

சிறுவர்க்கான கல்வியில் கைகளும், அறிவும். உணர்வும் என்ற முப்பொருள்களினதும் முக்கியத் துவத்தை விளக்கிய அவர் அவற்றுக்கு உரிய முறையிலே பயிற்சிகள் வழங்கப்படல் வேண்டும் என்பதை வலி யுறுத்தினார்.
செயல் அனுபவங்கள் இன்றிக் கற்றல்; முயன்று தவறிக்கற்றல், இயற்கையை நம்பிய கற்றல் முதலிய வற்றின் எதிர்மறைப்பண்புகளை அவர் விளக்கினார். இச்சந்தர்ப்பத்தில் ரூசோவின் இயற்பண்பு நெறியோடு பெஸ்டலோசி முரண்படுகின்றார். கல்வியின் வாயிலாக குடும்பத்தை, கிராமத்தை, சமூகத்தை மறுமலர்ச்சி பெற வைக்க முடியும் என அவர் நம்பினார்.
கல்வியின் உள்ளடக்கம் பெஸ்டலோசியினால் இரு பெரும் பிரிவுகளாக வகுத்துக் கூறப்பட்டது.
1) பருப்பொருள் தொடர்பான கல்வி உள்ளடக்கம் இதில் பொருள் உற்பத்தி, விவசாயம், வணிகம், அறிவியல், பயன்தரு கலைகள் முதலியவை பற்றிய கற்கைகள் இடம்பெறும்.
2) அறவொழுக்கம் தொடர்பான கல்வி உள்ளடக்கம் இப்பிரிவில் ஒழுக்கவியல், சமயம், குடியியல் உரிமை கள், பிரசைகளுக்குரிய கடமைகள் ஆகியவை பற்றிய கற்கைகள் உள்ளடங்கும்.
இவ்வாறாக அமையும் கல்வியை வழங்கும்பொழுது கல்வியின் நடைமுறை முக்கியத்துவத்தை அல்லது பிரயோக முக்கியத்துவத்தை அவர் ஆழ்ந்து வலியுறுத் தினார். இச் சிந்தனையின் தொடர்ச்சியும் வளர்ச்சியும் அவரது குழந்தைக் கல்விச் சிந்தனைகளில் ஆழ்ந்து வேரூன்றி நின்றன.
அதாவது, குழந்தைகளுக்கான கல்வியும் கோட் பாட்டளவில் நின்றுவிடாது நடைமுறை சார்ந்ததாக
இருத்தல் வேண்டும் என்பது அவரது துணிபு.
- 3

Page 7
பெஸ்டலோசியின் சிறார்கல்விச் சிந்தனைகளைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்:
1) குழந்தைக் கல்வியில் பேச்சுக்கு முக்கியத்து வம் வழங்குதல், பேச்சுக்குப் பின்னரே எழுத்துக் கற் பித்தல் ஏற்புடையது. அவர் வாழ்ந்த காலத்தில் குழந் தைக்கல்வி, எழுதுதல் முக்கியத்துவத்தோடு ஆரம்பித் தமையை அவர் நிராகரித்தார்.
2) கற்பிக்கப்படும் பாடம் பொருள் குழந்தை களின் உடல், உள்ள, மனவெழுச்சிக்குப் பொருந்தக் கூடியதாக அமைதல் வேண்டும்.
3) கற்பித்தல் என்பது முற்றிலும் உளவியல் மயப்பட்டதாக, எளிதில் இருந்து படிப்படியாக சிக்கலை நோக்கிச் செல்லக் கூடியவாறு ஒழுங்குபடுத்தப்பட்ட தாக அமைக்கப்படுதலே சிறந்தது.
4) குழந்தைகளின் உள்ளுணர்வு ஆற்றலுடன் இணைந்த கல்வியை வழங்குதல் வேண்டும். அதாவது எண், மொழி, வடிவம் முதலியனவே உள்ளுணர்வு ஆற்றலுடன் தொடர்புடையவை. இவைதான் புலன் களால் தரிசிக்கப்படும் பொருள்கள் பற்றிய அறிவுக்கு அடிப்படைகளாகும். இதனை மேலும் விளக்குவதாயின் குழந்தைகள் காணும் பொருள்களுக்கு வடிவமும், எண் ணும், பெயரும் உண்டென்பதை அவர் கண்டார். பொருள்கள் பற்றிய நேரடி அனுபவங்களில் இருந்தே அறிவு கிளர்ந்தெழுவதாகக் கொள்ளப்படுகின்றது.
5) உற்றுநோக்கலும் புலக்காட்சியும் அறித லுக்கு அடிப்படைகளாகின்றன. உற்றுநோக்கப்படும் பொருள்கள் மொழியுடன் தொடர்பு படுத்தப்படல் வேண்டும். பொருளறியா ஒலிகளைக் கற்பிப்பதனால் பயனில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தெளி வற்ற-ஆனால் பொருள்பொதிந்த புலன் உணர்வுகளைத் தெளிவு படுத்துவதற்குச் சொற்கள் துணைநிற்கும்.
4 -

தற்காலத்தில் பயன்படுத்தப்படும் ஒலி மொழி முறை யியலுக்குரிய முன்னோடியாகவும் அவரைக் கருதலாம்.
6) குழந்தைகளுக்கான கற்பித்தலில் ஒவியம் வரைதலின் முக்கியத்துவமும் அவரால் வலியுறுத்தப் பட்டது. பொருள்களின் வடிவங்கள் பற்றிய விளக்கத் தைப் பெறுவதற்கு ஒவியம் துணைசெய்யும். எழுத்துக் கள் செப்பமடைய ஓவியக்கல்வி துணை செய்யும் என்றும் அவர் கருதினார்.
7) செயல்முறை அனுபவங்களில் இருந்தே எண்ணும் கணிதமும் கற்பிக்கப்படல் வேண்டும் என்ற கருத்தையும் முன்மொழிந்தார். அவர் காலத்தில் குழந் தைகள் மீது திணிக்கப்பட்ட அருவநிலையான (Abstract) கற்பித்தல் பயனற்ற நடவடிக்கை என்பது அவரது துணியாக இருந்தது.
8) கற்றலின் பல்வேறு கூறுகளிடையேயும் தொடர்பும் ஒத்திசைவும் இருக்கவேண்டிய தேவையைத் தமது கற்பித்தல் அனுபவங்கள்ை அடிப்படையாகக் கொண்டு தெளிவுறக் கூறினார். இதன் வாயிலாக ஆளுமையின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு வளமூட்ட முடியும்,
9) அனைத்துக் குழந்தைகளும் கல்வி கற்பதற் குரிய தகுதியுடையவர்கள் என்ற கருத்து அவரால் உரத்து ஒலிக்கப்பட்டது. ஒரு வகையில் தற்காலத்தில் முன்னெடுக்கப்படும் சமத்துவம், சமவாய்ப்பு முதலிய முனைப்புகளுக்கு உரிய முன்னோடிகளுள் பெஸ்ட லோசியையும் ஒருவராகக் கருத முடியும். ஆற்றலுள்ள வர்களுக்கும் வசதிபடைத்தவர்களுக்குமே கல்வி என்ற கருத்து வலிமையாக ஒலித்த காலகட்டத்தில் பெஸ்ட லோசி நலிந்தவர்களின் கல்வி வாய்ப்புகளுக்கான குர லாக ஒலித்தார்.
10) மனிதரின் தேவைகளில் இருந்தே கல்வியும் கண்டுபிடிப்புக்களும் முகிழ்த்தெழும் என்பது அவரது - 5

Page 8
கருத்தாக அமைந்தது. “அழுதபிள்ளை பால் குடிக்கும்" என்று தமிழ் மரபிலே கூறப்பட்ட கருத்துக்களுக்கும் பெஸ்டலோசியின் கருத்துக்களுக்குமிடையே ஒப்புமை காணமுடியும்.
பெஸ்டலோசி அவர்களது கல்விப் பங்களிப்புக் களைத் திறனாய்வு செய்கையில் குழந்தைகள் கல்வி யிலும் வறியோர்கள் கல்வியிலும் அடிப்படையான புரட்சிகளைச் செய்தார் என்று கூற முடியாது. ஆனா லும் குழந்தைகளை நடுநாயகப்படுத்தும் செயல்முறை சார்ந்த கற்பித்தல் இயக்கத்தை வலுவூட்டிய ஒருவராக அவர் விளங்கினார் என்பதை மறுக்கமுடியாது. பெஸ் டலோசியின் பணிகள் அவரின் பின்வந்தோரால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருதல் அவரின் செல்வாக்கைத் தெளிவுபடுத்துகின்றன.

ஜோன் பிரட்ரிக் கேர்பார்ட் (1776 - 1841)
பெஸ்டலோசியின் மாணவர்களுள் ஒருவராகிய கேர்பார்ட், தமது ஆசிரியரின் கல்விக் கோட்பாடு களுக்கு மேலும் வலுவூட்ட முயன்றார். கற்பித்தலில் உளவியலின் முக்கியத்துவத்தையும் செயல்முறைப் பாங்குகளையும் ஆழ்ந்து வலியுறுத்திய கல்வியாளராக அவர் விளங்கினார். இசை, கணிதம், தத்துவம், சட்டம் போன்ற பல்துறைகளில் இவர் பாண்டித்தியம் பெற் றிருந்தமையால் அனைத்து அறிவுப் புலங்களிலுமிருந்து கிடைக்கப்பெற்ற அனுபவங்களைச் சிறார் கல்வி யியலிலே பயன்படுத்தினார்.
இவரால் எழுதப்பெற்ற பின்வரும் நூல்கள் இவரின் கல்விச் சிந்தனைகளையும் கற்பித்தலியல் பற்றிய நடைமுறை விளக்கங்களையும் தெளிவாக விளக்குகின்றன: (1) "கற்பித்தலியற் கோட்பாடு பற்றிய சுருக்கம்* (2) 'கற்பித்தலியல் விஞ்ஞானம்' (3) "கல்வி விஞ்ஞானம்'

Page 9
(4) “கல்விக்கான கலைச் சொற்றொகுதி' (5) “கற்பித்தலியற் சுருக்கம்* (6) 'புலக்காட்சி அடிப்படைகள்’’.
புலக்காட்சிகளை முன்னறிவோடு தொடர்பு படுத்திக் கற்கும் “தொடுபுலக்காட்சி" (Apperception) யின் முக்கியத்துவம் இவரால் விரித்துரைக்கப்பட் டுள்ளது. ஒருவர் அறிவைத் திரட்டிக்கொள்வதில் அவரிடம் ஏற்கனவேயுள்ள அறிவின் களஞ்சியம் முக்கி யத்துவம் பெறுதல் இந்த எண்ணக்கருவாற் புலப்படுத் தப்படுகிறது. பிற்காலத்தில் இக்கருத்தானது "அனுப வத் திரளமைப்பு’ என்ற எண்ணக்கருவால் பியாசே யின் விருத்திமுறை சார்ந்த உளவியலில் நன்கு எடுத்
தாளப்பட்டுள்ளது.
கல்வி மற்றும் உளவியல் ஆகிய துறைகளை விஞ்ஞானப்படுத்தும் பல்வேறு முயற்சிகளை இவர் முன்னெடுத்தார். இவர் வாழ்ந்த சூழல் விஞ்ஞான வளர்ச்சியோடு இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. விஞ்ஞான மயப்படுத்தலோடு இணைந்த கற்பித்தலின் முக்கியத்துவம் அவரால் உணரப்பட்டிருந்தது. கற்பித் தலைக் கல்வியின் நடுநாயகக் கருத்தாக அவர் கொண் டார். கற்பித்தலின் விளைவாகவே சிந்தனையும் ஒழுக்க மும் முகிழ்த்தெழும் என்று அவர் கருதினார்.
கற்பித்தலியலை விஞ்ஞான மயப்படுத்த முயன்ற கேர்பர்ட், கற்பித்தல் தெளிவு கொண்டதாயும், தொடர்புபடுத்தல் கொண்டதாயும், செயலமைப்புவழி ஒருங்கிணைப்புடையதாகவும், பொருத்தமான முறை யியலை உள்ளடக்கியதாகவும் அமைக்கப்படல் வேண்டு மென்று விளக்கினார். இவை பின்வரும் ஆங்கில எண் ண்க்கருக்களால் விளக்கப்படும்:
(a) CLEARNESS (b) ASSOCIATION (c) SYSTEM (d) METHOD
8

கேர்பேர்ட்டின் மாணவராகிய சில்லர் என்பவர் இப்படி நிலைகளை மேலும் விரிவுபடுத்தி பின்வருமாறு நிரற்படுத்தினார்:
அ) தயாரித்தல் ஆ) சமர்ப்பித்தல் அல்லது வழங்குதல் இ) தொடர்புறுத்தல்
ஈ) செயலமைப்பு வழி ஒருங்கிணைத்தல் உ) பிரயோகித்தல்.
இந்தப் படிநிலைகள் ஆங்கிலத்தில் பின்வருமாறு விளக்கப்படும்:
a) PREPARATION b) PRESENTATION c) ASSOCIATION d) SYSTEM e) APPLICATION.
சிறாருக்குரிய கற்பித்தல் தொடர்பாக கேர் பேர்ட் முன்வைத்த கருத்துக்களைப் பின்வருமாறு சுருக்கிக் கூறலாம்:
1) சிறார்களுக்குக் கற்பிக்கத் தொடங்கும் பொழுது அவர்களது தொடுபுலக் காட்சியையும், அத னுடன் தொடர்புடைய முன்னறிவுத் திரளையும் அறிந்து கற்பித்தலை ஒழுங்கமைத்தல் வேண்டும்.
2) புலக்காட்சிப் பயிற்சிகள் கற்பித்தலிற் சிறப் பார்ந்த இடத்தைப் பெறுகின்றன. வடிவங்களைத் தெளிவாக உற்றுநோக்கி உள்வாங்கிக் கொள்ளச் செய்வதன் வாயிலாக கணித அறிவை மேம்படுத்த 4pւգ-պւb.
3) கட்டுப்பாடு, பயிற்சி ஆகியவை கற்பித்தலிற் சிறப்பார்ந்த இடத்தைப் பெறுகின்றன. பயிற்சி எப் பொழுதும் தற்கட்டுப்பாட்டையும்,தன்னடக்கத்தையும், சுய உறுதியையும் வளர்க்கின்றது. கட்டுப்பாடு, பயிற்சி
9

Page 10
ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது, பயிற்சி யையே மேலானதாகக் கொள்ளுதல் வேண்டும். பயிற்சி யும் கற்பித்தலும் ஒன்றையொன்று தழுவிநிற்றல் வேண்டும்.
4) ஒழுக்க மேம்பாட்டைக் கற்பித்தல் வாயி லாகவே முன்னெடுக்கமுடியும். ஒழுக்கம் என்பது அகத்தி லிருந்து முகிழ்த்தெழுவதால் அகத்தைச் செழுமைப் படுத்த மிக விரிந்த அகல்விரி கற்பித்தல் துணைசெய்யும்,
5) கற்பித்தல் கவர்ச்சியும் நாட்டமும் (Interest) கொண்டதாக அமைக்கப்படுதல் வேண்டும். கவர்ச்சி யானது ஆர்வத்தைத் தூண்டி வினைத்திறனுடன் முயற்சியடையச் செய்கின்றது. கவர்ச்சியை மலினப் பட்ட பொருளில் அவர் பயன்படுத்தவில்லை. கவர்ச் சியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகப் பாடப் பொருளை மலினமாக்கிவிடக் கூடாது.
6) பன்முனைப்பட்ட கவர்ச்சிகளைச் சிறார்க ளிடத்து வளர்த்தல் வேண்டும். அதாவது ஒருவர் பல் வேறு பாடங்களையும் கற்பதற்கு உற்சாகமளித்தல் வேண்டும். இதனால் ஒருவரது சிறப்புத் தேர்ச்சி நிரா கரிக்கப்படுவதாகக் கொள்ளமுடியாது.
7) கற்பிக்கப்படும் பாடங்கள் செய்தி வழங்கும் பிரிவில் அடங்கலாம் அல்லது உணர்ச்சியூட்டும் பிரிவில் அடங்கலாம். அதாவது அறிகை, எழுச்சி என்ற பிரிவு களை அவர் சுட்டிக்காட்டுகின்றார். அறிகை சார்ந்த பாடப் பொருள்களை உணர்ச்சியூட்டும் வகையிலே கற்பித்தல் ஆசிரியருக்குரிய பணியாகும்,
8) பகுத்தறிதல், தொகுத்தறிதல் என்ற திறன் களை வளர்க்கும் வகையிலே கற்பித்தலைக் கட்ட மைப்புச் செய்து அவற்றுக்குரிய பொருத்தமான பாடப் பொருள்களை அமைத்தல் வேண்டும் என்பதும் அவரால் குறிப்பிடப்படுகின்றது.
10 -

பெஸ்டலோசியின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி சிறுவர்க்கான கல்வியை வளம்படுத்தும் பல்வேறு நுண் ணுபாயங்களை இவர் முன்மொழிந்துள்ளார். கைத் தொழில் மயப்பட்டு மாற்றமடைந்து வளர்ந்துகொண் டிருந்த ஐரோப்பிய சூழலில், பொது மக்களுக்கான கல்வி விரிவடைந்துசென்ற நிலையில், அனைத்துச் சிறார்களையும் ஒரே வகுப்பறையிலே வைத்துக் கற் பிக்கும் கவிநிலையில் எதிர்நோக்கப்பட்ட பிரச்சினை களுக்குரிய விடையாக அவரது கல்விச் சிந்தனைகள் அமைந்தன.
ܐ ܐ ܢ

Page 11
பிரெட்ரிக் புரோபல்
ஜேர்மனியின் கிராமியப் பின்புலத்து வாழ்க்கை நிலைக்களனாகக் கொண்ட ஒரு கல்வி முறைமையின் வெளிப்பாடுகளை புரோபலின் (1783-1852) ஆக்கங் களிலே காணமுடியும். சிறார் கல்வியிலே ‘குழந்தைப் பூங்கா முறைமையை’ முன்மொழிந்த சிறப்பும் இவருக் குரியது. பெஸ்டலோசியின் பள்ளிக்கூடத்திலே பெற்ற அனுபவங்களும் இவரது சிந்தனைகளை வளமூட்டின.
குழந்தைப் பருவத்திலே தமது தாயாரை இழந்த தவிப்பும் கிராமப்புறத்து இயற்கைச் சூழலிலே வாழ்ந் தும் கற்றும் பெற்ற அனுபவங்களும், ஆசிரியத் தொழி லிலே கிடைக்கப்பெற்ற பன்முகமான அனுபவங்களும் குழவிப் பூங்கா முறைமையை உருவாக்குவதற்குரிய தளங்களாயின. அக்காலத்து ஜேர்மனிய சிந்தனை யாளர்களிடத்து முகிழ்த்திருந்த முழுநிறைவுக் கருத்தி u6o (Absolute Idealism) 90)Ifll –égså Gaf 6v6)IntéG& செலுத்தியிருந்தது. இறைவன், இயற்கை, மனிதன் ஆகிய மூன்றும் இணைந்த முழுமையானதும், ஒருமை யானதுமான கருத்தியல் இவரால் வலியுறுத்தப்பட்டது.
புரோபலின் கல்விக் கொள்கைகளை அவர் எழுதிய பின்வரும் நூல்களில் தெளிவாகக் கண்டு கொள்ளமுடியும்.
I2 -

1. "குழவிப் பூங்கா கற்பித்தலியல்'
'மனிதனின் கல்வி' 3. "அன்னையின் விளையாட்டும்,
மழலையர் பாடல்களும்" 4. 'விருத்திவழிக் கல்வி**.
ஒவ்வொருவரிடத்தும் கல்வி முழுவளர்ச்சியை ஏற்படுத்தல் வேண்டும். ஒவ்வொருவரதும் பன்முக ஆற்றல்களைக் கல்வி முனைப்புடன் வளர்த்தல் வேண் டும். இவற்றின் வாயிலாக மனிதரிடத்து உள்ளுறைந்து காணப்படும் இறையுணர்வை வெளிக்கொண்டுவருதல் வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகளுக்கான கல்வியின் முக்கியத்துவத்தை இவர் நன்கு உணர்ந்துகொண்டதுடன் தெளிவாக வெளிப்படுத்தியுமுள்ளார். மூன்று வயது தொடக்கம் ஏழுவயது வரையான குழந்தைகளுக்குரிய 'குழவிப் பூங்கா’ பள்ளியை அவர் திட்டமிட்டு அமைத்தார். அந்தப் பள்ளிக்கூடம் பின்வரும் பரிமாணங்களைக் கொண்டதாக அமைந்தது.
1) குழந்தைகள் தாம் விரும்பி ஈடுபடக்கூடிய செயல் களுக்கு பள்ளிக்கூடத்திலே வசதிகள் இருத்தல் வேண்டும்.
2) அத்தகைய செயல்களினால் தனது இயல்பை ஒரு
குழந்தை அறிந்து கொள்ளவும், சூழலை விளங்கிக் கொள்ளவும் முடியும்.
3) விரும்பி ஈடுபடும் நடவடிக்கைகள் அறிவுக்கும் செய
லுக்குமிடையேயுள்ள இடைவெளியைச் சுருக்கி ஆற்றலை அதிகரிக்கச் செய்யும்.
4) கற்றல் மகிழ்ச்சி கொண்டதாகவும், விடுதலை
உணர்ச்சி தருவதாகவும் ஆக்கம் தரும் ஊக்கலை முன்னெடுப்பதாகவும் இருத்தல் வேண்டும்.
13

Page 12
5) ஒவ்வொரு குழந்தையிடத்தும் காணப்படும் இயல் பான படைப்பாற்றலை வளர்ப்பதற்குரிய ஏற் பாடுகள் ஒழுங்கமைக்கப்படுதலே சிறந்தது.
6) Spairi digifu Gibsopra (Miniature State) pairaord அமைத்தல், சுதந்திரத்தோடும் மகிழ்ச்சியோடும் அவர்கள் ஈடுபடல் முதலியவை அவரது குழவிப் பூங்காவிலே இடம்பெற்றன.
7) அவருடைய குழவிப் பூங்காவில் பாடநூல்கள் பயன்படுத்தப்படவில்லை. அதாவது பாடநூல்கள் பொறிமுறையான கற்றலுக்கே இடமளிக்கும் என்று அவர் கருதினார்.
8) பாடுதல், ஒடியாடி இயங்குதல், புதிதாக நிர்மாணம் செய்தல் (Construction) முதலியவற்றால் மொழி யைப் பயன்படுத்துதலும், கருத்துக்களை வெளிப் படுத்துதலும் வளர்ச்சியடைகின்றன.
9) குழவிப் பூங்காவில் பாடல்கள் சிறப்பார்ந்த இடத் தைப் பெற்றன. குழந்தையின் உடல்வளர்ச்சி. உளவளர்ச்சி, ஒழுக்க வளர்ச்சி முதலியவற்றுக்குப் பொருத்தமான ஐம்பது பாடல்களை அவர் தயாரித்து வைத்திருந்தார். அவர் இயற்றிய பாலர் பாடல்கள் உலகப் புகழ் பெற்றவை. பல பாடல்கள் இன்றும் வழக்கில் உள்ளன.
10) குழந்தைகள் கல்விக்குரிய நன்கொடைகளையும் தொழிற் செயற்பாடுகளையும் அவர் வழங்கினார். வண்ணப் பந்துகள், மர உருளைகள், கோளங்கள் முதலிய பல பொருள்கள் அவர் வழங்கிய நன் கொடைகளாகும். காகித அலங்காரம், களிமண் வேலை, றேந்தை பின்னுதல், ஓவியம் வரைதல், முதலியவை அவர் வழங்கிய தொழிற் செயற்பாடு களுக்கு உதாரணங்களாகும்.
11) நன்கொடைகளும், தொழிற் செயற்பாடுகளும் குழந்தைகளின் புலன்களுக்கு இங்கிதமான அனுப
I4 -

வங்களைத் தருகின்றன. பொருள்களின் வண்ணம், வடிவம், பருமன் முதலாம் அனுபவங்களையும், எண் ணறிவையும் அழகுணர்ச்சியையும் வளர்க்கின்றன.
12) குழவிப்பூங்காவில் விளையாட்டுக்கள் சிறப்பார்ந்த இடத்தைப் பெறுகின்றன. மகிழ்ச்சி, இசைவாக்கம், விடுதலை உணர்வு, உளநிறைவு முதலியவற்றை விளையாட்டுக்கள் வழங்குகின்றன. குழந்தையின் தனித்துவமான இயல்புகள் விளையாட்டுக்கள் வாயி லாக வெளிவருகின்றன. அதனால் குழந்தைகளின் ஆன்மபலம் வளர்ச்சியடைகின்றது.
13) மொழிகள், கலைகள், சமயக்கல்வி, இயற்கை அறிவு, உடல் உழைப்பு முதலாம் பாடங்கள் குழந் தைகளின் உளநிலைக்கு ஏற்றவாறு கற்பிக்கப் படும்.
14) குழவிப் பூங்காவில் ஆசிரியர் பயிர் வளர்க்கும் தோட்டக்காரராய் இருந்து குழந்தைகளின் இயல் பான வளர்ச்சிக்கு ஊக்கமளித்தல் வேண்டும். குழந்தைகளின் இயல்பான ஆற்றல்களை அவர் மழுங்கடித்து விடலாகாது.
15) குழந்தைகளுக்குத் தரப்படும் பாதுகாப்பு வழி யாக அவர்களிடத்திலே கட்டுப்பாடுகள் வளர்த் தெடுக்கப்படும். கூட்டுறவுச் செயற்பாடுகள் அதற்கு மேலும் வலிமையைத் தரவல்லது.
குழந்தைகள் கல்வியிலும், குழந்தைகளுக்கான பிரயோக உளவியற் புலத்திலும் பிரெட்ரிக் புரோபல் தனித்துவமான பங்களிப்பினைச் செய்துள்ளார். துன் புறுத்தல்களுக்கு உள்ளாக்கிக் குழந்தைகளுக்குக் கற்பிக் கும் எதிர்மறைப் பாரம்பரியத்தை உடைத்தெறிந்தவர் களுள் இவர் குறிப்பிட்டுக் கூறப்படக் கூடியவர். குழந் தைக் கல்வி என்பது ஒரு மகிழ்ச்சிதரும் பூங்காவாகவும், உற்சாகம் தரும் நந்தவனமாகவும் இருத்தல் அவரது இலட்சியமாக அமைந்தது.
- 5

