கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மீண்டும் பயிற்று மொழியாக ஆங்கிலம்: ஒரு விளக்க நிலை நோக்கு

Page 1


Page 2

பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம் (ஒரு விளக்க நிலை நோக்கு)
பேராசிரியர். சோ.சந்திரசேகரம் கலாநிதி.மா.கருணாநிதி

Page 3
ஆசிரியத் துவ நோக்கு
நூல் : பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம்
(ஒரு விளக்க நிலை நோக்கு)
ஆசிரியர்கள் : பேராசிரியர். சோ.சந்திரசேகரம்
கலாநிதி. மா. கருணாநிதி
பதிப்பு: டிசம்பர் 2006
வெளியீடு : அகவிழி
3, டொறிங்டன் அவெனியூ கொழும்பு - 07
அச்சு : டெக்னோ பிரின்ட்
55, ஈ.ஏ.குரே மாவத்தை, கொழும்பு - 06
Rs.
 

பதிப்புரை
இன்றுவரை இலங்கையின் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஆனால் இந்த மாற்றங்கள் கல்விக்கும் தொழிற்சந்தைக்கும் இடையே காணப்படும் பொருத்தப்பாடு, இனங்களுக்கிடையே ஒருமைப்பாட்டையும் பரஸ்பர புரிந்துணர்வையும் வளர்த்தல், இலவசக்கல்வி மூலம் சமவாய்ப்புக் கிடைக்கும் தன்மை போன்ற இன்னோரன்ன அம்சங்களில் எத்தகைய தாக்கம், மாற்றங்கள் விளைவித்துள்ளன என்பது குறித்து நாம் சிந்திக்கும் பொழுது நடைமுறையில் உள்ள கல்விமுறைமை தோல்வி கண்டுள்ளது என்பது அப்பொழுது புலப்படும்.
கல்வி சமூக சனநாயகம் சமூகநிதி, சமூக சமத்துவம் போன்ற பண்புகளை ஊட்டி சமூகப் பொறுப்புள்ள பிரசைகளை உருவாக்குவதில் தோல்வி கண்டுள்ளது. இதன் விளைவுகளை பல தளங்களிலும் பல நிலைகளிலும் அனுபவிக்கின்றோம். ஒரு முரண்பட்ட வாழ்க்கை முறையை நாம் எத்தனை நாட்களுக்கு வாழப்போகின்றோம்? கல்வி முறை இதனை மாற்றியமைப்பதற்கு மாறாக இவற்றை இன்னும் வளர்க்கவே உதவி வருகின்றது.
இந்நிலையில் மீண்டும் ஆங்கிலம் பாடசாலை நிலையில் பயிற்றுமொழியாகக் கொள்ள வேண்டுமென்று கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் சாதக பாதக அம்சங்கள் குறித்து நாம் அக்கறைப்படுவதுடன் எதிர்காலம் கருதி இவை தொடர்பான நிலைப்பாடுகளையும் எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்.
மேலும் உலகமயமாக்கல் என்ற கொள்கைக்கு அனுசரணையாக கல்விக்கொள்கைகள், ஏற்பாடுகள் மாற்றப்படுகின்றன. பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் கலைத் திட்டங்களில் மேலைத்தேச கலாசாரத்தின் செல்வாக்கு படிப்படியாக

Page 4
உள்ட்டப்படுகின்றது. இந்நிலையில் பயிற்று மொழியாக ஆங்கிலம் முதன்மை பெற்றுச் செல்கிறது.
மீண்டும் ஆங்கிலம் பயிற்று மொழியாக வரும் பொழுது ஏற்படக் கூடிய சாதக பாதக அம்சங்கள் பற்றிய திறந்த கலந்துரையாடலுக்கு இச்சிறு நூல் களம் அமைக்க வேண்டும்.
அந்தவகையில் இந்நூலை காலத்தேவை கருதி வெளியிடுகின்றோம். மேலும் இந்த நூலை உருவாக்கித்தந்த பேராசிரியர் சந்திரசேகரம் மற்றும் கலாநிதி மா.கருணாநிதி ஆகிய இருவருக்கும் எமது நன்றிகள்.
தெமதுசூதனன்
4. பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம்

முன்னுரை
'கல்வி பற்றிப் பல பரந்த விளக்கங்கள் உண்டாயினும், நவீன உலகில் முறைசார்ந்த பாடசாலைக் கல்விக்கு ஒரு விசேட முக்கியத்துவம் உண்டு. அதற்கான குறிப்பிட்ட இலக்குகள், அடையப்பட வேண்டிய தேர்ச்சிகள், அதற்கான கலைத்திட்டம், பாடத்திட்டம், ஆசிரியர் பயிற்சி, பாடசாலைக்கான பெளதீக வசதிகள், தலைமைத்துவம், மேற்பார்வை, கட்டுப்பாடு, மதிப்பீட்டு முறை என்பனவற்றை உள்ளடக்கியதாகப் பாடசாலை முறைமை விளங்குகின்றது. அதற்கான விசேட நிதிஒதுக்கீடும் உண்டு. இதன் காரணமாகவே பாடசாலைக்கல்வி பெரு முக்கியத்துவம் பெறுகிறது. அதனை வினைத்திறனுடன் வழங்குவதற்கான முயற்சிகளும் அம்முயற்சிகளை வழி நடத்துவதற்கான ஆராய்ச்சிகளும் நடைபெறுகின்றன.
இன்று பாடசாலைக் கல்வியின் நிலைமைகள் பற்றிக் காலத்துக்குக்காலம் ஆணைக்குழுக்களும், குழுக்களும் நியமிக்கப்பட்டு ஆராயப்பட்டது. அதனைத் தொடர்ந்து கண்காணித்துக் கொள்கையாக்கம் செய்யவென ஒரு நிரந்தரமான தேசிய ஆணைக்குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. கல்வி தொடர்பான கொள்கைகள், செயற்பாடுகள் குறித்த ஒரு தொடர் மதிப்பீட்டை இந்த ஆணைக்குழு செய்து வருகின்றது எனக் கொள்ளவும் முடியும்.
ஆணைக்குழுவுக்கு அப்பால் செயற்பட்டு வரும் கல்வித்துறை ஆய்வாளர்களும் இப்பணியைச் செய்தல் வேண்டும். கல்வி முறைமையில் எப்போதுமே சமூகமும் அக்கறை கொண்டு வந்துள்ளது. பரந்த சமூகமானது கல்வித்துறை பற்றிய ஆரோக்கியமான சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள ஆய்வாளர்கள் உதவவேண்டும் என்பதும் கல்வித்துறை தொடர்பான ஒரு பொதுமக்கள் விசாரணைக்கு (Public Scrutiny) அவர்கள் உறுதுணையாக

Page 5
அமைய வேண்டும் என்பதும் அவர்களுடைய ஒரு சமூகக் கடப்பாடு என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றோம். இவ்வகையான ஒரு நிலைப்பாட்டிலிருந்தே "பயிற்று மொழியாக ஆங்கிலம்" என்னும் விடயம் பற்றி இந்நூலை எழுத முற்பட்டோம்.
இலங்கையின் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பல முன்னேற்றங்கள் விரிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஏனைய அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுடனும் குறிப்பாக, தென்னாசிய நாடுகளுடனும் ஒப்பிடும் போது இலங்கையின் பாடசாலை மாணவர் சேர்வுக் குறிகாட்டிகள் உயர்தரமானவை. ஆயினும் இலங்கையின் பாடசாலைக் கல்வி பல பிரச்சினைகளை எதிர் கொண்டு வருகின்றது. நாட்டின் பொருளாதார மற்றும் வேலை வாய்ப்பு நிலைமைகளுக்குப் பொருத்தமற்ற கல்வி, மாணவர்களின் குறைந்த கல்வித் தராதரங்கள், பல பாடத்துறைகளில் ஆசிரியர் பற்றாக்குறை, பாடசாலைகள் வினைத்திறனற்று இயங்குகின்றமை, பாடசாலைகளின் முகாமைத்துவக் குறைபாடுகள், கல்வித்துறையில் அரசியல் தலையீடு எனப்பிரச்சினைகள் பற்றிய பட்டியல் நீண்டு செல்லும். இன்று சில பாடசாலைகள் அரசின் தீர்மானத்திற்கேற்ப ஆங்கில மொழிவழியில் கல்வி வழங்கி வருவதும் சில புதிய பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆங்கில வழிக்கல்விவியின் தேவை, சாத்தியப்பாடு பற்றிய நாடளாவிய கருத்தாடல் ஒன்று நடைபெறவில்லை என்பதும் பெற்றோர்கள் இவ்விடயத்தில் ஆழமாக ஈடுபட்டு அதன் குறைநிறைகளை ஆராய்ந்து தீர்மானங்களை மேற்கொள்ளும் நிலையில் இல்லை என்பதும் எமது கருத்து. எனவே ஆங்கில வழிக்கல்வியின் பல்வேறு பரிமாணங்கள் பற்றிய இச்சிறுநூல் இவ்விடயம் பற்றிப் பல விளக்கங்களையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்த உதவும் என்று கருதி இதனை எழுதித் தமிழ் பேசும் மக்கள், தமழ் பேசும் மக்களின் கல்விக்குப் பொறுப்பான ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி அதிகாரிகள் ஆகியோரிடம் சமர்பிக்கின்றோம்.
நவீன உலகில் பொருந்தி வாழ்வதற்கு ஆங்கிலமொழியறிவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் இந்நூல் அம்மொழியைப் பாடசாலை நிலையில் கல்வி பயிற்றும் மொழியாகக் கொள்வதில் உள்ள பிரச்சினைகளை விரிவாக ஆராய்கின்றது. இவ்விடயம் தொடர்பாக உலக நாடுகளின் அனுபவங்கள், அறிஞர் சிந்தனைகள், ஆய்வு ரீதியான முடிவுகள் என்பனவற்றை ஆதாரமாகக் கொண்டு
6 பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம்

இச்சிறு நூலை எழுதினோம். இலங்கையில் போதனாமொழி மாற்றம்' பற்றிய வரலாற்று ரீதியான பின்புலத்தை விளக்கும் ஒரு ஆய்வுக் கட்டுரையையும் பின்னிணைப்பாகத் தந்துள்ளோம்.
கல்விப்பீடம் பேராசிரியர் சோ.சந்திரசேகரன் கொழும்புப் பல்கலைக்கழகம் கொழும்பு-03 கலாநிதி மா.கருணாநிதி
பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம் 7

Page 6
உள்ளடக்கம்
1. அறிமுகம் 09
2. இந்நூலின் நோக்கங்கள் 21
3. இலங்கையில் ஆங்கிலக் கல்வி:
ஒரு வரலாற்று நோக்கு 22
4. மீண்டும் பயிற்றுமொழியாக ஆங்கிலம் 32
5. முடிவுரை 53
பின்னிணைப்புகள்
1. போதனா மொழி மாற்றத்தின் பின்னணி 54
2. பாடசாலைகளில் தாய்மொழிக் கல்வி
வெற்றி பெற்றுள்ளதா? 81
3. மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் பயிற்று
மொழிப் பிரச்சினை 88
4. முடிவுரை 92
8 பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம்

அறிமுகம்
இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் கல்வித்துறையில் பெற்றுக்கொள்ளப்பட்ட சில முக்கியமான பெறுபேறுகளைக் கருத்திற்கொள்ளுதல் வேண்டும். ஒரு தேசிய கல்விமுறை அமைக்கப்பட்டமை, கல்வி வாய்ப்புகள் பின்தங்கிய பிரிவினருக்கு விரிவுபடுத்தப்பட்டமை போன்றவை இவற்றுள் குறிப்பிடத்தக்கவை. இவற்றுக்கு மேலாக, ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் காணப்பட்ட ஆங்கில மொழிப்பாடசாலை, சுயமொழிப்பாடசாலை எனப்பட்ட இருவகைப் பாடசாலை முறைமையையும் அதன் காரணமாக, கல்வித்துறையில் காணப்பட்ட பல பாரதூரமான குறைபாடுகளையும் அகற்றும் வகையில் படிப்படியாக, பாடசாலைக் கல்வியில் முற்றாகச் சுயமொழிகளைப் பயிற்றுமொழியாக அறிமுகஞ் செய்தமை சுதந்திரத்தின்பின் நாடு அடைந்துகொண்ட முக்கிய கல்வித்துறைப் பெறுபேறாகும்.
பாடசாலைக் கல்வியைப் பொறுத்தவரையில் கலைத்துறைப் பாடங்கள் மட்டுமன்றி விஞ்ஞானம், கணிதம் போன்ற பாடங்கள் க.பொ.த உயர்தர வகுப்பு வரை சுயமொழியில் கற்பிக்கப்படலாயின. ஆரம்பத்தில் கலைத்துறைப் பாடங்களும் பின்னர் விஞ்ஞானப் பாடங்களும் சுயமொழிகளில் கற்பிக்கப்பட்டன.
2002ம் ஆண்டுவரை அரசாங்கப் பாடசாலைகளில் மட்டுமன்றித் தனியார் பாடசாலைகளிலும் இதே நிலைமை நீடித்து வந்தது. முழுப் பாடசாலைக் கல்வி முறைமையிலும் சுய மொழிகளே பயிற்றுமொழி என்ற நிலைமை உறுதிப்படுத்தப்பட்டு அது ஒரு நிரந்தரமான அம்சம் என்ற நிலைமை உருவாயிற்று.
பாடசாலை முறைமை போலன்றி பல்கலைக்கழகக் கல்வி (1942 முதல்) முற்றாகவே ஆங்கில மொழியில் வழங்கப்பட்டு வந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஏறக்குறைய 8-10 சதவீதமான
பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம் 9

Page 7
பாடசாலை மாணவர்கள் ஆங்கில மொழியில் கல்வி பயில ஏனையோர் சுயமொழிப் பாடசாலைகளிலேயே கல்வி பயின்றனர். ஆனால் உயர்கல்வி நிலையில் ஆங்கிலம் மட்டும் பயிற்று மொழியாக இருந்தது. 1942 இல் முதலாவது பல்கலைக்கழகம் நிறுவப்படுவதற்கு முன்னர் உயர்கல்வி பயின்ற மாணவர்கள் இலண்டன் பல்கலைக்கழகப் பரீட்சைகளுக்கு அமர்வதே வழக்கமாக இருந்தது. 1921 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பல்கலைக்கழகக் கல்லூரியும் ஆங்கிலமொழி வழியிலேயே மாணவர்களை பிரித்தானியப் பல்கலைக்கழகப் பரீட்சைகளுக்கு ஆயத்தம் செய்தது. சுருக்கமாகக் கூறின் உயர்கல்வித்துறையில் ஆங்கில மொழிவழிக்கல்வியே ஏகபோக உரிமை பெற்றிருந்தது.
சிங்களம் , தமிழ் மொழி இலக்கியங்களைக் கற்பிக்கும் போது ஆங்கில மொழி பயன்படுத்தப்பட்டதாகவும் அவற்றுக்கான வினாத்தாள்கள் கூட ஆங்கில மொழியில் வழங்கப்பட்டதாகவும் அறியக்கிடக்கின்றது. ஆனால் பாடசாலைக் கல்வி முழுவதும் படிப்படியாகச் சுயமொழிகளில் வழங்கப்படத் தொடங்கிய பின்னர் பல்கலைக்கழகக் கல்வி நிலையிலும் சுயமொழிவழிக் கல்வி இடம் பெறுவது தவிர்க்க முடியாததாயிற்று. 1950 களின் இறுதியில் க.பொ.த உயர்நிலையில் கலைத்துறைப் பாடங்களைச் சுயமொழியில் கற்ற தமிழ் மொழிமூல மற்றும் சிங்கள மொழி மூல மாணவர்களுக்காகப் பல்கலைக்கழகக் கலைத்துறைப் பாடங்கள் சுயமொழிகளில் கற்பிக்கப்படலாயின. பொருளியல், புவியியல், வரலாறு, மெய்யியல், அரசறிவியல் போன்ற பாடங்கள் 1960களின் ஆரம்பத்தி. லிருந்து சுயமொழியில் கற்பிக்கப்படலாயின. பல்கலைக்கழக மட்டத்திலான ஆசிரியர் கல்வியும் சுய மொழியிலேயே வழங்கப்பட்டது. ஆரம்பத்தில், பழைய ஆங்கிலக் கல்வி முறையில் மிச்சசொச்சமாக இருந்த சில மாணவர்களுக்கு இப்பாடங்கள் தொடர்ந்து ஆங்கிலவழியில் கற்பிக்கப்பட்டாலும் இந்நிலை விரைவில் ஒரு முடிவுக்கு வந்தது.
உயர்கல்வி நிலையில் அறிமுகம் செய்யப்பட்ட சுயமொழிக் கல்வியின் மற்றொரு முன்னேற்றம் மேற்குறிப்பிடப்பட்ட பாடங்களை மாணவர்கள் பட்டமேற்படிப்பு நிலையிலும், (Postgradudte Degrees) சுயமொழிகளில் கற்கத் தொடங்கியமையாகும். கடந்த மூன்று தசாப்தகாலத்துக்கும் மேலாக பல ஆயிரக்கணக்கான பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சிகள் சுயமொழிகளில் எழுதப்பட்டமை ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும்.
10 பயிற்றுமொழியாக மீண்டும் ஆங்கிலம்

1970 களில் க.பொ.த உயர்தரக் கல்வி நிலையில் விஞ்ஞான பாடங்கள் அனைத்தும் சுயமொழிகளில் கற்பிக்கப்படத் தொடங்கி. யதன் விளைவாக, பல்கலைக்கழக விஞ்ஞான போதனா பீடங்களில் சுயமொழிகளிலும் விஞ்ஞான பாடங்கள் கற்பிக்கப்படலாயின. மாணவர்கள் 12 ஆண்டு காலம் வரை பாடசாலை நிலையில் சுயமொழிகளில் கற்றுவிட்டுப் பல்கலைக்கழகம் வந்தபின்னர் உடனடியாக ஆங்கில மொழியில் விஞ்ஞான பாடங்களைக் கற்றுக்கொள்வது சிரமமாக இருக்கும் என்பதால், ஆரம்ப ஆண்டு. களில் விஞ்ஞானக் கல்வித்துறையிலும் சுயமொழிகள் பயன்படுத்தப்பட்டன. எவ்வாறாயினும் பல்கலைக்கழக நிலையில் மருத்துவம், பொறியியல் மற்றும் விஞ்ஞான போதனா பீடங்களில் அடிப்படையில் ஆங்கிலமொழியே பயிற்று மொழியாக இருந்து வருகிறது. இதற்கிடையே பல்வேறு கலைத்துறை மற்றும் விஞ்ஞானத்துறைப் பாடங்களை உயர்கல்வி நிலையில் கற்பிக்கப் பல கலைச்சொல் அகராதிகளை வெளியிடக்கல்வித் திணைக்களம் முன்னின்று செயலாற்றியமை இவ்விடத்து குறிப்பிடத்தக்கது. எடுத்துக்காட்டாக 1960 களில் விஞ்ஞானத்துறை சார்ந்த பாடங்களில் தயாரிக்கப்பட்ட கலைச்சொல் அகராதிகள் சிலவற்றின் தலைப்புக்களைக் கீழே தந்துள்ளோம்.
1. தூய கணிதமும் பிரயோக கணிதமும் - 1956
2 Electrical Engineering - 1956
3. Glossary of Printing Terus - 1965
4 பிறப்புரிமையியல் -குழியவியல் - கூர்ப்பு - 1964
Gemethics-Cytology-Evolution
5. பெளதிக விஞ்ஞானம். - Physical Sciences - 1960
6. பொது உடனலச் சொற்றொகுதி - Physical Health
7. பயிர்ச் செய்கைச் சொற்றொகுதி -Agriculture - 1958
இதே போன்று சகல கலைத்துறை மற்றும் விஞ்ஞானத்துறைப் பாடங்களுக்குமான கலைச்சொல் அகராதிகள் 1955-1965 களுக்கு இடையில் ஆக்கப்பட்டமை சுயமொழிக்கல்வி ஏற்பாட்டில் நிகழ்ந்த ஒரு முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றமாகும். அக்காலத்தில் பாடசாலை நிலையிலும் பல்கலைக்கழக நிலையிலும் இப்பாடங்களைக் கற்பித்த பட்டதாரி ஆசிரியர்கள் முற்றாகவே ஆங்கில
பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம் 11

Page 8
மொழியில் கல்வி கற்றிருந்தனர். அவர்கள் சுயமொழிகளில் இப்பாடங்களை உயர்நிலையில் கற்பிப்பதை இலகுபடுத்தும் வகையிலும் அவர்களுக்கு உதவும் வகையிலும் இத்தகைய அகராதிகளை அரசாங்கம் முன்னின்று தயாரித்தது. அரசகரும மொழி அலுவலகத்தின் இம்முயற்சியில் பங்குகொண்டு பெரும் பணியாற்றிய அறிஞர்களின் பெயரை இவ்விடத்துக் குறிப்பிடுதல் சாலப் பொருந்தும். திரு. ஏ.வி. மயில்வாகனம், கலாநிதி என்.மகாதேவன், கலாநிதி.வ.பொன்னையா, திரு.பொ.தர்மலிங்கம், கலாநிதி. அப்பாப்பாப்பிள்ளை, பேராசிரியர். அசின்னத்தம்பி, திரு.பொ.சங்கரப்பிள்ளை, மருத்துவக் கலாநிதி, மு.ஹ.மு.அப்துல்காதிர், கலாநிதி, வி.நவரத்தினம், பேராசிரியர். க.கணபதிப்பிள்ளை, சி.நடராசர், பண்டிதர். க.பொ. இரத்தினம் போன்றவர்களும் அக்காலத்தில் பல்வேறு துறைகளிலும் நிபுணத்துவம் பெற்றிருந்த இன்னும் பலர் கலைச் சொல்லாக்கத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். (இத்துறையில் பணியாற்றிய சகல அறிஞர்களின் பெயர்களும் இங்கு தரப்படவில்லை)
இதே காலப்பகுதியில் வரலாறு , புவியியல், பொருளியல் , மெய்யியல், அரசறிவியல் துறைகள் சார்ந்த பல முக்கியமான உயர்கல்வி மாணவர்களுக்குரிய ஆங்கில நூல்கள் தமிழாக்கம் செய்து வெளியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. எடுத்துக்காட்டாக இடட்லி ஸ்ராம்பின் புவியியல் நூல், வில்சனின் மேலைநாட்டு வரலாற்று நூல், பசாமின் இந்திய வரலாற்று நூல் போன்றன குறிப்பிடத்தக்கவை. தமிழாக்கப் பணியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் ஈடுபட்டனர். எடுத்துக் காட்டாகப் புவியியல் பேராசிரியர், சோ. செல்வநாயகம் மெய்யியல் விரிவுரையாளர். வே.காசிநாதன் முதலியோரைக் குறிப்பிடலாம். அத்துடன் 1960 களில் ஹன்டி பேரின்பநாயகம், நிக்கலஸ், பொ. சங்கரப்பிள்ளை ஆகியோர் முறையே அரசியல், வரலாறு, பொருளியல் ஆகிய துறைகளில் பல மூல நூல்களை எழுதினார்கள். இந்த ஆரம்பகால முயற்சிகளைத் தொடர்ந்து அண்மைக்காலம் வரை உயர்கல்வி மாணவர்களுக்கான ஏராளமான நூல்கள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சமூக அறிவியல் துறை சார்ந்த தமிழ் நூல்களின் விரிவான பட்டியலொன்று தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை இவ்விடத்தில் வலியுறுத்த விரும்புகின்றோம். சுயமொழியில் உயர்கல்வி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து பல்கலைக் கழக நிலையில் பல்வேறு சமூக அறிவியல் துறைகள்
12 பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம்

சார்ந்த பல சஞ்சிகைகளும் வெளிவரத் தொடங்கின. பேராசிரியர். கா. இந்திரபாலா சிந்தனை என்னும் சஞ்சிகையையும் பேராசிரியர். சமுத்துலிங்கம் கல்வி என்ற சஞ்சிகையையும் நடத்தினர். சிந்தனை சஞ்சிகை இன்றும் யாழ்பல்கலைக் கழகக் கலைத்துறையினரால் வெளியிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 1960 முதல் இன்றுவரை தமிழில் வெளிவந்த சமூக அறிவியல் துறை சார்ந்த சஞ்சிகைகள் பற்றிய பட்டியல், அவற்றின் உள்ளடக்கம் பற்றிய வகைப்படுத்தல் பற்றிய தேவையொன்றுள்ளது. இம்முயற்சிகள் ஒரு வகையில் தமிழ்மொழி உயர்கல்வி நிலையில் விரிவாகப் பயன்படுத்தப்பட்டதன் ஒரு விளைவு என்பதோடு, தமிழ் மொழியில் காணப்பட்ட நூல் பற்றாக்குறையைக் கருத்திற்கொண்டு மாணவர்களுக்கு உதவும் முகமாகச் செய்யப்பட்ட ஒரு முக்கிய முயற்சியாகும்.
இதேகாலப்பகுதியில் தமிழ்நாட்டில் தமிழ் உயர்கல்வி நிலையில் தமிழ் வழிக்கல்வி இடம் பெற வேண்டும் என்ற கொள்கை ஊக்கம் பெற்றதன் காரணமாக அந்நாட்டிலும் சமூக அறிவியல் துறையில் ஏராளமான நூல்கள் வெளியிடப்பட்டன. இலங்கையில் தமிழில் உயர்கல்வி பயின்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசாங்கத்துறை வெளியிட்ட சமூக அறிவியற்றுறை சார்ந்த இத்தகைய நூல்கள் உதவியாக இருந்தமை முக்கியமானது.
பல்கலைக்கழக நிலையில் சுயமொழி பயிற்று மொழியாக மாறிய காலப்பகுதியில் (1960களில்) அங்கு பணியாற்றிய விரிவுரை. யாளர்கள் சுயமொழியில் கற்பிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாயினர். ஆங்கிலம், சுயமொழி ஆகிய இரு மொழிகளிலும் வல்லுநராக இருந்தவர்கள் புதிய மாற்றங்களுக்கு ஏற்பத் தம்மை இலகுவில் இசைவாக்கிக் கொள்ள முடிந்தது. புதிய பணியைச் செய்வதற்குச் சுயமொழியறிவு பெற்றிராத சில விரிவுரையாளர்கள் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களை நாடிய சம்பவங்களும் உண்டு. இதன் பின்னர் விரிவுரையாளர்கள் தெரிவுசெய்யப்படும் போது அவர்களுடைய சுயமொழி அறிவு ஒரு முக்கிய நிபந்தனையாக்கப்பட்டது. ஆங்கில மொழிவழி வந்த பழைய விரிவுரையாளர்களுக்கு விசேடமான சுயமொழி வகுப்புகளும் நடாத்தப்பட்டன.
சுருங்கக் கூறின் சுயமொழிக் கல்வியைப் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மட்டங்களில் அறிமுகம் செய்து அதனை வலுப்பெறச் செய்யவும் வளம் பெறச் செய்யவும் பல உறுதியான முன்னோடி முயற்சிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டன.
பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம் 13

Page 9
குறைந்தபட்சம் சமூக அறிவியல் துறைகளிலாவது சுயமொழியில் கல்விபெறும் மாணவர்களுக்கான அடிப்படையான நூல்களை வெளியிடுவதிலும், தமிழ்மொழியில் இப்பாடங்களைக் கற்பதிலும் சில முக்கிய வெற்றிகள் கிடைத்தன எனக் கூறலாம். எவ்வாறாயினும் உயர்கல்வியை ஆழமாகவும் அகலமாகவும் பெற்றுக்கொள்ளும் அளவுக்கு நூல் வெளியீட்டுத்துறை மிகவிரிவாக இருந்தது எனக் கூறுவதற்கில்லை. தமிழ்நாட்டில் தொடர்ந்து வந்த காலப்பகுதியில் உயர்கல்வி நிலையில் விரிவான முறையில் ஆங்கிலமொழி முக்கியத்துவம் பெற்றதன் காரணமாகத் தமிழ்மொழிப் பாடநூல்களின் வெளியீடும் தடைப்படத் தொடங்கியது. எவ்வாறாயினும் 1990 களின் இறுதிப் பகுதியில் இலங்கையின் பாடசாலைக் கல்வியிலும் பல்கலைக்கழக நிலையில் சமூக அறிவியற்றுறையிலும் சுயமொழிக்கல்வி ஒரு உறுதியான, நிரந்தரமான ஒரு இடத்தைப் பெற்றுவிட்டது.
புதிய நூற்றாண்டின் முற்பகுதியில் இதுவரை காலமும் பேணி வளர்க்கப்பட்டு உறுதி பெற்றிருந்த சுயமொழிக் கல்வியைப் பாதிக்கும் சில புதிய போக்குகள் எழுச்சியுறத் தொடங்கின. இப்போக்குகளை இக்காலத்தில் பரவிய உலகமயமாக்கச் சித்தாந்தத்தின் அடிப்படையிலேயே விளங்கிக்கொள்ள முடியும். உலக மயமாக்கத்தின் விளைவாக நாட்டின் தனியார்துறையும், பொருளா. தாரம், பன்னாட்டு நிறுவனங்களினதும் வெளிநாட்டு மூலதனத்தின. தும் வருகை, இவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் முறையில் அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றங்கள், உலகளாவிய பல்வேறு தொடர்புகளில் ஆங்கிலமொழி பெற்று வந்த முக்கியத்துவம் என்பவற்றின் காரணமாக, கல்வி முறையில் இடம் பெற்ற பயிற்று மொழி பற்றிய மீள் பரீசிலனையொன்று ஆரம்பமாயிற்று.
இக்காலத்தில் ஆங்கிலம் வர்த்தக கைத்தொழில் துறையில் நிருவாக மொழியாகப் பயன்படத் தொடங்கியது. இராஜதந்திரத்துறை மற்றும் உலகளாவிய தொடர்புகளில் அம்மொழி விரிவாகப் பயன்படத் தொடங்கியது. கணினி, இணையம், மின்னஞ்சல் என்பன ஆங்கில மொழியின் முக்கியத்துவத்தை மேலும் வலுப்படுத்தின. புதிய நூற்றாண்டு அறிவு மைய நூற்றாண்டு, தகவல் மைய நூற்றாண்டு என வர்ணிக்கப்பட்டு, அறிவு வெள்ளம் பிரவாகம் எடுத்து ஒடுகின்ற ஒரு நூற்றாண்டாக மாற்றம் பெற்றது. ஐம்பது ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட அறிவுத் தொகுதிக்குச் சமமான அறிவுத் தொகுதி
14 பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம்

ஐந்து ஆண்டுகளில் உருவாகும்; இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை அறிவுத் தொகுதி இரட்டிப்பாகும் நிலை உருவாகியுள்ளது. இத்தகைய மாற்றங்களில் ஆங்கில மொழி பிரதான இடத்தை வகிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து உலகளாவிய ரீதியில், ஆங்கிலம், பேசாத ஐரோப்பிய நாடுகளில் கூட ஆங்கில மொழியின் முக்கியத்துவம் வெகுவாக உணரப்பட்டுள்ளது.
இலங்கையில் வளர்ச்சி பெற்ற தனியார்துறை நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் வழங்கிய வேலைவாய்ப்புகள் அரசாங்கத்துறையில் காணப்பட்ட வேலைவாய்ப்புகளை விட அதிகமானவையாகக் காணப்பட்டன. அரசாங்கத்துறை வேலை வாய்ப்புக்கள் 1994 தொடக்கம் 16.4 சதவீதத்தை எட்டின. 35 சதவீதமான வேலைவாய்ப்புகள் தனியார் துறையிலேயே இருப்பதாகவும் கண்டறியப்பட்டது. தனியார் துறையினரும் ஆங்கில மொழியறிவினை ஒரு முக்கிய நிபந்தனையாக எடுத்துக் கூறத் தொடங்கினர். வேலை வாய்ப்புக்களை பெற்றுக் கொள்வதற்கு மட்டுமன்றி உலகமயமாக்கப் போக்குகளுடன் இலங்கை தன்னை இணைத்துக் கொள்வதற்கும் ஆங்கிலமொழியறிவு ஒரு கட்டாய தேவையென உணரப்பட்டது.
இலங்கையில் சுயமொழிகள் பயிற்று மொழியாக அறிமுகம் செய்யப்பட்ட போதிலும் பாடசாலை நிலையில் ஆங்கிலம் ஒரு முக்கிய பாடமாகக் கற்பிக்கப்பட்டு வந்தது. அரசாங்கப் பணியில் சேருவதற்கோ அல்லது பல்கலைக்கழகங்களில் அனுமதி பெறுவதற்கோ ஆங்கில பாடத்தில் சித்தியெய்தி இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கவில்லை. பாடசாலை மற்றும் பல்கலைக்கழகக் கல்வியைப் பொறுத்தவரையில் ஆங்கில நூல்களையும் சஞ்சிகைகளையும் படித்துப் புதிய அறிவைத் திரட்டிக் கொள்ளாமலே பரீட்சைகளில் சித்தியடைய முடியும் என்ற நிலை ஏற்பட்டது. பல்கலைக்கழகப் பட்டதாரிகள் அரசாங்கப் பணிகளை மட்டுமே நாடுவது என்பது வழமையாயிற்று. மறுபுறம் பாடசாலைகளில் ஆங்கிலமொழியைத் திறம்படக் கற்பிப்பதற்கான ஆசிரியர்களினுடைய பற்றாக்குறை ஒரு முக்கிய கல்வித்துறைப் பிரச்சினையாக உருவாயிற்று, இந்நிலையில் மாணவர்களின் ஆங்கிலத் தேர்ச்சி மட்டுமன்றி நாடளாவிய ரீதியில் ஆங்கிலத் தேர்ச்சி பெரிதும் பாதிப்புக்கு உள்ளாயிற்று. க.பொ.த சாதாரண தர நிலையிலும் பின்னர் க.பொ.த.உயர்நிலையிலும் மாணவர்கள் ஆங்கில பாடத்தில் மிகக் குறைந்த சித்திகளையே பெற்றனர். ஆங்கில மொழியைப் பாடசாலையில் பல ஆண்டுகாலம் கற்ற பின்னர் க.பொ.த சாதாரண
பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம் 15

