கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சமகாலக் கல்வி வளர்ச்சி

Page 1

ԺւI. 6ցքայIԺI

Page 2

சமகாலக் கல்வி வளர்ச்சி
CONTEMPORARY EDUCATIONAL DEVELOPMENT
கலாநிதி சபா. ஜெயராசா
2lass
ஆசிரியத்துவ நோக்கு

Page 3
நூல் : சமகாலக் கல்வி வளர்ச்சி
ஆசிரியர் : கலாநிதி சபா ஜெயராசா
பதிப்பு : மார்கழி 2006
வெளியீடு: அகவிழி
3, டொறிங்டன் அவெனியூ கொழும்பு - 07
அச்சு : டெக்னோ பிரின்ட்
55, ஈ.ஏ.குரே மாவத்தை, கொழும்பு - 06
BOOK AYA I E3
விை
FRS
 

கல்விமுறைமையின்
நிராகரிப்புக்கு
உள்ளான மாணவர்களுக்கு
இந்நூல் சமர்ப்பணம்
— guravatáFfuai -

Page 4
இன்றைய கல்வி .
அதிகம் பேசப்படுவதும் அதிகம் அறியப்படாததுமான கல்விச் சிகரங்களை நோக்கிய கடின வழித் தடங்களில் உதறி விடப்பட்ட வழிகாட்டிகள் கை நிறைந்த சான்றிதழ்களுடன் நிற்கின்றனர்.

பதிப்புரை
இன்று பல்வேறு சமூக மட்டங்களிலும் என்றும் இல்லாத அளவுக்கு கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றன. கல்வியின் செயற்பாடுகள் சமூக அசைவியக்கத் தொழிற்பாட்டில் புதிய சமூகப் பரிமாணங்களை ஏற்படுத்தி வருகின்றன.
உலகில் ஏனைய நாடுகளைப் போலவே இலங்கையிலும் கல்விக்கும் சமூக நகர்வுக்கும் ஆன தொடர்புகள் வெளிப்படையானவை. அனைத்து விதமான சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களின் பின்புலத்திலும் கல்விக்கு ஒரு பிரதான இடமுண்டு. கல்வி சார்ந்த செயற்பாடுகள் மக்களின் அந்தஸ்து வேறுபாட்டிலும் தீர்க்கமான பங்கு வகிக்கின்றது. குறிப்பாக சமூக வகுப்புகளை இனங்காணலில் கல்வி நேரடியாகத் தாக்கம் செலுத்துகிறது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அரச துறையினரால் வழங்கப்பட்ட உயர் தொழில்களுக்கும் கல்வித்தகைமையே முக்கியமாகக் கொள்ளப்பட்டு வந்தது. ஆகவே அந்த மரபு தொடர்ந்து சமூக மட்டத்திலும் சிந்தனைப் பாங்கிலும், நடத்தையிலும் செல்வாக்குச் செலுத்தும் காரணியாகவே மாறியுள்ளது.
இருபத்தோராம் நூற்றாண்டில் காலடி எடுத்து வைத்துள்ள எமக்கு கல்விசார் கொள்கைகளும் நடைமுறைகளும் பன்னாட்டு ரீதியில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் அமைந்து வரவேண்டுமென்று எதிர்பார்க்கின்றோம். வருகின்றன. அதே நேரம் பன்னாடு தழுவிய நுகர்ச்சிப் பண்டமாகவும் கல்வி மாற்றப்பட்டு வருகின்றது. உலக சந்தை வேண்டி நிற்கும் திறன்களையும் ஆற்றல்களையும் வளர்த்தல் எனும் உயரிய நோக்கத்தை கல்விச் செயன் முறை உள்வாங்கிச் செல்ல வேண்டும் இது தவிர்க்க முடியாத நிர்ப்பந்தமாக மாற்றப்பட்டுள்ளது. இங்குதான் சமகாலக் கல்வியின் செல்நெறிகள் எவ்வாறு ஒழுங்குபடுத்தப்படுகிறது என்பதன் பின்னால் உள்ள அரசியல் கவனம் பெறுகிறது.
-5-

Page 5
உலகச் சந்தை அல்லது பன்னாட்டுச் சந்தை என்ற கண்ணோட்டத்திலேயே கல்வி இயக்கப்படும் பாங்கு முதன்மை பெற்றுச் செல்கிறது. இதன் தர்க்க ரீதியாகவே "சமகாலக் கல்வி வளர்ச்சி உள்ளது. அதாவது உலக மயமாக்கல் அல்லது பூகோளமயமாக்கல் என்ற தொடர் சங்கிலியின் இயக்க முறைமைக்கு உட்பட்டு அதன் வேகத்துக்கேற்ப 'கல்வி வளர்ந்து செல்ல வேண்டும் என்னும் எதிர்பார்ப்பு ஒரு சாராரால் திணிக்கப்படுகிறது.
இந்தப் பின்புலத்தில் தான் சமகாலக் கல்வி வளர்ச்சி பற்றிய அறிமுகத்தை கலாநிதி சபா.ஜெயராசா அவர்கள் இச்சிறுநூல் மூலம் அடையாளப்படுத்தகின்றார். சமகாலக் கல்வியின் பின்னால் உள்ள நலன்கள், ஆதிக்க சக்திகள் யாவர் என்பதும் அவற்றை கல்வி வளர்ச்சிப்படிகளினூடு நாம் அறிந்து கொள்ளும் வகையில் விமரிசனச் சிந்தனையுடன் முன்வைக்கின்றார்.
தமிழில் "சமகாலக் கல்வி வளர்ச்சி பற்றிய சிந்தனை, தேடல் விமரிசன மனப்பாங்கு கொண்ட அகல்விரி கல்வியின் தேடலை முன்னிலைப்படுத்துகிறது. இதுவே நமக்கு இன்று வேண்டும். சமூகச் சிந்தனைக்கும் செயற்பாட்டுக்குமான ஒரு கருவியாகவே இந்த சிறு நூலைக் கருத வேண்டும். தொடர்ந்து நாம் பன்முக உரையாடல்களில் ஈடுபட வேண்டும். கல்வியின் இயக்கம் சமூக மாற்றத்தின் உரைகல்லாக அமைய வேண்டும்.
இந்தச் சிறு நூலை வெளியிடுவதற்கு உதவி புரிந்த சபா.ஜெயராசாவுக்கும் மற்றும் ஏனைய நண்பர்களுக்கும் நன்றிகள்.
தெ. மதுசூதனன்
ஆசிரியர் - அகவிழி

சமகாலக் கல்வி வளர்ச்சி
Contemporary Educational Development
உலகின் சமகாலக் கல்வி வளர்ச்சி பலபுதிய பரிமாணங்களையும், புதிய எண்ணக்கருக்களையும் தோற்றுவித்துள்ளது. கோள் நிலைப்பட்ட உணர்வுகள் (Planetary Conscious) என்ற மேலோங்கிய பரந்த தளத்திலே செயற்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய கல்வி நடவடிக்கைகள் உலக சந்தையின் அழுத்தங்களுக்கு ஏற்றவாறு இயங்கத்தொடங்கிவிட்டது. மனிதவளம் உள்ளிட்ட இயற்கை வளங்கள் பராமரிக்க முடியாத சுரண்ட்லுக்கு (Unsustainable Explotation) உள்ளாகும் நிலை கல்வியின் குறிக்கோள்களையும் தொழிற்பாடுகளையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது.
உலகம் தழுவிய நுகர்ச்சிப் பண்டமாகக் கல்வி மாற்றப்பட்டு வருகின்றது. உலக வர்த்தகத்தினதும் உற்பத்திக் கோலங்களதும் வளர்ச்சி நிலைகள் வாழ்வாதார எல்லைகளின் கீழ் வாழ்வோரின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்துள்ள நிலையில் (Mitter, 1986) உற்பத்தி நிறுவனங்கள் மேற்கொள்ளும் சிக்கன நடவடிக்கைகளுக்கு கற்றவர்களும் கல்வி நிறுவனங்களும் இரையாகும் தோற்றப்பாடுகள் மேலெழத் தொடங்கியுள்ளன. நவீன சமூக வளர்ச்சி பற்றி ஆராய்ந்த Guib6|TITé (Latoiche.s 1993) "Gugbé60)63 folpabib" (Grand Society) என்ற எண்ணக்கருவை முன் மொழிந்தார். இதன் விளக்கம் என்னவென்றால், மனித நாகரிக முன்னேற்றத்தின் உயர்ந்த கட்டமாக மேலைத்தேய சந்தை நிலைப்பட்ட மனோபாவங்களை உள்ளடக்கிய சமூகம் குறிப்பிடப்படுகின்றது. இந்தச் சமூகம் புதிதாக வறியவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. வீடற்றவர்களின் எண்ணிக்கையைப் பெருக்கமடையச் செய்கின்றது. எதிர் நிறுவனமாக்கற் செயற்பாடுகளை (De Institutional Activities) அதிகரிக்கச் செய்கின்
- 7

Page 6
றது. கல்வி நிறுவனங்களில் இருந்து வெளிவீசப்படுவோரின் எண்ணிக்கையை உயர்த்திச் செல்கின்றது. தரமான கல்வியைக் கற்றவர்கள் கூட வேலையின்மை மற்றும் கீழ் உழைப்பில் ஈடுபடும் நிலையை ஏற்படுத்திவிடுகின்றது.
உலகச் சந்தை என்ற கண்ணோட்டத்திலே கல்வி இயக்கப்படும் பொழுது கற்றவர்கள் தமது நிலத்திலிருந்தும், தமது பண்பாட்டிலிருந்தும், பிடுங்கி எறியப்படுகிறார்கள். மேலைத்தேய அபிவிருத்திக் கோட்பாடுகள் இச்செயற்பாடுகளுக்கு ஆதரவாகவும், அனுகூலமாகவும் அரண்களாகவும், அமைகின்றன. தமது பண்பாட்டோடு இணக்கமுற்று வாழும் மாணவரை உருவாக்குவதற்குப் பதிலாக தமது பண்பாட்டுச் சுவடுகளை நிராகரிக்கச் செய்யும் உளப்பாங்குகளை நிரப்பக் கல்விச் செயற்பாடுகள் முனைகின்றன. தமது சுய ஆற்றல்கள், சுயவளங்கள் பற்றிய நம்பிக்கை வரட்சியைக் கல்வி வழங்கல் நடவடிக்கைகள் ஏற்படுத்தி விடுகின்றன.
உலக வங்கியின் அறிவுரைகளின்படி உருவாக்கப்பட்டுவரும் கட்டமைப்புச் சீராக்க நடவடிக்கைகள் (Stuctural Adjustments) கல்வி மற்றும் சமூக நலன்புரிச் செயற்பாடுகள் மீது வழங்கப்படும் நிதியைப் படிப்படியாக வெட்டிக் குறைக்கத் தொடங்கியுள்ளன. கல்வியின் விழுமிய உள்ளடக்கம் நடப்புவாழ்வை விட்டு விலகியும், நுகர்ச்சி விழுமியங்களை (consumption Values) வலியுறுத்தியும் உருவாக்கப்படுவதற்குரிய மேலைப்புல நிபுணத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. உடைந்த தற்கோலத்தை (Self Fragmentation) உருவாக்குவதிலே கல்வி ஈடுபாடு கொள்ளுகின்றது. உலகு பற்றிய பார்வையை 6Tg5ii (SibirdsgjL6i (Anti WorldView) Glafu ibuGBg55gldsgjás ab6io65 (p60p தூண்டுதளிக்கின்றது.
உலக சந்தை வேண்டிநிற்கும் திறன்களையும் ஆற்றல்களையும் வளர்த்தல் ஆரம்ப நிலைக்கல்வியில் இருந்து உயர்மட்டங்கள் வரை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் தேசிய மொழிகள் பலமிழந்தவையாகக் காட்டப்படுகின்றன. இயற்கை வளங்களின் அழிவு, கோள வெப்பம் அதிகரித்தல், மனித உரிமைகள் மீறப்படல், வறுமை முதலியவை நவீன முதலாளித்துவ நடவடிக்கைகளால் நிகழ்கின்றன என்பதை வெளிக்காட்டாது, தவறான கல்வி முறைமையின் விளைவுகளே என்றவாறு போலித் திரையிட்டுக்காட்டும் கல்வி நடவடிக்கைகளும் கருத்தரங்குகளும் உருவாக்கப்பட்டு
-8-

வருகின்றன. கல்வி ஒருசிறு உயர்ந்த குழாத்தினருக்கு நன்மைபயக்க, பெரும்பாலானோர் பரிதவிப்பு நிலையில் விடப்படுகின்றனர் (Manson, M 1997). தொழில் பெற்றோருக்கும் பெறாதோருக்குமிடையேயுள்ள விகித இடைவெளி மேலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
உளவியல் அழுத்தங்கள் :
கல்விச் செயல் முறை மற்றும் தொழில் வாழ்க்கை முதலியவை தொடர்பான நிராகரிப்பு (Denia) என்ற எண்ணக்கரு மனித உள்ளங்களிலே வளரத் தொடங்கியுள்ளது. கைவிடப்பட்ட நிலையிலே தூண்டப்படும் மனஉணர்வுகள் விகாரமான மனப்பெருக்கத்துக்கு இட்டுச் செல்கின்றது. ஆதரவற்ற நிலையில் இருப்போரை வர்க்க நிலையில் ஒன்று திரட்டுவதற்குரிய வலிதான நிறுவன அமைப்புகள் உருவாகாதிருத்தல் மேலும் அவலங்களை ஏற்படுத்திவிடுகின்றது. இலங்கையில் பட்டதாரிகளுக்கு வேலைவழங்கிய திட்டம் நிராகரிப்பை நீக்கும் தற்காலிக நடவடிக்கையாக இருந்தாலும், கல்வியையும் பொருளாதாரச் செயல்முறையையும் கருத்திற் கொள்ளாத, நிலையில் கீழ் உழைப்புச் செயல்முறை, ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது.
நிராகரிப்பின் முக்கியமான ஓர் உளக்கோலம் பரிதவிப்பு (Despair) நிலையாகும். மக்கே (Macy, 1991) இவ்வாறான தோற்றப்பாட்டை விளக்கும் பொழுது, இது சமகால வரலாற்றின் வெளிப்பாடு என சுட்டிக் காட்டியுள்ளார். அதாவது பல்வேறு சமூக, பொருளாதார, பண்பாட்டுக் காரணிகளுடன் இந்த உளநிலை தொடர்புபட்டு நிற்றலைச் சுட்டிக்காட்டுதலே பொருத்தமான தரிசனமாகின்றது. தனித்துக் கல்வி நிலையங்களுடன் மட்டும் இணைந்த தொழிற்பாடாக இதனைக் கொள்ள முடியாது.
தரமேம்பாடு, பன்முகக்கல்வி அனுபவங்கள், தொழில்களோடு இணையவைக்கும் கல்வி என்பவை வலியுறுத்தப்பட்டு வரும்வேளை, கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நிதியை வெட்டிக்குறைக்கும் நடவடிக்கைகள் நிராகரிப்பு உணர்வையும் பரிதவிப்பு நிலையையும் கல்வி நிறுவனங்களை நடத்துபவர்களுக்கு ஏற்படுத்தி விடுகின்றன. கல்வி நிறுவனங்கள் தனியார் கம்பனிகளின் வலியுறுத்தல்களுக்கு ஏற்றவாறு இயக்கப்பட வேண்டிய அவலநிலையும் உருவாக்கப்படுகின்றது. கல்வி நிறுவனங்கள் உற்பத்தி நிறுவனங்களிலும்

Page 7
தாழ்ந்தவை என்ற தாழ்வுச் சிக் கலையும் இந்நிலை ஏற்படுத்தி விடுகின்றது.
இச்சந்தர்ப்பத்தில் நவீன கல்வியியல் எடுத்தாளப்படும் ஓர் எண்ணக்கருவாக நடையறிவு (Sagacity) அமைதல் குறிப்பிடத்தக்கது. புத்திக் கூர்மை மற்றும் நுண்மதி ஆற்றல்களோடு நடைமுறைத் தந்திரோபாயங்களையும் நாகரிகமான ஏமாற்று முறைகளையும் கலந்து செயற்படுத்துதலை நடையறிவு' என்ற எண்ணக்கரு புலப்படுத்தும். கல்வி நிறுவனங்களும், பெற்றோரும், தளமற்ற ஆய்வறி. வாளரும், நடையறிவு நுட்பங்களைப் பயன்படுத்துவோராய் மாறுகின்றனர்.
தனியார் நிறுவனங்களின் கனவுகளுக்கு ஏற்றவாறு கல்வி நிறுவனங்கள் இயக்கப்படல் வேண்டும் என்ற வலியுறுத்தல் மேலோங்கி எழத் தொடங்கியுள்ளது. சுரண்டலும் நுகர்ச்சித்துண்டலும் தனியார் நிறுவனக் கனவுகளின் உள்ளடக்கங்களாகின்றன. மாறுபடும் வர்த்தக சகல ஒட்டங்களுக்கு சவுக்கடிவாங்கும் மனிதனாக' கல்வி DIT fiompúb (O) libgp6iT6Igf5 (Quarter And Matthews 1987,) gibsé76oo6uou 6io கல்வி மீண்டும் அடிப்படைகளை நோக்கிச் செல்லல் வேண்டும் (O.S.Ullivan, (1980)"Back to the Basis") 6T6ip abcb5600g) 62.65uplgigstb குரல்களும் எழத் தொடங்கியுள்ளன.
பொருளாதார விளைவுகளும் கல்வியும் :
கைத்தொழில் நிறுவனங்களின் கைப்பொம்மைகளாக இயங்கும் விளம்பரங்கள் "மனித உணர்வுகளுக்கும் தலைமை தாங்குவோர்" (Captains of Consciousness) என்ற வகிபாகத்துக்கு உயர்த்தப்பட்டுள்ளன. நிஜங்களை மூடுதல் இவற்றின் தலையாய தொழிற்பாடுகளுள் ஒன்றாக அமைகின்றது. கல்வி நிறுவனங்களும் விளம்பரங்களில் தங்கியிருக்க வேண்டிய (முன்புகாணப்படாத) நிலை இன்று தோன்றியுள்ளது.
இன்றைய கைத்தொழில் ஒழுங்கமைப்பும் அதன் வளர்ச்சியும் கல்வியிலே சமனற்ற வாய்ப்புகளை மட்டுமன்றி, பொருள்கள் மற்றும் சேவைகளின் நுகர்ச்சியிலும் சமனற்ற வாய்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. (Apple, 1979) மூலவளங்களின் நுகர்ச்சியைத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் நிறுவனங்கள் முடிவுப் பொருள்களின்
- 10