Page 13
மரிய மொன்ரிசோரி அம்மையார்
குழந்தைகளுக்கான உளவியல் மயப்பட்ட கல்வி இயக்கத்தின் நவீன சிற்பிகளுள் ஒருவராக மொன்ரி சோரி அம்மையார் (1870-1952) விளங்குகின்றார். இத்தாலியில் பிறந்த இந்த அம்மையார் ரோமாபுரிப் பல்கலைக்கழகத்திலே மருத்துவத்துறையிற் பெற்ற பட்டமும், உளநலம் குறைந்த குழந்தைகளின் பரா மரிப்பிலும், கல்வியிலும் ஈடுபட்டமையாற் கிடைக்கப் பெற்ற பட்டறிவும், அவரது கல்விச் சிந்தனைகளுக்கு வளமும் வலுவும் தந்தன.
குழந்தைகளை நடுநாயகப்படுத்திய கல்விமுறை யில், புலன்களுக்கான பயிற்சியின் முக்கியத்துவத்தை அம்மையார் வலியுறுத்தினார். அதாவது பொருத்த மான முறையில் குழந்தைகளின் புலன்களுக்குப் பயிற்சி தந்தால் அவர்கள் அறிவில் மேம்பாடு அடைந்து கொண்டு செல்வார்கள் என்பதை அவர் கண்டறிந் தார். அவர் நடத்திய பரிசோதனைகள் இந்த முடிவுக்கு மேலும் வலுவூட்டின.
குழந்தைகள் ஒவ்வொருவரும் தனித்தன்மை பெர்ருந்தியவர்கள். இந்நிலையில் எல்லாக் குழந்தை களையும் ஒரே வகுப்பில் இருத்தி ஒன்றாகக் கற்பிக்கும்
I6 -

பொழுது அவர்களின் தனித்தன்மைகள் நசுக்கப்பட்டு விடலாம் என்ற அச்சம் அம்மையாருக்கு எழுந்தது. ஒவ்வொரு குழந்தையும் தத்தமது இயல்புக்கு ஏற்பவும், தன் வேகத்துக்கேற்பவும் கற்பதற்கு வழியமைத்துக் கொடுத்தல் வேண்டும்.
குழந்தைகளின் தனித்துவம், குழந்தைகளுக்குரிய
புலன் பயிற்சி மற்றும் கற்பித்தல் சாதனங்கள் முதலிய வற்றை முதன்மைப்படுத்திய அம்மையாரின் குழந்தைக் கல்விக் கருத்துக்களைப் பின்வருமாறு சுருக்கிக் கூறலாம்:
1)
2)
3)
4)
5)
6)
குழந்தைகளது தனித்துவத்தையும் தனியாள் இயல் புகளையும் மலர்ச்சியடையச் செய்யும் வண்ணம் கற்பித்தலை ஒழுங்கமைத்தல் வேண்டும்.
அறிவின் நுழைவாயில்களாக அமையும் புலன்களுக் குப் பலவகையாகவும் பல நிலைகளிலும் பயிற்சி தருதலே சிறந்த கற்பித்தல் முறையாகும். மூன்று வயது முதல் ஏழு வயதுவரையான வீச்சில் உள்ள மாணவர்கள் தீவிரமான புலன் செயற்பாடுகள் கொண்டவர்களாக இருப்பார்கள்.
புலன்களுக்குப் பயிற்சிதரும் விளையாட்டுக்களும், செயற்பாடுகளும் கற்பித்தலிலே சிறப்பிடம் பெற
வேண்டியுள்ளன.
தாமே முயன்று கற்கும் செயற்பாட்டைக் குழந்தை களிடத்து வளர்த்தல் வேண்டும். அதற்குரிய பொருத்தமான கற்பித்தற் கருவிகளைத் தேர்ந் தெடுத்து ஒழுங்கமைத்தலே சிறந்தது.
குழந்தைக் கல்வியில் குழந்தைகளின் தன்னுரிமைக் கும், சுயாதீனமான செயற்பாடுகளுக்கும் இட மளித்தல் வேண்டும்.
பொருத்தமான நிலையில் வழங்கப்படும் கற்பித்தற் கருவிகள் வாயிலாக சுயாதீனமான கற்றலும்.
- 7

Page 14
குழந்தைகள் தம்மைத்தாமே திருத்தியமைத்துக் கொள்ளலும் இடம்பெறுகின்றன.
7) சிறுவர்க்குரிய பள்ளிக்கூடம் வீட்டுச் சூழலைப் பிரதிபலிப்பதாய் அமைக்கப்படுதலே சிறந்தது. குழந்தைகள் படிக்க, உணவு உண்ண, விளையாட, ஓய்வெடுக்க, உடல் உழைப்புடன் இணைந்து விளையாட, தனித்தனி அறைகள் இருத்தல் விரும்பத்தக்கது. திட்டவட்டமான நேரகுசிகை இன்றி ஒவ்வொரு குழந்தையும் தத்தமது விருப் பத்துக்கேற்ற செயல்களில் ஈடுபடுவர்.
8) சிறார்களுக்குரிய கல்வி எப்பொழுதும் நடைமுறை வாழ்க்கையைத் தழுவிச் செல்லுதல் வேண்டும், தங்களுக்குரிய பொருள்களைத் துடைத்து அழகாக வைத்திருத்தல், பல்துலக்குதல், நகங்களைச் சுத்தப் படுத்துதல், கைகழுவுதல் போன்ற நாளாந்த செயற்பாடுகள் அவர்களுக்குக் கற்பிக்கப்படுதல் வேண்டும்.
9) உடல் ஒத்திசைவையும், இயக்கத்தையும் மேம் படுத்தும் உடற்பயிற்சிகளும் குழந்தைகளுக்கு வேண்டப்படுகின்றன.
10) பல்வேறு வடிவங்களைக் கொண்ட மரக்கட்டை கள், வண்ணத்தாள்கள், நாணயங்கள், மணிகள், கம்பளி நூல்கள், பெட்டிகள், வெப்ப வேறுபாடுகள் கொண்ட நீர்ப் போத்தல்கள் முதலியவற்றைக் கொண்டு சிறந்த புலப்பயிற்சியை மாணவர்களுக்கு வழங்கலாம்.
11) அவற்றைத் தொடர்ந்து வண்ணங்களை இனங் காணல், வடிவங்களை இனங்காணல், ஒலிகளை இனங்காணல், எடை வேறுபாடுகளை அறிதல் முதலாம் செயற்பாடுகளை வழங்கலாம்.
8 .

12) அவற்றைத் தொடர்ந்து எழுதுதல், படித்தல், கணித்தல் முதலியவற்றைச் செயற்பாடுகளுடன் இணைத்துக் கற்பித்தல் வேண்டும்.
13) எழுத்துக் கற்பித்தலில் மூன்று நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டியுள்ளன. அவையாவன:
அ) எழுத்துக்களின் வரிவடிவ அமைப்பை அறிதல்.
ஆ) எழுத்துக்கள் குறிக்கும் ஒலியை அறிந்து
கொள்ளல்.
இ) எழுதுகோலைக் கையாளும் திறனறிதல்,
14) சொற்களையும், சொற்றொடர்களையும் கற்பிப் பதற்கு எழுத்துப் பளிச்சீட்டு அட்டைகளைப் பயன்படுத்துதல்,
கற்பித்தலில் குழந்தை உளவியலின் பிரயோ கத்தை முன்னெடுத்த கல்வியியலாளர்களுள் அம்மை யார் தனித்துவம் பெறுகின்றார். அவர் கண்ட ஆசிரியத் துவமும் உளவியல் மயப்பட்டதாக அமைந்தது. ஆசி ரியர் "நெறியாளராக" இருக்க வேண்டும் என அம்மை யார் வலியுறுத்தினார். குழந்தைகளின் தொழிற்பாடு களில் தேவையற்ற வகையில் ஆசிரியர் குறுக்கீடு செய்யலாகாது. சிறந்த முறையில் குழந்தைகளை உற்றுநோக்கி அவர்களின் தனித்துவத்தைக் கண்டறிந்து ஊக்குவித்தல் வேண்டும். ஆசிரியர்களுக்குப் பாட அறிவு, மருத்துவ அறிவு, ஒழுக்கம் முதலியவை கட்டாய மாக வேண்டப்படுகின்றன.
மறைபொருளாய் அகத்தே மலர்ந்துள்ள குழந் தையின் உள்ளத்தை வளம்படுத்தும் ஆற்றல்மிக்க கருத்துக்களை அம்மையார் முன்மொழிந்தார். அவரின் குழந்தைக் கல்வி இயக்கம் ஜேர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா முதலிய நாடுகளில் விரைந்து பரவலாயிற்று.
- 9

Page 15
இலங்கையிலும் இக்கருத்துக்கள் படிப்படியாகப் பரவலாயின. யாழ்ப்பாணத்தில் வேம்பஸ்தானில் அமைக்கப்பட்ட பாலர் கல்வி நிலையத்திலும், பின்னர் றிம்மர் மண்டபத்தில் அமைக்கப்பட்ட பாலர் கல்வி நிலையத்திலும் அம்மையாரின் குழந்தைக் கல்விக் கோட்பாடுகள் நடைமுறைப் படுத்தப்பட்டன. அக்கருத் துக்களை இங்கு பரப்புவதில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் அதிபராகவிருந்த கலாநிதி வண. டி. ரி. நைல்ஸ் சிறப்பார்ந்த பங்கு வகித்தார்.
20.

ஜி. ஸ்ரான்லி ஹோல்
சார்ல்ஸ் டார்வினுடைய உயிரினங்களின் பரி ணாம வளர்ச்சி பற்றிய ஆய்வுகள் குழந்தைக் கல்வி பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டோருக்குப் பெரும் உற்சா கத்தைத் தந்தன. ஐரோப்பாவில் வாழ்ந்த ஆய்வாளர் கள் குழந்தைகளின் இயற்கையான வளர்ச்சி பற்றிய ஆய்வுகளிலே சிறப்பார்ந்த கவனம் செலுத்தினர். அமெரிக்காவில் இந்த ஆய்வுகளின் செல்வாக்கு ஜி. ஸ்ரான்லி ஹோல் (1844-1924) அவர்களிடம் பிரதிபலித்தது. குழந்தைகள் பற்றிய கற்கையின் தந்தை என்று அவரை அமெரிக்கர்கள் குறிப்பிடலாயினர்.
மனிதரைப் பற்றி விளங்கிக்கொள்வதற்கு குழந்தை நிலையிலிருந்து அவர்களது விருத்தி பற்றிய கற்கை இன்றியமையாதுள்ளது என்று அவர் குறிப்பிட் டுள்ளார். ஒவ்வொருவரதும் விருத்தியானது எமது முன்னோர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் அனுபவித்த வற்றுக்கு ஏறத்தாழச் சமமானதாயிருக்கும் என்ற ஒரு கருத்தை அவர் முன்வைத்தார். இது தொடர்பாக அவர் குழந்தைகள் தொடர்பான ஆசிரியர்களின் கருத் துக்களைக் கேட்டறிந்தார். அவற்றிலிருந்து சிறார்களின்
- 2

Page 16
நடத்தைகள், மனப்பதிவுகள், உணர்வுகள், பிரச்சினை கள், நம்பிக்கைகள் தொடர்பான பெருந்தொகையான தகவல்களைத் திரட்டிக்கொண்டார்.
ஆரம்பத்தில் இவர் அகநோக்கல் என்ற ஆய்வு முறையைப் பயன்படுத்தினார். அந்த ஆய்வுமுறையில் இருந்த மட்டுப்பாடுகளை அவர் பின்னர் அறிந்துகொண் டார். அதன் பயனாக அவர் திருத்தமானதும் ஒழுங் கமைக்கப்பட்டதுமான வினாக்கொத்துக்களைப் பயன் படுத்தி சிறார் தொடர்பான ஆய்வுகளை முன்னெடுத் தார். இந்த முறை பின் பயனாக மிகக் குறைந்தளவு காலப்பகுதியில் பெருந்தொகுதியான தகவல்களையும், தரவுகளையும் அவரால் திரட்ட முடிந்தது.
வளர்ந்தோர்கள் சிறுவர்களாயிருந்த பொழுது பெற்ற அனுபவங்களையும் வினாக் கொத்துக்கள் வாயிலாக அவர் திரட்டிக் கொண்டார். அவை அனைத் தையும் தொகுத்து சிறாரின் ஆசைகள், பயம், தண்ட னைகள், கனவுகள், விளையாட்டுப் பொருள் விருப்புக் கள், தம்மைப்பற்றிய புலக்காட்சி, பிரார்த்தனைகள், ஒத்திசைவுகள் பற்றிய புலக்காட்சி முதலியவற்றை அறிக்கைகளாக அவர் வெளியிட்டார்
இயன்றவரை விஞ்ஞான பூர்வமாகவும், புறவய மாகவும், சிறார் தொடர்பான ஆய்வுத்தகவல்களைப் பெறவேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருந்தது. விஞ்ஞான பூர்வமற்றதும், குறைபாடுகள் கொண்டது மான ஆய்வுக் கருவிகளை சிறார் உளவியலிலும், சிறார் பற்றிய ஆய்வுகளிலும் பயன்படுத்தலாகாது என்ற அணுகுமுறையை முன்னெடுத்தவர்கள் வரிசை யில் இவர் முதன்மையாகக் கருதப்படுகின்றார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் சிறார் தொடர்பான ஆய்வுகளை விஞ்ஞான பூர்வமாக முன் னெடுப்பதில் இவர் மேற்கொண்ட பணிகள் பிற சிந்தனையாளர்கள் மீதும் செல்வாக்கினை ஏற்படுத்தின.
22 -

வினாக் கொத்துக்களில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களையும், தரவுகளையும் பகுத்து ஆராய்வதற்கு இவர் எளிமையான புள்ளிவிபரவியல் நுட்பங்களைப் பயன்படுத்தினார். இதுவும் இவரது அணுகு முறையின் தனித்துவமாகக் கருதப்படுகின்றது.
ஸ்ரான்லி ஹோல் மேற்கொண்ட சிறார் தொடர் பான ஆய்வுகள் டார்வினுடைய கூர்ப்புக் கோட்பாட் டினைச் சிறாருடன் தொடர்புபடுத்தி மீளாய்வு செய் வதற்கும் உறுதுணையாக அமைந்தன. விலங்குகளில் இருந்து மனிதன் எவ்வாறு படிமலர்ச்சி கொண்டான் என்பதை விளக்கும் ஒரு தொடுகோடாக (Link) குழந் தைகள் அமைகின்றார்கள் என்பது தொடர்பான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன குழந்தைகளின் அசைவுகளுக்கும் மீன்களின் நீச்சலுக்குமிடையே தொடர்புகள் காணப்படுகின்றன. குழந்தைகள் தாவு தலுக்கும் முலையூட்டிகளின் அசைவுகளுக்குமிடையே ஒற்றுமைகள் தென்படுகின்றன. குழந்தைகள் ஓடுதலுக் கும் மனிதரின் அசைவுகளுக்குமிடையே உடலியக்கம் சார்ந்த தொடர்புகள் உள்ளன.
டார்வினுடைய ஆய்வு முன்னெடுப்புக்கள் அவ ருக்குப் பின்னர் பல பரிமாணங்களிலே வளர்ச்சியுற்றுச் சென்றன. டார்வினுடைய ஆய்வுகளையும் முன்மொழிவு களையும் முன் உதாரணங்களாகக் கொண்டு குழந்தை உளவியல், குழந்தைகளின் விருத்தி, உடலியக்கச் செயற் பாடுகள், மனவெழுச்சிக் கோலங்கள், சூழலுக்கு அவர்கள் இசைவாக்கம் செய்யும் முறைமை, முதலாம் துறைகளில் புறவயமான ஆய்வுகளை முன்னெடுத்த முன்னோடிகளுள் ஒருவராக இவர் விளங்குகின்றார்.
சிறார்களுக்கான நுண்மதித் தேர்வுகளை வடி வமைப்பதிலும் இவரது ஆக்கப்பணிகள் விதந்து குறிப் பிடப்படுகின்றன. ஹேலின் மாணவர்கள் இப்பணியினை முன்னெடுத்துச் சென்றார்கள். லிவிஸ் மடிசன், ரேர்மன் என்ற இவரது மாணவர் நுண்மதித் தேர்வினை ஆக்கும் பணியிலே சிறப்பார்ந்த பங்களிப்பைச் செய்துள்ளார். - 23

Page 17
அல்பிரெட் பீனே
உளவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு எவ்வாறு உரிய முறையில் கற்பிக்கலாம் என்பது தொடர்பான முன்மொழிவுகளை வழங்குமாறு பிரான்ஸ் நாட்டின் கல்வி மந்திரி 1904ஆம் ஆண்டு ஒர் ஆணைக்குழுவினை அமைத்தார். ஒரு சிறப்பார்ந்த பரீட்சையின் அடிப் படையிலேதான் அத்தகைய சிறுவர்களை சாதாரண வகுப்பறையிலிருந்து உளவளர்ச்சி குன்றிய சிறுவர்கள் கற்கும் பள்ளிக்கூடங்களுக்கு இடம்மாற்றல் வேண்டு மென அந்த ஆணைக்குழு குறிப்பிட்டது. இந்நிலையில் மாணவரது நுண்மதி எந்த அளவிலே அமைந்துள்ளது என்பதைக் கண்டறியும் தேர்வினை உருவாக்கும் பொறுப்பு அல்பிரெட் பீனே (1857 - 1911) யிடம் கையளிக்கப்பட்டது.
குழந்தைகளின் கல்வி, குழந்தை உளவியல் முதலியவற்றில் நுண்மதித் தேர்வுகளை ஆக்கும் முயற்சி களின் முன்னோடியாக பீனே விளங்குகின்றார். இவரது ஆய்வுகளுக்கு தியோடர் சிம்சன் என்பாரும் உறுதுணை யாக விளங்கினார்.
24 -

பீனே தமது நுண்மதித் தேர்வினை வடிவமைப் பதற்கு முன்னர் ஆய்வு கூடங்களில் வழங்கப்பட்ட செய்முறைத் தேர்வுகளில் இருந்தே ஒருவரது உள ஆற்றல் நிச்சயிக்கப்பட்டது. பொருள்களை வகைப் படுத்துதல், வேறுபிரித்தறிதல், பொருள்களுக்கிடையே யுள்ள தூரத்தை நிச்சயித்தல், துலங்கல் வேகம் முதலிய வற்றை அறிதலே ஆய்வு கூடங்களில் பெரும்பாலும் பரீட்சிக்கப்பட்டன.
ஆனால் பீனே அவர்கள் நாளாந்த வாழ்க்கை யுடன் தொடர்புடையதும் நடப்பியல் தழுவியதும், ஆனால் சிக்கல் பொருந்தியதுமான நுண்மதித் தேர் வினை சிறார்களுக்கென அவர் வடிவமைத்தார். ஐம்பது தேர்வு உருப்படிகளை அவர் முதலில் ஆக்கினார். அவற்றிலே சொல் சார்ந்த உருப்படிகளும் அமைந்தன. உடற்கூறுகளுக்குப் பெயரிடல், பொதுவான பொருள் களுக்குப் பெயரிடல், எண் மீட்டல், ஞாபகத்திலுள்ள கோலங்களை வரைதல், பொருத்தமான சொல்லை இட்டு எளிய வசனங்களை நிரப்புதல், அருவமான எண்ணக்கருக்களை விளக்குதல் முதலாம் உருப்படிகளை அவர் தமது நுண்மதித் தேர்விலே அமைத்தார். எளிதி லிருந்து கடினமானது வரை ஓர் ஒழுங்குமுறையில் அவற்றை நிரற்படுத்தி அமைத்தார்.
சிறார் கல்விக்கு அவர் வழங்கிய அடுத்த முக்கிய மான பங்களிப்பாகக் கருதப்படுவது வயது அடிப்படை யில் நுண்மதித் தேர்வினை ஒழுங்கமைத்தமையாகும். 'கால வயது', 'உளவயது' என்ற இரண்டு எண்ணக் கருக்களை அவர் தாம் அமைத்த தேர்வுகளை அடிப் படையாகக் கொண்டு விளக்கினர்ர். இந்நிலையில் மூன்று வகையாக சிறுவர்களின் நுண்மதியாற்றல்களை இனங்கண்டு விளக்கக் கூடியதாகவுள்ளது.
அ) கால வயதிலும் குறைவான நுண்மதியாற்றல்
களைக் கொண்ட சிறுவர்கள்.
- 25

Page 18
ஆ) கால வயதோடு சமாந்தரமாகச் செல்லும் நுண்மதியாற்றல்களைக் கொண்ட சிறுவர்கள்.
இ) கால வயதிலும் கூடிய உள ஆற்றல்களைக் கொண்ட சிறுவர்கள், அதாவது இவர்களின் உளவயதானது கால வயதிலும் கூடுதலாகக் காணப்படும்.
சிறாரின் நுண்மதியாற்றல் அளவீடு தொடர்பாக பீனே மேற்கொண்ட ஆய்வுகள் பல கண்டனங்களையும் எதிர்கொண்டன. 'சிறார் தொடர்பான சிறுபிள்ளைத் தனமான ஆய்வை இவர் மேற்கொண்டுள்ளார்’ என்ற கண்டனமும் முன்வைக்கப்பட்டது. 'நுண்மதியை எண்ணளவுகளுக்குள் சிறைப்பிடித்துக் கொண்டுவர முடியுமா?’ என்ற வினாவும் இவர் மீது தொடுக்கப் பட்டது.
சிறார் கல்விக்கும் உளவியலுக்கும் பீனே தந்த பெரும் பங்களிப்பு நுண்மதி என்ற பண்பினை எண் ணளவுக்குள் கொண்டுவந்தமை என்ற பாராட்டையும் ஒரு சாரார் அவருக்கு வழங்கினர்:
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பொது மக்களுக்கான கல்வி விரைந்து வளர்ச்சியடையத் தொடங்கியது. பல்வேறு வகையான ஆற்றல் வேறு பாடுகளைக் கொண்ட சிறுவர்களை ஒரே வகுப்பறையில் இருத்திக் கற்பிக்கும்போது ஆசிரியர்கள் பல இடர்களை எதிர்கொண்டனர். இந்நிலையில் மாணவர்களை அவர் களின் உள ஆற்றல்களுக்கு ஏற்றவாறு குழுக்களாகப் பிரித்துக் கற்பிப்பதற்கு பீனேயின் நுண்மதித் தேர்வு கள் பயன்படுத்தப்பட்டன.
சிறுவர்களுக்குச் சீர்மியம் உரைப்பதற்கு அவர் களின் நுண்மதிக் குறைபாடுகளைக் கண்டறிதல் தேவை யென உணரப்பட்டது. அந்நிலையிலும் பீனேயின் தேர்வுகள் பயன்பட்டன. உளக் குறைபாட்டை ஆய்ந்
26 -

