கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பிரிக்க முடியாத மனித உரிமைகள்

Page 1
ü மனித உ
அரசியல் குடி உயிர்பிழைத்திருப்பத வறுமைக்கும் எவ்வித
 
 

பியல்உரிமைகள் ற்கும் வாழ்வுதியத்திற்கும் GSIL (GBIGOL 606)
மைள் காப்பு ights Watch

Page 2
Movement for the Defence of Democratic ថ្ងៃhs
|- 1149, Kotte Road, Rajagiriya. ) .8897131865655 87375 mddrQstik
In appreciation of yourparticipation in the Oratoricas Competition on Peace c, Jsu man Rights
111 si Marcs 2002
 

பிரிக்கமுடியாத மனித உரிமைகள்
அரசியல் குடியியல் உரிமைகள், உயிர்பிழைத்திருப்பதற்கும் வாழ்வூதியத்திற்கும் வறுமைக்கும் எவ்வித தொடர்பு கொண்டவை
வெளியீடு
செப்டம்பர் 1992
மனித உரிமைகள் காப்பு
Human Rights Watch

Page 3
1992 மனித உரிமைகள் காப்பு எல்லா உரிமைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அச்சிடப்பட்டது இது-56432-084-7 காங்கிரஸ் நுால் நிலைய தொகுப்புநுால் இல. 92-14298
மனித உரிமைகள் காப்பு சர்வதேச மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகள் பேணப்படுதல் கண்காணிக்கும் நிறுவனம் மனித உரிமைகள் காப்பாகும். இது ஐந்து காவல் குழுக்களைக் கொண்டது அவையாவன :ஆபிரிக்க காவல், அமெரிக்க காவல், ஆசிய காவல், க்ஷல்சிங்கி காவல், மத்திய கிழக்கு காவல்,
இதன் நிருவாக குழுவில் அங்கம்வகிப்போர் தலைவர்; ருெபெட் எல் பேண்ஸ்ரெயின், உபதலைவர்; ஏற்றியன் டிவின், ஏனைய அங்கத்தவர்கள் றேலண்ட் அல்கிருண்ட்,நீசா அன்றசன்,பீற்றர் பெல், அல்விஸ் பிறவுணி, வில்லியம் கதமிஷல், டொறத்தி கல்மன், ஜறின் டயமன், ஜொனதன் வெல்பன், ஜெக், அலிஸ் கெங்கிள், ஸ்ரீபன் காஸ், மரீனா கொல்மன், ஜெறி லேபல், அறியே நயா, பூநுால் பிறன், கறியர் றென், கெனத்ருப்ெ, ஒயில் செல், கேநிசிக் றெபட் லெஸ்போ,
செயலக அங்கத்தவர்கள்: அறியே நயல், நிர்வாக இயக்குநர்:கெனற் றெச், உபஇயக்குநர்; கொலி பேக் கொல்டன், வாசிங்டன் இயக்குநர், கெலன் லுட்ஸ், கலிபோனியா, இயக்குநர்; ஆசன் கொஸ்னெஸ், அச்சக இயக்குநர், ஜெமேரு ருேண் , சட்ட ஆலோசகர்; ஸ்ரானி ஸ்ரீல், செயல்பாடு இயக்குநர்; டொறத்தி தொமஸ், மகளிர் உரிமைத்திட்ட இயக்குநர்; யஞன்னா வெஸ்வர், சிறைச்சாலை திட்ட இயக்குநர்.
நிர்வாக இயக்குநர்கள்
ஆபிரிக்ககாவல் கெல்சிங்கி காவல்
றக்கி ஓபர் ஜெறி லேபர்
அமெரிக்க காவல் மத்திய கிழக்கு காவல் பூலன் மேன்டஸ் அன்று லிற்வி
ஆசிய காவல் சுயாதீன கருத்துத்தெரிவிப்பு நிதியம் சிற்ணி யூன்ஸ் காறா லமாச்
மறுபிரசுரிப்பு 1992 நடேசன் நிலையம், 31,சாள்ஸ் இடம் கொழும்பு 3.இலங்கை அச்சிட்டவர் தர்சனா அச்சீட்டாளர், 26/3 சில்வா வீதி,ருஜகிரிய

அறிமுகம் ------------------ 1
அத்தியாயம் : பஞ்சம் ------------ 4 ஜனநாயகமுறையில் கணக்குக் காட்டும் பொறுப்பு ட - 6
உருப்படியான உதாரணம் 1 : இந்தியா (7) உருப்படியான உதாரணம் 2பொட்ஸ்வான7 (70) கலப்பு உதாரணம் 7 தன்வானிய/7 (72) கலப்பு உதாரணம் 2: கென்னியா (74) கலப்பு உதாரணம் 3: பங்களாதேஷ் (75) எதிர்மாறான உதாரணம் : சீன7 (79) எதிர்மாறான உதாரணம் 2: எத்தியோப்பியா (22) எதிர்மாறான உதாரணம் 3: குட7ன் (29) எதிர்மாறான உதாரணம் 4 சே7ம7விய/7 8ே)
அத்தியாயம் II நிலம் ------------- 45
1. நகர்ப்புறங்களில் சட்ட விரோதமாய்க்
குடியேறுவோர் . 48
| Isilo/7 (115u//76i/LD/7ff) (51 ) (54 /76it (52) 2. இடம்பெயர்வதற்கான சுதந்திரமும் மேய்ச்சலுக்கான
உரிமைகளும். 54
கென்னியா (56) எத்தியோப்பியா (57) மாலி (57) 3. சூழலின் பெயரால். 58
தாய்லாந்து (58) கென்னியா(60) இந்தோனேஷியா (67) 4. கிராமப்புற அமைப்பாளர்களுக்கெதிரான நிலச்சொந்தக்
காரனின் வன்முறைகள் குறித்து வாளாவிருத்தல் . 63
LിGffകി) (3) பராகுவாய் (66) 5. வெளிப்புறத்தவரை உள்ளே கொண்டுவரல் . 69
எத்தியோப்பியா(69) பங்களாதேஷ் (70) மேற்கு கரையோரப்பகுதிஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள் (72) தென்னாடபிரிக்கள் (72) திபெத் (74) 6. மரங்களை வெட்டுவதற்காகவும் வர்த்தக
விவசாயத்திற்காகவும் நிலம் ஒதுக்கப்படல் . 75
ம7ரிதானியா (75) குடான் (76) பிலிப்பீன்ஸ் (77)

Page 4
7. அபிவிருத்தி திட்டங்களுக்காக வெளியேறுதல் 79
இந்தியா (80)
அத்தியாயம் II சூழல் பாதுகாப்பு ------- 83 சூழல் இயக்கம் நடத்துவோர் மீது தாக்குதல் . 79
சங்கம் அமைத்தும் கட்டம் கூடியும் இயங்குவது மீது கட்டுப் //டுகள் (87) அப7யச்சங்கு ஊதுவே//ை/த் துன்புறுத்தல் 8ே) தொடர்புச்சாதனங்கள் மீது கட்டுப்பாடு (89) அரசாங்கத்திடமுள்ள தகவல்களை பெறுவதற்கு கட்டுப்பாடுகள்(90)
மலேசியா ஒர் ஆய்வு - - - - - - - - - - - 9
a 260.7607600/7 (95) மரம் வெட்டுதலும் அரசியல் ஊழலும் (97) ஒடுக்குமுறைச்சட்டங்கள்(700) தடுப்புக்காவல் நிலைமைகள்(104) பயமுறுத்தல்(705) பரவலான அலைக்கழிவுகள்(706) பத்திரிகைத்தணிக்கை(708) முடிவுரை(777)
அத்தியாயம் IV வேலை ----------- 3 தொழிலாளர் உரிமைகளும் பொருளாதார நலம்பேணலும் . 13 பலவந்தம் அல்லது சுயவிருப்பற்ற வேலை . 175 பொருளாதார ரீதியிலும் உடல்ரீதியிலும் பிழைத்திருத்தல் . 123 தொழிலாளர் சங்கம் அமைப்பதைத் தடுப்பதற்கு s=9//747/7/5/>52526ö7 £d i L//7///25/256î7. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 737 தொழிற்சங்கவாதிகள் மீது வன்முறை, அச்சுறுத்தல், துன்புறுத்தல்' . 132
புலம் பெயர் தொழிலாளர் மீது கட்டுப்பாடுகள். 138
V முடிவுரை 42

அறிமுகம்
குடியியல், அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகளை உள்ளடக்கிய மனித உரிமைகளின் பிரிக்க முடியாத இயல்பை நாட்டின் அல்லது அரசாங்கத்தின் தலைவர்கள் மேலும் வலியுறுத்தினர். உணவு, உறையுள், சுகாதாரம், வறுமையொழிப்பு, படிப்பறிவின்மையொழிப்பு இன்னோரன்ன மனித இனத் தேவைகளோடு உடனடித்தொடர்பு கொண்டவையே பொருளாதார, சமூக கலாச்சார உரிமைகள். ஆனால் அவற்றுடன் தொடர்பற்ற அரசியல் நோக்கங்களுக்காக அவற்றைப் புறக்கணித்து மனித உரிமைகளிற் சிலவற்றைப் பொறுக்கியெடுத்து கவனஞ் செலுத்தும் போக்குக் குறித்து அவர்கள் கவலை தெரிவித்தனர்.
(அணிசேரா நாடுகளின் அரச அல்லது அரசாங்கத் தலைவர்களது பத்தாவது மாநாட்டின் இறுதி அறிக்கை, பந்தி 61),
குடியியல், அரசியல் உரிமைகளுக்காக வாதாடுவது சமூக பொருளாதார உரிமைகளைப் புறக்கணிப்பதாக பல சந்தர்ப்பங்களில் கருதப்படுகின்றது. பசி, வறுமை, படிப்பறிவின்மை முதலானவை மீது கவனஞ் செலுத்துவதே பிரதான கரிசனையாக இருக்க வேண்டுமென பல அரசாங்கங்கள் தர்க்கம் புரிகின்றன. கருத்துச் சுதந்திரம் ஒன்று கூடி இயங்கும் சுதந்திரம் முதலானவை இரண்டாம் தரத்தவை என்பதே அதன் அர்த்தம். உதாரணமாக 1991 அக்டோபரில் வெளியிடப்பட்ட மனித உரிமைகள் மீதான வெள்ளையறிக்கையில் சீன அரசு இவ்வாறு வாதிக்கின்றது. "அனைத்து மனித உரிமைகளுள் வாழ்வூதிய உரிமையே எந்தவொரு நாட்டுக்கும் அல்லது தேசத்துக்கும் மிக முக்கியம் என்பது ஒரு சாதாரண உண்மை. இவ்வுரிமையின்றி ஏனைய உரிமைகள் பற்றிய பேச்சுக்கே இடமில்லை"
அரசியல், மற்றும் குடியியல் உரிமைகள், விசேடமாக ஜனநாயக முறையில் பொறுப்புணர்ச்சி மிளிரும் உரிமைகள் காணப்படுவதில்தான் வாழ்வூதியம் உண்மையில் உயிர்பிழைத்திருத்தல், அடிக்கடி தங்கியுள்ளது என நாம் இவ்வறிக்கையில் விவாதிக்கின்றோம். இவ்வுரிமைகள் குறிப்பிட்டவொரு பொருளாதார வளர்ச்சி மட்டத்தையெய்திய பின்னரே அனுபவிக்கப்பட வேண்டிய ஆடம்பரங்களோ அத்தோடு முடிந்து
1. பீஜிங் ரிவியூ, நவம்பர் 4 - 10, 1991 பக். 9

Page 5
போகிறவைகளோ அல்ல. இவ்வுரிமைகள் உள்ளார்ந்த பயன் மதிப்புள்ளனவையாய் இருப்பதோடு, சகல நாடுகளைச் சேர்ந்த மக்களும் தாம் உயிர்வாழ்வதற்குத் தேவையான உணவைப் பெறவும் வாழ்க்கை ஊதியத்துக்குத் தேவையான நிலத்தை வைத்திருக்கவும், தம் பொருளாதார உயர்வுக்காகப் பிறருடன் சேர்ந்து அமைப்புகளை உருவாக்கவும், உலகளாவிய அளவில் சுகாதாரத்துக்குக் கடுமையான அச்சுறுத்தல் விடுக்கும் சூழல் மாசடைவதை எதிர்க்கவும் அனுமதிக்கும் அத்தியாவசிய வழிமுறைகளாகும்.
பஞ்சம், நிலம், சூழல், சுற்றாடல், தொழில் என நான்கு அத்தியாயங்களாய் இவ்வறிக்கை பிரிக்கப்பட்டுள்ளது. முதல் அத்தியாயத்தில், அரசியல் மற்றும் குடியியல் உரிமைகள் இல்லாமை எவ்வாறு பஞ்சத்தைத் தோற்றுவிக்கின்றதெனக் காட்டியுள்ளோம். வரட்சி, பயிரழிவு முதலியவைகளால் மட்டுமே எந்தவொரு பஞ்சமும் விளைவதில்லை. தட்டுப்பாடு நிலவுமாயின் தட்டுப்பாடு பற்றிய தகவலை மக்கள் அரசாங்கத்திற்கு எட்டச் செய்தால் மட்டுமே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவிகளை அனுப்ப ஏற்பாடு செய்ய முடியும். அரசாங்கங்கள் பொறுப்புடன் நடக்கக் கடமைப்பட்டுள்ளன. கருத்துச் சுதந்திரத்தையும், ஜனநாயகப் பொறுப்புணர்ச்சியையும் உயர்ந்த அளவில் அனுபவிக்கும் இந்தியா பஞ்சத்தைத் தடுப்பதில் வெற்றி கண்டுள்ளமையும் அதேவேளை எதியோப்பியாவுக்கும் சூடானுக்கும் அது முடியாமல் போனமையும் தற்செயலான நிகழ்வுகளன்று.
இரண்டாம் அத்தியாயத்தில், மனித உரிமை மீறல்கள் சமூகத்தின் வறிய பகுதியினர் தம் வாழ்வூதியத்துக்காகத் தங்கியிருக்கும் நிலம் பரவலாகப் பாராதீனஞ் செய்வதில் முடிந்ததென்பதை நாம் பதிவு செய்துள்ளோம். ஜனநாயகப் பொறுப்புணர்ச்சியின்மை உலக நாடுகளில் பஞ்சத்திற்கு வழி வகுத்ததென்றால் வன்முறை வழிவகைகள் இன்மை இன அடிப்படையில் அரசியல் பாரபட்சம், அரசியல் அதிகார அத்துமீறல் முதலியன கோடிக்கணக்கானோரை வறுமையில் வீழ்த்தியுள்ளன. வளர்முக நாடுகளைப் போன்று, வளர்ச்சியுற்ற நாடுகளும் குற்றச்சாட்டுக்குரியவை தான். நிலம் பாராதீனஞ் செய்தலுக்கு இட்டுச் செல்லும் மனித உரிமைகள் மறுப்புக்கு இரண்டாம் உலக யுத்தத்துக்கு முந்திய குடியாட்சி சக்திகள் உதாரணங்கள் என்றால், இவ்வுதாரணங்கள் ஆசியாவையும் ஆபிரிக்காவையும் சேர்ந்த சுதந்திரத்துக்குப் பிந்திய பல அரசுகளால் அச்சொட்டாகப் பின்பற்றப்பட்டுள்ளன.

மூன்றாவது அத்தியாயம் சூழல் சுற்றாடல் சம்பந்தமா 60 விவகாரங்களில் கவனஞ் செலுத்தக்கூடிய சக்திகள் மீது விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், சுகாதாரம், வாழ்வூதியம் முதலியவற்றோடு சூழல் சுற்றாடல் சீரழிய எவ்வாறு காரணமாயிற்று என்பதைப் பதிவு செய்கின்றது. கிழக்கு ஐரோப்பா, ஆசியா, ஆபிரிக்கா, லத்தின் அமெரிக்கா, ஐக்கிய அமெரிக்கா (யு.எஸ்.ஏ.) முதலிய நாடுகளிலிருந்து உதாரணங்கள் பெறப்பட்டுள்ளன. மனித உரிமைக்கெதிரான அதிகார அத்துமீறலுக்கும் பாரதூரமான நீண்ட கால விளைவுகள் கொண்ட சூழல் சுற்றாடல் பாதிப்புக்குமிடையே காணப்படும் தொடர்பு பற்றி மலேசியா ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது.
தொழில் பற்றிய அத்தியாயத்துடன் அறிக்கை முடிவுறுகின்றது. இது நாட்டுப்புற, நகர்ப்புறத் தொழிலாளர் வலுவான முறையில் சங்கமமைத்து இயங்குவதற்கான உரிமை மீது விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் எவ்வாறு அவர்களை வாழ்வூதியத்துக்கு போதாத சம்பளங்களோடு, பெரும்பாலும் பாதுகாப்பற்ற தொழில் வாய்ப்புகளில் அவதியுறும் நிலைக்குத் தள்ளியுள்ளதென்பதைக் காட்டுகிறது. இடம்பெயர்ந்து வந்து தொழில் புரியும் மக்களைப் பொறுத்த மட்டில் இடம் பெயர்தலுக்கெதிரான அரசாங்கக் கட்டுப்பாடுகள் மரணதண்டனையாக முடியலாம்.
குடியியல், அரசியல் உரிமைகளின் பாதுகாப்பும், தம் பொருளாதார சமூக கலாச்சார நல்வாழ்வுக்கான உலகமக்களின் ஆற்றல்களும் பிரிக்கப்பட முடியாதவையென்பதை மீள வலியுறுத்துவதற்காக மனித உரிமைகள் பாதுகாப்பு விழிப்பு இயக்கத்தினால் இவ்வறிக்கை வெளியிடப்படுகின்றது.

Page 6
அத்தியாயம் 1 : பஞ்சம்
பஞ்சம் என்பது ஒரு கூட்டத்தினர் இன்னொரு கூட்டத்தினர் மீது அதாவது வழக்கமாக ஒரு தேசத்தின் அரசாங்கமோ இராணுவமோ அத்தேசத்தின் வறிய, வலிமையற்ற மக்கள் மீது இழைக்கும் படுபாதகக் கொடுமையாகும். சிலசமயம் வேண்டுமென்றும், இருந்திருந்து தெரியாத்தனமாயும், மிகப் பெரும்பாலும், அதன் முடிவு பற்றித் தெளிவற்ற பலதரப்பட்ட குறிக்கோள்கள் காரணமாகவும் இக்கொடுமை இழைக்கப்படுகின்றது. மனித துன்பங்களையும் மனித உரிமைகளையும் அதிகாரஞ் செலுத்துவோர்துச்சமாக மதிப்பதே பஞ்சத்தை விளைவிக்கும் முக்கிய காரணமாகும்.
சமூகப் பொருளாதார உரிமைகளுக்கு மேலாக குடியியல் அரசியல் உரிமைகள் முதன்மை பெறுவது பற்றிய விவாதம் தொடர்ந்து முனைப்புப் பெற்று வருகின்றது. குறிப்பிட்ட தயாள மனித உரிமைகள் சிலவற்றிற்கும் மிகவும் அடிப்படையான பொருளாதார உரிமைகளில் ஒன்றான பஞ்சத்திலிருந்து மீட்படைவதற்குமிடையேயுள்ள அனுபவ பூர்வமான உறவைக் காட்டுவதன் மூலம் திட்டவட்டமான, பணிவான பங்களிப்பை அவ்விவாதத்துக்கு வழங்க இவ்வறிக்கை முற்படுகின்றது.
மனித உரிமைகளுக்கு நடுநாயகமான இரண்டு அம்சங்கள் மீது இவ்வறிக்கை கவனஞ் செலுத்துகின்றது. அவையாவன:
(1) தகவல், கருத்து வெளிப்பாடு, கூடி இயங்குதல், போட்டித் தேர்வுகள் முதலியவற்றுக்கான சுதந்திரத்தை உள்ளடக்கிய ஜனநாயகப் பொறுப்பு.
(2) இடம்விட்டு இடம் நகர்வதற்கும் குடி யிருப்புக்குமான சுதந்திரமும், எதேச்சதிகாரமாக வாழ்வூதியம் மறுக் கப்படுவதிலிருந்து விடுதலையும்,

உணவு உரிமை பல்வேறு மனித உரிமை உடன்படிக்கைகளில் அடங்கியுள்ளதெனினும் இங்கு அது தனித்துவமாக கவனத்தில் கொள்ளப்படமாட்டாது. உள்நாட்டு வெளிநாட்டு மோதல்களுக்காக ஜெனிவா உடன்படிக்கையும் "யுத்தவிதி"களும் இருபகுதியினராலும் வேண்டுமென்றே மீறப்பட்டமை உலகின் படுமோசமான பஞ்சங்கள் சிலவற்றுக்குக் காரணமாயமைந்த போதிலும், பஞ்சத்துக்கு யுத்தம் ஒரு காரணமாக இவ்வறிக்கையில் காட்டப்படவில்லை.?
மூன்று கண்டங்களில் நிலவிய பஞ்சங்களைப்பற்றிய ஏராளமான உதாரணங்களைத் தருகின்றது இவ்வறிக்கை. பஞ்சத்துக்கும் மனித உரிமைகளுக்குமிடையிலான சம்பந்தத்தைக் காட்டுவதற்கான உதாரணங்களைத் தெரிவு செய்யும் போது பின்வரும் உண்மைகள் விரைவில் வெளியாகின.
(1) தற்கால வரலாற்றில் பிரதான பஞ்சம் ஒவ்வொன்றும் குறைந்தபட்சம் முக்கியமான அளவு, மனித உரிமைகள் கிரமமாக மீறப்படுவதால் நேர்ந்துள்ளது.
(2) அநேக விவகாரங்களில், பல்வேறு மனித உரிமை மீறல்கள் பஞ்சத்தை உண்டுபண்ணுவதில் சப்பந்தப்பட்டுள்ளன. இது மனித உரிமைகளின் பிரிக்க முடியாத தன்மையை துல்லிமாய்க் காட்டுகின்றது. ஓர் உரிமை மீறப்படும் போது ஏனைய உரிமைகளும் மீறப்படுவது பொதுவாக உண்மையேயாகும்.
உண்மையில் எதிர்விளைவை உண்டுபண்ணும் தட்ப வெப்பநிலை நீடித்து வறுமை, பொருளாதாரக் கொள்கைகளின் தோல்வி, பொருளாதார அலட்சியம், சுரண்டல் போன்ற வேறு காரணிகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் இவை எதுவுமே பஞ்சம் நிலவுவதற்குப் போதுமான காரணிகளன்று - பொருளாதார வளர்ச்சி வாய்ந்த சமூகத்திலுங்கூட அரசாங்கத்தினதோ இராணுவத்தினதோ நடத்தை காரணமாக சில பஞ்சங்கள் ஏற்பட்டதுண்டு.
பஞ்சத்தையுண்டு பண்ணுவதற்கு இக்காரணங்கள் மட்டும் போதா. பிரதானமான நவீனகால பஞ்சத்திற்கு இவை காரணங்களாய் விளங்கிய
2. ஆபிரிக்கா காவல் (Africa Watch) யுத்தமும் பஞ்சமும் பற்றிப் பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. "தீய நாட்கள் எதியோப்பியாவில் 30 ஆண்டுகள் யுத்தமும் பஞ்சமும்" (செப்டெம்பர் 1991) "மொசாம்பிக்" அப்பட்டமான அழிவு-மொசாம்பிக் யுத்தம், பஞ்சம் சீர்த்திருத்த வழிமுறைகள்” (ஜூலை 1992) முதலியன இவற்றுள் அடங்கும்.

Page 7
ஒவ்வொரு விவகாரத்திலும் மனித உரிமைகள் மீறலும் ஒரு முக்கிய அம்சமாகும்.
பஞ்சத்தைத் தடுக்கும் சக்திவாய்ந்த முறைகள் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக அறியப்பட்டவை யாகும். தற்போதைய விலைவாசியின்படி ஒரு மனிதன் ஒருவருடத்திற்குத் தேவையான சத்துணவைப் பெறுவதற்கு இருபது அமெரிக்க/டாலரைவிடக் குறைவாகவே செலவாகும். எனவே பஞ்சத்தடுப்பு முறையை மேற்கொள்ள முடியாத அளவுக்கு எந்தவொரு நாடும் வறுமையடையவில்லை. இத்தகைய சூழ்நிலையில், ஓர் அரசாங்கம் அதன் குடி மக்கள் அதிகமானோருக்கு கணக்குக்காட்ட முடியாத பொறுப்பற்ற நிலையிலேயே பஞ்சம் ஏற்படமுடியும்.
ஜனநாயக முறையில் கணக்குக் காட்டும் பொறுப்பு
கிரமமான தேர்தல், பத்திரிகைச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் உட்பட, ஜனநாயக அரசியலில் காணப்படும் பல்வேறு அரசியல் சுதந்திரங்கள், பஞ்ச ஒழிப்புக்கு இன்றியமையாதவை என கருதப்பட வேண்டும். இங்கே மீண்டும் - விமர்சித்தல், பிரசுரித்தல், வாக்களித்தல் முதலியவற்றிற்கான ஒருவகைச் சுதந்திரங்களின் தொகுதி வழக்கமாகப் பஞ்சத்திலிருந்தும் பட்டினிச் சாவிலிருந்தும் தப்புவதற்கான சுதந்திரம் போன்ற வேறுவகைச் சுதந்திரங்களோடு பின்னிப் பிணைந்ததாகத் தோன்றுகிறது."
பஞ்சத்தைத் தடுப்பதற்கான சக்திவாய்ந்த முறையின் ஆணிவேராக ஜனநாயக முறையில் கணக்குக் காட்டும் பொறுப்புகளின் அடிப்படைகள் அமைந்துள்ளன. இதற்கான காரணிகள் வருமாறு:
(1) நம்பத் தகுந்த தகவல்
ஓர் அரசாங்கம் பஞ்சத்தைத் தடுப்பதற்காக தக்க சமயத்தில் நடவடிக்கையெடுக்க வேண்டுமெனில், வரப்போகும் பஞ்சம் பற்றி அது முன்கூட்டியே அறிந்திருத்தல் அவசியம். இக்காரணம் பற்றியே இன்று "முன்கூட்டியே எச்சரிக்கை முறை" உருவாக்கப்பட்டுள்ளது." எனினும் தொழினுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு அமைப்பையும் விட பாதிக்கப்பட்ட மக்கள் கூட்டமே நேரப்போகும்
S. அமார்த்தியா ஸென், சமூகப் பொறுப்பாகத் தனிநபர் சதந்திரம் நியூயோர்க் நூல் விமர்சனம்,
rocr 14,1990
4. இந்தியாவில் நேர்ந்த, படுநாசமான பஞ்சங்களைத் தொர்ந்து 1870 பிரிட்டிஷ் ஆட்சி நிறைவேற்றிய இந்திய பஞ்ச தொகுப்புகளின் "புலனாய்வு" முறையின் நேரடிப் பெறுபேறே இவ்வமைப்ப. ஏற்படப்போகும் தட்டுப்பாட்டை முன்கூட்டியே அடையாளங்காண்பதற்குக் குடியரச நிர்வாகத்தக்கு உதவும் வகையில் பஞ்சத்தடுப்பு கொள்கையொன்றை இத்தொகுப்புகள் முன்வைத்தன.
6

பஞ்சம் பற்றி அதிகம் உள்ளுணர்வு கொண்டதாகவிருக்கும். அதிகார வட்டாரங்களுக்கு நம்பகமான தகவல்களை வழங்குவதன் மூலம் தங்கள் அச்சத்தை வெளியிடுவதற்கு மக்களுக்கு அனுமதியளிப்பதே மிகவும் சக்திவாய்ந்த முன்கூட்டிய எச்சரிக்கை முறையாகும். தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளிடம் நேரடியாக அறிவிப்பதன் மூலமோ சுதந்திரமான பத்திரிகைகள் மூலமோ அல்லது இவ்விரண்டின் மூலமாகவோ இதனைச் செய்ய முடியும்.
(2) எதிர் வினையை முடுக்கிவிடல்
ஓர் அரசாங்கம் வரப்போகும் பஞ்சத்தைப் பற்றிச் சகல தகவல்களையும் அறிந்திருப்பதென்பது ஒன்று, அது உரிய நேரத்தில் சரியான முறையில் தகுந்த நடவடிக்கை மேற்கொள்வதென்பது இன்னொன்று. "முடுக்கிவிடத்" தவறுதல் தொழிநுட்ப முன்னெச்சரிக்கை முறையின் மாபெரும் பிரச்சினையாகும். ஜனநாயக முறையில் கணக்குக் காட்டல் ஒழுங்கில் நம்பகமான தகவல்களின் ஆதாரங்களே தவறுதலின்றி அக்கடமையைச் செய்கின்றன. உள்ளூர் அமைப்புகளும் பத்திரிகைகளுமே அவ்வாதாரங்கள். எதிர்வினை காட்டத் தவறும் அரசியல்வாதிகளையும், நிர்வாகிகளையும் கணக்குக் கேட்கும், எதிர்ப்பு தெரிவித்து விமர்சிக்கும் பாத்திரத்தை வகிக்கும் உள்ளூர் அமைப்புகளும், பத்திரிகைகளும் அரசு சரியாகவும் உடனடியாகவும் மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்வதை உறுதிப்படுத்த முடியும்.
(3) கடந்த காலத்துக்கான கணக்குக் காட்டல்
பஞ்ச நிவாரணமும் பஞ்சத்தடுப்பும் பரிணாம வளர்ச்சிபெற்று வரும் ஓர் விஞ்ஞானமாகும். பெரும்பாலும் தவறுகள் நேர்வதுண்டு. ஆயினும் அவற்றிலிருந்து படிப்பினை பெறுவது அத்தியாவசியம். ஜனநாயக நாடொன்றில் பஞ்சம் நேரும் போது அல்லது அழிவு தடுக்கப்படும் போதெல்லாம், நேர்ந்த தவறென்ன, யார் குற்றவாளி, பெறப்படும் படிப்பினை யாது? அத்தோடு, மேற்கொள்ளப்பட்ட சரியான எதிர்நடவடிக்கைகள் எவை? என்பனபற்றி ஒரு பொது விசாரணை இடம்பெறும். சரியான சகல பஞ்சத்தடுப்பு முறைகளிலும் இத்தகைய விசாரணைக்குழுக்கள் சர்வசாதாரணமானவை.
உருப்படியான உதாரணம் 1 : இந்தியா
1947ல் சுதந்திரமடைந்ததிலிருந்து, அடுத்தடுத்து உண்டான வரட்சி, நீடித்த வறுமை முதலியவற்றையும் மீறி வெற்றிகரமாகப் பஞ்சத்தைத் தடுத்த ஒரு நாடான இந்தியா இதற்கு மிகச் சிறந்த உதாரணமாகும்.
7

Page 8
சுதந்திரமடையும் போது இந்திய அரசு, உலகிலேயே அதிநாகரிகமான பஞ்சத்தடுப்பு, பஞ்ச முன்னறிவிப்பு முறையை சொத்துரிமையாகப் பெற்றிருந்தது. இது பஞ்ச தொகுப்புகள் என அறியப்பட்டிருந்தது. 1943ல் வங்காளத்தில் பத்துலட்சத்துக்கும் அதிகமான மக்களைப் பலி கொண்ட பஞ்சத்தைத் தொடர்ந்தே இந்தியா சுதந்திரம் பெற்றது. பஞ்ச தொகுப்புகளின் விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தினர் தவறியமை இப்பஞ்சம் ஏற்படுவதற்கு ஓரளவு காரணமாகும் - பயன்படுத்தப்படாது விடப்பட்ட அதிநவீனம் வாய்ந்த தொழினுட்பமுறை வீண் என்பதை இது காட்டுகின்றது. இப்பஞ்சத்தால் ஏற்பட்ட கொந்தளிப்பு, இரண்டாம் உலகயுத்தத்தின் பின் உடனடி சுதந்திரத்திற்கான கோரிக்கையை தீவிரப்படுத்திற்று அத்தோடு பஞ்சத்தடுப்புக்கான பொறுப்பு. புதிய அரசாங்கத்தின் அரசியல் முன்னுரிமைப் பட்டியலில் முதலிடம் பெறும் என்பதையும் உறுதிப்படுத்திற்று.
இப்போது "தட்டுப்பாட்டுக் கையேடுகள்" எனப் பெயர் மாற்றம் பெற்றுள்ள பஞ்ச தொகுப்புகள் 1947ல் இருந்து காலத்திற்கேற்ற முறையில் புதுப்பிக்கப்பட்டும் திருத்தஞ் செய்யப்பட்டும் வந்துள்ளன. அவற்றின் விதிகள் அடிக்கடி - குறிப்பாக 1966, 1973, 1987 ஆகிய காலப்பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. எல்லாச் சந்தப்பங்களிலும் இவை பஞ்சத்துக்கு இட்டுச் சென்றிருக்கக் கூடிய பாரிய உணவுத்தட்டுப்பாடுகள் உண்டாவதைத் தடுத்தன.
பொறாமைப்படத்தக்க இச்சாதனை இந்திய அரசின் தயாள தன்மையால் நிகழ்ந்ததல்ல. ஜனநாயக உறுப்புகள் குறிப்பாக சுதந்திரமான பத்திரிகைகள், சுதந்திரமான தொழிற்சங்கங்கள், தெரிவு செய்யப்பட்ட சட்டமியற்றும் சபை முதலியன இயங்கிவருவதே இதற்குக் காரணம். இதில் இந்தியாவின் சுதந்திரமான பத்திரிகைகள் பிரதான பங்கை வகித்துள்ளன. பஞ்சம் சம்பந்தப்பட்ட விவகாரங்களைக் கையாள்வதில் மேற்கத்திய பத்திரிகைகளைவிட அதிக நவநவமான முறைகளை இந்தியப் பத்திரிகைகள் சுட்டிக் காட்டியுள்ளன. முக்கியமான சந்தர்ப்பங்களில், பத்திரிகைகள் பொதுமக்களின் அபிப்பிராயத்தை உருவாக்கி அரசின் நடவடிக்கையை விசையுறச் செய்துள்ளன. 1966-7ல் பீஹாரில் நிலவிய தட்டுப்பாடு பற்றிய பத்திரிகைச் செய்திகள் தேசிய அரசியல் நாடகமொன்றையே உருவாக்கி விட்டது. சேர்ச் லைட், இன்டியன் நேஷன் ஆகிய இரு தினசரிகளும் மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் எதிராக பலம் வாய்ந்த விமர்சன நிலைப்பாட்டையெடுத்தன. நிலைமை முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டதென்ற
8

உத்தியோகபூர்வ அறிக்கைகளை அவை அடிக்கடி மறுத்தன. 1970 - 3ல் மஹாராஷ்டிராவில் நிலவிய வரட்சியின்போது, த டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகை அப்பிரச்சினை பற்றி தொடர்ச்சியாகச் செய்திகளை அடக்கமாக வெளியிட்டு வாசகர்களின் கவனத்தை ஈர்த்தது.
பத்திரிகைகளின் இதுபோன்ற ஈடுபாடு 1985 - 86இல் நடவடிக்கைகளை எடுக்க அரசைப் பலவந்தப்படுத்தியது). 1985ன் பிற்பகுதியில் துன்பத்திலிருந்து மீட்சிபெறுவதற்கு கர்நாடக மாநில அரசு மேற்கொண்ட நடிவடிக்கைகளுக்கு உள்ளூர் பத்திரிகைகளே காரணம் என்கிறார் இந்தியப் பத்திரிகையாளர் என்.ராம். அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி 1985 - 86 தீவிர பட்டினியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரே போய் பார்வையிட்டதற்கு பத்திரிகைச் செய்திகளின் பலமான செல்வாக்கே காரணம். 1987 - 8ல் வட இந்தியா முன்னென்றுமில்லாதவாறு கடும் வரட்சியால் பாதிக்கப்பட்ட போது, பத்திரிகைகள், அரசாங்கம் இரண்டும் தயார் நிலையில் கண்காணிப்புடன் காணப்பட்டன. துன்பம் காரணமாக நாட்டுப் புறங்களிலிருந்து நகரங்களுக்கு மக்கள் புலம்பெயரும் அறிகுறிகளைப் புறக்கணித்தமைக்காகவும், தொழிலாளர் சம்பளங்களில் நிவாரணப் பணிகளுக்கான் பாக்கியைச் செலுத்தத் தவறியமைக்காகவும் ராஜஸ்தான் அதிகாரவர்க்கத்தினரை த ஸ்டேட்ஸ்மன் பத்திரிகை கண்டித்தது. ஓராண்டின் முன்னர் த டைம்ஸ் ஒஃப் இந்தியா பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைத் தொடர் சத்துணவுக்கான புள்ளி விவரங்களைக் கவனமாக வழங்கியது. பட்டினி இடம் பெறாத போதிலும் உணவுச்சத்தில் பாரதூரமான வீழ்ச்சியேற்பட்டதனையும், ஒருசில பகுதிகளில் சிறுவர் மரணங்கள் அதிகரித்தமையையும் இப்புள்ளிவிபரங்கள் காட்டின.
உள்ளூர் மொழிகளில் வெளியாகும் பத்திரிகைகளிலும், ஆங்கில, ஹிந்தி மொழிகளில் வெளிவரும் தேசியப் பத்திரிகைகளிலும் பட்டினி ஓர் முன்னணிப்பிரச்சினையாக இடம் பெற்றது. அதைவிட அதிகளவில் கோட்பாட்டு முறையில் கல்விசார் மட்டத்தில் "பொருளாதார அரசியல் alsTUITIbgrf" (Economicand Political Weekly) (இவ்விவகாரம் வாதப்பிரதிவாதப் பொருளாகியது. இது பஞ்சத்தின்) என்ற சஞ்சிகையில் யதார்த்த நிலைகள் மீதும், அது சம்பந்தமாய் உலகின் வேறெந்த பகுதியில் காணப்படுவதை விடவும் அதிகமான பல்வேறுபட்ட கோட்பாடுகள் மீதும் இந்திய வாசகர்கள் அறிவுவளம் பெறச் செய்தது. பஞ்சத்தைப் பற்றிய செய்திகளை வெளியிடுவதில் மேற்கத்திய பத்திரிகையாளர்கள் இந்திய பத்திரிகையாளர்களை விட மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றனர்.
s. பி.ஆர். பிராஸ், "நெருக்கடியின் அரசியல் பயன்பாடுகள், பிஹார் பஞ்சம் 1966 - 1987
ஏசியன் ஸ்டடீஸ் சஞ்சிகை 45, 1986 9

Page 9
பஞ்சம் சம்பந்தப்பட்ட விவகாரத்தையெடுத்துக் கொள்வதற்கு பத்திரிகைகள் தயாராயிருப்பதற்குக் காரணமாக, துன்பத்திற்கான அறிகுறிகளையிட்டு அரசியல் வாதிகளும் , அதிகாரிகளும் விழிப்புணர்வோடு இருக்கின்றனர். தங்கள் நிலைமைகளுக்காக பரந்த ஆர்ப்பாட்டம் நடத்த நாட்டுப்புற மக்கள் ஆயத்தமாயிருக்கின்றனர். இது சாத்தியமாவதற்குக் காரணம் இ ந்தியா - குறைப்பாடுள்ளதாகக் காணப்பட்ட போதிலும் - ஒரு தாராளவாத ஜனநாயக நாடாக இருப்பதேயாகும். எனவே, தன் தொகுதியைச் சேர்ந்தவர்களின் நலன்களைப் பேணத் தவறிய எவரும் தனி தொகுதியால் அப்புறப்படுத்தப்படும் அபாயமுண்டு. வரப்போகும் பஞ்சத்துக்கெதிராகக் கண்டனம் தெரிவிக்க தொழில் சங்கங்களாலும் உழவர் சங்கங்களாலும் விசேட அக்கறை அமைப்புகளாலும் அங்கு முடியும். பஞ்சம் அரசியல்மயப்படுத்தப்படுகின்றது. அது சாதாரண மக்களைப் பாதிக்கும் பிரச்சினையாகின்றது. அடிப்படை அரசியல் சுதந்திரங்கள் மதிக்கப்படும் ஒரு நாட்டில், இது அரசியல்வாதிகளின் கரிசனைக்குரிய விவகாரமாகுமென இதனால் அர்த்தமாகின்றது.
உருப்படியான உதாரணம் 2 : பொட்ஸ்வானா
ஆபிரிக்காவில் சஹாராவின் தாழ் பிரதேசத்தில் பொட்ஸ்வானா ஒரு விதிவிலக்காகும். சுதந்திரமடைந்ததிலிருந்து அங்கு பல கட்சிமுறை காணப்படுகிறது. வரட்சியால் பாதிக்கப்பட்ட இந்நாடு பஞ்சத்தைத் தடுப்பதில் வெற்றி கண்டுள்ளது. 1980க்களில் பெரும்பகுதியில் பொட்ஸ் வானாவில் பயிர்விளைச்சல் மக்களின் தேவைக்குப் போதுமானதாய் இருக்கவில்லை. 1984ல் நுகர்வோர் தேவைகளில் 13 சதவீதத்தையே அடைய முடிந்தது. அங்கு நிலவிய உணவுத் தட்டுப்பாடு சூடானிலோ எதியோப்பியாவிலோ காணப்பட்டதைவிடவும் மோசமானதாகும். இவ்விரு நாடுகளும் அவ்வருடம் சாதாரணமாக 80 சதவீத விளைச்சலைப் பெற்றன. எனினும், பிந்திய இருநாடுகளும் பஞ்சத்தினால் பாதிக்கப்பட்ட அதே வேளையில் பொட்ஸ்வானா பஞ்சத்திலிருந்து தப்பியது.
இவ் வெற்றிக்கான உடனடியான காரணங்கள் - 80ல் உண்டான வர்ட்சிக்குப் பிந்திய விளைவுகளில் வேர் பதிந்துள்ளன. 1979ல் பயிர் விளைச்சல் படுதோல்வியுற்றதைத் தொடர்ந்து பொட்ஸ்வானா அரசு, நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் உணவுதவியை நேரடியாக விநியோகிக்கும் திட்டமொன்றை ஆரம்பித்தது. அது வெற்றி காணவில்லை. பாரிய அளவிலான பஞ்சம் தடுக்கப்பட்ட போதிலும் சத்துணவின்மை அதிகரித்தது, மரணவீதம் அதிகரித்தது. இந்நடவடிக்கை அதிக
10

செலவையுண்டுபண்ணியது தேவைப்பட்டோரும் தேவைப்படாதோரும் ஒரே விதமாய் உணவுப் பங்கீடுகளைப் பெற்றனர்.
இவ்வகையான நிவாரணத்திட்டம் ஆபிரிக்காவின் ஏனைய பகுதிகளிலும் அறிமுகமானதே வழக்கமாக வெற்றிபெற்ற திட்டமென்றே கருதப்பட்டிருக்கும். எனினும், பொட்ஸ்வானா அரசு, இந்நடவடிக்கை யிலிருந்து பெறக்கூடிய படிப்பினைகள் பற்றி சுதந்திரமான மதிப்பீடொன்றை மேற்கொள்வது அவசியமென நினைத்தது. கூச் - மக்டொனால் டு என்ற தனியார் ஆலோசனை நிறுவனம் பணியிலமர்த்தப்பட்டது. நடந்ததைப் பற்றிய நேர்மையான மதிப்பீட்டை அந்நிறுவனம் கடும் உழைப்புடன் மேற்கொண்டது. 1981ல் பூர்த்தி செய்யப்பட்ட கூச் - மக்டொனால்டு அறிக்கை, இந்திய தட்டுப்பாட்டுக் கையேடுகள் பாணியிலான பஞ்சத்தடுப்புமுறையொன்று நிறுவப்படல் வேண்டுமென பரிந்துரைத்தது.
அரசாங்கம் விசாரணையை மேற்கொண்டது என்ற உண்மை ஜனநாயக அமைப்பில் கணக்குக் காட்டலின் அடையாளமாகும். சிபாரிசுகளைப் பாரதூர்மாக எடுத்துக் கொண்டமை, மக்களின் தேவைகளைக் கணக்கிலெடுத்துக் கொள்வதன் மற்றொரு அறிகுறியாகும். வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரம் உதவியது உண்மைதான். எனினும், அரசாங்கம் எம்பீக்களினதும், எதிர்க்கட்சி எம்பீக்களினதும் விழிப்புணர்வு முக்கியமான உந்துசக்தியாய் அமைந்தது.
இந்தியாவில் போலன்றி, அரசாங்கத்தை செயல்படத் தூண்டுவதில் பத்திரிகைகளின் செல்வாக்கு சிறிதளவாகவே பயன்பட்டது. 1980 - 82ல் காணப்பட பத்திரிகைகள் அரசாங்கத்திற்குச் சொந்தமானவை மட்டுமே. (இவை பெரும்பாலும் வணிகநோக்கு கொண்டவை). இவை வரட்சிபற்றிய செய்திகளை வெளியிட்ட போதும் அரசாங்கத்திற்கெதிரான ஒரு நிலைப்பாட்டையெடுக்கவில்லை தமது தொகுதி மக்களின் கோரிக்கைகளை ஏற்க மறுத்தால் ஆசனங்களை இழக்க நேரும் என்ற பொட்ஸ்வான பாராளுமன்ற உறுப்பினர்களது அச்சமே பிரதான அம்சமாகும்.
இவ்வாறு 1982 - 7ல் வரட்சியால் பாதிப்பு ஏற்பட்ட போது அரசு ஆயத்தமாய் இருந்தது. உடல் வலுவுற்றவர்களுக்குத் தொழில் வாய்ப்பு, தெரிவு செய்யப்பட்ட குழுக்களுக்கு இலவச நிவாரணம் என்ற அடிப் படையில் சீரான பஞ்சத் தடுப்புமுறையொன்று நடைமுறைப்படுத்தப்பட்டது. இவ்வாறு, வரட்சி 1979 - 80 ஐ விடவும் கடுமையானதாகவும், நீடித்ததாகவும் இருந்த போதிலும், மக்கள் பட்ட
11

Page 10
துன்பம் வெகுவாகக் குறைந்தது. சத்துணவின்மை சற்று அதிகரித்து பின்னர், வரட்சிக்கு முன்னர் காணப்பட்ட நிலையை விடவும் சீர்பெற்றது. மரண வீதம் அதிகரிக்கவில்லை.
கலப்பு உதாரணம் 1 : தன்ஸ்ானியா
தசாப்தக் கணக்கில் தவறான பொருளாதார நிர்வாகத்தின் பேறாக ஆபிரிக்காவிலேயே மிகவும் வறிய நாடுகளில் ஒன்றாக மாறிய தன்ஸானியாவின் பொருளாதார சாதனை பயங்கரமானது. சுதந்திரமற்றுச் சிறிது காலத்திலிருந்த 1992 வரை அது தனிக்கட்சி அரசாங்கமாக இருந்து வந்துள்ளது. அங்கு பத்திரிகைகள் அரசாங்கக் கட்டுப்பாட்டிலானவை. அப்படியிருப்பினும் எதியோப்பியாவுடனும் சூடானுடனும் ஒப்பிடுகையில் உணவு தட்டுப்பாட்டுக்கு இட்டுச் சென்ற அதன் வறுமையையும், வரட்சியினாலுண்டான பாதிப்பையும், வெள்ளப்பெருக்கையும், பயிர்களை நாசஞ் செய்யும் பூச்சிகளின் படையெடுப்பையும் மீறி, பஞ்சத்தைத் தடுப்பதில் தன்ஸானியா குறிப்பிடத்தக்க சிறந்த சாதனையை நிலைநாட்டியுள்ளது. எனினும் இச்சாதனை நிச்சயத்தன்மையற்றதாகும்.
தன்ஸானியாவின் பஞ்ச எதிர்ப்பு முறையின் மையமாய் விளங்குவது, பஞ்ச அபாயத்திற்குட்பட்டதாய்ப் பிரகடனஞ் செய்யப்பட்ட மாவட்டத்தைச் சேர்ந்த சகல குடியிருப்பாளர்களுக்கும் வழங்கப்படும் மாவட்ட த்திலான நிவாரணம் என்ற கொள்கையாகும். இம்முறை இந்தியாவிலோ, பொட்ஸ்வானாவிலோ காணப்படுவதனை விடவும் செம்மை குறைந்ததாகும். இது ஒரு மாவட்டம் வரட்சியால் பாதிக்கப்படின், சம்பளத் தொழில் புரியாத மக்கள் தொகையினரின் 90 வீதத்திற்கு உதவித் தேவைப்படும் என்ற ஊகத்தின் அடிப்படையிலானது. உதவித் தேவைப்படாத 10 வீதத்தினரைக் கண்டுபிடிக்கத் தேவையான முயற்சியும் தாமதமும் செலவைக் குறைப்பனவாக இல்லை. எனவே பொதுவான பங்கீடு வழங்கப்படுகின்றது.
இம்முறை செயற்படுத்தப்படுவது எவ்வாறு? வழக்கமாக மாவட்ட எம்.பி. முக்கியமான நபர். சிலசமயங்களில் பத்திரிகை விளம்பரம் துணைபுரிகின்றது தன்ஸானியா தனிக்கட்சி அரசாக இருந்த போதிலும் அதன் தேர்தல்கள் உயர்தரமானவையாகும். ஒவ்வோர் ஆசனத்துக்கும் போட்டியிட கட்சிக்கிளைகளால் ஒன்றுக்கு மேற்பட்ட அபேட்சகரைத் தெரிவு செய்ய இயலும். ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும். மந்திரிச்சபையைச் சேர்ந்த அமைச்சர்களுட்பட்ட மூன்றிலொரு பகுதி எம். பீக்கள் தம்தொகுதிகளில் தோற்கடிக்கப்படுகின்றனர். எம். பீக்கள்
12

தம்தொகுதிகளில் “காப்பாளர்” களாகக் கருதப்படுவதோடு அவர்கள் அத்தியாவசியப் பண்டங்கள் கிடைக்கப் பெறுவதற்கு உத்தரவாதம் வழங்க வேண்டுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றனர். குடியரசு நாட்களிலிருந்த பெறப்பட்ட நன்கு வேரடித்து விட்ட நிர்வாகக் கோட்பாடொன்றினால் இது ஊக்குவிக்கப்படுகின்றது. அக்கோட்பாடு வருமாறு: "உழவனின் உணவை உறுதி செய்வது மாவட்டக் கொள்கையின் அச்சாணியாகும்; அதனைக் கவனியாதிருத்தல் உழவனை புறக்கணிப்பதாகும்." * உணவு விநியோகத்தின் இன்றியமையாமையை வலியுறுத்திய முன்னாள் ஜனாதிபதி நியுரேரேயும் இக்கோட்பாட்டை ஊக்குவித்தார். தன்ஸானியா பட்டினியால் வாடுவதைப் பார்த்திருப்பதை விட தென்னாபிரிக்காவிலிருந்து சோளத்தை இறக்குமதி செய்வதற்கும் தாம் தயார் என நியரேரே ஒரு சமயங் கூறினார்." அத்துடன், பத்திரிகைகள், தேசிய அரசியல் சர்ச்சைகள் சம்பந்தப்பட்ட வாக்கு வாதங்களை கட்டுப்படுத்தும் அதேவேளை வெளியிடுவதற்கு ஆயத்தமாகவே இருக்கின்றன.
தேசிய உணவுத் தட்டுப்பாடு ஆபத்து நிலவும் போது, தன்ஸானியா, ஐ.நா. உணவு கமத்தெர்ழில் நிறுவனத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்ப முன்னெச்சரிக்கை முறையை நாடுகின்றது. இம்முறை மழைவீழ்ச்சியையும், பயிர்விளைச்சலையும் பதிவு செய்து கண்டு பிடிக்கப்பட்ட விவரங்களை கமத்தொழில் அமைச்சுக்கு வழங்குகின்றது. இத்தகவல் வழக்கமாகப் பகிரங்கப்படுத்தப் படுவதில்லை.
அரசாங்கத்தின் சரியான உணவு விநியோகமுறை காரணமாக 1974-5, 1981 - 2, 1984 - 5, 1990 ஆகிய காலப்பகுதிகளில் தன்ஸானியா வில் பெரும் பஞ்சம் தடுக்கப்பட்டுள்ளது. என்றபோதிலும், தெளிவான ஜனநாயகப் பாதுகாப்புகள் இல்லாமையால், பஞ்சத் தடுப்பு முறை பெரும்பாலும் சீர்குலையக் கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டது. 1981ல் பஞ்ச முன்னெச்சரிக்கை முறை 170,000 தொன் சோளம் இறக்குமதி செய்யப்படல் வேண்டுமென முன்னறிவிப்பு விடுத்தது. உணவுப் பண்ட உதவி-ஒப்பந்தங்களின் மூலம் உயர் அதிகாரிகள் சுயலாபம் பெற எதிர்ப்பார்த்தப்படியால், இத்தகவல் வழக்கமான முறையில் அறிவிக்கப்படவில்லை. முன்னறிவிப்பு முறையைச் சேர்ந்த வெளி நாட்டில் வாழ்ந்த தன்ஸானியாவாசியொருவர் ஒரு வெளிநாட்டுப் பத்திரிகையாளருக்குப் பேட்டியளித்தபோது தான் உண்மை தெளிவாகியது. பத்திரிகையாளரின் கேள்விகள் ஜனாதிபதிக்கு முன்னெச்சரிக்கையாய்
6. டெபோரா எஃப் பிரைஸ்ன், "தன்லானியாவில் உணவுப் பாதுகாப்பின்மையும் தொழிலின்
சமூகப் பிரிவினையும், 1919-35, லண்டன் 1990, பக் 59 7. 25 awtuGår (oavsicr) saubeuf 9, 1980 இதழின் எடத்தாளப்பட்ட மேற்கோள்.
13

Page 11
அமைந்தன. உதவி வழங்க மேல் நாடுகள் உடனடி யாக உதவ முன்வந்தபடியால் பஞ்சம் தடுக்கப்பட்டது."
மாவட்ட மட்டத்திலன்றி தேசிய மட்டத்தில் தகவல் சுதந்திரமும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரமும், தனிப்பட்ட எம். பிக்களின் மட்டத்திலன்றி, அரசாங்க உயர்மட்டங்களில் ஜனநாயக முறை கணக்குக் காட்டலும் இத்தகைய நிகழ்வுகள் மீண்டும் சம்பவித்துப் படுநாசம் விளையாமலிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு அவசியமாகும்.
கலப்பு உதாரணம் 2 : கென்யா
பஞ்சத்தடுப்பில் கலப்புச் சாதனை கொண்ட மற்றோர் உதாரணம் கென்யா. கென்யா (1991 டிசெம்பர் வரை) , பத்திரிகைகளில் வரும் கண்டனங்களைச் சகித்துக் கொள்ளாத பரந்த ஒடுக்குமுறை இயந்திரத்தைக் கொண்ட, தனிக்கட்சி அரசாகவிருந்தது எனினும் எம்.பிக்கள் நம்தொகுதிகளைப் பாதிக்கும் பட்டினிபோன்ற பல்வேறு பிரச்சினைகளையிட்டுக் குரலெழுப்ப முடிந்தது. அரசாங்கம் அதிகாரத்தில் நீடித்து நிற்பதற்கு நெருங்கி தொடர்பற்ற விவகாரங்களை பத்திரிகைகளால் விமர்சிக்க முடிந்தது.
வடக்கிலும் கிழக்கிலுமுள்ள ஒரப்பகுதிகளில், குறிப்பாக 1979-80ல் பெரும் பஞ்சம் ஏற்படுவதற்கு அரசாங்கக் கொள்கைகளும் காரணமாயிற்று. இப்பகுதிகள் மீது அரசாங்கத்தினால் கிரமமாக பாரபட்சம் காட்டப்பட்டது. (கீழே, இடையர்கள் மீது விதித்த கட்டுப்பாடு சம்பந்தப்பட்ட உபபகுதியைப் பார்க்கவும்). இதற்கு நேர் மாற்றமாக மத்திய மலைப்பிராந்தியங்களில் பஞ்சத்தைத் தடுப்பதில் அரசு சிறந்த சாதனையை நிலைநாட்டிற்று. இவ்வாறு 1984ல் சூடானையோ, எதியோப்பியாவையோ விடப் படுமோசமாக கென்யா பஞ்சத்தால் பாதிக்கப்பட்டது. பெருமளவில் சோளத்தை இறக்குமதி செய்வதன் மூலமும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுவான பங்கீட்டை மேற்கொள்வதன் மூலமும் அரசு உடனடியான நடவடிக்கையில் ஈடுபட்டது. பின்னர் சர்வதேச உதவி வந்து சேர்ந்தது. உள்ளூர் தானிய வியாபாரத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் போன்ற சில நடைமுறைகள் காலப்போக்கில் படு மோசமான பாதிப்பை விளைவித்தபோதும், இந்நடவடிக்கைகள் பஞ்சத்தைத் தடுத்தன.
அரசியல் அமைதியின்மை பற்றிய அச்சம் ஏற்பட்டு அரசை உடனடியாகச் செயல்படத் தூண்டிற்று என்பது தெட்டத் தெளிவு.
8. jaosauleår, 1990, u åt. 208 - 9
14

"மத்திய மகாணத்தில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த செல்வாக்குமிக்க பகுதிகளையும், நைரேபியையும் 1984ம் ஆண்டின் வரட்சி ஓரளவு வழக்கத்திற்கு மாறாகக் கடுமையாய்ப் பாதித்தது என்ற உண்மையே அரசியல் அமைதியின்மை பற்றிய அச்சம் ஏற்படக் காரணம்.”*
தன்ஸானியாவில் போலவே, எம். பீக்களில் அநேகர் தம்மை "இரட்சகர்” களாக, மீண்டும் தெரிவு செய்யப்படுவதற்கு தம் தொகுதியினரின் பொருளியல் த் தேவைகளை வழங்கும் கட்டுப்பாடுடையவர்களாக கருதுகின்றனர். தம் மாவட்டங்களின் அரசியல் அமைதியின்மை ஏற்படுவதால் அரசாங்கத்தின் கோபத்தை சம்பாதித்துக் கொள்ளக் கூடாது என எம். பீக்கள் கவலை கொள்கின்றனர். இவ்வாறு எம் - பீக்களின் தனிப்பட்ட அக்கறை அரசின் துரித நடவடிக்கையைத் தூண்டிவிடுகிறது. இதனால், 1984 லிருந்து தம்மாவட்டங்களுக்கு உணவு உதவிகளைப் பெறுவதற்கு எம்.பீக்கள் தமக்குள்ளேயே ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொண்டு மாவட்டத்தின் தேவைக்கு மிஞ்சிய உணவு உதவியை பலமுறை கேட்கச் செய்தது.
கிளர்ச்சிக்கு அஞ்சி பொதுமக்கள் மேல்கரிசனை காட்டுதலும், ஜனநாயக நிறுவனங்களின், விதிமுறைகளின் அடிப்படையில் கணக்குக் காட்டுதலும் ஒன்றன்று. கென்யாவின் உதாரணம், தக்க நேரத்தில் பயனளிக்கும் பஞ்சத்தடுப்புக்கு இது இட்டுச் செல்வது எவ்வாறு சாத்தியமாகலாம் என்பதையும், (உதாரணம் 1985), மற்றைய விவகாரங்களில் எவ்வாறு சாத்தியமற்றுப் போகலாம் (உதாரணம் 1979 - 80) என்பதையும் காட்டுகிறது. அரசாங்கம் கணக்குக் காட்டுவதன் அடிப்படையிலான பாதுகாப்பு முறைகளை நிறுவுவதன் மூலம் மட்டுமே, அரசு உறுதியாகப் பஞ்சத்தைத் தடுப்பதனை உத்தரவாதப்படுத்தலாம்.
கலப்பு உதாரணம் 3 பங்களாதேஷ்
1971ல் பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெற்ற பங்களாதேஷ் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டது. (1974ல்) மும்முறை பஞ்சத்தை மயிரிழையில் தடுக்க முடிந்தது (1979, 1984, 1988) எந்தவொரு நவீனகால பஞ்சத்தை விடவும் இயற்கைப் பேரழிவின், பொருளாதாரப் பேரழிவின் விளிம்புக்கே இட்டுச் சென்றது 1974ம் ஆண்டின் பஞ்சம் ஆயினும் வெளிப்படையாக "தார்மீக நடுநிலை” வாய்ந்ததாய்க் காணப்பட்ட இப்பஞ்சம், மனித
9. ஜே. டிரெஸ். எ. லென் இருவரும் தொகுத்து வெளியிட்ட பட்டினியின் அரசியல்
பொருளாதாரம் என்ற நூல், தொகுதி 1 (ஒக்ஸ்ஃ போர்டு 1990) த லோன் டிரைஸ் எழுதிய ஆபிரிக்காவின் பஞ்சத்தடுப்பு என்ற கட்டுரை பக். 138 15

Page 12
உரிமைகள் மதிக்கப்படாமை, ஜனநாயக முறை கணக்குக் காட்டலில் கடுமையான குறைபாடு முதலிய அம்சங்கள் தெள்ளிதில் காட்டுகின்றது.
சூழ்நிலைகள் எதிர்வினைவிளைவாக ஒன்று சேர்ந்ததால் ஏற்பட்டது இப்பஞ்சம். அவையாவன:
(1) கடுமையான வெள்ளப் பெருக்கினால் நெற்பயிர்ச் செய்கை வீழ்ச்சியுற்றது. (மொத்த உணவுப் பண்டங்கள் கிடைக்கக்கூடிய நிலை வழக்கத்திற்கு மாறானதாய்க் காணப்படாதபோதிலும்).
(2) சணல் விளைச்சல் (பங்களாதேஷின் பிரதான ஏற்றுமதி) வீழ்ச்சியுற்றதால் அரசாங்கத்தின் அந்நியச் செலாவணி நெருக்கடியும், எண்ணெய் விலையேற்றத்தால் உண்டான அதிர்ச்சியும்.
(3) பங்களாதேசும் கியூபாவுடன், தொடர்ந்து வர்த்தகத்தை மேற்கொண்டமைக்காக, அமெரிக்க அரசாங்கம் வெளிப்படையாக அதன் உணவு உதவியை பெருமளவு குறைத்தமை.
இவை எவ்வாறிருந்த போதிலும், இக்காரணிகள் பஞ்சத்துக்கு இட்டுச் செல்லக் காரணம் தேசிய உணவு முறையின் மற்றுமிரு அம்சங்களாகும். ஒன்று, பஞ்சத்தினால் பாதிப்புற்ற பகுதிகளுக்கு உணவுப்பண்டங்களை வழங்கும் பொது உணவு விநியோகத்திடம் தோல்வியுற்றமை. பொதுஉணவு விநியோகத்திட்டம் என்ற அமைப்பே பங்களாதேஷில் பிரதான உணவு விநியோகிப்பாளனாகவும் நற்பயனளிக்கும் உணவுப் பங்கீட்டு முறையாகவும் விளங்கி வந்தது.அதன் நோக்கில் உணவைப்பெற முன்னுரிமையுடையோர் வருமாறு. (1) இராணுவமும் சிவில் நிர்வாகத்துறையும், (2) உற்பத்தித் தொழிலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் பாடசாலை
ஆசிரியர்கள்.
)ே மற்றைய நகரப்புறக் குடியிருப்பாளர்கள்.
இம்முன்னுரிமை, முத்திரத்தாரின் அரசியல் சக்தியின் தரத்தைப் பிரதிபலிக்கின்றது. இன்னும் இளம் வயசுடையதாகவும், தாக்கப்படக்கூடியதாகவும் காணப்பட்ட அரசு இவர்களைச் சமாதானப் படுத்துவதற்கு எந்தளவுக்கு முயன்றது என்பதையும் காட்டுகின்றது. உணவு உதவி அரசியல் ஆதரவுக்கான வெகுமதியாகவும் விளங்கியது.
16

"தேசிய விடுதலை உதவிப் பொதியின் அதிகமான பெரும்பங்கைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பமாகும் என தேசிய இயக்கம் கருதியது." "
உணவுப்பண்ட உதவியில் தங்கியிருந்தமையாலும், அமெரிக்க உதவி துண்டிக்கப்பட்டமையாலும் பொது உணவு விநியோகத் திட்ட அமைப்புக்கு உணவு விநியோகம் குறைக்கப்படல், சில நாட்டுப்புறப் பகுதிகளின் உணவுத் தேவைகள் பூர்த்திசெய்யப்படாமை முதலிய நிலைமைகளுக்கு அரசு முகங்கொடுக்க நேர்ந்தது. பஞ்சத்தை தடுப்பதற்காக வேண்டி, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளிலிருந்து உணவு விநியோகத்தைத் திருப்பி விடுவதா அல்லது நகர்ப்புறங்களையே தொடர்ந்து சமாதானப்படுத்திக் கொண்டு இருப்பதா என்ற சங்கடமான நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டது. முன்னுரிமை பெறும் பகுதியினர் க்கான பங்கீட்டைக் குறைப் பதிலையென றும் , ஒரப் பகுதிகளிலுள்ள கிராமங்கள் பஞ்சத்தால் வாடுவதை அனுமதிப்பதென்றும் அரசு தீர்மானித்தது. அரசாங்கக் கணிப்பீட்டின்படி 26,000 பேர் மாண்டனர். ஏனைய கணிப்பீடுகளின் படி பஞ்சத்தால் இறந்தோரின் தொகை இதைப்போல் ஐந்துமடங்காகும். காலந்தாழ்த்தியே பாரிய நிவாரணத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
பஞ்சத்தை உருவாக்கிய மற்றுமொரு காரணி தானிய வியாபாரிகளின் வணிக சூதாட்டமாகும்.' தட்டுப்பாடு உண்டாகப் போகிறதென நம்பி,தானிய வியாபாரிகள் தம் பண்டங்களைச் சந்தையிலிருந்து பதுக்கியதனால் விலைவாசி அசுர வேகத்தில் ஏறிற்று. மக்களின் வறிய பகுதியினரால் விலையேற்றத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. பாரிய அளவில் அவசரகால தானிய இறக்குமதியை மேற்கொள்வதற்கு திடசித்தமோ பணவசதியோ அரசிடமிருக்க வில்லையெனத் தானிய வியாபாரிகளால் (சரியாக) ஊகிக்க முடிந்தமையே அவர்கள் இவ்வாறு நடந்து கொள்ளக் காரணம்.' 1979, 1984, 1988 முதலிய ஆண்டுகளில் இதே போன்ற, அல்லது இதைவிடவும் மோசமான உணவு விநியோக நிலைமையேற்பட்டபோதும், பஞ்சத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பொது உணவு விநியோகத் திட்ட அமைப்பினால் உதவக் கூடிய அளவுக்குப் போதியளவு உணவுப்பண்டங்களை அரசாங்கம் இறக்குமதி
10. ரஹ்மான் சுப்ஹள், "வெளிநாட்டு உதவியில் தங்கியிருக்கும் நெருக்கடி பங்களாதேசுக்கு
வழங்கப்படும் வெளிநாட்டு உதவியின் அரசியல் பொருளாதாரம்" டாக்கா 1982 பக். 6
11. மார்ட்டின் ரெவளியன், சந்தைக்கும், சந்தைகளும் பஞ்சங்களும் ஒக்ஸ்போர்டு 1985.
12. சித்திக் உஸ்மானி, பங்களாதேசின் உணவுப்பிரச்சினைகள் ஜே.டி. ரெஸ்லம் எ. லென்னும் தொகுத்த பட்டினியின் அரசியல் பொருளாதாரம் தொகுதி 11 ஒக்ஸ் போர்டு,
99.
17

