கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பாலர் கல்வி

Page 1

ர்சு
才 | 《
S< s 渲ވަހަޙީ

Page 2

இாது நன நூலகம்
ஆளுவோண்ஸ்
கலாநிதி சபா, ஜெயராசா முது நிலை விரிவுரையாளர் கல்வியியல் துறை ாழ்பாணப் பல்கலைக் கழகம்
, كلما حاشا . エ944 */
* '്
யாழ்ப்பாண கிறிஸ்தவ ஒன்றியம்

Page 3
。 Title Palar | Kalvi
Author Dr. Saba Jayarajah, M.A. (Ed. Ph.D. Address . ܐ ܕ Department of Education
University of Jaffna,
| Subject : New Approches to Child Education
Edition Frs - 1997. Language Tami
Publisher Jaffna Christian Union
Copν Right Author
* ISBN 955 643 000 8.
Printer 器 Earlaai Printing Works,
Kantharmadam, Jafna, Sri Lanka.
Price: Rs. 50/-
 
 
 
 

நூலாசிரியர் உரை
பாலர் கல்விக்குரிய ஆய்வு பூர்வமான நூலாக்கம் இன்றைய காலகட்டத்தின் சமூ கத் தேவையாகவும், அறிவுத் தேவையாக வும் முகிழ்ந்தெழுந்துள்ளது. நவீன உரை ஆய்வுகளுடனும், எமது சூழலிலே முகிழ்த்துள்ள புதுமைகளுடனும் ஆய்வாளர் களையும், ஆசிரியர்களையும் சங்கமிக்கச் செய்யும் நடவடிக்கையாக இந்நூலாக்கம் இடம்பெறுகின்றது.
புதிய தேவைகளைக்கருதிப் புதிய சொற்கள் பல இந்நூலிலே அறிமுகம் செய்யப்பெற் றுள்ளன. விரிந்த கருத்துக்களுடன் புதிய சொற்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை யால் எளிதில் புரிந்து கொள்ளப்படத்தக்க தாக இருக்கும். இது ஓர் ஆழ்ந்த வாசிப்புநூல் ஆசிரியர் gór வாண்மைவிருத்திக்கு ஏற்றவாறு திட்டமிட்டு ஆக்கப்பெற்றுள்ளது. குழந்தை களைப் பராமரிக்கும் பணிகளில் ஈடுபட் டுள்ளோருக்கும் பயனுள்ள கற்பித்தவியல் நுண்முறைகள் இந்நூலில் இடம்பெறுகின்
Çá Ï *、臀
。

Page 4
தென்னிந்தியத் திருச்சபைப் பேராயர் அதி வண. கலாநிதி எஸ். ஜெப நேசன்
அவர்கள் வழங்கிய
முன்னுரை
கலாநிதி சபா ஜெயராசா அவர்கள் எழுதிய பாலரி கல்வி' நூல் வடிவம் பெற்று வெளிவருவதனைக் கண்டு பெருமகிழ்ச்சி
அடைந்தேன்.
பாலரி கல்வியின் அவசியத்தை ஃப்ரொய்ட் உட்படக் கல்விச் சிந்தனையாளர்கள் அனைவருமே வலியுறுத்தியுள்ளனர். ஒரு பிள்ளையினுடைய சுயவுணர்வற்ற மனம் ஐந்து வயதிற்குள்ளேயே பூரணமடைந்துவிடுகின்றது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும். குழந்தைப் பராயத்தில் தோன்றும் ஏக்கம், பயம், ஒஞ்சலம், பாதுகாப்பின்மை, கசப்பு எல்லாம் சேர்ந்துதான் ஆளு மையை உருவாக்குகின்றன. "குழந்தையைப் பயமுறுத்தாதே" என்று திரும்பத் திரும்பச் சொன்னாலும் பழமைவாதிகளுக்குப் புரிவதில்லை. துரதிர்ஷ்டவசமாக இன்று நமது நாட்டில் பாலர் கல்வி தனியார்வசம் விடப்பட்டுள்ளது.
பாலர் பாடசாலை ஆசிரியர்களது பயிற்சி மிகக் குறை வாகவே நடைபெற்றுவருகின்றது. நாட்டின் விலைமதிக்கமுடி யாத சொத்து நன்கு பயிற்சிபெறாத ஆசிரியைகளினால் பாழடிக் கப்படுகின்றது. லெஸ்லி வெதர்ஹெட் என்னும் அறிஞர் தமக்கு முதுமை நெருங்கியபொழுதுங் கூட ஒரு பள்ளி ஆசிரியை தன் னைத் தவறாகத் தண்டித்ததை மறக்கமுடியாமல் இருக்கின்றது என்று எழுதியுள்ளார்.
பாலரி கல்வியின் அவசியத்தினை நமது நாட்டில் நன்கு உணர்ந்தவர்களில் கலாநிதி சபா ஜெயராசா அவர்களும் ஒருவர் இவரை மாணவப் பருவத்திலிருந்தே நான் அறிவேன். கல்வித் தத்துவத்திலும் உளவியலிலும் பரந்த அறிவு கொண்டவர் மாண

வர்களினாலே மிகவும் விரும்பப்படும் ஆசிரியர் திறன் வளர்ச்சி, உள நிரற்கோலம் அறிகையும் சிக்கலாக்கலும், அசைவுக் கல்வி முதலிய ஆழமான விடயங்களையெல்லாம் கற்றோரும் மற்றோரு மாகிய யாவரும் புரியும்வண்ணம் எழுதியுள்ளார். கற்பித்தல் முறைகளைப் பற்றிய அதிகாரங்கள் தெளிவாகவுள்ளன. பாலரி பாடசாலை ஆசிரியர்களுக்கென எழுதியமையால் ஆசிரியர் தமது இயல்பான கடின தடையைத் தவிர்த்திருக்கின்றார். இது போற் நற்குரியது. -
பயன்மிக்க இந்நூலை யாழ்ப்பாண கிறிஸ்தவ ஒன்றியம் பிரசுரம் செய்ய முன்வந்துள்ளது. நமது பிரதேசங்களிலுள்ள பாலர் பாடசாலைக்ளுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.
பாலர் பாடசாலை ஆசிரியைகளின் கைகளிற் கட்டாயம் தவளவேண்டிய நூல் "பாலர் கல்வி"
எஸ். ஜெபிநேசன் பேராயர், தென்னிந்திய திருச்சபை, வட்டுக்கோட்டை, யாழ், ஆதீனம்,

Page 5
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை அவர்கள் வழங்கிய
சிறப்புரை
எமது நாட்டின் பாலர் கல்வி நன்கு ஒழுங்குபடுத்தப்படாமல் இருத்தலும், பா லர் பள்ளிக்கூடங்களுக்கிடையே சுற்பித்தல் திலைத் தர வேறுபாடுகள் பெருமளவிலே காணப்படுதலும் கல்வி யியல் ஆவணங்களிலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. பா லர் பள்ளிக் கூடங்கள் தனியார் முகவர்களினாலும், தொண்டு நிறுவனங்களாலும் நடத்தப்பட்டு வருகின்றவேளை, அவற்றின் கலைத்திட்டத்தைப் பகுப்பாய்வு செய்யும்பொழுது முதற்கண் வினைத்திறன் மிக்க ஆசிரியர் பயிற்சியிலே கவனம் செலுத்தவேண் டிய தேவையைச் சுட்டிக் காட்டவேண்டியுள்ளது.
பாலர் கல்வி தொடர்பான நவீன கருத்துக்களையும் கற்பித் தல் முறையியல்களையும் உள்ளடக்கிய நூலாக்கம் ஆசிரிய வாண்மை மேம்பாட்டுக்கு அடிப்படையானதாகும். இந்த ப் பணியை எமது பல்கலைக்கழகத்தின் கல்வியியல்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி சபா ஜெயராசா நன்கு நிறைவேற்றி வைத்துள்ளார். தமிழ்மொழி மூலமான பாலர் கல்வி ஆசிரியர் களுக்கு இந்நூல் பரந்த தகவல்களையும், நவீன ஆய்வுகளின் முடிவுகளையும் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது. பாலர் கல்வி தொடர்பான கருத்தியல்கள், குழந்தை உளவியல், கற்பித்தலி யல், கற்பித்தற் பொருளாக்கம், கலைத்திட்டம், ஆசிரியர் பயிற்சி போன்ற பல்வேறு துறைகளை உள்ளடக்கிய அகல்விரி ஆக்க மாக இந்நூல் அமைந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் யாழ். கிறிஸ்தவ ஒன்றியம் இவ்வாறான நூல் வெளியீட்டுப் பணிகளில் முனைப்புடன் செய லாற்றுதல் மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகின்றது.
பேராசிரியர் பொ. பாலசந்தரம்பிள்ளை
துணைவேந்தர் அலுவலகம், யாழ்ப்பாணப் பல்கலைகழகம், 27.0997. :

யாழ் மாவட்ட அரச ση ή υφίν நிறுவனங்களின் இணையத்தின் தலைவர் சு. பரமநாதன்
அவர்கள் வழங்கிய
அணிந்துரை
"இளமையிற் கல்வி சிலையில் எழுத்து" பிறக்கும்பொழுதே நாம் கற்க ஆரம்பிக்கின்றோம். இளம் வயதிலேயே சுய கட்டுப்பாடு, சுய நம்பிக்கை என்பன விருத்தி யடைகின்றன. இவற்றை ஆரம்பத்தில் பெறும் குழந்தைகள் சமு தாயத்திற்கு பாரிய நன்மைகளைச் செய்கின்றன. சரியான வழி காட்டல் மூளையை அபிவிருத்தியடையச் செய்கின்றது. இவற் றைக் கருத்திற்கொண்டுதான் கற்றறிவையும் அனுபவத்தையும் பாலர் கல்வி என்ற நூல் வடிவில் பிள்ளைக்கனி அமுதாக வடித் துத் தந்திருக்கின்றார்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்வி சார் சிரேஷ்டவிரிவுரையாளர் கலாநிதி சபா ஜெயராசா அவர்கள். மகா கவிஞர் பாரதியின் ஓடி விளையாடு பாப்பா" என்ற பாடல் அமைப்பில் பாலர் கல்வி அமையவேண்டும் என்றும், கல்வியின் அத்திவாரம் திடமாக இருப்பதன் அவசியத்தையும் விளக்குகிறார். அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் வேண்டுதற் கமைய இதனைப் புத்தக வடிவில் வெளியிடுவதற்கு அவர் தன் முழு மனமுவந்த சம்மதத்தைத் தெரிவித்தார். இணையத்தின் சார்பில் நன்றியினைத் தெரிவிப்பதுடன் கலாநிதி சபா ஜெய ராசா அவர்களின் அறிவு விரிவாக்கம் தமிழ் உலகிற்கு ஒர் ஆல் விருட்சம்போல் வளரவேண்டுமென்று எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
மேலும் இணையத்தின் வேண்டுதலைச் செவிமடுத்து இந் நூலை பிரசுரிப்பதற்கு முன்வந்த யாழ். கிறிஸ்தவ சபைக்கும் அயராது ஒத்துழைப்புத் தந்த வணக்கத்துக்குரிய எஸ். பி. நேச குமார் அவர்களுக்கும் எங்கள் நன்றிகள்.
இந்நூலினைக் குறுகிய காலத்தில் சிறந்தமுறையில் அச்சிட்டு உதவிய ஏழாலை மஹாத்மா அச்சகத்துக்கும் எங்கள் நன்றிகள், "கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக" குறள்,
97.09. சு. பிரமநாதன் (தலைவர்)

Page 6
யாழ். பரியோவான் கல்லூரி அதிபர் திரு. சி. தனபாலன் அவர்கள் வழங்கிய
அணிந்துரை
"விளையும் பயிரை முளையில் தெரியும்", 'வளரும் பிள்ளையை மண் விளையாட்டில் தெரியும்"
இவை எம் முன்னோரின் அனுபவ மொழிகள்
அம்மொழிகள் இன்றைய எமது கல்விச் சிந்தனையாளர்களின் ஆய்வுகளுக்குரிய கருவூலங்கள் என்றால் மிகையாகாது.
காரணம் விளையும் பயிர், வளரும் பிள்ளை இச்சொற் றொடர்கள் இன்று நாம் கருதும் பாலர் பிரிவைச் சுட்டி நிற் ைேவ என்பது புலப்படும். கல்விச் சிந்தனையாளர்கள் பருவ அடிப்படையில் முன் பிள்ளைப் பருவத்தினரைப் பாலர் பருவத் துக்குள் அடக்குவர். இப்பருவக் கல்விதான் ஒரு பிள்ளையின் எதிர்கால அடித்தளமும், அத்திவாரமுமாகும்.
ஒரு நல்ல முளை பிறப்பால் வலுவுடையதாயினும் அதன் நிலம் சூழல் என்ற புக்கக் காரணிகள் ஏற்புடையதாக அமையா விடின் முளையிலேயே கருகியோ அன்றி அழுகியோ உரியபயனைத் தராது விடலாம். இது போன்றதுதான் பாலர் பருவமும், பாலர் பருவத்தில் அவர்களுக்கு உரிய முறையில் கல்வி புகட்டப்பட வில்லையென்றால் அப்பருவ நாற்றுக்களாகிய பாலர்களும் நல்ல
எதிர்காலமின்றிக் கருகவும் அழியவும் நேரிடும்.
ஆதலால் இப்பருவத்தினர்க்குக் கல்வி புகட்ட முன்னிற்கும் ஆசிரியர்களும், அத்துறை சார்ந்தவர்களும் வகிக்கும் பொறுப்பும் கடனும் உன்னதமானவை: உயர்வானவை. அத்தகையோர்க்கு இப்பாலர் பருவத்தினரின் புலன் உணர்ச்சிகளை நன்கு புரிந்து

கொள்ளும் பக்குவம் வேண்டும். அத்தகைய பக்குவத்தை எல் லோராலும் இயல்பாகப் பெற்றுவிடமுடியாது. ஆதலால் பலருக்கு நல்ல வழிகாட்டலும், வழிகோலலும் வேண்டும்.
அத்தகையவர்களுக்கான ஒரு நல்ல ஆக்கப்பணியே கலாநிதி சபா ஜெயராசா அவர்களது பாலர் கல்வி நூலாகும்.
ஆசிரியர் அவர்கள், மேலைத் தேசக் கீழைத்தேசக் $ଇଁ) କୋର୍ଡ଼: சிந்தனைகளில் நல்ல தெளிவு உள்ளவர் என்பதால், இக்கைந்நூல் ஒரு ஒப்பியல் வழியில் உருவம் பெற்றுள்ளதால் எமது சூழலுக் கேற்ற பாலர் பருவத்தினர்க்குக் கல்வி புகட்டியே நிற்கும் துறை யினர்க்கு ஒரு நல்ல வழி நூலாகும்.
இத்தகைய ஒரு நன்னூலை எமது பாலர் கல்வியின் மேம் பாடு கருதி Lrgo. கிறிஸ்தவ ஒன்றியம் பிரசுரித்து நிற்பது கல்வி உலகத்தின் பாராட்டிற்கு உரிய ஒன்றாகும். இது போன்ற நன் முயற்சி எமது கல்வி உலகில் மேலும் வளர வாழ்த்தி ಇತ್ತಿತ್ಲಿ ಇàLಧಿ கின்றேன்.
சி. தனபாலன் 9θυή, αυτώς பரியோவான் கல்லூரி,

Page 7
நன்றி நவிலல்
இந்நூலாக்கத்துக்குப் பல்வேறு வழிகளிலும் துணைபுரிந்த பின்வருவோருக்கு
*
20. GTI TŘIGGófj55 நன்றி
βυσσό ή ανή βλμα , υπουα, ό3 σώίθείτσώδη βυρση βή μυή ܙܟܐ சண்முகதாஸ் பேராசிரியர் வ. ஆறுமுகம் வணபிதா எஸ். பி. நேசகுமார் யாழ்ப்பாண கிறிஸ்தவ ஒன்றியம்
யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின்
இணையம்
βυσσιανή 3ου η ββ στου. 6ι βωβρίσών மஹாத்மா அச்சகத்தினர். திரு. எஸ். தனபாலன்
திரு. சு. பரமநாதன்
- நூலாசிரியர்

பொருளடக்கம்
2. புலன் தழுவிய கற்றல் 6 3. விளங்கும் திறன் வளர்ச்சி O 4. உள நிரற் கோலம் 2 5. அறிகையும் சிக்கலாக்கலுமி 9 6. அசைவுக் கல்வி 26 7. பாலர் கல்வியில் இசையாக்கல் 3. 8. சிந்தனையும் காரணங் காணலும் 35 9. பேச்சுத் திறன் 37 10. மனவெழுச்சி நடத்தை 40 11. பாலர் கதைகள் 43 12. நகையங்கள் 48
13. விளையாட்டும் பொருளாக்கமும் 54 14. வாசிப்பும் எழுத்தும் 56
15. எழுத்துத் திறன் 58 16: அறிவுக் கையளிப்பில் 60 17. மலர் அலங்காரம் 65 18. சடங்குகளும் மந்திரங்களும் கற்பித்தலும் 74 19. கலை வடிவமாகவும் கற்பித்தல்
வடிவமாகவும் முகமூடிகள் 78
20. பாலர் கவிதைகள் 82 21. கற்பித்தல் வடிவமாக விடுகதைகள் 88 22. சமயக் கல்வியும் அறக்கல்வியும் 93 23. அமிழ் கலைகள் 96 24. ஆளுமை O2 25. எறிக்சன் உருவாக்கிய கோட்பாடு 105
26. சமூகமயமாக்கல் 08 27. ஆற்றல்களை இனங்காணும் தேர்வுகள் 112 28. பாலர் கல்வி ஆசிரியர் பயிற்சி 115 29. பிரயோகக் கல்வி உளவியல் 9

Page 8

பாலர் கல்வி
உற்பத்தி வளங்களை மீள் உற்பத்தி செய்த பொழுது தொல்குடிமக்கள் பெருமிதம் அடைந் தனர். இந்தக் கண்ணோட்டத்திலேதான் வி ல ங் கு கள் தமது குட்டிகளைப் பராமரிப்பதற்கும், மனிதர் தமது குழந்தைகளைப் பராமரிப்பதற்குமிடையே வேறுபாடுகள் காண்ப்படுகின்றன . கு ழ ந்  ைத களை விளங்கிக் கொள்ளல் வாயிலாகத் தம்மை விளங்கிக் கொள்ளத் தொல் குடிமக்கள் முயன்றனர். அதுவே குழந்தைகளின் கல்விக்கு அடித்தளமிட்டது.
பொருளாதார உற்பத்தியில் மனித உடற்பலம் மேலோங்கியமை குழந்தைகள் பற்றிய அணுகுமுறை யிலே நேரடியான செல்வாக்கினை ஏற்படுத்தின. மத் திய கால ஓவியங்களிலும் சிற்பங்களிலும் சிறுவர் கள் வளர்ந்தோரின் உடற்கட்டைக் கொண்டவர் க ளா க வே காட்டப்பட்டனர். சிறுவர்களுக்குரிய தனித்துவமான கல்விமுறைமை பற்றிய சிந்தனை பதினேழாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தீவிரம்பெறத் தொடங் கி ய து. வளர்ந்தோரிலும் வேறுபட்டதும் - தனித்துவம் மிக்கதுமான அணுகு முறைகள் சிறுவர் களுக்கு வேண்டப்படுகின்றன என்ற கருத்தை ஜோன் லொக் (1632 - 1704) முன் வைத்தார். சிறுவர்களை

Page 9
2
வேலைக்கமர்த்துதல் தடுக்கப்படல் வேண்டும் என் பதும், அவர்கள் விரும்பும் விளையாட்டுக்களில் ஈடு பட அனுமதித்தல் வேண்டும் என்பதும் அவரது கருத்துக்களாக அமைந்தன.
தமிழர் தம் கல்விப்பண்பாட்டில் சிறுவர்கள் பற் றிய அணுகுமுறை பிள்ளைத்தமிழ் இலக்கியங்களி புலப்படுத்தப்படுகின்றது. குழந் தை க ளி ன் வளர்ச்சியில் நிகழ்ந்த "படிமுறை” முன்னேற்றங்கள் பற்றிய அறிவு இனப்பட்டமைக்குப் பின்ளைத்தமிழ் இலக்கியங்கள் சான்றாகவுள்ளன.
குழந்தைகள் போபத்தின் ஜின்னமாகவே' பிறக் கின்றார்கள் என்ற கருத்து வலிமை பெற்றிருந்த ஐரோப்பிய சூழலில் ரூசோ (1712 - 1778 ) முன் வைத்த கருத்துக்கள் மாறுபட்டவையாக அமைந் தன. சிறுவர்களின் @päj学甲 நிலைகண்டு கற்பித் தல் வேண்டும் என்பதும், சமூகத்தின் தலையீடுகள் குழந்தைகளை விரக்தியடையச் செய்து விடுகின்றன என்பதும் அவரது கருத்துக்களாக அமைந்தன. குழந்தைகள் சூழலால் உருவாக்கப்படவில்லை சூழ லைக் குழந்தைகள் உருவாக்குகின்றார்கள் என்ற அவரது கருத்து பின் வந்த உளவியலாளர் மீது செல் வரக் கினைப் பதித்தது.
குழந்தைகளுக்கான 6) முன்னெடுப்புக்களில் இபஸ் ரலோஜி (1746 - 1827) மேலும் பங்களிப்புக் களை வழங்கினார். குழந்தைகளின் நடத்தைகளை விளங்கிக் கொள்வதுடன் அவற்றுக்கு மதிப்பளித்தல் வேண்டும் என்பதும் வற்புறுத்தப்பட்டன: தாய்மாரே குழந்தைகளின் முதல் ஆசிரியராக விளங்குகின்றார் தன். குழந்தைகளின் புலன் உணர்வுகள், உற்றுநோக் குமி திறன் முதலியவற்றை வளர்ப்பதில் தாய்மாரே பெரும்பங்கு வகிக்கின்றனர். தாய்மார்களின் இந்தக்

3.
கற்பித்தற்பணி மிகவும் பொறுப்பு வாய்ந்தது என் பதும் அவரது கருத்துக்களாக அமைந்தன.
குழந்தை தொடர்பான வளர்ச்சி வரலாற்று அவ தானிப்புக்களை தமது குழந்தைமகனை ஆதாரமா கக் கொண்டு சார்லஸ் டார்வின் ( 1809 - 1882) நாட் குறிப்பு நூலாக வெளியிட்டார். விலங்குகளில் இருந்து மனிதர் படிமலர்ச்சி கொண்டனர் என்பதும் விலங்கு களுக்கும் மனிதருக்குமிடையே உள்ள இணைப்பைக் குழந்தைகள் புலப்படுத்துகின்றனர் என்பதும் அவ ரால் வலியுறுத்தப்பட்டன. குழந்தைகளின் தவழல், மீன்கள் நீந்துதலைப் புலப்படுத்துகின்றது. அவர் கள் தாவி ஏறுதல் முலையூட்டி விலங்குகளின் அசைவு களைக் காட்டுகின்றன. அவர்களின் விசை நடையும் ஓட்டமும் மனிதர்களின் அ  ைச வு க  ைள விளக்கு கின்றன.
குழந்தைகள் தொடர்பான நவீன கல்வி இயக் கத்தை முன்னெடுத்தவர்களுள் ஸ்ரான்லி ஹோல் (1844-1924) விதந்து குறிப்பிடப்படுகின்றார். நன்கு பயிற்றப்பட்ட ஆசிரியர்களுக்கு வினாக்கொத்துக் களை வழங்கி அவற்றை அடிப்படையாகக் கொண்டு குழந்தைகளின் விருப்பங்கள், பயம், கனவுகள், இயக் கத்திற்ன்கள், தண்டனைகள் பற்றிய உணர்வுகள், வழி பாடு பற்றிய உணர்வுகள், இசை பற்றிய உணர்வுகள் முதலியவற்றை அவர் வெளியிட்டார். அவரது ஆய்வு களிலே அகவயக் கலப்புக்கள் இருந்தாலும் குழந் தைக் கல்வி தொடர்பான ஆய்வுகளுக்குப் புதிய பரிமாணங்களை அவை வழங்கின.
குழந்தைகள், சிறுவர்களுக்கான கல்வியில் சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வுகளின் செல்வாக்குகள் வலிமையான பாதிப்புக்களை ஏற்படுத்துதல் மார்க் ஸியக் கல்வியாளர்களினாற் சுட்டிக்காட்டப்பட்டன.

Page 10
பாலர் கல்வியில் இந்த அணுகுமுறை பல்வேறு
பாதிப்புக்களை ஏற்படுத்தியது. இலம்பாடு கொண்ட சிறுவர்களுக்கும், நுண்மதி வளர்ச்சி குன்றிய சிறுவர் களுக்கும் கல்வி வழங்கவேண்டும் என்ற இயக்கங் கள் மேலோங்குவதற்கு மார்க்ஸிய விசை துணை செய்தது,
உளவளர்ச்சி குறைந்த சிறுவர்களை இனங்காணு வதற்கு பிரான்ஸில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட் டன. இவற்றின் பின்புலத்தில் நுன்மதித் தேர்வினை அமைக்கும் முயற்சியில் அல்பிரெட் பீனே (1857 - 1914) ஈடுபட்டார். நாளாந்த வாழ்க்கையுடன் இணைந் ததுமீ படிப்படியாக சிக்கலடையக்கூடியதுமான நுண் மதித் தே ர் வி  ைன தியோடோர் சிமோனுடன் இணைந்து அவர் உருவாக்கினார். இந்தத் தேர்வு களினூடாக காலவயது? "உளவயது' என்பவற்றை விளக்குவதற்கு அவர்களது ஆய்வுகள் அடித்தளமிட்
60f
உளவளர்ச்சி குறைந்த சிறுவர்களை ஆராய முற்பட்ட மாரியா மொன் ரிசோறி (1870 - 1952 ) அம்மையாரால் பாலர் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பை வழங்க முடிந்தது. மூ ன் று வ ய து தொடக்கம் ஆறு வயது வரையிலான ஏழைச்சிறுவர் களுக்குக் கல்வியை வழங்கும் பொருட்டு அ வர் ரோம் நகரச் சேரிகளிலே பாலர் கல்வி நிலையங் கள் பலவற்றைத் திறந்தார். புலக்காட்சித் திறன் களை வளர்ப்பதன் வாயிலாகவும், உடலியக்கத்திறன் கள், புலன் இயக்கத்திறன்கள் மு த லி ய வ ற்  ைற வளர்ப்பதன் வாயிலாகவும் அனைத்துச் சிறுவர்களுக் கும் கல்வி வழங்கும் ஏற்பாடுகளை அம்மையார் முடிவெடுத்தார்.
மரக்கட்டைகள், விதைகள், நூற்பந்துகள், தடி கள் போன்ற இலகுசாதனங்களைப் பயன்படுத்திச்

5
சிறுவர்க்கான கற்றலையும் கற்பித்தலையும் அவர் ஒழுங்கமைத்தார். சூழலை நன்கு ஒழுங்கமைப்பு தன் வயிலாக சிறுவர்களின் இயல்பான வளர்ச்சியை மேம்படுத்தலாம். குழந்தைகளுக்குப் பொருத்தமான கற்றல் சாதனங்களை ஒழுங்கமைத்துக் கொடுத்த பின்னர் அவர்கள் தாமாகவே செயற்படுமாறு செய்ய வேண்டும் என்பது அம்மையாரின் கருத்து, அக் காலத்தில் இத்தாலியில் நிலவிய மனனம் செய்தல், மீட்டெடுத்தல், இருக்கைகளில் நிலைத்திருத்தல், போன்ற நியமமான கற்பித்தல் முறைகளோடு ஒப் பிடும் பொழுது அம்மையாரின் அணுகுமுறைகள் புரட்சிகரமாக அமைந்தன. பிரச்சினைக்குரிய சிறு வர்களைக் கூடக் கற்றலிலே ஈடுபாடு கொள்ளச் செல் வதற்கு அவரது அணுகுமுறைகள் துணைநின்றன.
தமிழகத்தில் பெருங்கவி பாரதியார் எழுதிய பாடல்கள் சிறுவர் கல்வி தொடர்பான புதிய அணுகு முறைகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தன. விளையாட்டும் கற்றலின் பரிமாணமாக அமைதல் *ஓடி விளையாடு பாப்பா' என்ற அவரது எண்ணக் கருவால் வெளிப்படுகின்றது.
நெகிழ்ச்சியற்ற நியமமான கற்பித்தல் வழங்கப் பெற்ற தமிழகச்சூழலில் 'ஒடி விளையாடு பாப்பா' என்பது மாற்று வகைப்பட்ட கருத்தாக அமைந்தது,
மாரியா மொன்ரி சோறி அம்மையாரது கருத் துக்கள் ஒரு காலகட்டத்தில் முற்போ க்கானவை யாகக் காணப்பட்டாலும், தற்காலத்தில் கூடுதலான திறனாய்வுகளுக்கு முகம் கொடுக்க நேரிடுகின்றது. லோறா ஈ பேர்க் இதனைப் பற்றிய விரிவான ஆய்வுகளை மேற் கொண்டார். பல மொன்ரி சோறி | T. SE AT GOED 6) SE56řT நெசிழ்ச்சியற்ற நடை மு  ைற துளைக் கொண்டுள்ளன என்பதை அவர் நிறுவினார்.

Page 11
6
பாலர்களிடையே விரிவான இடைவினைகள் ஊக்கு விக்கப்படுவதில்லை,அதிக சட்டதிட்டங்கள் பாலர்கள் மீது பிரயோசிக்கப்படுகின்றன என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். அவரது திறனாய்வுகளை பாலர் பாடசாலை ஆசிரியர்கள் விருப்புடன் வரவேற்கின் றனர்.
புலன் தழுவிய கற்றல்
கட்புலன் :
கற்றலை உள்வாங்கும் பலம் பொருந்திய புலன் உறுப்புக்களிற் கண் சிறப்பிடம் பெறும். வெறுமனே ஒரு நிழற்படக் கருவியின் செயல்களை மாத்திரம் கண்கள் புரியவில்லை. அறிகைச் செயல் முறையில் கண்கள் மூளையுடன் இணைந்து செயற்படுகின்றன.
வடிவங்கள் வண்ணங்கள் என்பவை கண்களால் உணரப்படுகின்றன, ஒளியின் நீள அளவுகளினாலே காட்சி தீர்மானிக்கப்படுகிறது. ஒவ்வொரு வண்ணமும் அவற்றுக்குரிய ஒளி நீளங்களைக் கொண்டிருக்கும்.
கட்புலச் செயற்பாடுகள் ஒளியின் செறிவோடு சம்பந்தப்பட்டிருக்கும். முற்றான இருளில் கட்புலச் செயற்பாடு பூச்சியமாக இருக்கும். சிறிதளவு ஒளி பரவத் தொடங்கியவுடன் கட்புலச் செ ய ற் பா டு அரும்பத் தொடங்கிவிடும். கட்புலச் செயற்பாட்டி னைப் பல காரணிகள் பாதிக்கின்றன. ஒரு பொருளின் உடனடிப்பின்னணியின் ஒளிச் செறிவு முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது. மென்பழுப்பு நிறப் பின்புலத்தின்

மீது அமைந்த கரிய எழுத்துக்கள் நல்ல துலக்கமாகத் தெரியும். படிக்கும் அறையின் முழுப்பகுதிகளிலும் ஒளி பரவியிருக்குமாயின் கட்புலச் செயற்பாடு மேம் பாடு கொன்டதாக இருக்கும்.
சிறுவர்களின் கண் அசைவுகள், நிறக்குருடு முத லியவை கட்புலன் தழுவிய கற்றலைப் பாதிக்குத் வாசிக்கும் பொழுது கண்கள் ஒரு தொடர்ச்சியான முறையில் அசைவதில்லை. வேகமான பாய்ச்சலுடன் கண் அசைவுகள் இடம்பெறும். வேகமான பாய்ச் லிடையே ஒரு நுண் செக்கனில் கண் ஒய்வெடுது துக் கொள்ளும். இவை வாசிப்புத் திறனிலே செல்வது கினை ஏற்படுத்தும். ஒரே பார்வையில் உள்வாங் கக் கூடிய எழுத்துக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பொழுது வாசிப்பு வேகமும் வளர்ச்சியடையும்.
செவிப்புலன் :
ஒலியின் செறிவு, அதன் இயக்கவீச்சு, அடிப் படை சுருதி, பேசும் விகிதம் முதலியவை செவிபுலன் தழுவிய கற்றலின் மீது செல்வாக்குச் செலுத்து கின்றன. ஒலி அலைகள் குறிப்பிட்ட அளவு மீடிறன் களையும் செறிவையும் கொண்டுள்ளன. ஒழுங்கற்ற முறையில் இடம் பெறும் பல்வேறு மீடிறன்களை கொண்ட ஒலி அலைகள் ‘இசைவற்றசத்தங்கள்” என்று குறிப்பிடப்படும்.
காதிலுள்ள ஒலிப்பறைகள் மீது ஒலிபடும் பொழுது அதிர்வு ஏற்படுகின்றது. செவிப்பறைகளில் இருந்து உட்காதுக்கு ஒலி கடத்தப்படுகின்றது. அங்கிருந்து உடற்கூற்றியல் செயல் முறைகளினூடாக மூளைக்கு ஒலிசார் உள்ளீடுகள் அனுப்பப்படுகின்றன. மிகவும்

Page 12
3
நுண்ணிதான ஒலிகளைச் செவிகளால் உணரமுடிவ தில்லை. அவ்வாறே அதிஉயர் மீ டி ற ன் க னை க் கொண்ட ஒலிகளும் செவிகளினால் உணரப்படுவ தில்லை. பொதுவாக நிமிடத்துக்கு இருபது தொடக் கம் இருபதாயிரம் மீடிறன்களைக் கொண்ட ஒலி களை சாதாரணமான செவிகளால் உணரமுடியும்.
ஒலிகளின் குறுக்கீடு, ஒலிகளின் இசைவு, இசைவுப் பிறழ்வு, என்பனவும் செவிப்புலன் தழுவிய கற்ற லில் வேறுபடுத்திப் பார்க்கப்பட வேண்டியுள்ளன.
ஒலி எந்தத் திசையிலிருந்து வருகின்றது எவ் வளவு தூரத்திலிருந்து வருகின்றது என்பவை பற் றிய உணர்வும் சிறுவர்களுக்கு முக்கியமானவை,
முகர் புலன்:
காற்றுடன் செறிந்து வரும் மணங்கள் முகர்ந்து அறியப்படுகின்றன. நறுமணம், உப்புமணம், வெறுப்பு மணம், என்றவாறு அடிப்படை மணங்கள் வேறுபடுத் தப்படுகின்றன. மணங்களின் வேறுபாட்டுக்கேற்ப முகரும் செயல் முறையிலும் வேறுபாடுகள் காணப் படும். மு கர்தலுடன் இணைந்து மனவெழுச்சிகள் தூண்டப்படுகின்றன. பொருந்தாத மணங்கள் சிறுவர் களுக்கு வெறுப்பு மட்டுமல்ல பயத்தையும் ஏற்படுத்தி விடுகின்றன. பல்வேறு மணங்களை இனங்காணக் கூடிய பயிற்சிகள் பாலர் பாடசாலைகளில்ே அமைக் கப்பட வேண்டியுள்ளன.
சுவைப்புலன்:
獻
நாவிலுள்ள சுவைக்கலன்களினூடாக சு  ைவ ப் புலன் உணரப்படுகின்றது. உவர்ப்பு, புளிப்பு, இனிப்பு, கசப்பு ஆகியவை அடிப்படைச் சுவைகள் என்று குறிப்பிடப்படும் சுவைப்புலன் சார்ந்த உய்த்துண

9
ருமி பயிற்சி, வேறுபடுத்தும் பயிற்சி, தொடர்புபடுத் துமி பயிற்சி, பழக்கப்படுத்திக் கொள்ளும் பயிற்சி, முதலியவற்றைப் பாலரி கல்வியில் வளர்ந்தெடுத்தல் வே ண் டு மீ முகர்புலனும், சுவைப்புலனும் ஒன் றிணைந்த வகையில் சிறுவர்களால் அனுபவிக்கப் படுகின்றன. சிறுவர் விரும்பாத சத்துள்ள உணவு களுக்கு நறுமணம் ஊட்டி அவற்றிலே விருப்பத்தை ஏற்படுத்தலாம். உணவுப் பொருள் களின் வடிவமைப் பும், விநோதமான பெயர்களும் சிறுவர்களுக்கு உண் ணும் விருப்பத்தை ஏற்படுத்துவதால் அவற்றின் மீதும் கவனம் செலுத்துதல் வேண்டும்.
தோல் உணர்வுகள்
தோல் உணர்வுகள் வழியாகவும் கற்பித்தலை மேற்கொள்ள வேண்டியுள்ளது. தோற்பரப்பு முழு வதுமீ உணர்வுகள் சமமாக இருப்பதில்லை. சில பகுதிகளில் மீயுணர்வு நிலை காணப்படும். எத்தகைய அழுத்த நிலையில் தோல் உணர்வுகள் தூண்டப் படும் என்பதிலும் தோற்பரப்பில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. நாநூனி, உதடுகள், விரல்கள் கைகள் என்பவற்றில் மீயுணர்வு காணப்படும் கால் கள், இடுப்பு முதலியவை ஒப்பீட்டனவிற் குறைந்த அளவு தோல் உணர்வை வெளிப்படுத்தும்,
குத்துமீ பொருள்கள், மென்மையான பொருள் கள், திண்மம், திரவம், களிப்பாங்கான பொருள்கள், சூடு, குளிர், அழுத்தம் முதலியவை தோல் உணர்வு களினால் அறியப்படுகின்றன. இத்துறைகளிலும் சிறுவர்களுக்குக் கற்றல் அனுபவங்களைக் கொடுத் தல் வேண்டும்.