தறிந்த பின்னரே கல்விசார்ந்த சீர்மியத்தைப் பொருத்த மான முறையில் வழங்க முடியும்.
உள ஆற்றல் குறைபாடுகளுக்கும், மனவெழுச்சிக் குழப்பங்களுக்கும் இணைப்புகள் காணப்பட்டமையால் பள்ளிக்கூட இசைவாக்க முறைமையை நெறிப்படுத்து வதற்கும் பீனேயின் தேர்வுகள் பயன்பட்டன.
உளஆற்றல் மிகுந்து காணப்பட்ட சிறுவர்களும் ஒருவகையில் பள்ளிக்கூட அமைதிக்குப் பங்கம் விளை விப்போராய்க் காணப்பட்டனர். அவர்களைக் கண் டறிந்து அவர்களைக் கல்வியில் முழுமையாக ஈடுபடுத் தக்கூடிய வகையில் அறைகூவற் கற்பித்தலை ஒழுங் கமைப்பதற்கும் பீனேயின் தேர்வுகள் மாணவர்களை இனங்காட்டும் சோதனைகளாக அமைந்தன.
பீனே வடிவமைத்த நுண்மதித் தேர்வுகள் பல நாடுகளில் பயன்படுத்தப்படலாயின. சிறார்களுக்குப் புலமைப் பரிசில் வழங்கல், சிறப்பார்ந்த சில பள்ளிக் கூடங்களுக்கு அனுமதி வழங்கல் முதலாம் தேர்வுகளுக் குப் பல நாடுகளிலே பீனே பயன்படலானார்.
பீனேயின் தேர்வுகளை அடிப்படையாக வைத்து அமெரிக்க நாட்டு ஆய்வாளர்கள் தமது பண்பாட்டுச் சூழலுக்கேற்றவாறு நுண்மதிச் சோதனையை வடி வமைத்தனர். யாழ்ப்பாணத்துச் சூழலில் பீனேயின் சோதனையை அடிப்படையாக வைத்து சுழிபுரம் விக் ரோறியாக் கல்லூரி முந்நாள் அதிபர் அமரர் சிவபாத சுந்தரனார், ஆசிரியர் கலாசாலை முந்நாள் விரிவுரை யாளர் கலாநிதி சிவப்பிரகாசம், புலோலி வேலாயுதம் மகாவித்தியாலய முந்நாள் அதிபர் இராமநாதபிள்ளை ஆகியோர் தமிழில் சில நுண்மதிச் சோதனைகளை அமைத்தனர்.
- 27

Page 19
ஜீன் பியாசே
சிறார் கல்வி மேம்பாடு சிறாரின் எண்ணக்கரு விருத்தி முதலாம் துறைகளில் தனித்துவமான பங்களிப் பைச் செய்தவர்களுள் ஜின் பியாசே (1896-1980) சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர். 1896ஆம் ஆண்டில் நியுசெரெல் நகரிலே பிறந்த இவரது இளமைக்கால ஆய்வுப்புலமாக உயிரியல் விளங்கியது. இதன் காரண மாக குழந்தைகள் கல்வியின் உயிரியல் தளங்களை அவரால் தெளிவுபட விளக்கமுடிந்தது.
நியுசெரெல் பல்கலைக்கழகத்தில் அவர் தமது முதலாவது பட்டத்தை 1915ஆம் ஆண்டிலும், கலா நிதிப் பட்டத்தை 1918 ஆம் ஆண்டிலும் பெற்றுக் கொண்டார். 1919ஆம் ஆண்டு முதல் 1921 ஆம் ஆண்டுவரை அவர் பரிஸ் நகரிலுள்ள பீனே உளவியல் ஆய்வுகூடத்திலே கென்றி சிமோன் என்பவரின் வழி காட்டலின் கீழ் ஓர் ஆய்வாளராகப் பணிபுரிந்தார். பேற் என்பவர் உருவாக்கிய காரணங்காணற் சோத னையை நியமப்படுத்தல் தொடர்பான ஆய்வுகளை அங்கு அவர் மேற்கொண்டார்.
28 -

1921ஆம் ஆண்டில் பியாசே அவர்கள் ஜெனிவா வில் உள்ள ரூசோ ஆய்வுநிலையத்தில் ஒர் ஆய்வாள ராக நியமனம் பெற்றார். அந்த ஆய்வுகூடத்தில் அவர் பணிபுரிந்தபோது அவர் வெளியிட்ட முதலாவது நூல் அவருக்குப் பெரும் புகழைக் கொடுத்தது.
1923ஆம் ஆண்டு அவர் வெளியிட்ட அந்நூலின் பெயர் 'பிள்ளையின் மொழியும் சிந்தனையும்’ என்ப தாகும். சிறுவர்களின் சிந்தனையின் அமைப்பும் தொழிற் பாடும் பற்றி அந்நூலில் அவர் ஆய்வு பூர்வமாக எழுதி யுள்ளார். அனைத்துலகக் கல்வி நிறுவனத்தின் பணிப் பாளராக அவர் நீண்டகாலம் பணியாற்றிய வேளை வேறுபல நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டார். அவர் வெளியிட்ட "தருக்க சிந்தனை. யின் வளர்ச்சி' (1955), "விஞ்ஞானக் கல்வியும் குழந்தை உளவியலும்’ (1971) ஆகிய நூல்கள் அவருக்கு மேலும் புகழைக் கொடுத்தன. 1976ஆம் ஆண்டில் பியாசேயின் ஆண்டுவிழா கொண்டாடப்பட்ட பொழுது அவரது மாணவர்கள் ஒன்றுகூடி அவரைக் கெளரவிக்கும் முகமாக "பியாசே . உளவியலும் கல்வியும்' என்ற ஆராய்ச்சிக் கட்டுரைத் தொகுதியை வெளியிட்டார்கள்.
பியாசே வெளியிட்ட கருத்துக்கள் 'பிறப்புரிமை அறிவாய்வியல்’’ என்ற தளத்தில் அமைந்தன. அதாவது உயிர்ப் பாரம்பரியப் பண்புகளுக்கும் ஒருவர் அறிவைத் திரட்டிக் கொள்ளும் முறைமைக்குமுள்ள தொடர்புகள் பிறப்புரிமை அறிவாய்வியலிலே விளக்கப்படுகின்றன.
குழந்தைகள், தூண்டி - துலங்கல் வழியாகக் கற்றுக் கொள்ளுகின்றார்கள் என்ற கருத்தை பியாசே ஏற்றுக்கொள்ளவில்லை. உள அமைப்பினதும் செயற் பாட்டினதும் வழியாகவே கற்றல் நிகழ்கின்றது என்பது அவரது முடிபு.
கற்றல் என்பது இரண்டு வழிகளிலே நிகழ்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவையாவன:
29

Page 20
1) சூழலுடன் தழுவிக் கொள்ளல் வாயிலாக
நிகழும் கற்றல். 2) ஒழுங்கமைத்தல் வாயிலாக நிகழும் கற்றல்இது உளச்செயற்பாட்டின் இயக்கங்களையும் காரணங்கண்டு ஒழுங்கமைக்கும் திறனையும் குறிப்பிடுகின்றது.
சிறாரின் நுண்மதி வளர்ச்சி மட்டங்களையும்
நுண்மதித் திறன்களையும் விளக்கும் பொழுது பின் வரும் இயல்புகள் அவரால் சிறப்பாக ஆராயப்பட் டுள்ளன.
1) அகத்தை மத்தியாகக்கொண்ட இயல்பு.
2) பின்திரும்பும் இயல்பு
3) நடுநாயகப்படுத்தும் இயல்பு.
4) நிலையும் நிலைமாற்றமும் பற்றிய இயல்பு.
5) காரணங்காணலை இடம்மாற்றித் தொகுக்கும்
இயல்பு.
சிறார்கள் சூழலுடன் இடைவினை கொண்டு சூழல் பற்றிய அறிகையை மூளையிலே அமைத்துக் கொள்ளல் திரளமைப்பு அல்லது 'சீமா' என்று குறிப் பிடப்படும். புதிய புதிய அனுபவங்கள் ஏற்படும்பொழுது பழைய திரளமைப்பு மாற்றியமைக்கப்படும். இது 'தன்னமைவாக்கல்' எனப்படும். பழைய அனுபவங்களை மீண்டும் அனுபவிக்க நேரிடும்பொழுது திரளமைப்பை மாற்றியமைக்க வேண்டிய தேவை ஏற்படமாட்டாது. திரளமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தாது அனுபவங் களை உள்வாங்குதல் "தன்மயமாக்கல்’ எனப்படும்.
சிறார்கள் தமது தொழிற்பாடுகளினாலும், இயக் கங்களினாலும், மனத்திலே நிலைகொண்ட உளப்படி மங்கள் அல்லது உள உருவங்களின் ஒன்றிணைந்த தொகுதியே திரளமைப்பாக (சீமா) உருவெடுக்கின்றது.
30 -

சிறார்கள் சூழலுடன் கூடுதலான இறைவினைகளை மேற்கொள்ளும்போதும், ப்ரவலான பட்டறிவைப் பெற்றுக்கொள்ளும்பொழுதும் வளமான திரளமைப்பை அவர்களால் உருவாக்கிக்கொள்ள முடியும் என்று பியாசே கருதினார்.
தனது புலன் உறுப்புக்களால் உலகை குழந்தை விளங்க முற்படுகின்றது. கைகளால் பிடித்தல், வாயி னால் உறிஞ்சுதல், சத்தம் வந்த திசையை நோக்கித் திரும்புதல், சத்தங்களை வேறுபிரித்து அறிந்து கொள்ளல், ஒளிக்குத் துலங்குதல் என்றவாறு குழந்தை பிறந்து இரண்டாண்டுகள் வரையிலான காலப்பகுதியின் விருத்திப் படி நிலையை 6'புலன் இயக்கப் பருவம்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இப்பருவமே சிந்தனை விருத் தியின் அடிநிலையாக அமைகின்றது. புலன் இயக்கப் பருவத்தின் தொழிற்பாடுகளில் இருந்து எளிமையான எண்ணக்கருவாக்கமும், எளிமையான கருத்துப்பரி மாற்றங்களும் மலர்ச்சியுறுகின்றன. இப்பருவத்தில் கைகளுடன் இணைந்த மொழிவிருத்தியும் முகிழ்த்தெழத் தொடங்கும்.
புலன் இயக்கப் பருவத்தைத் தொடர்ந்து நிகழும் விருத்திப் படி நிலையை 'முன் உளத் தொழிற்பாட்டுப் பருவம்' என்று அவர் குறிப்பிட்டார். இப்பருவம் இரண்டு வயது முதல் ஏழுவயது வரை அமைந்திருக்கும். இப்பருவத்தை இரு கூறுகளாகப் பிரித்து பியாசே விளக் தினார், அவையாவன:
அ) 'முன் எண்ணக்கருப் பருவம்' - இது இரண்டு வயது தொடக்கம் நான்கு வயது வரை அமைந்திருக்கும். ஆ) ‘உள்ளுணர்வுப்பருவம்' . இது நான்கு வயது
தொடக்கம் ஏழு வயது வரை அமைந்திருக்கும்,
எண்ணக்கருக்கள் திருத்தமாக உருவாகாத நிலை
முன் எண்ணக்கருப் பருவத்திலே காணப்படும்.
3

Page 21
உதாரணமாக, ஒரு பந்தின் பின்னால் சிறுவர்கள் வீதியின் குறுக்கே ஒடும்பொழுது முன்னும், பின்னுமாக விரைந்து வரும் வாகனங்களைக் கருத்திற்கொள்ளமாட் டார்கள். இப்பருவத்தின் தொடக்கத்தில் தொகையின் மாறாத்தன்மை, கொள்ளளவின் மாறாத்தன்மை, நிறையின் மாறாத்தன்மை முதலியவற்றைச் சிறார் களால் விளங்கிக் கொள்ளுதலும் கடினமாக இருக்கும்.
வளர்ச்சிப் படிநிலைகளின் அடுத்த கட்டமாக "தூல உளத் தொழிற்பாட்டுப் பருவம்" அமையும். இது பொதுவாக ஏழு தொடக்கம் பதினொன்று அல்லது பன்னிரண்டு வயதுவரை அமைந்திருக்கும். ஒரு தொழிற் பாட்டின் பல்வேறு பரிமாணங்களையும் அறியக்கூடிய திறன் இப்பருவத்திலே விரைந்து வளரத் தொடங்கும். சம அளவுகளின் மாறாத் தன்மைகளை இப்பருவத்தில் நன்கு புரிந்துகொள்வார்கள். ஆனாலும் அருவநிலை யான சிந்தனைத் தொடர்புகள் இப்பருவத்தில் மேற் கிளம்பி விரிவடைய மாட்டா.
இப்பருவத்தினைத் தொடர்ந்து நிகழும் "நியம மான உளத் தொழிற்பாட்டுப் பருவம்' பதினைந்து அல்லது பதினாறு வயது வரை நீடித்துச் செல்லும். தருக்க நிலையாகத் தொடர்புகாணல், அருவநிலையாகச் சிந்தித்தல், சிக்கலான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணல் முதலாம் ஆற்றல்கள் இப்பருவத்தில் வளர்ச்சியடையும்.
மேற்குறிப்பிட்ட சிந்தனைத் தொழிற்பாடுகள் முன்னையதிலிருந்து பின்னையது தொடர்புபட்டு வளர்ச்சியடையும்.
சிறார்களுக்குரிய கற்பித்தற் படிநிலைகளை ஒழுங் கமைத்தல், பாடத்திட்டங்களை வடிவமைத்தல், பாட நூல்களை எழுதுதல், கற்றல் உபகரணங்களைத் திட்ட மிடல், ஒழுக்க எண்ணக்கருக்களைக் கற்பித்தல், மொழி
32 -

கற்பித்தல், கணிதம் மற்றும் விஞ்ஞானம் கற்பித்தல் முதலாம் துறைகளில் பியாசேயின் கருத்துக்கள் பெரி தும் துணைசெய்கின்றன.
ஆனாலும் பியாசே முன்மொழிந்த அமைப்பியல் அணுகுமுறையில் பல மட்டுப்பாடுகளும் கர்ணப்படு கின்றன.
- 33

Page 22
புறுனர்
குழந்தை உளவியல், குழந்தைக்கல்வி, அறிகை உளவியல் முதலாம் துறைகளில் அதீத ஈடுபாடு கொண்ட ஆய்வாளராக ஜெரோம் எஸ். புறுானர் விளங்கினார் , 1915ஆம் ஆண்டு நியூயோர்க் நகரத்தில் பிறந்த புறுனர் 1941ஆம் ஆண்டில் ஹாவார்ட் பல்கலைக் கழகத்தில் உளவியல் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றார். ஹாவார்ட் பல்கலைக்கழகம், ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் முதலியவற்றில் பேராசிரியராகவும், பல்கலைக் கழக அறிகைக் கற்கை மையத்தின் பணிப்பாளராகவும் அவர் பணியாற்றினார்.
* மக்களுக்கான ஒப்புதல்' (1944), 'சிந்தனை பற்றிய கற்கை' (1956), ‘அறிதல் பற்றியது’’ (1962), 'போதனைக்கான ஒரு கோட்பாட்டினை நோக்கி’ (1966), ‘அறிகைச் செயல்முறை வளர்ச்சி’ (1968), ‘கல்வியின் பொருத்தப்பாடு' (1971), "மொழியை நிகர்த்த தொடர்பாடல்' (1982) முதலாம் ஆய்வு நூல்கள் அவரால் எழுதப்பெற்றன.
34

குழந்தைகளின் கல்வியில், அவர்களால் திரட்டிக் கொள்ளப்படும் மொழி விருத்தியானது சிறப்பார்ந்த இடத்தைப் பெறுகின்றது. குறியீடுகள் தொகுதியே மொழியாகின்றது. புறவுலகினை மனத்திலே பிரதி நிதித்துவம் செய்வதற்கு குறியீட்டுத் தொகுதி துணை நிற்கின்றது. சிந்தனையை இயக்குவதற்கும் அந்தக் குறியீட்டுத் தொகுதியே தளமாக அமைகின்றது.
கற்றல் மேம்பாடு தொடர்பான நான்கு அடிப் படை அமைப்புக்களை அவர் விளக்கினார். அவை
I ITG I 6ðIT
1) கற்பதற்கான உளநிலை கற்போனிடம் இருத்தல். 2) கற்பவர் விளங்கிக் கொள்ளும் வகையில் அறிவுத்
தொகுதியை அமைப்பாக்கிக் கொடுத்தல். 3) கற்பவர் ஈடுபடக்கூடிய வகையில் படிநிலை வரிசைக்
கிரமப்படுத்தி அறிவை வழங்குதல். 4) பொருத்தமான மீளவலியுறுத்தல்களை ஏற்படுத்திக்
கொடுத்தல்.
மேற்கூறியவற்றின் அடிப்படையில் சிறாரின் கல்வி தொடர்பான சிறப்பார்ந்த கருத்தொன்றினை அவர் முன்மொழிந்தார். "எந்தப் பாடத்தையும், எந்தப் பிள்ளைக்கும், எத்தகைய விருத்திப் படிநிலை களிலும் அறிவுசார் நேர்மையான அமைப்பில் கற்பிக் கலாம்' என்பது அவர் முன்மொழிந்த வலுவான ஒரு கருத்தாகும்.
சிறார்கள் உலகு பற்றிய அறிகையை மூன்று படிநிலைகளின் வழியாக வளர்த்தெடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிட்ட அறிகை விருத்திப் படிநிலைகள் வருமாறு:
1) செயல் வடிவப் படிநிலை 2) உளப்படிம வடிவப் படிநிலை 3) குறியீட்டு வடிவப் படிநிலை.
- 35

Page 23
1) செயல் வடிவப் படிநிலையில் சிறார்கள் தொழிற் பாடுகளின் வழியாக மட்டும் சூழலை விளங்கிக் கொள்ளுகின்றனர். உதாரணமாக ஒரு தள்ளு வண்டியை அசைத்தும், உருட்டியும் தொழிற்படும் பொழுது உடலும் உள்ளமும் இணைந்து இயக்க நிலையில் அந்த வண்டியை விளங்கிக்கொள்ளு கின்றனர்.
2) உளப்படிம வடிவப் படிநிலையில் தொழிற்பாடுகள் மனப்படங்களாக உருவெடுக்கின்றன. தள்ளுவண்டி இல்லாத பொழுதும் அதனைப் பற்றிய படத்தை மனவடிவமாக உருவாக்கி வைத்திருக்கும் நிலையை இது குறிப்பிடுகின்றது. அதாவது பட்டறிவு, மனக் காட்சியாகப் பரிணமித்து நிற்றலை இப் படிநிலை சுட்டுகின்றது.
3) குறியீட்டு வடிவப் படிநிலையின் சிறார்கள் தாம் பெற்ற அனுபவங்களை மொழிக் குறியீடுகளாக்கும் ஆற்றலைப் பெறுகின்றனர். முன்னைய இரண்டு படிநிலைகளினதும் தொடர்ச்சியும் வளர்ச்சியுமாக இது அமையும். உதாரணமாக இப்பருவத்தில் முன்னர் அனுபவித்த தள்ளுவண்டியை 'தள்ளு வண்டி’ என்று எழுதி மொழிக் குறியீட்டு வடி வமைக்கும் ஆற்றலைக் கொண்டு விளங்குகின்றனர். ‘வண்டியும் ஒருநாள் ஒடத்தில் ஏறும், ஒடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்’ என்பதன் பொருளை விளங்கும் திறனைப் பெறுகின்றனர்
செயல் வடிவப் படிநிலையிலிருந்து உளப்படிம வடிவப் படிநிலைக்கும் அதிலிருந்து குறியீட்டு வடிவப் படிநிலைக்கும் பொதுவாக பிள்ளைகள் தாம் உள்வாங் கும் அனுபவங்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற னர் என்பது புறுானரின் கருத்தாகும்.
பாலர் கல்வி ஆசிரியர்கள் மேற்கூறிய பிரதிநிதித் துவப்படுத்தற் செயற்பாட்டினை உய்த்துணர்ந்து
36

செயற்பட முடியும். செயல் அனுபவங்கள், காட்சிசார் அனுபவங்கள் முதலியவற்றிலிருந்து பிள்ளைகளின் கற்றலை வளம்படுத்தலாம்.
பாலர்களுக்குரிய கல்வியை ஒழுங்கமைக்கும் பொழுது மேற்கூறியவை பற்றிச் சிந்தித்தல் வேண்டும்.
அறிவின் கட்டமைப்புப் பற்றிய மூன்று பண்புக் கூறுகளை புறுரனர் வலியுறுத்தியுள்ளார். அவையாவன:
1) (p60sp GOLD (Mode) 2) சிக்கனம் (Economy) 3) aley (Power).
1) முறைமை என்பது அறிவைப் பிரதிமை செய்யும் செயற்பாடாகும். அதாவது, காட்சிவடிவில், படிமவடிவில், குறியீட்டு வடிவில் அறிவு பிரதிமை செய்யப்படுகின்றது.
2) பெருந்தொகுதியான அறிவைச் சிக்கனப் படுத்தி, கருச்சுருக்கமாக்கி மூளையிலே பதித்துவைத்தல் சிக்கனம் எனப்படும்.
3) அறிவின் அமைப்பிலிருந்து ஆற்றல்மிக்க கண்டுபிடிப்புக்களை வெளிப்படுத்துதல் வலு எனப் படும்.
பிள்ளைகளுக்குப் பொருத்தமான வகையில் கற்றல் பணிகள் திட்டமிட்டு அமைக்கப்படுதல் வேண்டு மென புறுானர் வலியுறுத்தினார். புலக்காட்சியாக்கத் தில் பிள்ளைகளின் விழுமியங்களும் அவர்களுக்குரிய பெறுமானங்களும் (Values) அதிக முக்கியத்துவம் பெறு வதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
- 37

Page 24
தமிழ் மரபில் சிறார் கல்விச் சிந்தனைகள்
பாரதியார்
தமிழகத்திற் செயற்பட்டுக்கொண்டிருந்த ஆங் கிலக்கல்வி முறையும் புதுச்சேரியில் இயங்கிக்கொண் டிருந்த பிரெஞ்சுக் கல்வி முறையும், சிறார் தொடர் பான அணுகு முறைகளில் புதிய புலக்காட்சிகளை ஏற்படுத்தின. சிறார் அனைவருக்கும் கல்வி, பெண் சிறார்களுக்கும் கல்வி, சிறார்க்குரிய கற்பித்தல் உள் ளடக்கம், கற்பித்தல் முறைகள், இலக்கிய ஆக்கம் முதலாம் துறைகளில் மேலெழுந்த அபிவிருத்திகளை பாரதியார், பாரதிதாசன், தேசிகவிநாயகம் முதலான வர்களின் ஆக்கங்களிலே காணமுடியும்.
பாரதியார் வாழ்ந்த காலத்தில் இந்தியக் கல்வி முறையிலே நன்கு இனங்காணக் கூடியதான இருமைத் தன்மைகள் காணப்பட்டன. ஒருபுறம் வளமான கட்டு மானங்களுடன் கூடிய ஆங்கிலக்கல்வி ஒழுங்கமைப்பு, மறுபுறம் நலிவுக்கு உள்ளாக்கப்பட்ட சுதேசக் கல்வி முறை. இந்த முரண்பாடுகளை விளங்கியும் உணர்ந்தும் பாரதியாரின் சிந்தனைகள், சிறப்பாக சிறார் கல்விச் சிந்தனைகள் முகிழ்த்தெழுந்தன. س 38

இந்தியாவெங்கிலும் பொதுமக்களின் கல்விப் பங்கு பற்றல் விசையடைந்துவரும் காலகட்டத்தில் தமிழகத்து மக்களின் கல்விப் பங்குபற்றல் பின்னடைந்த நிலையில் இருப்பதை விதி' என்ற தமது கட்டுரையில் தெளிவா கச் சுட்டிக்காட்டினார். கல்விப் பரவலும், பங்குபற்ற லும், சிறார் கல்வியிலிருந்தே கால்கோள் கொள்ளல் வேண்டுமென்று அவர் கருதினார். தாய் மொழியை ஊடகமாகக் கொண்ட கல்வியே பயன்மிக்க கல்வி யாகவும், வினைத்திறன் கொண்ட கல்வியாகவும், சிறார்களிடத்தே கூடிய விளக்கத்தை ஏற்படுத்தும் கல்வியாகவும் அமையுமென்பது அவரது துணிபு. அத்துடன் சிறார்க்கான கல்வி, கட்டணம் எதுவுமின்றி இலவசமாகத் தரப்படல் வேண்டுமென்ற கருத்தையும். அவர் முன்வைத்தார்.
ஆங்கிலக்கல்வி முறைமை,கற்பவர் அனைவரையும் அந்நியமயப்படுத்திக் கொண்டிருந்த அவலங்களையும் அறிந்திருந்தார். "ஆங்கிலம் ஒன்றையே கற்றார், அதற்கு ஆக்கையோடு ஆவியும் விற்றார், தாங்களும் அந்நியர் ஆனார்' என்று அவர் துணிந்து எழுதினார்.
பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் ஏழ்மைக்கும் கல்விக்குமிடையேயிருந்த இடைவெளியைத் தமது பட்டறிவு வாயிலாக அறிந்துகொண்ட பாரதியார் பின்வருமாறு குறிப்பிட்டார்:
'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல் அன்னயாவினும் புண் ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்'
சிறார்கள் வீரமும் உறுதியும் கொண்டவர்களாக மலர்ச்சி கொள்ளல் வேண்டும் என்பது பாரதியாரின் குழந்தைக் கல்விச் சிந்தனைகளுள் மேலோங்கிய வீச்சாக அமைந்தது. பின்வரும் அடிகளில் அந்த விசைகளைக் காணலாம்.
- 39

