கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செந்தமிழ் இலக்கண விளக்கம்: முதலாம் பாகம்

Page 1
நூல்
●
鱷 露 唱 §
 


Page 2

பொதுசன் இால கம்
22 MAR 2004 ஆாழ்ப்பாணம்
(ւք 5 6ծ II id L. T & tid
。 ら49*
1.3 (238 | 9 நூலகம்
Curryčia. Er strario *Samosmannsnummings- | ----************
நூலாசிரியர் :
பண்டிதர் க. நாகலிங்கம் Wー○芝、三?

Page 3
g/76och 60uwū செந்தமிழ் இலக்கண விளக்கம்
(opgavardb om ad)
முதற் பதிப்பு I விக்கிரம ஆண்டு சித்திரை மாதம்
ஏப்பிரல் 2000
பிரதிகள் : 1000
பதிப்புரிமை நூலாசிரியருக்கே
'ே யூ
ஏழாலை மஹாத்மா அச்சகம் இந்து மகளிர் கல்லூரி ஒழுங்கை கந்தர்மடம்,
பதிப்பு
嘯*娜轉。 "κεια μαυσφυυπεισώ,
ബ இலங்கை " .
| " )
விலை ரூபா 200/-
 

(1 :
Јута Саки,
リのエリ
நூலின் உட்பிரிவு ளும் பக்கங்களும்
எழுத்திலக்கணம்
எழுத்தியல்
பதவியல்
புணரியல்
உயிரீற்றுப் புணரியல்
மெய்யீற்றுப் புணரியல்
உருபு புணரியல்
சொல்லிலக்கணம்
பெயர்ச் சொல்லியல்
வினைச் சொல்வியல்
தொடர் மொழியியல்
பொதுவியல்
இடைச் சொல்லியல்
உரிச் சொல்லியல் /
0.
56
84
94
2
厦26
厦岛岛
9
露1罗
2岛9
罗6座
276

Page 4
.ெ Gaunti è
இலக்கணவித் தகர் பண்டிதர் இ. நமசிவாயம் அவர்கள்
வழங்கிய
மதிப்புரை
மொழியின் அமைதியே இலக்கணம் எனப்படும். ஒரு மொழியின் தனித் தன்மை பேணப்பட வேண்டுமாயின் அதன் இலக்கணம் பேணப்படுதல் அவசியம். அன்றாயின் அது கால இடங்களால் தாக்குண்டு ஒன்று பலவாகும் நிலை வெய்திச் சிதையும். தான் வழங்குமிடத்து ஓரிடத்தில் வழங்குவது மற்றோ ரிடத்தில் வழங்காது போகும். ஒரி காலத்து வழங்கியது மற்றோர் காலத்தில் வழங்காது போகும். அடிப்படை இலக்கணம் ஒன்றாய் எவ்விடத்தும் எக்காலத்தும் வழங்குவது மொழிக் காப்பாகும். தமிழர்கள் தமது பழைய நூல்களில் மிக முந்திய நாகப் பேணி வைத்திருப்பது தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலையே யென்பது அவர்களின் மொழிக்காப்பின் அக்கறையைக் காட்டுகிறது.
சிறிது காலத்தின் முன்பிருந்து இலக்கணக் கல்வி புறக் கணிக்கப்படுகிறது. அதனாலாந் தாக்கம் சிறிது சிறிதாகப் புலப் படத் தொடங்கி விட்டது. அறிஞர்கள் என்ன செய்வதென்று தெரியாமற் கவல்கிறார்கள். சிலரி இலக்கணம் கடுமையான தென்றுங் கஷ்டப்பட்டுப் படிப்பதனால் அதிக பயன் இன் றென்றுங் கருதுகிறார்கள். பாட நூல்களில் இலக்கணத்துக் குரிய இடம் வழங்கப்பட்டிருந்தும், பரீட்சைகளில் இலக்கணத் துக்கு உரிய இடம் வழங்கப் படாமையின் அது கல்லாமலுஞ் சோதனையிற் சித்தி யெய்தலாம் என்ற கருத்தில் அதனைக் கற்பித்தல் கற்றல்களிற் சோர்வு காணப்படுகிறது.
மொழியறிவு மற்றெல்லாப் பாடங்களையும் படித்தல் படிப்பித்தல்களில் தாக்கம் ஏற்படுத்துவதால் அது எவராலும் புறக்கணிக்கப்படத் தக்கதன்று. அது ஒரு கடிய பாடமன்று;
(iv )

சிந்தனைக்குரிய ஒரு இனிய பாடம் என்ற கருத்து நிலைபெறக் கற்பிக்கப்பட்டால் மாணாக்கர் அதனைக் கல்லாது
இப்பொழுது, பண்டித ஆசிரியப் பயிற்சி பெற்றவரும், நெடுங்காலமாகப் பாடசாலை மேல் வகுப்புக்களில் தொடர்ந்து தமிழ் கற்பித்தவரும், பிரவேச பண்டித, பாலபண்டித, பண்டித வகுப்புக்களிற் படிப்பித்து வருகின்றவரும், தமது தலைசிறந்த பொதுத் தொண்டுகளின் மத்தியிலும் தமிழ்த் தொண்டை என்றும் மறவாது போற்றுபவரும், பல ஆற்றல்கள் நிறைந்த வரும், அன்பருமாகிய அளவெட்டியூர் பண்டிதர் க. நாகலிங்கம் அவர்கள் * செந்தமிழ் இலக்கண விளக்கம் ' என்ற பெயரில் தமிழ் இலக்கண நூல் ஒன்று செய்து தமிழ் உலகுக்குத் தந்திருக் கிறார்கள். அந்நூல் படிக்கும் போது ஒரு இலக்கண நூலைக் கற்கிறோமென் றெண்ணாது சாதாரண விடய நூலொன்றைக் கற்கிறோமென்று எண்ணும்படி ஒழுங்குபடுத்தி இல குவா க் விளக்கமும் இனிமையும் பொருந்த எழுதப்பட்டிருக்கிறது. ஐந்திலக்கணம் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நூ  ைல யே முன்னாகக் கொள்ளாது அவை பற்றிய பிற நூல்களையும் வேண்டியவிடத்து ஆராய்ந்து ஏற்று முழுமை செய்யப்பட்டிருக் கிறது. சார்பெழுத்து, ஐகார ஒளகாரக் குறுக்கம், சந்தியக்கரம் என்பன முதலி ய கேள்விக்குரிய விடயங்களும் ஆராய்ந்து தெரிக்கப்பட்டுள்ளன.
இலக்கணத்தின் இக்கால நிலையில் இப்படியானதொரு நூல் இன்றியமையாதது. தமிழுலகம் இதனை யுவந்தேற்றுப் பயன் பெறுவதாக,
இ. நமசிவாழும்
தென்மயிலை 19-06-99
(v)

Page 5
63a Dunia zib
இலக்கிய கலாநிதி
பண்டிதர் மு. கந்தையா அவர்கள் வழங்கிய
மதிப்புரை
தமிழ் மாணவர் தமிழ்மொழி இலக்கணத்தை வரன் முறையாகக் கற்கும் வாய்ப்பை அநுசரணையிலுள்ள இன்றைய பாடத்திட்டங்கள் வழங்குவதில்லை. மாணவர்க்குரிய இலக்கியப் பகுதியின் விளக்கத்துக்கு இன்றியமையாத இலக்கண அம்சங் களை மட்டும் சமவாயக் கல்வி ரீதியில் தழுவிக்கொள்ளும் முறையே நடைமுறையில் உள்ளது. பரீட்சைகளிலும் இலக்கணம் ஒரு சார்பு வகையாய்ப் பரீட்சிக்கப் படுவதன்றி முதன்மைத்துவம் வழங்கப்படும் ஒன்றாகவில்லை. இலக்கணச் சார்பான வினால் இளைப் புறக்கணித்தும் தமிழ் மொழிப் பாடத்தில் மாணவர் வேண்டுந் திறமைச் சித்திபெறும் வாய்ப்புத் தாராளமாகவுண்டு. இந்நிலை தமிழ்மொழி கற்கும் மாணவர் தமிழ்த் திறமை பெறு தலில் பெருமளவு பின்னிடைவை நேர்வித்தலாற் சாதாரரை தமிழ் இலக்கியங்கள் கூடப் பயனிழக்கும் நிலைக்குத் தள்ளப்படு கின்றன. இது ஒருபாலாக, பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி யையும் ஒரு பாடமாகக் கொள்ள வேண்டியிருக்கும் மாணவர்கள் இலக்கண விடயங்களில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க வேண்டிய நியமமும் மறுபால் இருக்கவே செய்கிறது. இதை நிறைவேற்று வதில் அம்மாணவர்கள் வடுஞ் சிரமங்கள் வெளிப்படையானவை.
இந்நிலையில் ஆரம்ப இடைநிலைக் கல்வியில் சார்பு வகை பாற் பெறும் இலக்கண அறிவையாவது கற்பிப்போர் வரஷ் முறையறிந்து வழங்கவும் பல்கலைக்கழக மட்டத்தில் இலக்கண விஷயங்களில் ஆய்வேடுகள் தயாரிப்போர் சுயமான இலக்கண விளக்க உறுதியுடன் அவற்றைத் தயாரிக்க உதவுவதற்கும் தகுதியான தமிழ் இலக்கண விளக்க நூல்கள் இக்கால மொழி நடையில் வரன் முறையான விளக்கத்துடன் வெளிவர வேண்டிய தேவை சில காலமாக இருந்து வருகிறது.
இதன் சார்பில் இப்போது வெளிவருகின்றது பண்டிதர் க. நாகலிங்கம் அவர்களின் செந்தமிழிலக்கண விளக்க நூல்.
பண்டிதர் அ வ ரீ க ள் பண்டிதத்துக்குரிய் சாமானியத் தன்மைக்கு மேம்பட்ட விசேஷமுடையவரி. தமிழாசிரியத் தகைமை
(vi)

Er
பெறும் அதேவேளை தமிழ்ப் பண்டித தகைமையும் சமகால விளைவாக விளைவித்தற்கென இந்நூற்றாண்டின் முற்பகுதியில் பரமேஸ்வராக் கல்லூரியில் பிரத்தியேகமாக நடைபெற்ற பண்டித ஆசிரியப் பயிற்சியிற் சேர்ந்து தலைசிறந்த தமிழாசிரியர்களான பண்டிதமணி க. .ை நவநீத கிருஷ்ண பாரதியார், வித்துவான் க. கார்த்திகேசு முதலானோரிடம் தமிழ் இலக்கண இலக்கியங் களை ஐயந்திரிபறக் கற்றுத் தெளிந்து பயிற்றப்பட்ட பண்டித ஆசிரியராக மலர்ந்தவர். அத்துடன் 1951 - 52 இல் நடை பெற்ற, இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ் 9 டிப்புளோமா ? விலும் தேறியுள்ளவர். பாலபண்டித, பண்டித பரீட்சார்த்திகள் பலருக்கும் பரோபகார சிந்தையுடன் கற்பித்துப் பலன் கண்ட அனுபவசாலி. எல்லாவற்றுக்கும் மேலாகச் சேவைக் காலம் முழுவதும் அளவெட்டி அருணோதயக் கல்லூரித் தலைமைத் தமிழ்ப் பண்டிதராயிருந்து உயர்கல்வி மாணவரின் தமிழ் இலக்கணத் தேர்ச்சிக்கு ஆக வேண்டுவனவற்றை அனுபவத்திற் கண்டவர்.
இவரியற்றும் இந்நூல், பொதுவில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியரி
எதிர்கொள்ளும் இலக்கணப் பிரச்சனைகளை விடுவிப்பதும் தமிழ் உயர் கல்வி மாணவர் உளப்பூர்வமான இலக்கண விளக்க முணரி வதற்கு உதவுவதுமே தன்மையாகக் கொண்டுள்ளது. பிரசித்தி பெற்ற தொல்காப்பியம் நன்னூல் என்ற இரு நூல்களையுஞ் சமதிருஷ்டியில் நோக்கி இலக்கண அம்சம் ஒவ்வொன்றையும் அலசித் தெளிவிப்பது. இடந்தோறும் இருநூற் கருத்துக்களின் தார தம்மியங்களைச் சீராக முன்வைப்பதோடு அவை பற்றிய தமது சுய அபிப்பிராயங்களையும் தெளிவாகத் தந்து வைக்வின் றார் ஆசிரியர். அதன் மூலம் இலக்கணத்தின் ஆழ அகல மாண்புகள் நன்கு பிரகாசமாகின்றன,
சார்பெழுத்து விஷயத்தில் நன்னூல் பத்தென உணர்த்து சார்பெழுத்தைத் தொல்காப்பியர் மூன்றளவிற் கொண்டதன் பாதிப்பின்மை நன்னூல் ஆறென நிறுவிய உரிச்சொற்றொகை தொல்காப்பியத்தில் மூன்றுடன் முடிந்ததன் விரோதமின்மை போன்றன பற்றி ஆசிரியர் தரும் விளக்கங்கள் அபூர்வமானவை. இலக்கண விதிக்குள் அமையாத இடைச் சொற் பிரயோகம் முதலியன எடுத்துக்காட்டப் படுவதும் இணைமொழி, அடுக்குதி தொடர், அடுக்கிடுக்குத் தொடர், இரட்டைக்கிளவி ஆகிய வற்றின் வேறுபாடுகள் தெரித்துக் காட்டப்படுவதும் புதுமை 26060) he
ஆரம்பக் கல்வி இடைநிலைக் கல்வி ஆசிரியர்களும் வல்கலைக் கழக மாணவர்களும் அவசியம் படித்தாக வேண்டிய நூல் இது வென்பது எமது கருத்து.
ஏழாலை மேற்கு - மு. கந்தையா
8-08-99 -
(vii)

Page 6
அருட்கவி சி. விநாசித்தம்பி அவர்கள்
வழங்கிய ஆசியுரை
* கற்பகமாய் நயந்து வாழி' (பதினான்கு சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ) பொதிகை மூனி தமிழறியே னெனப்புகல முக்கண்ணன்
போதித் தருள்பு ரிந்தான் பொருந்துமொழி பேசுமிலக் கணம் வேண்டி முருகனைப்
பூசித் திரங்கி யேத்தி மதுரதமி பூழிலக்கணங் கேட்டறிந் திவ்வுலகம்
வழுவாத தமிழ்வி ளங்க வாய்ந்தமுனி யகத்திய மெனும் நூலைத் தந்தருள
Locat, Gayupanti 6 u - 60 mrau துதிமிகுதொல் காப்பியர் முதலாய உத்தமர்கள்
சொன்ன விலக்கண விதியெலாம் தூயதமி பூழிலக்கியம் புராண விதி க்ாசங்கள்
சொற்பொரு ஞணர்ந்து துய்க்கும் மதிவிளக் கென்பதனை யறிஞரறி வார் பாரில்
மன்னு முத் தமிழ்செழிக்கும் வண்ணமாய்ச் செந்தமி பூழிலக்கண விளக்க நூல்
மலர்ந்ததெம் மொழி மிளிரவே.
( எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ) முந்துதமி மிலக்கியமா காவியங்கள் முட்டறுத்துட் பொருள்விளங்கித் தெளிவதற்குச் செந்தமி பூழிலக்கண விளக்க மென்னுஞ் சிறந்தநூல் பழந்தமிழைப் படித்து வந்து சிந்தையுணரி வார்க்குவழி காட்டி யாக திகழ் சொல்லின் வகைபுணர்ச்சி வேற்றுமைகள் வந்து புகு வழக்குகள்சார் பமைதி யெல்லாம் மாதாபால் ஊட்டுதல்போல் விளக்கு தம்மா,
சீர் வளருந் தமிழ்செழிக்க வந்துதித்த செந்தமி பூழிலக்கணவி ளக்க மிந்தப் பார்வளருங் கற்பகமாய் நயந்து வாழி படிக்கின்ற தமிழ்ப்பற்று மிகுந்த மக்கள் தாரிவளரும் புகழ்ஞானம் பெருகிவாழி தவம் வளரு மிந்நூலைத் தந்த செம்மல் பேர்வளரும் பண்டிதர் க. நாகலிங்கப் பெருத்தகையின் சேவுைதினா திபன் போல் வாழி
(viii)

ଔଖ୍ଯ
சிவமயம்
நூலாசிரியர் உரை
தமிழ் இலக்கணக் கல்வி இப்போது கல்விக் கூடங்களிற் புறக்கணிக்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்த உண்மை. பாடசாலைகளை அரசினர் பொறுப்பேற்க முன்னிருந்த தமிழ் மொழிக் கல்வி அதன்பின் இல்லை யென்பதும் egge Ltd u T 607 உண்மையாகும். தமிழ் இலக்கியக் கல்வி ஓரளவிற்குக் கருத் தூன்றிக் கற்பிக்கப்பட்டாலும் தமிழ் இலக்கணக்கல்வி மாணவர் களாலன்றி ஆசிரியர்களாலும் புறக்கணிக்கப்பட்டுவருகிறதென்பது வியப்புக் குரியதன்று. அரசினர் வழங்குந் தமிழ்ப் பாடப் புத்த கங்கள் சிலவற்றில் இலக்கணக்கல்விக்குப் போதிய இடமளிக்கப் பட்டிருப்பது உண்மைதான். ஆனால்தமிழ் மொழிப் பரீட்சையில் தமிழ் இலக்கணத்துக்குப் போதிய இடமளிக்கப்படுவதில்லை. இலக்கண வினாக்களிற் கவனஞ் செலுத்தாமலே தமிழ் மொழியில் மாணவன் தனது இலக்காகிய திறமைச் சித்தியை அடையலா மென்பது ஆசிரியரும் மாணவரும் அறிந்து கொண்ட பகிரங்க இரகசியம். இந்நிலையில் தமிழ் மக்களின் தெய்வீகக் கருவூல மாகிய தமிழ் இலக்கணம் காலப்போக்கில் எவ்வாறாகும் என்பது இலக்கண அறிவாளர் அனைவருக்குங் கவலை தருவதாகு மென்பது புனைந்துரையன்று. தமிழ் இலக்கணம் கடினமான பாட மென்பது ஆசிரியர்களுடாக மாணவர் மனத்திலும் ஆழப்பதிந்துள்ளது. தமிழ் இலக்கணம் சரியான வழியிற் கற்பிக்கப்பட்டால் அப்பாடம் சிந்தனைக்கு விருந்தாவதோடு மாணவர் விரும்பிக் கற்பதற்குரிய பாடமுமாகுமென்பதில் எத்தகைய ஐயத்துக்கும் இடமில்லை" இலக்கண வளஞ் சான்ற தமிழ் மொழிக் கல்வியை இலக்கண வரம்பில்லாத பிற மொழிக் கல்வி போலக் கற்பிக்க முற்பட்டதே தமிழ் இலக்கணம் விரும்பப்படாத நிலைக்குத் தள்ளப்பட்டமைக்கு முக்கிய காரணம் எனலாம். இந்நிலையைப் போக்கித் தமிழ் இலக்கணத்தின் ஆழ அகல மாண்பினை வெளிக் கொணர வேண்டு மென்னும் நோக்கே செந்தமிழ் இலக்கண விளக்கத்தின் தோற்றத் திற்கு முக்கிய காரணமாகும்.
தொல்காப்பியம் என்னும் பழந்தமிழ்ப் பேரிலக்கண நூல் விளங்கிக் கொள்ள முடியாத தென்னும் ஒரு தவறான கருத்து இன்றைய தலை முறையினரிடங் காணப்படுகிறது. தொல்காப் பியத்தின் வழி நூலாகிய நன்னூல் கூட கடினமான தென்ற கருத்தும் ஆசிரியரிடமும் மாணவரிடமும் நிலவுகிறது. ஆறுமுக
(ix)