Page 13
விளங்கும் திறன் வளர்ச்சி
திழலுடன் குழந்தைகன் மேற்கொள்ளும் இடை வினைகள் வாயிலாக செயற்பாடுகள் சார்ந்த திர ளமைப்பு ( Action Schema ) மூளையிலே வணர்த் தெடுக்கப்படுகின்றது. தன்மயமாக்கல் தன்மை வாக் கம் என்ற இரு இயக்கப்பாடுகளும் அனுபவங்களை உள்வாங்கிக் கொள்ள உதவுகின்றன,
சொல் சார்ந்த குறியீட்டாக்கத்துடன் விளங்கும் திறன் மேலும் வளர்ச்சியடைகின்றது. ஆனால் குழந்தைகளின் பிரச்சினைகள் சொல் சார்ந்த குறி யீடுகளினால் மட்டும் அணுகப்படுவதில்லை. பாவனை செய்தல் பிரதிநிதித்துவம் செய்தல், முதலியனவும் விளங்கும் திறன் வளர்ச்சியோடு தொடர்புடையதாக இருக்கும்.
ஏற்கனவே உருவாக்கப்பட்ட திரளமைப்பை மீள் வடிவாக்கலுடன் விளங்கும் திறன் தொடர்புடையதாக இருக்கும் என்பது அறிகை உளவியலாளரின் கருத்து. அறிகையில் சொற்களுக்கு அதீத முக்கியத்துவத் தைக் கொடுப்போர் சொற்களின் வழியாகவே குழந்தை தனக்குரிய அனுபவங்களை உள்வாங்கிக் கொள்கின்றதென்றும் மீள் வடிவமைத்துக் கொள் கின்றதென்றும் குறிப்பிடுகின்றனர். "பெரியது" "சிறி

யது" போன்ற எண்ணக்கருக்களை சொல் சார்ந்த முறையிலே குழந்தைகள் உள்வாங்கிக் கொள்ளுகின் றார்கள் என்பதை ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன. இந்த அடிப்படையிலிருந்து மேலும் சொல் சார்ந்த உள்வாங்கல்கள் இடம்பெறுகின்றன. "பெரிய பெட்டி" *சிறிய பெட்டி? "பெரிய நீலநிறப் பெட்டி", "சிறிய பச்சை நிறப்பெட்டி' என்றவாறு உள் வாங்கி விளங் கும் திறன் சொற்கள் வாயிலாக முனைப்புப் பெறு கின்றது. சொற்கள் எண்ணக்கருக்களின் குறியீடு களாக இருப்பதனால் இந்தப்பணி இலகுவாக்கப்படு கின்றன.
குழந்தைகளின் வினங்கும் திறன் உயிர் இரசாயன வியல் அடிப்படையிலும், நரம்பியல் அடிப்படையி லும் விளக்கப்படத்தக்கவை. இவை உள்ளார்ந்த நிலையில் நிகழும் உடற்கூற்றியல் மாற்றங்களாக வுள்ளன.
பொருள்களை வேறுபடுத்திக் காணும் ஆற்றல் குழந்தைப்பருவ விளங்கும் திறனில் முக்கியமாக வற் புறுத்தப்படுகின்றது. வேறுபட்ட வடி வ ங் க னை க் காண்பதால் திரட்டப்படும் அனுபவத் தொகுதி விளங்கும் ஆற்றலை வனப்படுத்துகின்றது. முரண் படும் வடிவங்கள் குழந்தைகளால் விரைந்து உள் வாங்கப்படுகின்றன. சில உதாரணங்கள் வருமாறு.
அ. ಆ''ಆಸ್ಥಿತಿ * திறந்த எழுத்தும்
ஆ. நேர்வடிவமும் தலை கீழ் வடிவமும்
M
இ. நேர்கோடுகளும் வனை கோடுகளும்
L - C)

Page 14
12
பொருள்களின் மேல் அதன் பெயரும் நிறமுமீ பதிந்திருக்கும் பொழுது, குழந்தைகள் அவற்றை இலகுவிலே விளங்கிக் கொள்கின்றனர்,
உருவம், பின்புலம் என்பவற்றுக்கான தொடர் புகளையும், வேறுபாடுகளையும் தெரிய வைத்தல் குழந்தைப் பருவத்து விளங்கும் திறனை அதிகரிக்கச் செய்கிறது. இலைகளைப் பார்த்து வரையும் படி குழந்தைகள் கேட்கும் பொழுது, உருவம் பின்புலம் என்பவற்றைப் பிரித்தறியக் கூடிய குழந்தைகள் இலை நரம்புகளை நுட்பமாக வரைந்தார்கள்.
நிறங்களின் செறிவு, முரண்படும் நிறங்கள், நிறங் கள் மீது பெயர் பதித்தல், முதலியவை நிறங்கள் பற்றிய விளங்கும் திறனை அதிகரிக்கச் செய்கின்
றன.
எண்பற்றிய அறிவு விலங்குகளுக்கு இல்லை. சேர்தல், இணைத்தல், திரட்டுதல், பிரித்தல், பகுத் துக்கொடுத்தல் முதலியவை குழந்தைகளிடத்தே எண் பற்றிய எண்ணக் கருவை வளர்க்கத் துணை நிற் கின்றன.
உளநிரற் Gamຄອງ
அறிகை உளவியலில் ஆழ்ந்து ஆராயப்படும் ஒரு புலமாக உளநிரற் கோலம்" அமைகின்றது. கற்றல், அறிவை உள்வாங்கிக்கொள்ளல், துலங்குதல், என்ற செயற்பாடுகள் உளநிரற் கோலத்துடன் (Schemata) இணைந்தவை. புலக்காட்சி கொள்ளல்;

122944 3.
சிந்தித்தல், நடத்தைகளை வெளிப்படுத்தல் முதலிய வற்றின் பொருட்டு வகுத்து ஒழுங்கமைக்கப்பட்ட வடிவமே உள நிரற் கோலம் என்பது வேர்ணனின் கருத்து. உயிர்ப்பும் நெகிழ்ச்சியும் கொண்டதே உன நிரற்கோலம் என்பது வோல் ரேஸ் வழங்கிய முன் மொழிவு. நவீன உளவியல் இத்துறையில் மேலும் விரிவான கண்ணோட்டங்களைச் செலுத்துகின்றது.
மூனைக்குரிய தகவல்கள் புலன் உறுப்புக்கள் வழியாக உள்ளீடு செய்யப்படுகின்றன. வாழ்க்கை மேம்பாட்டுக்கும், வினைத்திறன் வளத்துக்கும் தக வலை உள்வாங்குதலும் மூளையிலே திரட்டி வைத் தலும் துணைசெய்கின்றன. சில தகவல்கள் உட னடிப்பயன் தருபவை. சில நிலைத்து நின்று தொடர் செயற்பாடுகளுக்கு உ த வி செய்பவை. இவை தொடர்ந்து இயக்கமுறும் நிலையில் சமாந்தரமாக, நிலைமாற்றமும் (Transformation) ஏற்படுகின்றது. நிலைமாற்றமே கற்றலின் உன்னதமான செயல்முறை யாகக் கருதப்படுகின்றது.
N22-S-AYANA மூனையானது தன்னியக்கமான தகவல்களை மேற் கொள்ளுவதற்கு, இயக்க நிலையில் உள்ள உளநிரற் கோலம் துணை செய்கின்றது. வேறுபட்ட ஆனால் தொடர்புடைய அனுபவங்களை உளநிரற் கோலம் ஒன்றிணைக்கின்றது. குழந்தை பால் பருகும் செயற் பாட்டினை அடிப்படையாகக்கொண்டு உளநிரற் கோலத்தின் பண்பு எளிமையான முறையிலே விளக் கப்படும். புட்டியிற் பருகுதல், கரண்டியிற் பருகு தல், குவளையிற் பருகுதல் என்றவாறு வேறு பட்ட பருகும் முறைகள் உ என நி ர ற் கோலத் தால் ஒன்றிணைக்கப்பட்டு 9 பருகும் ' செயற் பாடு தன்னியக்கமான முறையிலும், போதுமான வகையிலும் தழுவிக்கொள்ளப்படுகின்றது. வேறு

Page 15
4
பட்ட, ஆனால் தொடர்புடைய பண்புகள் இங்கு ஒன் றிணைக்கப்படுகின்றன.
*உடலியக்க உள நிரற் கோலம்', அறிகை உள நிரற் கோலம்' என்ற இரண்டு கோலங்கள் ஆழ்ந்து நோக்குவதற்குரியவை. மேற்குறித்த பால் பருகும் உடலியக் இச் செயல்முறையோடு இ  ைண நீ த ஒன்றிணைக்கப்பட்ட அசைவுகளின் (pl. C9 60 A0 "உடலியக்க உளநிரற் கோல"த்தோடு தொடர்புடை
LU 359
உயர்நிலையான சிந்தனைத் தொழிற்பாடுகளு டன் இணைந்ததே அறிகை உள நிரற்கோலம், தொடர் புடைய எண்ணக் கருக்களை இணைத்து பிரச்சினை களுக்கும் உளச் சவால்களுக்கும் தீர்வுகாண முற் படும் உளத்தழுவற் செயற்பாடு அறிகை உளநிரற் கோலத்துடன் தொடர்புகொண்டது, முன்ைய கற் றல் அனுபவங்களின் திரண்டெழுந்த வடிவமாக அமையும் அறிகை உள நிரற்கோலம் பின்னைய கற்ற லுக்குரிய தளமாகவும்" உசாத்துணை' யாகவும் அமை கின்றது. உள நிரற் கோலத்தின் இயல்பான தழுவ லுடன் நிகழும் கற்றல், பொருளுடைக் கற்றலாக (Meaningful learning) el GOLDujub.
புதிய கற்றற் பிரச்சினை ஒன்று எதிர்கொள்ளப் படும் பொழுது, பழைய அனுபவங்களில் இருந்து முகிழ்த்த உளநிரற் கோலத்தின் முன் அது வைக்கப் படுகின்றது. புதிய கற்றற் பிரச்சினையைக் கையாள் வதற்கு அந்த நிரற் கோலம் போதுமானதாக இருப் பின் அது நிரம்பிய உளநிரற்கோலம்' என்று குறிப் பிடப்படும். புதிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உளநிரற் கோலம் போதுமானதாக இல்லாவிடின் அது குறைநிலை உளநிரற் கோலம்" என்று விளக் கப்படும், இந்நிலையில் உள நிரற் கோலம் மீள்வடி

5
வமைக்கப்பட வேண்டியுள்ளது. கற்றல், உள நிரற் கோல உன்ன தங்களை நோக்கிய மீள்வடிவமைப்பை மேற்கொள்கின்றது.
உளநிரற்கோலம் எவ்வாறு மேம்பாடு அடைகின் றது என்பதை விளக்க வந்த பியாசே இரண்டு முக் கியமான உளப்பணிகனைக் குறிப்பிடுகின்றார். அவை L. Fr. 660
தன்மயமாக்கல் .يو
ஆ, தன்னமைவாக்கல்
உளநிரலமைப்பை மாற்றாது கற்றலை உள்வாங்கும் செயல்முறை "தன்மயமாக்கல்' என்று குறிப்பிடப் படும். பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண உண நிரலமைப் புப் போதுமானதாக இல்லாதவிடத்து உளநிர லமைப்பை மீள் வடிவமைக்கும் செயல்முறை 'தன் அமைவாக்கல்" என்று விளக்கப்படும். தனது அணு பவம் பொருத்தமான விளைவையோ சரியான முடி வையோ தரமாட்டாது என்று கருதும் பட்சத்தில் உளநிரலமைப்பை மீள் வடிவமைக்க வேண்டியுள்ளது.
காட்சி வடிவான செய்முறை அனுபவங்களிலிரு ந்து சிந்தனை வளர்கின்றது. சமூக gest LTA šesar அனுபவங்களுக்கு மொழிவடிவம் கொடுக்கின்றன. செயலும் சிந்தனையும் இடைவினை கொள்ளுகின் றன. எண்ணக்கரு ஆக்கத்திற்கும் மேம்பாட்டுக்கும் மொழி துணைசெய்கின்றது. உள நிரற்கோலமி மொழி யாலும், எண்ணக்கருக்களினாலும் வளம்படுத்தப் படுகின்றது. மொழி என்பது 'பிரதிநிதித்துவப்படுத் தும்" செயலை மேற்கொள்ளுகின்றது. பிரதிநிதித்து வப்படுத்தல் மூன்று வழிகளில் நிகழ்கின்றதென்பது புறுனரின் கருத்து. அவையாவன:

Page 16
(அ) உடலியக்கவழிப் பிரதிநிதித்துவமீ.
(Enactive representation)
(ஆ) படிமவழிப் பிரதிநிதித்துவம்.
(Iconic representation)
(இ) மொழி வழிப் பிரதிநிதித்துவம் அல்லது குறியீட்டுவழிப் பிரதிநிதித்துவம்
(Symbolic representation)
மேற்கூறிய பிரதிநிதித்துவப்படுத்தல் நடவடிக் கைகள் உள நிரற்கோலத்தை ஆக்குவதற்கும் வளர்ப் பதற்கும் பயன்படுகின்றன. உள நிரற்கோலத்தின் அடிப்படையிலேதான் மேற்கூறிய உளச்செயற்பாடு களும் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் ஆக்கும் பொருளாகவும், ஆக்கப்படும் பொருளாகவும் அது அமைகின்றது.
அறிகைசார் உளநிரற்கோலவிருத்தி 8ந்து படி நிலைகளைக் கொண்டது என்பது கல் பிறின் என்ப வரது ஆய்வுகளின் முடிவு. அவையாவன;
(1) செயற்பணி பற்றிய முன் ஆரம்ப உணர்
வினை ஏற்படுத்தல்,
(2) செயலுக்குரிய பொருள்களைக் கையாளும்
ஆற்றல் பெறல்
(3) செயலைப் பேச்சு மொழிக்குக் கொண்டுவரும்
ஆற்றல் பெறல்.
(4) செயலை a lar 55 or 5 g (5 (Mental Plane)
இடம்மாற்றுதல்.
(5) குறித்த உளச்செயலைப் பாதுகாத்தல்.

7
இவற்றிலிருந்து உண நிரற்கோலம் தொடர்ச்சி யான ஒன்றிணைந்த செயல் முறைகளின் வழியா கவே உருவாகின்றது என்பது தெளிவு.
என்ணக்கரு கற்றல் உளநிரற் கோல ஆக்கத் திற்குத் துணைசெய்கின்றது. எண்ணக்கரு ஆக்கத் தோடு இணையாத கற்பித்தல் பின்னடைவை ஏற் படுத்தும் கற்பித்தலாகின்றது. நேரடியான புலன் அனுபவங்களைக் கொண்டே பாடசாலை மாணவரின் எண்ணக்கருவாக்கத்தினை வளம்படுத்த வேண்டியுள் ளது. நேர் எடுத்துக் காட்டுக்களையும், எதிர் எடுத் துக்காட்டுக்களையும் காட்டுவதன் வா யி லா க எண்ணக்கரு கற்றலை வனம்படுத்த முடியும் என்பது பிளெஸ்னர் முன் வைத்த கருத்து.
எண்ணக்கருக்களைக் கற்பிப்பதற்காக பட்டியல் முறை ஒன்றும் உளவியலாளரால் மு ன் வை க் கப்பட்டது.
உள நிரற் கோலத்தை உருவாக்குதலே கற்பித் தலின் பிரதான செயலாக்கமாகக் கொள்ளவேண்டி யுள்ளது. புலக்காட்சி கொள்ளல், தகவல்களை ஒழுங் அமைத்தல் உள நிரற்கோல த்தைத் தொடர்ந்து விரி வாக்குதல் என்ற செயல்முறைகளில் மீள வலியுறுத் திகளைப் பயன்படுத்தலும் பின்னூட்டிகளைப் பயன் படுத்தலும் சிறப்பிடம் பெறுகின்றன.
உனநிரற்கோலம் பின்வரும் ஒழுங்கமைப்புக்கனைக் கொண்டதாக அமையும்.
(1) நெடுங்கோட்டு ஒழுங்கமைப்பு:
ஒரளவு பொதுவான உள்ளடக்கத்தை அல் லது உருவமைப்பைத் தொ ட ரீ பு படு த் தி

Page 17
8
நிற்றல், நெடுங்கோட்டு ஒழுங்கமைப்பு எனப் LJ (Gib.
(2) கிளைவிடும் ஒழுங்கமைப்பு:
பொதுவான ஒரு மூலகத்திலிருந்து கிளை விட்டு நேரான அல்லது எதிரான பெறுமானங் களுடன் விரிவடைந்து செல்லல் கிளை விடும் ஒழுங்கமைப்பு எனப்படும் ,
(3) பன்முக ஒழுங்கமைப்பு:
பல்வேறு கோணங்களிலும் தளங்களிலும் கருத்துக்களை ஒழுங்குபடுத்தும் நிலையை இது குறிப்பிடும்.
(4) சிக்கல் ஒழுங்கமைப்பு:
உளநிரற்கோலத்தின் உன்னத நிலையாக இது கருதப்படும். புதியவற்றை வடிவமைத் தல், உயர்நிலையான பிரச்சனைகளை விடு விப்பதற்கான ஆற்றல், முதலியவற்றை இது உள்ளடக்கி நிற்கும்,
உளநிரற்கோலம் என்பது கற்றலை நெறிகை (Monitoring) செய்யும் இயல்பையும் கொண்டது. ஒருவர் தன்னைத்தானே இயக்கிக்கொள்வதற்குரிய ஆற்றலை இது வழங்குகின்றது.
உளநிரற்கோலத்தை ஆக்குவதற்கும் வளப்படுத் துவதற்குமான கற்பித்தல் வேலுநிலைக் கற்பித்தல்' என்று குறிப்பிடப்படும். அறிவு ஒரு நிலையிலும், அறிவை உள்வாங்கும் மாணவர் எதிர் நிலையிலும் உள்ளனர் என்ற °துருவப்படும்" அணு கு மு றை யினைத் தற்கால உளவியல் நிலைப்பட்ட கற்பித் தலியல் (Psycholpediagogy) நிராகரித்துவிடுகின்றது.

9
கற்கும் சூழலை ஒழுங்குற அமைக்கும் திறனில் மாணவரும் அறிவும் சங்கமித்து நிற்கும் நிலை தோன்றுவதுடன் வலு நிலைக் கற்பித்தல் உறுதி பெறுகின்றது. வலுநிலைக் கற்பித்தலின் வழியாக "அறிகைச் சிக்கல் அமைப்பாக்கம்" (Cogno - Complexformation) உருவாக்கப்படுகின்றது.
அறிகையு ம் சிக்கலாக்கலும்
புலக்காட்சிச் செயல்முறை, நினைவு, எண்ணக் கருவடிவமைத்தல்,குறியீட்டு வடிவமைத்தல், மொழித் தொடர்பாடல் முதலியவற்றின் ஒன்றிணைந்த செயற் பாடே அறிகைச் செயல்முறை (Cognitive process) என்று கூறப்படும். "அறிகைச் செயல்முறை", அறிகை விருத்தி' ஆகியவற்றிற்கிடையே ஒற்றுமை இருந் தாலும், அவை வேறுபட்ட எண்ணக்கருக்களைக் குறிப் பிடுகின்றன. அறிகைச் செயல்முறையின் வழியாக உள்ளடக்க மேம்பாட்டை ஏற்படுத்தல் அ றி ைே sắcas iš ás í Cognitive Development GT GOT ČLuG IIb.
புலன் பதிவு, நினைவு, தொடர்பாடல், முதலிய அறிகைத் திறன்கள் குழந்தைகளிடத்துக் காணப் பெற்றாலும், அறிகை நடத்தையைப் பொறுத்தவரை வளர்ந்தோருக்கும் குழந்தைகளுக்குமிடையே குறிப் பிடத்தக்க பரிமாண வேறுபாடுகளைக் காணலாம் தனது ஆய்வுகளிலே இந்தப் பரிமாணங்களை அவதா னித்த பியாசே "அறிகைவிருத்தி நிலைக் கட்டங்கள்" பற்றி அறிவுறுத்தலானார்.

Page 18
().
தூண்டி - துலக்கல் இணைப்பு நடத்தைக் கோட் பாடும் அதிலிருந்து படி மலர்ச்சி கொண்ட நவ நடத்தைக் கோட்பாடும் (Neobehaviourism) உள்ளத் தில் நிகழும் அறிகைச் செயல்முறை பற்றி ஆழ்ந்த கவனம் செலுத்தத் தவறிவிடுகின்றன. ஆ ன ல் எண்ணக்கரு ஆக்கம் பற்றிய ஆய்வு, அறிகை உள வியலிற் பரந்த அளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கற்றல் தொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள தகவல் நிரற்படுத்தல் அல்லது அறிவரல் செழுமை (Informa tion Processing) அணுகுமுறை 'மூன்றாவது விசை” என்று கருதப்படுகின்றது. முதலாவது விசையாக நடத்தைக் காட்டுருவும், இரண்டவது விசையாக அறிகைக் காட்டுருவும், மூன்றவது விசையாக அறி வரல் செழுமைக் காட்டுருவும் அமைகின்றன. நியூ வெல், சிமொன் முதலியோர் அறிவர ல் செழுமைக் காட்டுரு பற்றி விரிவான ஆய்வுகளை மேற்கொண்
டனர்.
புலன்கள் வழியாக, நினைவுப் பதிவுகளுக்கு உள்ளிடுகள் தரப்படுகின்றன என்றும் நினைவுப் பதிவுகளே அறிகைத் தொழிற்பாட்டின் நடுநாயக மாக விளங்குகின்றதென்றும் அறிவரல் செழு மைக் காட்டுரு விளங்குகின்றது. அ றி வ ர ல் என்பது குறுங்கால நினைவுப்பதிவுகளாகவோ நீண்ட கால நினைவுப் பதிவுகளாகவோ இருப்புச் செய்யப் படும். ஊக்கலும், தேவையும், அழுத்தங்களும், வினைத்திறன் பொருந்திய கற்பித்தலும் நீண்டகால நினைவுப்பதிவுகளை ஏற்படுத்தும்
அறிவரல் செழுமைப்படுத்தலைச் செயல் வேறு பாடுகளின் அடிப்படையில் ரல்விங் என்பார் இரண்டு
பிரிவாகப் பாகுபடுத்தினார். அவையாவன:

2.
(அ) புனைநிலை நினைவுப்பதிவு (E p is o di c
memory)
(ஆ) மொழிநிலை நினைவுப்பதிவு (Semantic
memory)
காலம் இடைவெளி என்பவற்றுடன் தொடர்புடைய குறித்துரைக்கப்பட்ட அழுத்தம் மிக்க சம்பவங்களின் நினைவுப்பதிவு "புனைநிலை நினைவுப்பதிவு" என்று குறிப்பிடப்படும். பொதுமையாக்கப்பட்ட அறிவர லின் நினைவுப்பதிவு 'மொழிநிலை நினைவுப்பதிவு'
எனப்படுமீ,
ஒவ்வொருவரும் தாம் சூழலுடன் இடைவினை கொண்டு தத்தமக்குரிய அறிகை நிரற் கோலங்கு அன ஏற்படுத்திக் கொள்ளுகின்றனர் என்றும், அத்தகை அறிகைநிரற் கோலங்களைப் பயன்படுத்தி மேலும் மேலும் அறிவைத் திரட்டிக் கொள்கின்றனர் என்றும் அறிகை உளவியலாளர் வ லி யு று த் து கி ன் ற ன ர். ஆனால் அறிவரல் செழுமைக் காட்டுருவை விளக்கு வோர் நிகழ்ச்சித் திட்டம் அல்லது "நிகழ்கை' (Programs) என்ற பொருள்பற்றி இத்தொடர்பிலே குறிப்பிடுகின்றனர். அறிவைத் திரட் டி க் கொ ள் ள உதவும் "நிகழ்கை" என்பது சந்தர்ப்பப் பொருத்த முடையதாகச் செயற்படும். குழந்தைகளும் வளர்ந் தோரும் ஒரே வகையிலேதான் அறிவர ல் செழுமைப் படுத்தலை மேற்கொள்கின்றனர். ஆனால் வளர்த் தோர் மேம்பாடு கொண்ட ஆக்குகையில் வழிப்பட்ட நிகழ்கையைக் கையாளுகின்றனர். இந்த அணுகு முறையில் அறிவர லும், செழுமைப்படுத்தலும், சுயா தீனமான செயற்படுகளாகக் கொள்ளப்படுகின்
060T
இச்சந்தர்ப்பத்தில் பியாசே முன்வைத்த அறிகை தொடர்பான கருத்து, உளவியல் முக்கியத்துவம்

Page 19
22
வாய்ந்ததாகும். அறிவரல் என்பது புறநிலையானது. உள் வாங்கும் உளச் செயல்முறை அகநிலையான து. இந்த இரு நிலைகளுக்குமிடையே நிகழும் இடை வினைகளால் ஏற்படும் "வடிவமைப்பு' (Construction) (discovery) நடவடிக்கையைக் குழந்தை மேற்கொள்ள வில்லை. அகத்துக்கும் புறத்துக்கும் இடையே நிகழும் இடைவினைகளால் மலர்ச்சியடையவும் ஒரு பு து ப் புனைவு அல்லது ஒரு வடிவமைப்பு குழந்தையின் உள்ளத்திலே நிகழ்கின்றது என்பது அ வ ரி ன் கருத்து.
*தெரிந்து கொள்ளும்? ஆற்றல் ஒருவருக்கு இருக் கின்றது என்று கூறும் பொழுது, அவர் பொருத்த மான அறிகை அமைப்பை வடிவமைத்துக் கொண் டார் என்றே கருதப்படும். அறிகை விருத்தியின் பொழுது மேம்பாடு கொண்ட அமைப்புகள் வடிவ மைத்துக்கொள்ளப்படும். அறிகை என்பது உயிரி யற் காரணிகளிலே கால்கோள் கொண்டு, படிமலர்ச்சி அல்லது கூர்ப்பின் வழியாக முன்னெடுக்கப்படும். உடலமைப்பும், தொழிற்பாடும் சூழலுக்குத் துலங்கு வதற்குரிய தளங்களாக அமைகின்றது.
விருத்தி நிலைகளுக்கு ஏற்றவாறு உளக்கோல அமைப்பு மாற்றமடைந்து கொண்டு இருக்கும்" இந்த மாற்றங்கள் "சமநிலைகளின் மாற்றம்” என அறிகை
உளவியலிலே விளக்கப்படும், புதிய ஒழுங்கமைப்பு
ஒன்றினை ஏற்படுத்தும் பொழுது பழைய சமநிலை மாற்றியமைக்கப்படும். இது செயலூக்கம் மிக்க சுய இயக்கத் தொழிற்பாடு என இன்கெல்டர் வி ன க் ás 6GT rriff.
அறிகைக் கோலங்களிற் பின்வரும் பண்புக் கூறுகள் விதந்து குறிப்பிடப்படுகின்றன.

2 3
(அ) உள்ளமைந்த வடிவமைப்பு (ஆ) மாறாத் தொழிற்பாடு (இ) மாறும் தொழிற்பாடு (ஈ) சமநிலை (உ) இடைவினைகள்
உயிரியற் காரணிகள், சுயநெறிப்பாட்டுக் காரணிகள், சமூகக் காரணிகள், கற்றற் காரணிகள், எ ன் நான்கு துறைகளிலும் அறிகை அணுகுமுநை கவ னம் செலுத்துகின்றது. அறிகை விருத்தியானது ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு கட்டத்திற்கு நகர்ந்து செல்லும் பொழுது அது "பண்பு நிலை யான? முன்னேற்றத்தைக் குறிப்பிடும்.
இச்சந்தர்ப்பத்தில் கட்டங்கள் அல்லது படி நிலைகள் (Stages) பற்றிய ஆய்வு முக்கியமா இரு து ஒவ்வொரு படிநிலையிலும் யாதாயினும் ஓர் அறிகை து திறனைக் குழந்தை மிகையாகப் பயன்படுத்தி இன் னொரு படிநிலையில் அந்தத் திறனைக் கைவிட்டு விடுகின்றதா என்ற கேள்வி எழலாம். பின் வந்த ஆய்வுகள் இந்தக் கருத்தை மேலும் தெளிவு படித் தி யுள்ளன.
அறிகை விருத்தி என்பது படிநிலைகளாக ஏற் படாது, சுழல் ஏணி அல்லது சுருள் கை (Spira1 வடிவில் முன்னேற்றப்படும் தொடர்ச்சியாக உயர் கின்றன என்று பின்னைய ஆராய்ச்சிகள் குறிப்பிடு சின்றன.
இந்தத் துறையில் மேலும் ஆய்வுகளை மேற் கொண்ட பிஷர் குறிப்பிட்ட கருத்து வருமாறு:
*சிறப்பார்ந்த திறன்களின் நிரலாக்கப்பட்ட வடி வமைப்பை உருவாக்குதலே அறினை விருத்தி' என்று

Page 20
24
அவர் குறிப்பிட்டார். ஒருவர் வேறு வேறு சந்தர்ப் பங்களில் வேறு செயற்பணிகளுக்கு ஏ ற் ற வ ர று பொருத்தமான திறன்களைப் பயன்படுத்தும் ஆற்ற லுடன் அறிகை தொடர்புடையது என்று இந்த அணு குமுறை விளக்குகின்றது. மேற்குறித்தவாறு வேறு பாடுகளை இனங்காணுதலும் பயன்படுத்துதலும் அறி கையின் பரிமாணங்களாகப் கொள்ளப்படுகின்றன. அதாவது 'கட்டுப்பாட்டு வேறுபாடே (Control Varia tion) அறிகை விருத்திச் செயல் முறையின் அடிப் படைப் பண்பாகக் கொள்ளப்படுகின்றது. குழந்தை நிலையில், புலன் சார் உடலியக்கக் கட்டுப்பாட்டு வேறு பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அவர் க ள் மேலும் வளர்ச்சி யடைய, தமது பிரதிநிதித்துவப்படுத் தலின் வேறுபா டுகளைக் கட்டுப்படுத்துகின்றார்கள். மென்மேலும் வளர்ச்சியடைய தமக்குரிய அருவமான வேறுபாடுகளைக் கட்டுப்படுத்தும் திறன் பொருந் தியவர்களாக மேம்படுகின்றனர்.
அறிகை உளவியலில் நிகழும் நீண்ட ஆய்வு களைத் தொடர்ந்து எங்களால் உருவாக்கப்பட்ட ஒரு புதிய கோட்பாட்டினையும் குறிப்பிடவேண்டி யுள்ளது. அக்கோட்பாடு "அறிகைச் சிக்கல் அமைப் Lui destis' (Cogno - Complex formation) or 68 g) குறிப்பிடப்படும் குழந்தைகள் வளர வளர அறி கைச் சிக்கல் அமைப்பாக்கங்களை ஏ ற் படுத் த வேண்டியுள்ளது. சிக்கலாகும் தொழிற்பாடுகளுடன் இணைந்தே வினைத் திறன் மிக்க ஆக்கங்களும் விளைவுகளும் பெறப்படுகின்றன,
விலங்குகளுடன் ஒப்பிடும் பொழுது ம னி த மூளை அமைப்பு அதிக சிக்கல் பொருந்தியதாகும். கூடிய விளைவுகள் அந்தச் சிக்கல் பொருந்திய அமைப்பின் வழியாகப் பெறப்படுகின்றன. சிக்கல் பொருந்திய ஒழுங்கமைப்புக்கள் பாரிய விளைவுகளை

25
ஏற்படுத்துவதற்குரிய முன் நிபந்தனைகளாகக் கரு தப்படுகின்றன. இந்தப் பண்புகன் பொறிகள் ஆக்கு தலிலும் ஊடுருவி நிற்கின்றன.
கற்றல் என்பது சிக்கல் பொருந்திய சமூகக் காரணிகள் மீது சிக்கல் பொருந்திய செயற்பாடு களை உள்வாங்குவதற்கும், பதித்தலுக்கும், நிலை மாற்றம் செய்வதற்கும், வெளியிடுவதற்கும் உரிய தாகும். அவற்றைச் செவ்வனே ஏற்படுத்த அறி கைச் சிக்கல் அமைப்பாக்கத்தின் வெற்றியிலே கற் றலின் வெற்றி தங்கியுள்ளது.
சிக்கல் பொருந்திய நிலைமைகளுக்குப் பழக்கப் படும் திறமைகளை வகுப்பறைகளில் வள ர்க்க வேண் டியுள்ளது. இன்றைய அறிவுத் தொகுதியானது வேக மாகவும், பன்மு கப்பட்டும், ஆழமாகவும் பெருக் கெடுத்து வருகின்றது. இந்தப்பெரும் வளர்ச்சியை ஒவ்வொருவரும் உள்வாங்குவதற்கு "அறிகைச் சிக் கல் அமைப்பாக்கம்" தழுவிய அணுகுமுறையே பொருத்தமானதாக அமைகின்றது.
அறிவை நுகர்வோராயிருக்கும் மாணவரிடத்துச் "சிக்கல்" பற்றிய உணர்வை ஏற்படுத்த வேண்டியுள் ளது. கிக்கல் பற்றிய உணர்வை ஏற்படுத்துவதற்கான கற்றலும் கற்பித்தலும் இந்தத் தொடர்பில் முக்கியத் துவம் பெறுகின்றன. சிக்கல் பொருந்திய உணர்வு களின் வழியாக முன்னெடுக்கப்படும் கற்றல், ஆழ்ந்த நினைவுப் பதிவுகளாக நீண்டகால நினைவிலே தேக்கி வைக்கப்படக் கூடியதாக இருக்கும்.