Page 25
"ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா’.
"அச்சம் தவிர்
ஆண்மை தவறேல்’’. “பாதகம் செய்பவரைக் கண்டால் - நீ
பயங்கொள்ளலாகாது பாப்பா மோதி மிதித்துவிடு பாப்பா - அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா”.
4.
சிறுவர்களது ஆளுமையைத் துலங்கவிடாது தடுத்தும், அவர்களால் எதுவும் செய்யமுடியாது என்று பலவீனப்படுத்தியும் அவர்களின் புத்தாக்கத் திறன் களை முறியடித்தும் வந்த கல்விச் சூழலுக்கு எதிரான கிளர்ச்சியாக பாரதியாரின் கல்விக் கருத்துக்கள் எழுந்தன. பிரெஞ்சுப் புரட்சி, சோவியத் புரட்சி முதலியவை பற்றிய இலக்கியங்களை அறிந்திருந்தமை யால் சிறார் கல்வி தொடர்பான மரபுநிலைக்கு மாறு பட்ட கருத்துக்கள் பாரதியாரிடத்து அரும்பிநின்றன.
குழந்தைகளைத் தெய்வ வடிவினராகக் காணுதல் பாரதியாரது கவிதைகளிலே பரவலாகக் காணப்படும் ஒரு பண்பாகும். பராசக்தியை அவர் குழந்தையாகப் பாவனைசெய்து, தெய்வம் - குழந்தை - அன்பு - செல்வம் முதலாம் பரிமாணங்களை ஒன்றிணைத்துப் பாடினார்.
'அன்பு தருவதிலே - உனைநேர் ஆகுமோர் தெய்வமுண்டோ? மார்பில் அணிவதற்கே - உன்னைப்போல் வைர மணிகள் உண்டோ? சீர்பெற்று வாழ்வதற்கே - உன்னைப்போல் செல்வம் பிறிது முண்டோ?*
என்ற பாடல் மேற்கூறிய கருத்தை மீள வலியுறுத்தி
நிற்கின்றது.
பாரதியாரது குழந்தைக் கல்விச் சிந்தனைகள்
பாப்பாப் பாட்டில் உரத்து வெளிப்படுகின்றன.
40 -

குழந்தைகளுக்கான கலைத்திட்டத்தில் கற்றல்அழகியற் செயற்பாடுகள் . விளையாட்டு - ஆகியவை ஒன் றிணைந்திருத்தலின் சிறப்பை அவர் பின்வருமாறு: விளக்கினார்:
**காலை எழுந்தவுடன் படிப்பு
பின்னர் கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு மாலை முழுதும் விளையாட்டு’.
பாரதியாருடைய குழந்தைக் கல்விச் சிந்தனை களுள் முகிழ்த்தெழும் பிறிதொரு விசையாகக் காணப் படுவது, அனைத்து உயிர்களிடத்தும் அன்புகாட்டும் நெறியாகும். பாலைப்பொழியும் பசு, வாலைக்குழைக் கும் நாய், வண்டியிழுக்கும் குதிரை, வயலில் உழும் மாடு, அண்டிப்பிழைக்கும் ஆடு என்றவாறு அனைத்துப் பிராணிகளிடத்தும் அன்பு காட்டல் என்பது கல்விச் செயல்முறையின் வாயிலாக மலர்விக்கப்படல் வேண்டு மென்பதை அவர் வலியுறுத்துகின்றார்.
அறக்கல்வி, ஒழுக்கக்கல்வி முதலியனவும் பாரதி யாரது சிறார் கல்விச் சிந்தனைகளிலே பரக்கக் காணப் படுகின்றன. “பொய்சொல்லக்கூடாது" என்பது பொது ITE எல்லா அறங்களிலும் வலியுறுத்தப்பட்டு வந்தாலும், பாரதியார் அதனையும் வலியுறுத்தி அதற்கு மேலாகவும் சென்று 'புறம் சொல்லலாகாது' என்ற கருத்தைச் சிறார்க்கு வழங்கியுள்ளார்.
பாரதி வாழ்ந்த காலத்து அரசியற் சூழல் கல்வி வாயிலான நாட்டுப்பற்றை வளர்ப்பதற்குத் தூண்டுத லளித்தது. குழந்தைகளிடத்து மொழிப்பற்றையும், நாட்டுப்பற்றையும் நேரடியாக உணர்த்திக் கற்பித்தல் வேண்டுமென்று அவர் விரும்பினார்.
'தமிழ்த்திரு நாடுதனைப்பெற்ற - எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா அமிழ்தில் இனியதடி பாப்பா - நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா",
a 4

Page 26
நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் வளர்த் தல் தொடர்பான இரண்டு விதமான கருத்துக்கள் கல்வியியலாளரிடையே காணப்படுகின்றன. ஒருசாரார் நாட்டுப்பற்றையும் மொழிப்பற்றையும் நேரடியாகக் கற்பிக்காது, அறிவுத்துறைகளோடும் அழகியற் பாடங் களோடும் ஒன்றிணைத்துக் கற்பித்தல் வேண்டுமென்று கருதுகின்றனர். இன்னொருசாரார் அவற்றை நேரடி யாகவே கற்பிக்கவேண்டுமென்று கருதுகின்றனர். இந்த நேரடி முறைமையே பாரதியாரால் தெரிந் தெடுக்கப்பட்டுள்ளது. நாட்டுப்பற்றைப் போலவே சாதி வேறுபாடுகளுக்கு எதிரான மனோபாவங்களை வளர்க்கும் கற்பித்தலையும் நேரடியான முறையில் அவர் முன்வைக்கிறார்.
'சாதிகள் இல்லையடி பாப்பா - குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் நீதி உயர்ந்த மதி கல்வி - அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்’ என்ற பாடல் மேற்கூறிய கருத்தைத் துல்லியமாக விளக்கிநிற்கின்றது.
சிறார் கல்வியோடு வளர்ந்தோர் கல்வி தொடர்பு பட்டு நிற்றலும் கல்வி விரிவாக்கம் அனைத்து மக்க ளையும் தழுவிய வெகுஜனப்படுத்தலாக (Massification) இருத்தல் வேண்டும் என்பதும் பாரதியின் வேட்கை களாக அமைந்தன.
* வீடுதோறும் கலையின் விளக்கம்
வீதிதோறும் இரண்டொரு பள்ளி நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள் நகர்கள் எங்கும் பலப்பல பள்ளி தேடு கல்வியிலாத தோர் ஊரைத் தீயினுக்கிரையாக மடுத்தல். 9 என்ற பாடல் மேற்கூறிய கருத்தை மீள வலியுறுத்தி நிற்கின்றது.
42 -

சிறார் கல்வியூடாக வளர்ந்தோர் கல்விக்கு அடித்தளமிடுதலுடன் மட்டும் பாரதியாரது வேட்கை நின்றுவிடவில்லை. கல்விவாயிலான சமூக அசைவியக்கம் (Social Mobility) Lusbstiu G.5ITGO)6) Gis stigib
அவரிடத்துக் காணப்பட்டது.
**வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்குவாழு மனிதருக் கெல்லாம் பயிற்றிப் பலகல்வி தந்து இந்தப் பாரை உயர்த்திட வேண்டும்'.
கல்விவாயிலான சமூக அசைவியக்கம், மனிதவள மேம்பாடு, தேசிய செல்வத்தின் வளர்ச்சி முதலியவை பாரதியாரால் முன்மொழியப்பட்டுள்ளன.

Page 27
தேசிகவிநாயகம்பிள்ளை
ஒரு கவிஞர் என்ற நிலையிலும் ஓர் ஆசிரியர் என்ற பாத்திரத்திலும் நின்று தமிழ் மரபில் சிறார் கல்விச் சிந்தனைகளை முன்மொழிந்தவர்களுள் கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை (1876-1954) அவர்கள் தனித் துவமானவர். நாஞ்சில் நாட்டுப் பகுதியில் வாழ்ந்து வந்தமையால், அவர் வாழ்ந்த காலப்பகுதியின் மலை யாள நாட்டுக் கல்விச் செல்வாக்கும் அவரிடத்தே சுவறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கவிமணிக்குக் குழந்தைகள் இல்லை. ஆயினும் குழந்தைகள் பால் அவருக்கு அதீத அன்பிருந்தது. குழந்தைகளின் உளஇயல்பை அறிந்துகொள்வதிலும் குழந்தைகளிடம் பழகுவதிலும் அவருக்கு அதிக ஈடுபா டிருந்தது. ஆத்திசூடி முதலிய இலக்கியங்களைக் குழந் தைகள் படித்துப் புரிந்துகொள்வது கடினம் என்று புலவர் கருதினார். 'தமிழில் ஏதோ சில பாடல்கள் சிறுவர்களுக்காகப் பாடியிருப்பதாகவும், அறஞ்செய விரும்பு, ஆறுவது சினம் முதலியன குழந்தைகளுக்குப் புரியாதென்றும், குழந்தைகட்குப் புரியும்படி பாடல்கள் இயற்றப்படல் வேண்டும்' என்று கவிமணி குறிப்பிட் டுள்ளார்.
س 44

இசை கலந்த பாடல்களால் குழந்தைகள் பெரிதும் கவரப்படுவார்கள் என்று கருதிய கவிமணி 'ஒருமுறை ஒரு குறிப்பிட்ட இசையொலியில் ஈடுபட்டு இன்பமுறும் குழந்தையின் உள்ளம் மீண்டும் மீண்டும் அந்த இசை யினை நாடி நாடிச் செல்லும்’ என்றும் கூறினார். சிந்து மெட்டினால் சிறார்கள் கவர்ந்திழுக்கப்படுவார் கள் என்பதையறிந்த கவிஞர் சிறுவர்க்கான கவிதைகளில் சிந்து மெட்டினை நன்கு பயன்படுத்தினார். வகை மாதிரியாக பின்வரும் பாடலைக் குறிப்பிடலாம்
'பொழுது விடிந்தது, பொற்கோழி கூவிற்று
பூஞ்செடி பொலிவதைப் பாராய் பொன்னே! நீ எழுந்தோடி வாராய்! காகம் கரைந்தது காலையும் ஆயிற்று கனியுதிர் கானினைப் பாராய் கண்ணே! நீ எழுந்தோடி வாராய்!’
பறவைகள் மற்றும் விலங்குகளைக் குழந்தைகள் விளித்துப்பேசும் பொழுதும், பாடும்பொழுதும் குழந்தை களின் கற்றல் ஈடுபாடு தீவிரமடையும் என்பது புலவரின் கருத்தாக அமைந்தது. கவிமணியின் பின்வரும் பாடலை இச்சந்தர்ப்பத்திலே சுட்டிக்காட்டலாம்: **காக்காய் ! காக்காய்! பறந்துவா, கண்ணுக்கு மை கொண்டுவா; கோழி! கோழி! கூவிவா; குழந்தைக்குப் பூக்கொண்டுவா !’’.
பாலர் கல்வியில் “பொம்மைக் கலைத்திட்டம்’ எத்துணை ஆற்றல் மிக்கது என்பதையும் புலவர் வற் புறுத்தினார். 'பல பொம்மைகளையும் ஓரிடத்தில் வரிசையாக வைத்துக்கொண்டு ஆடுவதில் அளவிலா இன்பம் குழந்தைகட்கு உண்டு. இந்தப் பாவை விளை யாட்டிலே ஒரு திருமணத்தையே நடத்தி முடிப்பதாகக் காட்டுகின்றார் கவிமணி’ (சு. பாலச்சந்திரன் 1978). 'திருமணத்துக்கு உரிய ஏற்பாடுகளைச் சிலந்தியும், - 45

Page 28
நண்டும், கறையானும் செய்துவருகின்றன. காக்கை, நத்தை, கோழியும் பங்கு கொள்கின்றன. குயில்கள் பண்ணொடு பாட, மயில்கள் ஆடுகின்றன. வண்டினங் களோ வந்தவரை வரவேற்று விருந்து பேணுகின்றன. வீட்டெலி, காட்டெலி, வெள்ளெலி, முள்ளெலி, குண் டெலி, சுண்டெலி எல்லாம் வந்தன. விருந்து ஏழுநாள் நடைபெற்றது. மணமக்கள் வாழ்க வாழ்கவே என்னும் மங்கலவொலி எங்கும் முழங்கியது' என்று கவிஞர் பொம்மைகளின் ஊடாட்டம் வாயிலான கதைச் சித்திரிப்பினைக் காட்டுதல் குறிப்பிடத்தக்கது.
கற்பனைப் பரிமாணங்களை வளர்ப்பதாய் சிறார் கல்விச் செயற்பாடுகள் சிறக்கவேண்டும் என்பதும் கவிமணி தேசிகலிநாயகம்பிள்ளையவர்களின் கருத்தூன்ற லாக அமைந்தது.
அவர் சிறார்க்காக முன்வைத்த கற்பனைகள் சிலவற்றைப் பின்வருமாறு தொகுத்துத் தரலாம்.
'கல்லும் மலையும் குதித்து வந்தேன்-பெருங்
காடும் செடியும் கடந்து வந்தேன்; எல்லை விரிந்த சமவெளி. எங்கும்நான் இயங்கித் தவழ்ந்து தவழ்ந்து வந்தேன்’’.
"பூமகளின் புன்னகைபோல் பூத்திடுவோமே - கம்பன் பாமணக்குந் தமிழினைப்போல் பரிமளிப் போமே? .
தாம் காணும் காட்சிகளை எளிமையான முறை யில் விபரித்துக் கூறும் திறன்களை வளர்த்தல் என்ற கலைத்திட்டச் செயற்பாடு சிறார் கல்வியிலே முன் னெடுக்கப்படல் வேண்டும் என்ற கருத்தும் கவிஞரிடத்து நிலைபேறு கொண்டிருந்தது. தோட்டத்தில் நிகழும் காட்சியைப் பின்வரும் காட்டுருவினால் கவிஞர் விளக்கு கின்றார்.
46 -

*தோட்டத்தில் மேயுது
வெள்ளைப்பசு - அங்கே
துள்ளிக் குதிக்குது
கன்றுக்குட்டி!
அம்மா என்குது
வெள்ளைப்பசு - உடன்
அண்டையில் ஓடுது
கன்றுக்குட்டி
நாவால் நக்குது
வெள்ளைப் பசு - பாலை
நன்றாய்க் குடிக்குது
கன்றுக்குட்டி.
முத்தம் கொடுக்குது
வெள்ளைப் பசு - மடி
முட்டிக் குடிக்குது
கன்றுக் குட்டி'.
கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளையவர் தமிழா
சிரியராகக் கடமையாற்றி வரையறுக்கப்பட்ட இலக்கண வழிப்பட்ட தமிழைப் பள்ளிக்கூடத்திலே கற்பித்தாலும், பேச்சுத்தமிழின் இயக்கப் பண்பை நன்கு அறிந்திருந் தார். சிறாரின் அறிகையை வளர்ப்பதில் பேச்சுமொழி வலிமைமிக்க ஊடகமாகும் என்பதை அறிந்த அவர் சிறார் கவிதைகளிலும், உரையாடல்களிலும், கட்டுரை களிலும், பேச்சு மொழியைப் பொருத்தமாகப் பயன் படுத்தினார். கேட்டல், பேசுதல், எழுதுதல் என்றபடி முறைகளில் சிறார்கல்வி நிகழவேண்டும் என்பது அவரது துணிபு. அக்காலத் தமிழ்க் கல்வியில் கேட்டலுக்கும் பேசுதலுக்கும் முக்கியத்துவம் கொடுக்காது எழுதுதலுக் கும், வாசித்தலுக்குமே கற்பித்தலில் முதன்மை நிலைகள் வழங்கப்பட்டன. இந்தப் பாரம்பரிய அணுகுமுறை யினை மாற்றியமைப்பதற்குக் கவிமணிக்குக் கற்பித் தலிற் கிடைத்த பட்டறிவே துணை செய்திருத்தல் வேண்டுமென ஊகிக்க இடமுண்டு.
47

Page 29
அழ. வள்ளியப்பா
குழந்தை இலக்கியங்கள் வாயிலாகச் சிறார்க் குரிய கல்விக் கருத்துக்களைத் தமிழர் கல்வி மரபில் முன்மொழிந்தவர்களுள் அழ. வள்ளியப்பா விதந்து குறிப்பிடத்தக்கவர். 1922ஆம் ஆண்டில் இராயவரத்தில் பிறந்த வள்ளியப்பா ‘காந்தி பாடசாலையில்" தம தொடக்கக் கல்வியைக் கற்றவேளை இந்திய விடுதலை இயக்கத்துக்குரிய கல்விச் சிந்தனைகளால் ஊட்டம் பெற்றார். தேசப்பற்று, மொழிப்பற்று, நல்லொழுக்கம், இயற்கை நயப்பு, முதலாம் சிந்தனைகளை குழந்தை களின் உளக்கோலங்களுக்கு ஏற்றவாறு எளிமையாகக் கற்பிக்கவேண்டுமென்பது அழ. வள்ளியப்பாவின் கருத் தாக அமைந்தது.
"ஈசாப் கதைப் பாடல்கள்', 'ரோஜாச் செடி", 'உமாவின் பூனைக்குட்டி’, ‘அம்மாவும் அத்தையும்" ‘மணிக்குமணி', 'மலரும் உள்ளம்', 'கதை சொன்னவர் கதை’, ‘மூன்று பரிசுகள்’, ‘எங்கள் கதையைக் கேளுங் கள்’, ‘நான்கு நண்பர்கள்’, ‘பர்மாரமணி, எங்கள் பாட்டி', 'மிருகங்களுடன் மூன்று மணி’, ‘நல்ல நண் பர்கள்”, “பாட்டிலே காந்தி கதை’, ‘குதிரைச் சவாரி",
سه 48

நேரு தந்த பொம்மை’, ‘நீலாமாலா", "பாடிப் பணி வோம்’, ‘வாழ்க்கை விநோதம்'. 'சின்னஞ்சிறு வயதில்", பெரியோர் வாழ்விலே சுவையான நிகழ்ச்சிகள் முதலாம் பல நூல்களை வள்ளியப்பா எழுதினார்.
சிறார்கல்வி தொடர்பான கோட்பாடுகளை அவர் நேரடியாகக் கூறாவிடினும், மேற்கூறிய நூல் களில் சிறுவர்க்கான கல்விச் சிந்தனைகள் பல இழை யோடி நிற்பதைக் காணமுடியும். இலக்கியத்துறையில் தி. ஜ. ரங்கநாதன் (தி. ஜ. ர.) அவர்களிடம் பெற்ற அனுபவமும் பேராசிரியர் ஐயன் பெருமாள் கோனாரின் நட்பும், அவரிடத்து மேற்கொள்ளப்பெற்ற கல்வி தொடர்பான கலந்துரையாடல்களும் வள்ளியப்பா அவர்களின் சிறார் கல்விச் சிந்தனைகளை வளமூட்டின.
சிறார் கல்வியில் சுற்றப்புறச் சூழலின் அறிவும், சுற்றுப்புறச் சூழலுடன் மேற்கொள்ளப்படும் இடை வினைகளும் சிறப்பார்ந்த இடங்களைப் பெறும் என்று கருதிய இவர் வீட்டிலுள்ள பறவைகள், விலங்குகள். விளையாட்டுப் பொருள்கள், தெய்வங்கள், பெற்றோர், உறவினர், தின்பண்டங்கள் முதலியவற்றை அடிப்படை யாகக் கொண்ட பல குழந்தைப் பாடல்களை எழுதினார்.
கல்வியில் இயற்பண்பு நெறி (Naturalism) கவி யரசர் தாகூரால் முன்னெடுக்கப்பட்ட இந்தியச் சூழலும் அழ. வள்ளியப்பா மீது செல்வாக்குச் செலுத்தியிருக் கலாம் போலத் தெரிகின்றது. இயற்கையை உற்று நோக்கல், இயற்கையை அனுபவித்தல், இயற்கையோடு இணைந்து வாழ்தல் முதலாம் உள்ளடக்கங்களை இவர் தமது குழந்தைக் கவிதைகளிலே முன்வைத்தார். பூஞ் சோலை, மலர், மல்லிகை, வண்டு, வெண்ணிலா, கடல், மழை, காற்று முதலானவற்றை உட்பொதிந்து பல குழந்தைக் கவிதைகளை எழுதினார்.
சிறார்க்கான அறிவூட்டல், நகைச்சுவையுடன் இணைந்த மனவெழுச்சி சார்ந்த கற்பித்தலாக
- 49

Page 30
(Emotional Learning) g(55.56 Gougia, Gub argård கருத்தும் இவரிடத்து இழையோடியிருந்தது. குறும்புகள் பிறர் மனத்தைப் புண்படுத்தலாகாது என்ற உறுதியான கருத்தையும் இவர் கொண்டிருந்தார். பறவைகள், விலங்குகள், பொருள்கள் சார்ந்த நகைச்சுவையிலும், குறும்புகளிலும் இவரது ஈடுபாடு கூடுதலாக் இருந்தது. வகை மாதிரிக்கு ஒரு பாடல் வருமாறு:
“ஒட்டைச் சிவிங்கி கழுத்து மிகவும்
நெட்டையானதேன்? - அது எட்டி எட்டி இலையுந் தழையும் பறித்துத் தின்றதால்’’
என்றவாறு வினாவிடை வாயிலாக நகைச்சுவையைத் தூண்டி குழந்தைகளின் அறிகையை மேம்படுத்தும் நடவடிக்கையைப் புலவர் மேற்கொண்டிருந்தார்.
நகைச்சுவையை வெளிப்படுத்தும் பிறிதொரு கவிதை வருமாறு:
'உருண்டு விழுந்தது நாற்காலி ஒடிந்தன மூன்று கால்களுமே! மிச்சம் ஒற்றைக் காலுடனே முடமாய்க் கிடந்தது நாற்காலி’. சிறார்க்கான கல்வியிற் செவிப்புலன், பயிற்சியின் முக்கியத்துவமும் இவரால் பல சந்தர்ப்பங்களிலே வலி யுறுத்தப்பட்டுள்ளது. இதற்குரிய சில எடுத்துக்காட்டுகள் கீழே தரப்படுகின்றன.
*வட்டமான தட்டு
தட்டு நிறைய லட்டு லட்டு மொத்தம் எட்டு'.
"டிங் டாங் டிங்டிங் டிங் டாங் டிங்டிங் கோயில் யானை வருகுது
s 2
A.
குழந்தைகளே பாருங்கள்
50

குழந்தைகளுக்கான கற்பித்தலில் “இசையும் அசைவும்" என்ற "உடல்-உள இயக்க* தேவைப்பாட் டினையும் கவிஞர் முன்மொழிந்தார். இசையும் அசை வும் தழுவிய நடித்துக் காட்டும் பாடல்கள் பலவற்றைக் கவிஞர் புனைந்து தந்துள்ளார். “பாப்பா அழாதே’, ‘நாய்க்குட்டி’, ‘சிட்டுக்குருவி', 'சின்னப்பொம்மை?? முதலியவை இப்பிரிவிற் குறிப்பிடத்தக்கவை.
'அனுபவங்களில் இருந்து அனுபவங்களை நோக்கி’ சிறார்க்குரிய கல்வி நகர்ந்து செல்லல் வேண்டும் என்ற கருத்தும் கவிஞரால் உள்வாங்கப்பட்டுள்ளது. மிக எளி மையான அனுபவக் கட்டமைப்பிலிருந்து இவரது குழந் தைக் கவிதைகள் முகிழ்த்தெழுகின்றன. வகை மாதிரி பாக பின்வரும் எடுத்துக்காட்டைக் குறிப்பிடலாம்:
*அணிலே அணிலே ஒடிவா
அழகு அணிலே ஒடிவா கொய்யா மரம் ஏறிவா குண்டுப் பழம் கொண்டுவா’’
சிறார்க்கு, நாட்டுப்பற்றுடன் கூடிய தாய்மொழி வாயிலான கல்வி இன்றியமையாதது என்பது கவிஞரால் வலியுறுத்தப்பட்டுள்ளது. சமூக உணர்வுடன் கூடிய கல்வியை வலியுறுத்திய இவர் சமூக ஏற்றத்தாழ்வுகளை யும் அவலங்களையும் கற்பித்தல் வேண்டும் என்பதை யும் உணர்த்தியுள்ளார்.
'மாடு இல்லை குதிரை இல்லை
மனிதன் வண்டி இழுக்கிறான்
பாடுபட்டு உடல் வளர்க்கப்
பாவம், இதுபோல் செய்கிறான்’’.
வண்டியிழுக்கும் மனிதர்மீது இப்பாடல் இரக் கத்தை ஏற்படுத்துகிறது.
சிறார்க்குரிய இலக்கிய ஆக்கங்களை வளம்படுத் தும் நடவடிக்கைகளிலும் அழ. வள்ளியப்பா அவர்கள் பரந்த பங்களிப்பினை தமிழ் இலக்கியப் பரப்பிலே மேற்கொண்டுள்ளார்.
5

Page 31
சோமசுந்தரப்புலவர்
தமிழர் மரபில், சிறப்பாக ஈழத்துச் சிறார் கல்வி மரபில் பல்வேறு கல்வியியற் சிந்தனைகளைத் தமது கவிதைகள் வாயிலாக உதிர்த்தவர்களுள் நவாலி யூர் சோமசுந்தரப்புலவர் தனித்துவமாகக் குறிப்பிடத் தக்கவர். இலங்கையில் இலவசக்கல்வி விரிவாக்கம் பெற்ற காலகட்டத்தில் சிறாரை நடுநாயகப்படுத்தும் கல்வி நோக்கங்கள் முனைப்புப்பெற்ற பின்புலத்தில் இவரது பங்களிப்பை நோக்கவேண்டியுள்ளது.
புலவரது சமகாலத்தில் வாழ்ந்த கல்வியதிகாரி திரு. எஸ். அருள்நந்தியவர்கள் குழந்தை உளவியலறிவு வாய்க்கப்பெற்றவராயிருந்ததுடன், பருத்தித்துறை தும்பளைக் கிராமத்தில் தாம் வாழ்ந்த நெய்தலங் கானல் இல்லத்துக்கு யாழ்ப்பாணத்துப் புலவர்களை அழைத்து, சிறார்க்கான கவிதைகளை இயற்றுமாறு வேண்டினார். குழந்தைக் கல்விச் சிந்தனைகள் பரவ லடைவதற்கு அருள்நந்தியவர்களது பங்களிப்புக்களும், யாழ்ப்பாணத்தில் இயங்கிவந்த ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளும் விசைகளாக அமைந்தன. ஏற்கனவே சிறுவர்க்கான பாட நூலாக்கத்திலும், கல்வியிலும் ஆறுமுகநாவலரது செல்வாக்கு இங்கு ஊடுருவியிருந்
52 .