Page 7
நாவலர் செய்தளித்த இலக்கணச் சுருக்கமும் இன்றுள்ள மாண வர்களால் விளங்கிக் கொள்ள முடியாததென ஆசிரியர்கள் சிலரி கருதுவதையும் நாமறிவோம். தொல்காப்பியம் நன்னூல் ஆகிய இரு நூல்களிலும் கூறப்படும் இலக்கண விடயங்களை இலகுவான உரை நடையில் தருவதன் மூலம் அந்நூல்களைக் கற்பதில் மாணவர்க்கு ஆர்வ மேற்படச் செய்வதும் இந்நூலின் தோற்றத் திற்கு இன்னொரு காரணமாகும். தொல்காப்பியத்தைக் காலங் காலமாகக் பேணிக்காத்த நம் முன்னோரின் தமிழ் மொழிப் பாதுகாப்பின் சிரத்தையை உணர்ந்து அந்நூலைக் கருத்தூன்றிக் கற்பதற்கு வழி சமைப்பது அவசிய மென்பதைக் தமிழ் இலக்கண ஆய்வாளரும் தமிழ் மொழி ஆர்வலர்களும் மறந்து விடக் கூடா தென்பதை ஞாபகஞ்செய்ய விரும்புகிறோம்.
செந்தமிழ் இலக்கண விளக்கம் என்னும் இந்நூலின் முதலாம் பாகம் இப்போது வெளிவருகிறது. இந்நூலில் பழந்தமிழ் இலக்கண ஆசிரியர்கள் கூறும் எழுத்து சொல் என்பன ஆய்வும் விளக்கமும் பெறுகின்றன. எழுத்து ஆறியல்களாகவும் சொல்லும் அவ்வண்ணமே ஆறியல்களாகவும் வகுக்கப்பட்டுள- இந்நூலின் இரண்டாம் பாகம் தொல்காப்பியப் பொருளதிகாரத்தை முதன்மை நூலாகக் கொண்டு அகப்பொருள், புறப்பொருள், மெய்ப்பாடு மரபு என்பனவும் தொல்காப்பியத்தோடு யாப்பருங் இலக் காரிகை தண்டியலங்காரம் என்பவற்றை முதன்மை நூல் களாகக் கொண்டு செய்யுள் அணி என்பனவுமாக ஆறியல்களால் விளக்கப்படும்.
இப்போது வெளிவரும் முதலாம் பாகத்தில் எழுத்துச் சொல் என்பன பற்றிய முந்துநூல் ஆசிரியர்கள் கருத்துக்கள் எடுத் தோதப்படுவதோடு அவற்றின் ஒற்றுமை வேற்றுமைகளும் எடுத்துப் பேசப்படுகின்றன. தமிழ் இலக்கண நூல்களில் விவாதத் துக்குரிய விடயங்களாகிய சார் பெழுத்துக்கள், சந்தியக்கரம், எழுத்துப்போலி, ஐகார ஒளகாரக் குறுக்கம், ஆகுபெயர், அன் மொழித்தொகை, இயல்பு வழக்கு தகுதி வழக்கு, இயற்சொல், திரிசொல் முதலாய பலப்பல விடயங்கள் ஆய்வுக்கு இடமாகி யுள்ளன. தொல்காப்பியம் நன்னூல் மட்டுமல்லாமல், விர சோழியம், பிரயோக விவேகம், நேமிநாதம், இலக்கணச் கொத்து சூத்திர விருத்தி முதலான நூற்கருத்துக்களும் தேவையான இடங்களில் எடுத்தாளப்படுகின்றன. பிரபலம் வாய்ந்த சேனா வரையர், இளம் பூரணர், நச்சினாரிக்கினியர் முதலிய உரை *யாசிரியர் கருத்துக்களும் ஆய்வுக்கு இடமாகியுள்ளன.
(Χ)

இந்நூலுள் காட்டப்பட்ட உதாரணங்களிற் பெரும்பாலன முன்னூல்களின் உரையாசிரியர்கள் எடுத்துக்காட்டியனவே யாகும். அந்த உதாரணங்கள் இறந்துபடக் கூடாதென்னும் நோக்கமும் அவற்றையெடுத்தாண்டதற்கு ஒரு காரணம். ஆரம்ப வகுப்புக்களில் இலக்கணங் கற்பிக்கும் ஆசிரியர்கள் இக்கால வழக்கிலுள்ள உதாரணங்களை எடுத்துக்காட்டி இலக்கண விடயங்களை விளக்குவது விரும்பத்தக்கது. மேனிலைக் கல்வி மாணவர்கள் இவ்வுதாரணங்களை விளங்கிக்கொள்வதில் சிரமம் இருக்காது என்பது எமது கருத்து.
இலக்கண நூலொன்றை எழுதுமாறு ஏறத்தாழ முப்பது ஆண்டுகளின் முன் என்னைப் பணித்த எனது வணக்கத்துக்குரிய இரு ஆசிரியர்கள் என்மனக்கண் முன் வருகிறார்கள். அவர்கள் எனது தமிழ் ஆசிரியர் வித்துவான் க. கார்த்திகேசு B. A அவர்களும் எனது கணித விஞ்ஞான ஆசிரியர் திரு. ச. சிதம்பரப் பிள்ளை B, A, B. Sc அவர்களுமாவர். அக்காலத்தில் இதனை எழுதமுடிய்ாது போனமை பற்றி வருந்துகிறேன். இந்நூல் வெளிவரும்போது அவர்கள் இல்லையே என்னும் ஏக்கமும் மேலோங்குகிறது. இந்நூலுட் சேர்க்கப்பட்டுள்ள சில ஆய்வுக் கருத்துக்களை எனக்கு எடுத்துக்காட்டியவர் பரமேஸ்வர patio 9.5 ஆசிரிய கலாசாலை அதிபராகவிருந்த கலாநிதி கு. சிவப்பிரகாசம் அவர்களாவர். அவர் புலோலியூர் வ. குமாரசாமிப் புலவரின் மகனாவார். குறிப்பாக எழுத்துப் பிறப்புக்கும் புணர்ச்சிக்கும் உள்ள தொடர்பு பற்றி ஆய்வு செய்யுமாறு எனக்கு ஆலோசனை வழங்கியவர் கலாநிதியவர்களே. இந்நூலில் அவ்வாய்வு சிறுக இடம்பெற்றுள்ள போதிலும் விரிவாக ஆய்வு செய்ய வேண்டிய விடயம் அதுவென்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். எனது குருநாதர் புல வர் மணி க. சு. நவநீதகிருஷ்ணபாரதியாரது ஞாபகமாக இந் நூலை வெளியிடுவதில் பெருமகிழ்வடை கிறேன். எனது ஆசிரியமணிகளாய இந்நால்வரையும் சிரந்தாழ்த்தி வணங்குகிறேன்.
புலம்பெயர்வு காரணமாகக் கைவசம் இலக்கண நூல் ஏதும் இல்லாத நிலையில் இந்நூலை எழுத முற்பட்டபோது எனக்கு நூல்களை உதவியவர்களையும் நன்றியுடன் நோக்குவது எனது கடமையாகும். அருணோதயக் கல் லூ ரி அதிபர் திரு. கி. மகேந்திரராசா அவர்கள் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டிய வராவர். பண்டிதர். த. இ ரா ச ரத் தி ன ம் பண்டிதர், வ. பேரின்பநாயகம் புலவர்மணி பண்டிதர். க. மயில் வாகனனார் திரு. அ. வாமதேவன் ஆகியோர் வேண்டிய நூல்களை அவ்வப் போது வழங்கி உதவியவர்களாவர். அவர்களுக்கு எனது பெரு நன்றி உரித்தாகுக.
(xi)

Page 8
இந்நூலைத் தமது முதிர்ந்த வயதிலும் தளர்ந்த உடல் நிலை யிலும் நன்கு ஆராய்ந்து மதிப்புரை வழங்கிலவர்கள் இலக்கண வித்தகர் பண்டிதரி, இ நமசிவாயம் அவர்களும் இலக்கிய கலாநிதி பண்டிதர். மு. கந்தையா அவர்களுமாவர். பெருங் கல் வி மான்களாய அன்னார் இருவருக்கும் எனது வணக்கமும் நன்றியும் உரியவாகுக.
இந் நூலுக்கு ஆசியுரை வழங்கியவரும் நூலை விரைவில் வெளியிடுமாறு தூண்டியவரும் அருட்கவி சீ. விநாசித்தம்பி அவர் களாவர். அவர்களுக்கும் எனது அன்புகனிந்த நன்றி உரியதாகுக.
ப ண் டி த ர் க ளா க வும் பட்டதாரிகளாகவுமுள்ள எனது மாணவர்கள் பலர் இந்நூலை விரைந்து வெளிவரச் செய்வதில் எனக்கு ஊக்கமளித்தமைக்காக அன்னார் அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன். குறிப்பாக மயிலங்கூடலூர் பண்டிதர் சி. அப்புத்துரை, பண்டிதர். க. உமாமகேசுவரன் என்போரி எனது அன்புக்கும் நன்றிக்கும் உரியர்,
எனது அறியாமை மறதி என்பன காரணமாக இந் நூலிற் பிழைகள் நேர்ந்திருக்கலாம். இலக்கண வல்லுனர்கள் அப்பிழை களை எடுத்துக் காட்டி மேல்வரும் பதிப்புக்களில் நூல் திருத்தமுற உதவுவார்களாக,
இந்நூலை அழகுற அச்சிட்டு வெளிவரச் செய்த மஹாத்மா அச்சக உரிமையாளர் திரு. ந. தெய்வேந்திரன் அவர்களுக்கும் அச்சகப் பணியாளர்களுக்கும் எனது நன்றியைச் செலுத்தியமை கிறேன்.
அளவெட்டி, க. நாகலிங்கம்
2-04-2000 ஆசிரியர்
(xii)

* " " " sligis: 6-83áisi57 *gcrib

Page 9

LP tro,
"""ག་གང་ལ་
எழுத்ததிகாரம்
1. எழுத்தியல்
எழுத்து எவையெனல்:
5ழுத்து என்பது எழுதப்படுவது எனவும் எழுத்தொ லிப்பது எனவும் இரு பொருள்படும் என்பர் தமிழிலக்கண நூலோர், எழுதப்படுவதென்பது வரி வடிவையும், எழுந்தொலிப்பதென்பது ஒலி வடிவையுங் குறிப்பனவாம். ஒலிவடிவு, வரிவடிவென்பனவே எழுத்தின் வடிவங்கள். த மி ழ் எழுத்துக்கள் முப்பதென்பது தொல்காப்பியர் கருத்தாகும். நன்னூலாருந் தொல்காப்பியர் கருத்தை ஏற்றுக்கொண்டவர் என்பதில் இழுக்கில்லை.
* எழுத்தெனப்படுப,
அகர முதல் னகர விறுவாய்
முப்பஃ தென்ப * (தொல்காப்பியம் நூன்மரபு -1) என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்தால் இவ்வுண்மை புலனா கின்றது. எழுத்தென்று சொல்லப்படுவன அகரவுயிர் முதலாக னகர மெய்யீறாக முப்பது என்று சொல்லுவர் அறிஞர் என்பது இதன் பொருளாகும். நன்னூலாசிரியர் எழுத்துக்கள் பற்றிக் கூறுகையில், ' உயிரும் உடம்புமாம் முப்பது முதலே " - (நன், எழுத்தியல்4) எனக் கூறியுள்ளார். எழுத்தின் தொகையை முப்பது என வரையறைசெய்த தொல்காப்பியர் அச்சூத்திரத்தின் இறுதி

Page 10
  

Page 11
பெற்ற இவையே சார்ந்துவரன் மரபினவாந் தகுதியும் பெற்றன போலும், குற்றியலிகரம் குற்றியலுகரம் என்பன வரிவடிவிற் புள்ளி பெறுவது அக்கால வழக்கு,
உயிர் மெய்யெழுத்து
உயிர் மெய்யெழுத்தை ஆசிரியர் தொல்காப்பியர் உயி ரெழுத்துக்கும் மெய்யெழுத்துக்கும் வேறானதோர் எழுத்தாகக் கொண்டிலர். ஒலி வடிவில் உயிரும் மெய்யும் பெறும் ஒசை ய்ையே உயிர்மெய்யெழுத்துப் பெறுதலானும் வரிவடிவிலும் மெப் யெழுத்துக்களின் திரிந்த வடிவினைய்ே உயிர் மெய்யெழுத்துப் பெறுதலானும் உயிர் மெய்யெழுத்தைச் சார்ந்து வரன் மரபின என்று எண்ணப் பட்டவற்றுடன் சேர்த்து எண்ணாராயினார். உயிர் மெய்யெழுத்து வருமிடங்களில் மெய்யெழுத்தை முதலில் எழுதி அதன்பின் உயிரெழுத்தை எழுதாமல் உயிர்மெய்யெழுத் துக்குத் தனிவடிவமைத்த மொழிகளில் தமிழும் ஒன்று. இது மொழியை எழுதுவோருக்கும் அதனைக் கற்போருக்கும் இலகுவான முறையென்பதை யெவரும் மறுக்க முடியாது. உயிரெழுத்து மெய்யெழுத்திற் சிறந்ததாதலால் உயிர் மெய்யென முன்னோர் பெயரிட்டனரேனும் ஒலிவடிவில் மெய் முன்னும் உயிர் பின்னுமாக ஒலித்தலே மரபாகும். நன்னூலார் தாங் கொண்ட சார்பெழுத்துக்களில் உயிர் மெய் யெழுத்தை முதலில் வைத்தார், அவ்வெழுத்தின் ப யன் பா டு நோக்கி யென்க. தொல்காப்பியரும் அது முதலெழுத்தோடு பின்னிப் பிணைந்த தாதலால் அதனைச் சார்பெழுத்தாக்கி அதன் பெருமையைக் குறைக்காது முதலெழுத்திலேயே பெறவைத்தார்.
உயிர்மெய் யென்பது உயிரும் மெய்யுங் கூடிப்பிறந்ததோர் எழுத்து எனப் பொருள்படும். இதனை உம்மைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை யென்பர். உயிரெழுத் துக்கள் பன்னிரண்டும் மெய்யெழுத்துக்கள் பதினெட்டோடுந் தனித்தனி கூடுதலால் பிறக்கும் உயிர்மெய்யெழுத்து இருநூற்றுப் பதினாறாகும். அகரவுயிர் முதலிய பன்னிரண்டும் ககர மெய் யோடு தனித்தனி கூடப் பன்னிரண்டு உயிரி மெய்யெழுத்துக்கள் பிறக்கும். அவ்வாறே நுகரமெய் முதலிய வற்றோடும் ஒட்டி உயிர்மெய் இருநூற்றுப் பதினாறாதலை அறிந்து கொள்ளலாம்,
鐵 4

இவ்வுயிர்மெய் இருநூற்றுப் பதினாறும் உயிர்மெய்க்குறில் உயிர்மெய் நெடில் என இருவகையாகவும் வல்லின உயிர்மெய் மெல்லின உயிர்மெய் இடையின உயிர்மெய் என மூன்று வகை யாகவும் வகுக்கப்படலாம். உயிரிக்குறில் எழுத்து அ, இ, உ, எ, ஒ என ஐந்து. இவ்வைந்தும் பதினெட்டு மெய்யின்மேலுந் தனித்தனி ஏறிவர உயிர்மெய்க்குறில் தொண்ணுரறு பெறப் படும், அவ்வாறே நெட்டெழுத்துக்கள் ஏழும் பதினெட்டு மெய் மேலுந் தனித்தனி ஏறிவர உயிர்மெய் நெடில் நூற்றிருபத் த7றாகும்.
வல்லின மெய்க்ள் ஆறோடும் பன்னிரண்டு உயிரெழுத் துக்களுந் தனித்தனி கூடிவர எழுபத்திரண்டு வல்லின உயிர் மெய் பிறக்கும். அவ்வாறே மெல்லினம் ஆறும் கூடிவர மெல்லின உயிர்மெய் எழுபத்திரண்டாகும். இடையின மெய்யெழுத்துக் களும் அவ்வாறு கூடிவர இடையின் உயிர்மெய் எழுபத்திரண்
{-n(5th
உயிர்மெய் இருநூற்றுப் பதினாறுள்ளும் தமிழ்மொழியாக் கத்துக்குப் பயன்படாத எழுத்துக்களுஞ் சிலவுள. அவை மெய் யெழுத்துக்களில் நுகர வரிசையில் வரும் 'ங்ா" முதலிய பதினொ ரெழுத்துமாம், நுகர மெய்யும் நகர வுயிர் மெய்யும் அதாவது "ங்" என்பதும் 'ங்' என்பதுமே பயன்படுவன. ஆனால் ங்கர மெய்யோடு பன்னீருயிருங் கூடிப் பிறக்கும் பன்னிரு உயிர்மெய் யெழுத்துக்களும் தமிழ்நெடுங்கணக்கிற் சேர்க்கப்பட்டுள. இவ் வாறு நுகரம் மற்றைய எழுத்துக்களையுஞ் சேர்த்து நிற்றலையே ஒளவையார் 'ங்ப்போல் வளை" என ஆத்திசூடியிற் கூறினார்.
உயிர்மெய்யெழுத்து உயிரும் மெய்யுங் கூடிப் பிறந்த போதும் உயிர்க்குரிய மாத்திரையும் மேய்க்குரிய மாத்திரையுஞ் சேர்ந்தொலிப்பதில்லை. மெய்யின்மேல் ஏறி நிற்கும் உயிரின் மாத்திரையே உயிர்மெய்க்கும் மாத்திரையாகும். அதாவது நகர மெய்யின் மேல் அகரவுயிரேறிப் பிறக்கும் ககர வுயிர்மெய் ஒரு மாத்திரையும் ககர மெய்யின் மேல் ஆக்ார வுயிரேறிப் பிறக்கும் ககர வாகார உயிர்மெய் (கா.) இரண்டு மாத்திரையும் பெற்று வருவது குறிப்பிடத் தக்கது. உயிரும் மெய்யுஞ் சேர்ந்து மாத்திரை பெறும் விதத்தை இலக்கண ஆசிரியர்கள் அப்பொடு
5藻