Page 10
தரப் பரீட்சையில் 25 சதவீதமானவர்களே சித்திபெற முடிகின்றது. அண்மைக்காலத்தில் க.பொ.த உயர்தர வகுப்புகளில் ஆங்கிலம் ஒரு பாடமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. க.பொ.த.உயர்தர நிலைக்குரிய ஆங்கில பாடப் பரீட்சைக்கு அமர்ந்தவர்களில் 76 சதவீதமானவர்கள் அப்பாடத்தில் சித்தி பெறத் தவறினர் (2002). இந்த வீதாசாரம் அண்மைக் காலங்களில் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக அனுமதிக்கு ஆங்கிலமொழிச் சித்தி கட்டாயம் இல்லை என்பதன் காரணமாகப் பல மாணவர்கள் இப்பரீட்சைக்கு அமர்வதில்லை எனவும் கண்டறியப்பட்டுள்ளது. 13 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி இவ்வகுப்பில் கற்பிக்கும் ஆசிரியர்களில் 33 சதவீதமானவர்கள் ஆங்கில மொழியில் தேர்ச்சியற்றவர்கள் எனக் கண்டறியப்பட்டது. இலங்கையில் ஆங்கிலமொழிக்கல்வி உச்சக்கட்டத்தில் இருந்த காலத்தில்கூட நாட்டில் 10 சதவீதத்துக்கும் குறைந்தவர்களே ஆங்கிலமொழித் தேர்ச்சியுடையவர்களாகக் காணப்பட்டனர். அக்காலத்தில் ஆங்கில மொழியில் கற்றவர்கள் மத்தியிலும் ஆங்கிலத் தேர்ச்சியைப் பொறுத்தவரையில் பல வேறுபாடுகளைக் காண முடிந்தது என்பது ஆய்வாளர் கருத்து.
1990 களின் இறுதியில் இவ்வாறான குறைந்த ஆங்கில மொழித் தேர்ச்சிபற்றி அரசாங்க மட்டத்தில் கூடுதலான கவனம் செலுத்தப்பட்டது ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கற்பித்து அதனூடாக ஆங்கில மொழித் தேர்ச்சியை ஏற்படுத்தும் கொள்கை தோல்வியடைந்ததாகக் கொள்கை வகுப்பாளர்கள் கண்டறிந்தனர். துரித கதியில் ஆங்கிலமொழித்தேர்ச்சியை ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை அவர்கள் உணர்ந்தனர். இந்தியா போன்ற ஏன்னய தென்னாசிய, தென்கிழக்காசிய நாடுகளில் காணப்பட்ட ஆங்கிலத் தேர்ச்சியுடன் ஒப்பிடும் பொழுது இலங்கையின் பின்தங்கிய நிலையும் உணரப்பட்டது. துரிதமாக வளர்ச்சிபெறத் தொடங்கிய தனியார் துறையினரும் பாடசாலை, பல்கலைக்கழக மாணவரின் ஆங்கிலத் தேர்ச்சியை மேம்படுத்துமாறு கோரிக்கைகளை விடுக்கத் தொடங்கினர். இளைஞரின் வேலையின்மைப் பிரச்சினைக்கு ஒரு பிரதான காரணம் அவர்களுடைய ஆங்கிலமொழித் தேர்ச்சிக்குறைவு என்றும் எடுத்துக்காட்டப்பட்டது. மேலும் பாடசாலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி என்பவற்றின் தராதரங்கள் பற்றிய ஆய்வுகள் ஆங்கிலமொழித் தேர்ச்சிக் குறைவின் காரணமாக கல்வித் தராதரங்கள் வீழ்ச்சியுற்று இருப்பதாகவும் எடுத்துக்காட்டின.
16 பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம்

1990களில் வளர்ச்சியுற்ற சர்வதேசப் பாடசாலைகள் ஆங்கில மொழி வழியில் உள்ளுர் மாணவருக்கும் கல்வி வழங்கத் தொடங்கின. ஆங்கிலத்தின் பல்வேறு முக்கியத்துவங்களை உணர்ந்த பொருள் வசதிமிக்க பெற்றோரும் ஆங்கில மொழியில் தமது பிள்ளைகளுக்குக் கல்வி வழங்க முற்பட்டனர். இதனால் சர்வதேசப் பாடசாலைகளை அவர்கள் நாடினர். வெளிநாட்டவரின் பிள்ளை. களுக்காக ஏற்படுத்தப்பட்ட சர்வதேசப்பாடசாலைகள் 1980-களில் கம்பனிகள் சட்டத்தின்கீழ் பதிவு செய்து கொண்டு முதலீட்டுச் சபையின் அனுமதியுடன் விரிவாக இயங்கத் தொடங்கின. கொழும்பில் மட்டுமன்றி நாடளாவிய ரீதியில் இப்பாடசாலைகள் ஆங்கில மொழியில் கல்வி வழங்கத் தொடங்கின. தேசிய பாடசாலை முறைமைக்கு அப்பால் வெளிநாட்டுப் பரீட்சைகளுக்கு அமர்வதற்கான ஆயத்தத்தை இப்பாடசாலைகள் வழங்கின. நாட்டில் வசதிமிக்க ஒரு சாரார் ஆங்கில மொழியில் பயின்று தனியார்துறை வழங்கும் வேலைவாய்ப்புக்களைப் பெறுகின்ற நிலையில் சுயமொழிகளில் அரசாங்கப் பாடசாலைகளில் பயிலுவோருக்கு ஏற்படக்கூடிய பாதிப்பைக் கொள்கை வகுப்போர் நுணுகி நோக்கத் தொடங்கினர்.
இப்பின்புலத்தில் ஆங்கில மொழியை அரசாங்கப் பாடசாலைகளிலும் பயிற்றுமொழியாக்கும் ஒரு புதிய கொள்கை 2000 ஆம் ஆண்டில் வகுக்கப்பட்டது. 1997 ஆண்டு தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்ட கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான பரிந்துரைகளில் இக்கொள்கை எடுத்துக் கூறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்பரிந்துரைகளுக்கு அப்பால் 2000 ஆம் ஆண்டில் பின்வரும் கொள்கை முன்மொழியப்பட்டது.
1. க.பொ.த உ/த வகுப்புகளில் விஞ்ஞான பாடங்களைப் பயிலும் மாணவர்கள் ஆங்கில மொழியில் பயில்வதற்கான விருப்பத் தெரிவு வழங்கப்பட்டது.
2. ஆனால் 6ஆந் தரத்தில் இருந்து சில தெரிவு செய்யப்பட்ட பாடங்களை ஆங்கில மொழியில் கற்க அனுமதி வழங்கப்பட்டது. (கணிதம், விஞ்ஞானம்/ சுற்றாடல் கல்வி , சுகாதரக் கல்வி, உடற்கல்வி)
3. 2003 மார்கழியில் தேசிய கல்வி ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட மனித விருத்திக்கான கல்வி பற்றிய புதிய தொலைநோக்கு என்ற அறிக்கையின்படி (பக்கம் 52) அமைச்சரவையின் ஒப்புதலின்றி முதலாம் தரத்திலிருந்து
பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம் 17

Page 11
ஆங்கில மொழியைப் போதனாமொழியாகக் கொள்ளலாம் என்றதொரு கருத்து வேறுபாட்டுக்கு உட்பட்ட கொள்கையொன்று முன்வைக்கப்பட்டது. இத்தகைய கொள்கை பல குழப்பங்களுக்கு இடமளித்ததாகவும் நீண்டகாலக் கல்வி மற்றும் சமூக வளர்ச்சியைப் பொறுத்த வரையில் இது ஆழ்ந்து நோக்கப்படவேண்டிய ஒரு விடயம் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இப்புதிய கொள்கை அறிவுறுத்தல்கள் எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டன என்பது பற்றி முறையாக மேற்பார்வை செய்யப்படவில்லை. எவ்வாறாயினும் இடைநிலைப் பாடசாலைப் பாடஏற்பாடு பற்றிய தேசிய கல்வி ஆணைக்குழுவின் மதிப்பீட்டு ஆய்வுகளின் படி ஒரு சில பாடசாலைகளே ஆங்கில மொழியைப் பயிற்று மொழியாகத் தெரிவு செய்துள்ளன. ஆங்கில மொழிவழியில் குறிப்பிட்ட பாடங்களைக் கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை. ஆங்கில மொழிவழியில் கல்விபெறாத ஆசிரியர்களுக்குச் சில வாரங்களுக்கு மட்டுமே பயிற்சி வழங்கப்பட்டது. குறிப்பிட்ட பாட அறிவில் தேர்ச்சியற்ற ஆங்கில ஆசிரியரின் சேவையைச் சில பாடசாலைகள் நாடின. சில பாடசாலைகளில் ஆங்கில மொழிவழியில் கல்வி கற்ற மாணவரின் பாட அறிவை விட ஆசிரியர்களின் ஆங்கில அறிவு குறைவாகவே இருந்தது. இந்த மதிப்பீட்டு ஆய்வுகளின்படி புதிய ஆங்கில மொழிவழிக் கொள். கையை பிற பாடங்களுக்கும் விரிவு செய்வதில் மிகுந்த அவதானம் தேவை. இத்தகைய புதிய பயிற்று மொழிக் கொள்கை கல்வித்தராதரங்களிலும் கல்வி வாய்ப்புகளை வழங்குவதிலுள்ள நியாயத்தன்மையிலும் பல பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடுமென இந்த ஆய்வாளர்கள் சில எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளனர்.
தேசிய ஆணைக்குழுவின் 2003 மார்கழிமாத அறிக்கையானது இலங்கையில் ஆங்கிலக் கல்வி பற்றிய சில பரிந்துரைகளைச் செய்துள்ளது.
1. ஆரம்பக் கல்வி நிலையில் 1-5 வரையுள்ள தரங்களில் வாய்மொழி ஆங்கில நிகழ்ச்சித்திட்டம் வலுப்படுத்தப்படல் வேண்டும் என்றும் இதனை நடைமுறைப்படுத்தச் சகல பாடசாலைகளிலும் ஆங்கில ஆசிரியர்கள் நியமிக்கப்படல் வேண்டும் என்றும், ஆங்கில மொழித் திறன்களை விருத்தி செய்வதற்குக் கட்புல செவிப்புல சாதனங்கள் வழங்கப்படுதல்
18 பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம்

வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளது. ஆரம்பநிலைக்கல்வியில் ஆங்கில மொழியைப் பயிற்று மொழியாக்குவது பற்றிப் பரிந்துரைகள் எவற்றையும் செய்யவில்லை.
2. கனிஷ்ட இடைநிலைக் கல்வியைப் பொறுத்தவரையில் ஏற்கனவே ஆங்கில மொழிவழிக் கல்வி சில பாடங்களைப் பொறுத்தவரையில் நடைமுறைப்படுத்தப்பட்ட பொழுது ஐந்தாண்டு காலப்பகுதியில் (2004-2005) இக்கொள்கை சகல பாடசாலைகளுக்கும் விரிவுசெய்யப்பட வேண்டும் எனப் பரிந்துரை செய்துள்ளது. அதாவது தொழில்நுட்பம், சமூக விஞ்ஞானங்கள், சுற்றாடல் ஆகிய பாடங்களைப் பாடசாலைகள் விரும்பினால் கனிஷ்ட இடைநிலையில் (தரங்கள் 6-9) மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் கற்பிக்கலாம் என்ற ஏற்பாட்டை இவ்வறிக்கைசகல பாடசாலைகளுக்கும் விரிவுசெய்வதை ஆதரிக்கும் முறையில் தனது பரிந்துரையைச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
3. க.பொ.த சாதாரணதர வகுப்புகளைப் பொறுத்த வரையில் சில பாடங்களைச் சுயமொழியிலும் மேலே குறிப்பிட்ட பாடங்களை ஆங்கிலத்திலும் கற்பிக்கும் இருமொழிக் கொள்கை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படுதல் வேண்டும் என்பதும் ஒரு பரிந்துரையாகும்.
4. க.பொ.த உயர்தர வகுப்புகளில் விஞ்ஞான பாடங்களையும் கணிதத்தையும் ஆங்கில மொழிவழியில் கற்பிக்கும் கொள்கையை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள் நடைமுறைப்படுத்தி வருகின்றன. பொதுப் பரீட்சையின்போது மாணவர் தெரிவு செய்யும் மொழியில் விடையளிக்க வாய்ப்புண்டு. ஆனால் நடைமுறையில் சில மாவட்டங்களில் எப்பாடசாலையும் விஞ்ஞான பாடங்களை ஆங்கிலமொழியில் கற்பிக்க முன்வரவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது. தேசிய கல்வி ஆணைக்குழுவின் அறிக்கையானது ஒவ்வொரு கோட்டத்திலும் ஒரு பாடசாலையிலாவது இத்தரங்களில் ஆங்கில மொழியில் விஞ்ஞான பாடங்களைக் கற்பிக்கும் ஏற்பாடுகளைச் செய்தல் வேண்டும். கல்வித்துறையில் நியாயத்தன்மையை நிலைநாட்ட இத்தகைய ஏற்பாடு அவசியம் என்று பரிந்துரை செய்தது.
பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம் 19

Page 12
20
சுருங்கக்கூறின் பாடசாலை மட்டத்தில் கனிஷ்ட இடைநிலையிலும் (6-9) க.பொ.த சாதாரண மற்றும் உயர்தர வகுப்புகளிலும் மேலே குறிப்பிட்ட பாடங்களை ஆங்கில மொழியில் சில பாடசாலைகளிலாவது அறிமுகம் செய்ய வேண்டும் என்ற கொள்கை 2000ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதை இவ்விடத்தில் வலியுறுத்திக்கூற விரும்புகின்றோம்.
பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம்

இந்நூலின் நோக்கங்கள்
ஆங்கில மொழியை முழுப்பாடசாலை முறையிலும் அல்லது குறிப்பிட்ட சில பாடசாலைகளிலாவது பயிற்று மொழியாக மீண்டும் அறிமுகம் செய்வது எந்தளவுக்குப் பொருத்தமானதொரு கல்விசார் நடவடிக்கை : இத்தகையதொரு ஏற்பாட்டினால் ஏற்படக்கூடிய கல்விசார் மற்றும் சமூக கலாசார விளைவுகள் எவை? இவ்விடயங்களை ஆராய்வதற்கு இலங்கையின் கல்வி வரலாற்றில் ஆங்கில வழிக் கல்வி இடம் பெற்ற காலத்திலிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய படிப்பினைகள் பற்றி நோக்குகின்ற"அதேவேளையில், இலங்கையின் கல்விமுறையில் ஆங்கிலமொழிக்குரிய இடம் யாது என்றும் விடயங்களை இந்நூல் ஆராயும்,
பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம்
21

Page 13
இலங்கையில்,ஆங்கிலக் கல்வி ஒரு வரலாற்று நோக்கு
ஆங்கில ஆட்சியாளர்கள் இலங்கையை ஆண்ட காலத்தில் தமது குடியேற்ற ஆட்சிமுறையின் தேவைகளையும் நன்மைகளையும் கருத்திற்கொண்டு ஆங்கில வழிக்கல்வியை அறிமுகம் செய்தனர். ஆங்கிலக் கல்வியைப் பாடசாலை நிலையில் கற்றுத் தேர்ந்தவர்களை வைத்துக்கொண்டு அரசாங்க நிருவாகத்தைக் குறைந்த செலவில்நடத்திச் செல்லலாம் என்பதற்கு அப்பால் சில அரசியல் கலாசார காரணிகள் பற்றியும்,ஆங்கில ஆட்சியாளர்கள் சிந்தித்தனர். ஆங்கிலக் கல்வியினூடாகக் குடியேற்ற ஆட்சிமுறையின் கீழ்மட்டங்களில், பணிபுரியக்கூடிய விசுவாசம் மிக்க, மேலைத்தேயப் பாணியிலான சுதேச கற்றோர் குழாம் ஒன்றை உருவாக்குவது ஆட்சியாளரின் நோக்கமாக இருந்தது என்று வரலாற்று ஆசிரியர் ஜி.சி.மென்டிஸ் சுட்டிக் காட்டுகின்றார்.
சமகால இந்தியாவில் முதன்முதலாக ஆங்கிலக் கல்வியை அறிமுகம் செய்யமுற்பட்ட மக்காலே பிரபு அதன் நோக்க்த்தைப் பற்றிக் கூறியமை இலங்கைக்கும் சாலப்பொருந்தும், ஆங்கிலக் கல்வியினுடாக, இரத்தத்திலும் நிறத்திலும் இந்தியராகவும் சுவையிலும் சிந்தனையிலும் ஒழுக்கத்திலும் அறிவாற்றலிலும் ஆங்கிலேயராகவும் உள்ள ஒரு புதிய வகுப்பினை உருவாக்க வேண்டும். ஆட்சியாளருக்கும் பொதுமக்களுக்கும் இடையே பாலமாக விளங்கக் கூடிய ஒரு வகுப்பினரை உருவாக்குதல் வேண்டும். அவ்வகுப்பினர் சுதேச மொழிகளைச் செம்மைப்படுத்தி மேலை நாட்டறிவினை மக்கள் மத்தியில் பரப்புபவர்களாக விளங்குதல் வேண்டும். இக்கூற்றானது ஆங்கில ஆட்சியாளர் அறிமுகம்செய்த ஆங்கிலக் கல்வியின் அடிப்படை நோக்கத்தைச் சுட்டிக்காட்டுகிறது. ஆங்கில ஆட்சியாளர் தமது ஆட்சியை நீண்டகாலத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளத் தமது கலாசாரத்துக்கு இயைந்த ஒரு சமூகக் குழுவினரை உருவாக்கிக் கொள்ளுதல், பொதுமக்கள் அல்லாது
22 பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம்

நாட்டிலிருந்த செல்வந்தர்களான நிலவுடமையாளர்கள் மற்றும் உயர்குடியினரின் பிள்ளைகளுக்கு மட்டுமே ஆங்கிலக் கல்வியை வழங்குவது உகந்தது என்பது ஆட்சியாளரின் கருத்தாக இருந்தது.
ஆங்கில ஆட்சியாளர்கள் ஒரு சிலருக்கு உயர்தரமான ஆங்கிலக் கல்வியை வழங்குமிடத்து, கல்வியறிவானது அவர்களுக்கூடாக முழுச் சமூகத்துக்கும் "வடிந்து செல்லும்" என்ற கொள்கையில் நம்பிக்கையுடையவர்களாகக் காணப்பட்டனர். எனவே "யாவருக்கும் சமகல்வி" என்னும் கொள்கை உருவாக இலங்கை மக்கள் 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை காத்திருக்க நேர்ந்தது. ஆங்கில ஆட்சியாளர்கள் ஒரு சிலருக்கு உயர்தரமான ஆங்கிலக் கல்வி, சாதாரண மக்களுக்குச் சுயமொழிகளில் ஆரம்பக் கல்வி" என்ற கொள்கையைத் தமது ஆட்சிக்காலம் முழுவதும் பின்பற்றினர்.
கோல்புறுக் குழுவினர் மேற்கூறிய நோக்கங்களின் அடிப்படை. யில் அரசாங்கம், ஆங்கிலப் பாடசாலைகளின் வளர்ச்சிக்கு மட்டுமே உதவ வேண்டும் என்றும், அரசாங்கப் பதவிகள் ஆங்கில மொழி தெரிந்த சகலருக்கும் திறந்துவிடப்படுதல் வேண்டும் என்றும் விதந்துரைத்தனர். இவர்கள் வழங்கிய ஊக்குவிப்பின் காரணமாக இலங்கையில் ஆங்கிலமொழிப் பாடசாலைகள் வளர்ச்சியுறத் தொடங்கின. அதே வேளையில் சாதாரண மக்களுக்கு ஆரம்பக் கல்வியை வழங்குவதற்கெனச் சுயமொழிப் பாடசாலைகளைப் படிப்படியாக ஏற்படுத்தினர். தனியார் துறையினரும் கிறிஸ்தவ மிசனறிமாகும். ஆங்கிலக் கல்வியின் வளர்ச்சியில் மிகுந்த ஊக்கத்துடன் ஈடுபட்டனர். இவ்வாறு ஆங்கிலப் பாடசாலைகள் ஒருபுறமும் சுயமொழிப்பாடசாலைகள் மற்றொரு புறமுமாக இலங்கையின் கல்விமுறை இருவகைப்பட்ட கல்விமுறையாகப் பிரிவுபட்டமுறையில் வளர்ச்சிபெற்றன. ஆங்கிலப் பாடசாலைகளில் மிகச் சிறப்பாக இயங்கியவை, ஆங்கில நாட்டிலிருந்த செல்வந்தருக்கான பாடசாலைகளை (Public Schools) முன்னுதாரணமாகக் கொண்டு உருவாக்கப்பட்டன. இதில் ஒரு விஷேட அம்சம் யாதெனில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஏற்பட்ட பெளத்த, இந்து சமயங்களின் மறுமலர்ச்சியின் காரணமாக, உருவாக்கப்பட்ட பாடசாலை முறைமையில், கிறிஸ்த்தவ மிசனரிமார் உருவாக்கியது போன்ற ஆங்கிலப் பாடசாலைகளும் அடங்கும். ஆங்கிலக் கல்வியானது, உயர்கல்வி மற்றும்வேலைவாய்ப்புப் போன்றவற்றில் பல சந்தர்ப்பங்களை வழங்கியதன் காரணமாகப் பெளத்தர்களும் இந்துக்களும்
பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம் 23

Page 14
இப்போக்கிலிருந்து விலகிச் செல்ல முடியவில்லை அத்துடன் பாடசாலைக் கல்வியில் மிசனரிமாரிடமிருந்ததாகக் கூறப்பட்ட ஏகபோக உரிமையை எதிர்கொள்ள உள்ளுர்ச் சமயத்தவரும் ஆங்கிலப் பாடசாலைகளை நிறுவவேண்டியதாயிற்று.
இவ்வாறு கல்வி முறையில் தேசிய மொழிகள் அலட்சியப்படுத்தப்பட்டமை குறித்து 1901 ஆம் ஆண்டிலேயே பொன்னம்பலம் அருணாசலம் அவர்கள் தமது குடிசன மதிப்பீட்டு அறிக்கையில் (1901) பின்வருமாறு சுட்டிக் காட்டுகிறார்.
"ஆங்கில மொழியோடு அதிக தொடர்பற்ற நாட்டிலிருந்த திறமைமிக்க மாணவர்கள் ஆங்கிலப் பாடசாலைகளால் பெரிதும் கவரப்பட்டனர். கீழ்வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் கற்பிக்கப்பட்ட பாடங்கள் எதனையும் சரியாகப் புரிந்துகொள்வதில்லை. அவ்வாறு புரிந்து கொண்டாலும் அதனால் பல உளப்பாதிப்புகளை அடைய வேண்டியிருந்தது. கிளிப்பிள்ளை போல் சொற்களைப் புரிந்து கொள்ளாமல் திரும்பத்திரும்ப சொல்வது ஊக்கவிக்கப்பட்டது. சுயமொழிப் பாடசாலைகளில் பிள்ளைகள் குறைந்த பட்சம் சிந்திக்கவாவது கற்பிக்கப்பட்டது. கல்வியியல் நிலைப்பாட்டிலிருந்து நோக்குமிடத்து ஆங்கிலப்பாடசாலைகளின் நிலை உண்மையில் மோசமாக இருந்தது. ஆங்கிலமொழி முறையாக கற்பிக்கப்படாததின் காரணமாக அதனைப் பத்தாண்டு காலமாகக் கற்றவர்கள் கூட இலக்கணப் பிழைகளின்றி எழுதப் பேச முடியாதுபோயிற்று. அவர்களில் சிலர் ஆங்கிலச் சொற்களஞ்சியத்தை விரிவாகப் பெற்றிருந்தாலும் அவர்கள் அதனைக் கல்வியெனத் தவறாகக் ab(bgól6OTř." (Census Report 1901)
தேசிய மொழிகளுக்கு முறையான இடம் வழங்கப்படாததையிட்டு வேறுபல குழுவினரும் அதிருப்தி தெரிவித்தனர். இக்காலத்தில் இந்தியாவில் தேசிய மொழிகளின் வளர்ச்சிக்கெனப் பல இயக்கங்கள் தோன்றியிருந்தன. அத்துடன் ஆசிய நாடான யப்பான் 1904 இல் ரஷ்யாவை வெற்றிகொண்டது. இவையாவும்இலங்கையின் தேசியவாதிகளுக்கு ஊக்கமளித்தன. அநகாரிக்க தர்மபால சிங்கள மொழிவளர்ச்சி பற்றி விரிவாக எடுத்துரைத்தார். கலாயோகி ஆனந்த குமாரசுவாமி நிறுவிய இலங்கை சமூக சீர்திருத்தச் சங்கம் ஆங்கிலப் பாடசாலைகளில் தேசிய மொழிகளை அறிமுகம் செய்யுமாறு ஆங்கில ஆளுனரை வேண்டியது. ஆங்கிலத்தில் கல்விபயின்ற உயர்வர்க்க இளைஞர்கள் சாதாரண மக்களுடன் தேசிய மொழிகளில் உரையாட முடியவில்லை என்றும் தமது
24 பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம்

சிந்தனைகளை சுயமொழிகளில் வெளியிடுவதற்குத் தேவையான சுயமொழி அறிவு அவர்களிடம் காணப்படவில்லை என்றும் இச்சங்கத்தின் உறுப்பினர்கள் எடுத்துக்காட்டினர். இதனை விட அக்காலத்தில் புகழ்பெற்ற சஞ்சிகையாளர்கள், நாவலாசிரியர்கள் எனப்பலரும் இவ்விடயத்தில் தமது அதிருப்தியை எடுத்துக் காட்டினர்.
ஆங்கில மொழிக்குக் கல்வி முறையில் வழங்கப்பட்ட பிரதான இடம் குறித்து இவ்வாறான விமர்சனங்கள் அக்காலத்தில் எழுந்தன. இந்தியாவிலும் இந்தியத் தேசிய வாதிகள் மற்றும் முஸ்லிம்கள் ஆங்கில மொழிவழிக் கல்வியை எதிர்த்துக் குரல் எழுப்பினர்.
ஆங்கில ஆட்சியாளரின் கல்விக்கொள்கையின் விளைவாக நாட்டில் இரண்டு வகையான பாடசாலைமுறை உருவாகியிருந்தது. ஒன்று ஆங்கிலமொழிப்பாடசாலை, இரண்டாவது சுயமொழிப் பாடசாலை. இத்தகைய ஏற்பாடு ஒரு நாட்டில் இருவேறு வகையான கல்வி முறைமையின் வளர்ச்சிக்கு இடமளித்தது. இவ்வாறு பயிற்றுமொழியின் அடிப்படையில் இருவேறுபட்ட கல்விமுறைகள் காணப்பட்டமை கல்வி முறையின் முதலாவது பிரதான குறைபாடு என கன்னங்கரா குழுவின் அறிக்கையில் (1943)கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இத்தகைய கல்வி முறைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட சில வாதங்கள் பின்வருமாறு:
1. ஆங்கில மொழியானது சமூக மேன்மைக்கான ஒரு அடையாளமாகிவிட்டது. இதனால் மக்கள் மத்தியில் ஒரு புதிய பிரிவு தோன்றியது. ஆங்கிலம் பேசும் சமூகம், சுயமொழிகளைப் பேசும் சமூகம் என்ற புதியதொரு சமூகப் பிரிவு தோன்றியது. ஏற்கனவே மொழிfதியாகவும் பொருளாதார வர்க்க ரீதியாகவும் பிளவுபட்டுக்கிபீந்த இலங்கைச் சமூகத்தில் இவ்வாறானதொரு புதிய பிரிவொன்று தோன்றுவதற்கு இத்தகைய மொழி ரீதியாக வேறுபபடுத்தப்பட்ட கல்வி முறை உதவியது எனப் பல அறிஞர்கள் சுட்டிக் காட்டினர்.
2. சிங்களம் அல்லது தமிழ் மொழியைப் பேசுகின்றவர்களின் இயற்கையான பயிற்றுமொழி. இவ்வாறான ஒரு பயிற்று மொழியின் ஊடாகவே (சியமொழி) அவர்கள் இலக்கியத் துறையிலும் கலைத்துறையிலும் தமது பங்களிப்பைச் செய்துகொள்ள முடியும். ஆனால் அம்மொழிகள் விருத்தி செய்யப்படவில்லை.
பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம் 25

Page 15
இவ்வாறான இருவகைப்பட்ட பாடசாலை முறையானது கல்வித் துறையில் சமவாய்ப்புகளையும் வழங்கத் தவறிவிட்டது. ஏனெனில் கட்டணம் செலுத்தக் கூடியவர்களே பெரும்பாலும் ஆங்கிலப் பாடசாலைகளில் அனுமதிபெற முடிந்தது. அவ்வாறு
கட்டணம் செலுத்த முடியாதோர் சுயமொழிப் பாடசாலைகளுக்கே சென்றனர்.
வங்காளதேசத்தில் பயிற்று மொழியாக ஆங்கிலம் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நகர்ப்புறப் பெற்றோர்கள் ஆங்கில வழிக் கல்வியியில் அக்கறை செலுத்தவில்லை. ஆனால் காலமாற்றத்துடன் அவர்கள் ஆங்கில வழிக் கல்வியை நாடினர்.
கடந்த காலங்களில் ஆங்கில மொழியில் பேசுவோர் பெரிதாக மதிக்கப்படவில்லை. ஆனால் இன்று ஆங்கில மொழி அறிவு உயர் தொழிலுக்கும் உயர்கல்விக்கும் அவசியம் என்ற எண்ணம் மேலோங்கி விட்டது.
எனினும் ஆங்கில வழிப்பாடசாலைகள் நீதியான, நியாயமான முறையில் கல்விச் சேவையை வழங்குகின்றனவா என ஆராய வேண்டியுள்ளது. நாங்கள் நினைப்பது போல சிறந்த கல்வியை வழங்கும் பாடசாலைகள் எத்தனை இயங்குகின்றன?
பணத்தை மையப்படுத்திய பண்பாட்டையே இக்கல்வி நிறுவனங்கள் வளர்க்கின்றன. பணமிருந்தால் அனுமதியுண்டு; இல்லையேல் அனுமதியில்லை' என்பதே அவற்றின் கொள்கை, பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு ஆங்கில வழிக் கல்வியை வழங்க சொல்லொணா நிதி நெருக்கடிகளை எதிர் கொள்கின்றனர். செல்வந்தர்களுக்கு மட்டுமே ஆங்கிலக்கல்வி என்ற நிலை உருவாகி வருகின்றது. இப்பள்ளிகள் பெருமளவு பணத்தைப் பெற்றோர்களிடமிருந்து அறவிட்டாலும், ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவது மிகக் குறைந்த órtbLu6IIItas(36T!
இப்பாடசாலைகளை அரசாங்கம் பரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. ஆங்கிலப் பாடசாலைக்கென்று எதுவித சட்டவிதிகளும் பிரமாணங்
26
பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம்