Page 13
செய்யும் என வர்த்தகர்கள் (மீண்டும் சரியாகவே) அனுமானித்தபடியால் விலைவாசி உயரவில்லை.மேலதிக தானியங்களை இறக்குமதி செய்து, பொது உணவு விநியோகத்திட்டத்தில் இருந்த தானியங்களை பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பியிருந்தால், பஞ்சம் தடுக்கப்பட்டி ருக்கலாம். அவ்வாறு செய்வதில்லையென அரசு தீர்மானிக்கக் காரணமென்னP
1974 பஞ்சத்தின் போது, சுதந்திர பங்களாதேஷின் முதலாவது அரசாங்கம் ஓராண்டுகூட நிறைவெய்தவில்லை. பிரதமர் முஜிபுர்ரஹ்மான் தமது அரசாங்கம் வலிமையிழந்ததாய் சர்வதேச பரப்பில் தனிமைப்படுத்தப்பட்டதாய், பயங்கரமான உள்நாட்டு அச்சுறுத்தலை எதிர்நோக்குவதாய் இருப்பதனைக் கண்டார். 1972 க்கும் 74க்கும் இடையில் அவ்வரசாங்கம் இடதுசாரி எதிர்கட்சியினர் மீது வன்மையான அடக்குமுறையை அவிழ்த்து விட்டது பல்லாயிரக்கணக்கானோர் பலியாகினர். எதேச்சாதிகாரமாக தடுப்புக்காவல் விதிக்கப்பட்டது." 1973ல் அது பத்திரிகைச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் சட்டத்தை இயற்றியது, 1974ல், தனிக்காட்டு ராஜாவாக முழு அதிகாரத்தையும் தன்வயமாக்கிக் கொண்டு ஜனவரி 1975ல் முஜீவ் அரசியல் சட்டத்தை செல்லுபடியற்றதாக்கி சகல எதிர்கட்சிக்கும் தடைவிதித்து ஜனாதிபதி அதிகாரங்களை வரித்துக் கொண்டார். எனவே பங்களாதேஷ் பெயரளவில் ஜனநாயக நாடாக இருந்த சமயத்திலேயே பஞ்சம் ஏற்பட்டதெனினும் பொறுப்பு வாய்ந்த அமைப்புகளும் விதிமுறைகளும் அதுவரை வேர்கொண்டிருக்கவில்லை. எல்லா பக்கங்களிலிருந்தும் அவை நிலை கொள்ளாதிருக்க சூழ்ச்சிகள் நடந்தன. ஆட்சியில் ஒட்டிக் கொண்டிருக்கும் தேவையையே அரசின் நடவடிக்கைகள் முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தன. கிராமப்புற மக்களை விட நகர்ப்புற குழுக்களோ சீர்குலைவையுண்டுபண்ணி அரசாங்கத்தைக் கவிழ்க்கக் கூடுமென அறிந்தபடியால் அதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கே முன்னுரிமையளித்து உணவுப்பண்டங்கள் வழங்கப்பட்டன.
இதற்கு நேர்மாறாக, ஜனாதிபதி ஸியாவுர் ரஹ்மானின் அரசாங்கம் போட்டி நிகழ்ந்த தேர்தல் மூலம் - குறைகள் மலிந்த தேர்தலாய் காணப்பட்டபோதும் - அப்போது தான் பதவிக்கு வந்திருந்தது. அது குறைகுற்றங்கள் மலிந்த ஜனநாயகமாய் இருந்த போதும், பல்வேறு கருத்துகளுக்கு இடமளித்து சகிப்புத்தன்மையைக் கடைபிடிக்கும் திசையை
13. தல்கூதர் மனிருஸ்ஸமான், "பங்களாதேஷ் பூர்த்தியடையாத" புரட்சி ஈ அஹமத்
தொகுத்த "பங்களாதேஷ் அரசியல்" (டாக்கா, 1980) என்ற நூலில்,
14. எஸ். ஆர். சக்கரவர்த்தி. "பங்களாதேஷ் ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபத்திரண்டு
தேர்தல்" புதுடெல்லி 1988.
18

நோக்கி நகர்ந்தது. அதற்கேற்ப, கிராமப்புற தொகுதிகளின் கோரிக்கைகளுக்கு அது செவிமடுத்தது.
எனவே 1974ன் பஞ்சம் கணக்குக் காட்டும் பொறுப்புணர்ச்சிக்கு மட்டுப்பாடு உண்டென்பதைக் காட்டுவதாயிருந்தது.
எதிமாறான உதாரணம் : சீனா
வறிய கிராமப்புற மக்களது வாழ்க்கைத் தரத்தை சீர்செய்வதில் சோஷலிஸ் சீனா பிறநாடுகள் பொறாமைப்படத்தக்க சாதனையை நிலைநாட்டியது. எனினும் இச்சாதனை 1958 - 61 பஞ்சத்தின் பயங்கர நிகழ்வால் மலிவடைந்தது. இது வரலாற்றின் நிகழ்ந்த மாபெரும் பஞ்சமாகும். 150 இலட்சம் முதல் 300 இலட்சம் உயிர்களை அது பலிகொண்டதாக கணிக்கப்படுகின்றது. எனினும் இது பரம இரகசியமாக வைக்கப்பட்டு 1980 களில் மக்கள் தொகையை மட்டுப்படுத்தும் சீனாவின் முயற்சிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டபோது தான் அம்பலமாயிற்று. மக்கள் தொகையின் வயதடிப்படையிலான புள்ளிவிபரங்கள் திரட்டப்படும் போது, 1950 களிலிருந்து 1962 வரை பிறந்தவர்களின் எண்ணிக்கை அசாதாரணமான முறையில் குறைந்து காணப்படுவது தெரியவந்தது. அக்காலகட்டத்தில் சீனாவில் வாழ்ந்த இளம்பிராயத்தினர் ஏதாவதொரு பேரழிவினால் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற முறையில் மட்டுமே இவ்வெண்ணிக்கைக் குறைவை விளக்க முடியும்.
இப்பஞ்சத்தின் தோற்றுவாயும், வளர்ச்சியும் இன்று நன் கறியப்பட்டதாகும்." இப்பஞ்சத்திற்கான காரணங்களிலொன்று இயற்கையழிவு யாங்சி நதிப்பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கும், அநேக மாகாணங்களில் வரட்சியும் ஏற்பட்டமை, என்றபோதிலும் இவ் அழிவுகள் 1959 லும் 60லும் ஏற்பட்டவை. ஆனால் பஞ்சமோ 1958 லேயே ஆரம்பித்து விட்டது. தலைவர் மாவோவின் "மாபெரும் முன்னேற்றப் பாய்ச்சல்” என்ற விவசாய உற்பத்தித் திட்டத்தால் ஏற்பட்ட சீரழிவே இப்பஞ்சம் ஏற்பட முழுக்காரணம். கடந்த வருடங்களில் கூட்டு விவசாய முறையைத் தொடர்ந்தே இது நேர்ந்தது. 1958ல் ஒரு சில மாதங்களின் இடைவெளிக்குள் இக்கூட்டுப் பண்ணைகள் மக்களின் பொதுப்பண்ணைகளாக இணைக்கப்பட்டன. விவசாயப் பயிர்ச் செய்கையின் வழக்கமான விதிமுறைகள் யாவும் சுக்குநூறாயின. இதனால் உற்பத்தி படு மோசமாய்ப் பாழடைந்தன. அதே வேளையில்
15. பி. கானே. "சீனாவில் பஞ்சம் 1958-61 மக்கள் தொகையின் சமூகப் பிரதிபலிப்புகள்
figuuntfås 1988.
19

Page 14
900 இலட்சம் மக்கள் கமத்தொழிலிருந்து உருக்கு உற்பத்தித் தொழிலுக்கு பலவந்தமாய் மாற்றப்பட்டனர். இதனால் நாட்டுப்புறத் தொழிலாளர் பட்ட நஷ்டம் சொல்லுந்தரமன்று.
பஞ்சத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ட மற்றுமொரு நிகழ்வு "நூறு பூக்கள் மலரட்டும், நூறு சிந்தனைகள் மோதட்டும்” என்ற அற்பாயுளில் முடிந்த திட்டத்திற்கு மாவோ காட்டிய எதிர்வினையாகும். 1957ல் சொற்ப காலத்துக்கு பகிரங்கமான விமர்சனம் அனுமதிக்கப்பட்டது. எனினும் பூக்களுக்குப் பதிலாக "நச்சுப் பூண்டுகள்” தலையெடுக்கக் கண்ட மாவோ உடனடியாக இயக்கமொன்றை ஆரம்பித்தார். இதனால் 300,000 "வலது சாரி" அறிவாளிகள் வாயடைக்கப்பட்டனர். அவர்கள் தமது அத்துமீறல்களையிட்டு சுயவிமர்சனம் செய்யுமாறு நிர்ணயிக்கப்பட்டனர். இனி மேல் அவர்கள் மனந்திறந்து பேசாமல் மெளனஞ் சாதிப்பது உறுதிப் படுத்தப்பட்டது. நிலைமை கட்டுக்கடங்காதபோது அவர்கள் சிறையில் தள்ளவும் கொலை செய்யவும் பட்டனர். இவ்வாறு, பஞ்சம் தலைவிரித்தாடிய போது கேட்டுக் கேள்வியெதுவுமின்றி கட்சியின் சித்தாந்தத்துக்கு கீழ்ப்படியுமாறு எதிர்ப்பார்க்கப்பட அந்நோக்கம் நிறைவேறியது.*
நாட்டுப்புற கட்சித் தொண்டர்கள் தங்களின் புரட்சிகர ஆர்வத்தையும், விசுவாசத்தையும் காட்டுவதற்கு, கவனத்தை ஈர்த்துப் பதவியுயர்வுகளைப் பெறும் நோக்குடன் தம் கூட்டுப் பண்ணைகளின் விளைச்சல் குறித்து அபரிதமான புள்ளிவிபரங்களை கண்மூடித்தனமாக வெளியிடுமாறு மாவோவின் சர்வாதிகார அரசு ஊக்கமளித்தது. "பசுத்தோலை வீங்கச் செய்யும்” காலம் என இக்காலகட்டம் பிரசித்தம் பெற்றது. கொழுத்த மாடு எனக்காட்டி ஏமாற்றுவதற்காக, கொலை செய்யப்பட்ட மாட்டின் தோலுக்கடியில் ஊதி வீங்கச் செய்வதை இது குறிக்கும். 1958 இலையுதிர் பருவத்தின்போது, வழக்கமான பயிர் விளைச்சலை விட பத்து மடங்கு ஏன் நூறு மடங்கு அதிகமான அமோக விளைச்சல் ஏற்பட்டதாகத் தம்பட்டமடிக்கப்பட்டது. அது நல்ல விளைச்சல் தான் ஆனால் 2000 இலட்சம் தொன்களே. உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்ட 3500 இலட்சம் தொன்களை விடவும் மிகவும் குறைவான விளைச்சலே. உண்மையில் கிடைக்கக்கூடிய அளவைவிட 1000 இலட்சம் தொன்கள் அதிகமாக உள்ளதென்றே தலைவர்கள் நம்பினர். அரசிடம் ஒப்படைக்கப்பட வேண்டிய பங்கு 40 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. இவ்வாறு கிடைக்கக்கூடியதற்கும் மிக அதிகமாக மூன்றிலொரு
16. கட்டுரை 19 “மெளனப்பட்டினி பஞ்சமும் தணிக்கையும் பற்றிய அறிக்கை” லண்டன்
1990.
20

பங்கிற்கு மேலான பயிர் பெறப்பட்டது. "ஊதிப்புடைத்த காற்றினால்” ஏமாற்றப்பட்டு அரசாங்கம் தானிய சாகுபடி நிலத்தை குறைத்துக்கொள்ளுமாறு கட்டளையிட்டது. 1958ன் இறுதியில் நாட்டுப்புறங்களில் பஞ்சம் தலைவிரித்துப் பரவிவிட்டது.
மிதமிஞ்சிய உணவு விளைச்சல் பற்றி மக்கள் தொடர்புச் சாதனங்கள் வெளியிட்ட அறிக்கைகளைக் கேட்ட பட்டினி கிடந்த கிராமவாசிகள் தங்கள் பகுதிகளில் மட்டும்தான் தட்டுப்பாடு நிலவுவதாக நம்பினர்-தட்டுப்பாட்டையொத்த ஆர்ப்பாட்டங்களை உருவாக்குவது சாதிக்கப்படவில்லை. சுதந்திரமான பத்திரிகைச் செய்திகள் அனுமதிக்கப்படவில்லை. காலம் பிந்திப் போகும் வரையில் அரசாங்கம் கூட உண்மை நிலையை அறிந்திருக்கவில்லை.
ஏதோ தவறு நடந்துவிட்டதெனத் தலைவர் மாவோ காலந்தாழ்த்திய அறியவந்த போதிலும், அவர் நடவடிக்கையெடுப்பதற்கான நிர்ப்பந்தமேதும் இருக்கவில்லை. நிவாரணம் வழங்குவது அவர் தனியாக மேற்கொண்ட தீர்மானமே தவிர, அழிவுக்கு இட்டுச் செல்லும் கொள்கைகளைக் கைவிட்டுமக்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தும் ஜனநாயகப் பொறுப்புணர்ச்சிக்கான அமைப்புகளேதும் இருக்கவில்லை.
கட்சித்தலைவரும் "நீண்டபவனி வீரருமான பெங் தேவஹ"வாய் கிராமப் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று பின் பஞ்சத்தைப் பற்றி அறிய வந்துப் பின்வரும் கவிதையை எழுதினார்.
தானிய மணிகள் தரையெங்கும் சிதறுண்டு கிடக்கின்றன : உருளைக்கிழங்கின் இலைகள் உதிர்ந்து கிடக்கின்றன : இளைஞரும் வலிமை கொண்டோரும் இரும்பை உருக்குதற்குச் சென்று விட்டார், அறுவடைக்கு குழந்தைகளும், வயோதிபப் பெண்களுமே எஞ்சியுள்ளனர்,
அடுத்த ஆண்டை நாம் எதிர்கொள்வதெப்படி? மக்களுக்கு ஆதரவாக நான் குரலெழுப்புவேன்!
1959 வேனிலின் போது பெங் தம் விமர்சனங்கள் மூலம் கட்சியின் நிலைப்பாட்டை எதிர்த்து நின்றார். அவரது கொள்கையை ஆதரித்த மற்றவர்களோடு அவரும் கட்சியைவிட்டு வெளியேற்றப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.
21

Page 15
பஞ்சத்தை உருவாக்கிய கொள்கைகள் காத்தகைய தங்குதடையுமின்றித் தொடர்ந்தன. ஏற்பட்ட பேரழிவு மூடிமறைக்கப்பட்டது. சீனா 1960 வரை தொடர்ந்து அரிசியை ஏற்றுமதி செய்தது. இறுதியாக 1961 அளவில் தான் சிறிதளவு வெளியிலிருந்து இறக்குமதி செய்தது. இந்நேரம் பஞ்சம் நீங்கியிருந்தது.
மக்கள் குடியுரிமைகளும், அரசியல் உரிமைகளும் அனுபவிக்கவில்லை என்ற உண்மையான நிலவரமே மாபெரும் மனித இழப்புகளுக்கு நேரடியாக காரணமாகும் என்பதற்குச் சீனா உதாரணமாகும். தகவல்கள் மறைக்கப்பட்டன. விவாதம் தடுக்கப்பட்டது. மக்கள் கூடி இயங்கும் சுதந்திரம் தடைசெய்யப்பட்டது. என்ன நடக்கிறதென்பதை அறிந்திருந்த போதிலுத் அரசாங்கம் மக்களுக்குக் கணக்குக் காட்டும் பொறுப்புணர்ச்சி கொண்டிருக்கவில்லை. பஞ்சத்தின் பழுவைக் குறைப்பதற்கு அது நடவடிக்கையெடுக்கவுமில்லை. பஞ்சநிவாரணம் வழங்கவுமில்லை. இவ்வழிவின் பின்னர்தானும் அது கற்பிக்கும் படிப்பினை பெற முயற்சிக்கவுமில்லை.
எதிர்மாறான உதாரணம் 2 : எதியோப்பியா
கடந்த இரு தசாப்தங்களாய் எதியோப்பியா தொடர்ந்து பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டு வந்துள்ளது. தட்பவெப்ப நிலை பாதிப்பு முக்கிய பங்கு வகித்த போதிலும், இடைவிடாமல் நிகழ்ந்த மனித உரிமைகள் மீறலே இப்பஞ்சங்கள் ஏற்படுவதற்கு பிரதான காரணமாகும். இவ்வுரிமை மீறல்களின் ஏனைய அம்சங்கள் இதன் கீழே ஆராயப்படும். இங்கு, ஜனநாயகமுறை கணக்குக் காட்டும் பொறுப்பு விலக்கப்பட்டமை பரிசீலிக்கப்படுகின்றது.
(11) 1973ன் "அறியவரப்படாத பஞ்சம்”
1973ல், எதியோப்பியாவில் வொலோ மாகாணத்தைப் பீடித்த பஞ்சம் 40,000 க்கும் 80,000 க்கும் இடைப்பட்ட மனித உயிர்களை பளிவாங்கியதென கணிப்பிலிடப்பட்டுள்ளது. தசாப்தக் கணக்கில் மத்திய அரசு காட்டிய அலட்சியம், உயர்மட்ட நிலச்சொந்தக்காரர்கள் குத்தகைக்கு கமஞ்செய்வோரை அரக்கத்தனமாகச் சுரண்டியமை, இடையர்களிடமிருந்து மேய்ச்சல் நிலங்கள் பறித்தெடுக்கப்பட்டமை, வரட்சி இவற்றிலேயே பஞ்சத்திற்கான காரணிகள் வேர் கொண்டுள்ளன. இவை யாவற்றுக்கும் மேலாக, பஞ்சம் நிலவுகிறதென்பதை ஏற்றுக் கொள்ள மறுத்தது சக்கரவர்த்தி, ஹெய்லி ஸ்லாவியின் அரசாங்கம்.
22

ஏற்பட்ட அழிவை மூடிமறைப்பதில் நீண்ட பழம் மரபொன்றையே அவர் பின்பற்றினார் 1958லும் 1966 லும், வடமாகாணங்களில் பல்லாயிரக் கணக்கானோர் உயிர்குடித்த பஞ்சத்திற்கெதிராக நடவடிக்கையெதனையும் மேற்கொள்ளத் தவறியிருந்தது அரசாங்கம். அரசு கடைப்பிடித்து வந்த போக்கைத் துலபம்பரப்படுத்தும் சம்பவமொன்று அக்டோபர் 1965ல், வொலோ மாகாணத்தில் லெர் இலூ மாவட்டத்தைச் சேர்ந்த பொலிஸ், பஞ்சம் உண்டாகப் போவதனை அறிந்திருந்தது. அது ஆளுநருக்கு அறிவித்தது. ஒரு மாதம் சென்ற
பின் ஆளுநர் உள்நாட்டமைச்சுக்கு அறிக்கையொன்றை அனுப்பிவைத்தார். சரியாக 302 நாட்களுக்குப் பின் அமைச்சிடமிருந்து பதில் வந்தது - ஆளுநரிடம் இறந்தவர்களின் பெயர்களையும்
முகவரிகளையும் கேட்டு.”
வொலோ மாகாணத்தில் பஞ்சத்தின் நிலைமைகள் 1972ல் முதன்முதலாக வெளிப்படையாயின. பஞ்சத்திற்கும் பட்டினிக்கும் முகம் கொடுக்க நேர்ந்த உடனடியாக உணவு வசதிகளைப் பெறுவதைத் தவிர வேறெந்த விளைவையும் இப்போது எண்ணிப்பார்ப்பது அஃபார் சாதியினர்க்கு மிகவும் கடினமாகவிருந்தது." என்று அங்கு சென்ற ஒருவர் குறிப்பிட்டார். ஒன்றுமே செய்யப்படவில்லை. ஆகஸ்ட் 1973dು வொலோ மாகாணத்தைப் பார்வையிடச் சென்ற யுனிசெப் ஆலோசகர் இருவர் பஞ்சநிலைமைகள் பற்றிய அறிக்கையொன்றை தயாரித்தனர். பட்டினிச் சாவுகளைப் பற்றியும், தப்பிப் பிழைத்தவர்களின் அவலம் பற்றியும் இவ்வறிக்கை விரிவாக எடுத்துரைத்தது.
அமைச்சு மட்டத்தை அடையுமுன் இருபது பிரதிகள் விநியோகமாயின. அறிக்கையைத் தடைசெய்வதற்காக ஆணைபிறப்பிக்கப்பட்டது. சர்வதேச உதவிகளைப் பெறுவதற்கு அறிக்கை உதவக் கூடுமென ஆலோசனை கூறப்பட்டதும் உதவித் திட்டமிடல் அமைச்சர் பதில் கூறினார்: "சருவதேச உதவியைப் பெறுவதற்காக நீங்கள் விவரித்துள்ளபடிதான் நிலைமையை வர்ணிக்க வேண்டுமென்றால், எமக்கு அவ்வுதவி தேவையில்லை. இதனால் அரசாங்கத்துக்கு ஏற்படப் போகும் சங்கடத்தைப் பார்த்தால் இது தேவையற்றது. விளங்கிற்றா? அறிக்கை இருட்டடிக்கப்பட்டது அறிக்கையைத் தயாரித்தவர்களையும், அதன்
17. மெஸ்ஃபின் வொல்டே மரியம் எத்தியோப்பியாவின் நாட்டுப்புறம் பஞ்சத்தால் பாதிப்புறக்கூடிய
நிலை 1958-1977 லண்டன் 1986 பக். 106.
18. நொயல் கொளின்ஸ் வாழ வழியில்லை வடகிழக்கு வனப்பகுதிகளைச் சேர்ந்த அஃபார்
இனக்குழுக்கள் பற்றிய ஆய்வு அடிஸ் அபாபா 1472 பக். 2.
19. பி.எச். பிரிட்ஸ்கேயின் சட்டம் அபிவிருத்தி எத்தியோப்பிய புரட்சி (லிவிஸ்வர்க் 1982) 127ம்
பக்கம் எடுத்தாளப்பட்டுள்ள மேற்கோள்.
23

Page 16
முடிவுகளையும் இழிவுபடுத்துவதற்கு அரசாங்க அதிகாரிகள் பகீரதப்பிரயத்தனமெடுத்தனர்.
எத்தியோப்பிய பத்திரிகையாளர்களாலோ, அரசாலோ பஞ்சத்தைப் பற்றி விசாரணையெதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அதைத் தொடர்ந்து ஆண்டில் பத்திரிகை தணிக்கை அகற்றப்பட்டதும், "எத்தியோப்பியன் ஹெரல்ட்" பத்திரிகையின் ஆசிரியர் தணிக்கையின் மூலம் கட்டுப்படுத்தப்பட்ட விடயங்களைப் பட்டியல்படுத்துமாறு கேட்கப்பட்ட போது, அவர் கூறிய பதில்:
"அநேக விடயங்கள் உண்மையில் எழுத முடியாமற் போன விடயங்களை விடவும் எழுத முடிந்தவைகள் கணக்கிட்டுச் சொல்வது சுலபம். ஏனெனில் பட்டியல் அந்தளவு நீளமானது. கோலாலம்பூர், ஆப்கானிஸ்தான் போன்ற இடங்களிலிருந்து வந்த ராய்ட்டர் செய்திகளைத் தவிர வேறெதையுமே வெளியிட முடியவில்லை . உள்நாட்டில் எதிர்க்கருத்தடங்கிய அரசியல் அபிப்பிராயங்களை வெளியிடுவது பற்றி நினைத்துப் பார்க்கவே முடியவில்லை."
என்றபோதிலும், ஜொனதான் டிம்பிள்பை என்பவர் எடுத்த "மறந்துபோன பஞ்சம்” என்ற தொலைக்காட்சி விவரணப் படத்தை அரசினால் தடை செய்ய முடியாமல் போயிற்று. வொலோவில் மக்கள் பட்ட துயரம் பஞ்சத்தை அலட்சியப்படுத்துவதற்கு, விசேடமாக சக்ரவர்த்தியின் எண்பதாவது பிறந்தநாள் வைபவத்தின்போது, அரசு மேற்கொண்ட முயற்சிகள் முதலியவை பற்றி கட்புல குறியீடுகள் கொண்ட சித்திரங்களை இப்படம் காட்டிற்று. நிர்க்கதியான மக்கள் நகரை நோக்கி அணிவகுத்து வருவதைத் தடுப்பதற்காக அடிஸ் அபாபாவைச் சுற்றி வீதித்தடை போடப்பட்டன.
இப்படமும் இதற்குக் கிடைத்த விளம்பரமும் ஹெய்ல்லி ஜெலாஸியை பதவியிலிருந்து, வீழ்த்திய 1974ன் "ஊர்ந்து வரும் புரட்சி" க்கு பெரும் பங்களிப்பை வழங்கின. மிக அதிகமான விநியோகத்தைக் கொண்ட செய்தித்தாள் ஒன்று இவ்வாறு அபிப்பிராயம் வெளியிட்டது "இயற்கையாகவே இரக்க குணமும், தயாள சிந்தையும் கொண்ட எத்தியோப்பிய மக்கள் போதியளவு நிவாரணப் பணிகளில்
20. எல். தோலாளின் "மறந்துபோன பஞ்சம்” (டப்பிளன் 1974) 52ம் பக்கம். எடுத்தாளப்பட்டுள்ள
மேற்கோள்.
24

பங்கெடுக்கவில்லையென்பது உண்மைதான், காரணம் எவருமே அவர்களிடம் பஞ்சத்தைப்பற்றி எதுவும் கூறாததே."
ஸ்லாஸி பதவியிலிருந்து கவிழ்க்கப்படுவதற்கு முந்திய நாள் மாலை செப்டெம்பர் 11ம் திகதி, திருமணப்பலகாரம் இத்தாலியிலிருந்து விசேடமாக விமானமும் கொண்டு வரப்பட்டு, விமரிசையாக நடந்த பிரபல ஆளுநர் ஒருவரது மகளின் திருமணக் காட்சியோடு, டிம்பிள்பையின் திரைப்படத்திலிருந்து சில பகுதிகளையும் அடுத்தடுத்து ஒலிபரப்பிக் காட்டியது எத்தியோப்பிய தொலைக்காட்சி.
ஹெய்ல் ஸலாஸி அரசின் வீழ்ச்சியும், அவ்வீழ்ச்சிக்குக் காரணமான பஞ்சமும், புதிய அரசு பஞ்சம் சம்பந்தப்பட்ட விவகாரத்தையிட்டு விழிப்புணர்ச்சியோடு இருப்பதை உறுதிப்படுத்தப் போது மானதாயிருந்தது. உண்மையில் 1974ல் உற்சாகமூட்டும் அறிகுறிகள் காணப்பட்டன. பத்திரிகை தணிக்கையின் பெரும்பகுதி நீக்கப்பட்டது. பஞ்சத்துக்கான காரணத்தைத் தடுப்பதற்கும், பஞ்சக்குழு நியமிக்கப்பட்டது. வருங்காலத்தில் பஞ்சத்தைத் தடுப்பதற்கும், பஞ்ச நிலையைச் சீர்ப்படுத்துவதற்கும், நிவாரண, புணர்வாழ்வுக் குழுவுக்கு கணிசமான அளவு சுயாதீனமும், பாரிய வரவு செலவு பண ஒதுக்கீடும், சர்வதேச நிதியுதவி நிறுவனங்களிடமிருந்து உதவிபெறும் , வாய்ப்பும் வழங்கப்பட்டிருந்தது. "டெர்கு” என அறியப்பட்ட தற்காலிக இராணுவ நிர்வாகக் குழு பாரமான குத்தகை முறையை நீக்குதல் போன்ற தீவிர சமூக, பொருளாதார சீர்த்திருத்தங்களில் நாட்டங் கொண்டதாகத் தோன்றியது. எத்தியோப்பியாவிலிருந்து பஞ்சத்தை ஒழித்துக் கட்டுவதற்கான உண்மையான வாக்குறுதி 1974 தென்பட்டது.
(2) யுத்தமும், பஞ்சமும், மீளக் குடியமர்த்தலும், 1983 - 5
1974 ம் ஆண்டு தந்த நம்பிக்கையையும் மீறி, பத்தாண்டுகளுக்குப் பின் அதே சோக நிகழ்வு மீண்டும் இடம் பெற்றது. இம்முறை பாரிய அளவில், 1983 - 5ல் 400,000 முதற்கொண்டு 600,000 மக்கள் வரை பலி கொண்ட பஞ்சம் எத்தியோப்பியாவை பீடித்தது. ஒரு தசாப்தத்திற்கு முன் பஞ்சத்தில் பாதிக்கப்பட்ட அதே வொலோ, டைக்ரே பகுதிகளே பஞ்சத்தின் பிரதிபலிப்பின் மையமாய் விளங்கின. 1984ன் நடுப்பகுதியில் ஆறுமாதக்காலத்திற்கு அரசு சகல தகவல்களையும் மூடிமறைத்தது ஒடுக்கியது. பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குப் பத்திரிகையாளர்கள் நிலவரத்தைப் பார்வையிடச் செல்வது தடை செய்யப்பட்டது.
21. அடிஸ் லெமின் மார்ச் 27, 1974. 25

Page 17
இதற்குக் காரணம் அரசு புரட்சியின் பத்தாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடுவதற்குத் தடல்புடலாக ஏற்பாடு செய்து கொண்டி (ருந்தமையே அடிஸ் அபாபாவில் வெற்றிச் சின்ன விளைவுகள் நிறுவப்பட்டுக் கொண்டிருந்தன. இராணுவ அணிவகுப்பு ஒத்திகைகள் நடந்து கொண்டிருந்தன.
அநாதரவானோர் அவ்விடம் புகுந்து திருவிழாவைக் குட்டிச் சுவராக்காமலிருப்பதற்காக புறநகரில் தடை காவல் போடப்பட்டது. அக்டோபர் 1984ல் கோரெம், கெம்கெலி ஆகிய நகரங்களுக்குச் செல்வதற்கு பிபிசி தொலைக்காட்சி குழுவுக்கு தாமதமாய் அனுமதி வழங்கப்பட்டு, அவர்களது படம் உலகமெங்கும் காட்டப்பட்ட போதுதான் இப்பஞ்சம் உள்நாட்டிலும், பிற நாடுகளிலும் தேவையான கவனத்தைப் பெற்றது.
உண்மையில் பல்வேறு பகுதிகளில் கலகம் மூண்ட போது அதை அடக்குவதற்கு இராணுவம் கடைபிடித்த அடக்கு முறைகள் காரணமாக எதியோப்பியாவில் 1979 முதல் 1983 வரை மறைமுகமாகப் பஞ்சம் நிலவியது. ஆனால் இவை சர்வதேச கவனத்தைக் கவரவேயில்லை. 22 இது எவ்வாறிருந்த போதிலும், வடக்கில் நிலவிய மாபெரும் பஞ்சத்தை மறைக்க முடியாமல் போயிற்று.
அரசாங்கம் மூடிமறைத்தமையை பஞ்சத்திற்குக் காரணமாய் காட்டுவது தப்பெண்ணத்தை உருவாக்கும். நிலவுகின்ற பஞ்சம் பற்றி அரசாங்கம் முன்கூட்டியே மனந்திறந்து குறிப்பிட்டது. தமது 1983 மேதின உரையில் தளபதி மெங்கிஸ்ட்டு பஞ்சம் பற்றிக் குறிப்பிட்டார். அவலத்தில் அவதியும் மக்களின் சரியான எண்ணிக்கையை அறிவதற்காக நிவாரண புனர்நிர்மாணக்குழு புள்ளி விபரங்களைத் திரட்டிக் கொண்டிருந்தது. அரசாங்கமும், சர்வதேசச் சமூகமும் பஞ்சத்தைப் பற்றிய சரியான தகவல்களைப் பெற்றன. என்றபோதிலும் நிவாரண, புணர்நிர்மாணக் குழுவின் முன்னெச்சரிக்கை பற்றி சர்வதேச சமூகம் சந்தேகப்பட்டது. இச்சந்தேகம் தவறாய் முடிந்தது. 1984ன் நடுப்பகுதியில் தென்பட்ட கடுமையான மூடிமறைப்பு விதிவிலக்கான ஒன்றாகும். பிராந்திய பிரச்சனையாகத் தோன்றிய இப்பஞ்சம் தேசிய மட்ட அழிவாக மாறிவிட்ட வேளையில் ஏற்பட்டமையால் இம்மூடிமறைப்பு முக்கியமானதோர் விதிவிலக்காகும்.
22. ஆபிரிக்காக் காவல் "தீய நாட்கள் எத்தியோப்பியாவில் 30 ஆண்டுகள் போரும் பஞ்சமும்,
GoF'Go touň 1991”
26

1974ல் காணப்பட்ட நம்பிக்கை பத்தாண்டு முடிவதற்குள் பொய்த்துப் போனமைக்கான விளக்கம் வெறும் "தணிக்கை”யை விடவும் சிக்கலானது. தகவல்களும் தொழில்நுட்பச் சாதனங்களும் காணப்பட்ட போதிலும், பயனுள்ள நிவாரணத்துக்கான அரசியல் உறுதி காணப்படவில்லை - ஜனநாயக முறை கணக்குக் காட்டும் கடமைப்பாடு இருக்கவில்லை. 1974ன் பின் நிலவிய சொற்பகால சுதந்திரத்துக்குப் பின் பத்திரிகைகள் மீண்டும் கடுமையாக தணிக்கை செய்யப்பட்டு அவை அரசின் ஊதுகுழலாய் மாறின. தொழில் சங்கங்கள் போன்ற சுதந்திர அமைப்புகள் தடைசெய்யப்பட்டன. கல்வி சார் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டது. 1973 பஞ்சத்தின் போது மனிதனால் உண்டாக்கப்பட்ட காரணிகளை முன்னர் விமர்சித்த சமூக விஞ்ஞானிகள் வாயடைக்கப்பட்டனர். அரசியலில் ஒத்துப்போக மறுக்கும் சகல போக்குகளும் ஒடுக்கப்பட்டன - மிகவும் குறிப்பாக, 1977 - 8ல் நிலவிய பயங்கர நாட்களின் போது சுமார் 30,000 இளைஞர்கள் மரண தண்டனை விதிக்கப்பட்டனர். 1982 - 5 ஆகிய வருடங்களில் டைக்ரேயிலும் ஏரிட்ரியாவிலும் கிளர்ச்சியாளர்களுக்கெதிராக அரசாங்கம் நான்கு பிரதான தாக்குதல்களைத் தொடுத்தது. யுத்தத்தின் மூன்று தசாப்தங்களிலும் இவையே வெகுநாசம் விளைவித்தவை எனலாம். யுத்தம் பற்றிய விமர் சனமெதுவும் சாத்தியப் படவில்லை. அற்பசந்தேகத்துக்கு இடமிருந்தால் தடுப்பு காவலில் அல்லது கொலையில் முடிந்தது. 1984ல் அரசிற்கு விரோதிகள் என்ற சந்தேகத்தில் ஆயிரம் கணக்கான டைகரே இனத்தவர் கைது செய்யப்பட்டனர். அரசாங்கத்தின் தலைவரான தளபதி மெங்கிஸ்ட்டு ஹெய்லி மரியம், நாட்டுப்புற வறியமக்களின் தேவைக்குச் செவிசாய்க்கும் எத்தகைய நிர்ப்பந்தத்துக்கும் ஆளாகாதவராய்க் காணப்பட்டார்.
பஞ்சம் நிலவியதை அரசு பெரும்பாலும் மறுக்கவில்லை. அதற்குப் பதிலாக பஞ்சத்தின் இயல்பான தன்மையை அது வேண்டுமென்றே மாறுபட்ட முறையில் காட்டியது. உண்மையில் இப்பேரழிவுக்கான காரணம் முதலில், வடக்கில் கலகத்தை அடக்குவதற்காக இராணுவம் கடைப்பிடித்த முறை : இரண்டாவதாக, மற்றைய இடங்களில் விடாப்பிடியாய்க் கடைப்பிடிக்கப்பட்ட சோவித் பாணி விவசாயக் கொள்கைகள் என்ற போதிலும், எத்தியோப்பிய மக்கள் தொடர்ப்புச் சாதனம் (அத்துடன் உண்மையில், சர்வதேச மக்கள் தொடர்புச் சாதனங்களின் பெரும் பகுதியும்) பஞ்சம் ஓர் "இயற்கையான நிகழ்ச்சி " என்ற அரசின் கொள்கையையே தப்புத்தவறின்றி எதிரொலித்தன. தட்பவெப்ப, சூழல் சுற்றாடல் சீர்குலைவு முக்கியமாயிருந்த போதிருலும், பஞ்சம் உண்டானதற்கும், அதிகரித்ததற்கும் அதனைக் காரணங் காட்ட
27

Page 18
முடி யாதென்பதை பஞ்சம் ஏற்பட்ட காலநேரம், பரவிய விதம் முதலிய பற்றி விசாரணை மெய்ப்பிக்கின்றது.*
பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டோரில், கிளர்ச்சிக்காரர்களின் பிடியிலிருந்த பகுதிகளை விட்டு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளைச் சேர்ந்த சிறுபான்மையான மக்களுக்கே பெரும்பாலும் தனிப்பட்ட உதவிகள் வழங்கப்பட்டன. என்பதும் குடியானவர்கள் அனைவருக்கும் தங்குதடையின்றி நிவாரண உதவிகள் அனுப்பப்படுவதற்கான பரிந்துரைகள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டன என்பதுமே திரித்து வெளியிடப்பட்ட உத்தியோக பூர்வமான தகவல்களின் அர்த்தம். இவ்வாறு, இராணுவ, சமூக பொருளாதாரக் கொள்கைகள் பஞ்சப் பேரழிவை உண்டுபண்ணிய அதேவேளை, யுத்தத்தோடு சம்பந்தப்பட்ட, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், அமைப்பு ரீதியாக செயல்படும் சுதந்திரம் முதலியவற்றின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடு நிலைமையைச் சீர் - செய்வதில் உண்டான தோல்வியுடன் பின்னிப் பிணைந்துள்ளன. அத்தோடு, ஜனநாயக முறை கணக்குக் காட்டும் கடமைப்பாடு இல்லாமையால், நிவாரண உதவியில், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நகரப் பகுதிகளுக்கும், இராணுவத்துக்கும், மாற்றத்தை நெறிப்படுத்தும் சமூக அதிகாரக் கட்டப்பாட்டை வலுப்படுத்தும் பூதாகரத் திட்டமான மீளக்குடியமர்த்தும் திட்டத்திற்கும் முன்னுரிமை வழங்கப்படுதலை அரசாங்கம் திடப்படுத்திக் கொள்ள முடிந்தது.
மீளக் குடியமர்த்தும் திட்டம், கலகப் பகுதியான வடக்கிலிருந்து மக்களை அப்புறப்படுத்துகின்ற கிளர்ச்சி எதிர்ப்பு முறையாகவும் அதே வேளை அடிமைகளாக்கப்பட்ட மக்கள் கூட்டத்தைக் கூட்டுப் பண்ணைகளில் வேலை செய்ய வைக்கும் வழிமுறையாகவும் விளங்கியது. படுமோசமான பஞ்சத்தினை விட அதிவேகமாக மக்களைக் கொன்று குவித்த போதிலும், ஒரு பஞ்ச நிவாரண முறையாகவே இத்திட்டம் உலகிற்குக் காட்டப்பட்டது. பஞ்சம் உச்சநிலையிலிருந்த போது இத்திட்டத்தின் செயலாக்கம் தொடங்கிற்று. இதன் விளைவாக உயிர்வதைகள் வெட்ட வெளிச்சமாகியது பின்னும் இத்திட்டம் தடையேதுமின்றி தொடர்ந்தது. மீளக் குடியமர்த்தல் 1986ல் தற்காலிகமாய் நிறுத்தப்பட்ட போதிலும், அநேக எத்தியோப்பிய அறிஞர்கள் அரசாங்கத்தின் மொத்தக் குறிக்கோள் மீது விருப்புத் தெரிவித்து அதே வேளை இத்திட்டம் பற்றி கடுமையான கண்டனங்களை முன்வைத்ததையும் மீறி, இரண்டு வருடங்களின் பின் மீண்டும் இத்திட்டம் புதுப்பிக்கப்பட்டது.
23. கீழே பார்க்கவும் அத்துடன் ஆபிரிக்கா காவல் “எத்தியோப்பியாவில் 30 ஆண்டுகள் போரும்
பஞ்சமும் 1991 அத்தியாயம் 9"
28

எதிர்மாறான அத்தாட்சியையும் மீறி அழுங்குப் பிடியாய் கடைப் பிடிக்கப்பட்ட இப்போக்கு மாவோவின் சீனாவையே நினைவூட்டுகிறது.
செயல்படுத்தக் கூடிய அரசியல் உறுதிப்பாடு இல்லாவிடின் நன்கு பணவசதியுடன் முறைகள் கொண்ட நவீன பஞ்சத்தடுப்பு முறை இருந்தும் பிரயோசனமில்லையென்பதை 1980 க்களின் எத்தியோப்பிய பஞ்சம் தெளிவாகக் காட்டுகின்றது. - 1943 ன், வங்காளத்தை இது எதிரொலிக்கின்றது. இதை பொறுத்தவரை மக்களின் குடியியல் அரசியல் உரிமைகளை மதிக்காத சர்வாதிகார அரசொன்று காணப்பட்டமையே அரசியல் உறுதிப்பாடு காணப்படாமைக்கான காரணம்.
எதிர்மாறான உதாரணம் 3 ; சூடான்
கடந்த பத்தாண்டுகளில் சூடான் மூன்று பஞ்சங்களை கண்டுவிட்டது. வரட்சியோடு சம்பந்தப்பட்ட 1984 - 5ன் பஞ்சம் பிரதானமாக தர்ஃபூர் கோர்டோஃபான் ஆகிய மேற்கு மாகாணங்களைப் பாதித்தது. வரட்சி காரணமாக உண்டான 1990 - 1ன் பஞ்சம் முழுவடக்கையும் பாதித்தது. ஒவ்வொரு பஞ்சத்தின் போதும் பரவலான மனித உரிமை மீறல்களே பெரும்பாலும் அதற்கான காரணம்.
(1) நிமெய்ரியின் பஞ்சம் : 1984 - 5
1984 ல் சூடான் தப்பும் தவறுமாக ஆட்சிபுரிந்த ஜனாதிபதி நிமெய்ரின் எதேச்சதிகார அரசாக விளங்கியது. அயல்நாடாகிய எத்தியோப்பியாவில் காணப்பட்டதைவிடவும் அதிகமாக பத்திரிகைச் சுதந்திரமும் கூட்டங் கூடி இயங்கும் சுதந்திரமும் காணப்பட்ட போதிலும் நிமெய்ரின் ஆட்சிக்கு இராணுவப் பாதுகாப்புச் சேவைகளே முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தன.
1956ல் சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் சூடான் பஞ்சத்தைக் கண்டதில்லை. குடிநாட்டரசு காலத்தைச் சேர்ந்த பஞ்சத்திற்குரிய சட்ட ஒழுங்கு விதிகள் கைவிடப்பட்டிருந்தன. 1983ல் கடுமையான வரட்சி நாட்டில் ஆழமான பொருளாதார பிரச்சினையை உருவாக்கிற்று. ஒருதலை முறையினர் முதன் முறையாகப் கொடூரமான பட்டினியால் அச்சுறுத்தப்பட்டனர். மத்திய அரசின் அலட்சியப்போக்கு கண்டு வெறுப்புற்று வரட்சியால் பாதிக்கப்பட்ட தர்ஃபூர் பிரதேச ஆளுநர் பதவியிலிருந்து விலகி வெளிநாடு ஒன்றில் அடைக்கலம் புகுந்தார். மாகாணத்துக்குத் தேவையான நிவாரண உதவிகளைக் கணிப்பிடுவதற்காக
29

Page 19
ஐக்கிய நாடுகள் சபை கணிப்பீட்டுக் குழு ஒன்றை அனுப்பி வைத்தது. அக்குழுவின் பரிந்துரைப்படி தேவைப்பட்ட 39,000 தொன் உணவுப் பண்ட உதவி மத்திய அரசினால் 7,000 தொன்களாகக் குறைக்கப்பட்டது. சர்வதேச உதவியேதும் கோரப்படவில்லை.
அரசு காட்டிய அலட்சியத்துக்கு முக்கியகாரணம், நாட்டை "அரபுலகின் உணவுக் களஞ்சிய"மாக மாற்றும் திட்டத்தின் ஒருபகுதியாக, குறிப்பாக இயந்திரமாக்கப்பட்ட விவசாயத்துறையில் சூடான் குடாநாடுகளின் முதலிட்டிலேயே பெரிதும் தங்கியிருந்தமையாகும். அமைச்சர்களுக்கும் - ஜனாதிபதிக்கும் இந்த முதலீட்டில் கிடைத்த “தரகுப்பணம்” கொள்ளை இலாபம் தந்தது. பஞ்சம் பிரகடனஞ் செய்யப்பட்டால் உணவுக் களஞ்சிய உபாயத்தின் தோல்வி வெட்ட வெளிச்சமாகிவிடும். அதனால் நிதி உதவி நின்று விடும் என நிமெய்ரியும் அவரைச் சூழ்ந்தவர்களும் அஞ்சினர். இதன் மிகவும் முக்கிய உதாரணமாக ஃபைஸால் இஸ்லாமிய வங்கியைக் குறிப்பிடலாம். இது ஓர் அடிப்படைவாத நிறுவனம் அரசாங்கத்தில் இஃவானுல் முஸ்லிமினுக்கு (முஸ்லிம் சகோதரர்கள்) சொந்தமானது. அச்சமயம் இந்நிறுவனத்தில் நிமெய்ரியின் பிரதான பங்காளியாய் அரசாங்கத்தில் விளங்கிற்று. இவ்வங்கி பஞ்சத்தின் போது தானியத்தைப் பதுக்கி வைத்து, சாதாரண மக்களின் வயிற்றிலடித்து, விலையுயர்வால் கொள்ளை இலாபம் சம்பாதித்தது. ஜனநாயக கணக்குக் காட்டு முறையின் கடமைப் பாடின்மையால், ஏராளம் பேரின் வயிற்றிலடித்த ஒருசிலர் சு கித்திருக்கும் பேராசை தாண்டவமாடிற்று.
1984 வேனிலில் மீண்டும் வானம் பொய்த்த போது, நிலைமை படுமோசமாயிற்று. வரட்சியால் பாதிக்கப்பட்ட கோர்டேல்ஃபான் மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்தோர் வயிற்றுப்பாட்டுக்கு வழிதேடித் தலைநகரின் புறநகர்ப்பகுதிகளில் போய் தஞ்சமடைந்தனர். அவர்களுக்கு உதவிபுரிய தலைநகரான கார்ட்டும் மக்கள் முயற்சிகள் மேற்கொண்டனர். எனினும் அரசாங்கம் பஞ்சம் நிலவுவதை தொடர்ந்து மறுத்து வந்தது.
உணவு நிலைமை “மீண்டும் நம்பிக்கையூட்டுகின்றது” எனப் பிரகடனஞ் செய்து, வரட்சியால் இடம் பெயர்ந்தோரை மீண்டும் அவர்களின் சொந்த இடங்களுக்கு பலவந்தமாக அப்புறப்படுத்துமாறு கட்டளை பிறப்பித்த நிமெய்ரி, எத்தியோப்பியாவிலிருந்தும், ஸாடிலிருந்தும் வந்த அகதிகளுக்கு மட்டுமே உணவு நெருக்கடியேற்பட்டது. என்ற பொய்யை நிலைநாட்டினார்.
30

என்ற போதிலும் பஞ்சம் ஓர் அரசியல் பிரச்சினையாய் மாறுவதைத் தடுக்கக் கூடிய அளவுக்கு நிமெய்ரியிடம் அரசியல் ஆதிக்கம் இருக்கவில்லை. கிளர்ச்சிவாத சூடானிய விடுதலை இராணுவம் அதன் வானொலி ஒலிபரப்புகள் மூலம் அரசாங்கம் செயலற்றிருந்த தன்மையைக் கண்டித்தது. இவ்வெதிர்ப்புக் குரல் மக்களின் பிரதான நீரோட்ட கூட்டத்தினர் மத்தியில் எதிரொலி கிளப்பிற்று. இந்நிலை கலகக்காரர் மீது மக்கள் கொண்டிருந்த எதிர்ப்பை மழுங்கச் செய்தது முன்னணி மருத்துவர் குழுவொன்று பஞ்ச நிலைமை குறித்து அறிக்கை வெளியிட்டது. கமத்தொழில் அமைச்சு தேவையான நிவாரண உதவி பற்றிய தன் மதிப்பீட்டைப் பகிரங்கப்படுத்தியது. "சூடானவ்" என்ற ஆங்கில சஞ்சிகை அதன் ஆகஸ்ட் 1984 இதழில் வரட்சி பற்றிய செய்திகளை வெளியிட்டது. எனினும் பிரதான நீரோட்டத்தைச் சேர்ந்த அரபுப் பத்திரிகைகள் இவ்விவகாரத்தைப் பற்றி மெளனமாயிருந்தனர்.
நிமெய்ரியின் கெடுபிடி யுத்தக் காப்பாளனும் பிரதான நிதியுதவியாளனுமான அமெரிக்க அரசாங்கம் பஞ்சம் பற்றிய அதன் மதிப்பீட்டைப் பத்தாண்டில் வெளியிட்டபின் தான் நிமெய்ரி செயல்படத் தொடங்கினர். 1985 ஜனவரி 10ந் திகதி, அதாவது பிரச்சினை வெடித்துக் கிளம்பி சுமார் பதினான்கு மாதங்களின் பின்னரே, சூடான் சர்வதேச உணவு நிவாரண உதவி கோரியது. தீவிரப்படுத்தப்பட்ட பிரமாண்ட நிவாரண முயற்சி காலங்கடந்த நடவடிக்கையாகும் ஏனெனில் சுமார் 250,000 சூடானியர்கள் மரணமடைந்து விட்டதாக மதிப்பிடப்பட்டது. நிமெய்ரிக்கும் காலம் பிந்திப் போய் விட்டது. பஞ்சம் அவருக்கு அவமதிப்பை உண்டு பண்ணியதோடு, அவரது ஆட்சியை கவிழ்த்து 1985 ஏப்பிரல் பொதுமக்கள் எழுச்சிக்கும் காரணமாயிற்று.
சூடானிய மரபு ஒவ்வொரு பஞ்சத்திற்கும் பெயர் சூட்டியுள்ளது. சில வரலாற்று இடம் பெற்ற சில பஞ்சங்கள் அவற்றுக்கு மூலகாரணமாகக் குற்றஞ் சாட்டப்பட்ட இராணுவ தளபதிகளின் அல்லது ஆட்சியாளரின் பெயரால் அழைக்கப்பட்டன. அந்தவகையில் 1984 - 5ல் நிகழ்ந்ததை "நிமெய்ரியின் பஞ்சம்” என அழைப்பது பொருத்தமே.
1984 - 5 பஞ்சம் சூடானிய மக்களின் பொறுமையை நிமெய்ரி அளவுக்கதிகமாக சோதித்துவிட்டதைக் காட்டியது. அவர்கள் ஒன்று திரண்டு நிமெய்ரியின் ஆட்சிக்கு முடிவு கட்டினர். 1990-1 விவகாரம் வேறுவிதமானதாகும். அதேயளவு பரிமாணங்களைக் கொண்ட இப்பஞ்சத்துக்கு தளபதி ஒமர் அல் பஷீருடைய இராணுவ அரசாங்கம்
31

Page 20
தலைமை தாங்கியது. தேவைப்பட்ட நிவாரண உதவியாக மிகக் குறைந்த வருகைகளே வழங்கப்பட்டன.
(2) அல் பஷ்ரின் பஞ்சம் : 1990 - 91
1990 ன் பஞ்சம், அதே மாதிரியாக அடுத்தடுத்து, இருவருடங்களாகத் தொடர்ந்து நீடித்த, அடையானங்காணப்படாத வரட்சி கனமாக ஏற்பட்ட கடும் பஞ்சமாகும். இப்பஞ்சத்தைப் பொறுத்தவரை, பொருளாதார நெருக்கடி கடமையுற்றது. 1990 ஆகஸ்டி ல் குவைத் மீதான ஈராக் ஆக்கிரமிப்பை அரசாங்கம் ஆதரித்ததால் உண்டான நம்பிக்கை குன்றிய ஈடாட்டத்தாலும் சவூதி அரேபியாவில் வாழும் பெருந்தொகையினரான சூடானியரிடமிருந்து வரும் பணம் நிறுத்தப்பட்டுவிடும் என்ற அச்சத்தினாலும் இப்பொருளாதார நெருக்கடி மேலும் மோசமுற்றது.*
பஷ்ரின் அரசாங்கம் இஃவானுல் முஸ்லிமின் என்ற இயக்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்து இராணுவ அரசாங்கம். 1089 ஜூனில் நிகழ்ந்த சதியால் ஆட்சியைக் கைப்பற்றிய பஷீர் அரசாங்கம் சூடானில் சகல குடியுரிமை அரசியல் உரிமைகளையும் நசுக்குவதில் நிமெய்ரியை விட மோசமான நடவடிக்கைகளைக் கையாண்டது. சுதந்திரமான பத்திரிகைகள் அனைத்தும் தடை செய்யப்பட்டன. தொழிற்சங்கங்களும், அரசியல் கட்சிகளும் கலைக்கப்பட்டன. பகிரங்க அரசியல் கலந்துரையாடல்கள், வியாபகமான குரூர பாதுகாப்பு முறையால் தடுக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான அரசியல் மாற்றுக் கருத்தினர் சிறையில் தள்ளப்பட்டனர்.
1984 - 85க்கு நேர்மாற்றமாக, அரசாங்கம் அதன் கொள்கையை மாற்றிக் கொள்ளுமாறு வலியுறுத்துவதற்கு பிரஜைகள் குழுக்களோ, மருத்துவச் சங்கங்களோ, அல்லது முக்கிய சமய உறுப்பினர்களோ முயற்சியெதுவும் மேற்கொள்ளவில்லை. அத்தகைய நடவடிக்கையெதுவும் மேற்கொள்ள முடியாதபடி மக்கள் அச்சுறுத்தப்பட்டடிருந்தனர். 1984ல் முக்கியமான ஒன்றாய் விளங்கிய மருத்துவர் சங்கம் மீது அரசாங்கம் கண்வைத்திருந்தது. 1989 டிசெம்பரில் அமைதியான முறையில் வேலை நிறுத்தஞ் செய்தமைக்காக பிரபல மருத்துவர்கள் அரசுக்கெதிராகப் போர் தொடுத்ததாக குற்றஞ் சாட்டப்பட்டனர் மாமூன் ஹைேஸன் என்ற வைத்தியர் மரண தண்டனை விதிக்கப்பட்டு ஆறுமாதங்கள் சிறையில் கிடந்தார். சர்வதேச எதிர்ப்பு நடவடிக்கை உருவானதால் விடுதலை செய்யப்பட்டார்.
24. பார்க்கவும் "சூடான் நாடளாவிய பஞ்சம்" ஆபிரிக்கா காவல் செய்தி நவம்பர் 9, 1990
32

முன்னைய வருடங்களில் காணப்பட்டதற்கு நேர் மாற்றமாக சூடானிய மக்கள் தொடர்புச் சாதனங்கள் பஞ்சம் குறித்து அது சம்பந்தப்பட்ட விவகாரங்கள் குறித்து செய்தி வெளியிட முன்வரவில்லை. 1984 - 85 பஞ்சத்தின் பின் அப்போதைய சுதந்திர பத்திரிகைகளிற் சில ஃபைஸல் வங்கி விவகாரத்தில் வீராப்பு மிக்க அக்கறை காட்டின. அவ் வங்கிக்கெதிராகச் சட்ட நடவடிக்கையெடுக்க வேண்டுமென வலியுறித்தின. இஃவானுல் முஸ்லிமின், இயக்கத்தின் தலையீட்டால் இக்கோரிக்கை பின்னர் கைவிடப்பட்டது. 1990ல் ஃபைஸல் இஸ்லாமிய வங்கியினதும் ஏனைய இஸ்லாமிய வங்கிகளினதும் ஆதரவில் சூடானில் களஞ்சியத்திலிருந்த அவசர தேவைக்கான தானியங்கள் பிரதானமாய் ஐரோப்பாவுக்கும், சவூதி அரேபியாவுக்கும் (விலங்குகளுக்கு உணவாக) எஷிரின் அரசாங்கத்தால் ஏற்றுமதி செய்யப்பட்டது. இரகசியமாக மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கைக்கெதிரான அத்தாட்சிகள் காணப்பட்டபோதும், அரசாங்கம் இதனை ஒரேயடியாய் மறுத்துவிட்டது. கண்டன விமர்சனங்களொரு பக்கமிருக்க, செய்திகளை கூட வெளியிட பத்திரிகைகள் தவறிவிட்டன. பிறகு பஞ்சத்தின்பால் கவனத்தையீர்க்க முயன்ற பத்திரிகையாளர்கள் பயமுறுத்தப்பட்டனர். நெருக்கடியேற்பட்டது உண்மைதானென பத்திரிகையாளர்களிடம் ஒத்துக் கொண்ட மாகாண நிர்வாகியொருவர் பதவிநீக்கஞ் செய்யப்பட்டார்.
"நாம் பயிரிட்டதையே நாம் சாப்பிடுகிறோம்." என்று சுலோக மெழுப்பிய இராணுவ அரசு அமோக விளைச்சல் எதிர்ப்பார்க்கப் படுவதாக விளம்பரப்படுத்தி வற்புறுத்தியது. தொலைக்காட்சியில் பொய்யாகக் காட்டப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த உழவர்கள் இது கண்டு நகைத்தனர். வரப்போகும் பஞ்சத்தைப் பற்றிய செய்திகள் யாவும் பொறாமை கொண்ட எதிர் வட்டாரங்களைச் சேர்ந்தவர்களின் அரசியல் இலாபம் கருதி "ஆதாரமற்ற வதந்திகள்” என கமத்தொழில் அமைச்சு மறுப்பு தெரிவித்தது. 1990ன் இறுதிமாதங்கள் முழுவதும், பஞ்சம் நிலவுவதை ஒப்புக் கொள்ளவோ, நிவாரண உதவி கோரி விண்ணப்பம் விடுக்கவோ அரசு மறுத்துவிட்டது. வெறும் 75,000 தொன் மாத்திரமே தானியத்தின் "உணவுப் பற்றாக்குறை” என்று இவ்விகாரத்தை அரசு 6) 1доoоћ4.g55).
யதார்த்தத்துக்கு முகம் கொடுக்க மறுக்கும் தனது "விடாக்கண்டன்” போக்குக்கு நல்லொழுக்க நடத்தைக்கென காட்ட அரசு முயற்சித்தது. அதன் அடிப்படைவாதக் கொள்கை மேலைய மனிதாபிமான இயக்கங்களின் செயற்பாடுகளுக்கு நேர் விரோதமானதாய் விளங்கியது. இவ்வியக்கங்கள் தம் சொந்த நோக்கங்களுக்காக பஞ்சத்தைப்
33

Page 21
பயன்படுத்துகின்றனவென்று சூடான் மக்கள் விடுதலை இயக்கத்துடன் சேர்ந்து அரசுக்கெதிராகச் சதிசெய்கின்றன வென்றும் குற்றஞ் சாட்டப்பட்டது. "பஞ்சம் நிலவுவதென பிரகடனப்படுத்தப்பட்டாலும் கூட நாம் உணவு உதவியை ஏற்றுக் கொள்ள மாட்டோப்" என்று அகம்பாவமாய் கூறினார் ஒரு பிரபல அரசியல் ஆலோசகர்
உணவுதவி விநியோகத்துக்கு தடங்கல் உண்டு பண்ணியதோடு, நிவாரண அமைப்புகளுக்கு தொந்தரவு உண்டுபண்ணியதோடு, நிவான அமைப்புகளுக்கு இன்னல் விளைவித்தது பஷீர் அரசு. இறுதியில் அரசாங்கம் சமரச உடன்பாட்டுக்கு வந்து, நிவாரண அமைப்புகளின், மதிப்பீட்டின் படியான உணவுத் தேவைகளை ஒப்புக் கொண்ட போதிலும் சம்பிரதாயபூர்வமாக பஞ்சம் நிலவுவதாய் அறிவிக்கவில்லை. பஞ்சம் நிலவ வில்லையெனவும் ஒருவரும் சாகவில்லையெனவும் சூடான் அரசாங்கம் தொடர்ந்து சாதித்த போதும் ஓரளவு இணங்கத் தொடங்கிய போது காலங்கடந்து விட்டது.
மரண வீதம் பற்றிய முறையான விசாரணையெதுவும் அனுமதிக்கப்படவில்லை. ஜனநாயக கணக்குக் காட்டும் கடமைப்பாட்டை அரசாங்கம் ஏற்காதபடியால், முற்று முழுதாக தடுக்கப்படிருக்கக்கூடிய ஒரு மாபெரும் சோகம் நிகழ்ந்து முடிந்தமைக்கு இப்பஞ்சம் தெட்டத் தெளிவான ஓர் உதாரணமாகும். இதுவே "உமர் அல் பஷ்ரின் பஞ்சம்"
(3) போர்ப்பஞ்சம், 1985 - 89
1985 - 9ன் தென்பகுதிப் பஞ்சம் இரண்டு அம்சங்களில், அடிப்படை வித்தியாசமானது. நிமெய்ரியுடையவும் பஷீருடையவும் இரு இராணுவ அரசாங்கங்களுக்கும் இடைப்பட்ட குறுகிய காலத்தில் சூடானில் பாராளுமன்ற ஆட்சி நடந்த போதும் நிலவிய பஞ்சம் இக்காலத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் இயங்கிக் கொண்டிருந்தன. பத்திரிகைகள் மீதும் சுதந்திரமான தொழில் சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் மீதும், தணிக்கையோ தடையோ அவ்வளவாக விதிக்கப்படவில்லை நாற்பதுக்கு அதிகமான சஞ்சிகைகள், செய்தித் தாள்கள் வெளிவந்து கொண்டிருந்தன. இவை அடிக்கடி அரசாங்கத்தை விமர்சித்தன. இரண்டாவதாக இப்பஞ்சம் நிலவியது தெற்கில். இப்பகுதியில், சூடானிய சமூகத்தின் அரபு பேசும் மக்களின் ஆதரவைப் பெற்ற அரசாங்கத்துக்கு அரபியரல்லாத, முஸ்லிமல்லாத தெற்கத்தியரின் ஆதரவைப் பெற்ற சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தினரிடையே உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்தது. தெற்கத்தியர்கள் வடக்குச் சூடானில் நீண்டகாலமாக இனப்பாகுபாட்டுக்கு ஆளாகி "இரண்டாந்தரக்
34

