கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புவி வெளியுருவவியல்

Page 1
圈
*
 


Page 2

| புவிவெளியுருவவியல்
தத்துவங்கள்
* 、
ஆக்கியோன் த தியாகராசா I J BA (Ma) B. A (spe) di Dip, in Ed, (Cey
★ శిలి ീ ாழ்ப் பிள
식을 A c, 124 பிரதான வீதி, கொழும்புத்துறை,
Tjü Ê

Page 3
முதற்திப்பு புதிய பதிப்பு சித்திரை 1998.
All Rights Reserved J the Author
சகல உரிமைகளும் நூலாசிரியருக்கே
"り 27500
 

உயர் வகுப்புகளில் புவியியலைக்கற்கும் மாணவர்கள், கற்பிக்கும் ஆசிரியர்கள், மற்றும் பல்கலைக்கழகத் தேர்வு களுக்குத் தோற்றும் மாணவர்கள் ஆகியோருக்குப் பயன் டக் கூடியதாக 1968ல் எம்மால் வெளியிடப்பட்ட இந் நூல் பரவலான வரவேற்பைப் பெற்றிருந்தும் இதனைக் காலத்திற்கேற்ற வகையில், அண்மைக்கால ஆய்வுகளின் முடிவுகளைத் தழுவிப் புதுப்பித்து வெளியிடவேண்டு மென்ற அவா சந்தர்ப்பசூழ்நிலை காரணமாக நிறைவேற வில்லை. ஆயினும், நீண்டகால இடைவெளிக்குப் பின்னர், பல இடர்ப்பாடுகளுக்கிடையிலும் இந்நூலைப் புதுப்பித்து, மேலும் விரிவாக்கி இவ்வாண்டு வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.
பல்கலைக்கழக B.A தேர்வுக்குரிய பாடத்திட்டத்தைத் தழுவி எழுதப்பட்ட இந்நூல் வெளிவாரி மாணவர்க்கும், ஆசிரியர்களுக்கும் பெரிதும் பயன்படுமென நம்புகிறேன். எனவே ஆசிரிய, மாணவ உலகு இதனை முன்போல் வரவேற்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
இந்நூலைக் கண்ணுறும் அறிஞர்கள் இதில் ஏதாவது கருத்துப் பிழைகள், குறைபாடுகளிருப்பின் அவற்றைச் சுட்டிக்காட்டினால் இதனைத் திருத்தி அதிக பயனுடைய தாக்கி வெளியிட உதவும் என்பதை அறியத்தருகின்றேன்.
இறுதியாக இப்திப்பில் புதிதாகச் சேர்க்கப்பட்ட சில பகுதிகளைப் பார்வையிட்டுப் பயனுள்ள சில திருத்தங்கள் செய்வதற்கு உதவிய யாழ். பல்கலைக்கழகப் புவியியற் றுறையைச் சேர்ந்த பேராசிரியர் S. பாலச்சந்திரன், முன்னாள் உதவி விரிவுரையாளர் G. றொபேட் ஆகியோருக் கும், இந்நூலை வெளியிடுவதற்கு ஊக்கமும் உற்சாகமு மளித்த உதவி விரிவுரையாளர்கள் K. இராஜேந்திரம், R. சிவச்சந்திரன் ஆகியோருக்கும், உசாத்துணை நூல்கள், சஞ்சிகைகளைப் பார்வையிட அனுமதித்த யாழ் பல்கலைக் கழக நூலகருக்கும் எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். 蠶
யாழ்ப்பாணம், தி தியாகராசா

Page 4
GL ாருளடக்கம்
அத்தி, Låg, to
.
ஞாயிற்றுத் தொகுதியும் புவியும் 20 ஞாயிற்றுத் தொகுதியும் புவியும் உருவாகிய முறை. பழைய, புதிய கருதுகோள்கள்.
புவியின் உருவம் சமநிலைத் தன்மை 21 - 26
சமநிலைத்தன்மையின் தாற்பரியம் சமநிலை ஈடுசெய்தல்
புவியின் அமைப்பும் உட்பாகமும் 27 6 4 سنة உள்ளமைப்பை அறிய உதவும் சான்றுகள்: புவிநடுக்கவியற் சான்றுகள் புவியின் படையமைப்பு: புவியின்உட்பாகவெப்ப அமுக்க நிலைமைகள் புவியின் காந்தக்களம் இயங்கும் முறை காந்தக்கள முரண்பாடுகள் எஞ்சும் காந்தம்; இரு முனைவில்லாக்களம்
புவியோட்டின் ஆக்கம் 47.75
பாறைகள் உருவாகும்முறை பாகுபாடு; பண்புகள்
தகட்டசைவு, கீழடங்குவலயம்; மாறுகுறைகள் முச்சந்திகள் கடலடித்தரை பரவல்; சான்றுகள்; விசைகள்; தகட்டு விருத்திக் கோட்பாடு, குறை நிறைகள்.
கண்டநகர்வு 90 - O வெகினரின் கருதுகோள்: சாதகமான சான்றுகள்; பாஞ் சியாவிற்கு முந்திய நகர்வு, பெருங்கண்டவட்டங்கள்
1129 سے 111111 எரிமலை வெளியேற்றும் பொருட்கள்; எரிமலை நில வுருவங்கள் பிளவுக்கக்குகை; வெப்பமையங்களும் இடை யோட்டுத்தாரைகளும்; வெப்பமையங்களின் பரம்பல்
நிலத்தேய்வு 量30。量44 வானிலையாலழிதல்: பாதிக்கும் காரணிகள் பொறிமுறை பழிவு இரசாயனமுறையழிவு; உயிரினங்களின் பங்கு திரளசைவுகள்

9 D 145 - 167 சேர்க்கை மண்ணாக்கக் காரணிகள்; பண்புகள் செயல் முறைகள் வகைப்படுத்தல்; மண்ணரிப்பும் மட்பாதுகாப்பும்
10. சாய்வுகள் | 6 7 178 سن
சாய்வுகள் பற்றிய ஆய்வுகள் அணுகு முறைகள் பெங், கிங், டேவிஸ் ஆகியோரின் கோட்பாடுகள்
புவியசைவுகள் 179 - 190
இழுவிசை, அமுக்கவிசை அவற்றின் விளைவுகள் குறைத்தடை மலைகள் பாறைப் பிதிர்வுகள் பிளவுப்பள்ளத்தாக்குகள்
மலையாக்க அசைவுகள் 191 - 202 மலையாக்கம்; மலையாக்க வலயங்கள்; புவிக்கீழ்மடிப்புகள் முன்னிலம்; பின்னிலம் மலையாக்க மாதிரிகைகள்
புவி நடுக்கங்கள் 203 - 2, 12 வகை; காரணங்கள் புவிநடுக்கவலயங்கள் புவி நடுக்கங் களின் விளைவுகள் பாதுகாப்பு நடவடிக்கைகள்
கண்டங்களும் சமுத்திரங்களும் 213 - 230. தோற்றம் பற்றிய பழைய கருத்துக்கள்; புதிய கருத்து சமுத்திரவடிநிலங்களின் தோற்றம் அமைப்பியல்புகள் கண்ட ஓரங்கள்; அத்திலாந்திக்வகை பசிபிக் வகை
ஆற்றின் செயலும் நிலவுருவங்களும் 23, 246 ஆற்றின் செயல்கள்; நிலவுருவங்கள், வெள்ளச்சமவெளி, கழிமுகங்கள், பொங்கு முகங்கள் வண்டல் விசிறிகள்
ஆற்றுத்தொகுதியின் விருத்தி 247 l. 258 வடிகால் விருத்தி ஆற்றுச்சிறை மடிக்கப்பட்ட பாறைப் பிரதேசங்களின் நிலவுருவ விருத்தி; மேலமைந்த வடிகால் முந்தியவடிகால்
பள்ளத்தாக்குகளின் உருவியல் 259 - 275 நெடும்பக்கப்பார்வை, ஒரு சீரியக்கம்; சமநிலைப்பக்கப் பார்வை; குறுக்குப்பக்கப்பார்வை ஆற்றுவாய்க்கால்களின்
உருவம் மியாந்தர்களின் உருவவியல்

Page 5
18.
9.
2.
22.
23.
பிழை திருத்தம்
உசாத்துணை நூல்களும் சஞ்சிகைகளும்
அரிப்பு HJ d N 276 94 2 ܚ அடிப்படைக்கருத்துக்கள் இளமை, முதிர்ச்சி, முதுமை நிலைகள் அரிப்பு வட்டத்தில் குறுக்கீடுகள்; நேரசைவுகள் எதிரசைவுகள்; விளைவு க ள். புவிவெளியுருவவியலில்
வட்டக்கோட்பாடு
தரைக்கீழ்நீர் 295 - 310
வகை: சேர்க்கை உட்புகவிடுதன்மை நுண்டுளைத்தன்மை
நீரூற்றுக்கள்; வெப்பவூற்றுக்கள்; கொதிநீரூற்றுக்கள்
சுண்ணாம்புப் பாறைப்பிரதேசங்களின் நிலவுருவங்கள்
பனிக்கட்டியாற்றின் செயலும் நிலவுருவங்களும்
340 سي 1 31 |
பனிக்கட்டியாறுகள் உருவாகும் முறை வகை மேற்பரப்
பியல்புகள் பாயும் முறை ; பனிக்கட்டியாற்றரிப்பு: பள்ளத் தாக்குப் பணிக்கட்டியாற்று நிலவுருவங்கள் கண்டப்பனிக் கட்டி யாற்றரிப்பும் படிவு நிலவுருவங்களும் பனிக்கட்டி யாற்றுக் காலங்கள்; பனியுகங்கள் ஏற்பட்டதற்குக் காரணங்கள் “
காற்றின் செயலும் நிலவுருவங்களும் 341 .. 355 கர்ற்றின் செயல்கள்; காற்றரிப்பால் உருவாகும் நிலவுரு வங்கள் மணற்பாலை; நிலப்படிவு நிலவுருவங்கள் மணற் குன்றுகள் பாலை நிலங்களில் நீரின் செயல் சரிவுச்சமதளங்
அலைகளின் செலும் நிலவுருவங்களும் 356 - 375 அலைகளின் அசைவுகள்; அலைகளின் வகை செயல்கள் கடற்கரைப் பக்கப்பார்வை அமிழ்ந்திய கரையின் விருத்தி வெளிப்பட்டகரையின் விருத்தி; கரைகளின் வகைகள்
புவிவெளியுருவவியலில் புதியகருத்துக்கள் 376 - 389 இயக்கச் சமநிலைக் கோட்பர் டு அரிப்பு நிலப்பரப்புகள் - செதுக்கற் சமநிலம் தளச் சமநிலம்: ஆறரித்த சமவெளி
 


Page 6
இந்நூலின் வருவாய் கொழும்புத்துறை பரீ சந்திரசேகரப் பிள்ளையார் கோயில் இராசகோபுரத் திருப்பணிக்குச் செலவிடப்படும்.
- நூலாசிரியர் -
 
 

அத்தியாயம் 11 ܚ ஞாயிற்றுத்தொகுதியும் புவியும்
1 ஞாயிற்றுத் தொகுதி !
ஞாயிற்றை மையமாகக் கொண்டு அதனைச் சுற்றி வரும் புதன் முதல் புளுற்றோ வரையுள்ள 9 கோள்கள் 43 துணைத் கோள்கள், சிறுகோள்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய அமைப்பே ஞாயிற்றுத் தொகுதியாகும். ஞாயிறு ஒரு உடுவாகும். கோட் டொகுதியின் திணிவில் 98 8% ஞாயிற்றிலேயே காணப்படுகிறது. ஆயினும் ஞாயிறு ஒரு வாயுக்கோளமாகும். அதில் 74% ஐதரச னும், 23% கீலியமும் கலந்து காணப்படுகின்றன. இதனால் அதன் அடர்த்தி புவியின் அடர்த்தியிலும் பங்காயுள்ளது. ஞாயிறு மெதுவாகச் சுழன்று கொண்டிருக்கின்றது. அதன் மத்திய கோட்டிலுள்ள ஒரு புள்ளி 24, 8 நாட்களிலும் (நமது) 45° யிலுள்ள ஒரு புள்ளி 2806 நாட்களிலும் ஒரு தடவை (தன்னைத் தானே) சுற்றி வருகிறது. இவ்வாறு ஞாயிறு மெது வாகச் சுழலும் போது கோள்கள் அதிக வேகமாகச் சுழன்றபடி ஞாயிற்றையும் சுற்றுவதனால் ஞாயிற்றுத் தொகுதியின் கோணத் திணிவு வேகத்தில் 98% வரை கோள்களிலேயே காணப்படு கிறது. ஞாயிற்றிலுள்ள வாயுக்களின் தொழிற்பாட்டினால் ஒளி யும் வெப்பமும் பிறக்கின்றன. அதன் வெளிப்பகுதியில் 6000° C அளவான வெப்பம் நிலவுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கோட்டொகுதியில் புதன், புவி, செவ்வாய், வெள்ளி என்னும் நான்கையும் உட்கோள்கள் எனவும், வியாழன், சனி, யூறானஸ், நெப்ரியூன், புளுற்றோ என்னும் ஐந்தையும் வெளிக் கோள்களெனவும் குறிப்பிடுவர் உட்கோள்கள் கற்பாங்கானவை யாதலின் அவற்றின் அடர்த்தி அதிகமாகவும் திணிவு குறை

Page 7
2 புவிவெளியுருவவியல்
வாகவுமுள்ளது வெளிக்கோள்கள் வாயுப் பாங்கானவையாதலின் அவற்றின் அடர்த்தி குறைவாகவும் திணிவும் பருமனும் அதிக மாகவும் உள்ளன. கோள்கள் ஞாயிற்றின் ஈர்ப்புவிசைக்குக் கட்டுப்பட்டு நீ ன் வட் ட ப் பாதைகளில் அதனைச் சுற்றி வருகின்றன அதே சமயம் அவற்றிடையும் ஈர்ப்பு விசை செயல் படுகிறது. கோள்களில் வெள்ளியைத் தவிர ஏனையவை, ஒரே திசையில் ஞாயிற்றைச் சுற்றி வருகின்றன. அவற்றில் புதன், வெள்ளி என்பவற்றைத் தவிர ஏனையவை துணைக்கோள்களுட னும் காணப்படுகின்றன. கோள்களில் பெரியது வியாழன்; சிறியது புளுற்றோ. வியாழனும் சனியும் தனித்தனி 16 துணைக் கோள்களையுடையவை.
டி 5 9
படம் : 1 ஞாயிற்றுத் தொகுதி
வியாழன், 2. சனி, 3. யூறானஸ் 4. நெப்ரியூன் 5. புவி, 6. வெள்ளி, 7. செவ்வாய், 8. புதன், 9. புளுற்றோ
2 ஞாயிற்றுத் தொகுதி உருவாகிய முறை : ஞாயிற்றுத் தொகுதி உருவாகிய முறை பற்றி அறிவியலாளர்
களிடையே நீண்ட காலமாகக் கருத்து வேறுபாடு நிலவியது ஆனால் கழிந்த கால் நூற்றாண்டில் விண்வெளி ஆய்வுகளில் ஏற்
 

ஞாயிற்றுத் தொகுதியும் புவியும்
பட்ட முன்னேற்றத்தின் காரணமாக இன்று இவ்விடயத்தில் கணிசமான கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது. அண்மைக்கால ஆய்வுகளின் முடிபின்படி, ஞாயிற்றுத் தொகுதியானது ஒரு * ஞாயிற்றுப் புகையுரு மு கி லி லி ரு ந் து ( Solar Nebulia ) பிறந்தது. அப்புகையுரு முகில் ஒரு பெருநவா (Super Nova) வெடித்தபோது ஏற்பட்ட அதிர்வலைகளின் விளைவாக வான் வெளியிற் காணப்பட்ட வாயுக்களும் தூசியும் அடர்ந்து திரண்ட தனால் உருவாகியதாக நம்பப்படுகிறது. இனி இப்புதிய கருது கோளை ஆராய முன்னர் சில பழைய கருதுகோள்களை நோக்கு Gorriño.
1 : 3. கான்ற்-லாப்பிலஸ் வான் புகையுருக் கருதுகோள்: வான் புகையுருவின் அடிப்படையில் ஞாயிற்றுத் தொகுதி யின் பிறப்பை விளக்கும் ஒரு கருதுகோளை 1755 இல் ஜேர்மனி யரான கான்ற் என்பவர் முதலில் வெளியிட்டார். அவருக்குப் பின்னர் 1796 இல் லாப்பிலஸ் என்னும் பிரான்சியர், அடிப் படை அமிசங்களில் அதிலிருந்து அதிகம் வேறுபடாத தமது வான்புகையுருக் கருதுகோளை வெளியிட்டார்.
கான்ற், வான்வெளியிற் காணப்பட்ட கடினமான, குளிர்ந்த, தொல்காலச் சடப் பொருட்கள் (துணிக்கைகள்) தமது ஈர்ப்பு விசை காரணமாக ஒன்றுடனொன்று மோதியதனால் காலப் போக்கில் வெப்பமான ஒரு வான்புகையுருவாகத் திரண்டன எனக் கூறினார். அவ் வான்புகையுரு சுழன்று கொண்டிருந்த தினால் அதில் மையநீக்கவிசை அதிகரித்ததென்றும், அதன் விளைவாக அது தனது மத்திய கோட்டுப் பகுதியிலிருந்து கருப் பொருட்களை வளைய வடிவில் வெளியே வீசியதென்றும் அவ் வாறு வீசப்பட்ட பொருட்கள் ஒடுங்கல் முறையில் கோள்களாக உருவாகியதாகவும் அவர் விளக்கினார். பின்னர், கோள்களும் முன் கூறப்பட்ட முறையில் வளைய வடிவாகக் கருப்பொருட் களை வீசியபோது, அவை துணைக்கோள்களாகின. அதே சமயம் வான் புகையுருவின் மத்திய பகுதியில் ஞாழிறு உருவாகியது. சடப் பொருட் துணிக்கைகளின் மோதுகையினால் வான்புகையுரு சுழன்றதாக கான்ற் கூறியது "கோணத்திணிஜ வேகக்காப்புக் கொள்கைக்கு எதிரானதாயிருப்பதனால் அவரது கருதுகோளுக்கு ஆதரவு கிடைக்கவில்லை,

Page 8
4 புவிவெளியுருவவியல்
லாப்பிலஸ் வான்புகையுருவின் தோற்றம் பற்றியோ அதன் சுழற்சிக்கான காரணம் பற்றியோ எதுவும் கூறவில்லை. அவர் வானில் சுழன்றபடி காணப்பட்ட வெப்மான ஒரு வான்புகையு ருவிலிருந்தே ஞாயிற்றுத் தொகுதி உருவாகியத்ென விளக்கினார். அவ்வான் புகையுரு அடர்த்தியான மையத்துடன் யூறானஸ் காணப் படும் எல்லைக்கு அப்பால் விரிந்தும் காணப்பட்டதாக அவர் கூறி னார். பின்னர் அது படிப்படியாகக் குளிர்ந்து சுருங்கிய போது அதன் சுழற்சி வேகம் கூடியது. இதனால் மையநீக்க விசை அதிகரித்தது. இதன்மேல் அ வ் வி  ைச மையநாட்ட (ஈர்ப்பு) விசைக்குச் சமனாகியபோது வான்புகையுருவின் மத்திய கோட் டுத்தளத்திலிருந்து வளையவடிவில் கருப் பொருட்கள் விலகித் தாமும் சுழலத் தொடங்கின. இதன் மேல் புகையுரு மேலும் சுருங்கியபோது வளையவடிவான கருப் பொருட்கள் குளிர் வடைந்து (ஒடுங்கித்) திரண்டு ஒரு கோளாகின என லாப்பிலஸ் கூறினார். வான்புகையுரு மேலும் சுருங்கியபோது முன்கூறப் பட்ட முறையில் அதன் கருப்பொருட்கள் வளையவடிவாக ஒன் றன் பின் ஒன்றாக விலகி ஏனைய கோள்களை உருவாக்கின வென்றும், பின்னர், அக்கோள்களும் அதே முறையில் செயல் பட்டுத் தமது துணைக்கோள்களை உருவாக்கின எனவும் லாப் பிலஸ் விளக்கினார். இவ்வாறு கோள்கள் வான்புகையுருவின் வெளி யோரங்களில் உருவாகியபோது அதன் மையப் பகுதியில் ஞாயிறு பரிணமித்தது.
லாப்பிலசின் கருது கோளிலும் சில குறைபாடுகள் உள்ளன: முதலாவதாக லாப்பிலஸ், சனியின் வrையங்களை வழிகாட்டி யாகக் கொண்டே தமது கருதுகோளை வெளியிட்ட போதிலும் அவ்வகையான வளையங்களிலிருந்து கோள்கள் உருவாக முடியா தென கிளார்க் மக்ஸ்வெல் என்பவர்களின் ஆய்வுகள் நிறுவியுள் ளன. இரண்டாவதாக லாப்பிலஸ் கருதியது போல், கணிசமான வெப்பநிலையில் வாயு வடிவிலிருந்த பின்னர் திண்மையடைந்து நீண்டு காணப்படும் கோள்கள் வாயுக்களையோ, ஆவியையோ ஈர்த்து வைக்கக் கூடியன வல்லவென்றும் அந்நிலையில் அப் பொருட்கள் வான்வெளியிற் கலந்துவிடுமெனவும் நம்பப்படுகிறது. மூன்றாவதாக, லாப்பிலசின் கருத்துப்படி வான்புகையுரு தொடக்

ஞாயிற்றுத் தொகுதியும் புவியும்
கத்தில் ஏறத்தாழ 9600 மில். கி. மீ. தூரம் (தற்போது நெப் ரியூன் இருக்கும் தூரம்) விரிந்து பரந்து காணப்பட்டது. ஆனால் ஞாயிற்றின் வயது சில ஆயிரம் மில்லியன் ஆண்டுகள் வரையே யிருக்கலாமென்பதனால் அது அவ்வளவு விரைவாகத் சுருங்கி இன்றைய நிலையையடைந்திருக்க (UP 4.447 gi7 - 157ratorrian 55 frg amorrot பிலசின் கருதுகோள் 'கோணத் திணிவு வேகக் காப்பு ' என்னும் கொள்கைக்கும் எதிராயுள்ளது. அவரது கருத்தின்படி ஞாயிற்றுத் தொகுதியின் கோணத்திணிவு வேகத்திற் பெரும்பகுதி ஞாயிற்றி லும் ஒரு சிறு பகுதி மட்டுமே பிற கோள்களிலும் EfTao வேண்டும். ஆனால் உண்மையில் ஞாயிற்றுத் தொகுதியின் கோணத்திணிவு வேகத்தில் 98% கோள்களிலும் 2% மட்டுமே ஞாயிற்றிலும் காணப்படுவதனால் அவரது கருதுகோள் ஏற்கப் படக் கூடியதன்று. இறுதியாக வான்புகையுரு நெப்ரியூன் வரை நீண்டிருப்பின் அதன் சுழற்சி வேகம் குறைவாயிருந்திருக்குமென வும் அந்நிலையில் கருப்பொருட்கள் வளையங்களாக விலகமுடி யாதெனவும் கூறப்படுகிறது.
1 : 4 வற்றுப்பெருக்குக் கருதுகோள்
இது சேர் ஜேம்ஸ் ஜீன்ஸ் என்பவருக்குரியது. எனினும், இக் கொள்கையில் சில திருத்தங்கள் செய்து வெளியிட்டவர் െ(Trn " ஜெப்றீஸ் என்பவராவர். இக் கொள்கை கோள்களின் பிறப்பு சடுதியாக நிகழ்ந்தது எனக் கூறுகிறது; இதன்படி ஞாயிற்து: கண்மையிற் சென்ற அதனிலும் பெரிய உடுவொன்று தனது ஈர் பின் விளைவாக ஞாயிற்றில் பெரிய வாயுப்பெருக்கை ஏற்படுத் தியபோது ஞாயிற்றின் உருவம் பாதிக்கப்பட்டு அதிலொருபகுதி உடுவைநோக்கி இழுக்கப்பட்டு நீண்ட ஒரு நாடாவாக மாறியது. இந்நாடா. உடு பின்வாங்கும்போது மேலும் இழுக்கப்பட்டு இறு தியில் ஞாயிற்றைச் சுற்றும் இயல்பையும் பெற்றது. இவ்வாறு நீண்டிருந்த நாடா உறுதியற்றிருந்தபடியால் நாளடைவில் பகுதிகளாகப் பிரிந்து ஒடுங்கல் குளிர்வடைதல் முதலிய செய் முறைகளின் மூலம் கோள்களாயிற்று என ஜீன்ஸ் கூறினார். ஆனால் ஜெப்ரீஸ் என்பவர் சிறிது வேறுபட்ட கருத்தைத் தெரி வித்தார். அவர், ஞாயிற்றிலிருந்து வாயுப்பொருட்கள் பிரிந்து

Page 9
சிறிது காலத்திலேயே கோள்கள் உருவாகியிருக்கலாமென்றார். வாயுப் பொருட்கள் ஒரு நாடாவைப் போலன்றிப் பகுதிபகுதி யாகவே வெளியேறியிருக்கவேண்டுமெனவும் அவர் கருதினார்.
இவ்வாறு உருவாகிய கோள்களிற் சில ஒழுங்கற்ற சில சுற்று கையின் பின்னர் ஞாயிற்றுக்கண்மையில் வந்தபோது அவற்றில் உடைவுகள் ஏற்பட்டமையினால் துணைக்கோள்கள் உருவாகியிருக் கலாமெனவும், இந்நிகழ்ச்சியின்போது துணைக்கோள்களை யுரு வாக்கிய கோள்குளிர்வடைந்து திரவநிலையடைந்திருக்க வேண்டு மெனவும் விளக்கப்பட்டது.
ܐ ܨܐ படம் 2 வற்றுப் பெருக்குக் கருதுகோள்
மேலும், முதலில் மிகநீண்ட நீள்வளையச் சுற்றொழுக்கினை புடையதாயிருந்த கோள்கள் தற்போது காணப்படும் ஒரளவு வட்ட மான ஒழுங்கைப் பெற்றதற்கு, ஞாயிற்றில் பெருக்கு ஏற்பட்ட காலத்தில் அதிலிருந்து சிதறிய பொருட்களினால் ஏ ற்பட்ட தடங் கலே காரணமெனவும் கூறப்பட்டது.
இக்கொள்கை கோள்களின் சுழற்சியைத் திருப்திகரமாக விளக்கவில்லை. கோள்கள் ஞாயிற்றிலிருந்து வெகு தொலைவிற்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுத் தொகுதியும் புவியும் 7
குத் தள்ளப் பட்டிருப்பதற்கும் இது விளக்கம் தரவில்லை. அன் யும் ஒர் உடு ஞாயிற்றைப் போன்ற பிறிதொரு உடுவிற்கு அய லிலோ, அண்மையிலோ வரும் நிகழ்ச்சி 6 இலட்சம் மில்லியன் ஆண்டுக்கொரு முறையே நடைபெறக்கூடியது. எனவே இக்கொள் கையும் ஞாயிற்றுக் குடும்பத்தின் பிறப்பைத் திருப்திகரமாக விளக் வில்லை என்பது தெளிவு.
15 கோள் நுணுக்குக் கருதுகோள்
இது சம்பலின், மோல்ரன் என்பவர்களால் 1905 ல் வெளி யிடப்பட்டது. இக்கொள்கை ஞாயிற்றிலிருந்து காலத்துக்குக்காலம் வெளிப்படும் பெருஞ்சுவாலைகளை (Prominences)அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. முன்னொருகாலத்தில் ஞாயிற்றி லிருந்து பெருஞ்சுவாலைகள் பெருமளவில் வெளிப்பட்ட சமயத் தில் ஒர் அலையும் உடு அதற்கு அண்மையில் வந்தபோது அவ் வுடுவின் ஈர்ப்பினால் பெருஞ் சுவாலையிலிருந்து வாயுக்களும், ஆவியும் வெளியே இழுக்கப்பட்டன வென்றும், அவ்வாறு வெளி யேறிய பொருட்கள் குளிர்வடைந்து, ஒடுங்கி நாளடைவில் 'கோணுணுக்கள்' எனப்படும் திண்ணிய பொருட்களாயினவென் றும் பின்னர் பல கோணுணுக்கள் ஒன்றாயிணைந்து கோள்களா யினவென்றும் இக்கொள்கை விளக்குகிறது.
இதிலுள்ள பிரதான குறைபாடென்னவெனின் பெருஞ் சுவாலையினின்று வெளிப்பட்ட சிறிதளவான வாயுவும் ஆவி யும் கோணுணுக்குகளாயினவென்பதே. அவ்வாயுப்பொருட்களும் ஆவியும் வான் வெளியிற் கலைந்துவிடக் கூடியனவேயன்றி ஒன்றாகக் கலந்து கோணுணுக்குகளை ஆக்கக்கூடியனவல்ல.
16 இரட்டையுடுக் கருதுகோள் :-
இக்கருதுகோள் H.N றஸ்ஸல் என்பவரால் வெளியிடப்பட் டது இதில் ஞாயிறு தனித்த ஒருடுவாகவன்றி ஓர் இரட்டையுடுத் தொகுதியின் உறுப்பினராகக் கொள்ளப்படுகிறது. ஞாயிற்றின் பங்காளியான உடு அதிலிருந்து வெகுதொலைவில் (தற்போது சனி காணப்படும் தூரத்தில்) காணப்பட்டது. அவ்வுடுவுக்கு அண்மையில் இன்னோருடு எதிர்ப்பட்டபோது முன்கூறப்பட்ட

Page 10
8 புவிவெளியுருவவியல்
உடுவில் பெருக்கு உண்டாகியதென்றும், அதன்விளைவாக வெளி யேறிய பொருட்களே காலகதியில் ஒடுங்குதல் மூலம் கோள் களாயின வென்றும் கூறப்பட்டது.
இரட்டை உடுக்கள் (அவை மூன்றுவகையின) வானிற் காணப் படுவது உண்மையே. வெள்ளுடுத் தொகுதியைத் சேர்ந்தவற்றில் ஏறத்தாழ 10 வீதமானவை இரட்டையுடுக்களென மதிப்பிடப் பட்டுள்ளது. அன்றியும் ஞாயிற்றின் பங்காளி அதிலிருந்து வெகு தொலைவிற் காணப்பட்டதென்னும் சுற்று கோள்கள் ஞாயிற் றுக்குச் சேய்மையிற் காணப்படுவதை ஒரளவு விளக்குகிறது. ஆனால் ஞாயிற்றின் பங்காளி எவ்வாறு அதை விட்டுவிலகிய தென்பதும் தலையிட்ட உடுவினால் ஈர்க்கப்பட்ட வாயுப் பொருட் கள் எவ்வாறு கோள்களையுருவாக்கினவென்பதும் விளக்கப்பட
இச்சிக்கலைத் தீர்க்குமுகமாக கலாநிதி லிற்றில்ரன் 1936-ல் பின்வரும் விளக்கத்தைக் கொடுத்தார். அவர் ஞாயிற்றின் பங் காளி தற்போது சனி காணப்படும் துரத்தில் (5700 மில்லியன் கி.மீ துரத்தில்) ஞாயிற்றைச் சுற்றியதென்றும் அதன் திணிவு ஞாயிற்றை ஒப்ப இருந்திருப்பின் அதன் வாழ்க்கைக் காலம் 50 ஆண்டுகளாகவும் அதன் சுற்றுகை வேகம் 1 செக்கனுக்கு 9.6 கி. மீ. ஆகவுமிதிருந்திருக்கும் எனவும் கூறினார். மேலும் தலையிட்ட உடுவின் வேகம் 1 செக்கனுக்கு 32 கி. மீற்றராக இருந்திருக்கலாமெனவும், அது ஞாயிற்றின் பங்காளியிலிருந்து குறைந்தது 5 அல்லது 6.5 மில்லியன் கி.மீ துாரத்தில் அதைக் கடந்து சென்றிருக்கலாமெனவும் சொல்லப்பட்டது. இவ்வாறு தலையிட்ட உடுவும் ஞாயிற்றின் பங்காளியும் இறுதியில் வெள் ளுடுத் தொகுதிகளைக் கொண்ட வான்வெளில் மறைந்துபோக அவற்றினால் விடப்பட்டுச் சென்ற பொருட்களிற் சில வாயினும் ஞாயிற்றைச் சுற்றிச் நீள்வட்ட ஒழுங்கிற் செல்லத் தலைப்பட்டிருக்க வேண்டும்.
மேற்கூறப்பட்ட முறையில் உருவாகிய கோள்கள் திண்மை படையாத நிலையில் ஒன்றுக்கொன்று அண்மையிற் சென்றபோது
 

ஞாயிற்றுத் தொகுதியும் புவியும் 9
அவற்றிடையேற்பட்ட பெருக்குச் செயல்முறைகளின் விளைவாகத் துணைக்கோள்கள் உருவாகியிருக்கலாமென விற்றில்ரன் குறிப் | 3 | frri.
இரட்டையுடுக் கோட்பாட்டிலும் சில குறைபாடுகள் கானப் பட்டிருக்கின்றன. குறிப்பாக கோள்களெல்லாம் ஞாயிற்றுக்கப்பால் ஒரே தூரத்திலேயே உருவாகினவெனின் அவை ஒன்றைவிட் 。 டொன்று விலகித் தற்பொழுதுள்ள சுற்றொழுக்கினைப்பெற்ற தெவ்வாறென்பதற்குப் போதிய விளக்கமில்லை.
7 புகையுருமுகிற் கருதுகோள் இது கலாநிதி வெசாகர் (Weiszaker) என்பவரால் 1945-ல் வெளியிடப்பட்டது. இக்கருதுகோள் லாப்பிலசின் புகையுருக் கோட்பாட்டிற் கூறப்பட்ட செயல்முறையைப் பெருமளவு பின் பற்றுகிறது.
ஞாயிறு வான் வெளியிடைப் பொருட்களின் ஒடுங்கல் மூலம் உருவாகிய காலத்தில் அப்பொருட்களிற் பெரும்பகுதி ஞாயிற்றைச் சுற்றி ஒரு பெரிய உறையைப்போல அமைந்திருந்தது. அவ்வுறை ஐதரசன், கீலியம் என்பவற்றையும் சிறிய அளவில் வேறுவாயுக் களையும், இரும்பு ஒட்சைட், சிலிக்கன் கூட்டுககள், நீர்த்துளி கள், பனிக்கட்டிப்பளிங்குகள் முதலிய பல பொருட்களின் துணிக்கைகளையுமுடையதாயிருந்தது, வாயுவுக்குள்ளே மிதந்து கொண்டிருந்த இப்பொருட்கள் சுழன்றுகொண்டிருந்த அவ்வாயு உறையினாற் காவிச்செல்லப்பட்டுக்கொண்டுமிருந்தன.
அவ்வாயு உறை உராய்வு விசைகளின் செயலினால் ஞாயிற் றுத் தொகுதியின் விட்டமுடைய ஒரு தட்டைப் (Dise) போல மாறியது. தட்டுவடிவான பல புகையுருக்கள் வானிற் காணப்படு கின்றன. இவற்றிற் சில ஒளிர்வனவாயும் சில இருண்டவையாக வும் காணப்படுகின்றன. ஒறியனிலுள்ள பெரிய புகையுரு ஒளிரும் வகையைச் சேர்ந்தது.
வாயு உறையிற் காணப்பட்ட துரசித்துணிக்கைகள் 0.0000 அங்குல விட்டமுடையனவெனக்கொள்ளின் அவற்றின் மொத்த

Page 11
O புவிவெளியுருவவியல்
எண்ணிக்கை 1045 ஆக இருந்திருக்கவேண்டும், இவ்வளவு அதிக மான துரசித்துணிக்கைகள் சுற்றும்போது அவை ஓர் ஒழுங்கி லின்றி வேறுபட்ட போக்குகளையுடையவையாயிருந்தபடியால் அவற்றிடை மோதல் உண்டானபோது ஒரேயளவு திணிவுள்ள பொருட்கள் உடைந்து துகளாகிவிடுமென எதிர்பர்ர்க்கலாம்,
ஆனால் சிறிய பொருட்கள் பெரியவற்றுடன் மோதும்போது அவை பெரியவற்றுட் புதைந்திருக்கும் இச் செயல்முறை யின் விளைவாகப் பெரிய பொருட்கள் மேலும் பெரிதாகின. இவ் வாறு திரண்டு பெரிதாகிய பொருட்குவியல்கள் தமது ஈர்ப்பின் மூலம் தம்பக்கமாகச் சென்ற சிறுதுணிக்கைகளைக் கவர்ந்து தம் முடன் சேர்த்துக்கொண்டன எனலாம். மேற்கூறப்பட்ட செயல் முறைகளின் மூலம் தற்போதைய ஞாயிற்றுத்தொகுதியின் பரப் பளவு பரந்திருந்த துரசித்துணிக்கைகள் படிப்படியாகத் திரண்டு காலகதியில் கோள்களாயினவென்றும் இந்நிகழ்ச்சி நிறைவேறக் குறைந்தது 10கோடி ஆண்டுகளாகியிருக்கலாமெனவும் வெசாக்கர் கூறினார்.
மேலும், முன் கூறப்பட்ட ஒட்டு வ ள ர் ச் சி முறையில் (accretion process) கோள்கள் உருவாகிக் கொண்டிருக்கும்போது புதிய புதிய பொருட்கள் அவற்றுடன் மோதியதனால் அவை அதிகவெப்பமுடையனவாயிருந்தனவெனினும் அப்பொருட்கள் முடிந்தபின்னர் கோள்கள் கதிர்வீச்சின் மூலம் வெப்பத்தையிழந்து கெட்டியான மேலோட்டைப் பெற்றனவெனலாம். அன்றியும் தூசித்துணிக்கைகள் முன்கூறப்பட்ட முறையில் திரண்டு வேறு பட்ட தூரத்தில் வேறுபட்டகாலத்தில் சுற்றத்தலைப்பட்டபோது குழப்பமான நிலைமை காணப்பட்டிருக்கலாம். ஆயினும் ஒரே காலத்தில் ஒரே தூரத்தில் சுற்றிய பொருட்களின் போக்கு ஒரு * நெக்லசைப் ' போன்றிருந்திருக்குமெனவும், இத்தகைய பல நெக்லஸ் வடிவான போக்குகள் ஒவ்வொன்றும் ஐந்து தனியான சுழிப்புகளைக்கொண்ட ஒரு ஒழுங்காக அமைந்திருக்குமெனவும் அச்சுழிப்புகளின் எல்லைகளில் மோதல்கள் அதிகமாக ஏற்பட் டிருக்குமாதலின் அங்குதான் கோள்களும் உருவாகியிருக்குமென வும் வெசாக்கர் கூறியுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுத் தொகுதியும் புவியும்
இவ்வாறு தூசித்துணிக்கைகள் கோள்களாக உருமாறிக் கொண்டிருந்தபோது அத்திரள்களுக்கு வெளியிற்சுற்றிக்கொண் டிருந்த தூசித்துணிக்கைகள் தாமே திரண்டு துணைக்கோள்க ளாகியிருக்கலாம். இம்முறையில் தூசித்துணிக்கைகள் கோள்களை யும் துணைக்கோள்களையும் ஆக்கியபோது புகையுருவிற் காணப் பட்ட வாயுக்கள் படிப்படியாக வான்வெளியிற் கலந்துவிட்டன. அதற்கு 10 கோடி ஆண்டுகள் தேவைப்பட்டிருககலாம். கோள் அள் உருவாதற்கும் அக்காலமே தேவைப்பட்டது எனமுன்னர்க் குறிப்பிடப்பட்டது. எனவே கோள்கள் உருவாகி முடிவ1ை-4 நிலையில் ஐதரசன், கீலியம் என்னும் வாயுக்கள் ஞாயிற்றுத் தொகுதியிலிருந்து வெளியேறிவிட்டன எனக்கொள்ளலாம்
படம் 3 வெசாகரின் கருதுகோள் கறுப்பு வட்டங்கள் கோள்கள் உருவாகிய நிலையங்களைக் குறிக்கும்.
8 புதிய புகையுரு முகிற் கருதுகோள் ஞாயிற்றுத் தொகுதியை உருவாக்கிய வான்புகையுரு வாயுக்
களை மிக அதிகமாகவும் (99% தூசியை மிகக்குறைவாகவும்
கொண்டிருந்தது. அது தொடக்கத்தில் அடர்த்தியற்றதாகவும்

Page 12
夏罗 புவிவெளியுருவவியல்
குளிரானதாகவும் காணப்பட்டது ஆயினும் சுழற்சி of TiTLGF ಬ್ರಿಟಿ! அதன் ஈர்ப்பு விசை அதிகரித்தபோது வாயுக்களும் தூசியும் உள்நோக்கி அமுக்கப்பட்டதனால் அதன் அடர்த்தியும் சுழற்சி வேகமும் மேலும் அதிகரித்தன. அந்நிலையில் அப்புகையுருமுகில் ஒரு தட்டுருவில் சுழன்று கொண்டிருந்தது அப்போது அதன் மையப்பகுதியில் அடர்ந்து திரண்ட வாயுப் பொருட்களிலிருந்து ஞாயிறு உருவாகியது அவ்வேளை அங்கு 2000°C அவை: வெப்பம் காணப்பட்டிருக்கலாம். அதேசமயம்"ஞாயிற்றது . பட்ட ஐதரசன் கீலியம் முதலிய இடைத்தாக்கத் தினால் (அணுக்கலவையினால்) வெளிப்பட்ட சகஇ வெப்பக்கதிர் வீச்சாக அதிலிருந்து வெளியேறத் தொடங்கியது
பிறப்பும் នាំអ៊ួង
வான் புகையுருவின்மையத் தில் ஞாயிறு உருவாகிய போது சமகாலத்தில் அதன் வெளிப்பகுதியில் (ခြို.မ္ဟ ၂yး ကြီ# ငွှ၊ ளும் உருவாகத் தொடங் இன வான்புகைபுரு விரி வடைந்தபோது அதன் வெப் வீழ்ச்சி படைந்தது அந்நிலையில் அணுக்கலவை an
உருவாகியிருந்து அதன்கருப்பொருட்கள் ஆங் காங்கு கணிப்பொருள் மணி களாக ஒடுங்கின. இவ்வாறு இரும்பு 1640°C வெப்ப நிலையிலும் சிலிக்கேற்றுக் கணிப்பொருட்கள் 14400 வெப்பநிலையிலும் ஒடுங்கிய போது வாயுப்பொருட்களும் பனிக்கட்டியும்-70°C GO) GJAKA
4. Ø ም°.... Q ܐܲܢ புதிய கருதுகோள் நிலை யில் ஒடுங்கிப்பளிங்
懿
குருவாகின.
 
 

ஞாயிற்றுத் தொகுதியும் புவியும் 3.
ஞாயிற்று வான்புகையுருவில் தொடக்கத்திலேயே அதன் மையத்திலிருந்து வெளிநோக்கிய வெப்பச்சரிவும், மூலகங்களின் L J Jr Lino L 880iesi வேறுபாடுகளும் காணப்பட்டன. இதன் விளைவாக அதிக வெப்பநிலையில் ஒடுங்கும் இரும்பு நிக்கல் போன்ற அடர்த்தி கூடிய மூலகங்கள் ஞாயிற்றுக்கு அண்மையிலும்,
டாக்கியது. உதாரணமாக புதன், புவி என்னும் உட்கோள்களின் அடர்த்தி முறையே 5 & 5.5 ஆகவும் யூறேனஸ், நெப்ரியூன் என்னும் வெளிக்கோள்களின் அடர்த்தி முறையே 13, 18 ஆகவுமுள்ளமை கவனிக்கத்தக்கது.
கோள்களின் கருப்பொருட்கள் ஒடுங்கல் முறையில் உருவாகத் தொடங்கிய பின்னர், அவை ஒட்டுவளர்ச்சி முறையில் (Accretion) பெரிதாகின. கணிப்பொருட் துணிக்கைகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டி - இணைந்து - வளரும் முறையே இதுவாகும். தொடக்கத் தில் அம்முறையில் பலகணிப்பொருட் துணிக்கைகள் ஒன்றுட னொன்று ஒட்டியதனால் பாறைப்பாங்கான பலகோள்துணுக்கு கள் உருவாகினவென்றும் அவற்றில் ஒரளவு பெரியவை தமது ձեւնg விசையின் மூலம் சிறியவற்றைத் தம்முடன் இணைத்து மேலும் பெரிதாகின வென்றும், உட்கோள்கள் நான்கும் அம் முறையிலேயே உருவாகியதாகவும் நம்பப்படுகிறது. இவ்வாறு கோள் துணுக்குகளில் நேரடியான ஒட்டுதல் மூலம் உருவாகிய உட்கோள்களிலிருந்த வாயுக்கள் ஞாயிற்றுக் காற்றினாலும், கதிர்வீச்சினாலும் வெளியே தள்ளப்பட்டன. அவை புகையுரு முகிலின் வெளிப்பகுதியில் திரண்டு ബിൿTങു உருவாக் கியதாக நம்பப்படுகிறது. -
இம்முறையில் உருவாகிய கோள்கள் அனைத்தும் ஞாயிற்றுப் புகையுரு முகிலின் உட்பகுதியில் ஒரு தளத்தில் சுழலத்தலைப் La ar . அதன் விளைவாக் வான்புகையுருவில் எஞ்சியிருந்த கருப்பொருட்களும், ஈர்ப்புமுறையில் வெவ்வேறு கோள்களுடன்
அடர்த்தி குறைந்த வாயுக்கள் நீர்த் தன்மையான (Volatiles) கருப் பொருட்கள் ஆகியன ஞாயிற்றுக்குச் சேய்மையிலும் ஒடுங்கின. இது கோள்களிடையே அடர்த்தி, திணிவு வேறுபாடுகளை உண்

Page 13
4 புவிவெளியுருவவியல்
இணைக்கப்பட்ட நிலையில் கோட்டொகுதி முழுமையானது. இவ்வாறு கோட்டொகுதியின் பரிணாமவளர்ச்சி முற்றுப்பெறப் பலகோடி ஆண்டுகள் சென்றிருக்கலாமென முன்னர் கருதப்பட் டது. ஆனால் இச்செயல்முறை சில மில்லியன் ஆண்டுகளில் விரை வாக முற்றுப்பெற்றிருக்கலாமென அண்மைக்கால ஆய்வாளர் கள் கருதுகின்றனர்.
ஞாயிற்றுத்தொகுதியிலுள்ள கோள்களைச்சுற்றிக் காணப் LQL துணைக்கோள்கள் ஒன்றில் அவற்றினால் கைப்பற்றப்பட் டவையாக அல்லது அவற்றிலிருந்து பிரிந்து போனவையாக இருக்கலாம். புவியின் துணைக்கோளாகிய சந்திரன் ஒருபெரிய தோள் அல்லது கோணுணுக்கின் மோதுகையினால் புவியின் இடையோட்டிலிருந்து பிய்த்தெடுக்கப்பட்ட பகுதியாயிருக்கலா மெனச்சில ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இவை இரண்டினதும் மூலகச்சேர்க்கை ஒரேமாதிரியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ் வாறு செவ்வாயைப் போன்ற ஒருகோளின் மோதலினால்சிதறிப் பரவிய பொருட்கள் திரண்டு சந்திரனாக மாறியிருக்கலாமென இன்னொரு கருத்து அண்மையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 i புவியின் பிறப்பும் பரிணாம வளர்ச்சியும்
ஞாயிறுப்புகையுருமுகிலிலிருந்து புவி ஒரு கோளாது உருப் பெற்றபோது குளிரானதாக ஏறத்தாழ 500°C வெப்பநிலை யுடன் காணப்பட்டிருக்கலாமெனப் பெரும்பாலான புவிப்பெளதிக வியலாளர்கள் கருதுகின்றனர். புவியின் உள்ளே நீர் மூலக்கூறு கள் காணப்படுதல் அதற்குச்சான்றாகும்(ஏனெனில் அதிகவெப்ப நிலையில் அவை ஆவியாக்கப்பட்டு வெளியேறியிருக்கும்
புவியும் அதற்கு இணையான 3 உட்கோள்களும் கற்பாங்
கான விண்வீழ் கற்களை யொத்த aேrbonaceous chrondites)
கணிப்பொருட்சேர்க்கையுள்ள பல கோள்துணுக்குகளின் ஒட்டுகை பினால் உருவாகியிருக்கலாமெனப் பல ஆய்வாளர்கள் நம்புகின்றனர் ஆனால் புவியின் அடிப்படை அமைப்புக்கூறுகளான இடையோடு, புவியோடு, அகக்கோளம், ஆகியன ஓரினமான பொருட்களின் ஒட்டுகையினால் ஒன்றன்பின் ஒன்றாக உருவாகினவா அன்றிப்

ஞாயிற்றுத் தொகுதியும் புவியும்
பொருட்களின் ஒட்டுகை மூலம் புவி ஒரு கோளா கப் சேரிணமித்த பின்னர் அப்படையமைப்பு உருவாகியதா என் பதில் இன்னும் கருத்து வேறுபாடுள்ளது. அண்மைக்காலச் சிந் தனைப் போக்கின்படி பல்லினமான பொருட்களின் ஒட்டுகை
ton Siaos' (Model) பின்வருமாறு.
இது பல்லினமான ஒட்டுகை, இலது ஓரினமான ஒட்டுஜை
புவியானது தொடக்கத்தில் சிலிக்கேற்றுக் சேர்வைகள், இரும்பு, மக்னீசியம் ஒக்சைட் என்பவற்றை அதிகமாகவும் பிற மூலகங்களைச் சிறியளவிலும் கொண்டிருந்தது. அப்பொருட்கள் பகுதிகளிலும் கலத்து காணப்பட்டன. அக் காலகட்டத்தில் புவியின் மேற்பகுதியில் பசால்ற் பாறை கிளைக்கொண்ட பலமிற்ற ஒருபுவியோடும், கண்டங்களை போன்ற அமைப்புக்களும் உருவாகியிருந்திருக்கலாமெனது ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இவ்வாறு பல்லினமான பொருட் களைக்கொண்டிருந்த புவி tiւգմաւգլար : வெப்பமடையத் தொடங் கியது. இதற்கு (1) ஒரளவு பெரிய (உம். 100 கி.மீ ഖി ".. முள்ள) கோள்நுணுக்குகள் வேகமாக ஒட்டியமை, (2) புவியின் மேற்பரப்பில் விண்வீழ்கற்களும் கோணுணுக்குகளும் மோதியது னால் ஏற்பட்ட தாக்கம்  ேபுவியினுள்ளே காணப்பட்ட றேடி யக்கதிரியக்க மூலகங்களின் (உம். றேடியம், யூறேனியம், தோறி
யம்) தொழிற்பாடு (4) புவியின் மேலோட்டில்மோதிய சிலவான்
பொருட்கள் அதனுள்ளே புகுத்தமை, உட்பகுதியில்

Page 14
16 யுவிவெளியுருவவியல்
அதன் கருப்பொருட்கள் திரண்டபோது புவியீர்ப்பு அதிகரித்தமை பால் மேற்பகுதியிலிருந்த மூலகங்களும் சேர்வைகளும் உள்ளிழுக் கப்பட்டதனால் அங்கு அமுக்கம் அதிகரித்தமை ஆகியன முக் இபமான காரணங்களாம்.
புவியின் உட்பாகம் சூடாகியபோது அதில் முன்னர் உரு வாகியிருந்த பாறைகள் வெப்பத்தை வெளிவிடாதமையினாலும் (பாறைகள் அரிதிற்கடத்திகள்) புவியின் மேற்பரப்பில் மோதிச் சிதறிய வான்பொருட்களின் துண்டுகள் துணிக்கைகள் தூசி ஆகி பன வெப்பம் வெளியேறாமல் தடுத்தமையாலும் புவியின் வெப் பம் விரைவாக அதிகரித்தது.
இவ்வாறு புவியின் வயது 10 மில்லியன் ஆண்டாகிற அள வில் சிலர் 100 மில்லியன் ஆண்டு என்பர்) ஏறத்தாழ 400-800 .ெ மீ ஆழத்தில் அதன் வெப்பநிலை இரும்பின் உருகு நினைக்கு (700°C) உயர்ந்திருக்கலாம். அந்நிலையில் உருகிய இரும்பின் துளிகள் உட்பாகத்தில் தாழ்ந்து திரண்டபோது வெளிப்பட்ட சக்தியின் விளைவாக வெப்பநிலை 2000°C அளவுக்கு உயர்ந்திருக் கலாம். அதன் பின்னர் புவியின் திணிவில் ஏறத்தாழ 1/3 பங் ாயுள்ள இரும்பு முழுவதும் புவியின் உட்பகுதியில் திரண்டு அதன் அகக்கோளத்தை உருவாக்கியது. புவி இன்றுள்ளதில் 1/8 அளவு வளர்ந்த பின்னரே இரும்பு உட்பகுதியில் தாழத்தொடங் கியது எனவும் பின்பு அதன்பருமன் 1/3 அளவுக்கு வளர்வதற்கு முன்னர் அதன் அகக்கோளம் இடமான ஒரு திணிவாக உரு வாகியதாகவும் நம்பப்படுகிறது.
புவியின் மையக்கோளம் உருவாகியதைத் தொடர்ந்து அதன் வெப்பநிலை மேலும் அதிகரித்தபோது புவி ஒரு 'வெப்பப் புரட் சிக்கு" உள்ளாகியது. அப்போது அதன் மையப் பகுதியிலிருந்து மேல் எழுந்த மேற்காவுகை ஒட்டங்கள் கீழ்மேலான வெப்பன் கடத்தலுக்கு உதவியதன் மூலம் புவியின் தொடக்ககால அமிசங் களை (புவியோடு, பெருவாய்கள் முதலியன) முற்றாக அழித் தொழித்து விட்டதாகத் தெரியவருகிறது. சப்பறனோவ் என்னும் இரசிய கோட்பெளதிகவியலாளர் புவி இப்போதைய பருமனில்

ஞாயிற்றுத் தொகுதியும் புவியும் 17
15 % அளவு வளர்வதற்கு முன்னரே முதற் பாறைகள் உருகத் தொடங்கியிருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆயினும் புவி படிப்படியாகக் குளிர்வடைந்தது.
18(i) புவியின் இரசாயன பொறிமுறைப் L6o Liu 6on Di L
புவியில் ஏற்பட்ட வெப்பப் புரட்சி அதன் இ ன்  ைற ய இரசர்யன, பொறிமுறைப் படையமைப்புக்கு வித்திட்டது. புவி யின் இன்றைய உட்பாகப் படையமைப்பு வேறுபடுத்தல் (Differenciation) என்னும் செயல்முறையின் மூலம் உருவாகி பது. இதன் ப டி புவியின் உட்பகுதியில் கலந்து காணப்பட்ட பல்வேறு மூலகங்களும் சேர்வைகளும் தமது (1) அடர்த்தி (2) உருகு வெப்பநிலை (3) இரசாயனத் தொடர்பு என்பவற்றுக்கு இசைவாக வேறுபட்ட சேர்வைகளாக மாற்றமடைந்து புவியின் உள்ளே வெவ்வேறு மட்டங்களில் திரண்டன. இவ்வாறு அதிக பாரமானதும் அடர்த்தியானதுமான இரும்பு, கலப்பு உலோக மான நிக்கல் மற்றும் அவை போன்ற பிறவும் உட்பகுதியில் தாழ்ந்து புவியின் அகக்கோளத்தை உருவாக்கியபோது பாரம் குறைந்த மக்னீசியம், இரும்பு ஒக்சைட் போன்ற சிலிக்கேற்றுப் பொருட்கள் அ க க் கோ ள த்  ைத ச் சுற்றிப் படிந்து இடை யோட்டை உருவாக்கின.
இடையோடு அநேகமாக, கீழிருந்து மே ல் நோ க் கி த் திண்மையடைந்த காரணத்தினால் புவியின் உள்ளிருந்து வெப்பம் வெளியேற முடியாது போயிற்று இதன் விளைவாக அகத் கோளம் நீண்ட காலம் திரவ நி  ைல யி ல் இருந்திருக்கலாம். ஆனால் புவி முழுவதும் மீண்டும் உருவாகிய பி ன் ன ர் உள் ளமுக்கம் அதிகரித்தபோது அகக்கோளத்தின் உட்ப கு தி உறைந்து திண்மை நிலைக்கு மாறியிருக்கலாம்.
இவ்வாறு முதலில் அகக்கோளமும் அதனைத் தொடர்ந்து இடையோட்டின் கீழ்ப்பகுதியும் திண்மையடைந்த போது இடை யோட்டின் மேற்பகுதி மக்னீசியத்தை அதிகமாகக் கொண்ட ஒரு பாறைக்குழம்புத் தேக்கமாக" காணப்பட்டது. அந் நிலையில் மேற்காவுகை முறையில் மேலெழுந்த பாறைக்குழம்பு திண்மையடைந்து தீப்பாறைகளை உருவாக்கியது. அப்பாறைக் குழம்பு பாரமற்ற சிலிக்கோன், ஒட்சிசன் மற்றும் அவற்றுடன் தொடர்புள்ள யூறேனியம், தோறியம் போன்ற மூலகங்களை அதிகமாகக் கொண்டிருந்தமையால் எளிதா க மேலெழுந்தது புவியின் இன்றைய புவியோடு இம்முறையில் உருவாகியதாக நம்பப்படுகிறது. , ,

Page 15
18 புவிவெளியுருவவியல்
புவியோட்டிற் காணப்படும் சிலிக்கேற்றுக் கணிப்பொருட் களில் மிக முக்கியமானதான களிக்கல் 700 - நிலையில் உருகக்கூடியதாயிருப்பதனால் விரைவாக மேலெழுந்து புவியோட்டுப் பாறைகளில் அதிகமாகக் கலந்து காணப்படுகி றது. இவ்வாறு புவி ஒரு கோளாக உருவாகத் தொடங் கி 800 மில் ஆண்டிற்குள் இன்றைய படையமைப்பைப் பெற்று விட்டது. ஆயினும் வேறுபடுத்தல்' என்னும் செயல்பாடு இன்னும் இடம்பெறுவதாகக் கருதப்படுகிறது. புவியின் படை யமைப்பு உருவாகியபோது அதன் படைகளுக்குள்ளிருந்த பார மற்ற நீர்த்தன்மையான பொருட்களும் (Volatites) வாயுக்க ளும் வெளியேறின் இதனை 'வாயுநீக்கம்' (Degassig/0ut
gasing) எனக் குறிப்பிடுவர்.
இவ் வாறு வெளியேறிய வாயுக்கள் திரண்டு புவியின் பூர்வீக வளிமண்டலத்தை உருவாக்கின. பிற்காலத்தில் ஏற் பட்ட எரிமலைத் தொழிற்பாட்டினாலும் தாவரங்களின் ஆவி யுயிர்ப்பு, ஒளித்தொகுப்பு (Photosynthesis) என்பனவற்றி னாலும் வெளியேறிய வாயுக்கள் வளிமண்டலத்துடன் சேர்ந்த மையால் அது புவியைச் சுற்றி ஒரு உறை போலத் திரண்டது எனலாம். வளிமண்டலம் உருவாகிய தைத் தொடர்ந்து அதி லுள்ள நீராவி ஒடுங்கியபோது மழை பெய்தது. அம்மழை நீர் புவியோட்டின் தாழ்ந்த பகுதிகளை நிரப்பியதனால் கடல்கள், கடல், நீரேரிகள், சமுத்திரங்கள் ஆகியன தோன்றின.
1.8 (iv) | வயது:
ஞாயிற்றுத் தொகுதி 4600 மில்லியன் ஆண்டு வயதுடை யது என அண்மைக்கால ஆய்வுகள் முடிவு செய்துள்ளன. இம் முடிவு (1) சந்திரக்கற்கள் (4400 மில்) விண் வீழ்கற்கள் (4550 மில்) என்பவற்றின் வயது, (2) புவியில் கர்ணப்படும் மிகப் பழைய பாறைகளர்ன கி ரீ ன் லா ந் தி ன் இசுவாப்பாறைகள் (3800 மில்) கனடாவிலுள்ள அனோதாசைற் வகையான அகஸ்ரா பளிங்குருப்பாறைகள் (3960 மில்) (3) மேற்கு அவுஸ் திரேலியாவிலுள்ள நரேயர் குன்றிலிருந்து எடுக்கப்பட்ட சிர் கோன் (Zircon) கனிமம் (4100 -4200 மில்) (4) நடுச் சமுத் திரப் பாறைத் தொடரிலிருந்து வெளிவரும் பாறைக் குழம்பி லிருந்து பிரித்தெடுக்கப்பட்ட அரிதான Xenono வாயு (4400 மில் ) என்பவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டதொன்
0ாகும்

ஞாயிற்றுத் தொகுதியும் புவியும் 19
புவியின் வயது புவியோடு உருவாகிய காலத்தைக் குறிப் பதனால் அதைப் புவிச்சரிதவியல் வயது எனக்கூறுவர். அதே சமயம் புவி ஒரு கோளாக - கோணுணுக்காக - உருவாகத் தொடங்கிய காலம் புவிச்சரித வயதிற்கு முற்பட்டது என்பதை நாம் உணரலாம். அவ்வயது வானியல் வயது' என வழங் கப்படும் அது 4600 மில்லியனுக்கு மேற்பட்டதாயிருக்க வேண் டும் எனச் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவை பின்வருமாறு
1) புவி ஒரு கோளாக உருப்பெற்ற காலத்து நிலை மை களை அறிவதற்கு எந்தவித ஆதாரங்களுமில்லை.
2) புவியோட்டின் பூர்வீகப் பாறைகள் புவியில் ஏற்பட்ட வெப்பப் புரட்சியின்போது மீளப்பளிங்குருவாக்கப்பட்டவை.
3) வெப்பப் புரட்சி ஏற்பட்ட காலத்தையும் பாறைகள் உருகி மீளப்பளிங்குருவாதற்குத் தேவையான காலத்தையும் கணக்கிட்டுக் கூறமுடியாது அதற்கு 500 - 1000 மில்லியன் ஆண்டுகள் தேவைப்படலாமெனச் சிலர் கருதுகின்றனர்.
4) கனடாவில் காணப்படும் மிகப் பழைய பாறையான அகஸ்ரா" பாறை 'அனோ தோசைற்" வகையானது. அது ଡ୍ର ଓ தலையீடாயிருப்பதனால் அது தலையிட்டிருக்கும் LITT 339CD அதனிலும் வயதிற் கூடியதாயிருக்கவேண்டும்.
புவியின் sold tig. 34 trørj, முதலில் உருவாகியது 2) ada ao L. பர்னால் புவியோடு உருவாகப் பன்னூறு மில்லியன் ஆண்டு கள் சென்றிருக்கலாம்
6) புவியோட்டுப் பாறைகள் உருமாறுவதற்கு வளிமண்ட லம், சமுத்திரம் என்பவை துணையாயிருப்பதனால் முதற் பாறைகள் உருவாகியபோதே வளிமண்டலமும், சமுத்திரங்க ளும் உருவாகியிருக்கவேண்டும் , ஆனால் இவ்விடயத்தில் கருத்து வேறுபாடுள்ளது. இவற்றையெல்லாம் நோக்கும்போது புவியின் உண்மையான வயது - அது ஒரு கோளாக உருவாகத் தொடங் கிய வயது - 5000 மில்லியன் ஆண்டுகளுக்கு மேற்பட்டதாகவே இருக்க வேண்டும் எனச் சில ஆய்வாளர் கருதுகின்றனர்.
அண்மைக்கால ஆய்வாளர்களில் சிலர் புவி கோள் துணுக்கு களின் ஒட்டுகையினால் விரைவாக வளர்ந்து ஏறத்தாழ 1000

Page 16
புவிவெளியுருவவியல் 泷
மில்லியன் ஆண்டு காலத்தில் வேறுபட்ட மையக்கோளத்தை யும், மின்காந்தக்களத்தையும் பெற்றுவிட்டதாகக் கருதுகின்ற னர். அவுஸ்திரேலியா தேசிய பல்கலைக்கழக ஆய்வுகள் காந்த மயமர்க்கப்பட்ட பாறைகளின் வயது 3500 மில்லியன் ஆண்டுகள் எனக் கணித்துள்ளதனால் புவியின் உட்கோளமும் காந்தக்கள மும் அந்தக்கால எல்லையில் உருவாகியிருந்தன என்பது தெளிவு. மேலும் கலிபோனியாவிலுள்ள லிக் (Lick) வானியல் அவ தர்ன நிலையத்தைச் சேர்ந்த லின் (Lin) என்பவர் புவியைப் போன்ற ஒரு கோள் 1 மில்லியன் ஆண்டுகளில் ஒட்டுகை மூலம் உருவாகியிருக்கமுடியும் எனக் கூறும்போது கானேஜி நிறுவனத் தைச் சேர்ந்த ஜோர்ஜ் வெட்றில் (George Wedri) என்பவர் 10 கி.மீ. விட்டமுள்ள ஒரு கோள் நுணுக்கிலிருந்து புவியைப் போன்ற ஒரு கோள் உரு வா கு வ த ற் கு 100 மில்லியன் (10 கோடி) ஆண்டுகளாகலாம் எனக் கருதுகிறார். இத்தகைய கருத்து வேறுபாடுகள் இன்றிருப்பினும் புவிப்பெளதிகவியல் மற்றும் வானியல் துறைகளில் இடம்பெற்றுவரும் விரிவான ஆய்வுகள் கோட் தொகுதியின் பிறப்பு, மற்றும் அதனுடன் தொடர்புள்ள விடயங்கள் பற்றிய பூரணமான, முடிந்த முடிவு களைக் கிட்டிய எதிர்காலத்தில் வெளிப்படுத் தும் என எதிர் LITTij, G, Gy (TLi).

அத்தியாயம்: 2
புவியின் உருவம்: சமநிலைத்தன்மை (ISOSTAΟΥ)
2. 1 புவியின் உருவம்:
to கோள வடிவானது எனக்கூறுவது வழக்கம். ஆனால் அதன் மத்திய கோட்டு விட்டம், முனைவு விட்டத்தைவிட 42, 8 கி.மி. கூடியதாயிருப்பதால், அதனை "ஒரு சிற்றச்சுக் கோளம்" என்பதே சரியானது. புவியின் முனைவுப் பகுதிகள் சிறிதளவு தட்டையாயிருப்பதற்குப் புவிச்சுழற்சியும், புவியீர்ப்பு வேறுபாடுகளுமே காரணங்களென நியூற்றன் என்னும் பெளதிக வியலாளர் 17 ம் நாற்றாண்டிலேயே விளக்கினார். அஃதாவது முனைவுகள் புவியின் மையத்துக்கு அண்மையிலிருப்ப கனால் அங்கு மைய நீக்கவிசை குறைவாகவும் புவியீர்ப்பு அதிகமாக வும் இருக்கும் என்றும், மத்தியகோட்டுப் பகுதியில் அதற்கு மாறான நிலைமைகள் காணப்படுமெனவும் அவர் விளக்கினார்.
புவியின் உள்ளிருக்கம் பாறைகளின் அடர்த்தி ஒரேயளவா யிருப்பின் அதன் சுழற்சி காரணமாக , அதன் உருவம் ஒரு SS T T TT TTTTTTTTTm aa T S TST T TTT SLLLLLLLL cL LLLL L LLL L LLLLaLL LLLS ஆனால் பாறைகளின் அடர்த்தி வேறுபடுவதன் விளைவாக அது அவ்வாறிருக்காது. ஆயினும் நில அளவீட்டாளர்கள், சர்வ தேச ரீதியில் புவியின் உருவத்தை ஒரு சுழற்சி நீள்விளைய மாகவே கொள்கின்றனர். ஏனெனில் அ வ் வுருவ மும், ஒரு சிற்றச்சுக்கோளவுருவமும் அதிக வேறுபாடற்றவை. அதே சமயம், புவியின் மேற்பரப்பர்னது எங்கும் கடல் மட்டத்திலி ருப்பின் அதில் தோன்றக்கூடிய 'புவியுருவமும்' (GE01D) முன்னர் குறிப்பிடப்பட்ட உருவங்களும் அனேகமாக ஒரே மாதிரியானவையாகவே இன்று கொள்ளப்படுகின்றது.
அண்மைக்காலத்தில் செயற்கைக் கோள்கள் மூலம் பெறப் பட்ட தரவுகளின்படி, புவியின் மையத்திலிருந்து வடமுனை வானது தென்முனைவைவிடச் சற்று அதிக தூரத்திலிருப்பத னால் புவியின் உருவம் ஒரு பேரிக்காயைப் போன்றிருப்பதாக வும் கூறப்படுகிறது. உண்மையில் புவியானது தான் சுழன்று

Page 17
22 புவிவெளியுருவவியல்
கொண்டிருக்கும்போதே பாறைகளின் அ டர் த் தி வேறுபாடு களைச் சீர்செய்து ' புவியீர்ப்புச் சமநிலையை" அ  ைடய முயன்றுகொண்டிருப்பதனால் அத்தகைய சமநிலை ஏற்படும் போதுதான் புவியின் உண்மையான சமநிலை உருவம் புலப் படும். ஆனால் புவியின் அகவிசைகளின் செயல்பாடுகள் அத் தகைய உருவம் ஏற்படாதவாறு தடுத்து வருகின்றன என்பதை அறியவேண்டும் இனி ' சமநிலைத்தன்மை' பற்றி சற்று விரி வாக ஆராய்வோம்.
22 சமநிலைத் தன்மை:
சமநிலைத் தன்மை" என்பது கண்டங்கள் கடலடித் தளங்கள் என்பவற்றின் உயரத்தை அ வ ற் றின் கீழிருக்கும் பாறைகளின் அடர்த்திக்கேற்ப கட்டுப்படுத்தும் சீரிய புவியீர்ப் புச் சமநிலை என டற்றன் என்பவர் (1889 ல்) விளக்கியுள் ளார். ஒரு நீர்த்தெர்ட்டியில் உயரத்தில் வேறுபட்ட சில மரக் குற்றிகளை மிதக்கவிட்டால் அவற்றில் சில குற் றி க ள் நீர் மட்டத்தின்மேல் உயர்ந்தும், வேறு சில குற்றிகள் நீரினுள்ளே தாழ்ந்தும் காணப்படுவதைப்போல பு வி யி ன் மேற்பகுதியில் நாம் காணும் ഥ ജ്യൂക്ലt, 3ഥ' എ நிலங்கள், சம நில ங் கள், கடலடித்தளங்கள் ஆகியன வேறுபட்ட உயரங்களுடன் காணப் படுவதை விளக்கும் கோட்பாடே சமநிலைத்தன்மையாகும். அதன்படி, புவியோட்டுத் துண்டங்கள் அதன் கீழிருக்கும் இடை யோட்டின் மேல் ஒரு வகையான மிதப்புச் சமநிலையிலிருப் பது புலனாகிறது. “
2.2(i) சமநிலைத்தன்மைக் கோட்பாட்டின்
1889ல் சமநிலைத்தன்மை பற்றிய பற்றன் பவரால் வெளியிடப்படுமுன்னர் 17 ம் நூற்றாண்டில் லியனா TS S T S 0 LL ttt LL S LLL LGGLLLLSS MMM TTT S T tT TTTS தற்குக் காரணம் அவை சம நில ங் க  ைள விட அடர்த்தி குறைந்த பொருட்களாலாக்கப்பட்டிருத்தலே எனக் கூறியிருந் தார். அவருக்குப் பின்னர் 1735ல் அந்தீசு மலைப் பகுதியில் புவியீர்ப்பு அளவீட்டினை மேற்கொண்ட பூகே (Bouger) என் னும் பிரான்சிய புவிச்சரிதவியலாளர் உயர்ந்த மலைகளில் அவற்றின் திணிவிற்கேற்ற ஈர்ப்புக் கவர்ச்சி இல்லாமையைக் கண்டறிந்தார். அவரது அவதானிப்பு 19ஆம் நூற்றாண்டில் இமயமலைப் பிரதேசத்தின் அயலில் மேற்கொள்ளப்பட்ட நில

சமநிலைத் தன்மை 23
அளவீடுகளின்போது உறுதிப்படுத்தப்பட்டது. அப்போது இமய மலைக்கு அண்மையிலுள்ள கலியானா, அதற்கு 608 கி. மீ. தொலைவிலுள்ள கலியான்பூர் என்னும் இரு ந க ரங்க ளின் அகலக்கோட்டு நிலையங்களைத் திரிகோண கணித முறை யிலும் வானியல் முறையிலும் கணித்தபோது அவை 5' 3 23 தூரம் வேறுபட்டிருந்தன. இது நிலத்தில் 168 கி. மீற்றர் தூர வேறுபாட்டைக் காட்டியது. இவ்வேறுபாட்டை விளக்க முற்பட்ட பிறாற் (Prat) என்பவர், வானியல் முறையான அளவீட்டின்போது இமயமலைகளின் ஈர்ப்புக்கவர்ச்சியின் விளைவாக ஊசலி கலியானாவில் மலைப்பக்கம் சரிந்ததென விளக்கினார். அவர் . பின்னர் இமயமலைகளின் திணிவினால் கலியானாவிலும், கவியான்பூரிலும் ஏற்படக்கூடிய புவியீர்ப்புக் கவர்ச்சியை மதிப்பிட்டபோது அது முன் ன ர் கணித்தறியப் பட்ட (5 - 231) அளவிலும் மூன்று பங்கு அதி க ம க க் (15 - 885) காணப்பட்டதைக்கண்டு வியப்படைந்தார். இக் கண்டுபிடிப்பு மலைகள் தமது உயரத்துக்கும். திணிவுக்கும் ஏற்ற ஈர்ப்புக்கவர்ச்சியின்றியிருப்பதை மேலும் உறுதிப்படுத்தி பது இதனைத் தொடர்ந்து பிறாற் சமநிலைத்தன்மை பற்றிய தமது கருத்தைத் தெரியப்படுத்தினார். அஃதாவது புவியின் மேலோட்டுப் பகுதிகள் வேறுபட்ட உயரத்துடன் காணப்படுவதற்கு அவற்றின் கீழுள்ள பொருட்களின் அடர்த்தி வேறுபாடுகளே காரணமாகும் இதன்படி உயரம் கூடியவை அடர்த்தி குறைந்தவையாகவும், உயரம் குறைந்தவை அடர்த்தி கூடியனவாகவுமிருக்கும் ஆயினும் பன்னூறு கி.மி. அகலமான வேறுபட்ட துண்டங்களின் அடர்த்தி வேறுபாடுகள் புவியோட் டின் கீழ் ஏறத்தாழ 150 கி.மீ ஆழத்திலுள்ள ஈடுசெய் மட் டத்தில் சீர்படுத்தப்படும். அதற்குக் கீழ் எங்கும் அடர்த்தி ஒரேயளவாக இருக்கும் என்பதாம்.
பிறாற்றின் கருத்து வெளியிடப்பட்ட அதேயாண்டு 1855) எயறி (Aity) என்பவர் சமநிலைத் தன்மை பற்றிச் சற்று வேறுபட்ட ஒரு கருத்தை முன்வைத்தார். அவர் புவியோட் டின் பகுதிகள் மேற்பாகத்தில் ஒரு சீரர்ண அடர்த்தியையும் கீழ்ப்பாகத்தில் அதிக அடர்த்தியையும் கொண்டவை ; அதே சமயம் மலைகளின் உயரம் புவியோட்டின் கீழுள்ள அவற்றின் வேரினால் ஈடுசெய்யப்படுகின்றது. ஒரு நீர்த்தொட்டியில் மிதக்கவிடப்பட்ட மரக்குற்றிகளைப்போலப் புவியோட்டுத் துண்டங்கள் இடையோட்டின்மேல் ஒரு வகையான சமநிலையிலுள்ளன' L
மிதப்புச்

Page 18
24 புவிவெளியுருவவியல்
""
* **
* : {{}}:
* ※ ་་་་་་་་་་་་་་་་་་་་་་
ಇಲ್ಲಿ? + ' ' } မန္တီးစ མ་༧་ ་་་་་་་་་་ “འཚེ་
རྩི། ། ____** ** ** * * -*ኚ‹:
استان ماه
2*
படம் 6. 1, 2, 3, 4 என்னும் நான்கு நிரல்களும்
சமநிலையிலுள்ளன.
புவியோட்டின் உண்மையான இயல்புகள் பற்றி இதுவரை அறியப்பட்டவை பிறாற் எயறி என்பவர்களின் சில கருத்
துக்களை உறுதிப்படுத்துகின்றன. அவர்களுக் பின் ன ர் ஹேகனின் (Heiskamen) என்னும் பின்லாந்துப் புவிப்பெளதிக
வியலாளர் சமநிலைத் தன்மை பற்றிச் சி கருத்துக்
களைத் தெரிவித்துள்ளார். அவையாவன:- 偲,鷲
(1) மலைகளும் மேட்டு நிலங்களும் மட்டுமன்றிக் கண்டங்க ளும் வேர்களையுடையன (2) புவியோட்டுத்துண்டங்களின் சராசரி அடர்த்தி வேறுபட்டது. (3) புவியோட்டின் வெவ் வேறு பகுதிகளில் உயரத்துக்கேற்ப அடர்த் தி வேறுபடுகிறது. இவரது கருத்துக்கள் இன்று பரவலாக ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளன. ...' 薇。
2, 2 (ii) சமநிலை ஈடுசெய்தல்
புவியோட்டுத்துண்டங்களின் அடர்த்தி மற்றும் அமுக்க வேறுபாடுகளை ஈடுசெய்யும் (சமன்செய்யும்) மட்டம் மேல் இடையோட்டிலுள்ள மென்பாறைக் கோளத்திலிருப்பதாகவும் அதன் மூ ல மே சமநிலையாக்கம்' செய்யப்படுவதாகவும் நம்பப்படுகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சமநிலைத் தன்மை 25
சமநிலையாக்கம் இருவகையான சீர்ப்படுத்தும் அசைவு களையுடையது. சுமையேற்றப்பட்ட பிரதேசங்கள் அச்சுமை நீங்கும்போது மேலுயர்வது ஒருவகையாகும். அதேசமயம் உயரமான ஒரு மலைப்பிரதேசம் தேய்வதனாற் பெறப்படும் அடையல்கள் பிறிதொரிடத்தில் படிவு செய்யப்படுவதனால் அப்பகுதி தாழும்போது ஏற்படும் சமநிலைச்சீர்குலைவை ஈடு செய்வதற்காகத் தாழும் பகுதியிலிருந்த பொருட்களில் ஒரு பகுதி தேய்வடைந்த மலைப்பிரதேசத்தை நோக்கிக்கிடையாக அசைவதும், அதன் விளைவாக அம்மலைப்பிரதேசம் மீண்டும் (மெதுவாக) மேலெழுவதும் இரண்டாவது வகையான அசை வைக்குறிக்கும்.
22(ii) சமநிலை சீர்ப்படுத்தற்குரிய சான்றுகள்:
மேல் குறிப்பிடப்பட்ட முதலாவது வகையான சீர்படுத் தும் அசைவு, கண்டப்பனிக் கட்டியாறாக்கப்பட்ட ஸ்கந்தினே வியா பின்லாந்து போன்ற நாடுகளில் இன்றும் இடம்பெறுகி றது அங்கு 250 மீ உயரமான மேலுயர்த்தப்பட்ட கடற் கரைகள் காணப்படுவதும், பொத்ணியன் குடாப்பகுதியில் நிலம் ஆண்டிற்கு 1 செ. மீ அளவு மேலெழுவதும், கனடா வில் கட்சன் குடாப்பகுதியிலும் அதைப்போன்ற அசைவு நிகழ் வதும் முதலாவது வகையான சீர்படுத்தும் அசைவிற்குச் சான்று களாகும், இரண்டாவது வகையான சீர்படுத்தும் அசைவானது (1) விறைப்பான ஆனால் பிளாஸ்திக் தன்மையுள்ள இடை யோட்டுப்பகுதியில் கிடையான அசைவையும் புவியோட்டில் நிலைக்குத்தான அசைவையும் உள்ளடக்குவதனாலும்,
(2) புவியோட்டின் திணிவு மற்றும் சேர்க்கை வேறுபாடுகள் காரணமாக மேற்பரப்புச்சுமையை நீ க் க வு ம் , நீக்கப்பட்ட வற்றைக் கிடையாக அசைக்கவும் அதிக காலம் தேவைப்படு வதனாலும் , 鷺
(3) புவியோடு அவ்வப்போது ஆங்காங்கு வேறுவகையான புவி அசைவுக்குட்படுவதனாலும் மெதுவாகவே செயல்படும் என்பதை உணரலாம். இதனால், எச்சந்தர்ப்பத்திலும் எப்பிர தேசத்திலும் சமநிலை முற்றுப்பெறாதிருத்தல் சாத்தியமாகும். உதாரணமாக, இமயமலைப்பிரதேசம், மேற்கு மத்தியதரைக் கடற் பிரதேசம், பால்கன் பிரதேசம், கேரக்கசஸ், பிரனிஸ் மலைப்பிரதேசங்கள் ஆகியன இன்னும் சமநிலை ஈடுசெய்யப் படாதிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Page 19
26 புவிவெளியுருவவியல்
இவ்வாறு சமநிலையசைவுகள் செயல்பட்டு ஒரு ஆழ மட் டத்தில் புவியோட்டின் அமைப்புக்கூறுகளின் அடர்த்தி, அமுக்க வேறுபாடுகளைச் சீர்படுத்தா விட்டால், உயர்ந்த மலைகள், மேட்டுநிலங்கள், கண்டமேடைகள் முதலியன சரிந்து விழுந்து சமுத்திரங்களை நிரப்பியிருக்கும்! ஏனெனில், புவி முழுவதும் விறைப்பானதாகவோ, புவியோடானது மலைகள் மேட்டுநிலங் களைத் தாங்கக்கூடிய பலமுடையதாகவோ, இல்லை. எனவே புவியீர்ப்பு விசைகள் மெதுவாக வாயினும் தொடர்ந்து செயல் பட்டுப் புவியோட்டில் ஈர்ப்புச் சமநிலையைக் கொண்டுவர முயலும் - கொண்டு வரும் என்பதை விளங்க முடியும். இதுவே சமநிலைத்தன்மையின் தாற்பரியமாகும்.
23 புவியீர்ப்பு அளவீடுகளும் முரண்பாடுகளும்:-
எந்தவிடத்திலும் சமநிலைத்தன்மையை ஆய்வு செய்வ தற்குப் புவியீர்ப்பு அளவீட்டுமுறை பயன்படும். இவ்வாறு புவி யீ ர் ப்பை அளவீடு செய்யும் போது (1) புவியின் ஒரு சிற்றச்சுத் தன்மை (2) குத் துயரம் (3) தரைத்தோற்ற வேறு பாடுகள் என்னும் மூன்றுக்கும் வேண்டிய திருத்தங்கள் செய்யப் படும். இதன்மேல் பெறப்படும் புவியீர்ப்பளவைச் சீர்ப்படுத்திய அளவிலிருந்து கழிக்கும் போது வருவது போகே (Bouger) முரண்பாடு எனப்படும். அது அதிகமாயிருப்பின் நேர்முரண் பாடு எனவும் குறைவாயிருப்பின் எதிர்முரண்பாடு எனவும் குறிப்பிடப்படும்.
அடர்த்தி கூடிய பாறைகளைக்கொண்ட கடலடித்தளங்கள், எரிமலை மையங்கள் அகழிகள் (Trenches) போன்றவை பொதுவாக நேர்முரண்பாட்டைத் காட் டு ம், அதேசமயம் மலைப் பிரதேசங்களும், கண்டநிலப்பரப்பும் எதிர்முரண்பாட் டைக் காட்டும் ஆயினும் இத்தகைய முரண்பாடுகளில் பெரு மளவு (8.5%) ஏறத்தாழ 113 கி.மீ. ஆழ மட்டத்தில் அற்றுப் போகச் சிறிய அளவிலான சமநிலை முரண்பாடு" மட்டும் மிஞ்சும். ஆயினும் அதுவும் மென்பாறைக் கோளத்தில் (150 கி. மீ ஆழ மட்டத்தில்) முற்றர்க மறைந்துவிடுமென நம்பப் படுகிறது. *

அத்தியாயம் 3
புவியின் அமைப்பும் உட்பாகமும்
கோட்தொகுதியில் புவியின் அமைப்பு தனித்துவமுண்ட யது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட விண்வெளி ஆய்வுகள் குறிப்பாக செவ்வாய், சந்திரன் பற்றிய ஆய்வுகள் அதனைச் சுட்டுகின்றன. புவியைச் சுற்றியுள்ள வளிமண்டலம் வேறுபட்ட படைகளையும், பண்புகளையும் கொண்டிருப்பதுபோல், புவி யின் மேற்பரப்பும், உட்பாகமும் வேறுபட்ட அமைப்பையும் பெளதிக இயல்புகளையும் கொண்டிருப்பதை அண்மைக்கால ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
31 சில பழைய கருத்துக்கள்:-
புவியின் உள்ளமைப்பை விளக்க முற்பட்ட சுயெஸ் என்னும் (Suess) ஆஸ்திரிய அறிஞர் அது சீயல் சீமா நிபே (Sial. Sima Nife) என்னும் வேறுபட்ட மூன்று படைகளையுடைய தென்றும் அவற்றின் அடர்த்தி மேலிருந்து கீழ் நோக்கி அதி கரித்துச் செல்கின்றதென்றும், இதனால் மேலு ள்ள படை கீழுள்ள படையின்மேல் மிதப்பதாகவும் கூறினார். அவருக்குப் பின் இந்நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த சில ஆய்வாளர் கள் புவியின் ஆழமான உட்பாகம் முற்றிலும் திரவமானதாக இருக்கலாமெனக் கருத்து வெளி யி ட் டார். ஒரு சில புவிப் பெளதிகவியலாளர்கள் இன்றும் இக்கருத்தை ஆதரிக்கின்றனர். ஆனால் அண்மைக்கால ஆய்வுகள் புவியின் உள்ளமைப்பைப் பற்றிய புதிய சான்றுகளையும் தகவல்களையும் வெளிப்படுத்திய தன்மூலம் சில பழைய கருத்துக்களை நிராகரித்து அதன் உண்மை யான அமைப்பியல்புகளை நாம் ஒரளவு அறிய உதவியுள்ளன.
3:2 புவியின் உள்ளமைப்பை அறிய உதவும் சான்றுகள்:
புவியின் ஆழமான உட்பாக நிலைமைகளை நேரடியாக அறிய முடியாது. உலகிலுள்ள மிக ஆழமான பெற்றேர்லியக் கிணறும் 8 கி.மீ. ஆழமானதே. அதுவும் கண்டநிலப்பரப்பில் இருப்பதனால் புவியின் பாறை வலயத்தின் ஒரு சிறு பகுதியைப் பற்றி மட்டும் (உ-ம் புவி யோ டு) ஒரளவு அறிய முடியும்.

Page 20
8 புவிவெளியுருவவியல்
எனவே புவியின் உள்ளமைப்பையும், ஆழமான உட்ப ா க நி  ைல  ைம க  ைள யு ம் மறைமுகச் சான்றுகள் மூலமே நாம் உய்த்துணர முடியும். அவற்றை முதலில் ஆராய்வோம்.
3:2 (i) மறைமுகச் சான்றுகள்:
புவியின் உள்ளமைப்பையும் இயல்புகளையும் அறிய உதவும் மறைமுகச் சான்றுகளில் காந்தப்புல இயக்கம், புவி யீர்ப் பு அளவீடுகள், விண்வீழ்கற்கள் பற்றிய ஆய்வுகள், சந்திரக்கற்கள் பற்றிய ஆய்வுகள், நிலத்தடி அணுகுண்டு / நீரகக்குண்டுப் பரி சோதனைகள், ஆய்வுகூடப் பரிசோதனைகள், புவி நடுக்கவியற் சான்றுகள் என்பன குறிப்பிடத்தக்கவை. இ வ. ற் றி ல் இறுதி யாகவுள்ள மூன்றும் முக்கியமானவை.
(1) காந்தப்புல இயக்கம்
புவியின் ஆழமான உட்பகுதியில் ஏறத்தாழ 3500 மில்லி யன் ஆண்டு காலமாக ஒரு காந்தப்புலம் இயங்கி வருவதாக அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் ஆய்வுகள் தெரி விக்கின்றன. எனவே இக்காந்தப்புலத்தின் இயக்கத்திற்கு இன்றி யமையாத இரும்பை அதிகமாகக் கொண்ட ஒரு அகக்கோளம், அதன் உட்பகுதியில் திண்மையாகவும், வெளிப்பகுதியில் திரவ நிலையிலும் இருப்பது புலப்படுகிறது.
(2) புவியீர்ப்பு அளவீடுகள்:
புவியீர்ப்பு அளவீடுகள் புவியின் மேற்பரப்பில் அடர்த்தி வேறுபாடுகளைக் கொண்ட புவியோடும் அதன் உள்ளே படிப் படியாக அதிகரிக்கும் அடர்த்தியைக் கொண்ட வன்பாறைகளும் காணப்படுவதைச் சுட்டுகின்றன. மேலும் புவி யே ர ட் டி ன் அடர்த்தி 28 ஆகவும் புவி முழுவதின் அடர்த்தி 5.5 ஆகவும் இருப்பதிலிருந்து புவியின் உட்பாகத்தில் அடர்த்தி கூடிய பார மான உலோகக் கணிப்பொருட்கள் காணப்படுவதை ஊகிக்க 6})ff Lf).
(3) விண்விழ்கற்கள்
விண்வீழ் பொருட்களில் 'கற்பாங்கான' (Carbonaceous Chrondites) பழைய விண்வீழ்கற்களின் சேர்க்கை மேல் இடை
யோட்டுக்கு ஒ ப் பா ன து. அவை ஒலிவைன் பைறொக்சின் கூட்டினாலாக்கப்பட்டவை. அதேசமயம் உலோகப்பர்ங்கான

புவியின் அமைப்பும் உட்பாகமும்
விண்விழ்கற்கள் (Sideries) 90 %இரும்பையும் 10 % நிக்கலை யும் கொண்டவை. இவற்றின் சேர்க்கையும் அ டர் த் தி யு ம் புவியின் மையக்கோளத்திற்கு ஒப்பானவையாயிருப்பது குறிப் பிடத்தக்கது. விண்வீழ்கற்கள் உடைந்த ஒரு கோளின் பகுதி யாகவோ, உட்கோள்களை உருவாக்கிய கருப்பொருட்களின் மீதமாகவோ இருக்கலாமென்பதால் அவற்றி ன் அமைப்பும் சேர்க்கையும் புவியின் உள்ளமைப்பை ஊகிக்க உதவுகின்றன.
(4) சந்திரப் பாறைகள்:
சந்திரனிலிருந்து கொண்டுவரப்பட்ட பார்  ைற க ள் புவி யோட்டிலுள்ள எரிமலைக் குழம்புப் பாறை, கப்புறோ என்ப வற்றைப் போன்றிருக்கின்றன. ஆனால் இவற்றின் வயது 4.4 மில்லியனாக இருப்பதனால் புவியிலும் தொடக்கத்தில் அத்த கைய பாறைகளை அதிகமாகக்கொண்ட ஒரு புவியோடு ப் பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆனால் புவியில் ஏற் பட்ட வெப்பப் புரட்சியின் விளைவாக அதன் அமைப்பியல் புகள் மாறின என நம்பப்படுகிறது.
(5) நிலத்தடி அனு/நீரகக்குண்டுப்
நிலத்தடியில் நீரகக்குண்டுகளை வெடிக்க வைக்கும்போது வெளி ப் படும் அதிர்வலைகள் சிற்றலைகளாயிருப்பதனால் (0.5 - 2 %). L'É. நீளம்) புவியின் உள்ளே காணப்படும் சில கி.மீ. நீளமான சிறியளவிலான அமைப்பு வேறுபாடுகளையும் புலப் படுத்துகின்றன. அதேசமயம் புவிநடுக் கவலைகள் தமது நீளத் திலும் பெரிய அம்சங்களைப்பற்றிய தகவல்களை மட்டும் அறி யத்தருகின்றன. இவ்வாறு 1992 ல் சீனாவில் நிகழ்த்தப்பட்ட நிலத்தடிக் குண்டு வெடிப்பின்போது வெளப்பட்ட அதிர்வலை கள் சைபீரியாவில் இடையோட்டின்கீழ் உள்ள D படையில் 300 கி. மீ நீளமும், 130 கி. மீ. உயரமும் கொண்ட தீவு போன்ற ஒரு அமைப்பு காணப்படுவதை வெளிப்படுத்தின. நிலத்தடியில் வெடிக்க வைக்கும் ஒரு சிறிய அணு க் கு ன் டு றிச்ரர் அளவுத்திட்டத்தில் 5 அளவான புவிநடுக்கத்திற்கு ஒப்பான அதிர்வலையை ஏற்படுத்தும் என்பது ஈண்டு குறிப்பி -த்தக்கது. இத்தகைய பரிசோதனைகள் காலம் இடம் அளவு என்பவற்றைப் பொறுத்தவரை முற்றிலும் மனிதனின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதனால் அதிக பயனுடையன.

Page 21
}
புவிவெளியுருவவியல்
(6) ஆய்வுகூடிப் பரிசோதனைகள்
ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்படும்" பரிசோதனைகள் வேறுபட்ட வெப்ப அமுக்க நிலைமைகளில் கணிப்பொருட்களில் ஏற்படும் மாற்றங்களை வெளிப்படுத்துகின்றன. அவற்றி ன் அடிப்படையில் புவியின் உட்பாகத்தில் நிலவக்கூடிய வேறுபட்ட வெப்ப அமுக்க நிலைமைகளில் அங்குள்ள கணிப்பொருட்களின் பெளதிக இயல்புகள், அடர்த்தி, சேர்க்கை என் பவற்றை உய்த்துணரக்கூடியதாயிருக்கிறது. மேலும் இத்தகைய பரி சோதனைகளையும் நாம் விரும்பியபோது, விரும்பிய இடத்தில், விரும்பிய அளவில் மேற்கொள்ளக்கூடியதாயிருப்பதனால் இவற் றின் மூலம் ஊகங்களை உறுதிப்படுத்துவதோடு புதிய தகவல் களையும் பெறலாம்.
鲨。 蕊,*,
. . . . (( \,,\,\,,\, \ 3:2 (i) புவிநடுக்கவியற் * TT 575791356 FT | ,
புவியின் உட்பாக அமைப்பு சேர்க்கை, பெளதிக இயல்பு என்பவற்றை քո լք , அறிவதற்கு உதவும் சான்றுகளில் புவி நடுக்கவியற் சான்றுகள் மிக முக்கியமானவை. ஏனெனில் புவி நடுக்க அலைகள் பற்றிய ஆய்வுகள் மூலமே பல புதிய தகவல் தள் பெறப்பட்டுள்ளன. இனி அவற்றை ஆராய்வோம். A
புவி நடுக்கம் ஏற்படும் போது (1) உடலலைகள் (உள்ளலை கள்) (2) மேற்பரப்பலைகள் என இருவகையான அலைகள் பரவுகின்றன. இவற்றில் P அலை S அலை என்னும் இரண்டும் உடலலைகளாகும். இவை புவியை ஊடறுத்து உள்ளே செல் வதனால் தான் உடலலைகள் எனப்படுகின்றன. புவியின் மேற் பரப்பு வழியே செல்லும் அலைகள் ப அலைகள் எனப்படும் அவை லொவ்" (Love) அல்ை றேலே அலை (Raleigh) என இருவகைப்படும். 。
”。
,
3.3 புவிநடுக்க அலைகளின் இயல்பும் போக்கும்
。 P' 'S' எனப்படும் உள்ளலைகளிடையே சில ஒற்றுமை களும் வேற்றுமைகளும் உள்ளன. முதலாவதாக, ['P': 'S' ୬ ବର୍ତ୍}ତ । களிரண்டும் புவியின் உட்பாகத்தில் எங்காயினும் அடர்த்தி அல்லது நெகிழ்ச்சி அதிகரிக்குமாயின் அல்வெல்லையில் முறிவு டையும் அல்லது பிரதிபலிக்கப்பட்டுத் திரும்பும். இரண்டாவ தாக, சில சூழ்நிலைகளில் இவை ஒன்று மற்றொன்றாக மாறக்
 
 
 

அ பரவுகின்றன. இவை 100 கி.மீ வரை வீச்சுடையன. இவற்றில்
புவியின் அமைப்பும் உட்பாகமும் 31
கூடியன் மூன்றாவதாக இவை சிறிய அலைகள்ை (அலை வரிசை) யுடையனவாதலின் விரைவாக ஒரிடத்தைக் கடந்து செல்லும். ஆயினும் ஒப்பளவில் 'P' அலைகள் "S" அலைகளை விட அதிக வேகத்தில் (1.7 பங்கு) செல்வதனால் அவையே புவியின் மேற்பரப்பை முதலில் வந்தடைகின்றன. இதனால் அவை முதலலைகள்' எனவும் அவை நேர்த்திசையில் அசை வதனால் நெடுங்கோட்டலைகள் எனவும் அழைக்கப்படுகின் றன. P அலைகள் ஒலி அலைகளைப்போன்று திர வம் திண்மம், வாயு என்னும் மூன்று கூடாகவும் செல்லும்,
வகையான ஊடகங்களுக்
"S" அலைகள் : P அலைகளுக்குப்பின்னால் மேற்பரப்பை வந்தடைவதனால் இரண்டாவது அலைகள் (வழியலைகள்) எனப்படுகின்றன. இவை தாம் செல்லும் திசைக்குக் குறுக்கே (பக்கத்திசைகளில்) பொருட்களை அசைப்பதனால் குறுக் கலைகள் எனவும் பெயர்பெறும். இவற்றின் அசைவு பாம்பின் அசைவைப்போன்றிருக்கும் மேலும், இவ்வலைகள் தாம் ஊட றுத்துச் செல்லும் பொருட்களை உலுப்பி உருக்குலைப்பதனால் உலுப்பும் அலைகள் எனவும் அழைக்கப்படும். "S" அலைகள் விறைப்பான (கெட்டியான) பொருட்களுக்கூடாக மட்டு ம் செல்லும்; திரவத்திற்கடாக செல்லமாட்டா. ஆயினும் அதன் மேற்பரப்பு வழியே செல்லும், ”
*Pಿಕ್ಲಿಷ್ ಫ್ಲಿ... . "ينبغي أنه تمثالثة ثانية لغة التي فقه فيه
* ଜ୍ଞ, ଜ୍ଞାଞ୍ଜୋ
IL ii 历 புவி நடுக்க அலைகள் 3, 4. மேற்பரப்பு
இவ்வகையான அலைகள் புவி நடுக்க மேன்மையத்திலிருந்து
லொவ் வகையான அலைகள் S அலைகளைப் போன்று

Page 22
N பக்கத்திசையிற் பொருட்களைத் தள்ளும் அதேசமயம் றேலே அலைகள் கடலலைகளைப் போல் உருளும் (உருட்டும்) இயல் LA GØDL-ULI GÖT.
புவி நடுக்க அலைகளில் 'P' 'S' எனப்படும் உடலலைகள் மூலமே ஆய்வாளர்கள் புவியின் உட்பாகத்தைப்பற்றி அதிக மாக அறிந்துள்ளனர். புவி ஓரினமானதாயில்லாது அதன் உட் பகுதியில் தொடர்ச்சியற்ற அமைப்புக்கள், பெளதிக நிலை மற்றும் கணிப்பொருட் சேர்க்கை வேறுபாடுகள், கணிப்பொருள் அடர்த்தி நிலைமாறல், வெப்ப அமுக்க வேறுபாடுகள் முதலி பன கா ன ப் படு வ  ைத ப் புவி நடுக்க அலைகளின் வேகம் போக்கு என்பன பற்றிய ஆய்வுகள் பலப்படுத்துகின்றன.
புவி நடுக்க அலைகளின் வேகம் பெரதுவாக பாறைகளின் அடர்த்தி, நெகிழ்ச்சி என்பவற்றைப்பொறுத்து வேறுபடுகிறது. (அடர்த்தி வேகத்தைக் கூட்டும்; நெகிழ்ச்சி குறைக்கும்) அதே சமயம் அவற்றின் போக்கு பாறைகளின் பெளதீக இயல்பு, அடர்த்தி என்பவற்றில் ஏற்படும் மாற்றங்களினால் பாதிக்கப் படுகிறது.
3. 5. புவி நடுக்க அலைகள் தரும் தகவல்கள்
புவியின் மேற்பகுதியில் 6, 1 கி. மீ ஆகவுள்ள 'P' அலை களின் வேகம் கண்டங்களின் கீழ் 25-30 கி. மீ ஆழத்தில்
6, 9 ஆக அதிகரிப்பதனால் புவியின் மேற்பகுதியில் அடர்த்தி
குறைந்த பாறைகளும், கீழ்ப்பகுதியில் அடர்த்தி கூடிய பாறை களும் காணப்படுவதை உணரலாம். இதன் பின் "P" அலை களின் வேகம் கண்ட நிலப்பரப்பில் 30 - 40 கி. மீ ஆழத்திலும்
சமுத்திரங்களின் கீழ் 10 கி. மீ ஆழத்திலும் 7.9 - 8.1 ஆக
அதிகரிப்பதனால் அது அந்த எல்லையில் பாறைகளின் கணிப்
பொருட் சேர்க்கை அடர்த்தி என்பவற்றில் குறிப்பிடத்தக்க
மாற்றம் ஏற்படுவதைக் காட்டுகின்றது. முன் குறிப்பிட்ட எல்லையில் ஏற்படும் வேக மாற்றத்தை 1919ல் மோகோவிசி என்னும் யூகோசிலாவியர் கண்டறிந்தபடியால் அதற்கு * (ჭupn† (ჭჭ;ji''''* გT6სტგუთმეს எனப்பெயரிட்டுள்ளனர். இந்த எல்லைக்கு மேலுள்ள பகுதி புவியோடு எனவும் கீழ் உள்ள ததி இடை யோடு எனவும் குறிப்பிடப்படுகின்றது.
மோகோ எல்லைக்குக்கீழ் 100 - 250 கி. மீ ஆழ வலயத்தில் P அலைகளின் வேகம் 8.1 இலிருந்து 7.8 ஆக வீழ்ச்சி யடைந்து 300 கி. மி எல்லையில் மீண்டும் 8, 1 ஆக மெதுவாக
 
 
 

புவியின் அமைப்பும் உட்பாகமும் 33
அதிகரிப்பதனால் 100 - 250 கி. மீ ஆழ வலயம் ஒரு வேகம் மாறும் வலயமாயுள்ளது. அந்த வலயத்திற்குக்கீழ் P அலை களின் வேகம் படிப்படியாக அதிகரித்து 413 கி. மீ ஆழத்தில் 8, 9 ஆகவும் 700 கி. மீ ஆழ எல்லையில் 9 ஆகவும் மெதுவாக அதிகரிப்பதனால் 300 - 700 கி. மீ ஆழ வலயத்தை இன்னொரு வேகம் மாறும் வலயமாகக் கொள்ளலாம். இதன் மேல் 984 கி. மீ ஆழத்தில் 10.4 ஆகவிருக்கும் P அலைகளின் வேகம் 2900 கி. மீ ஆழ எல்லையை நோக்கிப் படிப்படியாக அதிகரித்து 13, 6 ஆக உயர்கிறது. எனவே 984 - 2900 கி.மீ ஆழ வலயத்தில் பொதுவாக பாறைகளின் அடர்த்தி ஒரு சீராக ஆழத்திற்கு ஏற்ப அதிகரிப்பதை அறியலாம். ஆயினும் 2900 கி. மீ ஆழ எல்லைப் பகுதியில் அலைகளின் வேகம் 13.6 இலிருந்து மீண்டும் 8, 1 ஆக (மோகோ எல்லையில் அளவுக்கு) சடுதியாக 40% வீழ்ச்சியடைவதனாலும் அந்த எல்லையில் அலைகள் முறிவடைவதனால் புவி நடுக்கங்களின் போது அலைகள் பரவாத ஒரு நிழல் வலயம் அதற்கு அப்பல் உருவாதலினாலும் அதனைப் புவியின் உட்பகுதியில் பெளதிக நிலைமை மாறும் ஒரு முக்கியமான எல்லையாக கொள்ளலாம்.
ཕྱི་ م2
*、 议 ஆ
வடிஇடின்பாறைக்கோளம்
به بیبیسیسیسیسی : . கிமீ/ஒது Exధి జిల్లా గ్రామిక్స్టిస్తేజ
研丁函下丁3下落下畸「下
8. புவி நடுக்க போக்கும் உள்ளமைப்பும் குறிப்பு: உள்ளீடு என்பது மையக்கோளமாகும் 鷺。 2900 கி. மீ ஆழ எல்லையில் 8, 1 ஆகக் குறையும் P அலை வேகம் படிப்படியாக அதிகரித்து 5100 கி மீ ஆழத்தில் 10, 8 ஆக உயர்கின்றது. அந்த எல்லையில் அவ்வலையின் வேகம் சடுதியான சிறு அதிகரிப்பைக் காட்டுகின் றது. ஆனால்

Page 23
புவிவெளியுருவவியல்
5100 கி. மீ ஆழ எல்லைக்கு அப்பால், 'P' அலைகளின் வேகம் குறிப்பிடத்தக்க மாற்றமின்றிப் புவியின் மையப்பகுதியை நோக்கித் தொடர்ச்சியாக அதிகரித்து அங்கு 12 - 13 ஆக உயர்கிறது. இதனால் புவியின் மையக்கோளத்தின் உட்பாகம் ஓரினமான, திண்மையான ஒரு கோளமாயிருப்பதை ஊகிக்க லாம். இனி, புவி நடுக்க அலைகளின் பரவல் மூலமும் முன்னர் குறிப்பிடப்பட்ட பிற சான்றுகளிலிருந்தும் புவியின் உட்பாக அமைப்பு, பெளதிக இயல்பு சேர்க்கை என்பன பற்றி அறியப் பட்டவற்றைத் தொகுத்து நேர்க்குவோம்.
புவி நடுக்கவலைகள் பற்றிய ஆய்வுகள் மூலமும், பிற மறை முகச் சான்றுகள் மூலமும் புவி படையமைப்புடைய ஒரு கோள் என்பது புலப்படுகிறது. இவ்விதமான படையமைப்பில் புவியை நாம் ஒரு முட்டைக்கு ஒப்பிடலாம். ஒரு முட்டையின் கன அள வில் அதன் மேலோடு, வெண்கரு, மஞ்சட்கரு ஆகியன காணப் படும் அதே விகிதாசாரத்தில் (ஏறத்தாழ) புவியின் பிரதான அமைப்புக் கூறுகளாகிய புவியோடு, இடையோடு, அகக் கோளம் என்பன அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இனி புவியின் வெவ்வேறு படைகளின் பெளதிக , இரசாயன, பொறி முறை இயல்புகளைச் சற்று விரிவாக நோக்குவோம்.
3 6 புவியோடு:
முட்டையின் மேலோட்டைப் போன்று புவியை முடியுள்ள மெல்லிய பாறைப்படையே இதுவாகும். இது நிலப்பகுதியில் உயர்ந்தும் நீர்ப்பகுதியில் தாழ்ந்துமிருப்பதோடு இரசாயனச் சேர்க்கை, பெளதிகப்பண்புகள் என்பவற்றில் வேறுபாடுகளைக் காட்டுவதனால் இதனை ,
(1) கண்டப்புவியோடு
(ii) சமுத்திரப்புவியோடு எனப்பகுத்தல் பொருத்தமானது
(i) கண்டப்புவியோடு:
இது ஏறத்தாழ 4008 மில்லியன் ஆண்டு பழையதும் ஒப் பளவில் நிலையானதுமாகும். ஏனெனில் இது உருவாகிய பின்னர் புவியோட்டு விருத்தி அசைவுகளினால் ஆங்காங்கு ஒரளவு உருவம் மாற்றப்பட்டும் உருக்குலைக்கப்பட்டுமிருப்பி னும், ஒரு பொழுதும் முற்றாக அழிக்கப்படவில்லை. கண்டப் புவியோடு சமநிலங்களில் 20 கி. மீ முதல் உயர் மலைப்பிர தேசங்களில் 70 கி. மீ வரை வேறுபட்ட தடிப்புள்ளது. இதில்

புவியின் அமைப்பும் உட்பாகமும் 35
எல்லா வகையான பாறைகளும் கலந்து காணப்படுகின்றன. இதன் மேற்பகுதி அடர்த்தி குறைந்த (28) பெல்சிக் வகை யான பாறைகளையும் கீழ்ப்பகுதி அடர்த்தி கூடிய மாபிக் வகையான பாறைகளையும் கொண்டுள்ளது. மேலும் . இது மிகப் பழைமையான பரிசை நிலங்கள், உயரமான மலைகள், மேட்டு நிலங்கள் போன்ற வேறுபட்ட தரைத்தோற்ற உறுப்பு களைக் கொண்டிருப்பதனாலும், இதில் புவியோட்டு விருத்தி அசைவுகள், எரிமலையுயிர்ப்பு ஆகியன அவ்வவ்போது ஏற் பட்டதனாலும் இதன் அமைப்பு மிகச் சிக்கலாயுள்ளது.
கண்டப்புவியோட்டின் மேற்பகுதிக்கும் கீழ்ப்பகுதிக்குமிடை யில் புவிநடுக் கவலைகளின் வேகம் வேறுபடுவதை கொன்றாட் என்பவர் 1924 ல் கண்டுபிடித்த பின்னர் அதன் மேற்பகுதி யையும் கீழ்ப்பகுதியையும் பிரிக்கும் எல்லை 'கொன்றாட்டின் தொடர்ச்சியறுமெல்லை' எனப்படுகிறது. ஆயினும் கண்டப் புவியோடு முழுவதும் அது தொடர்ச்சியாகக் காணப்படாமை யினால் அதனை ஒரு முக்கியமான பிரிகோடாகக் கொள்ள முடியாது. அண்மைக்காலத்தில் இதுபோன்ற இரண்டு எல்லை களும் கண்டப்புவியோட்டில் அறியப்பட்டிருக்கின்றன.
ii) சமுத்திரப் புவியோடு
இது இதன் கீழிருக்கும் இடையோட்டின் மேற்பரப்பு வெளிப் பாடாகவும், பர்தி உருகலுக்கும், இரசாயன மாற்றங்களுக்கும் உட்படுத்தப்பட்ட அதன் பகுதிகளிலிருந்து பெறப்பட்டதாகவு முள்ளது. (F.vine) மேலும் இது ஒப்பளவில் புதியதும், விரை வாக உருவாக்கப்பட்டுப் பேணப்பட்ட பின்னர், ஏறத்தாழ 200 மில்லியன் ஆண்டு காலத்தில் முற்றாக அழிக்கப்பட்டு மீண்டும் புதுப்பிக்கப்படுவதுமாகும். சமுத்திரப் புவி யோ டு முற்றிலும் தீப்பாறைகளைக் கொண்டதாகவும் எங்கும் ஒரு சீரான அமைப்புடையதாகவும் காணப்படுகிறது. இதன் சரா சரித் தடிப்பு 10 -11 கி. மீ. வரையுள்ளது. ஆனால் சமுத் திர நீரை நீக்கிப்பார்ப்பின் இதன் உண்மையான தடிப்பு 5-6 கி.மீ. வரையிலேயே உள்ளது.
சமுத்திரப் புவியோட்டின் மேற்பரப்பில் வேறுபட்ட தடிப் புள்ள அடையற் படிவுகள் காணப்படுகின்றன. அவற்றின் கீழ் முறையே (1) 1 கி.மீ - 2 கி.மீ தடிப்பான தலையணைப் பாறைக்குழம்பு, (2) தகட்டுருவான டொலறைற் குத்துத்தீப் பாறைகள் , (3) கப்புறோ மற்றும் பெரிடோரைற் பாறைகள்

Page 24
36 புவிவெளியுருவவியல்'
என்பவற்றைக் கொண்ட மூன்று படைகளை இனங்காணலாம் இவற்றின் தடிப்பு இடத்திற்கிடம் வேறுபடுகின்றது.
சமுத்திரப் புவியோட்டின் வயது கண்டங்களின் கரைகளை நோக்கியும், ஆழத்துடனும் அதிகரிக்கின்றது. உதாரணமாக 2 மில்லியன் வயதுடைய சமுத்திர ஒடு 3 கி. மீ ஆழத்திலும் 50 மில்லியன் வயதுடைய சமுத்திர ஒடு 5 கி. மீ ஆழத்திலும் கர்ணப்படுகிறது. தகட்டொருங்கல் வலயங்களில் மேல்நோக்கித் தள்ளப்பட்ட ஒபியேர்லைற் (Ophiolite) எனும் திரள் பாறை கள், சமுத்திரப்புவியோட்டின் பாறை அமைப்பைப் பிரதிபலிப் பதோடு அதனை வெளிப்படையாகக் காணவும் உதவுகின்றன.
புவியோட்டின் கீழ் எல்லையாகக் கொள்ளப்படும் மோகோ 0.16 கி.மீ. 32 கி.மீ வரை தடிப்பானது அது கண் டப் புவியோட்டில் சராசரி 35 - 40 கி மீ ஆழத்திலும் சமுத்திரப் புவியோட்டில் 10 ஆழத்திலும் காணப்படுகின்றது. அது கண்டப்பகுதியில் ஓரளவு தொடர்ச்சியாகவும் நடுச் சமுத் திரப் பாறைத்தொடர் வலயத்தில் மேல் நெளிக்கப்பட்டும் நறுக்கின்றியும் காணப்படுகிறது. ஆயினும் புவியோட்டையும் அதிலிருந்து அடர்த்தி, கணிப்பொருட் சேர்க்கை என்பவற்றில் வேறுபட்ட இடையோட்டையும் பிரிப்பதனால் அதனைப் புவி யின் மேற்பகு தியிலு rt ஒரு மு க்கியமான στου ഞ ഒ யாகக் கருது கின்றனர். மோகோ எல்லைக்குக் கீழ் உள்ள பாறை க ஸ், மேலுள்ள பாறைகளுடன் இறுக்கமாக ஒட்டியுள்ளன. இவ்வாறு புவியோட்டேர்டு இணைந்து 100 கிமீ ஆழ மட்டம் வரை யுள்ள இடையோட்டின் ଧ୍ମା () { பகுதியையும் உள்ளடக்கிய பகுதி பாறைக்கோளம் எனப்படுகிறது. அதேசமயம் முன் குறிப் பிட்ட இடையோட்டின் சிறு பகுதி மூடி (Lid) எனப்
3:8 ജൂബ പേര്
இது ம்ோகோ எல்லையிலிருந்து 2900 கிமீ வரை பரந்து புவியின் கனத்தில் ஏறத்தாழ 84%மான பகுதியை உள்ளடக் கியிருக்கிறது. இதன் சேர்க் கை கற்பர்ங்கான விண்விழ்கற் களைப்போன்றதென்க் கருதப்படுகிறது புவியேர்ட்டைப்போல் இதையும் மேல் கீழான் இரு படைகளாகப் பிரிக்க ல ம்
 

புவியின் அமைப்பும் உடபாகமும் (புல்லன் என்பவர் மூன்றாகப் பிரித்துள்ளார்) இதன்படி மோகோவிலிருந்து 670 கி.மீ வரையுள்ள யோடு எனவு அதற்குக் கீழ் 2900 கி.மீ. வரையுள்ள பகுதி
37
பகுதிமேல் இடை
இடையோடு எனவும் குறிப்பிடப்படும்.
ধ্ৰুষ্টঃ
m...sxxwwwmaታናፋጭ**ጫoooo`”ሆ*************oo4ኛá(ss ,
ჯ, ჩ, ჭ) წეზ8 & "リ
變。。。。
* * ४ थ्र. ४; g
ఇబ్లీ స్త్ర : స భ శ్రీ స్టా :
في ي ي ي ي في نة، تم في قة E و 44 نة في في
* ? s。源。e @。
↔。******* 鶯。*******獻
స్థ స్ట్రీస్ట్రీ శ్రీ స్టీ
့် 'ဇို ဖြိုး' }
嵩 ***、* * శ్రీ విజ్ఞ _్యకి
畿
* ? 4'3$33% ! 6ծ) 1 Ուլյց:
Gigirarth
馨 $?。
శాఖీ
படம் 9 புவியின் L1632 L LS63) LDL After Ki Bullen ) (அ) மேல் இடையோடு:
இடையோட்டில் ஒலிவைன் (50%), பைறொக்சீன் (30%), காணெற் (15% என்பவற்றை அதிகமாகக் கொண்ட பெரிடோரைற் பாறை முக்கியமானது. ஆயினும் மேல்

Page 25
38 புவிவெளியுருவவியல்
இடையோடு பெளதிக இயல்பு, அடர்த்தி என்பவற்றில் பக்கத் திசையிலும் நிலைக்குத்தாகவும் வேறுபாடுகளைக் காட்டுகின் றது. உதார்ணமாக 1000 கி. மீ நீளமான பகு தி யி ல் புவி நடுக்க அலை வேகம் 4 - 8 % வேறுபாடுகளைக் காட்டுகிறது. மேலும் இதன் மேற்பாகத்தில் ஏறத்தாழ 100 - 250 கி. மீ. ஆழமான பகுதியில் புவிநடுக்க அலை வேகம் மோகோ எல்லை யில் உள்ளதைவிட 6% குறைவாயிருப்பதை 1926 ல் சுற்றன் பேர்க் சுட்டிக்காட்டினார். இவ்வலயத்தில் காணப்படும் வெப்ப அமுக்க நிலைகளில் இங்குள்ள பெரிடேதரைற் பா  ைற க ள் 1 - 10% வரை உருகிய நிலையில் (பிளாஸ்ரிக் போல) இருப் பதனால் இதனை மென்பாறைக் கோளம் (Asthenosphere) எனக்குறிப்பிடுகின்றனர். இது நடுச் சமுத்திரப்பாறை வலயத்தில் குறைந்த ஆழத்திலும் (30 - 60 கி.மீ.) தெளிவாகவும் கண்டங் களின்கீழ் அதிக ஆழத்திலும் (150 - 250 கி. மீ.) தொடர்ச்சி யின்றியும் காணப்படுவதாக ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது.
மென் பாறைக்கோளப் பகுதியில் அமுக்க அதிகரிப்பைவிட வெப்ப அதிகரிப்பு விகிதம் கூடுதலாயிருப்பதும் சிறிதளவு (5%) திரவம் காணப்படுவதும் பாறைகளை நெகிழச்செய்து புவி நடுக்கஅல்ை வேகத்தையும் குறைத்திருப்பதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர். மேலும், இக்கோளம் பாறைக்குழம்பில் ஒரு பகுதியின் பிறப்பிடமாயிருப்பதனாலும், பாறைக்கோளத்தின் கீழ் எல்லையில் அமைந்திருப்பதனாலும் எரிமலைத் தொழிற் பாடு, தகட்டசைவு, சமநிலைத் தொழிற்பாடு என்பவற்றுடன் நெருங்கிய தொடர்புடையதென நம்பப்படுகிறது பாறைக் கோளத்தையும் அதன் கீழுள்ள மென்பாறைக் கோளத்தையும் சேர்த்துப் புவியோட்டு விருத்திக் கோளம் (Tectomosphere) எனவும் குறிப்பிடுவதுண்டு.
இடையோட்டின் மேற்பகுதியில் 400 கி. மீ ஆழ மட்டத்தில் ஒலிவைனின் பளிங்கமைப்பு ஸ்பைனல் அமைப் பாக வேகமாக மாறுவதனால் பெரிடோரைற் பாறைகளின் அடர்த்தி 6% அதிகரிக்கும் போது அந்த எல்லையின் கீழ் (412 கி. மீ) பைறொக்சினும் காணெற் அமைப்புக்கு மெது வாக மாறுகிறது. இதனால் 300 - 700 கி. மீ ஆழ வலயம் புவிநடுக்க அலை வேகம் மெதுவாக அதிகரிக்கின்ற ஒரு வேகம் மாறும் வலயமாயுள்ளது. ஆனால் தகடுகள் கீழிறங்கும் வல யங்களில் அலை வேகத்தில் முரண்பாடுகள் அவதானிக்கப்பட் இள்ளன.

புவியின் அமைப்பும் உட்பாகமும் 39 (ஆ) கீழ் இடையோடு:
இது மேல் இடையோட்டிலிருந்து வேறுபட்ட அமைப்பு டையதாகவும், கணிசமான அளவு ஓரினமானதாகவுமிருக்கின் றது. உதாரணமாக 1000 கி. மீ. தூரத்தில் புவி நடுக்க அலை கள் 1 - 2% வேறுபாட்டையே காட்டுகின்றன. (மேல் இடை யோட்டில் 4-8%) மேலும், 670 கி. மீ. ஆழ மட்டத்தில் நிலவும் 1900°C வெப்பநிலையில் ஸ்பைனல் பெறொக்கைற் அமைப்புக்கு மாறத்தொடங்கிக் கீழ் இடையோட்டின் கீழ்ப் பகுதியில் நிலவும் 15-25 மில்லியன் பார் வளிமண்டல அமுக்க நிலையில் முற்றாக பெறொக்கைற்றாக மாறுகின்றது. இதனால் பெறோகைற் கீழ் இடையோட்டில் மட்டுமன்றிப் புவி முழுவதி லுமே மிக முக்கியமான கணிப்பொருளாக விளங்குகிறது. இதன் அடர்த்தி 4 - 6 வரையுள்ளது. இவ்வாறு பெறோக்கைற் அமைப்புடன் கூடிய பெரிடோரைற் பாறைகள் பெருமளவிற் காணப்படுவதனால் புவியினுள்ளே காணப்படும் ஓரினமான பெரிய படை இதுவேயெனலாம். கீழ் இடையோட்டிற்கூடாக * S அலைகள் செல்வதனால் அது திண்மையான ஒரு படை யாகவே இருக்கவேண்டும். ஆனால் கணிப்பொருட்களின் பளிங் கமைப்பு மாற்றங்கள் காரணமாக ஆங்காங்கு வேக முறிவு கள் ஏற்படுவதாக நம்பப்படுகிறது.
3, 9 மையக்கோளம் (அகக்கோளம் / கோளவகம்)
இடையோட்டின் கீழ் புவியின் மத்திய பாகத்தை உள்ள டக்கிய பகுதி கோளவகம் அல்லது மையக்கோளம் எனப் படுகிறது. இது புவியின் கனத்தில் ஏறத்தாழ 1/3 பங்கினதா யுள்ளது. புவியின் உட்பகுதியைப்பற்றிப் பூரணமாக தகவல்கள் இதுவரை பெறப்படவில்லை. ஆயினும் அண்மைக்கால ஆய்வு கள் பல புதிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளதோடு உட் பாகம் பற்றிய சில ஊகங்களை நிராகரித்தும், சிலவற்றை உறுதிப்படுத்தியுமுள்ளன.
(1) மையக் கோளத்தின் அமைப்பு:
புவியின் இடையோட்டின் கீழ் அதனிலும் வேறுபட்ட ஒரு அமைப்பு இருக்கவேண்டுமென்பதை 1890 ல் வேச்சாட் என் பவர் முதன்முதல் ஊகித்த பின்னர் 1906 ல் ஒல்டாம் என்ப வர் தமது ஆய்வுகள் மூலம் அதனை உறுதிப்படுத்தியுள்ளார். அதன் பின்னர் 1913 ல் கூற்றன் பேர்க் என்பவர் அதன்

Page 26
40 புவி வெளியுருவவியல்
எல்லையை 2891 கி.மீ. எனச்சரியாக நிர்ணயித்தார். அந்த எல்லைக்குக்கீழ் S அலைகள் பரவாமையும் P அலைகள் முறி வ  ைட ந் து (103 - 147 வரை) புவி நடுக்க நிழல் வல யத்தை உண்டர்க்குவதும் P அலைகளின் வேகம் 40% வீழ்ச் சியடைவதும் அவர்களின் முடிவுக்கு ஆதாரங்களாகும். ஆயினும் மையக்கோளம் முழுவதும் ஒரு திரவக்கோளமெனவே அப் போது கருதப்பட்டது . -
*T *>~~) >
படம்: 10 நிழல் வலயமும் மையக்கோளமும்
ஆனால் 1936 ல் லேமன் (Lehmann) என்னும் ஒல்லாந்தர் தமது ஆய்வுகள் மூலம் புவியின் அகக் கோளம் அதன் வெளிப் பகுதியில் திரவநிலையிலும் உட்பகுதியில் திண்மைநிலையிலும் இருப்பதாகத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். அண்மைக் கால ஆய்வுகள் அக்கருத்தை உறுதிப்படுத்தியதோடு திண்மை யான உட்கோளம் 2444 கி.மீ விட்டத்துடன் பருமனில் சந்திர னிலும் சற்றுப் பெரியதாகவும் புவியின் முழுத்திணிவில் அண் ணளவாக 1% மாயிருப்பதாகவும் தெரிவிக்கின்றன.
புவியின் மையக் கோளத்தின் உட்பாகம் திண்மையான தென்பதற்குரிய சான்றுகள் பின்வருமாறு (1) மையக் கோளத் தின் உட்பாகத்துக்கூடாக "S" அலைகள் 3.7 கி.மீ/செக். வேகத்திற் செல்வது அறியப்பட்டுள்ளது. (உண்மையில் அவை திரவக்கோள எல்லையில் 'P' அலைகளாக மாறியபின் திண்மை யான உட்கோள எல்லையில் மீண்டும் S அலைகளாக மாறிய வையாம்) (2) மையக் கோளத்தின் உட்பகுதியில் 'P' அலை களின் வேக அதிகரிப்பு அப்பகுதி திண்மையானதாயிருப்பதைச் சுட்டுகின்றது. (3) புவி யி ன் காந்தப்புலம் இயங்குவதற்கு திண்மையான ஒரு உட்கோளம் தேவையென்பதை ஆய்வுகள்
 
 
 

புவியின் அமைப்பும் உட்பிரகமும் 4.
வலியுறுத்துகின்றன (4) நிலத்தடி நீரகக் குண்டுப் பரிசோதனை ୫ କର୍ମୀ பற்றிய பதிவேடுகள் மையக் கோளத்தின் உட்பாகம் திண்மையாயிருப்பதை உறுதிப்படுத்துகின்றன. அதேசமயம் அக் கோளத்தின் வெளிப்பாகம் திரவ நிலையிலிருப்பதற்கு இரு சான்றுகள் உள்ளன. முதலாவதாக புவியின் காந்தப்புலம் மின் பிறப்பாக்கி முறையிற் செயற்படுவதற்கு அசையக்கூடிய திரவக் கோளமொன்று Ա9յ6ւյցի այլք: இரண்டாவதாக, மையக் கோளத் தின் வெளியெல்லையிற் காணப்படுகின்ற வெப்ப, அமுக்க நிலைமைகளில் (வெப்பம் 3700°C அமுக்கம் 136 மில் பார்) அப்பகுதி திரவநிலையிலேயே இருத்தல் வேண்டும்.
மையக்கோளத்தின் இரசாயனச் சேர்க்கை
புவியின் கோளத்தில் பாரமான இரும்பு, நிக்கல் ஆகியன அதிகமாகக் காணப்படுவதாக 1860 ல் ஆகஸ்ரிடோறே (Augusteoaubre) என்ற பிரான்சியர் முதன் முதல் கருத்து வெளியிட்டார் அக்கருத்தின் அடிப்படையிலேயே அது நிக்கல்இரும்புக்கோளம் (Nite) எனப் பெயர் பெற்றது. இரும்பு அண்டத்தில் அதிகமாகக் காணப்படுதலும், பாறைப்பாங்கான விண் வீழ்கற்கள் (Siderites) 90% இரும்பையும் 10% நிக்கலையும் கொண்டிருப்பதும் அக்கருத்துக்கு ஆதாரமாயுள்ளன. மேலும் அகக் கோளத்தின் அடர்த்தி இயல்பான நிலைக்குத்தான அமுக் கத்தினால் மட்டும் ஏற்படமுடியாதென்றும், இரும்பு மற்றும் நிக்கல் போன்ற பாரமான உலோகப் பொருட்கள் இருந்தால் மட்டுமே அத்தகைய அடர்த்தி உண்டாகுமெனவும் மையக் கோளத்தின் நெகிழ்ச்சி மின்னியற் பண்புகள் ஆகியனவும் அங்கு இரும்பு காணப்படுவதைச் சுட்டுவதாகவும் கருதப்படுகிறது. ஆனால் அண்மைக்கால ஆய்வுகள் புவியின் மையக்கோளத்தில் பாரமான இரும்பு, நிக்கல் என்பவற்றுடன் பாரமற்ற சில மூல கங்களும் கலந்து காணப்பட வேண்டுமென்பதை வலியுறுத்து கின்றன. இதற்கு மூன்று காரணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன . அவை (1) மையக் கோளத்தின் வெளிப்பாகத்திற் காணப்படும் அமுக்க நிலையில் (1.36 மில் பார்) அதன் அடர்த்தி 1 18 என்ற நிலைக்கு உயரவேண்டும். ஆனால் அங்கு இரும்பின் இயல்பான அடர்த்தியிலும் (8) 10% குறைவாகவே ( 2) காணப்படுகிறது. (2) மையக் கோளத்தின் உட்பகுதியில் நிலவும் வெப்ப அமுக்க நிலைமைகளில் (வெப்பம் +43000 அமுக்கம் 3.4 மில் பார்) அப்பகுதியின் அடர்த்தி 14 க்கு மேல் இருக்க வேண்டும் ஆனால் அங்கு 11 அல்லது 12 வரையிலான அடர்த்தியே காணப்படு

Page 27
4、 புவிவெளியுருவவியல்
கிறது. (3) மையக் கோளத்தின் உட்பகுதியில் "S" அலைகளின் வேகம் அதிகரிப்பதனால் அங்கு அடர்த்தியைக் குறைத்து வேகத்தைக் கூட்டக் கூடிய வேறு சில மூலகங்களும் கலந்து காணப்பட வேண்டும்.
அண்மைக்கால ஆய்வாளர்கள் கந்தகம் (இரும்பு சல்பைட்) ஒட்சிசன் (இரும்பு ஒட்சைட்) ஆகியனவும் மையக் கோளத்திற் கலந்து காணப்படலாமென்றும் அதற்குச் சில புறச்சான்றுகள் உள்ளதாகவும் கூறுகின்றனர். அவை (1) கந்தகம், ஒட்சிசன் என்பன அண்டத்தில் அதிகமாயுள்ளன. (2) கந்தகம் புவியின் மேற்பகுதியில் குறைவாயிருப்பதனால் அதன் உட்பகுதியில் அதிகமாகக் காணப்பட வேண்டும் (3) புவியின் ஆழமான உட்பகுதியிலுள்ள வெப்ப, அமுக்க நிலைமைகளில் இரும்பு சல்பைட்டும், இரும்பு ஒட்சைடும் உலோக நிலையடையக் கூடி பன. (1) அவற்றின் அடர்த்தி இரும்பின் அடர்த்தியை விடக் குறைவானது. (5) இடையோட்டுப் பொருட்களைவிட இரும்பு சல்பைடின் உருகுநிலை வெப்பம் குறைவானது. (6) விண்வீழ்கற் களிலும் இரும்பு சல்பைட் காணப்படுகிறது. (7) அது ஒரு சிறந்த மின்கடத்தி. (8) அகக் கோளத்தில் அவதானிக்கப்பட்ட புவி நடுக்க அலைகளின் வேக வேறுபாடுகளும், அடர்த்தி வேறுபாடு களும் அங்கு 90% இரும்பும், 10% அளவுக்கு நிக்கல், மற்றும் ஒட்சிசன், கந்தகம் என்பவற்றுடன் சிறிய அளவில் அரிதான மூலகங்களும் (Trace Elements) காணப்பட வேண்டுமென்பதைச் சுட்டுகின்றன. அதேசமயம் அகக் கோளத்தின் மையப்பகுதி யிலுள்ள உலோகங்கள் அங்கு நிலவும் வெப்ப, அமுக்க நிலை 6ზე) ს ი რქ5 6ifმმწy உருகாமல் உறைநிலையில் இருக்கலாமென நம்பப் படுகின்றது.
மையக்கோள இடையோட்டு எல்லை வலயம்: மை ய க் கோளத்தின் வெளிப்பாகமும் இடையோடும் சந்திக்கும் எல்லை. யில் 'P' அலைகளின் வேகம் 40% வீழ்ச்சியடைவதாக ஒல்டாம் (Oldham) என்பவர் 1906 ல் குறிப்பிட்டார். அந்த எல்லை 2891 கி மீ ஆழத்திலிருப்பதாக கூற்றன்பேர்க் (Cutenberg) 1913 ல் கணித்துக் கூறினார். இதனால் அதனை ஒல்டாம்கூற்றன்பேர்க் எல்லை அல்லது கூற்றன்பேர்க் எல்லை எனக் குறிப்பிடுவர்.
ஒல்டாம் கூற்றன்பேர்க் எல்லை நறுக்கானது. மோகோ எல்லையைப் போல் அதுவும் ஒரு சில கி.மீ தடிப்பானது. அதே
 

புவியின் அமைப்பும் உட்பாகமும் 43
சமயம் அவ்வெல்லையில் தனித்துவமுள்ள இன்னொரு படையும் அமைந்திருப்பதாக அண்மைக் கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதுவே D படையாகும்.
இடையோட்டிற் கூடர்க ஆழத்துடன் அதிகரித்துச் செல் லும் P அலைகளின் வேகம் இப்பகுதியில் அதிகரிக்கவில்லை அது பிரதேசத்துக்குப் பிரதேசம் வேறுபடுவதாகவும் "P" அலைகளின் முகப்பு, D படையை அண்மிக்கும் போது நெளிந் தும் வளைந்தும் செல்வதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
D படையின் தோற்றமும் சேர்க்கையும்: "D" படை யானது இடை யோட்டிற்கும் மையக் கோளத்திற்குமிடையில் ஏற்படும் இரசாயன எதிர்த் தாக்கங்களின் விளைவாக உரு வாகியதாக நம்பப்படுகிறது. கீழ் இடையோட்டுப் பாறைகள் மையக் கோளத்தின் திரவப்பகுதியில் படிந்து கரைவதாகவும் அதன் விளைவாக உருவாகும் உலோகச் செறிவுள்ள மண்டிகள் (Dregs) D எல்லையில் படிவு செய்யப்படுவதாகவும் கருதப் படுகிறது அதே சம்யம் மையக் கோளத்தின் வெளிப்புறத் திலுள்ள திரவம் அவ்வெல்லையில் மெதுவாக மேலெழுவதாக வும், அவ்வெழுச்சி முற்றுப் பெறப் பல மில்லியன் ஆண்டுக் காலம் செல்லலாமெனவும் நம்பப்படுகிறது. இவ்வாறு இடை யோட்டுப் பொருட்களுக்கும் மையக் கோளத்தின் திரவப்பகுதிக்
மேற்காவுகை ஒஉங்கள்
Α (Z/
uit 11 D படையின் அமைப்பு - குமிடையே ஏற்படும் இடைத் தாக்கங்களினால் இரும்பு சிலி சைட், வூல் சைட் போன்ற கலப்பு உலோகங்கள் உருவாகு

Page 28
புவிவெளியுருவவியல்
வதாகவும், மேற்காவு கையோட்டங்கள் அக் கலவைகளைச் சிறிது தூரம் மேல் நோக்கி நகர்த்தக் கூடுமாயினும் அடர்த்தி கூடிய அக் கலவைகள் மீண்டும் D படை எல்லையிற் படி வதாகவும் தெரியவருகிறது. இவ்வாறு திரளும் உலோகக் கலவைகள் ஏறத்தாழ 300 கி.மீ வரை தடிப்பான் மேடுகளாகத் (Bumbs) தோன்றுவதாகத் தெரியவருகிறது. அதேசமயம் மேற் காவுகையோட்டங்கள் கீழிறங்குமிடங்களில் D படை மிக மெலிந்து காணப்படுகிறது. சைபீரியப் பகுதியில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வுகள் அதனை உறுதிப்படுத்துகின்றன.
1) பல்லினமான சேர்க்கையுடன் காணப்படுவதற்குக் காரணம் அவ்வெல்லையில் உருவாகும் இடையோட்டு-மையக் கோள இடைத்தாக்கப் பொருட்களுடன் இடைத்தாக்கமற்ற இடையோட்டுப் பொருட்கள் கலப்பதாகும். "D படை இடை யோட்டில் உள்ளதை விட 10% அதிகமான இரும்பைக் கொண்டி ருக்கலாமெனவும் அது (இரும்பு) மையக் கோளத்திற் படியாமல் அதற்கு வெளியே தேங்கி நிற்கின்ற அல்லது மையக் கோளத்தின் வெளிப் பகுதியிலிருந்து வெளியேறிய இரும்பாயிருக்கலாமென வும் நம்பப்படுகிறது அதேசமயம் இடையோட்டிலுள்ள விறைப் பான பாறைகள் திரவக் கோளத்தையடுத்துள்ள பகுதிகளில் நிலவும் உயர் வெப்பநிலை காரணமாக இளகித் (நெகிழ்ந்து) திரவமாக மாறும் நிலையில் இருக்கக் கூடுமெனவும் சில ஆய்
கருதுகின்றனர்.
1) படையின் முக்கியத்துவம்: இது புவியிலுள்ள மிக உயிர்ப்பான புவிச்சரிதவியல் வலயமாயிருக்கலாமெனக் கருதப் படுகிறது D படையைப் பற்றி இதுவரை அறியப்பட்டதி லிருந்து அது ) புவியின் சுழற்சி அச்சின் தளம்பல் (Wobbing) (2) புவியின் மின் காந்தக் களத்தின் பெயர்ச்சிகள் (3) மேற் காவுகையோட்டங்களின் தொழிற்பாடு என்பவற்றுடன் ஏதோ விதமான ஆனால் நெருங்கிய தொடர்புடையதென நம்பப் படுகிறது.
F படை புவியின் மையக் கோளத்தின் மேற்பகுதியில் உள்ள திரவக் கோளமும் அதன் உள்ளிருக்கும் திண்மையான கோளமும் சந்திக்கும் எல்லையில் "P" அலைகளின் வேகம் சடுதியாக (10% வரை) அதிகரிப்பதனால் அதை ஒரு வேகம் மாறும் வலயமாகச் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதுவே F' படை எனப்படுகிறது. அந்த எல்லையில் நிலவும் உயர் அமுககம் (3.3 மில் பார்) காரணமாக இரும்பு உறைநிலையில்

புவியின் அமைப்பும் 45
இருப்பதே வேக அதிகரிப்பிற்குக் காரணமாயிருக்கலாமெனக் கருதப்படுகிறது. ஆனால் F படை ஏறத்தாழ 150-300 கி.மீ தடிப்புடனும் நறுக்கான் எல்லைகளுடனும் காணப்படுவதாக அண்மைக் கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே அதனை ஒரு மாறல் வலயமாகக் கொள்ளாமல் தனியான ஒரு படை பாகக் கொள்வதே பொருத்தமானது.
புவியின் உட்பாக (வெப்ப அமுக்க, அடர்த்தி) நிலைமைகள்:- புவியின் உள்ளே வெப்பம் அதிகரித்துச் செல்வதை மலைத் தொழிற்பாடு (2) ம்ேற்பரப்பு வெப்பப் பாய்ச்சல் அளவீடுகள் (3) வெப்பவூற்றுக்கள் (4) தரைக்கீழ் சுரங்கங்களிற் காணப்படும் உயர் வெப்பநிலை (5) புவிப்பெளதிக மாதிரி கைகள் மூலம் பெறப்பட்ட தகவல்கள் ஆகியன உறுதிப்படுத்
0 na R ” *
f
帶
っWalio سمیع بھی
:ே ”。 * rg | {{eళి కొడి) gd | | |
感 蝠
5 ಸ್ಕಿನ್ತಿ &ಿಧಿಧಿಡಿ ß蟲 وي""تهجيقؤقت
படம்: 12 புவியின் வெப்பச் சாய்வு விகிதம்
துகின்றன புவியின் உட்பாக வெப்பத்தில் ஒருபகுதி பூர்வீக வெப்பமாகும் புவி ஒரு கோளாக வளரத்தொடங்கிய காலத்தில் ஏற்பட்ட கோள் நுணுக்குகளின் மோதல், புவியின் கருப் பொருட்

Page 29
46 புவிவெளியுருவவியல்
கள் படைகளாக வேறுபடுத்தப்பட்டமை, பாரமான கணிப் பொருட்கள் ஈர்ப்பு முறையில் உள்ளிழுக்கப்பட்டமையினால் வெளிவந்த வெப்பம் ஆகியன பூர்வீக வெப்பத்திற்குப் பிரதான காரணங்களாகும். பிற்காலத்தில் றேடியக்கதிரியக்கமும் அதன் வெப்ப நிலையைக் கூட்டியது. ஆனால் புவியின் உள்ளே வெப்பம் ஒரு சீராக, ஒரேவிகிதத்தில் அதிகரித்துச் செல்லவில்லை. புவி யின் வெப்பச்சாய்வு விகிதம் இடத்துக்கிடம் வேறுபட்ட அதி கரிப்பைக் காட்டுகிறது. உதாரணமாக, உட்பாக வெப்பம் இடையோட்டின் மேற்பகுதியை (மென்பாறைக் கோளத்தை) ஒரளவும் (5-10%) அகக்கோளத்தின் வெளிப்பாகத்தை முற் றிலும் திரவ நிலையில் வைத்துள்ளது. அதேசமயம் இடை யோட்டின் பெரும்பகுதியும், அகக் கோளத்தின் உட்பகுதியும் விறைப்பாக (திண்மையாக) இருப்பதாக ஆய்வுகள் சுட்டு கின்றன. -
புவியின் மேற்பகுதியில் வெப்பச் சாய்வு விகிதம் 25-30°C இ.மீ என்ற அளவிலுள்ளது. அந்த வி கி த த் தி ல் வெப்பம் தொடர்த்து அதிகரித்தால் 30 கி.மீ ஆழத்தில் வெப்ப நிலை 750-900+c ஆகவும் 3000 கி.மீ ஆழத்தில் வெப்பநிலை 7500°C9080°c ஆகவுமிருக்க வேண்டும். ஆனால் 30 கி.மீ ஆழத்தில் வெப்பம் 400°C க்கு மேற்படவில்லையென்றும் 2900 கி.மீ ஆழ மட்டத்தில் வெப்பநிலை ச் 37000 அளவில் இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய முரண்பாடுகளுக்கு (1) உட்பாக அமுக்க வேறுபாடுகள் (ii) கணிப் பொருட்களின் அவத்தை (Phase) மாற்றம் (ii) அடர்த்கி வேறுபாடுகள் ty) மேற்காவுகையின் தொழிற்பாடு ஆகியன காரணங்களாயிருக் SG)
பாறைக் கோளத்தின் கீழிருக்கும் மென்பாறைக் கோளப் பகுதியிலிருந்து பசால்ற் வகையான பாறைக் குழம்பு மேலெழு வதனால் அங்கு ஏறத்தாழ 1200°C வெப்பநிலை காணப்பட வேண்டும். அந்த அடிப்படையில் நோக்கும் போது வெப்பம்
புவியினுள்ளே கி.மீ ஆழத்திற்குச் சராசரியாக 10-12°C என்ற விகிதத்தில் இடையோட்டின் கீழ் எல்லை வரை (2900 கி.மீ)
அதிகரித்துச் சென்று அதற்கு அப்பாலுள்ள திரவக் கோளப் பகுதியில் ஒரு சீராகப் பரம்பியிருக்கலாமெனவும் , பின் மையக் கோளத்தின் திண்மையான உட்பகுதியில் ஏறத்தாழ 10 கி.மீ ஆழத்திற்கு 5°c என்ற விகிதத்தில் வெப்பம் மெதுவாக அதி கரித்துச் செல்வதாகவும் நம்பப்படுகிறது. ஆயினும் மையக் கோளத்தின் ஆழமான உட்பகுதியின் உண்மையான நிலைமை, களை உறுதிப்படுத்த முடியாதிருக்கிறது.

புவியின் அமைப்பும் உட்பாகமும் 47
புவியின் உட்பாக அமுக்க நிலைமைகள்:- புவியினுள்ளே எங்காயினும் காணப்படும் அமுக்கம் அவ்விடத்தின் மேலுள்ள பாறைகளின் அமுக்கமாகும். அதனைப் பாறை நிலையியல் அமுக்கம் (Lithostatic Pressure) என்பர். அது பொதுவாக, ஆழத்தோடு அதிகரிப்பினும் அதி க ரி ப்பு விகிதம் ஒரு சீரா யில்லை. அதற்கு (1) புவியின் படையமைப்பு (2) கணிப்பொருட் சேர்க்கை (3) அடர்த்தி வேறுபாடுகள் ஆகியனவே காரணங் ளாகும். புவியின் பாறை நிலையியல் அமுக்கம் வளிமண்டல அமுக்க அடிப்படையில் கணிக்கப்படுகிறது. அது சதுர செ. மீற்றருக்கு 1 கிலோ கிராமிலும் சற்றுக் குறைவானது. கீழ்வரும் அட்டவணை புவியின் உட்பாக நிலைமைகளைக் காட்டுகிறது.
39 புவியின் உட்பாக நிலைமைகள்
படைகள் தடிப்பு கீழ் எல்லை அடர்த்தி வெப் நிலை அமுக்கம்
(கி.மீ) (ஆழம்)
புவியோடு 20.70 70 இ , 8 27 . . g. - 9000 t uri ri
மென்பாறைக் -
39, Tart) 50 250 இ 8 3.3-3.5 000 - 4000 , ,
1 250°C:
கீழ்
இடையோடு 600 670 கி.மீ 3.5-3.7 1900°C 382000 .
இடையோடு 2221 2891 கி.மீ 3.7 - 5.5 3700°c 1.36மி. Dʼ Lj 623) g , - 0-300 289 16 ਨੂੰ 5-99 ਤੇ 700, 36, வெளி W மையக்கோளம் 2258 5149 கி.மீ 122-128 - 3.30மி. , α» αίτ மையக்கோளம் 2444 6371 கி.மீ 3 + 4300 3.46மி. ,
3. (ஆ) புவியின் காந்தக்களம் (புலம்) (Geomagnetic field)
காந்தம் கவரும் திறனுடையது என்பதை எவரும் அறிவர். இவவாறு காந்தக் கவர்ச்சியுடைய ஒரு பொருளைச்சுற்றி அதன் கவர்ச்சி வெளிப்படும். பரப்பே காந்தக்கள மாகும். எனவே புவியின் காந்தக்களம் என்பது புவியைச்சுற்றி அதன் கவர்ச்சி தென்படும் பரந்த வலயமாகும் புவியின் காந்தக்களமானது வளிமண்டலத்திற்கு அப்பாலுள்ள 'காந்தக் கோளம்' என்னும்

Page 30
48. “
வலயம் வரை பரந்துள்ளதாகத் தெரிகிறது. ஆயினும் அது, பலமாதன்று, அது புவியின்மையக்கோளம் உருவாகிய காலம் முதல் ஏறத்தாழ 3500 மில்லியன் ஆண்டுகளாக இயங்கி வருவதாக அண்மைக்கால ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது. புவியின் காந்தக்களத்தைப்பற்றி முன்னாளில் ஆய்வுகளை மேற்கொண்ட சிலர் புவி நிலையான ஒரு காந்தக்களத்தை யுடையது எனக்கூறினர். அதாவது புவியை ஒரு காந்தப் பொருளாக அவர்கள் கற்பனை செய்தனர். வேறு சிலர் புவியின் உள்ளிருக்கும் காந்தக்கணிப்பொருட்களின் செறிவினால் (உதாரணம் மக்னரைற் ஹேமரைற்) காந்தக்களம் உருவாகி யிருக்கலாமெனக் கருத்து வெளியிட்டனர். ஆனால் இக்காலப்பு விப் பெளதிகவியலாளர்கள் இக்கருத்துக்களை ஏற்கவில்லை. இதற்குரியகாரணங்கள் பின்வருமாறு, ”、
புவியின் காந்தக்களம் குறுகிய கால நீண்டகால மற்றும் இட, பிரதேச வேறுபாடுகளைக் காட்டுவதனால் நிலையான (அசைவற்ற) ஒரு காந்தக்களம் புவியில் இருக்கமுடியாது. மேலும் காந்தக்கணிப்பொருட்களின் அடிப்படையில் ஒரு களம் உருவாதலும் கடினமானதே, ஏனெனில் புவியின் உட்பாகத்தில் நிலவும் உயரமுக்க நிலையில் கணிப்பொருட்கள் காந்தமயமாகும். வெப்பநிலை கூறியின் புள்ளி (Curies paint)- குறையும். அதாவது அவை விரைவாகக்காந்தமயமாகும். அதேசமயம் அமுக்கம் வெப்பத்தை அதிகரிப்பதனால் பாறைகள் உருகித் திரவமாக மாறும் போது கணிப்பொருட்கள் தமது காந்தத் தன்மையை இழந்து விடும். ஆகவே புவியின் உட்பாகத்தில் காந்தக்கணிப்பொருட்கள் தனியாக இயங்கி ஒரு காந்தக் களத்தை உருவாக்க முடியாது என்பது தெளிவாகிறது.
3. ஆ. 1. தற்காலக் கருத்துக்கள்:
புவியின் காந்தக்களம் பற்றிய அண்மைக்கால ஆய்வுகள் அது ஒரு சட்டக்காந்தம் போன்று (Bamagnet) இரு @ ಛಿಛಿ ಓಮ್ನಿ! களைக் கொண்டிருப்பதாகவும் அதனை இரு முனைவுக்களம் என அழைக்கலாமெனவும் தெரிவித்துள்ளன. (D pote Field) புவியின் காந்தக்களத்தின் செயற்பாட்டை காந்தத்திசை காட்டி வெளிப்படுத்துகிறது அதிலுள்ள முள் எப்பொழுதும் வட காந்த முனைவையே சுட்டும் அதனையும் அதற்கு எதி ரான தென்காந்த முனைவையும் இணைக்கும் ஒரு கற்பனைக் கோடு காந்த முனை வச்சு" எனப்படும் அது புவியின் வட
 
 
 
 
 

புவியின் அமைப்பும் உட்பாகமும் 49
தென் முனைவச்சிலிருந்து 11° விலகிக் கர்ணப்படுகிறது. இக் கோண வேறுபாடு காந்தச்சரிவு எனப்படும். ஆனால் இது புவியில் இடத்திற்கிடம் காலத்திற்குக் காலம் வேறுபடும்.
3. ஆ. 2. காந்தக்களம் உருவாக உதவிய காரணிகள்
புவியின் காந்தக்களம் ஒரு சட்டக் காந்தம் போலச் செயற்பட்டு வருவதாக நம்பப்படுகிறது. அது தோன்றியதற்கும் நிலைத்திருப்பதற்கும் உதவிய காரணிகள் பற்றித் திட்டவட்ட மாகத் தெரியாவிடினும் அது பற்றிச் சில கருத்துக்கள் தெரி விக்கப்பட்டுள்ளன. காந்தக்களம் பற்றி முதலில் ஆய்வு செய்த "எல் சாசர் என்பவர் 1958ல் தமது மின் பிறப்பாக்கிக் கோட் L s00 G SMSOOtL0 tTOLOOOO S S S L L LS
அவர் புவியின் காந்தக்களம் தன்னைத்தானே தூண்டி நிலைபெறச் செய்யும் (Self Exciting) ஒரு மின் பிறப்பாக்கி போலச் செயற்படுவதாகக் கூறினார். அவரது கருத்தின் படி புவியின் மையக் கோளப்பகுதியில் திரவ நிலையிலுள்ள இரும் பானது வெப்பம், புவிச்சுழற்சி என்பவற்றினால் தூண்டப் பட்டுத் திண்மையான உள்மையக் கோளத்தைச் செல்வதனால் மின் பிறக்கும். அதே சமயம் தாரை போன்ற (ஆனால் மெது வான) திரவப்பாய்ச்சல் மின் கம்பியைப் போன்று மின்னைக் கடத்தும். இவ்வாறு கடத்தப்படும் மின் தன்னைச் சுற்றி ஒரு (மின்) காந்தக்களத்தை உருவாக்கும். பின்னர் இந்தக்காந்தக் களத்தினூடாகத் திரவம் பாயும்போது மேலும் மின் பிறக்கும். இவ்வாறு மின்னும் காந்தக்களமும் ஒன்றையொன்று தூண்டு வதனால் காந்தக்களம் தெர்டர்ந்து நிலைக்கும். மேலும் முன் குறிப்பிட்ட மின் பிறப்பாக்கி முறையான இயக்கம் தற்செயலாக ஏற்பட்ட ஒரு இர சா ய ன - மின் கலச் செயற்பாட்டினால் (Chance Chemical Battery Action) (Ip(5)ő és Lil JLig (53, 56vfTLb என எல்சாசர் விளக்கியுள்ளார். இத்தகைய ஒரு மின்பிறப் பாக்கிச் செயல்முறையின்றிப் புவியின் காந்தக்களம் 10000 ஆண்டுகளுக்கு மேல் இயங்கமுடியாதெனக் கருதப்படுகிறது.
அண்மைக்கால ஆய்வுகளின் படி புவியில் ஒரு காந்தக்களம் உருவாதற்குச் சாதகமாயிருக்கும் காரணிகள் பின்வருமாறு
1) புவியின் மையக் கோளப்பகுதியில் இரும்பும் பிற காந்தக்
கணிப்பொருட்களும் கணிசமாகக் காணப்படுதல்.