களும்இல்லை. இதனால் அவை மனம் போன போக்கில்
பயமின்றி இயங்குகின்றன. சிறுவயதில் பணம்தான்
எல்லாம்" என்ற மனப்பாங்கைப் பிள்ளைகள் வளர்த்துக் கொள்ள உதவுதான் இப்பள்ளிகளின் கைங்கரியம்
-"New Age (ugg5ifadab)-
Bangladesh
இக்கருத்துக்களை எடுத்துக் கூறிய கன்னங்கரா குழுவின் அறிக்கை ஆங்கிலப் பாடசாலைகள் ஊடாக நாட்டில் சலுகைபெற்ற ஒரு வகுப்பினர் தோன்ற முடிந்தது. எனச் சுட்டிக் காட்டியது. ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட பறங்கியர் சமூகம் தவிர்ந்த ஏனையோர் ஆங்கிலத்தைப் பயிற்றுமொழியாகக் கொள்ள எதுவித காரணமும் இல்லையெனச் சுட்டிக்காட்டியது. ஆரம்பக் கல்வி நிலையில் தாய்மொழி பயிற்றுமொழியாக இருத்தல் வேண்டுமெனப் பரிந்துரைத்த கன்னங்கராக்குழு இம்மாற்றம் படிப்படியாகவே நிகழவேண்டும் என எடுத்துக் காட்டியது.
இவ்வகையான இருவகைப்பட்ட கல்விமுறை ஏற்படுத்திய விளைவுகளைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.
I. சுயமொழிப் பாடசாலைகள் மாணவர்களுக்கு எழுத்தறிவுக்கு மேல் எத்தகைய அறிவையும் வழங்கவில்லை. உயர்நிலை அறிவை அக்காலத்தில் ஆங்கிலப் பாடசாலைகள் மட்டுமே வழங்கின.
2. சுயமொழிகள் சிறந்த பண்பாட்டுச் செழுமையைக் கொண்
டிருந்த போதிலும் நவீன விஞ்ஞான தொழில்நுட்பச் சிந்தனைகளின் வாகனமாக விருத்தியுற வாய்ப்பில்லாமல் போயிற்று.
இலங்கையை 150 ஆண்டுகளாகப் பிரித்தானியர் ஆண்டு வந்துள்ளனர். எனினும் மக்கள் தொகையில் 10 சதவீதத்துக்கும் குறைந்தவர்களுக்கே ஆங்கிலம் தெரியும். அவர்களில் (10 சதவீதத்தில்) ஒரு சதவீதமானவர்களே சிறந்த, முறையான ஆங்கிலக் கல்வியைப் பெற்றவர்கள்.
-எஸ்.டபிள்யு. ஆர்.டி பண்டாரநாயக்கா21-01-1955
பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம் 27

Page 16
சிங்களவர்களும் அந்நிய மொழிகளும்
சிங்களவர்கள் மரபு வழியாகவே இரு மொழிகளைக் கொண்டவர்கள். கற்றவர்கள். சிங்கள மொழியுடன் பாளி, சமஸ்கிருதம் ஆகிய அந்நியமொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருந்தனர். இவ்வந்நிய மொழிகளை அறிந்தவர்களே அக்காலசமூகத்தில் கற்றவர்களாகக் கருதப்பட்டனர். சாதாரண பொதுமக்கள் சிங்கள மொழியை மட்டுமே அறிந்திருந்தனர். பழைய இலக்கியங்கள் பாளி மொழி யிலேயே எழுதப்பட்டன. கல்வி கற்ற சிங்களவர்கள் எக்காலத்திலுமே இரு மொழிகளை அறிந்தவர்களாக இருந்தனர். இம்மரபினையொட்டியே மகாவம்சம் பாளி மொழியில் எழுதப்பட்டது. சிங்களவர்களின் வரலாறு சிங்கள மொழியில் எழுதப்படாது பாளி மொழியில் எழதப்படக் காரணம் என்ன? அநகாரிக்க தர்மபால எதற்காகத் தமது தினக்குறிப்புகளை ஆங்கிலத்தில் எழுதினாரோ அதே காரணத்துக்காகவே மகாவம்ச ஆசிரியர் தமது நூலைப் பாளி மொழியில் எழுதினார்.
பாளியில் எழுதப்பட்ட இலக்கியங்களின் அடிப்படையில், சிங்கள் இலக்கியத்தை மகா பாரம்பரியம்' என்றும் சுதேச சிங்கள மொழி இலக்கியங்கள் (13,14,15 ஆம் நூற்றா ண்டைச் சேர்ந்தோரை சிறு பாரம்பரியம்' என்றும் பேராசிரியர் கே.என்.ஒ. தர்மதாச பிரித்துள்ளார். வரலாற்று ரீதியாக சிங்களம், படித்தவர்களின் மொழியாக இருந்ததில்லை.
ஆங்கிலத்தின் வருகையுடன் சிங்களவர்கள் பாளியையும் சமஸ்கிருதத்தையும் கைவிட்டு ஆங்கிலத்தை இறுகப்பிடித்துக் கொண்டனர். சிங்களவரின் பாரம்பரிய வழக்கங்களின்படி இதில் தவறொன்றுமில்லை. குடியேற்ற ஆட்சிக்காலத்துக்கு முன்னர் சிங்களப் பண்பாட்டில் காணப்பட்ட ஒரு உடன்பாடான அம்சம் கற்ற சிங்களவர் மத்தியில் காணப்பட்ட இருமொழி அல்லது மும்மொழிப் பண்பாடாகும். நவீனகால சிங்களவர்களைவிடப் பண்டைக் கால சிங்களவர்கள் (இவ்வகையில்) முன்னேற்ற மாணவர்களாகக் காணப்பட்டனர். Li6OrgoLu சிங்களவர்களின் இம்மனப்பாங்குகளைக் கருத்திற் கொண்டு நவீன காலத்தில் கல்வி மொழி பற்றித்
28 பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம்

தீர்மானிக்கலாம். ஆங்கில ஆட்சிக்காலத்தில் ஆங்கிலக் கல்வி பல வாய்ப்புகளை வழங்கியது உண்மையே. அதே வேளையில் சிங்களவர்கள் அப்புதிய மொழியை ஏற்றுக் கொண்டமைக்கு அவர்களுடைய இருமொழி மரபும் காரணமாக இருந்தது.
எமது வரலாற்றில் எக்காலத்திலும் ஒரு மொழிமட்டும் தெரிந்த கல்விமான்கள் இருக்கவில்லை. சிங்களத்தில் மட்டும் கல்வி பெறுவதில் உள்ள முக்கிய அபாயம் என்னவெனில் அவ்வாறு படித்தவர்கள் அரைகுறையாகக் கற்றவர்களாக இருப்பர் என்பதே!
- பி. சந்திரப் பெருமா (பத்திரிகையாளர்) (Conflict- Causes and Consequences)
இலங்கை மக்கள் தமது சொந்த மொழியில் சிந்திக்கவும்
கருத்துக்களை வெளியிடவும் உரிமை மறுக்கப்பட்டனர். அவர்களுடைய இலக்கிய வளர்ச்சியும் பெரிதும் தடைப்
பட்டது.
ஆங்கிலப் பாடசாலைகளில் வழங்கப்பட்ட கல்விப் பயிற்சியானது மாணவர்களை அவர்களுடைய சொந்தப் பண்பாடு, பாரம்பரியம் என்பவற்றிலிருந்து அந்நியப்படுத்தியது. அவர்கள்
தமது மூதாதையரின் கலாசாரத்தைப் பயன்படுத்தி அதன்
களத்திலிருந்து அறிவுத்துறை மேம்பாட்டைக் கட்டியெழுப்ப
வாய்ப்பின்றிப் போயிற்று.
ஆங்கிலப் பாடசாலைகளின் கலாசாரச் சூழலின் காரணமாக இளைஞர்கள் மேலைநாட்டு வாழ்க்கை முறைகளைக் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ளும் நிலைமை உருவாயிற்று. இத்தகைய மேலைத்தேயப் பாணிகள் அவர்களுடைய
பாரம்பரியங்களுக்கும் சுவாத்திய நிலைமைகளுக்கும் பொருத்தமானவையன்று.
ஐரோப்பிய வாழ்க்கை முறையைக் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொண்டதன் காரணமாக உருவாகிய பொருளாதார சமூக மாற்றத்தினால் சமூகத்தில் பல புதிய ஒழுங்கின்மைகள்
தோன்றி வாழ்க்கைச் செலவும் அதிகரித்தது.
பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம்

Page 17
7. ஆங்கிலப் பாடசாலைகளில் வழங்கப்பட்ட கல்வியானது மனித
உழைப்பைக் கெளரவிக்கும் எண்ணங்களை ஏற்படுத்தவில்லை.
8. சுயமொழிகளைத் சுயமாகக் கொண்ட பிள்ளைகள் ஆங்கிலப்
பாடசாலைகளுக்குச் சென்றவிடத்து அவர்களுக்கு வழங்கப்பட்ட அறிவையும் சிந்தனைகளையும் அவர்களால் தொடர்புபடுத்திப் பார்க்க முடியாது போயிற்று. அவர்களுடைய இயல்பான அறிவுவளர்ச்சி தடைப்பட்டது.
9. குழந்தைப் பருவத்தில் பிள்ளைகள் ஒரு புதிய மொழியைக் கற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. இதனால் தேவையற்ற மனஉளைச்சல் ஏற்படுவதுடன் அதிக நேரமும் சக்தியும் விரயமாக நேரிடுகின்றது.
அக்காலத்துச் சட்டசபையில் (1926) உறுப்பினராக இருந்த ஏ.கனகரத்தினம் சட்டசபையில் சமர்ப்பித்த பிரேரணை ஒன்றில் மேற்கூறிய கருத்துக்கள் எடுத்துக்கூறப்பட்டிருந்தன.
கன்னங்கரா காலந்தொடக்கம் படிப்படியாகப் பாடசாலைக் கல்வி நிலையிலும் பின்னர் பல்கலைக்கழகக் கல்விநிலையிலும் (விசேடமாக சமூக அறிவியல் துறைகளில்) ஏற்பட்ட பயிற்றுமொழி மாற்றம் வெறுமனே ஒரு கல்வித்துறைச் சீர்திருத்தமாக மட்டுமன்றி ஒரு சமூக சீர்திருத்தமாகவும் விளங்கியது என்பதைக் கருத்திற்கொள்ள வேண்டும். 1950 களில் இப்பயிற்று மொழி மாற்றம் பாடசாலைக்குச் சென்ற 10 சதவீதமான மாணவர்களையே பாதித்தது. ஆங்கிலத்தில் கல்வி வழங்கிய ஒரு சில பாடசாலைகளே தமது பயிற்று மொழியைச் சுயமொழிக்கு மாற்ற வேண்டியதாயிற்று. 1946 ஆம் ஆண்டளவில் 365 ஆங்கிலப் பாடசாலைகளில் 1,16,000 மாணவர் கல்வி பயின்றனர் ; அதே வேளையில் 4440 சுயமொழிப் பாடசாலைகளில் 7,50,000 மாணவர்கள் கல்வி பயின்றனர். இங்கு குறிப்பிடப்பட்ட 365 ஆங்கிலப் பாடசாலைகளும், சுயமொழிகளில் கற்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதுடன் படிப்படியாக க.பொ.த உயர்தரக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி என்பனவும் இப்பயிற்று மொழி மாற்றத்தை உள்வாங்கவேண்டிய அவசியம் உண்டாயிற்று. இவ்வாறான பயிற்று மொழி மாற்றத்தின் பின்னணிபற்றிய விரிவான கட்டுரையொன்று பின்னிணைப்பில் தரப்பட்டுள்ளது.
30 பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம்

சில மொழி நிலைமைகளில் ஆரம்பக் கல்வி நிலையில் தாய்மொழியில் LuITLs dat56oo6TTáiö கற்பிப்பது விரும்பத்தக்கதல்ல ; தாய்மொழிக்கல்விக்கு எதிராகச் செயற்படும் பல காரணிகள் உண்டு:(1) பிள்ளையின் தாய்மொழி எது என்பதைத் தீர்மானிப்பதில் உள்ள சிரமம் ; பன்மொழிச் சூழ்நிலையில் பிள்ளைகள்' பல தாய்மொழிகளுடன் வளரக் கூடும் ; (2) ஒரு மொழி' என்பதன் வரையறை; தாய்மொழிகள் நியமமான 660 disu for 6intais' (Standard Variety) 605dd56urrib; (3) தாய்மொழிக்கல்வியானது சமூக, இனத்துவப் பிரிவினைகளுக்கு வழிகோலலாம். பன்மொழி நாடுகளில் தாய்மொழிக் கல்வியை விட சமூக ஒருமைப்பாடு முக்கியமானதாக இருக்கலாம். தாய்மொழிக்கல்வி பின்தங்கிய பிரிவினர்கள் அதிகார பதவிகளைப் பெறும் வாய்ப்புகளைக் குறைக்கலாம். ஆரம்பக்கல்வி தாய்மொழியில்தான் இருத்தல் வேண்டும் 66 வலியுறுத்தும் பொது விதி எதுவும் இல்லை.
Anthea Fraser Gupta
University of Leeds.
பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம்
31

Page 18
மீண்டும் பயிற்றுமொழியாக ஆங்கிலம்
"வரலாறு தானாகத் திரும்பத் திரும்ப வருகின்றது" என்ற கூற்றுக்கு அமைய 1950கள் தொடக்கம் பாடசாலை நிலையில் பயிற்றுமொழி என்ற அந்தஸ்தில் இருந்து முற்றாக நீக்கப்பட்ட ஆங்கில மொழி இன்று அதிகாரபூர்வமாக மீண்டும் பாடசாலைகளில் ஒரு பயிற்றுமொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அரசாங்கக் கொள்கை வகுப்போர் மட்டுமன்றிப் பல பெற்றோரும் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்ற ஒரு நிலைமையும் உண்டு. ஆங்கிலத்தைப் பயிற்றுமொழியாகக் கொள்ளவேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. பெற்றோர்கள் விரும்புமிடத்து ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொள்ள முடியும். இதன்படி, தமிழ், சிங்கள மொழிவழிப் பாடசாலைகளும் விரும்பியவிடத்து ஆங்கிலமொழியையும் பயிற்று மொழியாகக் கொள்ளலாம்; அதற்கான அனுமதியைக் கல்வியமைச்சு வழங்கியுள்ளது.
உலகமயமாக்கத்தின் சர்வதேச உறவுகள், வர்த்தகம், கைத்தொழில், தகவல் தொழில்நுட்பத்தின் விரிவான பயன்பாடும் முக்கியத்துவமும், உலகளாவிய ரீதியில் பன்மடங்காகப் பெருகிவரும் அறிவுத் தொகுதியனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கின்ற நிலைமை, சர்வதேசத் தொழிற்சந்தையில் இலங்கை இளைஞர்கள் பிறநாட்டு இளைஞருடன் சமமாகப் போட்டியிடுவதற்கு ஆங்கிலமொழித் தேர்ச்சியின் அவசியம், உயர்கல்வி நிலையில் மருத்துவம், பொறியியல் விஞ்ஞானம் மற்றும் சமூக அறிவியல் துறைகளில் ஆங்கிலமொழி பயன்படுத்தப்படுகின்ற நிலைமை, வெளிநாட்டு மூலதனத்துடன் பல்தேசியக் கம்பனிகளின் வருகை, அரசாங்கத்துறையில் வேலைவாய்ப்புகளின் வீழ்ச்சியும் தனியார்துறையின் வேலைவாய்ப்புகளுக்கும் ஆங்கில மொழித் தேவைகளை நிறைவுசெய்ய வேண்டிய அவசியம் - இதுபோன்ற வலுவான காரணங்களுக்காக இளைஞர்கள் மத்தியில் துரிதமாக ஆங்கிலமொழித் தேர்ச்சியை ஏற்படுத்த ஆங்கிலவழிக் கல்வியை ஒரு கொள்கைத் தெரிவாக அரசு முன்வைத்தது. அத்துடன் நாட்டில்
32 பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம்

ஏற்கனவே வளர்ச்சி பெற்றிருந்த சர்வதேசப் பாடசாலைகள் ஆங்கில வழிக்கல்வியை அறிமுகம் செய்திருந்தன. கணிசமான தொகையான இளைஞர்கள் ஆங்கிலமொழி பேசும் நாடுகளில் கல்வி பயின்றும் வருகின்றனர். இந்நிலையில் அரசாங்கப் பாடசாலைகளில் சுயமொழிகளில் கல்வி பெறுவோர் ஆங்கில மொழிவழியில் கல்வி பயின்ற மாணவர்களுடன் போட்டியிட முடியாத ஒரு பாதகமான நிலை உருவாகியிருந்ததை அரசாங்கம் கருத்திற் கொள்ள நேர்ந்தது. வசதிமிக்கவர்களுக்குக் கிடைக்கின்ற ஆங்கில மொழிக் கல்வி அரசாங்கப் பாடசாலைகளில் பயிலும் மாணவர்களுக்கும் வழங்கப்படல் வேண்டும்; எனவே இந்த ஏற்பாடு கல்வி வாய்ப்புகளைச் சமப்படுத்தும் நோக்கையும் நியாயத்தன்மையை மேம்படுத்தும் ஒரு ஏற்பாடு எனக் கொள்கை வகுப்போர் கருதினர். எவ்வாறாயினும் இன்றைய நிலைமைகளில் ஆங்கில மொழியின் முக்கியத்துவமும் அவசியமும் பற்றிப் புதிதாக விரித்துரைப்பதற்கு எதுவுமில்லை. கடந்த காலங்களில் ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கற்பிக்கும் முயற்சிகளில் காட்டப்பட்ட அலட்சியமும் அக்கறையின்மையும் ஆங்கிலமொழியறிவில் பாரதூரமான வீழ்ச்சிக்குக் காரணமாயிற்று என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய விடயமாகும். இப்பின்புலத்தில் ஒரு துரித நடவடிக்கையாகவே ஆங்கில மொழி வழிக்கல்வி ஒரு தெரிவாகப் பரிந்துரைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இக்கொள்கையாக்கத்தின் விளைவாக, நகர்புற பாடசாலைகள் மட்டுமன்றி நாட்டின் தூரப் பிரதேசங்களிலும் பின்தங்கிய கிராமப் புறங்களிலும் கூட சில பாடசாலைகள் ஆங்கில மொழிவழிக் கல்வியைப் பல இடையூறுகளுக்கு மத்தியிலும் அறிமுகம் செய்துவருகின்றன. இன்றைய நிலைமைகளில் ஆங்கிலத்தின் தேவை அதன் முக்கியத்துவம் என்பன பற்றி மாற்றுக் கருத்துக்குப் பொதுவாக இடமில்லை என்றே கூறவேண்டும். புதிய ஜனாதிபதியின் தேசியவாத அம்சங்கள் ஒரு புறமிருக்க அவருடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் பூகோளக்கிராமம் என்ற கோட்பாட்டினால் பாரதூரமான இடர்களை எதிர் கொண்டுள்ள எமது சந்ததியினரை அதிலிருந்து காக்க அவர்களுக்கு ஆங்கில மொழியைக் கற்பிப்பது தேசியத் தேவையாகும்; இலங்கையில் சகல குழந்தைகளும் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றவர்களாக ஆக்கப்பட எதிர்வரும் 10 ஆண்டுக்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. சுருங்கக் கூறின் இன்று ஆங்கில மொழித் தேர்ச்சியை எதிர்ப்போர் எவரும் இல்லையெனலாம்.
பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம் 33

Page 19
இப் பின்புலத்தில் ஆங்கில மொழிவழிக் கல்வி தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த கொள்கை மாற்றத்தை நுணுகி ஆராய வேண்டியுள்ளது.
"ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில மொழி புதிதாக 5000 சொற்களைப் பெற்றுக் கொள்கின்றது. பிரஞ்சு மொழியில் அந்நிய மொழிகளைச் சேர்க்க முனைவோரை பிரஞ்சு அரசு தண்டிக்க முற்பட்டது. இதனால் ஆங்கில மொழியோடு ஒப்பிடும்போது பிரஞ்சு மொழி பின்தங்க நேர்ந்தது"
L.V.d5'i jJtnT6rib
"வெளி உலகைத் தரிசிப்பதற்கான பிரதான சாளரமே ஆங்கில மொழி"
-ஜவஹர்லால் நேரு"கல்விக் கடவுள் சரஸ்வதி இந்தியர்களுக்கு வழங்கிய பரிசே ஆங்கில மொழி. எனவே இந்தியர்கள் ஆங்கில மொழியின் நன்மைகளை அடைந்து கொள்ள வேண்டும்" - மூதறிஞர் இராஜகோபாலாச்சாரி
முதலில், இக்கொள்கை மாற்றத்தின் அடிப்படை நோக்கு பல்வேறு பாடசாலைப் பாடங்களை ஆங்கிலமொழி வழியில் கற்பிப்பதால் மாணவர்கள் அம்மொழியில் உயர்ந்த தேர்ச்சிகளைப் பெற்றுவிடுவர் என்பதாகும். இக்கொள்கைக்கான அடிப்படையானதொரு எடுகோளாகவும் இதனைக் கொள்ள முடியும். இத்தகைய கொள்கை மாற்றம் 1997 இல் அறிமுகம் செய்யப்பட்ட ஏனைய கல்விச் சீர்திருத்தங்கள் போன்றதன்று. கடந்தகாலக் கல்வி ஆணைக்குழுக்கள் போலன்றி, 1991 இல் நிறுவப்பட்ட தேசியகல்வி ஆணைக்குழு தனது பல்வேறு சீர்திருத்த ஆலோசனைகளைப் பல புதிய ஆய்வுகளின் அடிப்படையிலேயே செய்திருந்தது. 1999ஆம் ஆண்டு தொடக்கம் இவ்வாணைக்குழு கல்வி வாய்ப்புகள், பாட ஏற்பாடு, ஆசிரியர் கல்வி, கல்வி முகாமைத்துவம் தொடர்பான ஏராளமான ஆய்வுகளைச் செய்தது. இந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையிலேயே அதன் முன்மொழிவுகளும் அமைந்தன. ஆனால் ஆங்கில மொழிவழிக் கல்வி பற்றிய புதிய கொள்கை எதுவித ஆய்வு அடிப்படைகளைக் கொண்டதாக இருக்கவில்லை. பாடசாலையில் ஆங்கில பாடம் பற்றிய சில ஆய்வுகள் ஆணைக்
34 பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம்

குழுவால் செய்யப்பட்ட போதிலும் பயிற்றுமொழிபற்றிக் குறிப்பான ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2000ஆம் ஆண்டில் கல்வியமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமையச் சில பாடசாலைகளில் இப்பயிற்றுமொழி மாற்றம் நிகழ்ந்ததேயன்றி இது ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு கொள்கை மாற்றம் அல்ல. 2003 ஆம் ஆண்டின் ஆணைக்குழுவின் அறிக்கை இத்தகைய புதியகொள்கை தவிர்க்க முடியாத வகையில் நகர்ப்புறங்களில் உள்ள பெரிய பாடசாலைகளுக்குச் சாதகமானது என்றும் எடுத்துக்காட்டியது. குடியேற்ற ஆட்சிக் காலத்தில் இருந்தது போன்று சலுகை பெற்ற வகுப்பினர் மேலும் வலுப்பெற நேரிடும் என்றும் நாட்டில் ஏற்கனவே காணப்படுகின்ற சமூக - பொருளாதார வேறுபடுத்தல்கள் மேலும் தீவிரமடைய நேரிடும் என்றும் இக்கொள்கையை அவ்வறிக்கை விமர்சித்தது. மொழிக் கொள்கையை குறிப்பாகப் பயிற்று மொழிக் கொள்கையை மாற்றும் போது ஆங்கில அறிவைப் பெற்றுக் கொள்வதில் நியாயத்தன்மை (equity) இருத்தல் வேண்டும் என்ற கருத்து அறிக்கையில் வலியுறுத்தப்.
gil.
நாட்டின் சில பாடசாலைகளில் முதலாந்தரத்திலும் ஆங்கிலம் பயிற்று மொழியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளதைக் கருத்திற் கொண்ட தே.க. ஆணைக்குழு, அரசாங்கப் பாடசாலைகளில் ஆரம்பக் கல்வி நிலையில் சிங்களம் / தமிழ் பயிற்று மொழியாதல் வேண்டும்; ஆங்கில மொழிக்கல்வி ஆரம்ப நிலையில் இடம் பெறல் வேண்டும்; மூன்றாந்தரத்திலிருந்து முறையாக ஆங்கிலம் கற்பிக்கப்படுதல் வேண்டும் என்றும் பரிந்துரைத்தது (2003, பக்கம் 116).
இடைநிலைக்கல்வி நிலையில் கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்ப பாடம், கணனியறிவு, சமூக அறிவியல் போன்ற பாடங்களைக் கற்பிக்க ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டு இருமொழிக்கல்வி (bilingualism) மேம்படுத்தப்படலாம் என்ற ஒரு பரிந்துரையையும் ஆணைக்குழு செய்துள்ளது. இப்பாடங்கள் ஆங்கில மொழியில் கற்பிக்கப்படலாம் என்பதையே ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. எவ்வாறாயினும், இடைநிலையில் பயிற்று மொழி பற்றிய திட்டவட்டமான ஒரு பரிந்துரையைச் செய்யாது, ஆங்கிலத்தைப் பயிற்றுமொழியாக ஏற்கும் உளப்பாங்கை ஆணைக்குழுவின் மயக்கமான பரிந்துரை. களில் காணமுடியும் அதன் பரிந்துரையின்படி பாடசாலைகளில் மாணவர்கள் சில பாடங்களை ஆங்கில மொழியிலும் வேறு சில பாடங்களைச் சுயமொழியிலும் படிக்கும் நிலை ஏற்படும். அதாவது
பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம் 35

Page 20
ஒரு மாணவன் ஒரே வேளையில் இரண்டு மொழிகளைப் பயிற்று மொழியாக மேற்கொள்ள வேண்டியேற்படும். பயிற்று மொழியாகக் கொள்ளப்பட வேண்டியது ஆங்கிலமா அல்லது தாய்மொழியா என்ற கேள்விக்கு நேரடியான பதிலைத்தர ஆணைக்குழுவால் முடியவில்லை என்பதோடு பயிற்று மொழி தொடர்பாக விவாதிக்கும் பல்வேறு தரப்பினரை திருப்திப்படுத்தும் முறையிலேயே ஆணைக்குழுவின் இறுதியான பரிந்துரை அமைந்துள்ளது.
ஆங்கில மொழியைப் பயிற்று மொழியாகக் கொள்ள வேண்டுமென்று வாதிடுபவர்கள் அதனுடாக மாணவர்கள் சிறந்த ஆங்கில மொழித் தேர்ச்சியைப் பெற்றுக் கொள்வர் எனக் கொள்கின்றனர். அவர்களுடைய நோக்கில் ஆங்கிலமொழியறிவு இன்றைய உலகமயமாக்கப்பட்ட சூழலில் அத்தியாவசியமானது, ஆங்கிலத்தை ஒரு பாடமாக கற்பிக்கும் கொள்கை தோல்வியடைந்து விட்டது ; பாடசாலைகளில் நடத்தப்படும் பல பொதுப் பரீட்சைகளில் ஆங்கிலத் தேர்ச்சி மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. (கொழும்புப் பல்கலைக்கழக தேசிய கல்வி ஆராய்ச்சி மதிப்பீட்டுநிலையம் நடத்திய ஆய்வொன்றின்படி நாலாந்தர மாணவர்களில் 10 சதவீதமான மாணவர்களே ஆங்கில மொழியில் தேர்ச்சிமட்டத்தைப் பெற்றிருந்தனர் (2003)
இந்நிலையில் 'ஆங்கில மொழியை ஒரு பாடமாகக் கற்பித்து அம்மொழியில் தேர்ச்சியை ஏற்படுத்திவிட முடியாது. இந்தியா போன்ற நாடுகளில் பல தரப்பினரும் ஆங்கிலம் புலமை மிக்கவர்களாகக் காணப்படக் காரணம் அவர்கள் ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்டு தமது முழுக் கல்வியையும் பெற்றமையே. எனவே ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாக்கிவிட்டால், ஆங்கிலமொழித் தேர்ச்சி தொடர்பாக நிலவும் மனிதவளப் பற்றாக்குறையை நீக்கிக் கொள்ளலாம்; வெளிநாடுகளில் உயர்கல்வி பெறவும், தொழில்வாய்ப்புகளைப் பெறவும் ஆங்கிலமொழித் தேர்ச்சி கட்டாயம் தேவை; எனவே பாடசாலை நிலையில் ஆங்கிலமொழியைப் பயிற்று மொழியாக்குவதே உகந்தது. அத்துடன் அறிவுசார்ந்த நூல்கள் சஞ்சிகைகள், இணையத் தளங்கள் குறுந்தட்டுக்கள் போன்ற எல்லாமே ஆங்கில மொழியில் இருப்பதால், பயிற்று மொழியாக ஆங்கிலம் வந்துவிட்டால், கல்வித் தராதரங்கள் உயர்ந்து செல்லவும் அதிக வாய்ப்புகள் உண்டு; சுயமொழிகளில் பயிலுவதன் காரணமாகவே பல்கலைக்கழகத் தராதரங்கள் யாவும் வீழ்ச்சியடைந்து விட்டன; 1960 க்கு முன்னர் பல்கலைக்கழகத்திலே
36 பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம்

ஆங்கிலம் பயிற்று மொழியாக இருந்தபோது உயர்ந்து காணப்பட்ட கல்வித்தராதரங்கள் பின்னர்வந்த "சுயபாஷாக்" கொள்கையால் வீழ்ச்சியடைந்து விட்டன, என்ற முறையில் இன்றும் கூட வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.
மேலே முன்வைக்கப்பட்ட வாதங்களுக்குச் சரியான அடித்தளம் இல்லையென்பது எமது கருத்து. ஆங்கிலேயர் காலத்தில் பாடசாலை சென்ற மாணவர்களில் 5-10 சதவீதமான மாணவர்களே ஆங்கிலவழியில் கல்விகற்றனர். அம்மொழியில் கற்ற சகலரும் ஆங்கிலமொழியில் பெரிய உச்சங்களை எட்டிவிடவில்லை என்றும் அவர்கள் மத்தியில் கூட ஆங்கிலத் தேர்ச்சியின் அடிப்படையில் பிரிவுகள் இருந்தமை பற்றிப் பேராசிரியர் J.E.ஜெயசூரியா எடுத்துக் கூறியுள்ளார். ஆங்கில வழிக்கல்வியினால் அக்காலத்தில் அதிகம் பயனடைந்தவர்கள் ஆங்கிலத்தை வீட்டு மொழியாகக் கொண்ட உயர்வர்க்கத்தினரே என்ற கருத்து முக்கியமானது. அவ்வாறு கற்றவர்களில் பெரும்பாலானவர்கள் தமக்கு முக்கியமாகக் கிடைத்த இலிகிதர் பதவிக்கே சென்றனர். சுருங்கக் கூறின் அக்கால ஆங்கிலக் கல்வி வெறுமனே ஆங்கில மொழித் தேர்ச்சியை வழங்குவதை இலக்காகக் கொண்டதேயொழியக் கல்வியின் உயர்தரமான நோக்கங்கள் பலவற்றை உள்ளடக்கியிருக்கவில்லை.
இவ்வகையில் பாடசாலைக் கல்வியானது ஆங்கில மொழித் தேர்ச்சியை மட்டும் நோக்கமாகக் கொள்வதை ஏற்றுக் கொள்வதற்கில்லை. காலனித்துவ காலத்தின் தேவைகளுக்கு இந்தநோக்கு பொருத்தமானதாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்கள், சமூகப் பிரச்சினைகள் இளைஞர் மத்தியில் காணப்படும் விரக்திகள், கிளர்ச்சிப் போக்குகள்,நாட்டில் காணப்படும் இனமுரண்பாடுகள், நாட்டின் வளங்கள் விரயமாக்கப்படுதல், உலகமயமாக்கம் எற்படுத்திவரும் பிரதிகூலமான தாக்கங்கள், மனித உரிமைகளும் சனநாயகத் தத்துவங்களும் பெற்றுவரும்
"ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாக்கிஅதற்காக வளங்களை ஒதுக்குவது பற்றிக் கூறும்போது . ፍ»® சிலர் மட்டும் ஆங்கிலக்கல்வி பெற வாய்ப்பளிப்பது சமூக அநீதிக்கு வழிவகுக்கும். அதற்காகத் தேசிய வளங்களை ஒதுக்குவது ஒரு சமூகக்குற்றம் ; இதனால் பாரதூரமான விளைவுகளே ஏற்படும்'
-ஆர்.ஏ.ஜயவீர
பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம் 37