குடிமக்களாய்” நடத்தப் பட்டனர். என நியாயத்துடன் வாதிக்கப்பட்டது. இக்காலகட்டத்தில் நேர்ந்த இப்பஞ்சம் அதனை நிரூபிக்கின்றது.
தெற்கில் ஏற்பட்ட பஞ்சம் போரினால் விளைந்ததாகும். இதற்கு இயற்கையின் கொடுமை காரணி எப்போதும் போலவே முக்கியமானதாய் விளங்காத போதும் பஞ்சம் சர்வதேசக் கவனத்தைக் பெற்றது சூடான் பத்திரிகைகளும், சர்வதேச பத்திரிகைகளும், நிவாரண அமைப்புகளும் தட்பவெப்ப நிலை மீதே எப்போதும் போலக் குற்றம் சாட்டின.* சூடான் மக்கள் விடுதலை இயக்கம், நிமெய்ரியின் ஆட்சியை வீழ்த்துவதில் வகித்த பங்கு காரணமாக வட சூடானில் 1985ல் செல்வாக்குப் பெற்றிருந்த போதும், அதன் தலைவர் கர்னல் ஜோன் கராங், புதிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்க மறுத்து அதற்குப் பதிலாக, போர் தொடர்ந்து நடைப்பெற வேண்டுமென வலியுறுத்தியதன் காரணமாக அச்செல்வாக்கு குன்றத் தொடங்கிற்று. 1986ல் பல கட்சிகள் போட்டியிட்டு சுதந்திரமாய் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் ஸாதிக் அல் மஹ்தியின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. சூடான் மக்கள் விடுதலை இயக்கம் சமாதான பேச்சு வார்த்தைகளுக்கான அழைப்பை நிராகரித்தது. அதே வேளை தெற்குடன் சமரசம் செய்து கொள்ள வேண்டுமெனக் குரலெழுப்பிய வடபாலுள்ள மாற்றுக் கருத்தினரை அரசாங்கம் போரைக் காரணங்காட்டி நசுக்கியது.
எதியோப்பியாவில் காணப்பட்டது போலவே போர் சம்பந்தப்பட்ட பிரச்சினையும் பஞ்சம் சம்பந்தப்பட்ட பிரச்சினையும் ஒன்றோடென்று பின்னிப் பிணைந்து விளங்கின்று. போரின் பேரால் தெற்கு பற்றிய தகவல்கள் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் பஞ்சம் பற்றிய செய்திகளை இருட்டடிப்பு செய்யவும் உதவும். சூடான் மக்கள் விடுதலை இயக்கத்துடன் பேச்சு வார்த்தைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனக் கூறியவர்களுக்கெதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பஞ்சம் பற்றிய பிரச்சினை விவாதிக்கப்படுவதனைக் தடுத்தன. இறுதியாக, சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் மீது அரசு கொண்டிருந்த வெறுப்பு தெற்கில் குடிமக்களுக்கு நேர்ந்த அவலநிலை பற்றிய அலட்சிய போக்குக்கு வழிவகுத்தது.
பிபிசி சேவையின் பகுதிநேர பத்திரிகையாளராய் கடமையாற்றிய, தெற்கின் தலைநகரான ஜூபாவைச் சேர்ந்த மைக் கிலொங்ஸன் அங்கு மோசமடைந்து வரும் பஞ்சம் குறித்து மார்ச் 1986ல் அறிவித்த போது,
25. பார்க்கவும், கீழேயும், அத்துடன் ஆபிரிக்கா காவலன் “கெளரவமான வாழ்வு” மறுக்கப்படல்,
சூடான், மனித உரிமைகள் துவம்சம், 1990 அத்தியாயம் 4.
35

Page 22
போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமுலிலிருந்த அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருமாதங்கள் சிறையிலிருந்தார். அல்-மெதான் என்ற கம்யூனிஸ்ட் செய்தித் தாளுக்காக, சித்தீக் அல் ஸெய்லால் என்ற மற்றொரு பத்திரிகையாளர் அரசாங்க ஆதரவிலான இராணுவ ஒடுக்குமுறை குறித்து விசாரணை மேற்கொண்ட போது அச்சுறுத்தப்பட்டதோடு, இறுதியில் 1989ல் கைது செய்யப்பட்டார். போர்ப் பிராந்தியங்களில் பணிபுரிவதும் பயங்கரமாயிற்று 19876) பத்திரிகையாளர் ஒருவர் கண்ணிவெடியில் சிக்கி உயிரிழந்தார். செய்திகள் தேடி பயணங்கள் மேற்கொள்ள விரும்பிய பத்திரிகையாளர் மீதும் அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. பஞ்சம் சம்பந்தமான தகவல்களைத் திரட்ட விரும்பரிய மற்றைய பத்திரிகையாளர்களையும் இச்சம்பவங்கள் இடைநிறுத்தின.
வடக்கின் மக்கள் தொடர்புச் சாதனங்கள் கடைபிடித்த சுய தணிக்கையும், அலட்சியப் போக்கும் எத்தகையதெனில், பஞ்சம் பாரிய அளவில் வடக்கில் பரவத் தொடங்கியும் அவை செய்தி வெளியிட முன்வரவில்லை. உதாரணமாக ஏப்ரல் 1988ல் தெற்கிலிருந்து பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான அகதிகளையேற்றிக் கொண்டு ரயில் வண்டியொன்று கார்ட்டுமை வந்தடைந்தது. ரெயில் பெட்டிகளுக்குள் இடமின்மையால் நசுங்குண்டு பலர் உயிரிழந்தனர். வழியில் காணப்பட்ட ரெயில் நிலையங்களில் இன்னும் பலர் மாண்டொழிந்தனர். தூங்கும் குழந்தைகள் ரெயில் வண்டிக்கூரையிலிருந்து உருண்டு வீழ்ந்து ரயில்பாதையோரங்களிலுல் இறந்து கிடந்தனர். கார்ட்ரூம் ரயில் பாதையோர நிலையத்தில் ஆறுகுழந்தைகள் இறந்து வீழ்ந்தனர். அரபுமொழியில் வெளியான செய்தித் தாள்கள் ஒன்று கூட இச்செய்தியை அறிவிக்கவில்லை. தெற்குச் சார்பான "சூடான் டைம்ஸ்" என்ற ஆங்கில பத்திரிகை மட்டுமே இச் செய்தியை வெளியிட்டது. மத்திய கார்ட்டுமில் நிகழ்ந்துங் கூட தெற்கைச் சேர்ந்த குடிமக்களின் பரிதாபமரணம் வடக்கின் வாசகர்களது கவனத்துக்குரியதாய்க் கருதப்படவில்லை. தெற்கில் நிலவிய பஞ்சத்தை வெகுவாகக் குறைப்பது, நிவாரணப் பொருட்கள் அனுபவிக்கப்படுவதற்குச் சாத்தியமான முறையில் இராணுவம் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கமும் சூடான் மக்கள் விடுதலை இயக்கமும் உடன்பாடு அகாண்பதிலேயே தங்கியுள்ளதென்பதை 1986 முதற்கொண்டு, மனிதாபிமான உதவி நிறுவனங்கள் உணரத் தலைப்பட்டன. நிவாரணங்களின் பக்கச் சார்பற்றதன்மையையும் நிவாரண உதவி குடிமக்களைப் போய்ச் சேரும் பொறுப்பையும், குடிமக்களுக்காக அமைதிப் பிரதேசங்களை ஒதுக்கவும் உறுதிப்படுத்தும் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன.
36

1986ல் சிறிது முன்னேற்றம் காணப்பட்ட போதிலும் உதவி நிறுவனங்கள் மீது அரசு விதித்த கட்டுப்பாடு காரணமாய் நிலைமை Լյ60ւՔաւ 1ւգபின்னடைந்து அங்கு தங்கியிருந்த ஐ.நா. பிரதிநிதி அக்டோபரில் வெளியேற்றப்பட்டது. இவ்வகையில் அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகளில் ஒன்றாகும். உதவி தேவையென்பதை அரசாங்கம் தொடர்ந்து மறுத்து வந்தது. தேவைகள் நிவர்த்தி செய்யப்படுவதாய் சாதித்தது. (விநியோகங்கள் மேற்கொள்ளப்படுவதாய், சில சமயங்களில் கற்பனைக் கயிறு திரிந்தது). தெற்கில் வாழும் குடிமக்களின் தேவைகளை முழுதாகப் புறக்கணித்தது. மார்ச் 1989ல் நிவாரண பிரேரணைகள் மீண்டும் புத்துயிரூட்டப்பட்ட போது தான் இறுதியில் சிறிது பலனேற்பட்டது. போரை நிறுத்துமாறு உள்நாட்டிலும் சர்வதேச அரசிலும் மிகப்பெரிய அளவில் நிர்ப்பந்தம் உண்டுபண்ணப்பட்ட பின்னரே இது சாத்தியமாயிற்று.
இதற்கு நேர்மாற்றமாக, கார்ட்டும் வாசிகளின் கோரிக்கைகளுக்குச் சூடான் அரசு உணர்ச்சி பூர்வமாகச் செவிசாய்த்தது. சூடானிய அளவு கோளின்படி வசதிபடைத்த வகுப்பினரான இவர்கள் குறிப்பிட்ட - மிகவும் குறைந்த, மானியவிலைக்கு பாண் பெற முடிந்தது. 1980 க்களில் பாணுக்காக மானிய வருடமொன்றுக்கு 9 கோடி அமெரிக்க டாலராக அதிகரித்தது. சூடான் சர்வதேச நாணய நிதியிலிருந்து உதவி பெறுவதற்கு அம்மானியத்தை நீக்குவதால் பாரிய நன்மை ஏற்படவிருந்த போதிலும், அரசாங்கத்தால் அது முடியாமல் போயிற்று. வீதியில் நடந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும், தேசிய சபையில் காட்டப்பட்ட எதிர்ப்பும் மானியத் திட்டத்தைத் தொடர்ந்து வைத்திருக்குமாறு நிர்ப்பந்தித்தன.
நிவாரண உதவி பெறும் உரிமையை அதிகரிக்குமாறு கோரி தென்னகத்தவர்கள் ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்றையும் நடத்தவில்லை. தெற்கில் காட்டப்படும் எதிர்ப்பு அசட்டை செய்யப்பட்டிருக்கும். கார்ட்டுமில் எதிர்ப்பு அசட்டை செய்யப்பட்டிருக்கும். போர் காரணமாய் அநேக சந்தர்ப்பங்களில் இனப்பதற்றம் நிலவியபோது கார்ட்டூமிலிருந்து தென்னகத்தவரை வெளியேற்றப் போவதாய் அரசு பயமுறுத்தியது. ஒரு முறை அவ்வாறு செய்தும் காட்டிற்று.
சுருக்கமாக, உள்நாட்டு யுத்தம், இனப்பாகுபாடு ஆகிய சூழ்நிலைகளில்
ஓர் அரசாங்கம் குடிமக்களின் ஒரு பகுதியினரின் தேவைகளை முழுமையாக புறக்கணித்து மற்றொரு பகுதியனருக்கு மட்டும்
37

Page 23
பொறுப்பாளியாய் இருத்தல் முடியுமென்பதனை 1985 89ல் தென் சூடானில் ஏற்பட்ட பஞ்சம் துலக்கத்துலாம்பரமாய்க் காட்டுகின்றது.
எதிர்மறை உதாரணம் 4 : சோமாலியா
சமகால உலகின் படுமோசமான பஞ்சம் 1992ல் சோமாலியாவைப் பீடித்தது. இவ்வளவு கடுமையான பஞ்சம் இந்நாட்டின் வரலாற்றிலேயே இதற்கு முன் ஏற்பட்டதில்லை. உள்நாட்டு யுத்தம், வழிப்பறிக் கொள்ளை இவற்றின் விளைவாக குடிமக்கள் சமூக அமைப்பு சின்னாபின்னமுற்றமை - இவற்றால் நாட்டில் உணவு விநியோக முறை சீர்குலைந்தமையே இப்பஞ்சத்திற்கான உடனடிக் காரணங்கள். வரட்சிக்கும் இதில் சிறிது பங்குண்டுதான். எனினும் முன்னாள் சர்வாதிகாரி சியாத் பாரேயின் 21 வருட ஆட்சிவிட்டுச் சென்ற எச்சசொச்சமாகவே இப்பஞ்சம் ஆழமாக வேரோடிக் கிடக்கின்றது.
1969 இராணுவச் சதி மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய காலந்தொட்டு ஜனவரி 1991ல் தலைநகரான முகத்திஸ"வில் ஏற்பட்ட பயங்கரக் கிளர்ச்சியால் ஆட்சியிலிருந்து விரட்டப்படும் வரை சியாத் பர்ரே சோமாலியாவை ஆட்சிபுரிந்தார். எதிர்ப்பையோ, மாற்றுக் கருத்துக்களையோ பர்ரே சகித்துக் கொண்டிருந்ததில்லை. சோமாலியாவின் கோத்திர அமைப்பு முறை மீது முதலில் குறிவைத்தார் பர்ரே, தனது விஞ்ஞான சோஷலிஸப் புரட்சிக்கு விரோதமானதாய் அவர் இவ்வமைப்பை கருதினார். அதுகால வரை கோத்திர அமைப்பு சோமாலியா சமூக அரசியல் அமைப்பின் தனித்துவமான அம்சமாய் நீடித்திருந்தது. கோத்திரங்களிடையே போட்டியும், மோதலும் இருந்திருந்து பொருளாதார வளர்ச்சியைப் பின்னடையச் செய்த போதும் தகராறுகளைத் தீர்ப்பதிலும், சமாதானத்தை நிலைநிறுத்துவதிலும் இனக்குழுத் தலைவர்கள் பிரதான பங்கு வகித்து வந்தனர். 1969ல் இருந்து சியாத் பர்ரே நாட்டின் மரபு வழித் தலைவர்களைச் சிறையில் தள்ளியும் சித்திரவதை செய்தும் அவர்களை அழித்தொழித்தார். கோத்திர அடையாளம் தனித்துவம் - என்பது தடைசெய்யப்பட்ட விவகாரமாயிற்று. கோத்திரப் பெயர்களைப் பகிரங்கமாய் மொழிவது சட்டவிரோதமாயிற்று. ஆனால் கோத்திரப் பற்றுக்கள் ஒழித்துக் காட்டப்படவில்லை. குறிப்பாக தனது ஆட்சிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டபோது, சியாத்பர்ரே கோத்திர பாங்கான அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். தனது மரேஹான் கோத்திரத்துக்கும், தேரோட் கோத்திரத்தோடு இணைந்த ஏனைய கோத்திரக் குழுவினருக்கும் பர்ரே வெகுமதிகள் வழங்கினார்.
சியாதின் ஒடுக்குமுறை, குடிமக்கள் அமைப்பு உருவெடுத்து
38

இயங்குவதை தடுத்தது. சுதந்திர தொழிற் சங்கங்களும், உத்தியோகம் சார்ந்த சங்கங்களும் தடை செய்யப்பட்டன. பல்கலைக்கழக பலத்த கட்டுப்பாட்டில் இருந்தது. தணிக்கை பரவி சர்வசாதாரண வழக்கமாயிருந்தது. சியாதின் ஒடுக்குமுறையாட்சியோடு தொடர்புடைய இராணுவம், பாதுகாப்புச் சேவை, மற்றும் தேசிய பொருளாதாரத்தின் மீது சியாதுக்கிருந்த நேர்மையற்ற இறுக்கப்பிடியுடன் தொடர்புடைய பாதாள உலகக்கிராகதர்கள் அமைப்பால் கடத்தல், சூறையாடல் மூலம் நடந்த வர்த்தகம் இவையே நடைமுறையில் காணப்பட்ட அமைப்புகள். அதே வேளை (1977 வரை) சோவியத் ஆதரவுடன் (அதற்குப் பின்) அமெரிக்க ஆதரவுடனும் நவீன ஆயுதங்கள் குவித்து பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சியளிக்கப்பட்டது. ஊழலும், வன்முறையுமே நாட்டின் தனிப்பட்ட அரசியல் பண்பாடாய் விளங்கிற்று.
பாழ்பட்ட காலத்தின் பலனாய் சியாத் பர்ரேக்கு எதிராக உருவான எதிர்ப்பு பர்ரேயின் படுகீழ்த்தரமான அரசியல் பாணியை விட அப்படியொன்றும் உயர்வானதாய்த் தோன்றவில்லை. கோத்திரச் சலுகை, குடும்பச் சலுகை, ஊழல் மலிந்த வர்த்தக ஒப்பந்தங்கள், இளைஞருக்கு ஆயுதம் வழங்கி கொள்ளையடிப்பதற்கு அனுமதி அளித்தல் என்பவற்றின் அடிப்படையிலேயே எதிர்ப்பியக்கங்கள் இயங்கின.
இவ்வாறு, இறுதியில் 1991ல் முகத்திஸ"விலிருந்து சியாத் பர்ரே விரட்டியடிக்கப்பட்ட போது, ஆட்சியை ஏற்றுச் செயல்பட்டு குறைந்த பட்ச ஜனநாயகப் பொறுப்புணர்ச்சியோடும், பிரச்சினைத் தீர்வுகாணும் உறுதியோடும் சமூகத்தைப் புணரமைக்கக் கூடிய அமைப்பொன்று அங்கு காணப் படவரில் லை. மரபுவழி அமைப்புக்கள் அழித்தொழிக்கப்பட்டும், நவீன அமைப்புகள் பிறப்பிலேயே நசுக்கப்பட்டுச் செயலிழந்தன. இதன் விளைவாய் கோத்திரக் குழுக்கள் சீரழிந்தது மட்டுமல்லாமல் வணிக அடிப்படையிலான சண்டைகளும் gD G6ööTL LfTuñ?60T.
சோமாலியாவின் கிராமப் புறங்கள் சியாத் பர்ரே ஆட்சியால் சிறிதும் நன்மையடையவில்லை. நாட்டின் தென்பகுதியையும் மத்திய பகுதியையும் சேர்ந்த உழவர் மக்களைப் பொறுத்த மட்டில் இதுவே உண்மை. பிரதான இடையர் கோத்திரக் குடும்பங்களோடு ஒப்பிடுகையில் சோமாலியா சமூகத்தில் பரம்பரை பரம்பரையாய் வசதிவாய்ப்புகள் குறைந்தன. முன்னாள் அடிமைகளின் பரம்பரையினர், ரஹான்வெய்ன்
39

Page 24
சோமாலி கோத்திரத்தையும், பண்ட்டு கூட்டத்தையும் சேர்ந்தோர்: இவர்களே இம்மக்கள் கூட்டத்தினர். இவர்கள் சுரண்டப்படுவதற்கு வசதியாய்க் காணப்பட்டனர். உதாரணமாய், ரஹான் வெய்ன் கோத்திரத்தின் உபகுழுவான கபாவெய்ன் சாதியார் ஜுபா நதியின் மேற்பகுதிக் கரையோரங்களில் வசித்து வந்தனர். சியாத் பர்ரேயின் இனமான மரே ஹான் குழுவினரது தாயகத்தையடு தீதே இப்பகுதியிலிருந்து, கபாவெய்ன் சாதியினரின் வளம் நிறைந்த நிலம் அவர்கள் வாழ்வில் செழுமையைக் கொடுத்திருக்க, ஆனால் அதற்குப் பதிலாய், மராஹென் குழுவினர் அவர்களைக் கிரமமாக, வன்முறை மூலம் தம் சொந்த நிலங்களிலிருந்து வெளியேற்றுவது 1980க்களின் நடுப்பகுதியில் உறுதிப்படுத்தப்பட்டது. காபாவெய்ன் சாதியினருக்குச் சொந்தமான நிலங்களை மராஹெய்ன் சாதியினர் கமத்தொழில் அமைச்சில் பணியாற்றிய தம் உறவினர்களைப் பயன்படுத்தித் தம் பெயர்களில் பதிவு செய்து கொண்டனர். அல்லது துப்பாக்கி முனையில் உள்ளூர் உழவர்கள் வெளியேற்றப்பட்டனர். அதே போல், பண்ட்டு கூட்டத்தைச் சேர்ந்த அநேகர் தம் நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு, அந்நிலங்கள் வாழை, கரும்பு பயிர்ச் செய்கைக்காய் பயன்படுத்தப்பட்டன.
வசதிவாய்ப்பற்ற பகுதியினர் என்ற முறையில் உழவர்கள் சியாத் பரிரேக்கு எதிராகச் சண்டையிட்டு வந்த சக்திகளுடன் இணைந்து கொள்வதற்காய் ஆயுதங்களைப் பெறுவது கடினமாயிருந்தது. இவ்வாறு, 1992ல் குழப்பநிலை தலைவிரித்தாடிய போது, தம்மைவிட ஆயுத வசதிகொண்ட அயலவர்களால் சூறையாடப்பட்டனர். ஜூபா, ஸெபெள பள்ளத்தாக்குகளையும், குடாப் பகுதியின் வறண்ட வேளாண்மை நிலத்தையும் சேர்ந்த உழவர்கள் போராடிய இனக்குழுக்களின் வெவ்வேறு இராணுவப் பிரிவினரால் மும்முறை சூறையாடப்பட்டனர். அங்கு வசித்தவர்களால், தாக்குப் பிடித்து நிற்க முடியவில்லை. அவர்கள் தம் பயிர்களையும், கால் நடைகளையும் மற்றும் உடைமைகள் பலவற்றையும் பறிகொடுத்தனர். பாதைகளிலிருந்து தொலை தூரக் கிராமங்களால் மட்டுமே ஒருசில வசதிகளுடன் தப்பிப் பிழைக்க முடிந்தது.
நவறான்வெய்ன் குழுவினரும், பண்ட்டு கூட்டத்தினருமே பஞ்சத்தால் மிகவும் பாதிக்கப்பட்டோரென்பது அதிசயமன்று. மிகவும் பாதிக்கப்பட்ட ஏனையோர், போரினால் இடம்பெயர்ந்து பரிதாபமான நிலையில் அகதி முகாம்களிலும் புறநகர்களிலும் அடைக்கலம் புக நேர்ந்தது. அதிகாரத்திற்காகப் போராடிக் கொண்டிருந்த ஆயுதந்தரித்த இடையர் சமூகத்தினரான இனக்குழுக்கள் அதிகம் பாதிக்கப்படாதவர்களாவர்.
40

ஒவ்வொரு குழுவினுள்ளும் ஒருவரையொருவர் ஆதரிப்பதும் குறைந்தளவு கணக்குக்காட்டும் பொறுப்புணர்வும் காணப்பட்டது. பாரம்பரிய இனக்குழு தலைவர்களிடம் பிரச்சினைகளைத் தவிர்க்கக் கூடிய அளவு அதிகாரம் இல்லாத போதும் நிவாரணங் கிடைக்கும் போது தம் இனக்குழுவைச் சேர்ந்தோர் போதியளவு உணவு நிவாரணம் பெறச் செய்வதற்கு அவர்கள் செல்வாக்குள்ளவர்களாய் விளங்கினர். உணவு விநியோகத்துக்காக நிவாரண நிறுவன ஊழியர் இனக்குழுக்களைச் சேர்ந்த முதியோர்களுடன் தொடர்பு கொண்டனர். நடைமுறைச் சாத்தியப்பாடும், பாதுகாப்பும், தொடர்பு கொள்ளக்கூடிய வசதியும் உள்ள குழுவினர் விநியோக ஒப்பந்தங்களுக்கு முன்னுரிமை பெற்றனர். இதனால் ஹாவியே போன்ற வெகுசக்தி வாய்ந்த இனக் குழுவினர் முதன்முதல் உணவு பெற்றனர். சக்தி குறைந்த இனக் குழுக்கள் அடுத்து உணவு பெற்றனர். இனக்குழு அமைப்புக்கு வெளியே காணப்பட்ட பண்ட்டு கூட்டத்தினர், எத்தியோப்பிய அகதிகள் போன்றோருக்குக் கடைசியில்தான் உணவு கிடைத்தது; அல்லது கிடைக்காமல் போயிற்று. சோமாலியாவில் உண்டான பஞ்சம் கொடூரமான உள்நாட்டு யுத்தத்தால் விளைந்ததாகும், என்ற போதிலும், யுத்தம் நடந்த முறையும், பஞ்சம் உண்டான விதமும் முன்னாள் சர்வாதிகார ஆட்சியால் நிறுவப்பட்ட அரசியல் ஒடுக்குமுறையை ஒரு புறமும், சன்மானங்களை வழங்கும் முறையை மறுபுறமும் பிரதிபலிக்கின்றது.
சர்வதேச உதவி
பாரிய அளவு சர்வதேச உணவு உதவிகளைப் பெறுவதன் மூலம் மட்டும் எந்தவொரு நாடும் பஞ்ச அபாய நிலையிலிருந்து பஞ்சம் நீங்கிய விமோசனம் பெற்ற நிலைக்கு வளர்ச்சியடைந்ததில்லையென்பது கண்டறிந்த உண்மையாகும். இது சர்வதேச உதவி பற்றிய அடிப்படை பிரச்சினையொன்றை சுட்டிக் காட்டுவதாக உள்ளது.
பெரும்பாலான பஞ்சநிவாரண சர்வதேச உதவிகள் தொழில் நுட்ப ரீதியாய் பலவிதத்திலும் குறைபாடுள்ளவையே. பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட சமூகம் குறித்தும், அதன் பொருளாதாரம் குறித்தும் போதியளவு தகவல் கிடைக்காத நிலையில் அவசரமாக அனுப்பி வைக்கப்படும் இவ்வுதவிகள், அதிக நன்மை பயக்காத பஞ்சநிவாரண நேரடி விநியோக முறையை அடிப்படையாகக் கொண்டவை. இது எவ்வாறிருப் பினும், உதவி பெறும் நாட்டின் ஜனநாயக முறையில் கணக்குக்காட்டும் பொறுப்பை அது மலிவடையச் செய்துவிடுகிறதென்பதே மிகவும் அடிப்படையான பிரச்சினையாகும்.
41

Page 25
பஞ்சத்தினால் பாதிப்புறும் நாட்டின் கிராமப்பகுதி மக்களுக்கு சருவதேச உதவி முக்கியமான ஆனால், அற்ப சொற்பமான உதவியேயாகும். பொதுவாக உதவி பெறும் நாட்டின் நிதி நிலைக்கும் அந்நியச் செலாவணி சம்பாத்தியத்துக்கு இவ்வுதவியின் பங்களிப்பு மிகப்பெரிது. தன்ஸானியாவில் 1980ல் சருவதேச உதவி மொத்த தேசிய விளைபொருளில் 18.1 வீதமாகும். உள்நாட்டு அறவீட்டில் 106.8 சதவீதமும் ஏற்றுமதி வருவர்யில் 152.8 சதவீதமும் ஆகும். பிரிட்டிஷ் பொருளாதார அறிஞர் பவ்வர் பிரபுவின் வார்த்தைகளில்:
"விண்ணிலிருந்து விழும் இன்னமுது போன்று பாரபட்சமின்றி மக்களை நாடி உதவி வந்து இறங்குவதில்லை. அது நேரடியாக அரசாங்கத்தையே போய்ச் சேருகின்றது. உதவி அரசாங்கத்தைப் போய்ச் சேர்வதால் சமூகத்தின் ஏனைய பகுதிகளைவிடவும் அரசின் வளங்களும், செல்வாக்கும், அதிகாரமும் அதிகரிக்கின்றது. இதன் விளைவாய் வாழ்க்கையில் ஏற்படும் அரசியல் நோக்குக் கலந்த நடைமுறை மக்கள் மீது அரசின் பிடியை இறுகச் செய்வதோடு அதிகாரத்திற்கான போராட்டத்தின் அதன் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கிறது.*
பவ்வர் பேசியது அபிவிருத்தி உதவி பற்றி, அதிகமான பஞ்சநிவாரண உதவிகள் நேரடியாக மக்களுக்கே அனுப்பப்படுகின்றது. என்றபோதிலும், அதே அடிப்படைகள் பரவலாக இங்கும் பொருந்துகின்றன. அதிகாரப் போட்டி மீதுள்ள நாட்டம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளிலிருந்து மக்களைத் திசைதிருப்பி, ஆயுதமோதலில் போய் முடியக்கூடும் என அவர் ஆதங்கப்பட்டார்.
உதவியின் முக்கியமான மற்றொரு இயற்கையான விளைவு பற்றி பவ்வர் குறிப்பிடத்தவறிவிட்டார். மக்கள் மீது அரசாங்கத்திற்குள்ள பொறுப்பின் முக்கிய கோட்பாடொன்றை அது அகற்றி விடுகின்றது. "பிரதிநிதித்துவமின்றி வரிவிதிப்பு கிடையாது” என்பது ஜனநாயக சமூகங்களின் ஓர் அடிப்படைக் கோட்பாடாகும். சர்வதேச உதவியை நம்பியிருக்கும் ஒரு நாட்டின் அரசாங்கம் “வரிவசூலிக்க முடியாவிட்டால் பிரதிநிதித்துவமில்லை என்ற இக்கோட்பாட்டை மாற்றிக் கொள்ளக் கூடும். அநேக வறிய நாடுகள் தம் சொந்த வாக்காளர்களை விட,
26. பீட்டர் பவ்வர் "அபிவிருத்தி எல்லைப் பகுதி பிரயோகப் பொருளாதாரக் கட்டுரைகள்"
லண்டன் 1991 பக்கம். 45.
42

மேற்கத்திய உதவியாளர்களுக்கு அதிகம் கணக்குக் காட்டும் பொறுப்பாளிகளாய் விட்டனர்.
அரசு தக்க நடவடிக்கையெடுக்க தவறிய போதும், மேற்கத்திய உதவியாளர்கள் அவசரமாகவும், பொறுப்புடனும் நடவடிக்கையெடுத்தால் பஞ்சத்தைத் தடுக்க முடியுமென்பதை மேலே காட்டப்பட்ட தன்ஸானியா உதாரணம் காட்டுகின்றது. என்ற போதும், இது வழக்கத்துக்கு மாறானதோர் உதாரணமாகும். பெரும்பாலான விவகாரங்கள் இதற்கு மாற்றமான உதாரணங்களாய் விளங்குகின்றன. பங்களாதேஷுக்கு அமெரிக்க உணவு உதவி துண்டிக்கப்பட்டதனால் உண்டான 1974ன் பஞ்சம் இதற்கு நல்லதோர் உதாரணமாகும்.
உதவியாளர்களுக்குக் கணக்குக் காட்ட முந்தும் போக்கு மிகச் சிறந்த உதாரணத்தை சூடான் 1984 வழங்குகின்றது. பஞ்சம் அதிகரித்து வரும் வேளையில் சூடானின் நிதியமைச்சர் அமெரிக்க திறைச்சேரியோடும், சர்வதேச நிதியத்தோடும் தினசரி தொடர்பு கொண்டு, அரசின் கடன் பிரச்சினையை தீர்ப்பதற்கும், ஜனாதிபதி நிமெய்ரி பதவியில் ஒட்டிக் கொணடிருப்பதற்குத் தேவையான வர்த்தகர்களுக்கும், இராணுவ அதிகாரிகளுக்கும் பெருந்தொகையான கொடுப்பனவுகளைத் தொடர்வதற்கும் நிதி உதவி கிடைப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முயன்றார். மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பதற்கு அரசுக்கு ஆர்வமோ, அக்கறையோ, தேவையோ நேரமோ இருக்கவில்லை. நிமெய்ரி பஞ்சத்தை அறிவிப்பதற்கு நான்கு மாதங்களுக்கு முன் அமெரிக்கா 250, 000 தொன் பஞ்ச நிவாரணத்துக்கான பண்டங்களை அனுப்பத்தான் செய்தது. பஞ்சத்தின் பாதிப்பைக் குறைப்பதற்கு இவ்வுதவி சாதகமானதெனினும், உடனடியாகவும், பகிரங்கமாகவும் அரசு விண்ணப்பித்திருந்தால், இதனை விடவும் அதிகமான உள்நாட்டு வெளிநாட்டு உதவிகள் பெறப்பட்டிருக்கலாம்.
அதே போன்று 1990 ஸ்விம்பாப்பேயில், நாட்டின் கடனுதவி யாளர்களதும், நன்கொடையாளர்களதும் கோரிக்கைகளில் மாற்றம் நிகழ்ந்தமை, உணவு பாதுகாப்பு கொள்கையில் பாதகமான மாற்றத்தை விளைவித்தது. தேசிய களஞ்சியத்தில் சேகரமாயிருந்த தானியம் காலியாவதற்கு வழி வகுத்தது. வாக்காளர்களையும், ஸிம்பாவேய்க்கு நிதி வழங்குவோர்களையும் வெகுவாகப்பாதித்த இம்முடிவு - மக்களோடு கலந்தாலோசியாமல், அந்நிய உதவியார்களுடன் பேசி எடுக்கப்பட்டதாகும். சர்வதேச நிதி நிறுவன அதிகாரிகள் தம்கொள்கைகளில் மாற்றம் நேரும்
43

Page 26
போது, பட்டினியால் பாதிக்கப்படுவதில்லை. எனவே அரசின் மீது வாக்காளர்களைவிட வித்தியாசமான கோரிக்கைகளை விடுக்க அவர்களால் முடிகிறது.
பஞ்சத்தைத் தடுப்பதில் சருவதேச உதவியானது பிரயோசனப் படுவதாயிருப்பின், பஞ்சத்தால் பீடிக்கப்படுவதை இலக்காவதை அதிகரிக்கவிடாது செய்து, அதனிடமிருந்து உதவி பெறும் நாடுகளின் அங்கு ஜனநாயக முறை கணக்குக்காட்டும் பொறுப்பை அதிகரிக்க வேண்டும். அத்தோடு, உதவியின் முழுமையான வழிமுறையும் அதே நேரத்தில் ஜனநாயகக்கணக்குக் காட்டலுக்கு உட்படுத்தப்படல் வேண்டும். தற்போது, சருவதேச உதவி நிறுவனங்கள் பெறுமளவு, கணக்குக் காட்டும் பொறுப்பற்றவையாகவே உள்ளன. வழக்கமாக, இப்பகுதியின் தொடக்கத்தில் கோடிட்டுக் காட்டப்பட்ட கொள்கைகளுக்கு இவை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே கட்டுப்படுகின்றன. பத்திரிகைகள் அவற்றின் நடவடிக்கைகள் மீது செல்வாக்கு செலுத்த முக்கிய பாத்திரம் வகித்த போதும், இவை தேவையான சந்தர்ப்பங்களில் எதிர்ப்புக்குரல் கொடுத்து, அவற்றின் செயல் முடமான தன்மையை விமர்சித்து, தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் முன்னால் விவகாரங்களை விளம்பரப்படுத்தும் பணி அடிக்கடி நிகழ்வதில்லை. இறுதியாக, அவர்களது பொது விசாரணைக்கு உட்படுத்தப்படுவது அரிதினும் அரிது. சருவதேச நிவாரண முயற்சிகள் தொடர்ந்து திறமையற்றதாயும், ஆமை வேகத்தில் நகர்வதாயுமிருப்பதற்குப் பிரதான காரணம் இக்குறைபாடுகளேயென்பதில் எள்ளத்தைனையும் சந்தேகமில்லை.
44

அத்தியாயம் I : நிலம்
அரசியல் குடிமக்கள் உரிமைகளைவிட சமூக பொருளாதார உரிமைகளுக்கு முதலிடமளிக்கப்பட வேண்டுமென விவாதிப்பதன் மூலம் அநேக வளர்முக அரசாங்கங்கள், ஆடம்பர வசதிகளான அரசியல் சுதந்திரங்கள் வழங்கப்படு முன் உணவு, உடை, உறையுள் போன்ற அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்யப்பட வேண்டுமென வாதாடுகின்றன. இவ்வாறு செய்வதால் அவை அநேக விவகாரங்களில், தம் சகாக்களான சில வளர்ச்சிடைந்த நாடுகளைப் போன்று தமது சொந்த கொள்கைகள் வறிய மக்களை மேலும் உடைமையற்ரோயும், தரித்திரர்களாயும் மாறச் செய்கின்றன என்பதை மறந்து விடுகின்றனர்.
இவ்வரசாங்கங்கள் - சிலவற்றின் பெயர்களைக் குறிப்பிடுவதாயின் கென்யா, இந்தோனேஷியா, சூடான், தென்னாபிரிக்கா, தாய்லாந்து சகல சமூக பொருளாதார உரிமைகளுக்கும் மூலாதாரமான வயிற்றுப்பிழைப்பு உரிமையே மிகவும் அடிப்படையான உரிமையென்பதை ஜயமின்றி ஒப்புக் கொள்கின்றன. ? வளர்முக நாடுகளின் நகர்ப்புறம், நாட்டுப்புறம் இரண்டிலும் வயிற்றுப்பிழைப்பு நேரடியாக நிலத்துடன் தொடர்புடையது: பண்ணைத் தொழில் செய்வதற்கு அல்லது மந்தைகளை மேய விடுவதற்கு நிலம், அல்லது கமத்தொழில் செய்தோ நாட்டின் பொருளாதாரத்தின் "மரபற்ற பகுதி" யான பல்வேறு சிறுதொழில்களின் ஏதாவதொன்றைப் புரிந்துகொண்டோ வசிப்பதற்கான நிலம் தேவை. சொந்தமான அல்லது குத்தகைக்கான, அல்லது குடியேறியுள்ள நிலம் அபகரிக்கப்படும் போது, அநேகமாக பரம ஏழைகளின் வயிற்றில் அடி விடுகின்றது. எனவே, சமூக, பொருளாதார உரிமைகளுக்கும் அரசியல் குடிமக்கள் உரிமைகளுக்கும் இடையிலுள்ள பிணைப்பு வெட்டவெளிச்சமாகிறது. கருத்துச் சுதந்திரமும் கூடி இயங்கும் தந்திரமும் கட்டுப்படுத்தப்பட்டு, நிறைவேற்று அதிகாரத்தின் மீது கட்டுப்பாடு நிலவாத போது, அல்லது அற்பக் கட்டுப்பாடே நிலவுகின்ற போது, ஒரு சமூகத்தினருக்கு நிலம் மறுப்பதோ, அல்லது அச்சமூகத்தின் வயிற்றுப்பிழைப்பு உரிமைகளை இழக்கச் செய்வதோ அரசாங்கத்துக்கு மிகவும் எளிது. எதிர்ப்பு ஒடுக்குமுறையைத் தூண்டிவிடுகிறது. அத்துடன் நீதி மன்றஞ் செல்லக் கூடிய வழிமுறையேதும் இல்லா திருந்தால், உடைமைகளையிழந்தோரை, நியாயங் கேட்டு குரெலழுப்பவோ, தம் இழப்புக்களுக்காக இழப்புப் பணம் பெறவோ வகையற்றவர்களாக்கி விடுகின்றது.
27. எந்தவொரு மக்கள் கூட்டத்துக்கும் அதன் வயிற்றுப்பிழைப்பு ஆதாரங்கள் எவ்வகையிலேனும்
மறுக்கப்படல் கூடாத" வாசகம் (2) பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகள் மீதான் சர்வதேச ஒப்பந்தம்.
45

Page 27
நிலவுரிமை பற்றிய நவீன கோட்பாடுகளும் அவற்றை வழிமுறைப்படுத்தும் சட்டத் தொகுதிகளும், நூற்றாண்டுகளாக தம் வயிற்றுப்பிழைப்புக்கு உதவிய நிலங்களிலிருந்து மக்களை வெளியேற்றுவதற்குத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. வெட்கக்கேடான உதாரணங்களிலொன்று, அமெரிக்காவின் பூர்வீகக் குடிகள் வந்தேறு குடிகளால் ஐக்கிய இராச்சியத்திலிருந்து அகற்றப்பட்டமை. இன அடிப்படையிலான, அல்லது வாழையடி வாழையாய் பாரம்பரிய அடிப்படையிலான நிலவுடைமை வந்தேறு குடியேற்றக்காரர்கள் ஏளனஞ் செய்தனர். தனி நபர் நிலவுடைமை எவ்வளவு வேகமாய் அறிமுகப்படுத்தப்படுகின்றதோ அவ்வளவு வேகத்தில் பூர்வீகக்குடிகள் நாகரீகப்படுத்தப்படலாம். அமெரிக்காவின் எல்லைப் பிரதேசத்தில் நிலத்துக்கு உரிமை கொண்டாடும் நடைமுறை பூர்வீகக் குடிகளைப் பெருமளவில் மிகச் சிறிய பகுதிகளுக்குத் தள்ளியது. பூர்வீகக் குடிகள் பல்லாயிரக் கணக்கில் கொல்லப்பட்டனர். தப்பிப் பிழைத்தோர் தரித்திரத்திலாழ்ந்தனர்.
ஏழைகள் தம் இருப்பிடங்களிலிருந்து அல்லது நிலங்களிலிருந்து விரட்டப்பட்ட சில சமீபத்திய சந்தர்ப்பங்களில் அங்கு நீர்ப்பாசனம், மின் விநியோகம், வீதி நிர்மாணம், சூழல் பாதுகாப்பு போன்ற அபிவிருத்திகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று விவாதிக்கப்படுகின்றது. பலரின் நன்மைக்காக ஒரு சிலர் தியாகம் புரிந்ததாக வேண்டும். இறுதியில் ஏழைகளே இதனால் நன்மையடைவர் எனப்படுகின்றது. 28 என்ற போதிலும், பெரும்பாலான விவகாரங்களில் மக்கள் வெளியேற்றப்படுவதற்கான காரணங்கள் அப்படியொன்றும் உன்னதமானவைகளாய்த் தென் படவில்லை . கண் றாவியை அப்புறப்படுத்தல்; அரசியல் ரீதியாகவோ இனரீதியாகவோ விரும்பத்தகாத மக்கள் கூட்டத்தை வெளியேற்றுதல் அல்லது அவர்களைப் பழிவாங்கல், அரசியல் அல்லது இராணுவ உயர் குடியினரின் வர்த்தக நலன்களைப் பேணல் எனப் போன்றவை.
குறிப்பிட்டவொரு கூட்டத்தினரின் வயிற்றுப்பிழைப்பை அச்சுறுத்தும் வெளியேற்றங்கள், உலகம் முழுவதும் பின்வரும் சந்தர்ப்பங்களில் நிகழந்துள்ளன:
1. நகர்ப்புற வெற்று நிலங்களில் உரிமையின்றித் தங்கியிருப்போர் தம் இனக்குழு அல்லது அரசியல் தொடர்பு காரணமாக அதிகார
28. இக் காரணங்களால் செல்லுபடியாகக் கூடிய சில விவகாரங்களில் கூட சம்பந்தப்பட்ட கருத்திட்டங்களைத் தீட்டுவதிலும், நடைமுறைப்படுத்துவதிலும் அரசாங்கங்கள் அடிக்கடி மனித உரிமைகளை மீறியுள்ளன.
46

வர்க்கத்தின் பகைமையைச் சம்பாதித்துக் கொண்டமையால் ஒரு அரசாங்கத்தால் பலவந்தமாய் வெளியேற்றப்படுகின்றனர்; அல்லது புரணமைக்கப்படுகின்றனர். (கென்யா, பர்மா, தென்னாபிரிக்கா, சூடான்)
இனக்குழு அல்லது அரசியல் தொடர்பு காரணமாய் சந்தேகத்துக்குள்ளான குழுக்கள் சுதந்திரமாகத் திரிவதற்கோ, மேய்ச்சல் நிலங்களை நாடிச் செல்வதற்கோ அனுமதிக்கப் படுவதில்லை. நீர் வசதி பெறுவதற்கான உரிமைகளும் அக்குழுக்களுக்கு மறுக்கப்படுகின்றன. அல்லது அவ்விதத் தொடர்புடைய இடையர் குழுக்கள் குறிப்பிட்டவோரிடத்தில் நிலையாய் தங்கியிருக்குமாறு நிர்ப்பந்திக்கப்டுகின்றன. (கென்யா, எத்தியோப்பியா, மாலி)
சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் உழவர்களும், வனவாசிகளும் பலவந்தமாக வெளியேற்றப்படுகின்றனர். ஆனால் அங்கு வர்த்தக நலன்களும் ஒட்டிக் கிடக்கின்றன. (இந்தோனேஷியா, தாய்லாந்து).
பயன்படுத்தப்படாமல் உள்ள பண்ணை நிலங்களை பிடித்துக் கொள்வதற்கோ, அல்லது தாம் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள நிலங்களிலிருந்து வெளியேற்றப்படுவதனையெதிர்த்து நிற்பதற்கோ வேறு வழியற்ற உழவர்களை ஒன்று திரட்ட முயலும் தொழிற்சங்கவாதிகள் கொலை செய்யப்படும்போது அரசு கண்ணை மூடிக் கொள்கின்றது.
(பிரேஸில், பராகுவாய்).
அரசியல், வர்த்தக, பாதுகாப்புக் காரணங்களுக்காக அரசாங்கம் அந்நியர்களை ஓரிடத்துக்கு இடமாற்றஞ் செய்கிறது. அல்லது இடமாற்றத்தை ஊக்குவிக்கின்றது. இதனால் அப்பகுதியைப் பூர்வீக வதிவிடமாகக் கொண்டவர்கள் இடம் பெயர்க்கப்படுகின்றனர். அல்லது அவர்கள் மேலும் வறுமையில் வாடுகின்றனர். அத்துடன் சில சமயங்களில் புதிதாக வந்தவர்களின் வயிற்றுப்பிழைப்பும் அச்சுறுத்தப்படுகின்றது. (பங்களாதேஷ்சிட்டகொங் மலைப்பகுதிகள் இஸ்ரேல்/ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள், சீனா/ திபேத், இந்தோனேஷியா/ கிழக்கு திமோர், ஈராக்குர்திஸ்தான்).
அரசாங்கம் இனக்குழு - ரீதியான அல்லது பாரம்பரிய உரிமைகளைப் புறக்கணித்து, சமூக சொந்தம் பாராட்டப்படும் நிலத்தை, மரங்களை
47

Page 28
வெட்டி வீழ்த்தி விற்பதற்கோ பண்ணைப் பயிர்ச் செய்கை மற்றும் பல்வகையான வர்த்தகப் பயிர் செய்கைக்கு உபயோகிப்பதற்கோ அதிகாரமளிக்கின்றது. (பிலிப்பைன்ஸ், மாரித்தானியா, சூடான், பிரேசில்) தனிநபர் உரிமைகளைவிட கூட்டு உரிமைகளுக்கு மதிப்பளிப்பதாக தம்பட்டமடித்துக் கொள்ளும் மலேசியா போன்ற நாடுகளின் அரசாங்கங்களால், இனக்குழுக்கள் நிலத்துக்கான தனிநபர் உரிமைகளைப் பெறும் போது மட்டுமே வர்த்தகத்துறைகளிடமிருந்து அந்நிலங்களைப் பாதுகாக்க முடியுமென்பது விந்தையாகும்.
7 புதியதோர் அணையைக் கட்டுவதற்காக அல்லது வேறு அபிவிருத்தித் திட்டத்தை ஆரம்பிப்பதற்காக அரசாங்கம் கிராம வாசிகளை வெளியேற்றுகின்றது. (இந்தியா, பிரேசில், பாராகுவே).
மேலே காட்டப்பட்ட சகல சந்தர்ப்பங்களிலும் அரசாங்கம் வாழ்வூதிய உரிமைகளுக்கு ஆபத்தை உண்டு பண்ணுகிறது. குடியியல் உரிமைகள் இல் லாமை அல்லது அவ்வுரிமைகள் முழு மூச் சாக கடைப்பிடிக்கப்படாமை, பலமான எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதை சாத்தியமற்றதாக்குகின்றது. மேலும், வெளியேற்றப்படல், இடமாற்றம் முதலியவற்றைத் தொடர்ந்து, மனித உயிருக்கும் கெளரவத்துக்கும் மதிப்பளிக்காத முறையில் வெறித்தனமான நாசச்செயல்களும், அச்சுறுத்தலும், வன்முறையும் கட்டவிழ்த்தப்படுகின்றன
1. நகர்ப்புறங்களில் சட்டவிரோதமாய்க் குடியேறுவோர்
கென்யாவில் நடந்த முவோரொட்டோ கொலைகள், ஓர் அரசாங்கத்தினால் ஒரு சமூகத்தை வாழ்வூதியம் அழிந்தொழிக்கப் பட்டதற்கு, அப்பட்டமான உதாரணங்களில் ஒன்றாகும். "நகரைச் சுத்தம் செய்தல்" என்ற போலிச்சாட்டில் ஆயிரக் கணக்கான பிரஜைகளின் ஜீவனோ வாழ்வூதியம் அழித்தொழிக்கப்பட்டது. இத்தாக்குதல் பலமான அரசியல், இனச்சார்பு கொண்டதாகும். அரசின் கொடுமைகள், கணக்குக்காட்டுவதற்கு, பொறுப்பின்மை, பகிரங்க விவாதத்தின் மீது கட்டுப்பாடு முதலியவை இத்தாக்குதல் தடுக்கப்படுவதனைச் சாத்தியமற்றதாக்கிற்று. தனிகட்சி அரசில், அரசியல் குடியியல் உரிமைகள் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஊறு விளைவிக்கப்பட்டவர் மாற்றீடு பெறுவதனைத் தடுத்தன.
48

மே 26, 1990ல், நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள், கலகத்தடுப்பு பொலிசார் கென்யா ஆபிரிக்கா தேசிய இளைஞர் பிரிவு உதவியோடு, நைரேபியின் மத்திய பகுதியிலிருந்து மூன்று மைல்களுக்கு அப்பாலிருந்த முஸோரொட்டோ சேரிப்பகுதியினுள் முன்னெச்சரிக்கையெதுவுமின்றி நுழைந்தனர். பெரும்பாலும் கிக்குயூ குடியிருப்பாளர்களுச்குச் சொந்தமான கடைகளையும் வீடுகளையும் உடைத்து அழித்தனர். அப்புறம் எடுத்த காரியத்தைப் பூர்த்தி செய்வதற்காக கனரகக் கருவிகள் கொண்டு வரப்பட்டன. கடைச் சொந்தக்காரர்களால் எதிர்ப்பு காட்டப்பட்டு கல்வீச்சு நடந்த போது, கற்கள், தடிகள், சாட்டைகள், இரும்புக் கம்புகள் முதலியவை கொண்டு இராணுவத்தினர் அவர்களை நையப் புடைத்தனர். சிறுகுழந்தைகள் உட்பட குடியிருப்பாளர்கள் வீதிக்கு இழுத்துவரப்பட்டு காட்டுமிராண்டித் தனமாகத் தாக்கப்பட்டனர். குறைந்த பட்சம் 13 பேர் உயிரிழந்தனர். 2, 000 பேர் வீடிழந்தனர். * நகர்ப்புறங்களில் அத்துமீறிக் குடியேறியவர்களை அப்புறப்படுத்துவதற்கு எந்தவொரு அரசாங்கமும், காட்டுகின்ற காரணம் அவர்களுக்கு அங்கிருப்பதற்கு உரிமையில்லையென்பதே முரோட்டோ விவகாரத்தில் தரைமட்டமாக்கப்பட்ட கடைகள் அனுமதிப்பத்திரம் பெற்றவைகளாகும்.
முழுமையான தகவலே நியாயமான மாற்றீட்டுக்கு முதற்படியாக இருந்த போதிலும், கென்யா அரசாங்கமோ வன்முறை பற்றிய செய்திகளை இருட்டடிப்புச் செய்வதிலேயே தொடக்கத்தில் கண்ணாயிருந்தது. என்ற போதிலும், இரு நாட்களின் பின், நைரேபியிலிருந்து வெளியாகும் லண்டே ஸ்டான்டர் பத்திரிகை இத்தாக்குதலில் இருவர் உயிரிழந்தனரென்றும், பதினொரு குழந்தைகளைக் காணவில்லையென்றும் செய்தி வெளியிட்டது. இந் நாசகாரச் செயலை நேரில் கண்ட நைரோபி அனைத்துத் துறவிகளின் கோயில் தலைவரான சங்கைக்குரிய பீட்டர் நிஜெங்கா, குறைந்தது ஏழுபேர் உயிரிழந்தனர் என பத்திரிகைச் செய்தியொன்றை வெளியிட்டார்.
குழந்தைகள் காணாமல் போயினர். அல்லது பெற்றோரின் இல்லங்கள் தரைமட்டமாக்கப்படும் போது அவர்கள், அவர்கள் கனரகக்கருவிகளின் அடியில் அகப்பட்டுச் செத்தனர். அல்லது பாலர், பெண்கள், வயோதிபர் உட்பட நிர்க்கதியான மக்கள் நையப் புடைக்கப்பட்ட போது, அவர்கள் உயிர் தப்புவதற்காக விழுந்தடித்தோடுகையில் அக்குழந்தைகள் நெரிசலில் அகப்பட்டு மடிந்திருக்கலாம் என்ற சாத்தியப்பாடு அதிர்ச்சி
29. ஆபிரிக்கா காவல் "கென்யா தான்தோன்றித்தனம்" (நியூயார்க் ஜுலை 1991) பக்கம் 251-258.
49

Page 29
தருவதாகும் - நாம் காண விரும்பிய கென்யா இதுதானா? நாம் போராடியது இச்சுதந்திரத்திற்குத்தானா? 30
நிஜெங்கா பொய் வதந்திகளைப் பரப்புவதாய் கென்யா ஜனாதிபதி தனியேல் அராப் மொய் குற்றஞ் சாட்டினார். அதைத் தொடர்ந்து அவருக்குத் தொந்தரவு கொடுக்கும் செயல் முறை ஒழுங்குபடுத்தப்பட்டது. ஆகஸ்ட் 1990ல் மாண்ட நிஜெங்காவின் மனைவி கணவனால் கொலை செய்யப்பட்டார் அல்லது தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார் எனக் கதை பரப்பப்பட்டது. அதேவேளை முவோரொட்டே விவகாரத்தை மூடிமறைப்பதற்கு அரசாங்கம் முழு மூச்சாகச் செயற்பட்டது. சவச்சாலைகளிலிருந்து பிரேதங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. இலஞ்சம் வழங்கியும் மரணங்களை மூடி மறைக்குமாறு உறவினர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். மரணச் சடங்குகளைத் தலைநகருக்கு G) 6) 6ir) (3 u வைத் துக் கொள் ஞமாறு பணவுதவியளிக்கப்பட்டது.
மே 1990ல் முவேரொட்டோ மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆரம்பம் மட்டுமே. "சட்ட விரோதக்"குடியிருப்பாளர்களையும், வியாபாரிகளையும் நகரிலிருந்து வெளியேற்றும் தம்நோக்கத்தை அதிகார வட்டாரத்தினர் அறிவித்தனர். நகர சேரிகளுக்கெதிரான இரண்டாவது நடவடிக்கை அக்டோபர் 1990ல் இடம் பெற்றது. இம்முறை இவர்களின் உள்ளக் கிடக்கை வெட்டவெளிச்சமாயிற்று. சேரிப்பகுதிகள் அரசுக்கெதிரான சதிச்செயல்கள் உருவாகும் இடமென்றும், சிறு கடை வியாபாரிகள் அரசாங்கத்துக்கெதிராகச் செயல்படுகிறார்க ளென்றும் விவாதிக்கப்பட்டது. உருவாகி வரும் எதிர்ப்பை நசுக்குவதற்கான போக்கை மறைக்கும் எத்தனமே "நகரைச் சுத்தப்படுத்தல்” என்ற நியாயம் கிக்குயூ இனத்துக்கெதிரான விரோதமும் இதில் நியாயமான அளவு கலந்திருந்தது. ஆபிரிக்க விளிப்புக்குழு அறிவித்தது போல் -
வறிய பகுதியினர் மத்தியில் நிலவிய அதிருப்தி (ஜனாதிபதி மொய்க்கு) ஏற்பட்ட கண்கூடான பயத்துக்கு போதிய ஆதாரம் இருந்த போதும் இது தவறான காரணங்களால் உண்டானதாகும். ஏழைகள் மத்தியில் காணப்பட்ட கசப்புணர்ச்சி, வெளியேற்றத்தால் வேரூன்றிய அனுதாபமின்மையால் மட்டும் உண்டானதல்ல. நகரத்தில் நிலம் சுவீகரிக்கப்பட்டது. ஜனாதிபதி மொய் நலனுக்காகப்
30. அதே வெளியீடு பக்கம் 254.
50

பயன்படுத்தத் தான் என்ற பொதுவான நம்பிக்கையும் இதற்குக் காரணமாகும்). முவோரொட்டோ நிலம் தனியார் உடைமை என வலியுறுத்தப்பட்டும் அதன் சொந்தக்காரரை அடையாளங் காண்பதற்கு அதிகாரிகள் உறுதியாக மறுத்துவிட்டமை இச்சந்தேகத்தை வலுப்படுத்தியது. ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வூதியத்தில் மண்போட்டு விட்டு, அப்புறம் சதிச் செயல் எனக் கண்டித்ததுதான் அரசாங்கம், செய்ததெல்லாம். 31
шлл7лол7 (269шл76йтлголтл7)
அரசியல் விழிப்புணர்வு கொண்ட நகரக்குடியிருப்பாளர்களின் குடிபெயர்ப்பு பர்மாவிலும் (மியான்மார்) இடம்பெற்று, இடம்பெயர்ந்தோர் வாழ்க்கை வருவாய்க்கு ஆபத்துண்டு பண்ணியது. மே 1990 தேர்தலுக்குச் சற்றுமுன் 500,000 பேர் தம் சொந்த இடங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர் என ராஜதந்திரிகள் மதிப்பிட்டனர். ரங்கூனிலிருந்து மட்டும் வெளியேற்றப்பட்டோர் தொகை 200,000. இடப்பெயர்ச்சி, நகரங்களைச் சுத்தமாக , வைப்பதற்கு தரம்வாய்ந்த பொருளாதார அபிவிருத்திக்கு ஏதுவாகுமென்றும் இதனால் அத்துமீறிக் குடியேறியவர்களுக்கு பாதுகாப்பான, சுகாதாரமான சூழலில் வீடுகள் கிடைக்குமென்றும் அரசாங்கம் கூறியது. அவர்கள் இடம்பெயர்க்கப் பட்ட புதிய இடங்களில், வீடுகளோ, தண்ணிரோ, மின்சாரமோ, சுகாதார வசதிகளோ இருக்கவில்லை என வெளியான அறிக்கைகள் அரசாங்கம் பிரகடனஞ் செய்த குறிக்கோள்கள் நிறைவேறவில்லை யென்பதனையுணர்த்துகின்றன. அநேகர் நகர மையங்களிலிருந்து வெகுதொலை தூரங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். அங்கு தொழில் வாய்ப்புகள் நகரங்களில் இருந்ததைவிட வெகு குறைவாகவே காணப்பட்டன.
ஆனால், அரசியல் காரணங்களுக்காகவே அவர்கள் அப்புறப் படுத்தப்பட்டனர் என்பதற்குச் சில சான்றுகள் தென்பட்டன. மார்ச் 29, 1990ல் அவ்றலோன் நகரப் பேட்டையைச் சேர்ந்த 300 க்கு மேற்பட்ட குடும்பங்களைக் கொண்ட லுட்லட்யே சுதந்திர தொகுதியின் குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை அழித்துவிட்டு, ரங்கூன் நகரின் கீழ்ப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து ரங்கூன் நதிக்கு மறுபக்கமுள்ள, மீளக்குடியமர்த்துவதற்கான இடமொன்றுக்கு வெளியேறும்படி அரசாங்கம் கட்டளை பிறப்பித்தது. சுதந்திரத்தொகுதி 1940 - க்களின் பிற் பகுதியிலிருந்து இருந்துவந்த தொழிலாளர் குடியிருப்பாகும்.
51

Page 30
அரசாங்கக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மரபு அங்கு நிலவி வந்தது. உள்ளூர் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த சட்டத்தையும் ஒழுங்கையும் மீண்டும் நிலை நாட்டும் அதிகாரசபைக்கு அனுப்பப்பட்ட கடிதமொன்றில் வெளியேற்றக் கட்டளையை எதிர்த்து மேல் முறையீடு மனுச்செய்த பதினொரு பிரதான குடியிருப்பாளர்கள் கைது செய்யப்பட்டனர். ஏப்ரில்மாத ஆரம்பத்தில், ஐந்து திறந்த சரக்கு வண்டிகளும் விசேட பொலிஸ் வாகனங்களும் சுதந்திரத்தொகுதியை வந்தடைந்தன. வீடுகளையுடைத்து நொறுக்குமாறு குடியிருப்பாளர்களுக்குக் கட்டளையிட்டது. எதிர்த்து நின்ற ஒருசிலர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்கள் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தனர். ஏப்ரல் 10ந் திகதியளவில், அக்குடியிருப்புகள் சின்னாபின்னமாக உடைத்துக் கற்குவியல்களாகக்
காணப்பட்டன *
ரங்கூனிலிருந்த ராஜதந்திரிகளின் கூற்றுப்படி, வேற்றிடத்தில் குடியேற்றுவதற்காகக் குறிவைக்கப்பட்டோர், 1988 செப்டெம்பரில் நிகழ்ந்த அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஆதரித்தோராவர். பஹான் என்பது எதிர்க்கட்சித் தலைவரும் நோபல் பரிசாளருமான ஆங் ஸன் கு கியீ யின் நகராகும். அங்கு 1989ல் 500க்கும் அதிகமான வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டு அதன் குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர் என அறிவிக்கப்பட்டது.*
குடான்
வறிய மக்களைக் கார்ட்டுமிலிருந்து, நகருக்கு வெளியே அமைக்கப் பட்டுள்ள முகாம்களுக்கு பலவந்தமாக வெளியேற்றும் பயங்கரத் திட்டத்தின் மூலம் சூடான் அரசாங்கம் சமீப மாதங்களில் சுமார் 500,000 வீடுகளை கனரக உழவு வண்டிகளினால் இடித்துத் தள்ளி தீக்கிரையாக்கிற்று. பாதிக்கப்பட்டோர் நியாயம் சோரி நீதிமன்றம் செல்வது தடுக்கப்பட்டு, அரசாங்கத்துக்கெதிராக இழப்புப்பணங் கோரும் சாத்தியப்பாடும் மறுக்கப்பட்டது. இடம்பெயர்க்கப்பட்டோரும், வெற்றிடங்களில் அத்துமீறிக் குடியேறியவர்களும் தாம் தெரிவு செய்யும் இடங்கலில் வதிவதற்குள்ள உரிமையை, திட்டமிட்டு வேற்றிடத்துக்குக் குடிபெயர்க்கும் நடவடிக்கை வெட்கக் கேடான முறையில் மீறியது. இடம் பெயர்க்கப்பட்டவர்களும் அத்துமீறிக் குடியேறியவர்களுமான பத்துலட்சத்துக்கும் அதிகமானோர் சூழலின்
32. ஆசியா காவல், பர்மா (மியான்மார்) வில் மனித உரிமைகள், மே 1990. 33. ஃபார் ஈஸ்ரன் ஈக்கனொமிக் ரிவியூ ஜனவரி 25,1990 அத்துடன் பார்க்கவும், த வாஷிங்டன்
Q3 umsiu () uti ya uff? 8, 1990
52

ஆரோக்கியத்துக்கு ஆபத்து விளைவிப்போராவர் என்பது அரசாங்கத்தின் வாதமாகும். இது உண்மையாயிருக்கக் கூடும். ஆனால் பலவந்தமான வெளியேற்றத்துக்குப் பதிலாக ஏற்கனவேயிருந்த குடியிருப்புகளைச் சீர்படுத்தியிருக்க வேண்டுமென்பது திரும்பத்திரும்ப மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவாகும். புலம் பெயர்ந்தோரில் பெருவாரியானோர் தென்சூடான் வாசிகள் என்பது காரணமாக அச்சமும், அவர்கள் மீது காட்டப்பட்ட விரோத மனப்பான்மையையும், வெளியேற்றத்தின் முக்கியமானதோர் அம்சமாய் விளங்குகிறது.
வெளியேற்றும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சகல அதிகாரங்களையும் எதேச்சாதிகாரமாய் அரசாங்கம் கைக்கொண்டது. அடிப்படை சட்ட உரிமைகள் மீறப்பட்டன, வெற்றுக்காணிகளில் குடியமர்ந்தோர் சார்பில் சட்ட நடவடிக்கையெடுப்பது தடைசெய்யப்பட்டது. நிறுவப் பட்டிருந்த சூடானிய நில குத்தகை வழக்கங்கள் செயலிழக்கப்பட்டன. வேற்றிடயங்களுக்குக் குடிபெயர்க்கும் நடவடிக்கை க்கு அடிப்படையாய் விளங்கிய சட்டம், சகல சட்டக் கொள்கைகளோடும் மாறுபட்டிருந்த விதத்தைப் பார்த்தால் அச்சட்டமே சட்டவிரோதமானது எனல் வேண்டும்.
வேற்றிடத்துக்குக் குடிபெயர்க்கும் திட்டத்தினால், இடம் பெயர்க்கப்பட்டோரின் வீடுகள் இழப்புப்பணமெதுவும் வழங்கப்படாமல் தரைமட்டமாக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து கொள்ளைகள் இடம் பெற்றன. பாடசாலைகளும், மருத்துவ மனைகளும் அழிக்கப்பட்டன. வேற்றிடத்துக்குக் குடிபெயர்ப்பு பெரும்பாலும் வன்முறை மூலமாக நடந்தது. படுமோசமான சம்பவம் 1992 டிசெம்பர் 22ல் குர்மட்டா என்ற இடத்தில் நடந்தது. வெளியேற்றத்தையும், ராணுவத்தையும் எதிர்த்து நடந்த மோதலில் குறைந்தது 21 பேர் பலியாகினர். நகரிலிருந்து 25 மைல்களுக்கு அப்பாலுள்ள புதிய இடங்களுக்கு மக்கள் இடம்பெயர்க்கப்பட்டனர். புதிய இடங்களில் நிலை படுமோசமாக இருந்தது. தொழில் வாய்ப்புகள் எதுவுமில்லை. வசதிகளேதும் இருக்கவில்லை. அவலநிலை காரணமாய் மரணங்கள் சம்பவித்ததாய் அறிவிக்கப்பட்டது.
1992 பெப்ரவரி மாத முற்பகுதியில் ஜெபெல் அவ்வியா முகாமைப்
போய் பார்க்க ஒருவர் தாம் கண்ணுற்ற நிலைமைகளைப் பின்வருமாறு வர்ணிக்கின்றார்.
53