Page 31
5 O புவிவெளியுருவவியல் 2) மையக் கோளத்தின் உட்பாகம் திண்மையாகவும் ( ଗ ଘ ଜୀl"},
பாகம் திரவநிலையிலும் காணப்படுதல்.
3) திரவப்பாகம் அசைதல் (via 1 மணிநேரத்தில் ஏறத்தாழ
மீற். அசைவதாக நம்பப்படுகிறது)
4) திரவப்பாகத்திலுள்ள மூலக்கூறுகள் அயன்களாகவும் இலத் திரன்களாகவும் பிரிந்து கர்னப்படுதல் (இது மின்னோட் டத்தை எளிதாக்கும்.)
5) புவியின் சுழற்சி
6 ) மேற்காவுகை ஒட்டங்களின் செயற்பாடு
புவியின் காந்தக்களம் தொடர்ந்து இயங்குவதற்கு வலு இன்றியமையாதது. அது (i) றேடியக்கதிரியக்கச்சக்தி (1)பூர்வீக வெப்பம் (ii) திரவக்கோளத்தின் உட்பகுதிகள் உறைந்து உள் மையக் கோளமாக மாறும் பொழுது வெளிவரும் மறை வெப்பம் என்பவற்றின் மூலம் கிடைக்கலாம் என அண்மைக் கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் இறுதியாகக்கூறப்பட்ட முறையில் புவியின் உள்மையக்கோளம் உருவாகியிருப்பின் அதன் மூலம் 80°C அளவுக்கு வெப்பநிலை குறையும்போது 8012 வாற்ஸ் அளவு சக்தி புவியின் ஆயுட்காலத்தில் பிறந்திருக்கு மெனவும் அதுவும் மேற்காவுகை மூலம் கிடைக்கும் சக்தியும் சேர்ந்து புவியின் மின் பிறப்பாக்கியை இயக்கப் போதுமானவை எனவும்
3 ஆ3 காந்தக்களம் இயங்கும் முறை
சட்டக்காந்த இயக்க முறையில் செயற்படும் புவியின் காந்தக்களத்திலிருந்து புவியின் காந்தமுனை வச்சுக்கு செங்குத் தான திசையில்- அதாவது அகலக்கோட்டுத்திசையில் காந்தக் கவர்ச்சி வெளிப்படுகிறது. ஆயினும் மத்திய கோட்டுப்பகுதியில் உள்ளதைவிட இரு மடங்கு அதிகமான செறிவு (பலம்) முனை வுப்பகுதிகளில் காணப்படுகிறது. இதனால் சமகாந்தக்கோடுகள் காந்த முனைவுப்பகுதிகளில் ஒருங்குவதையும் காந்த மத்திய கோட்டுப்பகுதியில் விரிவதையும் காணக் கூடியதாயிருக்கிறது.
P. Geology by HOLMES (1992) Page. 619
 
 
 
 
 
 
 
 

யானது காந்த முனைவுகளைச் செங்குத்தாகக் காட் டு ம் அதாவது வட காந்த முனைகிை கீழ்நோக்கியும், தென் காந்த முனைவை மேல் நோக்கியும் சுட்டும். அதே சமயம் காந்த
புவியின் அமைப்பும் உட்டாகமும் 5
இத்தகைய செறிவு வேறுபாடுகள் கரணமாகக் காந்த ஊசி
மத்திய கோட்டுப்பகுதியில் அது மேற்பரப்புக்கு இசைவாகக்
(கிடைநிலையில்) சம காந்தக்கோட்டு திசை வழியே முனைவு களைச் சுட்டும்
ஆகவே, காந்த முனைவுகளுக்கும் கர்ந்த மத்திய கோட்டிற்
குமிடைப்பட்ட பகுதியில் காந்த ஊசி சரிவாகத் திசைகளைக்
காட்டும் என்பது தெளிவு.
3 ஆ4 காந்தக்களத்தின் பெயர்ச்சிகளும் மாற்றங்களும்
புவியின் காந்தக்களம் முனைவுப்பாங்கான தாயினும், அது புவியின் சுழற்சி அச்சுடன் சேர்வதுமல்லை; அதன் மத்திய
பாகத்துக்கூடாகச் செல்வதுமில்லை. ஏனெனில் அவ்வாறு செல்லின் அதன் களப்பலம் மத்திய கோட்டில் ஒரேயளவாயி ருக்கும் சுருங்கக்கூறின் அதன் இயக்கம் ஒரு சீரின்றித்தளம்பிய படியே காணப்படுகிறது. காந்த முனைவானது புவியின் வட தென் முனைவச்சிலிருந்து 11 விலகி உள்ளது என்பதை முன் னர் குறிப்பிட்டோம் வட காந்த முனைவு இப்பொழுது 79 வடக்கு 70 மேற்கிலும், தென்காந்த முனைவு 79° தெற்கு 110 கிழக்கிலும் நிலை கொண்டுள்ளது. இவை ஓரிடத்தில் நீடித்து நிலைப்பதில்லை. உதாரணமாக வடகாந்த முனைவு ஆண்டுக்கு 0.04 (ஏறத்தாழ 8. G. 8) மேற்கே விலகிச் இரல் வதாகவும், ஆய்வு செய்யப்பட்ட 140 ஆண்டு காலத்தில் அது 64 மேற்கிலிருந்து 70° மேற்கு வரை நகர்ந்துள்ளதாகவும் தெரிகிறது. இதன் விளைவாக காந்தச் சரிவும் (கோணமும்) மாறிக்கொண்டிருக்கும் என்பதை நாம் ஊகிக்கலாம். இத்த கைய முனைவுப்பெயர்ச்சியை முனைவு அலைதல்" எனவும் குறிப்பிடுவர். ஆனால் உண்மையில் காந்தக் களத்தின் (காந்த முனைவுகளின்) பெயர்ச்சியானது ஓய்ந்துபோகும் ତ୍ର ଓ li li {list 5
தின் சுழற்சியைப் போன்று காணப்படுவதாகவும் காந்த
முனைவுகள் புவியின் முனைவுகளிலிருந்து 30 க்கு மேல் வில குவதில்லையென்றும் அவ்வாறு விலகிலும் நீண்டகால எல்லை யில் (10, 000 ஆண்டுகளில்) அவை முனைவச்சுகளுடன் மீண் டும் இணையுமென்றும் எந்த நிலையிலும் புவியின் காந்தக்
7%২২

Page 32
52 புவிவெளியுருவவியல்
களத்தின் இயக்கத்திற்குப் புவிச்சுழற்சி இன்றியமையாததாயி ருப்பதனால் காந்த முனைவுகள் புவியின் முனைவுகளுக்கு அண் மையிலேயே எப்போதும் இருக்கும் இருக்கவேண்டும் - என்பது புலப்படும்.
அஃதெவ்வாறாயினும் அண்ணளவாக 10 கோடி ஆண்டு களுக்கு முன்னர் ஒரு காலகட்டத்தில் (பலியோசோயிக் யுகத் தில்) புவியின் வட முனைவு மத்திய கோட்டயவில் காணப் பட்டதென்றும் அது மீண்டும் இன்றைய நிலையத்திற்கு வந்த பாதையைக் கண்டங்களில் உள்ள பாறைகளின் எஞசிய காந் தக்களம் காட்டுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. -
மேல் விபரிக்கப்பட்ட இடப்பெயர்ச்சிகளை விட அதிக தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடிய நீண்டகால அசைவு ஒன்றுண்டு. அது முனைவு நேர்மாறல்' எனப்படுகிறது. இதன்படி வட காந்தமுனைவு தென்காந்தமுனைவாக (நிலையம்) மாறும் ஆனால் இத்தகைய மாற்றங்கள் ஒழுங்கற்றும் ஒரளவு நீண்டவேறுபட்ட கால இடைவெளியிலும் (40, 000 ஆண்டிலிருந்து 35 மில்லியன் ஆண்டு காலம் வரை) ஏற்படுவதாகத் தெரிய வருகிறது இவ்வாறு ஆகப்பிந்திய முனைவு நேர்மாறல் இற் றைக்கு 8.9 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தொடங்கி 3, 6 இலடசம் ஆண்டுகள் நீடித்ததாகத் தெரியவருகிறது. இவ்வாறு கடந்த 76 மில்லியன் ஆண்டுகளில் 141 தடவை காந்தமுனை வுகள் நேர்மாறியிருப்பதும் ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. முனை வுகள் நேர்மாறும்போது அவை ஒரு பெருவட்டப் பாதையில் நகர்ந்து எதிரடியிடத்தையடையும். ஆனால் நேர்மாறல் சடுதி யாக ஏற்படுவதில்லை. அது ஏறத்தாழ 5000 ஆண்டுகளில் முற்றுப்பெறும் ஒரு நீண்டகாலச்செயல் முறையாகும் முனைவு நேர்மாறல் நிகழும் காலங்களில் புவியின் இயல்பான காந்த க் களம் படிப்படியாகத் தனது முழுப்பலத்தையும் இழந்துவிடும். அப்போது இரு முனைவில்லாக் களங்கள் செயற்படுவதோடு வெளிப்புறக் காந்தக் களங்களின் (உம். அயனமண்டல மின் tT T SS SSLLLL00LLLLL LLLLLLLLS 0 S S TTTT TT TTTT SLLLLLLL Current) தாக்கமும் புவியில் அதிகரிக்கும். இவற்றில் தாக்கங் களினால் உயிரினங்கள் பாதிக்கப்படலாமெனச் சில அறிவிய லாளர்கள் அச்சம் தெரிவித்த போதிலும், அது இற்றைவரை நிருபிக்கப்படவில்லை.
மிக அண்மைக்கால ஆய்வுகளின்படி புவியின் காந்தக்களம் மீண்டும் நேர்மாறும் அறிகுறிகள் தென்படுவதாகத் தெரிகிறது.

புவியின் காந்தக்களம் - 53
முனைவு அலைதல், நேர்மாறல் என்பவற்றுக்கான கார ணங்கள் அறியப்படவில்லை. ஆயினும் (i) D படையில் ஏற் படும் மின்னோட்ட வேறுபாடுகள் (ii) அப்படையில் இரும்பு சிலிசைட், வூல் சைட் போன்ற கலப்பு உலோகங்கள் காணப்படு தல், (ii) புவியின் மத்திய கோட்டுப் பகுதியில் இடையோடு புடைத்திருத்தல் , (iv) அ டர் த் தி யா ன குளிர்ந்த பாறைக் கோளத் துண்டங்கள் இடையோட்டிற்குள் இறங்குதல் ஆகியன முனைவுகளின் இடப்பெயர்ச்சியைத் தூண்டமுடியுமெனச் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதேயமயம் காந்தக் களம் நேர்மாறுதல் அதன் வழமையான இயல்பு என வேறு சிலர் கருதுகின்றனர்.
ー ー "க "கனுஜே "హి-s ச்சு ஆவியச்சு R
தாந்தஅ
鬣 鬣 *
ஆ வடக்கு ஈாடும் திசைகாட்டி s தே ாந்த விசைக்கோடுகள்
படம் 13 காந்தக்களம் இயங்கும் முறை
3. e. 5. 35T 55 š556Typ T6ốST LI TG3255ir.: (Magnetic Anomaly)
காந்தக்களத்தின் பலம் இயல்புக்கு அதி க ம ப க வோ குறைந்தோ காணப்படுவதைக் காந்த முரண்பாடு' என்பர் இந்நிலைமை காலப்போக்கிலும், பிரதேச ரீதியாகவும் ஏற் படலாம் புவியின் மேற்பரப்பில் தோன்றும் சிறு அளவிலான முரண்பாடுகளுக்கு காந்தக் கணிப்பொருட்களின் பரம் பல் காரணமாகலாம். உதாரணமாக இரும்பு, மக்னரைற், ஹேம ரைற் போன்ற உலோகப் படிவுகள் அதிகமாயுள்ள இடங்களில் காந்தக்களம் பலமானதாயிருக்கும். ஆயினும் பெரியளவிலான

Page 33
4 புவிவெளியுருவவியல்
காந்தக்கள வேறுபாடுகள், ஒழுங்கீனங்களுக்கு கணிப்பொருட் பரம்பல் மூலம் விளக்கமளிக்க முடியாது. ஏனெனில் குறிக்கப் பட்ட ஒரு வெப்ப நிலைக்கு மேல் (இது கூறியின் புள்ளி எனப் படும்) கணிப்பொருட்களைச் சூடாக்கினால் அவை தமது காந்த சக்தியை இழந்துவிடுகின்றன. எனவே புவியின் ஆழமான அகக் கோளத்தின் (வெளி) எல்லையில் நிலைகொண்டுள்ளதாக நம் பப்படுகின்ற காந்தக்களத்திற் காணப்படும் ஒழுங்கீனங்களுக்கு வேறு காரணங்கள் இருக்க வேண்டும்.
புவியின் காந்தக்கள முரண்பாடுகளை விளக்குவதற்குச் சில கருதுகோள்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவை (1) அகக்கோள இடையோட்டு எல்லைப் பகுதியில் ஏற்படக்கூடிய காந்தப் புயல் காந்தக்களத்தின் பல த்  ைத க் கூட்டிக்குறைக்கலாம். அதாவது மையக்கோளத்தின் வெளிப்பகுதியிலுள்ள இரும்புத் திரவம் பாய்ந்து (நகர்ந்து) செல்லும்போது மேலெழும் திர வத்தின் பகுதிகள் (காந்த அலைகள்) காந்தப்புயலை உரு வாக்கும்போது காந்தக்களத்தின் பலம் அதிகரிக்கின்றது என்ப தாம் , (ii) அண்மைக்கால ஆய்வாளர்கள் இடையோட்டின் கீழ் எல்லையில் அமைந்துள்ள D படையிற் காணப்படும் மேடுகளும் (Bumbs) அப்படையில் ஏற்படும் மின்னோட்ட வேறுபாடுகளும் (Electrical Variations) காந்தக்களத்தைப் பாதிக்கலாமெனக் கருத்து வெளியிட்டுள்ளனர்.
புவியின் காந்தக் களத்தைப் பாதிக்கும் புறக்காரணி ஞாயிற் றுக்காற்றாகும். ஞாயிற்றிலிருந்து அவ்வப்போது வெளிப்படும் பிளாஸ்மா எனப்படும் அயனாக்கப்பட்ட வாயுத்துணிக்கை கள் ஞாயிற்றுக்கு எதிரில் வரும் புவியின் பக்கத்தில் அதன் காந்தக்களத்தை அமுக்குகின்றன. அதேசமயம் மறுபக்கத்தில் காந்தக்களம் நீட்சியடையும். இதுவும் காந்தக்களத்தின் பலம் சிறிது கூடிக்குறைவதற்குக் காரணமாகலாம்.
புவியின் காந்தக் களம் குறுகிய கால நீண்டகால வேறு பாடுகளையும் இட பிரதேச வேறுபாடுகளையும் காட்டுகிறது. இவ்வாறு கடந்த 2000 ஆண்டு காலத்தில் அதன் பலம் படிப் படியாகக் குறைந்து வருவதாகவும் இதுபற்றி ஆய்வு மேற் கொள்ளப்பட்ட 100 ஆண்டுகளில் அதன் பலம் 5% குறைந்தி ருப்பதாகவும் தெரியவருகிறது. இதுபோலவே அவுஸ்திரேலியா விலும், தென் அமெரிக்காவிலும் ஒரே அகலக் கோட்டிலுள்ள இரு இடங்கள் ஒரேயளவு பலத்துடன் காணப்படாமை, காந் தக் களத்தின் பலம் பிரதேச ரீதியாக வேறுபடுவதைக் காட்டு கின்றது. -

புவியின் காந்தக்களம் $5),
3 ஆ6, எஞ்சும் காந்தம் (உயிர்ச்சுவட்டுக் காந்தம்)
(Remanent Magnetism)
பாறைகளிலுள்ள கணிப்பொருட்கள் காலத்தைக் airlGir கண்ணாடியைப் போன்றவை. ஏனெனில் அவை தாம் உரு வாகிய காலத்தில் இயங்கிய காந்தக்களத்திற்கு இசைவாகப் படிந்துள்ளன. புவியின் காந்தக்களம் இன்றுபோல் இயல்பு நிலையில் இருந்தபோதும், நேர்மாறியபோதும் உருவாகிய கணிப்பொருட்கள் காந்த ஊசியைப்போல் அ க் கா ல த் தின் காந்த நிலையை அச்சொட்டாகக் கர்ட்டுகின்றன. குறிப்பாக எரிமலைக் குழம்புப் பாறைகள் பழைய காந்தக் களத்தின் பண்புகளை நன்கு பேணுவதனால் அவற்றில் காந்தம் உறைந் திருப்பதாகவும் குறிப்பிடுவதுண்டு. -
எஞ்சும் காந்தநிலையானது (1) பாறைகளிற் காணப்படும் காந்த இரும்புக் கணிப்பொருட்களின் அளவு (it) சேர்க்கை (i) பாறைகளில் காணப்படும் வெப்ப அமுக்க, இரசாயனச் சூழல் (Vi) அச்சூழலில் ஏற்பட்ட மாற்றங்கள் என்பவற்றில் தங்கியுள்ளது. பெரும்பாலான கணிப்பொருட்கள் பளிங்குருவா கும் போது அல்லது கூறியின் புள்ளி எனப்படும் வெப்ப நிலைக்குக்கீழ் குளிர்வடையும்போது அல்லது படியும் போது காந்தமயமாகின்றன. இவற்றில் தீப்பாறைகளும் உருமாறிய பாறைகளும் பெரும்பாலும் கூறியின் புள்ளிக்குக்கீழ் குளிர் வடையும்போதே காந்தமயமாகின. பின்னர் இயல்பான வெப்ப நிலை மீண்டும் ஏற்பட்டபோது அவற்றின் காந்தப் படிவுகள் நிலையானதாகின.
சமுத்திர அடித்தளப் பாறைகளும் எஞ்சிய காந்தநிலை யைக் காட்டுகின்றன. அவற்றை ஆய்வு செய்த புவிச்சரிதவிய லாளர்கள் அப்பாறைகள் உருவாகிய காலத்தையும் அவற்றின் வயதையும், கடலடித்தரை பரவிய வேகத்தையும் சரியாகக் கணித்துக் கூறியுள்ளனர். மேலும் எஞ்சிய காந்த நிலை , ജt : நகர்ந்த திசையையும் அறிய உதவுகிறது. இது gഞഖ 51 ഏ முனைவு நிலையங்களிலிருந்து வெளிப்படுகிறது. அதே சமயம் காந்தமயமாகிய கணிப்பொருட்களின் நிலை (சரிவுக்கோணம்) (inclination) மு  ைன வின் துரத்தையும் அகலக்கோட்டு நிலையத்தையும் அறிய உதவுகின்றது உதாரண மாக கணிப்பொருட்கள் குத்துநிலையிற் காணப்படுமாயின் முனைவுக்கு அயலிலும் கிடைநிலையிற் காணப்படின் மத்திய

Page 34
S6 புவிவெளியுருவவியல்
கோட்டுக்கு அருகிலும் காந்தமயமாகியதை உண ர ல n ம் மேலும் காந்தக் கணிப்பொருட்களின் சரிவுக்கோணம் அவற்
றின் உண்மையான அகலக்கோட்டு நிலையத்தையும் கணித் தறிய உதவும். உம் 49% சரிவுக் கோண்ம் 30 அகலக் கோட்டு
நிலையத்தை உணர்த்தும். TAN 49 - 1, 15 - 2 TAN 30
3.ஆ.7 இரு முனைவில்லாக்களம் (Non - Dipole Field)
புவியின் பிரதான (இயல்பான) காந்தக்களம் இரு முனை வுப்பாங்கானதாயினும், காந்த ஊசியானது உண்மையான காந்த முனைவில் குத்தாகச் சரியாமல் அதற்குச் சற்று யேயுள்ள வேறொரு மையத்தைச் சுட்டுவதாகத் தெரிகிறது. இதனைக் காந்தச்சரிவு முனை (Magnetic Dip - Pole) எனக் குறிப்பிடுவர் இம்முனைவுகள் வடக்கே 75° வ 110 மேற்கி இலும் தெற்கே 67 தெ, 143 கிழக்கிலும் அமைந்துள்ளன. இவை ஒன்றுக்கொன்று எதிரில், அதாவது எதிரடியிடத்தில் இல்லை என்பது குறிப்பிடந்தக்கது.
இரு முனைவில்லாக்களமானது இயல்பான காந்தக்களத் திற்கு முரணாக இயங்குவதனால் 'பிரதேச புவிக்காந்த (upg airlfrt G' (Regional Magnetic Anomaly) 6T6 alth Guuri பெறும் இதன் பலம் பொதுவாக இயல்பான காந்தக்களத் தின் பலத்தில் 5 10% அளவினதாயிருப்பினும் சில இடங்க ளில் அதற்கு அதிகமாகவும் (30 - 40%) காணப்படலாம். இக் களத்தின் அமைவும் அசைவும் நீர் நிலப்பரம்பலுடனோ புவிச் சரிதவியல் அமைப்புடனோ தொடர்பின்றி மாறு கி ன்ற து அத்துடன் இக் களம் ஒரேயளவு பலத்தைக் கொண்டிருப்பது மில்லை. இதன் பலத்தில் சரி அரைப்பங்கு ஆண்டுக்கு 0.18 விகிதம் மேற்கு நோக்கி நகர்கிறது. அதேசமயம் எஞ் சி ய பகுதியின் பலம் கூடிக்குறைகிறது. இவ்வாறு இது இருமுனை வுக்களத்தைவிட அதிக வேகமாக அசைவது தெளிவாகிறது. புவியின் மையக்கோளம் இடையோட்டைவிட மெதுவாகச் சுழல்வதனால் அவற்றிடை ஏ ற் ப டு ம் நறுக்குத்தொடுவிசை (Shearing) காரணமாக திரவக்கோளப் பகுதியில் உருவர்கும் சுழிகள் இருமுனைவில்லாக்களத்தை உருவாக்குவதாக நம்பப் படுகிறது.

அத்தியாயம் 4
புவியோட்டின் ஆக்கம்
புவியின் மேற்பரப்பிலிருந்து கண்டங்களின் கீழ் சராசரி 30 - 40 கி. மீ ஆழ எல்லை வரையிலும் சமுத்திரங்களின் கீழ் 10 -11 கி.மீ ஆழ எல்லை வரையிலும் காணப்படும் பாறை வலயமே புவியோடு என்பது முன்னர் விளக்கப்பட்டது. புவி யோடு பலவகையான பாறைகளாக்கப்பட்டது.
பாறைகள் பல்வேறு கணிப்பொருட்களாலாக்கப்பட்ட திண் மையான பொருட்களாகும் கணிப்பொருட்கள் எனப்படுபவை திட்டவட்டமான பெளதிக, இரசாயனப் பண்புகளுடன் இயற் கையாகக் காணப்படும் அசேதனப் பொருட்களாம். அவை திண்மையாகவும், ஓரினமானதாகவும் இருப்பதோடு பல்வேறு மூலகங்களின் சேர்க்கையினால் உருவாக்கப்பட்டதாகவும் காணப்படும். இதுவரை அறியப்பட்ட 108 மூலகங்களில் ஒரு சிலவற்றின் சேர்க்கையினால் 2000 க்கும் அதிகமான கணிப் பொருட்கள் உருவாகியுள்ளன. இவற்றில் தங்கம், வெள்ளி, பிளாற்றினம், கந்தகம், வைரம் முதலியன தனி (ஒரு) மூலகக் கணிப்பொருட்களாகும். படிகம் என்னும் கணிப்பொருள் ஒட்சிசன் சிலிக்கோன் என்னும் இரு மூலகங்களின் கூட்டாகும் அதேசமயம் கல்சைற் கல்சியம், ஒட்சிசன், காபன் (கரி) என்னும் மூன்று கணிப்பொருட்களின் கூட்டாகவுள்ளது. இவ் வாறு பல்வேறு கணிப்பொருட்களை உருவாக்கும் மூலகங்களில் ஒட்சிசன், சிலிக்கோன், இரும்பு, மக்னீசியம் என்னும் ஐந்தும் புவியோட்டில் 90% அளவினதாக உள்ளன. இவற்றுடன் கல்சியம், சோடியம், பொட்டாசியம் என்னும் மூன்று மூலகங்களும் பலவாறு இணைந்து களிக்கல் படிகம், ஹேர்ன்பிளென்ட், பைறொக்சின், ஒலிவைன், மைக்கா எனப்படும் ஆறு முக்கியமான கணிப்பொருட்களை ο φόνι τεί η யுள்ளன. இவை பாறைகளை உருவாக்கும் கணிப்பொருட்க ளெனவும் சிலிக்கேற்றுக் கணிப்பொருட்கள் எனவும் குறிப்பிடப் படுகின்றன. ܘ ܐ ܐ ܢ
கணிப்பொருட்களைப்போலவே பாறைகளும் வேறுபட்ட சேர்க்கையைக் கொண்டவை. அவை ஒரு கணிப்பொருளைக்

Page 35
58 புவிவெளியுருவவியல்
கொண்டதாகவோ ( உம் சுண்ணாம்புப்பாறை ) இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட கணிப்பொருட்களைக் கொண்ட தாகவோ இருக்கலாம்,
பாறைகள் புவியோட்டுக்கு உள்ளும், வெளியிலும் உருவா குவதனால் அவற்றின் இயல்புகள் அவை உருவாகிய சூழலைப் பொறுத்து வேறுபடும். புவியோட்டுப்பாறைகளை அவை உரு வாகிய முறையின் அடிப்படையில் (1) தீப்பாறைகள் (2) அடை யற்பாறைகள் (3) உருமாறிய பாறைகள் எனப்பாகுபடுத்து வது வழக்கம். அவற்றில் தீப்பாறைகள் 64.7% மாகவும், உருமாறிய பாறைகள் 27.4 % மாகவும், அடையற்பாறைகள் 7.9 % மாகவும் புவியோட்டிற் காணப்படுகின்றன.
4. 1. தீப்பாறைகள்
முதலில் உருகிய நிலையிலிருந்த வெப்பமான பாறைக் குழம்பு குளிர்வடைந்து பளிங்குருவாதல் மூலம் தீப்பாறைகள் உருவாகின்றன. புவி ஒரு கோளாக உருப்பெற்ற காலத்தில் அல்லது அதற்குப் பின்னர் திரவநிலையிலிருந்ததாக நம்பப் படுவதனால் தீப்பாறைகளே முதலில் தோன்றியிருக்க வேண்டும். இதனால் இவற்றை முதற்பர்றைகள் எனவும் குறிப்பிடுவ துண்டு. தீப்பாறைகளின் இயல்பு (1) பாறைக்குழம்பின் தன்மை (2) அது குளிர்வடைந்த சூழல் என்பவற்றைப் பொறுத்து வேறுபடும்.
4。2。 தீப்பாறைகளின் Lisr(Guir(B:
தீப்பாறைகளைப் பலவாறு பாகுபடுத்தலாம் முதலான தாக, அவை காணப்படுமிடத்தின் அடிப்படையில் அவற்றை (1) எரிமலைப் பாறைகள் (2) புளூற்றோப்பாறைகள் (3) கீழ் பாதாளப்பாறைகள் என மூன்றாகப் பிரிக்கலாம். புவியோட் டின் மேற்பரப்பில் பாய்ந்த எரிமலைக்குழம்பு குளிர்வடைந்த தினால் உருவாகியவை எரிமலைப்பாறைகள் எனவும் புவி யோட்டின் ஆழமான பகுதிகளிற் பெருந்திணிவுகளாகக் காணப் படுபவை புளூற்றோப்பாறைகள் எனவும், இவற்றுக்கு இடைப் பட்ட நிலையத்தில் தலையீடுகளாகவுள்ள சிறு திணிவுகள் கீழ் பாதாளப்பாறைகள் எனவும் குறிப்பிடப்படுகின்றன. எரி மலைப்பாறைகளுக்கு றியோலைற், அந்திசைற் என்பனவும், புளுற்றோப்பாறைகளுக்குக் கப்புறோ, டயோறைற் ஆகியனவும் கீழ் பாதாளப்பாறைகளுக்கு கிறனோபயர், போபிரி ஆகியன வும் சில உதாரணங்களாகும்.

புவியிேர்பீடின் ஆக்கம்
இரண்டாவதாக, தீப்பாறைகளை அவற்றின் இரசாயனச் சேர்க்கையின் அடிப்படையில் (1) பெல்சிக் (2) ւդուհժ (3) மிகை மாபிக் என மூன்றாகவும் வகைப்படுத்தலாம். தீப்பாறைகளை உருவாக்கும் சிலிக்கேற்றுக்கணிப்பொருட்களான களிக்கல், படிகம், ஹோன்பிளென்ட், பைறொக்சீன், ஒலிவைன், மைக்கா என்பவற்றின் கலப்பு விகிதமும் அவற்றின் நிறவேறுபாடுகளும் இப்பாகுபாட்டிற்கு இடமளிக்கின்றன: 〔。
{!}} * . .
() பெல்விக் (Rese) பாறைகள் இவை பொட்டாசியக்களிக்கல் gr@ý)j; gir என்பவற்றை அதிகளவிற் கொண்டவை கருங்கல், அந்திசைற், டயோறைற் ஆகியன இவ்வகைக்கு உதாரணங்களாகும். இவற்றில் கருங்கல் 57% பொட்டாசியக்களிக்கல்லையும் 27% படிகத்தையும் கொண்டது. இவ்வகைப் பாறைகள் பொதுவாக அடர்த்தி குறைந்தவையாகவும் (2.6 - 27) மென்னிறமுடையனவாகவும் (இளஞ் சிவப்பு, சாம்பல் அல்லது வெள்ளை) காணப்படும்.
(i) மாபிக் (Mafic) பாறைகள்:
இவை மக்னீசியம், இரும்பு என்பவற்றை அதிகமாகக் கொண்டிருப்பதனால் இருண்ட நிறத்துடனும் அதிக அடர்த்தி யுடனும் (30) காணப்படுகின்றன. இவை பைறொக்சீன், ஒலிவைன், மைக்கா ஹோன்பிளென்ட் என்பவற்றின் கலப்பி னால் உருவாகியவை எரிமலைக் குழம்புப்பாறை (பசால்ற்) கப்புறோ ஆகியன இவற்றுக்கு உதாரணங்களாகும். இவற்றில் கப்புறோ 60% பைறொக்சினையும் 20 - 40% கல்சிய/சோடிய களிக்கல்லையும் கெர்ண்டிருக்கும்
(iii) tổ6öìg, Loff flo (Uitra Mafic) L'II 6ỡng)36ằI:
இவை மக்னீசியம், இரும்பு என்பவற்றை அதிகமாகவும் படிகத்தைக் குறைவாகவும் கொண்டிருக்கும். இவற்றில் அலு மீனியம் இருப்பதில்லை. இதனால் இவை மிக இரு ண் ட நிறத்துடனும் அதிக அடர்த்தியுடனும் (33) காணப்படும் . இவ்வகைப்பாறைகளில் ஒலிவைன் பைறொக்சீன் என்னும் கணிப்பொருட்களின் கலப்பு அதிகமாகும். உதாரணமாக பெரி டோரைற் பாறை 60% ஒலிவைனையும் 40% பைறொக்சினை யும் கொண்டது. அதேசமயம் டியுனைற் முற்றிலும் ஒலிவை
ಹಾದಿ... ஒரு மிகைமாபிக் பாறையாகும்.

Page 36
| 60. புவிவெளியுருவவியல்
மேல் விபரிக்கப்பட்ட மூன்று வகைப் பாறைகளும் சிலிக் காவின் அ ள வின் அடிப்படையிலான (1) அமிலப்பாறைகள் (66% சிலிக்கா), (2) உப்பு மூலப்பாறைகள் (45 - 55% சிலிக்கா) (3) மிகையுப்பு மூலப்பாறைகள் (45% சிலிக்கா) என்னும் மூன்று பிரிவுகளுடனும் பெருமளவு இசைவாயிருக்கின்றன. (இப்பாகுபாடு இன்னும் வழக்கிலுள்ளது) இது போலவே *சியல் சீமா எனப்படும் வகைகளும் முறையே பெல்சிக், மாபிக் வகைகளுடன் ஒப்புநோக்கத்தக்கவை. (சீயல்-சிலிக்கா+ அலுமீனியம், சீமா - சிலிக்கா + மக்னீசியம்)
மூன்றாவதாக, தீப்பாறைகளை அவை காணப்படும் நிலை யின் அடிப்படையில் (1) தள்ளற்பாறைகள் (2) தலையீட்டுப் பாறைகள் @T657 இரண்டாக வகைப்படுத்தலாம். (1)தள்ளற்பாறைகள்: இவை பாறைக்குழம்பு எரிமலைத்தொழிற் பாட்டின் மூலம் புவியோட்டின் மேற்பரப்புக்கு வந்து ஆறி இறுகுவதனால் உருவாகிய பாறைகளாகும். இவற்றைத் தீயுடைபாறைகள் (Pyroclasts) என்ற பொதுப்பெயரால் குறிப் பிடுவதுமுண்டு இ  ைவ (1) வேறுபட்ட பருமனையுடைய பறைக்குழம்புத்துண்டங்கள் (2) எரிமலைக்குண்டுகள் (Bomb) (3) இலாப்பிலி (4) துளையுடை எரிமலைக்குழம்பு (Scoria) (5) துரைக்கல் (Punce) (6) சாம்பல் (7) தூசி முதலிய வற்றை உள்ளடக்கும். இத்தகைய பாறைகள் ஒன்று திரண்டு திண்மையடைவதனால் தபு (Taft) எனப்படும் பாறை உரு வாகும் அது தகடுகளாகக் காணப்படும்போது இக்னிம்பிறைற் (Ignirinbrite) GrGør tilli Lu@lib , ,
(2) தலையீட்டுப்பாறைகள்: கீழிருந்து மேலெழும் பாறைக்குழம்பு வரும் வழியிற் காணப்படும் பாறைப் படைகளுக்கிடையில் திணிக்கப்படுவதனால் உருவாகும் பாறைகளே தலையீட்டுப்பாறைகளாகும் பின்வருவன பிரதான மானவை. (1) பெருங்கற் குழம்பு (பத்தோலித்) இவை தலை யீட்டுப்பாறைகளில் திணிவிலும் பருமனிலும் பெரிய பாதாளப் பாறைகளாகும். இவை புவியோட்டின் அடிப்பாகம் வரை தாழ்ந்து காணப்படுவதனால் உள்ளிட்டுலம் எனவும் அழைக் கப்படும். ・ 。
பத்தோலித்துகள் உருவாகிய முறைபற்றிக் கருத்து வேறு பாடுள்ளது. ஆயினும் நாட்டுப்பாறைகளைத் தமது பாதையி லிருந்து தள்ளி அல்லது தம்முள் அடக்குவதன் மூலம் இவை உருவாகியிருக்கலாமென நம்பப்படுகிறது. உள்ளடக்கல் என்

புவியோட்டின் ஆக்கம் 6.
னும் செயல்முறை Stoping எனப்படும். பத்தோலித்துகள் பருமனில் வேறுபட்டவை. சில பத்தோலித்துகள் 1000 கி. மீற் றருக்கு மேற்பட்ட நீளமும், 100 கி. மீற்றருக்கு மேற்பட்ட அகலமுமுடையவை. இவற்றில் ஒரு சில தனித் திணிவுகளாகவும் வேறு சில வெவ்வேறு காலகட்டங்களில் ஏற்பட்ட பல சிறிய தலையீடுகள் ஒன்றாயிணைந்தமையாலும் உருவகிேயிருப்பதாக ஆய்வுகள் உணர்த்துகின்றன.
உதாரணமாக சியாராநிவாடா பத்தோலித் தனித்தனி யாக ஏற்பட்ட 200 தலையீடுகளின் திரட்சியினால் உருவாகி யதாகத் தெரியவந்துள்ளது. இத் த  ைகய சில தலையீடுகள் அண்மைக்கால மலையாக்கவலயங்களின் அடிப்பாகத்திலும் காணப்படுகின்றன (உம். அந்தீஸ், றொக்கீஸ் மலைகள்) ஆனால் அல்ப்ஸ் வலயத்தில் இவை கண்டறியப்படவில்லை. பத்தோலித்துகளை விடச் சிறிய தலையீடுகள் சிறு கற்குழம்பு (Stock) எனப்படும் இவை 100 கி. மீற்றருக்குக் குறைந்த பருமனுடையவை, பத்தோலித்துகள் ஒரளவு உருண்டையான ஒழுங்கற்ற புற உருவத்துடன் காண்ப்படும். ஆனால் சிறுகற் குழம்புகள் ஒழுங்கற்ற பல்வேறு உருவங்களுடன் காணப்படு கின்றன. சில பத்தோலித்துகள் ஒரு வகையான படையமைப் புடன் காணப்படுவதனால் அவற்றின் உருவவியல் வேறுபட்ட தாயிருக்கலாம்.
(ii) - இவை வட்டில் அல்லது கோப்பை வடிவத்தில் பாறைப் படைத்தளங்களுக்கிடையே உருவாகிய இணங்கிய தலையீடுகளாகும். இவற்றின் மேற்பாகம் குழிந்தும் கீழ்ப்பாகம் குவிந்தும் காணப்படும். இவை பெரும்பாலும் கீழ் மடிப்புகளின் உள்ளீட்டுப் பகுதியில் உருவாகியுள்ளன. இவற்றின் தடிப்பு பல கி.மீற்றர் வரை காணப்படலாம். பெரிய லொப்போ லித்துகள் ஒரு வகையான படையமைப்புடனும் சிறிய  ைவ கிடைத்திப்பாறைகள் போன்ற அமைப்புடனும் காணப்படுவ தனால் அவை வேறு முறை யி ல் உருவாகியிருக்கலாமெனக் கருதப்படுகிறது. லொப்போலித்துகள் பலவிடங்களில் உள்ளன. தென்னாபிரிக்காவில் திறான்ஸ்வால் பகுதியில் 300 கி.மீற்றர் நீளமும் 5 கி. மீ தடிப்புமுள்ள ஒரு லொப்போலித்தும் டுலுத் (ஐ.அ) பகுதியில் 240 கி மீ நீளமான ஒரு லொப்போலித்தும் உள்ளது. இவற்றைத்தவிர ஒன்ராறியோ பிறேசில் அந்தர் டிக்காப்பகுதிகளிலும் லொப்போலித்துகள் இனங்காணப்பட் டுள்ளன. லொப்போலித்துகளைத் தொட்டித் தீ ப் பாறை கள் எனவும் குறிப்பிடுவதுண்டு.

Page 37
6. புவிவெளியுருவவியல்
ఓస్ట్స్లో
懿 వ్లో
படம்: 14 தீப்பாறைகளின் நிலை கி. கிடைத்தீப்பாறை
கு, குத்துத்தீப்பாறை, ல, இலக்கோலித்
(i) இலக்கோலித்துகள்:- இ  ைவ பாறைப்படைகளுக் கிடையில் குமிழ் வடிவிற் காணப்படுகின்ற இணங்கிய தலை யீடுகளாகும். இதனால் இவை குமிழ்த்தீப்பாறைகள் எனவும் சிலபோது குறிப்பிடப்படுகின்றன. இ வ. ற் றி ன் அடிப்பாகம் ஒரளவு தட்டையாகவும், மேற்பாகம் குவிந்தும் காணப்படும். இவ்வகைத் தலையீடுகள் சில விடங்களில் ஒன்றி ன் மே ல் ஒன்றாக அடுக்குகளாக - அமைவதுண்டு. அந்நிலையில் அவை சீடர்மரஇலக்கோலித்துகள்’ எனப்படும். ஐக்கிய அமெரிக் காவின் யூற்றா மாகாணத்திலுள்ள ஹென்றி ம ன ல களி ல் இலக்கோலித்துகள் காணப்படுகின்றன.
iv) பக்கோலித் இவை மேற்பாகம் குவிந்த வளைவான சிறிய தலையீடுகளாகும். இவை பெரும்பாலும் மேல் மடிந்த பாறைப் படைகளின் உச்சிப் பகு தி யி ல் காணப்படுகின்றன. பாறைப்படைகள் மடித்தலுக்குட்பட்டபோது இவையும் உரு வாகியிருக்கலாமென நம்பப்படுகிறது. பக்கோலித்துகள் சில மீற். முதல் சில கி.மீ வரை அகன்று காணப்படுகின்றன. சுரொப்சயர் (ஐ.இ) மாகாணத்திலுள்ள கோன்டோன் குன்று ஒரு பக்கோலித்து எனக் கருதப்படுகிறது.
(y) கிடைத்தீம்பாறைகள்: புவியோட்டிற்கூடாக மேலெழும் பாறைக் குழம்பு மேற்பரப்புக்கு அண்மையிலுள்ள பாறைப் படைகளுக்கிடையில் கிடைநிலையில் திணிக்கப்பட்டிருப்பின்
 
 
 
 
 
 
 

புவியோட்டின் ஆக்கம் 63
கிடைத்தீப்பாறைகளெனப்படும். எனவே இவை இணங்கிய தலையீடுகளாகும். இவை எரிமலைப் பிரதேசங்களில் அதிக மாகக் காணப்படுகின்றன. இவற்றின் தடிப்பு வேறுபட்டது. நியூயோக்கிலுள்ள பலிசேட்" இங்கிலாந்திலுள்ள ' வின்' என்னுமிடங்களில் பெரிய கிடைத் தீப்பாறைகள் உள் ள ன. இவற்றின் பின்னையது சில விடங்களில் 65 மீற். வரை தடிப்புள்ளது. மேலும் திறான்ஸ்வால், தஸ்மேனியா அந்தாட் டிக்காப் பகுதிகளில் கிடைத்தீப்பாறைகள் கூட்டம் கூட்ட மாகக் காணப்படுகின்றன. அவை கொண்டுவானாலாந்து என்னும் தென்கண்டத்திணிவு உடைந்தபோது ஏற்பட்ட எரி மலைக் கு ழ ம் பு ப் பெருக்குடன் தொடர்புள்ளவை எ ன த் தெரியவருகிறது.
(wi) குத்துத்தீப்பாறைகள்: இவை குத்துநிலையில் திணிக் கப்பட்ட பாறைக்குழம்பு குளிர்வடைவதனால் உருவாகின்றன . இவை பெரும்பாலும் இழுவிசையின் தாக்கத்திற்குட்பட்ட பாறைக்கோளத்தின் ஆழமான பகுதிகளிலேயே அதிகமாகக் காணப்படுகின்றன அன்றியும் இவை பெருப்பாலும் கூட்டங் கூட்டமாகவும் (Swarms) ஒரளவு சமாந்தரமாகவும் உருவாகி யுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ் வா று கனடாவிலுள்ளி மக்கென்சிப் பிரதேசத்தில் கேம்பிரியனுக்கு முற்பட்ட பழைய குத்துத்தீப்பாறைகள் பெருந்தொகையாகக் காணப்படுகின்றன. அதேசமயம் சில எரிமலை மையங்களில் ஆரத்திசையில் உரு வாகியுள்ள குத்துத் தீப்பாறைகளும் ஆங்காங்கு காணப்படு கின்றன. மேலும் சமுத்திரப் புவியோட்டின் கீழ்ப்பகுதியிலும் தகட்டுரு வான கிடைத்தீப்பாறைகள் காணப்படுகின்றன. அவை கடலடித்தரை பரவலுடன் தொடர்புள்ளவையென்பது குறிப்பிடத்தக்கது .
குத்துத்தீப்பாறைகள் சில மீற்றர் முதல் பன்னூறு கி. மீ, வரை நீண்டும் பல செ. மீ. முதல் ப ன் னு று மீற். வரை அகன்றும் வேறுபட்ட பரிமாணங்களுடன் காணப்படுகின்றன.
(yi) வளையக்குத்துத்தீப்பாறை (Ring dykes) இ  ைவ எரிமலையின் பெருவாய் அதனுள்ளே ஏற் படும் குறைத்தல் காரணமாக இடைக்கிடை படிதலினால் அல்லது அவ்வாயின் உள்ளிருக்கும் பாறைக்குழம்புத் தே க் காம் கீழிறங்குவதனால் ஏற்படும் இடைவெளிக்கூடாகக் குமிழ் வடிவில் மேலெழும் பாறைக்குழம்பு குளிர்வடைந்து திண்மையடைவதனால் உரு வாகின்றன. இவை அரைவட்டமாகவோ, முழுவட்டமாகவோ

Page 38
4 புவிவெளியுருவவியல்
அமைவதோடு மேலிருந்து வெளிநோக்கிச் சரிந்தும் காண்ட் படும் இவ ற் றி ன் அகலம் ஒரு சில மீற்றரிலிருந்து 100 மீ. வரையிலும், விட்டம் 5 - 25 கி.மீ வரையிலும் இருக்கலாம். நைகர் நாட்டில் எயர் (Ayre) என்னுமிடத்தில் 60 கி.மீ விட்டமுள்ள வளையக்குததுத்தீப்பாறை ஒன்றுள்ளது. ஸ்கொட் லாந்தில் 'முல்" பகுதியிலும் நைஜீரியாவின் ஜொஸ்மேட்டு நிலத்திலும், சிம்பாப்வேயிலும் இவற்றைக் காணலாம்.
(wi) கூம்புத்தகடுகள் (Cone Sheets) இவை பார்வைக்கு வளையக்குத்துத் தீப்பாறைகள் போலிருப்பினும் இவற்றின் சரிவு மேலிருந்து உள்நோக்கியிருக்கும். இவை எரிமலையின் கீழிருந்த பாறைக்குழம்புத் தேக்கத்திலிருந்து சரிவுத் திசைகளில் ஏற்பட்ட பிளவுகளுக்கூடாகப் பாறைக்குழம்பு மேல்நோக்கித் தள்ளப்பட்டதனால் உருவாகின. ஒரு மையவட்டங்களைப் போன்ற இத்தகடுகளின் தடிப்பு ஒரு சில மீற்றருக்கு மேல் இருப்பதில்லை. உதாரணமாக ஸ்கொத்லாந்தின் மூல் பகுதி யிலுள்ள கூம்புத்தகடுகள் 3 மீ தடிப்பானவை.
4. g. 4. இப்பாறைகளின் in of u(5 (950) put 50 to il (Texture): தீப்பாறைகள் வேறுபட்ட கணிப்பொருட்களாலாக்கப்பட்டிருப் பதனாலும், அவற்றை உருவாக்கிய பாறைக்குழம்பு வேறுபட்ட விகிதத்தில் குளிர்வடைந்தமையினாலும், அவற்றின் மணியுரு (இழையமைப்பு வேறுபட்டுக் காணப்படுகிறது. ஈண்டு இழை யமைப்பு என்பது கணிப்பொருட்களின் பருமன், உருவம், அமைப் பொழுங்கு என்பவற்றைக் குறிக்கும் தீப்பாறைகளில் பின்வரும் இழையமைப்புக்களைக் காணலாம்
(i) பெருமணி (இழை) யமைப்பு:- இ வ் வ மை ப் பை கொண்ட பாறைகளில் பெரிய பளிங்குகள் காணப்படும் இவை சிலபோது 2.5 செ.மீ. விட்டமுடையனவாகவுமிருப்பதுண்டு. பாறைக்குழம்பு மெதுவாகக் குளிர்வடைவதனாற்தான் இவ் விதமான பளிங்கமைப்பு உண்டாகிறது. கருங்கல், டயோறைற் உட்படப்பெரும்பாலான புளுற்றோப்பாறைகள் இவ்வகையான இழையமைப்பைக் கொண்டவை. *
(ii) நுண்மணி (இழை)யமைப்பு:- இதில் கண்களுக்கு எளிதிற் புலப்படாத சிறிய பளிங்குகள் காணப்படும் எரிமலைக்குழம் புப்பாறை, பெல்சைற் ஆகியன இவ்வகையான இழையமைப் புடையவை. 鷺 リ

புவியோட்டின் ஆக்கம் 65
(i) கண்ணாடி (இழை) யமைப்பு:- பாறைக்குழம்பு மிக விரைவாகக்குளிர்வடைவதனால் இவ்வகையான அமைப்பு உருவாகிறது. ஒப்பீடியன் (கண்ணாடிப்பாறை) நுரைக்கல், கரிப் பிசின்பாறை ஆகியன இவ்வகைக்கு உதாரணங்களாகும்.
(iv) கலப்பு இழையமைப்பு:- இது இனத்திலும், பருமனிலும் வேறுபட்ட பளிங்குகளுடன் காணப்படும். இதை போபிரி (Porphyry) எனவும் குறிப்பிடுவதுண்டு. இவற்றைத் தவிர மிகப் பெரிய மணியமைப்புடன் கூடிய தீப்பாறைகளும் உள்ளன. அவை மெக்மரைற் எனப்படும். அவற்றிலுள்ள பளிங்குகள் 1 மீற்றருக்கு மேற்பட்ட பருமனுடையவை,
4 ஆ ,5 தீப்பாறைகளின் விசேட இயல்புகள் - புவியோட்டுப் பாறைகளில் 95% மானவை தீப்பாறைகளாகும் ஒரு சீரான தோற்றம், ஒப்பரவற்ற கோணவடிவான கணிப்பொருட்களைக் கொண்டிருத்தல், கணிப்பொருட்களின், செருகலான அமைப்பு, உயிர்ச்சுவடுகள் இன்மை ஆகியன திப்பாறைகளின் விசேட இயல்புகளாகும்.
峰。 )لؤي(
புவியோட்டின் மேற்பாகத்திலுள்ள பாறைகள் வானிலை யாலழிதலினாலும், ஒடும்நீர், காற்று, கடலலை முதலிய அரிப்புக்கருவிகளின் தாக்கத்தினாலும் உடைந்து துணிக்கைக ளாகின்றன. இவை அரிப்புக்கருவிகளினாற் கொண்டு செல்லப் பட்டு கடல், ஏரி போன்றவற்றில் படிவு செய்யப்படுகின்றன. இப்படிவுகளே அடையல்கள் எனப்படுகின்றன.
4 ஆ1. அடையற்பாறைகள் பல்லினமான அடையல்களின் சேர்க்கையினால் உருவாகின்றன. அவற்றை (1) துருவலடையல் கள் (எல்லா வகையான பாறைகளின் உடைவினால் உண்டாகும் திண்ணியதுணிக்கைகள்) (2) இரசாயனவடையல்கள் (கரைசல் கள் (3) சேதன வடையல்கள் (தாவரங்கள் நுண்ணுயிர்களின் எஞ்சிய பாகங்கள்) என மூன்றாக வகைப்படுத்தலாம். இவ் விதமாகப் பலவிதமான (பிற) பாறைகளிலிருந்து பெறப்பட்ட அடையல்களால் உருவாக்கப்படுவதனால் தான் அடையற் பாறைகளைப் பெறுதிப்பாறைகள் எனக்குறிப்பிடுகின்றனர்.
4.ஆ.2. பாறையாக்கம்:- அடையல்கள் ப்ாறையாக உரு வாகுவதைப் பாறையாக்கம் என்பர். இது சில செயன்முறைகள் மூலம் நடைபெறுகிறது. அவற்றில் (1) நிலையியல் அமுக்கம்

Page 39
66 புவிவெளியுருவவியல்
(2) உலர்தல் (3) மீளப்பளிங்குருவாதல் (4) சீமெந்திணைப்பு ஆகியன முக்கியமானவை. அடையல்கள் ஓரிடத்தில் படியும் போது, கீழ்ப்பகுதியிலுள்ளவை மேலுள்ள வற்றின் பாரத்தினால் அமுக்கப்பட்டு இறுகுகின்றன. களி, களிமட்பாறை களிக்கல் ஆகியன இம்முறையிலேயே உருவர்கின்றன. பாறைகள் வெப் பத்தினர்ல் உலர்த்தப்படும்போது அவற்றுக்குள்ளிருக்கும் நீர் முற்றாக வெளியேறிவிடுவதனால் அவை மேலும் இறுக்க மடையும் சேதன அடையல்கள் (உம் தாவரங்களின் எஞ்சிய பாகங்கள்) அமுக்கத்தினாலும் உலர்தலினாலுமே நிலக்கரி யாக உருவாகின்றன அதே சமயம் இரசாயன அடையல்கள் மீளப்பளிங்குருவாதல் மூலமே திண்மையடைகின்றன. அடையற் பாறைகளிலிருக்கும் பெரியதுணிக்கைகள் சிறியவற்றை உள்ள டக்கி வளர்வதை இச்செயல்முறை குறிக்கும். சுண்ணாம்புப் பாறை, தொலொக்கல், தீக்கல், தீக்கற்பாறை ஆகியன இம் முறையிலேயே திரண்டு பாறை யுருப் பெறுகின்றன. சீமேந் திணைப்பு என்னும் செயல்முறை சில இரசாயனக் கரைசல்கள் மூலம் இடம்பெறுகிறது. இக்கரைசல்கள் பாறைகளிலுள்ள கணிப்பொருள் மணிகளுக்கிடையிற் படிவதனால் நீரை உட்புக விடாது தடுத்து அம்மணிகள் ஒன்றுடனொன்று இணைந்து (ஒட்டி) இறுகுவதற்கு உதவுகின்றன. இப்படிப்பட்ட இணைக்கும் பெர்ருட்களில், கல்சைற் சிலிக்கா, ஹேமரைற் (இரும்புஒக் சைட்) சைடறைற் (இரும்பு காபனேற்று) லெமோனைற் ஆகியன முக்கியமானவை SS 。
4、3 டையாக்கம்) :- அடையற்பாறை களை
உருவாக்கும் பல்லினமான அடையல்கள், தமது பருமனுக்கும் பாரத்துக்குமேற்பப்படிவதனால் அப்பாறைகளில் படையமைப்பு
உண்டாகிறது. அப்படைகளைப்பிரிக்கும் எல்லை பாறைப் படைத்தளம் எனப்படும். இத்தகைய படையமைப்புடன் காணப்படுவதனால் அடையற்பாறைகளைப் படையாக்கிய
பாறைகள் எனவும் கூறுவர். சாதாரணமாக அடையற்பாறை களில் 4 வகையான படையமைப்புகளை அடையாளங் காண லாம். அவை (1) இயல்பான (சமாந்தரமான) படையமைப்பு (2) குறுக்குப்படையமைப்பு (3) படிமுறைப்படையமைப்பு (4) திரள்படையமைப்பு என்பனவாம். அடையற்பாறைகள் கிடையான ஒரு தளத்தில் (உம் கடல் ஏரி போன்றவற்றின் அடித்தளம்) உருவாகும்போது சமாந்தரமான படையமைப்பு உண்டாகிறது. அதேசமயம் கடலில் புயற்கர் லத்தில் ஏற்படும் பேரலைகளினால் அல்லது நீரோட்டங்களினால் முன்பிருந்த படைக்குக் குறுக்குத்திசையில் புதிய அடையல்கள் படிவுசெய்

புவியோட்டின் ஆக்கம் 67.
யப்படுவதனால் குறுக்குப்படையமைப்பு உருவாகிறது. இதனை நீரோட்டப்படையமைப்பு அல்லது போலிப்படையமைப்பு எனவும் குறிப்பிடுவதுண்டு அடையல்கள் நீரிற்படியும்போது பாரமான துண்டங்களும் துணிக்கைகளும் விரைவாகவும், பாரங்குறைந் தவை மெதுவாகவும் படிவதினால் சில பாறைகளில் அடையல் கள் மேலிருந்து கீழ்நோக்கிப் பருமனிற் கூடிச்செல்லும். இத் தகைய அமைப்பு படிமுறைப்படையமைப்பு எனப்படும்
மேற்குறிப்பிட்டவற்றைத் தவிரச் சில சூழ்நிலை களி ல் அடையல்கள் சடுதியாகவும் விரைவாகவும் வகைப்படுத்தப் படாமலேயே படிவதனால் ஒழுங்கற்ற திரள்படையமைப்பு (MassiveStructure) எண்டாகிறது. பாலைநிலங்களிலும் எரி, மலைப்பிரதேசங்களிலும் ஏற்படும் சேற்றுப்பெருக்கின்போது இவ்வகையான அமைப்பைக்கொண்ட பாறைகள் உருவாகின் றன அடையற் பாறைகளிற் காணப்படும் படைகளின் தடிப்பு வேறுபட்டிருக்கும். அவற்றை (1) தடித்த படை (1.2 மீற்.) (2) மெல்லிய படை (0.6 மீ.) (3) இ  ைட நி  ைல ப் ப  ைட (1.2 - 0.6 மீ ) (4) தகட்டுப்படை (1 செ. மீ ) எனப்பகுத்து 39), Ifj. G. GUITLEY.
4 ஆம் 4 அடையற்பாறைகளின் பாகுபாடு
அடையற்பாறைகளை, அவற்றில் காணப்படும் அடையற் சேர்க்கை அவை உருவாகிய முறை என்பவற்றின் அடிப்படை யில் (1) துருவலடையற்பாறைகள், (2) இரசாயன அடையற். பாறைகள் (3) சேதன அடையற்பாறைகள் என மூன் ற ர க வகைப்படுத்தலாம். 熵。
() துருவலடையற் பாறைகள் (Castic/Detrital Roks):-
இவை பாறைகள் பொறிமுறையாழிவதனாலுண்டாகும் உடைகற்கள், துண்டங்கள் துணிக்கைகள் என்பவற்றால் உருவாக்கப்பட்டவை. இவற்றை (1) பெருமணிகளைக்கொண்ட உடைகற்பாறைகள் (2) இடைத் த ர மணிகளைக்கொண்ட மணற்பாறைகள் (3) நுண்மணிகளைக்கொண்ட களிமட்பாறை கள் என மூன்றாக வகைப்படுத்தலாம் பருக்கை உருண்டை கற்றிரள், பரற்கல் ஆகியன முதலாவது வகைக்கும். மணற் এ956) இரண்டாவது வகைக்கும், மாக்கல், சேற்றுக்கல், மண்டிக் கல் ஆகியன மூன்றாவது வகைக்கும் உதாரணங்களாகும்.

Page 40
68 புவிவெளியுருவவியல்
பருக்கை எனப்படுபவை பெரிய (பாறைத்) துணிக்கைகளா கும், உருண்டைக்கற்றிரள் என்பது உருண்டையான பெரிய பரல்களின் திரட்சியினால் உருவாகிய பாறையாகும், பரல் கோண வடிவான கூழாங்கற்களைக்கொண்டது. மணற்கல் படி கத்தைப்பெருமளவிற் கொண்ட ஒரு பாறையாகும். களிக்கல்லை அதிக அளவிற் கொண்ட பாறை ஆர்க்கோஸ் (மட்பாறை) எனப்படுகிறது. மணற்பாறைகள் அடையற்பாறைகளில் ஏறத் தாழ 15% மாகவுள்ளன. மாக்கல் என்பது சேற்றுத் துணிக் கைகளைக்கொண்ட பிரிந்தழியும் தன்மையுள்ள (Fissie) ஒரு பாறையாகும்.அது இறுகும்போது சேற்றுக்கல்லாகும் (Mudstone) அடையற்பாறைகளில் "மாக்கல் ஏறத்தாழ 70% மாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. மண்டிக்கல் முற்றிலும் மண்டித்துணிக்கை களைக் கொண்டது. அடையற்பாறைகளில் துருவலடையற் பாறைகள் 95% அளவு காணப்படுகின்றன.
(i) இரசாயன அடையற்பாறைகள்:
இவை நீரினாற் கொண்டு செல்லப்படும் அடையற்) கரை சல்கள் படிவதனால் உருவாகின்றன. இவற்றை இரசாயனக் கூட்டின் அடிப்படையில் (1) ஆவி மீதிகள் (Evaporites) (குளோ றைட்டுகள் / சல்பேற்றுகள்) (2) காபனேற்றுகள் 3) சிலிக் காவை அதிகமாகக்கொண்ட தீக்கல் (Chett) (4) இரும்புக் கரைசல்கள் (5) பொஸ்பேற்றுக்கள் என ஐந்தாக வகைப் படுத்தலாம். இவற்றில் முதலாவது வகையைச் சேர்ந்தவை விரைவாகக் கரைந்து விடுவதனால், ஆவியாக்கம் மூலமே படிவு நிகழ்கிறது. சோடிய மக்னீசிய, பொற்றாசிய சல்பேற் றுக்கள் இப்படிப்பட்டவை. இவற்றில் சோடியம் குளோறைட் படிவு சாதாரண (கறி) உப்பாகிறது. கல்சியம் சல்பேற்று இந்துப்பு ஆகிறது.
இரசாயன அடையல்களில் மெதுவாகக் கரைபவற்றுக்கு ೬ಘಿಗಳ 1767 LOTರ್ತಿ காபனேற்றுக்கள், சிலிக்கா என்பவற்றைக் குறிப்பிடலாம். இவற்றில் கல்சியம் காபனேற்று (கல்சைற்)ப் வினால் சுண்ணாம்புப்பாறையும், கல்சிய, மக்னீசியக்காப னேற்றுக்களின் க ல ப் பி னா ல் தொலமைற் (தொலோக்கல்) என்னும் பாறையும் உருவாகிறது. அதேசமயம் சிலித்தாப்
டிவினால் தீக்கற்பாறை (Flint) உருவாகிறது. | } }}
* தொலோன மற் என்பது ஒரு கணிப்பொருளும் பாறையுமாகும்
 
 
 

புவியோட்டின் ஆக்கம் 69
(ii) சேதன அடையற் பாறைகள் - இவை சில கடல் வாழ் நுண்ணுயிர்கள் தாவரங்கள் மற்றும் சேற்றுநிலத்தாவரங்கள் என்பவற்றின் எஞ்சிய பாகங்களின் திரட்சியினால் உருவாகு வனவாம். இவற்றை (1) சுண்ணப்பாறைகள் (11) சிலிக்காப் பாறைகள் (111) நிலக்கரியினங்கள் என மூன்றாகவகுக்கலாம். கோறல்' எனப்படும் பவளப்பூச்சிகள் மற்றும் அவை போன்ற கடல்வாழ் நுண்ணுயிர்கள் கடல்நீரிலுள்ள கல்சியம் காபனேற் றைப்பயன் படுத்தித் தமது எலும்புகள் ஒடுகள் போன்ற கடின உறுப்புக்களை ஆக்குகின்றன. பின்னர் அப்பிராணிகள் இறந்ததும், அவற்றின் எஞ்சிய உறுப்புகள் படிந்து திரண்டு, காலப் போக்கில் பாறைகளாகின்றன. வன்மையான சுண்ணாம்புப் பாறைகள், சோக்கு எனப்படும் மென்மையான வெண்சுண்ணப்பாறைகள் மற்றும் பாரம் குறைந்த முருகைக்கற்கள் (இவையல்லடியங்க ளைக் கொண்டவை) ஆகியன இம்முறையில் உருவாகும் சுண் ணரம்புப் பாறைகளாகும்.
சேதன அடையல்களில் சிலிக்காப்படிவுகள் அதிக முக்கிய மற்றவை தயற்றம்’ எனப்படும் கடற்றாவரம் சிலிக்காவை அதிகமாகப் பயன்படுத்துகிறது இதனால், அது அழிந்த இடங் களில் தயற்றோமைற் என்னும் கசிவுப்படிவுகள் உருவாகின்றன. சேற்றுநில மற்றும் த ரைக்குரிய தாவரங்களின் எஞ்சியபாகங்கள் புவியசைவின்விளைவாக நிலத்துட் புதையும் போது அவை வெப்பம் அமுக்கம் என்பவற்றின் தாக்கத்தினால் மாற்ற மடைந்து நீண்டகால எல்லையில் தரத்தில் வேறுபட்ட நிலக்கரிப் படிவுகளாகின்றன. மேற்குறிப்பிடப்பட்டவற்றைத் தவிரச் சில பற்றிரியாக்களின் வளர்ச்சியினால் பொஸ்பரைற் என்னும் சேதனப்பாறைகள் உருவாகின்றன.
4 இ உருமாறிய பாறைகள்
முதலில் வேறு பாறைகளாக இருந்த பின்னர் பெளதிக, இரசாயனத் தாக்கங்களின் விளைவாகத் தமது உருவம், கணிப் பொருட்சேர்க்கை, அமைப்பு, மணியுரு முதலியன முற்றா கவோ கணிசமாகவோ மாறிக் காணப்படும் பாறைகளே உரு மாறிய பாறைகளாகும். உருமாற்றம் எப்பொழுதும் வானிலை யாலழிதல் நிகழும் மேற்பரப்பு வலயங்களுக்குக்கீழேயே இடம் பெறும். அத்துடன் திண்மையான பாறைகள் மட்டுமே உரு மாற்றத்திற்குட்படுவது குறிப்பிடத்தக்கது.

Page 41
70 புவிவெளியுருவவியல்
4 இ: (1) உருமாற்றக்கருவிகள் செயல்முறைகள், காரணிகள்:
உருமாற்றத்தை உண்டாக்கும் கரு விகளில் வெப்பம் அமுக்கம், இரசாயனக் கருவிகள் ஆகியன முக்கியமானவை . இவற்றில் வெப்பமானது புவியோட்டின் மேற்பகுதியில் கி.மீ ஆழத்திற்கு 30°C என்ற விகிதத்தில் அதிகரித்துச் செல்கின்றது. இத்தகைய வெப்ப அதிகரிப்பு பாறைகளில் உருமாற்றத்தை உண்டுபண்ணும் ஆனால் பாறைக்குழம்புத் தலையீட்டின்ால் ஏற்படும் வெப்பம் இதைவிட அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். அமுக்கம் நிலையியல் அமுக்கம், திசைகொண்ட அ மு க் கம் என இருவகைப்படும் நிலையியல் அமுக்கம் என்பது மேலுள்ள பாறைகளின் அமுக்கமாகும். திசைகொண்ட அமுக்கம் என்பது இயக்கவிசையமுக்கமாகும். இது பரந்த அளவில் செயல்பட்டு உருமாற்றத்தை உண்டுபண்ணும். இரசாயனக் கருவிகளில் வெப்பமான நீர், வாயுக்கள், கரைசல்கள் ஆகியன முக்கியமான உருமாற்றக் கருவிகளாகும்.
உருமாற்றம் சிக்கலான பல செயல்முறைகள் மூலம் ஏற் படுகிறது. பாறைப் பாய்ச்சல் கணிப்பொருட்கள் மீளப்பளிங் குருவாதல் சிறு மணிகளாதல் சில மூலகங்கள் மீள இணைந்து உறுதியான் புதிய கணிப்பொருட்கள் உருவாதல் உறுதியற் றவை நீக்கப்படுதல் ஆகியன அவற்றி ல் முக்கியமானவை. மேலும் உருமாற்றச் செயல்பாடுகள் சில காரணிகளாலும் கட்டுப்படுத்துகின்றன. அவை (1) முதற்பாறைகளின் பொருட்சேர்க்கை (2) புதிய வெப்ப நிலைம்ைகள் (3) அமுக் கத்தின் த ன்  ைம யு ம் நிலையானதா, திசை கொண்டதா என்பது) அளவும் (4) இரசாயனத் திர வங்கள் கரைசல்களின் தன்மையும் தாக்கத்தின் அளவும் (5) உருமாற்றம் ஏற்பட்ட காலம், கிரமம் என்பனவாம் இக்காரணிகள் உருமாற்றத்தின் தன்மையையும் அளவையும் பெருமளவில் நிர்ணயிக்கின்றன.
4 இ (i) உருமாற்ற வகை
உருமாற்றத்தைப் பலவ்ாறு வகைப்படுத்தலாம் வழக்க மான ஒரு முறையின்படி உருமாற்றத்தை ஏற்படுத்தும் கருவி களுடன் தொடர்புபடுத்தி அதனை (1) வெப்ப உருமாற்றம் (2) இயக்கவிசை உருமாற்றம் (3) வெப்ப - இயக்க உருமாற்றம் (4) உடன்மாறு (அனுமூர்த்தி) உருமாற்றம் என நான்காக வகைப்படுத்துவதுண்டு. ஆயினும் உருமாற்றம் ஏற்படுகின்ற சூழல் அதன் அளவு என்பவற்றின் அடிப்படையில் (முன்னர்

புவியோட்டின் ஆக்கம்
குறிப்பிட்ட கருவிகளையும் உள்ளடக்இ) )ே உள்நாட்டு உரு மாற்றம் (2) பிரதேச உருமாற்றம் என இரண்டு பெரும் பிரிவு
களாகப் பகுத்து விளக்குதல் பயனுடையது.
SYS S S SS SS000SSS TTTT 0 T TTTC TTT S S Ll LS LL LLLlLM LGClCLLLLLLL00S
சிறிய பிரதேசத்தில் இறிய அளவில் ஏற்படுவதே உள் நாட்டு உருமாற்றம் எனப்படும். இதை (1) தொடுகை உரு மாற்றம் (2) இயக்கவிசை உருமாற்றம் (3) மோதுகை உரு மாற்றம் என மூன்றாகப் பிரிக்கலாம்.
(1) தொடுகை (5tD si ipo (Contact Metamorphism) வெப்பமான பாறைக்குழம்பு மேலெழுந்து உள்நாட்டுப்
பாறைகளுக்கிடையில் தலையிடுவதனால் அ ப்யா றை க ள் வெதும்பலாம். அதேசமயம் வெப்பமும் பாறைக்குழம்பிலிருந்து
வெளியேறும் வாயுக்கள் ஆவி ஆகியனவும் சேர்ந்து பாறை
களை உருமாற்றும் இவ்வாறு தொடுகை உருமாற்றம் பெரு மளவில் வெப்பத்தின் மூலம் ஏற்படுவதானால் அதனை வெப்ப உருமாற்றம் எனவும் குறிப்பிடலாம். ஆனால் இது பாறைக் குழம்புத் தலையிட்டிலிருந்து 2 - 8 கி.மீ தூரத்திற்கு மேல் ஏற்படுவதில்லை. இம் மு ன்ற யில் உருமாற்றத்திற்குட்பட்ட பாறை வலயம் உருமாற்ற ஒளிர்வட்டம்" (Aureore) எனப் படும் உருமாற்றம் இவ்வடடத்தின் உட்பகுதிகளில் (பாறைக் குழம்புத் தைையீட்டுக்கு அண்மையில்) முழுமையாகவும் வெளி நோக்கிப் படிப்படியாகக் குறைந்தும் காணப்படும்.
(2) இயக்க ຂ(5161ງພໍ (Dynamic Metamorph Sm)
இது பொதுவாக குறைத்தல் நிகழுமிடங்களில் ஒரு ஒடுக்க மான வலயத்தில் ஏற்படுகிறது. குறைத்தலின்போது பக்க அமுக்கவிசைகள், நறுக்குத்தொடுவிசை என்பவற்றால் பாறை கள் பாதிப்புறும்போது, அவற்றிலுள்ள கனிப்பொருட்கள் மீளப்பளிங்குருவாகும். இதன் விளைவாக அவற்றின் பளிங் கமைப்பும் உருவமும் மாற்றமடையும். இயக்கவிசையின் செயல் பாட்டி ன்போது மேற்பரப்புக்கு அருகில் குறைவான வெ ப் ப அமுக்க நிலைமைகளில் பாறைகள் நெரிக்கப்பட்டுக் கணிப்
பொருட்களும் அழிவடைந்தால் அதனைக் கடிதுகளாகு உரு
மாற்றம் (Cataclastic Metamorphism) எனக்குறிப்பிடுவர். இவ் வகையான உருமாற்றத்தினால் மிக நுண்மையான மாத்தன்மை புள்ள மைலோனைற் (Mytonite) போன்ற பாறைகள் உரு αλλίτευ ιδί

Page 42
72 புவிவெளியுருவவியல்
(3) Gud TT 363 as 9 GC5lD Tjippúd (Impact Metamorphism)
புவியின் மேற்பரப்பில் விண்வீழ்கற்கள் வேகமாக மோது மிடங்களிலும் அயலிலும் உள் ள பாறைகள் மோதுகையின் தாக்கத்தினால் வெப்பமூட்டப்படுவதனாலும் சடுதியாக அமுக் கப்படுவதனாலும் உருமாற்றப்படலாம். ஆனால் இது சிறிய அளவிலும் அருமையாகவுமே ஏற்படுகிறது.
4. 9. (iv) u 5 IJ (35 3F 2. (E5LDJrgib Nord (Regional Metamorphismin)
பரந்த அளவிலும் - சில இடங்களில் பல்லாயிரம் கி.மீ. பரப்பளவிலும் - அதிக ஆழத்திலும் ஏற்படுவதே பிரதேச உரு மாற்றமாகும் இவ்வகையான உருமாற்றத்தில் வெப்ப ம், அமுக்கம், இரசாயனக் கருவிகள் முதலிய வேறுபட்ட கருவி களுக்கும் பங்குண்டு. ஆயினும் இதை நரம் (அ) மலையாக்க வலய உருமாற்றம் (ஆ) சமுத்திர வலய உருமாற்றம் (இ) புதைப்பு வலய உருமாறறம் என மூன்றாகப் பிரிக்கலாம்.
S0 S kkTT TtttTTTT ttLLL STTTTTTTT SLLLLLLLL LLLLLGG GLL LL LS
மலையாக்கவலயங்களில் பிரதேச உருமாற்றம் பெருமளவில் இடம்பெறுகிறது. ஏனெனில் மலையாக்கமானது பரந்த நிலப் பரப்பில் ஏற்படுவது மட்டுமன்றிப் பாறைகளை உருமாற்றக் கூடிய பல சிக்கலான செயல்முறைகளையும் உள்ளடக்கியது. மேலும் அது பாறைக்கோளத் தகடுகளின் மோதுகையின் போது ஏற்படும் இயக்கவிசைத் தாக்கங்களினால் பாறைகளில் உண்டாகும் மாற்றங்களுடனும் இணைந்து செயல்படுகிறது . புவியோடு புடைத்தல் (தடிப்பாகுதல்) மேலுயர்த்தப்படுதல், உதைப்புக்குள்ளாதல் தாழ்த்தப்படுதல் , பாறைக் குழம்பு பீறிட்டு எழுதல் (எரிமலைத் தொழிற்பாடு) போன்ற பல செயன்முறைகள் மலையாக்க வலயத்தில் பாறைகளின் உரு மாற்றத்துக்கு உதவுகினறன. ஆயினும் இவ்வகையான உரு மாற்றம் நீண்டகால எல்லையிலேயே நிகழ்கிறது.
(2) agrup göggs seus 2-(5) PribüD (Oceanic Metamorphis rin)
இது தகடுகள் பிரியும் எல்லைகளிலும், ஒருங்கும் (கீழடங் கும்) வலயங்களிலும் ஏற்படுகிறது, நடுச்சமுத்திரப் பாறைத் தொடர் வலயத்தில் மென்பாறைக் கோளத்திலிருந்து மேலெழும் பாறைக்குழம்பு சமுத்திர நீருடன் கலப்பதனால் அந்நீர் சூடாக் கப்படுகிறது. அந்நீர் பாறைக்குழம்பைப் பாதிப்பதனால் அது

புவியோட்டின் ஆக்கம் 73
உருமாற்றப்பட்ட பாறையாக மேலெழுகிறது. அதேசமயம் சூடாக்கப்பட்ட நீர் கீழிறங்கிப் பெரிடோரைற் பாறைகளைப் பாதிப்பதனால் அவை இரசாயனத்தாக்கத்திற்குள்ளாகிப் * பாம்புப் பாறைகளாக' (Serpentine) உருமாறுகின்றன. அப் பாறைகள் பரம்பும் பாறைத்தொடர் வலயங்களிற் காணப் படுகின்றன. அதுபோலவே தகடுகள் கீழிறங்கும் வலயங்களில் அகழிகளின் மேல் திரளும் அடையல்கள் குறைந்த வெப்ப நிலையில் அமுக்கத்திற்குள்ளாகி நீலத்தகடாகுபாறையாக (Blue Schist) உருமாற்றப்படுவதாகவும் அவ்வலயத்தில் சற்று ஆழ மான பகுதிகளில் பசால்ற் கப்புறோ என்பவற்றில் காணப் படும் பைறொக்சீன், ஒலிவைன், பிளேஜியோகிளேஸ் என்னும் கணிப்பொருட்கள் மீள இணைந்து படிகம், காணெற் என்ப வற்றை அதிகமாகக் கொண்ட அடர்த்தி கூடிய (3 5) எக்ளோஜைற் (Ecologite) பாறைகளாக உருமாறுவதாகவும் தெரியவருகிறது.
(3) 555 út (Loriging Liv (Buria i Metamorphis rn)
புவியோட்டின் ஆழமான பகுதிகளில் - குறிப்பாக அடை யல்கள் திரளும் வலயங்களில் - அடிப்பாகத்திலுள்ள பாறைகள் மேலுள்ள பாறைகளின் நிலையியல் அமுக்கத்தினாலும் கீழ் நோக்கி அதிகரிக்கும் வெப்பத்தினாலும் பாதிப்புற்று உருமாறு கின்றன. இவ்வகை உருமாற்றம் தனியாகவும் சிலபோது மலை யாக்க வலயத்துடன் தொடர்புற்றும் இடம்பெறுகிறது. புதைப்பு உருமாற்றத்தை பாதாள உருமாற்றம்" எனவும் குறிப்பிடுவ துண்டு.
4 இ(w) வக்கிரநிலை உருமாற்றம் (R etrograde Metamorphismo)
ஒரு பாறையானது தான் உருவாகியபோது காணப்பட்ட வெப்பநிலையைவிடக் குறைவான வெப்பநிலையில் உருமாற்ற மடையுமாயின் அதனை "வக்கிரநிலை உருமாற்றம்’ எனக் குறிப்பிடுவர். இவ்வகையான உருமாற்றம் வெப்பமான திர வங்கள் உட்புகுவதனாலேயே ஏற்படுவதாகத் தெரிகிறது.
பாறைகளின் உருமாற்றம் வேறுபட்ட கருவிகளினால் வேறுபட்ட அளவில் ஏற்படுவதனால் ஒரே பாறையே வேறு பட்ட பாறைகளாகவும் வேறுபட்ட பாறைகள் ஒரே பாறை யாகவும் உருமாறலாம். உதாரணமாக, மாக்கல்லானது தொடுகை உருமாற்றத்தினால் ஹோன்பெல் ஆக உருமாறும்.

Page 43
74. புவிவெளியுருவவியல்
ஆனால் வெப்பமும் அமுக்கமும் தாக்கும்போது அது மைக்காத் தகடாகுபாறையாகவும், திசை கொண்ட அமுக்கத்தின்ால் சிலேற்’ ஆகவும், அதிக ஆழத்தில் மீளப்பளிங்குருவாதலினால் பளிங்குப்பட்டைப் பாறையாகவும் உரும்ாறும் இவ்வாறே கருங்கல் டயோறைற் ஆகியன பளிங்குப்பட்டைப் பாறையா கவும் மண்டிக்கல், மாக்கல் என்னுமிரண்டும் சிலேற்றாகவும் உருமாறும் இதனால், குறிக்கப்பட்ட ஒரு உருமாறிய பாறை, எப்பாறையிலிருந்து உருவாகியது எனக்கூறுவது எளிதன்று.
4. S. (vi) உருமாறிய பாறைகளின் பகுப்ாடு:
உருமாறிய பாறைகளை அவற்றின் சிறப்பமிசம்ான பளிங் குப்பட்டைகளுடன் தொடர்புபடுத்தி (i) படைகொள்பாறை கள் (ii) படைகொள்ள்ாப் பாறைகள் (திரள் பாறைகள்) என இரண்டாக வகுப்பது வழக்கம்
鷺。 (1) படைகொள் பாறைகள் :
பளிங்குப்பட்டைப் பாறைகள் (Gheiss) தகடாகுபாறைகள் (Schist) சிலேற்று, பைலைற் (Phyllite) g9) ugor (pj9) utorror படைகொள் பாறைகளாகும் பளிங்குப்பட்டைப் பாறைகளில் மைக்கா, களிக்கல் படிகம் என்பவற்றைக்கொண்ட படைகள் ஒன்றுவிட்டொன்றாக அமையலாம். இப்படைகளின் தடிப்பு 1 மி.மீ முதல் செ.மீ வரை வேறுபடலாம். தகடாகுபாறை களில் மைக்காவும், குளோறைற் ஹோன்பிளென்ட் போன்ற கணிப்பொருள்களும் மெல்லிய படைகளாக அமையும் சிலேற் றுப்பாறைகளில், மைக்கா, படிகம், பைறைற் போன்ற கணிப் பொருட்கள் சமாந்தரமான தளங்களில் அமைவதனால் அத் தளம் வழியே அவை எளிதாகக் கிழியும் (பிளக்கும்)
2) படைகொள்ளாப் பாறைகள்:
படிகப்பார், சலவைக்கல், ஹேர்ன்பெல் ஆகியன இவ் வகைக்கு உதாரணங்களாகும் மணற்பாறை மீளப்பளிங்குரு வாதலினால் படிகப்பார் உருவாகிறது. இது முற்றிலும், அல்லது பெருமளவு படிகத்தைக் கொண்டது. சலவைக்கல் ಇನ್ಫೇಟ್ರಿ! சுண்ணாம்புப்பாறை தொலமைற் என்பவற்றிலிருந்து. உருவாகிறது. அது முற்றிலும் அல்லது பெருமளவு கல்சைற்.
ன்றத் கொண்டிருக்கும்.

புவியோட்டின் ஆக்கம் 75
4. G. (vi) 2 (5ongoul Hiroy GITåæsir (Metamorphic Facies)
இது உருமாற்றத்திற்குட்பட்டு மாறிய புதிய கணிப்பொருட்
கூட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு பாகு பாடாகும். இப்பாகுபாடு P எஸ்கேர்லா (Eskota) என்பவர்ல்
முதலில் வெளியிடப்பட்டது. இதன்படி குறிக்கப்பட்ட ஒரு
பெளதிகச்சுழலில் ஒரே மாதிரியான இரசாயனச் சேர்க்கை யுள்ள பாறைகள் உருமாற்றத்திற்குட்படும் போது ஒரு குறிக் கப்பட்ட கணிப்பொருட்சேர்க்கையைக் கொண்ட புதிய பான்ற கள் உருவாகும். எனவே உருமாறிய பாறைகளிற் காணப் ப்டும் கணிப்பொருட்சேர்க்கை அவை எத்தகைய சுழலில் உரு மாற்றப்பட்டன என்பதை எடுத்துக்காட்டும். எஸ்கோலாவினால் அறிமுகப்படுத்தப்ப்ட் 10 உருமாறிய பாறை இனங்களும் 鲇r@,
பசிய தகடாகுபாறை இனம் (Green Schist Facies) அம்பிபோல்ைற் இன்ம் (Amphiboite) 蠶鷲 அல்பைற் ட எபிடோற் இனம் (Abite - Epidote) பைறொக்சின் ஹோன்டெல் இனம் (Pyrixeme Hérate) சனிடினைற் இனம் (Sanidite) , .
6 சியோனைற் இனம் (Syote) ನ್ನು 0S S TTT S T T TT S T ee SLLLL LLLL S S LL LaLL t LLLLS 8 கிறனுரலைற் இனம் (Granite) 9. குளுக்கோபேன் இனம் (Gucophane): 10 எக்லோஜைற் இனம் (Ecologie)
4இ (Vi) உருமாறிய பாறைகளின் விசேட இயல்புகள் :
லாம். (1) பட்டை(பளிங்குப்படை) (2) புதிய கணிப்பொருட்கள் (3) மீளப்பளிங்குருவாகிய தன்மை (4) வெப்பத்தால் கடின மாகிய தன்மை இவற்றில் படைகொள்ளல் உருமாறிய பாறை களுக்கேயுரிய தனிப்பண்பு ஆகும். கணிப்பொருட் பளிங்குகள் ஏறத்தாழச் சமாந்தரமாக (அடையல் பாறைகளிலுள்ள படை களைப்போல) அமைவதை இது குறிக்கும். இத்தகைய பளிங்குப் படையமைப்பு பாறைகள் பிளப்பதற்கு உதவுகின்றது. இது அமுக்கத்தினால் தூண்டப்பட்ட வெட்டுத்தொடுவிசையும் மீளப்பளிங்குருவாதலும் இணைந்து செயற்படுவதனால் ஏற் படுகிறது. ஆயினும் உருமாறிய பாறைகள் எல்லாமே படை கொள்வதில்லை.

Page 44
is புவிவெளியுருவவியல்
4. g) (ix) u f'Tayagy 6 f'Little (Rock Cycle)
புவியில் முதலில் தோன்றிய பாறைகள் பசால்ற் வகை யான தீப்பாறைகளென நம்பப்படுகிறது. அப்பாறைகள் வானிலையாலழிவுக்குட்பட்டமையால் உண்டாகிய அடையல் கள் படிந்து அடையற்பாறைகளாகின பின்னர் அவ்விரு பாறை களும் உருமாற்றத்திற்குட்பட்டமையால் உருமாறிய பாறைகள் தோன்றின. ஆனால், உருமாற்றம் குறிக்கபட்ட ஒரு எல்லைக் குள்ளேயே ஏற்படும். ஏனெனில் வெப்பநிலை 6000க்கு மேற் படும்போது பாறைகள் உருமாற்றம் அடையாமல் உருகிவிடும். இம்முறையில் உருவாகும் பாறைக்குழம்பு குளிர்வடைந்து மீண்டும் தீப்பாறையாகும். இவ்வாறு தீப்பாறைகளும் அடையற் பாறைகளும் உருமாறிய பாறைகளாகிய பின்னர் உருகி மீண்டும் தீப்பாறைகளாவதுடன் பாறைவட்டம் பூர்த்தியாகிறது.
புதிய தகட்டு விருத்திக் கோட்பாட்டிற்கு அமைவாகவும் (அத் 5பார்க்க) பாறை வட்டம் செயல்படுகிறது. இவ்வாறு நடுச்சமுத்திரப் பாறைத்தொடர் வலயத்தில் வெளியேறும் பசால்ற் பாறைக்குழம்பு திண்மையடைந்து தீப்பாறையாகிறது, அப்பாறைகளிலிருந்தும் வேறுவழிகளிலும் பெறப்படும் அடை பல்கள் தகட்டசைவுகளின் விளைவாக ஒரு கீழடங்கு வலயத்தில் இறங்கும்போதுவெப்ப-இயக்கமுறையில் உருமாற்றப்படுகின்றன. பின்னர் அப்பாறைகள் இடையோட்டின் ஆழமான பகுதிகளில் உருகி மீண்டும் பாறைக்குழம்பாகின்றன. அப்பாறைக்குழம்பில் ஒரு பகுதி மேற்காவுகைச் சாற்றோட்டங்களில் செயற்பாட்டி னால், பரப்பும் பாறைத்தொடர் வலயத்துக்குக் கிடையாகக் கொண்டுசெல்லப்பட்டு மீண்டும் பசால்ற் ஆக வெளிவருவ துடன் பாறை வட்டம் முற்றுப்பெறுகிறது.

அத்தியாயம்: 5
454 i G (553) (PLATE TECTONICS)
ண்ேடங்களையும் சமுத்திர வடிநிலங்களையும் புவியின் மேலோட்டின் அடிப்படை அமைப்புக்கூறுகளாகக் கொள்ளும் வழக்கம் இன்றில்லை 1950-60 காலப்பகுதியில் புவிப்பெளதிக வியல், சமுத்திரவியல்-சிறப்பாக கடலடித்த இப் படL க் கல்-மற்றும் பண்டைக்காந்த நிலையியல் துறைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாகப் பல பழைய கோட்பாடுகள் கைவிடப் பட்டநிலையில் இன்று புதிய தகட்டுவிருத்திக்கருதுகோள் வலுப் பெற்றுள்ளது. பாறைக்கோளத்தைப் பல மெல்லியதகடுகளாகப் பிரித்து அவற்றின் அசைவுகளுடன் அக்கோளத்திய அமைப்பு, உருவம், அதில் இடம் பெறும் செயல்முறைகள் முதலியவற்றைத் தொடர்புபடுத்தி விளக்குவதே தகட்டுவிருத்திக் கோட்பாட்டின் குறிக்கோளாகும்.
இக்கோட்பாட்டின்படி, சமுத்திரங்கள் நிலையற்றவை; அவற்றின் உருவமும் பருமனும் மாறி அழிவடைந்தபின் அவை மீண்டும் புதிதாக உருவாக்கப்படுகின்றன. அதேசமயம் கண்டங் கள் ஒப்பளவில் நிலையானவையெனவும், அவை அவ்வப்போது தமது வெளியோரங்களில் சில அசைவுகளுக்குட்பட்டு (உ-ம் மலையாக்கம்) வளர்வதேயன்றி முற்றாக அழிவதில்லையெனவும் புவியோட்டைப்பாதிக்கின்ற எரிமலை உயிர்ப்பு புவிநடுக்கம் மலையாக்கம் போன்றவை தகடுகளின் வேறுபட்ட அசைவு களுடன் நெருங்கிய தொடர்புடையவை எனவும் இக்கோட்பாடு கூறுகிறது. 貂
5.1 பாறைக்கோளத்தகடுகள்,
புவியின் பாறைக்கோளத்தை (இது 100 கி.மீ தடிப்பானது) உருவத்திலும் பருமனிலும் வேறுபட்ட பல தகடுகளாக றொபேட் டயிஸ் (Dietz) லேபியோன் (Lepion) ஆகியோர் பிரித்தனர். இவர்களில் லேபியோன் 6 பெரிய தகடுகளையும் பல சிறிய தகடுகளையும் இனங்கண்டார். இன்று எல்லாமாக 20 க்கும் அதிகமான தகடுகள் இனம்காணப்பட்டுள்ளன. தகடுகளின் உருவம், பருமன், அமைப்பு ஆகியன வேறுபடினும் பெளதிக

Page 45
**---- **· 哑蛾戲娜娜* km影 *is,邬)§ 4
娜 麴
->*a*kmrェgag“も* 日員g@** ulio: 15 som på Gossområ; syosoɛsir 10, 1060, jos gae();Gae Gaerff, mae:Qat.Ĝorĝ Gorchaeo@
TYKS LLLKYYJTS LL00LLLLYY0 S LSYYKT0 0S0LLS00LLY0 K KT TYTT S5ffı olul gör 35 35(5)
0TLL LLS KTTLl SLLL JTT KTK LL KYTYY S0LS1ð. / 9,6(10)குறிக்கும்.
 
 
 
 
 
 
 

தகட்டு விருத்தி 79
நிலைமையைப் பொறுத்தவரை அவை விறைப்பானவை. ஆயினும் அவை அசையக்கூடியவை அவற்றின் அடித்தளம் 100 கிமீ - 250 கிமீ ஆழம் வரையுள்ள மென்பாறைக் கேரளத்தில் மிதப்பதாக நம்பப்படுகிறது. வாகனங்கள் பயணிகளைச்சுமந்து செல்வதுபோலவும், தொழிற்சாலைகளில் உள்ள காவும் பட்டிகள் (Conveyor Belts) பண்டங்களைக்காவிச் செல்வது போலவும் தகடுகளும் கண்டங்களைச் சுமந்து (காவிச் செல்வதாகக் கருதப் படுகிறது.
தகடுகளை, எளிமைக்காக, கண்டத்தகடு, சமுத்திரத்தகடு எனப்பாகுபடுத்தலாம். ஆயினும் அவற்றின் எல்லைகள் கண்டங் கள் சமுத்திரங்களின் எல்லைகளுடன் எங்கும் இணைந்திருக்க வில்லை. பசிபிக் தகடு, நாஸ் காத்தகடு, கொக்கோஸ்தகடு ஆகியன முற்றிலும் சமுத்திரத்தகடுகளாயுள்ள அதேசமயம், யூறேசியத்தகடு கண்டத்தின் பெரும்பகுதியை மட்டும் உள்ளடக்கி யிருக்கும் போது, வேறு சில தகடுகள் கலப்புத்தகடுகளாகவே
காணப்படுகின்றன. எனினும், பொதுவாக, கண்டங்கள் சமுத்
திரங்களின் அமைப்பு வேறுபாடுகள் அவை அமைந்திருக்கும்
தகடுகளின் அமைப்பு வேறுபாடுகளையே பிரதிபலிக்கின்றன.
5.2 தகட்டசைவுகள் தகட்டசைவுகள் தனியசைவாகவும் சார்பான அசைவாகவும் இடம்பெறுகின்றன தனியசைவுகள் குறிக்கப்பட்ட நிலையான ஒரு மையத்திலிருந்து இன்னோரி டத்தை நோக்கிநிகழும். பொதுவாக, தகடுகள் சமுத்திரங்களி லுள்ள பரப்பும் பாறைத் தொடர்களிலிருந்து, ஒரு கீழடங்கு வலயத்தை- அதாவது அகழியை நோக்கி, அல்லது இன்னொரு தகட்டை நோக்கி நகரும். மேலும் சில சந்தர்ப்பங்களில் ஒப் பளவில் பெரிய தகடுகளுக்கிடையிலிருக்கும் சிறு தகடுகள் அப் பெரிய தகடுகளின் அசைவினால் உந்தப்பட்டுத் தாமும் அசை யலாம். உதாரணமாக, யூறேசியத்தகடும் அரேபியத் தகடும் அமுக்குவதனால் அவற்றுக் கிடையிலுள்ள துருக்கியத்தகடு அசைகிறது. தகடுகளின் தனியசைவு வேகம் குறிக்கப்பட்ட
ஒரு மையத்திலிருந்து (உம் வெப்பமையம்) அவை குறிக்கப்
பட்ட காலத்தில் நகர்ந்த துாரத்தின் மூலம் கணிக்கப்படும்.
தகடுகளின் சாரசைவு யூலர்(Eular) என்பவரின் தேற்றத் திற்கமைவாக இடம் பெறுவதாகத் தெரிகிறது. அதன்படி கோளவடிவான புவியில் தகடுகளின் சாரசைவு எப்பொழுதும் ஒரு சுழற்சி அச்சைச்சுற்றியும், சுழற்சி வட்டத் திசையிலும் நிகழும். அத்தகைய அசைவு சுழற்சிவட்டத்தின் முனைவு நில்ை

Page 46
  

Page 47
82. புவிவெளியு ருவவியல்
கீழடக்கல் (subduction) எனப்படும். இவ்வாறு கீழிறங்கும் தகடு இடையோட்டுப்பகுதியில் உருகி அழிவடையும். இதனால், ஒருங் கும் எல்லைகளைத் தகடுகள் அழியும் எல்லைகள் எனவும் குறிப் பிடுவதுண்டு. அதேசமயம் இருகண்டத்தகடுகள் ஒருங்கும்போது கீழிடங்கலுக்குப் பதிலாக மோதல் ஏற்படும் ஏனெனில் அவை இரண்டும் அடர்த்தி குறைந்த பாறைகளைக் கொண்டிருப்பது னால், ஒன்றின்கீழ் மற்றொன்று இறங்கி அடங்காது. தகட்டோ ருங்கல் 3 வகைப்படும் அவை (i) சமுத்திரத்தகடு - சமுத்திரத் தகடு ஒருங்கல் (ii) சமுத்திரத்தகடு - கண்டத்தகடு ஒருங்கல் (ii) கண்டத்தகடு-கண்டத்தகடுஒருங்கல்(மோதல்)என்பனவாம்.
(i) சமுத்திரத்தகடு - சமுத்திரத்தகடு ஒருங்கல்- இருசமுத்திரத் தகடுகள் ஒருங்கும்போது அவற்றில் ஒன்று மற்றதின்கீழ் இறங் கும். இவ்வாறு கீழிறங்கும் தகட்டின் பகுதிகள் உருகிப்பாறைக் குழம்பாகி மேலெழுந்து மேலமைந்த சமுத்திரத்தகட்டில் எரி மலைத் தீவு வில்லுகளை உருவாக்கும். பசிபிக்கிலுள்ள குறைல் தீவுகள், அலூசன்தீவுகள் ஆகியன இம்முறையில் உருவாகிய தீவுவில்லுகளுக்கு உதாரணங்களாகும்.
(ii) சமுத்திரத்தகடு - கண்டத்தகடு ஒருங்கல்: ஒரு சமுத்திரத் தகடும் ஒரு கண்டத்தகடும் ஒருங்கும்போது பாரமான சமுத்திரத் தகடே கண்டத்தகட்டின்கீழ் இறங்கும். இதன் விளைவாக மேல மைந்த கண்டத்தகட்டில் எரிமலைகள் உருவாகும். இவ்வாறு தென்னமெரிக்காவின் மேற்குக்கரையோரமாக (பேரு சில்லிக் கரை) நாஸ்கா தகடு கீழிறங்குவதனால்தரின் அத்திசு மலைப் பகுதியில் பல எரிமலைகள் தோன்றியுள்ளன.
(i) கண்டத்தகடு கண்டத்தகடு மோதல் இருகண்டத்தகடுகள் மோதும்போது அந்த எல்லையில் புவியோடு புடைத்தல், தகடு களின் உருவமும் பருமனும் tpff () giả), தகடுகள் உடைதல் ஆகியன இடம்பெறுவதோடு சிக்கலான மடிப்பு மலைகளும் உருவாகும் அதன்விளைவாக அப்பகுதியில் புவியோடு குறுகுதலும்
இடம்பெறும் இவ்வாறு யூறேசியத்தகடும் இந்தியத்தகடும்மோதி
பத6ால் (அவை இன்றும் மோதிக்கொண்டிருக்கின்றன) இம்
யமலைகளும், அத்திரியாட்டிக் தகடும், யூறேசியத்தகடும் மோதி
யதன் விளைவாக அல்ப்ஸ் மலைகளும் உருவாகின. அதேசமயம் ஆபிரிக்க யூறேசியத்தகடுகளின் மோதலின் ஒருபக்க விளைவாக அவற்றுக்கிடையிலுள்ள மத்தியதரைக் கடலின் கிழக்குப் பகுதி
யிலிருந்த சில தகடுகள் உடைந்து பல குறுந்தகடுகளாகியுள்ள
5 T (Microplates) 15 bL'LG Gp 5.

தகட்டு விருத்தி 83.
GypLIĞI (ö. 6. sı'ud ((Benioff Zone)
இரு சமுத்திரத்தகடுகள் அல்லது ஒரு சமுத்திரத்தகடும் கண்டத்தகடும் ஒருங்கும்போது ஏற்படும் விளைவுகள் ஒரே மாதிரியானவை தகடுகள் கீழிறங்குதல் கண்டங்கள் அல்லது தீவு வில்லுகளையடுத்து உருவாகின்ற அகழிகளுக்கூடாக இடம் பெறுகிறது அந்த எல்லையில் கீழ்நோக்கித் திரும்பும் மேற் காவுகையோட்டங்களே அகழிகளை உருவாக்கி அவற்றுரடாகத் தகடுகளையும் கீழிழுப்பதாக நம்பப்படுகிறது. இவ்வாறு கீழிறங்கும் தகடுகளின் சரிவான தளங்களுக்கும் புவி நடுக்கங் களுக்குமிடையிலுள்ள தொடர்பை ஆய்வுசெய்த பெனியோ (behict) என்பவரின் பெயரால் அத்தளங்களை பெனியோ வலயம் எனக்குறிப்பிடுகின்றனர்
பெனியோ தளத்தின் சரிவு, ஆம் ஆகியன இடத்திற்
கிடம் வேறுபடுகின்றன அதன் சரிவு 30 - 60 வரையிலும்
(ஆனால் யப்பான் அகழியில் 75 ) ஆழம் 300 கி. மீ - 700 கி.மீ. வரையிலும் வேறுபட்டிருப்பதாக ஆய்வுகள் புலப்படுத்து கின்றன. சுந்தா, ரொங்கா, கர்மாடெக் குறைல் - கம்செட்கா அகழிகளில் பெனியோ வலயம் 700 கி. மீ. ஆழமானதாயிருப் பது குறிப்பிடத்தக்கது. புவி நடுக்கக் குவியங்கள், அவற்றின் ஆழங்கள் பற்றிய ஆய்வுகளும் தகட்டசைவு, வேகம், கீழிறங்கும் வேகம் தகடுகளின் வயது என்பன பற்றிய மதிப்பீடுகளும் முன்னர் குறிப்பிடப்பட்ட தகவல்களை உறுதிப்படுத்துகின்றன.
தகடுகள் கீழிறங்கும்போது சூடாக்கப்படுவதனால் }}{ 0 په 150 கி. மீ ஆழஎல்லைக்குள் உருகத்தொடங்கும் சூடான சமுத்திரநீர் உட்புகுந்து கலப்பதனாலேயே அவை எளிதாகவும் விரைவாகவும் உருகுகின்றன. இம்முறையில் பு தி தாக உரு வாகும் பாறை க் கு ழ ம் பு ம் பிற திரவங்களும் (Volatiles) மேலெழுவதனால் மேலமைந்த தகட்டில் எரிமலைகள் உரு வாகும். அவை எப்பொழுதும் ஒரு வளைகோட்டுத் திசையில் அமைவதனால் எரிமலை வில்லுகள் எனப்படும். இவ்வில்லு :ளுக்கும் தகடுகள் கீழிறங்கும் அகழிக்கும் இ  ைடப் பட்ட தூரம் வில் - அகழி இடைவெளி (Arc Trench Gap) எனப் படும். அத்தூரம் கீழிறங்கும் த கட்டி ன் சரிவுக்கோணத்திற் கேற்ப 100 கி. மீ முதல் 200 கி. மீ. வரை அல்லது அதற்கு மேலும் இருக்கலாம். இவ்வாறு இரு தகடுகளின் ஒருங்கல் வேகம்

Page 48
怒4 புவிவெளியுருவவியல்
La 8 தகடுகளின் சரிவுக் கோணமும் வில் அகழி இடைவெளியும்
அதிகமாயுள்ள இடங்களில் தகட்டின் சரிவுக்கோணம் குறை
வாகவும், வில் அகழி இடை வெளி அதிகமாகவுமிருக்கும்.
மெக்சிக்கோ இழடங்கு வலயம் இதற்கு உதாரணமாகும் அதே சமயம் ஒருங்கல் வேகம் குறைவாயிருக்குமிடங்களில் சரிவுக்
கோணம் அதிகமாகவும் வில் - அகழி இடைவெளி குறைவாக
வுமிருக்கும் மத்திய அமெரிக்க (கொக்கோஸ்) கீழடங்கு வலயம் இதற்கு உதாரணமாகும்
பெனியோ வலயங்கள் உல கி லு ஸ் விர முக்கியமான புவி
நடுக்க வலயங்களாகும். இடைநிலைப் புவி நடுக்கங்களிற் பெரும்பாலானவையும் அனேகமாக எல்லா ஆழ்குவிய நடுக்
கங்களும் பெனியோ வலயங்களிலேயே ஏற்பட்டுவருவதாகத்
தெரியவந்துள்ளது
5. 3 (3) C35 in இவ்வகையான தகடுகள் குறைக்கோட்டுத் திசைவழியே நகரும் அங்கு பெரும் பாலும் குத்தான குறைத்தளம் வழயே கிடைச்சறுக்கல்
முறையில் தகடுகள் அசைவதனால் அவை பெருப்பதுமில்லை
சிறுப்பதுமில்லை. கலிபோனியாவிலுள்ள சென்அன்டிரியாஸ் குறை அமெரிக்க - பசிபிக் தகடுகளைப் பிரிக்கும் எல்லை
யாக உள்ளது. அங்கு பசிபிக் தகடு, வடஅமெரிக்கத் தகட்டை
ச்செல்வதாகத் தெரிகிறது. இத்தகைய சறுக்கல்கள்
தடப்படுமாயின் பாறைகளுக்கிடையே தகைப்பு அதிகரிக்கும்.
அந்நிலையில் அவ்வப்போது சடுதியான சறுக்கல் ஏற்படும்
போது அப்பகுதியில் புவி நடுக்கங்கள் ஏற்படுகின்றன. இவ்
விதமாக 1906 இல் சான்பிரான்சிஸ்கோவில் ஏற்பட்ட ஒரு
ஆண்டுக்கு 5 செ மீ தூரம் வடமேற்குத் தி  ைசி யி ல்
 
 
 
 

தகட்டு விருத்தி 85
புவிநடுக்கத்தின் விளைவாக அந்த நகரத்தின் ஒரு பகுதி நிர்மூலமாக்கப்பட்டது. நியூசிலாந்திலுள்ள அல்பைன் குறை பசிபிக் தகட்டுக்கும் அவுஸ்திரேலியத் தகட்டுக்குமிடையிலுள்ள இன்னொரு எல்லைக் குறையாகும்.
நடுச் சமுத்திரப் பாறைத்தொடர்களின் பகுதிகளுக்கிடை யில் பல சிறிய குறைகள் காணப்படுகின்றன. அவை தகடு களைப் பிரிப்பவையல்ல. மாறாக, தகடுகளின் பகுதிகளுக் கிடையே அவற்றின் எல்லையில் ஒரு பகுதியாகவே அவை அமைகின்றன. அவற்றை மாறுகுறைகள் (Transform Faults) என அழைக்கின்றனர்.
5. 4 udnyugssay i sir (Transform Faults)
இவை கடலடித்தரை பரவும் நடுச் சமுத்திரப் பாறைத் தொடர் வலயத்திற் காணப்படுகின்ற விசே ட வகையான கிடைச் சறுக்கற் குறைகளாகும். இவை பரப்பும் ப  ைற த் தொடர்களின் தொடர்ச்சியற்ற பகுதிகளுக்கிடையில் அவற் றுக்குச் செங்கோணத் திசையில் அமைந்துள்ளன.
தகடுகளில் தொடக்கத்தில் ஏற்பட்ட தகைப்பினாலும் கடலடித்தரை பரவத்தொடங்கியபோது கண்டத்தகடு ஒழுங் கற்றும் தொடர்ச்சியற்றும் பிளவுபட்டதன் விளைவாகவும் பாறைத்தொடரின் பகுதிகள் புறக்கிடைகளாகியமையாலேயே இவ்வகைக் குறைகள் உருவாகின. எனவே இவை வேறு வகையான உ - ம் Transcurrent) குறைகளைப் போ ன் று புதிதாகத் தோன்றி அப்புறக்கிடைகளைத் துண்டிக்கவில்லை என்பது புலப்படும் * η Ν.
தகடுகளின் உண்மையான அசைவு ஒரு திசையில் நிகழும் போது பாறைத் தொடரி ன் பகுதிகளுக்கிடையில் வேறு திசைகளில் அசைவுகள் ஏற்படுவதனால்தான் ரூசோ வில்சன் Tuz) Wilson) அவற்றை மாறு குறைகள் எனப்பெயரிட்டார் மாறுகுறைகள் பரப்பும் பாறைத்தொடர்களை இணைக்கும் பகுதிகளில் மட்டும் புவி நடுக்கங்கள் ஏற்படுவதிலிருந்து அவ் வுண்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடலடித்த ரை பரவும் திசையும் வேகமும் மாறுகுறைகளின் இருபக்கங்களிலும் வேறு படுவதனாலேயே அக்குறைகள் சுவடுகள்போல நீண்டுள்ளன. ஆயினும் பரவல் வேகம் இருபக்கங்களிலும் சமமாகும் எல்லை பில் அக்குறைகள் முடிவுறும்.

Page 49
36 புவிவெளியுருவவியல்
மோகன் (Morgan) என்பவர், மாறுகுறைகள் எதிர்த் திசைகளில் விலகும் இரு த க டுக ளின் பகுதிகளுக்கிடையில் அவற்றின் எல்லையின் ஒரு பகுதியாகவும், ஒரு சுழற்சி முனை வைச் சுற்றி வரும் ஒரு மையச்சிறுவட்டங்களாகவும் காணப் படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் மாறுகுறைகள் 11 பரப்பும் மையங்களின் அச்சுகளையும் 21 வேறுபட்ட விகிதத் தில் பரப்பும் பாறைத் தொடரின் பகுதிகளையும் (3) பரப்பும் திசை சமமாக இல்லாத இடங்களையும் (4) பரப்பும் பாறைத் தொடருடன் கீழடங்கு வலயத்தையும் இணைப்பதை அவ
தானிக்கலாம்.
assassis. *வு: YTrME00riiYrLYSDDLLDBDES
ൈ'(. exფჭჯგჯერ issen- 就** ܙܸܝܼܙܘܼܬܐ
* సాణ్య శాస్లో
'ഝു', -
*B*Aళళ్లమ్డాj ზ%ჯ. *ზ&ioწჯoszęsჭჯgრთდა §. :േ. (
%ox{92
8:
茨
ஐ '%இ
%ණ්ෂුණූ
恕懿
"####
'(. "88}{gi:
స్లో
..ommmSö} ́ ́,
g్యక్తిత్తిళ్ల リ* 一一*
:*'
ഥr (
மாறுகுறைகளின் தளங்கள் பெரும்பாலும் கு
g p y p Lê) நடுக்கங்களின்
காணப்படும் அத்தளங்கள் ஆ !
பிறப்பிடமாயுள்ளன: நடுச் சமுத்திரப் பாறைத்தொ t.f് ഖ@ பத்தில் நூற்றுக்கணக்கான மாறுகுறைகளைக் காணலாம். மத்திய் அத்திலாந்திக் பகுதியில் அவை 50 இ மீ இடைத் தூரத்திலும் அமைந்துள்ளன. வட அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் கலிபோனியாவுக்கூடர்கச் செல்லும் சர்ன்அன் டிரியர்ஸ்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தகட்டு விருத்தி இ!
குறை உலகின் மிக நீண்ட, உயிர்ப்புள்ள மாறுகுறை எனக் கருதப்படுகிறது. இது 966 கிமீ நீளமானது. அக்குறைத்தளம் வழியே ஏற்படும் தகட்டசைவுகள் புவி நடுக்கங்களை உண் டாக்கி வருகின்றன. நியூசிலாந்திலுள்ள அல்  ைப ன் குறை தென் பசிபிக்கிலுள்ள எல்ரனின் குறை ஆகியன மாறுகுறை களுக்கு வேறு சில உதாரணங்களாகும்.
5.5 (p53,55a, sir (Triple Junctions)
மூன்று தகடுகள் சந்திக்கும் மையங்கள் முச்சந்திகள் எனப் படும். தகடுகளின் பரம்பல், அவை சந்திக்கும் வேறுபட்ட ს გrენტგუთეტყნენ; என்பவற்றின் அடிப்படையில் 16 வகையான முச் சந்திகளை நாம் இன்ங்காண முடியும் ஆயினும் தகட்டசைவு களின் விளைவாக அச்சந்திகளிற் பெரும்பாலானவை உறுதி பற்றவையாகவும் தமது கோண அமைப்பு குலையக் கூடியன்
ஒரு முச்சந்தி உறுதியாயிருப்பதாயின் அதன் தனியசைவின் போதும், எக்காலத்திலும் அதன் கோண அம்ைப்பு - உருவம் - மாறாதிருக்க வேண்டும். அந்த அடிப்படையில் நோக்கும்போது 3 பரப்பும் பாறைத்தொடர்களின் சந்தி (பா பா பா எப் பொழுதும் உறுதியானதெனலாம். அதேசமயம் குறை எல்லை களைக்கொண்ட 3 தகடுகளின் சந்தியும் (கு கு கு) இரு பரப்பும் பாறைத்தொடர்களும் ஒரு குறையும் சந்திக்கும் மைய மும் (பா பா - கு) எப்பொழுதும் உறுதியற்றிருக்கும். ஏனைய வற்றின் உறுதி அவற்றின் கேர்ண் அமைப்பைப் பொறுத்து அமையும் 霹。 *,
முச்சந்திகளிற் சில : வடிவத்தையும் வேறுசில இயல்பான அல்லது தலைகீழான Υ வடிவத்தையும் கொண்டவை. ஆயி னும் தகடுகளின் அ ைசிே சரிவுத் திசையில் (Obłiqueły) நிகழ் வதனால் முச்சந்திகளின் உருவம் முன் குறிப்பிட்டவாறு ஒழுங் காயிருப்பதில்லை புவியிலுள்ள பேரிய சமுத்திரத்தகடுகளின் எல்லைகளை நேர்க்கும் போது அவற்றில் 6 வகையான முச் சந்திகள் முனைப்பாயுள்ளதை அவதானிக்கலாம் அவை மேல் 62) (5 EFE).
(1) பாறைத்தொடர் பாறைத்தொடர் பாறைத்தொடர் வகை: தென்பசிபிக்கில் கல்பகோஸ் தீவுகளுக்கருகிலுள்ள பசிபிக் - நாஸ்கா - கொக்கோஸ் முச்சந்தி இவ்வகைக்குச் சிறந்த உதா ரனமாகும் இச்சந்தி தான் உருவாகிய காலத்திலிருந்து

Page 50
୫୫ புவிவெளியுருவவியல்
(20 - 40 மில் ஆண்டுக்கு முன்) இதுவரை 100 கி.மீ தூரம் அசைந்திருப்பினும் இதன் கோணஅமைப்பு மாறாதிருப்பதாக டயிஸ் (R. Dietsz) என்பார் குறிப்பிட்டுள்ளார்.
(2) அகழி - அகழி - குறைவகை (அ - அ கு) : பேரு - சில்லி அகழிசில்லி பாறைத்தொடரையும் போவே தீவையும் சந்திக் குமிடம் இதற்கு உதாரணமாகும் ,
(3) குறை - குறை - பாறைத்தொடர் வகை மேல் குறிப்பிடப் பட்டது இவ்வகைக்கும் உதாரணமாகும்.
(4) குறை - குறை அகழிவகை கு கு- அ) கலிபோனியா விலுள்ள சென் அன் டிரியாஸ் குறையின் வடபகுதி இதற்கு உதாரணமாகும்.
(5) பாறைத்தொடர் - அகழி குறைவகை (ப - அ கு) கலி போனியாக் குடாவின் வாய்ப்பகுதி இதற்கு உதாரணமாகும் .
(6) பாறைத்தொடர்-பாறைத்தொடர்-குறைவகை (பா-பா-கு) : மத்திய ஆத்திலாந்திக்கில் அசோர்ஸ் தீவுகளுக்கு அருகில் ஜிபி றோல்ரர் முறிவுவலயம் மத்திய பாறைத்தொடரைச் சந்திக்கு மிடம் இவ்வகையானது. இது உறுதியற்றது. இது காலப்போக் கில் பா + கு = கு முச்சந்தியாக மாறும் சில்லிமுறிவு வலயம் பசிபிக் பாறைத்தொடரைச் சந்திக்குமிடமும், இவ்வகையான உறுதியற்ற ஒரு முச்சந்தியாகும்.
பொதுவாக, தகடுகளின் அசைவு நீண்டகாலமாக இடம் பெறும்போது சந்திகளின் கோன அமைப்பு மாறுவதோடு, சந் திகளின் நியை மும் மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.
5.6 தகட்டசைவுகளின் வின்ைவுகள்
தகடுகளின் வேறுபட்ட அசைவுகளினால் இரண்டு முக்கிய மான விளைவுகள் ஏற்படுகின்றன. அவை ( ) முனைவு அலை தல் (1) கண்டநகர்வு என்பனவாம். முனைவு அலைதல் என்பது (பக் 53 பார்க்க) தகடுகள் புவியச்சிலிருந்து வெவ்வேறு நிலையங் களை நோக்கி அசைவதாகும். அத்தகடுகள் முனைவுக்கு அப் பால் அலைதலினால் அவற்றின் முனைவு சார்நிலையம் மாறு வதையே சிலர் முனைவு அலைதல் என முரண்படக் கூறுகின் றனர். கண்டநகர்வு என்பது ஒரு கண்டத்திணிவு இன்னொரு கண்டம் சார் நிலையத்திலிருத்து புதிய நிலையத்தை நாடிச் செல்வதாகும்.

கடலடித்தரை பரவல் 89
தற்காலத் தகட்டசைவுகள் ஏறத்தாழ 2.5 மில்லியன் ஆண்டு களுக்கு முன்னர் புறொட்டறோசோயிக் காலத்தில் தொடங் கியதாகவும் அதற்குப் பின்னர் பாஞ்சியா" போன்ற பெருங் கண்டங்கள் பலமுறை உருவாகிப் பிளவுற்றதன் விளைவாக கண்டநகர்வுகள், கடலடித்தரை பரவல், முனைவு அலைதல் ஆகியன வட்டமுறையில் இடம்பெற்றதாகவும் (இதனைப் பெருங் கண்டவட்டம் என்பர்) ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இவ்வித மாக பாஞ்சியாவுக்கு முன்னர் (750 மில் ஆண்டுகளுக்கு முன்) உருவாகிய பெருங்கண்டம் றொடீனியா (Rodenia) எனப் பெய ரிடப்பட்டுள்ளது.
5. g., blót is 52,503 Li Jaisi (Sea Floor Spreading)
இது தகட்டுவிருந்தியுடன் இணைந்த முக்கியமான ஒரு ஆக்கச்செயற்பாடாகும் கடலடித்தரை (இதனைக் கடலடித் தளம் கடற்றரை எனவும் குறிப்பிடுவதுண்டு) பரவுதல் மூலமே முசத்திரங்கள் உருவாகின்றன என்றும் இப்புதிய - புரட்சிகர மான - கருதுகோளை H ஹெஸ் (Hess) என்னும் அமெரிக்கர் 1961 ல் முதன்முதல் வெளியிட்டார் அவரைத் தொடர்ந்து R டயிஸ் (R. Ditsz) என்பவரும் அதேயாண்டு கடலடித் தரை பரவல் பற்றிய தமது கருதுகோளைத் தனியாக வெளி யிட்டார். இதன்மேல் , 1961 - 70 காலப்பகுதியில் சமுத்திர அடித்தரையின் பல்வேறு அமிசங்களைப்பற்றி மேற்கொள்ளப் பட்ட ஆய்வுகள் கடலடித்தரையைப் படமாக்குதல், முதலியன கடலடித்தரை பரவுதலை உறுதிப்படுத்தின
கடலடித்தரை உருவாகுதலும் பரவுதலும் நடுச் சமுத் திரப்பாறைத் தொடர்களை மையமாகக் கொண்டு ந ேெட பெறுகின்றன. இதனால் அப்பாறைத் தொடர்களைப் பரப்பும் பாறைத் தொடர்கள் எனவும் குறிப்பிடுவதுண்டு. Li if E L if பாறைத்தொடர்களின் மத்தியிலுள்ள பி எ வு களு க் கூ டாக (அவற்றை அச்சுப்பிளவு (Axial Rift) எனவும் அழைப்பர்) பாறைக்குழம்பு வெளியேறி, இருபுறமும் சமச்சீர்ாகப் பரவுவ தாகத் தெரிகிறது. “
கடலடித்தரை பரவும் (பொறி) முறை(கடலடித்தரை பரவுதல் ஒரு தகடு பிளவுறுவதைத் தொடர்ந்தே ஏற்படுகிறது) தகடுகள் பிளத்தற்கு மேற்காவுகையோட்டிடங்கள் அல்லது வரிசையான இடையோட்டுத்தாரைகளின் செயல்பாடே காரணமாகலா

Page 51
புவிவெளியுருவவியல் {} (ر
மெனக் கருதப்படுகிறது. இவ்வாறு ஒரு தகடு பிளவுறும்போது அதன் பகுதிகள் எதிர்த்திசைகளில் அசைய (விலக) முற்படுமெ
னவும் அதற்கும் மேற்காவுகையோட்டங்களின் தொழிற்பாடே காரணமாயிருக்கலாமென நம்பப்படுகிறது இவ்வாறு பிளவுற்ற ஒரு தகட்டின் இருபகுதிகளும் எதிர்த்திசைகளில் அசையும் போது (அல்லது அசைய அசைய) அவற்றுக்கிடையில் ஏற்படும் இடைவெளிக்கூடாகப் பாறைக்குழம்பு பொங்கியெழுந்து பரவு வதாக முன்னர் கருதப்பட்டது. ஆனால் பாறைக்குழம்பானது வெப்பமான ஊட்டும் குத்துப்பாறைத் தலையீடுகளாக (Feede Dykes) ஒன்றன்பின் ஒன்றாக மேலெழுந்து பிளவுற்றதகட்டின் பகுதிகளுக்கிடையில் வெளி ஏற்படாதபடி ஒரு தலையீட்டி னுள்ளே இன்னொன்று உட்புகுந்து மேலெழுந்து பரவுவதாகவும்,
இப்பொறிமுறையானது தகட்டசைவையும் கடலடித்தரை பரவு
தலையும் ஒருங்கே இடம்பெறச்செய்வதாகவும் இப்பொழுது
கருதப்படுகிறது.
தகடுபிளத்தலும், அசைதலும் மேலமுக்கத்தைக் குறைப் பதன் விளைவாக இடையோட்டிலுள்ள பெரிடோரைற் பாறை கள் 10-15% வரை உருகி பசால்ற் வகையான பாறைக்குழம் பாக மாறுகின்றன. அப்பாறைக்குழம்பு விரிவடைந்து மேலெழும். (அதனை தோலிற்’ (Tholite) எனவும் குறிப்பிடுவர்) பசால்ற் பாறைக்குழம்பானது முதலில் 60-100 கிமீ ஆழத்தில் (சிலர் 100 கி.மீ ஆழத்திற்குக்கீழ் என்பர்) 6-10 கி.மீ அகலமான பெரிய பாறைக்குழம்புத் தேக்கங்களிற் திரள்கிறது. பின்னர் அங்கி ருந்து மேலெழுந்து நடுச்சமுத்திரப் பாறைத் தொடர்களின் கீழ் ஆழமற்ற பல சிறிய பாறைக்குழம்புத்தேக்கங்களை உருவாக்கி அவற்றிலிருந்து ஊட்டும் குத்துப்பாறைத் தலையீடுகளாக மேலெ ழுந்து பரவுகிறது. இவ்வாறு மேலெழும் வெப்பமான பாறைக் குழம்பு சமுத்திரநீருடன் கலந்து தலையனை போன்ற உரு வத்துடன் காணப்படுவதனால் தலையணைப் பாறைக்குழம்பு எனவும் அழைக்கப்படுகிறது. அதேசமயம், மேலெழும் பாறைக் குழம்பில் ஒருபகுதி குத்துப்பாறைத் தலையீடுகளாகத் தலை யணைப்பாறைக் குழம்பின்கீழ் தங்கிவிடுகிறது. ஆயினும் பாறைக் குழம்பு ஆங்காங்கு தொடர்ச்சியாக வெளியேறிச் சமுத்திர நீர் மட்டத்திற்குமேல் உயர்வதனால் பல தீவுகள் தோன்றியுள்ளன. ஐஸ்லாந்து, அதற்கு அயலில் 1963 ல் புதிதாகத் தோன்றிய சேட்டிசி தீவு (Sures) மற்றும் அரோர்ஸ், திரிஸ்டன்டி குகா, கல்பகோஸ் ஆகியன அம்முறையிலேயே உருவாகின.

கடலடித்தரை பரவல் 勁盟
நடுச்சமுத்திர எரிமலைத்தொழிற்பாடு பொதுவாக கடல் டித்தளத்தின் கீழ்ப்பகுதியிலேயே அதிகமாகவும் மெதுவாகவும் இடம்பெறுகிறது. அதன் விளைவாக மேலிருந்துகீழாக முறையே தலையணைப்பாறைக் குழம்பு, குத்துப்பாறைத் தலையீடுகள், கப்புறோ என்பவற்றைக் கொண்ட புதிய கடலடித்தரை உரு வாகிறது. அதுவே சமுத்திரப்புவியோடு எனப்படுகிறது.
கடலடித்தரை பரவும் வேகம் எங்கும் ஒருசீராயில்லை. அது வெவ்வேறு சமுத்திரப்பாறைத் தொடர்களுக்கிடையில் வேறு படுவதுபோல் ஒரே பாறைத்தொடரின் பகுதிகளுக்கிடையிலும் வேறுபடலாம். உதாரணமாக அத்திலாந்திக்கிலும் இந்துசமுத் திரத்திலும் ஆண்டிற்கு 2-4 செ.மீ கடலடித்தரை பரவும்போது பசிபிக்கில் 12-24 செ மீ அளவான தரை (இருபக்கங்களிலும்) பரவுவதாகத் தெரிகிறது. மேலும் பொதுவாக புவியின் வட பாகத்தைவிட அதன் தென்பாகத்தில் கடலடித்தாைபரவல் அதிக வேகமாக நிகழ்வதாக ஆய்வுகள் சுட்டுகின்றன. இவ்வாறு எல்லாச்சமுத்திரங்களிலும் இடம் பெறும் கடலடித்தரை பரவல் மூலம் ஆண்டிற்கு 15 சதுர கி.மீ. அளவான புதிய கடலடித் தரை உருவாகுவதாகவும் அதே போல் கடந்த 100 மில்லியன் ஆண்டுகளில் 16 கன கி.மீற்றருக்கு மேற்பட்ட கடலடித்தரை உருவாகியிருப்பதாகவும் தெரியவருகிறது.
கடலடித்தரை பரவல் புவிச்சரிதகாலங்களில் பன்முறை இடம்பெற்றதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர் ஆகப்பிந்திய பரவல் 200 மில்லியன் ஆண்டுக்கு முன்னர் தொடங்கியதாகவும் அப்போது "பாஞ்சியா" என்ற ஒரு பெருங்கடல் பல சிறு கண்டங் களாகப்பிரிந்து நகர்வதற்கு முன்னோடியாக அதில் பல பிளவுகள் தோன்றியதாகவும் அப்பிளவுகளுக்கூடாக வெளியேறிய பாறைக் குழம்பு பரவியதன் விளைவாகப் புதிய சமுத்திரங்கள் இன்றைய சமுத்திரங்கள்-உருவாகியதோடு, கண்டங்களும் நகர்த்தப்பட்ட தாகவும் நம்பப்படுகிறது (அத் 6 பார்க்க)
இடையோட்டுப்பாறைக்குழம்பு மேலேழுந்து புதிய கடலடித் தரையை உருவாக்குகின்ற போது, பழைய தரையின் ஒரு பகுதி கண்டங்கள் மற்றும் தீவு வில்லுகளின் அயலில் உருவாகும் அகழிகளுக்கடாகக் கீழிறங்கி, இடையோட்டுப் பகுதியை யடைந்து உருகி மீண்டும் பாறைக்குழம்பாக மாறுகிறது. கடலடித் தரை பரவும் வேகத்தைவிடக்கீழிறங்கும் வேகம் அதிகமானால் கண்டங்கள் மீண்டும் ஒருங்கி (மோதி) மடிப்புமலைத்தொடர் களை உருவாக்குமெனக் கருதப்படுகிறது. இம்முறையில் கடலடித்

Page 52
92 புவிவெளியுருவவியல்
தரை ப்ர்வல் மூலம் சமுத்திரங்கள் தோன்றி, வளர்ந்து, மறையும் முறையை வில்சன் வட்டம் எனக்குறிப்பிடுவர் இன்றைய அத்திலாந்திக் சமுத்திரம் முந்திய ஒரு வட்டத்தின் முடிவில் ஏறத்தாழ 180 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மீண்டும் திறக்கப்பட்டு வளர்ந்து வருவதாகத் தெரிகிறது. வில்சன் வட்டம் முற்றுப்பெறுவதற்குப்பன்னூறு மில்லியன் ஆண்டுகள்
கடலடித்தரை பரவல் பற்றிய ஆய்வுகள் கிழக்காபிரிக்க பிளவுப்பள்ளத்தாக்கு வலயம் கரு நிலையிலும் செங்கடல் வலயம் குழந்தை நிலையிலும், அத்திலாந்திக் இளமைநிலை பிலும், இந்து சமுத்திரம் சிறிது முதிர்ந்த நிலையிலும் பசிபிக் சமுத்திரம் முதுமை நிலையிலும் ரெதிஸ் கடல் மூடப்பட்ட நிலையிலும் இருப்பதாகத் தெரிவிக்கின்றன. மேலும் அண்மைக் கால ஆய்வுகளின்படி ஐக்கிய அமெரிக்காவில் நியூ மெச்சிக்கொ கொலராடோ மாகாணங்களிற்கானப்படுகின்ற றியோகிரன்டே (Riograde) பிளவும் செங்கடலைப் போலக் குழந்தை நிலையில் அல்லது தொடக்க நிலையிலுள்ள ஒரு கடலடித்த ரை பரவும் மையமாயிருக்கலாமென ஊகிக்கப்படுகிறது. மேற் குறிப்பிடப் பட்ட கணிப்புகளின் படி, பசிபிக்சமுத்திரம் இன்னும் ஏறத்தாழ 200 மில்லியன் ஆண்டுகளில் மூடப்பட்டு விடுமென நம்பப் படுகிறது.
5.ஆ. (2) கடலடித்தரை பரவுதற்குச்சான்றுகள்
கடலடித்தரை பரவுதற்குப் பலமான பல சான்றுகள் உள் ளன அவற்றில் (1) புவிநடுக்கங்கள், எரிமலைகளின் பரம்பல் (2) சமுத்திர அடித்தளப்பாறைகள் அலற்றிலுள்ள படிவுகள், அடையல்கள் ஆகியவற்றின் வயது மற்றும் பரம்பல் (3) காந்த முரண்பாட்டுத் துண்டுகளின் அமைவு மற்றும் வயது (4) மாறு குறைகளின் அமைவு (5) கண்டநகர்வு பற்றிய புதிய கருதுகோள் மற்றும் கால அட்டவணை ஆகியன முக்கியமானவை இனி இவற்றைச் சற்று விரிவாக ஆராய்வோம். முதலாவதாக புவி நடுக்கங்கள் எரிமலைகள் என்பவற்றின் பரம்பலானது கடலடித் தரை பரவுதலுடன் தொடர்பைக் காட்டுகின்றது. உதாரணமாக ஆழமற்ற புவி நடுக்கங்களிற் கணிசமானவை புதிய கடலடித் தரை உருவாகும் நடுச் சமுத்திரப் பாறைத் தொடர் வலயத்தில் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நடுச்சமுத்திரப் பாறை தொடரின் மத்திய பள்ளத்தாக்கில் நிகழும் குறைத்தலும் பரப் பும் பாறைத்தொடர்களுக்கிடையே காணப்படும் மாறுகுறை

கடலடித்தரை பரவல் 93
வலயங்களில் ஏற்படும் அசைவுகளுமே புவி நடுக்கங்களை உண் டாக்குகின்றன. அதேசமயம், சமுத்திரத்தகடுகள் கீழிறங்கும் (ஒருங்கல்) வலயங்களில் தகடுகளின் மேற்பகுதி இழுவைக்கும் உராய்வுக்கும் உட்படுவதனால் அங்கும் ஆழமற்ற நடுக்கங்கள் ஏற்படலாமெனவும் தகடுகள் சரிந்து கீழிறங்கிச் செல்கின்ற பெனியோ வலயங்களின் ஆழமான பகுதிகளில் மட்டுமே ஆழ் குவிய நடுக்கங்கள் ஏற்படும் எனவும் இக்கோட்பாடு கூறுவதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
இனி, எரிமலைகளின் பரம்பலை எடுத்துக்கொண்டால், அவற்றின் தொழிற்பாடு, கடலடித்தரை உருவாகும் நடுச்சமுத் திரப்பாறைத்தொடர் வலயத்திலும், அது மறையும் அகழிகளை யடுத்துள்ள பகுதிகளிலுமே அதிகமாக (90% இடம்பெறுவ தாகத் தெரிகிறது. உலகிலுள்ள அதி உயிர்ப்புள்ள எரிமலைகளிற் பெரும்பாலானவை பசிபிகிலுள்ள அகழிகளையடுத்திருக்கும் நெருப்புவளையம்' எனப்படும் நீண்ட வலயத்திற் காணப் படுவது ஈண்டு குறிப்பிடத்தக்கது.
இரண்டாவதாக, சமுத்திர அடித்தளம், அதன் மேலுள்ள பாறைப்படிவுகள் ஆகியன பற்றி மேற் கொள் ள ப் ப ட் ட றேடியோ மெற்றிக் ஆய்வுகளின்படி இன்று புவியிலுள்ள எந்தவொரு சமுத்திர வடிநிலத்தின் வயதும் 180 மில்லியன் ஆண்டுக்கு மேற்படவில்லை. அதே சமயம் அடித்தளப்பாறை களின் வயதும் அடையற்பாறைப்படிவுகளின் வயது, அவற்றின் தடிப்பு ஆகியனவும் நடுச் சமுத்திரப்பாறைத்தொடரிலிருந்து கண்டக்கரைகளை நோக்கி அதிகரித்துச் செல்வதாகத் தெரி கிறது. உதாரணமாக, அத்திலாந்திக்கின் நடுச்சமுத்திரப் பாறைத்தொடர்களுக்கு அயலில் உள்ள அசோர்ஸ் தீவுகளிற் காணப்படும் பாறைகளின் வயது 4 மில்லியன் ஆண்டுகளா கவும், ஆபிரிக்க கண்டத்தின் அயலிலுள்ள கேப்வேட் தீவுகளி லுள்ள பாறைகளின் வயது 120 மில்லியன் ஆண்டுகளாகவு முள்ளது. இவற்றிலிருந்து கடலடித்தரை பரவல் மூலமே சமுத் திரங்கள் உருவாகின என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மூன்றாவதாக, நடுச்சமுத்திரப்பாறைத்தொடர்களின் இரு புறமும் காணப்படும் எரிமலைக்குழம்புப்பாறைகள் தாம் திண் மையடைந்த காலத்திற்குரிய காந்தக்களத்தின் அமைவையும், மாற்றங்களையும் நன்கு பதிந்து வைத்துள்ளன. இவ்வாறு சமுத்திர அடித்தளப்பாறைகளில் மேற்கொள்ளப்பட்ட காந்தக் கள ஆய்வுகள் நடுச் சமுத்திரப்பாறைத்தொடரின் இருபுறமும்

Page 53
94 புவிவெளியுருவவியல்
காந்தக்கள முரண்பாடுகள் (இயல்புக்கு அதிகமான அல்லது" குறைந்த கர்ந்தச்செறிவைக் காட்டும் துண்டுகள்) சமச்சீராகவும் ஒரே ஒழுங்கிலும் கண்ணாடிபிம்பம்போலிருப்பதாகத் தெரிவிக் கின்றன. குதிரையின் வரிகள் போலத் தோன்றும் இத்துண்டு களின் அமைப்பு, தடிப்பு என்பவற்றின் மூலம் கடலடித்தரை பரவத்தொடங்கிய காலம் அதன் பரவல்வேகம் என்பவற்றைக் கணித்தறிந்துள்ளனர். இவ்வாறு அறியப்பட்ட விபரங்கள் சமுத்திர அடித்தளப்பாறைகள், அடையல்கள், அடையல் உள் வீடுகள் ஆகியவற்றின் வயது, பரம்பல் பற்றிய தரவுகளுடன் பொருந்துகின்றன. மேலும் காந்தக்கள மாற்றங்கள் பற்றி நிலப்பரப்பிற் பெறப்பட்ட சான்றுகளும் கடலடித்தளச் சான்று களும் ஒன்றுடனொன்று பொருந்துவதோடு கடலடித்தரை பரவியதைச் சுட்டுகின்றன.
وقع يتجه رويي - هاته . (9 ! 2
彝
ಫ್ಲ...ಳrg೯೪೪೯ೇಜ್ಡ,
以 **
படம் 20 பண்டைக் காந்தநிலைத் துண்டுகள்
நாலாவதாக, நடுச்சமுத்திரப்பாறைத்தொடரின் பகுதிகளுக் கிடையிலுள்ள மாறுகுறைகள் தோன்றுவதற்கும் கடலடித் தரை பரவுதலே கர்ரணமாகும், ஏனெனில் அது நிகழாதிருப்பின் பாறைத்தொடரின் பகுதிகளுக்கிடையில் எதிர்த்திசை ଦ୍ଦ) ଏFବy । களும் புவி நடுக்கமும் ஏற்படமுடியாது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கடலடித்தரை பர்வல் 95.
ஐந்தாவதாக கடலடித்தரை பரவும் வேகத்தைப்பற்றிய ஆய்வுகள், அத்திலாந்திக்கில் ஆண்டுக்கு 2-3 சமீ வேகத்திலும் பசிபிக்கில் 8-12 ச.மீ வேகத்திலும் (ஒருபக்கத்தில்) கடலடித் தரை பரவுவதாகத் தெரிவிக்கின்றன. இதுபோன்று பிற இடங் களிலிருந்தும் பெறப்பட்ட கணிப்புகள், கண்டங்களின் கரை யோரப்பாறைகளின் வயதுடன் பொருந்துவதோடு, 180 மில் லியன் ஆண்டுகளுக்கு முன்னர் கண்டநகர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்தே இன்றுள்ள சமுத்திரங்கள் எல்லாம் உருவாகின என்ற புதிய கருத்தை வலியுறுத்துகின்றன.
இறுதியாக, கடலடித்தரை பரவும் வேகம் தகடுகள் அகழி களில் இறங்குவதனால் அவை குறுக்கமடையும் வேகம் என்ப வற்றுக்கும், கீழிறங்கும் தகட்டில் புவி நடுக்கங்கள் ஏற்படும் ஆழத்துக்குமிடையில் இணக்கம் காணப்படுதல் கஜலடித்தரை பரவலுக்கு இன்னொரு முக்கியமான சான்றாகும்.
5. ஆ(3) தகட்டசைவு கடலடித்தளப் பரவல் என்பவற்றை
ஏற்படுத்தும் விசைகள்
கடலடித்தரை பரவுதல், தகட்டசைவு என்னும் (இணைந்த) செயற்பாடுகளை ஏற்படுத்தும் விசை எது என்பதில் இன்னும் கருத்து வேறுபாடு நிலவுகிறது. கடலடித்தரை பரவல் நிலைக் குத்தான விசையின்றி ஏற்படமுடியாது. அதேசமயம் கிடை யாகச் செயற்படும் ஒரு விசையின்றித் தகட்டசைவு நிகழாது.
இந்நிலையில் இவற்றை விளக்குவதற்குச் சில கருதுகோள்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றில், (1) புவியீர்ப்புச்சறுக்கல் (2) தகட்டிழுவை (Sab-pu1) (3) மேற்காவுகை என்பன முக்கியமானவை.
(1) புவியீர்ப்புச்சறுக்கற் கோட்பாட்டின்படி நடுச்சமுத்திரப் பாறைத்தொடர்ப் பகுதியில் உருவாகும் எரிமலைக்குழம்புப் பாறையும் குமிழ் போல் மேலுயர்த்தப்பட்டுப் பிளவுற்ற மெல் லிய டூயல் புவியோடும் தகடு கீழிறங்கும் வலயத்தை நோக்கிச் செல்லும் அடித்தளத்தைக் கொண்டிருப்பதனால் அவை பக்கத் திசைகளில் எளிதாகச் சரிந்து (வழுக்கிச்) செல்ல முடியும்.
தகட்டிழுவைக் கருத்தின்படி ஒரு சமுத்திரத்தகடு கீழிறங் கும்போது அதன் கீழ்ப்பகுதியில்-குறிப்பாக 400 கி.மீ, 670 கி.மீ மட்டங்களில் ஏற்படும் கணிப்பொருட் பளிங்கமைப்பு (அடர்த்தி நிலை) மர்ற்றத்தினால் தகட்டின் பாரமும் திணிவும் அதிகரிக்கும்

Page 54
96 புவிவெளியுருவவியல்
-
*ଜ୍ଞ
படம் 21 புவியீர்ப்புச்சறுக்கல்
போது, கீழிறங்கும் எல்லையை நோக்கி இழுவை ஏற்படும். ஒரு மேசைவிரிப்பில் பெரும்பகுதி நழுவும் போது அது எஞ்சிய விரிப்பையும் கீழே இழுப்பதைப்போலத் தகட்டிழுவையும் செயற் மடுமெனக் கருதப்படுகிறது. ஆனால் இக்கருதுகோளை எதிர்ப் பவர்கள் தகட்டிழுவை சிறிய தகடுகளையேயன்றிப் பாரமான பெரிய தகடுகளை அசைக்க மாட்டா எனவும், சில தகடுகள் (உம்யூறேசியத்தகடு) கீழிறங்கும் வலயத்தைக் கொண்டிருக்க வில்லை எனவும் கூறுகின்றனர். இன்னொரு கருத்தின்படி பல இடையோட்டுத்தாரைகள் (Mantle Plumes) மேலெழுவதனாலும் கண்டத்தகட்டிலோ சமுத்திரத்த கட்டிலோ பிளவுகள் ஏற்பட்டுப் புதிய கடலடித்தரை பரவமுடியும்.
தகட்டசைவையும் கடலடித்தரைபரவலையும் ஏற்படுத்தக் கூடியதெனப் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருதுகோள் மேற்காவுகையோட்டக் கருதுகோளாகும். இதன்படி இடை யோட்டின் கீழ்ப்பகுதியிலிருந்து வெளிப்படும் மேற்காவுகை ஒட் டங்கள் வெப்பமான அடர்த்தி குறைந்த பாறைக்குழம்பைத் தள்ளிக்கொண்டு மேலெழும் அப்பாறைக்குழம்பில் ஒரு பகுதி நடுச் சமுத்திரப்பாறைத்தொடரில் ஏற்படும் பிளவுகளுக்கூடாக வெளியேறும் போது இன்னொரு பகுதி கீழ்ப்பகுதியில் தலையீடு களை உண்டாக்கும் அதேசமயம் பாறைக்கோளத்தின் அடிப் பகுதியில் இரு கிளைகளாகப்பிரிந்து கிடையாகச் செல்லும் சுற்றோட்டங்கள் தகடுகளையும் தள்ளிச் செல்லும் பின் அவை கீழ்நோக்கித் திரும்பும் எல்லையில் உருவாக்கும் அகழிகளுக்
 

I j; ) 16 97
கூடாகத் தகடுகள் கீழிழுக்கப்படும். இம்முறையில் கீழிறங்கும் தகட்டுப்பொருட்கள் இடையோட்டுப் பகுதியில் உருகி மீண்டும் பாறைக் குழம்பாக மாறும் . இவ்வொழுங்கு மேற்காவுகையின் வட்டமான கல அமைப்புக்கு இசைவானது. மேலும் வெப்பப் பாய்ச்சல் மத்திய பாறைத்தொடர்ப்பகுதியில் அதிகமாகவும் அகழிப்பகுதியில் குறைவாகவும் காணப்படுதல் மேற்காவுகையின் செயற்பாட்டிற்குச் சான்றாயுள்ளது.
5. ஆ. (4) தகட்டு விருத்திக்கோட்பாடு - குறைநிறைகள்
தகட்டு விருத்திக் கோட்பாடு புவியில் இடம் பெறும் எல்லாவிதமான நிகழ்வுகளையும் பூரணமாகவும். ஐயத்திற்கும் ஊகத்திற்கும் இடமின்றியும் விளக்குவதாகக் கொள்ளமுடியாது. அது இன்னமும் ஆய்வுக்குட்பட்டிருப்பதும் புவியின் அக விசை கள், அசைவுகள் பற்றி நேரடியாக அறியமுடியாதிருப்பதும் அதை எல்லாம் தழுவிய' ஒரு கோட்பாடு என்ற நிலைக்கு
உயர்த்துவதற்கு இடமளிக்கவில்லை இந்நிலையில் இதில் சில
குறைபாடுகள் காணப்படுவது இயற்கையே அவற்றில் முக்கி யமானவை பின்வருமாறு: ,
1) பாறைக்கோளத் தகடுகளின் உண்மையான தடிப்பு எவ்வளவு என்பது இன்னமும் விவாத நிலையிலுள்ளது. အံ့ငှါ များ} fiji–
அவை மென்பாறைக்கோளம் வரை தாழ்ந்து அதன் மேல் மிதப்பதாகக் கூறுகின்றனர் வேறு சிலர் அவை மென்பாறைக்
கோளத்திற்குக் கீழ் உள்ள இடையோட்டில் ஒரு பகுதியுடனும்
இணைந்து அசைவதாகக் கருதுகின்றனர். இக்கருத்துக்கு இப்
பொழுது ஆதரவு அதிகரித்து வருகிறது.
2) த க ட் ட ைச வு மேற்காவுகையினால் ஏற்படுமெனக்
கொள்ளின் அதன் மேலெழும் காலின் (Lib) மேலுள்ள ஒரு பாறைத்தொடர் அதன் கீழிறங்கும் காலினாலும் கீழ்நோக்கிக்
காவிச்செல்லப்படுவது எவ்வாறு என்பது விளங்கவில்லை
3) சமுத்திரப் பாறைத் தொடர் பெனியோ வலயத்
தில் கீழிறங்கும் முறை தெளிவற்றது ஏனெனில் ஒரு தகடு கீழிறங்கும் எல்லையை அடைகிற அளவில் மென்பாறைக்கோளத் திலிருந்து பிரிந்து விடும். அந்நிலையில் பாறைத்தொடரின் பிற் பாகம் கீழிறங்காது.
4) பெனியோ வலயத்தில் சில நூறு கி.மீ அகலமான மலை
வலயங்களே கீழிறங்கலாம். வடஅமெரிக்காவின் மேற்கு மலைத்

Page 55
98. புவிவெளியுருவவியல்
தெரடர்கள் 15 oo, G). வரை அகலமானவை. எனவே அவற்றின் அசைவுகளை விளக்குவதற்குச் சிக்கலான இன்னொரு கோட் பாடு தேவை!
5) அந்தீசு மலைப்பகுதியில் இடம்பெறும் எரிமலைத் தொழிற்பாடு பக்கத்திசையில் தொடர்ச்சியற்றுக் 5, T600 படுவதற்குக் காரணம் தெரியவில்லை.
6) தகட்டுக் கோட்பாடு தகட்டெல்லைகளில் மட்டும் நிலைக்குத்தான அசைவுகளுக்கு இடமளிக்கிறது, ஆனால்த கட் டெல்லைக்கு அப்பால் கண்டங்களிலும் சமுத்திரங்களிளும் நிலைக்குத்தசைவுகள் ஏற்பட்டமைக்குச் சான்றுகள் உள்ளன. வட மேல் பசிபிக்கிலுள்ள சட்ஸ்கி உயர்ச்சி, அத்திலாந்திக் கிலுள்ள பேர்முடா உயர்ச்சி, பிறேசிலுக்கருகிலுள்ள றையோ கிரண்டே உயர்ச்சி ஆகியன சமுத்திரங்களிலுள்ள உயர்ச்சி களுக்கும், ஒசார்க்குன்றுகள், டகோட்டாவிலுள்ள கருங்குன்று கள் கொலராடோ மேட்டுநிலம், மிச்சிக்கன் வடிநிலம் ஆகி யன கண்ட நிலப்பரப்பிலுள்ள உயர்ச்சிகளுக்கும் சில உதார ணங்களாகும் இவற்றைத் தகட்டசைவுடன் எவ்வாறு தொடர்பு படுத்தலாம் எனத் தெரியவில்லை. மேலும் தகடுகளின் நடுப் பகுதியில் இத்தகைய நிலைக்குத்தான அசைவுகள் ஏற்படுதல் அவை விறைப்பானவை என்ற கருத்துக்கும் முரணாயுள்ளது.
7) தகட்டெல்லைக்குத் தொலைவிலும் சில ஆழ்குவியப் புவிநடுக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இத்தகைய புவிநடுக்கங் கள் ஐக்கிய அமெரிக்காவில் பொஸ்ரன் (1755) நியூமட்றிட் (1812) சாள்ஸ்ரன் (1886) பகுதிகளில் ஏற்பட்டுள்ளன. இத் தகைய புவிநடுக்கங்கள் 1976 ல் சீனாவில் ரான்சான்" பகுதி யிலும் (1997 ல் இந்தியாவின் மத்திய பிரதேசத்திலும் ஏற்பட் டுள்ளன) இவற்றைத் தகட்டசைவுக் கோட்பாட்டின் மூலம் விளக்கமுடியாதுள்ளது.
8) கண்டங்களிலும் முத்திரங்களிலும் தகட்டெல்லைக ளுக்கு வெளியே வெப்பமையங்கள் தோன்றுவதற்கும், எரிமலைத் தொழிற்பாடு இடம்பெறுவதற்கும் விளக்கமளிப்பது கடினமா
புள்ளது.
9) கண்டத்தகடுகளிடையே மோதல்கள் ஏற்பட்ட @t_já களிற் காணப்படும் நிலைமைகள் குழப்பமானவை. உதாரண மாக மத்தியதரைக்கடற் பகுதியில் ஆபிரிக்கத்தகடும், L. Gu» சிறிய தகடுகளும் மோதியதனால் விளங்கவும் விளக்கவும் முடி யாத அளவு சிக்கலான நிலைமைகள் தோன்றியுள்ளன. அன்

கடலடித்தரை }} }} ଖ}; ୋ; 99
றியும் கிழக்கு மத்தியதரைக் கடற்பகுதியிற் காணப்படும் சில தகடுகளின் எல்லைகள் தெளிவற்றும் முரண்பட்டும் காணப்படு வதனால் அவற்றை எந்த வகையான எல்ல்ை எனக்கூறமுடி யாதுள்ளது (10) இந்திய, யூறேசியத்தகடுகளின் மோதலினால் அம்மேர்தல் எல்லைக்கு அப்பர்ல் பரந்து உயர்ந்துள்ள திபெத் மேட்டுநிலமும் மலைகளும் உருவாகியதெவ்வாறு என்பதைத் திருப்திகரமாக விளக்கமுடியாதுள்ளது.
இவ்வாறு தகட்டுவிருத்திக் கோட்பாட்டிற்கு எதிராகப் பல கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டிருப்பினும், அதன் காரண மாக அதை நாம் ப யன ற் ற ஒரு கோட்பாடெனக் கருத முடியாது. ஏனெனில் புவியின் பாறைக்கோளத்தின் அமைப்பு, அதில் ஏற்படும் வேறுபட்ட அசைவுகள், மாற்றங்கள் என்ப வற்றை விளக்குவதற்காக வெளியிடப்பட்ட எந்தவொரு கருது கோளையும் விட இது அவற்றைச் சிறப்பாக விளக்குகிறது. என்பதில் சந்தேகமில்லை. இதிலுள்ள வேறு சில:சிறப்பம்சங்கள் பின்வருமாறு (1) இது முனைவு அலைதல்' என்ற மயக்கத் திற்குரிய கோட்பாட்டை நிராகரிப்பதோடு, தகடுகளின் வேறு பட்ட அசைவுகளே அம்மயக்கத்தை ஏற்படுத்தின என்ற கருத்தை நிலைநாட்டியுள்ளது. (2) கண்டநகர்வு ஏற்பட்ட முறை அதை ஏற்படுத்திய விசை என்பவற்றை விளக்குவதன் மூலம் கண்ட நகர்வு" என்பது கண்டத்துடன் இணை ந் த தகட்டின் அசைவே என்பதையும் அது (நகர்வு) கடலடித்தரை பரவல் மூலம் ஏற்பட்டது என்பதையும் தெளிவாக்கியுள்ளது. )ே இது பாறைக்குழம்பு உருவாகும் முறை, பாறைகள் உருமாற்றப்படுதற்கான காரணங்கள், பாறைகள் மீள உருகிப் பாறைக்குழம்பாதல் என்னும் பாறை மாற்ற வட்டத்தின் மூன்று கூறுகளையும் நன்கு விளக்குகிறது. (4) இது எரிமலைத் தொழிற்பாடு, புவி நடுக்கம் மடிப்பு மலைகள் பேர்ன்றவற்றின் பரம்பலையும் அவற்றுக்கான காரணங்களையும் ஒன்றிண்ைத்து
விளக்கக்கூடிய கட்டமைப்பைக் (Frame Work) கொண்டுள்ளது.
இக்கருதுகோளிற் காணப்படும் சில குறைபாடுகள் கரலப் போக் கி ல் களையப்படலாம். அஃதெவ்வாறாயினும் அந்த் நிலை ஏற்படும்வரை இது புவியின் பாறைக்கோளத்தைப்பற்றிய பல விடயங்களை நாம் விளங்கவும், விளக்கவும் உதவும் ஒரே :ொரு கோட்பாடாக இருக்கும் என்பதில் ஐ ய மி ல்லை. அன்றியும் புவி அறிவியல் துறையில் இதுவரை வெளியிடப்பட்ட கோட்பாடுகளில் இதுவே அதிக பலமுள்ளதும் பயனுள்ளது மான கோட்பாடு எனின் அது மிகையன்று. 添

Page 56
அத்தியாயம் 6
கண்டநகர்வு
மேற்பாகம் ஒடு போன்றிருக்கும். அதன் 8ழுள்ள திரவத்தின் உக்கிரமான அசைவுகளினால் அது உடைக் கப்படவும் ஒழுங்கு குலைக்கப்படவும் கூடியது (பெஞ்சமின் பிராங்கிலின்) கண்ட நகர்வு என்பது இன்று ஒரு கருதுகோளன்று, அது புவியின் பரிணாம வரலாற்றில் அவ்வப்போது ஏற்படக் கூடிய தவிர்க்கமுடியாத ஒரு நிகழ்வு’ எனுமளவுக்கு அறிவியல் உலகின் ஆதரவைப்பெற்று விட்டது. ஆயினும் இதனை ஏற்றுக் கொள்ள அரைநூற்றாண்டுகாலம் (1912-62) சென்றிருப்பது ஆச்சரியமானதே !
கண்ட நகர்வு பற்றி நா ஜர து ஆண்டுகளுக்கு முன்னரே (முதன் முதல்?) சிந்தித்தவர் ஆபிரகாம் ஒற்றேலியஸ் (Abraham Otteius) எனும் ஒல்லாந்தப் படவரைகலை வல்லாளராகும். அவர் 1596 ல் வெளியிட்ட Geographicus Thesaurus என்ற நூலில் அது பற்றிக் குறிப்பிட்டுள்ளார் அவருக்குப் பின்னர் முறையே பிரான்சிஸ் பேகன் (1620) ஸ்நைடர் (1858) ஹபணிச் (1875) ஆகியோர் சுருக்கமாகவும், 1910 ல் ரெயிலர் சற்று விரிவாகவும் கண்ட நகர்வு பற்றிய தமது கருத்துக்களை வெளியிட்டனர். ஆ யி னு ம் இக்கருதுகோளை விவாதத்திற் கேற்ற வகையில் விரிவாகவும், விளக்கமாகவும் பல சான்று களுடன் வெளியிட்ட பெருமை அல்பிரட் வெகினர் என்னும் ஜேர்மானியரைச் சேரும் ,
அல்பிரட் வெகினர் ஒரு கா வநிலையியலறிஞராவர் அவர் புவிச் சரித காலங்களில் புவியிற் காணப்பட்ட காலநிலைகளைப் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தார் நிலக்கரிக் காலத்திலும் அதற்குப் பின்னரும் ஏற்பட்ட 9 frag) Gు மாற்றங்களை 6ါ၉yr'မ္ဘ; கவும் சிறப்பாக - உயிரினங்களின் பரம்பல், உயிர்ச் சுவடுகளின் பரம்பல், பணிக்கட்டியாற்றுக்காலப் படிவுகளின் பரம்பல் போன்றவற்றில் கண்டங்களிடையே காணப்பட்ட ஒற்றுமை வேற்றுமைகளைச்சீர்தூக்கிப்பார்த்து அவற்றுக்கு விளக்கமளிக்க அவர் முற்பட்டார்.