தது. கிறிஸ்தவ திருச்சபையினரும் சிறுவர்க்கான கல்விப் பரவலிலும், மேம்பாட்டிலும் ஒன்றிணைந்த பல நட வடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். இவற்றின் பின்னணியிலே கற்கச் செய்தல் முதலாம் கற்பித்தல் உபாயங்களைப் பயன்படுத்தும் ஒவ்வொரு மாணவ ரிடத்தும் வினையாற்றல் மிக்க கற்பித்தலை மேற் கொள்ள முடியும் என்று புலவர் கருதினார். உரை யாடல் வாயிலாகக் கற்பித்தலை 'சல்லாப முறை என்று புலவர் பெயரிட்டு அழைத்தார்.
சிறார்க்கான கற்பித்தலில் ‘அன்பு" என்ற விழு மியம் ஊடுருவியிருத்தல் வேண்டும் என புலவர் வலி யுறுத்தினார். தாம் கற்பித்த பாடசாலையை கலை யரசியாக உருவகம் செய்து ‘கலையரசி ஐம்பருவம் என்ற நடிப்புப் பாடலை உருவாக்கிய புலவர் அவர்கள் அம்புலிப் பருவத்தில் அன்பின் ஆழத்தை வலியுறுத்து கின்றார்.
'அன்னை மார்கள் தந்தைமார்கள் வெண்ணிலாவே -
இங்கு அன்புடையோர் வந்துவிட்டார் வெண்ணிலாவே' என்று அந்த அடிகள் வருகின்றன. 'ஆடு கதறியது" என்ற பாடலில் ஆடு என்பதைக் குறியீடாக வைத்து அன்பின் வடிவங்களை விளக்குகின்றார். நட்பின் பெருமை, ஈதல், அறம், கொல்லாமை முதலாம் விழு மியங்கள். அன்புடன் தொடர்புபட்டு நிற்றல் புலவரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சோமசுந்தரப்புலவர் அவர்களது சிறார் கல்விச் சிந்தனைகள் இயற்பண்புநெறி (Naturalism) தழுவி மலர்ச்சியடையத்தொடங்கின.
சிறார்க்கான கற்பித்தலில் குழவிப் பாடல்களின் " முக்கியத்துவம் சோமசுந்தரப் புலவரினால் வலியுறுத் தப்பட்டது. தமிழிலே காணப்படும் இனிய ஒசையின்
- 53

Page 32
அமைதி "வண்ணம்’ என்று அழைக்கப்படும். செவிக்கு இன்பம் தரும் வண்ணங்களைப் பயன்படுத்தி சிறார்க்கு முறைசார்ந்த வகையிலும் முறைசாரா வகையிலும் கற்பித்தல் வேண்டுமென்பது புலவரது கருத்தாக அமைந்தது. வண்ணங்களைக் கேட்கும்பொழுது செவிப்புலன் தழுவிய அறிகையும் எண்ணக்கருவாக் கமும் வளர்ச்சியடைந்து மேம்பாடு கொள்ளும்
புலவர் அவர்கள் வட்டுக்கிழக்கு சைவாங்கில வித்தியாசாலையில் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியராக இருந்து கற்பித்தவர். தமது அனுபவங் களை அடியொற்றிச் சிறுவர்களை முத்திறத்தினராக வகைப்படுத்தினார். அந்த வகைப்பாடு வருமாறு:
1) ஆற்றல்மிகு சிறார் 2) சராசரி நிலைச் சிறார் 3) மெதுவாகக் கற்கும் சிறார். மேற்கூறிய மூன்று திறத்தாரும் நிறைந்த பயனைப் பெறுமாறு கல்வி ஒழுங்கமைக்கப்பட வேண்டு மென்பது புலவரின் கருத்தாக அமைந்தது.
பாத்திரமேற்று நடித்தல் (Role play), உரை யாடல் வாயிலாக தாமே ஈடுபாடு கொண்டு மான
வரைத் தழுவியதாகவும் அமைந்தன.
அவர் எழுதிய கலையரசி ஐம்பருவக் காப்புப் பருவத்தில் வேப்பிலைக் காப்புப் பாடியமை அவர் வரித்துக் கொண்ட இயற்பண்பு நெறியினை ஒருவகை யிலே சுட்டிக்காட்டுகின்றது.
“காற்றுடனே தோற்றுபிணி காலநெடுங் கோளரிட்டம் வேற்று விடங்கெடுக்கும் வேப்பிலைதான் காத்தருள்க’ என்றவாறு வேப்பிலைக் காப்பைப் புலவர் பாடியுள் ளார். மேலும் புழுக்கொடியலைப் பற்றிப் பாடும் பொழுது,
54 -

"வண்ணப் பனங்கிழங்கதுதான்-வேறு
மருந்துமா மென்றுமுன் சொல்லிவைத்தாரே'
என்றவாறு புலவர் இயற்கை உணவுகள், இயற்கை வைத்திய முறைகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
சிறார்க்கான கற்பித்தலில் நகைச்சுவையின் முக்கியத்துவமும் புலவரால் வற்புறுத்தப்பட்டுள்ளது. நகைச்சுவை வாயிலாக உடல் உளச் செயற்பாடுகளை எழுச்சிபெறச்செய்து ஆற்றல்மிக்க கற்பித்தலை முன் னெடுக்கலாம் என்று புலவர் கருதினார். இதனை அடியொற்றியே “கத்தரி வெருளி’, ‘தாடியறுந்த வேடன் முதலாம் சித்திரங்களை அவர் பாவடிவில் அமைத்தார்.
சிறார் கல்வியில் குழுநிலைக் கற்பித்தல், குழுச் செயற்பாடு முதலியனவும் முன்னெடுக்கப்படல் வேண் டும் என்பதைப் புலவர் தமது குழந்தைப் பாடல்களிலே குறிப்பிட்டுள்ளார். குழுச் செயற்பாடு புலவரது கண் ணோட்டத்திலே ‘தோழமைச் செயற்பாடாக வலியுறுத் தப்பட்டது. ஆடிப்பிறப்புப் பாடலில் தோழமைச் செயற்பாடு குறிப்பிடப்பட்டுள்ளது.
கவிஞர் வாழ்ந்த காலம் கல்வி வாயிலான சமூக அசைவியக்கம் யாழ்ப்பாணத்தில் விசை கொண்டு செயற் பட்டுக்கொண்டிருந்தது. கல்வி வாயிலாகத் தொழில் வாய்ப்புக்களையும், சமூக உயர்நிலையையும் எட்டக் கூடியதாக இருந்தது. அந்நிலையில் கல்வி பற்றிய எண்ணக் கருவையும் சிறாருக்கு வழங்கவேண்டிய தேவை கவிஞருக்கு இருந்தது. ஏற்கனவே தமிழர்களு டைய பண்பாட்டிற் கல்வியின் முக்கியத்துவம் வலி யுறுத்தப்பட்டிருந்தாலும், இருமொழிக் கல்வியின் சிறப்பு புலவரால் விதந்து கூறப்பட்டுள்ளது:
"சைவந்தழைக்கத் தமிழாங்கிலம் வளர
பல்லுயிர்க்குந் தாயாய்ப் படைத்த பசுங்கொடியே - ஆராரோ ஆரிவரோ" என்று புலவர் தமது கலையரசி ஐம்பருவத்திலே குறிப் பிட்டுள்ளார்.
- 55

Page 33
சிறாரைக் கேடுறுத்தல் தொடர்பான சமூக உளவியற் காட்டுருக்களின்
மதிப்பீடு
சிறுவர் துஷ்பிரயோகம் அல்லது சிறாரைக் GaGadsá) (Child Abuse) Tig நவீன கட்டற்ற பொருளாதார செயல்முறைகளாலும் தீவிர சுரண்டற் கோலங்களாலும் கர்ப்படைந்துவரும் ஒரு சமூக உளவியற் பிரச்சினையாக மேற்கிளம்பியுள்ளது. சிறா ரைப் பாதுகாப்பதற்குரிய சட்டங்கள் பல இயற்றப் பட்டாலும் நிறுவன ஒழுங்கமைப்புக்கள் அவ்வப்போது உருவாக்கப்பட்டாலும் கேடுறுத்தல் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணமுள்ளது. (Fontona, 1973, p. 223). அத்துடன் மூன்று வயதுக்குக் குறைந்த சிறாரைக் கேடு றுத்தல் மேலும் மிகவும் துன்பகரமாகவுள்ளதை ஆய் வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள். (Terr, 1970, p. 665). திட்டமிட்ட வகையில் கேடுறுத்தல் ஒருபுறம் நிகழ, பெற்றோர் பாதுகாவலரின் அறியாமையாலும், உட்ல் உள்ள மனவெழுச்சிக் கேடுறுத்தல்களுக்கு சிறார் உள்ளாக்கப்படுகின்றனர். சிறார்களிடத்துக் கல்வியில் பின்னடைவு ஏற்படுவதற்கும் ஆளுமைச் சிதைவு ஏற் படுவதற்கும், உளநோய்கள் தோன்றுவதற்கும் கேடு றுத்தல் அடிப்படைக் காரணியாகின்றது. 56 -

சிறாரைக் கேடுறுத்தல் பின்வருமாறு விளக்கிக் கூறப்படுகின்றது:
உடல் சார்ந்த கேடுறுத்தல். உளம் சார்ந்த கேடுறுத்தல். மனவெழுச்சி சார்ந்த கேடுறுத்தல், ஊட்ட உணவுப் புறக்கணிப்பு. பாலியல் சார்ந்த கேடுறுத்தல். போதைப்பொருள் கடத்தல். மருந்து வழங்கல் நிராகரிப்பு. கல்வி நிராகரிப்பு. வேலைகளில் ஈடுபடுத்தல் வன் நடத்தைகளில் ஈடுபடுத்தல்.
சிறாரைக் கேடுறுத்தல் தொடர்பான காட்டுருக் களை (Models) மதிப்பீடு செய்தலே இவ்வாய்வுக் கட்டு ரையின் இலக்குகளாகும். கேடுறுத்தல் தொடர்பான காட்டுருக்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்:
1. உளவியற் காட்டுரு. 2. சமூகவியற் காட்டுரு, 3. சமூக - சந் சர்ப்பக் காட்டுரு. 4. ஒன்றிணைக் காட்டுரு.
1. உளவியற் காட்டுரு:
பெற்றோரின் உளவியற் பிரச்சினைகள், அவர் களால் கட்டுப்படுத்த முடியாத மனவெழுச்சிப் பிரச் சினைகள், பெற்றோர்கள் வளர்ந்துவந்த முறைமை, எதிர்ப் பண்பு கொண்ட முறைமை, முதலிய பல்வேறு உளவியற் பிரச்சினைகள் சிறாரைக் கேடுறுத்தலுக்குக் காரணமாக இருக்கின்றன என்பதை உளவியற் காட்டுரு விளக்குகின்றது. பெற்றோருக்குப் பொருத்தமான கல்வியை வழங்குதல், அவர்களின் ஆளுமைக் குழப்பங் களைத் தவிர்த்தல், சீர்மியம் வழங்குதல் முதலியவற் றால் கேடுறுத்தலைத் தவிர்த்துக் கொள்ள முடியும் என்று கருதப்படுகின்றது.
57

Page 34
சிறுவர்கள்மீது உடற் காயங்களை ஏற்படுத்தல், பொறுப்பற்ற முறையில் தமது பிள்ளைகளுக்கு வைத் தியம் செய்தல், தவறான கற்பித்தல் முறைமை முதலி யவை சிறார்களுக்கு கேடுறுத்தல்களை ஏற்படுத்துகின் றன. இலங்கையின் நிலவரப்படி பெண் சிறார்களே அதிக அளவிற் கேடுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுதல் G)5fflua(56)6ösog. (Economic Review, Nov. Dec. 1996).
கேடுறுத்தலை உளவியற் கண்ணோட்டத்தில் நோக்கியவர்கள் ஒரு பிரதான கருத்தை முன்மொழி கின்றார்கள். அதாவது தாழ்ந்த சுயபடிமம் (Low Self image) உள்ளவர்களே கூடுதலாக சிறாரைக் கேடுறுத்து கின்றார்கள் என்று விளக்கப்படுகின்றது (Papalia, 1979, P. 230). கேடுறுத்தப்படும் சிறார்களிடத்தும் பின் னடைந்து தாழ்ந்த சுயபடிமமே ஏற்படுகின்றது.
2. சமூகவியற் காட்டுரு:
சமூகத்தின் இயல்பு, அதன் அடிக்கட்டுமானம், சமூக உறவுகள், சுரண்டற் கோலங்கள், சமூகத்தின் ஒடுக்குமுறை இயல்பு முதலியவற்றின் கூட்டு மொத்த மான விளைவாக எழுவதே சிறார் கேடுறுத்தல் ஏற்படு கின்றது என்பதைச் சமூகவியற் காட்டுரு விளக்குகின் றது. இது தொடர்பாக கில் (Gill, 1975) என்பார் ஐந்து பிரதான பரிமாணங்களைச் சுட்டிக் காட்டியுள் ளார். அவையாவன:
1. சமூகத்தின் அடிப்படையான தத்துவம், ஆட்சி செலுத்தும் விழுமியங்கள், மனிதன் பற்றிய எண் ணக்கரு, மற்றும் சமூக நிறுவனங்களின் இயல்பு. 2. முடிவுகளைப் பெறுவதற்குச் சமூகத்திலுள்ளோர்
பயன்படுத்தும் அதிகார வலுவின் ஏற்புடைமை, 3. சிறார் பற்றிய சமூகத்தின் எண்ணக்கரு, 4. சமூகத்தின் நெருடற் கேடுகளுக்கான சந்தர்ப்பங்கள். எடுத்துக்காட்டாக, மிகு வறுமை, குடித்தொகைக்
58 -

குவிப்பு, இடநெருக்கடி, மற்றும் போதுமான நல வசதியின்மை முதலியன சமூகத்திற் காணப்படும் பல்வேறு வகைப்பட்ட உளப்பிணிகள்,
சில ஆய்வாளர்கள் சமூகத்திலே காணப்படும் 95)'u 5-ri 3Fiğ5İlül 151565't-Gö7 (High-risk Situations) தொடர்புபடுத்தி (Bronfen Nrenner - 1974) சிறார் கேடுறுத்தலை விளக்குகின்றார்கள். அதாவது மனிதச் சூழலின இயல்பும், சிறாரைக் கேடுறுத்துவதற்கான சமூக ஆதரவுச் செயற்றொகுதியின் பண்பும், இந் நிலையை ஏற்படுத்துவதாகக் குறிப்பிடுகின்றார்.
மேற்குறித்த ஆய்வாளர்கள் பெரும்பாலும் சமூக நிலவரங்களை விளக்குவதிலும், தோற்றப்பாடுகளை விளக்குவதிலும் கவனம் செலுத்துகின்றார்களேயன்றி சமூகத்தை மாற்றியமைக்கும் உபாயங்களை முன் மொழியவில்லை. அவற்றை மார்க்சிய சிந்தனையாளர் களிடமிருந்தே பெறவேண்டியுள்ளது.
3. சமூக சந்தர்ப்பக் காட்டுரு:
சிறாரைக் கேடுறுத்தல் தொடர்பான சமூக சந்தர்ப்பக் காட்டுருவை, பார்க் மற்றும் கொல்மர் (pair (LDT fligiTri digit. (Park and Collmer - 1975). குடும்பப் பின்புலத்தில் நிகழும் இடைவினைகளையும், சந்தர்ப்பங்களையும் அவர்கள் தீவிரமாகப் பகுப்பாய்வு செய்தார்கள். குடும்பப் பின்புலத்திலே குறைந்தளவு இடைவினைகள் காணப்படுதல், எதிர்மறையான அணுகுமுறைகள் நிலவுதல், எதிர் இசைவாக்கல் காணப் படுதல் முதலிய சந்தர்ப்பங்களால் சிறுவர் கேடுறுத்தல் நிகழ்வதாக சமூக சந்தர்ப்பக் காட்டுரு விளக்குகின்றது. இதுவும் ஒருவகை நுண்பகுப்பாய்வாக இருக்கின்றதே யன்றி, சமூக நிலவரங்களை மாற்றியமைப்பதற்கான விஞ்ஞான பூர்வமான கருத்தை முன்வைப்பதாகக் காணப்படவில்லை. சமூக ஆதரவு நடவடிக்கைகள் வாயிலாக நடத்தைகளை மாற்றியமைக்க முயலலாம்
- 59

Page 35
என்டதும் வெறும் கற்பனை வாதமாகிவிடுகின்றது. ஏனெனில் சுரண்டற் கோலங்கள் நிலவும் ஒரு சமூகத்தில் உற்பத்திச் சாதனங்களை வைத்திருப்பவரே சமூக ஆதரவு நடவடிக்கைகளிலும் ஈடுபடவேண்டியுள்ளமை யால், தமது சுரண்டல் நலனை அவர் ஏதோ ஒரு வகையில் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்து இறுகப்பற்றி நிற்கவேண்டியுள்ளது. 4. 96óTpóspotá, antes (INTEGRATVE MODEL)
யாதாயினும் ஒரு காரணியால் மட்டும் சிறார் கேடுறுத்தல் நிகழ்வதில்லை என்றும், பல்வேறு காரணி களின் ஒன்றிணைப்பாலேயே அந்நிகழ்ச்சி ஏற்படுகின்ற தென்றும் ஒன்றிணையக் காட்டுரு விளக்குகின்றது. 66F6ŕv (Gelles 1973), gyổi Gí? (Alvy) (pg56ÓGulumtri இந்தக் காட்டுருவை விளக்கினர். ஆளுமைப் பண்புக் கூறுகள், பெற்றோர் பெற்ற சமூக மயமாக்கல் அனு பவங்கள், அவர்களின் சமூக அந்தஸ்து, வன் நடத்தை தொடர்பான பண்பாட்டு நியமங்கள் சந்தர்ப்ப நெருக்கு வாரங்கள், உடனடியான நிசழ்ச்சி முதலியவை ஒன் றிணைந்த முறையிலே சிறார் கேடுறுத்தல்ை உருவாக்கு கின்றதென இந்தக் காட்டுரு விளக்குகின்றது.
பெற்றோரின் ஆளுமை, சிறாரின் ஆளுமை, சூழல் முதலியவற்றின் இடைவினை ஒன்றிணைப்பு கேடுறுத்தலுக்கு அடிப்படையாகின்றது என்பது இதன் Ffi frn LDérLD.
தீர்வு பற்றிய திறனாய்வு:
சமூக உளவியற் கண்ணோட்டத்தில் இந்தக்
காட்டுருக்களை ஆராய்ந்தோர் பிரச்சினைக்குப் பின்
வரும் தீர்வு முறைகளைக் குறிப்பிடுகின்றனர்:
1. வறுமையை ஒழித்தலும் குடும்பத் திட்டமிடற்
செயற்பாடுகளை முன்னெடுத்தலும்.
2. ஆற்றுப்படுத்தல் மற்றும் சீர்மிய நடவடிக்கைகளைப்
பல மட்டங்களிலும் விரிவுபடுத்தல்,
60 -

உச்சநிலைப் பயன் தரக்கூடியவாறு உடல் நல, உள நல, நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்தல். குடும்பச் சூழலில் நெருக்குவாரங்களைத் தணிப் பதற்குரிய குடும்ப அயற்புறச் சமூக சேவுைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தல், ஒன்றிணைந்த சமூக சேவை நடவடிக்கைகளை மேற்கொள்ளல். சிறார்நலப் பாதுகாப்பு நடவடிக்கைகளை விரிவு படுத்தல். சமூகத்துக்கான முறைசாராக் கல்வி நடவடிக்கை களை விரிவுபடுத்தல்.
மேற்கூறியவற்றோடு தனித்தனி நிறுவன அமைப்
புக்களோடு கூடிய தீர்வு முறைகளும் முன்வைக்கப் படுகின்றன. பின்வருவனவற்றை இதற்கு எடுத்துக் காட்டுக்களாகக் குறிப்பிடலாம்:
l
2
சிறார்க்கென பகற்பாதுகாப்பு இல்லங்களை (Day Care Centre) sidiag56i. நெருக்குவாரப் பாதுகாப்பு இல்லங்களை (Crisis Nurseries) அமைத்தல் நெருக்கடியான எந்த நேரத்திலும் சிறார்களை இந்த இல்லத்திலே கொண்டுவந்து பாதுகாப்புக்கென விடமுடியும். வதிவிடப் பாதுகாட்பு (Residential Care) இல்லங் களை ஏற்படுத்துதல். சிறாரும், அவர்களின் பெற் றோர் அல்லது பாதுகாவலர் ஒரு குறுங்காலப் பாதுகாப்பு நடவடிக்கையாக இங்கு வந்து தங்கிப் பயன் பெறும் வழிமுறையாக இது அமைகின்றது. சமூக உளவியல் நிறுவனங்களை ஏற்படுத்தி ஒன் றிணைந்த உளவியல் நடவடிக்கைகளை மேற் கொள்ளல். நடத்தைச் சீர்ப்படுத்தல் (Behaviour Modification) நிலையங்களை ஏற்படுத்தல்.
- 6

Page 36
6. மாற்றுப் பாதுகாப்பு இல்லங்களை (Foster Homes) அமைத்து, பாதுகாப்பான வதிவி மாற்றத்தின் வழியாகத் தீர்வுக்ாண முயற்சித்தல்,
மறுவாழ்வு இல்லங்களை அமைத்து பாதிக்கப்பட்ட சிறார்களுக்குப் பாதுகாப்பும் கல்வியும் வழங்குதல்.
எத்தகைய விரிவானதும் ஒன்றிணைந்ததுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், சிறார் கேடுறுத்தல் அதிகரித்து வருதல் ஆய்வாளருக்குப் பெரும் அறைகூவலாகவும் உள்ளது. அடிப்படையான ஒரு சமூக மாற்றம், பொருள் உற்பத்தி உறவுகளில் அடிப்படை பான மாற்றம், எவ்வகையான சுரண்டல்களையும் ஒழிப்பதற்கான அடிப்படையான மாற்றம் பற்றிய சிந்தனையின் முக்கியத்துவத்தையே இச்சந்தர்ப்பத்தில் மேலும் வலியுறுத்தவேண்டியுள்ளது.
62 .