Page 31
லொறிகள் முகாமை வந்தடைவதை நாம் கண்டோம். ஓம் துர்மானுக்கு திரும்பிச் செல்கையில் இன்னம் அநேக லொறிகளை நாம் வீதியில் கடக்க நேரிட்டது. ஒரு லொறியிலிருந்து பொருட்கள் இறக்கப்படுவதை நான் அவதானித்தேன். அப்பகுதி வெறும் அசுத்த மணற்பரப்பாகக் காணப்பட்டது. கால் பந்தாட்ட மைதானத்தில் கோடுகிழிக்கப்பட்டிருப்பது போல தடியால் எல்லைக்கோடுகள் மட்டுமே கீறப்பட்டிருந்தன. லொறியொன்று வந்து ஒரு துண்டுநிலத்தில் பொருட்களைக் காலிசெய்தது. பழைய வீடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட தட்டுமுட்டுச் சாமான்கள் வளர்ந்தோர் இருவரிருந்தனர். பெற்றோர்களாயிருக்கக் கூடும், அவர்களோடு ஒரு கிழவியும், குழந்தையும்.
அப்போது அந்திப்பொழுது குளிர் வீசத் தொடங்கியது. அக்குடும்பத்திடம் எதுவுமே இருக்கவில்லை. என்ன செய்யப் போகிறார்களென நான் அவர்களிடம் கேட்டேன். குளிரிலிருந்து சற்றேனும் பாதுகாப்பு பெறுவதற்காகக் குழிகள் தோண்டிக் குழந்தைகளை அவற்றில் கிடத்தப் போவதாக கூறினார்கள்.
2. இடம் பெயர்வதற்கான சுதந்திரமும் மேச்சலுக்கான உரிமைகளும்
வரட்சியால் பாதிக்கப்பட்டு (சூடானுக்குக்) குடிபெயர்ந்த (மேற்கு ஆபிரிக்க) வந்தேறு குடிமகன் ஒருவனிடம் அவன் மீண்டும் தாயகம் திரும்புவது எப்போது என வினவினோம். அவனிடமிருந்து கிடைத்த பதில் : "எது என் தாயகம்? எங்கு நிலமும் மழையும் உண்டோ அதுதான் என் தாயகம்.” 34
உலகின் பல்வேறு பகுதிகளில், உயிர்பிழைத்திருப்பதற்காக இடம் பெயர்வு அத்தியாவசியமாகும். ஆபிரிக்காவைச் சேர்ந்த இடையர் மக்கள் தொகையினரை பொறுத்தமட்டில் இது மிகவும் உண்மை. மிகச் சிறந்த உதாரணமாக, மேலே குறிப்பிடப்பட்ட மேற்கு ஆபிரிக்க இடையர் நைகர் பகுதியிலிருந்து தொடங்கி பெரும்பாலும் சூடானின் கிழக்கெல்லை வரை நாடோடியாய் அலைந்து வந்தவர். சர்வதேச
34 நேர்காணல் டாக்டர் அப்துல் ரஹ்மான் அல் பஷீர், முன்னாள் அகதிகள்
ஆணையாளர், சூடான்.
54

எல்லைகள் பற்றியெல்லாம் அவர் அறியமாட்டார். இவ்வளவு துாரங்களுக்கு நாடோடியாய் அலைவது அபூர்வம். எனினும் சிறிதுதுரரங்களுக்கு அலைந்து திரிதல் சர்வசாதாரணம். வாணிபம் பிறநாடுகளை நாடித்திரிந்து கூலிவேலை செய்தல் போன்றவற்றில் தங்கியிருக்கும் மக்களுக்கும் இடம்பெயர்வு முக்கியமானதாகும்.
கிளர்ச்சி எதிர்ப்பு சமூக மாற்றம், பொருளாதார அபிவிருத்தி, இனப் பாரபட்சம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக மக்கள் மீது அரசாங்கங்கள் கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. குடியிருப்புக்கான சுதந்திரம் இடப்பெயர்வுக்கான சுதந்திரம் முதலியவற்றை மீறல் உட்பட கட்டுப்பாடுகள், வெளியேற்றங்கள் இழப்புப் பண கொடுப்பனவின்றி நிலக்குத்தகை உரிமையை அபகரித்தல், தானிய வியாபாரம் மீது அதிகார துஷ்பிரேயாகம் முதலியவை கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கை காரணமாகக் கொண்டு வரப்படும் போது மிகவும் கொடூரமானவையாகும். வேறு காரணங்களுக்காக விதிக்கப்படும் போது அவை படுநாசம் விளைவிக்கக் கூடும்.
"வாழ வகைசெய்யத் தொழில் உரிமை” என்ற தலைப்பின் கீழ் வசதிக்காக பட்டியல்படுத்தப்படும் தவறான ஒழுக்க வழுக்கல் இடதுசாரி அரசுகளாலும், வலதுசாரி அரசுகளாலும் ஒரே விதமாக இழைக்கப்படுகின்றன. சோஷலிஸ் அரசாங்கங்கள் கூட்டுக்கிராமங் களையும் திணிக்க முற்படும் அதேவேளை, முதலாளித்துவ அரசாங்கங்கள் வர்த்தகப் பயிர்ப் பண்ணைகளையும், பாரிய கால்நடைப் பண்ணைகளையும் நிறுவுவதற்காக மக்களுக்கு நிலம் மறுக்கின்றன இவ்வுரிமைகளை மதிப்பதற்கு முக்கியத்துவங் கொடுப்பது கட்டுப்பாடற்ற பொருளாதார சுதந்திரம் அனுமதிக்கப்படல் வேண்டுமென்ற வலதுசாரி வாதத்தை அங்கீகரிப்பதாக அர்த்தப்படமாட்டாது.
கடந்த இருபது வருடங்களாக, ஆபிரிக்காவில் வேறெந்த மக்கள் கூட்டத்தினரையும்விட, மேய்நிலம் பயன்படுத்தும் இடையர்கள் பஞ்சத்தினால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் இதற்கான பல, சூழல் ரீதியாக அவர்கள் விளிம்பரப் பகுதிகளில் வாழ்வதே வழக்கமாகையால் அரசினால் வழங்கப்படும் சேவைகள் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. இது எவ்வாறிருப்பினும், இடப்பெயர்வு மீது கட்டுப்பாடுகள் விதிப்பதன் மூலமும், மேய்ச்சல் நிலங்களை பிறருக்கு உரிமையாக்குவதன் மூலமும், இடையர் தொழிலின் பொருளாதார பின்னேற்றத்தை வேண்டுமென்றோ, அல்லது சிந்தித்துப் பாராமலோ கெடுக்கும் அரசாங்கக் கொள்கைகளே முக்கிய காரணம்.
55

Page 32
Gassiru/7
இடையர்கள் நாடோடிகளாய்த் திரிதலைக் கட்டுப்படுத்தும், மிக நெடுங்காலமாக இருந்துவரும் கிரமமாக நடத்தப்படும் கொள்கைகள் சில கென்யாவில் காணப்படுகின்றன. புல்வெளிகளையும் மற்றும் ஒதுக்கி வைத்த நிலங்களையும் இடையர்களுக்கு மறுக்கும் கொள்கைகள் பெரும்பாலும் வன்முறையைக கையாண்டே நடைமுறைப்படுத்தப்பட வேண்டி நேர்ந்தன. இதன் விளைவாக, கென்யாவின் ஒரப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் போரான், ஸம்புரு, ரெண்டில் மற்றும் சோமாலியா இனத்தவரும் எதிர்மாறான பருவகால நிலை ஏற்படும் போது வறுமைக் கோட்டுக்குத் தள்ளப்பட்டனர்.
கென்யாவில் அன்னியகுடியேற்ற ஆட்சிகாலத்தில் வெள்ளையர்களான கலோனியல் குடியேற்ற ஆதிக்க வர்க்கத்தின் நன்மைக்காக மேற்நிலத்தை நம்பி வாழ்ந்த மக்கள் தாம் பயன்படுத்திய பாரிய நிலப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். அக்காலை அவை வெற்றுநிலமாய்க் காணப்பட்டபடியால், அன்னிய நிர்வாகத்தினர் பெரும்பாலான இந்நிலப்பகுதிகளை "பயன்படுத்தப்படாதவை" என அழைத்தனர். உண்மையிலே, மழைவீழ்ச்சி குறைவாகவும் பரவலின்றியும் காணப்படும் போது பயன்படுத்துவதற்காக பெரும்பகுதியான நிலத்தை ஒதுக்கி வைத்திருப்பது கென்யாவில் மந்தைத்தொழில் விருத்திக்குத் தேவையாகும். அன்னிய அரசாங்கம் மட்டுப்படுத்திய "மேய்ச்சல் பகுதி" யை வரையறுத்தது. முன்னர் பயன்பாட்டிலிருந்த நிலத்தில் அற்பச்சிறுபகுதியே இடையர்களுக்கு அனுமதிக்கப்பட்டது. 1963ல் சுதந்திரமடைந்ததைத் தொடர்ந்து கென்யா அரசாங்கம் எத்தகைய பாரிய மாற்றமுமின்றி இச்செயல்த் திட்டங்களைத் தொடர்ந்தது. அதுமட்டுமன்றி, "ஷிப்தா யுத்தம்” என்று அழைக்கப்பட்ட (சோமாலியாவுடன் இணையவேண்டுமென சாமாலியா இனத்தவர்கள் புரிந்த சிறுகலகம்) இதை காரணங்காட்டி சோமாலியா இனத்தவர் வசித்த வடஎல்லை மாகாணத்தில அவசரகால சட்டத்தை அரசு பிரகடனஞ் செய்தது. இடையர்களின் இடப்பெயர்வைக் கட்டுப்படுத்தியதோடு, அரச கட்டளைகளைக் கடைபிடிக்கத் தவறியவரின் மந்தைகளைப் பறிமுதல் செய்யவும் அவசரகாலச் சட்டம் அதிகாரமளித்தது. அநேக சோமாலி, போரான் சாதியினர் நீர்பாசனத் திட்டங்களிலும், நிர்வாக நிலையங்களையடுத்த முகாம்களிலும் பலவந்தமாகக் குடியமர்த்தப்பட்டனர். ஏனைய முன்னாள் மந்தை மேய்ப்பாளர்கள் அப்பகுதியிலுள்ள அற்பசொற்பமான நதியோர நகர்களில் கூட்டமாகக் குடியேறி, பண்ணைகளில் தொழில்புரிந்தோ, பிரதான நகர்களுக்கு அடுப்புக் கரியைக் கொண்டு விற்றோ சீவனம் நடத்தினர். கால்நடைகளை வைத்திருந்தோர் வருடாந்த இடப்பெயர்வின்
56

போது குறுகிக் கொண்டு போகும் தூரங்களுக்கு நகர்ந்தனர்.
இதன் விளைவாக, முந்திய வருடங்களில் அதிகம் தாக்குப் பிடித்துப் பிழைத்திருக்கக் கூடியதாயிருந்த வரட்சி, 1970 களிலும் 1980 களிலும், வடகென்யா முழுவதும் பெரும்பாலான இடையர்களுக்கு படுநாசத்தையுண்டு பண்ணிற்று.
எத்தியோப்பியா
இடையர் சமூகத்தினர் மத்தியில் பஞ்சம் உருவாக்கப்பட்டதற்கான மற்றொரு குறிப்பிடத்தக்க உதாரணம் எத்தியோப்பியாவில் உள்ள அலாஷ் பள்ளத்தாக்காகும், இப்பள்ளத்தாக்கைச் சேர்ந்த அஃபார் இடைச்சாதியினர், வரட்சிக்காலத்தில் கால்நடை மேச்சலுக்காக, அலாஷ் நதியின் பருவ வெள்ளப் பெருக்கினால் உண்டாகும் புல்வெளியை நம்பியிருப்பர். 1960 களின் பிற்பகுதியில் சக்கரவர்த்தி ஹெய்லிஸெலாஸியின் ஆட்சியின் கீழ், உள்நாட்டு - வெளிநாட்டு வார்த்தகர்களின் கூட்டு முயற்சியில் பெருவாரி பருத்திப் பயிர்ச்செய்கைக்காக இப்பகுதி பயன்படுத்தப்பட்டது. 1972 அளவில் 50,000 ஹெக்டயர் பாசன நிலம் ஒதுக்கப்பட்டதும் 20,000 இடையர்கள் தம் இருப்பிடங்களிலிருந்து வெளியேற வேண்டியதாயிற்று. பருவகாலத்தில் மேய்ச்சல் நிலத்தினால் பயன்பெற்று வந்த இன்னும் அநேகர் வெளியேற்றப்பட்டனர். 1972 - 73 ல் வரட்சியேற்பட்டு, ஒதுக்கப்பட்ட மேய்ச்சல் நிலங்கள் கிடையாமையால் அஃபார் சாதியினர் மத்தியில் பஞ்சம் உருவாக இவ் "அபிவிருத்தி” யே பாரதூரமான காரணமாகும்.
ad/ra,
இடையர்கள் இடம்பெயர்வதும். மேய்ச்சல் நிலங்களைப் பயன்படுத்துவதும் நீண்டகாலம் தடுக்கப்பட்டமையால் பஞ்சம் தோன்றுவதற்கு மூன்றாவது உதாரணமாக மாலி திகழ்கிறது. தென்மாலியில் வதிவோரோடு ஒப்பிடுகையில் வடமாலியைச் சேர்ந்த துவாரெக் சாதியினர் வரலாற்று ரீதியாகப் பாதிக்கப்படுவோராவர். 1963ல் வெடித்த சிறிய கலகமொன்றை வைத்து துவாராக் சாதியினருக்கெதிரான பல்வேறு நடவடிக்கைகள் திணிக்கப்பட்டன. இடையர்கள் மந்தை மேய்ச்சலையும், தமது பொருட்களை விற்பதையும் தடுக்குமாறு அங்கு குடியேற்றப்பட்ட விவசாயிகள் தூண்டப்பட்டனர். 1969 - 73ன் போது இப்பகுதி பஞ்சத்தால் பாதிப்புறுவதற்கு இதுவே
57

Page 33
முக்கிய காரணமென்பதில் ஐயமில்லை. 1990-91ல் துவாரெக் சாதியினரின் கலகம் தீவிரமடைந்ததும், அரசாங்கத்தின் ஒடுக்குமுறையும் கட்டுப்பாடுகளும் அதிகரித்தன. வியாபாரத்திற்காக துவாரெக் சாதியினர் பயன்படுத்திய வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டன. சந்தைகள் மூடப்பட்டன. அங்கு குடியேற்றப்பட்டோர் இடைச்சாதியினர்க்கெதிராய்த் தூண்டிவிடப்பட்டனர். இராணுவவத்தினால் கொலை, தீவைப்பு முதலிய கொடுமைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. மீண்டும், இவை பஞ்ச நிலை உருவாகக் காரணமாயிற்று.
நாடோடி இடைச்சாதியினர்கள் மத்தியில் எதிர்காலத்தில் பஞ்சம் உருவாகாமல் தடுப்பதற்கு அபிவிருத்தி, சூழல் பாதுகாப்பு, அதே போன்று சரிநிகராக, முக்கியத்துவம் வாய்ந்த மனித உரிமைப் பாதுகாப்பு முதலிய உத்தரவாதஞ் செய்யப்படல் வேண்டும். அப்போது தான் பஞ்சப்பிணி விடுக்கும் சவாலை எதிர்கொள்ள முடியும். கடைசியாகக் குறிப்பிடப்பட்டதில் அடங்குபவை மிக அத்தியாவசியமான இரு அம்சங்கள், அலைந்து திரிவதற்கான சுதந்திரம், மேய்ச்சல் நிலக் குத்தகை முறை, அதாவது தேவைப்படும் போது, வரட்சிக்கால பயன்பாட்டுக்கென ஒதுக்கப்பட்ட நிலங்களை இடையர்கள் பயன்படுத்துவதற்கான உரிமையும்.
3. சூழலின் பெயரால்
அந்தோனேஷியாவிலும் தாய்லாந்திலும் வனப்பாதுகாப்பு என்ற பெயரால் கிராமவாசிகள் முற்றுமுழுதாக வெளியேற்றப்பட்டுள்ளனர். சிறைவாசஞ் செய்வதாக பயமுறுத்தல் உடைமைகளை நொறுக்கி நாசஞ் செய்தல் முதலிய அச்சுறுத்தல்கள் நிகழ்ந்துள்ளன. வெளியேற்றம்,பலவந்தமாய் வெளியேற்றப்பட்டவர்களின் வாழ்க்கை வருவாய்க்கு ஆபத்து அச்சுறுத்துகின்றதென்பதில் சந்தேகமாயுள்ளது. பெரும்பாலும், உள்ளூர் இராணுவத்தின் மேலதிகக் கொள்ளை லாபத்தையே இது உறுதிப்படுத்துகின்றது.
தாய்லாந்து
1990 ல் தாய்லாந்தில் பழுதடைந்த ஒதுக்கப்பட்ட வனப்பிராந்தியத்தில் ஏழைகளுக்கு நிலம்வழங்கும் கோர் ஜோர் கோர் என்ற பேர்பெற்றதுமான திட்டம் இராணுவத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டது. தாய் இராணுவத்தின் உள்நாட்டு பாதுகாப்பு நடவடிக்கைப் பிரிவினால் ஒருங்கிணைக்கப்பட்ட இராணுவ ஆணையாளர் தளபதி சுசிந்தாவினதும் அவரது துணையதிகாரி ஜெனரல் நூன்பக்டி என்பவராலும்
58

இச்செயல்திட்டம் நெறியாளப்பட்டது. பாங்கொக்கில் மே 1992ல் இடம் பெற்ற வன்முறையின் பின்னர் இவ்விருவரும் பதவியிலிருந்து நீக்கப்பட்டதோடு இத்திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டது. நிலச்சீர்திருத்தம், சூழல் பாதுகாப்பு இரண்டையும் நோக்காகக் கொண்டதென பிரச்சாரம் செய்யப்படும். திட்டமொன்று மக்களின் பாதுகாப்பு இல்லாத போது, பாதிக்கப்பட்டோர்களுக்கு எந்தளவு இன்னல் விளைவிக்கும் என்பதற்கு இத்திட்டம் நல்லதொரு உதாரணமாகும்.
பதினேழு வெவ்வேறு மாகாணங்களில் உள்ள பாதுகாக்கப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட வனப்பிரதேசங்களில் வதியும் ஒருகோடி மக்களை மீளக்குடியமர்த்துவதனை நோக்கமாகக் கொண்டது ஐந்தாண்டுத் திட்டம். மீளக்குடியேற்றத்துக்காகக் குறிக்கப்பட்ட பகுதிகள் - சிலர் சொல்வது போல் இராணுவத்துக்குச் சொந்தமான வியாபாரத்துக்காக வேண்டி அளவுக்கதிமாய் மரங்கள் தறிக்கப்பட்டு சீரழிந்து காணப்பட்டன. துரிதமாக வளர்ந்த சுலபமாகவிற்பனையாகும் மரங்களை நடுவதன் மூலம் மீண்டும் காடுகளை வளர்த்தல், விவசாயக் கைத்தொழில்களை விருத்தி செய்தல், மீளக்குடியமர்த்தப்பட்ட கிராமவாசிகள் புதிய நிலமும் அவற்றில் பயிர்ச் செய்கை மேற்கொள்வதற்குத் தேவையான தொழிநுட்ப வசதிகளும் பெறுவதன் மூலம் வருமானத்தை அதிகரித்துக் கொள்ள உதவுதல் முதலியன நோக்கங்கள் என்று கூறப்பட்டது.
1991ன் பிற்பகுதியில் தாய்லாந்தின் வடமேற்குப் பகுதியில் 13 கிராமங்களிலிருந்து 1,793 குடும்பங்களை வெளியேற்றுவதன் மூலம் இத்திட்டம் கால்கோளாயிற்று. இதனால் பாதிக்கப்பட்டோர் என்னபாடுபட்டிருப்பர் என்பதை இதே நிலைக்கு ஆளான முவோரொட்டோவின் அத்துமீறிய குடியேற்றக்காரர்களால் உணரமுடியும். செப்டெம்பர் மாதமுற்பகுதியில் இரண்டாவது பிராந்திய இராணுவம் 360 குடும்பங்களை வெளியேற்றியது. இவர்கள் யாவரும் நக்ஹொன் ரட்சசிமா மாகாணத்தின் நொங் யாய், ஸொயெங் ஸாங் மாவட்டத்தைச் சேர்ந்த மரவள்ளிக் கிழங்கு விவசாயிகளாவர். மரவள்ளி உற்பத்தியின் மூலம் இக்கிராமவாசிகள் சீவியம் நடத்தினர். கற்பூரத்தைல மரநடுகைக்காகவும், மூங்கில் வளர்ப்புக்காகவும் ராணுவத்திற்கு நிலம் தேவைப்பட்டது. கிராமவாசிகளை வெளியேறுமாறு காலையில் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. மதியவேளைக்குப் பின் இராணுவ வீரர்கள் வீடுகளை வீழ்த்தித் தள்ளினர். வெளியேறா விட்டால் கைது செய்யவும் குற்றப்பணம் கொடுக்கவும் நேரிடும் என்றும் கிராமவாசிகள் பயமுறுத்தப்பட்டனர். 14 ரை விசால நிலமும், தொழில் இழப்புப் பணமும் வழங்கப்படும் எனக் கிராமவாசிகளிடம் வாக்களிக்கப்பட்டது. ஆனால் கனரக வண்டிகளில்
59

Page 34
அவர்கள் கொண்டு சேர்க்கப்பட்ட இடத்தில் நிலம் இருக்கவில்லை. தண்ணீர் வசதியில்லை சுகாதார வசதிகளில்லை, உணவும் இல்லை. ஒவ்வொரு குடும்பத்துக்கும் அரிசியும், டின்மீனும் வழங்கப்பட்டன. டின்களில் குறிப்பிட்டிருந்த திகதியின்படி அவை எப்போதோ அமைப்பதற்கு காலாவதியானவை. சுமார் 100 டாலர் இழப்புப்பணம் கூரையுடனான ஒலைக் குடில்களை அமைப்பதற்கு மட்டுமட்டாய் போதுமானதாயிருந்தது. கனரகவண்டிகளில் இராணுவம் தினமும் தண்ணீர் கொணர்ந்து விநியோகித்ததெனினும் கிராமத்தின் தேவைக்குப் போதியதாய் இருக்கவில்லை. (எதிர்ப்புக் காடடியவர்களுக்கு இழப்புப்பணம் மறுக்கப்பட்டது). பழைய கிராமத்திலிருந்து பாடசாலை அழித்தொழிக்கப்பட்டது, எனினம், புதிய இடத்தில் பாடசாலை நிர்மாணிக்கப்படவில்லை.*
இன்னும் நிலமில்லாதபடியால் புதிய இடத்தில் பண்ணைத் தொழில் புரிய முடியாத நிலையில் ஜூன் 13, 1992ல் கிராமவாசிகள் கடனாளிகளாய். உள்ளூர் விவசாயிகளின் விரோதத்துக்காளாகி சொந்தக் கிராமமான நொங்யாயியிக்குத் திரும்பிச் சென்றனர். மூன்று நாட்களின் பின் 300 இராணுவ வீரர்களும், பொலிசும், வனப்பகுதி அதிகாரிகளும் அங்கு படையெடுத்து, தேசிய வனத்தினுள் சட்டவிரோதமாய் நுழைந்ததாகவும் அங்குள்ள மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தொந்தரவு கொடுத்ததாகவும் குற்றஞ்சாட்டி சமூகத் தலைவர்கள் 17 பேரைக் கைது செய்தனர்.* துப்பாக்கியினால் அவர்கள் நையப்புடைக்கப்பட்டனர். வயது குறைந்த மைனரான ஒருவரைத் தவிர மற்றவர்கள் மாகாணச் சிறையில் தள்ளப்பட்டனர். ஜூலை 28ந் திகதி விசாரணைக்காகக் குறிக்கப்பட்டது.
கென்யா
இதே போன்ற சம்பவமொன்று கென்யாவிலும் நடந்தது. மக்களின் வதிவிடமாகவும், கமச்செய்கைக்குரியதாகவும் காணப்பட்ட பொது நிலம் பாரிய சர்வதேச ஆதரவில் தாவர, விலங்கு ஆராய்ச்சிக்காக நிறுவப்பட்ட விலங்குச் சரணாலயமாய் மாறிற்று. 1970 க்களில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆதரவில் உருவாக்கப்பட்ட கோரா தேசியவனம், முன்பு பாதி இடையர்களான சோமாலி இனத்தவரும், பொரானா கூட்டத்தவரும் மந்தை மேய்ப்புக்காகப் பயன்படுத்திய புல் தரையாகும் தேசியவனத்தில் அகப்பட்டுக் கொள்ளும் சட்டவிரோதமானவர்களைச் சுட்டுக் கொல்லும் அரசின் கொள்கைக்கு
35. மலி திரெய்ஸ்வல் திஹாய் "வெற்று வாக்குறுதிகள்" த நேஷன் (பாங்கொக்) செப். 30,1991. 36. கிராமவாசிகள் பலாத்காரமாய் வெளியேற்றப்பட்டதற்கெதிராய்ப் பிரதமர் "பாங்கொக்
போஸ்ட் ஜூன், 18,992.
60

பாரம் பரியக் குடிகள் இப்பொழுது பலியாகின்றனர். தேசியவனம் உருவாக்கப்பட்ட நாள்தொட்டு, அதன் பாரம்பரியக் குடிமக்கள் சட்ட விரோதமாய் பிரவேசிப்பவர்களாய் மாறிவிட்டனர்.
இந்தோனேஷியா
மற்றொரு சம்பவம் இந்தோனேஷியாவில் 1989ல் நிகழ்ந்தது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மரநடுகை மேற்கொள்வதற்காக சுமத்ரா, லம்புங்கில் உள்ள புளாவ் பங்குங் என்ற இடத்தில் கிராமவாசிகளை அப்புறப்படுத்தும் முயற்சியில் உள்ளூர் இராணுவத்தினால் 2,000 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.
புளாவ் பங்குங் என்ற இடமும் அதைச் சூழவுள்ள மலைப்பிராந்தியமும் 1930 க்களில் பாதுகாக்கப்பட்ட வனமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. ஆனால் 1960 க்களில் ஜாவாவைச் சேர்ந்தோர் சுமத்தராவில் வந்து குடியேறியதால் உண்டான நில நெருக்கடி காரணமாக, ஆயிரக் கணக் கானோர் அவ் வனப் பகுதிக்குப் புலம்பெயர்ந்தனர். உள்ளூர் அரசாங்கம் இதை அறிந்திருந்தது மறைமுகமாக அனுமதித்தது. நிலத்தை வெட்டித் திருத்திய போதும் காணிக்கான உரிமை உறுதிகள் வாங்கப்படவில்லையாயினும் மரங்களை வெட்டுவதற்கு உரிமை வழங்கப்பட்டிருந்தது. திருத்தப்பட்ட நிலப்பரப்பில் அவர்களில் பெரும்பாலானோர் கோப்பியும், கராம்பும் பயிரிட்டனர். 1970 களில் மண்ணரிப்பு, வெள்ளப்பெருக்கு, மண்சரிவு முதலியவற்றைத் தடுப்பதற்காக உபமாவட்டத்தில் மீண்டும் காடு வளர்ப்பு தேவையென மத்திய அரசு தீர்மானித்தது. அங்கு குடியேறியோரை வெளியேற்றுமுகமாக உள்ளூர் அதிகாரிகள் பயிர் களை நாசஞ்செய்தலையும், அவர்களைப் பயமுறுத்துவதையும் சிறிய அளவில் ஆரம்பித்தனர்.
தசாப்த காலம் விவசாயிகளுக்கு இன்னல் விளைவித்து வந்த பின் அரசாங்கம் இன்னுங் கடுமையான நடவடிக்கையெடுக்கத் தீர்மானித்தது. நவம்பர் 18, 1988ல் உபமாவட்டத் தலைவர் ஹஸ்திதி தய்யூப், பாதுகாப்புப் படையினருடன் தாத்தார் செநூஜூ சாத என்ற கிராமத்தினுள் நுழைந்து 85 வீடுகளை எரித்துச் சாம்பலாக்கினர். இந்நாசச் செயலுக்கு முன்பாக சட்டபூர்வமான வழிமுறைகள் எதுவும் கடைபிடிக்கப்படவில்லை. மூன்றுவாரங்களில் 476 வீடுகள் அழிக்கப்பட்டன. குடியிருப்பாளர்களுக்கு தய்யூப் ஒருநாள் அவகாசம் வழங்கினார். ஆனால் அவர்களுக்கு வீட்டுச் சாமான்களை எல்லாம் பொதிகட்டுவதற்கு நேரம் போதவில்லை.
61

Page 35
குடியிருப்பாளரில் சிலர்போய் பிராந்திய இராணுவ தளபதியிடம் முறையிட்டனர். தீவைப்பு நிறுத்தும்படி அவர் தய்யூவுக்கு கட்டளையிட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் வீடுகளையிழந்தோர் ஏலவே சீவிப்பதற்கு மிகக் கடினமான நிலப்பகுதியில் பினாஸ்திக் கூடாரங்களிலும், தற்காலிகமாக அமைக்கப்பட்ட குடில்களிலும் குடியேறியிருந்தனர். கடினமான இப்பகுதியில் மழைக்காலம் நிலைமையை மேலும் மோசமாக்கிற்று. பெப்ரவரி 1989ல் எஞ்சியிருந்த குடியிருப்பாளர்கள், ஜகார்தாவிலிருந்த சட்ட உதவி நிறுவனத்தின் உதவியை நாடினார். உடன்பாடு காணும் திட்டமொன்றை வகுத்தெடுத்தனர். ஏதேனும் வருவாய் தேடிக்கொண்டு புதிய இடமொன்றில் போய் குடியேறுவதற்கு மூன்று வருட அவகாசம் கேட்டனர். வெளியேற்றும் மனிதத்துவ முறையில் படிப்படியாக நியாயமாக மேற்கொள்ளப்படல் வேண்டுமெனக் G35strfootfit.
இதற்கு எதிர்வினையாய் தய்யூப் இன்னும் அதிகமாக வீடுகளைத் தீக்கிரையாக்கினார். ஒவ்வொன்றாக உடைந்து நொறுக்குவதை விட எல்லாவற்றையும் தீவைப்பது எளிது என வாய்விட்டுச் சொல்லிக் கொண்டார். இந்நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்ட பாதுகாப்புப் படைப்பிரிவில் சுமார் 150 பேர் இருந்தனர். அவர்கள் கோப்பிப் பயிர்களை அழிததனர். விநியோகப்படும் அரிசியை கொள்ளையடித்தனர். அகப்பட்டவர்களின் அடையாள அட்டைகளை அபகரித்துக் கொண்டு பணங்கேட்டனர். சில கிராமங்களில் உடுத்த துணி மட்டுமே மக்களிடம் மிஞ்சியது. தாத்தார் லெபுவாய் என்ற கிராமமொன்றில் வெளியேற்றப்பட்ட கிராமவாசிகள் தாம் நடுகை செய்த கோப்பியை பறித்துக் கொடுக்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டனர். அவ்வாறு செய்யத்தவறியோர் இஸ்லாமியத் தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்படுவர் என அச்சுறுத்தப்பட்டனர். இச்சாட்டைக் கொண்ட அரசுக்கெதிரான சதிக்குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது கொண்டுவரப்பட முடியும். அதே ஆண்டு அம்மாகாணத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்குமிடையே மோதல் நடைபெற்றிருந்தபடியால், இவ்வச்சுறுத்தல் படுபயங்கரமாகும். மே 1989 அளவில் அப்பிரதேசத்தின் பெரும்பகுதி அழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் கிராமவாசிகளை வேறிடத்தில் குடியமர்த்துவதற்கோ அல்லது அதற்கான நிதி வசதியைத் தேடவோ எத்தகைய முயற்சியும் எடுக்கப்படவில்லை. அப்பகுதியில் மீண்டும் காடுவளர்க்கும் திட்டம் ஜனாதிபதியின் குடும்பத்தோடு தொடர்புடைய கம்பெனியொன்றால் நடைமுறைப்படுத்தப்படப் போகின்றது என்ற குற்றச்சாட்டுக்கு ஆதாரமேதும் முன்வைக்கப்படவில்லை. ”
37. ஆசியா கண்காணிப்பு அநீதி, கொடுமைகள் வெளியேற்றம் நியூயோர்க், 1990 பக் 59-61.
62

4. கிராமப்புற அமைப்பாளர்களுக்கெதிரான நிலச்சொந்தக் காரனின் வன்முறைகள் குறித்து வாளாவிருத்தல்.
Af)GArab
பிரேசிலில், பயன்படுத்தப்படாத நிலங்களைப் பிடித்துக் கொள்வதற்கு, அல்லது வெளியேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு பயிர் செய்கையாளரை ஒன்று திரட்ட முற்பட்ட கிராமப்புற சங்க அமைப்பாளர்கள் மீது பெருநிலச் சொந்தக் காரர்களின் கூலிப்படையினர்
வன்முறையைப் பலமுறை கட்டவிழ்த்துவிட்டனர்."
இக்கிராமப்புற வன்முறையைத் தொடர்ந்து, பிரேசிலிய அரசாங்கம் உள்ளூர் சங்க அமைப்பாளர்களைப் பாதுகாக்கவும், அவர்களின் மரணங்களுக்குக் காரணமானோரைத் தண்டிக்கவும் தவறியமை, தண்டனையின்றி குற்றம் புரியும் வட்டத்தை உருவாக்குவதற்கு வித்திட்டது. ஜனவரி 1, 1964 க்கும் ஜனவரி 31, 1992 க்கும் இடையே நிலப்போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட கூட்டு மொத்தம் 1981 கிராமப்புறத் தொழிலாளரும் நிலப்போராட்டத்தில் சம்பந்தப்பட்டோரும் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் 26 கொலைகள் சம்பந்தமாக மட்டுமே விசாரணை இடம்பெற்றது. இதில் 15 பேரின் மரணவளக்குகளில் மட்டுமே எதிரிகள் தண்டிக்கப்பட்டனர். வழக்குகளில் பெரும்பாலானவை சில, பாதிக்கப்பட்டோரின் சமூக உயர்வு (சட்டத்தரணி, மதகுரு) காரணமாய் அல்லது சர்வதேச அக்கறை போதிய நிர்ப்பந்தத்தையுண்டு பண்ணியபடியால் வெற்றிபெற்றன. இந்தியர் கொலைகள், சூழல்வாதி சிகோ மெண்டெஸ் கொலை முதலிய விவகாரங்களில் இவ்வாறு நேர்ந்தது.
குறிப்பாக, கிராமப்புற சங்கங்களை உருவாக்கிய அமைப்பாளர்கள் மீது கொடுமைகளும் கொலைகளும் கட்டவிழ்த்துவிடப்பட்டன. 1991ல் மட்டும் கிராமப்புற சங்க அமைப்பாளர் ஐவர் கொலை செய்யப்பட்டனர். ஒன்பது பேர் தமக்கெதிரான முயற்சிகளிலிருந்து தப்பினர். 43 பேர் மீது கொலை அச்சுறுத்தல் உருவாயிற்று. *
கிராமப்புற வன்முறைக்கான காரணிகள் பற்றிக் கருத்து வேற்றுமை குறைவுற அவற்றுள் ஒன்று வலியோர் சிலரிடம் நிலச் சொத்து 38. முழுமையான அலசலுக்குப் பார்க்கவும் "பிரேசிலில் கிராமப்புற வன்முறை" அமெரிக்கா காவல் (நியூயோர்க் 1991) இன்னும் பிரேசிலின் நிலப் போராட்டம் அமெரிக்கா காவல் கண்காணிப்பு (நியூயோர்க், 1992) 39. Commissao Pastoral da Terra, Conflitos no campo-brurit 1991, Goiania, May 1992 charts 6-8
63

Page 36
சேர்ந்து குவிந்தமை. சூழல் கட்டுப்பாடு, தொழிலாளர் நலச் சட்டங்கள், நிலம் மீளப் பகிர்ந்தளிக்கப்படல் போன்ற சீர்திருத்தங்களை அவர்களால் தடுக்க முடிந்தது. பிரேசிலிய கமத்தொழில் அமைச்சர் அந்தோனிலோ கம்பரேரா - அரசியல் பழமைவாதப் போக்குடையவர் பின்வருமாறு கூறியுள்ளார்.
கிராமப்புற வன்முறை ஒட்டுமொத்தத்தில் அநீதமான விவசாய அமைப்பின் விளைவாகும். நிலவுடைமை, நிலப்பயன்பாடு முதலியவற்றால் பதற்ற நிலையையும் மரணங்களையும் உருவாக்கியது ஒரு புறத்திருக்க, நகரவளர்ச்சியைத் துரிதப்படுத்தும் பிரச்சனையின் மையமாகவும் அது விளங்குகிறது."
நிலம் செல்வத்தின் அடிப்படை மட்டுமன்று, அரசியல் அதிகாரத்தின் அடிப்படையும்கூட. உலகிலேயே மிகவும் உயர்ந்த அளவில் குவிந்துகிடக்கும் நிலவுடைமை பிரேசிலில் நிலவுகின்றது. 1989ல் ஒவ்வொன்றுக்கும் 500 ஹெக்டயருக்கும் அதிகமான நிலங்கொண்ட பெருந்தோட்டங்கள் நிலத்தின் பாதியை தமதாக்கிக் கொண்டிருந்தன. எனினும் அவை பண்ணைகளின் தொகையில் இரண்டு சதவீதமேயாகும்.41 மறுபுறம், ஒவ்வொன்றும் சராசரி 3.25 ஹெக்டயர் கொண்ட 30 இலட்சம் சிறு பண்ணைகள் காணப்பட்டனவெனினும் அவை நாட்டின் பண்ணை நிலத்தொகையில் மூன்று சதவீதத்தை மட்டுமே கொண்டிருந்தன.42 பிரேசிலில் நிலமற்ற கிராமவாசிகளின் தொகை பற்றிய மதிப்பீடு வித்தியாசப்படினும் அது 20 இலட்சத்துக்கும், 70 இலட்சத்துக்கும் இடைப்பட்டதெனக் கருதப்படுகின்றது.
பிரேசீலியர்கள் மத்தியில் வருவாயும் மிகவும் சமத்துவமற்ற முறையிலேயே காணப்படுகின்றது. 1989ல் நாட்டின் குடியிருப்பாளர்களது மொத்த வருவாயில் 62 வீதம் இருபது சதவீத செல்வந்தர்களிடமிருந்தது. ஆனால் கீழ்மட்டத்தைச் சேர்ந்த இருபது வீதத்தினர் எட்டுவீதத்துக்கும் சற்று அதிகமான வருவாயை மட்டுமே பெற்றனர். *
உயிர் உடம்புடன் நிலைப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள கிராமப்புற நிலமற்ற தொழிலாளர்கள் பயன்படுத்தப்படாத நிலத்தில் வாழ்க்கை
40. கிராமப்புற வன்முறை மீதான காங்கிரஸ் விசாரணை கமிஷன் முன்னாள் விவசாய - விவசாயச் சீர்திருத்த அமைச்சர் அந்தோனியோ கம்ப்ரேரா வழங்கிய தொட்கக் குறிப்புரைகள் பிரஸ் பிரல் பிரியா ஜூன் 17,1991.
41. ஒரு ஹெக்டயர் 2.47 ஏக்கராகும்.
42. பிரேசில் புவியியல் நிறுவன வெளியீடு 1984, பக்கம் 293
43. உலக வங்கி "உலக அபிவிருத்தி அறிக்கை 1991 (வாஷிங்டன்) பக்கம் 200”
64

வருவாய்க்காகவும் முடிந்தபோது இலாபம் பெறுவதற்காகவும் பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் உபாயத்தை அவ்வப்போது கையாண்டனர். இப்பயிர்த்தொழில் தனி முயற்சியாகவும், ஒருங்கமைந்த கூட்டு முயற்சியாகவும் நடைபெற்றது. இக்கிராமப் புறத்தொழிலாளர்கள் வாழ்க்கை வருவாய்க்கு மட்டுமன்றி, நிலத்தைத் தமக்கு விடும்படி , அரச முகவர்கள் மீதும், கூட்டுமுகவர்கள் மீதும் நிர்ப்பந்தத்தைக் கொண்டு வருவதற்காகவும் நிலத்தைத் தம்வசம் பிடித்துக் கொண்டனர். 1991ல் இவ்வாறு நிலத்தைப் பிடித்துக் கொள்ளும் 77 சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் 9.644 குடும்பங்கள் சம்பந்தப்பட்டிருந்தன. தாம் பயிர்ச்செய்கை மேற்கொண்டிருந்த, நிலத்திலிருந்து சட்டபூர்வ உரிமை தகராறு காரணமாக வெளியேற்றப்படுவதனை எதிர்ப்பதற்காகவும் கிராமப்புற விவசாயிகள் அடிக்கடி ஒன்று திரளவேண்டியிருந்தது. இத்தகைய விவகாரங்களில் கிராமப்புற ஏழைமக்கள் பெரும்பாலும், பணபலம் படைத்த நிலப் பிரபுக்களினதும், நிலவியாபாரச் சூதாடிகளினதும் வன்முறைகளாகவேண்டியிருந்தது. 1991ல் பிரேசிலிய மேற்றிராணிமார்களின் மகாநாட்டின் ஆதரவில் ஏற்படுத்தப்பட்ட மேய்ச்சல் நில அதிகாரக்குழு 70 இலட்சம் ஹெக்டயர் நிலத்தில் இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் மக்களின் நிலவுரிமை சம்பந்தப்பட்ட 383 மோதல்களைப் பதிவு செய்தது.
நிலத்தைத் தமதாக்கிக் கொள்ளும்படியும், வெளியேற்றத்தை எதிர்த்து நிற்கும்படியும் கிராமப்புறக் கமத்தொழிலாளர்களை ஒன்று திரளச் செய்த அமைப்பாளர்கள் மீது படுமோசமான வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது அதிசயமன்று. பிரேசிலின் மோதல் மலிந்த பகுதியான நகரொன்றில் மட்டும் (பரா மாநிலத்தின் தென்பகுதியைச் சேர்ந்த ரியே மரியா நகரில்) 1985 லிருந்து கிராமப்புறத் தொழிலாளர் சங்கத் தலைவர்கள் ஆறுபேர் கொலை செய்யப்பட்டனர். மிகவும் சமீபத்திய கொலை பெப்ரவரி 2, 1991ல் நடந்தது. ரியோ மரியா கிராமத் தொழிலாளர் சங்கத் தலைவர் எக்ஸ்பெடீட்டோ ரிபெய்ரோ த சூசா கொலை செய்யப்பட்டார். இக்கொலை சம்பவிப்பதற்கு முன் எக்ஸ்பேடிட்டோ தமது தொழிற்சங்க ஈடுபாட்டுக்கெதிராக அச்சுறுத்தல் தொடர்ச்சியாக ஏற்பட்ட போதிலும் பிரேசிலிய அரசாங்கத்திடமிருந்து அவருக்குப் போதிய பாதுகாப்பு கிடைக்கவில்லை. எக்ஸ்பெடீட்டோவின் கொலை நடந்து ஒருமாதத்தின் பின், அவரைத் தொடர்ந்து கிராம தொழிற்சங்கத் தலைவரான கார்லொன் கப்ரால் பெரெய்ரா கொலை முயற்சியிலிருந்து மயிரிழையில் தப்பினார்.
கொலை செய்வதற்காகக் கிராம தொழில் சங்கத் தலைவர்கள்
65

Page 37
மீது மேன்மேலும் குறிவைக்கப்பட்டதன் காரணங்குறித்து, கிராமப்புற ஏழைகளை ஆதரித்து நிற்கும் பிரேசிலிய போராட்டக்காரர்களுக்குச் சிறிதும் ஐயம் கிடையாது. குறி வைக் கப் படும் இவ் வக் கிரமம் குறித்து சலர் பதப்பிரயோகமொன்றைக் கண்டு பிடித்துள்ளனர். சட்டாம்பித்தன வன்முறை - அதாவது நிலம் படைத்த மேட்டுக் குடியினர் அதிகாரத்துக்குச் சவால்விடுக்க ஒன்று திரள்வதன் விளைவு குறித்து கிராமப்புற ஏழைகளுக்குப் "பாடம் புகட்டத்” திட்டமிட்ட வன்முறை. மேய்ச்சல் நில அதிகாரர்க்கு அதன் 1991 அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடுகின்றது. பிரேசிலில் மோதல்களினதும் கொலைகளினதும் மொத்த எண்ணிக்கை குறைந்துள்ளபோதிலும், கிராம வன்முறை பிரச்சினையை, மோதல் களின் எண்ணிக்கைகளால் மட்டும் அளந்துவிட முடியாதென்பதை நினைவில் நிறுத்திக் கொள்வது அத்தியாவசியம். வன்முறையைக் கையாள்வதில் அதிகரித்து வரும் நாகரிகமுறை அதிக சங்கடம் தருவதாகும். சட்டாம்பித்தன வன்முறை தொழிலாளர் அமைப்புகளுக்குத் தீங்குவிளைவித்து, கிராமப்புற ஏழைகளிடம் காணப்படும் உற்பத்திச் சாதனங்களை அழித்தொழிக்கும் வகையில் தேர்ந்தெடுத்த முறையில் திட்டமிடப்படுவதாகும். இதன் விளைவாய் வன்முறை எழுந்தமானமாய் நிகழ்வதில்லை. அதற்குப் பதிலாக, கிராமப்புறத் தலைவர்களது கொலைகள் அதிகரித்து வருவதைக் காண்கிறோம். தலைவர்களில் லாத இயக்கம் அதன் ஆதரவாளர் களை அணிதிரட் டுவதில் மாபெரும் முட்டுக்கட்டைகளை எதிர்நோக்க நேரிடும் என்பதை பெரிய நிலப் பிரபுக்கள் உணர்ந்துள்ளனர்.*
பராகுவாய்
பராகுவாய் இதேபோன்ற நிலைமையை எதிர்நோக்குகின்றது.45 நிலமற்ற விவசாயிகளின் உரிமைப் பாதுகாப்புகளுக்கான சட்டங்கள் புத்தகங்களில் காணப்பட்டபோதிலும், நடைமுறையில் அவை புறக்கணிக்கப்படுகின்றன. விவசாயிகள் தம் உரிமைகளை அறிந்திருந்த போதிலும் அவர்களால் அவற்றைப் பாதுகாத்துக் கொள்ள முடிவதில்லை. உழுபவனுக்கே நிலம் சொந்தமாகையால் காணி உறுதிகள் தேவையில்லையென்பது பராகுவாய் உழவரின் பாரம்பரிய நம்பிக்கை என்றபோதிலும் 1963ல் ஸ்ட்ரோஸ்னர் நிலச்சீர்திருத்தத் திட்டமொன்றைக்
44. Commissao Pastotal da terra contitos no Campo-Brasil 1991 p. 32 45. அமெரிக்கா காவல் “பராகுவாய் நாட்டுப்பறத்தில் ஒடுக்குமுறை, (மே 1988) இன்னும்
பராகுவாய் நிலத்தகராறுகளில் புதிய வன்முறைத் தாண்டவம். பெப்ரவரி 1991.”
66

கொண்டு வந்தார். அரசாங்கத்துச் சொந்தமான நிலத்தில் பயிர்த்தொழிலில் ஈடுபட்டு அதனை அபிவிருத்தி செய்வதற்கு உழவருக்கு உரிமை வழங்குவதே இத் திட்டத்தின் நோக்கமென அறிவிக்கப்பட்டது. நிலம் ஸ்ட்ரோஸ்னரின் நண்பர்களுக்கும் கூட்டாளிகளுக்கும் கொள்ளை மலிவான விலைக்கு விற்கப்பட்டது. 1981 அளவில் பராகுவாய் நாட்டில் 36.3 வீதம் ஒரு சில அந்நிய கம்பெனிகளுக்குச் சொந்தமாகிவிட்டது. அதேவேளை இன்னும்? வீதம் பராகுவாய் பெருங்கமப் பண்ணைகளுக்குச் சொந்தமாகியது.
ஸ்ட்ரோஸ்னரைப் பதவியிலிருந்து கவிழ்த்த பெப்ரவரி 1989 புரட்சியின் பின் பெருங்கமப் பண்ணைகளுக்கு சொந்தமானதென அறிவிக்கப்பட்டிருந்த ஆனால் பயன்படுத்தப்படாலே கிடந்த நிலத்தை ஆயிரக் கணக்கான உழவர்கள் பிடித்துக் கொண்டனர். புதிய ரொட்ரிகுயெஸ் அரசாங்கம் அவர்களுக்குத் தொல்லை தராதென அவர்கள் நம்பியிருந்தனர். அதுவும் அமைதியான முறையில் பிடித்துக் கொள்ளப்பட்ட நிலம் விட்டுக் கொடுக்கப்படல் வேண்டுமென்றும் சட்டபூர்வமாகவன்றி எவரும் வெளியேற்றப்படக் கூடாது என்றும் பராகுவாய் சட்டம் விதித்திருந்தது.
ரொட்ரிகுவஸ் பதவியேற்ற மே 15, 1989ல் பராகுவாய் முழுவதும் உழவர்கள் நிலங்களைப் பிடித்துக் கொண்டனர். ஆண்டு இறுதியளவில் நூற்றுக் கணக்கானோருக்கக் கொடுமையிழைக்கப்பட்டது. அவர்கள் நையப்புடைக்கப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். ஒரு முறை கொலை செய்யவும்பட்டனர். அல்டோ பரானா பிரதான பாதை வழியாக அரசாங்கத்துக்குச் சொந்தமானதென நம்பப்பட்ட நிலத்தில் விவசாயிகள் குடியேறிய இரண்டு வாரங்களில், அவர்களது பிரச்சனை மூன்று மாதங்களில் தீர்க்கப்பட்டு விடுமென்றும், எனவே அவர்கள் வெளியேற வேண்டுமென்று இராணுவத்தினால் கேட்டுக் கொள்ளப்பட்டபோது அவர்களும் அமைதியான முறையில் வெளியேறினர். மூன்று மாதங்கள் கழிந்தும் அவர்கள் பிரச்சனை தீர்க்கப்படாததால் மீண்டும் அவர்கள் அதே நிலத்தில் வந்து குடியேறினர். ஒரு மாதத்தின் பின் செப்டம்பர் 12ம் திகதி அப்பகுதி 300 ராணுவ வீரர்களால் சுற்றி வளைக்கப்பட்டது. பெண்கள் உட்பட அங்கு குடியேறியோர் அனைவரும் குண்டாந்தடிகளாலும் துவக்குகளின் பின்பகுதியாலும் நையப்புடைக்கப்பட்டு கனரக வண்டிகளில் அப்புறப்படுத்தப்பட்டனர். அவர்களின் குடிசைகள் யாவும் தீக்கிரையாக்கப்பட்டன.
67

Page 38
பின்னர், நிலத்தில் குடியேற உரிமை உறுதி வழங்கப்படுமென இராணுவத் தளபதியொருவர் வாக்களித்தபடியால் அவர்கள் மீண்டும் அவ்விடத்துக்குத் திரும்பினர். எனினும் பிரேசிலிய நிலப்பிரபுவான புளோரண்டினோ ரொஸாட்டோ அவர்களைத் துன்புறுத்துவதை நிறுத்தவில்லை. செப்டெம்பர் 26ல், தனது வழக்கறிஞரோடும் சில அதிகாரிகளோடும், அங்கு பிரவேசித்து, உழவர்களுக்கு வாக்குறுதியளித்து முன்னர் இராணுவத் தளபதி கையொப்பமிட்டு வழங்கியிருந்த உரிமை உறுதி செல்லுபடியாகாதென அறிவித்தார். அவர்களது குடிசைகளுக்குப் பக்கத்தில் இராணுவம் முகாமமைத்தது. 1990 ஜூலை வரை அவர்கள் உழவர்களுக்கு இடையூறு விளைவித்து வந்தனர். அக்காலகட்டத்தில் மூன்று தனிநபர்கள் மீதும், அடையாளங் காணப்படாத "மற்றோர்” மீதும் பிடி விறாந்துடன் ராணுவத்தினர் வந்து சேர்ந்தனர். ஐம்பத்திரண்டு பேர் கைதுசெய்யப்பட்டு ஒருவாரத்திற்கு மேல் தடுத்து வைக்கப்பட்டனர் போதிய உணவோ, போர்வைகளோ அவர்களுக்கு வழங்கப்படவில்லை. பின்னர் கொள்ளை, கொலை செய்யப்பயமுறுத்தல் காட்டு மரத்தைக் களவாடல், தனியார் சொத்தை அபகரித்தல் போன்ற குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது கொண்டு வரப்பட்டன.
பராகுவாயில் நிலப்பிரபுக்கள் தனிப்பட்ட சொந்த இராணுவங்களை அதிகமாக உருவாக்கி வருகின்றனர். இவ்விராணுவங் கள் தண்டனையிலிருந்து விதிவிலக்கு பெற்றனவாய் இயங்கி வருகின்றன. பெரும் நிலச்சொந்தக்காரர்களின் நிலத்தில் ஒரு பகுதியை அரசாங்கம் உழவர்களுக்குக் கையளித்த பின்னரும், உழவர்கள் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். டொரின், காகுவாஸ" முதலிய இடங்களில் உழவர்களை கமத்தொழிலில் ஈடுபடவிடாமல் முள்வேலிகளையமைத்துத் தன்னியக்கத் துப்பாக்கியால் குண்டர்கள் தடுத்தனர். எனினும் அரசாங்கம் நடவடிக்கையெதுவுமெடுக்கவில்லை. சாந்தா ரோஸா த லிமாவில் உழவர்கள் ஒரு மாத காலமாய் பொலிஸ் பாதுகாப்பு கேட்டுவந்த போதிலும், பொலிஸ் பாதுகாப்பு அவர்களுக்கு மறுக்கப்பட்டது. ஜூன் 17, 1990 சாதாரண உடையில் அங்கு நுழைந்த துப்பாக்கி வீரர்கள் தன்னியக்கத் துப்பாக்கிகளால் உழவர்களைத் தாக்கினர் உழவர்களின் தலைவர்கள் குறிவைத்துக் கண்டுபிடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். தேசிய நிலப்போராட்ட ஒன்றிணைப்புக்குழு உறுப்பினர் ஆர்ஸ்ெனியோ பாயெஸ் மே 1990ல் கொலை செய்யப்பட்டார். 200 உழவர் குடும்பங்களால் உரிமை கோரப்பட்ட நிலத்தின் முன்னாள் சொந்தக்காரர் கூலிக்கமர்த்திய பிரேசிலிய துப்பாக்கிக் குண்டர்களாலேயே இக்கொலை புரியப்பட்டதாய் புகார் கூறப்பட்டது.
68

5. வெளிப்புறத்தவரை உள்ளே கொண்டுவரல்.
அநேக நாடுகளில், அரசியல் ரீதியில் பாதுகாப்பற்ற இடங்களுக்கும் அன்றேல் பிரிவினைவாதமோ தேசிய உணர்வலையோ கிளம்பும் இடங்களுக்கும் மேலாதிக்கக் குழுக்களைக் கொண்டு போவதும் தாழ்ந்த பதவிக்குழுவினரை அங்கிருந்து வெளியேற்றுவதும் ஆட்சியாளரின் திட்டமிட்ட சமூக பொருளாதார நல்வாழ்விலும், கலாசார தனித்துவத்திலும் செயலாகும் நாட்டு மக்கள் இச்செயலால் எதிர்மறை விளைவுகளை எதிர்நோக்குவர்.
67245Gurtz flus
1984ல் தளபதி மெங்கிஸ்டு ஹெய்லி மரியமின் எத்தியோப்பிய முன்னாள் அரசாங்கம், பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட வடபகுதியிலிருந்து 600,000 உழவர்களைப் பலவந்தமாக வெளியேற்றி நாட்டின் சற்று வளமிக்க தென்பகுதியிலும், மேற்குப் பகுதியிலும் மீளக்குடியமர்த்தும் பெருந்திட்டத்தை மேற்கொண்டது. பஞ்ச நிவாரண நடவடிக்கையாக வெளியுலகுக்குக் காட்டப்பட்ட இந்த மீளக்குடியமர்த்தும் திட்டம், அதனால் “நிவாரணம் , பெற்றோரை” படு பஞ்சத்தை விடவும் அதிவேகமான முறையில் உயிர்ப் பலிவாங்கித் தீர்ந்தது. மற்றைய குறிக்கோள்கள் மிகமுக்கியமானவையென்பதில் ஐயமில்லை. வடக்கேயுள்ள தைக்ரே, வொலோ ஆகிய கிளர்ச்சிக் கிராமங்களிலிருந்து மக்களை வெளியேற்றி, அவர்களை தென் எத்தியோப்பியாவில் புதிய கமத்தொழில் திட்டங்களுக்காக அடிமைத்தொழிலாளர்களாக உருவாக்குவதையே இத்திட்டம் குறிக்கோளாகக் கொண்டிருந்தது. மீளக் குடியமர்த்தப்பட்ட சில பகுதிகள், குறிப்பாக வொலேகா மாகாணம், கிளர்ச்சிப் பகுதிகளாகத்தான் இருந்தன. அங்கு ஒரோமோ இனத்தவர் அரசாங்கத்துக்கெதிராக கொரில்லா யுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். இப் பகுதிகளில் மீளக்குடியமர்த்தும் திட்டம் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கையாகப் பயன்பட்டது. சுற்றியுள்ள கிராமங்களில் உளவுபார்ப்பதற்கும், ஒடுக்குமுறை ஆட்சி நடத்துவதற்கும் இப்பகுதிகள் கேந்திர நிலையமாகப் பயன்படுத்தப்பட்டன.
மீளக்குடியமர்த்தும் திட்டம் இருவகைப்பட்டவை. "பாரம்பரிய குடியமர்த்தல்" முறையில் மீளக்குடியேறுவோர் அரசாங்கப் பண்ணைகளால் சூழப்பட்ட மாதிரி கிராமங்கலில் அமர்த்தப்பட்டு பிரதியுபகாரமாக வேலைத்தளங்களில் தமது உழைப்பைக் கொடுத்துப் பிழைப்புப்பெற்றனர். நிலம் உள்ளூர்வாசிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. சிலவேளைகளில் உள்ளுர்வாசிகள் முக்கியமான
69

Page 39
பண்ணைநிலங்களையும், புற்றரைகளையும் இழந்திருந்தனர். ஏனைய வேளைகளில் முக்கிய காட்டுநிலங்கள், இடிப்புப்பணக்கொடுப்பனவின்றி, பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. குமுஸ் என்ற உள்ளூர் இனக்குழுவொன்று காட்டுநிலங்களில் அடியெடுத்து வைக்க முடியாமல் தடுக்கப்பட்டபடியால் பஞ்சத்தின் விளிம்புக்குத் தள்ளப்பட்டதனை, விசாரணையொன்று வெளிப்படுத்திற்று. தம் நிலங்களைப் பறிகொடுத்தது மட்டுமன்றி, உள்ளே நுழைந்தவர்களுக்கு வீடுகட்டிக் கொடுக்கவும், புதிய குடியேற்றங்களுக்காக நிதியுதவி வழங்கவும், மந்தைகளுட்பட மற்றும் உடைமைகளை விட்டுக் கொடுக்கவும் உள்ளூர்வாசிகள் துப்பாக்கி முனைகளில் நிர்ப்பந்திக்கப்பட்டனர். *
“ஒன்றிணைந்த குடியேற்ற" முறைக்கிணங்க ஏற்கனவே இயங்கி வந்த கிராமங்களில் குடியேற்றவாசிகள் அமர்த்தப்பட்டனர். இந்த நடவடிக்கை குறைந்த சீர்குலைவை ஏற்படுத்தியபோதிலும், ஏலவே வறியோராயிருந்த உள்ளூர்வாசிகள் மீது மேலதிகப் பளுவைச் சுமத்திற்று. புதிய குடியேற்றவாசிகள் தன்னம்பிக்கையுடைய துணைபுரியுமாறு உள்ளூர் கிராமவாசிகள் நிலத்தையும் உழைப்பையும் வழங்குவார்களென எதிர்பார்க்கப்பட்டது. இதற்குப் பதிலாக போதிய இழப்புப்பணம் எதுவும் வழங்கப்படவில்லை.
முன்னைய அரசாங்கத்தின் இராணுவத் தோல்வியின் விளைவாய் இத்திட்டம் கைவிடப்படும்வரை இதன்படி குடியேறியோர் "உயர்மட்ட நிலக்குடிகளாய்” கணிக்கப்பட்டனர். தங்கள் சொந்த இடங்களில் ஆதிக்கங்கொண்ட குழுவினராய்க் கருதப்படாதபோதும் புதிய குடியேற்றப் பகுதிகளில் அவர்கள் அவ்வாறு ஆக்கப்பட்டனர். அவர்களைக்கொண்டே உள்ளூர் மக்களை அப்படையினர் பயமுறுத்தி கொள்ளையடித்தனர். மீளக்குடியேற்றப் பகுதிகளில் கொரில்லா தாக்குதல்கள் நடந்தபோது, உள்ளூர்வாசிகள் துரிதவேகத்தில் நசுக்கப்பட்டனர். 1988-90ன் போது டஜன் கணக்கான கிராமங்கள் கொளுத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்மை நாடான சூடானுக்கு தப்பியோடினர்.
பங்களாதேஷ்
1979 க்கும் 1984க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பங்களாதேஷ் அரசாங்கம் இராணுவத்தின் உதவியோடு 400,000 வங்காளக் குடியேற்றக்காரர்களை சிட்டாகொங் மலைப்பிராந்தியத்தில்
46. "டெஸாலென் ரஹ்மத்தோ” மேற்கு எத்தியோப்பிய மெட்டெக்கெலில் குடியமர்த்தலும் மீளக்
குடியமர்த்தலும், ஆபிரிக்கா ரோமா) 43, 1988.
70

குடியமர்த்தியது. நாட்டின் தென்கிழக்கிலுள்ள இப்பகுதி பெளத்த சக்மா, மர்மா இனக்குழுக்கள், இந்துதிரிபுர மக்கள் ஏனையோர் போன்றோரின் தாயகமாகும். குடியேற்றக்காரர்கள் வந்து புகுவதற்கு முன்பே அங்கிருந்த நிலம், கப்டாய் அணை நிர்மானத்துக்காக வெகுவாய்த் துண்டாடப்பட்டது. மலைப்பகுதியின் 40 வீதமான விவசாயநிலம் அணைக்கட்டு ஏற்படுத்திய நீர்ப்பெருக்கினால் பாதிக்கப்பட்டது. அணை 1974ல் கட்டி முடிக்கப்பட்டது. அங்கு குடியேற்றக்காரர்கள் வந்து புகுந்தமை ஓரளவு பாதுகாப்பு நடவடிக்கையாகும். சிட்டாகொங் மலைப்பிராந்திய மக்கள் ஐக்கியக்கட்சி 1971 தொடக்கம் பிரதேச சுயாட்சி கோரிப் போராடிக் கொண்டிருந்தது. சாந்தி பாஹினி என்ற இராணுவப் பிரிவை உருவாக்கியிருந்த அக்கட்சி, 1976ல் சுயாட்சி உரிமைகோரி வன்முறையில் இறங்கியது. இனக்குழுக்களைச் சேர்ந்த மக்களின் மனக்குறைகள் பொருளாதாரத் தன்மை வாய்ந்ததாகவும் அதேபோன்று அரசியல்தன்மை வாய்ந்ததாகவும் சீக்கிரம் மாறின. வங்காள குடியேற்றக்காரர்கள் வளம்மிக்க நிலப்பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தனர். அநேகமாக அங்கிருந்த உள்ளூர்வாசிகள் பலாத்காரமாய் வெளியேற்றப்பட்டிருந்தனர்.
நிலத்தைப் பறித்தெடுத்துக் கொள்ளும் இப்போக்கு 1980 அளவில் சாந்தி பாஹினியின் ஆதரவு இங்கு பெருகக் காரணமாயிற்று. கொரில்லாக்களுக்கும் ராணுவத்துக்குமிடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டன இருதரப்பினரும் குடிமக்களின் உரிமைகளை இருசாராரும் உதாசீனஞ் செய்தனர். சாந்திபாஹினியின் தாக்குதல்கள் பிரமாண்டமான இராணுவ பதில் நடவடிக்கைகளுக்கு இட்டுச் சென்றது. 1986ல் வன்முறை உச்சநிலையையடையவும் ஆயிரக்கணக்கான மலைவாசிகள் அகதிகளாக இந்தியாவுக்கு ஓடினர். மலைவாசிகளுக்கும் அரசாங்கத்துக்குமிடையே பேச்சுவார்த்தைகளேற்பட்டபடியாலும், சாந்திபாஹினிக்குக் கிடைத்துவந்த ஆயுத உதவி குறைந்தபடியாலும் 1980களின் பிற்பகுதியில் பதற்றம் சற்று தணிந்தது. ன்றபோதிலும் ஏப்ரில் 1992ல், வங்காள இளைஞனொருவன் சக்மா இனப்பெண்ணைக் கற்பழிக்க முயற்சித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, இராணுவ வீரர்களின் ஆதரவு பெற்ற மக்கள்படையான கிராமப் பாதுகாப்புக் குழுக்களினால் குடியேற்றவாசிகளின் சார்பில் பாரிய பதில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இருதினங்களுக்குப் பின் உணமையை நேரில் அறிவதற்கு டாக்காவிலிருந்து சென்ற விசாரணைக்குழு, 400க்கும் அதிகமான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டனவென்றும், 100க்கும் அதிகமான இனக்குழுவாசிகள் கொலை செய்யப்பட்டனரென்றும் அறிவித்தது. பிரபல வங்காள உத்தியோகத்தர்களைக் கொண்ட இக்குழு, "இனச்
71