Page 12
சேர்ந்த உப்பே போலவென உதாரணங் காட்டி விளக்குவர். ஒரு குறித்த அளவு தண்ணிரில் அதன் அரைப்பங்கு உப்பைக் கரைத்து அளந்தால் நீரின் அளவே அளவாக இருக்குமென்பது அப்பொடு சேர்ந்த உப்புக்கு விளக்கமாகும்.
ஆய்த ைெழுத்து
தொல்காப்பியர் சார்ந்து வரன் மர பின் மூன்றென எண்ணியவற்றுள் ஆய்தவெழுத்தும் ஒன்றாகும். ஆய்தம் தனித்த வரிவடிவும் ஒலி வடிவும் பெற்றுள்ளது. ஆய்தத்தை நன்னூலார் முற்றாய்தம் ஆய்தக் குறுக்கமென இரண்டாக்கிச் சார்பெழுத்துப் பத்துள் இரண்டையும் இடம்பெறச் செய்துள்ளார். முற்றாப்தம்
அரை மாத்திரை பெறுவதாகும். ஆய்தக்குறுக்கம் மாத்திரை பெறுவது. ஆய்தம் அடுப்புக் கூட்டுப்போன்ற வரி வடிவுடைய தென்பர். தொல்காப்பியர், "ஆய்தம் என்ற
முப்பாற் புள்ளியும்" எனக் குறிப்பிட்டது ஆய்தத்தின் வரி வடிவையே எனச் சிந்திப்பாரும் உளர். உரையாசிரியர் சிலரி முப்பாற் புள்ளிய்ென்பது குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்ற மூன்றும் புள்ளி பெறுதலையே யென்றுங் கூறுவர். ஆய்தம் அஃகேனம் என்றுங் கூறப்படும். முற்றாய்தம் என்பதை ஆய்தம் என்றும் மற்றையதை ஆய்தக் குறுக்கம் என்றுங் கூறலாம்.
ஆய்தம் வழக்கில் எவ்வாறு வருமென்பது சிந்தித்தற் பாற்று, ஆய்தம் குற்றெழுத் தொன்றைத் தனக்கு முன்னே பொருந்தி உயிரெழுத்தோடு கூடிய வல்லின மெய்களாறில் ஒன் றைப் பின்னே பொருத்தி வரும். 'அஃது" என்னுஞ் சொல்லில் ஆய்தத்துக்கு முன்வந்தது அகரவுயிர். " கஃசு " என்பதில் முன் வந்தது ககரவுயிர் மெய். இரண்டும் குற்றெழுத்துக்களே, ஈற்றில் வந்தவை வல்லின மெய்யெழுத்தோடு கூடிய உயிரெழுத்துக்கள். வல்லின மெய்கள் ஆறினையுஞ் சார்ந்து வரும் வகையால் முற்றாய்தம் ஆறு பெறப்படுகிறது. அதன் மேற் புணர்ச்சி விகா ரத்தால் வரும் ஆய்தம் ஒன்றும் செய்யுள் விகாரத்தால் வரும் ஆய்தம் ஒன்றுஞ்சேர்க்க முற்றாய்தம் எட்டாகும். அவ் என்னுஞ் Jt LGELIT (6) és 19-Il என்னுஞ் சொல்லைச் சேர்க்கும்போது அஃகடிய எனவரும், இது புணர்ச்சி விகாரத்தால் வந்த முற்றாய்தம். "அ" என்னும் எழுத்தோடு கான் என்னும் சாரியை Gouji GSF rfj; as அஃகான் எ ன வ ரு ம். இது செய்யுள்
淡6

விகாரத்தால் வந்தது. இதுவும் புணர்ச்சியால் வந்த ஆய்த மாயினும் இது செய்யுளில் அன்றி வராதாதலால் செய்யுள் விகாரம் எனப்பட்டது.
ஆய்தம் பற்றிக் கூறப்புகுந்த இவ் விட த் தி ல் ஆய்தக் குறுக்கம் பற்றியும் பேசுவது பொருத்தமானதே. "ல்", "ள்" என்னும் எழுத்துக்களை ஈறாகவுடைய சொற்கள் புணரும் போது தோன்றும் ஆய்தம் தனக்குரிய அரை மாத்திரையிற் குறைந்து கால் மாத்திரை யளவினதாக ஒலிக்கும். கல் + தீது என்பது கஃறீது எனவும் முள்+ தீது என்பது முஃடீது எனவும் வரும், "ல்" "ஸ்" என்னும் எழுத்துக்கள் தனிக்குறில் எழுத்தை யடுத்து வரும்போதே ஆய்தங் குறுகியொலிக்கும் என்பதுங் கருதத்தக்கது. எனவே ஆய்தக் குறுக்கம் இரண்டாகும், ஆய்தம் , ஆய்தக்குறுக்கமாக வருவதும் தொல்காப்பியர்க்கு உடன்பா டென்பது, "ஆய்தம் அஃகாக்காலையான என்னும் மொழிமரபு எழாஞ் சூத்திரப் பகுதியால் அறியப்படுகிறது. அஃகுதல் = சுருங்குதல்.
உயிரளபெடை
செய்யுளில் ஒசை குறைந்து செய்யுள் சிதைவுறும்போது செய்யுளைச் சிதையாமற்காக்க அளபெடை அவசியமாகிறது. இவ்வளபெடை, உயிரளபெடை ஒற்றளபெடை யென இருவகைப் படும். உயிர் நெட்டெழுத்துக்கள் அளபெடுப்பதே உயிரள பெடை யெனப்படும். உயிர்க் குற்றெழுத்துக்கள் அளபெடுப் பினும் அவை நெட்டெழுத்தாகியே அ ள பெ டு க் கும். உயிர் நெட்டெழுத்துக்கள் ஒவ்வொன்றுந் தனித்தனி இவ்விரண்டு மாத்திரை பெறுவது இயல்பு. அந்நெட்டெழுத்து அளபெடுப்பின் மூன்று மாத்திரைபெறும். நெட்டெழுத்து அளபெடுத்து நிற்கிற தென்பதற் கறிகுறியாக அதற்கினமாய குற்றெழுத்து அள பெடுத்த நெட்டெழுத்தைச் சார எழுதப்படும். ஐகாரம் அள பெடுக்கும்போது இகரமும் ஒளகாரம் அளபெடுக்கும்போது உகரமும் அவற்றைச்சார எழுதப்படும். நெட்டெழுத்து இரண்டு மாத்திரையுடைய தாதலால் அதை மூன்று மாத்திரை யுடைய தாக்கும் போது ஒரு இனக் குறில் எழுதப்படும். இராகம் பண்ட மாற்று ஒப்பாரி முதலியவற்றில் மேலும் நீண்டொலிக்க வேண்டு மாயின் அதற்களவான இனக்குறில் எழுத்துக்கள் எழுதப்படும்.
7藻

Page 13
நான்கு மாத்திரைய்ாக்கின் இரு குறிலும் ஐந்து மாத்திரை யாக்கின் மூன்று குறிலும் மேலும் இவ்விதமே கூட்டி எழுத வேண்டும்,
* பாஅல் புளிப்பினும் பகல் இருளினும்
நா அல் வேதம் நெறி திரியினும் ” என்பது புறநாநூற்றுச் செய்யுளொன்றின் இரு அடிகள். இச் செய்யுளை அளபெடை கெடாமல்
* பால் புளிப்பினும் பகல் இருளிலும்
நால் வேதம் நெறி திரியினும் " எனச் செய்தால்
செய்யுளின் ஒசை நிரம்புதலும் சீர் சரியாதலுமின்றிச் செய்யுள் சிதைவுறும், அதனாலேயே "பாஅல்" "நா அல்" என அளபெடை சேர்த்துச் செய்யுளைச் சீர் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது.
இக்காலப் புலவர்கள் அளபெடைகளைப் பெரிதும் பயன் படுத்தாத போதும் முற்காலப் புல வர் க ள் அளபெடையைப் பெரிதும் பயன்படுத்தினரென்பதற்குச் சங்கச் சான்றோர் செய்யுள்கள் சான்றாக நிற்கின்றன. நன்னூலார் உயிரள பெடையை இருபத்தொன்றாக விரித்து விளக்கியது அவசியந் தானோ என்பதும் பொருத்தமற்ற வினாவன்று. எனினும் முற்கால இலக்கியப் பயிற்சிக்கு முக்கியமான அளபெடை பற்றியும் அது வரும் இடங்கள் பற்றியும் அறிந்திருப்பதில் தவறேதுமில்லையென்க.
உயிரளபெடை இருபத்தொன்றாதல் எவ்வாறென்பது பற்றிச் சிந்திப்போம். உயிரி நெட்டெழுத்துக்கள் ஏழும் மொழி முதல், இடை, கடை என்னும் மூன்றிடத்தும் அளபெடுத்தால் உயிரளபெடை இருபத்தொன்றாகும், நெட்டெழுத்தேழனுள் ஒளகாரம் மொழி முதலிலன்றி இடையிலுங் கடையிலும் வாராது. அதனால் இரண்டு கழிக்க உயிரளபெடை பத்தொன் பதாகும். இப்பத்தொன்பதோடு இன்னிசை அளபெடை யொன்றுஞ் சொல்லிசையளபெடையொன்றுஞ் சேர்க்க உயிரள பெடை இருபத்தொன்றாகும்.
இன்னிசையளபெடை யாவது யாது என்பது பற்றிச் சிந்திப் போம், செய்யுளில் இனிய ஒசையையுண்டாக்கும் பொருட்டுக் குற்றெழுத்து நெட்டெழுத்தாகி அதுவே அளபெடுப்பது இன்னிசையளபெடையாகும். இவ்வளபெடைய்ை உதாரண முகத்தால் விளக்குதும்
藻8

'ா
9 கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
எடுப்பது உ மெல்லாம் மழை"
என்னுந் திருக்குறட் செய்யுளில் வரும் கெடுப்பதூஉம், எடுப்ப தூஉம் என்பவற்றின் இயல்பான வடிவம் "கெடுப்பதும்", எடுப்ப தும் என வரும். அங்கு கெடுப்பதும் எடுப்பதும் என நின்றா லுஞ் செய்யுள் சீருந்தளையுஞ் சிதைவுறுமாறில்லை. ஆனால் அவ்வாறு செய்யுள் அமைந்திருப்பின் இனிய ஓசை பிறவாது. அதனாற் புலவர் கெடுப்பது, எ டு ப் பது என்பவற்றிலுள்ள ஈற்றெழுத்துக்களை நெட்டெழுத்துக்களாக்கிப் பின்னர் அவ் வெழுத்துக்களையே அளபெடை எழுத்துக்களாக்கினாரி.
சொல்லிசையனபெடையாவது ஒரு வகைச் சொல் இன்னொரு வஇைச் சொல்லாதற் பொருட்டு அளபெடுப்பது. அளபெடுக்கும் போது அளபெடுத்த சொல் தன்னிலை மாறி வேறொரு சொல் லாகி விடும். நசை என்ற சொற்குப் பொருள் விருப்பம் என்ப தாகும். அதனால் அது ஒரு பெயர்ச்சொல். அச்சொல் அள பெடுத்து நசைஇ, " என வருகின்றது. " நசைஇ " என்ற சொல் விரும்பி என்னும் பொருளைத் தந்து வினையெச்சச் சொல்லா கின்றது. செய்யுள்களில் ஒசைக்காக மட்டுமல்லாமல் சொற் பொருளில் மாற்றமேற்படுத்தவும் இவ்வளபெடை பயன்படுகின் றது. இது செய்யுளுக்கு அழகையும், ஒசை நயத்தையும் ஊட்டு வதை இவ்வளபெடையமைந்த செய்யுள்களை வாசித்துணரலாம்.
நேமிநாதம் என்னும் இலக்கண நூலின் உரையாசிரியர், ' உயிருள் நெட்டெழுத்தேழும் அளபெடுக்கும். அ  ைவ அள பெடுக்குமிடத்துத் தனி நிலை, முதனிலை, இடைநிலை, இறுதி நிலை என்னும் நான்கு வகையிலும் அளபெடுக்கும். எ ன வே உயிரளபெடை இருபத்தெட்டாகும்" என்பர். தனிநிலையென் பது தனித்துவரும் ஒரெழுத்து அளபெடுப்பது. ஆ அ, ஈ இ, ஊ உ என்பன முதலாக ஏழு நெட்டெழுத்துக்களும் தனித்தனி அளபெடுக்கும் என்பர். முதனிலை என்பது இரண்டு முதலிலு எழுத்துக்களால் ஆக்கப்பட்ட மொழிகளில் முதலெழுத்து அள பெடுப்பது என்பர். மாஅரி, மீஇமிசை முதலாக முதனிலை எழுத்துக்கள் அளபெடுப்பதற்கு உதாரணங் காட்டலாம். இடை நிலை அளபெடையென்பது சொல்லின் இடையில் வரும் எழுத்
9徽

Page 14
துக்கள் அளபெடுப்பது, பலாஅசு" முதலியன இடைநிலையள பெடைக்கு உதாரணங்களாகும். மொழியிறுதியில் அளபெடுப்ப
தற்குப் ' பலாஅ " முதலியவற்றைக் காட்டலாம். ஆனால் ஒள காரம் மொழியிடையிலும், இறுதியிலும் அளபெடுப்பதற்கு அவர் காட்டிய உதாரணங்கள் அநெளஉகம் என்பதும், அநெளஉ என்
பதுமாம். இவர் உதாரணமாகக் காட்டியவை ஆரிய மொழிச்
சொற்களேயாதலால் இவற்றை நன்னூலார் தவிர்த்தது பொருத்த மானதே, நேமிநாதம் எழுத்ததிகாரம் மூன்றாஞ் செய்யுள் உரை யில் உயிரளபெடை பற்றிய அவர் கருத்தை அறியலாம். நேமி நாதர் கூற்றுப்படி பார்ப்பின் இன்னிசை சொல்லிசையளபெடை
களும் குறித்த இருபத்தெட்டில் அடங்குவனவாம், மொழியிடையி லும், இறுதியிலும் ஒளகாரம் வரா தெனத் தெளிவாகக் கூறிய நேமிநாதகாரர் அது மொழியிறுதியிலும், இடையிலும் அளபெடுக் கும் எனக் கூறியது நகைப்புக்கிடமானதாகும். ஒளகாரம் மொழி யிறுதியிலும், மொழியிடையிலும் வராதெனக் கூறி அதனால்
அவ்விரண்டளபெடைகளையுங் குறைத்து அளபெடையைக் கணக் கிட்ட நன்னூலார் அளபெடை பற்றிக் கூறிய கருத்துப் பெரி தும் பாராட்டத் தக்கதே. நேமிநாதகாரர் கூற்று மலடி மைந்தன் முயற்கொம்பை ஒடித்தான் என்பதற்கொப்பானதே.
ஒற்றளபெடை
ஒற்றளபெடையும் உயிரளபெடை போலச் செய்யுளில் ஒசை குறையுமிடத்து அவ்வோசையை நிறைவுசெய்வதற்காகப் புலவர்க ளாற் கையாளப்படும் ஒரு நெறி காரணமாகத் தோன்றுவதாகும். ஒற்று என்பது மெய்யெழுத்தைக் குறிக்கும். இக்காலப் புலவர்கள் அளபெடைகளை எடுத்தாள்வது மிக மிக அரிது. உயிரளபெடை சிலவிடங்களிற் பயன்படுத்தப்பட்டாலும் ஒற்றளபெடையைப் பயன்படுத்துவார் மிக மிக அரியர் என்றே கூறலாம். ஆதலால் இக்கால இலக்கண நூலுள் ஒற்றளபெடை பற்றிப் பே ச வும் வேண்டுமோ என்று சிந்திப்பாரும் உளர். முற்கால இலக்கியச் செல்வங்களைப் பேணிப் பாதுகாக்கும் நாம் ஒற்றளபெடை பற்றி அறிந்திருப்பதில் தவறேதுமில்லையல்லவா?
செய்யுளில் ஒசை குறைந்தவிடத்து ஒற்றெழுத்து அளபெடுக் கும் என்ற அளவானே விட்டுவிடாது எந்த எந்த ஒற்றுக்கள் எவ்வெவ்விடங்களில் அளபெடுக்கும் என்பதையும் அ வ ற் றி ன்
懿 10

தொகை பற்றியும் நன்னூலார் விரிவாக ஆராய்ந்துள்ளார். நன்னூலார் ஒற்றளபெடை பற்றிக் கூறிய நூற்பாவின்படி ஒற்றள பெடையின் விபரம் தெளிவாகத் தெரிகின்றது. மெய்யெழுத்துக் களில் ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ள் என்னும் பத்தும் ஆய்தம் ஒன்றுமாகிய பதினோரெழுத்துக்களுமே அளபெடுத்தற் பாலனவாம். ஆய்தம் ஒற்றெழுத்தல்லவாயினும் அது அரை மாத் திரை பெற்று மெய்யெழுத்தளவாய் ஒலித்தலாலும், பன்மை பற்றிப் பெயரிடுவது வழக்காறாதலாலும் பத்து மெய்யோடு எண் ணப்பட்ட பதினொராவது எழுத்தையும் ஒற்று என உபசரித்துக் கூறியது ஏற்புடைத்தேயாகும். இங்கு கூறப்பட்ட பதினோ ரெழுத்தும் தனிக் குறில் எழுத்தையடுத்தும் இரண்டு குறில் அதா வது இணைக் குறிலையடுத்தும் அளபெடுக்குமென்பதும் அவை மொழியின் இடையிலுங் கடையிலும் அளபெடுக்குமென்பதும் நன்னூலார் கூற்றாகும். இப்பதினோரெழுத்துங் குறிற்கீழ் மொழி யிடையில் அளபெடுக்கப் பதினொன்றும், மொழிக் கடையில் அளபெடுக்கப் பதினொன்றுமாக ஒற்றளபெடை இருபத்திரண் டாகும். அவ்வாறே குறிலிணைக் கீழ் மொழியிடையில் அள பெடுக்கப் பதினொன்றும், மொழிக் கடையில் அளபெடுக்கப் பதினொன்றுமாக இருபத்திரண்டாகும். இவ்விரு வகையாலும் ஒற்றளபெடை நாற்பத்துநான் காதல் வேண்டும். ஆனால் ஆய்தம் குறிற் கீழ்க்கடை, குறிலிணைக் கீழ்க்கடை என்னும் இரண் டிடத்தும் வருதலின்மையால் மேற்கண்ட நாற்பத்து நான்கில் இரண்டு கழிக்க ஒற்றளபெடை நாற்பத்திரண்டாகும். ஒற்றள பெடையை உதாரண முகத்தாற் காண்போம்.
* எங்ங் கிறைவ னுளனென்பாய் மனன்ேயா
னெங்ங் கெனத் திரிவாரின் "- இங்கு ங்கரவொற்றுக் குறிற் கீழ் இடையில் அளபெடுத்தது.
* இலங்ங்கு வெண்பிறைகு டீசனடி யார்க்குக்
கலங்ங்கு நெஞ்சமிலை காண் " இங்கு குறிலிணைக் கீழ் இடையில் அளபெடுத்தது.
* அங்ங் கனிந்த வருளிடத்தார்க் கன்பு செய்து
நங்ங் களங்கறுப்பா நாம்” இங்கு குறிற்கீழ்க் கடையில் அளபெடுத்தது.
11 籤

Page 15
* மடங்ங்கலந்த மனனே களத்து
விடங்ங் கலந்தானை வேண்டு ** இங்கு குறிலினைக் கீழ்க் கடையில் அளபெடுத்தது.
*" எஃஃ கிலங்கிய கையரா யின் னுயிர்
வெஃஃகு வார்க்கில்லை வீடு ** இங்கு ஆய்தம் குறிற் கீழ் இடையில் அளபெடுத்தது.
*" விலஃஃகி வீங்கிரு ளோட்டுமே மாத
சிலஃஃகு முத்தி னினம் " இங்கு ஆய்தம் குறிலினைக் கீழ் இடையில் அளபெடுத்தது. ம ற்  ைற ய எழுத்துக்களுக்கு உதாரணம் வந்தவழிக் காண்க.
குற்றியலுகரம்
குற்றியலுகரம் தொல்காப்பியர் காலத்தில் மிகமிக முக்கி யத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்பட்டதென்பதற்கு அந் நூலுட் பல சான்றுகள் உள. பிற்கால யாப்பிலக்கண ஆசிரி யர்கள் செய்யுளுக்கு உறுப்பாய அசை வகுக்குங்கால் நேரசை நிரையசை என்னும் இரண்டே கொண்டனர். தொல்காப்பியர் குற்றியலுகரத்தைப் பய்ன் படுத்தி நேர்பு அசை, நிரைபு அசை என வேறிரண்டு அசைகள் சேர்த்து அசை நான்கு என்பர். சொற்புணர்ச்சி கூற வந்த தொல்காப்பியர் குற்றியலுகரப் புணரியல் எனக் குற்றியலுகரப் புணர்ச்சிக்கே தனியான ஒரியல் வகுத்துள்ளார். வெண்பாவில் ஈற்றடி இறுதிச் சீரில் குற்றியலு கரத்தின் பயன்பாடு இக்காலப் புலவர்களாலுங் கைக்கொள்ளப் பட்டு வருகிறது.
இக்காலத்தில் குற்றியலுகரம் பெரும்பாலும் பயன்பாடு டையதெனக் கூறமுடியா தென்பது உண்மைதான். முற்றியலுக ரத்தின் வேறு படுத்திக் குற்றியலுகரத்தை ஒலிப்பாரும் அரியர் முற்றியலுகரம் ஒரு மாத்திரை யுடையது. குற்றியலுகரம் அரை மாத்திரை யுடையது. தும்மு என்னுஞ் சொல்லின் முதலெழுத் தும் ஈற்றெழுத்தும் முற் றி ய லு கி ர ல் க ள். அவை ஒவ்வொரு மாத்திரை யொலிப்பன. பாக்கு என்னுஞ் சொல்லின் இறுதி யெழுத்துக் குற்றியலுகரம். இது அரைமாத்திரைப் பொழுதே யொலிப்பது. உகரம் இதழ் குவித்துச் சொல்லும்போது ஒரு மாத்திரை பெற்று முற்றிய லுகரமாகி விடுகிறது. குற்றியலுக
懿 12

