கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நாகம் பூசித்த நயினை ஸ்ரீ நாகபூசணி அம்பாள்

Page 1
|×
}, Ķ
|- 密 sos §§
擊繆溪籌
|-
 

浸臺臺

Page 2

வெளியீடு : அறங்காவலர் சபை
ரீ நாகபூஷணி அம்மன் தேவஸ்தானம்
நயினு தீவு
23 - 6-90

Page 3
பிரதிகள் - 5000
மறு பதிப்பு-1990
அச்சுப் பதிவு :
திருமகள் அழுத்தகம், சுன்னுகம்
அட்டைப் படம்
ஓவியம் 3 ஐ பாஸ்கரன்
அட்டைப் படம்
அச்சுப் பதிவு 3 - கத்தோலிக்க அச்சகம்,
யாழ்ப்பாணம்
 
 
 
 
 
 


Page 4

இ.
நயினுதீவு பூரீ நாகபூஷணி அம்மன் தேவஸ்தானம்
அறங்காவலர்கள் - 1990 1. திரு. சி. நா. மதியாபரணம், J. P.
- கெளரவ தலைவர்
2. திரு. ஆ. தியாகராசா - கெளரவ செயலாளர் 3 திரு. நா. க. குமாரசூரியர்-கெளரவ பொருளாளர் 4. திரு. பொ. இராசலிங்கம் 5. திரு, தி. பாலசிங்கம் 6. திரு. மு. ச. திருநாவுக்கரசு, J. P. 7. திரு. சி. தனபாலசிங்கம் 8. திரு. க. உருத்திரகுமாரன், B 4, 9. திரு. மு. நவரத்தினம் 10. திருமதி. சிவகாமி மகாதேவன் 11. 365, d. நாகேஸ்வரன், B. A. (Hons), M. A. 12. (வெற்றிடம்)
(1986ஆம் ஆண்டுமுதல் அமுலுக்கு வந்த புதிய நடைமுறைத் திட்டத்தின்படி 12 பேரைக் கொண்ட அறங் காவலர் சபை தற்பொழுது கோவிலை நிர்வகித்து வருகின்றது.)

Page 5
(Updb೧601 *" எனக்கென்றேர் தனிவரம் யான் கேட்கவில்லை என்னினத்தார் வாழ்வொன்றே கருதவில்லை உனக்கெல்லா உயிர்களுமே சொந்தமென்ற உண்மையை நான் ஒருபோதும் மறந்ததில்லை சினங்கொண்டு தீங்கிழைக்கும் தீயர் தாமும் சீலமுற வேண்டுமென்றே வேண்டுகின்றேன் தனக்கொருவ ரொப்பிலாத் தாயே இந்தத் தாரணியிற் சாந்தியையே தருவாய் நீயே, '
(நயினை க. இராமச்சந்திரன்)
1957ஆம் ஆண்டு (நயினுதீவு பூரீ நாகபூஷணி அம்மன் கோவில் தேர்த்திருப்பணிச்சபை) வெளியீடான தேர்த் திருப்பணிச்சபை மலரி'லிருந்து முறையே, பூர்வீக இலங்கை, நாகர், நாகர் வழிபாடு, நயினுதீவு (நந்தாப் புகழ்வாய்ந்த நயினைத் தலச் சிறப்பு), நாகேஸ்வரி ஆலயம், நயினுதீவு நாகேஸ்வரி யம்மை பதிகம், நயினை ஊஞ்சல், படங்கள் என்னும் அம்சங்கள் அடங்கிய தொகுப்பு வெளியீடாக இந்நூல் தற்போதைய (1990) அறங்காவலர் சபையினுல் வெளியிடப்படுகிறது. இந்நூலை மலர்விப்பதிலே அறங் காவலர் சபை பெருமகிழ்வெய்துகிறது. நயினைத்தலத்தைப் பற்றியோ அம்பிகையின் திருவருட் சிறப்பைப் பற்றியோ ஏதும் புதிய கட்டுரைகளோ, பிற அம்சங்களோ இந்நூலிற் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. பூர் விகத் தன் மையும், வரலாற்றுப் பெருமையும் கொண்டு மக்களின் Fungu நம்பிக் கையின் இருப்பிடமாக இலங்கும் நயினே பூரீ நாகபூஷணி அம்பிகையின் பரங்கருணைப் பிரவாகம் உள்ளவாறே உலகம் அறியவேண்டி இந்நூல் வெளிக்கொணரப் படுகிறது.
ஆய்வுகள் மக்கள் மனதிலேயுள்ள சமய நம்பிக்கை களைத் தகர்த்துவிடக் கூடாதென் பதிலே மிகுந்த கவன மாகவும், விழிப்பாகவுமிருத்தல் வேண்டும். உண்மையிலேயே ஒருவரிடத்தியல்பாயமையும் நம்பிக்கையை மேலும் பலபடி உயர்வாக வளர்த்தெடுக்கத்தக்க வகையிலே நூல்களும் ஆய்வுக் கட்டுரைகளும், இதர சமய வெளியீடுகளும் வெளி
 

யிடப்படல் வேண்டும். அந்த வ்கையிலே இந் நூலிலடங்கி யுள்ள சிறப்புக் கட்டுரைகள் பூரீ நாகபூஷணி அம்பாளின் பெரும் புகழையும் அருட்பொலிவையும் கருணைப் பிரவாகத் தையும் பறைசாற்றுவனவா யமைந்துள்ளன. இன்னும் ஆழமான ஆராய்ச்சியினுற் பெறப்பட்ட சாசன இலக்கியச் சான்றுகளிடையாகவும், ஆதிக்கப்படர்ச்சியின் விளைவுகளி ணு,லுமமைந்த உண்மைகளையும் இந்நூலிலே இடம்பெறும் கட்டுரைகள் அழகான முறையிலும் ஆழமாகவும் எடுத் தியம்புகின்றன.
நயினைத் திருத்தலம் இன்று ஒரு புனித யாத்திரைத் தலமாகத் திகழுகின்றது. தினமும் அடியார்கள் இத் தீவுக்கு வருகைதந்து அம்பிகையைத் தரிசித்துத் தமக்கு வேண்டிய பெரு வரங்களையெல்லாம் பெற்றுத் திரும்புகின்றனர். அரு ளொழுகு திருவதனத்துடன் வீற்றிருந்து அன்பருள்ளத்தில் மேவிடும் சாந்த சொரூபியாக நயினை பூரீ நாகபூஷணி அம்பிகை விளங்குகின்ருள் எல்லோரையும் பிணிக்கும் பெருங் கட்வுளாக அம்பிகை விளங்குகின்ருள் நச்சுவாயகி மாலினி' யாக அடியார்களது "பழங்குடில் தொறும் எழுந் தருளி'த் தனது அருளாட்சியினை மெய்ப்பித்து ஈர்த்து" ஆட்கொள்ளும் தனிப்பெரு நலம் வாய்க்கப் பெற்றவள் நயினை பூரீ நாகபூஷணி இப் பண்பினுல் அம்பிகையின் அருளுக்குப் பாத்திரராகி இருவினை நீக்கியுய்யும் பக்தர்கள் பலப்பலர். அம்பிகையை அணுகாதவர்களுக்குப் பிணியே என்று தன்னனுபவத்தை அபிராமிப்பட்டர் எடுத்துக் கூறு கின்ருர், எனவே பிணிகளெல்லாவற்றையும் பொடிப் பொடி யாக்கி அருளும் தாயான தத்துவத்தை - நாகபூஷணி அம்மனைச் சதா மனத்திருத்திச் சிந்திப்பதற்கு இந்நூல் அரிய பெருந்துணையாக அமையும் என்பது எமது நம்பிக்கை. இந்நூலின் வெளியீட்டைத் தொடர்ந்து அடுத்தடுத்த சிறப்புற்சவத்தின்போது, இன்னும் காத்திரமான அருள் நூல்களை அம்பிகையின் அருளால் வெளிக்கொணர முயலுவோமென உறுதி கூறுகிருேம்.
மிகவுங் குறுகிய காலத்தில் இத் தொகுப்பு நூலே அச்சிட முடிந்ததும் அம்பிகையின் திருவருட் பெருக்கேயாம், வெகுவிரைவில் நூலொன்றை வெளிக்கொணர வேண்டு மென்று மிகுந்த செயற்றுடிப்புடன் அறங்காவலர்கள் அனே வரும் செயற்பட்டார்கள், அதன் பெறுபேறே இவ்வரிய நூல்

Page 6
சுன்னகம், திருமகள் அழுத்தகத்தாரின் பேருதவியிஞ லும், அழுத்தக ஊழியர்களின் கண்ணியமிக்க சேவையினு லும் இந்நூல் இவ்வளவு அழகாக வெளிவருகின்றதென்ருல் அது மிகையாகாது. எல்லாம்வல்ல நயினை பூரீ நாகபூஷணி அம்பிகை இவர்களனைவருக்கும் நீடாயுளும், செல்வ வளமும், மனமகிழ்வும், நிம்மதியும் அருள வேண்டும் எனப் பிரார்த்தித்துக் கொள்கிருேம்.
நாகம் பூசித்த நயினை பூரீ நாகபூஷணி அம்பாள் என் னும் இந்த நூலின் அட்டைப் படத்தைத் தமது கைவண் ணத்தால் அழகுற அமைத்துதவிய திரு. ஐ. பாஸ்கரன் அவர்களுக்கும் அட்டைப்படத்தைக் கவர்ச்சியான முறை யில் அச்சிட்டுதவிய யாழ்ப்பாணம் கத்தோலிக்க அச்சகத் தினருக்கும் பரிபாலன சபையின் நன்றியுரித்தாகுக.
முடிவாக, அம்பாளைத் தரிசிக்கவந்த ஞாபகத்தைத் தினமும் மனதிலே நிலைநிறுத்தும் வகையில் அம்பிகை அடியார்களது இல்லங்களிலே அலங்கரித்திருக்கவேண்டிய நூலிது. இந்நூலே உவந்து வரவேற்றுப் பேறுகளையும், சுகங்களையும், நலங்களையும் மண்ணிலே நல்ல வண்ணம் பெற்று வாழவேண்டுமென வாழ்த்துகிருேம். சைவமும், தமிழும் வாழவும் வளரவும் அம்பிகையடியார்களது பரி பூரண ஆதரவு கிடைக்கும் என்பது எமது திடமான உறுதி. ஒவ்வொருவரும் வாங்கியனுபவிக்க வேண்டிய அருமை மிகுந்த நூல் இது. எல்லோரும் இவ்வரிய நூலைப் பெற்றுப் பெரும் பயனடைவார்களாக,
* பூத்தவளே புவனம் பதினுன்கையும் பூத்தவண்ணங்
காத்தவளே பின் கரந்தவளே கறைக்கண்டனுக்கு
மூத்தவளே யென்று மூவாழுகுந்தற் கிளையவளே
மாத்தவளே யுன்னேயன்றி மற்ருேர் தெய்வம் வந்திப்பதே"
- அபிராமி அந்தாதி
இங்ஙனம்
அறங்காவலர் சபையினர். அறங்காவலர்சபை அலுவலகம், பூறி நாகபூஷணி அம்மன் தேவஸ்தானம்,
நயினுதீவு, இலங்கை, 23-06-1990,
 

இலங்கை
இலங்கை ஒரு சிறு தீவு. உலகப்படத்தை நாங்கள் உற்று நோக்கினுல், இலங்கைத்தீவு ஆசியாக்கண்டத்தில் பாரத நாட்டிற்குக் கீழே ஒரு சிறு புள்ளியாகவே காட்சியளிக் கின்றது. எனினும், கீழைத்தேசத்துக்கும் மேலைத்தேசத் துக்குஞ் செல்லும் பாதையில் கேந்திரத்தானத்தில் இலங்கை இருக்கின்றமையால், இது சரித்திரப் பிரசித்தி வாய்ந்த பூர்வீக நாடாக விளங்குகின்றது. இந்நாட்டிற் பண்டைக் காலத்தில் வாழ்ந்த நாகர், இயக்கர், வேடர், தமிழர், சிங்களவர் முதலிய குழுவினரும், இதனைக் காலத்துக்குக் காலந் தரிசித்த பேர் பெற்ற யாத்திரீகரும், இதனை வென்று ஆட்சி புரிந்த சோழர், பாண்டியர், சீனர், பல்லவர், நாயக்கர், போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் முதலியோரும், இத்தீவில் இப்பொழுது வாழ்ந்து வரும் சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள், டச்சுக்காரர், மலாயக் காரர், மலையாளத்தார் முதலியோருந் தத்தம் மொழிக் கேற்ற பெயர்களை இலங்கைத் தீவுக்கு இட்டு வழங்கினர். இவ்வாறு பல மொழிகளிலும் இலங்கைக்கு இடப்பட்ட பெயர்கள் 130க்கு மேல் உண்டு. எனினும் ஈழநாட்டுக்குந் தமிழ்நாட்டுக்கும் உள்ள தொடர்பினைக் குறிக்கும் ஒரு சில பெயர்களை மட்டும் ஈண்டு எடுத்துக் காட்டுவாம்.
குமரிக்கண்டம்
தென்னுடு உலகின் பழம் பெரும் நாடுகளில் ஒன்று என்பதனைப் பன்மொழிப் புலவர் திரு. கா. அப்பாத்துரைப் பிள்ளை அவர்கள் தாம் எழுதிய தென்னுடு என்னும் நூலில் தக்க சான்று காட்டி நிறுவியுள்ளார். இந்த ஆராய்ச்சி நூலில் இருந்து ஒரு சிறு பகுதியை மட்டும் ஈண்டெடுத்துக் காட்ட விரும்புகின்றேன்.

Page 7
- 2 -
தென்னடு உலகின் பழம் பெரும் நாடுகளில் ஒன்று என்பது மட்டும் அன்று. அது இயற்கையன்னையின் முதல் மாநிலக் கன்னியாகவும் இருந்தது. இமயம் உண்டாவதற்கு நூருயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பும், சிந்து கங்கை ஆறுகளும் அவற்றின் சமவெளிகளும் தோன்றுவதற்குப் பன்னூருயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரும் தென்னுடு ஒரு முழுமாநிலமாகவே இருந்தது.
தென்னுட்டின் தென்பாலுள்ள மா கடலில் பல தீவுகள் இருக்கின்றன. இப்பெருங்கடல் முன்பு தென்னுட்டின் தொடர்ச்சியான ஒரு மாபெருங் கண்டமாயிருந்தது. தென் ஆபிரிக்கா, பர்மா, மலாயா, கிழக்கு இந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா, வடமேற்கு அமெரிக்கா ஆகிய நிலப் பகுதிகள் இக்கண்டத்துடன் முன்பு ஒட்டிக் கிடந்து பின் பிளவுபட்டுச் சிதறிப்போயின என்று மண்ணுலார் குறிக் கின்றனர். இம் மாபெரு நிலப்பகுதியைத் தமிழ் மரபு குமரிக்கண்டம் என்று வழங்குகின்றது. ஆராய்ச்சியாளர் இதனை 'இலெமூரியா’ என்று குறிக்கின்றனர். உயிரினங்கள் முதன் முதல் இங்கேயே தோன்றின. தென்னுடு நில உலக வளர்ச்சி, உயிரின் வளர்ச்சி, மனித இன Gjarrij:g) ஆகிய இயற்கையின் பல படிமுறை வளர்ச்சிகளைப் படலம் படலமாகத் தொகுத்து எடுத்துக்காட்டும் ஒரு பெருங் காவிய ஏடாகத் திகழ்கின்றது.
(தென்னுடு- பக். 6-8)
as LGJ (85 TGT PGA)
பண்டை ஞான்று இலங்கையானது தமிழ் நாட்டின் ஒரு பகுதியாய் இருந்ததென்பதே சரித்திர ஆராய்ச்சி யாளர் துணிபு. அங்ஙனமாயின் இந் நாட்டின் பழம் பெரும் குடிகள் திராவிடவகுப்பினர் என்பது அவர் கருத்து. கந்தபுராண காலத்தில் சூரபத்மன் ஆட்சி புரிந்த பொழுது, கார்த்திகேயப்பெருமான் இந்நாட்டிற்கு வந்த வரலாற்றைக் கதிர்காமம் என்னுந் திருத்தலம் இன்றும் நினைவூட்டிக் கொண்டிருக்கின்றது என்பர் சேர் பொன். அருணுசலம் அவர்கள்.? களுகங்கை கடலோடு கலக்கும் இடத்தின் ஒரு
 
 

--سے 3 ہے۔
கரை வேலபுர மெனவும், மற்ருெரு கரை தேவசத்துரு கரை (Desastra Kalutara) தேசஸ்தரதுறையெனவும் வழங் கப்படல் இப்பேரின நினைவூட்டுகின்றதென முற்கூறிய அறிஞர் குறிப்பிட்டிருக்கின்ருர்,
இங்ஙனம் ஒரு பெருங் கண்டத்தின் பெரும் பகுதி யாயிருந்த இலங்கையானது பன்முறை கடற்கோட்பட்ட தென்பது சரித்திர நூல்களிற் றெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அன்றியும், கடலடுத்த நாடுகளுக்கெல்லாம் கடற்கோள் வரலாறு ஏற்படுதல் இயல்பு. எனவே இலங்கைக்கும் பல கடற்கோள்கள் ஏற்பட்டிருக்கு மென்பது மறுக்காது ஒப்பக் கூடியதேயாம். அங்ங்னமானுல் இப்பொழுதுள்ள இலங்கை யின் நிலப்பரப்பு இன்னும் பன்மடங்கு விரிந்திருக்க வேண்டுமென்பது சொல்லாமலே பெறப்படும். ஆழிசூழ் இலங்கை ஆயிரக்கணக்கான மைல்களுக்குப் பரந்திருந்த தென்ப இராவணனுடைய ஆட்சியின் பின்னர் ஒரு கடற் கோள் கூறப்பட்டிருக்கின்றது. இராம-ராவண யுத்தம் கி. மு. 2387 அளவில் நிகழ்ந்ததெனச் சிங்களச் சரித்திரங் குறிப்பிடுகிறது. சேர் வில்லியம்ஸ் ஜோன்ஸ் அவர்கள், இந் நிகழ்ச்சி கி. மு. 1810 அளவில் எனக் குறிப்பிட்டிருக் கின்ருர், பந்துவாசன் காலத்திலும் (கி. மு. 500), களனி திஸ்ஸன் காலத்திலும் (கி. மு. 200), இத்தீவுக்குக் கீழ் மேற்றென் பாகங்கள் கடலுள் ஆழ்ந்தன எனச் சிங்களச் சரித்திரங் கூறுகின்றது. இன்னும் கடையம்பொத்த, Gvši 55/T6ýloň) 57TUT ALI, (Kadaimpota, Lanka, Vistaraya) GT Görgg) Lih நூல்களாற் களனி என்னும் இராசதானி கடலிலிருந்து 28 மைல் தூரத்தில் இருந்ததென அறியக்கிடக்கின்றது. 1,00,000 பட்டினங்களையும், 970 நெய்தற்பாக்கங்களையும், 470 முத்துக் குளிப்பவர் இருந்த கிராமங்களையும், எல்லா மாக இலங்கை நாட்டின் 12இல் பாகத்தைக் கடல் மூடிற்றென இராசாவலி எனும் சிங்களதுரல் குறிப்பிடு கின்றது.
இலங்கையின் கீழ்மேற் றென்பகுதிகளே ஆழிவாய்ப் பட்டனவென்பது மிகப் பொருத்தமான கூற்றேயாம். இலங்கையின் தென்கீழ்க் கடலிலிருந்து ஒளிகாலும் கலங்

Page 8
} --سے 4 سے
கரை விளக்கம் கட்டப்பட்டிருக்கும் கற்பாறை (Great Bass Light House) இன்றும் இராணுவக் கோட்டை என்றே அழைக்கப்படுகிறது. இன்னும் மாணிக்க வாசக சுவாமிகளும், ஆர்கலிசூழ் தென்னிலங்கை யெனக் குறிப் பிட்டிருத்தலும் அவதானிக்கற்பாலது. தென் எனுஞ் சொல்லுக்கு வேறு பொருள் கூறுவாருமுளரெனினும், இச் சொல் தென்பாண்டி நாடென்ருற் போல, திசையைக் குறித்து நின்றது எனக் கோடல் நேர்பொருள். இராவணன் திருக்கோணேசர் கோவிலை நிறுவினன் என்பது கன்ன பரம்பரை இராமர் இராவணனுடன் போர் தொடுத் தற்கு முன்னர் முனிசுவரத்தில் வணங்கினுரென சேர். அருணுசலம் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்ருர்கள். 3 சேது பந்தனத்திற்கு இராமரணை எனும் பெயருண்மையும் ஈண்டு நினைவுகூர்தற்பாற்று. சீதாபிராட்டியாரின் பெயர் நுவரெலியாவுக்கும் ஹக்கலைக்கும் இடையிலுள்ள சித்தலவா (சீதைவெளி), சீதால (சீதை யருவி), சிதாகுண்ட (சீதை குண்டம்) எனும் இடப்பெயர்களாலும், பொய்ச்சீதை உரு வத்தை இந்திரசித்து எரித்த இடமெனக் கருதப்படும் சீதாவாக்கை யெனும் இடப் பெயராலும், இலங்கையில் இன்றும் நின்று நிலவுகின்றது. இராவணனுடைய மனைவி மண்டோதரி மாணிக்கவாசக சுவாமிகளாற் புகழப்பட் டிருத்தலையும் ஈண்டு நினைவு கூர்தல் நன்று. இன்னும் இராமாயணக் கதைகள் பலவாருக மலைநாட்டிற் கேட்கப் படுகின்றன. இவற்றுட் சிலவற்றை மேஜர் போர்ப்ஸ் என் னுஞ் சரித்திர அறிஞர் தொகுத்துக் கூறியிருக்கின்ருர், இராமாயணத்திற் கூறப்பட்ட இலங்கை வேறு, இப் பொழுது இலங்கை யென அழைக்கப்படும் தீவு வேறு என வாதிப்பாருமுளர். அத்தகையார் இலங்கையின் ஒரு பாகம் ஆழிவாய்ப்பட்டதனை நினைவுகூர்ந்து இத்தீவின் மலைநாட் டினைச் சுற்றிப்பார்ப்பார்களாயின், தங்கொள்கையிற் றளர்ச்சியுறுவர் என்பதற்கையமின்று.
இப்பொழுது இலங்கை என்று வழங்கும் இந்நாடே இராமாயணத்திற் கூறப்பட்ட இலங்கை எனத் தீர்மானிக்க லாம் என்பதனைத் தக்க சான்றுகளுடன் நிரூபித்துள்ளார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

سيد 5 سلسل
யாழ்ப்பாணம் பரமேஸ்வரக் கல்லூரித் த லே வரும், தலைசிறந்த ஆராய்ச்சி அறிஞருமாகிய திரு. சு. நடேசபிள்ளை யவர்கள். இவ்வறிஞர் இலங்கைத் தமிழ் விழா மலரில் எழு திய "இலங்கை ஆற்றுப்படை' என்னும் ஆராய்ச்சிக் கட்டுரை யினைப் பார்க்க இலங்கைக்குப் பல பெயர்கள் இருப்பது போல உலகில் வேறெந்தத் தீவுக்கும் இருக்குமெனக் கூற முடியாது. இலங்கையின் பெயர்களை அறிந்துகொள் ளுதல் அதன் சரித்திரத்தை அறிதற்குப் பெருந் துணை யாக இருக்குமாதலின், அத்தகைய பல பெயர்களை முதற் கண் குறிப்பிடுவாம்.
இலங்கையேனும் பேயர்
இலங்கையெனும் பெயர் எக்காரணம்பற்றி உண்டா யிற்றென இக்காலத்தில் துணிந்து கூறமுடியவில்லை. இச் சொல் இலட்சம் அல்லது இலக்கம் எனும் சொல்லின் மருவெனக் கொண்டு, இத்தீவுக் கருகிலிருந்த இலட்சம் தீவுகள் ஆழிவாய்ப்பட்டன எனும் கன்ன பரம்பரை யொன்றினை நினைவூட்டுகின்றதென்பர் மேஜர் போர்ப்ஸ், இலக்கம் எனும் சொல் ஒளியெனவும் பொருள்படுதல் *எல்லே யிலக்கம். (தொல், உரி) எனும் நூற்பாவால் இனிது துணியப்படும். ஒளியென ஒரு பொருள்படும் எல், இலக்கம் எனும் இருசொற்களினின்றும் முறையே ஈழம் என்பனவும், இலங்கை, லங்கா என்பனவும் பிறந்த இயைபு ஈண்டு நோக்கி யின்புறத் தக்கது.
ங்கை யெனுஞ் சொல்,
* கடல்சூ றிலங்கைக் கயவாகு வேந்தன்'
எனச் சிலப்பதிகாரத்திலும், * இலங்கா தீவத்துச் சமனுெளி யென்னுஞ்
சிலம்பினை யெய்தி'
என மணிமேகலையிலும், ** தொன்மா விலங்கைப் பெயரொடு பெயரிய
நன்மா விலங்கை'
எனச் சிறுபாணுற்றுப் படையிலும்,