விற்பனையும் தமக்குச் சாதகமாக்கிக் கொள்கின்றன. இந்தநிலையை மீண்டும் மீண்டும் பிறப்பிப்பதற்கு ஏற்றவகையிலே கல்விச் செயற்பாடுகள் வடிவமைக்கப்படுகின்றன.
கோள்நிலைப் பட்ட போட்டிச் சந்தைக்கு (Global competetive Maket) வலுவூட்டும் வண்ணம் தகவல் தொழில் நுட்ப ஒழுங்கமைப்பும் மரபு அணுப் பொறியியலும் (Genetic Engineering) வடிவமக்கப்பட்டு வருகின்றன.
நவீன நுகர்ச்சியைப் பொருளாதாரக் கோலங்களுடன் அனுசரித்துச் செல்லும் வகையிலே பின்வரும் எண்ணக்கருக்கள் முன்வைக்கப்பட்டன:
(1) பொருளாதாரம் தொடர்பான சுதந்திரமானதும் கட்டற்றதுமான
Ggbirgil ITGB356i (Free Enterprise)
(2) அரசியல் தொடர்பான தாராண்மை சனநாயகம் (Liberal De
mocracy)
(3) பண்பாடு தொடர்பான சுதந்திர சிந்தனை (Free Thought)
(4) கல்வி தொடர்பான கோளமயச் சந்தை இடம் (Global Market
place) −
மேற்கூறிய அனைத்து எண்ணக்கருக்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டு இயக்கங்கொள்வதுடன் தனிமனித விடுதலைக்கு இட்டுச் செல்லும் என்ற மாயைத் தோற்ற ஆக்கங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. விநோத உலகம் (Wonder World) என்பது நடைமுறையில் இழப்பு உலகமாக (Waste World) மாறும் நிலை தோன்றுகின்றது.
கல்வியில் பேசப்படும் பன்முகவியல் (Pluralism) என்பது பல அறிவுத்துறைகளையும், பல அனுபவங்களையும் தொகுத்து வழங்குதல் வாயிலாக எழும் முக்கியத்துவத்தை காலங்காலமாக வலியுறுத்தி வந்துள்ளது. இது ஒருமை இயலுக்கு மாறுபட்டது. பன்மை நோக்குநிலை அறிவுப் பெருக்கத்துக்கு ஆதாரமாகக் கருதப்பட்டது. நிறைவான ஆளுமை வளர்ச்சிக்கு பன்மைநோக்கு அடிப்படையானதாக வலியுறுத்தப்பட்டது. ஆனால் சமகால பொருளாதார வளர்ச்சியும், உலக சந்தையின் எழுச்சியும் பன்முகவியல் என்ற நோக்கை பன்முக மறுதலிப்பு' (Pluriverse) என்ற நிலைக்கு மாற்றிவிட்டது. தனித்தனியாக இயக்கமுறும் நிலையை இந்த எண்ணக்கரு புலப்படுத்துகின்றது.
- 11 -

Page 8
ஒரே முகமான வார்ப்புச் சிந்தனைகளை நோக்கி பெற்றோரும் மாணவரும் நகர்ந்து செல்லுமாறு கற்பிதங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
அறிகை விஞ்ஞானம்
பியாசேக்கு பின்னர் கல்வி உளவியலில் நிகழ்ந்த ஆய்வுகளின் வழியாக "அறிகை விஞ்ஞானம்" (Cognitive Science) என்ற எண்ணக்கரு ஆக்கம் பெற்றது. அறிகை விருத்தி உளவியலையும் கணினித் Ogb(T(5g556.f6 95 IT616060760)u Jujib (Computer systems simulation) ஒன்றிணைத்து அறிகை விஞ்ஞானம் வளர்க்கப்பட்டு வருகின்றது. அறிகை விஞ்ஞானத்தை சமூக நடுவன் (Sociocentric) நிலையிலிருந்து மாற்றி தொழில்நுட்ப நடுவன் (Technocentric) நிலையை நோக்கி நகரவைப்பதற்கான நடவடிக்கைகளைச் சமகால சந்தைப் பொருளாதாரச் செயற்பாடுகள் மேற்கொண்டு வருகின்றன. அதாவது சமூக நோக்கைக் கைவிட்டு இலாபமீட்டும் தொழில்நுட்ப நடவடிக்கைகளை நோக்கி அறிவைத் திசைதிருப்பும் செயற்பாடுகளைக் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கின்றன. வகுப்பறையைச் சூழ்ந்துள்ள பரந்த உலகு பற்றிய கண்ணோட்டத்தை தொழில்நுட்ப நடுவன் போக்கு நிலைகுலைத்து விடுதல் கல்வியியலாளரின் கவனத்தை ஈர்த்துள்ளமை சுட்டிக்காட்டப்படத்தக்கது (Bowers, 1993 86-7) உலகச் சந்தைக்குரிய கல்விச் செயல்முறைகளின் அழுத்தங்களில் இருந்து விடுபடவைப்பதற்கு மீண்டும் மரபு வழித்தராண்மைக் கல்வியை அறிமுகப்படுத்தல் வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகின்றது. அந்த அமைப்பிலும் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. பாரம்பரியக் கல்வி முறையின் பண்புகளைப் பின்வருமாறு தொகுத்துக்கூறலாம் (Wynne 1987: 130–2)
(1) பாரம்பரியமான சமூக ஏறுநிரலமைப்பை ஏற்று அதற்கு ஏற்றவாறு
ஒழுகுதல்.
(2) சிறார்மீதும் கட்டிளைஞர் மீதும் வளர்ந்தோர் அதீத கட்டுப்
பாடுகளை ஏற்படுத்துதல்.
(3) உடனடியான நல்ல நடத்தைகளுக்கு முன்னுரிமை வழங்கல்.
(4) கூட்டுக்குடும்பம் மற்றும் கூட்டுச் செயற்பாடுகள் ஆகியவற்றை
வலியுறுத்துதல்.
- 12

(5) பழைய கருத்துக்களுக்கும் அறிவுக்கும் மதிப்பளித்தல்.
(6) நாளாந்த வாழ்க்கைச் செயற்பாடுகளைக் காட்டிலும் சமய நம்பிக்கைகளுடன் கூடிய புனிதமான செயற்பாடுகளுக்கு மதிப்பளித்தல்.
(7) அனைத்து மக்களையும் இறைவனின் குழந்தைகளாகக் கருதி
சமத்துவ மதிப்பளித்தல்.
பாரம்பரியமான கல்விச் செயற்பாடுகளிலே பல அனுகூலங்கள் இருந்தாலும் நவீன அறைகூவல்களுக்கு அவற்றால் ஈடுகொடுக்க முடியாதுள்ளன. விண்வெளி ஆய்வுகள் உலகு பற்றிய தரிசனத்திலும் அறிகையிலும் மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன. இந்தப்புதிய அறிகைக் கோலத்தை ஜேம்ஸ் லவ்லொக் (Jemes Lovelock, 1988) 'a5'ut ab([bgb(3a5ft6it' (Gaia Hypothesis) 6T6ip எண்ணக்கருவால் விளக்கினார். நிலமும், நீரும், வளியும் மனித வாழ்வுக்குரிய சூழலையும் கடந்த ஒரு புதிய தொனிப் பொருளை உண்டாக்குவதை மேற்கூறிய எண்ணக்கருவால் அவர் விளக்கினார். உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் நோக்கும் தரிசனத்தை அவர் முன்வைத்தார். அதனுடாக மனித தரிசனத்தில் புதிய அணுகுமுறைகளின் வலுட்டல்களையும் அவர் விளக்கினார்.
உலக செயற்பாடுகள் அனைத்தும் ஒன்றுடன் மற்றையது சார்ந்தும், இடையுறவு கொண்டும், இடைத்தாக்கம் கொண்டும் இயங்கிய வண்ணமுள்ளன. இந்நிலையில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்வோரின் எண்ணிக்கை அதிகரித்தல், எழுத்தறிவற்றவர்கள் மற்றும் கல்வி முறைமையிலிருந்து வெளிவீசப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தல் முதலியவற்றை உலகின் சமகாலப் பொருளாதார வளர்ச்சிப் போக்கிலிருந்தும், சமகால உலக சந்தை நிலவரங்களிலிருந்தும் வேறுபடுத்தி நோக்க முடியாது. மேலைத்தேய அறிகை முறைமையில் உருவாக்கப்பட்டுள்ள 'விருத்தி அல்லது "மேம்பாடு என்பது நவீன சந்தை முறைமைக்குச் சார்பான உற்பத்தி, நுகர்ச்சி என்ற தளங்களில் மீளாக்கப்பட்டுள்ளது. சுரண்டலின் உள்ளார்ந்த இயல்பை இந்த எண்ணக்கரு விஞ்ஞான பூர்வமாகப் புலப்படுத்தவில்லை. இந்த எண்ணக்கருவை மறுதலித்து வேறு மேம்பாடு ' (Another Development) என்ற எண்ணக்கருவும் உருவாக்கப்பட்டது. (Ekins,P -1992) இது பாரம்பரியமாகக் குறிப்பிடப்பட்ட மேம்பாடு' என்ற
- 13

Page 9
எண்ணக்கருவிலிருந்து விலகி ஐந்து மாற்றுப்பண்புகளை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது.
(1) மனிதரது அடிப்படையான தேவைகளை நிறைவேற்றித்தருதல்.
(2) மேலைத்தேய வற்கடச் சிந்தனைகளில் இருந்துவிடுபட்டு குறித்த மக்களது அறிவு, அனுபவம், பண்பாடு முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு மேம்பாட்டைக் கட்டியெழுப்பல்.
(3) உள்ளுர் வளங்களையும் ஆற்றல்களையும் உரிய முறையிலே பயன்படுத்தி தன்னிறைவை மனிதர்களிடத்தும் பிரதேசங்களிடத்தும் ஏற்படுத்துதல்.
(4) சூழலையும், சூழல்வளங்களையும் ஊறுபடவைக்காத நிலை
யைத் தக்க வைத்தல்.
(5) உள்ளுர் அதிகாரத் தொடர்புகள், உலக வங்கி முதலாம் தொடர்புக் கட்டமைப்புகளில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தும் உபாயங்களைக் கையாளுதல்.
சமகாலப் பொருளாதார முறைமையும் உலக சந்தையும் மரபு அணுப்பொறியியல் அறிவின் மீதும் உயிர்நுட்பவியல் (Bio Technology) அறிவின் மீதும் தாக்கங்களையும் அழுத்தங்களையும் பிரயோகிக்கத் தொடங்கியுள்ளன. தீவிர இலாப நோக்கம் கருதி உயிரியல் பன்மைநிலை (Bio Diversity) செயற்கையாகக் கட்டுப்படுத்தப்பட்டு பயிர் விதைகளில் ஓரினப்பாங்கு (Seed Monoculture) உருவாக்கப்பட்டு வருகின்றது. பல் தேசிய நிறுவனங்கள் குறிப்பிட்ட பயிர்விதை உற்பத்திகளை தமக்குரிய தனியுரிமையாக்கி வருகின்றன. (Sullivan, 1999: 144)
பலகோடி ஆண்டுகளாக நிகழ்ந்து வந்த மனிதரின் பரிணாம வளர்ச்சியோடும், பிற உயிர்களோடு ஒப்பிடும் பொழுது மேம்பாடு கொண்ட மனித நிலையோடும் மரபு அணுப் பொறியியல் தலையிடும் பொழுது மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டுமேயன்றி குறுகிய இலாபநோக்கை முதன்மையாக்குதல் தகாது என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. அறிவு என்பது உற்பத்தி இலாபம் நோக்கிய பண்டமாக மாற்றப்படுகின்றது. ஆனால் ஆய்வறிவாளர்கள் அறிவுக்கும் கருத்தியலுக்கும் (Ideology) உள்ள தொடர்புகளை அணுகத் தவறிவிடுகின்றனர்.
- 4 -

அறிவுச் சுரண்டல் :
புதிய உற்பத்திக் கோலங்களின் வெளிப்பாடுகளுள் ஒன்றாக "எலத்திரனியல் காலனித்துவம்" (Electronic Colonialism) விளங்குகின்றது. (Chomsky,N.1997) சமகாலக் கல்வியியல் புலத்தில் ஆட்சி செலுத்தும் எலத்திரனியல் தொடர்பாடற் சாதனங்கள் பொருளாதார சுரண்டலுடன் தீவிர அறிவுச் சுரண்டலையும் மேற்கொள்ளுகின்றன. நவீன உலகச் சந்தையின் கரங்களாகத் தொழிற்படும் தொலைக்காட்சி நிலையங்கள் எவ்வாறு சிந்திக்க வேண்டும், எவ்வாறு தீர்மானங்களை மேற்கொள்ளல் வேண்டும் என்பவை தொடர்பான கருத்தேற்றங்களை "சுதந்திர ஊடகம்' என்ற மகுடத்தில் மேற்கொள்ளுகின்றன. பொதுசன அபிப்பிராயத்தை முகாமை செய்யும் மேலாளராகவும் அவை தொழிற்படுகின்றன. இந்த நிலை புதிய தகவல் 62(pálä560)upüL (New Information Oder) 6T6öso G),25ffLTITDIÖ 960)upäbகப்படும். எலத்திரனியல் தொடர்பு சாதனங்களை விமர்சித்தல் சுதந்திர ஊடகத்தை விமர்சித்தல் என்ற மாயைத் தோற்றமும் உருவாக்கப்பட்டுள்ளமை ஓர் அபத்தமான நிலையாகும்.
உலக சந்தை நிலவரங்களின் வளர்ச்சி கல்வியிலே தீவிர போட்டி நிலைகளை உருவாக்கி வருகின்றது. போட்டி என்ற எண்ணக்கரு முதலாளித்துவத்தின் பலம்மிக்க ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் முதலாளித்துவ வளர்ச்சியை நியாயப்படுத்திய சிந்தனையாளர் அடம் சிமித் அனைத்து வர்த்தகத்தையும், கொடுக் கல் வாங்கல்களையும் "போட்டி" என்பது ஒழுங்கமைக்கவல்லது என வலியுறுத்தினார்.
ஆழ்ந்து நோக்கும் பொழுது தனிச் சொத்துரிமையை வலியுறுத்தவல்ல உன்னத சாதனமாக போட்டி செயற்பட்டு வருகின்றது. போட்டியின் இயல்புகள் சமூக இழிவுகளோடு இழுபட்டுச் செல்வதை "அழகுராணிப் போட்டி", "அழகுக் குழந்தைப் போட்டி", "சமய அறிவுப் போட்டி," முதலாம் செயற்பாடுகள் நன்கு வெளிப்படுத்தும்.
மனித அறிவு வளர்ச்சியிலும், சமூக மேம்பாட்டிலும் போட்டியைக் காட்டிலும் கூட்டுறவே பலம் மிக்க விசையாக இருந்து வருதல் ஆய்வுகளின் வழியாக வெளிப்படுத்தப்படுதல் குறிப்பிடத்தக்கது. (Margulis, L: 1987) ஆனால் போட்டி தொடர்பான நடவடிக்கைகளிலே பல்தேசிய நிறுவனங்கள் மேலும் ஒருபடி முன்னேறி சம்மதிப்பதற்கான போட்டிகளையும் உருவாக்கி வருகின்றன.
- 15

Page 10
உலக வர்த்தகத்தின் வளர்ச்சி "பண்டப்பண்பாடு" (Commodity Culture) என்ற சமூகக் கோலத்தையும் உருவாக்கியுள்ளது. நுகர்ச்சிப் பண்டங்களை அடிப்படையாகக் கொண்ட பண்பாட்டின் வளர்ச்சியை உளவியல் நோக்கில் ஆராய்ந்தவர்களுள் பிலிப்கஸ்மன் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர் (Philip Cushman, 1990) இரண்டாம் உலகப்போருக்குப்பிற்பட்ட உலக வளர்ச்சிப் போக்குகள் சிறப்பாக அமெரிக்க நிலவரங்கள் மனிதரிடத்தே வெற்றிடமாக்கிய சுயவடிவத்தை (Empty Self) ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கூட்டுணர்வையும் ஒன்றிணைந்த கருத்தாக்கத்தையும் இந்த உளவியல் தோற்றப்பாடு அழித்து வருகின்றது. மன அமைதிக் குழப்பத்தையும், மனவெழுச்சிப் பசியையும், அது ஏற்படுத்தியுள்ளது. உற்பத்தி முறைமையால் விடுக்கப்படும் அறிவுவலு ஆளுமையில் அழுத்தங்கொடுத்தலை இந்தத் தோற்றப்பாடு விளக்கி நிற்கின்றது.
பொருள்கள், அனுபவங்கள், காதற் சகபாடிகள் முதலியவற்றை நுகர்ச்சிசெய்வதால் வெற்றிடமாகிய சுயவடிவம் ஆறுதல் பெற முயற்சிக்கின்றது. அதாவது பொருட்களை நுகர்தல் மன அமைதியைக் கொடுக்கும் செயற்பாடாக மாற்றப்பட்டு வரும் அறிகைக்கு அழுத்தங் கொடுக்கப்படுகின்றது.
"கோளப்பண்பாடு" என்பது "வெகுசனப் பண்பாடு' என்ற எண்ணக்கருவாலும் அழைக்கப்படும். இந்தப்பண்பாடு நுகர்ச்சியாளரை முதன்மைப்படுத்தி சுரண்டலை மேற்கொள்ளுகின்றது. அமெரிக்காவின் மத்திய தரவகுப்பினர் வெகுசனப் பண்பாட்டினாலும், நுகர்ச்சிக் கோலங்களினாலும் அனுபவிக்கும் அவலங்களை ஆய்வாளர் சுட்டிக்காட்டியுள்ளனர். (Sullivan, 1999 122)
வேலைக்களைப்புடன் வீட்டுக்குவரும் மத்தியதரத்தினர் தொலைக் காட்சியின் கருத்தேற்றங்களுக்கு (Indoctrination) உள்ளாகின்றனர். சக மனிதர்களின் தொடர்புகளை இழந்த நிலையில் தொலைக்காட்சியைப்பார்க்கும் பொழுது மனித உருவாக்கம் பற்றிய தொலைக் காட்சிப்படிமங்களே மனத்தில் ஊடுருவி நிற்பதுடன் அன்னியமாதலை மேலும் தீவிரப்படுத்தி விடுகின்றது.
சமூகப்பங்குபற்றல், அரசியல் பங்குபற்றல் முதலிய செயற்பாடுகளையும் தொலைக்காட்சிச் செயல்முறை பாதிப்படையச் செய்துவிடுகின்றது. தொடர்ச்சியான தொலைக்காட்சிச் செயல்முறையானது
- 16

தன்னிலை இனங்காணலையும் பாதிப்படையச் செய்து விடுகின்றது. அரசியல் சமூக நிலைகளில் பிரசை என்ற எண்ணக்கரு இழக்கப்பட்டு நுகர்ச்சியாளர்' என்ற அமைவு மேலோங்கிவருகின்றது.
நவீன ஆய்வுகளின் வழியாக மேலெழும் பிரதான எண்ணக் கருக்களாக ஆளுவோர் பண்பாடு (Dominator Culture) ஆளுவோர் சமூகம், ஆளுவோர் செயற்றொகுதி முதலியவை அமைகின்றன. (Eisler, 1988) அரசியல் நிறுவனங்கள் முதலியவற்றுடன் ஆள்வோர் அழுத்தங்கள் இணைந்து தொழிற்படுகின்றன. ஆள்வோர் ஆட்சி அதிகாரத்துக்குள் விஞ்ஞான அறிவு இயக்கப்படுகின்றது. இயற்கை. இராணுவவலு, பொருளாதாரம், போட்டிகளை உருவாக்குதல், முதலிய அனைத்தும் அதிகாரம் செலுத்தும் ஆளுவோரின் பிடிக்குள் வந்துள்ளன. ஆய்வறிவாளர்கள் தமது இருப்பைத் தீர்மானிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஆட்சி அதிகார பலம் நவீனமாக்கப்பட்ட வறுமையை (Modernised POVerty) கல்வியில் ஏற்படுத்தியுள்ளது. இந்த வறுமை ஆய்வாளர்களை குறுகிய சுய இலாபங்களை நோக்கிச் செயற்படவைக்கின்றது. தம்மைச் சூழ்ந்துள்ள அநீதிகளைச் சுட்டிக் காட்டுவதற்கு அஞ்சிநிற்றல் நவீனமாக்கப்பட்ட கல்வி வறுமையாகும்.
சர்வதேச அழுத்தங்களுக்குச் சமாந்தரமாக மூன்றாம் உலக நாடுகளின் அரசுகள் தேசிய இனங்களின் கல்வியில் அழுத்தங்களைப் பிரயோகித்தலும் சமகாலக் காட்சிகளாகவுள்ளன.
மனித முகிழ்ப்பு :
புதிய பொருளாதாரக் கோலங்கள் தொழில்நுட்பவளர்ச்சி முதலியவை பாரம்பரியமான தொழில் முறை நோக்கிய கல்வியைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. பாரம்பரியமான கல்வியானது செயலர்கள், நிர்வாகிகள், எழுதுவினைஞர்கள், வங்கி உத்தியோகத்தர்கள், முகாமையாளர்கள், தொலைபேசி இயக்குநர்கள் முதலியவர்களை உருவாக்குவதற்கென கூர்மைப்பட்டிருந்தது. மேலும், பொறியியலாளர்கள், கணக்காளர்கள், வைத்தியர்கள் என்றவாறு வாண்மையினரையும் உருவாக்கும் வகையிலும் கட்டமைப்புச் செய்யப்பட்டிருந்தது.
- 17