Page 21
அசைவுக்
பலர் பாடசாலைகளில் நிகழும் கற்பித்தல் நுட்ப 6ĩlusốlấồ s960) ge 5J để & đồ cổì L1 f}{6} (MOVement Education) உளவியலாளர் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர். உடல் அசைவு உளஅசைவுடன் இணைந்து அறிகை அமைப்பை விரிவாக்குகின்றது.
பாலர்களால் மேற்கொள்ளப்படும் அசைவுகள் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படும். அவை {ut ଜିଲ୍ଲା ୱିt:
(அ) செயல் நெறிப்பிட்ட அசைவுகள்:
ஏறுதல், தள்ளுதல், தாவுதல் சமநிலைப்படுத்தல் முதலியவை செயல் நெறிப்பட்ட அசைவுகளுக்கு உதாரணங்கள் இவற்றிலிருந்து பிற்காலத்தில் தசைநார்வகைத்திறன்கள் மேம்பாடு அடையும்,
(ஆ) உடற்கலத்தையும் வேகத்தையும் ஒன்றிணைத்துச்
செயற்படுத்தும் அசைவுகள்
ஒடுதல், பாய்தல், நீந்துதல், கெந்துதல் முதலி யவை இதற்கு உதாரணங்கள் இவற்றிலிருந்து

27
மெய்வல்லுனர் திறன்களும், விளையாட்டுத் திறன் களும் பிற்காலத்தில் வளர்ச்சியடையும்
(இ) ஒத்திசைவுடன் இணைந்த அசைவுகள்
தாளத்தோடும், இசையோடு இணைந்த அசை வுகள் இதற்கு எடுத்துக் காட்டுகளாக அமையும். இவற்றை அடியொற்றிப் பிற்காலத்தில் நடன மாடும் திறன் படிமலர்ச்சி கொள்ளும்
அசைவுக்கல்வியுடன் இணைந்ததாகவே இரு பிள்ளையின் பேச்சுத்திறன், எழுத்துத் திறன், ஆற் றுகைத் திறன் முல்லியவை வளர்ச்சியடைவதால், பெற் றோரும் ஆசிரியர்களும் இத் துறையிலே கவன குவிப்பை ஏற்படுத்த வேண்டியுள்ளது. இவற்றை மேலும் ஆழ்ந்து பார்க்கும்போது நுண்மதித்திறன், ஆக்கத்திறன் போன்றவற்றின் வளர்ச்சிக்கும் அசை வுக்கல்வி இன்றியமையாது விளங்குவதைக் காணலாம்.
சிறுவர்களுக்கு அசைவுக் கல்வியை உரிய முறை யிலே வழங்குவதன் வாயிலாக தன்னம்பிக்கை, தமது நடத்தைகளைத் தாமே நேர்முகமாக நெறிப்படுத் தக்கூடிய ஆற்றல் முதலியவற்றை வளர்க்கலாம். சிறுவர்களின் மனவெழுச்சிக் கட்டுப்பாடுகளுக்கும் அசைவுக்கல்வி மேலும் துணை செய்கின்றது. பெரிய வர்களைப் பார்த்துச் செய்யும் "திணிப்பு முறைகள்" கைவிடப்பட்டு, அசைவுகளைக் கற்றுக் கொள்ளக் கூடிய துண்டிகளையும் அறைகூவல்களையும் சிறு வர்களுக்கு வழங்குதல் வேண்டும் உள்ளார்ந்த அறிகையையும், அனுபவத் திரளமைப்பையும் வளர்ப் பதற்கு அசைவுக் கல்வி மிகப் பொருத்தமானதாக விளங்குகின்றது.
அசைவுக்கல்வியை வளர்ப்பதற்கு முதற்படியாக ஆசிரியரும் பெற்றோரும் சிறுவர்களை உற்று நோக்

Page 22
28.
கல் வேண்டுமீ. இவ்வகையான உற்று நோக்கலில் நான்கு வகையான வினாக்களுக்கு விடை காணும் தேடல் இடம்பெறல் முக்கியமானது.
ඉංජීolණ්ඩාංකj දී
(அ) அசைவுகளின்போது உடலின் எப்பகுதிகள் கூடு தலாகச் சமீ பந்தப்படுகின்றது என்பதைப் பகுப் பாய்வு செய்தல்,
(ஆ) 'எங்கு" அசைவு ஏற்படுகின்றது என்பதை நோக்கல். மேல்நோக்கிய அசைவு, தரை அளவு சம்பந்தப்படும் அசைவு, என்ற பண்புகள் எங்கு" என்பதோடு இணைந்தது.
(இ) எவ்வாறு அசைவு ஆற்றுகை கொள்ளப்படுகின் றது என்பதை ஆராய்தல் இப்பிரிவில் இடம் பெறும், அசைவின் விசை, மெதுவானதா வேக மானதா என்பதை நோக்குதல், அசைவின் பலத்தை மதிப்பிடுதல், போன்றவை இப்பிரிவில் இடம்பெறும்,
(ஈ) அசைவுகள் எவற்றுடன் சம்பந்தப்படுகின்றன என்பதை இனங் காணல் இப்பிரிவில் இடம் பெறு மீ. இலக்குகளுடன், பொருள் களுடன், நண் பர்களுடன் என்றவாறு அசைவுகளின் சம்பந் தங்கள் விரித்து நோக்கப்படும்.
மேற்கூறிய அவதானிப்புகளை அடிப்படையாகப் வைத்து அசைவுக்கல்வியை ஒழுங்கமைத்தல் வேண் டும்.
(அ) உடலோடு தொடர்புடைய கற்றற் பரப்புக்கள்
பின் வருமாறு இடம்பெறும்
1. முழு உடலையும் பயன்படுத்தும் செயற்
கோலங்கள்.

(勃
(ତୁ)
(F)
2இ
2. தனித்தனி உடல் உறுப்புக்களைப் பயன்படுத்
செயற் கோலங்கள்
ஐ டல் உருவத்தோடு இணைந்த செயற்
வளைந்து நிற்றல், சரிந்து நிற்றல் முதலி
606.
அசைவு இடைவெளிக்கு முதன்மை கொடுக்குமி
கற்றற் பரப்புக்கள் பின்வருமாறு இடம்பெறும் 1. அண்மை நிலை - சேய்ம்ை மநிலை , 2. தள த்தில் நிகழும் ಅ 6) ಆF ೧ ಲೌ ಫೆr 3 இல் வெளி பில் நிகழும் அசைவுகள் 4. தாள் மட்டம் உயர் மட்டம் நடுத் தர மட்டங்
ஆளில் நிகழும் அசைவுகள். 5。@pó °°*叫。 பக்க அசைவு, பின் அசைவு
உடலின் பண்புகளை வலியுறுத்தும் கற்றற் பரப் புக்கள்
தளர்ந்த நிலை, ஓய்வுநிலை ه (6۱ «fr 0 til Go عویس e ، 1 2. மனவெழுச்சிகள் கலந்த அபிசிசி" 3. வேறுபட்ட விதைகள் கலந்த அசைவுகள் 4. பாரங்கள் தூக்கும் அசைவுகள்
B th அசைவுகளோடு இணைந்த கற்) ف نشه يي قر بh Lعg றற் பரப்புக்கள்
, மாணவரும் - மாணவரும்
2. மாண வரும் - அசையும் பொருள் களும் ஐ மாணவரும் - அசையாப் பொருள்களும் 4. மாணவரும் " ஆசிரியரும்
பலர் கல்வி என்பது முற்றிலும் உளவியல் மயப்
படுத்தப்பட்ட,கல்வியாக மாற்றுவகைப்பட்டதும், பன் முகமான செயற்பாடுகளை உள்ளடக்கியதுமான ல்வியாக கட்டியெழுப்பப்பட்டு வருகின்றது. இந்த

Page 23
30
அவதானிப்புக்களை உள்வாங்காது பாரம்பரியமான, நெகிழ்ச்சியற்ற வகுப்பறை மாதிரிகையினை இன்ன மும் இறுகப் பற்றி நிற்றல் பொருத்தமற்றது.
சூழலுடன் இடைவினைகளை விருத்தி செய்தல், சூழலை விளங்கிக்கொள்ளல், சூழலுடன் பொருத்தப் பாடு கொள்ளல் உடற்பலத்தைத் தனியாகவும், கூட் டாகவும் பிரயோகித்தல்,சமூக இசைவாக்கம் போன்ற கல்வியாற்றல்களை வளம்படுத்த அசைவுக் கல்விக்கு பிரதியீடுகள் இல்லை. அசைவுகள் வாயிலாக ஆற் றல்கள் வெளிப்படுகின்றன - நெறிப்படுகின்றன. அனைத்துச் செயற்பாடுகளும் அசைவுகளுடன் தொடர்புடையன. எழுதுதல், பேசுதல், பாடுதல் என்பவை நுண்ணிய அசைவுகளுடன் தொடர்புடை யவை. உடலை இயக்கி உற்பத்தியைப் பெருக்கும் நட வடிக்கைகள் எல்லாவற்றிலும் அசைவுகளே அடிப் படையாகின்றது. அழகியற் செயற்பாடுகள் அனைத் தும் அசைவுகளினாற் பிறப்பிக்கப்படுகின்றன.
உளவியலாளர் மட்டுமன்றி சமூக மானுடவிய லாளரும் அசைவுகள் பற்றி ஆராய்ந்து வருகின்ற னர். பழங்குடி மக்களது சடங்குகளிலும், நடனங்களி லும், செயற்பாடுகளிலும், மரபுகளிலும் அசைவுகள் உன்னிப்பாக அவதானிக்கப்படுதல் குறிப்பிடத்தக் ಲಿಟ್ರಿ!
மேலை நாடுகளில், பாலர் பள்ளிகள் விளையாட் டுப் பள்ளிகள்' (Play Schools) என்ற அமைப்பையும் பெற்று வருகின்றன.

பாலர் கல்வியில் இசையாக்கல்
பலர் கல்வி ஆசிரியர்கள் தமது மாணவர்களின் உள்ளத்தோடு உறவாடும் உளவியற் கடப்பாடு கொண்டவர்கள். இதனை Chid Minders என்ற தொடர் தெளிவுபடுத்தும். இந்த உறவாடலில் ஓசை சிறப்பார்ந்த இடத்தை பெறுகின்றது. அவர்கள் அனு பவங்களேர்டுமி, கற்பனைகளோடும், ஆக்க வெளிப் பாடுகளோடுமி, மனவெழுச்சிகளோடும் 2-6ծT6մ (Ա5671 தற்கு ஓசை நயமும், ஒத்திசைவும், ஒலிக்கோவைக ளும் துணைசெய்கின்றன.
பாலர்கல்வியில் இசையாக்கல், உடல் சார்ந்த ஒலி களில் இருந்து ஆரம்பமாகின்றது. விரல்களால் சுண்டி ஒலி எழுப்புதல், உள்ளங்கைகளைத் தட்டி ஒலி எழுப் புதல், துள்ளி ஒலி எழுப்புதல், முதலியவை உடல் சார் ஒலி எழுப்புதலுக்கு உதாரணங்கள்.
எளிமையான ஒலிகளோடு இணைந்த உடலசை வுகள் ஒலி சார்ந்த ஆக்க வெளிப்பாடுகளுக்கு அடித் தளமிடுதலுடன் உடல்,உள்ளம் மனவெழுச்சி இணைப் புச் சுவடுகளையும் பலப்படுத்தும், ஒலிகளோடு இணைந்து வலம் திரும்புதல், இடம் திரும்புதல், வட்டமிடுதல், வடிவங்களை உருவாக்குதல், எழுத்

Page 24
துக்களை உருவாக்கல் என்றவாறு இணைப்புச் ал 6л08 கள் பலப்படுத்தல் பன்முகப்படும்.
மேற்கூறிய இசையாக்கலோடு இணைந்த முறை யில் "இசைதழுவிய விளையாட்டுக்கள்? முன்னெடுக் கப்படும். இசையாக்கல் இசைகேட்டல் இரண்டும் ஒன்றையொன்று வலுவும் வளமும்படுத்தும், பாலர் கல்வியில் இசைகேட்டல் நன்கு திட்டமிட்டு வளர்க்கப் படல் வேண்டும், 68 வாய் சார்ந்த பன்முக இசையாக் கல்’ இதற்குக் பக்கபலமாக அமையும். இதற்குரிய சில முன்மொழிவுகள் வருமாறு:
13 பறவைகள் போன்ற ஒலிகள் 2. விலங்குகள் போன்ற ஒலிகள் 3. மனிதப்பாங்கு ஒலிகள் - சிரித்தல், அழுதல், இருமுதல், மூசுதல், உரத்த குரல் தாழ்ந்த குரல் முதலியவை 4. வெளிக்கள ஒலிகள் - காற்றொலி, மழைஒலி,
அலை ஒலி, நீர் வீழ்ச்சி ஒலி முதலியவை. 5. உள் ளக ஒலிகள் - தொலைபேசி, மணி ஒலி, தையற்பொறிஒலி, கடிகா ர ஒலி முதலியவை.
பாலர்கல்வியில் இசைவாக்கல் மேலும் வளம்பெற இேசை ட ஓவிய இணைப்புப் பலம்" வேண்டப்படுகின் றது. இசைக்கு ஓவியம் தீட்டும் அனுபவம் உளவியற் Trdse. Aru ores மட்டுமன்றி. உளக்கோல வெளிப் பாடுகளுடன் இணைந்த ஆக்கத்திறன் முயற்சிகளுத் தூண்டுதலாகவும் அமையும்
பாலர் பள்ளிக்கூடங்களில் இசைத்தொழில் நுட் பத்தையும் கட்டியெழுப்பவேண்டியுள்ளது. சூழலிற் கிடைக்கும் பொருள்களைப் பயன்படுத்தி இணக்கல் இசை உபகரணங்கள் செய்யும் திறன்களை மேம் படுத்த வேண்டியுள்ளது. சில முன்னெடுப்புக்கள்
SA COLDAT OM

33
1. வட்ட வடிவமான கொள்கலன்களைப் பயன் படுத்தி சிற்றொலி மேனங்களை உருவாக்கு தல். 2. உலோகத் துண்டுகளைப் பயன்படுத்தி கொங்
கணங்கள் (Gongs) செய்தல், 3. ஒன்றுடன் ஒன்று மோதி ஒலி எழுப்பக்கூடிய
š9,6) do 1576 sir Jingles) 09-tisab. 4. கொள்கலன்களுள் பரல்களை அல்லது உலோ கத் துண்டுகளை இட்டு அசையொலிப்பான் &ao sa (Shakers) of Glej i gosti. 5. மரத் துண்டு, சிறுதடிகள் எலும்புகள் முதலிய வற்றைப் பயன்படுத்தி இரு தன மோதல் உப கரணங்களை (Clappers)ச் செய்தல். 6. துருவல் ஒலிச் சாதனங்களை (Scraper) ஆரை வடிவத்தட்டுக்களில் இருந்து உருவாக்குதல், மேற்கூறியவற்றோடு மேலும் நுண் உபாயங்க னைப் பயன்படுத்தி நுண் ஒலிகளைப் பிறப்பிக்க முடி யும், மென்தகடுகள் மீது காற்றழுத்தத்தைப் பிர யோகித்தல் வாயிலாக எழும் ஒலி, செப்புக் கம்பிக ளைப் பயன்படுத்தி orGքնւյմ), நரம்பு ஒலி, தண்ணிர் குவளைத் தட்டி எழுப்பும் ஒலி, என்றவாறு பல் வேறு இணக்கல் முயற்சிகளைப் பள்ளிக் கூடங்களிலே மேற்கொள்ளலாமீ.
இசையாக்கத்தில் 'ஒலி ஒழுங்குபடுத்தல்" ஒர் அடிப்படை ஆற்றலாகும். யாதாயினும் ஓர் ஒலி அல கைத் தெரிந்தெடுத்து (உதாரணம் ஆ, ஏ, ஓ) அத னைக் குறு ஒலி நீளத்திலிருந்து நீண்ட ஒலி நீளம் வரை ஒலித்துக் காட்டும் பொழுது ஒலி ஒழுங்கு படுத்தல் ஆற்றல்களையும், ஒலி இன்பத்தையும் மாண வர் பெறக்கூடியதாக இருக்கும். (அ) இரண்டு அடுக்கு
।

Page 25
34
(ஆ) மூன்று அடுக்கு
மேற்காட்டியவாறு அடுக்ககுகளைத் தேவைக் கேற்றவாறு விரிவுபடுத்தலாம். படிப்படியாக இரு வேறுபட்ட ஒலி அ ல கு க ளை ஒழுங்கமைத்தல், வேறுபட்ட ஒலி அலகுகளை ஒழுங்கமைத்தல் பயிற்சி களை மாணவரின் முதிர்ச்சி நிலைகளுக்குகேற்ற வாறு வழங்கலாம். படிப்படியாக ஒலி அலகுகளை ஏறு நிரைப்படுத்தல் அதே அலகுகளை இறங்கு நிரைப்படுத்தல் போன்ற பயிற்சிகளை செயல் பூர்வ
மாக அறிமுகப்படுத்தல் பொருத்தமானதாகும்.
இசையனக் கல் உளவியலில் வேறுபட்ட ஒலிகளை ஒன்றிணைக்கும் "ஒலிக்கூடல்" (Sound Collage) ஒரு முக்கியமான அனுபவமாகப் பாலர்கல்வியில் வலி யுறுத்தப்படுகின்றது. வேறுபட்ட மிடற்றொலிகளை ஒன்றிணைத்தல், வேறுபட்ட கருவிகளின் ஒலிகளை ஒன்றிணைத்தல் என்ற அனுபவத்தில் மனவெழுச் சிச் சமநிலைகளுக்கு உயர்ந்தபயிற்சி தரப்படுகின்
"", பள்ளிகளில் நிகழும் இசையாக்கல் அணு பவங்களூடாக “காட்சி வடிவாக்கல்" மீது கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இசையைக் காட்சிக் குறி யீடாக்கும் பொழுது, அவை சிக்கலற்ற வகையில் மிக எளிதாக இருத்தல் வேண்டும். மெதுவாய் இசைத்தல், விரைவாய் இசைத்தல், மெளனித்து நிற்றல் முதலிய ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒவ்வொரு வகையான எளிய குறியீடுகனைப் பயன்படுத்தலாம்.
இசையாக்கலில் இன்னொரு பரிமாணமி இசை விளையாட்டாகும். இசை விளையாட்டுக்கள் சிறுவர் களின் உடலுக்கும், உன்னத்துக்கும், மனவெழுச்சி களுக்கும் சமகாலத்தில் அழகியல் நிலைப்பட்ட பயிற் சியைத் தருவதனால் உளப்பிணிகளை நீக்கவல்ல வலிமையை அங்கே காணமுடியும்.

சிந்தனையும் காரணங்காணலும்
இடத்தை அணுகு முறைகளின் மட்டுப்பாடுகள் தந்த உணர்வுகளின், வினை வாக அறிகை உளவியல் வளர்ச்சியடையத் தொடங்கியது, அறிகைச் செயல் முறை என்பது ஒன்றிணைந்தது. புலக்காட்சி, நினைவு, படிமவாக்கம், மொழி முதலிய அறிகை உள்ளிட்டுக் கூறுகள் இன்றி சிந்தனை நிகழமாட் யே அது
சிந்தனை என்பது மூன்று பரிமாணங்களைக் கொண்டது. சிந்தனை அறிகை பூர்வமானது. அது அறிகைத் தொகுதியின் தொழிற்பாடுகளைக் கையா ளும் ஒரு செயல் முறையாக அமைகின்றது. அது ஒரு பிரச்சினையின் அமைப்பையும் தீர்வையும் நோக்கி நெறிப்பட்டு நிற்கின்றது. அளவையியல் சார்ந்த சிந் தனைக் கோலங்கள் காரணங்காணலாக இடம்பெறும்.
பாலர்களின் சிந்தனை,வளர்ந்தோரின் சிந்தனை யிலும் பார்க்கப் பண்பளவில் வேறுபட்டது அனுப வங்களை உள்ளார்ந்த வகையாகக் கையாளலுடன் சிந்தனைச் செயல்முறை இணைந்துள்ளது. உள் ளார்ந்த அனுபவத்திரன் இடைவினைகள் காரணமா கத் தொடர்ந்து மாறிய வண்ணம் இருக்கும். இந்த

Page 26
36
இடைவெளியே வளர்ந்தோருக்கும் பாலர்களுக்கு மிடையே சிந்தனையைப் பண்பளவில் வேறுபடுத்து கின்றது.
மொழித்திறனோடு சிந்தனையும் காரணங்காண லும் மேலும் மேம்பாடு அடையும். எண்ணக்கருக்க ளைத் திரட்டிக் கொள்ளவும் குறியீட்டு விளக்கங்களை வளர்த்துக் கொள்ளவும் மொழி துணை செய்கின்றது. அனுபவப்படுதல் - உளப்படிமங்களை ஆக்கிக்கொள் ளுதல் - மொழிக்குறியீடுகளாக்குதல் என்ற மூன்று தொழிற்பாடுகளுக்குமிடையே தொடர்புகள் ஊடுருவி நிற்கின்றன.
தகவலின் அளவு அவற்றைக் கையாள கூடிய மூளையின் இயல்பு, உள்ளார்ந்த தந்திரோபாயம் ஆகி 66. இடைவினை கொள்வதன் வாயிலாகவும், வளர்ச்சியடைவதன் வாயிலாகவும் சிந்தனை கார ணங்காணல் ஆகியவை விருத்தியடைகின்றன.
பாரம்பரிய உளவியல், குழந்தைகளை எதனையும் உள்வாங்கக் கூடிய தெறித்தல் அற்ற கொள்கலன் களாகக் கருதியது. ஆனால் நவீன உளவியல் பிரச் சினைகளுக்குதி தாமே முயன்று தொழிற்படும் தெறித் தல் செயற்பாடுகள் கொண்ட தொடர் வளர்ச்சி கொண்ட பொருள்களாகக் குழந்தைகளைக் கருது கின்றது.
நவீன உளவியல் குழந்தைகளின் செயல்முனை நடவடிக்கைகளுக்கு (Strategies) முதன்மை கொடுக் கின்றது. ஆசிரியர்கள் இதனை வளர்ப்பதிலே தான் கூடியளவு கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

பேச்சுத்திறன்
குழந்தைகளின் பேச்சு தொடர்ச்சியான மாற்றத் துக்குரியது. அது தொடர்ந்து திருத்தவும், மீள் வடிவ மைக்கவும் படுகிறது. இடைவினைகளும், கல்வியும், சமூகமயமாக்கலும், குழந்தைகளின் ஆளுமைப் பண்பு களை மேம்படுத்துகின்றன.
பேச்சு என்பது புலன் சார் இயக்க ஆற்றுகை uy Lóór (Perceptual Motor Performance) San Goor jij 53 புலன் சார் உள்ளிடு, பேச்சு வெளியீடு என்ற இரண்டு விளைவுகளுக்கும் இடைப்பட்ட ஒன்றிணைப் புச் செயற்பாடும் மூளையில் நிகழும் இ ய க் க நடவடிக்கைகளும் கட்டுப்பாடுகளும்“பேச்சு? என்ற வெளியீட்டை ஏற்படுத்துகின்றன,
பேச்சுக்குரிய ஒலியை உண்டாக்கும் உடலியக்கச் செயற்பாடு நோய்களினாலும் பிறப்புரிமைக் காரணி களினாலும் தாக்கப்படுதல் உண்டு. தங்களோடு சமமான வயதினரோடு கூடுதலாகப் பழகு மீ சிறுவர்களிலும் பார்க்க வயதுக்கு மூத்தோரிடம் பழகும் குழந்தைகள் கூடிய பேச்சு ஆற்றல் மிக்கோ ராய்க் காணப்படுகின்றனர். தமது வயதினரிடத்துக் குறைந்தளவு சொற்பிரயோகங்களையும், வயதிற்

Page 27
38
கூடியோரிடத்துக் கூடியளவு சொற்பிரயோகங்களை யும் தம்மை அறியாமலே வெளிப்படுத்துகின்றனர்.
பாலர் பள்ளிக்குழந்தைகளின் பேச்சு மொழி சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப வேறுபடுகின்றது. வகுப் பறையினுள் இயங்குதல், திறந்த வெளியில் வினை யாடுதல், உணவருந்துதல், காட்சிகளைப் பார்த்தல் போன்ற சந்தர்ப்பங்களில் சொற் கோலங்களிலும், உச்சரிக்கும் செறிவிலும் வேறுபாடுகள் காணப்படு கின்றன .
குழந்தைகளின் குடும்பப் பின்புலம், சொற்களஞ் சிய விருத்திக்குரிய கவிநிலை, முதலிய வை பேச்சு மொழிக் கோலங்களிலே செல்வாக்குகளை ஏற்படுத்து கின்றன. பருமட்டாக இரண்டு வ ய தி லி ரு ந் து இயக்கம் சார்ந்த வெளிப் பாய்ச்சலுடன் இணைந்த 6. 62 su76ö (Motoric Overflow) (3ueät gp6) GT. Jatந்து செல்லும் தமது செயற்பாடுகளுடனும், செயற் பாடுகளுக்கு முன்னரும் பின்னரும் குறித்த சில தொடர்களை மீன மீளச் சொல்லல் இங்கே குறிப்பிடத் தக்கது. அதீத ஒலி வெளிப்பாடு கொண்ட குழந் தைகள் அதிக பேச்சுத் திறன் கொண்டவர்களாகப் பிற்காலத்தில் வளர்ச்சியடைந்தமை க ண் டறிய ப் பட்டுள்ளது.
உரத்து வெளிப்படுத்திச் சிந்தித்தல் உள்ளார்ந்த முறையிலே சிந்தித்தல் என்றவாறு சிந்தனை இயக் கங்கள் இருவகைப்படும். பாலர் கல்விப் பருவத்தில் நிகழும் சித்தல் பேச்சு மொழி தழுவிய உ ர த் து வெளிப்படுத்தும் சிந்தனையாகப் பெருமளவில் இடம்பெறும். உரத்து வெளிப்படுத்தும் சிந்தனைசமூகத் தொடர்புச் சிந்தனையாக இடம்பெறும். பேசுவோர், கோட்போர் சந்தர்ப்பம் என்ற மூன் றும் கருத்திலே கொள்ளப்படும். குழந்தை வளர வளர

39
உரத்து வெளிப்படுத்திச் சிந்திதிதல் குறைந்து உள் ளார்ந்த முறையிலே சிந்தித்தல் வளர்ச்சியடையும்.
குழந்தை கேட்கும் பேச்சுக்களும் குழந்தை பேசும் பேச்சுக்களும் சிந்தனையின் வெளிப்பாடாக இருத்தல் மட்டுமன்றி, பிறருடன் மேற்கொள்ளும் தொடர்புகளையும் பாதிக்கின்றன.
பேச்சு மேம்படுத்தல் தொடர்பான ஆய்வுமுடிவு களைப் பாலர் பள்ளிக்கூடங்களிலே பயன்படுத்தல்.
.
காட்சிக் கவர்ச்சிகளுடன் சொற்களை அறி முகப்படுத்தல்,
சொற்களையும் பொருள்களையுமீ தொடர்பு படுத்தும் பன்முக அனுபவங்களைத் தருதல்
சொற்களையும் செயற்பாடுகளையும் ஒன் றிணைத்தல்.
இசைக்கவர்ச்சியை parro டுதல்
சுயவெளிப்பாடுகளைத் தூண்டுதல்
கேட்கும் திறன்களை வளர்த்தல்
செயல்களுக்குப் பிரதியீடாகப் பே ச் சை வளர்த்தெடுத்தல்
உச்சரிப்புச் சோம்பலைத் தவிர்த்தல்
சொற்களையும், வசனங்களையும் முழுநிறை வாகப் பெற்றோரும் ஆசிரியரும் பேசுதல்,

Page 28
மனவெழுச்சி நடத்தை
குழந்தைகளின் அனைத்துச் செயற்பாடுகளோ டும் மனவெழுச்சி ஊடுருவி நிற்கும். மனவெழுச்சி என்பது பல்வேறு விதமாக வெளிப்படுத்துகின்றது. அசைவு பேச்சு, உடலியக்கம், துலங்கல் போன்ற பல்வேறு பரிமாணங்களுடன் தொடர்புடையதாக மன வெழுச்சிக் கோலங்களைக் காணலாம்.
குழந்தைகளிடத்துத் தோன்றும்கோபம் பற்றி உளவியலாளர்கள் விரிவாக ஆராய்ந்துள்ளனர். உண வருந்துதல், நிதி திரை செய்தல், பழக்க வழக்கங்கள் முதலியவற்றில் பெற்றோரின் தலையீடுகளும், எதிர் மறை அணுகு முறைகளும் குழந்தைகளின் குருதிச் சுற்றோட்டம், சுவாசம் முதலியவற்றில் கோபத்தின் வெளிப்பாடுகளை உடனடியாகக் ஏற்படுத்தும், கோபம் உளச் சுரப்பித் துலங்கலால் உய்த்தறியப் படத்தக்கது.
கோப வெளிப்பாடு ஆண்பிள்ளைகளிடத்து மிகை யாக இருத்தல் அனைத்துப் பண்பாடுகளிலும் காணப் படும் ஒரு பொதுப் பண்பாக இருக்கின்றது. எதிர்த் தல், வன்மம் காட்டுதல், கவனத்தை ஈர்த்தல், அடம்

龜
பிடித்தல் அழுது ஒலி எழுப்புதல், தாக்க அசைவு களை ஏற்படுத்துதல் முதலியவை கோபம் என்ற மனவெழுச்சியின் வெளிப்பாட்டு நடத்தைகளாகவுள்
உடல் நலம் குன்றியிருக்கும் வேளைகளிலும், வளர்ந்தோர் வீட்டில் கூடுதலாக இருக்கும் சந்தர் பங்களிலும் கோபவெளிப்பாடு மிகையாக இருத்தலை ஆய்வுகள் புலப்படுத்துகின்றன.
கோபத்தை உள் அடக்குதலும், *『Lo鱷率受 வெளிப்படுத்தலும் பின்னர் உளவியற் களை ஏற்படுத்தியுள்ளன.
கோபத்தைப் போன்று குழந்தைகளிடத்து ஏற் படும் பயமும் விரிவாக ஆராயப்பட்டு வருகின்றது. பழக்கமற்ற தூண்டியினால் குழந்தைகளிடத்துப் பயம் ஏற்படுகின்றது. அது உடனடி କ୍ଷୋଣ୍ଡା, ଶof ଶal it $1") பிறக்கும். தனிமையாய்விட்டால், விரைவாக நிகழும் இடம் பெயர்தல், ஆதரவு இழத்தல், இருன் பழக்க மற்ற உருவங்கள், உயரம் கூடிய இடம், பலத்த ஒலி, பாம்பு நோய் முதலியவை பாலர் LTL g-Teທີ 6) ມີລັກ ளைகளிடத்துப் பயத்தை ஏற்படுத்துகின்றன.
பயத்தைப் போன்று பாலர் பாடசாலைக் குழந் தைகளிடத்து உளவியற் சிக்கல்கனை ஏற்படுத்தும் மனவெழுச்சியாக பதகளித்தல் (Anxiety) விளங்கு கின்றது. கோபம், பயம் போன்ற மனவெழுச்சிகளு டன் பதகளித்தல் இணைந்துள்ளதென்பது S_STSilus லாளர்களின் கருத்து பெற்றோர் [$g ୬ ଶିଆ ୱିମ୍ପିଣୀ ରଶ୍ମ தங்கியிருத்தல், புற நெருக்கு வாரங்கள், வேண்டாத போட்டிகளைக் கொண்ட கற்பித்தல், பொருத்தமற்ற ஆசிரியர் - மாணவர் உறவு, பொருத்தமற்ற பெற் றோர் - பிள்ளைகள் உறவு, முதலியவை பதகளித் தலை ஏற்படுத்துகின்றன.