Page 9
ܚܙܝ 6 ܥܬܝܕܝܢ
* இலங்கையீ ழத்துக் கலந்தரு செப்பு'
எனப் பெருங்கதையிலும் வந்துள்ளது.
இரத்தினத்தீவம்
இவ்விலங்கை கடற்கால்வாயால் இருபெருங் கூருகப் பிரிக்கப்பட்டுள்ளது. முன்னது வடபாற் கண்ணது,
பின்னது தென்பாற் கண்ணது. இரத்தினத்தீவம் எனுஞ் சொல், இரத்தினத் தீவத் தோங்குயர் சமந்தத் துச்சி மீமிசை.” என மணிமேகலையில் வந்துள்ளது. இத்தகைய பாகுபாடின்றி இலங்கை முற்றினையுங் குறித்த பெயராகக் கருதுவாரு முளர் சமந்த கூடத்திற்கு அண்மையில் இரத்தினபுரி யெனுஞ் சிறந்த நகரம் இருத்தலும் ஈண்டு நினைவு கூர்தற் பாற்று. இலங்கை இரத்தினக் கல்லுக்குப் பேர்போன இடமாகும்.
ஈழம்
ஈழம் எனும் பெயர் இலங்கை முழுவதற்கும் பொது வாகவும், வடபாற் கூருகிய யாழ்ப்பாணத்திற்குச் சிறப்பா கவும் வழங்கப்பட்டிருக்கின்றது. இப் பெயர் முதலில் இந்தியா என்னும் பெயர்போல யாழ்ப்பாணத்திற்கு இடப் பட்டதாயிருந்து பின்னர் இலங்கை முழுவதற்கும் வழங் கிற்றுப்போலும். இங்ஙனமின்றி முதன் முதலில் இலங்கை முழுவதற்கும் உரிய பெயராயிருந்து நாளடைவில் அதன் ஒரு கூற்றுக்கு வழங்கப்பட்டதாகக் கொள்ளினும் கொள்ள லாம். இலங்கை ஈழத்துக் கலந்தரு செப்பு என்ப் பெருங் கதையில் வரலால் இலங்கையின் ஒருபகுதி ஈழமெனுங் கொள்கை வலியுற்றமை காண்க. இன்னும் "ஈழத்துணவும் எனப் பட்டினப்பாலையில் இச்சொல் ஆளப்பட்டிருக்கிறது. பழஞ் சிங்களம் எலு’ என வழங்கப்பட்டு வந்ததென்பது சிங்களர்க்கும் உடம்பாடு. எலு என்பது தமிழின் பாற்பட்ட தொன்றெனச் சொற்பிறப்பாராய்ச்சி வல்லுநர் சுவாமி ஞானப்பிரகாசர் குறிப்பிடுகின்ருர், அவர் கூறுவது:- பரத கண்டத்தோடு ஒருகாலம் இணைந்திருந்ததாகிய நம் இலங்கை யிலே ஆதி தொட்டுத் தமிழின் ஒரு பாகதமே பேசப்பட்டது
 
 

ܨܚܚܐ 7 ܚܝ
என்ற உண்மை எல்லாருக்கும் சம்மதம். இங்கே பாகதம் என்றது ஒரு பாஷையின் சிதைந்த உருவத்தை . அதுவே மேலும் திரிந்து எலு எனப்படுகிற சிங்களம் ஆயிற்று என்பது
எனது கொள்கை.4
ஈழம் என்னுஞ் சொல்லடியாகவே இலங்கையின் ஏனைய பெயர்கள் தோன்றின வெனக் காலஞ்சென்ற வழக்கறிஞர் பிறிற்ருே அவர்களும் முதலியார் இராசநாயகம் அவர்களுங் குறிப்பிட்டிருக்கின்ருர்கள். முதலியார் அவர்கள் கூறுவ தாவது: " அக்காலத்தில் இலங்கையில் வசித்த நாகரும் இயக்கரும் எலு" என்று இக்காலத்திற் பிழைப்பட வழங் கப்படும் ஈழ வென்னும் நிறைவற்ற பாஷையே பேசி வந்தார்கள். அதனுல் இலங்கைக்கு ஈழம் என்றும், ஈழ மண்டலம் என்றும் பெயர் உண்டாயது. ஈழம் சீழம் என மருவிச்சிஹழம், சிங்களம் என மாறியது. சீழம் என்னும் பெயரிலிருந்தே சீழம்தீப், சேரண்டிப் என்னும் அராபிய நாமங்களும், சிலாங், சிலோன் என்னும் மேலைத் தேயத் தவரிட்ட பெயர்களும் வந்தன. சிஹ வென்னும் பாலிப் பாஷைச் சொல் "சிங்கம்" என்னும் பொருளை யுடையதான படியால், சிகழல், சிங்களமாக மருவியது அதிசயமல்ல. விஜயன் மிருகேந்திரனுகிய ஒரு சிங்கத்தின் வழித்தோன்ற லானபடியால், அவன் வழித்தோன்றினேரும் சிங்களவர் என்றழைக்கப்பட்டார்கள் என்னும் மகாவமிசக் கூற்று உண்மையுமன்றிச் சிங்கள சாதியாருக்கோர் பெருமையுந் தராத வெற்றுரையாதல் காண்க' இனி, சிறி ஈழம், சிஹளம், சிங்களம் ஆயிற்றெனக் கொள்வாரு முளர், இந்த ஈழத்திற்கும் சுமேரியாவிலுள்ள ஈழத்திற்குந் தொடர் புண்டென்பது நிச்சயிக்கப் படுமாயின், தமிழர் நாகரிகம் பரவியிருந்தமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாதல் கூடும்.
தமிழர் வாழ்ந்த நாடு தமிழகம் என்ருயினுற்போல ஈழர் வாழ்ந்த நாடு ஈழமென்ருயிற்ருதல் வேண்டும். சேரர், சோழர், பாண்டியர் என்ற தமிழரின் ஒவ்வோர் இனம் போல, ஈழரும் மற்ருேரினமாய் இருத்தல் கூடும். இவ்

Page 10
--------8 -۔
வீழர்கள் தாம் இலங்கையில் நாகர்களுக்குஞ் சிங்களர் களுக்கும் முன்பு இருந்த பழங்குடி மக்கள். ஈழர் என்னுஞ் சொல்லையே ஆரியர்கள் இயகஷர் என வழங்கினர்கள். ஆரியர்களுக்கு ழகரவெழுத்தொலி இல்லாமையால் அதக் கியைந்த ஷகாரமாக்கி இயகூஷர் எனத் திரித்து வழங்குதல் கூடும். இவ் வீழர் தலைவன்தான் மிகப் புகழ்பெற்ற இராவணன் என்பவனும், குவேனியும் இவ் விழர் தலைவியே. இவ் வீழர் என்னும் பெயர் சரித்திர வாராய்ச்சி யுடையார்க்குப் புலனுகாது போனது வருந்தத்தக்கது. ஈழர்கள் கல்வி, கைத்தொழில், வேளாண்மை முதலிய வற்றிற் சிறந்திருந்து வாழ்ந்தவர்களெனப் பழைய நூல்
களான் உணரவருகின்றது. "ஈழத்துணவும் என்னும் பட்டினப்பாலையான் வேளாண்மை புலப்படும். "ஈழத்துச் செப்பு எனும் பெருங்கதையானும், ஈழவக்கத்தி' எனும்
நச்சிஞர்க்கினியர் எடுத்துக்காட்டானும் விஜயன் கண்ணுற்ற பொழுது ஈழர் தலைவி குவேனி நூல் நூற்றுக் கொண் டிருந்தன ளென்னும் மகாவம்சக் கூற்ருனும் கைத்தொழிற் றிறமை பெறப்படும். ஈழக் குலச்சான்ருர் வரலாற்ருல் ஈழரது போர்ப்பயிற்சியும், ஈழத்துப் பூதன்றேவனுர் வர லாற்ருல் ஈழரது கவிப்புலமையும் பெறப்படுகின்றன.
இனி ஈழம் என்பது பொன், கள், கிழக்கு எனப் பல் பொருள் தந்து நிற்றலின் இப் பொருளைக் கருத்தில் வைத் துப் புராணகாரர் பல கதைகளே உண்டாக்கிவிட்டனர். பொன்மலையெனப்படும் மேருவின் ஒரு சிகரமே ஈழ நாடாயின. தென்பது பெளராணிகர் கூற்று. ஈழுவர் எனுங் குடியினர் இந்தியாவிற் காணப்படலால், அவர்கள் இத் தீவினின்றும் இந்தியாவிற் குடியேறியவர்களாய் இருத்தலுங் கூடும். ஈழ நாட்டிலிருந்து தமிழ் நாட்டிலும், மலையாளத் திலும் குடியேறியவர்கள்"ஈழவர்' எனவும்,திருநெல்வேலியிற் குடியேறிய ஈழத்துப் பிள்ளைமார் இல்லத்துப்பிள்ளைமார் எனவும் வழங்கப்படுதலும் ஈண்டு நினைவுகூர்தற்பாற்று
 

ܚܝܝ | 9 --
மும்முடிச் சோழமண்டலம்
இலங்கையின் வட பகுதியை வெற்றி கொண்ட இராஜராஜன் தனது நாட்டுள் ஒரு பகுதியாக இதனைக் கருதி இதற்கு மும் முடிச் சோழமண்டலம் எனும் பெரிட்ட ழைத்தானென்பது தென்னிந்திய சாசனங்களால் அறியக் கிடக்கின்றது.
சிங்களம் அல்லது சிங்களத் துவீபம்
சிங்களர் வாழும் இடம் என்பது இதன் பொருள். சிங்களம் எனும் தீவில் வாழ்ந்தவர்கள் சிங்களர் எனப் பெயர் பெற்றனர் என்பது வைபவ மாலையுடையார் கூற்று. இங்ங்னமன்றிச் சிங்களர் எனும் மரபினர் வாழ் இடம் சிங்களமாயிற் றென்பாருமுளர். இடப்பெயர் ஆராய்ச்சி வல்லுநர் திரு. S. W. குமாரசாமியவர்கள், சிங்களம்' எனும் சொல் சமஸ்கிருத மகாபாரதத்தில் வந்துளதெனக் குறிப் பிட்டிருக்கின்ருர், அங்ஙனமாயின் சிங்களர் எனும் மரபினர் தோன்றுதற்கு முன்னரே சிங்களம் என்னும் இடப்பெயர் இருந்திருத்தல் வேண்டுமெனக் கருத இடமுண்டு.
மேலும் இவ் வறிஞர் கூறுவது சிம்ஹ அல்லது சிங்க என்பது திரளானதானப் பெயர்களிலேயே தலைநிற்றலானும் மத்திய இந்தியாவிலும், மற்றுஞ் சிலவிடங்களிலும், ஆண் மக்கள் தம் இயற்கைப் பெயரோடு சிங் (சிங்கம்) என்னுஞ் சொல்லைச் சேர்த்து வழங்குதலாலும் அவ்வண்ணம் வழங் குஞ் சாதிகளிற் பலவற்றை வடதிராவிட ரெனவும், திராவிடக் கலப்புடையோ ரெனவும் ஆங்கிலக் கலைஞர் அறைதலானும், நாடகத் தமிழிலே சிங்கன் என்பதன் பொருள் குறவணுகையாலும், விஷ்ணுவுக்குச் சிங்கேசுவரன் சிங்கப்பெருமாள், சிங்கதேவன், நரசிங்கனெனும் நாமதேய முண்மையானும் இராவணன் மகன் முதலிய இராக்கதர் சிலரும், அசுரர் சிலரும், மற்றுஞ் சில வேந்தரும் சிம்ஹ என்னுஞ் சொல்லைத் தனித்தேனும் வேறு சொல்லோ டொட்டியேனும் தம் பெயராகக் கொண்டிருந்தமையானும் சிங்வோ எனப் பெயரிய வொரு சாதி கடாரத்திலே

Page 11
இருக்கின்றமையானும், சிம்ஹ என்னும் வடசொற்கு அரசகுமாரன், தலைவன் நாதனெனவும் பொருளுண்மை யானும், சிங்கப் பட்டம் எனப் பெயரியவொரு பட்டம் பெரும்பாலும் வேளாளர்க் குண்மையானும், கேசத்தி ேைலனும், முகத் தோற்றத்தினலேனும், வீரசக்தியின லேனுஞ் சிங்கத்தையொத்த வொரு சாதியாரைச் சிங்கர் எனச் செப்புதல் தகுதியாதலானும், நாக வழிபாடுடைய மக்கட்கு நாகர் எனும் பெயர் அமைந்தவாறு, சிங்கதேவனை வழிபட்ட மாந்தர்க்குச் சிங்கரெனும் பெயர் அமைதல் முறைமையாதலானும், சிங்களம் என்னும் ஸ்தானப் பெயரி லுள்ள சிங்க என்பது சிங்கள மகா வம்சத்திற் சொல்லிய மிருகேந்திரனைக் குறியாது, பண்டைய நாட் பரதகண்டத்தும் ஈழமண்டலத்தும் பரவியிருந்த (நாகரை யொத்த ஒரு சாதி நரேந்திரரை யேனும், சிங்கேசுவரனயேனும் குறித்தது போலும்) ."
சிங்களவர் எனுஞ் சொல் கேரளர், போசளர், குந்தளர் என்ருற்போலும் ஆரியச் சொற்சிதைவாகிய இனப் பெயரா யிருத்தல் வேண்டும், போசன் மரபினர் போசளர் குந்தன் மரபினர் குந்தளர், கேரன் (சேரன்) மரபினர் கேரளர் எனப்பொருள்படுமாறு சிங்களர் என்பதும் சிங்கன் மரபினர் எனப் பொருள்படும். சிங்கன் எனும் பெயர் பகையரசர்க ளாகிய யானைகளுக்குத் தான் சிங்கம்போல்பவன் என்னுங் கருத்தால் தனக்குத் தானே இட்டுக்கொண்ட பெயராதல் பொருந்தும். இங்ஙனமின்றிச் சிங்கன் எனும் சொல் வந்த வரலாறு; உலகியலுக்கொவ்வாத புனைந்துரை வகையால் மகாவமிசத்திற் கூறப்பட்டு இக்காலத்து வழங்குகின்றது. சிங்களவர்கள் பெரும்பான்மைத் தமிழ்க் கலப்புடைய ரென்பது அவரது மொழி நடையிலே தெரிந்துகொள்ள லால் சிம்ஹ என்பது சிங்க என வருவதும், தேவனும்பிரிய தர்ஸ் என்பது தேவநம்பியதீஸன் என வருவதும் தமிழ்க் கலப்பென்பதற்குச் சிறிதும் ஐயமில்லை, (தேவனும் பிரிய தர்ஸ் என்பது மகதநாட்டரசன் அசோகச் சக்கரவர்த்தி யின் பெயர்). சிங்களர் விஷ்ணுவையும், கதிர்காமக் கடவு ளையும் பத்தினித் தெய்யோவையும் (கண்ணகி) இன்னும்
 

ہی۔ 11 ہے۔
வழிபட்டு வருகிருர்கள். அன்றியும் கண்டியில் ஆண்டு தோறும் நடக்கும் (Perahera) பெருவிழாவில் இத் தெய் வங்களே முதன்மை பெற்றிருந்தமை சரித்திர வாயிலாற் பெற்ற உண்மை.
இனி, தமிழொழி பதினேழ் நிலங்களுள் முதற் கூறப் பட்டிருப்பது சிங்களம். இதனை நன்னூ லுரை யாசிரிய ராகிய மயிலைநாதர் எடுத்துக்காட்டியிருக்கின்ருர், அவர் கூறுவது தமிழொழி பதினேழ் நிலமாவன : “ சிங்களஞ் சோனகஞ் சாவகஞ் . தாமிவையே ' என்பன. அரு மணம், காம்போசம், ஈழம், கூவிளம், பல்லவம் என்பன முதலானவை இவற்றின் பாரியாயமும் இவற்றின் பேதமு மாய் இவற்றுள்ளே அடங்குமென்க. இவற்றின் மொழி களும் வந்தவழி அறிந்துகொள்க.
' கன்னித் தென்கரைக் கட்பழந் தீவஞ்
சிங்களங் கொல்லங் கூவிள மென்னு . * 擎
g5 T L Goru GOT (Taprobane)
பண்டைக் காலத்து யவன (உரோம) கிரேக்க ஆசிரி Jiř5@TITULI Oncscritus, Diodorous Siculus, Ovid, Strabo, Dionysius Periegetes Pomponius Mela, Solinus Polyhistor, Pliny முதலியவர்கள் இத் தீவு ' தாபிரபன ' எனும் பெயரால் அழைக்கப்பட்டதென அறிந்திருந்தார்கள். இது மிகவும் பழையதொரு பெயர். இச் சொல் (Tap - ravan) egyői Gugl (Tab - ravan) எனப் பிரிக்கப்பட்டு இராவணன் தீவு எனப் பொருள் படுமென்பர் ஒரு சாரார். இது தம்ப பன்னியெனச் சிங்கள நூல்களால் இத்தீவுக்கிடப்பட்ட பெயரின் மருவென்பர் பிறிதொரு சாரார். தம்பபன்ன என்பதன் பொருள் செந்நிறமுடையது என்பது. விஜயனும் அவன் பரிவாரமும் முதன் முதல் இத் தீவில் இறங்கியபொழுதுகளைப்பினுலும் அலுப்பினுலும் நடக்கச் சக்தியற்றுத் தங்கள் கைகளை ஊன்றிக் கொண்டிருந் தார்களெனவும் தம் கைகள் செந்நிறம் படிந்தமை கண்டு தம்பபன எனப் பெயரிட்டார்களெனவும் மகாவம்சம்

Page 12
ܚܝ 12 ܚ
கூறும். இத்தகைய வெற்றுரைகள் பல சிங்கள மகா வம்சத்தில் உளவென்பதற்கு இஃதோர் எடுத்துக்காட்டா கும். தென்னிந்தியாவில் தாமிரபரணியாற்றுக்கருகிலிருந்த தமிழர் இங்கு வந்து குடியேறிய பொழுது இத்தீவுக்கு இப்பெயரிட்டினர் என்பது சாலும், அன்றேல் தென்னிந்தி யாவில் தமிழரைக் கண்ட பிறதேயத்தவர்கள் இங்கும் மகாவலிகங்கையையும் தமிழரையும் கண்டபொழுது, இத் தீவுக்கும் அப்பெயரையிட் டழைத்தனரெனக் கோடலும் ஒன்று. இதுவே சேர். பொன் அருணுசலம் அவர்களது கொள்கையாகும். இப்பொழுது பொதியின் மலையிலே பிறந்து கிழக்கோடி கொற்கையிலே கடலொடு கலக்கின்ற தாம்ரபரணியாறு முன்னுெரு காலத்தில், அஃதாவது இப் பொழுதுள்ள கடல் கன்னியாகுமரி முனைக்கு வடபால் இல்லாத பொழுது, கொற்கைக்கும் கிழக்கே நிலத்தோடி வந்து, இலங்கை வரையும் ஒடி இலங்கையினுள்ளும் சென்ற தாதல் பற்றி அவ்வாற்றின் பெயரே பெயராக இலங்கைக்கு வழங்கினரெனக் கொள்ளுதலுஞ் சான்று கிடைப்பின் உறுதிப்படும்.
LUFTGUT é o typ GöOTCB (palaesimoundu)
பிற்காலத்துக் கிரேக்கரும் உரோமரும் இத் தீவினைப் பாலாசி முண்டு எனக் குறிப்பிட்டிருக்கின்ருர்கள். இதைத் தமிழ்ச் சொல் எனக் கொள்வர் முதலியார் இராசநாயகம் அவர்கள். பழைய சீழமண்டலம் சீலமண்டலம் - ஈழ மண்டலம், இவற்றிலிருந்து ஏனைய பெயர்கள் வந்த வர லாற்றை முன்னர்க் குறிப்பிட்டுள்ளாம். ஆண்டுக் காண்க. பரசிறி மண்டலம் என்பதன் மரூவென்பர் வின்சென்ற் ஆசிரியர். இஃது ஒர் பட்டினத்தின் பெயரெனவும், இலங்கையின் வடமேற்குப் பகுதியில் இருந்ததெனவுங் கூறுவர் பிறிடாம் ஆசிரியர், மேஜர் வோர்ப்ஸ் எனும் சரித் திர வல்லுநர் இச் சொல் சிங்கள மொழியினின்றும் பிறந்ததெனக் கொண்டு - பலாயசிய மண்டலம் - கீழ் LT T S L S TO TTT S TTTTT T S LLSLLS LLtLltlttt S L SLlLtLL Simudu - பாலி சிமந்த எனும் வடமொழிப் பதத்தி னின்றும் போந்த பெயரெனவும், தருமநுாற்றலேமை எனப் பொருள்படுமெனவும் பிறிதொருவர் கூறியுள்ளார்.
 