୫ କର୍ତା ।-g3;; it ଷ୍ଟ ...)
(நிலக்கரிக்காலத்திற்குரியவை எனக்கருதப்படும் படிவுகள், இட்ைவெப்ப வலயத்தில் (உ.ம் ஜேர்மனி, இங்கிலாந்து, போலந்து) காணப்படுதல், தென்னாபிரிக்கா, இந்தியா, அவுஸ் திரேலியா, பிறேசில், ஆர்ஜென்டீனா, உருகுவே முதலிய இ டங்க ளி ல் பணிக்கட்டியாற்றுடன் தொடர்புள்ள அறை பாறைக்களிமண் காணப்படுதல் , ஐக்கிய அமெரிக்காவின் ஒகையோ, ெ ..............................................................................................................................................TYi rTTS S SLLSS SS LLCCLLLLS S S S S S LL LLLLS S
கன்ரக்கி மாகாணங்களிலும், சீனாவின் சாந்துங் குடாநாட்டிலும், செம்பூரான்மண் காணப்படுதல் போன்ற முரண்பாடான அமிசங்களை விளக்க முயன்ற வெகினர் கண்டங்கள் தற்போது காணப்படும் நிலையங்களில் நிலக்கரிக் காலத்திலும் காணப்பட்டிருப்பின் முன் குறிப்பிட்டவற்றை விளக்கமுடியாதெனக்கண்டார். குறிப்பாக, தென்கண்டங்கள் அக்காலத்தில் 'தென்முனை வைச் சுற்றி ஒரு மித் துக் காணப்பட்டாலன்றி அக்கண்டங்களில் பனிக்கட்டியாறாதல் நிகழ்ந்ததை விளக்கமுடியாதெனக்கருதிய வெகினர் தமது கருதுகோளை நிறுவுவதற்கு வேண்டிய சான்றுகளைத் திரட்டு வதில் ஈடுபட்டார். அவர் கண்டங்களின் உயிரினப் பரம்பல் பாறைப்படையில் ஒற்றுமை, பணிக்கட்டியாற்றுப் படிவுகளின் பரம்பல் போன்றவற்றை ஆராய்ந்து அவற்றிலுள்ள சாதக மான அமிசங்களைத் தமது கருத்துக்கு ஆதாரமாக முன் வைத்தார். ஆயினும் கண்டங்களை நகர்த்திய விசை, கண்டங் கள் நகர்ந்த முறை என்பன பற்றி அவர் வெளியிட்ட கருத் துக்கள் அரை நூற்றாண்டுக்கு மேல் (1912 - 62) அறிவிய லாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனால் வெகி னரின் (கண்ட நகர்வு பற்றிய) கருத்து ஒரு புவிச்சரிதவியற் கேலியாக (oke) கணிக்கப்பட்டது. ஆனால் 1960 - 65 காலத் தில் சமுத்திரவியல், புவிப்பெளதிகவியல் துறைகளில் மேற் கொள்ளப்பட்ட பல ஆய்வுகள், புரட்சிகரமான புதிய கண்டு பிடிப்புகளையும் கருத்துகளையும் வெளியிட்டதன் மூலம் வெகினரின் கண்டநகர்வுக் கருதுகோளுக்கும் புத்துயிரூட்டி
6.2 வெகினரின் கண்டநகர்வுக் கருதுகோள்
வெகினர், மேய்நிலக்கரிக் காலத்தில் கண்டங்களனைத்தும் ஒன்றாயிணைந்திருந்ததாகக்கொண்டு அப்பெருங்கண்டத்திற்கு பாஞ்சியா' (Pangea) எனப் பெயரிட்டார். அது புவியின் முழுப்பரப்பில் 40%மாகக் காணப்பட்டதெனக்கூறிய வெகினர் எஞ்சிய 60%மான கடற்பரப்பைப் பாந்தலாசா (Panthalassa) எனக் குறிப்பிட்டார். இவ்வாறு "பாஞ்சியா என வெகினராற்

Page 57
O2 புவிவெளியுருவவியல்
பெயரிடப்பட்ட பெருங்கண்டம் , aut & Giải 'Gr('g8'u1' என்னும் நிலத்திணிவையும் தெற்கில் கொண்டுவானாலாந்து என்னும் நிலத்தினையும் உள்ளடக்கியிருந்ததாக F.B. ரெயிலர் (6 Q56 (Du Tuoi i) ஆகியோர்) கூறியுள்ளனர். அதேசமயம் அவ்விருநிலத்திணிவுகளுக்குமிடையில் ரெதிஸ் ("Tethys) என்னும் 5, 6 காணப்பட்டதாக gG)66v (Suess) என்னும் ஆஸ்திரிய அறிஞர் குறிப்பிட்டுள்ளார்.
மேல்நிலக்கரிக் காலத்தில் தெ ன் முனைவு தென்னாபி ரிக்க கரையையொட் டி யிருந்ததென்றும், பாஞ்சியாக் கண்டம் துண்டுகளாக உடைந்து பி ரி த் து வெவ்வேறு திசை களில் நகர்ந்ததன் விளைவாக இன்றுள்ள கண்டங்கள் உருவா கின எனவும் வெகினர் விளக்கினார் மேலும் காலத் தில் தென்முனைவு எங்கெங்கு காணப் பட்டதோ அங்கிருந்து தெ ன் க எண் டங்கள் வெளியே இழுத்துச் செல்லப்பட்டதனால் அவை பிரிந்தனவென் றும் அதற்குப் பின்னர்
வட அமெரிக்காவும், தென்னமெரிக்காவும் வெகினரின் கண்ட நகர்வுக் கருது கோள் P" (1) மேல்நிலக்கரிக் (2) இயோசின் (3) பழைய குவாற்றனறி ஏற் பட்ட பிளவே 扈 அத்திலாந்திக் சமுத்
திரமெனவும் Gag) Göri ositä gaST itsi .
கண்டங்களின் நகர்வை வெகினர் முனைவை விட்
t-ILőb (Poliflucht) grost விபரித்துள்ளார்.
 
 

கண்டநகர்வு
கண்டங்களை நகர்த்திய விசையை விளக்க மு ற் பட் ட வெகினர், சூரிய சந்திரர்களின் வற்றுப்பெருக்கு வி  ைச யி ன் விளைவாகப் புவியின் மத்தியகோட்டுப் பகுதி புடைத்தமை யால் உண்டாகிய ஈர்ப்பு விசையே கண்டங்கள் முனைவை விட்டோடவும், மேற்கு நோக்கி நகரவும் காரணமெனக் குறிப் L? . Litri.
வெகினரின் கண்டநகர்வுக் கருதுகோள்கள் சம கால ப் புவிச்சரித்வியல் , புவிப்பெளதிகவியல் துறையினரிடையே கலப்பான வரவேற்பைப் பெற்றது. ஆதர் ஹோம்ஸ் (பிரித் தானியர்) LC. கிங், டு ரூவா (தென்னாபிரிக்கர்) போன்ற சில புவிச்சரிதவியலாளர்கள் கண்டநகர்வுக் கருதுகோளைப் பலமாக ஆதரித்த அதேவேளை ஹரோல்ட் ஜெப்றிசும் வேறு சில புவிப்பெளதிகவியலாளர்களும் அதனை எள்ளிநகையாடினர். குறிப்பாகக் கண்டங்களை நகர்த்திய விசை, கண்டங்கள் நகர்த்தப்பட்ட முறை என்பன பற்றிப் பலத்த கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
இந்நிலைமை 1960 வரை நீடித்தது.அதற்குப் பின்னர் சமுத் திர அடித்தளம் பற்றிய விரிவான ஆய்வுகளின் அடிப்படை யில் வெளியிடப்பட்ட தகட்டு விருத்திக் கோட்பாடு (1961) கண்ட நகர்வு நிகழ்ச்சித்தக்கவானதென்பதை நி ரூ பி த் து விட்டது.
6. 3 கண்டநகர்வு ஏற்பட்டமுறை பற்றிய புதிய கருத்து
இது ஏறத்தாழ 200 மில்லியன் ஆண்டுகளுக்கு மு ன் ன ர் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. பாஞ்சியாவில் ஏற் பட்ட ஆரம்ப உடைவைத் தொடர்ந்து 2 பிளவுகள் தோன்றின. அவற்றில் ஒன்று அமெரிக்காவுக்கும் ஆபிரிக்காவுமிடையிலும், மற்றொன்று தலைகீழான Y வடிவில் ஆபிரிக்கா, அவுஸ் திரேலியா, அந்தாட்டிக்கா என்பவற்றுக்கு இடையிலும் உருவாகின. முன்னைய பிளவைத் தொடர்ந்து கிழக்கு ஐக்கிய அமெரிக்காவில் எரிமலைக் குழம்புப் பெருக்கு ஏற்பட்டது.
இதன் பின்னர் கொண்டுவானா லாந்து உடைந்தது. அத னைத் தொடர்ந்து இந்தியக்குடாநாடு வடக்கு நோக்கி நகர முற்பட்ட போது, தென்கண்டங்களனைத்தும் அதிலிருந்து பிரிந் தன. இது 135 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது. இதன் மேல், தென்னமெரிக்கா ஆபிரிக்காவை விட்டுப்பிரிந்தது. அவ்வேளை இந்தியக்குடாநாடு மேலும் வடக்கு நோக்கி நகர்த்

Page 58
4. புவிவெளியுருவவியல்
திருந்தது. அதேசமயம் வட அமெரிக்கா மேற்கு நோக்கி நகர்ந்தமையால் தென் அத்திலாந்திக்கும், தென்னம்ெரிக்கா மேற்கு நோக்கி நகர்ந்தமையால் தென் அத்திலாந்திக்கும் விரி வடைந்தது. இதனைத்தொடர்ந்து இந்திய குடாநாடு ஒரு வெப்ப மையத்தின் மேலாகச் சென்ற போது எரிமலைக்குழம்புப் பெருக்கு ஏற்பட்டு டெக்கான் மேட்டுநிலம் உருவாகியது. பின்னர் (45 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்) அது யூறேசியாவுடன் மோதியதனால் இமயமலைகள் உருவாகின.
கிரீன்லாந்து வடஅமெரிக்காவிலிருந்து பிரிந்ததும் கலிபோ னியாக்குடா உருவாகியதும் கடந்த 10 மில்லியன் ஆண்டுகளில் ஏற்பட்ட நிகழ்வுகளாம் பாஞ்சியாவின் உடைவுக்குப் பின்னர் அசைவற்றிருக்கும் ஒரேயொரு கண்டம் அந்தாட்டிக்காவாகும்.
6.4 கண்டநகர்விற்குச் சாதகமான சான்றுகள்:-
(1) கரைக்கோட்டுப்பொருத்து - பாஞ்சியா என்ற பெருங் கண்டத்தினின்று பிரிந்து சென்ற அமெரிக்க கண்டங்களின் கிழக்குக் கரைகள்-(கரைக்கோடுகள்) வட ஐரோப்பாவினதும், ஆபிரிக்காவினதும் மேற்குக்கரைகளுடன் பொருந்துவதை வெகி னர் சுட்டிக்காட்டினார் அண்மையில் சேர் புல்லாட், சிமித்
இ' "ஸ்டி
படம்: 23. கரைக்கோட்டுப் பொருத்து புள்ளியிடப்பட்ட வை,
பழைய பரிசை நிலங்களாகும்,
 
 

கண்ட நகர்வு 05
ஆகியோர் கணனிமூலம் மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் 1000 மீற்றர் ஆழத்தில் முன்குறிப்பிட்ட கண்டங்களின் கரைக்கோடு கள் நன்கு பொருந்துவதைச் சுட்டிக்காட்டியுள்ளார். (படம் 23)
(i) பண்டைய காலநிலைச்சான்றுகள்: (1) கொண்டுவானா லாந்து எனும் தென் கண்டத்தின் பகுதிகள் கேம்பிறியனுக்கு முற்பட்ட காலத்தில் (600-800 மில்லியனுக்கு முன்), கண்டிப் பனிக்கட்டியாறுகளினால் மூடப்பட்டிருந்ததற்கு அங்குக ஒப் படும் பணிக்கட்டியாற்றுப்படிவுகள் சான்றாயிருக்கின்றன. அப் படிவுகள் ஒரேகாலத்தவையாகவும் ஒரே படைநிலையிலும் காணப்படுகின்றன.உதாரணமாக தென்ஆபிரிக்காவில்(நமீபியீர், கட்டாங்கா) பகுதிகளிலும் தென்னமெரிக்காவில் பிறேசில் (லாறேஸ்) பகுதியிலும் காணப்படும் படிவுகள் ஒரே காலத்தவை என அறியப்பட்டிருக்கிறது. மேலும் இயோப்போ (Tapo) தில் லைற்படிவுகள் தென்னமெரிக்காவில் பிறேசிலின் தென்மேல் பகு தியிலும், தென்னாபிரிக்காவின் மேசைமலைப்பகுதியிலும் ஒரே படைநிலையில் உள்ளன. இவற்றிலிருந்து முன்குறித்த கண்டங் கள் கேம்பிரியன் காலத்திற்கு முன்னர் ஒன்றாயிணைந்து ஒரே காலநிலையைக் கொண்டிருந்தன என்பது தெளிவு. மேலும் தஸ் மேனியாத்தீவில் கீழ் பேர்மியன் காலத்திற்குரிய தில்லைற்படி வுகள் காணப்படும் தன்மை அங்கு பனிக்கட்டியாறு:தென்மேற்கி லிருந்து நகர்ந்ததைக் காட்டுகிறது. ஆனால் அபீபீகுதியில் இப் போது கடல் காணப்படுவதனால் முன்னொரு காலத்தில் அங்கு அந்தாட்டிக்கா’ அமைந்திருந்தது என ஊகிக்கலாம். கீண்ேட்:ங் கள் முன்னர் வேறுகாலநிலைவலயங்களிற் காணப்பட்டன்ரிேன்ப தற்குப் பின்வரும் சான்றுகளையும் வெகினர் குறிப்பி&இஃrர்.
: ம்ே: (i) வெப்பவலயத்திற்குரியதான உப்புப்படிவுகள், கனடா வின் ஆட்டிக்பகுதியிலுள்ள எலிசபெத்தீவுகளிலும் (உ.ம்: இசா G)argir (51ðlp; (Isachsen Dome) முருகைக்கற்பார்கள் விட கிரீன்லாந்திலும் காணப்படுதல், இச்சான்றுகள் வட அமெரிக்கா அயன வலயத்திலிருந்து ஏறத்தாழ 40 அகலக்கோட்டுத் தூரம் வடக்கே நகர்ந்ததைக் குறிக்கிறது.
(i) கீழைக் காற்று வலயத்தில் உருவாகிய அடையாளங் களைக் காட்டும் மணற்குன்றுகள் தென்மேற்கு ஸ்கொத்லாந்தில் காணப்படுதல்.
(i) செம்பூரான் மண், வட சீனாவிலும் (சாந்துங் குடா நாடு) ஐக்கிய அமெரிக்காவிலும் (கென் ரக்கி) காணப்படுதல்

Page 59
புவிவெளியுருவவியல்
(i) புவிச்சரிதவியற் சான்றுகள்:-
(1) பலேயோசோயிக் காலத்தில் வட அமெரிக்காவில் உருவாகிய ஹேர்சினிய மலைத்தொடர்கள் ஸ்கொத்லாந்தில் உருவாகிய கலிடோனிய மலைத்தொடர்கள் என்பவற்றின் போக்கிலும், அமைப்பிலும் கணிசமான ஒற்றுமை நிலவுகிறது.
(2) மேற்காபிரிக்காவிலும் வட பிறேசில் உயர்நிலத்திலும் காணப்படும் அடித்தளப்பாறைகள் ஒரே வயதையும், ஒத்த இயல்பையும் காட்டுகின்றன.
(3) தென்னாபிரிக்காவிலும், தென் ன மெ ரி க் காவிலும் காணப்படும் நிலக்கரிக்காலப் படையமைப்பு யூறாசிக்காலம் வரை ஒரே மாதிரி உள்ளது.
(4) யூறாசிக்காலத்தில் ஏற்பட்ட எரிமலைக்குழம்புப் (பெருக்கு) படிவுகள் தென்னாபிரிக்காவிலும் தென்னமெரிக்கா வில் பரானா வடிநிலத்திலும் பரவலாகக் காணப்படுகின்றன. அவுஸ்திரேலியா யூறாசிக்காலத்திற்கு முன்னர் பிரிந்துபோன படியால் அங்கு அப்படிவுகள் காணப்படவில்லை.
(iv) பாறைப்படையியற் சான்றுகள் - தென்கண்டங்களிற் காணப்படும் பாறைப்படையொழுங்கு ஒரே மாதிரி அமைந் துள்ளது. உதாரணமாக, அங்கு காணப்படும் பணிக்கட்டியாற் றுப்படிவுகளை நிலக்கரிப்படிவுகளைக்கொண்ட களிக்கல்லும், மணற்கல்லும் மூடியுள்ளன. அவற்றுள்ளே பண்டைய உயிரி வங்கள் சிலவற்றின் உயிர்ச்சுவடுகள் உறைந்துள்ளன. அதே சமயம் களிக்கல் மணற்கல் படிவுகளுக்குமேல் எரிமலைப் பாறைகள் காணப்படுகின்றன. இதிலிருந்து அவை ஒரே காலத் தில் ஒரே காரணங்களால் உருவாகியிருப்பதை உணரலாம்
(v) கணிப் பொருளியற் சான்றுகள்:- (i) தென்கண்டங் களிடையே கணிப்பொருட் பரம்பலில் குறிப்பிடத்தக்க ஒருமைப் பாடு காணப்படுகிறது இவ்வாறு இந்தி பர்வில் உமேரி என்னு மிடத்தில் காணப்படும் மெல்லிய கண்ணக்கல் படிவுகளுக்கு ஒப்பான படிவுகள் மேற்கு அவுஸ்ரேலியாவில் உள்ளன. (i) இந்தியாவில் ஒரிசா விலுள்ள சிங்பும் இரும்புத்தாதுப் படிவுகளும் அவுஸ்ரேலியாவிலுள்ள பாம்பி சவுண் இரும்புப் படிவுகளும் சமகாலத்தவையாகக் காணப்படுகின்றன. (2000 2200 மி.ஆண்டு) (i) இந்தியாவில் மைசூரிலுள்ள கோலார்" தங்கவயல்களும் அவுஸ்ரேலியாவின் கால்கூர்லி தங்க வயல் களும் ஒரே அகலக்கோட்டு நிலையத்திலுள்ளன பொதுவாக,

கண்டதகர்வு
இந்திய அவுஸ்ரேலிய கணிப்பொருள் வலயமும் தென்னாபிரிக்க கணிப்பொருள் வலயமும் ஒரு எல்லைக்குட்பட்டிருத்தல் அவை முன்னர் இணைந்திருந்ததை எடுத்துக் காட்டுகின்றது.
(yi) பண்டைய உயிரினப்பரம்பல்:- பண்டைக்கர் லத்தில் வாழ்ந்து அழித்தொழிந்த சில உயிரினங்களின் உயிர்ச்சுவடுகள் அத்திலாந்திக்கின் இருபுறமும் - சிறப்பாகத் தென்கண்டங்களில் காணப்படுதல் அக்கண்டங்கள் முன்னர் இணைந்திருந்ததை வலியுறுத்தும் சான்றுகளாயுள்ளன. அவற்றின் பரம்பலை நிலப்பாலங்கள் மூலமோ, வேறுவழியிலோ விளக்க முடியாது. இவ்வாறு (i) மெசோசோறஸ் (Mesosaurus) என்னும் நீந்தக் கூடிய ஒரு பிராணியினதும் சமனெற்றி" (Manette) எனப்படும் இன்னொரு பிராணியினதும் உயிர்ச்சுவடுகள் தென் ஆபிரிக்கா விலும் தென்னமெரிக்காவிலும் மட்டும் காணப்படுகின்றன. (i) லிஸ்ரெஹோ சோறஸ் (Listersaurus) எனப்படும் பிராணி ” t;$) რეზე“ உயிர்ச்சுவடுகள் முதலில் இந்தியாவிலும் தென்ஆபிரிக்கா விலும் பின்னர் (1969 ல்) அந்தாட்டிக்காவிலும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன (ii) குளோசொறஸ் என்னும் தாவரத்தின் சுவடுகள் தென்னாபிரிக்கா, இந்தியா, அந்தாட்டிக்கா என்னும் மூன்று இடங்களிலும் கண்டப்பணிக்கட்டியாற்றுப்படிவுகளுக்கு மேல் காணப்படுகின்றன. இக்கண்டுபிடிப்பு இப்போது இந்து சமுத்திரமாயுள்ள பகுதியில் இந்நிலப்பகுதிகள் முன்னர் இணைத் திருந்ததையும், பனிக்கட்டியாறாதலுக்குட்பட்டதையும் உறுதிப் படுத்துகிறது (V) ஒலினெலஸ் (Ottenellus) எனப்படும் ஒரு பிராணியின் உயிர்ச்சுவடுகள் வடக்கே நியுபவுண்லாந்திலும் ஸ்கொத்திலாந்திலும் காணப்படுகின்றன.
(Wi) சமுத்திர அடித்தள ஆய்வுகள் வெளிப்படுத்தும் சான்றுகள்:
1950-60 காலத்தில் சமுத்திர வடிநிலங்களில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வுகள் () சகலசமுத்திரங்களும் 200 மில் லியன் ஆண்டுகளுக்குக் குறைவான வயதுடையனவாயிருப்பதை யும் (ii) கடலடித்தரை பரவியதன் மூலம் அவை உருவாகி யிருத்தலையும் சமுத்திர அடையல்களின் பரம்பல், தடிப்பு, வயது மற்றும் காந்தமுரண்பாட்டுத்துண்டுகள் மூலம் சந்தேகத் திற்கிடமின்றி நிரூபித்துள்ளன. எனவே கடலடித்தளம் பரவுதல் கண்டநகர்வைத் தூண்டும் செயல்முறையாயிருப்பதையும், இரண்டினதும் செயற்பாட்டுக் காலஅட்டவணையின்படி அவை 200 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னரே ஏற்பட்டன af öðrt í தையும் நோக்கும்போது கண்ட நகர்வை இன்னும் ஒரு கருது கோளாக கொள்ளமுடியாது 鷺 V

Page 60
O8. புவிவெளியுருவவியல்
(wi) குறைகளும் மாறுகுறைகளும் :- உலகில் ஆங்காங்கு, நீண்ட பெரிய கிடைச்சறுக்கற்குறைகள் காணப்படுவதும் அவை பன்னூறு கி.மீ தூரம் நீண்டிருப்பதும் கண்டநகர்வு ஏற்பட்ட முறையை ஊகிக்கவும் விளக்கவும் உதவுகின்றன. உதாரண மாக, பசிபிக்கிலுள்ள பயணியர், மென்டோசீனா (1600 கி.மீ) முறே, கிளிப்பேட்டன் முதலியன பழைய குறைகள் சமுத்திர அடித்தளத்திற் பக்க அசைவுகளையும் காட்டுகின்றன. அன்றி யும் நடுச் சமுத்திரப்பாறைத்தொடர்களிடையே அமைந்துள்ள மாறுகுறைகளும் பக்க அசைவுகளுக்குச் சான்று பகர்கின்றன.
(ix) புவிநடுக்கங்களின் பரம்பலும் அவை ஏற்படும் திசை களும் கண்டநகர்வு ஏற்பட்ட மாதிரிகை (Model) மூலம் விளக்கப்படக்கூடியது.
(x) பண்டைய காந்தநிலைச் சான்றுகள் - கண்டங்களிலுள்ள பாறைகளிற் காணப்படும் காந்தமயமாகிய கணிப்பொருட்கள் வெவ்வேறு புவிச்சரித காலங்களில் கண்டங்களின் முனைவுசார் நிலையங்களைக் காட்டுகின்றன. அத்தகைய ஆய்வுகள் (1) அவுஸ் திரேலியா தெவோனியன் காலத்தில் மத்திய கோட்டுக்கு அண்மையிலும் பேர்மோநிலக்கரிக்காலத்தில் தென்முனைவுப் பகுதியிலும் காணப்பட்டதை உறுதிப்படுத்துகின்றன. (2) நேண் (Narn) என்பவரின் ஆய்வுகளின் படி ஆபிரிக்காநிலக் கரிக்காலப் பிற்பகுதியிலிருந்து திறயாசிக் காலம்வரை தென்முனைவு அயல் நிலையத்திலிருந்து மத்தியகோட்டயல் நிலையத்திற்கு மாறிய தென்றும் அதன் நகர்வு 90° அளவான இடப்பெயர்ச்சியைக் காட்டுவதாகவும் தெரியவருகிறது (3) தக்கிண (டெக்கான்) மேட்டுநில எரிமலைக்குழம்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் இந்தியக்குடாநாடு சோக்குக்காலப்பிற்பகுதியிலிருந்து இயோசின் காலப்பிற்பகுதி வரை 37° தெற்கிலிருந்து 13 தெற்குவரை (24° தூரம்) வடக்கு நோக்கி நகர்ந்ததை உறுதிப்படுத்து கின்றன.
பண்டைய காந்தநிலை பற்றி வெவ்வேறு கண்டங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் வேறுபட்ட முனைவு நில்ை யங் களைக் காட்டியதனால், முனைவுகள் இடம்பெயர்ந்தன என முன்னர் கூறப்பட்டது. ஆனால் உண்மையில் கண்டங்களின் முனைவுசார் நிலையங்கள் மாறினவேயன்றி முனைவுகளின் நிலை யங்கள் மாறவில்லையென்பது இப்போது ஏற்றுக்கொள்ளப்பட் டிருக்கிறது. ஆகவே ஒரு ஆய்வாளர் குறிப்பிட்டது போல் எல்லாக்கண்டங்களையும் அவற்றுக்குரிய நிலையங்களில் பொருத்

கண்டநகர்வு 09
திப் பார்க்கும்பேர்து பலேயோசோயிக்காலத்தில் கண்டங்கள் ஒரே முனைவையே காட்டுகின்றன. எனவே அக்காலத்தில் பாஞ்சியாப் பெருங்கண்டம் காணப்பட்டதென்பது மறுக்க முடியாத உண்மையாகும்." . . . .
இறுதியாக, மனிதனின் வாழ்க்கை முறையில் சூழலுக்கு இசைவாக ஏற்பட்ட அபிவிருத்திகள் வேகமாக ஏற்பட்டதற்குக் கண்டங்கள் பிரிந்தமையும் அதன் பக்க விளைவுகளும் (உ. ம் கால நிலைமாற்றம் காரணமாயுள்ளமை கவனிக்கத்தக்கது.
இவ்வாறு கண்டநகர்வு ஏற்பட்டதற்குப் போதிய பலமான சான்றுகள் இருந்த போதிலும், அதை ஏற்க (நம்ப) மறுப்ப வர்களும் உளர். ஆயின் அவர்கள் அவர்கள் சிறுபான்மை யினரே வெகினர் கண்டநகர்வை ஏற்படுத்திய விசை, அது ஏற்பட்ட முறைபற்றித் தெரிந்த கருத்துக்கள் முன்னர் பலத்த கண்டனத்துக்குள்ளாயிருந்தன. இப்பொழுது தகட்டசைவுக் கோட்பாடு பெரும்பாலான அறிவியலாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதனால் பழைய எதிர்ப்புகள் வலுவிழந்து விட்டன. ஆயினும் கண்டநகர்வுக்கு எதிராகச் சில கண்டனங் கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவையாவன
(1) சில கண்டங்களில் கண்டறியப்பட்ட է 1687եքա (Մ606ծr64 நிலையங்கள் ஒன்றுக்கொன்று முரணானவையாக (30 – 40) வரை வேறுபட்டுக் காணப்படுவதனால், முனைவுகளேயன்றிக் கண்டங்கள் நகரவில்லை.
(2) Lanao a காந்தநிலை பற்றிய தரவுகள் காந்த முனைவின் திசையையும் தூரத்தையும், கண்டத்தின் சுழற்சி 60) Ամ Ավ ւն காட்டலாம் ஆனால் அதன் உண்மையான அகல் நெடுங்கோட்டு நிலையத்தை அவை காட்டமாட்டா ஏனெனில் ஒரு அகலக்கோட்டில் எந்தவொரு நெடுங்கோட்டு நிலையத் திலும் காந்தமுனைவு ஒரே திசையையே காட்டும்.
(3) பண்டைய காந்தநிலை பற்றிய ஆய்வுகளின் முடிவுகள் முற்றிலும் சரியானவை எனக்கூறமுடியாது. ஏனெனில் ଜିଭ) பாறைகள் இரண்டாவது முறையும் காந்தமயமாக்கப்பட்டிருக் கலாம். அவ்வாறிருப்பின் அதில் பழையது எது எனக் கண்ட றிதல் கடினமானது.
(4) சமுத்திர அடித்தளத்திற் காணப்பட்ட சில காந்த முரண்பாடுகள் பிழையானவையர்கவிருக்கலாம். ஏனெனில்

Page 61
O புவிவெளியுருவவியல்
அடித்தள அடையல்கள் சில இடங்களில் வெதும்பிக் காணப் படுவதனால் அவற்றின் வயது கீழுள்ள பாறையை விட அதி கமாயிருக்கலாம். அன்றியும் அடையல் உள்ளிடு பற்றிய ஆய்வு களின்போது கிடைத்தீப்பாறைகளை அடித்தளப்பாறையெனக் கருதித் தவறான முடிவுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம்.
Lu (Tiế9àu CT súa fib(5 upplögu 5 asử6 (Pre Drift - Drift)
கண்டநகர்வுக்கு முன்பிருந்த பாஞ்சியா உடைந்த அதே முறையில் அதற்கு முன்னிருந்த தகடுகள் மோதியதனால் உடைந்த துண்டுகள் (கண்டங்கள்) ஒன்றாகியே பாஞ்சியா உருவாகியது. அது 500 - 250 மில்லியன் ஆண்டு கால இடை வெளியில் ஏற்பட்டது. இவ்வாறு வடஅமெரிக்கா வடஐரோப்பா, சைபீரியா ஆகியன இணைந்து லோறேசியாவாகின. இவற்றில் வடஐரோப்பாவும் வடஅமெரிக்காவும் ஒருங்கியதனால் அத்தி லாந்திக் மூடப்பட்டதோடு வடஅப்பலாச்சியன் மலைகளும் உருவாகின. அதே சமயம் சைபீரியா மணிக்கூட்டுத்திசையில் நகர்ந்து ஐரோப்பாவுடன் ஒருங்கியதனால் யூறல் மலைகள் உருவாகின. 'லோறேசியா நிலத்திணிவு உருவாகி 50 மில்லியன் ஆண்டுகளில் அது கொண்டுவானாலாந்துடன் இணைந்து பாஞ்சியா ஆகியது. இக்காலத்தில் (300-250 மில்) ஆபிரிக்கா வடஅமெரிக்காவுடன் மோதியதனால் தென் அப்பலாச்சியன் மலைகள் தோன்றின. இவ்வாறு கடந்த கண்டநகர்வுக்கு முன் னரும் பிறிதொரு நகர்வு இடம்பெற்றதற்குப் பின்வருவன மேலதிக சான்றுகளாகும்.
(1) தென்முனைவுப் பணிக்கட்டிக் கவிப்பு சகாராவை மூடியிருந்தமை.
(2) வடஅமெரிக்காவின் கிழக்குக் கரை மத்திய கோட்டிற்கு அருகில் காணப்பட்டமை.
6. பெருங்கண்டவட்டங்களும் நகர்வுகளும்:- பாஞ்சியா வைப்போன்ற பெருங்கண்டங்கள் புவிச்சரிதகாலத்தில் பன்முறை உருவாகிப் பிளந்தமையினால் கண்டநகர்வுகளும் பல முறை இடம் பெற்றிருக்கவேண்டும். இந்நிகழ்வுகள் ஒன்றன்பின் ஒன்றாக, வட்ட முறையில் இடம் பெற்றமையால் இவற்றைப் பெருங்கண்ட வட்டங்கள் (Super Continent Cycles) எனக்குறிப் பிடுகின்றனர். இத்தகைய வட்டங்களுடன் தொடர்புள்ள செயல் முறைகள் புவியின் கண்டநிலப்பரப்பின் படிமுறைவளர்ச்சியில்

கண்டநகர்வு
முக்கியமான பங்கு வகித்திருப்பதாக நம்பப்படுகிறது. அண்மைக் கால ஆய்வுகளின்படி பெருங்கண்டங்களெல்லர்ம், தமக்கு முன்னர் உருவாகியிருந்த நிலத் திணிவுகளின் மோதுகையினால் முறையே 2600 மில், 2100 மில், 1800-1600 மில், 650 மில் , 250 மில். என்னும் கால எல்லைகளில் உருவாகின என்றும் அவை ஏறத்தாழ 500 மில் ஆண்டுகள் நிலைத்திருந்த பின்னர் பிளவுற் றுப்பிரிந்தனவெனவும் நம்பப்படுகிறது. இத்தொடரில், கடை சியாக 250 மில். ஆண்டுகளுக்கு முன்னர் பாஞ்சியா என்ற பெருங்கண்டம் உருவாகியது. அது பிளவுற்றுப்பிரிந்தமையால் (நகர்ந்தமையால்) இன்றையகண்டங்கள் தோன்றின.
பெருங்கண்டங்கள் பிளந்து பிரிவதற்கு மூன்று காரணங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. முதலாவதாக கண்டநிலத்திணி வுகள் வெப்பத்தை அரிதிற் கடத்திகளாதலினால், புவியின் உட்பகுதியிலிருந்து மேற்காவுகை மூலம் மேலெழும் வெப்பம் அவற்றின் கீழ் திரளும். அதன் விளைவாக நிலம் குமிழ் போல மேலுயர்த்தப்படும். அதே சமயம் அக்குமிழ்களின் கீழ் பல இடை யோட்டுத்தாரைசள் நேர் கோட்டுத்திசையில் மேலெழுவதன் விளைவாக வெப்பம் மேலும் அதிகரிக்கும் போது அக்குமிழில் பல பிளவுகள் தேர்ன்றும். பின்னர் அப்பிளவுகளை மையமர்கக் கொண்டு பாறைக்குழம்பு வெளியேறிக் கடலடித்தரை பரவும் போது கண்டங்கள் நகரும் இரண்டாவதாக புவிச்சுழற்சியும் பெருங்கண்டங்கள் பிளப்பதற்குக் இன்னொரு காரணமாகலா மெனச் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர் அஃதாவது பெருங் கண்டங்கள் உயரமான, பாரிய நிலத்திணிவுகளாயிருப்பதனால் அதிக கோணத்திணிவு வேகத்தைக் கொண்டிருக்கும். என்வே அதன் தாக்கத்தினால் அக்கண்டத்தினுள்ளே தகைப்பு அதிகரிக் கும்போது அது பிளக்கலாம். மூன்றாவதாக பாஞ்சியாப் பெருங் கண்டத்தைப் பொறுத்தவரை அதன் வெளியோரங்களில் உரு வாகிய பல கீழடங்கு வலயங்களில் இழு விசை காரணமாக ஏற்பட்ட தசைப்புகள் அது பிளவுறுதற்குக் காரணமாயிருக் கலாமெனக் கருதப்படுகிறது.
:InGü
* Scientific American July 88

Page 62
அத்தியாயம் 7
arrin danglassi
புவியோட்டிற்கூடாகப் பாறைக்குழம்பு, தணல், தூசி, வாயுக்கள் முதலியன வெளியேறும் வாயே எரிமலையாகும். ஆனால் பேச்சு வழக்கில் எரிமலைக்குழம்பினால் உருவாக்கப் பட்ட கூம்புவடிவான குன்றுகளையே எரிமலைகள் எனக்குறிப் பிடுகின்றனர்.
பாறைக்குழம்பு, புவியோட்டின் கீழிருந்து இரு முறைகளில் வெளியேறுகிறது. அவை (1) மத்திய கக்குகை (2) பிளவுக் கக்குகை என்பனவாகும் மத்தியவகை என்பது கூம்பைப் போன்ற உருவத்தையும் வெளிப்படையான வாயையும் கொண்ட எரிமலைகளைக் குறிக்கும். அவற்றில் குழாயைப் போன்ற அமைப்புடைய ஒரு வாய் அல்லது தொடாபுள்ள பல வாய் களிலிருந்து பாறைக்குழம்பு வெளியேறுவதனால்தான் அதற்கு மத்திய கக்குகை என்ற பெயர் வழங்கப்படுகிறது. புவியோட்டில் ஏற்படும் பல கி.மீ நீளமான பிளவுகளுக்கூடாகப் பாறைக் குழம்பு வெளியேறுவதைப் பிளவுக்கக்குகை என்பர்.
72 மத்திய கக்குகையின் வகைகள்:-
எரிமலைக்குழம்பும் அதனோடு தொடர்புள்ள பிற பொருட் களும் வெளியேறும் முறை, அவற்றின் தன்மை என்பவற்றின் அடிப்படையில் மத்திய கக்குகையைப் பலவாறு வகைப்படுத் தலாம். அவற்றில் ஹவாய் வகை, ஸ்ரோம்போலி வகை, வல்கானியன் வகை, வெகுவியஸ் வின்சன்ற் வகை என்பன குறிப்பிடத்தக்கவை. ஹவாய் வகை யில் பாயும் தன்மையுள்ள எரிமலைக்குழம்பும், வாயுக்களும் அமைதியாக வெளியேறும். ஸ்ரோம்போலி (இது சிசிலிக்கு வடக்கிலுள்ளது) வகையில் பாறைக்குழம்பு மிதமான வெடி யதிர்வுடன் வெளியேறும்; உக்கிரமான கக்குகைகளின் போது வெடியதிர்வைத் தொடர்ந்து பிரகாசமான முகில்கள் உரு வாகுவதுண்டு. வல்கானியன் வகையில் பாறைக்குழம்பு இளகி யதாகவும் கக்குகைக் கிடையில் உலரும் தன்மையுடனும் காணப் படும். இவ்வாறு உலரும் பாறைக்குழம்பின் கீழ் திரளுகின்ற
 

எரிமலைகள்
வாயுக்கள் வெடியதிர்வுடன் வெளியேறும்போது மேலெழும் கருமுகில்கள் காலிப்பூ வைப் போன்று காட்சியளிக்கும். (பீலியன்/ வெகுவியஸ்) வகையில் எரிமலைக்குழம்பும், வாயுக் களும் நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் சடுதியாகவும், வேகமாகவும் வெளியேறும். கி.மு 79 ல் வெகுவியஸ் இவ்வாறு கக்கியதை பிளினி என்பவர் நேரிற்கண்டார். பீலியன் வகை யில் அதிக பாகுத்தன்மையுள்ள எரிமலைக்குழம்பு தாமதமாக நிகழும் வெடியதிர்வுடன் வெளியேறும் இவ்வகைக்கக்குகையின் போது வழிந்தோடும் பாறைக்குழம்பு (Nuee Ardenne) ஒளிரி எனப்படும். வின்சன்ட் வகையில் எரிமலைக்குழம்பு நிலைக் குத்தாக வெளியேறும் அதைத்தொடர்ந்து ஒளிரும் பாறைக் குழம்பு நாற்புறமும் வழிந்தோடும்.
7.3 எரிமலை உயிர்ப்பின்போது வெளியேறும் பொருட்கள்
எரிமலைகள் கக்கும்போது, திண்மையான பொருட்கள், திரவப்பொருட்கள் ஆகியன வேறுபட்ட அளவிலும் முறையிலும் வெளிவருகின்றன.
(i) வாயுப்பொருட்கள்:-
எரிமலையுயிர்ப்பின் போது பலவகையான வாயுக்கள் வெளி யேறும் அவற்றில், காபனீரொட்சைட், நைதரசன், சல்பர் ஈரொக்சைட், ஐதரசன், காபன்மொனோக்சைட், கந்தகம், குளோறின் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவற்றைத் தவிர எரிமலையிலிருந்து பலவகையான கூட்டுக்களும், அமிலங்களும் வெளியேறுவதுண்டு மேற்குறிப்பிட்ட பலவகையான வாயுக் களும் இரசாயனமுறையில் தம்முட்செயல்படுவதன் மூலம் எரி மலைக்குழம்பை வெப்பநிலையில் வைத்திருப்பதாக நம்பப் படுகிறது. வாயுக்கள் கரைசலாகக் காணப்படும்போது எரிமலைக் குழம்பின் அடர்த்தி குறையும். அன்றியும் வாயுக்குமிழிகள் பிரிக்கப்படுவதனாலும் அடர்த்தி மேலும் குறையலாம். இதன் விளைவாக எரிமலைக்குழம்பு வேகமாகப்பரயவும் அதிக உயரத் திற்கு எழவும் முடிகிறது. வாயுக்கள் வெளியேறிய பின்னர், எரிமலைக்குழம்பு விரைவாகத் திண்மையடைந்துவிடுகிறது.
எரிமலையிலிருந்து வாயுக்களைத் தவிர நீராவியும் பெரு மளவில் வெளியேறுகின்றது. எரிமலையிலிருந்து வெளியேற்றப் படும் வாயுக்களில் நீராவியினளவு 60 முதல் 90%வரை காணப் படலாம், பரிசுட்டின் எரிமலை நாளொன்றுக்கு 1.6 மில்லியன் " நீராவியை வெளியேற்றுகின்றது. நீராவி தரைக்

Page 63
14 புவிவெளியுருவவியல்
கீழ் நீரிலிருந்தோ, எரிமலைப்பெருவாய் ஏரிகளிலிருந்தோ, பாறைக்குழம்பிலிருந்தோ பெறப்பட்டதாயிருக்கலாம். ஆனால் தீவுகளிலும் கடலோரங்களிலுமுள்ள எரிமலைகளிலிருந்து வெளி யேறும் நீராவிக்கு கடல்நீரும் ஒரு காரணமாயிருக்கலாம்.
(i) திரவப்பொட்கள்:-
எரிமலைகளிலிருந்து வெளியேறும் முக்கியமான பாய்பொருள் எரிமலைக்குழம்பாகும். புதிதாகக் கக்கப்பட்ட எரிமலைக் குழம்பானது. அதன் இரசாயனச்சேர்க்கை, வாயுக்கலப்பு என்பவற்றைப்பொறுத்து 600 - 1200°Cவரை வெப்பமுடைய தாயிருக்கலாம், அதை (1) அமிலனரிமலைக்குழம்பு (2) உப்புமூல எரிமலைக்குழம்பு என இரண்டாக வகைப்படுத்தலாம் அமில எரிமலைக்குழம்பு சிலிக்காவை அதிகமாகக் கொண்டதாதலின் அதிக வெப்பநிலையில் உருகும். ஆனால் அதன் பாகுத்தன்மை காரணமாக அது அதிக தூரம் ஒடிச்செல்லாது றியோலைற் இவ்வகையானது. உப்புமூல எரிமலைக்குழம்பு சிலிக்காவைக் குறைந்த அளவில்கொண்டது. இதனால் அது அதிகதூரம் பாய்ந்து சென்று பரவும். மேலும் அமில எரிமலைக்குழம்பு வெடியதிர்வுடன் கூடிய கக்குகைகளுடன் வெளியேறும்போது உப்புமூல எரிமலைக்குழம்பு அமைதியாகவே வேளியேறும்,
புதிதாக வெளியேறித்திண்டையடைந்த எரிமலைக்குழம் பின் அமைப்பும் மேற்பரப்பின் தோற்றமும் வேறுபட்டவை அவ்வேறுபாடுகளின் அடிப்படையில் அவற்றை (1)ஆ ஆ (AA) (2) பகோ (Pahoehoe) என (ஹவாய் மொழியில்) பகுத்துக் குறிப்பிடுவர் பகோ வகையான எரிமலைக்குழம்பு திண்மை யடைந்தபின் கயிற்று வளையத்தைப்போலத் தோன்றும் அது கடலடித்தளத்திலோ, நீரின்கீழோ பாயும்போது தலையணைக் குவியல் போலத்திரள்வதனால் தலையணைப்பாறைக்குழம்பு எனவும் அழைக்கப்படுகிறது. ஆஆ. வகையான பாய்ச்சல்கள் குறைந்த வெப்பநிலையில் நிகழ்வதோடு அதிகபாகுத்தன்மை யுடனும் காணப்படும் . இதனால் பாறைக்குழம்பின் மேற்பரப்பு கரடுமுரடாகவும், கற்குவியலைப்போன்றும் காட்சியளிக்கும் அந்திசைற் வகையான எரிமலைக்குழம்பு இத்தன்மையானது.
(i) திண்மையான பொருட்கள்:
翻 எரிமலை வெடியதிர்வுடன் கக்கும்போது வெளியே வீசப்படும் திண்மையான பொருட்கள் தீயுடைபாறைகள் (Pyroclasts) GTIGSTID பொதுப்பெயரால் அழைக்கப்படுகின்றன. இவை (1) எரிமலை

எரிமலைகள் 5
யின் வாய்க்குள்ளும், கழுத்துப்பாகத்திலும் காணப்பட்ட நாட்டுப்பாறைத் துண்டுகள், பழைய எரிமலைக் குழம்புத்துண்டு கள் ஆகியவற்றையும் (2) திரவநிலையில் வெளியே வீசப்பட்டுக் கீழே விழுமுன்னர் திண்மையடைந்த பொருட்களையும் உள்ள டக்கும், இப்பொருட்கள் எரிமலை வாய்க்கு அருகில் அதிக மாகவும், அதற்கு அப்பால் படிப்படியாகக் குறைந்தும் காணப் படும் , தீயுடைபாறைகளில் பிரதானமானவை பின்வருமாறு.
(I) பெரியதுண்டங்கள்:- இவை பல்லாயிரம் கில்லோ வரை பாரம்ான பெரிய பாறைத்துண்டங்களாகும்.
(2) எரிமலைக்குண்டு (volcanic Bombs): இவை 64 மி.மீக்கு மேற்பட்ட விட்டமுள்ள பாறைக்குழம்புத் துண்டுகளாகும். (3) இலாப்பிலி - இவை ஒரளவு உருண்டையான சிறிய துண்டு களாகும். (4) துளையுடை எரிமலைக்குழம்பு (Scotia) :- இவை வாயுக் குமிழிகளை அதிகமாகக் கொண்ட பாறைக்குழம்புத் துண்டு களாகும்
5) நுரைக்கல் (Pumice)- இவை நுண்டுளையுள்ள மென்னிற மான பாறைக்குழம்புத்துண்டுகளாகும் இவை வாயுக்களை அதிகமாகக் கொண்ட ஹியோலைற் அல்லது டசைற் வகை யான பாறைக்குழம்பிலிருந்து உருவாகிய அடர்த்தி மிகக் குறைத்த துண்டுகளாகும். இவை நீரில் மிதக்கக்கூடியவை. இவற்றைத்தவிர சாம்பல், தூசி ஆகியனவும் எரிமலையிலிருந்து வெளியேறும். இவ்வாறு வெளியேறும் பலவகையான சிறிய தீயுடை பாறைகள் கலந்து இறுகுவதனால் தபு பாறையும் (@) ifihli தீயுடைபாறைகளின் கலப்பினால் பரற்பாறையும் உரு வாகும். தபு தகடுகளை இக்னிம்பிறைற் (12nimbrite) எனக் குறிப்பிடுவர். அதேசமயம் எரிமலை கக்கும்போது வெளியே வீசப்படும் வசைப்படுத்தப்பட்ட பலவகையான துண்டங்கள் * Glasion " (Tephra) எனப்படும்.
7.4 மத்திய கக்குகையுடன் தொடர்புள்ள நிலவுருவங்கள்.
மத்திய கக்குகையின் விளைவாகப் பல எரிமலையுருவங்கள் தோன்றியுள்ளன அவற்றில் (1) பரிசை எரிமலை (ii) எரிமலைக் குழம்புக்குமிழ் (ii) சாம்பல்-தணற்குழம்பு (iv) கூட்டுஎரிமலைக் கூம்பு (v) எரிமலைப் பெருவாய் (wi) எரிமலைக்கழுத்து | Tait Ian முக்கியமானவை.

Page 64
6 புவிவெளியுருவவியல் (i) பரிசை எரிமலைகள் (Shield Volcanoes).
இவை 199 سے 9 ہے வரையுள்ள மென்சாய்வுகளைக் கொண் டவை. உப்பு மூலப்பாறைக்குழம்பு அதிவேகமாக வெளியேறி அதிக தூரம் பரவுவதனால் இவை உருவாகின்றன. ஹவாய்த் தீவிலுள்ள மோன லோவா, பரிசை எரிமலைக்கு ஒரு சிறந்த உதாரணமாகும். அது கடலடித்தளத்திலிருந்து ஏறத்தாழ 10 கி. மீ உயரமும் அடிப்பாகத்தில் 100 கி.மீ. விட்டமுமுடை யது. அன்றியும் அதன் பிரதான வாய் 2 கி. மீ. விட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் அது உலகிலுள்ள மிகப்பெரிய எரி மலையாக விளங்குகிறது. அதேசமயம் ஹவாயிலுள்ள இன் னொரு எரிமலையான மோனா கிலோவா உலகின் உயிர்ப்பு மிக்க எரிமலையாயுள்ளது. |
(1) எரிமலைக் குழம்புக்குமிழ் (Basalt Domes:-
எரிமலைகள் மெதுவாகக் கக்கும்போது வெடியதிர்வு ஏற் படுவதில்லை; திண்மையான பொருட்கள் வெளியே வீசப்படு வதுமில்லை. அந்நிலையில் றியோலைற் அல்லது டசைற் வகையான அமிலத்தன்மையுள்ள எரிமலைக் குழம்பு அமைதி யாகப் பாய்வதனால் (அது ஒரு சில கி. மீ. பாயும்) குமிழ்கள் உருவாகின்றன. இவை குத்தான குவிந்த சாய்வு களைக்கொண்டவை. அலாஸ்காவிலுள்ள நோவாறுப்ராவும், பிரான்சில் ஒவேனிலுள்ள சில எரிமலைக் குன்றுகளும் குமிழ் ολIL4-6MIT60Tου) 6)) .
(ii) கூம்புகள் -
எரிமலை வாயிலிருந்து திண்மையான பொருட்கள் | (}} გაიყგჯo} யேறிக் குவிவதனால் தணற்கூம்புகள் உருவாகும். இவை மேல் நோக்கிக் கக்கும்போது வெளியே வீ ச ப் படும் பொருட்கள் வாய்க்கு அருகில் வீழ்ந்து குவியும். இதனால் தனற்கூம்புகளின் வாய்கள் ஒடுக்கமாகவும் சாய்வுகள் குழிந்தும் காணப்படும். மெக்சிக்கோவிலுள்ள பரிசுற்றின் எரிமலை இவ்வகையானது அது 1943 ல் கக்கியபோது ஒராண்டிற்குள் 500 மீ. உயரமான ஒரு கூம்பு உருவாகியது, அதுபோலவே நேப்பிள்ஸ் ந க ரு க் கு
மேற்கிலுள்ள மொன்ரிநொவா என்னும் எ ரி மலை 1538 ல்
கக்கியபோது அது 3 நாட்களில் 150 மீ உயரம் வளர்ந்தது.
சாம் பற் கூம்புகள் வட்டில் போல் அகன்ற வாயைக் கொண்டவை. அவை வெளிநோக்கி - பக்கத்திசைகளில் கக்கு வதாலும் சாம்பல் திணிவற்றதாகவிருப்பதனாலுமே அவற்றின் வாய் அகன்று காணப்படுகிறது.

எரிமலைகள் 7
(iv) ...G Srihogo sugar, tols it (Composite Cones);
இவையே இயல்பான எரிமலைக்குன்றுகளாம். இவை 40 வரையுள்ள ஒரு சீரான சாய்வுகளுடன் கண்ணுக்கு இதமான, உ ண் மை யர் ன கூம்பு வடிவத்தையும் கொண்டிருக்கும். இவற்றின் வாய்களும் வெளிப்படையாகத் தெரியும் இவ் வகையான கூம்புகள் வேறுபட்ட அளவில் மாறி மாறி ஏற்பட்ட கக்குகையினால் நீண்டகாலத்தில் உருவாக்கப்பட்டவை. இவற் றில் பெரும்பாலும் பாறைக்குழம்பும் தீயுடைபாறைகளும் (Pyroelasts) ஒன்றின் மேல் ஒன்றாகப்படிந்து படைகள் போலக் காணப்படும். இதனால் இவற்றைப் படையுள்ள எரிமலைக் கூம்பு எனவும் குறிப்பிடுவதுண்டு. ஆயினும் இப்படைகள் ஒரு ஒழுங்கில் இருப்பதில்லை. சில கூட்டு எரிமலைக்கூம்புகளின் பக்கச்சாய்வுகளுக்கூடாகப் பாறைக்குழம்பு பீறிட்டுப்பாய்ந்தமை யால் அவற்றில் ஒட்டுணிக்கம்புகளும் உருவாகியுள்ளன. சிசிலியிலுள்ள எட்னா எரிமலையில் இத்தகைய கூம்புகள் ஏராளமாகக் காணப்படுகின்றன. பியூஜியாமா (ஜப்பான்) மேயோன் (பிலிப்பைன்) எக்மொன் (நியூசிலாந்து) எட்னா வெகுவியஸ் (இத்தாலி) முதலியன கூட்டு எரிமலைக்கூம்பு களுக்குச் சிறந்த உதாரணங்களாகும். ”,
Sடிறைந்துழங்க்ஜஃதல்
படம் 24 எரிமலை நிலவுருவங்கள் 1 சாம்பற்கூம்பு 2. எரிமலைக் குழம்புக் குமிழ் 3. எரிமலைப் பெருவாய் 4 பரிசை எரிமலை 5. கூட்டுஎரிமலை

Page 65
8 புவிவெளியுருவவியல்
(y) எரிமலைப் பெருவாய் (Caldera) :-
எரிமலையின் பிரதான வாய் இயல்புக்கு மேலாகப்பெருத்து அகன்ற, ஆழமான ஒரு வாயாக உருவாகுமாயின் அதனைப் பெருவாய் என்பர். இவை சாதாரணமாக 1.6 கி.மீ (1 மைல்) அல்லது அதற்கு மேற்பட்ட விட்டமுடையவை பெருவாய்கள் பல காரணங்களினால் உருவாகலாம். *,、
ஒரு எரிமலை நீண்டகாலம் உறக்கநிலையிலிருந்த பின்னர் அதனுள்ளிருக்கும் பாறைக்குழம்பு அமுக்கத்தினின்று விடுபடும் போது சடுதியாகவும், வெடியதிர்வுடனும் கக்குவது வழக்கம், இத்தகைய கக்குகைகள் மீண்டும் மீண்டும் ஏற்படுவதனால் எரிமலையின் பழைய வாய் பெருக்கலாம். (உ. ம் கிறகற்றோவா) இரண்டாவதாக, ஒரு எரிமலையின் உள்ளிருக்கும் பல சிறிய வாய்கள் உடைந்து ஒன்றுடனொன்று இணைவதனாலும் ஒரு பெருவாய் உருவாகலாம். மூன்றாவதாக, எரிமலையின் உள் ளிருக்கும் பாறைக்குழம்புத் தேக்கத்தைச்சுற்றிக் குறைத்தல் ஏற்படுவதன் விளைவாகப் பாறைக்குழம்பு உள்ளே படிதலினா லும் எரிமலைப்பெருவாய் உரு வாக லாம். ஹவாயிலுள்ள கிலோவா எரிமலையின் (2 கி.மீ விட்டமுள்ள) பெருவாயும் கென்யாவிலுள்ள கிலாலி எரிமலைப்பெருவாயும் இம்முறையில் உருவாகியவையாம். மேலும், சில சமுத்திர எரிமலைகளின் வாய் உறுதியிழந்து ஒருபக்கம் இடி வதனால் குதிரை லாடன் போன்ற பெருவாய்கள் உருவாகலாம். (உ.ம் றியூனியன் தீவு எரிமலை).
எரிமலைப்பெருவாய்களில் நீர் தேங்குமாயின் அவை எரி மலை ஏரிகளாகும். ஐக்கிய அமெரிக்காவில் ஒறிகன் மாகாணத் திலுள்ள மசாமா எரிமலையிற் காணப்படும் கிறேற்றர் ஏரி 8 10 கி.மீ விட்டமுள்ளது. உலகிலுள்ள மிகப்பெரிய எரிமலைப் பெருவாய் ஆர்ஜென்ரீனாவிலுள்ள சீராகோலோன் என்ப தாகும். அது 50 கி.மீ விட்டமுடையது. ஆனால் அதனிலும் பெரிய (80 கி.மீ விட்டமுள்ள) ஒரு பெருவாய், செவ்வாய்க் கோளில் ஒலிம்பஸ் மொன் என்னும் எரிமலையிற் காணப் படுவதை மரீனர் – 9 என்னும் விண்கலம் படம் பிடித்துள்ளது
(6) எரிமலைச் (Volcanic Neck/Plugpia treme: )
எரிமலை வாயிலிருந்து கீழ் நோக்கிச் செல்லும் குத்தான, குழாய் போன்ற பகுதியே இதுவாகும் மத்திய கக்குகை இடம் பெற்ற எரிமலைகள் நீண்டகாலமாக அரித்தலுக்குட்பட்டு
 

எரிமலைகள் 9
அழிவடையும்போது இவை வெளிப்படும். இவை பல மீற்றர் முதல் 1 கி.மீ. வரை விட்டமுடையவை. எரிமலைக்குள்ளிருந்த வாயுக்கள் வெடியதிர்வுடன் வெளியேறியமையால் இவை உருவாகியதாக நம்பப்படுகிறது. இவற்றில் பரற்பாறைகள் நிறைந்து காணப்படும். நியூமெக்சிக்கோவிலுள்ள கப்பற்பாறை (Shiprock) 515 மீ. உயரமான ஒரு பழைய எரிமலைக்கழுத்தா கும். எடின்பேக்கிலுள்ள காசில் பாறை, மொன்றியல் நகரிலுள்ள றோயல் குன்று, வையோமிங் (ஐ.அ) கிலுள்ள பைசா சக் கோபுரம் (Devis Tower) ஆகியன வேறு சில உதாரணங்க ளாகும். தென்னாபிரிக்காவில் “கிம்பர்லி என்னுமிடத்திலுள்ள வைரச் சுரங்கங்கள் கிம்பர்லைற் பாறைகளைக்கொண்ட எரி மலைக்கழுத்துக்களை ஊடறுத்துச்செல்கின்றன. அவற்றை தயற்றிம்(Diatreme) எனக்குறிப்பிடுவர். கிம்பர்லைற் பாறை களின் கீழிருந்த காபன் 150 கி.மீ. ஆழத்திற்குக்கீழ் நிலவும் உயர் வெப்ப அமுக்க நிலைமைகளின் கீழ் வைரப்படிவுகளாகின. அவை புவியசைவினாலும் எரிமலைகள் வெடியதிர்வோடுகக்கி யதன் விளைவாகவும் மேல் நோக்கித் தள்ளப்பட்டன.
7) தோலோயிட் இயூமுலோக்குமிழ்கள் (Tholoid Cumulo Domes)
இவை எரிமலை வாயினுள்ளிருந்து வெளியே பாயாமலும் வீசப்படாமலும் அதனுள்ளேதங்கிய பாறைக்குழம்பினால் உரு வாக்கப்பட்டவை. தோலோயிட்குமிழ் அரைக்கோள வடிவத் தையும் குத்தான சாய்வுகளையும் கொண்டது. கம்சட்கா குடா நாட்டிலுள்ள பெசிமியன் எரிமலையின் பெருவாயினுள்ளே அத்தகைய குமிழ் ஒன்று காணப்படுகிறது' கியூமுலோக் குமிழ்கள் ஒழுங்கற்ற உருவத்துடன் குன்றுகள் போலத்தோற்றமளிக்கும், றியூனியன் தீவிலுள்ள மாமிலோன் குமிழ் இவ்வகையானது.
5 சிறு எரிமலையுருவங்கள்:-
1) சொல்பத்தாரா - இவை நீராவியையும் வாயுக்களையும் மட்டும் தற்போது வெளியேற்றுகின்ற எரிமலைகளாகும். நேப்பிள்ஸ் நகருக்கு மேற்கிலுள்ள ஓர் எரிமலையிலிருந்து இப் பெயர் வழக்சில் வந்துள்ளது. அது 12ம் நூற்றாண்டிற்குப்பின்னர் இதுவரை கக்கவில்லை. ஆயினும் கந்தகவாயுவும், நீராவியும் காலத்திற்குக்காலம் அதிலிருந்து வெளியேறுகின்றன.

Page 66
20 புவிவெளியுருவவியல்
(2) பியூமறோல் (Fumarole): இது நீராவியுடன் கந்தகவாயு வைத்தவிர்ந்த வேறு வாயுக்களை வெளியேற்றும் அலாஸ்கா விலுள்ள பத்தாயிரம் புகைப்பள்ளத்தாக்கில்' ତ୍ରି0) பியூமறோல் உள்ளது.
(3) சேற்றெரிமலை இது எரிமலைக் குழம்பிற்குப் பதிலாக கொதிநீர் மண், சேறு முதலியனவற்றை வெளியேற்றும், மண்ணும் சேறும் கலந்து இறுகுவதனால் சேற்றெரிமலை உரு வாகிறது. நியூசிலாந்தின் வடதிவிலும், கிழக்குச் சிசிலியிலும் சேற்றெரிமலைகள் காணப்படுகின்றன.
8.6 பிளவுக்கக்குகை
புவியோட்டிலுள்ள பலமற்ற ஒரு வலயத்தில் ஏற்படும் பன்னூறு மீற்றர் முதல் பல கி.மீ நீளமான பிளவுகளுக்கூடாகப் பாறைக்குழம்பு தொடர்ச்சியாக அல்லது விட்டுவிட்டு வெளியேறி நீண்ட தூரம் பரவுதலே பிளவுக்கக்குகை எனப்படும். இவ்வகை யான கக்குகை, நடுச் சமுத்திரப் பாறைத்தொடர் வலயத்தில் சிறப்பாக இடம்பெறுகிறது.
வட அத்திலாந்திக்கிலுள்ள மத்திய பாறைத் தொடரின்
மேலமைந்த ஐஸ்லாந்தில் இவ்வகையான கக்குகை மனிதனால் நேரில் அவதானிக்கப்பட்டுள்ளது பிளவுக்கக்குகை கண்டங்கள்
பிளவுற்றுப் பிரியத்தொடங்கிய காலகட்டத்திலும் ஆங்காங்கு
ஏற்பட்டிருக்கிறது. (உம் பரானா வடிநிலம், காரு பிரதேசம்) அன்றியும் பிற்காலத்தில் இழுவிசை காரணமாகக் கண்டங்களில் உருவாகிய பிளவுப்பள்ளத்தாக்குகளிலும் வடிநிலங்களிலும் அம்முறையில் எரிமலைக் குழம்பு பெருமளவில் வெளியேறிய தாக நம்பப்படுகிறது. இதனை எரிமமைக் குழம்புப் பெருக்கு (Flood Rasat) எனக்குறிப்பிடுவர். இவ்வகையான பெருக்கு கள் வெவ்வேறு காலகட்டங்களில் ஏற்பட்டதன் விளைவாகப் பல பெரிய மேட்டுநிலங்கள் உருவாகின. இவற்றில் தக்கின மேட்டுநிலம் (50 000 ச. கி. மீ.) கொலம்பியா மேட்டுநிலம் (200 000 ச. கி. மீ.) பரானா வடிநிலம் (750 000 ச. கி. மீ.) என்பன முக்கியமானவை. இவற்றைப்போல் உருவாகிய சிறு மேட்டுநிலங்கள் கிரின்லாந்து, எத்தியோப்பியா என்னுமிடங் களிலும் கர்ணப்படுகின்றன. மேலும் இவ்வகையான இல மேட்டுநிலங்கள் சமுத்திர வடிநிலங்களிலும் உருவாகி உள்ளன. (உம் கேர்குவலென் மேட்டுநிலம் (இந்து), ஒன்ராங்யாவா மேட்டுநிலம் (பசிபிக்)

எரிமலைகள் 2
சமுத்திரங்களிலுள்ள 64,000 கி.மீ. நீளமான மத் தி ய பாறைத்தொடர் வலயத்திலிருந்து பிளவுக்குகை மூலம் வெளி யேறிய பாறைக்குழம்பு கடந்த 200 மில்லியன் ஆண்டு காலத் தில் இன்றுள்ள சமுத்திரப் புவியோட்டை உருவாக்கியுள்ளது. கடந்த 300 ஆண்டு காலத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய பிளவுக் குகை ஐஸ்லாந்தின் தென்பகுதியிலுள்ள லேக்கி (Laki) என்னு மிடத்தில் 1783 ல் ஏற்பட்டுள்ளது. அப்போது 25 கி மி. நீளமானதொரு பிளவுக்கூடாக வெளியேறிய பாறைக்குழம்பு 45 கி.மீ. வரை பரவியது.
உலகிலுள்ள 550 எரிமலைகளில் 95% மானவை தகட்டெல்லை களிலும் அவற்றுக்கு அயலிலும் காணப்படுகின்றன. ஏனையவை தகடுகளின் உட்பகுதியில் ஆங்காங்கு மேலெழும் இடையோட் டுத்தாரைகளின் மேல் அமைந்துள்ளன. அவை வெப்ப மைய எரிமலைகள்" (Hotspot Volconoes) எனப்படும்.
தகடுகள் உருவாகிப் பிரியும் நடுச்சமுத்திரப் பா  ைற த் தொடர் வலயம் முக்கியமான ஒரு எரிம  ைல மையமாகும். ஆனால் அங்கு கக்குகை பெருமளவில் கடல்மட்டத்தின் கீழ் இடம்பெறுவதனால் ஐஸ்லாந்து போன்ற ஒரு சில இடங்களைத் தவிர ஏனைய பகுதிகளில் எரிமலைத் தொழிற்பாட்டை வெளிப்படையாகக் கா ண முடியா து தகடுகள் ஒருங்கும் (கீழிறங்கி அழியும்) எல்லைகளை அடுத்து இன்னொரு எரி மலை வலயம் அமைந்துள்ளது அப்பகுதியில், தகடுகள் கீழிறங் கும் எல்லையிலிருந்து அவற்றின் சரிவுக்கோணத்திற்கேற்ப 200 முதல் 500 கி. மீ தூரத்தில் எரிமலைகள் காணப்படுகின்
[ᎠᏊᏡᎢ .
இவ்வாறு பசியிக் சமுத்திரத்தின் மேற்கு மற்றும் தென்கீழ் பகுதிகளிலுள்ள ஒருங்கல் வலயம் சங்கிலித் தொடர் போன்ற வரிசையான பல எரிமலைகளையும், எரிமலைத்தீவுகளையும் கொண்டிருப்பதனால் பசிபிக்கின் நெருப்பு வளையம் எனவும் குறிப்பிடப்படுகின்றன. இவ்வலயத்தின் தென்மேல் பகுதியில் இந்தோனேசியாவிலிருந்து ப ர் மா வுக் கூ டாக எல்பேர்ஸ், கோக்கசஸ் மலைப்பகுதிகளை உள்ளடக்கி மத்தியதரைக் கடலின் மத்திய பகுதிவரை தொடர்ச்சியற்ற இன்னொரு எரிமலை வலயம் உள்ளது.

Page 67
22 புவிவெளியுருவவியல்
உலகின் மூன்றாவது முக்கியமான எரிமலை வலயம் செங் கடலிலிருந்து தெற்கு நோக்கி நீண்டு ஆபிரிக்காவின் பிளவுப் பள்ளத்தாக்கு வலயத்தை உள்ளடக்கிக் காணப்படுகிறது. கிளிமாஞ்சரோ, கென்யா போன்ற எரிமலைகள் இவ்வலயத் தில் உள்ள பிரதான எரிமலைகளாகும்.
தசட்டெல்லைக்கு வெளியே, கண்டங்களிலும், சமுத்திரங் களிலும் இடம்பெறும் தொடர்ச்சியற்ற எரிமலைத் தொழிற் பாடு இடையோடு வெப்பமையங்கள், மற்றும் தாரைகளுடன் தொடர்புள்ளதென நம்பப்படுகிறது.
எரிமலைத் தொழிற்பாட்டுக்குரிய காரணங்கள்
புவியின் ஆழமான உட்பாகத்திலிருந்து பொங்கியெழும் பாறைக்குழம்பின் மேற்பரப்பின் மேற்பரப்பு வெளிப்பாடே எரிமலைத் தொழிற்பாடாகும். பாறைக்குழம்பை வெளியேற் றும் எரிமலை மையங்களின் பரம்பலை நோக்கும்போது அப் பாறைக்குழம்பு புவியின் உள்ளே குறிப்பிட்ட சில மையங்க ளிலேயே உருவாகுவது புலப்படும்
புதிய தகட்டுவிருத்திக் கோட்பாடு பாறைக்குழம்பு உரு வாகும் வேறுபட்ட சூழல்களை விளக்குகின்றது. அதன் படி பசால்ற் வகையான பாறைக்குழம்பு (1) தகடுகள் உருவாகின்றஉருவாகிப் பிரியும் - நடுச்சமுத்திரப்பாறைத் தொடர் வலயங் களிலும் (2) சமுத்திர வெப்ப மையங்களிலும் உருவாகுவதாக வும், அந்திசைற் அல்லது கருங்கல் இனத்தைச் சேர்ந்த பாறைக்குழம்புத் தகடுகள் கீழிறங்கி அழியும் வலயங்களில் உருவாகுவதாகவும் தெரியவருகிறது.
நடுச் சமுத்திரப்பாறைத்தொடர் வலயங்களில் பெருமளவில் வெளிவரும் பசால்ற் வகையான பாறைக்குழம்பு அப்பாறைத் தொடர்களின்கீழ் ஒரு சில கி. மீ. ஆழத்திலிருந்து மேலெழுவ தாகவும் அங்கு மென்பாறைக்கோளம் மேலுயர்த்தப்பட்டிருத் தலே அதற்கு முக்கியமான காரணமெனவும் கூறப்படுகிறது. மென்பாறைக்கோலத்திலுள்ள பெரிடோறைற் பாறைகள் 10%வரை (பாதி) உருகிய நிலையில் மேலெழும்போது தமது கணிப்பொருட்சேர்க்கை மாறிப்பசால்ற் வகையான பாறைக் குழம்பாக வெளியேறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அது தோலிற் (Tholite) எனப்படும்.

எரிமலைகள் 123
பாசல்ற் வகையான பாறைக்குழம்பு சமுத்திர வெப்ப மையங்களிலும் உருவாகிறது. அது இடையோட்டின் ஆழமான பகுதிகளில் இயல்புக்கு அதிகமான வெப்பநிலையிலுள்ள சில மையங்கள் அல்லது எல்லைகளிலிருந்து (உம் 670கி.மீ எல்லை) தாரை பேசுல மேலெழுந்து எரிமலைத்தொழிற்பாட்டை ஏற் படுத்துவதாக நம்பப்படுகிறது. இவை இடையோட்டு மேற் காவுகைக்கலன்கள் மேலெழும் கால்களாயிருக்கலாம். பாறைக் கோளத்தகடுகள் கீழ்டங்கும் வலயங்களில் உட்செல்லும் பாறை கள் அதிக அமுக்கத்திற்கும் வெப்பமூட்டலுக்கும் உள்ளா கின்றன வெப்பம் புவி யோட்டில் கி.மீற்றர் ஆழத்தில் 30°C அளவும் அதற்குக்கீழ் அதனிலும் சற்றுக் குறைந்த விகிதத்திலும் அதி க ரிக் கிற து. அதேசமயம் நிலையியல் அமுக்கம் 1கி. மீ ஆழத்திற்கு 250-300 பார் (Bar) விகிதத்தில் அதிகரித்துச் செல்கிறது.
கீழிறங்கும் பாறைகள் முன்னர் மேற்பரப்பில் உருவாகிய படியால் அவற்றிலுள்ள கணிப்பொருட்கள் குறைந்த வெப்ப நிலையில் உருகும்.அன்றியும் அப்பாறைகளுடன் சமுத்திரநீர் கலப் பதும் அவை விரைவாக உருக உதவும். இவ்வாறு தகடுகள் கீழிறங்கி அழியுமிடங்களில் 100 150 கி.மீ ஆழத்திலிருந்து அந்திசைற் வகையான பாறைக்குழம்பு அதிகமாக மேலெழு
வதாகத்தெரிகிறது
இவ்வாறு பல்வேறு மையங்களிலும் உருவாகும் பாறைக் குழம்பானது அதன் (1)திரவத்தன்மை (2)கன அதிகரிப்பு (3) அடர்த்தி குறைதல் (4) வாயுக்கள் அதனுடன் கலத்தல் என் பவற்றின் விளைவாக மேலெழ முயலும். ஆயினும் மேல் உள்ள பாறைகளின் அமுக்கம் விடுவிக்கப்படாதவரை அது சாத்திய மாகாது எனவே புவியோட்டில் உடைவுகள் முறிவுகள் குறைத் தல் ஆகியன ஏற்படுமிடங்களில் அமுக்கம் விடுவிக்கப்படுவதனால் அவ்விடங்களில் அது மேலெழுதல் சாத்தியமாகும். சமுத்திரப் பாறைத்தொடர் வலயங்களில் அந்நிலைமைகள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் ஒரு மையத்தில் உருவாகித் திரளும் பாறைக்குழம்பானது, தனக்கு மேலுள்ள பாறைகளை வெப்பமூட்டி, உடைத்து தன்மயமாக்குவதன் மூலம் அல்லது அவற்றைத் தனது பாதையிலிருந்து தள்ளுவதன் மூலமும் மேலெழலாம். இது Stoping" எனப்படும். இச்செயல்முறைக்கு வாயுக்களும் திரவங்களும் துணை செய்யும், தகடுகள் கீழிறங்கும் வலயங்களில் இம்முறையிலேயே பாறைக்குழம்பு மேலெழுந்து மேற்பரப்பில் எரிமலைத்தொழிற்பாட்டை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது.

Page 68
24 புவிவெளியுருவவியல்
எரிமலை உயிர்ப்பும் முன்னெச்சரிக்கை முயற்சிகளும்:-
எரிமலைகளின் கக்குகையினால் பயங்கரமான விளைவுகள் ஏற்படலாம் - ஏற்பட்டுள்ளன. ஆனால் உயிர்ப்புள்ள எரிமலை கள் எனக்கணிக்கப்பட்டுள்ள 550 எரிமலைகனில் ஒரு சில பற்றியே நன்கு ஆராயப்பட்டுள்ளதனாலும் பெரும்பாலான எரிமலைகளின் போக்கு அதாவது கக்கும் கால ஒழுங்கு மற்றும் கக்கும் முறைபற்றித் திட்டவட்டமாகக் கூறமுடியாதுள்ளது. இதனால் எரிமலைக்கக்குகைக்கு எதிராகப் பாதுகரப்பு நடவடிக் கைகள் எடுத்தல் சிக்கலானதும் சிரமமானதாகும். எனினும் ஒரு எரிமலை அடிக்கடியும், ஒழுங்காகவும் கக்கிவருமாயின் அதிலிருந்து வெளியேறும் பொருட்களை ஆராய்வதன் மூலம் குறித்த எரிமலையின் நடத்தை பற்றி ஒரளவு முன்கூட்டியே அறியமுடியும். ஆனால் அத்தகைய எரிமலைகள் ஒரு சிலவே (உ.ம் எட்னா, கிலோவா (ஹவர் ய்) ,
இரண்டாவதாக எரிமலைகளின் உயிர்ப்பிடைக்காலம் வேறு பட்டது. அதாவது ஒரு கக்குகைக்கும் அடுத்த கக்குகைக்கும் இடைப்பட்ட காலம் (உறங்கும் காலம்) சில மணிநேரத்தி லிருந்து பல்லாயிரம் ஆண்டுவரை வேறுபடலாம். அன்றியும் எரிமலைகளின் அகத்தே இடம்பெறும் தொழிற்பாடுகள், கக்கும் அறிகுறிகள் போன்றவற்றை அறிவியல் ரீதியில் கண்காணிப்பது சாத்தியமாயினும் பொருளியல் ரீதியில் அது மிகச் செலவான தாகும். இத்தகைய இடர்பர்டுகளுக்கிடையிலும் எரிமலை உயிர்ப்பு பற்றி முன்கூட்டியே அறிவதற்குப் பின்வரும் நடவடிக் கைகள் எடுக்கப்படலாம்.
(1) ஒரு எரிமலையின் உளளே பாறைக்குழம்பின் அசைவு பற்றி அறிவதற்கு உதவியாக அவ்வெரிமலையுடன் தொடர்புள்ள ஏரி வெப்பவூற்று, நீரூற்று, பியூமறோல் (Fumarole) என்ப வற்றின் கனஅளவு, வெப்பநிலை, சேர்க்கை என்பவற்றில் ஏற்படும் மாற்றங்களைக் கணித்தறியலாம்.
(2) அண்மைக்காலத்தில் வானூர்திகள், செயற்கைக்கோள்கள் மூலம் நுட்பமான கருவிகளின் துணையுடன் மேற்கொள்ளப் பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளும் மிகத்தொலைவிலுள்ள எரிமலைகளின் உயிர்ப்புப் பற்றிய தகவல்களை ப் பெற உதவுகின்றன. ဖွံ့ဖြိုးမျိုး’ ၊ ဂြိုါဖူး”

எரிமலைகள், ! 25
மேலும் இட்விளக்கப்படங்கள், மற்றும் எரிமலையின் முந்திய போக்குப்பற்றிய தகவல்களின் துணையுடன் எரிமலைக க க் கு  ைக பற்றிய அபாயப்படங்களை (Hazard Maps) தயாரித்து வெளியிடுவதன் மூலம் உள்ளூர் மக்களின் இடப் பெயர்ச்சிக்கு உதவலாம். 1991 ல் ஜப்பானின் அன்சன் எரி மலையும் பி லி ப்  ைப ன் சி ன் பி னா ரு பா எரிமலையும் கக்குவதற்கு முன்னர் முன்குறிப்பிட்ட முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் எடுக்கப்பட்டதனால் உயிரிழப்புப் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. -
8.10 வெப்ப மையங்களும் இடையோட்டுத் தாரைகளும் (Hot Spots And Mantle Plumes)
இடையோட்டின் ஆழமான பகுதியில் ஆங்காங்கு இயல்புக்கு அதிகமான வெப்பநிலையிற் காணப்படும் சில மையங்களிலி ருந்து வெப்பம், பாறைக்குழம்பு, மற்றும் இடையோட்டுப் பொருட்கள் மேலெழுந்து புவியோட்டில் எரிமலைத் தொழிற் பாட்டைத் தோற்றுவித்துள்ள இடங்களே வெப்ப மையங்க ளாகும். புவியோட்டிலுள்ள எரிமலைகளில் 5 %மானவை இத் தகைய வெப்ப மையங்களில் அமைந்திருப்பது குறிப் பி டத் தக்கது. வெப்ப மையங்களில் இடையோட்டிலிருந்து நிரல்
அல்லது உருளைவடி வில் மேலெழும் திரட் சியான பாறை க் குழம்பே 'இடை யோட்டுத் தாரை' யாகும். இத்தாரை கள் 00 G. E. அல்லது அதற்கும் மேற்பட்டி விட்டமு டையவை. இவற்றில் பெரிய தாரைகள் "D" படை எல்லையிலும் சிறியவை 670 கி. மீ. அ வ த் தை மாற்ற எல்லையிலும் உருவாக்கக்கூடுமென நம்பப்படுகிறது. இவ்வாறு மேலெழும் இடையோட்டுத்தாரைகளில் சிறுபகுதியே (5% முதல் 30%வரை) புவியோட்டில் எரிமலைக் குன்றுகள், மேட்டுநிலங்கள் மற்றும் த  ைல யீ டு க ைள உருவாக்கியுள்ளன. எனவே
படம் 25: இடையோட்டுத்தரை

Page 69
26 புவிவெளியுருவவியல்
இடையோட்டுத் தர்ரைகளில் பெரும்பகுதி புவியோட்டிற்குக்கீழ் அடங்கியிருப்பது புலனாகும். 8.11 வெப்ப மையங்களின் பரம்பல்:
உலகில் 50க்கும் அதிகமான வெப்ப மையங்கள் இனங் காணப்பட்டுள்ளன. இவை சமுத்திரங்களில் மட்டுமின்றி கண்ட நிலப்பரப்பிலும் காணப்படுகின்றன. கண்ட நிலப்பரப்பில், ஆபிரிக்காவும் சமுத்திரங்களில் பசிபிக்கும் ஒப்பளவில் அதிக மான வெப்ப மையங்களைக் கொண்டுள்ளன. ஆபிரிக்க வெப்ப மையங்களில் திபெஸ்தி (சாட்), ஹொக்கர் (அல்ஜீரியா), கமறுான் போன்றவை குறிப்பிடத்தக்கவை. அதேசமயம் ஐக்கிய அமெரிக்காவிலுள்ள யெலோஸ்ரோன் பூங்கா ஐரோப்பாவில் பிரான்சிலுள்ள மக்தியதிணிவு, ஜேர்மனியிலுள்ள ஈபெஸ் பிர தேசம் ஆகியனவும் கண்டம் சார்ந்த சில வெப்பமையங்களாகும்.
சமுத்திர வெப்ப மையங்களில் சில தகட்டெல்லையிலும் சில அதற்கு அயலிலும் அமைந்துள்ளன. ஐஸ்லாந்து ஒரு பரப்பும் பாறைத்தொடரின் மேல் அமைந்துள்ள வெப்ப மையமாகும். அப்பாறைத்தொடர் ஒரு இடையோட்டுத் தாரைக்கு நேர் மேலாக உருவாகியதனால்தான் அங்கு எரி மலைத்தொழிற்பாடு பெருமளவிலும் முழுமூச்சாகவும் இடம் பெறுகிறது. அதேசமயம் பரப்பும் பாறைத்தொடர்களுக்கு அயலிலுள்ள சில வெப்பமையங்களும் அப்பாறைத்தொடரின் கீழ் அல்லது அரு கி லு ள் ள இடையோட்டுத்தாரைகளுடன் தொடர்புள்ளவை எனத் தெரியவருகிறது. பசிபிக்கிலுள்ள ஈஸ்ரர் தீவு, பிற்கரின்தீவு, கல்பகோஸ்தீவுகள், அத்திலாந்திக் கிலுள்ள அசோர்ஸ், அசென்சன் தீவுகள், கிறிஸ்ரன்டிகுகா ஆகியன இவ்வகைக்கு உதாரணங்களாகும்.
சமுத்திரங்களில், தகட்டெல்லைக்கு அ ப் பால் காணப் படும் வெப்ப மையங்களில் ஹவாய் (பசிபிக்) விரிவான ஆய் வுக்குட்பட்டதொன்றாகும். இந் து சமுத் தி ரத் தி லுள்ள றியூனியன் தீவும் இந்த வகையைச் சேர்ந்ததே. இவ் வகை யான வெப்பமையங்கள் தகட்டெல்லைக்கு வெளியே குறிப் பிட்ட ஒரு சில இடங்களில் தோன்றியிருப்பதற்கான காரணம் தெரியவில்லை. ஆயினும் அவை இடையோட்டு மேற்காவுகை ஒட்டங்கள் நிலைத்திருக்கும் அல்லது உருவாகும் மையங்களr யிருக்கலாமெனவும் அத்தகைய மேற்காவுகையோட்டக் கலன் களின் கால்களே தாரைகளாக மேலெழுந்து வெப்பமையங்களை உருவாக்கியிருக்கலாமெனவும் சில ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

27
அதேசமயம் ஒரு தகட்டெல்லை புதிதாக உருவாகிக் கடலடித் தரை பரவுதற்கு முன்னோடியாக அல்லது அறிகுறியாகவும் இடையோட்டுத்தாரைகள் தோன்றக்கூடும் என இன்னொரு கருத்தும் உண்டு.
ஹவாய் தீவின் கீழுள்ள தாரை ஆண்டிற்கு 34 செ. மீ. வேகத்தில் மேலெழுவதாகவும். வே றுசில 5 - 10 செ. மீ, வேகத் தில் மேலெழுவதாகவும், ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இடையோட்டுத்தாரைகள் மேலெழுவதனால் ஏற்படும் எரி மலைத் தொழிற்பாடு, சில இடங்களில் எரிமலைக்குழம்புப் பெருக் கையும் பரந்த மேட்டுநிலங்களையும் உருவாக்கியுள்ளது. டெக் இரண் மேட்டுநிலம் (இந் தி யா) பரானாமேட்டு 5) at th (தெ. அமெரிக்கார் சைபீரிய மேட்டுநிலம், முதலியனவும் தென் பசிபிக்கிலுள்ள ஒன்ராங்யாவா மேட்டுநிலம், இந்துசமுத்திரத்தி லுள்ள கேர்குவலென் மேட்டுநிலம் என்பனவும் இம்முறையில் உருவாகின. வெப்பமையங்களில் சில ஒப்பளவில் குறைந்த வெப்பநிலையைக் காட்டுவதாகவும் ( உம் அசோர்ஸ் ) இதற்கு மத்திய கோட்டுப்பகுதியிலுள்ள இடையோடு (ஒப்பளவில்) குளி ரானதாகக் காணப்படுவது காரணமாயிருககலாமெனவும் ஒரு கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பமையங்கள் அசைவற்றவையாகத்தோன்றினாலும் அவற் றில் ஒருசில மெதுவாக அசைவது தெரியவந்துள்ளது. அவ்வாறு அசைவனவற்றின் சார் நிலையங்கள் மாறுவதாகவும், அவை தமக்கு மேலுள்ள தகடுகளைவிட மெதுவாக நகர்வதாகவும் பசி பிக்கிலுள்ள சில வெப்பமையங்கள் அம்முறையில் கடந்த 1 மில் லியன் ஆண்டு காலத்தில் 3 கி. மீ தூரம் நகர்ந்துள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆயினும் வெப்பமையங்களிற் பெரும் பாலானவை நிலையானவையாகக் காணப்படுவதனால், அவற் றின் மேலுள்ள தகட்டில் உருவாகும் எரிமலைக்குன்று அத் தகடு அசையும்போது வெப்ப மையத்தைவிட்டு விலகும் அதன் பின்னர் ஒரு புதிய எரி மலை க் கு ன் று அம்மையத்தில் உருவாகும், இவ் வா று குறிப்பிட்ட ஒரு வெப்பமையத் தில் உருவாகும் எரிமலைக்குன்றுகள் தகட்டசைவின் விளை வாக அம்மையத்திலிருந்து விலகிச் செல்வதனால்தான் சமுத்தி ரங்களில் வரிசையான பல எரிமலைக்குன்றுத் தொடர்கள் உரு வாகியிருப்பதாக ரூசோவில்சன் விளக்கியுள்ளார். இம்முறையில் உருவாகி ஒருவெப்பமையத்தைவிட்டு விலகிச் செல்லுகின்ற எரி

Page 70
贾罗密 புவிவெளியுருவவியல்
மலைக் குன்றுகளைத் தாரைச்சுவடு (Pumetrace) அல்லது 'வெப்பமையச்சுவடு" ( Hot spot trace ) எனக்குறிப்பிடுவர். இவை காலப்போக்கில் கடலரிப்பினால் பாதிப்புற்று மட்டமான உச்சிகளைக் கொண்ட கடற்கீழ்க்குன்றுகளாக மாறியுள்ளன. இவற்றின் உச்சிகள் வெப்பமையத்திற்கு அப்பால், தகடு கீழிறங் கும் எல்லையை நோக்கிப் படிப்படியாகத் தாழ்ந்து காணப்படும்.
. په شړgشوينrكه "çಷ್ರ (5ಿದ್ಲಿಕಿಟಿಷ್ರ$ فيق عمله
日 டி r என்  ை ைமு ைஇ  ை ை ைடிவ
படம் :- 26 ஹவாய் தீவின் கீழுள்ள வெப்ப மையத்தின் மேல் உருவாகிய எம்பறர் கடற்கீழ்க்குன்றுகளும் மிட்வே தீவும் பசிபிக் தகட்டின் அசைவு கார ணமாக விலகுதல்.
பசிபிக்கில் ஹவாய்தீவின் கீழுள்ள வெப்பமையத்தில் அதற்கு முன்னர் உருவாகிய மிட்வே தீவுகள், எம்பறர் மற்றும்ஜிம்மு கடற்ற்ேக்குன்றுகள் முதலியன அச்சமுத்திரத்திலுள்ள மிகநீண்ட (2500 கி. மீ) தாரைச்சுவடாகத் திகழ்கின்றன . அவற்றைத்தவிர லயின்தீவுகள், ரூவாமாட்டோ தீவுகள், மார்சல் - எலிஸ்தீவுகள், ஆஸ்ரல் கடற்கீழ்க்குன்றுகள் ஆகியனவும் தாரைச்சுவடுகளாகும். இவற்றில் ருவாமாட்டோத் தீவுகள் 'பிற்கேன்" வெப்பம்ையத் தின் மீதும், ஆஸ்ரல்கடற்கீழ்க்குன்றுகள், மக்டொனால்ட் கடற் கீழ்க்குன்றின் கீழுள்ள வெப்பமையத்தின் மீதும் உருவாகியவை யாம். அதேசமயம் லயின் தீவுகளில் பெரும்பகுதி சமகாலத்தில் பல தாரைகளினால் உருவாக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. அண்மைக்கால ஆய்வுகளின்படி, ஹவாய் தீவையொட்டி அதன் தென்சரிவில், "லோகி" (toihi) எனும் புதிய எரிமலைக்குன்று கடலடியில் உருவாகி வளர்ந்து வருவதாகவும் சில இலட்சம் ஆண்டுகளில் அது வெளிப்படலாமெனவும் தெரியவருகிறது.
انتقل إلى يد سيين.
 
 
 
 
 
 
 

GOGAJ" LUGO) DALJAăG6řiro 29
மேலும் ஹவாய்தீவு ஆண்டிற்கு 14 செ. மீ தூரம் அசைவது னால் சில ஆயிரம் ஆண்டுகளில் அதுவும் ஒரு காரைச்சுவடாக மாறலாமெனவும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஹவாய் தீவின் வடமேற்கில் உள்ள "கீ (Kea) எரிமலை 1801க்குப் பின் னர் உயிர்ப்படங்கியிருப்பதும் முன் குறிப்பிட்ட கருத்தை வலி யுறுத்துகின்றது.
காரைச்சுவடுகள்" கண்டநிலப்பரப்பிலும் காணப்படுகின்றன. ஐக்கிய அமெரிக்காவிலுள்ள சினேக் ஆற்று எரிமலைக் குழம்புப் படிவு அப்பகுதி முன்னர் யெலோஸ்ரோன் பூங்காவின் இழுள்ள வெப்பமையத்தின் மேலிருந்தபோது உருவாகிய பின்னர் பபிெக் தகட்டின் அசைவு காரணமாக நகர்ந்திருப்பதாகத் தெரிகிறது. மேலும் ஆபிரிக்காவில் நமீபியாவிலும், நைஜீரியாவில் ஜொஸ் மேட்டு நிலத்திலும் (பான்யாம் பகுதி) முன்னர் இடையோட்டுத் தாரைகளினால் உருவாக்கப்பட்டு இப்பொழுது அவிந்த நிலையி லுள்ள சில எரிமலைக்குன்றுத் தொடர்களைக் காணலாம்.
வெப்பமையங்கள் பெரும்பாலும் அசைவற்றனவாத வின் அவற்றின்மேலாக ஒரு தகடு அசைந்து சென்ற வேகத்தையும், காலத்தையும் கணித்தறியமுடியும். இத்தகைய கணிப்புகளின்படி ஹவாய்தீவு 1 மில்லியன் ஆண்டுக்கு முன்னரும் மிட்வேத்தீவுகள் 35 மில்லியன் ஆண்டுக்கு முன்னரும், ஜிம்மு கடற்கீழ்க்குன்று 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரும் ஒரே வெப்பமையத்தின் மேல் உருவாகியதாக ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது. இதி லிருந்து, ஹவாய்தீவின் கீழிருக்கும் வெப்பமையம் 70 மில்லியன் ஆண்டுகாலமாக் அசைவற்றிருப்பதையும் அறியக்கூடியதாயிருக் கிறது.
"ழ்ப்பாணம் இறு

Page 71
அத்தியாயம் 8 நிலத்தேய்வு
வானிலையாலழிதல், புவியீர்ப்பசைவுகள், ஆறு, பனிக்கட்டி யாறு, காற்று, கடலலை முதலிய தேய்ப்புக்கருவிகளின் செயல் பாடு என்பவற்றின் கூட்டுத்தாக்கத்தினால் நிலப்பரப்பு படிப்படி யாகத் தேய்வடைகிறது. இதன் விளைவாகப் புவியில் பலவகை பான நிலவுருவங்கள் தோன்றியுள்ளன. அவை ஒரே நிலையில் நீடித்திருப்பதில்லை; அவை எப்பொழுதும் மாற்றத்துக்குட்பட்ட படியே இருக்கின்றன. ஆயினும் அவற்றின் இயல்பானது பாறை யமைப்பு, இடம்பெறும் செயல்முறைகள், நிலை என்னும் மூன்று காரணிகளுடன் தொடர்புள்ளதென W. M. டேவிஸ் கூறியுள் of T.
நிலவுருவ விருத்தியில் வானிலையாலழிதல், அரித்தல் என்றும் இரு செயல்முறைகளும் முக்கியமானவை. அவ்விரண்டும் இணைந்த கூட்டுச் செயல்முறையே உரிதல் (Dendation) அல்லது நிலத்தேய்வாகும்.
8 வானிலையாலழிதல்
வளிமண்டலத்தின் தாக்கத்தினால் புவியோட்டுப் பாறைகள் பலவழிகளில் உடைந்து துண்டங்கள் துணிக்கைகளாகப் பிரிந்து அழிந்து போகும் செயல்முறையே வானிலையாலழிதல் எனப்படு கிறது. இது அரிப்புச் செயல்முறையின் முன்னோடியாகும். வானி லையாலழிதல் பாறைகள் காணப்படுமிடங்களிலேயே நிகழ்கின் றது. அன்றியும் அது எங்கும், எப்பொழுதும் புவியோட்டின் மேற்பரப்பு வலயத்திலேயே இடம்பெறும் ஒரு செயல்முறை யென் பது குறிப்பிடத்தக்கது.
8 2 வானிலையாலழிதலைப் பாதிக்கும் காரணிகள்
வானிலையாலழிதலின் தன்மையும் அளவும் (i) பாறைகளின் தன்மை (i) தரைத்தோற்றம் (ii) காலநிலை (iv) தாவரப் பரம்பல் (w) காலம் என்பவற்றினால் பாதிக்கப்படுகின்றன. பாறைகளின் தன்மையைப் பொறுத்தவரை அவற்றின் அமைப்பு,

வானிலையாலழிதல் 3.
வன்மை, இரசாயனச் சேர்க்கை, மணியுரு என்பன முக்கியமானவை. பாறைகள் திரட்சியான அமைப்புடையனவாயின் வரவி லழிதலினாற் பாதிக்கப்படுவது குறைவு. அவை, படைகள், மூட் டுக்கள், உடைவுகள் அல்லது நுண்துளைகளுடன் காணப்படின் இரசாயன முறையில் எளிதாக அழிவடைகின்றன. Ք-5Ո Մ6ծմrԼՈn Ժ, நுண்துளைத் தன்மை கருங்கல்லில் 1% அளவும், சில மணற் கற்களில் 15% வரையிலும் காணப்படுவதனால் மணற்கற்கள் கருங்கல்லைவிட விரைவில் அழிவடைகின்றன. அடுத்து, பாறை களின் வன்மையும் வானிலையாலழிதலை சிறப்பாக பெளது. முறையான அழிவைப்பாதிக்கின்றது ஈண்டு வன்மையென்பது கணிப்பொருட்களின், வன்மை. ஒட்டுறுதி என்பவற்றைக் குறிக்கும். ஆனால் "வன்மை இரசாயன முறையான அழிவைப் பாதுக் காது. பாறைகளின் கணிப்பொருட் சேர்க்கையும் அவை பிரிந்தழி தல், மாற்றமடைதல் என்பவற்றின் வேகத்தைப் பாதிக்கின்றது. இவ்வாறு சில கணிப்பொருட்கள் வளிமண்டல வாயுக்கனினால் விரைவாகவும், வேறுசில மெதுவாகவும் பாதிப்புறுகின்றன. பொது வாக அதிக வெப்பநிலையில் பளிங்குருவாகிய கணிப்பொருட் களே அதிகமாக வானிலையாலழிவிற்குட்படுகின்றன. 2-$"TDT ୩ மாக, பயோரைற், ஓதோகிளேஸ் களிக்கல் ஆகியன அதிகமாக வும் பைநோக்சின் ஒலிவைன் ஆகியன மிக அதிகமாகவும் பாதிப் புறும் போது படிகம் வானிலையாலழிதலினால் எளிதிற் பாதிக் கப்படாத ஒரு கணிப்பொருளாயுள்ளது. மேலும் பொதுவாக இருண்ட நிறப்பாறைகள் (உம் பசால்ற், கப்புறோ) மென்னிறப் பாறைகளைவிட (உம் சோக்கு) உறுதி கூடியன. ஏனெனில் அவை மென்னிறப் பாறைகளைப்போல சூரிய ஒளியைப் பிரதி பலிக்காமல் அதிகமாக உறிஞ்சுகின்றன. அன்றியும் வேறுபட்ட நிறங்களைக் கொண்ட கணிப்பொருட்கள் காணப்படும் பாறை யும் வேறுபட்ட அளவில் வெப்பமூட்டப்படுவதனால் விரைவாக உடையும். அன்றியும், பாறைகளின் மணியுருவும் (இழையமைப்பு) வானிலையாலழிதலின் தன்மையை நிர்ணயிக்கின்றது. பொதுவாக நுண்மணிகளைக் கொண்ட பாறைகள் இரசாயன முறையில் மெதுவாக உருக்குலையும் போது, பெருமணிப் பாறைகள் பொறிமுறையில் விரைவாக அழிவடைகின்றன.
இரண்டாவதாக, தரைத்தோற்றமும் வானிலையாலழிதலைப்
பாதிக்கின்றது. இவ்வாறு உயர்ந்த மலைப்பகுதிகளிலுள்ள சாய்வு கள் குத்தாயிருப்பின், மண், பாறைச் சிதைவுகள் ஆகியன அவற்றிலிருந்து எளிதாகக் கழுவப்படுவதனால் பாறைகள், தொடர்ச்சியாகப் பாதிப்புறும். அதேசமயம் மென்சாய்வுகளில்

Page 72
32 புவிவெளியுருவவியல்
மண்ணும் பாறைச்சிதைவுகளும் அதிகமாகத் திரள்வதனால் அங் குள்ள பாறைகள் நீரின் தாக்கத்திற்குட்பட்டு அழிவடைகின்றன.
மூன்றாவதாக, காலநிலையும் வானிலையாலழி தலைப் பாதிக் கின்றது. அதுவானிலையாழிதலின் தன்மையையும் அளவையும் பெருமளவு கட்டுப்படுத்துகின்றது. பொதுவாக வரண்ட பிரதேசங் களிலும் குளிர்பிரதேசங்களிலும் பெளதிகமுறையழிவு அதிகமர் யுள்ளது. ஈரலிப்பான பிரதேசங்களில் இரசாயன வழிவு அதிக மாக ஏற்படுகின்றது. ஆனால், அண்மைக்கால ஆய்வுகள் வரண்ட பிரதேசங்களிலும் குளிர் பிரதேசங்களிலும் நிகழும் இரசாயன அழிவின் முக்கியத்துவத்தைப் புலப்படுத்துவனவாய் உள்ளன.
இரசாயனக் கருவிகளில் முதன்மையுடைய தான காபனீ ரொட்சைட் குறைவான வெப்பநிலையிலும் கரைகிறதென்றும் குளிர்ப்பிரதேசங்களில் பணிக்கட்டியுருகுவதனாலுண்டாகும் நீரு டன் கலந்து அது பாறைகளின் அழிவுக்கு அடிகோலுகிறதென்றும் ஆய்வுகள் அறிவுறுத்துகின்றன. மேலும் வெப்பப்பாலை நிலப் பிரதேங்களில் பொறிமுறையழிவைப் போல இரசாயன அழி வும் குறிப்பிடத்தக்கவளவில் நிகழ்வதாகப் பல ஆய்வாளர் கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அங்கு அருமையாகப் பெய்யும் மழையும் அடிக்கடியேற்படும் பனியும் பாறைகளில் நீரையேற் றுவதன்மூலம் அவற்றின் இரசாயனவழிவைத் துரிதப்படுத்து கின்றன வென்றும் பொறிமுறையழிவு பெரும்பாலும் இரசாயன வழிவுடனிணைந்தே செயல்படுகிறதென்றும் அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நாலாவதாக, தாவரங்களின் பரம்பலும் வானிலையாலழித லைப் பாதிக்கக் கூடியது. தாவரங்கள் சிலபோது தமது வேர் களின்மூலம் பொறிமுறையழிவையும் சிலபோது, பாறைகளின் மேற்பரப்பில் நீரை வைத்திருப்பதன்மூலம் இரசாயனவழிவையும் உண்டாக்குகின்றன. அன்றியும் அடர்த்தியான தாவரப்பரம்பல் மண்படையை இறுக்கமாக வைத்திருப்பதன்மூலம் அடித்தளப் பாறைகளை மூடிக்கொண்டிருப்பதனால் பாறையழிவு தடைப்படு கிறது என்பதையும் ஈண்டுக்குறிப்பிடலாம்.
ஐந்தாவதாக, பாறைகள் வானிலையாலழிவை உண்டாக்கும் கருவிகளின் தாக்கத்திற்குட்பட்ட காலத்தைப் பொறுத்தும் அழி விணளவு வேறுபடும்.

வானிலையாலழிதல் 133
வானிலையாலழிதல் இருமுறைகளில் இடம்பெறுகின்றது. ୧୭୩),ରାଧା କ
(அ) பொறிமுறை வானிலையாலழிவு (ஆ) இரசாயன வானிலையாலழிவு என்பனவாம்.
8 3 பொறிமுறை வானிலையாலழிவு
பாறைகள் சிறுசிறு துண்டுகளாக உடைதலையும் அத்துண்டு கள் துணிக்கைகளாகப்பிரிந்தழிதலையும் இ ச் செ ய ல் முறை உணர்த்துகின்றது. பொறிமுறை வானிலையாலழிவு ஐந்து காரணிகளா ஏற் படுகிறது. அவை (1) வெப்பமாற்றங்கள் (2) உறைபனியின் செயல் (3) பளிங்கு வளர்ச்சி (4) அமுக்க விடுகை (5) தாவரங்கள் பிராணிகளின் செயல் என்பனவாம்.
(1) வெப்ப மாற்றங்கள்: பகல் இரவு வெப்ப வேறுபாடுகள்-அதா வது வெப்பவிச்சு - அதிகமாகக் காணப்படும் அயன அயல் வலயத் தில் - குறிப்பாக குறைவறட்பிரதேசங்களில் பல்லினமான கணிப் பொருட்சேர்க்கையைக் கொண்ட பாறைகள் பிளந்தும் உடைந் தும் பொறிமுறையழிவுக்குள்ளாவதாக முன்னர் நம்பப்பட்டது. ஆனால் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகூடப் பரிசோதனைகள் அக்கருத்தை உறுதிப்படுத்தவில்லை. வெப்ப மாற்றங்கள் தனித்துப் பாறைகளைத்தாக்கியழிக்க LDFrt og for வென்றும் ஒரளவு ஈரலிப்பான சூழலில் தான் பாறைகள் உருக் குலைவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆயினும் வறண்ட பாலைநிலத்தின் உண்மையான நிலைமைகளை ஆய்வுகூடத்தில் ஏற்படுத்தமுடியாதென்றும் வெப்பமாற்றங்கள் நீண்டகாலமாக செயல்பட்டு ஓரளவாவது வாறைகளில் பொறிமுறை அழிவைத் தூண்டுகின்றன எனவும் சில ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இக்கருத்துக்கு இன்னும் ஆதரவு உள்ளது. (2) உறைபனியின் செயற்பாடுண்டி அயன வலயத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாயிருப்பது போல், குளிர்ற்றபிரதேசங்களில் நீர் உறைபனியாக மாறி வானிலையாலழியில் தாக்கத்தை ஏற்படுத்து கின்றது.
உறைபனியின் செயற்பாடும் தாக்கமும் இருமுறைகளில் இடம்
பெறுகிறது. அவை (அ) உறைந்து உருகுதல் (Freeze and thaw) (ஆ) உப்புதல் (பொருமுதல்) (Frost Heaving) என்பனவாகும்.

Page 73
厦34 புவிவெளியுருவவியல்
(1) உறைந்துருகுதல் - பகலில் திரவமாயிருக்கும் நீர் இரவில் திண்மையான பனிக்கட்டியாக மாறும்போது அதன் கனம் 9% அதிகரிப்பதனால் ஏற்படும் அமுக்கம் பாறைகள் பிளக்க ஏதுவா கிறது. இச்செயல்முறை தொடர்ச்சியாக நிகழுமிடங்களில் பாறை கள் விரைவாக அழிவடைகின்றன. குறிப்பாக, படைகள் மூட் டுக்கள், நுண்துளைகளைக்கொண்ட அடையற்பாறைகளே இச்செயல்முறையால் அதிகமாக அழிவடைகின்றன. அப் பாறைகள் நீரிற்படிவுசெய்யப்பட்ட அடையல்களின் திரட்சியி னால் உருவாகியமையால், அவற்றிலுள்ள கணிப்பொருள் மணி களுக்கிடையிலும் படைகளுக்கிடையிலும் நீர் சிறிதளவாவது தங்கியிருந்து உறைந்து உருகுவதனால்தான் அவை பிளந்து பிரிந்து அழிகின்றன. ஆனால், கருங்கல், எரிமலைக் குழம்புப் பாறை போன்ற தீப்பாறைகள் இம்முறையில் பாதிக்கப்படுவது @@@@ya
(i) உறைபனி உப்புதல் (பொருமுதல் (Frost Heaving) மண்வலயத் தின் கீழ்ப்பகுதியில் உறையும் பணியானது, படைபடையாக மேல் நோக்கி வளர்வதனால்(பொருமுவதனால்) மண்படையும் பொருமி அழிதலை இச்செயல்முறை உணர்த்துகிறது. இவ்வாறு குளிர் பிர தேசங்களில் கீழ் மண்படை உறையும்போது அப்பகுதியிலிருந்து மயிர்த்துளைகளூடாக (Capilary மேலிழுக்கப்படும் நீர் அங்குள்ள பணிக்கட்டியின் மேற்பரப்பில் பளிங்குருவாகும். அப்போது சிறிது நீர் பனிக்கட்டியின் மேற்பரப்பில் திரைபோலத் தங்குவதனால் கீழ்மண்படையிலிருந்து நீர் மீண்டும் மேலெழ முடிகிறது. இம் முறையில் மேலெழும் நீர் உறைவதனால், பனிக்கட்டிப்படை பெரிதாக வளர்கிறது. இதன் விளைவாக மேல்மண்படையும் அதி லுள்ள பாறைகளும் மேலுயர்த்தப்படுவதால் அவை வானிலை யாலழிவுக்குட்படுகின்றன. நீண்ட குளிர்காலத்தையுடைய பிர தேசங்களிலும் ஆண்டில் நீர் பலமுறை உறைநிலையை எட்டும் பிரதேசங்களிலும் இச்செயல்முறை முக்கியமானது. குளிர்காலத் தில் ஊசிப்பனிக்கட்டி (Needle ice) உருவாகுமிடங்களிலும் முன் விபரிக்கப்பட்ட முறையில் மேல் அண்படை பாதிக்கப்படலாம்.
(i) பளிங்கு வளர்ச்சி (Crystal growth) பலவகையான கரையக் கூடிய உப்புக்களின் படிவு வீழ்ச்சியினால் உருவாகின்ற பளிங்கு கள் பாறைகளின் நுண்துளைகளிலும், மூட்டுக்களிலும் வளர்வத தனால் பாறைகள் அமுக்கப்பட்டு உடைந்து அழிகின்றன. கல் சைற், கிப்சம், பாறை உப்பு போன்றவை இவ்வாறு கரைசலாகக் காணப்படும் சில கணிப்பொருட்களாகும். 'பளிங்குவளர்ச்சி "

வானிலையாலழிதல் 翼$5
ஒட்டுறுதி குறைந்த பாறைகளையே பெரிதும் பாதிக்கின்றது. அதன் தாக்கம் அதிகரிப்பதாயின் விரைவான ஆவியாக்கத்தின் மூலம் ஆவி நிரம்பில் நிலையை அடையவேண்டும் அந்நிலைமை பெரும்பாலும் தாவரப்போர்வையற்ற பாலைநிலப்பிரதேசங்களி லும் சிலபோது கரையோரப்பகுதிகளிலும் உருவாகலாம். மேலும் முன்குறிப்பிட்ட முறையில் ஏற்படும் உப்புப்படிவுகள் மிகுதியால் விரிவடைவதன்மூலமும் பாறைகளின் அழிவை விரைவி படுத்தலாம்.
(iv) ay upass sa Sans (Dilatation | off loading) கீழ்ப்பகுதியிலிருக்கும் கருங்கல்லைப்போன்ற திரட்சியான பாறை தன் தமக்கு மேலுள்ள அமூக்கத்திலிருந்து இடுபடும்போது சிறிது ஓரிவடைவதனால் அல்லது மேலெழுவதனால் அப்பாறைகளில் ஏற்படும் தாக்கத்தை இது குறிக்கின்றது. அமுக்கவிடுகை () முன் னர் பணிக்கட்டியாறாக்கப்பட்ட பிரதேசங்களிலும் 12 நீண்ட காலமாக இயல்பான அரித்தலுக்குட்பட்ட பிரதேசங்களிலும் ஏற்படுகிறது. இவ்விரு சந்தர்ப்பங்களிலும் தமக்கு மேலுள்ள சுமை நீங்குவதனால் கீழுள்ள பாறைகளில் மூட்டுக்களும் வெடிப் புகளும் உருவாகும். பனிக்கட்டியாறாக்கப்பட்ட பிரதேசங்களி லுள்ள பாறைகளில் ஏற்படும் பிளவுகளுக்கூடாக இரசாயனக் கரைசல்கள் உட்புகுவதனாலும் அவை அழிவடைகின்றன. அதே சமயம் அவை மேற்பரப்புக்குச் சமாத்தரமான தகடுகளாகப் l୩ fig தும் அழிவதுண்டு. இதனை அமெரிக்க நூலாசிரியர்கள் திக႕မ္ဘာ့ဓါး) (sheeting) என்பர் ஆனால் பாறைகள் வளைவான தகடு களாகப் பிரித்தழித்தலைப் படைகழற்றல் (Exfoliation) எனவும்
குறிப்பிடுவதுண்டு படைகழற்றல் (புவியின் கீழ் புதைந்திருக்காத) மேற்பரப்புப் பாறைகளை மட்டுமே பாதிக்கின்ற ஒரு டுரு:பல்
முறையாகும். இவ்வாறு படைகழற்றிய பலபாறைத்திணிவுகள்
குமிழ்வடிவாகக் காணப்படும்போது அவற்றைப் படைகழற்றிய குமிழ் என்பர் பாறைப்படைகள் வெங்காயத்தின் தோல் உரி
வதைப் போலக் கழல்வதனால் இச்செயல்முறை e Ganës si U.
வானிலையாலழிதல் எனவும் வேடிக்கையாகக் குறிப்பிடப்படு
கிறது.
புவியோட்டின்
அண்மைக்கால ஆய்வுகளின்படி படைகழற்றல், வெப்பமா றங்கள் உட்படச் சிக்கலான வேறுசில் செயல்முறைகளின் விளை வாக ஏற்படுவதாகத் தெரியவந்துள்ளது. உதாரணமாக இயரா நிவாடா மலைப்பகுதியிற் காணப்படுகின்ற படைகழற்றிய குமிழ் கள் அமுக்க விடுகையினாலும், நீண்டகால, நாளாந்த வெப்ப

Page 74
盧讚魯 புவிவெளியுருவவியல்
மாற்றங்களினாலும் உருவாகியதாக நம்பப்படுகிறது. அதே சமி யம் தென்னாபிரிக்காவிலுள்ன தளத்திடைக் குன்றுகளும் இச் செயல் முறையினாற் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், சுரங்கங்களில் மேற்படைப் பாறைகள் அகற்றப்படுவதனால் சுமை நீங்கும். அடித்தளப் பாறைகளிலும் தகடாகும் தன்மை காணப்படுவதாக வும் ஆய்வுகள் சுட்டுகின்றன. ஆனால் சில ஆய்வாளர்கள். தக டாதல், படைகழற்றல் என்னும் செயல்முறைகள் எல்லாவிடங்க ளுக்கும் பொருந்தாவெனவும், அவை நிலத்தின்கீழ் ஒருபொழு தும் இருந்திருக்காத அடையற்பாறைகளிலும், எரிமலைப் பாறை களிலும் காணப்படுவதாகவும். அதற்குக் குறைத்தல், மற்றும் முற்கால (அல்லது இப்போதும் இடம்பெறும்) பக்கவமுக்கமே காரணமாகலாம் எனவும் கூறுகின்றனர். அஃதெவ்வாறாயினும் படைகழற்றல் ஒன்றுடனொன்று இணைந்த பொறிமுறை, இர சாயனகருவிகளினால் ஏற்படுவதாக இப்பொழுது நம்பப்படுகிறது.
(w) தாவரங்கள் பிராணிகள் இெயூல் : தாவரங்களின் வேர்கள் பாறைகளிற்காணப்படுகின்ற நுண்துளைகள், வெடிப்புகளுக் கூடாகச்சென்று அவற்றைப்பிளத்தல் சாதாரண காட்சியாகும். வேர்கள் பாறைகளைப் பிளக்கும்போது நீ ரு ம் அ வ ற் நூடாகச் செல்வதற்கு வாய்ப்பு ஏற்படுவதனால் அது வும் பாறைகளின் அழிவுக்கு அடிகோலும், தாவரங்களைத்தவிர முயல், மண்புழு போன்ற பிராணிகளின் தோண்டும் செயலும் [[Dଜର୍ଦା துர்வையாக்குவதற்கு உதவுகிறது. இவையாவும் பொறிமுறையான அழிவுகளாம்.
(i) பிறகாரணிகள் : புல்நிலம் பற்றைக்காடு, காடு, என்பவற் றில் ஏற்பட்டுப்பரவும் தீயானது மேற்பரப்பு மண்படையையும் வெளியரும்பு பாறைகளையும் சூடாக்குவதன் மூலம் அவை விரை வான வானிலையாலழிவதற்கு வழிவகுக்கின்றன.
8 4 இரசாயன வானிலையாலழிவு
இது சில வானிலையாலழிவுக் கருவிகளின் செயல்பாடுகளி னால் பாறைகளின் கணிப்பொருட்சேர்க்கை மாறுதல், புனரமைக் கப்படுதல், கணிப்பொருட்கள் மீளப்பரப்பப்படுதல் என்பவற்றை உள்ளடக்கும் செயல்முறையாகும். இதன்விளைவாகப் பாறைகளி லுள்ள சில கணிப்பொருட்கள் கரைக்கப்படலாம்3 அல்லது முற் றாக நீக்கப்பட்டுப் புதிய கணிப்பொருட்களும் உருவாக்கப்பட No fra jäFishBA

வானிலையாலழிதல் 37
நீர், இரசாயனமுறையான வானிலையாலழிவை ஏற்படுத் தும் பிரதான கருவியாயிருப்பதனால், பாறைகளின் அமைப்பு மணியுரு (இழையலமைப்பு) உட்புகவிடும் தன்மை நுண்துளைத் தன்மை ஆகியன அதன் செயல்பாட்டைப் பெரிதும் பாதிக்கும் காரணிகளாயுள்ளன. பொதுவாக தூய்மையான நீரைவிட வாயுக் கலப்புள்ள மழைநீரே இரசாயனமுறை வானிலையாலழிவை அதிகமாவும் துரிதமாகவும் ஏற்படுத்துகிறது. மழை பெய்யும் போது காற்றிலுள்ள ஒட்சிசன், காபனீரொட்சைட் போன்ற வாயுக்கள் கரைந்து நீருடன் கலக்கின்றன. அத்துடன் மழைநீர் மண்படைக்கூடாகக் கீழிறங்கும்போது அழுகிய இலை, குழை, வேர் என்பவற்றினால் உண்டாகும் காபனீரொட்சைட்டும் அத னுடன் கலக்கிறது. அதேபோல் பாறைகளின் நுண்துளைகளிற் காணப்படும் ஒட்சிசனும் மழைநீருடன் கலக்கின்றது. இவ்வாறு வாயுக்கள் கலப்பதனால் மழைநீர் பாறைகளின் உறுதியைக் குலைத்தும், அவற்றைப்பொருமச்செய்தும், புதியகரைசல்களை உருவாக்கியும் பலவாறு செயல்பட்டு அவை எளிதாக அழிவடைய உதவுகிறது.
இரசாயன வானிலையாலழிவு 5 முறைகளில் ஏற்படுகிறது. அவையாவன, (1) கரைதல், (2) ஒட்சியேற்றம் (3) நீரேற் றம் (4) நீர்ப்பிரிகை (5) காபனேற்றம் என்பனவாம்.
(1) கரைதல் பொதுவாக இரசாயனவானிலையாலழிவின் முதற்கட்டமாக இடம்பெறுவது இச்செயல்முறையெனலாம். கறி யுப்பு. கிப்சம் ஆகியன மிகவிரைவாகவும் காபனேற்றுகள் ஒர ளவு விரைவாகவும் நீரில் இரையக்கூடியன. இவற்றில் உப்பும் கிப்சமும் வரண்ட காலநிலம்ைபிரதேசங்களில் நீர் ஆவியாதல் மூலம், நிலப்பரப்பில் திரள்கின்றன. இச்செயல்முறை பான காலநிலைப் பிரதேசங்களில் இடம்பெறுவதில்லை.
(2) ஒட்சியேற்றம் : ஒட்சிசன் வேறுமூலகங்களுடனும் சேர்வை களுடனும் இணைவதனாலேற்படும் இரசாயனத்தாக்கமே இது வாகும். நீர் வெப்பம் ஆகியன இதற்கு உதவுகின்றன. கந்தகம், இரும்பு, மங்கனீசு முதலியன ஒட்சிசனுடன் எளிதில் சேரக்கூடிய மூலகங்களாகும். இதனால் இவை காணப்படுகின்ற பைறோக்சீன் ஹோன் பிளென், பயோரைற், ஒலிவைன் போன்ற #cia பொருட்கள் ஒட்சியேற்றப்படுவது சாதாரணமானது இதன் விளைவாக இம்மூலகங்களிற் காணப்படும் இரும்பு பெரிக் ஒக் சைட் (ஹேமரைற்ற அல்லது விமோனைற் ஆக மாறுகிறது,

Page 75
巫岛& புவிவெளியுருவவியல்
என்கிறோம். அது
இத்தகைய பெரிக் கட்டையே துரு (கறள்)
காணப்படும்.
பழுப்பு, மஞ்சல் அல்லது சிவப்பு நிறத்துடன் பொதுவாக, ஒட்சியேற்றம் ஈரலிப்பான வெப்பகாலநிலைப்பிர தேசங்களிலேயே மிகமுக்கியமானது. அன்றியும் இச்செயல்முறை நீர்மேடைக்கு மேலுள்ள பாறைகளையே பெரிதும் பாதிக்கின்றது.
(3.) நீரேற்றம்: நீர் பாறைகளினால் உறிஞ்சப்படுவதையும், சில சேர்வைகளுடன் இணைவதையும் இச்செயல்முறை குறிக் கும். நீரேற்றப்பட்ட பாறைகளிலுள்ள கணிப்பொருட்கள் பொரு மிக்காணப்படும் களிக்கல் நீரேற்றப்படுவதனால் உண்டாகும் களி அத்தகையது அத்துடன் அத்தகைய பாறைகளில் பளிங் குருத் தன்மை குறைவதோடு அவற்றின் கனமும் அதிகரித்துக் காணப்படும். இவ்வாறு கருங்கல்லானது மண்ணாக மாறும்போது வேறு இழப்பில்லாவிட்டால் அதன் கனம் 88% அதிகரிக்கும். மேலும் கல்சியம் சல்பேற் நீரேற்றப்பட்ட பின் கிம்சம் ஆக மாறு கிறது. நீரேற்றம், நீரில் உருவாகிய அடையற்பாறைகளைக் குறைவாகவும் பெருமணிகளைக் கொண்டதீப்பாறைகளை அதிக மாகவும் பாதிப்பதோடு கணிப்பொருட்களை ஒட்சியேற்றம் காப னேற்றம் போன்ற பிறசெயல்பாடுகளுக்கு உகந்த நிலைக்கும் மாற்றுகிறது.
(4) நீர்ப்பிரிகை / நீர்ப்பகுப்பு (Hydrolysis): நீருக்கும் சில கணிப்பொருட் சேர்வைகளுக்குமிடையே ஏற்படும் இடைத்தாக் கமே இதுவாகும். இதன் மூலம் பலமற்ற அமிலம் அல்லது அடித் தளம் (Base) உருவாதவினால் களிக்கல்லைப்போன்ற சிலிக்கேற் றுக்கணிப்பொருட்களில் பெரும்பாலானவை பெரிதும் பாதிப்புற்று அழிகின்றன. உதாரணமாக, ஒதோகிளாஸ் வகையான களிக்கல் இம்முறையில் உருக்குலைந்து ‘கேயோலின் (Kaolinita) எனப்படும் வெண்களியாக மாறுகிறது. களிக்கல் பாறைகளில் அதிகளவில் காணப்படுவதனால் இச்செயல்முறை முக்கியமானதாகக் கருதப் படுகிறது. இவ்வாறு? படிகம் ஒன்றைத்தவிர்ந்த ஏனைய கணிப் பொருட்கள் நீரேற்றம் நீர்த்தாக்கம் என்பவற்றினால் களிக்கணிப் பொருட்களாக மாற்றப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஒகைற், ஒலிவைன், ஆகியனவும், இச்செயல் முறையாற் அதுபோலவே பசால்ற் பாறையும்
பாதிக்கப்படுவதாகவும்
மாறுவதாகவும்
நீர்ப்பகுப்பினால் போக்சைற் (Bauxite) ஆக தெரியவருகிறது.

வானிலையாலழிதல் 39
(5) காபனேற்றம் மழை நீருடன் காபனீரொட்சைட் கலப் பதனால் உருவாகும் காபனிக் அமிலத்தின் செயல்பாட்டினால், சோக்கு, சுண்ணாம்புக்கல், தொலொமை ற் போன்ற பாறைகள் கரைக்கப்படுவதை இச்செயல்முறை குறிக்கும். காபனிக் அமிலத் இன் தாக்கத்தினால் சில கணிப்பொருட்கள் எளிதில் கரையக் கூடிய காபனேற்றுக்களாக்கப்படுவதே இதன் சிறப்பம்சமாகும். இவ்வாறு காபனிக்கமிலம் பைறைற் எனும் இரும்பு சல்பைட் டைத் தாக்குவதால் இரும்புக்காபனேற்றும் சுண்ணாம்புப் பாறை யைத் தாக்குவதால் கல்சியமிருகாபனேற்றும் உருவாகின்றது. இத் தகைய காபனேற்றுக்கள் தாம் தோன்றிய தாய்ப்பாறையைவிட விரைவாகக்கரையக்கூடியவை. உதாரணமாக, கல்சிய மிருகPப னேற்று, காபனேற்றைவிட 25 பங்கு அதிகமாகக் கரையக்கூடி யது. காபனிக் அமிலத்தைத் தவிர அழுகிய பொருட்களிலிருந்து உருவாகும் நைத்திரிக் அமிலம் மற்றும் தொழிற்சாலைகளில் உரு வாகும் சல்பூரிக்கமிலம் ஆகியனவும் காபனேற்றுக்களைக் கரைக் கக்கூடியவை. ஆனால் படிகம், மஸ்கோவைற் என்னும் இரண் டும் காபனிக் அமிலத்தால் கரைக்கப்பட முடியாதவையாம். அதே சமயம் ஒதோகிளேஸ், ஒலி வைன் போன்றவை அ வ்வமி லத்தால் எளிதாக கரைக்கப்படக்கூடியன.
8 : 5 கோளவுரு வானிலையாலழிதல்:
இது படை கழற்றலைப்போல் சிறிய அளவில் நிகழும் முற் றிலும் இரசாயன முறையான செயல்பாடாகும். இது நுண்மணி களைக்கொண்ட ஒரினப்பாறைகளிலேயே அதிகமாக ஏற்படுகிறது. இம்முறையான அழிவில் கரைக்கப்பட்ட வாயுக்களைக் கொண்ட நீர் பாறைகளின் மூட்டுத்தளங்கள் ஒன்றையொன்று வெட்டு மிடங்களில் உட்செல்வதனால் அப்பாறைகள் பொருமிச்சிதைவுக் குட்படும். அதேசமயம் பாறைகளின் மூலைகளிலும் விளிம்புகளி லும் அதிகசிதைவு ஏற்படுவதனால் அதுகோளவுருவைப் பெறும் இம்முறையில் சிதைவடையும் ஒரு பாறையின் மேலோடு முற் றாக நீங்கும்போது அதன் உட்பாகம் வெளிப்படும். பின்னர், அது வும் முன் கூறப்பட்ட முறையில் அழிந்து படைகழற்றும் போது பாறை முன்னரிலும் அதிக கோளவுருவைப்பெறும். இவ்வாறு அழிவுறும் பாறையில் எஞ்சியிருக்கும் உட்பாகம் அல்லது மையக்கல் Core Stone) எனப்படும்.

Page 76
40 புவிவெளியுருவவியல்
8 : 5 இரசாயன முறை அழிவில் உயிரினங்களின் பங்கு.
இரசாயனச் செயல்முறைகளின் வேகத்தை நிர்ணயிப்பதில் உட்செல்லும் நீர் முதலிடத்தை வகிக்கிறது. அந்நீரின் அளவை பும், இயல்பையும் தாவரங்கள் கட்டுப்படுத்துகின்றன. உதாரண மாக, தாவரப்போர்வையும், அழுகிய பொருட்களும் கீழ்ச்செல் இலும் நீரைக்குறைக்கும். அதேசமயம் தாவரங்களின் செருகியசிக்கலான வேர்கள் மண்ணையும் பாறைகளையும் மெத்தை போல மூடுவதனால் அவை அரிப்பிலிருந்து பாதுகாக்கப்படுகின் றன. சில தாவரங்கள் நீரை உறிஞ்சுவதன் விளைவாகவும் நிலத் தில் நீரின் தாக்கம் குறைகிறது. மேலும் தாவரங்களின் வேர்க விலிருந்து சுவாசம் வெளிவருவதனால் மண்ணிலுள்ள காற்றில் காபனீரொட்சைட்டின் அளவு அதிகரிக்கும். அது இரும்பு - மங் கனீசு சேர்வைகளின் கரையும் திறனைப்பாதிக்கும். அன்றியும் அழுகிய பொருட்களிலிருந்து உருவாகும் சில அமிலங்களும் உம் நைத்திரிக் அமிலம் ) வானிலையாலழிதலுக்கு உதவு கின்றன.
இவற்றைத் தவிர, நீரிலும் பாறைகளிலும் படிந்து வளரும் சில பாசியினங்கள் நீரின் அமில - உவர் நிலைமையை (PH விகி தம்) அதிகரிப்பதன் மூலமும், பாறைகளிலிருந்து நுண் ணிப மூல கங்களை அகற்றுவதன் மூலமும் அவற்றின் அழிவுக்கு உதவுகின் றன. அன்றியும் அவை காபனீரொட்சைட்டை வெளிவிடுவதனால் உருவாகும் காபோணிக்கமிலமும் பாறைகளின் அழிவுக்கு உதவு கிறது. ஹவாய் தீவிலுள்ள பாறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. தாவரங்கள் மட்டு மன்றி மண்ணில் வாழும் நுண்ணுயிரிகளும் இரசான வானிலை யாலழிவைப் பலவாறு தூண்டுகின்றன. இவ்வாறு பற்றியா பங்கி ஆதியன பொருட்களை அழுகச்செய்யும்போது சேதன அமி லங்களை உருவாக்குவதோடு மண்ணிலுள்ள காபனீரொட்சைடின் அளவும் அதிகரிக்கும் (2) காற்றில் வாழாப் பற்றிரியா (Anaerobic) இரும்பை பெரிக் நிலையிலிருந்து பெரஸ் நிலைக்கு அல்லது உலோக நிலைக்கு மாற்றுவதன் மூலம் அதிலிருந்து ஒட்சிசனைப் பெறுகின்றன. இம்முறையில் பெறப்படும் இரும்புச்சேர்வைகள் நீரில் விரைவாகக் கரைவதனால் மண்ணிலிருந்து எளிதாக நீக் கப்படுகின்றன. லெமொனைற் என்னும் மூலகம் இவ்வாறே கரைத் த பூழி கி ன் ற து சில பற்றி ரி யாக்க ள், காற்று, நீர், மண், அழுகிய பொருள் என்பவற்றிலிருந்து நைத்திரிக் அமிலத்தை உண்டாக்கிப் பாறைகளின் சிதைவுக்கு உதவுகின்றன,

வானிலையாலழிதல் Η 4
இரசாயன வானிலையாலழிவுச் செயல்முறைகளின் விளை வாக (i) பாறைகளின் கட்டமைப்பு குலைகிறது, (i) கரைசல்கள் உருவாக்கப்படுகின்றன, (i) பழைய கணிப்பொருட்களினிடத்தில் அவற்றிலும் அதிக கனமுடைய புதிய கணிப்பொருட்கள் உரு வாகின்றன. இவற்றின் தேறிய விளைவாகப் பாறைகள் பொறி முறையில் எளிதாக அழிவடைகின்றன.
8 : 6 வானிலையாலழிதலின் முக்கியத்துவம்:-
நிறவுருவங்களின் பரிணாம வளர்ச்சியில் வானிலையாலழி தல் ஒரு முக்கியமான செயல்முறையாகும் அது (1 அரிப்புக்கருவி களின் தொழிற்பாட்டுக்கு (அரித்தல், கொண்டுசெல்லல், படிவு செய்தல்) அவசியமான பாறைத்துண்டுகள் துணிக்கைகளை வழங் குவதன் மூலம் பல்வேறு நிலவுருவங்கள் உருவாக உதவுகிறது. (2) இவ்வாறு உருவாகும் நிலவுருவங்களில் மாற்றங்களை உண் டாக்குவதன் மூலம் நிலத்தோற்றத்தைப்பாதிக்கிறது. (3) "மண்" ணாக மாறும் கருப்பொருட்களைப் பதனிட்டு வெவ்வேறு கால நிலை வலயங்களில் வேறுபட்ட மண்வலயங்களை உருவாக்கு கிறது. இவ்வாறு உருவாகும் மண் உலகெங்கும் மனிதனின் பயிர்ச்செய்கை முயற்சிகளுக்கு மூலாதாரமாயுள்ளது. (4) வாணி லையாலழிதலினால் பெறப்படும் அடையல்களிலிருந்து உருவாகும் அடையற் பாறைகள் எரிபொருள் மூலவளங்களை (உம். பெற் றோலியம் இயற்கை வாயு) கொண்டிருப்பதனால் அது அவற் றின் உருவாக்கத்திற்கு மறைமுகமாக உதவுகின்றது எனலாம்.
8 (g) gG) U GIMTGDoar en as 6in (Mass Movements)
பாறைகள், உடைகற்கள், "புவி எனப்படும் கல்லும் மண்ணும் கலந்த குவியல், மண், சேறு முதலியன நீரினால் நுகைப்படைந்து சாய்வுகள் வழியே கீழிறங்குவதையே 'திரளசைவுகள்" என்இன் றோம். அவை புவியீர்ப்பு முறையில் இடம்பெறுகின்றன. அதே சமயம் பெருமழையும் உட்புகும் நீரும் அவற்றுக்குத் துணை செய்கின்றன. திரளசைவுகள் ஆள் சை..) சாய்வுகளின் உருவவியலுடன் தொடர்புள்ளவை அவற்றின் அசைவு முறை களும் வேகமும் வேறுபட்டவை. பொதுவாக பாய்ச்சல் (Flow) வழுக்குகை (Side) வீழ்ச்சி, சறுக்கல் (Stump) ஆகியன ஒப்பள வில் விரைவாகவும், ஊரல், நகர்ச்சி, ஆகியன மெதுவாகவும் நிகழ்கின்றன. விரைவான அசைவுகள் எப்பொழுதும் நீர் மிகுப்ப தனாலேயே ஏற்படுகின்றன.

Page 77
14 2 புவிவெளியுருவவியல்
8 ஆ - 1 மெதுவான அசைவுகள் (i) day partygi (Soil creep
மண் ஊரல் (நகர்வு) என்பது கண்ணுக்குப் புலனாகாமல், மெதுவாகவும், ஒரேயளவிலும் ஏற்படும் அசைவாகும். மண்ணி லுள்ள நுண்துளைகளுக்கூடாக உட்செல்லும் நீர் மண் ஊரலை உண்டாக்கும் முக்கியமான காரணியாகும். வெப்பமாற்றங்களி னால் மண்விரிந்து சுருங்குதல், நீர் உறைந்துருகல், மண் ஈர மாகி உலர்தல் முதலியனவும் தாவரங்கள் பிராணிகள் மற்றும் மனிதனின் செயற்பாடுகளும், மண்நகர்ச்சிக்கு உதவுகின்றன. உயிர்த்தாவரங்களின் வேர்கள் பரவுமிடங்களிலும் தாவரங்கள் அழிவுற்ற இடங்களிலும் மண்ணில் வெடிப்புகளும் துளைகளும் உண்டாகும். அதேசமயம் புழுக்களும் சில பிராணிகளும் மண் ணைக் கிளறித் தூர்வையாக்குகுன்றன. இக்காரணங்களினால் நீர் மண்ணுட்புகுந்து மண்ணுரலைத் தூண்டும், அன்றியும், மரங் கள் பலமாக அசைவதனாலும் கனமான களிமண்ணில் ஏற்படும் வெடிப்புகளை நீர் நிரப்புவதனாலும் மண்ணுரல் உண்டாக லாம். பொதுவாக ஊரலின் வேகம் ஆண்டிற்கு ஒரு சில மீற்றர் அல்லது அதற்குக் குறைவாகவும் இருக்கலாம்,
(iii. Lo arfor GGOOT AT "Litið (Solifluction:)
இது சாய்வு முழுவதையும் மூடிய அசைவாகும். இது மண் னகர்ச்சியை விடச்சற்று வேகம கூடியதுமாகும். உறைபனி காணப் படும் பகுதிகளில் (உம் ஆட்டிக்) இது அதிகமாக இடம்பெறு கிறது, அங்கு உறைபனி உருவாவதனால் உண்டாகும் நீர் மண் ணுடன் கலப்பதனால் ஒரு வகைச்சேறு உருவாகிறது. அது விறைப்பான நிலத்தின்மேல் எளிதாக ஒடிச்செல்லும். இவ்வகை யான நகர்ச்சி 20 - 30° உள்ள மென்சாய்வுகளிலும் ஏற்படும். நிலையாக உறைந்துள்ள கீழ்மண், தாவரமின்மை, உறைபனி உருகுதல் போன்ற நிலைமைகள் இதற்கு உதவுகின்றன.
i) பாறைப்பணிக்கட்டியாறுகள் (Rock Glacier)
குளிர் காலநிலைப்பிரதேசங்களிலுள்ள குத்தான மலைச் சாய்வுகளிற் குவியும் உடைகற்குவை, ஒடுக்கமான பள்ளத்தாக்கு களில் நாக்கைப்போல் நீண்டிருக்கும். அவற்றில் சிறிதளவு பணிக்கட்டியும் மண்ணும் கலந்து காணப்படலாம். அப்பாறைத் துண்டுக்குவியல் பனிக்கட்டியாற்றைப் போல மெதுவாக அசைந்து கீழிறங்குவதனால் இப்பெயரைப்பெறுகின்றது,

திரளசைவுகள் 143
(ty) உடைகற்குவை 5533 (Talus Creep) -
இது மண்ணகர்ச்சி ஏற்படும் முறையில் மெதுவாக ஏற்படு கின்றது. ஆயினும் அதிகமழை அல்லது பணிக்கட்டி உருகுதல் காரணமாக உடைகற்கள் நீரில் ஊறுவதனாலும், நுகைப்படை வதனாலும் இது சடுதியான, வி  ைர வா ன அசைவாகவும் மாறக்கூடும்.
8. ஆ 2 விரைவான அசைவுகள்
(1) பாய்ச்சல் வகையான அசைவுகள் - இவை பலவகை யானவை. இவ்வகையான அசைவுகள் சில போது ஒட்டுத்திரவம் (உம் பசை) போல ஒரளவு மெதுவாகவும், நீர் மிகுந்த நிலையில் எப்பொழுதும் வேகமான அசைவுகளாகவும் வெளிப்படும். சேற் றுப் பாய்ச்சல், உடைகற்பாய்ச்சல், புவிப்பாய்ச்சல் ஆகியன விரைவான அசைவுகளாகும்
(i) சேற்றுப் பாய்ச்சல் - (Mud Flow) இது பெரும்பாலும் குத்தான சாய்வுகளில் நுண்மண்ணுடன் நீர் அ தி க ம ர் க க் கலப்பதனால் ஏற்படுகிறது. இது எரிமலைக்குன்றுகளிலும், குறைவறட்பிரதேசங்களிலும் ஏற்ப டலாம். எரிமலைக்குன்று களின் சாய்வுகளிற் குவிந்திருக்கும் இறுக்கமற்ற படிவுகள் மழை நீரினால் நுகைப்படையும் போது கீழிறங்கும். இதை லாகார் ( ahar) என்பர். அதேசமயம் பாலைநிலப்பகுதிகளில் சடுதியாக ஏற்படும் முகிலுடைப்பின் விளைவாக அங்குள்ள (இடைக் கிடை பாயும் ஆறுகளில் நீர் பெருகும் போது அவை மேற் பரப்பிற் சொரியலாகக் காணப்படும் பொருட்களை வாரிச் செல்லும் இத்தகைய தகட்டுப் பெருக்குகள் (Sheet Floods) உன்மையில் சேற்றுப்பாய்ச்சல்களே. தாவரமின்மை இவற்றுக்
குத்துணை செய்யும்
என்பது பாறைத்துண்டுகளும் இறுக்கமற்ற அடையல்களும்
கலந்து அசைவதாகும். இது பெருமழையினால் ஏற்படும்
(i) பாறைத்துண்டுக்குவைப் பாய்ச்சல் :- (Debris Flow)
பாறைத் துண்டுக்குவைப்பாய்ச்சல் என்பது பா  ைற க ள். மண், தாவரப்பொருட்கள் ஆகியன கலந்து அசைவதாகும். புவிப்பாய்ச்சலும், பாறைத்துண்டுக்குவைப்பாய்ச்சலும் பெரும் பாலும் பள்ளத்தாக்குகள் வழியாகவே ஏற்படுகின்றன.

Page 78
|44 /аў? ()
8. ஆ. 3 வழுக்குகை (Side) முறையான அசைவுகள்
இவை நிலவழுக்குகை ( Land Side) பாறைவழுக்குகை SLLLLLLL LLLL LLLLL S TT TTTTTT TTT T T S T TT SLLLLLLS Side) என்பவற்றையும் பாறைகள் மற்றும் உடைகற்களின் வீழ்ச்சியையும் உள்ளடக்கும். இவை ஒரளவு விரைவாக நிகழும் அசைவுகளாகும் , மேலும், எல்லா வித மா ன வ ழு க் கல் அசைவுகளும் நறுக்குத்தளங்கள் (வழுக்கற்றளங்கள்) மேலாகவே இடம்பெறுகின்றன நிலவழுக்குகை (நிலச்சரிவு) என்பது பாறைத் துண்டுக்குவியல் நீரினால் நுகைப்படைந்து விரைவாகக்கீழிறங் குவதாகும். இவ்வாறு கீழிறங்கும் பொருட்கள் இறுக்கமற்றுச் செர்ரியலாக அசையும். நில வழுக்குகை குத்தான பள்ளத்தாக்குச் சாய்வுகளிலும், மலைப்பிரதேசங்களில் போக்குவரவுப்பாதைகள் அமைப்பதற்காகச் சாய்வுகள் வெட்டப்பட்ட இடங்களிலும் அதிகமாக ஏற்படும் பாறைகளிலுள்ள மூட்டுக்களும் பிளவுகளும் இதற்கு உதவும். பாறை வழுக்குகை உடைகற்குவை வழுக்குகை ஆகியன பாறைப் படைகள் மேற்பரப்புக்குச் சமாந்தரமாகவும் குத்தாகவும் சரிந்து காணப்படுமிடங்களில் ஏற்படும்.
சறுக்கல் என்பது சுழற்சித்தன்மையுள்ள அசைவாகும் இவ் வகையான அசைவின் போது பொருட்கள்ஒன்றை விட்டொன்று பிரியாதிருக்கும். அன்றியும் ஒரினமான மணியுருவான பொருட் களில் (உம் களி) நிகழ்ந்தால் அது ஏற் பட்ட இடம் ஒரு கரண்டியைப்போலக்காட்சியளிக்கும். சறுக்கல் பெரும்பாலும் மேற்பகுதி குழிந்த சாய்வுகளின் முறிவுத்தளம் வழியே நிகழும்.
பாறை வீழ்ச்சி (Rock Fa:1) உடைகல் வீழ்ச்சி என்பவை நிலைக்குத்தான அல்லது தொங்குநிலையியிலுள்ள வெளியரும்பும் பாறைகளிலும், சரிவுப்பாறைகள் ஓங்கல்கள் மற்றும் வட்டக் குகை நுழைகழி என்பவற்றின் குத்தான சாய்வுகளிலும் ஏற்படும். இவ்வகையான அசைவுகளினால் பாறைத் துண்டுகள் தனித் தனியாகக் கீழேவிழும். பேரிறங்கி என்பது மிக விரைவாக இடம் பெறும் வழுக்குகை போன்ற அசைவாகும். இது பனிக்கட்டி அல்லது நீர் உடைகற்களுடன் கலப்பதனால் உண்டாகும்.

அத்தியாயம்- 9
logy
9.
D60 என்பதற்கு வெவ்வேறு துறையினர் வேறுபட்ட வரைவிலக்கணங்களைக் கொடுத்துள்ளனர். ஆனால் ஒரு புவி யியலாளனின் பார்வையில் நிலத்தை மூடியுள்ள பாறைகளின் சிதைவுப் பொருட்களின் மேல், சேதன, அசேதனப்பொருட்களின் சிக்கலான கலவையினால் உருவாகின்ற மெல்லிய படையே மண்ணாகும். இதை மேலும் விளக்கமாகக் கூறுவதாயின் வாணி லையாலழிவுக்குட்பட்ட பாறைகளின் பகுபொருட்களின் மீது உயிரினங்களின் தாக்கத்தினாலும், அப்பொருட்களுடன் நீர் வாயுக்கள், சேதனங்கள் ஆகியன கலப்பதனாலும் நீண்டகால எல்லையில் உருவாகின்ற முடிவுப்பொருளே மண் எனலாம். மண் சடப்பொருளாகிய பர்  ைற க  ைள உயிரினங்களுடன் இணைக்கும் ஒரு பாலமாக விளங்குகிறது.
மண்ணானது திண்மையான அசேதனப்பொருட்கள் சேதனக் கூட்டு, மண்ணிர், வாயுக்கள் மண்வாழ் உயிரினங்கள் என்னும் வேறுபட்ட மூலக்கூறுகளைக் கொண்டுள்ளது. மண்ணிலுள்ள அசேதனப் பொருட்களில் முக்கியமானது பாறைத்துணிக்கை களாகும், அவை திண்மையான கணிப்பொருள் மணிகளாகக் காணப்படும். அக்கணிப்பொருட்களின் வகை, விகிதாச்சாரம் போன்றவை தாய்ப்பாறையைப் பொறுத்து வேறுபடும். ஆயினும் அவற்றில் களி (அலுமினியம், சிலிக்கேற்) படிகம், இரும்பு, ஒக்சைடுகள், மைக்கா ஹோன்பிளேன்ட், ஒகைற் ஆகியன முக்கியமானவை. மண்ணிலுள்ள பாறைத்துணிக்கைகள் அதன் கனத்தில் 45% மாகும்
மண்ணிலுள்ள மற்றொரு அசேதனப்பொருள் நீராகும். அது மழை நீரின் ஒரு பகுதியாகும். மழை நீரில் ஒரு பகுதி மேற்பரப் பில் வழிந்தோடும் அதேசமயம் ஆவியாக்கம், ஆவியுயிர்ப்பு என்பவற்றால் ஏற்படும் இழப்புக்களும் போக மிஞ்சும் நீரே மிண்ணுTடு பரவுகிறது. ஆயினும் அந்நீரில் ஒரு பகுதி கீழிறங்கித்

Page 79
46 புவிவெளியுருவவியல்
தரைக்கீழ் நீருடன் சேர்ந்து விடுவதனால், மழை நீரில் ஒரு சிறு பகுதியே மண்துளைகளில் தங்குகிறது. இவ்வாறு மண்ணுடன் கலந்துள்ள நீரின் அளவு அதன் கனத்தில் 25% மாகும்.
மண்ணிலுள்ள மூன்றாவது அசேதனப்பொருள் வாயுக் களாகும். அவற்றில் காபனீரொட்சைட், நைதரசன், ஐதரசன், ஒட்சிசன் ஆகியன முக்கியமானவை. அவை வளி யி லி ரு ந் து நேரடியாகவோ, மழை நீருடன் கலந்தோ, நுண்ணுயிர்களின் செயற்பாட்டினால் பெறப்பட்டேர் மண்ணுடன் சேர்கின்றன. இவ்வாறு மண்ணிற்காணப்படும் பல்வேறு வாயுக்களின் அளவு அதன் கனத்தில் 25% மாகும்.
மண்ணின் சேர்க்கையில் சேதனப்பொருட்களின் அளவு 5% மாகும். அவை தாவரங்களிலிருந்தும் உயிரினங்களிலிருந்தும் பெறப்படுகின்றன. இலைகள், அழிவுற்ற தாவரங்களின் த ண் டு கள் , வேர்கள் முதலியன தாவரச் சேதனங்களாகும். இறந்த விலங்குகள், பூச்சி புழுக்கள் பற்றிரியா போன்றவற்றின் எஞ்சியபாகங்கள் உயிரினச் சேதனங்களாகும். மண்ணின் இன்னொரு மூலக்கூறு மண் வாழ் உயிரினங்களாகும் நன்கு விருத்தியடைந்த வளமான மண்ணில் 1 சதுர மீற்றரில் 10 இலட் சத்துக்கு மேற்பட்ட சிற்றுயிரினங்கள் செறிந்து வாழ்வதாகத் தெரிகிறது. இவை நுணுக்குயிரிகளான பற்றிரியம் முதல் பெரிய மண்புழுக்கள் வரை வேறுபட்ட 5 தொகுதிகளாக வாழ்ந்து மண்ணை வளப்படுத்துகின்றன.
9.2 மண்ணாக்கக்காரணிகள்:-(Soi Forming Factors)
மண்ணை உருவாக்குவதில் பல காரணிகளுக்குப்பங்குண்டு அவை ( . ) தாய்ப்பாறை (2) காலநிலை (3) இடவிளக்கம் (4) உயிரினங்களின் தொழிற்பாடு (5) காலம் என்பனவாம் இவற்றில் இடவிளக்கம் ஒர் கட்டுப்படுத்தும் காரணியெனவும் தாய்ப்பாறையும் காலமும், உயிர்ப்பற்ற காரணிகளெனவும், காலநிலையும் உயிரினங்களின் தொழிற்பாடும் உயிர்ப்புள்ள காரணிகள் எனவும் கருதப்படுகிறது.
(1) 5 Huis LIFT 500m: -
தாய்ப்பாறைகள் மண்ணின் முக்கியமான மூலப்பொருளான பாறைத் துணிக்கைகளை வழங்கினாலும், மண்ணின் தன்மையை நிர்ணயிக்கமாட்டா மாறாக, அவை அம்மண்ணின் தன்மையில் செல்வாக்குடைய ஒரு காரணியாகவே கணிக்கப்படுகின்றன.