Page 11
பாரம்பரியமான கல்வித் தொழிற்பாடுகளை நவீனத்துவத்தை நோக்கி மாற்றியமைக்க வேண்டியுள்ளது. நவீனத்துவம் என்பது கணினி அறிவுடன் மட்டும் தொடர்புடையது அன்று. புதிய கணினி அறிவை மட்டும் பெற்றுவிடுவதால் அறிவாக்கம் முழுமையடையமாட்டாது. நவீன உற்பத்தி முறைமையின் அழுத்தங்களையும் சுரண்டற் கோலங்களையும் தெளிவாகப் புலக்காட்சி கொள்வதற்குரிய உள்ளடக்கங்கள் கலைத்திட்டத்திலே கட்டமைப்புச் செய்யப்படவேண்டியுள்ளன.
மிகுந்த சிக்கலாகிவரும் சமூக சுரண்டல் முறைமை மனித உணர்வுகளை அன்னியமாக்கிவருதல் தொடர்பாடலிலும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிணைந்த கூட்டுணர்வின் இனிமை இழக்கப்படுகின்றது. நவீன ஆய்வாளர்கள் அந்நியமாதல் (Alienation) என்ற பாரம்பரிய எண்ணக்கருவுக்குப் பதிலாக "அகநிலைத் தனிமை" (Damnation) என்ற எண்ணக்கருவினையும் பயன்படுத்துகின்றார்கள்.
சமகாலச் சூழலில் மனித அகவய உணர்வுகள் கீழ்நோக்கப்படுகின்ற அவலநிலை தோன்றுகின்றது. அகநிலைத்தனிமை சுயநிலைச் சுட்டலுடன் இணைந்தது. அந்நியமாதல் சுயமேலோங்கலுடன் (Autism) இணைந்தது. நவீன மனித இயல்புகள் சுயநிலைச்சுட்டல், சுயமேலோங்கல் என்ற இரண்டு நிலைகளிலும் பாதிப்புக்கு உட்பட்டுள். ளன. மனிதர் தனிமைப்படுவதிலிருந்து மீண்டெழுவதற்குரிய புலக்காட்சியை வலிதாக்கும் அறிவுக்கையளிப்பை முன்னெடுத்தலும், நுகரப்படும் அறிவு நடைமுறை அறிவாக மாறுவதற்குரிய செயல்நிலை வடிவங்களையும், ஒன்றுபடும் கூட்டுணர்வை வலுப்படுத்தும் பண்பாட்டு வேர்களையும் மீளவலியுறுத்த வேண்டியுள்ளது.
கோட்பாட்டு நிலையில் கல்வி மேம்பாடுபற்றி நோக்கும் பொழுது "கோடற்கட்டமைப்புகள்" (Dissipative Structures) கோட்பாடு முதற்கண் (páib (3ślulugögbJ6Juib (O) upė#56öADg5. (Prigogine and Stengers, 1984) அனைத்து இயங்கும் பொருள்களும் தொடர்ச்சியாக வலுவை உள்வாங்கி தமது கட்டமைப்பை நிலை நிறுத்திக் கொள்கின்றன. கோடற்கட்டமைப்புக்கள் சிதறி உதிரும் கட்டமைப்புக்களாகவுமுள்ளன. அவை தளம்பலுறும் பண்பைக் கொண்டுள்ளன. தளம் பலுறும் நிலையும் உதிரும் நிலையும் மேலும் மேம்பாட்டுக்கு இட்டுச் செல்லும். பெருங்கட்டமைப்பினுள் பொருத்தமான சிறு கட்டமைப்புக்களும்
- 18

உட்பொதிந்து காணப்படும். சிறுசிறு கட்டமைப்பு இயக்கப்படும் பொழுது அதற்குக் கூடுதலான வலு வேண்டப்படும்.
எந்த ஒரு கட்டமைப்பும் சமநிலையில் இயங்கும் அல்லது சமநிலை பிறழ்ந்த நிலையில் இயங்கும் பெரும் கட்டமைப்பின் உள்ளமைந்த சிறுகட்டமைப்புக்கள் சமநிலைப்பிறழ்வைத் தாங்க முடியாத நிலை ஏற்படும் பொழுது, புதிய சவால்களைத் தாங்கக் கூடியவாறு அனைத்துக் கட்டமைப்புக்களும் தம்மை நிலை மாற்றம் செய்து, புதிய தொடர்புகளை ஏற்படுத்தி மேலும் மேம்பாடான நிலைக்கு உயர்ந்து செல்லும். இப்பொழுது முன்னரிலும் கூடுதலான வலுவை அது வேண்டி நிற்கும். கல்வியில் புதிய அபிவிருத்திகளை மேற்கொள்ளும் பொழுது இந்தக் கோட்பாடு பயனுள்ள புலக்காட்சியை ஏற்படுத்தவல்லது.
மாறும் சவால்களுக்கு ஏற்றவாறு ஒவ்வொருவரும் தொடர்ச்சியாக தம்மை மீள் ஒழுங்குபடுத்துமாறு கல்வியை ஒருங்கிணைத்து வழங்க வேண்டியுள்ளது. இந்த மீள் ஒழுங்குபடுத்தல் முன்னைய நிலையிலும் மேம்பாடு கொண்டதாக இருத்தல் வேண்டும். ஆக்க மலர்ச்சியுடன் மேற்கொள்ளப்படும் மீள் ஒழுங்குபடுத்தல் சமூக நிறுவனங்களை ஆக்கபூர்வமாக மீள் ஒழுங்குபடுத்துவதுடன் ஒரேநேரத்தில் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
உயிரியலில் உயிர்ப் பொருள்கள் தம்மை ஒழுங்குபடுத்திக் கொள்ளல் 'தன்னாட்சிமை' (Autopoiesis) என்பர். உயிரியலிற் காணப்படும் இந்தச் செயற்பாட்டை சமூகமேம்பாட்டியலுக்கும் பிரயோகிக்க வேண்டியுள்ளது. கட்புலனாகும் நிலையிலும் கட்புலனாகா நிலையிலும் சுரண்டலுக்கு உள்ளாகும் மக்கள், சுரண்டல் இயல்புகளைத் தெளிவாக விளங்கிக் கொள்வதற்குரிய கல்வியையும், அவர்கள் உதிரிகளாகப் பிரிந்து செல்லாது, ஒன்றிணைந்து தம்மை மீள் ஒழுங்குபடுத்துவதற்கான கல்வியைக் கட்டமைப்புச் செய்வதிலே கூடிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகளே சமூக மாற்றத்துடன் கூடிய மனித முகிழ்ப்பை ஏற்படுத்தும்.
தனிமனித விருத்தி சமூகத்துடன் இணைந்த ஒரு சிக்கலான செயல்முறை. மேலைத்தேய உளவியல் ஆய்வாளர்கள் தனிமனித விருத்தியின் தளமாக அமையும் சமூக இருப்பின் மீதும், சமூக தொடர்புகள் மீதும் போதுமான கவனக்குவிப்பை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. மாறாக அதனைத் தனிமனிதனை நடுநாயகப்படும்
- 19

Page 12
செயற்பாடாகவே விதந்து நோக்குகின்றனர். மனித விருத்தியை Lífljó35sólgj56ö (Differentiation) 2)}ób6)JuJÚ LITEÍ G5 (Subjectivity) தொடர்பாடல், என்ற மூன்றுக்குமிடையே நிகழும் சிக்கலான செயல்முறையின் விளைவு என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது. (Sullivan, 1999:225)
வேறுபிரித்தறிதல் என்பதில் ஒருவரிடத்து உள்ளடங்கிய தனித்துவம் கருத்திலே கொள்ளப்படுகின்றது. ஒருவரது செயற்பாடுகள் அனைத்திலும் அவருக்குரிய தனித்துவம் வெளிப்பாடு கொண்ட வண்ணமிருக்கும். தனித்துவம் தனிமனிதனைச் சார்ந்ததாகவும் இருக்கலாம். பிறரால் வழங்கப்படமுடியாத பொருளாகவே தனித்துவம் இருக்கும். ஒவ்வொரு தொடர்பிலும் இந்தத் தனித்துவம் பங்களிப்புச் செய்த வண்ணமிருக்கும்.
அகவயப்பாங்கு இரண்டு நிலைகளைக் கொண்டது. உயிரியல் நோக்கிலே பார்க்கையில், ஒருவர் நிறைவு கொள்வதில்லை. வாழ்க்கைச் சமூகத் தொடர்புகளால் ஒருவர் முழுமையை நோக்கி நகர்ந்து செல்கின்றார். சுயாதினமாக வாழ்வதற்குரிய செயற்பாடுகள் விருத்தியில் முக்கியத்துவம் பெறுகின்றன. விருத்தியினுரடே ஒருவர் சமூக இருப்பினுக்கு ஏற்றவாறு தனித்துவமாகத் தொழிற்படும் நிலை தோன்றுகின்றது.
தொடர்பாடல் முடிவிலியாக இருப்பதுடன் சமூக இருப்புடன் தொடர்புபட்டு நிற்கின்றது. தொடர்பாடலின் விரிவாக்கம் நாகரிகங்களுக்கு அடிப்படையாக அமைந்துள்ளது.
இந்தப் பூகோளத்தின் செயற்பாடுகள் ஒருவர் தம்மை ஒழுங்கமைப்பதற்கும் தம்மை நெறிப்படுத்திக் கொள்வதற்கும் வழிகாட்டியவண்ணமுள்ளன. பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தாலும் பூகோளம் தனது வெப்பநிலைச் சராசரியைப் பராமரித்து தன்னை ஒழுங்கமைத்துக் கொள்ளுகின்றது. பல்வேறு தாக்கங்கள் நிகழ்ந்தாலும் பூகோளம் தனது ஒட்சிசன் மட்டத்தைப் பராமரித்து தன்னைத்தானே நெறிப்படுத்திக் கொள்ளுகின்றது. இவ்வாறே பூகோளம் தன்னைத்தானே ஒழுங்குபடுத்தியும், நெறிப்படுத்தியும் மேற்கொள்ளும் செயற்பாட்டினை லவ்லொக் வழங்கிய "கயா கருதுகோள்" விளக்கி நிற்கின்றது. பூகோளத்தின் ஓர் இணைபிரியாத உறுப்பாக இருக்கும் மனிதரும் இதனை அறிகை கொள்ளல் வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது.
- 20

புவிக்கோள் தன்னகத்தே அடக்கியுள்ள உயிரினங்களின் பன்முகமாகிய இயல்புகளும் சமூக உள்ளடக்கம் கொண்டுள்ள பன்முகமாகிய இயல்புகளும், கட்டில்லாத திறந்த செயற்பாட்டினராக மனிதரை உருவாக்கி வருதலுடன் புத்தாக்கம் செய்யும் தூண்டிகளையும் வழங்கி வருகின்றது. அதாவது புத்தாக்கம் செய்யும் இயல்பை இயற்கையும் சமூகமும் மனிதரிடத்தே தொடர்ச்சியாக ஊட்டி வருகின்றன.
கல்வியின் தலையாய இலக்குகளுள் ஒன்றாகக் கருதப்படுவது வாழ்க்கைப் பண்பு (Quality of life) மேம்பாடு ஆகும். மனிதரிடத்துக் காணப்படும் ஆக்க மலர்ச்சியும் வாழ்க்கைப் பண்பு மேம்பாட்டுக்கு உதவுகின்றது என்று கூறும் பொழுது கிடைக்கப்பெறும் அனுகூலங்களின் வர்க்க நிலைப்பட்ட வேறுபாடுகளும் கருத்திலே கொள்ளப்படல் வேண்டும். நிராகரிப்பின் பிறிதொரு வடிவமாக அமைவது புத்தாக்கத்தின் தூண்டுதல்களுக்கு உட்பட்ட விஞ்ஞான வளர்ச்சியும் தொழில்நுட்ப வளர்ச்சியும் சூழல் மீது ஏற்படுத்தும் தாக்கங்களும், மாசுற வைக்கும் நடவடிக்கைகளுமாகும். சூழல் மாசடைவதன் தாக்கங்களால் சுரண்டலுக்கு உள்ளாகும் மக்களே அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
வாழ்க் கைப் பண்பு வாழ்வின் தரமான அனுபவங்களுடன் இணைந்தது. தரமான அனுபவங்களைக் கல்விச் செயற்பாடுகள் மற்றும் கலை இலக்கியச் செயற்பாடுகள் முதலியவை சமூகச் செயற்பாடுகள் இணைந்த வகையில் கையளிக்கப்படுதலின் தேவை வாழ்க்கைப் பண்பில் வலியுறுத்தப்படுகின்றது. மேலைத் தேய ஆய்வாளர்கள் வாழ்க்கைப் பண்பை வாழ்க்கைத்தரத்துடன் இணைத்துப் பார்க்கின்றவேளை தரமான அனுபவங்களின் கையளிப்பிலே கவனம் செலுத்தத் தவறியுள்ளனர்.
மூன்றாம் உலக நாடுகளிலே ஆரம்பக்கல்வியின் விரிவாக்கம் பற்றிப் பேசும் பொழுது, தரமேம்பாடு பற்றிய நடவடிக்கைகள் போதுமான அளவில் இடம் பெறவில்லை என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. இரண்டாம் நிலைக் கல்வியை விரிவாக்கியும் நவீனப்படுத்தியும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் பிரதிகூலக் குழுவினர் நிராகரிப்புக்கு உள்ளாதலையும் குறிப்பிட்டுக் கூறவேண்டியுள்ளது. மனித முகிழ்ப்பு என்பது அனுகூலம் மிக்கவர்களை மட்டும் குவியப்படுத்துவதாய் அமைதல் ஏற்புடையது அன்று.
- 21 -

Page 13
அண்மைக்காலத்தைய உளவியல் ஆய்வாளர்கள் தேவைபற்றிய ஆய்வுகளை விரிவுபடுத்தி வருகின்றனர். தேவைகள் இருப்புக்குரிய தேவைகள் (Existential Needs) மற்றும் நிரலமைப்பைக் கொண்ட தேவைகள் (Axiological Needs) என இருவகைப்படும். இருத்தல், தொழிற்படல், இடைவினைகொள்ளல், முதலியவை இருப்புக்குரிய தேவைகளுடன் தொடர்புடையவை. நிரலமைப்புக்கொண்ட தேவைகளான வாழ்வாதாரம், பாதுகாப்பு, அன்பு, விளக்கம், பங்கு பற்றல், ஆக்கல், இனங்காணலை வெளிப்படுத்தல், விடுதலை முதலாம், தேவைகளுடன் இருப்புக்குரிய தேவைகள் இணைந்தவை. "தேவைகள்", "திருப்தி ஊடகங்கள்" (Satistiers) என்ற இன்னொருபாகுபாடும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உணவும் இருப்பிடமும் மனித இருப்புக்குரிய அடிப்படை திருப்தி ஊடகங்களாக அமைகின்றன. உலகை விளங்கிக் கொள்வதற்குரிய திருப்தி ஊடகங்களாக கல்வியும், தரமான அனுபவங்களும் அமைகின்றன.
சமகாலக் கல்வியில் தரவற்புறுத்தல் இடம்பெறுதல் குறிப்பிடத்தக்கது. ஆனால் கலை இலக்கியத் தரவற்புறுத்தல்களுக்கு வர்த்தகத் தொடர்பு சாதனங்கள் தடையாக இருத்தலும் கணிப்புக்குரியது.
கல்விச் செயல்முறை
அதிக பணத்தை உள்வாங்கி, குறைந்தளவு மக்களுக்கு நன்மை தருவதாகவே இன்றைய கல்விச் செயல்முறை அமைந்துள்ளது. பாடசாலைகளின் இன்றைய போக்குகள் மாற்றமடைந்து சென்றாலும் ஒரு சிலரே ஊன்றிய நன்மை பெறுவோராயிருக்கின்றனர்.
பயிர்ச் செய்கை முறைமையோடு இணைந்திருந்த பாரம்பரியமான பாடசாலைச் செயல்முறையிலும் மேற்கூறிய நிலமைகளே காணப்பட்டன. நிலமுடையோரின் அரவணைப்பிலே பாடசாலைகள் இயங்கியமையால் அவர்களுக்கு இயைபான அறிவூட்டும் அனுகூலங்களை அவை முன்னெடுத்தன. நிலவுடைமைச் சமூகத்தில் இயந்திரமயமாக்கல் இடம் பெறாமையால் தொழில் முறை சார்ந்த பாடங்களுக்குக் கலைத் திட்டத்திலே முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. புலமை சார்ந்த பாடங்களுக்கே (Academic Subjects) முன்னுரிமை வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் வரன் முறைக் கல்வி கற்ற புலமைமிக்கவர்களுக்கும், சுயமாகக் கற்று மேம்பட்ட புலவர்களுக்குமிடையே
- 22

ஏற்பட்ட முரண்பாடுகள் பற்றிய சம்பவங்கள் நிலவுடமைச் சமூகத்தின் முரண்பாட்டை வெளிப்படுத்தின.
விஞ்ஞான எழுச்சியும், தொழிற் புரட்சியும் பாடசாலைகள் உற்பத்திநிலை (Production Line) செயற்பாடுகளுக்கு இட்டுச் சென்றன. கைத்தொழிற்சாலைகளுக்கும் நிர்வாகத் தேவைகளுக்கு முரியவர்களைத் தயாரிக்கும் பொறுப்பு பாடசாலைகளுக்கு விடப்பட்டன. பெரும் தொழிற்சாலைகளை மாதிரிகைகளாக (Models) கொண்டு பாடசாலைகள் உருவாக்கப்படலாயின பெரிய தொழிற்சாலைகள் மற்றும் சிறிய தொழிற்சாலைகள் போன்று பெரிய பாடசாலைகள், சிறிய பாடசாலைகள் என்ற கட்டமைப்புக்களும் வளரலாயின.
உற்பத்தி செய்யப்படும் பொருட்களை நுகர்ச்சி செய்வதற்கு அடிப்படை அறிவு அனைவருக்கும் வேண்டப்பட்டமையால், இரண்டாம் நிலைக்கல்வியை விரிவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன, கட்டாயப்படுத்தலும் முன்னெடுக்கப்படலாயிற்று. ஆங்கில மரபிலே தொழிற்சாலைகளின் முடிவுப் பொருள்களுக்குப் பயன்படுத்தப்பட்ட (Products) என்ற எண்ணக்கரு கல்வி நிலையங்களிலே கற்றுத்தேறியவர்க்கும் பிரயோகிக்கப்படலாயிற்று.
பாடசாலைகள் மட்டுமல்ல, மருத்துவ நிலையங்கள், அரச திணைக்களங்கள், என்ற அனைத்தும் தொழிற்சாலைகள் என்ற மாதிரிகையைப் பின்பற்றலாயின. தொழிற்சாலைகளிலே பயன்படுத்தப்படும் உற்பத்திச்சிக்கனம், உற்பத்திவினைத்திறன், தரக்கட்டுப்பாடு, சிறப்புத் தேர்ச்சி. முகாமை, உச்சவிளைவு, தவறுகளைப் பூச்சியநிலையில் வைத்திருத்தல் முதலிய எண்ணக்கருக்கள் கல்வி நிறுவனங்களிலும் எடுத்தாளப்படுகின்றன. சந்தைப் பொருளாதாரத்தின் இன்றைய வளர்ச்சி சந்தையில் விலைபோகக் கூடிய படித்தவர்களை உருவாக்குதல் என்ற எண்ணக்கருவை ஏற்படுத்தி வருகின்றது. "சந்தைப்படுத்தப்படக்கூடிய பட்டதாரிகளை உருவாக்குதல்" (Marketable Graduates) என்ற சுலோகம் இலங்கையிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சமகாலக் கல்வியைப் பொறுத்தவரை அனைத்தையும் மீள் சிந்தனைக்கு உட்படுத்தல் (Rethinking Everything) என்ற கருத்து ஆய்வறிவாளர்களால் முன்வைக்கப்படுகின்றது. மீள்சிந்தனை, மீள்புலக்காட்சி முதலியவற்றை நவீன அறிவியல் ஆய்வுகளுடன் தொடர்புபடுத்த வேண்டியுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் கோட்பாட்டும்
- 23