 

سے 13 سس۔
பாலாவி மன்று என்பது பாலாவி ஒடும் வெளியிடம். பாலாவி மன்று என்பது பாலாசி முண்டெனக் கிரேக் கர்கள் வழங்கியிருக்கவேண்டு மென்பர் சிவங்கருணுலய பாண்டியப் புலவர் அவர்கள். பாலாவிமன்று என ஓரிடத்தின் பெயராக இருந்ததனையே இலங்கை முழுதிற்கும் பெயராகக் கிரேக்கர்கள் வைத்துக்கொண்டார்களாதல் வேண்டும். இந்தியா என்பதும் கிரேக்கர்கள் அவ்வாறே இட்ட பெய ரென்பது ஈண்டு நினைவுகூர்தற் பாற்று. மன்று மண்டு எனத் திரிந்து முண்டெனச் சிதைந்த தென்ருல் பொருந்தும். நீலகிரியைச் சார்ந்த மன்று எனும் பல ஊர்களின் பெயர் கள், உதக மண்டு என்ருற்போல மண்டென வழங்குவது கண்டுகொள்க.
arr G5s (Salika)
'தாபிரபன எனப் பழம்பெயர் பூண்ட தீவு இப்பொ ழுது சாலிக என அழைக்கப்படுகின்றது' எனத் தொலமி என்பவர் எழுதியிருக்கிருர், சலாவ அல்லது சாலியர் என் னும் ஒருவகைச் சாதி இலங்கையிலுண்டு. இவர்கள் இலங் கைக்கே சிறப்பாகவுரியவர்கள். முன்னுெருகாலத்தில் கூலி யாட்களாகவும் பின்னர் கறுவாப்பட்டையுரிக்கும் தொழி லாளர்களாகவும் வாழ்ந்துவந்தார்கள். இவர்களுடைய வரலாறு பலபடத் திரித்து வழங்கப்படுதலின், உண்மை வர லாற்றுப்பகுதி தெரிந்திலது. இனி, சாலிய என்பது சீலம் அல்லது சீழம் எனும் சொல்லின் மருவென்பாருமுளர். மலையாளத்தார் இதனை சைலத்த' எனப் பெயரிட்டழைத் தனT.
சலாபதீபம்
சலாபம் என்பது முத்துக்குளித்தல் எனப்படும். இப் பெயரால் இத் தொழிற் சிறப்பு மிகுந்த பட்டினமும் இலங்கையிலுண்டு. முத்துக்களாலும் வாசனைத் திரவியங்க ளாலும்இலாபத்தை யுண்டாக்கித் தன்னகத்தே பிறதேயத்து வணிகர்களை இழுக்கும் ஆற்றல்வாய்ந்த தீவு என்பது இதன் பொருள் போலும்,

Page 13
-- 14 سب
GeFpGörgü (Serendib) Selen-divis
1991JTnrı ?u il 2), Grifuli ricağı Gir. Edirisi, soleyman, Abou-Zeyn முதலியோர் இட்டழைத்த பெயர் செறண்டிப் என்பது. டிவிஸ் (Divis) என்னும் சொல் தீவு என்னும் பொருளது. இதுவே பின்னர் மருவி Siten Zeilan Ceylon, சிலோன் என்ருயிற் றென்பர் ஒரு சாரார்.
முதற் புத்தராகிய காகுசந்தன் காலத்தில் இத்தீவு ஒச்ச தீவம்' எனவும், கோனகம்ம புத்தன் காலத்தில் "வரதுவி பம்' எனவும், காசியப்பன் புத்தன் காலத்தில் மததுவீபம்" எனவும் வழங்கப்பட்டுவந்ததென மாகாவம்சம் குறிப்பிடு கின்றது. புத்தருடைய விரிவான வரலாற்று நூல்களில் அவர் இலங்கைக்கு வந்த வரலாறு கூறப்படவில்லை யெனக் கருதுகின்றனர். ஒருசில ஆராய்ச்சியாளர் ஒபிர், தர்ஷிஸ் என எபிரேயர் குறிப்பட்டவற்றின் ஒரு பகுதி இலங்கை யெனவும், சாலமோன் அரசன் தனது கப்பற்படை மூலம் பொன், வெள்ளி. இபம், மயிற்ருேகை முதலியவற்றைப் பெற்ருனெனவும் நம்பப்படுகின்றது. சீயம் (Siam) தேசத் தவர் இதனைத் தேவ லங்கா' என்றழைத்தனர். காகத்தீவு
இயக்க வேந்தணுகிய குபேரன் இலங்கையில் ஆட்சி புரிந்தான் எனப் புராணங் கூறுதலால் இத்தீவு இயக்க தீவு எனப் பெயர்பெற்றது. இனி நாகர்கள் முன்னுெரு காலத்தில் இலங்கையில் வாழ்ந்தமையால் இத் தீவு நாகத்தீவு எனவும் பெயர் பெற்றது. அடிக்குறிப்பு:
1. Ceylon - by any other Name by Walrus-Ceylon
Daily News 29-27-56 - Census Report for 1901-by Sir P. Arunachalam Sketches of Ceylon. History-by Sir P. Arunachatam. ஈழகேசரி 15-8-37 யாழ்ப்பாணச் சரித்திரம்-பக், 11 - 12. சிங்பூர், சிங்கபாத்து, சிங்கயிர், சிங்கம்பட்டி, சிங்கநல்லூர், சிங்கபுரம், சிங்காசனம், சிங்கப்பூர், 7. வடமாகாணத்துள்ள சில இடப் பெயர்களின்
வரலாறு - பக். 17 - 8.
 

ఈ_
நாகர்
நாகர் என்ற வகுப்பினர் நாகரிக வளர்ச்சியுடையவ ராக இருந்தனர் என்பதற்குப் பல சான்றுகள் ஆங்காங்கு கிடைத்துள்ளன. எனினும் இவ் வகுப்பினரின் சிறப்பியல் புகளை விளக்கும் நூல் எதுவும் இதுவரை வெளிவந்த தாகத் தெரியவில்லை. இருபதாம் நூற்ருண்டின் தொடக் கத்தில் ஈழத்துப் பெருந்தமிழ் மகனுரான திரு. வி. கனகசபைப்பிள்ளை பீ. ஏ., பி. எல். அவர்கள் 1800ஆண்டு களுக்கு முற்பட்ட தமிழகம்' என்ற நூலினை ஆங்கிலேயரும். விரும்பி வாசிக்கத் தக்க சீரிய ஆங்கில நடையிலே இயற்றி ஞர்கள். பன்மொழிப் புலவர் திரு. கா. அப்பாத்துரை எம். ஏ. எல். டி. அவர்கள் இதனைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். திரு. வி. கனகசபைப் பிள்ளையவர்கள் நாகர்களின் வரலாற்றை ஒரளவு தொகுத்துக் கூறியுள்ளார். இப் பேரறிஞர் ஆராய்ச்சி நடாத்திய காலத்தில் தமிழ் நூல்கள் பல ஏட்டுப்பிரதிகளாகவே கிடந்தன என்பதை நோக்குமிடத்து, இவர் இந்நூலை எழுதுவதற்குப் பட்ட இன்னல்கள் ஒரளவு புலனுகும். இப் பெருந்தகையார் நாகரைப்பற்றி வெளியிட்ட சில குறிப்புக்களை ஈண்டு எடுத்துக்காட்டுவாம்.
"இவர்கள் (நாகர்) ஒரு காலத்தில் இந்தியா, இலங்கை, பர்மா ஆகிய பரப்பின் பெரும் பகுதியையும் ஆண்டார்கள். பெரிதும் தெக்கணத்திலேயே இருந்திருக்கக்கூடிய ஒரு நாகர் தலைநகரம் இராமாயணத்திற் கீழ்வருமாறு வர்ணிக்
கப்பட்டுள்ளது.

Page 14
سسه 16 -سس
நஞ்சுறைவன் பற்கள்கொடு
நாகரிள மைந்தர் பொன்செய்கொடுந் தாழ்இரும்
புரிசைமதில் காக்க எஞ்சுதலில் விதிபல
எங்கணும் நிறைந்து மிஞ்சவரு போகவதி
மேவுநக ரத்தே
மின்செய்பொலங் கோயிலிடை வியன்தவசின் மீதே அஞ்சவரு வாசுகி
அமர்ந்தபதி காண்நி மஞ்சுதவழ் மாடமொடு
கூடம்மிடை காடு விஞ்சவரு பைங்கழனி
யாவும் விழி கொள்வாய்.
"கி. மு. 13ஆம் நூற்ருண்டினருகாமையில் கங்கைக்கும் முனைக்கு மிடையேயுள்ள பகுதியில் நாக அரசுகள் ருந்ததாக மகாபாரதத்திலிருந்து கேள்விப்படுகிருேம்.
ன் மணிபுரத்தை ஆண்ட நாக அரசன் சித்திரவாகனன் ல்வியாகிய சித்திராங்கதையையும் மணம் புரிந்து
* மீண்டும் நாகர்களை நாம் வரலாற்றில் கி. மு. 6ஆம் ற்ருண்டிற் காண்கிருேம். அப்போது ஒரு நாக மரபினர் கதத்தை ஆண்டனர். இம் மரபைச் சார்ந்த ஆளும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"இலங்கை வரலாற்று நூல்கள் யாவுமே நாகர்களைப் பற்றிய செய்திகளுடன் தொடங்குகின்றன. இவற்றிலிருந்து கி. மு. 6ஆம் நூற்ருண்டில் தீவின் மேற்குக்கரையில் வல்லமை வாய்ந்த நாக அரசுகள் நிலவின வென்றும் அக்காரணத்தால் தீவு நாகத்தீவு என்று அழைக்கப்பட்ட தென்றும் அறிகிருேம். 1800ஆண்டுகளுக்கு முன் வரையப் பட்ட பண்டை அமராவதிச் சிற்பங்களிலும் அது போன்ற பிற இடங்களிலும் தலைக்கு மேல் பின்புறமாக விரிந்த படங்களுடன் நாகங்கள் தீட்டப்பட்ட மனித உருவங்கள் உள்ளன. இவை நாகர் உருவங்களே.3 அமராவதியின் அழிபாடுகளிலிருந்து அகற்றப்பட்டுள்ள சில துண்டங்கள் சென்னை அரசியற் கண்காட்சிச்சாலையிற் காணப்படுகின்றன. இச் சிற்பங்களில் நாக அரசருக்குத் தனிச் சிறப்புச் சின்ன மாகப் பின்புறம் ஐந்தலை அல்லது எழுதலே நாகம் உள்ளது. நாக இளவரசியருக்கு இதுபோல முத்தலை நாகங்களும் பொதுநிலை நாகர்களுக்கு ஒரு தலை நாகங்களும் உள்ளன.
"இச் சிற்பங்களை அரிது முயன்று செதுக்கிய செதுக்குக் கலைஞர் நாகர்கள் நாக இயல்புடையவர் என்றும், அவர்கள் உடல் பாதி மனித உருவாகவும், பாதி பாம்புருவாகவும் அமைந்திருந்தன என்றும் கருதியதாகத் தோற்றுகிறது. இந் நம்பிக்கையைப் பண்டைத் தமிழ்க் கவிஞர்கள் அரை குறையாகவே கொண்டிருந்ததாகத் தெரிகிறது. ஏனெனில், அவர்கள் தம்முடன் சமகாலத்தவரான நாகர்களே மனித ராகவே கருதிக் குறிப்பிடுகின்றனர். ஆனல், அதே சமயம் பண்டை நாகர்கள் பாதலத்திற் பாம்புகளாக வாழ்ந்த தாகக் குறிக்கின்றனர்.
சோழர் தலைநகராகிய காவிரிப் பட்டினத்தின் பழ மையையும் செல்வவளத்தையும் குறிப்பிடும் போது, நாகர் தலைநகர் அதாவது நாகர் நாட்டின் தலைநகரைப் போலப் பழமையும் புகழும் உடையதாயிருந்தது என்று கூறுகிருர், இதிலிருந்து 1800ஆண்டுகளுக்கு முன் வாழ்ந் திருந்த தமிழ் மக்கள் நினைவெல்லைக்குள்ளாக, நாகர் அரசுகளை விடப் பழமை வாய்ந்த அரசுகள் எதுவும் இருந்த தில்லை என்று தோற்றுகிறது. காவிரிப்பட்டினமே நாகர் களின் ஒரு பழைய வாழ்விடமாயிருந்ததென்று கூறப் படுகிறது.

Page 15
ܚ ܲ18 ܒܚ.
நாகர்களில் எயினர், ஒளியர், அருவாளர், பரதவர் ஆகிய பல கிளையினர் இருந்தனர். இவர்களில் மறவரே மிக வல்லமை வாய்ந்தவராகவும் போர்த்திற மிக்கவராகவும் இருந்தனர். நாக மரபினரிடையே முற்றிலும் அடங்காப் பண்புடையவர்கள் எயினர் அல்லது வேடரே கி. பி. இரண்டாம் நூற்ருண்டின் நடுப்பகுதியில் சோழர் வலிமையும் ஏனைத் தமிழரசர் வலிமையுந் தற்காலிகமாகச் சில காலம் தளர்வுற்றிருந்தது. அச்சமயம் அருவாளர் மரபினரின் கிளையினரான ஒவியர் எயிற் பட்டினத்தில் ஆண்டதுடன் மா விலங்கையின் மன்னர்களாகவும் விளங்கினர். நாகர்கள் பல கலைகளில் திறமையுடையவர்கள் சிறப்பாக நெசவு அவர்கள் தனித்திறமாய் இருந்தது.'
திரு. வி. கனகசபைப்பிள்ளை அவர்கள் எழுதிய நூலினை மொழிபெயர்த்த பன் மொழிப் புலவர் திரு. கா. அப்பாத்துரை அவர்கள் இந்நூலின் 86ஆம் பக்கத்தில் அடிக்குறிப்பாக எழுதியுள்ள பாகமும் பரிசீலனைக்கு உகந்த தொன்ருகும். "நாகர்கள் தமிழராகவே தமிழகத்தில் வாழ்ந்தனர். எங்கும் வேறு இன மொழிக்குரியரென்ற பேச்சும் ஏற்படவில்லை. தனியினமாகவே வாழ்ந்தனர். ஆகவே, அவர்கள் கடல்கொண்ட தமிழகத்திலோ, தமி ழகம் சூழ்ந்த நிலத்திலோ இருந்த தமிழினப் பிரிவினர் என்றும், கடல்கோளின் பயனுகவோ வேறு காரணங்க ளாலோ எங்கும் பரந்தவர் என்றும் கருத இடமுண்டு'.
து இன்னும் ஆராயத்தக்கது.
இதுவரை கூறியவாற்ருன் நாகர் தமிழகத்தில் வாழ்ந்த தொல்குடியினர் என்பது பெறப்படும். இந்த நாகர் அனுட் டித்த நாகவழிபாடும் எவ்வாறு உலகிற் பரவிய தென்பதைச் சிறிது நோக்குவாம்.
அடிக்குறிப்பு:
| L. Griffith’s Ramayana, IV, 205, Indian Antiguary
Vol. P, 5.
2. Tree and Serpent Worship by Fergusson P. 60.
Archaeological Survey of Southern India Vol. I. The Bouddhistis stupas of Amarawati and Jaggaya peta
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வழிபாடு
நாக வழிபாடு இந்தியாவின் பழங்குடிகளுள் மட்டு மல்ல உலகத்திலே சரித்திர காலத்துக்கு முற்பட்ட வேறநேக குழுவினருள்ளும் மிகப் பரவியிருந்ததொன்று என்பதற்குச் சான்றுகள் பலவுள. நாக வழிபாடு சம்பந்தமான அநேக குறிப்புக்களை பண்டிதர் ந. சி. கந்தையாபிள்ளை அவர்கள் எழுதிய "பழந்தமிழர் என்ற நூலிற் காணலாம். அதன் சுருக்கத்தை மட்டும் இவ்விடத்திற் குறிப்பிடுதல் பொருத்த முடையதாகவிருக்கும்:- 'நாக வழிபாடு பகல் வழிபாடு போலவே உலகம் முழுமையிலும் வியாபகம் பெற்றிருந்தது. இவ் வழிபாட்டின் தொடக்கம் எவ்வகையினது என்று துணிதல் கூடவில்லை. உலகின் பல பாகங்களில் கூட்டங் களாக வாழ்ந்த மக்கள் விலங்கு பறவை முதலியவைகளில் யாதோ ஒன்றைத் தமது குலக்குறியாகக் கொண்டனர். இதனை ஆங்கில மொழியில் 'otem என வழங்குவர். மயூரர், நாகர், லம்புக்கர்ணர், கருடர் முதலிய பெயர்கள் இதற்கு உதாரணமாகும். இக் குலங்களுக்குரிய விலங்குகளும், பறவைகளும் அவ்வவ் மக்கட் கூட்டத்தினரால் புனித முடையனவாகக் கருதப்பட்டன; அவைகளின் உருவங்கள் கொடிகளிலும் தீட்டப்பட்டன. ஆகவே ஒவ்வொரு கூட் டத்தினரும் ஒவ்வொரு கொடியுடையவர்களாயிருந்தனர்.
*ஆதி மக்கள், மொழியை ஒவிய முறையாக எழுதினர். கட்புலனுகும் பருப்பொருள்களை விளக்க, அவ்வப் பொருள் களின் வடிவங்கள் எழுதப்பட்டன. கட்புலனுகாத வீரம், கோபம், தந்திரம், அறிவு முதலியன போன்ற மனத் தோற்ற மளவிலுள்ள பொருள்களை விளக்க அவ்வக் குணங்களமைந்த உயிர்களின் வடிவங்கள் எழுதப்பட்டன. விவேகமின்மைக்கு ஈயின் உருவமும், விடா முயற்சிக்குத் தேனியின் உருவமும், வெற்றிக்குக் கருடனும் இன்னும் மற்றைக் குணுதிசயங்களுக்கு மற்றை உயிர்களின் உருவங் களும் அறிகுறிகளாக வழங்கி வந்தன.

Page 16
ܚ ܲ20 ܚ
பண்டை மக்கட் கூட்டத்தினர் ஒவ்வொருவரும் தம்மிடத்திற் காணப்பட்ட முக்கியதன்மை ஒன்றை விளக்க ஒவ்வோர் அடையாளமாகிய ஒவியத்தை வழங்கி யிருக்கலாம். அவை பிற்காலத்தில் அம் மக்களால் வழி பாட்டுக்குரியனவும் ஆயின என்று கூறுதல் ஏற்றதாகத் தெரிகிறது. பாம்பு வணக்கத்தின் ஆரம்பமும் இதுவா யிருக்கலாம். இது ஆராயத்தக்கது.'
ஒல்ட்ஹாம் 2 என்னும் ஆசிரியர் நாக வணக்கத்தை யும் ஞாயிற்று வணக்கத்தையும் ஆராய்ந்து சிறந்த நூலொன்று வெளியிட்டுள்ளார். டக்டர் வோகல் அவர்கள் சர்ப்ப வழிபாடு முதலியன பற்றி எழுதிய நூலிலும்? பிரான்சியப் பேராசிரியர் துப்ரே எழுதிய நூலிலும் சரித் திரவாராய்ச்சி அறிஞர் திரு. எச். கிருஷ்ண சாஸ்திரி அவர்கள் எழுதிய தென்னிந்திய தெய்வவடிவங்கள் என்ற நூலிலும் நாக வழிபாட்டின் தொன்மையுஞ் சிறப்பும் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன. ஒல்ட்ஹாம் எழுதிய நூலின் முக்கிய குறிப்புக்களை மேற்கூறிய பண்டிதர் கந்தையாபிள்ளை அவர்களே அழகாக மொழி பெயர்த் துத் தந்துள்ளார்கள். அவற்றையும் சுருக்கமாகக் குறிப் பிட விரும்புகின்றேன்.
" இந்திய நாட்டில் படமுள்ள நாகம் பகல் வணக்கத் தோடு தொடர்பு பெற்று வருகின்றது. அது ஞாயிற்றி னின்று தோன்றியவர்களெனச் சொல்லிக்கொள்ளும் மக்கட் கூட்டத்தினரின் குல இலச்சினையாகும். எங்கெங்கு பகல் வணக்கம் காணப்பட்டதோ அங்கெல்லாம் படமுடைய பாம்பு புனிதமுடையதாகக் கருதப்பட்டது. இந்தியாவிற் காணப்படுதல் போலவே ஞாயிற்றை வழிபடும். நாடுகளி லெல்லாம் நாகம் வழிபடப்பட்டது. சீனு, பேரு, ஆபிரிக்கா முதலிய நாடுகள் ஒன்றிலிருந்து ஒன்று மிகவும் தொலைவில் இருக்கின்றன. இந்நாடுகளில் இவ் வழிபாடுகள் மற்றை நாடுகளின் சம்பந்தமில்லாது தனித்துத் தோன்றின என்று கூறுதல் முடியாது. இவ்வணக்க முறை இந் நாடுகள் ஒன் றிற் காணப்படுவது போலவே மற்றைய நாடுகளிலுங் காணப்படுகின்றது. ஆகவே ஞாயிற்றுக் குலத்தவர் என்று சொல்லிக் கொண்ட ஒரு குலத்தவர்களுடைய மத்தியி லிருந்தே இவ் வழிபாடுகள் பரந்து நானுதிசைகளிலும் சென்றிருத்தல் வேண்டும்.'

உலகம் முழுமையிலும் காகம் புனிதமுடையதாகக் கோள்ளப்பட்டது
வரலாற்றுக்கால ஆரம்பத்தில் பாம்பு, பகல் வழிபா டுகள் நன்ருக வளர்ச்சி அடைந்திருந்தன. மிகப் பழங் காலத்தில் யூபிராதசுக்கும் சிந்து நதிக்கும் இடையில் இவ் வழிபாடுகள் ஓங்கியிருந்தன. பபிலோனியாவிலும் அதனை அடுத்த நாடுகளிலும் பண்டை நாட்களில் ஞாயிற்று பாம்பு வழிபாடுகளே இருந்தன. பாபிலோன் மக்களின் ஆதித் தெய்வங்களுள் ஒன்று ஈஆ; இது ஏழுதலே நாக வடிவுடையது, சூரியனும் நாகமும் பினீசியரால் வணங் கப்பட்டன. கிரேக்கர் ஞாயிற்றையும் பாம்பையும் வணங்கி ஞர்கள். எகிப்தில் ஆதிகாலமுதல் பகலும் படமுள்ள பாம்பும் வணங்கப்பட்டு வந்தன. 8 மஞ்சூரிய மக்களின் பாம்புத் தெய்வங்கள் இன்றும் ஆறுகளுக்கும் மழைக்கும் அதிபதிகள். யப்பானியர் ஐதிகத்தின்படி மலைத் தெய் வங்கள் பாம்பு வடிவங்களே எடுத்துள்ளன. இந்நாடுகளில் ஞாயிற்று, பாம்பு வழிபாட்டு முறைகள் இந்தியாவிற் காணப் படுவன போன்றன. சேரநாடு நாகர்நாடு எனப்படும் சாரை என்பதே சேர என வந்தது. இன்றும் ஒவ்வொ நாயர் சாதியினரின் கொல்லையிலும் நாக தெய்வங்க வழிபடப்படுகின்றன.
கிறித்துவ ஆண்டின் முற்பகுதிகளிற் சீன யாத்திரிகர்கள் இந்தியாவுக்குச் செல்லும் வழியிற் பாம்புத் தெய்வங்கள் எல்லா ஆறுகளையும் குளங்களையும் ஆள்வதைக் கண்டனர். திபெத் தில் இன்றும் குளங்களும், நீரூற்றுக்களும் பாம்புத் தெய் வங்களால் ஆளப்படுகின்றன. பேருவில் கசமார்க்கா என்னுமிடத்தில் பாம்பு ஆலயத்திற் பாம்பு வடிவக் க இருந்தது.
பாம்பு வழிபாடு இந்தியாவில் ஆரம்பித்ததென ஆராய்ச்சி யாளர் துணிவர்?