Page 29
42
பதகளிப்பின் போது இருவகை மன உணர்வுகள் ஏககாலத்திலே செயற்படும். ஒரு மன உணர்வு நேர்ப் பண்புடையதாவும் மற்றைய உணர்வு அதற்கு எதிர்ப் பண்புடையாதாகவும் இருக்கும்.
பாலர் கல்விச் சிறார்களிடத்து ஏற்படும் இன் னொரு பிரதான மனவெழுச்சி பொறாமை உணர் வாகும். பெற்றோர்கள் அன்பு தமது சகோதரர்கள் மீது செல்கின்றது என்ற அவதானிப்பு மேலோங்கும் பொழுது பொறாமை உணர்வு மேம்படத் தொடங்கு கின்றது. பொறாமைக்கும் அன்பு பாராட்டல் வேறு பாடுகளுக்குமிடையில் கூடுதலான தொ ட பு க ன் சிறார் நிலைகளிற் காணப்படுகின்றன. அடைவுகள் தொாடர்பாகவும், பொருள்கள் தொடர்பாகவும் படிப் படியாகப் பொறாமை வளர்ச்சியடைத் தொடங்கு கின்றது. சிறார்களின் பொறாமை, வன் செயல் வெளிப் பாடுகளுடன் தொடர்புடையதாகக் காணப்படும்.
மொழி வெளிப்பாடு, இயக்கத்திறன்கள் உனத் திறன்கள், ஆற்றுகை சமூகமயமாதல் போன்ற நடத் தைகள் அனைத்திலும் மனவெழுச்சிகள் ஊடுருவி
நிற்கும்.

பாலர் கதைகள்
லெர் கல்வியில் மிகவும் வலிமை மிக்க சாதன மாகக் கதைகள் விளங்குவதற்குக் காரணம், அவற் றின் வாயிலாகத் தூண்டப்பெறும் மனவெழுச்சிகளும் எதிர்பார்ப்பு இன்பமும் ஆகும். கதை அசைவுகளி னுாடாகக் குழந்தைகள் உள அசைவுகளை அனுபவிக் கின்றனர். பாத்திரங்களுடன் ஒன்றிணைத்துக் கற் பனை இன் பத்தையும் எளிமையான சீராக்கத்தையும் அனுபவிக்கின்றனர். சமூக மயமாக்கற் செயற்பா ட் டிலும், அறிகைக் கோலங்களின் வளர்ச்சியிலுமி, கதை கன் நேர்விசைகளை ஏற்படுத்துகின்றன.
பாலர் கதைகளுக்குரிய பலமும், வலிமையும் கொண்ட தளம் நாட்டார் மரபுகளில் இருந்து கிடைக் கப் பெறுகின்றது. நாட்டார் கதைகளில் இடம்பெறும் எண்ணக் கருக்கள் காட்சி வடிவிலிருந்து கருத்து வடிவை நோக்கிப் பெயர் வதாகக் காணப்படும். பலமி மிக்க வாய்மொழி ஊடகப் பண்பு மேலோங்கி உள்ள மையால், கேட்டல் என்ற இலகு கவனத்தின் வழியாக கதைக் காட்சிகளை உள்ள த்திலே அமைத்துக் கொள்ளமுடியும்

Page 30
4鱷
இக்கதைகளிலே காணப்படும் மிகப்பலம் பொருந் திய பரிமாணம், விலங்குகளும், பறவைகளும், மரங் களும், செடிகளும் பேசுதலாகும். தமது இயல்புக னை க் கொண்டே குழந்தைகள் சூழலை மதிப்பிட முயலும் செயற்பாடுகளில் இவ்வகையான பேச்சு? ஆழ்ந்த உள ஈடுபாட்டை ஏற்படுத்தும்,
கதைப் புலத்தில் நிகழும் ஒரு சிறிய நிகழ்ச்சி குழந்தைகளிடத்துப் பெரிய குது கலத்தை தூண்டும் *சிறிய" உள்ளீடுடன் “பெரிய துலங்கலை ஏற்படுத் தும் உன நடவடிக்கையாக இது அமையும், ஆனால் வளர்ந்தோரிடத்து பல்வேறு செறிவுள்ள தூண்டிகளை உள்ளீடாகப் பெய்தால் மட்டுமே பெரிய துலங்கலை
ஏற்படுத்தலாம்.
டாலர் கதைகள் அதிக நெகிழ்ச்சிப் பாங்கான 56 # இருக்கும். கதைகூறிக் கொண்டிருக்கும் பொழுது, சிறுவர்கள் எழுப்பும் வினாக்களுக்குரிய விடைகளும் விளக்கங்களும் சேர்க்கப்பட வேண்டி யிருப்பதால் பாலர் கதைகளில் இரண்டு அடிப்படைப் பண்புகள் காணப்படும் அவையாவன:
1. கதைத் தளத் 2. நெகிழும் இணைப்புக்கள்.
வளர்ந்தோருக்குரிய கதைகளில் நெகிழா இணைப் புக்களே காணப்படும் அதாவது கதையின் வசனங் களிலோ, சொற்களிலே எந்த விதமான மாற்றங்க களும் புகுத்தப்படாது. 'கறாராகப் பின்பற்றப் படும் அமைப்பே நெகிழா இணைப்பாகும். ஆனால் பாலர் கதைகளிலும், நாட்டார் கதைகளிலும் வாய் மொழித் தொடர்பாடலின் அழுந்தங்கள் காரணமாக 'நெகிழும் இணைப்புக்களே " கதைத்தனத்தைப் பற்றிப் பிடித்த வண்ணமிருக்கும்

45
பின்வரும் குழந்தைக் கதையை அமைப்பியல் ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளலாம். -
- ஒரு கொக்கு இருந்தது. கு ள க்க  ைஏ யி ல் அலமதியாக இருந்தது. அதற்கு நல்ல பசி, காலை tlzt S S S S T T S Y tttC SS S uuu t SS SS tS ttt இருந்தது. அப்போது குனத்திலே தண்ணீர் ஆடியது. ஒரு சிறிய மீன் குஞ்சு வந்தது. கொக்குப்பிள்ளை அதைக் கண்டு விட்டார். 'எனக்கு நல்ல பசியாக இருக்கிறது” என்று கொக்கு மீன் குஞ்சிடம் சொன் னது. "அப்படியா எனக்கும் நல்ல பசியாக இருக் கிறது. நான் அம்மாவிடம் போகின்றேன் என்று மீன் குஞ்சு ஓடிவிட்டது. -
இக்கதையைக் குழந்தைகளுக்குச் சமர்ப்பிக்கும் பொழுது ஆசிரியர் நடிப்புடன் உரையை இணைத்தல் வேண்டும். 'பாவம்' பசியுடன் பேசாமல் இருந்தது" என்ற வசனமி ஒன்றே குழந்தைகளின் ஆழ்ந்த மனவெழுச்சியைத் துண்ைடப் போதுமானது. கொக்கு மீன்குஞ்சைப் பிடித்திருந்தால் கொக்கின் மீது குழந்தைகள் கொண்ட பரிவும் அனு தா ப மு ம் உடைந்து போயிருக்கும். பசிக்கும் போது குழந்தை கள் என்ன செய்யலாம் என்ற பிரச்சினை இக்கதையின் நடுவிற் குழந்தைகளுக்கு முன்வைக்கப்படுகின்றது. இந்த பிரச்சினைக்குரிய தீர்வு தாயாரை நாடுதல் என்பது கதையினூடாகக் குழந்தைகளுக்குத் தரப் படுகின்றது. அத்தோடு ஓர் எதிர்பார்ப்பு ஆவலும் குழந்தைகளிடத்தே தூண்டப்படுகின்றது. மீன் குஞ்சு போய் விட்டது. கொக்கு என்ன செய்தது என்பது தான் எதிர்பார்ப்பு ஆவல்.
குழந்தைகளுக்குரிய கதைகள் சிறியனவாயும், எளிதானவையாயும், சிந்திக்கத் தூண்டுவனவாயும், ஒழுக்கம் உரைப்பதாயும் இருத்தல் வேண்டும்.

Page 31
46
இன்னொரு பாலர் கதையையும் அமைப்பியல் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளலாம்.
ஒரு பெரிய நாவல்மரம் இருந்தது. அதில் பழங்கள் அதிகமாக இருந்தன. நன்றாகப் பழுத்த பழங்கன். மரத்தின் மீது ஒர் அணிற்பிள்ளை இருந்தது. கிளை களில் தாவித் தாவிப் பாய்ந்தது . பழங்களைப் பிடுங்கிச் சாப்பிட்டது. அங்கே கண்ணன் வந்தான். அணிற்பிள்ளையைக் கண்டான். பழங்களையும் கண் டான் உயரமான மரம், பழங்களைப் பறிக்க முடி யாது அணிலே எனக்குப்பழங்களைப் பறித்துத் தரு கின்றாயா? என்று கேட்டான், அணில் *ஆக்? என் றது. அதிகமான பழங்களைப் பறித்தது. மெதுவாகக் கீழே போட்டது. கண்ணன் பழங்களைப் பக்குவ மாக எடுத்தான், கழுவினான் நண்பர்கள் வந்தார் கள், எல்லாரும் பகிர்ந்து பழங்களை உண்டனர்.
இந்தக் கதையில் பாலர்களுக்குச் சில அடிப்படை விழுமியங்கள் கற்பிக்கப்படுகின்றன. "அன்பு' என்ற விழுமியம் வளர்த்தெடுக்கப்படுகின்றது. அணி லின் மீது அன்பு, நண்பர்கள் மீது அன்பு கட்டியெழுப்பப் படுகின்றது. அணில் பின்ளையின் தாவிய பாய்ச்சல் நடிப்பு முறையிலே பாலர்களுக்குக் குதூகலத்தை வருவிக்கும். இசைவாக்கச் செயல்முறையில் சாது வான விலங்குகள் மனிதருக்கு ஒத்துழைப்புத் தரும் என்ற எண்ணக்கரு அணில் பழங்களைப் பறித்து தீ தருவதன் வாயிலாக வலியுறுத்தப்படுகின்றது. பாலர் கள் பிறரிடம் உதவியைக் கோருதலும், அதற்குத் துலங்கல் கிடைத்தலும் அணிலின் செயல்களால் சுட் டிக் காட்டப்படுகின்றன. "பகுத்து உண்ணல்"கழுவி உண்ணல்" என்ற விழுமியங்கள் கதையின் நிறைவுப் பகுதியிலே உருவாக்கப்படுகின்றன,
பாட்டி கதைகள், நாடோடிக் கதைகள், புராணக் கதைகள் முதலியவற்றைப் பகுப்பாய்வு செய்து பார்க்

47
கும் பொழுது, பல்வேறு மனித விழுவியங்கள் அவற் றினூடாகக் கையளிக்கப்பட்டு வருதலைக் காணலாம். பாலர்கள் வளர வளர அவரீதம் வயதுத் தராதர கி களுக்கேற்றவாறு கற்பிக்கக்கூடிய பல்வேறு கதைகள் காணப்படுகின்றன. வகைமாதிரியாகப் பின்வருவன வற்றைக் குறிப்பிடலாம்; தென்னாலி இராமன் கதை, மரியாதை இராமன் கதை, சிறுவர்க்கான சாயி கதைகள், ஈசாப் கதைகள், அரபுக் கதைகள், விக்கிர மாதித்தன் கதை, கண்டர்பரிக் கதைகள், ரொபின் சன் குருசோ கதை கலிவரது பிரயாணங்கள், தேவ தைக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், அவிவேக பூரண குருவின் கதைகள் முதலியவற்றை இவ்வகை யிலே குறிப்பிடலாம்.
நவீன விஞ்ஞான, தொழில்நுட்பவியல் எண்ணக் சுருக்களை அறிமுகம் செய்யக்கூடிய கதைகளும் குழந்தைகளின் உள்மேம்பாட்டுக்கு அடிப்படையா னவை. சில்லின் கதை, காற்றாடியின் கதை, கடதாசி யின் கதை, புயலின் கதை போன்றவை தமிழ் மொழி யில் ஆக்கப்பட்டு வருதல் நவீன கதை பயில் வில் நமீபிக்கையை ஏற்படுத்துகின்றன.

Page 32
நகையங்கள்
தொடர்பாடலிலும் கற்பித்தலிலும் நகையங்க ளின் (Comics) வலிமையான அழுத்தங்கள் ஆய்வு களிலிருந்து தெரியவருகின்றன.நாள் இதழ்கள், பருவ இதழ்கள் என்பவற்றில் எல்லாராலும் வாசிக்கப்படும் பகுதிகளில் நகையங்களே முன்னுரிமை பெறுகின் றன. சுவான்சன் என்பவர் பரவலாக மேற்கொண்ட ஆய்வுகளில் இருந்து நகையங்களின் முக்கியத்துவம் மேலும் வெளிப்படுகின்றது.
அச்சுக்கலை வளர்ச்சி, இதழியலின் வளர்ச்சி, என் பவற்றோடு இணைந்ததாக நகையங்கள் பலம் பெறத் தொடங்கின. 1870 ஆம் ஆண்டளவில் இந்த வடிவம் முழுமைபெறத் தொடங்கியது. கோடுகளைப் பயன் படுத்திக் கேலியான உருவங்கள் ஆரம்பத்தில் வரை யப்பட்டன. எளிமையும் நகைச்சுவைப் பண்பும் நகையங்களின் ஆதாரப் பலங்களாக அமைந்தன. நகையம் என்ற வடிவம் தோன்றுவதற்கு மானுடவி யல் விசைகளும் பின்புலமாக அமைந்தன.
பூர்வீகக் கலை மரபுகளிலும், சடங்குகளிலும், மந்திர உச்சாடனங்களிலும் இடம்பெறும் குறியீடுகள், நகையத்தின் வளர்ச்சிக்கு உதவின. 8 தினக் கதைகள்,

龜9
நனவிலிக் கற்பனைகள், முதலியவை நகையங்களைப் படைப்பதற்குப் பின்புலமாக அமைந்தன ஆழ்ந்த மன உணர்வுகளைத் தூண்டுவதற்கும் நனவிலிபூர்வ மான ஈடுபாடுகளை ஏற்படுத்துவதற்கும் நகைய மீ பலம் பொருந்திய கலைச் சாதனமாகவும், கல்விச் சாதனமாகவும் விளங்குகின்றது,
ந ைகயங்களில் மனிதர் உள்ளிட்ட அனைத் து உருவங்களும் எளிமையான வடிவ அமைப்புக்குள் கொண்டுவரப்படுகின்றன. ஒரு விதமான ' காட்சிச் சிக்கனம்" பின்பற்றப்படுகின்றது. யாதாயினும் ஓர் உடல் உறுப்பின் மீது கொடுக்கப்படும் முக் திரை அழுத் தத்திலிருந்து பாத்திரத்தை இ ல கு வி லே அறிந்து கொள்ள முடியும், பாத்திரங்களோடு இணை நித இலகு கற்பனை தூண்டிவிடப்படும்.
நகை யங்கள் வாயிலாக " இருமுனைத் தொடர் பாடல்" நிகழ்தல் அவற்றின் கலையா ற் றல்களை மேலும் வினைத்திறன்படுத்தும். ந ட ப் பி ய லி ல் இருந்து "விலகிய” பாத்திரங்களையும் நைந்து போன பாத்திரங்களையும் புனைந்து காட்டுகின்ற ர்ை. நகைய ஆக்குனர்களின் இந்த முயற்சிக்குச் சமூகமே பின்புலமாக அமைகின்றது. நகையங்களில் முன்வைக்கப்படும் பாத்திரங்களை வா ச க ரீ க ள் ச மூ க தீ தி லே தேடிப்பார்க்கும் பொழுது கருத் தைத் தருபவரும் கருத்தை நுகர்பவரும் நகை யத் தின் வழியாக இருமுனைத் தொடர்பாடலை மேற் கொள்ளுகின்றனர். ஏனைய இலக்கியங்கள் வழியாக வும் இவ்வாறான தொடர்பாடல் நிகழ்கின்ற தாயினும் நகையத்தின் வழியாக இது மிகவுமீ வலிமையுடன் செயற்படுகின்றது என்பதை வாசகர் தொடர்பான ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன,

Page 33
50
சிரித்திரன் சுந்தர் புனைந்த *ச வாரித்தம்பர்? எமது சூழலில் அதிக புகழ்பெற்ற நகையங்களுள் ஒன்றாக விளங்கியது. அதிற் புனையப்பட்ட பாதி திரங்களை வாசகர்கள் ஆழ்ந்த உளக்கவர்ச்சியுடன் தேடிய சம்பவங்கள் உள்ளன.
நகையம் என்ற கலை வடிவத்தை கிராமிய மண் வனத்தோடும் மாறிவருமி விழுமியங்களின் இயல்பு களோடும் இந்நாட்டில் நிலைப்படுத்திய கலைஞர்க ளுள் சிரித்திரன் சுந்தருக்குத் தனியிடம் உண்டு.
மொழி கலந்த நகையங்கள், மொழி கலக்காத *உருவ இயக்க" வடிவிலான நகையங்கள் என்ற இரண்டு பிரிவுகள் காணப்படுகின்றன. மொழி கலந்த நகையங்களில் உரையாடல் “பலூன்” வடிவில் அமைக் கப்பட்டன. பேசுபவரிடமிருந்து பலூன் ஆரம்பிக்கும். உரையாடலுக்கு ஏற்றவாறு பலூன் பல்வேறு வடிவங் களில் அமைக்கப்படும். பலூன் வடிவத்தினுள்ளே எழுத்துக்கள் இ ட ம் பெ று மீ. பாத்திரங்களுடன் பேச்சை இணைப்பதற்கு பலூன் உருவமைப்பு துணைசெய்கின்றது.
அமுங்கிய மன உணர்வுகளை வெளியே பாய்ச்சி உளவியற் " சகம் " பெறுவதற்கான குறியீடாக அமைந்த பலூன் உருவமைப்பு நகையத்துக்கு அணி செய்யும் துணை உறுப்பாக அமைந்தது.
நகையங்கள் தொடர்பான உலகளாவிய வளர்ச்சி யினூடாக சிறப்பான சில பாத்திரங்கள் முகிழ்ந் தெழுந்துள்ளன. அவையாவன;
1. குறும்புச் சிறுவர் 2. ஞாபக மறதிக்காரர். 3 விதைக்காரர். 4, el 8or 5.
 

$麟
5 பேராசைக்காரர். 6. அண்டவெளி மர்ம வீரர். 7. கடலோடிகள், 8. வீரதீரச் செயல்களில் ஈடுபடுவோர். 9. காதற் கோலத்தினர்.
ஆரம்ப காலத்தில் நகைச்சுவை எழுப்புதலே நகையத்தின் அடிப்படை நோக்காக அமைந்தது. நகையத்தின் ஆற்றல் பிற கலைத் துறைகள் மீதுமீ செல்வாக் கினை ஏற்படுத்தியது. இசை, நடனம், நாடகம், திரைப்படம், மட்டுமல்ல, ஆடை அலங் காரம், உணவு அலங்காரம், விளம்பரம், கற்பித்தல் போன்ற பல்வேறு துறைகளில் நகையத்தின் செல் வாக்கு உண்டு.
உலகப் புகழ் பெற்ற நகையக் கலைஞராகிய வால் ற் டிஸ்னி உருவாக்கிய 'மிக்கி மெள ஸ்? ?டக்? என்ற பாத்திரங்கள் சிறுவர்களையும் வளர்ந்தோரை யும் சமகாலத்திலே கவர்ந்தன. மனித ஆற்றல்களை யும், கற்பனைகளையும் விலங்குகளின் மீது ஏற்றியமை அந்தப் பாத்திரங்களின் வெற்றிக்குப் பின்புலமாக ඉජිමා’ (Guip fl5 ඊ ග්‍රි ල
வாசிப்புத் தேவை கருதியும் போட்டிக்குரிய பல் லினத் தன்மை கருதியும் பல்வேறு இயல்புகளைக் கொண்ட நகையங்கள் வளர்ச்சி பெறத்தொடங்கின,
360)6 (UT6a60T
, சிரிப்பைத் தூண்டுபவை.
2. பயங்கரம், திகில் என்பவற்றை உள்ளடக்கி
ULJ. ග්‍රි) ඕග් (''
3. காதல் விர வியவை.
4. உடற் படலத்தை வெளிப்படுத்துபவை,
5. துப்புத் துலக்குபவை
6. அதிமானுடப் பண்பு கொண்டவை.

Page 34
52
7. குடுமீப வாழ்க்கை தழுவியவை. சில சமூகப் பிறழ்வுகளைத் தழுவியவை 9. சீர்திருத்த முனைப்புடையவை.
ஒழுங்கற்ற முறையிலே வெளிவந்த நகையங்கள் சிறுவர்களிடத்தும், வளர்ந்தோரிடத்தும் "விலகல்" நடைத்தைகளைத் தூண்டியும் உருவாக்கியும் வரத் தொடங்கின. இதன் காரணமாக 8 க்கிய அமெரிக்கா வில் நகை யங்கனை வெளியிடும் நிறுவனங்கள் 1954 ஆம் ஆண்டில் ஒரு கழகத்தை ஏற்படுத்தி அடிப் படையான சில ஒழுக்க நெறிகளைப் பின்பற்ற வேண்டும் என்பதனை ஏற்றுக்கொண்டன.
தமிழ் இதழியலைப் பொறுத்தவரை ந ைகயங்க ளைத் தமிழகச் சூழலுக்குரிய வடிவமாகப் பயன்படுத் திய இதழ்களுள் ஆனந்த விகடன் சிறப்புப் பெற் றிருந்தது. மேலைத் தேச நகையக்கலையின் செல் வாக்கு, கல்கி, புதுமைப்பித்தன் போன்ற எழுத்தா ளர்களிடத்து ஆழப் பதிந்திருந்தது.
கற்றல் - கற்பித்தற் பணிகளுக்கு நகையத்தைப் பயன்படுத்தல் நவீன கல்வித்தொழில்நுட்ப வளர்ச்சி யிற் குறிப்பிடத்தக்க திருப்பு முனையாகவுள்ளது. விஞ்ஞான எண்ணக் கருக்களைக் கற்பிப்பதற்கு 8க் கிய அமெரிக்காவின் ஜெனரல் எலெக்றிக் கோப்ப ரேசன் நகையத்தைப் பயன்படுத்திப் பல நூல்களை வெளியிட்டு வருகிறது. அணுவலுகமிசனும் பொதுமக் களுக்குக் கல்வியறிவூட்ட நகைய உபாயங்களைப் பயன்படுத்துகின்றது.
சுற்றாடற் பாதுகாப்பு வீதி ஒழுங்கு, உடல் நலம், நற்பழக்கங்கள், மொழி கற்பித்தல், கணித எண்ணக் கருக்களை விளக்குதல், விஞ்ஞானம் கற் பித்தல், உடற்கல்வி போன்ற பல்வேறு அறிவுத் துறைகனைக் கற்பிப்பதற்கு நகையங்கள் பயன்

53
படுத்தப்படுகின்றன. பாடநூல்களிலும் நகையங்கள் இன்று பெருமளவில் இடம்பெறத்தொடங்கியுள்ளன.
நகையங்களைப் ப ய ன் ப டு த் தி க் கற்பிக்கும் பொழுது மாணவர்கள் அதிக தூண்டற் பேறுகளைத் தருகின்றனர். தவறாகக் கற்றுக்கொண்ட எண்ணக் கருக்களைத் திருத்தி அமைப்பதற்கும் நகையங்கள் வாயிலாக கற்பித்தல் துணைசெய்கிறது.
சரியாகக் கற்றுக்கொண்ட எண்ணக்கருக்களோடு மேலும் உள்ளடக்கப்பண்புக் கூறுகளைச் சேர்த்துக் கொள்வதற்கு நகையங்கள் துணைசெய்யும்.
கற்றல் அடிப்படையிலும், மனவெழுச்சி அடிப் படையிலும் அனைத்து மாணவர்களும் நகையங்களி னுாடாக இலகுவில் ஒன்றிணைக்கப்படுகின்றனர். தாமே விரும்பி ஈடுபாடு கொண்டு கற்பதற்கு இது துணைசெய்கின்றது. பாடநூல்களுக்கிடையே நகைய நூல்களை ஒழித்து வைத்துப் படிக்கும் பழக்கம் மாணவர்களிடையே ஒரு துணைப்பண்பாடக வளர்ச்சி யடைந்துள்ளது. நகையத்தொடர் வெளியீடுகள், நூல் விற்பனைச் சந்தையில் முக்கிய இடத்தைப் பெற்று வருகின்றன.
உலகப் புகழ்பெற்ற நகையங்களை மொழி பெயர்த்து வெளியிடும் நடவடிக்கைகள் விரிவடைந்து வருகின்றன. நகையங்களின் தவறான கையாளுகை உளவியல் பாதிப்புக்களையும் சிறுவர்களிடத்து ஏற் படுத்தி வருகின்றன.

Page 35
விளையாட்டும் பொருளாக்கமும்
Dனிதக் குரங்குகளின் விளையாட்டுக்கள் மானுட வியலாளரால் விரிவாக உற்று நோக்கப்பட்டுள்ளன, விளையாட்டுக்களினூடாக அவை கற்றுக் கொள்ளு கின்றன. ஒலியாலும் உடற் காட்சிகளினாலும் அவை தொடர்பு கொள்ளுகின்றன. அவற்றினூடக எளிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுகின்றன. மனிதக் குரங்குகளின் தொடர்பு முறைக்கும் மனிதத்தொடர்பு முறைக்குமிடையே அடிப்படை வேறு பஈ டு கள் காணப்படுகின்றன.
மனிதர் கருவிகளின் வழியாகவும், வேறொருவர் வழியாகவும் தொடர்புகளையும், குறியீடுகளையும் ஆக்கக் கூடியதாகவுள்ளனர். மூன்று வயதுச் சிறு வர் களே அடையாளங்களையும் உருவங்களையும் ஆக்கக் கூடிய ஆற்றல் பெற்று விடுகின்றனர். காலம், இடை வெளி, பயன்படுத்தக் கூடிய ஊடகம் என்பவற்றுக் கும் மேலாக அவர்களது கற்பனைத் திறன் ஊடுருவிக் செல்லும், இவ்வாறு தோன்றும் மிகைக் கற்பனை யாற்றல் "மீயம்' என அழைக்கப்படும்.
விளையாட்டுக்கள் வாயிலாக உடலியக்கத்திறன் வளர்க்கப்படுதல் மட்டுமன்றி பிற்காலத்தில் தாம்

55
முன்னர் விளையாட்டுக்கள் வாயிலாகப் பெற்ற அனுபவங்களை மொழிவாயிலாக வெளிப்படுத்தும் திறனையும் பெற்றுக் கொள்ளுகின்றார்கள்,பிற்காலத் தில் பல்வகைப்பட்ட கல்வி ஆற்றல்களை வளர்ப்பு தற்குரிய உள்ளிடுகளை விளையாட்டுக்கள் கொடுக் கின்றன. பிற்காலக் கல்வியடைவுகளுக்கு குழந்தை நிலை விளையாட்டுக்கள் உதவும் செ ய ற் பாடு "மலரம்' என்ற சொல்லால் அழைக்கப்படும்,
சிறுவர்களது உடல் உளவலு விளையாட்டுக்களில் பயன்படுத்தப்படும் பொழுது வன் செயலீடுபாடு, அறியாது அழிவு செய்யும் விருப்பம் முதலியவை தவிர்கப்படுகின்றன. தமது உடல் மீதுள்ள நம்பிக் கையை விளையாட்டுக்கள் மீள வலியுறுத்துகின்றன. மேலும் தசைநார்க் கட்டுப்பாடுகளையும், உடற் சம நிலைக்கட்டுப்பாடுகளையும் தெரியப்படுத்துகின்றன.
விளையாட்டுக்களை ஒழுங்கமைக்கும் பொழுது ஆசிரியர் பின்வருவனவற்றிலே கவனம் செலுத்துதல் வேண்டும்,
1. சமூகக் கவிநிலை - சமூக அ னு ப வங் க ளைப் பகிர்ந்து கொள்வதற்கான சந்தர்ப் பங்களை உருவாக்குதல், இடைவினை களைச் செமீமைப்படுத்தல்,
2 விளையாட்டுப் பொருள்கள் - மணல், தண் ணிர், கிளிஞ்சல், களி, மரக்கட்டைகள்- பிளா ஸ்ரிக்பொருள்கள், றப்பர் பொருள்கள், நூல் காகிதம், துணி, முதலியவை,
3. புலன் உணர்வுகனைத் தூண்டும் பொருள்கள் - மலர்கள், இறகுகள், செதுக்கியெடுக்கப் பட்ட பொருள்கள், பஞ்சு வண்ணக்களி முதலியவை.
4. சிறுவர்கள் சுதந்திரமாகவும் பொறுப்புணர்ச்
சியுடனும் செயற்படக் கூடிய சூழல்

Page 36
வாசிப்பும் எழுத்தும்
கேட்டல், பேசுதல், எழுதல் என்ற திறன்களு டன் ஒன்றிணைந்த ஆற்றலாகவே வாசிப்பைக் கருதுதல் வேண்டும். தனித்த ஒரு திறனாக அதனைக் கருதுதல் பொருத்தமற்றது. வாசித்தல் என்பது உற்று நோக்கலுடனும் கட்புல இன்ப நுகர்ச்சியுடனும் இணைந்தது. பார்த்தல் வழியாகக் கிடைக்கும் இன் பமே வாசித்தலுக்கு அடிப்படையாகின்றது.
சொற்களஞ்சியத்தைத் திரட்டிக் கொள்ளல், பாலர் கல்விப்பாடல்கள், கதைகள் முதலியவை சொற் களஞ்சியத் திரட்டலுக்குத் துணை செய்யும். வாசித்தலுக்குரிய ஆயத்தம் பின் வரும் காரணி களிலே தங்கியுள்ளது.
1. உளவியற் காரணிகள்; முதிர்ச்சி, நரம்பியல் தொழிற்பாடுகள் கட்புலன் செவிப்புலன் ஆகியவற்றோடு இணைந்த உளச்செயற் பாடுகள், 2. சூழற் காரணிகள்: மொழியியற் சூழல், குடும்ப உறுப்பினர்களின் இடைவினைகள் சிறப்பார் ந்த அனுபவங்கள்.

*?
3. மனவெழுச்சிக் காரணிகள்: வாசிப்புக்குரிய ஊக்கல் பொறுமை, ஈடுபாடு, சுவைக்கும் ஆற்றல் முதலியவை.
4. உனக்காரணிகள்: மொழியாற்றல், பிரித்தறி யும் திறன், பொதுமை காணும் திறன், முத லியவை.
வாசிப்புத் தொடர்பான இரண்டு முறையியல் களை முதலில் நோக்கலாம்.
1. ஒலிமுறை - அதாவது எழுத்துக்குரிய ஒலி
களை இணைத்து வாசிக்கும் முறை.
2. முழுமைப்புல உளவியல் தழுவியமுறை - அதாவது சொற்களை முழுமையாக இனங் கண்டு வாசிக்கும் முறை,
மேற்கூறிய இ ர ண்டு முறைகளையும் ஒன் றிணைத்துப் பயன்படுத்துதலே சிறந்ததாகக் கருதப் படுகின்றது. ஒவ்வொரு மொழியிலும் அதிக அளவு பயன்படுத்தப்படும் சொற்கள் இருக்கின்றன. அவற் றைப் படிமுறையாக அறிமு கமி செய்து வைத்தல் வாசிப்புத்திறனை மேம்படுத்தத் துணையாக இருக் கும்.
பாலர் பள்ளிச் சிறுவர்களுக்கான வாசிப்பு நூல் கள் அவர்களின் பேச்சு மொழி அமைப்பியலைத் தழுவியதாகவும், கவர்ச்சியூட்டும் சித்தரிப்புக்களைக் கொண்டதாகவும் இருத்தல் வேண்டும். எழுத்துக்களின் ஒழுங்கைப் பார்த்து அது என்ன சொல்லாக இருக் கும் என்று இன மீ காணும் திறன் ° செங்கோடல் ? எனப்படும். செங்கோடல் வளர்ச்சி பெற விரைந்த வாசிப்பை முன்னெடுக்க முடியும்

Page 37
58
செங்கோடலோடு இணைந்த இன்னொரு திறன், வாக்கிய அமைப்பில் அடுத்துவரும் சொல் யாதாக இருக்கும் என்ற அமைப்பியலைப் புரிந்து கொள்ளும் திறன் . இந்தத் திறன் தொடு கோடல்" எனப்படும். *சொங்கோடல்' , தொடுகோடல் ? இரண்டும் விரைந்த வாசிப்பைத் தூண்டிய வண்ணமிருக்குமி.
எழுத்துத் திறன்
பரம்பரியமான கற்பித்தலில் எழுத்துக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மொழித்திறன் களைப் பகுத் தாராயும்பொழுது, பேச்சுத் திறனிலும் எழுத்துத் திறனே கடினமானது என்று கொள்ளப்படு கிறது. கேட்டலும், பேசுதலும் ஒன்றிணைந்தவை. அவ்வாறே வாசித்தலும் எழுதுதலும் ஒன்றிணைந்த சோடிகளாகவுள்ளன.
சிறுவர்கள் தாம் சுவைத்த காட்சியை அல்லது கதையை பாடமாக்கும் படி கூறுவதோடு எழுத்துப் பயிற்சியையும் இணைத்தாற் கூடிய விளைவு கிடைக் குமி என ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன. கதைத் தொடர்களை மடி ஏடுகளில் (Folders) எழுதுதல் கூடிய ஈடுபாட்டினைச் சிறுவர்களிடத்தே ஏற்படுத்து கின்றன.
நகைச்சுவைக் காட்சிகளைச் சித்தரிக்கும் படங் களைத் தழுவிய எழுத்தாக்கங்கள் சிறுவர்களின் எழுத்து விருப்பினைத் தூண்டும் என்பதை ஆய்வு கள் தெரியப்படுத்துகின்றன. பல்வேறு உருவங்களுக் குப் பெயரிடுமாறு சிறுவர்கள் கேட்கப்பட்டபொழுது
 

59
கோமாளி உருவத்துக்குப் பெயரிடுவதையே பெரி தும் விரும்பினார்கள்.
வண்ணங்கள் தீட்டி எழுதுதலும் சிறுவர்களின் எழுத்து விரும்பத்துக்குத் தூண்டுதலளிக்கும். பூவுக்கு வண்ணம் தீட்டிப் பூ" என்று எழுதுதல், நாய்க்கு வண்ணமி தீட்டி நாய் என்று எழுதுதல், இதற்குரிய சில உதாரணங்களாகும்.
ஒவ்வொரு குழந்தைகளுக்கும் குதூகலம் தரக் கூடிய சொற்கள், சொற்றொடர்கள் இருக்கின்றன. உளமொழியியலில் இத்தகைய சொற்களுக்கு முன் னுரிமை கொடுக்கப்படுகின்றது. எமது ஆய்வுகளின் போது ஒவ்வொரு சிறு வருக்கும் குதூகலம் தந்த மகிழ்ச்சியான சில சொற்கள் தொடர்கள் வருமாறு:
1. பாலாடை
2. சண்பகம் 3. செந்தாமரை 4. பஞ்சு
மேற்கூறிய சொற்கள் தமக்கு ஏன் மகிழ்ச்சி யைத் தருகின்றன என்பதைப் பாலர் கல்விச் சிறுவர் களினால் விளக்க முடியா திருந்தது. ஆனால் அச் சொற்களைத் தாம் சொல்லும் போதும் பிறர் சொல் லக் கேட்கும் போதும் அவை குறித்த சிறுவர்களுக்கு மகிழ்ச்சியைத் தூண்டின. இவ்வாறான சொல் 'இனி யம்' என அழைக்கப்படும். இனியம் எழுத்து வடி வாக்கப்படும் பொழுது கூடிய ஈடுபாட்டுடன் இணைந்த கற்றல் நிகழும்.
உள்ளத்துக்கு இனிமையான சொற்கள் கற்பிக் கப்படுவதில்லை (Taught) கவ்விப்பிடிக்கப்படுகின் றன. (Caught) என்ற கருத்தை மனங்கொள்ள வேண்டியுள்ளது.