Page 14
பெளதிகவியலாளராகிய பிறீமன் டைசன் உருவாக்கிய கருத்துக்கள் இணைத்து நோக்குதற்குரியவை (Dyson, F 1981)
ஒரு நிலைப்பாங்கு (Clone) பல நிலைப்பாங்கு (Clade) என்ற இரு எண்ணக்கருக்களை அவர் விவரிக்கின்றார். பாரம்பரியமான ஓர் எண்ணக்கருவைப் பயன்படுத்தி ஒரே விதத்தில் மட்டும் சிந்திப்பவர்கள் ஒருநிலைப்பாங்கானவர்கள். பரிணாம வளர்ச்சியில் மேலும் முன்னேற முடியாத முடிவுநிலையில் இருப்பவர்களாக அவர்கள் விளங்குவர். ஒரு பெரும் நெருக்கடி வந்து அடிப்படைகள் சிதறும்பொழுது பலநிலைகள், பலதொழிற்பாடுகள் கொண்ட பல்லினப்பாங்கினை உடைய புதிய கிளைகள் வடிவெடுத்துத் தோன்றுவதுடன் அவை பரிணாம வளர்ச்சியின் முன்னேற்றகரமான இயல்புகளைக் கொண்டவையாகவும் அமையும்.
சமகாலப் பாடசாலைகள் ஒருநிலைப் பாங்கின் இயல்புகளைக் கொண்டவையாகக் காணப்படுகின்றன. இதனால் மேலும் முன்னேற்றத்தை நோக்கி நகர்த்திச் செல்ல முடியாத இடர்காணப்படுகின்றது. பாடசாலைகளால் மகிழ்ச்சி பெறுவோரைக் காட்டிலும் விரக்தியடைவோரின் எண்ணிக்கையே அதிகரித்துச் செல்கின்றது. கல்வி நிலையங்களின் தொழிற்பாட்டில் பொறிமுறைப் பண்புகள் மேலோங்கியும், மலர்ச்சிப் பண்புகள் ஒடுக்கப்பட்டும் காணப்படுகின்றன.
புதிய ஆய்வுகள், புதிய கருத்துக்கள், புதிய அணுகுமுறைகள் நடைமுறைகளுக்கு ஒத்துவராதவை என்று பாரம்பரியமான கல்வி நிறுவனங்களின் முகாமையாளர்கள் கூறுதல் மலர்ச்சிப்பண்புகளை ஒடுக்குதலுக்கு ஒர் எடுத்துக்காட்டு.
நவீன மாறுதல்களுக்கு ஏற்ப கல்விச் செயற்பாட்டை மீள்வடிவமைக்கும் பொழுது அதன் சமூகப் பரிமாணம் உலகப் பரிமாணம் ஆகியவற்றைக் கவனத்திலே எடுக்க வேண்டியள்ளது. சமூகப் பரிமாணங்களை நோக்காது முற்றிலும் தனிமனித நிலைப்பட்ட முன்னேற்றத்துக்குரிய ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தற்போதைய செயற்பாடுகள் மாற்றியமைக்கப்பட வேண்டியுள்ளன. கல்வியை ஓர் அத்தியாவசிய சேவையாக (Essential Service)க் கருதி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொழுது எந்தப் பிரிவினரும் இச்சேவை கிடைக்கப் பெறாதவர்களாயிருத்தலாகாது. அத்தியாவசியமான சேவையாகவும் தரமான சேவையாகவும் கல்வியை
-24

உருவாக்கும் பொழுது சமூகம், பொருளாதாரம், அரசியல் போன்ற பல காரணிகளை ஒன்றிணைக்க வேண்டிள்ளது.
சமூக நிரலமைப்பில் நிராகரிப்புக்கு உள்ளானோர் கல்வி என்ற அத்தியாவசிய சேவையை ஒழுங்குபடுத்துபவர்களாக மாற்றப்படல் வேண்டும். கல்விச் செயல் முறையில் யாரும் விடுபட்டவர்களாக இருத்தலாகாது. பாடசாலைச் செயற்பாடுகளில் காணப்படும் ஒரு முகமாகிய இறுகிய நடவடிக்கைகள் கைவிடப்பட்டு பன்முகமாகிய அரவணைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தல் அவசியமாகின்றது. அறிவை ஒரு சாராருக்கு மட்டும் கையளிக்கும் நிலையமாக பாடசாலை தொழிற்படலாகாது.
ஆசிரிய சேவையிலே காணப்படும் இறுகிய வார்ப்புவகையை (Stereo type) மாற்றியமைக்க வேண்டியுள்ளது. குறிப்பிட்ட பாட அலகுகளைச் சிறப்புறக் கற்பிக்கக் கூடிய ஆசிரிய அணியினை ஒவ்வொரு பிரதேசத்திலும் உருவாக்க வேண்டும். பாடசாலைகள் அவ்வப்போது அவர்களின் சேவையைப் பெற்றுக் கொள்ளக்கூடிய ஏற்பாடுகளை ஏற்படுத்துதல் பொருத்தமான நடவடிக்கையாகும். மருத்துவத் துறையில் புறமுள்ள சிறப்பு நிபுணர்களின் சேவையை மருத்துவ நிலையங்கள் பெற்றுக்கொள்ளும் செயற்பாடுகள் வளர்ச்சியடைந்து வருதலை முன்மாதிரியாகக் கொள்ளலாம். இக்கருத்து கல்வி நிறுவன முகாமைத்துவத்துக்கும் பொருந்தும். குறித்த முகாமைத்துவ ஒழுங்கமைப்பை மேற்கொள்வதற்கு அதிபர்களுக்கோ, நிர்வாகி. களுக்கோ ஆற்றல் கொள்ளளவு போதாமலிருக்கும் பொழுது. புறமிருக்கும் நிபுணர்களின் சேவையைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருத்தல் வேண்டும்.
நவீன கலைத்திட்ட ஆக்கத்தில் மாணவர்கள் சுயமாகத் தொழிற்படக்கூடிய இதவடிவப் (Modular) பண்புகளும், ஆசிரியரின் துணையுடன் தொழிற்படக்கூடிய இறுவடிவப் (Nodular) பண்புகளும் ஒருங்கே இணைந்திருத்தல் வேண்டும்.
கற்றலை மாற்றிடில்லா ஒருபாதையில் வைத்து நோக்கும் பொழுது எளிதிலிருந்து சிக்கலுக்குச் செல்லல் என்ற பழைய செயற்கையான முறை முன்வைக்கப்பட்டது. ஆனால் இன்றைய கற்றலும் கற்பித்த91 பலநிலைகளினூடாக, பலவழிகளினூடாக, செல்லும் :ெ பூ: எளிதானவற்றுக்கு முதல் சிக்கலானவற்றைக் கற்கும் செயற்பா) : இடம்பெறும்.
- 25

Page 15
பாடசாலைகளை வினைத்திறன்படுத்தும் இயக்கம் (The School Effectiveness Movement) என்பது அண்மைக் காலமாக தீவிர வளர்ச்சியடையத் தொடங்கியுள்ளது. இந்த இயக்கம் தொடர்பான ஆய்வுகளில் இருந்து ஒரு முக்கியமான கருத்து வெளிக்கிளம்பி. யுள்ளது. அதாவது, அனுபவம் மிக்க ஆசிரியர் கைகளில் இருந்தும் கல்விமான்களது கைகளில் இருந்தும் பாடசாலைகள் நழுவிச் சென்று கொண்டிருக்கின்றன என்பது ஒரு முக்கியமான புலப்பாடாகும்.
சமகாலக்கல்வியில் பாடசாலையை ஆக்க முதலீட்டு நிறுவனDAT 35 dö (School As An Enterprise) đ5(5g5sub GibsTýsið um (Bab 6ïï முன்னெடுக்கப்படுகின்றன. கற்றற் குவிப்பை அனைத்து மாணவர்களிடத்தும் ஏற்படுத்தல், தவறுகளில் இருந்தும் வெற்றிகளில் இருந்தும் கற்கத் தூண்டுதல், திறந்த தேடல்களை உருவாக்குதல், கற்போரை வினைப்படும் நிலைக்கு மாற்றுதல், இலக்குடைய கற்பித்தல்களை முன்னெடுத்தல், உயர்ந்த இலட்சியங்களை அனைத்து மாணவரிடத்தும் ஏற்படுத்துதல், ஆசிரியர்களிடத்து வாண்மைத்தலைமைத்துவத்தை நிறுவும் நடவடிக்கைகளை ஊக்குவித்தல், ஒழுங்கமைந்த கணிப்பீடுகளையும், நெறிப்படுத்தலையும் மேற்கொண்டு மாணவர்களைத் தொடர்ச்சியாக ஊக்கப்படுத்தல், நேர்முகமான பின்னுரட்டல்களை வழங்குதல், மாணவர் உரிமைகள், கடமைகள், மற்றும் விழுமிய மேம்பாடுகளை முன்னெடுத்தல், பால்நிலையிலும், பொருளாதார நிலையிலும், அந்தஸ்து நிலையிலும் மாணவர் பாதிப்புக்கு உள்ளா. காது இருத்தலை உறுதிசெய்தல் முதலியவை பாடசாலை பற்றிய ஆக்க முதலீட்டு எண்ணக்கருவில் வலியுறுத்தப்படுகின்றன.
வினைத்திறன் கொண்ட ஒரு பாடசாலையின் இயல்புபற்றி ஆராய்ந்த ஆய்வாளர்கள் அவுஸ்திரேலியாவில் உள்ள பிட்சொறி வடக்கு ஆரம்பப் பாடசாலையை முன்மாதிரியாகக் குறிப்பிட்டுள்ளனர். (Hedley Beare, 2000; 122-4) தன்னம்பிக்கை, தற்கணிப்பு ஓங்கல், கூட்டுறவுப் பண்புகளுடன் தொழிற்படல், அனைத்துமானவரும் உயர்ந்த அடைவுகளைப் பெற ஊக்குவிக்கப்படல் முதலியவை அப்பாடசாலையில் முன்னெடுக்கப்படுகின்றன. சமூக முனைப்புடன் அது இயக்கப்படுகின்றது. பாடசாலையின் அனைத்து செயற்பாடுகளிலும் மாணவர், ஆசிரியர், பெற்றோர், சமூக உறுப்பினர் ஆகிய அனைவரும் ஒன்றிணைக்கப்படுகின்றனர். சமூக நீதி, சமசந்தர்ப்பம் முதலியவை பாடசாலையின் ஒவ்வொரு செயற்பாட்டிலும் முன்னெடுக்கப்படுகின்றது.
-26

மாணவர், ஆசிரியர், பெற்றார் ஆகிய அனைவரும் திறந்த மனத்துடன் கலந்தாலோசிக்கப்பட்டு முடிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. திட்டமிடலிலும் மதிப்பீட்டிலும் வரன்முறையானதும், பாடசாலையை பற்றிய முழுமை நோக்கைக் கொண்டதுமான அணுகுமுறை மேற்கொள்ளப்படுகின்றது.
இப்பாடசாலையிலே கற்பிக்கும் ஆசிரியர்கள் வலிமையான வாண்மை அர்ப்பணிப்புடனும், வாண்மை விருத்தி பற்றிய தொடர்ச்சியான ஈடுபாட்டுடனும், கூட்டுறவுடன் ஒன்றிணைந்த குழுவாகச் செயற்படுகின்றனர். தூண்டுதலளிக்கும் வகையிலும், அறைகூவல் விடுக்கும் வகையிலும் மாணவர் கற்பதற்குரிய சூழல் அங்கே உருவாக்கப்பட்டுள்ளது. பலவிதப்பட்ட கற்றல் வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்கள் புதியவற்றைக் கண்டறிவதற்கும், மகிழ்ச்சியான கற்றற் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும் பாதுகாப்பான நிலமைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
பாடசாலைகள் வழங்குனர் (Provider) என்ற செயற்பாட்டைத் தெளிவாக முன்னெடுக்க வேண்டியுள்ளன. வழங்குனர் என்ற செயற்பாட்டில், நலிந்தவர்களும், பிரதிகூலம் எய்தியவர்களும் புறக்கணிக்கப்படாதவர்களாயிருத்தல் வேண்டும்.
பாடசாலைகள் பொதுவாக புதிய மாற்றங்களுக்கு ஈடுகொடுக்க முடியாதவை என்ற கருத்து உண்டு. அறிவின் பிரிப்புக்கும் பாடசாலைகள் இரையாகி வருகின்றன. அறிவின் பிரிப்பு என்றால் ஒன்றிணைந்த பெருந்தொகையான அறிவு, பாடங்கள் என்ற வகையில் துண்டாடப்பட்டுள்ளன. இதன் அபத்தமான வளர்ச்சி ஒருபாடம் உயர்ந்தது மற்றைய பாடம் தாழ்ந்தது என்ற கருத்தேற்றமாகும்.
புதிய அறிவு விச்சுக்குப் பொதுவாக ஆசிரியர்கள் முகம் கொடுக்காத இறுகிய நிலை காணப்படுகின்றது என்ற இன்னொரு திறனாய்வும் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை இருநிலைகளில் நோக்குதல் வேண்டும். ஒன்று ஆசிரியர் சார்பான காரணிகள். மற்றையது அரசும் சமூகமும் சார்ந்த காரணிகள். வளர்ந்து வரும் புதிய அறிவுப் பெருக்கை ஆசிரியர்களுக்குக் கையளிப்பதற்கு அரசும் சமூகமும் என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன என்பதை ஆழ்ந்து நோக்குதல் வேண்டும். புதிய அறிவுப் பெருக்கை உள்வாங்காத நிலையில் "காலாவதியான" ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கும். இந்நிலையில் ஆசிரியர் மீது
- 27

Page 16
மாணவர் கொண்டுள்ள நம்பிக்கை வீழ்ச்சியடைவதுடன், கல்வி நிறுவனங்களில் ஒழுங்கு மற்றும் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தலும் கடினமாகிவிடும்.
புதிய அறிவைத் தேடுதலும் வாசிப்புப் பழக்கமும் மாணவரிடத்து வீழ்ச்சியடைந்து வருதலும் இன்னொரு தோற்றப்பாடாகச் சுட்டிக் காட்டப்படுகின்றது. மாணவர் தொடர்பான காரணிகளுடன் ஆசிரியர், பரீட்சைமுறை, சமூகம், அரசு மற்றும் தொடர்பாடற் காரணிகளுடன் இணைத்து இப்பிரச்சிணையை ஆராய்தல் வேண்டும். புதிய தேடலும், வாசிப்புப் பழக்கமும் மாணவர்களிடத்து வளர்க்கப்படாவிடில் அறிவு நிலையில் காலாவதியான மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கும்.
ஆசிரியரும், மாணவரும், பெற்றோரும் பாரம்பரியமான இறுகிய ஒரு வழிப்பாதையாகிய கல்வி முறைமையில் இருந்து விடுபட்டு கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளில் "பன்முக மலர்ச்சி" (Polymorphic Approach) அணுகு முறையை முன்னெடுக்க வேண்டியுள்ளது. இறுகிய ஒருதலைப்பட்சமான கற்றலும், பரீட்சை முறைகளும் மாணவரிடத்துப் பராமரிக்க முடியாத மன முறிவையும் மனக் கவலைகளையும். ஏற்படுத்திவிடுகின்றன. இலங்கையைப் பொறுத்தவரை ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் தேர்வில் சித்தியடையாதவிடத்தும், பல்கலைக்கழக நுழைவுக்குரிய இறுகிய தேர்வின் வழியாக நுழைவு பெறாதவிடத்தும் வாழ்க்கை இருண்டு விடுகின்றது என்ற நிலைக்குத் தள்ளப்படுதல் பாரம்பரியமான இறுகிய ஒருவழிமயப்பட்ட கல்வியின் வெளிப்பாடாகும்.
கற்றல் என்பதை "கற்றல் நகரம்" (Learning City) என்ற செயற்பாட்டுக்கு ஆய்வாளர் இட்டுச் செல்கின்றனர். அதாவது, வளர்ச்சியடைந்த ஒரு நகரின் இயக்கப்பாட்டுடன் கல்விச் செயல்முறை ஒப்புமைக்கு உள்ளாக்கப்படுகின்றது. வாழ்க்கை முழுவதும் கல்வி இயக்கப்படுதல் வாழ்க்கை முழுவதும் தொடர்ச்சியாக இயக்கப்படுதல், பல்வேறு மனிதர்களிடமும் சாதனங்களுடனும் இடைவினைகள் கொண்டு இயக்கப்படுதல், வயது வேறுபாடுகள் இன்றியும் வயதுக் கட்டுப்பாடுகள் இன்றியும் இயக்கப்படுதல் முதலியவற்றைத் தொகுத்துக் கூறும் எண்ணக்கருவாக "கற்றல் நகரம்" என்பது பயன்படுத்தப்படுகின்றது.
- 28

ஆசிரிய வாணர்மை:
பாடசாலை நிர்வாக முறைமை மேலிருந்து கீழ் நோக்கிய செயற்பாடுகளைக்கொண்டதாக, கட்டுப்பாடுகளை உள்ளடக்கியதாக, மரபுவழி ஆசாரங்களை உள்ளடக்கியதாக, போதுமான வளங்களைக் கொடுக்காது பெறுபேறுகளை மட்டும் கருத்திலே கொள்ளும் அணுகுமுறைகளைக் கொண்டதாக சேவை மூப்பு, மற்றும் நியமன ஆசாரங்களைக் கருத்திலே கொண்டு சிறப்பு ஆற்றல்களை நிராகரிப்புக்கு உள்ளாக்குவதாக இருக்கும் நிலைகளை ஆய்வாளர்கள் கூட்டிக் காட்டி வருகின்றனர். அதாவது கல்வி நிலையங்களுக்கு நிறைவலுவூட்டும் (Empowering) செயற்பாடுகளிலே உரிய கவனம் செலுத்தப்படாத நிலையில் அதிபர்களும், ஆசிரியர்களும் தாழ்வுச்சிக்கல் என்ற உளவியல்தோற்றப்பாடுகளுக்கு உட்படும் நிலை ஏற்படுகின்றது. "கெளரவமான அடிமைத்தனம்" ஆசிரிய வாண்மையிலே மறைமுகமாக உட்படுத்தப்படுகின்றது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் ஆசிரியரின் தொழில்சார்ந்த உளநிறைவில் (Job Satis Faction) வீழ்ச்சி ஏற்பட்டுச் செல்லல் கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தோற்றப்பாடு கல்வி வளர்ச்சியை உடனடியாகவும் நீண்டகாலத்திலும் பாதிப்புக்கு உள்ளாக்கவல்லது. ஆசிரியர்களால் ஆசிரியர்கள் தாழ்த்தப்படும் நிலையானது வாண்மைச் செயற்பாடுகளை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கி விடுகின்றது.
சுயநெறிப்பாடு, தற்புலக்காட்சியை மேம்படுத்தல், சுயபடிமத்தை உயர்த்துதல், வாண்மைநிலை நெகிழ்ச்சியை ஏற்படுத்துதல், சர்வதேச மட்ட இட மாற்றங்களுக்கும் நிலை மாற்றங்களுக்கும் ஏற்றவாறு வாண்மைத்திறன்களை உயர்த்துதல் முதலியவற்றை நோக்கிய ஒன்றிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுத்தல் சமகாலக் கல்வி வளர்ச்சிக்குரிய தேவைகளாகின்றன. ஆசிரியர்கள் அறிவு வேலையாட்கள் (Knowledge Workers) என்ற எண்ணக்கருவாலும் அழைக்கப்படுகின்றனர். தமது வாண்மை முன்னேற்றத்துக்குத் தாமே பொறுப்பு என்ற ஒரு மனித வியாபாரத்துக்கு (One PerSOn Business) அவர்கள் உட்படுத்தப்பட்டுள்ள இக்கட்டான நிலை காணப்படுகின்றது. இதன் தாக்கம் என்னவென்றால் கூட்டுமுயற்சிகள், கூட்டுமுயற்சிகள் வழியான முன்னேற்றம், முதலிய பண்புகள் ஆசிரிய வாண்மையிலே வலிதாக முன்னெடுக்கப்படவில்லை.
- 29