இவ்வாறு மண்ணிலுள்ள கணிப்பொருட்களும் அதன் இழை யமைப்பும் (மணியுரு) தாய்ப்பாறையின் தன்மையில் கணிசமான அளவு தங்கியுள்ளன. உதாரணமாக மணற்பாறையிலிருந்து உருவாகும் மண் நுண்டுளைகளையும், உப்புகவிடுமியல்பையும் கொண்டது. இதனால் அது நீரைத்தாங்காது. அதேசமயம் 'களி' நீரை உட்புகவிடாது. அது போல் தூய்மையான சுண்ணப் பாறையிலிருந்து தோன்றிய மண் தூய்மையற்றபாறையிலிருந்து உருவாகிய மண்ணைவிடத்தடிப்பும் செழிப்பும் குறைந்தது: மேலும் பெல்சிக் (அமில) வகையர்ன கருங்கற் பாறையிலிருந்து மென்னிறமான மண் மெதுவாக உருவாகும் போது, மாபிக் வகையான பசால்ற் பாறையிலிருந்து கடும்நிறமுள்ள (எரிமலை) மண் விரைவாக உருவாகிறது. இவ்விதமாக மண்ணின் உருவாக் கத்தில் தாய்ப்பாறைகளின் செல்வாக்கு கணிசமாகக் காணப் படினும், காலப்போக்கில் , பிற காரணிகளின் தாக்கத்தினால், அது மறைந்து விடலாம்.
(2) இடவிளக்கம் (தரைத்தோற்றம்) :-
இடவிளக்கம் என்பது சிறப்பாக தரையின் குத்துய .." அதன் சாய்வுகளின் தன்மை என்பவற்றைக் குறிக்கும். தரையின் உயரம் குத்தான காலநிலை வலயங்களை உருவாக்கக்கூடியது. அது பொதுவாக வெப்பத்தைக் குறைத்துப்படிவு வீழ்ச்சியைக்கூட்டும்: தரைக்கீழ் நீரின் ஆழத்தைக் கட்டுப்படுத்தும் இவற்றின் மூலம் அது தாவரப்பரம்பலிலும் செல்வாக்குச் செலுத்தும். அதே சமயம் நீர் வடியும்முறை, வெள்ளப்பெருக்குகள், கீழ் நீர்ப் பாய்ச்சல், ஆகியன சாய்வுகளின் தன்மையினால் பெருமளவு கட்டுப்படுத்தப்படுகின்றன. பொதுவாக குத்தான சாய்வுகளில் வழிநீர் (கழுவுநீர்) அதிகரிப்பதால் மண்ணாக்கம் மெதுவாக் இடம்பெறுவதோடு மண்ணின்மேல் வலயமும் நன்கு விருத்தி படையாது. மேலும் உயரமான மலைகளின் உச்சிப்பகுதிகளில், சேதனப்பொருள் திரள்வதும் நீர் முறையரித்தலும் மட்டுப் படுத்தப்பட்டிருக்கும். ஆனால் பள்ளத்தாக்குகள், மென்சாய்வு கள், சமநிலங்கள் போன்றவற்றில் முன்குறிப்பிட்டவற்றிற்கு எதிரான நிலைமைகள் நிலவுவதனால் அங்கெல்லாம் ஆழமான் வளங்கூடிய மண்விருத்தியடையும். அன்றியும் இடைவெப்ப வலயத்தில் சூரியக்கதிர்வீச்சைப்பெறும் சாய்வுகளுக்கும் ஒதுக்குச் சாய்வுகளுக்குமிடையே மண் விருத்தியில் வேறுபாடுள்ளது. அங்கு சாய்வுகளின் அமைவுத் திசையின் செல்வாக்கு ஒரளவு அதிகமானது. மேலும் தரையிற் காணப்படும் சிறிய புள்ளங்

Page 80
48 புவிவெளியுருவவியல்
களுக்கும் திட்டுகளுக்குமிடையே மண்ணின் ஈரலிப்பு, உக்கலின் திரட்சி போன்றவற்றில் வேறுபாடிருப்பதை நாம் கண்கூடாகக் g; fr. GöröIF GITT .
(3) காலநிலை :-
மண்ணின் விருத்தியில் மற்றைய காரணிகளை விடக் கால நிலையே அதிக செல்வாக்குடையது. மண் காலநிலையைப் பிரதி பலிக்கும் ஒரு கண்ணாடி எனக்கருதப்படுகிறது. காலநிலையானது மண்ணாக்கத்தின் முதற்படியான வானிலையாலழிவைக்கட்டுப் படுத்துகின்றது; சேதனங்களை உதவும் தாவரங்களின் தன்மை, பரம்பல் ஆகியவற்றில் செல்வாக்குச்செலுத்துகிறது. தரைக்கீழ் நீரின் அளவை நிர்ணயிக்கின்றது. மேலும் காலநிலையானது வெப் பம், படிவுவீழ்ச்சி (மழை, மழைப்பனி) என்பவற்றின் மொத்த அளவு, பரம்பல், பருவகால வேறுபாடுகள் என்பவற்றின் மூலம் நேரடியாகவும் ஆவியாக்கம், ஆவியுயிர்ப்பு என்பவற்றின் மூலம் மறைமுகமாகவும் மண்ணாக்கத்தில் தனது செல்வாக்கைச் செலுத்துகிறது. உதாரணமாக ஆண்டு முழுவதும் உயர்வெப் பமும் அதிகமழையும் காணப்படும் மத்தியகோட்டுப் பிரதேசங் களில் பாறைச்சிதைவும், நீர்முறையரிப்பும் அதிகமாகவிருப்பத னால் அங்கு ஆழமான, ஆனால் வளங்குறைந்த செம்பூரான் (சரளை) மண்ணே உருவாகிறது. பருவகால மழை பெய்யும் பிரதேசங்களில் ஈரக் களிமண் நன்கு விருத்தியடைகிறது. அது போலவே ஆவியாக்கம், ஆவியுயிர்ப்பு, என்பன அகதிமாகவுள்ள வரண்ட காலநிலைப் பிரதேசங்களில் காரத்தன்மையுள்ள மண்ணும் , நீண்டகுளிர் காலத்தைக் கொண்ட முனைவயற் பிர தேசங்களில் சதுப்புத் தன்மையான அல்லது முற்றா நிலக்கரியைப் போன்ற மண்ணும் உருவாகின்றது. மேலும், கருங்கல் வெவ் வேறு காலநிலைப் பிரதேசங்களில் வேறுபட்ட மண்களை (உம் பொட்சோல் சேணோசம்) உருவாக்குவதற்கும், வேறுபட்ட பாறைகள் (உம் பசால்ற், கருங்கல், நுண்மண்படிவு) ஒரே கால நிலைப் பிரதேசத்தில் ஒரே மாதிரியான மண்ணை உருவாக்கு வதற்கும் (உம் இரசிய தெப்பு வெளிக் கிருமண்) காலநிலையின்
செல்வாக்கே முக்கியமான காரணமாகும்.
(4) தாவரங்கள், உயிரினங்களின் பங்கு:
மண்ணை உருவாக்குவதில் தாவரங்களுக்கும் பல்வேறு உயிரினங்களுக்கும் தனியான பங்குண்டு தாவரங்களை எடுத்துக்
 

Logcm 49
கொண்டால் அவற்றின் தாக்கம் பின்வருமாறு புலப்படுவதைக் காணலாம். முதலாவதாசு, தாவரங்களின் சிதைவினால் பாறை களிலுள்ள கணிப்பொட்களின் சி  ைத வு தூண்டப்படுகிறது. இரண்டாவதாக தாவரச்சேதனங்கள் அழுகி, உக்கலாகி (இதை மட்கு எனவும் கூறுவர்) மண்ணுடன் இரண்டறக்கலக்கின்றன. மூன்றாவதாக, தாவரச்சேதனங்கள் பலவகையான உயிரினங்கள் (பூச்சி, புழு பங்கசு பற்றீரியம், புறோட்டசோவா) வாழவும் பெருகவும் இடமளிப்பதன் மூலம் மண் உருவாக்கத்திற்கு உதவுகின்றன நாலாவதாக தாவரங்களின் வேர்கள் (i) மண்ணை நீரரிப்பிலிருந்து பாதுகாக்கின்றன, (i) தமது சுவாசத்தின் மூலம் மண்ணில் வாயுக்கலப்பிற்கு வழிவகுக்கின்றன (ii) நிலம் பொசி நீரை உறிஞ்சுவதன் மூலம் மண்ணின் ஈரலிப்பைக் குறைக்கின் றன. (w)மண்ணுாடு பரவுவதன் மூலம் அதில் பிரிகையை உண்டாக் குகின்றன. இறுதியாக சில தாவரங்கள் குறிப்பிட்ட சில மூலகங் களை மண்ணிலிருந்து நீக்குவதனால் அதன் இரசாயனச்சமநிலை சீர்குலைகிறது. உதாரணமாக மூங்கில், சில தடித்த புல்லினம் பாம் மரங்கள் முதலியன மண்ணிலிருந்து படிகத்தைப் பெரு மளவில் உறிஞ்சுவதனால் மண்ணின் சேர்க்கையில் மாற்றம் ஏற்படுகின்றது. இவை மண்ணுாடு பரவுவதன் மூலம் அதில் பிரிகையையும் உண்டாக்குகின்றன.
அடுத்து உயிரினங்களை எடுத்துக்கொண்டால் அவற்றின் செல்வாக்கு அவற்றின் இனத்துக்கேற்ப வேறுபடுவதைக்கான லாம் இவ்வாறு விலங்குகள், பறவைகளைப்பொறுத்த வரை அவற்றின் கழிபொருட்களும், இறந்தவற்றின் எஞ்சிய பாகங்களும் உக்கலாக மாறுகின்றன. அதேசமயம், முயல், அகிழான் முதலிய வளை தோண்டும் பிராணிகளும், மண் புழுக்களும் மண்ணைக் கிளறிக்கீழ் மேலாகப் புரட்டி அதில் வாயுக்களினதும், நீரினதும் தாக்கத்தைக்கூட்டுகின்றன. இவற்றில் மண் புழுக்கள் மட்டும் ஒரு ஹெக்டர் நிலத்தில் 7000 முதல் 54,000 கிலோ மண்ணைப் புரட்டக்கூடியன அடுத்து நுண்ணுயிரிகளான பற்றீரியா, பங்கசு முதலியன அழியும் தாவரங்களிலிருந்து சிக்கலான ஊட்டச் சத்துக்களைப் பிரித்தெடுத்து அவற்றை மீண்டும் தாவ : ரங்களுக்கு ஏற்ற உணவாக்குகின்றன. இரண்டாவதாக நுண்ணு யிரிகள் எல்லா விதமான சேதனங்களையும் உக்கலாக்குகின்றன. மூன்றாவதாக, அவை சேதனங்கள் மற்றும் உக்கலிலிருந்து சில அமிலங்களையும், வாயுக்களையும் உண்டாக்குகின்றன. நாலாவதாக, சில நுண்ணுயிரிகள் இயற்கையான நைதரசன் , கரி - கந்தக வட்டங்களைத் தூண்டும் கருவிகளாக (Catalyst) வும் செயல்படுகின்றன.

Page 81
50 புவிவெளியுருவவியல்
உயிரினங்களில் மனிதனின் பங்கும் முக்கியமானது. அவன் பயிர்ச்செய்கை, கைத்தொழில் விருத்தி, நகராக்கம் போன்ற வற்றுக்காக நிலத்தைப் பலவாறு பயன்படுத்தி அதன் முகத் தோற்றத்தையே முற்றாக மாற்றுகின்றான். அந்நடவடிக்கைகள் மண்ணின் விருத்தியைப் பாதிக்கின்றன. இவ்வாறு மண்ணாக் கத்தில் மனிதன் உட்பட எல்லா உயிரினங்களும் உயிர்ப்புள்ள காரணியாயிருப்பது குறிப்பிடத்தக்கது
(5) காலம்:-
மண்ணின் விருத்தியும் முதிர்ச்சியும் காலத்தினாற் கட்டுப் படுத்தப்படுகின்றன. மண்ணாக்கம் மெதுவாக நிகழும் ஒரு பரிணாமச்செயல்முறையாகும். ஒரிடத்தில் நீண்டகாலமாக நிலைத்திருந்து உருவாகும் மண் ஏனையவற்றைவிட வளங்கூடிய தாயிருக்கும் சாதாரணமாக, ஒரு சதுரமீற்றர் மண் உருவாக 4000 - 5000 ஆண்டுகள் செல்லலாம். ஆயினும் மண் உருவாகும் சூழலைப்பொறுத்து அது முதிர்ச்சியடையும் வேகம் வேறு ւմ է 61) Ո՞ւհ .
94. மண்ணின் பண்புகள் (Characteristics)
1. மண்ணின் மணியுரு ( இழையமைப்பு ) மண்ணிற்காணப்ப டும். வேறுபட்ட பருமனைக் கொண்ட மணல், பரல், கனி, மண்டி ஆகியவற்றின் விகிதாசாரத்தை இது குறிக்கும். அவற்றின் பருமன் பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது.
துணிக்கை விட்டம் (மி, மீ) துணிக்கை விட்டம் (மி.மீ)
( \ gទៅ 0.002 (4) பெருக்கன் 0 2 - 2 (2) மண்டி 0 002-0 02 (5) நுண்பரல் 2. (3) நுண்மணல் 0 02 - 0 2 (6) பெரும்பரல் 5 - 75
மண்ணின் இழையமைப்பானது தாய்ப்பாறைகளின் கணிப் பொருட்சேர்க்கை, மண்ணுருவாக்க செயல் முறைகளின் தன்மை, வேகம்,மண்ணின் முதிர்ச்சி என்பவற்றைப்பொறுத்து வேறுபடும் பொதுவாக களிமண் நுண்ணிய (கனத்த) இழையமைப்பையும், மணல் களி, மண்டி ஆகியன கலந்த ஈரக் களிமண் இடைத்தர இழையமைப்பையும், மணல்மண் பருத்த (Coarse) இழைய மைப்பையுடையது. 。 。”
。 மண்ணின் இழையமைப்பு அதன் நீர்தாங்கும் திறனை நிர் ணயிக்கும். பொதுவாக களியைப் போன்ற நண்ணிய இழைய

மண் 15
மைப்பைக்கொண்ட மண்கள் அதிக நீரைத் தாங்கக்கூடியன. உதாரணமாக குறிக்கப்பட்ட கன அளவைக்கொண்ட நுண் ணியகளி (அதேயளவு கனஅளவைக்கொண்ட ) மண்டியைவிட 10 பங்கும் மணலைவிட 50 அதிகமான பரப்பையுமுடையது பரப்பு அதிகரிக்கும் போது நுண்துளைகளும் அதிகரிப்பதனால் தான் நீர்தாங்கு திறன் அதிகரிக்கிறது.
மணல்மண் நீரைத்தாங்காது. மண்டிமண் இவற்றுக்கு இடைப்பட்டது. மண்ணிற் கா ன ப் படு ம் வேறுபட்ட துணிக்கைகளின் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் அவற்றைப் பெயரிடுவது வழக்கம். இவ்வாறு களிமண் என்பதில் குறைந்தது 50% களித்துணிக்கைகள் காணப்படும். ஆனால் சில நூலாசிரி யர்கள் இதனை 75 முதல் 80% எனக்கொள்கின்றார்கள்.
(2) LD6ôT sofisör Gť a 53: LDůu :- (STRUCTURE)
இது மண்ணின் பகு பொருட்கள் திரண்டிருக்கும் முறையை உணர்த்தும் மண்ணாக்கச்செயல் முறைகள் மேலிருந்து கீழ் நோக்கி இடம்பெறுவதனால் பெரும்பாலான மண்களின் கீழ்ப் பகுதியிலேயே கட்டமைப்பு நன்கு விருத்தியடைந்துள்ளது.
மண்ணிலுள்ள துணிக்கைகள் சாதாரணமாக, சிறு திரட்சி களாக அல்லது கட்டிகளாகக் (Aggregates or peds) காணப்படு வது வழக்கம் அத்தகைய திரட்சிகள் அமைந்திருக்கும். முறை யின் அடிப்படையில் மண்ணில் நான்கு வகையான கட்டமைப் புக்களைக் காணலாம்.
அவை (1) தகட்டுக்கட்டமைப்பு (Platy Structure) (2) கட்டிக்
கட்டமைப்பு (Blocky Structure) (3) அரியக்கட்டமைப்பு (Pri smatic) (4) ĝi (Dj Ln 677öfládr Lo... Li - 68) Lin tiuj, (Granular Structure) 6765r , LIGOrari tij.
தகட்டுக்கட்டமைப்பில் மண் துணிக்கைகள் கிடைநிலையில் படைபோலச் காணப்படும். அப்படையின் தடிப்பு 0.008 செ.மீ வரை வேறுபட்டிருக்கலாம். கட்டி அமைப்பு ஒழுங்கற்று உரு வத்தையுடையது ஆயினும் அவற்றிற் சில ஒப்பரவான விளிம்பு களுடன் காணப்படலாம். கட்டிகளின் தடிப்பு 7.5 செ.மீ வரை இருக்கலாம். ஈரக்களிமண் இந்தவகையான கட்டமைப்பைக் கொண்டது. அரியக்கட்டமைப்பு அகலத்திலும் அதிகமான உய ரத்தைக்கொண்டிருக்கும். அதன் மேற்பாகம் வளைந்து காணப் பட்டால் அதனை நிரற்கட்டமைப்பு (Columnar Structure) என்

Page 82
52 புவிவெளியுருவவியல்
குறிப்பிடுவர் அரியங்கள் 13 15செ மீ தடிப்பானவை களிமண் இத்தகைய கட்டமைப்பைக் கொண்டது. சிறுமணிக்கட்டமைப்பு ஒழுங்கற்ற உருவத்துடன் வளைவானதாகக் காணப்படும் பயிர் செய்கைக்கு அது மிகப்பொருத்தமானதாகக் காணப்படுகிறது.
மண்ணில் முன் குறிப்பிட்டவற்றைத் தவிர, வேறுவகையான கட்டமைப்புக்களும் காணப்படலாம். கொரியலான ( Loose ) கட்டமைப்பு (இதில் மணல் மணிகள் தனித்தனியாகக் காணப்ப டும்) திணிவான கட்டமைப்பு (Massive) (இது சில களிமண்களிற் காணப்படுவதுண்டு) என்பன இத்தகையவை மண்ணின் கட்ட மைப்பை அதன் தரத்தின் அடிப்படையில் பலமானது, பலமற்றது இடை த்தரமானது என மூன்றாகப்பகுத்தும் விபரிக்கலாம் இயற் கையில், தாவரங்களின் வேர்களும் நுண்ணுயிர்களும் மண்ணின் கட்டமைப்பைப் பாதுகாக்கின்றன. அதேசமயம் மண்ணை அடிக் கடி கிளறுவதனால் (உம் உழுதல்) அதன் கட்டமைப்புச் சீர்கு லைந்துவிடும் மண்ணின் கட்டமைப்பானது அதன் ஈரத்தை உறிஞ் சும் வேகம், காற்றுாட்ட நிலைமை என்பவற்றைப் பாதிக்கும்.
)ே மண்ணின் அமிலத்தன்மை : (Act)
அமிலத்தன்மை என்பது மண்ணில் மேலதிகமாகக் காணப்ப டும் ஐதரசனைக் குறிக்கும் மண்ணின் அமிலத்தன்மை ஒரு அளவுத்திட்டத்தினடிப்படையில் கணிக்கப்படுகிறது அது (அமில /உவர் விகிதம் (PH) எனப்படும். அதன்படி 7 என்பது நடுநிலை யானது எனவும் 1முதல் 7 வரை புள்ளது அமிலம் கூடியதெனவும் 7க்கு மேற்பட்டது காரத்தன்மையுள்ளதெனவும் கணிக்கப்படு கிறது. இயல்பான் pappi flair PH gyGöI GOT GTGITS 5. 5 ஆகும் அதன் அமிலத்தன்மைக்கு வளியிலுள்ள காபனீரொட்சைட் கலப்பதே காரணமாகும்.
(4) 18ண்ணின் நிறம்
இது மண்ணிற் காணப்படும் சேதனப்பொருட்கள், இரும்பு ஒக்சைட்டுகள் என்பவற்றின் அளவை பொறுத்து வேறுபடும் கருமையான மண், இரும்பு காபனேற், மிக உருக்குலைந்த சேதனப்பொருட்கள் கந்தகக் கூட்டு என்பவற்றின் கலப்பினால் உருவாகிறது. செம்மண்ணானது பெரிக் வகையான இரும்புக் கூட்டுக்கள் (தும் ஹேமரைற்) காணப்படுகின்ற நீர்முறை பரித்தல் அதிகமாயுள்ள ) பிரதேசங்களில் உருவாகும் மஞ்சள் மண், நீர்த்தன்மையுள்ள பெரிக் ஒட்சைட்டுகளின் (உம் லெமோ

| f), გუნგუ; 153
னைற்) கலப்பினால் உருவாகிறது. அதேசமயம் பழுப்புமண் இரும்பு ஒக்சைடுகளும் சேதனப்பொருட்களும் கலப்பதனால் உருவாகும்.
9.5 post 600Triad Glarusi penpassiT (Soil forming processes)
பாறைத்துணிக்கைகளாகிய மூலப்பொருட்களைப் பயன் படுத்தி "மண்" என்னும் முடிவுப்பொருளாக மாற்றுவதில் பல செயன்முறைகளுக்குப் பங்குண்டு. அவற்றை (1) புறச்செயற் பாடுகள் (2) அகச்செயற்பாடுகள் என இரண்டாக வகைப் படுத்தலாம். -
(1) புறச்செயற்பாடுகள்:
பாறைத்துணிக்கைகளாகிய மூலப்பொருட்கள் #டருfெகு வதும், துணை மூலப்பொருட்களாகிய சேதனங்கள் அவற்றின் மேல் திரள்வதும் புறச்செயற்பாடுகளில் பிரதானமானவை. இவற்றில் சேதனங்கள் திரளுதல் தாவரங்களின் சிதைவினால் ஏற்படுகின்றது. இவ்வாறு ஓரிடத்தில் திரளும் சேதனங்களின் அளவானது, அவ்விடத்திலுள்ள தாவரங்க ளின் தன்மை, பரம்பல், காலநிலையின் தாக்கம் என்பனவற்றைப் பொறுத்து வேறுபடும் பொதுவாக அடர்த்தியான அயனவலயக் காடுகளில் சேதனங்கள் அதிகமாகத் திரளும். அடுத்து பாறைத் துணிக்கை கள் உருவாதலை நோக்கும்போது அது சில காரணிகளின் செயற் பாட்டில் தங்கியிருப்பதைக் காணலாம். அக்காரணிகளை (1) வானிலை (2) புறஅரிப்புக் கருவிகள் என இரண்டாகப் பிரித்து ஆராயலாம்.
வானிலையானது பாறைகளைச் சிதைக்கும் பிரதான காரணி யாகும் அதனால் ஏற்படும் பொறிமுறையழிவு பாறைத் துணிக்கைகளை உருவாக்குகிறது. அதேசமயம், இரசாயன வானிலையாலழிவு பாறைகளைப் பல வழிகளில் உருக்குலைக் கிறது. பாறைத்துணிக்கைகள் பருமனில் 0.1 முதல் 0 0 ! மி.மீ அளவுக்குக் குறைந்த நிலையில் பொறிமுறையான அழிவு முற்றுப் பெறும் அதேசமயம் இரசாயன முறையான வானிலையாலழிவு பாறைத் துணிக்கைகளைப் பதப்படுத்துவதில் பெரும்பங்கு வகிக் கிறது. அடுத்து புறத்தே செயல்படும் பெளதிகக் கருவிகளை எடுத்துக்கொண்டால் அவை ஒடும்நீர், காற்று, பனிக்கட்டியாறு, கடல் என வேறுபட்டிருப்பதைக் காணலாம். அவை அரித்தல், தேய்த்தல், சுரண்டல் போன்ற சில செயல்முறைகள் மூலம் பாறைகளை உடைத்துத் துணிக்கைகளாக்குவதோடு அவற்றைப் பிறிதொரிடத்திற்குக் கொண்டு சென்று படிவு செய்கின்றன.

Page 83
154 புவிவெளியுருவவியல்
(2) அகச்செயற்பாடுகள்
இவை, உயிரினங்கள்,நீர் என்பவற்றுடன் தொடர்புள்ளவை இவற்றில் உயிரினங்களுடன் நெருங்கிய தொடர்புள்ள செயற் பாடுகளாவன: (1) சேதனங்கள் அழு கி உக்க வாகுதல் (2) அமிலங்கள் வாயுக்கள், உருவாதல். (3) ஊட்டப்பொருட் கள் பிரித்தெடுக்கப்படுதல் 4) மண்படைகள்கலத்தல். 5) மண் துணிக்கைகள் வேறாக்கப்படுதல் என்பனவாம்.
மண்ணாக்கத்தில் உயிரினங்களின் பங்கைப்பற்றி முன்னரே குறிப்பிடப்பட்டது. உயிரினங்களின் செயற்பாடுகள் அனேகமாக அவற்றினாற் தூண்டப்பட்ட சிதைவுசசெயல்முறைகளாயிருப் பதோடு அவற்றில் சில பொறிமுறையாகவும் சில இரசாயன முறையிலும் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது,
உயிரினச் செயற்பாடுகளில் தாவரங்களை உருக்குலைத்து உக்கலாக்குதல் முக்கியமானது. அது பெரும்பாலும் பங்கி பற்றீரியம் போன்ற நுண்ணுயிரிகளின் தொடர்பினால் நிகழுகிறது இவ்வாறு காற்றில் வாழும் (Aerobic) பங்கிகளும் பற்றிரியங்களும் காபனீரொட்சைட், சல்பூரிக்கமிலம் பொஸ்பரிக் அமிலம், உக்கல் அமிலம் (Humic Acid) ஆகியவற்றை உரு வாக்கும்போது காற்றில் வாழாப்பங்கிகளும், பற்றீரியங்களும் (Amerobic) சேதனங்களை மெதுவாகச்சிதைத்து ஐ த ர ச ன், மீதேன், ஐதரசன் சல்பைட் போன்ற கூட்டுகளை உண்டாக்கு கின்றன இவற்றின் சிக்கலான சமகாலச்செயற்பாட்டின் மூலமே உக்கல்' எனப்படும் சேதனக்கூட்டு உருவாகிறது.
உக்கல், பழுப்பு அல்லது கருமையான நிறத்துடன் காணப் படும். அதன் நிறம் கணிப்பொருட்களுடன் சேதனங்கள் கலப் பதனால் உண்டாகிறது. உக்கலின் தடிப்பானது, தாவரப்போர் வையின் தன்மை, பரம்பல், காலநிலையின் செல்வாக்கு என்பவற்றைப் பொறுத்து வேறுபடும். பொதுவாக புன்னிலங் களிலேயே உக்கல் அதிக தடிப்பாயுள்ளது களியுடன் உக்கல் கலப்பதனால் is - is என்னும் கூட்டு (Clay-Humour Complex) உருவாகும். அது கூழ் (Colloid) எனப்படும். அந்நிலையில் அது மிக நுன்மையான பகு பொருட்களைக் கொண்டிருக்கும் உக்கல் ஓரளவு அமிலத்தன்மையுடன் கா படின் முல் (Mult) எனவும், காரத்தன்மையுடன் காணப்படின் மோர் (Mor) எனவும் குறிப்பிடப்படும் இவற்றில் 'முல் உக்கலே பயிர்ச்செய்கைக்கு ஏற்றது. அது புல் நிலங்களிலேயே அதிகமாக உருவாகிறது.
 

4p) টেক্ট 155
பங்கிகள், பற்றீரியங்களின் இன்னொரு பணி சேதனங் களிலுள்ள சத்துப் பொருட்களைப் பிரித்தெடுத்தலாகும். இப் பொருட்கள் வட்டமுறையில் மீண்டும் தாவரங்களுக்கே உண வாக்கப்படுகின்றமை (Recycling) குறிப்பிடத்தக்கது. சில உயிரினங்கள் - குறிப்பாக வளை தோண்டும் பிராணிகள் (உம் முயல், அகிழான்) மற்றும் கறையான், மண்புழு ஆகியன கீழ்ப்படை மண்ணை மேற்பரப்புக்குக் கொண்டுவருவதனால் மண்படைகள் கலந்து முந்திய படையமைப்புச் சீர்குலைகிறது. அன்றியும் மண்பழுக்களும் கறையான்களும் நுண்ணியமண் துணிக்கைகளை வேறாக்கிக் கு வி ப் ப தோ டு தாம் உண்ட மண்ணைக் கழிவுப் பொருளாக்கி மீண்டும் மண்ணுடன் தேர்த் கின்றன. இத்தகைய செயற்பாடுகளினால் மண்ணின் கட் டமைப்பு மாறும்
அடுத்து நீருடன் தொடர்புள்ள செயல்முறைகளை நோக்கு வோம். நீரின் - குறிப்பாக மழைத்துளிகளின் தாக்கத்தினால் மண்ணின் மேற்பகுதியிலுள்ள நுண்ணிய களித்தணிக்கைகள் கூழ்ப்பொருட்கள் போன்றவை பொறிமுறையாகக் கீழ் நோக்கித் தள்ளப்படுகின்றன. இதை ( Huviation ) எனவும் இவ்வாறு அகற்றப்பட்ட பொருட்கள் கீழ்ங்படைகளிற்படிதலை (Eluviation) எனவும் குறிப்பிடுவர். அதேசமயம் சேதனச் சத்துப் பொருட்களைக் கொண்ட நீரானது, அலுமினியம். இரும்பு போன்ற உலோகங்களின் சாரத்துடன் (Essence) கலந்து அவற் றைக் கீழ்ப்படைகளுக்குக் கொண்டுசெல்வதை Chetuviation எனக்குறிப்பிடுவர்.
நீரின் மற்றொரு செயல், நிர்முறையரித்தலாகும் (Leaehing) இது மழைமிகுந்த பகுதிகளில் நிகழுகின்ற ஒரு கழுவற்செயல் முறையாகும். இதுவும் முன்னர் குறிப்பிட்ட Cheluviation செயல்முறையும் ஒரே மாதிரியானவை. இவற்றின் மூலம் மண் ணின்மேற்படைகளிலுள்ள சிலகணிப்பொருட்கள் கரைசல்களாக் கப்பட்டுக் கீழேகொண்டு செல்லப்படுகின்றன. இதனால் மேல் மண்ணின் அமிலத் தன்மை அதிகரிக்கும். இதுபோலவே ஆவி யாக்கம் மிகுந்த பிரதேசங்களில் மண்ணின் கீழ்ப்படைகளிற் தங்கியிருக்கும் நீர் நுண்துளைகள் வழியாக மேலிழுக்கப்படும் போது அதிலுள்ள உப்புக்கள் மேற்படைகளைச் சென்றடைவத னால் அங்குள்ள மண்ணின் காரத்தன்ம்ை கூடுகிறது.

Page 84
1 56., புவிவெளியுருவவியல்
9.6. மண்ணின் பக்கப்பார்வை (Soil Protie ) :
மண்ணாக்கச் செயல்முறைகள் மேலிருந்து கீழ்நோக்கி இடம்பெறுவதனால் அவற்றின் தாக்கங்களினால், வேறுபட்ட மட்டங்களில் மண்ணின் நிறம் இழையமைப்பு, கட்டமைப்பு ஆகியவற்றில் கணிசமான வேறுபாடுகள் தோன்றுகின்றன. இத்தகைய நிலைக்குத்தான வேறுபாடுகள் முதிர்ச்சியடைந்து மண்களிலேயே முனைப்பாக வெளிப்படும். இவ்வாறு மண்ணில் உருவாகும் படையமைப்பை அதன் பக்கப் பார்வை அல்லது முகத்தோற்றம் எனவும் அதிற் புலப்படும் ஒவ்வொரு படையை பும் மண் அடிவானம் ( Soil horizon ) அல்லது கிடைத்தின் எனவும் குறிப்பிடுவது வழக்கம்.
纷 A. ... 岛。 O
A - A- { 1 } " | A - 2 || . . - - - - - - - 2 بين
ஐவங்க '" *کله دا ښا يسته بيت د i مسلم مينه ii. من B B " " ਤੇ కి _____{i = §
T|| B - 2 it i + +" 2
++ i、 2. ۔۔۔۔۔۔۔۔ -- it to
C C W
-- ←28 8
”V。
ཡོམ་གཡོ་མ་ལས་མ་ 9 岑忒 సాM (.
LL LYSJYS00SYLt 0tTTTTttttT S 0TmumtLLtLLtttT0 இடமிருந்து பொட்சோல், சேணோசம், சரளைமண்
(விளக்கம் பாடத்திற் காண்க)
மண்ணின் படைகளை 0.A,B,C,D என ஐந்தாகப் பிரிப் பது வழக்கம் "0" என்பது சேதனங்கள் திரளும் மேற்படை யாகும். அதற்குக்கீழுள்ள 'A' படையானது உயிரினங்களின்

| p მეტრჯr 157
செயற்பாட்டினால் சேதனங்கள் உக்கலாக மாறும் படையாக வும், நீர் முறையரித்தல் மற்றும் இரசாயனச் செயல்முறை கள் நிகழும் படையாகவும் உள்ளது. அதை A A2 என வேறுபடுத்துவதுமுண்டு. B படை கீழ் மண் படை (Sub Soil } எனவும் குறிப்பிடப்படும். அதில் வானிலையாலழிவுக்குட்பட்ட நுண்ணிய துணிக்கைகளுடன் 'A' படையிலிருந்து கீழிறங்கிய பொருட்களும் கலந்து காணப்படும். ஈர வெப்பக் காலநிலைப் பிரதேசங்களில் இரும்பு, அலுமினியம் ஒட்சைட் ஆகியனவும் வரண்ட பிரதேசங்களில் கல்சியமும் இப்படையிற் காணப் படுவதுண்டு *
9 7. மண் வகைப்படுத்தல்
* LD 6 jorġ, GoonGT LI பலவாறு பாகுபடுத்தலாம். மண் உருவாகிய நிலையம் அல்லது இடத்தினடிப்படையில் மீதமண் (Residual ) கொண்டு செல்லப்பட்ட மண் ( Transported Soil ) என இரண் டாக வகைப்படுத்தலாம், பாறை அழி பொருட்கள் இரசாயன முறையில் கரைக்கப்படாதுள்ள இடங்களில் உருவாகும் மண்ணே மீதமண்" எளப்படும். அது நன்கு விருத்தியடைந்து படை ஒழுங்குடன் காணப்படும் அதற்கு மாறாக புவியீர்ப்பு ஒடும் நீர், காற்று முதலிய புறக்கருவிகள் பாறைச் சிதைவுப் பொருட்களைப் படிவுசெய்த இடங்களில் உருவாகும் மண் கொண்டு செல்லப்பட்ட மண் எனப்படும். இவ்வாறு புவி யீர்ப்பினால், மலைச் சரிவுகளிலிருந்து கீழிறங்கிய பண் கூழ் வண்டல் ( Colloi da ) எனவும், ஆற்றுப் படிவுகளிலிருந்து உருவாகும் மண் வண்டல்மண் (Ailuvi a1 எனவும், காற் றெறிந்த மண்ணிலிருந்து உருவாகுவது நுண்மண்' ( Loess ) எனவும் பெயர்பெறும் இம் மண் အား @;}} ၉ါ) படையமைப்பு, இருக்காது.
புதியமுறை வகைப்படுத்தல்
மண்ணாக்கத்தில் பெளதிகக் காரணிகளான காலநிலை, இயற்கைத் தாவரம் என்பவற்றின் செல்வாக்கு முக்கியமானது. அதேசமயம் சில உள்நாட்டுக் காரணிகளும் உ-ம் பாறைகள் மண்ணின் இயல்பை நிர்ணயிக்கின்றன. எனவே அம் மூன்றின் அடிப்படையில் உலகின் மண்களை i) வலய மண்கள் ii) வலய இடை மண்கள் (ii)வலய மாகா மண்கள் என மூன்று தொகுதி கள் அல்லது கூட்டங்களாக ( Groups) வகைப்படுத்தலாம். கீழுள்ள அட்டவணை மண் தொகுதிகளையும் அவற்றின் உட் பிரிவுகளையும் காட்டுகின்றது.

Page 85
58 புவிவெளியுருவவியல்
66 ພວກຫລ້າ (Zonal Soils)
,
அ) சுண்ணாம்பற்றவை சுண்ணாம்புள்ளவை
(Pedalfers) (Pedocalis) i) தண்டிரா மண் -- 1) சேணோசம் ii) பொட்சோல் - ii) செஸ்நட்நிறமண் ii) கபிலநிறக் காட்டுமண் - ii) சாம்பல்நிறப்
பாலைநில மண் பிறேயறி மண் w) சிவப்பான பாலை
நில மண்
w) சிவப்பு - மஞ்சள்
9 UO6T6N 6O LA BLAD GOST
w) சிவப்பான அயனவலய மண்
2. வலய இடைமண்கள் (Intrazonal )
ஈரலிப்பான மண்கள் உப்புத்தன்மை கல்சியமுள்ள
யுள்ளவை DGð07 g5 Gjir (Hydromorphic) (Halomorphic) (Calcimorphic) ) பசுந்தரைமண் } சொலோன்சாக் i) றென்சீனா
i) முற்றா நிலக்கரி i) சொலோநெற் ii) ரெற றோசா ii) சதுப்புநிலமண் ii) சொலோத்
3. வலயமாகா மண்கள் (Azonal)
1) லித்தோசொல் i றிகோ சொல் ii) வண்டல்மண் (Lil hosol) (Regosol) (Auvia)
வலயமண்கள் இவை உலகின் பிரதான காலநிலை வலயங் களுட்ன் நெருக்கமான தொடர்புள்ளவை. அவ் வலயங்களிற் காணப்படும் காலநிலை, இயற்கைத் தாவரம் மற்றும் வடிகால் அமைப்பு என்பவற்றை வலய மண்கள் பிரதிபலிக்கும். அன்றி யும், ஒரேமாதிரியான பெளதிகச் சூழலில் உயிரினங்களின்

飞、
O Gärts 羈
தொழிற்பாடும் சிறப்பாக இடம்பெறுவதனால் முன் குறிப்பிடப் பட்ட மூன்று காரணிகளதும் நீண்டகாலத் தாக்கத்தின் விளைவாக வலய மண்கள் நன்கு விருத்தியடைந்து பரந்த வலயங்களாக விளங்குகின்றன 懿。
வலய மண்கள் சுண்ணாம்பற்றவை, சுண்ணாம்புள்ளவை என இரு பிரிவுகளாகக் காணப்படுகின்றன.
(அ) கண்ணாம்பற்றவை
(1) தண்டிரா மண் - இவை மேல்மண் குளிர் காலத்திலும் கீழ்மண் ஆண்டு முழுவதும் உறைந்திருக்கும் முனைவயற் பிரதேசங்களில் உருவாகின்றன. அங்கு குறுகிய கோடை காலத்தில் பனிக்கட்டி உருகுவதால் பரவும் நீர், கீழ்மண் உறைதல் காரணமாகக் கீழ் வடியாமல் மேற்பரப்பில் தேங்கும். அதே சமயம் அக்காலத்தில் சில தாவரங்கள் வளருமாயினும் உயிரினச் செயல்பாடு குறைவாயிருப்ப தனால் சேதனப்பொருட்கள் மெதுவாகவே சிதைவடையும் ஆயினும் தண்டி ரா மண்ணாக்கம் கோடையில் ஓரளவு இடம் பெறுகின்றது. s
தண்டிராச் சூழலில், இருண்ட கபிலநிறமான முற்றா நிலக்கரித் தன்மையான மண்ணே மேற்பரப்பில் உருவாகின் றது. அதேசமயம் கீழ்மண் சற்றுக் கருமையானதாயிருக் கும். நீர் மேற்பரப்பில் தேங்குவதனால், மண் அமிலத் தன்மையுடையதாயிருக்கும். இக் காரணங்களினால் தண் டிரா மண்கள் பொதுவாகப் பயன் குறைந்தவை. ஆயினும் ஆங்காங்கு சாதகமான சூழல்களில் வேறுபட்ட வளங் கூடிய மண்களும் சிறிய அளவில் விருத்தியடைந்துள்ளன,
(2) பொட்சோல் மண் இது குளிரான இடைவெப்பக் கால நிலைப் பிரதேசங்களில் - சிறப்பாக ஊசியிலைக் காட்டுப் பகுதிகளில் உருவாகின்றது. குறுகிய கோடை, குறைவான மழைவீழ்ச்சி, நீண்ட குளிர்காலம் ஆகியன காணப்படும் சூழலில் இம் மண் விருத்தியடைகின்றது. வேனிற் காலத் தில் மழைப்பனி உருகுதல் மூலம் திரளும் நீர், மேற்பரப் பில் வீழும் இலைகளுடன் கலந்து அமிலத்தன்மையடை வதோடு நீர் முறையரித்தலிலும் ஈடுபடும். அது இரும்பு, அலுமீனியக் கூட்டுக்களைக் கரைக்கும்போது.அவை:Sesqi 0xides) ஆகக் கீழிறக்கும். அக் கூட்டுக்கள் கீழ்ப்பகுதியில்

Page 86
60
(3)
(4)
புவிவெளியுருவவியல்
(B ) கடினமான ஒரு படையாக உருவாதலினால் நீர் மேற்பரப்பிலும் தேங்குகிறது. இதனால் தண்டிராவைப் போல் இங்கும் முற்றாநிலக்கரி போன்ற மண்ணே மேற் பரப்பில் உருவாகிறது. மேலும் இப்பிரதேசங்களில் நிலவும் கடுமையான குளிர்காலநிலை பற்றீரியங்களின் தொழிற் பாட்டைப் பாதிப்பதனால் உக்கல் நன்கு விருத்தியடையாவி டினும் "Mor' வகையான உக்கல் ஒரளவு காணப்படுகின்றது அதேசமயம் அலுமீனிய இரும்புக் கூட்டுக்களின் கலப்பும், நீர் முறையரித்தலின் விளைவாக மண்துணிக்கைகள் கீழிறங் குவதும், இம் மண்ணின் கீழ்ப்படை சாம்பல்நிறத்தைப் பெற உதவுகின்றன. பொட்சோல் மண்வளமற்றதாதலின் பசளையிடுவதன் மூலமே அதிலிருந்து பயன்பெறலாம்.
கபிலநிறக் காட்டுமண் :- இது, இலையுதிர்காட்டுப் பிரதேசங் களில் நன்கு விருத்தியடைந்துள்ளது அங்கு அதிகளவிலான இலையுதிர்வும் பற்றீரியங்களின் தொழிற்பாடும் ஒன்றிணை வதனால் தாவர ஊட்டப் பொருட்களைக் கொண்ட * Mu11 வகையான சிறந்த உக்கல் உருவாகின்றது. ஆயினும் 'A' படை மிதமான நீர் முறையரித்தலுக்குள்ளாவதனால், மேல்மண் கபில நிறத்துடனும், கீழ்மண் இருண்டகபில நிறத் துடனும் காணப்படுகின்றது. ஆனால் இவ்வகை மண் தண் டிரா மண்ணைவிடக் குறைவாக நீர் முறையரிப்பிற்குட் பட்டதாகவும் அமிலம் குறைந்ததாகவும் அதிக உக்கலை யுடையதாகவுமிருப்பதனால், பயிர்ச் செய்கைக்கு ஏற்ற வளமான ஒரு மண்ணாயுள்ளது. எனினும் தாய்ப்பாறைக் கேற்ப இவற்றின் இயல்புகள் வேறுபடலாம்.
பிறேயறி மண்:- இவ் வகையான மண் இடையகலக் கோட் டுப் புல் நிலங்களில் உருவாகின்றது. கண்டங்களின் உட் பகுதிகளிற் காண்ப்படுகின்ற இம்மண் பெடோக்கல், பெடல் பர் வகை மண் வலயங்களுக்கிடையே ஒரு மாறல் வலய மாக விளங்குகிறது. இம் மண் அதிகளவில் நீர் முறை பரிக்கப்படவில்லை. அதே வே ளை பிறேயறியிலுள்ள உயர்ந்த புல்லினங்களிலிருந்து பெறப்படும் சேதனங்கள் மெதுவாகச் சிதைவதனால் உக்ால் பெருமளவில் உருவா கிறது. இதனால் இம்மண் கருமையான கபிலநிறத்துடனும் B பகுதி களிப்பாங்கானதாகவும் காணப்படுகிறது. பிறே பறிமண், செழிப்பானதும் பயனுள்ளதுமாகும்.

மண் 8.
சிவப்பு மஞ்சல் மண்கள்:- இவை அயன அயல் வலயக் காட்டுப் பிரதேசங்களுக்குரியவை. அங்கு அதிக மழை காரணமாக நீர் முறையரித்தலும் அதிகளவில் நிகழ்கிறது. அதே கமயம், உயர்வெப்பமும், ஈரலிப்பும் பற்றீரியத் தொழிற்பாட்டைத் துரிதப்படுத்துவதனால் உக்கல் சிறிய அளவிலேயே உருவாகிறது. இம் மண்ணில் இரும்புக் கூட்டுக் கள் கலந்திருப்பதன் காரணமாகவே மண், சிவப்பு, மஞ் சல் நிறங்களைக் கொண்டுள்ளது. பொதுவாக, இவ்வகை யான மண்கள் விரைவில் ஊட்டத்தை இழப்பதனால், பசளையிடுவதன்மூலமே அதிக பலன்பெறலாம்.
சிவப்பான அயனவலய மண்கள் ( Lattisos ) - இவை உயர் வெப்பமும் அதிக ஈரலிப்பும் காணப்படுகின்ற மத் தி ய கோட்டுக் காட்டுப்பிரதேசங்களிலும், அதையடுத்துள்ள சவன்னாப் புல்நிலப் பகுதிகளிலும் உருவாகின்றன. அப் பிரதேசங்களில் பாறை கள் பல மீற்றர் ஆழத்திற்கு வானிலையாலழிவுக்குட்பட்டிருப்பதோடு, நீர் முறையளித்த லும் பெருமளவில் நிகழ்கிறது. இதனால் இம்மண்கள் தெளிவான படையொழுங்குடன் காணப்படுவதில்லை.
ஆயினும் A படை, நன்கு வரையறுக்கப்பட்டிருக்கும்.
மத்திய கோட்டுக் காடுகளிலும், அதனையடுத்துள்ள குட்டையான புல் லி ன ப் பிரதேசங்களிலும், சேதனப்
பொருட்கள் விரைவாகச் சிதைவதனால், உக்கல் உருவாகுவ
தில்லை, அதேசமயம், இரும்பு, மங்கனீசு, அலுமினிய
ஒக்சைடுகள் மண்ணின் மேற்பகுதியில் தங்குவதனால் இம்மண்கள் சிவப்பாகக் காணப்படுகின்றன.
செம்பூரான்மண் அல்லது சரளைமண் எனப்படுவது அயன வலயச் சிவப்பு மண்களில் மிகை விருத்தியடைந்த කෆිලිෆ්, வகையாகும். இது அல்கலி, கிலிக்கா ஆகியன நீக்கப்பட்டு அலுமீனியம், இரும்பு ஒக்சைடுகளை மட்டும் கொண்டிருக்கும். இது பெரும்பாலும், பருவகால மழையைப் பெறும் சவன்னாப் பிரதேசங்களில் பரவலாகக் காணப்படு
வதோடு பல இடங்களில் பயன்குறைந்த கட்டாந்தரை"
யாகவும் காட்சியளிக்கிறது. م:%}

Page 87
62. புவிவெளியுருவவியல்
(ஆ) சுண்ணாம்புள்ளவை
(i) சேணோசம்: கருமண் என விபரிக்கப்படும் இம்மண் இடைவெப்பப் புன்னிலங்களில் குறைவான கோடைமழையைக் கொண்ட பகுதிகளில் உருவாகிறது. அங்கு கோடை காலத் தொடக்கத்தில் மழைப்பனி உருகுவதனால் பரவும் நீர் சிறிதளவு நீர் முறையரித்தலை ஏற்படுத்துகிறது. ஆயினும் ஆவியாக் கம் அதனை ஒரளவு ஈடுசெய்வது மட்டுமன்றி மண்ணின் கீழ்ப்படைகளில் சுண்ணாம்பு திரளவும் உதவுகிறது. சேணோ சம், சேதனப் பொருட்களும் நைதரசனும் கலந்த 70 - 100 செ. மீ. தடிப்பான A படையுடன் காணப்படுவதோடு வேறு மண்களைவிட அதிகளவில் ஓரினமானதாகவும் உள்ளது இம் மண் தெளிவான படையமைப்பற்றது. ஆயினும் சுண்ணாம்புக் கலப்பின் காரணமாக உதிரும் இயல்புடையதாகவும், ஈரந்தாங் கக் கூடியதாகவுமுள்ளது இக்காரணங்களினால் இது ஒரு வள மான மண்ணாயிருப்பதோடு பம்பாஸ்" போன்ற புன்னிலப் பகுதிகளில் தொடர்ச்சியாக நல்ல பலனளித்து வருகிறது.
(i) செஸ்நட் கபிலநிற மண் :- இது இடைவெப்ப புல் நிலங்களின் வரண்ட பகுதிகளில் குட்டையான புல்லினங்கள் வளரும் பிரதேசங்களில் விருத்தியடைகின்றது. அங்கு நீர்முறை பரிப்பும் சேதனங்களின் கலப்பும் குறைவாயிருக்கும். ஆனால் சேணோசத்தைப் போல் இம்மண்ணும் கண்ணாம்பு கலந்த தாகும். இதனால் இம்மண்ணின் மேற்படை செஸ்நட் போன்ற மென்கபில நிறத்துடன் காணப்படும் இம்மண் ஒப்பளவில் வளங்குறைந்ததாயிருப்பதோடு இது உருவாகும் பிரதேசங்களின் வரட்சி காரணமாகப் பயன்பாடு குறைந்ததாயுள்ளது.
(i) பாலைநிலச்சாம்பல் மண் :- இது இரசிய மொழியில் சியரோசெம் (Sierozem) எனப்படுகிறது. இவ்வகை மண் இடையகலக் கோட்டுப் பிரதேசங்களில் கண்டங்களின் உட் பகுதியிலுள்ள பாலை நிலங்களில் உருவாகின்றது. அங்கு மழைக்குறைவு, தாவரமின்மை ஆகியன காரணமாக முறையே நீர்முறையரித்தலும் உக்கல் உருவாதலும் இல்லை அல்லது மிகக்குறைவு எனலாம். அதே சமயம் கோடையில் ஆவியாக்கம் இடம்பெறுவதனால் மண்ணின் கீழ்ப்படைகளில் கல்சியம் திரள் கிறது ஆயினும் இவ்வகை மண் தெளிவான படையமைப் புடனோ ஆழமாகவோ காணப்படுவதில்லை. இதனால் பொது வாக கல்சியம் குறைவாயுள்ள பகுதிகளில் நீர்ப்பாய்ச்சல் உதவியுடன் மட்டுமே பயிர் செய்ய முடியும்.

Lp লেখা
(iv) பாலைநிலச் செம்மண் - இது மிக வெப்பமானதும் ஆதிவறண்டதுமான வெப்ப பாலைநிலப் பிரதேசங்களில் உரு வாகிறது. இது பலதரப்பட்ட சிவப்பு நிறங்களுடன் காண படுகிறது. அதேசமயம், முன்னர் விபரிக்கப்பட்ட மண்ணை போல் இதிலும் தெளிவான படையொழுங்கோ, உக்கலே காணப்படுவதில்லை. அன்றியும் இதிலும் கடினமான கல்சியப் படையொன்று காணப்படும். இத னா ல் பொதுவாக கல்சியம் குறைவாகக் காணப்படும் நிலைமைகளில் நீர்ப்பாய் சல் உதவியுடனேயே பயிர் செய்யலாம்.
வலய இடைமண்கள்:
(i) ஈரலிப்பான (நீர்மிகுந்த) மண்கள் (Hydromorphic) இவை ஈரம் மிகுந்தவை. இவற்றின் மேற்பரப்பில் நீர் தேங்கு வதுமுண்டு இந்நிலைமைகள் தாவரச் சிதைவையும் பற்றிரிய செயல்பாட்டையும் தடைப்படுத்துவதனால் இவவகை மண் களின் கீழ்ப்பகுதியில் சிதைவுறாத சேதனப் பொருடகளை கொண்ட ஒரு படையும் அதற்குககிழ் நல - சாமபலநிறததோடு கூடிய ஒட்சியேற்றப்படாத இருமபைக கொண்ட களி (uey) எனப்படும் இன்னொரு படையும் காணபபடும்
சதுப்புநில மண் (Bogsoil) முற்றா நிலக்கரிமண் (Peatsoil) பசுந்தரை மண் (Meadow S011) எனணும மூனறும இபபிரிவில் அடங்கும் சதுப்புநிலமண் நீர் நனகு வடியாத உயாநலவகளில் உருவாகும். அது அமிலத் தனமையுளள மொர் (Mor) வகையான பண்படாத உக்கலைக் கொணடிருககும. முறறா நிலக்கரிமண், தாழ்ந்த பிரதேசங்களில் கலசியக கலபபளள நீர் தேங்கும் நிலைமைகளில் உருவாகும். அது காய்கறி உற பத்திக்கு ஏற்றது. பசுந்தரைமண ஆறுகா அவ்வபபோது சேறு, மண்டி ஆகியவற்றைப் படிவு செய்யும் வெள்ளச் சம வெளிகளில் உருவாகும். அது கருமையான தடிதத உககற் படையைக் கொண்டிருக்கும். இவ்வகை மண் விலங்குகளின் மேய்ச்சலுக்கேற்ற புல்லினங்களின் வளர்ச்சிக்கு ஏற்றது.
(i) வறண்ட (உப்புச் செறிந்த) மண்கள் (Halomorphic) இவை பெரும்பாலும் வறண்ட மற்றும் குறைவறட் பிரதேசங் களில் உருவாகின்ற உவர் மண்களாகும். அப்பரதேசங்களில் உயர் விகித ஆவியாக்கமும் மண்ணின் மயிர்த்துளைகள் வழியாக நீர் மேலிழுக்கப்படுவதும் சாதாரணமானது. இதனால் கீழ்ப் பகுதியிலிருக்கும் உப்புச்சாரம் மேற்படையைச் சென்றடையும்

Page 88
164. cu:
இந்நிலைமைகள் ஏரல் - கஸ்பியன் கடல் போன்ற உள்நாட்டு வடிகாற் பிரதேசங்களில் நிலவுகின்றன. உவர் மண்கள் வேறு பட்ட 3 தொகுதிகளாக விருத்தியடைந்து காணப்படுகின்றன. அவை (1) சொலோன்சாக் (Solonchak), (ii) சோலோநெற் (Solonetsk). (iii) GF TFG Snorris (Soloth) a'r gŵr Igor o'r tir (7). சொலோன்சாக் மண்ணில் வெண்ணிறமான உப்புக்கள் மேற் படையில் (A) திரளும் இவ்வாறு திரளும் உப்புக்கள் நீர்ப் பாய்ச்சல் காரணமாக (B) படைக்குக் கீழிறங்கிய நிலைமையில் சொலொநெற் வகையான மண் உருவாகும். அதேசமயம் முன்னேற்றமான வடிகால்முறை, நீர்முறைய ரித்தல் போன்ற வற்றின் விளைவாக உப்பு மேலும் கீழிறங்குமாயின் அங்கு சொலோத் வகையான மண் உருவாகும். சொலோத் மென்னிற மான மேற்படையையும் கருங்கபில நிறமான 'B' படையை யும் கொண்டது. அது உவர் மண்களில் பயன் கூடியதாகும்.
(ii) கல்சியம் செறிந்த மண்கள் (Calcimorphic): இவை கண்ணாம்புப் பாறை மற்றும் சோக்கு போன்ற தாய்ப்பாறை களின் தாக்கம் மிகுந்துள்ள பகுதிகளில் உருவாகின்றன. இவை (1) றென்சினா (Readsta), (1) ரெறறோசா (Teratosa) என இருவகைப்படும் றென் சீனா, ஈரலிப்பான காலநிலையிலும் ரெறறோசா வரண்ட காலநிலையிலும் விருத்தியடைகின்றது : றென்சீனா மெல்லிய கருநிறமான மண்ணாகும். அதன் மேற் படை சேதனப் பொருட்களையும் கல்சியத்தையும் கொண்டி ருக்கும். ரெறறோசா மண் சுண்ணாம்புப் பாற்ைகளின் மேல் உருவாகிறது. அது கனமான களித்தன்மையுள்ள மண்ணாகும். அது கல்சியம் மற்றும் இரும்பு அலுமீனியம், சிலிக்கோன் ஒக்சைடுகளைக் (Sesquioxides) கொண்டிருக்கும். ஆனால் அதில் உக்கல் இருக்காது இரும்பு ஒக்சைடுகளின் செறிவு காரணமாகவே அது சிவப்பாயுள்ளது. தெற்கு ஐரோப்பாவில் பல இடங்களில் பரவலாகக் காணப்படும் இம்மண் செழிப்புக் குறைந்த மெல்லிய மண்ணாகும். 。
3. வலயமாகா மண்கள் இவற்றின் இயல்புகள், சிறப்பாக, தாய்பாறைகளின் தன்மையில் தங்கியுள்ளன. இதனால் தாய்பாறைகள் தோன்றிய முறையினடிப்படையில் இவற்றை () லித்தோசோல் (Lithosol) (ii) றிகோசொல் (Reposol) (i) வண்டல் என மூன்றாக வகைப்படுத்துவதுண்டு. இவை பொதுவாக நன்கு விருத்தியடையாத முதிர்ச்சியற்ற மண்களாகும். லித்தோசோல் வகையான மண்கள் மலைச் சரிவுகளிற் கானப்படுகின்றன. அவை தடிப்பற்ற கற்பாங்கான

1. 65
மண்களாகத் தாய்ப்பாறைகளின் மேற்கானப்படும். அவ்ை பெருமணிகளைக் கொண்டவையாகவும், சேதனப்பொருட்கள் குறைந்தவையாகவுமுள்ளன மலைச்சரிவுகளில் விரைவான வழி நீரோட்டம் காரணமாகத் தாவரங்கள் வளர்வதில்லை. எனவே இவ்வகை மண்கள் பயன் குறைந்தவை. றிகோசொல் வகை யான மண்கள் ஆழமான ஆனால் இறுக்கமற்ற பணிக்கட்டி யாற்றுப் படிவுகள் வெளியடையல்கள், காற்றெறிந்த நுண்மண், எரிமலைச் சாம்பல் ஆகியவற்றின் மேல் விருத்தியடைகின்றன. வேறுபட்ட இழையமைப்பைக் கொண்ட இப்படிவுகளிலிருந்து செழிப்பான மண்கள் உருவாகின்றன. வண்டல்மண் என்பது ஒடும் நீரினால் கொண்டு செல்லப்பட்டுப் படிவு செய்யப்படும் மண்ணாகும். அதில் மணல், மண்டி, களி ஆகியன கலந்து காணப்படும். அகன்ற ஆற்றுப் பள்ளத்தாக்குகளிற் படிந்து காணப்படும் வண்டல்மண் வெள்ளப் பெருக்கின்போது புதுப் பிக்கப்படுவது வழக்கம். இது பொதுவாக படையமைப்பற்ற தாயினும் முதிர்ச்சியடைந்த நிலையில் படையமைப்புடனும் வலயமண்ணின் பண்புகளுடனும் காணப்படலாம். வண்டல் மண் வளங்கூடிய பயன்கூடிய ஒரு மண் என்பது குறிப்பிடத் தி சிகிது.
9; 7. மண்ணரிப்பு
மண்ணரிப்பு பெளதிக மற்றும் மானிட காரணிகளால் ஏற்படுகிறது பெளதிகக் காரணிகளில் தரைத்தோற்றம் மழை வீழ்ச்சி, காற்று என்பவை முக்கியமானவை மழைவீழ்ச்சியைப் பொறுத்தவரை முறையே அதன் பருவகாலப் பரம்பல் செறிவு அளவு ஆகியனவும் காற்றைப் பொறுத்தவரையில் அதன் வேகம், வீசும் ஒழுங்கு, தாவரப் போர்வை, தரைத்தோற்றம் ஆகியனவும் அவற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துகின்றன. தரைத்தோற்றத்தில் சாய்வுகளின் தன்மை மண்ணரிப்பில் செல்வாக்குடையது.
மண்ணரிப்பை ஏற்படுத்தும் காலநிலைக் காரணிகளில் மழைநீரே முக்கியமானது. அது மேற்பரப்பை நேரடியாகத் தாக்குவதோடு, அம்மேற்பரப்பு வழியாகவும், மண்ணின் நுண் துளைகளுக்கூடாகவும் பக்கத்திசைகளிற் பாயும் நீர் மண்ணின் நுண்துளைகளின் வழியாகப் பக்கத்திசையில் பாய்வது ஊடு T TT SS S LLLLLLLLmmLLLLLL L LLLLL S TT 0Ta S TTTTT S TT TT நீர் உட்புகும் வேகத்தைவிட அதிகமாயின் மேலதிக நீர் மேற் பதிப்பு வழியாக ஒடிச்செல்லும் இவ்வாறு ஒடிச்செல்லும் மழை நீரின் அரிப்பு பலவகைப்படும் அவற்றில் (i) மழைத்துளி

Page 89
66 புவிவெளியுருவவியல்
அரிப்பு (i ) வழிநீர் அரிப்பு அல்லது தகட்டுக்கழுவல் (ii) தகட் S tataaa YLLLS S S TT TTTT SLLLLLLLL LLLLLLLLS S LLS S T TTS TtTTaS (Guyerosiou) ஆகியன முக்கியமானவை. பாரமான மழைத் துளிகள் நிலத்தில் மோதுவதனால் மழைத்துளியரிப்பு ஏற்படு கிறது. இவ்வாறு சடுதியான முகிலுடைப்பு அல்லது மழைப்புயல் ஏற்படும்போது, டாரிய துளிகள் மணிக்கு 30 கி.மீ வேகத்தில் நிலத்தில் வீழ்வதனால் 1 ஏக்கரிலிருந்து ஏறத்தாழ 250 தொன் அளவான மண்துணிக்கைகள் அகற்றப்படுகின்றன. வழிநீர் அரிப்பைத் தகட்டுக்கழுவல் எனவும் குறிப்பிடுவர். அது நீர் மேற்பரப்பில் தொடர்ச்சியாகப் பாய்ந்துசெல்வதைக் குறிக்கும். அதன் விளைவாக, நுண்மையான மண்துணிக்கைகள் பெருமள வில் நீக்கப்படுகின்றன. தகட்டுக்கழுவல் தொடர்ந்து நிகழு மாயின் அது த ட்டரிப்பாக மாறலாம். அதன் விளைவாக, மண்ணின் மெல்லிய மேற்படை முற்றாக அரித்துச் செல்லப் படும் ஒடையரிட்பு என்பது நீர் சரிவான் நிலத்தில் புவியீர்ப் பின் விளைவாகச் சிறு வாய்க்கால்கள் (ஓடைகள்) போலப் பாய்ந்து பண்ணை அரித்துச் செல்வதாகும். ஒடைகள் பெரி தாகும்போது நீரில் மண் அதிகமாகக் கலப்பதனால், அதன் அரிப்புத்திறனும் கூடும் அதன்விளைவாக ஒடைகள் ஆழமான டேரோடைகளாக உருவாகும். பேரோடைகள் கீழ்மண்படையை வெட்டிச்செல்வதோடு மேற்பரப்பில் ஆழமான பள்ளங்களை யும் உருவாக்கும். ஒடையளிப்பும் பேரோடையளிப்பும் பெரு மழையின் காரணமாகவே ஏற்படுகின்றன.
மண் அரிப்பை ஏற்படுத்தும் மானிடக் காரணிகளில் (1) காடழித்தல் (ii) உழுதல் (i) மிகைமேய்ச்சல் (iv) மிகைப் பயிர்ச்செய்கை (Overcultivation) (V) பிற்போக்கான பயிர்ச் செய்கை ( உம் சேனைப் பயிர்ச்செய்கை ) ஆகியன முக்கிய மானவை. இத்தகைய நடவடிக்கைகள் ஒன்றில் மண்ணரிப்பைத் தூண்டுகின்றன அல்லது துரிதப்படுத்துகின்றன எனலாம்.
9.8 மட்பாதுகாப்பு: மண்ணானது பயிர்ச்செய்கைக்கு மூலாதாரமான ஒரு இயற்கை மூலவளமாயிருப்பதனால் அதைப் பேணுதல் அவசியம் மட்பாதுகாப்பு என்பது மண்ணரிப்பைத் தடுத்து அல்லது குறைத்து அதன் வளங்குன்றாது பேணுதலாம். மழைநீரின் நேரடித்தாக்கத்தைக் குறைப்பதும், வழிநீரின் வேகத்தைக் குறைப்பதுமே மட்பாதுகாப்பின் குறிக்கோளாகும். பொருத்தமான பயிர்ச்செய்கை முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் மண்ணரிப்பைப் பெருமளவில் குறைக்கலாம் அவை

சாய்வுகள் 67
(1) சமஉயரக்கோட்டுத் திசையில் உழுதல் (i) துண்டுநிலப் பயிர்ச்செய்கை (i) பெரிய வயற்காணிகளைச் சிறிதாக்கி அவற்றைச்சுற்றி மரவேலி அமைத்தல் (iv) பயிர்நிலத்தைப் புல் நிலமாக்குதல் (v) சுழல்முறைப் பயிர்ச்செய்கை (wi) மாற்றுப் பயிர்ச்செய்கை (Vi) ஊடுபயிர்ச்செய்கை போன்றவற்றைப் கைக்கொள்ளுதல் (Vi) பண்ணைகளிலுள்ள புல்லின் தாங்கு திறனுக்கு ஏற்ற அளவில் விலங்குகளை வளர்த்தல் (ix) மலைக் பிரதேசங்களில் படிமுறைப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளுதல் ő TGST AF GØT6) AT LA
அத்தியாயம் 10
சாய்வுகள்
புவியின் நிலத்தோற்றத்தை நோக்குமொருவர், அதில் பெரும்பகுதி பலவகையான சாய்வுகளாகவும் ஒரு சிறு பகுதி மட் டு ம் மட்டமானதாகவுமிருப்பதை அவதானிக்கலாம். சாய்வுகள் வேறுபட்ட உருவங்கள், பரிமாணங்களுடன் உயர மான மலை உச்சிகளிலிருந்து ஆழமான கடலடித்தளம் வரை விரிந்து காணப்படுகின்றன
நிலவுருவங்களின் உருவவியலுடன் சாய்வுகளின் தேய்வும் இணைந்துள்ளதனால் சாய்வுகளில் ஏற்படும் மாற்றங்களையும் அவற்றுடன் தொடர்புள்ள காரணிகளையும் அறிவதில் புவி வெளியுருவவியலாளர்கள் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர். ஆயினும் சாய்வுகள் மாறுபட்ட பெளதிகச் சூழல்களில் வேறு பட்ட காரணிகளின் செல்வாக்கிற்குட்பட்டு உருவாகுவதனா லும் அவற்றின் பரிமாணம் 'காலம்' என்னும் காரணியில் கணிசமான அளவு தங்கியிருப்பதனாலும் (Timedependent) அவற்றை உருவாக்கும் செயல்முறைகள் சிக்கலானவையாயி ருப்பதனாலும் அவற்றின் உருவவியல் கருத்து வேறுபாடு களுக்கு இடமளித்துள்ளது.
சாய்வுகளின் உருவவியல் பற்றிய சில கோட்பாடுகள்
காலத்துக்குக்காலம் வெளிவந்துள்ளபோதிலும் அவற்றி ல் எதுவும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவற்றி

Page 90
168 புவிவெளியுருவவியல்
லுள்ள பிரதான குறைபாடு யாதெனில் அவை நீண்டகால அவதானிப்புகள், அளவீடுகள் மற்றும் வெளிக்கள ஆய்வுகளின் அடிப்படையில் அமையாமையே. அதேசமயம் எண்ணளவீட்டு அடிப்படையிலான சில கோட்பாடுகள் அண்மைக்காலத்தில் வெளிவந்திருப்பினும் ( ம் ஸ்ராலர் பெண்மன் டல்றிம்பிள்) அவையும் முழுமையானவையாகவோ முடிந்த முடிவுகளா
கவோ இல்லை என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது
10, 1 சாய்வுக்கூறுகள் (அலகுகள்) சாய்வுகளின் உரு வங்கள் வேறுபட்டவை அவை வேறுபட்ட உயர மட்டங்க ளில் தனியாகவோ, கலந்தோ காணப்படலாம். ஆயினும் அவ்வுருவங்களின் தோற்றம் அல்லது அமைப்பின் அடிப்படை யில் அவற்றை நான்கு அலகுகளாக வகைப்படுத்தலாம். அவை (1) குவிந்த சாய்வு (2) ஒங்கல், (3) நேர்ச்சாய்வு (4) குழிந்த சாய்வு என்பனவாம்
() குவிந்த சாய்வு (Waxing Slope 3 g Lng) aui ைெயயொட்டிக் காணப்படும். இதனை வளரும் சாய்வு எனவும் வழங்குவர். ஈராற்றிடை நிலத்தில் உச்சியின் இரு புறமும் இவ்வகையான சாய்வுகள் உருவாகும்
(11) ஓங்கல் இது ஒரு பள்ளத்தாக்குச் சாய்வின் மேற் பகுதியில் நிலைக்குத்தாடை அல்லது குத்தான முகத்தோற் றத்துடன் ATGITT LIGN:n tu தியாகும் இது பாறைத் துண்டுக்
படம் 28 சாய்வுக் கூறுகள் 1. குவிந்த சாய்வு (உச்சி) 2 ஓங்கல் (சரிவுச் சாய்வு) 3. நேர்ச் சாய்வு (பாறைத்துண்டுக்குவைச் சாய்வு) 4 குழிவுச் சாய்வு சரிவுச் சமதளம் (தேயும் சாய்வு)
 
 
 

!േ
குவையினால் மூடப்படாமல் வெளிப்படையாகவும் முனைப் பாகவும் தோன்றுவதனால் இதனை வெளிமுகம் (Free Foce) எனவும் குறிப்பிடுவர்.
(ii) நேர்ச்சாய்வு இது ଜଗଜ୍ଜults); பள்ளத்தாக்குச் சாய் வில் பெரும்பகுதியை உள்ளடக்கியும் சிலபோது மற்றைய சாய்வுக்கூறுகளுக்கிடையிலும் கானப்படலாம் இத ை பாறைத்துண்டுக்குவையினால் கட்டுப்படுத்தப்படும் சாய்வு
TT DT) (Constits எனவும் குறிப்பிடுவதுண்டு
(ty) குழிவுச்சாய்வு இது பள்ளத்தாக்கின் கீழ்ப்பாகத்தில் உருவாகும். இதன் மேற்பகுதியில் பாறைத் துண்டுகள தொடர்ச்சியாகத் திரள்வதனாலும், கீழ்ப்பகுதியில் வானிலை யாலழிதல் இடம்பெறுவதன்ாலுமே குழிவுத்தன்மை உண்டா கிறது. ஆயினும் இதுவும் காலப்போக்கில் தேய்வடைவதனால் இதனைத் தேயும் சாய்வு (Woning Sope) எனவும் குறிப்பி
" . . . . - 10 2 சாய்வு உருவங்களைப் பாதிக்கும் காரணிகள்
சாய்வு உருவங்கள் பல காரணிகளாற் பாதிக்கப்படுகின் றன அவை (1) பாறைகளின் இரசாயனச் சேர்க்கை (i) மூட்டுடைத்தன்மை (i) உட்புகவிடுதன்மை (1) சாய்வுக் கோணம், (v) சாய்வின் அடிப்பாகத்திற்பாயும் ஆற்றின் அரிப்பு வேகம் (vர்) காலநிலை (Vi) தாவரப் போர்வை யின் தன்மை (wi) நிகழ்காலப் புவியசைவுகள் என்பன வாம். இவற்றில் காலநிலை மற்றைய சில காரணிகளின்மேல் செல்வாக்குடையதாயிருக்கலாம். ஆயினும் பாறை க ளின் தன்மையானது வானிலையாலழிதலைப் பாதிப்பதன் மூலம் காலநிலையின் தாக்கத்தைக் கணிசமான அளவு குறைக்கலா மென்பதை உணரவேண்டும் -
ஆய்வுகளும் அணுகுமுறைகளும்
சாய்வுகள் பற்றி இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் இரு அணுகுமுறைகளைக் கையாண்டன. சாய்வுகள் காலத்து டன் மாறுகின்றன பரிணமிக்கின்றன என்ற அடிப்படையில் அணுகுவது ஒரு முறையாகும். அதே சமையம் சாய்வுகளின் உருவம் அவற்றில் இடம்பெறும் செயல்முறைகளினால் நிர்ண விக்கப்படுகின்றது என்ற அடிப்படையில் அணுகுவது மற்றொரு

Page 91
70 புவிவெளியுருவவியல்
முறையாகும். இவற்றில் முதலாவது முறையானது, ஒங்கல் போன்ற ஒரு தொடக்க நிலைச் சாய்வின் விருத்தியை - சிறப்பாக அதன் உருவத்தையும் கோணத் தொடக்கத்தையும் - அதன் வய துடன் (காலத்துடன்) பொருத்துகிறது. உதாரணமாக, குழிந்த சாய்வுகள் இளமையானவையென்றும் குவிந்த சாய்வுகள் முதிர்ந் தவையென்றும் கூறப்படுகிறது. ஆனால் தொடக்க நிலைச் சாய்வு எத்தகையது, என்பதை அறியமுடியாதிருத்தல், பெரும் பாலான சாய்வுகள் ஓங்கல்களாயில்லாமல் பள்ளத்தாக்குச் சர்ய்வுகளாகக் காணப்படுதல், எல்லாச் சாய்வுகளும் காலப் போக்கில் தேய்ந்து மாறாமை, சில சாய்வுகள் சமாந்தரமாகப் பின்வாங்குதல் அல்லது அதிக குத்தாகுதல் ஆகியன காரணமாக இந்த அணுகுமுறைக்கு அதிக ஆதரவு கிடைக்கவில்லை.
இரண்டாவது அணுகுமுறையானது, வானிலையாலழிதல் அரித்தல், கொண்டுசெல்லல் படிவு செய்தல் போன்ற உரிவுச் செயல்முறைகளுக்கும் சாய்வுகளின் உருவம் கோணம் என்பவம் றிற்குமிடையில் நெருக்கமான தொடர்புள்ளதெனக் கூறுகிறது. ஆனால் இந்த அணுகுமுறையிலும் சில குறைபாடுகள் உள்ளன. -9|33)3): 1) д тајфа»әт உருவாக்குவதாக நம்பப்படும் செயல் முறைகள் மெதுவாகச் செயல்படுவதனால் குறுகிய கால அளவீடு கள் பதிவுகள்மூலம் அவற்றின் செல்வாக்கைக் கூறமுடியா துள்ளது (2) சல உரிவுச் செயல்முறைகளும் (உம். மண் ணோட்டம், கழுவல் ) உண்மையிலேயே சாய்வுகளை உருவாககு கின்றன என்பதைச் சுட்டிக்காட்ட முடியாதிருக்கின்றது. (3) இன்று நாம் காணும் சாய்வுகள் எல்லாமே ( அல்லது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ) இக்காலத்தில் இடம்பெறும் செயல்முறைகளினால் மட்டும் உருவாக்கப்ப்டவில்லை அவற் றில் சில சாய்வுகள் பழைய எச்சச் சாய்வுகளாயுள்ளன (Relict slopes) (4) சாய்வுகளை உருவாக்கும் செயல்முறைகள் கால நிலைக்கேற்ப வேறுபடுவதனால், ஈரக் காலநிலையிலும் வறண்ட காலநிலையிலும் விருத்தியடையும் சாய்வுகளின் உரு வங்கள் கணிசமான வேறுபாடுகளைக் காட்டுகின்றன.
மேற்குறித்த இரு அணுகுமுறைகளிலும் சில குறைபாடு களிருப்பினும் அவை சாய்வுகள் பற்றிய சில மெய்மைகளை வெளிப்படுத்தியிருப்பதோடு, இத்துறையில் ஆய்வுகள் ம்ேற் கொள்ளப்பட வேண்டிய முறையையும் திசையையும் சுட்டியிருப்
1கை மறுக்கமுடியாது. "、 ”。 薰 ,

சாய்வுகள் 7.
16. 4. சாய்வுகள் பற்றிய கோட்பாடுகள்:
சாய்வுகளின் உருவவியல் பற்றிப் பல கோட்பாடுகள் வெளி வந்திருப்பினும் அவற்றில் W. பெங், W. M. டேவிஸ், L. C. கிங் ஆகியோரின் கோட்பாடுகளே புவிவெளியுருவவியலறிஞர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளன.
(i) பெங்கின் கோட்பாடு: W. பெங், உய்த்துணர் முறை யிலேயே சாய்வுகளின் பரிணாமத்தை விளக்குகிறார், ஆனால் டேவிஸ் கருதியதுபோல் சாய்வுகள் காலத்துடன் மாறுகின்றன என்பதை அவர் மறுக்கிறார். பெங், தொடக்க நிலைச் சாய்வு மற்றும் அதில் இடம்பெறும் செயல்முறைகள் ஆகியன பற்றிச் சில அனுமானங்களை ( Assumptions) வெளியிட்டார். அவை (1) உரிவுமுறையில் உருவாகும் சாய்வானது அதில் இடம் பெறும் செயல்முறைகளினால் நேரடியாகப் பாதிக்கப்படுவ தில்லை. மாறாக, வானிலையாலழிதலினால் உருவாகும் சிதைவுப் பொருட்களை அகற்றுவதன்மூலம் பாறைகளை வெளிப் படுத்தி அவற்றை மீண்டும் மீண்டும் அழிவுக்குட்படுத்துவதே அச்செயல் முறைகளின் பணியாகும் (2) ஒரு சாய்வு பின்வாங்கும் வேகம் அதன் சாய்வுக் கோணத்தைப் பொறுத்தது. இதன்படி குத்தான சாய்வு எப்பொழுதும் ஒரு மென்சாய்வைவிட வேக மாகத் தேய்வடையும். அதே சமயம் ஒரு மென்சாய்வின் கீழிருக் கும் குத்துச்சாய்வு விரைவாகத் தேய்வடையும்போது அதன் மேலுள்ள மென்சாய்வும் பாதிப்புற்று அழியும், இவ்வாறு ஒரு நீர்பிரிநிலத்தின் இருபுறமுமுள்ள குத்தான சாய்வுகள் விரை வாகப் பின்வாங்கி அழியும்போது அவற்றின்கீழ் உருவாகும் மென்சாய்வுகள் அக் குத்துச்சாய்வுப் பகுதியை நோக்கி (உள்ள டக்கி) விரிவடையும். (3) எந்த வகையான சாய்வும் சிறியதும் பெரிதுமான ஆனால் நேரான பல சாய்வுக்கூறுகளைக் கொண் டிருக்கும். (4) சாய்வு அலகுகள் எல்லாமே சாய்வின் அடிப் பாகத்திலிருந்து உருவாகத் தொடங்கும் (5) சாய்வு அலகு கள் - அவற்றின் பருமனும் கோணமும் எவ்வாறிருப்பினும் - ஒரு சீராக வானிலையாலழிவுக்குட்படும்போது சமாந்தரமாகப் பின் வாங்கும்.
பெங்கின் கோட்பாட்டிலுள்ள சிறப்பம்சங்கள் இரண்டா கும். பள்ளத்தாக்குச் சாய்வுகளின் உருவமும் கோணமும் அப் பள்ளத்தாக்கிற் பாயும் ஆற்றின் கீழ் வெட்டும் வேகத்தைப் பொறுத்து வேறுபடும் என்பது அவற்றில் ஒன்று. இதன்படி ஆறுகள் குறையும் வேகத்தில் அரிக்கும் நிலைமையில் குவிவுச்

Page 92
72 புவிவெளியுருவவியல்
சாய்வும் ஒரே வேகத்தில் அரிக்கும்போது நேரான சாய்வும், அதிகரிக்கின்ற வே கத் தி ல் அரிக்குமாயின் குவிவுச் சாய்வும் உருவாகும். பெங்கின் கோட்பாட்டின் மற்றொரு அம்சம் சாய்வு கள் கீழிருந்து மேல்நோக்கித் தேய்வடைவதும் விரிவடைவது மாகும். இதன்படி சாய்வின் கீழ்ப்பகுதி மெதுவாகத் தேய் வடைந்து தொடர்ச்சியான பல அடித்தளச் சாய்வுக் கூறுகளை உருவாக்கும்போது சாய்வின் குத்தான மேற்பகுதி சமாந்தர மாகப் பின்வாங்கி விரைவாகத் தேய்வடையும். அந்நிலையில் கீழ்ப்பகுதில் உருவாகின்ற மென்சாய்வு முகப்புகள் (அடித்தளச் சாய்வுக் கூறுகள்) மேல்நோக்கி விரிவடைந்து மேற் சாய்வுகளைத் தம்முள் அடக்கும். அதாவது மேற் சாய்வுகளாக மாறும் FTü6j LDrt på ( Stope Replacement) at airgo) in இச் செயல்முறை யானது இறுதியில் முழு நிலப்பரப்பும் தேய்வடைய வழிவகுக்கும்.
பெங், ஆற்றரிப்பும் படிவு செய்தலும் நிகழாத ஒரு பள்ளத் தாக்கிலுள்ள நேரான ஒரு சாய்வு அலகைத் தொடக்கச் சாய் வாகக்கொண்டு அதன் விருத்தியை (பரிமாணத்தை ) விளக்கி புள்ளார். அச்சாய்வின் எல்லாப் பகுதிகளிலும் வானிலையா லழிதலும் அழிவுப் பொருட்கள் அகற்றப்படுதலும் ஒரேயளவி லும் , ஒரே வேகத்திலும் இடம்பெறுவதனால் அது சமாந்தர ாேகப் பின்வாங்கும் அதன் விளைவாகக் குறிப்பிட்ட ஒருகால
|? (ත්‍රී ක්‍රි.
படம் 29 பெங்கின் கோட்பாடு 1, 2, 3 அடித்தளச் சாய்வுகள், கீற்றுக்கோடு, சாய்வின் இறுதிநிலையைக் குறிக்கும். எல்லையில் சாய்வின் நிலையம் 'அ' விலிருந்து "ஆ" வுக்கு மாறும் அதேசமயம் அச்சாய்வின் அடிப்பாகத்திற் திரளும் பாறைத் துண்டுகள் வானிலையாலழியும்போது அவை கழுவுநீர், மண் ணோட்டம் என்பவற்றினால் அகற்றப்படுவதனால் அங்கு ஒரு அடித்தளச் சாய்வு உருவாகும். இதன்மேல், குறிப்பிட்ட ஒரு
 
 

சாய்வுகள் 。173
கால எல்லையில் சாய்வின் நிலையம் 'ஆ' விலிருந்து இ க்கு மாறும் இவ்வாறு சாய்வுகள் சமாந்தரமாகப் பின்வாங்கும்போது அவற்றின் நீளமும் படிப்படியாகக் குறைபும். அதே சமயம் முதலில் உருவாகிய அடித்தளச் சாய்வும் சமாந்தரமாகப் பின் வாங்கும்போது, அதன்கீழ் இன்னொரு அடித்தளச் சாய்வு உரு வாகும். 。
மேல் விபரிக்கப்பட்ட முறையில் பல அடித்தளச் சாய்வுகள்
வேறுபட்ட பரிமாணங்களுடன் தொடர்ச்சியாக உருவாதலினால்
தொடக்கச் சாய்வானது காலப்போக்கில் பல் சாய்வு முகப்பு டன் தோன்றலாம். ஆயினும் அடித்தளச் சாய்வுகள் படிப்படி யாக மேல்நோக்கி விரிவடையும்போது தொடக்கச் சாய்வின் கீழ்ப்பாகம் முதலில் குழிவுத்தன்மையைப்பெறும். அதனைத் தொடர்ந்து மேற்சாய்வு மேலும் தேய்வடைந்து அதன் கோணம் குறையும்போது முழுச் சாய்வின் பெரும்பகுதி குழிவுத் தன்மை யைப்பெறும். ஆனால் குழிவுத்தன்மை முற்றிலும் ஒப்பரவாக அல்லது பகுதிகள் ஒப்பரவானதாகவும் காணப்படலாம்.
மேல் விபரிக்கப்பட்டவாறு சாய்வின் தேய்வு முதிர்ச்சி யடைந்த நிலையில் அதில் 90% வரை குழிவானதாயிருக்கு மென நம்பப்படுகிறது. பின்னர் இறுதி நிலையில் சாய்வு முற்றாக அழியுமெனினும், பள்ளத்தாக்கிற்பாயும் ஆறு கீழ் வெட்டலில் ஈடுபடாதிருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். ஏனெனில் ஆறு கீழ் வெட்டலில் ஈடுபடுமாயின், அதன் கீழ்வெட்டும் வேகத் திற்கேற்பச் சாய்வின் உருவமும் மாறிக்கொண்டேயிருக்கும்.
இவ்வாறு, பெங், ஒரு பள்ளத் தாக்குச் சாய்வின் கோண மும் அதன் முகத்தோற்றமும் அதிற்பாயும் ஆற்றின் அரிப்பு வேகத்தைப் பொறுத்து வேறுபடுமெனவும் எவ்விடத்திலாயிலும் காணப்படும் சாய்வுக்கோணம் அங்கு இடம்பெறும் வானிலை யாலழிவின் வேகத்திலும் அழிவுப் பொருட்கள் அகற்றப்படும். வேகத்திலும் தங்கியுள்ளதாகவும் அச் செயல்முறைகளிடையே சமநிலை ஏற்படும்போதுசாய்வுகள் சமாந்தரமாகப் பின்வாங்கும் எனவும் கூறியதைப் பல புவிவெளியுருவவியலாளர்கள் ஏற்க மறுக்கின்றனர். அவர்கள், செயல்முறைகளுடன் தொடர்புள்ள காரணிகளான பாறைவகை, அவற்றின் அமைப்பு, காலநிலை போன்றவற்றின் செல்வாக்குகள் உள் நாட்டிலும் பிரதேச ரீதி யாகவும் முதன்மைபெறலாமெனக் கூறுகின்றனர். மேலும் பெங் கின் கருத்து சமநிலைச் சாய்வு பற்றிய கருத்துடன் முரண்

Page 93
74. புவிவெளியுருவவியல்
படுகிறது. ஏனெனில் ஒரு சமநிலைச் சாய்ை உருவாக்குவ இடம்பெறும் செயல்முறைகள் மட்டு மன்றி மேற்சாய்வுச் செயல்முறைகளான சுமையின்தன்மை, ஆதன் அளவு குறித்தவோரிடத்தில் மேலிருந்துவரும் கழுவு நீரின் அளவு ஆகியவற்றுக்கும் அதன் உருவாக்கத்தில் பங்கிருப் பதாகக் கருதப்படுகிறது.
(I)LC,ä என்பாரின் கருத்துக்கள் -
கிங் சாய்வுகளில் நான்கு அமைப்புக் கூறுகை ୯୬;$3&l-lift ଜୀtr; } காண்கிறார். அவை உச்சி (Creet ) சரிவுச் சாய்வு Scorp Slope ), பாறைத்துண்டுக் குவைச் சாய்வு (Debris slope), gif வுச் சமதளம் (:Pediment), Grağru çörəmirib. அலன்வூட் இவற்றை முறையே வளரும் சாய்வு (Waxing Slope), வெளிமுகம் (Free Face) ஒருநிலைச் artia ( Constant Slope ), தேயும் சாய்வு (Warning Slope), arar. பெயரிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்குறிப்பிட்டநான்கு அமைப்புக்கூறுகளும் நன்கு(முழுமை a lit 5) விருத்தியடைவதற்கு ରାଷ୍ଟ୍tଜolourtଜot அடித்தளப்பாறை யும் போதிய திரைத்தோற்றமும் அவசியமெனவும் அந்நிலைமை கள் காணப்படாவிடின், சரிவுச் சாய்வும் பாறைத்துண்டுக் குவைச்சாய்வும் உருவாகாமல் மேற்புறம் குவிந்து, கீழ்ப்புறம் குழிந்த ஒரு தேய்நிலைச் சாய்வு மட்டுமே தோன்றுமெனவும் கிங் கூறியுள்ளார். மே லும் சாய்வுகளின் பரிணாமத்தின்போது திரள்வமுக்கல் ( Mass Siding ), நீரளிபள்ளங்களி é5ᏛᏈ ᏣᎧᏬᏁᏍ8 ability (Head ward Gully Erosion), arab இரு செயல்முறை களின் விளைவாக சரிவுச் சாய்வு தேய்வடைந்து சமாந்தர Off & பின்வாங்குமெனவும் (i) உயர்ந்த அரைத்தோற்றம் (i) கிடையான 1769ADLUGODLOČILA (iii) Gత్గా : ଅFrt liର); குறைச்சரிவுச் சாய்வாக (F Scarp) அல்லது சரிக்கப் சரிவுச் சாய்வு (Te Scarp) காணப்படுதல் போன்ற நிலைமை கள் சமாந்தரமாகப் பின்வாங்கலுக்கு உதவும் எனவும் சாய்வு கள் பின்வாங்குதலே Pேழுச் சாய்வினதும் பரிணாமத்தைக் கட்டுப்படுத்துவதாகவும் கிங் கருதுகிறார், மேலும் அவர் கணிசமான அரைத்தோற்றம் காணப்படுமிடங்களில் எந்தவகைப் பாறைகள் காணப்படினும் சரிவுச்சாய்வு தோன்றுதல் தவிர்க்கு முடியாதென்றும், அதுவே இயல்பான நிலைமை என்றும்

சாய்வுகள் 75ן
படம்: 30 கிங் என்பவரின் சமாந்தரப் பின்வாங்கல் கோட்பாடு
கிங், டேவிசைப் பின்பற்றி சாய்வுகளின் விருத்தியை நில வுருவவிருத்தியுடனும் தொடர்புறுத்துகிறார். அவர் சாய்வு களின் சமாந்தரப் பின்வாங்கல் சரிவுச் சமதளம் உருவாதல் எனும் இரு செயல்முறைகளுமே நிலப்பரப்பைப் பாதிக்கும் பல மான கருவிகளாகவிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். சாய்வுகள் பின்வாங்குதல்மூலம் நிலம், பதிவான தரைத்தோற்றத்தைப் பெற்ற பின்னர் இருவகையான நிலப்பரப்புகள் உருவாகுமென் றும், வன்பாறைகள் காணப்படுமிடங்களிலும் நீரின் செயல் முதன்மை பெறுமிடங்களிலும் நிலம் பல்குழிவுத் தன்மையையும் மென்பாறைகள் காணப்படுமிடங்களிலும், திரள்வழுக்கல் தொழிற்படுமிடங்களிலும் நிலம் மேற்குவிந்து - கீழ் குழிந்த (Covexo Concave) தன்மையைக் காட்டுமெனவும் கிங் விளக்கு கிறார். மேலும் கிங், சாய்வுகளின் பரிணாமம், காலநிலையி னாற் கட்டுப்படுத்தப்படமாட்டாதெனவும் எக்காலநிலையிலும் சரிவுச்சாய்வு பின்வாங்குதலும் சரிவுச்சமதளம் உருவாதலும் இடம்பெறலாமெனவும் கருதுகிறார். இவ்வாறு சாய்வு பின் வாங்குவதனால் அதன் கீழ்ப்பகுதியில் உருவாகின்ற சரிவுச்சம் தளம் மேலும் விரிவடையும்போது காலப்போக்கில் அத்தளத் தில் சாய்வுக்கோணமும் குறையுமென்றும் அதற்கு (1) அடித் தளப்பாறைகள் மட்டமாதல் (2) வழிநீர்ப்படிவுகள் அகற்றப் படுதல் என்னும் இரு செயல்முறைகளும் உதவுமெனவும் அவர் விளக்குகிறார்.
(ii) டேவிஸ் அவர்களின் கருத்துக்கள் :
டேவிஸ் வட்டமுறையான நிலவுருவவிருத்தியுடன் சாய்வு
களின் பரிணாமத்தையும் இணைத்து விளக்குகிறார். அவர் ஈரலிப்பான இடைவெப்பக் காலநிலைப் பிரதேசங்களை மனதிற்

Page 94
76. புவிவெளியுருவவியல்
கொண்டு உய்த்துணர் முறையில் (Deductive ) சாய்வுகளின் உருவவியல் பற்றிய த மது கருத்துக்களை வெளியிட்டார். அவரது கருத்தின்படி மேலுயர்த்தப்பட்ட ஒரு நிலப்பரப்பின் இளமைக்காலத்தில் விரைவான மேலுயர்ச்சி, அருவிகளின் விரைவான கீழரிப்பு ஆகியன காரணமாக அதன் தொடக்க நிலைச் சாய்வுகள் குத்தாகக் காணப்படும். அந்நிலையில் வானிலையாலழிதல் வெளியரும்பு பாறைகளைப் பாதிப்பத னால் உருவாகும். பாறைத்துண்டுக்குவை கீழ்ச்சாய்விற் குவியும் அக்குவியல், கீழுள்ள பாறைகளை வானிலையாலழிவிலிருந்து பாதுகாப்பதோடு கீழ்ச்சாய்வின் கோணத்தையும் குறைப்பத னால் பாறைச்சிதைவுகள் அகற்றப்படும் வேகமும் குறையும். ஆயினும் வெளியரும்பு பாறைகளின் அழிவும், அழி பொருட் கள் அகற்றப்படுதலும் ஒரேயளவாயிருக்கும்போது, சாய்வுகள்
படிப்படியாக - முழுமையாகத் தேய்வடையும், இவ்வாறு டேவி ஸின் திட்டத்தில் சாய்வுகள் மேலிருந்து கீழ்நோக்கித் தேய்வ
டைதல் முக்கிய அம்சமாகும்.
சாய்வுகள் மேலிருந்து தேய்வடையும்போது மேற்சாய்வு களில் குவிவுத் தன்மையும் கீழ்ச் சாய்வுகளில் குழிவுத் தன்மை யும் தோன்றும் மண்ணோட்டம், மேற்சாய்வுகளில் குவிவுத் தன்மையை ஏற்படுத்தக்கூடிய முக்கியமான காரணி என டேவிஸ் குறிப்பிட்டுள்ளார், மேலும் அரிப்பு வட்டம் முதிர்ச்சி நிலையை நோக்கிச்செல்லும்போது இந்நிலைமைகள் மேலும் விரிவடையும் எனவும் இதன் விளைவாகச் சாய்வுகள் கீழ்நோக்கி மேலும் தேய்வடையும்போது ஒரு நிலைபில் மேற்சாய்வின் வெளிமுகம் (முகப்பு) முற்றாக மறைந்து முழுச்சாய்வும் ஒரு நீண்ட வளை கோட்டையைப்போல உருப்பெறும் எனவும் டேவிஸ் விளக்கி யுள்ளார்.
ஒப்பீடு டேவிஸ், பெங், கிங் எனும் மூவரினதும் கோட் பாடுகள், வன்மையான மூடிப்பாறையைக்கொண்ட சாய்வு
களுக்கேயன்றி மென்பாறைச் சாய்வுகளுக்குப் பொரு ந் த மாட்டா டேவிஸ், பெங் என்பவர்களின் மாதிரிகைகள்
பாறைத்துண்டுக்குவை விரைவாக அகற்றப்படாத கொண்டு செல்லல் மட்டுப்படுத்தப்பட்ட" (Transport Limited) சாய்வு
களுக்கு ஏற்றவையாயிருப்பதனால் அவை சிறப்பாக பனிக்
கட்டியர்றாக்கப்பட்ட பிரதேசங்களின் எல்லைப் பகுதிகளில் (Periglacial) விருத்தியடைந்துள்ள சாய்வுகளுக்கும், பொது வாக, இடைவெப்ப பிரதேசங்களுக்கும் பொருத்தமானவை பாகக் கருதப்படுகிறது. அதேசமயம், கிங் தெரிவித்த சமாந்
المر

சாய்வுகள் 77
தரப் பின்வாங்கல் செயல்படுவதாயின் பாறைத்துண்டுக்குவை உடனுக்குடன் - விரைவாக அகற்றப்படுதல் அவசியம். இது னால் அது 'வானிலையாலழிதல் மட்டுப்படுத்தப்பட்ட (Weathering Limited frt tigyasooji Gas gigas பொருத்தமானது வரண்ட காலநிலைப் பிரதேசங்களில் வானிலையாலழிதல் மெதுவாக இடம்பெறுவதனாலும் அங்கு தாவரப் போர்வை குறைவாயிருப்பதனாலும் தகட்டுக்கழுவலே (SheetWash) முக்கியமான கொண்டுசெல்லும் முறையாயிருப்பதனாலும் சமாந்தரப் பின்வாங்கல் அப்பிரதேசங்களுக்கே அதிக பொருத் தமானது. ஆயினும் பணிக்கட்டியாறாக்கப்பட்ட பகுதிகளின் எல்லைப் பிரதேசங்களிற் காணப்படும் 'படிச்சாய்வுகளின் இ விருத்தியிலும் ஈரவெப்ப வலயத்தில் வன்மையான மூடு பாறையைக் கொண் ட (Duricrusted) சரிவுப்பாறைகள், மேசைமலைகள் போன்றவற்றின் விருத்தியிலும் கிங் தெரி வித்த கருத்துக்கள் ତୂ]୮୩ ଗ୍ଧ பொருத்தமானவையாகத் தெரி கின்றன:
is big 3
இடது "கிங் அவர்களின் கருத்து வலது டேவிசின் கருத்து
டேவிசின் மாதிரிகையில் சாய்வின் குத்தான பகுதியின் கோணம் படிப்படியாகக் குறைந்து, முற்றிலும் மேற்குவிந்து கீழ்க்குவிந்த பக்கப்பார்வை (Convex - Concave) உருவாகும். ஆனால் பெங்கின் மாதிரிகையில் கீழ்ச்சாய்வின் தேய்வைத் தொடர்ந்து அதன்மேலுள்ள சாய்வும் மென்சாய்வாக மாறு வதனால் முழுச்சாய்வின் உச்சக்கோணமும் கு  ைற ந் து சாய்வின் முதிர்ச்சி நிலையில் குழிவுத்தன்மை தோன்றும் பகுதி முழுச்சாய்வின் நீளத்தில் 20% மாகவும் கு பூழி வுத் தன்  ைம தோன்றும் பகுதி 10% மாகவும் காணப்படும். அதேசமயம் பெங்கின் மாதிரிகையில் குவிவுத்தன்மை 10%மாகவும், குழி வுத்தன்மை 5%த்திற்கும் குறைவாகவும் காணப்படும். கிங்கின்

Page 95
78 புவிவெளியுருவவியல்
மாதிரிகையில் சாய்வின் உச்சக்கோணமும் சாய்வுக்கூறுகளின் நீளமும் மாறாது. ஆனால் குழிவுத்தன்மை மாற்றமடைந்து விரிவடைவதனால் அப்பகுதியில் எங்காயினும் காணப்படும் கோணம் குறைந்துகொண்டிருக்கும்.
சாய்வுகள் பற்றிய ஆய்வுகளின்போது எதிர்ப்படும் வேறு பட்ட சிக்கல்கள் இதுவரை முற்றாகத் தீர்க்கப்படவில்லை. இதனால் புதியபுதிய கோட்பாடுகள் வெளிவந்தவண்ணமே புள்ளன. அவற்றில் பெரும்பாலானவை ஒன்றில் சில நிலைமைகளுக்கு, அல்லது சில பிரதேசங்களுக்கு மட்டுமே பொருந்துவனவாயுள்ளன. ஆயினும் சாய்வுகளுடன் தொடர் புள்ள காரணிகள் பற்றிய பெர்துவான விளக்கம் ஏற்பட்டுள் ளதனால், அவற்றின் உருவங்கள், பரிமாணங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புள்ள செயல்முறைகள் பற்றிய எண்ணள வீட்டுமுறையிலான ஆய்வுகளே இன்றைய தேவையாகும். இதனை உணர்ந்த ஆய்வாளர்கள், தற்போது பாறையியல் பரிமாணங்கள் என்பவற்றுடன் சாய்வு உருவங்களைப் பொருத்தி விளக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

அத்தியாயம் 11
புவியசைவுகள்
புவியின் அகத்தே உருவாகிச் செயல்படும் சில விசை களின் தாக்கத்தினால் புவியோட்டின் பகுதிகள் அவ்வப்போது ஆங்காங்கு பாதிப்புக்குள்ளாகி அசைகின்றன. இத் த  ைக ய அசைவுகள் சிலபோது ஆக்கபூர்வமான விளைவுகளையும், சில போது அழிவுகளையும் ஏற்படுத்துகின்றன. இவற்றில் ஆக்க பூர்வமான விளைவுகளை ஏற்படுத்தும் அசைவுகளைப் புவி யோட்டு விருத்திக்குரிய அசைவுகள் எனக் கூறுவதுண்டு. அதே சமயம் புவியோட்டில் அழிவுகளை மட்டும் உண் டா க்கும் அசைவுகள் புவிநடுக்கங்கள்’ என அழைக்கப்படுகின்றன.
11 (அ) புவியோட்டு விருத்தி அசைவுகள்
புவியோட்டுவிருத்திக்குரிய அசைவுகளை உண்டாக்கும் விசைகளை (1) ஆரவிசைகள் (2) தொடுகோட்டுவிசைகள் என இரண்டாகப் பிரிக்கலாம். ஆரவிசைகள் புவியின் உட் பாகத்திலிருந்து வெளிநோக்கியோ வெளி யி லி ரு ந் து உள் நோக்கியோ செங்குத்தாகச் செயல்படுவனவாகும். அவை புவியோட்டின் சில பகுதிகளை உயர்த்தும் அல்லது தாழ்த்தும். அவ்வசைவுகள் எப்பொழுதும் பரந்த அளவில் செயல்படுவத Gör firqəsi) அவற்றைக் கண்டவாக்க அசைவுகள் எனவும் குறிப்பி டுவர்.
தொடுகோட்டு விசைகள் புவியின் மேற்பரப்பிற்குத்தொடு கோட்டுத் திசையில் கிடையாகச் செயல்படுவனவாகும். அவை (1) இழுவிசை (2) அமுக்கவிசை என இருவகைப்படும்
11. அ, (i) இழுவிசையும் அதன் விளைவுகளும்:
இழுவிசையின் விளைவாகப் புவியோட்டில் பிளவுகள் ஏற் படலாம். சிலபோது புவியோட்டுக் துண்டங்கள் கீழே நழுவுவ துமுண்டு. மேலும் இவை புவியோட்டை மெலியச் செய்து நீட்சியடையச் செய்வதனால் இவற்றை விரிவாக்க அசைவுகள் (Extensiona Movements) graoraiyub got it Gaigaior(5.

Page 96
go புவிவெளியுருவவியல்
இழுவிசையை அது ஏற்படும் அ ள வி ன் அடிப்படையில் (1) இடஇழுவிசை (2) பிரதேச இழுவிசை எனவும் பாகுபடுத் தலாம். இடஇழுவிசை சிறிய நிலப்பரப்பில் செயல்பட்டுப் பாறைகளில் சிறிய அளவான மாற்றங்களையே கொண்டு வருகிறது. அது பாறைகளை இடம்பெயரச் செய்வதில்லை. மாறாக, அவற்றில் தகைப்பை ஏற்படுத்தி அவை | ୩ ଜrtåål உதவுகின்றது. இவ்வாறு பாறைகளில் ஏற்படும் முழுமையான பிளவுகளை மூட்டுக்கள்' எனவும் கூறுவர். அடையற்பாறை களில் பாறைப்படைத் தளத்திற்குச் செங்கோணத் திசையில் மூட்டுக்கள் உருவாகும். பாறைப்படைகள் சரிந்து காணப்பட் டால் அவற்றின் சரிவு, கிடை, பாறைப்படைத்தளம் என்ப வற்றுக்குச் சமாந்தரமாக 3 சோடி மூட்டுக்கள் உண்டாகும் போது பாறைகள் செவ்வகத் திண்மங்களாகப் பி ள க்கு ம். ஒரு பாறைத்திணிவில் ஏற்படும் மூட்டுக்களில் பிரதானமான வற்றைப் 'பெருமூட்டுக்கள்' (Maste Joints) என்பர்.
மூட்டுக்கள் இழுவிசைகளினால் மட்டுமன்றி வேறு காரணங் களினாலும் ஏற்படலாம். உதாரணமாக தீப்பாறைகள் குளிர் வடைந்து திண்மையடையும் போதும், சுண்ணாம்புப்பாறைகள் பளிங்குருக்கொள்ளும்போதும் அடையற்பாறைகள் உலரும் போதும் மூட்டுக்கள் உண்டாகலாம். அன்றியும் மேல் மடிப் புக்களின் உச்சியிலும் மேலுயர்த்தலின்போது ஏற்படும் இழு விசையினாலும், பாறைகள் முறுக்கப்படுவதனாலும் திருகப் படுவதனாலும் மூட்டுக்கள் ஏற்படலாம்.
11. g (ii) பிரதேச இழுவிசை:
இது பரந்த அளவில் செயல்படுவதாகும். இதன் விளை வாகப் பாறைகள் இடம்பெயரும். இதனைக் 'குறைத்தல்' எனக் குறிப்பிடுவர். குறைத்தல் நிகழும்போது பி ள வு ற் ற பாறைத்திணிவு அல்லது படையின் ஒரு பகுதி மேலுயரலாம் அல்லது கீழ் நழுவலாம். சில சந்தர்ப்பங்களில் அவை புடைப் பெயர்வதுமுண்டு.
குறைத்தலின் விளைவாகப் பாறைகள் முன்னிருந்த நிலை யிலிருந்து விலகிச்சென்ற தூரம் எறி' எனப்படும். எறியி னளவு ஒரு சில செ. மீற்றரிலிருந்து பன்னூறு மீற்றர் வரை காணப்படலாம். குறைத்தல் சரிவாக நிகழுமாயின் பாறைகள் ஒரு பக்கமாகப் பெயர்ந்து காணப்படும். அது கிடைப்பெயர்ச்சி" எனவும் நிலைக்குத்துத் தளத்திலிருந்து குறைத்தளம் விலகிக்

புவியசைவுகள் 8.
காணப்படுகின்ற கோணம் தகர்ச்சித் தளக்கோணம் எனவும் குறிப்பிடப்படும், குறைத்தலின் போது பாறைத்திணிவுகள் நழுவிச்செல்லும். குறைத்தல் பெரும்பாலும் சரிவாகவும் சிலபோது குத்தாகவும் காணப்படும். அது சரிவாயிருப்பின் குறைத்தல் ஏற்பட்ட பின்னர் அதில் மேலும் கீழுமாக இரு பாறைத்துண்டங்கள் காணப்படும். அவற்றில் மேலுள்ளதை தொங்கும் சுவர்த்துண்டம் (Hangingwal) எனவும் கீழுள்ளதை அடிச்சுவர்த்துண்டம் (Foot Wall) எனவும் குறிப்பிடுவர்.
படம் 32 குறைகளின் வகை 1 இயல்பான குறை இதில் தாழ்ந்திருக்கும் பகுதி தொங்கும் சுவர்த்துண்டம் எனவும் உயர்ந்த பகுதி அடிச்சுவர்த் துண்டம் எனவும் அழைக்கப்படும். 2. நேர்மாறாகிய குறை 3. பிடுங்கற் குறை 4 குனிந்த மடிப்பில் உதைப்புக் குறை. 5. குறைத்தல் பற்றிய சொற்றொகுதி A. தகர்ச்சித்தளக் கோணம் B கிடைப்பெயர்ச்சி C எறி
தொங்கும் சுவர்த் துண்டம், அடிச்சுவர்த்துண்டம் என்பவற்
றுக்கிடையில் ஏற்படும் சார்பான அசைவுகளின் அடிப்படை யில் குறைகளை (1) இயல்பான குறைகள் (2) நேர்மாறாகிய

Page 97
182 புவிவெளியுருவவியல்
குறைகள் (3) உதைப்புக் குறைகள் என மூன்றாக வகை ப் படுத்தலாம். இயல்பான குறைகளில் ஒரளவு குத்தாகச் சரிந்த தளம்வழியே தொங்கும் சுவர் கீழிறங்கிக் கர்ணப்படும். நேர் மாறாகிய குறைகளில் தொங்கும் சுவர்மேலுயர்ந்து காணப் படும். அதேசமயம் உதைப்புக்குறைகளில் குறைவான கோணத் தில், நேர்மாறாகிய அசைவுகள் ஏற்படும். ஆனால் உதைப்புக் குறைத்தலின்போது பாறைப்படைத் தளத்திற்குச் சமாந்தர மான அசைவுகள் ஏற்படுவது வழக்கம் உதைப்புக்குறைகள் Loaoa)LITig, Guaja. Afëra, Gildi) அதிகமாகக் காணப்படுகின்றன. அங்கு அடையற்பாறைப்படைகள் மடிக்கப்பட்ட | ୩ୟ୍ ସ୍ଫt if உதைப்புக் குறைத்தலுக்குட்பட்டதனால் தான் சாய்ந்த மடிப்பு கள் உருவாகியுள்ளன.
அ , (iv) வேறுவகையான குறைகள் -
மேற்குறிப்பிட்டவற்றைத் தவிர சறுக்கல் முறையில் ஏற் படும் சில குறைகளும் உள்ளன. அவற்றில் (1) கிடைச்சறுக் கற்குறை (2) சரிவுச் சறுக்கற்குறை (3) சுழற்சிக்குறை என்பன குறிப்பிடத்தக்கவை. இவ்வகையான குறைகளில் அவை ஏற் பட்ட திசைகளையும் சறுக்கலின் அளவையும் திட்டவட்ட
மாகத் தெரிந்துகொள்ள முடியும்.
கிடைச்சறுக்கற்குறைகளில் குறைத்தளம் குத்தாகவோ பெரு மளவில் குத்தாகவோ காணப்படும். அவற்றில் கிடைத்திசைக்குச் சமாந்தரமாகப் பாறைகள் அசையும். இவ்வகைக் குறைகள் நீண் டவையாகவும் அதிகளவில் பாறைத்திணிவுகளில் பெயர்ச்சியை ஏற்படுத்துவனவாயும் உள்ளன. உதாரணமாக வடஅமெரிக்காவி லுள்ள சான் அண்டிறியாஸ் குறை 300 கி.மீ. க்கு மேற்பட்ட நிலப் பெயர்ச்சியைக் காட்டுகிறது. இத்தகைய நிலப்பெயர்ச்சி ஏற்படுவதனால் இதனைப் பிடுங்கற்குறை எனவும் கூறுவர். ஸ்கொத்லாந்திலுள்ள கிளென் (Glen) குறையும் இவ்வகை யைச் சேர்ந்தது. அங்கு பாறைப்படைகள் 105 கி.மீ தூரம் விலகியுள்ளதாகத் தெரிகிறது.
சரிவுச்சறுக்கற் குறையில் சரிவுத்திசையில் பா  ைற க ள் விலகிக் காணப்படும். அவை பார்வைக்கு இயல்பான குறை போலத் தோன்றும்.
சுழற்சிக்குறையில் பாறைத்திணிவுகள் நேர்த்திசையில் விலகாமல் ஒன்றிலிருந்து மற்றொன்று சுழன்று காணப்படும்.

புவியசைவுகள் 83
இதன் விளைவாகப் பாறைகளின் பெயர்ச்சி இடத்துக்கிடம் வேறுபட்ட திசைகளிலும், வேறுபட்ட அளவிலும் ஏற்படும்.
11 (ஆ) அமுக்கவிசைகளும் விளைவுகளும்:-
புவியோட்டின் மேற்பகுதியில் நேர்த்திசையில் செயற் படும் அமுக்க விசைகளின் தாக்கத்தினால் கிடைநிலையி லுள்ள பாறைகள் பலவாறு மடிக்கப்படுகின்றன பொதுவாக மலையாக்கவலயங்களில் இச்செயல்முறை சிறப்பாக இடம் பெறுகிறது. இவ்வாறு உருவாகும் மடிப்புகள், அமுக்கத்தின் தன்மை, அளவு, அது செயல்பட்ட காலம் போன்றவற்றுக்கேற்ப வேறுபட்ட உருவங்களுடன் காணப்படும். அவற்றை ஆராயு முன்னர் மடிப்புகளுடன் தொடர்புள்ள சில பதங்களின் பொருளை விளங்குதல் பொருத்தமானது.
மடிப்புகளின் பக்கச்சாய்வுகள் புயங்கள் எனப்படும் அப் புயங்களின் மத்தியபகுதிக்கூடாகச் செல்லும் ஒரு கற்பனைக் கோடு அச்சு எனவும் அவ்வச்சுத்திசைவழியே மடிப்பை இரு
கூறாக்கும் தளம் அச்சுத்தளம் எனவும் அழைக்கப்படும் அத் தளம் குத்தாகவோ, கிடையாகவோ, சரிந்தோ காணப்படலாம். ஒரு மடிப்பின் அதிஉயர்ந்த பகுதி உச்சியெனவும், மிகத்தாழ்ந்த பகுதி தாழி எனவும் குறிப்பிடப்படும். பாறைப்படைகள் மேற் பக்கமாக வளைந்திருப்பின் அதனை மேல் மடிப்பு எனவும் கீழ்நோக்கி வளைந்திருப்பின் கீழ்மடிப்பு எனவும் குறிப்பிடப் படும்.
:''' × '';
嵩 8
*^**** 'Aళ్ళ్క
படம் 33 A மடிப்பின் உறுப்புக்கள். B ஒரு சரிவர்சு eta
மடிப்புருவங்கள் பல்வேறு வகையின. அவற்றின் அமைவின் (நிலையின்) அடிப்படையில் பிரதானமாக மடிப்புருவங்களைப் பின்வருமாறு பாகுபடுத்தலாம்.

Page 98
84 புவிவெளியுருவவியல்
(i) சமச்சீர்மடிப்பு:- அமுக்கவிசை இருதிசைகளிலும் சமமாகச் செயல்படும் போது பாறைப்படைகள் ஒரு சீராக மடிக்கப் படுவதனால் இவை உருவாகும். இவற்றிலுள்ள மடிப்பின் இரு புயங்களும் ஒரேயளவாகச் சரிந்திருக்கும். அந்நிலையில் அச்சுத் தளம் நிலைக்குத்தாக அமையும். சமச்சீர்த்தன்மை மேல்மடிப்பு களிலும் கீழ்மடிப்புகளிலும் காணப்படலாம் இத்தகைய மேல் மடிப்புகளை நிமிர்ந்த மடிப்புகள் ( Upright Fold ) எனவும் குறிப்பிடுவதுண்டு.
6 ii) 3-LD 39°iy gibm) LDLq.ʻi 1q: - 30, மடிப்பின் புயங்களில் ஒன்று மற்றதைவிட அதிக குத்தானதாயிருப்பின் அது சமச்சீரற்ற மடிப்பு எனப்படும் அம்மடிப்பின் அச்சுத்தளம் சரிவாயிருப்பத னால் சரிந்த மடிப்பு ( ncined Fold ) எனவும் அதனைக் குறிப்பிடுவதுண்டு.
(i) தலைகீழ் மடிப்பு:- ஒரு சமச்சீரற்ற மடிப்பின் இரு புயங்களும் ஒரே திசையிலும வேறுபட்ட அளவிலும் சரிந்திருப் பின் அது தலைகீழ் மடிப்பாகும்.
(iv) குனிந்த மடிப்பு:- ஒரு சமச்சீரற்ற மேல்மடிப்பின் உச்சி ஒரு பக்கத்திசையில் மிக அதிகமாகத் தள்ளப்பட்டு அதன் உச்சி கீழ்நோக்கிச் சரிந்திருப்பின் அது குனிந்தமடிப்பு எனப் படும்.
ut it : 34 τοις αιμεςiήςδι 6Ꭼ 5ᏍᏈᏍ8Ꮛ 1. சமச்சீர் மடிப்பு 2. சமச்சீரற்ற மடிப்பு 3. தலைகீழ் மடிப்பு 4. குனிந்த மடிப்பு 5. சாய்ந்த மடிப்பு
(v) gFrt tij535 LDLafit (Nappe):- ஒரு குனிந்த மடிப்பின் அச்சு உதைப்புக் குறைத்தலுக்குட்படுவதால் அதன் ஒரு புயம் முரிந்து மறுபுயத்தின் மேல் தள்ளப்பட்டிருப்பின் அது சாய்ந்த மடிப் பாகும். குனிந்த மடிப்பிலும் சாய்ந்த மடிப்பிலும் அச்சுத் தளம் கிடையாக அல்லது அரைக்கிடையாக அமையும்.
 
 
 
 

புவியசைவுகள் 185
(vi) | groảg Tü6ị tDLạủLI (Isoclinal Fold): - (?).9ải) மடிப்பின் இரு புயங்களும் சமமாகக் காணப்படும்.
(wit) வேறுசில மடிப்புருவங்கள் :- ஒரு மடிப்பின் அச்சு ஒரு திசையிற் சரிந்து காணப்படின் அது அச்சுச் சாய்வு மடிப்பாகும். (Pitching Fold) ஒரு பாறைப்படை மேலும் கீழும் ஒரே திசையில் ஒரேயளவாக மடிந்து இடையில் குத்தான சாய்வுடன் காணப்படின் ஒரு சரிவச்சு மடிப்பு (Monocline) எனப்படும்.
(viii) Gioa (bat Gap (boyo (Antiforn - Synform):- g)606. மேல் மடிப்பையும் கீழ்மடிப்பையும் போன்ற அமைப்புக்களா கும். ஆனால் இவற்றின் படை நிலை வெளிப்படையாகத் தெரியாமலோ, வேறுவிதமாகவோ அமையலாம். ஒரு மேலுரு வில் இளமையான பாறைகள் அதன் உள்ளீடாகவும் ஒரு கீழுருவில் பழைய பாறைகள் அதன் உள்ளீடாகவும் காணப் படும். ஆனால் மேல் மடிப்பிலும் கீழ் மடிப்பிலும் இதற்கு எதிர்மாறாகக் காணப்படும். மேலும் அமுக்க விசையின் தாக் கத்திற்கேற்ப மடிப்புகளின் புயங்கள் வேறுபட்ட கோணங்க ளில் விரிந்து காணப்படலாம். இதன்படி, ம டி ப் புக் க  ைள (1) திறந்த மடிப்புகள் (2) மூடிய மடிப்புகள் (3) இறுக்க மான மடிப்புகள் என மூன்றாக வகைப்படுத்தலாம். திறந்த மடிப்புகள் 70'க்கு மேல் விரிந்தும், மூடிய மடிப்புகள் 80 - 70 வரை விரிந்தும் இறுக்கமான மடிப்புகள் 30 க்கும் குறை வாக விரிந்தும் காணப்படும். -
11. (5600 gig, L. D66 an assir (Fault Black Mts)
இவை பெரிய அளவிலான தடைக் குறைத்தல் மூலம் உருவாகும் மலைகளாகும். இவ்வகையான மலைகள் பெரும் பாலும் சமாந்தரமான இருபக்கக் குறைத்தல் அல்லது ஒருபக்க உதைப்புக் குறைத்தலின் விளைவாகத் தொடர்ச்சியான அல்லது தனியான நிலத்திணிவுகள் மேலுயர்த்தப்படுவதனால் உருவா கின்றன. தடைக் குறைத்தல் அனேகமாக, மடித்தல் அல்லது தாழ் கோணக் குறைதலின் விளைவாக ஏற்கெனவே மலைகள் உருவாகியுள்ள பிரதேசங்களிலேயே ஏற்பட்டுள்ளது.
குறைத்தல் ஒருபக்கத்தில் மட்டும் ஏற்படுவதனால் உருவா கும் தடைமலைகள் ஒருபக்கம் உயர்ந்து குத்தான சாய்வு களுடனும், மறுபக்கம் சரிந்து மென்சாய்வுகளுடனும் காணப் படுவதன் காரணமாக, சரிக்கப்பட்ட தடைமலைகள் எனக்

Page 99
86 புவிவெளியுருவவியல்
குறிப்பிடப்படுகின்றன. இத்தகைய மலைகள் ஐக்கிய அமெரிக் காவின் றொக்கீஸ் மலைப்பிரதேசத்தில் - குறிப்பாக கிழக்கு கலிபோனியா, நெவாடா, மேற்கு யூற்றா, அரிசோனா , வையோமிங், மேற்கு ரெக்சாஸ் பகுதிகளில் பரவலாகக் காணப் படுகின்றன. அவை உயர்கோணக் குறைத்தலின் விளைவாக மேலுயர்த்தப்பட்ட தடைமலைகளையும், மத்தியில் தாழ்த்தப் பட்ட அல்லது ஒருபக்கம் சரிக்கப்பட்ட திணிவுகளையும் கொண்டிருப்பதனால் வடிநில மலைத்தொடர் மகாணங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. யூற்றாவிலுள்ள வசாச் தொடர், வையோமிங்கிலுள்ள ‘ரீரோன் தொடர், கலிபோனி யாவிலுள்ள சியராநிவாடா மலைகள் ஆகியனவும் சீனாவின் மேற்குப் பகுதியிலுள்ள தியன்சன் மலைகளும் அத்தகைய அமைப்புடன் காணப்படும் மலைகளுக்குச் சில உதாரணங் களாகும் ,
குறைத் தடை மலைகள் வேறுமுறைகளிலும் உருவாக லாம். உதாரணமாக, ஒடுக்கமான ஒரு நிலத்திணிவு அல்லது தனியான ஒரு நிலத்திணிவு இழுவிசைக்குட்படும் போது அதன் மத்திய பகுதி பிளவுற்றுத் தாழ்வதனால் (படிதலினால்) அது ஒரு பிளவுப்பள்ளத்தாக்காக மாறும். அந்நிலையில் அதன் இருபக்கங்களிலுமுள்ள உயர்ந்த திணிவுகள் உள்நோக்கிய குத்துச்சாய்வுகளையும் வெளிநோக்கிய மென் சாய்வுகளையும் கொண்ட தடைமலைகளாக மாறும் கிழக்கா பிரிக்காவில் உகண்டாவிலுள்ள றுவன்சோரி மலைகள் இதற்கு உதாரண மாகும்.
11. ஈ. பாறைப் பிதிர்கள்: இழுவிசை கடைக்குறைத்தல் என்பவற்றின் விளைவாக உருவாகும் நிலத்திணிவுகள் அயற்பிர தேசத்துடன் உயரத்தில் இணங்காது மேலுயர்ந்து காணப்படும் போது இவ்வாறு அழைக்கப்படுகின்றன. உதாரணமாக, இழு விசைக்குட்பட்ட ஒரு பிரதேசத்தில் உண்டாகும் ஒரு சோடிக் குறைகளின் இருபக்கங்களிலுமுள்ள நிலத்திணிவுகள் தாழ்வத னால் அல்லது அக்குறைகளுக்கு இடைப்பட்ட பகுதி மேலுயர்த் தப்படுவதனால் உருவாகின்ற குத்துச்சாய்வுகளுடன் கூடிய தடைமலைகள் பாறைப் பிதிர்வுகளாகும் ஐரோப்பாவிலுள்ள வோசேஸ் மலைகள், கருங்காட்டு மலைகள் (இவை றைன் பள்ளத்தாக்கின் இருபுறமுமுள்ளன) மற்றும் ஹார்ஸ் மலைகள் (ஜேர்மனி) செங்கடலின் வடக்கிலுள்ள சைனாய் குடாநாடு, கொரியக்குடாநாடு ஆகியன பாறைப் பிதிர்வுகளுக்குச் சில உதாரணங்களாகும்.

புவியசைவுகள் 87
11.உ பிளவுப் பள்ளத்தாக்கு: சமாந்தரமான அல்லது ஒரளவு ச மா ந் த ர மா ன ஒரு சோடிக் குறைகளுக்கு இடைப்பட்ட நிலம் தாழ்வதனால் உருவாகின்ற நீண்ட தாழியை ப் போன்ற இறக்கமே பிளவுப் பள்ளத்தாக்காகும். பிளவுப் பள்ளத்தாக்குகளிற் பெரும்பாலானவை எரிமலைத் தொழிற்பாட்டுடன் தொடர் புள்ளவையாயிருத்தல் குறிப்பிடத்தக்கது. உலகிலுள்ள மிக நீண்ட பிளவுப்பள்ளத்தாக்கு கிழக்காபிரிக்க பிளவுப்பள்ளத் தாக்காகும். அது சிரியாவின் தென்பகுதியில் தொடங்கி, ஆபிரிக்காவில் நியாசா ஏரிவரை ஏறத்தாழ 4900 கி.மீ நீண்டுள் ளது. ஐரோப்பாவிலுள்ள றைன் பிளவுப்பள்ளத்தாக்கு ஸ்கொத் லாந்தின் மத்திய பள்ளத்தாக்கு என்பன் வேறுசில பிளவுப் பள்ளத்தாக்குகளாகும். -
பிளவுப்பள்ளத்தாக்குகள் உருவாகிய முறை பற்றிக் கருத்து வேறுபாடுள்ளது அவை இழுவிசையினால் உண்டாகியதாகப் பரவலாக நம்பப்படுகிறது. இவ்வாறு இழுவிசை காரணமாகப் புவியோட்டுத் திணிவுகள் எதிர்த்திசைகளில் இழுக்கப்படும் போது அவற்றுக்கிடைப்பட்ட பாகம் தாழ்வதனால் பிளவுப்
பள்ளத்தாக்கு உருவாகலாம்.
படம் 35 பிளவுப் பள்வத்தாக்குகள் உருவாகிய முறை
பற்றிய கருத்துக்கள்.

Page 100
188 - புவிவெளியுருவவியல்
அதேசமயம், புவியோட்டில் ஒரு வலிய பகுதி (Crations ) குமிழ் போல மேலுயர்த்தப்படுவதனால், அதன் உச்சிப்பகுதி பிளந்து, சிறிய அளவிலான பிளவுப்பள்ளத்தாக்கை உருவாக் கலாமெனவும், றைன் பிளவுப்பள்ளத்தாக்கு அம்முறையில் உருவாகியிருக்கலாமெனவும் நம்பப்படுகிறது.
பிளவுப்பள்ளத்தாக்குகள் அமுக்க விசையினால் உருவாகி யிருக்கலாமென ஒரு மாற்றுக்கோட்பாடு உள்ளது. அதன்படி நேர்மாறாகிய உதைப்புக் குறைகளுக்கிடைப்பட்ட திணிவுக்கு மேலாக அதன் அயலிலுள்ள திணிவுகள் தள்ளப்படும்போது இடைப்பட்ட திணிவு அமுக்கப்படும் அதேசமயம் மேலுயர்த் தப்பட்ட திணிவுகள் வானிலையாலழிவுக்குட்படுவதனால் அவற்றின் உள்நோக்கிச் சரிந்த பகுதிகள் தேய்வடையும்போது பிளவுப்பள்ளத்தாக்கு உருவாகும்.
11. (ஊ) கண்டவாக்கம் ( Eperogenesis ) கண்ட நிலப் பரப்பில் கணிசமான பகுதிகள் செறிவான மடித்தலுக்குட் படாமல் ( சிறு அளவிலான மடித்தலுடன் ) மேலுயர்த்தப் படுதல் அல்லது தாழ்த்தப்படுதலே கண்டவாக்கமாகும் கண்ட வாக்க அசைவுகள் புவியின் எல்லாப் பகுதிகளிலும் ஏற்பட்டிருப் பதற்குப் பல சான்றுகள் உள்ளன. அவை மேல் வருமாறு. (1) கடற்கரைப்படி வரிசை: முன்னர் கடல்மட்ட உயரத்தில் உருவாகிய படிவரிசைகள், பல இடங்களில் உயர்ந்த மட்டத் தில் காணப்படுகின்றன. நியூசிலாந்திலும் கலிபோனியாவிலும் இவற்றைக் காணலாம். இவற்றிற் சில 400 மீற். உயர மட்டத் தில் தற்போது காணப்படுகின்றன.
(2) கடலின்கீழ் உருவாகும் பவளத்திட்டுக்கள் சில இடங்களில் கடல் மட்டத்தின் மேல் நூறுக்கு மேற்பட்ட மீற்றர் உயர்ந்து காணப்படுகின்றன. (உம். இந்தோனேசியா) -
(3) யெலோஸ்ரோன் பூங்காவிற்கு (ஐ.அமெ) மேற்கிலுள்ள ஹொப்கன் ஏரிப்பகுதி மேலெழுவதாக ஆய்வுகள் தெரிவிக் கின்றன.
(4) பெனைன் மலைப்பகுதியிற் காணப்படும் சுண்ணாம்புக் கல்லில் கோறல், மற்றும் கடல் வாழ் உயிரினங்களின் உயிர்ச் சுவடுகள் காணப்படுகின்றன. அதேபோல் அலாஸ்காவின் அதி

புவியசைவுகள் 89
உயர்ந்த மக்கின்லி மலையில் கருங்கற்களுககுமேல் காணப்படும் களிக்கல் கடல் வாழ் உயிரினங்களின் உயிர்ச்சுவடுகளைக் கொண்டுள்ளது. இதுபோலவே எவறெஸ்ட் மலையின் உச்சிப் பகுதியும் நீர்ப்பரப்பில் உருவாகும் அடையற்பாறைகளா லாக் கப்பட்டுள்ளது. ့်မျိူးရှို့ ဖို့
(5) தென்மேல் பசிபிக்கிலுள்ள எனிவரோக் (Eniwetock) புனாபுற்றி (Fuma Fut) தீவுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு கள் சில பவளத்திட்டுகள் 1000 மீ ஆழத்திற்குக்கீழ் அமிழ்ந்திக் கிடப்பதைக் காட்டுகின்றன.
(6) பல இடங்களில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட நிலஅளவீடுகள், நிலஉயர்ச்சி, தாழ்ச்சிகளை உறுதிப்படுத்து கின்றன. 。、 ,
(1) அமிழ்ந்திய காடுகள் இங்கிலாந்தில் செசயர் கரையிலும் சீனாவில் பென்சான்சிற்கு அருகிலுள்ள மவுன்குடாப்பகுதியிலும் காணப்படுகின்றன.
(8) தமிழ் நாட்டில் காவிரி இன்று கடலோடு கலக்கும் இடத் திற்கு அப்பால் வரலாற்றுப் புகழ்மிக்க பூம்புகார் நகரின் சிதைவுகள் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அது போலவே குமரி என்னும் கண்டம் கன்னியாகுமாரி முனைக் குத் தெற்கிலுள்ள கடலின்கீழ் மறைந்து விட்டதாகச் சொல்லப் படுகிறது. அதுவும் கண்டவாக்க முறையில் தாழ்ந்திருக்கலாம்.
11. (எ) கடல்மட்ட மாற்றங்கள்:-
வரலாற்றுற் காலத்தில் கடல்மட்ட மாற்றங்கள் இடைக் கிடை ஏற்பட்டுள்ளன. குறிப்பாக கடந்த பிளெயிஸ்ரசீன் பனிக்கட்டியாற்றுக் காலத்திலும் அதற்கு முன்னரும் உலகின் பல பகுதிகளில் கடல்மட்ட மாற்றங்கள் ஏற்பட்டன. பிளெயிஸ் ரசீன் காலத்தில் கடல்மட்டம் 100 மீ. வரை நீழ்ச்சியடைந் தது. ஆயினும் அடுத்த நூற்றாண்டில் (Green house efect ) காரணமாக கடல்மட்டம் 1 - 2 மீற். உயரலாமெனக் கருதப் படுகிறது.
கடல்மட்ட மாற்றங்கள் 4 காரணிகளுடன் தொடர்பு ஐ. ளவை. அவை (1) கடலில் அடையல்கள் அதிகமாகப் படிவு செய்யப்படுதல் (2) சமுத்திர வடிநிலங்களிலுள்ள நீரின் கன

Page 101
90 புவிவெளியுருவவியல்
அளவு கூடிக்குறைதல் (இது பனிக்கட்டித் தகடுகள் வளர்ந்து மீண்டும் அழிவதனால் உண்டாகும்) (3) அதிகரிப்பினால் சமுத்திரநீர் விரிவடைதல் (4) தகட்டசைவு களின் விளைவாகச் சமுத்திர வடிநிலங்கள் பெருத்தல், சிறுத்தல்
GT GöITLU GÖTGATT A b .
மேற்குறிப்பிட்டவற்றில் எவற்றினாலாயினும் ஏற்படும் கடல்மட்ட மாற்றங்கள் நன்னிலை நிலஅசைவுகள் (Eustatic Changes) எனப்படும். இவை மெதுவாக நிகழும் சமநிலைச் சீர்படுத்தலின் விளைவாக உண்டாகின்ற புவியோட்டசைவு களுடன் பெரும்பாலும் தொடர்புள்ளவை. உதாரணமாக பனிக் கட்டித்தகடுகள் உருகுவதனால் அங்கு புவியோட்டின் பளு’ குறையும். இதனால் அங்கு நிலம் மேலுயரும் (உம், பால்டிக் பிர்தேசம்) அதேபோல் பனிக்கட்டியாறு உருகும்போது அதிகரிக் கும் பாரத்தினால் சமுத்திர அடித்தளம் சிறிது தாழலாம் இவ்வாறு, நன்னிலை நிலஅசைவு என்பது சிறிய அளவில் ஏற்பட் டுள்ள கடல்மட்ட மாற்றங்களையே உணர்த்தும். அதேசமயம் தனியான புவிஅசைவுகளும் சமகாலத்தில் புவியோட்டின் உயர மட்டத்தைப் பாதிக்கலாம். இதை Diastrophism ? σταυτί, பொதுவாகக் குறிப்பிடுவர். அவை பெரியளவிலான கடல்மட்ட மாற்றங்களை உண்டாக்கலாம். ஆயினும், அத்தகைய அசைவு களும் சமநிலையாக்கத்துடன் தொடர்புடையவையாக இருக்கக் கூடும். எனவே நன்னிலை நிலஅசைவு நிலைக்குத்தான சமநிலை யாக்க அசைவு என்பவற்றின் சிக்கலான செல்வாக்கினாலேயே கடல்மட்ட மாற்றங்கள் உருவாகுவதாகக் கொள்ளலாம்.

அத்தியாயம் 12
மலையாக்க அசைவுகள் (Orogenic Movements)
புவியோட்டின் மேற்பரப்பில் புடைத்திருக்கும் உயர LorrGoT தரைத்தோற்ற உறுப்புகளே மலைகளாகும். அவற்றை பிறப்பு மரபின் அடிப்படையில் (1)எரிமலைகள் (2) குறைத்தடை மலைகள் (3) மடிப்பு மலைகள் என மூன்றாக வகைப்படுத்த லாம். இவற்றில் எரிமலைகளைப் பற்றியும் குறைத் தடைமலை களைப்பற்றியும் ஏற்கனவே விளக்கப்பட்டபடியால் ஈண்டு மடிப்பு மலைகளைப்பற்றிச் சிறப்பாக ஆராய்வோம்.
12 (1) மலையாக்கம்:- மலையாக்கம் என்ற தொடர் பொது வாக எல்லாவிதமான மலைகளின் உருவாக்கத்தையும் உணர்த் தினும் சிறப்பாக மடிப்பு மலைகளின் உருவவியலை விளக்கவே பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் அம்மலைகள் உலகளாவிக் காணப்படுவதோடு, மிக நீண்டகால அளவில் நிகழும் சிக்க லான பல செயன்முறைகள் மூலம் உருவாகித் தனித்துவமுடைய னவாகத் திகழ்கின்றன. மேலும் அவை புவியில் தகட்டு விருத்தி யும் தகட்டசைவுகளும் ஏற்படத் தொடங்கிய காலம் முதல் (ஏறத்தாழ 2500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்) வட்டமுறை யில் உருவாகியிருப்பதாக ஆய்வுகள் சுட்டுகின்றன. இந்நிகழ்வை * மலையாக்க வட்டம்" எனக் குறிப்பிடுவர் மலையாக்க வட்டங் களும் காலங்களும் மேல்வருமாறு
12. 1 (i) மலையாக்க காலங்கள்
5 D
1) அல்ப்ஸ் 0-65 மில் ஆண்டு - அல்ப்ஸ், இமயம்
றொக்கீஸ், அந்தீஸ்,
மலைகளின் பகுதிகள்
2 லறமைட் - 65-225 , , அந்தீஸ், றொக்கீஸ்
鷺 மலையின் பகுதிகள் a மேற்கு uit 1 (B61) + Sj) ಶಿ) ತಿಮಿ॰ { ? } .. R: Gifu, அப்பலேச்சியன்) 鷺 பிரிக்கும் தொடர்
(அவுஸ்)

Page 102
192 புவிவெளியுருவவியல்
4) கலிடோனியன் 4 10-600 அப்பலேச்சியன் (உட்
பகுதி) கலிடோனியன்
5) அல்கோமன் ) 600-4000 , கனடா, பி றே சி ல்
பெனோ இயன் மேற்கு அவுஸ்திரேலிய
கிறென்வில் s - இரசிய பரிசை நில
மலைகள்.
தற்காலத் தகட்டு விருத்திக்கோட்பாட்டின்படி கண்டப் புவியோட்டின் விளிம்புகளில் உருவாகிய இறக்கங்கள் அல்லது தாழிகளைப் போன்ற வடிநிலங்களிற் திரண்ட அடையல்கள் தகடுகளின் ஒருங்கள் மோதல்) வகையான அசைவுகளின் விளைவாக அமுக்கப்பட்டு மடித்தல், குறைத்தல், தாழ்த்தல், உருமாற்றம் போன்றவற்றுக்குள்ளாகி மேலுயர்த்தப்படுவதே மலையாக்கமாகும். இதன் விளைவாகத் தகடுகளின் விளிம்பு கள் பாதிக்கப்படுவதோடு புவியோடு புடைத்தலும் குறுகுதலும் ஒருங்கே இடம்பெறும் .
தகட்டு விருத்திக் கோட்பாட்டின்மூலம் மலையாக்கத்தை விளக்கமுற்பட்ட ஜோன் டி வே (Dewey) ஜோன் பே(B)ட் ஆகியோர் மலையாக்கம் ஏற்படும் சில மாதிரிகைகளை' வெளியிட்டுள்ளனர் அவற்றில் மோதல் மாதிரிகை, கோடிலரா மாதிரிகை, நியூகினி மாதிரிகை தீவுவில் மாதிரிகை ஆகியன குறிப் பிடத்தக்கவை புவியிலுள்ள வேறுபட்ட மலைகள், மலைத் தொகுதிகளின் உருவவியலை விளக்குவதற்கு இம்மாதிரிகைகள் எடுத்தாளப்பட்டு வருகின்றன. அவற்  ைm ஆராயுமுன்னர் மலையாக்கம் இடம்பெற்ற வலயங்கள் மற்றும் அவற்றோடு தொடர்புள்ள சில அம்சங்களைப்பற்றி அறிந்துகொள்ளுதல் LIII.1910) L-LЈgi.
12.2 மலையாக்க வலயங்கள் :- மலையாக்கம் நி க ழ் ந் த நீண்ட அடையல் வலயங்களே இவையாம். இவை புவியோட் டில் முன்னர் அடையல்கள் தடிப்பாகத் திரண்ட வடிநிலங்க ளாயிருந்தபின்னர் அசையும் திறன் பெற்ற நீண்ட வலயங்க GITT 5 LD rTróGOT. (Mobile belts)
உலகில் இன்றுள்ள மடிப்பு மலைத்தொகுதிகள் (றொக்கீஸ் அந்தீஸ், இமயம் போன்றவை) யூறாசிக் யுகத்திற்குப் பின்னர் - குறிப்பாக கேனோசோயிக் யுகத்தின் வெவ்வேறு கால கட்டங்களில் - உருவாகிய சில மலையாக்க வலயங்களிலிருந்து தோன்றியவையாம்.

மலையாக்கஅசைவுகள் 193
மலையாக்க வலயங்களில் புவியோட்டு விருத்தியசைவுக ளும், பாறைக்குழம்புத்தலையீடு உருமாற்றம் ஆகியனவும் இடம்பெற்றமைக்குச் சான்றுகள் உள்ளன. பல மலையாக்க வலயங்களின் உட்பகுதியில் பெருங்கற்குழம்புத் தி னி வு க ள் (பத்தோலித்) தலையீடுகளர்கக் காணப்படுகின்றன. (உ- ம் சியாராநிவாடா அந்தீஸ்மலைகள்) இவை மலைகள் தேய் வுற்றுப்போக வெளிப்படுவது மட்டுமன்றிச் சமநிலையாக்க முறையில் மேலெழுந்துகொண்டிருப்பதை இமயமலைப் பகுதியில் நங்காயர்பத், அலாஸ்காவில் மக்கின்லி மலை என்பனவும். கனடிய றொக்கீசின் சில குன்றுகளும் காட்டுகின்றன. இத்த கைய நிலைக்குத்தான அசைவுகள் மலையாக்க வலயங்களின் அசைதிறனையும் நிரூபிக்கின்றன.
மலையாக்க வலயங்கள், மலையாக்க அசைவுகள் மிக நீண்டகாலம் நிகழ்ந்தபின் செயலற்று உறுதிநிலையடையும் மலையாக்கத்திற்குக் காரணமாயிருந்த தகட்டசைவுகள் முற்றுப் பெற்ற பின்னர் அத்தகடுகள் புனரமைக்கப்படும்போது அந் நிலைமை ஏற்படலாம். அக்கால எல்லையில் மலையாக்க வலயம், அதனையொட்டியிருக்கும் பரி  ைச நில ம் அல்லது கண்டத்திணிவுடன் இணைந்துவிடும். இவ்வகையான ஒட்டு வளர்ச்சி முறையிலேயே கண்டங்கள் வளர்ந்து பெரியதாகிய தாக நம்பப்படுகிறது. W,
12.3 புவிக்கீழ் LDLS úLJ356iT:- (Geosyn clines): - LD60) a LIT55 வலயங்களிற் காணப்பட்ட நீண்ட, ஒடுங்கிய வடிநிலங்கள் அல்லது தாழிகளே இவ்வாறு அழைக்கப்பட்டன. புவிக்கீழ் மடிப்புகள் எனக் கருதபபடுபவை எல்லாமே கீழ் ம டி ப் பு க ளாசக் காணப்படாமையினால் அவற்றைப் " புவிசார் மடிப்பு ' (Geocline) என இன்று குறிப்பிடுகின்றனர். அவை தாமே தாழ்ந்துகொண்டிருந்தபடியால் அவற்றில் அ  ைட ய ல் க ள் தொடர்ச்சியாகவும், தடிப்பாகவும் திரண்டன. நிலக்கரியைப் போன்ற மேற்பரப்புப் படிவுகள் அதிக ஆழத்திற் காணப்படு வது அதனை நிரூபிக்கின்றது புவிசார் மடிப்புக்களில் 3 மீற். தடிப்பான அசையற்சுமை திரண்டபோது புவியோடு 2 மீற். தாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
புதிய தகட்டுவிருத்திக் கோட்பாட்டின் அடிப்படையில் மலையாக்கத்தை விளக்குபவர்கள் புவிக்கீழ்மடிப்புகளைப் போன்ற பல வடிநிலங்களைக் கண்டசமுத்திர எல்லைகளில் இனம்கண்டுள்ளனர். மேற்கு பசிபிக் - ஆசிய கண்ட எல்லையி

Page 103
94. மலையாக்கவசைவுகள்
லமைந்துள்ள ஜப்பான் கடல், ஒ கொட்ஸ் கடல் மற்றும் மத்தியதரைக் கடலிற் காணப்படும் ஏஜியன் அத்திரியாட்டிக் போன்ற சிறிய சமுத்திர வடிநிலங்கள் அத்தகைய புவிக்கீழ் மடிப்புகளுக்கு இணையாக இன்று காணப்படுகின்ற இறக்கங்க ளாகும். வங்காள விரிகுடாவின் தென்பகுதியும் ஒரு எதிர்காலப் புவிக்கீழ் மடிப்பாக உருவாகிவருவதாகச் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
புவிசார் மடிப்புகளை, அசைவற்ற ம டி ப் புக ள் ( Mi0 Geoclines) egy65)őfo/676lt LDLg: lil 15 Git (Eu Geoclines) GTGö7 ஸ்ரில் (Stie) என்பார் வகைப்படுத்தியுள்ளார். இவையிரண் டும் அருகருகே அமையுமெனவும் இவற்றுக்கிடையில் ஒரு புவிசார் மேல்மடிப்பும் (Geo Anticine) காணப்படுமென அவர் கூறி யுள்ளார்.
(1) Eu வகையான புவிசார் மடிப்புகள்:- இவை க ண் - எழுச்சிப் பகுதியில் உருவாகலாமெனச் சில ஆய்வாளர் கள் கருதுகின்றனர். அதேசமயம் ஜப்பான், கடல் ஒகொட்ஸ் கடல் போன்றவற்றை இவை குறிக்கலாம் என இன்னொரு சாரார் கூறுகின்றனர். Eu வகையான புவிசார் மடிப்புகள் இடைக்கிடை எரிமலைத் தொழிற்பாட்டையுடையன. இத னால் இவை ஒரளவு அசையும் திறனுடையவை என நம்பப் படுகிறது. இவற்றில் கருமையான களிக்கல், வகைப்படுத்தப் படர்த கிறேவேக் (Greywake) வகையான மணற்பாறைகள் ஆகியன அதிகமாயுள்ளன. அல்ப்ஸ் மலைப்பிரதேசத்தில் இனம் காணப்பட்ட இவ்வடையல்கள் (Flysh) எனப்படுகின்றன.
(1) Mio வகையான புவிசார் மடிப்புகள் இவை, பிளவுற்றுப் பிரிந்து சென்ற கண்டத்தகட்டின் பின் விளிம்புகளில் (Traing.edges) உருவாகலாமெனக் கருதப்படு கிறது. அவ்விளிம்புகள் இன்று கண்டமேடைகளாயுள்ளன. அப்பகுதி தகடுகள் பிளக்குமுன்னர் வெப்பமூட்டப்பட்ட தோடு அவை பிரியும்போது ஏற்பட்ட இழுவை காரணமாக மெலிவடைந்தது. அதே சமயம் அது காலப்போக்கில் குளிர் வடைந்து தாழ்ந்தமையினால் அதில் அடையல்கள் திரளக் கூடிய நிலைமைகள் உருவாகின. அம்முறையில் உரு வா கி ய *மயோ வகையான புவிசார் மடிப்புகளில் எரிமலைத் தொழிற்பாடு மிகக்குறைவாக அல்லது அருமையாகவே இடம் பெறும் "மயோ வகையான புவிசார் மடிப்புகள் அ  ைமதி
 

மலையாக்கவசைவுகள் 95
யானை அத்திலாந்திக்கின் மேற்குக்கரையோரமாக இன்று இனங் காணப்பட்டுள்ளன. அங்கு வகைப்படுத்தப்பட்ட மணற்பாறை கள், படிகப்பார், சுண்ணாம்புப்பாறை தொலோக்கல் (தொலோ மைற்) முதலியன காணப்படுகின்றன. சுவிஸ் - அல்ப்ஸ் மலை களுக்கு முன்பாகக் காணப்படும் மொலாசே ( Molasse ) அடையல்களும் இவ்வகையானவையாம்.
12. (4) முன்னிலம்; பின்னிலம்:- மலையாக்க வலயங் களை முழுமையாக நோக்கும் போது அவற்றிற் காணப்படும் உதைப்புகள், சாய்ந்த மடிப்புகள் முதலியன ஒரு திசையிலும், ஒன்றில் அருகிலிருந்த உறுதியான கண்டமேடை அல்லது கடலடித்தளத்தை நோக்கியும் காணப்படுகின்றன. இத்தகைய உறுதியான கண்டமேடை அல்லது கடலடித்தளம் முன்னிலம் (Foreland) எனப்படும். ஆனால் இரு கண்டத்தகடுகள் மோதிய போது அவற்றின் இரு முன்னிலங்களையும் நோக்கி உதைப்பு களும் சாய்ந்த மடிப்புகளும் ஏற்பட்டதன் விளைவாக இரண்டு மலைத்தொகுதிகள் உருவாகின. அல்ப்ஸ் - இமயமலைத்தொகுதி யில் இத்தகைய அமைப்பைக் கர்ணலாம். அங்கு வடக்கில் அல்ப்ஸ், காப்பேதியன் கோக்கசஸ் மலைகளும் தெற்கில் அத்திலஸ், அப்பினைன், எல்பேர்ஸ் இமயமலை என்பனவும் அமைந்திருப்பது அவதானிக்கத்தக்கது. இவ்வாறு இரு பிரிவு களாக மலைத்தொடர்கள் உருவாகும் போது அவற்றிடையே ஒரு கடல், சமநிலம் அல்லது மேட்டுநிலம் காணப்படும். அதனை இடைத்திணிவு (Median Mass) என அழைப்பர். அதேசமயம் ஒரு கண்டத்தகடும் சமுத்திரத்தகடும் ஒருங்குவதன் மூலம் மலை கள் உருவாகுமிடங்களில் கண்டத்தகட்டின் அருகே காணப்படும் சமுத்திரப்புவியோட்டைப் பின்னிலம் (Hinterland) எனக் குறிப் பிடுவதுண்டு.
12. (ஆ) மலையாக்க மாதிரிகைகள் (Models)
12 gg (1) o GasfTq sopr' Lorr5 f:- (Cordillera Model)
வட அமெரிக்காவிலுள்ள றொக்கீஸ், தென்னமெரிக்காவி லுள்ள அந்தீஸ் என்பவற்றைக் கோடிலறா மலைகள் எனக் குறிப்பிடுவர். இவையிரண்டும் மடிப்பு மலைத்தொகுதிகளாயி னும் றொக்கீஸ் மலைகளின் உருவவியல் சிக்கலான பல நிகழ்வு களை உள்ளடக்கியிருப்பதாக ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது. ஆனால், அந்தீஸ் மலைகளின் உருவாக்கம், டிவே, பேட்

Page 104
99 புவிவெளியுருவவியல்
(Dewey Bird) என்பவர்களால் வெளியிடப்பட்ட கோடிலறா
மாதிரிகையுடன் முற்றிலும் அல்லது பெருமளவு பொருந்துவத னால் அதனை முதலில் நோக்குவோம்.
தென்னமெரிக்காவின் மேற்குக் கரையோரமாகவுள்ள அந்தீஸ் மலைத்தொடர்கள் கண்ட சமுத்திர தகட்டொருங்கலின் விளைவாக உருவாகின. கொண்டுவானாலாந்தின் பகுதியா யிருந்த தென்னமெரிக்காக் கண்டம் அதிலிருந்து பிரிந்து மேற்கு நோக்கி நகர்ந்த போது பசிபிக்கிலுள்ள நாஸ்கா தகட்டுடன் ஒருங்கியது. அதன் விளைவாக நாஸ்காதகடு தென்னமெரிக்கக் கண்டத்தகட்டின் கீழ் இறங்கத் தொடங்கியது. இந்நிகழ்வு கடந்த 130 மில்லியன் ஆண்டுகாலமாக இடம்பெற்று வருவதாக நம்பப்படுகிறது.
அண்மைக்கால ஆய்வுகளின்படி, தென்னமெரிக்காவின் மேற்குக்கரை, தொடக்கத்தில் அமைதியானதாயிருந்த (Paasive) பின்னர் உயிர்ப்படைந்த போது அக்கரையோரமாக ஒடுக்க மான சில வடிநிலங்கள் (புவிசார் மடிப்புக்கள்) உருவாகின. அதைத்தொடர்ந்து அவற்றில் அடையல்கள் திரண்டன. அதே சமயம் அவ்வடிநிலங்களுக்கு வெளியே, தோன்றிய பேரு-சில்லி அகழிக்கூடாக நாஸ்காதகடு கீழிறங்கியது. இதன் விளைவாக, முன் குறிப்பிட்ட வடிநிலங்களிற் திரண்ட அடையல்கள் அமுக் கத்திற்குள்ளாகி, மடிந்த பின் மேலுயர்த்தப்பட்டு இன்றைய கிழக்கு - அந்தீசு மலைகளை உருவாக்கின. நாஸ்காதகடு தொடர்ந்து கீழிறங்கியபோது அதன் பகுதிகள் பாதி உருக்கப் பட்டு அந்திசைற் பாறைக்குழம்பாக மேலெழுந்து கிழக்கு அந்தீசு மலைகளுக்கும் கரைக்கோட்டிற்குமிடையே எரிமலை களை உருவாக்கின. அப்போது அவற்றின் கீழ்த்திணிக்கப்பட் டிருந்த பத்தோலித்துகள் புவயோட்டைத் தடிப்பாக்கின. அதன்மேல் சமநிலையாக்க முறையில் மேலுயர்த்தப்பட்ட எரிமலைகள் பிற்காலத்தில் அரித்தலுக்குட்பட்டுப் பெருமளவு தேய்ந்துவிட்டன. ஆயினும் அவற்றின் அடிப்பாகத்திலிருந்த பெருங்கற்குழம்புத் திணிவுகள் (பத்தோலித்துகள்) பேரு-சில்லி பற்றக்கோணியா பகுதிகளில் இன்றும் காணப்படுகின்றன. நாஸ்காதகடு தொடர்ந்து கீழுதைப்பதனால் இன்று அந்தீசின் கிழக்குப் பகுதியிலே எரிமலைத் தொழிற்பாடு கூடுதலாக இடம்பெறுகிறது.