சிறார் கல்வி தொடர்பான மாற்றுவகைச் சிந்தனை
உலகளாவிய நிலையில் சிறுவர் கல்வியின் இன்றி யமையாமை பல பரிமாணங்களிலும், பல நிலைகளிலும் விளக்கப்பட்டாலும், விடுபட்டு நிற்கும் ஒரு பெரும் இடைவெளி பற்றிக் குறிப்பிடாமல் இருந்துவிட முடி யாது. சிறார் கல்வியைப் பொறுத்தவரை வர்க்க இடைவெளி கூர்ப்படைந்து கொண்டு நிற்கின்றது. வாய்ப்பு மிக்கோரின் குழந்தைகள் விரைந்த கல்விப் பங்குபற்றலுக்கு உள்ளாகிச் சிறக்கின்றனர். வறுமை நிலையிலுள்ள சிறார்கள் தொடர்ந்து பின்னடைவுகளை அனுபவித்து வருகின்றனர்.
உணவு ஊட்டப் பற்றாக்குறைவு, சிறப்பாக புரத உணவுகளின் பற்றாக்குறைவு காரணமாக ஏழைக் குழந்தைகளின் மூளைவளர்ச்சி பின்னடைவுகளை எதிர் கொள்ளுகினறது. உயிர்ச்சத்துக்களின் போதாமை, கனிமங்களின் பற்றாக்குறை முதலியவற்றால் ஏழைக் குழந்தைகளின் சராசரியான உடல் வளர்ச்சியும், தசை நார்களின் இயக்க வளர்ச்சியும் பின்னடைவுகளை எதிர்
- 63

Page 37
கொள்ளுகின்றன. உடல் மேம்பாடு தொடர்பான பின் னடைவு உள மேம்பாட்டிலும் தாக்கங்களை ஏற்படுத்து கின்றது.
வசதிமிக்க சிறார்களுக்குரிய பள்ளிக்கூடங்கள், வசதிகுறைந்த ஏழைச் சிறுவர்களுக்குரிய பள்ளிக்கூடங் கள் என்ற முரண்பாடான செல்வழிகள் தோன்றி யுள்ளன.
இல்லங்களிற் கிடைக்கப்பெறும் கல்விசார்ந்த வளங்கள், சிறாரின் கல்வியில் நேரடியான செல்வாக்கு களை ஏற்படுத்துகின்றன. வசதிமிக்க சிறார்களின் இல்லங்களிற் கிடைக்கப்பெறும் கணனிகள் உட்பட்ட வளங்கள் அவர்களின் அடைவுகளை உயர்த்துவதற்குத் துணை நிற்கின்றன. ஆனால் ஏழைச் சிறார்கள் அடிப்படை வள வசதிகள் அற்ற நிலையில் பொதுத் தேர்வுகளுக்கு முகம்கொடுக்க நேரிடுகிறது.
சிறார் கல்விச் சிந்தனைகள் பற்றி ஆழ்ந்து நோக்கும்பொழுது முகிழ்த்தெழும் ஒரு பிரதான விசை யாக "மறைநிலை நிராகரிப்புக் கோட்பாடு’ (Theory of Hidden Deprivation) 6Tairua.05 (p6ira)aididsCal Tig யுள்ளது. அதாவது வெளிப்படையாக கல்வியில் சம சந்தர்ப்பம், சமவாய்ப்பு என்று கூறப்பட்டாலும், அனைத்து மாணவர்களுக்கும் பாட நூல்களும் சீருடை களும் வழங்கப்பெற்றாலும், பள்ளிக்கூடக் கட்டமைப்பு களிலும், குடும்பச் சூழலிலும் காணப்படும் வேறுபாடுகள் மறைமுகமான நிராகரிப்புக்களை ஏற்படுத்திவிடு கின்றன.
மறைநிலை நிராகரிப்புக்களினால் சிறார்கள் தமது ஆற்றல்களை உய்த்தறிதல் தம்மைப்பற்றிய விழிப்புணர்வு (Self AWareness), தம்மை அங்கீகரிக்கும் உணர்வு (Self Acceptance), தம்மை ஏற்று மதிக்கும் உணர்வு (Self Respect) முதலிய துறைகளிலும் பாதிப் புக்களையும் பின்னடைவுகளையும் எதிர்கொள்ளுகின்ற
64 -

னர். குடும்ப வறுமையாலும், ஏழ்மையாலும், கைதுக்கி விட முடியாத போட்டி நிலைமைகளினாலும், அவர் களின் உட்பொதிந்த ஆற்றல்கள் (Potentialities) வெளி வரமுடியாமலிருக்கின்றன.
சமூக ஏற்றத்தர்ழ்வுகளும், சமூக நிரலமைப்பை வலியுறுத்தி நிற்கும் போட்டிகளும் வறுமையின் பாதிப் புக்கு உள்ளாகிய சிறுவர்களிடத்து தனிலைத்தேய்வை (Self Depreciation) அல்லது சுயஆற்றல் சுருங்கலை ஏற்படுத்திவிடுகின்றது. அவர்களது இருப்பு பாதகமாக இருப்பினும், ஒன்றிணைந்த முறையிலே அந்த இருப்பை அவர்களால் மாற்றமுடியாதிருத்தல் சிறார் கல்விச் சிந்தனையாளர் பலருடைய கவனத்தை ஈர்க்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டவேண்டியுள்ளது.
சிறார்களுக்குக் கல்வி நிதியும், புலமைப் பரிசில் களும். 'புகழ்பூத்த பள்ளிக்கூடங்களுக்கான நுழைவும் நுண்மதித் தேர்வுகளை அடிப்படையாகக் கொண்டே பெரும்பாலும் மேற்கொள்ளப்படுகின்றன. சில நாடு களில் உளச்சார்புத் தேர்வு" என்ற தலைப்பில் நுண் மதித் தேர்வுகளே நடத்தப்படுகின்றன. ஆனால் நுண்மதி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நரம்பியல் gur SFTuLu 537 giùGay56ir (Gurowitz 1968, Hicks, 1970) திடுக்குறும் தகவல்களைத் தந்துள்ளன. அதாவது சிறார் நிலையில் வறுமை காரணமாக நிகழ்ந்த உணவு ஊட்டப் பிறழ்வு நுண்மதித் தேர்வுகளில் குறைந்த அடைவு களை அவர்களுக்குக் கொடுத்துள்ளன.
சிறாரினது வறுமையினதும் பின்னடைவுகளினதும் ஆழ்ந்த காரணிகளை ஆராயாது சில கல்வியியலாளர் கள் அவர்களைப் பண்பாட்டு நிலையில் பிரதிகூலம் gyalfö35 Jrf356ir (Culturally Disadvantaged) GT Gör go மேலோட்டமாகக் குறிப்பிட்டுள்ளனர். அதாவது பண்பாட்டு உள்வாங்கலாலும், பண்பாட்டு அதிர்ச்சி யைத் தீர்த்துவைப்பதனாலும், புரிந்துணர்வினாலும் எளிதாக இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாது.
65

Page 38
ஐ. அமெரிக்காவின் பெருநகரங்களிலே வாழும் குழந்தைகளுக்குக் கற்பிக்க முடியுமா என்று எழுப்பப் Lille - 6aoTT (Can Slum pupils bo educated?) (Raspberry, 1971) geps, பொருளாதார நிராகரிப்புக் கும் கல்விக்குமுள்ள தொடர்பை எடுத்துக் காட்டுகின் றது. இச்சந்தர்ப்பத்தில் சிறாரின் கல்வி தொடர்பான இன்னோர் அதிர்ச்சியும் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது வறுமைச் சூழலில் உள நோய்களும் அதிகம் இருப்பதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது. (Adams, 1973, P. 91).
சிறார்க்கான கல்வி உளவியல் மயப்பட்டதாக இருத்தல் வேண்டும் என்பதைப் பெரும்பாலானோர் ஏற்றுக்கொண்டாலும் நடைமுறையில் உளவியல் நிரா கரிப்பு மிகுந்து காணப்படுகின்றது. போலி உளவியற் பாங்குகளும் இழையோடிக் காணப்படுகின்றன. நடை முறையிற் காணப்படும் சில குறைபாடுகள் வருமாறு:
1. ஆசிரியர்களிடத்து ஏற்படும் எதிர்மனப்பதிவுகளும், முற்சாய்வுகளும் மாணவர்களிடத்து உளத்தாக்கங் களை ஏற்படுத்திவிடுகின்றன.
2. தமது நடையியலே (Style) மேலானது என்று ஆசிரியர்கள் அவற்றை மாணவர்மீது திணித்து விடுகின்றனர்.
3. மாணவர்கள் தவறாக விடையளிக்கும் வேளைகளில் ஆசிரியர்களுக்குக் கோபம் என்ற மனவெழுச்சியே மேலோங்குகின்றது.
4. மாணவர்கள் ஈட்டுப் புள்ளிகளுக்கும், தரநிலை களுக்கும் அடிமைகளாக்கப்படுகின்றனர். அத* துெ தேர்வுகளுக்கு விடையளிக்கும் பொறிகளாக மாண வர்கள் உருவாக்கப்படுகின்றனர். இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் ஐந்தாம் ஆண்டுப் புலமைப் பரிசில் தேர்வு மேற்குறித்த பண்புகளை மீள வலியுறுத்தி நிற்கின்றது.
όό -

5. சிறுவர்களது பாட அடைவுகளுக்குக் கொடுக்கப் படும் முன்னுரிமை அவர்களது விழுமிய அடைவு களுக்குக் கொடுக்கப்படுவதில்லை.
ஒவ்வொரு சிறுவனையும் சிறுமியையும் கற்பவர் களாகவும், கற்பிப்போராகவும் ஒரே நேரத்தில் மாற்ற முறச்செய்யும் இரு பரிமாண அணுகுமுறையே (TWO Dimensional Approach) p5@îGOT Ggp Gurf Gibauf Gör வெற்றிக்கு வித்தாக அமையும். தாம்பெற்ற அனுபவங் களை ஒவ்வொரு சிறுவரும் பரிமாற்றம் செய்வோராக மாற்றப்படல் வேண்டும்.

Page 39
புலன் தழுவிய கற்றல்
கட்புலன்:
கற்றலை உள்வாங்கும். பலம் பொருந்திய புலன் உறுப்புக்களிற் கண் சிறப்பிடம் பெறும். வெறுமனே ஒரு நிழற்படக் கருவியின் செயல்களை மாத்திரம் கண்கள் புரியவில்லை. அறிகைச் செயல் முறையில் கண்கள் மூளையுடன் இணைந்து செயற்படுகின்றன.
வடிவங்கள், வண்ணங்கள் என்பவை கண்களால் உணரப்படுகின்றன. ஒளியின் நீள அளவுகளினாலே காட்சி தீர்மானிக்கப்படுகிறது. ஒவ்வொரு வண்ணமும் அவற்றுக்குரிய ஒளி நீளங்களைக் கொண்டிருக்கும்.
கட்புலச் செயற்பாடுகள் ஒளியின் செறிவோடு சம்பந்தப்பட்டிருக்கும். முற்றான இருளில் கட்புலச் செயற்பாடு பூச்சியமாக இருக்கும். சிறிதளவு ஒளி பரவத் தொடங்கியவுடன் கட்புலச் செயற்பாடு அரும்பத் தொடங்கிவிடும். கட்புலச் செயற்பாட்டினைப் பல காரணிகள் பாதிக்கின்றன. ஒரு பொருளின்
68 -

உடனடிப் பின்னணியின் ஒளிச்செறிவு முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது. மென்பழுப்பு நிறப் பின்புலத்தின் மீது அமைந்த கரிய எழுத்துக்கள் நல்ல துலக்கமாகத் தெரியும். படிக்கும் அறையின் முழுப்பகுதிகளிலும் ஒளி பரவியிருக்குமாயின் கட்புலச் செயற்பாடு மேம்பாடு கொண்டதாக இருக்கும்.
சிறுவர்களின் கண் அசைவுகள், நிறக்குருடு முத லியவை கட்புலன் தழுவிய கற்றலைப் பாதிக்கும். வாசிக்கும் பொழுது கண்கள் ஒரு தொடர்ச்சியான முறையில் அசைவதில்லை. வேகமான பாய்ச்சலுடன் கண் அசைவுகள் இடம்பெறும். வேகமான பாய்ச்ச லிடையே ஒரு நுண் செக்கனில் கண் ஒய்வெடுத்துக் கொள்ளும் இவை வாசிப்புத் திறனிலே செல்வாக்கினை ஏற்படுத்தும். ஒரே பார்வையில் உள்வாங்கக் கூடிய எழுத்துக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பொழுது வாசிப்பு வேகமும் வளர்ச்சியடையும்.
செவிப்புலன்:
ஒலியின் செறிவு, அதன் இயக்கவீச்சு, அடிப்படை சுருதி, பேசும் விகிதம் முதலியவை செவிப்புலன் தழுவிய கற்றலின்மீது செல்வாக்குச் செலுத்துகின்றன. ஒலி அலைகள் குறிப்பிட்ட அளவு மீடிறன்களையும் செறிவை யும் கொண்டுள்ளன. ஒழுங்கற்ற முறையில் இடம்பெறும் பல்வேறு மீடிறன்களைக் கொண்ட ஒலி அலைகள் ‘இசைவற்ற சத்தங்கள்' என்று குறிப்பிடப்படும்.
காதிலுள்ள ஒலிப்பறைகள் மீது ஒலிபடும்பொழுது அதிர்வு ஏற்படுகின்றது. செவிப்பறைகளில் இருந்து உட்காதுக்கு ஒலி கடத்தப்படுகின்றது. அங்கிருந்து உடற்கூற்றியல் செயல் முறைகளினுாடாக மூளைக்கு ஒலிசார் உள்ளீடுகள் அனுப்பப்படுகின்றன. மிகவும் நுண்ணிதான ஒலிகளைச் செவிகளால் உணரமுடிவ தில்லை. அவ்வாறே அதிஉயர் மீடிறன்களைக் கொண்ட ஒலிகளும் செவிகளினால் உணரப்படுவதில்லை. பொது
- 69

Page 40
வாக நிமிடத்துக்கு இருபது தொடக்கம் இருபதாயிரம் மீடிறன்களைக் கொண்ட ஒலிகளை சாதாரணமான செவிகளால் உணரமுடியும்.
ஒலிகளின் குறுக்கீடு, ஒலிகளின் இசைவு, இசைவுப் பிறழ்வு என்பனவும் செவிப்புலன் தழுவிய கற்றலில் வேறுபடுத்திப் பார்க்கப்படவேண்டியுள்ளன.
ஒலி எந்தத் திசையிலிருந்து வருகின்றது. எவ் வளவு தூரத்திலிருந்து வருகின்றது என்பவை பற்றிய உணர்வும் சிறுவர்களுக்கு முக்கியமானவை.
முகர் புலன்:
காற்றுடன் செறிந்துவரும் மணங்கள் முகர்ந்து அறியப்படுகின்றன. நறுமணம், உப்புமணம், வெறுப்பு மணம் என்றவாறு அடிப்படை மணங்கள் வேறுபடுத் தப்படுகின்றன. மணங்களின் வேறுபாட்டுக்கேற்ப முகரும் செயல்முறையிலும் வேறுபாடுகள் காணப்படும். முகர்தலுடன் இணைந்து மனவெழுச்சிகள் தூண்டப் படுகின்றன. பொருந்தாத மணங்கள் சிறுவர்களுக்கு வெறுப்பு மட்டுமல்ல பயத்தையும் ஏற்படுத்திவிடுகின் றன. பல்வேறு மணங்களை இனங்காணக்கூடிய பயிற்சி கள் பாலர் பாடசாலைகளிலே அமைக்கப்படவேண்டி யுள்ளன.
சுவைப்புலன்:
நாவிலுள்ள சுவைக்கலன்களினூடாக சுவைப் புலன் உணரப்படுகின்றது. உவர்ப்பு, புளிப்பு, இனிப்பு, கசப்பு ஆகியவை அடிப்படைச் சுவைகள் என்று குறிப் பிடப்படும். சுவைப்புலன் சார்ந்த உய்த்துணரும் பயிற்சி, வேறுபடுத்தும் பயிற்சி, தொடர்புபடுத்தும் பயிற்சி. பழக்கப்படுத்திக் கொள்ளும் பயிற்சி முதலிய வற்றைப் பாலர் கல்வியில் வளர்த்தெடுத்தல் வேண்டும். முகர்புலனும், சுவைப்புலனும் ஒன்றிணைந்த வகையில் சிறுவர்களால் அனுபவிக்கப்படுகின்றன. சிறுவர் விரும்
7O .

பாத சத்துள்ள உணவுகளுக்கு நறுமணம் ஊட்டி அவற்றிலே விருப்பத்தை ஏற்படுத்தலாம். உணவுப் பொருள்களின் வடிவமைப்பும், விநோதமான பெயர் களும் சிறுவர்களுக்கு உண்ணும் விருப்பத்தை ஏற்படுத்து வதால் அவற்றின் மீதும் கவனம் செலுத்துதல் வேண்டும்.
தோல் உணர்வுகள்:
தோல் உணர்வுகள் வழியாகவும் கற்பித்தலை மேற்கொள்ள வேண்டியுள்ளது. தோற்பரப்பு முழுவதும் உணர்வுகள் சமமாக இருப்பதில்லை. சில பகுதிகளில் மீயுணர்வு நிலை காணப்படும். எத்தகைய அழுத்த நிலையில் தோல் உணர்வுகள் தூண்டப்படும் என்பதிலும் தோற்பரப்பில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. நாநூனி, உதடுகள், விரல்கள், கைகள் என்பவற்றில் மீயுணர்வு காணப்படும். கால்கள், இடுப்பு முதலியவை ஒப்பீட்டளவிற் குறைந்த அளவு தோல் உணர்வை வெளிப்படுத்தும்.
குத்தும் பொருள்கள், மென்மையான டொருள் கள், திண்மம், திரவம், களிப்பாங்கான பொருள்கள், சூடு, குளிர், அழுத்தம் முதலியவை தோல் உணர்வு களினால் அறியப்படுகின்றன. இத்துறைகளிலும் சிறுவர் களுக்குக் கற்றல் அனுபவங்களைக் கொடுத்தல் வேண்டும்.
புலன்கள் தழுவிய கற்றலும் கற்பித்தலும் சிறார் கல்வியிற் சிறப்பிடம் பெறுகின்றன.
- 7

Page 41
விளங்கும் திறன் வளர்ச்சி
சூழலுடன் குழந்தைகள் மேற்கொள்ளும் இடை வினைகள் வாயிலாக செயற்பாடுகள் சார்ந்த திரள மைப்பு (Action Schema) மூளையிலே வளர்த்தெடுக் கப்படுகின்றது. தன்மயமாக்கல், தன்மைவாக்கம் என்ற இரு இயக்கப்பாடுகளும் அனுபவங்களை உள்வாங்கிக் கொள்ள உதவுகின்றன.
சொல்சார்ந்த குறியீட்டாக்கத்துடன் விளங்கும் திறன் மேலும் வளர்ச்சியடைகின்றது. ஆனால் குழந்தை களின் பிரச்சினைகள் சொல்சார்ந்த குறியீடுகளினால் மட்டும் அணுகப்படுவதில்லை. பாவனை செய்தல் பிரதிநிதித்துவம் செய்தல் முதலியனவும் விளங்கும் திறன் வளர்ச்சியோடு தொடர்புடையதாக இருக்கும்.
ஏற்கனவே உருவாக்கப்பட்ட திரளமைப்பை மீள்வடிவாக்கலுடன் விளங்கும் திறன் தொடர்புடைய தாக இருக்கும் என்பது அறிகை உளவியலாளரின் கருத்து. அறிகையில் சொற்களுக்கு அதீத முக்கியத் துவத்தைக் கொடுப்போர் சொற்களின் வழியாகவே குழந்தை தனக்குரிய அனுபவங்களை உள்வாங்கிக்
72 -

கொள்கின்றதென்றும் மீள் வடிவமைத்துக் கொள்கின்ற தென்றும் குறிப்பிடுகின்றனர். “பெரியது' 'சிறியது’’ போன்ற எண்ணக்கருக்களை சொல்சார்ந்த முறையிலே குழந்தைகள் உள்வாங்கிக் கொள்ளுகின்றார்கள் என்பதை ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன. இந்த அடிப்படையிலிருந்து மேலும் சொல் சார்ந்த உள்வாங் கல்கள் இடம்பெறுகின்றன. “பெரிய பெட்டி' 'சிறிய பெட்டி”, “பெரிய நீலநிறப் பெட்டி', 'சிறிய பச்சை நிறப்பெட்டி' என்றவாறு உள்வாங்கி விளங்கும் திறன் சொற்கள் வாயிலாக முனைப்புப் பெறுகின்றது. சொற் கள், எண்ணக்கருக்களின் குறியீடுகளாக இருப்பதனால் இந்தப்பணி இலகுவாக்கப்படுகின்றன.
குழந்தைகளின் விளங்கும்திறன் உயிர் இரசாயன வியல் அடிப்படையிலும், நரம்பியல் அடிப்படையிலும் விளக்கப்படத்தக்கவை. இவை உள்ளார்ந்த நிலையில் நிகழும் உடற்கூற்றியல் மாற்றங்களாகவுள்ளன.
பொருள்களை வேறுபடுத்திக் காணும் ஆற்றல் குழந்தைப்பருவ விளங்கும் திறனில் முக்கியமாக வற் புறுத்தப்படுகின்றது. வேறுபட்ட வடிவங்களைக் காண் பதால் திரட்டப்படும் அனுபவத் தொகுதி, விளங்கும் ஆற்றலை வளப்படுத்துகின்றது. முரண்படும் வடிவங்கள் குழந்தைகளால் விரைந்து உள்வாங்கப்படுகின்றன. சில உதாரணங்கள் வருமாறு
அ. மூடிய எழுத்தும் திறந்த எழுத்தும்
O - C ஆ. நேர்வடிவமும் தலைகீழ் வடிவமும்
M - W இ. நேர்கோடுகளும் வளை கோடுகளும்
L - O.
பொருள்களின் மேல் அதன் பெயரும் நிறமும் பதிந்திருக்கும் பொழுது, குழந்தைகள் அவற்றை இலகுவிலே விளங்கிக்கொள்கின்றனர்.
73 سـ

Page 42
உருவம், பின்புலம் என்பவற்றுக்கான தொடர்பு களையும், வேறுபாடுகளையும் தெரிய வைத்தல் குழந்தைப் பருவத்து விளங்கும் திறனை அதிகரிக்கச் செய்கிறது. இலைகளைப் பார்த்து வரையும்படி குழந் தைகள் கேட்கும் பொழுது, உருவம் பின்புலம் என்ப வற்றைப் பிரித்தறியக்கூடிய குழந்தைகள், இலை நரம்பு களை நுட்பமாக வரைந்தார்கள்.
நிறங்களின் செறிவு, முரண்படும் நிறங்கள், நிறங்கள் மீது பெயர் பதித்தல், முதலியவை நிறங்கள் பற்றிய விளங்கும் திறனை அதிகரிக்கச் செய்கின்றன
எண்பற்றிய அறிவு விலங்குகளுக்கு இல்லை. சேர்தல், இணைத்தல், திரட்டுதல், பிரித்தல், பகுத்துக் கொடுத்தல் முதலியவை குழந்தைகளிடத்தே எண் பற்றிய எண்ணக்கருவை வளர்க்கத் துணை நிற்கின்றன.
விளங்கும் திறன் வளர்ச்சியை அனுசரித்தே சிறார் கல்வியைக் கட்டியெழுப்பவேண்டியுள்ளது.
74 -

அசைவுக் கல்வி
பாலர் பாடசாலைகளில் நிகழும் கற்பித்தல்
நுட்பவியலில் அசைவுக்கல்வி பற்றி (Movement Education) உளவியலாளர் விரிவான ஆய்வுகளை மேற் கொள்ளத் தொடங்கியுள்ளனர். உடல் அசைவு உள அசைவுடன் இணைந்து அறிகை அமைப்பை விரிவாக்கு கின்றது.
பாலர்களால் மேற்கொள்ளப்படும் அசைவுகள்
மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படும். அவை
tLIG) 16:
([9۔
(3ے
செயல் நெறிப்பட்ட அசைவுகள்: ஏறுதல், தள்ளுதல், தாவுதல், சமநிலைப்படுத்தல் முதலியவை செயல் நெறிப்பட்ட அசைவுகளுக்கு உதாரணங்கள். இவற்றிலிருந்து பிற்காலத்தில் தசை நார்வகைத் திறன்கள் மேம்பாடு அடையும். உடற்பலத்தையும் வேகத்தையும் ஒன்றிணைத்துச் செயற்படுத்தும் அசைவுகள்: ஓடுதல், பாய்தல், நீந்துதல், கெந்துதல் முதலியவை இதற்கு உதாரணங்கள். இவற்றிலிருந்து மெய் வல்லுனர் திறன்களும், விளையாட்டுத் திறன்களும் பிற்காலத்தில் வளர்ச்சியடையும்.
75

Page 43
இ) ஒத்திசைவுடன் இணைந்த அசைவுகள்:
தாளத்தோடும், இசையோடும் இணைந்த அசைவு கள் இதற்கு எடுத்துக் காட்டுகளாக அமையும். இவற்றை அடியொற்றிப் பிற்காலத்தில் நடன மாடும் திறன் படிமலர்ச்சி கொள்ளும்.
அசைவுக் கல்வியுடன் இணைந்ததாகவே ஒரு பிள்ளையின் பேச்சுத்திறன், எழுத்துத்திறன், ஆற்று கைத்திறன் முதலியவை வளர்ச்சியடைவதால், பெற் றோரும் ஆசிரியர்களும் இத்துறையிலே கவனக் குவிப்பை ஏற்படுத்தவேண்டியுள்ளது. இவற்றை மேலும் ஆழ்ந்து பார்க்கும்போது நுண்மதித்திறன் , ஆக்கத்திறன் போன்றவற்றின் வளர்ச்சிக்கும் அசைவுக்கல்வி இன்றி யமையாது விளங்குவதைக் காணலாம்.
சிறுவர்களுக்கு அசைவுக் கல்வியை உரிய முறை யிலே வழங்குவதன் வாயிலாக தன்னம்பிக்கை, தமது நடத்தைகளைத் தாமே நேர்முகமாக நெறிப்படுத்தக் கூடிய ஆற்றல் முதலியவற்றை வளர்க்கலாம். சிறுவர் களின் மனவெழுச்சிக் கட்டுப்பாடுகளுக்கும் அசைவுக் கல்வி மேலும் துணை செய்கின்றது. பெரியவர்களைப் பார்த்துச் செய்யும் 'திணிப்பு முறைகள்’ கைவிடப் பட்டு, அசைவுகளைக் கற்றுக் கொள்ளக்கூடிய தூண்டி களையும் அறைகூவல்களையும் சிறுவர்களுக்கு வழங்குதல் வேண்டும். உள்ளார்ந்த அறிகையையும், அனுபவத் திரளமைப்பையும் வளர்ப்பதற்கு அசைவுக்கல்வி மிகப் பொருத்தமானதாக விளங்குகின்றது.
அசைவுக் கல்வியை வளர்ப்பதற்கு முதற்படியாக ஆசிரியரும் பெற்றோரும் சிறுவர்களை உற்று நோக்கல் வேண்டும். இவ்வகையான உற்று நோக்கலில் நான்கு வகையான வினாக்களுக்கு விடை காணும் தேடல் இடம்பெறல் முக்கியமானது.
அவை: அ) அசைவுகளின்போது உடலின் எப்பகுதிகள் கூடு தலாகச் சம்பந்தப்படுகின்றது என்பதைப் பகுப் பாய்வு செய்தல்.
76 -