Page 17
காக வழிபாடு காகருடையது
நாக வகுப்பினரே நாக வழிபாட்டுக்கு ஆஸ்பதமா யிருந்தாரென எண்ணுவது ஏற்புடைத்துப்போலும். * பிற்காலத்தனவான புராண காவியங்கள் நாகர்களைப் பாதி பாம்பும் பாதி நரருபமுமாகச் சித்திரிக்கின்றமை * நாகர்' என்ற குலப் பெயருக்கு உற்பத்தி கொடுத்தோ தும்படி உண்டாக்கிய கற்பனையேயன்றி உண்மையன்று. தக்ஷகன் எனும் பாம்பு ஒரு மானுட கன்னிகையைப் புணர்ந்து பெற்றவர்களை நாகர்கள் என்ற பெளராணிகர் கூற்றும் அவ்வாறேயாம். நாக வழிபாடு உள்ளோராயும், நாகத் தைத் தங் கொடியாகக் கொண்டோராயும் இருந்தமை தான் நாகருக்கு இப்பெயர் வருவதற்குக் காரணமாயிற்று. இப்போது சென்னை நூதனசாலையில் வைத்திருக்கும் அமராவதிச் சித்திரங்களிற் கண்ட நாகரின் தலைமேல் நாக படம் போன்ற ஒருவகைக் குடை கவிந்து நிற்பதைக் கவ னிக்கலாம். உள்ளபடி இக் குலத்தார் இவ்வகையான ஒர் ஆபரணம் உள்ளோராய் இருந்தமை பொருத்தமாகாத தன்று. இவர் உச்சியிற் கட்டும் கொண்டையும் மண்டல மிட்டுக் கிடக்கும் நாகத்தினுக்கு ஓர் சின்னமே என்ப.
*நாகர் இந்தியாவிலும் இலங்கையிலும் பரந்த காலத்தில் நாகவழிபாடும் மிகப் பரவுவதாயிற்று. இவர் முக்கியமாய் நிலை யூன்றிய பிரதேசமாகிய மலையாளத்திலேதான் இன்றைக்கும் அது உறைத்து நிற்கின்றது. மலையாளத்துச் சேரகுலத்தவர் இந் நாகரின் பிதிர்வழியே போலும். இவருள், பெண்கள் இன்றைக்கும் நாகபாம்பின் வடிவமான ஆபரணங்களைக் காதிலுங் கையிலும் அணியும் வழக்கத்தை மிகப் போற்றுவா ராகின்றனர். வட இந்தியாவிலும் ராகிபூர்ணிமை என்னுந் தினத்தில், பாம்பு கடிக்கு ஒர் காவலாகராகி என் றழைக்கப்படும் மணிக்காப்புக்களை ஒருவர் இன்னுெருவருக்கு அனுப்பும் வழக்கமொன்றிருக்கிறது. இவ்வழக்கமும் நாக வழிபாட்டோடு சம்பந்தப்பட்டதே யென்பர் மெஸ், தத்தர், யாழ்ப்பாணத்தில் நாட்டுப்புறங்களில் வழங்கும் நாகபடம் என்னும் கால்விரல் ஆபரணத்துக்கும் காதாபரணத்துக்கும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ܘܚܛ 23 ܚ
உற்பத்தி யாது?நாகபத்தர்களது வழக்கந்தானேயோ? தென் னிந்தியாவில் குளம் நதிக்கரைகளிலும் நாகபாம்பின் வடிவங் கொத்தப்பட்டுள்ள கற்களைப் பலவிடங்களிற் காணலாம். இவைகளுட் சில வெகுகாலத்தன. நாகவழிபாடு ஞாயிறு, திங்கள் முதலியவற்றின் வழிபாட்டுக்கும் முற்பட்டதாயிருக் கக் கூடும் எனவும், பிள்ளைப்பேறில்லாதவர்கள் நாகப் பிரதிஷ்டை செய்வதாற் பிள்ளைகளைப் பெறலாம் என்ற நம்பிக்கை தமிழகத்தில் நன்கு வேரூன்றியிருந்தது எனவும் திரு. ஏச் கிருஷ்ண சாஸ்திரி அவர்கள் தாம் எழுதிய நூலிற் குறிப்பிட்டுள்ளார்கள்.
இனி, நம் சைவ சமயத்தை நோக்குமிடத்துச் சிவ பெருமான் சர்ப்பத்தை ஆபரணமாக அணிந்துள்ளார் என்று கூறப்படுகின்றது. இதன் கருத்து யாது?
"குண்டலினி சத்தி பாம்பு வடிவாயிருக்கிற தென்று உருவகப்படுத்துகிற படியாலும், அது அவர்க்குப் பரிக்கிரக சத்தியாதலுண்மையானும், அதனுடைய விரிவு சுருக்கங் களே பிரபஞ்ச தோற்ற ஒடுக்கங்க ளாகையானும், அதனை யுடையராயிருத்தலாற் சகத்திற்கு நிமித்த காரணர் தாமே என்பதையும், இஃதன்றி, "இருத்தியே நாகரூபம்’ எனக் கூறலால், இருத்தி என்பதற்குப் பொருள் நல்ல செல்வம், ஐஸ்வரியம் அதிகப்படல், நிறைவு, மேலாந்தன்மை என்பன வாக இவைகளையுடையவர் தாமே என்பதையும் ஆன்மாக் களுக்கு அருளே தனுவாக எடுத்து அருள் செய்வோர் தாமே என்பதையும் பரம கருணுகர பரஞ்சோதிப் பிழம்பாகிய பரசிவன், சிற்றறிவினர்களாகிய ஆன்மாக்கட்கு அறிவித்து உய்விப்பான்கொண்ட திருச்சின்னங்களேயாம்' என்று சைவசித்தாந்த சரபம் மேலைப்புலோலி நா. கதிரைவேற்பிள்ளை அவர்கள் சிவகேஷத்திராலய மகோற்சவ விளக்கம்" எனும் நூலில் விளக்கிக் காட்டியுள்ளார்கள்.
அடிக்குறிப்பு :
1. ஆதி அநாகரிக மக்களுள் பாம்பு வழிபாடு பயத்திஞல் எழுந்ததுபோலும். சத்தப்படாமல் நகர்ந்து போய்க் கள்ளனப் போற் சதிமானஞ் செய்வதும், குப்பை

Page 18
2.
용.
--24 ) ۔
கூழங்களுள், பொந்து சந்துகளுள் மறைந்து கிடந்து எவருங் காணமுன்னரே அனர்த்தம் விளைப்பதும், தன் சத்துருவின் தோற்புரையில் கவ்வுதல் ஒன்றினல்
அவனை மரணத்துக்கிடமாக்கி விடு கின்றது மாகிய
இந்தச் சொல்லரிய வல்லமை யை ப் பொருந்திய பிராணி, இயல்பாகவே சனங்களுடைய அச்சத்துக்கும் அதனுல் உபாசனைக்கும் ஆதிதொட்டு இலக்காகிக் கொண்டது. தமிழரின் பூர்வ சரித்திரமும் சமயமும்நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் பக். 58.
The Sun and the Serpent-by C. F. Oldham Ch., X- XI.
Indian Serpente Lore or The Nagas in Hindu Legend, and Art-by J. P. H. Vogel, Ph. D. Iconography of Southern India—by G. Jouveau Dubreuil.
South Indian. Images of Gods and Goddesses-bu
Η Κίνης ή για Saδίγή.
The lotus and hooded snakes were in Egypt, which make it probable that the religious symbols of both countries originally came from the Hindus - The Symbolie Language of Ancient Art and Mythology. P. I09.
The mythical serpent of the Hindus too is generally represented with five heads to signify perhaps the five senses, but still it is the hooded snake, which we believe to be a native of India, and consequently to have been originally employed as a religious symbol in the country from whence the Egyptians and Phonecians probably borrowed it and transmitted it
to the Greeks and Romans upon whose bracelets and
GGMtM S G L LL LL L S E Et GGLmL SS 000 SS MM LL LL LM S LGtLT S G0SS Symbolical Language of Ancient Art Mythology, p. 16. தமிழரின் பூர்வ சரித்திரமும் சமயமும் 4 சுவாமி ஞானப்பிரகாசர்,
9. Sομία Indian Images of Gods and Goddesses -- Nagas
H. Krishna Sasiya. P, 248 - 257.
 

நயினுதீவு கந்தாப் புகழ்வாய்ந்த கயினைத்தலச் சிறப்பு
நீருற வளைந்து புரண்டெழுந் திரைந்து
நிறைந்திடும் பணத்திரை விரித்துக் காருற விடங்கொண் டுலகெலா மீன்ற கருணைநாயகிதிருக் கோலத் தேருற விளங்கு முரகமொத் திருந்த விருங்கட னடுவனெண் டிசையும் பாருடன் புகழத் திகழ்சிகா மணிபோற் படிந்ததந் நயினையம் பதியே
பவக்கடற் கிடைவீழ்ந் தலமரு வோரைப்
பாதுகாத் தின்பமே பயக்குஞ் சிவத்திடைப் படரும் பச்சிளங் கொடிதன்
றிருப்பதத் துணைமல ரெனவே யுவப்புறத் தனச்சூ ழாழிமே ஞவா
யொழிதர மறலிநோ யுற்றுத் தவிப்பவ ரயர்கைக் குறுபுன யுமானத் தங்குமந் நயினையாந் தலமே.
- நயினை மான்மியம்
யாழ்ப்பாணக் குடாநாடும் அதனை அடுத்துள்ள ஒவ்வொரு சிறு தீவுகளும் புராதனப் பெருமை வாய்ந்தன வாகக் காணப்படுகின்றன. லேடன்தீவு, காரைதீவு, எழுவை தீவு, அனலைதீவு, நயினுதீவு, புங்குடுதீவு, நெடுந்தீவு எனும் சப்த தீவுகளுக்கு நடுநாயகமாக அமைந்துள்ளது நயினுதீவு. இது யாழ்ப்பாணத்திலிருந்து நெடுந்தீவுக்குச் செல்லுங் கடற் பாதையில் தென்மேற்குத் திசையில் 20மைல் தூரத்தில் உள்ளது. நயினுதீவுக்கு வடக்கே ைேமல் தூரத்திலுள்ளது அனலைதீவு, நயினுதீவு ஏறக்குறைய 4மைல் சுற்றளவுள்ளது. மூன்று மைல் நீளமும் ஒருமைல் அகலமும் உள்ளது. இது சதுர வடிவமுடையது. கடுகு சிறிதெனினும் காரம் பெரி

Page 19
- 26 -
தென்ற முதுமொழிக்கிணங்க, நயினுதீவு அளவாற் சிறிய தெனினும், தொல் புகழாற் றலைசிறந்த தீவாக விளங்கு கின்றது. மேனுட்டு நாகரிக அ லை களால் எற்றுண்டு போகாது சைவத்தையுந் தமிழையும் பேணி வளர்த்து வந்தவர்கள் தீவுப்பகுதிச் சைவ நன்மக்களே எனக் கூறலாம்.
தலத்தின் மறுபெயர்கள்
சரித்திரகாலத்திற்கு முன்தொட்டே பல சிறப்புப் பெயர்களால் அழைக்கப்பட்டு வந்த பெரும் புகழுடையது நயினுதீவு. இத்தீவின் பல்வேறு பெயர்களை அறிந்து கொள்வது அதன் வரலாற்றை அறிந்து கொள்ளுதலில் ஒரு பாகமாகும். இத்தலத்திற்கு நாகதிவயின, நாகதீவு அல்லது நாகத்தீவு, நயினர்தீவு, நாகநயினுர்தீவு, மணிநாகதீவு, மணிபல்லவத்தீவு, மணித்தீவு, பிராமணத்தீவு, ஹார்லெம்
சம்புத்தீவு, நரித்தீவு, நாகேஸ்வரம், நாகேச்சரம் முதலிய பல பெயர்கள் உள்ளன.
தலத்தின் தோன்மை
இலங்கையில் விசயன் வந்து சேர்வதற்குப் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரே நாகரிக முதிர்ச்சியுள்ள நாகர் வாழ்ந்து வந்தனர் என முன்னர்க் குறிப்பிட்டுள்ளாம். இந்த நாகர்கள் வாழ்ந்தனர் என்ற பேருண்மையினை இன்றும் நினைவுறுத்துவது நயினுதீவு, நாகர்கோயில் முதலிய தொல்பதிகளாகும். இப்பொழுதுள்ள நயினுதீவின் விஸ்திர ணத்தைப் பார்க்கிலும் பண்டொருஞான்றிருந்த அதன் விஸ்தீரணம் பன்மடங்கு கூடியது என யூகிக்க இடமுண்டு. இப்போது குடாநாடாகவிருக்கும் யாழ்ப்பாணம் முன்னுெரு காலத்தில், அதாவது கிறித்துவுக்கு அநேகவாயிரம் ஆண்டு கட்கு முன்னரே இரண்டு தீவுகளாக இருந்தது. மேற்கே நாகதீவம், மணிநாகதீவம், மணிபுரம், மணிபல்லம் என்னும் நாமங்களால் வழங்கப்பட்ட பெருந்தீவும், கிழக்கே எருமை முல்லைத்தீவு, எருமைதீவு என்று பெயர்பெற்ற சிறு தீவும் ஆக இருந்தது. காலந்தோறும் பூகம்பங்களினுலும் பிரள யங்களினலும் அழிக்கப்பட்டு மேற்கே ஒன்ருயிருந்த பெருந்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ܚܩ 27 ܘܝ
தீவகம் பல தீவுகளாகப் பிரிக்கப்பட்டது சரித்திர காலத் துக்குள்ளே அதாவது கி. மு. மூன்ரும் நூற்ருண்டிலே திஸ்ஸன் என்னும் நாகவரசன் கல்யாணியில் அரசாண்ட காலத்திற் சம்பவித்த கடற்கோளினல் இலங்கையின் மேற்குக் கரையில் ஒரு பெரும்பாகம் கடல்வாய்ப்பட்டபோது இத்தீவும் பிரிக்கப்பட்டிருக்கலாம்.
* காரைதீவு, வேலணை, மண்டைதீவு, புங்குடுதீவு, அனலைதீவு, நயினுதீவு, நெடுந்தீவு முதலிய தீவுகளும் வலிகாமமும் அப்பெருந் தீவகத்தின் பகுதிகளேயாம். அவ் வாறே கிழக்கே ஒன்ரு கவிருந்த சிறுதீவகம், களப்புக் கடலால் வடமராட்சி, தென்மராட்சி, பச்சிலைப்பள்ளி யென்னும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது' என்று முதலியார் இராசநாயகம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
எனவே வட இலங்கையை யடுத்துள்ள சிறு தீவுகளின் இப்போதைய நிலப் பரப் பின் அளவை ஆதாரமாகக் கொண்டு பழந்தமிழ் நூல்களிலும் சிங்கள நூல்களிலுங் கூறப்பட்டுள்ள நாடுகளின் பண்டைக்கால நிலைமையை வரையறுத்துக் கூறுவது இயலாததொன்ருகும். இதனுற்ருன் நாகதீவு யாண்டுளது என்பது பற்றி இதுவரை பலவகைப் பட்ட கருத்துக்கள் கிளம்பியுள்ளன.
காகதீவு
நயினுதீவுக்கு இடப்பட்ட பழைய பெயர் நாகதீவு அல்லது நாகத்தீவு என்று கோடலே பொருத்தமாகத் தெரிகின்றது, பிறிதொரு காலத்தில் வட இலங்கை முழு வதுமே நாகதீவு என்றழைக்கப்படலாயிற்று, இப் பெயரே பின்னர் இலங்கை முழுவதிற்கும் இடப்படலாயிற்று,
இதன் பழைய பெயர் நாகதீபம். பகவான் புத்தர் தரிசித்த காலத்திலுள்ள நாமம் அதுவே, அக்காரனம் பற்றியே பெளத்தர்கள் இன்றும் அதனை நாகதீபம் என்றே அழைக்கின்றனர். மணிமேகலை விஜயஞ் செய்தபோது அதன் பெயர் மணிபல்லவமாக இருந்ததாய் அறிகின்ருேம். சிவபெருமானுக்குத் தில்லை. அண்ணுமலை முதலிய பஞ்ச

Page 20
1 ܨܒܘܬܐ 28 ܚܢܢ
லிங்க ஸ்தலங்களை அமைத்த முறையில், பராசக்திக்குக் குண்டலினியோகத்திலுள்ள ஆறு ஆதாரங்களே உருவகப் படுத்தி அவற்றை விளக்கிநிற்க ஆறு ஸ்தலங்களை அமைத்து நம் ஆன்ருேர்கள் நயினுதீவை மணிபூரகமாகப் பாவித்து அதற்கு மணிபீடகம் என்று திருநாமஞ் சூட்டியதாகவும் அறிகின்ருேம், அதுவுமன்றி சக்தி பீடங்கள் அறுபத்து நான்கினுள் இது ஒன்றே இலங்கையில் இருப்பதுங் குறிப் பிடவேண்டிய விஷயமாகும்.
" மாந்தரின் வருகையால் பரவிய புத்தமதத் தொடர் பில், தற்போதுள்ள வடமாகாண எல்லைக்குள் அடங்கிய பிரதேசம் முழுவதுமே நாகதீபமென அழைக்கப்பட்டது. இலங்கையைக் கொழும்பெனவும், இங்கிலாந்தை லண்டன் எனவும், ஈழத்தை யாழ்ப்பாணமெனவும் அழைக்கும் முறை யில் தோன்றியதாகும் பிந்திய நாகதீபமென்னும் பெயர். இந்த உண்மையை அறியாத ஆராய்ச்சியாளர் இன்னும் பழைய நாகதீபத்தைத் தேடி அலைகின்றனர்' என்று ஆத்மஜோதி ஆசிரியர் திரு. க இராமச்சந்திரன் அவர்கள் கூறியுள்ளார்கள்.2
யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதுமே நாகதீபம் அல் லது மணிபல்லவம் என்று கருதினர்கள் முதலியார் இராச நாயகம் அவர்கள். " நயினுதீவு மட்டும் பதினைந்தாம் நூற்ருண்டில் நாகதீவு என அழைக்கப்பட்டபோதிலும், நாகர்கோயிலுக்கும் அத்தீவுக்கும் இடைப்பட்ட நம் குடா நாடு முழுவதும் அதன் முன் பல நூற்ருண்டுகளாய் நாக தீவுப் பெயர்கொண்டிருந்தமை மறுக்கப்படுவதன்று. சிங்கள மகாவமிச நூல் இப் பெயரையே பலவிடங்களில் யாழ்ப் பாணத்துக்குச் சூட்டுகின்றது' என்று கூறுகின்ருர் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அவர்கள்.3 நாகதீபம் என்ற கட்டுரையினை வெளியிட்ட முதலியார் ஏ. எம். குணசேகர அவர்கள் புத்தளம், சலாபம் ஆகிய கரையோ ரப் பகுதிகளும் அவற்றையடுத்துள்ள தீவும் நாகதீவு என் றழைக்கப்பட்டதெனப் பிறிதொரு கொள்கையினை வெளி யிட்டுள்ளார், இதற்கு ஆதாரமாக இரசவாகினி என்னும்

பாளிமொழி நூலிலும் சத்தர்மாலங்காரய என்ற சிங்கள இலக்
29--
கியத்திலும் வரும் நாக உபாசிகையின் கதையை எடுத்துக்
காட்டியுள்ளார். ‘நாகதீபமும் யாழ்ப்பாணத்திலுள்ள பெளத்த
சின்னங்களும் என்ற கட்டுரையில் டக்டர் போல் பீரிஸ் அவர்கள் நாகர்கோவில் தொடக்கம் நயினுர்தீவு வரையுள்ள யாழ்ப்பாணக்குடாநாடு அல்லது தமிழ்ப்பட்டினம் முழுவ துமே நாகதீபம் என்றழைக்கப்பட்ட தெனவும் பிற்காலத் தில் நாகதிவயின என நமபொத்த எனும் நூலிற்
கூறப்பட்டிருப்பது இப்பொழுதுள்ள நயினுதீவையே குறிக்
கும் எனவுங் கூறியுள்ளார்கள்.
இனி வல்லிபுரக் கோயிற் பொற்சாசனத்தைப்பற்றி
எழுதிய தொல்பொருட் பகுதி அதிபர் டக்டர் பரணவித்தான
என்பவன் பதகர அ(த்)தனையில் பியகுகதிக விகாரையைக்
அவர்கள், "நாகதீபம் எங்கேயுள்ளது என்பதைப்பற்றி ஆராய்ச்சியறிஞர் சந்தேகங் கொள்வதற்கிடமின்றிச் செய்துவிட்டது இச்சாசனம். அதன்படி யாழ்ப்பாணமே நாகதீவு என வழங்கப்பட்டது' எனக் குறிப்பிட்டுள்ளார்
கள். இக் கொள்கையினேயே இலங்கையின் சரித்திரச் சுருக்கம் எழுதிய எச். டபிள்யு. கொட்றிங்டன்? அவர்களும் சூளவம்சத்தை மொழிபெயர்த்த கைகர் அவர்களும் ஏற் றுக்கொண்டனர்.
வல்லிபுரக்கோயிற் பொற்சாசனம் இது ;
1. ஸித மஹிரஜ வஹயஹ ரஜெஹி அமெதெ
2. இஸிகி ரய நகதி வ புஜமெனி
3. 11 з 5 з கர அதெெனஹி 3 பியகு 3 கதிஸ்
4. விஹர கரிதெ
(இதிற் குறிக்கப்பட்டுள்ள எண்கள் சமஸ்கிருத அக்ஷர வரிசை எண்கள். எடுத்தலோசையுடன் உச்சரிக்கப்படல் வேண்டும்.
இதன் பொருள் வாசப அரசன் காலத்தில் நாக தீவை ஆட்சிபுரிந்த அமத்தன் (அமைச்சன்) இஸிகிரயன்

Page 21
ܗܝ 30
கட்டினுன்' என்பது, பிக்கு ராகுலரின் கட்டுரையைத் T TT T aa T TT S TTTT S LLLlLLLLLLLZSZLltLLtLL S S TT TT ஆங்கில எழுத்துக்களிலிருந்த உருவத்தை படகர ஆற்ருன் எனத் தவருகப் பெயர்த்துவிட்டார், இதன் சரியான உச்சரிப்பு பதகர அதன பதகர அதன எனக் குறிக் கப்பட்ட இடம் எத்திசையிலுள்ளதென்பதைத் திடப் படுத்துவதற்குச் சரித்திர ஆராய்ச்சியாளர்க்கு ஒர் அரிய சந்தர்ப்பம் எனப் பிக்கு ராகுலர் கூறியிருந்தார். ஒரு வாரத்தின்பின்னர் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் இதற்குச் சரியான ஒரு பொருள் கொடுத்திருந்தார். ' வடகரை என்ற தமிழ்ச் சொல்லின் திரிபே குறித்த சாசனத்தில் பதகர எனக் குறிக்கப்பட்டிருத்தல் வேண்டும். அதன என் னும் சொல் கூடியிருப்பதால் வடகரை நாடு எனப் பொருள் கொள்வது சாலும், வல்லிபுரக் கோயிலில் இச்சாசனங் காணப்பட்டதெனின் அப்பகுதியை விளக்கும் வடகரை நாடு என்ற பொருள் மிகவும் பொருத்தமுடையது. இப் பொற்சாசனத்திலிருந்தும் யாழ்ப்பாணத்தில் அக்காலத் திலே தமிழ்மொழிதான் பேசப்பட்டு வந்ததென்பது பெறப் படுகின்றது. *
இனி, மகியங்கனைக் கருகே புராதன தாதுகர்ப்பம் ஒன்றிருக்கின்றது. இவ்விடமே நாகதீபம் என்றழைக்கப் பட்டதென்பர் பிறிதொருசாரார். மகியங்கனம், நாக தீபம்' என்ற பாலிச் சூத்திரத்தில் மகியங்கனைக்கு அடுத்த படியாக நாகதீபம் குறிப்பிடப்பட்டிருப்பதால் இக்கருத் துப் பரவியிருக்கலாம். மகாவமிசத்தில் வரும் நாகமன்னர் களின் கதையைக் கொண்டு களனியே நாகதீபம் எனக் கருதுகின்றனர் பிறிதொருசாரார் சத்தர்மாலங்காரய என்ற சிங்கள இலக்கியத்தில் வரும் நாக உபாசிகையின் கதையை ஆதாரமாகக்கொண்டு இவ்விடம் தெல்வத்தையி லுள்ள தொட்டகமுவை விகாரையெனக் கூறுவாருமுளர், மாத்தறைக்கருகே நாகம் என்ற சொல் தழுவிய இடப் பெயர்கள் பரக்கக் காணப்படுதலால், அதுவே நாகதீபம் என்பாருமுளர், பாம்பன் தீவை அல்லது மன்னர் தீவை நாகதீபம் என்பாருமுளர். இக்கருத்துக்கள் எவ்விதமா
 

- 31 -
யினும் யாழ்ப்பாணமே நாகதீபம் என்பது சரித்திரச் சான்றுகளின் மூலமாக அறியக்கிடக்கின்றது என்று உதவித் தொல்பொருள் அதிபர் திரு. எஸ். கருணுரத்ன அவர்கள் * தினமின பொஸன் மலரில் (11-6-57) குறிப்பிட்டுள்ளார். * மணிபல்லவமேனும் நாகதீபமேனும் யாழ்ப்பாணக் குடா நாடல்ல என்பது வெளிப்படை' என்ற கருத்துப்பட நயினுதீவு திரு. செல்லேயா தில்லையம்பலம் அவர்கள் நற்றவம் மிக்க நயினுதீவு' என்னுங் கட்டுரையில் எழுதியுள்ளார்கள்.
வெடியரசன் வரலாறு?
தென்னுட்டிற் கற்புக்கரசி கண்ணகி வாழ்ந்த காலத்தில் தீவுப்பகுதிகளை வெடியரசன் எனும் அரசன் ஆண்டு வந் தான் என வெடியரசன் நாடகம் கூறுகின்றது. இந்த நாடகம் நவாலியூர் வைரவி இராமு என்பவரால் இயற்றப் பெற்றது. இவர் வாழ்ந்த காலம் 18ஆம் நூற்றண்டின் பிற்பகுதியும் 19ஆம் நூற்ருண்டின் முற்பகுதியும் எனலாம். இந் நாடகம் இயற்றி அரங்கேற்றப் பெற்ற காலம் 1844 ஆம் ஆண்டளவிலென இந்நூலின் முகவுரையிற் குறிப்பிட் டிருக்கின்றது. பூரீ கிருஷ்ணமூர்த்தியுடைய வலது தொடை யில் உதித்த பிள்ளை தான் குகனென்றும், அவனுக்கு வெடியரசன் என்னும் பட்டத்தையும் கருடக்கொடியையும் நீலகேசி யென்னும் பெண்ணையும் கொடுத்து அவனுக்குச் சகோதரர் நால்வரையும் சிருஷ்டித்துக் கொடுத்து நாக நகரை அரசாளும்படி வைத்தார் என்று இந் நாடக நூலா சிரியர் குறிப்பிட்டுள்ளார். காகுந்தி புதல்வனுன மீகாமன் சோழவரசனுடைய கட்டளைப்படி, மாநாய்கன் எனும் வணிகேசன் மகள் கண்ணகியின் பாதச்சிலம்பு செய்தற் கேற்ற நாகரத்தினம் வாங்க, நயினுதீவு என்று சொல்லப் படும் நாகதீவை நோக்கி வந்தான். அத்தீவு வெடியரசனு டைய ஆளுகைக்குட்பட்டது. வெடியரசன் நெடுந்தீவிற் கோட்டை கட்டி தீவுப்பகுதியை ஆண்டு வந்தான். வெடி யரசனின் மாலுமி, மீகாமனையும் சேனையையும் கரையி விறங்காதபடி தடுத்து, அவன் வரவை வெடியரசனுக்கு அறிவிக்க, அவன் தன் சமுகத்துக்கு மீகாமனை அழைக்