மலையாக்கவசைவுகள் 197
ஆகப்பிந்திய ஆய்வுகளின்படி, கொண்டுவானாவிலிருந்து தென்னமெரிக்கா பிரிந்து நகர்வதற்கு முன்னரே அந்தீசு மலை பாக்கம் ஆரம்பித்துவிட்டதாகவும் அப்போது தீவுவில்லுகள், குறுங்கண்டங்களின் (Microbcontinents) மோதுகையும் ஒட்டுகை
யும் இடம்பெற்றிருக்கலாமெனவும் சில ஆய்வாளர்கள் நம்பு கின்றனர்.
12. lg, (2) Guors songs “tor Shangs' (Collision Models) கண்ட சமுத்திரத்தகட்டொருங்கலின் போது சமுத்திரத் தகடுகள் கண்டத்தகடுகளின் கீழிறங்கி அடங்கி அழிவுறுகின்றன. அதேசமயம் இரு கண்டத்தகடுகள் ஒருங்கும் போது நேரடியான மோதல் இடம்பெறும். ஏனெனில் கண்டத்தகடுகள் பாரமற்ற, அடர்த்தி குறைந்த பெல்சிக் வகையான பாறைகளைக் கொண்டிருப்பதனால் அவை ஒன்றின்கீழ் மற்றொன்று இறங்கி அழியமுடியாது. இதுபோன்ற நிலைமைகள் கண்டத்தகடு - தீவுவில் மோதல் அல்லது தீவு வில் - தீவுவில் மோதலின் போதும் ஏற்படும். இத்தகைய மோதல்களினால் புவியோடு புடைத்தல், மடித்தல், தாழ்த்தல் ஆகியனவும் சமநிலையாக்க முறையிலான மேலுயர்த்தலும் இடம்பெறும்
ஆ 2 () கண்டத்தகடு - கண்டத்தகடு மோதல்:- இவ் வகையான மோதல் இந்திய யூறேசியத் தகடுகளுக்கிடையில் நீண்டகாலமாக இடம்பெற்றுவருகிறது. இதன்விளைவாகவே இமயமலைகள் உருவாகியுள்ளன. பாஞ்சியாவின் உடைவைத் தொடர்ந்து கொண்டுவானாந்திலிருந்து பிரிந்த இந்தியத்தகடு ஒரளவு விரைவாக வடகிழக்குநேர்க்கி நகர்ந்துசென்று ஏறத்தாழ 45 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் யூறேசியத்தகட்டுடன் மோதத் தொடங்கியது. அதற்குமுன்னர், அத்தகடுகளுக்கிடையே காணப் பட்ட ‘ரெதிஸ்" என்னும் கடல் அதன்கீழிருக்க சமுத்திரத்தகடு ஆசியத்தகட்டின்கீழ் இறங்கி அடங்கியதன் விளைவாக முற்றாக மறைந்துவிட்டது. இந்நிகழ்வு வில்சன் வட்டத்தின் இறுதி நிலை' என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது.
ரெதிஸ் கடலின் மறைவு இந்திய யூநேசியத்தகடுகளின் நேரடி மோதலுக்கு வழிவகுத்தது இவ்வாறு இந்திய்த்தகடு யூறேசியத்தகட்டுடன் மோதத்தொடங்கிய போது ஆசியத்தகட் டின் ஒரங்களிற் காணப்பட்ட புவிசார் மடிப்புகளிற் திரண் டிருந்த அடையல்களும், கீழிறங்கிய ரெதிஸ் சமுத்திரத்தகட்டின் சில பகுதிகளும் அமுக்கப்பட்டு மடித்தல், குறைத்தல், தாழ்த்தல்

Page 105
98 புவிவெளியுருவவியல்
ஆகியவற்றுக்குள்ளாகிய பின்னர் ஒரளவு விரைவாக மேலுயர்த் தப்பட்டதனால் இமயமலைகள் உருவாகின. எவறெஸ்ற் மலை யின் உச்சிப்பகுதியிற் காணப்படும் அடையற்பாறைகள் அம் மேலுயர்ச்சிக்குச் சான்றாயுள்ளன.
இந்தியத்தகடும் யூறேசியத்தகடும் தொடர்ந்து மேர்திய
போது இந்தியத்தகட்டின் முகப்பு ஆசியத்தகட்டின்கீழ் திணிக்
கப்பட்டதன் விளைவாக அப்பகுதியில் புவியோடு 65-70 கி.மீ
வரை தடித்துள்ளதாக தெரியவருகிறது. இவ்வாறு இமயமலை யின் வேரைப்போலப் பாறைக்கோளத்துட் புகுந்த பகுதிகள்
சமநிலையாக்க முறையில் இன்றும் மேலெழுந்து கொண்டிருக்
கின்றன. உதாரணமாக, நஸ்கா பர்பத் மலை கடந்த 10 இலட்சம் ஆண்டுகளில் 8000 மீ. மேலுயர்த்தப்பட்டதாக ஆய்வு கள் தெரிவிக்கின்றன. இந்திய யூறேசியத்தகடுகளின் மோதல் இன்றும் இடம்பெறுவதற்கு அவ்வலயத்தில் இடைக்கிடை ஏற்ப டும். புவிநடுக்கங்கள் சான்றாகும்.
படம் 36. மலையாக்க மாதிரிகைகள் மேல் கண் டத் தகடு - கண்டத்தகடு மோதல், மத்தி - கண்டத்தகடு - தீவுவில் மோதல் கீழ் - கண்டத்தகடு - சமுத்திரத்தகடு மோதல்,
ஆ. 2, (i) பழைய கண்டத்தகட்டு மோதல்கள்:-
கண்டத்தகடு - கண்டத்தகடு மோதல்கள் கழிந்த புவிச்சரித காலங்களில் ஏற்பட்ட தகட்டசைவுகளின் போதும் இடம்பெற்ற தாக நம்பப்படுகிறது. இவ்வாறு பாஞ்சியா உருவாதற்கு முன்னர் வடஅமெரிக்கத்தகடும் ஆபிரிக்கத்தகடும் மோதியதனால் அப்லேச்சியன் மலைகளும், ஐரோப்பிய தகடும் சைபீரியத் தகடும் மோதியதனால் யூறல் மலைகளும் உருவாகின. இவற்றில்
 

மலையாக்கவசைவுகள் 199,
அப்பலேச்சியன் மலைகள் உருவாதற்கு முன்னர் அமெரிக்க, ஆபிரிக்கத்தகடுகளுக்கிடையே காணப்பட்ட பழைய அத்திலாத் திக் சமுத்திரம் மூடப்பட்டதனாலேயே அவை மோதவேண்டிய நிலைமை ஏற்பட்டது. அம்மோதலின் போது ஆப்பலேச்கியன் பகுதியில் ( இன்று ) பாறைத்தொடர் - பள்ளத்தாக்குப் பிர தேசமாகவுள்ள பகுதியிற் பரந்து காணப்பட்ட அடையல்கள் அமுக்கப்பட்டு மேலுயர்த்தப்பட்டன. அதேசமயம் அங்கு இடம் பெற்ற சிறிய அளவிலான எரிமலைத்தொழிற்பாட்டின் விளை வாக உருவாகிய சில பத்தோலித்துகள் நியூ இங்கிலாந்துப் பகுதியிற் காணப்படுகின்றன. அத்திலாந்திக் சமுத்திரம் இன்றும் விரிவடைந்து கொண்டிருக்கின்றது. அது முதிர்ச்சியடையும் போது மீண்டும் கீழடங்கல் முறையில் மூடப்படும். அதற்கு 300 மில்லியன் ஆண்டுகளுக்கு மேல் செல்லலாம். அதன்பின்னர் அமெரிக்கக் கண்டங்கள் ஆபிரிக்க ஐரோப்பிய கண்டங்களுடன் மோதிப் புதிய மலைத்தொகுதிகளை உருவாக்குமென எதிர்
| rrrifj;g; G), Th .
ஆ. 2. (i) தீவுவில் மலைகள் (Island Arc Model)
ஒரு கண்டக்கரைக்கு வெளியே காணப்படும் அகழிகளுக்குச் சமாந்தரமாக , வளைகோடு அல்லது வில்லைப்போல அமைந் திருக்கும் தீவுகளே தீவுவில்லுகளாகும். அவற்றில் எரிமலைத் தொழிற்பாடு இடம்பெறுமாயின், அவை எரிமலைத்தீவுவில்லு கள்' என அழைக்கப்படும்.
எரிமலைத் தீவுவில்லுகள் இரு முறைகளில் உருவாகலா மெனக் கருதப்படுகிறது. அவை (மாதிரிகள்) மேல்வருமாறு. இரு சமுத்திரத்தகடுகள் ஒரு கண்டக்கரைக்கு அப்பால் ஒருங்கு வதன் மூலம் எரிமலைத்தீவு வில் உருவாதல் ஒரு முறையாகும். இவ்வாறு இரு சமுத்திரத்தகடுகள் ஒருங்கும்போது அவற்றில் ஒன்று ஒருங்கல் எல்லையில் உருவாகின்ற அகழிக்கூடாகக் கீழிறங்கும் அது இடையோட்டுப் பகுதியில் ஏறத்தாழ 100 - 150 கி.மீ ஆழ எல்லையில் உருகத்தொடங்கும். அதன் மூலம் உருவாகும் பாறைக்குழம்பு மேலுள்ள சமுத்திரத்தகட்டிற்கூடாக வெளியேறுமிடங்களில் உருவாகின்ற தீவுகளே எரிமலைத்தீவு வில்லுகளாகும். அவை தோன்றிய பின்னர் அவற்றுக்குப் பின்னாலுள்ள கடற்பாகம் ஒரு வடிநிலமாக மாறும் அது பின்வில்லு வடிநிலம் (Back Are Basin) எனக் குறிப்பிடப் படும்

Page 106
200 புவிவெளியுருவவியல்
மேற்குறிப்பிட்ட முறையில் ஒரு எரிமலைத்தீவு வில்லு உருவாகும் போது அதன் கீழுள்ள சமுத்திரத்தகடு தொடர்ந்து எரிமலை வில்லின் கீழ்ப்பகுதியில் உதைப்பையும் மேற்பகுதியில் அமுக்கத்தையும் ஏற்படுத்தும். இதன் விளைவாக எரிமலை வில்லின் பகுதிகளும், அதன் கரையோரமாகக் காணப்படும் அடையற் படிவுகளும் (இவற்றில் எரிமலைப்படிவுகள் அதிக மாயிருக்கும்) மடித்தல் குறைதலுக்குட்பட்டு மேலுயர்த்தப் படுவதனால் மலைகள் உருவாகும். இவ்விதமாக எரிமலைத் தீவுவில்லுகளில் பல்லினமான மலைத்தொகுதி ஒன்று காலப் போக்கில் இறுதியில் உருவாகும் அலூசன் தீவுவில்- மலைகள் இம்முறையிலேயே உருவாகியதாக நம்பப்படுகிறது. அலுரசன் அகழியில் பசிபிக் தகடு கீழிறங்கியதன் மூலம் அவை, முன்னர் விபரிக்கப்பட்ட முறையில் உருவாகின. அத்தீவுகளின் பின்னா லுள்ள சமுத்திரத்தகட்டைவிட அத்தீவுகள் வயதிற் குறைவா யிருப்பது அதற்குச் சான்றாகும்.
எரிமலைத்தீவு வில்லு உருவாகின்ற இன்னொரு மாதிரிகை யின் படி ஒரு கண்டத்தகடும் ஒரு சமுத்திரத்தகடும் ஒருங்கும் போது பாரங்கூடிய சமுத்திரத்தகடு கண்டத்தகட்டின் கீழ் இறங்கும். அது இடையோட்டுப்பகுதியில் உருகும்போது வெளிப் படுகின்ற புதிய பாறைக்குழம்பு கண்டத்தகட்டின் விளிம்பில் (எல்லையில்) எரிமலை வில்லுகளை உருவாக்கும். இதன் பின்னர் எரிமலைவில்லுகளுக்குப் பின்னாலுள்ள கண்டத்தகட்டில், விரி வாக்க அசைவுகள் ஏற்படும்போது அத்தகடு பிளந்து கடலடித் தரை பரவுதலின் விளைவாக எரிமலைவில்லு கண்டத்தகட்டி லிருந்து விலகி எரிமலைத்தீவு வில்லாக மாறும் யப்பானியத் தீவுகள் - சிறப்பாக ஹொன்சுத்தீலின் சில பகுதிகளும் ஜப்பான் கடலும் - மேல் விபரிக்கப்பட்ட முறையில் உருவாகியதாக நம்பப்படுகிறது. ஹொன்சு தீவின் சில பகுதிகள் அத்தீவு வில்லை விடவும், யப்பான் கடல் அத்தீவு வில்லைவிடவும் குறைந்த வயதுடையதாயிருப்பது அதற்குச் சர்ன்றாகும். இதன்படி ஹொன்சுத்தீவு முன்னர் ஆசியக்கண்டத்தகட்டின் பகுதியாயிருந்தது. பின்னர் பசிபிக்தகடு அதனுடன் ஒருங்கிய போது அத்தீவில் எரிமலைத்தொழிற்பாடு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அத்தீவுக்குப் பின்னால் பிளத்தல் உண்டாகிக் கடலடித்தரை பரவியதன் விளைவாக அது கண்டத்தகட் டிலிருந்து பிரிந்தபோதே யப்பான் கடல் தோன்றியது.

மலையாக்கவசைவுகள் 201
ஆ 2. (iv) சண்டத்தகடு - தீவுவில் மோதல் :- இது நியூகினி மாதிரிகை எனப்படும். இதன்படி ஒரு கண்டத்தகடு, தீவுவில்லு டன் மோதுவதனாலும் மலைகள் உருவாகலாம். இந்தவகை யான மோதல்கள் பசிபிக் சமுத்திரத்தின் தென்மேல் பகுதியில் ஆங்காங்கே ஏற்பட்டுவருகின்றன. இவ்வாறு (1) பிலிப்பைன் தீவுவில்லின் வடபாகத்திற்கும் ஆசிய கண்டத்தகட்டின் பகுதி யான தைவானுககுமிடையிலும் (2) அவுஸ்திரேலிய கண்டத் தகட்டுக்கும் அதற்கு வடக்கிலுள்ள பண்டாத்தீவுவில்லுக்கு மிடையிலும் (ரிமோர் தீவுப்பகுதி) (3) நியூகினித்தீவின் கிழக்குப் பகுதிக்கும் (இதுவும் அவுஸ்திரேலியக்கண்டத் தகட்டின் பகுதி யாகும்) அதன் வடக்கிலுள்ள நியூபிரித்தன் தீவுவில்லுக்குமிடை யிலும் மோதல்கள் இன்றும் இடம்பெற்று வருவதாகத் தெரிய வருகிறது. மேற்குறிப்பிட்டவற்றின் தைவான் அதன் கிழக்கி லுள்ள பிலிப்பைன் தீவுவில்லுடன் மோதுவதனால் அதன் புவியோடு, மடித்தல் உதைப்புக் குறைத்தல் என்பவற்றுக் குள்ளாகிப் புடைத்துவருவதாகத் தெரியவருகிறது.
படம் 37 இடது தீவுவில் - தீவுவில் மோதல்; வலது கண்டத் தகடு - தீவுவில் மோதல்
ஆ. 2. (V) தீவுவில் - தீவுவில் மோதல்:- இரு தீவுவில்லு களுக்கிடையில் ஏற்படும் மோதலின் விளைவாக அவற்றின் பகுதிகளும், இடைப்பட்ட புவியோடும் அமுக்கப்பட்டு மடித்தல்,

Page 107
2O2 புவிவெளியுருவவியல்
உதைப்புக்குறைத்தல், மேலுயர்ச்சி, தாழ்த்தல் முதலியவற்றுக் குட்படலாம். இத்தகைய ஒரு மோதல் இன்று மேற்கு பசிபிக் கில் பிலிப்பைன்ஸ் தீவுகளுக்குத் தெற்கிலுள்ள சங்கிகே, ஹல்மகாரா என்னும் இரு தீவுவில்லுகளுக்கிடையே இடம் பெற்று வருகிறது. இ த னா ல் அத்தீவுகளுக்கிடையிலுள்ள (மொலுக்காஸ் கடல்) சமுத்திரப் புவியோடு பெரிதும் பாதிக் கப்பட்டு உருக்குலைந்து வருகிறது. அதேசமயம் மோதலின் விளைவாக இரு தீவுவில்லுகளின் விளிம்புகளில் உருவாகிய மடிப்புகளும், உதைப்புகளும் இணைந்துவிட்டன. ஆயினும் அத்தீவுவில்லுகளின் மத்திய திணிவுகள் இன்னும் நேரடியாக மோதவில்லை.
gy 2. (vi) பிரிதல்
மோதல் மற்றும் ஒருங்கல் முறைகளால் மட்டுமன்றி தகடு கள் பிளந்து பிரியும் எல்லைகளிலும் மலைகளும் பாறைத் தொடர்களும் உருவாகியுள்ளன. பிளத்தல் ஏற்பட்டுள்ள െ கண்டப்பிரதேசங்களிற் காணப்படும் மலைகள் இவ்வகையைச் சேர்ந்தவை இவ்வகையான மலைகள் உருவாதற்குப் புவியோடு சூடாக்கப்பட்டு மேலுயர்த்தப்படுதலும் அதன் சில பகுதிகள் தாழ்தலுமே காரணங்களாகும்.
தகடுகள் பிரிவதற்கு முன்னோடியாக மேற்காவுகை ஓட்டங் களின் செயற்பாட்டினால் சூடாக்கப்பட்ட புவியோட்டின் சில பகுதிகள் விரிவடைந்து குமிழ்போல் மேலெழும்போது அப்பகுதி யில் மலைகள் அல்லது பாறைத்தொடர்களும், அவற்றிடையே பிளவுப்பள்ளத்தாக்குகளும் உருவாகுவதாக நம்பப்படுகிறது.
செங்கடலின் இருபுறமும் காணப்படும் மலைகளும் கிழக் காபிரிக்க பிளவுப்பள்ளத்தாக்கையடுத்துள்ள மலைகளும் மேற் குறிப்பிட்ட முறையிலேயே உருவாகியதாகக் கருதப்படுகிறது. செங்கடல் அரேபிய ஆபிரிக்க தகடுகளுக்கிடையிலுள்ள ஒரு பிளவுப்பள்ளத்தாக்காகும். அங்கு கடலடித்தரை பரவல் ஆண்டிற்கு 1.1 செ.மீ வேகத்தில் இடம்பெற்று வருகிறது. கிழக்காபிரிக்க பிளவுப்பள்ளத்தாக்குகளிலும் இந்நிலைமை விரைவில் ஏற்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

அத்தியாயம் is புவி நடுக்கங்கள்
புவியின் மேற்பரப்பிலிருந்து ஏறத்தாழ 700கி.மீ ஆழத் திற்குள்ளிருக்கும் பாறைத்திணிவுகளில் சடுதியாக ஏற்படும் சறுக்கல் அல்லது குறைத்தல் காரணமாக உண்டாகும் அதிர்ச்சியே புவிநடுக்கமாகும். புவிநடுக்கத்தினால் ஒரிடத்தில் ஏற்படும் அதிர்ச்சியானது அலை உருவில் பரவுகிறது. ஒரு நீர்க் குடையில் கல்லை வீசினால் அக்கல் வீழ்ந்த இடத்திலிருந்து வட்டவடிவான அலைகள் ஆரத்திசைகளிற் பரவுவதை அனை வருமறிவர். அது போலவே புவிநடுக்க அலைகளும் ஒரு மையத் திலிருந்து வெளிநோக்கிப் பரவுகின்றன. புவிநடுக்கம் 1 முதல் 3 நிமிடங்கள் வரை நீடிக்கலாம். அதேசமயம் முதலில் வெளிப் படும் நடுக்க அலை 1 செக்கனுக்கு 3 கி.மீ வேகத்தில் 1000 கி.மீ தூரம் பரவும்.
உலகில் நாள்தோறும் பல நடுக்கங்களும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான நடுக்கங்களும் ஏற்படினும் அவற்றில் பெரும் பாலானவை சிறியளவில் இருப்பதனால் அவற்றின் தாக்கம் நமக்குப் புலப்படுவதில்லை, அவ்வவ்போது ஆங்காங்கு ஏற்படும் பெரிய நடுக்கங்களே பேரழிவையும், இழ ப்  ைப யு ம் உண்டு பண்ணுகின்றன. 1995 மே - யூன் மாதங்களில் ஜப்பானின் கம்சட்கா குடாநாட்டுப்பகுதிகளிலும் 1997 மே மாதத்தில் வட கிழக்கு ஈரானிலும் ஏற்பட்ட நடுக்கங்களினால் ஆயிரக் கணக்கான மக்கள் மாண்டு போனமை குறிப்பிடத்தக்கது.
131. புவிநடுக்கங்களின் வகை
புவி நடுக்கங்கள் புவியினுள்ளே ஏறத்தாழ 700 கி.மீ ஆழம் வரை ஏற்பட்டிருக்கின்றன. ஆண்ால் பெரும்பாலான நடுக்கங் கள் புவியோட்டுப்பகுதியிலேயே உண்டாகின்றன. புவிநடுக்கங் களை அவை ஏற்படும் ஆழத்தின் அடிப்படையில் (1) ஆழமற்ற நடுக்கங்கள் (0-70 கி மீ ஆழம்) (2) இடைநிலைப் புவிநடுக் கங்கள் (70-300 கி.மீ ஆழம்) (2) ஆழ் குவிய நடுக்கங்கள் (> 300 கி.மீ ) எனவும் அவற்றுடன் தொடர்புள்ள வலயங் களுடன் இ  ைணத் து () எரிமலைப்புவி நடுக்கம் (ii) புவி யோட்டுப்புவி நடுக்கம் (ii) பாதாளப்புவி நடுக்கம் எனவும் வகைப்படுத்தலாம்.
... . . . . . .artin, is

Page 108
204 புவிவெளியுருவவியல்
புவிநடுக்கம் ஏற்படும் இடம் (தானம்) குவியம் எனவும் அதற்கு நிலைக்குத்தாக மேலுள்ள இடம் ʻ G3LD6öT6)LDurD * எனவும் குறிப்பிடப்படும். புவிநடுக்கங்களின் தாக்கம் மேன் மையப்பகுதியில் அதிகமாகவும் அங்கிருந்து வெளிநோக்கிப்படிப் படியாகக் குறைந்தும் காணப்படும்.
புவி தடுக்கங்களின் காரணங்கள் - புவிநடுக்கங்கள் ஏற்படும் ஆழம் வேறுபடுவதைப்போல் அவற்றுக்கான காரணங்களும் வேறுபடுகின்றன.
13, 2 ஆழமற்ற புவிநடுக்கங்கள்:-
இவை 0-70 கி மீ ஆழத்திற்குள் ஏற்படுகின்றன. இவற்றைப் புவியோட்டுப் புவிநடுக்கங்கள் அல்லது புவியோட்டு விருத்திப் புவிநடுக்கங்கள் எனவும் குறிப்பிடலாம். இவை முறை யே (1) குறைத்தல் (2) தகட்டொருங்கல் (3) எரிமலைத்தொழிற் பாடு (4) நிலச்சரிவு, மற்றும் தரைக்கீழ்குகை இடிதல் போன்ற வேறுபட்ட காரணிகளுடன் தொடர்புள்ளவை உலகில் ஏற்படும் புவிநடுக்கங்களில் 62%மானவை ஆழமற்ற நடுக்கங்களாகும்.
(i) குறைத்தலுடன் தொடர்புள்ள புவிநடுக்கங்கள்
புவியோட்டில் ஏற்படும் இயல்பான அல்லது வேறுவகை யான குறைத்தலின் போது பாறைத்திணிவுகள் உடைந்து (முறிந்து) சடுதியாக நிலைபெயரும் போதே புவிநடுக்கம் ஏற்படு கிறது. குறைத்தலின்போது பாறைத்திணிவுகள் மேலுயர்த்தப் படலாம். அல்லது தாழ்த்தப்படலாம், சில அசாதாரண நிலைமைகளில் அவை முறுக்கப்படுவதுமுண்டு. (உம். 1923 ல் பப்பானில் ஏற்பட்ட கான்ரோ புவிநடுக்கத்தின்போது நிலம் 2 மீற்றர் வரை மணிக்கூட்டுத் திசையில் முறுக்கப்பட்டது. 1899 ல் அலாஸ்காவில் ஏற்பட்ட புவிநடுக்கத்தின்போது குறைக் கோட்டு வழியே நிலம் நிலைக்குத்தாக 15 மீற்றர் வரை உயர்த்தப்பட்டதாகத் தெரிகிறது, அதேசமயம் நடுச்சமுத்திரப் பாறைத்தொடர்களின் உச்சிப்பகுதியிலுள்ள மத்திய பள்ளத் தாக்குகளில் குறைத்தல் ஏற்படும்போது பாறைக்குழம்பு உள்ளே படிதலினாலும் (தாழ்வதனால்) அப்பகுதிகளில் புவிநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
இயல்பான குறைத்தலினால் மட்டுமன்றி மாறுகுறைகள் காணப்படும் வலயங்களில் தகட்டசைவு காரணமாகப் பாறைத் திணிவுகள் பக்கத்திசைகளில் நகர்வதனாலும் (சறுக்குவதனா

புவி நடுக்கங்கள் 205
லும்) புவிநடுக்கங்கள் ஏற்படுகின்றன. 1906 ல் சான்பிரான்சிஸ்
கோவில் ஏற்பட்ட புவிநடுக்கத்திற்கான காரணங்களை ஆய்வு
செய்த றேட் (Reid) என்பவரால் வெளியிடப்பட்ட நெகிழ்ச்சி மறுதலிக்கும் கோட்பாடு (Elastic Rebound Theory ) குறை
வலயங்களில் புவிநடுக்கம் ஏற்படும் முறையை விளக்குகின்றது.
அஃதாவது ஒரு குறைக்கோட்டு வழியே ஒரு பாறைத்திணிவு
(துண்டம்) பக்கத்திசையிற் தள்ளப்படும்போது அதற்கும் அதற்கு அருகிலுள்ள (அசைவற்ற ) திணிவுக்குமிடையே உராய்வு
உண்டாகும். அந்நிலையில் அசைவற்ற திணிவின் உராய்வுத் தடுப்புத்திறன் மற்றதின் அசைவைத் தடுக்கலாம். அவ்வாறு தடுப்பதினால் அதில் தகைப்பும் நெகிழ்ச்சியும் ஏற்படும்
ஆனால் அப்பாறைத்திணிவு சறுக்காதவரை புவிநடுக்கம் ஏற்ப டாது அந்நிலையில் குறை பூட்டப்பட்டதாகக் கருதப்படும். எனினும் தகைப்பும் நெகிழ்ச்சியும் மேலும் அதிகரிக்கும்போது அவற்றிலிருந்து விடுபடுவதற்காகப் பாறைத்திணிவு அசைய முற்படும் அந்நிலையில் பூட்டு உடைந்து பாறைகள் சறுக்கு வதனாலேயே புவிநடுக்கம் ஏற்படுகிறது. குறைகள் நீண்டிருப் பின் குறைக்கோட்டுவழியே தகைப்பும் சறுக்கலும் பல கி.மீ தூரத்திற்கு தொடர்ச்சியாக ஏற்படலாம். இவ்வாறு 1906 ல் சான் பிரான்சிஸ்கோவில் ஏற்பட்ட புவிநடுக்கத்தின்போது 138 கி.மீ தூரம் நிலம் பக்கத்திசையில் நகர்ந்தது. மேலும் ஒரு பிரதான நடுக்கத்தைத் தொடர்ந்து எப்பொழுதும் பின் அதிர்வு களும் ஏற்படுவது வழக்கம். அவை குறைத்தளத்திற்கு அண்மை யில் ஏற்பட்ட தகைப்புகள் சீர்படுத்தலின் விளைவாகவும் உண்டாகலாமெனக் கூறப்படுகிறது.
(ii) தகட்டொருங்கல்
தகடுகள் கீழிறங்கும் வலயங்களில் அகழிச்சுவருக்கும் கீழிறங் கும் தகட்டுக்குமிடையில் ஏற்படும் உராய்வுத் தடைகள், சறுக் கல்கள் என்பவற்றால் அப்பகுதியில் ஆழமற்ற புவிநடுக்கங்கள் உண்டாகலாம். அதுபோலவே இரு கண்டத்தகடுகள் மோதும் வலயங்களிலும் ஆழமற்ற நடுக்கங்கள் ஏற்பட்டுவருகின்றன. இவ்வாறு யூறேசியத்தகடும் இந்தியத்தகடும் மோதிக்கொண் டிருக்கும். நீண்ட | arგზებითაც ეგზა இவ்வகையான நடுக்கங்கள் அடிக்கடி ஏற்பட்டுவருகின்றன. (உம். 1997 ல் ஈரானில் ஏற் பட்ட நடுக்கம்).

Page 109
206 |lଗତ வளியுருவவியல்
(ii) எரிமலைப் புவிநடுக்கங்கள்:
ஒரு எரிமலை கக்கும்போது அதற்குள்ளிருந்து வாயுக்கள் வெளியேறி விரிவடைவதனால் உண்டாகும் சடுதி யான வெடியதிர்வுகளினாலும், எ ரி ம லை க்கு ஸ் விரு க் கு ம் பாறைக்குழம்பு படிதலினாலும் எரிமலைவாய் அல்லது பெரு வாய் இடிதலினாலும் புவிநடுக்கங்கள் ஏற்படலாம். பசிபிக்கைச் சுற்றியுள்ள நெருப்பு வளையம் என்னும் பகுதியில் புவிநடுக்கங் கள் அடிக்கடியும் அதிகமாகவும் ஏற்படுவதற்கு அங்கு இடம் பெறும் எரிமலைத்தொழிற்பாடும் ஒரு காரணமாகும்.
(iv) | மலைப்பிரதேசங்களில் அவ்வப்போது பெய்யும் பெரு மழை காரணமாக ஆங்காங்கு ஏற்படும் Quial', அளவிலான நிலச்சரிவுகள் அப்பகுதியில் சிறியளவிலான புவிநடுக்கங்களைத் அாண்டக்கூடியன. இத்தகைய சிறு புவிநடுக்கங்கள் சில சந்தர்ப் பங்களில் தரைக்கீழ்க்குகைகள் இடிவதனாலும் ஏற்படலாம்.
13 3 இடைநிலைப் புவிநடுக்கங்கள்:-
இவை 70-300 கி மீ ஆழத்திற்குள் ஏற்படுகின்றன. உலகில் ஏற்படும் புவிநடுக்கங்களில் 32% மானவை இந்தவகையானவை யாம் இவற்றுக்கான காரணங்கள் பின்வருமாறு (1) தகட் டொருங்கல் எல்லையில் கீழிறங்கும் தகடு விறைப்பான இடை யோட்டுப் பாறைகளால் தடுக்கப்படும்போது மேல் நெளிக்கப் 'டுவதனால் அல்லது முறிவதனால் புவிநடுக்கம் ஏற்படலாம். (* தகடுகள் கீழிறங் கும் போது அவற்றின் மேற்பகுதி இழுவைக்கு உட்படுவதனால் அப்பகுதிகளில் புவிநடுக்கம் ஏற்படலாம். (3) அண்மைக்கால ஆய்வுகளின்படி ஒரு பாறைக் கோளத்தகடு கீழிறங்கும்போது இடையோட்டின் மேற்பகுதியி லுள்ள ஒலிவைன் என்னும் கணிப்பொருளுடன் சமுத்திரநீர் கலப்பதனால் உருவாகும் பாம்புப்பாறை தகடுகள் கீழிறங்கும் போது மேன்மேலும் சூடாக்கப்படுவதனால், நீர் நீக்கம் செய்யப் படுகிறது. இவ்வாறு நீக்கப்பட்டநீர் பாறைகளிற் காணப்படும் செங்குத்தான நுண்வெடிப்புகளை ( Microcracks ) gyapjiegin போது அவை உடைந்து சறுக்குவதனாலேயே இடைநிலைப் புவிநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இச்செயல்முறை உராய்வுச்
Dáith 6' 67 GOTITLIG6).pg/.. (Frictional sliding)

புவி நடுக்கங்கள் 207 13.4. ஆழ்குவிய நடுக்கங்கள்:
உலகில் ஆண்டுதோறும் ஏற்படும் புவிநடுக்கங்களில் 8% மானவை மட்டுமே ஆழ்குவிய நடுக்கங்களாகும். ஆழ்குவிய நடுக்கங்கள் தகடுகள் கீழிறங்கும் வலயங்களில் அதிகமாகவும் மலையாக்க வலயங்களில் குறைவாகவும் பிறபகுதிகளில் அபூர்வ மாகவும் (உம். சார்ள்ஸ்ரன் 1886) ஏற்பட்டுள்ளன. தகடுகள் ஒருங்கும் எல்லைகளில் கீழிறங்கும் தகட்டில் ஆழ்குவிய நடுக்கக் குவியங்கள் அதிகமாயிருப்பது அறியப்பட்டதிலிருந்து அதற்கான காரணங்களைக் கண்டறிவதில் ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டிவருகின்றனர்.
இத்திசையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் கணிப் பொருட்களின் பளிங்கமைப்பு (அவத்தை) மாற்றங்களுக்கும் ஆழ்குவிய நடுக்கங்களுக்குமிடையே தொடர்பிருப்பதாகத் தெரிவிக்கின்றன. இவ்வாறு 400 கி.மீ ஆழ எல்லையில் வேகமாக ஏற்படும் ஒலிவைன்- ஸ்பைனல் அமைப்பு மாற்றம் பாறையின் அடர்த்தியை 6% அதிகரிப்பதன் மூலம் தகடு விரைவாகக் கீழிறங்க உதவுவதாக நம்பப்படுகிறது. அதேசமயம் 670 கி.மீ ஆழ எல்லையில் ஏற்படும் ஸ்பைனல் பெறோக்கைற் அமைப்பு மாற்றம் பாறையின் அடர்த்தியை 8% அதிகரித்து அந்த எல்லைக்குக்கீழ் தகட்டில் அமுக்கத்தை ஏற்படுத்துவதனால் தகட்டின் கீழிறங்கும் வேகம் குறைக்கப்படலாம்; அல்லது அதன் அசைவு முற்றாகத் தடைப்படலாமென ஊகிக்கப்படு கிறது. மேலும் 400 கி.மீ ஆழ எல்லையின்கீழ் மெதுவாக நிகழும் பைறொக்சீன் - காணெற் அமைப்பு மாற்றமும் தகட்ட சைவின் வேகக்தைக்கட்டுப்படுத்தலாமெனக் கருதப்படுகிறது. இவ்வாறு கீழிறங்கும் தகட்டில் வெவ்வேறு மட்டங் களி ல் ஏற்படும் கணிப்பொருட்பளிங்கமைப்பு மாற்றங்கள் ஆழ்குவிய நடுக்கங்களுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புடையனவெனத் தெரியவருகிறது.
அண்மைக்கால ஆய்வுகளின்படி ' உராய்வுச் சறுக்கல் முறையில் உண்டாகும் நடுக்கங்கள் 300கி.மீ ஆழ எல்லையை நோக்கிப்படிப்படியாகக் குறைந்து அதற்குக்கீழ் மீண்டும் அதிகரிப் பதாகவும். அந்த எல்லைக்குக்கீழ் தகடுகளில் நுண்வெடிப்புகளுக் குப் பதிலாக, நுண்எதிர்வெடிப்புகள் (Micro Anticracks) அமுக் கத் திசைக்குக் குறுக்கே உருவாகுவதாகவும் தெரிகிறது. அவை (வெடிப்புகள்) நுண்மணிகளைக் கொண்ட ஸ்பைனல் அமைப்

Page 110
208 புவிவெளியுருவவியல்
புக்கு மாறிய, ஒலிவைனை அதிகமாகக் கொண்ட அமைப்புக்
களாகும். அவற்றிலுள்ள ஒலிவைன் மிகநெகிழ்ச்சியுடன் காணப்
படுவதனால் எதிர்வெடிப்புகள் எளிதாக உடைந்து சறுக்கும்
போதே புவிநடுக்கம் ஏற்படுவதாகத் தெரிகிறது. இவ்வாறு
%90 கி.மீ ஆழத்திற்குக்கீழ் இறங்கும் தகட்டிலுள்ள ஒலிவைன முகப்பைச்சுற்றி அடர்த்தியான நுண் எதிர் வெடி ப் புக ள்
வளர்ந்து பரவுதல் குறைத்தலுக்கு ஏற்ற நிலைமைகளை உரு வாக்கிப் புவிநடுக்கத்திற்கு ஏதுவாயிருப்பதாக நம்பப்படுகிறது.
தகடுகள் கீமிறங்கும் பெனியோ லலயங்களில் புவிநடுக் கங்களின் பரம்பலை நோக்கும்போது சில உண்மைகள் வெளிப் படுகின்றன. (1) பெனியோ வல ய த் தி ல் கீழிறங்கும் தகடு படிப்படியாகச் சூடாக்கப்பட்டுப் பாதி உருகுநிலையடையும் வரை அதில் புவிநடுக்கங்கள் ஏற்படலாம் அதற்கு 10 மில்லியன் ஆண்டுகள் செல்லவாமெனத் தெரிகிறது. (2) இளமையான (புதிய) மெதுவாக நகரும் தகடுகளில் பெரும்பாலும் ஆழமற்ற புவிநடுக்கங்கள் ஏற்படுகின்றன. (3) பழைய (குளிர்ந்த) வேக மாக நகரும் தகடுகளிலேயே ஆழ்குவியநடுக்கங்கள் ஏற்படு கின்றன.
, " R || .
தகடுகள் கீழிறங்கும் பெனியோ வலயங்களில் புவிநடுக்கக் குவியங்களின் ஆழத்தை அறிவதன் மூலம் அங்கு தகடு எவ்வளவு ஆழத்திற்குத் தாழ்ந்துள்ளது என்பதைத்திட்டவட்டமாகக்
கூறலாம். மேலும் ஆழ்குவிய நடுக்கங்கள் 550-600 கி.மீ ஆழ
மான பகுதிகளில் அதிகமாகவும் 700 கி.மீ ஆழத்திற்குக்கீழ் மிக
அருமையாகவும் ஏற்ப டு வ தற்கும் காரணங்கள் இருக்க வேண்டும். (இதுவரை 720 கி.மீ ஆழத்தில் ஒரு புவிநடுக்கம்
மட்டுமே ஏற்பட்டிருக்கிறது) இது பற்றிய ஆய்வுகள் பின்வரும் தகவல்களைக் தந்துள்ளன.
(1) கீழிறங்கும் தகடுகளிற் பெரும்பாலானவை குறிப்பாக
மெதுவாக நகரும் தகடுகள் - 640 கி.மீ ஆழ எல்லைக்குள் நுகரப் படுவதனால் அந்த எல்லைக்குக்கீழ் புவிநடுக்கம் ஏற்படும் வாய்ப்புக்குறைகிறது. “
(2) 670 ଜ, if ஆழத்தில் ஏ ற் படும் அ வத் தை மாற்றம்
(ஸ்பைனல்-பெறோகைற்) கீழிறங்கும் தகட்டில் அமுக்கத்தை
அதிகரிப்பதனால் அதன் வேகம் குறையும். அதேசமயம் அம் மாற்றம் கீழிறங்கும் தகட்டின் இயக்கப்பாட்டுச்சக்தியைத் (Kienetic Energy) தன்னுள் அடக்குவதனால் தகடு கீழிறங்கு
 
 

புவிநடுக்கங்கள் 209
வது மேலும் கடினமாகும். இந்நிலைமைகள் 670 கி.மீ ஆழத் திற்குக்கீழ் புவிநடுக்கங்கள் ஏற்படுவதைக்கட்டுப்படுத்துகின்றன.
(3) வேகமாக அசையும் தகடுகள் 700 கி.மீ ஆழ எல்லையை அடையமுன் மேலமுக்கம் காரணமாக அவற்றின் கீழ்ப்பகுதி விறைப்புநீங்கிப் பிளாஸ்திக் ஆகும்போது தகைப்பிலிருந்து விடுபடுவதனால் அந்த எல்லைக்குக்கீழ் புவிநடுக்கம் ஏற்படாது.
(4) 670 கி.மீ எல்லையில் ஸ்பைனலின் அமைப்பில் ஏற்படும் 2 வகையான மாற்றங்கள் அதற்குக்கீழும் தொடர்வதற்கு மேலதிக வெப்பம் தேவை அந்நிலைமை குறைத்தலுக்கேற்ற தாயிருக்காது. அன்றியும் அந்த எல்லைக்கு அப்பாலுள்ள அமுக்கநிலையில் ஸ்பைனல் தன் உறுதியை இழந்து விடுவத னால் குறைத்தல் முறையான புவிநடுக்கம் ஏற்படும் சாத்தியம் மேலும் குறைகிறது.
(5) கீழிறங்கும் தகட்டின் குளிர்ந்த பகுதியில் ஒலிவைன் முகப்பு 700 கிமீ எல்லைவரை சென்று அந்த எல்லையில் வேறு அமைப்புகளுக்கு மாறுவதனால் அதற்குக்கீழ் புவி நடுக் க ம் ஏற்படமுடியாது.
புவிநடுக்க வலயங்கள்
உலகில் ஆண்டு தோறும் பதிவுசெய்யப்படும் புவிநடுக்கங் களில் 80% மானவை தகட்டெல்லைகளிலேயே ஏற்படுவதாகத் தெரிகிறது. அதேசமயம் பசிபிக்கிலும் வேறு சில இடங்களிலு முள்ள சில எரிமலை வலயங்களில் குறைந்த அளவில் (10%) புவிநடுக்கங்கள் உண்டாகின்றன. புவிநடுக்கங்கள் ஏற்படும் கிரமம் செறிவு என்பவற்றின் அடிப்படையில் புவியிலுள்ள பிரதான புவிநடுக்க வலயங்கள் பின்வருமாறு.
(1) பசிபிக்கைச் சுற்றியுள்ள எரிமலை வில்லுகளையும் s-ԶԱՔLDIT6ծr Լ16) அகழிகளையும் உள்ளடக்கிய வலயம், இவ்வல யத்தில் அலூசன், கர்மாடெக், யப்பான், மின்டனோ, ரொங்கா பேரு - சில்லி முதலிய 18 அகழிகள் அடங்குகின்றன. இவ்வல யத்தில் இடைநிலை நடுக்கங்களும், அவற்றிலும் அதிகமாக ஆழ்குவிய நடுக்கங்களும் ஏற்பட்டு வருகின்றன.
(2) மத்தியதரைக் கடலிலிருந்து ஈரான், திபெத் ஊடாக வட சீனாவின் தியன்சன் மலைப்பிரதேசம் வரையுள்ள வலயம். இவ்வலயத்தில் அல்பைன். இமயமலையாக்கத்துடன் தொடர்

Page 111
20 புவிவெளியுருவவியல்
புள்ள ஆழமற்ற புவிநடுக்கங்களே அதிகமாக ஏற்படுகின்றன: உலகில் ஏற்படும் புவிநடுக்கங்களில் 15% மானவை இவ்வலயத் தில் ஏற்படுவதாகத் தெரிகிறது. இதுவும் ஒரு பழைய தகட் டொருங்கல் வலயமாகும். 。 |}',
(3) அதிக வெப்பப் பாய்ச்சலையும் எரிமலைத் தொழிற் பாட்டையும் கொண்ட நடுச் சமுத்திரப் பாறைத்தொடர் வலயம் இது மத்திய அத்திலாந்திக், மேற்குப்பசிபிக், இந்து சமுத்திரத்தின் தென்பகுதி ஆகியவற்றை உள்ளடக்கும், இங்கும் பெரும்பாலும் ஆழமற்ற புவிநடுக்கங்களே ஏற்படுகின்றன.
(4) குறைவலயங்கள்: கலிபோனியாவிலுள்ள சான் அன்டிரி யாஸ் குறை வலயம், துருக்கியிலுள்ள அனற்றோலியா குறை வலயம், நியூசிலாந்தின் அல்பைன் வலயம் போன்றவை இப் பிரிவிலடங்கும். இங்கும் ஆழமற்ற நடுக்கங்களே ஏற்படுகின்றன.
13.6 புவிநடுக்கங்களின் விளைவுகள் புவிநடுக்கங்களினால் ஏற்படும் விளைவுகள் அவற்றின் தாக்கத்தைப் பொறுத்து வேறு படும். பொதுவாக குறைந்த ஆழத்தில் ஏற்படும் புவிநடுக் கங்களே அதிக தாக்கத்தையும் அழிவையும் உண்டுபண்ணு கின்றன. மேலும், புவிநடுக்கக் குவியங்களுக்கு அண்மையிலும், அதிர்ச்சி அலைகள் சரிவாகச் சென்று தாக்குமிடங்களிலும் தான் பாதிப்பு அதிகமாயிருக்கின்றது. புவிநடுக்கங்களினால் ஏற்படும் அனர்த்தங்களுக்கு மேற்பரப்பு அலைகளின் தாக்கமே பிரதான காரணமாகும். நீண்ட வீச்சுடைய அவ்வலைகள் பரவுதலி னால், நிலம் பிளத்தல் கட்டிடங்கள் இடிதல், இரும்புப்பாதை கள் முறுக்கப்படுதல், பாலங்கள் உடைதல், போன்ற பல விளைவுகள் உண்டாகின்றன. புவிநடுக்கங்களின் தாக்கத்தை (செறிவை)க் கணிப்பதற்கு மேக்காலி (Mercali) என்பவரின் அள வுத்திட்டம் 1902 முதல் பயன்படுத்தப்படுகிறது. திருத்தப்பட்ட மேக்காலியின் அளவுத்திட்டத்தின்படி புவிநடுக்கங்களின் தாக்கம் பின்வருமாறு.
அலகு நிலச்சுழற்சி வெளிப்பாடு
/10 புவியதிர்ச்சி பதிகருவியினால் மட்டும்
உணரப்படும். i ii 7 10 கூர்மையான புலனுடையோர் மட்டும்
g) 655 i off.

புவி நடுக்கங்கள் 2.
ア25 அசையாதிருப்பவர்கள் உணர்வர் ア 50 மிதமானது; போக்குவரவு செய்பவர்
கள் உணர்வர். Z 1 0 0 0 . உறங்குவோர் விழிப்பர் மணிகள்
ஒலிக்கும். ア 250 பலமானது; சிற்றழிவு 7 500 மிகப்பலமானது; சுவர்கள் பிளத்தல்
பீதி ஏற்படல். 7 1000 புகைபோக்கிகள் இடிதல் Z 2500 பலமற்ற வீடுகள் இடிதல், 7 5000 பலகட்டிடங்கள் இடிதல். 7 7500 பலத்தசேதம் நிலம் பிளத்தல் பாலங்
கள் உடைதல். 7 9800 முழுச்சேதம், பொருட்கள் மேலே
வீசப்படுதல்.
CF றிச்ரரின் (Richter) அளவுத்திட்டம்; இது 1935 ல் வெளியிடப்பட்ட இன்னொரு அளவுத் திட்டமாகும். இது ஒரு புவிநடுக்கத்தின்போது வெளிவரும் நெகிழ்ச்சிச்சக்தியின் அளவைப் பிரதிபலிக்கிறது, இது 0 முதல் 8.9 வரையுள்ள அலகுகளைக் கொண்ட திறந்த திட்டமாகும். இத்திட்டம் மடக்கை முறை யிலானது. இதனால் இதில் எண் 1 அதிகரிக்கும்போது, வெளி வரும் சக்தியின் அளவு 10 மடங்கு அதிகரிக்கும். றிச்ரரின் அளவுத்திட்டத்தில் எண் 5 நிலத்தடியில் ஒரு சிறிய அணுக் குண்டு வெடிப்பதற்குச் சமமான அதிர்ச்சியை உண்டாக்கும். மேக்காலியின் திட்டத்தில் iv ம் y ம் ( மிதமான நடுக்கங்கள் ) றிச்ரரின் திட்டத்தில் 4.3 – 4.8 க்குச் சமமானவை. அதுபோல் மேக்காலியின் திட்டத்தில் ix = xi (பேரழிவை ஏற்படுத்தும் அலகுகள்) றிச்ரர் திட்டத்தில் 6, 9 - 8.1 க்கு சமமானவை. றிச்ரரின் திட்டம் வகுக்கப்பட்டபின்னர் உலகில் 3 புவிநடுக்கங் கள் மட்டும் எண் 8 ஐத் தாண்டியுள்ளன. அவை 1950 ல் அசாமிலும், 1960 ல் சில்லியிலும் 1964 ல் அலாஸ்காவிலும் ஏற்பட்டன. இவற்றில் சில்லியில் ஏற்பட்ட நடுக்கம் மேக்காலி யின் திட்டப்படி xi ஆகவும் றிச்ரரின் திட்டப்படி 8.9 ஆகவும் பதியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
3, 7. புவிநடுக்கங்களுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகள்: புவிநடுக்கங்கள் சடுதியாக ஏற்படுவதனால் அவற்றுக்கு எதிரான "ாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தல் சாத்தியமானதன்று

Page 112
22 புவிவெளியுருவவியல்
எனினும் புவிநடுக்கவலயங்கள் என அறியப்பட்டவற்றில் வாழும் மக்கள் சில பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம். குறிப் பாக நகர நிர்மாணிப்பு, விரிவாக்கம் போன்றவற்றில் ஈடுபடும் போது குறைவலயங்களைத் தவிர்த்தல் நல்லது. மேலும் கட்டிட அமைப்பின்போது சாதாரண சீமெந்துக்குப் பதிலாக செறிவூட் டிய 'கொங்கிறீற் கலவைகளைப் பயன்படுத்துதல் விரும்பத் தக்கது. s
ஆனால் புவிநடுக்கவலயங்களில் வாழ்பவர்கள் கற்களுக்குப் பதிலாகப் பாரமற்ற மரப்பொருட்களினால் வதிவிடங்களை அமைத்தல் பாதுகாப்பானது. அதேசமயம் சீமெந்துக் கட்டிடங் களைக் கட்டும்போது அடித்தளப்பாறைவரை ஆழமான அத்தி வாரமிடுதல் அவசியம். மேலும், புவிநடுக்கவலயங்கள் மலை சார்ந்தவையாயிருப்பின் குத்துச்சாய்வுப் பகுதியில் குடியிருப்புக் களை அமைத்தல் கூடாது.
புவிநடுக்கங்களை முன்னறிவிப்பதற்குப் பல முயற்சிகள் அண்மைக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அவற்றில் (1) காந்தப் புல வேறுபாடுகளைக் கண்டறிதல் (2) குறைவலயங் களின் இருபக்கங்களிலும் திரிகோணகணித முறையில் அளவீடு செய்து நிலத்தின் உயர வேறுபாடுகளை அவதானித்தல், (3) அவ்வாறே இரு இடங்களுக்கிடையேயுள்ள நேர்கோட்டுத்தூர வேறுபாடுகளைக் கண்டறிதல், (41 சரிவுமானிகள் மூலம்சாய்வு களை அளவிடுதல் (5) கிணறுகளின் நீர்மட்ட வேறுபாடுகளை அளந்தறிதல், (6) நுண்மையான புவிநடுக்கப்பதிகருவிகள் மூலம் சிறு அதிர்வுகளைப் பதிவு செய்தல், (7) விகாரமானிகள் மூலம் (Strain) நிலத்தில் ஏற்படும் விரிவாக்கம் மற்றும் அமுக்கத்தை அளவிடுதல் ஆ கி ய ன குறிப்பிடத்தக்கவை. இவற்றைத்தவிர குறைவலயங்களில் P, S அலைகளின் வேக வேறுபாட்டின் அடிப்படையில் புவிநடுக்கங்களை முன்னறிவிக்க முயற்சி எடுக்கப்படுகிறது. அஃதாவது P, S எனப்படும் அலை களின் வேகம், புவிநடுக்கங்கள் ஏற்படுதற்குச் சற்று முன்னா இயல்புக்கு மாறான முறையில் வேறுபட்ட ஒரு ஒழுங்கில் மாற்றமடைவது அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே அத்தகைய வேக விகித மாற்றங்களை முன்கூட்டி அறிவதன் மூலம் மக்களின் பாதுகாப்புக்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுத்தல் சாலும்,
ஐக்கிய அமெரிக்காவின் மேற்குப்பகுதியிலுள்ள குறை வலயங்களில் இம்முறை கையாளப்படுகிறது.

அத்தியாயம் 4.
கண்டங்களும் சமுத்திரங்களும்
14, 1 புவியின் நிலநீர்ப் பரம்பல் - புவியின் மேற்பரப்பில் நீர் பருமட்டாக 71% மாகவும் நிலம் 29% மாகவும் காணப்படு கின்றது. புவியின் நிலமும் நீ ரு ம் பரந்திருக்கும் முறையை நோக்கும்போது பின்வரும் அம்சங்கள் புலப்படுகின்றன (1) நிலப் பரப்பில் பெரும்பகுதி வட அரைக்கோளத்திலும் நீர்ப்பரப்பிற் பெரும்பகுதி தென் அரைக்கோளத்திலும் உள்ளது. (2) கண்டங் களும் சமுத்திரங்களும் பருமட்டாக முக்கோண வடிவுடையன. (3) நிலமும் நீரும் எதிரடியிடத்திலுள்ளன. இவ்வாறு பசிபிக் சமுத்திரத்தின் எதிரடியிடத்தில் யூறேசிய நிலத்திணிவும் வட கடலுக்கு எதிரடியிடத்தில் அந்தாட்டிக்காவும் உள்ளது. அத் தாட்டிக்கா முற்றிலும் பனிக்கட்டியினால் மூடப்பட்டுள்ளமை *னடு குறிப்பிடத்தக்கது. (4) பசிபிக் சமுத்திரம் புவியின் நீர்ப்பரப்பில் 2/3 பங்குக்கும் அதிகமாயுள்ளது.
14.2 கண்டங்கள் சமுத்திரங்களின் தோற்றமும் நிலைபேறும் - கண்டங்களும், சமுத்திரங்களும் புவியின் நிலையான அடிப்படை அமைப்புக்கூறுகள் என நீண்டகாலமாக நம்பப்பட்டது. ஆனால் அண்மைக்கால ஆய்வுகளின்படி புவி ஒரு கோளாக உருவாதிய காலத்தில் கண்டங்களைப்போன்ற சியல் திரட்சிகளைக் கொண்டிருந்ததென்றும் (இது முதற் புவி யோடு எனப்படும்) விண் வீழ் கற்களின் மோதுகையினால் அது உடைந்ததென்றும். பின்னர் புவியில் ஏற்பட்ட வெப்பப்புரட்சி யின் விளைவாக அது முற்றாக அழிந்தொழிந்ததென்றும் நம்பப் படுகிறது. ஆயினும் இன்றுள்ள கண்டங்களிற் காணப்படும் மிகப்பழைய பாறைகள் உருமாறிய பாறைகளாயிருப்பதனால் அவை அவற்றுக்கு முன்தோன்றிய வேறு பாறைகளிலிருந்துே உருவாகியிருக்க வேண்டும். அதேசமயம் புவியில் ஏற்பட்ட வெப்பப்புரட்சியின் பின்னரே புதிய (இன்றைய) புவியோடு உரு வாகியதென்பது புலப்படும். ஆயினும் அது எப்போது, எவ்வாறு உருவாகியது என்பதுபற்றிப் பலவிதமான ஊகங்கள் தெரிவித்து

Page 113
2 14 புவிவெளியுருவவியல்
அஃதெவவாறாயினும், இன்றைய கண்டங்கள் ஏறத்தாழ fooo மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகிய பின் அவ்வப் போது அவற்றின் வெளியோரங்களில் சிறு மாற்றங்களுக்குட் பட்டபோதிலும் முற்றாக அழிவடையாது நிலைத்திருப்பதாகத் தகட்டு விருத்திக் கோட்பாடு கூறுகிறது. உதாரணமாக கேம் பிரியனுக்கு முற்பட்ட கண்டப் பரிசைகள் பெருந்திணிவுகளாக இன்றுமுள்ளன. அதேசமயம் இன்றுள்ள சமுத்திரங்களெல்லாம் கடந்த 200 மில்லியன் ஆண்டு காலத்தில் கடலடித்தரை பரவல் மூலம் உருவாக்கப்பட்டதாகவும், அவை அதேகால எல்லைக் குள் அழிக்கப்பட்டு மீண்டும் புதிதாக உருவாக்கப்படக்கூடியவை எனவும் தகட்டு விருத்திக் கோட்பாடு தெளிவாக்குகிறது,
14.3 ரூசோ வில்சனின் ஒட்டுவளர்ச்சிக் கருதுகோள் - கனடியப் புவிப் பெளதிகவியலாளரான வில் ச ன் புவி ஒரு கோளாக உருப்பெற்ற காலத்தில் கண்டங்கள் உருவாகியிருக்க வில்லையென்றும், அப்போது எரிமலைக் குழம்புப் பாறைகளைக் கொண்ட ஒரு புவியோடு மட்டும் காணப்பட்டதென்றும் கருத் துத் தெரிவித்துள்ளார். மேலும் முன்குறிப்பிட்ட புவியோடு குளிர்வடைந்தபோது அதில் ஏற்பட்ட பிளவுகளுக்கூடாக எரி மலைக்குழம்பும் வாயுக்களும் வெளியேறினவென்றும் அவ்வாறு வெளியேறிய வாயுக்கள் வளிமண்டலத்தை உருவாக்கியபோது எரிமலைக்குழம்பு மலைகளை உருவாக்கியதெனவும் அவர் கூறி யுள்ளார். பிற்காலத்தில் எரிமலைத் தொடர்கள் கருங்கற் பொருட்களாக உருமாற்றப்பட்டுக் கண்டங்களின் கருவாகிய தாக வில்சன் கூறினாா. இவ்வாறு கண்டக்கருக்கள் உரு வாகிய பின்னர் அவற்றிலிருந்து அரிப்பினால் நீக்கப்பட்ட பொருட்கள் கண்டக் கருக்களின் ஒரங்களிற் படிவுசெய்யப்பட் டன. அவை உருமாற்றப்பட்டு மீண்டும் கருங்கற் பொருட்களாகி அவற்றுடன் இணைந்தமையால் கண்டங்கள் பெரிதாகின. இத்தகைய ஒட்டு வளர்ச்சி முறையிலேயே இன்றைய கண்டங்கள் உருவாகினவென்றும், இச்செயல்முறை இன்றும் இடம்பெறு வதாகவும் வில்சன் விளக்குகிறார்.
14.4 மேற்காவுகை யோட்டக் கருதுகோள் - கண்டங்களின் உருவவியல் பற்றிய இன்னொரு முக்கியமான கருதுகோள் இது வாகும். இது கண்டங்களில் கருப்பொருட்களின் திரட்சிக்கு மேற்காவுகை யோட்டங்கள் மூல காரணமாயிருக்கலாமெனக் கூறுகிறது.

கண்டங்களும் சமுத்திரங்களும் 215
இக்கோட்பாட்டின்படி, புவியில் வெப்பமான இடையோடு அல்லது புற உள்ளிட்டுப் பகுதியிலிருந்து மெதுவாக மேலெழும் ஒட்டத்தொகுதிகள் புவியோட்டின் கீழ்ப்பகுதியில் இரு பிரிவு களாகி எதிர்த்திசைகளை நோக்கிக் கிடையாகச் செல்லும். அவை மேற்பரப்பில் முன்னர் காணப்பட்ட சீயல் திரட்சிகளை யும் எதிர்த்திசைகளிற் தள்ளுவதனால் ஏற்படும் வெற்றிடங் களில் சமுத்திரங்கள் தோன்றியிருக்கக்கூடும் அதேசமயம் கிடை யாகச் செல்லும் இரு ஓட்டத் தொகுதிகள் ஒன்றுடனொன்று ஒருங்கிக் கீழ்நோக்கித் திரும்பும்போது பாரமற்ற சீயல் திரட்சி களை மேற்பரப்பிலேயே தங்கவிட்டுச் சென்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இவ்வாறு மேற்பரப்பில் தங்கிய சீயல் பொருட் கள் பின்னர் கண்டங்களாகியிருக்கலாமெனக் கூறப்படுகிறது. திரினிடாத் தீவிலுள்ள தார் ஏரியில் (Pitch lake) மேற்காவுகை யோட்டங்கள் செயல்படுவதைப்போன்று இடையோட்டுப்பகுதி யிலும் அவை செயல்பட்டுக் கண்டங்களை உருவாக்கியிருக்கலா மெனக் கருதப்படுகிறது.
14.5 விரிவுக் கோட்பாடு: புவியின் இளமைக்காலத்தில் (அது உருவாகி 700 மில் ஆண்டிற்குள்) ஏற்பட்ட வெப்பப்புரட்சி, விண்வீழ்கற்களின் மோதுகை என்பவற்றின் விளைவாக அதன் பூர்வீகப் புவியோடு அழித்தொழிக்கப்பட்ட பின்னர் புவி படிப் படியாகக் குளிர்வடைந்தது. அக்காலத்தில் புவியின் உள்ளே கலந்து காணப்பட்ட பல்வேறு மூலகங்களும் தமது இனம், அடர்த்தி என்பவற்றுக்கேற்ப வேறுபடுத்தப்பட்டன. இதை வேறாக்கல் (வேறுபடுத்தல்) எனக் குறிப்பிட்டுள்ளனர். அந் நிலையில் பாரமான இரும்பு நிக்கல் முதலியன உட்கோளத்தை உருவாக்கின (அத், 1ஐ பார்க்க) அதேசமயம் பாரமற்ற சிலிக் கேற்றுப்பொருட்கள் மேலெழுந்து மிதந்து புவியின் மேற்பரப்பை மூடின. அவையே பின்னர் கண்டப் புவியோடாகின. இவ்வாறு தொடக்கத்தில் புவி முழுவதையும் மூடியிருந்த புவியோடு புவி விரிவடைந்தபோது ஏற்பட்ட இழு விசைகளின் தாக்கத்தினாற் பிளவுபட்டுக் கண்டத்திணிவுகளாயிருக்கலாமென இக்கருதுகோள் கூறுகிறது. ஆனால் இக்கருத்திற்கு ஆதரவு குறைவு.
அண்மைக்கால ஆய்வாளர்கள் புவியின் பூர்வீகக் கண்டப் புவியோடு வேறாக்கல் என்னும் செயல்முறையின் விளைவாக மேலெழுந்த பாரமற்ற சிலிக்கேற்றுப் பொருட்களின் திரட்சி யினால் உருவாகியிருக்கலாம் என்ற சருத்தை ஏற்கின்றனர். அப்போது கண்டப்புவியோடு ஒரு திணிவாகக் காணப்பட்டிருக்

Page 114
26 புவிவெளியுருவவியல்
கலாமெனவும் பின்னர், புவியின் அகவிசைகளின் செயல்பாட்டி னால் அது பல துண்டங்களாக (கண்டங்களாக) பிரிந்திருக் கலாமெனவும் அவர்கள் கருதுகின்றனர். அதைத் தொடர்ந்து இடம்பெற்ற கடலடித்தரை பரவல் மூலம் புதிய சமுத்திரங் கள் உருவாகியிருக்கலாம். அதே சமயம், புதிதாக உருவாகிய சமுத்திரத்தகடுகள் கண்டங்களின் அருகே கீழிறங்கி உருகிப் பாறைக் குழம்பாக மாறின. பின்னர் அப்பாறைக் குழம்பு மேலெழுந்து எரிமலைத் தொழிற்பாட்டைத் தொடங்கியதனால் எரிமலை வில்லுகள், கருங்கற் திணிவுகள் (பெருங்கற் குழம்பு) ஆகியன கண்டங்களின் அருகே உருவாகின. அதன்மேல் சமுத் திரத் தகடுகள் முற்றிலும் கீழிறங்கி அடங்கி அச்சமுத்திரங்கள் மூடப்பட்டபோது முன்னர் அக்கண்டங்களினருகே உருவாகி யிருந்த தீவு வில்லுகள், எரிமலை வில்லுகள், கருங்கற் திணிவு கள் ஆகியன கண்டங்களுடன் ஒட்டி இணைந்தன. இந்நிகழ்வு கள் வட்டமுறையில் மீண்டும் மீண்டும் ஏற்பட்டதன் விளை வாகக் கண்டங்கள் பெரிதாகின - வளர்ந்தன எனலாம். இவ் வாறு புவியில் ஏதோவொரு முறையில் உருவாகிய கண்டங்கள் பலவாயிருந்திருப்பினும் வெவ்வேறு புவிச்சரித காலங்களில் ஏற் பட்ட தகட்டசைவுகளின் விளைவாக அவை ஒன்றுடனொன்று இணைந்தும் ஒன்றைவிட்டென்று பிரிந்தும், தமது உருவமும் பரு மனும் மாறின. இவ்வாறு ஏறத்தாழ 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்காணப்பட்டபழைய கண்டங்களனைத்தும் ஒன்றாயிணைந்து பாஞ்சியா என்ற பெருங் கண்டமாகிறனவென்றும் அப்பெருங் கண்டம் பிளவுற்றுப் பிரிந்து அதன் பகுதிகள் நகர்ந்தமையினா லேயே இன்றைய கண்டங்கள் தோன்றின என்றும் வெகினர் என்பவர் கூறியுள்ளார். மேலும் பாஞ்சியாவிற்கு முந்திய பெருங்கண்ட வட்டங்களின்போது தகடுகள் விரைவாகக் கீழி றங்கியதன் விளைவாக உருவாகிய எரிமலைத் தீவு வில்லுகளின் மோதுகை, மற்றும் எரிமலைத் தொழிற்பர்டு ஆகியன காரணமா கப் புதிய கண்டப்புவியோடு பல காலகட்டங்களில் ஒட்டு வளர்ச்சி முறையில் (Accrction) உருவாகியதென்ற கருத்து இப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இவ்வாறு புவி உருவாகி 235-2. பில்லியன் ஆண்டுகளுக்கிடையில் 50-75%மான கண்டப் புவியோடுதாக புதிஉருவாகியதாக அண்மைக்கால ஆய்வா ளர்கள் நம்புகின்றார்கள்.
14.6 சமுத்திரங்களின் தோற்றம்:- புவியின் பூர்வீகச் சமுத் திரங்களின் தோற்றம் வளிமண்டலத்தின் தோற்றத்துடன் தொடர்புள்ளது புவியின் பரிணாமத் தி ன் போது அதன்

கண்டங்களும் சமுத்திரங்களும் 217
தொடக்க காலத்தில் ஏற்பட்ட வெப்பப் புரட்சியைத் தொடர்ந்து இடம்பெற்ற வாயுநீக்கம்’ என்ற செயல்பாடு காரணமாகப் புவியின் உள்ளிருந்த வாயுக்கள் பெருமளவில் வெளியேறின என நம்பப்படுகிறது. வேறுபடுத்தல், தகட்டுவிருத்தி சந்திர விசையினால் ஏற்பட்ட வற்றுப் பெருக்கோட்டங்கள் ஆகியன அதற்குத் துணைக் காரணங்களாயிருந்தன. இவ்தாறு வெளி யேறிய வாயுக்களில் நீராவியே அதிகமானதும் முக்கியமானது மாகும். அந்நீராவி ஒடுங்கியதன் விளைவாக ஏற்பட்ட மழை வீழ்ச்சி புவி யோட்டிற் காணப்பட்ட பள்ளங்களை நிரப்பியத னால் சமுத்திரங்கள் உருவாகின.
14 (ஆ) சமுத்திர வடிநிலங்கள்
இவை அத்திலாந்திக்கிலும் இந்துசமுத்திரத்திலும் கண்டச் சரிவுக்கு அப்பாலும் பசிபிக்கின் மேற்குப்பகுதியில் தீவுவில்லுகள் அகழித் தொகுதிகளுக்கு அப்பாலும் பரந்துள்ளது. புவியில் இன்றுள்ள சமூத்திரங்கள் அனைத்துப் இளமையானவை என் பதை அவற்றிலுள்ள மெல்லிய அடையற் படிவுகள் காட்டுகின் றன. அவை கடந்த 200 மில்லியன் ஆண்டு காலத்திற்குள் ளேயே உருவாகியதர்கப் புதிய தகட்டுக் கோட்பாடு கூறுகிறது:
இக்கரலம் புவிச்சரிதவரலாற்றில் 5% த்திற்கும் குறைவானதா
களும் பிறவும் என்பனவாம்.
யிருப்பது கவனிக்கத்தக்கது. இவ்வாறு இன்றுள்ள சமுத்திரங் களில் பசிபிக் ஏறத்தாழ 180 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்ன ரும் அத்திலாந்திக் 160 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரும் கடலடித்தரை பரவல்மூலம் உருவாகியதாகப் பண்டைக்கால நிலை பற்றிய ஆய்வுகள் புலப்படுத்துகின்றன. அஃதாவது இன்றைக்கு 200 மில்லியன் ஆண்டுகளுக்குமுன்னர் பாஞ்சியா' என்ற பெருங்கண்டத்திணிவில் ஏற்பட்ட பிளவுகளை மைய மாகக்கொண்டு கடலடித்தரை பரவியதன் விளைவாக இன்றைய சமுத்திரங்களும் உருவாகிய அதேசமயம் கண்டங்களும் வெவ் வேறு திசைகளில் நகர்ந்ததாக நம்பப்படுகிறது.
சமுத்திர வடி நிலங்களில் நான்கு அமைப்புக்களை நாம் அடையாளம் காணலாம். அவை (1) நடுச்சமுத்திரப் பாறைத் தொடாத் தொகுதி (2) குறுக்குப் பள்ளத் தாக்கு க ள் (3) ஆழ்கடற் சமவெளி (4) புவிநடுக்கமற்ற பாறைத்தொடர்

Page 115
18 புவிவெளியுருவவியல்
14. ஆ. (1) நடுச்சமுத்திரப் பாறைத் தொடர்கள் - இவை சமுத்திரங்களின் அடியில் பெரும்பாலும் தொடர்ச்சியாகவும், கரடுமுரடான தோற்றத்துடனும் காணப்படுகின்ற நீண்ட மலைத் தொடர்களாகும், இவை கண் ட நிலப்பரப்பிலுள்ள மலைத்தொடர்களைப் போலன்றி முற்றிலும் பசால்ற் பாறைக் குழம்பினால் உருவாக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. நடுச் சமுத்திரப் பாறைத் தொடர்கள் மொத் த ம் 64,000 கி.மீ தூரம் நீண்டும், 483 முதல் 4830 கி.மீ வரை அகன்றும், கடலடித் தளத்திலிருந்து 3050 மீற் வரை உயர்ந்தும் காணப்படுகின்றன. மேலும் இவை சமுத்திர அடித்தளத்தில் 32 7 % மான பரப்பை மூடியிருப்பதோடு கடலடித்தரை பரவும் மையங்களாகவும் விளங்குகின்றன.
ஆ, (i) பாறைத்தொடர்களின் உருவவியல் நடுச் சமுத் திரப் பாறைத் தொடர்கள் ஏறத்தாழ 200 மில்லியன் ஆண்டு களுக்கு முன்னர் கண்டங்கள் உடைந்து பிளவுற்றபோது அவற் றின் கீழ் உருவாகின. அவற்றின் உருவவியல் இடையோட்டு மேற்காவுகையோட்டங்களுடன் தொடர்புடையதெனத் தற் போது நம்பப்படுகிறது. மேற்காவுகையோட்டங்கள் மேலெழும் மையங்களில் பாதி உருகுதலுக்குள்ளாகும். பெரிடேரரைற் பாறைகள் தமது சேர்க்கை மாறிப் பசால்ற் வகையான பாறைக் குழம்பாக மேலெழுந்து கண்டப்புவியோட்டைச் சூடாக்கும். அப்பாறைக் குழம்பு விரிவடைவதனாலும் அதி லுள்ளகணிப்பொருள் மூலகங்கள் மீள ஒழுங்குபடுத்தப்படும் போது அவற்றின் கனம் 10% அதிகரிப்பதனாலும், கண்டப் புவியோடு ஒரு குமிழ் போல 1000 - 3000 மீற். வரை மேலு யர்த்தப்படும். அதன் விளைவாக அப்பகுதியில் பல பிளவுகள் தோன்றும். இவ்வாறு பிளவுற்ற துண்டங்கள் புவியீர்ப்பின் விளைவாகப் பக்கத் திசைகளில் இழுக்கப்பட்டுச் சரிக்கப்படும். அதேசமயம், மேலுயர்ந்த குமிழ் பக்க இழுவிசை காரணமாக மெலிவடையும்போது, அதன் மத்திய பகுதி குறைத்தலுக்குட் பட்டுத் தாழ்வதனால் (படிதலினால்) அப்பகுதி மத்திய பள்ளத் தாக்காகவும், அதன் பக்கங்கள் ஒரளவு சமாந்தரமான பாறைத் தொடர்களாகவும் உருவாகும். அதேசமயம் இழுவிசை காரண மாக மத்திய பள்ளத்தாக்கின் அயற்பகுதிகளிலும் குறைத்தல் நிகழும்போது, புவியோடு மேலும் கூறாக்கப்படுவதனால் அங் கும் தொடர்ச்சியற்ற பலபாறைத் தொடர்கள் உருவாகும்.
நடுச் சமுத்திரப் பாறைத் தொடர்களிடையே காணப்படும் மத்திய பள்ளத்தாக்கு சராசரி 30 - 48 கி. மீ. அகலமானது.

கண்டங்களும் சமுத்திரங்களும் 29
அதன் உள்ளே 1-3 கி. மீ அகலமான ஒரு சிறிய பள்ளத்தாக்கு
2500 மீற். ஆழத்தில் அமைந்திருப்பதாகவும் அதன் அடித்தளத் தில் 100 - 200 மீற் உயரமான நீள் குன்றுகள் காணப்படுவ தாகவும் தெரியவருகிறது. மேலும் நடுச்சமுத்திரப் பாறைத் தொடர் வலயத்தில் பாறைக்குழம்பு ஒப்பளவில் ஒடுக்கமான தேக்கங்களிலிருந்து மெதுவாக மேலெழுமிடங்களில் மட்டுமே மத்திய பள்ளத்தாக்குகள் உருவாகுவதாகச் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். &
14. (இ) அத்திலாந்திக் சமுத்திரவடிநிலம்
இ. (1) நடுச்சமுத்திரப் பாறைத்தொடர் :- இது தன்பெயருக் கேற்ப அத்திலாந்திக்கின் நடுப்பகுதியிலேயே அமைவதோடு அச்சமுத்திரத்தின் பரப்பில் 1/3 பகுதியை மூடியுள்ளது. இதன் அமைப்பும் உருவமும் அத்திலாந்திக்கின் இருபுறமுமுள்ள கரைக் கோடுகளுக்கு இசைவாகவே உள்ளன. இப்பாறைத்தொடர் வடக்கே ஆட்டிக்கிலுள்ள நான்சன் தொடர் முதல் தெற்கே போவே முச்சந்தி வரை நீண்டுள்ளது. இது கிரின்லாந்துக் கடலில் துலக்கமாகத் தெரியாவிடினும் ஐஸ்லாந்திலிருந்து முனைப்பான ஒரு கடற்கீழ் நிலவுருவமாக வெளிப்பட்டுத் தெற்கே இந்துசமுத்திரப் பாறைத்தொடருடன் இணைகிறது. இப்பாறைத்தொடர் ஐஸ்லாந்தில் ஏறத்தாழ 500 கி.மீ தூரம் கடல் மட்டத்தின்மேல் உயர்ந்து காணப்படுவது குறிப்பிடத் தக்கது.
மத்திய அத்திலாந்திக் பாறைத்தொடர்கள் பரப்பும் பாறைத்தொடர்களாகும். அஃதாவது அவற்றின் மத்தியிலுள்ள அச்சுப்பிளவுகளுக்கூடாகப் பாறைக்குழம்பு வெளியேறி இரு பக்கங்களிலும் பரவுகிறது. அப்பாறைத்தொடர்கள் தொடர்ச்சி யற்ற பல சிறிய தொடர்களின் தொகுதியாக உள்ளதால் அவை சில இடங்களில் 3000 கி.மீ. வரை அகன்றும் காணப் படுகின்றன. மேலும், அப்பாறைத்தொடர்கள் மத்தியகோட்டுப் பகுதியில் அதிக ஆழத்திலும் முனைவுகளை நோக்கிக் குறையும் ஆழத்திலும் காணப்படுவதாகப் புவியீர்ப்பு அளவீடுகள் மூலம் தெரியவருகிறது.
மத்திய அத்திலாந்திக் பாறைத்தொடர்ப்பகுதியில் கடலடித் தரை பரவல் பொதுவாக, விட்டு விட்டும் மெதுவாகவும் இடம் பெறுவதனால் (ஐஸ்லாந்து இதற்கு விதிவிலக்கு) அங்கு கரடு முரடான தரைத்தோற்றம் காணப்படுகிறது. இயல்பான குறைத்

Page 116
220 புவிவெளியுருவவியல்
தலும் இதற்கு இன்னொரு காரணமாகும். அதன் உச்சிகள் 5-20 கி.மீ அகன்றும் 1 கி மீ. உயர்ந்தும் உள்ளன. அப்பாறைத் தொடரின் சிறப்பம்சம் அதன் உச்சிகளுக்கிடையிலுள்ள மத்திய பள்ளத்தாக்காகும். அது 30-45 கி.மீ. அகலத்துடன் அருகிலுள்ள உச்சிகளிலிருந்து 2000 மீற்றர் வரை பதிந்து முனைப்பாகக் காணப்படுகிறது.
ஐஸ்லாந்திலுள்ள இடைப்படு பள்ளத்தாக்கு வெளிப்படை யான ஒரு நில உருவமாயுள்ளது. அது சில இடங்களில் சமச்சீராக வும் சில இடங்களில் சமச்சீரின்றியும் (உம் அசோர்ஸ் தீவுகளின் தென்மேல் பகுதி) காணப்படுகிறது. அத்திலாந்திக் பாறைத் தொடர்களின் உச்சிகள் பாறைக்குழம்பினால் மூடப்பட்டுள் ளன. அவ்வுச்சிகளின் கீழ் தலையணைப் பாறைக் குழம்பு திரண்டு காணப்படுகிறது. அதேசமயம் மத்திய (இடைப்படு) பள்ளத்தாக்கிலிருந்து 100 கி. மீ. தூரத்திற்கு அப்பால் ஆங் காங்கு மெல்லிய அடையற் படி வுகள் காணப்படுகின்றன. அத்திலாந்திக் பாறைத்தொடரின் பகுதிகள் ஆங்காங்கு கடல் மட்டத்தின் மேல் உயர்ந்து தீவுகளாகவும் தோன்றுகின்றன. அசோர்ஸ் அசென்சன் ஆகியன அவற்றுக்குச் சில உதாரணங் 5GTFT(35LD .
இ. (2) குறைத்தொகுதி: - அத்திலாந்திக்கின் மத்திய பாறைத் தொடர்களுக்குச் செங்கோணத் திசையில் ஆழமான, ஒடுங்கிய குறுக்குப் பிளவுகள் (குறைகள்) காணப்படுகின்றன. இவை பரப்பும் பாறைத் தொடர்களிலிருந்து பிரிந்து (விலகிச்) டுசல்) லும் புதிய சமுத்திரத் தகடுகளின் எல்லைகளின் ஒரு பகுதி யாக அமைந்துள்ளன. அக்குறைகளில் இடம்பெறும் வேறுபட்ட அசைவுகள் காரணமாகவே அவற்றை 'மாறுகுறைகள்' எனக் குறிப்பிடுகின்றனர். (Transform) அத்திலாந்திக்கின் பாறைத் தொடர் வலயத்தில் இவை அதிகமாகவும் 50 கி. மீ இடைத் தூரத்திலும் காணப்படுகின்றன. இவற்றில் அத்திலாந்திக்கின் மத்தியிலுள்ள றோமா ஞ் முறிவுகள் ( Romanch Fractures ) 3000 மீற்றர் உயர வேறுபாட்டைக் காட்டுகின்றன.
இ. (3) ஆழ்கடற் சமநிலங்கள் :- இவை 5 - 6கி.மீ வரை ஆழி மான சமுத்திரப்பகுதியிற் காணப்படுகின்றன. இவை தடிப்பான அடையற்படிவுகளைக் கொண்டிருப்பதனால் இவற்றின் மேற் பரப்பு தட்டையாயுள்ளது. மேலும் இச்சமவெளிகள் ஒழுங்கற்ற உருவத்துடன் ஒரு சில கி.மீ முதல் பன்னூறு கி.மீ அகன்றும் காணப்படுகின்றன.

கண்டங்களும் சமுத்திரங்களும் 22
அத்திலாந்திக்கின் ஆழ்கடற் சமவெளிகள் வடக்கிலும் தெற்கிலும் மத்திய பாறைத்தொடரின் இருபுறமும் ஒரளவு சமச்சீராக அமைந்துள்ளன. அவற்றின் அடித்தள அமைப்பு நடுச்சமுத்திரப் பாறைத்தொடரில் உள்ளது போல் மேற்பரப் பில் அடையற் படிவுகளையும் அவற்றின்கீழ் முறையே தலை பனைப் பாறைக்குழம்பு, தீப்பாறைத் தலையீடு, கப்புறோ, பெரிடோரைற் என்பவற்றையும் கொண்டிருப்பதாகப் புவிநடுக் கப் பதிவேடுகள் புலப்படுத்துகின்றன:
இ. (2) புவிநடுக்கமற்ற பாறைத்தொடர்களும் பிறவும். அத்திலாந் திகதில் இவ்வகையான பாறைத் தொடர்கள் அரிதாகவுள்ளன. அதேசமயம் நடுச்சமுத்திரப் பாறைத்தொடருடன் தொடர் புள்ள தனிக் குன்றுகள் ஆங்காங்கு காணப்படுகின்றன. அவற் றில் திரிஸ்டன்குகா , கோவ் ( Gough ) ஆகியன எரிமலைக்
குன்றுகளாகும்.
அத்திலாந்திக்கின் மேற்குப்பகுதியிலுள்ள ஐ. அமெரிக்கக் கரையோரமாக அமைந்துள்ள ஜோஜ் மேடை பால்ரிமோர் கடற் கீழ்க் குடைவு மற்றும் பிளேக் மேட்டுநிலம் முதலியன வடிநில அமைப்புடன் காணப்படுகின்றன. அவற்றில் மீசோசோயிக் கால அடையல்கள் படிவுசெய்யப்பட்டுள்ளன. அவை எரி பொருள் மூலவளங்களைக் கொண்டிருக்கலாம்.
அத்திலாந்திக்கின் கண்டஒரம் ஒப்பளவில் அமைதியான தாயிருப்பினும் அதன் கண்ட மேடைக்கு அப்பால் "குறைத்தல் இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக "பிளேக் மேட்டுநிலத்தின் வெளிவிளிம்புகள் குறைத்தலுக்குட்பட்டத னால் கடற்கீழ் ஒங்கல்கள் போலக் காட்சியளிக்கின்றன. அத்தகைய குறைத்தல் ஐரோப்பியக் கரையோரமாகவும் இடி பெற்றிருத்தல் குறிப்பிடத்தக்கது.
14. (FP) சமுத்திர வடிநிலம்
(1) நடுச்சமுத்திரப் பாறைத்தொடர் - *、 பசிபிக்கிலுள்ள பரப் பும் பாறைத்தொடர் அதன் கிழக்குப்பகுதியிலேயே அமைந் துள்ளது. அது 2000 - 4000 கி.மீ வரை வேறுபட்ட அகலத் துடனும், அடித்தளத்திலிருந்து ஏறத்தாழ 5 கி.மீ உயர்ந்தும் காணப்படுகின்றது. ஆயினும் அதனைக் கிழக்குப் பசிபிக் உயர்ச்சி எனவே குறிப்பிடுகின்றனர். அப்பகுதியில் கடலடித் தரை பரவல் ஒப்பளவில் அதிக வேகமாக நிகழ்தல் பாறைத்

Page 117
222 புவிவெளியுருவவியல்
தொடர்களுக்குப் பதிலாக உயர்ச்சிகள் தோன்றுவதற்கு ஒரு முக்கியமான காரணமெனக் கருதப்படுகிறது. உதாரணமாக அந்தாட்டிக் - பசிபிக், பசிபிக் - கொக்கோஸ் பரப்பும் எல்லை களில் ஒரு பக்கத்தில் ஆண்டுக்கு 3-5 செ.மீ வேகத்திலும், நாஸ்கா - பசிபிக் எல்லையில் 8 செ. மீ. வேகத்திலும் கடலடித்தரை பரவு வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கிழக்கு பசிபிக் உயர்ச்சியிலிருந்து பிரிந்து செல்லும் ஒரு பாறைத்தொடரிலுள்ள கல்பகோஸ் பிளவு ஒரு இடைப்படு (மத்திய) பள்ளத்தாக்காகும். அத்தகைய பள்ளத்தாக்குகள் வேறுபகுதிகளில் (அத்திலாந்திக்கிலுள்ளது போல்) வெளிப்படை யாகவோ முனைப்பாகவோ அமையவில்லை அண்மைக்கால ஆய்வுகளின்ட்டி, பசிபிக் உயர்ச்சிப் பகுதியில் பாறைக்குழம் பானது அகன்ற பாறைக்குழம்புத் தேக்கங்களிலிருந்து விரை வாக மேலெழுவதே, அந்நிலைமைக்குக் காரணமெனக் கருதப் படுகிறது.
( ii ) குறைத்தொகுதிகள்:- பசிபிக் உயர்ச்சிக்குக் குறுக்கே சிறிய அளவிலான பல மாறுகுறைகள் உள்ளன. அதேசமயம் அவ் வுயர்ச்சியையொட்டிப் பசிபிக்கின் மேற்கு - மத்திய பகுதிகளில் நீண்ட முறிவு வலயம் ஒன்று காணப்படுகிறது. அது பல பழைய மாறுகுறைகளைக் கொண்டது. அவை பசிபிக் தகட்டைக் கூறாக்குகின்றன, அவற்றில் மெண்டோசீனா ( 3635 ଈ l୪ முறே (4025 கி.மீ) , கிளாறியன், கிளிப்பேட்டன் (9660 கி.மீ)
ஆகியன முக்கியமானவை.
மெண்டோசீனா முறிவு வலயம் தெற்கு நோக்கிய சரிவுப் பாறையையும் முறே வலயம் 2135 மீ உயரமான வடக்கு நோக்கிய சரிவுப்பாறையையும் கொண்டுள்ளது. கிளாறியன் முறிவு வலயம் ஏறத்தாழ 15கி.மீ ஆழமான ஒரு தாழியாகக் காணப்படுகின்றது. அதேசமயம், கிளிப்பேட்டன் முறிவு வலயம் 80கி.மீ அகன்று 300 - 600 மீ. உயரமான ஒழுங்கற்ற தரை யமைப்பைக் காட்டுகின்றது. இம்முறிவு வலயங்கள், பலமற்ற பழைய மாறுகுறைகளாயிருப்பதனால், இவற்றுக்கூடாக (இயல் புக்கு மாறாக) எரிமலைக்குழம்பு வெளியேறுவதாகவும், அதுவே அவற்றின் கரடுமுரடான தரைத்தோற்றத்திற்குக் காரணமென வும் கருதப்படுகிறது.
(i) புவிநடுக்கமற்ற பாறைத்தொடர்களும் கடற்கீழ்க்குன்றுகளும்: பசிபிக்கின் தென்-மத்திய பகுதிகளில் பாறைத்தொடர்களைப் போலத் தோ ன் று ம் வரிசையான பல கடற்கீழ்க்குன்றுகள்
彎
 

கண்டங்களும் சமுத்திரங்களும் 223
காணப்படுகின்றன. அவை இடையோட்டுத்தாரைகளின் மேல் உருவாகிய பின்னர் பசிபிக் தகட்டின் அசைவு காரணமாக அம்மையங்களிலிருந்து விலகிச்சென்ற அவிந்த எரிமலைகளாம். ஹ வாய்-எம்பறர் தொகுதி, ஆஸ்றல் தொகுதி, ருவாமாட்டோ தொகுதி, லயின்தொகுதி ஆகியன இவற்றுக்குச் சில உதாரணங் களாகும். இவற்றில் ஹ வாய் - எம்பஹர் தொடர் 2800 கி.மீ. நீளமானது. அது 70 மில்லியன் ஆண்டு காலத்தில் உருவாகி யிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன (அத் 7 பார்க்க)
(v) ஆழ்கடற் சமநிலங்கள்:- பசிபிக்கில் பத்துக்கும் மேற்பட்ட அகன்ற ஆழ்கடற் சமநிலங்கள் காணப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை அதன் மத்திய வடமேல் பகுதிகளிலேயே அமைந்துள்ளன. அவற்றில் கிழக்கு அவுஸ்திரேலிய வடிநிலம் வடபசிபிக் வடிநிலம் மத்தியபசிபிக் வடிநிலம் தென்பசிபிக் வடி நிலம் பேரு வடிநிலம் பசிபிக் - அந்தாட்டிக் வடிநிலம் ஆகியன ஒப்பளவில் பெரிய, அகன்ற வடிநிலங்களாகும்.
14. (9) 356õT L gęs iš 356ir ( Continental Margins ) கரைக்கோட்டிற்கும் சமுத்திர வடிநில விளிம்புக்குமிடைப்பட்ட கடலடித்தளமே கண்ட ஒரம் எனப்படுகிறது. கண்டநிலப் பரப்பின் தொடர்ச்சியாக ஆழ்கடலை நோக்கிச் சரிந்து செல்லும் அப்பகுதி பொதுவாக அமைப்பிலும், பாறையியலிலும் ஒரு மாறல்வலயமாயுள்ளது. ஆயினும், கண்ட ஒரங்களிடையே அமைப்பு வேறுபாடுகள் உள்ளன. குறிப்பாக, அத்திலாந்திக்கின் கண்ட ஒரங்களும், பசிபிக்கின் கண்ட ஒரங்களும் அத்தகைய வேறுபாடுகளைக் காட்டுகின்றன.
எரிமலைத் தொழிற்பாடு, புவிநடுக்கம், மற்றும் புவியசைவு கள் இடம்பெறும் கண்ட ஒரங்கள் உயிர்ப்புள்ள ( Active ) கண்ட ஒரங்கள் எனவும், அச்செயற்பாடுகள் இடம்பெறாத வற்றை உயிர்ப்பற்ற (Passive) கண்ட ஒரங்கள் எனவும், வகைப்படுத்துவர். இதன்படி, அத்திலாந்திக்கின் கண்ட ஒரங் கள் உயிர்ப்பற்றவையாகவும், ஒபிக்இன் கண்ட ஒரங்கள் உயிர்ப்புள்ளவையாகவும் கருதப்படுகின்றன.
14. ( p (i) அத்திலாந்திக் வகையான கண்ட ஒரம் இது உறுதியானதும், உயிர்ப்பற்றதுமான ஒரு (மாறல்) வலய மாகும். ஏனெனில் இவ்வலயத்தில் பிளவுற்ற பழைய கண்டப் புவியோட்டின் பகுதியும், 130 மில் ஆண்டுகளுக்கு முன் உருவாகிய புதிய சமுத்திரப் புவியோட்டின் ஒரு பகுதியும் இணைந்து ஒரே அலகாக அசைவதனால், இதில் புவிநடுக்கம், எரிமலை உயிர்ப்பு

Page 118
22A புவிவெளியுருவவியல்
ஆகியன இடம்பெறுவதில்லை. அன்றியும் இங்கு அகழிகளும் காணப்படவில்லை. இவ்வலயத்தின் கடலடித்தளம் கரையோரத் திலிருந்து ஒரு ஒழுங்குமுறையில் ஆழ்கடலை நோக்கிச் சரிந்து செல்வதோடு வெளிப்படையான மூன்று அமைப்புக் கூறுகளை யும் கொண்டுள்ளது. அவை முறையே கண்டமேடை, கண்டச் சரிவு, கண்ட எழுச்சி (உயர்ச்சி) என்பனவாம்.
1) கண்டமேடை - இது கரைக்கோட்டிலிருந்து ஏறத்தாழ 200 மீற். ஆழ எல்லை வரை விரிந்த பரவைக் கடற்பகுதி யாகும். இதன் அடித்தளம் கடலை நோக்கி 1 முதல் 2 வரை யிலே சரிந்து செல்கிறது. இதன் அகலம் 0 - 1290 கி.மீ. வரை இடத்துக்கிடம் வேறுபட்டுள்ளது. அத்திலாந்திக் சமுத்திரத்தின் இருபுறமும் காணப்படும் கண்டமேடைகள் பொதுவாக வட பகுதியில் அகன்றும், தென்பகுதியில் ஒடுங்கியும் காணப்படு கின்றன. உதாரணமாக வடகடற்பகுதியில் 1000 கி.மீற்றருக்கு மேலும், கனடாவின் கிழக்குக் கரையில் 500 கி மீற்றர் வரை அகன்றும் காணப்படுகின்ற கண்டமேடையானது பிஸ்கே குடா வின் தென்பகுதி மற்றும் வட ஆபிரிக்காவின் மேற்குக்கரைப் பகுதிகளில் ஒடுக்கமாக அமைந்துள்ளது.
அத்திலாந்திக் கண்டமேடையின் பகுதியாயுள்ள புதிய சமுத்திரப் புவியோட்டுப் பகுதி குளிர்வடைந்து படிப்படியாகத் தாழ்ந்ததின் விளைவாக, அதில் நீண்டகாலமாகத் திரண்ட அடையற் படிவுகள் காணப்படுகின்றன. குறிப்பாக, அமேசன். மிசிசிப்பி, கொங்கோ, நைகர் முதலிய பெரிய நதிகளினாற் கொண்டுவரப்படும் அடையல்கள் அதிற் குவிகின்றன. அவை
படம் 38 அத்திலாந்திக் agos, ursor g, gir ஒரம். குறிப்பு: புள்ளிகள் அடையல்களைக் குறிக்கும்
 

கண்டங்களும் சமுத்திரங்களும் 225
வற்றுப் பெருக்கோட்டங்கள், புயல் அலைகள், நீரோட்டங்கள் ஆகியவற்றால் அங்குமிங்கும் பரப்பப்படுவதனால், மணற் பாறைத்தொடர்கள். மணற்றடைகள், தீவுகள் கடலடித்தள மேடைகள் ஆகியன அக்கண்டத் திட்டில் உருவாகியுள்ளன. வடகடலிலுள்ள டொகர் மேடை, கனடியக் கரையையொட்டி யுள்ள கிரான் மேடை, புளோரிடாவுக்கு அண்மையிலுள்ள பகாமா மேடை ஆகியன முக்கியமான கடலடித்தளமேடை களர்கும். அன்றியும், அமேசன். மிசிசிப்பி, நைகர் போன்ற பெரிய நதிகளின் வாய்ப்பகுதியில் நீண்ட கடற்கீழ் வண்டல் விசிறிகளும் காணப்படுகின்றன. இவற்றைத் தவிர, இவ்வலயத் தில் மீசோ சோயிக் காலத்துக்குரிய பழைய அடையல்களும், லோங் தீவுக்கு வடக்கே பனிக்கட்டியாற்றுப் படிவுகளும் அதற்
குத் தெற்கே கண்டத்துக்குரிய அடையற் படிவுகளும் கலந்து காணப்படுகின்றன.
(ii) கண்டச்சரிவு - கண்டமேடையின் விளிம்பிலிருந்து கடலை நோக்கி சராசரி 2 - 6 வரை சரிந்துள்ள பகுதியே இதுவாகும். ஆனால், சில இடங்களில் இதன் சரிவு முன் குறிப்பிட்டதை விடப் பன்மடங்கு அதிகமாகவும் காணப்படுகிறது. கண்டச் சரிவு கரைக்கோட்டிலிருந்து ஏறத்தாழ 2 கி.மீ முதல் 4 கி.மீ வரை பரந்துள்ளது. இதன் கீழ்ப்பகுதி ஆழ்கடலின் அடித்தளத் துடன் இணைகிறது. இதனால் அப்பகுதி ஒரு பாறைமாறும் வலயமாகும். கண்டச்சரிவுகளிற் சிலவற்றில் புவிநடுக்கங்களும் ஏற்பட்டிருப்பதனால், அவை குறைத்தலின் விளைவாகவும் உருவாகியிருக்கலாம் எனச் சிலர் கருதுகின்றனர்.
கண்டச்சரிவுகள் ஆங்காங்கு ஆழமான கடற்கீழ்க்குடைவு களைக் கொண்டுள்ளன. அக்குடைவுகள் மட்சரிவுகளால் உருவாக் கப்பட்டிருக்கலாமென நம்பப்படுகிறது. அவற்றுக்கூடாக ஒடிசெல் லும் கலங்கல் ஓட்டங்கள் (Turbidity Currents) கண்டமேடை யிற் திரளும் அடையல்களை ஆழ்கடற்பகுதிக்கு அகற்றுகின்றன.
அத்திலாந்திக்கின் கண் ட் மே  ைட யு ம் கண்டச்சரிவும் இணைந்த வலயம் படிப்படியாகத் தாழ்வதனாலும் அதில் அடையல்கள் அதிகமாகத் திரள்வதனாலும் அது ஒரு புவிசார் மடிப்பாக (Miogeocline) உருவாகிவருவதாக நம்பப்படுகிறது. எனவே அத்திலாந்திக் சமுத்திரம் மூடப்படும்போது அப்பகுதி யில் மலையாக்கம் இடம்பெற்றுப் புதிய மலைத்தொடர்கள் உருவாகலாம். -

Page 119
226 புவிவெளியுருவவியல்
(ii) கண்ட எழுச்சி (உயர்ச்சி) - இது கண்டச்சரிவையும், ஆழ் கடற் சமநிலத்தையும் இணைக்கும் பகுதியாகும். இது பெரும் பாலும், கலங்கல் நீரோட்டங்களாற் கொண்டுவரப்படும் மணல் களி, மண்டி போன்ற அடையற் படிவுகளின் திரட்சியினால் உருவாகியுள்ளது. இவற்றின் தடிப்பு 1 கி.மீ. வரை காணப்பட லாம். அதேசமயம் இதன் சாய்வு 1:100 முதல் 1700 வரை இடத்துக்கிடம் வேறுபட்டுக் காணப்படுகிறது.
14. (ஊ) பசிபிக் வகையான கண்ட ஒரங்கள்
இது அத்திலாந்திக் வகையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது.
ஏனெனில் இது எரிமலைத் தொழிற்பாடு, புவிநடுக்கம் முதலி யன இடம்பெறும் அமைதியற்ற ஒரு வலயமாக அமைந்துள்ளது. பசிபிக் சமுத்திரத்தில் மூன்று வகையான கண்ட ஒரங்களை ( மாறல் வலயங்களை ) அடையாளம் காணலாம். அவை (1) மேற்கு பசிபிக்கின் எரிமலைத்தீவுவில் வலயம் (2) வட அமெரிக்க மாறுகுறை வலயம் (3) தென் அமெரிக்க ஒருங்கல் வலயம் என்பனவாகும்.
(1) மேற்கு பசிபிக்கின் எரிமலைத் தீவுவில் வலயம் - மேற்கு பசிபிக்கின் மாறல் வலயம் ஏனையவற்றிலும் வேறுபட்டதாக வும், தனித்துவமான அமைப்புடையதாகவும் திகழ்கிறது அங்கு ஆழமான பல அகழிகளை வெளிப்புறத்திற் கொண்ட பல எரிமலைத் தீவுவில்லுகள் சங்கிலித்தொடர் போலப் பல்லாயிரம் கி.மீ நீண்டு காணப்படுகின்றன . அலுரசன், குறைல், ஜப்பான்
韶 கண்டப்புலிஜாடு சமுத்திரப்புவியோடு
படம்: 39 பசிபிக்கண்ட ஒரம்
பி. வி. வ. பின்வில்லு வடிநிலம் மு. வி. வி. முன்வில்லு வடிநிலம்
 

கண்டங்களும் சமுத்திரங்களும் 227
மரியானா, பிலிப்பைன், ரொங்கா, கர்மாடெக் முதலிய தீவுக் கூட்டங்கள் சில அங்குள்ள முக்கியமான எரிமலைத் தீவுவில்லு களாகும். அவையனைத்தும் அகழிகளுடன் தொடர்புள்ளவை யாதலின் அவற்றைத் தீவுவில் அகழித்தொகுதி (Arc Trench
Systen ) GT6öT6/Lö குறிப்பிடுவர். - -
தீவுவில் அகழித்தொகுதியில் நான்கு உருவவியல் அலகுகளை அடையாளம் காணலாம். அவை (i) அகழி (ii) எரிமலைத் தீவுவில் (ii) முன்வில்லு வடிநிலம் ( Fore Arc Basin) (iv) பின்வில்லு வடிநிலம் (Baek Arc Basin) என்பனவாம்.
(1) அகழிகள்:- தகட்டொருங்கல் நிகழும் எல்லையில், கீழிறங் கும் தகடு சரிந்து (மடிந்து) புவியோட்டிற்கூடாக உட்செல்லு மிடங்களில் இவை உருவாகின்றன - உருவாக்கப்படுகின்றன. இவை அமைப்பில், நீண்ட, ஒடுங்கிய, ஆழமான இறக்கங்களாக வுள்ளன. இவற்றில் சில பல்லாயிரம் கி.மீ. நீண்டு காணப்படி னும் பெரும்பாலானவை 10 கி.மீ. வரையிலான அகலத்தையும் ஏறத்தாழ அதேயளவு ஆழத்தையுமுடையன. உதாரணமாக உலகின் மிக ஆழமான அகழியான மரியானா (கடல்மட்டத் திலிருந்து) 10, 850 மீற்றர் ஆழமானது.
அகழிகள் தமக்கருகில் அல்லது அண்மையில் உள்ள தீவு வில்லுகளைப் போல வளைவான உருவத்துடன் காணப்படுகின் றன. தகடுகள் சரிந்து கீழிறங்கும் இடங்களில் அகழிகளின் வெளிச்சுவர் மென்சர்ய்வுடனும் உட்சாய்வுகள் கீழுதைப்புக் காரணமாக குத்துச் சாய்வுடனும் ( சமச்சீரற்றுக்) காணப்படு கின்றன. 臀
அகழிகள், அடையல்கள் திரளுமிடங்களாகும். அவற்றில் ஆழ்கடற்படிவுகள் (சேறு, கசிவு) கலங்கல் நீரோட்டங்களாற் கொண்டுசெல்லப்படும் பல்லினமான அடையல்கள் என்பவற் றுடன், குறைந்த அளவில் எரிமலைத்தொடர்புள்ள அடையல் களும் கண்டம் giri is a அடையல்களும் காணப்படுகின்றன. ஆனால் அகழிகள் எரிமலைத்தீவுகளுக்குத் தொலைவில் இருப் பின் அவற்றில் ஆழ்கடற் படிவுகள் மட்டுமே காணப்படும் மரியானா அகழி இப்படிப்பட்டது. அகழிகளில் அடையல்கள் படிந்திருப்பதனால் அவற்றின் அடிப்பாகம் தட்டையாகக் காணப்படுகின்றது.
(1) எரிமலைத் மேற்கு ப சி பி க் கி லுள்ள அலுரசன், குறைல், ஜப்பான் முதலிய தீவுவில்லுகள் தகட் பொருங்கல் மூலம் உருவாகியதாக நம்பப்படுகிறது. இதுபற்றி

Page 120
228 புவிவெளியுருவவியல்
ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். (அத் 5) இவற்றில் அலூசன் தீவுவில் இரு சமுத்திரத்தகடுகளின் ஒருங்கல் மூலம் உருவாகியது. ஆனால் ஜப்பர்ன் தீவுவில் - சிறப்பாக ஹொன்சுத்தீவு ஆசிய பசிபிக் தகடுகளின் ஒருங்கலின் விளைவாக உருவாகிய பின்னர் . ஆசியக்கண்டத்தகட்டில் ஏற்பட்ட பிளத்தலைத் தொடர்ந்து கடலடித்தரை பரவியதன் மூலமே எரிமலைத்தீவு வில்லாகிய தாக நம்பப்படுகிறது.
(i) பின்வில்லு, முன்வில்லு வடிநிலங்கள். மேற்கு பசிபிக் கிலுள்ள சில எரிமலைத்தீவுவில்லுகள் பின்லில்லு வடிநிலம் ,
முன்வில்லு வடிநிலம் என்பனவற்றுடனும் காணப்படுகின்றன.
பின்வில்லு வடிநிலங்கள் உருவாகும்முறை முன்னர் விளக்கப்
பட்டது. ( அத் 5 ) அலூசன், குறைல், ஜப்பான் என்னும்
தீவுகளுக்குப் பின்னால் உள்ள பேரிங்கடல், ஒகொட்ஸ்கடல்
ஜப்பான்கடல் ஆகியன பின்வில்லு வடிநிலங்களாகும். அதே
சமயம் அலூசன், குறைல், என்னுமிரண்டும் முன்வில்லு வடி
நிலத்துடனும் காணப்படுகின்றன. அத்தீவுகளுக்கு முன்னால்
உள்ள அகழிகளுக்கூடாகக் கீழிறங்கும் பசிபிக் தகட்டிலிருந்து
சுரண்டப்பட்ட அடையல்கள், அத்தீவுகளுக்கும் அகழிகளுக்கு மிடையிற் படிந்து சிறு தீவுவில்லுகளை உண்டாக்கியதே முன் வில்லு வடிநிலங்கள் தோன்றக் காரணமாகும் ஆயினும் அடை
மல்கள் போதாமையினால் முன்குறிப்பிட்ட சில தீவுவில்லுகள்
முனைப்பாகக் காணப்படவில்லை. இந்துசமுத்திரத்தில் இந்தோ
னேசியாவுக்கும் சுந்தா அகழிக்குமிடையினுந்: நியாஸ் எனப் படும் சிறிய தீவுவில்லுகளும் முன்வில்லு வடிநிலமும் உருவாகி யிருப்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது.
(2) தென்னமெரிக்க ஒருங்கல் வலயம் :- தென்னமெரிக்காவின் மேற்குக்கரையோரமாகவுள்ள ஏறத்தாழ 4800 கி.மீ நீளமான பேரு - சில்லி அகழிவலயம் உலகிலுள்ள மிக நீண்ட ஒருங்கல்
வலயமாகும். அங்கு நாஸ்காத்தகடு தென்னமெரிக்கத்தகட்டின் கீழ் இறங்குகிறது. நாஸ்காத்தகடு 6செ.மீ வேகத்திலும் தென்ன மெரிக்கத்தகடு 3செ.மீ. வேகத்திலும் ஒருங்குவதனால், கீழிறங்
கல் 9 செ.மீ. வேகத்தில் இடம்பெறுகிறது. இவ்வாறு கடந்த 130 மில்லியன் ஆண்டு காலத்தில் 5000 கி.மீ. சமுத்திர ஓடு இப்பகுதியில் கீழிறங்கியதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இங்கு தகட்டிறங்கல் வேகமாகவும் உயர் கோணத்திலும் நிகழ்வத னால் அந்தீசு மலைப்பகுதியில் உயரமான, உக்கிரமான பல எரிமலைகள் உருவாகியுள்ளன. அவை அந்தீசின் வட, மத்திய தென்பகுதிகளில் மூன்று தொகுதிகளாகக் காணப்படுகின்றன

கண்டங்களும் சமுத்தி ரங்களும் 229
தென்னமெரிக்காவின் மேற்குக்கரைப் பகுதியில் குறுகிய ஆறுகள் பாய்வதனாலும் தகட்டொருங்கல் கரைக்கு அருகில் இடம்பெறுவதனாலும் அங்கு பரந்த கண்டமேடையோ, கண்ட சரிவோ உருவாகவில்லை. இதனால் அங்குள்ள் ஒடுக்கமான கண்டமேடைகளின் விளிம்புகள் ஆழமான அகழியின் விளிம்பு களுடன் இணைகின்றன. அதேசமயம் அகழிக்கு அப்பாலுள்ள கடலில் சில ஆழ்கடற் சமநிலங்கள் உள்ளன.
தென்னமெரிக்கத் தகட்டின் கீழுள்ள பெனியோ வலயக் வேறுபட்ட கோணிங்களில் சரிந்திருப்பதனால், அப்பகுதியில் அனேகமாக எல்லா வகையான புவிநடுக்கங்களும் ஏற்பட்டு வருகின்றன. ஆயினும் இடைநிலை, ஆழ்குவிய நடுக்கங்களே ஒப்பளவில் அதிகமாயுள்ளன. இந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் (1960 ல்) ஏற்பட்ட மிகப்பெரிய புவிநடுக்கம் அந்தீசு - தகட் டொருங்கல் வலயத்திலேயே (சில்லியில் ) ஏற்பட்டது. அது றிச்ரர் அளவுத்திட்டத்தில் 8.6 ஆகப்பதியப்பட்டது.
(3) வட அமெரிக்க மாறுகுறை (மாறல்) வலயம் :- வட அமெரிக்காவின் மேற்குக்கரைப் பிரதேசம் தகட்டெல்லைகளில் தனித்துவமுள்ள ஒரு மாறுகுறை வலயத்தில் அமைந்துள்ளது. அங்கு வடஅமெரிக்கத் தகடும் பசிபிக் தகடும் சந்திக்கின்றன. அவற்றில் பசிபிக்தகடு பஜா குடாநாடு உட்படக் கலிபோனியா வின் மேற்குப்பகுதியை உள்ளடக்கியிருக்கிறது. அத்தகடு வட மேற்குத் திசையில் ஆண்டிற்கு 5 செ.மீ. வேகத்தில் அசையும் போது அதற்கும் வடஅமெரிக்கத் தகட்டுக்குமிடையே தகைப்பு ஏற்படுவதனால், அப்பிரதேசம் உறுதியற்றதாயுள்ளது.
வடஅமெரிக்கக் கண்டத்தகடு அத்திலாந்திக்கில் நிகழும் கடலடித்தரை பரவல் காரணமாக மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அதேசமயம் கிழக்கு பசிபிக் உயர்ச்சி முன்னர் வடஅமெரிக்கக் கரையுடன் சரிவுத்திசையில் ஒருங்கியது. இக் காரணங்களினால் வடஅமெரிக்கத் தகடு கிழக்குப்பசிபிக் உயர்ச் சிக்கு மேலாக நகர்ந்ததன் விளைவாகவே கலிபோனியக்குடாக் கடலும் அங்குள்ள மாறுகுறைகளும் உருவாகின.
கலிபோனியக்குடாப் பகுதியில் கிழக்கு பசிபிக் உயர்ச்சி பல சிறிய பாறைத்தொடர்களாகப் பிரிந்துள்ளது. அவை கரைக்கோட்டிற்குச் செங்கோணத் திசையிற் செல்லுகின்றன. இதன்விளைவாக கரைக்கோட்டிற்கு ஒரளவு சமாந்தரமாகப் பல மாறுகுறைகள் உருவாகியுள்ளன. இவற்றில் சென் அன்டிரி

Page 121
230 புவிவெளியுருவவியல்
பாஸ் குறை முக்கியமானது. அது a)Guir gif LIT2)2 ஊடறுத்து பசிபிக்கிலுள்ள மென்டோக்ரா என்னும் குறைவரை ஏறத்தாழ 966 கி.மீ. நீண்டுள்ளது. அது கலிபோனியாவுக்கு வெளியே பெயர்வெதர் (Fairweather) மாறுகுறையாகத் தொடர்கிறது. அதேசமயம் கிழக்கு பசிபிக் உயர்ச்சியானது கலிபோனியாவுக்கு வெளியே மெண்டோசீனா குறைக்கு அப்பால் கோர்டா, பியூகா என்னும் இரு பாறைத் தொடர்களாகப் பிரிந்து செல்கிறது. பின்னர் பெயர் (F) வெதர் மாறுகுறை முடியும் எல்லையில் அது அலுரசன் அகழியில் கீழிறங்குகிறது.
கோர்டா, பியூகா என்னும் ଜୁଏ, பரப்பும் பாறைத்தொடர்
களிலிருந்து பரவிய கடலடித்தரை (கோர்டா தகடு) முன்னர்
ஒறிகன் - வாஷிங்டன் கரைப்பகுதியில் கீழிறங்கியிருக்க வேண்டு மென்றும் அதன்விளைவாகவே கஸ்கேட் மலைப்பகுதியில் எரி மலைகள் தோன்றினவென்றும் நம்பப்படுகிறது. 1980ல் ஹெலன் மலைப்பகுதியில் ஏற்பட்ட எரிமலைத் தொழிற்பாடு, அங்கு கீழிறங்கல் இன்னும் இடம்பெறுவதற்குச் சான்றாயுள்ளது.
மாறுகுறைகள் ஆழ் பிளவுகளாக அமைவதனாலும் அவற்றுக் கிடையே கிடைச்சறுக்கல் முறையான அசைவுகள் இடம்பெறு வதனாலும் கலிபோனியாக்குடாவிலும் அதற்கு அப்பாலும் ஆழமான சிறு வடிநிலங்கள் உருவாகியுள்ளன. கலிபோனியாக் குடாவின் வட பகுதியில் கொலராடோ ஆற்றுப்படிவுகளும் தென்பகுதியில் ஆழ்கடற் சேறும் காணப்படுகின்றன. அதே சமயம் மேற்குக்கரையோரப் பகுதியில் தடிப்பான அடையற் படிவுகள் உள்ளன.

அத்தியாயம் 15 ஆற்றின் செயலும் நிலவுருவங்களும்.
5 sa உண்டாக்கும் கருவிகள் பலவற்றுள் ளும் ஒடும் நீரே மிக முக்கியமானது. புவியிற் காணப்படும் நிலவுருவங்களில் ஏறத்தாழ 90 சதவீத ரனவை ஒடும் நீரின் செயலால் உருவாக்கப்பட்டவையாம். இவ்வாறு புவியின் மேற் பரப்பில் பரந்த அளவிற் செயற்படும் இக்கருவியை இயல் பான அரிப்புக் கருவியென W M டேவிஸ் குறி ப் பி ட் டது பொருத்தமானதே. நீர், நிலையான ஒரு பள்ளத்தாக்கில் ஒடிச்செல்லும்போதுதான் அதிக அளவில் அரிப்பில் ஈடுபடுகிறது. அத்தகைய ஒரு நீர் வழியையே ஆறு என்றும் அருவி என்றும் அழைக்கிறோம்.
ஆறு தொடங்குமிடம் ஆற்றுமுதல்' எனவும் அது பிறி தொரு நீர்ப்பரப்புடன் கலந்து முடிவடையுமிடம் ஆற்றுவாய் எனவும் கூறப்படும் ஒர் ஆற்றையும் அதன் கிளைகளையும் சேர்த்து ஆற்றுத்தொகுதி என்பர். இத்தகைய ஒர் ஆற்றுத் தொகுதியின் நீர் வடிந்தேர்டும் பிரதேசம் முழுவதும் ஆற்று வடிநிலம் எனவும் இரு ஆற்றுத்தொகுதிகளைப் பிரிக்கும் எல்லை நீர்பிரிநிலம் எனவும் வழங்கப்படும்.
151 ஆறு உருவாகுதல்
நீர், நிலப்பரப்பில் ஒடிச்செல்வதற்குப் படிவு வீழ்ச்சியே முதற்றேவையாகும். ஆனால் படிவு வீழ்ச்சியினாற் கிடைக்கும் நீர் முழுவதும் மேற்பரப்பிலிருந்து ஒடிச்செல்வதில்லை. அந்நீரில் ஒரு பகுதி தரையிலிருந்து ஆவியாக்கப்பட்டுவிடுகிறது. தாவ ரங்கள் இன்னொரு பகுதியைப் பயன்படுத்துகின்றன. மற்றொரு பகுதி தரைக்கீழ்ச் சென்றுவிடுகிறது. அதில் ஒரு பகுதி ஊற்றுக் களாக மீண்டும் மேற்பரப்பில் வெளிப்படுவதுமுண்டு. எனவே மேற்பரப்பில் ஒடும்நீர் எப்பொழுதும் ஒரு வரம்பிற்குட்பட்ட தாகவேயிருக்கும். ஒரிடத்தில் கிடைக்கும் மழை நீரில் ஒடும் நீரிளைவானது மழை வீழ்ச்சி விகிதம், நிலத்தின் சரிவு, ஆண்டு LDGOLD, Gւքյbւյցrւնւյլն பாறைகளின் உட்புகவிடுதன்மை, தாவ ரப்பரம்பல் முதலிய பல காரணிகளாற் பாதிக்கப்படுகின்றது.

Page 122
232 புவிவெளியுருவவியல்
மழை சடுதியாகப் பொழியும்போது நீர் அதிக அளவில் மேற்பரப்பில் ஒடிச்செல்லும், அதேசமயம், மெதுவாகப் பெய் யும் மழை அதிக நீரைத் தரைக்கீழ்ச் செ ல் ல வைக்கிறது. நிலம் குத்தான சரிவுடையதாயின் அதிக நீரும், தட்டையாயி ருப்பின் குறைவான நீரும் மேற்பரப்பில் ஒடிச்செல்லும் மேலும் மேற்பரப்புப் பர்றை உட்புகவிடுவதாகவும் தடிப்பற்றதாகவு மிருப்பின் கணிசமான அளவு நீர் தரைக்குட்சென்றுவிடலாம். அன்றியும் தாவரங்கள் மிக அடர்த்தியாகவுள்ள கா டு களி ல் ஒடும் நீரினளவு அவை ஐதாகக் காணப்படுமிடங்களில் ஒடுவதை விடக் குறைவானதாயிருக்கும். இவற்றைத் தவிர, ஆண்டு முழு வதும் ஒரு சீராகப் பரம்பியுள்ள மழையைவிட ஒரு பருவத்தில் அல்லது குறுகிய காலத்தில் ஏற்படும் செறிவான மழை ஒடும் நீரினளவை அதிகரிக்கச் செய்கிறது: *
ஆறுகள் நிலப்பரப்பிற் பாய்ந்து செல்லும்பே து அரித்தல், கொண்டுசெல்லுதல், படிவு செய்தல் என்னும் மூவகைச் செயல் களில் ஈடுபடுகின்றன.
15, 2 ஆற்றரிப்பு: ஆற்றரிப்பு ஐந்து செயல்முறைகளை உள் ளடக்கியது. அவை (i) சுரண்டல் (ii) நீர்த்தாக்கம் (ii) கரைத் தல் (iv) குழியாக்கல் (Cavitation) (vi) அரைந்து தேய்தல்
鬣
1512 (i) சுரண்டல்: பாறைத் துண்டுகளாகிய சுமையைக் கருவி யாகப் பயன்படுத்திப் பள்ளத்தாக்கின் பக்கங்களையும் படுக்கை யையும் அரித்து அழித்தலையே இச்செயல்முறை குறிக்கின்றது. இதன் விளைவாக ஆற்றுப்படுக்கை அதிகமாகத் தோண்டப் படுவதனால் பள்ளத்தாக்கின் ஆழமும் அதிகரிக்கிறது. பள்ளத் தாக்கை ஆழமாக்கும் செயல்முறை நிலைக்குத்துச் சுரண்டல் எனப்படும். அதுபோல் சாய்வுகளைச் சுரண்டிப் பள்ளத்தாக்கை அகலமாக்கும் செயல்முறை பக்கச்சுரண்டல் எனப்படும். சுரண் டலினளவானது நீரின் வேகம், நீரினளவு, சுமையின் தன்மை, சுமையினளவு, பள்ளத்தாக்குப் பாறைகளின் தன்மை முதலிய பல காரணிகளினாற் கட்டுப்படுத்தப்படுகிறது. சு ர ண் ட ல் ஆற்றின் பொறிமுறைச் செயல்பாடு என்பது குறி ப் பி ட த் தி கிகிது
(i) நீர்த்தாக்கம்: நீர் வேகமாகப் பாய்வதன் விளைவாக பாறைகள் பிடுங்கப்படுவதையும், பாறைகளிலுள்ள மூட்டுக்கள் பிளவுகளுக்கூடாகப் புகும் நீர் அவற்றை அமுக்கிப் பெயர்த் தெடுத்தலையும் இச்செயல்முறை குறிக்கின்றது இதன் விளை
 
 

ஆற்றின் செயலும் நிலவுருவங்களும் 233
வாக ஆற்றில் வளைவுகள் காணப்படுமிடங்களில் அதன் கரை அடியறுக்கப்படலாம். கரையைக் குடையும் இச்செயல்முறை பொதுவாக மென்பாறைகளையே அதிகமாகப் பாதிக்கின்றது.
(ii) கரைத்தல் நீரிற் கரையக்கூடிய பா  ைற க ளா ன
சோக்கு, சுண்ணாம்புப்பாறை முதலியவற்றில் ஆறு பாயும்
போது அப்பாறைகள் கரைக்கப்பட்டு நீக்கப்படுகின்றன. இது நீரின் இரசாயனச் செயல்முறையாகும்.
(iv) குழியாக்கல் நீர் வேகமாகப் பாயும்போது குமுறும் நீர்ச்சுழிகளில் காணப்படும் நீராவிக் குமிழிகள் (Bubbles) உடைவதனால் இது நிகழ்கிறது. குமிழி க ள் உடைவதனால் ஏற்படும் அதிர் வலைகள் அருகிலுள்ள பாறைகளைத் தாக்கி அவற்றை உடைக்கும். குழி யா க் க ல் விரைவோட்டங்கள் காணப்படுமிடங்களிலும் நீர்வீழ்ச்சிகளின் அடிப்பாகத்திலும் அரித்தலுக்குத் துணைசெய்யும் மேலும் ஆற்றுப்படுக்கையில் சிறு குழிகள் தோன்றுவதற்கும் இச்செயல்முறையே காரண மாகும். இத்தகைய சிறு குழிகளே காலப்போக்கில் பெ ரி ய பானைக்குழிகளாகின்றன,
(W) அரைந்து தேய்தல் நீரினாற் கொண்டு செல்லப்படும் சுமையாகிய பாறைத்துண்டுகள் ஆற்றுப்படுகையுடனோ பக்கங் களுடனோ ஒன்டொன்றோ மோதுவதன் விளைவாக உடைந்து தேய்ந்து உருவழிதலை அரைந்து தேய்தல் என அழைப்பர்.
15. 3. கொண்டு செல்லல் ஆறு கொண்டுசெல்லும் பொருட்கள் பள்ளத்தாக்குச் சாய்வுகளில் நிகழும் வானிலை யரலழிதலின் மூலமும், கிளையருவிகளின் அரிப்பின் மூலமும், உயர கலக்கோட்டுப்பிரதேசம் அல்லது மழைப்பனிக் கோட்டுக்கு மேலுள்ள பிரதேசமாயின் பனிக்கட்டியாறு உருகுவதனாலுண் டாகும் நீர் மூலமும், ஆற்றின் அரிப்புச் செயல்கள் மூலமும் பெறப்படுகின்றன. கொண்டுசெல்லல் ஐந்து முறைகளில் நிகழ் கின்றது. அவை (1) காவுதல், (2) இழுத்தல் அல்லது உருட் டல் , (3) எற்றுதல், (4) கரைத்தல், (5) மிதத்தல் என்பன வாகும். நுண்மணல், சேறு முதலியன நீரினால் காவிச்செல் லப்படுகின்றன. சிறிய கற்களும் பரலும் அடித்தளம் வழியே இழுத்துச் செல்லப்படுகின்றன. அவை பெரும்பாலும் உருண்டு உருண்டுதான் நகரும், அதேசமயம் பெரிய பாறைத் துண்டுகள் அவ்வப்போது நீரின் வேகம் அதிகரிக்கும் காலங்களில் மட்டும் எற்றப்பட்டுக் குதித்துக் குதித்துக் கெல்லும் கரையக்கூடிய

Page 123
134。 புவிவெளியுருவவியல்
பாறைகள் கரைசலாக்கப்பட்டுக்கொண்டு செல்லப்படுகின்றன. அதேயமயம் நுரைக்கல், மைக்காத்துகள் முதலியன நீரின் மேற் பரப்பில் மிதந்து செல்வதையே மிதத்தல்' எனக் கூறுகின்ற றனர்.
ஒர் ஆற்றின் கொண்டுசெல்லும் திறன் மூன்று காரணி களாற் பாதிக்கப்படுகின்றது. அவை முறையே நீரின் வேகம், சுமையின் தன்மை, சுமையின் அளவு என்பனவரம். இவற்றில் நீரின் வேகம் அதிகரிக்கும்போது கொண்டுசெல்லும் திறன் பன் மடங்கு அதிகரிக்கிறது. உதாரணமாக, 100 செ.மீ / செக். வேகத்திற் பாயும் நீர் 2 கிலோ பாரமான ஒரு பாறையை அசைத்துச் செல்லும் அதேசமயம், அதன் வேகம் 200 செ.மீ. செக் ஆக அதிகரிக்கும்போது அது 64 கிலோ பாரமான பாறையையும் அசைத்துக்கொண்டு செல்லும் அடுத்து சுமை யின் தன்மையை எடுத்துக்கொண்டால், ஒரு குறிப்பிட்ட வேகத் துடன் LIII u tih ஆறு ஒழுங்கற்ற உருவங்களையுடைய பெரிய பொருட்களைவிடக் கனத்தில் அதிகமான நுண்  ைம ய ர ன பொருட்களைக் கொண்டுசெல்லக்கூடியது. 2-5 fTT 600 i Df1 g5 மிசிசிப்பி நதி ஆண்டு தோறும் 34 கோடி தொன் பொருட் களைக் கரைசலாகவும் 4 கோடி தொன் பொருட்களை இழுத் துக்கொண்டும் செல்வதாகக் கணிக்கப்பட்டுள்ளது. சுமையின் அளவும் ஆற்றின் கொண்டுசெல்லும்ம் திறனைப் பாதிக்கும். ஏனெனில் ஒராற்றிற்குக் கிடைக்கும் சுமை அதிகரிக்கும்போது அதன் கொண்டுசெல்லும் திறன் குறையும் அதேபோல் சுமை குறையும்போது கொண்டுசெல்லும் திறன் அதிகமாகும்.
15 4 ஆற்றரிப்பால் உருவாகும் நிலவுருவங்கள் ஒரு நிலத் திணிவு ஒரளவு விரைவாகக் கடலிலிருந்து மேலுயர்த்தப்படு கிறது எனக்கொள்வோம் அத்துடன் அந்நிலத்திணிவில் ஆறு உருவாகுதற்குப் போதிய மழை பெய்கிறது எனவும் எண்ணு வோம். மழை பெய்தவுடன் நீர் முதலில் வழிந்து தகட்டோட் டமாகப் பாயும். பின்னர் அது சிறுசிறு வாய்க்கால்களை யமைத்துக்கொண்டு நிலச் சரிவைப் பின்பற்றிச் செ ல் லும் நாளடைவில் பல சிறு வாய்க்கால்கள் ஒண்றாயிணைந்து ஒரு பெரிய வாய்க்காலாக மாறும். இவ்வாய்க்கால் பின்னர் பிர தான ஆறாக உருவாகும்.
ஆறு உருவாகியவுடன் அது இளமை நிலையிலிருப்பதாகக்
கொள்வர். இளமையான ஆறு நிலத்தின் சரிவு காரணமாக விரைவாகப் பாய்ந்து செல்லக்கூடியது. இதனால் அது நிலைக்

ஆற்றின் செயலும் நிலவுருவங்களும் 235
குத்தரிப்பில் முழு மூச்சாக ஈடுபடும். தொடக்கத்தில் அதன்
பள்ளத்தாக்கு மிக ஒடுக்கமான நீரரிபள்ளமாய் அ  ைம யு ம்.
எனவே நீரினளவு குறைவாயிருப்பினும் நிலச்சரிவும் பள்ளத்
தாக்கின் ஒடுக்கமும் நிலக்குத்தரிப்பை விரைவுபடுத்தும். அந்
நிலையில் பள்ளத்தாக்கானது குறுக்குப் பார்வையில் V வடிவ
மானதாகக் காணப்படும். பொதுவாக பள்ளத்தாக்குச் சாய்வு
களின் குத்துத்தன்மை அவற்றிலுள்ள பாறைகளின் வன்மை
யைப் பொறுத்து வேறுபடக்கூடியது. அஃதாவது பாறைகள் வானிலையாலழிதலினாலும் ஆற்றரிப்பினாலும் அதிகம் பாதிக்
கப்படாதிருப்பின் சாய்வுகள் அதிக குத்தானவையாய் இருக்
கும். ஆயினும் குத்தான சரிவுகளும் காலகதியில் வானிலை
யாலழிதலினாற் பாதிக்கப்பட்டுத் தேய்வதனால் மேற்சாய்வு
களிலிருந்துவிழும் பாறைத்துண்டுகள் ஆற்றுநீரின் கையில்
அரிப்புக்கருவிகளாக மாறும். ஆறு அவற்றின் துணையுடன் தனது படுக்கையைத் தோண்டுவதில் ஈடுபடும்.
15.4 (1) பானைக் குழிவுகள்: வேகமாகப் பாயும் நீரில் சுழி கள் ஏற்படுவது இயற்கையாதலின் அவை காணப்படுமிடங்களில் பாறைத் துண்டுகள் சுழன்று சுழன்று அடித்தளத்தை மோதுவ தன் விளைவாக அதிற் பள்ளங்கள உண்டாகும். அதேசமயம் குழியாக்கல் என்னும் செயல்முறையும் சிறு குழிகளை உரு
Golf (T 53,6.) Tp.
இப்பள்ளங்கள் காலப்போக்கில் பெரிய குழிகளாக உருப் பெற்று பானைக்குழிவுகள் ஆகின்றன. பானைக்குழிவுகள் 1-1, 5 மீ விட்டமுடையனவாகவும், சிலபோது 2 - 2.5 மீற்றருக்கு மேற்பட்ட ஆழமுடையனவாகவும் இருப்பதுண்டு. மகா வலி கங்கைப் பள்ளத்தாக்கில் கடம்பேக்கு அண்மையில் 1 மீற்விட்டம் 2 மீற். ஆழமான பல பானைகுழிவுகளைக் காணலாம். பானைக் குழிவுகள் மென்பாறைகளில் எளிதிற் தோண்டப்படுகின்றன. ஆனால் ஒரளவு வன்பாறைகளிற்றான் அவை நிலைத்திருக்கின் றன. பெரிய பானைக்குழிவுகளில் தவாளிப்புகளும் கீறல்களும் காணப்படலாம். அவை கற்களும் பரல்களும் நீரினாற் கழற் றப்படுவதனால் ஏற்படுபவையாகும். பானைக்குழிவுகளிற் காணப்படும் கற்கள் உருண்டையாகவும் ஒப்ப ர வரி க வம் காணப்படுதல் அவை முன்னர் அரிப்புக் கருவியாகப் பயன் பட்ட  ைத உணர்த்துகின்றது. சில பானைக்குழிவுகள் நீர் வீழ்ச்சிகளுக்கு முன்னாலிருக்கும் 'குதிக்கும் குட்டை' களிற் காணப்படுகின்றன. இவை பாரிய குழிவுகளாம். பா  ைன க்

Page 124
236 புவிவெளியுருவவியல்
குழிவுகளை உருவாக்குவதன் மூலம் ஆறு தனது அடித்தளத்தை ஆழமாக்கிச் செல்கிறது. அதேசமயம் அதன் பக்கச் சாய்வுகள்
வானிலையாலழிவினாலும் ஆற்றரிப்பினாலும் அதிகமாகப் பாதிக்கப்படாதிருப்பின் நீண்ட, ஒடுக்கமான இறக்கங்கள் ஏற் படலாம் பொதுவாக, அகலத்தைவிட அதிக நீளத்தையும் ஆழத்தையுமுடைய இறக்கங்களை மலையிடுக்கு அல்லது ஆற்றுக் குடைவு என்பர். வன்பாறைகளிலுருவாக்கப்பட்ட மலை யிடுக்குகள் குத்தான பக்கச்சாய்வுகளுடன் மிக ஒடுக்கமான வையாயிருக்கும் மென்சாய்வுகளிலுருவாக்கப்பட்ட மலையிடுக் குகளின் மேற்பக்கச் சாய்வுகள் அகன்று காணப்படும். மலை யிடுக்குகள் நீர்வீழ்ச்சிகள் பின்வாங்குவதனாலும் உருவாகலாம். அன்றியும் வரண்ட பிரதேசத்தினூடாகப் பாயும் ஆறுகளும் சடுதியாக நீர்ப்பெருக்கு ஏற்படும்போது ஆழமான மலையிடுக்கு களை ஏற்படுத்துகின்றன. இவ்வகை இடுக்குகளை வாடிகள் என அழைப்பர். வட அமெரிக்காவிலுள்ள கொலராடோ நதியானது வரண்ட அரிசோனா யூற்றா மாகாணங்களில் மிக ஆழமான மலையிடுக்குகளை ஏற்ப டு த் தி யு ள் ளது . அரிசோனா மர்காணத்திலுள்ள பெருமலையிடுக்கு (Grand Canyon) 2000 மீற். ஆழத்தையும் 490 கி. மீ. ஆளத்தை யுமுடையதாகும். ஓர் ஆறு புத்துயிர்ப்படைவதனாலும் அதன் போக்கில் நிலவுயர்ச்சியேற்படும்போது அது வேகமாக நிலைக் குத்தரிப்பிலீடுபடுவதனாலும் மலையிடுக்குகள் ஏற்படுவதையும் ஈண்டுக்குறிப்பிடலாம். இந்து, பிரமபுத்திரா நதிகள் இறுதி யாகக் குறிப்பிட்ட முறையில் மிக ஆழமான மலையிடுக்குகளை உருவாக்கியுள்ளன மேற்குறிப்பிட்டவற்றைத் தவிரச் சுண்ணாம் புப் பாறைப்பிரதேசத்திலுள்ள தரைக்கீழ்க் குகைகள் இடிவத னாலும் மலையிடுக்குகள் உண்டாகலாம்.
இனி ஆற்றுப்பள்ளத்தாக்குகளுக்கு மீண்டும் வருவோம். இளமை நிலையிலுள்ள ஆறுகளின் போக்கு நேரானதாயிருப்ப தில்லை. சுவடுகள் வன்மையான பாறைத்தடைகள் முதலியன எதிர்ப்படும்போது ஆறு அவற்றைச் சுற் றிப் பாயமுயல்வத னால் ஆற்றின் போக்கு வளைவானதாயிருக்கும். ஆற் றில் உண்டாகும் இவ்வளைவுகளின் வெளிப்பாகத்தில் நீர் வேகமாக மோதுவதினால் அவை மேலும் பெரிதாக்கப்படுகின்றன. இம் முறையில் ஆறு வளைந்து வளைந்து பாயும்போது பள்ளத் தாக்கின் இருபுறமுள்ள சுவடுகள் ஒன்றினுள் ஒன்று செருகிய நிலையிற் காணப்படும். இத்தகைய செருகிய சுவடுகள் இளமை யான அ ரு வி க ள் செயற்படுமிடங்களிற்றான் காணப்படும்.

ஆற்றின் செயலும் நிலவுருவங்களும் 237
இவற்றைத்தவிர இளமையான ஆற்றின் பள்ளத்தாக்குகளில் ஆங்காங்கு சிறு ஏரிகளும் காணப்படலாம். ஆனால் ஆறு படிவுசெய்வதன்மூலம் இவ்வேரிகளை நிரப்பி நீக்கிவிடும். ஏரி களைத் தவிர ஆங்காங்கு தடைபாறைகள் வெளியரும்புமிடங் களில் விரைவோட்டங்கள் அல்லது நீர்வீழ்ச்சிகளும் உண்டாக லாம். நைல்நதியில் இத் த  ைக ய விரைவோட்டங்கள் பல காணப்படுகின்றன. V
15.4 (i) நீர் வீழ்ச்சிகள் ஆற்றுப்போக்கில் தடை பாறைகள் காணப்படுவதுடன் அவற்றுக்குக்கீழ் மென்பாறை களுமிருப்பின் அதுவே நீர்வீழ்ச்சிகள் உருவாதற்கு உகந்த நிலை மையாகும். நீரின் அரிப்பினால் மென்பாறைகள் உடைந்து நீர் வீழ்ச்சியின் அடித்தளத்தில் வீழ்வதனால் அது படிப்படி யாகப் பின்வாங்கிச் செல்லும் பிரசித்திபெற்ற நயாகரா நீர் வீழ்ச்சி இவ்வாறு பின்னிடைகிறது. அதுவும் ஒரு தடைபாறை யால் உண்டாக்கப்பட்டதே. அதன் மேற்பாறை தொலமைற் ஆகும். அதற்குக்கீழ் களிக்கல்லும் மணற்பாறைகளும் காணப் படுகின்றன. இந்நீர்வீழ்ச்சி ஐக்கிய அமெரிக்காவின் பக்கத்தில் 55 மீற் உயரமுடையது. இதன் பின்வாங்குதலினாலுண்டாகிய மலையிடுக்கு ஏறத்தாழ 11 கி. மீ நீளமுடையது. நீர் வீழ்ச்சிகள் ஆறுகளின் வாழ்க்கையில் இயல்பான அமிசங்கள் எனினும் அவை வேறு காரணங்களினாலும் ஏற்படுகின்றன. இவ்விதமாக (1) குத்தான விளிம்புகளையுடைய ஒரு மேட்டு நிலத்தை ஆறு கடக்குமிடத்தில் நீர்வீழ்ச்சி உண்டாகலாம். ஆபிரிக்காவிலுள்ள கொங்கோ, ஒறேஞ் முதலிய சில நதிகளி லும் இலங்கையில் கிருண்டிஒயாவிலும் (தியலுரமா) இவ்வகை நீர்வீழ்ச்சிகளைக் காணலாம். (2) ஆற்றுப்போக்கில் குறைத்தல் அ ல் ல து நெளித்தலின் மூலம் நீர்வீழ்ச்சிகள் உண்டாகலாம். (3) புத்துயிர்ப்படைந்த பிரதான ஆறு வேகமாக அரிக்கும் போது அதன் கிளைகள் தொங்கிய நிலையில் விடப்படுவத னால் நீர்வீழ்ச்சிகள் உண்டாகலாம். (4) பனிக்கட்டியாறாக் கப்பட்ட பிரதேசங்களில் பிரதான பனிக் கட்டி ஆற்றுப்பள் ளத்தாக்குடன் இணையாமல் தொங்கும் கிளைப்பனிக்கட்டியாற் றுப்பள்ளத்தாக்கில் நீர் வீழ்ச்சிகள் உண்டாகலாம்(உ-ம் கலிபோ னியாவிலுள்ள யொசோமைற் நீர்வீழ்ச்சி) (5) கடலலைகள் கடற் கரையிலுள்ள ஓங்கல்களை அரித்துக் குத்தாக மாற்றுவதனால் அவ்விடத்திற் கடலிற்பாயும் ஆற்றில் நீர்வீழ்ச்சி ஏற்படலாம், (6) ஒர் ஆறு இன்னொன்றைச் சிறைப்படுத்தும்போது உரு வாகும் சிறைப்படுத்து வளைவிலும் (முடக்கு) நீர்வீழ்ச்சிகள்

Page 125
238 புவிவெளியுருவவியல்
உண்டாகலாம். இறுதியாக ஒர் ஆற்றின் வாழ்க்கையில் ஏற் படும் தற்காலிகக் குறுக்கீடுகள் அதன் போக்கைத் தடுப்பத னாலும் நீர்வீழ்ச்சிகள் உண்டாகலாம். அத்தகைய குறுக்கீடு கள் நிலச்சரிவு, எரிமலைக் குழம்புப் பாய்ச்சல், பனிக்கட்டியாற் றுப்படிவுத்தடை, ஆற்றின் போக்கிலேற்படும் மேலுயர்த்துகை, பனிக்கட்டியாற்றினால் ஆற்றின் போக்குத் திரும்புதல் என்பன வாகும். இவ்வாறு ஆறுகளின் வாழ்க்கையிலேற்படும் குறுக்கீடு களைப் போன்ற நீர்வீழ்ச்சிகள் காலகதியில் நீக்கப்பட்டுவிடு கின்றன. ஆனால் சில அசாதாரண நிலைகளின்கீழ் அ  ைவ நீடித்து நிலைத்திருக்கும். உதாரணமாக குத்துத் தீப்பாறை அல்லது அதைப்போன்ற தடைபாறை எதுவும் காணப்படுமா யின் அவ்விடத்திலுண்டாகும் நீர்வீழ்ச்சி நிலைபெயராதிருத்தல் கூடும்.
மேற்கூறப்பட்டவாறு பெரும்பாலும் நிலைக்குத்தரிப்பிலீடு படும் ஆறு தனது நெடும்பக்கப் பார்வையில் காணப்படும் ஒழுங்கீனங்களையும் முறிவுகளையும் முற்றாக நீக்கிக் காணப் படும்போது அது முதிர்ச்சி நிலையிலிருப்பதாகக் கருதப்படும். அந்நிலையில் ஆற்றின் நிலைக்குத்தரிப்புக் கு  ைற ந் து பக்க வரிப்பு அதிகரிக்கிறது. இதனால் ஆற்றுப்பள்ளத்தாக்கு விரை வில் அகலமாகிறது. பள்ளத்தாக்கு அகலமாக்கப்படும்போது அதில் முன்னர் காணப்பட்ட சுவடுகள் முற்றாகத் துண்டிககப் படுவதனால் அவை ஆற்றோங்கல்களாகக் காட்சியளிக்கும். அன்றி யும் பள்ளத்தாக்கு அகலமாகும்போது ஆறு அங்குமிங்குமாகத் தனது போக்குகளை மாற்றி அசையவும் வாய்ப்பு ஏற்படும் . அத்தகைய அசைவுகளினால் ஆற்று வாய்க்காலில் தொடக்கத்
படம் 39 ஆற்று வளைவுகளில் அரித்தலும் படிவுசெய்தலும்
 

ஆற்றின் செயலும் நிலவுருவங்களும் 239
திற் காணப்பட்ட சிறிய வளைவுகள் பெரிதாகும். இவ்வாறு தொடக்கத்திற் தோன்றிய சிறிய வளைவுகளே காலப்போக்கில் மியாந்தர் எனப்படும் பெரிய வளைவுகளாக மாறுகின்றன ஆற்றுநீர் மியாந்தர்களின் குழிவுப்பக்கங்களை (வெளி வளைவு களை) அதிகமாகத் தாக்குவதனால், அவற்றையொட்டி ஆழ மான குட்டைகள் தோன்றும். அதேசமயம் மியாந்தர்களின் உள்வளைவுகளில் நீரின் தர்க்கம் குறைவாயிருப்பதன் விளை 6. அப்பகுதிகளில் மணல், கூழாங்கல், பரல் ஆகியன படிவு செய்யப்படுவதனால் வளைவான திடல்கள் உருவாகும். அவை * Point Bars (படம் 45 பார்க்க) எனப்படும். மியாந்தர்கள் பக் கத் திசைகளில் மட்டுமன்றி, நிலத்தின் சரிவைத் தொடர்ந்து கீழ் நோக்கியும் அசையும். சிறப்பாக வெள்ளப்பெருக்குக்காலங்களி லேயே அவ்வசைவுகள் இடம்பெறுகின்றன. அத்தகைய அசைவு கள் மூலம் பள்ளத்தாக்கிற் காணப்பட்ட சுவடுகள் துண்டிக் கப்படும்போது அவை ஆற்றோங்கல்களாகும். அதுபோலவே பள்ளத்தாக்கிலுள்ள அடையற்படிவுகளும் படிவுகளாக மாற்றப் படலாம். இம்முறையில் உருவாகின்ற படிகளை மியாந்தர் வெட்டிய படிவரிசை என்பர். இவை வெள்ளப்பெருக்குக் காலத் தில் அழிக்கப்படலாமெனினும் பள்ளத்தாக்கின் பக்கங்களில் வன்மையான தடை பாறைகள் காணப்படின் (GBL u Goot" ut av TTL). இத்தகைய படிவரிசைகளைப் பாறைகளாற் பேணப்படும் படி வரிசை எனக்குறிப்பிடுவர்.
15.5 வெள்ளச் சமவெளி ஆற்றின் கீழ்ப்போக்கில் அதன் வாய்க்காலின் இருபுறமும் உருவாகும் பரந்த, தட்டையான சமநிலமே இதுவாகும். இதனை உருவாக்குவதில் மியாந்தர் களுக்குப் பெரும்பங்குண்டு. முதலில் மியாந்தர்களும் பின் னர் முழு மியாந்தர் வலய மும், பக்கத் திசைகளிலும் கீழ் நோக்கியும் அசையும்போது பள்ளத்தாக்கு பக்கவரிப்பிற்குட் பட்டுப் படிப்படியாக விரிவடைவதனாலேயே இச்சமவெளி உரு வா கி றது. அது வெள்ளப்பெருக்குக் காலங்களில் நீரினால் மூடப்படுவதனாற்றான் அப்பெயரைப் பெற்றது. வெள்ளச்சமவெளியிற்பாயும் ஆற்றில் மியாந்தர்கள் அதிக மாகவும் பெரிதாகவும் உருவாகும் போது ஆற்றின் போக்கு நீள்வதனால் அதன் வேகமும் அரிக்கும் திறனும் குறைந்து போகப் படிவுசெய்தல் முன்னரிலும் அதிகமாக இடம்பெறும். வெள்ளச்சமவெளியில் பரல், மணல் என்பவற்றின்மேல் மெல் லிய மண்டிப்படிவும், சேற்றுப்படிவும் காணப்படும். அவை கீழிருந்து மேல்நோக்கி நுண்மையடைவது குறிப்பிடத்தக்கது.

Page 126
240 புவிவெளியுருவவியல்
மேலும் கடல் மட்டம் வீழ்ச்சியுற்ற இடங்களிலும் அடித் தளப்பாறைகள் தாழ்த்தப்பட்ட பகுதிகளிலும் இவ்வகையான அடையற் படிவுகள் அதிக தடிப்பாகக் காணப்படலாம். மிசி சிப்பிச் சமவெளி முதலாவது வகைக்கும் இந்துகங்கைச் சம வெளி இரண்டாவது வகைக்கு உதாரணமாகும் மிசிசிப்பி நதியா னது இன்று 122 மீற். தடிப்பான அடையலைக் கொண்ட ஒரு வெள்ளச்சமவெளியிற் பாய்கிறது. அச்சமவெளி கடல்மட்டம் 122 மீற். தாழ்ந்து காணப்பட்டபோது உருவாக்கப்பட்டதே அதற்குக் காரணமாகும். அதேசமயம் இந்துகங்கைச் சமவெளி தாழ்ந்துகொண்டிருப்பதனாலேயே அதில் அடையற் படிவுகள் தடிப்பாகத் திரண்டுள்ளன.
வெள்ளச்சமவெளியானது ஆற்றி ன் மியாந்தர்களைத் தன்னுள் அடக்கக்கூடிய அளவு பரந்து காணப்படும்போது ஆற்றின் முதிர்ச்சி நிலை முற்றுப்பெற்றதாகக் கரு த ப படும். அதன்மேல் ஆறு மியாந்தர்களை அசைத்து அசைத்து பெரிது வாகப் பாய்ந்து தனது பள்ளத்தாக்கை மேலும் அகலமாக்கும். ஆற்றுப்பள்ளத்தாக்கின் அகலம் மியாந்தர் வலயத்தைவிட, அதிகமாகக் காணப்படும்போது 20 முதுமைநிலையடைந்து விட்டதாகக் கொள்ளப்படும். அந்நிலையில் படிவு செய்தல் முதன்மை பெறும். ஆயினும் வெள்ளப்பெருக்குக் காலங்களில் நீரின் வேகம் அதிகரிப்பதினால் அது நிலையாயுள்ள மியா ந் தர்களின் குழிந்த பகுதிகளை அதிகமாக அரிக்கும். இதன் விளைவாக அவற்றின் கழுத்துப்பாகம் படிப்படியாக ஒடுங்கு வதனால் நீர் அதற்கூடாகக குறு க கே பாயும். அதன்மேல்
படம்: 40 பணியெருததேரி உருவாகும் முறை
 

ஆற்றின் செயலும் நிலவுருவங் களும் 241.
ஆற்றின் போக்கு நேராக மாறுவதோடு மியாந்தரும் கைவிடப் படும். இவ்வாறு கைவிடப்பட்ட மியாந்தர்கள், ஆற் று டன் தொடர்பற்ற வளைவான ஏரிகளாகச் சிலகாலம் நிலைத்திருக் கும். அவற்றைப் பணியெருத்தேரி அல்லது குழம்புக்குட்டை எனக்கூறுவர். ஆயினும் அவை காலப்போக்கில் மறையக்கூடிய வையாதலின் சாவேரி" (Mortake) எனவும் அழைக்கப்படுகின் றன.
வெள்ளச் சமவெளியிற் பாயும் ஆறு நீர்பெருகும் காலங் களில் தனது வாய்க்காலின் இருபக்கங்களிலும் வண்டல்களை அதிகமர் கப் படிவு செய்வதனால் அப்படிவுகள் ஒரு வர ம் பு போல உயர்ந்து தோன்றும். இத்தகைய இயற்கை யான வண்டல் வரம்புகளை உயரணைகள் என்பர். உயரணைகள் உருவாகிய பின்னர் அவற்றிற்கு வெளியிலுள்ள பகுதிகளில் நீர் தேங்குவதனால் ஆங்காங்கு சேற்றுநிலங்களும் ஆழமற்ற சிறிய ஏரிகளும் தோன்றலாம். அதேசமயம் உயரணைகள் உருவாகிய பின்னர் பிரதான ஆற்றுடன் அதன் கிளையருவிகள் இணைய முடியாத நிலையில் அவை அதற்குச் சமாந்தரமாகச் சிறிது தூரம் கீழ் நோக்கி ஒடிச்சென்று வேறோரிடத்தில் அதனுடன் இணை யும். மிசிசிப்பி நதியின் வெள்ளச்சமவெளியிற் காணப்படுகின்ற அத்தகைய கிளையருவிகள் யோசூ என அழைக்கப்யடுகின்றன.
உயரணைகள் வெள்ளப்பெருக்குக் காலங்களில் உடைக் கப்படுவதனால் அழிவுகள் ஏற்படலாம். அவற்றைத் தடுப்ப தற்காக - குறைப்பதற்காக உயரண்ைகளைச் செயற்கையாக உயர்த்தும் முறைகள் ஐ. அமெரிக்காவில் பின்பற்றப்படுகின்றன. ஆயினும் உயரணைகள் உயர உயர நீர் மட்டமும் உயருமாத லின் வெள்ள அபாயம் அதிகரிக்குமேயன்றிக் குறையாது.
வெள்ளச்சமவெளியின் சாய்வு விகிதம் குறைவாயிருப்பத னாலும் வண்டற் படிவுகள் ஆங்காங்கு திடல்களாகத் திரள் வதனாலும் ஆற்றுவாய்க்கால் பல கிளைகளாகப் பிரி ந் தும் பின்னலாகவும் காணப்படும். அத்துடன் பின்னலான கிளை வாய்க்கால்களுக்கிடையிலுள்ள படிவுத் திடல்கள் ஆற்றுத்தீவுக ளாக வளர்ச்சியடையலாம். மகாவலி நதியில் கடம்பேக்கு அண் மையிலும் மகாஒயாவில் மாவனெல்லைக்கு அண்மையிலும் அத்த கைய ஆற்றுத்தீவுகளைக் காணலாம். இவ்வாறு உயரணைகள் பிற்புலச் சேற்றுநிலங்கள், பணியொருத்தேரிகள் பின்னலான வாய்க்கால்கள் என்பவற்றோடு கூடிய வெள்ளச்சமவெளியைக் கடக்கும் ஆறு இறுதியில் ஒரு கழிமுகம் அல்லது பொங் கு முகத்தினூடாகக் கடல் அல்லது ஏரியுடன் கலகிறது.