Page 40
சிறுபான்மையினர் இனப்பெரும்பான்மையினரான வங்காளிகளை விடத் தாழ்ந்தவர்களாகவும், இரண்டாந்தரப் பிரஜைகளாகவும் அதிகார வட்டாரத்தினால் கருதப்பட்டு, அரசியல் யாப்பு ரீதியாக அவர்களுக்கு உத்தரவாதஞ் செய்யப்பட்டுள்ள உரிமைகள் கிரமமாக மறுக்கப்பட்டுள்ளது.” எனக் குறிப்பிட்டது.
மேற்குக் கரையோரப் பகுதி / ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள்.
மேற்குக் கரையோரத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் யூதக் குடியேற்றங்களை அமைத்து நிதி உதவிகள் வழங்கும் அரசின் மொத்த நடவடிக்கைகள் முழுக்க முழுக்க அரசியல் தன்மை வாய்ந்ததாகும். ஷமீரின் தலைமையில், பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போது, யூதக் குடியேற்றத்தைத் துரிதப்படுத்துவதன் மூலம் அப்பகுதியின் பூகோள உண்மையையே மாற்றிவிட முயற்சித்தது இஸ்ரேல். 1991ல் மட்டும், மேற்குக் கரையோரத்தில், கோலான் குன்று, காஸா பகுதி முதலியவற்றில் யூத சனத்தொகை கிட்டத்தட்ட 10,000 அளவில் அதிகரித்திருந்தது."
ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில், குடிமக்களான பாலஸ்தீனியர்களைப் புறக்கணித்து யூதக் குடியேற்றக்காரர்களுக்குச் சலுகை காட்டுவதற்கு, நேரடியாக பணஞ் செலவிடுவதுடன் பல்வேறு முறைகளைக் கையாண்டு வருகிறது இஸ்ரேல் அரசாங்கம். யூதர்களுக்கு அடமான உதவித்தொகை கிடைக்கின்றது. கட்டட அனுமதிப்பத்திரங்கள் யூதர்களுக்கு உடனுக்குடன் கிடைக்கின்றன. தம்வீடுகளை உடைப்பது உட்பட, சட்டத்தை மீறி கட்டடங்களை நிர்மாணித்தல் போன்ற செயல்களுக்கு யூதரைவிட பாலஸ்தீனர்களே உடனுக்குடன் தண்டிக்கப்படுகின்றனர். அரசாங்கத்தால் நிர்மாணிக்கப்படும் பாதைகள் பலஸ்தீனக்கிராமங்களைத் தவிர்த்து, யூதக்குடியேற்றங்களுக்கு உதவுகின்றன. சில வேளைகளில் பிரதான வீதிகளுக்கும், தொலைபேசிக் கம்பிகளுக்கும் அருகில் காணப்படும் பாலஸ்தீனர்களின் நிலம் மூடு மந்திரமான "பாதுகாப்பு காரணங்களு”க்காகப் பறிமுதல் செய்யப்படுகின்றது. வரண்டபகுதிகளில் குறைவாக விநியோகிக்கப்படும் தண்ணிர்கூட, பலஸ்தீனர்களைவிட யூதர்களுக்கு அதிக அளவில் அதுவும் மலிவு விலைக்கு வழங்கப்படுகின்றது.
தென்னாபிரிக்கா
தென்னாபிரிக்காவில், பெரும்பான்மையினரான கறுப்பர்களுக்கு குடியியல் உரிமை, அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளமை,
47. மேற்குக்கரையில் 7000-10,000 அதிகரிப்பு காஸ்ா பகுதியில் 6000 அதிகரிப்பு, கோலான்
கன்றில் 2000 அதிகரிப்ப என்ற கணிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டது.
72

பெருந்தொகை கறுப்பு குடிமக்களை அப்புறப்படுத்துவதற்கும், நிலமற்றவராக்குவதற்கும் அரசாங்கத்தை அனுமதிக்கும் அத்தியாவசியக் கருவியாக விளங்குகிறது. "சுதந்திரத் தாயகங்கள்" என அழைக்கப்படும் பகுதிகளில் மக்களுக்குக் குடியியல் அரசியல் உரிமைகள் வழங்கப்படாமை அவ்விடங்களில் பிரஜாவுரிமைப் பெறுமாறு பலவந்தப்படுத்தப்பட்டுள்ள மக்களின் பொருளாதார அரசியல் உரிமைகளை மேலும் இருளடையச்செய்கின்றது. தென்னாபிரிக்காவில் பத்து தாயகங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் நான்கு சுதந்திரமானவையாகப் பிரகடனப்படுத்தப்பட்டவை. அவையாவன போஃபு தட்ஸ்வானா, சிஸ்கெய், திரான்ஸ்கெய், வெண்டா, ஆரம்பத்தில் அரசு மனத்திற்கொண்ட தாயகக் கொள்கைப்படி, நாட்டிலுள்ள ஆபிரிக்கர் அனைவரும் அவர்களின் இனப் பூர்வீகத்துக்கேற்ப குறிப்பிட்ட வொரு தாயகத்திற்குரியவராய் ஆக்கப்படல் வேண்டும். இதன் விளைவாக அவர்கள் தம் தென்னாபிரிக்கப் பிரஜாவுரிமையை இழத்தல் வேண்டும். முதலில் இவ்வினங்கள் “வெள்ளை" தென்னாபிரிக்காவிலிருந்து தாயகங்களுக்கு இடம்பெயர்க்கப்படல் வேண்டும். "சட்டவிரோத" எதிர்ப்புக்கிளாச்சி காரணமாகவும் பாரிய சர்வதேச நிர்ப்பந்தம் காரணமாகவுமே அரசர்ங்கம் அதன் ஆரம்ப தந்திரோபாயத்தைக் கைவிட்டது. அப்புறம் விசாலிப்பு அரசு , குறிப்பிட்ட ராஜ்ய எல்லைகளின் விசாலிப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியது. (இது மே 1990ல் நீக்கப்பட்டது.) இதன் அடிப்படையில் தாயக எல்லைகள் மீண்டும் வரையறுக்கப்பட்டன. இதனால் 1988 லியு பொண்டெய்னும், பிரக்லாக்டேயும் போஃபுதட்ஸ்வானாவுடன் இணைக்கப்படும் நிலையேற்பட்டது. 1989ல், சிஸ்கெய்யின் ஒருபகுதியாய் தோர்ன்ஹில் இணைக்கப்பட்டது.
இக்கட்டத்தில், இச்சமூகத்தினர் தாயக அதிகார வட்டத்தினரின் ஒடுக்குமுறை உபகரணங்களை எதிர்நோக்கவேண்டி நேர்ந்தது. குடியியல் அரசியல் உரிமைகள் சுதந்திரமாய்க் கடைப்பிடிக்கப்படுவதனையும் இவ்வதிகார வட்டத்தினர் அனுமதிக்கவில்லை.
தாயக அதிகார வட்டத்தினுள், இனங்களின் அதிகார பிரதிநிதித்துவம் இடம்பெறவில்லை. உதாரணமாக சிஸ்கெய்யில் இனக்குழு அதிகார வட்டத்தின் உள்ளூர் மட்ட நிர்வாகம் தம் ஆட்சியின் கீழுள்ள மக்களுக்கு பொறுப்புள்ளவர்களாய் இருக்கவில்லை. உள்ளூர் பொலிஸ் சேவையாலும், கண்காணிப்புக் குழுக்கள் கலகக்காரரையடக்கும் சமூக அதிகார குழுக்கள் ஏனைய பாதுகாப்புக் குழுக்களாலும் இவ்வதிகார வட்டத்தினர் ஆதரிக்கப்பட்டனர். பெப்ரவரி 7, 1990ல் சிஸ்கெய்
73

Page 41
பொலிஸ் சமூக உறவுத்தலைவரான படைத்தலைவர் நிகாக்கி இவ்வாறு கூறினார்.
"அவர்கள் (தியோஸொம்குவா சமூகத்தினர்) தம் தலைவரை விரும்பவில்லையெனினும் பொலிஸ் அவர்கள் தம் தலைவரை விரும்புமாறு செய்யுமென்பது கவனிக்கத்தக்கதாயிருந்தது.”
அதிகார வட்டாரத்தினர் மீது எவ்வித எதிர்ப்பு / சகித்துக் கொள்ளப்படவில்லை. ஓர் சுதந்திர ராஜ்யமாக, போபுதட்ஸ்வானாவை நிராகரித்தமைக்காகவும், இணைப்பையெதிர்த்துப் போராடியமைக்காகவும் மேற்கு டிரான்ஸ்வாலைச் சேர்ந்த பிரக்லாக்டே தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருகிறது. 1991 பிராக்லாக்டேயைச் சேர்ந்த குழந்தைகள் பாடசாலை செல்லும் உரிமை மறுக்கப்பட்டு, ஆசிரியர்களின் சம்பளமும், முதியோரின் ஓய்வூதியமும் கொடுபடாமல் முடிந்துவிட்ட மூன்றாவது ஆண்டு நிறைவாகும். பிரக்லாக்டே மக்களுக்கு சமூக பொருளாதார உரிமைகள் மறுக்கப்பட்டமை, தாயகங்களினுள்ளும், முழு ஆபிரிக்காவிலும் குடியியல் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டதன் விளைவேயாகும்.
திபேத்
திபேத்தில் சீனர் திபேத்தியர்களை பொருளாதார ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் பலம் குன்றச் செய்கிறது. திபெத் மக்களின் இடமாற்றம் பலாத்காரமாக நடைபெறுவதான அத்தாட்சியெதுவும் கிடையாது. குறிப்பாக அரசாங்கத்தின் சந்தை சார்புச் சீர்திருத்தத்தால் ஏற்பட்ட பொருளாதார உந்தல்காரணமாக சீன குடியேற்றக்காரர்கள் பெருமளவில் வருகின்றனர். உல்லாசப் பயணத்துறையின் வளர்ச்சி, குறிப்பாகத் தலைநகரான லாஸாவிலும், மற்றைய நகர்ப்புறங்களிலும் சீனர்களுக்கு அதிக தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அயல் மாகாணத்தைச் சேர்ந்த சீன அங்காடிக் கூடை வியாபாரிகளும், குரலெழுப்பி வியாபாரஞ் செய்பவர்களும் திபேத்தினுள் நுழைந்து, எளிதாகப் பெறக் கூடிய தற் காலிகக் குடி யிருப்பு அனுமதிப்பத்திரங்களோடு கடைதிறக்க ஆரம்பிக்கின்றனர். அதே மாகாணங்களைச் சேர்ந்த திபேத்திய இனத்தவர்களுக்கோ லாஸ்ாவில் குடிகொள்ள அனுமதிபத்திரம் பெறுவதே பெருஞ் சிரமமாக உள்ளது. வீட்டுவசதி, தொழில் வசதி போன்ற துறைகளில் பாரபட்சம் காணப்படுகின்றது.
74

6. மரங்களை வெட்டுவதற்காகவும் வர்த்தக விவசாயத்திற்காகவும் நிலம் ஒதுக்கப்படல்.
வர்த்தக பண்ணைகளை அல்லது மரம் வெட்டி விற்குந் தொழில் நிலையங்களையும் ஆரம்பித்ததனால் உள்ளூர் இனங்களைச் சேர்ந்த பெருந் தொகையான உழவர்களின் அத்தியாவசிய ஆதார வளங்கள் மறுக்கப்பட்டுள்ளன. இதனால் வாழ்க்கை வருவாய்க்கு ஆபத்து விளைந்துள்ளது. அவர்கள் பஞ்சத்துக்கு இலக்காகும் ஆபத்தும் அதிகரித்துள்ளது.
ap/7/75/760fu/7
தெட்டத் தெளிவான உதாரணம் மாரிதானியாவிலிருந்து கிடைக்கின்றது. 1970 களின் பிற்பகுதியில், பிரதானமாய் "மூவர்' தொழிலதிபர்களின் நன் மைக்காக வேண்டி , ஸெனிகல் நதிப் பள்ளத் தாக்குகளில் வதியும் கறுப்பர் சமூகங்களை இடம்பெயர்ப்பதற்கு மூவர் ஆதிக்கஞ் செலுத்தும் அரசாங்கம் முயற்சியெடுத்தது. தமது இடங்களிலிருந்து விரட்டப்பட்ட கறுப்பர்கள் அண்மைநாடான ஸெனிகல்லில் நிலமற்ற தொழிலாளிகளாகவும், அகதிகளாகவும் அடைக்கலம் புகநேர்ந்தது. அவர்கள் பரம ஏழைகளாகவும் பஞ்சத்தால் பாதிக்கப்படக் கூடியவர்களாகவும் விளங்கினர்.
1983 வரை நிலம் சட்டவிரோதமாய் பறிமுதலானது. உதாரணமாய் சட்டவிரோதமாய் கறுப்பர்களின் வெளியேற்றம் பலவந்தத்துடன் நிகழ்ந்தது. 1983ல் உழவர்களின் உரிமைகளை மறுக்கும் சட்டமுறைகளை நிலச் சீர்திருத்தப் பிரகடனமொன்று அறிவித்தது. உடைமை சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படுவதற்காய் சகல நிலங்களும் பதிவு செய்யப்பட வேண்டியிருந்தது. கறுப்பருக்குச் சொந்தமான நில உரிமை பாரம்பரிய குத்தகை விதிப்படியே அனுவிக்கப்பட்டு வநதது. எழுத்தில் உரிமைப்பத்திரமெதுவும் அவர்களிடம் இருக்கவில்லை. நிலம் சொந்தங் கொண்டாடுவதற்குக் கறுப்பர்கள் சட்டபூர்வ அதிகாரம் பெறமுடியாமல் பல முட்டுக்கட்டைகள் இடப்பட்டன. அதேவேளை ஏலவே கறுப்பர்கள் வசமிருந்த நிலத்தில் எதனையேனும் மூவர் பதிவுசெய்து கொள்ள விரும்பியபோது அவர்களுக்கு உத்தியோகபூர்வ ஆதரவும் ஊக்குவிப்பும் கிடைத்தது. பயிர்ச்செய்யப்படாமல் வைக்கப்பட்டிருக்கும் தரிசு நிலம் இழப்பீட்டுக்கொடுப்பனவின்றி பறிமுதல் செய்யப் படுமென நிலச்சீர்திருத்தச் சட்டம் கூறிற்று. இது வழக்கமான நிலக்குத்தகை விதிகளையும், நிலப்பயன்பாட்டு நடைமுறைகளையும் மீறுவதாகும்.
75

Page 42
இவற்றின்படி நதிகள் பெருக்கெடுப்பதில் காணப்படும் வேறுபாடுகள் நிமித்தம் சிறிது நிலம் பயிர்ச்செய்யப்படாமல் விட்டுவைக்கப்படுவது அவசியம். நிலம் இவ்விதம் பறிமுதல் செய்யப்படுவது அடிப்படைச் சட்டக் கொள்கைகளை மீறுவதாகவிருந்தது. நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட நிலத்தகராறு சம்பந்தப்பட்ட வழக்குகள் யாவும் தடுத்து நிறுத்தப்பட்டன. அத்துடன் நிலத்தின்மீது பாரம்பரிய உரிமை கொண்டாடுவதற்கு அங்கீகாரம் மறுக்கப்பட்டது.
(54 /767
இரண்டாவது, இன்றும் அதிக சிக்கல் வாய்ந்த உதாரணம் சூடான் மத்திய பிரதேசம் , இங்கு 1970 களிலும் 1980 களிலும் இயந்திரமயப்படுத்தப்பட்ட பண்ணைவளர்ச்சியும் , ஓரளவு உள்ளூர்கிராமவாசிகளின் காணிபறிக்கப்பட்டமையும் 1984 - 85லும், 1990 - 91லும் ஏற்பட்ட பஞ்சத்திற்கு முக்கிய காரணிகளாகும்
பண்ணைகளின் உருவாக்கம் சிற்சிலவேளைகளில் பண்ணைக் கிராமவாசிகளின் நிலம் பலவந்தமாக அந்நியமாக்கப்படுவதில் முடிந்தது. இது அப்பட்டமான உரிமை மீறலாகும். எனினும் பெரும்பாலும் கிராமவாசிகள் பொருளாதார மீது குரூரம் குறைந்த ஆனால் நாசம் விளைவிக்கக்கூடிய கட்டுப்பாடுகளை விதித்தது. "பயன்படுத்தப்படாத" நிலங்களை அல்லது வனப்பிராந்திய நிலங்களை - இந்நிலங்கள் உள்ளூர் விவசாயிகளுக்குத் தேவையானவை, முழுச் சொந்தத்துக்கு குறைவான குத்தகை உரிமை வழங்கியமையே இவ்வாறு நேரக் காரணம்.
உதாரணத்துக்கு, வடசூடானில் மழைவளம் கொண்ட நிலம் சில வருடங்களுக்குப் பயிர் செய்யப்பட்டு அப்புறம் மறுபயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படும் வரை நீண்டகாலத்துக்கு விட்டு வைக்கப்படல் வேண்டும். இவ்வாறு உழவர்கள் தாம் பயிர் செய்யும் நிலத்தைப் போன்று இருமடங்கு அல்லது மும்மடங்கு வைத்திருத்தல் வேண்டும். எஞ்சியபகுதி "பயன்படுத்தப்படாது" அன்று: ஆனால் அது இன்றியமையாத ஒதுக்கீட்டு நிலமாகும். ஆனால் இவ்வொதுக்கீட்டு நிலம் மீதான உரிமை சூடானில் சட்ட அங்கீகாரம் பெற்றதன்று. அத்தோடு, பெரும்பாலான உழவர்கள் கால்நடைகளை வைத்திருந்தனர். அவர்களது குடும்ப உணவுக்கும், வருவாய்க்கும் இது இன்னொரு மூலாதாரமாயிற்று. இக்கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலம் தேவை. ஆனால் சகல மேய்ச்சல் நிலங்களும் அரசுக்குச் சொந்தமானதாய்ப் பிரகடனஞ் செய்யப்பட்டிருந்தன. எனவே, இந்நிலங்களை
76

இழப்பீட்டுக்கொடுப்பனவின்றி பறிமுதல் செய்யலாம். இறுதியாக, கிராமவாசிகள் தம் ஜீவாதாரத்துக்காக வனங்களைப் பயன்படுத்தினர். வனத்திலிருந்து விறகு கிடைத்தது. உணவு தட்டுப்பாடு நிலவும் வேளையில் வனத்திலிருந்து பல்வேறு வகை உணவுகளும் கிடைத்தன. ஆனால் இவ்வனங்களைச் சமூகங்கள் பயன்படுத்திக் கொள்ளும் உரிமையும் சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்டிருக்கவில்லை.
பொருத்தமற்ற நிலச்சட்டம் காரணமாய், நிலம்பிரிக்கப்படும்போது உழவர்களின் பயன்பாட்டிலிருந்த நிலம் மட்டுமே வழக்கமாக அவர்கள் பிடியில் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. அந்த நிலம் சுவீகரிக்கப்பட்டால் இழப்பீட்டுப் பணம் வழங்கப்பட்டது. ஏனைய நிலங்கள் மீதான பயன்பாட்டு உரிமைகள் அங்கீகரிக்கப்படவில்லை. இது கிராமவாசிகளின் பிரதான உரிமைகளை மறுப்பதாகவும், அவர்களுக்குப் பொருத்தமான பொருளாதார முயற்சியை முடிவு செய்வதில் பிரதான கட்டுப்பாடாகவும் முடிந்தது அடுத்தடுத்து விளைச்சல் குறைந்து கொண்டே போகும் தனித்த நிலத்துண்டில் அவர்கள் கமஞ் செய்ய வேண்டியிருந்தது. அல்லது இயந்திரமயமாக்கப்பட்டப் பண்ணைகளில் அவர்கள் கூலிக்குத் தொழில் புரிய வேண்டியிருந்தது. வரட்சிக் காலங்களில் போதிய உணவைப்பெறும் உறுதியான மாற்றுவழியெதுவுமே அவர்களுக்கிருக்கவில்லை. இதன் படுபாதகமான விளைவை 1984 - 85லும் 1990 - 91லும் நிலவிய பஞ்சம் அப்பட்டமாக வெளிப்படுத்தியது.
உழவர்களின் குத்தகை உரிமைகள் எல்லாவற்றையும் மதித்தல் பஞ்சத்துக்கெதிரான முக்கியமானதோர் பாதுகாப்பாகும் என்பது இதனால் புலனாகின்றது. நிலப்பங்கீடு நீதிமன்ற மேற்பார்வையுடன், பாரம்பரிய சட்டத்தில் காணப்படும் பயன்பாட்டுரிமைகளுக்கும் சமூகக் குத்தகையுரிமைகளுக்கும் அங்கீகாரமளித்து, அவற்றுக்கேற்ப இழப்பீடுகளும் வழங்கி மேற்கொள்ளப்படல் வேண்டும். அன்றி வேறெந்த முறையிலும் இது நடைபெறக்கூடாது.
பிலிப்பீன்ஸ்
பிலிப்பீன்ஸில் சுதேசிய திபோலி மக்கள் பெரும்பாலும் மணிலாவைத் தளமாகக் கொண்ட வர்த்தக நிறுவனங்களாலும், கூட்டுத்தாபனங்களாலும், உறுதிப்பத்திரமற்ற தம் பாரம்பரிய நிலங்களிலிருந்து வரிசைக் கிரமமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இவர்கள் வசதிகளேதுமற்ற வெளியேற்றப்பட்ட பகுதிகளில் பசியாலும், பிணியாலும் வாடும்படி
77

Page 43
விடப்பட்டனர். அல்லது சுற்றுப்புறப் பண்ணைகளில் விவசாயத் தொழிலாளர்களாய் வேலைதேடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
ஒரு சந்தர்ப்பத்தில, அன்சா கால்நடை விவசாயப் பண்ணைச் சொந்தக் காரரான அந்தோனியே நோகொம் என்ற மணிலா வர்த்தகர் 1960 க்களில் மீன்தினாபோவைச் சேர்ந்த தென் கொட்டாபட்டோவில் 2,500 ஹெக்டயர் நிலத்துக்கான உறுதிப்பத்திரத்தைப் பெற்றார். திபொலி சமூகத்தைச் சேர்ந்த முதியோர்கள் இதுவோர் ஊழல்மலிந்த ஏமாற்றுவித்தை என இப்போது கூறுகின்றனர். (எழுத்தறிவில்லாத தலைவர்கள் மூவரை நோகொம் மணிலாவுக்குக் கொணர்ந்தார். அவர்களுக்கு விருந்து வைத்து அவர்கள் மதுபோதையிலிருக்கும் போது பத்திரமொன்றில் பெருவிரல் அடையாளம் பெற்றனர். திபொலி குழந்தைகளுக்கு பாடசாலையொன்றை நிர்மாணிக்கும்படியான வேண்டுகோள் என அவர்களிடம் அப்பத்திரம் பற்றிக் கயிறு திரித்துக் கூறப்பட்டது. திபொலி நிலத்தை கால் நடைப் பண்ணைக்காரன ஒருவனுக்குத் தாரை வார்த்து கொடுத்த உண்மை அவர்களுக்குப் பின்னரே தெரிய வந்தது.)
பெரும்பாலும் உள்ளூர் இராணுவத்தின் ஒத்துழைப்புடன் திபோலிகளை காலத்துக்குக் காலம் விரட்டும் முயற்சி அதன் பின் தொடர்ந்தது. நவம்பர் 1990ல் இப்போது கலைக்கப்பட்டு விட்ட பிலிப்பைன் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த இருவரின் உதவியுடன் அபரிமிதமாக ஆயுதமேந்திய கும்பலொன்று நூற்றுக் கணக்கான திபோலி குடும்பங்களை வெளியேற்றியது. அவ்விருவரில் ஒருவர் புதிதாக உருவாக்கப்பட்ட பிலிப்பைன் தேசிய பொலிஸ் பிரிவில் அதன் பின்னர் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அயலிலிருந்த மூன்று குடியேற்றங்களில் சுமார் 300 வீடுகள் தீவைக்கப்பட்ட போது, நையப்புடைத்தல், கற்பழிப்பு முயற்சி, கொள்ளை, பிடிவிறாந்து இன் ற கைது செய்தல் முதலியவை இடம் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1992ல் அவர்களின் இராணுவத் தலைவரை மனித உரிமை கண்காவல் குழு பேட்டி கண்டு, வெளியேற்றக் கட்டளையேதுமின்றி ஆயுதந் தரித்த காவலர்கள் அக்கிரமச் செயல்களில் ஈடுபடும்போது இராணுவத் துருப்பினர் அதனைப் பார்த்துக் கொண்டு வாளாவிருப்பது சட்டபூர்வமானதாவென வினவியபோது அவ்வதிகாரி கூறிய பதில் : "நாம் அமைதியை நிலைநாட்டக் கடமைப்பட்டவர்கள். உண்மையில், எமக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் தகவல்களின்படி வெளியேற்றப்பட்ட
78

மக்களே திரும்பவும் அங்கு சென்று தங்கள் வீடுகளைத் தீக்கிரையாக்கின்ர." மேலும் அவர் கூறியதாவது, "கால்நடைப் பண்ணைச் சொந்தக்காரரான அந்தோனியே நோகொம் உதவி கேட்டு விடுத்த நியாயமான வேண்டுகோளின்படியே நமது ஆட்கள் நடந்து கொண்டனர் என்பதில் எனக்கு நம்பிக்கை." மணிலாவில் நோகொம் பேட்டி காணப்பட்டபோது, அந்நடவடிக்கைக்கு உள்ளூர் ஆளுநர் ஆதரவிருந்ததாகக் கூறினார்.
வெளியேற்றப்பட்ட குடும்பங்கள் சில வெளியேற்ற மையத்துக்கு நகர்ந்தன. எனினும் அங்கு உணவும் வைத்திய வசதியும் போதவில்லையென்று சொல்லி பெப்ரவரி 1991 லும் 1993லும் மீண்டும் தம் நிலங்களில் போய் குடியேற முயற்சித்தனர். உள்ளூர் தேவாலயத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட மருத்துவக்குழு டி. சிறுவர்கள் மத்தியில் போசாக்கின்மை காணப்படுவதனை அ றிவித்தது.*
ஜனவரி 7, 1992ல் ஐம்பது திபோலி குடும்பங்கள் தங்கள் வீடுகள் எரிந்து கரியாய்ப் போய் இன்னும் காணப்பட்ட இடங்களில் மீண்டும் வீடமைக்கும் வேலையைத் தொடங்கினர். பத்து நாட்களின் பின் ஜனவரி 17ல் தக்க நடவடிக்கையெடுக்குமாறு உள்ளூர் தரைப்படையைச் சேர்ந்த தளபதி பெர்முடெஸ்ஸுக்கு நோகொம்மிடமிருந்து தொலைபேசி மூலம் கோரிக்கை வந்தது. திபொலிகள் திரும்பவும் வீடு கட்டிக் கொண்டிருந்த காணியை இராணுவப் பயிற்சித் தளமாக்கக் கொடுப்பதாக நோகொம் வாக்களித்ததாய்க் கூறப்படுகிறது.
திபோலிகளை வெளியேற்றுவது இராணுவத்தின் பொறுப்புத் தானாவெனக் கேட்கப்பட்ட போது நோகொம் கூறிய பதில், "திபோலிகள் கலகக்கார புதிய மக்கள் இராணுவத்தின் அனுதாபிகள், நமது தனியார் கூட்டுத்தாபனங்களை பாதுகாப்பது எங்கள் கடன். இவைமிது மக்கள் விடுதலை இராணுவமும் அதன் ஆதரவாளர்களும் குறி வைத்து உள்ளனர். இயற்கை வளங்களில் மக்கள் விடுதலை இராணுவம் கைவைப்பதை நாம் தடுத்தாக வேண்டும்." திபோலிகளைக் கிலி பிடித்து ஓடச் செய்வதற்காக வேண்டி - 230 எறிகுண்டு வீசியை இயக்கி திபோலிகள் மீண்டும் விரட்டியடிக்கப்பட்டனர்.
7. அபிவிருத்தித் திட்டங்களுக்காக வெளியேற்றுதல்.
அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்கு இடமளிக்கும் வகையில் கிராமவாசிகளும், உழவர்களும் வெளியேற்றப்படும் உதாரணங்கள்
48. திபோலிகள் முன்னைய நிலத்தில் குடியேறுகின்றனர். பெரியோடிக்ஜோ டபாவ், மார்ச்
2, 99.
79

Page 44
பிரேசிலில் இருந்து இந்தோனேஷியா வரை உலகெங்கிலும் காணப்படுகின்றன. எமது எதிர்ப்பு அபிவிருத்தித் திட்டங்களோடு தொடர்புடை யவையல்ல. அணைக் கட்டுகளதும் வீதிகளதும் தேவைகளையும் சூழல் மீது அவையுண்டு பண்ணும் தாக்கத்தையும் மதிப்பிடுவது இங்கு நம் நோக்கமன்று. "இறுதி முடிவு வழிமுறைகளை நியாயப்படுத்தும்” என்ற தத்துவத்தோடு தொடர்புடைய மனித உரிமை மீறல்கள் பற்றியும், வெளியேற்றப்பட்டவர்களின் நிர்கதி பற்றியுமே நாம் கரிசனை காட்டுகின்றோம்.
gfieu/7
மிகவும் கெட்டபெயரெடுத்த விவகாரங்களில் ஒன்று இந்தியாவின் நர்மதா அணைக்கட்டு சம்பந்தப்பட்டதாகும். 1988 தொடக்கம் நர்மதா நதிமீது பல அணைகளை நிர்மாணிப்பதற்கு எதிராக மேற்கு இந்தியாவைச் சேர்ந்த நாட்டுப்புற தொண்டர்களும் சமூக அரசியல் நடவடிக்கைக் குழுக்களும் போராட்டம் நடத்தின. சர்தாப் ஸரோவர் திட்டம் (எஸ்.எஸ்.பி.) பாரிய நர்மதா அணைக்கட்டுத் திட்டங்களில் ஒன்றாகும். நர்மதா அணைக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த குழுக்களோடு தொடர்புடைய போராட்டக்காரர்கள் நர்மதா பச்சாவே அண்டோலன் (என்.பி.எ. நர்மதாவை காப்பாற்றுக இயக்கம்) * இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். நர்மதா திட்டத்திற்கெதிராய் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை ஏற்பாடு செய்தோரும், அவற்றில் கலந்து கொண்டோரும் எதேச்சதிகாரமாக கைது செய்யப்பட்டனர். சட்டவிரோதமாய்த் தடுத்து வைக்கப்பட்டனர். நையப் புடைக்கப்பட்டனர். வேறுவகையான சரீர துன்புறுத்தல்கலுக்கும் ஆளாக்கப்பட்டனர். அணைக்கட்டால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்புக்கு ஆதரவு திரட்டுவதிலிருந்து, இத்திட்டத்தினால் உண்டாகப்போகும் சூழல், சமூக விளைவுகள் பற்றித் தகவல் வெளியிடுவதிலிருந்து இவ்வார்ப்பாட்டக் குழுக்களைத் தடுப்பதற்கான ஒடுக்கு முறைகளின் முயற்சிகளாக இவ்வக்கிரமங்கள் விளங்கின.
திட்டத்தை எதிர்த்தவர்களின் கரிசனை, நீரினுள் மூழ்கப் போகும் பகுதியில் வாழ்பவரின் இடப்பெயர்வு, புணர்வாழ்வுப் பிரச்சனை,
49, gögou வெங்கிலுமுள்ள குழுக்களின் ஒரு கட்டுக்கோப்பு நெருக்கமற்ற அமைப்பாகும் பாதிக்கப்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த மூன்று குழுக்கள் இவ்வமைப்பின் மையமாய் விளங்கினர். நர்மதா தரங்கரஸ்தா சமிதி (நர்மதா அணைக்கட்டால் பாதிக்கப்பட்ட மக்களின் அமைப்பு) மஹாராஷ்டிராவைச் சேர்ந்த, மத்திய பிரதேசத்தில் நர்மதா நவ்நிர்மான் சமிதி (நர்மதாவின் நல்வாழ்வுக்கான அமைப்பு) குஜாராத்தின் நர்மதா அலர்கிரான்த சமிதி (நர்மதா) அணைக்கட்டால் பாதிக்கப்பட்டோரின் அமைப்பு)
80

போதிய இழப்பீட்டுக்கொடுப்பனவு செய்வதற்கும் திட்டத்தால் பாதிக்கப்பட்டோருக்குத் தகவல் பரிமாறுவதற்கும் அரசும், அணைக்கட்டு அதிகார வட்டாரமும் தவறியமை முதலியவற்றை மையமாகக் கொண்ட குழுக்கள், இக்கரிசனைகளைப் பகிரங்கப் படுத்துவதற்காக பாதிக்கப்பட்ட பிரதேசதக்தைச் சேர்ந்த கிராமவாசிகளைப் போய்ச் சந்தித்தன. பொதுக்கூட்டங்களை நடத்தின. சில சந்தர்ப்பங்களில் இக்கூட்டங்களுக்கு ஆயிரக் கணக்கானோர் சமூகமளித்தனர். ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை நசுக்குவதற்குப் பொலிஸ் வழக்கம் போல் அத்துமீறிய அதிகாரத்தைப் பிரயோகித்தது. கூட்டங்கள் கலைக்கப்பட்டன. ஆர்ப்பாட்டக்காரர்கள் அடித்து நொறுக்கப்பட்டனர். பிரதான தலைவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். கிராமக் குடியிருப்பாளர்களை வெளியேற்ற முற்பட்ட போது பொலிஸ் கட்டுமட்டற்ற பலாத்காரத்தைக் கையாண்டது. அமைதியான எதிர்ப்பின் போதும், சட்டமறுப்பியக்கத்தின் போதும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டோர், வழக்கமான வசனமொழிகளுக்கு ஆளாகினர். அநேக விவகாரங்களில் இந்திய சட்டம் கூறுகிறபடி நீதியரசர் முன்னால் விசாரணைக்கு கொண்டு வரப்படாமல் அநேகர் நீண்ட நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டனர். நையப்புடைக்கப்பட்டு அல்லது வேறுவிதமாகத் தாக்கப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டோருக்கு மருத்துவ வசதியேதும் வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பிரதேசத்தைச் சேர்ந்த கிராமங்களினுள் போராட்டக்காரர்கள் செல்வதும் தடை செய்யப்பட்டது. 1992ன் நடுப்பகுதியளவில், நர்மதா பள்ளத்தாக்கில் நீண்டநாட்களுக்கு அல்லது நீண்ட வாரங்களாகத் தடுத்து வைக்கப்பட்டோர் தொகை 1,000 க்கும் அதிகமாகும்.
1992ன் முற்பகுதியில் அதிகாரிகள் கிராமங்களுக்கு வந்து, திட்டமிட்ட கால எல்லைக்கு முன்பதாகவே அப்பகுதி நீரில் மூழ்கப் போகிறதென்றும் எனவே கிராமவாசிகள் வெளியேற வேண்டு மென்றும் குடியிருப்பாளர்களுக்கு சொல்ல முற்பட்டபோதே எதிர்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கின. மீளக் குடியமர்த்துவதற்கு ஒதுக்கப்பட்ட வனப் பிராந்தியத்திலிருந்து இனக்குழுக்களைச் சேர்ந்த கிராமவாசிகளை வெளியேற்றுவதற்கு ஜூலை 13, 1992ல் பொலிஸ் முயற்சித்தது. கிராமவாசிகள் எதிர்த்து நின்ற போது பொலிஸ் துப்பாக்கிப் பிரயோகஞ் செய்தது. தனிபாய் பத்வியா என்ற 35 வயதுப் பெண்மணி கொல்லப்பட்டாள். அநேகர் படுகாயமுற்றனர்.
சர்வதேச ரீதியாய் ஏற்படுத்தப்பட்ட நிர்ப்பந்தம் காரணமாய், அணைக்கட்டு திட்டத்திற்கு நிதியுதவி உலகவங்கி, நர்மதா சம்பந்தமாகக் கிளப்பியுள்ள கவலை படிந்த அக்கறை பற்றி அறிவதற்காகச் சுதந்திரமான விசாரணைக் குழுவொன்று அனுப்பிவைத்ததைத் தொடர்ந்து
81

Page 45
நடைபெற்ற இக்கொலைச் சம்பவம் சோகமயமானது மட்டுமல்ல சிரிப்புக்கிடமானதுமாகும். சர்தார் சரோவர் அணை நிர்மாணத்திற்காக உலகவங்கி 1985ல் 45 கோடி யூ.எஸ். டாலரை அனுமதித்திருந்தது.* மற்றைய பிரதான நிதியுதவியாளனான ஜப்பான் அதன் உத்தியோகப்பூர்வ அபிவிருத்தியுதவியை (ஓ.டி.ஏ) தடுத்து நிறுத்தத் தீர்மானித்தது. இத்திட்டத்தின் பாதகமான சமூக, தாக்கங்களை ஜப்பானிய சூழல் குழுக்கள் அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொணந்தமையால் நேர்ந்தது இது."
அமெரிக்க காங்கிரஸ் முன்னாள் உறுப்பினரும், ஐ நா அபிவிருத்தித் திட்ட முன்னாள் தலைவருமான பிரெட்போர்டு மோர்ஸ் தலைமையிலான மீளாய்வுக்குழு ஜூன் 18, 1992ல் அதன் அறிக்கையைக் கையளித்தது. இத்திட்டம் "குறைப்பாடுள்ளது” நிலவுகின்ற சூழ்நிலைகளில், இடம் பெயர்க்கப்பட்ட அனைவரையும் மீளக்குடியமர்த்துவதும், அவர்களுக்குப் புணர்வாழ்வளிப்பதும் சாத்தியமன்று. அத்துடன் சூழலை பாதிக்குந் தாக்கங்கள் சரியான முறையில் கருத்தில் கொள்ளப்படவில்லை. அவற்றைத்திருத்த போதியளவு பரிகாரங் காணப்படவுமில்லை.” என முத்தாய்ப்பாய்க் கூறியது. நீரில் மூழ்கப் போகும் பகுதியில் இத்திட்டத்துக்குக் காணப்படும் எதிர்ப்பையும், விரோதத்தையும் சுட்டிக்காட்டி அவ்வறிக்கை இவ்வாறு எச்சரிக்கை விடுத்தது. "இவ்விரோதபான்மை நீடிக்கும்வரை, ஏற்றுக்கொள்ளப்பட முடியாத வழிமுறைகளினாலன்றி, முன்னேற்றம் காண்பது சாத்தியமில்லை.” நடைமுறைப்படுத்துவதைத் தொடருமுன் இத்திட்டத்தை மீளாய்வு செய்வதற்காக வேண்டி உலக வங்கி “ஒரடி பின்வாங்க வேண்டும்” என இக்குழு பரிந்துரை கூறிற்று.
அறிக்கையில் எழுப்பப்பட்டுள்ள கரிசனைகளுக்குப் பரிகாரம் காணும் வகையில் "பரிகார நடவடிக்கைகள்” எடுப்பது பற்றிக் கவனஞ் செலுத்துவராய் வங்கி அறிவித்தது. ஆனால், இந்திய அரசாங்க வட்டாரங்களிலிருந்து திட்டவட்டமான, உத்திரவாதங்கள் வங்கிக்கு இன்றியமையாதது என்பது பற்றியோ அல்லது இத்திட்டம் இறுதியாக நடைமுறைப்படுத்தப்படுமுன், இதனால் மிகவும் பாதிக்கப்பட்டோரின் உரிமை அரசாங்கத்தினால் பாதுகாக்கப்படும் என்பது பற்றியோ இதுவரை எந்த அறிகுறியுங் காணோம்.
50. அணைநிர்மானத்துக்குத் தேவையான மொத்த தொகையில் இது சுமார் 10 சதவீதமாகும்.
51. “டோக்கியோ ஷிம்பன்" பத்திரிகையில் மே 23, 199ல் வெளியான அறிக்கையொன்றின்படி, “நிர்மாணவேலை தொடங்கிய பின் ஓடிஏ உதவி நிறுத்தப்படுவது ஒர் விதிவிலக்காகம். இத்திட்டம் ஆரம்பிக்கப்படுவதன் முன் சூழல், கலாச்சார தாக்கம் கறித்து நடத்தப்பட்ட கவனயீனமான கணிப்பீடுகள் பற்றிய விமர்சனம் இவ்வுதவி நிறுத்தப்பட்டதற்கு ஓரளவு காரணமாகம்." 1992ல் உதவி வழங்குவதற்கு ஜப்பான் மறுயோசனை கொண்டுள்ளதாக, ஆசியா காவல் வட்டாரங்கள் நம்புகின்றன.
82

அத்தியாயம் 111 : சூழல் பாதுகாப்பு
மனித உரிமைகள் - குறிப்பாக கருத்து வெளியீட்டுச் சுதந்திரம் அமைப்பு உருவாக்கி ஒன்று சேர்ந்து செயற்படும் சுதந்திரம், தீர்மானமெடுப்பதில் பங்கேற்கும் சுதந்திரம் முதலியவை - உயர்மட்டத்தினர் சிலரின் கரிசனைக்கான தென்னும் ஒழுங்கை நாட்டுவதற்கும், பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதற்கும் அத்தியாவசியமாக அவை டரின் வரிசைக்கு செயல்தளைப்பட வேண்டுமென்றுக் கூறி ஒடுக்குமுறையரசாங்கங்கங்கள் அடிக்கடி தம் செயல் முறைகளை நியாயப்படுத்த முயல்கின்றன. அதேவேளை சூழல் மாசடைந்தமையால் ஏற்பட்ட அழிவுகள் கெடுதிகளினால் நாளாந்தம் மக்கள் இன்னலுறுகின்றனர். அல்லது செத்து மடிந்து கொண்டிருக்கின்றனர். இவற்றுக்குக் கால் கோளான கொள்கைகளையும் நடைமுறைகளையும் விமர்சிக்கிவும் விவாதிக்கவும் வேறு கருத்துடையோர் அனுமதிக்கப்பட்டிருப்பின் இச்சீரழிவைத் தடுத்திருக்கலாம்.
ஒப்பிட்டுப்பார்க்கும் பொழுது பல்வேறு கருத்துக்களையும் அனுமதிக்கும் திறந்த சமூகமாகக் காணப்படும் அமெரிக்காவில் கூட அரசியல் வலிமைகுன்றிய சிறுபான்மை இனங்களும், ஏழை எளியவர்களும் வதிக்கின்ற பகுதிகளில் சூழலை அளவு மீறி ஆபத்துக்குள்ளாக்கும் தொழிற்சாலைகள் நிறுவப்படுகின்றன என்ற ஏக்கம் காணப்படுகின்றது. தென்னாபிரிக்காவின் சூழல் மீது இன ஒதுக்கல் முறை ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து பானொஸ் நிறுவனம் நடத்திய சமீபத்திய ஆய்வின் இறுதியில் கலாநிதி மம்பெலா நம்பெலே இவ்வாறு எழுதுகின்றார். "சூழலை மேம்படுத்துவதற்குங் மக்கள் பங்குபற்றும் ஜனநாயகமுறை முக்கியமான மூலவிசையாகும். இது மக்கள் தம் அதிகாரத்தை மீளப்பெறவும் உத்தியோக வட்டாரங்கள் தாம் சேவையேற்றும் சமூகப்பணிகளுக்கு பொறுப்பேற்கவும் வழிவகுக்கும்.*
52. இவ்வத்தியாயத்தின் பெரும்பகுதி, "பூமியைப் "பாதுகாத்தல்: மனித உரிமைகளும் சூழல் துஷ்பிரயோகமும்" என்ற அறிக்கையைத் தழுவியதாகும். இவ்வறிக்கை மனித உரிமைகள் காவல், தேசிய வளங்கள் பாதுகாப்புக் கவுன்சில் ஆகிய இரு அமைப்புகள் ஜூன் 1992ல் வெளியிட்டது.
53. பானோஸ் நிறுவனம் "நிலத்தை மீட்டெடுத்தல்: இனவொதுக்கலுக்குப் பிந்திய தென்னாபிரிக்காவில் சூழலும் மாற்றமும்" (மம்பெலா ரம்பெலே தொகுப்பு, லண்டன் : 1991) Luák. 202.
83

Page 46
1992 ஜூனின் ரியோடி ஜெனெய்ரோவில் நடந்த "பூமிபேணும் உச்சி மகாநாட்டில்" சில கோட்பாடுகள் குறித்து உலகத் தலைவர்கள் உடன்பாடு கண்டனர். அவற்றுள் ஒன்று மனித உரிமைகளுக்கும் சூழல் பேணும் அத்தியாவசியங்களுக்குமிடையேயான உறவுபற்றியது.
"தம் சமூகங்களில் காணப்படும் ஆபத்து விளைவிக்கும் பொருட்கள் நடவடிக்கைகள் பற்றிய தகவல் உட்பட, பொது அரச அதிகாரங்கள் கீழுள்ள சூழல் சம்பந்தமான தகவல்களை தேசியமட்டத்தில் எந்தவொரு மனிதனும் பெறக் கூடியதாய் இருத்தல் வேண்டும். அத்துடன் தீர்மானமெடுப்பதற்கான வழிமுறைகளில் அவன் பங்கு கொள்வதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்படல் வேண்டும். தகவல் பரவலாக கிடைக்கும்படி செய்வதன் மூலம் மக்கள் விளிப்படைவதற்கும், பங்குபற்றுவதற்கும் அரசுகள் வசதி ஏற்படுத்தி ஊக்குவித்தல் வேண்டும். இழப்பு ஈடு பெறவும் விட்ட பிழைகளைத் திருத்துவதற்கும் , நீதிமன் றங்களிலும் நிர்வாகத் திணைக் களங்களிலும் பாதிக்கப்பட்டோருக்கு வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.” 54
தகவல் பரப்புவசதியும் பொறுப்புணர்ச்சியும் சூழல் பாதுகாப்பிற்கு மிக முக்கியமானது என்று அங்கீகரிக்கப்பட்டிருப்பது ஒருபுறத்திருக்க, உககெங்கிலுமுள்ள அரசாங்கங்களோ, நையப்புடைத்தல் சிறையில் தள்ளுதல், அச்சுறுத்தல், இன்னல் இடையூறு விளைவித்தல்மானநட்ட வழக்குகள் தொடர்தல் முதலியநடைமுறைகளால் கட்டுப்பாடு விதித்து, கருத்துச்சுதந்திரத்தையும் அமைப்பு மூலம் செயற்படுத்தலையுந் தடுத்து இவற்றின் மூலம் கலந்துரையாடலையும் விவாதத்தையும் தொடர்ந்து நசுக்கி வருகின்றன.
சூழல் இயக்கம் நடத்துவோர் மீது தாக்குதல்
பிரேசிலில் நடந்த சிக்கோ மெண்டெஸ் விவகாரம் அநேகர் அறிந்ததே. அவர் கொலை செய்யபட்டதிலிருந்து அக்ரேயில் அவரின் பின் செயல்பட்ட தொழில் சங்கத் தலைவர்கள் கொலை செய்யப்பட போவதாய்ப் பயமுறத்தப்பட்டனர். தலைவர்கள் சிலர் தலைமறைவாகினர் தலைமறைவாகியோரில் மெண்டெஸரின் விதவை இல்ஸமார், மெண்டெஸின் சகோதரர் அல்வெஸ் மெண்டெஸ் நெட்டோ, கோமசின்டோ கிலோவிஸ் ரொட்றிகல்ஸ், றப்மண்டோடி பெரொஸ், ஜூலியோ பார்போசா டி அக்குவினோ, பிரான்சிஸ்கோ டி அசிஸ் மொண்டெய்ரோ
54. "சூழல், அபிவிருத்தி சம்பந்தமான ரியோ பிரகடனம்”, சூழல், அபிவிருத்தி சம்பந்தமான
ஐ.நா. மகாநாடு, கொள்கைப் பிரமானம் 0.
84

டி ஒலிவெயரா, மெண்டஸ்"க்குப் பின் ரம்பர் தொழிலாளர் சங்கத்தின் தலைவராகிய ஒஸ்மாரினோ அமன்சியோ றொட்றிகஸ் ஆகியோர் அடங்குவர். உள்ளூர் நிலப்பிரபுக்களால் தயாரிக்கப்பட்ட 25 பெயர்கள் கொண்ட கொலைப்பட்டியில் இவர்கள் பெயர்களுமிருந்தன. இவர்களுக்கு பாதுகாப்பளிக்கவோ அங்குள்ள நிலைமை குறித்து விசாரணை நடத்தவோ அதிகார வட்டாரங்கள் முன்வரவில்லை.
பிலிப்பைனில் அக்டோபர் 1991ல் வணயிதா நெர்வி விட்டோ சட்ரூர் கொலை செய்யப்பட்டார். இவரைக் கொலை செய்த துப்பாக்கி மனிதர் மூவரும் மிண்டானோ தீவில் சட்டவிரோதமாய் மரம் வெட்டுவதில் ஈடுபட்டவர்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் என நம்பப்படுகின்றது. வனபிதா சட் ரூர் சட்ட விரோதமாய் மரந்தறிப்பதற்கெதிரான இயக்கத்துடன் சம்பந்தப்பட்டவர். சட்டவிரோத செயலில் ஈடுபட்டோரைக் கைது செய்வதற்கும், வெட்டப்பட்ட மரங்களைப் பறிமுதல் செய்வதற்கும் அவர் அரச அதிகாரிகட்குச் சமீபத்தில் உதவியிருந்தார். இஸ்நொக் சாதியினரின் தலைவரான ஹென்ரி டொமொல்டோல் பல கொலை அச்சுறுத்தல்களின் பின் ஜூலை 1991ல் கொலை செய்யப்பட்டார். இக்கொலையைச் செய்தது இராணுவ இணை அமைப்பு எனச் சந்தேகிக்கப்படுகின்றது. இனக்குழுக்களின் வாழ்வுக்கு உதவும் எஞ்சிய மழைக்காடுகளைப் பாதுகாப்பதற்கு முன்னின்று உழைத்த தலைவர் இவர். பலவானில் பாதுகாக்கப்பட்ட கருங்காலி மரங்களைக் கள்ளத்தனமாய் வெட்டியோரை அம்பலமாக்கியதற்காக ஹரிபன் என்ற சூழல் பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள் உள்ளூர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது சதிக்குற்றம் சுமத்தப்பட்டது. அவர்கள் சூழல் திணைக்களத்துடன் ஒத்துழைத்தனர் என்ற உண்மையையும் மீறி இது நடந்தது. இக் கொள்ளை வியாபாரத்தில் உள்ளூர் இராணுவம் சம்பந்தப்பட்டிருப்பதாக அறியக்கிடக்கிறது.
தாய்லாந்தின் தென்பிராந்தியத்தில் காடழிப்பு மண்சரிவுகளையுண்டு பண்ணி நூற்றுக்கணக்கான கிராமவாசிகளைப் பலி கொண்டது. கள்ளத்தனமாய் மரம் வெட்டப்படுவதிலிருந்து டொங்யாய் வனத்தைப் பாதுகாப்பதற்குப் பாடுபடும் பெளத்த பிக்கு பிரா பிரஷாக் குட்டசிட்டோ அமைதிக்குக் பங்கம் விளைவிப்பதாய் குற்றஞ்சாட்டப்பட்டு இருமுறை
கைது செய்யப்பட்டார். *
55. "தாய்லாந்து இராணுவத் தலைவரின் பெளத்த மடாலயத்துக்கெதிரான குடிவெறி
குற்றச்சாட்டு" ராய்டர், செப்டெம்பர் 10, 1991.
85

Page 47
பச்சை மண்டல சூழல்குழுவின் தலைவரான கென்யாவைச் சேர்ந்த பேராசிரியர் வங்காரி மத்தாய் அரசியல், பொலிஸ் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவதன் மீது கவனத்தைத் திருப்புமாறு மனித உரிமை, சூழல் குழுக்கள் அறைகூவல் விடுத்துள்ளன. பேராசிரியை ஜனாதிபதி தானியேல் அராப் மொய்ப்பின் சர்வாதிகார ஆட்சியைப் பட்டவர்த்தனமாய் எதிர்த்து வந்தவராவார். கென்யாவில் காடழிப்புக்கெதிராய் மரநடுகை இயக்கத்தைத் திட்டமிட்டதன் மூலம் பிரபல்யமானவர். நைரோபநகள் கீழ்ப் பகுதியில் 60 அடுக்கு மாடி வீட்டுத்தொடரை அமைப்பதற்காக நந்தவனமொன்றை அழிக்கும் ஜனாதிபதியின் திடத்துக்கெதிராக இவர் இயக்கம் நடத்தியமைக்கு தேசவிரோதியென நாமஞ்சூட்டப்பட்டது.
சூழல் சம்பந்தப்பட்ட விமர்சனங்களை நசுக்குவதற்கான மற்றொரு உபாயம் மானபங்க வழக்கு தொடர்தலாகும். பத்திரிகை நிருபர்களை சிறையில் தள்ளக் கூடிய மானபங்கக் குற்றச்சாட்டு சட்டங்களை இன்னும் வைத்திருக்கும் பிலிப்பைன்ஸில், மரவியாபாரியான ஜோஸ் அல்வாரெஸ், ஃபார் ஈஸ்ரன் ஈக்கனொமிக் ரிவியூ சஞ்சிகை மீது வழக்குத் தொடர்ந்தார். 1988ல் பாலாவான் நகரசபை உறுப்பினரான அந்தோணியோ பிம்பாஸ் மரங்களை ஏற்றிச் சென்ற கனரக வண்டியொன்றை தடுத்து நிறுத்தியதும் சில மணித்தியாலங்களில் கொலை செய்யப்பட்டார். சம்பளப்பாக்கி, மேலதிக நேர வேலைக்கு ஊதியம், விடுமுறை வேதனம் முதலியவைகளைக் கோரி, மரம் வெட்டும் கம்பனியொன்றின் தொழிலாளர்கள் சார்பாய் தொழில் திணைக்களத்தில் முறையீடொன்றைச் சமர்ப்பித்த சிறிது நேரத்தில் அகஸான் டெல் சூர் கொலை செய்யப்பட்டார். இவ்விரு கொலைகளோடும் சம்பந்தப்பட்ட அரசியல் தலைவர்களோடும் , இராணுவத் தலைவர்களோடும் அவ்வாரெஸ் கொண்டிருந்த தொடர்புபற்றி ஃபார் ஈஸ்ரன் ஈக்கெனாமிக் ரிவியூவில் வெளியான அமெரிக்காவில் சூழல் இயக்கக்குழுக்கள் முறையீடு செய்வதற்கு தமது அரசியல் யாப்பு உத்தரவாதம் அளித்துள்ள உரிமையைக் கையாண்டமைக்
காக" அறையப் பட்டன" (Opp) என்பது ” ja g sii 5 j பங்குபற்றுதலுக்கெதிராய் உபாயமான வழக்குகள் " (Strategic OWSuits Ogdinst PuoliC Participation) என்பதன் முதல்
எழுத்துக்களான பிரயோகமாகும். பொதுமக்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் தங்களை எதிர்போருக்கெதிராய் கூட்டுத்தாபனங்கள், தோட்ட அபிவிருத்தியாளர்கள், அரசாங்க அதிகாரிகள் போன்றோரால் இவ்வழக்குத் தொடரப்படும்.
86

பத்திரிகையில் ஆசிரியருக்கு கடிதமெழுதுதல், பொது உத்தியோகத்தரை அழைத்தல் மக்கள் எழுச்சி இயக்கம் நடத்துதல், நகரக் கூட்டங்களில் பேசுதல், காங்கிரஸ் சபை முன்னால் அல்லது சட்டமியற்றும் மாநில சபைகளின் முன்னால் சாட்சியமளித்தல், பொதுநலன் கருதி வழக்குத் தொடர்தல் போன்ற - முதலாவது சட்டத்திருத்தத்தால் பாதுகாப்பளிக்கப்பட்ட பரிந்துரையின் மையமாகவுள்ள - சகல நடவடிக்கைகளுக்காவும் வழக்கு தாக்கல் செய்யப்படும்.
தொற்று நோய் பரப்பும் கழிவுப்பொருட்களை எரித்துச் சாம்பலாக்கும் கருவியொன்று பயன்படுத்தபடுவது குறித்து விமர்சித்து ஆசிரியருக்கு கடிதங்கள் எழுதிய மிசூரியைச் சேர்ந்த இரு பெண்மணிகள் மீது வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. பக்குவப்படுத்தப்படாமல் "உறுதிப்படுத்தப்பட்ட" முத்திரை மட்டும் பொறித்த வெறும் பால் உண்டுபண்ணக் கூடிய அபாயம் குறித்து காங்கிரஸ் முன்னால் சாட்டசியமளித்தமைக்காக, அமெரிக்க குழந்தை மருத்துவ பேரவை மீது அல்டாடெனா பாற்பண்ணை 22 கோடி டாலர் இழப்பீடு கோரி வழக்குத் தொடர்ந்தது. நியுயோர்க் நகருக்கு நீர் வழங்கும் தேக்கங்கள் அமைந்துள்ள இடமான நாட்டுப்புற பட்டணம் கவுண்டியிலுள்ள கென்ட் நகரைச் சேர்ந்த "பிளான் கென்ட்" என்ற பிரஜைகள் குழு, சூழல் தாக்கம் பற்றி மதிப்பீடு மேற்கொள்ளப்படவில்லை என்ற அடிப்படையில் நகரவரிசை வீடுகளையமைக்கும் உத்தேச அபிவிருத்தித் திட்டத்தை எதிர்த்து அதற்காக அக்குழு மீது வியாஜ்யம் கொண்டு வரப்பட்டது.*
சங்கமமைத்தும் கூட்டங் கூடியும் இயங்குவது மிது கட்டுப்பாடுகள்
அரசாங்கச் சார்பில்லாத அமைப்புகளை ஒழுங்கமைப்பதற்கும் - எனவே கட்டுப்படுத்துவதற்கும் - அநேக அரசாங்கங்கள் அளவுக்கதிக அதிகாரங்களைக் கொண்டிருக்கின்றன. மனித உரிமை, சூழல் போராளிகளுக்கும் இராணுவத்துக்குமிடையே பதற்றம் நிலவும் இந்தோனேசியாவில் இவ்விரு உரிமைகளுக்காகவும் போராடும் அரசியல், மத அமைப்புக்கள் மீது, குடிமக்கள் அமைப்புக்களை ஒழுங்கமைக்கும் 1985ம் ஆண்டு சட்டத்தின்படி அவை கலைக்கப்பட வேண்டுமென நிர்ப்பந்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அமைப்புகளில் ஒன்றான மக்களின் முன்முயற்சியை வளர்ப்பதற்கான ஆய்வுக்குழு வட தப்பனுளியிலுள்ள கிராம வாசிகளுக்கு சட்ட உதவி வழங்கி
56. பார்க்கவும் “விமர்சிப்போரை வாயடைக்கச் செய்தல் சுதந்திரக் கருத்து வெளிப்பாட்டுக்கான
நிதி ஜூலை 1991.
87

Page 48
வருகின்றனது. அந்தோநாயன் என்ற கடதாசிக் கூழ் தொழிற்சாலையால் இக்கிராமவாசிகளின் நிலத்துக்கும் வாழ்க்கை வருமானத்துக்கும் ஆபத்தேற்பட்டது. கம்பெனியால் நிலம் அபகரித்துக் கொள்ளப்படும் என்ற அச்சத்தால் சுமாத்திரா குடியிருப்பாளர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் சில பகுதிகளில் காடுகள் அழிக்கப்படும்; அத்தோடு மேய்ச்சல் நிலங்களில் கற்பூரத்தைல மரங்கள் நடப்படும்: இதனால் உள்ளூர் நீர்பாசன முறை பாதிக்கப்படும்; மேலும் தொழிற்சாலையுண்டுபண்ணும் கழிவுகளால் சூழல் மாசடையும்.57 அமைப்புகள் இயங்குவதற்கு அரசாங்க அனுமதிப்பத்திரம் தேவையாகையால், தாமதித்தல் கூட ஒரு பலமான உபாயமாய் அரசாங்கத்துக்குப் பயன்படலாம் - 1970 க்களில் செயற்படவிருந்த மலேஷிய சூழல் இயக்கக்காரர்கள் சங்கங்களின் பதிவாளரிடமிருந்து அனுமதிப்பத்திரம் பெற ஆறுமாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.
"அபாயச் சங்கு ஊதுவோரை துன்புறுத்தல்”
அரசாங்கத்திலிருந்து கொண்டு எச்சரிப்பு தெரிவிப்போரை (அபாயச்சங்கு ஊதுவோரை) பதவி நீக்குதல் அல்லது தண்டித்தல், தவறான சூழல் கொள்கைகளுக்குச் சவால் விடுப்போரையும் உத்தியோகபூர்வமான ஊழலை அம்பலப்படுத்துவோரையும் ஊமைகளாக்குவதற்கான மற்றோர் உபாயமாகும்.
1988ல் பெனின் அரசாங்கம் பிரித்தானிய கூட்டுத்தாபனமொன்றுடன் இரகசிய ஒப்பந்தமொன்றை செய்து கொண்டது. இதன்மூலம் நாட்டின் தென்பகுதியில் பத்துவருடக் காலத்துக்கு 50 கோடி தொன் இரசாயனக் கழிவுகளைக் கொட்டுவதற்குக் கூட்டுத்தாபனம் உரிமை பெற்றிருக்கும். கம்பனி முதலில் மறுத்த போதிலும் பெரும்பாலான கழிவு நச்சுத்தன்மை வாய்ந்ததாயிருத்தல் கூடுமென தீர்மானிக்கப்பட்டது. பெனினுடைய சுகாதார அமைச்சர் அந்திரே அச்சாடே, இத்திட்டம் குறித்து அந்தரங்க அறிக்கையொன்றின் மூலம் எதிர்ப்பு தெரிவித்தமைக்காக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். * மெக்சிக்கோவில் அரசாங்கத்தின் அணுசக்தித் திட்டத்தையிட்டு கேள்வி கிளப்பிய விஞ்ஞானிகள், இணைந்த மின்சார ஆணைக்குழுவின் அவர்கள் வகித்த பதவிகளிலிருந்து நீக்கப்பட்டனர். *
57. "இந்தோனேசியா : வட சமத்ராவில் தொழிலாளர், சூழல் இயக்கத்தவர்களுக்குக்
கொடுமையிழைக்கும் பிரயத்தனங்கள்” ஆசியா காவல் செய்தி ஏப்ரில் 15,1992.
58. "ஆபிரிக்கப் பாழ்நிலம்" இன்டெக்ஸ் ஒன் சென்லர்ஷிப் ஜுன்/ஜூலை 1989, பக். 34.
59. "மெக்சிகோவில் அணுவாயுதச் சர்ச்சைக்காரர்கள் பதவி நீக்கம்" இன்டெக்ஸ் ஒன்
சென்ஸர்ஷிப், ஜூன்/ஜூலை 1989.
88

சூழல் சட்டங்களை மீறி மொண்ட்டானிலும், வட இடாஹோவிலும் அதிகமரம் வெட்ட அனுமதிக்குமாறு கொண்டு வரப்பட்ட அரசியல் நிர்ப்பந்தத்துக்கு இசைய மறுத்தமைக்காக அமெரிக்காவில் ஜோன் மம்மா அமெரிக்க வளசேவையின் வட பிராந்திய வன அதிகாரப் பதவியிலிருந்த ஜோன் மம்மா வேறு பணிகள் புரிய பலவந்தமாக மாற்றப்பட்டார். யெலோ ஸ்ரோன் தேசிய வனத்தின் அபிவிருத்தியை முடுக்கி விடுவதற்கான சர்ச்சைக்குரிய "அர நோக்கு அறிக்கை” பற்றி கேள்வியெழுப்பியமைக்காக தேசிய வனச் சேவையின் ரொக்கி மெளண்ட்டன் பிராந்திய பணிப்பாளர் லொரெய்ன் மிண்ட்ஸ்மையர் இடமாற்றஞ் செய்யப்பட்டார். *
தொடர்ப்புச் சாதனங்கள் மீது கட்டுப்பாடு
சூழல் சம்பந்தப்பட்ட விவகாரங்களையிட்டு மக்களின் விளிப்புணர்ச்சியைத் தூண்டி விடுவதிலும், பொதுவிவாதங்களை நடத்துவதிலும் பத்திரிகைகள் முக்கிய பங்கு வகித்து வருவதால் சர்ச்சைக்குரிய விவகாரங்களில் கருத்து பரிமாறுவதை நசுக்குவதில் ஆர்வங்கொண்டுள்ள அதிகாரிகளும் மற்றோரும் அடிக்கடி பத்திரிகையாளர்கள் மீது குறிவைக்கின்றனர்.
தணிக்கை யாங்ஸி நதியை பெருக்கெடுக்கச் செய்து லட்சத்துக்கும் அதிகமான மக்களை இடம்பெயரச் செய்திருக்கக் கூடிய மூன்று இடுக்குகள் அணைக் கட்டுத் திட்டத்தை எதிர்த்தமையால் சீனப்பத்திரிகையாளர் டாய் கிங் சீனப் பிரதமர் லி பெங்கின் கோபத்திற்குள்ளானார். இவ்விவகாரம் சம்பந்தமாகக் கட்டுரைத் தொகுப்பு நூலொன்றை வெளியிட்டதன் மூலம் 1989ன் முற்பகுதியில் இத்திட்டங் குறித்து பொதுவிவாதங்கள் புரிவதன் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை மீறினார். தியான் மென் சதுக்க ஒடுக்குமுறைச்சவுக்கடிக்கு பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். அமைதியின்மையை உண்டு பண்ணுவதற்காக பொதுமக்களைக் கிளர்ச்சியுண்டுபண்ணத்துரண்டும் நோக்குடன் உருவாக்கப்பட்டதெனச் சொல்லி அவரது நூலின் பிரதிகள் பறிமுதல் செய்யப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன."
அபிவிருத்தி சூழல் ஆகியனபற்றிய பயிற்சிப்படமொன்றிலிருந்து, மழைக் காடொன்று ஒருமுறை அழிக்கப்பட்டால் பின் மீண்டும் அதன் பழைய நிலைக்கு அதனை மீட்கமுடியாது என்பது போன்ற சில விவரணப்பகுதிகளை ஜப்பானின் சர்வதேசக் கூட்டுறவு உதவி நிலையம் வெட்டித் தள்ளிற்று. *
80. வைற கண்ட்ரி நியூஸ், அக்டோபர் 7, 1991, பக். 7
81. டாய் கிங்குடன் ஹியூமன் ரைட் டிரிபியூன் நடத்திய பேட்டி வசந்தம் 1992.
62. "மறைந்துவரும் இறால் பற்றிய விவகாரம்" இன்டெக்ஸ் ஒன் சென்லர்ஷிப், ஜூலை, 1991.
89