Page 38
அறிவுக் கையளிப்பில் பொம்மலாட்டம்
அழகுப்பொருள்களின் ஆக்கம்-அழகுப் பொருள் களின் மீளாக்கம் என்பவை கல்விச் செயற்பாடுக ளுடன் இணைந்தவை. கற்றலுக்கும், கற்பித்தலுக் கும் அழகுத் தொடர்பாடலுக்கும் பொம்மைகளின் ஆக்கமும், பொம்மலாட்டமும் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பண்டைய கற்பித் தல் முறையியல்களை அறிந்து கொள்வதற்கும் பொம்மைகள் துணைசெய்கின்றன .
'பாவனை' முறையிலான கற்பித்தல் பொம்மை களின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டது, கருவிக்கை யாட்சியில் நிகழ்ந்த மேம்பாடுகள் பொம்மைகளின் மூலம் வெளிப்படுகின்றன. மண், தோல் என்பவற் றால் பொம்மைகளை ஆக்குதல் மிகவும் தொன்மை யான செயற்பாடு. மனிதர் தமது ஆற்றல் கனைப் பிர யோகிப்பதற்குப் பொம்மைகளைச் சாதனமாக்கினர். மனிதரைக் கருவிகளாக உருவகப்படுத்திய செயற் பாட்டை பொம்மலாட்டத்திலே தெளிவாகக்காணலாம். அம்பு போன்ற மனிதனும், பானை போன்ற மனி தனும், மனிதரைக் கருவிகளுக்கு உருவகப்படுத்தி யமைக்குச் சான்றுகள். சக்கரத்தின் கண்டு பிடிப்பு,

நார், நூல் என்பவற்றின் கலைப் பிரயோகம் என்ப வற்றுடன் இணைந்து பொம்மைகளை ஆட்டுவிக்கும் செயற்பாடு வளர்ச்சியடைந்தது.
சு ல் வி மு றை, தொழில்முறை, சடங்குகள் வாழ்க்கை முறை என்பவற்றின் ஒன்றிணைப்பைக் கொண்டிருந்த சமூகச் சூழலின் வெளிப்பாடாக ஆரம்பத்தில் பாவைக் கூத்தும், பாவை நோன்பும் அமைந்தன. சமூகத்திலே நிகழ்ந்த சொத்துரிமை ஆதிக்கங்களும் அந்நிய மயப்பாடும் பொம்மலாட் டத்தின் இயல்புகளைக் பாதித்தன. இதனை மேலும் விணக்கலாம். உதாரணமாக வேட்டைத் தொழிலில் ஈடுபட்டோர் பொம்மைகனைப் பயன்படுத்தி வே" டையாடும் பொழுது பொம்மைக்கலை வாழ்கை யுடன் இணைந்த கலையாகக் காணப்பட்டது தொழில் முறைகளோடுமி, வாழ்கையோடும் இணைந்து பொம்மைகளைப் பயன்படுத்துதல் "கலையம்" என்ற எண்ணக் கருவாலே புலப்படுத்தப்படும். சமூக மாற் றத்தின்பொழுது "கூத்தர்' என்ற தொழிற்பிரி வினர் வளர்ச்சியடையத் தொடங்கி அவர்களே பொம்மைக் கூத்தையும் இயக்குவோராக அமைந் தனர்.
இத்தகைய ஒரு தோற்றப்பாடு தென் ஆசிய வெங்கும் பரவலாகக் காணப்படுகின்றது. நாடகம் ஆடுவோரே பொம்மைகளை இயக்குவோராய் இருந் தனர் என்றும் அவர்களாலேயே இக்கலை பாதுகாக் கப்பட்டு வந்தது என்றும் சிங்கள மக்களின் பொம் மலாட்டாக் கலைப்பாரம்பரியத்தை ஆராய்ந்த பேரா சிரியர் ஜே. திலக சிறீ குறிப்பிடுகின்றார்.
தமிழ் மக்களின் பொம்மைப் பண்பாட்டு வளர் சியில் ஏனைய கலைகனைப் போன்று ஆலயங்கள் நடுநாயகமாக அமையத் தொடங்கின. ஆலய வழி

Page 39
62
பாட்டு முறைகளோடு "விக்கிரகக் கலை' என்ற நுண்பிரிவு வணர்ந்தது. ஆலயங்களின் கோபுரம், தேர், மஞ்சம், சப்பரம், வாகனம் என்பவற்றில் பொம்மையாக் கற்கலை வெளிப்பட்டது. பொம்மலாட் டத்தின் இன்னொரு பரிமாணம் அது நாட்டார் கலைகளுடன் இணைந்து வளர்ந்து வந்தமையாகும். ஆலயங்களில் இடம்பெற்று வந்த பொம்மைக்கலை சலனமற் ற - அசைவற்ற நிலையில் கருத்தைப்புலப் படுத் கம் கலையாக அமைந்தது, அசைவற்ற முறை யிலிருந்து தொடர்பாடல் செய்யும் பொம்மைக்கலை 'நிலகை” என்ற எண்ணக் கருவாற் புலப்படுத்தப் படும். அசைந்து மீ, இயங்கியும் பொருளுணர்த்தும் பொம்மைக் கலகை ** அச கை' என்று குறிப்பிடப். படும். அசைந்து பொருளுணர்த்தும் பொம்மலாட்டம் நாட்டார் மரபுகளின் வழியாகப் பாதுகாக்கப்பட்டது. கூத்தர்கள் தாமே பேசியும், பாடியும் பொம்மை களை இயக்கினர். 12204. 4.
அளவெட்டி, இணுவில், சில்லாலை, வ திரி, மீசாலை, போன்ற கிராமங்களில் பொம்மலாட்டக் கலை நிலைபேறு கொண்டிருந்தமைக்குச் சான்றுகள் உள்ளன. ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் பொம்மை களின் ஆக்கமும் ஆட்டமும் தடைசெய்யப்பட்ட மையால் இக் கலை நலிவடைந்தது என்று கூறப்படு கின்றது, தென் இலங்கையில் இ க்கலையைப் பாது காத்த பிரதேசமாக அம்பலாங்கொடை விளங்கு கின்றது.
தமிழ்மரபில் குமணன் கதை, அரிச்சந்திரன் கதை, கண்ணகி கதை, சீதா கல்யணம், நல்ல தங் கள் கதை, இளந்தாரிகள் கதை, அண்ணமார் கதை, தென்னாலி ராமன் கதை முதலியவை பொம்மலாட்டத் தினூடாகக் காட்டப்பட்டன. சிங்கள மரபில் மகா தன முக்தாவின் கதை புகழ்பெற்றது, பொம்மலாட்டத்

63
தின் வளர்ச்சியில் 'இயக்குபவர்' "இடிைப்பவர்' என்ற தொழிற் பிரிவினர் மேலும் வளரலாயினர் இருவரதும் கச்சிதமான இணைந்த தொழிற்பாடு இக்கலையில் முக்கியமாக வற்புறுத்தப்படுகின்றது.
அனைத்துப் பொம்மலாட்டக் கதைகளிலும் பொதுவான சில பாத்திரங்கள் இ ட ம் பெ று த ல் உண்டு. கோணங்கி, செல்லப்பிள்ளை, குறிசொல்லும் குறத்தி, சாணக்கியன் போன்ற பாத்திரங்கள் கதை இணைப்புக்கும், நகைச்சுவைக்கும், எனப் பயன் படும் பாத்திரங்களாகும்.
மனித அரங்கு தோன்றுவதற்கு முன்னரே பொம்மை அரங்கு தோன்றி விட்டதென்ற கருத்தும் ஆய்வாளர்களிடையே நிலவி வருகின்றது. இன்றைய சூழலில் மனித அரங்கும் பொம்மை அரங்கும் ஒன்றையொன்று வளம்படுத்தி வருகின்றன. மனித ரும் பொம்மைகளும் “கலந்த" அரங்குகளும் ஆக்கப் படுகின்றன . இவ்வாறான கலப்பு அ ர ங் கு *பொம்மம்" என அழைக்கப்படும்.
மனிதராகவும், மனிதரைக் கடந்த நிலையிலும் பொம்மைகள் காட்சி தருதல் பொம்மலாட்டத்துக் குரிய கலைவலிமையாகும். இந்தப்பண்பு உளவியல் வலிமையைக் கொடுக்கின்றது. பாலர்க்கும், முதி யோர்க்கும் உரிய கற்பித்தலிலும் மனவெழுச்சிப் பகிர்விலும் பொம்மலாட்டம் பங்கு கொள்ளுகின்றது. உளவளர்ச்சி பாதிக்கப்பட்டவர்களுக்குரிய கற்பித் தலிலும் பொம்மலாட்டம் வினைத்திறன் பொருந்திய சாதனமாகக் கருதப்படுகின்றது.
நடப்பியலை மீறிய செயற்பாடுகளைப் பொம்மை களினூடாகக் காட்டக் கூடியதாக இருத்தல் உளவியல் வலிமைக்குள் அடுத்து முக்கியத்துவம் பெறுகின்றது.

Page 40
色4
உலகப் புகழ் பெற்ற ஆங்கில ”பஞ்ஜடி” பொம்மலாட் டத் தில் நடப்பியலையும் மீறிய அசாதாரண காட் சிகள் வரும்பொழுது உளவியல் தாக்கங்களுக்கு உள்ளான வர்கள் அவற்றை ஆழ்ந்து நோக்கி உள் வாங்கியதாகக் கூறப்படுகின்றது. குரூர வடிவிலே ஆக்கப்படும் பொம் மைகளையும் உளதாக்கங்களுக்கு உள்ளாகியோர் விதந்து சுவைத்த அனுபவங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தியாவிலுள்ள ராஜஸ் தானியப் பொம்மைகள் கால்கள் அற்ற வடிவங்க ளாகவே உருவாக்கப்படுகின்றன. பெல்ஜியம் நாட் டில் உருவாக்கப்பட்ட ஒருவகைப்பட்ட பொம்மை களில் நெறிப்பாடுகளற்ற வகையிலே சுழலும் கால் அசைவுகள் காட்டப்படுகின்றன. இவற்றினூடாக ஒரு வித உளவியல் தொடர்பாடல் நிகழ்த்தப்படுகின் தி ஆக
பொம்மலாட்டத்துக்குப் பல வகையான பொம் மைகள் இன்று உருவாக்கப்பட்டு வருகின்றன. விரற் பொம்மை, கைப்பொம்மை, தடிப்பொம்மை, மிதக்கும் பொம்மை, நூல் இயக்கிப் பொம்மை, தட்டைப் பொம் மை, நிழற்பொம்மை, பொறிஉள்ளிட்ட பொம்மை, எலத்திரன் பொம்மை என்றாவது பொம்மை வகை விரிவடைகின்றது. மேலையுலகில் இன்று வளர்ச்சி பெற்று வரும் 'அவன்ற்கார்ட்" என்ற கலைக் கோட்பாடு பொம்மைகள் செய்வதிலும், பொம்ம
லாட்டத்திலும் செல்வாக்குச் செலுத்திவருகின்றது.
பொம்மைகள் செய்வதையும் பொம்மலாட்டத்தை யும் பாடசாலைக் கலைத்திட்டத்திலே உள்ளடக்கும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. பொம்மை களினூடாகக் கற்பிக்கும் முயற்சிகள் நவீனமாக்கப் படுகின்றன. பொம்மைகளை வடிவமைத்தல், செய்தல், வண்ணம்பூசுதல், அலங்காரித்தல், இயக்குதல் ஆற்

65
றுகை என்பவற்றினூடாக கணிதம், விஞ்ஞானம், மொழி, சூழல், அழகியல் சார்ந்த எண் ணக்கருக் கனை ஒன்றிணைந்த முறையிலே மாணவர்களுக்குக் கற்பிக்க முடியும்
மலர் அலங்காரம்
தமிழர்களின் நடத்தைகளோடும் இடைவினைக ளோடும், விழாக்களோடும், சடங்குகளோடும் இணைந்த மலர் அலங்காரக் கலை, எழுதப்படாத ஒரு 'மெளனமான" ஆக்கமாகவே இருந்து வருகின் றது. மலர் அலங்காரக் கலைஞர் "மாலை சூட்டப் படாத" கலைஞராக, இனங் காணப்படாத கலைஞ ராக, கெளரவிக்கப்படாத கலைஞராக, வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தமிழர் பண்பாட்டின் மூல வேர்களைத் தேடிக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில் மலர் அலங்காரக் கலையின் இயல்பு களை ஆழ்ந்து கண்டறிய வேண்டிய தேவை எழுந் துள்ளது?
தொலைப்புலன் உணர்வு, தொடுகைப் புலன் உணர்வு என்ற இரண்டு வகையான தொடர்பியல் உள்ளீடுகளை மலர் அலங்காரக் கலை கொண்டது. கண்கள் வழியாக ஒளி வடிவமும், செறிவும் இனங் காணப்படுகின்றன. ஒளியை உள்வாங்குதல், கட்டுப் படுத்தல், முதலியவை தன்னியக்கமாகக் கண்களால் மேற் கொள்ளப்படுகின்றன. வண்ணங்கள், ஒளியின் அலை நீளம் அல்லது மீடிறனால் தீர்மானிக்கப்

Page 41
படும். உதாரணமாக சிவப்பு வண்ணம் கூடிய அலை நீளத்தைக் கொண்டது. வண்ணங்கள் வடிவங்கள் பற்றிய அறிவைக் கொடுக்கும் கல்விச் செயற்பாட் டில் மலர்கள் சிறப்பான கற்பித்தல் பங்கினைப் பெறுகின்றன.
மலர் அலங்காரம் "செய்திக்குறி' அமைத்த லுடன் தொடர்பு கொண்டது. அலங்கார வடிவங்களி னுரடாக மெளனமான கருத்துப் பரிமாற்றம் நிகழ் கின்றது. மலர்களின் தெரிவு, வண்ணம், நறுமணம், <鸮6心成、广町 鲤一@ அமைப்பு, என்பவை கருத்துக்களை யும் உணர்ச்சிகளையும் குறியீட்டு வடிவிலே தெரி படுத்துகின்றன. இக் கலை முத் தொடர்புச் செய்திகளைப் புலப்படுத்துகின்றது மலர் அலங்கா ரம் செய்யும் கலைஞரின் கருத்து அலங்கரிக்கப் படுபவர், சூட்டப்படுபவர் நிலைப்பட்ட கருத்து, தகவல் பெறுனர் தொடர்பான கருத்து, என்றவாறு மூன்று தொடர்புகள் இடம் பெறுகின்றன.
gnsin ang r parat செய்திப் பரிவர்த்தனையில் மலர் அலங்காரம் என்ற தூண்டியின் செறிவு, பருமன், தாக்கம், புதுமை, தொடர்ச்சி, தெளிவு, முதலியவை செல்வாக்குச் செலுத்துகின்றன. செய்தியை அனைவருக்கும் உரியதாகப் *பொதுமைப்படுத்தல்", 9 வழமைப்படுத்தல்" போன்ற கலைப்பண்புகள் மலர் அலங்காரங்களிலே காணப்படுகின்றன. எழுத்து வடிவ தீ தொடர்பு வளர்வதற்கு முன்னைய தென டர்புக் கோலங்களை அறிந்து கொள்வதற்கும் to God ●a、T页击5@@ துணையாகவுள்ள அe
மானுடவியல் நோக்கில் அணுகும்பொழுது
கருவளப் பெருக்கின் குறியீடாக மலர்கள் நோக் கப்பட்ட சம்பவங்களும் உள்ளன. மலரில் இருந்து
உண்டாகும் விதைகள் புதிய தாவரங்களாக வளர்

67
கின்றன. பெரும்பாலும் இனப் பெருக்கத் தொழி லுக்கென்றே உருவாகும் மலர்களிலே விதைகள், விதைத் தூள்கள் முதலியவை காணப்படும். மலர் கள் சாதாரணமாக ஓர் அச்சின் நுனியிலே அமைந் திருக்கும். இந்த அச்சில் பூக்காம்பும், அதன் நுனி யில் பூக் கிண்ணமும் அமைந்திருக்கும்.
665) is மாதிரியான மலரிலே பூக்கிண்ணம் அல்லது ஆதானதின் மேலே பூ இதழ்கள் அமைந் திருக்கும். கீழ் உள்ள வட்டம் புல்லிவட்டம் அல் லது புறவிதழ்வட்டம் எனப்படும். அதற்கு மேல் அமைந்துள்ளது, அகவிதழ்வட்டம் அல்லது அல்லி வட்டம் எனப்படும். அதனை அடுத்து கேசரவட் ப.மீ அல்லது ஆண்பாகவட்டம் அமையும். நான் காவது வட்டம் சூலகம் அல்லது பெண்பாகவட்டம் எனப்படும். இவ்வாறு அமையும் மலர் "முழுமலர்? எனப்படும். முழுமலர் அல்லாத மலர்களில் மேற் கூறிய உறுப்புக்களுள் யாதாயினும் சில உறுப்புக்கள் குறைந்திருக்கும்.
மகரந்தத்தூள் எனப்படுவது மலரிலுள்ள இனப் பெருக்கத்துக்குரிய நுண்பகுதியாகும். மலர்களின் அமைப்பும், கவர்ச்சியும், நறுமணமும், மென்மை யும், கருவளப் பெருக்கத்துக்குரிய குறியீடாகச் சுட்டிக் காட்டப்படுதல் உண்டு,
மலர் அலங்காரக் கலை பிரதான தொழில்நுட்பப் பிரச்சினையை எதிர் நோக்கியது, மலர்கள் விரைந்து வாடுவதால் வடிவத்தைப் பேணிக் காப் பாற்றுதல் கடினமாக இருந்தாலும், உளநிறைவு டன் கலைமுயற்சி பேணப்படுகின்றது. இதன் வளர்ச்சிக்குக் கேந்திரகணித அறிவு துணை செய் கின்றது. சதுரம், வட்டம், முக்கோணம் என்றவாறு உருவமாகவும், அ ரு வ மா க வு ம் சிந்தித்தலுடன்

Page 42
68
இணைந்ததாக மலர் அலங்காரக் கலை வளர்ந்தது. ஆற்றுகைக் கலைக்குரிய பண் புக ள் சிலவற்றை மலர் அலங்காரக் கலை கொண்டுள்ளது. குறுகிய காலத்தினுள் அதன் கலைப் பெறுமா ன ங் க ள் மதிப்பீடு செய்யப்பட வேண்டியுள்ளன.
பண்டைய மட்பாண்டங்களிலும் சுவர் ஓவியங் களிலும் மலர் அலங்காரங்கள் பொறிக்கப்பட்டமை, மனப்பதிவுகளை நிலை நிறுத்தும் மு ய ந் சி க விாயின.
சூழலுக்குத் துலங்குதல் - சூழலைத் து ல ங் க ச் செய்தல், என்ற இரண்டு அணுகுமுறைகளும் மலர் அலங்காரக் கலையிலேயே பின்பற்றப்படுகின்றன.
மனவெழுச்சிகளுடன் மலர்களைத் தொட ர் பு படுத்தலும், மீள வலியுறுத்தலும், உலக இலக்கியங்கள் எல்லாவற்றிலும் காணப்படும் பொதுப்பண்பு கலை இலக்கியங்கள் அனைத்தும் முதலிலே ம னி த ரை உரைகல்லாகக் கொள்ளுகின்றன. அதனைத் தொ டர்ந்து தான் பண்பாட்டு உணர்வுகள் தொடர்கின் றன.
பண்டைய தமிழ் இலக்கியங்களில் மனவெழுச் சிளை மலர்களுடன் தொடர்புபடுத்தி காட்டும் பல பாடல்கள் காணப்படுகின்றன. வகைமா தி ரி யா க 8ங்குறுநூற்றில் சேயனார் பாடிய ஒரு பாடலைக் குறிப்பிடலாம்.
வண்டுதாது ஊதத் தேரை தெவிட்டத் தண்கமழ் புறவின் முல்லை மலர், இன்புறுத் தன்று பொழுதே நின் குறி வாய்த்தனம் தீர்க்க இனிப்படரே
(å494)

69
பூர்விக வேட்டையாடல், மந்தைமேய்த்தல், விவ ாயக்கிராமிய வாழ்க்கை, முதலியவை பலம் பெறத் தொடங்க, விவசாய வாழ்க்கையோடு இணைந்த இறை நம்பிக்கைகள் மலர் அலங்காரக் கலையைத் தெய்விகப்படுத்தலுடன் தொடர்புபடுத்தின.
தமிழர் கலைவளர்ச்சிக்கும் சமூக ஏறு நிரை அடுக்கமைப்புக்குமிடையே பல்வேறு இணைப்புக் இக் காணமுடியும். தமிழ்ச்சமூக அடுக்கமைப் புக்கும், ஆலைகளின் பேணல், கையளிப்புக்குமிடையே யுள்ள உறவுகளை ஆராயும் பொழுது, குறித்த சில கலைகள் குறித்த சில சாதியப்பிரிவினரிடை ஆழ்ந்து வேரூன்றிய பண்பாட்டுச் செயற்பாடுகளைக் காண
முடியும்
உடற்பலத்தை குறைவாகப் பயன்படுத் து மி கலையாக்கங்கள் பொவாக அடுக்கமைப்பில் உயர்ந் தோர் வசமாகின. கருங்கல், களிமண், மரம், முத லிய மூலகங்களைப் பயன்படுத்தும் கலைகள் ஒப் டி. வி ல் கூடுதலான உடற்பலத்தைப் a. JUGër படுத்தும் கலைகளாக அ மை ந் த ன மலர்கலை அதிக உடற்பலத்தைப் பயன்படுத்தாம ல் ஆக்கப் படும் பண்புடையது. அதன் காரணமாக அந்தணர், வீர சைவர் முதலியோரிடம் கூடு த ல ள க ப் பயிலப் 山二@ a站5g。守血55「@ ** அமைப்பில் மலர் அலங்காரக் கலை அனைவருக்கும் பொது வா ன தாகக் காணப்பட்ட அ.
இளையோர் சூடர் வளையோர் கொய்யார் நல்லியாழ் மருப்பின் மெல்லவாங்கிப் பாணன் சூடான் பாடினி அணியாள் ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த

Page 43
7()
வல்வேல் சாத்தன் மாய்ந்த பின்னை முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாடே
மலர் அலங்கார உள்ளடக்கம் பல்வேறு வடிவங் களைக் கொண்டது. மலர்மாலை ஆக்கம், மலர் மஞ்சம், மலர்த்தேர், மலர்ச்சப்பரம், மலர்த்திருவாசி, மலர்ச்சாத்துப்படி, மலர்த்தண்டிகை, மலர் விதானம், மலர் காப்பு, மலர்ச்செண்டு, மலர்த்துர ண், மலர் இருக்கை, மலர்த்திரை என்றவாறு பல்வேறு வடி வடிவங்கள் காணப்படுகின்றன. மாலை அலங்காரத் தில் பல்வேறு வகைகள் காணப்படுகின்றன. தலை மாலை, கைமாலை, கழுத்து மாலை, கொண்டை மாலை, பின்னல் மாலை, இடைமாலை, மனமாலை, மகேஸ்வரமாலை, ஆண்டாள்மாலை, நாரதர்மாலை, சுேவரியமாலை, தவமாலை, வாகைமாலை, இணை மாலை, முப்புரிமாலை, சரமாலை, அடுக்குமாலை தண்ணளிமாலை, காவல்மாலை, பழமாலை, சுட்டி மாலை, திணைமாலை, குருமாலை, அரசு மாலை, நட்சத்திரமாலை, என்றவாறு தனித்துவமான மாலை அமைப்புக்கள் காணப்படுகின்றன.
தமிழ் மரபில் மலர் அலங்காரக்கலை வரன் முறையான கல்விச் செயற்பாட்டினுள் அடக்கப் படாது, மரபு வழியாக வாய் மொழிவாயிலாகவும் செயல் அனுபவங்கள் வாயிலாகவும் கற்பிக்கப்பட் டன. ஆனால் ஐரோப்பிய நாடுகளிலும், ஜப்பானிலும் இக்கலையானது ஒழுங்கமைக்கப்பட்ட கல்வியின் செயற்பாடுகளிலுள்ளே கொண்டு வரப்பட்டுள்ளது. இவற்றைக் கற்பிப்பதற்கு அங்கீகரிக்கப்பட்ட நிறுவ னங்கள் அங்கு உள்ளன. இக்கலை தமிழ் மரபில் ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவனச் செயற்பாட்டினுள்ளே கொண்டு வரப்படாமையினால், வளர்ச்சி பின்னடைய
நேரிட்டது.

7.
மலர் அலங்காரக் கலை உலகில் வ ள ரீ சீ சி பெற்ற பண்பாடுகளுள் யப்பானியப் பண் பா ே விதந்து பேசப்படுகின்றது. "இங்கிபானா? (Ikebana) என்று அழைக்கப்படும். மலர் அலங்காரக்கலை அங்கு பெளத்தக் கோட்பாடுகளுக்குக் குறியீடு வடி வங்களை வழங்கியது. சீன, ஜப்பானிய, பாரம்பரிய மெய்யியலில் எதிர் எதிர் துருவங்களுக்கிடையிலான முரண்பாடுகள் விதந்து பேசப்பட்டன. நேருமி-எதி ரும், பலமும்-பலவீனமும், இருளும்- ஒளியும், உள்ள தும்-இல்லாததும் என்ற வாறு முரண்பாடுகள் உய்த் துணரப்பட்டன. இவ்வாறான முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டுவதற்கு மலர் அலங்காரக் குறியீடுகள் துணை செய்தன. முரண்பாடுகளுக்கிடையே இசை வையும் இணக்கத்தையும் காட்டுவதற்கு ம ல ரீ அலங்காரக் கலை பயன்பட்டது.
சீனாவிலிருந்து யப்பானுக்கு வந்து செல்வாக் குச் செலுத்திய “சென்° பெளத்தத்தின் செல்வாக்கு மலர் அலங்காரக் கலையை மேலும் வளர்ப்பதற்கு உதவியது. இயற்கை தழுவிய வாழ்க்கை, எளிமை, தூய்மை, போன்ற கருத்துக்களை இல்லங்களிலே எடுத்துக் கூற ம ல ர் அலங்காரம் பயன்பட்டது. சுவர்க்கமீ, உலகம், மனிதன் என்ற மூன்று பிரிவு கள் மலர் அலங்காரத்தின் வழியாகக் காட்டப்பெற் றன:
ந வீ ன ஜப்பானிய ம ல ர் அலங்காரக் கலை s9 Gusår sib es ir jo (Avant Garde) ST GOT ČI U GB við Lig மோடி வாதத்துடன் இணைந்தது. சேதன அசேதன பொருள்களின் இணைப்பு பல்வகைப் பொருள்களை யும் ஒன்றிணைத்து கலைஞரது படைப்புத் திறனைக் காட்டும் அருவ நிலைச் சிந்தனைகளின் குறியீடுக எாக மலர் அலங்காரக் கலை வளர்ந்துள்ளது.

Page 44
72
மேலை நாடுகளின் மலர் அ ல ங் கா ர கீ க லை வளர்ச்சியை ஆராய்ந்து பார்த்தால் ச மூ க வ ர லாற்று வளர்ச்சிக்கும் மலர் அலங்காரக்கலை வளர்ச் சி கீ கு மீ இடையே தெ விரி வா ன தொடர்புகளை அறிந்து கொள்ளலாம். நிலப்பிரபுத்துவ 8ரோப்பிய நாடுகளில் இக் கலையின் பயன்களும், அழகுபடுத்த லும் நிலப்பிரபுகளின் கட்டுப்பாடுகளின் கீழ் இருந் தன. மக்களாட்சிப்பண்புகளின் வளர்ச்சி, கைத்தொ ழிற் புரட்சி, நகரங்களை நோக்கிய புலப் பெயர்ச்சி, என்பவற்றின் விளைவுகளாக இல்லங்களை அ ழ கு படுத்தல், விடுதிகளை அழகுபடுத்தல், தேவாலயங் களை அழகுபடுத்தல், என்பவற்றிலே தனிமனித திருப் திகள் மேலோங்கின. மேலை நாட்டுப் போட்டிச் ச மூ க இயல்புகள் இக்கலையையும் போட்டிக்குரிய ஒரு கலையாக மாற்றியது. ம ல ர் அலங்காரப் போட்டிகள் ஒருங்கமைக் கப்பட்டன.
ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டது மோடியின் செல்வாக்கு மலர் அலங்காரக்கலை மூலகங்களை விரிவாக்கியுள்ளது. விதைகள், காய்கள், பழங்கள், கண்ணாடி, உலோகம், களிமண் போன்ற பல்வேறு மூலகங்களுடன் இணைக்கப்பட்டு மலர் ະ. காரக்கலை வளமாக்கப்பட்டு வருகின்றது,
இன்று மேலை நாடுகளில் இக்கலையானது *உளவியற் பிணி நீக்கல்’ உபாயங்களுள் ஒன்றெனப் பயன்படுத்தப்படுகின்றது. உள நோயாளர்கள், மன வெழுச்சிக் குழப்பமுள்ளோர், உளச்சீராக்கப் பிரச் சினைகளை எதிர் கொள்வோர், முதலியோருக்கு உளவியற் சிகிச்சை அளிப்பதற்கு மலர் அலங்காரக் கலைகளிலே ஈடுபடுத்தும் முயற்சிகள் மேற்கொள் னப்படுகின்றன, மலர் அலங்காரக்குறியீடுகள் ஆழ்ந்த மன உணர்வுகளையும் அமுக்கப்பட்ட உணர்வுகளை யும் வெளிக் கொண்டுவருவதற்கு உதவுகின்றன. மலர்களின் வடிவங்களும், நறுமணமும், இழந்த
 

73
முன்னைய உணர்வுகளையும் உளக்காட்சிகளையும் மீட்டெடுக்கின்றன. உடல், உள்ளம், மனவெழுச்சி
ஆகிய மூன்றையும் ஒன்றிணைக்கும் செயற்பாடுகள்
இக்கலையின் உள்ளடக்கத்தைச் சிறப்பிக்கின்றன. உளவியல் சார்ந்த தாக்கங்களை அனுபவிப்போருக்கு இதமும் இங்கிதமும் அளிக்கும் ஒரு கலையாக இன் னமும் எமது சூழலில் இக்கலை வளர்த்தெடுக்கப்
படவில்லை.
மலர் அலங்கா ரக்கலையை முழுநேரத் தொழில் முறையாகக் கொள்ளும் கலைஞர்கள் யாழ்ப்பாணத் தின் பல்வேறு கிராமங்களில் வாழ்கின்றனர். அளவெட்டி, இணுவில், மல்லாக மீ, தெல்லிப்பழை, எழுது மட்டுவாழ், நல்லூர் மட்டுவில், வல்வெட்டித் துறை, புலோலி, சித்தன்கேணி முதலிய கிராமங்க ளில் வாழும் கலைஞர்கள் குடிசைக் கைத்தொழிலாகவும் இத்தொழிலை மேற்கொள்கின்றனர். சரவணபவயேர், செல்லத்துரை யேர், கணேசுயேர், சபாநாதன், கேதிஸ்வர யேர், வரதராயக்குருக்கள், சபாயேர், சுப்பையா யேர், கந்தையாயேர், பஞ்சலிங்கம், மனோகரன், கதிர்பாலன், சுப்பிரமணியம், நித்தியா னந்தன் என்றவாறு மலர் அலங்காரக் கலைஞர்களின் பட்டியல் நீண்டு செல்கிறது.
மலர் அலங்காரம் பாலர் கல்வியில் ஒரு பிரதான அனுபவமாக்கப்பட வேண்டியுள்ளது. மேலை நாட்டுப் பாலர்கல்வி ஆசியர்களுக்கு இத்துறையில் சிறப் பார்ந்த பயிற்சி தரப்படுகின்றது. நாமும் இக் கலையைப் பாலர் கல்வியில் அனுபவமாக்கல் வேண்
டும்
ডিগ্ৰািন্ধয় ট্যািদ স্থাইিৰ্টজৰ
፭፻፱፻፱ ፻፷ 憩臀

Page 45
சடங்குகளும் மந்திரங்களும் கற்பித்தலும்
சீ டங்கு (Ritual) எ ன் ப து ப ல ம் வாய்ந்த கலைச் சாதனமாகவும் கற்பித்தல் சாதனமாகவும் வடிவமைக்கத்தக்க உ ள் ள |ா ரீ ந் த விசைகளைக் கொண்டுள்ளது. சடங்குகளின் உள்ளார்ந்த விசை களைப் பயன்படுத்தியமை சேக்ஸ்பியரின் நாடகங்க
ளுக்கு வெற்றியைக் கொடுத்தது.
சடங்கின் தொடர்பாடல் வலிமையின் ஆழங்கள் ச மூ க மானுடவியல் ஆய்வாளர்களினால் பல சந் தர்ப்பங்களிலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. உ ட ல், உள்ளம், மனவெழுச்சிகள், மீ இயற்கை வலுக்களு டன் ஈடுபட வைத்தல், சமூக மயமாக்கல் என்ற செயற்பாடுகளை ஏக காலத்திலே தொழிற்பட வைக் குமி வலுவினைச் சடங்கு கொண்டுள்ளது.
ச ட ங் கு க ளி ன் போ து பல்வேறு குறியீடுகள் காட்சி வடிவிற் கொண்டுவரப்படுகின்றன. மனவெ ழுச்சிகளைத் தூண்டும் இசைக் கோலங்களும் உட லசைவுகளும் ஒன்றிணைக்கப்படுகின்றன. ஒருங்கி ணைந்த ஒரு “பொதுச் சிந்தனை?யின் உருவாக்கம்

75
நிகழ்த்தப்படுகின்றது. சடங்குகளை நிகழ்த்துபவர் மீ இயற்கை வலுக்களையும் சடங்குகளிற் பங்கு பெறுவோரையும் பலம் மிக்க உளவியல் வலுவினால் ஒன்றிணைப்பவராக விளங்கும் நிலை காணப்படும்.
சடங்குகளின் போது உளவியற் பங்குபற்றல் வலுவை அதிகரிப்பதற்கு இசைக்கருவிகள், தெறிக்கும் வெளிச்சம், நறுமணம், உணவு வகைகள் முகமூடிகள், மந்திரங்கள் முதலியவை பயன்படுத்தப்படும்.
அருகே இருப்பவருடன் அன்புமி, பரிவும், ஒத் துணர்வும் தூண்டப்படுதல் சடங்கின் ஆழ்ந்த பலம் என்று குறிப்பிடப்படும். பிறப்பிலிருந்து இற ப் பு வரை மனித வளர்ச்சிப் படிநிலைகளுடன் ச ட ங் கு கள் இணைந்துள்ளன. பூர்வீகப் பொருளாதார நடவடிக்கைகளுடன் சடங்குகள் தொடர்பு கொண்டி ருந்தன. சமூக ஒன்றுகூடல் ஒவ்வொன்றுடனும் அவை இணைந்து காணப்பட்டன.
அப்பர் வோல்டா பகுதியில் வாழும் மோசி மக் களின் சடங்குப் பாடல் ஒன்று வருமாறு:
"இந்த ஆண்டு இனிமை சூழ்ந்தது அடுத்த ஆண்டு மேலும் இனிக்கும் உலகு இனிமையைப் பொழியும் உள்ளம் தண்ணெனக் குளிரும் பருத்திச் செடியிற் பஞ்சு பொழியும் குழந்தைச் செல்வம் குறையாது பெருகும் அறுவடை இன்பமீ முடிவிலா இன்பம் வான் முகில் பெய்யும் தண்ணீர் தண்ணெனப் பாயும் உலகெலாம் குளிரக் குழந்தைகள் மழையிற் குளித்து மகிழ்வர்.