Page 127
242 புவிவெளியுருவவியல்
15.6 கழிமுகங்கள்: ஒரு ஆறு தனது பயணத்தின் முடிவில் கடல் அல்லது ஏரியைப்போன்ற அசைவற்ற ஒரு நீர்ப்பரப்புடன் கலக்குமிடத்தில் உருவாகின்ற படிவுநிலவுருவமே கழிமுகமாகும். ஒரு நீர்ப்பரப்புடன் கலக்கும்போது ஆற்றின் வேகம் குறைவ தனாலும், கலக்கும் நீர் உவராயின் அதன் இரசாயனத்தாக் கத்தினாலும் ஆறு தனது சுமையைப் படிவு செய்யும். ஆனால் கடலிற் படிவுசெய்தல் நிகழ்ந்தால் அங்கு நீரோட்டங்கள், நீள்கரை நகர்வுகள், வற்றுப்பெருக்கோட்டல்கள், பலமான அலையரிப்பு முதலியன காணப்பட்டால் அல்லது படிவுசெய் யப்படுமிடத்தில் நிலம் தாழ்வதனால் கழிமுகத்தின் வளர்ச்சி தடைப்படும் அல்லது மெதுவாக நிகழும்.
கழிமுகம் என்பதைக் குறிக் கும் டெல்ரா (A) என்ற கிரேக்கச்சொல் முக்கோண உருவத்தைக் குறிக்கும். ஆயினும் எல்லாக் கழிமுகங்களின் உருவமும் அவ்வாறில்லை. கழிமுகத் தின் உருவம் (1) ஆறு கலக்கும் நீரின் தன்மை, (2) படிவு செய்யப்படும் பொருட்களின் தன்மை, (3) வெள்ளப்பெருக்கு
ஏற்படும் கிரமம் (ஒழுங்கு), (4) புவியோட்டு அ  ைச வு கள், (5) நீரோட்டங்கள், வற்றுப்பெருக்கோட்டங்கள் ஆகியவற்றின் பாதிப்பு முதலிய பல காரணிகளாற் கட்டுப்படுத்தப்படுகின்றது. மேலும் இவை கழிமுகத்தின் வளர்ச்சியையும் பாதிக்கின்றன. இவற்றின் வேறுபட்ட தாக்கத்தினால் (1) விசிறி வகை, (2) பறவைக்கால் வகை, (3) கூருரு வகை, (4) குவிவு வகை போன்ற வேறுபட்ட கழிமுகங்கள் உருவாகியுள்ளன. நைல் கழிமுகம் விசிறி வகைக்கும் மிசிசிப்பிக் கழிமுகம் பறவைக் கால் வகைக்கும், எப்றோ கழிமுகம் கூருரு வகைக்கும், நைகர் கழி முகம் குவிவு வகைக்கும் உதாரணங்களாகும். இனி இவற்றின் உருவவியலை எடுத்துக்கொண்டால் கலக்கும் நீர், படிவு செய் பப்படும் பொருட்களின் தன்மை என்பவற்றின் செல்வாக்கு அதிகமாயிருக்குமிடங்களில் விசிறி வகையான கழிமுகங்கள் உருவாகுவதைக் காணலாம். உதாரணமாக, கஸ்பியன் கடலில் கலக்கும் ரெறெக் (Terek) என்னும் நதியின் சேறு கலந்த நீரும் அக்கடலின் நீரும் ஒரே அடர்த்தியுடன் காணப்படுவதனால் அந்நதி பல பரப்பும் கிளையாறுகளாகப் பிரிந்து விசிறி வடி வான ஒரு கழிமுகமாக வேகமாக வளர்கிறது. அதேசமயம் ஜெனிவா ஏரியிற் கலச்கும் றோன் நதியின் வண்டல் நிறைந்த நீர் அவ்வேரியின் நீரைவிடக் கனமானதாயிருப்பதனால் அதன் வளர்ச்சி மிதமானதாயுள்ளது. அடுத்து, நைல் நதியை நோக் கும்போது அது கலக்கும் மத்தியதரைக் கடல்நீர் அந்நதியின்

ஆற்றின் செயலும் நிலவுருவங்களும் 243
Lib: 41 கழிமுகங்களின் 66.36 (1) பறவைக்கால் வகை (2) விசிறி வகை (3) றைன் பொங்குமுகம் (4) கூருரு வகை
நீரை விட அடர்த்தி கூடியதாயிருப்பதால் அதன் வளர்ச் சி வேகமும் அதிகமாகும். இவ்வுதாரணங்கள் க லக் கும் நீரின் செல்வாக்கைக் காட்டுகின்றன. ஆனால் அண்மைக்கால ஆய்வு களின்படி நைல்நதியின் கழி மு க ம் புவியோட்டசைவினாற் பாதிக்கப்பட்டுத் தாழ்ந்துகொண்டிருத்தல் அதன் வளர்ச்சி
வேகத்தைக் குறைப்பதாகத் தெரியவருகிறது. ஆயினும் அது கரைசற்பொருட்களைக் குறைவாகவும் மணல், பரல் என்ப
வற்றை அதிகமாகவும் படிவுசெய்வதனால் விசிறி வடிவான கழிமுகத்துடன் காணப்படுகிறது. இங்கு படிவுசெய்யப்படும்
பொருட்களின் செல்வாக்கு புலனாகிறது.
இனி மிசிசிப்பி நதியை எடுத்துக்கொண்டால் அந்நதியின் நீர் கடல்நீரைவிட அ டர் த் தி குறைந்திருப்பதனால் அது கடலின் மேற்பரப்பில் ஒரு சில வாய்க்கால்களாக நீண்டதூரம் பாய்ந்து செல்கிறது. அவ்வாய்க்கால்களிற் படிவுசெய்யப்படும் வரம்பு போன்ற படிவுகளை அது ஆங்காங்கு உடைத்துப்

Page 128
244 புவிவெளியுருவவியல்
பாய்வதனாலேயே "பறவைக்கால்? போன்ற க பூழி மு க ம் உருவாகியுள்ளது. ஆனால் நைல்நதியைப்போல் மிசிசிப்பியின் கழிமுகமும் தாழ்ந்துகொண்டிருப்பதனால் அதன் வளர்ச்சி வேகம் குறைவாயுள்ளது.
கழிமுகங்களின் மேற்பரப்பு தட்டையாகவிருப்பினும் அவற்றிற் படியும் அடையல்கள் 3 படை நிலைகளிற் காணப்படுகின்றன. அவை: (1) மேலமைந்த படை, (2) முன்னோக்கிய படை (3) கீழமைந்த படை என்பனவாம். கடலில் உருவாகும் கழி முகங்களில் இரண்டாம், மூன்றாம் படைகள் இ  ைண ந் து காணப்படுகின்றன. கழிமுகங்களின் கடலோரப்படிவுகள் சில விடங்களில் மணற்றடை, மணற்கூழாங்கல், நா க் கு என்ப வற்றை உருவாக்குவதனால் கழிமுக ஏரிகள் உருவாகலாம். மிசிசிப்பிக் கழிமுகத்திலுள்ள கிரான், சல்வடோர் எ ன் னும் ஏரிகள் இம்முறையில் உருவாகின. கழிமுகங்களில் அடையல்கள் சேறு ஆகிய ன படிவதனால் அவற்றை வாரி இறைப்பதன் மூ ல ம் அப்பகுதியில் சுப்பற்போக்குவரத்து நடைபெறுகிறது. (உ- ம் கங்கை யாங் சிக்கியாங்) அதேசமயம் அங்கு காணப் படும் வளமான வண்டல்மண் செறிவான பயிர்ச்செய்கைக்கு உதவுவதனால் அங்கு மக்கள் அடர்த்தியாக வாழ்கிறார்கள். (உ - ம் நைல், கங்கை).
15.7 பொங்குமுகங்கள் - ஓராறு கடலோடு கலக்குமிடத்தில் வற்றுப்பெருக்கோட்டங்கள் நீரோட்டம் ஆகியன காணப்படு மாயின் ஆற்றின் படிவுகள் உடனுக்குடன் அகற்றப்பட்டுவிடும் இதனால் ஆற்றுவாய்ப்பகுதி ஆழமாகுவதோடு அங்கு கடல் நீர் உட்சென்று நன்னீருடன் கலக்கும். இத்தகைய நிலைமை களைக் கொண்ட ஆற்றுவாய்ப்பகுதி பொங்கு முகம் எனப் படும். ஆனால் ஆற்றுவாய்ப்பகுதியில் வன்பாறைகள் காணப் படுகின்ற பிரதேசங்களில் நிலம் தாழ்வதனால் மட் டு மே பொங்கு முகங்கள் உருவாக முடியும்.
பொங்குமுகங்கள் நீர்ப்போக்குவரத்துக்கு ஏற்றவை. இது
னால் அவற்றையடுத்துப் பல சிறந்த துறைப்பட்டினங்கள் தோன்றியுள்ளன. இவ்வாறு தேம்ஸ், எல்ப், பிளாற்றா, றைன் முதலிய ந தி க ளி ன் பொங்குமுகங்களையொட்டி முறையே லண்டன் றையோடி ஜனிரோ றொட்டர்டாம் என்னும் துறை கள் தோன்றி வளர்ச்சியடைந்துள்ளன. அங்கு கப்பல் கட்டும் தொழிலும் முக்கியமானது. பொங்குமுகங்களில் படிவுசெய்தல்
" وهي
 

ஆற்றின் செயலும் நிலவுருவங்களும் 245
நிகழ்வதனால் கரைக்கு அப்பால் மணற்ற டை, மணற்கூழாங் கல் நாக்கு ஆகியன உருவாகுவதுண்டு. அதேசமயம் ஆற்று வாயையடுத்துள்ள நிலப்பகுதியில் சேற்றுநிலங்களும் தோன்றும்.
15.8 வண்டல் விசிறிகள் ஆற்றினால் ப செய்தல்மூலம் உருவாக்கப்படும் நில வுரு வங்க ளி ல் இதுவுமொன்றாகும்.
ஆற்றின் சாய்வு விகிதம் சடுதியாகக் குறைவடையும்போது
படிவுசெய்தல் ஏற்படுவதனாற்றான் வண்டல் விசிறிகள் உரு
வாகின்றன. உதாரணமாக ஒரு மலைப்பிரதேசத்திலிருந்து
வரும் அருவிகள் கிளையாறுகள் முதலியன சமநிலத்திற்பாயும்
பிரதான ஆற்றுப்பள்ளத்தாக்கை அடையும்போது அங்கு நிலத்
தின் சாய்வு விகிதம் சடுதியாக வீழ்ச்சியடைவதன் விளைவாக
அவை தாம் கொண்டுவந்த அடையல்களை அங்கு படிவு
செய்துவிடுகின்றன. அவ்வடையல்கள் விசிறியைப்போலத்
தோற்றமளிப்பதனால் வண்டல் விசிறிகள் எனப்படுகின்றன.
வண்டல் விசிறிகளிற்பாயும் ஒர் அருவி பின்னலாகப் பாய்வத
னாலும் அதன் நீரிற் பெரும்பகுதி வண்டல்களால் உறிஞ்சப்படு
வதனாலும், அதில் இன்னொருபகுதி ஆவியாகுவதாலும் அது
தனது சுமை முழுவதையும் படிவுசெய்வதன் வி  ைள வாக,
வண்டல் வி சிறி க ள் வண்டற்கூம்புகளாக வளர்வதுண்டு.
வண்டல் விசிறிகளின் சாய்வு 1 - 7 வரையிலும், வ ண் டற்
கூம்புகளின் சாய்வு வரையிலும் காணப்படலாம். வண்டல்
விசிறிகளில் கூழாங்கல், பரற்கல், மண்டி, மணல் ஆகியன கலந்து காணப்படும்.
S AJJS S Aee AAATAALMLkeAAAeeeSeM00YOeOeTS S SeYkeS LLS e e ee 0SJe Teeeeeeeee e e SS S S E JKeeqeqeqeeke eeeeeqe eA S iee LLSS SBS
படம் : 42 வண்டல் விசிறிகள்

Page 129
246 புவிவெளியுருவவியல்
{Gi°.£. K.E A T , , வண் ல் விசிறிகள் மலையடிவாரங்களில் மட்டு ம ன் றி வரண்ட பிரதேசங்களிலும், மலையிடை ஏரிகளிலும் உருவா கலாம். வரண்ட பிரதேசங்களில் அருமையாக, ஆனால் சடுதி யாகப் பெய்யும் மழையைத் தொடர்ந்து உருவாகின்ற (நிலை யற்ற) அருவிகள் அதிக அளவில் அடையல்களை வாரிச்சென்று படிவுசெய்வதனாலும் வண்டல் விசிறிகள் உருவாகின்றன. அது போலவே ம  ைல யி  ைட ஏரிகளிற்பாயும் அருவிகளும் அங்கு வண்டல் விசிறிகளை உருவாக்கலாம். உதாரணமாக சுவிற் சர்லாந்திலுள்ள இன்ரலேகன் ஆறு தூன் ஏரியில் ஒரு வண்டல் விசிறியை உருவாக்கியுள்ளது.
சமாந்தரமான போக்குடைய பல அருவிகள் ம  ைல ப் பகுதியைவிட்டு நீங்குமிடங்களில் உருவாகும் விசிறிகள் ஒன்றுட னொன்று இனைவதனால் மலையடிவார வண்டற்சமவெளி ( Piedmont Alluvial Fan) p. (56), T (5 lb. 565GLIraohu T 6air மத்திய பள்ளத்தாக்கிலும் அந்தீசு மலையடிவாரத்திலும் இவ் வகையான பல வண்டற்சமவெளிகள் காணப்படுகின்றன.
 

அத்தியாயம் 16
ஆற்றுத் தொகுதிகளின் விருத்தியும்
அமைப்புக்கிசைவாதலும்
L -
isaalaga மிக மெதுவாகவே உருவாகின்றன. ஆறு கள், பள்ளத்தாக்குகள், கு ன்று க ள் முதலியவற்றின் தற் போதைய அமைப்பும் வைப்பும் பல இலட்சக்கணக்கான ஆண்டு களாகப் பல மாற்றங்களுக்குட்பட்டுச் சீர்ப்படுத்தப்பட்டு உரு வாகியுள்ளன, அவற்றின் உருவவியலை விளங்குவதாயின் ஒன் றின் பல்வேறு நிலைகளிலுள்ள பிரதேசங்களையும் அவற்றின் இயல்புகளையும் அவதானிக்கவேண்டும். அ ல் ல து புதிதாக வெளிப்பட்ட ஒரு நிலப்பரப்பில் நிலத்தேய்வுக்கருவிகள் செயல் படுத் துவதனால் நிலவுருவங்கள் உருவாகும் ஒழுங்கைக் கற்பனை பண்ணி அவற்றினியல்புகளை ஊகிக்கவேண்டும்.
மேற் கூறப்பட்டவற்றில் இரண்டாவது முறையைப் பற்றி நிலவுருவங்களின் படிமுறை விருத்தியை உணர்தல் எளி §IT6ðTg1
நிலத்தேய்வு தொடங்குவதற்கு வேண்டிய தொடக்க நிலப் பரப்பு மேலுயர்ச்சியின் விளைவாகக் கடலிலிருந்து வெளிப்படு கிறது எனக்கொள்வோம். அத்துடன் அந்நிலப்பரப்பு ஒரின மான பாறைகளையும் மென்மையான சாய்வு மற்றும் நேரான நீர்பிரிமேட்டையுமுடையதென எண்ணிக் கொள்ளுவோம்.
16.1 வடிகால் விருத்தி
மேற்குறிப்பிடப்பட்ட இயல்புகளையுடையதாக வெளிப் பட்ட நிலப்பரப்பில் மழைபெய்யும்போது முதலில், நீரரிபள் ளங்களும் அவற்றைத் தொடர்ந்து ஒழுங்கான வாய்க்காலை யுடைய பல அருவிகளும் உருவாகும். தொடக்கநிலையில் அருவி கள் நெருக்கமாகவும் ஒரளவு சம்ாந்தரமான போக்கினையுடை யனவாகவும் இருக்கும் கடலை நோக்கிப்பாயும் அவற்றின் போக்கு மேலுயர்ச்சியினாலுண்டாகிய சாய்வினால் வழிப்படுத்

Page 130
248 புவிவெளியுருவவியல்
தப்படுவதனால் முதற்றோன்றிய அவ்வருவிகளை விளைவருவி கள் எனக்குறிப்பிடுவர். அஃதாவது சாய்வின் விளைவாகத்தோன் றிய அருவிகளே அவையென்க. அவை தமக்கென விரைவில் ஆழமான பள்ளத்தாக்குகளைத் தோண்டுவதுடன் கிளையருவி களையும் பெறும். -
கிளையருவிகள் சரிவுத் திசைகளில் பிரதான ஆற்றைச் சந் திக்கும். காலகதியில் கிளையருவிகளும் பல கிளைகளையுடை யனவாகும் தொடக்கத்திற் தோன்றிய பல அருவிகளில் சிறி யவை, அயலிலுள்ள சற்றுப்பெரிய அருவிகளாற் கவரப்படுவது முண்டு. இவ்வாறு காலகதியில் சில விள்ைவருவிகளே ஏனைய வற்றைவிட முதன்மை பெறுகின்றன. பின்னர் பிரதான ஆற் றின் கிளைகளும் அவற்றின் கிளைகளும் தமக்கென நன்கு வரை யறுக்கப்பட்ட வாய்க்கால்களை அமைத்தவுடன் வடிகால் நிலை பெற்று விடுகிறது. அந்நிலையில் விளைவருவிகளும் அவற்றின் கிளைகளும் மரத்தினது கிளைகளையும் கொம்பர்களையும் நிகர்த்திருப்பதனால் அத்தகைய வடிகாலமைப்பை 'மரநிகர் வடிகால்’ என்பர். து, பாறைப்படைகள் கிடைநிலையிலுள்ள பிரதேசங்கள், ஓரினமான பளிங்குருப்பாறைப் பிரதேசங்கள் மற் றும் பதிவான தரைத்தோற்றத்தையுடைய பிரதேசங்களில் உருவாகும் .
வெளிப்பட்ட நிலப்பரப்பு வன்பாறைப் படை களை யும் மென்பாறைப்ப் படைகளையும் உடையதாயிருப்பின் பாறைவேறு பாடுகளைப் பிரதிபலிக்கும் வகையில் அதில் அருவிகள் உரு வாகும். அங்கு நிலப்பரப்பின் பொதுவான சாய்வைப் பின்பற்றி விளைவருவிகள் உண்டாகும். அவை செங்கோணத் திசையில் கிளையருவிகளைப் பெறும். அக்கிளைகள் விளைவருவியின் சாய் விற்குச் செங்கோணத்திசையில் வெளியரும்பும் மென்பாறைப் படைகளிலிருந்து உருவாகும். அவை விளைவருவிகளுக்குப் பின் னர் உருவாதலினால் பின்விளைவருவிகள் எனப்படுகின்றன. மேலும், பாறைப்படைகளின் கிடைத்திசையிற் பாய்வதனால் அவை கிடையருவிகள் எனவும் கூறப்படுகின்றன. வெளிப்பட்ட நிலப்பரப்பிலுள்ள வன்பாறைப்படைகள் விரைவாக அரிக்கப் படாமையினால் உயரமான பாறைத்தொடர்களாகத் தோன்றும். அதனால் விளைவருவிகள் அவற்றைக் கடக்குமிடங்களில் குத் தான சாய்வுகளுடன் கூடிய ஆற்றுடைவெளிகள் உருவாகும்.
வன்பாறைப் பகுதிகளில் உருவாகும் பாறைத்தொடர்கள் நிலத்தின் சரிவுத்திசையில் நீண்டசாய்வையும் எதிர்த்திசையில்

ஆற்றுத்தொகுதிகளின் விருத்தியும் அமைப்பும் 249
6)Arpa
n. m. 43 Galamúnuť L os பிரதேசத்தில்
வடிகால் விருததியும் ஆற்றுச்சிறையும் C, C = விளைவருவிகள் s - பின்விளைவருவி
0 - முரண்விளைவருவி x சிறைப்படுத்திய முடக்கு y - காற்றிடைவெளி ஆ - ஆற்றிடைவெளி மெ மென்பாறை வ - வன்பாறை
குத்தான சிறிய சாய்வையும் கொண்டிருக்கும். அத்தகைய அமைப்பைக்கொண்ட நில வு ரு வ மும் குவயித்தா (Cuesta) அல்லது சரிவுப்பாறை (Escarpmena) எனப்படுகிறது. அதி லுள்ள பாறைப்படைகள் உயர்கோணத்திற் சரிந்திருப்பின் கூரிய உச்சியைக் கொண்ட பாறைத்தொடர் போன்ற ஒரு நிலவுருவம் உருவாகும் அது கொடும்பாறை (Hogback) 6rā
is:
璇
Ltd. * Ꮜ" °ᏈᎵ. அமைப்பும் பிரதேசத்தில் நிலவுருவவிருத்தியும்
குவயித்தா 2) கொடும்பாறை (Hogback) art." 8) மேசை மலை 4) மொட்டைக்குன்று (Butte)

Page 131
250 புவிவெளியுருவவியல்
படும். ஆனால் கிடையான படையமைப்பைக் கொண்ட பாறைகளில் கூரிய உச்சிக்குப்பதிலாகத் தட்டை உச்சியைக் கொண்ட மேசை மலை உருவாகும். மேசை என்ற பதம் Mesa என்னும் ஸ் பா னிய பதத்திலிருந்து பிறந்ததாகும். மேசைமலைகள் நாற்புறமும் குத்துச்சாய்வுகளுடன் கா ண ப் படும். அவை காலப்போக்கில் தேய்வடைந்து சிறிய தனிக் குன்றுகளாக மாறும்போது மொட்டைக்குன்றுகள் (Butte) எனப்படும். அத்தகைய தனிக்குன்றுகள் ஆ பி ரி க் கா வி ல் கொப்பீஸ் (Kopies) எனக்குறிப்பிடப்படுகின்றன.
இனி, வடிகால் விருத்திக்கு மீண்டும் வருவோம். முன்னர் குறிப்பிட்டதுபோல வன்பாறைப்படைகளையும் மென்பாறைப் படைகளையும் கொண்ட நிலப்பரப்பில் விளைவருவிகள் பின் விளைவருவிகளைத் தொடர்ந்து அவற்றின் கிளைகளும் உருவா கும். இவ்வாறு விளைவருவிகள் பாயும் அதேதிசையிற் பாய்ந்து பின்விளைவருவிகளுடன் இணைபவற்றை இரண்டாம் விளை si (passir (Secondary Cosequent) எனவும் பாறைப்படைகளின் சரிவுத்திசைக்கு எதிர்த்திசையிற் பாய்ந்து பின்விளைவருவிகளு டன் சேர்பவற்றை முரண்விளைவருவிகள் (Obsequent) எனவும் குறிப்பிடுவர். மேற்குறிப்பிடப்பட்ட அருவித்தொகுதியைக் கொண்ட வடிகாலமைப்பை அளியடைப்பு வடிகாலமைப்பு (Trelis) அல்லது சட்டத்தட்டுவடிகாலமைப்பு என்பர். இவ்வகை யான வடிகாலமைப்பு சரிக்கப்பட்ட பாறைப்பிரதேசங்களில் மட்டுமன்றி மடிக்கப்பட்ட அடையற்பாறைப் பிரதேசங்களிலும் சமாந்தரமான முறிவுகளைக்கொண்ட பிரதேசங்களிலும் உரு வாகலாம். இவ்வகையான வடிகாலமைப்பில் பிரதான ஆற்றின் கிளைகள் பெரும்பாலும் ஒரேயளவு பருமனுடன் ஒரளவு சமாந் தரமாகப் பாய்ந்து செங்கோணத்திசையில் பிரதான ஆற்றுடன் இணையும் அளியடைப்பு வடிகாலமைப்புக் காணப்படுமிடங்க ளில் இடம்பெறும் ஒரு முக்கியமான நிகழ்வு ஆற்றுச்சிறையாகும்.
16.2 ஆற்றுச்சிறை:- ஒரு ஆறு அல்லது அருவி சாதகமான சூழ்நிலைகளில் வேறொரு ஆறு அல்லது அருவியைத் திசை திருப்பித் தன்னுடன் இணைப்பதே ஆற்றுச்சிறையாகும். மென் பாறைப் பகுதிகளிற் பாயும் பின்விளைவருவிகளே பெரும்பாலும் அச்செயலில் ஈடுபடுகின்றன. அவை வேகமாகத் தலைமுகவரிப் பில் ஈடுபட்டு ஒரு விளைவருவியை அண்மித்து அதன் தலைப் பக்க நீரைத் தமது வாய்க்காலுக்குள் திருப்பிவிடுவதுண்டு. இதனால் விளைவருவியின் (கீழ்ப்)பள்ளத்தாக்கில் நீர் குறையும்
 

ஆற்றுத்தொகுதிகளின் விருத்தியும் அமைப்பும் 25.
அந்நிலையில் அதிற் பாயக்கூடிய சிறிய அருவி "பொருந்தா வருவி' எனவும் விளைவருவி திசைதிருப்பப்பட்ட இடம் சிறைப்படுத்திய முழங்கை வளைவு எனவும் அழைக்கப்படும். அதேசமயம் விளைவருவி முன்னர் பாறைத்தொடரை வெட்டிச் சென்றவிடத்திலிருந்த ஆற்றிடைவெளி ஆற்றுச்சிறையின்
பின்னர் காற்றிடைவெளியாக மாறும் (படம் 43 பார்க்க)
ஆற்றுச்சிறை மேல் விபரிக்கப்பட்ட முறையிலன்றி வேறு விதமாகவும் நிகழலாம். உதாரணமாக, எதிர்த்திசைகளிற் பாயும் இரு விளைவருவிகளில் ஒன்று ஒப்பளவில் விரைவாகத் தலைமுகவரிப்பில் ஈடுபட்டு மற்றொன்றைச் சிறைப்படுத்தலாம். அன்றியும் நீர்பிரிநிலத்தின் ஒருபக்கத்தில் மழை அதிகமாகப் பெய்தல் அல்லது அதன் ஒருபக்கச் சாய்வு அதிக குத்தாயிருத் தல் போன்ற காரணங்களினால் நீர்பிரிநிலம் நிலைமாறுவதன் விளைவாகவும் ஆற்றுச்சிறை ஏற்படலாம்.
16.3 வடிகால் அமைப்புகள்:- தொடக்க நிலப்பரப்பு களின் அமைப்பு முன்னர் குறிப்பிடப்பட்டவற்றைவிட வேறு வகையானதாயிருப்பின் அவற்றுக்கு இசைவான வடிகாலமைப்பு கள் உருவாகும். இவ்விதமாக, சமாந்தரவடிகால், செவ்வக வடிகால், கங்கண வடிகால், ஆரவடிகர்ல் முதலிய வேறுபட்ட வடிகாலமைப்புகள் உருவாகும்.
படம்: 45 வடிகாலமைப்புகள்

Page 132
252 翼、 . ܕ புவிவெளியுருவவியல்
சமாந்தரவடிகாலமைப்பு தாவரப்போர்வை குறைந்த மித மானது முதல் குத்தானசாய்வுகளைக் கொண்ட பிரதேசங்களில் உருவாகும் செவ்வகவடிகாலமைப்பு மூட்டுகள், குறைகள் ஆகியன செங்கோணத்திசையில் வலைப்பின்னல்போலக் காணப் படுகின்ற திரட்சியான தீப்பாறைப் பிரதேசங்களில் உருவாகும் கங்கணவடிகாலமைப்பு ( Annular ) குமிழ்கள், வடிநிலங்கள் ஆகியவற்றில் உருவாகும். அதே சமம் ஆரவடிகாலமைப்பானது (Radial) எரிமலைக்குன்றுகள் கூம்புக்குன்றுகள் மற்றும் குமிழ் போல மேலுயர்த்தப்பட்ட பிரதேசங்களிற் காணப்படும்.
16, 4 மடிக்கப்பட்ட பாறைப்பிரதேசங்களின் தரைத்தோற்றம்
மடிப்பு மலைகளின் அமைப்பு பலவகைப்பட்டது. அவை
சாதாரண மடிப்புகளையோ, தலைகீழாக்கப்பட்ட மடிப்பு களையோ அல்லது கடுமையான உதைப்புக்குட்பட்ட ιρίφι 11 μό, களையோ உடையனவாயிருக்கலாம். இவற்றில் சாதாரண மடிப்பு அமைப்பையுடைய மலைகள், மேல்மடிப்புக்களையும் கீழ் மடிப்புக்களையுமுடையனவாயிருக்கும். ஆனால் அத்தகைய அமைப்பைக் காட்டும் இளமையான மலைகளைக் காண முடி யாது ஏனெனில், மடித்தல் மெதுவாக հ&զքլի ஒரு செயல்முறை யாதலினால் மடித்தல் நிகழும்போது அதனுடனிணைந்து அரிப் பும் நிகழும். இதனால் மடித்தல் முடிவடையுமுன்னரே அப் பிரதேசம் இளமை நிலையிலிருந்து மாறி முதிர்ச்சி நிலையடைந் திருக்கும். எனவே மடிப்புமலைப் பிரதேசத்தின் தரைத்தோற்ற விருத்தியின் முதல்நிலையை அனுமானத்தின் அடிப்படையிலேயே விளக்கவேண்டும் ஈண்டு அம்முறையிலேயே சாதாரண bigay புக்களைக்கொண்ட ஒரு பிரதேசத்தின் தரைத்தோற்றவிருத்தி விபரிக்கப்பட்டுள்ளது.
தொடக்கநிலை; இந்நிலையில் தொடர்ச்சியாயுள்ள அடை பற்படைகள் அமுக்கவிசைகளின் செயலினால் மேல்மடிப்புக் களாகவும் கீழ்மடிப்புகளாகவும் ஆக்கப்பட்டிருக்கும் இத்தகைய அமைப்புடைய தொடக்க நிலப்பரப்பில் முதல்நிலையில் கீழ் மடிப்புக்களே பிரதான பள்ளத்தாக்குகளாயமையும் இப்
 
 
 
 
 
 
 
 
 

ஆற்றுத்தொகுதிகளின் விருத்தியும் அமைப்பும் 253
எத்தாக்கிற்பாயும் அருவி நெடும்பக்கவிளைவருவி ானப்படும். இவ்விளையருவி மேல்மடிப்புக்களின் பக்கச்சரிவுகளிலிருந்து இளையருவிகளைப்பெறும் இவை பக்கவிளைவருவிகளாகும்
இளமைநிலை இந்நிலையில் இலா அருவிகளும் அரிப்பில் ஈடுபடும். ஆயினும் பக்கவிளைவருவிகளே அதிக மா 岳 அரிப்பிலிடுபடும் அலி அதிக குத்தான் சரிவுகள்வழியே பாய் வதுதான் அதற்குக் காரணமாகும். இதனால், நெடும்பக்க (၇) ၉၅) @) If வருவிகளுக்கு முன்னரேயே :விளைவருவிகள் ஆழம்' GF 动岛岛r、 தோண்டிக்கொண்டு தலைமுகி அரிப்பிலீடுபடும் இதன் விளைவாக க்கவிளைவருவிகள் மேல்மடிப்பின் துச்சச் Gór.○産卵* வழியேயும் விருத்தியடையத் தொடங்கும். στου கதியில் மேல்மடிப்பின் துடுப்பாகம் ஆழமான, அகன்ற ஒரு பள்ளத்தாக்கர்கிவிடும் இந்நிலையில் நெடும்பக்க விளைவருவி களைவிடப் இன்விளைவருவிகளே (3Gj. E E DIT 5 அரிப்பிலீடுபடும். அன்றியும், இமல்மடிப்புக்களே கீழ்மடிப்புக்களிலும் அதிகமாக இயற்கைத் தேய்வுக்குட்படுவதனால் அெை லப்போக்கில் இழ்மடிப்பின் *一ég@@* தேய்ந்துவிடும்
ഉ 8 4
彗
اینکه
849
இ
as
R
இ
鹃
(
u č. 46: LDLaä36ťou 1- பாறைகளின் தரைத்தோற்றவிருத்தி
காலகதியில் மேல்மடிப்பின் து இயில் விருத்தியடைந்த பின்விளையருவி தனது பள்ளத்தாக்கை வேகமாக ஆழமாக்கு
வதன் மூலம் பக்கவிளைவருவுகளனைத்தையும் சிறைப்படுத்தி லாம். அந்நிலையில் கீழ்மடிப்பில் ஓர் ஆறும், (நெடும்பக்க

Page 133
254. புவிவெளியுருவவியல்
விளைவருவி) மேல்மடிப்பில் ஒர் ஆறும் (நெடும்பக்கப் பின்விளை வருவி) மட்டும் காணப்படும். இந்நிலையிலேயே மடிப்பு மலைப் பிரதேசம் ஆகக்கூடிய அளவு தரைத்தோற்றத்தையும், வேறு பாடுகளையுமுடையதாயிருக்கும். இதுவே முதிர்ச்சிநிலையின் தொடக்கமுமாகும்.
முதிர்ச்சிநிலை இந்நிலையில் மேல்மடிப்பிற்பாயும் பின் விளைவருவி மேலும் தீவிரமாக அரிப்பிலீடுபடும். அது மென்மை யான பாறைப் படைகளிற் பாய்வது அரிப்பிற்கு வாய்ப்பாயி ருக்கும். எனவே பின்விளைவருவியின் கிளையொன்று விரைவில் விருத்தியடைந்து நெடும்பக்க விளையருவியைப் பலவிடங்களிற் சிறைப்படுத்துவதனால் அது முற்றாக மறைந்துவிடும். இவ்வாறு நெடும்பக்கவிளைவருவியைச் சிறைப்படுத்திய அருவிகள் முரண் விளைவருவிகளாம். இவை பின்விளைவருவிகளின் கிளைகளா யிருப்பவை. இவை பக்கவிளைவருவிகளுக்கு எதிர்த்திசையிற் பாய்வது கவனிக்கத்தக்கது. இல்வாறு வேல்மடிப்புகள் பள்ளத் தாக்குகளாகவும் கீழ்மடிப்புகள் மலைகளாகவும் காணப்படும் தரைத்தோற்றம் 'தலைகீழான தரைத்தோற்றம் (Inverted Relief) எனப்படும். இதன் பின்னர், மேல்மடிப்பிற்பாயும் ஆறு மென்பாறைப்படைகளை முற்றாக அழித்துவிட்டுக் கீழுள்ள வன்பாறைப்படையையடைந்துவிடும்.
SiiiiSiiiiSiiiiSiSiiiLiiSiiiSiSiSiSiSiSMSTiSMSMSSSLSSSLSLCSTSHSDSTTTS
A.
படம் 47 மேல்மடிப்புப் பள்ளத்தாக்குகளும் கீழ்மடிப்பு
மலைகளும்.
எனினும் அது அதன் போக்கில் சிறிது தூரம் வன்பாறைப் படைக்குக் குறுக்காகவும் வெட்டிச் செல்லலாம். இவ்வாறு சென்றால் அது சிலபோது மேல்வளைவின் ஒருபக்கத்திலும் சில போது மறுபக்கத்திலும் ஒடலாம். இந்நிலையில் மேல்வளை வில் ஒருபக்கத்திலிருந்து பக்கவிளைவருவிகள் பாய்ந்த அதே திசையில் சிற்றாறுகள் பாயலாம், இவை பிந்திய விளைவருவி g5 Tf Tg -
 
 

ஆற்றுத்தொகுதிகளின் விருத்தியும் அமைப்பும் 255
முதுமை நிலை: இறுதிநிலையில் மடிப்புமலைப் பிரதேசத்தில் தரைத்தோற்றம் முற்றாக அழிக்கப்பட்டுக் காணப்படலாம் அல்லது மிகக்குறைவான தரைத்தோற்றம் காணப்படலாம். இந் நிலையில் ஆறுகளினாற் பாப்பப்பட்ட மெல் லிய வண்டல் (LP19-60) (l. பேற்பரப்பிற் கொண்ட தட்டையான ஆறரித்த சமவெளியே காணப்படும்"
16.4 விளைவில் வடிகாலமைப்புகள்.
இதுவரை விளக்கப்பட்ட வடிகாலமைப்புகள் அமைப்புக் கிசைந்தவையாகவும் அமைப்பின் விளைவாக உருவாகியனவாக வும் உள்ளன. அடுத்து அமைப்புக்கிசைவில்லாமலும் அதன் விளைவாக உருவாகாததுமான சில வடிகால் அமைப்புக்களைப்
i fit fi i nGL fro .
16.5 (i) (BDG)50 obg sugarsi) ( Superimposed Drainage )
மேற்பரப்பின்கீழிருக்கும் பாறைகளின் அமைப்புக்கு இசை வில்லாத வடிகாலமைப்பை இவ்வாறழைப்பது வழக்கம். பழைய நிலப்பரப்பை அடையல்கள் மூடியிருப்பின் புதிதாகத் தொடங் கும் ஒருவடிகாற்றொகுதி அடையல் மூடியின் சாய்வுக்கும் நிலைக் கும் ஏற்றதாகத் தனது போக்கை அமைத்துக்கொள்ளும் கால கதியில் அருவிகள் அடையலை வெட்டிக் கீழ்க்காணப்படும் நிலப்பரப்பை அடைகிற அளவில் அதன்போக்கு நிலைபெற்று விடுவதனால் அது அந்நிலப்பரப்பின் அமைப்பினால் எவ்வழி யிலும் கட்டுப்படுத்தப் படுவதில்லை எனவே அடையல் முற் றாக நீக்கப்பட்ட பின்னரும் அருவிகள் தமது முந்திய வடிகா லமைப்பையுடையனவாகவே இருக்கும். இத்தகைய வடிகா லமைப்பே மேலமைந்த வடிகால் எனப்படுகிறது. இங்கிலாந்தில் தெற்கு வேல்சிலும், ஏரி மாவட்டத்திலும் இத்தகைய வடிகா லமைப்புக் காணப்படுகிறது. அப்பலேச்சியன் பிரதேசத்திலுள்ள ஆறுகளும் மேலமைந்த வடிகால்களேயெனக் கூறப்படுகின்றது.

Page 134
படம் 48 மேலமைத்தவடிகால் உருவாதல்.
மேலமைந்த வடிகால் சிலசமயங்களில் கீழுள்ள அமைப்புக்கிசை
வாகத் தம்போக்கை அமைப்பது சசத்தியமே. இங்கிலாந்தில் வடக்கு டவுண்சிலுள்ள மோல் மெட்லே என்னுமாறுகள் (மேலமைந்தவை) பொதுவாக கீழுள்ள சோக்குப் பாறையின் சரிவுத்திசையைப் பின்பற்றிச் செல்வதாகத் தெரிகிறது.
16.5 (ii) முந்தியவடிகால் ( Antecedant Draiange )
இதுவரை விபரிக்கப்பட்டவற்றில் புவியசைவுகளின் விளை வாகவே அருவித்தொகுதி உருவாகியதெனக் கண்டோம் இனி,
வடிகாற்றொகுதி உருவாகிய பின்னர் புவியசைவுகள் g) GööFR_T 6) :
தனால் ஏற்படும் விளைவுகளைப் பார்ப்போம்.
புவியசைவுகள் மெதுவாகவே ஏற்படுகின்றன. அத்தகைய
அசைவுகளின் விளைவாக ஓராற்றின் போக்கில் நிலவுயர்ச்சி ஏற் படுமாயின், அவ்வாறானது மேலுயர்ச்சி விகிதத்திலும் அதிகமா இவோ அல்லது அதற்குச் தறமாகவோ அரிப்பில் ஈடுபடுவதன் மூலம் தனதுபோக்கை நிலைநாட்டிக்கொள்ளமுடியும், அந் நிலைமையில் அது மேலுயர்ச்சியின் விளைவாயுருவாகிய புதிய அமைப்பிற்கு இசைவாயிருப்பதில்லை. இப்படிப்பட்ட வடிகா
லமைப்பே முந்திய வடிகால் எனப்படுகிறது. உதாரணமாக ஓர்
ஆற்றின் போத் இல் தரையுயர்ச்சி ஏற்பட்டால் அவ்வுயர்ச்சி
மெதுவாயிருப்பின் ஆறு தனது திசையை மாற்றாமல், அரிப்பின்
 
 

ஆற்றுத்தொகுதிகளின் விருத்தியும் அமைப்பும் 257
:P :P அம்மேல்மடிப்பினாலுருவாக்கப்பட்ட பாறைத்தொடருக் கூடாக வெட்டிச் செல்லலாம். ஆனால் ஒரு வடிகால் முந்தியதர் பிந்தியதா என்பதைக் கூறுதல் எப்போதும் எளிதன்று. அவ் வாறு கூறுதற்கு முன்னர் அப்பிரதேசத்தின் வரலாற்றைத் தெரிந்து கொள்ளுதல் அவசியம்.
முந்திய வடிகால் என்ற தொடரை ஒருபிரதேசம் முழுவதும் மேலுயர்த்தப்பட்டமையினால் வடிகாற்றொகுதி முழுவதும் ஆழ வெட்டுண்டுகாணப்படும் நிலைமை யைக்குறிப்பிடப்பயன்படுத்தக் கூடாது. ஸ்பாக்ஸ் கூறியதுபோல் 'முந்திய வடிகாற்றொகுதியின் சாரம் என்னவெனில் ஆறுகள் குறிப்பிட்டவோரிடத்தில் ஏற்பட்ட மேலுயர்ச்சியின்போது வெற்றிகரமாக நடத்திய போட்டியே' முந்திய வடிகாலுக்கு உதாரணமாக இந்து, பிரமபுத்திரா நதி களின் இமாலயப் பிரதேசப்போக்கைக் குறிப்பிடுவதுண்டு. இந்து நதியின் கிளைகள் (குறிப்பாக அருண்) 6599 மீற்றருக்கு மேற்பட்ட ஆழமுள்ள மலை இடுக்குகளுக்கடாகப் பாய்கின்றன. இமய மலையுயர்ச்சியின்போது இவை அரிப்பின்மூலம் தமது முந்திய போக்கைப் பின்பற்றியமையால் இந்நிலைமை ஏற்பட்டதெனப்
படம் 49 முந்திய வடிகால் உருவாதல்

Page 135
258 புவிவெளியுருவவியல்
பொதுவாக நம்பப்படுகின்றது, ஆனால் இமய மலைத் தொட ருக்குத் தென்பக்கத்திலிருந்து தலைமுக அரிப்பின்மூலமும் அவை பின்னோக்கிச் சென்றிருக்கலாம் என வேறொரு கருத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் பலர் முந்திய வடிகாற் கருத்தையேயே ஆதரிக்கின்றனர் வட அமெரிக் கா வில் கொலம்பியா ஆறும் இம்முறையில் கஸ்கேட் மலைத்தொடரின் மேலுயர்ச்சியின்போது தனது போக்கை நிலைநாட்டியுள்ள தாகத் தெரிகிறது. பெரிய உப்பு ஏரிக்குள் விழும் கிடன் ஆறும் இந்நிகழ்ச்சிக்கு வேறொரு உதாரணமாகும்.
 

அத்தியாயம் 17 سس
பள்ளத்தாக்குகளின் உருவவியல்.
17. 1 GBGs assi antana. (Longitudinal Profile)
ஆற்று முதலிலிருந்து அதன் வாய்வரையுள்ள பிரதேசத்தின் நீள்முகத்தோற்றத்தைக்காட்டும் இருபரிமாண வளைகோடே நெடும் பக்கப் பார்வையாகும். பொதுவாக, இக்கோட்டின் தோற் றம் ஆற்றின் விருத்தி நிலையுடன் தொடர்புள்ளதென நம்பப்படி னும் அதனியல்பும் அதை உருவாக்கும் செயல்முறைகளும் சிக் கலானவை. ஆயினும் ஆறுகள் தமது போக்கைச் சீர்ப்படுத்தி அதிலுள்ள ஒழுங்கீனங்களை அகற்றுவதிலும், கிடைக்கும் சுமை யைக் கொண்டு செல்வதற்குப் போதுமான சாய்வை உண்டாக்கு வதிலும் ஈடுபடுகின்றன வென்பது ஒர் அடிப்படை உண்மை யாகும். அரித்தல், கொண்டு செல்லல், படிவுசெய்தல் என்னும் மூவகைச் செயல்முறைகளின் மூலம் ஆறு தனது நெடும்பக்கப்பார் வையை உருவாக்குகிறது. இச்செயல்முறைகளில் ஒவ்வொன்று அவ்வப்போது முக்கியத்துவமடையும். உதாரணமாக அரிக்கும் திறனும் அளவும், நீரின் அளவு, அதன் வேகம், சுமையின் தன்மை, பள்ளத்தாக்குப்பாறைகளின் தன்மை என்பவற்றினாற் பாதிக்கப் படுகின்றன. கொண்டு செல்லும் திறன், ஆற்றின் வேகம், நீரினளவு சுமையின்தன்மை என்பவற்றுக்கேற்ப வேறுபடுகிறது. பொதுவாக, அரித்தலும் கொண்டுசெல்லலும் ஆற்றில் நீர் அதிகரிக்கும் காலத் திலும் அதன் வேகம் கூடும் காலத்திலும் உச்சநிலையடைகின் றன. அதேசமயம்,சாய்வு விகிதம் வீழ்ச்சியடையும்போதும் நீர் குறையும்போதும் படிவு செய்தல் அதிகமாக நிகழ்கிறது,
ஆறு தனது நெடும்பக்கப்பார்வையை உருவாக்குகிறது. அதன் தன்மையும் தோற்றமும் (1) ஆறுபாயும் பிரதேசத்திலுள்ள பாறைகளின் தன்மை. (2) ஆறு செயல்பட்ட காலம் (3) கால நிலை வேறுபாடுகள், (4) அப்பிரதேசம் புவியசைவுகளின்றி உறுதி நிலையிலிருந்தகாலம் என்பவற்றினாலும் பாதிக்கப்படுகின் றன. இனி, புதிதாக வெளிப்பட்ட நிலப்பரப்பிற் செயல்படும் ஒரு ஆற்றினால் உருவாக்கப்படும் நெடும்பக்கப்பார்வையின் தன் மையையும் காலத்துக்குக்காலம் அதில் ஏற்படும் மாற்றங்களை யும் நோக்குவோம்.

Page 136
260 புவிவெளியுருவவியல்
7 (1) இளமை நிலையில் ஆற்றின் நெடும்பக்கப்பார்வை,
புதிதாக வெளிப்பட்ட நிலத்திற்பாயும் இளமையான ஒராற் றின் சாய்வு செப்பமான ஒப்பரவான வளைகோடுபோல் இருக் காது. ஆற்றின் போக்கில் ஆங்காங்கு வெளியரும்பும் வன் பாறைகள், இறக்கங்கள் முதலியன காணப்படலாம். இத்தகைய இறக்கங்கள் ஏரிகளாக மாறலாம், அதுபோல வெளியரும்பும் தடைபாறைகள் விரைவோட்டங்களையோ, நீர் வீழ்ச்சிகளையோ உண்டாக்கலாம். இவ்வகைத் தடைகளின் விளைவாக ஆற்றின் நெடும்பக்கப் பார்வையில் முறிவுகள் ஏற்படுவது இயல்பே ஈண்டு இளமையான நிலப்பரப்பிற் பாயும் ஆறுகள் தாமும் இளமை நிலையிலேயே இருக்கின்றன என்பது தெளிவு.
முதுமைநிலையில் ஆற்றின் நெடும்பக்கப்பார்வை,
நிலப்பரப்பு முழுவதும் முற்றாகவோ பெருமளவோ தேய்க்
இப்பட்ட நிலையில் ஒராற்றுப்பள்ளத்தாக்கின் நீள்சாய்வு மென்மை யானதாயிருக்கும். அத்தகைய சாய்வைக் கொண்ட நிலப்பரப் பிற்பனயும் ஆற்றின் நீள்முகப்பார்வையில் எவ்வித ஒழுங்கினமும் இருக்காது. அங்கு ஆறும் நிலமும் முதுமைநிலையிலேயே உள்ளன.
1 (i) முதிர்ச்சி நிலையில் ஆற்றின் நெடும் Leġistress ta' l-isfir fit6056).
மேல் விபரிக்கப்பட்ட நிலைமைகளில் ஆறும் அதுபாயும் நிலப் பரப்பும் ஒரே நிலையிலிருப்பதாகக் குறிப்பிட்டோம். அவற்றைப் போல ஆறும் நிலமும் ஒரே சமயத்திலேயே முதிர்ச்சியடைதல் எப்பொழுதும் சாத்தியமன்று. அரிப்பு வட்டத்தைத் தொடங் கும் மேலுயர்ச்சி சராசரியானதாயிருப்பதுடன் அது நிகழும் நிலப்பரப்பும் ஓரினமான பாறைகளையுடையதாயிருந்து புவி யசைவுகளும் ஏற்படாமலிருந்தால் ஒருபோது ஆறும் நிலமும் ஒரே சமயத்தில் முதிர்ச்சியடைதல் கூடும். அத்தகைய நிலைமை களின் கீழ் முதிர்ச்சியடைந்த ஒராற்றின் நெடும்பக்கப்பார்வை மேல்நோக்கிக் குழிந்ததாகவும், கீழ்நோக்கிக் குறையும் சாய்வை யுடையதாயுமிருக்கும். ஆனால் அது ஒர் இலட்சிய வளைகோடே பன்றி உண்மையாகக் காணப்படக்கூடியதொன்றன்று. ஏனெ னில் ஆறுகளின் உண்மையான நெடும்பக்கப்பார்வை அதைப்போல் ஒரே வளைகோடாகவிருப்பதில்லை. அது புவியசைவுகளின் விளை வாக (கடல்மட்டம் வீழ்தல், மேலுயர்தல் முதலியன) பல அரை வளைவுகளையுடையதாகக் காணப்படும். இதனால் ஓராறு தற் போதைய கடல்மட்டத்திற்கு இசைவுடையதாக உருவாக்கப்பட்ட ஒப்பரவான தெடும்பக்கப்பார்வையுடன் எங்காயினும் இருக்கு

பள்ளத்தாக்குகளின் உருவவியல் 26{
மெனக் கூறுவதற்கில்லை. ஆனால் நிலப்பரப்பு உறுதி நிலையி லிருப்பதுடன் கடல் மட்டத்திலும் மாற்றம் ஏற்படாதிருப்பின், போதிய காலத்திற்குச் செயல்படும் ஒராறு இளமைக்காலத்திற் குரியதான தனது போக்கிற் காணப்படும் ஒழுங்கீனங்களை நீக் கிய நிலையில் செப்பமான ஒரு நெடும்புக்கப் பார்வையைப் பெற முடியும் எனலாம்.
17: 2 sea snuisastb (Grade):
ஒரு நிலப்பரப்பு போதிய காலம் உறுதிநிலையில் இருக்கும் போது அதில் உருவாகும் ஆறு தனது போக்கிலுள்ள ஒழுங்கீனங் களை. (உ-ம்: வன்பாறைத்தடைகள், விரைவோட்டங்கள், ஏரிகள்) முற்றாக அகற்றித் தான் தொடங்குமிடத்திலிருந்து வாய் வரை ஒப்பரவான, மென்சாய்வுள்ள (ஒருவளை கோட்டைப் போன்ற) நீள் பக்கப்பார்வையை உருவாக்கியிருப்பின் அது ஒரு சீரியக்க நிலை அடைந்து விட்டதாகக் கருதப்படுகிறது. அத் தகைய ஒரு சீரியக்கநிலை ஒரு வகையான சமநிலையைச் சுட்டு வதாகவும் நம்பப்படுகிறது. அச்சமநிலை அரித்தலுக்கும் படிவு செய்தலுக்குமிடையில் நிலவலாம். இதன்படி ஒரு ஆறு தனது சுமையை (தனக்குக்கிடைப்பதும் தன்னால் பெறப்படுவதும்) தனது போக்கில் எங்கிருந்தும் அகற்றுவதற்குப் போதுமான சக்தியைக் கொண்டிருப்பின் ஒரு சீரியக்கம் அடைந்ததாகக் கருதப்படுகிறது. அந்நிலையில் அரித்தலோ படிவுசெய்தலோ நிகழாமல் அவற்றி டையே சமநிலை நிலவும். ஆனால் சுமை அதிகரித்தால் ஆறு அதனைக் கொண்டுசெல்ல முடியாதநிலையில் அதில் ஒருபகுதி யைப்படிவு செய்வதன் மூலம் அப்பகுதியில் சாய்வையும் வேகத் தையும் அதிகரித்துத் சமநிலை"யடைய முயலும், இச்செயல் முறை வண்ட்ல் நிலமாக்கல் (Agradation) எனப்படும். அதேபோல், ஆற்றின் சுமை குறையும் போது அதன் அரிக்கும் திறன் அதி ரிப்பதனால் அது கீழ் வெட்டலில் ஈடுபடுவதன் மூலம், சக்தியைச் செலவிடும்; சாய்வைக் குறைக்கும்; சுமையைக்கூட்டும். இம்முறை யில், ஓராறு தனது சுமையைக் கொண்டு செல்லக்கூடிய ஆற் றலை இறுதியிற் பெற்றுவிடும். இவ்வாறு நிலைக்குத்தரிப்பின் மூலம் சாய்வையும் சக்தியையும் குறைத்துச் சமநிலை யடையும் செயல்முறை தேய்த்தல் (Degradation) எனப்படும்.
அடுத்து, ஒரு சீரியக்க நிலையில் அரித்தலுக்கும் கொண்டு செல்லலுக்குமிடையில் சமநிலை காணப்படும் என்ற கருத்தை ஆராயின் அதில் ஒரு சிக்கல் இருப்பதைக்காணலாம். ஏனெனில் எந்த ஒரு ஆறும் அந்நிலையை எட்டுவதில்லை யெனவும் ஆற்று வடிநிலம் தேயும்போது உடைகற்குவை குறைந்தாலும், வெளி

Page 137
262 புவிவெளியுருவவியல்
யேறும் நீரின் அளவு குறையாதிருந்தால் ஆறு தனது சுமையைக் கொண்டு செல்லுவதோடு கீழ் வெட்டலிலும் ஈடுபடமுடியும் என்பதனால் 'ஒரு சீரியக்கநிலையில் அரித்தலுக்கும் கொண்டு செல்லலுக்குமிடையே சமநிலை காணப்படும் என்பது கணித வல் லுனரின் கனவே' என ஒரு ஆய்வாளர் கூறியது கவனிக்கத்தக் භීෂ් දේ
மேலும் ஒரு சீரியக்க நிலையை உருவாக்குவதில் சுமையும் ஆற்றின் சக்தியும் மட்டும் சம்பந்தப்படுவதாகச் சொல்லமுடியாது. உணமையில் அதில் பல காரணிகளுக்குப் பங்குள்ளது. அவற்றில் (1) வெளியேறும் நீர் (2) அடையற்சுமை (3) இறுதியான அடித் தள மட்டம் என்னும் மூன்றும் முக்கியமானவை. இவற்றில் ஆற் றின் செல்வாக்கு அறவேயில்லை. மேலும் வெளியேறும் நீரின் அளவானது ஆற்றின் சக்தியை, அதாவது அரிக்கும் திறனையும் கொண்டுசெல்லும் ஆற்றலையும் கட்டுப்படுத்தக் கூடியது அது பருவகால, மற்றும் குறுகியகால வேறுபாடுகளைக் காட்டுவத னால், சக்தியும் அதற்கேற்பக் கூடிக்குறையுமாயினும் ஆற்றின் சக்தியில் மாற்றம் ஏற்படும்போது சுமை உடனுக்குடன் மாறாது. அன்றியும் ஒரு ஆறு எச்சந்தர்ப்பத்திலும் குறைந்த சுமையுட னேயே காணப்படுவது வழக்கம். சுமை கிடைக்காமையும் அதற்கு ஒருகாரணமாகும்.
மேற்குறிப்பிடப்பட்ட மூன்று காரணிகளைத் தவிர (4)வாய்க் காலின் அகலம் (5) அதன் ஆழம் (6) ஆற்றுப்படுக்கையின் ஒப் பரவின்மை (7) அடையற் துணிக்கைகளின் பருமன் (8) ஆற்றின் வேகம் (9) ஆற்றுவாய்க்காலின் போக்கு மாறுந் தன்மை (பிரி தல் / இணைதல் பின்னலாதல்) என்னும் ஆறு காரணிகளின் தாக்கம் அல்லது செயற்பாடு, முதல் மூன்று காரணிகளிலும் தங்கியுள்ளது. அவற்றைத்தவிர ஆற்றின் அடித்தளச்சாய்வு விகி தம் என்னும் பத்தாவது காரணி, ஏனைய ஒன்பது காரணிகளிலும் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்குறிப்பிட்ட பத்துக் காரணிகளின் தாக்கம் ஆற்றின் போக்கில் வெவ்வேறு பகுதிகளிலும் நீண்டகால அளவிலும் மாறக் கூடியதாயிருப்பதனால் ஒருஆறு நிச்சயமாக ஒரு சீரியக்க நிலை மையை அடையமுடியும் என்பதும் அவ்வாறடையிலும் அந் நிலைமை நீண்டகாலம் பேணப்படும் என்பதும் ஐயத்துக்குரியது. ஏனெனில் மாற்றமடையும் சில காரணிகளின் செல்வாக்கினால் அந்நிலைமை சீர்குலைக்கப்பட்டு விடலாம். இதனால் ஓராறு ஒரு

பள்ளத்தாக்குகளின் உருவவியல் 263
சீரியக்க நிலைமையை அண்மிக்கும் போதே அதிலிருந்து மாறி விடும் - மாறவேண்டும் எனவும் கூறப்படுகிறது.
உதரணமாக, ஒரு ஆற்றின் பாதையில் ஓரினமற்ற பாறைகள் காணப்படின் அவற்றில் மென்பாறைப் பகுதிகளில் சமநிலை விரைவில் (முதலில்) உருவாகுதல் சாத்தியம். அதேசமயம், வன் மையான தடைபாறைகள் குறுக்கிடுமிடங்களில் நீர் வீழ்ச்சிகள் விரைவோட்டங்கள் ஆகியன தோன்றும் போது அவற்றை அகற் றுவதற்கு அதிககாலம் தேவைப்படுவதனால், அப்பகுதிகளில் சம நிலை ஏற்படுதல் தாமதமாகும். எனவே, ஆறு தனது போக்கு முழுவதிலும் ஒரே நேரத்தில் சமநிலையை உருவாக்குதல் எளி தன்று. அன்றியும் ஆற்றின் வடிகாற் பிரதேசம் பரந்ததாயின் அதன் வெவ்வேறு பகுதிகளிற் காணப்படும் தரையமைப்பு வேறு பாடுகளுக்கேற்ற முறையில் பிரதான ஆறும் அதன் கிளைகளும், சமகாலத்தில் சமநிலையடைவது சாத்தியப்படாமற் போகலாம். மேலும் சமநிலையைப் போன்ற ஒரு நிலையை ஒரு ஆறு எட்டி னாலும் அந்நிலையை அது பேணுவது கடினமானது. ஏனெனில் புவியசைவுகள், கடல்மட்ட மாற்றங்கள், மாற்றங் கள் ஆகியவற்றின் குறுக்கீட்டினால் அது குழம்பிவிடலாம். உதா ரணமாக பிளெயிஸ்தசின் காலப்பணிக்கட்டியாறாதலினால் ஏற் பட்ட கடல்மட்ட மாற்றம் காரண்மாகப்பல கிளையருவிகள் பிர தான ஆற்றுடன் ஒரே உயர்மட்டத்தில் இணையாமல் தொங் கும் பள்ளத்தாக்குகளுடன் காணப்படும் நிலைமை உருவாகியுள் ளது. இது அக்கிளையருவிகளின் சமநிலையாக்க முயற்சியைச் சீர்குலைத்துவிட்டது. இதனால் சமநிலையாக்கம் என்பது ஆற் றின் போக்கில் ஒரு பகுதியிலும், குறுகிய காலத்திலும் மட்டும் காணப்படக் கூடியதென விளக்கலாம். ஏனெனில் ஓரிடத்தில் சம நிலைநிலவுவது போலத்தோன்றினாலும், அது நீண்ட காலத்திலும் முழு வடிநிலத்திலும் அவ்வாறிருக்கும் எனக்கூறமுடியாது. எனவே சமநிலையாக்கச் செயல்முறைகளை விளக்கும்போது பிரதேசத் தின் பரப்பு, காலம் என்பவற்றையும் நாம் கருத்திற் கொள்ள வேண்டும் என்பது புலனாகும்,
இறுதியாக ஒரு ஆறு ஏதோ ஒருவகையான சமநிலையை அடைந்த பின்னரும் அதன் போக்கில் இரசாயன முறையான அரித்தல், நிகழ்தல் சாத்தியமாதலின், அரித்தல் முற்றாக நின்று விடும் ஒரு நிலையை நாம் கற்பனை செய்யமுடியாது. இவற்றை யெல்லாம் சீர்தூக்கிப்பார்க்கும்போது ஒரு சீரியக்கமென்பது சிக் " பல காரணிகளுக்கிடையே ஏற்படும் சீர்படுத்தலின் விளை

Page 138
264 புவிவெளியுருவவியல்
வாக உருவாகின்ற ஒரு வகையான சமநிலை என்பதையும் அது, ஆற்றின் கீழ்ப்போக்கில் முதலில் நிலைநாட்டப்பட்ட பின் னர் படிப்படியாக மேல்நோக்கி விரிவுபடுத்தப்படுகிறது என்பதை யும் ஊகிக்கலாம். ಡಾ.
ஈண்டு மக்கின் (Mackin) என்பவரின் கருத்து கர்ந்து நோக் கத் தக்கது. அஃதாவது, "ஒரு சீரியக்க ஆறானது ஓரளவு நீண்ட காலத்தில் அதன் சாய்வுகள் செவ்வையாகச் சீர்படுத்தப்பட்டு அதற்குக் கிடைக்கும் நீரினளவு ஆற்று வாய்க்காலின் நிலமைகள் என்பவற்றுக்கேற்பத் தனதுசுமை முழுவதையும் கொண்டு செல் லக்கூடிய வேகத்தைக்கொண்டிருக்கும்."மேலும் சமநிலைத்தன்மை யானது காலத்துக்குக்காலமும் குறுகிய காலத்திலும் மாறக்கூடிய ஒரு சராசரி நிலைமையாகும். அது சீர் குலைந்தாலும் அரித் தல், படிவு செய்தல் ஆகியவற்றின் மூலம் மீண்டும் நிலைநஆ டப்படும் ஒரு சீரியக்க ஆறு என்பது ஒருவகையான சமநிலை (pfägg9uptun Glb ( a System in equilibrium ) அதைக்கட்டுப் படுத்தும் காரணிகள் எவற்றிலும் ஏற்படும் மாற்றம் அதன் தாக் கத்தைச் சீர்படுத்தக்கூடிய ஒருதிசையிற் செலுத்தப்பட்டுச் செம் மையாக்கப்படும்"
மேற்குறிப்பிட்டபடி ஒரு ஆற்றின் கீழ்ப்போக்கில் சமநிலை ஏற்பட்டுள்ளதா என்பதை அறிவதற்கு இரண்டு அடையாளங்கள் உள்ளன. அவை (1) தொடர்ச்சியான வெள்ளச்சமவெளி தோன்றி பிருத்தல் (2) அதில் வண்டல் நிறைந்த ஆற்றுவாய்க்கால்கள் காணப்படுதல் என்பனவாம். ஆனால் இம்முறையில் ஒரு ஆறு எப்பகுதியிலாயினும் ஒரு சீரியக்க நிலையை அடைந்தாலும் அங் கும், அந்நிலையிலும் அரித்தலும் படிவு செய்தலும் சிறிதளவாயி னும் இடம்பெறும். அதேசமயம் அதன் அடித்தளச் சாய்வு விதி தமும் மாறிக்கொண்டேயிருக்கும். எனவே, முடிவாகக்கூறின் ஒடு சீரியக்கமென்பது அரிப்பின் போக்குடன் மெதுவாக மாற்ற மடைந்து கொண்டிருக்கும் ஒருவகைச் சமநிலை எனலாம். gas ஆய்வாளர் கூறியது போல் "ஒரு சீரியக்க மென்பது ஒரு ஆற்றின் காலநிலையைக் குறிக்கிறதேயன்றி அதன் வானிலையையன்று?,
ஒரு சீரியக்க நிலை என்னும் எண்ணக்கரு (Cencept) பல புவியியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருககிறது, ஏனெனில் அது குறைவான சுமையைக் கொண்ட ஆறுகள் நிலைக்குத்தரிப் பில் ஈடுபடுவதையும், ஒரு சீரியக்க நிலையிலுள்ள ஆறுகள் பக்க வரிப்பில் ஈடுபடுவதையும், ஒரு சீரியக்க நிலையிலிருந்து சுமை

பள்ளத்தாக்குகளின் உருவவியல் 265
கூடிய நிலைக்கு மாறுகின்ற ஆறுகள் படிவுசெய்தலையும் விளக்க உதவும் ஒரு எடுகோளாகவுள்ளது. ஆனால் முன்னர் கூறப்பட்ட தைப் போன்ற செம்மையான சமநிலைத்தன்மை எங்காயினும் நிலவுவதை நிரூபிப்பதும் அத்தகைய சமநிலையைப் பிரதிபலிக் கும் ஒரு சீரியக்க நிலையிலுள்ள ஒரு ஆற்றை உதாரணமாகக் காட்டுவதும் எளிதன்று.
17.3 giosanson assi aritanni (Profile of Equilibrium)
ஒரு சீரியக்க நிலையை அடைந்த ஒராற்றின் நெடும்பக்கப் பார்வையே சமநிலைப்புக்கப் பார்வையாகும். ஒரு சீரியக்கம் என்பது சுமைக்கும் கொண்டுசெல்லும் ஆற்றலுக்குமிடையே நில வும் ஒரு வகைச் சமநிலை எனக்கொள்ளின், சமநிலைப் பக்கப் பார்வை அத்தகைய ஒரு சமநிலையைப் பிரதிபலிக்கின்றது என லாம். இதனால் ஒரு சீரியக்க நிலையை உருவாக்குவதற்கு உத வும் வெளியேறும்நீர், சுமை ஆற்றின் அகலம், நீளம், வேகம், சாய்வுவிகிதம், அடித்தள ஒப்பரவின்மை முதலியன) அதே கார னிகளுக்கிடையில் சமகாலத்தில் ஏற்படும் சிக்கலான சீர்படுத்த லின் விளைவாகவே சமநிலைப்பக்கப் பார்வையும் உருவாகின்ற தென்பதை உணரவேண்டும்.
17 4 சமநிலைப் பக்கப்பார்வையின் பரிணாமம்
ஒர் ஆற்றின் நெடும்பக்கப் பார்வை அதன் அடிப்படை அடித் தளமட்டமான கடல்மட்டத்திற் கிசைவாகவே உருவாக்கப்படு கிறது. அம்மட்டம், ஆற்றின் கீழ்நோக்கிய தேய்த்தலைக்கட்டுப் படுத்தும் எல்லையாகும். அதேசமயம் கிளையாறுகளின் அடித் தளமட்டம் அவை பிரதான ஆற்றுடன் கலக்குமிடத்தின் நீர் மட்டமாகும்.
ஒர் ஆறு உருவாகிய பின்னர் அரித்தல், கொண்டுசெல்லல், படிவுசெய்தல் என்னும் மூன்று தொழில்களிலும் ஈடுபடும். ஆற் றின் தொடக்க நிலைச் சாய்வு விகிதத்திற்கேற்ப அத்தொழில் கள் இடம்பெறும். பொதுவாக ஆற்று முதற்பகுதியில் கீழ் வெட்டலும் மத்திய பகுதியில் கொண்டுசெல்லலும், ஆற்றுவாயை அண்மித்த பகுதியில் படிவுசெய்தலும் முதன்மை பெறும். ஆயி னும் இத்தொழில்களின் முக்கியத்துவம் - தாக்கம் - முன்னர் குறிப்பிட்ட வெளியேறு நீர், சுமை, சாய்வுவிகிதம் பள்ளத்தாக் கின் ஒப்பரவின்மை முதலிய பல காரணிகளின் செல்வாக்கினால் இடத்துக்கிடம், காலத்துக்குக்காலம் கூடிக்குறையும் இவ்வாறு ஓராறு தனது போக்கில் வன்பாறைத்தடைகள் ஏரிகள் ஆகியன

Page 139
266 . புவிவெளியுருவவியல்
எதிர்ப்படும் போது அவற்றை அடித்தள மட்டமாகக் கொண்டு செயல்பட்டு அவற்றை நீக்க முயலும், இச்சந்தர்ப்பங்களில் ஆற் றின் நீள்பக்கப்பார்வை ஒன்றுக்கு மேற்பட்ட வளை கோடுகளைக் கொண்டிருக்கலாம். ஆயினும் ஆற்றின் - ஆற்றுத் தொகுதியின்விருத்தி முற்றுப் பெறுமள்வில் அதில் முன்னர் காணப்பட்ட அரைகுறையான பல வளைகோடுகளும் ஒன்றாயிணைந்து ஒரே வளை கோடாகும். மேற்பகுதியில் சற்றுக்குழிந்தும் கீழ்ப்பகுதியில் மென்சாய்வுடனும் காணப்படும் இத்தகைய ஒரு வளை கோட் டுப்பார்வையே "சமநிலைப்பக்கப்பார்வை' எனக்கொள்ளலாம்.
சமநிலைப்பக்கப் பார்வையின் மேற்பகுதி குழிந்து காணப் படுவதற்கு (1) அப்பகுதியில் அரித்தல் (கீழ் வெட்டல்) வேறு பகுதிகளை விடச்சற்று அதிகமாயிருப்பதும் (2) ஆற்றின் கீழ்ப் போக்கை நோக்கிச் சுமையும் வெளியேறும் நீரும் அதிகரிப்பதும் (3) ஆற்றின் சுமை அதன் கீழ்ப்போக்கில் நுண்மையடைவதும் (4) சுமை நுண்மையடையும் வேகவேறுபாடுகளும் காரணங்களா யிருக்கலாமெனக் கருதப்படுகிறது. ஆற்று முதல் பகுதியில் நீரும் சுமையும் ஒப்பளவில் குறைவாயிருப்பதனால் அங்கு அரித்
தல் குறைவாயிருக்கும். அதேபோல் ஆற்று வாய்ப்பகுதியில் அடித்தள மட்டம் (கடல்) அண்மையிலிருப்பதனால் அங்கும்
அரித்தல் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும். எனவே ஆற்றின் இடைப் போக்கிலேயே அரித்தல் அதிகமாக நிகழ்வதாகக் கருதப்படுகிறது.
அடுத்து, ஒராற்றில் வெளியேறும் நீர் அதன் தோற்றுவாய்ப் பகுதியில் குறைவாயிருக்கும், ஆனால் கிளையாறுகளும் ஊற்று நீரும் கலப்பதைத் தொடர்ந்து நீரின் அளவு நடுப்போக்கிலிருந்து படிப்படியாக அதிகரிக்கும். அதே சமயம் ஆற்றின் சுமையும் அவ் விதமே கீழ்நோக்கி அதிகரிக்குமாயினும் வெளியேறு நீர் அதிகரிக் கும்போது ஆறுகுறைந்த சாய்விலும் தனது சுமையைக் கொண்டு செல்லும். மேலும் ஆற்றின்சுமை படிப்படியாகக் கீழ்நோக்கி நுண்மையாகுவதும், குறைந்த சாய்வில் ஆறு தனது சுமையைக் கொண்டு செல்ல உதவுகிறது. ஆயினும் பாறைத்துண்டுகள் (சுமை நுண்மையாகின்ற (சிறுக்கும்) வேகமும் சமநிலைப்பக்கப் பார்வையைப் பாதிக்கலாம். இவ்விதமாக ஆற்றின் சுமை அதன் தோற்றுவாய்ப்பகுதியில் அதிகமாகவும், நடுப்பகுதியில் படிப்படி யாகக் குறைந்தும், வாய்ப்பகுதியில் ஒரேயளவாகவும் காணப் படுவதனாலேயே ஆற்று வாய்க்கால் அதன் கீழ்ப்போக்கில் - ஆற்றுவாயை யடுத்துள்ள பகுதியில் - நீண்டதூரம் தட்டையா கக் காணப்படுகிறது. ஆற்றின்வேகம் அதிகரிக்கும்போது அந் நிலமைகள் மாறக்கூடுமாயினும், கள ஆய்வுகள், ஆற்றின் சராசரி

பள்ளத்தாக்குகளின் உருவவியல் 267
வேகம் ஒன்றில் கீழ்நோக்கிச் சிறிது அதிகரிக்கும் அ ல் ல து மாறாதிருக்குமென்பதைச் சுட்டுகின்றன. இந்நிலைமைகளுக்கு (1) ஆற்றுவாய்க்காவின் அடித்தள ஒப்பரவின்மை கீழ்நோக்கிக் குறைதல், (2) நீரின் அளவு அதிகரித்தல் ஆகியன காரணங் களாகும்.
இவ்வாறு மேற்பகுதியில் குழிவுத்தன்மையுடனும் கீழ்ப் பகுதியில் மென்சாய்வுடனும் கூடிய சமநிலைப்பக்கப் பார்வையை ஒரு ஆறு உருவாக்கினாலும் அது நீடித்து நிலைத்திருப்பதுநிச்சய மற்றது. ஏனெனில் முன்னர் குறிப்பிட்ட மாறக்கூடிய காரணி களின் தாக்கத்தினால் அதன் உருவம் மாற்றமடைந்துகொண் டிருக்கும். எனவே ஒரு சீரியக்கம் அடைந்த ஒர் ஆற்றி ன் நீள்பக்கப்பார்வை, நீர்வீழ்ச்சிகள், விரைவோட்டங்கள், ஏரி
LLLSSMMSMMMMMSSASSASSASSASSASAAAASSSSSSSLSSSSS qSS A ELLSS0ASASqSqqSAAA AAAA SAAAAA AAAA S AM MAA qMMSqM A T q q S q qqAqS MAMqAqq
படம்: 49 சமநிலைப்பக்கப்பார்வை உருவாதல் ஒ. ப. பா - ஒரு சீரியக்க (சமநிலை) பக்கப்பார்வை
கள் முதலியவற்றால் முறிவடைந்திருக்காது எனத் திட்டவட்ட மாகக் கூறினாலும் அது முற்றிலும் ஒப்பரவான ஒரு வளை கோடாயிருக்குமெனக் கூறமுடியாது ஏனெனில், ஒருபோது ஒரு சீரியக்க நிலையை அடைந்த ஒரு ஆறு மெதுவாக மாறிக் கொண்டிருக்கும் நிலைமைகளுக்கேற்ப புதிய சமநிலையடைய முயலும், அவ்வாறு முயலும்போது ஒரு காலவவதியில் அது

Page 140
268 புவிவெளியுருவவியல்
வேறுபட்ட பல ஒரு சீரியக்க வளைகோடுகளையுடைதாயிருக் கும். அவற்றில் பிந்தியகோடுகள் படிப்படியாகத் தட்டையாகிக் கொண்டிருக்கும். மேலும் ஒப்பரவான (இலட்சிய) வளை கோடு இளமையான ஆற்றின் ஒழுங் கற்ற பார்வையைத் தொடர்ந்து உருவாகும் வளைகோட்டுத் தொடரில் இறுதி யானதென்பதும் முற் றி லும் சீர்படுத்தப்பட்ட ஒப்பரவான வளைகோட்டுப்பார்வையை ஒரு ஆறு எக்காலத்திலும் அடைய வேண்டிய நியதியில்லை என்பதையும் உணரவேண்டும். சுருங் கக்கூறின் "சமநிலைப்பக்கப்பார்வையென்பது பொதுவாகத் தட்டையாகுவதும் தட்டையாக்கப்படுவதுமாகும். இதனால் அடித்தள மட்டம் எப்பொழுதும் அணுகப்படுவதேயன்றி ஒரு போதும் அடையப்படுவதில்லை'
இவ்வாறு ஒரு சீரியக்க நிலையிலுள்ள ஒரு ஆற்றின் சம நிலைப்பக்கப்பார்வையைப் பாதிக்கக்கூடிய வேறுபட்ட நிலை மைகள் ஒழுங்கற்றும் அதிகமாகவும் காணப்படுவதனாலும் ஆறுகளின் உருவம் காலப்போக்கில் மாறக்கூடியதாயிருப்பத னாலும் நீண்டகால எல்லையில் அ  ைவ அடித்தளத்தைத் தேய்த்துச் சாய்வையும் குறைக்குமாதலினாலும், நிலைக்குத் தரிப்பு முற்றாக நின்றுவிடக்கூடிய ஒரு நிலைமையைக் கூறமுடி பாதிருப்பதனாலும் ஒரு சீரியக்கவாற்றின் நிலைமையை எவ் வகையுருவத்துடனும் பொருத்திக் காட்டுவது சாத்தியமான Ꮽ5ᎧᏑᎢ Ᏸ0l .
17 ஆ. குறுக்குப் பக்கப்பார்வை
ஆறுகளின் நெடும்பக்கப் பார்வையைப்போலவே அவற்றின் குறுக்குப்பக்கப் பார்வையும் குறிப்பிடத்தக்க பல அமிசங்க ளையுடையது. ஒரு ஆற்றின் குறுக்குப்பக்கப்பார்வையில் 3 அமி சங்கள் முக்கியமானவை. அவை (1) பள்ளத் தாக்கின் உருவம் (2) ஆற்றுவாய்க்கர்லின் உருவம் (3) பள்ளத்தாக்கின் அடித்தள உருவம் என்பனவாம்.
ஆ (1) பள்ளத்தாக்கின் உருவம்: நீரின் நிலைக்குத்தரிப்பினா லேயே பள்ளத்தாக்குத் தோண்டப்படுகிறது. அதன் மூலம் பள்ளத்தாக்கின் ஆழம் அதிகரிக்கும். அதேசமயம் பள்ளத்தாக் கின் பக்கச்சாய்வுகள் வானிலையாலழிவு, மண்ணகர்ச்சி நிலவழுக்குகை முதலிய பல காரணிகளாற் பாதிக்கப்படுவத னால் முதலில் ஒடுக்கமான “V” போலத் தோன்றும் பள்ளத்

பள்ளத்தாக்குகளின் உருவவியல் 269 தாக்கு படிப்படியா அகன்று V வடிவாகவும்: விரிந்த "W" போலவும், அகன்ற 6ரு போலவும் மாறும் (படம் 50) அன்றியும் பள்ளத்தாக்குகள் குறுக்குப்பார்வையில் சிலபோது சமச்சீராகவும் இலபோது சமச்சீரற்றும் காணப்படலாம். இத்தகைய வேறு பாடுகளுக்குப் பாறைக କାଁ டைந்த காலம், காலநிலை மற்றும் ஆகியன முக்கியமான み行方asorägarr@"・ இவ்வாறு பண்தை தாக்கின் குறுக்குப் பக்கபபார்வையானது சாய வியலுடன் தொடர்புடையதாயிருக்கின்றது GTiTL©ಶಿ gಿ&T
வேண்டும்.
படம் 50 பள்ளத்தாக்குகளின் படிமுறை விருத்தி
ஒரு ஆறு தொடர்ந்து கீழ்வெட்டிக்கொண்டிருப்பதாலோ, அடித்தளத்தை அரிப்பதாலோ அதன் பக்கச்சாய்வுகள் குத்தாக | Lost Doprth: அதேசமயம் முதுமை நிலையிலுள்ள பள்ளத்தாக்கு
களிலும், மென்பாறை இனப்படுமிடங்களிலும் ஆறு களின் அடியில் அரித்தலில் ஈடுபடாதபோதும் மென்சாய்வுகள் உருவாகும். ஆயினும் ஒரு ஆறு தனது போக்கிலுள்ள ஒழுங் கீனங்களை நீக்கி, ஒரு சீரியக்க நிலைமையை அ  ை- வ 國 போலச் சாய்வுகளும் தமது பக்கப்பார்வையைச் சீர்படுத்தும், அஃதாவது அவையும் இறுதியில் ஒப்பரவானவையாகிவிடும். *
ஒரு பள்ளத்தாக்கு சமச்சீரற்றிருப்பதற்குப் பாறைகளின் அமைப்பும் , தன்மையுமே பிரதான காரணங்களாகும். இவ் | 6) ITO) இன்சாய்வைக்கொண்ட டிரிக்கப்பட்ட பாறைப் பிர தேசங்களில் ஆறு சரிவுத்தி ைபவழியே பெயர்ந்துசென்று அரிப் பதனால் பள்ளத்தாக்குக் சமச்சீரின்றிக் காணப்படும். சில சந்தர்ப்பங்களில் பாறையமைப்புக்குக் கட்டுப்படாமலும் சமச்

Page 141
270 புவிவெளியுருவவியல்
ჭ, ზ. ; წ . 德、鲨 蟾 、”。”。°觐 '' .. '.%' :'*' : ': نه لري .
படம்: 51 பாறைகளின் அமைப்பும் பள்ளத்தாக்கின் உருவமும்
சீரின்மை தோன்றலாம். உதாரணமாக ஒரு பள்ளத்தாக்கு ஒரினப்பாறைகளில் வெட்டப்படுமாயின் அதன் குறுக்குப்பக்கப் செயல்முறைகளின் தன்மைக்கும், உருவவியலில் அதன் நிலைக்கும் ஏற்றதாயிருக்கும். சில சந்தர்ப்பங்களில் செ ய ல் முறைகளில் மாற்றமேற்படுவதனால் (உ- ம் மழை குறைதல்) பள்ளத்தாக்கு அகலமாகுதல் தடைப்படலாம். கொலராடோப் பள்ளத்தாக்கு இதற்குச் சிறந்த உதாரணமாகும். அது மிகக் குத்தான பக்கச்சாய்வுகளுடன் காணப்படுவதற்கு மழைக் குறைவே முக்கியமான காரணமாகும்.
சுண்ணாம்புப் பாறையோ, சோக்குப்பாறையோ காணப் படுமிடங்களில் கரைசல் அதிகமாக நிகழ்தலினால் அங்குள்ள பள்ளத்தாக்குகள் வட்ட வடிவத்துடன் காணப்படுகின்றன. வன்பாறைகளும், மென்பாறைகளும் கிடைநிலையிலுள்ள இடங் களில் அரித்தல் வேறுபட்ட அளவில் நிகழ்வதனால் வன்பாறை கள் புடைத்துப் பாறைப்பீடங்களாகக் காட்சியளிக்கும்.
ஆ. (2) ஆற்று வாய்க்கால்களின் உருவம் ஆற்றுநீர் பாய்ந்து செல்லும் வரையறுக்கப்பட்ட வழியே ஆற்று வாய்க் காலாகும். அதன் பருமன், உருவம், அமைப்பு ஆகியன வேறு பட்டவை. ஆயினும், அவற்றை (1) நேரானவாய்க்கால்கள் (2) வளைவான வாய்க்கால்கள் (3) பின்னலானவாய்க்கால்கள் என மூன்றாக வகைப்படுத்தலாம். பொதுவாக, ஆற்றுவாய்க் கால்களின் உருவமும் பருமனும் முறையே (i) வெளியேறும் நீரினளவு (i) ஆற்றின்சராசரி ஆழம் (ii) சராசரி அகலம் (iv) சராசரிவேகம் (v) சுமையின்தன்மையும், அளவும் (wi) அடித்
 

பள்ளத்தாக்குகளின் உருவவியல் 271
தளச்சாய்வுவிகிதம் (vii) ஆற்றுப்படுக்கையின் ஒப்பரவின்மை முதலிய காரணிகளாற்பாதிக்கப்படுகின்றன. *、
நேரான வாய்க்கால்கள் சில விசேட நிலைமைகளின் கீழ் (உம் குறைக்கோடுகள்) குறுகிய தூரம்மட்டும் நோராகக் காணப் படலாம். ஆயினும், பொதுவாக, ஆற்று வாய்க்கலின் அகலத் திலும் 10 மடங்கு அதிக தூரத்திற்கு மேல் அவை நேராயிருப் பதில்லை. எனவே, வளைவான அல்லது பின்னலான வாய்க்கால்களே இ ய ல் பாக, எங் கும் காணப்படுவதனால் அவற்றின் உருவவியல் பற்றி அறிதல் அவசியமானது.
ஆ. 2 (i) வளைவான வாய்க்கால்கள். இவை பெரும்பாலும் மென்சாய்வையும், படிவுகளையும் கொண்ட ஆற்றின் கீழ்ப்போக் கிலேயே அதிகமாக உருவாகின்றன. இவ்வாறு ஆற்றின் படிவு களுக்கு மேல் நன்குவிருத்தியடைந்து தங்குதடையின்றித் தாமா கவே அசையும் ஆற்று வளைவுகளே "மியாந்தர்கள் எனப்படு கின்றன. மியாந்தர் என்ற பெயர் துரு க் கி யி ல் வளைவான போக்குடன் கானப்படும் மியாந்தரிஸ் (Meanderes) என்னும் ஆற்றின் பெயரிலிருந்து பெறப்பட்டதாகும்.
ஆற்றுவளைவுகள் பற்றி நீண்டகாலமாக மேற்கொள்ளப் ut * ஆய்வுகள், அவை காரணம் எதுவுமின்றிச் சுயமாகவே உருவாகுவதாகவும் வளைந்து வளைந்து செல்லுதல் பாய்ச்சலின் இயல்பான ஒரு பண்பு' எனவும் தெரிவிக்கின்றன. உதாரணமாக ஒரு கண்ணாடியில் வழிந்தோடும் நீர் வளைந்து வளைந்தே செல்கிறது. அது போலவே வளைகுடா நீரோட்டமும், பனிக் கட்டியாற்றின் மேற்பரப்பில் பாயும் நீரும் வளைவான போக் குடனேயே காணப்படுகின்றன. எனினும் இத்தகையபாய்ச்சல் ஒரு பெளதிகத் தத்துவத்தின் அடிப்படையில் அமைந்துள்ள தாகக் கூறப்படுகிறது. அஃதாவது ' ஒரு மூலம் (Medium) மற் றொன்றின் மேலாக அசையும் போது அவை சந்திக்கும் தளம் அலையுருவாக மாறும் ' என்பதாகும். மணற்பரப்பில் வீசும் காற்று அலையுருவான மணல் மேடுகளை உருவாக்குதல், கடற் கரையில் மோதியபின் பின்னோக்கித் திரும்பும் அலைகள் அலைக் குறிகளை உரு வா க் கு த ல் ஆ கி ய ன அதை விளக்கும் சில உதாரணங்களாகும்.
அஃதெவ்வாறாயினும், செயற்கையருவிகளில் மேற் கொள்ளப் பட்ட சில ஆய்வுகள், ஆற்றுவளைவுகள் முழுமையான மியாந்

Page 142
272 புவிவெளியுருவவியல்
காரணிகள் ஆகியனபற்றிப் பல புதிய தகவல்களை வெளிப்படுத்தி யுள்ளன. அவை மேல் வருமாறு.
மியாந்தர்களின் உருவவியல். ஒரு சீரான மென் சாய்வையும் அடையற்படிவுகளையும் கொண்ட நேரான ஒரு வாய்க்கா லில் ஒடும் நீர், அரித்தல் படிவு செய்தல் என்பவற்றின் மூலம் அவ்வாய்க்காலில் "சைன் வளைவு' போன்ற சமச்சீரான வளைவு களை உருவாக்கும். அவ்வளைவுகள் தோன்றுவதற்கு முன்னோடி யாக ஆற்றுவாய்க்காலில் குட்டைகளும் கடவைகளும் (Pools and Rittes Sequence) ஆற்று வாய்க்காலின் அகலத்தைவிட 5 முதல் 7 மடங்கு தூரத்தில்-சமதூரத்தில் - தொடர்ச்சியாக உருவாகும்.
படம்: 52 மியாந்தர்கள் உருவாகும் முறை
ஆறு கரை நிறைந்தும், குறிக்கப்பட்ட ஒரு வேகத்திற்கு மேலா கவும். (அது Critical Velocity' எனப்படும்) பாயும் போதே அவை முழுமையாக விருத்தியடைகின்றன. அதேசமயம் குட்டை களின் அடித்தளம் சமச்சீரின்றியிருத்தல்,கடவைகளின் அடித்தளம் சமச்சீராயிருத்தல், ஆற்றின் மேற்பரப்பு நீர் அதன் வெளி வளைவுகளை நோக்கியும், அடிப்பாக நீர் உள்வளைவுகளை நோக்கியும் பாய்தல் (இது "Helical Flow' எனப்படும்) ஆகிய வற்றின் விளைவாக ஆற்றின் வெளிவளைவுகளில் அரித்தலும் உள் வளைவுகளில் படிவு செய்தலும் ஏற்படுவதோடு, ஆற்றின் போக்கும் மேலும் வளையும். அதே ச ம ய ம் உள்வளைவுளை யடுத்து மணல், பரல் ஆகியன படிவதனால் வளைவான மணற் றடைகள் (Point Bar) உருவாகும் போது ஆறு அவற்றைச்
 
 

பள்ளத்தாக்குகளின் உருவவியல் 273
சுற்றிப்பாய முற்படுவதனல் அதன் போக்கு முற்றாகவளைந்து முழுமையான மியாந்தராக மாறும் ஒரு மியாந்தரின் அலை நீளம், ஆற்று வாய்க்காலின் அகலத்தைவிட 10 பங்கு வரை அதிகமாயிருக்கும். இவ்வாறு வளைந்து பாய்ந்து ஒரு மியாந் தரை உருவாக்கிய ஆறு, தொடர்ந்தும் அவ்வாறே பாய்வத னால் ஆற்றில் பல மியாந்தர்கள் தொடர்ச்சியாக உருவாகும். அம் மியாந்தர்களை உள்ளடக்கியபகுதி மியாந்தர்வலயம் எனப் படும் . அதன் அகலம் ஆற்று வா ய் க் கா லி ன் அகலத்தை விட 15முதல் 18 பங்கு அதிகமாயிருக்கும். எனவே ஒரு ஆறு எம் முறையிற்பாயினும் அதன்வாய்க்காலின் அகலம் அதில் தோன் றக்கூடிய வளைவுகளின் அகலத்தை மதிப்பிட உதவுகிறது.
ஆ. 2 ( i ) பின்னலான வாய்க்கால்கள் ( Braied Cha nnels ) ஒரு ஆற்றின் பிரதான வாய்க்கால், பல பரப்பும் கிளைகளாகப் பிரிந்த பின்னர், அவற்றில் சில ஒன்றுட னொன்று இனைந்து காணப்படுமாயின் அவை பின்னலான வாய்க்கால்கள் எனப்படுகின்றன.ஆற்றின் பிரதனா வாய்க்காலில் அதன் படிவுகள் வண்டல் மேடுகளாக வளர்ந்து அதன் போக்கைத்தடை செய்யும் போது ஆறு அவற்றைச் சுற்றியும் அவற்றுக் கூடாகவும் பல பரப்பும் கிளை வாய்க்களையமைத் துப்பாய முற்படுவதனால் அதன் வாய்க்கால்கள் பின்னலாகும். ஆற்றுக் கழிமுகங்களிலும், சில போது கழிமுகத்தையடுத்துள்ள பகுதிகளிலும் முன்குறிப்பிட்ட நிலைமைகள் காணப்படலாம் (உ. ம் அமேசன், கங்கை )
பொதுவாக, பின்னலான வாய்க்கால்கள் உருவாதற்கு நிலத்தின் சாய்வு விகிதம் வீழ்ச்சியடைவதே பிரதான காரண மாகும். மலையடிவாரப் பகுதிகளில் அதை அவதானிக்கலாம் மலைப்பகுதியிலிருந்து பெறப்பட்ட உடைகல், பரல், மணல், என்பவற்றுடன் வெளிப்படும் ஓராறு சமநிலத்தையடையும் போது, சாய்வு விகிதம் வீழ்ச்சியடைவதனால் அதுதனது சுமையை அங்கு சடுதியாகப்படிவு செய்யும். அப்படிவுகளே வண் டல் விசிறிகளாகவும் வண்டற் கூம்புகளாகவும் வளர்கின்றன. பின் னர் ஆறு அப்படிவுகளும் கூடாகப் பாயமுற்படும் போது அதன் போக்குப் பின்னலாகும். அன்றியும் ஒப்பரவற்ற பொருட் களைக் கொண்ட ஒரு ஆற்றுவாய்க்காலின் வளர்ச்சியைத் தொடர்ந்தும் ஆற்றின் போக்குப் பின்னலாகும். நீர் நுண்மை யான பொருட்களை அரித்துக் கொண்டு செல்லும் போது கரடு முரடான பொருட்கள் ஆங்காங்கு கைவிடப்பட்டுக் குவி யும், அவை படிப்படியாகவளர்ந்து மேடுகளாகிக் கீழ் நோக்ஓ

Page 143
274 புவிவெளியுருவவியல்
வளரும் இதனால் ஆற்று நீர் இருவாய்க்கால்களாகப் பிரிந்து அம்மேடுகளைச் சுற்றிப்பாயும். அவ்வாய்க்கால்கள் ஆழமாகின்ற போது அவற்றுக்கிடையில் உருவாகிய மேடுகள் மேலும் வள ரும். அம்மேடுகளில் தாவரங்கள் முளைத்தால் அவை ஆற்றுத் தீவுகளாக நிலைக்கலாம், கலுகங்கையிலும், மல்வத்து ஒயா வில் மாவனெல்லைக்கு அண்மையிலும் அத்தகைய ஆற்றுத் தீவுகளைக் காணலாம்.
பின்னலான வாய்க்கால்கள் உருகும் பனிக்கட்டிக் கவிப்புக் களுக்கு முன்பாகவும் சில பனிக்கட்டியாறுகளின் நாக்கிற்கு முன்னால் உள்ள வெளியடையற் சமநிலத்திலும் காணப்படு கின்றன. 。”
பின்னலாகிய ஒரு ஆறு மியாந்தர்களுடன் கூடிய ஆற்றைப் போலத் தனது சுமையைப்படிவு செய்வதன் மூலம் தனது அகலம், ஆழம், சாய்வு, வேகம், என்பவற்றைச் சீர்ப்படுத்தி அரித்தலுக்கும் படிவு செய்தலுக்கு மிடையே சமநிலைக்குக் கிட்டிய ஒரு நிலையை அடையும். இச் செயல்பாட்டில் மியாந் தர்களுக்கும் பின்னலான ஆற்றுக்கு மிடையே ஒற்றுமை உண்டு ஆனால் குறிக்கப்பட்ட அளவான கரைநிறைந்த நீரைக் கொண்டு செல்வதாயின் பின்னலான ஆற்றுக்கு ஒப்பளவில் அதிக சாய்வு தேவை. அதேசமயம் குறிக்கப்பட்ட ஒரு சாய் வில் பாய்வதாயின் பின்னலான வாய்க்காலுக்கு ஒப்பளவில் அதிகநீர் தேவை. மேலும் மியாந்தர்களையுடைய ஓராறு தனது அகலத்தை ஒரே நிலையில் வைத்திருக்கும் ஏனெனில் அதன் ஒரு பக்கத்தில் அரித்தலும் வாய்க்கால் அகலமாதலும் இடம் பெறும் போது, மறுபக்கத்தில் படிவுசெய்தலும் a T iiij; 5 trij ஒடுங்குதலும் இடம்பெறும். ஆனால் பின்னலான ஒரு ஆற் றைப் பொறுத்தவரை அதன் இரு கரைகளிலும் அரித்தலும் அகலமாக்கலும் சமகாலத்தில் இடம் பெறுவதனால் அதன் அகலம் தொடர்ந்து அதிகரித்தபடியேயிருக்கும்
17. ஆ. 3. பள்ளததாக்கின் அடித்தள உருவம் ஒரு ஆர்
றுப்பள்ளத்தாக்கு முழுவதையும் நீர் மூடியிருப்பின் அதில் புறம்பான அடித்தளத்தைக் காணமுடியாது. இளமை நிலையி லுள்ள ஆற்றுப்பள்ளத்தாக்குகள் அப்படிப்பட்டவை. அதேசம யம்,முதிர்ச்சி நிலையிள்ள ஒரு ஆற்றில் உருவாகும் மியாந்தர்கள்
பக்கவரிப்பில் ஈடுபடுவதோடு கீழ் நோக்கியும் அசைவதனாலும் பள்ளத்தாக்குச் சாய்வுகள் இயற்கையாகத் தேய்வதனாலும்,

பள்ளத்தாக்குகளின் உருவவியல் 275
ஆற்றுவாய்க்காலின் இருபுறமும் அகன்ற தட்டையான சமநிலங் கள் உருவாகும். அவை வெள்ளச் சமவெளிகள் எனப்படுகின்றன ஆற்றில் நீர் பெருகும் போது வாய்க்காலினிருபுறமுமுள்ள
உயரணைகளை நீர் உடைத்து வெளியே பாய்வதனால், வெள்ளச் சமவெளியில் வண்டல்கள் அதிகமாகப் படிந்து காணப்படுவது வழக்கம், இவ்வாறு, வண்டல்களை அதிக
மாகக் கொண்ட ஒரு வெள்ளச்சமவெளி மேல் நோக்கிச் சிறிது குவிந்து காணப்படும்.

Page 144
அத்தியாயம் 18
அரிப்பு வட்டம்
18. 1. பொது அமிசங்கள்
புவியின் அடிப்படை அமைப்புக் கூறுகளான கண்டங் களையும், சமுத்திர வடிநிலங்களையும் முதல்நிலைத் தரைத் தோற்ற உறுப்புக்கள் எனவும் சமநிலங்கள் மேட்டு நிலங்கள், மடிப்புமலைகள், எரிமலைகள் முதலியவற்றை இரண்டாவது நிலைத்தரைத் தோற்ற உறுப்புகளென்றும் குறிப் பி டு வ து வழக்கம். இவ்விருவகை உறுப்புக்களும் ஆக் க நிலவுருவங்க ளர்கும். அஃதாவது இவை புவியோட்டசைவுகளினால் உரு வாக்கப்பட்டவை என்பதாகும். இவற்றைவிட இன்னொரு வகை நிலவுருவங்களும் உள்ளன. அவை ஒடும்நீர், பனிக்கட்டி யாறு, காற்று முதலிய அரிப்புக் கருவிகள் புவியின் மேற் பரப்பில் செயற்படுவதனாலும், வானிலையழிவினர்லும், மலை கள், மேட்டுநிலங்கள் முதலியன தர்க்கப்பட்டமையால் உரு வாகியவை. இவை மூன்றாவது நிலைத்தரைத்தோற்ற உறுப் புகளெனப்படும். இவற்றை (1) அரிப்பு நிலவுருவங்கள் (2) எச்ச நிலவுருவங்கள் (3) படிவு நிலவுருவங்கள் என மூன்றாகவும் வகைப்படுத்தலாம் .
புவியின் மேற்பரப்பை அணிசெய்யும் பலவகையான நில வுருவங்களையும் பார்க்குமொருவனுக்குத் திகைப்பும் வியப்பும் ஏற்படக்கூடியவாறு அ  ைவ எண்ணிக்கையிலும் வகையிலும் எல்லையற்றிருக்கின்றன. மேலெழுந்த வாரியாக நோக்குபவர் கள் அவை இயற்கை விநோதங்களென எண்ணக்கூடும். ஆனால் அறிவியற் கண்கொண்டு பார்க்கும்போது அவை ஏதோ ஒர் ஒழுங்கில் உருவாகியிருத்தல் புலப்படும். நிலவுருவங்களை அம் முறையில் நோக்கி, அவை ஒர் ஒழுங்கில் வரையறுக்கப்படக் கூடிய வாழ்க்கை வரலாற்றுடன் காணப்படுவதை உணர்ந்து உணர்த்தியதோடு அந்நிலவுருவங்கள் ' வட்டமுறை ' யான வாழ்க்கையையுடையன என்பதைக்கூறி அவற்றின் வாழ்க்கை யைப்பற்றித் திட்டமான, தெளிவான கருத்துக்களைத் தெரி வித்த பெருமை W. M. டேவிஸ் அவர்களையே சாரும்,

அரிப்பு வட்டம் 277
டேவிஸ் அரிப்பு நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தியதோடு நில வுருவங்களின் வட்டமுறையான வாழ்க்கையையும் விருத்தியை யும் வற்புறுத்தினார். அவர் தெரிவித்த கருத்துக்களிற் ତ୍ରିମ ରା)। தற்போது நிராகரிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அவர் வகுத்த திட்டமும், அதன் அடிப்படைக் கொள்கைகள் பலவும் பிற் கால ஆய்வுகளால் வலியுறுத்தப்பட்டுப் பலராலும் ஏற் று க் கொள்ளப்பட்டிருக்கின்றன. நிலவுருவங்களின் உருவவியலை மனக்கண்முன் கொணர்ந்து விளக்கும்போது செயல்முறையின் முக்கியத்துவத்தைப் புறக்கணித்தமை அவரின் பலவீண்மாயி ருக்கலாம். எனினும் புவியியலை வெறும் விபரவியல்' என் னும் நிலையிலிருந்து விளக்கங்களைத் தரவல்ல ஒர் அறிவியல் என்ற உயர்நிலைக்கு உயர் த் தி ய பெருமை அவருக்குரியது என்பதில் ஐயமில்லை.
18.2 அரிப்புவட்டத்தின் அடிப்படைக் கருத்துக்கள்.
W M, டேவிஸ் அவர்களால் வகுக்கப்பட்ட அரிப்புவட்டத் தின் அடிப்படைக் கருத்துக்கள் பலவாகும். அவற்றில் பின் வருவன முக்கியமானவை. (1) நிலவுருவங்கள் வரையறுத்துக் கூறப்படக்கூடிய வரலாற்றையுடையன. (2) அவை நிலைமாறி, உருவம்மாறி விருத்தியடைந்துகொண்டிருக்கும். (3) எங்கும், எப்பொழுதும் நிலவுருவங்களின் தன்மையானது, (i) அமைப்பு (i) செயல்முறை (ii) நிலை என்பனவற்றினால் நிர்ணயிக்கப் படும். (4) நிலவுருவங்கள் இறுதியில் முற்றாக அழிந்துவிடக் கூடியவை. (5) அழிவுக்குப் பின்னர் ஆக்கம் ஏற்படுதல் இயல் பாதலின் நிலவுருவங்கள் மீண்டும் மீண்டும் தேர்ன்றி அழியும் மு  ைற வட்டவொழுங்கிலமைகிறது. (6) நிலவுருவங்களின் வாழ்க்கைக் காலத்தைச் சமனற்ற பல நிலைகளாகப் பகுத்து அவை ஒவ்வொன்றுடனும் சில விசேட நிலவுருவ அமிசங்களைத் தொடர்புபடுத்தலாம் குறிப்பாக அவை தொடக்கவுருவம், விளைவுருவம், இறுதியுருவம் என மூன்றாகப் பிரிக்கப்படக் கூடியவை. மேல் விபரிக்கப்பட்டவை எல்லா வகையான அரிப்பு வட்டங்களுக்கும் பொதுவான அடிப்படைக் கருத்துக்களாம். டேவிஸ், இயல்பான அரிப்பு வட்டத்தையே சிறப்பாக விளக்கி யுள்ளாராதலின் இயல்பான அரிப்பு வட்டத்திற்கு மட்டும் ஏற் புடையதான கருத்துக்களையும் ஈண்டு குறிப்பிடலாம்.
18.3 இயல்பான அரிப்பு வட்டம்:
இயல்பான அரிப்புவட்டம் பின்வரும் கருத்துக்களை அடிப் படையாகக் கொண்டுள்ளது. நிலவுயர்ச்சி அரிப்புக்கும் தேய் வுக்குமுட்படும் ஒரு தொடக்க நிலப்பரப்பைக் கொடுக்கிறது.

Page 145
278 புவிவெளியுருவவியல்
தெர்டக்க நிலப்பரப்புகள் வேறுபட்ட அமைப்பினையுடையன வாக அமையலாம். அவை அண்மையில் மேலுயர்த்தப்பட்ட கண்டமேடையின் ஒரு பகுதியாகவோ, குமிழ், வ டி நில ம், மடிந்த அமைப்பு, பிளவுற்ற அமைப்பு முதலியவற்றில் ஏதா யினுமொன்றாகவோ காணப்படலாம். தொடக்க நிலப்பரப்பு ஒருவழிப்பட்டு அல்லது அவ்வாறின்றி ஒடிச்செல்லும் நிரினால் வானிலையாலழிவு, அரிப்பு, திணிவுத்தேய்வு என்னும் செயல் முறைகளின் கூட்டுத்தாக்கத்தின்கீழ்த் தேய்வடைகிறது. நிலம் பல வகையான ஒட்டுருவழிவு நிலைமைகளின்கீழ் தேய்க்கப் படுகிறது. தரையின் மேலுயர்ச்சியின்போதோ, அ தற் கு ப் பின்னரோ தேய்வு நிகழலாம். அதேபோல் மேலுயர்ச்சி தொடர்ச்சியாகவோ, இடைவிட்டோ ஏற்படலாம். டேவிஸ் விரைவான மேலுயர்ச்சியையும் அதைத்தொடர்ந்து நிகழும் அரிப்பையுமே இயல்பானதெனக் கருதினாராயினும் அவை இன்றியமையாத நிலைமைகள்ல்லவென்பதைத் தெ ரி ந் து கொள்ளவேண்டும். (அவர் தெரிவித்த நிலைமைகள் இயல் பானவையல்லவெனக் கூறுவாருமுளர்) மேலுயர்ச்சியின் பின்னர் நிலம் அசைவற்றிருக்கும் காலத்தில் நிலத்தேய்வு அரைகுறை யாக நிறைவேறியிருக்கும் அந்நிலையில் அப்பிரதேசம் மீண்டும் மேலுயர்த்தப்பட்டுப் பிறிதொரு வட்டம் தொடங்குமானால் * பலவட்டங்கள் அல்லது குறைவட்டங்கள் அங்கு காணப் படலாம். எனவே முற்றுப்பெற்ற வட்டங்கள் விதிவிலக்கான வையேயன்றி நியதியானவையல்ல.
நிலத்தேய்வின்போது பல நிலைகள் அடையாளங்காணப் படலாம். அவற்றை இளமைநிலை, முதிர்ச்சிநிலை, முதுமை நிலை என மூன்றாக வகுக்கலாம். அவற்றின் உபநிலைகளை முன்பின் என்னும் அடைமொழிகளினுதவியுடன் குறிப்பிடலாம். (உ- ம், முன் ணிளமை, பின் முதிர்ச்சி) "வட்டம் ஒடிக்கொண் டிருக்கும்போது ஒர் ஒழுங்குமுறையில் ஒன்றுமாறியொன்றாக விளைவுருவக் கூட்டத்தைக் காணலாம். நிலவுருவங்களின் தன்மை , அ  ைம ப் பு செயல்முறை, நிலை என்னும் மூன்று காரணிகளிற்றங்கியிருப்பதனால் அத்தன்மைகளை அவற்றுடன் தொடர்புபடுத்தியே விளக்கமுடியும்.
மேலுயர்த்தப்பட்ட எத்தகைய நிலத்திணிவும் இறுதியில் அதன் அடித்தளமட்டத்திற்குக் குறைக்கப்படுதல் சாத் தி ய மானது. வானிலையாலழிவு, அரிப்பு, திணிவுத் தேய்வு என்ப வற்றின் கூட்டுத்தாக்கத்தின் விளைவாக, நிலப்பரப்பு பெரும்

அரிப்பு வட்டம் 279
பாலும் முற்றாகத் தேய்க்கப்படுவதனால் ஆறரித்த சமவெளி என்னும் நிலவுருவம் உண்டாகிறது. இளமை, முதிர்ச்சி, முதுமை என்னும் நிலைகள் தேய்வுக்குட்பட்ட நிலத்திணிவின் அவ்வப் பேரதைய நிலைமையை மட்டும் உணர்த்துமேயன்றி, அதன் மேல் செயல்படும் கருவியின் நிலையையும் உணர்த்தாது. ஆயின், நிலமும் கருவியும் ஒரு குறுகிய காலத்திற்காவது ஒரே நிலையிலிருத்தல் சாத்தியமே. மேலும், நிலம் இளமைநிலை யிலிருக்கும்போது ஆறு முதிர்ச்சியடைதலும் நிலம் முதிர்ச்சி நிலையிலிருக்கும்போது ஆறு இளமை நிலையிலிருத்தலும் சாத் தியமானதாம். எனவே நி ல த் தின் தேய்வுநிலையை அளவு கோலாகக்கொண்டு ஆற்றின் நிலையையோ ஆற்றின் நிலை யைக்கொண்டு நிலத்தின் தேய்வு நிலையையோ தீர்மானித்தல் 6მმ) მიმGჭart — நிலைமைகளிலன்றி எப்பொழுதும் சாத்தியமான தும் சரியானதுமல்ல. ஆகவே, ஆற்றின் செயல்களைக்கொண்டு அதன் நிலையையும் , நிலவுருவங்களின் தன்மைகளைக்கொண்டு அவற்றின் நிலையையும் நிர்ணயித்தலே சரியான முறையாகும்.
வட்டத்தின் போக்கில் குறுக்கீடுகள் ஏற்படுதல் சாத்தியம். அவற்றை உணர்த்தும் நிலவுருவங்கள் தனியானவை.
இனி, இயல்பான அரிப்பு வட்டத்தை அதன் பல வேறு நிலைகளுடனும் தொடர்புபடுத்தி நோக்குவோம்
டேவிஸ் நிலவுருவங்களின் ஒழுங்குமுறையான வளர்ச்சியை எளிதாகவும் தெளிவாகவும் விளக்குவதற்கு உதவுமென்பதி னால் பின்வரும் நிலைமைகளின் அடிப்படையில் தமது வட்டக் கொள்கையை வகுத்தார். அந்நிலைமைகளாவன (1) மேலு பர்த்தப்படும்நிலம் சாதாரண கிடையான அமைப்பையுடைய தாயிருத்தல். (2) மேலுயர்ச்சி குறுகிய காலத்தில் ஒ ர ள வு விரைவாக நிகழ்ந்த பின்னர் நீண்டகாலம் நிலம் உறுதி நிலை யிலிருத்தல், (3) வட்டம் ஒடும்காலத்தில் காலநிலை ஒரு சீராகக் காணப்படுதல், (4) மேலுயர்ச்சி முற்றுப்பெற்ற பின் னரே அரிப்பு நிகழ்தல். -
மேற்கூறப்பட்ட நிமைமைகளுக்கிசைய மேலுயர்த்தப்பட்ட ஒரு நிலப்பரப்பின் வாழ்க்கையை விளக்க முற்பட்ட (ჭ| || იმეგეზ) அதை மூன்று நிலைகளாக வகுத்துப் பின்வருமாறு கூறுகின் றார். 'மேலுயர்த்தப்பட்ட நிலப்பரப்பு அதிகரிக்கும் தரைத் தோற்றத்தோடு கூடிய குறுகிய இளமைக்காலத்தையும் அதி

Page 146
280 புவிவெளியுருவவியல்
கரித்துள்ள வேறுபட்ட தரைத்தோற்றத்தையுடைய ஒர் இடைக் காலத்தையும் எல்லையற்று நீண்டதும் மிக மெதுவாக மாறு வதுமான முதுமைக்காலத்தையுமுடையதாயிருக்கும்' ஆனால் முன் கூறப்பட்ட நிலைகள் தனியாகப் பிரிக்கப்படமுடியாத வையாகப் பெரும்பாலும் ஒன்றுடனொன்றிணைந்தே காணப் படும் எனவும் டேவிஸ் கூறியுள்ளார்.
முன்னரே குறிப்பிட்டதுபோல் கிடையான அமைப்பை யுடைய நிலம் ஒரளவு விரைவாக மேலுயர்த்தப்பட்டதெனக் கொள்வோம். மேலுயர்ச்சி முற்றுப்பெற்றவளவில் அ ரி ப் புக் கருவிகள் தொழிற்படத் தொடங்கும். மேலுயர்ச்சியின் பின் னர் மழை பெய்யும்போது பல நீரரிபள்ளங்கள் உருவாகும். அவை படிப்படியாக விருத்தியடைந்து இணைந்து ஒரு சில அருவிகளாகப் பாயும். தொடக்க நிலப்பரப்பின் சாய்வுக்கிசை வாகப் பாயும் அவ்விளைவருவிகளின் போக்கு, இறக்கங்கள், ! வெளியரும்பும் வன்பாறைகள் முதலியவற்றின் வி ைள வர் க ஒழுங்கானதாயமையாவிடினும், காலப்போக்கில் அத்தகைய ஒழுங்கீனங்கள் அகற்றப்பட்டுவிடும். இவ்வாறு வடிகால் நிலை பெறுவதைத் தொடர்ந்து, வடிகால் விருத்தியும் அமைப்புக் கிசைவாதலும் நிகழும். அமைப்புக்கிசைவாதல் அருவிக்கவர்வு, ஆற்றுச்சிறை என்பவற்றின் மூலம் ஏற்படும். அதற்குப் பாறை யமைப்பு உதவியர்யிருக்கும். ஆற்றுச்சிறை பெரும்பாலும் பின்விளைவருவிகளினாலேயே உண்டாகிறது. இதனால் அவை காலப்போக்கில் ஏனைய அருவிகளைவிட முதன்மை பெறும்.
வடிகால் விருத்தியைத் தொடர்ந்து அமைப்புக்கிசைவாதல் நிகழும். அதனுடன் இணைந்த இன்னொரு செயல் சமநிலை யடையும் செயலாம். சமநிலையெனின் அரிப்பிற்கும் ப டி வு செய்தலுக்குமிடையில் நி ல வு ம் சமநிலையே என டேவிஸ் கூறினார் சமநிலைத்தன்மையேற்படும்வரை நிலைக்குத்தரிப்பு முதன்மையுடையதாயிருக்கும். அது படிப்படியாக வலுவிழந்து போகப் பக்கவரிப்பு முக்கியத்துவமடையும். பள்ளத்தாக்குச் சாய்வுகள் வானிலையாலழிதலும், ஆற்றிலுருவாகும் மியாந்தர் களின் அரிப்பும் பள்ளத்தாக்கு அகலமாக உதவும். இவ்வாறு அகலமாகும் பள்ளத்தாக்கில் ஆறு அங்குமிங்குமாக அசைந்து செல்வதனாலும் அவ்வப்போது படிவு செய்வதனாலும் அடை யலை அதிகமாகக் கொண்டஒரு வெள்ளச்சமவெளி உருவாகும்.
வெள்ளச்சமவெளி உருவாதலைத் தொடர்ந்து நிலம் மெது வாக அரிக்கப்படினும், அது காலகதியில் பரந்த தட்டையான ஒரு அரிப்புச்சமவெளியாக உருப்பெறும். அந்நிலையிலும் அதில் ஆங்காங்கு வன்பாறைத் தனிக்குன்றுகள் காணப்படலாம்.

அரிப்பு வட்டம் 281
இனி பள்ளத்தாக்கின் பக்கச்சாய்வுகளில் வட்டத்தின்போது ஏற்படும் படிமுறையான மாற்றங்களை நோக்குவோம். சாய்வு களின் தேய்வு வானிலையாலழிவினாலேயே பெரும்பாலும் ஏற்படுகிறது. வானிலையாலழிவினாலுருவாகும் உ ைட கற் குவை சாய்வுகள் குத்தாகவிருக்கும் காலத்தில் எளிதாக நீக் கப்பட்டுவிடும். ஆனால் சாய்வு குறையும்போது உடைகற்குவை நீக்கப்படாமல் ஆங்காங்கு காணப்படலாம். ஆயினும் அதுவும் படிப்படியாகச் சமநிலையடைந்து விடுகிறது. அந்நிலையில் மேற்சாய்வுகளிலுள்ள உடைகற்குவை தடையின்றி ஆற்றி ற் சென்றுவிழும். ஆயின் இச்சமநிலை சிறிது காலத்திற்கு மட்டுமே நிலவும். ஏனெனில் சாய்வுகளின் தேய்வு அதிகரித்த பின்னர் சாய்வுக்கோணம் வீழ்ச்சியடையும்போது உடைகற்குவை முற் றாக நீக்கப்படாமல் ஆங்காங்கு குவிவதனால் கீழிரு க் கும் பாறைகள் வானிலையாலழிவினின்றும் பாதுகாக்கப்படுகின்றன என்க. இவ்வாறு சமநிலையடைந்த ஆறும் சமநிலையடைந்த சாய்வுத்தேய்வுப்பொருட்களும் இணைந்து நிலத்தின் தேய்வு விகி தத்தை மிகக் குறைந்துவிடும். இதனால் ஆறரித்த சமவெளி உருவாதற்கு அதிக காலம் தேவைப்படும். ஏனெனில் நிலத்தை மட்டமாக்குவதில் ஆற்றரிப்பும், பக்கச்சாய்வுகள் மட்டமாகுத லுமே சிறப்பான பங்குபெறும் செயல் முறைகளாகவுள்ளன.
மேல் விபரிக்கப்பட்ட முறையில் நிலவுருவங்கள் உருவாகும் எனக்கூறிய டேவிஸ் அவற்றை இளமைநிலை, முதிர்ச்சிநிலை, முதுமைநிலை எனப்படும் மூன்று நிலைகளுடன் தொடர்புறுத்தி କ୍ଷୋଜt $ଈଇit to ii'). -
18.4 இளமை
அரிப்பிற்குட்பட்ட நிலம் இந்நிலையிலிருக்கும் போது ஈராற் றிடைநிலங்கள் தடையுச்சியுடையனாவகவும் பள்ளத்தாக்குகள் குத்தானவையாக V போன்ற பக்கப்பார்வையுணவாக வும் விளங்கும். அவற்றில் மலைஇடுக்குகளும் ஆற்றுக்குடைவுக களும் காணப்படலாம். ஆனால் வானிலையாலழிதழின் விளை வாகப் பள்ளத்தாக்குச் சாய்வுகள் படிப்படியாக தேயும்போது, ஈராற்றிடைநிலம் அதன் தட்டைத் தன்மையையிழந்து கூரிய உச்சியையுடையதாகிவிடும். இவ்வாறு தொடக்கத்திலிருந்த தரைத்தோற்றத்தையுணர்த்தும் அடையாள்ங்கள் அனைத்தும் நீக்கப்பட்டிருக்கும் நிலையே முதிர்ச்சியின் முதல் நிலையாகும். டேவிஸ், பள்ளத்தாக்குச் சாய்வுகள் சமநிலையிலுளள தேய்

Page 147
282 புவிவெளியுருவவியல்
வுப்பொருட்களினால் மூடப்பட்டிருக்கும் நிலையே முதிர்ச்சி யின் தொடக்கமெனக் கூறினார். அவர் கூற்றின்படி, மிக உயர்ந்த தரைத்தோற்றத்தையுடைய பிரதேசங்கள் அருவிக ளும் சாய்வுகளும் சமநிலையடைதற்கு முன்னரேயே முதிர்ச்சி யைக் காட்டும்; தாழ்வான தரைத்தோற்றத்தையுடைய பிர தேசங்களில் தொடக்கத்திலிருந்த நிலப்பரப்பு முற்றாக நீக்கப் பட முன்னரேயே அருவிகளும் சாய்வுகளும் முதிர்ச்சியடையும் எனவே சராசரித் தரைத்தோற்றத்தையுடைய பிரதேசங்களில் நிலமும் அருவிகளும், சாய்வுகளும் பெரும்பாலும் ஒரே சமயத் திலேயே முதிர்ச்சியடையக் கூடும்.
18.5 முதிர்ச்சி நிலை
இளமை நிலையின் தொடக்கத்தில் கூரான உச்சிகளுடனி ருந்த ஈராற்றிடை நிலங்கள் படிப்படியாகத் தேய்ந்து இந் நிலையில் வட்டஉச்சியையும் வளைவான குவிந்த சாய்வுகளையு முடையானவாக மாறிவிடுகின்றன. அதேசமயம் ஆறுகள் தரையமைப்புக்கேற்புடையதாகத் தம்போக்கை அமைத்துக் கொள்ளும். இவ்வாறு ஆறுகள் தம்மை அமைப்புக்கிசைவாக்கும் செயலில் கூடுதலாக ஈடுபடுதலே முதிர்ச்சி நிலையை உணர்த்தும் முக்கியமான அறிகுறி என டேலிஸ்கூறியுள்ளார்.
முதிர்ச்சிநிலையில் பள்ளத்தாக்குகள் படிப்படியாக அகல மாகும் போது மியாந்தர்கள் அதிமாகத் தோன்றவும் வெள் ளச்சமவெளி உருவாகவும் முடிகின்றது. பிரதான ஆறும் அதன் கிளைகளும் சமநிலையடைதலைத் தொடர்ந்தே வெள்ளச்சம வெளி உருவாகும். பிரதான ஆறும் கிளைகளும் சமநிலை யடைதலும் வெள்ளச்சமவெளி காணப்படுதலும் முதிர்ச்சிநிலை யின் இன்னொரு சின்னமாகக் கொள்ளப்படுகின்றது. முதிர்ச்சி நிலையின் பிற்பகுதியில் பிரதான ஆறு மட்டுமன்றி ஈரலிப் பான வானிலையின் போது தோன்றும் சிறு நீரரிவாய்க்கால் களும் சமநிலையடைந்துவிடும். மேலும் அந்நிலையில் நிலப்பரப்பு முழுவதையும் கழிவுபொருட்கள் மூடியிருப்பதுடன் சாய்வுகளும் மென்மையாக மாறிவிடும்.
18.6 முதுமைநிலை
இந்நிலையின்போது நிலவுருவங்கள் தாழ்ந்து காணப்ப டும்; சாய்வுகள் உடைகற்குவையினால் மூடப்பட்டிருக்கும். உடைகற்குவையிலிருந்து உருவாகிய மண் ஆழமானதாகக் காணப்படுதலும் முதுமைநிலையின் சின்னமாகுமென டேவிஸ் கூறியுள்ளார். வானிலையாலழிவு மேற்கொண்டு நிகழின் சாய்
േ

அரிப்பு வட்டம் 283
リ、"#%ー。ー一ー
ሥ ዳ ኅራ ബ
... ... & f /*ッ。 து 'க்ஷ கடி
އެތަހ / {{" 11 ܔܗ .."
e
ബ
&
sop
শু৪৯৭
--
ബ
படம்: 53 ஆறரித்த சமவெளி
வுகளின் கோணம் குறைந்துவிடுவதனால் ஆறுகள் வெள்ளச் சம வெளியில் அலைந்து செல்லும். இந்நிலையில் தடிப்பான வண் டலின்மேல் ஆறுகள் பாய்வதனால் அவற்றின் போக்கு அமைப் புச்கிசைவாயிருக்காது. மேலும் இப்போது தரைத்தோற்றம் குறைவாயிருப்பதன் காணமாக மழைவீழ்ச்சியும் குறைவத னால் தலைப்பக்க நீரும் அற்றுப்போய்விடுகிறது. இதனால் சில அருவிகளின் நீளமும் குறையலாம். அத்துடன் வண்டல் மண்ணும். அதிக நீரை உறிஞ்சிவிடும். ፲U,MI ... )
முதுமைநிலையில் ஈராற்றிடை நிலங்கள் தேய்ந்துபோப் விடப் பிரதான நீர்பிரிநிலம் காணப்பட்ட் இடங்களில் முற்றா கத் தேய்க்கப்படாத வன்மையான சில குன்றுகள் காணப்பட லாம், அவை " எச்சக்குன்றுகள் எனப்படும். இவ்வாறு ஆங்காங்கு சிறு மேடுகளுடன் பெரும்பாலும் சமநிலமாகவே காட்சியளிக்கும் அத்தரைத்தோறறம் ஆதரித்த சமவெளி யெனப்படும்.

Page 148
284 புவிவெளியுருவவியல்
படம் 54 அரிப்பு வட்டம் (After Davis)
அ, ஆ, தொடக்கநிலைத் தரைத்தோற்றம். இ. ஈ. உச்சநிலைத் தரைத்தோற்றம்.
படம் 54 அரிப்புவட்டத்தை வரைப்பட முறையிற் காட்டு கிறது. தொடக்கநிலையில் விளைவருவிகளின் நிலைக்குத் தரிப் பின் விளைவாகப் பள்ளதாக்குகள் ஆழமானவையாகக் காணப் படுகின்றன. ஆனால் ஈராற்றிடைநிலங்கள் அதிகமாகப் பாதிக் கப்படவில்லை. அஃதாவது பக்கவரிப்பு நிலைக்குத் தரிப்ப லும் குறைவாகவே நிகழ்கிறது என்பதாம். இக்காரணத்தி னால் தரைத்தோற்றம் அதிகரித்துச் செல்கிறது. படத்தில்
அ, ஆ, எனக்குறியிடப்பட்டபகுதி தொடக்கத்திலுள்ள
தரைத்தோற்றத்தினளவைக் காட்டுகிறது, ஆ, ஈ என்ற
கோடு பள்ளத்தாக்கினடிப்பாகத்தையும் அ. இ. என்றகோடு உச்சிகளின் உயரத்தையும் உணர்த்துகிறது. நிலத்திணிவு
முதிர்ச்சியடையும்போது அல்லது அதற்குச் சற்றுமுன்னர்
தரைத்தோற்றம் உச்சநிலையில் ( ஆகக்கூடியதாக ) உள்ளது
படத்தில் இ, ஈ, தரைத்தோற்றத்தின் உச்சநிலையைக் குறிக் கின்றது. இதன் மேல் ஈராற்றிடைநிலத் தேய்வும் பள்ளதாக்கு ஆழமாக்கலும் அதிகமாக நிகழ்வதனால் தரைத்தோற்றம் படிப்படியாகக் குறைகிறது. வளைகோடுகள் ஒன்றையொன்று நெருங்கிவருவதல் அந்நிகழ்ச்சியைக் காட்டுகிறது. இதற்குப் பின்னர், பக்கவரிப்பும் பக்கத்தேய்வும் முதன்மை பெறுவத னால் ஈராற்றிடை நிலங்கள் படிப்படியாகத் தேய்ந்து செல்
லத் தரைத்தோற்றமும் குறைந்து சென்று இறுதியில் மென் மையான சாய்வுகளையுடைய ஒரு ஆறரித்த சமவெளி உரு வாகும்.
 

அரிப்பு வட்டம் 285
18. 7 அரிப்புவட்டத்தில் குறுக்கீடுகள்
அரிப்புவட்டத்தின் வாழ்க்கையில் இடையூறுகள் அல்லது குறுக்கீடுகள் ஏற்பட்டால் அதன் போக்குத் தடைப்பட்டுப் புதிய அரிப்புவட்டம் தொடங்கப்படலாம். ஆனால் அத்த கைய இடையூறுகள் சிறிய அளவில் ஏற்படுவதனாலோ, அன் றிச் சிறிய பிரதேசத்தை மட்டும் பாதிப்பதனாலோ உண்டா வது சிறுவட்டம் ' எனப்படும். இவ்வாறு ஒரு அரிப்புவட்டத் தின் வாழ்க்கையில் தலையிடக்கூடிய இடையூறுகள் குறுக்கீடு களை நன்னிலை நீரசைவுகள், காலநிலை மாற்றங்கள், எரி மலையுயிர்ப்பு என மூன்றாக வகுப்பர். நன்னிலை நீரசைவு கள் கடல்மட்டத்தில் மாற்றங்களை உண்டாக்கும் கடல் மட் படம் வீழ்ச்சியடைதலை எதிரசைவு என்றும், கடல்மட்டம் உயர்வதை நேரசைவு, எனவும் குறிப்பிடுவர் எதிரசைவுகளின் விளைவாகப் புதிய நிலம் வெளிப்படும். காலநிலையில் ஏற்படும் மாற்றங்களின் விளைவாகப்பணிக்கட்டியாறாதல் நிகழலாம். அல்லது பாலைநிலத்தன்மைகள் தோன்றலாம். அன்றியும் எரி மலையுயிர்ப்பின் விளைவாகவும் புதிய வட்டம் ஏற்படலாம்.
18, 8 நேரசைவுகளின் விளைவுகள்.
அரிப்பு வட்டம் செயல்பட்டுக்கொண்டிருக்கும் காலத்தில் எக்காரணத்தாலாயினும் கடல்மட்டம் உயருமாயின் ஆற்றுப் பள்ளத்தாக்கின் ஒருபகுதி கடலுள் அமிழ்ந்துவிடும். அவ்வாறு அமிழ்ந்தும் பிரதேசம் கரடுமுரடான மலைப் பிரதேசமாயின், முன்பிருந்த பள்ளத்தாக்குகள் நீள்குடாக்களாகும் வடமேல் ஜரோப்பாவில் ஆங்காங்கு அவற்றைக்காணலாம். அமிழ்ந்திய ஆற் றுப் பள்ளத்தாக்குகள் வன்பாறைப்படைகளில் அமைந்திருந்தால் நீள்குடாக்கள் சாதாரணமானவையாய் நீண்டுகாணப்படும். தென்கீழ் அயர்லாந்தில் காணப்படுவன இவ்வகை நீள்குடாக் களாம். பள்ளத்தாக்குகள் அமைப்பிற்குக் குறுக்காக இருந்தி ருந்தால் நீள்குடாக்கள் நேரின்றியும் பல பக்கக் குடாக்களை புடையனவாகவும் காணப்படும். அவை அமைப்பிற்குச் சமாந்தரமாக இருந்தால் அமிழ்தலைத் தொடர்ந்து தொடர்ச் சியான பல நீண்டதீவுகள் கரைக் கோட்டிற்குச் சமாந்தர மாகத் தோன்றும். இவை முன்பிருந்த பாறைத் தொடர்க ளைக் குறிக்கும். யூகோசிலாவியக் கரையும் தென் சில்லிக் கரையும் இவ்வகையைச் சேர்ந்தவை. இவை இணங்கிய கரைகள் எனப்படும்.

Page 149
286 புவிவெளியுருவவியல்
பதிவான தரைத்தோற்றமுடைய ஒரு தாழ்நிலம் அமிழ்ந்து மாயின் அதன் விளைவாக ஆற்றுவாய்ப்பகுதி பொங்குமுகமாக மாறும் பொங்குமுகங்களிற் பாயும் ஆறுகள் முதுமைநிலையை யடைந்திருப்பின் மணற்றடைகள் போன்றவை உண்டாவதனால் பொங்குமுகம் மண்டியினாலும் வண்டலினாலும் நிரப்பப்பட்டு விடுதலுமுண்டு. ஆனால் தேம்ஸ் , ஹம்பர் போன்ற சில ஆறுகள் தமது பொங்குமுகத்தை ஆழமாக வைத்திருக்கின்றன. நேரசைவு களின் விளைவாகத் தீவுகளும் தோன்றலாம். அத்துடன் பள்ளத் தாக்கின் கீழ்ப்போக்கில் படிவுசெய்தலும் அதிக அளவில் நிகழும்.
18.9 எதிரசைவுகளின் விளைவுகள்
எதிரசைவுகளின் விளைவாகப் புதியநிலம் வெளிப்படுவதைத்
தொடர்ந்து ஆறு புத்துயிர்ப்படைதலினால் பல முக்கியமான விளைவுகள் உண்டாகும். எதிரசைவுகளின் விளைவாக உண்டா
கும் நிலவுருவங்கள் (1) உயர்த்தப்பட்ட கடல்சார்நிலம், கடல்
மேடை (2) ஆற்றுப்படிகள் (3) குறுக்குமுகப் பார்வையில் ஏற்
படும் முறிவுகள் (முறிவுத்தளங்கள்) (4) ஆழவெட்டுண்ட மியாந்
தர்கள் என்பனவாகும்.
18, 9 (i) உயர்த்தப்பட்ட கடல்சார்நிலமும் கடல்மேடையும்
கடல் நீண்டகாலமாக அரிப்பிலீடுபட்டிருந்திருக்குமாயின் எதிரசைவைத் தொடர்ந்து உயர்த்தப்பட்ட கடல்சார்நிலம் தோன்றலாம். இந்நிலம் அரிக்கப்பட்ட ஒரு மேடையை அடித் தளத்திற்கொண்டதாகக் காணப்படலாம். அதில் கடற்கரைப் படிவுகள் காணப்படலாம் அல்லது காணப்படாதுமிருக்கலாம். சாதாரணமாக 50 மீ மட்டத்திற்குக்கீழ்க் காணப்படுவனவற்றை உயர்த்தப்பட்ட கடல்சார்நிலமென்றும் அதற்கு மேலுள்ள வற்றை கடல்மேடைகள் கடலரிப்புச் சமநிலங்கள் எனவும் குறிப்பிடுவர். இவ்வகை மேடைகளில் படிவுகள் காணப்படுவ தில்லை. ஆனால் பொதுவாக உயர்த்தப்பட்ட கடல்சார்நிலங் களில் படிவுகள் காணப்படுவது வழக்கம். உயர்த்தப்பட்ட கடல்சார்நிலங்களை இங்கிலாந்தின் தென்மேல் கரைகளிலும் ஸ்கொத்லாந்தின் மேற்குக்கரையிலும் காணலாம் உயர்த்தப் பட்ட கடல்மேடைகளைப் பொறுத்தமட்டில் அவை கடல்மட்ட வீழ்ச்சியினாலுண்டாகியவையா அல்லது நிலவுயாச்சியின் விளை வாகத் தோன்றியவையா என்பதையிட்டுக் கருத்துவேறுபாடுகள் உள்ளன. எனினும் அவை எதிரசைவுக்குரியவை என்ற கருத்துக்கு அதிக ஆதரவுள்ளது. «

அரிப்பு (6) u li Li Li 287
8. 9 ( ii ) ஆற்றுப்படிகள்
இவை ஆறுகளின் நெடும்பக்கப்பார்வையிலுள்ள முறிவு களுடன் நெருங்கிய தொடர்புள்ள அம்சங்களாம். ஒர் ஆறு போதியகாலம் செற்பட்டு ஒரு அகன்ற வெள்ளச்சமவெளியை உருவாக்க முன்னர் புத்துயிர்ப்படையுமாயின் அதன்விளைவாகப் பக்கச்சாய்வில் சாய்வுமுறிவுகள் மட்டும் காணப்படும். இத்தகைய சாய்வுமுறிவுகளை அடையாளங்காணுதல் எப்பொழுதும் எளிதன்று.
ஆனால் புத்துயிாப்படையுமுன்னர் வெள்ளச்சமவெளி யுடன் காணப்பட்ட ஒரு ஆறு கடல்மட்ட வீழ்ச்சியைத் தொடர்ந்து புத்துயிர்ப்படைந்து கீழ்வெட்டலில் ஈடுபடுமாயின் அதன் முன்னைய வெள்ளச்சமவெளியின் பக்கங்கள் படிகளைப் போல எஞ்சிநிற்கும். இவையே ஆற்றுப்படிகளாம். இதன்மேல் ஆறு பழைய பள்ளத்தாக்கினுள்ளே வேறொருபள்ளத்தாக்கை உருவாக்கலாம். இவ்வாறு பள்ளத்தாக்கினுள் பள்ளத்தாக்கை உருவாக்கி அதிற்பாயும் காலத்தில் மீண்டும் எதிரசைவுகள் ஏற்பட்டால் இரண்டாவது பள்ளத்தாக்கினிருபுறத்திலும் படி கள் உண்டாகும் இவ்வாறு உருவாகும் படிகள் பெரும்பாலும் சோடி சோடியாக ஒரே உயரமட்டத்தில் காணப்படுவது வழக்க மாதலின் இவற்றை இணையானபடிகள் அல்லது ஒத்த மட்டப் படிகள் எனக்கூறுவர். "தேம்ஸ் நதியில் இவ்வகையான 3 சோடிப் படிகள் காணப்படுகின்றன. பொதுவாக ஆற்றின் புத்துயிர்ப் பினால் தோன்றும் படிகள் திண்மையான அடித்தளப்பாறையில் வெட்டப்பட்ட மேடைகளைப்போல அமைவதோடு பரல், மணல், வண்டல் ஆகிய படிவுகளுடன் காணப்படும்.
மேற்குறிப்பிட்ட இணையான படிகளைத்தவிர இணையற்ற படிகளும் சிலவேளைகளில் உருவாகின்றன. பொதுவாக, நிலத் தின் மேலுயர்ச்சி இடைவிட்டு ஏற்படும்போது இணையான படி களும், தொடர்ச்சியாக நீண்டகாலம் நிகழும்போது இணையற்ற படிகளும் உருவாகலாம். இணையற்றபடிகள் உருவாகுவதாயின் ஆற்றின் கீழ்வெட்டல் குறைவாகவும் பக்கஅசைவும், அரிப்பும் அதிகமாகவும் காணப்படவேண்டும்.
ஒர் ஆறு புத்துயிர்ப்படைவதைத் தொடர்ந்து அதிற் காணப்பட்ட மியாந்தர்கள் உள்வளர்ந்து காணப்படுமாயின் அம்மியாந்தர்களுக்கு மேலுள்ள சாய்வுகள் நழுவும் சாய்வுக ளாக அமையும். அத்தகைய நழுவும் சாய்வுகளைக்கொண்ட

Page 150
288 புவிவெளியுருவவியல்
ஒரு பள்ளத்தாக்கு இணையற்றபடிகள் உருவாதற்கு ஏற்ற நிலைமைகளையுடையதாம். அன்றியும் ஒருஆறு ஒருசீரியக்க நிலையையடைந்த பின்னர் ஒழுங்கற்ற பருமனையுடைய பொருட்களை ஒரளவு குத்தானசாய்வில் கொண்டுசெல்லும் போது ஒரு வெள்ளச்சமவெளியை உருவாக்கலாம். பின்னர், நிலம் தேய்வடைவதனாலும், சுமையின் பரிமாணங்கள் குறை வதனாலும் அது மென்சாய்விலும் பாய்தல்கூடும். அப்போது அது பக்கவரிப்பிலும் ஈடுபடுமாயின் அதன் மூலம் இணையற்ற படிகள் தோன்றலாம்.
18.9 (i) முறிவுத்தளங்கள்
புத்துயிர்ப்படைந்த ஓராறு கீழ்வெட்டலிலீடுபடும் தொடக்க எல்லை(தலை) யை இத்தளம் குறிக்கும். இத்தளத்தில் ஒத்தமட்ட ஆற்றுப்படிகள் ஒன்றாக இணையும். இதற்கு மேலுள்ள பள்ளத் தாக்கு பழைய பள்ளத்தர்க்காகும். முறிவுத்தளங்கள் படிப்படி யாகப் பின்வாங்குவதனால் ஆற்றுப்படிகளும் பின்னோக்கி நீண்டு செல்லும் .
கடல்மட்ட வீழ்ச்சியைத் தொடர்ந்து ஆறு புத்துயிர்ப்படை பும் போது கடலுக்கு அண்மையிலேயே முறிவுத்தளம் உண்டா கலாம். அந்நிலையில் முறிவுத்தளத்திலிருந்து கடலைநோக்கிய சாய்வு ஒரளவு குத்தாகக் காணப்படும். விசேடமாக, கடல்
--AKIGKA S Eff
படம் 55 ஆற்றுப்படிகளும் முறிவுத்தளங்களும் ஆழமாயிருக்கும்போதே இவ்வாறு காணப்படும். முறிவுத்தளம் காலப்போக்கில் பின்வாங்கிச் செல்வதனால் சாய்வு மென்மை யானதாகிவிடும். கடல் ஆழமற்றதாயிருக்கும்போதும், கடல்
 
 

அரிப்பு வட்டம் 289
மட்டவிழ்ச்சி குறைவாயிருக்கும்போதும் ஏற்படும் முறிவுத்தளங் கள் சாய்வில் சிறு முறிவைமட்டும் காட்டக்கூடியன. ஆற்றின் போக்கிலுள்ள வன்பாறைகளினாலேற்படும் சாய்வு முறிவையும் புத்துயிர்ப்பாலுண்டாகிய முறிவுத்தளங்களையும் வேறுபடுத்தல் சிலபோது சிரமமானது.
18, 9 (v) ஆழவெட்டுண்ட மியாந்தர்கள்
ஒரு ஆறு புத்துயிர்ப்படைய முன்னர் மியாந்தர்களையுடைய தாயிருந்திருப்பின் புத்துயிர்ப்பின் விளைவாக ஏற்படுகின்ற கீழ் வெட்டலினால் மியாந்தர்கள் ஆழப்பதிந்துவிடலாம். இவ்வகை யான மியாந்தர்கள் எப்பொழுதும் தரைமட்டத்திற்குக் கீழேயே காணப்படும். ஆழவெட்டுண்ட மியாந்தர்களைச் சிலபோது
憩 * படம் 56 ஆழவெட்டுண்ட மியாந்தர்கள்
கிளாக வகுப்பதுமுண்டு. உன் வளர்ந்த மியாந்தர்கள் மெதுவான கீழ்வெட்டலினால் தாழ்வடையும். வன்மையான தடைபாறை கள் காணப்படுதலினால் அல்லது மெதுவான கீழ்வெட்டலினால் தான் இவை மெதுவாகத் தாழ்வடைகின்றன. மேலும் இவை கீழ்வெட்டலின்போது ஓரளவு பக்க அரிப்பிலும் ஈடுபடும். இதனால் இவை சமச்சீரற்ற பள்ளத்தாக்கையுடையனவாயிருக் கும் அகழிமியாந்தர்கள் விரைவான கீழ்வெட்டலினால் உரு வாகின்றன. இவை பக்கவரிப்பில் ஈடுபடுவதில்லை. இதனால்

Page 151
290 புவிவெளியுருவவியல்
இவற்றின் பள்ளத்தாக்குகள் சமச்சீரானவையாகக் காணப்ப
6)ւհ. உள்வளர்ந்த மியாந்தர்கள் நிலத்தின் சரிவைத் தெடர்ந்து கீழ்நோக்கி அசைவதனால் பள்ளத்தாக்குச் சாய்வு களை வெட்டி ஓங்கல்களாக்குகின்றன. ஆனால் அகழிமியாந்தர் கள் அவ்வாறு செய்வதில்லை,
உள்வளர்ந்த மியாந்தர்கள் பக்கவரிப்பின் மூலம் தமக்கிடை யுள்ள சுவடுகளைத் தனித்தகுன்றுகளாக்குவதுமுண்டு. அத்த கைய தனித்த குன்றுகளை மியாந்தர் உள்ளீடு என வழங்குவர் சில சந்தர்ப்பங்களில் மியாந்தரின் கழுத்துப் பகுதியில் அரிக்கும் நீர் சுவட்டின் கீழ்ப்பகுதியில் அதற்கூடாகச் செல்வதனால் இயற்கை வளைவுகளும் ஏற்படலாம். ஊற்றாமாகாணத்தி லுள்ள (ஐ.அ) "றெயின் போபாலம்' இம்முறையில் உருவாகி யிருக்கலாமென நம்பப்படுறது,
ஆற்றுப்படுக்கை மென்மையான பாறைகளில் நோண்டப் பட்டிருந்தால் அதில் இடைக்கிடை காணப்படும் சுவடுகள் மியாந்தர்களின் கீழ் நோக்கிய அசைவுகளால் முற்றாக நீக்கப் படலாம். ஆனால் வன்பாறைப் பிரதேசங்களில் அவை நிலைத் திருத்தல் சாத்தியமானதே.
மேல் விபரிக்கப்பட்டவாறு உள் வளர்ந்த மியாந்தர்களை யும் அகழி மியாந்தர்களையும் வகைப்படுத்த முடியுமெனினும் அவற்றிடையே வேறுபாடு காணுதல் எளிதன்று. ஏனெனில் அவ்விரண்டு வகையான மியாந்தர்களும் ஆற்றின் போக்கில் சிறிது இடைத்தூரத்திலேயே காணப்படலாம்.
18. ஆ புவிவெளியுருவவியலில் வட்டக்கோட்பாடு,
டேவிஸ் அவர்களால் வகுக்கப்பட்ட இயல்பான அரிப்பு வட்டக் கருத்து அண்மைக்காலத்தில் பல முனைத்தாக்குதலுக் குட்பட்டிருக்கிறது. அவர் ஈரலிப்பான இடைவெப்பக்காலநிலைப் பிரதேசங்களை(உம். பிரித்தானியா நியூஇங்கிலாந்து) அடிப்படை பர்கக் கொண்டே தமது இலட்சியவட்டத்தை வகுத்தார். அவ் வட்டத்திட்டம் வேறு காலநிலைப்பிரதேசங்களுக்கும் பொருந் தக்கூடியதாயிருப்பினும் நிலவுருவங்களின் பரிணாம வளர்ச்சியில் அவர் அமைப்புக்கு அதிக முக்கியத்துவம் அளித்துச் செயல் முறைக்கு அதற்குரிய சிறப்பை அளிக்கத்தவறிவிட்டாரென்பதே அவரது திட்டத்திலுள்ள பிரதான குறைபாடாகக் கூறப்படு கிறது.

அரிப்பு வட்டம் 291
டேவிஸ் நிலப்பரப்பின் தேய்வில் பக்கவரிப்புக்குப்போதிய முக்கியத்துவம் அளிக்கவில்லையெனவும் நிலத்தேய்வின் பிந்திய நிலைகளில் வானிலையாலழிதலைவிடப் பக்கவரிப்பே கூடிய முக்கியத்துவமுடையதெனவும் கிரிக்மே என்பார் குறிப்பிட் டுள்ளார். பக்கவரிப்பு வானிலையாலழிதலைவிட விரைவாகச் செயல்பட்டு அகன்ற வெள்ளச்சமவெளியை உருவாக்குவதோடு சுவடுகளையும் துண்டித்துப் பல்வேறு ஆறுகளின் வெள்ளச்சம வெளிகளையும் இணைத்து இறுதிநிலையில் ஆறரித்த சமநிலத் தைவிடத் தட்டையான ஒரு நிலத்தை உருவாக்குகிறது என அவர் கூறியுள்ளார். கிங் என்பாரின் கருத்துப்படி டேவிசின் தத்துவத்திலுள்ள பிரதான குறைபாடு இரண்டாவது நிலை யிற்றான் காணப்படுகிறது. அந்நிலையில் அரிப்பு வட்டத்தின் முக்கிய செயல்முறையாகிய சாய்வுகளின் சமாந்தரப் பின் வாங்கலிற்கு இடமளிக்காமல், வானிலையாலழிதலின் கீழ் நிலைக்குத்தான (கீழ் நோக்கிய) தேய்விற்கு அளவுக்கதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே இக்கோட் பாடு உண்மையான அவதானிப்பின் விளைவாகவன்றி, மனக் கண்ணின் பகுப்பாய்வினால் வகுக்கப்பட்டிருப்பதால் இது புவிவெளியுருவவியல் பற்றிய சிந்தனைகளைக் கட்டுப்படுத்தி அதன் விருத்தியையும் கடுமையாகப் பாதித்துள்ளது'.
டேவிசின் வட்டத்திட்டத்திற்கெதிராகத் தெரிவிக்கப்பட்ட வேறு சில கண்டனங்கள் மேல்வருமாறு.
(1) ஆறரித்த சமவெளி என்பது ஒரு கற்பனை நிலவுருவம், அத்தகைய சமவெளியை எங்கும் காணமுடியாது டேவிஸ் ஆறரித்த சமநிலம் எனக் கருதியவை உண்மையில் வேறு வகையான மட்ட நிலப்பரப்புக்கள் எனத்தெரியவந்துள்ளது அவற்றில் சில அடித்தளப் பாறைப்படை வரை மேற்பரப் பின் அழிபொருட்கள் நீக்கப்பட்ட நிலப்பரப்புகளெனவும் வேறு சில ஒன்றில் முன்னர் அடையல்களின்கீழ் புதைந்தி ருந்தபின்னர் அரித்தலினால் அவ்வடையலிகள் நீக்கப்பட்டு மேலுயர்த்தப்பட்ட நிலப்பரப்புகளாக அல்லது படிவுசெய் தலினால் உருவா கி ய நிலப்பரப்புகளாகவிருப்பதாகத் தெரியவந்துள்ளது.
(2) டேவிஸ் விரைவான மேலுயர்ச்சியைத் தொடர்ந்து நில
வுருவங்கள் படிமுறையகக விருத்தியடைதலை இயல்பான நிலைமை எனக்கருதினார். ஆனால் அது இயல்பானதன்று. ஏனெனில் மேலுயர்ச்சி முடியும்வரை அரித்தல் தாமதிக்கு

Page 152
292
3.
புவிவெளியுருவவியல்
மென வோ, மேலுயர்ச்சியின் போது அரித்தல் நடைபெறா
தென்றோ அறுதியிட்டுக் கூறமுடியாது. அன்றியும் மேலு யர்ச்சி மெதுவாகத் தொடங் கி விரைவாக நிகழலாம்.
அல்லது விரைவாகத் தொடங்கி மெதுவாக முடியலாம். இத்தகைய வேறுபாடுகளுக்கேற்ப அரித்தலும் வேறு படலாம். எனவே டேவிஸ் கருதிய முறையிலேயே நிலத் தேய்வு எங்கும் ஏற்படும் எனக்கூறமுடியாது. அவரது திட்டம் எளிமையாக்கப்பட்டதும் ஒரு விசேட நிலைமைக் குரியதுமாகும். உண்மையில் அது "கலப்புக்காலநிலைக்கே பொருத்தமானது.
டேவிசின் வட்டம் முற்றுப்பெற நீண்டகாலம் தேவை. இதனால் அது முற்றுப்பெறாமற்போவதும் இடைநிறுத்தப் படுவதும் சாத்தியம். டேவிஸ் குறுகிய கால மாற்றங் களையே இயல் பானதெனக்கருதினார். ஆனால் இன்றைய நிலவுருவங்கள் பனியுகத்திற்குப்பிந்திய பல கடல் மட்ட மாற்றங்களினால் பாதிப்புற்றிருக்கின்றன. உதாரணமாக கடந்த 100 மில்லியன் ஆண்டு காலத்தில் கடல் இன்றைய
மட்டத்திலிருந்து 200 மீற்றர் உயர்ந்தும் 450 மீற்றர்
தாழ்ந்துமிருக்கிறது.
மேலும், காலநிலை மாற்றங்கள் நீண்டகாலமாகத் தொடர் கின்றன உண்மையில் கிட்டிய புவிச்சரிதகாலங்களில் கால நிலை மாற்றங்களே இயல்பான அம்சங்களாயிருந்துள்ளன
எனவே, அத்தகைய மாற்றங்கள் வட்டமுறையன நிலவுருவ
விருத்தியிற் குறுக்கிட்டு அதன் போக்கை மாற்றக்கூடியன
aff)
டேவிசின் இயல்பான அரிப்பு வட்டம் நிலவுருவங்களின் உருவவியலை நெகிழ்ச்சியற்ற ஒரு திட்டத்தின் அடிப் படையில் நோக்குகின்றது. இதனால் அதில் இடம் பெறாத சிலவற்றை நாமே வலிந்து புகுத்த வேண்டியுள்ளது.
நிலவுருவவிருத்தி எளிமையாக்கப்பட்டு பொதுப்பட விளக் கப்பட்டுள்ளது. அறிவியல் ரீதியில் செயல் முறைகள் பற்றிச் செவ்வையாகக்கற்கப்படவில்லை; உண்மையில் அவை சிக் கலானவை. அன்றியும் வெறும் விபரண முறையிலேயன்றி அளவீட்டு முறையின் அடிப்படையில் நிலவுருவவிருத்தி விளக்கப்படவில்லை. ஸ்ராலர் கூறியதுபோல் டேவிசின் தி ட் டம் சா ய் வுக ளின் தேய்வுப்பொறிமுறையையோ
அரித்தலின் செறிவையோ நிர்ணயிக்கும் காரணிகளை
விளக்குவதற்கு உதவாது"

அரிப்பு வட்டம் 293
7
டேவிசின் வட்டக்கருத்து நிலவுருவங்களை வரலாற்று ரீதியில் வரன்முறையாகத் காலத்துடன் தொடர்புபடுத்திக் காணு தலே புவிவெளியுருவவியலின் குறிக்கோள் எ ன் ப தை வலியுறுத்துகிறது, சுருங்கக் கூறின் அவரதுகருத்தின்படி நிலவுருவவிருத்தி முற்றிலும் கா லத் தி ற் த ங் கி யு ள் ள (Time Dependent)
8. டேவிஸ், இளமை முதிர்ச்சி முதுமை என்னும் மூன்று
பிரதான நிலைகளை மட்டும் இனங்கண்டார்; ஆனால் உண்மையில் நிலத்தோற்றவிருத்தி பல படிகளை-கட்டங் களைக் - காட்டுகின்றது. அவற்றை டேவிஸ் குறிப்பிட்ட நிலைகளுடன் பொருத்தமுடியாது அன்றியும், குறிக்கப் பட்ட ஒருநிலவுருவம், இளமை முதிர்ச்சி முதுமை என்னும் மூன்று நிலைகளுக்குரிய சிற்சில அமிசங்களை ஒருங்கே கொண்டிருத்தலும் சாத்தியமானதே.
இவ்வாறு டேவிசின் வட்டக்கருத்துக்கெதிராகப் பல கண் டனங்கள் தெரிவிக்கப்பட்டிருப்பினும் அவற்றினால் அக்கருத்து முற்றாக நிராகரிக்கப்பட்டதாகக் கூறமுடியாது. ஏனெனில் அவரது திட்டத்தில் நிறைவான பல அம்சங்களும் உள்ளன. அவை மேல்வருமாறு:
1. டேவிசின் கருத்துக்கள் பிறப்பு மரபில் நிலவுருவங்களை விளக்குவதற்கு வேண்டிய அடிப்படையைக் கொடுக்கின்றன. அவர் குறிப்பிட்டது போல் 'விரிவாக்கப்பட்ட வட்டத் திட்டம் நிலவுருவங்களின் ஒருங்கான, நம்பகரமான பிறப்புமுறையிலாக் கப்பட்ட பாகுபாட்டைக் கொடுக்கிறது. அப்பாகுபாடு நாம் காணக்கூடிய உண்மைகளைத் திரட்டவும் விபரிக்கவும் உதவு கிறது. அதை விளங்கக்கூடிய பயிற்சி பெற்ற ஒருவர் பண்பட்ட ஒரு ஆய்வாளன் கொடுக்கும் விபரங்களை விளங்கவும் விளக் கவும் அது பெரிதும் உதவுகிறது.
இரண்டாவதாக, டேவிசின் வட்டத்திட்டம் ஒரு புவியிய லாளன் தான் காண்பதை உள்ளபடி காண்பதற்கும், கண்ட வற்றை விளக்குவதற்கும் ஏற்ற ஒரு சொற்தொகுதியை உதவு கிறது. உதாரணமாக, பயிற்சியற்ற ஒருவனுக்கு மலைப்பிர தேசமாகத் தெரிவது பயிற்சியுள்ள ஒருவனுக்கு முதிர்ச்சிநிலை யிலுள்ள வெட்டுண்ட மேட்டுநிலமாகக் காட்சியளிக்கலாம். மேலும் மலைப்பிரதேசம்" எனும்போது அது திட்டவட்டமான ஒரு காட்சியை எம்மனக்கண்முன் கொண்டுவரவில்லை. ஆனால்

Page 153
2.94. புவிவெளியுருவவியல்
முதிர்ச்சிநிலையிலுள்ள ஒரு வெட்டுண்ட மேட்டுநிலம் என்னும் போது அத்தொடர் நன்கு வரையறுக்கப்பட்ட சில அம்சங்களை ஒழுங்கில் தொடர்புறுத்தி நம்மனக்கண்முன் கொண்டுவருகிறது. அப்பொழுது அத்தொடர் பொருளுடையதாகிறது. எனவே நிலவுருவங்களைப் புரிந்துகொள்ளும் ஆற்றலைப் புவியியலாள னுக்களிப்பதே அத்திட்டத்தின் தனிச்சிறப்பெனலாம்.
மூன்றாவதாக, வட்டத்திட்டத்தற் கூறப்பட்ட நிகழ்ச்சி
களிற் பல உண்மையில் நிகழ்வனவென நாம் நம்பக்கூடியதா யுள்ளன. உதாரணமாக அருவிகள் அமைப்புக்கிசைவாகத் தம் போக்கை அமைத்தல், சாய்வுகளின் வானிலையாலழிவு போன் றவை எவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியவை, மேலும் வட்ட மானது திட்டத்திற்கமைய முற்றுப்பெறாவிடினும், ஒவ்வொரு நிலையுடனும் தொடர்புபடுத்தப்பட்ட நிலவுருவங்கள் அவ் வொழுங்கிலேயே அடியொற்றிச் செல்லாவிடினும் அவற்றில் குறிப்பிடத்தக்க இணக்கங்கள் காணப்படுகின்றன. என்பதை யும் வட்டம் நிலவுருவவியலின் பொதுவான போக்கைப் புலப் படுத்துகின்றதென்பதையும் எவரும் மறுக்கமுடியாது.
நாலாவதாக, வட்டக்கொள்கை, விரிவான ஒரு கட்டுக்
கோப்பின் கீழ் நிலவுருவ விருத்தியை விளங்கவும் விளக்கவும் உதவுகிறது. அக்கட்டுக்கோப்பு ஆய்விற்கும், ஒப்பீட்டுக்கும் தேவையான அடிப்படையைக் கொடுப்பதோடு நிலத்தேய்வு களின் விளைவுகளை அழுத்தம் திருத்தமாகக் கூறுவதன்மூலம்
புவிவெளியுருவவியலின் வளர்ச்சிக்குத் பெரிதும் உதவியுள்ளது,
டேவிஸ் கூறியதுபோல் 'நிலவுருவங்களை ஒழுங்குமுறையில்
கற்பதற்குக் கொள்கை அடிப்படையிலான பயிற்சி பயனுள்ளது.
அத்தகைய கொள்கை ஒன்றை வழங்குவதனால் இத்திட்டம்
சிறப்படைகிறது'
இறுதியாக, டேவின்ெ திட்டத்தின் சிறப்பம்சம் அதன் எளிமையாகும். இதனால் இது புவி வெளியிருவவியலை இலகு
வாகக் கற்பிக்கவும் நிலவுருவங்களை விபரிக்கவும் உதவுகிறது.
மேலும் இத் திட்டத்திற் கூறப்பட்ட சில கருத்துக்கள் உலகம்
முழுவதற்கும் பொருந்தக்கூடியன. உதாரணமாக மேலுயர்த்தப் பட்ட நிலத்தின் படிமுறையான தேய்வு எங்கும் ஒரே முறையி லேயே அமையும். மேல் குறிக்கப்பட்ட பல கண்டனங்களுக்
கிடையிலும் டேவிசின் வட்டத் திட்டம் முற்றாகக் கைவிடப்
படவில்லை.
எனவே இதனிலும் சிறந்ததென எவராலும் ஏற்றுக்கொள் ளக்கூடிய வேறொரு சிட்டம் வகுக்கப்படும்வரை இது புவிவெளி யுருவவியல் விளக்கத்திற்கும் பயிற்சிக்கும் பயன்படக்கூடியது
என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை.
 