Page 49
பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்கள் இயற்கையின் சமநிலை, சூழல் முதலியன குறித்து எழுதிவந்த பேருநாட்டின் முன்னணி எழுத்தாளரான பார்பாரா டக்கில் என்ற பத்திரிகையாளர் ஷைனிங் பாத் கொரில்லாக்களால் கல்லெறிந்து கொல்லப்பட்டார். அவரோ வாமா என்ற விலங்குபற்றி நன்கறிந்த நிபுணரான எஸ்டெபென் பொஹொர்கேயும் கல்லெறிந்து கொல்லப்பட்டார். டக்கில் சூழல் பாதுகாப்பு திட்டங்களைப் பலமாக ஆதரித்தவர்; கொக்கா பயிர்ச்செய்கையால் சூழல் பாதிப்படைவது காடழிப்பு, இரசாயன பாவிப்பால் சூழல் மாசடைதல், மண்ணரிப்பு (விசேடமாக ஹவால்லகா நதிப்பள்ளதாக்கின் மேற்பகுதியில்) முதலியனபற்றியும் டக்கில் அடிக்கடி எழுதி வைத்துள்ளார். *
அரசாங்கத்திடமுள்ள தகவல்களைப் பெறுவதற்குக் கட்டுப்பாடுகள்
"தகவல் வலிமை தருவதாகும்” என்பதை அரசுகள் நன்கறியும். மக்களின் கரிசனையையும், எதிர்ப்புக் காட்டும் ஆற்றல் வாய்ந்த மக்கள் சக்தியையும் வலுவிழக்கச்செய்து விடுவதற்காகத் தகவல்களை இருட்டடிப்புச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.
வளிமண்டலம் மாசடைவதால் தாஜ்மஹாலுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை தங்கள் அரசாங்கம் மூடிமறைக்கின்றது எனக்கூறி இந்தியாவில் சூழல்வாதிகள் மேல்நீதிமன்றம் சென்றனர். * 1989ல் இந்திய மாநில அரசான குஜ்ராத் நர்மதா நதி வழியே அணைகள் கட்டும் திட்டத்தை நடைமுறைப்படுத்திற்று. 15 லட்சம் உள்ளூர் உழவர்களை இடம்பெயர்க்கத் தொடங்கிற்று. இந்தியாவின் உத்தியோகத்தகவல் இரகசிய சட்டத்தை உதாரணங்காட்டி நர்மதா நதிவழியே பாதிக்கப்பட்ட பன்னிரண்டு கிராமங்களில் செய்திப்பரப்பவை இருட்டடிப்புச் செய்தது போராட்டக்காரர்களும் குடியிருப்பாளர்களுமாக 8,000 பேர் எதிர்ப்புத் தெரிவித்த போது 5000 பேர் கைது செய்யப்பட்டனர். பலத்த நிர்ப்பந்தத்தின் பின் செய்தி இருட்டடிப்பு நீக்கப்பட்டது. ஆனால் அணைத்திட்டம் தொடர்கின்றது. பொட்ஸ்வானாவில் திட்டத்தின் மீது அரசினால் பொது மக்களின் கருத்துக் கோரப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட காரணத்தினால் அது கைவிடப்பட்டது. ஆபிரிக்க நாடொன்றில் கருத்துச் சுதந்திரத்தின் மிகச் சிறந்த சாதனையாக பொட்ஸ்வானா நிகழ்ச்சி விளங்குகிறது.
63. “பெருவியன் கொரில் سگ- ல் பக்கிரிை Ar fà " சிக்காக்கோ டிரிபியூன் ஜுன்
2,989, is, 20. 64. "இந்தியாவின் பளிங்கு மகோன்னதத்தை மாசு அரிக்கின்றது" த டைம்ஸ், பெப். 7, 1992.
90

எத்தியோப்பியாவில் முன்னாள் அரசாங்கங்கள் மழைவீழ்ச்சி பற்றிய உத்தியோகபூர்வ பதிவுகளை இரகசியமாக வைத்திருந்தன. விடாப்பிடியாய்த் தொடர்ந்து பஞ்சத்துக்கு வரட்சியே காரணமெனப் புளுகுமுட்டையை அவிழ்ப்பதே இதன் நோக்கம். உண்மையில் இராணுவ நடவடிக்கைகளும் விவசாயக் கொள்கைகளுமே பஞ்சத்திற்கு முக்கியமான காரணிகளாகும். அத்திலாந்திக் கரை வழியாகப் பெரியதோர் எண்ணெய் கசிவு ஏற்பட்ட செய்தியை மொராக்கோ அதிகாரவட்டம் மக்களிடமிருந்து பத்து நாட்களுக்கு மறைத்து வைத்தது.
அமெரிக்காவில், தாழ்ந்த மட்டக் கதிர்வீச்சால் ஏற்படக்கூடிய சுகாதாரப் பாதிப்பு பற்றிய தரவுகளைப் மறைப்பதற்கு, சக்தி திணக்களம் முறையற்றவகையில் தேசிய பாதுகாப்பு போர்வையை, சமூக பொறுப்புக்கான மருத்துவர்கள் எதிர்த்துள்ளனர்.*
மெக்சிகோ எழுத்தாளரும், சூழலியக்கத் தலைவருமான ஹொமெரோ அரித்ஜி எம்மை எதிர்நோக்கும் சவால்பற்றி, சமீபத்திய உரையொன்றில் பட்டவர்த்தனமாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறுவதாவது : வழக்கம் போல், எல்லாம் சரி என்ற நிலைப்பாடு, நம் சந்ததியினர் மனித, குழல் உரிமைகளை அனுபவிப்பதனை உறுதிப்படுத்தாது . நம் தலைவர்களால் எத்தனை கட்டளைகள் , பயிரகடனங்கள் விடுக்கப்பட்டபோதிலும், தகவல் பெறுவதற்கான சுதந்திரமும், சட்டப்படி நீதிப்பிரமான வழிமுறைகளில் பங்கு கொள்வதற்கான சுதந்திரமும் இல்லாத பட்சத்தில் ஆரோக்கிமான சூழலை உத்திரவாதப்படுத்துதல் சாத்தியமில்லை. *
மலேஷியா ஒர் ஆய்வு :-
மலேஷிய மழை வனப் பகுதியில் வாழ்ந்து வரும் சொந்த நாட்டு மக்கள் தம் வாழ்வின் சகல அம்சங்களுக்கும் அவ்வனத்தினையே நம்பியுள்ளனர். இன்று அவ்வனங்களில் கொள்ளை இலாபம் ஈட்டுவதில் ஈடுபட்டுள்ள மத்திய அரசவட்டாரங்களோடும், சம்பந்தப்பட்ட ஏனைய மாநில வட்டாரங்களோடும் மோதிக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மரங்களை வெட்டுவதும், அரசியல் விவகாரங்களும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. பழம் பாதுகாப்புகளைத் தாண்டிச் செல்லக்கூடிய வகையில் புதிய சட்டங்கள் இயற்றப்படுகின்றன. வைதிகபோக்கு கொண்ட சருவதேச மர வியாபார அமைப்பு
65. "கதிர்வீச்சுத் தாக்கம் பற்றிய ஆய்வினை, இரகசியம் தடுப்பதாகச் சொல்லப்படுகிறது. த
வாஷிங்டன் போஸ்ட், மே 8, 1992. 6ே. அதே பத்திரிகை.
91

Page 50
(ஐ.டி.டி.ஓ) இத்தசாப்தத்தில் மலேஷியாவின் மழைவனங்கள் பாழ்நிலமாக மாறிவிடுமாகையால், இவ்விவகாரம் சீக்கிரம் சர்ச்சைப் பொருளாகி விடும் எனகிறது.? அளவு கடந்த மர ஏற்றுமதி வர்த்தம் ஏலவே மண்ணரிப்பு, தண்ணிர் அசுத்தம், விலங்குயிர் தாவரவுயிர்களின் அழிவு, சுதேச கலாச்சாரங்களின் அழிவு முதலியவற்றைத் தோற்றுவித்துள்ளது. மேலும், பூகோளம் அளாவிய சூடு அதிகரிப்பின் மீது பரவலான தாக்கம் பற்றிச் சொல்லத் தேவையில்லை.
மரம் வெட்டுவதிலிருந்து கிடைக்கும் பெருந்தொகையான இலாபம் மாநில அதிகாரிகளைப் போய்ச் சேர்ந்த போதும், கோலாலம்பூரிலுள்ள மத்திய அரசாங்கம் பொருளாதார ரீதியாவும், அதைவிட அதிகமாக அரசியல் ரீதியாகவும், மரம்வெட்டுவதால் நன்மையடைகிறது. மாநில அரசுகள் தம் போக்கின்படி வனங்களைச் சூறையாடுவதற்கு அனுமதிப்பதன் மூலம் மலேசியப் பிரதமர் தாத்துக்ஸேரி டாக்டர் மஹதிர்முகம்மத் தாம் தலைமைதாங்கும் பாரிஸான் நெஷனல் என்ற ஆளுங் கூட்டணி கட்சிக்கு ஆதரவை உறுதிப்படுத்திக் கொள்கிறார். இரு போனியோ மாநிலங்களோடு (சபாஹ், சரவாக்) கோலாலம்பூர் ஒரு போதுமே சுமுகமான உறவு கொண்டிருக்கவில்லை. எனவே, அவ்வரசாங்கங்களின் ஆதரவைத் தொடர்ந்து பெற்றுக் கொள்ள வேண்டியது அரசியல் தேவையாகின்றது. விசேடமாக, பாராளுமன்றத்தின் மீது இறுக்கமான பிடியைக் கொண்டிருப்பதற்கு இது தேவை? * 2020ம் ஆண்டளவில் மலேஷிய "பூரணமாகத் தொழில்மயமாக்கிவிடல் வேண்டும்” என மஹதிர் விரும்புகிறார். 69 "குரங்குகளைச் சாப்பிட்டு சகலவித வியாதிகளாலும் துன்பப்படுதல்" என மஹதிர் வர்ணிக்கும் சுதேசவாழ்க்கைப் போக்குகளுக்கு இத்தகைய திட்டத்தில் சிறிதும் இடம் கிடையாது. "
எனவே, மரம் வெட்டுதல் இடைநிறுத்தப்படல் வேண்டும் அல்லது குறைந்த பட்சம் நடைமுறையில் உள்ள மரம் வெட்டுத் தொழில் அமைப்பு புதுப்பிக்கப்படல் வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கும், சூழல் பாதுகாப்பு சுதேச மக்கள் நலப்பாதுகாப்பு முதலியவற்றுக்காகப்
67. த ஈக்கன்ொமிஸ்ட், பெப். 15, 1992ல் வெளியான "அயனமண்டல உஷ்ணம்" என்ற கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள ஐ.டி.டி.ஓ. அறிக்கை, 2001 அளவில் சரவாக்கில் கன்னிக்காடுகள் இராது என எச்சரிக்கின்றது. 68. சபாஹ்வில் எதிர்க்கட்சியான பர்தி பெர்லத்த ஸ்பாஹ் கட்சி உறுப்பினர்கள் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். சிலர் இன்னும் தடுப்புக்காவலில் உள்ளனர். மேலதிக விவரங்களுக்குப் பார்க்கவும். : "மலேஷியா" சபாஹ்வில் தடுப்புக் காவலில் உள்ளோர்" நியூஸ் ப்ரம் ஏசியா வாட்ச். அக். 18,1991. 69. "மலேஷியா; 2020 "ஐ நோக்கி ஓட்டம்" த சக்கனொமிஸ்ட், நவம்பர் 9, 1991. 70. "அயனமண்டல உஷ்ணம்" த சக்கனொமிஸ்ட், 245A2.
92

பாடுபடுவோருக்கெதிராக மஹதிர் இக் காரணங்களுக்காக உத்தியோகபூர்வமற்ற முறையில் போர்ப் பிரகடனஞ் செய்துள்ளார். சங்கமமைப்பதற்கும் பேரவை கூட்டுவதற்குமான சுதந்திரத்தைத் தடைசெய்யும் சட்டங்கள், உள்நாட்டு தொடர்புச் சாதனங்கள் மீதும், சர்வதேசத் தொடர்புச் சாதனங்கள் மீதும் தணிக்கையும், ஒடுக்குமுறையும், ஊழல், அதிகாரிகள் சூழல் சம்பந்தமான கொள்கைகளை மீறுதல் முதலியவற்றைக் கண்டுங் காணாதது போல் நடித்தல் கூலிக்கமர்த்தப்பட்ட குண்டர்களைக் கொண்டு தாக்குதல், அரசியல் யாப்பில் உத்திரவாதஞ் செய்யப்பட்டுள்ள உரிமைகளை மீறி அதிதீவிரமான அவசரகாலச் சட்டங்களின் கீழ் தடுப்புக்காவலில் வைத்தல் முதலிய கைங்கரியங்கள் மூலம் இப்போர் தொடுக்கப்படுகின்றது.
நம்பகமான முறையில் மலேஷிய அதிகார வட்டாரங்கள் சூழல் பாதுகாப்புப் பற்றியெல்லாம் பிதற்றிக் கொள்கின்றன. எனினும் இப் பாதுகாப்பு நடவடிக்கையெதுவும் நடைமுறைப்படுத்தப் படுவதைத்தான் காணோம். மிகச்சிறிய மரங்களைத் தறித்தல் அல்லது ஒரு ஹெக்டர் நிலத்தில் அளவுக்கதிகமான மரங்களை வெட்டுதல் போன்ற செயல்களால் 'மரம்வெட்டுதல் பற்றிய பிரத்தியட்சமான வலிமைவாய்ந்த உத்தியோகபூர்வ மரம் தறிக்கும் சட்டங்களை மீறுவோருக்கெதிரான நடவடிக்கையெடுக்கப்படுகின்றதா, அவர்கள் எப்போதேனும் தண்டிக்கப்பட்டதுண்டா எனக் கேட்கப்பட்டபோது, மரம் தறிக்கும் ஒருவர் கூறிய பதில், "இல்லை, வியாஜ் வழக்கோ தண்டனையோ கிடையாது, ஊழல் மட்டுமே காணப்படுகிறது."
அண்மையில் பிரசுரமான கட்டுரையொன்று, மலேஷியாவின் போர்னியோ இராச்சியத்தல் காணுங்காட்சி அளவு கடந்த விரயமும் நாசமுமாகவுள்ளதென்று கூறுகிறது. அது சுரங்கத் தொழில் போன்றது. தோண்டப்பட்ட பெருமளவு மண்ணையும், மேல் மண்ணையும் கனரக உழவு இயந்திரங்கள் கிளப்பி நிதியினுள் தள்ளுகின்றன. தற்காலிகப் பாதைகள் அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான மரங்கள் கனரக உழவு இயந்திரங்கள் மூலம் சிறு கால்வாய்களினுள் தள்ளப்படுகின்றன. கரைப்பகுதிக்கு அனுப்ப முடியாத மிகச்சிறிய மரங்கள் வானளாவிய எரியும் தகனக்கிரியைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
வாடிக்கையாளர்கள் வாங்கமறுத்து விட்டபடியால் நாற்பதடி உயரத்திற்கு அடுக்கி வைக்கப்பட்டு அழுகிக் கொண்டிருக்கும் வெட்டப்பட்ட மரங்களின் வரிசை நதியோரம் காணப்படுகின்றது. மரக்குற்றிகளுக்காகத் துண்டுக்கணக்கில் கூலிவாங்கும் அனுபவமற்ற
93

Page 51
மரம்வெட்டும் தொழிலாளர்களாய் இல்லாதிருந்திருப்பின் இம்மரங்கள் வெட்டப்படாமல் வளர்ந்து கொண்டிருக்க விடப்பட்டிருக்கக் கூடும்.” பாழ்படுத்தப்பட்ட நிலத்தை களைப்பூண்டினத்தைச் சேர்ந்த ஒருவகைச் சிறுகொடி பசுமைப்படுத்துகின்றது. ஆனால் மழைக்காடுகள் புதுப்பிக்கப்படவில்லை.
சூழல் வாதிகளின் நடவடிக்கைகள் தேசத்துரோகத்துக்கு ஒப்பானவையென மஹதிர் பெருந்தாக்குதல் தொடுத்துள்ளார். மலேஷியாவில் மரங்கள் வெகுவாக வெட்டித் தள்ளப்படுவது பற்றிக் கவலை தெரிவிக்கும் வெளிநாட்டார் இழித்துரைக்கப்படுகின்றனர். அவர்கள், வெள்ளையரல்லாதோர் சரியாக தீர்மானமெடுக்கத் தெரியாதோர்" என்று இன உணர்வால் தூண்டப்பட்டுச் செயல்படுகிறார் களாம். சர்வதேசச் சூழல் இயக்கத்தினர் இனத்துவேச "உயிரின வாழ்க்கைச் சூழல் - ஏகாதிபத்தியவாதிகள்” எனப்பழிக்கப்படுகின்றனர். உள்நாட்டுச் சூழல் இயக்கத்தினர் "முதலாந்தரத் துரோகிகள்” எனத் தூற்றப்படுகின்றனர்.”
சூழலைப் பாதுகாத்தல் என்ற சாட்டில், இறைமை கொண்ட மூன்றாம் உலக நாடுகளைக் கண்டித்து, அவ்வரசாங்கங்களைக் கவிழ்ப்பதற்கான சருவதச அமைப்பொன்றை உருவாக்குவதற்காகவே மரம் வெட்டுவதை எதிர்த்து நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று வாதிடுகின்றார்கள் பிரதமர் மஹதிர் முஹம்மத்."
ஐரோப்பாவில் தளங்கொண்ட விசேட செயற்பாட்டுப்பிரிவொன்றை உருவாக்கப் போவதாய் மலேஷிய அதிகாரவட்டாரம் சமீபத்தில் அறிவித்தது. அதன் 40 இலட்சம் அமெரிக்கடாலர் வரவு செலவுத்திட்டத்துக்கு மலேஷிய மரத்தொழில் அபிவிருத்தி சபையால் நிதிவழங்கப்படும்." "தீயநோக்கம் கொண்ட சூழல்வாதிகளால் பரப்பப்படும் பொய்ப்புளுகுகளை முறியடிப்பதுதான் இப்பிரிவின் பணியாகும்.", "இச்சூழல்வாதிகள் ஐரோப்பிய மக்களை கண்மூடித்தனமாய்
72. அதே கட்டரை 73. "உயிரின வாழ்க்கைச் சூழல் ஏகாதிபத்தியவாதிகள்" என்பது பிரதமர் மஹ தீரின் பதப்பிரயோகம். "முதலாந்தரத் துரோகிகள்" எனக் குற்றஞ் சாட்டியவர் ஸ்ரவாக் முதலமைச்சர் அப்துல் தயிப் மஹ்மூத். "துரோகிகளின் அழைப்புக்கெதிராய் செயற்படுங்கள்". GunTiffGf|Gaunt Gunsivt, onTňrf 30, 1992. 74. "அயனமண்டல உஷ்ணம்" த சக்கனொமிஸ்ட், பெப்ரவரி 15, 1992. 75. "மலேஷியா ; லரவாக்கில் டயாக்குகளுக்கு நெருக்கடி தீவிரமாகின்றது." அர்ஜண்ட் அக்ஷன்
பள்ளட்டின், சர்வைவல் இண்டர்நேஷனல், ஏப்ரில், 1992.
94

நம்பவைக்கச் செய்கின்றனர் " "நாட்டின் நற்பெயருக்குப் பங்கம் விளைப்பதுதான் அவர்களின் நோக்கம்" என்கின்றனர் அதிகாரிகள்.76
A feiveweaf :
மலேஷியாவின் பதின்மூன்று மாநிலங்களில், பதினொன்று மலேஷிய தீபகற்பத்தில் உள்ளன. அதேவேளை ஸ்பாஹ், ஸரவாக் இரண்டும் கோலாம்பூரிலிருந்து மலேஷியாவின் ஏனைய பகுதியிலிருந்தும் சுமார் 200 மைல்கள் போர்னியோ கடலினால் பிரிக்கப்பட்டுள்ளன. ஸ்பாஹ்வின் மழைக்காடு 1995 அளவில் "வெட்டிச் சாய்க்கப்பட்டுவிடும்” என எதிர்பார்க்கப்படுகின்றது.” எனவே கண்கள் யாவும் ஸரவாக் பக்கம் திரும்புகின்றன. அதன் நிலப்பரப்பு 123.3 இலட்சம் ஹெக்டயர். இது மலேஷியாவின் மொத்த நிலப்பரப்பில் 38 வீதமாகும். 1990ல் அதன் மரத்தொழில் சுமார் 20 இலட்சம் அமெரிக்க டாலர் வெளிநாட்டுச் செலாவணியை ஈட்டித்தரும் என மதிப்பிடப்பட்டது. (அப்போதிருந்து மரம்வெட்டுதல் அதிகரித்து வந்துள்ளது) இத்தொழிற்றுறையில் 55,000 பேர் வேலையிலமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால் அமேசன் மழை வனங்களை விட மும்மடங்கு வேகத்தில் போர்னியோ மழைவனத்தின் எஞ்சிய பகுதிகள் நிரந்தரமாக அழிக்கப்பட்டு வருகின்றவென சூழல்வாதிகளும் சுதேச உரிமைப் போராளிகளும் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
சுதேசிகள் ஏகபோக உரிமைபூண்டுள்ள சமூகப்பொது வனங்கள் 1968ல் 30,00 ஹெக்டயர்களிலிருந்து 1990ல் 5000 ஹெக்டயர்களாகக் குறைந்துவிட்டன. சுதேச பாரம்பரியச் சட்டத்தின்கீழ் உள்ளூர்வாசிகளுக்கு நிலத்தின்மீது சட்டபூர்வ உரிமையுண்டு. ஆனால் அரசாங்கத்திடம் விண்ணப்பிக்காமல் சொந்த நில உரிமை கொண்டாட முடியாது. இவ்வழிமுறை பெருஞ் செலவையுண்டு பண்ணுவதாகும். சுதேசிகளிடம் அந்தளவு பணம் இருப்பதில்லை. அத்தோடு அறிவித்தல் மூலம் நிலவுரிமைகள் தலைகீழாய்ப் புரட்டப்படுவதுண்டு. அரசாங்க வர்த்தமானியில் அரச அதிகாரிகள் அறிவித்தலொன்றை வெளியிடுவார்கள். இவ்வறிவித்தல் சுதேசிகளுக்குத் தெரியவருவதில்லை. குறிப்பிட்ட காலனல்லைக்குள் பதில் கிடைக்காவிட்டால், நிலம் கைமாறிவிடும். " தற்போது 942 இலட்சம் ஹெக்டயர் நிலம் அரசாங்க வர்த்தமானி அறிவித்தலில் இடம் பெற்றுள்ளது. இதில்
76. பிரதம கைத்தொழிலமைச்சர் தாத்துக் லெரி டாக்டர் லிம் கெங்யய்க், "மேற்கத்திய தொடர்புச் சாதனங்களின் பிரச்சாரத்தை முறியடிப்பதற்கு விஷேச பிரிவு” என்ற TLTSLTTLTLTS SLLLLL LLLLTTLLLLLLL L0TLTLSrTTL 0S 0000S 77. தெ இக்கொணபமில்ட் ஆகஸ்ட் 10, 1991. 78. "காலிக் குடிசைகளில் குழந்தைகள்" ஜெனி கெண்டெல் எழுதியது இன்டெக்ஸ் ஒன்
சென்ஸர்ஷிப் ஜுன்ஜூலை, 1989.
95

Page 52
பெரும்பகுதி மரம் வெட்டுவதற்கான சலுகை பெற்றவையாக பிரிக்கப்பட்டுவிடும்.
மாநிலத்தில் மக்கள் தொகையில் 50 வீதத்தினர் சுதேசிகளாவர். உணவு, மருந்து, இருப்பிடம் போன்றவற்றுக்காக மட்டுன்றி தங்கள் பழக்க வழக்கங்களையும் வாழ்க்கை முறையையும் பேணிக்காத்துக் கொள்ளவும் இவர்கள் முழுமையாக இம்மழை வனங்களின் வருமானத்தையே நம்பியிருக்கின்றனர். காடழிப்பு என்பது அவர்களது பண்டைக்கால கலாச்சாரத்தை அழிப்பதாய் முடியும்.
காடழிப்பை மந்தகதிபெறச் செய்வதாகும், சுதேசி கலாச்சாரங்களைப் பேணிக்காப்பதற்குமான போராட்டம் ஸரவாக்கில் இருவழிகளில் நடைபெறுகின்றது. முதலாவது வழி, தேசிய மட்டத்திலும், சருவதேச மட்டத்திலும் பிரச்சினையை அம்பலத்துக்கு கொண்டுவருவதும், அதிகாரிகளால் பரப்பப்படும் "பிழையான தகவல்" களையெதிர்த்துப் போராடுவதாகும். இரண்டாவது வழி, உள்ளூர்வாசிகள் சாத்வீகமான முறையில் எதிர்ப்புக் குரல் கொடுக்கின்றனர். மரம் வெட்டச் செல்லும் பாதைகளின் குறுக்கே வரிசையமைத்து மனிதத்தடைகளை உருவாக்குகின்றனர்.
சுதேசிகள் அநேகருக்கு அதிகார மொழிகளான ஆங்கிலமோ, மலாய் மொழியோ வாசிக்கவோ எழுதவோ தெரியாது. அடையாள அட்டையில்லா காரணத்தால் அவர்களில் அநேகருக்கு வாக்களிக்கவும் முடியாது. ” எனவே இம்மனிதத் தடைகள் தான் தங்கள் சக்தியை காட்டுதற்கு அவர்களுக்குள்ள ஒரே சாதனம். சுதேசியொருவரின் வாய்மொழியாகக் கூறுவதாயின், "கம்பெனியின் செயலைத் தடுப்பதற்கு (மனிதத் தடைகள் இல்லாமல்) எம்மால் எதுவுஞ் செய்ய முடியாது.நாம் எம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்குப் பிரயத்தனஞ் செய்கையில் குழப்பக்காரர்கள் எனக் கண்டிக்கின்றோம்." 8O
உள்ளூர்வாசிகளுள் பிரதானமாக வேட்டையாடியும் வனப்பயிர்ச் செய்தும் சீவிப்பவர்களான பெனான் இனத்தவர்கள் குறிப்பாக மரம் வெட்டுவதற்காகச் செல்லும் பாதைகளின் குறுக்கே மனிதத் தடைகளையமைப்பதில் மிகவும் முனைப்பாகவுள்ளனர். அவர்களின் இனப்பெயர் மொத்தத்தில் எதிர்ப்பு இயக்கத்தையே குறிப்பதாகவுள்ளது.
79. அநேகருக்கு அடையாள அட்டை கிடையாது. பதிவு செய்ய முடியாதுபோவதால் ஏற்படும்
விளைவு இது. ஆண்டுக்கணக்கில் பதிவு செய்யப்படுவதில்லை.
80. உலாத் ஆயத், ஸ்ரவாக்கின் வனங்களுக்காகப் போராட்டம்" என்ற உலக மழைவன இயக்கத்தினதும் ஸஹாபத் ஆலம் மலேஷியாவினதும் வெளியீட்டின் (பக். 47) மேற்கோள் காட்டப்பட்டுள்ளபடி.
96

தம் "புராதன” வாழ்க்கைப் போக்கைக் கைவிட்டு நவீன உலகத்துடன் இணைந்து முன்னேற்றமடைந்து வருவதாக மலேஷிய அதிகார வட்டத்தினர். பலர் உறுதியாய் மொழிகின்றார்கள். தாராள சிந்தனை கொண்ட மேலைநாட்டார் பெனைன் இனத்தவரை அளவுக்கதிக கற்பனா நோக்குடனும் புராதன காப்புக் கண்ணோட்டத்துடனும் மதிக்கின்றனர். என அவர்கள் கூறுகின்றனர்." பெனான்கள் மழைவனத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு விட்டனர். வனங்களில் பழையமுறைப்படி இன்னம் வாழும் சுமார் 9,000 பெனான்களில் இப்போது சில நூறுபேர்கள் மட்டுமே உள்ளனர். இப்போது அவர்கள் அரசினால் நிதிஉதவி வழங்கப்படும் "நீள்வீடுகளில்" வசிக்கின்றனர். இங்கு அவர்கள் போஷாக்கின்மையாலும், உடல் வியாதிகளாலும், மனச்சோர்வாலும் அவதியுறுகின்றனர். அவர்கள் நவீன சமூகத்தினுள் ஈர்த்துக் கொள்ளப்படவில்லை. அவர்கள் சார்பில் அரசாங்க முயற்சி பூஜ்யமாகவே தெரிகிறது.* எனினும் உள்நாட்டுத் தொடர்புச் சாதனங்களில் அவர்கள் விமோசனம் பெற்று விட்டதாகக் கதை திரிக்கப்படுகிறது. "நீள்வீடுகளில்" பெனான்களின் வாழ்வு தீவிர மாற்றங் கண்டுவிட்டதெனச் பறைசாற்றப்படுகின்றது.*
மரம் வெட்டுதலும் அரசியல் ஊழலும்
நிலம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் அரசாங்கம் முழுமையான சட்ட ஆதிக்கம் கொண்டுள்ளது. 1963ல் சபாஹ் வையும், ஸ்ரவாக்கையும் அக்கால "மலேய கூட்டரசு" என்று அழைக்கப்பட்ட ஒன்றியத்தில் சேருமாறு மாயவலை வீசிய சட்டத்தொகுப்பின் எஞ்சிய பகுதியே இது. இவ்விரு இராச்சியங்களும் இனவேறுபாடுகள் கொண்ட ஐக்கியத்தை உறுதிப்படுததியது மட்டுமன்றி இயற்கை வாயு, கன்னி மழைவனங்கள் முதலிய அரிய பெரும் வனங்களையும் ஒன்றியத்துக்கு ஈட்டித்தந்தன. இந்நாள் வரை, இயற்கை வாயுவிலிருந்து பெறப்படும் 95 வீதப் பெரும் இலாபம் நேரடியாக மத்திய அரசைப் போய்ச் சேருகின்றது. (மத்திய - மாநில அரசு பிணக்குகளுக்கு இதுவே காரணம்). அதேவேளை, மரம்வெட்ட, அனுமதி வழங்குதல் மரம்
81. "பெனான்கள் யார்? கென் யாலாங் எழுதியது. ஸ்ரவாக் டிரிபியூன், பெப்ரவரி 29, 1992.
82. உதாரணத்துக்க, அரசு "பறக்கும் மருத்தவ சேவை" யொன்றினை ஆரம்பித்துள்ளது. இதன்மூலம் மருத்துவர்கள் ஆகாயமாக்கமாகக் கொண்டு செல்லப்படுகின்றனர். இப்பகுதியில் தரைப்பயணம் மிகவும் கடினம்.) எப்போதாவது ஒருமுறையே மருத்துவர்கள் செல்கின்றனர். பெரும்பாலும் ஹெலியிலிருந்து எஸ்பிரின் போன்ற மருந்துவகைகள் வீசப்படுகின்றன. ஏனைய நேரத்தை மருத்துவர், ஆகாயத்திலிருந்தே மிருகங்களை வேட்டையாடுவதில் கழிப்பதாக அறிவிக்கப்படுகின்றது. லரவாக் பிரதிநிதிகளோடு பேட்டி, செப்டெம்பர் 24,
99.
83. பார்க்கவும், உதாரணத்திற்கு "யார் இந்த பெனான்கள் கென் யலாங்க எழுதியது.
வரலாக் டிரிபியூன், செப். 29.1992
97

Page 53
வெட்டும் சட்டங்களின் மீதான நியாயாதிக்கம் முதலியன முழுமையாக இன்னும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. மாநில அரசு தனிநபர்களுக்கு மரம்வெட்ட அனுமதியை வழங்குகின்றது. லாபத்தில் ஒரு பங்கைத் தனிநபர்களுக்குக் கொடுப்பதற்குப் பிரதியுபகாரமாக அவர்கள் மரம் வெட்டுவோர் குறுகிய கால உரிமைகளை அவர்களிடமிருந்து ஒப்பந்தம் மூலம் பெறுகின்றனர். வாரத்தில் ஏழுநாட்களும் 24 மணித்தியாலங்களாக மரம் வெட்டுதல் தொடர்கின்றது. இரவில் அதிசக்தி கொண்ட விளக்குகளால் ஒளிவெள்ளத்தில் திகழ்கின்றது. அரசியல் அதிகாரம் கைமாறும் போது மரம் வெட்டும் ஒப்பந்தங்களும் கைமாறுகின்றன. ஓராண்டு அல்லது ஈராண்டு ஒப்பந்தமே செய்து கொள்ளப்படுவதால், ஒப்பந்தம் கைச்சாத்தானதும், காட்டிலிருந்து உச்ச பட்ச நன்மையைப் பெறுவதற்காக ஒவ்வொரு விநாடியுமே செலவிடப்படுகின்றது. எனினும் வெட்டப்படும் மரங்களில் 30 வீதம் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. ஏற்றுமதி விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்படாது நிராகரிக்கப்பட்ட இளமரங்கள் கிடந்து அழுகுமாறு விடப்படுகின்றன.*
பலவருடங்களாக கணக்கு வழக்குகள் ஒப்படைக்கும் பொறுப்பின்மை காரணமாக, சூழலை பாதுகாக்க வேண்டியவர்களே சூழலைச் சூறையாடி இலாபம் பெறும் நிலைமை உருவாகியுள்ளது. ஸ்ரவாக் சூழல் உல்லாச பயண அமைச்சர் தாத்துக் ஜேம்ஸ் வொங்கின் வார்த்தைகள் இந்நிலைமையைக் குறிக்கும் பொழிப்புரையாகவுள்ளது. "ஸரவாக்கில் எமக்கு அளவுக்கதிகமான மழை பெய்கிறது. இது நான் கொல்ப் விளையாடுவதைக் தடுத்துவிடுகிறது” என்கிறார் வொங். 85 மரம் வெட்டப்படுவதைப் பட்டவர்த்தனமாக ஆதரித்துப் பேசுகின்ற இவருக்கு சலுகையாகக் கிடைத்த காட்டுநிலம் 300,000 ஹெக்டயருக்கும், தேசத்தின் மாபெரும் மரத்தொழில் கொம்பனியான, லம்பங் வர்த்தகக் கொம்பெனியும் சொந்தமாகவுள்ளது. "மரம் வெட்டுவது தான் எனது வயிற்றுப்பாடாகும்” என்பது அவரது வார்த்தைகள்."
மரம் வெட்டுவதனையெதிர்க்கும் இயக்கத்தினரை மலைசியாவின் “முதலாந்தர துரோகிகள் என அழைக்கும் ஸ்ரவாக் முதலமைச்சர் அப்துல் தயிப் மஹ்மூத் ஸ்ரவாக்கின் மரம் வெட்டும் சலுகைகளில் 10 வீதத்தைத் தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்தக் கொண்டிருக்கிறார்.
84. “மரத்தொழில் கொள்ளையர்களுக்கெதிராய் பெனான்களின் கடைசி நிலைப்பாடு" சேம்ஸ்
பார்க்லே, கார்டியன், ஜனவரி 1, 1992. 85. "மரம் வெட்டப்படுவதன் மூலம் ஸ்ரவாக் வாசிகள் மோசமாகப் பாதிக்கப்படுவதாகச்
சர்வதேச நிபுணர்கள் கூறுகின்றனர்.” உட்டுசன் கொன்ஸுயூமர், மார்ச் 1988. 86. “suff, GyFlo bi utf 5 988. ***
98

மரம் தறிப்பதற்கான அனுமதி பத்திரங்களை தம்மிச்சைப்படி , அரசியல் சலுகை போன்று விநியோகிக்கின்றார். தயிபின் உறவினர்களும் அரசியல் நண்பர்களும் சுமார் 16 இலட்சம் ஹெக்டயர்களை வைத்திருப்பதாகச் சொல்லப்படுகின்றது. இது ஸ்ரவாக்கின் மரச்சலுகைகளில் மூன்றிலொரு பங்காகும்."
1987ல் ஸ்ரவாக் மாநிலத் தேர்தலுக்காக வாரியிறைக்கப்பட்ட பணம் மரம் வெட்டுவதன் மூலம் சம்பாதிக்கப்பட்டதே. முதலமைச்சர் தயிர் தன் எதிரிகளுக்கு சொந்தமான 9 மில்லியனுக்கும் 22.5 மில்லியனுக்கும் இடைப்பட்ட மலேஷிய டாலர்கள் பெறுமதியான 12.5 இலட்சம் ஹெக்டயர் நிலத்தின் மீதான மரம் வெட்டும் உரிமைகளை அதிகரியாது நிறுத்தினர். மரம் வெட்டுவதன் மூலம் கிடைக்கும் பணம் அரசியல் நடவடிக்கைகளுக்காகச் செலவிடப்படுகின்றது. 88 அரசியல்வாதிகளுக்கு மரம் வெட்டும் உரிமைகள் வழங்குவது நல்லதே. அது தமக்குப் பணவுதவி செய்வோரிடமிருந்து அவ்வரசியல்வாதிகளுக்கு விடுதலை வழங்குகிறது. 89 என்று அவர் கூறுகிறார்.
குறிப்பிட்ட இனங்களைச் சேர்ந்த மரங்களுக்கு உயர்ந்த உரிமைப்பங்குத் தொகை செலுத்துவதிலிருந்து தப்புவதற்காக வெட்டப்பட்ட மரக்குற்றிகளின் இனமும், அளவும் பற்றிப் பொய்யான பதிவேடுகள் தயாரிக்கப்படுகின்றன. ஸ்பாஹ்வில் வருடாந்தம் தறிக்கப்படும் மரங்களில் 30 - 40 சத வீதமானவை ஒழுங்கற்ற பத்திரங்களுடன் ஏற்றுமதி செய்யப்படுகின்றனவென மதிப்படப்பட்டுள்ளது.
கிழக்கு மலேஷியத் துறைமுகங்களில் ஏற்றப்படும் மரங்களின் இனம், அளவு பற்றிப் பொய்யான பத்திரங்கள் தயாரிப்பதற்காக இலஞ்சமும் "சந்தோஷ" மும் வழங்குவதற்கென்றே வியாபாரிகளின் மர்மமான அமைப்பொன்று விரிவான முறையினைக் கையாள்கின்றது.*
ஸ்பாஹ்வில் சட்டவிரோதமாய்ச் செயற்படும் குழுக்களில் ஒன்று சட்ட விரோதமாய் ஏற்றுமதி செய்த மரங்களினால் கிடைத்த 100 மில்லியன் அமெரிக்க டாலரை வெளிக்காட்டவில்லை என மதிப்பிடப்பட்டுள்ளது.” சட்டங்களை நடை முறைப்படுத்தும் அதிகாரிகளின் நடவடிக்கைகள் எத்தகைய தாக்கத்தையும்
87. "ஸ்ரவாக்கில் நிலத்துக்காகவும், அதிகாரத்துக்காகவும் மோதல்” ரபேல் புரா, த ஏசியன்
வால் ஸ்ட்ரீட் ஜர்னல், பெப்ரவரி7, 1990.
88. "காலிக்குடில்களின் குழந்தைகள்" இன்டெக்ங் ஒன் சென்ஸர்ஷிப்.
89. நியூ ஸ்ட்ரெடஸ் டைம்ஸ், அக்டோபர் 4, 1987.
90. “உரிய அளவுக்குத் தரித்தல்" டவுத் ட்கருவோகா, ஃபார் ஈட்ரன் ஈக்கனொமிக் ரிவியூ ஜூலை
4,珀91。
91. அதே கட்டுரை.
99

Page 54
ஏற்படுத்துவதில்லை. மரத்தொழில் நிறுவனங்கள் பெறும் பாதுகாப்புகளால் அவர்களின் நடவடிக்கைகள் நன்றாகக் கட்டுப் படுத்தப்பட்டுள்ளன. இரகசியமாகக் கிடைக்கும் இலாபத்தில் பங்கு பெறுவதற்காக வேண்டி அவர்கள் மெளனஞ்சாதிக்கவே விரும்பு கின்றனர்.?
கோலாலம்பூர் காத்திரமான சூழல்பாதுகாப்பு நடைமுறைகள் பற்றிப் பிதற்றிக் கொள்கின்றது. அதே வேளை த ஈக்கனொமிஸ்ட் பத்திரிகையின்படி,
உண்மையில், கோலாலம்பூரிலுள்ள மத்திய அரசுக்கும் போர்னியோவிலுள்ள இரண்டு மாநில அரசுகளில் அதிகாரத்திலிருக்கும் கும்பலுக்குடையே மெளனமான புரிந்துணர்வு நிலவுகின்றது. தம்மிஷ்டப்படி ஆட்டிப் படைப்பதற்குச் சுதந்திரமாக விடப்பட்டிருக்கும் வரை போர்னியோவின் இயற்கை வளங்களிலிருந்து மத்திய அரசுக்கு வருமானம் கிடைப்பதற்கு மாநில அரசுகள் உதவிவரும். 93
ஒடுக்கு முறைச் சட்டங்கள் அவசரகால (பொதுக் கட்டுப்பாடும் குற்றத்தடுப்பும்) சட்டம் 1969
குற்றம் புரிந்தவராக சந்தேகப்படுவோரை எத்தகைய குற்றச்சாட்டுகளும் விசாரணையுமின்றி 60 நாட்கள் வரை தடுத்து வைப்பதற்கு அவசரகாலச் சட்டம் அதிகாரம் வழங்குகிறது. கடந்தகாலத்தில் குண்டர்களுக்கும், கம்யூனிஸ்ட் கிளர்ச்சிகாரர்களுக்குமெதிராகப் பிரயோகிக்கப்பட்ட இச்சட்டம் இப்போது கெலாபிட் இனக்குழுவைச் சேர்ந்த அண்டர்ஸன் முட்டாங் உருதுக்கு எதிராகத் திருப்பிவிடப்பட்டுள்ளது. முட்டாங் உருத் மனிதத்தடை இயக்கத்தின் தலைவரும் சுதேசிகளுக்காகச் சர்வதேச குரல் கொடுப்போருமாவார். மலாய், ஆங்கிலம், கெலாபிட் மொழிகளில் சரளமாகப் பேசக் கூடிய அவர் ஸ்ரவாக்கில் உருவாகியுள்ள நிலைமை மீது சர்வதேசக் கவனத்தைத்திருப்புவதற்காகப் பல நாடுகளுக்கு சென்றுள்ளார். ஸ்ரவாக் சுதேச மக்கள் கூட்டணி (SPA) யை 1991ல் உருவாக்குவதில் அவர் முன்னின்று உழைத்தவர். இவ்வியக்கம் கண்டபடி மரங்களை வெட்டித் தள்ளுவதற்கெதிராக போராட்டம் நடத்துவதோடு தகவல்களையும் வழங்குகின்றது.
92. அதே கட்டுரை 93. "லோங் லேனுக்கும் அப்பால் அருகிவரும் காடு" த ஈக்கனொமிஸ்ட், ஆகஸ்ட் 18,
1990.
100

ஜனவரி 11, 1992ல் மலேஷியாவுக்கு வருகை தந்திருந்த கனேடியப் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்வெண்ட் ரொபின்ஸனுடன் சேர்ந்து முட்டாங் உருத் உண்மையை அறியும் ஆய்வுக்குழுவொன்றில் பங்கு கொண்டார். பின்னர் கனேடிய ராஜதந்திரி பிரெண்டன் மக் கவர்கருடன் சேர்ந்து மரெவட்டுக்கெதிரான மனிதத்தடை இயக்கமொன்றைப் பார்வையிட்டனர். பெப்ரவரி 5ந் திகதி அவசரகாலச் சட்ட 3ம் பிரிவின் கீழ், சிபாவோ (SIPA) என்ற பதிவு செய்யப்படாத சங்கமொன்றை நடத்தி வந்தமைக்காக கைது செய்யப்பட்டார் . (சங்கங்களின் சட்டத்தின் கீழ் சகல சங்கங்களும் சங்கப் பதிவாளரிடம் பதிவு செய்யப்பட்டிருந்தல் வேண்டும். உத்தியோக பூர்வ கட்சி வழியைப் பின்பற்றும் சங்கமொன்று பதிவு செய்யப்படுவதற்கு ஒருமாத காலமெடுக்கும், கட்சிக் கொள்கைகளுக்கு விரோதமாகச் செயல்படும் சங்கங்கள் பதிவு செய்யப்படுதற்கோ மூன்று வருடங்களுக்கும் அதிகமான காலமெடுக்கும்.)
தாம் கைது செய்யப்பட்டதற்கான உண்மைக் காரணம் ஸ்வெண்ட் ரொபின்சன் விவகாரமோ விபாவோ (SPA) அல்லெவன முட்டாங் நம்புகிறார். லோங் அஜெங்கில் நீண்டகாலமாக நடந்த மிகப்பெரும் மனிதத்தடை இயக்கம் அதிகார வட்டாரத்தால் பெப்ரவரி 12ந் திகதி கலைக்கப்படுவதற்குச் சற்று முன்பதாக இக்கைது நடந்ததை முட்டங் சுட்டிக் காட்டுகின்றார். முட்டாங்கிங் கைது அவ்வியக்கத்தில் பங்குபற்றிய ஐந்நூறுக்கும் அதிகமானோரை உற்சாகமிழக்கச் செய்துவிடும். அப்புறம் சிரமமின்றி அவர்களை எளிதாக இயக்கத்திலிருந்து அப்புறப் படுத்திவிடலாம் என்பதே அவர்கள் நோக்கமாயிருந்தது. தடுத்து வைக்கப்பட்டிருந்த முட்டாங்கிடம் விசாரணையின்போது மனிதத் தடையைக் கலப்பதற்குச் சிறந்த வழி எதுவெனக் கேட்கப்பட்டது. அக்கைங்கர்யத்தில் ஈடுபட்ட மாநில, மத்திய அதிகாரிகளோடு அவரும் உடன் செல்ல வேண்டுமென வலியுறுத்தப்பட்டார் (முட்டாங் அதற்கு மறுத்து விட்டார்."சர்வதேச மன்னிப்புச் சபையும், ஏனைய குழுக்களும் எதிர்ப்பு தெரிவித்தமையால் மார்ச் 3ந் திகதி முட்டாங் விடுதலை செய்யப்பட்டார். அவரது விசாரணை செப்டெம்பர் 1992ல் நடைபெறவுள்ளது.
முட்டாங் தனிமையாக தடுத்து வைக்கப்பட்டு நீண்ட மணித்தியாலங்களாக விசாரணை செய்யப்பட்டார். சிலவேளைகளில்
94. லோங் அஜெங்கில் நடந்த மனிதத்தடை இயக்கம் அதிகார வட்டத்துக்குப் பெருந்தலையிடியைக் கொடுத்த விவகாரமென்பது வெள்ளிடைமலை. இறுதியில் இதனைக் கலைப்பதற்கு பலம்பொருந்திய மத்திய பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பெடரல் ரிசேர்வ் யுனிட் அழைக்கப்பட்டது. இப்பிரிவினர் கிளர்ச்சிகளை அடக்குவதில் தேர்ச்சி பெற்றவர்கள். விசேடச் சீருடையில் கண்ணிர்ப் புகையும், குறுந்தடியும் ஆயுதமாய்க் கொண்டவர்கள் முன்னைய தடைகள் யாவும் உள்ளூர் பொலிசினாலேயே கலைக்கப்பட்டன. முட்டாங் உருத் பேட்டி ஏப்ரில் 26,1992.
101

Page 55
காலை 4.00 மணிவரை விசாரணை தொடர்ந்தது. இரவோ பகலோவென்பதைக்கூட அவர் அறிந்திருக்கவில்லை. பத்துநாட்களாக பலகணியற்ற சிறு அறையினுள் அடைத்து வைக்கப்பட்டார். நள்ளிரவு வேளையில் குளிர்ந்த நீரில் குளிக்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டார். சட்டையோ, போர்வையோ, கம்பளமோ எதுவுமின்றி நித்திரை செய்யுமாறு விடப்பட்டார். மருத்துவ சிகிச்சை மறுக்கப்பட்டது. மேலும், அவசரகாலச் சட்டப் பொதுப் பாதுகாப்புப் பிரிவின் கீழ் அவர் நீண்டகாலத்துக்குத் தடுத்துவைக்கப்படலாமென்று விசாரணையாளர்கள் எச்சரிக்கை விடுத்துக்கொண்டிருந்தனர்.*
வனங்கள் சம்பந்தமான சட்டம்.
மனிதத்தடைகள் இயக்கம் ஒரு தசாப்தத்துக்கு முன்பே தொடங்கிவிட்ட போது 1987 வரை அது சருவதேச தொடர்புச் சாதனங்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. 1987ல் 310,000 ஹெக்டயர் நிலத்தில் மரங்கள் அழிக்கப்பட்டன. 1985ல் 270,000 ஹெக்டயர் நிலத்தில் மரங்கள் அழிக்கப்பட்டன. எல்.டி.டி.ஓ.வும் ஏனைய குழுக்களும் அவசர ஆலோசனைகள் விடுத்ததற்கு நேர்மாற்றமான மரம் வெட்டப்படுதல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது. 1992ல் 400,000 ஹெக்டயர் காடுகள் அழிக்கப்பட்டிருக்கும். சட்டவிரோதமாக நடவடிக்கைகளையும் சேர்த்துக் கொண்டால் இவ்வெண்ணிக்கை இன்னும் அதிகமாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
தடைகள் சருவதேசக் கவனத்தைப் பெற்றதன் விளைவாக, சரவாக் வனங்கள் சட்டம் திருத்தப்பட்டது. இத்திருத்தச் சட்டத்தின் படி, மரம்வெட்டப்படுவதற்கு முட்டுக்கட்டையிடுதல், அல்லது தடைகள் அகற்றப்படுவதற்கு எதிர்ப்புக்காட்டுதல் முதலியவை சட்டவிரோத குற்றமாகும். இதற்குத் தண்டனையாக இரண்டு வருடச் சிறை அல்லது 6,000 மலேசிய டாலர் அபராதம் விதிக்கப்படலாம். தடைகளைத் தகர்க்க மரம் வெட்டும் உரிமை பெற்ற முகவர்களின் உதவியைப் பெறுவதற்கு இத்திருத்தச்சட்டம் வழிசமைத்தது. மாநில அரசுக்குக் குற்றமிழைத்தோர் என அழைக்கப்பட்டோரிடமிருந்தே, தடைகளை அகற்றுஞ் செலவினங்கள் அறவிடப்படல் வேண்டுமெனவும் இத்தொகை செலுத்தப்படுங்காலம் வரை இதன் மீது வருடாந்த வட்டியும் விதிக்கப்படல் வேண்டுமெனவும் புதிய சட்டம் கூறிற்று. *
95. முட்டாங்குடன் பேட்டி, ஏப்ரில் 10, 26, 1992. 98. உட்டுசன் கொன்ஸியூமர், மே 1988.
102

சுதேசிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் நிலத்தின் மீதான தம் பாரம்பரிய உரிமைகள் அரச சட்டத்தினால் பாதுகாப்புப் பெற்றவையென்றும், எனவே தம் நிலங்களில் மேற்கொள்ளப்படும் தடைகள் சட்டவிரோதமானவையல்ல வென்றும் வாதித்தனர். 1990ல் கயான் சமூகத்தைச் சேர்ந்த மூவர் மரங்கள் வெட்டப்படுவது நிறுத்தப்படல் வேண்டுமென்றும், அது தம் சுதேச பாரம்பரிய நிலவுரிமைகளை மீறுஞ் செயலாகுமென்றும் கட்டளை பிறப்பித்தனர். இதனால் பயனேதும் ஏற்படவில்லை ”. இவ்வுரிமைக் கொண்டாட்டத்தையும் மீறி, சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வந்தது முதல் 500 சுதேசிகள் இச்சட்டத்தின் கீழ் சட்டவிரோதக் குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்தது. பல்வேறு சந்தர்ப்பங்களில் தனிநபர்களுக்கு பிணை மறுக்கப்பட்டது. இவர்கள் தடுப்புக் காவலில் மிக மோசமாக நடத்தப்பட்டனர். (பார்க்கவும் தடுப்புக்காவல் நிலைமைகள்) 1989ல் என்பது (80) பீனான், சுவிடென் விவசாய வியலாளர்கள் மூன்று மாதங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். இவர்களின் மனைவி மக்கள் இந்நாட்களில் உணவுக்காய்ப் பெரிதும், திண்டாட நேர்ந்தது. பிடிவாதம் கொண்ட சுதேசிகளுக்குப் பாடம் புகட்ட கடூரமாக நடந்து கொள்ள வேண்டிய தேவையேற்பட்டது என சர்வாக வனபரிபாலன பணிப்பாளர் லியோ ஷாய் விளக்கங்க கூறினார். 98
உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம்
மலேசியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உண்டு பண்ணக்கூடியவர் எனக் கருதப்படும் எவரும் பிடி விறாந்தின்றிக் கைது செய்யப்படுவதற்கு உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் (ஐ.எஸ்.ஏ) அனுமதிக்கின்றது. கைது செய்யப்படுவோர் குற்றச்சாட்டுகளெதுவுமின்றி 60 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்படலாம். தடுப்புக்காவலில் வைப்பதை இரண்டாண்டுகளுக்கு நீடிக்கவும் கால வரையறையின்றி அதனை நீடிக்கவும் உள்விவகார அமைச்சருக்கு அதிகாரமுண்டு. உள்விவகார அமைச்சர் பதவியை பிரதமர் மஹதித் தம்வசம் வைத்திருக்கிறார் மதத்தீவிரவாதிகள் கம்யூனிஸ்ட்டுகள் முதலியோருக்கெதிராகப் பிரத்தியேகமாய்ப் பிரயோகிப்பதற்கான உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் சூழல் போராளிகளுக்கெதிராகவும் பயன்படுத்தப்படுகின்றது. ஸஹாபத் ஆலம் மலேசியாவின் (ஸாம்) சரவாக் பிரதிநிதியும், மரம்வெட்டுவதற்கெதிரான தடைகளின் தலைவருமான ஹரிசன் நிகோவை அரசாங்கம் கம்யூனிஸக்
97. சிம்பா (சிங்கப்பூர் மலேசியன் பிரிட்டிஷ் அசோசியேஷன்) செய்திக் கடிதம் 1990. 98. மலேசியாவில் மனித உரிமைகளுக்கான அவசரகாலக்குழு, "அப்டேட் இல, 10, மலேசியன் ஐஎஸ்ஏ தடுப்புக்காவலும் மனித உரிமைகள் உசார் நிலையும் பெப்ரவரி 16, 1989,
103

Page 56
கையாள் என்றது.? நாடு பூராவிலும் மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கைகளின் மத்தியில் 1987ல் அவர் தம் அலுவலகத்தில் கைது செய்யப்பட்டு உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 60 நாட்கள் தடுத்துவைக்கப்பட்டார். பின்னர் சில நிபந்தனைகளுக்குட்பட அவர் விடுதலை செய்யப்பட்டார். இரவு 10 மணிக்குப் பின் அவர் வீட்டை விட்டு வெளியே செல்வது தடைசெய்யப்பட்டது. பொலிஸ் அனுமதிப் பத்திரமின்றி அவர் மாருதி நகரை விட்டு வெளியே செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. ஜூலை 1987ல் அவர் 12 சுதேசிகள் அடங்கிய குழுவொன்றை கோலாலம்பூருக்கு அழைத்து வந்து தம் மனக்குறைகளை அரசாங்கத்துக்கு எடுத்துக்கூறி முறையிட்டார். இம்முயற்சியால் ஏதும் பயனேற்படவில்லை.
அதேவேளை மற்றுமிரு சரவாக்கியர்கள், சரவாக் காணி அபிவிருத்திச்சபை விவசாயிகள், உள்ளூர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டனர். இதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. 1987ல் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நூற்றுக்கணக்கான கைதுகளில் குறைந்தது 91 பேரேனும் உத்தியோகபூர்வமான காணித் கொள்கையை வெளிப்படையாக எதிர்த்தோராவர் "
தடுப்புக்காவல் நிலைமைகள்
தடைகளில் பங்கு பற்றியோர், 1987ல் இருந்து சிறைவாசத்தின்போது அனுபவித்த மனிதத்தன்மையற்ற கேவலமான பல்வேறு கொடுமைகள் பற்றி விவரித்துள்ளனர். அவர்களுக்கு விலங்குகள் மாட்டப்பட்டிருந்தன. இதன் விளைவாய் அவர்கள் தம் மலசலங்கள் மீது வீழ்ந்து கிடக்க நேர்ந்தது. இதற்காக அவர்கள் ஏளனஞ் செய்யப்பட்டனர். சாப்பிட முடியாத உணவு அவர்களுக்குப் பரிமாறப்பட்டது. பொலிசார் அவர்களை நையப்புடைத்தனர். அமர்ந்திருக்கவோ குந்தவோ முடியாதபடி அவர்கள் சின்னஞ்சிறிய அறைகளில் நெரிசலாக அடைத்து வைக்கப்பட்டனர். குளியல் வசதிக்குப் பதில் 42 பேருக்கு ஒரு தண்ணிர் வாளி வீதம் வழங்கப்பட்டது. தடுப்புக்காவல் வாசத்தின் போது ஒரே கெளமீனத்தையே அணிய வேண்டியிருந்தது. மேலதிகமான பினை செலுத்த வேண்டியிருந்தது. அநேக விவகாரங்களில் சுதேசிகள் நேரே பொலிஸ் நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்படாமல் மரநிறுவன முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் தாறுக்கும் மாறுக்கும் அறையப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டனர்."
99. "லோங் லானுக்கு அப்பால் அழிந்து வரும் காடு" தி ஈக்கனொமிஸ்ட், ஆகஸ்ட் 18, 1990 100. 505 சரவாக் பத்திரிகைச் செய்தி. 101. வாய்மொழி அறிக்கை அத்துடன் உட்டுசன் கொன்லியூமர், ஆகஸ்ட் 1991.
104

அவசரகாலச் சட்டத்தின் கீழும், உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டோர் மேலதிகமான துன்புறுத்தல்களுக்கு ஆளாகினர். தடுப்புக்காவலில் பெரும்பாலும் வெளித்தொடர்புகள் யாவும் துண்டிக்கப்பட்டன. குற்றச்சாட்டுக்கள் தெளிவுபடுத்தப்படவில்லை. விசாரணை நாள் நெருங்கும் வரை சட்ட ஆலோசகர்கள் அனுமதிக்கப்படவில்லை.
பயமுறுத்தல்.
வாகனங்களை ஒட்டுதற்கும் மற்றும் கீழ்மட்ட வேலைகளைச் செய்வதற்கும் மரக் கம்பெனிகள் குண்டர்களைக் கூலிக்கமர்த்தின. இத்தொழில்களுக்கு விண்ணப்பிப்போர் சட்டத்தின் பிடியில் சிக்கியோராயிருந்தனர். இவர்களுக்கு வனங்கள் பாதுகாப்பான புகலிடமாய் விளங்கின. இவர்கள் பெரும்பாலும் குடி காரர்களாயும் சிறைப்பறவைகளாயுமிருந்தனர். இவர்களின் தோற்றம் சுதேசிகளைக் கிலி கொள்ளச் செய்வதாகவிருந்தது. உடம்பெங்கும் கடுமையாகப் பச்சைக் குத்தப்பட்ட பீமசேனர்களாய்க் காட்சியளித்தனர். உள்ளூரில் சமுராய் என்று அழைக்கப்படும் பாரிய சத்திகள் இவர்கள் வசமிருந்தன. சமீபத்திய மூன்று சம்பவங்களின் போது குண்டர்கள் தலையிட்டதன் காரணமாக உள்ளூர் சரவாக்கியர்கள் மத்தியில் ஏற்பட்ட பூசல்கள் பயங்கரச் சண்டைகளாய் மாறின. அற்ப வாக்குவாதம் மோசமடைந்தபோது ஓர் உள்ளூர்வாசியின் நான்கு விரல்கள் நறுக்கப்பட்டன 02.
உத்தியோக பூர்வ அதிகாரமின்றி ஒழுங்கை நிலைநாட்டுவோராய் இக்குண்டர்கள் பணியாற்றுகின்றனர். சட்டவிரோதமாய் மரங்கள் வெட்டப்படும் பகுதிகளில் விசாரணைகள் மேற்கொண்ட வன அதிகாரியொருவரின் வீட்டுக்குக் காடையர் இருவர் கையில் கத்திகளுடன் சென்று அவர் மனைவியை அச்சுறுத்தியபடியால் அவ்வதிகாரி விசாரணையைக் கைவிட நேர்ந்தது.
சட்டவிரோதமாய் மரங்களை வெட்டும்போது கண்காணிப்பில் ஈடுபடும் குண்டர்கள் தம் காடைத்தனங்கள் மூலமாகச் சுதேசிகளைப் பயமுறுத்துகின்றனர். மரங்கள் வெட்டப்படுவது தடுக்கப்பட்டால் தலைகள் உருண்டோடும் என அச்சுறுத்தப்படுகின்றது. மேற்கில் இது நடக்க முடியாத காரியமாய் காணப்படினும் சமீபகாலம் வரை தலைகளைக் கொய்தல் சில குழுக்கள் மத்தியில் நடைமுறையாய் காணப்பட்டுவந்த போர்னியோவில் இவ்வச்சுறுத்தல் சுதேசிகளைக் கதி கலங்கச் செய்து விடுகின்றது.
102. முட்டாங் உந்துடனும் மற்றோருடனும் நேர்காணல், செப்டெம்பர் 24, 1991, ஏப்ரில் 10, 24,
26 1992.
105

Page 57
மரங்கள் வெட்டப்படுவதற்கெதிராகக் குரலெழுப்புவதை அடக்குவதற்கு சரவாக்கில் கையாளப்படும் மற்றோர் உபாயம் உத்தியோக பூர்வமற்ற முறையில் விடுக்கப்படும் எச்சரிக்கைகளாகும். உள்ளூர்வாசிகள் தற்செயலாய் ஏதோ காரணங்களுக்காக உள்ளூர் பொலிஸ் அதிகாரிகளை சந்திக்க நேர்கிறது. பொலிஸ் தலைமையகத்தில் அரட்டையடிப்பதற்காக அல்லது குளிர்பானம் அருந்துவதற்காக அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். அப்போது சொந்த நன்மை கருதி தடை நடவடிக்கைகள், அந்நியர்கள் அல்லது சூழல் போராளிகள் முதலியோரிடமிருந்து ஒதுங்கியிருக்கும்படி அறிவுரை வழங்கப்படும். இவ்வழைப்புகள் சம்பிரதாய பூர்வமற்ற விசாரணையாகவும் அமைவதுண்டு. பயமுறுத்தப்பட்ட (அழைப்புகளுக்காக) நன்றி மறந்தவர்களென காட்டவிரும்பாத சுதேசிகள் தம்மீது விடுக்கப்படும் கேள்விக் கணைகளை சமாளிக்க முடியாமல் திணறிப்போவர். "
பரவலான அலைக்கழிவுகள்.
1988 முடிவில் மரம் வெட்டுவதற்கெதிரான சுதேசி மக்களின் தடைகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் சர்வதேச கவனத்தை ஈர்த்தன. வெவ்வேறு நாடுகளிலிருந்து வெவ்வேறு சட்ட குழுக்களின் பிரதிநிதிகள் மலேசியாவுக்கு பார்வையாளர்களாக வந்து குவிந்தனர். வழக்கு விசாரணைக்கு மூன்று நாட்கள் பிரயாணத்தின்பின் சுதேசி மக்கள் வந்து சேர்ந்தனர். ஆனால் விசாரணை சட்டென ஓராண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. கூறப்பட்ட காரணம் மொழி பெயர்ப்பாளர் கிடைக்காமையும் ஓராண்டு கால அவதியிற்கூட குற்றச்சாட்டுகளை ஒப்பேற்ற சாட்சிகள் இல்லாமையுமாகும்.
வழக்குகளைத் தயாரிப்பதற்கும், சாட்சிகளையும் மொழிபெயர்ப்பாளரையும் தேடுவதற்கும் வாதித்தரப்பு வருடமொன்றுக்கும் அதிகமான கால அவகாசம் எடுப்பதைக் கவனத்தில் கொண்டால், சருவதேச எதிர்ப்புகளைச் சிதறச் செய்வதற்கும் சங்கடமான நிலைமைகளைத் தவிர்த்துக் கொள்வதற்கும் சரவாக் அதிகார வட்டத்தினர் கடைப்பிடிக்கும் தந்திரோபாயங்களாகவே இதனை அர்த்தங்காண வேண்டியுள்ளது. *
103. முட்டாங் உர்துடனும் மற்றோருடனும் நேர் காணல், செப்டெம்பர் 24, 1991 ஏப்ரில் 26, 1992.
104. சுதேசிகள் நவம்பர் 1987ல் கைது செய்யப்பட்டு ஒக்டோபர் 1988ல் விசாரிக்கப்படவிருந்த வழக்குகள் ஏப்ரில் 1989 வரை ஒத்திப்போடப்பட்டன. டிசெம்பர் 1988ல் விசாரிக்கப்படவிருந்த வழக்குகள் ஏப்ரில் 1989 வரை ஒத்திப் போடப்பட்டன. டிசெம்பர் 1988ல் விசாரிக்கப்படவிருந்த வழக்குகள் ஜனவரி 1990 வரை ஒத்திப்போடப்பட்டன. மலேசியாவில் மனித உரிமைகளுக்கான அவசரகாலக்குழு, அப்டேட் இல. 10, பிப்ரவரி 16, 1989.
106