ஆ) ‘எங்கு அசைவு ஏற்படுகின்றது என்பதை நோக்கல்.
இ}
மேல்நோக்கிய அசைவு, தரை அளவு சம்பந்தப் படும் அசைவு என்ற பண்புகள் "எங்கு" என்ப தோடு இணைந்தது.
எவ்வாறு அசைவு ஆற்றுகை கொள்ளப்படுகின்றது என்பதை ஆராய்தல் இப்பிரிவில் இடம்பெறும். அசைவின் விசை, மெதுவானதா வேகமானதா என்பதை நோக்குதல், அசைவின் பலத்தை மதிப் பிடுதல் டோன்றவை இப்பிரிவில் இடம்பெறும்,
அசைவுகள் எவற்றுடன் சம்பந்தப்படுகின்றன என்பதை இனங்காணல் இப்பிரிவில் இடம்பெறும். இலக்குகளுடன், பொருள்களுடன், நண்பர்களுடன் என்றவாறு அசைவுகளின் சம்பந்தங்கள் விரித்து நோக்கப்படும்.
மேற்கூறிய அவதானிப்புகளை அடிப்படையாக
வைத்து அசைவுக்கல்வியை ஒழுங்கமைத்தல் வேண்டும்.
அ)
உடலோடு தொடர்புடைய கற்றற் பரப்புக்கள் பின்வருமாறு இடம்பெறும்:
1. முழு உடலையும் பயன்படுத்தும் செயற்
கோலங்கள்.
2. தனித்தனி உடல் உறுப்புக்களைப் பயன்படுத்
தும் செயற்கோலங்கள். 3. உடல் உருவத்தோடு இணைந்த செயற்
கோலங்கள். வளைந்து நிற்றல், சரிந்து நிற்றல் முதலியவை.
ஆ) அசைவு இடைவெளிக்கு முதன்மை கொடுக்கும்
கற்றற் பரப்புக்கள் பின்வருமாறு இடம்பெறும் : 1. அண்மைநிலை - சேய்மைநிலை: 2. தளத்தில் நிகழும் அசைவுகள். 3. மேல் வெளியில் நிகழும் அசைவுகள்,
- 77

Page 44
4. தாள் மட்டம், உயர் மட்டம், நடுத்தர மட்டங்
களில் நிகழும் அசைவுகள். 5. முன் அசைவு, பக்க அசைவு, பின் அசைவு. இ) உடலின் பண்புகளை வலியுறுத்தும் கற்றற் பரப்
புக்கள் 1. உசார்நிலை, தளர்ந்தநிலை, ஒய்வுநிலை. 2. மனவெழுச்சிகள் கலந்த அசைவுகள் 3. வேறுபட்ட விசைகள் கலந்த அசைவுகள். 4. பாரங்கள் தூக்கும் அசைவுகள். ஈ) சம்பந்தப்படும் அசைவுகளோடு இணைந்த கற்றற்
பரப்புக்கள். 1. மாணவரும் - மாணவரும் 2. மாணவரும் - அசையும் பொருள்களும 3. மாணவரும் - அசையாப் பொருள்களும் 4. மாணவரும் - ஆசிரியரும்.
பாலர் கல்வி என்பது முற்றிலும் உளவியல் மயப் படுத்தப்பட்ட கல்வியாக மாற்றுவகைப்பட்டதும், பன்முகமான செயற்பாடுகளை உள்ளடக்கியதுமான கல்வியாகக் கட்டியெழுப்பப்பட்டு வருகின்றது. இந்த அவதானிப்புக்களை உள்வாங்காது பாரம்பரியமான, நெகிழ்ச்சியற்ற வகுப்பறை மாதிரிகையினை இன்னமும் இறுகப் பற்றி நிற்றல் பொருத்தமற்றது.
சூழலுடன் இடைவினைகளை விருத்தி செய்தல், சூழலை விளங்கிக்கொள்ளல், சூழலுடன் பொருத்தப் பாடு கொள்ளல். உடற் பலத்தைத் தனியாகவும், கூட் டாகவும் பிரயோகித்தல், சமூக இசைவாக்கம் போன்ற கல்வியாற்றல்களை வளம்படுத்த அசைவுக் கல்விக்கு பிரதியீடுகள் இல்லை, அசைவுகள் வாயிலாக ஆற்றல்கள் வெளிப்படுகின்றன, நெறிப்படுகின்றன அனைத்துச் செயற்பாடுகளும் அசைவுகளுடன் தொடர்புடையன எழுதுதல், பேசுதல், பாடுதல் என்பவை நுண்ணிய அசைவுகளுடன் தொடர்புடையவை. உடலை இயக்கி உற்பத்தியைப் பெருக்கும் நடவடிக்கைகள் எல்லா
78 -

வற்றிலும் அசைவுகளே அடிப்படையாகின்றது. அழகியற் செயற்பாடுகள் அனைத்தும் அசைவுகளினாற் பிறப்பிக் கப்படுகின்றன.
உளவியலாளர் மட்டுமன்றி சமூக மானுடவிய லாளரும் அசைவுகள் பற்றி ஆராய்ந்து வருகின்றனர். பழங்குடி மக்களது சடங்குகளிலும், நடனங்களிலும், செயற்பாடுகளிலும், மரபுகளிலும் அசைவுகள் உன்னிப் பாக அவதானிக்கப்படுதல் குறிப்பிடத்தக்கது.
மலை நாடுகளில், பாலர் பள்ளிகள் 'விளையாட் டுப் பள்ளிகள்' (Play Schools) என்ற அமைப்பையும் பெற்று வருகின்றன.
79

Page 45
பாலர் கல்வியில் இசையாக்கல்
பாலர் கல்வி ஆசிரியர்கள் தமது மாணவர்களின் உள்ளத்தோடு உறவாடும் உளவியற் கடப்பாடு கொண்ட வர்கள். இதனை °Child Minders’ என்ற தொடர் தெளிவுபடுத்தும். இந்த உறவாடலில் ‘ஓசை’ சிறப் பார்ந்த இடத்தைப் பெறுகின்றது. அவர்கள் அனுபவங் களோடும், கற்பனைகளோடும் ஆக்க வெளிப்பாடு களோடும், மனவெழுச்சிகளோடும் உலா வருவதற்கு ஒசை நயமும், ஒத்திசைவும், ஒலிக்கோவைகளும் துணை செய்கின்றன.
பாலர் கல்வியில் இசையாக்கல், உடல் சார்ந்த ஒலிகளில் இருந்து ஆரம்பமாகின்றது விரல்களால் சுண்டி ஒலி எழுப்புதல், உள்ளங்கைகளைத் தட்டி ஒலி எழுப்புதல், துள்ளி ஒலி எழுப்புதல் முதலியவை உடல் சார் ஒலி எழுப்புதலுக்கு உதாரணங்கள்.
எளிமையான ஒலிகளோடு இணைந்த உடலசைவு கள் ஒலி சார்ந்த ஆக்க வெளிப்பாடுகளுக்கு அடித் தளமிடுதலுடன் உடல், உள்ளம், மனவெழுச்சி இணைப் புச் சுவடுகளையும் பலப்படுத்தும் ஒலிகளோடுஇணைந்து
80 -

வலம் திரும்புதல் இடம் திரும்புதல், வட்டமிடுதல், வடிவங்களை உருவாக்குத்ல், எழுத்துக்களை உருவாக்கல் என்றவாறு இணைப்புச் சுவடுகள் பலப்படுத்தல் பன் முகப்படும்.
மேற்கூறிய இசையாக்கலோடு இணைந்த முறை யில் "இசைதழுவிய விளையாட்டுக்கள்' முன்னெடுக் கப்படும். இசையாக்கல், இசைகேட்டல் இரண்டும் ஒன்றையொன்று வலுவும் வளமும் படுத்தும். பாலர் கல்வியில் இசைகேட்டல் நன்கு திட்டமிட்டு வளர்க்கப் படல் வேண்டும். "வாய் சார்ந்த பன்முக இசையாக் கல்" இதற்குப் பக்கபலமாக அமையும். இதற்குரிய சில முன்மொழிவுகள் வருமாறு:
1. பறவைகள் போன்ற ஒலிகள் 2. விலங்குகள் போன்ற ஒலிகள் 3. மனிதப்பாங்கு ஒலிகள் - சிரித்தல், அழுதல், இருமுதல், மூசுதல், உரத்த குரல், தாழ்ந்த குரல் முதலியவை. 4. வெளிக்கள ஒலிகள் - காற்றொலி, மழைஒலி,
அலைஒலி, நீர்வீழ்ச்சி ஒலி முதலியவை. 5. உள்ளக ஒலிகள் - தொலைபேசி, மணிஒலி,
தையற்பொறிஒலி, கடிகாரஒலி முதலியவை.
பாலர் கல்வியில் இசைவாக்கல் மேலும் வளம் பெற "இசை . ஒவிய இணைப்புப் பலம்’ வேண்டப் படுகின்றது. இசைக்கு ஒவியம் தீட்டும் அனுபவம் உளவியற் சீராக்க உபாயமாக மட்டுமன்றி, உளக்கோல வெளிப்பாடுகளுடன் இணைந்த ஆக்கத்திறன் முயற்சி களுக்குத் தூண்டுதலாகவும் அமையும்.
பாலர் பள்ளிக்கூடங்களில் இசைத் தொழில் நுட்பத்தையும் கட்டியெழுப்பவேண்டியுள்ளது. சூழலிற் கிடைக்கும் பொருள்களைப் பயன்படுத்தி இணக்கல் இசை உபகரணங்கள் செய்யும் திறன்களை மேம்படுத்த
வேண்டியுள்ளது. சில முன்னெடுப்புக்கள் வருமாறு:
8

Page 46
1. வட்டவடிவமான கொள்கலன்களைப் பயன் படுத்தி சிற்றொலி மேளங்களை உருவாக்குதல், 2. உலோகத் துண்டுகளைப் பயன்படுத்தி கொங்
கணங்கள் (Gongs) செய்தல். 3. ஒன்றுடன் ஒன்று மோதி ஒலி எழுப்பக்கூடிய
சிலுப்பிகள் (Jingles) செய்தல், 4. கொள்கலன்களுள் பரல்களை அல்லது உலோ கத் துண்டுகளை இட்டு அசையொலிப்பான் களை (Shakers)ச் செய்தல். 5. மரத்துண்டு, சிறுதடிகள், எலும்புகள் முதலிய வற்றைப் பயன்படுத்தி இருதள மோதல் உபகரணங்களை (Clappers)ச் செய்தல். 6. துருவல் ஒலிச்சாதனங்களை (Scraper) ஆரை
வடிவத்தட்டுக்களில் இருந்து உருவாக்குதல். மேற்கூறியவற்றோடு மேலும் நுண் உபாயங் களைப் பயன்படுத்தி நுண் ஒலிகளைப் பிறப்பிக்க முடியும். மென்தகடுகள் மீது காற்றழுத்தத்தைப் பிரயோ கித்தல் வாயிலாக எழும் ஒலி, செப்புக் கம்பிகளைப் பயன் படுத்தி எழுப்பும் நரம்பு ஒலி, தண்ணிர்க் குவளைகளைத் தட்டி எழுப்பும் ஒலி என்றவாறு பல்வேறு இணக்கல் முயற்சிகளைப் பள்ளிக்கூடங்களிலே மேற்கொள்ளலாம்.
இசையாக்கத்தில் 'ஒலி ஒழுங்குபடுத்தல்" ஒர் அடிப்படை ஆற்றலாகும். யாதாயினும் ஓர் ஒலி அலகைத் தெரிந்தெடுத்து (உதாரணம் ஆ, ஏ, ஓ) அத னைக் குறுஒலி நீளத்திலிருந்து நீண்ட ஒலி நீளம்வரை ஒலித்துக் காட்டும்பொழுது ஒலி ஒழுங்குபடுத்தல் ஆற்றல்களையும், ஒலி இன்பத்தையும் மாணவர் பெறக் கூடியதாக இருக்கும்.
அ) இரண்டு அடுக்கு
ஆ) மூன்று அடுக்கு
82 -

மேற்காட்டியவாறு அடுக்குகளைத் தேவைக் கேற்றவாறு விரிவுபடுத்தலாம். படிப்படியாக இரு வேறு பட்ட ஒலி அலகுகளை ஒழுங்கமைத்தல், வேறுபட்ட ஒலி அலகுகளை ஒழுங்கமைத்தல், பயிற்சிகளை மாண வரின் முதிர்ச்சி நிலைகளுக்கேற்றவாறு வழங்கலாம். படிப்படியாக ஒலி அலகுகளை ஏறு நிரைப்படுத்தல், அதே அலகுகளை இறங்கு நிரைப்படுத்தல் போன்ற பயிற்சிகளை செயல் பூர்வமாக அறிமுகப்படுத்தல் பொருத்தமானதாகும்.
இசையாக்கல் உளவியலில் வேறுபட்ட ஒலிகளை ஒன்றிணைக்கும் "ஒலிக்கூடல்" (Sound Collage) ஒரு முக்கியமான அனுபவமாகப் பாலர் கல்வியில் வலி யுறுத்தப்படுகின்றது. வேறுபட்ட மிடற்றொலிகளை ஒன்றிணைத்தல், வேறுபட்ட கருவிகளின் ஒலிகளை ஒன்றிணைத்தல் என்ற அனுபவத்தில் மனவெழுச்சிச் சமநிலைகளுக்கு உயர்ந்த பயிற்சி தரப்படுகின்றது.
பாலர் பள்ளிகளில் நிகழும் இசையாக்கல் அணு பவங்களூடாக "காட்சி வடிவாக்கல்' மீது கவனம் செலுத்தவேண்டியுள்ளது. இசையைக் காட்சிக் குறி யீடாக்கும் பொழுது, அவை சிக்கலற்ற வகையில் மிக எளிதாக இருத்தல் வேண்டும். மெதுவாய் இசைத்தல், விரைவாய் இசைத்தல், மெளனித்து நிற்றல் முதலிய ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒவ்வொரு வகையான எளிய குறியீடுகளைப் பயன்படுத்தலாம்.
இசையாக்கலில் இன்னொரு பரிமாணம், இசை விளையாட்டாகும். இசை விளையாட்டுக்கள் சிறுவர் களின் உடலுக்கும், உள்ளத்துக்கும், மனவெழுச்சிகளுக் கும் சமகாலத்தில் அழகியல் நிலைப்பட்ட பயிற்சியைத் தருவதனால் உளப்பிணிகளை நீக்கவல்ல வலிமையை அங்கே காணமுடியும்.
- 83

Page 47
சிந்தனையும் காரணங்காணலும்
நடத்தை அணுகு முறைகளின் மட்டுப்பாடுகள் தந்த உணர்வுகளின் விளைவாக அறிகை உளவியல் வளர்ச்சியடையத் தொடங்கியது, அறிகைச் செயல் முறை என்பது ஒன்றிணைந்தது. புலக்காட்சி, நினைவு, படிமவாக்கம், மொழி முதலிய அறிகை உள்ளிட்டுக் கூறுகள் இன்றி சிந்தனை நிகழமாட்டாது.
சிந்தனை என்பது மூன்று பரிமாணங்களைக் கொண்டது. சிந்தனை அறிகை பூர்வமானது. அது அறிகைத் தொகுதியின் தொழிற்பாடுகளைக் கையாளும் ஒரு செயல்முறையாக அமைகின்றது. அது ஒரு பிரச் சினையின் அமைப்பையும் தீர்வையும் நோக்கி நெறிப் பட்டு நிற்கின்றது. அளவையியல் சார்ந்த சிந்தனைக் கோலங்கள் காரணங்காணலாக இடம்பெறும்.
பாலர்களின் சிந்தனை, வளர்ந்தோரின் சிந்தனை யிலும் பார்க்கப் பண்பளவில் வேறுபட்டது. அனுபவங் களை உள்ளார்ந்த வகையாகக் கையாளலுடன் சிந்த னைச் செயல்முறை இணைந்துள்ளது. உள்ளார்ந்த அனுபவத்திரள் இடைவினைகள் காரணமாகத்
84 -

தொடர்ந்து மாறிய வண்ணம் இருக்கும். இந்த இடை வெளியே வளர்ந்தோருக்கும் பாலர்களுக்குமிடையே சிந்தனையைப் பண்பளவில் வேறுபடுத்துகின்றது.
மொழித்திறனோடு சிந்தனையும் காரணங்கான லும் மேலும் மேம்பாடு அடையும். எண்ணக்கருக்க ளைத் திரட்டிக் கொள்ளவும் குறியீட்டு விளக்கங்களை வளர்த்துக் கொள்ளவும் மொழி துணைசெய்கின்றது. அனுபவப்படுதல், உளப்படிமங்களை ஆக்கிக்கொள்ளு தல், மொழிக்குறியீடுகளாக்குதல் என்ற மூன்று தொழிற்பாடுகளுக்குமிடையே தொடர்புகள் ஊடுருவி நிற்கின்றன.
தகவலின் அளவு அவற்றைக் கையாளக்கூடிய மூளையின் இயல்பு, உள்ளார்ந்த தந்திரோபாயம் ஆகியவை இடைவினை கொள்வதன் வாயிலாகவும், வளர்ச்சியடைவதன் வாயிலாகவும் சிந்தனை காரணங் காணல் ஆகியவை விருத்தியடைகின்றன.
பர்ரம்பரிய உளவியல், குழந்தைகளை எதனையும் உள்வாங்கக் கூடிய தெறித்தல் அற்ற கொள்கலன்களா கக் கருதியது. ஆனால் நவீன உளவியல் பிரச்சினை களுக்குத் தாமே முயன்று தொழிற்படும் தெறித்தல் செயற்பாடுகள் கொண்ட தொடர்வளர்ச்சி கொண்ட பொருள்களாகக் குழந்தைகளைக் கருதுகின்றது.
நவீன உளவியல் குழந்தைகளின் செயல்முனைய நடவடிக்கைகளுக்கு (Strategies) முதன்மை கொடுக் கின்றது. ஆசிரியர்கள் இதனை வளர்ப்பதிலே தான் கூடியளவு கவனம் செலுத்தவேண்டியுள்ளது.
8
5

Page 48
பேச்சுத்திறன்
குழந்தைகளின் பேச்சு தொடர்ச்சியான மாற்றத் துக்குரியது. அது தொடர்ந்து திருத்தவும், மீள்வடிவ மைக்கவும் படுகிறது. இடைவினைகளும், கல்வியும், சமூகமயமாக்கலும் குழந்தைகளின் ஆளுமைப் பண்பு களை மேம்படுத்துகின்றன.
பேச்சு என்பது புலன்சார் இயக்க ஆற்றுகை up 657 (Perceptual Motor Performance) 360) 300T fig5g). புலன்சார் உள்ளீடு, பேச்சு வெளியீடு என்ற இரண்டு விளைவுகளுக்கும் இடைப்பட்ட ஒன்றிணைப்புச் செயற் பாடும் மூளையில் நிகழும் இயக்க நடவடிக்கைகளும் கட்டுப்பாடுகளும் 'பேச்சு’’ என்ற வெளியீட்டை ஏற்படுத்துகின்றன.
பேச்சுக்குரிய ஒலியை உண்டாக்கும் உடலியக்கச் செயற்பாடு நோய்களினாலும் பிறப்புரிமைக் காரணி களினாலும் தாக்கப்படுதல் உண்டு. தங்களோடு சமமான வயதினரோடு கூடுதலாகப் பழகும் சிறுவர்களிலும் பார்க்க வயதுக்கு மூத்தோரிடம் பழகும் குழந்தைகள் கூடிய பேச்சு ஆற்றல் மிக்கோராய்க் காணப்படுகின்ற
86

னர். தமது வயதினரிடத்துக் குறைந்தளவு சொற்பிர யோகங்களையும், வயதிற் கூடியோரிடத்துக் கூடியளவு சொற்பிரயோகங்களையும் தம்மை அறியாமலே வெளிப் படுத்துகின்றனர்.
பாலர் பள்ளிக்குழந்தைகளின் பேச்சு மொழி சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப வேறுபடுகின்றது. வகுப்பறை யினுள் இயங்குதல், திறந்த வெளியில் விளையாடுதல், உணவருந்துதல், காட்சிகளைப் பார்த்தல் போன்ற :: சொற் கோலங்களிலும், உச்சரிக்கும் செறிவிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன.
குழந்தைகளின் குடும்பப் பின்புலம், சொற்களஞ் சிய விருத்திக்குரிய கவிநிலை முதலியவை பேச்சுமொழிக் கோலங்களிலே செல்வாக்குகளை ஏற்படுத்துகின்றன. பருமட்டாக இரண்டு வயதிலிருந்து இயக்கம் சார்ந்த வெளிப் பாய்ச்சலுடன் இணைந்த வகையில் (Motorie Overflow) பேச்சு முனைப்படைந்து செல்லும். தமது செயற்பாடுகளுடனும, செயற்பாடுகளுக்கு முன்னரும் பின்னரும் குறித்த சில தொடர்களை மீள மீளச் சொல்லல் இங்கே குறிப்பிடத்தக்கது. அதீத ஒலி வெளிப் பாடு கொண்ட குழந்தைகள் அதிக பேச்சுத்திறன் கொண்டவர்களாகப் பிற்காலத்தில் வளர்ச்சியடைந் தமை கண்டறியப்பட்டுள்ளது.
உரத்து வெளிப்படுத்திச் சிந்தித்தல் உள்ளார்ந்த முறையிலே சிந்தித்தல் என்றவாறு சிந்தனை இயக்கங்கள் இருவகைப்படும். பாலர் கல்விப் பருவத்தில் நிகழும் சிந்தித்தல் பேச்சு மொழி தழுவிய உரத்து வெளிப்படுத் தும் சிந்தனையாகப் பெருமளவில் இடம்பெறும். உரத்து வெளிப்படுத்தும் சிந்தனை சமூகத் தொடர்புச் சிந்தனை யாக இடம் பெறும். பேசுவோர், கேட்போர், சந்தர்ப்பம் என்ற மூன்றும் கருத்திலே கொள்ளப்படும். குழந்தை வளர வளர உரத்து வெளிப்படுத்திச் சிந்தித்தல் குறைந்து உள்ளார்ந்த முறையிலே சிந்தித்தல் வளர்ச்சியடையும்.
- 87

Page 49
குழந்தை கேட்கும் பேச்சுக்களும் குழந்தை
பேசும் பேச்சுக்களும் சிந்தனையின் வெளிப்பாடாக இருத்தல் மட்டுமன்றி, பிறருடன் மேற்கொள்ளும் தொடர்புகளையும் பாதிக்கின்றன.
பேச்சு மேம்படுத்தல் தொடர்பான ஆய்வுமுடிவு
களைப் பாலர் பள்ளிக்கூடங்களிலே பயன்படுத்தல் வருமாறு.
l.
காட்சிக் கவர்ச்சிகளுடன் சொற்களை அறிமுகப் படுத்தல்
சொற்களையும் பொருள்களையும் தொடர்பு படுத்தும் பன்முக அனுபவங்களைத் தருதல்
சொற்களையும் செயற்பாடுகளையும் ஒன்றி ணைத்தல்
இசைக்கவர்ச்சியை ஊட்டுதல்
சுயவெளிப்பாடுகளைத் தூண்டுதல் கேட்கும் திறன்களை வளர்த்தல் செயல்களுக்குப் பிரதியீடாகப் பேச்சை வளர்த் தெடுத்தல்
உச்சரிப்புச் சோம்பலைத் தவிர்த்தல் சொற்களையும், வசனங்களையும் முழுநிறைவாகப் பெற்றோரும் ஆசிரியரும் பேசுதல்.