Page 21
முக்கியத்துவம், உலகளாவிய ரீதியிலும் தேசிய ரீதியிலும் பெருகிவரும் வன்செயல்கள், இப் பின்புலத்தில் யாவருடனும் ஒன்றுகூடி வாழ்தல் மற்றும் உயர்ந்த வாழ்க்கை விழுமியங்களின் முக்கியத்துவம், அறிவு பன்மடங்காகப் பெருகி வருவதால் கற்பதற்குக் கற்றல் என்ற புதிய தேர்ச்சிக்கு வழங்கப்படும் முக்கியத்துவம், வாழ்நாள் முழுவதும் கற்பதற்கு இளையோரை ஆயத்தம் செய்ய வேண்டிய அவசியம் போன்ற இன்னோரன்ன விடயங்கள் பாடசாலைக் கல்வியின் நோக்கங்களை உருவாக்கும் செயற்பாட்டில் செல்வாக்கு மிகுந்தவையாக உள்ளன. இவற்றினடிப்படையில் இன்று பல்வேறு தேர்ச்சிகளையும் திறன்களையும் வழங்கும் நோக்குடன் கல்விமுறைகள் மறுசீரமைக்கப்பட்டு வருகின்றன.
1997 ஆம் ஆண்டில் சீர்திருத்தங்களும் புதிய நூற்றாண்டுக்கான கல்விப்பற்றிய டெலோர்ஸ் அறிக்கையும் (1996) பல்வேறு அடிப்படைத் தேர்ச்சிகளை வலியுறுத்துகின்றன. டெலோர்ஸ் அறிக்கையானது கல்வியின் நான்கு பிரதான தூண்களைப் பற்றி 6.65ulpigsglassinogi. 91s56)!gbibgbdis absinai (Learning to know), Gafliogfigdis Eibno6i (Learning to do), 6). Typéis abiososi (Learning to be), Djibm6Jífát5656öt ởnạ6)Typ&bibIsIp6io (Learning to live together), என்ற நான்கு பிரதான தூண்களைப் பற்றி இவ்வறிக்கை வழியுறுத்துகின்றது. தனியார், நாடுகள், மனிதகுலம் - இவற்றின் எதிர்கால முன்னேற்றத்துக்கு வாழ்நாள் முழுவதும் கல்வி ஆற்ற வேண்டிய மிக முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பைப் பற்றி இவ்வாவணம் விரிவாக எடுத்துரைக்கின்றது.
2003 ஆம் ஆண்டுக்குரிய தேசிய கல்வி ஆணைக்குழு பரிந்துரைக்கும் ஏழு தேர்ச்சிகள் இவ்விடத்து முக்கியமானவை . esg960D6)JLI IAT6)I60T:
1. தொடர்பாடல் தொடர்பான தேர்ச்சிகள்
ஆளுமை விருத்தி தொடர்பான தேர்ச்சிகள்
சுற்றாடல் தொடர்பான தேர்ச்சிகள்
உழைக்கும் உலகில் வாழ்வதற்குத் தேவையான தேர்ச்சிகள். சமயம், ஒழுக்கம் தொடர்பான தேர்ச்சிகள்
ஒய்வு நேரம், விளையாட்டு தொடர்பான தேர்ச்சிகள்
கற்பதற்குக் கற்றல் தொடர்பான தேர்ச்சிகள்.
38 பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம்

இவ்விரு அறிக்கைகளும் வலியுறுத்திக்கூறும் தேர்ச்சிகளை முழுக் கல்வி முறையையும் கருத்திற் கொள்ள வேண்டியதன் அவசியத்தை இவ்விடத்து விரிவாக வலியுறுத்திக் கூற வேண்டிய அவசியமில்லை. எவ்வாறாயினும் ஆங்கில மொழித் தேர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் வழங்குகின்ற முன்கூறப்பட்ட வாதம் முற்றாகவே மனித வாழ்க்கைக்கும் அதன் மேம்பாட்டுக்கும் தேவையான அதிமுக்கியத்துவம் வாய்ந்த தேர்ச்சிகளைக் கருத்திற் கொள்ளவில்லை என்பதை இங்கு வலியுறுத்திக்கூற விரும்புகின்றோம். எடுத்துக்காட்டாகப் பிள்ளைகள் நிலைத்து நிற்கும் அபிவிருத்தி, சுற்றாடல் பாதுகாப்பு, விஞ்ஞானம் மற்றும் கணிதம் தொடர்பான அடிப்படைத் தத்துவங்களை விளங்கியிருப்பது ஆங்கிலமொழித் தேர்ச்சியைவிட அவசியமானது என்பதோடு அத்தகைய அறிகைவிருத்தி தாய்மொழியினூடாகக் குறுகிய காலத்தில் இலகுவில் வழங்கப்படக்கூடியது. எனவே ஆங்கிலத் தேர்ச்சிக்கு அப்பாற்பட்ட பல அடிப்படையான கல்விசார் நோக்கங்களை இத்தருணத்தில் மறுப்பதற்கில்லை என்பதுடன் ஆங்கிலத்தேர்ச்சிக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் காரணமாக இவ்வுயரிய கல்விநோக்கங்கள் புறந்தள்ளப்படுகின்ற நிலைமையும் உண்டாகின்றன.
மேலும், ஆங்கில மொழியிலான தேர்ச்சியானது பாடசாலையில் கற்பிக்கப்படும் வழமையான பாடங்களில் தேர்ச்சியை அதிகரிக்கும் வகையில் ஏதேனும் ஒரு புதிய பங்களிப்பைச் செய்ய முடியுமா என்ற வினாவும் எழுகின்றது. இலங்கை தொடர்பான எமது மற்றொரு முக்கிய அனுபவத்தை இவ்வேளயிைல் சுட்டிக் காட்டுவது இன்றியமையாதது. வீட்டில் 1-5 வயதுவரை தாய்மொழியில் பெற்ற தேர்ச்சி, அதன் பின்னர் பாடசாலையில் தாய்மொழியையும் தாய்மொழியிலும் பாடங்களைக் கற்கும் வாய்ப்புக் கிடைக்கப்பெற்ற எமது மாணவர்கள், பல்வேறு பாடங்களில் பெற்றிருக்கும் தேர்ச்சி மிகவும் வீழ்ச்சி நிலையில் காணப்படுகின்றது. குறிப்பாகக் கணிதம் விஞ்ஞானம் சமூகக்கல்வி ஆகிய பாடங்களைத் தாய்மொழியில் பயின்றாலும் அவர்களுடைய தேர்ச்சி குறைந்த நிலையில் இருப்பதைப் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
පද්ද 2003 இல் தே.க.ஆ.ம.நிலையம் நடத்திய ஆய்வொன்றின்படி நான்காம் தரமாணவர்களில் 38 சத வீதமானவர்களே எண்ணறிவுத் திறன்களைப் பெற்றிருந்தனர்.
பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம் 39

Page 22
※ இவ்வாய்வின்படி முதன் மொழியில் 37 சதவீதமானவர்களே
தேவையான தேர்ச்சிகளைப் பெற்றிருந்தனர்.
ck 2002 இல் க.பொ.த. சா/த பரீட்சையில் முழுமையாகச் சித்தியடைந்தவர்கள் சதவீதம் 37 சதவீதம் மட்டுமே.
k இதேயாண்டில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் முழுமையாகச்
சித்தியடைந்தவர் சதவீதம் 56 ஆகும்.
sk க.பொ.த சா/த பரீட்சையில் ஒருபாடத்தில் சித்தியடையாதோர்
தொகை ஆண்டு ரீதியாகக் கீழே தரப்பட்டுள்ளது.
1995 34,000G8 li
1996 22.880 (Buff
1997 AA 23,700 GBl Iii
3k க.பொ.த உ/த பரீட்சையில் ஒரு பாடத்தில் கூட
சித்தியடையாதோர் தொகை பின்வருமாறு
1995 7,400 பேர்
1996 4,400 (3L ii
1997 5,900 பேர்
சுயமொழிகளில் 13 ஆண்டுகள் பயின்ற மாணவர்களின் க.பொ.த உ/ த பரீட்சை சித்தியின்மை வீதங்கள் (2004)
LITLI556ir சித்தியின்மை பாடம் சித்தியின்மை
வீதம் வீதம்
1. பெளதீகம் 40.5% 6. புவியியல் 13.7%
2. இரசாயனம் 4925% 7. பொருளியல் 36.0%
3.66ld-Iru 66.67% 8. வியாபாரக்கற்கை 99%
விஞ்ஞானம்
4. உயிரியல் 24.5% 9. கணக்கியல் 28.6%
5. கணிதம் 45.4%
ஆதாரம் : பரீட்சைத் திணைக்களப் புள்ளிவிபரங்கள் (2005)
40
பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம்

தாம் பிறந்தது முதல் வீட்டிலும் பாடசாலையிலும் பேசி, கற்றுப் பழக்கப்பட்டு வந்த மொழியில் பயின்ற மாணவர்களின் தேர்ச்சிநிலை இவ்வாறென்றால் ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொள்வதால் கல்வித் தராதரங்கள் எவ்வாறு மேம்பாடடைய முடியும்? எமது நோக்கில் விரிவான முறையில் ஆங்கிலம் பயிற்று மொழியாக அறிமுகம் செய்யப்படுமிடத்து, தற்போது, பல சிரமங்களுக்கு மத்தியில் படிப்படியாக முன்னேற்றமடைந்து வந்த கல்வித் தராதரங்கள் வீழ்ச்சியடையும் வாய்ப்புகள் ஏராளம் உண்டு. ஆங்கிலத்தை வீட்டுப் பின்புலமாகக் கொள்ளாத பெற்றோர்கள் பல சந்தர்ப்பங்களில் இவ்வுண்மைகளை அறிவதற்கான வாய்ப்புகளின்றித் தமது பிள்ளைகளுக்கு ஆங்கிலக் கல்வியை வழங்க விரும்புகின்றார்கள்; பெற்றோரின் பல்வேறு நிர்ப்பந்தங்களும் கோரிக்கைகளும் பயிற்றுமொழி பற்றிய புதிய கொள்கை மாற்றங்களுக்குக் காரணமாக இருந்து வந்துள்ளன என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது. பாடசாலைக்குச் செல்லும் பிள்ளை தான் 1-5 வயதுவரை வீட்டிலும், சூழலிலும் கற்றுக் கொண்ட தாய்மொழியைத் தனது கல்வி மேம்பாட்டுக்குப் பயன்படுத்தாமல், ஒரு அந்நிய மொழியைப் புதிதாகப் பயின்று அதில் கல்விகற்க முற்படும்போது எதிர்நோக்கக் கூடிய இடர்பாடுகளை விரிவாகச் சுட்டிக்காட்ட வேண்டியதில்லை. இவ்வாறு அந்நிய மொழியில் கல்விகற்க முயன்ற பல சமூகங்கள் தமது இயற்கையான வளர்ச்சிக்குத் தடைகளை ஏற்படுத்திக் கொள்வதாகக் கல்வியாளர்கள் கருதுகின்றனர். தாய்மொழியே பிள்ளைகளின் இயற்கையான பயிற்றுமொழி என்பது அவர்களுடைய முடிபு.
ஆங்கிலம் போன்ற உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த அந்நிய மொழிகளைக் கற்பது பற்றி ஆராய்ந்த பல ஆய்வாளர்கள், தாய்மொழியை முறையாகக் கற்றவர்கள் தான் அந்நியமொழிகளை முறையாக கற்றுக் கொள்ள முடியும் என்ற ஒரு அடிப்படையான கருத்தை தெரிவிக்கின்றனர். 2001 இல் ஜெனிவாவில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் இவ்விடயம் ஆராயப்பட்டபோது, தாய்மொழியைப் பயிற்றுமொழியாகக் கொள்வது என்பது, சமூக, கலாசார
"உள்ளுர்மொழியைப் பயன்படுத்தி நவீனமாகிய நாடுகள் ஜப்பான், சீனா, கொரியா, ரஷ்யா, ஈரான், துருக்கி என்பன; கல்வியிலும் விஞ்ஞான ஆராய்ச்சியிலும் வர்த்தகம் மற்றும் நிர்வாகத்துறையிலும் பயன்படுத்தப்பட்ட இம்மொழிகள் சமூகங்கள் ஒன்றிணைக்கவும் உதவின
பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம் 41

Page 23
மற்றும் கல்விசார் காரணங்களைப் பொறுத்த வரையில் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததென முடிவுசெய்தது. "ஓர் உலகளாவிய மொழியானது சர்வதேசத் தொடர்பாடலில் ஏகபோக உரிமையைக் கொள்ளுமிடத்து அதனால் மொழி மற்றும் கலாசாரப் பன்மைத்துவம் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகின்றது; தாய்மொழியுட்படப் பிற மொழிகளைக் கற்பதற்கான ஊக்கம் சிதைக்கப்படுகிறது," அறிவையும் விழுமியங்களையும் மக்களுக்கு வழங்குவதைப் பொறுத்தவரையில் உயர்ந்த மொழி, இழிந்த மொழி என்ற முறையில் மொழிகளைப் பாகுபடுத்த முடியாது என்றும் இந்த ஜெனிவா மகாநாடு வலியுறுத்தியது. பல நாடுகளின் கல்வி முறைகளில் தாய்மொழிக்கு உயர்ந்த முன்னுரிமை வழங்கப்படுவதற்குக் காரணம் அவை வெறுமனே தொடர்பூடகம் மட்டுமன்றி அவை குறிப்பிட்ட மக்கள் குழுவினரின் உரையாடலுக்கான மொழி என்பதோடு, அமைதியான முறையில் பிணக்குகளைத் தீர்ப்பதற்கான மொழி என்றும் இம்மகாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. அடிப்படையில் இம்மகாநாடு யாவரும் இணைந்து வாழ்வதற்குக் கல்வி முறைகள் எவ்வாறு பங்களிப்பைச் செய்யலாம் என்னும் விடயம் பற்றியே ஆராய்ந்தது.
இந்த மகாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஓர் அறிக்கையானது, பல மொழிகளைப் பேசும் ஆற்றல் மிக்கவர்கள் இன்னும் கூடியளவுக்கு மனிதத் தன்மையைப் பெறுகின்றார்கள்" என்ற செக்கோஸ்லாவாக்கிய பழமொழியை நினைவூட்டுகின்றது. இத்தகைய பழமொழியை உருவாக்கிய அந்நாட்டில் மாணவர்கள் "பிற மொழி. களைக் கற்பதில் ஆர்வத்தை ஏற்படுத்தும்" நோக்குடன் தமது சொந்த மொழியில் தொடர்பாடல் ஆற்றலைப் பெற வேண்டும் என்ற கருத்துடன் மொழிக்கல்வி ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அந்நாட்டின் பாடசாலைக் கல்வியில் ஆங்கிலத்தோடு வேறுபல வெளிநாட்டு மொழிகளையும் பிள்ளைகள் கற்க வேண்டியிருப்பதால் முதற்கட்டமாகத் தாய்மொழிக்கல்வி வலியுறுத்தப்படுகின்றது. குறிப்பாக, அந்நாட்டில் அண்டை நாடுகள், தேசிய சிறுபான்மையினர்கள் மற்றும் ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த பல்வேறு மொழிகள் மாணவருக்கும் தெரிவுகளாக வழங்கப்படுகின்றன. 95g/L.67 g65dibgp60.607, 6 fajibgb60607 (Convergent and divergent teaching) எனக் கல்வியாளர்கள் வலியுறுத்தும் கற்பித்தல் முறைகளைப் பொறுத்தவரையில் குவி சிந்தனைக் கற்பித்தலானது பிள்ளைகளின் தாய்மொழிக்கே முக்கியத்துவம் வழங்குகின்றது.
42 பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம்

"தாய்மொழியில் கல்வி வழங்கச் சகல முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்பது முக்கியமானது.
கல்வியியல் காரணங்களின் அடிப்படையில் முடிந்த அளவு கல்விநிலையின் இறுதிவரை தாய்மொழியைப் பயன்படுத்த வேண்டும் என நாம் பரிந்துரைக்கின்றோம். குறிப்பாக, பாடசாலைக் கல்வியை ஆரம்பிக்கும்போது மானவர்கள் தாய் மொழியில் பயிலத் தொடங்குதல் வேண்டும்; ஏனெனில் அவர்கள் அதனையே மிகச் சிறப்பாக விளங்கிக் கொள்வர்; அத்துடன் பாடசாலை வாழ்க்கையைத் தம் தாய் மொழியில் தொடங்குவதால், பாடசாலைக்கும் இல்லத்திற்குமிடையே உள்ள இடைவெளி மிகவும் குறையும்.
-UNESCO (1951) pp 688-716
இக்கருத்தைக் கூறும் ஆய்வாளரான Sambatraore என்பார் தாய்மொழியில் எழுதும் திறன்போன்ற முக்கியமான திறன்களில் தேர்ச்சி பெற்ற பின்னரே பிள்ளைகளுக்கு இரண்டாம் மொழி. யொன்றைக் கற்பிப்பதுபற்றிச் சிந்திக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அவரது நோக்கில், சகல வகையான கற்றலுக்கும் தேவையான உளப்பாங்குகள், உளச் சார்புகள் மற்றும் நடத்தைகளையும் பிள்ளைகளில் வளர்க்க உதவும் ஒரே மொழி தாய்மொழியே. தாய்மொழியானது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கு இடையிலும் அவர்களுக்குள்ளும் நம்பிக்கையையும் இசைவாக்கத்தையும் உருவாக்குகின்றது என்றும், பிள்ளைகள் தம்மைச் சுற்றியுள்ள உலகை ஆராய்வதற்கான சிறந்ததொரு வாய்ப்பினை வழங்குகின்றது என்றும் மாணவர்களின் மனத்தடைகளை அகற்றி அவர்களுடைய கற்பனை வளத்தையும் படைப்பாற்றலையும் விருத்தி செய்கின்றது என்பதும் இவ்வறிஞரின் கருத்தாகும். ஒரு பிள்ளை தனது மொழியில் எழுதவும் வாசிக்கவும் கணிக்கவும் கற்றுக் கொள்ளுமிடத்து இரண்டாம் மொழியொன்றைக் கற்கும் பொழுது அதே திறன்களையே பயன்படுத்துகின்றது. இதனால் பிள்ளை தனது மொழி, தனது கலாசாரம், தன்னைச் சூழவுள்ள உலகு என்பன பற்றிய தெளிவான விழிப்புணர்வைப் பெறுகின்றது என்ற அவரது கருத்து தாய்மொழிக் கல்வியின் முக்கியத்துவத்தை மிகக் கூடியளவுக்கு வலியுறுத்துவதாகும் எனக் கொள்ளுதல் வேண்டும்.
பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம் 43

Page 24
ஒரு தனியாளின் தாய் மொழியின் விருத்தியை விட, ஒரு மொழி பேணிப் பாதுகாக்கப்படல் வேண்டும் என்பதை விட தனியாட்கள் வலுப்படுத்தப்படல் வேண்டும் என்பது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.
-Anthea Fraser Gupta(1997)-
மறைந்த சோவியத் யூனியனின் பொதுவுடமைப் புரட்சிக்குப் பிந்திய வரலாற்றில் (1917இல்) எழுத்து வடிவமில்லாத பல மொழிகளுக்கு அவ்வடிவம் வழங்கப்பட்டு அவை பின்னர் பயிற்று மொழிகளாகப் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. சுவிற்சலாந்தில் பேசப்படும் ஜேர்மன், இத்தாலி, பிரான்சிய மற்றும் ரோமனாச் ஆகிய நான்கு மொழிகளும் அவ்வம்மொழிக்குழுவினரின் பயிற்று மொழியாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் மொழியடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டு அவ்வம் மாநில மொழிகளுக்குப் பயிற்று மொழி அந்தஸ்து வழங்கப்பட்டாலும், அம்மாநிலங்களில் வாழ்கின்ற சிறுபான்மையினர் தமது தாய்மொழியில் கல்வி பெற உரிமை படைத்தவர்கள். உதாரணமாக, தமிழ்நாட்டில் கேரள மாணவர்கள் மலையாள மொழியிலும் கேரள மாநிலத்தில் வாழ்கின்ற தமிழ்ப் பிள்ளைகள் தமிழ்மொழியிலும் மும்பையிலும் புதுடில்லியிலும் வாழும் தமிழ்ப் பிள்ளைகள் தமது தாய்மொழியிலும் பயிலுவதற்கான பாடசாலை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் எவ்வாறு, சிறபான்மையினர்கள் தாய்மொழியல்லாத மொழிகளில் கற்க நேரிட்டுள்ளது என்பதைப் பின்னிணைப்பு II விளக்குகின்றது.
இலங்கையில், நீண்டகாலமாகத் தமிழ், சிங்களம் ஆகிய மொழிகள் ஆரம்ப நிலைக் கல்வியில் பயிற்று மொழியாகப் பயன்படுத்தப்பட்டு, சுதந்திரத்தின் பின்னர் அம்மொழிகள் படிப்படியாக, இடைநிலைக்கல்விக்கும் (க.பொ.த.சா.த, உ/த) உயர்கல்விக்கும் விரிவுசெய்யப்பட்டது. இந்நிலைகளில் கலைத்துறைப் பாடங்களில் மட்டுமன்றிக் காலப்போக்கில், விஞ்ஞானத்துறைப் பாடங்களும் கற்பிக்கப்படலாயின. இத்தகைய நோக்கினை வெற்றி. கரமாக நிறைவு செய்யும் முகமாக ஏராளமான கலைச்சொல் அகராதிகள் தயாரிக்கப்பட்டன. அரசகரும மொழித் திணைக்களம் இத்துறையில் பெரும் பணி ஆற்றியது. புவியியல், பொருளியல், வரலாறு, மெய்யியல் போன்ற பாடத்துறைகள் சார்ந்த அடிப்படையான ஆங்கிலப் பாடநூல்கள் பல தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில்
44 பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம்

மொழிபெயர்க்கப்பட்டன. ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில், பல்கலைக்கழகங்களில் கல்வியியல் கற்கை நெறிகள் அனைத்தும் சுயமொழிகளில் வழங்கப்படலாயின. 1970 களில் க.பொ.த உ/ நிலையில் விஞ்ஞான பாடங்களும் 1960 களில் பல்கலைக்கழகங்களில் சமூக அறிவியல் பாடங்களும் சுயமொழிகளில் கற்பிக்கப்படலாயின. சமூக அறிவியல் மற்றும் கல்வியியல் துறைகளில் பட்டமேற்படிப்புக் கற்கை நெறிகளும் சுயமொழிகளில் வழங்கப்படலாயின. கடந்த நான்கு தசாப்தகாலத்தில் இத்தகைய முயற்சிகளின் காரணமாக இரு சுயமொழிகளும் கல்வித்துறையில் பயிற்று மொழியாக ஓர் உறுதியான இடத்தையும் வளர்ச்சியையும் பெற்றுவிட்டமையை மறுப்பதற்கில்லை. மேலை நாட்டு சமூக அறிவியல் மற்றும் இயற்கை அறிவியல் சிந்தனைகளை இன்று சரளமான முறையில் சுயமொழிகளில் வழங்கலாம் என்ற நிலை உருவாகி இம்மொழிகள் நவீன மொழிகளாக வளர்ச்சி பெற்றுள்ளன.
நவீன விஞ்ஞானங்கள், இந்தியாவைப் பொறத்தவரையில், உள்ளுர் சிந்தனையாளரால் உருவாக்கப்படவில்லை. இந்திய ஆட்சியாளர்கள் எப்போதும் மக்கள் மொழியை விடுத்து அந்நிய மொழிகளையே பேசினர். சமஸ்கிருதம், பாரசீகம், ஆங்கிலம் என்பன, சமகால இந்தியாவில் உயர் குழாமானது (elite) ஆங்கிலத்தைப் பேணவே விரும்புகின்றது. ஆங்கிலப் பயிற்சி இருப்பதால் உயர்குழாமிடமே яр-шії தொழில்கள் 63 Luiruil ár சேருகின்றன. மற்றவர்கள் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற உயர்குழாம் ஒரு போதும் உதவப் போவதில்லை.
-Poggy Mohan
ஜெர்மனியில் உள்ள சில உயர்கல்வி நிலையங்கள் ஆரம்ப ஆண்டுகளில் ஆங்கில மொழிமூலம் கற்பித்துப் பின்னர் ஜெர்மன் மொழியைப் பயிற்று மொழியாகக் கொள்கின்றன. இலங்கையில் ஆங்கிலத்தில் கற்பித்துக் கொண்டு சென்று இறுதிப் பரீட்சையைச் சுயமொழிகளில் எழுத அனுமதிக்கும் உயர்கல்விக் கற்கை நெறிகள் 260 GB:
இவ்வகையான சுயமொழிக்கல்வியினால் விஞ்ஞான அறிவும் உயர்கல்வியறிவும் நாடெங்கும் பரவும் வகை செய்யப்பட்டது. ஆங்கிலப் பின்புலம் அற்றோரும் இத்துறைகளில் கல்விவாய்ப்பு
பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம் 45

Page 25
களைப் பெற்றும் தமது சமூக, பொருளாதார நிலைகளை உயர்த்திக் கொள்ளவும் முடிந்தது. சுருங்கக் கூறின், தரமான பாடசாலைக் கல்வி, உயர்கல்வி என்பனவற்றை வழங்குவதற்குப் பொருத்தமான முறையில் சுயமொழிகள் வளர்ச்சிபெற்றுவிட்டன என்ற கருத்தும் விரிவடைந்துவந்தது அண்மைக்காலங்களில் கல்வியின் தராதர விருத்திக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு அதற்கான பல கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. கல்வித் தராதரங்களின் வீழ்ச்சிப்போக்கு பற்றி ஆராய்ந்தவர்கள் பாடசாலைத் தலைமைத்துவத்தின் குறைபாடு, முகாமைத்துவத் திறமைக் குறைவு, ஆசிரியர் கல்வியில் காணப்படும் குறைபாடுகள், கற்பித்தல் முறைகளிலும் கற்பித்தல் சாதனங்களிலும் காணப்படும் குறைபாடுகள், பிள்ளைகளின் பின்தங்கிய சமூக பொருளாதார நிலை என்பனவறை இனங் காண்கின்றார்களேயொழிய பயிற்று மொழிகளை சுயமொழியை ஒரு காரணமாக கூறவில்லை. அதாவது சுயமொழிக் கல்வியினை அறிமுகம் செய்தற்கும் பாடசாலைக் கல்வியின் தராதரங்கள் குறைந்து காணப்படுவதற்கும் எதுவித தொடர்பும் இல்லை. இக்கல்வித் தராதரங்களை மேம்படுத்துவதற்குப் பயிற்று மொழியை மாற்றுதல் எந்த வகையிலும் பொருந்துவதாக இருக்க முடியாது என்பது எமது கருத்து.
எவ்வாறாயினும் ஆங்கில மொழியில் கல்வி மேம்பாட்டுக்குத் துணையாக இருக்கக் கூடிய ஏராளமான கற்றல் சாதனங்கள் இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆங்கிலத்தில் பயிலுவோருக்குப் பொதுத்துறை மற்றும் வெவ்வேறு பாடத்துறைசார்ந்த ஏராளமான நூல்களும் சஞ்சிகைகளும் இருப்பது உண்மையே. எடுத்துக்காட்டாக, ஆங்கில மொழியில் பயிலும் ஆரம்பக் கல்விநிலையைச் சேர்ந்த பிள்ளைகளுக்கும் தெரிவுசெய்யக்கூடிய பல பாடநூல்கள் இருக்கின்றன. க.பொ.த உயர்நிலை வகுப்புகளுக்கான ஏராளமான கற்றல் சாதனங்கள் பாடநூல்கள் என்பன ஆங்கில மொழியில் கிடைக்கப்பெறுகின்றன. இவற்றைவிட இணையத்தளத்தில் காணப்படும் அனைத்தும் ஆங்கில மொழியிலேயே உள்ளன.
சுயமொழிகளில் அரச பாடசாலைகளில் பயிலுவோருக்கு விதிக்கப்பட்ட ஒரு பாடத்துக்கு ஒரு பாடநூலே உண்டு. இத்தகைய ஏற்பாடு கடுமையாக விமர்சிக்கப்பட்டமையால் தற்பொழுது ஒரு பாடத்துக்குப் பலபாடநூல்கள் இருக்கும் முறை பின்பற்றப்படுகின்றது.
இப்புதிய ஏற்பாடுகள் ஆங்கில வழியில் கல்விபெறும், பிள்ளைகளுக்குக் கிடைக்கும் வசதிகளுடன் எந்த வகையிலும் ஒப்பிடப்பட
46 பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம்

முடியாதவை. இலங்கையில் பல பாட நூல்கள் தமிழ் மொழி, சைவசமயம் தவிர்ந்த ஏனைய பாடநூல்கள் அனைத்தும் சிங்கள மொழியிலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கப்பட்டவை. இருநாடுகளிலும் இந்தியப் பாடசாலைகளில் பயன்படுத்தப்படும் சுய மொழிப் பாடங்கள் அனைத்தும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டவை. இவ்வாறு மொழிபெயர்க்கப்பட்ட பாடநூல்கள் பற்றி விமர்சனங்கள் எழுந்தன. அரசபாடசாலையில் பயிலும் பிள்ளைகள் எதிர்நோக்கும் மேலதிகமான ஒரு பிரதிகூலமாகவும் இது கருதப்படுகின்றது. ஆங்கிலவழிப் பாடசாலைகளில் பல பாடநூல்களுள் ஒன்றைத் தெரிவுசெய்யும் வசதிபிள்ளைகளுக்கு இருப்பது போல சுயமொழியில் பயிலுவோருக்கு இல்லை. இவ்வாறு ஆங்கில மொழி. யில் பயிலுவோருக்கு உள்ள இத்தகைய வாய்ப்புகளை விரிவாக வலியுறுத்த வேண்டியதில்லை.
"உகலாவிய தொடர்பு மொழியாக ஆங்கிலம் பிரபல்யமடைந்து வருவதைத் தொடர்ந்து, நோர்வே நாட்டின் உயர்கல்வி நிலையிலும் ஆராய்ச்சித் துறையிலும் ஆங்கில மொழி விரிவாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் நோர்வீஜியன் மொழிப் பண்பாடும் கலைச்சொல்லாக்கமும் குறைந்து செல்லும் அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆங்கிலம் மட்டும் தெரிந்தவர்கள் - நோர்வே மொழி அறிவற்றவர்கள் உயர்கல்வித்துறையில் ஆதிக்கம் செலுத்தும் நிலை நோர்வேயில் தோன்றியுள்ளது.
-International Review of Education,
July, 2001
பாடநூல்களில் சிறந்தனவற்றைப் பெறுகின்ற வாய்ப்பு ஆங்கிலவழியில் பயிலும் பிள்ளைகளுக்கு இருப்பதை ஏற்றுக் கொள்ளும் அதேவேளையில் கல்வி ஆய்வாளர்கள் கூறும் மற்றொரு விமர்சனத்தையும் மனங்கொளல் அவசியம் "பரீட்சைக்கான அடித்தளமாகப் பாடநூல்களைப் பயன்படுத்தும் மரபுக்கு அப்பால், பிள்ளைகள் 9inj606ith Gupatiairporifab6ft (Receiver of knowledge) 6T6ip வழமையான எமது பார்வைக்கு அப்பால் பாடசாலைக்கல்வி ஒரு மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருத்தல் வேண்டும் என்று gig5u IITGisi G66fsibgs "Learning without Burden" (1990) 6T6ip அறிக்கை எடுத்துக்கூறுகின்றது. பாடநூல்களைப் பயன்படுத்தி எல்லா விடயங்களையும் பிள்ளைகளுக்குக் கற்பித்து விடவேண்டும்

Page 26
ஆங்கிலத் பேசாத சில ஐரோப்பிய நாடுகள்( பிரான்ஸ். ஜெர்மனி, சுவீடன்) வெளிநாட்டு மாணவர்களைக் கவருவதற்காக வர்த்தக நோக்கில் ஆங்கில மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்ட கற்கை நெறிகளை ஆரம்பித்துள்ளன. ஐக்கிய அமெரிக்காவுக்கு வெளிநாட்டுச் செலாவணியை ஈட்டித்தரும் ஒரு முக்கிய துறை உயர்கல்வி.
என்ற எண்ணத்திற்குக் காரணம் பிள்ளைகளின் சொந்தப் படைப்பாற்றல் மற்றும் இயல்பூக்கத்திலும் பிள்ளைகள் தமது சொந்த அனுபவத்திலிருந்து அறிவைக் கட்டியெழுப்பக்கூடிய ஆற்றல்கள் படைத்தவர்கள் என்ற விடயத்திலும் நம்பிக்கை இன்மையாகும். கடந்தகாலங்களில் பாடநூல்களின் பருமன் அதிகரித்துக் கொண்டே வந்திருக்கின்றது. புதிய புதிய தலைப்புக்களைச் சேர்க்க வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் இருந்துவந்துள்ளது. தடித்த பாடநூல்களும் அவற்றின் விரிவான பாடத்திட்டமும் பிள்ளைகளைப் பிள்ளைமைய நோக்கிலிருந்து பார்ப்பதில் ஏற்பட்ட கடுந்தோல்வியை உருவகிப்பதாக இந்த இந்திய அறிக்கை தெரிவித்தது. கலைக் களஞ்சியப் பாணியிலான பாடநூல்களை எழுதுவோர் அறிவு வெள்ளம் பிரவாகம் எடுத்து ஒடுகின்து என்ற பொதுவான நம்பிக்கையினால் வழிநடத்தப்படுகின்றனர். முன்னேறிய நாடுகளை எட்டிப் பிடிக்க வேண்டுமென்றால் பெருகிவரும் அறிவைப் பிள்ளைகளின் தொண்டைக்குள் திணிக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் செயற்படுகின்றனர். வகுப்பறையில் பாடநூல்களைப் பயன்படுத்துவது தொடர்பான இவ்வாறான பாரதூரமான கண்டனங்களைக் கல்வியாளர்கள் இன்று முன்வைக்கின்றனர். இக் கண்டனங்களை முன்வைத்த மேற்கூறிய அறிக்கையானது பாடநூல்கள், பாடத்திட்டங்கள் என்பவற்றின் வடிவமைப்பில் பல பிரதானமான மாற்றங்களையும் எடுத்துக் கூறியது. இத்தகைய பாடநூல் பற்றிய நவீன சிந்தனையானது, ஆங்கில மொழியில் ஏராளமான பாடநூல்கள் உண்டு என்ற சிறப்பம்சத்தைக் பொருளற்றதாக்குகின்றது. பாடநூல்களின் பயன்பாடே விமர்சனத்துக்கு உள்ளாகிவிட்ட இந்நாளில் ஆங்கிலத்தில் ஏராளமான பாடநூல்கள் உண்டு என்ற வாதம் ஏற்றுக்கொள்ள முடியாததாகின்றது. இன்றைய கல்விச்சிந்தனையானது பிள்ளைகளில் படைப்புபாற்றலையும் சுயசிந்தனையும் மேம்படுத்துவதற்கான கல்வி பற்றிச் சிந்திக்கின்றதேயொழிய பாடநூல் விடயத்தை மனனஞ் செய்து அதனை அப்படியே பரீட்சைகளில் சமர்ப்பிப்பதனைக் கல்வியாகக் கருதவில்லை.
48 பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம்