விசாரணைகளை மீண்டும் மீண்டும் ஒத்திவைப்பதற்காகவே நீதிமன்றத்துக்கு அமைக்கப்படுவதாய் சுதேசிகள் கூறுகின்றனர். நீதிமன்றத்திற்கு வருவதற்கு சுதேசிகள் பெரும்பாலும் நாட்கணக்காகக் கால்நடையாய்ச் செல்ல வேண்டியிருப்பதால் இதுவும் துன்புறுத்தலின் ஓர் முக்கிய வடிவமாகும். "
நீதிமன்ற நடைமுறைகள் ஆங்கிலத்திலேயே இடம்பெறுகின்றன. இது சுதேசிகளுக்குப் புரியாத மொழி. நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர்கள் சுதேசிகள் பேசும் மொழியைப் போன்ற ஆனால் அதை விட அதிக சிக்கலான இன்னொரு மொழியில் விசாரணைகளை மொழி பெயர்ப்பதால் அவர்களால் வழக்கு விசாரணைகளைச் சரியாக விளங்கிக்கொள்ள முடிவதில்லை.
புரூனா மென்சர் என்ற சுவிஸ் பிரஜை 1980களில் பீனான்வாசிகளுடன் ஆண்டுக்கணக்காக வாழ்ந்து வந்தார். மரங்கள் வெட்டப்படுவதற்கு எதிர்ப்பு இயக்கத்தில் அவர் நெருக்கமாக ஈடுபட்டபடியால் மலேசியாவில் அவர் வேண்டப்படாதவரானார். ஸியோனிஸ்ட், கம்யூனிஸ்ட் சதிகாரர் என அரசாங்கம் அவரை வர்ணித்தது. மரம் வெட்டும் நிறுவனங்கள் அவரது தலையைக் கொணர்வோருக்கு 30,000 டாலர் சன்மானம் என அறிவித்தன. மென்சர் மறைந்திருக்கும் இடம் பற்றி தகவல் பெறுவதற்காக பீனானியர் நையப் புடைக்கப்பட்டனர். இச்சம்பவத்தின்போது ஒருவர் கொலையுண்டார். அவர் தலைகாட்டியதாகக் கூறப்பட்ட பிரதேசங்களில் இராணுவ வீரர்களின் தேடல் நடவடிக்கைகள் இடம்பெற்றன. அவ்விடங்களில் அரசாங்கம் பரிசோதனை நிலையங்களை நிறுவியது. அவர் செய்த குற்றம் அனுமதிச் சீட்டு காலாவதியான பின்னரும் மலேசியாவில் தங்கியிருந்தமையாகும். ?
மேலே குறிப்பிட்ட நடவடிக்கைப் பிரிவுகளுடன் மேலும், மலேசிய மரப்பலகைத் தொழிற்சாலை அபிவிருத்திச் சபையின் நிதியுதவியுடன் சூழல்வாதிகளின் பிரச்சாரத்தை முறியடிப்பதற்காக விசேட பொலிஸ் பிரிவொன்று நிறுவப்படுமென ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் ஏப்ரலில் 29,1992ல் அறிவித்தது. இச்செய்தியின்படி மேற்படி பொலிஸ் பிரிவு மரங்கள் வெட்டப்படுவதற்கு முட்டுக்கட்டையிட முயலும். மேற்கத்திய
உள்ளூர் சூழல்வாதிகளைக் கண்காணிக்கும். 107
105. அதே வெளியீடு, இன்னும் ஸர்வைவல் இண்டர்நேஷனல், அர்ஜண்ட் அக்ஷன் பள்ளட்டின்
ஏப்ரில் 1992.
106. "போர்னியோவின் தீர்க்கதரிசி" வாடி டேவிஸ், அவுட்சைட், ஜனவரி 1991.
107. "சூழல் வாதிகள் மீது மலேசியப் பொலிஸ் பரிசோதனை நடத்தும் ராய்டர், ஏப்ரில் 29,
992.
107

Page 58
பத்திரிகை தணிக்கை
தணிக்கை - உத்தியோகப் பூர்வமானதும் உத்தியோகப்பூர்வமற்றதும் மலேசியாவில் பரவலாகக் காணப்படுகின்றது. மலேசிய அரசின் மீது விமர்சனக் கண்ணோட்டம் செலுத்திய கட்டுரைகளை வெளியிட்டமைக்காக பிரிட்டிஸ் பத்திரிகையான ஈக்கனொமிஸ்ட் 1991ல் இருமுறை தடைசெய்யப்பட்டது. அதன் விநியோகம் மும்முறை வேண்டுமென்றே தாமதிக்கப்பட்டது. *
பத்திரிகைகளைக் கட்டுப்படுத்தும் வழக்கமான உபாயம் தகவலமைச்சிலிருந்து பத்திரிகையாசிரியர்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புகளாகும். குறிப்பிட்ட விவகாரம் குறித்து அலட்டிக் கொள்ள வேண்டாமென எச்சரிக்கை வரும். இவ்வாலோசனை ஏற்கப்படாமல் போவதில்லை. அரசாங்க அதிகாரிகளுடன் ஆரோக்கியமான தொடர்புகளை வைத்துக்கொள்ள வேண்டியது பத்திரிகையாளர்களின் தேவையாகவுள்ளது.
உயர்ந்தளவு சுயதணிக்கை காரணமாக மரங்கள் வெட்டப்படுதல் உட்பட உள்நாட்டு விவகாரங்கள் குறித்து சில சில செய்திகளே எதிர்மறையாக வெளிவருகின்றன. தடை, தணிக்கை அல்லது நிறுவனம் மூடப்பட்டுவிடல், போன்ற ஆபத்துக்களை செய்தி நிருபர்கள் எதிர்நோக்க வேண்டியுள்ளது. உதாரணத்திற்கு, பொறுப் பற்று நடந்து கொண்டமைக்காக மிங்குவான் வாக்கு என்ற அரசியல் வாராந்தரி டிசெம்பர் 1991ல் தடைசெய்யப்பட்டது. ஆரம்பிக்கப்பட்டு ஐந்துமாதங்களே ஆகியிருந்த அப்பத்திரிகை மஹதிரின் நிர்வாகம் பற்றிய காரசாரமான விமர்சனங்களை வெளியிட்டது. ?
மேல் நாட்டுப் பாணியிலான பத்திரிகைச் சுதந்திரம் வளர்முக நாடுகளுக்கு இடைஞ்சலாகும் என மஹதிர் தென்னாசிய நாடுகளின் கழக உறுப்பினர்களிடம் கூறினார். தங்களது புளுகு மூட்டைகளின் விளைவுகள் பற்றிக் கவலைப்படாமல் பணம் பண்ணுவதற்காகவும் பரபரப்பூட்டுவதற்காகவும் அவர்கள் கதை திரிக்கின்றனர். என்றார் மஹதிர். "
108. விநியோகத்தைத் தாமதித்தல் தணிக்கைக்கு நிகரான தர்க்கத்தைக் கொண்டதாகும். தணிக்கை செய்வது கடினமாகத் தென்படும் போது இவ்வுபாயம் கையாளப்படுகின்ற்து. சர்ச்சைக்குரிய விடயம் காலாவதியாகும் வரை விநியோகத்தைத் தாமதிக்கலாம். இதனால் வாசகர் தொகை வீழ்ச்சியுறும். சம்பந்தப்பட்ட பிரதி ஏற்படுத்தியிருக்கக்கூடிய தாக்கமும் கரைந்து விடும். அதேவேளை நேரடியாகத் தணிக்கை செய்யும் சங்கடத்திலிருந்தும் அரசாங்கம் தப்பிக்கொள்கின்றத.
109. பத்திரிகை மீது தாக்குதல், 1991. பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு (CPJ)
tortë. ISO8. udbasab 79.
10. "மலேசியா அதன் உணர்வுகளைத் தெளிவாக்குகின்றது." இபிஐ அறிக்கை அக்டோபர் 1991.
108

ஒரு பத்திரிகையைத் தடைசெய்வதோ, அந்நிய நிருபரை வெளியேற்றுவதோ அவ்வளவு எளிதான காரியமன்று எனவும் அவர் ஆசியான் நாடுகளின் உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை வித்தார்.
எம்மை விடத்தம்மை புனிதமானவர்களாய்க் கருதிக்கொள்ளும் நான்காவது கூறிலிருந்து வாங்கிக் கட்டாமல் இத்தகைய காரியங்களில் நீங்கள் ஈடுபட முடியாது. "
தனக்கெதிராக மஹதிரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நீதிமன்றத்துக்கு வெளியே தீர்த்துக்கொண்ட ஃபார் ஈஸ்ரன் ஈக்கனமிக் ரிவியூ சஞ்சிகையின் ஜூலை 4,1991 இதழ் தடைசெய்யப்பட்டது. 10,000 பிரதிகள் மலேசியாவில் விநியோகமாகும் இச் சஞ்சிகை குறிப்பிட்ட இதழில், உதவி உள்ளூர் அமைச்சர் மெகாத் ஜூனைத் மெகாத் ஐயூபின் கூற்றுப்படி, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் கட்டுரைகளைக் கொண்டிருந்தது. ' குறிப்பிட்ட இதழில் மலேசியா பற்றி மூன்று கட்டுரைகள் காணப்பட்டன. ஒரு கட்டுரை இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றியது. மற்றொன்று வியாபார நிறுவனமொன்றின் புதிய பணிப்பாளர் எதிர்நோக்கும் சவால்கள் பற்றியது. மிகவும் விரிவான மூன்றாவது கட்டுரை (ஸ்பாஹ் சரவாக் ஆகிய) இருமாநிலங் களில் அளவுகடந்து வரும் சட்டவிரோதமான காடழிப்பு வெளிநாட்டுத் தொடர்புகளைக் கொண்டிருத்தல் கூடும் என அறிவிப்பதாகும். 13
ஜூலை 5 1991ல் எட்டு அந்நியச் சூழல் போராளிகள் கோலா பராம் என்ற கப்பல் கட்டுஞ்சாலையில் ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்றை நடத்தினர். இது பராம் நதி முனையில் உள்ளது. மர ஏற்றுமதிக்கு முக்கியமான இடமாகும். படகுகளில் ஏற்றிச்செல்லப்பட்டு இறுதியில் கப்பல்கள் மூலம் வெளிநாட்டுச் சந்தைகளுக்கு அனுப்பப்படுமுன் உட்பகுதிகளிலிரூந்து இங்கு மரங்கள் மிதக்க விட்டுக் கொணரப்படுகின்றன. ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடந்து மறுநாள் இரு சுயேட்சைப் பத்திரிகையாளர்களான ஜெர்மனியைச் சேர்ந்த மொம்பெர்க், அமெரிக்காவைச் சேர்ந்த அன்னாலியனார்ட் ஆகியோர் நதியின் குறுக்காக ஆர்ப்பாட்ட ஊர்வலச் சேதிகளைச் சேகரித்தமைக்காகத் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு இறுதியில் மலேசியாவிலிருந்து வெளியேற்றப்பட்டனர். சரவாக்கின் பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கையில் தான் சம்பந்தப்பட்டிருந்ததாக அதிகார
1. அதே அறிக்கை 12. பத்திரிகைகள் மீது தாக்குதல் 1991 சிபிஜே. பக். 78. 13. "கள்வபங்கஞ் செய்தல் பார் ஈஸ்ரன் ஈக்கனமிக் ரிவியூ, ஜூலை 4, 191.
109

Page 59
வட்டாரம் குற்றஞ்சாட்டியது என்கிறார் மொம்பெர்க். நாம் அரசின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்தபடியால் வெளியேற வேண்டும் என மலேசிய அதிகாரவட்டம் கூறியது. இது கேலிக்கிடமானதாகும் என்றார் லியனார்ட். '*
இருவரில் எவரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வில்லை. அசோஸியேட்டட் பிரஸ் ராய்டர்ஸ் உட்பட சருவதேசச் செய்தி நிறுவனங்களுக்கு அவர்கள் ஃபாக்ஸ் மூலம் செய்திகளை அனுப்பினர். ரொபின் வுட் என்ற ஜெர்மனிய சஞ்சிகைக்கு மொம்பெருக் எழுதினார் அவர்களுடனிருந்த ஏனைய வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் தடுப்புச் சிறையில் தள்ளப்படவில்லை. அவர்கள் கோலாலம்பூரிலிருந்து இயங்கியபடியால், சரவாக் மாநில சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்படாமல் விடப்பட்டிருக்கக் கூடும்.
இன்று சுதேசிகளின் நீண்ட வீடுகளுக்கும் மரம் வெட்டப்படுவதற்கு எதிரான எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெறும் இடங்களுக்கும் அந்நியப் பத்திரிகையாளர்கள் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. உல்லாசப் பயணிகள் பத்திரிகையாளர்கள் உட்பட சகல வெளிநாட்டவர்களதும் பெயர்ப்பட்டியலை பரிசீலனைக்காக விசேட பகுதியிடம் சமர்ப்பிக்குமாறு உல்லாசப்பயண முகவர் நிலையங்கள் கேட்கப்பட்டுள்ளன.
மஹதிர் விளக்கம் கூறினார் :
நாடு தரித்திரமுற்று, உதவிக்காகப் பிச்சைப் பாத்திரமேந்தினால் அவர்களுக்கு (அந்நியப் பத்திரிகையாளர்களுக்குப்) மட்டற்ற மகிழ்ச்சியாயிருக்கும் ஆனால், நாடு உதவிகேட்டுக் கையேந்தாவிடின் அவர்கள் அறிவிப்பதற்காக வேறு மோசமான செயதிகளைத் தேடுகின்றனர். நிறம் கொண்டோரை ஏளனமாக எடைபோடுவது அவர்களது கலாச்சாரத்தின் ஓர் கூறாக மாறி விட்டது. *
பிப்ரவரி 16, 1992ல் ஜெர்மனியிலிருந்து வெளியாகும் ஜியோ சஞ்சிகையின் ஆசிரியர் சார்ள்ஸ் லிண்ட்சே என்பவரும், கனடாவைச்சேர்ந்த புகைப்படக்காரர் ஒருவரும் சரவாக்கை வந்தடைந்த போது அவர்கள்
14. சிபிஜேயுடன் தொலைபேசிப் பேட்டிகள் 15. “சில அந்நியப்பத்திரிகையாளர்களுக்கு மலேசியா மீது பொறாமை P என்பதிலிருந்து மஹதிர்
மேற்கோள் காட்டப்படுகின்றார். சபாவத் டைம்ஸ், செப்டெம்பர் 17,1991.”
110

தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. சரவாக்கில் உல்லாசப்பயணம் பற்றிய கட்டுரையொன்றைத் தயாரிப்பதற்கு இருவரும் ஜெர்மனியிலுள்ள மலேசிய உல்லாசப்பயண அபிவிருத்தி கூட்டுத்தாபனம் மூலமாக விண்ணப்பித்திருந்தனர் எனினும் அவர்கள் காடழிப்புக்கெதிரானப் போராட்டம் சம்பந்தமான கட்டுரையொன்றை யெழுதவே திட்டமிடுவதாக அரச வட்டாரங்கள் சந்தேகித்தனர். " (1980 களின் நடுப்பகுதியில் புரூனோ மென்சரை முதலில் பேட்டி கண்டோரில் பொக்கேமியரும் ஒருவராவார்.)
கனேடிய படத்தயாரிப்புக் கம்பெனியொன்றுக்காக, பீனான் தடையைப் படம் பிடித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பின் பிரித்தானிய எழுத்தாளர் ஜேம்ஸ் பார்க்லே சரவாக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு ஆகஸ்ட் 1991ல் ஓர் தடைசெய்யப்பட்ட பயணியானார். போர்னியோவூடாக நடைப்பயணம் என்ற நூலின் ஆசிரியரான ஜேம்ஸ் பாத்க்லே, உத்தியோகபூர்வமாகத் தம்பெயரை மாற்றிக்கொண்டு புதியதொரு கடவுச்சீட்டுடன் சரவாக்கினுள் மீண்டும் பிரவேசித்தார்.
தடை செய்யப்பட்ட நுழைவாளர் என்ற முறையில் குடிவரவுச் சட்டத்தின் 33வது பிரிவின் கீழ் 1992ல் பிப்ரவரி 15ந் திகதியிலிருந்து மார்ச் 17 வரை அவர் தடுத்து வைக்க்பட்டார். எனினும் போதைப்பொருள் கடத்தி வந்ததாக அவர்மீது குற்றஞ்சாட்டப்படுமென அவரிடஞ் சொல்லப்பட்டது. (இதற்குக் கட்டாய மரண தண்டனை வழங்கப்படும்) அவர் மிகவும் மோசமான நிலைமையில் வைக்கப்பட்டிருந்ததாக அறிவிக்கப்படுகின்றது. இரு தினங்கள் உணவும் தண்ணிரும் மறுக்கப்பட்டன. உடல் ரீதியாக இழிவுபடுத்தப்பட்டார். விசாரணையின் போது , மரப் பலகை உற்பத்தித் தொழில் வரிரோத கொள்ளைக்காரர்களுக்கெதிராக பீனானியர்களின் கடைசி நிலைப்பாடு என்ற அவரது சமீபத்திய கார்டியன் கட்டுரை அடிக்கடி குறிப்பிடப்பட்டது. '
முடிவுரை
மத்திய அரசாங்கம் விதித்துள்ள சூழல் சம்பந்தமான நற்பலனளிக்கும் சட்டங்களிலிருந்து மரங்கள் வெட்டப்படும் தொழிலுக்குக் கிட்டத்தட்ட விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளிலிருந்து எதிர்ப்புக்குரல்
16. நியூ ஸ்ரெயிட் டைம்ஸ், மார்ச் 12, 1992 17. Sgsrauf 0, 1992.
1 11

Page 60
கிளப்பக்கூடிய சக்திகள் செல்வங்குவிப்பதற்கு வழிவகுத்து இது அவர்களை மத்திய அரசுக்கு விசுவாசமுள்ளவர்களாக வைத்திருக்க உதவுகின்றது. அரசியல் சண்டித்தனமும், பயமுறுத்தல் உபாயங்களும், சட்டபூர்வமான நிறுவனங்களும், கறுப்புச்சந்தைக் காரர்களும் எத்தகைய கட்டுப்பாடுமின்றி மரங்களையழிப்பதற்கு உதவுகின்றனர்.
ஆவணங்கள் மூலமும் வாய் வார்த்தைகளாலும் மலேசியா நியாயமான பாதுகாப்பு நடவடிக்கைகளையே மேற்கொள்கின்றது. எனினும் நடைமுறையில் சூழல் போராளிகளும், மரங்கள் அழிக்கப்படுவதனை எதிர்ப்போரும் தடுத்துவைக்கப் படுகின்றனர், வதைக்கப்படுகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக, இப்பூமியின் மிகப் பழைமை வாய்ந்த மழைவனங்களும் அவற்றிலுள்ள கணக்கிட முடியாத தாவர, விலங்குயிர்களும் அழிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் தங்கியுள்ள நொய்மையான மனிதத்துவ கலாசாரங்கள் அழிவின் விளிம்பில் ஊசலாடுகின்றன.
112

அத்தியாயம் IV வேலை
நாம் நடமாடும் பூமியில் பொருளாதார சமூக
நலன்களுக்காய் பாடுபடுவோருக்கு அன்றாடம்
மரணம் காத்திருக்கின்றது.
மிகுவல் ஏன்ஜல் அல்பிளU"நெஸ் கெளத்தமாலா தொழில் அறிஞர்.
வாழ்வூதிய உரிமைகளை மீறுவதற்கு அரசாங்கம் கையாளும் உபாயங்கள், நிலம் பராதீனப்படுத்தலுக்கும் சூழலின் அழிவுக்கும் இட்டுச் செல்லும் குடியியல் உரிமைகளைத் தவறான வழியில் பயன்படுத்தல் மாத்திரமன்று, அமைப்பு முறையாக ஒன்று சேர்தல் கூட்டாகப் பேரம் பேசல் உட்பட அடிப்படைத் தொழிலாளர் உரிமைகளை மறுப்பதின் மூலமும், சுதந்திரமாக இயங்குவதைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் அவர்கள் இதனைச் செய்யலாம். இவற்றால் பெரிதும் பாதிக்கப்படுவோர் சமூகத்தின் வறிய மட்டங்களைச் சார்ந்தோராவர்.
தொழிலாளர் உரிமைகளும் பொருளாதார நலம்பேணலும்.
சங்கம் அமைப்பதற்கான உரிமை, கூட்டாகப் பேரம் பேசுவதற்கான உரிமை, பலவந்தப்படுத்தப்பட்ட கட்டாய உழைப்பிலிருந்து விடுதலை பெறுவதற்கான உரிமை உட்பட தொழிலாளர் உரிமைகளை வழங்கல், அநேக நாடுகளில் வாழ்வூதியத்துக்கான சம்பளம், மனித நேயமான தொழில் ஒழுங்குகள் முதலியவற்றைப் பெறுவதற்கான தொழிலாளர்களின் ஆற்றல்களுடன் பின்னிப் பிணைந்துள்ளன. அரசாங்கக் கொள்கைகளையிட்டுக் கேள்வியெழுப்ப சுயாதீனமான பத்திரிகைகள் இல்லாதபோது, எதிர்க்கட்சிகள் இல்லாதபோது, கணக்குக் காட்டும் பொறுப்பில்லாதபோது இவ்வுரிமைகள் நசுக்கப்படுவது மிகவும் சுலபமாகும். தமக்கு அநியாயம் இழைப்போருக்கு எதிராக ஏழைகள் நீதிமன்றங்கள் மூலமாக வெற்றிகரமாக நடவடிக்கைகளெடுக்கும் சாத்தியக் கூறுகள் இல்லாதபோது வாழ்வூதியத்துக்கு ஆபத்து நேரக்கூடும்.
சருவதேச மனித உரிமைகள் பிரகடனம், தொழிலாளர் உரிமைகள் மதிக்கப்பட வேண்டியதன் தேவையை வலியுறுத்துகின்றது. 23வது பிரிவு பின்வருமாறு கூறுகின்றது.
1. தொழில் புரிவதற்கும் சுதந்திரமாகத் தொழிலைத் தேர்ந்தெடுப்பதற்கும், நியாயமான விரும்பத்தக்க தொழில்
113

Page 61
ஒழுங்குகளுக்கும், வேலையின்மைக்கெதிரான பாதுகாப்புக்கும் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. 2. பாரபட்சமின்றிச் சமமான உழைப்புக்குச் சமமான சம்பளம்
பெறும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. 3. வேலை செய்யும் ஒவ்வொருவரும் நியாயமான விரும்பத்தக்க வேதனம் பெறுவதற்கும், மனித மதிப்புக்குரிய வாழ்வூதியத்தை தனக்கும் தன்குடும்பத்திற்கும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கும்
தேவையேற் படி ன் அதனோடு வேறு வகையான சமூகப்பாதுகாப்பினைச் சேர்த்துக் கொள்வதற்கும் உரிமை பெற்றுள்ளனர்.
4. ஒவ்வொருவரும் தனது நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தொழிற்சங்கங்களையமைக்கவும் அவற்றில் உறுப்பினராகச் சேரவும் உரிமை பெற்றுள்ளனர்.
ஆபிரிக்கா, கரீபியன், பசுபிக், ஐரோப்பிய சமூகம் ஆகியவற்றைச் சேர்ந்த 81 நாடுகள் கலந்து கொண்ட நாலாவது லோம் மகாநாடு, பல்வேறு வகையினதான மனித உரிமைகள் பாரபட்சமான முறையில் நடத்தப்படல், அடிப்படை மனித உரிமைகள் குடியியல் அரசியல் உரிமைகள் பொருளாதார சமூக கலாச்சார உறவுகள் ஒவ்வொன்றும் அதன் முதன்மை ஒழுங்குடன் பரிரிக்க முடியாதவாறு பின்னிப்பிணைந்ததாகும் (பிரிவு 5.2) என 1990ல் அறிவித்தது."
இறுதியாக சருவதேசத் தொழிலாளர் சங்கம் இவ்வாறு அறிவிக்கின்றது. ஐஎல்ஓ குடியியல் அரசியல் உரிமைகளில் மிகுந்த அக்கறை காட்டுகின்றது. ஏனெனில் அவையின்றேல், தொழிற்சங்க உரிமைகள் சாதாரணமாக நடைமுறையாக்கம் பெறுவதோ, தொழிலாளர் பாதுகாப்பு பெறுவதோ முடியாத காரியமாகி விடும். '? மேலும் தொழிற்சங்க இயக்கத்தின் அடிப்படையான நிரந்தரமான பணி தொழிலாளரின் பொருளாதார சமூக முன்னேற்றத்தை அடைவதாகும் என அதன் அறிக்கை குறிப்பிடுகின்றது. *
சங்கம் அமைப்பதற்கான உரிமைக்கும் பொருளாதார நல்வாழ்வையுண்டுபண்ணுவதற்கு மிடையேயான தொடர்பினை
118. நாலாவது லோம் மகாநாட்டு அறிக்கை எபிசி ; ஈஈசி கூரியந் (பிரஸ்ஸல்ஸ்) சஞ்சிகையில்
மறுபிரசுரஞ்செய்யப்பட்டது. இல. 120, மார்ச் - ஏப்ரில் 1990.
119. ஜனநாயக மயப்புடுத்தலம் ஐ.எல்ஓவும், பணிப்பாளர் நாயகம் அரிக்கை, சர்வதேசத்
தொழிலாளர் அலுவலகம் ஜெனிவா 1992 பக். 14
120. சர்வதேச தொழிலாளர் சங்கம் : உத்தியோகபூர்வ அறிக்கை வல். XXXV இல, 2. ஜெனிவா.
952 . 83.
114

அங்கீகரிப்பது ஒரு புறத்திருக்க அநேக அரசாங்கங்கள் அவ்வுரிமையை மறுப்பது மட்டுமன்றி நாட்டுப்புற, நகர்ப்புற அமைப்பாளர்கள் மீது முழு மூச்சாக தாக்குதல் தொடுத்தும் அல்லது அத்தகைய தாக்குதலைக் கண்டுங்கவனியாது வருகின்றன. உலகெங்கிலுமுள்ள தொழிலாளர்களது வாழ்வூதிய வழிவகை நன்மைகளுக்கு சங்கம் அமைக்கும்உரிமையும், கூட்டாகப் பேரம் பேசும் உரிமையும் எவ்வாறு முக்கியமாகின்றனவென்று பரிசீலிப்போம். அப்புறம் இவ்வுரிமைகள் கடைப்பிடிக்கபடுவதனைத் தடுப்பதற்குச் சில அரசாங்கங்கள் எவ்வளவு துTரம் எத்தனித்துள்ளனவென்பதைக் கவனிப்போம்.
பலவந்த அல்லது சுயவிருப்பற்றவேலை
தொழிலாளர் உரிமைகள் இழப்பு சமூக பொருளாதார அழிவுக்கு இட்டுச் செல்லும் அப்பட்டமான வழி, பலவந்த உழைப்பு நடைமுறைபடுத்துவதாகும் உலெகங்கிலும் சம்பளமின்றியும், மோசமான தொழில்நிலைவரங்களிலும் வேலை செய்யுமாறு பலவந்தஞ் செய்வதற்கு ஏமாற்று வழிகளும் வன்முறையும் கையாளப் படுகின்றன சில விவகாரங்களில், நியாயமான சம்பளமும் சுமூகமான தொழில் நிலைபரங்களும் உறுதிமொழியப்பட்டு வேலையற்றோர் தூர இடங்களுக்கு ஆசைகாட்டிக் கொண்டு செல்லப்படுகின்றனர். அங்கு தொழில் அதிபர்களிடம் போக்குவரத்து தங்குமிட வசதி முதலியவற்றுக்கான செலவுகள் செலுத்தப்படல் வேண்டுமெனக் கூறப்படுகிறது. இவ்வாறு அவர்கள் மீது சுமத்தப்படும் கடன் பளுவிலிருந்து மீள்வதற்காக அவர்கள் தங்கிருந்து வேலை செய்தாக வேண்டி நேர்கிறது. தொழிலாளர் தப்பியோட முயற்சித்தால் அல்லது வேலை செய்ய மறுத்தால் அவர்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்படும் அச்சுறுத்தல் ஏற்படுகின்றது.
சருவதேசத் தொழிலாளர் நியதிப்படி பலவந்த உழைப்பு திட்டவட்டமாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. ஐஎல்ஓ ஒப்பந்தம் இல.
O5
இவ்வொப்பந்தத்தில் கைச்சாத்திட்டு உறுதி செய்துள்ள ஒவ்வொரு சர்வதேச தொழில் நிறுவன உறுப்பினரும் பலவந்த அல்லது கட்டாய வேலைக்கு முற்றுப்புள்ளி வைப்பதும், அரசியல் பலாத்காரமாகவே அரசார் கல்வியூட்டுவதாகவோ, அல்லது நிறுவப்பட்ட அரசியல் சமூகப் பொருளாதார அமைப்புக்கு சித்தாந்த ரீதியான, அரசியல் ரீதியான மாற்றுக் கருத்துக்களைக் கொண்டிருப்பதற்கும், எதிர்ப்பை வெளியிடுவதற்கும்
15

Page 62
தண்டனையாகவோ பொருளாதார அபிவிருத்தி நோக்கங்களுக்காகத் தொழிலாளர்களை ஒன்று திரட்டி உபயோகிப்பதற்காகவோ இன, சமூக, தேசிய அல்லது மத ஒடுக்குமுறைகளுக்காகவோ எந்தவொரு வடிவத்திலும் பலவந்தக் கட்டாய உழைப்பை ஓர் கருவியாகப் பயன்படுத்துவதில்லையென்றும் பொறுப்பேற்கின்றார்கள்.
வடமேற்கு பர்மலாவில் அரகான் மாநிலத்தில் ரொஹிங்யா முஸ்லிம் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஆண்கள் பர்மிய இ ராணுவத்தினால் பலாத்காரமாக கடினவேலை களுக்கமர்த்தபடுகின்றனர். 12 சம்பளமின்றி அரைகுறை உணவுக்காக முப்பது நாட்கள் வரை கட்டாய உழைப்பில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அரசாங்கப்படைபிரிவுகளுக்காகக் கட்டாய உழைப்பில் ஈடுபடுத்தப்படாத வளர்ந்த ஆண்கள் எவரையேனும் தான் சந்தித்ததில்லையென மாங்டோவில் கிலாடுங் கிராமத்தைச் சேர்ந்த எழுபது வயது முதியவரொருவர் ஆசியா கண்காணிப்புக்கு அறிவித்தார். பாரப் பொதிகளைச் சுமப்பதிலும் கால்வாய் வெட்டுவதிலும் அவர் ஈடுபடுத்தப்பட்டார். பாரச்சுமை அழுத்தியபோதும் அல்லது தொழிலாளிக்கு களைப் பு ஏற்படினும் இளைப் பாற அனுமதிக்பபடுவதில்லையென அவர் அறிவித்தார். இரவானதும் அவரும் சக தொழிலாளர்களும் இரண்டரை மணித்தியாலம் மட்டுமே பாதையோரத்தில் படுத்துறங்க அனுமதிக்கப்பட்டனர். நாளொன்றுக்கு ஒருவேளை உணவு மட்டுமே அவர்களுக்கு வழங்கப்பட்டது. தண்ணிர் அருந்த அனுமதிக்கப்படவில்லை. பாதை நிர்மாணிக்கும், மேடுகளைச் சமப்படுத்தும் வேலைகளில் பலவந்தமாக ஈடுபடுத்தப்பட்ட ரொஹிங்யா தொழிலாளர் ஒருவர் 1992ன் ஆரம்ப நாட்களில் அடி உதைகளாலும் பட்டினியாலும் இறந்த இருதொழிலாளர்களைத் தமக்குத் தெரியும் என்கிறார்.
மொரிதானியாவில் அரசாங்கம் அடிமைத்தனத்தைச் சம்பிரதாயமாக மும்முறை "ஒழித்துக்கட்டி"ய போதும் சட்டத்தை நடைமுறைப் படுத்தவதற்கு பாத்திரமான நடவடிக்கையெதனையும் மேற்கொள்ள வில்லை. முன்னைய அடிமைகளிடம் அவர்கள்* சட்டபூர்வமாக விடுதலை பெற்றுவிட்டதனை அறிவிக்கவுமில்லை. பல்லாயிரக்கணக்கான கறுப்பு அடிமைகள் தம் "எஜமானர்” களின் ஏக உடைமையாகவுள்ளனர். சம்பளமின்றி நீண்டநேரம் உழைக்க வேண்டும். கல்வி வசதி கிடையாது
12. பார்க்கவும் : ஏசியா வாட்ச், பர்மா : வட அரகானில் கற்பழிப்பு, பலவந்த உழைப்ப, மத
ஒடுக்குமுறை” ஏசியா வாட்ச், செய்தி, வல் 4, இல. 13, மே 7, 1992.
12. பார்க்கவும்: ஆபிரிக்கா கண்காணிப்பு, "அடிமைத்தனம் : ஒழிக்கப்பட்டுப் பத்துவருடத்தின் பின்னரும் உயிரோடும் புஷ்டியோடும்” ஆபிரிக்கா வாட்ய செய்திகள், ஜூன் 29,1990.
116

திருமணஞ் செய்து கொல்வதற்கோ ஏனைய கறுப்பர்களுடன் தொடர்பு கொள்ளதற்கோ சுதந்திரம் கிடையாது. இவ்வடிமைகள் அடிமைத்தனத்திலிருந்து தப்புவது தம் "சட்டபூர்வ” உரிமைகளைப் பிரயோகிப்பதன் மூலமாகவல்ல, தப்பியோடுவதன் மூலமாக தம் உரிமைகள் பற்றி அறிந்திராமை மீண்டும் அகப்பட்டுக்கொள்ளும் அச்சம், தப்பிச் செல்ல முயலும் அடிமைகள் அனுபவிக்கும் காட்டுமிராண்டித்தனமான சித்திரவதைகள், சந்தைப்படுத்தும் ஆற்றல்கள் இன்மை முதலிய கணிசமான அடிமைகளைத் தப்பியோடும் முயற்சியிலிருந்து தடுக்கின்றன. நாட்டின் கிழக்குப்பகுதியான அதார், கஃபா, அஷ்ரம், அலெக் ஆகிய பகுதிகளில் அடிமை முறை ஒரு சிலரே இங்கு காணப்படுகின்றனர்.
அடிமைகள் தப்பியோடும் முயற்சிகளைத் தடை செய்வதற்காக அடிமை முதலாளிகள் மிதமிஞ்சிய வழிகளைக் கையாள்கின்றனர். அம்மணமாய்விட்டு ஈரக் கயிற்றினால் அடித்தல், அன்ன ஆகாரம் கொடாமல் வாட்டுதல், கைகால்களை பிணைத்து வெயிலில் கிடத்துதல் போன்ற வழக்கமான தண்டனைகளுடன் தப்பியோட முயற்சிக்கும் அடிமைகளுக்கு பாடம் புகட்ட வேறு சித் திரவதைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. மிகவும் குரூரமான சித்திரவதைகளிலொன்று காதினுள் சிறுபூச்சிகளை விட்டு காதைச் சிறு கற்களால் அடைத்து விடல். தண்டிக்கப்படுபவரின் கைகளும் கால்களும் கட்டப்பட்டிருக்கும் பல நாட்களுக்குப் பின் கற்கள் அகற்றப்படும் போது அவனது மனம் நிலைகுலைந்து போயிருக்கும்.
இந்தியாவில் சில குழந்தைகள் விலைக்கு வாங்கப்படுகின்றன அல்லது திருடப்படுகின்றன. இவர்கள் கம்பளம் இழைக்கும் வேலையில் தினசரி 16 மணித்தியாலங்கள் வேலை செய்யுமாறு பலவந்தப் படுத்தப்படுகின்றனர். * வேகமாக வேலை செய்யாவிடின் இக்குழந்தைகளுக்கு அடிவிழும். சிதறிக்கிடக்கும் படுக்கை அறைகளுக்குள் தப் பியோட முடியாதபடி இவர்கள் இரவில் அடைத்து வைக்கப்படுகின்றனர். சகலவிதமான ஒப்பந்த அல்லது சிறுவர் உழைப்பு தொடர்ந்து நீடித்து வருகின்றது. அடிமைத்தன குழந்தை உழைப்பைப் பயன்படுத்தும் எந்தவொரு கைத்தொழில் நிறுவனமும் அதிகாரவட்டத்தினால் இதுவரை திடீர்ச் சோதனை செய்யப்பட வில்லையென்பதும் எந்தவொரு தொழிலதிபருக்கெதிராகவும் சட்ட
123. ஹமிஷ் மக்டொனால்ட், "அடிமைச்சிறுவர்கள்", ஃபார் ஈஸ்ரன் ஈக்கனமிக் ரிவியூ, ஜூலை 9, 1992 பக். 18-20, எட்வர்ட் எ. கார்கன், வறுமையாலும் அச்சத்தாலும் தறிக்கட்டைகளடன்
கட்டுண்டு, இந்தியாவைலி சிறுவர்கள் ஒரு சிலரைப் பணக்காரராக்குகின்றனர்." நியூயார்க் டைம்ஸ் ஜுலை 9, 1992.
7

Page 63
நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லையென்பதும் அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது. 24
சீனாவில், அநேக கைதிகளும் தடுப்புக் காவலில் உள்ளோரும் சிறைத் தொழில் முகாம் களில் பலவந்த உழைப்பரில் ஈடுபடுத்தபடுகின்றனர். * சிறையில் உழைத்தல் சர்வதேசத் தொழிலாளர் உரிமைகளின் நியதிப்படி தடைசெய்யப்பட்டிராத போதிலும் பத்து இலட்சத்துக்கும் அதிகமெனக் கணக்கிடப்படும் பயங்கரமானவை களைப்படையச் செய்பவை சீன சிறைத்தொழிலாளர்களின் தொழில் முறை ஒழுங்குகள் படுமோசமானவை தகாத முறைகளைக் கட்டுப்படுத்துதற்கு கண்காணிப்பு அமைப்புகள் கிடையா சிறைச் சீர்கேடுகள் குறித்து விமர்சனமெதுவும் பத்திரிகைகளில் வெளிவருவதில்லை இதற்கு பதிலாக சமீபத்தில் வெளியிடப்பட்ட “வெள்ளையறிக்கை” யில் சீன அரசாங்கம், சிறைவாழ்வில் காணப்படும் வசதிகளைப் பறைச்சாற்றி தம் தவணை முடிவுற்ற போதிலும் அநேக கைதிகள் வெளியேற விரும்புவதில்லையெனப் பெருமையடித்துக் கொண்டது. நடைமுறை யதார்த்தமோ இதற்கு நேர்மாறானதாகும். நியாய விசாரணையெதுவுமின்றி உழைப்பு மூலம் மறைமுக கல்வியூட்டும் தண்டனைமுறை அநேக தொழிலாளர் மீது திணிக்கப்பட்டுள்ளது. இன்னும் அநேகர் தமது சட்டபூர்வ சிறைவாசம் காலாவதியான பின்பும் தொழில் சீர்திருத்த முயற்சிகளைத் தொடரச் செய்வதற்காக வேண்டி சிறையிலேயே தங்கியிருக்க நேர்ந்துள்ளது. இத்தொழிற் சீர்த்திருத்த முயற்சிகள் பெரிதும் ஏற்றுமதிப் பண்டங்களை கைதிகள் உற்பத்தி செய்வனவாகும். இக்கைதிகள் தவணைப்பூர்த்தியடைந்த கைதிகளை முகாம்களில் பலவந்தமாக வேலைவாங்குவதற்காகத் தடுத்துவைக்கும் வழக்கத்திற்குப் பலியாகியுள்ளனர்.
பிரேஷில் பலவந்த உழைப்பு பெரும்பாலும், வட எல்லை மேற்கு எல்லை மாகாணங்களில் காணப்படுகின்றது. இங்கு பெருந்தோட்டச்
124. வறிய குடும்பங்களின் சீவனோபாயத்திற்காக குழந்தைகள் வேலை செய்தாக வேண்டும் என்பதை வளர்ந்த நாடுகள் புரிந்துகொள்வதில்லையென வளர்முக நாடுகளைச் சேர்ந்த சில தலைவர்கள் வாதிட்டு வருகின்றனர். என்றபோதிலும் குழந்தையுழைப்பு வறுமையை நீக்குவதற்குப் பதில் வறுமையை அதிகரிக்கும் என தொழிற்றுறை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதிகம் கூலி சம்பாதிக்கக் கூடிய அதிக குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் அக்குழந்தைகளக்கு உரிய கல்வி வழங்கப்படுவதைப் புறக்கணிக்கும் சாத்தியப்பாடு உண்டாகி இதனால் வறுமையின் மாயச்சூழல் வட்டம் உருவாகின்றது.
125. பார்க்கவும் ஆகிய விழிப்பு சீனாவில் சிறையுழைப்பு ஆகிய விழிப்புச் செய்தி ஏப்றில் 1991 "சீனாவிலிருந்து பலவந்த உழைப்ப ஏற்றுமதி" அப்டேட் இல. 1 ஆகிய விழிப்புச் செய்தி செப்டெம்பர் 1991. "சீனாவிலிரந்து பலவந்த உழைப்ப ஏற்றமதி அப்டேட் 2 ஆகிய விழிப்பு செய்தி நவம்பர் 1991.
118

சொந்தக்காரர்கள், மேய்ச்சல் நிலங்களை உருவாக்குவதற்காகப் பெருவாரி நிலங்களை வெட்டியெரித்து துப்புரவு செய்கின்றனர். * ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் படுமோசமான தொழில் நிலைமைகளில் வன்முறைமூலமும் அச்சுறுத்தல்கள் மூலமும் இந்நிலைகளில் வேலை செய்யுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இவ்வித சீர்கெட்ட பிரயோகங்களால் இப்பகுதியில் பாதிக்கப்பட்டோர் தொகை 1991ல் 205 வீதம் அதிகரித்துள்ளது என மனித உரிமைக் குழுக்கள் அறிவிக்கின்றன. இந்நடைமுறையில் அரசாங்கம் நேரடியாகச் சம்பந்தப்படாத போதிலும் பிரேசிலிய சட்டத்தில் பலவந்த உழைப்புத் தடைசெய்யப்பட்டிருந்த போதிலும் தொழிலாளரை வேலைக்குக் கொண்டு செல்வோருக்கு அல்லது ஃபஸெண்டா என்றழைக்கப்டும் பெருந் தோட்டங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை வெற்றி பெரும் வகையாக மேற்கொள்ளப்படுவதில் அதிகார வட்டாரங்கள் தவறிவிட்டன.
உதாரணமாக, 1991ல் ஏப்ரிலுக்கும் ஜூலைக்குமிடையில் பிரேசில், ரெடென்காவோவிலிருந்து 120 கிளோமீட்டர் தூரத்தில், ஒரலாஸ்டியாடு நோட்டே, பாராவுக்கு அருகாமையில் பெருந்தோட்டங்களில் சுமார் 200 பேர் வேலைக்குச் சேர்க்கப்பட்டனர். வரட்சியால் வாடிய மரன்ஹாவோ மாநிலத்தில் வாழ்வூதியத்துக்காக சிறு காணித்துண்டுகளில் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், நாற்பது நாட்களில் செய்து முடித்து விடக் கூடிய "இலகுவான வேலை' க்கு ஆட்சேர்ப்போர் ஆசைகாட்டிய உயர் வேதனத்தில் மயங்கினர், மூடப்பட்ட கனரக ஊர்திகளில் மூன்று நாட்கள் இவர்கள் பிரயாணஞ் செய்ய நேர்ந்தது அவர்களுக்கு வழங்கப்பட்ட இருவேளை உணவுக்கு அவர்களிடமே அறவிடப்பட்டது.
அற்பக்கூலிக்கு, படு மோசமான நிலைமைகளில் வேலை செய்ய நேர்ந்த போதுதான் அவர்களுக்குத் தாம் ஏமாற்றப்பட்டு விட்ட சங்கதி விளங்கிற்று. ஆயுதந்தாங்கிய காவலர்களதும், துப்பாக்கிக் குண்டர்களதும் கண்காணிப்பின் காரணமாக அவர்களால் தப்பியோட முடியவில்லை. பொழுது விடிந்ததிலிருந்து பொழுது சாயும் வரை அவர்கள் வேலை செய்ய வேண்டியிருந்தது. வேறொரு குழு முதலில் மின்சாரவாள் கொண்டு அறுத்த பின்னர் அவர்கள் செடிகொடிகளை வெட்ட
128. பார்க்கவும் அமெரிக்கா கண்காணிப்பு “பிரேசிலில் பலவந்த உழைப்பு", டிசெம்பர் 1990. அமெரிக்காஸ் வாட்ச், பிரேசிலில் உள்நாட்டு வன்முறை” (நியூயார்க், மனித உரிமைகள் கண்காணிப்பு, 1991) அமெக்காஸ் வாட்ச், பிரேசிலில் நிலப்போராட்டம், உள்ளூர் வன்முறை தொடர்கின்றத. (நியூயார்க் மனித உரிமைகள் கண்காணிப்பு. 1992.
119

Page 64
கத்திகளையும் கொடுக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்த போதிலும் வெறுங்கையாலேயே அவர்கள் வேலை செய்ய வேண்டியிருந்தது.
இத்தொழிலாளர்கள் வெளி உலகுடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கப்படவில்லை. குழாய் நீர் வசதியிருக்கவில்லை. கராப்பே ஆற்று நீரை அருந்தியதால் அநேக தொழிலாளர் நோய்வாய்ப்பட்டனர். மலேரியாவில் தாக்கப்பட்டவர்கள் கப்பெனிக் கடையில் பன்மடங்கு அதிகரிக்கப்பட்ட விலைக்கு மருந்து வாங்க வேண்டியிருந்தது. உணவைக் கூட அதிகரிக்கப்பட்டவிலைக்கு கம்பனிக்கடையிலேயே வாங்க வேண்டியிருந்தது. வாங்கப்படாத பொருட்களுக்கும் அவர்கள் பேரில் பற்றுக் கணக்கு எழுதப்பட்டது. இத்தொகை அவர்கள் கூலியில் கழிக்கப்பட்டது. கிடைத்த கூலி கம்பெனிக் கடையின் கடனடைக்கவே போதவில்லை ஒரு தொழிலாளி கூறியதுபோல் கூடுதலாக வேலை செய்த போது கட்ட வேண்டிய கடன் தொகை அதிகரித்தது.உண்மையில் காட்டில் கடுமையான நிலைபரங்களில் மாதக்கணக்கில் வேலை செய்த தொழிலாளர் அநேகருக்கு வேதனம் வழங்கப்படவேயில்லை.
வேலை கடினமாகவும் கூலி அற்பமாகவும் காணப்பட்ட போது தொழிலாளர் தப்பியோட எத்தனித்தனர். ஆயுதமேந்திய காவலாளிகளாலும் துப்பாக்கிக் குண்டர்களாலும் கொல்லப்படக் கூடிய ஆபத்தையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை. தப்பியோட முயன்று பிடிபட்டோர் அடித்துதைக்கப்பட்டு இன்னும் கடினமாக வேலை செய்யுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டனர். தப்பியோட முயற்சித்த தொழிலாளியொருவர் துப்பாக்கி குண்டரால் பின்தொடரப்பட்டார். துப்பாக்கி வேட்டு தொழிலாளர் காதுகளில் விழுந்தது அத்தொழிலாளி திரும்பி வரவேயில்லை.
காலப்போக்கில் பெரும்பாலான தொழிலாளர்கள் தப்பிச் செல்ல முடிந்தது, தப்பியோடியவர்கள் செய்த முறையீடுகள் காரணமாக இரண்டு மாதங்களுக்குப் பின் பொலிஸ் அங்கு சென்று திடீர்ச்சோதனை செய்து எஞ்சிய தொழிலாளர்களையும் விடுவித்தது. இவ்வழக்கு சம்பந்தமான’ மட்டுப்படுத்தப்பட்ட விசாரணை நிதி பற்றாக் குறை காரணமாக ஒத்திப் போடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. எனினும் பிரேசில் பலவந்த உழைப்பைப் பயன்படுத்தியமைக்காக எவரும் குற்றஞ்சாட்டப்படவில்லை. இறுதியில் தொழிலாளருக்கு எந்தப் பாதுகாப்பும் கிடையாது. ஏனெனில் சட்டநியாய முறை செயற்படுவதில்லை.
120

பல வந்த உழைப் புக்கு மற்றுமொரு உதாரணம் இந்தோனேசியாவிலிருந்து கிடைக்கின்றது. 1990ல் சுமத்திராவின் கரைப்பகுதிக்கு அப்பாலுள்ள புளாவ் பெட்டம் என்ற கைத்தொழில் அபிவிருத்திப் பகுதியில் மூன்று மாதப் பயிற்சியுடன் உயர்ந்த சம்பளம் பெறக்கூடிய தொழில்கள் வழங்குவதாக வாக்குறுதி கூறி ஜனாதிபதி சுஹாந்டோவின் மகள் 15க்கும் 25க்கும் இடைப்பட்ட தொழிலாளர்களை வேலைக்குத் சேர்த்தாள். ' குறைந்த கிழக்குத் திமேரரியத் சிற்றுாழியம் செய்வதற்காக, ஜாவாவிலும் பாலியிலுமுள்ள தொழில் முயற்சிகளில் பணியாற்றுவதற்காக அறுநூறு இளைஞர்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். ஒரு குழுவினர் ஜகார்த்தாவுக்குத் தென்பகுதியிலுள்ள, ஜனாதிபதி குடும்பத்துக்குச் சொந்தமான தொழில் முயற்சியொன்றில் கோழிக்கூடுகளைச் சுத்தஞ் செய்யுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டனர். மற்றையோருக்கு தொழிற்பயிற்சிக்குப் பதில் இராணுவப் பயிற்சி வழங்கப்பட்டது. இந்தோனேசிய இராணுவத்தின் விசேட பிரிவின் கண்காணிப்பில் இவர்கள் விரட்டப்பட்டனர். *
டொமினிக்கன் குடியரசில் சமீப ஆண்டுகளாக அநேக ஹெத்தியர்கள் அரசுக்குச் சொந்தமான கரும்புத் தோட்டங்களில் (கொன்ேெஸஜக எஸ்டாட்டல் டி அசூக்கார் அல்லது சிஇஏ) வேலை செய்யுமாறு ஏமாற்றப்பட்டனர் அல்லது நிர்ப்பந்திக்கப்பட்டனர். இன்னும் அநேகர் வேலை தேடித் தாமாகவே கரும்புத் தோட்டங்களுக்கு இடம் பெயர்ந்தனர். 29 சர்வதேச அக்கறையின் விளைவாக, கரும்புத் தோட்டங்களில் தொழிலாளி விரும்பிய வித வேலை முறையை நடைமுறைப்படுத்துவதற்காக திட்டத்தை டொமினிக்கன் குடியரசு அறிவித்தது. எனினும் 1991ன் நடுப்பகுதியில் எல்லா ஹைத்தியர்களையும் முற்று முழுதாக வெளியேற்றும் குரூரக் கொள்கையை அரசு நிறைவேற்றிற்று. இக்கொள்கை தான்தோன்றித் தனமாக நடை முறைப்படுத்தப்பட்டு ஹைத்திய வம்சாவழி டொமினிக்கன் சட்டபூர்வமாகக் குடியேறும் அந்தஸ்த்துக்கு உரிமை கொண்ட
127. பார்க்கவும் : ஏசியா வாட்ச், கிழக்குத் திமோரியத் தொழிலாளர்களை வஞ்சித்தலும்
துன்புறுத்தலும் "ஏசியா வாட்ச்" செய்தி, மே, 1992. 128. கிழக்குத் திமோரியத் தொழிலாளர்களை "வஞ்சித்தலும், துன்புரத்தலும்" ஏசியா வாட்ச் மே
19, 1992, வல். 4 இதழ் 16. 129. பார்க்கவும் வளர்ந்துவரும் அமெரிக்க கண்காணிப்ப அறிக்கை (கொந்தளிப்பான ஆண்டு
டொமினிக்கன் குடியரசில் ஹைத்தியர்கள் செப்டெம்பர் 1992.
21

Page 65
ஹைத்தியர்கள் ஆகிய இருசாராரையும் பாதித்தது. * மிகவும் சமீபத்திய அறுவடையின் போது ஹைத்தியர்கள் எல்லையில் கைது செய்யப்பட்டு தம் விருப்பத்துக்கு மாறாக கரும்புத் தோட்டங்களுக்கு அனுப்பப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஹைத்தியர்களும், ஹைத்திய வம்சாவழியினரான டொமினிக்கர்களும் இராணுவத்தினராலும், ஆயுதந் தரித்த தோட்டக்காவலாளிகளாலும் வீதிகளில் கைது செய்யப்பட்டு கரும்பு வெட்டுவதற்காகத் தோட்டங்களுக்குக் பலவந்தமாய் இழுத்துச் செல்லப்பட்டனர். ஹைத்தியர்கள் சிஇஏ காவலர்களால் சீஇஏ கட்டடங்களில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு வேலை செய்யுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டனர். (சிஇஏ அதிகாரிகள் தொழிலாளர்களை நையப்புடைத்த சம்பவங்களும் இடம் பெற்றன. உதாரணமாக, மே 2 1991ல் ஹைத்திய தொழிலாளர் இருவர் இளைப்பாறிக் கொண்டிருக்கையில் சிஇஏ மேற்பார்வை அதிகாரியால் கத்தியால் தாக்கப்பட்டனர். தப்பியோட முயன்றபோதும் அவர்கள் காயமுற்றனர்.)
குவைத்தில் ஆசியப் வீட்டுப்பணிப்பெண்கள் தம் முதலாளிகளின் கற்பழிப்புக் கொடுமைகளுக்கும், துன்புறுத்தல்களுக்கும் ஆளாகின்ற னர். ' குவைத்தில் ஆசியப்பணிப்பெண்கள் பெரும்பாலும் கடன் அடிமைத்தன முறையால் பாதிக்கப்படுகின்றனர். ப்ழைய கடன் என்று சொல்லப்பட்டு அதனை அடைப்பதற்காகச் சம்பளம் பிடித்துக் கொள்ளப்படுகிறது. குவைத்தை அடைந்ததும் பணிப்பெண்களின் கடவைச் சீட்டு முதலாளியின் கைக்குச் சென்று விடும். இதனால் பணிப் பெண் குவைத்தை விட்டு வெளியேற முடியாமல் முட்டுக்கட்டையேற்பட்டு விடும். மேலும் சில பணிப்பெண்கள் முதலாளிகளின் வீடுகளில் óዎ t I [ - வரிரோதமாய் ப் பூட்டிவைக்கப்படுகின்றனர். அவர்களால் வெளியுலகுடன் தொடர்பு கொள்ள முடியாது.
ஏனைய தொழிலாளர்களுக்கு பாதுகாப்பளிக்கும் குவைத்திய தொழிலாளர் சட்டம் பணிப்பெண்கள் பற்றி எதுவும் குறிப்பிடாமல் ஒதுக்கிவைக்கப்படுகிறது. மேலும், தொழில் முதலாளிகளைச்
130. பார்க்கவும் அரைகுறை நடவடிக்கைகள் சீர்திருத்தம், பலவந்த உழைப்பு, டொமினிக்கன். கரும்பு உற்பத்தித்தொழில், அமெரிக்காஸ் வாட்ச், வைத்திய அகதிகளுக்கம் கரீபிய உரிமைக்குமான கூட்டணியுடன் இணைந்து) மார்ச் 1991 ஒடுக்குமுறை அறுவடை, டொமினிக்கன் கரும்பு உற்பத்தியில் ஹைத்தியர்களின் பலவந்தப் படுத்தப்பட்ட உழைப்பு அமெரிக்காஸ் வாட்ச் (என்சி எச் ஆரும் கரீபிய உரிமைகளும் இணைந்து) ஜூன் 1990 டொமினிக்கன் குடியரசில் ஹைத்திய கருத்தொழிலாளர்கள், அமெரிக்காஸ் வாட்ச் (என்சிஎச் ஆருடன் இணைந்து) நவம்பர் 1998.
131. பார்க்கவும் மத்தியக் கிழக்குக் காவல் - பெண்கள் உரிமைகள் கருத்திட்டம்
122

தண்டிப்பதில் சட்ட நிறைவேற்று அதிகாரிகள் காட்டும் தயக்கம், முறையீடுகளைச் சமர்ப்பிக்கும் தொழிலாளர்களையே துன்புறுத்தல் முதலியன பரவலாக நடப்பவை. எல்லா அறிக்கைகளின்படியும், இதுவரை கடன் அடிமைத்தன முறையைக் கைக்கொள்வதற்க்காகவே ஆசிய பணிப்பெண்களைச் சட்ட விரோதமாய் அடைத்து வைக்கப்படவோ குற்றஞ்சாட்டப்பட்டது கிடையாது.
கெளத்தமாலாவில், இராணுவத்துக்குச் சம்பளமற்ற ஊழியஞ் செய்வதற்காக விவசாயிகள் சிவிலியன் தற்காப்பு ரோந்து படைகளில் சேருமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். மக்களை தற்பாதுகாப்பு ரோந்துப் படையில் சேர்க்கப்படும் விவசாயிகள் பாதைகளைச் துப்பரவு செய்தல், விறகு வெட்டுதல் இராணுவ முகாம்களையும், காவற்கோபுரங்களையும் நிர்மாணித்தல் போன்ற சம்பளமற்ற வேலைகளில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக கெளத்தமாலா ஏற்றுமதி பொருள் தொழில்சாலைகளில் பாக்டரியில் உற்பத்தி உச்ச இலங்கை அடைய மிகைநேர வேலையில் பலவந்தமாய் ஈடுபடுத்தப்படுகின்றனர். தாழ்ப்பாளிடப் பட்ட கதவுகளிலுள் துன்புறுத்தல் மத்தியில் பலவந்தமாய் மிகைநேர வேலை வாங்கப்படுகின்றது.*
விடுதலையைப் பறிகொடுப்பதற்கும், வருவாயை இழப்பதற்கும் வழிகோலும் பலவந்த உழைப்பு முறை ஒழித்துக் கட்டுவதற்கு சுயாதீன தொழிற்சங்கங்கள் தொழிலாளருக்கு அவர்தம் உரிமைகள் பற்றி அறிவூட்டுவதன் மூலமும், சட்ட விரோதமாய் வேலைக்குச் சேர்க்கப்படுகையில் நியாயம் கோருவதற்காக அவர்களுக்கு உதவிசெய்வதன் மூலமும் முடியும். அடிப்படை மனித உரிமைகளை மதிக்கும் அரசுகள் அருவருக்கத்தக்க இந் நடைமுறையை அனுமதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் வெகுகுறைவு அதுமட்டுமன்றி இதற்குக் காரணமாய் இயங்குவோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்வதும் சாத்தியமே எனலாம்.
பொருளாதார ரீதியிலும் உடல்ரீதியிலும் பிழைத்திருத்தல
அநேகநாடுகளில் நியாயமான சம்பளம் கோருவதற்கும் ஆபத்து நிறைந்த தொழில் நிலையங்களில் பாதுகாப்பைக் கட்டாயப்படுத்துவதற்கும்
132. கெளத்தமாலாவின் தொழிற்கூடங்களில் தொழில் நிலைமைகளைச் சீர்செய்தல் சங்கம் அமைக்கும் உரிமை போன்றவை சம்பந்தமான தகவல், சர்வதேசத் தொழிலாளர் உரிமைகள் கல்வி ஆய்வு நிதியம், அமெரிக்க வர்த்தகப்பிரதி நிதியிடம் சமர்ப்பித்த தொழிலாளர் உரிமை சம்பந்தமான விண்ணப்பத்திலிருந்து பெறப்பட்டதாகும். ஜூன் 2, 1992.
123

Page 66
அமைப்பு ரீதியாகத் திரள்வதே ஒரேவழியாகும். தொழில் தியாகங்களினாலும், அரசாங்கங்களினாலும் பெரும்பாலும் புறக்கணிக்கப்படும் தொழிலாளர்களின் நல்வாழ்வுக்காகத் தனி மனிதர்களின் வாழ்வைச் சீர்பெறச் செய்வதில் தொழிற்சாலைகள் முக்கிய பாத்திரம் வகிக்கின்றன.
தொழிற்சங்கங்கள் தேவை என்பதற்கான முதல் உதாரணம் கெளத்தமாலாவிலிருந்து கிடைக்கின்றது. அங்கு 1991ல் பிலிப்வொன் ஹோசன், சரீட் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர் சங்கமொன்றை அமைக்க முற்பட்டனர். (பிலிப்ஸ் வொன் ஹோசன் ஆண்களின் சர்ட்டுகளை அமெரிக்காவில் ஆகவும் பெருவாரியாக விற்பனை செய்கின்றனர்.) * பிலிப் வொன்ஹோசனின் எதிரடிச் செயலும் அச்சுறுத்தலும் துன்புறுத்தலுமாக வெளிப்பட்டது. இவ்வாறு சங்கம் நிறுவும் முதல் முயற்சி முறியடிக்கப்பட்டது. 1992 ஜனவரியில் தொழிலாளர்கள் சங்கம் ஆரம்பிக்கும் இரண்டாவது முயற்சியில் ஈடுபட்டபோதும் நிர்வாகம் இதே செயல்முறையை கையாண்டது.
வாழ்வூதியத்துக்குப் போதுமான சம்பளம், மேற்பார்வையாளர்களின் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி, நாளொன்றுக்கு எட்டுமணித்தியால வேலைக்கு மேற்பட்ட உழைப்புக்கு மிகநேர வேலைச் சம்பளம் காற்றோட்ட வசதிகள் விருத்தி செய்யப்படல் இவையே தொழிலாளர்களின் கோரிக்கைகள் தற்சமயம் தொழிலாளர்கள் வாரத்தில் நாற்பத்தி நாலு மணித்தியால உழைப்புக்கு 21 டாலர் அதாவது ஒரு மணித்தியால உழைப்புக்கு 50 சதத்துக்கும் குறைவாகவே வேதனம் பெறுகின்றனர். ஏற்றுமதித் துறையில் வழங்கப்படும் சம்பளத்தைவிட இது அதிகமே எனினும் கெளத்தமாலா நகரில் ஐந்து பேர் கொண்ட குடும்பமொன்று சீவிப்பதற்குத் தேவைப்படும் தொகையென ஆய்வாளர்கள் கணித்துக்கூறும் வாரத்துக்கு 56 டாலரில் இது அரைவாசிக்கும் குறைவானதாகும்.
இத்தொழிற்சாலையில் வேலைசெய்யும் அன்னா என்ற பெண் 1012 அடி அளவினதான தனியறை மட்டும் கொண்ட வீட்டில் வசிக்கிறாள். இவ்வறையில் மூன்று கட்டில்கள் நெருக்கமாக போடப்பட்டுள்ளன. எட்டுப்பேர் இதில் குடியிருக்கின்றனர். அன்னா அவளது இரு ஆண்பிள்ளைகள் இவர்களோடு அன்னாவின் சகோதரியும் அவளது நான்கு குழந்தைகளும் அழுக்குப் படிந்த தரை நாளொன்றுக்கு
133. வொன் ஹோசன் தொழிற்சாலையில் சங்கம் அமைக்கும் முயற்சி பற்றிய தகவல் அமெரிக்க / கெளத்தமாலா தொழிலாளர் கல்வித்திட்டம், சர்வதேசத் தொழிலாளர் உரிமைகள் கல்வி ஆய்வு நிதியம், மத்திய அமெரிக்காவில் மத நடவடிக்கைச் சேனை முதலியவை ஆக்ஸ்ட் 1992ல் வெளியிட்ட சங்கம் அமைப்பதற்கான உரிமை. பிலிப்வொன் ஹோசன் விவகாரம்" என்ற அறிக்கையிலிருந்து பெறப்பட்டதாகும்.
124

ஆறுமணித்தியாலம் மட்டுமே நீர்விநியோகம் வேலைக்குச் செல்வதற்கு அல்லது வீடு திரும்புவதற்கு அன்னா ஒரு மணித்தியாலம் பிரயாணஞ் செய்ய வேண்டியுள்ளது. வொன் ஹோசன் தொழிற்சாலையைச் சேர்ந்த மற்ற தொழிலாளர்களும் இதே கதியிலேயே குடியிருக்கின்றனர்.
தொழிற்சங்கம் நிறுவ முயற்சித்த முதல் ஆறுபேர்களும் உடனடியாக வேலை நீக்கஞ் செய்யப்பட்டனரென அவரது சகாக்கள் கூறுகின்றனர். ஆதரவாளர்கள் மேற்பார்வையாளரின் வசை மொழிகளுக்கும் அடியுதைகளுக்கும் ஆளாக நேர்ந்தது. தொழிலிலிருந்து விலக முன்வருவார்களானால் சங்கத் தலைவர்களுக்கு ஒருவருட சம்பளத்துக்கும் அதிகமான தொகை இலஞ்சம் வழங்கப்படுமென ஆசை காட்டப்பட்டது. சங்கத்துக்கு உறுப்பினர் சோக்கும் முயற்சி தொடர்ந்தால் தொழிற்சாலையை இழுத்து மூடிவிடுவதாக வொன்ஹோசன் அறிவித்தது. ஆரம்ப கட்டிடத்திலிருந்த சங்கத்தில் எவருஞ் சேர்ந்தால் அவரின் வேலை பறிபோகும் எனத் தொழிலாளர்கள் பயமுறுத்தப்பட்டனர். சங்க தொழிலாளர்கள் கொலை செய்யப்படுவர் என்று ஆதரவாளர்கள் வொன்ஹோன் கெளத்தமாலாத் தொழிற்சாலைகளின் நிர்வாகம் அச்சுறுத்தியது 1991 செப்டெம்பர் 6ந் திகதி உருவாகி வந்த சங்கத்தின் தலைவரொருவர் தலையில் சடப்பட்டார். துப்பாக்கிக் குண்டு அவளது நெற்றியோரமாய் உராய்ந்து சென்று காதொன்றின் பாகத்தை கொண்டு போய் விட்டது. அவள் பின்னர் தலைமறைவானாள். கொலை அச்சுறுத்தலுக்குப் பொறுப்பான முகாமையாளர் சம்பவம் நடந்து ஒரு வாரத்தில் தொழில் நீக்கஞ் செய்யப்பட்டார் எனினும் இத்தாக்குதல் சங்கம் சம்பந்தமாய் நிகழ்ந்ததல்லவென நிர்வாகம் தொடர்ந்து சாதித்துவருகின்றது. நம்பிக்கையூட்டும் விசாரணை மேற்கொள்ளப்படவில்லை.
தொழிலாளர் தாம் விழித்திருக்கும் பெரும் பகுதி நேரத்தை தொழில் செய்யுமிடங்களில் கழிக்க வேண்டியிருக்கும்போது தொழிற் கூடத்தின் நிலைமைகள் மிகவும் முக்கியமானதாகும். பயங்கரமான அல்லது ஆபத்தான நிலைமைகள் காணப்பட்டால், தொழிலாளர் நீண்ட கால உடல் நலப் பிரச்சினைகளை எதிர்நோக்க நேரும்.
அமெரிக்காவில் வடக்ரோலினா பிரதேசத்தில் ஹாம்லெட் என்ற இடத்தில் கோழியிறைச்சி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள இம்பீரியல் உணவுற்பத்தித் தொழிற்சாலையிலிருந்து ஓர் உதாரணம் உள்ளது. *
134. போல் டெய்லர், சாம்பலும் குற்றச்சாட்டுகளும் த வாஷிங்டன் போஸ்ட் செப்டெம்பர் 5, 1991, அத்துடன், ஸ்டீவ் றிலே, தொழிற்சாலையில் அடிக்கடி சட்ட மீறல்கள்" த றலி நியூஸ் அண்ட் ஒப்லர்வர், நவம்பர் 15, 1991.
125