மனவெழுச்சி நடத்தை
குழந்தைகளின் அனைத்துச் செயற்பாடுகளோடும் மனவெழுச்சி ஊடுருவி நிற்கும். மனவெழுச்சி என்பது பல்வேறு விதமாக வெளிப்படுத்துகின்றது. அசைவு, பேச்சு, உடலியக்கம், துலங்கல் போன்ற பல்வேறு பரிமாணங்களுடன் தொடர்புடையதாக மனவெழுச்சிக் கோலங்களைக் காணலாம்.
குழந்தைகளிடத்துத் தோன்றும் கோபம் பற்றி உளவியலாளர்கள் விரிவாக ஆராய்ந்துள்ளனர். உண வருந்துதல், நித்திரை செய்தல், பழக்க வழக்கங்கள் முதலியவற்றில் பெற்றோரின் தலையீடுகளும், எதிர் மறை அணுகு முறைகளும் குழந்தைகளின் குருதிச் சுற்றோட்டம், சுவாசம் முதலியவற்றில் கோபத்தின் வெளிப்பாடுகளை உடனடியாக ஏற்படுத்தும். கோபம் உளச்சுரப்பித் துலங்கலால் உய்த்தறியப்படத்தக்கது.
கோப வெளிப்பாடு ஆண்பிள்ளைகளிடத்து மிகை யாக இருத்தல் அனைத்துப் பண்பாடுகளிலும் காணப் படும் ஒரு பொதுப் பண்பாக இருக்கின்றது. எதிர்த்தல், வன்மம் காட்டுதல், கவனத்தை ஈர்த்தல், அடம் பிடித்
- 89

Page 50
தல், அழுது ஒலி எழுப்புதல், தாக்க அசைவுகளை ஏற்படுத்துதல் முதலியவை கோபம் என்ற மனவெழுச்சி யின் வெளிப்பாட்டு நடத்தைகளாகவுள்ளன.
உடல் நலம் குன்றியிருக்கும் வேளைகளிலும், வளர்ந்தோர் வீட்டில் கூடுதலாக இருக்கும் சந்தர்ப்பங் களிலும் கோபவெளிப்பாடு மிகையாக இருத்தலை ஆய்வுகள் புலப்படுத்துகின்றன.
கோபத்தை உள் அடக்குதலும், தாமதித்து வெளிப்படுத்தலும் பின்னர் உளவியற் பிரச்சினைகளை
ஏற்படுத்தியுள்ளன.
கோபத்தைப் போன்று குழந்தைகளிடத்து ஏற் படும் பயமும் விரிவாக ஆராயப்பட்டு வருகின்றது. பழக்கமற்ற தூண்டியினாற் குழந்தைகளிடத்துப் பயம் ஏற்படுகின்றது. அது உடனடி விளைவாகப் பிறக்கும். தனிமையாய்விட்டால், விரைவாக நிகழும் இடம் பெயர்தல், ஆதரவு இழத்தல், இருள் பழக்கமற்ற உருவங்கள், உயரம் கூடிய இடம், பலத்தஒலி, பாம்பு, நோய் முதலியவை பாலர் பாடசாலைப் பிள்ளைகளி டத்துப் பயத்தை ஏற்படுத்துகின்றன.
பயத்தைப் போன்று பாலர் பாடசாலைக் குழந் தைகளிடத்து உளவியற் சிக்கல்களை ஏற்படுத்தும் மன வெழுச்சியாக பதகளித்தல் (Anxiety) விளங்குகின்றது. கோபம், பயம் போன்ற மனவெழுச்சிகளுடன் பதகளித் தல் இணைந்துள்ளதென்பது உளவியலாளர்களின் கருத்து. பெற்றோர் மீது அதிகளவு தங்கியிருத்தல், புற நெருக்குவாரங்கள், வேண்டாத போட்டிகளைக் கொண்ட கற்பித்தல், பொருத்தமற்ற ஆசிரியர். மாணவர் உறவு, பொருத்தமற்ற பெற்றோர். பிள்ளை கள் உறவு முதலியவை பதகளித்தலை ஏற்படுத்து கின்றன.
பதகளிப்பின்போது இருவகை மனஉணர்வுகள் ஏககாலத்திலே செயற்படும். ஒரு மன உணர்வு நேர்ப்
90 -

பண்புடையதாகவும் மற்றைய உணர்வு அதற்கு எதிர்ப் பண்புடையதாகவும் இருக்கும்.
பாலர் கல்விச் சிறார்களிடத்து ஏற்படும் இன் னொரு பிரதான மனவெழுச்சி பொறாமை உணர் வாகும். பெற்றோர்கள் அன்பு தமது சகோதரர்கள் மீது செல்கின்றது என்ற அவதானிப்பு மேலோங்கும் பொழுது பொறாமை உணர்வு மேம்படத் தொடங்கு கின்றது. பொறாமைக்கும் அன்பு பாராட்டல் வேறு பாடுகளுக்குமிடையில் கூடுதலான தொடர்புகள் சிறார் நிலைகளிற் காணப்படுகின்றன. அடைவுகள் தொடர் பாகவும், பொருள்கள் தொடர்பாகவும் படிப்படியாகப் பொறாமை வளர்ச்சியடையத் தொடங்குகின்றது. சிறார்களின் பொறாமை, வன்செயல் வெளிப்பாடுக ளுடன் தொடர்புடையதாகக் காணப்படும்.
மொழி வெளிப்பாடு, இயக்கத்திறன்கள், உளத் திறன்கள், ஆற்றுகை சமூகமயமாதல் போன்ற நடத் தைகள் அனைத்திலும் மனவெழுச்சிகள் ஊடுருவி நிற்கும்.
- 9 |

Page 51
பாலர் கதைகள்
பாலர் கல்வியில் மிகவும் வலிமைமிக்க சாதன மாகக் கதைகள் விளங்குவதற்குக் காரணம், அவற்றின் வாயிலாகத் தூண்டப்பெறும் மனவெழுச்சிகளும் எதிர் பார்ப்பு இன்பமும் ஆகும். கதை அசைவுகளினூடாகக் குழந்தைகள் உள அசைவுகளை அனுபவிக்கின்றனர் பாத்திரங்களுடன் ஒன்றிணைத்துக் கற்பனை இன் பத் தையும் எளிமையான சீராக்கத்தையும் அனுபவிக்கின் றனர், சமூக மயமாக்கற் செயற்பாட்டிலும் அறிகைக் கோலங்களின் வளர்ச்சியிலும் கதைகள் நேர்விசைகளை ஏற்படுத்துகின்றன.
பாலர் கதைகளுக்குரிய பலமும், வலிமையும் கொண்ட தளம் நாட்டார் மரபுகளில் இருந்து கிடைக் கப்பெறுகின்றது நாட்டார் கதைகளில் இடம்பெறும் எண்ணக்கருக்கள் காட்சி வடிவிலிருந்து கருத்துவடிவை நோக்கிப் பெயர்வதாகக் காணப்படும். பலம் மிக்க வாய்மொழி ஊடகப்பண்பு மேலோங்கி உள்ளமையால், கேட்டல் என்ற இலகு கவனத்தின் வழியாக கதைக் காட்சிகளை உள்ளத்திலே அமைத்துக்கொள்ள முடியும்.
92 -

இக்கதைகளிலே காணப்படும் மிகப் பலம்பொருந் திய பரிமாணம், விலங்குகளும், பறவைகளும், மரங் களும், செடிகளும் பேசுதலாகும், தமது இயல்புகளைக் கொண்டே குழந்தைகள் சூழலை மதிப்பிட முயலும் செயற்பாடுகளில் இவ்வகையான 'பேச்சு" ஆழ்ந்த உள ஈடுபாட்டை ஏற்படுத்தும்.
கதைப் புலத்தில் நிகழும் ஒரு சிறிய நிகழ்ச்சி குழந்தைகளிடத்துப் பெரிய குதூகலத்தைத் தூண்டும் “சிறிய உள்ளீடுடன் 'பெரிய' துலங்கலை ஏற்படுத் தும் உளநடவடிக்கையாக இது அமையும். ஆனால் வளர்ந்தோரிடத்து பல்வேறு செறிவுள்ள தூண்டிகளை உள்ளீடாகப் பெய்தால் மட்டுமே பெரிய துலங்கலை ஏற்படுத்தலாம்.
பாலர் கதைகள் அதிக நெகிழ்ச்சிப் பாங்கான தாக இருக்கும். கதைகூறிக் கொண்டிருக்கும் பொழுது, சிறுவர்கள் எழுப்பும் வினாக்களுக்குரிய விடைகளும் விளக்கங்களும் சேர்க்கப்படவேண்டியிருப்பதால் பாலர் கதைகளில் இரண்டு அடிப்படைப் பண்புகள் காணப் படும். அவையாவன:
1. கதைத்தளம் 2. நெகிழும் இணைப்புக்கள். வளர்ந்தோருக்குரிய கதைகளில் நெகிழா இணைப்புக் களே காணப்படும் அதாவது கதையின் வசனங்களிலோ, சொற்களிலே எந்தவிதமான மாற்றங்களும் புகுத்தப் படாது "கறாராகப் பின்பற்றப்படும் அமைப்பே நெகிழா இணைப்பாகும். ஆனால் பாலர் கதைகளிலும் , நாட்டார் கதைகளிலும் வாய்மொழித் தொடர்பாட லின் அழுத்தங்கள் காரணமாக 'நெகிழும் இணைப் புக்களே' கதைத்தளத்தைப் பற்றிப் பிடித்த வண்ண மிருக்கும்.
பின்வரும் குழந்தைக் கதையை அமைப்பியல் ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளலாம்.
- 93

Page 52
ஒரு கொக்கு இருந்தது. குளக்கரையில் அமைதி யாக இருந்தது. அதற்கு நல்ல பசி. காலையில் சாப் பிடவில்லை. பாவம் பசியோடு பேசாமல் இருந்தது. அப்போது குளத்திலே தண்ணிர் ஆடியது. ஒரு சிறிய மீன் குஞ்சு வந்தது. கொக்குப்பிள்ளை அதைக் கண்டு விட்டார். "எனக்கு நல்ல பசியாக இருக்கிறது’ என்று கொக்கு மீன் குஞ்சிடம் சொன்னது. 'அப்படியா ! எனக்கும் நல்ல பசியாக இருக்கிறது. நான் அம்மாவிடம் போகின்றேன்' என்று மீன்குஞ்சு ஓடிவிட்டது.
இக்கதையைக் குழந்தைகளுக்குச் சமர்ப்பிக்கும் பொழுது ஆசிரியர் நடிப்புடன் உரையை இணைத்தல் வேண்டும். "பாவம் பசியுடன் பேசாமல் இருந்தது' என்ற வசனம் ஒன்றே குழந்தைகளின் ஆழ்ந்த மன வெழுச்சியைத் தூண்டப் போதுமானது. கொக்கு மீன் குஞ்சைப் பிடித்திருந்தால் கொக்கின் மீது குழந்தைகள் கொண்ட பரிவும் அனுதாபமும் உடைந்து போயிருக்கும் பசிக்கும்போது குழந்தைகள் என்ன செய்யலாம் என்ற பிரச்சினை இக்கதையின் நடுவிற் குழந்தைகளுக்கு முன் வைக்கப்படுகின்றது. இந்த பிரச்சினைக்குரிய தீர்வு தாயாரை நாடுதல் என்பது கதையினுாடாகக் குழந்தை களுக்குத் தரப்படுகின்றது. அத்தோடு ஒர் எதிர்பார்ப்பு ஆவலும் குழந்தைகளிடத்தே தூண்டப்படுகின்றது. மீன் குஞ்சு போய்விட்டது. கொக்கு என்ன செய்தது என்பதுதான் எதிர்பார்ப்பு ஆவல்.
குழந்தைகளுக்குரிய கதைகள் சிறியனவாயும், எளிதானவையாயும், சிந்திக்கத் தூண்டுவனவாயும், ஒழுக்கம் உரைப்பதாயும் இருத்தல் வேண்டும்.
இன்னொரு பாலர் கதையையும் அமைப்பியல் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளலாம்.
ஒரு பெரிய நாவல்மரம் இருந்தது. அதில் பழங் கள் அதிகமாக இருந்தன. நன்றாகப் பழுத்த பழங்கள். மரத்தின் மீது ஒர் அணிற்பிள்ளை இருந்தது. கிளை
94 -

களில் தாவித்தாவிப் பாய்ந்தது. பழங்களைப் பிடுங்கிச் சாப்பிட்டது. அங்கே கண்ணன் வந்தான். அணிற் பிள்ளையைக் கண்டான். பழங்களையும் கண்டான். உயரமான மரம். பழங்களைப் பறிக்க முடியாது. ‘அணிலே எனக்குப் பழங்களைப் பறித்துத் தருகின் றாயா?" என்று கேட்டான். அணில் "ஆம்" என்றது. அதிகமான பழங்களைப் பறித்தது. மெதுவாகக் கீழே போட்டது. கண்ணன் பழங்களைப் பக்குவமாக எடுத் தான், கழுவினான். நண்பர்கள் வந்தார்கள் எல்லாரும் பகிர்ந்து பழங்களை உண்டனர்.
இந்தக் கதையில் பாலர்களுக்குச் சில அடிப்படை விழுமியங்கள் கற்பிக்கப்படுகின்றன. ‘அன்பு' என்ற விழுமியம் வளர்த்தெடுக்கப்படுகின்றது. அரிைலின் மீது அன்பு, நண்பர்கள் மீது அன்பு கட்டியெழுப்பப்படு கின்றது. அணில் பிள்ளையின் தாவிய பாய்ச்சல் நடிப்பு முறையிலே பாலர்களுக்குக் குதூகலத்தை வருவிக்கும். இசைவாக்கச் செயல்முறையில் சாதுவான விலங்குகள் மனிதருக்கு ஒத்துழைப்புத்தரும் என்ற எண்ணக்கரு அணில் பழங்களைப் பறித்துத் தருவதன் வாயிலாக வலியுறுத்தப்படுகின்றது. பாலர்கள் பிறரிடம் உதவி யைக் கோருதலும், அதற்குத் துலங்கல் கிடைத்தலும் அணிலின் செயல்களால் சுட்டிக்காட்டப்படுகின்றன. * பகுத்து உண்ணல்'', 'கழுவி உண்ணல்’ என்ற விழுமியங்கள் கதையின் நிறைவுப் பகுதியிலே உருவாக் கப்படுகின்றன.
பாட்டி கதைகள், நாடோடிக் கதைகள், புராணக் கதைகள் முதலியவற்றைப் பகுப்பாய்வு செய்து பார்க் கும் பொழுது, பல்வேறு மனித விழுமியங்கள் அவற்றி னுாடாகக் கையளிக்கப்பட்டு வருதலைக் காணலாம். பாலர்கள் வளரவளர அவர்தம் வயதுத் தராதரங்களுக் கேற்றவாறு கற்பிக்கக்கூடிய பல்வேறு கதைகள் காணப் படுகின்றன. வகைமாதிரியாகப் பின் வருவனவற்றைக் குறிப்பிடலாம். தென்னாலி இராமன் கதை, மரியாதை
95

Page 53
இராமன் கதை, சிறுவர்க்கான சாயி கதைகள், ஈசாப் கதைகள், அரபுக் கதைகள், விக்கிரமாதித்தன் கதை, கண்டிர்பரிக் கதைகள், ரொபின்சன் குருசோ கதை, கலிவரது பிரயாணங்கள், தேவதைக் கதைகள், பஞ்ச தந்திரக் கதைகள், அவிவேக பூரண குருவின் கதைகள் முதலியவற்றை இவ்வகையிலே குறிப்பிடலாம்.
நவீன விஞ்ஞான, தொழில்நுட்பவியல் எண்ணக் கருக்களை அறிமுகம் செய்யக்கூடிய கதைகளும் குழந் தைகளின் உளமேம்பாட்டுக்கு அடிப்படையானவை. சில்லின் கதை, காற்றாடியின் கதை, கடதாசியின் கதை, புயலின் கதை போன்றவை தமிழ் மொழியில் ஆக்கப்பட்டு வருதல் நவீன கதை பயில்வில் நம்பிக்
கையை ஏற்படுத்துகின்றன.
Γ)
96 -

கலைச்சொற்றொகுதி
Adjustment Path Analysis:
Affective Psychoses :
Affectothymia:
Age Anxiety:
Aids:
Altruism:
Autism:
இசைவாக்கற் பாதைப்
பகுப்பாய்வு: இசைவாக்கம் செய்வதற்குரிய மாற்று வகையான பாதைகளை ஆய்ந்து அறிதல்.
எழுச்சிநிலை உளப்பிணி: மனவெழுச்சிகளைப் பெரிதாக்கு வதாலும், விகாரப்படுத்துவதா லும் தோன்றும் உளப்பிணி.
எழுச்சி வினையம்: அதீத மனவெழுச்சிகளுடன்
இணைந்த பங்குபற்றும் நடத் தைக் கோலம்.
வயதுப் பதகளிப்பு: வயது மூத்தல் தொடர்பாக உள்ளத்திலே நிகழும் கொந் தளிப்பு.
துணையம் ஒருவரது ஆற்றலுடன் ஒன்றி ணைந்து செல்லக்கூடிய செயல மைப்பை மேம்படுத்தும் நட வடிக்கை .
தனியுன்னதம்: அதிதீவிரப் பாங்கான கிளர்ச்சி கொண்ட நடத்தை .
நற்கோடல்: எவை சாதகமானவையோ அவற்றில் நம்பிக்கை வைக்கும் இயல்பு.
97

Page 54
Behaviour Therapy:
Behaviour Units:
Bivariate Experiment:
Chemotherapy:
Chiasms:
Comentioni
Common Traits
98 -
நடத்தை மாற்றியல்:
வெகுமதி அல்லது நிபந்தனைப்
பாட்டின் வழியாக ஒருவரது நடத்தைகளை மாற்றியமைக்கும் உளவியற் சிகிச்சை முறைமை.
நடத்தை அலகுகள்: ஒருவரது தனியாள் நடத்தை கள் சமூகத்திலுள்ளவர்களது நடத்தைகளுடன் எவ்வாறு ஒன் றித்தும் வேறுபட்டும் செல்கின் றன என்பதைக் கண்டறியும் அல்குகள். இருமாறிப் பரிசோதனை: ஒரே நேரத்தில் இரண்டு மாறி களை அளவீடு செய்யும் வகை யில் உருவாக்கப்படும் பரிசோ தனை வடிவம்.
வேதி மாற்றியல்: உளஒழுங்குக்குலைவினை மருந்து களாலும் உயிர்வேதிப் பொருள் களாலும் மாற்றும் சிகிச்சை Qup@ዃንደD•
தெரிவியங்கள்: இயங்கு நிலைச் சீராக்கலின் போது விருப்பத்துக்குரிய தெரிவு களை மேற்கொள்ளும் செயற் பாடு.
இணங்கலியம்: குழுவின் நடத்தைகளுடன் இணங்கிச் செல்லும் ஆளுமைப் பண்புக் கூறு.
பொதுப்பண்புக்கூறு: சமூகத்திலுள்ள அனைத்து உறுப் பினர்களிடத்தும் காணப்படும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொது வான பண்புகளின் கூறு.

Confluence Learning
Curiosity:
Covert Anxiety:
Dominance:
Ego Strength:
Ergic Tension:
Extrovert:
!..Xubera)Ce:
இருதரக்கற்றல் ஒரே நேரத்தில் இரண்டு வேறு பட்ட இயங்கு இலக்குகளை நிறைவேற்றுகின்ற கற்றல் செயல் முறை,
உசாவல் விருப்பு: எதையும் துருவி ஆராயவேண் டும் என்ற ஆளுமைக்கூறு ,
மூடுநிலைப் பதகளிப்பு:
தனது நடத்தை வெளிப்பாடுகள் பதகளிப்பின் வெளிவீச்சு என் பதை அறியாதிருக்கும் உளநிலை
மேலாள்கை:
தன்னம்பிக்கை, பிடிவாதம் , அழுத்தம் கொடுத்தல் முதலிய பண்புக்கூறுகளைக் கொண்ட ஆளுமைப் பண்பு.
அகவல்லமைபு எத்தகைய மனவெழுச்சி இடர் களையும் தாங்கிச் செல்லும் இயல்பு.
தெறிப்புந்தல் நெருக்கு
வTரம: உள்ளிருந்து கிளர்ந்தெழும் ஒரு வகை அடிப்படை உந்தலால் எழும் நெருக்குவாரமும் அதீத நடத்தையும்.
புறமுகியர் : உணர்வுகளை அடக்காது வெளிப்படுத்தும் ஆளுமை கொண்டோர்.
ஆற்றலியம்: மீத்திறன் கொண்ட ஆற்றலை உள்ளடக்கிய ஆளுமைப் பண்புக்
Th.
- 99

Page 55
Function Fluctuation:
Guilt Proneness:
Humour Test:
Individual Test:
Inducement:
instrument Factor:
Introverti:
L - data
தொழிலித்தளம்பல்: நேரத்துக்கு நேரம் மாற்ற மடைந்துகொண்டிருக்கும் ஆளு மைப் பண்புக்கூறு ,
குற்ற விதிர்ப்பம்: குற்றவுணர்வுகளையே தாமதிக் காது முன்கூட்டி வெளியிடும் ஆளுமைப் பண்புக்கூறுE
நகையறி தேர்வு: எத்தகைய நகைச்சுவையை ஒருவர் விரும்புகின்றார் என்ப தைக் கண்டறியும் தேர்வு.
தனியாள் தேர்வு: ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு வருக்கு மட்டுமே செயற்படுத்தக் கூடிய ஆளுமைத் தேர்வு.
புகுதூண்டி:
ஒருவரது செயற்பாடுகளைத் தூண்டும் வண்ணம் அவருக்குள் நுழைக்கப்படும் விசைகள் .
கருவிசார் காரணி: ஒருவரது ஆளுமையைப் புலப் படுத்தாது, அளவிடும் கருவிக் குரிய இயல்பை வெளிப்படுத்தும் நிலை.
அகமுகியர் : உணர்வுகளைப் புறலைப்படுத் தாது அடக்கிவைக்கும் ஆளுமை கொண்டோர்.
வாழ்க்கைத் தரவு:
இயற்கையான சூழலில் ஒருவரது நடத்தைகள் எவ்வாறு அமைந் தன என்பதை விளக்கும் தரவுகள்

Leptosomatic:
Libido:
Misperception:
Mobilisation:
Modality:
Module:
Nature Ratio:
Overt Anxiety:
மெலிகை:
ஒல்லியான வளைந்த உடற்கட்டு
Góll 9GBL-m: பாலியல் உந்தலால் ஏற்படும் உள வலுவைக் குறித்து சிக்மன்ட் பிராய்ட் உருவாக்கிய எண்ணக் கரு
பிறழ்புலக்காட்சி: நியமமான புலக்காட்சியிலிருந்து விலகலைக் கொண்ட காட்சி
செயற்சிந்தல்: W ஒருவர் தமது ஆற்றல்களையும் திறன்களையும் விரைந்து பயன் படுத்தும் செயல்.
செய்முறைமை: ஆற்றல், மனோநிலை, ஊக்கல் முதலாம் செயல்முறைமைகள் ஆளுமையிலே விளக்கப்படு
கின்றன:
இதவடிவம்: ஒருவர் தாமாகவே கற்றுக்கொள் வதற்கென உருவாக்கப்பட்ட நெகிழ்ச்சி கொண்ட ஒரு கற்றல்கற்பித்தல் வடிவம்.
இயற்கை விகிதம்: ஒருவரது ஆளுமையில் பாரம் பரிய காரணிகளின் அளவைச் சூழற் காரணிகளுடன் ஒப்பிட் டுக்கூறும் விகிதம்.
வெளித்துலங்கு பதகளிப்பு: தனக்குரிய பதகளிப்பை ஒருவர்
அறிந்திருப்பதும் வெளி யி ல் தயார் நிலையில் இருப்பதும்.
Ol

Page 56
Parmia:
Personality:
Praxernia:
Premsia
Protension:
Psychometry:
Psychosis:
Schizophrenia:
i02 -
பயப்பழக்கம் :
பயமுறுத்தலுக்குப் பழக்கப் பட்ட ஆளுமைப்பாளர்.
ஆளுமை: ஒருவரது பல்வேறு இயல்புகளி னதும் சந்தர்ப்பங்களுக்குரிய துலங்கல்களினதும்கூட்டுமொத்த வடிவம்,
தெளிநடை:
தெளிந்த, உற்சாகமான, நடை
முறைப்பாங்கான, பாரம்பரிய நடத்தை .
தளிர்நடை:
குழந்தை உள்ளமும் பிறர்மீது தங்கியிருத்தலும், உணர்ச்சி பூர்வ மானதுமான நடத்தை
முற்கவி நெருக்கீடு: தம் மை ப் பற்றி ய எண்ணம் மே லோ ங் கி யிரு த் த லும், பொறாமை, ஐயுறவு நடத்தைகள் வெளிப்படுத்தலும் அவற்றோடி ணைந்த உள்ளார்ந்த நெருக்கு வாரம் நிலவுதலும் .
உளக்கணிமை :
கணிதவியலடிப்படையில் உள வியல் அளவீடுகளைச் செய்யும்
#: $0) Q).
அம்மல்: நடப்பியல் நிலவரங்களில் இருந்து உள்ளம் விடுபட்டு நிற்கும் உள ஒழுங்குக் குலைவு நிலை.
உளநோய்ம்மை:
சகமனிதர்களில் இருந்து விடு பட்டு நிற்றலும், நடப்பியலோடு

Somatype:
Superego:
Surgency:
Thirectia:
Transference Neuroses :
இணையாத சி ந் த னை க ள மேலோங்கியிருப்பதுமான 26T நலம் பாதிப்புற்றநிலை.
உடல்சார்வகை:
உடற்கூற்று அடிப்படையில் ஆளு மையை வகைப்படுத்தல்,
மீயகம்:
சமூகத் தொடர்புகள் வாயிலாக மேம்பாடு கொண்ட ஒழுக்கங் களை முன்னெடுக்கும் சிந்த.ை
களிநடத்தை;
உற்சாகமும் மகிழ்ச் சி யும் கொண்ட மகிழ்ச்சியான நடத்தை இயல்பு.
மிகையொதுங்கல்: அதிக வெட்கமும் மிகுந்த Լlա:1pւն கொண்ட நடத்தை.
மாறுகை மீடியம்:
லிபிடோவின் உந்தல்கள் பத களிப்பாக நிலைமாறி நரம்புப் பிணிகளை ஏற்படுத்தும். நிலை
a 103

Page 57


Page 58
擎
ཅ།།
*.
',
3.
-
a
ళ
-
ܨܝ ܲ