கல்வி பற்றி இரண்டு வகையான நிலைப்பாடுகள் உள்ளன. முதலாவது நிலைப்பாட்டின்படி, பிள்ளைகளுக்கு உள்ளார்ந்த பல ஆற்றல்கள் இருக்கின்றன. கல்வியானது அவ்வாற்றல்களைப் பயன்தருமுறையில் வெளிக்கொணர வேண்டும். அவற்றை வளர்த்தெடுப்பதில் முக்கிய பங்காற்ற வேண்டும் என்பதாகும். இரண்டாவது நிலைப்பாட்டின்படி அறிவார்ந்த ஆசிரியர் அறிவும் ஆற்றலுமற்ற பிள்ளைகளிடம் தனது அறிவை "வைப்புச் செய்வதாகும்" இதனையே "Banking Concept of Education " 6t6o Paulo Freire 66ôo g6u3556ôr அமெரிக்கக் கல்விச் சிந்தனையாளர் எடுத்துக்கூறினார். முதலாவது நிலைப்பாடானது இன்றைய கல்விச் சிந்தனையிலும் வரவேற்கப்படும் ஒர் அம்சமாகும். ஆனால் தாய்மொழிக் கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி வலியுறுத்திப் பேசும் டென்மார்க் நாட்டுக் கல்வியாளரான கலாநிதிTovskutnabb Kangas என்பார் பிள்ளைகளின் உள்ளார்ந்த ஆற்றல்களுடன் தொடர்புள்ள முறையில் அவர்களுடைய அறிவையும் திறன்களையும் வளர்ப்பதை அந்நியமொழிக் கல்வி தடுத்துவிடும் எனக்கூறுகின்றார். அந்நிய மொழியில் அடிப்படையான எழுத்தறிவைப் பெற 12-14 ஆண்டுகள் வரை செல்லும். அத்தகைய எழுத்தறிவை 8-9 ஆண்டுகளில் பெற்றுவிட முடியும்; சமூகத்திலும் தொழிற்சந்தையிலும் முழுமையாகப் பங்குபெறத் தேவையான எழுத்தறிவை அந்நிய மொழியில் பெறுவதற்கு 16-17 ஆண்டுகள் செல்லும்; இதே அறிவினைத் தாய்மொழியில் 12 ஆண்டுகளில் பெற்றுவிட முடியும். இந்நிலையில் அந்நிய மொழியில் கல்விபெற முற்பட்டால் பிள்ளைகளின் சொந்த வளங்களும், சமூகத்தின் வளங்களும் விரயமாக நேரிடும் என்ற கருத்தினையும் இந்த அறிஞர் முன்வைத்தார்.
நாடு மற்றும் தாய்மொழியை விடுத்து அந்நியமொழியைப் பயிற்றுமொழியாகப் பயன்படுத்துமிடத்துப் பாரதூரமான உளப் பாதிப்பு (Mental harm) ஏற்படுகிறது. இத்தகைய பாதிப்பானது அறிகை ரீதியாகவும் (Cognitive) கல்விரீதியாகவும் மொழியியல் ரீதியாகவும் மற்றும் உளவியல், சமூகவியல் ரீதியாகவும் இறுதியாகப் பிள்ளைகளின் எதிர்கால அரசியல் பங்கேற்பு என்பவற்றிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம் 49

Page 27
எழுத்தறிவைப் பெறுவதற்கான காலஎல்லை
தாய் மொழி அந்நியமொழி
1.தொடர்கல்விபெற அடிப் 8-9 வருடங்கள் 12-14
படையான எழுத்தறிவு வருடங்கள் 2.சமூகத்திலும் தொழிற் (p(p60)LDu IIT607 1 6-7
சந்தையிலும் 12 வருடங்கள் வருடங்கள் பங்குபெறத் தேவையான எழுத்தறிவு
ஆங்கில மொழிக் கல்வி பற்றி இந்திய ஆய்வாளர்கள் தெரிவிக்கும் புதிய கருத்தொன்று உண்டு. ஆங்கிலமொழியில் கல்விபெறுவோர் மற்றவர்களைவிட சமூக- பொருளாதார ரீதியாகப் பல அனுகூலங்களை அனுபவிக்கின்றனர். ஆனால், அவர்களும் ஆங்கிலமொழியில் பயில்வதால் ஒரு முக்கிய இழப்பையும் எதிர்நோக்குகின்றனர். கற்றலைப் பொறுத்தவரையில் அவர்கள் ஒரு அரைகுறையான வாழ்க்கையை வாழும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். சகல பாடசாலைப் பாடங்களையும் அவர்கள் ஆங்கில மொழியில் கற்பதால் தமது பாடசாலை அறிவைத் தமது நாளாந்த வாழ்க்கை அனுபவத்துடன் தொடர்புபடுத்திக் கொள்வதில் பெருஞ்சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இன்றைய
விஞ்ஞானத் தொடர்பாடலுக்குப் பிரதான மொழியாக ஆங்கிலத்தைப் பயன்படுத்தும் விடயம் பல பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ளது. ஆங்கில மொழிப்பயன்பாடு நவீன காலனித்துவத்துடன் கலாசார ஏகாதிபத்தியத்தையும் குறியிட்டுக் காட்டுவதோடு அரபு நாடுகளிலும் பிலிப்பைன்சிலும் பல்கலைக்கழக நிலையில் பொருத்தமான பயிற்றுமொழி எது என்பது பற்றிய குறிப்பான பிரச்சினைகள் உள்ளன. உள்ளுர் மொழிகளைப் பாதுகாப்பதில் ஆங்கில மொழிவழிக் கல்வி எத்தகைய பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற சிந்தனையும் எழுந்துள்ளது. வறிய நாடுகளில் மட்டுமன்றி பிரான்சிலும் இவ் விடயத்தில் அதிக கவனம் செலுத்தப்படுகின்றது. பிராணி சில் உள்ளுர் மொழியையும் கலாசாரத்தையும் பாதுகாக்கும் நோக்குடன் இணையதளத்துக்கு எதிரான வாதங்கள் முன் வைக்கப்படுகின்றன.
50 பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம்

நெதர்லாந்திலி டச்சு மொழி மறைய நேரிடலாம் என்றும் அதனிடத்தை ஆங்கிலம் பெற்றுவிடும் என்ற பயமும் தோன்றியுள்ளது. இந்நிலையில் டச்சுக்கல்வி அமைச்சு. பத்திரிகைகளுக்கூடாக "டச்சு கலாசாரத்தைப் பேணுதல், பாடசாலைகளிலும் அரசாங்கத்திலும் நீதிமன்றங்களிலும் டச்சு மொழியைப் பயன்படுத்துதல்' என்பவற்றில் தனக்குள்ள ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தியுள்ளது ; இது இலகுவான ஒரு பணியல்ல என்பதை அவ்வமைச்சு ஏற்றுக் கொண்டுள்ளது. " உயர்கல்வியும் ஆராய்ச்சியும் சர்வதேச மயப்படுத்தப்பட்டிருப்பதால், டச்சுடன் ஏனைய மொழிகளையும் பயன்படுத்துவது இன்றியமையாதது என்றும் அவ்வமைச்சு கூறுகின்றது.
-Daniel Schugurensky
பாடசாலைப் பிள்ளைகள் ஓராண்டில் 90 சதவீதமான நேரத்தைப் பாடசாலைக்கு வெளியேயுள்ள உலகில் - ஆங்கிலம் பேசாத உலகில் கழிக்கின்றனர். இவ்வெளியுலகம் வேறொரு மொழியிலேயே கருத்தாக்கங்களைச் செய்கிறது. இதனால், பிள்ளைகள் எதிர்நோக்கும் பல நெருக்கடிகளை இந்தியக் கல்வியாளர்கள்
தமிழ்நாட்டில் ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொள்வது ஒரு கெளரவமான விடயம்; அவ்வாறே தமிழில் பயிலுவது சற்று கெளரவக்குறைச்சலானது ; தமிழ் நாட்டாரே தமிழை ஒரு பயிற்று மொழியாக அங்கீகரிக்கும் நிலைமையில்லை (பல தமிழ்ப் பற்றாளர்கள் தமிழைப் பயிற்று மொழியாகக் கோரி வருவது உண்மையே) ஏன் இந்த நிலை? வரலாற்று ரீதியாகத் தமிழகத்தில் சமஸ்கிருதம், உருது, தெலுங்கு, மராத்திய மொழி என்பன முக்கியத்துவம் பெற்றிருந்தன. பல்லவர்கள் சமஸ்கிருதத்தையும் மராத்திய சரபோஜி மன்னர்கள் மராத்திய மொழியையும் நாயக்க மன்னர்கள் தெலுங்கையும் பேணிப் பராமரித்தனர்; அவரவர் மொழிகளுக்கு முக்கியத்துவமளித்தனர். இதனைத் தொடர்ந்தே ஆங்கிலேய ஆட்சியாளர்கள் ஆங்கில வழிக்கல்வியை அறிமுகம் செய்தனர். இப்பின்புலத்தில் தமிழ் நாட்டில் ஆங்கில மோகம் இலகுவாக வளர்ச்சி பெற முடிந்தது.
- கருத்து: அறவாணன்
பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம் 51

Page 28
சுட்டிக் காட்டுகின்றனர். தாய்மொழிப் பற்றும் தமது வழிவழிவந்த பண்பாடு பற்றிய பெருமிதத்தையும் கொண்ட மக்கள் வாழும் மாநிலங்களில் உள்ள பல பெற்றோர்கள் தமது மொழியையும் பிள்ளைகளுக்குக் கற்பிக்கின்றனர். ஆனால் ஆங்கில மொழியில் பயிலும் பெரும்பாலான பிள்ளைகளைப் பொறுத்தவரையில், அவர்களுடைய பாடசாலை மொழிக்கும் சமூகம் பயன்படுத்தும் மொழிக்கும் இடையே ஒரு பாரிய இடைவெளி உண்டு என்பதை ஒரு பெருங் குறைபாடாக இந்தியக் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அழிந்து வரும் மொழிகள்
* உலகில் ஒருமொழியைப் பேசுவோரின் சராசரித்
தொகை 5000-6000 பேர்வரை.
* உலகிலுள்ள 7000 பேச்சு மொழிகளில் 5000 மொழிகளைப் பேசுவோர் ஒரு இலட்சத்துக்கும் குறைவானோராவர்.
* பேச்சுமொழிகளில் 50 சதவீதமானவை எதிர் காலத்தில் அழிந்துவிடும் சாத்தியமுண்டு. (Dead 0r Moribund). 2100 ஆம் ஆண்டளவில் இம்மொழிகளை வயது முதிர்ந்தோர் மட்டுமே பேசுவார்கள். புதிய தலைமுறையினரான சிறு பிள்ளைகள் இம்மொழிகளைப் பேசமாட்டார்கள்.
* எதிர்மறை மதிப்பீடுகளின்படி 90-95 சதவீதமான மொழிகள் பாதிக்கப்படும். ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட மக்களால் பேசப்படும் 300-600 மொழிகள் தப்பிப் பிழைக்கும் சாத்தியக்கூறுகள் உண்டு. அதிகூடிய எதிர்மறை மதிப்பீடுகளின்படி 40-50 மொழிகள் மட்டுமே மிஞ்சக்கூடும்.
* யுனெஸ்கோ வெளியிடும் பல பிரசுரங்கள் மேற்கண்ட தரவுகளின் அடிப்படையிலானவை.
Dr.Tove Skutnabb - Kanas
University of Roskide - Skutnabb Kaugas (a) mail.dk.
52 பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம்

முடிவுரை
புதிய நூற்றாண்டில் ஆங்கிலமொழி பல்வேறு துறைகளில் பெற்றுவரும் முக்கியத்துவம், அதனடிப்படையில் இளந் தலைமுறையினர் ஆங்கிமொழியில் அறிவுபெற வேண்டியதன் அவசியம் பற்றி நூலில் முற்பகுதியில் விரிவாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. ஆயினும் ஆங்கில மொழியில் தேர்ச்சி பெறும் ஒரே நோக்குக்காக அம்மொழியைக் கல்வி மொழி அல்லது பயிற்று மொழியாக்க முயல்வதன் பின் விளைவுகள் பற்றியும் கல்வி ரீதியாக உளவியல் மற்றும் சமூகவியல் ரீதியாக அத்தகைய கொள்கை ஏற்படுத்தக்கூடிய பாதிப்புப் பற்றி விரிவாக ஆராயப்பட்டது. ஆங்கிலம் ஒரு மொழியாகக் கற்கப்படல் வேண்டும் ;அதனை துறைபோகக் கற்க வேண்டும் என்பதில் கருத்து வேறுபாட்டுக்கு இடமில்லை. ஆனால் குறைந்தபட்சம் பாடசாலை மட்டத்தில் தாய்மொழி போதனாமொழியாக அமைவதில் உள்ள இழப்பும் நிறைவும் பற்றியும் பல்வேறு ஆதாரங்களைப் பயன்படுத்தி இந்நூலில் வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது. பெற்றோர்களுக்கு மட்டுமன்றி ஆசிரியர்கள், கொள்கை வகுப்போர்கள் மற்றும் கல்வித்துறையில் ஈடுபாடு கொண்ட சகல தரப்பினரும் இங்கு கூறப்பட்டுள்ள கருத்துகளில் ஆழ்ந்த கவனத்தைச் செலுத்திய புதிய இளந்தலைமுறையினரின் எதிர்காலக் கல்விக்கான வழிகாட்டல் தத்துவங்களாக இவற்றைக் கொள்ளுதல் பயன்தருமென நாம் கருதுகின்றோம்.
பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம் 53

Page 29
பின்னிணைப்பு
போதனா மொழி மாற்றத்தின் பின்னணி
1945 ஆம் ஆண்டளவில் இலங்கையின் கல்விமுறையில் இடம் பெற்றிருந்த ஒரு முக்கிய அம்சம் போதனாமொழி அடிப்படையிற் பாடசாலைகள் பிரிக்கப்பட்டிருந்தமையாகும். பிரித்தானிய ஆட்சி. யாளர் கடைப்பிடித்த கல்விக் கொள்கைகளின் விளைவாக அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் நாட்டில் ஆங்கிலப் பாடசாலைகளும் சுயமொழிப் பாடசாலைகளும் தோன்றி வெவ்வேறு தரமான கல்வியை வழங்கி வந்தன.
1831 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட கோல்புறுக் குழுவினரின் அறிக்கையிற் காணப்பட்ட விதப்புரைகளின் விளைவாக அரசாங்கம் ஆங்கிலப் பாடசாலைகளை அமைப்பதில் முன்னைவிட அதிக ஊக்கம் செலுத்தியது. அவ்வறிக்கை, ஆசிரியர்களாக நியமனம் பெறுகின்றவர்கள் ஆங்கிலத்திலே தேர்ச்சியுடையவர்களாகவும் அம்மொழியிற் கற்பிக்கக்கூடியவர்களாகவும் இருத்தல் வேண்டும் என்று விதந்துரைத்தது.*
சுயமொழிப் பாடசாலைகளாக இருந்த அரசாங்கப் பாடசாலைகள் ஆங்கிலப் பாடசாலைகளாக மாற்றப்பட இவ்வறிக்கை வழிகோலியது. அதனை இலகுபடுத்தும் நோக்குடன் குழு ஆங்கிலமொழி மூலம் கல்வித்தகுதி பெற்றவர்கள் எவ்வகுப்பைச் சேர்ந்தவர். களாயினும் அவர்கள் அரசாங்க சேவையிற் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று கூறியது.
இவ்வாறு அரசாங்க சேவையில் இலங்கையர்கள் சேருவதற்கு இடமளித்த குழு அரசாங்க சேவையிற் சேருபவர்கள் ஆங்கில மொழியிலே தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டுமென்று விதித்தது. இதனால் அரசாங்க சேவையிற் சேரவிரும்பும் எவரும் ஆங்கிலக் கல்வியைப் பயில வேண்டியதாயிற்று.
54 பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம்

ஆங்கிலம் அரசகரும மொழியாக ஆக்கப்பட்டமையால் ஆங்கிலக் கல்விமுறையொன்று உருவாகி நாட்டிற் செல்வாக்குப் பெறுவது தவிர்க்க முடியாததாயிற்று. அரசாங்க நிர்வாகத்தை நடத்துவதற்கு ஆங்கில மொழி பயின்றவர்களை உள்ளுரிலேயே திரட்டுவது ஆட்சியாளரின் நோக்கமாக இருந்தமையால் அரசாங்கத்தின் ஆதரவுடன் ஆங்கிலப் பாடசாலை முறையொன்று நாட்டில் வளர்ச்சியடையத் தொடங்கியது.
இலங்கையில் வளர்ச்சியுற்ற ஆங்கிலக் கல்விமுறை இரத்தத்திலும் நிறத்திலும் இலங்கையர்களாகவும் கருத்திலும் சுவையிலும் அறிவிலும் ஆங்கிலேயர்களாகவும் உள்ள புதிய ஒரு வகுப்பினரை உருவாக்கும் குடியேற்ற நாட்டுக் கொள்கைக்கு ஒப்ப அமைந்தது. 1843ஆம் ஆண்டிற் பாடசாலைகளுக்கு அரசாங்கம் உதவி நன்கொடை வழங்கும் முறை செயற்பட்டபோது , அரசாங்கம் நாட்டில் ஆங்கிலக் கல்வியை வளர்க்க விரும்பியமையால், நன்கொடை வழங்கும்போது ஆங்கிலப் பாடசாலைகளுக்கே முதலிடம் வழங்கப்பட்டது.
கோல்புறுாக் குழுவினரின் விதப்புரைகளின் காரணமாகக் கிறிஸ்த்தவ சமயக் குழுவினரின் பாடசாலைகளும் ஆங்கிலப் பாடாலைகளாக மாற்றப்படலாயின. இப்பாடசாலைகள் தொடக்கத்தில் ஆரம்பப் பாடசாலைகளாக வளர்ச்சி அடைந்தன. உதவி நன்கொடையும் ஆங்கிலக் கல்விக்கான தேவையும் அதிகரித்தமையாற் சமயக் குழுவினர் பெரிய ஆங்கிலப் பாடசாலைகளை உருவாக்கினர்.
இப்பாடசாலைகள் படிப்படியாக வளர்ச்சியுற்று முன்பு ஆரம்பப் பாடசாலைகளுக்கிருந்த இடத்தைப் பெற்றன. சமயக் குழுவினரின் ஆங்கிலப் பாடசாலைகளிற் பெரும்பாலானவை இங்கிலாந்தில் நிலவிய செல்வந்தர் பாடசாலை அமைப்பைத் (Public Schools) தழுவியனவாக அமைந்தன.
இப்பாடசாலைகளின் பாடவிதானம் நூற்கல்விச் சார்புடையதாகவும், உயர்நிலையில் அதிக அளவுக்குச் சிறப்புப் பயிற்சி தருவதாகவும் அமைந்திருந்தது. பாடசாலைக் கல்வி பாடசாலை விடுகைச் சான்றிதழைப் பெறும் நோக்குடன் அல்லது பல்கலைக்கழகக் கல்விக்கு ஆயத்தம் செய்யும் நோக்குடன் அமைந்தது. கிறிஸ்த்தவ சமயக் குழுவினர் இலங்கையிற் கல்விப் பணிகளை ஆரம்பித்த காலம் தொடக்கம் சுயமொழிக் கல்வி வளர்ச்சியிற் கூடிய ஆர்வம் செலுத்தி வந்தனர். நாட்டில் சுயமொழிக் கல்வியைப்
பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம் 55

Page 30
பரப்புவதற்காக அவர்கள் சுயமொழிப் பாடசாலை முறை ஒன்றை ஆரம்பித்தனர்.
இத்துறையிற் சமயக் குழுவினரின் பணி அரசாங்கத்தின் முயற்சியைவிட அதிக அளவுக்கு வெற்றியளித்தது. சமயக் குழுவினர் அரசாங்கத்தை விடத் திறமையாகவும் சிக்கனமாகவும் சிங்கள, தமிழ் மொழிகளிற் கல்வி வழங்கினர். கோல்புறுக் குழுவினர் தமது அறிக்கையில் ஆங்கிலேய சமயக்குழுவினர் தமது பாடசாலைகள் மூலமாக ஆங்கில மொழியைப் பரப்புவதில் உள்ள முக்கியத்துவத்தைப் பொதுவாக வரவேற்கவில்லை என்று கூறியிருந்தனர். இதிலிருந்து சமயக் குழுவினர் சுயமொழிக் கல்வியிலேயே ஆர்வம் காட்டி வந்தனர் என்பது தெளிவாகும். 1841 ஆம் ஆண்டு அரசாங்கப் பாடசாலைகளை ஆணைக்குழு தேவையை நிறைவு செய்யும் அளவுக்கு ஆங்கிலக் கல்வி விரிவடைந்திருந்தது என்று கருதியமையால் எதிர் காலத்திற் சுயமொழிக் கல்வியையே முக்கியமாக விருத்தி செய்ய வேண்டும் என்று தீர்மானித்தது.
எனவே ஆங்கிலத்தில் மட்டுமே கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்ற ஆரம்ப காலப் பிரித்தானியக் கொள்கை கைவிடப்பட்டுச் சுயமொழிக் கல்விக்குச் சார்பான ஒரு கொள்கை உருவாக்கப்பட்டது."
ஆணைக்குழு ஆங்கிலக் கல்விக்கு முன்னோடியாகச் சுயமொழிக் கல்வியை அறிமுகப்படுத்தத் தீர்மானித்தது ஆங்கிலக் கல்வி பெறுவதற்கு முன்னாயத்தமாகச் சுயமொழிகளில் ஒவ்வொரு ஆரம்பப் பாடசாலையிலும் போதனை வழங்கப்படவேண்டுமென்றும், அதனால் ஆங்கிலக் கல்வியினாற் பெறக்கூடிய நன்மைகளை அறியாத இலங்கையர்கள் தமது பிள்ளைகளை அரசாங்கப் பாடசாலைகளுக்கு அனுப்புமாறு தூண்டமுடியும் என்று ஆணைக்குழு கருதியது. 1841 ஆம் ஆண்டு தொடக்கம் 1847 ஆம் ஆண்டு வரையும் அரசாங்கம் மத்தியபாடசாலை ஆணைக்குழுவினுடாகச் சிங்களப் பாடசாலைகளையும் தமிழ்ப்பாடசாலைகளையும் ஆரம்பித்தது. இக் காலப் பகுதியிற்றான் அரசாங்கம் மக்களுக்கு அவர்களுடைய சுயமொழிகளிற் கல்வி கற்பிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தது.
பிள்ளைகள் ஆங்கிலம் கற்பதற்கு முன்னர்தமது சுயமொழிகளில் வாசிக்கவும் எழுதவும் கற்றனர். முக்கிய நூல்கள் சிங்களத்திலும் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டன.
56 பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம்

1880 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட கோப்பி நெருக்கடியின் காரணமாக உருவான நிதிப்பிரச்சினை சுயமொழிக் கல்வியை வளர்க்கும் அரசாங்கக் கொள்கையை ஊக்குவித்தது. ஏனெனில் ஆங்கிலப் பாடசாலைகளின் வளர்ச்சிக்கு அதிகபணம் செலவிட வேண்டியிருந்தது. எனவே, ஒரு சில பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அரசாங்க ஆங்கிலப் பாடசாலைகள் யாவும் கிறிஸ்தவ சமயக் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
சமயக் குழுவினர் அரசாங்க நன்கொடையுடன் அப்பாடசாலைகளைப் பொறுப்பேற்று நடத்த ஆயத்தமாக இருந்தனர். அரசாங்கத்தின் கல்விப் பொறுப்பு 1886 ஆம் ஆண்டளவில் கிறிஸ்தவ சமயக் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது, சமயக் குழுவினரின் உதவி பெறும் சுயமொழிப் பாடசாலைகள் நாடெங்கும் பரந்து காணப்பட்டன. சிங்களப் பாடசாலைகள் சிங்களவர்கள் வசித்த பகுதிகளிலும் தமிழ்ப் பாடசாலைகள் தமிழர்கள் அதிகமாக வசித்த இடங்களிலும் காணப்பட்டன.
சுயமொழிப் பாடசாலைகள் ஆரம்பக் கல்வியை அல்லது இடைநிலைக் கல்வியை ஒரே பாடசாலையில் அல்லது வெவ்வேறு பாடசாலைகளில் வழங்கின. ஆரம்பப் பாடசாலைகள் ஐந்தாண்டுக் கல்வியை வழங்கின. இடைநிலைப் பாடசாலைகள் எட்டாம் தரம் வரை (கனிட்ட இடைநிலை) அல்லது பத்தாம் தரம் வரை (சிரேட்ட இடைநிலை) உள்ள வகுப்புக்களை மட்டும் கொண்டிருந்தன. இப்பாடசாலைகள் தமது மாணவர்களை ஆகக் கூடியது சிரேட்ட பாடசாலைப் பத்திர நிலைப் பரீட்சைக்கு ஆயத்தப்படுத்தின.
சுயமொழிகளை மட்டும் கற்பித்த பாடசாலைகளை விட ஆங்கில சுயமொழிப் பாடசாலைகள் அல்லது இருமொழிப் பாடசாலைகள் (Bilingual Schools) என்ற மற்றொரு வகைப்பாடசாலைகள் இருந்தன. இப்பாடசாலைகளின் ஆரம்ப வகுப்புக்களில் சுயமொழி போதனா மொழியாகவும், உயர்நிலைகளிற் படிப்படியாக ஆங்கிலம் போதனா மொழியாகவும் இருந்தன.
இப்பாடசாலைகள் சுயமொழிக் கல்வியைப் பொறுத்த வரை. யிலான அரசாங்கக் கொள்கைக்கு ஏற்பவும் ஆங்கிலக்கல்விக்கிருந்த தேவையை நிறைவு செய்வனவாயும் அமைந்தன. பிற்காலத்தில் நாடெங்கும் சுயமொழிகள் போதனாமொழிகளாக்கப்பட்டதும் இப்பாடசாலைகளுக்கான தேவை மறைந்தது.
பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம் 57

Page 31
குடியேற்ற நாட்டுக் கல்வி முறையின் முக்கிய அம்சம் பெரும்பாலனவர்களுக்குத் தரத்திற் குறைந்த இலவச சுயமொழிக் கல்வியும், குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் தரத்திற் கூடிய ஆங்கிலக் கல்வியும் வழங்கப்பட்டமையாகும்.
மக்களின் அறிவு வளர்ச்சியைப் பொறுத்தவரையில் அரசாங்கத்துக்கிருந்த பொறுப்பைக் குறைந்த செலவில் நிறைவேற்றச் சுயமொழிப் பாடசாலைகளும், அரசாங்க நிர்வாகத்தை நடத்த ஆங்கிலம் தெரிந்த கற்றோர் வர்க்கம் ஒன்றை உருவாக்க ஆங்கிலப் பாடசாலைகளும் நிறுவப்பட்டன.
இவ்விரு கொள்கைகளையும் பிரதிபலிக்கும் வகையில் ஆங்கிலச் சுயமொழிப் பாடசாலைகளை அமைக்க நீடித்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் அம்முயற்சிகள் வெற்றி பெறவில்லை. 1928ம் ஆண்டுக்கும் 1940 ஆம் ஆண்டுக்குமிடையில் இப்பாடசாலைகளிற் பயின்ற மாணவர்களின் தொகை குறைந்து வந்ததைப் பின்வரும் புள்ளி விபரம் காட்டும்."
ஆண்டு ஆங்கில சுயமொழிப்பாடசாலைகள் மாணவர் தொகை
1928 37,365
1938 20, 156
1939 19,912
1940 15,917
எனவே, போதனாமொழிகளை அடிப்படையாகக் கொண்ட இரு வேறுபட்ட பாடசாலைகள் குடியேற்ற நாட்டாட்சி நிலவிய காலம் முழுவதும் நீடித்து இயங்கிவர நேர்ந்தது.
ஆங்கில மொழி அரசகரும மொழியாகவும் வர்த்தகத்துறையில் நிர்வாக மொழியாகவும் இருந்தமையால் ஆங்கிலக் கல்வி பெரிதும் விரும்பப்பட்டது. கூடிய சம்பளங்களைக் கொண்ட பதவிகளை அடைவதற்கு ஆங்கில மொழிக் கல்வி பெரிதும் இன்றியமையாததாக இருந்தது.
எனவே, சிங்களவர்களும் தமிழர்களும் பொருளாதார சமூகப் பயன்பாடு கருதி ஆங்கிலமொழிக் கல்வியை நாடினர். சிங்களவர்களும், தமிழர்களும் டச்சுக்காரர்களும் ஒர் அந்நியமொழியைக்
58 பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம்

கற்க வேண்டும் என்பதற்காகத் தமது தாய் மொழியை அலட்சியம் செய்ய நேர்ந்தது பற்றி எவ்வித மனக் குறையும் அடைந்ததாகத் தெரியவில்லை."
ஆங்கிலக் கல்வித் தகுதிகளைக் கொண்டு அரசாங்கப் பதவிகளையும், அவற்றினுடாக உயர்ந்த பொருளாதார, சமூக அந்தஸ்தையும் அடைவதற்காகப் போட்டியிட வேண்டிய நிலைமையிருந்தமையால் அவர்கள் கல்விப் பிரச்சினையைத் தேசிய நோக்குடனோ அல்லது கல்வித் தத்துவ உண்மைகளின் அடிப்படையிலோ அணுக முயலவில்லை.
உண்மையிற் பொருளாதார, சமூக காரணங்களுக்காக இந்நாட்டு மக்கள் ஆங்கிலக் கல்வியை விரும்பியமையாலேயே தாம் ஆங்கிலம் போதனா மொழியாக அமைய வேண்டும் என்று விதந்துரைப்பதாகக் கோல்புறுக் குழுவினர் கூறியிருந்தனர்.'
பொருளாதார நன்மைகள், பணவருவாய், உத்தியோக அந்தஸ்து முதலியவற்றைப் பெறுவதற்கான போராட்டத்தில் இந்நாட்டு மக்கள் தமது தேசிய தனித்துவத்தையும், சுயகெளவரத்தையும் பல காலமாகப் போற்றப்பட்டு வந்த பாரம்பரியத்தையும் தியாகம் செய்ய ஆயத்தமாக இருந்தனர். '
சுயமொழிகளின் வளர்ச்சியிற் கூடிய அக்கறை செலுத்தப்படாமையால் மக்கள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்து காணப்பட்ட பழக்க வழக்கங்களும் பண்பாட்டு அம்சங்களும் சீர்கேடடையத் தொடங்கின.
1997 ஆம் ஆண்டுக்கான உயர்தரமான இலக்கிய விருதைப் (பூக்கர் விருது) பெற்ற அருந்ததிராயிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி; இந்தியாவில் பிறந்து இந்தியாவில் வளர்ந்தவராகிய நீங்கள் ஏன் ஆங்கிலத்தில எழுதுகிறீர்கள்?
இதற்கு அவரளித்த விடை: நான் அம்மொழிக்கு அடிமை
யாகி விடவில்லை; அம்மொழி எனது அடிமை; நான் சிந்
திப்பதை, நான் வேண்டுவதை அம்மொழியில் கூறுவது
எனது கலை.
-Daily News
12, ஜூலை, 2006
பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம் 59