Page 22
--سید 32' ہے
கிருன். அவன் வந்து நாகரத்தினம் கேட்க, வெடியரசன் வெகுண்டு மீகாமனைப் போருக்கழைக்கிருன் பின்னர் மீகாமன் வெடியரசனைச் சிறை செய்கிருன். இதற்கிடையில் நீலகேசி தன் மைத்துனன் வீரநாராயணதேவனுக்குச் செய்தி சொல்லியனுப்ப, அவன் தன் சேனைகளுடன் போர்க்களம் ஏகச் சித்தம் செய்கிருன்.
மீகாமன் நாகரத்தினம் கிடைக்குமோ கிடையாதோ என்று பிராமணன் ஒருவனிடம் சாத்திரங்கேட்கப் பின் னவன் வெடியரசனைக் கொண்டு அரவத்திடம் நாகரத்தினம் கேட்பித்தால் கிடைக்கும் எனக் கூறுகிருன் மீகாமன் அப்படியே செய்து நாகரத்தினத்தைப் பெறுகிருன்.
வீரநாரயணன் வந்து மீகாமனைப் போருக்கழைக்கிருன். இருவரும் போர் புரிகிருர்கள். வீரநாராயணன் மீகாமனே வெட்டுகிருன் மீகாமன் குற்றுயிராய் விழும் போது கண்ணகையே என்று கதறுகிருன் கலைமுனிவன் களரி மீது வந்து உதிக்கிருன் மீகாமனும் உயிர் பெற்றெழுகிருன், கலைமுனிவன் ஒரு வேலாயுதத்தை மீகாமன் கையிற் கொடுக்கிருன் மீகாமன் அவ்வேலாயுதத்தால் வீரநாரா யணனை மடியச் செய்கிறன்.
வெடியரசனின் ஏனைய சகோதரர் விளங்குதேவன், போர்வீரகண்டன், ஏரிலங்குருவன் ஆகிய மூவரும் தத்தம் சேனையுடன் வருகின்றனர். போர் நடக்கிறது. மீகாமன் தோற்று அஞ்சலியஸ்தனுகி நிற்கிருன் அவனை வெடியரசன் முன் கொண்டு ஏகினர்கள். மீகாமன் கண்ணகைக்கு நாகரத் தினம் வாங்கும் பொருட்டு சோழவரசன் அனுப்பிய தூதனேயல்லாது யுத்தஞ் செய்யக் கரவாக வந்தவன் அல்லன். ஆகவே அவனை ஒன்றுஞ் செய்யாமல் நாகரத் தினத்தைக் கொடுத்து விட்டுவிடுங்கள் என வெடியரசன் கட்டளையிடுகிருன் தம்பிமார்களும் அப்படியே செய்கி முர்கள், மீகாமன் நாகரத்தினத்தைப் பெற்றுக் கொண்டு சோழதேசஞ் செல்ல, வெடியரசனுந் தம் பி மாரும் வீரநாராயணனின் ஈமக்கடன்களை முடித்துக் கொண்டு தத்தம் இருப்பிடம் ஏகுகிருர்கள். இது செவிவழி வருஞ் செய்தியாதலின் இதனைச் சிறிது மாற்றியும் கூட்டியும் பல
 
 

- 33 ܒܪ ܚ
நசையாத நாகதீவில் நாகத்தின் மணிவாங்கக் கசிவான மனதுடனே கடுகவமை யழைத்தோங்காண்'
எனக் கண்ணகி வழக்குரைகாதை அடிகள் குறிப்பிடுகின்றன.
கடல்சூழ் இலங்கைக் கயவாகு மன்னன் அரசாண்ட காலத்தில் நிகழ்ந்த கண்ணகியின் வரலாற்றுடன் சம்பந்தப் பட்ட கதையொன்றினைப் பத்தொன்பதாம் நூற்றுண்டில் வாழ்ந்த புலவர் நாடகமாக இயற்றுமிடத்து, தாம் செவி வழிக் கேட்டு வந்த செய்தியைக் கொண்டே இயற்றினு ராதல் வேண்டும். இவர் வாழ்ந்த காலத்தில் நாகதீவு நயினுதீவு என்றே வழங்கப்பட்டதென்பதற் கையமில்லை. இதுவும் ஆராயத்தக்கது.
இதுவரை எடுத்துக் காட்டியவற்றை நோக்குமிடத்து நாகதீபம் எது என்பது பற்றித் தீர்மானிப்பது இலகுவான செயலன்று என்பது புலனுகும், புத்தர்பெருமான் தரிசித்த பதினறு புனித தலங்களைக் குறிப்பிடுஞ் சூத்திரத்தில் மகியங்கனை, பூரீபாதம், களனி எனத் தலங்களின் பெயர் களே குறிப்பிடப்பட்டிருப்பதால் நாகதீவு என்பது ஒரு சிறு இடமாக இருந்திருக்கவேண்டுமேயன்றி, குடாநாடு முழுவதையுங் கருதிய பெயராகக் கொள்வது பொருத்த மற்றதாகத் தெரிகிறது. ஆகவே நயினுதீவுக்கு முதற்கண் வழங்கிய பெயரே பின்னர் குடாநாடு முழுவதற்கும் வழங் கப்படலாயிற்று என்ற கொள்கை வலியுறுகின்றது. எனினும் இது நன்கு ஆராயப்படவேண்டியதொன்ருகும்.
கல்வியென்னும் பல்கடலில் வீழ்ந்த மக்கள் இவ்வாறு நாகதீபத்தைப் பற்றி ஆராய்ந்து முடிவு கட்டாதிருந்த போதிலும் பெளத்தப் பொதுமக்களுஞ் சைவப் பொது மக்களும் நயினுதீவு தான் பெளத்தர் தரிசித்த புனித தல மெனவும், நாகேஸ் வரி கோயில் கொண்டெழுந்தருளி யிருக்கும் அருட்டலமெனவுங் கருதி யாத்திரை செய்கின் ருர்கள். நயினுதீவு இப்பொழுது நித்திய யாத்திரைத் தல மாகி விட்டது. புத்தபகவான் நாகதீபத்தைத் தரிசித்த
3

Page 23
سس. 34 -
தாகக் கூறப்படுங் கதை மகாவம்சத்தில் முதலாவது அதி காரத்தில் மிக விரிவாகக் கூறப்பட்டுள்ளது. ("பூரீலங்கா - ஜூன் 1952 - பக். 18-19 ததாகதர் தரிசனம் பார்க்க.) மகாவம்சத்தின் தமிழ் ஆக்கத்தினை யான் பூரீலங்கா' பத்திரிகையிலே தொடர்ந்து வெளியிட்டு வருகின்றேன். இரு நாக அரசர் ஒரு மணியாசனத்துக்கு உரித்துக் கொண் டாடிச் சண்டையிட்ட போது கெளதம புத்தர் வான் வழி யாக வந்து பஞ்சசீலத்தை அவர்களுக்குப் போதித்ததாக மகாவம்சம் குறிப்பிடுகின்றது. இச் செய்தி மணிமேகலை யிலுங் கூறப்பட்டுள்ளது. இந்நூல் அச்செய்தி மணிபல்ல வத்தீவில் நிகழ்ந்ததாகக் கூறுகின்றது. 2
மணிபல்லவத்தீவு
மணிபல்லவத்தீவு நாகதீபமாகிய யாழ்ப்பாணமே யென்பது முதலியார் இராசநாயகம், நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர், பண்டிதர் அ. சிற்றம்பலம் முதலிய அறிஞர்களின் கருத்தாகும். 'இம் மணிபல்லவத்தைக் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து அடைய ஆறைந்தியோசனை தென்றிசை மருங்கில் செல்லவிருப்பதாலும்' புத்தரின் அடியிணை பதிந்த சமந்தம் என்னும் சமனுெளிச் சிலம்பு இதற்கு அயலகத்து இரத்தினதிவத்திலுள்ள தெனப்படு வதாலும், 14 அச் சிலம்புச்சியிற் சேர்ந்து புத்தரை வழி பாடாற்றினர். பரதகண்டத்துக்கு மீளும் வழியில் மணி பல்லவத்தையுங் கடந்து செல்வர் எனப் படுவதாலும்', மணிபல்லவம் நாகதீபமாகிய யாழ்ப்பாணமே என்பது மலையிலக்கு. இதனை முன்னவரா யெடுத்து விளக்கினர் முதலியார் செ. இராசநாயகமவர்கள், 17 மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒன்று என்பது மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் கருத்து, 18 கம்பலச்செட்டி, சாவக நாட்டரசன், மணிமேகலை, ஆபுத்திரன் முதலியோர் மணி பல்லவத்தைத் தரிசித்தனர் என மணிமேகலை கூறுகின்றது. மணிபல்லவம் என்ற தீவில் இருந்து சென்றவர்களே பல்லவர் என முதலியார் இராசநாயகம் குறிப்பிட்டுள்ளார். 19 இதனை வித்துவான் மா. இராசமாணிக்கம் அவர்கள் தாம் எழுதிய
 
 
 
 
 

ܚ ܲ35 -
பல்லவர் வரலாறு'20 எனுஞ் சிறந்த ஆராய்ச்சி நூலிற் குறிப்பிட்டுள்ளார். "இங்ஙனம் பல்லவர் என்பார் பஹ்லவர் மரபினரே என்று முடிபு கொண்டவர் பலர் உளர். இலங் ைகயிற் சிறந்த ஆராய்ச்சியாளராக இருந்த இராசநாயகம் என்பவர், இலங்கையை அடுத்துள்ள மணி பல்லவம் (காரைத்தீவு) பல்லவர் பிறப்பிடமாகும். மணி மேகலையிற் கூறப்பட்டுள்ள சோழனை மணந்த பீலிவளை என்பவள் நாகர் மகள் ஆவாள். அவள் பெற்ற மைந்தனே திரையாற் கடத்தப்பட்டுக் கரை சேர்ந்த முதற் பல்லவன். அவன் தொண்டைக்கொடியாற் சுற்றப்பட்டு இருந்தமையின் தொண்டைமான் என்றும், திரைகளால் உந்தப்பட்டு வந் தமையின் திரையன் என்றும் வழங்கப் பெற்றன். அவன் மரபினரே தம் தாயகப் பெயரைத் தாங்கிப் (மணிபல்லவம்) பல்லவர் எனப்பட்டனர். பல்லவர் முதல் அரசன் பெரும்பாணுற்றுப்படையிற் புகழப் பெற்ற தொண்டைமான் இளந்திரையன் ஆவன் என விளக்கியுள்ளார்.'
யாழ்ப்பாணம், யாழ்ப்பாண மக்களால் மணிபுரம் எனப்படுகிறது; அங்கு நாகரும் இருந்தமையால் மணிநாக புரம் என்னும் பெயர் பெற்றது. இந்தியாவிலிருந்து இலங்கை நோக்கி வருபவர்க்கு யாழ்ப்பாணம் ஒரு போது (போத்து Sprout) போலக் காணப்படுதலின், அது போது (போத்து) எனப்பட்டது. போது, போத்து, பல்லவம் என்பன ஒரே பொருளைக் குறிப்பன. யாழ்ப்பாணத்திலிருந்து, போந்தவராதலின், தம்மைப் போத்தர்' என்றும், பல்லவர் என்றும் பல்லவ அரசர் கூறிக்கொண்டனர். மணிபல்லவம் என்னும் தீவு மணிமேகலையிற் குறிப்பிட்டிருத்தல் காண்க. இவற்றை நன்கு ஆராயின், பல்லவம் எனுஞ் சொல் மணிமேகலை காலத்து மக்கட்கு விளங்கி இருத்தல் புல குைம். பல்லவத்திலிருந்து வந்தவர் பல்லவர் என்று தம்மைக் கூறிக் கொண்டமை இயல்பே. அன்ருே?21 வீர கூர்ச்சன், நாகர் மகளை மணந்து அரசு பெற்ருன் என்று பல்லவர் பட்டயம் கூறுதலும், கரிகாலன் நாகர் மகளை மணந்து பெற்ற இளந்திரையன் தொண்டைமண்டலம் ஆண்டான் என்பதும் ஆராய்ச்சிக்குரியன. மேலும் பல்லவர்

Page 24
ܚ 36 -
இன்ன இடத்திலிருந்து தாம் வந்ததாக ஒரு பட்டயத் திலுங் கூறிற்றிலர் என்பது கவனிக்கத்தக்கது. முதலியார் இராசநாயகம் அவர்கள் பல்லவ உற்பத்தி பற்றி விரிவான கட்டுரையொன்று தமிழிலும் வெளியிட்டுள்ளார்கள்.22 நயினுதீவே நாகதீவு என்பது வலியுறுமானுல், மணிபல்ல வமும் நயினுதீவு தான் எனக் கொள்வதில் விவாதத்துக் கிடமின்று.
காகாகயினுர்தீவு
மாநாய்கர் எனும் வணிகரே நயினுப்பட்டர் அல்லது நாயனர்பட்டர் என்பவரை நாகபூஷணி அம்பாள் ஆலய அர்ச்சகராகக் கொணர்ந்தார் என்பது ஐதிகம். எனவே அவர் வாழ்ந்த தீவு நாகநயினர்தீவு அல்லது நாகநயினுதீவு, நயினுதீவு என்ருயிற்று எனக் கூறப்படுகின்றது.
'நச்சுவிழி நாட்டியஞ்செய் வோர்கள் தானும்
நாகநயி னுதீவில் வாழு வோரும்' என வையா பாடலில் நாகநயினுதீவு என்ற பெயரே குறிப் பிடப்பட்டிருப்பதைக் காணலாம். நாகர் தாம் வழிபட்ட நாகத்தை நாகநயினர் நாகதம்பிரான் எனப் போற்றி யிருத்தல் கூடுமாதலின், அத்தெய்வம் கோயில்கொண் டெழுந்தருளிய தலம் நாகநயினுர்தீவு, நயிதிைவு எனப் பெயர்பெற்றதாகவுங் கூற இடமுண்டு.
மணித்தீவு
சக்தி பீடங்கள் அறுபத்து நான்கனுள் புவனேஸ்வரி பீடமும் திரிபுரபைரவி பீடமும் மணித்தீவிலுள்ளன என்று பிரபஞ்ச உற்பத்தி23, யாமளதாண்டகம்2 முதலிய நூல்கள் குறிப்பிடுவதாலும், நயினுதீவிலுள்ள அம்பாள் ஆலயமே ஒரு சக்திபீடமாகக் கருதி வழிபாடியற்றப்பட்டு வருகின்ற மையாலும், நயினுதீவு மணித்தீவு எனவும் பெயர் பெற லாயிற்று. புவனேஸ்வரியின் மகத்துவத்தை அச்சுவேலி சிவபூரீ ச. குமாரசுவாமிக் குருக்கள் பக்தி சிரத்தையுடன் விரிவாக எழுதியுள்ளார்.25 எனினும் கோயிற் கட்டியத்தில்
 

- 37 -
அம்பாள் நாகராஜேஸ்வரி என்றே போற்றப்படுகிருள். அம்பாள் அநேக அம்சங் கள் உடையவள். யார் யார் எந்த அம்சத்தை விசேடமாகப் பெற விரும்புகின்றனரோ அதற்கேற்ற தேவியம்சத்தைப் பெரிதும் போற்றி வணங்கு கின்றனர். உற்றுநோக்குமிடத்து, பிரபஞ்சத்தைத் தோற்று வித்து நடாத்துகின்ற பராசக்தி பரசிவத்தின் வேருனதன்று என்பது புலப்படும். விளக்கும் ஒளியும் போல சக்தியும் சிவமும் ஒன்றே.
* அருளது சக்தி யாகும்
அரன்தனக்கு அருளை யின்றித் தெருள்சிவம் இல்லை அந்தச்
சிவம்இன்றிச் சக்தி இல்லை ' எனச் சிவஞானசித்தியாரிற் கூறியிருப்பதை நோக்குக.
காகதீவயின
தீவயின28 என்னும் சிங்களப் பதம் தீவு என்னும் பொரு ளுடையது. துவீப என்னும் சம்ஸ்கிருத பதத்துக்குச் சகோ தரத்துவமுள்ளது. யாழ்ப்பாணத்துத் தீவுகளைக் குறித்த சிங்களச்சொல் இஃதே என்பதற்கு நம் பொத்த என்னும் சிங்கள நூல் சான்ருகும். நயினுதீவின் பழைய சிங்களப் பெயர் நாகதீவயின. அதற்கு நாகர்தீவு என்பது அர்த்த மாகும் நயினு ஒருவன் பெயர். நயினுப்பட்டர் எனப் பெயரிய ஓர் இந்திய பிராமணுேத்தமர் பண்டு நயினுதீவிலே மாநாய்க்கன், மாசாத்துவன் என்னும் நாமதேயமுடைய இளங்கோக்களினுலே இயற்றுவிக்கப்பட்ட நாகராஜேஸ்வரி கோவிலுக்கு ஆதிபூசகராய் அமர்த்தப்பட்டார் என்பது ஐதிகம். நயினுகட, நயினுவெல நயினுமடம் முதலியதான நாமங்களை நோக்குக.
ஹார்லேம்
ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் தீவுகளெல்லாவற்றிற்கும் ஒல்லாந்த தேசப் பெயர்கள் இடப்பட்டன. நயினுதீவுக்கு ஹார்லெம்27 என்றும், காரைதீவுக்கு அம்ஸ்ரடாம்? என்றும், அனலைதீவுக்கு முெற்றர்டாம்? என்றும், புங்குடு

Page 25
سبيس 38 سيك .
தீவுக்கு மிடில்பேர்க் 30 என்றும், நெடுந்தீவுக்கு டெல்வ்ற்) என்றும், ஊராத்துறைக்கு கைற்ஸ்32 என்றும், வேலணை அல்லது தண்ணித்தீவுக்கு லைடின்" என்றும் பெயர்கள் கொடுக்கப்பட்டன.
கரித்தீவு
ஆங்கிலேயர் இ ல ங்  ைக ைய வெற்றி கொண்டபோது இலங்கையிற் சத்தியவேதத்தைப் போதித்துவந்த பல்டேயஸ் பாதிரியார்34 எழுதிய இலங்கைச் சரித்திர நூலில் நயினுதீவு என்ருல் நரிகள் வாழுந்தீவு என்ற பொருளுடையது என்று குறிப்பிட்டுள்ளார். பாதிரியார் நயினுதீவு எப்படி ஏற் பட்டது என்று யாரையாவது வினவியிருத்தல் கூடும் அது சம்புத்தீவு என்று பழங்காலத்தில் அழைக்கப்பட்ட தென்ற விடை கிடைத்திருக்கலாம். சம்பு என்ருல் என்ன என்று பாதிரியார் கேட்டிருக்கவேண்டும். யாரோ ஒருவர் சம்பு என்ருல் நரி என்று விடைபகர்ந்திருக்கலாம். அந்நியரான பாதிரியார் அந்தக் கருத்தை உடனே தனது குறிப்புப் புத் தகத்தில் எழுதிக்கொண்டார்போலும்.
படகு துறை
நயினுதீவு பண்டைக் காலத்திற் சிறந்த துறைமுக மாகவும் விளங்கிற்றெனச் சரித்திரம் பேசுகின்றது. அந்நிய நாடுகளுக்குக் கப்பல்கள் செல்லும் பாதையில் நயினதிவு இருக்கின்றமையால், தமிழ் நாட்டுக் கப்பல்களும் அந்நிய நாட்டுக் கப்பல்களும் இத்துறையிற் றங்கியே சென்றிருக்க வேண்டும். இத்தீவின் மேற்குக் கடற்கரையிற் படகு துறை என்ற பெயரால் ஒர் இடம் இன்னும் அழைக்கப்படுகின்றது. மேற்குப் பகுதிக் கடல் மிக ஆழமாகவும் பெரிய கப்பல்கள் போக்கு வரவு செய்யக்கூடியதாகவும் இருக்கின்றது கற் பாறைகளில் மோதுண்டு கப்பல்கள் உடைவது முண்டெனக் கருத இடமுண்டு. நாகபூஷணியம்மன் கோயிலிலுள்ள சிலாசாசனமும் இக்கொள்கையினை வலியுறுத்துகின்றது,
 

| 39 سے
கயிஞதிவுச் சிலாசாசனம்
நாகபூஷணியம்பாள் கோயிலின் கீழைக்கோபுர வாயிலில் இந்தச் சிலாசாசனம் காணப்படுகின்றது. நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அவர்கள் 1922ஆம் ஆண்டு மாசி மாதம் நயினுதீவுக்கு சென்ற பொழுது, சாசனக்கல்லை அக்கோயிற் பூசகர் பிரம்மறி நா. சாமிநாதக் குருக்கள் அவர்களுடைய உத்தரவோடு புரட்டுவித்துப் பின்னர் திரு. லோசன் எனும் பிரதிமைப்படக்காரரைக் கொண்டு கல்லை நன்ற க உரோஞ்சிக் கழுவிப் புகைப்படம் எடுப்பித்துக்கொண்டு திரும்பினுர்கள்.38 இந்தப் படத்தை முதலியார் இராசநாயகம் அவர்கள் சுவாமியாரிடமிருந்துபெற்று முழுச்சாசனத்தையுந் தெளிவாக வாசித்துத் தமது புராதன யாழ்ப்பாணம் எனும் நூலிற் பதிப்பித்தார். யாழ்ப்பாணச் சரித்திரத்திற் கரிசனை கொள்ளுமாறு எனக்கு ஊக்கமளித்த இவ்விரு அறிஞர்களின் உதவியால் இந்தச் சாசனத்திலுள்ள வர லாற்றுக் குறிப்புத் தமிழகத்துக்குக் கிடைத்துள்ளது. அந்தக் சாசனம் பின்வருமாறு :
ஊராத்துறையிற் பரதேசிகள் வந்து இருக்கவேணு மென்றும் இவர்கள் ரகூைடிப்படவேணுமென்றும் பு(து) துறைகளில் பரதேசிகள் வந்த (ாலித்) துறையிலே) சந்திக்க()ேவணு மென்றும் நா (வாய) ஆன குதிரை யொடு(ம்) பண்டார சேவைக்கு ஆனை குதிரை கொடு வந்த மரக்கலங் கெட்டதுண்டாகில் நாலத் தொன்று பண்ட(ா)த் துக்கு கொண்டு மூன்று கூறும் (உ) டையவனுக்கு விடக்கட வதாகவும் -வாணிய மரக்கலங்கேட்டதுண்டாகில் செம பாகம் பண்டாரத்துக்குக் கொண்டு செமபாகம் உடைய வனுக்கு விடக் கடவதாகவும் இவ்வ்யவஸ்தை . தித்து no a தனையுங்கல்லிலுஞ் செம்பிலும் எழுத்து வெட்டு வித்து இவ்வ்யஸதை செய்து கொடுத்து தேவ பராக்கறம் பூஜோ.
இந்தச் சிலாசாசனம் மகாபராக்கிரமவாகுவால் 12ஆம் நூற்ருண்டிற் பழைய எழுத்துக்களிற் செதுக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு, நயினுதீவு ஆகியவற்றை அடுத்துள்ள கடற்