Page 46
7கு
மரக் கிளைகளிற் சுமை சுமையாய்ப் பழங்கள் குவியும் என்னால் மட்டும் தனித்துப் பழங்களைப் பறிக்க முடியாது.
(ஹெம்மொன்ட்-1966)
உற்பத்திப் பெருக்கிலும் சமூக உறவு மேம்பாட் டிலும் சடங்குகள் எவ்வாறு பங்கு கொள்கின்றன என்பதை மோசி மக்கள் ச ட ங் குப் பாடல் தெளி வாகக் காட்டுகின்றது.
சடங்குகளின் சிறப்புப் பண் பு முதியோரதும், இறந்தோரதும் ஆற்றல்களை ஏனையோர் பெற்றுக் கொள் ஞ மீ ஒழுங்கமைப்புக் காணப்படுதலாகும். அறிவின் தொடர்ந்த கையளிப்பு சடங்குகள் வாயி லாக நிகழ்த்தப்படுகின்றது.
ச ட ங் கு க ஞ க் கு ரிய பலம் மந்திரத்தினால் (Magic) மேலும் மீள வலியுறுத்தப்படுகின்றது. மந் திரத்தின்போது கையாளுகை ( Manipulation ) என்ற உளவியற் பண் பு மேலோங்கி நிற்கின்றது. அல்லவை நீக்கவும் நல்லவை வேண்டவும் மந்திரங் கள் கையாளப்படுகின்றன. (தீமைகளைத் தூண்டும் "கறுப்பு மந்திரம்' என்ற ஒரு பிரிவு மீ வளர்ச்சி யடைந்துள்ளது) "பாவனை மந்திரம்" என்ற பிரி வில் யாதாயினுமீ ஒரு காட்சிக் குறியீடு பயன்படுத் தப்படும். உதாரணமாக ஒரு பொ மீ  ைம வி ய ப் பாவனைக்குரிய பொருளாக்கி வசப்படுத்தலும், கையாளுதலும் பாவனை மந்திரத்தில் இடம்பெறும்,
"இணைப்புறு மந்திரம்" என்பது ஒருவருடன் தொடர்பு கொண்ட ஒரு பொருள் அ வ ரு கீ கு ரி ய வலிமையைக் கொண்டிருக்கும் என்ற நம்பிக்கையில் கையாளப்படுகின்றது.

77
சடங்குகளின் உபாயங்கள் ம நீ திர ங் களி ன் உபாயங்கள் கலையாக்கங்களுக்கு மட்டுமல்ல, கற் பித்தலுக்கும் பயன்படக்கூடிய வலிமையையும் ஆழங் களையும் கொண்டுள்ளன எண்ணக் கருதிகளைக் கற்பித்தல், சமன்பாடுகளைக் கற்பித்தல், செயல் முறைகளைக் கற்பித்தல், கோட்பாடுகளைக் கற்பித் தல் முதலியவற்றிற்கு சடங்கு உபாயங்கள் நன்கு பயன்படுத்த முடியும்
சடங்குகளைக் கற்பித்தல் முறையியலாகப் பயன் படுத்துதல் பூர் விகப் பண்பாட்டின் ஒன்றிணைந்த செயற்பாடாகக் காணப்பட்டது. இந்திய மரபில் கற்பித்தலைத் தொடங்குதலே 'உபநயனச் சடங்கு" என்ற செயல் முறையுடன் இணைந்திருந்தது. இந் நிலையிற் சடங்கைப் பொருத்தமான சந்தர்ப்பங் களில் ஒரு முறையியலாகப் பயன்படுத்தி வினைத் திறனுள்ள கற்றல் கற்பித்தலை முன்னெடுக்க முடி யும்.
ஆசிரியர் சடங்கு நிகழ்த்துவோராகப் பாவனை செய்து அன்றைய கற்பித்தலைத் தொ ட ங் கு ம் பொழுது சடங்குகளின் உளவியல் வலிமையானது வினைத்திறன் மிக்க கற்பித்தல் வலிமையாக மாற் றப்படுகின்றது. சடங்கு உபாயங்களைப் பயன்படுத் தும் கற்பித்தல் முறையியல் பாலர் பாடசாலைகளி லும் ஆரம்பப் பாடசாலைகளிலும் வெற்றியைத் தந் துள்ளது. --
யப்பானில் தேநீர்ச் சடங்கின் வழியாக நல் லொழுக்கமி, பணிவு, கட்டுப்பாடு, சமூக மயமாக் கல் முதலியவை முன்னெடுக்கப்படுகின்றன. எமது பாரம்பரியமான சடங்குகள் வெறுமனே கலையாட லாக இருக்கவில்லை. இயற்கையைப் புதுப்பித்தல் வாழ்க்கையைப் பராமரித்து வலுவூட்டல், சமூக

Page 47
78
நிறுவனங்களுக்கு ஆ |ழ் ந் த பெறுமானங்களைக் கொடுத்தல், ஆபத்துக்களில் இருந்து தப்புதல் கல்விக்கு மதிப்பளித்தல் முதலிய பல்வகை நோக் கங்களுடன் சடங்குகள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.
தனித்து வாய் மொழி மூலமாக அமையும் கற் பித்தலால் மாணவர்கள் சலிப்படைந்து விடுகின்ற னர். இந்நிலையில் ஆசிரியருக்கும் மாணவருக்கும் உற்சாகம் தரக்கூடிய முறையியல்களை எமது பாரம் பரியங்களில் இருந்து தேடியெடுக்கும் பொழுது கற் பித்தற் செயல்முறை மேலும் வலிமை பெறும். குரல், உடற் செயற்பாடு, பொருள்களின் கையாளுகை, உளச் செயற்பாடு ஆகியவை இக் கற்பித்தலில் ஏக காலத்தில் ஒன்றிணைக்கப்படுவதனால் இக் கற்பித் தல் முறையானது 'விளைவுகள்? தரும் கற்பித்த லாக அமையும்
வெறுமனே குறிப்புகளை எழுதுதலும், முறையாக மனனம் செய்தலும் எ ன் ற ச லி ப் பு நிலைகளில் இருந்து மாணவர் விடுவிக்கப்படுவர்.
கலை வடிவமாகவும் கற்பித்தல் வடிவமாகவும் முகமூடிகள்
திம்ே விரும்பிய மனவெழுச்சிக் கோலங்களை வெளிப்படுத்துவதற்கும், சுவைப்பதற்கும் எ ன் ற இரு நிலைகளிலே முகமூடிக்கலை பயன்படுகின்றது . கற்காலத்திலிருந்து ந வீ ன தொழில்நுட்ப யு 5 ம் வரை முகமூடிகளின் கற்றல் கற்பித்தற் பணிகளும்,

79
மனவெழுச்சிப் பகிர்வுப் பணிகளும் பன்முகப்பட்
டவையாகவுள்ளன.
களிமண், மரம், உலோகம், விலங்கின் ஓடுகள், கல், நார், யானைத்தந்தம், உமி, கதிர்கள், தானியம், இறகுகள், தோல், உரோமம், துணி போன்றவை முகமுடிகள் செய்வதற்கு உபயோகிக்கப்பட்டன. (UD ట్రి மூடியை வடிவமைக்கும் பொழுதும் செய்யும் பொழு
தும் மனவெழுச்சி வெளிப்பாடுகள் உடலசைவுகளுடன் இணைக்கப்படுகின்றன. மனித மு க கீ கோ ல மீ, விலங்கு முகக் கோலம், அரு வ மு க க் கோலம், என்றவாறு முகமூடியாக்கம் ப கு த் து க் கூறப்படு கின்றது. பாரம்பரியமான சடங்குகளில் GP és egp ig. களைத் தேவைகளுடனும், அதிமானுட வடிவங்களு டனும் தொடர்புபடுத்திய வேளை முகமூடி செய்யப் பயன்படுத்திய பொருள்கள் மீ து மீ தெரிவு மேற் கொள்ளப்பட்டது. மாலி நாட்டில் வாழும் பழங்குடி மக்கள் மத்தியில் முகமூடி செய்பவரே அதிமானுடப் பண்புகள் கொண்டவராகவும், தேவைகளைக் 6 * (GB" படுத்துபவராகவும் கருதப்பட்டார்.
முகமூடிகளை அணிபவர்கள் தேவைகளின் தாக் கத்திற்கு உள்ளாவார்கள் என்ற நமீபிக்கையும் பழங்குடி மக்களிடத்து நிலவியது. இதன் காரண மாக உள நோய்களைக் குணப்படுத்துவதற்குப் பழங்குடி மக்கள் முகமூடி உபாயங்களைப் பயன்படுத் தினர். தனி மனிதர்க்கு மட்டுமன்றி ஒரு கிராமத் திற்கு ஏற்பட்ட உனதாக்கங்களை விரட்டியடிப்பு தற்கு முகமூடிகள் அணிந்து நடமாடி கிராமத்தின் எல்லைவரை செல்வதும் ப ழ ங் (கு டி டத்துக் காணப்பட்டன. இச்சந்தர்ப்பங்களில் விகார மான முகமூடிகள் அணியப்படும். நோய்களிலிருந்து தப்புவதற்கும், நோய்களை விரட்டியடிப்பதற்கும் முகமூடிகள் அணிதல் சீன மக்களிடத்தும், சிங்கன

Page 48
80
மக்களிடத்தும் காணப்பட்டன. பத்தொன்பது வகை யான முகமூடிகளை சிங்கள ம க் க ள் இ த ன் பொருட்டுப் பயன்படுத்தினர். மிகக் குரூரமான தோற்றங்களைக் கொண்டதாக அந்த முகமூடிகள் அமைந்தன.
பண்டைய உரோமாபுரியிலும், கிரேக்கத்திலும் போர் வீரர்கள் பாதுகாப்புக்காகவும், பயமுறுத்து வதன் பொருட்டும் முகமூடிகளை அணிந்தனர். நச் சுப் பொருட்களில் இருந்து பாதுகாப்புத் தேடும் பொருட்டு முகமூடி அணியும் வழக்கம் நவீன தொழில்நுட்பவியல் நாடுகளிற் காணப்படுகின்றன. சமகால விளையாட்டுக்களிலும், ப ா து க – ப் பி ன் பொருட்டு முகமூடிகள் அணியப்பட்டன.
பயிர்ச்செய்கைப் பண்பாடுகளில் க ரு வ ள ப் பெருக்கை வேண்டி தானியங்களாலும், உமிகளாலும் செய்யப்பட்ட முகமூடிகளைக் குறித்த சந்தர்ப்பங் களிலே அணிதல் உண்டு கோபி இந்தியர்கள், சூனி இந்தியர்கள் மத்தியில் இவ்வாறான முகமூடிப்பண் பாடு காணப்பட்டது. தமிழ்ப் பண்பாட்டில் கரு வளப் பெருக்கம், நோய் விரட்டல், பண்டிகைக் குதூகலம், கற்பித்தல், கூத்து முதலிய செயற்பாடு களில் முகமூடிகள் பயன்படுத்தப்பட்டன. சுவாமி ஊர்வலமும் வரும் மானம்பூ, வேட்டை முதலிய திருவிழாக்களில் முகமூடியாட்டமே முதலில் இடம் பெறுதல் உண்டு. உள நோய் தீர்க்கும் கலை வடிவ ஆக்கத்தில் முகமூடிகளைத் தமிழ் மக்கள் பயன் படுத்தினர். உணர்ச்சிகளும், கனவெழுச்சிகளும் திட்டமிட்டு உருவ வடிவிலே தயாரிக்கப்படுவதனால் முகமூடிகள் கலைப் பெறுமதி மிக்கனவாயுள்ளன. தேக்கி வைக்கப்பட்ட மனவெழுச்சிகளை முகமூடி களின் வாயிலாகக் காட்டக் கூடியதாக இருப்பதனால்

8麒
அவை உளவியற் பெறுமதி மிக்கவை . எதிரி பாராத மனவெழுச்சிகளுடன் காட்சி வடிவிலே பழகுவதனால் ஏற்படும் உளச் சமநிலையாக்கத் திற்கு அவை துணை செய்கின்றன. தமிழர் பண் பாட்டில் முகமூடிகள் குதூகலமுமி மகிழ்ச்சியும் மிக்க உணர்வுகளைத் தூண்டுவதற்கு ஒப்பீட்டளவிற் கூடு தலாகப் பயன்படுத்தப்பட்டன.
நவீன அரங்கியலில் துன்பச் சுவை, இன்பச் சுவை என்ற இரண்டின் விரிவாக்கத்திற்கும் முக மூடிகள் பயன்படுத்தப்படுகின்றன. மர்மம், பயங் கரம் திகில் சார்ந்த எதிர் நிலை முகமூடிகளும், சாந்தம், கேலியாக்கம், தகைப்பு சார்ந்த நேர் நிலை முகமூடிகளும் ஆற்றுகையில் பயன்படுத்தப்படு கின்றன. N
சிறுவர்களுக்கான நவீன கற்றலிலும், கற்பித் தலிலும் முகமூடிகளுக்குத் தனிச் சிறப்பு வழங்கப் பட்டுள்ளது. கருத்தைக் காட்சி வளமாக்குதல், மனவெழுச்சிகளை உருவப்படுத்துதல், எளிமையான அனுபவங்களில் இருந்து சிக்கலான அனுபவங் களுக்குச் செல்லல், தெரிந்த பொருட்களிலிருந்து தெரியாத பொருட்களுக்குச் செல்லல், மனவெழுச்சி களைப் பகிர்ந்து அனுபவித்தல், ஆழ்ந்த உள ஈடு பாட்டுடன் கற்றல், முதலிய செயற்பாடுகளுக்கு முகமூடிகள் உதவுகின்றன. ஆழ்மனத்தை ஈடுபடுத்திக் கற்கச் செய்வதற்கும் முகமூடிகள் பலம் பொருந் திய சாதனங்களாகக் கருதப்படுகின்றன.
ஒவ்வொரு மனிதரும் நாளாந்த வாழ்க்கையிலே பல்வேறு நடிபங்குகளை ஏற்று நடக்கவேண்டியுள் ளது. ஒருவரது ஆளுமையின் ஒருங்கிணைவும் வெற் றியும் சமூகத்திலே தமக்குரிய நடிபங்குகளை நிறை வேறும் கோலங்களிலே தங்கியுள்னன. கோபம்,

Page 49
82
பயம், நகைப்பு, போன்ற மனவெழுச்சிகள் ஏற்படும் பொழுது எடுக்கப்பட்ட நி  ைல ப் படங்க னை ப் பார்க்கும் பொழுது முகமூடிகள் மனிதருக்கு அந்நிய மாகிய வடிவங்களாத் தெரியவில்லை . ஆளுமை என்பதைக் குறிக்கும் *பேர்சோனா' என்பது முகமூடியைக் குறிக்கும் எண்ணக் கருவிலிருந்து தோன்றி வளர்ந்தது.
மனிதரிடத்து இரண்டு விதமான நடத்தைக்
கோலங்கள் காணப்படுகின்றன. அவையாவன:
(அ) உள்ளத்தில் ஒன்றும் முகபாவனையில்
வேறொன்றும் காட்டப்படும் நடத்தை இது "எதிரல்' என்று குறிப்பிடப்படும்
(ஆ) உள்ளமும், முகபாவனையும் ஒன்றையே காட்டுதல், குழந்தைகளிடத்து இந்த நடத் தையே மேலோங்கி நிற்கு மீ. இது 'இசையம்” என்று குறிப்பிடப்படும். முக மூடி உபாயத்தின் வழியாக மேற்கூறிய இரண்டு நடத்தைகளையும் மீள வலியுறுத் தலாம் விரிவுபடுத்தலாம்.
பாலர் கவிதைகள்
குழந்தைகளின் உளமொழியியல் விருத்தி, மன வெழுச்சி விருத்தி, எண்ண்க் கருவாக்கம் என்பவற் றைத் தழுவி பாலர் கவிதைகள் ஆக்கப்படுகின்றன. வளர்ந்தோரின் மொழியையும், சிந்தனைகளையும் திணிக்கும் எதிர் அழுத்தம் விளைவிக்கும் கவிதைகள் பாலர்களின் உள வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்கும்

83
இதன் காரணமாகப் பாலர்களுக்குரிய கவிதையாக் கத்திலும் தெரிவிலும் கூடியளவு நிதானமும், கவன மும் செலுத்தப்படுதல் வேண்டும்.
குழந்தைகளின் எண்ணக்கருவாக்கத்துக்கும், உளவளர்ச்சிக்கும் ஊறு விளைவிக்கின்ற கவிதை யாக்கங்கள் பல காணப்படுகின்றன. வகைமாதிரி யாகப் பின்வரும் கவிதையடிகளை நோக்கலாம்,
வேட்ட வட்டப் பந்து வடிவான பந்து'
மேற்கூறிய அடிகளில் ಙ್ கள் குழந்தைகளுக்கு வழங்கப்படுதலைக் காண லாம். வட்டம்" என்பதும் கோளம்" என்பதும் வேறுபட்ட எண்ணக் கருக்கள், 'பந்து' கோளவடிவ மானது, இக்கவிதையில் பந்து வட்ட வடிவமானது என்ற தவறான எண்ணக்கரு குழந்தைக்குத் தரப் படுகின்றது. இவ்வாறான கவிதைகள் குழந்தை களின் பிற்காலக்க கணித அறிவையும், மொழி வளர்ச்சியையும் தாக்கிவிடுகின்றன.
இன்னோர் உதாரணத்தையும் இச்சந்தர்ப்பத்தில் நோக்கலாம்.
'நிலா நிலா ஒடிவா நில்லாமல் ஓடிவா மலைமேல் ஏறிவா மல்லிகைப்பூக் கொண்டுவா"
இந்தப் பாட்டிலும் குழந்தைகளுக்குரிய எண் னக்கரு முரண்பாடுகள் காணப்படுகின்றன. மலை யிலிருந்துதான் மல்லிகைப் பூ வரவேண்டும் என்று குழந்தை எண்ணலாம் அல்லது மல்லிகைப் பூவை

Page 50
魯魯
அம்மாவோ அப்பாவோ கொண்டுவர முடியாது நிலாவே கொண்டுவருகின்றது என்றவாறு குழப்பம் மிக்க எண்ணக் கருவாக்கங்கள் குழந்தைகளின் உள வளர்ச்சியில் அழுத்தங்களாகவும் உறுத்தி விடப்படு கின்றன. இவ்வாறான பாடல்கள் 'முரணிகள்? என்று குறிப்பிடப்படும்.
பாலர் பாடல்களின் இசையும், தாளக் கட்டும் தான் முக்கியம்பெறுகின்றன என்று எண்ணுவதும், எண்ணக் கருவை நழுவவிடுதலும், கல்விச் செயற் பாடுகளிலே பின்னடைவுகளை ஏற்படுத்திவிடுகின்
நீ)ஆக
எண்ணக்கருக்களை அடிப்படையாகக் கொண்டே குழந்தைகள் கற்கின்றார்கள் மா அனுபவங்களைத் திரட்டிக்கொள்கின்றார்கள். குழந்தைகள் சூழலுடன் மேற்கொள்ளும் இடைவினை கன் வாயிலாக எண்ணக் கருக்களைத் திரட்டிக் கொள்கின்றன. திரட்டப்படும் எண்ணக்கருக்களைத் துணையாகக் கொ ண் டு குழந்தை மேலும் புதிய எண்ணக்கருக்களை அறிந்து கொள்கின்றது. ஆரம்பத்தில் உருவ நிலையாகவும், காட்சி நிலையாகவும் எண்ணக்கருக்கள் கற்றுக் கொள்ளப்படுகின்றன. படிப்படியாக வளர்ச்சி எட் டப்படுமீபொழுது, அருவ நிலையான எண்ணக் கருக்கள் கற்று அறியப்படுகின்றன,
தாலாட்டுப்பாடல்களும் குழந்தைப் பாடல் வகை யைச் சாராதவை. தாலாட்டு என்பது தாய்மாருக் குரிய இலக்கியம். உளவியலில் அது மகலுக்கத்தின் இ லக் கி ய வெளிப்பாடு என்று கொள்ளப்படும். தோலாட்டு" என்ற சொல்லைப் பிரித்தால் அது தால் டி ஆட்டு என வரும் தால் என்பது நாக்கு, நாக்கை ஆட்டித் தாய்மார் பாடும் மரபு இங்கே சுட்டிக்காட்டப்படுகின்றது.
 
 
 
 
 
 

85
தாராட்டு, ஒராட்டு, தாலேலோ, ஒலாட்டு, தொன் டிற் பாட்டு, தாய்ப்பாட்டு, இராராட்டு, நித் திரைப் பாட்டு, கண்வளர் பாட்டு, என்றவாறு பல பெயர் குளால் இது வழங்கப்படுகின்றது. மலையாளத்தில் இது "தாராட்டு” என்றும், தெலுங்கில் 'ஊஞ்சோதி9 என்றும், கன்னடத்தில் இது “ஜோகுல" என்றும் அழைக்கப்படுகின்றது. தாலாட்டுப்பாடலில் குழந்தை பெறும் உளவியல் இன்பத்தைவிட, தாய்மர ரே மகிழ்ச்சியையும், திருப்தியையும் பெறுகின்றனர். என்பதை உளவியல் ஆய்வுகள் தெரியப்படுத்து கின்றன.
வகைமாதிரிக்கு ஓர் உதாரணத்தை எடுத்து நோக் Sa) frth.
8வெள்ளியால் செய்த ஏட்டில் வைர எழுத்தாணி கொண்டெழுத பள்ளியில் சேர்க்க மாமன் பரிவுடன் வந்திடுவார்?
இங்கு இடம்பெறும் வெள்ளியால் செய்த ஏடும், வைர எழுத்தாணியும் குழந்தைகளால் புரிந்து கொள் ளப்பட முடியாத எண்ணக் கருக்களாக இருக் கின்றன. இவற்றைப் பாலரி கவிதைகள் என்று எண்ணி சிலர் குழந்தைகளுக்குக் கற்பித்தும் விடு கின்றனர்.
பாலர் கவிதைகளின் ஓசை, சந்தம் முதலியவை முக்கியத்துவம் பெறுகின்றன. ஆனால் @ঞ্জ শুরু কঁতে அடிமைப்பட்டு தேவையற்ற கனதி நிறைகளைக் குழந்தைகளுக்குச் சுமத்திவிடக்கூடாது இவ்வாறு கன தி கூடிய கவிதை "இடர்ப்பா? 6 TGÖT’ (B23. உதாரணத்துக்குப் பின்வருமி அடிகனைக் குறிப் பிடலாம்.

Page 51
86
*ஒன்றும் ஒன்றும் இரண்டு ஓடாதே நீ மிரண்டு"
T LSL Y SLSLSLSMS S TTMTTT LSLSLSLS S TM MLMLMMT S Y L LSL LSLSLSLS LL LLLL LLLL
*8ந்தும் 8ந்தும் பத்து அதுவே போதும் நிறுத்து"
இங்கு இடம்பெற்றுள்ள “மிரண்டு”, “நிறுத்து" போன்ற சொற்கள் குழந்தையின் சிந்தனையோட் டத்திற்கு எ தி ர் அழுத்தம் ஏற்றக்கூடியனவாய் அமைந்து விடுகின்றன. சூழல் அனுபவங்களோடும், பொருள்களைக் கையாளுவதன் வாயிலாகவுமே கணித எண்ணக் கருக்களைக் குழந்தைகளுக்கு அறி முகப்படுத்தல் ஆரோக்கியமானதும் அனுகூலம் தரக் கூடியதும் என்பதை ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. *அருவ நிலையில்? அல்லது சூக்குமமாகக் கணித எண்ணக் கருக்களைக் கற்பித்தல் பாலர் நிலையிலே தவிர்க்கப்படவேண்டியுள்ளன.
அண்மைக் காலமான உயர் வகுப்புக் கணித பாடச் சித்திகளில் பெரும் வீழ்ச்சி காணப்பட்டு வருகின்றது. குழந்தை நிலையிலிருந்து க ணரித எண்ணக்கருக்கள் உ ரி ய முறையில் கற்பிக்கப் படாமை கணிதபாடப் பின்னடைவுக்கு ஓர் அடிப் படைக் காரணியாகச் சுட்டிக்காட்டப்படத்தக்கது.
குழந்தைகளைக் கருப்பொருளாக வை த் து த ம து உள நிறைவுக்காக வளர்ந்தோர் பாடும் பாட்டுக்களும், பாலர் பாட்டுக்களாகா, உதாரணத் துக்கு எ ம து இலக்கியங்களிலே இடம்பெறும் "பிள்ளைத்தமிழ்’ப் பாடல்களைக் குறிப்பிடலாம். குழந்தைகளின் ஒவ்வொரு வளர்ச்சிப் படிகளையும், வளர்ந்தோர் இ ன ங் கண் டு ஈடுபாடு கொண்டு சுவைத்துப்பாடும் பாடல்களாக அமைகின்றன.

87
அவை குழந்தைகள் ப ற் றி ய இலக்கியமாக" விளங்குமேயன்றி 'குழந்தை இலக்கியமாகக் கரு தப்படமாட்டா,
குழந்தை நிலையில் ஒ ைஅ வேறுபாடுகளைச் சரியாகக் கற்பித்து வருவோமாயின், பிற்காலத்தில் எ ழு த் து ப் பிழைகள் விடு வதையும், உச்சரிப்புத் தவறுகள் விடுவதையும் தவிர்த்துக்கொள்ள முடியும். ஓசை வேறுபாடுகளைக் கற்பிப்பதற்குப் பாடல்களே பொருத்தமான சாதனங்களாகும்.
குழந்தைகளுக்குரிய பாடல்களை உளவியலறிவு, உளமொழியறிவு, சமூக மொழியறிவு என்பவற்றைத் துணையாகக் கொண்டு, பொருத்தமான ஆராச்சி களைச் செய்து, சீர்தூக்கிப் பார்த்த பின்னரே கையளித்தல் வேண்டும். இத்தகைய முயற்சிகள் ஏற் கனவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.
பாலர் பள்ளிகளிலே கையசைவுகளுடனும் செயற் பாடுகளுடனும் பயன்படுத்தப்படக்கூடிய ஒரு பாடல் உதாரணத்துக்குக் கீழே தரப்படுகின்றது.
வண்ண வண்ணத் துண்டு 6) I fig. Gall AIP 607 துண்டு பூக்கள் போல ஒட்டலாம் பூனை போல ஒட்டலாம் மாலை போல ஒட்டலாம் மான்கள் போல ஒட்டலாம் கூடை போல ஒட்டலாமி குருவி போல ஒட்டலாம் ஆடை போல ஒட்டலாம் அலங்கரித்து வைக்கலாம்.

Page 52
வ ண் ண த் தாள்களை ஒட்டும்போது இப் பாடலைப் பாடுவதும், வடிவங்களை ஆக்குதலும், உ ட ல் உள இயக்கங்களை ஒன்றிணைத்தலும் குழந்தைகளுக்குக் குதூகலத்தைக் கொடுக்கும்.
கற்பித்தல் வ L96). LDT35 விடுகதைகள்
குதூகலம் நிரம்பிய கற்பித்தலில் விடுகதைகள் தனித் துவமானவை. பகுத்து நோக்குதல், தொகுத் து நோக்குதல், மறைபொருள் காணுதல் முதலிய கல்விப் பண்புகள் விடுகதைகளிலே காணப்படுகின்றன. 'பிரச் சினை விடுவித்தல்" என்பது விடுகதைகளினூடாக முன்னெடுக்கப்படுகின்றது. தமிழில் விடுகதைகள் 'நொடி" என்றும் புதிர்' என்றும் அழைக்கப்படும் பழந் தமிழ் இலக்கியங்களில் இது "பிசி" என்றுமி குறிப்பிடப்பட்டது. பிசி என்பது "பிதிர்" என்றும் "புதிர்' என்றும் வளர்ந்து வரலாயிற்று ஆங்கிலத் தில் இது றிடில் (Riddle) என்று குறிப்பிடப்படும். "G5u576ño”, “Ljófát.” Quiz, Puzzle) 6T 6ðir (D 675 TT fib களும் இதற்கு இணையாக பயன்படுத்தப்படுகின் pಳಿ"e
ஒரு சமூகத்தின் விழுமியங்களையும் அந்தச் சமூகத்தில் நி க மு மீ அறிகைக் கோலங்களின் இயல்பையும் குறிப்பிடும் குறியீடுகள் போன்று விடு கதைகள் விளங்குகின்றன. எளிமையிலிருந்து சிக்க லான வடிவங்கள் வரை விடுகதைகள் பல்வேறு அறிகைத் தளங்களைக் கொண்டதாக அமையும்,

89
அமைப்பியல் அடிப்படையில் விடுகதைகள் மூன்று பெரும் பிரிவுகளாகப் பகுப்பாய்வு செய்யப் படும். அவை,
(அ) தனிநிலை விடுகதை (ஆ) கூட்டுநிலை விடுகதை (இ) இணைநிலை விடுகதை
தனிநிலை விடுகதைகள் எளிமையானவை, பாலர் கல்வியில் இதுவே அ தி க மீ பயன்படும். இதற்கு உதாரணம் ஒன்று வருமாறு:
"ஒரு கோவிலுக்கு இரண்டு வாசல்" அது ਹੈ।6 இந்த விடுகதைக்கு விடை "மூக்கு" என்பதாகும். இங்கு கொடுக்கப்பட்ட வடிவமாக கோவில் அமை கின்றது. மாறாத வடிவமாக 'வாசல்" விளங்குகின் றது. கொடுக்கப்பட்ட வடிவத்திற்குரிய மறை பொருள் வடிவத்தைக் கண்டறிவதே இங்குள்ள புதிர்.
LDII 60T6 TS) அறிகை அமைப்புக்கள் வளர கூட்டுநிலை விடுகதைகளைக் கற்றலிலே பயன்படுத்த லாம். கூட்டுநிலை விடுகதைகளில் மறை பொருளை விளக்கும் சாயற் குறிகள் (Clues) ஒ ன் று க் கு மேலாகத் தரப்படும். இ த ற் கு ஒர் உதாரணம் ai (5LDIT (Ul,
பகலில் வருவான் JW பார்ப்பதற்குக் கூசுவான்வின் இது
எட்டாத வீரன் 鸚* அவன் யார்? .
இந்த விடுகதையில் கொடுக்கப்பட்ட வடிவம் எட்டாத வீரன். மாறாத வடிவங்களாக பகலில் வரு தல், பார்ப்பதற்கு கூசுதல், முதலியவை இடம்பெறும்

Page 53
90
இவை மறைபொருளை விளக்கும் சாயற் குறிகளாக வுள்ளனல்
இணைநிலை விடுகதையில் ஒவ்வொரு வரியிலும் மறைபொருளை விளக்கும் சாயற் குறிகள் இணைந்து காணப்படும். இவை சிக்கல் பொருந்தியனவாகக் காணப்படுவதால் அறிகை அமைப்புக்கள் வளர்ந்த பருவத்தினருக்கே பயன்படும். இதற்கு ஓர் எடுத்துக் காட்டு வருமாறு:
பச்சை மேகத்தில் பளிங்கு நட்சத்திரம் பார்த்த தால் வடிவு - மணந்தால் நறுமணம், அது என்ன? விடை 3 பூமரம் பண்புநிலை தொடர்பாக விடுகதைகள் பின்வரு மாறு பாகுபாடு செய்யப்படும்.
1. கருத்துப்புதிர் nேigma) 2. Gay rốio Gasco GruLUIT “GB (Charade) 3. மாற்றெழுத்துப் புதிர் (Anagram) 4. மாற்றுச் சொற்புதிர் 5. வியப்புச் சொற்கள் (Conundram) : 6, 6TQg5 5jë as frio. Lô (Logogriph)
7. 6 ou si i s'il fii (Rebus) 8. பொருள் வடிவப் புதிர். 9. 65) as Lilli L u FT (Epigramm) 10. புதிர் வினா.(Quiz)
1. கருத்துப் புதிருக்கு ஓர் எடுத்துக்காட்டு
*நீண்ட கம்பளம் ஆனால் சுருட்ட முடியாது" அது என்ன?
விடை: தெரு அல்லது றோட்டு
2. சொல் விளையாட்டுக்கு ஓர் எடுத்துக்காட்டுமூன்றெழுத்திலான சொல்-முதல் எழுத்து அப் பத்தில் உண்டு. இரண்டாவது எழுத்துக் கம்பில்

اڑ
உண்டு மூன்றாவது எழுத்து கோதுமை மாவில் உண்டு அந்தச் சொல் என்ன?
3. மாற்றுச் சொற் புதிருக்கு ஒர் எடுத்துக்காட்டு;-
பிடிகத்தி -> கத்திப்பிடி
4. மாற்றெழுத்துப் புதிருக்கு ஓர் எடுத்துக்காட்டு;-
60) 62) 60), ෆි -> 60) ද්ර්‍ සීඝ් ඪ ණ
5. வியப்புச் சொல்லுக்கு ஒர் எடுத்துக்காட்டு;-
தேர் உருளும் ஆனால் இடத்தை விட்டு நகராது அது என்ன?
660) : s 9) LÊ Lf6*
6. எழுத்துக்கட்டலில் எழுத்துக்களைச் சேர்க்கும் பொழுது அல்லது மாற்றியமைக்கும் பொழுது வியப்பான கருத்துக்கள் தோன்றும் ஓர் உதா g60TL5
சொல் என்பதன் அரவை நீக்கிவிட்டால் செல் என மாறும்.
7, 8. ஒவியங்கள், பொருள்கள் என்பவற்றில் மறைந் திருப்பவற்றைக் கண்டுபிடித்தல், சொற்களை ஓவியமாக்குதல், பொருள்களை இணைத்துப் புதிய பொருளை ஆக்குதல் முதலியவை ஒவிய வடிவப் புதிரிலும், பொருள் வடிவப்புதிரிலும் இடம் பெறும்.
9. விகடப் பாவுக்கு ஒர் எடுத்துக்காட்டு வருமாறு:
ஏறு ஏறு கிண்கிணி இறங்கு இறங்கு கிண்கிணி எட்டாத கொப்பெல்லாம் தொட்டு வரும் கிண்கிணி அது என்ன?