_“¶೨೫ ಣಃ à ரத்தை இதழ் குவியாமற் சொல்வதே அதன் மாத்திரையை அரையாக வைத்துக் கொள்ளும் வழியாகும். குற்றியலுகரத்தை உகரத்தொனி தெளிவாக ஒலிக்காமற் செய்வதே அதன் இயல் பைப் பேணும் முறையாகும். பாக்கு என்னுஞ் சொல்லிலுள்ள முதலீர் எழுத்துக்களையும் ஒலித்த பின்பு மூன்றாமெழுத்தாகிய "கு" என்பதை "க்" என்னும் எழுத்துக்குரிய மாத்திரை யளவில் உகரமும் ஒலிக்க வைப்பதே குற்றியலுகரப் பண்பு பேணுவார் கடனாகும். "பாக்க்" என்பதை ஒலிப்பது போல ஒலித்து உகரக் கூறும் புலப்படச் செய்தல் வேண்டும்.
குற்றியலுகரத்தை இ வ் வ நூறு பேணுவதால் ஆம்பயன் யாதென வினவுவாரும் உளர். சொற்களில் எழுத்துக்கள் நுட்ப மாக உச்சரிக்கப்படுமாற்றைக் கண்டு பிடித்து அவற்றின் மாத் திரையையும் அளவிட்டுக் கூறிய இலக்கணகாரர் கருத்தைத் தழுவி அவற்றை உச்சரிப்பது மொழிப் பாதுகாப்புக்குந் தூய் மைக்கும் இன்றியமையாதது என்பதை மறுக்கமுடிாேது, அந்த வகையில் குற்றியலுகரத்தின் இயல்பு பேணுதல் நங்கடனாகு மென்க. இதன் இன்றியமையாமையை உணர்ந்தே நன்னூலா ரும் குற்றியலுகரம் வருதற் குரிய சார்பும் பற்றுக் கோடும் பற்றி நுட்பமாக ஆராய்ந்துள்ளார். குற்றியலுகரம் பற்றி தன்னூலார் கூறுவதை நோக்குவோம். 64 (OC3, a cu
குற்றியலுகரமாவது யாது என்னும் வினாவுக்கு உரையா ஒரியர்கள், 'தனிக் குற்றெழுத் தல்லாதி மற்றைய எழுத்துக் களின் பின்னே சொல்லின் இறுதியிலே வல்லின மெய்யின் ஏறிவரும் உகரம் குற்றியலுகர" மென விடை பஈர்வர். எனவே குற்றியலுகரம் க், ச், ட், ந், ப், ற் என்னும் ஆறு மெய்களில் ஏதாவது ஒன்றின் மேல் நிற்க வேண்டு மென்பது ஒருவிதி. இதனை வேறு விதமாகக் கூறுவதானால் குற்றியலுகரத்தைப் பெற்று வருஞ் சொல்லின் இறுதி யெழுத்து கு, சு, டு, து, பு, று என்பவற்றில் ஒன்றாதல் வேண்டும். இவ்வாறு வரும் எல்லாச் சொல்லின் இறுதி யெழுத்துங் குற்றியலுகர மாவதில்லை. தனிக் குற்றெழுத்தைச் சார்ந்து குற்றியலுகரம் வருவதில்லை. தனிக் குற்றெழுத்தென்பது ஒரு குற்றெழுத்தாகும். 'அது' என்னுஞ் சொல்லிலுள்ள அகரம் தனிக் குற்றெழுத்து, "படு" என்பதிலுள்ள பகரவுயிர் மெய்யுந் தனிக் குற்றெழுத்தேயாகும். இவற்றைச்
13激

Page 16
சார்ந்த து" என்பதும் டு" என்பதும் குற்றிய்லுகரங்க ளாகா அவை முற்றியலுகரங்களே. இவற்றைக் குற்றியலுகரம் போல ஒலித்தால் சொற்பொருள் விளங்காமற் போகும் என்பதை அனுபவ ரீதியாக உச்சரித்துப் பார்த்தறிக.
குற்றியலுகர வீற்றுச் சொல்லைக் கண்டு பிடித்த பின் அது எவ்வகைக் குற்றியலுகரம் என்பதையுங் கண்டறிய் வேண்டும், அவ்வாறு கண்டறிந்து தீர்மானிப்பதற்கு இறுதியெழுத்துக்கு முன்னுள்ள அதாவது ஈற்றயலிலுள்ள எழுத்தை நோக்குதல் வேண்டும். ஈற்றயலெழுத்து வல்லின மெய்யாக விருந்தால் அது வன்றொடர்க் குற்றியலுகரமாகும். மென்றொடர்க் குற்றியலுகரம். இடையின மெய்யாக விருந்தால் இடைத் தொடர்க்குற்றியலுகரம். ஈற்றயலெழுத்து ஆய்த வெழுத்தாக விருந்தால் அது ஆய்தத் தொடர்க் குற்றியலுகர மாகும். உயிரெழுத்தாக விருந்தால் அது உயிர்த்தொடர்க் குற்றியலுகர மெனப்படும். உயிரெழுத்துச் சொல்லின் இடையில் வரும்போது மெய்யின் மேலேறி உயிர்மெய் நிலையிலேயே நிற்கும். இறும்பூது என்னுஞ் சொல்லை யெடுத்துக் கொண் டால் அதன் ஈற்றயலெழுத்து "பூ" என்பதாகும். "பூ" என்பது ப்+ஊ என ஒலியிற் பிரிபடும். ஆதலால் குற்றியலுகரத்துக்கு அயலெழுத்து "ஊ" என்பதே. அது உயிரெழுத் தாகையால் இறும்பூது என்பது உயிர்த்தொடர்க் குற்றியலுகரமாகும். ஈரெழுத்தில் குற்றியலுகரச் சொல் அமைவதானால் அதன் முதலெழுத்து தெட்டெழுத்தாதல் வேண்டும். குற்றெழுத்தாயின் அது தனிக்குறில் என விலக்கப்படும். முதலெழுத்து நெட்டெ ழுத்தாகி ஈரெழுத்தில் வருங் குற்றியலுகரம் நெடிற்றொடர்க் குற்றியலுகர மாகும், நெடில் உயிர் நெடிலாகவேனும் உயிர் மெய் நெடிலாகவேனும் ருக்கலாம் .
அறுவகைக் குற்றியலுகரத்துக்கும் உதாரணம் காண்போம்.
பாக்கு - வன்றொடர்க் குற்றியலுகரம் நுங்கு - மென்றொடர்க் குற்றியலுகரம். வெய்து - இடைத்தொடர்க் குற்றியலுகரம்.
ஒன்பது உயிர்த் தொடர்க் குற்றியலுகரம். ஆடு, காடு - நெடிற்றொடர்க் குற்றியலுகரம். அஃது - ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்.
徽 14

நன்னூலார் குற்றியலுகரம் முப்பத்தாறு என்பர். அது எவ்வாறு என்பது பற்றி இனிச் சிந்திப்போம். வல்லெழுத்துக்கள் ஆறுந் தனித்தனி சொல்லின் ஈற்றயலெழுத்தாக வரும் போது வன்றொடர்க் குற்றியலுகரம் ஆறு பெறப்படும். மெல் லெழுத்துக்கள் ஆறும் அவ்வாறு வரும்போது மென்றொடர்க் குற்றியலுகரமும் ஆறு பெறப்படும். இடைத்தொடர்க் குற்றிய லுகரம் ஐந்தே பெறப்படும். ஏனெனில் வகர மெய் வல்லின மெய்யோடியைந்து வராமையாலென்க. உயிரெழுத்துக்கள் பன்னிரண்டில் ஒளகாரம் மொழியிடையில் வராமையால் ஒன்று நீக்கிப் பதினொரு உயிரெழுத்துந் தனித்தனி ஈற்றயலெழுத்தாக வர உயிரித் தொடர்க் குற்றியலுகரம் பதினொன்றாகும். உயிரி நெட்டெழுத்துக்கள் ஏழும் த னித் த னி உயிரெழுத்தாகவோ அல்லது மெய்யுடன் சேர்ந்து உயிர்மெய் யெழுத்தாகவோ மொழி முதலில் தனிநெடிலாகவர நெடிற்றொடர்க்குற்றியலுகரம் ஏழாகும். ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் ஒன்றுஞ் சேர்க்க அறுவகைக் குற்றியலுகரத்தின் விரிமுப்பத்தாறாதல் காண்க. உயிர்த் தொடர்க் குற்றியலுகரம் பதினொன்றெனப்பட்டதேனும் எகர ஒகரங்கள் வல்லின மெய்யின்மேல் ஏறிவரும் உகரத்துக்கு அயலில் வர உரையாசிரியர்கள் உதாரணங் காட்டிற்றிலர். வந்த வழிக் காண்கவென்றே யொழிந்தார்.
குற்றியலுகரம் முப்பத்தாறாதலை வேறுவிதமாக்க் கணிப் போரும் உளர். வன்றொடர் முதலிய ஆறு வகைகளும் ஈற்றில் நிற்கும் கு, சு, டு, து, பு, று என்னும் ஆறோடும் உறழக் குற்றிய லுகரம் முப்பத்தாறாகும் என்பது அவர்கள் கருத்து. ஆய்தம் ஆறு வல்லின மெய்களோடுஞ் சொல்லில் வருவது சாத்தியமின் மையால் இவ்வகையாற் குற்றியலுகரம் முப்பத்தாறாதலுஞ் சாத்தியமில்லை யென்க.
நுந்தை என்னும் முறைப் பெயரின் முன்னின்ற மெல்லின மெய்யின் மேலேறிய உகரமுங் குற்றியலுகர மென்பர், இதனை யுஞ் சேர்த்துக் குற்றியலுகரம் முப்பத்தேழென்னாமையின் உயிரித்தொடரில் ஏதோ ஒரு எழுத்தை நன்னூலாசிரியரும் ஈற்றயலெழுத்தாக வராதென விலக்கினார் போலும், குற்றிய லுகர மல்லாது சொல்லின் கடையில்வரும் உகரங்களும் மொழி முதலிலும் இடையிலும் வரும் உகரங்களும் முற்றியலுகரங்களே.
15籌

Page 17
நுந்தை என்றமுறைப் பெயரில் முன்னின்ற உகரம் குறுகுமென் பது நன்னூலாராற் கூறப்படவில்லை. உரையாசிரியர்கள் கூறுப தொல்காப்பியர் நுங்தை என்னும் முறைப் பெயரின் உகரம் குற்றியலுகர மென்பர்.
குற்றியலிகரe
குற்றிய லிகரம் என்பது ஓசை குறைந்த இகரமேயாகும் இகரம் ஒரு மாத்திரையுடையதாயிருப்பக் குற்றியலிகரம் அரை மாத்திரை யுடையதாய் ஒலிக்கும். குற்றியலுகரத்தைச் சார்ந்தே குற்றியலிகரம் பிறத்தலால் அது குற்றியலுகரத்தின் பின் வைக் கப்படுவதாயிற்று. குற்றியலிகரமும் சார்ந்து வரன் மரபின் முன்றெனத் தொல்காப்பியரால் கூறப்பட்ட வற்றுள் ஒன்றென் பது முன்னரே அறியப்பட்டதாகும். குற்றியலுகரத்தை ஈறாக வுடைய சொற்களின் முன் 'யா' என்னும் எழுத்தை முதலாகக் கொண்ட மொழி வரும்போது குற்றியலுகரம் இகரமாகத் திரியும், அவ்வாறு திரிந்து வந்த இகரமும் முன்னர் நின்ற குற்றியலுகரம்போல அரைமாத்திரை கொண்டதாவே ஒலிக்கும். குற்றியலுகரம் முப்பத்தாறாதல் பெறப்பட்டமையால் குற்றிய லிகரமும் அவ்வகையால் முப்பத்தாறாகும். அம்முப்பத்தாறோடு உரையசைச் சொல்லாகிய "மியா’ என்பதன் முதலிலுள்ள மகர வொற்றுார்ந்த இகரமும் அரை மாத்திரை யளவினதாக ஒலித்துக் குற்றிப்லிகரமாகிறது. கேள் என்ற பொருளில் வழங்குங் கேண்மியா என்ற சொல்லில் மியா வென்பது உரையசை. அதற் கெனப்பொருள் இல்லாமையால் அது அசை யெனப்பட்டது. அதனாற் "குற்றியலிகரத்தின் விரிந்த தொகை முப்பத்தேழா யிற்று.
தொல்காப்பியர் குற்றியலிகரம் பற்றிக் கூறுவதையும் அவதானிப்பது நல்லது. அவர் இவற்றை வீரித்துத் தொகை கூறிற்றிலர்
குற்றிய லிகரம் நிற்றல் வேண்டும்
யாவென் சினைமிசை யுரையசைக் கிளவிக்கு
ஆவயின் வரூஉம் மகர மூர்ந்தே." (தொல்-மொழிமரபு 1) என்பதவர் கூற்று. அதில் யாவென்னும் எழுத்தை முதலாக வுடைய மொழிகள் வந்து புணரும்போது தோன்றுங் குற்றியலிக ரத்தைக் குறிப்பிட்டுள்ளார். அந் நூற்பாவிற்றானே உரையசைக்
懿 16

*、 - - - * ܢ ܝ ܬܘ - . . . . கிளவிக்கு ஆவயின் வரூஉம் மகரமூர்ந்தே" என்பதனால் மியா வென்னும் உரையசைச் சொல்லில் வரும் இகரத்தையுங் குற்றிய லிகரம் என்றார்.
நன்னூலார் குற்றியலிகரம் பற்றிக் கூறுகையில்
"யகரம் வரக் குறளுத்திரி இகரமும் அசைச்சொன் மியாவின் இகரமுங் குறிய" (நன். எழு. 38)
எனக்கூறிக் குற்றியலிகரத்தைப் பெற வைத்தார். "இ? முப்பானேழ், உகரம் ஆறாறு எனக் கூறி நன்னூலார் குற்றிய லிகரம் முப்பத்தேழு என்பதையுங் குற்றியலுகரம் முப்பத்தாறு என்பதையும் பெற வைத்தார்.
நாடு + யாது = pi5 ITL g KA U FT ġ5/ வரகு + யாது = வரகியாது எஃகு + யாது ா எஃகியாது
எனவரும், இவ்வாறே மற்றைய குற்றியலுகர வீற்றுச் சொற்கள் முன்னும் யகர முதன் மொழியைப் புணர்த்திக் கேண்மியா என்னும் உரையசைச் சொல்லின் இகரத்தையுஞ் சேர்த்துக் குற்றியலிகரம் முப்பத்தேழாதல் காணலாம்.
ஐகாரக் குறுக்கம்
ஐகாரம் இலக்கண ஆசிரியிர்களால் நெட்டெழுத்தாகவே கொள்ளப்பட்டது. ஆனால் அது தனியெழுத்தாகத் தன்னை உச்சரிக்கும் போது மாத்திரம் இரண்டு மாத்திரையுடையது என்பதும் அவர்கள் கருத்து. இவ்வெழுத்து மொழியில் வரும் போது தனது மாத்திரை குறைந்து ஒரு மாத்திரையளவினதாக ஒலிக்கும் என்பர். அவ்வாறு ஒலிக்கும் போது அது ஐகாரக் குறுக்கம் எனப்படும். ஐவர் என்னுஞ் சொல்லின் முன்னிற்கும் "ஐ" என்னும் நெட்டெழுத்து செய்யுளில் ஒரடியுள் முன்வந்தால் அடுத்த அடியில் உய்வர் என்பது முதலில் வரும்போது இரண்டும்
ஒசையால் ஒத்து நடக்கக் காண்கிறோம். உய்வர் என்பதி லுள்ள உய்" என்பதும் "ஐ" என்பதோடு ஒசையால் ஒத்து நடக்கக் காண்கிறோம். 'உய்' என்பதிலுள்ள உகரம் ஒரு மாத்
ரையும் யகரமெய் அரைமாத்திரையுந் தனித்தனி பெறற்பாலன வேனும் இரண்டுஞ் சேர்ந்து ஒரு மாத்திரையே பெறுமென்பது
17鯊

Page 18
பொருத்த மூடையதாகத் தெரியவில்லை. அதனால் ஐவர் என்பதிலுள்ள ஐகாரமும் ஒரு மாத்திரையூே பெறுமென்பது ஆராயப்படவேண்டியதே. தொல்காப்பியரும் நன்னூலாரும் இவ்வைகாரம் மொழி முதலிலன்றி மொழியிடை கடைகளிலும் ஐகாரக் குறுக்கமாகுமென்பர். ஐகாரம் மொழி முதல், மொழி விடை, மொழியிறுதி என்னும் மூன்றிடத்துங் குறுகுவதால் ஐகாரக் குறுக்கம் மூன்று என்பர். நன்னூலார், "தற்சுட் டளபொழி ஐமூவழியும் நையும்?? - தேன். எழு. 40) என்பர். ஐகாரம் எழுத்தெனச் சுட்டி வரும்போது மட்டும் இருமாத் திரை பெறும் என்பதும் சொல்லில் எவ்விடத்துவரினும் LOTä. திரையிற் குறுகி ஐகாரக் குறுக்கமாகுமென்பதுமே இந்நூற் வாவின் பொருளாகும்,
தொல்காப்பியர் ஐகாரக் குறுக்கம் முதலியவற்றைச் சார்ந்து வரன் மரபினவெனக் கூறாதபோதும் அவை குறுகியொலிப்பது பற்றி அவர் கூறத் தவறவில்லை. தொல்காப்பிய Զ9&ITU հի குறுகுதல் பற்றிக் கூறுவது கவனிக்கத்தக்கது. அவர் 3égraph, ஒளகாரம் என்னும் இரண்டும் பற்றிப் பேசுகையில்,
" ஓரள பாகும் இடனுமா ருண்டே
தேருங் காலை மொழிவயி னான?
- (தொல், மொழிமரபு - 24) என்பர். இதன் பொருள் ஐகாரம் ஒளகாரம் என் இரண்டு மாத்திரை யளவினவாய் ஒலித்தலின்றி மொழிக்கண் வரும்போது β)(ή மாத்திரையளவினவாயும் ஒலிக்கும் என்பது. 960sra) மொழியின் மூவிடத்தும் ஐகாரங் குறுகு மென்பது தொல்காப்பியர்க்கும் உடன்பாடானதே. ஐப்பசி, இடையன், குவளை என்பை ஐகாரம் மொழியின் மூவிடத்துங் மிேகுவதற்கு உதாரண களாகும்.
நன்னூலார், "தற்சுட்டளபொழி ஐமுவழியும் நையும்? என் பதனால் தன்னைச் சுட்டும்போதும் சீ57வது எழுத்தாக உச்டி: கும்போதும் அளபெடுக்கும்போதும் ஐகாரம் குறுகாது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
தொல்காப்பியர், ! ஒரள பாகும் இடனுமா ருண்டே
தேருங்காலை மொழிவயினான" என் பதனால் ஓரளபாகாத இடமும் உண்டென்பது பேறப்படுகிறது. ஒரளபாகும் இடனுமாருண்டே என்பதனால் மொழியில் ஓரள
鯊18