Page 67
இத்தொழிற்சாலையில் செப்டெம்பர் 3, 1991ல் தீவிபத்து நேர்ந்த போது ஏழு பெண்கள் உட்பட இருபதைந்து பேர் இறந்தனர். 55 பேர் காயமுற்றனர். இறந்தோர் அல்லது காயமுற்றோரில் பெரும்பாலானோர் தீப்புகையைச் சுவாசித்தோராவர். தீக்கதவுகள் ஒழுங்காகக் குறிக்கப்பட்டிருக்கவில்லை. தீயணைக்கும் அப்பியாசத்தேர்ச்சி வெளியேற்றுவதற்கென்றுள்ள ஒன்பது கட்டிடக் கதவுகளில் பாதி வழக்கம் போல் மூடிக்கிடந்தன என விபத்திலிருந்து தப்பிப்பிழைத்த தொழிலாளர்கள் கூறுகின்றனர். இறைச்சித் துண்டுகளைத் தொழிலாளர் திருடிச் செல்வர் என்பதற்காகவே கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன என்கிறார் ஒரு தொழிலாளி.
தொழிற்சாலையில் காணப்பட்ட ஆபத்தான தொழில் நிலைமைபற்றி தொழிலாளர்கள் தமக்குள் அடிக்கடி பேசிக்கொண்ட போதும் வேலையே போய்விடும் என்ற பயத்தில் எவரும் நிறுவனமுகாமைக்கு முறையிடத் துணிந்ததில்லையென்கிறார் இன்னொரு தொழிலாளி. இம்பீரியல் நிறுவன தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் சேர்ந்தோருக்கும் ஒரு மணிநேர உழைப்புக்கு 4.90 டாலருக்கும் 5.60 டாலருக்கும் இடைப்பட்ட அற்ப சம்பளத்தில் அவர்கள் தொழில்புரிந்தனர்.
இத்தீவிபத்து சம்பந்தமாய் வட கரோலினா அரசாங்க திணைக்கள காப்புறுதிச் சேவையால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதன் அறிக்கை நவம்பர் 4, 1991ல் வெளியிடப்பட்டது. தொழிற் சாலையில் ஒரு டசின் சட்ட மீறல்களை இவ்வறிக்கை பட்டியலிட்டுக்காட்டியது. இவற்றுள் பல அதிகமான தொழிலாளரின் சாவுக்குக் காரணமாயிருக்கலாம். இம்பீரியல் உணவுற்பத்தி நிறுவனம் தொழிலாளர்களின் சாவுக்குக் காரணமாயிருந்த அதன் கட்டட அமைப்புக்கு நிர்மாண அனுமதிப்பத்திரம் பெற்றிருக்கவில்லை. தொழிலாளர்களை அடைத்து வைக்கும் மூன்று கதவுகள் காணப்பட்டன. இது அரசாங்க சட்ட விதிகளை மீறிய செயலாகும். நீர் தெளிக்கும் இயந்திர முறை காணப்பட வில்லை தொழிற்சாலையில் 1980ல் நடந்த தீவிபத்தின் பின் அது கட்டடத்திலிருந்து துண்டிக்கப்பட்டு விட்டது.
இம்பீரியல் உணவுற்பத்தி நிறுவனம் கடன் தீர்க்க வகையற்ற நிலையடைந்து மூடப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது. அரசு தரப்பு வழக்கறிஞர்களாலும், பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினராலும் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டுகள் யாவும் தொழிற்சாலையின் முன்னாள் உரிமையாளருக்கெதிராக விசாரிக்கப்படவுள்ளன. இவ்விவகாரத்தில் தொழிலாளரின் சங்கமொன்று இருந்திருப்பின் தொழில் பாதுகாப்பு
126

சட்டத் தொகுப்பு மீறப்படுவதைத் தடுத்திருக்கலாம். எனினும் பொறுப்பு வாய்ந்த அரசாங் கமொன் றிருந்தபடி யால் தொழில் உரிமையாளருக்கெதிராக நடவடிக்கையெடுக்கப்பட்டு துன்புற்றோருக்கு ஓரளவு நியாயம் பெற்றுத்தர முடிந்துள்ளது.
மெக்சிகோ மக்கிலடோரா தொழிற்சாலையில் (ஏற்றுமதி உற்பத்தித் தொழிற்சாலை) சூழ்நிலைகள் மோசமானவை சியூடாட் றிவாரெஸ் தொழிற்சங்களில் சுகாதார பாதுகாப்பு வசதிகள் மிகவும் கீழ்த்தரமானவை என வர்ணிக்கப்டுகின்றது. காற்றோட்ட வசதிகள் இல்லை. வெளிச்சங் குறைவு நச்சுத் தன்மை வாய்ந்த மூலகங்கள் அளவுக்கதிகமாய் உபயோகிக்கப்படுவதால் தொழிலாளரின் உடல் நலத்துக்கு ஆபத்து நிலவுகின்றது. * என்ற போதிலும் அபாயமான தொழில் நிலைமைகளுக்கு எதிராகத் தம்மைத் பாதுகாத்துக் கொள்ள தொழிலாளர் சங்கம் அமைப்பதற்குப் பாரிய முட்டுக்கட்டைகள் காணப்படுகின்றன. மெக்சிக்கன் சமூகப் பாதுகாப்பு நிறுவனம் தொழில்சார்ந்த நோய்களைப் பதிவு செய்வதில்லை. தொழிலாளர்களின் உடல் நலம் குறித்தோ அவர்களின் பாதுகாப்பு குறித்தோ அது நேர்மையாக நடந்து கொள்ளவில்லை.
செப்டெம்பர் 23, 1991ல் மெக்சிகோவில், மட்டமோஸ் என்ற இடத்தைச் சேர்ந்த 42 குடும்பங்கள் இப்போது மூடப்பட்டு விட்ட பின்னும் கூட்டுத் தொழிற்சாலையொன்றை வைத்திருந்த மல்லோரி கப்பாசிடேட்டர் கம்பெனிக்கெதிராக வழக்குத் தொடர்ந்தன. தொலைக்காட்சிப் பொருள் உற்பத்தியில் கழுவுவதற்கு உபயோகப்படும் இரசாயனத்தினால் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்குப் பிறந்த பல குழந்தைகள் உடல் ஊனமுற்றும் மற்றும் உடல்நல பிரச்சினைகளோடும் காணப்படுவதாக வாக்காளிகள் குற்றஞ்சாட்டினர். இ த்தொழிற்சாலையில் வேலை செய்த அநேக பெண்கள் அடிக்கடி மயக்கமுற்றனர். இரசாயன ஆவிகாரணமாக சிலர் நிலைகுலைந்து போயினர். இரசாயனப்பொருட்கள் தொழிலாளர்களின் வாய்களினுள்ளும், கண்களினுள்ளும் வாரியடிக்கடிப்பட்டனவென அறிவிக்கப்படுகின்றனது. இரசாயனங்களால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரும் வேலை போய் விடும் என்ற பயத்தால் எவரும் முறையிடவில்லை என வாக்காளி ஒருவர் குறிப்பிட்டார். 36.
135. டான் லா பொட்ஸ், ஜனநாயக முகமூடி, இன்று மெக்சிக்கோவில் தொழிலாளர்
ஒடுக்குமுறை (பொஸ்டன் சவுத் எண்ட் பிரஸ், 19902) பக். 174.
138. எட்வேர்ட் தோடி விகாரமடைந்த பிள்ளைகளும் துயரமற்ற பெற்றோரும் வாஷிங்கரன்
Cursivo estáC3LTL, 1991.
127

Page 68
மெக்சிகோவில் இன்னொரு விவகாரத்தில் மொடெலோ மதுபானவுற்பத்தித் தொழிற்சங்கத் தலைவர்கள் 1989ன் பிற்பகுதியில் மொடெலோ மதுபான உற்பத்தித் தொழிற்சாலை உரிமையாளர்களுடன் பேச்சு வார்த்தைகள் மேற்கொண்டனர். பணவீக்கத்துக்கு ஈடு கொடுப்பதாக சம்பளவுயர்வு சுகாதார, பாதுகாப்பு நிலைமைகளில் அபிவிருத்தி முதலியவையே பேச்சுவார்த்தைகளின் நோக்கம். " போத்தல்கள் வெடிப்பதனாலும் மின்சார விபத்துக்களாலும், தானியங்கிகளோடும் அமிலங்களோடும் நீண்ட காலம் வேலை செய்வதால் உண்டாகும் பாதிப்புகள் முதலிய காரணமாக சுகாதார, பாதுகாப்பு நிலைமைகள் குறிப்பாகக் கரிசனைக்குரியதுமாய்க் காணப்பட்டன.
பேச்சுவார்த்தைகள் தோல்வி கண்டதும் தொழிலாளர் பெப்ரவரி 15,1990ல் வேலை நிறுத்தத்தில் குதித்தனர். வேலை நிறுத்தம் சட்டவிரோதமானதென அறிவிக்கப்பட்டது. 30 ஆண்டுகள் தொழில் செய்த பின் இளைப்பாறு ஊதிய நன்மைகள் உறுதிசெய்யப்பட்டால் வேலைக்குத் திரும்புவோமெனத் தொழிலாளர் தம்கோரிக்கைகளை மட்டுப்படுத்தினர். இந்நன்மைகளை வழங்க தொழில் நிர்வாகம் முன்வரவில்லை. மார்ச் 17-18 திகதிகளில் தொழிற்சாலையில் அமைதியான முறையில் ஒத்துழையாமையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர் மீது குறுந்தடியும் தீயணைப்புக் குழாயும் பிரேயாகிக்கப்பட்டன. பொலிசார் தொழிலாளர்களை நையப் புடைத்தனர். அவர்கள் உடைமைகள் பிடுங்கப்பட்டன. அல்லது உடைத்து நொருக்கப்பட்டன. தொழிலாளர் பலவந்தமாய் பஸ்களில் ஏற்றப்பட்டு தொழிற்சாலையி லிருந்து அகற்றப்பட்டனர். ஏப்ரில் 24, 1990ல் வேலை நிறுத்தம் முடிவு கண்டது. 32 வருட வேலைக்குப் பின் இளைப்பாறும் நன்மைகள் வழங்கப்பட ஏற்றுக்கொள்ளப்பட்டது. கோரிக்கைகள் எதுவும் செவிசாய்க்கப்படவில்லை. தொழிற்சங்கத் தலைவர்களும் உறுப்பினர்களும் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர். சங்கம் சீர் குலைவுற்றது.
பங்களாதேஷில் தொழிலாளருக்குப் பாதுகாப்பளிக்கும் சட்டத்தை மீறியபடியால் "நிர்க்கதியான தொழிலாளர் மீது நமது ஆடை உற்பத்தியாளர் காட்டும் அசிரத்தை" (டாக்காவில் வெளிவரும் வாரப்பத்திரிகையான "ஹொலிடே" வர்ணனை) காரணத்தாலும், டாக்கா ஆடைத்தொழிற்சாலையில் டிசெம்பர் 27, 1990ல் ஏற்பட்ட தீவிபத்தில் 27 தொழிலாளர்கள் எரியுண்டு இறந்தனர். * ஜனவரி
137. அமெரிக்காஸ் வாட்ச், "மெக்ஸிக்கோவில் மனித உரிமைகள் தண்டனைவிலக்கான
கொள்கை" (நியூயோர்க் : மனித உரிமைகள் கண்காணிப்ப, 1990) பக். 69-70.
138. பங்களாதேஷ் தொழிலாளர் உரிமைகள் சம்பந்தமாய் அமெரிக்க வர்த்தகப் பிரதிநியிடம்
AFL-CO சமர்ப்பித்த விண்ணப்பம், மே 31, 1991.
128

1990ல் இன்னொரு ஆடைத் தொழிற்சாலையும் தீபிடித்தபின் பங்களாதேஷ் டைம்ஸ் பத்திரிகை அதன் தலையங்கமொன்றில் பின்வரும் நிலைமைகளைக் கண்டித்து எழுதிற்று. அநேக தொழிற்சாலைகளில் ஆபத்தான நிலைமைகள் காணப்படுகின்றன. நெரிசலான அடுக்கு மாடிக் கட்டிடங்களில் தீவிபத்திலிருந்து தப்புவதற்கான வசதிகளேதும் காணப்படவில்லை. உயர்ந்த மின்சார இயக்கங் கொண்ட இயந்திரங்களில் பாதுகாப்பு பயிற்சியளிக்கபடாத தொழிலாளர்கள் வேலையில மர்த்தப்பட்டுள்ளனர். இத்தீவிபத்துக்கள் நிகழ்வதற்கு ஓராண்டுக்கு முன்னர் தான் சர்வதேசத் தொழிற் சங்கம் 1989ல் பங்களாதேஷ் தொழிற்சாலைகள் பலவற்றில் ஆய்வுப் பரிசோதனை மேற்கொண்ட போது "பாதுகாப்பு, சுகாதாரம், சுத்தம், தொழிற் சூழல் முதலியவை சம்பந்தமாய் தொழிலதிபர்கள் எத்தகைய கவனமும்
செலுத்தவில்லையென்பதைக் கண்டது. 39.
சீன தொழில் நிலையங்களில் சுகாதார பாதுகாப்பு ஒழுங்குகள் படுமோசமாகும். உதாரணத்துக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் 1991ல் பின்வருமாறு அறிவித்தது.
"சட்டமீறல் குற்றங்கள் சம்பந்தப்பட்ட ஆயிரக்கணக்கான அசிரத்தைகள் விபத்துகள் குறித்து வழக்குகள் ஆண்டு தோறும் அரச வழக்கறிஞர்கள் பரிசீலனை செய்கின்றனர். தேசிய தொழிலாளர் சட்டக் கோவையொன்று இல்லாமை தொழிலாளர் திணைக்களத்தால் தொழிலாளர் பாதுகாப்பு விதிகளை நடைமுறைப்படுத்தவது மிகவும் கடினம் என்பதை உணர்த்துகின்றது. மேலே குறிப்பிடப்பட்ட விவகாரங்கள் பெரும்பாலும் இயந்திரங்களாலும் போக்குவரத்துச் சாதனங்களாலும் விளைந்த காயங்கள் சம்பற்தப்பட்டவை யாகும். இரசாயனப் பொருட்களால் தொழிலாளர்க்கேற்படும் ஆபத்து குறித்து சமீபத்தில் தான் சீன வைத்தியத்துறை அதிகாரிகள் கவலை கொள்ளத் தொடங்கியுள்ளனர். இப்பொழுது தான் இவ்வபாயங்கள் பரவுவது பற்றி கண்காணிக்கத்
தொட்ங்கியுள்ளனர். *
வேகமாக வளர்ந்து வரும் இந்தோனேசிய சப்பாத்து உற்பத்தித் தொழில் மலிவான கூலியில் தொழிலாளர் ஈடுபடுத்தப்படுகின்றனர்
139. பங்களாதேஷ் தொழிலாளர் உரிமைகள், சம்பந்தமாய் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியிடம்
aflor iss ailatiwoosuio, GBuo, 1990.
140. அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின், மனித உரிமை நடைமுறைகள் பற்றி நாட்டறிக்கை,
GunTopšvL6ðir, 1992 udk. 833.
129

Page 69
சப்பாத்து ஏற்றுமதியில் பெரும் புள்ளிகளாய் விளங்கும் நைக், நீபொக், எல்.ஏ. கியர், ஏலியா போன்ற தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் ஆபத்தான நிலைமைகளில் வயிற்றுப்பாட்டுக்குப் போதாத மலிவான அற்ப சம்பளத்துக்கு வேலை செய்கின்றனர். பாதுகாப்பற்ற இயந்திரங்களில் தொழிலாளர் விரல்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. வைத்திய உதவி போதுமான அளவு காணப்படவில்லை. சில இடங்களில் முற்றாகவே இல்லை. ஜனவரி 1991ல் தொழிற்சாலை வச்சிர அறையில் தீப்பிடித்துக் கொண்டதால் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார். இன்னொரு தொழிலாளி கடுமையாகக் காயமுற்றார். "தொழிலாளர் தாமாகவே குரலெழுப்ப முன்வராவிட்டால், ஒரு தலைப்பட்சமான இம்முறை தொடரவே செய்யும், இதனால் தொழிலாளர் தொடர்ந்து துன்பப்படுவர் பொதுமக்கள் தொழிற்சாலைகளில் நடப்பவை குறித்து அறிந்திருப்பது அவசியம். தொழிலாளர்கள் தம் உரிமைகளை அறிந்திருப்பது அவசியம்" என இத்தீவிபத்தில் பின் மீடியா இந்தோனேசியா என்ற செய்தித் தாள் அபிப்பிராயம் கூறிற்று."
தொழிற்சாலைகளில் அளவுக்கதிக நீண்ட நேர உழைப்பும் பாதுகாப்பும் பிரச்சினையை உருவாக்குகின்றது. இவ்வாறு தொழிலாளரது நீண்ட நேர வேலை செய்யும் தொழிற்சாலைகளில், குறிப்பாக அங்கு கனரக இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகையில் உற்பத்தியின் போது விபத்துகள் நேர்வது சகஜம் மேலும் சில தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் ஆபத்தான கருவிகளை பாவிப்பதில் போதிய பயிற்சியின்றியே துரிதமாக வேலை செய்யுமாறு தூண்டப்படுகின்றனர். இதன் விளைவாய் அநாவசியமாய் காயமடைகின்றனர்.
வளர்முக நாடுகளில் பொருளாதாரத்தின் பெரும் பகுதியாய் காணப்படும் விவசாயத் துறையில் சுகாதார பாதுகாப்பு முறைகள் மிகவும் சீர்கெட்ட முறையிலிருக்கின்றன. * உலகம் பூராவும் பண்ணை நிலங்கள் குடும்பத் தேவைக்காகவும் உள்ளூர் நுகர்வுக்காகவும் உற்பத்தி செய்வதிலிருந்த ஏற்றுமதிப் பயிர்ச்செய்கைக்கு மாறியுள்ளன. உற்பத்தியைக் பெருக்குவதற்காக களைக்கொல்லிகளினதும் உரப்பசளைகளினதும் உபயோகம் அதிகளவு தேவைப்படுகின்றது. (உண்மையில் உலகின் களைக் கொல்லியின் உபயோகம் பதினைந்தாண்டுகளில் இருமடங்காக 1988 அதிகரித்துள்ளது.) களைக்கொல்லிகள் காற்றையும், உணவையும்,
141. "இந்தோனேசியாவில் நைக்கின் வெற்றிக்கதையின் மறுபக்கம்" லேபர் பிரெஸ், ஜன் 7, 1991.
Lii. 1
142. சர்வதேச தொழிலாளர் உரிமைகள் கல்வி ஆய்வு நிதியம், வர்த்தகத்தின் மறைமுகச் செலவு
(வாஷிங்டன் : சர்வதேசத் தொழிலாளர் கல்வி ஆய்வு நிதியம் 1988) பக். 32-34.
130

நீர்விநியோகத்தையும் மாசுபடுத்தும் சூழலில் தொழிலாளர் வதியவும், வேலை செய்யவும் நேர்ந்துள்ளது.*
கெளத்தமாலாவில் அரசாங்க உதவியுடன் நடத்தப்பட்ட ஆய்வின் போது எஸ்கு வின்ட்லாவைச் சேர்ந்த தொழிலாளர், பின்வருமாறு அறிவித்தனர். தொழிலாளர் களைக்கொல்லிகளை நீருடன் தம் கைகளாலேயே கலக்கவேண்டியிருந்தது. கலவை சரியான அளவில் உள்ளதா என ருசிபார்க்க வேண்டியிருந்தது. ஆகாய மார்க்கமாய் களைக்கொல்லிகளைத் தெளிப்பதற்கு பாதுகாப்புச் சாதனம் எதுவுமின்றி தொழிலாளர்கள் களைக்கொல்லி தெளிக்கப்பட்டு இருபத்து நான்கு மணித்தியாலங்கள் காத்திருக்க வேண்டியது அவசியமாயிருந்ததும் அதற்குப் பதில் மருந்து தெளிக்கப்படவுடனேயே தொழிலாளர் வயலில் இறங்கி வேலை செய்யுமாறு பணிக்கப்பட்டனர். ஒழுக்கல் விழும் தெளிப்பான்களை தொழிலாளர் உபயோகிக்க வேண்டியிருந்தது. தெளிப்பான் அடைபடும் போது வாயினால் உறிஞ்ச வேண்டியிருந்தது. * கெளத்தமாலாவில் சீன தொழில் நிலையங்களில் “சில இரசாயனங்களினதும் பாவனை முறையினதும் ஆபத்தான பாதிப்புகள் குறித்து தொழிலாளருக்கும் தொழிலதிபர்களுக்கும் அறிவூட்டுவதற்கு எதுவும் செய்யப்படவில்லை" என 1991ல் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அவதானித்தது. *
தொழிலாளர் சங்கம் அமைப்பதைத் தடுப்பதற்கு அரசாங்கத்தின் உபாயங்கள்
சுயாதீன தொழிற்சங்கங்கள் சமூகத்தின் மிகவும் வறிய பகுதியினர் பிழைத்திருப்பதற்கும் அவர்தம் நல்வாழ்வுக்கும் அத்தியாவசியமாயிருந்தும் அநேக அரசாங்கங்களும் வர்த்தக நிறுவனங்களும், அந்நிய முதலிட்டாளர்களும் நிலைநாட்டப்பட்ட சமூக அமைப்புக்கு அல்லது பொருளாதார வளர்ச்சிக்காக முதலீட்டைக் கவரச் செய்வதற்கு மலிவு உழைப்பை உத்தரவாதமாய் பயன்படுத்தும் நாடுகளுக்கு அது அச்சுறுத்தலாயிருப்பதாகவே கருதுகின்றனர்.உதாரணமாக ஏற்றுமதி உற்பத்தி வலையங்கள் செலவைக் குறைத்து வைத்திருக்கவும் பன்னாட்டு முதலீட்டாளர்களை கவர்ந்திழுப்பதற்குக் பெரும்பாலும் தொழிற்சங்கங்களைத் தடை செய்கின்றனர். காலப்போக்கில்,
143. சர்வதேச தொழிலாளர் உரிமைகள் கல்வி ஆய்வு நிதியம், வர்த்தகத்தின் மறைமுகச்
செலவுகள் (வாஷிங்டன், சர்வதேசத் தொழிலாளர் உரிமைகள் கல்வி ஆய்வு நிதியம்.
14. கெளத்தமாலாவில் தொழிலாளர் உரிமைகள் குறித்த சர்வதேச தொழிலாளர் நிதியிடம்
கையளித்த விண்ணப்பம் ஜூன் 2, 1992.
145. நாட்டறிக்கை, 1991, பக். 624.
131

Page 70
(தொழில்சங்கங்களைத் தடை செய்யும் முயற்சிக்கு அரசாங்கத்திற்கு நேரும் செலவு அதிகமாகி விடும் நாட்டுப்புற நகர்ப்புறத் தொழிலாளர்களின் வறுமையும் வெறுப்பும் அரசியல், சமூக எதிர் விளைவுகளையுண்டு பண்ணும்.
சங்கங்கள் அமைக்கப்படுவதைத் தடுப்பதற்கான அரசின் உபாயங்களில் ஒன்று அரசாங்கக்கட்டுப்பாட்டிலுள்ள ஒரு தொழிற்சங்கத்தை மட்டும் அங்கீகரித்ததாகும் (சீனா) சுயாதீனமான தொழிற்சங்கங்கள் உருவாக்கப்படுவதை மிகக்கடினமானதாக்கி நடைமுறையில் அதனைச் சாத்தியமற்றதாக்கி விடுவது (இந்தோனேசியா) தொந்தரவு கொடுக்கக் கூடியதாய்க் காணப்படும் தொழிற்சங்கங்கள் பதிவு செய்யப்படுவதற்கு எதிராக அரசாங்கம் தடுத்து நிறுத்தும் அதிகாரத்தைப் பிரயோகித்தல் (மெக்சிகோ) மேலும் தொழிற்சங்கங்கள் உருவாவதனை ஊக்கங் கெடச் செய்வதற்கு தொழிற்சங்க வாதிகள் மீது தாக்குதல் தொடுத்தல்.
தொழிற்சங்க வாதிகள் மீது வன்முறை, அச்சுறுத்தல், துன்புறுத்தல்
சம்பளப்பற்றாக்குறை மோசமான தொழில்நிலைச்சூழல்கள் நியாயமற்ற வேலை ஒப்பந்தங்கள் முதலியவற்றிலிருந்து தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்ட தொழிலாளர் உரிமைப் போராளிகள் ஒடுக்கு முறை அரசாங்கங்களின் தாக்குதலுக்கு அடிக்கடி ஆளாகியுள்னர். "கொலைப்படைகள்” சுறுசுறுப்பாய் இயங்கும் அநேக நாடுகளில், அல்லது அரசாங்கம் தான்தோன்றித்தனமாகக் கைது செய்து பிரஜைகள் "காணாமற் போகும்” இடங்களில் சங்கத் தலைவர்களும் உறுப்பினர்களும் முதலில் துன்புறுத்தப்படும் கூட்டத்தினருள் அடங்குவர். 146 பயமுறுத்தல்களும், தாக்குதல்களும் மற்றைய தொழிலாளர்கள் சங்கங்களில் சேர்வதிலும் தம் நிலைமைகளைச் சீர் படுத்திக் கொள்ளும் முயற்சிகளில் ஈடுபடுவதிலும் ஆர்வமிழக்கச் செய்கின்றன. அரசாங்கத்துக்கும், குறைந்த
146. உதாரணமாக CFTU அறிக்கையின்படி, மார்ச் 1991க்கும் மார்ச் 1992க்குமிடையில் எல். சல்வடோரின் 20 தொழிற்சங்கவாதிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சிலருக்கு வலதுசாரி கொலைப்படையிடமிருந்து முன்கூட்டியே பயமுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. இதே காலகட்டத்தில் கெளதெதமாலாவில் 11 தொழிற்சங்கவாதிகள் கொலை செய்யப்பட்டனர். வலதுசாரி பாராமிலிட்டரி துருப்புகளிடமிருந்தும், இடதுசாரி கிளர்ச்சிக்காரர்களிடமிருந்தும் வன்முறைக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ள பெருவில், சட்டவிரோதமானதென அரசாங்கத்தால் பிரகடனஞ் செய்யப்பட்ட வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து SUEP ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த 14 பேர் கொலை செய்யப்பட்டனர். தென்னாபிரிக்காவில் ஒராண்டுகாலத்தில் 47 தொழிற்சங்கவாதிகள் கொலையுண்டனர். இவர்களில் அநேகள் வலதுசாரி கொலைப்படையினால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
132

சம்பளத்தினாலும், மோசமான தொழில் முறைச் சூழ்நிலைகளாலும் இலாபம் பெறும் தொழிலதிபர்களுக்குமிடையில் காணப்படும் நெருக்கமான உறவு, தொழிலாளர் வாழ்வை வளமுறச் செய்வதில் அரசாங்கத்தை உற்சாகமிழக்கச் செய்கின்றன.
மார்ச் 1991க்கும் மார்ச் 92க்கு மிடையில் உலகெங்கிலும் மொத்தம் 200 தொழிற்சங்கவாதிகள் கொலை செய்யப்பட்டுள்ளனரென சுயாதீனத் தொழிற்சங்கங்களின் சர்வதேசச் சம்மேளனம் (CFTU) ஜூன் 1992ல் அதன் ஆண்டறிக்கையில் குறிப்பிடுகின்றது. கொலம்பியா, சீனா, கெளத்தமாலா, எல் சல்வடோர், ஈரான், பெரு, சூடான், தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளில் தொழிற்சங்க வாதிகளுக்கெதிரான ஒடுக்குமுறை மிகவுங் கொடூரமானதென அறிக்கை குறிப்பிடுகின்றது. இன்றும் அநேக நாடுகளில் தொழிலாளர் உரிமைகள் மீறப்படுகின்றன. உதாரணமாய், எல்லாக் கண்டங்களிலும் 85 நாடுகளில் குறிப்பிட்ட வருடத்தில் சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தொழிலாளர் உரிமைகள் வெவ்வேறு அளவில் மீறப்படுகின்றன என்று KFTU எடுத்துக் காட்டுகின்றது.
மெக்சிகோவில், மெக்சிகோ நகரில் ஒதுக்குபுறமான குவாடிட்வான் என்ற இடத்திலுள்ள தொழிற்சாலையில் தொழிலாளர் நீடித்துக் கொண்டு போவது காணப்பட்ட போது ஜனவரி 8, 1990ல் ஃபோர்ட் மோட்டார் கம்பெனி தொழிலாளர்கள் கதாயுதமும் துப்பாக்கியும் தாங்கிய குண்டர்களால் தாக்கப்பட்டனர்." தொழிற்சங்கத் தலைவர்கள் கம்பெனி நிர்வாகத்துக்கு வால்பிடிப்பவர்கள் எனக்கூறி சில தொழிலாளர்கள் சுதந்திரமான தொழிற்சங்கமொன்றை ஆரம்பிக்க முற்பட்ட போதே தாக்குதல் இடம்பெற்றது சுயாதீனத் தொழிற்சங்கத்தின் தலைவர்களை மத்திய அரசாங்க பொலிஸ் தாக்கி சொற்ப காலத்துக்கு அடைத்து வைத்ததும் பதற்றம் அதிகரித்தது. ஃபோர்ட் நிர்வாகம் தொழிலாளரின் கிறிஸ்மஸ் போனஸ் மீது வரிவிதித்தனாலும் அநேக தொழிலாளர் வேலை நீக்கம் செய்யப்பட்டதாலும் தொழிலாளர் மேலும் மனவருத்தமடைந்தனர். ஜனவரி 8 தாக்குதலின் போது ஒன்பது தொழிலாளர் குண்டுகளால் காயமுற்றனர். இருதினங்களின் பின் காயமுற்றோரில் ஒருவர் இறந்தார். அரசாங்க ஆதரவு பெற்ற (CTM) சங்கத் தலைவர்கள் உட்பட எட்டியிலிருந்து பன்னிரண்டு பேர் வரை கைது செய்யப்பட போவதும் டிசம்பர் 1990ல் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். ஃபோர்ட் தொழிலாளருக்கெதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை பற்றி முழுமையான விசாரணை நடைபெறப்
147. பார்க்கவும் லா பொட்ஸ், ஜனநாயக முகமூடி, பக். 148-49 அத்துடன் அமெரிக்காளப் வாட்ச்,
மெக்சிக்கோவில், மனித உரிமைகள் : தண்டனை விலக்குக்கொள்க.
133

Page 71
போவதாகத் தெரியவில்லை.
ஐ.சி.எப்.டி.யு. அறிக்கையின் படி கொலம்பியாவில் மார்ச் 1991 லிருந்து மார்ச் 1992 வரை 50 தொழிற்சங்க வாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உதாரணமாக பெப்ரவரி 1988லிருந்து 1990ன் பிற்பகுதிவரை குறைந்தது இருபது இண்டுபல்மா சங்கப் போராளிகள் கொலை செய்யப்பட்டுள்னர்.* மேலும் அண்டியோகுயாவில் புயர்ட்டோ நாரேயிலுள்ள சீமெந்து உற்பத்தித் தொழிலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கத்தின் இருபத்தொன்பது உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டனர். இவர்கள் அதிரடிப்படை தலைவர்களை கொலை செய்யப்பட்டதாக ஊகிக்கப்படுகின்றது.
குற்றச் செயல்கள் முழுமையாக விசாரணை செய்யப்படுவது அரிது. இதன் விளைவாய், இவற்றுக்குப் பொறுப்பானவர்கள் பெரும்பாலும் குற்றஞ் சாட்டப்படுவதேயில்லை. உதாரணமாக மகதலேனா மீடியோ பிரதேசத்திலுள்ள இந்துபல்மா தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத்தின் தலைவர் ஏப்பிரல் 19, 1991ல் கொலை செய்யப்பட்டார். இக்கொலை சம்பந்தமான விசாரணை பாதிக்கப்பட்டவரின் மனைவியையும், இரு சங்கத் தலைவர்களையும் அப்புறப்படுத்துவதில் முடிந்தது.
கொலம்பியாவில் தொழிலாளர் உரிமைப் போராளிகளுக்கெதிராகக் கொடுமையிழைக்கப்படுவதற்குப் பாதுகாப்புப் படையினரும் பொறுப்பாளியாவர். மார்ச் 1990ல் நடந்த விவகாரமொன்றில், நான்கு தொழிலாளர் உரிமைப் போராளிகளும் மற்றும் எட்டுப் பேர்களும் காலி என்ற இடத்தில் கைது செய்யப்பட்டு மூன்றாவது படைப்பிரிவின் தலைமையகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு மிருகத்தனமாகச் சித்திரவதைச் செய்யப்பட்டனர். * அடியுதை, மானப்பங்கம் நீண்ட மணிநேரம் நிற்கச் செய்தல் பயமுறுத்தல் முதலியவற்றுக்கு தொழிலாளர் சங்கப் போராளிகள் ஆளாகினர். "நீர்மூழ்கி” என்ற சித்திரவதை முறையுங் கையாளப்பட்டது. மூர்ச்சையுறும் வரை அவர்களின் தலைகள் தண்ணீரினுள் அமுக்கப்பட்டன. தொழிற்சங்கவாதிகளின் வழக்கறிஞர்கள் கூட அம்மாதப் பிற்பகுதியில் கைது செய்யப்பட்டு பத்து நாட்கள் சிறை
148. குறிவைக்கப்பட்ட சங்கம் மீதான தாக்குதலுக்குப் பார்க்கவும், அமெரிக்கா கண்காணிப்பு கொலம்பியாவில் அரசியல் கொலையும் சீர்திருத்தமும் (நியூயார்க், மனித உரிமைகள் கண்காணிப்பு 1992) பக். 23-24.
149. அமெரிக்கா கண்காணிப்பு, கொலம்பியாவில் அரசியல் கொலையும் சீர்திருத்தமும் பக். 83
A.
134

வைக்கப்பட்ட பின் விடுதலை செய்யப்பட்டார்கள். பல மாதங்களின் பின்னரே தொழிற்சங்க வாதிகள் வெளியே விடப்பட்டனர்.
முன்னர் குறிப்பிட்டது போல் கெளத்தமாலா சங்கம் அமைக்க முயற்சிக்கும் தொழிலாளர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகளுள் ஒன்றாகும். தேசிய மின்சார நிலையத்தைச் சேர்ந்த தொழிலாளர்களது யூனியனால் ஸ்டின்டே (ஸிண்டிகாட்டோ டி டிரெபஜாடோரெஸ் டெல் இன்ஸ்டியூட்டோ நெஷனல் டி எலெக்ட்ரிஷ்பிகேஷன்) மிகவும் பாதிக்கப்பட்ட தொழிற்சங்கங்களிலொன்றாகும். 1987ல் இத்தொழில்சங்கம் சட்ட பூர்வமாக்கப்பட்டதிலிருந்து கிரமமாக தொந்தரவு படுத்தப்பட்டும் அச்சுறுத்தப்பட்டும் வந்துள்ளது. ஸ்டிண்டே யூனியன் தலைவர்கள் கொலை செய்யப்பட்டனர். கடத்திச் செல்லப்பட்டுள்ளனர் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். உதாரணத்துக்கு மார்ச் 29 1992ல் எஸ்குவிண்ட்லாவில் ஸான் லூயிஸ் புவனே விஸ்டாவில் பிராந்திய SINDE யூனியனின் செயலாளர் நாயகம், ஆயுதந்தாங்கிய நபர்களால் கடத்திச் செல்லப்பட்டு, நையப்புடைக்கப்பட்டு, கொலை அச்சுறுத்தலின் பின் கைகால் பிணைக்கப்பட்ட நிலையில் வீதியோரத்தில் விட்டுவைக்கப்பட்டிருந்தார். கம்பெனி தனியார் மயப்படுத்தும் திட்டத்தால் நேரக்கூடிய வேலையிழப்புகள் பற்றி நிர்வாகத்துடன் சங்கத்துக்கு தகராறு ஏற்பட்ட போது நடந்த சம்பவமிது. இத்தகராறின் போது மற்றைய சங்கத் தலைவர்களுக்கு தொலைபேசி மூலம் கொலைப்பயமுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. மக்கள் ரோந்துப் படையினர் பலவந்த உழைப்புக்கு ஈடுபடுத்தப்படுவதற்கெதிராகக் குரல் எழுப்பியதன் விளைவாகவும் உறுப்பினர்கள் குறிவைக்கப்பட்டனர். *
பிரேசில், கடந்த பல வருடங்களாக பெரு நிலக்கிழர்களால் வேலையிலமர்த்தப்படும் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், சிறு விவசாயிகள் தம் நிலங்களை விட்டுக் கொடாமல் இருப்பதற்கும் உதவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது உள்ளூர் தொழிலாளர் சங்கங்கள் வன்முறைத் தாக்குதலுக்கும் இலக்காகின."பாரா மாநிலத்தில் நியோ மரியா நாட்டுப்புற தொழிலாளர் சங்கத்தில் மட்டும் - 1985 லிருந்து மூவர் சுடப்பட்டனர். - இருவர் உயிராபத்தான முறையில் 1991ல் ஒன்பது நாட்டுப்புற தலைவர்கள் மீது கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன; இம்முயற்சிகளில் ஐந்து வெற்றிபெற்றன.
ஹைத்தியில் செம்டெம்பர் 1991ல் நடந்த சதியைத் தொடர்ந்து
150. கெளத்தமாலாவில் தொழிலாளர் உரிமைகள் பற்றிய விண்ணப்பம், ஜூன் 2, 1992. 15. பார்க்கவும் அமெரிக்க கண்காணிப்பு, பிரேசிலில் நிலப்போராட்டம் : நாட்டுப்பற வன்முறை
தொடர்கின்றது (நியூயார்க், மனித உரிமைகள் கண்காணிப்பு, 1992)
135

Page 72
தொழிலாளர் சங்கங்களைத் சேர்ந்தோர் இராணுவத்தால், பயமுறுத்தவும் கைது செய்யவும் தாக்கவும் பட்டனர். ? உயிரைக் காத்துக் கொள்வதற்காக அநேக சங்கத் தலைவர்கள் தலைமறைவாகினர். ஹைத்திய ஆசிரியர் தேசியச் சம்மேளன (CNEH) உறுப்பினர்கள் தாக்குதலுக்கு இலக்காகினர். லே கேண்ஸ் என்ற இடத்தில் ஆசிரியர் பணிபுரிந்த ஜுன் குளோட் முஸோ என்ற (CNEH) உறுப்பினர் இராணுவ அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுச் சித்திரவதை செய்யப் பட்டார். இதனாலேற்பட்ட காயங்களால் நான்குநாட்களின் பின் இறந்தார். மின்சாரத் தொழிலாளர் சங்கம் (FESREDH) ஹைத்தியில் தாக்குதலுக்கு இலக்கான இன்னொரு தொழிற்சங்கமாகும். இதன் உறுப்பினரான ஜூன் டெலின்ஸ் ஜொஸ்மா ஒக்டோபர் 1991ல் கொல் லப் பட்டார் . இது இராணுவத்தின் செயலென அறிவிக்கப்படுகின்றது. ஜனவரி 1992ல் சங்கத் தவைவர்களிருவர் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு மிருகத்தனமாய்ச் சித்திரவதை செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர். சதிக்குப்பின் சங்கத்தின் முழுசெயற்குழுவும் அதன் சங்க நடவடிக்கைகள் காரணமாக வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டது.
இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் பிலாய் சுரங்கத் தொழிலாளர் வேலை நிறுத்தஞ் செய்த போது பொலிஸ் துப்பாக்கி பிரயோகத்தினால் 16 பேர் கொல்லப்பட்டனர். * குடியியல் உரிமைக்கான மக்கள் சங்க (PUCL) மனித உரிமைப் போராளியும், சுரங்கத் தொழிலாளர் சங்கத் தலைவருமான சங்கர் குஹா நியோகி செம்டெம்பர் 1991ல் கொலை செய்யப்பட்ட போது கொலைக்கு காரணமானவர்களாய்க் கருதப்பட்ட உற்பத்தியாளர்களைக் கைது செய்யுமாறு கோரியே தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் குதித்திருந்தனர். ஜூலை 2ந் திகதி உள்ளூர்க்கிளைச் செயலாளர் ராஜேந்திர ஸய்ல் சிறையில் தள்ளப்பட்டார். துப்பாக்கிப் பிரயோகம் சம்பந்தமாய் அவர் புலன்விசாரணையில் ஈடுபடுவதைத் தடுப்பதற்காகவே இவ்வாறு நடந்ததாய் அறிவிக்கப்படுகிறது. பின்னர் அவர் பிணையில் விடப்பட்டார். வேலை நிறுத்தத்தில் பங்கு பற்றிய இன்னும் 89 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் விடுதலை செய்யப்பட்டனரா என்பது பற்றி அறியவில்லை.
152. பார்க்கவும் : ஹைத்தியில் தொழிலாளர் உரிமை சம்பந்தமாய் AFL-CLO அமெரிக்க வர்த்தகப்
பிரதிநிதியிடம் கையளித்த விண்ணப்பம் ஜூன் 1992 பக். 21-24.
153. "பிலாயில் பொலிஸ் துப்பாக்கிப் பிரயோகத்தினால் கொலை" முலுடினு செய்திக்கதிந்தவல்
xii 926a). 8 -aga56ñulʻ 1992, Lu és. 125.
136

சூடானில் ஜூன் 1989ல் தேசிய விமோசனத்துக்கான புரட்சி ஆணைச்சபையின் சதியைத் தொடர்நது நாட்டின் உயிர்த்துடிப்பான தொழிலாளர் இயக்கம் அழிக்கப்பட்டது. * தொழிலாளர் சங்கங்கள் தடைசெய்யப்பட்டன. தொழிலாளர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். டிசெம்பர் 1989ல் நோயாளிகளின் நலனை மிகவும் பாதிக்கும் அரசாங்கக் கொள்கைகளுக்கு எதிராய் அமைதியாய் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுமாறு மருத்துவர்கள் அழைப்பு விடுத்த பிறகு அம்முயற்சி மிருகத்தனமாக முறியடிக்கப்பட்டது நாலு மருத்துவர்கள் இராணுவ நீதிமன்றத்தின் முன் கொண்டுவரப்பட்டு "அரசுக்கு எதிராகப் போர் தொடுத்ததாகக்” குற்றஞ்சாட்டப்பட்டனர். வேலைநிறுத்த நடவடிக்கையில் இறங்குவதாகத் தீர்மானம் நிறைவேற்றிய இருபது நிமிடக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய மருத்துவ மாமூன் ஹசைன் சர்வதேச எதிர்ப்பு காரணமாய் மாமூனின் மரணத்தண்டனை கைவிடப்பட்டது. அவர் சிறையிலிருந்து விடுதலைசெய்யப்பட்டார். இவ்வழக்கு விசாரணையைத் தொடர்ந்து டசின்கணக்கான தொழிற்சங்கவாதிகள் சிறையில் தள்ளப்பட்டனர். அவர்களில் அநேகர் பயங்கரமான "பேய்வீடுகளில்" சித்திரவதை செய்யப்பட்டனர். பின்னர் மார்ச் 13, 1990ல் கைது செய்யப்பட்ட மருத்துவ சங்கத் தாலைவர் அலி ஃபதுல் சித்திரவதையால் கொல்லப்பட்டார். சித்திரவதையின் போது தலையில் காயங்களேற்பட்டு மூர்ச்சையுற்றதும் ஒம்துர்மான் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர் மரணமானர். ஒதுக்குப்புற பாலைவன சிறையான ஸல்லாவில் பத்து மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த ஆசிரியர் சங்க உறுப்பினர் அப்துல் சல்மான் மோசமான இதயநோய்க்கு தொடர்ந்து வைத்திய உதவி மறுக்கப்பட்டு ஜனவரி 1991ல் வைத்திய சாலையில் இறந்தார்.
சதியைத் தொடர்ந்து, தடைசெய்யப்பட்ட சங்கங்களின் விவகாரங்களை நடத்துதற்கும் அவ்ற்றின் சொத்துக்களை சுவீகரித்துக் கொள்வதற்கும் அரசாங்கம்செயற்குழுக்களை நியமித்தது. தொழிலாளர் விவகாரங்களைக் கவனித்துக் கொள்வதற்கு அரசினால் நியமிக்கப்பட்டோரின் ஆதிக்கத்திலுள்ள தனியொரு தொழிற்சங்கத்தை உருவாக்குவதற்கு அது திட்டமிட்டுவருகின்றது.
நைஜீரியாவில், குறைந்த பட்ச சம்பளமேனும் வேண்டுமென முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து குவாரா
154. பார்க்கவும் ஆபிரிக்கா கண்காணிப்பு : “சூடானில் அரசியல் கைதிகள், தொழிற்சங்கவாதிகள்" ஆபிரிக்கா வாட்ச் செய்தி ஜனவரி 1990. அத்துடன் தொழிலாளர் உரிமைகள் பற்றி அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியிடம் ஆபிரிக்கா கண்காணிப்பு சமர்ப்பித்த விண்ணப்பம், மே, 1990.
137

Page 73
மாநிலத்தில் ஜெப்பாவிலுள்ள நைஜீரிய கடதாசி ஆலைத்தொழிலாளர்கள் காட்டிய அமைதியான எதிர்ப்பு ஏப்ரில் 4,1991ல் பொலிஸினால் வன்முறையால் நசுக்கப்பட்டது. * தொழிலாளர் மீது பொலிஸ் கண்ணிர்ப்புகையைப் பிரயோகித்தது. அதன் பின் துப்பாக்கிப் பிரயோகஞ் செய்தது. இதனால் எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்து கொண்டோர் நால்வர் மடிந்தனர். இன்னும் அநேகர் காயமுற் றனர். இக்கொலைகளுக்காக பொலிஸ் படையைச் சேர்ந்த எவருமே தண்டிக்கப்படவில்லை.
சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காகத் தொழிற் சங்கத் தலைவர்கள் கைது செய்யப்படுவரென்றும், தடுத்துவைக்கப் படுவரென்றும் அச்சுறுத்தப்படுகின்றனர். மார்ச் 1991 முதல் 1992 வரை ஓராண்டு காலத்தில் 2000 பேர் தடுக்கப்பட்டுள்ளதாக ICFTU வின் வருடாந்த மதிப்பீடு குறிப்பிடுகின்றது.
இந்த மதிப்பீடு முழுவதும் குறிப்பிட்டுள்ளது போல், தனிப்பட்ட தொழிலாளர் களுக்குப் பார துTரமான பொருளாதாரத் தாக்கத்தையுண்டுபண்ணும் இன்னொரு விதமான துன்புறுத்தல் சீரான தொழில் முறைச் சூழ்நிலை உருவாக்கப்படல் வேண்டுமென கோரிக்கையெழுப்பினால் தொழிலாளர்களின் வேலைப்பறிபோகும் என்பதாகும் பயமுறுத்தலாகும். மார்ச் 1991 முதல் வரை 50,000 தொழிலாளர் வேலை நீக்கஞ் செய்யப்பட்டுள்ளனரென ICFTU அறிக்கை குறிப்பிடுகின்றது. பெரும்பாலும் இவர்கள் சட்டபூர்வமான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக பன்னாட்டுக் குழுக்களால் பொதுவாகப் பெருந்தொகையில் வேலை நீக்கஞ் செய்யப்பட்டோராவர்.
புலம் பெயர் தொழிலாளர் மீது கட்டுப்பாடுகள்.
புலம் பெயர்ந்து புரியும் தொழில் உலகெங்கிலுமுள்ள பல இலட்சக்கணக்கான வறிய மக்களின் வருவாய்க்கு முக்கிய ஆதாரமாய் விளங்குகின்றது. குறிப்பாக இன்னொரு நாட்டில் விருந்துத் தொழிலாளர்களாய் வேலை செய்யும் போதும புலம் பெயர் உழைப்பாளிகள் கேவலமாய் நடத்தப்படுகின்றனர். ஒரு சில உரிமைகளே அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. குற்றச் செயல்கள் வேலையின்மை போன்ற பிரச்சினைகளுக்கு அவர்கள் பலிகடாக்களாக்கப் பட்டு பழி சுமக்க வேண்டியுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கெதிரான மோசடி
155. மனித உரிமைகள் பாதுகாப்புக்குழு, ஆண்டறிக்கை 1991.
138

பட்டியல் நீண்டதொரு ஆவணமாய் மாறிவிடும் இம்மோசடிகளை நேரடியாய்ப் பஞ்சத்தை உருவாக்கிய விவகாரங்களை மட்டும் இங்கு ஆராய்வோம்.
மொசாம்பிக்கைச் சேர்ந்த நூறாயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களும் அகதிகளும் தென்னாபிரிக்காவில் காணப்படுகின்றனர். அவர்கள் தரங்குறைந்த தொழில்களில் ஈடுபட்டு அற்பக் கூலியைப் பெறுகின்றனர். என்ற போதிலும் மொசாம்பிக்கின் குறிப்பாக நாட்டின் தென்பகுதியின் மொத்த வருவாயில், இவர்களது சம்பாத்தியம் கணிசமான பங்களிப்பாகும். மொசாம்பிக் பஞ்சத்தால் பாதிக்கக் கூடிய சாத்தியப்பாடு நிலவுவதற்கு முக்கிய காரணிகளில் ஒன்று தென்னாபிரிக்காவில் இத்தொழிலாளர்கள் அனுபவிக்கும் கொடுமைகளாகும். அங்கு அவர்களுக்கு எத்தகைய தொழிற்பாதுகாப்பும் இல்லை ஒரு சில உரிமைகளே அவர்களுக்குண்டு. புலம் பெயர்ந்த தொழிலாளர்களைத் தன்னிச்சைப்படி வெளியேற்றும் உரிமை அரசுக்குண்டு பல சந்தர்ப்பங்களில் அரசு அவ்வாறு செய்துள்ளது. மொசாம்பிக் எல்லை வழியாக அது மின்சாரம் படக்கூடிய வேலியமைத்துள்ளது. எல்லையைத் தாண்ட முயற்சித்தோர் விதிவிலக்கின்றி இதற்குப் பலியாகியுள்ளனர். தென்னாபிரிக்காவில் உள்ள பெரும்பாலான மொசாம்பிக்குகள் அகதிகளாக வர இவர்கள் உள்நாட்டு யுத்தத்தின் போது அல்லது இருதரப் பரினரதும் துன்புறுத்தல் களுக்கான காரணமாக அஞ்சியோடியோராவர், இது எவ்வாறிருப்பினும் 1951ம் ஆண்டின் அகதி உடன்படிக்கையில் தென்னாபிரிக்கா கைச்சாத்திடவில்லை. அகதிகளுக்கான ஐக்கிய நாட்டுத் தூதுவர் (UNHCR) நாட்டிலுள்ள அகதிகளுக்கு பாதுகாப்போ, உதவியோ வழங்குவதற்குத் தென்னாபிரிக்கா அனுமதிப்பதில்லை, தென்னாபிரிகாவில் நீவாந்திர வாசத்திலிருந்துத் திரும்பிச் செல்வோருக்கான திட்டமொன்றை மேற்கொள்வதற்கு மாத்திரமே அது ஐக்கிய நாட்டுத் தூதுவருக்கு (UNHCER) அனுமதியளிக்கின்றது. எனவே இவ்வகதிகளுக்குச் சர்வதேச உதவியுமில்லை பாதுகாப்புமில்லை பொருளாதாரச் சுரண்டலுக்கும், மனித உரிமைகள் மீறப்படுவதற்கும் இவர்கள் ஆளாகின்றனர். பண்ணைகளிலும், வீட்டுப் பணிகளிலும் மொசாம்பிக்குள் அடிமைத்தனத்துக்கு நிகரான நிலைமையில் வேலை செய்து மாய்வது ஆவணங்களில் பதிவாகியுள்ளது. எத்தகையச் செலவுமின்றித் தொழிலாளர் கிடைப்பதென்பது பொதுவாக சம்பளவீழ்ச்சியையும் வேலைவாய்ப்பு உறுதியின்மையையுங் குறிக்கும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் சம்பள வீழ்ச்சி மொசாம்பிக் மேலும் வறுமையில் வீழக் காரணமாகின்றது. இறுதியில் அகதிகளும் சாதாரணப் புலம்பெயர்த் தொழிலாளர்களும் தென்னாபிரிக்காவிலிருந்து
139

Page 74
விதிக்கட்டுபாடின்றி வெளியேற்றப்பட்டு தொழிலாளியினதும் அவனது குடும்பத்தினதும் வயிற்றில் அடி விழுந்து குடும்பத்தின் துன்பச் சுமை இன்னும் அதிகரிக்கின்றது.
ஒரு வறிய கிராமப்புற பொருளாதாரத்தில் தான்தோன்றித்தனமாய் தலையிட்டு அநாவசியப் பஞ்சத்தை உருவாக்குவது எப்படி என்பதற்கு முன்னாள் எத்தியோப்பிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் எப்போதும் போல சரியான பாடமொன்றைக் கற்றுத் தருகின்றன. 1970 களில் எத்தியோப்பிய கிராமப்புறத் தொழிலாளர் வியாபாரப் பொருட்கள் உற்பத்தியாகும் பண்ணைகளிலும், கோப்பித்தோட்டங்களிலும் செல்வம் படைத்த விவசாயிகளின் சிறுநிலங்களிலும் தனிநபர் கூலிக்கமர்ந்து உரிமையை இல்லாமல் செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டு இடைக்கிடை நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் வசதிபடைத்த விவசாயிகள் தொழிலாளரை வேலைக்கு அமர்த்துவது நிறுத்தவதற்கு வழி வகுக்கப்பட்டது. தொடர்ச்சியான அரசாங்க முட்டுக்கட்டைகள் மூலம் தொழிலாளர் புலம்பெயர்தல் தடுக்கப்பட்டது பணய அனுமதிப் பத்திரமின்றி பயணஞ் செய்து அகப்பட்டுக் கொண்டோர் தடுத்து வைக்கப்பட்டனர். அல்லது அவர்களின் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 1980 களின் தொடக்கத்தில் தொழிலாளர் புலப்பெயர்வு ஒரேயடியாய் நின்று விட்டது. கிராமப்புற வறியமக்கள் வருவாய்க்கான முக்கியமாதோர் வழி முறையை இழந்தனர்.
1971ல் கிழக்குப் பாகிஸ்தானில் நடந்த உள்நாட்டு யுத்தத்திலிருந்த வேறுவகை உதாரணமொன்று கிடைக்கின்றது. பங்களாதேஷ் உருவாவதற்கு வழிவகுத்த யுத்தத்தைத் தொடாந்து நகர்புறத் தொழிலாளர்களது வேலை நிறுத்தங்கள் வெடித்துக் கிளம்பின. இத்தொழிலாளரில் பெரும்பாலானோர் நாட்டுப் புறங்களிலிருந்து புலம் பெயர்ந்தோராவர். யுத்தம் வெடித்துக் கிளம்பியமையால், அரசாங்க நிறுவனங்களிலும், பாரிய வர்த்தக நிலையங்களிலும் வேலை செய்த ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையிலிருந்து வெளியேற்றப் பட்டு சொந்த ஊர்களுக்குத் திரும்புமாறு நிர்ப்பந்திக்கப்பட்டனர். ஏனையோர் தொழில்பார்த்த பகுதிகளில் நிகழ்ந்த ஆயுத மோதல்கள் காரணமாய் வேலையிழந்தனர். இதன் விளைவாய் நேர்ந்த பெருந்தொகை புலம்பெயர்வு கிராமப் புற வருவாயை படுமோசமாய்ப் பாதித்தது மட்டுமன்றி (வாந்திபேதி நோய்) வியாதிகள் பரவுதற்கும் காரணமாயிற்று யுத்தமும் 1970இல் ஏற்பட்ட சூறாவளியும்
140

பஞ்சத்தையுண்டு பண்ணியது. இப்பஞ்சம் 500,000 மக்களை உயிர்ப்பலி கொண்டிருக்கலாம். *
: : : : :
இவ்வறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ள ஏனைய விவகாரங்கள் போலவே அடிப்படை குடியியல் அரசியல் உரிமைகள் மறுக்கப்படலானது - இவ்விடயத்தில் சங்கமமைக்கும் இடம் பெயரும் சுதந்திரம் ஜனநாயகப் பொறுப்புணர்வு முதலியன - தொழிலாளர்களது பொருள் வசதி கொண்ட நலவாழ்வில் நேரடியான எதிர்மறை தாக்கத்தையுண்டுபண்ணியுள்ளது. சங்கமமைக்கும் சுதந்திரம் என்பது அரசாங்கங்கள் தமது சொந்த விருப்பின் பிரகாரம் மட்டும் வழங்கக் கூடியவொரு சலுகையன்று இவ்வுரிமை வாழ்வுக்கும் சாவுக்குமிடையிலான கெளரவத்துக்கும் அவமானத்துக் கமிடையிலான வறுமை விளிம்புக்குமிடையிலான வித்தியாசங்களை குறிக்கும் நகர்ப்புறத்தையும் நாட்டுப்புறத்தையுஞ் சேர்ந்த ஏழைகள் தம் உடல்நலத்தையும், நல்வாழ்வையும் பாதுகாத்துக் கொள்வதற்கு சிலசமயங்களில் தம் உயிர்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஒரே வழி அமைப்பு முறையில் ஒன்று திரள்வதேயாகும் புலம்பெயர் தொழிலாளர்களைப் பொறுத்தமட்டில் பஞ்சத்துக்கும் வறுமைக்கும் எதிராக அவர்களுக்குள்ள ஒரே பாதுகாப்பு புலம்பெயரும் சுதந்திரமேயாகும்.
ஜனநாயக முறையில் மக்களுக்குக்காரணங்காட்டும் பொறுப்புணர்ச்சியும் சமூக பொருளாதாரப் பாதுகாப்பாக உதவமுடியும் வாழ்வூதியத்துக்குப் போதாத அற்பக் கூலியையும் பாதுகாப்பற்ற தொழில் நிலவரங்களையும் வழங்கி தொழிலாளிகள் தப்ப முயன்றால் பொறுப்பு வாய்ந்தவொரு அரசாங்கம் அவர்கள் மீது சட்ட நடவடிக் கையெடுத்து, பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்க முடியும் சங்கமமைக்கும் சுதந்திரம் இடம்பெயர்வதற்கான சுதந்திரம் அல்லது மக்களுக்குக் காரணங்காட்டும் பொறுப்பு வாய்ந்தவோர் அரசாங்கம் இன்றேல் வாழவூதியத்துக்கான உரிமை பற்றிய உறுதிப்பாடுகள் யாவும் அர்த்தமற்றவையாகும்.
156. ஜீ. கர்லின் எல். ஷென் எஸ்.பி. ஹராசைன்" ஜனனமரண நெருக்கடி கிராமப்புற
பங்களாதேஷ் ஜனனமரணங்கள் மீது, பங்களாதேஷ் உள்நாட்டு யுத்தம் உண்டுபண்ணிய தாக்கம், மக்கள்தொகை ஆய்வுகள், 30 (1976) பக். 87.
141

Page 75
(pl: 660dT ஒரு புறம் சில மனித உரிமைகளை அனுபவிப்பதற்கும், மறுபுறம் பஞ்சத்திலிருந்து விடுதலை, சமூக, பொருளாதார நல்வாழ்வு முதலியவற்றுக்குமிடையே காணப்படும் சில பிணைப்புகளை இவ்வறிக்கை தெளிவாகக் காட்டியுள்ளது. கருத்துச் சுதந்திரம் சங்கமமைக்கும் ஒன்று கூடும் சுதந்திரம், சுதந்திரமான தேர்தல்கள், இடம்பெயர்வுச் சுதந்திரம் குடியிருப்புச் சுதந்திரம் உட்பட சம்பந்தப்பட்ட உரிமைகள் மக்களுக்குக் காரணங்காட்டும் ஜனநாயகப் பொறுப்பு என்ற பொதுவான தலைப்பின் கீழ் அடங்கும்.
மனித உரிமைகள் சில மீறப்பட்டமை பஞ்சம் உருவாக்கியது அதனைத் தடுப் பதற்குப் போதிய நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படாமையால் பஞ்சம் அநாவசியமாய் வளரவிடப்பட்டது. என்பதை இவ்வறிக்கை காட்டியுள்ளது. 1958-61ல் சீனா, 1984 லும் 1990 லும் சூடான், எத்தியோப்பியா முதலியன அதிகார ஆணவம் படைத்த அரசாங்கம் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்குச் செவிசாய்க்காமல் நடந்து கொண்டபடியால் அநாவசியப் பஞ்சத்தை வளர விட்ட நாடுகளுக்கு உதாரணங்களாகும். இதற்கு நேர் மாற்றமாக, குடியுரிமைக்கும் அரசியல் உரிமைக்கும் மதிப்பளித்தல் மற்றைய நாடுகளில் பஞ்சத்துக்கு இட்டுச் சென்ற பொருளாதார வீழ்ச்சியேற்பட்ட போதும், ஒரு நாடு பஞ்சத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு உதவ முடியும் இந்தியாவும் பொட்ஸ்வானாவும் இதற்கு நல்ல உதாரணங்கள்.
அரசியல் உரிமைகள் மறுக்கப்படுவதால் உண்டாகும் சமூக பொருளாதார விளைவுகளுக்கு, பஞ்சம் மிகத் தெளிவானதோர் உதாரணம் மாத்திரமே. பசி, வீடின்மை, வேலையின்மை, கலாச்சாரத் தனித்துவத்தை இழத்தல், படுதரித்திர வறுமை முதலியன ஏனைய உதாரணங்களாம். எனவே குடியியல் அரசியல் உரிமைகள் என்பன ஒருவகையில் "ஆடம்பரப் பொருளாகும்” எனவே மக்களின் அடிப்படை பொருளாதாரத் தேவைகள் நிறைவேற்றப் பட்ட பின்பே இவற்றை அனுபவிக்கலாம் என்பதனை இவ்வறிக்கை தவறென நிரூபிக்கின்றது. ஒருவகையில் மனித உரிமைகள் மீது அடிப்படை பொருளாயத் தேவைகள் முன்னுரிமை பெறுகின்றன என்ற கருத்து பொதுவாக நிலவி வருகின்றது. எனினும் ஒவ்வொன்றாய் இவ்வறிக்கையில் காட்டப்பட்டுள்ள விவகாரங்கள், இவ்வாதம் செல்லுபடியானதென்பதை துலாம்பரமாய்க் காட்டுகிறது. அடிப்படை சமூக, பொருளாதார உரிமைகளை அனுபவிப்பதும் குடியியல் அரசியல் சுதந்திரங்களை அனுபவிப்பதும் பிரிக்க முடியாத ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்ததாகும்.
142

சட்டத்தின் மூலம் மனித உரிமைகளுக்கான நடேசன் நிலையம் இந்தத்துறையில் ஈடுபட்டு இருக்கும் நிறுவனங்களும் சட்டத்தரணிகளுக்கும் பிறருக்கும் ஒரு நுாலகத்தையும் ஆவணக்கோர்ப்பையும் பிற தகவல்களையும் அளித்து வருகிறது.
இலங்கையின் மாபெரும் மனித உரிமைகள் சட்டவல்லுநர் அமரர் சோ.நடேசன் (Q.C) நினைவுச்சின்னமாக இந்த நிலையம் பெயரிடப்பட்டுள்ளது
தலைவர்: குணசேகர செயலாளா றதிக்கா குமாரசாமி, சூரியா விக்கிரமசிங்க பொருளாளர்: சித்தி சிருச்செல்வம்

Page 76
குடியியல் அரசியல் உரிமைகை வளர்ச்சியையும் பசிப்பிணியை ஒழிப் I6 அரசாங்கங்களின் வாதம் அை உலகின் பல பாகங்களிலிருந்தும்ப
குடியியல் அரசியல் உரிமைக பசிபட்டினியும் சுகக்குறைவும் முழுச் எடுத்துக் காட்டுகிறது.
இவ்வறிக்கை நான்கு முக்கிய அ காணி சுற்றாடல் பாதுகாப்பு தொழி அரசியல் கொள்கைகள் (கெனியா, இருப்பவர்களை வெளியேற்றுதல் AIDID IG II), g) II
நோக்குகையில் பல அவலங்கை
ན་མ་ முறைகளையும் பொதுஜன வி
தவிர்த்திருக்க முடியும் என்பதையும்
 

ப் பேணுவதற்கு முன் பொருளாதார துமே முதலிடம் பெறவேண்டும் என்பது த இந்த அறிக்கை ஏற்க மறுக்கிறது. உதாரணங்களை மேற்கோள் காட்டி ள் மறுக்கப்பட்டதால் மரணமும் சமூகத்தையுமே பாதிக்கிறது என்பதை
ம்சங்களை பரிசீலிக்கிறது சரித்திரம், உதாரணங்களாக அரசிற்கு எதிரான பர்மா) காரணமாக நகர்புற சேரிகளில் த்தியோப்பியா, மாலி, தென்னாபிரிக்கா) இடம்பெயர் தொழிலாளர்களையும் யைத் தாங்கொணாநிலைக்கு தள்ளுவது
இந்த அறிக்கை அவர்கள் சங்கம் கர்ப்புற கிராமப்புற தொழிலாளர்களின் வூதியத்திற்கு போதுமான சம்பளத்தை இவ்வறிக்கை காட்டுகிறது. சுற்றாடலை அரசின் கொள்கைகளையும் நெறி ர்சனத்துக்கு உட்படுத்துவதால் இவ்வறிக்கை நிரூபிக்கிறது.
ộngoao 75.00 BLIR
ed arumaratne & Sons Ltd.