Page 54
92
10. புதிர் வினாவுக்கு ஒர் எடுத்துக்காட்டு வருமாறு: இது ஒரு மரம் - இதன் மத்தியில் என்ன உண்டு:
விடை: "ர" என்ற எழுத்து
இன்னோர் எடுத்துக்காட்டு,
ஆடு எப்போது ஓடும்?
விடை: அ என்ற எழுத்துக்குப் பதிலாக
ஒ என்ற எழுத்தை எழுதும்போது,
விடுகதைகளோடு இணைந்து வளர்ந்து வரும் இன்னொரு கற்பித்தல் வ டி வ ம் “விடுகணக்கு" அல்லது "புதிர் கணக்கு” என்பதாகும்.
வேடிக்கை விடுகணக்கு, உண்மை விடுகணக்கு என்றவாறு இது இரண்டு பிரிவுகளாக வகுத்துக் கூறப்படும். உண்மை விடுகணக்குகள் உளவளர்ச்சி மே மீ ப ட் ட நிலைக்குரியதாகுமி, வேடிக்கை விடு கணக்குகளில் நகைச்சுவைப் பண்புகள் மேலோங்கி நிற்கும். இதற்கு ஒர் எடுத்துக்காட்டு வருமாறு,
ஒரு முழுப்பாணை ஒரு கத்தியால் எத்தனை துண்டுகளாக வெட்டலாம்?
விடை: இரண்டு துண்டுகள்.
(இரண்டு துண்டுகளுக்கு மேல் வெட்டப்படும் பொழுது முழுப்பாண் பாதிப்பாண் ஆகிவிடும்)
நாட்டார் வழக்கியல் மூலகங்கள் கற்பித்தலுக் குரிய ஆ ற் ற ல் பொருந்திய சாதனங்களாகும். அவற்றைப் பயன்படுத்தி வினைத்திறன் மிக்க கற் பித்தலை ஏற்படுத்த மு டி யு மீ. கூர்மையுடனும், நுண்ணிதாகவும் சிந்திக்கும் திறன்களை வளர்ப்பதற் கும் விடுகதைகள் பொருத்தமான அறிகை வடி வங்களாகும்

சமயக்கல்வியும் அறக்கல்வியும்
அறக்கல்வி கற்பித்தல் தொடர்பான இரண்டு கருத்துக்கள் கல்வியியலாளரிடையே நிலவுகின்றன. s960) 6) || LLT 6) 6078 (அ) அறக்கல்வியும் சமயக்கல்வியும் ஒன்றிணைந்
தவை என்ற கருத்து. (ஆ) அறக்கல்வி என்பது சமயத்துடன் ஒட்டாத
சுயாதீனமான துறை என்ற முன்மொழிவு.
பாலர் கல்வியைப் பொறுத்த வரை சமயக்கல் விக்கும் அறக்கல் விக்குமிடையே கூடிய ஒன்றிணைப் பையே கல்வியியலாளர் வற்புறுத்துகின்றனர்.
அற ஒழுக்கங்களை வற்புறுத்தல் அனைத்துச் சமயங்களுக்குமுரிய பொதுப்பண்பாகக் காணப்படு கின்றது. கல்வி வரலாற்றையும் சமயவரலாற்றையும் வேறு பிரிக்க முடியாதுள்ளது. பரந்துபட்ட பொதுக் கல்வி வளர்ச்சியை முன்னெடுப்பதில் சமய நிறு வனங்களுக்குப் பங்கு இருந்து வந்துள்ளது.
பிற பாடப்பரப்புக்களாலும், அனுபவப் பரப்புக் களாலும் நிறைவு செய்யப்பட முடியாத உள்ளடக்கம் அறக்கல்வியிலும் சமயக் கல்வியிலும் காணப்படு

Page 55
94.
கின்றது. சமயக் கிரியைகள் சமயவிழாக்கள் சமய இசை முதலியவை சிறுவர்களுக்குக் கூடிய மகிழ்ச் சியையும் ஈடுபாட்டையும் கொடுக்கின்றன.
சிறுவர்களின் சிந்தனை, மொழி, செயற்பாடுகள் முதலியவற்றில் சமயக்கல்வி செல்வாக்கினை ஏற் படுத்தக் கூடியதாக இருப்பதற்கு விழாக்களும், கிரியைகளும் விசைகளாக அமைகின்றன.
வாழ்க்கை நிகழ்ச்சிகளைச் சமயத்தினூடாக விளங்கிக் கொள்ளும் திறன் அறக்கல்வியாலும் சமயக் கல்வியாலும் கிடைக்கப் பெறுகின்றது. இவற்றினூ டாக இசைவாக்கம், புரிந்துணர்வு, முதலியவை சிறு வர்களிடத்து வளர்கின்றன என்று கூறும் சந்தர்ப் பத்தில் எதிர்க்கருத்து ஒன்றினை அறக்கல்வியின் தனித்துவத்தை வலியுறுத்துவோர் முன்வைக்கின்ற னர்.
அதாவது ஒரு சமயச் செயல் முறையில் ஊறி வளர்ந்த குழந்தை ஏனைய சமயங்களை சந்தேகத் துடனும், சில சமயங்களில் வெறுப்புடனும் அணுகக் கூடிய நிலை ஏற்படலாம் என்பது அந்தக் கருத்து. அடிப்படை மனிதாபிமானத்தை மீறிய சமயம் கற் பித்தல் அவ்வாறான எதிர்பாதிப்புக்களை ஏற்படுத் தும்.
பாலர் நிலையில் சமயக்கல்வி, அறக்கல்வி என் பவற்றினூடாக பின் வரும் இலக்குகள் முன்னெடுக்கப் படுகின்றன.
(அ) அன்பு (ஆ) உண்மை (உ) பொறுமை (ஈ) நல்ல நடத்தை

(உ) பிறர்க்கு உதவுதல் (ஊ) பகுத் து உண்ணல் (எ) ஒன்று பட்டு செயற்படல் (ஏ) மூத்தோருக்கு மதிப்பளித்தல் (8) வணங்குதல் (ஒ) வழிபடும் இட அலங்காரம் (ஓ) சுத்தம் பேணல்
பாலர் பாடசாலையில் சமயக் கல்வியையும் அறக் கல்வியையும் ஒழுங்கமைக்கும் பொழுது, காட்சி, வடிவமானதும் செயல் வடிவானதுமான அனுபவங் களுக்கு முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். இதன் தொடர்பில் மூன்று பண்புக்கூறுகளை மனங் கொள்ளல் வேண்டும்.
1. மாணவரின் கொள் திறன்
அவர்களின் சமூகப் பின்புலம்
3. பாடப் பொருளுக்கும் மாணவரின் கொள் திறனுக்கும் பொருத்தமான கற்பித்தல் Cup 60 AD 60LD.
மேற்கூறிய மூன்றையும் ஒன்றிணைத்துக் கற் பித்தலிற் பயன்படுத்துதல் 'மூவரண்' முறையாகும்
அறிகையிலும் நடத்தையிலும் மாற்றத்தையும் செம்மைப்படுத்தலையும் ஏற்படுத்துவதே 'கற்றல்' என்று குறிப்பிடப்படும். குழந்தைகளின் சமயக் கல்வி தொடர்பான சில அடிப்படை அறிகைத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
அவை வருமாறு:
1. செய்து அனுபவப்பட்டு ஈடுபாடு கொண்டு
கற்றல்.

Page 56
勁ó
2. பாவனை செய்து கற்றல். . 3. முயன்று தவறிக் கற்றல். 4. செம்மையாக்கல் வாயிலாகக் கற்றல், 5. சரி எது என்று ஒரே முயற்சியில் முடிவு
செய்து கற்றல். 6. பொருத்தமற்றவற்றைத் தவிர்த்துக் கற்றல். 7. பல்வேறு அறிகைத் திட்டங்களையும் ஒன்
றிணைத்துக் கற்றல்,
மேற்கூறிய அறிகைத் திட்டங்களின் பொருத் தப்பாடுகளை அறிந்து பாலர் கல்வி நிலையங் களிலே பயன்படுத்துதல் வேண்டும்.
நேரடியாக சமயத்தை அறிமுகப்படுத்தல், மறை முகமாக அறிமுகப்படுத்தல், நிகழ்ச்சிகளுடன் ஒன் றிணைத்து அறிமுகப்படுத்தல் என்ற மூன்று உபா யங்களையும் சமயக் கல்வியில் ஆசிரியர் பயன்படுத்த
அமிழ் கலைகள்
திமே தமக்குள் பேசுதல், பாடுதல், நடித்தல் என்ற மெளனமான வெளிப்படாத, ஒரு கலை வடி வம் உண்டு. உளவியற் பாங்கானதும், பெறுமதி மிக் கதுமான இந்தக் கலை வடிவம் பற்றிய ஆய்வும், மதிப்பீடும் புதிய கண்ணோட்டத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன. நியமமான தொடர் பாடலுக்குள் கொண்டு வரப்படாத அமிழ்ந்திய நிலையில் உள்ள இந்த வடிவத்தை 'அமிழ் கலை' என்ற எண்ணக் கருவாற் சுட்டலாம்

வரி வடிவம் பெறாத ஒலி வடிவிலும், புற உரு வம் பெறாத படிம வடிவிலும் அமிழ் கலை செயற் படுகிறது. இது உள்ளத்துடனும், உணர்வுகளுடனும் கூடுதலான நெருக்கமுடையது. சாதாரண கலையாக் கங்களில் இடம் பெறும் தொடர் பாடலில் "மேல் வடிவம்", "ஆழ் வடிவம்" என்ற இரு பரிமாணங்கள் உண்டு. ஆனால் அமிழ்ந்தி ஆழ்ந்த உணர்வும், வெளிப்பாடும் மிக நெருக்கமாக மிக க்ேகியமாக இருக்கும்:
சாதாரண கலை வடிவங்களில் மனவெழுச்சிகள் அந்த அந்தக் கலை வடிவங்களுக்குரிய உருவ நெறிப் பாடுகளுடன் Qaj sfid; கொண்டுவரப்படுகின்றன. ஆனால், அமிழ் கலையில் இவ்வாறான நிலை மாற்றக் செயல் முறை இடம் பெறுவதில்லை. சாதாரண கலை வடிவங்களில் கருத்து ஒன்றாகவும் வெளிப் பாடுகள் பலவாகவும் இரு க் கும் சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. உதாரணத்திற்கு ஒரு சிறிய வசனத்தை எடுத்துக் கொள்ளலாம்.
1- அவன் கருத்தை நிறுவினான். 2- கருத்துவ அனால் நிறுவப்பட்டது. 3- கருத்தை நிறுவியவன் அவனே,
மேற் கூறிய வசனங்களின் கருத்து ஒன்றாக இருப்பினும் வெளிப்பாடுகள் பலவாக அமைந்துள் ளன. சிக்கலான உணர்வுகளிலும் அவற்றிற்குரிய சிக்கலான வெளிப்பாடுகளிலும் பல்வேறு அகப் புற இழுவைகள் காணப்படும். அதாவது உணர்வுகள் சரியான முறையிலே வெளிப்பாடுகளினால் காட்டப் பட முடியா திருக்கும். அமிழ் கலையில் இவ்வாறான இழுவைகளுக்கு இடமிராது
வி ள ங் கமு ய லு மீ போது ஒரு சொல்லை ஏனைய சொற்களில் இருந்து பிரித்து இனங்கான

Page 57
வேண்டியுள்ளது. சொற்கள் குறி க் கும் எண்ணக் கருவை அறிய வேண்டியுள்ளது. சொற்கள் சுமந்து நிற்கும் பண்பாட்டு அழுத்தங்களை நோக்க வேண்டி யுள்ளது. இவையெல்லாம் சொற்களாற் கட்டியெழுப் பப்படும் கலைகளை விளங்கிக் கொள்வதற்குரிய உபாயங்கள் சிலவாகும்.
புறத் தொடர்பாடற் கலை க ளு க் கும், அ மி ழ் கலைக்குமுள்ள வேறுபாடுகளை விளங்கிக் கொள் வதற்கு 'நிலைமாற்றம்' பற்றிய அறிவு இன்றியமை யாதது. அருவமான உணர்வுகளை வெயிட்டுக் குறி யீடுகளாக்கும் செயல் முறை "நிலைமாற்றம்” எனப் படும். உள வி ய நீ கண்ணோட்டத்தில் இதனை விளக்குவதனால், அகவயமான உணர்வுகளைப் புற வயமான உணர்வுகளாக மாற்றியமைக்கும் செயற் பாடு என இதனை விளக்கலாம் உள்ளுணர்வுகள் சிக்கலாக இருக்கும் பட்சத்தில் வெளியீடுகளும் சிக்க லாக அமையும். இந்நிலையில் நிலைமாற்றம் என்பது மிகவும் கடினமான செயல் முறையாக இருக்கும். புறவுலகத்திற்குப் பொருந்தக் கூடிய குறியீடுகளின் தெரிவை மேற்கொள்ளுதலும் அவற்றை ஒழுங்கமைத் தலும் நிலைமாற்றச் செயல் முறையின் போது இடம் பெறுகின்றது.
வசனங்களில் வெளியிடப்படும் கருத்துக்களைப் பொருண்மை கொண்ட மூன்று பெரும் அலகுகளாகப் பிரிக்கலாம்,
1- "இயங்கும் முகவர்' இதனை எமது பாரம் பரிய இலக்கணத்தில் கருத்தா" எ ன் று குறிப்பிடுவர்.
2 "இயல்பு மாற்றங்கள்' - இது இலக்கணத்
தில் "செயல்” என்று விளக்கப்படும்.
3- "மாற்றத்திற்கு உள்ளாக்கப்படும் பொருள்'
இது செயப்படு பொருள் என்று இலக்கணத்
 

99.
தில் குறிப்பிடப்படுமீ. "எழுவாய்" பயனிலை செயப்படு பொருள்? என்று பாகுபடுத்தும் செயற்பாடுகள் வசன ஆய்வுகளிலே காணப் பட்டாலும், அகநிலைக் கருத்து புறநிலைக் கருத்தாக மாற்றப்படும் பொழுது தோன்றும் நிலை மாற்றம் பாரம்பரியமான வசனப் பகுப்பாய்வுகளிலே மே ற் கொள் ள ப் ப ட வில்லை .
தாம் எண்ணியதை வெளியே கூற முடியாத அவலங்களைக் கலைஞர்கள் அனுபவிப்பது உண்டு. இந்த அவலம் நிலைமாற்றம் தொடர்பான அவல மாகும்.
வெளிப்படாது ஒருவரது அகத்தே தொழிற்படும் கலைகளை அறிந்து கொள்வதற்கு கலைகளின் மூல கங்கள் பற்றிய அறிவு மேலும் துணை செய்யும், வெளிப்படும் இலக்கியங்களின் மூலகங்களைப் பகுப் பாய்வு செய்வோர் மொழி நடை, கதைப்புலம், பாத் திர வார்ப்பு, சூழமைவு, கரு என்றவாறு பல மூல கங்களை இனங்காணுவர். அகப்படிமங்கள். நனவிலி நிழல்கள், கண் விழித் திருக்க உட்காணும் க ன வு போன்ற காட்சிகள், உள்ளார்ந்த தேவைகளை நிறை வேற்றும் பொருட்டு மனம் மேற்கொள்ளும் நிரவல் முதலியவை வெளிப்படாது ஒருவரது அகத்திலே தொழிற்படும் மூலகங்கள் சிலவாகும்.
இவற்றை மேலும் விரிவாக நோக்கலாம்:
குழந்தை சிரித்தது. அவன் சிரித்தான். அவள் சிரித்தாள். அதிகாரி சிரித்தார். தோற்றவன் சிரித்தான். வென்றவன் சிரித்தான்.

Page 58
1:00
மேற்கூறிய தொடர்களில் 'சிரித்தல்" தொடர் பான அக மூலகங்களை புறநிலையான சித்தரிப்பு எடுத்துக் காட்டவில்லை. அகத்தில் ஒவ்வொரு சிரிப்பும் ஒவ்வோர் அகப்படிமத்துடன் தொடர்பு பட்டு நிற்கும். புற வெளிப்பாட்டை அகப்படிமத் துடன் ஒட்ட வைப்பதற்கு எழுத்தாளர்கள் அடை மொழிகளைத் தேடிப் பொருத்தும் நிகழ்ச்சிகளும் காணப்படுகின்றன. அவ்வாறான சந்தர்ப்பங்கள் தேடலாக அமையுமேயன்றி பொருந்துவதாக அமையு மென்று திடப்படுத்த முடியாது. ஏனெனில் ஒவ் வொருவரதும் உள்ள த்தே நிலை கொண்ட - குழ ந்தை, அவன், அவள், அதிகாரி, தோற்றவன், வென்றவன் என்ற உளப்படிமங்கள் தனித்துவமான பல இயல்புகளைக் கொண்டிருக்கும். அந்த இயல்பு களுடன் சிரித்தல்' என்ற தொழில் இணைக்கப் பட்டிருக்கும்
நாவல்களிலும், சிறு கதைகளிலும் பாத் திர உரையாடல்களை ஆராய்வோர் ஒருவித 'இருமைத் தன்மை? இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளனர். பாத் திரங்களின் உணர்வோடு ஆசிரியரது உணர்வும் கலந்து நிற்றல் இனங்காணத் தக்கது. அவ்வாறே கதை இயக்கத்தில் கதையும் கதை சொல்லலும் என்ற இரண்டு பண்புகள் காணப்படுகின்றன. இந்த வேறுபாடு அமைப்பியல் திறனாய்வில் மிக விரிவாக விளக்கப்படுகின்றது. "கதை' என்பது பற்றியும் ெேசால்லல்’ என்பது நவீன பிரெஞ்சு திறனாய் வாளர்கள் ஆழ்ந்து நோக்குகின்றனர். அவற்றி னி  ைட யே முனைப்புடைப்போலி (Intentional Fallacy) தோன்றுவதையும் சுட்டிக் காட்டுகின்றனர். நாவலை விளங்கிக் கொள்வதற்கு நாவலாசிரியரை யும் விளங்கிக் கொள்ள வேண்டியுள்ளது.
கலை இலக்கியங்கள் தொடர்பியற் பரிமாணங் களோடு இணைந்தவை கருத்தை வெளிக் கூற
 

0.
முனையும் பொழுது தொடர்பியற் கட்டுப்பாடுகள் சுயத்தை இழந்து விடவும் தூண்டுகின்றன.
பத்தொன்பதாம் நூற்றாண்டி லும், இருப தாம் நூற்றண்டின் ஆரம்பக்கட்டங்களிலும் எழுந்த நாவல் களில், ஆசிரியர் தாமே வெளி வந்து பேசும் சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. நாடகங்களில் உரைஞர் வாயிலாக ஆசிரியர் பேசுதல் உண்டு. ஆசிரியர் தம்மை வெளிப்படுத்திப் பேசுதல் நூலம்? என்ற எண்ணக் கருவாற் குறிக்கப்படும், நூலத்தின் போது ஆசிரியர் தம்மை ஓர் உயர்ந்த நிலையில் வைத்துப் பேசுதலே ஒப்பிட்ட ளவில் மேலோங்கி யிருக்கும். தம்மைத் "திறந்து' காட்ட முடியாத
ஆசாரங்களின் தடை அங்கு காணப்படும், 泷、
அறிந்து கொள்ளாத நிலைப் பாத்திரப் படைப் புக்கும் கலையாக்கங்களிலே இடம் பெறுதல் உண்டு. அறிந்து கொள்ளா நிலைப் பாத்திரங்கள் "அன்பாத் திரம்’ என்ற எண்ணக் கருவால் குறிப்பிடப்படும். ஐயத்துக்கிடமான மொழிப் பிரயோகங்களால் அன் பாத்திரங்கள் உருவாக்கப்படுகின்றன. சமூகத்தி னுள்ள எ ல் லா ப் பாத்திரங்களோடும் கதாசிரியர் நெருங்கிப் பழகியிருக்க முடியாது. இரண்டாம் நிலை யில் அறிந்தும், கேட்டும் திரட்டப்பட்ட தகவல்கள் ே வார்ப்பில் முடிவடைகின்றன.
பாத்திர உணர்வு க ள் பொதுமையாக்கப்பட்ட சொற் பிரயோகங்களே பெருமளவில் எடுத்தாளப் படுகின்றன. உதாரணமாக சோக உணர்வுள்ள பாத் திரப் படைப்பில், துன்பம், அழுகை, துயரமீசி ஆற முடியாமை, தனிமை, பயம் என்றவாறு கையாளப் படும் சொற்கள் உளவியலடிப்படையில் பொதுமை யாக்கப்பட்ட, மேலோட்டமான வடிவங்களாக அமை கின்றன. ஆனால் பூர்வீகக் கலைகளிலும், ஐதிகக்

Page 59
102
கதைகளிலும் உளவியலடிப்படையில் ஆழ்ந்த தொடர் பாடல் இருந்தமை சுட்டிக் காட்டப்படத் தக்க அ.
சொற்களையும், வசனங்களையும் ஆக்கும் செயல் முறையானது முடிவில்லாத தொடராகும். அ றி வு, அனுபவம், மனித உணர்வுகள் என்பவை முடிவிலி யாக இருத்தலினால் மொழியாள்கைக் கோலங்களும் முடிவிலியாக இருக்கும்.
மேற் கூறியவற்றிலிருந்து அமிழ் கலைக்கும், புற நிலைப்படுத்தப்பட்ட கலைகளுக்கும் உள்ள வேறு பாடுகளை ஒரளவு அறிந்து கொள்ளலாம். இரண்டும் ஒன்றன் மீது மற்றையது தாக்கங்களை ஏற்படுத்தும் அமிழ் கலை என்பது வெளிவடிவெடுக்காத கலை, எல்லா மனிதர்களும் அமிழ் கலையாக்கத்தில் ஈடுபடு கின்றனர். கலையை ஆக்குபவரும், சுவைப்பவரும் அ மி ழ் கலையில் ஒருவராகவே இருக்கின்றனர். பிறருக்குப் பகுத்துக் கொடுக்கப்படாத ஒரு கலை யாக இது விளங்குகிறது.
சிறுவர்களை விளங்கிக் கொள்வதற்கு மேற் கூறிய கருத்துக்கள் முக்கியமானதாகும்.
2,6560 LD
ஆளுமைக்குப் பன்முகமான வரைவிலக்கணங் கள் தரப்பட்டுள்ளன.
*தனித்து மனிதரது உந்தல்கள், விருப்புக்கள், இச்சைகள், இயல்பூக்கங்கள் என்ற உயிரியல் சார்ந்த உள்ளார்ந்த வைப்புக்களும், கற்றுக் கொண்ட பழக் கங்களும், திரட்டிக் கொண்ட அனுபவங்களும் என்ற தொகுதிகளின் முழுமையே ஆளுமை' எ ன் ப து மோறொன் பிறின்ஸ் (1924) தந்த கருத்து.

03
ஒவ்வொரு மனிதரையும் வேறுபடுத்துகின்ற முக்கிய பரிமாணங்களில் இருந்து ஆளுமைப் பண்பு களைக் கண் ட ஹி ந் து கொள்ளலாம்? என்பது புலொயிட் ஒல்போட் (1924) வழங்கிய கருத்து.
ஒழுக்கம், சீராக்கம், வாழ்க்கை, வரலாறு என் பவற்றை உள்ளடக்கிய ஆளுமை வரைவிலக்கணத்தை வாற் சன் (1924) வழங்கினார்.
*குறித்த மனிதர் தொடர்பான சமூகத் தூண்டி களின் பெறுமானமே ஆளுமை என்பது மே (1929) என் பாரின் கருத்து? மனிதப் பண்புக் கூறுகளின் தனித்துவமான கோலமே ஆளுமை என்பது, கில் போட் (1959) வழங்கிய முன்மொழிவு "நடத்தை களின் உள்ளடக்கம் விளைவுகள் என்பனவும் அவற் றுக்குப் பொறுப்பான காரணிகளின் செயல் முறை களுமே ஆளுமை” என்பது கோர்டன் (1963) முன் வைத்த கருத்து.
ஆளு  ைம தொடர்பான வரைவிலக்கணங்கள் தொடர்ச்சியான உளவியல் தேடல்களை முன்னெடுத் துச் செல்கின்றன. ஆளுமை உளவியல் சார்ந்த சிக் கலுக்குள் ஈடுபடாமலிருப்பதற்குத் தாம் எந்த வித மான வரைவிலக்கணங்களையும் வழங்கப் போவ தில்லை. என மிச்சேல் (1971) ஒரு சமயம் குறிப் பிட்டார்,
ஆளுமை வரைவிலக்கணங்களை இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவையாவன
(1) பிறர் மீது ஒருவர் செலுத்தும் தூண்டிகளை அடிப்படையாகக் கொண்டு ஆளுமையை விளக்குதல்,
(2) பிறரது தூண்டிகளுக்கு ஒருவர் எவ்வாறு துலங்குகின்றார் என்ற அடிப்படையில் ஆளு மையை விளக்குதல்,

Page 60
iO4.
ஆளுமையை "மு க மூ டி? இயல்புகளுக்கு ஒப் பிட்டுக்காட்டும் உளவியலாளரும், ஓவியர்களும், நாடக ஆசிரியர்களும் இருக்கின்றனர். தாம் சந்திப்போரின் இயல்புகளுக்கு ஏற்றவாறு பொருத்தமான முகமூடி கிளை மாற்றிக் கொள்ளலுடன் ஆளுமையை அவர் கள் தொடர்புபடுத்துகின்றனர்.
பல்வேறு தோற்றப்பாடுகளின் மத்தியில் சிரியர் றொஸ் ஸ் ரெக்னர் என்பவர் ஆளுமையைப் பின்வருமாறு விளக்குகின்றார்.
"சூழலுக்குரியவாறு தனித்துவமான முறையிலே துலங்கலை ஏற்படுத்தக் கூடியவாறு புலக் காட்சி, அறிகை, மனவெழுச்சி, ஊக்கல் தொகுதிகள் என் பவற்றின் உள்ளார்ந்த ஒருங்கமைப்பு ஆளுமையா கின்றது' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிராய்ட்டின் ஆளுமைக் கோட்பாடு
ஆளுமை தொடர்பான மூன்று பரிமாணங்களை சி க் ம ன் ட் பிராய்ட் விளக்குகின்றார். அவை, இட், ஈகோ, சுப்பர் ஈகோ என்பனவாகும். இட் என்பது நனவிலி மனத்தின் பிரதான உட்காவியமாகும். அது இயல்பூக்கங்களுடனும் இயற்கையான இச்சைகளு டனும் தொடர்புடையது. உடனடியான திருப்தியைப் பெறும் நோக்குடன் அது இயங்கிக் கொண்டிருக்கும். ஈகோ என்பது நனவு மனத்துடன் தொடர்புடையது. இது இட் என்பதற்கும் சுப்பர் ஈகோ என்பதற்கும் இடையே சமநிலையை ஏற்படுத்தும் வலுடையதாக இருக்கின்றது. சுப்பர் ஈகோ என்பது உயர் விழுமியங் களின் உறைவிடமாகவுள்ளது.
ஒவ்வொரு குழந்தைக்கும் விருப்பு உந்தல் உள் ளார்ந்த இருப்பாகக் காணப்படுகின்றது. இதனை அடியொற்றிய பிராய்ட்டின் அணுகுமுறை ஒரு
 

105
ேேலிபிடேர"கோட்பாடு என்றும் கூறப்படும். பல்வேறு வளர்ச்சி மட்டங்களினூடாக சிறுவர்கள் வளர்வதும், வளர்ச்சியின் போது மகிழ்ச்சி நிறைவெய்தாத தாக் கங்களும், ஆளுமையிலே செல்வாக்குச் செலுத்து கின்றன. லிபிடோ என்பது மனிதரின் உள்ளார்ந்த விருப்பங்களையும் இச்சைகளையும் குறிப்பிடும்.
வாய் வழியாக இன்பம் நுகரும் நிலை, குதவழி யாக இன்பம் பெறும் நிலை, பாலுறுப்பு நிலை, மறை நிலை, பிறப்பிக்கும் நிலை என்றவாறு வளர்ச்சி நிலைகளை அவர் விபரித்துக் கூறலானார்.
பாலியல் உந்தல் தொடர்பாக ஈடிப்பஸ் சிக்கல், எலெக்ரா சிக்கல் என்பவற்றையும் பிராய்ட் விளக் கினார். ஆண்மகன் தாய் மீது கொள்ளும் விருப்பும், தந்தை மீது கொள்ளும் வெறுப்பும் ஈேடிப்பஸ்" சிக் கலாற் குறிப்பிடப்படும். பெண் குழந்தை தந்தை மீது கொள்ளும் விருப்புமி தாய் மீது கொள்ளும் வெறுப்பும் "எல க்ரா" சிக்கலாற் குறிப்பிடப்படும்.
எறிக்சன் உருவாக்கிய கோட்பாடு
Dானுடவியலையும், உளவியலையும் இணைத்து இவர் தமது ஆளுமைக் கோட்பாட்டினை உருவாக்கி னார். மனிதரின் உள்ளார்ந்த உணர்வுகளுக்குச் சமூகமீ தடைகளையும், கட்டுப்பாடுகளையும், விதிப் பதனால் தான், எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்களைக் குழந்தை வளர்த்துக் கொள்கிறது. உலகுக்கேற்ப தான் எவ்வாறு துலங்க

Page 61
06
வேண்டும் என்பதே எதிர்பார்ப்பின் முனைப்பாக அமைகின்றது.
குழந்தை நிலையிலிருந்து முதுமை நிலைவரை
எட்டு முக்கிய படிநிலைகளை ஒவ்வொருவரும் கடந்து செல்ல வேண்டியுள்ளது. அந்தப் படிநிலை கள் வருமாறு:
(l
அடிப்படை நம்பிக்கையும், அவநம்பிக்கையும். குழந்தையின் அடிப்படைத் தேவைகள் ஒழுங் கமைந்த முறையிலே திருப்தியாக நிறைவேற்றி வைக்கப்பட்டால் உலகின் மீது குழந்தைக்கு நம் பிக்கை வளரும். அல்லாவிடில் அவநம்பிக்கை களே தொடரும். அதுவே ஒருவரது ஆளுமை
வளர்ச்சிக்கு அடித்தளமிடுகிறது .
| (2)
(3)
சுயமாக இயங்குதலும் அதற்கு எதிரான வெட்கமும், ஐயமும் குழந்தை சூழலைத் தனது கட்டுப்பாட்டினுள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபடும் பொழுது, அதற்குப் பெற்றோரும் மற்றோரும் ஆதரவு அளிக்கும் பொழுது சுயமாக இயங்கும் ஆற்றல் வளரும். அல்லாவிடில் தனது உடல், தனது நுண்மதி என்பவற்றின் மீ து 8யப்பாடுகள் தோன்றி ஆளுமையைத் தாக்கும்.
தொடங்கும் ஆற்றலும் அதற்கு எதிரான குற்ற உணர்ச்சியும்,
சுயமாக இயங்கும் ஆற்றலோடு தொடங்கும் ஆற்றல் இணைந்தது தாமே துணிந்து செயற் பாடுகளை ஆரம்பித்தல் தொடங்கும் ஆற்றல் எனப்படும். இதற்கு எதிர் மறையான நடவடிக் கைகள் குற்றவுணர்ச்சியைத் துண்டும் குற்ற வுணர்வைத் தம்மீது தாமே சுமத்திக் கொள்வர்.

(集)
(5.
(6)
O7
பிறர் சுமத்துவதால் ஏற்படுவது வெ ட் க மீ" தாமே சுமத்துவதால் ஏற்படுவது குற்றவுணர்ச்சி.
முயற்சியும் அதற்கு எதிரான தாழ்வுணர்ச்சியும்
பாடசாலையில் மாணவர் கல்வி தொடர்பான பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுவர். பாடசாலை யிலே கற்காத மாணவர் வீட்டுத் தொழில்களில் ஈடுபடுவர். எல்லாவிதமான பண்பாடுகளிலும் இவ்வாறான முயற்சிகளுக்கு வெகுமதி வழங்கப் படுகின்றது. போதிய வெகுமதிகளை ஈட்ட முடி யாத நிலையில் தாழ்வுணர்ச்சி மேலோங்கும்.
தன் விளக்கமும் அதற்கு எதிரான ாைத்திரக் குழப்பி நிலையும் கட்டிளமைப் பருவத்தில் உடல் சார்ந்த பண்பு கள் தீ விர வளர்ச்சியடையும். இவற்றோடு இணைந்த சமூக எதிர்பார்ப்புக்களும் மாற்ற மடையத் தொடங்கும் தன் விளக்கமீ நன்கு விருத்தியடையும் பொழுது பிறர் தம்மைப் பற்றி என்ன எண்ணுகிறார்கள் என்பதும், தாம் எவ் வாறு தொழிற்பட வேண்டும் என்பதும் தெளிவு பெறும், பல்வேறு சமூக நடிபங்குகளை ஏற் பதில் ஏற்படும் குழப்பநிலை தம்மைப்பற்றிய விளக்க நிலையைப் பாதிக்கும்.
மனந்திறந்து பழகுதலும், அதற் கு எதிரான தனிமைப்படலும்,
தன் விளக்கத்தை நன்கு பெற்றவர் எதிர்ப்பால ருடன் மனந் திறந்து பழகும் புரிந்துணர்வை வளர்ப்பர். மனந் திறந்து பழகும் இயல்பு வளராத நிலையில் தனிமைப்படல் மேலோங்கும். திருமண
மாகிப் புதல்வர்களைப் பெற்றாலும் தனிமை தொடரும்?