*** Ebhar garri
— ................................. "్వes பாகாத இடமும் உண்டென்பது தொல்காப்பியர் கருத்தா? சீசில 'உம்' இடைச்செ எடுத்துக் காட்டுகிறது. இதன் pGeoLib ஐகாரந் தன்னை உச்சரிக்கும்போது குறுகாது என்ற கருத்தையுந் தழுவிக்கொண்டார்.
ஒளகாரக் குறுக்கம்
தொல்காப்பியரும் நன்னூலாரும் ஐகார ஒளகாரங்கள் குறுகுவதற்கு ஒரே தன்மையான இலக்கணத்தைக் கூறியுள்ளனர் என்பது உரையாசிரியர்கள் கருதிது. நன்னூலார் கிருத்துப்படி தன்னைச் சுட்டிக் கூறும் இடத்திலும் அதாவது எழுத்தாக உச்சரிக்கும் போதும் அளபெடையிலும் மட்டுமே ஒளகாரம் இரண்டு மாத்திரையளவினதாக ஒலிக்கும். மொழிகளில் வரும் போது ஒளகாரங் குறுகியொலித்து ஒருமாத்திரை பெற்று ஒளகாரக்குறுக்கமாகும் என்பை தி ஒளவும் முதலற்றாகும் என்பதனாற் குறுப்பிட்டுள்ளார். ஒளகாரம் ஐகாரம்போல் மொழியின் மூவிடத்தும் வருவதில்லை. அது மொழியின் முதலில் மாத்திரம் வருவதாகும். அதனால் ஒளகாரக் குறுக்கம் எண் ணிைக்கையில் ஒன்றேயாகும்.
தொல்காப்பியர் ஒளகாரக் குறுக்கத்தையுஞ் சார்ந்து வரும் எழுத்தாகக் கொள்ளாராயினும் அது குறுகுமாறு பற்றிக் கூறத் தவறிற்றிலர். மெள என்பது ஒளகாரக் குறுக்கத்துக்கு உதாரணமாகும்.
ஐகார ஒளகாரம் பற்றிய ஓர் ஆய்வு
ஐகார ஒளகாரங்கள் பற்றி இலக்கண s-2,3Fífl tau tř ty 6) is? 6io ருத்து என்னவெனில் அவை மற்றைய நெட்டெழுத்துக்கள் போல இவ்விரண்டு மாத்திரை பெறுமென்பதும் அவைமொழி களில் வரும்போது குறுகி ஒருமாத்திரை பெறும் என்பதுமே ாகும் ஆகாரம், ஈகாரம் முதலிய நெட்டெழுத்துக்களுக்கும் கோரம் ஒளகாரம் ஆகிய நெட்டெழுத்துக்களுக்கும் ஒலித்தலில் வேறுபாடு சிறிதிருப்பதை நாம் உணரலாம். இவ் விர ண் டு ந் விர்ந்த ஏனையவை நீட்டி ஒலிக்கக்கூடிய இயல்புடையவை. அவற்றுக்கு இனமான குற்றெழுத்துக்கள் உள. ஐகார ஒளகாரங் ருக்கு இனமான குறில்கள் நேரில் இல்லை. இவை ஒலிப்பதிலும்
19靈

Page 19
வேறுபாடு காணப்படும். இவை நீண்டொலிக்க முடியாமல் அமுக்கி ஒலிக்கப்படுவன. இவை குறில்போல ஒருமாத்திரை பெறாமலும் நெடில்போல இரண்டு மாத்திரை பெறாமலும் இருப்பதை அவற்றை ஒலித்துப் பார்த்து உணரலாம். தொல் காப்பியர் உயிர் எழுத்துக்களைக் குறில் நெடில் என இரண்டாக வகுத்து ஐகார ஒளகாரங்களை அளபெடுப்பது கருதி நெட் டெழுத்துக்களோடு சேர்த்தார் என எண்ணத் தோன்றுகிறது. இவை பன்மைபற்றிய வழக்கால் இரு மாத் தி  ைர பெற்றன போலும் ஐவர் என்ற சொல்லோடு உய்வர் என்ற சொல் மாத்திரையால் ஒத்துப்போகிறதென்பதை எவரும் ஆட் சேபிக்க முடியாது. "ஐ" என்னும் ஒரெழுத்துக்குப் பதிலாக உப் என்னும் ஈரெழுத்துக்களும் நிற்கின்றன. இவ்விரண்டெழுத்துக் களில் உகரம் ஒரு மாத்திரையும் யகரமெய் அரை மாத்திரையும் பெறுவதியல்பே. எனவே அவை ஒன்றரை மாத்திரைக்குரியவை. யகரமெய் முதலில் வத்து உகரவுயிர் பின்னர்வரின் மட்டுமே அது ஒரு மாத்திரை பெறும். ஆதலால் ஐகாரம் மொழியில் வரும்போது ஒன்றரை மாத்திரை பெறுகிறதென்பது பொருத் தமானதே.
ஒளகாரமும் இத்தகையதே, ஒளவை என்ற சொல்லை முதலடியில் வைத்துக் கொவ்வை என்ற சொல்லை அடுத்த அடியில் வைத்துப் பார்ப்பின் இவ்வுண்மை விளங்கும். ஐகாரம் ஒளகாரம் என்பன பன்மை பற்றிய வ ழ க் கு ப் படி யும் அளபெடுத்தல் பற்றியும் நெட்டெழுத்துக்களாக எண்ணப் பட் டாலும் அவை நெடிலுக்குங் குறிலுக்கும் இடைப்பட்ட ஒலியை யுடைய எழுத்துக்கள் என்பது பெறப்படுகிறது. ஐகார ஒளகா ரங்களுக்கு மாத்திரை தனித்தனி ஒன்றரையெனக் கொண்டால் அவை குறுகியொ லித் த ன வென்றபேச்சுக்கேயிடமில்லை. ஐக்ார ஒளகாரக் குறுக்கங்களுந் தேவைப்பட்டிரா, ୋ} &୪) q! அளபெடுக்கும்போது எத்தனை மாத்திரை பெறும் என்பதும் ஆராயத்தக்கது. அளவெடுத்தற்கு அடையாளமாக ஐகாரத்துக்கு இகரமும் ஒளகாரத்துக்கு உகரமும் எழுதப்படுகின்றன. அவை ஒவ்வொன்றுந் தனித்தனி ஒரு மாத்திரை பெறுவதால் அவை அளபெடுக்கும் போது மூன்று மாத்திரை பெறாமல் இரண் டரை மாத்திரை பெறுதலே பொருத்தமாகும். தொல்காப்பியர்
淡20

{് A
இதனையும் பன்மை பற்றிய வழக்கப்படி மிற்றை உயிரள பெடைகள் மூன்று மாத்திரை பெறுவதால் இவற்றையும் மூன்று மாத்திரை பெறுமெனக் குறிப்பிட்டார் போலும், வீரசோழிய நூலாசிரியர் புத்த மித்திரனார், "ஒன்றரையாகும் ஐ ஒள" (வீர. சந்திப்படலம் - 5) என்பர். இப்பகுதிக்கு வீரசோழிய உரையாசிரியர் ஐகார ஒளகாரக் குறுக்கங்கள் ஒன்றரை மாத்திரை பெறுமெனக் கூறியுள்ளார். வீரசோழியகாரரும் ஐகார ஒளகா ரங்களின் மாத்திரை பற்றிச் சிந்தித்துள்ளனர் என்பதற்கு இவை சான்றாகின்றன.
ஐகார ஒளகாரங்கள் ஒன்றரை மாத் தி  ைர வெறுமென வீரசோழியகாரர் கூற வீரசோழிய உரையாசிரியர் ஐகார ஒளகாரக் குறுக்கங்கள் ஒன்றரை மாத்திரை பெறுமெனக்கூறியது மொழியில் அவை வரும்போது அவற்றுக்கு எதுகையாக வரும் ஈரெழுத்துக்கள் ஒன்றரை மாத்திரை பெறுவது குறித்தேயெனக்
கொள்ளலாம்,
அளபெடையில் வரும்போது அவை ஊன்றி உச்சரிக்கப் பட்டு இருமாத்திரையையும் அதன்மேல் அளபெடைக்கு அடை யாளமாக வரும் "இ", "உ" என்பவற்றின் தனித்தனி ஒரு மாத் திரையையும் பெற்று அளபெடையில் மூன்று மாத்திரை பெறு மென்பதும் கருதத்தக்கது. ஐ, ஒள ஒன்றரை மாத்திரை பெறும் என்ற வீரசோழிய நூலாசிரியர் கருத்துத் தவறானதெனச் சொல்ல முடியாது. நன்னூலார் எழுத்தை மட்டும் உச்சரிக்கும் போதும் அளபெடையிேலும் மட்டுமே ஐகார ஒளகாரங்கள் இரண்டு மாத்திரை பெறுமெனவும் அவை சொல்லில் வரும்போது குறுகி ஒரு மாத்திரை பெறுமெனவும் வரையறுத்துக் கூறினார். ஆனால் தொல்காப்பியர் "ஓரளவாகும் இடனுமாருண்டே" என்பதன் மூலம் அவை ஒன்றரை மாத்திரை பெறுமென்பார் கூற்றுக்கும் இடந்தந்துள்ளமை கருதத்தக்கது. 'உம்' என்னும் இடைச் சொற் கொடுத்துத் தொல்காப்பியர் ஐகார ஒளகாரங்கள் பற்றிய வீரசோழியகாரர் கருத்துக்கும் இடந்தந்துள்ளமை பாராட்டத் தக்கது. வீரசோழியகாரர் ஐ, ஒள ஒன்றரை மாத்திரை பெறு மெனக் கூறினாரன்றி அவை எழுத்திலா சொல்லிலா என்பதைக் கூடவரையறுத்துச் சொன்னாரல்லர். ஆதலால் அவர் ஐகாரங் கள் எங்கும் ஒன்றரை மாத்திரை பெறுமென்னுங் கருத்துடையர் என்பதையும் மறுப்பதற்கில்லை.
21囊

Page 20
இனி நேமிநாத நூலுடையார் கருத்தையுங் காண்போம். அவர், 'ஐ, ஒள அளவொன்றரை" (எழுத்து - 5) எனக் கூறியதும் வீர சோழியகாரர் கருத்தை அரண் செய்வதாகும். எழுத்தாக உச்சரிக்கும் போதிலும் அளபெடையிலுமன்றிச் சொல்லில் எங்குவரினும் ஐ, ஒள. ஒன்றரை மாத்திரைக்குரிய வென்பதையே வீரசோழிய காரரும் நேமிநாத காரரும் கூறினர் என்பதும் பொருத்தமானதே. எழுத்துக்களைச் சாரியை கொடுத் துச் சொல்லும் போது நெட்டெழுத்துக்கள் காரச்சாரியை பெற ஐகார ஒளகாரங்கள் காரம் கான் என்னும் இரண்டு சாரியை பெறுவதும் ஐகார ஒளகாரங்கள் மற்றைய நெட்டெழுத் துக்களின் வேறுபட்டவை என்பதற்கு ஒரு காரணமாகும். அவற் றிற்கு ஒத்த இனக் குறில் இல்லாமையும் இன்னொரு காரண மாகும்.
மகரக் குறுக்கம்
மகரக் குறுக்கம் பற்றியும் தொல்காப்பியர் கூறியுள்ளார். ஆனால் சார்ந்து வரன் மரபினையுடையதாகத் தொல்காப்பியர் மகரக் குறுக்கத்தைக் கொண்டிலர் என்பது முன்னர்க் காட்டப் பட்டது, “னகாரைமுன் மகாரங் குறுகும்" -(தொல் எழு- மொழி மரபு 19) என்பது தொல்காப்பியம். னகர வொற்றின் முன்வரும் மகரங் குறுகியொலிக்கும் என்பது தொல்காப்பியர் கூற்று. ஆனால் நன்னூலாரோ னண முன்னும் வஃகான் மிசையும் ம குறுகும் (நன்- எழு. 41) எனக் கூறித் தொல்காப்பியர் கூறிய னகரத் தோடு ணகரத்தையுஞ் சேர்த்து இ ர ண் டா க் கி அதன்மேல் வகரத்தின் மிசையும் குறுகும் என மகரக் குறுக்கத்தை மூன்றாக் 6)6OH Trio. இது பின்னோர் வேண்டும் விகற்பங் கூறல் என்ற வழிநூல் இலக்கணமாய் அமையும். "மருளினு மெல்லாம் மருண்ம்" என்ற விடத்து மருண்ம் என்ற சொல்லில் ணகரத்தின் முன்வந்த மகரமெய் குறிகியொலிப்பதைக் கா ண லா ம், 'திசையறி மீகானும் போன்ம்' என்ற விடத்து னகரத்தின் முன்வந்த மகரமெய் குறுகியொலித்தது.தரும் வளவன் என்பதில் வகரவுயிர்மெய்வர மகரங்குறுகிற்று. இவ்வாறு னகர, ணகர, வகரச் சார்பால் மகரங் குறுகியொலிப்பதால மகரக்குறுக்கம் மூன்றாயிற்று.
濠22

முதலெழுத்துக்களின் பாகுபாடு
முதலெழுத்துக்கள் உயிரும் உடம்புமாம் முப்பதென்பதும் அவற்றுள் உயிர்பன்னிரண்டு உடம்பு பதினெட்டு என்பதும் தொடக்கத்திற் கூறப்பட்டவை. உயிர் ஆவியெனவும் உடம்பு மெய்யெனவுஞ் சொல்லப்படும். உயிரெழுத்துப் பன்னிரண் டாவன, அகரமுதல் ஒளகாரம் ஈறானவை என்பதும் மெய் யெழுத்துக்கள் ககரமெய்முதல் னகர மெய் ஈறாகப் பதினெட்டு என்பதும் அங்குக் கூறப்பட்டவையே, உயிரி எழுத்துக்கள் குறில் நெடில் என இரண்டாக் வகுக்கப்படும் அ, இ, உ, எ, ஒ என்னுமி ஐந்துங் குற்றெழுத்தாம். ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் ஏழும் நெட்டெழுத்தாம்.
மெய்யெழுத்துக்களில் க், ச், ட், த், ப், ற் என்னும் ஆறும் வல்லின மெனவும் ங், ஞ், ண், ந், ம், ன் என்னும் ஆறும் மெல்லின் மெனவும் ய், ர், ல், வ், ழ், ள் என்னும் ஆறு ம் இடையின மெனவும் வழங்கப்படும். உயிர் எழுத்துக்கள் உயிர்போல மெய்யை இக்குவதால் அப்பெயர் பெற்றன. உயிர் என்பதும் மெய்யென் பதுங் காரணப் பெயர்கள்.
சுட்டெழுத்து
உயிரெழுத்துக்களிற் சில சுட்டெழுத்தாகவும் வரும், அ, இ, உ என்னும் மூன் றெழுத்து க் களு ஞ சுட்டெழுத்துக்களாகும். இவை பொருளைச் சுட்டி யுணர்த்துவதற்காக மொ ழி யி ன் முதலில் வருபவை. இச்சுட்டுக்கள் அகச்சுட்டு, புறச்சுட்டு என இருவகைப்படும். அகரம் முதலிய இம்மூன்றும் மொழிக்கு முதலில் வரும்போதெல்லாஞ் சுட்டெழுத்தா மா றி ல்  ைல. பொருளைச் சுட்டியுணர்த்தும்போது மட்டுமே அவை சுட்டெழுத் தாவன. "அ, இ, உ மூன்றுஞ் சுட்டு" என்பது தொல்காப்பியம் தொல்காப்பியர் எவ்வாறு அவை சுட்டுப்பொருள்படும் என் பதைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை உரையாசிரியர்கள் வசமே விட்டு விட்டார். நன்னூலார் சுட்டெழுத்துப் பற்றிக் கூறு கையில், அ, இ, உ முதற் றனிவரிற் சுட்டே "(நன் - எழு. 11) என்பர். முதல் தனிவரிற் சுட்டு என்பதற்கு முதலில் தனித்துச் சுட்டுப் பொருளைக் காட்டவரின் சுட்டெழுத்தாம் என்பர் ஒர் உரையாசிரியர். இச்சுட்டு அகச்சுட்டு, புறச்சுட்டு என இரு வகைப்படும். மொழியின் அகத்துவருஞ் சுட்டு அகச்சுட்டு எனவும் புறத்து வருஞ்சுட்டு புறச்சுட்டு எனவுங் கொள்ளப்படும்.
23潔

Page 21
அவன் இவன் உவன் என்பன மொழியின் அகத்து வந்த மையால் அகச்சுட்டாயின. அக் கொற்றன் இக் கொற்றன் உக் கொற்றன் என்பன மொழியின் புறத்து வந்தமையாற் புறச் சுட்டாயின. அவன் என்பதில் அகரத்தைப் பிரித்து விட்டால் 'அன்' என்பது பொருள்தராத இடைச்சொல் ஆகிவிடும். அக் கொற்றன் என்பதில் அகரத்தைப் பிரித்து விட்டிாலும் கொற் றன் பொருள் தருஞ்சொல்லாகும். அகரம் தூரத்திலுள்ள பொருளையும் இகரம் அண்மையில் உள்ள பொருளையும் உகரம் இடைப்பட்ட இடத்தில் உள்ள பொருளையுஞ் சுட்டி வரும், உப்பக்கம் என்பது பின்பக்கம் என்பதனையும் உம்பர் என்பது மேலிடத்தையுங் குறிப்பதாக இலக்கியங்கள் காட்டுகின்றன.
அவன், இவன், உவன் என்பவற்றிலுள்ள அகர இகர உக ரங்க்ள் அன்பு, இருள், உடை என்பவற்றிலுள்ள அகர இகர உகரங்கள் போல பிரிக்க இசையாவகையில் பின்னுள்ள எழுத்துக் களோடு தொடர்ந்து நின்று பொருளையுணர்த்தாமல் பொன் னன் முதலிய சொற்களின் பகுதிபோல வேறாக நின்று சுட்டுப் பொருளை யுணர்த்துதலால் அகச் சுட்டினுஞ் சுட்டெழுத்துக்கள் தனித்தே வந்தன வென்க. அ, இ, உ என்பன அந்த இந்த உந்த என வழங்குவதுமுண்டு. இவையும் புறச்சுட்டுக்களேயாம். இவை அவற்றின் மரூஉ எனப்படும். அந்த வீடு, இந்த வீடு, உந்த வீடு என உதாரணங் காட்டலாம்.
வினாவெழுத்து
வினாவெழுத்துக்கள் பற்றிக் கூறவந்த தொல்காப்பியர், 'ஆ ஏ ஒ அம்மூன்றும் வினா" (தொல் - நூன்மர 32) எனக் கூறி னார். இம்மூன்றும் வினாப்பொருளில் வருமென்பதைக் கூறி அவை மொழியில் எவ்விடத்து நின்று வினாப்பொருளைத் தரும் என்பதைக் கூடக் கண்டு பிடிக்கும் பொறுப்பை உரை காரரிடமே விட்டு விட்டார். ஆனால் நன்னூலாரோ வினா வெழுத்து அதிகாரப்பட்டமையால் உயிரெழுத்தல்லாத 'யா' என்பதையுஞ் சேர்த்து வினாவெழுத்துத் தொகையைப் பூரணப் படுத்தியுள்ளார். நன்னூலார் வினாவெழுத்துப் பற்றிப் பின்வரு மாறு கூறுகிறார்.
"எயா முதலும் ஆஒ ஈற்றும்
ஏயிரு வழியும் வினாவாகும்மே" (நன் - எழு, 18)
灘24