 

அத்தியாயம் 19
தரைக்கீழ் நீர்
Hவியோட்டின் மேற்பகுதியிலுள்ள பாறைகளிற்றேங்கி நிற்கும் நீரும் அதன் சுற்றோட்டமும் மனிதனைப் பலவாறு பாதிக் கின்றன. தரையின் கீழுள்ள அந்நீரைக் கிணறுகள், குழாய்கள் மூலம் வெளிக்கொண்டுவந்து ப யன் படுத் து கிறோம். சில இடங்களில் பொருத்தமான பர்றையமைப்பின் காரணமாக நீர் ஊற்றுக்களாக வெளியேறுவதுண்டு இத்தகைய சில நீருற்றுக்கள் குடியேற்றமையங்களாகவுமுள்ளன. மேலும் தரைக்கீழ்ச்செல்லும் நீரானது புவியின் மேற்பரப்பில் மட்டுமன்றித் தரையின்கீழும் குறிப்பிடத்தக்க சில நிலவுருவங்கள் உருவாதற்குக் காரணமா யுள்ளது. அன்றியும், தரைக்கீழ்நீர் தாவரங்களின் வளர்ச் சிக்கும் உறுதுணையாயுள்ளது: இவ்வாறு பொருளாதார ரீதியிலும் அறிவியலடிப்படையிலும் தரைக்கீழ்நீர் முக்கியத்து வமுடையதாயிருப்பதனால் அதன் சுற்றோட்டம் சிறப்பாகக் கற்கவேண்டியதொன்றாகும்.
19. 1 தரைக்கீழ் நீரின்வகை
அடையற்பாறைகள் உருவாகிய காலத்தில் அடையல்களுக் கிடையிற் சிறைப்பட்ட நீர் பிற்காலத்தில் அவ்வகைப்பாறைகளிற் சிறிதளவு காணப்படலாம். அதை உடன்பிறந்தநீர் ( Connate water) என்பர். இவ்வாறு சிறைப்பட்டநீரில் ஒருபகுதி அடை யல்கள் இறுகித்திண்மையடையும்போதும் பின்னர் அப்பாறைகள் உருமாற்றப்படும்போதும் வெளியேற்றப்பட்டுவிடுகின்றது. பாறை குழம்பு அசைவதினாலும் இடம்பெயர்வதினாலும் வெப்பமான தும் கணிப்பொருட்கலப்புள்ளதுமான நீர் சிறிது வெளியேற்றப் படுகிறது. இது பாறைக்குழம்புநீர் அல்லது இளைய நீர் (Juvenile water) எனப்படுகிறது. இவற்றைத் தவிரக் கடலையடுத்த பிர தேசங்களில் கடல்நீர் பாறைகளுட்சென்று தங்கிவிடுவதுமுண்டு. ஆனால் மேற் கூறப்பட்ட மூவகை நீரையும்விட விண்விழ்நீரே அளவிலும் முக்கியத்துவத்திலும் அதிகமாயுள்ளது.

Page 154
296 புவிவெளியுருவவியல்
19. 1 (i)6álsdórsfjöú (Meteoricwater)
மழை, மழைப்பணி என்பவற்றின்மூலம் கிடைப்பது விண் வீழ்நீர் எனப்படுகிறது. இவ்வாறு பெறப்படுவது முழுவதுமே தரைக்கீழ்ச்சென்று விடுவதில்லை. அந்நீரில் ஒருபகுதி பலவழி களிற் செலவாகிவிடுகிறது. உதாரணமாக விண்வீழ்நீரில் ஒரு பகுதி தரையின் மேற்பரப்பில் வழிந்தோடிச்சென்று அருவிகள், ஆறுகள், வாய்க்கால்கள் முதலியவற்றின்மூலம் கடல் அல்லது ஒரு ஏரியையடைகின்றது; இன்னொருபகுதி வெப்பத்தினால் ஆவியாகமாறி வளிமண்டலத்துடன் மீண்டும் கலந்து விடுகிறது: வேறோர்பகுதி தாவரங்களாலுறிஞ்சப்பட்டு இறுதியில் ஆவியு யிர்ப்பின்மூலம் வெளியேறுகிறது. இவ்வாறு கழிந்ததுபோக எஞ் சுவது மண், உட்புகவிடுபாறை என்பவற்றுக்கூடாகத் தரைக்கீழ்ச் செல்கிறது. எனவே எந்தவோரிடத்திலும் தரைக்கீழ்ச்செல்லும் நீரினளவு அவ்விடத்தின் தரைத்தோற்றம், அங்குள்ள பாறை களின் தன்மை, தாவரப்பரம்பல், மற்றும் மழைவீழ்ச்சியினளவு நிலத்தின் சரிவு, நீராவியாகும் விகிதம் என்பவற்றினால் பெரு மளவு கட்டுப்படுத்தப்படுகிறது.
இவ்வாறு தரையினுள்ளே செல்லும் நீர் முற்றிலும் 'தரைக் கீழ்நீர்" ஆகாது (ஈண்டு தரைக்கீழ்நீர் என்பது நிலையான நிரம் பல் வலயத்திலுள்ள நீரையே குறிக்கும்.) அந்நீரில் ஒருபகுதி கிப்சம், லி மொ னை ற் முதலிய களிக்கணிப்பொருட்களையும் (களிக்கணிப்பொருட்கள் 14 சதவீதம் நீரைக்கொண்டவை) வேறு சில கணிப்பொருட்களினாக்கத்திற்கும் பயன்படுகிறது. மேலும் சிறிதளவு நீர் பாறைகளிலுள்ள நுண்ணியபுரைகளிற்றங்கிவிடுவ தோடு அவற்றுாடாக மேலிழுக்கப்பட்டு ஆவியாகவும் மாறிவிட லாம். அதேசமயம் ஊற்றுக்கள் மூலமும் சிறிதளவு நீர்வெளியேறி விடுகின்றது இவ்வாறு பலவழிகளிலும் இழந்துபோகத் தரைக் கீழ் நீராகத் தங்கியிருக்கும் நீரினளவு புவியை 30 மீற். ஆழத்துக்கு மூடப்போதுமானது என மதிப்பிடப்பட்டுள்ளது.
19, 2 தரைக்கீழ் நீரின் சேர்க்கை.
மேற்பரப்பிலிருந்து கீழ்நோக்கிச்செல்லும் நீர் மண், பாறை கள். தாவரங்களின் அழுகிய பொருட்கள் முதலியவற்றைக் கழுவிச் செல்வதனால் அதில் கணிசமான அளவு கணிப்பொருட் கலப்பிருக்கும். தரைக்கீழ் நீரிற் காணப்படும் கணிப்பொருட்களின் தன்மையும் அளவும் (1) அடித்தளப் பாறைகளின் தன்மை

தரைக்கீழ் நீர் 297
(2) தரைக்கீழ்நீர் சென்றதுரம் (3) நீரின் வெப்பம் என்பவற் றைப்பொறுத்து வேறுபடும் அந்நீர் கல்சியம் காபனேற்று, கல்சியம்சல்பேற்று, சிலிக்கா, சோடியம்காபனேற்று, சோடியம் சல்பேற்று, சோடியம்குளோறைட் மக்னீசியம் காபனேற்று, பொட்டாசியம் கூட்டுக்கள் முதலியவற்றைக்கொண்டு செல்லும், இவற்றின் கல்சியம், மகனீசியம், இரு ம் பு என்பவற்றைக் கொண்டுள்ள நீர் தடிப்பானதாயிருக்கும். -
பொதுவாக, அதிக ஆழத்திற் காணப்படும் நீர் அதிக தடிப் பாயிருக்கும் ஆற்றுநீர் கிணற்றுநீரைவிடவும் கிணற்றுநீர் ஆட் டீசிய ன் சிணற்றுநீரைவிடவும் மென்மையாயிருப்பதற்கு அவற்றில் நீர் காணப்படும் ஆழவேறுபாட்டுக்கேற்பக் கணிப் பொருட்கரைசலினளவு வேறுபட்டிருப்பதே கார ண மா கும். சேற்றுநிலம், சதுப்புநிலம் அல்லது ஈரலிப்பான காட்டுநிலப் பகுதியிலுள்ள தரைக்கீழ்நீர் அதிக அமிலத்தன்ம்ைபுடிையதா யிருக்கும். அழியும் தாவரத்தின் பகுதிகள் அமிலத்தை உண்டு பண்ணுவதே அதற்குக் காரணமாகும். ஒரு பிரதேசம் சுண்ணாம் புப்பாறை அல்லது சிதைவடையும் பாறையைக் கொண்டதாயின் அங்குள்ள தரைக்கீழ்நீர் கல்சியக் கலப்புள்ளதாகத் தடிப்பான தாயிருக்கும். அதேசமயம் மிக உலர்ந்த பிரதேசங்களிலுள்ள நீர் அதிக வெப்பத்தினால் மண்ணிலுள்ள துளைகளுக்கூடாக மேலிழுக்கப்பட்டு ஆவியாவதனால் கல்சியம் காபனேற்று. சோடியம் சல்பேற்று முதலிய உப்புக்கள் மண்ணின் மேற்படை களிற் படிந்து விடுகின்றன. இதனால் அங்குள்ள தரைக்கீழ்நீர் காரமானதாகிவிடும். கடலையடுத்துள்ள பகுதிகளிற் காணப் படும் நீர் பெரும்பாலும் உவர்ப்பானதாக விருக்கும்.
19, 3 உட்புகவிடு தன்மையும் நுண்டுளைத் தன்மையும்
எல்லாவகைப் பாறைகளையும் உட்புகவிடும் பாறைகள் உட்புகவிடாப்பாறைகள் என இருபிரிவுகளாக வகுக்கலாம். நீரைத் தமக்கூடாகச்செல்லவிடும் பாறைகள் உட்புகவிடுபாறை களெனவும் ஏனையவை உட்புகவிடாப்பாறைகளெனவும் கூறப் படும். பாறைகளின் உட்புகவிடுதன்மை இரு நிலைமைகளிற் றங்கியுள்ளது. அவை (1) நுண்டுளைத்தன்மை. (2) பிளவுடைத் தன்மை என்பனவாகும் நூண்டுள்ைத்தன்மை என்பது (i) இடை வெளியுடைய மணியுரு. (i) நொய் தா ன பொருத்து (i) பல்லுருவப் பகுபொருட்களையுடைமை என்பவற்றின் காரணமாகப் பாறையில் நுண்ணிய துளைகள் காணப்படுதலை உணர்த்துகிறது. பிளவுடைத்தன்மை எ ன் பாது பாறை யி ன் மூட்டுக்கள், வெடிப்புகள் முதலியன காண்ப்படுதலைக்குறிக்கும்.

Page 155
298 புவிவெளியுருவவியல்
பாறைகளின் நுண்டுளைத்தன்மையைச் ச த வீ த மா க வும் குறிப்பிடலாம். அஃதாவது ஒருபாறையின் கனத்தில் இத்தனை சதவீதம் இடைவெளி, (வெற்றிடம்) காணப்படுகிறதென்ப தாகும். உதாரணமாக, சாதாரண மணல், பரல் என்பவற்றின் நுண்டுளைத்தன்மை ஏறத்தாழ 35 சதவீதமாகும். கருங்கல்லின் நுண்டுளைத்தன்மை ஒரு சதவீதமாகவும், களியின் நுண்டுளைத் தன்மை 45 சதவீதமாகவும் காணப்படுகின்றது. ஆயின் களியை அமுக்கி இறுக்கினால் அதன் நுண்டுளைத்தன்மை 5 சதவீதம் வரை குறையலாம். மணல் மணற்கல், பரல் முட்டைக்கற் களையுடைய சுண்ணாம்புப்பாறை ஆகியன நுண்டுளையுடைமை யினால் உட்புகவிடும்பாறைகளாகின்றன. நில க் க ரி க் கால ச் சுண்ணாம்புப்பாறை, சோக்கு, படிகப்பார், கருங்கல் முதலியன பிளவுடைத்தன்மையினால் உட்புகவிடும் பாறைகளாகின்றன. உட்புகவிடாப்பாறைகளுக்கு உதாரணமாகச்சிலேற்று, கப்புறோ, மாக்கல், களி என்பவற்றைக் கூறலாம். இவற்றில் களி உட்புக விடாப்பாறையாயிருப்பினும் நுண்டுளையுடையது. ஆனால் ஈரமாயிருக்கும்போது அத்துளைகள் நீரினால் நிரப்பப்படுவத னால் நீர் அதற்கூடாகச் செல்லமுடியாதிருக்கிறது. எனவே நுண்டுளைத்தன்மை உட்புகவிடுமியல்புக்கு இன்றியமையாத ஒரு நிலைமையன்றென்பதை உணரவேண்டும்.
19, 4 நீர்மேடை.
தரையின்கீழ் நிலையாகத் தேங்கிநிற்கும் நீரின் மேல்மட்டம் நீர்மேடை எனப்படும். நீர் அம்மேடையையடைவதற்கு முன்னர் வேறு இருவலயங்களுகசுடாகச் செல்கிறது. அவை நிரம்பரவலயம், இடைக்கிடை நிரம்புவலயம் என்பனவாகும். தரையின் மேற்பரப் பிலிருந்து கீழிறங்கும் நீர் முதலில் நிரம்பாவலயத்திற்கூடாகச் செல்லும். ஏரிகள் அல்லது சேற்று நிலங்களிருக்குமிடங்களில் இ வ் வல ய ம் காணப்படமாட்டாது. இவவலயத்தில் பெரும் பாலும் மண் காணப்படுவதனால் மண் துணிக்கைகளுடன் உராய் வதன் விளைவாக நீரின் வேகம் தடைப்படுகிறது. மேலும் வெப் பத்தினாலும் நீர் இதிலிருந்து மேல்நோக்கி இழுக்கப்படுகின்றது. இக்காரணங்களினால் நீரின் வேகம் கட்டுப்படுத்தப்படும்போது அது மெதுவாகக் கசிந்தும் பொசிந்தும் கீழிறங்குகிறது. இவ் வாறு மண் துணிக்கைகளுக்கூடாக அலைந்து செல்லும் நீர் நிலம்பொசிநீர் எனப்படும்.
நிரம்பாவலயத்திற்குக்கீழுள்ள இடைக்கிடை நீர் நிரம்பு வலயத்தில் அதிகமழைக்காலத்தில் மட்டும் நீர் காணப்படும்;

தரைக்கீழ்நீர் 299
வரட்சிக்காலத்தில் நீர் இருக்காது. இவ்வலயம் கடற்கரை யிலுள்ள உயர்பெருக்குக் கோட்டிற்கும் தாழ்பெருக்குக்கோட் டிற்கும் இடைப்பட்ட பகுதியைப்போன்றது. நீர்மேடை என்னும் பதம் நீர் எங்கும் கிடையான ஒரு மட்டத்திற் காணப்படுகிற தென்ற தவறான கருத்தைக் கொடுக்கக்கூடியது. ஆனால் அது தரைத்தோற்றத்திற்கேற்பச் சமநிலத்தில் தட்டையாகவோ குன்றுப்பிரதேசத்தில் ஒரளவு வளைவாகவோ காணப்படலாம்
நீர்மேடை காணப்படுமுயரமானது தரைத்தோற்றம், பாறை
களின் தன்மை, காலநிலை, பருவகாலம் என்பவற்றிற்றங்கி யுள்ளது. நிரம்பல் வலயத்தின் கீழ்எல்லை உட்புகவிடாப்பாறைப் படை வரை செல்லுமாதலின் அதன் தடிப்பு இடத்திற்கிடம் வேறுபட்டுக் காணப்படும்
19. 5 நீரூற்றுக்கள்.
தரைக்கீழ்ச் செல்லும் நீர் கீழுள்ள ஒரு உட்புகவிடாப்பாறை மட்டம் வரை போகிறது. அப்பாறைப்படை சரிந்திருக்குமாயின் அந்நீர் அதன் மேற்பரப்புவழியே ஒடிவந்து நிலப்பரப்பைச் சந்திக்குமிடத்தில் (கீழ்மட்டத்தில்) ஊற்றாக வெளிப்படுகிறது. இவ்வாறு உட்புகவிடாப்பாறையும் நிலமும் சந்திக்குமிடத்தில் மெதுவாக வெளிப்படும் நீரைக் கசியும்நீர் என்பர் பெரும் பாலும் அத்தகைய நிலைமைகளில் ஊற்றுக்கள் தோன்றுவது சாதாரணமானது. ஆனால் ஊற்றுக்கள் உருவாதற்கு ஏற்ற நிலைமைகள் பலவாகும். அவற்றுட்சில பின்வருமாறு
1. வேறுபட்டபாறைகளைக் கொண்ட ஒருகுன்றில் உட்புக விடாப்பாறைகள் கிடையாகக் காணப்படின் அப்பாறைகள் வெளியரும்பும் எ ல்  ைல க ளி ல் ஊ ற் று க் கள் தோன்றலாம் (படம் 57; 1 பார்க்க )
2. குறைத்தல் நிகழ்ந்த இடங்களில் உட்புகவிடாப்பாறையும் உட்புகவிடும் பாறையும் ஒன்றுக்கொன்று எதிராக அமையுமிடங் களில் உட்புகவிடாப்பாறையோரமாக ஊற்று வெளிப்படலாம் ( படம் 57 2 )
3. சில இடங்களில் குத்துத் தீப்பாறையின் தலையீடுகாரண மாகத்தடைப்பட்ட நீர் அத்தடைபாறைமேற்பரப்பைச் சந்திக் குமிடங்களில் ஊற்றுக்கள் உருவாகலாம். (படம் 57:3 பார்க்க)
4. வன்பாறைகளுக்கிடையில் மென்பாறைகள் வெளியரும்பிக் காணப்படும் பகுதிகளில் வன்பாறைகள் மேற்பரப்பைச் சந்திக் குமிடங்களில் ஊற்றுக்கள் உருவாகலாம். (படம் 574 பார்க்க)

Page 156
புவிவெளியுருவவியல்
Ltd . 57 நீரூற்றுக்கள் உருவாகும் முறை 5. கண்ணாம்புப் பாறைப்பிரதேசங்களில் உட்செ ல் லும் நீரானது அப்பாறைகளின் மூட்டுத்தளங்கள் வழியே அரிப்பதன் மூலம் குகைகளையும் தரைக்கீழ் வாய்க்கால்களையும் உரு வாக்குவதோடு, அப்பாறைகள் கரைத்தழிக்கப்பட்ட பின்னர் கீழுள்ள உட்புகவிடாப் பாறைத்தளத்தின் வழியாகத் தரைக் கீழ் அருவியாக ஓடிச்சென்று ஊற்றாக வெளிப்படுவதுண்டு.
ή (με ή 57: 5 μπή και η)
6 எரிமலைக்குழம்பு வெளியேறுமிடங்களில் நுண் து  ைண தன்மையுள்ள அல்லது உட்புகவிடும் பாறைவலயங்களுக்கூடாக
உட்செல்லும் நீர் அப்பாறைக்குழம்பின் அடித்தளப்பகுதிக் கூடாக நீரூற்றாக வெளிவரலாம் (படம் 57 6 பார்க்க) ஐ. அமெரிக்காவிலுள்ள 65 பெரிய நீரூற்றுக்களில் 38 எரி
மலைப் பாறைப் பிரதேசங்களிற் காணப்படுவது குறிப்பிடத் ܕ ܐ . தக்கது. இவ்வாறு பல்வேறு வழிகளில் ஊற்றாக வெளிவரும்
நீர் பாறைகளிலுள்ள கணிப்பொருட் கரைசலைக் கொண்டிருப்
 
 
 
 

தரைக்கீழ்நீர் 30
பதனால் உடற்சுகத்திற்கு உகந்ததாயுமுள்ளது. ஊற்றுக்கள் நிலைத்திருப்பதற்கு நீர்மேடை தளம்பலின்றி ஒரளவு நிலையா யிருத்தல் இன்றியமையாதது.
19.6 வெப்பவூற்றுக்களும் கொதிநீரூற்றுக்களும்
எரிமலைத் தொழிற்பாடு தற்போது மெதுவாக நிகழுகின்ற அல்லது அண்மைக் காலத்தில் நிகழ்ந்த பிரதேசங்களிலேயே * வெப்பவூற்றுக்களும் கொதிநீரூற்றுக்களும் பெ ரும் பாலும் காணப்படுகின்றன. அவ்விடங்களில் புவியோட்டின் கீழ்ப்பகுதி பிலிருந்து கடும் வெப்பநிலையில் மேலெழுகின்ற நீராவியும் பிற வாயுக்களும் மேற்பகுதியிலுள்ள தரைக்கீழ் நீருடன் கலப் பதனால் அந்நீர் வெப்பவூற்றாக வெளியேறும். இரண்டாவ தாக தரைக்கீழுள்ள் பாறைகள் உருமாற்றமடையும்போது அவற்றிலிருந்து வெளியேறும் நீர் மேற்பகுதியிலுள்ள நீருடன் கலப்பதனாலும் வெப்பவூற்று உண்டாகலாம். மூன்றாவதாக விண் வீழ்நீர் தரைக்கீழ்ச் செல்லும்போது அங்கு உயர் வெப்ப நிலையிலுள்ள பாறைகளைச் சந்தித்தால் அவற்றின் மூலம் சூடாக்கப்பட்டு மேற்காவுகை முறையில் மேலெழுந்து வெப்ப ஆற்றுக்களாக வெளிப்படலாம். திருகோணமலைக்கு அண்மை யிலுள்ள (கன்னியா) வெப்பவூற்றுக்கள் (இவை இளஞ்சூட்ா னவை) இம்முறையில் உருவாகியிருக்கலாமென நம்பப்படுகிறது.
வெப்பவூற்றுக்கள் எரிமலைப் பிரதேசங்களான ஐஸ்லந்து, ஐக்கிய அமெரிக்காவில் வையோமிங் மாகாணத்திலுள்ள யெலோசு ரோன் தேசியப் பூங்கர், நியுசீலந்தின் வடதிவு முதலிய இடங்களிற் காணப்படுகின்றன. வெப்பவூற்று நீரில் உள்ளூர்ப் பாறைகளிலுள்ள கணிப்பொருட்களின் க  ைர ச ல் கணி சாமா க க் காணப்படலாம். உதாரணமாக, யெலோக ரோன் தேசியப் பூங்காவிலுள்ள சில வெப்பவூற்றுக்களின் நீரில் அப்பகுதியிலுள்ள சுண்ணாம்புப் பாறைகளிலிருந்து பெற ப் பட்ட கல்சியம் காபனேற்று கலந்துள்ளது. அது மேற்பரப்பில் தவேட்டைன் படிவுகளாக (Traverine) காணப்படுகிறது. அதே சமயம் ஊற்று நீரில் சிலிக்காக் கரைசல் அதிகமாயுள்ள இடங் களில் அது கொதிநீர்ப் படிவுகளாக (Sinter or geyserite) காணப்படுகிறது. ஆயினும் வெப்பவூற்று நீரில் 80 முதல் 90 சதவீதம் வரை விண்வீழ் நீராகவேயுள்ளது. அதே சமயம் அந்நீரிற் காணப்படும் அசாதாரணமான சில மூலகங்கள் இளைய நீரினர்ற் கொண்டுவரப்பட்டவையாயிருக்கலாமெனக் கருதப் படுகிறது.

Page 157
302 புவிவெளியுருவவியல் 19.8 கொதி நீரூற்றுக்கள்
இவை சாதாரண வெப்பவூற்றுக்களிலிருந்து வேறுபட்டவை ஏனெனில் இவற்றிலிருந்து நீர் வேகமாகவும் இடைக்கிடை மட்டுமே வெளியேறுகிறது. இவ்வாறு வெளிவரும் நீர் 100 மீற். உயரத்திற்கு மேலும் வீசப்படுவதுண்டு.
கொதிநீரூற்றுக்குரிய ஆங்கிலப் பதமாகிய Geyser) ஐஸ் லாந்தில் கெக்ளா (Hekla) என்னுமிடத்திற்கு வடமேற்கிலுள்ள ஒரு அகன்ற பள்ளத்தாக்கிற் காணப்படும் ஒரு நீரூற்றின் (Geysiா) பெயராகும். அங்கு 22 மீற். விட்டமும், 1 மீற். ஆழ மான ஒருவடிநிலத்தின் மத்தியில் 30 மீற் ஆழமான ஒரு குழாய் காணப்படுகிறது. அ த ன் கீழ்ப்பாகத்தில் 70 - 90°C வெப்ப நிலை காணப்படுகிறது. ஆயி னு ம் மேற்பகுதியிலுள்ள நீரின் அமுக்கத்தின் காரணமாக அந்நீர் எளிதாக வெளிவரமுடியா துள்ளது. இருப்பினும், முன்குறிப்பிட்ட குழாயிற் காணப்படும் சில வெடிப்புகளுக்கூடாக நீராவி தொடர்ச்சியாக வெளியேறு வதன் விளைவாகக் கீழுள்ள நீர் கொந்தளித்து வெளி யே வழிகிறது. இவ்வாறு வழியும் நீர் அடியிலுள்ள நீரில் அமுக் கத்தைக் குறைப்பதனால் கொதிநிலையிலுள்ள அந்நீர் ஆவியாகி மேலெழும்போது குழாயின் மேற்பகுதியிலுள்ள நீர் 60 முதல் 65 மீற். உயரத்துக்கு வேகமாக வீசப்படுகிறது.
வெப்பவூற்றுக்களைப்போலவே கொதிநீரூற்றுக்களும் நியூ சீலாந்தின் வடதிவு (உ- ம் வைறாகே) யெலோசுரோன் தேசியப் பூங்கா (old Faithfal) ஐஸ்லாந்து முதலிய பல இடங் களிற் காணப்படுகின்றன. இவற்றில் இறுதியாகக் குறிப்பிடப் பட்ட Old Faithful கொதிநீரூற்று மணிக்கு ஒரு முறை 38 - 45 கன மீற்றர் நீரையும் நீராவியையும் சராசரி 40 மீற்றர்
உயரத்திற்கு வீசுகிறது.
19.9 ஆட்டீசியக் கிணறுகள்
போதிய நீரியலமுக்கத்தின் கீழிருக்கும் நீர் தொடர்ச்சியாக மேலெழுந்து வெளியேறும் ஒருவகைக்கினறே ஆட்டீசியக்கின றாகும். நீர்வெளியேறும் கிணற்றின்வாய், அந்நீர் காணப்படும் மட்டத்திலும் பதிவாகவிருப்பதினாற்றான் அமுக்கம் உண்டா கிறது. ஆட்டீசியக்கிணறுகள் உண்டாவதற்குச் சாதகமான நிலை மைகள் மேல்வருமாறு: (1) மேலும் கீழும் உட்புகவிடாப் பாறைப்படைகளைக் கொண்ட சரிவான அல்லது அகன்ற

தரைக்கீழ் நீர் 303
கீழ்மடிப்பைப்போன்ற நீரேந்துபடை காணப்படுதல் (Aquifer) (2) நீரே நதுபடையின் விளிம்பு நீரேந்து நிலத்தில் வெளிப்பட் டிருத்தலும், கிணற்று மட்டத்திலும் அதிக உயரத்திற் காணப் படுதலுர் (3) போதியமழை வீழ்ச்சி (4) கிணற்றைத் தவிர வேறுவழிகளில் நீர் வெளியேற முடியாத நிலைமைகள் காணப்
till 6).
நீர் மேலும் கீழும் செல்லமுடியாத நிலையில் அதிக அமுக்கத் திற்குமுள்ளாகியிருக்கும்போது மேலுள்ள உட்புகவிடாப்பாறைப் படைக்கூடாக ஒரு கிணற்றைத் தோண்டினால் அது அக்கிணற் றுாடாக வெளியேறுகிறது. சில சந்தர்ப்பங்களில் நீர்மேடை போதிய அளவு உயரத்திலமைந்திருந்தால் நீர் ஓர் ஊற்றைப் போலத் தானாகவெளியேறுவதுமுண்டு.
ஆட்டீசன் என்னும் பெயர் பிரான்சில் இவ்வகைக் கிணறு கள் முதன்முதற் கட்டப்பட்ட ஆட்டு ( Artoius ) என்னும் மாகாணத்தின் பெயரிலிருந்து பெறப்பட்டது. ஆட்டீசியக் கிணறுகள் ஒருசில மீற். முதல் நூற்றுக்குமேற்பட்ட மீற்றர் ஆசி முடையனவாகவும் அமைவதுண்டு
படம் 59 ஆட்டீசியக் கிணறு
குறிப்பு புள்ளியிடப்பட்ட பகுதி உட்புகவிடுபாறையாகும்.
உலகிலுள்ள ஆட்டீசிய வடிநிலங்களில் மிகப்பெரியது அவுஸ் திரேலியாவில் குவீன்ஸ்லந்து மாகாணத்தின் பெரும்பகுதியை யுள்ளடக்கிக் காணப்படும் பிரதேசமாகும். அங்கு யூறாசிக் காலத்திற்குரிய மணற்பாறை நீரேந்து பாறையாயுள்ளது. அப் பாறைப்படை பல இலட்சம் சதுர கி. மீற்றர் தூரம் பரந்

Page 158
3.04. புவிவெளியுருவவியல்
துள்ளது? அங்குள்ள சில கிணறுகள் 1300 முதல் 1609 மீற். ஆழமுடையனவாகக் காணப்படுகின்றன. ஐக்கிய அமெரிக்காவி லுளள வட தென் டகோட்டா மாகாணங்களில் ஏறத் தாழ 75,00 சதுர கி. மீற். பரப்புள்ள இன்னொரு பெரிய ஆட் டீசிய வடிநிலம் காணப்படுகிறது. தென்னிந்தியாவில் தென் ஆற்காடு மாவட்டத்திலும், புதுச்சேரிப்பகுதியிலும் ஆட்டீசிய வகை ஊற்றுக்களுள்ளன. லண்டன் வடிநிலமும் ஆட்டீசிய
அமைப்பைக் கொண்டது. அங்கு சோக்கும். சிலவிடங்களில் :
மணற்பாறைகளும் நீரேந்து படையாயுள்ளன. அதற்குமேல் வண்டற்களியும், கீழே கோல்ற் களியும் காணப்படுகின்றது. லண்டன் பிரதேசத்தில் 200 முதல் 250 மீற். ஆழமுள்ளி நூற். றுக்கணக்கான கிணறுகளிலிருந்து நீர் பெறப்படுகிறது. '
ஆட்டீசியக் கிணறுகள் குறைவறட் பிரதேசங்களிலும் வரண்ட பிரதேசங்களிலும் அதிக பயனுள்ளவை. சகாராப் பாலைநிலத்திலும் பிறவற்றிலும் காணப்படும் பல பசுந்தரை கள் அவ்விடங்களில் ஆட்டீசிய முறையில் மேற்பரப்பையடை யும் நீரை அடிப்படையாகக் கொண்டுள்ளன.
19 ஆ தரைக்கீழ் நீரின் செயல் ஆ. 1. சுண்ணாம்புப்பாறைப் பிரதேச நிலவுருவங்கள்.
நிலவுருவங்களின் தன்மைகள் அமைப்பு, செயல்முறை, நிலை என்னும் மூன்று காரணிகளாற் கட்டுப்படுத்தப்படுகின்றது என W. M. டேவிஸ் கூறியுள்ளார். இக்காரணிகளின் (ი) ტურჭ} வாக்கு எங்கும் எப்பொழுதும் ஒரேயளவிலிருப்பதில்லை. பொது வாக நோக்கும்போது செயல்முறையும் நிலையும் பெரும்பாலான நிலவுருவங்களின் பிறப்பையும் அமைப்பு, அந்நிலவுருவங்களின் வகையையும் நிர்ணயிக்கின்றது எ ன் பாது உண்மையாயினும் சுண்ணாம்புப்பாறைப்பிரதேசங்கள் அவ்விதிக்கு விலக்காயுள்ளன. ஏனெனில் சுண்ணாம்புப்பாறைப் பிரதேசங்களின் உருவவியல் மற்றெவற்றையும்விட அ வற்றி ன் நீரியலுடன் நெருங்கிய தொடர்புடையதாகக் காணப்படுகிறது. சுண்ணாம்புப்பாறை மூட்டுக்களையுடையதாயிருப்பதும், நீரினால் எளிதிற் கரைக்கப் படக்கூடியதாயிருப்பதுமே அதற்குக் காரணங்களாகும் பொது வாக, சுண்ணாம்புப்பாறையானது வன்மையானதாகவும் நன்கு விருத்தியடைந்த மூட்டுத்தொகுதியையுடையதாகவும், திரளாக வும் காணப்படுகிறது. அது கல்சியம் காபனேற்று என்னும்

தரைக்கீழ் நீர் 305
இரசாயனப் பொருளினாலாக்கப்பட்டிருப்பதனால் காபனீ ரொட்சைட் கலந்த நீரினால் எளிதிற் கரைக்கப்பட்டுவிடுகிறது,
மழைபெய்யும்போது வளியிலுள்ள காபனீரொட்சைட்டில் ஒருபகுதி நீருடன் கலப்பதனால் உண்டாகும் காபனிக்கமிலமே சுண்ணாம்புப்பாறைகளைக் கரைக்கிறது. இப்பாறை மூட்டுக் களையுடையதாயிருப்பதனாலும் நீரை நேரடியாக உறிஞ்சக் கூடியதாக விருப்பதனாலும் மழைநீர் மேலிருந்தும், கீழிருந்தும் தாக்கி இதனை எளிதிற் சிதைத்து விடுகிறது. இதனால் இப் பாறைப்பிரதேசங்களின் மேற்பரப்பு ஒப்புரவற்ற ஒரு கற்பாலை நிலத்தைப்போலக் கரடுமுரடானதும், கூரிய உச்சிகளையுடை யதுமான சிறுபாறைத் தொடர்களையும் அவற்றுக்கிடையில் பள்ளங்களையுமுடையதாகக் காணப்படுகின்றது.
சுண்ணாம்புப்பாறைகள் நீரை உறிஞ்சுவதன் காரணமாக அப்பாறைப்பிரதேசங்களில் நிலையான மேற்பரப்பு வடிகால்கள் காணப்படுவதில்லை. அன்றியும் மேற்பரப்பில் தொடர்ச்சி யான ஆழமான மண்படையையும் அங்கு காணமுடியாது.
சுண்ணாம்புப் பாறைப்பிரதேசங்கள் உலகின் பல பாகங்களி லும் காணப்படுகின்றன. யூகோசிலாவியாவிலுள்ள காசித்துப் பிரதேசம், பிரான்சிலுள்ள கோசஸ்" பிரதேசம், அமெரிக்க ஐக்கிய மாகாணத்தில் ஒறிகன், கென்ரக்கி, புளோரிடா மாகாணப் பிரதேசங்கள் இங்கிலாந்திலுள்ள செடர் - மென்டிப் பிரதேசம் முதலியவற்றில் இப்பாறைகள் பரந்து காணப்படுகின்றன. இவற்றில் காசித்துப் பிரதேசம், 64 900 ச. கி. மீற் பரப்புடன் விரிவாக ஆய்வுக்குட்பட்டதாகவும், நன்கு விருத்தியடைந்த நிலவுருவங்களையுடையதாகவுமிருப்பதினால் காசித்து நிலத் தோற்றம் என்னும் தொடர் புவிவெளியுருவவியலில் அதிக மாகப் பயன்படுத்தப்பட்டு வருவதுடன், பொதுவாக சுண் ணாம்புப்பாறைப் பிரதேசங்களின் உருவவியலுக்கு உதாரண மாகவும் எடுத்தாளப்படுகிறது.
சுண்ணாம்புப் பாறைப்பிரதேசங்களின் நிலவுருவங்கள் ஏனைய பிரதேசங்களிலுள்ளவற்றைப்போல ஒர் ஒழுங்கு முறை யிலேயே உருவாகின்றன. கண்ணாம்புப்பர்றை பரவலாக வெளி யரும்பிக் காணப்படும் பிரதேசங்களில் மழைபெய்யும்போது நீரர் னது நிலத்தின் சரிவைப் பின்பற்றி ஓடிச்செல்லுமாயினும், பாறைகள் அந்நீரை உறிஞ்சிவிடுவதனால், அது சிறிது தூரத்திற் குச் செல்லுமுன்னரேயே பாறைகளினூடாகக் கீழ்ச்சென்று விடு

Page 159
306 புவிவெளியுருவவியல்
கிறது. இம் முறையில் நீர் ஆங்காங்கு சிறுபள்ளங்களைத்தோண் டும். இப்பள்ளங்கள் ஒடுக்கமானவையாகவும் நீண்டவையாக வும் காணப்படும். இவற்றிற்கு இடைப்பட்டபகுதி கரைக்கப் படாமையினால் உயர்ந்த சிறு பாறைத்தொடரைப்போலத் தோன்றும் பொதுவாக, மூட்டுக்கோடுகள் காணப்படுமிடங் களிற்றான் முன் குறிப்பிட்ட ஒடுக்கமான பள்ளங்கள் உருவாகும். மூட்டுக்கள் குறுக்கும் நெடுக்குமாகச் செல்வதனால் பள்ளங் களும் அவ்விதமே காணப்படுமாதலின் அவற்றிற்கிடையிலுள்ள மேடுகளும் சிறு பாறைத்தொடர்களும் தொடர்ச்சியின்றியும் ஒப்பரவின்றியும் காணப்படும். இத்தகைய தரைத்தோற்றம் கிளின்ற் - இறைக், இலாபபீஸ்' 'கறன்' எனப்பல பெயர் களாற் குறிப்பிடப்படுகின்றது
சுண்ணாம்புப் பாறைகளின் மேற்பரப்பு வழியே ஒடிச்செல் லும் நீர் சிறிது தூரத்திற்குள் பாறைகளின் மூட்டுமையங்களுக்கு கூடாக உட்புகும்போது அதன் பள்ளத்தாக்கு அம்மையங்களில் சடுதியாக முடிவடைவதன் காரணமாக அவற்றைக் குருட்டுப் பள்ளத்தாக்குகள் என்பர்.
மேற்பரப்பு நீர் மூட்டுமையங்களுக்கூடாக உட்செல்லுமிடங் களில் கரைத்தல் மூலம் ஒருதுளை முதலில் உருவாகும். பின் னர் நாற்புறமிருந்தும் நீர் வழிந்து அதனூடாகச் செல்வ தனர்ல் அது படிப்படியாகப் பெரிதாகி ஒரு சிறு இறக்க மாகும். இத்தகைய இறக்கங்கள் ஒரு கோப்பை அல்லது புனல்போலத் தோன்றுவதனால் புனற்ப பளங்கள் (Dolines) எனப்படுகின்றன. இவை 10 முதல் 20 மீற்றருக்கு மேல் அகன்று 25 மீற்றர் வரை ஆழமாகக் காணப்படும். இவற் நூடாக நீர் கீழிறங்கி மறைவதனால் இவற்றை உறிஞ்சு துளை (sinkholes) விழுங்குதுளை (Swal0 Wholes ) என வும் குறிப்பிடுவர். சில ஆய்வாளர்கள், புனற்பாளங்கள், கரைத்தலினால் மட்டுமன்றி மேற்பரப்புப் பாறைகள் இடி வதனாலும் ( இது கீழ்ப்பகுதி கரைத்தழிக்கப்படுவதனால் எற்படலாம்) படிவதனாலும் (Subsidenee) உருவாகுவதா கக் கூறுகின்றனர்.
புனற்பள்ளத்தின் மத்தியிலுள்ள துளை பெரிதாகி ஆழமான ஒரு சுரங்கவாய் போல உருவாகும்போது போனோர் (Ponor) எனப்படுகிறது. சில போனோர்கள் சரிவாகவும் வேறுசில நிலைக்

தரைக்கீழ் நீர் 307
குத்தாகவும் காணப்படுகின்றன. அவற்றுாயாகச் செல்லும் நீர் கீழ்ப்பகுதியிலுள்ள பாறைகளைக் கரைப்பதனால் அங்கு தரைக் கீழ்க்குகைகள் உருவாகும்.
Sܔ
படம்: 60 காசித்து நிலவுருவங்கள் (After P. James) (1) கசிதுளிப்படிவு (2) கசிதுளிவீழ்படிவு. (3) தரைக்கீழ்க்
குகை, (4) புனற்பள்ளங்கள். (5) இலாப்பீஸ், (6) இயற்கைப் பாலம் (7) ஊவலா (8) ஹம்ஸ் 鷲。
தரைக்கீழ்க் குகைகள் உருவாகும் முறைபற்றிக் கருத்துவேறு பாடுள்ளது. ஒரு கருத்தின்படி, நீர் மேடைக்கு மேலுள்ள பகுதி யில், கரைத்தல் மூலமே தரைகீழ்க் குகைகள் உருவாகின்றன. பல குகைகளின் உள்ளே காணப்படும் பாறைகள் அவற்றிற்கு மேலுள்ள உடைவுகளின் அமைப்புக்கு இசைவாயிருப்பதா கவும் உடைவுகள் வழியாகவே நீர் உட்செல்வதனால் நீர் மேடைக்கு மேல் கரைத்தல் மூலமே குகைகள் உருவாதல் சாத் தியமெனக் கருதப்படுகிறது. இன்னொரு சாரார் தரைக்கீழ்க் குகைகள் நீர்மேடை மட்டத்திலேயே உருவாகுவதாகவும் அம் மேடைக்கு அருகில் நீர் எப்பொழுதும் காணப்படுவதோடு வலு வுடன்பாய்வதனால் அங்குதான் குகைகள் உருவாக முடியும் என வாதிக்கின்றனர். நீர் மேடையின் உயரம் எங்கும் ஒரேயளவாக இல்லாமையால் நீர் மூட்டுக்கள் வழியே ஒடிக் கீழிறங்கு மென்றும் அதன் விளைவாக அரித்தலும் கரைத்தலும் நிகழ்வத னாலேயே குகைகள் உருவாகின்றன எனவும் நீர் மேடை கால நிலைக்கேற்ப உயர்ந்தும் தாழ்ந்தும் காணப்படுவதனாலேயே குகைகளும் வேறுபட்ட உயரமட்டங்களில் உருவாகின்றன என வும் அவர்கள் வாதிக்கின்றனர். ஆனால் டேவிஸ் நீர் மேடைக்குக் கீழேயே குகைகள் உருவாகுவதாகக் கூறினார். நீர் மேடைக் குக் கீழ் உள்ள நீரின் அமுக்கம் இடத்துக்கிடம் வேறுபடும் போது அது அசைவதனாலும், நிரம்பல் மட்டத்திற்குக் கீழேயே

Page 160
308 புவிவெளியுருவவியல்
சுண்ணாம்புப் பாறைகள் பரவலாகக் கரைக்கப்படக் #೩toHIGT வாயிருப்பதனாலும் அங்குதான் குகைகள் உருவாகின்றன என அவர் கூறியுள்ளரர். 然
தரைகீழ்க் குகைகள் பிரான்ஸ் , இங்கிலாந்து, ( மென்டிப் குன்றுகள் ) ஐக்கிய அமெரிக்கா (கென்ரக்கியில் பெருங் குகை நியூ மெக்சிக்கோவில் கார்ள்ஸ்பாட் குகைகள்), யூகோசிலாவியா முதலிய பல நாடுகளிற் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் நிலாவரை ( நில அறை ) யிற் காணப்படும் வற்றாக் கிணறு நீர் மேடையுடன் தொடர்புள்ள ஒரு தரைகீழ்க் குகையாகும்
தரைக்கீழ்க்குகைகளில் சுண்ணப்படிவினால் பல நிலவுருவங் கள் தோன்றுகின்றன. இவ்வாறு மேற்பரப்பிலிருந்து மூட்டுக் கள் வழியாகக் கீழிறங்கும் சுண்ணாம்புக் கரைசல் சொட்டும் போது அதிலுள்ள நீர் ஆவியாகிப்போகச் சுண்ணாம்பு இறுக்க மடைந்து குகையின் கூரையிலிருந்து கீழ் நோக்கி வளர்ந்து ஒரு நூண்போலத் தூங்கும், அது கசிதுளி படிவு எனப்படும். அது போலவே குகையின் அடித்தளத்திற் சிந்தும் நீரிலுள்ள சுண் ணாம்பு படிவதனால் மேல்நோக்கி வளர்கின்ற தூண் கசிதுளி வீழ்படிவு எனப்படும். இவை ஆண்டிற்கு ஒருசில மி.மீற். மட்டுமே வளரும். இப் படிவுருவங்களிலிருந்து பக்கத்திசைகளில் வளரும் சிறிய கிளைகளைக் கசிதுளிக் கிளைப்படிவுகள் (Helictites) என் பர். மேற்குறிப்பிட்டவற்றைத் தவிர, தரைக்கீழ்க் குகைகளின் அடித்தளத்தில் படிவு செய்யப்படும் சுண்ணாம்புக் கரைசல் தவேட்டைன் (Travertine) படிவரிசைகளையும் உருவாக்கும்.
தரைக்கீழ் குகைகள் சில சந்தர்ப்பங்களில் இடிந்து விழுவ துண்டு. இதனால் சிறு புவிநடுக்கங்களும் ஏற்படலாம். இவ்வாறு கூரை இடிந்துவிழுந்த பின்னர் நீர் கீழிருக்கும் உட்புகவிடாப் பாறைப் படையின் மேற்பரப்பில் பலவாய்க்கால்களை அமைத்து ஒடும்போது அக்குகை, இடிந்ததனால் தோன்றிய பள்ளத்தில் நீர் காணப்படாமையினால் அது வரண்டி பள்ளத்தாக்காகும். இங்கிலாந்திலுள்ள செடர் இடுக்கு ( Chedde Gorge ) அதற்கு ஒரு உதாரணமாகும் தரைக்கீழ்க்குகை முற்றாக இடியாமல் அதில் ஒருபகுதி எஞ்சுமாயின் அப்பகுதி ஒரு இயற்கைப் பாலமாக மாறும் வேர்ஜீனியா ( ஐ அ ) வில் அத்தகையபால மொன்றுள்ளது. 。
யூகோசிலாவியாவின் காசித்துப் பிரதேசத்தில், முன்னர் குறிப்பிட்டவற்றைத்தவிர, ஊவலர, போல்ஜே என்னும் இரு நிருவுருவங்களும் கர்ணப்படுகின்றன. இவற்றில் ஊவலாக்கள் 2 கி. மீ வரை நீண்ட இறக்கங்களாகும். இவை பல புனற் பள்ளங்கள் இணைவதனால் உருவாகியிருக்கலாமென நம்பப்
படுகிறது.

தரைக்கீழ் நீர் 309
ஊவலர்க்களைவிடப் பெரிய பள்ளங்களே போல் ஜே எனப்படுகின்றன. இவை அகன்ற குத்தான சரிவுகளையுடைய இறக்கங்களாகும் போல்ஜேக்கள் உரு வா கி ய முறைபற்றிக் கருத்துவேறுபாடுண்டு சில ர் ஊவலாக்கள் இணைவதினால் இவை உருவாகியிருக்கலாமென்கின்றனர். வேறு சிலர் இவை புவியசைவின் விளைவாகக் குறைத்தலின் மூலம் உருவாகின என்கின்றனர். இன்னொருசாரார் போல்ஜேக்களின் உருவவிய லில் கரைசலுக்கும் கணிசமான பங்கு உண்டு எனக் கூறுகின்ற னர். அஃதெவ்வாறாயினும் போல்ஜேக்கா சுண்ணாம்புப் பாறைப் பி ர தே சங்க ளி ல் மட்டும் காணப்படுவதிலிருந்து அவற்றை உருவாக்குவதில் கரைசலுக்குப் பெரும்பங்குண்டு என்பதை மறுக்க முடியாது.
போல்ஜேக்கள் தட்டையான அடித்தளத்தையுடையனவா தலின் பெருமழையைத் தொடர்ந்து அவை ஏரிகளாகவும் மாறுவதுண்டு போல்ஜேக்களின் அடித்தளத்தில் ஆங்காங்கு கரைத்தலின்ாற் பாதிக்கப்படாத எச்சக்குன்றுகளும் காணப் படுகின்றன. அவை காசித்துப்பிரதேசத்தில் ஹம்ஸ் (Hums) எனவும், பிறவிடங்களில் மகொட்ஸ்; பெப்பினோக் குன்றுகள், வைக்கோற்போர்க் குன்றுகள் எனவும் பலவாறு அழைக்கப்படு கின்றன. -
19. ஆ. 2 காசித்து வட்டம்
நிலப்பரப்பின் பொதுவான அரிப்பு வட்டம் காசித்துப் பிரதேசத்திற்கும் பொருந்தக்கூடியது. காசித்துவட்டம் யூகோ சிவியாவிலுள்ள காசித்து நிலப்பிரதேசத்தின் உருவவியலடிப் படையில் வகுக்கப்பட்டிருக்கிறது. இவ்வட்டத்தின் தொழிற் பாடு சில அடிப்படைகளிற்றங்கியுள்ளது அவை (1) பரந்த தடிப்பான சுண்ணாம்புப் பாறைத் தி ண வு காணப்படுதல் (2) சுண்ணாம்புப் பாறைப்படைக்குக்கீழும் மேலும் உட் புக விடாப்பாறைப்படைகள் காணப்படுதல் என்பனவாகும் காசித்து வட்டம் இரு முறைகளிற்றொடங்கப்படலாம். இவ்வாறு பொதுவான அரிப்புச்செயல் நிகழ்ந்துகொண்டிருந்ததும், நீர் மேடையை மேற்பரப்புக்கண்மையிற் கொண்டதுமான ஒரு பிரதேசம் மேலுயர்த்தப்படுதல் அல்லது (2) சுண்ணாம்புப் பாறையின் மேலுள்ள உட்புகவிடாப்பாறைமூடி தேய்த்தழிக் கப்படுதலைத் தொடர்ந்து காசித்துவட்டம் தொடங்கலாம்.

Page 161
310 புவிவெளியுருவவியல்
இளமை நிலை: இந்நிலையின்போது மேற்பரப்பில் ஒ டி ச் செல்லும் நீர் பாறைகளிலுள்ள மூட்டுக்கள் பிளவுகளுக்கூடாகக் கீழிறங்கத்தொடங்கும். இதனால் ஆங்காங்கு புனற்பள்ளங்கள் உண்டாகலாம். புனற்பள்ளங்கள் அதிகரித்தவுடன் நீர் முழுவ தும் தரைக்கீழ்ச்சென்றுவிடும். அந்நிலையில் கீழிறங்கும் அருவி கள் குருட்டுப்பள்ளத்தாக்கையுடையனவாயிருக்கலாம். இதன் பின்னர் புனற்பள்ளங்கள் பல ஒன்றோடொன்று இணைவத னால் ஊவலா' எனப்படும் இறக்கங்கள் உருவாகும். இந்நிலை பில் மேற்பரப்பிலிருந்த உட்புகவிடாப்பாறைப்படை நீக்கப்படு வதனால் வடிகால் முழுவதும் தரைக்கீழ்ச்சென்றுவிடும். இதுவே முதிர்ச்சி நிலையின் தொடக்கமாகும்.
முதிர்ச்சி நிலையில் நீர் மூன்று வலயங்களில் ஒடிச்செல்லும், அவை (1) நீர் கீழிறங்கும் வலயம் (i) அதன் கீழுள்ள பக்க வசைவு வலயம் (i) இடையிலுள்ள இடைக்கிடை நிர ம் பு வலயம் என்பனவாகும். முதிர்ச்சி நிலையின் பிற்பகுதியில் நீர் மேடை மிகக் கீழே காணப்படுவதுடன் தரைக்கீழ்க்குகைகளும் முற்றாக இடிந்து விழுந்துவிடலாம். அவ்வாறு நிகழின் சுண் ணாம்புப்பாறைப் படைக்குக் கீழுள்ள உட்புகவிடாப் பாறை யில் வடிகால் அமைந்துவிடும்.
அதிமுதிர்நிலை
இந்நிலையில் பல ஊவலாக்கள் இணைவதனாலும் மேற் கூரை இடிவதனாலும் போல்ஜேக்கள் உண்டாகும். இவை பெரிய நீண்ட இறக்கங்களாகும். இவை புவியோட்டு விருத்திக் குரிய விசைகளினாற்றோன்றியவை எனச்சிலரும், கரைத்தலி னாற்றோன்றியவை என வேறு சிலரும் கூறுகின்றனர். ஆனால் முன் குறிப்பிட்ட இரண்டும் இணைந்துதான் இவற்றை உரு வாக்கியுள்ளன எனப் பலர் நம்புகின்றனர். இறுதிநிலையில் ஆங் காங்கு அரிக்கப்படாத சிறு எச்சக்குன்றுகளைக் காணலாம். இவை ஹம்ஸ், பெப்பினோக்குன்றுகள், வைக்கோற்போர்க் குன்றுகள் எனப் பலவாறழைக்கப்படுகின்றன. இயல்பான் அரிப்புவட்டத்திற்குரிய மொனாட்நொக்ஸ் குன்றுகளுக்கு ஒப்பானவையே இவை என்க.

அத்தியாயம் 20
*、 பனிக்கட்டியாற்றின் செயலும்
நிலவுருவங்களும்
புவியின் ஏறத்தாழ 10% இன்று பனிக்கட்டி யால் மூடப்பட்டிருக்கிறது உயர கலக்கோட்டுப் பிரதேசத்தி லும் மத்தியகோட்டயலில் ஏறத்தாழ 5000மீற்றருக்கு மேற்பட்ட உயரமுள்ள மலைகளின் உச்சிகளிலும் பனிக்கட்டி நிலையாகப் படிந்துள்ளது. "பளிக்கட்டி படிவுவீழ்ச்சியின் விளைவாதலின் அது உருவாகும் முறையை முதலில் நோக்குவோம்.
20.1 பனிக்கட்டியாறு உருவாகும் Աp6Ծն):
கடல், தரை முதலியவற்றிலிருந்து ஆவியாகிச் செல்லும் நீர் 0°C க்குக் குறைவான வெப்பநிலையில் ஒடுங்கும்போது பனிக் கட்டிப்பளிங்குகள் உருவாகின்றன. இப்பளிங்குக்ள் பல ஒன்று சேர்ந்து கீழே விழும்போது மழைப்பனிமென்படலம் ஆகின்றன. மழைப்பனிமென்படலம் விழுந்து சிதறும்போது அதிற் சிறைப் பட்டிருந்த காற்றில் ஒரு பகுதி வெளியேறிவிடுகிறது. அப்பட லங்கள் ஓரிடத்தில் அதிகமாக வீழ்ந்து படிப்படியாகத் திரண்டு படைகளையுடையனவாக மாறும்போது அவற்றில் சில மாற் றங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக, கீழ்ப்படைகளிலுள்ள பணிப் படலங்கள் மணியுருத்தன்மை குறைந்து திரட்சியடைகின்றன. அதேசமயம் மேலுள்ள படைகள் உருகுவதனாலுண்டாகும் நீர் கீழ்ச்சென்று மீண்டுமுறைவதும், பனிப்படலங்களின் அமுக்கமும் சேர்ந்து அப்படலங்களைத் திண்மையடையச் செய்கின்றன. அந்நிலையில் அவை பனிமணி எனப்படுகின்றன. புதிய மழைப் பனி ஒரு சில மாதங்களில் பணிமணியாகிவிடும். ப னி மணி நிலையிலிருக்கும் பனிக்கட்டியானது அமுக்கத்தின் விளைவாக மேலும் சில மாற்றங்களுக்குட்பட்டு பிளாஸ்திக் அல்லது களியைப் போல உருமாறி நாக்கைப்போல நீண்டு நகர்ந்து செல்லும்போது பனிக்கட்டியாறு எனப்பெயர் பெறுகிறது.
மழைபணி வீழ்ந்து பனிக்கட்டியாது உருவாதற்கு ଈର୍ଷ୍} மண் பல வெப்பநிலை 0° C க்கு குறைவாயிருக்கவேண்டும். மேலும் கூரிய உச்சிகளையுடைய மலைகளிலோ பாறைத்

Page 162
312 புவிவெளியுருவவியல்
தொடர்களிலோ விழும் மழைப்பனி சிதறிவிடுமாதலின் எப் பொழுதும் இறக்கங்கள், குழிவுகள் காணப்படுமிடங்களிலேயே பனிமணி திரண்டு பனிக்கட்டியாறாகி வெளியேறுகிறது.
மழைப்பணி ஆண்டு முழுவதும் மூடிக்கிடக்கும் வலயத்தின் கீழ் எல்லையை நிலையான மழைப்பனிக்கோடு என்பர். இக் கோட்டின் உயரமானது அகலக்கோட்டு நிலையம், தரையின் உயரம், தரையின் நிலைமை என்பவற்றுக்கேற்ப வேறுபடும். முனைவுப் பகுதிகளில் கடல் மட்டத்திற் காணப்படும் இக் கோடு தெற்கு கிறீன்லாந்தில் 600 மீற்றர் உய ரத் தி லும் நோர்வேயில் ஏறத்தாழ 1300 மீற்றர் உயரத்திலும், அல்ஸ்ப் மலைப்பகுதியில் பருமட்டாக 3000 மீற். உயரத்திலும், கிழக் காபிரிக்காவின் மத்திய கோட்டுப் பிரதேசத்தில் 5000 மீற்றர் உயரத்திலும் காணப்படுகிறது. இவ்வுயரங்கள் உள்நாட்டுப் பெளதிக நிலைமைகளுக்கேற்ப வேறுபடக்கூடியவை. கோடை யில் பனிக்கட்டி உருகுவதனாலேற்படும் அழிவு குளிர்காலத்திற் குவியும் பனிக்கட்டியை முற்றாக அகற்றமுடியாதிருக்கும் ஒரு உயர மட்டத்தையே மழைப்பனிக்கோடு காட்டுகிறது எனவே அது கோடையில் அதிக உயரத்திலும், குளிர்காலத்தில் குறைந்த உயரத்தில் காணப்படுமென்பது தெளிவு.
20.2 பணிக்கட்டியாறுகளின் வகை:- பனிக்கட்டியாறுகளை (i) மலை (அல்லது பள்ளத்தாக்குப்) பனிக்கட்டியர்றுகள், (i) பணிக்கட்டித் தகடுகள் என இரண்டாக வகைப்படுத்தலாம் பணிக்கட்டித்தகடுகளில் பெரியவை கண்டப்பணிக்கட்டியாறுகள் எனவும் சிறியவை பனிக்கட்டிக்கவிப்புகள் எனவும் குறிப்பிடப் படுவதுண்டு இவற்றைத்தவிர மலையடிவாரங்களில் சில பனிக் கட்டியாறுகள் இணைவதனால் மலையடிவாரப் பணிக்கட்டியாறு களும் உருவாகலாம். ஆனால் அவை இன்று அருகிவிட்டன.
20.2 (1) பள்ளத்தாக்குப் பணிக்கட்டியாறுகள்: இவை உலகின் பல பகுதிகளிலுமுள்ள உயரமான மலைப்பிரதேசங்களை அணி செய்கின்றன. அல்ப்சு மவைத்தொடர்களிடையே மட்டும் ஏறத்தாழ 2000 பனிக்கட்டியாறுகள் காணப்படுகின்றன. இவை அல்ப்சு மலைப்பகுதியில் அதிகமாகக் காணப்படுவதனால் அல் பைன் பணிக்கட்டியாறுகளெனவும் பெயர் பெறுகின்றன.
பள்ளத்தாக்குப் பணிக்கட்டியாறுகள் உயர்மலைப்பிரதேசத் தில் முன்னரே அமைந்திருந்த ஆற்றுப்பள்ளத்தாக்குகள் வழி யாகப் புவியீர்ப்பினாலிழுக்கப்பட்டுக் கீழிறங்குகின்றன. அவற்.

பனிக்கட்டியாற்றின் செயலும் நிலவுருவங்களும் 313
றின் பரு மனு ம், நீளமும் மழைப்பனியேந்து பிரதேசத்தின் பரப்பு, படிவுவீழ்ச்சியளவு, பள்ளத்தாக்குப் பாதையில் நிலவும் வெப்பம் என்பவற்றைப் பொறுத்து வேறுபடும். சராசரிப் பரு மனுடைய பள்ளத்தாக்குப் பனிக்கட்டியாறுகளின் வேகத்தை மணிக்கம்பியின் வேகத்திற்கு ஒப்பிடலாம். அவை ஒரு நாளில் I 5 G) g (LfS. வரையிலும், ஒராண்டில் 50 மீற். வரையிலும் நகரக்கூடும். அலெற் என்னும் அல்பைன் பனிக்கட்டியா று ஆண்டுக்கு 150 மீற்றர் வரை நகர்கிறது. அதேசமயம் கிரீன் லாந்திலுள்ள பனிக்கட்டித்தகட்டிலிருந்து வெளியேறும் சில பனிக்கட்டியாறுகள் ஒரு நாளில் 20 மீற்றர் தூரமும் ஒராண்டில் ஏறத்தாழ 8 கி. மீ. தூரமும் நகர்கின்றன.
2012 (i) பணிக்கட்டித் தகடுகள்:- (Ice Sheets) இவை முன்ை வயற் பிரதேசங்களை மூடிக்காணப்படுகின்ற குமிழ் வடிவான தகடுகளாகும். இவை கண்டநிலப்பரப்பிலும் பரந்து காணப் படுவதனால் கண்டப்பணிக்கட்டியாறுகள் எனவும் கூறப்படுகின் றன. பல்லாயிரமாண்டுகளுக்கு முன்னர் நிலவிய பணிக்கட்டி புகத்தில் உருவாகிய பெரிய பனிக்கட்டித்தகடுகளின் எச்சங் களையே இன்று நாம் காண்கிறோம். பனிக்கட்டியுகத்தின் போது கண்டங்களின் வடபாகத்திற் கணிசமான நிலப்பரப்பை (வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பருமட்டாக மூன்றி லொரு பகுதி) மூடியிருந்த இவ்வகைத் தகடுகளை இன்று அந் தாட்டிக்காவிலும் கிறீன்லாந்திலுமே சிறப்பாகக் காணக்கூடிய தாயிருக்கிறது. அந்தாட்டிக்காவில் உள்ள பனிக்கட்டித்தகடுகள் ஏறத்தாழ 80 லட்சம் சதுர கி. மீ பரப்புடையன. அவற் றின் தடிப்பு (ஆழம்) கரையோரப் பகுதியில் 275 மீற். முதல் 800 மீற். ஆகவும், மத்தியில் 2000 மீற். ஆகவும் காணப்படுகின றது. அப்பணிக்கட்டிகளினால் மூடப்பட்ட மலைகளின் உச்சி கள் ஆங்காங்கு வெளிப்பட்டுத் தெரிகின்றன. அவற் றை ப்
பனிக்கட்டியாற்றிடைக் குன்றுகள் என்பர் -
கிறீன்லாந்துப் பணிக்கட்டித் தகடுகள் ஏறத்தாழ 17 இலட் சம் சதுர கி. மீ பரப்புடையன. அவற்றின் ஆகக்கூடிய தடிப்பு 4300 மீற் என அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அங்குள்ள பனிக் கட்டித் தகடுகளின் பாரத்தினால் நிலம் அதன் மத்திய பகுதியில் கோப்பையைப்போன்ற ஒரு இறக்கமாக 1200 மீற்றர் வரை தாழ்ந்துள்ளதாகத் தெரியவருகிறது.

Page 163
314 புவிவெளியுருவவியல்
2012 (i) பணிக்கட்டிக் கவிப்புகள்:- (Ice Caps) இவை பரப்பிற் குறைந்த சிறிய பணிக்கட்டித்தகடுகளாம். இவற்றைத் தீவுப் பனிக்கட்டிக் கவிப்பு, மேட்டுநிலப் பனிக்கட்டிக்கவிப்பு என இரண்டர்க வகைப்படுத்தலாம். பிரான்சிஸ் யோசெப் நிலம் நொவா செம்லியா, ஸ்பிற்ஸ்பேகன், பவின் தீவிலுள்ள பென்சி பாண்ஸ் ஆகியன தீவுப்பணிக்கட்டிக் கவிப்புகளுக்கும், ஐஸ்லாந்
திலுள்ள ஜோகுல்வாற்னா மேட்டுநிலப்பனிக்கட்டிக் கவிப்புக்
கும் உதாரணங்களாகும். இவற்றைத்தவிர தட்டையான மலை உச்சிகளை மூடியுள்ள உச்சிக் கவிப்புகளும் (உம் கிளி மாஞ்சரோவின் கிபு உச்சி) இப்பிரிவில் அடங்கும்.
20.3. பணிக்கட்டிய பற்றின் மேற்பரப்பியல்புகள் பணிக்கட்டி யாற்றினுள்ளே நிகழும் பல செயல்முறைகளும் அவற்றின் விளை வாகனற்படும் பலவகையான அசைவுகளும் ஒன்று சேர்ந்து அதன் மத்தியபாகம் பக்கங்களைவிட வேகமாகவும், மேற்பகுதி கீழ்ப் பகுதியைவிட விரைவாகவும் அசையச் செய்கின்றன. இத்தகைய வேறுபட்ட அசைவுகள், பனிக்கட்டியாற்றின் போக்கிலேற்படக் கூடிய தடைகள், போக்கின் தன்மை (நேரான வளைவான) ஆகியன அதன் மேற்பரப்பில் பல அமிசங்கள் உருவாக உதவுகின்றன.
பணிக்கட்டியாறு உருவாகும் பணிமணி வயலுக்கும் மலைச் சுவருக்குமிடையிலுண்டாகும் பெரிய பிளவு பேட்சுறந்து எனப் படுகிறது. இது மிக ஆழமானது பனிக்கட்டியாறு பனிமணி வயலைவிட்டு வெளியேறுவதனால் இது உருவாகிறது பனிக் கட்டி உருகுவதும், பாறைகளோடு பணிக்கட்டி தொடர்பு கொள்வதும் பேட்சுறந்து உருவாகுவதற்கு உதவுகின்றன. பனிக்கட்டியாற்றின் வெவ்வேறு பகுதிகளின் வேறுபட்ட அசைவு விகிதங்களின் விளைவாக அதன் மேற்பரப்பில் பல பிளவுகள் உண்டாகின்றன. இவை நெடும் பிளவுகள், குறுக்குப்பிளவுகள் என இரு வகைப்படும். பனிக்கட்டியாறு கிளைகளாகப் பிரியு மிடத்தில் நெடும் பிளவுகள் உண்டாகின்றன பள்ளத்தாக்கு குத்தாக மாறுமிடங்களில் குறுக்குப்பிளவுகள் உருவாகின்றன. னிெக்கட்டியாற்றின் மத்தியபாகம் பக்கங்களைவிட விரைவாக நகர்வதனால் இவை எப்பொழுதும் சரிவுத் திசைகளிலேயே காணப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட பிளவுகளுக்கிடைப்பட்ட பகுதியில் பல சிறிய வெடிப்புகள் குறுக்கும் நெடுக்குமாக வெட்டிச் செல்வதினாலும், வானிலையாலழிதலினாலும், பனிக்கட்டித்தூண்கள் உருவாகின்றன.

பனிக்கட்டியாற்றின் செயலும் நிலவுருவங்களும் 315
61 பனிக்கட்டியாற்றின் மேற்பரப்பமிசங்கள்
பனிக்கட்டியாற்றின் மேற்பரப்பிற் கொண்டு செல்லப்படும் பாறைத்துண்டுகளிற் சில அவற்றின் கீழிருக்கும் பணிக்கட்டியை உருகவிடாது பேணுவதனால் அயலிலுள்ள பனிக்கட்டி உருகிய பின்னரும் அப்பாறைத்துண்டுகள் பனிக்கட்டியின்மீது நிலைத் திருக்கலாம். அந்நிலையில் அவற்றைப் பணிக்கட்டியாற்றுப்பீடம் எனக்குறிப்பிடுவர். பனிக்கட்டியாற்றின் மேற்பரப்பில் ஒடும் நீர் பிளவுகளுக்கூடாகப் பாய்ந்துசெல்லும்போது சிறுகற்களை யும் கொண்டுசெல்வதனால் அப்பிளவுகள் அரிப்பிற்குட்பட்டு அகன்ற பானைக்குழிவைப்போலாகிவிடுகின்றன. இவ்வகைக் குழிவுகள் அடித்தளப்பாறைவரை ஆழமுடையனவாயுமிருத்த லுண்டு இவை பனிக்கட்டியாற்றுக்குழிகள் எனப்படும்.பனிக்கட்டி யாற்றுப்படைகள் ஒன்றின்மேலொன்று சறுக்கிச்செல்லும்போது அவற்றின் மேற்பரப்பிற்றோன்றும் வளைவான உருவக்கோடுகள் (Form lines) ஒகிவ்' (Ogive) எனப்படுகின்றன. மேல்விபரிக்கப் பட்டவற்றைத் தவிர, அலைகளைப்போன்ற வரம்புகளும் நீர்க் குட்டைகளும் சிறுஏரிகளும் பணிக்கட்டியாற்றின் மேற்பரப்பிற் காணப்படுவதுண்டு.
20.3 பணிக்கட்டியாறு பாயும் முறை:- பனிக்கட்டியாறு ஆறுகளைப்போல் பாய்வதில்லை, மாறாக அது மெதுவாக அசை கிறது அதன் அசைவுகள் புவியீர்ப்பு, தள்ளற் பாய்ச்சல் என்னும் இரு முறைகளில் இடம்பெறுவதாக Demorest என் பார் கூறியுள்ளார். பள்ளத்தாக்கின் சாய்வு விகிதமானது, உராய்வுத்தடைகளை நீக்கப்போதுமானதாகவும் பனிக்கட்டி யாறு துண்டுகளாக உட்ையாத அளவுக்குக் குத்தானதாகவும் காணப்படும் நிலைமைகளிலேயே புவியீர்ப்புப் பாய்ச்சல் இடம் பெறுகிறது. மே லு ம் பணிக்கட்டியாற்றின் அடிப்பாகத்தில் அமுக்க அதிகரிப்பினால் நீர் மூலக்கூறுகள் வெளியேறிப் பனிக் கட்டி மணிகளிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்துதல், அவ்வப் போது பனிக்கட்டி உறைந்து உருகுதல் உராய்வுத்தடை காரண

Page 164
தெரியவருகிறது.
31.6) { புவிவெளியுருவவியல்
மாகப் பனிக்கட்டியாற்றின் அடித்தளத்தில் நறுக்குத்தளங்கள் உருவாதல் முதலிய செயல்முறைகளும், பனிக்கட்டியாறு வழுக்கி யும் சறுக்கியும் அசைவதற்கு உதவுவதாக நம்பப்படுகிறது. அதே சமயம் பள்ளத்தாக்கின் அடித்தளம் கோப்பைபோலக் குழிந்து அதிக பணிக்கட்டியுடன் காணப்படுமிடங்களிலேயே த ள் ள ற்
பாய்ச்சல் நிகழ்வதாகவும். அதுவே பனிக்கட்டியாற்றின் மத்திய
பாகம் அதன் பக்கங்களைவிட அதிக வேகத்தில் அசைவதற்குக் காரணமாகுமெனவும் கருதப்படுகிறது.
20:4 பனிக்கட்டியாற்றரிப்பு:- பனிக்கட்டியாற்றரிப்பு பிடுங்கல், (பறித்தல்)தேய்த்தல் என்னும் இருமுறைகளில் இடம்பெறுகிறது. இவற்றில் பிடுங்கலே ஒப்பளவில் முக்கியமானது. பனிக்கட்டியாறு அசையும்போது பள்ளத்தாக்குச்சாய்வுகளில் முன்னீட்டியபடி காணப்படும் பாறைகளை மூடி உறைவதனால் அப்பாறைகள் பனிக்கட்டியினுள்ளே புதைந்துவிடும். பின்னர் பனிக்கட்டியாறு மீண்டும் அசையும் போது அப்பாறைகள் பெயர்த்தெடுக்கப்
படுதலே பிடுங்கல் செயல்முறையாகும் இதற்குப் பாறைகள் அமுக்கத்திலிருந்து விடுபடுதலும் துணைசெய்வதாகத் தெரிய வருகிறது. மேலும், பனிக்கட்டியாற்றுநீர், உட்சென்று அடித் தளப்பாறைகளின் அப்பாறைகள் பிள்ந்து பிரியும் போது, பனிக்கட்டியாறு அவற் றையும் பெயர்த்துச் செல்லும் பறித்தற் செயல்முறை, பறை களில் மூட்டுக்கள் அதிகமாயுள்ள இடங்களில் சிறப்பாகச் செயல் பட்டுப் ப ள் ளத் தா க்கு களை எளிதாகத்தோண்டுவதனால்
மேல் உறைந்து உருகிச் செயல்படுவதனால்
வற்றின் ஆழமும் அகழமும் விரைவாக அதிகரிக்கும்.
- தேய்த்தல் என்பது பாறைத் துண்டுகளைக் கருவிகளாகப்
பயன்படுத்துவதன் மூலம் பள்ளத்தாக்கின் அடித்தளத்தையும்
பக்கங்களையும் சுரண்டும் செயல் முறையாகும். இது பொதுவாக மென் பாறைகளை மட்டுமே பெருமளவில் பாதிப்பதாகவும், வன்மையான, அல்லது திரளான பாறைகள் இதனால் பாதிக்கப் படுவதில்லையெனவும் சில ஆய்வாளர் க ள் கருதுகின்றனர் ஆயினும் தேய்த்தலின் விளைவாகப் பாறைகளில் கீறல்களும் தவாளிப்புகளும் உண்டாகின்றன. அன்றியும் பாறைமா (Rock Flour) எனப்படும் சிறு துணிக்கைகளின் உதவியுடன்
பாறைகளின் மேற் பர ப் பு மினுக்கப்படுதற்கும் தேய்த்தலே
காரணமாகும் ஆயினும் இதன் மூலம் ஒராண்டிற்கு 1 மி.மீ
தடிப்பான அடித்தளம் மட்டுமே தேய்த்தழிக்கப் படலாமெனத்
 
 
 
 

பனிக்கட்டியாற்றின் செயலும் நிலவுருவங்களும் 3.7
20.6. பள்ளத்தாக்குப் பணிக்கட்டியாறுகளாலாக்
கப்பட்ட நிலவுருவங்கள்
இவ்வகை நிலவுருவங்களை"அல்ப்ஸ் மலைப்பிரதேசத்தில் சிறப்பாகக்காணலாம். இவற்றில் பிரதானமானவை பின்வரு 20 TT). t
6 (i) வட்டக்குகைகள் :- மழைப்பனி திரண்டு பனிமணியாகு மிடத்தில் உருவிாகின்ற நாற்காலி அல்லது அரங்கு ( Amphi theatre ) போன்ற குழிவுகளே இவையாம். இவை Cirque, Bont, Corrie Cwm Oule Combe Zanoga GT66 till a GL Liri களைக் கொண்டுள்ளன.
வட்டக்குகைகள் பனிமணி (Fir) திரளுமிடங்களிற் காணப் பட்ட சிறு பள்ளங்களை மையமாகக் கொண்டு உருவாகின. அவற்றை உருவாக்குவதில் மழைப்பனியரிப்பு (Nivation) அடித் தளத் தேய்ப்பு (Basa Sapping), சுழச்சிச்சறுக்கல் (Rotational Siding) என்னும் மூன்று செயல் முறைகளுக்குப் பங்கிருப்பதாக நம்பப்படுகிறது. இவற்றில் மழைப்பனியரிப்பே வட்ட்க்குகை களை உருவாக்கத் தொடங்குவதாகத் தெரிகிறது. மழைப்பனி வீழ்ந்து உறைந்த பின்னர் வெப்பநிலை அதிகரிக்கும் போது அது உருகும். இவ்வாறு உறைந்து உரு தல் தொடர்ச்சியாக நிகழ் வதனால் அடித்தளப்பாறைகள் அழிவுறுகின்றன. அதே சமயம் பனிக்கட்டி உருகுவதனால் உண்டாகும் நீர் பாறை அழிபொருட் களை வெளி யேற்றுவதனால் முன்னர் ஆழமற்றிருந்த ஒரு சிறு பள்ளம் படிப்படியாகப் பெருத்து ஆழமான ஒரு இறக்கமாக மாறும் அவ்விறக்கத்தின் திரளும் பணிமணி, காலப்போக்கில் பனிக்கட்டியாகி அசையமுற்படும் போது வட்டக்குகைப் பணிக் *-பியாறு எனக்குறிப்பிடப்படுகிறது அது வட்டக்குகையை விட்டு வெளி யேறும் போது ஏற்படும் இழுவிசை காரணமாக அதற்கும் அதற்குப் பின்னாலுள்ள மலைச்சுவருக்கும் (தலைச் சுவர்) இடையில் பேட்தறந்து எனப்படும் ஆழ்பிளவு தோன்றும்
விக்கட்டி நீர் அப் பிளவுக்கூடாகக் கீழ்ச்சென்று உறைந்து உருகுவதனால் தலைச்சுவர்ப்பாறைகள் மட்டுமன்றி, அடித்தளப் உாறைகளும் அழிவுறும். மேலும், பனிக்கட்டித் திணிவு மலைச் சுவரைவிட்டுப் பெயரும் பொழுதும் மு ன் னோ க் கி அசையும் போதும் பாறைகள் பறிக்கப்படுவதனால் அடித்தளம் மேலும் தோண்டப்படும். பாறைகளில் மூட்டுக்கள் காணப்படுமாயின், இச்செயல் முறை அதிகவலுவுடன் நிகழும். பனிக்கட்டியாற்றின்

Page 165
38 புவிவெளியுருவவியல்
அசைவின்போது பாறைத்துண்டுகள் அகற்றப்படுவதனால் இச் செயல்முறை புதிய பாறைகளிற் செயல்படுவதோடு தலைச் சுவரையும் கீழ் வெட்டும் அடித்தளத் தேய்ப்பு என்னும் இச் செயல்முறையே வட்டக்குகைகளை உருவாக்கும் முக்கியமான காரணியென ஜோன்சன் என்னும் ஆய்வாளர் கருதுகிறார். அதேசமயம் பணிமணி திரளுமிடங்களின் மையத்திலுள்ள ஒரு புள்ளியைச் சுற்றிப் பணிக்கட்டித்தகடுகள் சுழன்று அசைவதா கவும் அத்தகைய சுழற்சி முறையான சறுக்கலின் விளைவாகவே வட்டக்குகைகள் ஆழமடைவதாகவும் "Lewis என்னும் இன் னொரு ஆய்வாளர் கூறுகிறார். 鷺。
இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட செயல்முறைகளின் தாக் கத்தினால் உருவாகும் வட்டக்குகைகளிலிருந்து பணிக்கட்டியாறு வெளியேறிய பின்னர் அவற்றின் மத்தியில் ஏரிகள் உருவாக லாம். அவை வட்டக்குகை ஏரிகள் எனப்படும் அல்ப்ஸ் மலைப் பிரதேசத்தில் பல ஆறுகள் வட்டக்குகையேரிகளில் ஊற்றெடுத் துப்பாய்கின்றன. பொதுவாக மலைகளின் கிழக்கு, வடக்குச் சாய்வுகளிலேயே வட்டக்குகைகள் அதிகமாகக் கானப்படுகின் றன. இதற்கு அச்சாய்வுகளில் கோடைகால மழைப்பனி உருகல் குறைவாயிருப்பதே காரணமாகும்.
6. (ii) ära år (plg. 95 SM5úb (gy Rq. 95STGüb (Arete S & Horns): - gCU மலைத் திணிவில் பல வட்டக்குகைகள் உருவாகும்போது அவற்றின் பக்கச்சுவர்களில் பணிக்கட்டி உறைந்து உருகுவதன் மூலமும் பாறைகள் பிடுங்கப்படுவதனாலும்அவை தேய்வடைந்து பின்வாங்கும். இதைத் தலைச்சுவர்ப்பின்வாங்கல்" எனக் கூறுவர். இம்முறையில் பல வட்டக்குகைகளுக்கிடைப்பட்ட மலைச்சுவர்கள் பின்வாங்கி இறுதியில் ஒடுக்கமான, வாள் போன்ற கூரிய உச்சிகளைக் கொண்ட பாறைத் தொடர்க வாாகமாறும் இவை கூர்முடி" எனப்படும். அதேசமயம் பல வட்டக்குகைகளின் தலைச்சுவர்கள் பின்வாங்கிச் செல்லும் போது அவற்றிற்கு இடைப்பட்டபகுதி நாற்புறமும் கூர்முடிகளை கொண்ட கூம்பகவடிவான ஒரு சிகரமாக உருப்பெறும் அது முடி அல்லது கூம்பகச்சிகரம் எனப்படும். சுவிற்சர்லாந்தி லுள்ள மற்றர்கோன் அதற்குத் தக்கதோருதாரணமாகும்.
6 (i) தாழிகள் (Troughs) பணிக்கட்டியாறாக்கப்பட்ட பள்ளத்தாக்கில், வட்டக் குகைகளுக்குக்கீழ், குத்தான சாய்வு களோடு கூடிய ஆழமான "தாழிகள் காணப்படுகின்றன. இவற்றைத் தாழியந்தம் (Trough End) எனவும் குறிப்பிடுகின்
 

பனிக்கட்டியாற்றின் செயலும் நிலவுருவங்களும் 319
படம்: 62 பள்ளத்தாக்குப் பனிக்கட்டியாற்று நிலவுருவங்கள்
வ: வட்டக்குகை சு துண்டிக்கப்பட்ட சுவடு
றனர். இவை பல வட்டக்குகைகளிலிருந்து வெளிப்பட்ட பனிக் கட்டியாறுகள் ஒன்றாயிணையும்போது ஏற்பட்ட சடுதியான அமுக்கத்தினாலும், அடித்தளச் சுரண்டல், மற்றும் பிடுங்கற் செயல்முறையின் விளைவாகவும் உருவாகியதாக நம்பப் படுகிறது.
6 (V) பாறைப்படிகள்: "ப னி க் கட்டி யாறு அசைந்து சென்ற பள்ளத்தாக்கின் நெடும்பக்கப்பார்வை ஒப்பரவின்றி ஆங்காங்கு முறிவுகளுடன் காணப்படுகின்றது. அம்முறிவுகள் பெரும்பாலும் வன்பாறைப்பகுதியிலே உள்ளன. அத்தகைய வன்பாறைத்தடைகள் காண்ப்படுமிடங்களில் அவற்றைக் கடக்கும் பனிக்கட்டித்தகடுகள் முறிந்து கீழே விழுவதோடு, சுழற்சிமுறையிலும் சறுக்கலாம். அன்றியும் வேறுபட்ட வெப்ப நிலையிலுள்ள வளியுடன் பணிக்கட்டியாற்றுநீரும் பணிக்கட்டி யாற்றுப் பிளவுகளுக்கூடாக உட்சென்று உறைந்து உருகி அடித் தளப் பாறைகளை அழித்து அவ்விடத்திலுள்ள சாய்வை மேலும் குத்தாக்கியிருக்கலாம். மேலும் கிளைப்பணிக்கட்டி யாறுகள் சந்திக்குமிடங்களில் அமுக்க அதிகரிப்பின் விளைவா கவும் படிகள் தோன்றலாம்.

Page 166
320 புவிவெளியுருவவியல்
8.རི་
படம் 63 பாறைப்படிகளும் தாழிகளும்
6 (w) பாறை வடிநிலங்கள் (Rock Basins) இவை பனிக் கட்டியாற்றுப் பள்ளத்தாக்கிலுள்ள ஆழமான இறக்கங்களாகும். பனிக்கட்டியாறு சென்ற பாதையில் அது பக்கவமுக்கத்திற்குள் ளாக்கப்பட்டவிடங்களிலேயே இவை அதிகமாகவும் ஆழமாக வும் காணப்படுகின்றன. மேலும், அடித்தளத்திலுள்ள பனிக் கட்டி குறித்தவிடத்தில் மேல்நோக்கி அசைந்திராவிடின் இவ் விடிநிலங்கள் உருவாகியிருக்கமுடியாதென்வும் இவை தள்ளற் பாய்ச்சல் மூலமே தோண்டப்பட்டிருக்கலாமெனவும் கூறப்படு கிறது. இத்தகைய பாறை வடிநிலங்களிற் பல தற்போது ஏரி களை புடையனவாகக் காணப்படுகின்றன. அல்ப்சு மலைப்பிர தேசத்திலுள்ள கொமோ ஏரி இவ்வகையேரியாகும். 450 மீற். ஆழமுடைய இவ்வேரி கடல் மட்டத்தின் கீழ் 230 மீற். தாழ்ந்து காணப்படுவது குறிப்பிடத்தக்கது. பாறைவடிநிலவேரிகள் தொடர்ச்சியாகக் காணப்படும்போது ' கிண்ணியேரிகள் ? Paternoster Lakes or Finger Lakes) gyáv avgi “GSFLUILD AT G30) ay ஏரிகள்" எனவும் கூறப்படுகின்றன.
6. (wi) U வடிவப் பள்ளத்தாக்குகள்:- பனிக்கட்டியாறுக ளாற் தோண்டப்பட்ட பள்ளத்தாக்குகள் குறுக்குப் பக்க ப் பார்வையில் "U" வடிவாகக் காணப்படுகின்றன. பனிக்கட்டி யாறு நீரைவிட அதிக பாரமானதாதலின், அதன் அமுக்கமும், பாறைத் துண்டுகளின் உதவியுடன் அது மேற்கொண்ட பக்கச் கரண்டலுமே அதன் பள்ளத்தாக்குகள் "U" வடிவைப் பெறக் காரணங்களாம். நீரரிப்பினால் உருவாகிய பள்ளத்தாக்குகளை பும் பனிக்கட்டியாற்றினால் தோண்டப்பட்ட பள்ளத்தாக்கு களையும் ஒப்பிடும்போது அவ்விருகருவிகளினதும் அ ரிப் புத் திறனை மதிப்பிடலாம். (படம் 64 பார்க்க) U வடிவப் பள்ளத் தாக்குகளின் பக்கச்சாய்வுகள் குத்தாகவும் ஒப்பரவாகவுமுள்
 

பணிக்கட்டியாற்றின் செயலும் நிலவுருவங்களும் 32.
ளன. அவற்றின் அடித்தளத்தில் பிற்காலத்திய அருவிகளாற் படிவு செய்யப்பட்ட பொருட்கள் காணப்படுகின்றன. இவ் வகைப் பள்ளத்தாக்குகளின் ஆழமும் அகலமும் அவற்றித் காணப்பட்ட பனிக்கட்டியாறுகளின் பருமனைப் பொறுத்து வேறுபடும்.
படம் 64 U V வடிவப் பள்ளத்தாக்குகளின் வேறுபாடு
6 (vi) 'ı (ö. 56îT (Benches)
U வடிவப் பள்ளத்தாக்குகளின் மேற் சாய் வுகள் மென் சாய்வுடன் காணப்படும்போது பீடங்கள் எனப்பெயர் ப்ெறுகின்றன. இப்பாறைப்பிடங்கள் உருவாகிய முறைபற்றிப் பல கருத்துக்கள் கூறப்பட்டிருக்கின்றன. பனிக்கட்டியாறாதற்கு முன்னர் காணப்பட்ட ஆற்றுப்பள்ளத்தாக்கு முழுவதையும் அப்பணிக்கட்டியாறு முற்றாக நிரப்பாமையினாலேயே இப் பீடங்கள் ஏற்பட்டன என ஒரு கருத்துண்டு. இன்னொரு கருத்தின்படி இப்பீடங்கள் முன்னர் பனிக்கட்டியாறாக்கப்பட்ட ஒரு பள்ளத்தாக்கின் எச்சங்களாகும். பிற்காலத்தில் சிறிய பனிக்கட்டியாற்றினால் அவை தோண்டப்பட்டமையினாற்றான் மேற்சாய்வுகள் மென்சாய்வுகளாகக் காட்சியளிக்கின்றன. இப் பீடங்களில் தங்கவிடப்பட்ட பாறைத்துண்டுகளை ஐயநிலைப் பாறைகள் என்பர். இவை பனிக்கட்டியாற்றின் பக்கங்கள் வழியே கொண்டுவரப்பட்டுத் தங்கவிடப்பட்டவையாம்.
(viii ) ; தொங்கும் பள்ளத்தாக்குகள்:- பனிக்கட்டியாறாக் கப்பட்ட பிரதேசங்களில் உள்ள பிரதான ஆற்றுப் பள்ளத் தாக்குகளுடன் ஒரே மட்டத்தில் இணையாத கிளைப் பள்ளத் தாக்குகளே இவ்வாறழைக்கப்படுகின்றன. இவை வேறுபட்ட காரணங்களின்ால் உருவாகியிருக்கலாமெனத் தெரியவருகிறது. முதலாவதாக, பிரதான பனிக்கட்டியாறு (தனது பாரத் தின் காரணமாகத்) தனது பள்ளத்தாக்கை விரைவாக ஆழமாக்கும் போது கிளைப்பனிக்கட்டியாறுகளும் அதே வேகத்தில் தி 19து

Page 167
322 புவிவெளியுருவளியல்
பள்ளத்தாக்குகளை ஆழமாக்க முடியாதபடியால் அப்பள்ளத் தாக்குகள் துண்டிக்கப்பட்டுத் தொங்குபள்ளத்தாக்குகளாக உயர்ந்த மட்டத்தில் நிலைபெறும் சிறியதும் பெரியதுமான பனிக்கட்டியாறுகள் இணையுமிடங்களில் அவற்றின் மேற்பரப்பு ஒரேமட்டத்திற் காணப்படுமாயினும், சிறிய (கிளைப்) பனிக் கட்டியாற்றுப் பள்ளத்தாக்குகளின் அடித்தள மட்டம் உயர்ந்து காணப்படலாம். இதனால் பணிக்கட்டியாறு நீங்கிய பின்னர் அவை தொங்கு பள்ளத் தாக்காகலாம். மூன்றாவதாக, பிர தான பனிக்கட்டியாறு ஒப்பளவில் வேகமாகக் கீழிறங்கி ஒரு ஆற்றின் பள்ளத்தாக்கை மூடுமாயின், அப்பள்ளத்தாக்கு மெது வாகத் தோண்டப்பட்டுப் பிற்காலத்தில் தொங்கு ப ஸ் ள த் தாக்காக மாறும்.
தொங்கும் பள்ளத்தாக்குகளில் இப்போது பாயும் அருவி கள் பிரதான பள்ளத்தாக்கையடையுமிடங்களில் நீர்வீழ்ச்சிகள் காணப்படுகின்றன. இவ்வாறு கலிபோனியாவிலுள்ள 'யொசோ மைற் பள்ளத்தாக்கில் 3 சோடி தொங்கு பள்ளத்தாக்குகள் நீர்வீழ்ச்சிகளுடன் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
6 (ix) தோசுமுட்டோன் (செம்மறியுருப் பாறை) பணிக்கட்டி யாற்றரிப்பின் தன்மையையும் திறனையும் வெளிப்படுத்தும் ஒரு நிலவுருவம் இதுவாகும். பனிக்கட்டியாறு நகர் ந் து சென்ற பள்ளத்தாக்கில் ஆங்காங்கு வன்பாறைத்திரள்கள் புடைத் திருந்தவிடங்களில் பனிக்கட்டியாற்றின் வேகம் தடைப்பட்டது. ஆயினும், அமுக்கத்தினாலும் புவியீர்ப்பினாலும் உந்தப்பட்ட பனிக்கட்டியாறு பாறைத்துண்டுகள் பாறைத்துகள் (Rock Flour) என்பவற்றின் துணையுடன் பாறைத்திணிவின் எதிர்நோக்கிய பக்கத்தையும், மேற்புறத்தையும் ஒப்பரவாக்கி மினுக்கியதோடு மறுபக்கத்திலுள்ள பாறைகளைப் பறிப்பதன் மூலம் அப்பக்கத் தைக் குத்தாக மாற்றியது அன்றியும் றோசுமுட்டோன்களின் மேற்புறத்திலும், பக்கங்களிலும் பாறைத்துண்டுகளால் ஏற்பட்ட கீறல்களும் தவாளிப்புகளும் காணப்படுகின்றன.
6. (x) நுழைகழிகள்:- (Fords) பனிக்கட்டியாறுகள் கடலைய டைந்தவிடங்களில் படிகளைப்போன்ற தடைபாறைகளும், அவற் றின் பின்னால் (தரையை நோக்கிய பகுதிகளில்) ஆழமான தாழிகளும் உருவாகியுள்ளன. இத்தாழிகளை நுழைகழிகள் எனக்குறிப்பிடுகின்றனர். இவை அமிழ்ந்திய "U" வடிவ ப் பள்ளத்தாக்குகளாயிருக்கலாமெனக் கருதப்படுகிறது. நுழைகழி

பணிக்கட்டியாற்றின் செயலும் நிலவுருவங்களும் 323
களின் வாயிலுள்ள படிகள் 50 முதல் 65 மீற். ஆழத்திலும், துழைகழிகளின் அடித்தளம் 1300 மீற். ஆழத்திலும் காணப்படு கின்றன. பனிக்கட்டியாறு கடலையடையும்போது அதன் கனத் தில் 7/8 பங்கு கடல் மட்டத்தின் கீழும் 1/8 பங்கு கடல் மட்டத்தின் மேல் உயர்ந்தும் காணப்படும். பனிக்கட்டியாற் வின் தோண்டல் கடலையடுத்த பகுதிகளில் குறைவாகவும் தரையையொட்டிய பகுதிகளில் அதிகமாகவுமிருந்த காரணத்
தினாலேயே நுழைக்ழிகள் தமது வாய்ப்பகுதியில் படிவுக ை
4ம் அவற்றின் பின்னால் ஆழமான தாழிகளையும் கொண்டுள்" ளன எனக் கருதப்படுகிறது. நுழைகழிகள் நோர்வே:சீவி!-ன் கிறின்லாந்து, நியூசிலாந்து முதலிய பல நாடுகளிற் கிடுை கின்றன. நோர்வேயிலுள்ள சோன் நுழைகழி 180 இ t நீளமும் ஏறத்தாழ 5 கி. மீ. அகலமுமுடையது.
6 (Ki) படிவுநிலவுருவங்கள்: பனிக்கட்டியாறாக்கப்பட்ட பள் ளத்தாக்குகளில் பனிக்கட்டியாற்றினாற் படிவு செய்யப்படி பொருட்கள் குவியல்களாகப் பல்வேறுருவிற் காணப்படுகின்றன. பள்ளத்தாக்குச் சாய்வுகளிலிருந்து ଜ୍ଯୋଦ୍ଧୀ வாகக் கீழே விழுந்த பாறைத்துண்டுகள் பனிக்கட்டியாற்றின் பக்கங்களிலும், மேலும் உள் ளு ம் கொண்டுசெல்லப்பட்டன. இவ்வாறு இரு பக்கங்களிலும் கொண்டுசெல்லப்பட்டுப் பிசி செய்யப்பட்டவற்றைப் பக்கப்படிவுகள் என்றும், இருபக்கப்
படம்: 65 பனிக்கட்டியாற்றுப் படிவுகள் முனைப்படிவு 2 - பின்னிடைப்படிவு 3 தரைப்படிவு 4 இடைப் δ. Αι έβ εί

Page 168
324 புவிவெளியுருவவியல்
படிவுகள் இணைவதனாலுண்டாகியதை இடைப்படிவு என்றும் பனிக்கட்டியாற்றின் கீழ்படிவு செய்யப்பட்டவற்றைத் தரைப் படிவு என்றும் அதன மூக்கைச் சுற்றிய பகுதியில் படிவு செய்
யப்பட்டவற்றை மு  ைன ப் படி வு என்றும், பனிக்கட்டியாறு
கரைந்து பின்வாங்கியபோது அது தரித்துச் சென்றவிடங்களிற்
படிவுசெய்தவற்றைப் பிள்னரிடைவுப்படிவு என்வும் குறிப்பிடுவர்.
20 8 கண்டப் பணிக்கட்டியாற்றின் அரிப்பு நிலவுருவங்கள்
8 (i) கண்டப்பனிக்கட்டியாறுகளின் அரிப்பு: கண்டப்பணிக்கட்டி யாறுகள் நகர்ந்து சென்றபோது தம்மாற் காவிச்செல்லப்பட்ட பாறைத்துண்டுகளினுதவியுடன் நிலத்தைச் சுரண்டுவதில் ஈடு பட்டன. இதன் விளைவாக நிலப்பரப்பிலிருந்த மண் படை முற்றாக நீக்கப்பட்டதுடன், தரை பள்ளமும் திட்டுகளுமாக் கப்பட்டிருக்கிறது. கண்டப்பணிக்கட்டியாறுகள் மூடியிருந்த பகுதிகளிலிருந்து ஏறத்தாழ 3 - 5 மீற். ஆழமான மண் படை அகற்றப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு மண் படை நீக்கப்பட்ட நிலையில் கட்டாந்தரையாகக் காட்சியளிக்
கும் நிலத்தை ஸ்கந்திநேவியாவிலும் கனேடியப் பரிசை நிலப்
பகுதியிலும் காணலாம். மேலும் இப்பிரதேசங்களிலுள்ள மேற் பரப்புப் பாறைகள், கீறல்கள், தவாளிப்புகள் என்பவற்றுட னும் காணப்படுகின்றன.
கண்டப் பணிக்கட்டியாறுகளின் நகர்ச்சியினாலுருவாகிய நிலவுருவங்களில் றோசுமுட்டோன் (செம்மறிருப்பாறை) குத் துப்பாறை வாற்குன்று என்னுமிரண்டும் குறிப்பிடத்தக்கவை. றோசுமுட்டோன்கள் புள்ளத்தாக்குப் பனிக்கட்டியாறுகளினா லும் ஆக்கப்பட்டிருப்பது பற்றி முன்னர் குறிப்பிடப்பட்டது. எனினும் கண்டப்பனிக்கட்டியாறுகளின் செயலினாற்றான் அவை பரவலாக உருவாகியிருக்கின்றன. குத்துப்பாறை வாற் குன்று கண்டப்பணிக்கட்டியர்றுகளுக்குரிய சிறப்பான நிலவுரு வமாகும் பனிக்கட்டியாறு நகர்ந்து வந்த பாதையில் எதிர்ப் பட்ட கடினமான பாறைகள் அதன் அரிப்பிற்குத் தடையாயி ருந்தமையால் எதிர்நோக்கும் பக்கம் பறித்தலின்மூலம் குத்தாக மாற்றப்பட்டு விடுகிறது. அதே சமயம் பணிக்கட்டியாற்றினர்ல் கொண்டு செல்லப்பட்ட அறைபாறைக் களிமண்ணும் பிறவும் குத்துப் பாறையின் மறுபக்கத்தில் நீண்டதூரம் படிவு செய்யப் படுவதன் மூலம் வால் உண்டாகிறது. எடின்பேர்க்கிலுள்ள காசில் பாறை" குத்துப்பாறை வாற்குன்றுக்குத் தக்கதோ ருதாரணமாடும்.
,*

பனிக்கட்டியாற்றின் செயலும் நிலவுருவங்களும் 325
上營_避. - _ _. - படம்: 66 மேல் குத்துப்பாறை வாற்குன்று,
கீழ் றோசுமுட்டோன்
கண்டப் பணிக்கட்டி யாறுகளின் அரிப்பினால் (தோண்டுத லினால்) உருவாகிய இறக்கங்களும் குழிகளும் தற்போது இயற்கை வனப்பும் கவர்ச்சியும் மிக்க ஏரிகளாகவும் நீரோடைகளாகவும் ஊர்சுற்றுவோரின் கண்களுக்கு விருந்தாயுள்ளன. பின்லாந்து கனடா, இங்கிலாந்து முதலிய நாடுகளில் இவ்வகை யேரிகள் ஏராளம். இவற்றில் பின்லாந்தைப் பத்தாயிரம் ஏரிநாடு என வும் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.
20, 9. கண்டப்பணிக்கட்டியாற்றுப் படிவுகள்
பண்டப்பனிக்கட்டிய்ாறுகள் பள்ளத்தாக்குப்பணிக்கட்டியாறு, களை விடப் பன்மடங்கு பெரியவையாதலின் அவற்றின் படிவு கள் அவை முன்னர் மூடியிருந்த பிரதேசங்களில் பரவலாகக் காணப்படுகின்றன. கண்டப் பணிக்கட்டியாற்றினாற் படிவு செய்யப்பட்ட பல்லினமான பொருட்களை நகர்வுகள் (Drift) a far பொதுவாகக் குறிப்பிடுவர். அவற்றை (1) அறை பாறைக் களிமண்படிவுகள் (Till) (2) பனிக்கட்டியாற்று நீர்ப் படிவுகள் (Glacio - Fluvial) என இரண்டு பிரிவுகளாக வகுக்க 6υ ΤΕ Ο ,,
*M
9. 1. அறைபாறைக் களிமண் படிவுகள்: னி த் கட்டியாற்றினாற் ப்டிவுசெய்யப்பட்ட இவ்வகையான படிவுக்ள் மணல் பரல்,களி,உடைகல் என்பவற்றின் கலப்பினால் உருவாகிய படையற்ற திரளாகும் இதைக் கண்டானிக்கட்டியாற்றின் தரைப்படிவு எனவும் கூறலாம். இப்படிவிற் காணப்படும் பொருட்கள் அவை அகற்றப்பட்ட பிரதேசத்தின் இயல்பைப்

Page 169
326 புவிவெளியுருவவியல்
பொறுத்து இடத்துக்கிடம் வேறுபட்டுள்ளன, மேலும் களில் இவை தடையாகவும் சிலவிடங்களில் குழிகளுடனும் காணப்படுகின்றன.
9.2 பனிக்கட்டியாற்று நீர்ப்படிவுகள் (Glacio Fiuvios) *
பணிக்கட்டியாறு இறுதியர்கத் தரித்து நின்ற இடத்திற்கு முன்பாக அப்பனிக்கட்டி யாற்றி லிருந்து வெளிப்பட்ட அருவி கள் மணல் பரல், களி என்பவற்றைப் படிவு செய்துள்ளன. இவை நீரினால் வகைப்படுத்தப்பட்டமையால் இனம் இனமாகப் படையாக்கப்பட்டுத் தகடுகளாகக் காட்சியளிக்கும். இப்படிவு கள் காணப்படும் பிரதேசம் வெளியடையற் சமவெளி"யெனப் படுகிறது.
9. 3. வெளியடையற் சமவெளி:- இதிற் காணப்படும் பொருட்கள் வெளிநோக்கிச் செல்லும்பேர்து துண்மையடைந்து செல்கின்றன. துண்மணற் படிவுகளைக் கொண்ட இத்தகைய பிரதேசம் வட அமரிக்காவில் 'Til plain' என அழைக்கப்படு கிறது. வட ஐரோப்பிய சமவெளியில் மணற்றிடல்களோடு கடிய மணற்றகடுகளை முனைப்படிவுகளுக்கு வெளியிற் கான லாம். இத்திடல்களை ஆறுகள் ஊடறுத்துச் செல்வதனால் இவை தனித்தனித் துண்டங்களாகவும் காணப்படுகின்றன. இவற்றில் மணலை அதிகமாகக் கொண்டுள்ள பிரதேசம் கீஸ்ற் எனப்படுகிறது.
வெளியடையற் சமவெளியில் ஆங்காங்கு நீர்ப் படிவுகளால் உருவாக்கப்பட்ட வண்டல் விசிறிகளும் குழிகளும் காணப்படு கின்றன. கரைந்து அழிந்துகொண்டிருந்த பனிக்கட்டியாற்றின் சில பகுதிகள் அடையல்களாற் சிலகாலம் சூழப்பட்டுப் பாது காக்கப்பட்ட பின்னர் இறுதியில் முற்றாக அழியும்போது குழி களாக மாறியிருக்கலாமெனக் கருதப்படுகிறது. இக்குழிகளைக் கெண்டித்துளைகள் ( Kettle Holes ) என்பர். வெளியடையற் சமவெளியின் வெளியோரத்தில் மிக துண்மையான அடையல்கள் படிந்துள்ளன. இவை பெரும்பாலும் பணிக்கட்டியா றுகளை யொட்டி உருவாகிய ஏரிகளிலேயே காணப்படுகின்றன. இவ் வகையான படிவுகள் Vrvaes" எனப்படுகின்றன.
இவை கோடையிற் பனிக்கட்டி உருகும்போது நீரினாற் படிவு செய்யப்பட்டவையாம். இம்முறையில் ஒராண்டுபடிவு செய்யப்பட்ட அடையல்களைப் படைகளாக அடையாளம்

பனிக்கட்டியாற்றின் செயலும் நிலவுருவங்களும் 327
காணக்கூடியதாயிருப்பதனால் இவை பனிக்கட்டியாற்றுக் காலத் தையும் அதற்குப் பிற்பட்ட காலத்தையும் கணித்தறிய உதவு கின்றன. ஆய்வாளர்கள் இம்முறையைப் பின்பற்றிப் பால்டிக் கடல் உருவாகிய வரலாற்றையும் பனிக்கட்டியாறாதலுக்குப் பின்னர் ஸ்கந்திநேவியாவின் காலத்தையும் அறிந்துள்ளனர்.
9. 4. கண்டப்பணிக்கட்டியாற்றுப்படிவு நிலவுருவங்கள்
கண்டப் பணிக்கட்டியாற்றுடன் தொடர்புள்ள படிவு நில வுருவங்கள் பலவாகும். அவற்றில் சில அறைபாறைக் களிமண் படிவுகளாகவும், சில நீர்ப்படிவுகளாகவும், வேறுசில கலப்புப் படிவுகளாகவும் காணப்படுகின்றன. இத்தகைய படிவு நிலவுரு வங்களில் (1) கூர் வரம்புகள் (Flutes) (2) நீள் குன்றுகள் (3) நீள் மணற் குன்றுகள் (4) படிவுத் திட்டைகள் (5) அலை யும் பாறைகள் ஆகியன குறிப்பிடத்தக்கவை.
(1) கூர் வரம்புகள் (Flutes) பனிக்கட்டியாற்றின் கீழ் படிவு செய்யப்பட்ட அறைபாறைக்களி மண்ணின் மேற்பரப்பில் நீண்ட நறுக்கான வரம்புகளைப் போன்ற நிலவுருவங்கள் தற்காலப் பணிக்கட்டியாறுகளுக்கு முன்னால் காணப்படுகின்றன. இவை நீள்குன்றுகளை விடச் சிறியனவாகவும் ஒடுக்கமானவையாகவும் இருப்பதோடு நேராகவும் சமாந்தரமான பக்கங்களுடனும்
قفلش انتقامگی،
படம்: 67 கண்டப்பணிக்கட்டியாற்றின் படிவுருவங்கள்

Page 170
328 புவிவெளியுருவவியல்
காணப்படுகின்றன. இவற்றின் உயரமும் அகலமும் 1 மீ. வரை யிலும், நீளம் பல கி. மீ வரையிலும் காணப்படலாம். இவை அறைபாறைக்களித்திரளிற் புதைந்த பாறைகளின் பின்புறத்தில் உண்டாகிய குழிகளிலிருந்து தொடங்கிப் பணிக்கட்டியாறு பின்வாங்கிச் சென்ற திசை நோக்கி நீண்டுள்ளன.
(2) நீள் குன்றுகள் (Drumlins): இவை மென்மையான படையற்ற அறைபாறைக்களிமண் படிவுகளினாலோ, நீர்ப் படிவுகளாலோ உருவாக்கப்பட்ட குன்றுகளாம். பார்வைக்கு ஒரு முட்டை, கவிழ்ந்த கரண்டி அல்லது திமிங்கில முதுகு போலத் தோன்றும் இக்குன்றுகள் சில மீற்றர் முதல் 1 கி. மீ வரை நீண்டும், 100 மீற்றர் வரை உயர்ந்தும் காணப்படுகின் றன. இவற்றின் நீள் அச்சு பனிக்கட்டியாறு சென்ற திசைக்குச் சமாந்தரமாகவும், சாய்வுகள், பனிக்கட்டியாறு வந்த திசையில் ஓரளவு குத்தாகவும் உள்ளன. பனிக்கட்டியாற்றின் சுமை அதிகரித்த நிலையில் அது அசைந்தபோது அதன் கீழிருந்த அறைபாறைக் களிமண் படிவுகளுக்கும், தரைக்குமிடையில் உராய்வு அதிகரித்தமையால் இவை உருவாக்கப்பட்டிருக்கலாம். பனிக்கட்டியாற்றின் அமுக்கம் காரணமாக இவற்றின் மேற் பாகம் ஒப்பரவானதாயுள்ளது. -
சில நீள் குன்றுகள் மத்தியில் பாறை உள்ளீட்டையும் அதனைச் சுற்றி மெல்லிய மண்படையையும் கொண்டிருப்பத னால் அவற்றை பாறைநீள்குன்றுகள் அல்லது போலிநீள் குன்றுகள் எனக்குறிப்பிடுவர். பல நீள்குன்றுகளைக் கொண் டுள்ள ஒரு பிரதேசம் பார்வைக்கு ஒரு முட்டைக்கூடையைப்
போலத் தோன்றுவதனால் அதனை முட்டைக்கூடைத் தரைத்
தோற்றம் எனவும் வர்ணிப்பதுண்டு (Basket of Eggs Topogrophy) -
7 (wi) நீள் மணற்குன்றுகள் (Eskers) இவை பனிக்கட்டி யாற்றின் முகப்பிற்குச் செங்கோணத் திசையில் உருவாகிக் காணப்படும் நீண்ட, மியாந்தர் போல வளைந்த படிவுருவங்க ளாகும். இவை அறைபாறைக்களிமண்ணினாலும், படையாக் கிய மணல், பரல் போன்ற நீர்ப்படிவுகளினாலும் உருவாக்கப் பட்டுள்ளதோடு சில இடங்களில், கிளைகளுடனும் காணப் படுகின்றன. பொதுவாக, பதிவான நிலத்திலும், புள்ளத்தாக் குகளிலும் நன்கு விருத்தியடைந்துள்ள இக்குன்றுகள் சில இடங் அளில் நிலச்சாய்வுககு எதிராகவும் பாறைத் தொடர்கள் மற்றும்

பனிக்கட்டியாற்றின் செயலும் நிலவுருவங்களும் 329
நீர்பிரிநிலங்களுக்கு மேலாகவும் செல்வதனால், நீரியல் நிலை யமுக்கத்தின்கீழ் ஒடிச்சென்ற அருவிகளால் உருவாக்கப்பட்டி ருக்கலாமெனக் கருதப்படுகிறது.
நீள்மணற்குன்றுகள் பனிக்கட்டியாற்றின்கீழ் அல்லது அதன் உட்பகுதியில் காணப்பட்ட வாய்க்கால்களுக்கூடாகப் பாய்ந்து அருவிகளாற் படிவு செய்யப்பட்ட பொருட்கள் அப்பணிக்கட்டி யாறு பின்வாங்கும்போது தாமும் பின்னோக்கி நீண்டு சென்ற தனால் உருவாகியிருக்கலாம். அல்லது பனிக்கட்டியாற்றின்கீழ்ப் பாய்ந்த அருவிகளின் படிவுகள் அப்பனிக்கட்டியாறு கரைந் தழிந்த பின்னர் வெளிப்பட்டு அயற்பகுதிகளைவிட உயர்ந்து நீள் குன்றுகளாகியிருக்கலாம். மேலும் இவை பனிக்கட்டியாறு தரித்துச்சென்ற இடங்களில் பெருத்தும் சில இடங்க ளி ல் தொடர்ச்சியின்றியும் காணப்படுகின்றன.
7 (wi) படிவுத்திட்டைகள்:- இவையும் படையாகிய மணல், பரல் போன்ற நீர்ப்படிகளால் உருவாக்கப்பட்டவை இவற் றின் பருமன், உருவம், படையாக்க அளவு ஆகியன வேறு பட்டவை. ஆயினும், 'பொதுவாக இவை 15 முதல் 20 மீற்றர் வரை உயர்ந்து சிறு கூம்புக்குன்றுகள்போலக் காணப்படுகின் ᎯᎠ6ᏡᎢ .
படிவுத்திட்டைகள் பல்வேறு முறைகளில் உருவாகியிருக் கலாம். அவை (1) பணிக்கட்டியாற்றின் முகப்புக்கு முன்னால் அருகில்) வளர்ந்த வண்டல் விசிறிகள், கழிமுகங்கள் மற்றும் ஏரிகளிற் திரண்ட் படிவுகள் (2) பனிக்கட்டியாற்றின் மே ற் பரப்பிற் குவிந்த அடையல்கள் (3) ஆழ்பிளவுகளிற் திரண்ட அடையல்கள் (4) பனிக்கட்டியாற்றின் மேலிருந்து ஆழ்பிளவு கள், குழிகள், வாய்க்கால்கள் போன்றவற்றினூடாகக் கீழ் நோக்கி அரித்துச் சென்ற அருவிகளின் படிவுகள் ஆகியவற்றி லிருந்து உருவாகியிருக்கலாமெனக் கருதப்படுகிறது.
படிவுத்திட்டைகள் கூட்டம் கூட்டமாகக் காணப்படும் போது நிலப்பரப்பு குன்றும் குழியுமாகத் தோன்றுவதனால் அதனை 'கேத்தில் முடிச்சுத்தரைத் தோற்றம்' என வும் குறிப்பிடுவதுண்டு. பனிக்கட்டியாறு பள்ளத்தாக்குடன் தொடர் புற்றிருந்த இடங்களில் அதன் பக்கங்கள் வெப்பமூட்டப்பட்டு உருகியதனால் உண்டாகிய அருவிகள் அப்பகுதிகளில் தட்டை யுச்சிகளைக் கொண்ட படிவுகளை விட்டுச்சென்றன. அவற்றை 'பத்டிவு திட்டைப்படிவரிசை' என்பர். அதேசமயம் சில படிவுத்

Page 171
330 புவிவெளியுருவவியல்
திட்டைப்படிவரிசைகள் பனிக்கட்டியாற்றின் பக்கங்களிற் காணப்பட்ட ஒடுங்கிய ஏரிகள் ஒன்றாயிணைவதன் மூலமும் உருவாகியிருக்கலாமெனக் கருதப்படுகிறது.
7 (Wi) அலையும் பாறைகள் (Erratics) : பனிக்கட்டியாற்றி னால் ஒரிடத்திலிருந்து அகற்றிக்கொண்டு செ ல் லப் பட் டு த் தொலைவிலுள்ள இன்னோரிடத்தில் தங்கவிடப்பட்ட பாரிய பாறைகளே இவையாகும். இவை பனிக்கட்டியாற்றின் கொண்டு செல்லும் திறனுக்குச் சான்றாயுள்ளன. இவை தாம் காணப் படுமிடங்களிலுள்ள நாட்டுப்பாறைகளிலிருந்து வேறுபட்டிருப்ப தனால் இவ ற்றை எளிதில் இனங்காணலாம். அல்பேட்டா (ஐ. அமெ) மாகாணத்திற் காணப்படும் ஒரு அலையும் பாறை பல்லாயிரம் கிலோ நிறையுள்ளதாகத் தெரியவருகிறது.
20.10. பனிக்கட்டியாற்றுக் காலங்கள்: அண்மைக்கால ஆய்வுகள் புவியின் வரலாற்றுக் காலத்தில் பன்முறை பனிக்கட்டி யாறாதல் நிகழ்ந்ததை உறுதிப்படுத்தியுள்ளன. சுப்பீரியர் ஏரியையொட்டிக் காணப்படும் தில்லைற் படிவுகள் அங்கு ஏறத் தாழ 100 கோடியாண்டுகளுக்கு முன்னர் (கேம்பிரியனுக்குமுன்) பணிக்கட்டியாறாதல் ஏற்பட்டதை உறுதிப்படுத்துகின்றன. அக்காலத்திய பனிக்கட்டியாறாதல் வேறுபல பிரதேசங்களை பும் பாதித்தது. அதன் பின்னர் பேர்மோ = நிலக்கரிக் காலத் தில் பணிக்கட்டியாறாதல் மீண்டும் ஏற்பட்டதற்குத் தென் கண்டங்களிலும் இந்தியாவிலும் சான்றுகள் கிடைத்திருக்கின் றன. அதற்குப்பின்னர் பெரிய அளவில் பனிக்கட்டியாறாதல் ஏற்பட்டது பிளெயிஸ்தசின் காலத்திலாகும்.
தற்பொழுது உலகின் பரப்பில் 10.4 சத வீதமான பகுதி மட்டும் பனிக்கட்டியாறுகளினால் மூடப்பட்டுள்ளது. பிளெ பிஸ்தசின் காலத்தில் பனிக்கட்டியாறாதல் உச்சநிலையிலிருந்த போது உலகின் பரப்பில் ஏறத்தாழ 30% பனிக்கட்டியாறு களினால் மூடப்பட்டிருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் அரைப்பங்கு வடஅமெரிக்காவிற் காணப்பட்டது. வடஅமெரிக் காவுக்கு அடுத்தபடியாக அதிகமாகப் பாதிக்கப்பட்ட பிர தேசம் வடமேல் ஐரோப்பாவாகும். இப்பிரதேசங்களில் மட்டும் பிரதான பனிக்கட்டித் தகடுகள் காணப்பட்ட தாகவும் இவற்றிலும் சிறிய ஒரு பனிக்கட்டித்தகடு சைபீ ரியாவிற் காணப்பட்டதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பனிக்கட்டியாற்றின் செயலும் நிலவுருவங்களும் 331
மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் பெரிய பனிக்கட்டித் தகடுகள் காணப்பட்ட காலத்தில் அல்ப்ஸ், இமயம், றொக்கீஸ் முதலிய உயர்மலைத் தொடர்களிலும், அவுஸ்திரேலியாவில் கொஸ்சியஸ்கோ மேட்டுநிலத்திலும், நியூசிலாந்து, பற்றக் கோனியா, தென்சில்லி, மத்திய ஆபிரிக்க உயர்நிலம் முதலிய வேறு பிரதேசங்களிலும் சிறிய அளவில் பனிக்கட்டியாறுகள் உருவாகியிருந்தன. இவ்வாறு பரந்த அளவில் ஏற்பட்ட பனிக் கட்டியாறாதல் அதிக அளவிலா ன படிவு வீழ்ச்சியைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்குமென்பதையும், அத்தகைய LIL-6, வீழ்ச்சிக்கு வேண்டிய ஈரத்திற்கு மூலாதாரமாக இருந்த சமுத் திரங்களின் நீர்மட்டம் வீழ்ச்சியடைந்திருக்குமென்பதையும் நாம் எளிதாக ஊகிக்கலாம்.
வட அமெரிக்காவின் வட பகுதியை apņš 5 Tall ill பனிக்கட்டித் தகடுகள் லபறடோர், கீவாற்றின், கோடிலரா முதலிய பிரதேசங்களை மையமாகக் கொண்டு நகர்ந்ததாக முன்னர் கருதப்பட்டது. தற்பொழுது பலர் லபறடோர் ஒன்றை மட்டும் மையமாகக் கொண்டே பனிக்கட்டித் தகடுகள் பல திசைகளிலும் நகர்ந்ததாகக் கருதுகின்றனர். வட அமெரிக்கா მამ ეჭr வடபகுதியை மூடிக்கானப்பட்ட பனிக்கட்டித்தகடு 1500 - 3000 மீற். தடிப்புடன் காணப்பட்டதாகத் தெரியவருகிறது.
ஐரோப்பாவின் வடமேல் பகுதியை மூடியிருந்த பிரதான பனிக்கட்டியாறு ஸ்கந்திநேவியாவை மையமாகக் கொண்டு நகர்ந்தது. இதன் ஆகக்கூடிய தடிப்பு 3000 மீற்றர் என மதிப் பிடப்பட்டுள்ளது. "...
அல்ப்ஸ் மலைப் பிரதேசத்திலும் பிற இடங்களிலும் மேற் கொள்ளப்பட்ட பல ஆய்வுகளிலிருந்து பனிக்கட்டியாறாதல் பல நிலைகளைக் காட்டுவதாகத் தெரியவருகிறது. அஃதாவது பனிக்கட்டியாறாதல் இடைவிட்டு நிகழ்ந்தது என்பதாம் பனிக் கட்டியாற்றுநீரினாற் படிவுசெய்யப்பட்ட வெளியடையல்கள் பனிக்கட்டியாற்றுப்படிவுகளுடன் (அல்ப்சு மலைப்பிரதேசத்தில்) வெவ்வேறு உயர மட்டங்களிற் காணப்படுவதையும் பிறசான்று களையும் அடிப்படையாகக்கொண்டுதான் அத்தகைய முடிவுக்கு வந்துள்ளனர். எனவே பனிக்கட்டியாறுகள் முன்னேறிய இரு காலங்கள் காணப்பட்டனவென்பதும், அக்காலங்களில் தற் போதுள்ளது போன்ற (அல்லது இதிலும் சிறிது வெம்மையான) காலநிலை நிலவியிருக்கலாம் என்பதும் உய்த்துணரப்படும்

Page 172
332 鷺 புவிவெளியுருவவியல்
அல்ப்ஸ் மலைப்பிரதேசத்தில் ஆய்வுகளை மேற்கொண்ட வர்கள் அங்கு பணிக்கட்டியாறுகள் ஐந்து தடவை முன்னேறி பதை உறுதிப்படுத்தியுள்ளனர். அ வ்  ைவந்து முன்னேற்றக் காலங்களையும் (அல்லது நிலைகளை) டான்யூப், குன்ஸ், மின் டெல், றிஸ் வே(ர்)ம் என்னும் பெயர்களாற் சுட்டுகின்றனர் இப்பெயர்கள் டான்யூப் நதியின் கிளைகளின் பெயர்களைத் தழுவிச் சூட்டப்பட்டுள்ளன. முன்னர் குறிப்பிட்ட ஐந்து நிலை களுக்குமிடைப்பட்ட காலங்கள் ஒரேயளவு நீட்சியையுடையன வாயிருக்கவில்லை. முதலிற் படிவு செய்யப்பட்ட அறைபாறைக் களிமண் வானிலையாலழிவிற்குட்பட்டுக் காணப்பட்ட அளவின் அடிப்படையில் பணிக்கட்டியாற்றிடைக் காலங்களின் நீ ட் சி கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி மின்டெல் - றிஸ் இடைக் காலம் மிக நீண்டதாகவும், ஏறத்த ழ 1,90,000 ஆண்டுகள் நீடித்திருந்ததாகவும் தெரியவருகிறது.
வட அமெரிககாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் அங்கு பணிக்கட்டியாறுகள் நான்கு தடவை முன்னேறியதாகத் தெரி விக்கின்றன. அக்காலங்களை நெப்றாஸ்கன், கான்சான் இல்லி னோயன், விஸ்கொன்சின் என்னும் பெயர்களாற் குறிப்பிடுகின் 106FT
20.11 பனியுகங்கள் ஏற்பட்டதற்குக் காரணங்கள்
புவிச்சரித காலங்களில் பன்முறை பனிக்கட்டியாறாதல் ஏற்பட்டிருக்கிறது. கடைசியாக பிளெயிஸ்தசின் காலத்தில் ஏற் பட்ட பனிக்கட்டியாறாதல் ஏறத்தாழ 25,000 ஆண்டுகளுக்கு முன் தொடங்கி 17,000 ஆண்டுகளுக்கு முன்னர் முடிவுற்றது. பனிக்கட்டியாறாதலுக்கு காலநிலை மாற்றம் - குறிப்பாக வளி மண்டல வெப்பநிலை வீழ்ச்சியே முக்கியமான காரணமாகும். அதற்குச் சில காரணங்கள் கூறப்பட்டுள்ளன. அவை பின் SAf Gloft sto
முதலாவதாக, வளிமண்டலத்திற் காணப்படும் தூசியின் அளவு கணிசமாகவும், சடுதியாகவும் அதிகரிக்குமாயின் அது சூரியக்கதிர்வீச்சிற் பெரும்பகுதியைப் பிரதிபலித்துத் திருப்பி விடும். இதனால் வெப்பநிலை வீழ்ச்சியுறும். இவ்வாறு தூசி அதிகரிப்பதற்கு எரிமலைக்கக்குகையே பிரதான காரணமாகும் எனவே கழிந்த ப னி யுகத் திற் கு முன்னர், அல்லது அது தொடங்கிய வேளை புவியில் எரிமலைக்கக்குகை அதிகரித்தி ருந்தால் அதன் விளைவாக வளிமண்டலத்தில் தூசியின் அளவு

பனிக்கட்டியாற்றின் செயலும் நிலவுருவங்களும் 33
அதிகரித்திருக்கும். அது கடுமையான குளிர்கால நிலையையும், பனிக்கட்டியாறாதலையும் தூண்டியிருக்கலாம் எனச் சில ஆய் வாளர்கள் நம்புகின்றனர்.
இரண்டாவதாக புவியில் சூரியக்கதிர்வீச்சின் தாக்கம் குறை வதனால் வெப்பநிலை வீழ்ச்சியடைந்து பனியுகம் ஏற்பட்டிருக் கலாம். வெப்பநிலையில் வீழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய நிலைமை களாவன (1) புவியின் சுழற்சி அச்சின் சரிவுக்கோணம் அதிக ரித்தல் (2) புவியின் சுற்றுகைப்பாதை இயல்புக்கு மேல் நீள் வளையமாதல் (3) சுழற்சி அச்சின் சரிவுத்திசை மாறு த ல் என்பனவாம். புவியின் சுழற்சி அச்சின் சரிவுக்கோணம் 21 5' முதல் 24 - 5 வரை 41,000 ஆண்டுகளுக்கொருமுறை வேறு படுவதனால் அக்காலத்தில் பகல் குறுகி இரவும், குளிர்காலமும் நீண்டு காணப்படும். அடுத்து புவியின் சுற்றுப்பாதை நீளு மாயின், சூரியக்கதிர்வீச்சின் தாக்கம் குறைந்து குளிர் காலங் கள் கடுமையானதாக மாறும். இந்நிகழ்வு ஏறத்தாழ 93, 000 ஆண்டுகளுக்கொருமுறை ஏற்படும் (3) புவியின் அச்சு 23,000 ஆண்டுகளுக்கொருமுறை தளம்புவதனால் (W bbing) அதன் சரிவுக் கோணம் கூடிக்குறையும்போது முனைவுப்பிரதேசங்களில் பகலும், கோடைகாலமும் குறுகி இரவும் குளிர்காலமும் நீண் டிருக்கும் இது "Precession எனப்படும்.
V. மெலன்கோ என்பவர் கணித்தபடி முன் குறிப்பிட்ட மூன்று காரணிகளின் கூட்டுத்தாக்கத்தின் கீழ் கோடை வெப்ப நிலை ஏறத்தாழ (20 - 3°C அளவு) குறைந்தால் அது பனியுகத் தைத் தோற்றுவிக்லாம் எனச்சில ஆய்வாளர்கள் நம்புகின்றனர். (ஆனால் வேறு சிலர் அதை மறுக்கின்றனர்)
மூன்றாவதாக, கண்டநகர்வும் பனிக்கட்டியறாதலுக்கு உதவி யிருக்கும். ஏனெனில் கண்டங்கள் முனைவுகளுக்கருகில் காணப் படாவிடின் பணிக்கட்டியாறாதல் ஏற்பட்டிருக்க முடியாது உதாரணமாக, கேனோசோயிக் யுகத்தில் யூறேசியாவும் வட அமெரிக்காவும் வடமுனைவையடுத்துக் காணப்பட்டன. அதே சமயம் பலேயோசோயிக் காலத்தில் பிற்பகுதியில் தென்கண்டங் கா (கொண்டுவானாலந்து) தென் முனைவையொட்டிக் காணப்பட்டன என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பக்க விளைவாகச் சமுத்திர நீர்ச்சுற்றோட்டம் மட்டுப் படுத்தப்பட்டமையால் கடல்கள் விரைவாகக்குளிர்வடைந்தன. மேலும் பனிக்கட்டியாறாதல் தொடங்கும்போது அதிகரிக்கும்

Page 173
334 புவிவெளியுருவவியல்
பனிக்கட்டி சூரியக்கதிர்வீச்சைப் பிரதிபலிப்பதனால் வெப்ப நிலை மேலும் வீழ்ச்சியடையும். எனவே அதுவும் பனிக்கட்டி யாறாதலைத் தூண்டியிருக்கலாம். இவ்வாறு, பனியுகங்கள் ஏற்பட்டதற்குப் பல காரணங்கள் முன்வைக்கப்பட்டிருப்பினும் அவற்றில் எதுவும், அறிவியலாளர்களின் ஒருமித்த ஆதரவைப் பெறவில்லை.
20, 12 பனிக்கட்டியாறாதலினால் ஏற்பட்டவிளைவுகள்
கடைசியாக ஏற்பட்ட பனிக்கட்டியாறாதலின் போது கடல் நீரின் மட்டம் வீழ்ச்சியடைந் திருந்ததுபற்றி ஏலவே குறிப்பிடப் பட்டுள்ளது. சில ஆய்வாளர்களின் முடிபின்படி ஏறத்தாழ 85 மீற் றர் தடிப்பான நீர் பணிக்கட்டி யாறாதலின்போது கடலி லிருந்து கவரப்பட்டு மீண்டும் கடலுட் சேர்க்கப்பட்டதாகத் தெரியவருகிறது. ஆனால் பனிக்கட்டியாற்றிடைக்காலங்களில் பனிக்கட்டியாறுகள் உருகினமையால் கடல்மட்டம் முன்பிருந்த நீலைக்கு உயரவில்லை யென்றும் அடுத்தடுத்த இடைக்காலங் களில் கடல் மட்டம் படிப்படியாகக் குறைந்ததாகவும் சில ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் பணிக்கட்டிாற் றிடைக் காலங்களில் கடல்மட்டம் 50 - 100மீ வரை மாற்றங் களைக் காட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும் பனிக்கட்டி யாறாதலை யடுத்து நிலத்திற் சுமை யேற்றப்பட்டமையால் அப்பகுதிகள் தாழ்ச்சியடைந்திருக்கு மென் பாதை யு ம் அதன் விளைவாகச் சமநிலை யீடுசெய்யும் அசைவுகள் புவியோட்டின் கீழ்ப் பகுதி க ளி ல் செயல்பட்டிருக்குமென்பதையும் உணர வேண்டும். அன்றியும், சமநிலை சீர்படுத்தல் முற்றுப் பெற அதிக காலம் தேவைப்ப்ட்டிருக்குமென்பதனால் பனிக்கட்டி யாறாக்கப்பட்ட பிரதேசங்களின் தி னரி வு அதிகரித்தபோது அங்கு மேலதிகமாகக் காணப்பட்ட திணிவின் விளைவாகவும் பின்னர் பணிக்கட்டியாறுகள் உருகுவதைத் தொடர்ந்து திணிவு குறைந்ததன் விளைவாகவும் தற்காலிகமான கடல்மட்ட மாற் றங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு கடல்மட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாகவே உயர்த்தப்பட்ட கடல்சார் நிலம், (Raised Beach) அமிழ்ந்திய காடுகள் முதலியன தோன் றின. மேலும் பனிக்கட்டித் தகடுகள் திரண்டிருந்த பகுதிகளில் நிலம் கோப்பையைப் போலத் தாழ்ந்தமையால் பல இறக்கங் கள் உண்டாகின. இவ்வாறு சுப்பிரியர் ஏரியையொட்டி ஏற் பட்ட இறக்கம் 500 மீற் வரை ஆழமுடையதாயிருந்தது.

ஏரிகள்
இத்தகைய இறக்கங்கள்தாம் இன்று ஏரிகளாகக் காட்சி யளிக்கின்றன. வட அமெரிக்காவிலுள்ள ஐந்து பெரிய ஏரிகளும், பின்லாந்து ஸ்கண்டிநேவியா என்னுமிடங்களிலுள்ள ஆயிரக்கணக் கான ஏரிகளும் பணிக்கட்டி யாறாதலின் விளைவாகவே உருவா கின. அதுபோல பாலடிக் கடலும், பிளெயிஸ்தசின் பணிக்கட்டி யாறாதலின் விளைவே. -
பனிக்கட்டியாறாதலின் விளைவாக அதிக சுமையேற்றப்பட்ட ஸ்கந்திநேவியப் பிரதேசம் சமநிலையீடு செய்தல் இன்னும் முற் றுப் பெறாமையினால் ஒராண்டில் சில செ. மீற்றர் விகிதத் தில் இன்றும் உயர்ந்துகொண்டிருப்பதை ஆய்வுக்ள் புலப்படுத்து கின்றன. மேலும் பணிக்கட்டியாறுகளினாற் படிவுசெய்யப்பட்ட அறைபாறைக் களிமண் படிவுகளினாலும் வெளியடையலினாலும், அக்காலத்திற் காணப்பட்ட ஆறுகளின் வடிகால் பலவாறு பாதிக் கப்பட்டதனால் பல விடங்களில் இன்று நாம் பொருந்தா வடி கால் அமைப்பைக் காணக்கூடியதாயிருக்கிறது.
பணிக்கட்டியாறாதலின் விளைவாக ஏற்பட்ட கடல்மட்ட மாற்றங்கள் பனிக்கட்டி யாறாக்கப்படாத பிரதேசங்களில் கோறல்" வளர்ச்சிக்கு உதவியதாக டார்வின், டானா முதலி யோர் கருதுகின்றனர்.
20. (ஆ) ஏரிகள்
புவியின் மேற்பரப்பில் நீரைக்கொண்டிருக்கும் பெரிய இறக் கங்கள் ஏரிகள் எனப்படும். ஏரிகளின் நிலைபேறானது இறக்கத்தின் ஆழம். அது பெறும் நீரினளவுக்கும் இழக்கும் நீரினளவுக்குமிடை யுள்ள தொடர்பு என்பவற்றில் தங்கியுள்ளது. ஏரிகள் மழை மூலமோ, நீரைப்பெறலாம். அதேபோல் ஆவியாதல், ஆறுகளாற் கொண்டு செல்லப்படுதல், அடித்தளத்தாற் பொசிந்து செல்லல் என்னும் மூன்று வழிகளில் ஏரிகள் தமது நீரை இழக்கலாம். ஏரிகள் சிலபோது ஒரு பருவத்தில் நீரின்றி வரண்டு காணப்படு வதுமுண்டு. குறிப்பாக, பாலைநிலப் பகுதிகளிலுள்ள ஏரிகள் இவ் வகையானவை. சாட் ஏரியும்,அயர் ஏரியும் இவற்றுக்குத்தக்க உதா ரணங்களாகும். வேறுசில ஏரிகள் நீர் வெளியேற்றமின்மையால் உப்பு ஏரிகளாகி விடுவது முண்டு. கஸ்பியன் கடல், சரிக்கடல், பெரிய உப்பு ஏரி முதலியன இப்படிப்பட்டவை.
ஏரிகளின் பாகுபாடு : ஏரிகளை அவை தோன்றிய முறையினடிப் படையில் அரிப்பினாலாக்கப்பட்ட ஏரிகள், வடிவு செய்தலினா

Page 174
歇岛6 புவிவெளியுருவவியல்
லுண்டாகிய ஏரிகள், புவியோட்டசைவுகளால் உருவாக்கப்பட்டே ஏரிகள், எரிமலை ஏரிகள் என நான்காக வகுக்கலாம்.
அரிப்பினாலாக்கப்பட்ட ஏரிகள்
பணிக்கட்டி யாற்றரிப்பு : பனிக்கட்டி யாறாக்கப்பட்ட பிரதேசங் களின் எழிலும் இயற்கைப் பொலிவும் பெருமளவுக்கு ஏரிகளினா லுண்டாகின்றன என்பது பலருமறிந்த உண்மை எனினும் பணிக் கட்டியாறாக்கப்பட்ட பிரதேசங்களிற் காணப்படும் சில ஏரிகள் ஆறு பனிக்கட்டியாறு என்னும் இரண்டினதும் கூட்டுத்தாக்கத் தினால் உருவாகின என நம்பப்படுகிறது. வேறுசில ஏரிகள் அரித்தல் படிவுசெய்தல் என்னும் இரண்டினதும் துணையுடன் உருவாகின எனப்படினும், சில ஏரிகளாவது முற்றிலும் பனிக் கட்டி யாற்றின் அரிப்பினாலேயே உண்டாகின என்பதில் ஐய மில்லை. ஸ்கைக் தீவிலுள்ள "கொறுஸ்க் ஏரி கப்புரோப் பாறை களில் தோண்டப்பட்டுள்ளது. ஆங்கில ஏரிமாவட்டத்திலுள்ள வட்டக்குகை ஏரிகளும் கனடாவிலுள்ள அதபாஸ்கா ஏரியும் இவ்வகைக்கு வேறு உதாரணங்களாம்.
ஆற்றரிப்பு சில ஏரிகள் முன்னர் ஆற்றில் நீர்வீழ்ச்சி காணப் பட்ட இடங்களில் உண்டாகிய குதிக்கும் குட்டையிற் காணப் படுகின்றன. ஆறு தனது போக்கை மாற்றிய பின்னர் இக் குட்டைகள் ஏரிகளாகமாறும். நியூயோக்கிலுள்ள சிறக்கூசுக்கு அண்மையிலிருக்கும் ஜேம்ஸ் வில் ஏரி இவ்வகையானது.
காற்றரிப்பு சில சந்தர்ப்பங்களில் காற்றும் மென்பாறைப் பிர தேசங்களில் சிறிய ஏரிகளைத் தோண்டிவிடுகின்றது. கிழக்கு சைபீரியாவிலும் மத்திய அவுஸ்திரேலியாவிலும் இவ்வகையான ஏரிகளைக் காணலாம். ஆர்செந் தீனாவிலும் இவ்வகையில் உரு வாகிய ஏரிகள் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. எகிப்தின் மேற்குப்பகுதியிலுள்ள குவாற்ராறஈ' இறக்கத்திற் க்ாணப்படும் ஏரிகளில் சில காற்றரிப்பினாலுண்டர்கியிருக்கலாமெனக் கருதப் படுகிறது.
கரைசலின் விளைவுகள் : சிலபாறைகள் நீரின் செயலால் கரை சலாக நீக்கப்படும்போது அவ்விடங்களில் ஏரிகள் உருவாகலாம். அயர்லாந்திலுள்ள "வோடோக்" எனப்படும் ஒர் ஆழமற்ற ஏரி சுண்ணாம்புப்பாறைகள் கரைசலினால் அகற்றப்பட்டமையால் உருவாகியுள்ளது. மேலும் கண்ணாப்புப்பாறைப் பிரதேசத்தில் பாறைகள் கரைக்கப்பட்டு நீர் தரைக் கீழ்ச் செல்லும்போது

ஏரிகள் @岛7
அடித்தளத்திலுள்ள உட்புகவிடாப் பாறைப் பரப்பில் ஏரிகள் உண்டாகலாம். காசித்துப் பிரதேசத்திலுள்ள போல்ஜேக்களிற் காணப்படும் ஏரிகளிற் சில இவ்வகையினவே. அதுபோலவே உறிஞ்சு துளைகளின் அடிப்பாகத்தை அடையல்கள் மூடுவதனா லும் சிறு ஏரிகள் உண்டாகின்றன. வடஅமெரிக்காவில் கென் ரக்கி, புளோரிடா மாகாணங்களில் இவ்வகை யேரிகள் காணப் படுகின்றன.
படிவு செய்தலினாலுண்டாகிய ஏரிகள்
ஆறுகளின் போக்கிற்குக் குறுக்கே எங்காயினும் படிவுசெய் தல் அதிக அளவில் நிகழ்வதனால் தடையேரிகள், உண்டாகலாம். இம்முறையிற்றோன்றும் சில தடையேரிகள் , காலப்போக் கில் தடை நீக்கப்படுவதனால் மறைந்துவிடுவதுண்டு. ஒர் ஆற் றுப் பள்ளத்தாக்கில் எங்காயினும் நிலவழுக்குகை ஏற்படுவதனால் ஆற்றின் போக்குத் தடைப்படும்போது அங்கு ஒர் ஏரி உருவாக லாம். 1892ல் மேல் கங்கைப் பகுதியில் ஏற்பட்ட நிலவழுக்குகை பின் விளைவாக 8 கி. மீ நீளமும் 100 மீற்றருக்குமேல் ஆழமு முள்ள ஒரேரி உருவாகியது. அது சிலகாலத்தின் பின்னர் அகற் றப்பட்டுவிட்டது. இம்முறையிற் றோன்றிய சிறு ஏரிகள் சிராநி வாடா மலைப் பகுதியிலும் பெனைன்மலைப் பகுதியிலும் காணப் படுகின்றன. சிலபோது உடைகற்குவை மலைச் சரிவிலிருந்து கீழிறங்கிக் குவிவதனாலும் சிறு ஏரிகள் உண்டாகின்றன. ஸ்நோ டனிலுள்ள "ஹாட்ராண்' ஏரி இத்தகையது எனக் கூறப்படு கிறது.
ஆறு படிவு செய்தலினாலும், தனது போக்கை மாற்றுவத னாலும் கழிமுக ஏரிகள் பணியெருத் தேரிகள் முதலியன உண்டா கின்றன. மிசிசிப்பிக் கழிமுகத்திலுள்ள கிராண், சல்வடோர் என்னுமிரண்டும் இப்படிப்பட்டவை. மேலும் ஒரு கிளை யாற்றி னாற் கொண்டுவரப்படும் பொருட்கள் பிரதான ஆற்றுப் பள் ளத்தாக்கிற் படிவுசெய்யப் படுவதனாலும் ஏரிகள் உருவாகலாம். மினசொற்றாவுக்கும் விஸ்கொன்சினுக்கும் இடையிலுள்ள "பெப் கின்' ஏரி இத்தகையது. இவற்றைத் தவிரச் சிலபோது ஆற்றின் இரு கரைகளிலுமுள்ள உயரணைகள் பெருக்கு நீரை உள்வர விடாது தடுப்பதனாலும் ஏரிகள் உண்டாகுன்றன. மறே ஆற் றின் வெள்ளச் சமவெளியிலுள்ள "பில்லா பொங் ஏரி இவ்வகை ፴፱ff ©öTé} •

Page 175
புவிவெளியுருவவியல்
மேற்கூறப்பட்டவற்றைத்தவிர ஆற்றினாற் படிவுசெய்யப் படும் வண்டல் மண் நீரோட்டங்களினாலும் அலைகளினாலும் மணற்றடைகளாக மாற்றப்படுவதனால் கடல் நீரேரிகள் உண்டா இன்றன. பால்டிக் கடலிலுள்ள ஹால்ப் புளோரிடாவிலுள்ள கடனீரேரிகள் முதலியன இவற்றுக்குச் சில உதாரணங்களாம்.
காற்றினாற் படிவு செய்யப்பட்ட மணற் குன்றுகள் குறுக் கிடுவதனாலும் கடலின் 'கைகள் கடனீரேரிகளாகலாம். ஒல் லாந்திலுள்ள தாழ் பிரதேசத்தில் மணற் குன்றுகளுக்குப் பின் னால் பலசிறு ஏரிகளும் சதுப்பு நிலங்களுமுள்ளன. அன்றியும், புயற்காற்றுகளின் விளைவாகக் கடற்கரையில் படிவு செய்யப்பட்ட பொருட்கள் ஆற்றுவாயைத் தடுப்பதனாலோ, அன்றி ஒரு குடா வின் வாயைத் தடுப்பதனாலோ கடனீரேரிகள் உருவாகலாம். நோர்போக், புறுரட்சில், செசில்பாங்கிற்குப் பின்னாலுள்ள பிளிற்ஸ் (Fleets) ஆகியன இவ்வகையானவை.
பனிக்கட்டியாற்றுப் படிவுகளினால்-குறிப்பாக முனைப் படிவு களின் தடையினால் பல ஏரிகள் உண்டாகியுள்ளன. வடஇத்தாலி யிலுள்ள கொமோ காடா மக்யோர் ஏரிகள் இவ்வாறு உரு வாகின. கேத்தில் துளைகள் எனப்படுபவையும் ஒரு விசேட வகை ஏரிகளே. பணிக்கட்டி யாற்றுப் படிவுக்குள் பனிக்கட்டித்துண்டு புதைக்கப்படுவதனால் இவை தோன்றியுள்ளன. இவற்றில் சில தற்போது முற்றா நிலக்கரியை யுடையனவாகக் காணப்படுகின் றன. சிலபோது பணிக்கட்டியாறே தடையாயிருப்பதனாலும் ஏரி கள் உண்டாகலாம். அல்ப்சு மலைப் பகுதியிலுள்ள அலெக் பனிக்கட்டியாற்றின் தடையினால் 'மார் ஜெலன்" என்னும் ஏரி உண்டாகியிருக்கிறது. ஐஸ்லந்திலும், கிரீன்லாந்திலும் இவ்வகை யான ஏரிகள் பல காணப்படுகின்றன.
நீரில் முளைக்கும் தாவரங்கள் அடர்த்தியாக வளர்வதானால் சில வேளைகளில் ஆறுகள் கழிமுகப்பகுதியிற்றடுக்கப்படும்போது ஏரிகள் உருவாகும். தெற்கு ஒல்லாந்திலுள்ள கூறென்" வட கிழக்கு பெல்சியத்திலுள்ள வெனென்" ஆகியன இவ்வகை ஏரி களுக்கு உதாரணங்களாகும்.
SIGGRÄTT GROOT படிவினாலுண்டாகிய ஏரிகள்
யூகோசிலாவியாவிலுள்ள காசித்துப் பிரதேசத்தில் பல ஆறு களின் போக்கு சுண்ணப் பொருட்களின் படிவினால் தடுக்கப்பட்

ஏரிகள் 器姆
டமையால் ஏரிகள் உண்டாகியிருக்கின்றன. மத்திய யூகோசிவா வியாவிலுள்ள "பிளிற்விக்கா ஏரி இவ்வகைக்கு உதாரணமாகும்.
புவியோட்டசைவினாலுருவாகிய ஏரிகள்
புவியோட்டில் ஒருபகுதி குறைத்தளம் வழியே நழுவுவதனால் ஏரிகள் உண்டாகலாம். இவ்வகை ஏரிகளுட் சில உப்பு ஏரிகளாக வும், சில நன்னீர் ஏரிகளாகவுமுள்ளன. றொக்கி மலைப்பகுதியி லுள்ள பெரிய வடிநிலத்திற் காணப்படும் "பெரிய உப்பு ஏரியும் ஏனைய சிறிய ஏரிகளும் குறைத்தலுக்குட்பட்ட பிரதேசத்திற் காணப்படுகின்றன. இவை முன்னர் அங்கு காணப்பட்ட பொண் வில்" ஏரியின் எச்சங்களாகும். மத்திய ஆசியாவிலுள்ள பைத் இல் ஏரியும் குறைத்தலுக்குட்பட்ட வடிநில மொன்றிலேயே கான படுகின்றது. ஐக்கிய அமெரிக்காவில் தெற்கு ஒறிகனிலுள்ள அல்பேட் வானர் ஏரிகள் சரிக்கப்பட்ட குறைத் திணிவுகளுக் கிடையிற் காணப்படுகின்றன. மேலும் பிளவுப் பள்ளத்தாக்கு ஏற்படுவதனாலும் ஏரிகள் உண்டாகலாம். சாக்கடல், தங்க னிக்கா, நியாசா, ருடோல்ப் முதலிய ஏரிகள் பிளவுப்பள்ளத்தாக் கிற் காணப்படுகின்றன. சில வேளைகளில் ஆற்றின் போக்குப் பகுதியில் மேல் நெளிப்பு (Warbing) உண்டாவதனால் ஆறுதடுக் கப்படும்போதும் ஏரி உண்டாகலாம். ஜெனீவா ஏரி, கஸ்பியன் கடல் ஆகியன இவ்வகைக்கு உதாரணமாகும்.
எரிமலை யேரிகள் : (எரிமலை வா யேரி கள்)
எரிமலையுயிர்ப்பு உக்கிரமானதாயிருக்கும் பொழுது சில வேளைகளில் அம்மலைகளின் வாய்ப்பகுதி முற்றாகத் தகர்க்கப் படுவதனால் அகன்ற ஆழமான பெரிய பள்ளங்கள். அங்கு உரு வாகலாம். இவற்றை எரிமலைப் பெருவாய் என்பர். இவற்றில் நீர் தேங்குவதனால் ஏரியுருவாகலாம். ஒறிகனிலுள்ள எரிமலைவாய் ஏரி பெயர்பெற்ற ஏரியாகும். ஐஸ்லந்திலுள்ள ஒஸ்க்ஜ"வன், மத் இய இத்தாலியிலுள்ள அவெண் ஏரிகளும் இவ்வகையினவே, வட சுமாத்திராவிலுள்ள ரோபா ஏரி எரிமலைப் பெருவாயே களிற் குறிப்பிடத்தக்க தொன்றாகும். இது ஏறத்தாழ 1200சதுர கி.மீ. பரப்புள்ளது.இதைச் சுற்றியுள்ள குத்தான மலைச்சுவர்கள் 650 மீற். உயரமானவை. மேலும் எரிமலைக் குழம்பு பாய் வதனால் ஆற்று நீர் தடுக்கப்படும்போதும் ஏரிகள் உண்டாக லாம். ஜோர்டான் பள்ளத்தாக்கிலுள்ள கலிலிக் கடலும், கலி போனியாவிலுள்ள லஸ்ஸனிற் காணப்படும் ஸ்நாக் ஏரியும்

Page 176
349 புவிவெளியுருவவியல்
கிழக்கா பிரிக்கப் பள்ளத்தாக்கிலுள்ள கிஷ ஏரியும் இவ்வகை யேரி களுக்குச் சில உதாரணங்களாகும்.
ஏரிகள் என்றும் நிலைபெற்றிருப்பவையல்ல. அவை ஆறுகள் அருவிகள் வாய்க்கால்கள் முதலியவற்றாற் கொண்டுவரப்படும் அடையல்கள் படிவதனால் நிரப்பப்பட்டு மறைந்துவிடலாம். எனி னும் அவை நீரைத் தேக்குவதன் மூலம் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்துவதுடன் நீர் மின்வலு உற்பத்திக்கும் உதவுகின்றன, பெரிய ஏரிகள் அயற் பிரதேசத்தில் வெம்மையைக் குறைக்கின் நன. சில ஏரிகள் நீர்ப்பாய்ச்சலுக்கும் மீன்பிடித்தலுக்கும் மட்டு மன்றிப் போக்குவரத்துக்கும் உதவுகின்றன. இறுதியாக, ஏரிகள் மனோரம்மியமான காட்சிப் பொருளாயமைந்து ஊர்சுற்றுவோரின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்துவருகின்றன.
 