Page 32
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வண.கலாநிதி. ஒமல்பே சோபித்த தேரோ அவர்கள்; அவர் தமது விகாரையிலேயே ஒரு ஆங்கில வழி சர்வதேசப் பாடசாலையை நிறுவியவர். இதனால் தேசிய மொழியாக சிங்களம் பாதிப்படையதா என்று கேட்ட போது அவர் தந்த பதில்:
நாங்கள் பிள்ளைகளுக்குச் சிங்கள மொழியைக் கற்பிக்கின்றோம்; பெளத்தம் உட்பட ஏனைய சகல பாடங்களையும் ஆங்கில மொழி வழியில் கற்பிக்கின்றோம். இன்றைய கோளமயமாக்கப்பட்ட உலகில் கிராமத்துப் பிள்ளைகள் சிறகடித்துப் பறக்க ஆங்கில மொழி தேவை.
-Daily News - 12, ஜூலை, 2006
சிங்களவர், தமிழர்கள் பலரின் இல்லங்களில் ஆங்கிலம் வீட்டு மொழியாகப் பயன்படுத்தப்பட்டது. உள்ளுர் மொழிகள் வீட்டிலுள்ள ஊழியர்களுடன் உரையாடுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டன. " சுயமொழிகளில் ஒரு சொல் கூடத் தெரியாதவர்கள் உயர்ந்த பதவிகளையும், செல்வத்தையும், செல்வாக்கையும் பெறக்கூடியவர்களாக இருந்தனர். அத்துடன் , சுயமொழி அறிவு எவ்வளவுதான் விரிவானதாக இருந்தபோதிலும் எந்தத் துறையிலும் தொழில் பெற முடியாத நிலையிருந்தது. "
சுயமொழிகளிற் கல்வி கற்பதால் எதிர்காலத்திற் பொருளாதார, சமூக அந்தஸ்தினை உயர்த்திக் கொள்வதற்கு எந்தவித வாய்ப்பினையும் பெற்றுக்கொள்ள முடியாத வகையிற் குடியேற்ற நாட்டுக் கொள்கை அமைந்திருந்தமையாற் சுயமொழிக் கல்வி நடைமுறை வாழ்க்கைக்குப் பயனற்றது என்ற கருத்து வலுப்பெற்றது.
"சுயமொழிகளைப் பயன்படுத்துவதால் ஏதேனும் பொருளாதார நன்மைகள் கிடைக்கும் என்று மக்கள் கருதாவிட்டால், பற்றுணர்வின் காரணமாக அம்மொழிகளைப் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. சிங்களத்தில் அல்லது தமிழில் கல்வி பயிலும் குடிமகன் சுயமொழி அறிவைக் கொண்டு மட்டும் தனது சீவனோபாயத்தைத் தேடுவதற்கும் பிறருடன் சமமாகப் போட்டியிடுவதற்கும் உயர்பதவிகளைப் பெறுவதற்கும் உத்தரவாதம் இருக்கவேண்டும்"
60 பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம்

என்று 1946 - ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரகரும மொழி பற்றிய தெரிவுக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டது இங்குக் குறிப்பிடத்தக்கதாகும்."
மிக அண்மைக்காலம் வரை சிங்கள தமிழ் சிரேட்ட பாடசாலைத் தராதரப் பத்திரம் (சி.பா.த.ப) அரசாங்கப் பாடசாலைகளில் ஆசிரியர் பதவி தவிர்ந்த வேறு எந்தத் தொழிலையும் அல்லது அரசாங்கப் பதவியையும் பெறுவதற்கான தகுதிப் பரீட்சையாக அங்கீகரிக்கப்பட்டிருக்கவில்லை." பொருளாதார , சமூக அந்தஸ்த்தை உயர்த்திக் கொள்வதில் மட்டும் சுயமொழிக் கல்வி ஆங்கிலக் கல்வியை விடப் பின்தங்கிய நிலையில் இருக்கவில்லை. உயர்கல்வியைப் பெறுவதற்கும் ஆங்கில அறிவு அல்லது வேறு ஏதேனும் ஐரோப்பிய மொழி அறிவு தேவைப்பட்டது.
சிங்கள மொழியில் அல்லது தமிழ்மொழியில் உயர் கல்விக்குப் பயன்படத்தக்க நூல்கள் மிகவும் குறைவாகவே இருந்தன மொழிப்பெயர்ப்பதற்கு ஏற்படக்கூடிய செலவினை ஈடுசெய்யும் அளவுக்கு அத்தகைய நூல்களுக்கு அதிக தேவையும் இருக்கவில்லை. எனவே உயர்கல்வியை நாட விரும்புபவர்கள் தவிர்க்க முடியாத வகையில் ஆங்கிலத்தில் சிறந்த தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கவேண்டி நேர்ந்தது.'
ஆங்கில மொழி மூலம் மட்டும் நடாத்தப்பட்ட புகுமுகப் பரீட்சையின் பெறுபேறுகளைக் கொண்டு பல்கலைக்கழகத்துக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டனர் சுய மொழிகளில் டிப்ளோமாப் பட்டம் பெறுவோர் தவிர்ந்த ஏனையோர் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டனர். சிங்களம் அல்லது தமிழ்மொழி மூலம் மாணவர்களைப் பரீட்சித்துப் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கும் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே ஆங்கிலமொழி மூலம் கல்வி பயிலும் மாணவர்கள் மட்டுமே பல்கலைக்கழகத்தில் அனுமதி பெறக் கூடியதாக இருந்தது."
சிங்கள- தமிழ் சிரேட்ட பாடசாலைத் தராதரப் பத்திரம் பெற்ற எம் மாணவனும் உயர்கல்வியைப் பெற முடியாமலிருந்ததுடன் நாட்டிலிருந்த ஒரே ஒரு பல்கலைக்கழகத்திலும் அவனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இச் சூழ்நிலை சுயமொழிக் கல்வி தளர்ச்சியடையக் காரணமாக இருந்தது."
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி தொடக்கம் இலங்கையில் கிறித்தவ சமயமும் ஆங்கில மொழியுமே உயர்கல்விக்கும்,
பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம் 61

Page 33
சமூக் நகர்வுக்கும் இட்டுச் செல்லும் முக்கிய ஏதுக்களாக விளங்கின. பொருளாதார, சமூக நன்மைகளையும் உயர்கல்வி வாய்ப்புக்களை. யும் வழங்கிய ஆங்கிலக்கல்வி யாவருக்கும் கிடைக்கத்தக்கதாக இருக்கவில்லை. அரசாங்கமும் கிறிஸ்தவ சமயக் குழுக்களும் ஆங்கிலப் பாடசாலைகளை ஆரம்பித்தகாலம் தொடக்கம், பொருளாதார வசதியுள்ளவர்கள் மட்டுமே தமது பிள்ளைகளை அங்கு அனுப்பிக் கல்வி பயிலச் செய்யக் கூடியதாக இருந்தது."
சுயமொழிப் பாடசாலைகள் இலவசக் கல்வியை வழங்கிய இடத்து ஆங்கிலப் பாடசாலைகள் கட்டணம் அறவிட்டமையால் ஆங்கிலக் கல்வி பொருளாதாரத் துறையில் சலுகை பெற்ற வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டதொன்றாகியது.*
கல்லூரி நிலையிலான ஆங்கிலப் பாடசாலைகள் (Collegiate English Schools) அரசாங்க நிதியிலிருந்து உதவிநன்கொடை பெற்ற போதிலும், அவை பிள்ளைகளின் கல்விக்குக் கட்டணங்களைச் செலுத்தக்கூடிய பெற்றோர்களுக்குரியனவாகவே விளங்கின. இப்பாடசாலைகளிற் கல்வி பெறுவதற்கு அதிகம் செலவு செய்ய வேண்டியிருந்தமையால், குறித்த ஒரு சிலருக்கான கல்வி நிலையங்களாக அவை விளங்கின. எனவே, இப்பாடசாலைகள் கல்வித்துறையில் யாவருக்கும் சமசந்தர்ப்பத்தை வழங்கவில்லை. இது இப்பாடசாலைக்குரிய ஒரு குறைபாடான இயல்பாகக் கொள்ள முடியாது. முழுக்கல்வி முறையிலும் இவ்வியல்பு செறிந்து காணப்பட்டது. *
எனவே, இலங்கையிற் கட்டணம் செலுத்திக் கல்வி பெறக் கூடியவர்கள் செல்லக்கூடிய ஒரு பாடசாலை முறையும், அதற்கான வழிவகைகள் இல்லாதவர்கள் செல்லக்கூடிய பாடசாலை முறையும் என இருவகையான பாடசாலை முறைகள் தோன்றி வளர்ச்சியுற்றன. ஒரு பாடசாலையிலிருந்து மற்றப் பாடசாலைக்கு மாறிச் செல்வது கடினமானதாக இருந்தது. எனவே ஏழ்மையான பெற்றோர்களின் பிள்ளைகள் உயர்கல்வி பெறமுடியாதிருந்தது*
ஆங்கிலப் பாடசாலைகளில் பிள்ளைகளை அனுமதிப்பதற்கு அவர்களுடைய உள்ளார்ந்த ஆற்றல்கள் கருத்தில் கொள்ளப்படாது பெற்றோர்களின் பொருளாதார நிலைக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டமையால், போதிய கல்வி வாய்ப்புகள் இன்றிப் பிள்ளைகளின் ஆற்றல்கள் தேசிய முன்னேற்றத்துக்காகப் பயன்படுத்தப்படாமலும் விரயம் செய்யப்பட்டன.
62 பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம்

அரசாங்க நன்கொடையாலும் பொருளாதார பலம் மிக்கவர். களால் வழங்கப்பட்ட கட்டணங்களாலும் ஆங்கிலப் பாடசாலைகள் சிறந்த பாடசாலைகளாக உருவாயின. அவை சிறந்த கட்டடங்களையும் சிறந்த உபகரணங்களையும் சிறந்த ஆசிரியர்களையும் கொண்டனவாக விளங்கின. இப்பாடசாலைகள் காலம் காலமாகக் கட்டணங்களை அறவிட்டு வந்தன.
இக்கட்டணங்களையும் பிற நன்கொடைகளையும் கொண்டு, சிங்கள், தமிழ் பாடசாலைகளால் அமைத்துக் கொள்ள முடியாத அளவுக்குச் சிறந்த கட்டடங்களையும் உபகரணங்களையும் அவை கொண்டு விளங்கின. அப்பாடசாலைகளின் அதிபர்கள் மேற்கு நாடுகளிலிருந்து வந்தவர்களாகக் காணப்பட்டனர்.
சிங்கள, தமிழ் பாடசாலைகளில் சேரும் ஆசிரியர்களை விட ஆங்கிலப் பாடசாலைகளிற் சேரும் ஆசிரியருக்கு அதிக தகுதிகள் தேவைப்பட்டன. ஆங்கில ஆசிரியர்கள் அதிகம் செலவு செய்து கல்வி பயின்றதாலும், அவர்களுடைய வாழ்க்கைத்தரம் உயர்ந்து காணப்பட்டமையாலும் அவர்களுக்கு அதிக சம்பளங்களை வழங்க வேண்டியிருந்தது.
ஆங்கிலப் பாடசாலைகளும் உயர்ந்த சம்பளங்களை வழங்க ஆயத்தமாக இருந்தமையாலே திறமைமிக்க ஆசிரியர்கள் அப்பாடசாலைகளிற் சேர்ந்துகொண்டனர். அரசாங்கமும் பொதுவாக இருமொழிப் பாடசாலைகளையும் சுயமொழிப் பாடசாலைகளையும் விட ஆங்கிலப் பாடசாலைகளையே கூடிய அளவுக்கு ஆதரித்தது. ஆங்கிலப் பாடசாலைகளில் ஒரு ஆசிரியருக்கு இருபது மாணவர்களும் இருமொழிப் பாடசாலைகளில் முப்பது மாணவர்களும் சுயமொழிப் பாடசாலைகளிற் நாற்பது மாணவர்களும் காணப்பட்டனர்.
ஓர் ஆண்டுக்கு ஒரு மாணவனுக்கான அரசாங்கச் செலவு ஆங்கிலப் பாடசாலை மாணவர்களுக்குச் சார்பானதாகவே அமைந்து காணப்பட்டது. (ஆங்கிலப் பாடசாலை ரூ 36.00 இருமொழிப்பாடசாலை ரூ 25-08, சுயமொழிப்பாடசாலை ரூ 18-70) எனவே பெரும்பான்மை மாணவர்களைப் பொறுத்தவரையில் அரசாங்கப் பணம் பாரபட்சமான முறையில் ஆங்கிலப் பாடசாலைகளுக்கே கூடுதலாகச் செலவு செய்யப்பட்டது. *
ஆங்கிலப் பாடசாலைகள் உயர்தரமான கல்வியை வழங்கிய சிறந்த கல்விக் கூடங்களாயும் எதிர்கால வாழ்க்கையிற் பொருளா
பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம் 63

Page 34
தார, அதிகார பலத்தை வழங்குவனவாயும், சமுதாயத்திலிருந்த சலுகை பெற்ற வகுப்பினருக்குரியனவாயும் விளங்கியவிடத்து, சிங்களப் பாடசாலைகளும் தமிழ்ப் பாடசாலைகளும் இவை எல்லாவற்றிலும் நேர்மாறான இயல்புகளைக் கொண்டனவாக விளங்கின.
பொதுவாகப் பிறநாடுகளிற் பாடசாலைகள் ஆரம்பப் பாடசாலைகளாகவும் இடநிலைப் பாடசாலைகளாகவுமே பிரிக்கப்பட்டிருக்கும். ஆனால் இலங்கையில் அவை போதனா மொழி அடிப்படையில் ஆங்கிலப் பாடசாலைகளாகவும் சுயமொழிப் பாடசாலைகளாகவும் பிரிக்கப்பட்டிருந்தன.
எல்லாச் சுயமொழிப் பாடசாலைகளும் சுதந்திரத்துக்கு மிக அண்மைக்காலம் வரை ஆரம்பப் பாடசாலைகளாகவே விளங்கி வந்தன. எழுத்து, வாசிப்பு, எண் முதலியவற்றுடன் சிறிதளவு முன்னேற்றமான கல்வியையே அவை கற்பித்து வந்தன.
நவீன கல்வியைக் கற்பித்த ஆங்கிலப் பாடசாலைகளை விட அவை எல்லாவிதத்திலும் தரத்திற் குறைந்தவையாகக் காணப்பட்டன. * சுயமொழிக் கல்விக்கான வசதிகள் மிகவும் பின்தங்கிக் காணப்பட்ட அதே வேளையில் அக்கல்வியைப் பெறுவதற்கான ஊக்கம் ஆங்கிலக் கல்விக்கு வழங்கப்பட்டது போன்று வழங்கப்படவில்லை.
பாடசாலை சென்ற மாணவர்களில் 80 வீதத்துக்கும் அதிகமானவர்கள் சுயமொழிப் பாடசாலைகளுக்கே சென்ற போதிலும் அவர்களில் மிகக் குறைந்த வீதமானவர்களே ஆரம்பப் பின்னிலை (Post Primary) வகுப்புகளிற் கல்வி பயின்றனர் என்பதைப் பின்வரும் புள்ளி விபரங்கள் காட்டும். *
மாணவர் தொகை
1943 1944
ஆரம்பநிலை 594,031 606,209
ஆரம்பப் பின்னிலை 62,991 60,802
குறைந்த வீதமானவர்கள் ஆரம்பப் பின்னிலைக் கல்வியைப் பெற்றதையும் அதனால் கல்வித்துறையில் கணிசமான அளவுக்கு விரயம் (Wastage) ஏற்பட்டதையும் இப்புள்ளி விவரங்கள் காட்டு
64 பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம்

கின்றன.27 1943 ஆம் ஆண்டை விட 1944 ஆம் ஆண்டில் ஆரம்ப நிலை மாணவர்களின் தொகை அதிகரித்திருந்த போதிலும், ஆரம்பப் பின்னிலை மாணவர்களின் தொகை குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்தின் குடியேற்ற நாட்டுச் சார்பான மொழிக் கொள்கையின் விளைவாக, சிங்களம் தமிழ் ஆகிய மொழிகளில் ஆரம்பப் பின்னிலைக் கல்வியைப் பயிலுவதாற் சமூக, பொருளாதார நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியாது என்பதாலேயே இந்நிலை ஏற்பட்டது.
சுயமொழிகளில் இத்தகைய முன்னேற்றமான கல்வியைப் பயிலுபவர்கள் ஆசிரியர் சேவையில் மட்டுமே சேரக்கூடியதாக இருந்தது.* நாட்டின் பொருளாதார நிலை சுயமொழிகளில் உயர்கல்வி பெறுவதை ஊக்குவிக்காது அம்மொழிகளிற் கல்வி பயிலுவதைத் தடைசெய்வதாக அமைந்திருந்தது.
"பாடசாலை மாணவர்களிற் பெரும்பாலோர் நாட்டில் வழக்கிலிருந்த சட்டங்களின்படி குறைந்த பட்சக் கல்வியை முடித்துக் கொண்டு தமது குடும்பங்களின் சீவனோபாயத்துக்காக உழைக்கச் சென்றுவிட, பாடசாலையிலே தொடர்ந்து பயிலுபவர்கள் தமது பெற்றோர்கள் ஒரு சுமையாகவே விளங்கினர்.?
சிங்கள தமிழ் பாடசாலைகளில் ஐந்தாம் வகுப்பிற் சித்தியடைந்த மாணவர்களின் 64 வீதமானவர்களே ஆரம்பப் பின்னிலைக் கல்வி பெறச் சென்றனர். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு உயர் வகுப்பிலும் அவர்களுடைய எண்ணிக்கை குறைந்து சென்றது.
ஆரம்பப் பின்னிலைக் கல்விபெறச் சென்ற மாணவர்களில் சிரேட்ட தராதரப் பத்திர வகுப்பு வரை சென்ற மாணவர்களின் வீதம் பின்வருமாறு. "
சிரேட்ட தராதர வகுப்பு வரை சென்ற மாணவர் வீதம்
ஆண்கள் பெண்கள் வீதம் வீதம்
சிங்களப் பாடசாலைகள் 25
தமிழ்ப்பாடசாலைகள் 30 15
பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம் 65

Page 35
பொருளாதார, சமூக அந்தஸ்தை உயர்த்துவதற்குப் பயன்பாட நிலையிற் சுயமொழிக்கல்வி இத்தகைய சீர்கேட்டினை அடைய நேரிட்டது.
சமூக அமைப்பிற் காணப்படும் சமூக வகுப்பு வேறுபாடுகளைக் களைவதில் அல்லது குறைப்பதிற் கல்வி ஒரு முக்கிய கருவியாகத் தொண்டாற்றி ஆகக் கூடுதலான சமூக நகர்வினை ஏற்படுத்த வேண்டுமாயின் எல்லாச் சமூக வகுப்பினரும் எல்லாக் கல்வி நிலைகளிலும் சேர்ந்து பயிலச் சமவாய்ப்பு இருக்க வேண்டும்.
ஆனால் இலங்கையில், பொருளாதார வசதியுள்ளவர்கள் எதிர்காலத்திற் புதிய வாய்ப்புக்களைத் தரக்கூடிய தரமான ஆங்கிலக் கல்வியையும், ஏழ்மை நிலையிலிருந்தவர்கள் அத்தகைய வாய்ப்புக்களைத் தந்துதவாத தரத்திற் குறைந்த சுயமொழிக் கல்வியையும் பெற நேர்ந்தமையால், ஏற்கனவே சாதிப் பாகுபாடுகளாற் பீடிக்கப்பட்டுப் பொரளாதார அடிப்படையிற் சமூக வகுப்புக்களாகப் பிரிக்கப்பட்டிருந்த"சமூக அமைப்பில், ஒரு புதிய சமூக வேறுபாடு புகுத்தப்பட்டு மேலும் சிக்கல்கள் தோற்றுவிக்கப்பட்டன"' செல்வந்த வகுப்பினர்களுக்கு எதிர்காலத்தில் மேலும் செல்வத்தையும் அதிகாரத்தையும் அந்தஸ்தையும் பெற்றுக் கொள்வதற்கான அடிப்படையை அமைப்பதாக ஆங்கிலப் பாடசாலைகள் விளங்கியமையால், அவை சமூக அநீதிக்கு ஒர் எடுத்துக்காட்டாக விளங்கின.
மேற்கு நாட்டு ஆதிக்கம் இந்நாட்டில் ஏற்படுத்திய ஒரு முக்கிய விளைவு மேலைத்தேயக் கல்வி பயின்ற கற்றோர் வகுப்பினரின் (Western- educated elite) (65slipupiTg5tb.
அரசாங்க சேவை உயர் தொழில்கள் அரசியல் முதலிய துறைகளில் அவர்களே சகல வாய்ப்புக்களையும் பெற்றுக் கொண்டனர்.’ இவ்வகுப்பினருக்கும் பொதுமக்களுக்குமிடையிலிருந்த வேறுபாடு எல்லாக் கீழைத்தேய சமுதாயங்களுக்குமே பொதுவானதாகக் காணப்பட்டது.
ஆங்கிலம் கற்ற வகுப்பினருடைய தொகை மிகவும் குறைவாகவே காணப்பட்டது. 1914 ஆம் ஆண்டில் நாட்டில் வாழ்ந்த 40 இலட்சம் மக்களில் 1 சதவீதமானவர்கள் ஆங்கிலம் பேசுவோராக இருந்தனர்ஃ 1921 இல் மொத்த மக்கள் தொகையில் 3.7 வீதமானவர்களும், 1946 இல் 7 வீதமானவர்களும் 1953இல் 10 வீதமானவர்களும் ஆங்கிலம் பேசுவோர்களாக விளங்கினர். *
66 பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம்

Z8Z“Zg“/T守寸寸ț70ç‘9 I£ț7Ç8‘9 Io I9999ț76 I ZƐ0°/9°99ț7 I ț7ț76 I ‘Ç IZ96ZO“ I O‘Iț799#7ff76 I 09. I oszÓ‘98£99909°8 IZZÇ I 6‘9/0£ €8£6 I I IZ ‘88‘Ç9€Zț7Z98“Ç IZ9ƐSZ‘Z9ZZɛ9€6 I Z8țzosoɛog808ɛÇ60°8 I89998°09[09]ț7€6 I 66€“Ç6‘ț7ț7999ZZS ‘E’Iț79969 ‘99.96ZZ£6 I 00Z‘69‘#79.8980I 0° I I9寸Z69* I908Z0ɛ6I qxoologÃg)qxoosse)
Į(910091||JUįr(910091||On1ų9g2(n0C091] ©1,93241(910091.J.
Q9QQ91||-627TI/TT(19009 !!!? TAJT!Q9009 saepT) UTTTIIT;sfîIIGIG)Q9QQ91|42” LIITT1,932090091/42-T un
IŢfill(Re)rnięTIĶIIGIØrnię | rsssfila19@@@@Isneg: ?Isao!?!?!?@iợ9ītā>
(9Þ6I-0£6I) qisng?(091.gé ĮR91009 UJI QJ199Țnrı Qsisão qÁÐq?Q9C091] ©-TIITI TÕRog)q9rı
67

Page 36
1921 ஆம் ஆண்டுக்கும் 1946 ஆம் ஆண்டுக்குமிடையில் ஆங்கிலம் கற்றவர்களின் தொகை இரண்டு மடங்காக அதிகரித்தது. சுயமொழிப் பாடசாலைகளின் தொகையும் மாணவர்களின் தொகையும் ஆங்கிலப் பாடசாலைகளின் தொகையையும் மாணவர்களின் தொகையையும்விடப் பன்மடங்கு அதிகமாக இருந்தது.
1929 ஆம் ஆண்டிற் பாடசாலை சென்ற மாவணர்களில் 89.76 வீதமானவர்கள் சுய மொழிப் பாடசாலைகளுக்கே சென்றனர்* பின்வரும் புள்ளி விபரம் 1930 ஆம் ஆண்டு தொடக்கம் 1946 ஆம் ஆண்டு வரையுள்ள காலப்பகுதியில் ஆங்கில, இருமொழி, சுயமொழிப் பாடசாலைகளின் தொகையையும் அவ்வப்பாடசாலைகளுக்குச் சென்ற மாணவர்கள் தொகையையும் எடுத்துக்காட்டும்."
சிறுபான்மையினருக்கு ஆங்கிலக் கல்வியையும் பெரும்பாலானவருக்குச் சுயமொழிக் கல்வியையும் வழங்குவதை வலியுறுத்திய குடியேற்ற நாட்டுக் கல்விக் கொள்கை இப்புள்ளி விபரங்களினாற் பிரதிபலிக்கப்படுகின்றது. இத்தகைய கல்வி முறையினால் ஏற்பட்ட சமூகப் பிரிவுகள் பற்றி அரசாங்க சபை உறுப்பினர் ஒருவர் பின்வருமாறு கூறினார்.
"மொழி அடிப்படையில் வேறுபட்டு அமைந்துள்ள எமது கல்விமுறை இரண்டு வேறுபட்ட நாடுகளையே ஏற்படுத்தி விட்டது. ஒரு நாடு சிங்களத்தையும் தமிழையும் கற்றுச் சிங்களத்தையும் தமிழையும் பேசி வருகின்றது. இன்னொரு நாடு ஆங்கிலத்தைக் கற்று ஆங்கிலத்தையே பேசி வருகின்றது. இந்நாட்டில் நடைபெற்று வந்த பிரித்தானிய ஆட்சிமுறையின் மிகவும் குறைபாடான அம்சம் இதுவாகும். எங்களுடைய மாணவர்களில் 95 வீதமானவர்கள் தமது தாய்மொழியிற் கல்வி கற்றமையால் ஆங்கில மொழிமூலம் நடாத்தப்படும் அரசாங்கத்தில் எந்தவித பங்கும் கொள்ள முடியாதுள்ளனர். எங்களுடைய பாடசாலைகளில் 5 வீதமானவை மட்டுமே ஆங்கில மொழி மூலம் கற்பிக்கின்றன. அங்கிருந்து கற்று வெளியேறுபவர்கள் பொது மக்களுடன் எந்தவிதத் தொடர்பற்றவர்களாகவும் தங்களுடைய வரலாற்றையும் பழக்க வழக்கங்களையும் அறியாதவர்களாகவும் காணப்படுகின்றனர். *
1943 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட விசேட கல்விக் குழுவினரின் அறிக்கை, போதனாமொழி அடிப்படையில் இருவகையான கல்விமுறை நிலவியதாற், சமூக அமைப்பில் ஆங்கிலம் கற்றவர், சுயமொழி கற்றவர் என்ற இரு வேறுபட்ட வகுப்பினர் தோன்றி, அவர்களில்
68 பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம்

ஆங்கிலம் கற்றவகுப்பினர் சலுகை பெற்றவர்களாக இருந்ததை ஒரு குறைபாடாக ஏற்றுக் கொண்டது.
அத்துடன் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் தாய் மொழியே இயற்கையான சிறந்த போதனாமொழி என்பதையும் ஏற்றுக்கொண்டது.
இருவகைப் பாடசாலைமுறை கல்வியில் நிலவிய சமவாய்ப்பின்மையைப் பிரதிபலித்தது என்பதையும் குழு சுட்டிக் காட்டியது.” இக் குறைபாடுகளைப் போக்குவதற்கு ஒரு வழியாகக் குழு எல்லாப் பாடசாலைகளிலுங் கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டுமென்று விதந்துரைத்தது.
மூன்றாம் நிலைக் கல்வி வழங்கும் உயர்கல்வி நிலையங்களிலும் இலவசக்கல்வி இடம்பெற வேண்டும் என்று குழு விதந்துரைத்தது" ஆற்றல்களும் திறன்களும் ஒரு குறிப்பிட்ட சமூக வகுப்புக்கோ அல்லது குழுவுக்கோ உரியன அல்ல ; எச்சமூக அமைப்பும் அவற்றை வெளிப்படுத்துவதற்கு ஏதுவாகக் கல்வித்துறையிற் சமவாய்ப்புக்களை வழங்க வேண்டும் ' என்னும் கருத்தைக் குழு ஏற்றுக் கொண்டது.
சுதந்திரத்துக்கு முன் 1945 ஆம் ஆண்டில் அரசாங்க சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இலவசக் கல்வித் திட்டம் 1951 ஆம் ஆண்டளவில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு அக்காலந் தொடக்கம் இலங்கையின் கல்வி வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைத்தது.
இன்னும்கூட எல்லாப் பிள்ளைகளுக்கும் சிறந்த கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் கிடைத்து விட்டதாகக் கூற முடியாதெனினுஞ் சிறந்த முன்னேற்றங் காணப்பட்டுள்ளதை மறுக்க (ԼքlջեւյՈ 25l.
அத்துடன் கல்வித்துறையிற் சமவாய்ப்புக்களை வழங்குவதைப் பொறுத்த வரையில் இலங்கையை வேறு எந்த அபிவிருத்தியுறுகின்ற ஆசிய நாட்டுடனும் ஒப்பிட முடியுமா என்பது ஐயத்துக்குரியதாகும்.?
இலவசக் கல்விமுறை நடைமுறைககு வருவதற்கு முன்பே அரசாங்கப் பாடசாலைகளுக்கும் உதவிபெறும் பாடசாலைகளும் சுயமொழிக் கல்வியை இலவசமாக வழங்கி வந்தன. இலவசக் கல்விமுறையானது, கட்டணம் அறவிட்டு வந்த அர்சாங்க் உதவி
பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம் 69

Page 37
பெறும் ஆங்கிலப் பாடசாலைகளையும், பல்கலைக்கழகம், தொழில் நுட்பப் பாடசாலை ஆகிய கல்வி நிலையங்களையும் சுயமொழிப் பாடசாலைகள் போன்று இலவசக் கல்வியை வழங்கும் நிலைக்குக் கொண்டு வந்தது.
எனவே, ஏழ்மையான பிள்ளைகள் ஆங்கிலக் கல்வி பெறுவதி. லிருந்த பொருளாதாரத் தடைகள் ஒரளவுக்கு நீக்கப்பட்டன. சுயமொழிக் கல்வி பெற்ற பெரும்பாலான மாணவர்கள் ஏற்கனவே இலவசமாகக் கல்வி பெற்றமையால் இலவசக் கல்விமுறை அரசாங்கத்தின் கல்விச் செலவிற் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தவில்லை.
இலவசக் கல்வி கல்விக் கட்டணமில்லாத கல்வி என்ற முறையிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டமையால் ஏழ்மையான பிள்ளைகளின் நிலை தீவிரமாற்றமடைந்ததாகக் கூறமுடியாது.
இலவசக் கல்விமுறை,போதனாமொழி அடிப்படையிற் குறைபாடுகள் நிறைந்து காணப்பட்ட இருவகைப் பாடசாலை முறையில், ஆங்கிலக்கல்வி பெறும் வாய்ப்புக்களை ஒரளவுக்கு விரிவுபடுத்தியவிடத்து சுதந்திரத்தின் பின்னரும் அவ்விருவகைப் பாடசாலை முறை நீடித்து நிலவியது.
கல்வித்துறையில் வழங்கப்பட்ட புதிய வாய்ப்புக்களை மக்கள் உற்சாகத்துடன் பயன்படுத்த முற்பட்டமையால் ஆங்கிலப் பாடசாலைகளில் அனுமதியை நாடும் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. அரசாங்க ஆங்கிலப் பாடசாலைகளிலும் உதவி. பெறும் ஆங்கிலப் பாடசாலைகளிலும் மாணவர்களின் தொகை அதிகரித்து, அனுமதியைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
சுயமொழிப் பாடசாலைகளிலிருந்த ஆரம்பப் பின்னிலைப் பிரிவுகள் தளர்ச்சியுற்று அவற்றிற் சில மறையத் தொடங்கின. புதிய பாடசாலைகள் அமைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகளும் எழ ஆரம்பித்தன. இலவசக் கல்விமுறையைக் காரணமாகக் கூறி ஆங்கிலப் பாடசாலைகள் அமைக்கப்படவேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
எனவே 1945 ஆம் ஆண்டில் ஆங்கில அரசாங்கப் பாடசாலைகளின் தொகை 15 ஆக இருந்து, 1950 ஆம் ஆண்டில் 289 ஆக அதிகரித்தது. 1945 ஆம் ஆண்டில் 5-14 வயதுக் கிடைப்பட்ட
70 பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம்