Page 26
ܚ- 40 -
பகுதிகளிற் கப்பல்கள் அடிக்கடி சேதமுற்றன என்பது இதனுல் அறியக்கிடக்கின்றது. மேலும் வருடந்தோறும் 60 கப்பல்கள் சேதமடைவதாக ஜோன் எனும் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் குறிப்பிட்டுள்ளாரென முதலியார் இராசநாயகம் அவர்கள் எடுத்துக் காட்டியுள்ளார்கள். நயினுதிவின் தென்பகுதி மலையடிவாரம் என்றழைக்கப்படு கின்றது. ஊர்காவற்றுறையிலிருந்து நெடுந்தீவுக்குக் செல்லும் வத்தைகள் ஏழாற்றுப் பிரிவினையும் மலையடி"யை யடுத்துள்ள கொந்தளிப்பான சமுத்திரத்தையுந் தாண்டிச் செல்லவேண்டும். நாவாய்கள் தம்முடன் மோதும் அலை களினுல் மேலெழும்பிக் கீழே விழும்பொழுது அவற்றி னுள்ளே இருக்கும் பிரயாணிகள் பெருங் கஷ்டப்படுவது வழக்கம். இரண்டு தீவுகட்கிடையே செல்லும் கடற்பகுதியை ஓர் ஆருகக் கருதி, ஏழு தீவுகட்கிடையே செல்லும் ஏழு கடற் பகுதிகளையும் ஏழு ஆறுகளாகக் குறிப்பிடும் மரபினை ஆதாரமாகக் கொண்டு, ஏழாற்றுப் பிரிவு என்ற பெயர் ஏற்படலாயிற்று. அம்பிகையின் சந்நிதியை யடைய முன்னர்
ஏழாற்றுப் பிரிவினைக் கடத்தல் வேண்டும். நெடுந்தீவுக் கடலிற் கப்பல்கள் சேதமடைவது சர்வ சாதாரண மென் பதற்கு வைபமாலை யுடையார் குறிப்பிட்டிருப்பதும் தக்க சான்ருகும். வட இலங்கையைச் சங்கிலி அரசன் ஆட்சி புரிந்த காலத்தில் நாற்பத்தொன்பது வன்னியர்மார் தென்னுட்டிலிருந்து மரக்கலமேறி வருகையில் நெடுந்தீவிற் கடலில் அமிழ்ந்துபோயினர் என்ற குறிப்புக் காணப்படு கின்றது.
சீனத்துச் சாடிகள்
சில ஆண்டுகளுக்கு முன் பப்பரவன் சல்லி என்னுங் காணியிற் கிணறு ஒன்று தோண்டியபோது அழகான சில சாடிகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றுட் சிலவற்றைத் திரு. வி. செல்லத்துரை அவர்கள் 1937ஆம் ஆண்டில் கொழும்பு நூதனசாலைக் கனுப்பிவைத்த பொழுது, அவை சீனதேயத்துச் சாடிகள் எனவும் 12ஆம் நூற்ருண்டிற் செய்யப்பட்டவையா யிருத்தல் கூடும் எனவுங் குறிப்பிட்டு:
 
 

سے 41 ہے۔
இத்தகைய சாடிகள் இன்னுங் கிடைத்தால் தங்கட்கு அனுப்பிவைக்குமாறு நூதனசாலை அதிகாரி கேட்டுக் கொண்டார். எனவே பன்னிரண்டாம் நூற்ருண்டிலும் சீனுவுக்கும் நயினுதீவுக்கும் தொடர்பு இருந்தது என்பது புலனுகின்றது. இத்தகைய சாடிகளை நயினுதீவில் இன்றுங் காணலாம். இவற்றில் தீட்டப்பெற்ற வர்ணங்கள் சிறிதும் சிதையாமல் இருப்பது வியப்பை விளைவிக்கும்.
பெளத்த விகாரை
நயினுதீவிற் பழைய விகாரை யொன்றிருந்த தெனக் கருத இடமுண்டு. இந்த விகாரை யிருந்த இடம் புத்தர் கோயிலடி என்று அழைக்கப்பட்டு வருகின்றதென முதியோர் கூறுவர். இவ் விகாரையிருந்த இடத்துக் கண்மையில் ஒரு பொய்கையிருந்த அடையாள முண்டெனவும், அதுவே கோமுகி யெனப்பட்டதெனவுங் கூறுவர். நயினுதீவில் கடற்கரை யோரத்தில் இப்பொழுது ஒரு புத்த விகாரை கட்டப்பெற்றுள்ளது. அநேக பெளத்தர்கள் இந்தக் கோயிலுக்குச் சென்று வழிபடுகின்ருர்கள். நயினுதீவு இப் பொழுது பெளத்த யாத்திரைத் தலமாக விளங்குகின்றது.
கற்சில்லு
கோயில் வீதியில் ஒரு கற்சில்லும் இரண்டு பீரங்கி களும் கிடக்கின்றன. இந்தப்பீரங்கிகள் ஒல்லாந்தர் காலத் தனவாயிருத்தல் கூடும். இவை இத்தீவின் அயலிலுள்ள ஆழ் கடலில் இருந்தெடுக்கப்பட்டன. கற்சில்லு கப்பல்களின் நங் கூரமாய் உபயோகிக்கப்பட்டிருத்தல் கூடும். போர்த்துக்கீசர் ஆட்சிக் காலத்திற் கடலுள் உருட்டிவிடப்பட்ட தேர்களின் சில்லுகளுள் ஒன்ருக இருக்கலாம் எனச் சிலர் கருதுகின்றனர்.
ஒல்லாந்தர் காலத்திலும் ஆங்கிலேயர் காலத்திலும் நயினுதீவை யடுத்த கடலிற் சங்கு குளித்தல் நடைபெற்றது. இதனுல் அரசாங்கத்துக்குப் பெரும் ஊதியம் கிடைத்து வந்தது. இப்பொழுது இது நடைபெறுவதில்லை. முன்னர்க் குறிப்பிட்ட காலத்திற் சங்கு குளிப்பதற்காக வந்திருந்த முஸ்லிம்கள் வணங்கும் பொருட்டு ஒரு பள்ளிவாசல் கட்டப் பெற்றுள்ளது. அதற்கருகில் முஸ்லிம் பெரியார் ஒருவருடைய சமாதியும் உண்டு." -

Page 27
ܚܝܐ ܀ 42 ܚ
மணிமேகலா தேய்வம்
மணிமேகலா தெய்வம் இத்தீவுகளைப் பாதுகாத்துவந்த தென்ற ஐதிகம் ஒன்றுண்டு. மணிமேகலா தெய்வமானது அரக்கர் வாதைபண்ணுதபடி இந்திரன் ஏவலாலே சில தீவுகளைப் பாதுகாத்துக் கொண்டிருந்தது. கோவலன் தன் குலத்தவன் ஒருவனே இத்தெய்வம் கடலிற் பாதுகாத்த நன்றிக்காகத் தன் புதல்விக்கு மணிமேகலை யென்று பெய ரிட்டான். இந்த மணிமேகலையை உபவனத்திலிருந்து மணிப் பல்லவங் கொண்டு சென்று புத்த பீடிகைக் காட்சியாற் பழம் பிறப்புணர்த்திற்றென மணிமேகலை யெனும் காப் பியம் கூறுகின்றது.
தலத்தைத் தரிசித்தோர்
மணிபல்லவத்திற் சிறந்த துறைமுக மிருந்தமையால் மேனுட்டு வணிகரும் தமிழக வணிகரும் தங்கள் பிரயா ணத்தின் போது இத்தீவினைத் தரிசித்தனர். மேலும் பல ஞானிகளும் அடியார்களும் காலத்துக்குக் காலம் இத்தலத் தைத் தரிசித்து வந்தனர். 'சாவகநாடு (ஜாவாதீவு), காகநாடு (பர்மாநாடு) முதலிய கீழ்நாடுகளுக்குத் தமிழ் நாட்டிலிருந்து வாணிகத்தின் பொருட்டு மரக்கலம் ஒட்டிச் சென்ற தமிழ்வணிகர், இடைவழியிலே மணிபல்லவத் துறை முகத்தில் தங்கிச்செல்வது வழக்கம். இதனை மணிமேகலை 14ஆம் காதையினுல் அறியலாம். கம்பளச்செட்டி என்பவன் கடலிற்சென்று வாணிகம் செய்து திரும்பிவருகிற வழியில் மணிபல்லவத்திலே தங்கினுன் என்றும், சாவகநாட்டரசன் புத்தரது பாதபிடிகையை வணங்க மரக்கலம் ஏறி மணி பல்லவம் வந்தான் என்றும் மணிமேகலை கூறுகிறது".38 மணிமேகலை என்பவளும் ஆபுத்திரனும் மணிபல்லவத்துக்கு வந்த செய்தி மணிமேகலையில் விபரமாகக் கூறப்பட்டுள்ளது.
கிறித்துவுக்கு 1500 ஆண்டுகளுக்கு முன் வட இந்தியா விலிருந்து அர சாண் ட பாண்டவர்களில் ஒருவனுகிய அருச்சுனன் தீர்த்தயாத்திரை காரணமாக மணிபுரத்துக்கு வந்து அங்கே சித்திராங்கதை யென்னும் நாககன்னிகையைக் கண்டு காதல்கொண்டு மணமுடித்தான் என்று மகாபாரதம்
குறிப்பிடுகின்றது.
t
 
 
 

مستند. 43 است.
கி. பி. 150-200 வரை ஆண்ட நெடுமுடிக்கிள்ளி என்னும் சாழ அரசன் யாத்திரை காரணமாக மணிபல்லவத்திற்கு ந்து வளைவணன் என்னும் நாகவரசன் மகள் பீலிவளை பாளை மணந்து ஒர் ஆண்மகவைப் பெற்ருன், சோழ ரசன் இப்பேரழகு வாய்ந்த பெண்மணியை ஓர் ஆதொண் டைச் செடியின் அருகேதான் முதன்முதலாகக் கண்டானும், பீலிவளை தான் பெற்ற மகனைக் கம்பளச் செட்டியென்னும் ணிகனிடம் கொடுத்து, அவள் தந்தையிடம் சேர்க்கும்படி படையாகக் கொடுத்தாள். அச் செட்டி யேறிப்போந்த ப்பல் காற்றினுல் அடி பட்டுக் கரையிலேற்றப்பட்டு
டந்து பிள்ளையுந் தவறிப் போனபடியால், ' கெடுகல மாக்கள் புதல்வனக் கெடுத்தது வடிவேற் கிள்ளி மன்னனுக் குரைப்ப மன்னவன் மகனுக் குற்றது பொருஅ னன்மணி யிழந்த நாகம் போன்று கானலுங் கடலுங் கரையுந் தேர்வுறி' தொண்டைக் கொடியாற் சுற்றப்பட்டுக் கரையிலிருந்த புதல்வனைக் கண்டெடுத்துத் தொண்டைமான் இளந்திரையன் எனப் பெயர் வகித்துக் தக்க பருவத்திலே தனதரசுரிமையி ணுெரு பகுதி யை அவனுக்குக் கொடுத்துக் காஞ்சிபுரம் என்னும் நகரிலிருந் தரசாளும்படி வைத்தான். அவனர சாண்ட பூமி தொண்டைமண்டலம் எனப் பெயர்பெற்றது.9 இவனுக்கு ஆதொண்டைச் சக்கரவர்த்தி என்னும் பட்டம் சூட்டப்பட்டதெனவும் கூறுவதுண்டு. இவ்வாறு வணிகர், யாத்திரிகர், சித்தர், ஞானியர் முதலியோர் இத்தலத்தைத் தரிசித்துள்ளனர்.
கயினுதீவுச் சுவாமியார்
நயினுதீவுச் சுவாமியார் என்று வழங்கப்பெற்று வந்த வராகிய முத்துக்குமார சுவாமியெனும் துறவியானவர் நயினுதீவிற்ருன் பிறந்தார். சுவாமியவர்கள் துறவுக்கோலம் பூண்டு நைட்டிகப் பிரமச்சாரியாக வாழ்ந்து வந்தபடியால் அவர்கள் நயினுதீவுக்குமட்டுமன்றிச் சைவ உலகம் அனைத் துக்கும் உரியவராவர். அவர் தோன்றிய பூமி நற்றவம்

Page 28
ܚ ܲ44 -
மிக்க நயினுதீவு எனினும், அவருடைய சீடர்கள் தீவுப் பகுதியிலும் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் உண்டு. யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக் கண்மையிலுள்ள சிவலிங்கப் புளியடி என்னுமிடத்தில், முன்னுள் கல்விப்பகுதியில் வேலை பார்த்த என் நண்பர் திரு. எஸ். சிவசுப்ரமண்யம் அவர்கள் இல்லத்தில் சுவாமியவர்களைக் காணும் பாக்கியம் அடி யேனுக்கு இடைக்கிடை கிடைத்தது. "நயினுதீவுச் சுவாமி களிடத்து விளங்கிய தெய்வபக்தி, ஞானம், தூய்மை, மன அடக்கம், இன்சொல், அருளோடுகூடியநோக்கு, எந்தநேர முஞ் சிவசிந்தனை, இன்னலுற்றுத் தம்மைடைந்தார்க்குச் சொல்லும் தேறுதல் வாக்கு, தவக்கோலம், கோபம் முதலிய தீய குணங்கள் அறவேயில்லாமை முதலிய சுகுணங்களோடு தூய செயல்களையுடையவர் என்று அவருடைய சீடர்களில் ஒருவர் கூறினர். 1949ஆம் ஆண்டில் சுவாமியவர்கள் இயற் கையுடன் கலந்தார்கள். ஞானிகளுடைய வரலாறுகளை ஞானிகள் தாம் அறிந்து கொள்ள முடியும். இவர்களிற் சிலருக்கு விசரர் என்ற பட்டத்தையுஞ் சூட்டியது உன்மத்த g). (a) 5th.
பாலரொடு பேயர்பித்தர் பான்மையென நிற்பதுவே சிலமிகு ஞானியர்தஞ் செய்கை பராபரமே' என்று ஞானியர்களிள் செய்கையைக் குறிப்பிடுகின்ருர் தாயுமானசுவாமிகள்
ஞாலமதின் ஞானநிட்டை
யுடையோ ருக்கு நன்மையொடு தீமையிலை
நாடுவதொன் றில்லை
விரதமொடாச் சிரமச் செய்லில்லை தியானமிலே
இத்தமல மில்லை கோலமிலை புலனில்லை
கரன மில்லை குணமில்லை, குறியில்லை குலமு மில்லை
 
 
 
 
 
 
 

ܚܙܝ 45 ܢ
பாலருடன் உன்மத்தர்
பிசாசர்குண மருவிப் பாடலினுெ டாடலிவை
பயின்றிடினும் பயில்வர்.'
என அருணந்திதேவரும் அறுதியிட்டுக் கூறியுள்ளார். எனவே சுவாமியவர்களைப் பற்றி எழுதுவதற்கு அவருடைய அணுக் கத் தொண்டரே அருகராவர். சுவாமியாரின் சமாதி காட்டுக் கந்தசுவாமிகோயில் கருப்பக்கிரகத்துக்குப் பின் புறமாக உண்டு. இதற்கண்மையில் ரீசத். சித்திரமுத்து அடிகளால் அத்திவாரமிடப்பட்டு திரு. சபாபதிப்பிள்ளை அவர்களுடைய பொருளுதவிகொண்டு கட்டிமுடிக்கப்பெற்ற திருவருள் ஒளிநிலையமும் உண்டு.
நயினுதீவிற் புராதனப் பெருமையும் பக்திப் பெருக்கமும் உள்ள நாகேஸ்வரி ஆலயத்தைத் தவிர வேறு பழைய கோயில்களும் உண்டு. இத்தீவின் தென்புறத்திற் காணப்படும் காளிகோயிலும் மிகத்தொன்மை வாய்ந்ததெனக் கருதப்படு கின்றது. யாழ்ப்பாணத்திலிருந்த கடையிற் சுவாமிகள் இந்தக் கோயில் உள்ள தில்லைவனத்தில் திரிவது வழக்கம் எனவும், தில்லைக்காளியே இங்கு எழுத்தருளியிருக்கின்ருள் எனச் சுவாமிகள் அடிக்கடி கூறிவந்தார்கள் எனவும் திரு. கா. ஆறுமுகம் அவர்கள் குறிப்பிட்டார்கள். 1882ഴ്ത്ത தயாரிக்கப்பட்டு யாழ்ப்பாணக் கச்சேரியில் வைக்கப்பட் டுள்ள பழைய கோயிற்பதிவு டாப்பில் நயினுதீவில் அப் பொழுது நாகபூஷணி அம்மன் கோவில், இளைய பண்டாரம் அல்லது முருகமூர்த்தி கோயில், ஐயனுர் கோயில், முருக மூர்த்தி கோயில், பிடாரி கோயில், காளிகோயில் எனக் கோயில்கள் பதியப்பட்டுள்ளன.
நயினையம்பதியிலிருந்து நாற்றிசையும் ஆளும் அகில லோக நாயகியான நாகபூஷணி அம்பாள் எழுந்தருளி யிருக்கும் ஆலயத்தின் சிறப்பினைச் சிறிது நோக்குவாம்.

Page 29
O.
اسسس 46 م.
அடிக்குறிப்புகள் :
1 யாழ்ப்பாணச் சரித்திரம் -பக். 1-2, 2. ஆத்மஜோதி - சோதி 3; சுடர் 5 பக், 148-149 3. யாழ்ப்பாண வைபவ விமர்சனம் பக். 22 4. Nagadi pa — by Muda liyar A. M. Guimasekara --
Royal Asiatic Society (C. B.) Ceylon. Notes and Ωμβγάes p. O XXI - O XXIV.
Nagadipa de Buddhist Remains in Jaffna-by Dr. P. E., Peiris, R. A. S., C. B. Vol. XXVIIINo. 70 Part Z (1977), Vol. XXVIII — No. 72 (1919).
Elprigraphia, Zeytanica — Vol. IV partő-—-Vallipuram Gold Plate Inscripation of the Reign of Vasabha pp. 229 — 237.
A. Short History of Ceylon-by H. W. Codrington φ. 8. வல்லிபுரக்கோயிற் பொற்சாசனம் - தமிழ்மாண வன்" வரைவது - இக் கட்டுரையை (ஈழகேசரி - 6-11-38) எழுதியவர் இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் க. கணபதிப்பிள்ளை அவர்கள் போலும். ஈழகேசரி 14-3-37 - பக். 13 பார்க்க. இக் கட்டுரையாசிரியர், 1928ஆம் ஆண்டு ஒற்றுமை எனும் பத்திரிகையின் ஜூலை இதழில் 7 P , எனும் பெரியார் நா கரை ப் பற்றி எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரையின் முக்கிய பாகத்தையும் எடுத்துக் காட்டியிருத்த ல் பாராட்டத்தக்க தொன்று. ஈழத்தில் இயற்றப் பெற்ற நாடகங்கள் வெடி ய ர சன் நாடகம் - வெள்ளவத்தை மு. இராமலிங்கம், இந்துசாதனம் 4-10 - 43,
 

II.
12.
13.
14.
15.
16.
17.
8.
19.
20.
27.
22.
س-47 -....
இந்நூலின் கையெழுத்துப் பிரதியை எனக்குப் பார்க்கத் தந்துதவிய என் அருமை நண்பர் சோம. சரவணபவன் அவர்களுக்கு நன்றி செலுத்துங் கடப்பாடுடையேன். வெடியரசன் நாடகப் பிரதி யொன்றைத் தேடுமாறு என்னைத் தூண்டியதும் இவரிடம் யான் கண்ட நாடகப் பிரதியேயாகும்.
மணிமேகலை - TT 1 - 2, 43 - 63.
passf?G3LDg5ża) - VIII — 217 - 2 12.
மணிமேகலை - XI - 21 - 26
Logo of GLn5%) - XXVIII - 707 - 109,
R. A. S. CA - N. 70
யாழ்ப்பாண வைபவ விமர்சனம் - பக் 23 - 24
மணிபல் ல வ ம் - ஜம்புகொல பட்டினம், ஈழகேசரி 26 - 6 = 49
Indian Antiguary — Vol. iii - pp 75 - 80
பல்லவர் வரலாறு - வித்துவான் மா இராச
DET GØofaj; 35 Lib, Laj;. 25 - 26.
Mysore Gazetteer-Vol. II part II-pp 516 - 57.7
பல்லவ உற்பத்தி - 0 இராசநாயக முதலியார்
செந்தமிழ் தொகுதி 21-பக். 205-216.
பிரபஞ்ச உற்பத்தி - சிறுமணவூர் முதலியார் - பக், 460
யாமளாதண்டகம் - பூரீ சதாசிவ ஐயர் தமி ழாக்கம் மல்குமணித்தீவில் எனுந் தொடரினை நோக்குக.

Page 30
2莒。
26.
27.
28.
29.
፵0.
岛五。
32.
33.
34.
リ5。
36.
37.
38.
邬9。
ܚ- 48 ܚܢܢ
புவனே சு வரி மகத்துவமும் திருவூஞ்சலும் - அச்சுவேலி சிவபூரீ ச. குமாரசுவாமிக் குருக்கள்.
வடமகாணத்துள்ள சில இடப்பெயர்களின் வர லாறு - தெல்லிப்பழை பூரீ ச. குமார சா மி.
. . i2.
Ha orlein
Amsterdam,
Rotterdam
Middleburg
Delft
Kayts
Leyden
A Description of Ceylon by Baldeus.
நயினுதீவுச் சிலாசாசனத்தைச் சுட்டிய சில குறிப்புக்கள் - நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர், ஈழகேசரி 21-2-37,
யாழ் வைபவமாலை - பக். 60.
Ceylon by Bertolacci. pp. 274 - 276
னிே வேங்கடசாமி ஈழகேசரி 26 - 8-49
யாழ். சரித்திரம் - முதலியார் இராசநாயகம் Lä. 17 - 18
 
 

Ε 枋

Page 31

份上
நாகேஸ்வரி ஆலயம்
ஐதீகங்கள்
எவர் எவர் எந்த எந்த மார்க்கத்தைக் கைக்கொண்ட போதிலும் இறுதி இலட்சியம் ஒன்றுதான் என்பதை உணர்த்தும் தலங்கள் இக்காலத்தில் உலகெங்கணும் இருக்கத்தான் செய்கின்றன. எங்கள் சிறிய இலங்கையிலும் கானக மத்தியில் விளங்கும் கதிர்காமம், வானுறவோங்கும் சிவனுெளிபாதம், வங்கம் மலி மாதோட்டத்துத் திருக்கேதீச் சரம், கோயிலுஞ் சுனையுங் கடலுடன் சூழ்ந்த கோணேச்சரம், வடிவாம்பிகையின் அருள் பெருகும் முன்னேஸ்வரம், புலநரிச் சிவன்கோயில்கள், கொழும்பு மாரியம்மன் ஆலயம், பொன்னம் பலவாணேஸ்வரர் ஆலயம், வட இலங்கையிலுள்ள செல்லச் சந்நிதி, நயினுதீவிலுள்ள நாகேச்சரம் ஆதியன சைவர் மட்டு மன்றிப் பிறமதத்தினரும் வழிபடும் பெருமை வாய்ந்தன வாய் அமைந்துள்ளன.
யாரே கூற வல்லார்
நயினுதீவிலுள்ள நாகேஸ்வரி அல்லது நாகபூஷணி அம்பாள் ஆலயம் எப்பொழுது தோன்றியது? யார் தாபித்தது? அது எவ்வாறு விருத்தியடைந்து புகழ் பெற்றது? என்றின்னுேரன்ன வினுக்களுக்கு ஆராய்ச்சியாளர் திருப்தி யடையக் கூடியதாக விடை கூறுஞ் சரித்திர நூல்கள் இல்லை. எனவே, செவி வழி வரும் கதைகளைக் (கன்ன பரம்பரை) கொண்டும் பிற்காலத்தவர் ஆங்காங்கு எழுதிய குறிப்புக்களைக் கொண்டும் இத்தலத்தின் பூர்வீக வரலாற் றினையும் பெருமையையும் ஓரளவுக்கு யூகிக்க முடியுமே ாறி நிதார்த்தமாக அதுபற்றிக் குறிப்பிடத் துணிய