Page 17
அறிவு வேலையாட்கள் இறுகிய கட்டுப்பாடுகளுக்குள் அடக்கப்பட்டு வேலை வாங்கப்படுவதில்லை. பாரம்பரியமான இறுகிய நிர்வாக முறையும், பொறிமுறையான மேற்பார்வைத் திட்டங்களும் அறிவு வேலையாட்களுக்குப் பொருத்தமற்றவை. இறுகிய உள்ளடக்கத்தை மாற்றாது "சகபாடி மேற்பார்வை" (PeerSupervision) என்று அண்மைக்காலத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை பழைய பொருளைப் புதிய மேலுறையுடன் வழங்கும் நடவடிக்கையாகும்.
உயர்கல்வி, புலமைச் சுதந்திரம், மற்றும், சுயமுகாமைத்துவம் முதலியவற்றை வளர்ப்பதன் வாயிலாக ஆசிரிய வாண்மையை வளம்படுத்தலாம்.
அழுத்தமும் மலர்ச்சியும்:
அறிவின் ஆக்கமும் அதன் பங்கிடும் சமூக நிரலமைப்புடன் இணைந்தவை. விரைந்து பெருகிவரும் அறிவுப் பெருக்கினை சமூக நிரலின் உயர்நிலையில் உள்ளோரே கூடுதலாக அனுபவிக்கக் கூடிய கட்டணமைப்புக்களை ஏற்படுத்தியுள்ளனர். பொருளாதார நிலையில் நிகழும் சுரண்டல் போன்று அறிவு நிலையிலும் சமாந்தரமாக நிகழ்ந்து வருகின்றது. இந்நிலையில் சமூக நிரலின் அடிநிலை மாந்தர்கள் ஒடுக்குமுறைக்கு எதிரான ஆக்கவடிவங்களைப் பிரயோகிக்கும் செயற்பாட்டினை "அழுத்த மலர்ச்சி" என்ற தோற்றப்பாட்டினால் விளக்கலாம். அதாவது சிறந்த கலைப்படைப்புக்கள், உன்னதமான இலக்கிய ஆக்கங்கள் முதலியவை சமூக நிரலமைப்பின் அடிநிலை மாந்தரினால் உருவாக்கப்படுகின்றன.
கல்வியியலிலும் கலை இலக்கியங்களிலும் இந்த "அழுத்த மலர்ச்சி" என்ற தோற்றப்பாடு விரிவான ஆய்வுகளை வேண்டி நிற்கின்றது. இந்த "அழுத்த மலர்ச்சியை" ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளையும் அறிவை ஆக்கிரமிக்கும் வகுப்பினர் பயன்படுத்துகின்றனர். இதன் ஒரு வெளிப்பாடுதான் வளர்ந்து வரும் தொழில்நுட்ப அறிவோடு ஒப்பிடும் பொழுது கலையாக்கங்களும், அவற்றோடு இணைந்த கல்வியும் தாழ்ந்தவை என்ற காட்சி உருவாக்கப்பட்டு வருதலாகும். எமது நாட்டின் கல்விச் செயற்பாடுகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது இக்கருத்து மேலும் உறுதியாதலைக் காணக்கூடியதாகவுள்ளது. சமூக நிரலமைப்பின் உயர்நிலைகளில் வாழ்வோர் உயர்ந்த தொழில் நுட்பக்கல்வியையும் சிறப்புவாண்மைக்
-30

கல்வியையும் கற்று வருகின்றவேளை அடிநிலை மாந்தரின் வாரிசுகள் அழகியற்பாடங்களில் அழுத்த மலர்ச்சியைத் தீவிரப்படுத்தும் கோலங்களைக் காணக்கூடியதாகவுள்ளது.
உலக நாடுகள் மூன்றின் சமகாலக் கல்வி :
உலகின் சமகாலக் கல்வி முறைமையின் மேம்பாட்டை எடுத்துக் கூறத்தக்க வகை மாதிரியாக ஜப்பானியக் கல்விமுறை குறிப்பிடப்படுதல் உண்டு. ஜப்பானிய சமூகம் சமகாலத்தில் உருகதிலைக்கு (Melting Society) உட்பட்டுள்ளதாக ஆய்வாளர் குறிப்பிடுவர். (Masako Kamio, 1999) தனி ஒருவரைப் பற்றிய தொன்மம், நேரத்தின் பெறுமானம், பால்நிலை வேறுபாடு, உண்மை, வாழ்க்கை, புதிய பண்பாடு முதலான பலநிலைகளில் உருகும் பண்பு ஏற்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போருக்குப்பின்னர் ஜப்பானியக் கல்வி முறை பெருமளவில் அமெரிக்க மாதிரிகையை பின்பற்றி அமைக்கப்பட்டது. ஆனால் ஜப்பானிய மொழியே அனைத்து மட்டங்களிலும் கல்வி மொழியாக இருத்தலை தொடர்ந்து வளம்படுத்தி வளர்த்து வருகின்றார்கள். புதிய அறிவு உலகின் எப்பகுதியிலே தோன்றினாலும், உடனடியாக அது ஜப்பானிய மொழியிலே தரப்படுகின்றது. ஆரம்பக்கல்வியில் மாணவர் இணைத்துக்கொள்ளப்படல் நூறுவீதமாகவுள்ளது. அதேவேளை இடைநிலைக் கல்வியில் தொண்ணுற்று எட்டு வீதமாகவும், உயர்கல்வியில் நாற்பது வீதமாகவுமுள்ளது. முன்பள்ளிக்கல்வி மூன்று வயது தொடக்கம் ஆறுவயது வரை வளச்சிறப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. ஆரம்பக் கல்வியும் ஆரம்ப இடைநிலைக் கல்வியும் ஆறுவயது தொடக்கம் பதினைந்து வயதுவரை செல்லும், செய்முறை அனுபவங்கள் ஆக்கத்திறன் மலர்ச்சி, விஞ்ஞான அனுபவங்கள் முதலியவை ஜப்பானிய மொழிவாயிலாக வளமாக வளர்க்கப்படுகின்றன.
சிரேட்ட இடைநிலைக்கல்வி மூன்றாண்டு முழுநேரக் கற்கையமைப்பைக் கொண்டது. அத்துடன் மூன்று ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளைக் கொண்ட தொழில்சார் கற்கை நெறிக்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிரேட்ட இடைநிலையில் எண்பதுக்கும் குறையாத ஈட்டல்களை (Credits) பெறுவோரே பட்டப்படிப்புக்கு ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்.
-31 -

Page 18
பல்கலைக்கழகக் கல்வி பொதுவாக நான்கு ஆண்டுகளை உள்ளடக்கியது. ஆனால் மருத்தும், பல்மருத்துவம், விலங்கு மருத்துவம் முதலாம் கற்கை நெறிகள் ஆறு ஆண்டுகளைக் கொண்டவை. முதுமாணிக்கற்கை நெறிகள் இரண்டு ஆண்டுகளை உள்ளடக்கிய நிலையிலும் கலாநிதிப்பட்ட நெறிகள் ஐந்து ஆண்டுகளைக் கொண்டவையாகவும் அமைக்கப்பட்டுள்ளன. ஐந்து ஆண்டுக் கற்கை நெறிகளை உள்ளடக்கிய தொழில் நுட்பக்கல்லூரிகளும் இயக்கப்படுகின்றன. இக்கல்வி நிலையங்களில் அறிமுறைகளுடன் செய்முறைப் பயிற்சிகளுக்குக் கூடிய அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன. எந்த நிலைகளிலும் தர உறுதி வலியுறுத்தப்படுகின்றது.
பல்வேறு தொழில்களிலும் ஆற்றுகைத்திறன்களை வளர்ப்பதற்குரிய சிறப்புப் பயிற்சிக் கல்லூரிகள் இயக்கப்படுகின்றன. பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒராண்டுப் பயிற்சியும் பதினைந்து வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்று மாதம் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்துக்குரிய பயிற்சியும் வழங்கப்படுகின்றன. முறைசாரா (Non Formal) அமைப்பில் வழங்கப்படும் இப்பயிற்சிகள் தொழில் சார் வினைத்திறன்களைப் பெருக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளன. வாழ்க்கை முழுவதும் கல்வி தொடரும் என்பது நடைமுறைகள் வாயிலாக வலியுறுத்தப்படுகின்றது. சுயஊக்கலும், படைப்பாக்கல் மலர்ச்சியும் கல்விச் செயற்பாடுகளிலே முன்னெடுக்கப்படுகின்றன.
ஜப்பானியப் பரீட்சை முறைமையில் இறுகிய மத்திய கட்டுப்பாடுகள் ஒரளவு தளர்த்தப்பட்டுள்ளன. பரீட்சை முறை பல நிலைகளிலும் பன்முகமாக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் தங்களுக்குரிய தேர்வு நியமங்களை வைத்து மாணவர்களைத் தெரிவு செய்யலாம். ஆனால் தேசிய பல்கலைக்கழகங்களிலே கற்பதற்கு மாத்திரம் "பல்கலைக்கழக அனுமதிக்கான தேசிய நிலையத்தின்" தேர்வுக்குத் தோன்றுதல் வேண்டும்.
ஜப்பானிய சமூகத்திலே காணப்படும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் கல்வி முறைமையில் நேரடியாகப் பிரதிபலிக்கின்றன. சமூக பொருளாதார நிலமைகளில் மேம்பாடு கொண்டோர் புகழ்பெற்ற கல்வி நிலையங்களிலே கற்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர். பொருளாதாரத்திலே காணப்படும் தீவிரபோட்டியும். அங்கலாய்ப்பும் கல்வியில் நேரடியாக வெளிப்பட்டு நிற்கின்றது. புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுப்பும் கல்லூரிகளே மேம்பட்ட
- 32

கல்லூரிகளாகக் கருதப்படுகின்றன. போட்டிப் பரீட்சைகளுக்கு முகம் கொடுக்கும் மாணவர்கள் ஒய்வு உறக்கமின்றிக் கற்றலும், உளவியல் நெருக்கீடுகளுக்கு உள்ளாதலும் தவிர்க்க முடியாதுள்ளன. பொருளாதாரக் கோலங்களினதும் அவற்றால் எழுந்த கல்வி முறைமையினதும் அழுத்தங்கள் உயர்ந்த இலட்சியங்களையும், சமூகம் தொடர்பான உயர்ந்த விழுமியங்களையும், மனித உரிமைகளையும் மழுங்கடித்து விடுகின்றன.
சமவுடைமைத் தத்துவங்களின் அடிப்படையிலும் சமகாலச்சந்தைப் பொருளாதாரத்தின் அடிப்படையிலும் உருவாக்கப்பட்ட சீனாவின் கல்வியை அடுத்ததாக நோக்கலாம்.
சீனர்களுடன் உத்தியோக பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஐம்பத்து ஐந்து இனக் குழுமங்களை உள்ளடக்கிய பன்முக இனக்குழும நாடாக சீனா விளங்குகின்றது. குடித்தொகையில் எழுபது விழுக்காட்டினருக்குமேல் கிராமங்களிலே வாழ்ந்து வருகின்றார்கள்.
பொருளாதார அடிப்படையிலும் அரசியல் அடிப்படையிலும் நாட்டைக் கட்டியெழுப்பல் கல்வியின் உன்னத நோக்கங்களாகக் கொள்ளப்படுகின்றன. ஐம் பெரும் பொருட்களிலே காதலையும் ஐம்பெருந்தத்துவங்களிலே ஈடுபாட்டினையும் கல்வி வளர்த்தெடுத்தல் வேண்டுமென வலியுறுத்தப்படுகின்றது. ஐம்பெரும் பொருட்கள் என்று கூறும் பொழுது தாய்நாடு, மக்கள், உழைப்பு. அறிவியல், சோசலிசம் ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளன. ஐம்பெருந் தத்துவங்கள் என்று கூறும் பொழுது நாட்டுப் பற்று, கூட்டுறவு, சர்வதேசியம், கமியூனிசம், இயங்கியல் மற்றும் வரலாற்றுப் பொருள் முதல்வாதம் என்பவை குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றுடன் முதலாளித்துவம், நிலமானியம், ஆகியவற்றிலிருந்து தோன்றிய கருத்துக்களை நிராகரித்தலும் சுட்டிக் கூறப்பட்டுள்ளது. பட்டதாரிகள் தமது துறைகளில் ஆற்றலுடையவர்களாயிருந்தலுடன் அரசியல் சார்பான நம்பகத்தன்மை கொண்டவர்களாயிருத்தல் வேண்டுமெனவும் வலியுறுத்தப்படுகின்றது. (Wing Wahlaw, 1999)
கல்விக்கட்டமைப்பு ஆரம்பநிலை, கனிஷ்ட இடைநிலை அல்லது இளஇடைநிலை, சிரேஷ்ட இடைநிலை அல்லது முது இடைநிலை, உயர்நிலை என்ற அடுக்குகளைக் கொண்டது. ஆறுவயது தொடக்கம் பதினைந்து வயது வரையிலான ஆரம்பக் கல்வியும் கனிஷ்ட இடைநிலைக் கல்வியும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது
- 33

Page 19
மூன்று குழு அமைப்பினைக் கொண்டது. குழு ஒன்றில் சீனமொழி, பிறமொழி, கணிதம், இயற்கை, பெளதிகவியல் இரசாயனவியல், உடற்றொழிலியல், கருத்தியலும் அறக்கல்வியும், அரசியல், சமூகக் கல்வி முதலாம் பாடங்கள் இடம் பெறுகின்றன. குழு இரண்டுக்குரிய பாடங்களாக வரலாறு, புவியியல், உழைப்பு, உழைப்பும் திறன்களும் ஆகியவை அமைகின்றன. குழு மூன்றில் உடற்கல்வி, இசை, நுண்கலைகள் இடம் பெறுகின்றன. இவற்றுள் பிறமொழி, பெளதிகவியல், இரசாயனவியல், உடற்றொழிலியல், வரலாறு, உழைப்பும் திறன்களும் கனிஷ்ட இடைநிலைமட்டக் கற்பித்தலுக்கு உரியவையாகும். குழு ஒன்றில் உள்ள பாடங்களுக்குக் கூடுதலான நேர ஒதுக்கீடு செய்யப்பட்டதுடன் (அறுபது விழுக்காட்டுக்குமேல்) எண்ணறிவு, எழுத்தறிவு, அறிவியல் அறிவு ஆகியவற்றில் அடிப்படையான ஆற்றுகைத் திறன்களை மேம்படுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பிறமொழி என்ற வகையில் முன்னர் ரூசிய மொழிக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் இப்போது ஆங்கில மொழிக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலை முகாமைத்துவத்தில் பொதுவுடமை அரசியற் கட்டுமான இணைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாகப் பயன்படுத்தப்படும் சொற்களில் முந்நூறுக்கும் குறைந்தளவு சொற்களை அறிந்தவர்கள் "எழுத்தறிவற்றவர்கள்" என அங்கு வரையறுக்கப்பட்டுள்ளனர். இதனைவிட ஓரளவு எழுத்தறிவற்றவர்கள் (Semi illite rates) என்ற பாகுபாடும் வரையறை செய்யப்பட்டுள்ளது. பொதுவாகப் பயன்படுத்தப்படும் சொற்களில் 1500 சொற்களுக்கும் குறைவானவற்றை அறிந்த கிராமிய மக்களும் 2000 சொற்களுக்கும் குறைவாக அறிந்த நகர மக்களும்" ஒரளவு எழுத்தறிவற்றவர்கள்" என்று பாகுபடுத்தப்பட்டுள்ளனர்.
சிரேஷ்ட இடைநிலைக்கல்வியில் நான்கு ஒழுங்கமைப்புக்கள் காணப்படுகின்றன. வரன்முறை (Regular) சிரேஷ்ட இடைநிலைப் பாடசாலைகள், சிறப்பு சிரேஷ்ட இடைநிலைப்பாடசாலைகள், சிரேஷ்ட தொழிற்பாடசாலைகள், சிறப்புத் தேர்ச்சித் தொழிலாளர்களுக்குரிய பாடசாலைகள் என்பவை நான்குவகை ஒழுங்கமைப்புக்களுமாகும். வரன்முறை சிரேஷ்ட பாடசாலைகளில் இருந்து உயர்கல்விக்கு மாணவர்கள் நேரடியாக அனுப்பப்படுவார்கள். இதேவேளை 1980 ஆண்டுக்குப் பின்னர் சிரேஷ்ட இடைநிலைக் கல்வியில் தொழில் மயப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.
-34

கருத்தியல் நிலையில் பலமுற்போக்கான நடவடிக்கைகள் சீனாவின் கல்விச் செயற்பாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், பல எதிர்த்தாக்கங்களும் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணமுள்ளன. நிலப்பிரபுத்துவம் மற்றும் முதலாளித்துவம் ஆகியவற்றின் எச்சநிலைகளின் தாக்கங்கள் கல்விச் செயற்பாடுகளில் ஆங்காங்கு ஊடுருவி. யுள்ளன. பாடசாலைகள் பொருளாதார நிலையில் தம்மைத்தாமே பராமரித்துக் கொள்ளல் வேண்டுமென மேற்கொள்ளப்பட்ட முடிவு முதலாளித்துவத்தின் தாக்கங்களுக்கு விட்டுக் கொடுக்கின்றது. பிரபல பாடசாலைகள் நலிவுற்ற பாடசாலைகள் என்ற பாகுபாடு தொடர்ந்து வண்ணமுள்ளது. வரையறுக்கப்பட்ட கல்விவளங்கள் முரண்பாடுகளைத் தோற்றுவித்த வண்ணமுள்ளன. வரையறுக்கப்பட்ட வளங்களுக்கும் தரமான கல்விக்குமிடையே முரண்பாடு தொடர்ந்து எழுந்தவண்ணமுள்ளது.
போர்த்துக்கீச காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்டிருந்த வளர்முக நாடாகிய பிரேசில் நாட்டின் சமகாலக்கல்வியை அடுத்து நோக்கலாம். காலனித்துவ அழுத்தங்களால் பிரேசில் ஐந்து நூற்றாண்டுக்காலக் கீழ்க்கல்விக்கு (Under Education) உட்பட்டிருந்ததென ஆய்வாளர் giúLGB6bi. (Candido Gomes, 1999)
அகன்று விரிந்த பெரும் நிலப்பரப்பு, (8512 மில்லியன் சதுர கிலோமீற்றர்) விரைந்த நகர மயமாக்கல், தாழ்ந்த நிலையில் உள்ள எழுத்தறிவு விழுக்காடு, ஒரே வகுப்பில் தங்கி நிற்கும் மாணவரின் எண்ணிக்கை அதிகரிப்பு, கல்விமீது வறுமை செலுத்தும் அழுத்தங்கள், பிரதேச ஏற்றத்தாழ்வுகள் முதலியவற்றுக்கு உட்பட்ட நாடாக பிரேசில் விளங்குகின்றது. 1988 இல் உருவாக்கப்பட்ட பிரேசிலின் அரசியல் யாப்பு கல்வி அனைவருக்குமுரிய அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து 1996 ஆம் ஆண்டுக் கல்விச் சட்டத்தில் பின்வரும் அடிப்படைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
(1) கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகளைப் பன்முகப்படுத்தி
சுயாதீனமான இயக்கப்பாடுகளுக்கு இடமளித்தல்.
(2) ஆசிரிய வாண்மையை வளப்படுத்துதல்
(3) பள்ளிக் கூடங்கள் தமது சூழலுக்குப் பொருத்தமான கலைத்திட்டத்தை முன்மொழிதல், முகாமைத்துவத்தை
-35