பிள்ளைகளில் 50 வீதமானவர்கள் ஆங்கிலக் கல்வியையும் சுய தொழிக்கல்வியையும் கற்றனர். 1949 ஆம் ஆண்டு இவ்வீதம் 63 ஆக அதிகரித்தது. *
உண்மையில் விசேட கல்விக்குழு குறைபாடுடைய இருவகைப் பாடசாலை முறை அப்படியே இருக்கத்தக்கதாக இலவசக் கல்விமுறையின் மூலம் கல்வியை விரிவு செய்ய முற்பட்டது. பொருளாதார வசதிகள் உள்ளவர்களுக்குத்தான் பயனுள்ள ஆங்கிலக்கல்வி கிடைக்கும் என்ற நிலையில் ஒரளவு மாற்றம் ஏற்பட்டதெனினும் ஆங்கிலம் கற்றவர்கள் சுயமொழி கற்றவர்கள் என்ற இரு வகுப்பினரின் தொகை மேலும் அதிகரிப்பதில் மாற்றம் நிகழவில்லை.
ஆங்கிலக் கல்வியை வருமானங் குறைந்தவர்களுக்கு விரிவு செய்யும் உற்சாகத்தில் சமூக அமைப்பில் புதிய சமூகப் பிரிவுகள் வளர்ச்சியுறுவதைத் தடுக்கும் முயற்சி தளர்ச்சியடைந்தது. பின்வரும் புள்ளி விபரம் 1944 ஆம் ஆண்டு தொடக்கம் 1960 ஆம் ஆண்டுவரை ஆங்கிலக் கல்வியும் சுயமொழிக்கல்வியும் விரிவடைந்ததைக் காட்டும்."
1934 ஆம் ஆண்டில் ஆங்கிலப் பாடசாலை மாணவர்களின் தொகை 1932 ஆம் ஆண்டைவிட 4 வீதத்தால் அதிகரித்திருந்தது. ஆனால் 1954 ஆம் ஆண்டில் அம்மாணவர்களின் தொகை 1962 ஆம் ஆண்டைவிட 8 வீதத்தால் அதிகரித்தது. தொகையளவில் 1938 ஆம் ஆண்டில் ஆங்கிலப் பாடசாலை மாணவர்களின் தொகை 1936 ஆம் ஆண்டைவிட 9662 ஆல் அதிகரித்தவிடத்து, 1948ஆம் ஆண்டில் அம்மாணவர்களின் தொகை 1946 ஆம் ஆண்டைவிட 1,12,679ஆல் அதிகரித்தது. இது இலவசக் கல்வி முறையால் ஆங்கில கல்வி பெறுவதற்கான வாய்ப்புகள் விரிவடைந்ததைக் காட்டும்.
இலவசக் கல்வி நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் சுயமொழிக்கல்வி பயிலும் மாணவர்களின் தொகையிலேற்பட்ட அதிகரிப்பு, ஆங்கிலக்கல்வி பயிலும் மாணவர் தொகையில் ஏற்பட்ட அதிகரிப்பைவிடப் பன்மடங்காக இருந்தது. 1936 ஆம் ஆண்டில் ஆங்கிலப் பாடசாலை மாணவரின் தொகை 1934 ஆம் ஆண்டைவிட 6.388 ஆல் அதிகரித்தவிடத்து, அதே காலப்பகுதியிற் சுயமொழிக் கல்வி பயிலும் மாணவர் தொகை 54,224 ஆல் அதிகரித்திருந்தது.
ஆனால், இலவசக் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்ட போது 1948ம் ஆண்டில் ஆங்கிலப் பாடசாலை மாணவர்களின் தொகை 1946 ஆம்
பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம் 71

Page 38
ț7/80ÞI ‘9 I ‘9 IŁ0Z9909°00'S6ZA.096 I
6/8/ I 8‘9/op I86/978ZZ“ĶI ‘y†SZ 896 I 8I6'69守88į7€8‘ZO‘EIƐ0£9.6€/opzoo6/9996 I 68Z‘99068696°Ø. I “ZIZ/09£ț79°ZI ‘E0/9#796 I 680‘99寸860I I ‘92-‘I I£ț78ț79#79°/8°Z699Z96|| ÇZț7'699 #76Z€8‘99”OI! €9ț79çɛ‘69“Z/#79096|| I ÇİZ' İçZ96/06°00′6çț79ț7Þ90°6′Z“ZƐZ98ț76I 988‘99098Z8Z“Zço/I###909“CI£#7989'9 I‘I9999ț76I 968‘ɛț78I6 Zɛ0'49'99守T寸ț76I ‘ÇIZ96ZO‘IO‘Iț798ț7ț76I
gxo9logégxo9logé
axc91,0ĮIŲ91,91KJ.1,93209009 | 41(910991kT,u99qxooaeg) Įr(910091KTI1į9@a9c09Cu9@9_ij-o TrussiIs-spoT; HIT!090091] ©TITI | 0900911-9-Turi | |1,910091.J.(l9009 s-o Q9QQ9 saepT LITT I 1/4; T sjȚIŋsiliquo)ŋsillale) [ f] fillano)IJssfi ugle)Q9QQ91|42TluffT-ı ırırsag ņTII/g(g)ņTJugog) | rmọTT||go@@@@Isao!?!?!?goạ sẽ | @goo'sā,
ங்கிலம்
ண்டும் ஆ
L
பயிற்று மொழியாக
72

ஆண்டைவிட 1,12,679ஆல் அதிகரித்தவிடத்து, அதே காலப்பகுதியிற் சுயமொழிக்கல்வி பயிலும் மாணவர் தொகை 54, 224 ஆல் அதிகரித்திருந்தது. ஆனால் இலவசக் கல்வி நடைமுறைப் படுத்தப்பட்ட போது, 1948ஆம் ஆண்டில் ஆங்கிலப் பாடசாலை மாணவர்களின் தொகை 1946 ஆம் ஆண்டைவிட 1,12,679 ஆல் அதிகரித்தவிடத்து அதே காலப்பகுதியிற் சுயமொழிப் பாடசாலை மாணவர் தொகை 1,48,625 ஆல் மட்டுமே அதிகரித்தது.
மேலும் 1944 ஆம் ஆண்டில் ஆங்கிலப் பாடசாலை மாணவர் சுயமொழிப் பாடசாலை மாணவர் விகிதம் ஏறத்தாழ 1:6 என்று இருந்து 1956 இல் 14 ஆக மாற்றமுற்றது.
இப்புள்ளி விபரங்கள் இலவசக் கல்வி முறையின் விளைவாகப் பாடசாலை செல்லும் மாணவர்களின் வீதம் அதிகரித்ததைக் காட்டும் அதேவேளையில், ஆங்கிலக் கல்வி சுயமொழிக் கல்வியைவிட வேகமாக விரிவடைந்ததையும் காட்டுகின்றது. கல்விமுறையில் இருந்த குறைபாடு, ஆங்கிலக் கல்வி யாவருக்கும் கிடைக்கதக்கதாக இருக்கவில்லை என்பது மட்டுமல்ல, போதனா மொழி அடிப்படையிற் கல்விமுறை பிரிவுபட்டு அமைந்திருந்தமையால் சமூக அமைப்பில் எழுச்சியுற்ற புதிய சமூக வகுப்புப் பிரிவுகளும் ஒரு முக்கிய குறைபாடாகவே எடுத்துக் கூறப்பட்டன. போதனாமொழியை எல்லாக் கல்வி நிலைகளிலும் மாற்றாது இலவசக் கல்வி முறை நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டமையால் ஆங்கிலத்தையம் சுயமொழிகளையும் கற்ற இரு வெவ்வேறு "நாடுகள்" சுதந்திரத்தின் பின்னரும் வளர்ச்சியுறுவது தவிர்க்க முடியாததாயிற்று.
இலவசக் கல்வி முறையினால், ஆங்கிலக் கல்வியை நாடிய யாவருக்கும் அது கிட்டியதாகக் கூறுவதற்கில்லை. சுயமொழிக் கல்வி பயிலும் மாணவர்களின் தொகை 1945 ஆம் ஆண்டின் பின்னர் அதிகரித்துச் சென்றதைக் காட்டும் புள்ளி விபரம் இதற்குத்தக்க சான்றாகும்.
1946 ஆம் ஆண்டில் 6,67,032 ஆக இருந்த சுயமொழிப் பாடசாலை மாணவர் தொகை, 1956 இல் 13,02,834 ஆக அதிகரித்தது. இலவசக் கல்வி முறை நடைமுறையிலிருந்த போதிலும் இக் காலப்பகுதியிற் புதிதாகச் சேர்ந்த 6,35,802 மாணவர்கள் அவ்வசதியைப் பயன்படுத்தி ஆங்கிலப் பாடசாலைகளிற் சேர. முடியாதிருந்தது.
பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம் 73

Page 39
ஆங்கிலத்தின் முக்கியத்துவம் இக் காலப் பகுதியிலே தொடர்ந்து நிலைபெற்றிருந்ததால், அவர்கள் விரும்பிச் சுயமொழிப் பாடசாலைகளிற் சேர்ந்திருப்பர் என்று கொள்ள முடியாது. இலவசக் கல்வி நடைமுறைக்கு வருமுன்னரே சுயமொழிப் பாடசாலைகள் இலவசமாகக் கல்வி வழங்கி வந்தன. உயர்தரமான ஆங்கிலக் கல்வியை வழங்கிய பாடசாலைகள் கட்டணம் அறவிட்டு வந்தன.
1945 ஆம் ஆண்டில் இலவசக் கல்விக் கொள்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதும் உடனடியாக ஏற்பட்ட விளைவு என்னவெனில், இதுவரை ஆங்கிலக் கல்வியைப் பெறக் கட்டணம் செலுத்தி வந்த பொருளாதார வசதியுள்ள வகுப்பினர் இதன் பின் அதே கல்வியை இலவசமாகப் பெற்றமையாகும். நீண்டகாலமாக இலவசமாக வழங்கப்பட்டு வந்த தரம் குறைந்த கல்வியையே வசதி குறைந்த வகுப்பினர் தொடர்ந்து பெற்றுவர நேரிட்டது. “எனவே போதனா மொழி அடிப்படையிலான குறைபாடுகள் நிறைந்த இருவகைப் பாடசாலை முறை நீடித்து நிலவ நேரிட்டது.
இலங்கையின் கல்வி முறையிலிருந்த இம் முக்கிய குறைபாட்டைப் போக்குவதற்கு எல்லாப் பாடசாலைகளிலும் சுயமொழிகளைப் போதனா மொழிகளாக்க வேண்டியிருந்தது. போதனாமொழி மாற்றம் நடைபெற்ற போது, ஆங்கிலத்திற்குப் பதிலாகச் சிங்களத்துக்கும் தமிழுக்கும் இடமளிக்கப்பட்டது. ஆரம்பநிலை, இடைநிலை, உயர்நிலை ஆகிய மூன்ற கல்வி நிலைகளிலும் படிப்படியாக ஆங்கிலம் நீடிக்கப்பட்டபோதும் சிங்களத்துக்கும் தமிழுக்கும் இடமளிக்கப்பட்டது.
"தேசிய நோக்கில் ஆங்கிலம் போதனா மொழியாக அமைவது ஒரு தவறான தெரிவு" என்றும் "தாய் மொழிக்கு நாம் அளிக்கும் பெரும்முக்கியத்துவத்தை ஒரு சிறுபான்மையினருக்காகக் கைவிட ஆயத்தமாயில்லை" என்றும் கூறிய விசேட கல்வி ஆணைக்குழு (1943) ஆரம்பப் பாடசாலையிலே தாய்மொழியே போதனா மொழியாக இருக்க வேண்டும் என்று விதந்துரைத்தது.
மூன்றாம் வகுப்பிலிருந்து ஆங்கிலம் கட்டாய இரண்டாம் மொழியாகக் கற்பிக்கப்பட வேண்டும் மென்றும் குழு விதந்துரைத்தது. “இவ்விதந்துரைப்புரைகள் அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன.
விசேட கல்விக் குழுவின் அறிக்கை எழுதப்பட்டுப் பிரசுரிக்கப்பட்டபோது அரசாங்க சபை சிங்களமும் தமிழும் அரசகரும
74 பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம்

மொழிகளாதல் வேண்டும் என்று தீர்மானிக்கவில்லை. எனவே, குழு அரசாங்க மொழி ஒன்றாக இருக்க, கல்வி நிலையங்களிற் போதனா மொழி வேறொன்றாக இருப்பதால் எழக்கூடிய பிரச்சினைகளை எதிர்நோக்கியது. எல்லாவகையான கல்வி நிலைகளிலும் தாய்மொழியே போதனாமொழிகளாகிவிடும் என்பதை எதிர்பார்த்த விசேட குழு ஆங்கிலம் நிர்வாக மொழியாக இருந்தமையால் அதனை யாவரும் கற்றல் வேண்டும் என்று விதந்துரைத்தது.
விசேட கல்விக் குழுவின் முக்கிய கொள்கைகள் அரசாங்க சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டதும் எல்லாக் கல்வி நிலைகளிலும் தாய்மொழியைப் போதனாமொழியாக்கும் குறிக்கோள் அரசின் முக்கிய குறிக்கோளாக்கப்பட்டது.
1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதியும் செப்டம்பர் மாதம் 20 ஆந்திகதியும் அரசாங்கசபை உதவி பெறும் ஆங்கிலப் பாடசாலைகளுக்கான கல்விச் சட்டக் கோவையைத் (Education Code) திருத்தி 1945 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஐந்தாம் வகுப்பு வரை எல்லா வகுப்புக்களிலும் ஒவ்வொரு மாணவனுடைய தாய்மொழியும் போதனா மொழியாக அமைதல் வேண்டுமென்றும் மூன்றாம் வகுப்புத் தொடக்கம் எல்லாப் பாடசாலைகளிலும் ஆங்கிலம் கட்டாய இரண்டாம் மொழியாகக் கற்பிக்கப்பட வேண்டுமென்றும் விதித்தது.
இதன் விளைவாகக் கடந்த 130 ஆண்டுகளாகக் கல்வி முறையிற் காணப்பட்டு வந்த முக்கிய குறைபாடு நீக்கப் பட்டது." ஆரம்ப நிலை வகுப்புக்களைப் பொறுத்த வரையில் 369 ஆங்கிலப் பாடசாலைகள் 5,436 சிங்கள தமிழ்ப் பாடசாலைகளின் நிலைக்குக் கொண்டு வரப்பட்டன.
தேசிய மொழிகளைப் பொறுத்தவரையிற் கல்வித்துறையிலே திட்டவட்டமான மாற்றங்கள் ஏற்பட்டவிடத்து அரசியற்றுறையிற் சுயமொழி இயக்கம் தேசிய விழிப்புணர்ச்சியின் வளர்ச்சியை ஊக்குவித்தது. 1932-ஆம் ஆண்டில் அரசாங்கசபையால் ஆரம்பித்த இயக்கத்தின் விளைவாகச் சிங்களத்தையும் தமிழையும் நாட்டின் அரசகரும மொழிகளாக்குவது பற்றி ஆராய ஓர் அரசாங்க சபைத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது. இக்குழு சமர்பித்த அறிக்கையை விவாதிக்கு முன்னர் அரசாங்க சபை கலைக்கப்பட்டது.
பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம் 75

Page 40
1947- ஆம் ஆண்டில் நாடு சுதந்திரமடைந்ததும் புதிய யுகமொன்று ஆரம்பமாயிற்று. இந்தியா இந்தி மொழியைத் தேசிய மொழியாகப் பிரகடனம் செய்தது. பர்மாவும் இந்தோனேசியாவும் தத்தம் தேசிய மொழிகளைப் பொறுத்தவரையில் இதேபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்தன.
ஒரு சுதந்திரமடைந்த சனநாயக நாடு அந்நிய மொழியைப் பயன்படுத்துவது மக்கள் பெற்றுக்கொண்ட புதிய அந்தஸ்துக்கு முரண்பட்டதாக இருந்தது.
தேசிய நிறுவனங்களுக்கும் தேசிய மொழிகளுக்கும் புத்துயிர் அளிக்க வேண்டும் என்ற மக்கள் கோரிக்கை வலுப்பெற்றது. இக்கோரிக்கை நியாயமானதாகவும் முறையானதாகவும் இயல்பானதாகவும் விளங்கியது.
மக்கள் தொகையில் 6 வீதமானவர்களே ஆங்கிலத்தை விளங்கிக் கொள்ளக் கூடியவர்களாவும், எஞ்சிய 94 வீதமானவர். களும் நாட்டின் சமூக, அரசியல், கல்வித்துறைகளில் என்ன நடக்கின்றது என்பதை அறியாதவர்களாகவும் இருந்த நிலையில் இம்மொழிக் கோரிக்கை தவிர்க்க முடியாததாக இருந்தது.
1951- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14- ஆம் திகதி கல்வி அமைச்சர் ஆறாம், ஏழாம், எட்டாம் வகுப்புக்களில் முறையே 1953, 1954, 1955 ஆம் ஆண்டுகள் தொடக்கம் தாய்மொழியே போதனா மொழியாக அமைய வேண்டுமென்று விதித்தார்.
எனவே, இதுவரை ஐந்தாம் வகுப்புத் தொடக்கம் சி.பா.ப. வகுப்புவரை ஆங்கிலத்தைப் போதனா மொழியாகக் கொண்டிருந்த நகரப் பாடசாலைகள் கட்டாயமாகத் தேசிய மொழிகளைப் போதனா மொழிகளாக்க வேண்டியதாயிற்று. இவ்விதி உண்மையில் ஆங்கிலத்திற் கல்விகற்ற 6 சதவீதமான பிள்ளைகளையே பாதித்தது.* உண்மையிலே தேசிய மொழிகளைப் போதனா மொழிகளாக மாற்றும் பிரச்சினையை ஒரு சில நகரப் புறப்பாடசாலைகளே எதிர்நோக்கின.
1945- ஆம் ஆண்டில் இலங்கையில் ஆரம்பநிலைக் கல்வி நிலையிலே தொடங்கிய போதனா மொழி மாற்றம் 1960 இல் பல்கலைக்கழக நிலைவரை முன்னேறிச் சென்றபோதிலும் இன்னும் அது முழுமை பெற்று விடவில்லை" உயர் கல்வியையும் வேலை வாய்ப்புக்களையும் பொறுத்த வரையிலே தேசிய மொழிகள் நடைமுறையில் முழு இடத்தையும் பெற்றுவிடவில்லை.
76 பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம்

போதனா மொழி மாற்றம் முக்கியமாக நாட்டிலிருந்த 10 சதவீதத்துக்கும் குறைந்த ஆங்கிலப் பாடசாலைகளுக்கும் அப்பாடசாலைகளுக்குச் செல்லும் பிள்ளைகள் சார்ந்திருந்த வசதி படைத்த சமூக வகுப்புக்களுக்கும் எதிரான ஒரு போராட்டமாகவும், போதனாமொழி அடிப்படையிலான குறைபாடுகள் நிறைந்த இருவகைப் பாடசாலை முறையினாற் கல்வித்துறையிலும் சமூகத்துறையிலும் ஏற்பட்ட அநீதிகளைக் களைந்தெறியும் இயக்கமாகவும் விளங்கியது.
சலுகை பெற்ற சிறுபான்மை வகுப்பினர் ஆங்கிலக் கல்வியின் மூலம் பொருளாதார, சமூக அந்தஸ்தை உயர்த்திக் கொள்வதற்கும் உயர்கல்வி பெறுவதற்கும் இருந்த வாய்ப்புக்கள் சுயமொழிக்கல்வி கற்றவர்களுக்குக் கிடைக்கப் பெறாமையால் ஏற்பட்ட குறைபாடுகளைப் போக்கும் ஒரு முக்கிய கல்விச் சீர்த்திருத்தமாகவும் போதனாமொழி மாற்றம் விளங்கியது.
இலவசக் கல்விமுறை யாவருக்கும் ஆங்கிலக் கல்வி கிடைப்பதை உறுதிப்படுத்தாத போதிலும், உயர்கல்வி நிலையிற் படிப்படியாக ஏற்பட்ட போதனாமொழி மாற்றம் சுயமொழி கற்றவர்களுக்கு உயர்கல்வி பெறும் வாய்ப்பையும் உயர்கல்வித் தகுதிகளின் அடிப்படையில் வேலை வாய்ப்புக்களைப் பெறும் வசதிகளையும் வழங்கியதை மறுப்பதற்கில்லை.
குடியேற்ற நாட்டாட்சியின்போது ஆங்கிலக்கல்வி பெறுவதற்கான வசதிகள் மிகச் சிறுபான்மையினருக்கே அளிக்கப்பட்டமையால் ஏற்பட்ட தீங்கான சமூக விளைவுகளும், பெரும்பாலானவர்கள் சுயமொழிகளிலேயே கல்வி கற்று வந்தமையும் "பிள்ளைகள் கல்வி பெறச் சிறந்த போதனாமொழி தாய்மொழியே" என்ற கல்வித்தத்துவ, உளவியல் ஆதாரங்களுடன் கூடிய உண்மை, போதனாமொழி மாற்றம் பற்றிய போராட்டத்திற் கொள்ளவேண்டிய பங்கின் முக்கியத்துவத்தைக் குறைத்து விட்டது.
அடிக்குறிப்புகள்
1. சுயமொழிகள்என்பன சிங்களம், தமிழ் ஆகிய இரு தேசிய மொழிகளையும்
குறிக்கும்.
2. Ceylon, Colebrooke Commission Report, 1831P.31
3. Ibid P29
4. Ibid P30
பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம் 77

Page 41
10.
11.
12.
13.
14.
15.
16. 17. 18.
19.
20.
21.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
3.
32.
33.
78
Ceylon Sessional Paper X 1956. Final Report of the Commission on Higher Education in the National Languages P.6 Mulder Wallace R. School For a New Nation, Colombo 1962 P.32-33 Ceylon, Colebrooke Commission Report, 1831 P.32 Ruberu, Ranjit T. "Church and State in Education in Ceylon: and historical survey", Word Year book of education 1966, London, 1966 P.123. Ceylon Sessional PapersXXIV 1943. Report of the Special Committee of Education P22
Ceylon Sessional PaperXOp, Cit.P.7 Ruberu, Ranjit, T. Education in Colonial Ceylon Colombo P.253 Ceylon Sessional Paper X 1956 Op. Citp.7 Ceylon Sessional PaperXXIV 1943, Op. Cit P40 Ceylon Sessional Paper XXII 1946 Report of Official Language P.11 Ibid P.11
Ceylon Sessional PaperX 1956 Op. Cit P.19 Ceylon Sessional Paper XXIV 1943 Op. Cit. P.32 Ceylon Sessional Paper X 1956 P.16
Ibid P.19
Ceylon Sessional Paper 1943 Op. Cit,23 Jayasuriya T.L. Education in Ceylon before and after independence 1939-1968 Colombo, 1969. P5
ruberu, Ranjit T.1966. OPcit.P. 121 Ceylon Sessional Paper XXIV 1943P.23
Ibid
Jayasuriya T.E.Op.Cit. P.5 Mendis G.C. "Adult Franchise and Educational Reforms" University ofCeylon Review II 1-2 Oct 1944 P39 Ceylon Administrative Report, 1944 IV P.A.8
Ibid - Ceylon Administrative Report, 1945 Part TV P.A.. II Ceylon Administrative Report, Part IVP.A.5
Ibid Arulnandhy K.S Ceylon YearBook ofEducation 1952 London. 1952 P535 Wriggins, Howard, W.Ceylon, Dilemma of a new nation Princeton University Press, New Jersey, 1960 P30
பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம்

34. Ames Mickal. M.The impact of Western Education on Religion And
Society in Ceylon Pacific Affairs, Vol. XL 1 & 2 1967. P.31 35. Ibid 36. Mills, Lennex. A. Ceylon under British Rule 1975 - 1932 Colombo.
1964. P. 265. 37. Ceylon Administrative Report 1930 Part IVPA 45 Ceylon Administrative Report 1932 Part IVPA61 Ceylon Administrative Report 1934 Part IVPA63 Ceylon Administrative Report 1936 Part IVPA80 Ceylon Administrative Report 1938 Part IVPA54 Ceylon Administrative Report 1944 Part IVPA 17 Ceylon Administrative Report 1946 Part IVPA26 38. Ceylon, Hansard (State Council) 24, January, 1945, Col.485,486. 39. Ceylon, Sessional Paper, XXIV 1943 Op. Cit P.138 40. Ibid P66
41. Ibid P.64 42. Jones, Gairn, S. Population Growth and Educational Progress in Ceylon
Colombo 1971 P. 43. Arulmanadhy, K.S. CitP. 539 44. Ceylon Adminstrative Report 1944 Part IV A 17 Ceylon Adminstrative Report 1946 Part IV A25 Ceylon Adminstrative Report 1948 Part IV A30 Ceylon Adminstrative Report 1950 Part IV A32 Ceylon Adminstrative Report 1952 Part IV A38 Ceylon Adminstrative Report 1956 Part IV A 127 Ceylon Adminstrative Report 1958 Part IV A 130 45. Jayasurya J.E.O.Cit. P.85 46. Ceylon Sessional Papers, XIV, 1943 Op.CitP40 47. Ceylon Sessional Papers, XXIV, 1946 Op. CitP36 48. Ceylon Sessional Papers, X, 1956 Op.CitP8 49. Jayasuriya, J.E. Op.Cit. P,200
REFERENCES:
Arasaratnam, S. Ceylon,New Jersey 1964.
Jayasekara, U.D.Early History of Education in Ceylon, Dept.of Cultural Af. fairs Colombo, 1969.
பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம் 79

Page 42
Jayasuriya, J.E. Education in Ceylon Before and After Independence, 19391968 Colombo, Associated Educational Publishers 1969.
Jayaweera, Swarna, Religious Organization and the State in Education. Comparative Education Review (New York), 12(2) June, 1968
Jayaweera, Swarna, The Morgan Report JNESC, 21. 1972.
Jayaweera Swarna, British Educational policy in the 19 the Century, Paedagogica historica, International Journal of the History of Education 9 (1) 1969
Keay, F. E. Indian Education in Ancient and Later Times, London, 1938.
Ruberu, T. Ranjit, Early British Educational Activities, Education in Ceylon, 1969,Part III.
Sirithasivam, A. (Ed) A Collection of Tamil Verse in Sri Lanka, Colombo, 1960.
Sirisena, U.D.I., Ancient Systems of Learning in Ceylon, Ceylon today, 18(1- 6) 1970
Somasegaram, S.U.The Hindu Tradition, Education in Ceylon (1969) Part3.
80 பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம்

பின்னிணைப்பு-I
பாடசாலைகளில் தாய்மொழிக் கல்வி வெற்றிபெற்றுள்ளதா?
சுதந்திரத்துக்குப் பிற்பட்ட காலத்தில் இலங்கைப் பாடசாலைகளில் படிப்படியாகத் தாய்மொழி (சிங்களம் /தமிழ்) பயிற்று மொழியாக்கப்பட்டது. இறுதியில் 1970 களில் விஞ்ஞான பாட நெறிகளும் க.பொ.த. உ/த வகுப்புகளில் பயிற்று மொழியானதுடன் பாடசாலை முறை முழுவதும் தனித்து சுயமொழிகளைக் கொண்டே
பாடங்கள் கற்பிக்கப்பட்டன.
இதன் பின் பல்கலைக்கழகங்களிலும் சமூக அறிவியல், கலை, வர்த்தகவியல் பாடங்கள் முதல் பட்ட நிலையிலும் பட்டப்பின் படிப்பும் பயிற்சி நெறிகளிலும் சுயமொழிகள் பயன்படுத்தப்பட்டன . ஆங்கில மொழியானது பொறியியல், விஞ்ஞான, மருத்துவ பயிற்சி நெறிகளில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு சுயமொழிகள் கல்வித்துறையில் உயர் நிலையிலும் விரிவாகப் பயன்படுத்தும் கொள்கை உருவாகக் காரணங்கள் யாவை?
தாய்மொழி பிள்ளைகளின் இயற்கையான பயிற்று மொழி ,
2. வீட்டு மொழியில் ஐந்தாண்டுகள் பரீட்சயம் பெற்றுவிட்ட பிள்ளைகளுக்கு அம்மொழியில் கல்வி பெறுவதில் பல சாதக நிலைமைகள் உண்டு. கல்வியைக் கற்க எதுவித மொழித் தடையும் இல்லை;
3. ஆங்கிலம் பயிற்று மொழியில் பயிலுவதாயின், வீட்டு மொழியற்ற ஒரு புதிய மொழியை முதலில் கற்றுத் தேறுவதில் சிரமமுண்டு;
4. ஆங்கிலேயர் காலத்தில் ஒரு சிலருக்கு மட்டுமே - பாடசாலை சென்ற மாணவர்களின் பத்து சதவீதமான மாணவர்களே ஆங்கில மொழியில் பயின்றனர். வசதி மிக்க வகுப்பினர் கட்டணஞ் செலுத்தி ஆங்கில மொழியில் சிறந்த கல்வியைப் பெற்றுத் தமது பதவிகளையும் அந்தஸ்தையும் தாமே
பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம் 81

Page 43
W பெற்றுக் கொள்ளும் நிலை இருந்தது. உலகில் பாடசாலைக் கல்வியை அனைத்துப் தமிழ்ப் பிள்ளைகளும் தமிழ் மொழியில் பெறும் ஒரே நாடு இலங்கைதான்.
சிங்கப்பூரில் தமிழ்ப் பிள்ளைகள் ஆங்கிலத்தில்தான் பயில வேண்டும்;
மலேசியாவில் தமிழ்ப் பிள்ளைகள் ஆரம்பக்கல்வியைத் தமிழில் பயிலலாம், இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்பன மலேசியமொழியிலேயே கற்பிக்கப்படும் ;
மேலை நாடுகளில் தமிழ்ப் பிள்ளைகள் அந்த அந்த நாட்டு மொழிகளிலேயே படிக்க வேண்டும்;
தமிழகத்தில் தமிழ்ப் பிள்ளைகள் தனியார் பாடசாலைகளில் ஆங்கில மொழியில் விரும்பிப் பயிலுகின்றனர். சாதாரண நகரசபை, முனிசிப்பல் சபை நடாத்தும் பாடசாலைகள் பெரும்பாலும் தமிழ் மொழியில் பயிற்றுகின்றன.
தமிழ், சிங்கள மொழிகளில் பயில்வதால், அவைதாய்மொழி என்பதால் பாடங்களை இலகுவாகக் கற்றுக் கொள்ளலாம். உண்மை. ஆனால் தாய்மொழி என்பதற்காக தன்னியக்கமாகக் கல்வித்தேர்ச்சி ஏற்பட்டு விடாது. முயற்சியும் ஆற்றலுடைய ஆசிரியர், அவருடைய விசேட கற்பித்தல் அணுகுமுறைகள் மாணவர்களின் ஊக்கம், கற்பித்தல் சாதனங்கள், வகுப்பறையில் சிறந்த கற்றல் சூழல், அதிபரின் முகாமைத்துவ, மேற்பார்வைத் திறன்கள், பெற்றோர்களின் ஒத்துழைப்பும் ஈடுபாடும் - இவையாவும் சாதகமாக இருந்தால்தான் தாய்மொழி ஒரு பயிற்று மொழியாக வெற்றி பெற முடியும்.
11 ஆண்டுகள், 13 ஆண்டுகள் பாடசாலையில் தமிழ் சிங்கள மொழியில் - தமக்கு நன்கு பரீட்சயமான மொழியில் கற்று இன்று பரீட்சையில் சித்தியெய்தார் சதவீதம் கீழே தரப்படுகின்றது. இத்தரவுகளில் பல அதிர்ச்சி தருவன:
க.பொ.த. சாத பரீட்சை
米 2002 இல் 330 000 க.பொ.த (சா/த) மாணவர்களில் 250 000 பேர் ஆங்கிலத்தில் சித்தி பெறவில்லை; 2001 இல் இத்தொகை 288.885.
ck 325000 விண்ணப்பதாரிகளில் 195000 பேர் கணிதத்தில் சித்தி
எய்தவில்லை.
82 பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம்

சித்தியெய்தாதோர் %
IITLIilab6ir 2001 2002
1. ஆங்கிலம் 66.7% 65.8% 2. கணிதம் 55% 60.0% 3. விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் 47% 46% 4. சமூகக்கல்வியும் வரலாறும் 24% 22% 5. தமிழ் மொழியும் இலக்கியமும் 21% 23%
தகவல் பரீட்சைத் திணைக்களம்
அதாவது விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம் முதலிய கடினமான பாடங்களில் குறைந்தளவான மாணவர்கள் சித்தி பெறும் நிலை , கடின அம்சம் குறைந்த பாடங்களான சமூகக்கல்வி, தமிழ்மொழியும் இலக்கியமும் ஆகிய பாடங்களில் கூட 2001 ஆம் ஆண்டில் முறையே 91000 பேர், 12215 பேர் சித்தி எய்தத் தவறுகின்ற நிலை ,
இச்சித்தியின்மைகள் சுட்டிக்காட்டும் நிலைமைகள் யாவை?
விஞ்ஞானம், கணிதம் ஆகிய பாடங்களை தமிழ், சிங்கள மொழிகளில் பயின்றும் இப்பாடங்களில் இலட்சக் கணக்கானோர் சித்தி பெறாத நிலை ; விஞ்ஞான பாடத்தில் (1) 136000 பேரும் கணிதத்தில் (1) 170623 பேரும் சித்தி எய்தாத நிலைமை பிள்ளைகளின் தாய்மொழியில், வீட்டு மொழியில் கற்பித்த போதும், இந்நிலைமையே காணப்படுகிறது. (ஒருகேள்வி: நாடளாவிய ரீதியில் இவர்களுக்கு இதே பாடங்களை பலர் உற்சாகத்துடன் கூறுவது போன்று, ஆங்கிலத்தில் - அறியாத ஒரு வேற்று நாட்டு மொழியில் கற்பித்தால் எமது நாட்டின் விஞ்ஞான, கணிதக் கல்வியின் தராதரங்கள் இப்போது இருப்பதை விட வீழ்ச்சி அடையும் என்பதே எமது கருத்து) க.பொ.த. சாதர பரீட்சை முடிவுகளைத் தொகுத்து நோக்குமிடத்து எமது மக்கள் அதிர்ச்சியடைய ஏராளமான தகவல்கள் உண்டு.
பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம் 83