எகரமும் யாவும் மொழிக்கு முதலிலும் ஆகாரமும் ஒகாரமும் மொழிக்கு இறுதியிலும் ஏகாரம் இருவழியும் வினாப்பொருள் உணர வரும்போது வினாவெழுத்துக்களாகும் என்பது நன்னுர லார் கருத்து, வினாவுள்ளும் அகவினா புறவினா என்பனவுங் கொள்ளப்படும்.
எவன், யாவன் என்பவற்றில் எகரமும் யாவும் மொழியின் முதலிலே அகவினாவாக வந்தன. எக்கொற்றன், யாங்ஙனம் என்பனவற்றில் எகரமும் யாவும் மொழியின் முதலிலே புறத்து வந்தன. வேலனா வேலனோ என்பவற்றில் ஆகாரமும் gastgraph மொழியின் ஈற்றிலே புறத்து வந்தன. ஏவன் என்பதில் ஏகாரம் மொழி முதலில் அகத்து வந்தது. கொற்றனே என்பதில் ஏகாரம் மொழியிறுதியிற் புறத்து வந்தது. மொழியின் முதலில் வரும், வினா வெழுத்துக்கள் அசுத்தும் புறத்தும் வரும். மொழியின் இறுதியில் வரும் வினா வெழுத்துக்கள் புறத்தில் மாத்திரம் வரும்.
மெய்யெழுத்துக்களின் வகை
மெய்யெழுத்துக்கள் வல்லினம், மெல்லினம் இடையினம். என மூன்று பிரிவுள் அடங்குமென்பது முன்னரே கூறப்பட்டது, வேல்லினங் கசடதபறவென வாறே" (நன். எழு, 13) என்பர் நன்னூலார், வல்லினம், வலி, வன்மை வன்கணம் எனவும் பெயர் பெறும்.
ஆசிய மொழியிற்போல உரப்பியும் எடுத்தும் கனைத்துங் கூ ற ப் ப டு ம் வல்லெழுத்துக்கள் தமிழ் மொழியில் இல்லாத போதிலும் தமிழில் உள்ள, வன்மையுள்ள நெஞ் சி லி ரு ந் து பிறப்பன இவையாதலால் வன்கணம் எனவும் வன்மை யெனவும் இவை பெயர் பெறும். ஆசிரியரி தொல்காப்பியர், வேல்லெழுத் தென்ப கசடதபற' (தொல்  ைநூான். 19) என வல்லெழுத்துக் களையெடுத்துக் காட்டினார்.
தமிழ் யொழியிலுள்ள மெல்லின மெய்யெழுத்துக்கள் ங், ஞ், ண், ந், ம், ன் என்னும் ஆறுமாம். இவை மெலி, மென்மை, மென்கணம் எனவும் பெயர் பெறும், மெல்லினம்" நுஞண நமன் வென வாறே" என நன்னூலாரும், மெல்லெழுத் தென்ப வஞண நமன" (தொல், நூான். 20) எனத் தொல்காப்பியருங் கூறுவர்.
25ష్ట్ర

Page 22
இடையின மெய்யெழுத்துக்கள், ய், ர், ல், வ், ழ், ள் என்னும் ஆறுமாம். இவை வல்லோசையோ மெல்லோசையோ பொருநீ துதலின்றி இடை நிகரணவான ஓசை பெற்று வருவதால் இடை யினம் எனப் பெயரி பெற்றன வெனலாம், அதுமாத்திரமன்றி வல்லெழுத்துக்கள் தோன்றும் மார்புக்கும் மெல்லெழுத்துக்கள் தோன்றும் மூக்குக்கும் இடையிலான மிடற்றிற் பிறத்தலால் இடையினமாயின என்றுரைப்பாகும் உளர். தொல்காப்பியர் "இடையெழுத்தென்ப ய ர ல வ ழ ள'(தொ.நூன். 21) என்னும் நூற்பாமூலம் இடையின வெழுத்துக்களை யெடுத்தோதினார். நன்னூலாரும் இதனையே, "இடையினம் ய ர ல வ ள ழ (ଜଗiଜit வாறே" (நன். எழு = 15) எனக் கூறுவர்.
இனவெழுத்து
எழுத்துக்கள் ஒன்றற்கொன்று இனமாதலை இ லக் கண நூலாசிரியர்கள் எடுத்துக் காட்டுவர். அகரமும் ஆகாரமும் ஒசையால் ஒத்த த ன்  ைம ய வாயினும் குறுகி யொலித்தல் நீண்டெனலித்தல் என்ற வகையில் வேறுபட்டும் அவைதம்முள் இனமாதல் வெளிப்படை. பிறப்பிடம், முயற்சி, அவை ஒலிக்குங் கால அளவு என்பவற்றாலும் எழுத்துக்கள் ஒன்றற் கொன்று இனமாகின்றன. அகரம் ஆகாரம் ஆகிய இரண்டும் மிடற்றிற் பிறத்தலானும் வாயைத் திறத்தல் என்ற முயற்சியிற் பிறத்த லானும் ஒன்றற் கொன்று இனமாகின்றன. ஒரு மாத்திரை பெறுதலும் இரு மாத்திரை பெறுதலுமே அவ்விரண்டுக்கும் உள்ள வேறுபாடாகும். அவ்வேறுபாடும் இல் லா வி ட் டா ல் இரண்டும் ஒரெழுத்தாகவன்றோ ஆகிவிடும்? இதனால் உயி ரெழுத்து என்னுங் கட்டமைப்புக்குட்பட்ட அகரம் ஆகாரத் துக்கும் இகரம் ஈகாரத்துக்கும் உகரம் ஊகாரத்துக்கும் எகரம் ஏகாரத்துக்கும் ஒகரம் ஒகாரத்துக்கும் இனமாக அமைகின்றன. இவற்றில் தனியெழுத்துக்களாகவுள்ள ஐகாரமும் ஒளகாரமும் தத்தமக்கு ஒத்த குறில் வடிவ எழுத்துக்களைக் கொண்டிரா மையால் அவற்று க்கு ஒத்த குற்றெழுத்துக்கள் இனமாதற் கில்லை. ஆனால் ஐகாரம் இகரத்தையும் ஒளகாரம் உகரத் தையும் இனமாகப் பெறக்கூடிய வகை யி ல் அவற்றின் ஒசை அமைந்துள்ளது. இதனையே நன்னூலாரும், "ஐ ஒள இ உச் செறிய முதலெழுத்து, இவ்விரண்டோரின மாய்வரல் முறைய்ே" (நன். எழு, 16)
鑽26

"டி, என்பர். நன்னூலார் கருத்துப்படி ஐகாரம் இகரத்தையும் ஒளகாரம் உகரத்தையும் தமக்கு இன வெழுத்துக்களாகப் பெற மற்றைய முதலெழுத்துக்கள் அனைத்தும் முறையே இவ்விரண் டெழுத்துக்கள் ஓரினமாக வருதல் மரபு என்றவாறாகும். ஐகா ரத்தை நீட்டி யொலிக்கும்போது அதன் இறுதியில் இகரம் பிறத்தலையும் ஒளகாரத்தை நீட்டி பொலிக்கும்போது உகரம் 9றத்தலையும் உ ச் ச ரி த் து ப் பார்க்கும் எவரும் இலகுவில் உணர்ந்து கொள்வர். 'ஐ'க்கு "இ"யும் 'ஒள' என்பதற்கு "உ"வும் முயற்சிப் பிறப்பால் ஒத்திருப்பதே அவை இனமாகக் காரணமாம், வாயைத் திறக்கும் அளவிற் பிறக்கும் எழுத்து அகரமாகும் வாயைத் திறவாமல் எந்த ஒசையையும் எழுப்ப முடியாது. ஆதலால் அகரம் எல்லா எழுத்துக்களிலுங் கலந்து நிற்கின்ற தென்னும் உண்மை தெள்ளிதிற் புலனாகிறது. இதனாலேயே, அேகர முதல் எழுத்தெல்லாம்" என வள்ளுவரும், "அகரவுயிர் போல், அறிவாகியெங்கும்" என உமாபதிசிவாச்சாரியாரும் எடுத் தோதினர் என்க. நன்னூலார் கூற்றுப்படி ஐகார ஒளகாரங்கள் தவிர்ந்த மற்றைய உயிரெழுத்துக்களும் மெய்யெழுத்துக்களும் இவ்விரண்டு ஓரினமாக வருமென்பது பெறப்படுகிறது.
மெய்யெழுத்துக்களையுஞ் சேர்த்தே நன்னூலார் முதலெழுத்து இவ்விரண்டு ஓரினமாய் வரல் முறையே எனக் கூறியதனால் ககரத் துக்கு நகரமும் சகரத்துக்கு ஞகரமும் டகரத்துக்கு ணகரமும் தகரத்துக்கு நகரமும் பகரத்துக்கு மகரமும் றகரத்துக்கு னகரமும் ஆக இனவெழுத்துக்கள் வரும் என்பது பெறப்படுகிறது. இனி எஞ்சியுள்ளன இடையின மெய்கள் ஆறுமே, இவையும் நன்னூலார் கருத்துப்படி யகரத்துக்கு ர கர மும் லகரத்துக்கு வகரமும் ழகரத்துக்கு ளகரமும் இனமாதல் வேண்டும். தொல்காப்பியச் சூத்திர விருத்தியுள் சிவஞான முனிவர் இடையினம் ஆறும் ஓரினமாயடங்குமெனக் கூறினார். அவர் கூற்றை ஏற்றுக் கொண்டாலும் நன்னூலாரின் இனப்பாகுபாட்டில் வழுவில்லை யென்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்துக்களின் வைப்பு முறை
அகரம் இகரம் உகரம் என்பன முயற்சிப் பிறப்பை அடிப்படையாகக் கொண்டே முறையாக வைக் கப் பட்ட ன. அவ்வாறு வைக்கப்பட்டபின் அவற்றோடொத்த நீண்ட ஒசை
27鯊

Page 23
யுடைய ஆகாரம் ஈகாரம் ஊகாரம் ஏகாரம் என்பனவாய நெட்டெழுத்துக்கள் அவ்வவ்வினக் குறில்களை யடுத்து வைக்கப் ட்ெடன. இதனால் அ ஆ இ ஈ உ ஊ எ ஏ என்பன இம் முறையில் இடம்பெற்றன. அகரக் கூறும் அதை அண்மித்துச் சார்ந்து நிற்கும் இகரக்கூறுஞ் சேர்ந்து ஐகாரம் பிறத்தலானும் அகரக்கூறும் இகரத்துக்கு அப்பாலுள்ள உகரக் கூறுஞ் சேர "ஒ" பிறத்தலானும் ஐகாரத்துக்குப் பின் ஒகரம் வைக்கப்பட்டது. ஒகரத்தைச் சார அதன் நெட்டெழுத்தாகிய ஒகாரம் வைக்கப் பட்டது. அகரக் கூறும் வகரக்கூறும் உகரக்கூறும் சேர்ந்தொலிக் கத்தோன்றும் ஒளகாரம் இறுதியில் வைக்கப்பட்டது. இதுவே உயிரெழுத்துக்களின் வைப்புமுறையாகும்.
மெய்யெழுத்துக்களில் ககரம் நகரமென்பன நாவின் அடி மேல்வாயைப் பொருந்தப் பிறத்தலானும் சகர ஞகரங்கள் இடை நாவானது மேல் வாயைப் பொருந்த்ப் பிறந்தலானும் டகர ணகரங்கள் நுனி நாவானது மேல் வாயைப் பொருந்தப் பிறத் தலானும் தகர நகரங்கள் மேல்வாயை அடுத்துள்ள பல்லின் அடியை நாநூனி தொடப் பிறத்தலானும் அம்முறையே கங்; சஞ, டண தந என்பன வைக்கப்பட்டன. இவற்றை யடுத்து இதழ்கள் இயைப் பிறக்கும் ப, ம என்பன வைக்கப்பட்டன. இவ்வாறே முயற்சிப் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு இடையினம் ய்ர்; ல்வ், ழ்ள் என்பன வைக்கப்படுவனவாயின. இவை இடை யின மென்பதாலும் எல்லாம் ஓரினம் என்பதாலும் அடுத்தடுத்து வைக்கப்படுவனவாயின. இவற்றை இடையில் நிறுத்தி றகர னகரங்கள் இறுதியில் வைக்கப்பட்டன. உலகியலில் வலியாரை முன்வைத்து மெலியாரைப் பின்வைத்தல் முறையாதலால் அவ்வாறே வல்லின மெய்கள் முன்னும் மெல்லின மெய்கள் பின்னுமாக வைக்கப்பட்டன வென்பர் தொல்காப்பியச் சூத்திர விருத்தி ஆசிரியராகிய சிவஞானமுனிவர். தமிழ்ச் சிறப்பெழுத் துக்கள் ஆதலால் றகர னகரங்கள் இறுதியில் வைக்கப்பட்டன வென்பதும் அவர் கூற்று. -
எழுத்துக்களின் பிறப்பு
எழுத்துக்கிள் பிறக்குமிடங்களையும் அ  ைவ பிறத்தற்கு
வேண்டிய முயற்சிகளையும் இலக்கண ஆசிரியர்கள் நுணுகி
ஆராய்ந்து தெளிவுபடக் கூறியுள்ளனர். ஆசிரியர் தொல்காப்
繫28

பியர் எழுத்துக்கள் பிறக்கு மிடங்களை தலை, மிடறு, நெஞ்சு என மூன்றாகவும் அவை பிறத்தற்கு முயற்சி செய்யும் உறுப் பூக்களை பல், இதழ், நா. மூக்கு, அண்ணம் என ஐந்தாகவும் வகுத்துள்ளார். இது பற்றி அவர் இயற்றிய நூற்பா பின்வரு மாறு அமைகிறது.
8% உந்தி முதலா முந்துவளி தோன்றித் தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇப் பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்னமும் உளப்பட எண்முறை நிலையான் "
(தொல், பிற.1) என்னும் இந் நூற்பாலின் மூலம் உந்தியில் நின்றெழுந்த காற் றானது தலை, மிடறு, நெஞ்சு என்னும் மூன்று பிறப்பிடங் இளையும் பல், இதழ், நா. மூக்கு அண்ணம் என்னும் ஐந்து முயற்சி யுறுப்புக்களையுஞ் சார்ந்து வெவ்வேறான எழுத்தோலி யாக வெளிப்படுகின்ற தென்பதே தொல்காப்பியர் கருத்தாகும் என அறியலாம். ஒவ்வோரெழுத்திற்கும் பிறப்பின் கூறுபாடு வேறு வேறியல்பை யுடைய தெனவும் அவர் கூறுவர்.
நன்னூலாசிரியர் பவணந்தி மு னி வ ர் தொல்காப்பியர் எழுத்துக்களின் பிறப்பிடமாகக் கூறிய தலை, மிடறு, நெஞ்சு என்பவற்றோடு மூக்கையுஞ் சேர்த்து நான்காகக் கூறினார். தொல்காப்பியர் முயற்சி செய்யும் உறுப்புக்களாகக் கூறிய ஐந்தில் மூக்கைத் தவிர்த்து நான் கையே கொண்டார் நன்னூல் ஆசிரியர். நன்னூலார் இதழ், நா. பல், அண்ணம் என்னும் நான்குறுப்புக்களையே கொண்டார். நன்னூலார் உயிரெழுத் துக்களும் இடையின மெய்யெழுத்துக்களும் மிடற்றின் வழிப் பிறக்கு மென்பர். மெல்லினங்கள் மூக்கை யிடமாகக் கொண்டு பிறக்குமென்பதும் வல்லின எழுத்துக்கள் நெஞ்சை யிடமாகக் கொண்டு பிறக்கு மென்பதும் அவர் காட்டிய எழுத்துக்களின் பிறப்பிடங்களாகும். தொல்காப்பியர் மெல்லின மெய்யெழுத் துக்கள் ஆறும் மூக்கின் வளியிசை யாப்புறத் தோன்றும் என்பர். இவ்விடத்தில் இருவர் கருத்துக்களிலும் பெரிய வேறுபாடிருப்ப தாகக் கூறமுடியாது. மூக்கின் வழியாகக் காற்று வந்து மெல்லின மெய்களைத் தோற்றுவிக்கும் என்பதால் நன்னூலாரும் மூக்கை இடமாகக் கொண்டாரென்பதே பொருத்தமாகும்.
29懿

Page 24
இடப்பிறப்பை இலக்கண ஆசிரியர்கள் தெளிவாகக் காட்டி யிருக்கிறார்கள் என்பது வெளி ப் ப ைட. ஆனால் முயற்சிப் பிறப்பை அவ்வாறு தெளிவாக வரையறுத்துக் கூறுதல் எவர்க்கும் அரிதெனவே கூறலாம். ஏனெனில் ஒரே முயற்சியாற் பிறக்கும் என்று கூறப்படும் எழுத்துக்களுக்கிடையிலும் வேறுபாடிருப்பது கருதத் தக்கதாதலால், வேறுபாடில்லா விட்டால் இரண்டெழுத் துக்க்ளும் ஒரெழுத்தாக வன்றோ ஆகிவிடும்? எனினும் எங்கள் இலக்கண ஆசிரியர்கள் தமது மதி நுட்பத்தால் முயற்சிப் பிறப் பையும் மிகமிக நுட்பமாக வெளியிட்டுள்ளார்களென்பதை மறுக்க முடியாது.
அ, ஆ என்பன வாயைத் திறக்குமளவிற் பிறக்கு மென் பதையே நன்னூலாரி, 'முயற்சியுள் அ ஆ அங்காப்புடைய' (நன். எழு, 21) என்பர். இடமாகிய கண்டத்திற் பொருந்து மாறு அங்காந்தால் அதாவது வாயைத் திறந்தால் மட்டுமே அகர ஆகாரங்கள் புறத்தார்க்குப் புலனாக வெளிப்படுவன
வாகும்.
இ, ஈ, எ, ஏ, ஐ என்பன வாயைத் திறத்தலோடு மட்டு மல்லாமல் மேல்வாய்ப் பல்லின் அடிப்பகுதிய்ை நாவின் ஒரமானது பொருந்தப் பிறக்கு மென்பர். நன்னூலார் இவ்வைந்தெழுத்தும் பிறக்குமாற்றுக்குக் கூறிய நூற்பா பின்வருமாறு அமைகிறது.
"இ ஈ எ ஏ ஐ அங் காப்போ
டண்பல் முதல்தா விளிம்புற வருமே" (நன். எழு. 22)
என்பதாகும். ஆனால் இவ்வைந்தெழுத்தும் நாவிளிம்பு மேல் வாய்ப் பல்லடியைப் பொருந்த முன்னரே பிறக்கக் காண்கிறோம். தொல்காப்பியரும் இவ்வைந்தெழுத்துக்களும், "அண்பல் முதல் நாவிளிம்புறலுடைய" (தொல் பிறப்பு 4) என்பர். இரு பெரும் இலக்கண ஆசிரியரும் ஒரே தன்மைத்தாகக் கூறினும் இவை பிறக்கு மாற்றிற்கு இருவரி கூற்றிலுஞ் சரியான வழி காட்டப் படவில்லை யென்றே தோன்றுகிறது. இவ்வைந் தெழுத்தும் மேல்வாய்ப் பல்லடியை நா தொடாமல் கிட்டிச் சேருமளவிற் பிறப்பன வெனக் கூறுவதே பொருத்தமாகும்.
உ, ஊ, ஒ, ஓ, ஒள என்னும் ஐந்தெழுத்துக்களும் இதழ் குவிந்து பிறக்கு மென்பதையே நன்னூலாருந் தொல்காப்பியரும்
籤30