Page 20
மேற்கொள்ளல், நிதியீட்டம் செய்தல் சுயாதின தொழிற்பாடு
களுக்கு இடமளித்தல். (4) பல்கலைக்கழகங்களும் சுயாதின தொழிற்பாடுகளை
மேற்கொள்வதற்கு இடமளித்தல்.
பிரேசிலின் கல்வி இருமட்டங்களைக் கொண்டது. அடிப்படை மட்டத்தில் முன்பள்ளிக்கல்வி, ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி ஆகியவை இடம்பெறுகின்றன. ஏழுவயது தொடக்கம் பதினான்கு வயது வரை கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அடுத்த மட்டம் உயர்கல்விச் செயற்பாடுகளை உள்ளக்கியது.
அடிப்படைத்திறன்களை வளர்த்தல், பிரசை உருவாக்கம், தொழில் சந்தைக்கு முகம் கொடுத்தல், உயர்கல்விக்கு நகருதல் முதலியவை அடிப்படைக் கல்விமட்டத்தின் இலக்குகளாகும் கலைத்திட்டம் தேசிய அடிப்படைகளைக் கொண்டதாகவும் அதேவேளை பிரதேச வேறுபாட்டுப் பண்புகளை உள்ளடக்கியதாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
மொழித்திறன்களை வளர்த்தல், சமூக, அரசியல், தொழில்நுட்ப சூழல் பற்றிய விளக்கங்களைப் பெறுதல், கற்கும் கொள்ளளவு ஆற்றலை மேம்படுத்துதல், குடும்ப உறவுகளை வலுப்படுத்துதல், மனித ஒருமைப்பாட்டை மேம்படுத்தல், சகிப்புத்தன்மையை வளர்த்தல், அவசரகால நிலமைகளுக்குரிய கல்வியை ஒழுங்கமைத்தல் முதலிய செயற்பாடுகள் ஆரம்பக்கல்வியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சுயாதினமாகச் சிந்திக்கும் திறன், திறனாய்வுச் சிந்தனை, சுயஒழுங்குக் கட்டுப்பாடுகள், அடிப்படைத் தொழில்நுட்பக் கல்வி, விஞ்ஞானக் கல்வி, பிறமொழியுடன் விருப்பத்துக்குரிய பிறிதொரு மொழி முதலாம் நடவடிக்கைகளுடன் தனியாள் வேறுபாடுகளுக்கு ஏற்றவாறு நெகிழ்ச்சிகொண்ட கலைத்திட்டம் இரண்டாம் நிலைக்கல்வியில் உருவாக்கப்பட்டுள்ளது.
சிறப்புக்கல்வி, முறைசாராக்கல்வி, ஆகியவற்றுடன் தரச்சிறப்புக் கொண்ட உயர்கல்வியும் வாண்மைக்கல்வியும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. உயர்கல்வியை விரிவுபடுத்தும் நோக்குடன் இரவு நேரக்கற்கைகள் தரச்சிறப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
-36

பிரேசிலின் சமூக மேம்பாட்டில் பட்டதாரிகள் தமது முன்னேற்றகரமான விஞ்ஞான அறிவையும், பண்பாட்டு அறிவையும் பிரயோகித்துப் பங்குபற்றல் வேண்டுமென்பது உயர்கல்வியின் நோக்கமாகவுள்ளது.
கூட்டாட்சி முறைமையைக் கொண்ட பிரேசிலின் கல்வி முகா. மைத்துவம் மத்திய அரசு, கூட்டாட்சி அரசு, மாநகராட்சிகள் என்ற வகையிலே பன்முகமாக்கப்பட்டுள்ளது. "பிரேசில் மக்களே விழித்தெழுங்கள்! பாடசாலையிலே கற்பதற்குரிய காலம் வந்துவிட்டது" என்ற நிகழ்ச்சித் திட்டம் பாடசாலையின் செயற்பாடுகளுக்குப் புத்தூக்கமளித்தலையும், சமூகப் பங்குபற்றலை வளப்படுத்துவதாகவுமுள்ளது. "பிரேசில் மக்களே மனந்திறந்து பேசுங்கள்" என்ற இன்னொரு நிகழ்ச்சித்திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தனியார் ஒத்துழைப்புடன் மெளனப் பண்பாட்டை உடைத்து அனைவரையும் பங்குபற்றவைக்கும் திட்டமாக இது அமைக்கப்பட்டுள்ளது.
பிரேசிலின் வடகிழக்குப் பிரதேசம் பல்வேறு பின்னடைவுகளைக் கொண்ட நிலையில் இருப்பதனால் அதனைக் குவியப்படுத்தி முன்னேற்றுவதற்குரிய திட்டங்களும் சமகாலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கல்வியில் எத்தகைய முன்னேற்றகரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் "நிர்வாக நாட்டுக்கும்," "யதார்த்த நாட்டுக்கும்" இடையே முரண்பாடுகள் தொடர்ந்த வண்ணமுள்ளன என ஆய்வாளர் குறிப்பிடுவர்.
இலங்கையின் கல்வி மீளமைப்புக்குரிய அனுபவங்களைப் பெற்றுக் கொள்வதற்கு ஜப்பான், சீனா, பிரேசில் ஆகிய நாடுகளின் கல்விச் செயற்பாடுகள் பயன்மிக்க எடுத்துக் காட்டுக்களாக அமைகின்றன. தாய்மொழிக் கல்வியை வளர்த்து வலுவூட்டிவரும் ஜப்பானிய அனுபவங்கள், கல்விச் செயற்பாட்டில் சீனா முன்வைத்துள்ள ஐந்து பெரும் தரிசனங்கள், பிரேசில் அண்மைக்காலமாக மேற்கொண்டுவரும் விரிவாக்கல் நடவடிக்கைகள் முதலியவை பற்றிச்சிந்தித்து ஆய்ந்து அறிதல் சமூகப் பயனுடையதாகும்.
இலங்கையின் தாய்மொழிக் கல்வி நடவடிக்கைகள் மீது விடுக்கப்படும் சவால்களும், கல்வி செயற்பாடுகளைத் தனியார் மயப்படுத்தும் உந்தல்களும், கல்விச் செயல்முறையின் நிராகரிப்புக்கு உள்ளாகும் மாணவரின் நிலையும், அனுகூலம் மிக்கோரை மேலும் வளம் படுத்தும் செயற்பாடுகளும் உடனடியான கவனத்தை ஏற்படுத்துகின்றன.
- 37

Page 21
கோளமயவியாபார எழுத்தறிவு
சமகால அறிவுப் போக்கிலும் கற்பித்தற் போக்கிலும் மாற்றங்கள் நிகழத் தொடங்கியுள்ளன. வேறுவகையான அறிவு வேறுவகையான விசையுடனும் வேகத்துடனும் செயற்படத் தொடங்கியுள்ளது. உதாரணமாக தொழில்நுட்ப அறிவின்வேகம் இலக்கிய அறிவின் வேகத்தை விஞ்சும் வகையில் இயங்கிக் கொண்டிருக்கின்றது. அறிவின் செயற்பாடுகள் சார்பு நிலைக்கு உட்டபட்டவை. ஆற்றுகையை (Performativity) அடிப்படையாகக் கொண்டே அறிவின் அடிப்படையினை மதிப்பீடு செய்யமுடியும் என்பது பின்னவீனத்துவ வாதிகளுள் ஒருவராகிய லியோராட்டின் கருத்து. (Lyotard, (1984) The post modern Condition, Manchesteruniversity press, Manchester) இதனால் குறிப்பிட்ட சந்தர்ப்பத்திலும் நேரத்திலும் மட்டுமே அறிவு உண்மைத்தன்மை கொண்டதாக இருக்கும் என்பது அவரது வலியுறுத்தல்.
ஆனால் மார்க்சிய கண்ணோட்டத்தில் அறிவு சமூக இருப்பின் வெளிப்பாடாக மேலெழுதலும், அறிவுக்கும் கருத்தியலுக்குமுள்ள தொடர்புகளும் வலியுறுத்தப்படுகின்றன. உதாரணமாக சுரண்டுவோர் தமக்குச் சார்பான அறிவுப் பலத்தைக் கட்டியெழுப்புதலும், சுரண்டப்படுவோர் அவற்றுக்கு அறைகூவல்விடுக்கும் அறிவுப்பலத்தை உருவாக்குதலும் நடப்பியல் வெளிப்பாடுகளாகவுள்ளன. மார்க்சிய அறிகையில் அறிவை இனங்காணலில் கருத்து வினைப்பாடு (Discoursre) என்பதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகின்றது.
சமூக இருப்பால் மனித உணர்வுகள் உருவாக்கப்படுகின்றன. அறிவின் ஆக்கத்தில் உழைப்பின் முக்கியத்துவத்தை மார்க்சியம் வலியுறுத்தியுள்ளது. சுரண்டலுக்கு அறிவு கருவியாக்கப்படுதலை போலோ பிறேறி, மிசேல்பூக்கோ போன்றோர் விரிவாக விளக்க முயன்றனர். ஒடுக்குமுறைக்கு அறிவு எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது என்பதை போலோ பிறேறி "ஒடுக்கப்பட்டவர்களுக்கான gdiflu lib" (Pedagogy of the oppressed) 6T6ölp Bré5(36) 66TId5560TITii. அறிவுக்கும் அதிகாரத்துக்குமுள்ள தொடர்புகளை மிசேல் பூக்கோ தாம் எழுதிய நூல்களிலும் கட்டுரைகரிேலும் பலகோணங்களிலே விளக்கியுள்ளார்.
-38 -

சமூக இருப்பே அறிவின் இருப்பாக மாற்றமுறுகின்றது.
அண்மைக்காலத்து ஆய்வாளர்கள் "சமூக மூலதனம்" (Social Capital) என்ற ஓர் எண்ணக்கருவை முன்வைத்துள்ளனர். (Giddens, (1998) The Third way, Poliotypress, Cambridge) depas (p5ugb6OTib என்பது சமூக அடிமட்டத்து மக்களை, சமூக நிராகரிப்புக்கு உள்ளான மக்களை, குவியப்படுத்தும் ஓர் அறிகை முறையாக உருவாக்கப்பட்டுள்ளது. பெரும் சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றும் நடத்தை உருவாக்கத்துடன் இணைந்ததாக இக்கருத்து வலியுறுத்தப்படுகின்றது. தொடர்பாடல் இணைப்பு, பொதுநியமங்கள், பொதுநோக்கங்களுக்குரிய இணக்கமுறும் தொழிற்பாடுகளை முன்னெடுக்கும் செயற்பாடுகள் சமூக நியமங்களின் அடிப்படையில் சமூக மூலதனம் விளக்கப்படும் பொழுது நியமங்களைக் கல்விச் செயல் முறையால் உருவாக்கிவரும் உயர் மத்தியதர வகுப்பினரே அனுகூலங்களைப் பெற்றுக் கொள்வார்கள் என்பதை மனங்கொள்ள வேண்டியுள்ளது.
9inj6d5 60ttgs (ogbirgsbó6i (Knowledge In stries) 9nj6 (pö760LDgóg56łub (Knowledge Management) (p ATE) 6760ötó00Täகருக்கள் சந்தைப்பொருளாதார வளர்ச்சியினதும், கோளமயமாக்கலினதும் வெளிப்பாடுகளாகவுள்ளன. பெரும் கம்பனிகள் தாமே பல்கலைக்கழகங்களை இயக்கத் தொடங்கியுள்ளன. கூட்டிணைப்புப் Lu6ö đ560d6Dái đ5pét5stã đ56 (Coorporate Universities) 6T 6ör smp Liguu கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. உலக சந்தையில் வெற்றிகர. மாகத் தொழிற்படவும், இலாபமீட்டவும் கம்பனிகளதும் பல்கலைக்கழகங்களினதும் கூட்டிணைப்பு வலிமையான கட்டமைப்பாக மாறியுள்ளது.
பல்கலைக்கழகக் கற்கை நெறிகளிலும், பாடத்திட்ட ஆக்கங்களிலும் கம்பனிகளினது நேரடியான தலையீடு வலுப்பெறத் தொடங்கி. யுள்ளது. தமக்குத் தேவைப்படும் தொழில்களுக்குரிய ஆற்றல்மிக்கோரை உருவாக்குவதற்குக் கம்பனிகள் பல்கலைக்கழகங்களைக் கருவிகளாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. அனைத்துப் பட்டதாரிகளுக்கும் கம்பனிகள் பற்றிய நேர்க்காட்சிகளை உருவாக்கும் வகையில் கலைத்திட்டம் நெறிப்படுத்தப்படுகின்றது. புதிய பண்டங்களை உருவாக்குவதற்குரிய ஆராய்ச்சிகள், புதிய பொறி. களை வடிவமைப்பதற்குரிய ஆராய்ச்சிகள். நுகர்ச்சியாளரைச் சென்றடைவதற்குரிய புதிய அணுகுமுறைகள் பற்றிய ஆராய்ச்சிகள்
- 39

Page 22
முதலியவற்றை மேற்கொள்ளுமாறு பல்கலைக்கழகங்கள் தூண்டிவிடவும், உற்சாகமளிக்கவும்படுகின்றன.
உலக சந்தையின் விரிவாக்கத்தின் நேர்க்காட்சிகளை வளர்க்கும் நடவடிக்கைகளுள் ஒன்றாக "கோளமயம் எழுத்தறிவு" (Global Business Literacy) என்ற கல்விச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தகவல் சமூகத்தில் எவ்வாறு கற்றுக் கொள்ளல் என்ற விடயம் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டவர்கள் தகவலும் தொடர்பாடலும் தொடர்பான தொழில்நுட்பவியல் (ICT) என்ற இயலை உருவாக்கியுள்ளனர். கற்கும் தொடர்பாடல் இயல்புகளை மாற்றுதல், கற்றலுக்கான பல புதிய சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தருதல் முதலியவை இந்த இயலில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. (Peter Jarvis, (2001) The age of Learning, London, Kogan Page) 35667& செயற்பாடுகளைத் தனியார் மயப்படுத்தலில் மேற்கொள்ளப்பட்ட புரட்சியாக தகவலும் தொடர்பாலும் தொடர்பான நுட்பவியல் (ICT) கருதப்படுகின்றது. நன்கு வழிப்படுத்தப்பட்ட முறையிலே தனியாள் ஒருவர் கற்றல் அலகுகளைக் கொள்வனவு செய்யலாம். (Purchasing Units of Learning) என்று கூறப்படுகின்றது. (இந்தச் சொற்றொடரே கல்வியின் வர்த்தக மயமாக்கப்பட்ட பண்பை புலப்படுத்துகின்றது)
மேற்கூறிய கற்பித்தல் நடவடிக்கை கல்விக்கான செலவைக் கட்டுப்படுத்தும் உபாயமாகின்றது. கோளமயமாக்கலின் நேரடியான தாக்கம் கல்விக்கான ஆசிரியச் செலவுகளைக் குறைத்து கல்வி நிறுவனங்களின் இலாபமீட்டலை அதிகரித்தலுமாகும். தகவலும் தொடர்பாடலும் தொடர்பான நுட்பவியல் ஓர் ஆசிரியர் முன்னரிலும் கூடுதலான எண்ணிக்கை கொண்டவர்களான மாணவர்களுக்குக் கற்பிக்கக்கூடிய ஏற்பாட்டைச் செய்கின்றது. இந்த அனுகூலம் ஆசிரியர்களுக்குச் சென்றடையவில்லை. ஆசிரியர்களுக்குரிய கொடுப்பனவுகள் இந்நிலையில் சமாந்தரமாக அதிகரிக்கவில்லை. இந்த நுட்பவியல் (ICT) ஆள்புல எல்லைகளையும் கடந்தவகையில், உலகளாவிய முறையில் கல்வியை முன்னெடுத்துச் செல்கின்றது. ஆனால் இணையத்தளங்களுக்குக் கட்டணம் செலுத்தி அறிவை நுகர்ந்து கொள்ளும் முறை வளர்ச்சியடைந்து செல்லல் கல்வியை நுகர்வோருக்குரிய செலவுகளை அதிகரிக்கச் செய்கின்றது. அனுகூலம்மிக்கோருக்கே தரமான கல்வி என்ற நடைமுறை மேலும்
- 40

வலிமையாக்கப்படுகின்றது. கடன் அட்டைகளைச் செலுத்தியே இணையத்தளங்களில் அறிவை நுகர வேண்டியுள்ளது.
இச் செயல்முறையின் உளவியல் மயப்பட்ட இன்னொரு விளைவு DIT 60076) i uDgöguf6ö "Dot. Com Hysteria"6T6öism) D 67īgjögöITđöđ5gjö6ODg5 ஏற்படுதலாகும். விரைந்து வளரும் கல்விச் சந்தையிலே நின்று நிலைப்பதற்கு இணையத்தளங்கள் உடனடி உடனடியான புத்தாக்கங்களை அறிமுகப்படுத்தவேண்டியுள்ளது. இந்நிலையில் புத்தாக்கங்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் பித்து (Mania) என்ற நிலைக்கும் மாறி விடுகின்றது.
தரமேம்பாடுடைய ஒர் இதவடிவத்தை (Modve) உருவாக்கிக் கணினிப் பதிவாக மாற்றும் பொழுது அதன் உற்பத்திச் செலவு அதிகரிக்கின்றது. இந்த அதிகரித்த செலவு இலாப எல்லைகளுடன் நுகர்ச்சியாளராகிய மாணவர் மீது சுமத்தி விடப்படுகின்றது. கல்வி நிறுவனங்கள் வர்த்தகமாக்கலின் தீவிர பிடிக்குள் அகப்பட்டு "9.6disabibafab6fr" (Knowledge Companies) gas LDITsjவிடுகின்றன. ዶ
கோளமயமாக்கற் செயற்பாடுகளும், நவீன சந்தைப் பொருளாதாரமும் ஆபத்து (Risk) என்ற பாரம்பரியமான எண்ணக் கருவில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. முதலாளிகளுக்குக் கிடைக்கும் இலாபம் ஆபத்தைத் தாங்குவதற்கான வெகுமதி என்பது பாரம்பரியமான பொருளாதார நிபுணர்களின் கருத்து. இன்று 'ஆபத்து' என்பது இலகுவாக நுகர்ச்சியாளர் மீது சுமத்திவிடப்படும் செயற்பாடாக மாறியுள்ளது.
சந்தைப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் சிந்தனையாளர்கள் '6760)gbujib dibodybdisg, 67GBTilab6ir' (Leave it to the market) 6T6isp ஒலிப்பை கல்வி, மருத்துவம் என்ற மானிட சேவைத்துறைகளிலும் தீவிரமாக வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர். வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களின் வறுமைக்குரிய சுரண்டற் காரணிகளை மூடி மறைக்கும் அறிகைச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஒடுக்குமுறைக்கும் வறுமைக்கும் உட்பட்டவர்கள் சோம்பேறித்தனம் (Lazy) உடையவர்கள், வேலை செய்யக் கூச்சப்படுபவர்கள் (Work Shy) என்றவாறான பெயர்சூட்டலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை மேற்கூறிய கருத்தை வலியுறுத்துகின்றது.
- 4 -