Page 62
08
(7) அசைவும் அதற்கு எதிரான தேக்கமும்,
பிறருக்கு உதவுதல், தேவைகளை நிறைவேற் றுதல், ஆக்கத்திறன் வெளிப்பாடு முதலியவை அசைவுப் பிறப்பாக்கத்திற்கு உதாரணங்கள்.இவ் வாறான பிறப்பாக்கம் எட்டப்பட முடியாமை செயலிலே தேக்கங்களை ஏற்படுத்தும்.
(8) அகத்திறன் ஒன்றிணைப்பும் அதற்கு எதிரான
அவலமும் தன்னை விளங்குதல், தான்செய்த சாதனை களையும் , சேவையையும் மதிப்பிடுதல், தான் செய்யாதவற்றை விளங்குதல் முதலியவை அகத் தின் ஒன்றிணைப்பை மேம்படுத்தி ஆளுமையை வளர்க்கும். இவை எட்டப்பட முடியாத நிலையில் அவலமும், தவிப்பும், மன உடைவும் ஏற்படும்.
பிராய்ட், எறிக்சன் ஆகியோர் ஆளுமையின் படிநிலைகளை விளக்கியமை பலவாறு திறனாய்வு செய்யப்படுகின்றது. மனித வளர்ச்சியைச் சமூக இயங்கியற் கண்ணோட்டத்தில் சிக்மன்ட் பிராய்ட்டும், எறிக்சனும் விளக்கத் தவறி விடுகின்றனர். ஆளுமை யின் மீது பொருளாதார முரண்பாடுகள் செலுத் தும் அழுத்தங்கள் இவர்களா ல் ஆழ்ந்து நோக்கப் படவில்லை.
Эғtрд5 LDш மாக்கல்
சிமூகத்தோடு ஒட்டி வாழப்பழகும் செயல்முறை *சமூகமயமாக்கல்? எனப்படும். சமூகம் 'பொருத்த மானது" என்று கருதும் செயல்களைக் கற்றுக்கொள் வால் இச் செயல் முறையில் சிறப்பான இடத்தைப்

O3
பெற்றுக் கொள்ளுகின்றது. இது மிகவும் சிக்க லானது. இச் செயல்முறையின் போது சிறுவர்கள் சில அகமுரண்பாடுகளையும் விலகல்களையும் எதிர்
கொள்ள நேரிடும். பிறர் விருப்பத்துக்கேற்றவாறு மொழியைப் பேசுதலுமி, வி ட் டு க் கொடுத்தலும் சமூகமயமாக்கற் செயல் முறையில் சிறுவர்களிடத்து அகமுரண்பாடுகளை ஏற்படுத்தலாம். சமூகத்தை *கண்டு பிடிக்கும்" செயல்களிலே சிறுவர்கள் ஈடு படும் பொழுது பெற்றாரும் ஆசிரியர்களும் கட்டுப் பாடுகளை விதித்தல் உண்டு.
சமூகம் விரும்பும் பொருத்தமான செயல்களைப் புரியும் பொழுது ஆசிரியர் வழங் கும் பாராட்டு, மாணவர்கள் தமது நடத்தைகளை ஒழுங்கமைத்துக் கொள்ள வாய்ப்புக் கொடுக்கும்.
தமக்குப் பிடித்தமானவர்களைப் "பாவணை" செய்வதற்குச் சிறுவர்கள் முயலுவார்கள். அவ் வாறான பாவனை சிறுவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும், சிறுவர்களின் கவர்ச்சிக்குரியவர்களாக விளங்கும் ஆசிரியர்களின் நடத்தைகள் சமூகமய மாக்கற் செயல் முறையிற் சிறப்பார்ந்த இடத்தைப் பெறுகின்றன. ஆசிரியரைப் பின் பற்றியே தமது நடத்தைகளை மாணவர் "விரிவாக்க' எண்ணுகின் றனர். நனவு பூர்வமாக வும் நனவிலி பூர்வமாகவும் இந்தச் செயற்பாடு நிகழ்ந்து கொண்டிருக்கும்.
சிறுவர்கள் தமக்குப் பிடித்தமானவர்களைப் பின் பற்றி பேசவும், நடத்தைகளை அமைக்கவும் முற் படும் பொழுது, அவை அவர்கள் பழகும் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்படும் பொழுது சமூகமயமாக்கல் உறுதி பெறுகின்றது. சமூகமயமாக்கல் என்பது வெகு மதி விழுமியங்கனையும் கொண்டது,
சுயகட்டுப்பாடுகனை ஏற்படுத்துதலும் சமூக மயமாக்கலின் பாற்படுகின்றது. சமூகம் விரும்பாத

Page 63
O
நடத்தைகளைத் தவிர்த்துக் கொள்ளல் சுயகட்டுப் பாட்டுக்கு ஓர் எடுத்துக்காட்டு சமூகம் விரும்பாத நடத்தைகளில் ஈடுபடும் பொழுது சிறுவர்களைத் தண்டிப்பது பல்வேறு உளவியற் பாதிப்புக்களை அவர்களிடத்து ஏற்படுத்தும். ஆழ்மனத்திலே அந்த உணர்வுகளை அவர்கள் அடக்க முயலும் பொழுது உளச் சுகாதாரம் பாதிக்கப்படும். இச்சந்தர்ப்பங் களில் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் பாரிய பொறுப்புக்கள் உண்டு தவறுகளுக்குத் தண்டிப் பதிலும் பார்க்க பொருத்தமான சந்தர்ப்பத்தில் சரி யான நடத்தைகளைச் சொல்லிக் கொடுப்பதே உள வியற் பாதிப்புக்களற்ற சமூகமயமாக்கலை உரு வாக்கும்.
முதியோரும் வளர்ந்தோரும் சிறுவர்களைத் திருத்தும் பொழுதும் இடித்துரைக்கும் பொழுதும் *தாம் தாழ்ந்தவர்கள்” என்ற உளவியல் தாக்கம் சிறுவர்களுக்கு ஏற்படக்கூடும். இந்த வளர்ச்சி சிறு வர்களின் ஆளுமையைப் பாதிக்கும். அவர்களின் ஆக்கத்திறனும், தாமே தொடங்கும் ஆற்றல் விரிவும் பாதிக்கப்படும். இந்நிலையில் சிறுவர்கள் “நல்லவர்' களாக இருப்பார்கள். ஆனால், "வல்லவர்' களாக மலரமாட்டார்கள். இச் சந்தர்ப்பத்தில் மிக வு மீ நிதானமாகப் பெற்றோரும் ஆசிரியர்களும் நடந்து வேண்டும். அதாவது, “தொடங்கும் ஆற்றல்" அேடங்கும் ஆற்றல்" என்பவற்றுக்கிடையே உள்ள முரண்பாடுகள் பற்றிய தெளிவு அவசியமாகும்.
சமூகமயமாக்கல் பண்பாட்டுப்பரிமாணங்களு டனும் இணைந்தது. சில பண்பாடுகளில் எதிர் மறை யான அணுகுமுறைகளை மிகையாகக் கையாண்டு சமூகமயமாக்கற் செயல்முறை ஊக்குவிக்கப்படுகின் றது. அப்படிச் செய்யக் கூடாது" “அது பிழையான செயல்" "அப்படி நடந்தால் தண்டிக்கப்படுவாய்"

1.
"ஆசிரியர் பேசுவார்" "அப்பா அடிப்பார்? முதலி யவை எதிர்மறை அணுகுமுறைகளாகும் இவை சிறு வர்களிடத்து தாழ்வுணர்ச்சியை வளர்ப்பதுடன் தன் னம்பிக்கையையும் பாதிப்படையச் செய்யும்,
*பாராட்டத் தக்க செயல்' 'ஆசிரியர் நன்றி சொல்வரர்” “இப்படிச் செய்வதே சரி” “இவ்வாறு செய்யும் பொழுது எல்லோரும் சந்தோஷப்படுவார் கள்" முதலியவை - சமூக மயமாக்கலை நெறிப் படுத்தும் நேர் அணுகுமுறைகளாகும். இவை உள வியல் அடிப்படையிலே தீங்கற்றவையாக இருப்பது டன் மாணவரின் சுயநம்பிக்கையினை வளர்க்கும். அதே வேளை தாழ்வுச் சிக்கல்களையும் உருவாக்க வும் மாட்டாது.
சிறுவர்களின் உந்தல்களையும் தேவைகளையும் நிறைவு செய்யக் கூடியவாறு ஆசிரியர் தொழிற்படும் பொழுது சமூகமயமாக்கற் செயற்பாடு சிறந்த முறை யிலே நடைபெறும். அகமும் புறமும் ஒன்றிணைந்த சமூகமயமாக்கலே உளவியல் அடிப்படையில் சிறந்தசெம்மையான - சமூகமயமாக்கலாகக் கருதப்படும். அதாவது உள்ளகத்திலே தோன்றும் விருப்பும் சமூ கத்தால் அங்கீகரிக்கப்படுகின்ற வி ரு ப் பு மீ ஒன் றிணைந்த இசைவாக்கம் பெறல் வேண்டும். இவ் வாறான சமூகமயமாக்கல் "சீர்வம்" என அழைக் கப்படும். "சீர்வம்" ஏற்படும் பொழுது வளர்ந்தோர் மீது சிறுவர்கள் அன்பு, பாசம், மரியாதை முதலிய வற்றைக் கூடுதலாக வெளிப்படுத்துவர்.
மொழி, பழக்கவழக்கங்கள், வழிபாடு, வரவேற்பு உபசரிப்பு, அசைவுகள், விட்டுக் கொடுத்தல், முதலிய வற்றினூடாக சமூகமயமாக்கல் முன்னெடுக்கப்படும்.

Page 64
ஆற்றல்களை இனங்காணும் தேர்வுகள்
ந்ேத ஒரு சோதனையும் சிறுவர்களின் ஆற்றல் களைக் கண்டறிவதற்குரிய முடிந்த முடிபு அல்ல. பல்வேறு சோதனைகளைப் பல்வேறு சந்தர்ப்பங் களிலே பயன்படுத்துவதால் மட்டுமே அவர்களின் பன்முகமான ஆற்றல்களைத் தெரிந்து கொள்ள முடியும். மேற்கு நாடுகளில் சிறுவர்களின் ஆற்றல் களை இனங்காணுவதற்கு நுண்மதித் தேர்வுகள் பயன்படுத்தப்படுகின்றன. உள வளர்ச்சி குறைந்த சிறுவர்களை இனங்காண்பதற்கும் நுண்மதித் தேர்வு களே உபயோகத்தில் உள்ளன. குறைபாடுகள் இருப் பினும் நுண்மதித் தேர்வுகளில் பல உபயோகமான பரிமாணங்களும் உள்ளன.
மூன்று வயது தொடக்கம் ஆறு வயது வரை யிலான சிறுவர்களுக்கு வழங்கப்படத்தக்க நுண்மதித் தேர்வுகளில் பின்வரும் உள்ளடக்கங்கள் முக்கியத் துவம் பெறுகின்றன.
1. பல்வேறு வடிவமான துவாரங்களைக் கொண்ட பலகையில் துவாரங்களுக்குப் பொருத்தமான கட்டைகளை வைத்து நிரப்புதல்,

7.
8.
0.
1.
2.
3.
4.
15.
6.
17.
13
உடல் உறுப்புக்களுக்குப் பெயர் கூறல் பல்வேறு அளவுகளில் வட்டம் வரைதல்,
தொழிற்படும் முகவரை இனங்காணல், உதாரணமாக ஓடுவது யார்? எது ஆடுகின்றது?
புல்லின் மீது நடக்காது பொருத்தமான பாதை
யில் நடப்பதை வரைபிற் காட்டுதல்.
ஆசிரியர் சொல்லும் ஒழுங்கற்ற இலக்கங்களை
யும், சொற்களையும் மீளச் சொல்லுதல்.
ஒரு பட வடிவிலான காட்சியைக் காட்டி அங்குள்ள பொருட்களுக்குப் பெயர் கூறுமாறு கேட்டல். துண்டாடப்பட்ட உருவப் படங்களைக் கொடுத்து முழு உருவாக்கும் படி பணித்தல் வண்ணங்களை இனங்காணும் பயிற்சி. ஆசிரியர் கடதாசியை மடித்துக் காட்டியவாறு மாணவரும் கடதாசிகளை மடித்துக் காட்டுதல். பாத்திரங்களைப் பொறுப்பேற்று நடிக்கச் செய் தல்5
கேத்திர கணித உருவங்களை இனங்காணச் செய்
தல், வசனங்களை மீளச் சொல்லுதல். கிரகித்தற் பயிற்சிகள், உதாரணமாக நாங்கள் ஏன் சாப்பிடுகின்றோம்? ஏன் உடை அணிகின்றோம்? என்றவாறான வினாக்கள், ஓரளவு சிக்கலான பாதைகளைக் கண்டறிதல், முகங்களை ஒப்பிடல், உதாரணமாகப் பல முகங்களைக் காட்டி எந்த முகம் பெரிதாகவுள்ளது எந்த முகம் சிறிதாக வுள்ளது என்றவாறு வினாக்களைத் தொடுத்தல் ஒரு முழு ஆளை வரையச் செய்தல்,

Page 65
4.
8.
9.
20.
2.
22
23.
24.
27.
28.
ஒன்றுக்கு மேற்பட்ட கட்டளைகளைச் செய்யு மாறு கேட்டல் உதாரணமாக புத்தகத்தை எடுத்து மேசையின் மீது வைத்து அதன் ஒரு பக்கத்தில் பென்சிலை யும், புத்தகத்தின் மேல் பேனாவையும் வைக்கு மாறு பணித்தல் ஒரு கதையைக் கூறி அந்தக் கதை தொடர்பான
வினா க்களைக் கேட்டல், பயன்பாடுகள் பற்றிய அறிவை மதிப்பீடு செய் தல். உதாரணமாகக் கரண்டி என்றால் என்ன? வாளி என்றால் என்ன? என்றவாறு வினவுதல். வினோதமான வ டி வங்க ளி ல் விலங்குகளை வரைந்து ஒவ்வொரு வடிவங்களுக்குமுள்ள வேறு பாடுகளை விளக்குமாறு கேட்டல், பாவனைப் பொருட்களுக்கிடையே வேறுபாடுகள்
கண்டறியும் பயிற்சி. உதானமாகப் பாலுக்கும், தண்ணிருக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை? வசனங்களை முடித்தல். பன்முகப்பட்ட உபயோகங்களைக் கேட்டல், உதாரணமாக நூலை என்ன என்ன தேவைகளுக் குப் பயன்படுத்தலாம்? நோயாளருக்கு உதவும் முறைகள் பற்றிச் சிறு வரின் கண்ணோட்டத்தினூடாக உதவுதல். தாய், தந்தையருக்கு உதவும் முறைகள் பற்றி வினவுதல். பொருத்தமான பொருட்களைக் கொ டு த் து மேசையைச் சுத்தமாக்கி அலங்கரிக்கச் சொல்லு தல்,
வழிபாடு பற்றி வினவுதல்.

பாலர்கல்வி ஆசிரியர் பயிற்சி
பலர் கல்வியின் வெற்றிக்கு அடித்தளமிடுதல் அதற்
குரிய பொருத்தமான ஆ சி ரி ய ர் பயிற்சியுடன் இணைந்துள்ளது. குழந்தைகளின் பன்முகப்பட்ட வளர்ச்சிகளையும் முன்னெடுத்து, முழுமையாக்கக் கூடிய திறன்களை வளர்க்கக் கூடிய ஆற்றல்கள் ஆசிரியர் பயிற்சியின் வழியாக முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளன.
வளர்ந்தோரின் அநாவசியமான தலையீடுகளில் இருந்து குழந்தைகளைப் பாதுகாத்தலும், குழந்தை களின் அடிப்படை உரிமைகளுக்குப் பாதுகாப்புத் தருதலும் பாலர்கல்வி ஆசிரியர்களுக்குரிய சிறப் பார்ந்த கடமைகளாகும். குழந்தைகளின் சுயமுயற்சி களுக்கு உற்சாகம் தருதல், செவ்விய புலக்காட்சி களை உருவாக்கு தற்குத் துணை செய்தல், சமூக உணர்ச்சிகளை வளர்த்தல், அடிப்படையான மனித விழுமியங்களைக் கற்பித்தல் முதலிய துறைகளில் ஆசியர் பயிற்சி ஒழுங்கமைக்கப்படல் வேண்டும்.
பின்வரும் அறிவுப்புலங்களில் ஆசிரியர் பயிற்சி யின் போது கவனம் செலுத்தப்படல் வேண்டும்.

Page 66
1. குழந்தையின் தனித் துவங்களுக்கு மதிப்பளித்தல், 2. குழந்தையின் எதிர்காலத்துக்கு வளம் அமைத்
தல், - 3. அவர்களை மகிழ்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும்
இருக்கச் செய்தல். 4. தமக்குரிய கருமங்களைக் குழந்தைகள் தாமே
ஆற்றும் படியான திறன்களை வளர்த்தல், 5. நல்ல பழக்கவழக்கங்களைப் பயிற்றுதல். 6. ஆசிரியர் தாமே முன்மாதிரியாக நடந்து கொள்
ளல், 7. குழந்தைகளின் மனவெழுச்சிகளுக்குப் பயிற்சி
வழங்கல், 8. அழகியல் உணர்வைத் தூண்டுதல், 9. ஆராய்வூக்கம், சூழலை அறியும் ஊக்கம் முதலிய
வற்றை வளர்த்தல். 10. ஆக்கச் சிந்தனைகளையும் செயல்களையும் வளம்
படுத்துதல் 12. கணிதம், மொழி, விஞ்ஞானம், நலவியல் முத லாம் துறைகளில் அடிப்படை எண்ணக் கருக் களை வளர்த்தல்
பாலர்கல்விக் கூடங்கள் நவீன கண்ணோட்டத் தில் 'விளையாட்டுக் கூடங்கள்" "நட்புக் கூடங்கள்" *விருத்திக் கூடங்கள்" என்றவாறு அழைக்கப்படு கின்றன. அதாவது பாலர் கல்விக்கான கலைத்திட் டமி நெகிழ்ச்சி கொண்டதாகவும், ஒன்றிணைக்கப் பட்டதாயும், செயல் முறைகளை உள்ளடக்கியதாயும், இருத்தல் வேண்டும்.
ஆசிரியரின் மேலாண்மைக்குப் பாலர் கல்வியில் இடமில்லை. தாய், தந்தை, தோழர், சேர்ந்து இயங்கு பவர், மகிழ்ச்சியூட்டுபவர், பாதுகாப்புத் தருபவர்,

தேவைகளை உணர்பவர் போன்ற பாத்திரங்களை ஏற்கப் பழக்குதல் முதலியவை ஆசிரியர் பயிற்சி உள்ளடக்கத்தில் இடம் பெறுதல் வேண்டும்.
மாரியா மொன்றிசோரி அம்மையாரின் கோட் பாடுகனை அடிப்படையாகக் கொண்ட ஆசிரியர் பயிற்சி நெறிகளில் பின்வரும் பாடங்கள் சிறப்பாகக் கற்பிக்கப்படுகின்றன.
1. குழந்தை உளவியல். 2. மொன்றிசோரி கோட்பாடு, 3. மொன்றிசோரி உபகரணவிளக்கமும் செயற்
கல்வியும் 4. அங்கீகரிக்கப்பட்ட குழந்தை இல்லங்களை
அவதானிக்கும் பயிற்சி, 53 புவியியல், தாவரவியல்,
அவதானிப்பும், குறிப்புக்களும், 6. முதலுதவி. 7. பள்ளிக்கூட முகாமைத்துவம் வே கற்பித்தற் பயிற் சி.
பொதுவாக இரண்டு ஆண்டுகளை உள்ளடக்கிய மொன்றிசோரி பயிற்சி நெறியானது அகல்விரி பண் புடையதாகக் காணப்பட்டாலும், நவீன கல்விக் கோட்பாடுகளுக்கு அப்பயிற்சி நெறியில் போதிய இடம் வழங்கப்படாமை பிரதான மட்டுப்பாடாகும்.
இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம் வழங்கிய பாலர்கல்வி ஆசிரியர் பயிற்சி நெறியில் பின்வரும் பாடங்கள் கற்பிக்கப்பட்டன.
1. கல்வித்தத்துவமும், பாலர்கல்வி இலக்குகளும், 2. குழந்தை உளவியல், 3. மொழி விருத்தி.

Page 67
8
4. கணித எண்ணக்கரு விருத்தி,
5. ஆக்கச் செயற்பாடுகளும் அழகியற் கல்வியும்.
6, சூழல் ஆய்வு:
7. படைப்பாற்றல்.
8. நலவியல்,
9. பாலர் கல்விக்கூட ஒருங்கமைப்பு, 10. கற்பித்தல் முறையியல்கள்,
1. கைநூல்கள், கற்பித்தல், உபகரணங்கள் தயாரித்
தல், உபயோகித்தல் முதலியன.
மிகவும் பரந்த கலைத் திட்டமாக இது அமைந் திருந்தது. சூழலில் இருந்து பெறப்பட்ட பொருள்கள் கற்றல் - கற்பித்தல் சாதனங்களாகப் பயன்படுத்தப் பட்டமை அதன் சிறப்புப் பண்பாகும்.
பாலர் கல்வியில், அண்மைக் காலத்தில் பல புதிய அணுகு முறைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. அவற் றையும் ஆசிரியர் பயிற்சித் திட்டங்களிலே சேர்த்துக் கொள்ள வேண்டியுள்ளது. உதாரணமாக ஆசிரியர் மேற்கொள்ளும் "இசை வியக் க ற் ற ல் அனுபவங் s Gir” (Mediated learning experiences) 52 CU5 LA SUL அணுகு முறையாகும். இச் செயல் முறையில் ஆசிரியர் குழந்தைகளுக்கும், கற்றல் தூண்டிகளுக்குமிடையே இசைவியராக (Mediator) த் தொழிற்பட வேண்டு மென வற்புறுத் தப்படுகின்றது. இத்தகைய தொழிற் பாட்டில் பின்வரும் சிறப்புப் பண்புகள் காணப்படும். 1 குழந்தைகளிடத்து முனைப்புடன் கவனத்தை
ஈர்த்தலும் துலங்கலைப் பெறுதலும் 2. கருத்தை நிலை நிறுத்தும் இசைவியம் தருதல்,
3. அறிவை விரிவாக்கவும், நிலைமாற்றவும் செய்
வதற்குரிய இசைவியம் வழங்கல்.

9
4. குழந்தைகளின் உணர்வு நிலை ஆற்றல்களுக்
குரிய இசைவியம் தருதல்.
5. இசை வியத்தினால் குழந்தைகளின் நடத்தை
களை ஒழுங்கமைத்தல்,
குழந்தைகளின் எதிர்காலம் பாலர்கல்வி ஆசிரி யர் பயிற்சி ஒழுங்கமைப்பிலே தங்கியுள்ள தென்ற பொறுப்புணர்ச்சியுடன் திட்டமிட்ட நடவடிக்கைகனை மேற் கொள்ள வேண்டியுள்ளது. இந்நிலையிலே பாலர் கல்வி ஆசிரியர்களின் பணிகள் மேலும் விரிவடைகின் றன. நீண்டகாலப் பயிற்சிகளுக்குப் பின்னரே ஒருவர் பாலர் கல்வி ஆசிரியராக வரும் 'அனுமதி பெறும் நிலை” வளர்ச்சியடைந்த நாடுகளில் ஏற்படத் தொடங்கியுள்ளது.
பிரயோகக் கல்வி உளவியல்
பிரயோகக் Ss 6d657 e 6T 6ốu 6ö (Practical Educat - ional psychology) பற்றிய அறிவு ஆசிரியர்களுக்கு இன்றியமையாததாகும்.ஒர் இயந்திரத்தை இயக்குபவர் போன்று ஆசிரியர் பொறி முறையாகத் தொழிற்பட முடியாது. சிறுவர்களின் நடத்தை வெளிப்பாடுகள் ஒவ்வொன்றும் சிக்கல் பொருந்தியவையாக இருக்கும். அவற்றை ஒழுங்கமைத்து, கற்றல் இலக்குகளை நோக்கி நெறிப்படுத்துதல் ஆசிரியருக்குரிய அறை கூவலாகும்.
ஒவ்வொரு சிறுவர்களும் சிக்கல் பொருந்திய நடத்தைகளை வெளி யி ட் டு க் கொண்டிருக்கும் பொழுது அவற்றுக்கிடையே முரண்பாடுகள், உராய்வு

Page 68
20
தோன்றும் பொழுது ஆசிரியர் உணர்ச்சி வசப் படுதல், கோபப்படுதல் என்பவற்றைத் தவிர்த்துக் கொள்ளல் வேண்டும். “கற்பித்தல் என்பது கற்றலை உண்டாக்குவதற்குரிய செயல் முனைப்புள்ள தொழிற் பாடுகளின் தொகுதி? என்று கிளார்க் (1970) குறிப் பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சிறுவர்களின் நடத்தைகளிலே தொடர்ச்சியான நேர் மாற்றங்களை ஏற்படுத்த ஆசிரியர் முனைதல் வேண்டும்.
சிறுவர்களிடத்து அறிகை ஆட்சி, எழுச்சி ஆட்சி, இயக்க ஆட்சி, ஆகிய மூன்றையும் ஒன்றிணைத்து வளர்த்தல் கல்வியின் இலக்குகளாகும். இவற்றை அடையும் பொருட்டு ஆசிரியர் பின்வரும் இயக்கங் களிலே கவனம் செலுத்துதல் வேண்டும்.
1. பேசுதல்.
2. விளக்குதல் .
3. வினாவுதல். 4. கண்டு பிடிக்கச் செய்தல், 5. தொடர்புபடுத்துதல், 6. செய்து காட்டுதல். 7. ஒப்படை தருதல் 8. நெறிப்படுத்தல். 9. தொழிற்பட வைத்தல், 10. சந்தர்ப்பங்களை உருவாக்குதல், 41. சாதனங்களை வழங்குதல், 12. தெளிவுபடுத்துதல், 13. உள்ளத்தை வென்றெடுத்தல், 14. இனங்காணச் செய்தல். 15. ஒப்பு நோக்கச் செய்தல், 1. தீர்ப்புக் கூறச் செய்தல். 17. மதிப்பீடு செய்தல், 18. பின்னூட்டல் செய்தல், 19. காரணங்காணச் செய்தல், 20. கற்பனையை வளர்த்தல்,

2.
இந்நிலையில் ஆசிரியரது பணிகள் வேறுயாரா லும் மேற்கொள்ளப்பட முடியாத ாேண்மை' என் பது தெளிவாகின்றது ஆசிரிய வாண்மையானது கல்வி உளவியல் வலுவைப் பிரயோகப்படுத்தும் திறன் களுடன் இணைந்தது. சிறுவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுதல், ஊக்க வினைப்படுத் தல், விருத்திக் கோலங்களை அறிதல், கற்றலை விளங்கிக் கொள்ளல், கற்பித்தல் முறையியல்களைத் தெரிந்து கொள்ளல், புலன் உணர்வு, புலக் காட்சி கற்றல், ஞாபகம், கற்றல் இடமாற்றம், மதிப்பீடு, முதலாம் தொழிற்பாடுகளைப் புரிந்து கொள்ளல் என்றவாறு கல்வி உளவியல் வலுக்களை ஆசிரியர் அறிந்து பிரயோகித்தல் வேண்டும்.
ஆசிரியர் பொருத்தமான நேரத்தில் பொருத்த மான தொழிற்பாடுகளை மேற்கொள்வதற்குக் கல்வி உளவியல் அறிவு துணை செய்யும். இந்நிலையிற் கற்பித்தல் என்பது கலையுமாகின்றது. விஞ்ஞான மு மாகின்றது. பிரயோகக் கல்வி உளவியல் கற்பவர் களை நடுநாயமாகக் கொள்கின்றது. இந்நிலையில் சிறுவர்களின் பின்வரும் விருத்திக் கோலங்களையும் தனித்துவங்களையும் ஆசிரியர் நுண்ணிதாக அறிந்து
1. உடல் விருத்தி, இயக்கத் திறன்களின் விருத்தி
யும், பின்னடைவுகளும் 2. உள விருத்தி, மீத்திறனும் பின்னடைவுகளும், 3. மனவெழுச்சி விருத்தி, நேர்க் கோலங்களும்,
எதிர்க் கோலங்களும். 4. சமூக விருத்தி, இசைவாக்கமும், இசை வாக்கப்
பின்னடைவுகளும் 5. மொழி விருத்தி, எண்ணக்கருவாக்கமும், எண்ணக்
கருவாக்க இடர்பாடுகளும்,

Page 69
凰22
6. அறவொழுக்க விருத்தி, நேர்க் கோலங்களுமீ,
எதிர்க் கோலங்களும், மேற்கூறிய ஒவ்வொரு பண்பும் ஒவ்வொரு மாண வரிடத்து எவ்வாறு அமைந்துள்ளது என்பதை ஆசிரி யர் நன்கு உற்று நோக்கல் வேண்டும்.
அடுத்ததாக, கற்றல் நிரலமைப்புப் பற்றிய அறிவு ஆசிரியருக்கு இன்றியமையாததாகும். கற்றல் நிரலமைப்பின் ஆரம்ப நிலையில் உள்ளது சமிக்ஞை (Signal) கற்றலாகும். மிகவும் உயர்ந்த நிலையிலுள் ளது பிரச்சினை விடுவித்தலாகும். இவை இரண்டுக்கு மிடையே பல கற்றல் படிநிலைகள் காணப்படுகின் றன. அவை வருமாறு:
1. சமிக்ஞை கற்றல் , 2. தூண்டி - துலங்கல் கற்றல், 3. உடலியக்கங்களைச் சங்கிலித் தொடராக்கிக்
கற்றல் 4. சொற்களைச் சங்கிலித் தொடராக்கிக் கற்றல், 5. வேறு பிரித்தறிந்து கற்றல், 6. எண்ணக்கரு கற்றல், 7. விதிகளைக் கற்றல் 8, பிரச்சினை விடுவித்தல்,
இவ்வாறான கற்றல் நிரலமைப்பை அறிந்து வைத் திருத்தல் ஆசிரியத்துவத்தின் வினைத் திற ணுக்கு இன்றியமையாததாகும்.
மாணவரின் விருத்தி நிலைக்கு ஏற்றவாறும், முன் அனுபவங்களுக்கு ஏற்றவாறும் கற்றல் பணி களை ஒழுங்கமைத்தல் ஆசிரியரின் கடமையாகும். மாணவர்கள் தாமே இயங்கிக் கற்பதற்குரிய நாட் டத்தை ஆசிரியர் ஏற்படுத்த வேண்டும். கற்றலில் ஏற்பட்ட முன்னேற்றம் பற்றிய உணர்வையும் மாண வரிடத்து உணர்த்துதல் சிறந்தது.
 
 

23
எவற்றைக் கற்கும் பொழுது, மகிழ்ச்சியுடனும்
ஈடுபாட்டுடனும் கற்பதற்கு ஆசிரியர் உதவுதல் வேண் டுமீ, கற்பிக்கும் பொழுது பின்வரும் அசைவுகள் பற்றிய அறிவு ஆசிரியர்களுக்கு இன்றியமையாதது.
2.
3.
தெரிந்தவற்றிலிருந்து தெரியாதவற்றுக்குச் செல்
லல், எளிதிலிருந்து சிக்கலுக்குச் செல்லல்: உருவ நிலையில் இருந்து அருவ நிலைக்குச்
செல்லல், காட்சியில் இருந்து கருத்துக்குச் செல்லல், முழுப்பொருளில் இருந்து பகுதிக்குச் செல்லல் -
பகுதியில் இருந்து முழுமைக்கு வருதல்.
இடை வினைகளில் இருந்து எண்ணக் கருவாக்
கத்துக்குச் செல்லல். செயற்பாடுகளில் இருந்து மதிப்பீடுகளுக்குச் செல்லல்,
கற்றல் பணிகளை நிறைவேற்றும் பொழுது சிறு
வர்களிடத்து ஏற்படும் மகிழ்ச்சியும் ஈடுபாடும் பொறுப் புணர்ச்சியும் பிரயோக உளவியலின் வெற்றியாகக் கருதப்படும்.
* வே ২৯%
リ }
త్రొకర్ని
2

Page 70
துணை நூல்கள்
l,
ேேய ബ് 19iിട്ടു 'o Eം சேரு ')[1 !, €:
2
组
4.
12
ஆறுமுகம், வ. வகுப்பறைக்கற்பித்தல் யாழ்ப்பாணம் - 1989
இலங்கைக் கல்வி அமைச்சு. கல்வி வெள்ளை அறிக்கை - 1982 இரத்தினகோபால், இ. பாலர் கல்வியும் விஞ்ஞான அணுகுமுறையும் யாழ்ப்பாணம் 1986, ஐக்கியநாடுகள் கல்வி விஞ்ஞான கலாசாரதாபனம் 2 - 5 வயதுப்பிள்ளைகளுக்கு உதவும் செயற்பாடுகள் ஐக்கியநாடுகள் சிறுவர் நிதியம், ஆயுதப்போர் நடைபெறும் நிலைமைகளில் சிறுவர்களுக்கு
உதவுவதற்கான கல்வி, 1987
சந்திரசேகரம், ப. கல்வியியற் சிந்தனை
சிறுவர் பாடசாலை ஆசிரியர் பயிற்சி நிலைய வெளியீடுகள் மூளாய் - 1, 2, 3
தேசியகல்வி ஆணைக்குழு முதலாவது அறிக்கை,
- ܓ݁ܠܶܓ݂Gܓܬ ܜܠܓܬ \؟ܒ>

Page 71
,"-
ISBN 955 643 000 8