அத்தியாயம் 21 காற்றின் செயலும் நிலவுருவங்களும்
21 புவியின் நிலப்பரப்பில் ஏறத்தாழ 30 சதவீதமான பிரதேசம் வரண்ட காலநிலையையுடையது. இப்பிரதேசம் இருவலயங்களா கக் காணப்படுகின்றது. அவை : (1) அயன மண்டல உயரமுக்க வலயத்திலுள்ள வெப்பப் பாலைநிலங்கள் (2) கண்டங்களின் உட் பாகத்தில் பெரும்பாலும் மலையிடை மேட்டுநிலங்களாகக் காணப் படும் வரண்ட பிரதேசங்கள் என்பனவாகும். இவற்றில் முகலா வது வலயமானது சகாரா, அரேபியா, தார் முதலிய வெப்பப் பாலை நிலங்களையும் உள்ளடக்கும். இப்பாலை நிலங்களில் மிக அருமையான மழை, தாவரக் குறைவு, பொறிமுறை வாணி லையாலழிவின் முதன்மை, நீரைவிடக் காற்றின் ஆதிக்கம் அதிக மாயிருத்தல் முதலியன சிறப்பமிசங்களாயிருப்பதனால் இங்குள்ள நிலவுருவங்கள் தனித்துவமுடையனவாகக் காணப்படுகின்றன.
வெப்பப்பாலை நிலங்கள் முற்றாக மழையற்றவையெனக் நாம் கருதக்கூடாது. அங்கும் அவ்வப்போது இடியுடன் கூடிய மேற்காவுகை மழை சடுதியாகப் பெய்வதுண்டு. ஆயினும் இம் மழை குறுகிய காலத்திலேயே நிகழ்வதனால் சடுதியான சேற்றுப் பெருக்குகளே ஏற்படுகின்றன. அசாதாரணமாக அதிக மழை பெய்தால் மட்டும் அருவிகள் உருவாகிக் கடுகதியிற் பாய்ந்து செல்லும். எனினும் அவையும் விரைவில் வற்றி வரண்டுவிடும். இதன் விளைவாகப் பாலைநிலப் பிரதேசங்களில் ஒடும் நீரினால் உருவாக்கப்படும் நிலவுருவங்கள் ஒப்பளவிற் குறைவு எனலாம். அங்கு, தாவரங்கள் குறைவாகக் காணப்படுவதனால் பாறைகள் ஞாயிற்றின் கதிர்களினால் நேராகத் தாக்கப்பட்டுப் பொறிமுறை வானிலையாலழிவுக் குட்படுகின்றன. பகலின் வெம்மைக் கேற்ப இரவில் தண்மைநிலவுவதனால் பாறைகள் எளிதில் உறுதியிழந்து உடைந்து விடுகின்றன. இத்தகைய பாறையழிவுக்குப் பணியும், அருமையாகப்பெய்யும் மழையும் உதவுகின்றன. இவ்வாறு பாறை களின் அழிவினாற் பெறப்பட்ட துணிக்கைகளும் துகள்களும் எங் கும் பரந்துகாணப்படுவதனால் காற்று அவற்றைக் கருவியாகப் பயன்படுத்திப் பல நிலவுருவங்களை ஆக்க முடிகிறது .
21 , 2 காற்றின் செயல்கள்
காற்று அரித்தல், கொண்டுசெல்லல், படிவுசெய்தல் என்னும் மூவகைச் செயல்களையும் புரிகின்றது. காற்றரிப்பு வாரியிறக்கல்,

Page 177
霹4罗 புவிவெளியுருவவியல்
தேய்த்தல் அரைத்து தேய்தல் என்னும் மூன்று செயல்முறை களை உள்ளடக்கும்.
2. (i) air funpatsi (Deflation) aleri is (Loose நுண் மனல், தூசி, முதலியவற்றை வாரிச் செல்வதன் மூலம் நிலத்தைக் குழி பாக்குதலை இச்செயல்முறை குறிக்கின்றது. இதன்மூலம் நிலத் தில் பள்ளங்களும், இறக்கங்களும் உருவாகின்றன. எகிப்து, லிபியா தென்னாபிரிக்கா முதலிய நாடுகளில் இவ்வகையான இறக்கங் களைக் காணலாம். உதாரணமாக எகிப்திலுள்ள குவாற்றாரா என்னும் இறக்கம் கடல் மட்டத்தின்கீழ் 125 மீற். ஆழமுடை யது. ஆனால் அண்மைக்கால ஆய்வுகளின்படி முன் குறிப்பிடப் பட்டவற்றைப் போன்ற இறக்கங்கள் அனேகமாக வன்மையற்ற பாறைப் பிரதேசங்களிலேயே உருவாகியுள்ளதோடு அவற்றின் உருவாக்கத்தில் இரசாயன முறையான வானிலையாலழிவுக்கும் கணிசமான பங்கிருப்பதாகத் தெரியவருகிறது. ஏனெனில் குழி கள், பள்ளங்கள்களாகவும், பள்ளங்கள் இறக்கங்களாகவும் மாறிப் படிப்படியாக ஆழமாகும்போது தரைக்கீழ் ஈரமும் அதிகரிப்பது னால் அது இரசாயன முறையான அழிவைத் துரிதப்படுத்தும் என்பது தெளிவு.
2. (i) தேய்த்தல் பாறைகளின் பொறிமுறை யழிவினாலும் சேறு உலர்வதனாலும் கிடைக்கும் துணிக்கைகளைக் கருவியாகப் பயன் படுத்தி, மணற்றாள் மூலம் நாம் மரப் பொருட்களை மினுக்கு வதைப் போலக் காற்றானது தனது போக்கி லெதிர்ப்படும் பாறைத் திணிவுகளையும் கற்களையும் தேய்த் தழிக்கின்றது. ஓரினமான பாறைகளின் மேற்பரப்பை மினுக்கி ஒப்பரவாக்கும் காற்றானது வேற்றினப்படைகளை யுடைய பாறைத் திணிவு களை வேறுபட்ட வளவில் தேய்த்துப் பல விசேட நில வுருவங் களை யாக்கியுள்ளது. காற்றினாற் காவிச் செல்லப்படும் மணலி னளவு காற்றின் வேகத்தையும் மணற்றுணிக்கைகளின் பருமனை யும் பொறுத்து வேறுபடுகிறது. பொதுவாகக் காற்றின் அரிப்பு நிலமட்டத்திலிருந்து ஏறத்தாழ 1 மீற் உயரத்திற்குள்ளேயே நிகழ் கிறது என்பதை உணரவேண்டும், தேய்த்தலின் விளைவாகப் பாலை நிலங்களில் ஆங்காங்கு தனித்துக் காணப்படும் பெரிய பரற்கற்கள் பாதிப்புறுகின்றன. அவை காற்றின் பல முனைத் தாக்குதலினால் தேய்ந்து தமதுபக்கங்கள் மினுக்கப்பட்டு ஒப்பர வான முகங்களுடன் காணப்படுகின்றன. அவற்றைக் காற்றரித்த பரல் (Ventifats) எனக்குறிப்பிடுவர். அவற்றில் மூன்று பக்கங்கள் மினுக்கப்பட்டுள்ளவை மும்முகப்பரல் எனவும் இருபக்கங்கள் மட் டும் மினுக்கப்பட்டவை இருமுகப்பரல் எனவும் குறிப்பிடப்படும்.

காற்றின் செயலும் நிலவுருவங்களும் 岑盛岛
21 . 3 காற்றரிப்பால் உருவாகும் நிலவுருவங்கள்
3 . (1) LIr6os. 56. Gubaal (Desert Pavement)
கூழாங்கற்கள், பரற்கற்கள் ஆகியன காணப்படுமிடங்களில் உள்ள நுண்மணல் காற்றினால் அள்ளப்பட்டு வெளியே வீசப் படுவதன் விளைவாக அக்கற்க்ள் செறிவாகக் காணப்படுமிடங் கள் கல்மேடையைப்போலக் காட்சியளிக்கும். அன்றியும் கிடை யான ஓரினப் பாறைப் படைகளின் மேற்பரப்பிலுள்ள மணல் காற்றினால் நீக்கப்படுமாயின் அதுவும் மேடைபோலத் தோன்று வதுண்டு. இவற்றைப் பாலைநில மேடைகள் என அழைப்பர். இவற்றின் மேற்பரப்பு தட்டையாகவும் மினுக்கப்பட்டுமிருக்கும்.
3 (i) காளான் பாறைகள் ( Mushroom Rock)
காற்றின் உச்சவரிப்பு தரைமட்டத்திலிருந்து 1 மீ. உயரத் திற்குள் அடங்குவதனால் தனியான சில பாறைத் திணிவுகள் பல கோணங்களிலிருந்தும் வீசும் காற்றினால் தமது அடிப்பாகம் அதிகமாக அரிக்கப்பட்டுக் கீழே ஒடுங்கியும் மேற்பக்கத்தில் அகன் றும் காளான்களைப்போலக் காட்சியளிக்கின்றன. இவ்வகைப் பாறைத் திணிவுகளைக் 'காளான் பாறைகள்' எனக்குறிப்பிடு வர் அண்மைக்கால ஆய்வுக்ளின்படி இப்பாறைகளின் அடிப்பா கம் அதிகமாக அரிக்கப்படுதற்கு நிலமட்டத்தில் ஏற்படும் இரசாயன வானிலையாலழிவும் காரணமெனவும், பாறைகளின் மேற்பரப்பிலுள்ள ஈரம் இரசாயனத் தாக்கத்திற்கு உதவுவதாக வும் தெரியவருகிறது. வளி சடுதியாகக் குளிர்வடைதல், பணித் துளிகள் படிதல் போன்ற நிலைமைகள் இரசாயன வானிலையா லழிதலுக்கு உதவுவதாகக் கருதப்படுகிறது. மேலும், மேற்குறிப் பிட்ட முறையில் பெரும்பாலும் முற்றாக அடியறுக்கப்பட்ட பாறைகள் தமது பாரம் சமநிலையிலிருக்குமாயின் அந்தர நிலைப்பாறைகளாகலாம். (Balancing Rock ) கொலராடோப் பூங்காவில் அத்தகைய ஒரு பெரியபாறை காணப்படுகிறது.
3 i பீடக்கிடைத் திணிவு (Zeugan)
வன்பாறைப்படையை மேலும் மென்பாறைப் படையைக் கீழும் கொண்ட கிடையான ஒரு பாறைத்திணிவின் மேற்பக்கத்தில் வானிலையாலழிவின் விளைவாகப் பிளவுகள் உண்டாகும்போது காற்று அப்பிளவுகளை மையமாகக்கொண்டு தேய்க்கும் தொழி லில் ஈடுபடும். இதனால் கீழுள்ள மென்பாறைப்படை விரைவில் அரிக்கப்பட்டுத் தேய்ந்துபோகும்போது குறைவான அரித்தலுக் குட்பட்ட மேற்படையானது அகன்று காணப்படும். இவ்வகை நிலவுருவங்களைப் பீடக்கிடைத் திணிவு எனக் கூறுவர். இவற்

Page 178
BAA புவிவெளியுருவவியல்
றின் கீழ்ப்பாகம் அடியறுக்கப்படுவதனால் சிலவேளைகளில் மேற் பாகம் இடிந்து விழுவதுண்டு. பீடக்கிடைத் திணிவுகளிற் சில 6ே மீற். வரை உயர்ந்து காணப்படுகின்றன.
துளுன்பாறை டேக்கிடைத்திணிவு
படம் : 68 காற்றரிப்பு நிலவுருவங்கள்
3 (iv) u Gru-lag is 366tir (Yardlangs)
வன்மையானதும் வன்மையற்றதுமான படைகளையுடைய பாறைத்திணிவுகள் காற்றுத்திசைக்குச் சமாந்தரமாகக் காணப் படுமாயின் அவற்றின் மேற்வக்கம் காற்றுச் செல்லும் திசை நோக்கித் திருப்பப்படுவதுடன் பலகோணக் காற்று வீச்சினால் அவற்றுக்கிடையில் வெளி ஏற்படலாம். இவ்வகை நிலவுருவங் களை மத்தியாசியாவில் யாடாங்குகள் எனக் கூறுவர். இவற்றை பொத்த நிலவுருவங்கள் வட, தென் அமெரிக்கக் கண்டங்களி லும் காணப்படுகின்றன.
மேல்விபரிக்கப்பட்ட முறையில் காற்று வாரியிறக்கல் தேய்த் தல் என்னும் இருசெயல் முறைகளின்மூலம் வேறுபட்ட இயல்பு களையுடைய பாலைநில மேற்பரப்புகளை உருவாக்கியுள்ளது. அவற்றைப் பாறைப் பாலைநிலம், கற்பாலைநிலம் என இரண்டாக வகுக்கலாம். மேற்பரப்பிலுள்ள மணல் முழுவதும் அகற்றப்படு வதனால் அடித்தளப்பாறைகள் வெளிப்பட்டுக் காணப்படும் பிரதேசமே பாறைப்பாலை நிலமாகும். சகாராவில் இவ்வகைப் பாலைநிலத்தை ஹமாடா எனக்கூறுவர். இப்பாலைநிலத்தில் பல் வேறு முறைகளில் தேய்வுக்குட்பட்ட பாறைத்துண்டுகளும் காணப்படும். கற்பாலைநிலம் மேற்பரப்பில் பரற்கற்கள் அல்லது கூழாங்கற்களைக் கொண்டிருக்கும்,அதை றெக் (Reg) எனக்குறிப் பிடுவர்.
 

காற்றின் செயலும் நிலவுருவங்களும் $45
மேற் கூறப்பட்டவாறு காற்று நிலவுருவங்களை உருவாக் கும்போது அதன் கருவிகளாகப் பயன்படும் மணற்றுணிக்கைகள் பாறைகளுடனும் ஒன்றுடனொன்றும் மோதுவதனால் தாமே தேய்ந்து உருச்சிறுத்து துண்மணலாகி விடுகின்றன. இச்செயல் முறையே அரைந்து தேய்தல் எனப்படுகிறது.
21 4 காற்றின் கொண்டுசெல்லல்
காற்று, உருட்டுதல் நகர்த்தல், காவுதல், எற்றுதல் என்னும் நான்கு முறைகளில் மணற்றுணிக்கைகள் தூசி என்பவற்றைக் கொண்டுசெல்கிறது. இவ்வாறு காற்றினாற் கொண்டுசெல்லப் படும் சுமையின் அளவானது சிறப்பாக மணல் மணிகளின் பரு மன், காற்றின் வேகம் என்னும் இரு காரணிகளில் தங்கியுள் ளது. உதாரணமாக 8 கி. மீ. வேகத்தில் வீசும் காற்று மண்டித் துணிக்கைகளையும் 50 கி. மீ. வேகத்தில் வீசும் காற்று சாதா ரண மணல் மணிகளையும் வாரிச் செல்லக்கூடியது. அதேசமயம் நுண்மையான தூசித்துணிக்கைகளும் பிறவும் அதிக உயரத்திற் கும் அதிக தூரத்திற்கும் காவிச்செல்லப்படுவதன் விளைவாக மணற்புயல் அல்லது தூசிப்புயல் உருவாகும். பாலைநில எல் லைப் பகுதிகளில் அத்தகைய புயல்கள் சாதாரண நிகழ்வுகளா கும்.
காற்று, பெரிய மணற்றுணிக்கைகளை 1 முதல் 2 மீற்ற உயரத்திற்குள் உருட்டி அல்லது அவ்வப்போது நகர்த்திக் கொண்டு செல்லும் இவ்வாறு ஓரிடத்திலிருந்து பெரிய துணிக்கைகள் அகற்றப்பட்டபின்னர் அவற்றின் கீழிருக்கும் சற்றுச் சிறிய துணிக்கைகள் மேலெழும் போது பலமான காற்றுக்கள் அவற் றைச் சிறிது தூரம் கொண்டுசென்றபின் மீண்டும் படிவுசெய் யும், இது எற்றல் (Saltation) முறையான கொண்டுசெல்லல்
鹬@H°。
இவ்வாறு வல முறைகளிலும் கொண்டு செல்லப்படும் மணல் ஒரு பரந்த பிரதேசத்திற் படிவு செய்யப்படுவதனால் மணற் பாலை நிலம் உருவாகும். அத்தகைய பாலைநிலம் சகாரா வில் *Brg" எனவும் துருக்கியில் "Kaum" எனவும் அழைக்கப்படுகின்
odeتي0ال

Page 179
346 புவிவெளியுருவவியல்
21 5 மணற்பாலைநிலப் படிவுருவங்கள்
மணற் பாலை நிலத்தில் காற்று பல கோணங்களிலிருந்தும் வீசும்போது திறந்த மேற்பரப்பிலுள்ள மணற்றுணிக்கைகள் அங்குமிங்கும் அள்ளியெறியப்படுவதனாலும் காவிச்செல்லப்படும் துணிக்கைகள் ஆங்காங்கு காணப்படும் பாறைகள் மற்றும் தாவ ரங்களினால் தடுக்கப்படுவதனாலும் பல்வேறுருவங்களில் மணல் குவிகிறது. இவ்வாறு உருவாகும் படிவு நிலவுருவங்களின் இயல் புகள் (1) காற்று மணலை அகற்றுமிடங்களின் பரப்பு, (2) அகற் றும்வேகம் (3) படிவுசெய்யப்படும் பொருட்களின் பருமன் (4) காற்று வழக்கமாக வீசும் திசை (5) காற்றின் வேகம் (6) கொண்டுசெல்லப்படும் மேற்பரப்பின் தன்மை (7) தாவரப் பரம்பல் முதலிய பல காரணிகளில் தங்கியுள்ளது.
5 : (1) மணற்றகடுகன் (Sand sheets) மணற்பாலைநிலத்திற் படிவு செய்யப்படுகின்ற மணல், ஆங்காங்கு - குறிப்பாக மணற் குன்று களுக்கிடையிலும் அவற்றுக்கு வெளியிலும் - பரந்த மணற்றகடு களாகவும் காணப்படுகிறது. மணற்றகடுகள் உருவாகிய முறை பற்றிக் கருத்துவேறுபாடுள்ளது. அவை, நுண்மணலையும், சற் றுப் பெரியதுணிக்கைகளையும் கொண்ட படைகளுடன் காணப் படுவதாகவும் வாரியிறக்கலுக்கும் படிவு செய்தலுக்குமிடையில் காற்றின் வேகம் கூடிக்குறைவதனால் அவை அம்முறையில் உரு வாகியிருக்கலாமெனவும் கருதப்படுகிறது.
5 (i) மணற்குவியல்கள் காற்றின் வேகம் குறையும் பொழுது அல்லது அதன் போக்கில் எதிர்ப்படும் தடைகளின் ஒதுக்குப் பக் கத்தில் படிவு செய்யப்படும் மணல் சிறிது காலத்தின் பின்னர் சிறு குவியல்களாகும். ஆனால் அத்தகைய குவியல்கள் எல்லாமே நீடித்து நிலைத்திருப்பதில்லை. அவற்றில்பல காலப் போக்கில் அழிந்துவிடலாம். ஒதுக்குக் குவியல் (Sand Shadow) மணல் நகர் வுகள் (Sanddri) போன்றவை இப்படிப்பட்டவையாம்.
5 (i) மணற்குன்றுகள் : மணற்குவியல்கள் ஒரளவு உறுதி யடைந்து ஒரு உச்சியுடன் காண்ப்படும்போதே மணற் குன்று கள்" எனப்படுகின்றன. காற்று ஒருதிசையில் ஒழுங்காக வீசுவத னால் உச்சி உருவாகும். அவ்வுச்சியின் மேலாகத் தள்ளப்படும் மணல் 34° வரையிலான கோணச்சரிவில் தங்கும். அதனை ஒய்வுக் கோணம் (Angle of Repose) என்பர். சாய்வு அதனிலும் அதிகரிக் கும் போது, மணற்றுணிக்கைகள் முன்னோக்கி நழுவுவதனால் மணற்குன்றுகள் நகரும் அதேசமயம் மணற்குன்றின் காற்றெதிர்ப் பக்கத்தில் ஏற்படும் சுழிகளும் அதன் நகர்வுக்கு உதவும். (படம் 69 ஐப் பார்க்க)

காற்றின் செயலும் நிலவுருவங்களுள் 47
*,
படம் 69 மணற்குன்று உருவாகும் முை
மணற்குன்றுகள் வேறுபட்ட உருவங்களுடன் காணப்படுகின் றன. அவற்றின் உருவமானது (1) மணலின் நிரம்பல் (2) காற்றின் வேகம் (3) காற்றுவீசும் (திசை) ஒழுங்கு (4) தாவரப் பரம்பல் என்பவற்றினால் நிர்ணயிக்கப்படுகிறது. பக்னோல்ட் (Bagnold) என்னும் பிரபல ஆய்வாளர் பிறையுரு மணற்குன்றுகள், நெடு மணற் குன்றுகள் என்னும் இருவகையான குன்றுகள் மட்டுமே உண்மையான, உறுதியான மணற்குன்றுகளெனக் கூறியுள்ளார். ஆயினும் அண்மைக்கால ஆய்வாளர்கள் வேறுவகையான சில மணற்குன்றுகளையும் இனங்கண்டுள்ளனர். இவ்வாறு இதுவரை இனங்காணப்பட்ட பல மணற் குன்றுகளில் பிறையுரு மணற் குன்றுகள் நெடுமணற் குன்றுகள் குறுக்குக்குன்றுகள் பரவளைவுக் குன்றுகள் உடுக்குன்றுகள் ஆகியன பிரதானமானவை,
5 (iv) பிறையுருமணற் குன்றுகள் துருக்கியிற் காணப்படும் மணற்குன்றுகளின் பெயரான "பாக்கான் இன்று அவ்வகையான குன்றுகளின் பொதுப்பெயராக வழங்கப்படுகிறது. பாக்கான்கள் பிறையுருவாக வளைந்தமணற்குன்றுகளாகும். அவற்றின் ஒடுங்கிய நீண்டகொம்புகள் காற்றுச் செல்லும் திசையை நோக்கும். அத் துடன் அவற்றின் கர்ற்றெதிர்ப்பக்கம் மென்சாய்வுடனும் ஒதுக் குப்பக்கம் ஒப்பளவில் குத்துச்சாய்வுடனும் காணப்படும்.

Page 180
348 புவிவெளியுருவவியல்
பிறையுருமணற்குன்றுகள் தனித்தும் கூட்டம் கூட்டமாகவும் காணப்படுகின்றன. அவற்றின் உயரம் 30 மீற். வரையிலும் அக லம் உயரத்தைவிட 12மடங்கு அதிகமாகவும் காணப்படும். அன்றி யும் அவற்றின் உச்சி ஒழுங்கற்ற உருவத்துடன் வளைந்தும் காணப் படும். இவ்வகைக்குன்றுகள் ஒப்பளவில் விரைவாக அசைகின் றன. அசைவுவேகம் குன்றுகளின் பருமன், உருவம் என்பவற் றைப் பொறுத்து வேறுபடுமாயினும் பெரியகுன்றுகள் ஒராண்டில் ஒரு சில மீற்றரும் சிறியகுன்றுகள் 50 மீற். வரையிலும் அசைய of D.
பிறையுரு மணற்குன்றுக்ள் ஒருதிசையில் ஒழுங்காக வீசும் காற்றுக்களால் உருவாக்கப்படுகின்றன. அதேசமயம் அவற்றின் கொம்புகள் வேறுவகையான குன்றுகளிடையே குறைவாகக் காணப்படும் மணலைக் காற்று வாரிவிசுவதனால் உருவாகியிருக் கலாமெனத் தெரிகிறது. இவ்வாறு மணல் நிரம்பல் குறையும் போது குறுக்குமணற் குன்றுகள் முதலில் வளைவான் குன்றுக ளாகிய பின்னர் இறுதியில் பாக்கான்களாக மாறலாமெனக் கூறப் படுகிறது. (படம் 70 பார்க்க) மேலும், சில ஆய்வாளர்கள், இவ்வகைக் குன்றுகளின் மத்திய பகுதி அகன்று அதிகமணலை யும் கொண்டிருப்பதனால் மெதுவாக அசையும் போது இவற் றின் பக்கங்கள் பதிவாகவும் ஒடுங்கியுமிருப்பதனால் விரைவாக அசைவதன் மூலம் முன்னோக்கி வளையலாமெனக் கருதுகின்ற SITT
படம் 70 பாக்கான் உருவாகும் ஒருமுறை
5 (w) நெடுமணற்குன்றுகள் (Longitudinal Set) . இவை காற் றுத்திசைக்குச் சமாந்தரமாக உருவாகின்ற, ஒடுங்கிய நீண்ட
 

காற்றின் செயலும் நிலவுருவங்களும்
குன்றுகளாகும். இவற்றின் உயரம் 800 மீற்றரீ வரையிலும் நீளம் 50 கி. மீ. அல்லது அதற்கு மேலும் காணப்படலாம். நெடுமணற் குன்றுகள் உருவாகும்முறை பற்றிக்கருத்து வேறுபாடுள்ளது. ஆழ மான நீர்மேடைக்கு மேல் உருவாகிய தட்டையான வண்டற் சம நிலங்களிலும் மணல் நிரம்பல் அதிகமாயுள்ள பகுதிகளிலுமே இவை அதிகமாகக் காணப்படுகின்றன. பிறையுரு மணற்குன்று கள் உருவாதற்கு ஒருதிசைக்காற்று அவசியமாயிருப்பதைப்போல் நெடுமணற்குன்றுகள் உருவாதற் குப் பல திசைக்காற்றுக்கள் தேவை யெனத் தெரியவருகிறது. ஆனால் இவை பிறையுருமணற் குன்று களிலிருந்தும் உருவாகியிருக்கலாமெனவும் ஒரு சிலர் கருதுகின்ற னர். இதன்படி பிறையுரு மணற்குன்றின் ஒருபக்கம் கோணத் திசையில் வீசும் ஒரு காற்றினால் முன்னோக்கித் தள்ளப்பட்டுப் படிப்படியாக நீள்வதனால் இவை உருவாகலாம். அதேசமயம் ஒரு மணற்குவியலானது சரிவுத்திசைகளில் ஒடுங்கிவீசும் இரு காற்றுக்களின் விளை திசை நோக்கி நீட்டப்படுவதனாலும் இவை உருவாகலாமென இன்னொரு கருத்துள்ளது. மேலும் பாக்கான் கள் அதிகமாகக் காணப்படுமிடங்களில் குறுக்குக் காற்றுக்கள் வீசுமாயின் அருகிலுள்ள இருபாக்கான்களின் கொம்புகள் நீண்டு ஒன்றுடனொன்று இணைவதனாலும் இவை உருவாகலாமெனக் கருதப்படுகிறது.
வாட்குன்றுகள் (self அரபியல் வாள்) எனப்படுபவை நெடு மணற்குன்றுகளில் ஒருவகையாகும். அவை கூரிய வளைவான உச்சி யுடன் காணப்படும். அவை பருவகாலக் காற்றுக்களினால் அவற் றின் விளைநிசைநோக்கி உருவாகியிருக்கலாமெனக் கருதப்படு கிறது. நெடுமணற்குன்றுக ள் சகாராப் பாலைநிலத்தின் வடபகுதி யில் பரவலாகவும், அரேபியாவின் தென்பகுதியில் ஏறத்தாழ 5 இலட்சம் சதுர கி. மீ. பரப்பிலும் காணப்படுகின்றன.
5 (ii) குறுக்கு மணற்குன்றுகள் (Transwerse) : பாக்கானைப் போல் இவையும் காற்றுத்திசைக்குக் குறுக்கே உருவாகின்றன. இவற்றின் காற்றெதிர்ப்பக்கம் மென்சாய்வுடனும் ஒதுக்குப்பக்கம் ஒப்பளவிற் குத்தாகவும் காணப்படும். காற்றெதிர்ப்பக்கம் வளர்ந்து அதன் சாய்வுக்கோணம் 34 க்கு மேற்படும்போது மணற்சரிவு ஏற்படுவதனால் இக்குன்றுகள் முன்னோக்கி அசையும். அப்பக்கத் தில் இடம்பெறும் வாரியிறக்கலும் குன்றின் அசைவுக்கு உதவும். இக்குன்றுகள் 100 மீற்றருக்கு மேற்பட்ட உயரமும் பல கி. மீ. நீளமும் உடையன இவற்றின் மேற்பாகம் சமச்சீராக 20 முதல்

Page 181
臀0 புவிவெளியுருவவியல்
30° வரை சரிந்து உச்சிகள் மீன்செதில்போலக் காணப்படுவ துண்டு. குறுக்கு மணற்குன்றுகள் மணற்பாலை நிலங்களிற் காணப்படுவதில்லை. கடற்கரையோரங்களிலும் அரிக்கப்பூடக கூடிய மணற்பரப்புகளிலுமே இவை அதிகமாகக் காணப்படுகின் றன, அன்றியும் காற்று வீச்சு கடுமையாக உள்ள இடங் களிலும் இவை உறுதியாக இருக்கமாட்டா. ஆயினும் மணல் நிரப்பல் அதிகரிக்கும்போது சில பிறையுருமணற்குன்றுகள் இணைந்து வளைவான மேடுகளாகியபின்னர் காலப்போக்கில் குறுக்குக்குன்றுகளாக மாறியருக்கலாமெனச் சில ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
5 3 (i) பரவளைவுக்குன்றுகள் (Parabolic) இவை குறுக்கு மணற் குன்றுகள் மற்றும் பிறையுரு மணற்குன்றுகளைப்போல் காற்றுத்திசைக்குக் குறுக்கே காணப்படுவதோடு ஒரு திசைக் காற்றினாலேயே உருவாக்கப்படுகின்றன. ஆனால் இவற்றின் கொம்புகள் காற்றெதிர்ப் பக்கத்தையே நோக்கும். இவை சில தாவரங்களின் (உம் முறே புல்) தடையினால் அவற்றின் ஒதுக்
படம் 72 காற்று வீச்சும் மணற்குன்றுகளின் உருவங்களும் இடமிருந்து பாக்கான் பரவளைவுக் குன்றுகள், குறுக்கு மணற்குன்றுகள், !
கின உருவாகக் தொடங்கிய பின்னர் பலமான ஒருதிசைக் காற் றுக்களால் மத்திய பகுதியிலுள்ள மணல் முன்னோக்கித்தள்ளப் படுவதனாலேயே பரவளைவான தோற்றத்தைப் பெறுவதாகத் தெரியவருகிறது. இவற்றை (U) வடிவக்குன்றுகள் எனவும் குறிப் பிடுவதுண்டு. இவை பெரும்பாலும் பாலைநில எல்லைப்பகுதி களிலும், இடைவெப்பவலதுக் கரையோரங்களிலும் அதிகமாகக் காணப்படுகின்றன.
 

காற்றின் செயலும் நிலவுருவங்களும் 35.
5. (wi) உடுக்குன்றுகள் (Srar Dunes) இவை காற்று ஒழுங்கற் றும் பல திசைகளிலிருந்தும் வீசுமிடங்களில் உருவாகின்றன: அதேசமயம் வேறுவகையான குன்றுகளுக்கிடையிற் காணப்படும் சிறிய பிறையுரு மணற்குன்றுகள் இணைவதனாலும் இவை உரு வாகலாமெனச் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இவ்வகை யான குன்றுகளின் உயரம் 200 மீற்றர் அல்லது அதற்கு மேலும் இருக்கலாம். இவற்றின் சாய்வுகள் குத்தாகவும் உச்சி கூரானதா கவும் காணப்படும். இவை அசைவற்று ஒரிடத்திலேயே நிலைத் திருக்கும்.
Gweriniau
படம்: 23 உடுக்குன்றுகள்
5. (ix) நுண்மண்படிவுகள் (L06SS) தேய்த்தல், அ  ைர ந் து தேய்தல் எனப்படும் செயல்முறைகளின் விளைவாகத் தமது உருச்சிறுத்த நுண்மையான மணற்றுணிக்கைகள் காற்றினாற் காவிச்செல்லப்பட்டுப் பாலைநில எல்லைக்கு அப்பால் படிவு செய்யப்படுவதுமுண்டு. பிரான்சிலுள்ள அல்சேசு மாகாணத் தில் இது போன்ற படிவு கா ண ப் பட்ட ஒரு கிராமத்தின் பெயராகிய 'Loess" என்பதையே இப்படிவிற்கும் சூட்டியுள் ளனர். நுண்மண் படிவுகள் ஆசியாவில் மஞ்சூரியாப் பகுதி யிலும் ஐரோப்பாவின் மத்திய பகுதியிலும் பரவலாகக் காணப் படுகின்றன. மஞ்சூரியாப் பகுதியில் ஏறத்தாழ 5 லட்சம் சதுர கி மீற். பரப்பில் இம்மண் காணப்படுகிறது. அங்கு இது கடல் மட்ட உயரத்திலும், 2500 மீற். உயரத்திலும் காணப்படுகிறது. கோபி பாலைநிலத்திலிருந்து வெளியே வீசும் காற்றுக்களினால் நீண்ட காலமாகப் படிவுசெய்யப்பட்டவையே இவையாம் தெப்புவெளிப் புல்லும் அதிக மழையும் இவை காற்றினாற் படிவுசெய்யப்படக் காரணமாயிருக்கலாம். இப்படிவுகளிற் காணப்படும் மணல் மணிகளின் சராசரிப் பருமன் 0.55 மி.மீ. ஆகும் இம்மண் நுண்டுளையுடையது மட்டுமன்றி நிலைக்குத் தான குழாய்களைப் போன்ற அமைப்பையுமுடையது.

Page 182
352 புவிவெளியுருவவியல்
21, 6 பாலைநிலங்களில் நீரின் செயல்
பாலைநிலப் பிரதேசங்களிற் காணப்படும் நிலவுருவங்களை உருவாக்கியதில் காற்றின் பங்கு அதிகம் என நம்பப்படினும் அங்கு நீரின் செயலும் கணிசமான அளவு நிகழ்கின்றது. பாலை நிலங்களெனின் பழையற்ற பிரதேசங்களென நாம் எண்ணுவது இயற்கை ஆனால் அங்கும் அவ்வப்போது சடுதியாக LD60ԼՔ பெய்வதுண்டு என்பது ஏலவே குறிப்பிடப்பட்டது. இத்தகைய சடுதியான முகிலுடைப்புகள் குறிப்பிடத்தக்க சில நிலவுரு வங்கள் உருவாதற்குக் காரணமாயிருக்கின்றன. மலையிடை வடிநிலங்களைப்போலக் காணப்படும் பாலைநிலங்களைச் சுற்றி யுள்ள மலைப்பிரதேசத்தில் மழை பெய்யும்போது அருவிகள் உற்பத்தியாகி மத்தியிலுள்ள பள்ளங்களை நோக்கி அதிக வேகத்துடன் ஒடும் பாலைநிலப் பிரதேசங்களில் வானிலை யாலழிவு அதிகமாக நிகழ்வதனால் உடைகற்குவையும் பாறை அழிவுப்பொருட்களும் மலைச்சரிவுகளிலும் அடிவாரத்திலும் அதிகமாகக் காணப்படும் இவற்றை அருவிகள் அள்ளிச்செல் லும் மேலும் ஒடும் நீரில் மண், சேறு கல் ஆகியன கலந்தி ருப்பதனால் அது கலங்கியதாகவும் கறுப்பாகவும் காண ப் படும். இத்தகைய நீர் எப்பொழுதும் வழிந்து பரந்து பாயும். இதனைத் தகட்டுப் பெருக்கு (Sheet Flood) என்பர். அதே சமயம் நீருடன் சேறு அதிகமாக கலந்துபாயின் அ த  ைன ச் சேற்றுப் பாய்ச்சல் (Mud Flow) எனக் குறிப்பிடுவர் தகட்டுப் பெருக்கும் சேற்றுப்பாய்ச்சலும் மத்திய இறக்கங்களைச் சேரும் போது அங்கு ஏரிகள் உருவாகலாம். ஆனால் அவை நிலை பேறற்றவை. ஏனெனில் அவற்றிலுள்ள நீர் வரண்ட கால நிலையின்கீழ் விரைவாக வற்றிவிடும் வடஅமெரிக்காவில் இவ் வகையான ஏரிகளை வற்றும் பள்ளங்கள் (Playas) என வழங் குவர். இவற்றில் உவர்நீரைக்கொண்ட ஏரி க ள் Salinas' எனப்படும். இவை சகாராப் பகுதியில் செப்ஸாஸ் என வும் ஈரானில் கேவிர் (Kewire) எனவும் அத்திலக மலைப் பகுதியில் சொட்ஸ் (Shots) எனவும் அழைக்கப்படுகின்றன. இவை பல்லுரு வான கற்கள், பரல், மண் முதலியவற்றையுடையனவாயிருக் கும். மலைப்பிரதேசத்திலிருந்து வரும் பல அரு விக ளா ற் கொண்டுவரப்பட்ட வண்டற் படி வுகள் ஒன்றுடனொன்று இணைவதனால் மென்மையான சாய்வைக் கொண்ட ஒரு சம நிலம் உருவாகலாம் மலையயற் பிரதேசத்திற் காணப்படும் இச்சமநிலத்தை பசாடா எனக்கூறுவர். உண்மையில் இது மலையயல் வண்டற் சமவெளியே

காற்றின் செயலும் நிலவுருவங்களும் 353
21. 7. வாடிகள்
பாலைநிலப் பிரதேசங்களில் பொதுவாகவும் பாறைப்பாலை நிலப் பிரதேசங்களிற் சிறப்பாகவும் காணப்படும் இடுக் கு களைப் போன்ற ஒடுங்கிய நிலவுருவங்களே வாடிகள்' எனப் படுகின்றன. இவை குத்தான சாய்வுகளையுடையவை. சடுதி யாகப் பெருக்கெடுத்துப்பாயும் அருவிகளின் அரிப்பினால் இவை உண்டாகியிருக்கலாம். மேலும் காற்றின் தேய்ப்பு பாறைகளின் அடித்தளத்தில் அதிகமாக நிகழ்தலும் அவற்றின் சுவர்கள் குத்தான மைக்குக் காரணமாகலாம். ஆனால் பல வாடிகள் நீரரிப்புக்காணப்படாத வரண்ட பாலைநிலங்களிலும் காணப்படுவதனால் இவை தற்காலத்திற் செயல்படும் கருவி களின் செயலினால் உருவாகின எனச் சொல்லமுடியாதிருக்கி றது. ஆகவே சில ஆய்வாளர்கள் கருதுவதுபோல இவை பனிக் கட்டியாற்று யுகத்தின்போது பாலைநிலப் பிரதேசங்களில் ஈர லிப்பான கால நி  ைல காணப்பட்ட சமயம் அருவிகளினால் தோண்டப்பட்டவையாயிருக்கலாம். வாடி என்ற பெயர் சகாராவிலும், அரேபிய நாடுகளிலும் வழக்கிலுள்ளது. இவற் றைப் போன்ற ஆற்றுப்போக்குகளை இந்தியாவில் நல்லா எனவும், வடஅமெரிக்காவில் அறோயோ எனவும் கூறுகின்றனர்
21.8 சரிவுச்சமதளங்கள்(Periments): இவைவறண்ட மற்றும் குறை வறட் பிரதேசங்களிலுள்ள சிலைகள் சரிவுப்பாறைகள் ஆகியவற்றின் அடிவாரத்திலும், தளத்திடைக்குன்றுகள் (Inse begs) கொப்பீஸ்" ஆகியவற்றைச் சுற்றியும் காணப்படுகின்ற மென்சாய்வுடன் கூடிய சற்றுக்குழிவான அரிப்பு நிலப்பரப்புக ாகும். W. பெங் L. C. கிங் ஆகியோர் "சரிவுப் பாறைகளின் (Scarps) குத்தான மேற்சாய்வுகளின் கீழ் விருத்தியடையும் ஒரு அடித்தளச்சாய்வே சரிவுச் சமதளமாகும் எனக் கூறியுள்ள னர். இத்தளங்கள் பல்லினமான வன்மையில் வேறுபட்ட பாறைகளின் மேலும் உருவாகியுள்ளன. இவை 4 முதல் 7. வரையிலான சாய்வைக் கொண்டவை. இவற்றின் மேல்விளிம்பு சரிவுப்பாறையுடன் இணையுமிடங்களில் வெளிப்படையான ஒரு சாய்வு முறிவு காணப்படுகின்றது. அதனை மலையுயற் கோணம் (Piedmont Ange) எனக் குறிப்பிடுவர். சரிவுச் சம தளங்களின் மேற்பரப்பு வெறுந்தரையாக அல்லது மெல்லிய அடையற் படிவுகளுடன் காணப்படலாம்.
சரிவுச் சமதளங்கள் உருவாகிய முறைபற்றிக் கருத்து வேறு பாடுள்ளது. இதுபற்றிய ஒரு கருத்தின்படி, அவை மீட்கப்பட்ட

Page 183
3.54 புவிவெளியுருவவியல்
தளங்களாகும். அதாவது மலையடிவாரத்தில் அருவிகளின் படிவுகளால் உருவாக்கப்படும் வண்டற்கூம்புகள் ஒன்றாயிணை யும் நிலையில் காலநிலை மாற்றம் அல்லது புவியசைவு கார ணமாக அருவிகள் புத்துயிர்ப்படையின் அவை வண்டற் படிவு களில் ஒரு பகுதியை அரித்துக் கொண்டு செல்வதனால் வெளிப் படும் அடித்தளமே சரிவுச் சமதளமாகும். அதேசமயம் அது தகட்டுக்கழுவல் மூலமே உருவாகுவதாகச் சிலர் கருதுகின்ற னர். அத்தளங்களில் பின்னலான அருவிகளால் வெட்டப்பட்ட வாய்க்கால்கள் காணப்படுதற்கும், அகன்ற, பதிவான சமச் இருள்ள வண்டல் விசிறிகளையொத்த குமிழ்கள் அடித்தளப் பாறைவரை அரிக்கப்பட்டிருப்பதற்கும் தகட்டுக்கழுவலே கார இனமென அவர்கள் கூறுகின்றனர். மேலும் சரிவுப்பாறைகளின் முகப்பில் வானிலையாலழிதல் மூலம் திரளும் உடைகற்குவை தகட்டுக் கழுவல் மூலம் அகற்றப்படுவதன் விளைவாகவே சரிவுச் சமதளங்கள் உருவாகுவதாக அவர்கள் நம்புகின்றனர். ஆனால் ஜோன்சன் என்பவர் அருவிகளின் பக்கவரிப்பின் மூலமே சரிவுச் சமதளங்கள் உருவாகுவதாகக் கூறுகிறார். மலைப் பகுதியிலிருந்து உடைகற் சுமையுடன் வெளியேறும் அருவிகள் பள்ளத்தாக்குப் பகுதியில் அதனைப் படிவு செய்து அப்பகுதி யிற் சமநிலையடைந்த பின்னர் மலையயற் பகுதியில் பக்க வரிப்பில் ஈடுபடுமெனவும், தொடக்கத்தில் அங்கு படிவு செய் பப்பட்ட பொருட்கள் அருவிகளின் போக்கைத் தடுப்பதனால்
səd foğlu *மதளமாகு வலயம் : مهاباد anse GFB Gula . ,"\\\' }, -
படம் 74 சரிவுச் சமதளம்
 

காற்றின் செயலும் நிலவுருவங்களும் 5
அவை தம்போக்கை அடிக்கடி மாற்றி (மியாந்தர்களைப் போல) வளைந்து பக்கவரிப்பில் ஈடுபடுவதன்மூலம் தமக்கிண்விெலுள்ள உயர்ந்த பகுதிகளை அரித்தழித்துச் சரிவுச் சமதளங்களை உருவாக்கலாமெனவும் அவர் கூறுகிறார். அன்றியும் சரிவுச் சம தளத்தின் மேற்பகுதியிலுள்ள சாய்வு முறிவு" வழிநீரின் கீழ் வெட்டலினாலேயே தோன்றுவதாகவும் அவர் விளக்குகிறார்.
இவ்வாறு சரிவுச் சமதளங்களின் உரு வியல் கருத்து வேறு பாடுகளை உண்டாக்கியிருப்பினும் சரிவுச் சமதளமாக்கும் செயல்முறைகளில் சாய்வுகள் பின்வாங்குதலே முக்கியமானது எனவும் சாய்வுக்கழுவல் (Slope Wash) ஓடைக்கழுவல் (Ril Wash) சமாந்தர வடிகால்களின் பக்கவரிப்பு போன்ற வற்றில் ஒன்றோ சிலவோ அதனுடன் இணைந்து செயல்படு வதன் மூலமே சரிவுச் சமதளங்கள் உருவாகுவதாகவும் இப்போது நம்பப்படுகிறது. மேலும் அவை சிறப்பாக, கொண்டு செல்ல லுக்குரிய மேற்பரப்பாயிருக்கும் அதேவேளை தகட்டுக் கழுவல் மூலம் அவ்வப்போது அரிக்கப்படுவதனாலேயே அவற்றின் மேல் விளிம்பில் சடுதியான ஒரு சாய்வு முறிவு உரு வா கி நிலைபெற்றிருப்பதாகவும் கருதப்படுகிறது.
அண்மைக்கால ஆய்வுகள், சரிவுச்சமதளங்கள் வற ண் ட
பிரதேசங்களில் மட்டுமன்றி ஈரலிப்பான, வெப்ப இடை வெப்ப பிரதேசங்களிலும் உருவாகலாமெனத் தெரிவிக்கின்றன.

Page 184
அத்தியாயம் 22
அலையின் செயலும் a ருவங்களும்
5டற்கர்ை வலயத்திற் காணப்படும் நிலவுருவங்கள் பல கருவிகளின் கூட்டுத் தாக்கத்தினால் உருவாகின்றன. அவற்றில் கடலலைகள். நீரோட்டங்கள், நீள்கரை நகர்வுகள், வற்றுப் பெருக்கோட்டங்கள் என்பன குறிப்பிடத்தக்கவை. ஆயின் மேற் குறிப்பிட்டவற்றுள் அலைகள் தாம் கரைகளின் உருவ வியலில் அதிக பங்கைப் பெறுவதனால் அவற்றின் செயல்களை விரிவாக நோக்குதல் அவசியமானது.
ஒரு நீர்ப்பரப்பின் மேற்பகுதியில் காற்று வீச்சின் அமுக்கத் தினாலும் உராய்வினாலும் உண்டாக்கப்படும் உயர்ச்சிகளே அலைகளாம். அலைகள் உண்டாவதற்குக் காற்று வீச்சு அவசிய மானது. காற்று பலமாக வீசும்போது நீர்ப்பரப்பில் உயர்ச்சி களும் அவற்றிற்குப் பின்னால் பள்ளங்களும் உண்டாகின்றன. இவ்வாறு காற்றின் உந்துதலினால் உயர்ச்சியடையும் நீரின் மேற் பகுதியை முடி" என்றும், முடிக்குப் பின்னாற் காணப்படும் பள்ளத்தைத் தாழி என்றும் கூறுவர் தாழிக்கு முன்னும் பின்னுமாக அலைகள் காணப்படும்.
ஓர் அலையின் நீளமென்பது இரண்டு முடிகளுக்கிடையி லுள்ள தூரமாகும். அலையின் உயரமெனின் தாழி மட்டத் திற்கும் முடியின் உச்சிமட்டத்திற்கு மிடையிலுள்ள உயர வேறு பாடாகும். அலைகளின் உயரமானது காற்றின் வேகம், காற்று வீசும் தன்மை, காற்று வீசிவரும் நிலப்பரப்பின் விரிவு என்ப வற்றைப் பொறுத்து வேறுபடும்.
கடல் (அல்லது நீர்ப்பரப்பு) பரந்து காணப்படின் அங்கு உயரமான பெரிய அலைகள் உருவாகும் காற்று அடிக்கடி திசைமாறியோ குறைவான வேகத்துடனோ வீசுமாயின் உய ரலைகள் உண்டாகா. ஆனால் சடுதியாக வீசும் புயற்காற்றுக் கள் பேரலைகளை உருவாக்கக் கூடியவையாம் - வங்காளவிரி குடாவிலும் பிலிப்பைன்ஸ் தீவுகளையடுத்த கடலிலும் ஏற்பட்ட

அலையின் செயலும் நிலவுருவங்களும் 357
சில சூறாவளிகளின் விளைவாக 10 மீற். உயரமான அலைகளும் உருவாகியிருக்கின்றன. இதேபோல் எரிமலைக் கக்குகையின்ா லும் கடற்கீழ்ப் புவிநடுக்கங்களினாலும் பிரமாண்டமான அலை கள் உருவாகுவதுண்டு குனாமி (Tsunami) எனப்படும் கடற் கீழ்ப் புவி நடுக்க அலைகள் 30 மீற்: மேற்பட்ட உயரத்தையும் மணிக்கு 500 கி. மீ வரையிலான வேகத்தையுமுடையவை.
அலைகளின் நீளத்திற்கும் உயரத்திற்குமிடையிலும் தொடர் புண்டு. 30 மீற்றருக்குக் குறைவான உயரமுள்ள அலைகளின் உயரமும் நீளமும் 1.17 என்ற விகிதத்திலும் 100 முதல் 130 மீற் உயரமான அலைகளின் உயரமும் நீளமும் 1.12 என்ற விகிதத்திலும் அமையும்
22, 2 அலைகளின் அசைவுகள்
பொதுவாக அலைகளின் தாக்கம் கடல்மட்ட உயரத்திற்கு அணித்தாக அதிகமாயிருக்கும். ஆனால் பெ ரும் புயல்களின் போது உருவாகும் பேரலைகள் அதிக உயரமட்டத்திலும் அழிவை உண்டாக்கலாம் அலைகளின் ஆழம் குறையும்போது அசைவு வேகமும் குறையும் சாதாரணமாக அலையின் நீளத் தினளவு ஆழமுள்ள இடங்களில் அதன் அசைவு அற்றுவிடுகிறது. அன்றியும் ஆழ்கடலில் வட்டமாகச் சுற்றி அசைந்து செல்லும் நீர் பரவைக்கடலில் முன்னும் பின்னுமாகவே அசைகின்றது. அலைகள் உடையும்போதும் அம்முறையிலேயே அசைவு நிகழ் கின்றது. வெளியான ஆழ்கடலில் உண்டாகும் 100 மீ நீளமான அலைகள் மணிக்கு 30 - 50 கி. மீ. வேகத்திற் செல்ல க் கூடியவை. ஆனால் அலைகளின் நீளம் மட்டுமன்றி அவற்றின் வேகமும் காற்று வீச்சு வேகத்திலேயே தங்கியுள்ளது.
அலைவீசும்போது அலையுருவான நீரன்றிக் கடல்மட்ட நீர் அசைவதில்லை. அதுபோல் ஒவ்வோரலையும் செல்லும்போதும் நீர்த்துணிக்கைகள் ஒருவட்ட வொழுங்கில் சுற்றிவருமேயன்றி முன்னோக்கி யசையா. ஆயின் காற்றுவேகம் அதிகமாயிருக்கும் போது மட்டும் நீர்த்துணிக்கைகள் சிறிது முன்னோக்கியும் நகர் கின்றன. உதாரணமாக அலையொன்று மணிக்கு 50 கி. மீ. வேகத்தில் அசையும்போது கடலின் மேற்பரப்பு நீர் வட்டமாச் சுற்றி மணிக்கு 7 கி.மீ வேகத்தில் செல்லும். ஆனால் அலையின் நீளமளவு ஆழமான பகுதிகளில் எவ்விதமான சுற்று அசைவும் இருப்பதில்லை. உண்மையில் அலையின் நீளத்தைவி ஆழம் குறைவான பகுதியில் நீர் கடலின் அடித்தளத்துடன் உராய்வதனால் அங்கு நீர்த்துணிக்கைகள் முன்னோக்கி அசைவ

Page 185
358 புவிவெளியுருவவியல்
திலுமதிகமாகப் பின்னோக்கியே அசைகின்றன. இதிலிருந்து எக் கரையிலாயினுஞ்சரி அலைகளின் நீளத்தில் அரைப்பங்கிற்கும் அதிகமான ஆழத்திற்கு நீர் காணப்படுமாயின் அங்கு அலைகளின் அரிப்பு நிகழாது என்பதை உணரலாம்.
அலைகளின் முடிகள் முன்னோக்கிச் சரிந்து ஓடிச் செல்வதை உடைப்பு எனக் கூறுவர். அலைகள் உடைவதற்கு அவற்றின் உய ரம் அதிகரிப்பதும், வேகம் குறைவதும் காரணமாகலாம். அதிக உயரத்தின் விளைவாக உறுதியிழக்கும். அலைகள் அவற்றின் முடியிலுள்ள நீரின் வேகத்தை விடத் தமது வேகம் குறையும் போது உடைந்துவிடுகின்றன. அன்றியும் தமது நீளத்தில் அரைப் பங்கு ஆழமுள்ள இடத்தையடைகிறவளவில் அவற்றினுருவமும் மாறிவிடுகிறது. அலைகள் வீசும்போது கடலடித்தளத்தோடு ஏற்படும் உராய்வினால் அவற்றின் ஆற்றல் அதிகம் குறைவ தில்லை. 20க்கு 1 இருந்து 100க்கு 1 வரை சரிவாக உள்ள அடித் தளத்தில் அலைகளின் முமுச்சக்தியில் 10 வீதத்திற்குமேல் குறை வதில்லையென மதிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் அ  ைலக ள் கரைக்கோட்டையண்மிக்கும்போது அவற்றின் போக்கும் மாற்ற மடையலாம். உதாரணமாக, குடாக்களையும் முனைகளையும் கொண்ட ஒழுங்கற்ற ஒரு கரையை நோக்கி அலைகள் செல்லு மாயின் முனைக்குமுன்னாலிருக்கும் ஆழமற்ற கடல் அலைகளின் போக்கை மாற்றிவிடுகிறது. முனைக்கு முன்பாக அவை முடி வடைந்துவிடுகின்றன. அவை முடிவடைவதற்கு அங்குள்ள நீரின் ஆழம் அலையின் நீளத்திலும் அரைப்பங்கிற்கும் முறைவாயிருப் பதே காரணமாகும். எனவே ஒழுங்கற்ற ஒரு கரையிற் காணப் படும் நீட்டு நிலங்கள் முனைகளை அண்மித்தவுடன் அவற்றிற்கு முன்பாக அலைகளின் வீச்சு தடைப்படுவதனால் அவை நீட்டு நிலங்கள் முனைகளை நோக்கி ஒடுங்கியும் குடாக்களை நோக்கி விரிந்தும் செல்லும், இக்கர்ரணத்தினால் குடாக்களைவிட நீட்டு நிலங்களே அதிக அளவில் அலைகளின் ஒருமுகமான தாக்கத் திற்குட்பட்டு விரைவாக அழிக்கப்படுகின்றன. அன்றியும் ஒரு தரை எவ்வளவு நேராயிருப்பினும் அலைகள் நேரெதிரில் (சமாந் தரமாக) வீசாமல் எப்பொழுதும் சிறிது வளைவாகவே வீசுகின் றன. அஃதாவது அலைகள் கரைக்குச் சமாந்தரமாகச் செல்ல

அலையின் செயலும் நிலவுருவங்களும் | 359
*:803
மேல் கரைக்கோடுகளும் அலைகளின் போக்கும்
படம் 75 கீழ் ஆக்கவலைகளும் அழிப்பலைகளும் After Lewis)
முயலுமேயன்றிச் சமாந்தரமாகச் செல்லா ஒரலையானது கரை யைச்சென்றடைய முன்னர் இடையில் குத்தான சரிவுகள் அல்லது தடைகள் எதிர்ப்பட்டால் உடையாமல் பின்வாங்குகின்றது. இவ் வாறு பின்வாங்கும் அலைகளும் எதிரேறிவரும் அலைகளும் சந்திப்பதனால் நிலையான அலைகள் உருவாகுவதோடு கடலில் கொந்தளிப்பும் உண்டாகிறது.
22.3 அலைகளின் பாகுபாடு
அலைகளை அவை வீசும் முறையினடிப்படையில் நீள் அலைகள் குறுக்கு அலைகள் என இரண்டாகப் பிரிக்கலாம், கரையை அண்மித்தவுடன் ஒர் அலை உடைவதைத் தொடர்ந்து முன்னேறும் உடைப்பு அலைகளே (Breakers) நீள் அலை ளாம். முனைகள், நீட்டுநிலங்கள் என்பவற்றுக்கு முன்பாகவும், கடல் ஆழமற்றிருக்குமிடங்களிலும் அலை உடையும்போது நீர்த் துணிக்கைகள் வட்டவொழுங்கிற் செல்லாமல் முன்னும் பின்னு அசைகின்றன. அவற்றில் நீர்த்துணிக்கைகளின் போக்கு அரை நீள்வட்டப் பாதையில் அமையும். நீள் அலைகள் குறுக்க லைகள் உடைவதைத் தொடர்ந்தே உருவாகின்றன. அவை

Page 186
360 புவிவெளியுருவவியல்
எப்பொழுதும் கரைக்கும் உடைப்பலைக் கோட்டிற்குமிடையே காணப்படும். இவ்வகையலைகள் கடலின் அடித்தளத்தையும் ஓங்கல்களின் கீழ்ப்பாகத்தையும் அதிகமாக அரிக்கக்கூடியவை. இவற்றின் முடி (உச்சி) உடைவதைத் தொடர்ந்து ஏற்படும் முற்பாய்ச்சலும் அதைத் தொடர்ந்து ஏற்படும் பிற்பாய்ச்சலும் தாம் அரிப்பிற்கு ஏதுவாயுள்ளன.
குறுக்கலைகள் ஆழமான க ட லிலும் குடாக்களிலுமே கானப்படுகின்றன. இவற்றில் நீர்த்துணிக்கைகள் வட்டமாகச் சுற்றிச்செல்லும் அலையின் நீளத்தில் பாதிக்கும் குறைவான ஆழ முடைய கடல்களில் இவ்வகை அலைகளைக்காணமுடியாது. இவ் வலைகளில் நீர் அலையின் முடியில் முன்னோக்கியும் தாழியின் அடிப்பாகத்தில் பின்னோக்கியும் அசையும். இவை ஆழமற்ற நீர்ப்பரப்பையடைகிறவளவில் பருமனில் சிறுத்தும் உயரத்திற் கூடியும் பிறைவடிவான குத் தா ன முகப்பையுடையனவாக மாறுகின்றன. குறுக்கலைகளின் அசைவினால் கடலடித்தளத்தி லுள்ள அடையல்கள் கலக்கப்படக்கூடிய ஆகக்கூடிய ஆழத்தை அலையடித்தளம் எனக் குறிப்பிடுவர் அலைகளை அவை ஆற் றும் செயலின் தன்மையினடிப்படையில் ஆக்க அலைகள், அழிப்பு அலைகள் எனவும் இரண்டாக வகுக்கலாம். புயல்களினால் முடுக்கிவிடப்படும் குறுகிய அலைகள் அழிப்பு அலைகளாம். அவை குத்தாகப் பாய்ந்து வருவதனால் நீர் முன்னேர்ற்கி ஓடிச் செல்வதில்லை. மேலும்முன்னேசென்ற அலையின் பின்னோக்கிய ஓட்டத்தினாலும் அது தடுக்கப்படலாம். எனவே இவ்வகை அலைகளினால் பொருட்கள் கடலை நோக்கி இழுக்கப்படுவ தோடு கடலின் அடித்தளமும் சுரண்டப்படுகிறது. (படம் 74)
மேற்கூறப்பட்டதற்கு மாறாக சில அலைகள் மெதுவாக அசைந்து சென்று மோதுவதனால் நீர் முன்னோக்கி வலுக் கொண்டு பாயுமர்யினும், கடலினடித்தளத்துடன் ஏற்படும் உராய்வு காரணமாக நீரின் பிற்பாச்சல் வலுக்குறைந்ததாகவே யிருக்கும். எனவே இவ்வகையலைகள் பொருட்களைக் கரையை நோக்கித் தள்ளும். இவையே ஆக்க அலைகளாகும்:
22.4 அலைக்ளின் செயல்
அலைகள் அரித்தல், கரைத்தல், நீர்த்தாக்கம், அரைந்து தேய்தல் என்னும் நான்கு முறைகளிற் செயற்படுகின்றள, முன்
குறிப்பிட்ட செயல்முறைகளின் முக்கியத்துவம் இடத்துக்கிடம் வேறுபடுமாயினும், பொதுவாக, அரித்தல் நீர்த்தாக்கம்

காற்றின் செயலும் நிலவுருவங்களும் 36
என்னுமிரண்டும் ஏனையவற்றைவிடவலுக்கூடியவை அரித்தல் பெரும்பாலும் பாறைத்துண்டுகளின் துணையுடன்தான் நிகழ் கிறது. ஆனால் நீர்த்தாக்கம் நீர் தானே தனித்து ஆற்றும் செயலாகும். அலைகள் வீசம்போது உண்டாகும் அமுக்கத்தி தினால் பாறைகளும் பிற தடைகளும் அதிக அதிர்ச்சிக்குள்ளா கின்றன. அத்தகைய அலைகள் ஆயிரக்கணக்கான கில்லோ நிறையுள்ள பாறைகளை ம் அலாக்காகத் தூக்கி வீசவல்லன. அன்றியும் மூட்டுக்கள் பிளவுகளையுடைய பாறைகளின்மீது அலைகள் மோதும்போது அம்மூட்டுவலங்களுக்கூடாகச் செல் லும் நீர் உள்ளிருக்கும் காற்றை அமுக்குவதனால் அலைகள் பின் வாங்கும் இடைவேளைகளில் அதுசடுதியாக விரிவடையும்போது பாறைகள் பிளந்துவிடுகின்றன இவ்வாறு உடைந்து விழும் பாறைத்துண்டுகள் அலைகளின் கையில் அரிப்புக்கருவிகளாகப் பயன்படுகின்றன. அவற்றின் துணைகொண்டு நீட்டுநிலங்கள் ஒங்கல்கள் முதலியவற்றை அடியறுக்கும் செயலில் அலைகள் ஈடுபடக்கூடியதாயிருக்கின்றது.
22. 5. கடற்கரைப் பக்கப்பார்வை உருவாகும் முறை
இயல்பான அரிப்புக்குட்பட்டிருந்த ஒரு நிலப்பரப்பு கடலை நோக்கிய குத்தான சாய்வுடன் காணப்படுகிறது எனக் கருத்திற் கொண்டு அதன் கரையின் உருவவியலை நோக்குவோம்.
கடற்கரைப் பக்கப் பார்வையின் உருவவியலானது அமைப்பு, செயல்முறை, நிலை என்பவற்றுக்கேற்ப வேறுபட்டு அமையும். அஃதாவது எந்தவொரு கடற்கரையின் இயல்பும் அதிற் செயற் படும் கருவிகளான அலைகள் வற்றுப் பெருக்குகள், நீரோட் டங்கள், நீள்கரை நகர்வுகள் மற்றும் கரையோரத்திலுள்ள பாறைகளின் தன்மை (வன்மை, ஓரினம் முதலியன) அப்பாறை களின் அமைப்பு, கணிப்பொருட் சேர்க்கை, கரையின் தரைத் தோற்றம் நிலத்தின் சாய்வு, ஒட்டுருச்செயல் முறைகள் (மேலு யர்த்தப்பட்டதா தாழ்த்தப்பட்டதா) முதலியவற்றிலும், ஏனைய விசேட நிலைமைகளான கோறல்களின் வளர்ச்சி பணிக்கட்டியாறு காற்று முதலியவற்றின் தாக்கத்துக்குட்பட்ட தன்மை என்னும் பல காரணிகளிலும் தங்கியுள்ளது. மேலும் மனிதனால் ஆக்கப்பட்ட செயற்கை உறுப்புக்களான அலை தாங்கிகள், துறைகள் முதலியனவும் கரையின் தோற்றத்தைப் பாதிப்பதையும் நாம் கருத்திற்கொள்ள வேண்டும்

Page 187
362
புவி வெளியுருவவியல்
கடலின் தாக்கத்திற்குள்ளாகும் தொடக்க நிலப்பரப்பு ஒரளவு குத்தானதாகக் காண்ப்படுகின்றதெனக் கொள்ளுவோம். அந்நிலையில் சரிவான நிலத்தில் அலைகள் வேகமாக மோதும் அதன் உறுதி குலைகிறது. பெருக்குக்கால அலை மட்டத்தில் ஏற்படும் வெட்டு (Nip) ஒன்றிலிருந்து அரிப்பு ஆரம்பமாகிறது. வெட்டு சற்று ஆழமான தாக மாறுவதைத் தொடர்ந்து அதற்கு மேலுள்ள பாறைகள் இடிந்து விழும் அப்பாறைத்துண்டு களைக் கருவியாகப் பயன்படுத்திச் சாய்வை அடியறுத்தலில் அலைகள் ஈடுபடும். இம்முறையில் உருவாகும் நிலவுருவம் ஓங்கல் எனப்படும். பாறைகள் இடிந்து விழுவதனால் ஓங்கில் படிப்படியாகப் பின்னடைகிறது. அதேசமயம் ஓங்கலிலிருந்து இடிந்து விழுந்த பாறைத்துண்டுகளை அங்குமிங்குமாக உருட்டி ஓங்கலின் கீழுள்ள - அதாவது அலையின் பெருக்குமட்ட வெட்டி ற்குக் கீழிருக்கும் ட பாறைப் பரப்பைத் தேய்த்தலி னால் அது ஒரு மேடைபோல உருவாகிறது இதை அலை வெட்டிய மேடை எனக் கூறுவர் (படம் 76 பார்க்க)
gs
భhణస్థిuటిది :
படம் 76 கடற்கரைப் பக்கம் பார்வை உருவாதல்
மேற் கூறப்பட்ட முறையில் உருவாகும் ஓங்கலின் தன்மையும் தோற்றமும் பல காரணிகளிற் தங்கியுள்ளன. அவற்றில் (1) பாறைகளின் தன்மை (2) அமைப்பு 3) ஆக்கம்(சேர்க்கை) (4) பிளவுக் கோடுகள் நலிவு வலயங்கள் காணப்படல் (5)óL( லரிப்பு, நிலத் தேய்வு ஆகியன நடைபெறும் விகிதங்கள் முதலி
 
 
 
 
 
 
 
 
 

அலையின் செயலும் நிலவுருவங்களும் 363.
யன முக்கியமானவை. உதாரணமாக, சரிவான நிலத்திற் காணப்படும் பாறைகள் படையாக்கிய பாறைகளாகவும் காணப்பட்டால் அலைகள் பாறைகளை எளிதிற் பெயர்த்து எடுத்து விடுகின்றன மாறாக, பாறைப்படைகள் தரையை நோக்கிச் சரிந்திருக்குமாயின் ஓங்கலின் முகப்பில் நிகழும் அரிப்பு அதனை அதிகமாகப் பாதிக்காது; அந்நிலையில் ஓங்கல் கடலை நோக்கி உயர்ந்து சரிந்து காணப்படும். பாறைப்படைகள் கடலைநோக்கிக் குத்தாகச்சரிந்து காணப்படும்போதும் பாறை கள் எளிதாகவும் விரைவாகவும் விழுந்து விடுகின்றன. இதனால் ஓங்கல் விரைவாகப் பின்னோக்கிச் சென்று சிறுத்துவிடுகின்
Dig).
ஓங்கல்கள் உருவாகும் அதே வேளையில் அலைவெட்டிய மேடை யொன்று கடலடியில் உருவாதல் பற்றி முன்னர் குறிப் பிட்டோம் அலைவெட்டிய மேடையைத் தவிர மென்பாறைப் பிரதேசங்களில் சிறுகுடாக்களும், வன்பாறைப் பகுதிகளில் நீட்டு நிலங்களும் உருவாகலாம்.
ஓங்கலை நோக்கிச் சரிவாக மோதும் அலைகளின் அரிப்பினால் அதன் கீழ்ப்பகுதியில் குகைகள் உருவாதலுண்டு. நலிவு வல யங்களிலும், மூட்டுள்ள பாறைகள் காணப்படுமிடங்களிலும் தான் குகைகள் எளிதில் உண்டாகின்றன. பின்னர் கூரை இடிந்து விழுவதினாலும், உடை கற்குவை அகற்றப்படுவதி னாலும் நீண்ட ஒடுக்கமான துழை குடாக்கள் உருவாகலாம். சிலவேளை குகைகள் மேற்பரப்புடன் தொடர்புடையனவாக அமைதலுமுண்டு. இவ்வாறு குகைகளையும் மேற்பரப்பையும் இன்னக்கும் நிலைக்குத்தான பள்ளத்தை ஊது துளை எனக் குறிப்பிடுவர் (படம் 75 ஐப் பார்க்க )
ஒரு நீட்டு நிலத்தின் இரு பக்கங்களிலிருந்தும் குகைகள் உண்டாகி ஒன்றோடொன்று இணையும்போது பாறை வளைவு கள் உருவாகலாம் இவ்வகை வளைவுகளின் கூரை (மேற்பாகம்) இடிந்து விழுவதினால் சிறுபாறைத் தீவுகள் உண்டாகின்றன. இவை தேய்ந்து உயரத்திற் குறைந்து அடிக்கட்டை எனப் பெயர்பெறுகின்றன.
அலைகளின் தாக்கத்தினால் படிப்படியாக் ஓங்கல்பின்னிடை வதனால் அதன் சாய்வு குறையும் இவ்வாறு குறையும் சாய்வு இறுதியில் சமநிலைச் சாய்வாகிவிடுகிறது. இந்நிலையில் கடற்

Page 188
364 புவிவெளியுருவவியல்
கரையின் நீள் பக்கப்பார்வை ஒரு சீரடைந்து காணப்படும். அதே சமயம் அலைவெட்டிய மேடையில் படிவுசெய்யப்பட்ட பாறைத்துண்டுகள் பரல்கள் மணல் முதலியன அலைகளினா நீள்கரை நகர்வினாலும் வகைப்படுத்தப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டு ைே டின் கடலை நோக்கிய சரிவிற் படிவு செய்யப்படுவதனால் அங்கு படிவரிசை உருவாகும். இது அலை கட்டிய படிவரிசை அல்லது முற்கரைப் படிவரிசை எனப்படும்.
(ι μι ίδ 76)
படம் 77 கரையோர நிலவுருவங்கள்
முற்கரைப் படிவரிசையிலிருந்து ஓங்கலை நோக்கிச் செல் லும்போது காணப்படும் பொருட்கள் படிப்படியாக அதிக பரும் இனுடையவையாகக் காணப்படும். ஓங்கலின் கீழ் பெரியபாறைத் துண்டுகளும் அவற்றைத் தொடர்ந்து சிறுபாறைத் துண்டுகளும் அதற்கு அப்பால் பரல்களும், முன்கரைப் படிவரிசையில் நுண் னிய மண் படிவுகளும் காணப்படுவது சாதாரணமானது. மேல் விபரிக்கப்பட்ட முறையில் பொருட்கள் படிமுறையாகக் காணப் படுவது சாத்தியமெனினும் அப்பொருட்கள் எப்பொழுதும் அசைக்கப்பட்டு தொடர்ந்து உருத்தேய்ந்தபடியே யிருக்கு மென்பதையும் மறக்கலாகாது
இவ்வாறு அலைவெட்டிய மேடையிற் காணப்படும் பொருட்
கிள் காலகதியில் அரைந்து தேய்ந்து மண்ணாக மாறியிருக்கும் போது அம்மேடை மிக அகன்று தட்டையாகக் காணப்படும்
 

அலையின் செயலும் நிலவுருவங்களும் 365
அந்நிலையில் அலைகள் தாம் வெட்டிய மேடையில் அரித்தலில் ஈடுபடக்கூடிய ஆற்றலையிழந்து விடுகின்றன. எனவே இப் பொழுது படிதல்தான் முக்கியமான செயல்முறையாயிருக்கும். படிதலின் விளைவாக உருவாகும் நிலவுருவங்களில் பிரதான மானது கடல்சார் நிலமாகும். கடல்சார் நிலம் உயர்ந்து பரந்து காணப்படும்போது கடற்கரைப் பக்கப்பார்வை யென ஒன்று காணப்படாது. அந்நிலையில் ஓங்கலும் கடல்சார் நீலமும் ஒன்றாகவே தோன்றும்
22. 6. கடற்கரைச் சமநிலைப் பக்கப்பார்வை
அரிப்பும் படிவுசெய்தலும் கூட்டாகச் செயல்பட்டுக் கடற் கரைப் பக்கப்பார்வையை உருவாக்குகின்றன. அவற்றின் முக் கியத்துவம் காலத்துக்குக்காலம் இடத்துக்கிடம் வேறுபடும். கடற்கரைப் பக்கப்பார்வையை உருவாக்கும் செயல்முறைகள் கரையின் சாய்வின் தன்மையினால் கட்டுப்படுத்தப்படுகின்றன. சாய்வு குத்தாகவிருப்பின் நிலப்பகுதியிலிருந்து பொருட்கள் அகற்றப்பட்டுக் கடலிற் படிவுசெய்யப்படும். இதனால் கரையின் குத்துத்தன்மை குறைகிறது. அதே சமயம் தொடக்க நிலைச் சாய்வு மென்மையானதாயிருந்தால் கடற்பகுதியில் அலைகளின் அரிப்பினாற் பெறப்பட்ட பொருட்கள் கரையையடுத்துப் படிவு செய்யப்பபடுவதனால் அதன் சாய்வு குத்தாக மாறும் இவ்வாறு கடற்கரைச் சாய்வின் மேற்பரப்பு என்றும் மாற்றத்திற்குட்பட் டுக் கொண்டேயிருக்கும். நிலப்பகுதியிலிருந்து கிடைக்கும் அடையல்களை அவை கிடைக்கும் அதே விகிதத்தில் எப்பகுதியி லிருந்தும் அகற்ற உதவக்கூடியதான ஒரு சரிவை ஆக்கும் முயற்சியே அம்மாற்றங்களாகும். இவ்வாறு கிடைக்கும் அடை யல்களை அகற்றக்கூடிய முறையில் சீர்படுத்தப்பட்ட சரிவின் பக்கப் பார்வையே சமநிலைப் பக்கப்பார்வையாகும். இது ஆற் றின் சமநிலைப் பக்கப்பார்வையைப் போன்றது. ஆயினும் இது நீடித்து நிலைக்கக்கூடியதன்று, பருவ காலங்கள், புயல்கள் என் பவற்றுக்கேற்ப இது மாற்றமடையக்கூடியது. எனவே கடற் கரைச் சமநிலைப் பக்கப்பார்வை ஒரு குறுகிய காலத்திற்கு மட்டும் நிலைக்கக்கூடியது. எச்சந்தர்ப்பத்திலாயினும் காணப் படும் பக்கப்பார்வையானது என்றும் மாற்றப்பட்டுக்கொண்டே யிருக்கும் 'ஆதர் ஹோம்ஸ் குறிப்பிட்டது போல் 'ஒவ்வொரு கூட்டு நிலைமையின் போதும் அதற்கு இயைபுடையதான சம நிலைப் பக்கப்பார்வை காணப்படுமாயினும், அந்நிலைமைகள் மாறும்போது அதற்கேற்பப் பக்கப்பார்வையும் மாற்றப்படுகி றது. இம்மாற்றங்கள் ஒரளவு உறுதியாகவுள்ள சராசரி நிலைமையிலிருந்து அதிகம் பிறள்வதில்லை",

Page 189
366 புவிவெளியுருவவியல்
எப்பொழுதாயினும் சரிவு குத்தாயிருப்பின் ஓங்கலிலிருந்தும் தேய்ப்பு மேடையிலிருந்தும் பெறப்பட்ட பொருட்களைக் கட் விற் படிவுசெய்து கரைமுகப் படி வரிசையைக் கட்டுவதன்மூலம் அது சமநிலைச் சரிவாக்கப்படும். அதேபோல் சரிவு மென்மை யாயிருப்பின் கடல் மேடையிலிருந்து பெறப்பட்ட பொருட் களை நிலப்பகுதியின் படிவு செய்வதன்மூலம் சமநிலைப்பக்கப் பார்வை உருவாக்கப்படும்.
22, 7. அமிழ்ந்திய கடற்கரையின் விருத்தி
அமிழ்ந்திய கடற்கரையின் தன்மை நிலத்தின் முன்னைய தன்மைக்கு ஏற்றதாக அமையும். பள்ளத்தாக்குக்களையும் உயர்நிலத்தையுமுடைய ஒரு பிரதேசம் அமிழ்ந்துமாயின் கரைக் கோடு ஒழுங்கீனங்களையுடையதாய் முரிவுபட்டுக் காணப்படும். அத்தகைய ஒரு கரையின் விருத்தியை வட்டமுறை விருத்தி யுடன் தொடர்புபடுத்தி ஆராய்வோம்.
தொடக்கநிலை
அமிழ்ந்திய ஒரு உயர் நிலக்கரையானது தொடக்கத்திற் பல குடாக்களையும் (முன்னர் பள்ளத்தாக்குகள்) நீட்டு நிலங் களையும் முன்னர் மலைத்தொடர்கள்) உடையதாகக் காண்ட் படும். அங்கு பல குடாநாடுகளும் தீவுகளும் காணப்படலாம் இத்தகைய பல்லுருவக் கரையைய்டுத்துள்ள கடற்கீழ் ஒப்பரவற்றதாகவே காணப்படும்.
இளமை நிலை
இந்நிலையில் அலைகளின் அரிக்கும் ஆற்றல் வெளிப்படும் கிறது. நீட்டுநிலங்களின் முன்னோக்கிய சாய்வுகளில் அலைகள் முழுமூச்சுடன் மோதுவதனால் ஓங்கல்கள் உருவாகும். ஓங்கல் கள் உருவர்தற்கு முன்னோடியாக நீட்டுநிலத்தில் உயர் நீர் மட்ட உயரத்தில் ஒரு வெட்டு ஏற்படும். இவ்வெட்டின் மேலுள்ள பகுதி இடிந்து விழுவதனால் ஓங்கல் குத் தா ன முகப்பையுடையதாக மாறும் இந்நிலையின்போது பாறைகளி லுள்ள மூட்டுக்கள், பிளவுகள் முதலிய பலவீனங்களைப் பயன் படுத்தி அலைகள் அரித்தலிலும் அதேசமயம் அரித்தலின் விள்ை வாகப் பெறப்பட்ட பொருட்களைக் கொண்டுசெல்லலிலும் ஈடுபடும் ஓங்கலின் மேற்பக்கத்தில் வானிலையாலழிவு நிகழ் வதனாலும் மழைநீரின் கழுவுதலினாலும் ஓங்கலின் கீழ்ப்பகுதி யில் அலைகள் அடியறுத்தலினாலும் பாறைகளின் உறுதிகுலையும்

அலையின் செயலும் நிலவுருவங்களும் 367
போது ஓங்கலின் மேற்பாகம் இடிகிறது. இவ்வாறு இடிந்து விழுவனவற்றை அலைகள் தாம் வெட்டிய மேடைவழியே இழுத்துச் சென்று அதன் வெளி விளிம்பில் படிவுசெய்கின்றன. இளமை நிலையின்போது அலைகளின் பின்வெட்டலினளவு ஓங்கல் பின்னிடையாமையினால் அதன் முன்சாய்வு பெரும் பாலும் குத்தானதாகக் காணப்படும். சில சந்தர்ப்பங்களில் ஓங்கல் நிலைக்குத்தான சரிவுடனும் காணப்படுவதுண்டு.
இளமை நிலையிலுள்ள கரையிற்றான் ஓங்கல்களையும் அவற்றோடு தொடர்புள்ள பிறஉறுப்புக்களையும் காணமுடியும். ஓங்கல்கள் கடல் நீரின் உயர்மட்ட உயரத்தில் அதிகமாக அரிக்கப்படுவதனால் குகைகள் அல்லது பெரிய துளைகள் உரு வாகும். இவை ஓங்கலின் மறுபக்கம் வரை உள்வளர்ந்தால் பாறை வளைவுகள் உண்டாகும். பாறை வளைவுகளின் மேற்
பாகம் இடிவதனால் அவை சிறு பாறைத் தீவுகளாகிவிடும்.
பின்னிளமை நிலை
இந்நிலையின்போது அலைகள் ஆழமற்ற நீர்ப்பரப்பில் அதிக தூரம் செல்லவேண்டியிருப்பதனால் அவற்றின் அரிக்கும் ஆற்றல் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும். மேலும் இந்நிலையில் ஓங்கலும் அதிக உயரமுள்ளதாகக் காணப்படும். இதனால் உடைகற் குவையும் அதிக அளவிற் கிடைக்கும். எனவே உடைகற் குவையை அகற்றுவதிலேயே அலைகளின் ஆற்றலிற் பெரும் பகுதி செலவாகிவிடுகிறது. இவ்வாறு அரிப்புக் குறைவாக நிகழ்வதனால் ஒங்கலின் கீழ்ப்பாகம் மெதுவாகவே பின்னிடை பும் அதே சமயம் வானிலையாலழிவின் விளைவாக ஓங்கலின் மேற்பாகம் தேய்வடைவதனால் அது மென்சாய்வுடையதாக மாறிவிடுகிறது. இப்போது ஓங்கலிலுள்ள வெட்டு துல்லிய மாகத் தெரிவதில்லை. இந்நிலையிற்றான் கரைமுகப் படிவரிசை உருவாகிறது.
கடற்கீழ் நோக்கிய சாய்வும், ஆழி மற்ற கடலும் அலைகள் பொருட்களைக் கடலை நோக்கி அகற்ற உதவுகின்றன. மேலும் இந்நிலையின்போது அலைகள் ஓங்கலிலுள்ள வெட்டை யடைவதில்லை. எனவே வானிலை யாலழிவு மிகும்போது வெட்டு மறைந்துவிடுகிறது. ஆனால் பாறைப் பாங்கான கரையில் அது சற்று நீண்டகாலம் நிலைத் திருக்கலாம்.

Page 190
368 புவிவெளியுருவவியல்
பின்னிளமைக் காலத்தில் கரைமுகப் படிவரிசை மட்டு மன்றி மணற்றடைகள் மணற் கூழாங்கல் நாக்குகள் ஆகியன வும் கடல்சார் நிலமும் உருவாகின்றன. ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை நீண்டு ஒரு குடாவை மறைக்கக் கூடியவளவு வளர்ந்து காணப்படுவனவே மணற்றடைக்ளாம். ஒரு முனையி லிருந்து கடலில் சிறிது தூரம் மட்டும் நீண்டு காணப்படுவதும் மணல் பரல் என்பவற்றினாலாக்கப்பட்டதுமான நாக்குகளே
படம: 18 அமிழ்ந்திய கரையின் படிமுறைவிருத்தி (After Johnson)
1. மணற்கூழாங்கல் நாக்கு 2 வளைவான மணற்கூழாங்கல் நாக்கு 3, கூட்டு மணற்கூழாங்கல் நாக்கு 4, தொம்போலா 5. கூருருவான மணற்கூழாங்கல் நாக்கு 6 குடாவிடை மணற் றயை 7 குடாத்தலை மணற்றடை,
மணற் கூழாங்கல் நாக்குகளாம். மணற்றடைகள் பல்வேறு நிலையங்களிற் காணப்படலாம் அவை குடாத்தலை மணற் றடை, குடாவாய் மணற்றடை, குடாவிடை மணற்றடை எனப் பல பெயர்களைப் பெறும். இதுபோலவே மணற் கூழாங் கல் நாக்குகளும் பல வகையின. சாதாரண மணற் கூழாங்கல்
 

அலையின் செயலும் நிலவுருவங்களும் 369
தாக்கு, கொழுக்கி மணற் கூழாங்கல் நாக்கு, உள்வளைந்த மணற் கூழாங்கல் நாக்கு என்பன அவற்றிற் சிலவாம். கடலி லுள்ள சிறு தீவுகள் மணல் நாக்குகளினால் நிலத்திணிவுட னிணைக்கப்படும்போது தொம்போலா’ எனப்படும் நிலவுருவம் உண்டாகிறது. சில தீவுகளைச் சுற்றியோ, நீட்டு நிலத்தின் முன்போ கூருருவான மணற்படிவுகள் ஏற்படுவதுமுண்டு. அவை மாலைபோல வளைந்தும் காணப்படும்.
முதிர்ச்சி நிலை
இந்நிலையின்போது சமநிலைப்பக்கப்பார்வை உருவாகிக் காணப்படும். அப்போது ஒருபுறம் அலைகளின் அரிப்பு, வானிலையாலழிவு ஆகியவற்றிற்கும் மறுபுறம் அலைகளின தும் பிறகருவிகளினதும் கொண்டு செல்லும் திறனுக்குமிடை யிற் சமநிலை நிலவுமெனலாம். இந்நிலையின்போது முன்னர் விபரிக்கப்பட்ட பலவகையான நிலவுருவங்களையும் அவற்றின் முழுப் பொலிவுடனும் பார்க்க முடியாது. அன்றியும், இப் போது சிறு தீவுகள், மணல் நாக்குகள் முதலியன முற்றாக அழிக்கப்பட்டுமிருக்கும். அதே சமயம் நீட்டு நிலங்கள் பின்னி டைவதனால் குடாவாய் மணற்றடைகள் இரு நீட்டு நிலங் களை முற்றாக இணைக்கும்போது குடாக்கள் கடலோடு தொடர்பற்றுப்போக, அங்கு கடல் நீரேரிகள் உண்டாகும். இவ்வாறு கடல் நீரேரிகளும் நீட்டு நிலங்களின் முன்னுள்ள கடல்சார் நிலமும் இந்நிலையில் பிரதான நிலத் தோற்றங்க ளாயமையும். இதன்மேல் கடல்நீரேரிகள் சேற்றுத் தர்வரர் களினால் நிரப்பப்படுவதும் நீட்டு நிலங்கள் பின்னிடைவதும் நிகழும் முதிர்ச்சியின் இறுதி நிலையில் குடாத்தலை மணற் றடைக்கு அப்பால் கரைக்கோடு தள்ளப்பட்டிருக்கும். அக் கோடு நிலத்தின் தொடர்ச்சியாகவும் அமையும்போது முதிர்ச்சி முழுமையடைகிறது - முற்றுப்பெறுகிறது எனலாம். ஜோன்சு னின் கருத்துப்படி முதிர்ச்சியின் முக்கியமான அறிகுறி யாதெ னில் உடைகற்குவை கடற்கரை மேடையின் மேற்பரவப்பட்டு அம்மேடை கடல்சார் நிலமாக மாறியிருப்பதாகும். தென் இத்தாலியின் தென்மேல் கரையும் தென்கீழ் இங்கிலாந்துக் கரையும் முதிர்ச்சி நிலையிலிருப்பதாக நம்பப்படுகிறது.
முதுமை நிலை
இந்நிலையில் கடலோங்கலின் முகப்பு பெரும்பாலும் முற் றாகத் தேய்க்கப்பட்டுக் காணப்படும். அப்போது தேய்ப்பு மேடையும் அதற்கு முன்னாலுள்ள அலைவெட்டிய மேடையும் ஒன்றாயிணைந்திருக்கும். ஓங்கல் தேய்க்கப்பட்ட காலத்தில்

Page 191
370 புவிவெளியுருவவியல்
அதற்குப் பின்னாலுள்ள நிலமும் தேய்க்கப்பட்டிருக்குமாதலின் அதுவும் பெரும்பாலும் சமநிலமாகவே காட்சியளிக்கும். மேலும் ஓங்கலுக்கு முன்னாலிருக்கும் தேய்ப்புமேடையில் இப்பொழுது உடை கற்குவை அதிகமாகக் காணப்படாது. அப்பொருட்கள் முற்றாக அகற்றப்பட்ட நிலையில் அது அகன்ற கடற்கீழ் மேடையுடனிணைந்துவிடுவதனால் பரந்த கண்டமேடை ஒன்று உருவாகும். அம்மேடையின் கடலை நோக்கிய சரிவுப் பகுதியில் அடையற் பாறைகளும் நிலத்தை நோக்கிய பகுதியில் வெளிப் படையான பாறையரும்புகளும் காணப்படும். W. L. ஜோன்சன் குறிப்பிட்டது போல் அலையரிப்பின் அடித்தள மட்டத்திற்கு நிலப்பரப்பு முழுவதும் தேய்க்கப்பட்ட வளவில் கடலரிப்பு பெரும்பாலும் முடிவடைகிறது. பின்னர் நிலப்பரப்பு முழுவதும் கடல் மட்டத்திலிருந்து ஏறத்தாழ 200 மீற்றர் மட்டத்திற்குத் தேய்க்கப்பட்டுக் கடலரித்த சமநிலமாகுமளவில் கடலரிப்பு முற்றாக நின்றுவிடுகிறது.
21, 8 வெளிப்பட்ட கரையின் விருத்தி
கடல் நீர் மட்டம் வீழ்ச்சியடைவதனாலோ, நிலம் உயர்த் தப்படுவதனாலோ கண்ட மேடையினொருபகுதி வெளிப்பட லாம். இவ்வாறு வெளிப்பட்ட நிலப்பரப்பு கடலை நோக்கி மெதுவாகச் சரிந்தும் நிலத்தை நோக்கி மெதுவாக உயர்ந்தும் செல்லும். இத்தகைய நிலத்தின் கரைக்கோடு நேராகவும் ஒழுங்காகவும் காணப்படும்.
தொடக்கநிலை
வெளிப்பட்ட நிலத்தின் கரை கடலை நோக்கி மெது வாகச் சரிந்து செல்வதனால் கடல் ஆழமற்றதாகக் காணப் படும். இதனால் பெரிய உடைப்பலைகள் கரைக் கோடுவரை வராமல் வெளியிலேயே உடைந்துவிடுகின்றன. எனவே சிறிய அலைகள் மட்டும் கரைக்கோடுவரை வரும். இக்காரணத்தி னால் கரையில் உண்டாகும் ஓங்கல் உருவிற் சிறியதாகவும் பதிவானதாகவும் காணப்படும் அமிழ்ந்திய கரையில் ஆழமான രഖ['(? ஒன்றையேற்படுத்தும் அலைகள் இங்கு சிறிய வெட்டு ஒன்றை மட்டும் உண்டாக்கும்.
இதன் பின்னர் உருவாகும் கரை நீங்கிய மணற்றடைகளின் பாதுகாப்பினால் இத்தகைய சிறுவெட்டு நிலைத்திருப்பது முண்டு. எனினும் நிலம் படிப்படையாக வெளிப்பட்டுவருமாயின்

அலையின் செயலும் நிலவுருவங்களும் 37.
அந்நிலைமையேற்பட வாய்ப்பிருக்காது. ஆனால் கரை நீங்கிய
மணற்றடை உருவாகிய பின்னர் கட்ல் நீரேரியலை கா அத்
தகைய ஒரு வெட்டினை உண்டாக்கலாம். சிலபோது அவை
உருவாகாமலுமிருக்கலாம். இத்தகைய ஒரு வெட்டுக் காணப்
படாவிட்டாலும் கரை நீங்கு மணற்றடை உருவாகத் தொடங் கியவுடன் கடற்கரை இளமை நிலையடைந்துவிடுகிறது.
இளமை நிலை
வெளிப்பட்டகரை இளமை நிலையையடைகிறவளவில் அதன் கரைக்கு வெளியே மணற்றடை ஒன்று உருவாகிக் காணப்படும். இது கரை நீங்கு மணற்றடை (அல்லது தடை மணற்றடை யெனக் கூறப்படும். இதன் பின் புறத்தில் (நிலத் தையடுத்து) கடனீரேரி உருவாகியிருக்கும் மணற்றடையும் கடனீரேரியும் தாம் இளமை நிலையின் சின்னங்களெனலாம். கரை நீங்கு மணற்றடை உருவாகிய முறைபற்றிக் கருத்து வேறுபாடுளது. கில்பேட் என்பவர் இவை நீள் கரை நகர்வு களினால் உண்டாகின்றன எனக் கூறியுள்ளார். ஆனால் டேவிஸ் இவை கரைக்கு வெளியே நிகழும் செயல்முறைகளி னாலேயே உருவாகின்றன எனக் கருத்துத் தெரிவித்துள்ளி அதேசமயம் ஜோன்சன் என்பவர், இம்மணற் றடையை உரு வாக்கும் பொருட்கள் அதற்கு முன்னாலிருந்து கிடைக்கின் றனவென்றும் நீள் கரை நகர்வுப் பொருட்களும் அவற்றுடன் சேர்கின்றனவென்றும் கூறியுள்ளார். கரைநீங்கு மணற்றடைகள் சிறிதாகவோ, பெரிதாகவோ காணப்படலாம். சிலபோது இணையான மணற்றடைகளும் உருவாகுவதுண்டு. அவற்றில் உள்ளிருப்பவை பலமற்ற சிறிய அலைகளினால் உருவாக்கப் படுகின்றன என நம்பலாம். கரை நீங்கு மணற்றடைகளின் பின்னால் மணற்குன்றுகளும் மண்ல் மேடுகளும் அடுத்தடுத்துக் காணப்படலாம். சிலவற்றில் வற்றுப்பெருக்கு நுழைகுடாக்கள் காணப்படுதுமுண்டு கரைநீங்கு மணற்றடையை உருவாக்கும் பொருட்கள் கிடைக்குமிடத்திலிருந்து அதிக தொலைவிற் காணப்படும் மணற்றடைகளில் பல நுழை குடாக்கள் காணப் படலாம். இக்குடாக்கள் பின்னொருபோது மூடப்பட்டு மீண்டும் திறக்கப்படுவதுண்டு. இவ்வாறு பல நுழை குடாக்கள் கானப் படுமாயின் மணற்றடையின் பின் புறத்திலுள்ள கடனீரேரியின் நீர் ஒரு சீரான உப்புத்தன்மையுடையதாக மாறுவதனால் அங்கு சேற்றுத் தாவரங்கள் முளைக்கும். சில சந்தர்ப்பங் களில் கடனீரேரியின் உள்ளோ வெளியிலேர் வற்றுப்பெருக்குக் கழி முகங்களும் உண்டாகின்றன,

Page 192
372 புவிவெளியுருவவியல்
கரை நீங்கு மணற்றடை உருவாதலைத் தொடர்ந்து கரைக்கோடு மெதுவாகப் பின்னிடைகிறது. புயலலைகள் மணற் றடைக்கு மேலாகப் பரல், கல், பாறைத்துண்டுகள் முதலிய வற்றை வீசுவதனாலும் ஓங்கலின் தேய்வினால் பெறப்பட்ட மணலைக் காற்று எறிவதனாலும் மணற்றடை படிப்படியாக நிலப்பரப்பை நோக்கிப் பின்னிடைகிறது. மணற் பரப்பின் முன்பக்கம் கடலரிப்பினால் சிறிது பாதிக்கப்பட்டாலும் அதன் அகலம் பெரும்பாலும் ஒரேயளவினதாகக் காணப்படுதல் முன் குறிப்பிட்ட நிலைமைகளின் விளைவே. கடனீரேரியை நிரப்பும் முயற்சியில் வற்றுப் பெருக்கோட்டங்களும் அருவிகளும் காற்றும் ஈடுபடுவதனால் அது சற்று விரைவாகவே நிரப்பப்பட்டு விடு கிறது. இதன் பின்னர் உப்புத் தன்மையுள்ள சேற்றுத் தாவ ரங்கள் அேங்கு காணப்படும். இந்த நிலையில் கடற்கரையின் பக்கப் பார்வை சமநிலைப் பக்கப் பார்வையாகிவிடுகிறது. தென்னமெரிக்காவில் புவனசு அயர்சிற்குத் தெற்கிலுள்ள கரை இந்நிலையிலிருப்பதாக நம்பப்படுகிறது.
முதிர்ச்சி நிலையும் முதுமை நிலையும்:
ஜோன்சனின் கருத்துப்படி கடனீரேரி முற்றாக நீக்கப்பட்ட பின்னர் அலைகள் மீண்டும் கரையில் அரிப்பிலீடுபடத் தொடங் கும் நிலையே முதிர்ச்சி நிலையாகும். இதற்குப் பின்னர், அமிழ்ந்திய கரையின் விருத்தியைப் போலவே இக் கரையின் விருத்தியும் அமையும்
21.9 கரைகளின் வகை
கடற்கரைகளைப் பற்றிய விரிவான ஆய்வு நடத்தியவப் களில் ஜோன்சனும் ஒருவராவர். அவர் பிறப்பு மரபின் அடிப் படையில் ஒரு பாகுபாட்டை வெளியிட்டார். அவர் கரைகளை (1) அமிழ்ந்திய கரை (2) வெளிப்பட்ட கரை (3) கூட்டுக் கரை (4) நடுநிலைக் கரை என நான்காக வகைப்படுத்தி அவற்றின் உபபிரிவுகள் பல வற்றையும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு பகுதி அமிழ்ந்திய நிலப்பரப்புடன் கடல் தொடர்பு கொள்வதனால் உண்டாவதே அமிழ்ந்திய கரையாகும். அதே போல கடல் அல்லது ஏரியின் அடித்தளத்தில் ஒரு பகுதி வெளிப்பட்ட நிலையில் கடலுடன் தொடர்புள்ளதாகக் காணப் படுவதே வெளிப்பட்ட கரையாகும். நடுநிலைக்கரை நிலம் அமிழ்தல் அல்லது வெளிப்படுவதனால் பாதிக்கப்படாமல் தனித்துவமுடையதாகக் காணப்படுவதாகும் கூட்டுக்கரை யென்பது முன்னர் குறிப்பிட்ட 3 வகையான கரைகளில் யாதா யினும் இரண்டினது தன்மைகளை ஒருங்கே கொண்டதாகும்

அலையின் செயலும் நிலவுருவங்களும் 373
மேல் குறிப்பிட்ட அடிப்படைப் பிரிவுகளின்கீழ் பல உப பிரிவுகளையும் ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார். அமிழ்ந்திய கரை களை (1) நீள் குடாக்கரை (2) நுழைகழிக்கரை என இரண் டாக வகுக்கும் ஜோன்சன் நீள்குடாக்கரை யை (1) குடாச்சம நிலக் கரை அல்லது குடாமேட்டுநிலக் கரை (2) குடா மலைக் கரை (3) குடா எரிமலைக்கரை என மேலும் 3 உபபிரிவுகளாக வகுக்கின்றார். ஆற்றினால் நன்கு வெட்டப்பட்ட நிலம் ஒரு பகுதி கடலில் அமிழ்ந்திய நிலையில் காணப்படுவதே நீள் குடாக் கரையாகும். வடமேற்கு ஸ்பெயின் கரையும் அயர் லாந்தின் தென்மேற்குக் கரையும் இவ்வகைக்குத்தக்க எடுத்துக் காட்டுகளாகும். குடாச் சமநிலைக்கரைக்கு அ ஐ மாகாணத் திலுள்ள செசபிக் குடாவும் குடா மேட்டுநிலக் கரைக்கு மெயின்கரையும், பிரான்சிலுள்ள பிரித்தனிக் கரையும் உதார ணங்களாகும். குடா எரிமலைக்கரைக்குப் பசுபிக்கிலுள்ள பல எரிமலைத் தீவுகளின் கரைகள் உதாரணங்களாகும்.
அடுத்ததாக நடுநிலைக் கரைகளை எடுத்துக்கொண்டால் அதிலும் பல உட்பிரிவுகளைக் குறிப்பிடலாம், கழிமுகக்கரை, வண்டற்சமநிலக்கரை, வெளிபடையற்சமநிலக்கரை எரிமலைக் கரை முருகைக்கற்கரை, பிளவுக்கரை ஆகியன ஜோன்சனால் குறிப்பிடப்படும் உபபிரிவுகளாம்.
ஜோன்சனின் பாகுபாட்டில் சில குறைபாடுகளும் காணப் பட்டிருக்கின்றன குறிப்பாக, பிளெயிஸ்தசின் காலப் பணிஃ கட்டியாறாதலுக்குப் பின்னர் ஏற்பட்ட கடல்மட்டமாற்றங் கள் உலக முழுவதையும் பாதித்தமையால் எங்கும் நடுநிலைக் கரைகளே காணப்படுகின்றன என்பதே ஒரு கண்டனமாகும். ஆயினும் கடல்மட்ட மாற்றங்களை நாம் ஏற்றுக்கொள்ளினும் புவியியல்ரீதியில் நோக்கும்போது ஜோன்சனின் பாகுபாடு பொருத்தமானதொன்றாகவே தென்படுகிறது.
ஜோன்சனுக்குப் பின்னர் செப்பாட், கொற்றன் மாட் டோன் முதலியோரும் கரைகளைப் பற்றிய uଉ}} --ପ୍ରୁଥିବା ଔଜ୍ଜା மேற்கொண்டு வேறு சில பாகுபாடுகளை வெளியிட்டுள்ளனர். செப்பாட் கரைகளை (1) அரிப்பின் தாக்கம் குறைவாகக் காணப்படும் இள  ைம ய ர் ன கரை (2) அரித்தலுக்குட்பட்டு முதிர்ச்சியடைந்த நிலையிலுள்ள கரை என இரண்டு பிரிவுக் குள்ளடக்கி அவற்றின் உபபிரிவுகளையும் குறிப்பிட்டுள்ளார். நீள்குடாக்கரை, நுாைகழிக்கரை, கழிமுகக்கரை, எரிமலைக் கரை, பிளவுச்சரிவுக்கரை ஆகியன முதலாம் பிரிவுக்குள்ளடங்

Page 193
74 புவிவெளியுருவவியல்
குகின்றன. முருகைக்கற்கரை மணற்றடை மணற்கூழாங்கல் நாக்கு என்பவற்றையுடைய கரை முதலியன இரண்டாம் பின் வுக்குள்ளடங்குகின்றன. VITI JAWA
79 அயர்லாந்தின் நீள் குடாக்கரை
கொற்றன் (Cotton) என்பவர் கரையின் தொடக்க உருவத் தின் தோற்றம், தன்மை என்பவற்றினடினடிப்படையில் நான்கு வகையான கரைகளை அடையாளங் காண்கிறார். அவை (1) எரிமலைக் குழம்பின் திரட்சியினாலாகிய கரை, (2) பிர தேசப் புவியசைவுகளினாலாய கரை (3) பிளத்தலினாலாகிய இரை (4) பனிக்கட்டியாற்றின் அரிப்புக்குட்பட்ட நுழைகழிக் கரை என்பனவாகும்.
மரடோன் என்பவாகரைகளைத் தட்டையர்ன கரைகள், குத்தான கரைகள் என வகைப்படுத்தி அவற்றின் உபபிரிவு களையும் குறிப்பிட்டுள்ளார். மேல் விபரிக்கப்பட்ட விரிவான பாகுபாடுகள் வெளியிடப்படுமுன்னர் ஆஸ்திரிய அறிஞராகிய அவெஸ் என்பவர் நிலத்திணிவிலுள்ள மலைத்தொடர்களின் போக்கையும் கலரக்கோட்டின் போக்கையும் நுணுகி ஆய்வு
 
 
 
 

அலையின் செயலும் நிலவுருவங்களும் 375
செய்தபோது பசிபிக் சமுத்திரக் த  ைரக் கும் அத்திலாந்திக் சமுத்திரக்கரைக்குமிடையில் அடிப்படை வேறுபாடுகள் இருப் பதை அறிந்தார். பசிபிக்சமுத்திரக் கரைகளின் கரைக்கோடு மலைத்தொடர்களின் போக்குச் சமாந்தரமாகவும் அத்திலாந் திக் கரைகளின் கரைக்கோடு மலைத்தொடர்களின் போக்குக்கு குறுக்காகவும் காணப்படுவதனால் கரைகளை பசிபிக்வகைக்கரை அத்திலாந்திக் வகைக்கரை என இரண்டாக வகைப்படுத்தி னார். அவர் பாகுபாட்டின்படி முன்னர் குறிப்பிடப்பட்ட நீள் குடாக்கரை, நுழைகழிக்கரை ஆகியன அத்திலாந்திக் வகைக் குள்ளும், தல்மேசியக்கரை (யூகோசியாவியக்கரை) பசிபிக் வகைக்குள்ளும் அடங்குவதை அவதானிக்கலாம்
படம் 80 தல்மேசியக்கரை (பசிபிக் வகை)
இவ்வாறு கரைகளைப்பற்றிய பாகுபாடு பல அடிப்படை ଅଞ୍ଜଳ୍କ மேற்கொள்ளப்பட்டிருப்பினும் பிறப்பு முறையிலமைந் ததும் புவியியல் ரீதியில் நோக்கும் போது பொருத்தமான தாகவுமுள்ள ஜோன்சனின் பாகுபாடே பரவலான ஆதரவைப் பெற்றுள்ளது.

Page 194
376 புவிவெளியுருவவியல்
21. 10. கடற்கீழ்க் குடைவுகள் (Submarine Canyons)
கண்டநிலப் பரப்பிலுள்ள சில ஆறுகள் கடலுடன் கலக்கு மிடத்திலிருந்து கண்ட மேடையில் நீண்டு காணப்படும் ஒடுக்க மான அகழிகளே (இடுக்குகள்) இவையாம். ஹட்சன் கொங்கோ எனும் இரு ஆறுகள்குடைவுகளாகத் தொடர்வதாகத் தெரியவரு கிறது. நியூயோக்கிற்கு 190 கி.மீ தென்கிழக்கிலுள்ள ஹட்சன் கடற்கீழ்க் குடைவு விளிம்பில் 10 கி.மீ அகலமானதாகவும், 1200 மீற். ஆழமானதாகவும் காணப்படுகிறது. இந்து நதி கடலோடுகலக்குமிடத்திலிருந்து 25 கி. மீ. தொலைவில் இத் தகைய ஒரு குடைவு காணப்படுவதாக அண்மையில் அறியப்பட் டிருக்கிறது. இக்குடைவு 25 கி.மீ. வரை அடையல்களினால் நிரப்பப்பட்டிருக்கலாம் என எண்ண இடமுண்டு.
பெரும்பாலான கடற்கீழ்க் குடைவுகளின் தலை கண் ட மேடையிலேயே காணப்படுகிறது. அன்றியும் அவை மரநிகர் வடிகாலையொத்துக் (கடற்கீழ்) கிளைப்பள்ளத்தாக்குகளுடன் கூடிய அமைப்பை உடையனவாகவும் காணப்படுகின்றன. இக் குடைவுகளிற் காணப்பட்ட ஆழமற்ற நீரினாலாய அடையற் படிவுகள், மற்றும் உயிர்ச்சுவடுகள் என்பவற்றின் ஆய்வுகளிலி ருந்து இவை யாதோ ஒருவகையான (கலங்கல்) நீரோட்டத்தின் அரிப்பினால் தோண்டப்பட்டிருத்தல் சாத்தியம் என்பது தெரி கிறது. இவை கடல் மட்டத்தின் மேலோ, கீழோ தோண்டப் பட்டிருக்கலாம்.
டலி என்பவர் இவை பனிக்கட்டியாற்றுக் காலத் தி ல் இடைநிலை (Suspenson) ஒட்டங்களினால் உருவாக்கப்பட்டி ருக்கலாம் என்ற கருத்தைத் தெரிவித்துள்ளார். அக்காலத்தில் கடல் மட்டம் வீழ்ந்தமையினால் கண்டமேடையில் ஒரு பகுதி வெளிப்பட்டிருந்தது. மேலும் அப்பொழுது நிலவிய கடுமை யான புயற்காலநிலையின் விளைவால் அலைகளும், நீரோட் பங்களும் அதிக வலுவுள்ளனவாயிருந்திருக்கலாம் அத்தகைய அலைகளும் நீரோட்டங்களும் கண்டமேடையின் வெளியோ ரத்திலுள்ள செரியலான அடையல்களைக் கலக்கி நிலை குலைத்தபோது அவ்வடையல்களையும் மண்டி, சேறு என் வற்றையும் கொண்ட அடிப்பாக நீர் ஒருவகையான கீழிழுப் பாகக் கீழ் நோக்கி ஒடியிருக்கலாம். அதன் வேகம் மேடை யின் சாய்வையும் தனது அடர்த்தியையும் பொறுத்து அமைத் திருக்கும். அத்தகைய கலங்கல் நீரோட்டம் கண்டமேடையில்

அலையின் செயலும் நிலவுருவங்களும் 377
ஆங்காங்கு காணப்பட்ட பள்ளங்களினாலும் இறக்கங்களினா லும் வழிப்படுத்தப்பட்டிருக்கலாம். அன்றியும் அத்தகைய இறக்கங்களும் அவ்வழியரிப்புக்குட்பட்டிருக்கலாம். இவ்வாறு செல்லும் ஒட்டங்கள் கண்டச்சரிவுப் பகுதியில் அதிக வேகத் துடன் பாய்ந்து அடித்தளம் தட்டையாகுமிடத்தில் ஒய்ந்திருக் குமெனலாம். ஒல்லாந்தைச் சேர்ந்த குனென் (Keuman) அ. ஐ. மாகாணத்தைச் சேர்ந்த H. S. பில் முதலியோரின் ஆய்வுகள் டலி குறிப்பிட்ட முறையில் கலங்கல் நீரோட்டங்கள் செயல் பட்டிருக்கலாம் என்பதை வலியுறுத்துகின்றன. இத்தகைய ஒட்டங்களின் செயல்பாட்டிற்குக் கடலடித்தளத்தில் உண்டா கிய பிளவுகளும் வெடிப்புகளும் உதவியிருக்கும். ஆனால் வன்மை யான பளிங்குருப் பாறைகளை இவை அரித்திருக்க முடியுமா என்பதைக் கூறமுடியாதிருக்கிறது. எனினும் ஆறுகளின் பெருக் குக்காலங்களில் அவற்றினால் கொட்டப்படும் அடையற் சுமை அதிகரிப்பதால் அக்காலத்தில் இத்தகைய ஒட்டங்கள் உருவா கியிருக்கலாமாதலின் அவை ஆறுகளின் நேர் தொடர்ச்சியாக உள்ள கடற்கீழ்க்குடைவுகளை ஆக்கியிருத்தல்கூடும். மேலும் புவிநடுக்கங்களின் விளைவாகவும் கடற்கீழ் நிலச்சரிவுகள் ஏற் படுவதினாலும் கடற்கீழ் எரிமலைக்கக்குகையினாலும் அடையல் கள் திரண்டு நீருடன் கலந்து ஓடலாம். இவற்றைத் தவிர வலுவுள்ள பெரும் புயற்காற்றும் இத்தகைய ஒட்டத்தை உரு 61 TT55 SF56) s TLD
ஹோல் (Hoyle) என்பவர் கண்டங்கள் புவியின் உள்ளிருந்து வெளிநோக்கி வளர்ந்து வருகின்றன என்ற கருத்தின் அடிப் படையில் கடற்கீழ்க் குடைவுகளின் தோற்றத்தை விளக்க முடியும் எனக் கருதுகிறார்.
கண்டங்கள் உள்ளிருந்து வெளிநோக்கி வளர்ந்தனவெனின் முன்னொரு காலத் தி ல் கடல்மட்டம் தற்போதுள்ளதிலும் பதிந்த நிலையிலிருந்திருக்கும் என்பது தெளிவு. அன்றி யும் அக்காலத்தில் உள்ளிருந்து வெளியேற்றப்பட்ட நீரின் அளவும் குறைவாயிருந்திருக்கும். எனவே கடற்கீழ்க் குடைவுகள் முன் னொருபோது காணப்பட்ட நிலைமைகளில் வெட்டப்பட்டவை யென்பதும் கடல்மட்ட உயர்ச்சியும் கண்டங்களின் வளர்ச்சி யும் அவற்றை விளக்கக்கூடியவை என்பதும் தெளிவு.
கண்டங்களின் ஆக்கப்பொருட்கள் எவ்வாறு மேல்நோக்கித் தள்ளப்பட்டனவோ அதேபோல் நீரும் உட்பகுதியிலிருந்து மேலே தள்ளப்பட்டதனால் சமுத்திரங்கள் தோன்றியிருக்க லாம் என ஹோல் கூறுகிறார். உட்பகுதியிலிருந்த புவியாக் கப்பொருட்கள் நீரையுடையனவாயிருந்திருக்க வேண்டும் என நம்பப்படுகிறது.

Page 195
அத்தியாயம் 23
புவிவெளியுருவவியலில் புதிய கருத்துக்கள்
23, இயக்கச் சமநிலைக் கோட்பாடு (Dynamic Equilibrium Concept
W M, டேவிஸ் அவர்களால் வகுக்கப்பட்ட இயல்பான அரிப்பு வட்டத்திற்கு மாற்றாக அமையும் இக்கோட் பாட்டினை ஹாக் (J. Haek) என்னும் அமெரிக்கப் புவிச் சரிதவியலாளர் வெளியிட்டார். அவர், நிலவுருவங்களை வட்ட முறையில் அமையாத ஒரு கருத்துக் கட்டுக்கோப்பின் மூலம் விளக்குகிறார். இதன் படி பெரும்பாலான நிலவுருவங்கள் கிடைக்கும் சக்திக்கும் இடம்பெறும் செயல்முறைகளுக்கு மிடையே நிலவும் ஒரு வகையான இயக்கச் சமநிலையில் இருப் பதாகக் கருதப்படுகிறது. மேலும் ஒரு பிரதேசத்தின் நிலவுரு வத்துடன் தொடர்புள்ள அம்சங்களான தரைத்தோற்றம், சாய்வின் நீளம், அதன் சராசரியான மற்றும் உச்சக்கோணங் கள், ஆற்றுவாய்க்காலின் சாய்வு விகிதம் முதலியன ஒன்றுட னொன்று நெருக்கமாக இணைந்துள்ளதாக இக்கோட்பாடு கூறுகிறது. அன்றியும் சாய்வுகள், நிலவுருவங்கள் ஆகியவற்றில் நாம் காணும் வேறுபாடுகளை அடித்தளப் பாறைகளில் இடம் பெறும் செயல்முறைகள், அப்பாறைகளில் ஏற்படும் மாற்றங் கள் ஆகியவற்றின் மூலமே விளக்கமுடியுமென்றும், அதுபோலவே நிலவுருவங்களில் காலப்போக்கில் ஏற்படும் மாற்றங்களை முறையே 1) அடித்தளப்பாறைகளில் ஏற்படும் மாற்றங்கள் (2) புவியோட்டுவிருத்தி அசைவுகள் (3) காலநிலை என்னும் மூன்று காரணிகளின் மூலமே விளக்கமுடியுமெனவும், டேவிஸ் கருதியதுபோல் படிமுறையான மாற்றங்களுடன் அவற்றைத் தொடர்புபடுத்த முடியாதெனவும் ஹாக் கூறியுள்ளார்.
இவ்வாறு, உச்சிகள் ஒரே மட்டத்திலிருத்தல், ஈராற்றிடை நிலங்கள் பரல்களால் மூடப்பட்டிருத்தல் போன்ற நிலைமை கள் அரிப்பு வட்டத்தின் நிலையைப் பொறுத்தவையெனவும் தட்டையுச்சிக்குன்றுகள் மேலுயர்ச்சி அல்லது பல வட்டங்களின் விளைவாகத் தோன்றுவதாகவும் டேவிஸ் கூறும்போது, அந்

புவிவெளியுருவவியலில் புதிய கருத்துக்கள் 379
நிலைமைகள் நீண்டகால அரிப்பினாலும், ஆற்றுக்கும் பாறை யமைப்புக்குமிடையில் படிப்படியாக ஏற்படும் சீர்படுத்தலின் விளைவாகவுமே உருவாகுவதாக ஹாக் கூறுகிறார். மேலும் ஒரே வகையானதும் ஒரேயளவு வன்மையுள்ளதுமான பாறை கள் காணப்படும் பிரதேசங்களில் சமதூரத்திற் பாயும் ஆறு கள் அரித்தலில் ஈடுபடும்போது உச்சிகளும் ஈராற் றிடை நிலங் களும் அனேகமாக ஒரே மட்டத்திலிருத்தல் சாத்தியமெனக் கூறும் ஹாக் அத்தகைய தரைத்தோற்றத்தைப் பாறை த் தொடர் இடுக்கு' (Ridge and Rawine) நிலத்தோற்றம் என விபரிப்பதோடு அதுவே இயக்கச் சமநிலையைக் காட் டும் இயல்பான நிலைமை எனவும் விளக்குகிறார்.
மேலும், ஹாக்கின் கருத்துப்படி நிலத்தோற்றத்தின் கூறு களான பள்ளத்தாக்கின் அடிப்பாகம், பக்கச்சாய்வுகள், ஈராற் றிடைநிலம் முதலியன சாதகமான சூழ்நிலைகளில் ஒரே விகிதத் தில் தேய்வடையும். ஆனால் அதற்கு நேர்த்தியான ஒரு சக்திக் சமநிலை இன்றியமையாதது. அந்நிலையில் சக்தி போதியதா யிருப்பதற்காகச் சாய்வும்-குறிப்பாக அதன் உயரமும் கோணங் களும் சீர்படுத்தப்படும். இது இயக்கச் சமநிலையின் இன்னொரு சிறப்பமிசமாகும். எனினும் அச்சமநிலை பொதுவாக பாறை களிற் காணப்படும் மூட்டுக்கள் சாய்வுக்கோனம், இயற்கைத் தாவரம் என்பவற்றாலும் புவியோட்டு விரு த் தி அசைவுகள், காலநிலை, முதவிய மாறக்கூடிய காரணிகளினாலும் பாதிக்கப் படலாம். இதன் விளைவாக நிலவுருவங்களின் இயல்பு மாறும். அதேசமயம் முன் குறிப்பிடப்பட்ட காரணிகளின் தாக்கம் மாறும்போது நிலவுருவங்களும் அதற்கேற்ற முறையில் தம்மைச் சீர்ப்படுத்துவதில் ஈடுபடலாம்.
உதாரணமாக படம் 81 ல் நிலவுருவம் தன்னைப் பாறை யமைப்புக்கு இசைவாக்கியுள்ளதைக் கானலாம் அதில் தொடக் கத்தில் ஒரு வன்பாறைப்படையில் தேய்வு இடம்பெறுகிறது. இதனால் சாய்வுகள் குத்தாகவும் தரைத்தோற்றம் உயர்ந்தும் காணப்படும். காலப்போக்கில் அவ்வன்பாறைப்படை தேய்ந்த ழிந்தபின்னர் அதன் கீழிருக்கும் ஒரு மென்பாறைப்படையில் அரித்தல் நிகழும். அதில் மென்சாய்வுகளும் பதிவான தரைத் தோற்றமும் உருவாகும். பின்னர் அம்மென்பாறைப்படையும் முற்றாகத் தேய்த்தழிக்கப்பட்டதன்மேல் மீண்டும் ஒரு வன் பாறைப்படை வெளிப்படும்போது தொடக்கநிலையிற் காணப் பட்ட அதே தரைத்தோற்றமும், சாய்வுகளும் மீண்டும் நிலை

Page 196
38()} புவிவெளியுருவவியல்
· ელად r
ELHHLHHLGLLLSLLLSLSLLLLLSLLLLLLLYY
படம்: 81 இயக்கச் சமநிலை ஏற்படும் விதம்
நாட்டப்படுகின்றன. இதுபோலவே வேறுவகையான மாற்றங் கள் ஏற்படும்போதும் அவை ஒன்றையொன்று ஈடுசெய்வதன் மூலம் நிலவுருவம் ஒரே நிலையிலிருக்க உதவலாம் உதவும். இவ்வுதாரணம் இயக்கச்சமநிலை ஏற்படும் முறையை எடுத்துக் காட்டுகிறது. ஹாக்கின் திட்டம் காலத்தாற் கட்டுப்படுத்தப் படாத திறந்த ஒரு நிலையிலுள்ள நிலத்தோற்றமாகும். SSOLLLLL LL LLLLL S LLLLLLLLS TTTTTT TT S TTT S TTJS TTTTTt லுள்ளவரை நிலவுருவங்களும் ஒரே நிலையிலிருக்கும். நிலத் திணிவு முற்றிலும் தேய்ந்தாலும் அந்நிலைமை மாறாது
ஹாக், நிலையான அடித்தளமட்டம், ஒரு சீரியக்கம் என்பவற்றைப் பொறுத்தவரை டேவிசின் சில கருத்துக்களை நிராகரிக்கிறார் நிலையான அடித்தளமட்டம் அபூர்வமான தென்றும், ஆனால் ஒரு சீரியக்கம் நிலையானதென்றும், அது ஆற்றின் முதிர்ச்சி நிலையைக் காட்டாதென்றும், ஒரு பிர தேசம் கூறுபடுத்தப்படுதலும் அவ்வாறே நிலையானதென்றும் அவர் வாதிக்கிறார். மேலும் அருவிகள் உருவாகியவுடனேயே பெரும்பாலும் ஒரு சீரியக்க நிலையையடைவதோடு, ஆற்று வடிநிலவமைப்பில் மாற்றம்வரும்வரை அந்நிலைமை பேணப் படுமெனவும் அவர் கருதுகிறார் அன்றியும் நிலவுருவங்கள்
 

புவிவெளியுருவவியலில் புதிய கருத்துக்கள் 38
அரிக்கப்படும் விகிதமானது வானிலையாலழிதலைப் பாறைகள் தடுக்கும் திறனில் தங்கியுள்ளதாகவும் சாய்வுகளிலும் தரைத் தோற்றத்திலும் நாம் காணும் வேறுபாடுகளுக்கு அதுவே காரணமெனவும் இதனால் ஆற்று வடிநிலத்தின் புவிச்சரித வியல் அதன் உருவவியலில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது எனவும் ஹாக் கூறுகிறார்.
உதாரணமாக, வன்பாறைகள் உயர்ந்த நிலவுருவங்களை யும் மென்பாறைகள் பதிவான நிலவுருவங்களையும் உருவாக்கு வதையும் வன்பாறைப் பிரதேசங்கள் குத்தான சாய்வுகளை யும் மென்பாறைப் பிரதேசங்கள் மென்சாய்வுகளையும் கொண் டிருத்தலையும் வன்மையான தடைபாறைகள் மட்டும் நீர் வீழ்ச்சிகள் மற்றும் விரைவோட்டங்களை உருவாக்குதலையும் நோக்கும்போது பாறைகளின் வன்மை வேறுபாடுகள் நில வுருவங்களைப் பாதிப்பது புலப்படும்.
குறைநிறைகள்:- இயக்கச்சமநிலைக் கோட்பாட்டிலும் சில குறைபாடுகள் காணப்படுகின்றன. முதலாவதாக, ஆற்றி ன் அரிக்கும் திறன் (இது சாய்வைப் பொறுத்தது) நிலத்தேய்வின் விளைவாகக் குறையும்போது, அரித்தலுக்கும் சக்திக்குமிடையே சமநிலை பேணப்படமாட்டாது. ஏனெனில் சக்தி குறையும் போது ஆறு அதற்கேற்ற ஒரு புதிய சமநிலையை அடைய முயலும். எனவே நீண்டகால எல்லையில் நிலத்தோற்றங்களில் ஏற்படக்கூடிய மாற்றங்களை இக்கோட்பாட்டின் மூலம் விளக்க முடியாது. இரண்டாவதாக, ஆறுகள் சமநிலையடைந்தபோது காணப்பட்ட அதே நிலவுருவங்கள் தொடர்ந்தும் அதேநிலை யில் மாற்றமின்றி இருக்குமாயின் அவற்றில் பழையது எது புதியது எது எனக்கூறுவது எளிதன்று. அதுபோலவே இயக்கச் சமநிலை ஏற்படுவதற்கு முந்திய நிலத் தின் தன்மையையும் அதன் எதிர்கால நிலைமையையும் எவரும் கூறமுடியாது.
மூன்றாவதாக, இயக்கச்சமநிலையானது புவியசைவுகள், காலநிலை மாற்றம் என்பவற்றால் மட்டும் சீர்குலையக்கூடியது. எனவே மேலமைந்த வடிகால் போன்ற சில விசேட அம்சங் களை அதன் மூலம் விளக்கமுடியாது. நான்காவதாக, இத் திட்டத்தை உள்நாட்டு வடிகாற்றொகுதியில் விருத்தியுடன் தொடர்புபடுத்த முடியாது. ஏனெனில் அங்கு பெரிய ஆறுகள் உருவாகுவதில்லை. மேலும், மலையிடைப்பட்ட அல்லது குறை வறட்பிரதேசங்களையொட்டியுள்ள வடிநிலங்களில் நீர் ஆவி

Page 197
382 புவிவெளியுருவவியல்
யாதல் மூலமோ உட்பொசிவதன் மூ ல மோ வற்றிவிடுவது னால் அங்கு படிவுசெய்யப்படும் அடையல்கள் திரண்டு காலப் போக்கில் அவ்வடிநிலங்களை நிரப்பிவிடும் அத்துடன் உள் நோக்கிப்பாயும் அருவிகளின் பள்ளத்தாக்குகளும் அவ்வாறே நிரப்பப்படும். இவற்றின் ଗନ୍ଧ ତ) ଜt ଜut it is நிலத்தோற் றத்தில் ஏற்படும் மாற்ற ங் களை இக்கோட்பாட்டின் மூலம் விளக்கமுடியாது. ஆயினும் இக்கோட்பாடு (1) குறுகிய அல்லது சற்று நீண்டகால எல்லையில் நிலவுருவங்களில் ஏற்படும் மாற் றங்களை (உ-ம் வெளியேறு நீர் அடையற்சுமை என்பவற்றுக்கு ஆற்றுவாய்க்கால்கள் இசைவாகுதல்) ஆராயவும் (2) புவிச்சரித வியலுக்கும் நிலவுருவங்களுக்குமிடையிலுள்ள நெரு ங் கி ய தொடர்பை வலியுறுத்தவும் (3) வேறுபட்ட நிலவுருவங்கள் சமகாலத்தில் கலந்து காணப்படுவதை விளக்கவும் உதவுகிறது.
23, 2 அரிப்பு நிலப்பரப்புகள்
(1) செதுக்கற் சமநிலம் (ETCH PLAN) இது யூலியஸ் (B) GILG) (J. Budel) என்னும் ஒரு ஜேர்மனிய புவிவெளியுருவ வியலாளரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு அரிப்பு நிலவுருவ மாகும். அவர் பருவகாலங்களைக்கொண்ட ஈரவெப்பவலயத்தில் இடம்பெறும் உரிவுச்செயல் முறைகளின் அடிப்படையில் ஒரு நில விருத்திக் கோட்பாட்பாட்டை முன்வைத்தார். அதன் சாராம் சம் மேல்வருவாறு
ஈரவெப்ப வலயத்திலுள்ள பரிசைநிலப் பகுதிகளிற் காணப் படும் பழைய பாறைகள் மிக நீண்டகாலவாகவும், அதிக ஆழத் திற்கும் இரசாயன வானிலையாலழிவிற்குட்பட்டிருக்கின்றன. உதாரணமாக, ஆபிரிக்காவில், நைஜீரியாவிலுள்ள ஜெரஸ் மேட்டுநிலப்பகுதி 30 மீ ஆழத்திற்குமேல் சிதைவுக்குட்பட்டிருப் பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேசமயம் அப்பகுதிகளில் இயல்பான அரித்தல் மூலம் பாறைச்சிதைவுகள் சமகாலத்தில் அகற்றப்படுதலும் இடம்பெறுகிறது. ஆயினும் அரித்தல் எக் காரணத்தாலாயினும் வேக மாக நிகழுமாயின் (உ-ம் நிலம் மேலுயர்த்தப்படுதல்) அடித்தளப் பாறைகள் வெளிப்படலாம். அதற்கு மாறாக, நீர்மேடை கீழிறங்குமாயின் அடித்தளப் பாறைகள் வெளிப்படாதுபோகலாம். இவ்வாறு அடித்தளப் பாறைகள் சிதைவுற்ற நிலையில் அருவிகள் அரித்தலில் ஈடு படுதற்குத் தேவையான பாறைத்துண்டுகள் கிடைக்கமாட்டா. அந்நிலையில் அரித்தல் கண்ணுக்குப் புலப்படக்கூடிய கழுவற்

புவிவெளியுருவவியலில் புதிய கருத்துக்கள் 383
செயல் முறைகள் மூலமும், அவற்றிலும் முக்கியமான கரைத்தல் உருக்குலைதல் போன்ற இரசாயனச் செயல்முறைகள் மூலமுமே இடம்பெறும் அவற்றின் மூலம் ஏற்படும் அழிவின் அளவானது (1) பாறைகளின் வன்மை (2) அவ்வப்போது நிலம் மேலுயர்த் தப்படும்போது அழிவுப்பொருட்கள் அகற்றப்படுகின்ற வேகம், என்பவற்றைப் பொறுத்து வேறுபடும். இவ்விதமாக இரசாயன முறையில் அதிகமாகச் சிதைவுற்ற அடித்தளப்பாறைகளின் மேல் உருவாகும் பதிவான சமநிலமே, செதுக் கற் சம நிலம் எனப்படுகிறது. இது பன்முறை மாறிமாறி இடம்பெறும் இரசா யனச் சிதைவு, கழுவல் என்பவற்றின் மூலம் உருவாகும். இதன் இயல்பானது பிரதேசத்தின் (1) கல்லியல் (ii) பாறையமைப்பு (i) அரித்தற் செயல்முறைகளின் தாக்கம் (செறிவு) என்ப வற்றைப் பொறுத்து வேறுபடும்.
செதுக்கற்சமநிலங்கள் சரிவுப்பாறைகளையும் குத்தான சாய்வு களைக் கொண்ட தளத்திடைக் குன்றுகளையும் அடுத்துச் சடுதி யாக முடிவுறும் தன்மையைக் காட்டுகின்றன. அச்சமநிலங்க ளின் கீழ் பெரும்பாலும் வானிலையாலழிதலினால் உருவாகிய அடித்தளப் பாறைகளின் மேற்பரப்பில் பலமற்ற அல்லது உடைந்த பாறைகளைக் கொண்ட பகுதிகளில் வடிநிலத்தைப் போன்ற அமைப்புகளும், வன்பாறைப் பகுதிகளில் மெல் லிய சப்பறோலைற் (Saprolite) த கட்டு களு ம் காணப்படலாம். ஆனால் களிப்பாங்கான அத்தகடுகள் மழைக்காலத்தில் தகட்டுக் கழுவல் (Sheetwash) மூலம் அகற்றப்படும். இவ்வாறு காலப் (ჭLiff"ქვემგზა வானிலையாலழிவுக்குட்பட்ட பாறைகளின் சாய்வுகள் குறைக்கப்பட்டாலும் வன்பாறை வலயங்களில் தளத்திடைக் குன்றுகள் வெளிப்படும். ஆனால் சிதைவுச்செயல்முறைகளும் கழுவற்செயல்முறைகளும் தொடர்ச்சியாக ஏற்படுவதனால் அடித்தளப்பாறை வலயமும் அதன்மேல் உருவாகிய சமநிலமும் தேய்ந்து படிப்படியாகத் தாழ்வுறும் அந்நிலையிலும் அச்சம நிலத்தின் மேற்பரப்புத் தோற்றம் (உருவம்) மாறாது. ஆயினும் நிலம் மேன்மேலும் தாழும்போது வன்மையான தளத்திடைக் குன்றுகளின் உயரம் அதிகரிக்கும்.
மேல் விபரிக்கப்பட்ட செதுக்கல் முறையில் சமநிலங்கள் உருவாதல் ஆபிரிக்காவை உள்ளடக்கிய கொண்டுவானாலாந் தின் பரிசைநிலங்களில் சிறப்பம்சங்களாயிருந்ததாகக் கருதப்படு
கிறது.

Page 198
384 புவிவெளியுருவவியல்
23. 3 g56MTả Ao top53'ünd (Pediplain)
ஆபிரிக்காவிலு ள்ள வறண்ட, மற்றும் குறைவறட்பிரதேசங் களில் நன்கு விருத்தியடைந்து காணப்படுகின் ) ஒரு வகையான * மட்டமாக்கப்பட்ட நிலப்பரப்பே Panation. Su face) இதுவாகும். இவ்வகையான சமநிலமானது மலைத்தொடர்கள், சரிவுப்பாறைகள் ஆகியவற்றையடுத்தும் தளத்திடைக்குன்றுகள் மற்றும், கொப்பீஸ் எனப்படும் அடுக்குப் பாறைக் குன்றுகள் ஆகியவற்றைச் சுற்றியும் காணப்படுகின்றது. மே லும் இது ஒப்பளவில் ஒப்பரவான ஆனால் சற்றுக் குழிந்த மேற்பரப் புடன் தோன்றுவது மட்டுமன்றி இதில் ஆறுகளோ அருவி களோ அதிகமாகக் காணப்படுவதுமில்லை.
தளச்சமநிலக் கோட்பாடு W. பெங் என்பாரின் எண்னக் கருவாயினும், அதனை விவாதத்திற்கும் விளக்கத்திற்கு முரிய தாக முன்வைத்தவர் L. C. கிங் ஆவார். அடிப்படையில் W. M டேவிசின் இயல்பான அரிப்பு வட்டத்திற்கு மாற்றாக வும், அதனுடன் கணிசமான அளவு முரண்படுவதாகவுமுள்ள இக்கோட்பாட்டின் சாராம்சம் மேல்வருமாறு:
நிலவுருவவிருத்தியில் அமைப்பைவிடச் செயல்முறைகளே அதிக முக்கியமானவை. பொதுவாக உயர்நிலங்கள் எங்கு ம் எப்பொழுதும் பின்னோக்கிபன்றிக் (Backwearing) கீழ்நோக்கித் (Downwearing) தே ய் ந் து மட்டமாவதில்லை. ஈராற்றிடை நிலச்சாய்வுகள் தமது கோணம் குறையாமல் சமாந்தரமாகப் பின்வாங்குவதனால் முதலில் சரிவுச் சமதளங்களும், பின்னர் பல சரிவு ச் சமதளங்கள் இணைவதனால் தளச்சமநிலமும் உருவாகும். சாய்வுகள் பின்வாங்குவதற்கு வானிலையாலழிதல் பேரோடைகளின் தலைமுகவரிப்பு வழிநீர்க்கழுவல் ஆகியன முக்கியமான காரணங்களாகும். அதேசமயம், மேற்குறிப்பிடப் பட்டவற்றுடன் தகட்டுக் கழுவலும் இணைந்து செயல்படுவத னால் சரிவுச்சமதளங்கள் உருவாகின்றன.
பணிக்கட்டியாறாக்கப்படாத பிரதேசங்களில் தேய்த்தல் மூலம் உருவாகியுள்ள நிலத்தோற்றத்திற் பெரும்பகுதி தளச் சமநிலமாகவே தோன்றுகிறது. இதனால் நிலவுருவவிருத்தியில் எங்கும் எப்பொழுதும் சரிவுச்சமதனமாக்கும் செயல்முறைகளே முதன்மை பெறுகின்றன என . C. கிங் கூறுகிறார்,

புவிவெளியுருவவியலில் புதிய கருத்துக்கள் 385
தளச் சமநிலம் பற்றி L. C. கிங் தெரிவித்த சில கருத்துக் கள் சில புவி வெளியுருவவியலாளர்களின் கண்டனத்துக்குள்ளாகி யிருக்கின்றன இவ்வாறு இக்கோட்பாடு, வானிலையாலழி ST TT S TT TTT TTT S LLLLS LLLLLL LL L S LLLL LL LLLLSS TTTT TTT TS பிரதேசங்களுக்கேயன்றி ஏனைய பிரதேசங்களுக்குப் பொருந் தாதெனச் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். உதாரணமாக M, தோமஸ் என்பவரின் கருத்துப்படி ' சவன்னாப்' பிர தேசங்களிற் காணப்படும் சரிவுச் சமதளத்தைப் போன்ற அமி சங்கள் உண்மையில் குழிவான கழுவற்சாய்வுகளே. (Washstopes) மேலும் சவன்னா நிலத்தோற்றம் சரிவுச் சாய்வுகள் பின்வாங் குதல் முலம் உருவாகுவதில்லை. மாறாக, செதுக்கல், அடித்தளச் சாய்வின் மேற்பரப்புப் படிவுகள் அருவிகளாலும் கழுவற்செயல் முறை களாலும் அகற்றப்படுதல், பாறைகள் வானிலையாலழி தல் போன்ற இன்னோரன்ன செயல்முறைகளின் கூட்டுத்தாக் கத் தினால் அங்கு செதுக்கற் சமநிலமே உருவாகின்றது.
இரண்டாவதாக, சாய்வுகள் பின்வாங்குதல் என்பது மென் பாறைப் பிரதேசங்களுக்கோ (உ-ம் களிப்பாறை) வன்மையான மூடிப்பாறையற்ற பிரதேசங்களுக்கோ பொருந்தாதெனவும் அங்கு நிலம் W. M. டேவிஸ் கருதிய முறையில் மே லிருந்து கீழ்நோக்கியே தேய்வடையுமெனவும் கூறப்படுகிறது. எனவே அமைப்பினால் கட்டுப்படுத்தப்பட்ட மேசைமலை" ' சரிவுப் பாறை' ஆகியவற்றைக்கொண்ட பிரதேசங்களுக்கே இக் கோட்பாடு அதிக பொருத்தமானதெனவும் கூறப்படுகிறது.
ஆயினும் இக்கோட்பாட்டில் நிறைவான சில அமிசங்களும் உள்ளன. அவையாவன: (1) கண்ட நிலப்பரப்பில் ச ரி வு ச் சாய்வுகள் அதிகமாகக் காணப்படுவதை விளக்க இது உதவுகிறது. (2) மேல்மட்டத்திலும் கீழ்மட்டத்திலும் காணப்படும் முதிர்ச்சி யடைந்த நிலப்பரப்புகளைப் பிரிக்கும் இளமையான சரிவுச் சாய்வுகளை விளக்க உதவுகிறது. (3) கண்டங்களிற் காணப் படும் "பல வட்டங்களுக்குரிய" மட்டமாக்கப்பட்ட நிலப் பரப்புகளும் சில அதிமுதிர்நிலப்பரப்புகளிற் காணப்படும் பல் குழிவான (Multi Concave) நிலவுருவங்களும் விளக்கப்படுகின் றன (4) பனிக்கட்டியாறர்க்கப்படாத பிரதேசங்களிற் காணப் படும் நிலத்தோற்றங்களெல்லாம் ஒரே வட்டத்தின் ஆட்சிக்கு அடங்குகின்றன. இதனால் ஈரலிப்பான பிரதேசங்களுக்கொ தனியான ஒரு அரிப்புவட்டம் தேவையற்றதாக்கப்படு1ெ

Page 199
386 புவிவெளியுருவவியல்
அண்மைக்கால ஆய்வுகளின்படி தளச்சமநிலக்கோட்பாட்டின் முதுகெலும்பாயுள்ள சரிவுப்பாறை பின்வாங்கும் செயல் (p. 60 AD. யானது பனிக்கட்டியாறாக்கப்பட்ட பிரதேசங்களைச் சுற்றி புள்ள பகுதிகளில் (Periglacial) உருவாகும் படிச்சாய்வுகளின் விருத்தியிலும் ஈரவலயத்தில் மூடிப்பாறைகளைக் (Duricrusted) கொண்ட பிரதேசங்களின் உருவவியலிலும் கணிசமான பங்கு வகிப்பதாகக் கருதப்படுகிறது.
23 2 (i) தளச்சமநிலவட்டம்
இவ் வட்டம் முன்னர் தளச்சமநிலமாக்கப்பட்ட ஒரு பிர தேசம் மேலுயர்த்தப்பட்டதன் பின்னர் ஒரு புதிய அடித்தள மட்டத்துக்கிசைவாகத் தொடங்கும். இது சிறப்பாக சரிவுச் சாய்வுகள் பின்வாங்குதல், சரிவுச் சமதளமாகுதல் என்னும் இரு செயல் முறைகளையும் அச்சாணிகளாகக் கொண்டிருக்கும்.
இளமைநிலை: இந்நிலையில் அருவிகள் புதிய அடித்தள மட்டத்திற் கிசைவாகக் கீழ்வெட்டவில் ஈ டு படும். இதனால் குத்தான சாய்வுகள் உருவாகும். இதன் பின்னர் கீழ்வெட்டல் முற்றுப்பெறும் நிலையில் தரைத்தோற்றம் உச்சநிலையிலிருக்கும். அந்நிலையில் வானிலையாலழிதல், வழிநீர்க்கழுவல் என்பவற்றி
: *\"ಇನ್ನು 2 * طرలో Ν ༄། v. * /" N جو سمصر
/ As ' 鬱" کھی تھی جسمصیسی۔کیسینزویلا
秒
85 தளச்சமநில விருத்தி நிலைகள்
 

புவிவெளியுருவவியலில் புதிய கருத்துக்கள் 387
னால் சாய்வுகளின் கோணம் குறையும். ஆயினும் மலைஇடுக்கு களையும் ஆற்றுக்குடைவுகளையும் கொண்ட நில ப் பா ம், அதிகம் தேய்வுறாது காணப்படும். பின்னர் அருவிகளின் கீழ் வெட்டல் விகிதம் குறையும் போது பக்கச்சாய்வுகளின் தேய்வு அதிகமாக இடம் பெறுவதனால் அவற்றின் அடிப்பாகத்தில் சிறு சரிவுச் சமதளங்கள் உருவாகும். அதனைத்தொடர்ந்து இளமை நிலையின் பிற்பகுதியில் ஈராற்றிடைநிலத்தின் பெரும் பகுதி தளத்திடைக்குன்றுகள் அல்லது வட்டமான குமிழ் ளாக மாறிவிடலாம்.
முதிர்ச்சி நிலை: இந்நிலையில் சாய்வுகள் பின்வாங்குத லும் பள்ளத்தாக்குகள் அகலமாகுதலும் தொடரும். அதே மியம் பல தளத்திடைக் குன்றுகள் தேய்ந்து கொப்பீஸ்" ஆக மாறுவ தோடு அவற்றின் எண்ணிக்கையும் குறையும். மேலும், இந் நிலையில் ஈராற்றிடை நிலத்தின் இரு பக்கங்களிலும் சரிவுச் சமதளங்கள் உருவாதலினால் அது (நிலம்) அரைக்குழிவான பக்கப் பார்வையுடன் காணப்படும். அன்றியும் அச்சரிவு சம தளங்களின் மேல் விளிம்பில் வெளிப்படையான சாய்வு முறிவு ஒன்றும் தோன்றும். அதேசமயம் அருகிலுள்ள பள்ளத்தாக்குகளின் சரிவுச் சமதளங்கள் ஒன்றுடனொன்று இணையும்போது ஒரு பரந்த சம நிலம் - தளச்சமநிலம் - உருவாகத் தொடங்கும் அச் சமநிலத்தில் முற்றிலும் தேய்வடையாத வன்பாறைகளைக் கொண்ட பல தளத்திடைக் குன்றுகள் தொடக்க நிலப்பரப்பின் தன்மைகளைப் பேணியபடி நிலைத்திருக்கலாம். இவ்வாறு, முதிர்ச்சிநிலைத் தரைத்தோற்றம் மாற்றமின்றியோ சிறிது குறைந்தோ (பதிவாக) காணப்படலாம்.
முதுமைநிலை - இந்நிலையில் தரைத்தோற்றம் பதிவாக வும் எச்சக் கன்றுகள் மிகக் குறைவாகவும் காணப்படும் அதே சமயம் சரிவுச்சமதளங்களே நிலத்தோற்றத்தின் முக்கிய அமிசங் களாயமைவதோடு அவை இணைவதனால் உருவாகின்ற தளச் சமநிலமானது பரந்து பல்குழிவுத் தன்மையுடன் காணப்படும். தெற்கு றொடீசியாவில் அத்தகைய ஒரு நிலப்பரப்புக் காணப் படுவதாக L. C கிங் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தளச்சமநில வட்டம் கரையோரத்திலேயே முதலில் முற்றுப்பெறுமென்றும் பின்னர் ஆற்றுவடிநிலங்களுக்கூடாக அது உள்நாட்டை நோக்கி விரிவடையுமென்றும் அங்கு தளச்சம நிலம் உருவாதற்கு எல்லையற்ற நீண்டகாலம் தேவைப்படலா மெனவும், அவ்வாறு உருவாகும் ஒரு தளச்சமநிலம் புவி யசைவுகளினால் புதிய ஒரு அடித்தளம் உருவாகும்வரை நீடித்
நிலைக்குமெனவும் கிங் கூறியுள்ளார்.

Page 200
388 புவிவெளியுருவவியல்
3. ஆறரித்த சமநிலம்:- இயல்பான அரிப்புக் கருவிகளின் செயல்பாட்டினா தேய்வடைந்து தட்டையான மேற்பரப்புடன் காணப்படும நிலவுருவமே இதுவாகு ஆயினும் இது முற்றிலும் தட்டையானதன்று. ஏனெனில் இதிற் பாயும் ஆறுகள் தமது சுமையைக் கொண்டுசெல்வதற்குத் தேவையான சாய்வு காணப் படுவதனால் நிலம் ஆற்றின் தோற்றுவாய்ப்பகுதி (முதல்) யை நோக்கி மெதுவாக உயர்ந்துசெல்லும் அதேசமயம், அச்சமநிலத் தில் முற்றிலும் தேய்த்தழிக்கப்படாத எ ச் சக் குன்று க ள் (மொனாட்நொக்ஸ்) ஆங்காங்கு காணப்படும்:
ஆறரித்த சமவெளி வானிலையாலழிதல், மழைநீர்க் கழுவல், மண்ணை கர்ச்சி என்னும் செயல்முறைகளினால் ஈராற்றிடை நிலங்கள் கீழ்நோக்கித தேய்க்கப்படுவதன் மூலம் உருவாகும். அது கடல்மட்டத்திற்கிசைவாக உருவாக கப்படுவதனால் கடலை யடுத்த (கழிமுகப்) பகுதிகளிலேயே சமவெளித்தன்மை முதலில் உருவாகும். காலப்போக்கில் அது உள்நோக்கி விரிவடைந்து உள்ந ட்டில் முதிர்ச்சி நிலையிலுள்ள ஒரு நிலப்பரப்புடன் இணைந்துவிடும். மேலும் இத்தகைய ஒரு சமவெளி உருவாதற் குப் புவிச்சரித காலத்தைப் போன்ற (5 முதல் 50 மில்லியன் ஆண்டுகள்) நீண்டகாலம் தேவையெனவும் அக்காலத்தின் நீட்சி (1) மேலுயர்ச்சியின் அளவு (2) காலநிலைத் தன்மைகள் = ( இவை வானிலையாலழிதல், நீரின் அளவு, அரிப்பு வேகம் ஆகியவற்றை நிர்ணயிக்கும் ) (3) அடித்தளப் பாறைகளின் வன்மை என்பவற்றைப் பொறுத்து வேறுபடும்.
முழுமையான அல்லது நிலப்பரப்பில் ஒரு பகுதி மட்டமா யுள்ள ஆறரித்த சமவெளிகள் உலகில் ஆங்காங்கு இனங்காணப் பட்டுள்ளன. இலங்கையின் மத்திய மலைநாட்டிலுள்ள எல்க், மூன் ஹோட்டன் முதலியன ஆறரித்க சமவெளித் தன்மையைக் காட்டுகினறன. M. டேவிஸ், நியூ இங்கிலாந்தின் சில பகுதிகளில் அத்தன்மைகள் நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ளார். அதுபோலவே இங்கிலாந்தில் கென்ற், சசெக்ஸ் மற்றும் தெற்கு மிட்லர்ந்துப் பகுதிகளிலும், அவுஸ்திரேலியாவின் சில பகுதிகளிலும் ஆறரித்த சமவெளிகள் காணப்படுவதாகச் சில ஆய்வாளர்கள் குறிப் பிட்டுள்ளனர்.
டேவிஸ், கிங், பூடெல் ஆகியோரின் கருத்துக்கள் ஒப்பீடு:-
இம்மூவரின் கருத்துக்களும் மூன்று வேறுபட்ட் முறைகளில் மட்டமான நிலப்பரப்புக்கள் உருவாகும் மாதிரிகைகளைக் காட்டுகின்றன. டேவிசின் வட்டம் ஈரலிப்பான இடைவெப்பக் காலநிலைக்குரியது. கிங்கின் வட்டம் வறண்ட பிரதேசங்களுக் குப் பொருத்தமானது, பூடெலின் கோட்பாடு பருவகாலங் களைக் கொண்ட வெப்பக்காலநிலைக்குரியது. இவற்றிடையே யுள்ள வேறுபாடுகள் இவற்றின் இறுதி நிலவுருவங்களின் வயதை நிர்ணயிக்க உதவுகின்றன எனலாம்.

புவிவெளியுருவவியலில் புதிய கருத்துக்கள் 389.
டேவிசின் வட்டத்தில் இறுதி நிலவுருவமான ஆறரித்த சமநிலத்தின் எல்லாப்பகுதிகளும் ஒரே வயதுடையவை ஆனால் தளச்சமநிலத்தில் பின்வாங்கும் சரிவுப்பாறையை நோக்கி அதன் வயது குறைகிறது. அதேசமயம் செதுக்கற் சம நிலத்தில் தொடக் க நில ப் பரப்பி ன் இயல்பு இறுதிவரை பேணப் படுகிறது. ஆனால் அதன் உயரம் மட்டும் குறைந்திருக்கும். மேற்குறிப்பிடப்பட்ட மூன்றுவகையான, சமநிலங்களையும் வேறுபடுத்தி இனங்காணுதல் எளிதன்று. ஏனெனில் அவை தோற்றத்தில் அனேகமாக ஒரேமாதிரியான - தாைத்தோற்ற அம்சங்களற்ற - தட்டையான சமநிலங்களாகும். (Featureles Plains)
மேலும் பல நிலவுருவங்கள் மூன்று மாதிரிகைகளுக்கும் பொருந்தக்கூடிய தரைத்தோற்ற விருத்தியைக் காட்டுவதால் அவை எதற்குரியவை எனக் கூறுதல் கடினமானது. இதற்கு புவியின் காலநிலையில் புடைக்காலத்துக்கூடாக ஏற்பட்ட மாற்றங்களும் ஒரு முக்கியமான காரணமாகும். ஏனெனில் காலநிலை மாற்றங்கள் காரணமாக ஒரு திட்டத்திற்குரிய செயற்பாடுகள் ஒழுங்குமாறியும் இன்னொன்றைப் போலவும் இடம்பெறலாம். உதாரணமாகத் தளச்சமநிலத்தில் சாய்வு பின்வாங்குதலைப்போல் செதுக்கற் சமநிலத்தில் சரிவுப்பாறை கள் பின்வாங்கலாம். அதேபோல் செதுக்கல் நிலப்பரப்புகளின் சாய்வுக்கோணங்கள் டேவிசின் திட்டத்திலுள்ளது போலவே குறையலாம். அன்றியும் ஈரவெப்பக்காலநிலையில் உருவாகிய ஆழமான வானிலையாலழிவுச் சிதைவுகள் இன்றைய வறண்ட பிரதேசங்களிலும் காணப்படுகின்றன. இதற் குக் காலநிலை மாற்றங்களே காரணமாகும்.
எனவே ஒரு ஆய்வாளர், எந்தவோரிடத்திலும் கிடைக்கக் கூடிய சான்றுகளனைத்தையும் கவனமாக ஆராய்ந்த பின்னரே அவ்விடத்தின் நீண்டகால நிலத்தோற்ற விருத்தி பற்றிய வர லாற்றைத் தொகுக்க முடியும்.
リリ  ിo ?-

Page 201
32
缝8
49
57
7ο
9.
32
5.
54.
70
18
86
21 6.
220 233
286
28
3.26
$27
歌多9
2.
盛岛
2
பிழை திருத்தம்
பிழை
பலமா தன்று
கோளத்தை Lumrap sorrás
கட்டுப்படுத்து
திருத்த
霹.1G。ó,/Gä
பலமானதன்று சோளத்தைச்சுற்றி பாறைகளாலாக்கப்
கட்டுப்படுத்தப்பட்டு
காற்றோட்டங்களின் சுற்றோட்டங்களின்
பெருங்கடல்
50 அதிகமான
Clay Humour
பெருங்கண்டம்
asi. LGG) A :
த0 பங்குக்கும் ଅଞ୍ଜି & Librt ଜof
t
Clay Hunius
கோணத்தொடக்கத்தை தொடக்க கோணத்தை
மேலுள்ளதை
பாறைப்பிதிர் தாகபுதி ஐஸ்லாந்திலுள்ள ஒன்டொன்று
ஆழத்தை தடையுச்சி Vevec (f பதடிவு மூலமோ
கீழுள்ளதை பிதிர்வுகள்
புதிதாக அத்திலாந்திலுள்ள ஒன்றோடொன்று நீளத்தை
தட்டையுச்சி
Varves
பிந்திய படிவுத் மூலமோ, பிறவழிகளிலோ

உசாத்துணை நூல்கள்
பொது
I. Principles Physical Geology:- A. Holmes & Mcduff 1992 2. Principles of Earth science: A. N. Strahler 1976 3. Encyclopedia of Earth science- Cambridge U B 1981 Earth science - E. J. Tarbuck & L. K. Lutgon 1980 5. Understanding Earth:- L. G. Gass, Smith 1974 6. Changing Face of Earth:- Abbot, Bradashow 1978 7. General Geology:- E。 Foster 1988 8. Text|'' Book of Geology Santosh Kumar Garg 1990 9. Geology L. E. Long 1974 0. Physical Geology Birch Field, Keller 1982 சிறப்புத் துணை நூல்கள் -சஞ்சிகைகள் அத்தியாயம் - ஞாயிற்றுத் தொகுதியும் புவியும் 1 Earth Frank Press & Sin on Lever 198 til 2. Encyclopaedia Brittanica Article on Earth 1989 3. The Evolution of the Earth Scientific AmericanOct. 1994 4. The Early History of the Earth” . 1993 5. Physical Geology I E. v. Spencer 1980
அத்தியாயம் = 3 புவியின் அமைப்பும், உட்பாகமும்
Home structure 邸 the Earth's Interiori.
Scientific American March 97 2. Dynamic Earth (Special Issue), Sept. 1983 3. The Core-Mantle Boundry , | ο May s 99. 4 T鬣e Evolution of the Continental Crust
VIII || || KOUWONO Scientific American June りゅs

Page 202
* "ತಿಳಿ در این 靛
. அத்தியாயம் 3 தகட்டு விருத்தி الله " . * 1. Piote Tectonics e Piho 976 2. Plate Tectonics Scientific American May 972
3. Geological Structures and Moving Phlaes
R. G. Park 1988 4. Man's Finite Earth - Article on Sea Floor
Spreading by F. Vine 1972 5. Fundamentals of Geomorphology R. J. Rice 1981
அத்தியாயம் 6 கண்டநகர்வு
Continerata Drift S. K. Runcorn 1975 2. The Super Continents Scientific American July 1988
அத்தியாயம் - 7 எரிமலைகள் ... introduction to the structure of the Earth-E.V. Spencer1984
அத்தியாயம் = 9 மண்
. Eneyc'opaedia Brittanica - Article on Soils 98.9 2. Eineycillo paedic Americana - , , s 1980 3. Bio Geography - H. Robinsota 4. World Sois 5.
அத்தியாயம் - 10 சாய்வுகள்
Stopes F. Young 1974. 2, Study of Land Formas R. S. Small 1978 3. Geomorphology A. L. Bloom 978
அத்தியாயம் 13 புவிநடுக்கங்கள்
... The Cause of Deep Earthquakes -
Seiertific American Sept. 1994
அத்தியாயம்-23 புவிவெளியுருவவியலில் புதியகருத்துக்கள்
A. Study of Land Forms R. S. Smait 1978 2, Basic Geology Robinson 1978 3. Morphology of the Earth L. C. King 1975
அச்சிட்டோர் போஸ்கோ / மகாத்மா பதிப்பகம் - யாழ்ப்பாணம்


Page 203
Principles of | GEOMORPHOL
为、 T. THIAG ARAJ.
, പ്പമിuി. 6 . . ഖിന്റെ
அடுத்த வெளியீடு
தற்காலப் புவியியல்: இலங்கை
2. தற்காலப் புவியியல உலகம்
விரைவில் வெளிவரு
אר
v,
ܛܠܠܐ
(২)

(ει 5 μ.μ
(புதிய