Page 32
- 50 -
'இலங்கா தீபத்தின் உத்தரபாகமாகிய யாழ்ப்பாணத் தைச் சார்ந்த தீவுகளிலொன்றுகிய நயினர் தீவிலே சகல லோக நாயகராகிய சிவபெருமானேடு அக்கினியும் வெம்மை யும் போலப் பின்னமற்று விளங்கிய பராசக்தியாகிய அம்பிகை மெய்யன்பர்களுடைய வழிபாட்டையேற்று அவர்கள் வேண்டிய வேண்டிய வரங்களை யெல்லா மீந் தருளும் பொருட்டு பூரீ நாகபூஷணியம்மை என்னுந் திரு நாமமுடையராய் எழுந்தருளி இங்கே வசிப்பவர்களுக்குப் பாணினைந் தூட்டுந் தாயினுஞ் சாலப் பரிந்து திருவருள் பாலித்தும் பிறவூர்களில் வசிப்பவர்களுக்குச் சொப்பனத்திற் ருேன்றித் தம்மை வந்து தரிசிக்கும்படி உணர்த்தியும் பல அற்புதங்களைப் பிரத்தியட்சமாகக் காட்டியும் அடித் தடித்து வக்காரமுன்றிற்றிய வற்புதமாக அவர்களை வலிந்தாட் கொண்டும் விளங்குங் கருணைத் திறம் இவ்வளவிற்றென்று கூறுதற்களிது.
மகோற்சவ காலங்களிலும் ஏனைய காலங்களிலும் பல ஆயிரக்கணக்கினராக யாழ்ப்பாணத்திலும் பிறவிடங்களிலு முள்ள அன்பர்கள் வந்து வழிபாடு செய்து அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நால்வகையினைச் சார்ந்த பேறுகளை யெல்லாம் வேண்டிய வேண்டியவாறே பெற்று வருதல் எவரும் நன்கறிந்த உண்மையேயாம்.
'இத்தகைய திருவருட் பெருங் கொடையாளராகிய பூரீ நாகபூஷணியம்மை எழுந்தருளி யிருக்கும் ஆலயம் முதன் முதல் எக்காலத்தில் எவரால் ஆக்கப்பட்டதென அறியப்படாப் புராதனமுடையது. இந்தியாவிலுள்ள சிவஸ் தலங்கள் போல முற்காலத்தில் சிவசந்நிதி தேவிசந்நிதி முதலியவற்றையும் ஏழு பிரகாரங்களையும் கோபுரங்களையும் கொண்டு விளங்கியது. செம்பினுல் ஆக்கப் பட்ட தேரொன்றும் பவளரத்தினம் இழைத்துச் செய்யப்பட்ட தேரொன்றும் இங்கே யிருந்தன. ஒரு சர்ப்பம் இங்கே நெடுநாள் வசித்துத் தவஞ் செய்து தனது சாபம் நீங்கப் பெற்றது. அதனைத் தமது திருமேனியில் அணிந்து சாப நிவிர்த்தி செய்தருளியமையாற்ருன் இங்கு எழுந்தருளிய
 
 

سے 51 ہے
அம்பிகை நாகபூஷணியம்மை யென்னுந் திருநாமம் உடைய ராயினர். இவ்வாறு நயினர்தீவு தியாகர் இராமச்சந்திரர் பூர்வீகக் கதைகளைப் பயபக்தியுடன் குறிப்பிட்டுள்ளார். ஆதிசேடன், அனுமான், அருச்சுனன், இராவணன் முதலி யோர் நாகபூஷணி அம்பாளை வழிபட்டனர் என்பது செவி வழிவரும் செய்தியாகும். ஆபுத்திரன், மணிபல்லவத்திற் பட்டினி கிடந்து உயிர் துறந்த வரலாறு மணிமேகலையில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
நாகம் அர்ச்சனை செய்தது
முன்னுெரு காலத்தில் நயினுதீவிலுள்ள அம்பிகையை ஒரு நாகம் பூசித்து வந்ததாம். ஒரு நாள் அந் நாகம் அர்ச்சனை செய்தற் பொருட்டுப் பூக்கள் கொய்துகொண்டு புளியந்தீவிலிருந்து மீளும் வழியில் ஒரு கருடன் அதனைக் கொல்லும் பொருட்டு எதிர்த்து வந்தது. கருடனைக் கண் டஞ்சிய நாகம் கடற்கரைக்குச் சமீபத்திலிருந்த கல்லொன் றினைச் சுற்றிக் கொண்டிருந்தது. கருடனும் அந்த நாகத் தைக் கொல்லாமலும் அதனை விட்டகலாமலும் அதற் கெதிரேயிருந்த கல்லொன்றின் மீது இருந்தது. இங்ஙனம் இவையிரண்டும் பகைமை கொண்டிருக்கும் சமயத்தில், அக்கடல் வழியாக மரக்கலத்திற் சென்ற வைசிகன் ஒருவன் (மாநாய்கன் என்பர் சிலர்) அந் நாகத்தின் பயத்தைக் குறிப்பாலுணர்ந்து, மரக்கலத்தை நிறுத்தி அக் கருடனை விலகும்படி கேட்டான். "உனது செல்வம் யாவற்றையும் கொணர்ந்து நாகம்மாள் கோயிலுக்குக் கொடுப்பாயானல் விலகுவேன்' என்றது கருடன், வணிகனும் அங்ஙனமே செய்தான், நாகமும் தனது நன்றியைச் செலுத் தி நயினுதீவை அடைந்தது. வணிகனும் தனது நாட்டுக்குத் திரும்பினுன் நடந்தவற்றையெல்லாம் தன் மனைவியிடங் கூறினன். அன்றிரவு வணிகனும் மனைவியும் நித்திரை கொள்ளும் பொழுது ஒரு பேரொளி தோன்றி அவர்க ளுடைய கண்களைச் சிறிதுநேரம் கூசச் செய்தது. பின்பு அவர்கள் எழும்பிப் பார்த்தபொழுது நாகரத்தினக் கற்கள் அவ்வறையிலே இருப்பதைக் கண்டார்கள். நயின

Page 33
سس 52 سس
தீவிலுள்ள அம்பிகையின் திருவருள் இருந்தவாறென்னே யென அவர்கள் வியப்புற்று நயினுதீவுக்கு யாத்திரை செய்யப் புறப்பட்டார்கள். அவர்கள் நயினுதீவுக்குச் சென்று வடகிழக்குக் கடற்கரையில் நாகம்மாளுக்குச் சிறந்ததோர் ஆலயம் கட்டுவித்தார்கள்.
ஏழு வீதி களும் கோபுரங்களும் அமைத்தார்கள். நயினுப்பட்டர் எனும் பிராமண குருவைப் பூசகராக நியமித் தார்கள். இத் தீவுக்கருகில் இப்பொழுதும் பாம்பு சுற்றிய கல், கருடனிருந்த கல் என இரு கற்களைப் பக்தர்கள் காட்டுகின்றர்கள். இக் கற்கள் அலைகளினல் மோதுண்டு இயற்கையாகப் பெற்ற வடிவங்களை ஆதாரமாகக் கொண்டு மேற் கூறிய கதைகள் உருவாகியிருத்தலும் கூடும்.
நயினுப்பட்டர்
நாகபூஷணி அம்பாள் கோயிலுக்குப் பூசகராக வந்த நாயனூர்பட்டர் அல்லது நயினுர்பட்டர் நயினார்தீவு தெற்கு மண்ணிப்புளி என்னும் இடத்தில் வாழ்ந்தனர் எனவும், அது இக்காலத்தில் பட்டர் வளவு என அழைக்கப்படு
கின்றதெனவும் திரு. சு. ஐயாத்துரைச் சோதிடர் அவர்கள் கூறுகின்ருர்கள்.2
வீராசாமிச் செட்டியார்
மேற்கூறிய மாநாய்கரின் வழித் தோன்றலாகிய வீராசாமிச் செட்டியாரும் வியாபாரத்தின் பொருட்டுப் பிரயாணஞ் செய்யும்பொழுது நாகபூஷணி அம்பாளை வழிபட்டுச் செல்வது வழக்கம். அம்பாளும் அவருக்குக் காட்சி கொடுத்து அனுக்கிரகஞ் செய்தபடியால் அவர் அம்பாள் கோயிற் றிருப்பணியில் ஈடுபட்டார் என்பது ஐதிகம்.
வெடியரசனுடைய கதையும் ஆதொண்டைச் சோழ னுடைய கதையும் ஏற்கெனவே கூறப்பட்டுள்ளன.
 
 

53
காகேச்சரம்
பண்டொருஞான்று ஈழநாட்டில் நயினுதீவு எனப்படும் நாகேச்சரத்தில் அல்லது நாகேஸ்வரத்தில் அம்மன் சந் நிதியும் சுவாமி சந்நிதியும் வெவ்வேருக இருந்தன வென்றும், நாகேச்சரத்து அப்பன் நாகேஸ்வரன், நாக ராஜேஸ்வரன், நாகதம்பிரான், நாகநயினுர் எனவும், தேவி நாகேஸ்வரி, நாகராஜேஸ்வரி, நாகராசேசுவரி, நாகபூடணி, நாகம்மாள் எனவும் அழைக்கப்பட்டனர் என்றும் பல நூல்கள் குறிப்பிடுகின்றன. அன்றியும் அப்பனும் அம்மையும் கோயில்கொண் டெழுந்தருளியிருந்த ஆலயம் ஏழு வீதி களையும் கோபுரங்களையுங் கொண்டதாகவும் விலையுயர்ந்த தேர்களை யுடையதாகவும் இருந்தது என்பது செவி வழி வரும் செய்தியாகும்.
காக வழிபாடு
இப் புனித ஆலயம் சரித்திர காலத்துக்கு அற்பாற்பட்ட நாக வழிபாட்டை எடுத்துக் காட்டும் சின்னமாக அமைந் துள்ளது என்ற கருத்தொன்றும் உண்டு. இக்கருத்தின் பிர காரம் இலங்கையில் இப் புனித ஆலயத்தைப்போன்ற தொன்மை வாய்ந்த ஆலயம் பிறிதொன்றில்லையெனலாம். மூலஸ்தான விக்கிரகத்தின் அமைப்பைப் பார்த்தால் அது ஆயிரம் வருடங்களுக்கு முந்தியதாகப் புலப்படுகிறது. ஆனல் நாகப்பிரதிஷ்டை இதற்கு முன்னுல் ஏற்பட்டிருக்கலாம். மூலஸ்தான விக்கிரகத்துக்குப் பின்னர் உள்ள நாகபடம் பார்க்கப் பயங்கரமாகவிருக்கிறது. சீறுவதுபோல இருக் கிறது என்று காரைக்குடி எம். செல்லக்கண்ணு ஸ்தபதியார் குறிப்பிட்டுள்ளார். இந்துமதச் சரித்திரத்தில் நாகபாம்பு ஒர் உன்னத ஸ்தானத்தை வகித்து வந்துள்ளது. இன்னும் வகித்து வருகின்றதென்று கூடச் சொல்லலாம். நாக வழிபாட்டைப்பற்றி முன்னரே கூறியுள்ளாம். "நாகதீவில் மூலஸ்தானத்தில் அம்மன் உருவம்போல இருப்பது பழைய நாகப் பிரதிஷ்டையே, இது மிகவும் தேய்ந்து அம்மன் உருவம் போலத் தெரிகிறது. இதற்குப் பின்னல் ஐந்தலை நாகப் பிரதிஷ்டை ஒன்றுண்டு. இந்தியாவிலும் நாக

Page 34
سيسي 54--
வழிபாட்டுக்கே பிரத்தியேகமாகவுள்ள இவ்வளவு புராதன கோயிலைக் காண்பதரிது. கலப்பற்ற தூய்மையான நாக வழிபாட்டுப் பண்பினை நயினுதீவிற் காணலாம். சரித்திர காலத்துக்கு எட்டாத காலந் தொடக்கமுள்ள கோயில் இது என்பது புலனுகின்றது' என்று இத் தலத்தைத் தரிசித்த தென்னிந்திய சிற்ப சாத்திர வல்லுநர் திரு. எம். நரசிம்மன் அவர்கள் தமது கருத்தை வெளியிட்டிருக்கின் முர்கள். உயிருள்ள நாகபாம்பு வழிபாடுகூட நயினுதீவில் இருந்ததெனச் செல்வி சி. எவ், கோர்டன் கம்மிங் குறிப்பிட் டிருப்பதாக வண. ஜேம்ஸ் காட்மன் எடுத்துக் காட்டியுள் ளார். மணமுடித்து நெடுங்காலமாகப் பிள்ளைப்பாக்கியம் இல்லாதிருக்கும் பெண்மணிகள் நாகராஜனை வழிபட்டு, நாகப்பிரதிஷ்டை செய்தால், கைமேற் பலன் உண்டாகும் என்ற நம்பிக்கை நம் மக்களிடையேயுண்டு. நயினுதீவில் வேப்பமரத்தடியிலுள்ள நாகப்பிரதிஷ்டை இதனை வலியுறுத்துகின்றது.
கோயிலே இடித்தல்
புராதனப் பெருமைவாய்ந்த நாகேஸ்வரி ஆலயம் வர்த்த கரின் பொருள் கொண்டு விஸ்தரிக்கப்பட்டு விளங்குவதைக் கண்ட போர்த்துக்கீசர் இதனைச்சும்மா விட்டுவைப்பார்களா? இந்த ஆலயத்தில் உள்ள பொருள் பண்டத்தை அபகரிக்கும் பேராசைபிடித்த போர்த்துக்கீசர் இதனை அழிக்கத் தொடங் கினர். கோயில் தரைமட்டமாக்கப்பட்டது. இந்த வன்கணு ளரின் கொடிய செயலைக் கண்டு சைவ மக்கள் அனலிடைப் பட்ட புழுப்போலத் துடிதுடித்தனர். தாங்கள் பக்தியுடன் வழிபட்டுவந்த மூர்த்திகளையும் பூசைப் பாத்திரங்களையும் தேர்களையும் அந்நியர் தீண்டக்கூடாதெனக் கருதிய சைவ நன்மக்கள் அவற்றை வெவ்வேறிடங்களில் ஒளித்து வைத் தார்கள். அம்பாளே மேற்குக் கடற்கரையிலுள்ள ஓர் ஆல மரப் பொந்தில் வைத்து வழிபட்டு வந்தனர். இந்த மரம் 'அம்மாள் ஒளித்த ஆல்' என வழங்கப்பட்டதென ஒர் ஐதீகமுண்டு. அந்நியர் கோயிலை இடித்த போதிலும் அம்பாள் வழிபாட்டை நிறுத்த முடியவில்லை. அவள் நயினுதீவு மக்கள்
 

............ ,55
ஒவ்வொருவருடைய உள்ளமாகிய பெருங்கோயிலில் உறுதி யான இடம்பெற்று விளங்கினுள். அந்நிய மதத்தினர் இன்னல் செய்தவிடத்தும் நயினுதீவு மக்கள் சைவப்பற் றினக் கைவிடவில்லை யென்பதனை இது உறுதிப்படுத்து கின்றது. இக்கோயிலை அந்நியர் அழிக்க வந்தபொழுது கோயிற் தேர் தானகவே உருண்டு மேற்குற் கடலில் ஆழ்ந்து விட்டதாம். ஒரு சமயம் அக்காலச் சைவமக்கள் அதனேக் கடலினுள் தள்ளிவிட்டிருத்தலுங் கூடும். சிற்சில காலங்களில் தேர்முடி கடலில் பெளர்ணிமைத் தினத்தில் தெரிகிறது என்ற ஒரு கதையும் அடிக்கடி கேட்கப்படுவதுமுண்டு. இது பண்டைக்காலத்தில் தேர் முதலிய கடலினுள் தள்ளப்பட்ட நிகழ்ச்சியின் எதிரொலியாக இருக்கலாம். இவ்வாலயத் திற்குச் சமீபமாகவிருக்கும் தென்னந் தோப்புக்களிற் சில விடங்களிற் கிண்டிப் பார்த்தபொழுது, தரையின்கீழ் பழைய கட்டடங்கள் காணப்பட்டன. திருக்குள மொன்று வெட்டியபொழுது கோயிற் பூ ைசக் குரிய வெண்கலப் பொருள்கள் சில வெளிக்கிளம்பின.
கோயிற் புனரமைப்பு
டச்சுக்காரர் ஆட்சியின் பின்னர் நயினுதீவில் மீண்டும் நாககேஸ்வரி ஆலயம் சிறிய அளவிற் கட்டப்பெற்றது. எனினும் அங்கே தாபிக்கப்பெற்றிருந்த சிவலிங்கத்தைச் சைவர்கள் தாம் மறைத்து வைத்திருந்த இடத்திற் காணு மையாற் பெரிதுங் கவலைகொண்டார்கள். எனினும் நயின தீவுக்கு வடபால் உள்ள புலியேத்தி அல்லது புளியந்தீவு எனும் சிறுதீவில் பழைய சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப் பட்டிருப்பதாகக் கேள்வியுற்ற சைவர்கள் ஒருவாறு மனந் தேறினர்கள். இக் கோயில் நாகதம்பிரான் கோயில் என அழைக்கப்படுகின்றது. புலியேத்தியிலுள்ள நாகதம்பிரான் கோயிலிலே தாபித் திருக்கு ம் சிவலிங்கம் நயினுதீவு நாகேஸ்வரி ஆலயத்தின் சுற்றுப்பிரகாரத்தில் முன்னரே பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த சிவலிங்கங்களுள் ஒன்ரு யிருத்தல் கூடும் என்ற கொள்கையும் உண்டு.

Page 35
ܚܕ 56 ܚ
டச்சுக்காரர் ஆட்சிக்குப் பின்னர் நாகேச்சரத்தில் தேவி ஆலயமே முதன்மை பெற்றுளதெனக் கருத இடமுண்டு. அற் றன்று; பண்டுதொட்டு இது தேவியாலயமாகவே விளங்கிற்று என வாதிப்பாரு முளர்.
இப்போதுள்ள கோயிலமைப்பு
நயினுதீவின் கிழக்குத் திசையிற்ருன் துறைமுகம். இத் துறைமுகத்திலிருந்து செல்லும் பாதை அம்பாளின் கீழைவீதி வரை சென்று பின்னர் தெற்கு நோக்கிச் செல்கின்றது. எனவே நயினதிவுத் துறைமுகத்தில் வந்து இறங்குகின்ற சகலரும் அம்பாளிடம் விடை பெற்றே ஊருக்குள் உலாவ வேண்டும் என்ற முறையிற் கோயில் கிழக்கு நோக்கிய சந்நிதியுடையதாய்க் கட்டப்பட்டுள்ளது. யாத்திரிகர் நாவாயில் வரும்பொழுதே தூரத்தில் தூலலிங்கமாகிய கோபுரத்தைத் தெரிசித்து அம்பாளுடைய புனித தலத்திற் கால் வைக்கின்றனர். கோயிலும் அதனைச் சார்த்த நிலமும் 150 லாச்சம் விஸ்தீரணமுள்ளது. கோயிலும் வீதியும் 15பரப்பு வரை இருக்கும். மூர்த்தி தலம் தீர்த்தம் எனு மும்ம்ையானும் சிறந்து விளங்குவது இந்த நாகேஸ்வரி ஆலயமாகும்; கோயி லுக்குத் தென்புறத்திலும் வடபுறத்திலும் தீர்த்தம் உண்டு
இராமலிங்கர் இராமச்சந்திரர்
யாழ்ப்பாணக் கச்சேரியில் சைவசமயக் கோயில்களைப் பதிவுசெய்து வைத்திருக்கும் பழைய இடாப்பு ஒன்று உண்டு. இது 1882ஆம் ஆண்டளவில் தயாரிக்கப்பட்டது. அதில் இந்த நாகபூஷணி அம்பாள் ஆலயத்தைப்பற்றி எழுதப்பட் டிருக்கும் விவரம் பின்வருமாறு :
நாகபூஷணி அம்மன் கோவில்
இராமலிங்கர் இராமச்சந்திரர் 1788இல் கட்டியது. மனேச்சர்: இராமலிங்கர் கார்த்திகேசரும் பிறரும், கல்லுக்
EL L Ll Łh).
திருவிழா : ஆண்டுக்கொருமுறை ஆணி 10ஆந் தேதி தொடக்கம் 20ஆந்தேதிவரை 10 நாட்கள் திருவிழா,
 

ܚܝܒܝܢ 57 ܚ
கோயில் வீதியில் மக்கள் அம்பாளைக் காவிக்கொண்டு வலம் வருதல் அல்லது தேரில் வலம் வருதல்,
திருவிழாக்காலங்களில் 10,000 பேர்வரை வருகின்றனர்
யாழ்ப்பாணத்திலும் அயலிலுள்ள தீவுகளிலுமிருந்து
பாத்திரிகர் வருகின்றனர்.
மேலே குறிப்பிடப்பட்ட இராமச்சந்திரரின் ஆண் சந்த தியினரே இக்கோயில் மனேச்சராக இருந்து வருகின்றனர் எனச் சொல்லப்படுகின்றது.
காலத்துக்குக்காலம் இக்கோயிலில் அநேக திருப்பணிகள் நடைபெற்று வந்துள்ளன. திருக்கோயிலின் கீர்த்திக்கியைய வானுற ஓங்கிநிற்கும் கோபுரமொன்று கிழக்கு வாயிலில் அமைக்கப்பெற்றுள்ளது. இத் திருப்பணியில் வட்டுக்கோட் டையைச் சார்ந்த இரகுப்பிள்ளை மணியம் அவர்கள் அதிக அக்கறை எடுத்து வந்தார்கள். பின்னர் வேலனைச் சோமசுந்தரமணியம் அவர்களும் இத்திருப்பணியில் ஈடுபட்டு ழைத்தனர். இந்தக் கோபுரம் 1935ஆம் ஆண்டளவிற் கட்டப் பெற்றது. இந்தக் கோயில் ஏனைய சாதாரண கோயில்களைப் போலவே கர்ப்பக் கிருகம், அர்த்தமண்டபம், மகாமண்டபம் முதலியவற்றைக் கொண்டுள்ளது. கோயிலின் தென்புற உள்வீதியில் தேவஸ்தான அலுவலகம் உண்டு. மேற்கு வீதியில் பிள்ளையார் கோயில், வாகனசாலை, சுப்பிரமணியர் கோயில் என்பவை உண்டு. கிழக்கு வீதியில் நவக்கிரகங்கள், வைரவர் கோயில் முதலியன உண்டு. தேரோடும் வெளிவீதியில் வேப்ப மரங்கள் காணப்படுகின்றன. யாத்திரிகர் தங்குவதற்கு வசதியான கிழக்கு மடம், மேற்கு மடம், தெற்கு மடம், தென்மேற்கு (சோமபதி) மடம், வடமேற்கு (நகரத்தார்) மடம், வடக்கு (இளந் தளே ய சிங்க முதலியார், வட்டுக்கோட்டை) மடம், குணரத்தின மடம் ஆதியன வுண்டு,

Page 36
-یہ 58 ہے۔
ଘଣ୍ଟୀ
மானப் புனரமைப்பு
நாகபூஷணி அம்பாள் கோயிலின் விமானப் புன ரமைப்பு வேலையை, ஸ்தபதிகள் பரம்பரையில் உதித்த வரும் சிற்பத் தொழிலில் புகழ் பெற்றவருமாகிய காரைக் குடி திரு. எம். செல்லக்கண்ணு ஸ்தபதியார் 1951ஆம் ஆண்டு தை மாதம் மேற் கொண்டார். பாண்டிய நாட்டுச் சிற்ப முறையில் இரண்டு நிலை விமானம் அமைக்கப்பட்டது. அம்பாள் கோயிலின் விமான வேலையை முடித்த பின்னர், பரிவார மூர்த்திகளின் பண்டிகைகளும் திருத்தியமைக்கப் பட்டன. 26-4-51இல் பூரீநாகபூஷணும்பிகை புனராவர்த்தன சம்புரோக்ஷண மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது. அப் பொழுது வெளிவந்த விஞ்ஞாபனப் பத்திரிகையில் இந்தத் தலத்தின் பெருமை இரத்தினச் சுருக்கமாகக் கூறப்பட் டுள்ளது. அது பின்வருமாறு :
பூரீ விராட்புருடனது சரீரமாகிய பிரமாண்டத்தின் இடை நாடிக்கு ஸ்தானமென்று சாந்தோக்கியம் முதலிய உபநிஷத்துக்களிலே எடுத்தோதப் பெற்றதும், இவ்விலங்கா தீபத்தின் கண்ணே அனேகம் சிவஸ்தலங்களோடு கூடியதும், வடமேற்றிசையில் ஆழிய சாகரம் மத்தியில் தோன்றி சப்தத்வீபங்களுட் சிறப்புற்று விளங்கும் நயினர்தீவில் இற்றைக்குப் பல்லாயிரம் வருடங்களுக்கு முன் சர்வலோக ரகஷகியாகிய உமையம்மையாருக்குப் பிரபல வாசஸ்தானங் களா யமையப்பெற்ற அறுபத்து நான்கு பீடங்களுள் ஒன்ருயதும், நாகர்களினுல் பூஜிக்கப் பெற்றதும் அருச்சுனன் முதலிய அரசர்களால் தரிசிக்கப் பெற்றதும், சிவ்ானுபூதிச் செல்வர்களாலும் பிறராலும் சிவபூமி, சுவர்ணபூமி,புண்ணிய பூமி அணுக்கிரக ஸ்தலம் என்று வியந்து கூறப் பெற்றதும், இவ்விலங்கா தேவியின் பராசக்திக்கு முக்கிய ஸ்தானமாக வுள்ளதும், சர்வான்மாக்களுக்கும் மனுேபீஷ்டப்படி அணுக் கிரகிக்கும் சர்வரோக நிவாரணியும், ஆன்மாக்களது தியா திைகளுக்குத் தாம் அகப்படுதல் வேண்டுமென்னுந் திரு வருளினலே சக்தி காரியமாகிய உருவத் திருமேனி கொண்டு திவ்விய மந்திர சிம்மாசனத்தின் மீது பூரீ நாகராஜேஸ்வரி
எழுந்தருளியிருக்கும் திருக்ஷேத்திரத்திலே.
 