எடுத்துக் காட்டியுள்ளனர். உயிர் எழுத்துப் பன்னிரண்டும் பிறக்குமாறு இது வரை கூறப்பட்டது. இனி மெய்யெழுத்துக்கள் பிறக்குமாற்றைக் காண்போம்.
ககர நகரங்கள் எவ்வாறு பிறக்கு மென்பதைத் தொல்ஜாப் பியர், "ககார ககாரம் முதல் நா அண்ணம்" (தொல், பிற, 7) என்பர். அவர் கூற்றுப்படி 'க 'ங்' என்னும் இரண்டெழுது அடிநாவானது மேல் வாயடியைப் பொருந்தப் பிறக்குமென்ப
தாகும்.
சகர ஞகரங்கள் பிறக்கு மாற்றைக் கூறப்புகுந்த தொல் காப்பியர், "சகார ஞகார மிடை நாவண்ணம்" (தொல் பிற,8) என்பர். நாவின் நடுப்பகுதி அண்ணத் தி ன் நடுப்பகுஒன பொருந்த ச ஞ என்னும் ஈரெழுத்தும் பிறக்கு மென்பது அவரி
கூற்று 6
டகர ணகரம் பிறக்கு மாற்றைக் கூறப்புகுந்த தொல், பியர் “டகார ணகாரம் நுனிநா வண்ணம்" (தெல் பிற, 9 என்பர், நாவின் நுனிப் பகுதி மேல்வாயின் நுனிப்பகுதியைப் பொருந்த "ட" "ண" என்னும் ஈரெழுத்தும் பிறக்கு மென்பது அவர் கருத்து தொல்காப்பியர், க, ச, நு, இரு வர எண என்னும் ஆறெழுத்துக்களும் பிறக்கு மாற்றை மூன்று நூற் பாக்கள் மூலம் தெரியவைத்துள்ளார். ஆனால் நன்னூலாரோ இந்த ஆறெழுத்துக்களின் பிறப்பையுஞ் சுருங்கச் சொல்ல நினைந்து, ஒரு நூற்பாவினால் ஆறெழுத்துக்களும் பிறக்குமாறு கூறினா ரேனும் தொல்காப்பியர் கூறியது போல அழகுந் தெளிவும்படக் கூறினாரல்லர். இவ்வெழுத்துக்களின் பிறப்பிற்கு அவர் கூறிய நூற்பாவையும் காண்க.
*கங்வுஞ் சஞவும் உணவும் முதலிடை நுனிநா அண்ணம் உறவுமுறை வருமே." (தன். எழு. 14) என்பது. தொல்காப் பியர் கூறிய நூற்பாக்களையும் நன்னூலார் கூறிய நூற்பாவை யும் வாசித்து உண்மையுணர்க. சுருக்க நூலாதலில் நன்னுர லாரி அது பற்றி இகழப்படாரென்க.
தகார நகாரம் என்னும் இரண்டெழுத்துக்களும் மேல் வாய்ப்பல்லடியை நாக்கு நுனி பொருந்தப் பிறக்கும் என்பர் நன்னூலார், அவர் கூற்றுப்படி கூறுவதானால்; 'அண்பல்
31豪

Page 25
லடிதா முடியுறத்நகவரும்" (நன், எழு. 25) என்பதாகும் த கார நகாரம் பிறப்பதற்குத் தொல்காப்பியர் கூறிய நூற்பாவைச் கவனிப்போம். ஒரு அடியில் நன்னூலார் கூறிய தகர நகரப் பிறப்பதைத் தொல்காப்பியர் மூன்றடிகளிற் கூறியுள்ளார்.
* அண்பல் நண்ணிய பல்முதல் மருங்கின்
நாதுனி பரந்து மெய்யுற வொற்றத் தாமினிது பிறக்கும் தகார நகாரம்" - (தொல், பிற. 11) என்பது அவர் கூற்று. இந்நூற்பாவைப் பார்க்கும்போது இதன் கருத்தையே நன்னூலார் சுருக்கமாகக் கூறியுள்ளார் என்பது புலனாகிறது. எனினுந் தொல்காப்பியர் கூறிய விதம் நுனித்து நோக்கி இன்புறற்பாலது. மேல்வாயைக் கிட்டிய பல்லடியின் பக்கலில் நாவின் நுனியானது பரந்து அவ்வெழுத்துக்களின் வடிவு பிறக்கும் வகையில் தொட தகார நகாரம் என்னும் இரண் டெழுத்தும் இனிதாகப்பிறக்கும் என்பதாம், தகார நகாரம் பிறத்தலை அனுபவ ரீதியாகச் சொல்லிக் காண்போர் தொல் காப்பியரது நுட்பமுந் தெளிவும் வாய்ந்த நூற்பா யாப்புப் பற்றி அறிந்தின்புறுவ ரென்பதில் ஐயமில்லை.
"ப" "ம" என்னும் இரண்டெழுத்துக்களும் பிறக்குமாற்றை எவருஞ் சுலபமாக உணர்வர். மேலிதழுங் கீழிதழும் பொருந்த அவை பிறத்தல் தெ எரி வா த லா ல் என்க. "இதழியைந்து பிறக்கும் பகார மகாரம் (தொல், பிற. 15) என்பர் தொல்காப் பியர், நன்னூலார், "மீ கீழிதழுறப் பம்மப் பிறக்கும்" (தன். எழு. 26) என்பர் இவற்றின் பிறப்புத் தெளிவானது.
பகர மெய் பிறத்தல் பற்றித் தொல்காப்பியர் பின்வருமாறு கூறுவர். "அண்ணஞ் சேர்ந்த மிடற்றெழு வளியிசை
கண்ணுற் றடைய பகாரம் பிறக்கும் (தொல், பிற. 17)
மேல்வாயைச் சேர்ந்த மிடற்றில் எழுகின்ற ஒசை அணைந்து செறிய யகாரம் பிறக்கும்” எ ன் பதே அவர் கூற்றாகும். இதனையே நன்னூலார்,
"அடி நா வடியன முறயத் தோன்றும்" (நன். எழு. 17) என்பர். அடிநா அடியண்ணத்தைப் பொருந்த ய தோன்றும் "ள்ன்பதே அவர் கருத்து, இதிலும் தொல்காப்பியர் கூற்றுச்
சற்று விளக்கமாக அமைந்துள்ளது.
鯊32

ரகார ழகாரம் பிறப்பதற்கு மேல் வாயை நாவின் துணி
வருட வேண்டும். இதனைத் தொல்காப்பியர் விளக்கிக் கூறு ഞuിങ്,
"நுனிநா அணரி அண்ணம் வருட
ரகார ழகார மாயிரண்டும் பிறக்கும்"
(தொல், பிற. 13)
என்பர். நுனிநா வானது மேல் நோக்கிச் சென்று மேல்வாயை வருட ரகார ழகாரமாகிய இரண்டும் பிறக்கும் என்பதே இந்நூற் பாவின் கருத்து. இதனையே நன்னூலார். "அண்ணம் நுனிநா வருட ரழவரும்" (நன். எழு. 28) என்பர் நுனிநா வானது மேல் வாயை வருட ரகாரமும் ழகிாரமும் பிறக்கும் என்பதாகும்.
ல" "ள" என்னும் இரண்டெழுத்துக்கள் பிறத்தலுக்குத் தொல்காப்பியர் கூறிய நூற்பாவையே சிறிது சொல் மாற்றத் துடன் நன்னூலார் பயன்படுத்தியுள்ளார். தொல்காப்பியர்
கூறிய நூற்பா வருமாறு:
'நாவிள்ம்பு வீங்கி அண்பல் முதலுற
ஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும்
லகார ளகார மாயிரண்டும் பிறக்கும்" - (தொல், பிற. 14) என்பதாகும் இதனையே நன்னூலார்,
"அண்பல் முதலு மண்ணமும் முறையின்
நாவினிம்பு வீங்கி ஒற்றவும் வருடவும்"
லகார ளகாரமா யிரண்டும் பிறக்கும் " (நன். எழு. 29 ) என்றோதுவர். இங்கும் தொல்காப்பியச் சூத்திரம் ஒசை நயம் வாய்ந்த தென்பதை மறுக்க முடியாது.
றகார ணகாரம் என்னும் இரண்டெழுத்துக்களும் பிறப்ப தெவ்வாறெனில், நாவின் நுனியானது மேல்வாயைத் தொட அவையிரண்டும் பிறக்கும் என்றவாறு இ த  ைன யே தொல்காப்பியர்,
அணரி நுனிநா அண்ணம் ஒற்ற
றஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும்'
- (தொல், பிற. 22) என்று கூறுவர்,
*அண்ணம் நுனிநா நனியுறிற் றனவரும்' (தன். எழு.-31)
3 33藻

Page 26
என்பதனால் றகர னகரங்கள் பிறக்கு மாற்றிற்கு வழிகாட்டி யுள்ளார் நன்னூலாசிரியர் அணரி என்பதன் பொருள் மேல் நோக்கி என்பதாகும்.
சார்பெழுத்துக்களுக்குப் பிறப்பு
சார்பெழுத்துக்களில் தனித்த ஒரு வடிவம் பெறுமெழுத்து ஆய்தம் ஒன்றே. இது பிறக்குமிடம் உச்சியாகும். உச்சி என்று கூறப்படுந் தலையை வேறெந்த எழுத்தும் இடமாகப் பெற வில்லை. ஆய்தம் என்னுஞ் சார்பெழுத்தே அக்குறையை நீக்குவது. இதற்கு முயற்சிப் பிறப்பு வாயைத் திறத்தலே யாகும். இாயைத் திறக்கும்போது எழுங்காற்றானது தலையைப்பொருந்த * ஃ " என்ற ஆய்தம் பிறருக்கும். மற்றைய எழுத்துக்கள் போல் ஆய்தத்துக்கு இன வெழுத்து இல்லை, அது தனித்த எழுத்தாத லால் தனிநிலை என்றொரு பெயரையும் பெற்றுள்ளது. ஆய்தம் சார்பெழுத்து எனப் பெயர் பெறக் காரணம் முன்னும் பின்னு மாகி நிற்கும் வேறெழுத்துக்களின் சார்பில் மட்டும் அது பிறத்த லாலென்சு,
உயிர் மெய்யெழுத்துக்கள் உயிரையும் மெய்யையுஞ் சார்ந்து பிறப்பன, உயிரளபெடை உயிர்நெட்டெழுத்துக்களைச் சார்ந்து பிறப்பது, ஒற்றளபெடை மெய்யெழுத்துக்களைச் சார்ந்து பிறப்பது. குற்றிய லிகரம் முற்றிய லிகரத்தின் வழித்தோன்றுவது.
குற்றியலுகரமும் முற்றிய லுகரத்தின் ஒசை குறைந்த நிலை யினது. ஐகார ஒளகாரக் குறுக்கங்கள் ஐகார ஒளகாரங்களின்
ஓசை குறைந்த நிலையின. மகரக் குறுக்கம் ஆய்தக்குறுக்கம் என்பனவும் "ம்" "ஃ" என்றும் எழுத்தோசைகளைச் சார்ந்து
குறுகி ஒலிப்பன.
உயிர்மெய்யெழுத்துக்கள் தத்தமக் குரியமெய்யெழுத்துக்கள் போல இடமுயற்சிகளைப் பெற்று மெய்யின் மேல் ஏறி நிற்கும் உயிரோசையும் புலனாகப் பிறப்பனவாம். க " என்னும் உயிர் மெய்யெழுத்தை எடுத்துக் கொண்டால் முதலில் " க் " என்னும் முதலெழுத்தாகிய மெய்யெழுத்துக்குரிய இடமுயற்சிகளைப் பெற்று அகரவோசையும் பின்னர்த் தோன்றவரும். இவ்வாறே எல்லா உயிர்மெய்யெழுத்துக்களுக்குமுரிய எழுத்தொலிகளையும் உணர்ந்து கொள்ளலாம்.
鯊34

உயிரளபெடையில் எந்த நெட்டெழுத்து அளபெடுக்கிறதோ அந்த தெட்டெழுத்துக்கு இனமான குறில் எழுத்தே அளபெடுத்த எழுத்திற்குரிப் பிறப்பிடத்தையும் முயற்சியையும் பெறும், பா என்னும் நெட்டெழுத்து அளபெடுக்கும்போது "அ" என்னும் அதற்கினமான குறில் தோன்றுவதனால் அந்த ஆகாரத்துக்குரிய இடமுயற்சிகளை அளபெடுக்கும் எழுத்துக்குப்பின் எழுதப்படும் அகரமும் பெறுகிறது. இது உயிர்மெய்யிலுள்ள "ஆ" வே அளபெடுத்த தென்பதற்கு அறிகுறியாகும். இவ்வாறே மற்றைய நெட்டெழுத்துக்கள் அளபெடுக்கும்போதுங் கண்டு கொள்க. ஒற்றளபெடையிலும் அளபெடுத்து வரும் ஒற்றுக்குரிய இட முயற்சிகளே அளபெடுத்தமைக்கு அறிகுறியாக எழுதப்படும் எழுத்துக்கும் உரியதாகும். குற்றியலிகரம், குற்றியலுகரம் ஐகார ஒளகாரக் குறுக்கங்கள் மகரக்குறுக்கம் என்பவற்றின் விடயத்திலும் இவ்வாறே அவற்றின் பிறப்பை உணர்ந்துகொள்க. சார்பெழுத்துக்களுக்கு இடமும் முயற்சியும் கூறவந்த நன்னூலார்,
*ஆய்தக் கிடந்தலை யங்கா முயற்சி
சார்பெழுத் தேனவுந் தம்மூத லனைய" (நன். எழு. 32) எனக் கூறுவது கொண்டு ஆய்தத்தின் இட முயற்சிப் பிறப்பையும் மற்றைய முதலெழுத்தைக் கொண்ட சார்பெழுத்துக்களின்
பிறப்பையும் உணரலாம்.
எழுத்துக்களின் வடிவம்
எழுத்துக்களின் ஒலிவடிவம் முன்னரே உணர்த்தப்பட்டது. இரிவடிவும் ஒன்றென்பது தொடக்கத்திலேயே கூறப்பட்டது. தமிழ் எழுத்துக்கள் இப்போது கொண்டுள்ள வரிவடிவம் எக் காலத்தில் எவரால் அமைக்கப்பட்ட தென்பது அறியப்பட வில்லை. எனினுந் தொல்காப்பியர் காலத்துக்கு முன்னிருந்தே பெரும்பாலான தமிழ் எழுத்துக்கள் இப்போது கொண்டுள்ள வரி வடிவம் பேணப்பட்டு வந்துள்ள தென்பது நன்கு புலனாகிறது. நன்னூலார்,
* தொல்லை வடிவின எல்லா எழுத்துமாண்
டெய்தும் எகர வொகரமெய் புள்ளி" - (நன். எழு. 48)
எனக் கூறுவதால் தமிழ் எழுத்துக்கள் இப்போது கொண்டுள்ள வரிவடிவம் பழமை வாய்ந்த தென்பது அவர் கருத்தென்பதை
35ష్ణ

Page 27
அறியமுடிகிறது. நன்னூலார் புள்ளிபெறும் எழுத்துக்களாகக் கூறுவன எகர ஒகர உயிர் எழுத்துக்களும் மெய்யெழுத்துக்களுமே யாகும். எகர ஒகரங்கள் நன்னூலார் காலத்திற்கு முன்னிருந்தே புள்ளிபெற்று வந்துள்ளவென்வதை அவர் கூற்று மெய்ப்பிக்கிறது. மெய்யெழுத்துக்கள் இன்றும் புள்ளி பெறுவதால் அவை பெறுதல் பற்றிய மலைப்புக்கே இடமில்லை. ஆனால் எகர ஒகரங்கள் இக்காலத்திற் புள்ளி பெறுவதில்லையாதலால் அவை புள்ளிபெற்று வழங்கின என்பது எம்மைச் சிந்திக்க வைக்கிறது. நன்னூலார் காலத்துக்குப் பின்னரேயே இவ்விரண்டு எழுத்துக் களும் இப்போதுள்ள வடிவம் பெற்றன. வென்பது தெளிவாகத் தெரிகிறது. எகர ஒகரங்களின் புள்ளி நீங்கிய வடிவங்கள்ே தொல்லை வடிவில் ஏகார ஓகார வடிவங்களாக இருந்ததாகவும் பின் அவை சிறிது மாற்றங்கள் பெற்று நெட்டெழுத்து வடிவம் பெற்றதாகவும் அறியப்படுகிறது. முன்னைய எகர ஒகரங்களும் ஏகார ஓகாரங்களும் பின் வரு மாறு அமைந்திருந்தனவாதல் வேண்டும். எ' என்பது 7ܛ ܘ எனவும் "ஒ" என்பது *ණි” எனவும் இருந்தனவென்பதே நன்னூலார் கருத்து. ஏகார ஓகாரங்கள் என "ஒ" எனவே எழுதப்பட்டன. இவ்வெழுத்துக்களை இன்றுள்ள வடிவில் அமைய மாற்றஞ் செய்தவர் வீரமாமுனிவர் என்னும் மேலை நாட்டறிஞர் என்பர். இது ஒரு நல்ல முயற்சி என்றே கொள்ளலாம். ஏகாரம் கால் பெற்றும் ஒகாரம் சுழிபெற்றும் வர எகர ஒகரங்கள் தாம் பெற்ற புள்ளியை இழந்தன. இம் மாற்றத்தைத் தமிழ் கூறு நல்லுலகம் ஏற்றுக் கொண்டது. வீரமாமுனிவர் காலத்தில் நூல்கள் ஏட்டு வழக்கிலிருந்து அச்சு வழக்கிற் புகுந்தபடியால் இம்மாற்றம் மிக மிக இலகுவாக எத் தகைய பரபரப்புக்கும் இடமில்லாமல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பிற்காலத்தில் தமிழ் எழுத்துக்களில் மாற்றம்வேண்டுமெனப் பற்பல முயற்சிகள் இடம் பெற்றன. அச்சுப்பொறிகளில் எழுத் துக்களை இலகுவாக அமைப்பதற்காகவே இம்மாற்றங் காணப் பலரும் விழைந்தனர். ஈற்றிற் சில எழுத்துக்கள் தொல்லை வடிவம் பெற்றன. இம்மாற்றங்களால் ஏற்படக் கூடிய பலா பலன்களை இவ்வெழுத்து மாற்றங் கண்ட பின் சிந்திப்போம். மாற்றம் பெற்ற எழுத்துக்களின் தொல்லை வடிவமும் அவை இன்று பெற்றுள்ள வடிவமும் பின்வருமாறமைகின்றன.
鑿36

தொல்லை வடிவு [6ffଣot ଜ୍ଞା!!!!!!!!!!!
0. குனு) 602 to 02. இன 6500,6385 R" 03. ணுெ Q600T st 04. ணுே (360T 05. 2; (6ზy) $ს)
06. ∂ 66
Ofi (3 நிே O8. Gន្ត្រ றொ 09. ருே றோ
O. (60) 6 1. % }}
2. ணுெ GGGSgr ggr 3. ணுே ଓଁ ଶେଠୀ (!"
மேலே காட்டியவாறு பதின்மூன்றெழுத்துக்களின் தொல்லை வடிவம் நீக்கப்பட்டுப் புதிய வடிவம் புகுத்தப்பட்டுள்ளது. இவை தொல்லை தராத மாற்றங்களாயின் தொல்லை வடிவு நீங்கியது பற்றி எவருங் கவலைப்படார். இம்மாற்றஞ் செய்யப்படுவதால் மாற்றத்துக்கு உட்பட்ட எழுத்துக்கள் கொண்டிருந்த வேறுபட்ட வடிவு மறைந்து மற்றைய எழுத்துக்களோடு ஒத்துப்போகக்கூடிய டிேவு அமைகிறது. இம்மாற்றம் அச்சுப்பொறிகளிற் கூடச் சிரமத்தைக் குறைக்கும் என்பது உண்மையே. ஆனால் இப்புதிய எழுத்துக்களின் தொ ல் லை வடிவத்தையும் உணர்ந்திருப்பது அவசியமாகும். அவ்வடிவங்களைக் காணாத மாணவர் தொல்லை வடிவில் அச்சேறிய நூல்களில் புதிய வரிவடிவுக்குப் பதிலாகப் பழைய வரி வடிவுகளைக் கண்டு மலைப்பெய்துவதற்கு இடமுண் டாகும். இம்மாற்றத்தைக் கொண்டுவந்தோர் பழைய எழுத்துக் களைப் பழகவும் கையெழுத்தில் இருவகை எழுத்துக்களையும் எழுதவும் வழிசமைத்துக் கொடுக்காமை ஒரு தவறு என்றே கருதவேண்டியுள்ளது. ஆங்கில மொழியில் பல்வேறு வகையான எழுத்துக்கள் பயன்படுத்தப்படுவதை நாம் மறந்துவிடமுடியாது. கையெழுத்து, அச்செழுத்து என்னும் இருவகை எழுத்துக்களை யும் அவர்கள் பயன்படுத்துகிறார்கள், கையெழுத்திலும் பெரிய
37ಷ್ರ