Page 44
ck 2001 இல் க. பொ.த சா/த பரீட் சைக்கு அமர்ந்த 347000 பாடசாலை மாணவர்களில் 25500 பேர் ஒரு பாடத்திலும் சித்தி எய்தவில்லை.
来 அதாவது ஐந்து பாடங்களுக்கும் குறைவான பாடங்களில் சித்தி எய்தத் தவறியோர் மொத்த பரீட்சை விண்ணப்ப தாரிகளில் 58 சதவீதமானவர்கள்
- தொகை 150000. இவர்கள் தாங்கள் முழுமையாக க.பொ.த சா/த பரீட்சையில் சித்தி எய்தியதாக உரிமை பாராட்ட (Մ9էջեւ IIT35l.
(மீண்டும் கூறுவதாயின் இம்மாணவர்கள் அனைவரும் தமிழ் / சிங்கள மொழியில், தங்களுக்கு மிகவும் பரீட்சயமான தாய் மொழியில் பயின்று இவ்வாறான மோசமான சித்தியின்மைக்கு உள்ளாகின்றார்கள்.)
எவ்வாறாயினும் பாடசாலைப் பரீட் சார்த்திகளில் 41.4 சதவீதமானவர்கள் (127000 பேர் - 2001) க.பொ.த. உ/த வகுப்புக்களுக்கு அனுமதி பெறும் தகுதிகளைப் பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்பகுப்பாய்வின் பயன் யாதெனில் பாடசாலைகளில் சிங்களம்/ தமிழ் மொழி மூலமான கற்பித்தலின் குறைகள் இனங் காணப்பட்டு உடனடியான பரிகார நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்பதுதான்.
க.பொ.த சாlத பரீட்சையில் உரிய தகுதிகளைப் பெற்றவர்களே உ/த வகுப்புகளில் அனுமதிக்கப்படுகின்றனர். இவ்வாறு சில அடிப்படைத் தகுதிகளைப் பெற்றபின் தொடர்ந்து உத வகுப்புகளில் பயிலும்மாணவர்களுக்கான பாடசாலைகளின் தொகை தற்போது 2345. இவற்றில் 600 பாடசாலைகளில் மட்டுமே க.பொ.த உ/த விஞ்ஞானப் பிரிவு உண்டு. மொத்தப் பாடசாலைகளில் (9826-2002) 23.9% வீதமான பாடசாலைகள் மட்டுமே உ/த வகுப்புகளைக் கொண்டவை.
இவ்வகுப்புகளிலும் விஞ்ஞானம் மற்றும் சகல பாடங்களும் சுயமொழிகளிலேயே கற்பிக்கப்படுகின்றன. க.பொ.த உயர் நிலையில் வழங்கப்படும் கல்வியில் ஏறத்தாழ 50 சதவீதமானவர்கள் பல்கலைக்கழகம் செல்லத் தேவையான அனுமதித்தகுதிகளைப் பெறுகின்றனர். 1997 இல் 51.6 சதவீதமானவர்களும் 1998 இல் 49.6
84 பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம்

சதவீதமானவர்களும் 1998 இல் 49.6 சதவீதமானவர்களும் 1999 இல் 43.3 சதவீதமானவர்களும் 2001 இல் மூன்று பாடப் பிரிவினரில் 50.2%, நான்கு பாடப்பிரிவினரில் 44.2% இத்தகைய தகுதிகளைப் பெற்றனர்.
ஆனால் மறுபுறம் உ/த பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பான சில தரவுகள் எவ்வாறு பல பாடசாலைகளில் உ/த பிரிவுகள் வினைத்திறனின்றி இயங்குகின்றன என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன:
சகல பாடங்களிலும் சித்தி பெறாதோர் தொகை
ஆண்டு மாணவர் தொகை
1997 98.33
1998 சகல பாடங்களிலும் 1 310
சித்திபெறாதோர்
2000 மூன்று பாடப்பிரிவினர் 9000
நான்குபாடப்பிரிவினர் 3581
2001 மூன்று பாடப் பிரிவினர் 14612 நான்கு பாடப் பிரிவினர் 2669
(ஆதாரம் பரீட்சைத்திணைக்களம்)
இதுபோன்ற மற்றொரு தரவு பின்வருமாறு
இருபாடங்களில் அல்லது அதற்கும் குறைவான பாடங்களில் சித்தி பெறாதோர் சதவீதம்:
ஆண்டு மாணவர் தொகை
1997 26%
1998 27%
2000 மூன்று பாடப்பிரிவு 44% நான்கு பாடப்பிரிவு 23%
2002 மூன்று பாடப் பிரிவு 41% நான்கு பாடம் பிரிவு 36%
(ஆதாரம் : பரீட்சைத் திணைக்களம்)
பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம் 85

Page 45
மேற்கண்ட முறையில் காணப்படும் சித்தியின்மைகள் கல்விமுறை வினைத்திறனற்று இயங்குவதையும் கல்வியின் மீதான அரசாங்கச் செலவு விரயமாகவதையுமே சுட்டிக் காட்டுகின்றன. அத்துடன் க.பொ.த உ/த கல்வி நிலையின் தராதரங்கள் மேம்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் இத்தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.
க.பொ.த உ/த பரிட்சையில் மாணவர் சித்தியின்மை பற்றிய மேலதிக தகவல்கள் பின்வருமாறு , இவை பெற்றோர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மட்டுமன்றி கல்வி மேம்பாட்டில் ஈடுபாடுடைய கொள்கை வகுப்போர், கல்வி ஆர்வலர்கள், கல்வி ஆய்வாளர்கள் ஆகியோருக்கும் பயனுள்ளவை.
க.பொ.த உ/த பரீட்சைப் பெறுபேறுகளின்படி முக்கிய பாடங்களில் காணப்படும் வீழ்ச்சிகளைக் காட்டும் இப்புள்ளி விபரங்களைக் கருத்திற்கொள்க: முக்கிய பாடங்களில் சித்தியின்மை பற்றிய தகவல்கள் மட்டுமே கீழே தரப்படுகின்றன.
Tib சித்தியின்மை %
1999 2000 1. பெளதீகம் 34.8% 36% 2. இரசாயனம் 33.4% 33% 3. தூயகணிதம் 49.4% 36% 4. பிரயோக கணிதம் 52% 35% 5. கணிதம் 36% 42% 6. பொருளியல் 38% 33% 7. மனைப்பொருளியல் 43% 31% 8. தமிழ் 20% 24.3% 9.ஆங்கிலம் 67% 61%
(ஆதாரம் : பரீட்சைத் திணைக்களம்)
தமிழ் /சிங்கள மொழி பயிற்றுமொழியாகக் கொண்டபோதிலும் கல்விச் சித்தி இவ்வாறென்றால், வேற்று நாட்டு ஆங்கில மொழி பயிற்று மொழியானால் பெறுபேறுகள் மேலும் வீழ்ச்சியடைவது நிச்சயம் இத்தகைய உயர்ந்த - அல்லது குறைந்த கல்வித் தேர்ச்சி.
86 பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம்

களுக்கு நிச்சயமாகப் பாடசாலைகளின் கற்பித்தல் முறைகள் ஒரு காரணம் , அத்துடன் எமது அனுமானப்படி , நாட்டில் வளர்ச்சி பெற்றுள்ள தனியார் போதனை நிலையங்கள் முற்றாக ஒழித்துக் கட்டப்பட்டு விட்டால் நிச்சயமாக இப்பரீட்சைப் பெறுபேறுகள் மேலும் வீழ்ச்சியடைவது நிச்சயம்.
பாடசாலைக் கல்வியானது, மாணவர்களின் கல்வியில் ஏற்படுத்தப்படும் இடைவெளிகளை நிரப்பும் ஒரு சக்தியாக, ஒரு காரணியாகவே தனியார் போதனை முறை விளங்குகின்றது என்பதை சொல்லித்தான் ஆகவேண்டும். தனியார் போதனை முறை பற்றி விரிவான முறையில் என்னதான் குறைகள் கூறப்பட்டாலும் அவை ஒரு 'கல்விசார் தேவை' யாக உருவாகி விட்டன. பரீட்சைகள், பரீட்சைப் பெறுபேறுகள் சமூகத்திலும் உயர்கல்வி நிலையங்களிலும் வேலை வாய்ப்பை வழங்கும் நிறுவனங்களிலும் இன்றும் பெரிதும் மதிக்கப்படுகின்றதை மறுக்க முடியாது. எனவே பாடசாலைக் கல்வி இப்போதைக்கு இத்தகைய கல்விப் பெறுபேறுகளில் அக்கறை காட்டவேண்டும் , தமது வினைத்திறனைக் கூட்ட வேண்டும் என்பது எமது தாழ்மையான வேண்டுகோள்
(பேராசிரியர். எஸ். சந்திரசேகரன்)
பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம் 87

Page 46
பின்னிணைப்பு-III
மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் பயிற்று மொழிப்பிரச்சினை
தமிழகம் மற்றும் இலங்கைக்கு அப்பால் தமிழர்கள் வாழும் நாடுகளில் மலேசியாவும் சிங்கப்பூரும் முக்கியமானவை. இருநாடுகளிலும் 19ஆம் 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம், இலங்கை ஆகிய இரு பிரதேசங்களிலிருந்து தொழில் நாடி தமிழர்கள் இந்நாடுகளுக்குக் குடியகன்றனர். மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் மக்கள் தொகையில் முறையே 8%, 7% மானவர்கள் இந்தியர்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்களாவர்.
மலேசியாவில் பெரும்பான்மையினர் மலாயர்கள்(50%), சீனர்கள் (28%); ஏனைய உள்ளூர் இனக்குழுமங்கள் 11%; இந்தியர் 8% .
சிங்கப்பூரில் சீனர்கள் 78%; மலாயர் 14%; இந்தியர்கள் 7%. இருநாடுகளிலும் ஒரே வகையான இனக்குழுமங்கள் காணப்படுவது ஒரு முக்கிய அம்சம்.
மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் கல்வியில் சலுகை பெற்ற மொழிகள்
UNTLib மலேசியா சிங்கப்பூர் 1. அதிகம் சலுகை பெற்ற மொழி மலாய மொழி ஆங்கில மொழி 2. சலுகை பெற்ற வேறு மொழிகள் ஆங்கில மொழி சீன மொழி
3. அரசாங்கக் கல்வி நிலையங்களில் மலாய மொழி ஆங்கில மொழி
பயிற்று மொழி
4. பிற மொழிகளில் கல்வி பெற உரிமை ஆம் இல்லை
2-603TLIT?
5இரண்டாவது சலுகை பெற்ற மொழியை யாவரும் சீனஇனத்தவர்கள்
பயிலுவது யார்?
(அட்டவணை 1)
88 பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம்

இவ்விருநாடுகளிலும் தாய்மொழியே பயிற்று மொழி என்ற நிலை இல்லை என்பது ஒரு குறிப்பிடத்தக்க அம்சம். இந்நாடுகளில் தேசிய ஐக்கியம் ஒரு பிரதான அம்சமாக உள்ளது. ஆனால் சிங்கப்பூரில் இனங்களின் அடிப்படையில் அவரவர் கலாசாரங்களைப் பேணும் கொள்கை பின்பற்றப்படுகின்றது. இரு நாடுகளிலும் முதலாவது பிரதான (Lead) மொழி, இரண்டாவது மொழி என இரண்டு உண்டு. இவையே சலுகை பெற்ற மொழிகள், பின்வரும் அட்டவணை 1 அந்நாடுகளில் சலுகை பெற்றுள்ள மொழிகள் எவை என்பதைக் காட்டும்.
மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளும் தமது பிரஜைகளுக்கு ஒரு இனத்துவ அடையாளத்தை வழங்குகின்றன. இந்நாடுகள் இனம் தொடர்பான கொள்கைகளைக் கொண்டவை - மலேசியாவின் 'மண்ணின் மைந்தர் (பூமிபுத்திர) கொள்கையானது சுதேசிகளுக்கு - இதில் பெரும்பாலானவர்கள் மலாயர்கள் - சலுகைகளை வழங்குகின்றது. சராசரியாகப் பார்க்கும் போது மண்ணின் மைந்தர்களின் பொருளாதார, கல்விச் சித்திகள் ஏனைய இனத்தவரிலும் (குறிப்பாக, சீனர்கள்) பார்க்கக் குறைவு, மண்ணின் மைந்தர் கொள்கையானது வறிய நிலையில் உள்ள ஏனைய இனத்தவர்களைப் பாதிக்கின்றது. மலாயர் தவிர பிற இனத்தவர்கள் மலாய மொழியை அறிந்தவர்கள் ;அதனைப் பாடசாலைகளில் பயின்றவர்கள், எனவே அம் மொழியினால் அவர்கள் பாபாட்டுக்குள்ளாகும் நிலைமை இல்லை என்பது ஆய்வாளர் கருத்து, கல்வி, பொருளாதாரக் குறிகாட்டிகளின்படி சீன, இந்திய சிறுபான்மையினர்கள் மலாயர்களை விட அத்துறைகளில் முன்னிற்கின்றனர்; மலாய மொழி அடிப்படையிலான கல்வி முறையில் அவர்களுடைய பெறுபேறுகள் மலாயர்களை விடவும் அதிகமாக உள்ளன.
சிங்கப்பூரில் இனத்துவ வகைப்பாடு காரணமாக கல்வி, வீட்டுவசதிகள் என்பவற்றில் இன ரீதியான அனுமதிப் பங்குகள் (Quota) உண்டு. இதனால் சிறுபான்மையினர் மீது எதிர்மறைப் பாதிப்புகள் ஏற்படவே செய்கின்றன. சிங்கப்பூரில் பாதிப்புக்குள்ளா. கின்றவர்கள் மலாயர்களும் இந்தியர்களுமாவர். இருநாடுகளிலும் இந்தியர்கள் - (பெரும்பாலும்) தமிழர்கள் - பாதிப்புக்குள்ளாவது குறிப்பிடத்தக்க அம்சம். ஆயினும் சிங்கப்பூரை விட மலேசியாவில் சில மாற்று ஏற்பாடுகள் உண்டு.
பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம் 89

Page 47
மலேசியாவில் கல்வி பயிற்று மொழி மலாய் மொழி; ஆங்கிலம் ஒரு கட்டாய பாடம். ஆனால் அரசாங்கம் நிதிவழங்கும் பாடசாலைகளில் பிரதான இனக்குழுவினர்களின் மொழிகள், பாடங்களாகக் கற்பிக்கப் படலாம்; ஒரளவுக்கு பயிற்று மொழியாகவும் பயன்படுத்தப்படலாம்; அப்பால் பல்வேறு வகையான பாடசாலைகள் உண்டு. ஆங்கில வழி, சீனமொழிவழி, தமிழ்வழி எனப்பல மொழிகளில் பயிற்றும் பாடசாலைகளும் உண்டு.
சிங்கப்பூரில் ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் ஆகியவை அரச கரும மொழிகள், ஆனால் ஆங்கிலமும் சீன மொழியும் சலுகை பெற்ற மொழிகள். ஆயினும் சகல அரசாங்கப் பாடசாலைகளும் ஆங்கிலத்தையே பயிற்று மொழியாகக் கொள்கின்றன. மேலும் ஒவ்வொரு இனத்தவரும் தத்தம் மொழியைப் பயில வேண்டும். சில வட இந்திய மொழிகளும் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஒரு இனத்தவர் மற்றொரு இனத்தவரின் மொழியைப் பயில வாய்ப்பில்லை; தமிழர் சீன மொழியையோ சீனர்கள் மலாய் மொழியையோ பயில வாய்ப்பில்லை. அரசாங்கப்பாடசாலைகளுக்கு வெளியே உள்ள பாடசாலைகளில் பயில அரசாங்க அனுமதி வேண்டும்.
மலேசியாவில் வசதியுள்ள சீன, தமிழ்க்குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள், பாடசாலைக்கு வரும்போது மலாய், ஆங்கிலம் என்பவற்றை ஓரளவு தெரிந்திருக்கின்றார்கள். இரு நாடுகளிலும் பிரதான மொழிகளைப் பயில எல்லா இனக்குழுவினருக்கும் வாய்ப்புகள் உண்டு(மலேசியாவில் மலேய மொழி, சிங்கப்பூரில் ஆங்கில மொழி) ஆனால் இரண்டாம் மொழியைப் பயில வாய்ப்புகள் குறைவு. இரு நாடுகளிலும் சிறுபான்மையினர்கள் (மலேசியாவில் சீனர்களும் இந்தியர்களும், சிங்கப்பூரில் மலாயர்களும் இந்தியர்களும்) ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதில் முன்னிற்கின்றனர். கிராமப்புற மலாயர்களின் ஆங்கில மொழி அறிவு வளர்ச்சியில் அக்கறை காட்டப்படுகின்றது.
தற்போது சிங்கப்பூரில் பல இடங்களில் ஆங்கிலம் பெற்றிருந்த இடத்தைச் சீன மொழிபெற்று வருகின்றது. குறிப்பாக வேலைத்தளங்களிலும் அடிமட்ட அமைப்புகளிலும் இது நிகழ்ந்து வருகின்றது. இவ்விடயங்களில் சீனர்கள் அதிகாரம் வலுப்பெறவும் சிறுபான்மையினர் வலுவிழக்கவும் இது காரணமாகின்றது. இந்நிலமையில் சிறுபான்மையினர் சீன மொழியைக் கற்கும் வாய்ப்புகளைக் கோருகின்றனர். தற்போது சிங்கப்பூரில் சீரல்லாதவர்கள் - மலாயர்கள், இந்தியர்கள் - சீன மொழியைக் கற்பதற்குத் தடைகள்
90 பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம்

உண்டு. பெரும்பான்மையான சீனர்கள் தமது மொழியைத் திணிக்க விரும்பவில்லை. இதற்கு அவர்கள் ஆங்கிலத்தையே பயன்படுத்த விரும்புகின்றனர். தற்போது நாளாந்த உரையாடல் மட்டத்தில் உள்ள சீனமொழி, காலப்போக்கில் முக்கியத்துவமடையும் நிலையும் அதனால் சிறுபான்மையினருக்குப் பாதிப்பு ஏற்படும் அச்சமும் காணப்படுகின்றது.
இரு நாடுகளிலும் இனரீதியான பாடசாலைகள் ஓரளவுக்குக் காணப்படுகின்றன. மலேசியாவில் சீன, இந்திய சிறுபான்மையினர். களுக்கென்று பாடசாலைகள் உண்டு ; சிங்கப்பூரில் சீனர்கள் மட்டும் படிக்கும் பாடசாலைகள் அதிகம். இங்கு பயிற்று மொழி ஆங்கிலம் ; இரண்டாம் மொழி சீனம். இதனால் பிற இனத்தவர்கள் தவிர்க்கப்படுகின்றனர். இரு நாடுகளிலும் சிறு தொகையான மலாய இஸ்லாமியப் பாடசாலைகளும் உண்டு. சுருங்கக் கூறின் சிங்கப்பூரை விட மலேசியாவில் பாடசாலை முறை நெகிழ்ச்சியுடன் காணப்படுகின்றது.
இருநாடுகளிலும் வாழும் தமிழர்களைப் பொறுத்தவரையில்.
sk தாய்மொழியல்லாத வேறு மொழிகளிலேயே (மலேசியாவில் மலாய் மொழி, சிங்கப்பூரில் ஆங்கில மொழி) பயில வேண்டியுள்ளது. மலேசியாவில் உயர் குழாத்தைச் சேர்ந்த பெற்றோர். கள் தமது பிள்ளைகளைத் தமிழ்ப்பாடசாலைகளுக்கு அனுப்ப விரும்புவதில்லை.
தமிழ் மொழி பயிற்று மொழி இல்லையாயினும் அதனை ஒரு பாடமாகக் கற்க இரு நாடுகளிலும் வாய்ப்புண்டு. சிங்கப்பூரில் பெரும்பான்மை மொழியாகிய சீன மொழியைத் தமிழர்கள் கற்க வேண்டிய அவசியமில்லை.
水 எவ்வாறாயினும் இரு நாடுகளிலும் தமிழ்ப்பிள்ளைகள்
மும்மொழிகளில் தேர்ச்சி பெற வேண்டியுள்ளது.
தமிழர் சிங்கப்பூர் மலேசியா
1. பயிற்று மொழி ஆங்கிலம் LD6)ITulu 2. இரண்டாம் மொழி தமிழ் ஆங்கிலம்
3. அடுத்த மொழி சீனம் (கட்டாயமல்ல)
பேராசிரியர் : சந்திரசேகரன்
பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம் 91

Page 48
முடிவுரை
புதிய நூற்றாண்டின் அறிவார்ந்த தேவைகளுக்கேற்ப ஆங்கிலமொழி சர்வதேச ரீதியாக, ஊடகமொழியாகவும், கணினி மொழியாகவும் மற்றும் வர்த்தக கைத்தொழில் துறைசார்ந்த மொழியாகவும் இன்னும் மேலாக, பல்வேறு அறிவுத்துறை சார்ந்த மொழியாகவும் உலகளாவிய ரீதியில் இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதனை எவரும் மறுப்பதற்கில்லை. சுருங்கக்கூறின், புதிய நூற்றாண்டின் சவால்களையும் நிலைமைகளையும் தேவைகளையும் எதிர்கொள்வதற்கு, இன்றைய நிலைமையில் ஆங்கில மொழித்தேர்ச்சி சகலருக்கும் அத்தியாவசியமானது என்ற கருத்து ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதொன்று.
உலகளாவிய தொழிற்சந்தையில் போட்டியிடுவதற்கு ஆங்கிலத்தில் சிறப்பான தேர்ச்சி அவசியம் என்ற கருத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
இலங்கை நிலைமைகளில் தற்போது மக்கள் மத்தியில், கடந்தகாலக் கல்வி சார்ந்த மொழிக்கொள்கையின் காரணமாக ஆங்கிலமொழித் தேர்ச்சி வீழ்ச்சியடைந்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும். சாதாரண மக்கள் மத்தியில் மட்டுமன்றி உயர்மட்டத்தில் பணிபுரியும் அரச ஊழியர்கள் மற்றும் பல்கலைக்கழக மட்டங்களிலும் இவ்வாறான ஆங்கிலமொழித் தேர்ச்சியின் வீழ்ச்சி இன்று இனங்காணப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சர்வதேச அரசாங்க மற்றும் புலமைசார் மட்டங்களிலும் இலங்கையர்களின் பங்களிப்பு மிகவும் கேள்விக்கிடமாகியுள்ளது. இதனை விரித்துக்கூறத் தயங்குகின்றோம்.
இப்பின்புலத்தில், ஆங்கிலத் தேர்ச்சியை மேம்படுத்துவதற்கு இரண்டு கொள்கையாக்கல்களை முன்வைக்க முடியும். 1. ஆங்கில மொழியை இரண்டாம் மொழியாகக் கற்பிப்பதில்
கடுமையாக ஊக்கங் காட்டுதல்.
92 பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம்

2. ஆங்கில மொழியைப் பாடசாலை மட்டத்திலும் பல்கலைக்
கழக மட்டத்திலும் பயிற்று மொழியாகப் பயன்படுத்துதல்.
இலங்கையில் கடந்த காலங்களில் பாடசாலை மட்டத்திலும் பல்கலைக்கழக மட்டத்திலும் மிகவும் தீவிரமான முறையில் சுயமொழிகள் பயிற்றுமொழியாக்கப்பட்டன. இக்கொள்கை நன்கு நடைமுறைப்படுத்தப்பட்டு, மறுப் பிரதானமாகப் பாடசாலை மட்டத்தில் விஞ்ஞான பாடங்களையும் சுயமொழிகளில் கற்பிக்கும் நிலை ஏற்பட்டது.
1960களில் இவ்வாறான பயிற்று மொழி மாற்றம், தேசிய கல்விமுறையொன்றின் 2 குழாத்திற்கான ஒரு பிரதானமான அடித்தளமாயிற்று.
ஆனால் 1990களில் உலகளாவிய ரீதியில் உலக மயமாக்கத்தின் காரணமாக, ஆங்கிலமொழிபெற்ற புதிய முக்கியத்துவம், இலங்கையின் கொள்கை வகுப்பாளர்களைச் சிந்திக்க வைத்தது.
புதிய சில கொள்கையாக்கங்களின் விளைவாக ஆங்கிலவழிக் கல்வி எதிர்பாராத முறையில் மட்டுமன்றி அதிக ஆய்வுக்கு உட்படாத முறையில் மீண்டும் அரச பாடசாலைகளில் அறிமுகம் செய்யப்பட்டது. பெற்றோர்கள் பலரும் தமது பிள்ளைகள் ஆங்கில வழியில் கல்விபெறுவதைப் பெரிதும் விரும்பினர். இப்பின்புலத்தில் ஆங்கிலவழிக்கல்வியின் பயன்கள், அதன் எதிர்மறை விளைவுகள்என்பன பற்றி ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்விக்கொள்கை வகுப்பாளர்கள் எனப்பலதரப்பட்டோரும் தெளிவுபெற வேண்டும் என்னும் நோக்குடன் இச்சிறுநூலை ஆக்கினோம்.
நவீனவுலகில் ஆங்கிலமொழியறிவின் முக்கியத்துவத்தைப் பெரிதும் வலியுறுத்துகின்ற அதேவேளையில் ஆரம்பநிலை முதல் ஆங்கிலமொழியைப் பயிற்று மொழியாகப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய கல்விசார் எதிர்மறை விளைவுகளைச் சுட்டிக்காட்ட வேண்டியது எமது சமூகக் கடப்பாடாகுமெனக் கருதியதன் காரணமாக இத்தகைய ஒரு நூல் முயற்சியில் ஈடுபட்டோம்.
நாட்டின் 'மக்கள் கல்வியில் மட்டுமன்றி, பாடசாலையில் பயிலுகின்ற 40 இலட்சம் பிள்ளைகளின் "கல்வி மேம்பாட்டில்" அக்கறை கொண்டுள்ளயாம், சில மாற்றுக் கருத்துகளை முன்வைப்பது முக்கியமானதெனக் கருதுகின்றோம் எம் மக்கள் மத்தியில் ஆங்கிலமொழியறிவை கல்வியறிவுக்குச் சமமாகக் கருதும்
பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம் 93

Page 49
மனப்பாங்கு வளர்ந்துள்ள நிலையில், எமது இந்நாற் கருத்து சமூகப் பயன்பாடுள்ளது எனக் கருதுகின்றோம். எம் மக்கள் மத்தியிலுள்ள ஆங்கிலமொழி சார்ந்த தவறான பெறுமானங்களைக் களைந்த தெளிவதற்கான ஒருபெருமுயற்சியாக இந்நால்வழி கொணரட்டும் கருத்துகள் அமைகின்றன என்பது எமது சிந்தனையாகும். இந்நாட்டில் எதிர்காலத்தில் வாழ்வாங்கு வாழும் தமிழினம் எமது தமிழ்வழிக்கல்வி பற்றிய இச்சிந்தனைகளின் தார்ப்பரியத்தைக் கருத்திற்கொள்ளும். என்றதொரு அசையாத நம்பிக்கையுடன் இந்நாலைச் சமகால தமிழ் பேசும் தலைமுறைக்கு மட்டுமன்றி எதிர்கால தலைமுறையினருக்கும் சமர்ப்பிம்பதில் நாம் பெருமையடைகின்றோம்.
பாடசாலைக்கல்வி தாய்மொழியில் இடம் பெறவேண்டியதன் அவசியத்தை இந்நூலில் தொடர்ச்சியாக வலியுறுத்தி, அதற்குச் சாதகமான பல்வேறு கல்வித்தத்துவ மற்றும் கல்விசார் நியாயங்களை முன்வைத்துள்ளோம். அதே வேளையில் புதிய நூற்றாண்டில், ஆங்கில அறிவின் தேவையையும் நன்கு வலியுறுத்தியுள்ளோம். இன்றைய கல்விமுறைமையில், பாடசாலை நிலையில் ஆங்கில வழிக்கல்விக்கான அரச அனுமதி இருந்த போதிலும், இக்கொள்கை ஒரு சில பாடசாலைகளிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. தனியார் பாடசாலைகளும் வசதிமிக்க நகர்ப்புற அரச பாடசாலைகள் தவிர்ந்த, பெரும்பாலான அரச பாடசாலைகளில் ஆங்கில வழிக்கல்வி நடைமுறையில் இல்லை. தேசிய கல்வி ஆணைக்குழுவானது, ஆங்கில வழிக்கல்வியின் வெற்றி, தோல்வி பற்றிய ஆய்வொன்றை நடாத்தி வருகின்றது.
சர்வதேசப் பாடசாலைகள் ஆங்கில வழியில் கல்வி வழங்குவதால் அப்பாடசாலையை மாணவர்கள் - சார்பளவில் உயர் மத்திய, மத்திய வகுப்பைச் சேர்ந்தவர்கள் - இன்றைய தனியார் தொழிற்சந்தையில் முன்னுரிமை பெறும் வாய்ப்பு உண்டு. இதனால் ஆங்கில வழிக்கல்வி வாய்ப்புகள் கிராமப்புற அரச பாடசாலைகளுக்கும் விஸ்தரிக்கப்பட வேண்டுமென்பது, அரசாங்க கொள்கை வகுப்பாளர். களின் நோக்கமாக இருந்தது. ஆயினும் இக்கொள்கை நகர்ப்புறப்பாடசாலைகளாலேயே பெரிதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
ஒரு சில மாணவர்கள் ஆங்கிலத்திலும் பெரும்பாலான மாணவர்கள் தாய்மொழியிலும் கற்கும் நிலையே இன்று ஏற்பட்டுள்ளது. இந்நிலை, பழைய காலனிததுவ காலக் கல்வி நிலைமையே
94 பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம்

ஞாபகப்படுத்துகின்றது. தேசிய ரீதியான மக்கள் மேம்பாடு, கல்வி வளர்ச்சி, அபிவிருத்தி என்பவற்றை நோக்காகக் கொண்ட பாடசாலைக் கல்வி முறையானது பின்பற்ற வேண்டிய ஆரோக்கியமான ஒரு மொழிக் கொள்கைகான வழிகாட்டலாக இந்நூற் கருத்து அமைந்துள்ளது என நாம் கருதுகின்றோம்.
இவ்விடயம் தொடர்பாக ஆராயும் சிந்திக்கவும் பொருத்தமான சில விடயத்தலைப்புகளைக் கீழே தருகின்றோம்: sk இன்றைய உலகமயமாக்கப்பட்ட சூழலில் ஆங்கில மொழி பெற்றிருக்கும் முக்கியத்துவம்; எனவே ஆங்கில மொழியை இரண்டாம் மொழியாகக் கற்பிப்பதற்கான, வினைத்திறனுள்ள
ஏற்பாடுகள்.
米 ஆங்கில மொழி வழிக்கல்வியைப் பாடசாலைகளில் அறிமுகம் செய்வதில் உள்ள பிரச்சினைகள்; அதற்கான சாதக நிலைமைகள்.
sk தாய்மொழிக்கல்வி; அதன் கல்வி சார் பயன்கள்.
கடந்த கால அனுபவங்கள் பற்றிய பகுப்பாய்வு.
கடந்த நான்கு தசாப்த காலத்தில் இலங்கையில் ஆங்கில மொழிக்கல்வியின் வீழ்ச்சி பற்றி பகுப்பாய்வு.
எதிர்காலத் தமிழ்ச்சந்ததியினர் தாய்மொழித்தேர்ச்சியோடு, பன்மொழிப்புலமையாளர்களாக உருவாகுவது, புதிய நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளத் தேவையானது எனஎதிர் காலவியல் நோக்கில் நாம் சிந்திக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றோம். 2030-2050 களில் வாழவிருக்கும் புதிய தமிழ்ச் சந்ததியினைக் கருத்திற் கொண்டதாக எமது பாடசாலைக் கல்வி தொடர்பான பயிற்று மொழிக் கொள்கை அமைய வேண்டும். என்ற சிந்தனையின் அடிப்படையில் இந் நூற்கருத்தை முன்வைத்துள்ளோம்.
பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம் 95

Page 50
References :
1.
96
Bureay of Int. Education, "Education for All for Learning of Lire Fogether, Geneva, 5-8 Sep 2001
Rajira Wijesinha t.M.P. Kulatunga, "Conflict - Causes and Consequences'. The Council for liberal Democracy, 2002.
National Education Commission "Envisioning Education for Human Development', 2003
Jayasuriya, J.E., "Educational Policies and progress during British Rule in Ceylon, Associated Educational Publishers, Colombo.
Perera, N.M. "The Cass for free education, Dr. N.M.Perera, Centre, Colombo, 2000
Dept. of Education, "Education. in south Asia, University of New Delhi, 1999
INCERT, National Curriculum Framework, 2005, New Delhi, 2005
பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம்


Page 51
變 縱 縱縱 |- |×縱攀