Page 23
பாடசாலை பற்றிய பாரம்பரியமான எண்ணக்கருவில் மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன. பாடசாலைகளையும் தொழில் துறைகளையும் நெருங்கிய இணக்கத்துக்குக் கொண்டுவருதல், வேலை உலகினுக்குப் பொருந்தக் கூடியதாகக் கல்வியைத் திறந்துவிடுதல், பாடசாலைகளுக்கும் வர்த்தக நிறுவனங்களுக்குமிடையேயுள்ள கூட்டிணைப்பை வளர்த்தெடுத்தல் என்றவாறு ஐரோப்பிய ஆணையம் (p6760)6);55 BCBg5g5dd56it (European Commission (1995) Teaching And Learning, Brussels, European Commission) (Sabit 67TLDLLILDITdisab656ir விசைகளால் உலகம் தழுவிய கருத்துக்களாக இவை மாற்றப்படுகின்றன. "வீடும் பாடசாலையும்" (Home School Links) என்ற பாரம்பரியமான இணைப்பு இன்று கம்பனியும் பாடசாலையும் என்ற இணைப்பாக (Company School Links) மாற்றப்பட்டுள்ளது. கம்பனிகளோடு கூடுதலான தொடர்புகளை வைத்திருக்கும் பாடசாலைகளே மேம்பட்ட செயற்பாடுகளைக் கொண்டவை என்ற படிமம் உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள பெரும் பாடசாலைகள் ஏற்கனவே இந்நடவடிக்கைகளில் இறங்கிச் செயற்படத் தொடங்கிவிட்டன.
கோளமயமாக்கலின் அழுத்தங்கள் கல்வி என்ற நிலையிலிருந்து பயிற்சி என்பதை (Training) நோக்கித் திரும்பியுள்ளது. தொழில்களை மத்தியாகக் கொண்ட கற்கை நெறிகள் பட்டப்படிப்பு மட்டத்தில் மட்டுமன்றி பட்டப்பின்படிப்பு மட்டங்களிலும் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன. அறிவுச் சமூகம் (Knowledge Society) என்ற நவீன தொடர் குறித்த தொழிலுக்குரிய பயிற்சியைப் பெற்ற சமூகமாகவே கருதப்படுகின்றது. தொடர் கல்வி என்பது தொடர் தொழிலுக்குரிய கல்வியாக மாற்றப்பட்டு வருகின்றது. மாணவர் என்ற பழைய எண்ணக்கரு கைவிடப்பட்டு துணை வேண்டுனர் (Clients) என்ற புதிய எண்ணக்கரு முன்மொழியப்படுகின்றது. கற்றல் என்பது தனிநபர் ஒருவரின் நுகர்ச்சிச் செயற்பாடு என வலியுறுத்தப்படுகின்றது. கற்றல் சந்தை கற்கும் சமூகத்தின் குறியீடாக ஆக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் மயப்பட்ட கற்றலே யதார்த்தமான கற்றல் என்ற மாற்றத்துக்கு (Certificated Learning Becomes Real Learning) (p6ör@6OTBáä5&bi uLu (B6iT6TTg5. அறிவதற்குக் கற்றல், அறிவுக்குக் கற்றல் மனநிறைவுக்குக்கற்றல், என்பவை புறந்தள்ளப்படுகின்றன. கற்கும் அறிவின் ஆழம் முக்கியமல்ல சான்றிதழே முக்கியம் என்பது வலியுறுத்தப்படுகின்றது.
வேலை வழங்கும் தனியார் நிறுவனங்களைப் பொறுத்தவரை மானிடப்பண்பு பாடங்கள் மற்றும் கலைப்பாடங்களைக் கற்றுப் பட்டம்
- 42

பெற்றவர்கள் வேண்டப்படாதவர்களாகக் கணிக்கப்படுகின்றனர். உயர்கல்விக்கான கொள்கைத் திட்டங்களை உருவாக்கும் பொழுது தனியார் உற்பத்தி நிறுவனங்களைச் சார்ந்தவர்களின் மதியுரைகளுக்கே முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது.
உயர்கல்வி, தொழில்நுட்பக் கல்வி, தொழில் சார்கல்வி, வாண்மைக்கல்வி முதலியவை வயது வேறுபாடின்றி, சமூக அந்தஸ்து வேறுபாடின்றி அனைவருக்கும் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் சமூகத்தின் தாழ்மட்டங்களில் உள்ளவர்கள் இந்த வாய்ப்புக்களைப் பயன்படுத்தி கற்று மேலுயர முடியும் என்று கூறப்படுவதிலே ஒரு பெரிய பொம்மை உட்பொதிந்துள்ளது. உயர் பட்டங்கள், சான்றிதழ்கள் முதலியவற்றைப் பெற்றுக் கொள்வதற்குக் கல்விச் சந்தையிலே அதிக பணத்தைச் செலவு செய்ய வேண்டியுள்ளது. இந்நிலையில் சான்றிதழ்களும் பட்டங்களும் பெறுதல் சாமானியர்களுக்கு நடைமுறையில் எட்டாதவையாகவே அமைகின்றன. பணவசதியுடையோரே இந்தப்பன்முகப்பட்ட அனுகூலங்களை அனுபவிக்கும் வளமான நிலையில் உள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
உற்பத்தி நிறுவனங்களின் வேகத்துக்குக் கல்வி நிறுவனங்கள் ஈடுகொடுக்க முடியாத நிலையில் உள்ளன என்ற குற்றச்சாட்டும் நிறுவனங்களால் முன்வைக்கப்படுகின்றது. இதன் பொருட்டு கற்பிப்போரின் வினைத்திறன்களை அதிகரிப்பதற்கான திட்டம், (Staffdevelopment Programme) Lil' Liugilisir G IIT(bg525i IUT'60Lulub தரத்தையும் முன்னேற்றுவதற்கான திட்டம் (Irque) தர உறுதிப்பாட்டுத்திட்டங்கள் முதலிய பல திட்டங்கள் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாட்டின் கூட்டுமொத்தமான பெளதிக வளங்கள், மனிதவளம், வருமான பங்கீட்டில் சமத்துவம், சுரண்டல் அற்ற சமூகத்தின் உருவாக்கம், யாதார்த்த நிலையில் தேசிய இனங்களின் முழுமையான பங்குபற்றல், முதலியவற்றைப் பரந்த நோக்கில், அணுகாது கம்பனிகளுக்கு உடனடியான அனுகூலங்களை ஏற்படுத்தக்கூடிய நோக்கங்களே உயர்கல்வியில் இலங்கையிலே அமுலாக்கம் செய்யப்படுகின்றன.
பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் கலைத் திட்டங்களில் மேலைத்தேய கலாசாரத்தின் செல்வாக்கு படிப்படியாக ஊட்டப்பட்டு வருகின்றது. உதாரணமாக பல்கலைக்கழகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொடர்தொழில் ஆற்றுப்படுத்தற்
- 43

Page 24
சேவையில் (Career Guidance) பெரிய கம்பனிகளில் நுழைவு உன்னதங்கள் பற்றி விளக்கப்படுகின்றதேயன்றி, இலங்கையின் மூலவளங்களின் பயன்பாட்டை முன்னெடுக்கும் தொழில்கள் பற்றியும், சமூக நன்மைகளை முன்னெடுக்கும் தொழில்கள் பற்றியும் விளக்குதல் அரிதாகவுள்ளது. ஆங்கில அறிவுக்கும் தகவல் தொழில்நுட்ப அறிவுக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம், இலங்கையின் வளம்சார் தொழில்களுக்கும்.சமூக நீதிக்குமுள்ள தொடர்புகளுக்கு வழங்கப்படுவதில்லை.
பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சீர்மியம் (Counselling) முற்றுமுழுதாக மேலைத்தேய புலக்காட்சினுடாக வளர்க்கப்படும் நிலையே காணப்படுகின்றது. தியானமும் ஆசனங்களும் கூட மேலைத்தேய நூல்களினுடான புலக் காட்சி வழியாகவே முன்னெடுக்கப்படுகின்றன. சீர்மியமேலைத் தேய அணுகுமுறைகளின் ஊடுருவல் ஏற்கனவே ஆய்வாளர்களினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (Intervention, (2005) Vol:3 : No -2)
புதிய சிந்தனைகளை, புத் தாக்கம் தரும் கருத்துக்களை, முன்வைக்கும் ஒருவன் பட்டதாரிமாணவன் சிறப்புச் சித்தியினை (Class) பெறாது வெளிவீசப்படுவதற்குரிய சந்தர்ப்பங்களே அதிகமாகக் காணப்படுகின்றன. அதே வேளை மேலதிக தேடல்களை மேற்கொள்ளாது வழங்கிய பாடக் குறிப்புக்களை அப்படியே மீள ஒப்புவிக்கும் திறன் கொண்டவர்கள் சிறப்புச் சித்திகளை ஈட்டி அவர்களே அறிவு வழங்கலை முன்னெடுக்கும் வாரிசுகளாக நியமிக்கப்படுகின்றனர். இந்த இறுகிய கட்டமைப்பை பல்தேசிய கம்பனிகளும் உள்ளுர்க்கம்பனிகளும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கும் பொழுது அவர்கள் பரீட்சைகளிலே உயர்ந்த புள்ளிகளைப் பெற்றிருந்தாலும் நிரந்தர நியமனங்களை வழங்காது ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே வேலையில் அமர்த்தப்படுகின்றனர். தொழிற்பாடுகளில் வினைத்திறன் காட்டப்படாதவிடத்து அவர்களின் சான்றிதழினைக் கருத்திற் கொள்ளாது வெளியேற்றப்படுகின்றனர். இது "அமர்த்துதலும் துரத்துதலும்" என்ற தொடரால் கோளமயப் பொருளாதாரத்திலே கூறப்படுகின்றது.
அறிவுக்கைத் தொழிலின் சமகால வளர்ச்சியை விளங்கிக்கொள்ளல் புதிய கல்வித்திட்டங்களையும், கலைத்திட்டங்களையும்
- 44

உருவாக்கிக் கொள்வதற்குரிய தேவையாகவுள்ளது. இலங்கையின் பரந்துபட்ட மனிதவளம், மற்றும் இயற்கைவளம், பன்முகத்தன்மை கொண்ட பண்பாட்டுக்கோலங்கள், வளமான தேசிய மொழிகள் என்ற அனைத்தையும் சமகால உலக விசைகளையும் கருத்திலே கொண்டு செறிவும் செழுமையும் மிக்க கல்வித்திட்டத்தை அனைத்தும் உருவாக்குதல் வேண்டும்.
- 45

Page 25
சிறார் கல்வியும் பின்கட்டமைப்பு இயலும்:
சிறார் கல்விதொடர்பான நியாயப்பாடு குன்றிய பல தொன்மங்கள் (Myths) நடைமுறையில் நிலவி வருவதாக பின்கட்டமைப்பியலாளர் (Post Structuralists) சுட்டிக்காட்டுகின்றனர். சமகாலத்திலே சிறார் கல்வியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள விருத்தி நிலைக்குப் GLITCBg55iil ITGB60Lu Gétu 6i BT6i56i (Developmentally Appropriate Practices) என்ற கலைத்திட்ட வடிவமைப்பையும் அவர்கள் திறனாய்வுக்கு உள்ளாக்குகின்றனர். நடைமுறையில் உள்ள சிறார் கல்வி தொடர்பான செயற்பாடுகளுக்கு பன்முகமான மாற்று அணுகுமுறைகளை முன்னெடுத்தல் வேண்டும் என்பதையும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
சிறார்கல்வி நடைமுறைகளிலே பின்வரும் குறைபாடுகள் காணப்படுகின்றன.
来 சிறாரை ஒன்றுமறியாதவர்களாகக் (Innocence) கருதியும் வளர்ந்தோரை மேலோங்கியோராக எண்ணியும் கல்வியை வழங்குதல்.
* உயரியல் சார்ந்த இயற்கை நெறிப்பாட்டுக்கு (Naturalness)
அதிக முக்கியத்துவம் கொடுத்து, இயற்பண்புவாத அணுகுமுறைகளைக் கற்பித்தலில் மிகையாகப் பயன்படுத்துதல்.
米 சிறார் மையக்கலைத்திட்டமும் கற்பித்தலியலும், அவர்களை ஒழுங்கமைக்கத் (Regulates) துணை போகின்றனவேயன்றி விடுவிக்க உதவி செய்யவில்லை.
米 பால்நிலை வேறுபாடுகளை வலிதாக்கும் வகையிலான செயற்பாடுகள் அவ்வப்போது மேற்கொள்ளப்படுகின்றன.
来 ஆண்நிலை ஓங்கல் மறைபொருட்கலைத்திட்ட (Hidden Cur
riculum) செயற்பாடுகளில் ஊடுருவி நிற்கின்றது.
- 46

பால்நிலையை ஓர் எழுபொருளாக (Issue) சிறாருக்குரிய கற்பித்தலில் முன்னெடுக்கப்படுதல் இல்லை.
sk சிறார்கல்வியில் மரபுவழி, மற்றும் நவீன அணுகுமுறைகள் சமூகத்தில் அனுகூலம் மிக்கோருக்கே வாய்ப்பானதாக இருக்கும் நிலைக்குரிய மாற்று நடவடிக்கைகள் வறிதாக இருத்தல்.
来 செயலூக்க மற்ற நிலையிலும் (Passive) தெறித்தல் (Reflective) அற்ற நிலையிலும் அறிவை உள்வாங்கும் நுகர்ச்சியாளராக சிறாரை மேலோங்கச் செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணமுள்ளன.
k சுயாதினமாகத் தொழிற்படும் நிலையைக் காட்டிலும், சார்ந்திரும் நிலையே (Dependent) கலைத்திட்டத்தின் வழியாகப் பெருமளவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
§ ஆசிரியர்களிடத்து கற்பித்தலியல் தொடர்பான அறிவு வளர்ந்த அளவுக்கு கருத்தியல்கள் (Ideologies) நிலைப்பட்ட திறனாய்வு சார்ந்த அறிவு மேம்பாடு கொள்ளவில்லை.
§ கற்றல் இலக்குகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் செயல்முறைகளுக்கு (Processes) கொடுக்கப்படுதல் இல்லை.
சிறார் கல்வித்திட்டங்களை வடிவமைக்கும் பொழுது மேற்கூறிய குறைபாடுகளை உடனடியான கவனத்துக்கு எடுக்க வேண்டியுள்ளது. உலகளாவிய முறையில் சிறுவர்க்கான கலைத்திட்டம் காலத்துக்குக் காலம் புதுப்பிக்கப்பட்டு வந்தாலும் திறனாய்வுக்கு உட்படுத்த வேண்டிய குறைபாடுகள் அவற்றிலே காணப்படுதலையும் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.
சிறார்க்குரிய நவீன கலைத்திட்டவடிவங்களுள் ஒன்றாக விருத்தி நிலைக்குரிய பொருத்தப்பாடுகளை உள்ளடக்கிய செயற்பாடுகளைக் கொண்ட கலைத்திட்டம் (DAP) ஐ.அமெரிக்க கலைத் திட்டவிய. லாளரால் முன்வைக்கப்பட்டது. (Seefeldt, L. (1987) Todays Kinderfarten. Pleasure or Preasure, The Principal, Vol: 64:No5, pp 1216) அக்கலைத்திட்டத்தில் பின்வரும் சிறப்பியல்புகள் சுட்டிக்காட்டப்படுகின்றன.
- 47

Page 26
38; திறந்த முடிவுகளைக் Open Endedகொண்ட கற்றல் பொருள்.
களையும் அனுபவங்களையும் கையளித்தல்.
3ද கற்றல் வெளிப்பாடுகளைக் காட்டிலும் கற்கும் செயல்
முறைகளைக் குவியப்படுத்துதல்.
米 சிறாரின் தெரிவுக்கும், சுயநெறிப்பட்ட கற்றலுக்கும் தூண்டுதலளிக்கும் வகையில் கற்றற் பொருட்களையும் பெளதிக சூழலையும் ஒழுங்கமைத்தல்.
米 கற்பதற்குரிய சுய ஊக்கல் கொண்டவர்களாக சிறார் விளங்குகின்றனர் என்ற எடுகோளைக் கொண்டிருத்தல்.
米 பொருத்தமான கற்றல் சாதனங்களை சிறாரின் வயதுக்கும்,
படிநிலை வளர்ச்சிக்கும் ஏற்றவாறு பயன்படுத்தும் அறிவை ஆசிரியர் கொண்டிருத்தல்.
米 தனியாள் தேவைகளையும் அனுபவங்களையும்
குவியப்படுத்துதல்.
米 மாணவரின் விருப்பங்களுக்குப் பொருத்தமான திடமானதும்
காட்சி நிலைப்பட்டதுமான அனுபவங்களைத் தருதல்.
米 சிறாரின் விருத்தி நிலைத் தேவைகளையும் உள்ளார்ந்த ஆற்றல்களையும் அவதானித்தும் ஆழவிளங்கியும் எவற்றைக் கற்பித்தல் வேண்டுமென்ற தீர்மானங்களை எடுத்தல்.
sk சிறாரின் கற்றலிலும் மேம்பாட்டிலும் உற்சாகத்தை தரவல்ல
மத்திய ஊடகமாக விளையாட்டைப் பயன்படுத்துதல்.
ஆழ்ந்து நோக்கும்பொழுது மேற்குறித்த செயற்பாடுகள் ஜீன் பியாசே தந்த கருத்துக்களை அடியொற்றி ஆக்கப்பட்டுள்ளமையைக் காணலாம். விஞ்ஞானிகளாக தமக்குரிய அறிகைக் கட்டமைப்புக்களை சிறார் ஏற்படுத்திக் கொள்கின்றார்கள் என்ற எடுகோளை அடிப்படையாகக் கொண்டே மேற்குறித்த செயற்பாடுகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. ஆனால் இவற்றிலே பலஉள்ளார்ந்த குறைபாடுகளும் காணப்படுகின்றன. கருத்தியலில் மரபுவழியாக மேற்கொள்ளப்பட்டுவந்த நடவடிக்கைகளும் அவற்றைத் தொடர்ந்து பியாசே முன்மொழிந்த கருத்துக்களின் மட்டுப்பாடுகளும் பின் கட்டமைப்பியலாளர் தமது கருத்துக்களை முன்மொழிவதற்குக் காரணிகளாக அமைந்தன.
- 48

மரபு வழிக் கருத்துக்களிலும் பியாசேயின் கருத்துக்களிலும் பின்வரும் பொதுவான குறைபாடுகள் காணப்படுகின்றன.
牢 உடல் உள ஆற்றல்களில் அறைகூவல் விடுக்கப்பட்ட சிறாரின்
கல்விக்கான அத்தியாவசியமான கட்டமைப்புக்களையும், வழிகாட்டல்களையும் அவர்கள் போதுமான அளவில் வழங்கவில்லை.
அவை மத்திய தர வகுப்பினரின் இலக்குகள், நம்பிக்கைகள், விழுமியங்கள் முதலியவற்றை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கற்பித்தல் நடவடிக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
* சமூக ஏற்றத்தாழ்வுகளையும், அநீதிகளையும் தொடர்ந்து தக்கவைக்கும் செயற்பாடுகளை அவை கொண்டுள்ளன.
* பால்நிலை ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதற்குப் பதிலாக, நீடித்து
நிலைப்பதற்கான செயற்பாடுகளையே முன்னெடுத்துள்ளன.
sk கற்றலில் நிகழும் சமூக முரண்பாட்டுவிசைகளை அவை
புறக்கணித்துள்ளன.
来源 வைக்கோட்சி குறிப்பிட்டுள்ள சிறார் விருத்தியின் பலபரிமாண
நோக்குகளைப் புறக்கணித்துவிட்டன.
தொகுத்து நோக்கும் பொழுது சிறாரின் கற்றல் தொடர்பான பாரம்பரியமான அணுகுமுறைகளும், பியாசேயின் முன்மொழிவுகளும், ஒருதலைப்பட்சமானவையாக இருப்பதுடன், காலவதியான நிலையை அடைந்துவிட்டன என்றே குறிப்பிட வேண்டியுள்ளது. சமூக முரண்பாடுகளைத் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியாத அவலமே அவற்றில் ஊடுருவியுள்ளன.
பின்கட்டமைப்பியலாளர் சிறார் கல்வி தொடர்பான மிகவும் தீவிரமானதும், மரபுவழி அடிப்படைகளையே வினாவுக்கு உள்ளக்குவதுமான கருத்துக்களை முன்மொழிகின்றார்கள். முதலில் அவர்கள் குறிப்பிடும் கருத்துவினைப்பாடு (Discourse) என்ற எண்ணக்கருவை விளங்கிக் கொள்ளல் வேண்டும். மொழி, கருத்து, தனிமனித நிலை, சமூகம் ஆகியவற்றுக்கிடையே தொடர்புகளையும், இடைவினைகளையும் உள்ளடக்கி நிற்பதே கருத்து வினைப்பாடு ஆகும். நிகழ்ச்சிகளுக்கு இயலுமான வரையில் விளக்கங் கொடுத்தலும், நடப்பியலுக்கு இயலுமானவரையில் கருத்தமைத்தலும், கருத்து
- 49