 
 

سے 59 -۔
சலாபத்திலுள்ள முன்னேஸ்வரத்தில் வடிவாம்பிகைக்கு பூரீ சக்ரபூசை நடாத்தி வந்த பிரமழறி சோமாஸ்கந்தக் குருக்களின் சீடராகிய நயினுதீவு பிரமயூரீ சுவாமிநாதக் குருக்கள் அவர்கள் பூரீ சக்ரபூசையை நாகேஸ்வரி ஆலயத் திலும் ஆரம்பித்து வைத்தார்கள். குருக்கள் அவர்கள் கோயிற் கிரியைகளைப் பயபக்தியுடனும் முறை பிறழாமலும் செய்வதைப் பார்த்துக்கொண்டிருப்பவர் உள்ளத்தில் பக்தி தானுகவே அரும்பிவிடும். இவரிடம் கற்ற நயினுதீவு பிரமயூரீ கயிலாயநாதக் குருக்கள் அவர்களும் கோயிற் கிரியைகளை முறையாகச் செய்வதிற் பிரசித்தி பெற்று விளங்குகின்ருர்கள்.
தியானஞ் செய்வதற்கேற்ற ஆலயம்
** அந்தராத்ம யோகத்தில் ஈடுபட்டவர்களுக்குத் தியானஞ் செய்வதற்குத் தகுந்த சூழ்நிலையை நயினுதீவு அம்பாள் கோயிற் சுற்ருடலிற் காணலாம். நாலா பக்கமும் கடலினுற் சூழப்பட்டு அழகிய சிறு தீவாக நயினுதீவு விளங்குகிறது. பெளர்ணிமைத் தினத்தன்று நடுநிசியின் போது ராஜகோபுரத்தின் கீழமர்ந்து தியானஞ் செய்தால் பயங்கரமான தொரு தெய்வீக சக்தி நம்முள் இறங்குவதை உணரலாம். பயங்கரமாக அச் சக்தி இருப்பதற்கு நம்மிட முள்ள குறைபாடுகளே காரணமாகும். சுயநல வழிகளில் அகம்பாவத்துடன் செல்லும் நம் மனசானது, சக்திவாய்ந்த தெய்வசாந்நித்தியத்துடன் சம்மதப்படும்பொழுது ஒருவித அதிர்ச்சியை அடைகிறது. இந்த அதிர்ச்சியானது நான் என்ற அகம்பாவத்தை ஈடாடச் செய்வதற்கே ஏற்படுகிறது. "நான்' என்ற உணர்ச்சியைப் பரித்தியாகஞ் செய்ய நாம் இலேசில் இடங் கொடுப்பதில்லை. ஆனல் "நான் என்ற ஆணர்ச்சி அற்றுப் போகாத விடத்துத் தெய்வ அருள் கிட்டாது' சித்தர்களும் யோகிகளும் இந்தச் சூழ்நிலையைப் பெரிதும் விரும்பிச் செல்கின்ருர்கள்.

Page 37
سے 60 ملی۔
ஆலய பூசையும் விழாவும்
உஷத் காலம், காலைசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை : அர்த்தசாமம் என ஐந்து கால நித்திய பூசை நடை பெறுகின்றது. கோயிலுக்கென நித்திய மேளம் உண்டு. சிவன், அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், விஷ்ணு முதலிய ஐவரின் பூஜைத் தினங்கள் ஒவ்வொரு மாதத்திலும் நடைபெறும் ஆனி மாதத்தில் மகோற்சவம் நடைபெறும், புரட்டாதியில் நவராத்திரி பூசை சிறப்பாக நடைபெறும். பகலிற் சங்காபிஷேகமும் இரவில் பூரீசக்கர பூசையும் நடைபெறுவதுடன் விஜயதசமியன்று அம்பாயுத பூசையும் வன்னிவிருட்ச பூசையும் நடைபெறும்.
இவ் வாலயத்திற் பாரம்பரியமாகச் சந்தான கோபாலப் பிரதிஷ்டை செய்து அளவிறந்த பக்தர்கள் புத்திர சந்தான முடையவர்களாய் மீண்டும் அம்பாள் தரிசனை செய்து விலைமதித்தற்கரிய திருவாபரணம், வாகனம், தீபம் முதலிய வற்றைக் காணிக்கையாகக் கொடுத்திருக்கின்றனர். இந்தக் கோயிலில் அழகிய கைலாச வாகனம், சர்ப்ப வாகனம்,
காமதேனு வாகனம் முதலியன உண்டு. இவை யாவும் பக்தர்கள் காணிக்கையாகக் கொடுத்து உதவியனவாகும்.
ஆலய நிர்வாகம்
யாழ்ப்பாணத்திலுள்ள சைவக்கோயில்களுக்குச் சாதா ரணமாக ஏற்படும் நோய் அம்பாள் ஆலயத்தையும் விட்டு விடவில்லை. ஆலய நிருவாகம் சம்பந்தமாக வழக்குகள் தொடரப்பட்டன. ஆணுல் இப்பொழுது நிர்வாகப் பொறுப்பு ஒன்பது அங்கத்தவர்களைக்கொண்ட தர்மகர்த்தா சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் பயணுக ஆலய
நிர்வாகஞ் சீராகவுஞ் சிறப்பாகவும் நடைபெறுகின்றது.
 
 
 
 
 
 
 
 
 

அடிக்குறிப்பு:
1.
2
سے 61 سال۔
நயினுர்தீவு கேஷத்திர வைபவம் - தியாகர் இராமச் சந்திரர். - பக். 3- 5
நயினுர்தீவு என வழங்கும் நாகதுவீபமகத்துவம் - சு. ஐயாத்துரைச் சோதிடர் - பக் 6 - 7.
நயினுதீவில் திகழும் நாகபூஷணி அம்பாள் ஆலயம்"சாது' எழுதியது வீரகேசரி, 11-3-1951
The Religious Associations of this Island are probably much earlier than the date of the Buddha - Nagadipa and Buddhist Remains in Jaffna' - by Dr. P. E. Peris, R A S C B No. 70p... - 13.
Two Happy Years in Ceylon-Miss C. F. Gordon Cunning. - Vol. 1, p., - 127.
Hinduism in Ceylon - by Rev. James Cartman.--p.84.
நயினுதீவில் நிகழும் நாகபூஷணி அம்பாள் ஆலயம் - * சாது - வீரகேசரி, 11:3-1959.

Page 38
நயினுதீவு நாகேஸ்வரியம்மை பதிகம்
சந்திரபூ ரணரத்ன தங்ககோ டக்கிரிட
தண்ணின்ற தவழி வட்டத் தனபதியை நிகர்மன்ன ரடிதொழச் சதுரங்க
தானே வெள் ளங்கள் சூழச் சிந்துரப் பகைமை பிடர் பீடிகை யிருந்தெண்டி
சாமுகமு மேயி றைஞ்சத் தேவேந்திர சுகமுற் றிருப்பவர்க ளுன்பாத
சேவைபுரி பவர்க ளன்ருே? மந்திர காரண ரூபரூ பாதிசிவ
மகமாயி புவன நேசி வாலசுந் தரிகெளரி நயினைமா நகர்க்கண்
வைகியருள் செய்யு மொருதாய் நந்துறு கரன்பிரம னங்கமணி கங்களொடு நஞ்சணி பிறங்கு களமே நாகமணி யும்பரமர் பாகமுறு மேகசிவ
நாக ஈஸ்வரி யம்மையே.
சோடுற்ற நவரத்ன கும்பியும் மேலிட்ட
தொங்கலும் அகில ளாவிச் சொருகிட்ட கொண்டையுஞ் சுட்டியும் மலர்க்கையால்
தொட்டிட்ட சிந்து ரமும் தோடுற்ற கொந்தழக மரகதக் கொப்புமார்
துணைவிழியி லெழுது மையும் துகளற்ற வெண்டரள முருகுநற் பவளவாய்த்
துவருமொளிர் நளின முகமும் தேடுற்ற செங்கமல பொற்பதமு மழகான
திருவுருவு மறிவி ேைல தெரிசிக்க வருடந்து நீடாயு ளும்பெருஞ்
செல்வ முந்தர வேண்டுநீ நாடுற்ற பலவளமு முறையுமெழில் நயின
நகர்க்கண் மருவுங் கெளரியே நாகமணி யும்பரமர் பாகமுறு மேகசிவ
நாக ஈஸ்வரி யம்மையே. 2
 
 

- 63 -
ஆரணத் துபநிடத வக்கரத் தொனியாகி
யா காய வட்ட மாகி அறுகோண மிருகோண முக்கோண நாற்கோண
மாகிநிற மைந்து மாகி காரணத் துருவாகி பருவாகி யாவுமாய்க்
காக்குமுன் பெருமை யெளிதோ கருணைப்பிர வாகமா மானந்த வெள்ளங்
கசிந்து றுபே ராழியே ஏரணத் திடுமருத வேலிசூழ் நயின வெனும்பதி சிறந்து மேவும் யாமள செளந்தரி கோமள சொரூபியே
ராசபர மேக வரியே நாரணற்கொரு சகோதரி யென்ன வந்தருளும்
நாக பூஷணி நாரணி இ நாகமணி யும்பரமர் பாகமுறு மேகசிவ
நாக ஈஸ்வரி யம்மையே.
சத்திபை ரவிகெளரி அக்கணியு முக்கணி சடTதரி சடாட்ச ரத்தி சங்கரி சுமங்கலி மதங்கியரு ளம்பிகை
சவுந்தரி சண்ட சண்டி உத்தமி பராபரை மனேன்மணி சிவானந்தி
யுமையிமைய முதவு மங்கை உலகுதவு மன்னயா மளே பொன்னினம் பலவ
ருடனிட மகிழ்ந்து மேவும் நித்தியகல் யாணிசாம் பவிபுவன கெளமாரி
நிமலமக மாயி யென்றே நெஞ்சில் நித முந்நினைவு தந்துனை வணங்கவரு
நின்னடி யவர்க் கருளுவாய் நத்துலவு சுத்தமணி யெய்துநயி னுநகரில்
நாளுமுறை யாழின் மொழியே நாகமணி யும்பரமர் பாகமுறு மேகசிவ நாக ஈஸ்வரி யம்மையே.

Page 39
سے 64 |
ஆகமது கூனித் தளர்ந்துரோ மம்வெளுத்
தைம்புல னெடுங்கி மேலாம் அறிவழிந் தைமே லெழுந்ததி தத்தினுயி
ரணுகுமக் காலே தனிலே வேகவெங் கடமைபிடர் நெளியவரு ஞமனெற்கு
விடுகயிறு முடுகி யடுமுன் வினையேனே யஞ்சலென் றுனதுநா யகருடன்
வெள்ளை விடைமீ தேறியே பாகமுற வந்துநின் றடிமைகொண் டெனையும் நீ
பாதுகாத் தருள வேண்டும் பைங்குலைத் தெங்கிளஞ் சோலைசெறி நயினை நகர்
பண்பு கொண்டுறை செல்வியே நாகமடர் தாருவென மேவிமுனி வோர்களுறை
நாடிவரு கோப விடமார் நாகமணி யும்பரமர் பாகமுறு மேகசிவ
நாக ஈஸ்வரி யம்மையே. 酥
மாற்றிற் சிறந்தபொற் குவையென்ன வளர்சாலி
வயலிற் கிடந்த நத்தம் மடையிற் றவழ்ந்தேறி மனையிற் புகுந்துழவர்
மனைமுன்றி லீனு முத்தை ஆற்றிற் சிறந்திடத் தண்டுலங் களையுநீர்
அள்ளிப் புறத்தின் மேவி அருகுற்ற சோலையினு மிகுதுற்ற வாவியினு
மரவிந்த வோடைக ளினும் காற்றிற் சிறந்துலவு கால்கொண் டுலாவக்
கயற்கண்ணி வந்து மோதக் கமுகினிற் றெங்கினிற் கதலியில் வருக்கையிற்
கணியு மடலுஞ் சிதறியே நாற்றிற்கு மேகமழு மதுமாரி சொரியுநயி
நைகரி னண்ணு முமையே நாகமணி யும் பரமர் பாகமுறு மேகசிவ
நாக ஈஸ்வரி யம்மையே. 6.
 
 
 

வன்கய மருப்பென நிமிர்ந்தடி பருத்திறுகி
மணிவா ரறுத்து விம்மி வட்டமிட் டெழுகும்ப முலேமுகங் காட்டியிரு
மகரவிழி வலை வீசியே மின்கய மதன்சாலுள் விட்டடைத் துளபெரு
வெறுக்கையைப் பற்றி யேற்கும் வேசியர் தனக்கடிமை செய்விக்கு மென்னைமுன்
வினைநூறி யருளு தவுவாய் பொங்கிடு நெடுந்திரைப் புணரிநாற் றிசையும்
பொருந்தநடு மேவி யுலகிற் புகழ்பெருகு நயினைமா நகரினி லிருந்துமிகு
புதுமைதரு புனித தாயே நன்கிய விளம்பிறையொ டொன்றைவேண் டிச்சடில
நண்புகொண் டிடுநஞ் சுமார் நாகமணி யும்பரமர் பாகமுறு மேகசிவ
நாக ஈஸ்வரி யம்மையே.
சம்புசிவ சங்கர திகம்பர நடம்புரி
சமர்த்தாதி யாதி யாய தற்பர மதிச்சடில முக்குண சதுர்ப்புய
சதாசிவ சிவா சிவாய எம்பரம வென்றுபதி னெண்கணமு மிம்பரு
மிறைஞ்சிவரு கணவ ருடனே இங்கித முடன் கயிலை தங்கியுறை யம்பிகையி
னின் புக பூழியம்ப வெளிதோ அம்புய மடந்தைய ரம்பையர் வயந்தழுவு
மரியநவ சக்தி களெலா மன்பினெடு தொண்டுசெயு முந்தனர விந்தபத
மந்தநிழல் தந்த ருளுவாய் நம்பிவரு தொண்டர்பெற மங்கல மிகுந்தநயி
ணுநகரி னண்ணு முமையே நாகமணி யும்பரமர் பாகமுறு மேகசிவ
நாக ஈஸ்வரி யம்மையே.
5

Page 40
- 66 -
கந்தான சொசிய்க் சின்க்கும் கடாதடக்
கைமலை முகத் தவுனன்ைக் கால்கொண் டுதைத்துவன் ருேலுரித் துப்போர்த்த
காதலனை மன் ருடியே முந்தாத ரத்தினெடு மிருநாழி நெற்பெற்று
முடிவிலா துயிர்களுய்ய முப்பத் திரண்டறந் தன்னையுத வியவன்னே
மூவுலகு நீயா கையால் சிந்தா குலங்கொண்டு திரியநான் முறையோ
தினந்தினம் சொல வேண்டுமோ திருவுள மிரங்கியே சற்றுன் கடைக்கண்
திருப்பினுல் வெகு பாரமோ நந்தாத வரமுதவு நங்கையே நயினு
நகர்க்கண் மருவும் கெளரியே நாகமணி யும்பரமர் பாகமுறு மேகசிவ.
நாக ஈஸ்வரி யம்மையே. 9
சீர்தங்கு தண்சுனை யெனச்சேர் மனத்திற்
றிளைத்துக் குழைத் தரும்பும் செஞ்சரண கஞ்சமலர் தஞ்சமெனு மென்புன்
சிரக்கஞ்ச மீதில் வைத்தே ஏர்தங்கு நல்லருட் பேறுதவி நெஞ்சத்
திடுக்கண் தவிர்த்து அஞ்சேல் என்றுமுன் நின்றெமக் கீடேற்ற முதவுவார்.
யாருன்னை யின்றி யம்மா பேர்தங்கு மகிலாண்டடுக்குமதி லூறுபொருட்
பிரிவுஞ் சராசர மெனும் பேருயிர்களுந்தந்து பாதுகாத் தருளுமுன்
பெருமையாம் பாட வெளிதோ நார்தங்கு சற்குணத் தொண்டருய வென்று நயி
நைகரி னண்னு முமையே நாகமணி யும்பரமர் பாகமுறு மேகசிவ
நாக ஈஸ்வரி யம்மையே. 0.
 

பூத்த தென்னிலங்கை தன்னின் மேவும் திரைபூத்த கடனயினை நகரில் வாழும்
இசைபூத்த செந்தமிழா லூஞ்சல் பாட பூத்த சடைமெளலி யரணு ரீன்ற
அருள்பூத்த வறிபிச்சை தொழிலென் ருேதும் பூத்த மும்மைமத களிற்றின் பாதம் கரம்பூத்த மலர்கொண்டே கருதி வாழ்வாம்.
பலனுேங்கு செம்பவளங் கால்க ளாக
பகர்வைர ரத்தினமே விட்ட மாக குலனேங்கு வெண்டரளங் கயிற தாக கூறரிய மாணிக்கம் பலகை யாக வலனுேங்கு மூஞ்சன்மிசை யினிது வைகி
மலர்மகளுங் கலைமகளும் வடந்தொட் டாட்ட நலனுேங்கு திருநயினை நகரில் வாழும்
2 .மேஸ்வரியே யாடீ ரூஞ்சல் "ע97Hזfפן,
உவகையொடு மலரயன்மால் கரங்கள் கூப்ப ஒசைமணி வாயிலட்ட பாலர் காப்ப தவமறையோர் துரபமொடு தீபங் காட்ட
தாழ்ந்துகண நாதர்புகழ் மாலை சூட்ட அவிரிடப துவசமகல் வானந் தூர்ப்ப
அனந்தன்முத லுரகர்செய செயவென் ருர்ப்பு நவையறுசீர் நயினைநகர் தன்னில் வாழும்
நாகபர மேஸ்வரியே யாடீ ரூஞ்சல், 6

Page 41
68 -
கொம்பினெடு துடிமுரசு முழவ மோங்க
குடைகளுட னுலவட்டம் குழுமி யோங்க தும்புருநா ரதர்வேத கீதம் பாட
தொண்டரக மகிழ்ந்துசுக வாழ்வு கூட வம்பவிழு மலர்மாரி யமரர் பெய்ய
வரமுனிவ ரடிபரவி யாசி செய்ய நம்புமடி யவர்க்கருளி நயினை வாழும்
நாகபர மேஸ்வரியே யாடீ ரூஞ்சல், 螺 அன்னநடை பயிராணி கவிகை தாங்க
அயிலைநிகர் விழியரம்பை களாசி யேந்த வன்னமுலை யுருவசிவெண் கவரி வீச
மணிகொள்கிரு தாசிகமண் டலங்கைக் கொள்ள மின்னிடைமே ன கைவெளிலே பாகு நல்க
வியந்துதிலோத் தமைவிகித நடனஞ் செய்ய நன்னயஞ்சேர் நயினை நகர் தன்னில் வாழும் நாகபர மேஸ்வரியே யாடீ ரூஞ்சல், மதிமுகமா லினிபணிநீர் வாசந் தூவ
மயிலைநிகர் சுகேசைமல ரடிக ணிவ விதிமுறைமங் கலைமுதலோ ராலஞ் சுற்ற
வேதியர்தம் மகளிர்சுப வசனஞ் சாற்ற அதிவினய மொடுசுமனை யாடி காட்ட
அன்பினநிந் திதைககந்த வருக்க நீட்ட நதியுலவு நயினைநகர் தன்னில் வாழும்
நாகபர மேஸ்வரியே யாடீ ரூஞ்சல், 徐 கோலமுறு வைரமணிச் சுட்டி யாட
குலவுமெழின் மாணிக்கத் தோடு மாட வாலியமுத் தாரமொடு மதாணி யாட
வயங்குவளை தொடியுடனங் கதமு மாட சாலவொளிர் பாடகமுஞ் சிலம்பு மாட
தண்டையொடு பாதசரந் தயங்கி யாட ஞாலமுக மெனவிளங்கு நயினை வாழும்
நாகபர மேஸ்வரியே யாடீ ரூஞ்சல், முந்துதவ மாதர்து தி கூறி யாட
முகமனெடு புனன்மாதர் முன்னின் ருட வந்தனையோ டுரகமட மாத ராட
வரையிலுறை மாதரடி வணங்கி யாட கந்தருவ மாதரிசை பாடி யாட
கருதரிய புவிமாதர் களிகொண் டாட நந்துதவழ் கழனிசெறி நயினை வாழும்
நாகபர மேஸ்வரியே யரடி ரூஞ்சல்,
 

ஆரணியே யம்பிகையே யாடீ ரூஞ்சல்
அந்தரியே செளந்தரியே யாடீ ரூஞ்சல் பூரணியே புங்கவியே யாடீ ரூஞ்சல்
பராதனியே புராந்தகியே யாடீ ரூஞ்சல் காரணியே காருணியே யாடீ ரூஞ்சல்
கன்னிகையே கண்மணியே யாடீ ரூஞ்சல் நாரணியே நாயகியே யாடீ ரூஞ்சல்
நாகபர மேஸ்வரியே யாடீ ரூஞ்சல், 9
பனிவரையில் வருமுமையே பரையே போற்றி
பகருமற மெண்ணுன்கும் வளர்த்தாய் போற்றி தனிமுதலாம் பரமனிடத் தவளே போற்றி
தணப்பில் பல சக்திவடி வானுய் போற்றி இனிமைமிகு மாரமுதே கனியே போற்றி
எவ்வுயிர்க்குந் தாயாகி இருந்தாய் போற்றி நனிகுலவு நயினைநகர் தன்னில் வாழும்
நாகபர மேஸ்வரியே யாடீ ரூஞ்சல், 0.
ஆவாழி யந்தனரோ டரசர் வாழி
அரியதவ மகநிகமா கமமும் வாழி தாவில்குல மங்கையர்கள் கற்பும் வாழி
சைவசம யமுமறமும் தழைத்து வாழி பாவார்வெண் ணிறுபஞ்சாட் சரமும் வாழி பாடியவூஞ் சற்றமிழும் பாரில் வாழி நாவலர்கள் புகழ்நயினை நகரும் வாழி நாகபர மேஸ்வரியும் வாழி வாழி.
- பூநீலழுநீ ம. அமரசிங்கப் புலவர்
濠
இக்காலத்தில் பாடப்படும் பாடல்
சீர்வாழி சிவ சமயம் வா
தேவாதி தேவுமெல்லாத் தேவும் வாழி பார்வாழி மதிதொறுமும் மாரி வாழி
பசுக்குலம்வே தியர்தருமம் பலவும் வாழி நீர்வாழி நயினைநக ருறைவோர் வாழி
நீடாயு ளன்னசொர்ணம் நிறைந்து வாழி ஏர்வாழி இராமசந்திர மகிபன் வாழி
இனம் வாழி இவ்வூஞ்சல் வாழி மாதோ,

Page 42

NA
ငွှိပြီဖြဲဂ္ဂိင္ငံမ္ဗ်
ಇ>
VV