Page 27
வினைப்பாட்டுடன் இணைந்த அறிகைச் செயல் முறைகளாகும். குறிப்பிட்ட வரலாற்று நிலையிலும், பண்பாட்டு நிலையிலும் அவற்றுக்கு மட்டுமே உரிய குறித்துரைப்புக் கொண்டதாக கருத்து வினைப்பாடு அமையும். பல்வேறு சிறப்பார்ந்த கற்பித்தற் செயற்பாடுகளில் குறிப்பிட்ட ஒரு செயற்பாடு பலவற்றுள் ஒன்றாக இருக்குமேயன்றி அதுமட்டுமே சிறப்பார்ந்த செயற்பாடாக இருக்கமாட்டாது என்பதை தமது கருத்து வினைப்பாட்டு எண்ணக்கருவால் பின் கட்டமைப்பு வாதிகள் வலியுறுத்துவர்.
மேற்கூறிய கருத்துக்களில் இருந்து பின்கட்டமைப்பியலாளர் மேலும் முன்னேறிச் செல்கின்றார்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் குறிப்பிட்ட நேரத்தில் பல கருத்து வினைப்பாடுகள் சுற்றோட்டத்தில் இருக்கும். அவற்றில் எவை அசிரியர் ஒருவருக்கு கிடைக்கின்றதோ, எவ்வாறு அவற்றை அவர்கள் விளங்கிக் கொள்ளுகின்றார்களோ அவற்றுக்கேற்றவாறு ஆசிரியரது கற்பித்தற் செயற்பாடுகள் விரிவடையும் அல்லது சுருக்கமடையும்.
கருத்து வினைப்பாட்டுக்கும் அதிகாரத்துக்குமுள்ள தொடர்புகளை பின்கட்டமைப்பியலாளராகிய மிசேல் பூக்கோ தெளிவாக 661735,35uisitatistii. (Focault,M (1982) The Subject and Power, Chicago, University of Chicago Press) (5sjilji. L. d5(5gs.gif வினைப்பாடுகள் குறிப்பிட்ட குழுவினரின் அதிகாரத்தைப் பிரயோகிப்பதற்கு ஏற்புடையதாக இருக்கும். ஏனெனில் அதிகாரத்தைப் பிரயோகிப்பவரது சமூகத்தில் அவை அங்கீகரிக்கப்பட்டவையாயும், சரியானவையாயும், பொருத்தப்பாடு கொண்டவையாயும் காணப்படும். இவை நிறுவனப்படுத்தலுக்குச் சார்பாக நின்று அதிகாரத்தை நிலைநிறுத்தவும் தொழிற்படுத்தவும் உதவுகின்றன.
ஆசிரியரைப் பொறுத்தவரை எது சரியென்றும் எது பிழையென்றும் வரையறுத்தல் கற்பித்தலைப் பொறுத்தவரை குறிப்பிட்ட சமூகத்தாற் கட்டமைப்புச் செய்யப்பட்ட கருத்து வினைப்பாட்டுடன் தொடர்புடையதாகக் காணப்படும். இதற்கு ஏற்பவே சிறார் கல்வியும் கட்டமைப்புச் செய்யப்படுகின்றது. குறிப்பிட்ட சில கருத்து வினைப்பாடுகள் குறித்த சமூகச் சூழலில் மேலோங்கியவையாயிருக்கும். இக்காரணத்தால் அவை உண்மையானவை என்றோ, சரியானவை என்றோ முடிவு கொள்ளக்கூடாது.
- 50

சமூக விளைவு கொண்ட எந்த நடத்தையும் அதிகார விளைவு கொண்டவையும், அதிகார நிறுவனப்பலப்படுத்தற் செயற்பாடு கொண்டவையாகவும் அமையும்.
சமகாலத்தில் எல்லா சமூக நிறுவனங்களும் தம்மை வலுப்படுத்திக் கொள்வதற்கும் நீடித்து நிலைத்துக் கொள்வதற்கும் உண்மை பற்றிய அதிகார அணிகளை (Regimes of Truth) உருவாக்கியும் பராமரித்தும் கொண்டு வருகின்றன. தம்மைப் பற்றியும் மற்றவர்களைப் பற்றறியும் எவ்வாறு சிந்திக்க வேண்டும் எவ்வாறு தொழிற்பட வேண்டும் என்பவற்றைப் பற்றியதாக அதிகார அணிகள் அமைந்திருக்கும். சிறார்கல்வி எவ்வாறு கட்டமைப்புச் செய்யப்படல் வேண்டும். எவ்வாறு கற்பித்தல் நிகழ்த்தப்படல் வேண்டும் என்பவற்றை முன்னெடுப்பதற்குரிய உண்மைப்பற்றிய அதிகார அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
சிறார்கல்வி, சிறார் விருத்தி என்று பேசப்படுவது எல்லாம் சமூக உலகம் உண்மைக்காகப் போட்டியிட்டுக் கொடுக்கப்படும் பல்வேறு விளக்கங்களுள் அடங்கி நிற்கின்றன. அவை போட்டியின் வாயிலாக தமது அந்தஸ்தை நிலை நிறுத்திக் கொள்ளுகின்றன. சிறார் கல்வியில் பல்வேறு திட்டங்களும் எண்ணக் கருக்களும் மாற்றீடாகவுள்ளன. குறிப்பிட்ட கற்பித்தற் பொருட்களும், குறிப்பிட்ட வகையில் கற்பித்தற் சாதனங்களை ஒழுங்கமைப்பதும்தான் சரியானவை என்பதல்ல. உண்மைகள் பராமரிக்கப்படுவதற்கும், நிறுவப்படுவதற்கும் அவற்றுக்கு நிறுவன ஆதரவும் தனியாள் ஆதரவும் கிடைக்கப்பெறுகின்றன. அதிகார அணியின் உண்மை பற்றிய அரசியல் சாராம்சத்துடன் நிறுவன ஆதரவு தொடர்புடையது.
உண்மை பற்றிய அதிகார அணியின் அறச் சாராம்சத்துடன் தனியாள் ஆதரவு தொடர்புபட்டு நிற்கின்றது. தம்மைப் பற்றி ஒருவர் எவ்வாறு சிந்திக்க வேண்டும், தாம் எவ்வாறு தொழிற்படல் வேண்டும், மற்றவர்களை எவ்வாறு அணுகுதல் வேண்டும் என்பவை அனைத்தும் உண்மை பற்றிய அதிகார அணியின் வழிப்படுத்தலுக்கு உட்பட்டவையாக அமைகின்றன. இவற்றுக்கு அமைய ஒருவர் சிந்தித்துத் தொழிற்படும் பொழுது அவருடைய நடத்தை, ஏற்புடைய நடத்தையாக, அங்கீகரிக்கப்பட்ட நடத்தையாக, நியம நடத்தையாகக் கொள்ளப்படும். இவ்வாறு ஒருவர் நடந்து கொள்ளும் பொழுது அவருக்கு நிறுவன ஆதரவு கிடைக்கப்பெறும். இந்நிலையில் ஒருவருக்குரிய தனியாள் சாராம்சமும் அரசியல் மற்றும் சமூக சாராம்சமும் ஒன்றிணைந்து கொள்கின்றன.
-51 -

Page 28
மற்றவர்களைப் பற்றி ஒருவர் உருவாக்கிக் கொள்ளும் மனக்கருத்துருவாக்கம், அதிகாரமும், அறிவும்பற்றி அறிந்து கொள்வதற்கு வாய்ப்பளிக்கின்றது.
உண்மைகள் நித்தியமானவை அன்று. போட்டியிடும் பல உண்மைகள் உலகிற் காணப்படுகின்றன. இந்நிலையில் உண்மை பற்றிய பின்வரும் வினாக்கள் அவர்களால் எழுப்பப்படுகின்றன.
- உண்மை என்பது யாது?
- உண்மையால் நன்மை பெறுகின்றவர் யார்?
- உண்மை யாருடைய நலனுக்காக உருவாக்கப்பட்டுள்ளது?
- உண்மையைப் பயன்படுத்தி யார் அதிகாரத்தை வலுப்படுத்துகின்றனர்?
அதிகாரத்திலுள்ளோர் தமது அதிகாரத்தை வலுப்படுத்துவதற்கும் தக்க வைத்துக்கொள்வதற்கும் சிறார் நிலையிலிருந்தே கல்வியை ஒழுங்கமைத்து வருகின்றனர் என்பது பின்கட்டமைப்புக் கருத்து.
பால்நிலையான ஒடுக்குமுறையானது அதிகாரத்தின் பிறிதொரு பரிமாணமாகும். ஆரம்பக்கல்வியில் பால்நிலை ஒடுக்குமுறையை முன்னெடுக்கும் பல செயற்பாடுகள் இடம் பெறுதல் பின் கட்டமைப்பியலாளரால் சுட்டிக்காட்டப்படுகின்றன. அவை:
ck சிறார்கல்வியில் பால்நிலைப் பாத்திரங்களைப் பலநிலைகளிலே
வலியுறுத்தி வேறுபடுத்துதல்.
来 மொழி, ஆடை அணிகலன்கள், மற்றும் நடத்தைகளால்
பால்நிலை வேறுபாடுகளை விசாரிக்கச் செய்தல்
米 பால்நிலைச் சமத்துவம் கல்வியால் ஏற்டுத்தப்பட்டுவிட்டது என்ற
மாயைத் தோற்றத்தை ஏற்படுத்திவிடுதல்.
米 உடற்பலத்தை அதிக அளவு வெளிப்படுத்தும் விளையாட்டுக்களில் ஆண்களை மட்டும் ஈடுபடுத்துதல்.
米 பெண்கள் தொடர்பான அணுகுமுறைகளில் சமூக, பொருளாதார முக்கித்துவங்களைக் குறைத்து உயிரியல் பண்புகளுக்கு அதிக முக்கியத்துவத்தைக் கொடுத்தல்.
- 52

மேற்குறித்த எதிர்மறை நிலைகளின் பின்னணியில் பால்நிலை இனங்காணல் தொடர்பான பின்வரும் கருத்துகளை பின் கட்டமைப்பியலாளர் குறிப்பிடுகின்றனர்.
米 பால்நிலை இனங்காணல் உருவாக்கத்தில் சிறார் செயலூக்கம்
மிக்க பங்கினை வகிக்கின்றார்கள்.
k பால்நிலை இனங்காணலில் அவர்கள் சுதந்திர முகவர்களாகத்
தொழிற்படுவதில்லை.
米 யாதாயினும் ஒருதனி முறையால் மட்டும் சிறார்
அறிவைத்திரட்டிக் கொள்வதில்லை.
米 அதிக அளவுகட்டுப்பாடுகளை உள்ளடக்கிய கருத்து அங்காடியிலேயே சிறார் அறிவைத் தெரிந்தெடுத்துக் கொள்ளுகின்றார்கள்.
ck சிறார் தம்மைப் பற்றிய கருத்துருவாக்கம் செய்து கொள்வதில், பிறருடனான இடைவினைகள் சிறப்பார்ந்த இடத்தைப் பெறகின்றன.
冰 எதிர் சனநாயக நடத்தைகளை மற்றும் அநீதிகளை அறிந்து
கொள்ளக் கூடியதிறன் சிறார்களுக்கு உண்டு. மேற்கூறிய அனைத்துப் பரிமாணங்களையும் தொகுத்து நோக்கி ஒடுக்கு முறை முறைகளுக்கு எதிரான சிறார் கல்விச் செயற்பாடுகளில் பின்வரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படல் வேண்டுமென வலியுறுத்தப்படுகின்றது.
эк தம்மைப் பற்றி நல்லுணர்வு கொள்ளும் செயற்பாடுகளை
சிறார்கல்வியில் ஏற்படுத்துதல்.
t கலைத்திட்ட செயற்பாடுகளில் முழு ஆற்றலுடன் பங்குபற்றுவதற்குரிய கொள்ளளவு ஆற்றலை அவர்களிடத்து வளர்த்தல்.
sk மற்றவர்களுடன் தொடர்புகொள்ளும் பொழுது எது ஏற்புடையது எது ஏற்புடையது அன்று என்று தீர்மானம் எடுக்கக்கூடிய ஆற்றலை சிறாரிடத்து வளர்த்தல்.
米 ஏறுக்குமாறான நடத்தைகளை எதிர்க்கும் ஆற்றல்களை மேம்படுத்தல். திறனாய்வுச் சிந்தனை மற்றும் தெறித்தற் சிந்தனைகளை வளர்த்தல்.
- 53

Page 29
米 பால்நிலை தொடர்பான ஆரோக்கியமான கருத்துப்
பரிமாணங்களை ஏற்படுத்துதல்.
米 எதிர் சனநாயக நடத்தைகளை அம்பலப்படுத்துதல்.
米 சிறார்நோக்கு தொடர்பான கருத்துக்களை பரிமாறிக்
கொள்ளல்.
米 ஒரே நோக்கான அணுகுமுறையினைப் புறந்தள்ளி பன்முக
அணுகுமுறைகளை முன்னெடுத்தல்.
பின் கட்டமைப்பியலாளரின் முன்மொழிவுகளும் அவற்றை உள்வாங்கி மேற்கொள்ளப்பட்டுவரும் சிறார் கல்வி நடவடிக்கைகளும் திறனாய்வு நோக்கில் அணுகுதற்குரியவை. சமகால நிகழ்ச்சிகளை ஆய்வுக்குட்படுத்திய பின்கட்ட்மைப்பியல் தரிசனம் அறிகை நிலையில் பல புதிய புலக்காட்சிகளை ஏற்படுத்தியுள்ளது.
சமகால சமூக பொருளாதார வாழ்க்கைக் கோலங்களில் மேடும் பள்ளமுமான அதிக வீச்சு ஏற்படத் தொடங்கியுள்ளது. வறுமைக் கோட்டின் கீழ்வாழ்வோரின் எண்ணிக்கையும், கல்விச் செயல்முறையில் இருந்து வெளிவீசப்படுவோர் எண்ணிக்கையும், தரமான கல்வியைப் பெறமுடியாது நிராகரிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கையும் பராமரிக்க முடியாத அளவுக்கு உயர்ந்து செல்கின்றன. இந்நிலையில் ஒடுக்கப்பட்டோருக்கு விடிவும் விமோசனமும் தரும் தெளிவான கருத்தியலை நோக்கி நரகவேண்டியுள்ளது.
சமகாலக் கல்வி வளர்ச்சி தொடர்பான பல பரிமாணங்கள் இங்கு நோக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்களும், கல்வி நிர்வாகிகளும் கல்வியோடு தொடர்புடைய சமூகத்தினரும் புதிய வளர்ச்சி நிலைகளை அறிந்திருத்தல். அறிகை நிலையிலும் தொழிற்பாட்டு நிலையிலும் தவிர்க்கவியலாத தேவைகளாகவுள்ளன. பயனுள்ள கருத்து வினைப்பாடுகளுக்கு இவை நுழைவாயில்களாக அமையும். கற்பித்தலியல் காலங்கடந்த தடங்களில் இருந்து முன்னோக்கி நகர்த்தப்படவேண்டியுள்ளது. அறிவினால் தமது சுயநலப்படிமத்தை (EGO) கட்டமைப்புச் செய்வோர் உள்ளனர். புதிய அறிவுப் பெருக்கைச் சமூகத்துக்கு சுவறவிடாது அணைபோடுவோர் ஒரு சாரார். தாம் படித்த காலத்திற் பெற்றுக்கொண்ட அறிவோடு திருப்தியுற்று மேலும் தேட முயலாதவர்கள் இன்னொருசாரார். ஒடுக்கு முறைகளுக்குக் கருவியாக அறிவு பயன்படுத்தலை அறியாதிருப்போர் வேறொரு சாரார்.
- 54

இந்த முரண்பாடுகளினூடே சமகாலக் கல்வி முனைப்படைந்து வருகின்றது. ஆசிரியத்துவம் ஆவல் மிக்க எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கப்படுகின்றது.
REFERENCES
l
10.
11.
Apple, M.(1979 Ideology and Curriculum, London, Routeledge and Kegan Paul.
Beare, H.(2000) Creating the Future School, London Routledge and Falner.
Bowers, C.A. (1993) Education, Cultural myths and ecological crisis, Newyork, state University of Newyork press.
Chomsky, N.(1997) The Spiritual Achievement of Propaganda,Newyork, Several Stories Press.
Cushrman, P.(1990) Towardsa Historical Situated Psychology, American Psychologists 45.5:599-610
Dyson, F, (1981) Disturbing the Universe, London, Pan Books.
Ekins, P.(1992) The Gaia Atlas of Green Economics, Toronto, archor Books.
Latouche,S.(1993) an Exploration of Post Development, London zed Books.
Lovelock, J (1988) The Ages of Gaia, Boston, MA, Landis fame Prers. Macy, J. (1983) Despair and Power in the nuclear Age, Philadelphia, New Society publishers. Manson, M.(1997) A History of the Third world since 1944, Toronto, Lines Margulis, L. (1987) Four Billion years of Evolution from our micro-bial arcestors, London, George. Allew and union. Mitter, S. (1986) Women in Global Economy, London, Pluto Press
Prigogine, I and Stengers, I (1984), Man's New Dialogue with Nature, New York, Bantam.
Quter, Jand Matthoqs (1987), Criticul Pedagogy and Cultural Power, Marsachusetts, Blergin and Carvey.
Sullivan, O. (1999) Transformative Learning, London, Zed Books.
-55

Page 30


Page 31
பேராசிரியர் சபா.ஜெயராசா கல்வியியல் துறைசார்ந்த எழுதி அத்துறைசார் விருத் முதன்மையான பங்கு வகித் கலை, இலக்கியம், உளவிய எனப் பல்வேறு துறைசார் ஊடாடி வருபவர். இவற்றி மற்றும் அறிவு ஆய்வு யாவு புலமைமரபு எத்தகையது தனித்துக் துல்லியமாக வெ மேலும், கலை தத்துவம் பற் விசாரணை, இவரை புதிய பணியில் முழுமையாக ஈடு வைப்பதுடன், கல்வியின் ெ சார்ந்து புதிய புதிய அர்த்தப் நோக்கிக் கவனம் குவிக்கவு தொடர்ந்து புதிய ஆய்வுக்க நோக்கியும் கவனம் கொள்
இன்றுவரை கல்வி உலகில் சபா ஜெயராசா உயிர்ப்புமி ராகவே திகழ்கின்றார்.
தெ மதுசூதனன் பிரதம ஆசிரியர்
Eவிழிڑھئیے
 

நூல்கள் பல ჭვმეtoევზა,
வருபவர் தத்துவம். லங்களுடன் செழுமை
GENTITEErfurf GTi
என்பதைத் ரிப்படுத்தும் றிய தொடர் அறிவுருவாக்கப்
ாருள்கோடல் பாடுகளை
செய்கிறது. origi
த் தூண்டுகிறது.
GB ganrif ffurfi (5 LIG)6otpultai