Page 28
எழுத்து, சிறிய எழுத்து என இருவகையுள. அவ்வாறே அச் செழுத்திலும் பெரிய, சிறிய எழுத்துக்கள் உள. அதுபோல இப் பதின்மூன்றெழுத்துக்களையும் அச்சில் பயன்படுத்த வைத் துக் கொண்டு  ைக பெ முத் தி ற் பழைய வடிவையும் பயன்படுத்த விட்டிருக்கலாம். பழைமையைப் பாதுகாப்பதும் மொ ழி ப் பாதுகாப்பில் அவசியம் என்னும் உண்மையை எவரும் மறுக்கவோ மறைக்கவோ முடியிாது முன்னோரீ எவ்வாறு வழங்கினரோ அவ்வாறு வழங்குவது அவசியமாயினும் இன்றியமையாதன புதியனவாகப் புகுதலுக்கு இடமில்லையென்பது கருத்தல்ல. புதியன புகும்போதும் பழமையையும் பாதுகாக்க முடியுமேல் அதனைக் கைவிடுவது நல்லதல்ல. சுருக்கமாகக் கூறின் இப்பதின் மூன்றெழுத்துக்களுக்கும் புதிய பழைய விரி வடிவங்கள் இரண் டும் பயன்படுத்தப்படுவதற்கு அனுமதிப்பது நல்லதெனவே கருது இன்றோம்.
எழுத்துக்களின் மாத்திரை
நம் முன்னோர் ஒலி வடிவில் எழுத்தையும் அதன் வாயிலாகச் சொல்லையும் தூய்மையாக வைத்திருப்பதில் எவ்வளவு கண்ணுகி கருத்துமாக இருந்தனரென்பதை அவர்கள் ஒவ்வொரு எழுத்தும் எவ்வெவ்வளவு நேரம் ஒலிக்கலாமென்பதை மிக நுட்பமாக வகுத் துத் தந்ததிலிருந்து அறியலாம். பழம்பெரும் நூலாகிய தொல் காப்பியத்திலேயே எழுத்துக்கள் ஒலிப்பதற்குரிய நேரக் கணிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு எழுத்தும் ஒலிக்கும் நேரம் மிகக் குறுகிய அளவினதாதலால் அக்கணிப்புக்கு மாத்திரை என்னுஞ் சிறிய அளவு கருவி பயன்படுத்தப்பட்டுள்ளது. " இயல்பெழு மாந்தர் இமைநொடி மாத்திரை " ( நன், எழு.45 ) என்பர் நன்னூலார் . தொல்காப்பியர்,
கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்டவாறே ' (தொல், நூன் மரபு 7) என்பர், இயல்பாகக் கண்ணிமைக்கும் நேரம் அல்லது கை நொடிக்கும் நேரம் ஒரு மாத்திரையென்பது இரு பெரும் ஆசிரியர்க்கும் ஒத்த முடிவினதேயாம். இக்கணிப்பைக் கொண்டு எல்லா எழுத்துக்களையும் வகைப்படுத்தி அவற்றிற்கு மாத்திரை குறிப்பிட்டுள்ளார்கள். உயிர்க் குறில் ஒரு மாத்திரை
獵38

யும், நெடில் இரண்டு மாத்திரையும் பெறும் நெட்டெழுத்துக்கள் அளபெடுத்து மூன்று மாத்திரை பெறும், மெய்யெழுத்துக்கள் எவ்வினத்தைச் சேர்ந்தனவாயினும் தனித்தனி அரை மாத்திரை பெறும். ஒற்றளபெடைக்கு மாத்திரை ஒன்று. உயிர்மெய்நெட் டெழுத்துக்களும் உயிர் நெட்டெழுத்துக்கள் போலத் தனித்தனி இரண்டு மாத்திரை பெறும். உயிர்மெய்க் குறில் உயிரிக் குறில் போல ஒரு மாத்திரை பெறும், குற்றியலிகரம், குற்றியலுகரம் என்பனவும் அரை மாத்திரை அளவினவாய் ஒலிக்கும். குறுக்கம் கால் மாத்திரை பெறும். ஆய்தம் அரை மாத்திரையும் ஆய்தக் குறுக்கம் கால் மாத்திரையும் பெறும். மொழி பேச்சு வழக்கில் திருத்தம் பெறுவதற்கு இம்மாத்திரைக் கணிப்பு துணை புரியும் என்பதில் ஐயமில்லை.
மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள்
மொழி தூய்மையாகவும், மரபு நிலை திரியாமலும் இயங்கு வதற்கு மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள் இறுதியில் வரும் எழுத்துக்கள், இடையில் இணைந்து நிற்கும் எழுத்துக்கள் என் பன பற்றியும் இலக்கண நூலாசிரியர்கள் கவனஞ் செலுத்தி புள்ளனர். சில எழுத்துக்கள் மொழி முதலில் வருமாயின் அவ் வெழுத்துக்கள் மொழியின் இயல்பான ஒசையை மாற்றி அதன் தூய்மையைக் கெடுத்துவிடுமென்பதற்காகவே இத்தகைய கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டனவென்க. -
தொல்காப்பியர், ' பன்னிருயிரும் மொழி முதலாகும் " தொல், மொழி 26 எனக் கூறியதன் மூலம் எல்லா உயிர் எழுத்துக்களும் மொழிக்கு முதலில் வருவதை ஏற்றுக்கொண்டார். அதையடுத்து உயிர் ஏறிநில்லாத மெய்யெழுத்துக்கள் மொழிக்கு முதலில் வரம்ாட்டா என்பதையுங் குறிப்பிட்டுள்ளார். பன்னி ரண்டு உயிரெழுத்துக்களுடனுஞ் சேர்ந்து மொழிக்கு முதலில் வரும் மெய் எழுத்துக்களாக க, த, ந, ப, ம என்னும் ஐந்து மெய்களையும் குறிப்பிட்டுள்ளார். சகர வருக்கத்தில் ச. சை செள என்னும் மூன்றுத் தவிர்ந்த ஒ ன் ப து எழுத்துக்களும் மொழிக்கு முதலாகுமெனக் கூறுவர். சகர வருக்கத்தில் மூன் றெழுத்துக்களை மொழிக்கு முதலில் வருதலில்லையெனத் தொல் காப்பியர் விலக்கினாரேனும் நன்னூலார் காலத்து அம் மூ ன்
39叢

Page 29
றெழுத்துக்களும் மொழிக்கு முதலாவது கண்டு அவை மொழியின் போக்கில் மாற்றஞ் செய்யாவென உணர்ந்த நன்னூலார் அவற். றைப் புதியன புகுதலாக ஏற்றுக்கொண்டார். ந ன் னுர லார் ஐ, ச, த, ந, ப, ம என்னும் ஆறெழுத்துக்களும் தனித்தனி பன் னிரண்டு உயிர்களோடுங் கூடி எழுபத்திரண்டு உயிர்மெய்யெழுத் துக்களும் மொழிக்கு முதலில் வருவதற்கு இலக்கணஞ்செய்தார்.
வகர மெய் உ, ஊ, ஒ, ஓ என்னும் நான்குயிருந் தவிர்ந்த எட்டுயிர்களோடுங் கூடி மொழிக்கு முதலில் வருமென்பர். அவர் கூற்றுப்படி, வ, வா, வி. வீ. வெ. வே, வை, வென என்னும் எட்டெழுத்துக்களும் மொழிக்கு முதலாவனவாம்,
ஞகரம் மொழிக்கு முதலில் வரும்போது ஆ, எ, ஒ என்னும் மூன்றெழுத்துக்களோடு மட்டுமே வரும் என்கிறார் தொல்காப் பியர். அகரவுயிரோடு சேர்ந்த ஞகர மெய்யும் மொழிக்கு முதலில் வருமென்பர் நன்னூலார். இதனால் ஞகர வரிசையிலும் ஒரெழுத் துக் கூடுதலாக இடம்பெறுவதாயிற்று.
* ஆ " என்னும் ஓர் உயிரெழுத்தோடல்லாமல் யரை மெய் மொழிக்கு முதலாகாது எ ன் பது தொல்காப்பியர் கூற்று. ஆனால் நன்னூலார் அ, ஆ, உ, ஊ, ஒ, ஒள, என்னும் ஆறெழுத்துக்களோடும் யகரம் மொழிக்கு முதலில் வருமெனக் கூறுகிறார். தொல்காப்பியத்தில் பாடபேதமாக வரும் நூற்பா வொன்று நன்னூலார் கூறிய ஆறுயிர்களோடும் யகரம் மொழிக்கு முதலில் வருமெனக் கூறுகிறது. பாடபேதமாக வரும் இந்நூற் பாவை நன்கு கவனித்தால் அது வே தொல்காப்பியர் கூறி ய நூற்பாவென்பது புலனாகின்றது. அந் நூற்பாவையும் ஈண்டுத் திருதும்
" அ ஆ உ ஊ ஒ ஒன
ஆறோ டல்லது யகர முதலாது"
இது தொல்காப்பியம் மொழி மரபில் முப்பத்திரண்டாஞ் குத் திரமாகக் காணப்படுகிறது. " ஆறோ டல்லது யகர முதலாது" என்னும் பகுதியில் இரண்டாவதெழுத்துச் சிதைவுபட்டமையால் அந்நூற்பா முதலடியை முற்றாகக் கைவிட்ட நிலையில் "ஆவோ டல்லது யகர முதலாது" என வந்திருக்கவேண்டும். ஆதலால் யகரம் மொழி முதலாவது பற்றி ஆசிரியர் தொல்காப்பியருக்கும்,
懿40

ஆசிரியர் ப்வணந்தியாருக்குங் கருத்து வேறுபாடில்லையெனவே கூறலாம். ஆனால் யா " என்னும் ஒரெழுத்துத் தவிர்ந்த மற்றை எழுத்துக்களுக்கு நன்னூல் உரையாசிரியர்கள் காட்டிய உதர ரணங்கள் ஆரியமொழிச் சொற்களாகவிருப்பதால் தொல்காப் பியர் அவை முதலாவதற்கு ஆணை தந்திலர் என்பாருமுளர், நகர மெய்யானது அ, இ, உ என்னும் முச்சுட்டுக்களையும் எகர வினாவையும், யா வினாவையும் முன்வைத்து மொழிக்கு முதலில் வருமென்பது நன்னூலார் கருத்து. இதை வேறுவித மாகக் கூறின் நுகர உயிர்மெய்யெழுத்துத் தானாக மொழிக்கு முதலில் வராது, சுட்டெழுத்துக்களையும் வினாவெழுத்துக்களை யும் முன்வைத்துத் தான் பின்னின்று இயங்குமென்பதே நன் னுாலார் கருத்தாகும். உரையாசிரியர்கள் ங் க ர ம் அவ்வாறு வருதலை முடவன் கோலூன்றி வந்தாற்போலவென உவமை மூலம் விளக்குவர். முடவன் நகரமெய் என்பதும் கோல் அ, இ, முதலிய சுட்டு வினாவெழுத்துக்கள் என்பதும் அறிதற்பாலது. நகரம் மொழிக்கு முதலாதலைத் தொல்காப்பியரோ நேமி நாதம் என்னும் இலக்கண நூலுடையாரோ எடுத்துக் காட்டிற் றிலர். அ, இ, உ, எ, யா என்பன அவர்கள் கூறிய மொழிக்கு முதலாகும் எழுத்துக்களில் அடங்குதலின் நகரமெய் மொழிக்கு முதலாதலைப் பற்றி அவர்கள் கூறாதது குறையன்று, ஆனால் "அ" முதலிய எழுத்துக்களோடு சேர்ந்து நகரமெய் தனக்கென ஒரு பொருள் தருதலால் நன்னூலார் நகரமெய் மொழிக்கு முத லாகுமென்று கூறியதிலும் இழுக்கில்லையென்க. நன் னுர லா ரி மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள் பற்றிக் கூறிய தற் பாவை மனத்திற் பதித்துக்கொள்வது நல்லதென்பதால் அதனை யீண்டுத் தருதும்
" பன்னிருயிரும் க ச த ந ப ம வ ய
ஞ ங் விரைந்துயிரி மெய்யும் மொழிமுதல் " ( நன். எழு. 4) இது பொதுச் சூத்திரம், சிறப்புச் சூத்திரங்கள் அதன்மேல் வந்துள. அவற்றின் பொருள் முன்னர் கூறப்பட்டது. இனி மொழிக்கு முதலாகும் எழுத்துக்களுக்கு உதாரணம் காட்டு தும், பன்னீர் உயிர்கள் கூ அவள், ஆடு, இலை, ஈ, உரல், ஊசி, எருது, ஏறு, ஐயம், ஒன்று, ஒலை, ஒளவியம் என வரும், அகர வரிசை  ைகடை, காடு, கிடை, கீரை, கூறு, கீெடு, கேடு, குடை கை, கொடு, கோல், கெளவை, எனவரும்
41藻

Page 30
சகர வரிசை - சட்டி, சாடி, சிலை, சீர், சுடு, சூடு, செய், சேய்
சைலம், சொல், சோகம், செளமியன் எனவரும். தகர வரிசை - தலை, தாடி, திசை, தீ,துலை, தூர், தெவ்வர்
தேரி, தைய்ல், தொல்லை, தோல், தெளமியன் எனவரும் நகர வரிசை - நடு நாடு, நிலை நீர், நுரை. நூல், நெல், நேர்,
நை, நொ, நோ, நெளமிசாரணியம் எனவரும். பகர வரிசை - படி, பாடு, பிழை, பீடை, என்பன, முதலாகவரும். மகர வரிசை - மடி மாடு, மிதி, மீன், முதலாகவரும், வகர வரிசை - எட்டெழுத்துக்களுக்கும் உதாரணம்
வண்டி, வா, விடு, வீடு, வெல், வேல், வையம், வெளவால் எனவரும். யகரவரிசை ஆறெழுத்துக்களுக்கும் உதாரணம்.
யவனர், யானை யுகம், யூகம், யோகி, யெளவனம் எனவரும் ஞகர வரிசை நான்கெழுத்துக்களுக்கும் உதாரணம் -
ஞமலி, ஞாயிறு, ஞெமிர், ஞொள்கிற்று எனவரும் வகரம் சுட்டு வினாவோடு ஒட்டி வருவதற்கு உதாரணம்
அங்ங்னம், இங்ங்னம், உங்ங்ணம். எங்ங்ணம், யாங்ஙனம் என
வரும்,
மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள் தொகை பற்றிச் சிந்தித்தால் உயிர் பன்னிரண்டும், க, ச, த, ந, ப, ம என்னும் ஆறு மெய்களோடும் பன்னிருயிரும் வர எழுபத்திரண்டும் வகர வரிசையில் எட்டும் யகர வரிசையில் ஆறும் ஞகர வரிசை யில் நான்கும் நகரத்தோடு சேர்ந்து ஐந்துமாக நூற்றேழு எழுத்துக்கள் மொழிக்கு முதலாவனவாம்
தொல்காப்பியர் கருத்துப்படி பார்ப்பின் உயிர் பன்னிரண்டும் க, த, ந, ப, ம என்னும் ஐந்தின் வரிசை அறுபதும் சகரவரி சையில் ஒன்பதும் வகர வரிசையில் எட்டும் ஞகர வரிசையில் மூன்றும் யகரவரிசையில் ஒன்றுமாக தொண்ணுரற்று மூன்றெழுத் துக்கள் மொழிக்கு முதலில் வரும், யகரத்தில் மேலும் ஐந் தெழுத்துக்களையுஞ் சேர்ந்தாலுந் தொண்ணுாற்றெட்டு எழுத் துக்களே மொழிக்கு முதலாவனவாம்.
靈42

சகர வரிசையில் மூன்றெழுத்துக்களை மொழிமுதலாகாவென விலக்கிய தொல்காப்பியச் சூத்திரத்தின் பாடபேதமாக வருஞ் சூத்திரமென்று 'ஒள' காரம் மட்டுமே சகரவரிசையில் மொழிக்கு முதலாகாதெனக் கூறுகிறது. அதனை ஏற்றுக் கொண்டால் மேலும் இரண்டு கூட்டி மொழிக்கு முதலில் வருமெழுத்துக்கள் நூறு எனத் தொல்காப்பியர் கூறினார் என லாம். நேமிநாதம் உயிரெழுத்துப் பன்னிரண்டும் க, ச, த, ந, ப, ம வரிசைகளால் எல்லாமாக எழுபத்திரண்டும் வகர வரிசையில் எட்டும் ஞகர வரிசையில் மூன்றும் யகர வரிசையில் மூன்றுமாகத் தொண்ணுாற்றெட்டெழுத்துக்கள் மொழிக்கு முதலாகுமெனக் கூறும், யகர வரிசையில் மூன்றும் ஞகர வரிசையில் ஒன்றும் நகர வரிசையில் ஐந்துமாக ஒன்பதெழுத்துக்கள் நன்னூலாராற் கூடுத லாகச் சேர்க்கப்பட்டுள. ஞமலி, யவனர், யுகம், ଓଜuଜୀtଈu ଶଙ୍ଖ {} என்பவற்றில் வரும் ஞ, ய, யு, யெள என்பவற்றை நேமிநாத நூலுடையார் விலக்கியது இக்கால வழி க்கு கீ கு ப் பொருத்த முடையதன்று. நுகரத்தைச் சுட்டு வினா முதலிய ஐந்திடத்தும் விலக்கிப்து ஏற்புடைத்தாகலாம். அது தொல்காப்பியர் கருத் தைத் தழுவியதுமாகும்.
இக்காலத்தில் மொழிக்கு முதலாகாவென இலக்கண நூலுடை யாரால் விலக்கப்பட்ட எழுத்துக்களிற் சில வேற்றுமொழிச் சொற்களைத் தமிழ் மொழியில் பயன்படுத்துதல் என்ற போரி வையில் மொழிக்கு முதலாக இந்து விடுகின்றன. இவை திகைச் சொற்களாக வந்து தமது சொந்த மொழிக்குரிய எழுத்துக்களை விட்டுவீட்டாலும் தமிழ் மொழியில் மொழிக்கு முதலாகாவென இந்தபட்ட எழுத்துக்களை மொழி மு த லா சி ப் பெற்று நடமாடுகின்றன. தமிழ்மொழி பேசுங் கிறித்தவர்களும் இசுலா மியர்களும் தீமிதி குழந்தைகளுக்குத் தமது சமயம் பிறந்த நாட்டுப் பெயர்களைச் சூட்டு முகமாக தமிழ்மொழிக்கு ஏலாத gago*ulot-ul நாமங்களைத் தமிழ் மொழியிற் புகுத்துகின்றனர். அதனால் மொழிக்கு முதலாகா வென விலக்கப்பட்ட எழுத்துக் கள் முதலில் வருகின்றன. சொந்த நாட்டு மதத்தினர் கூட
மேனாட்டுப் பெயர்களைச் சூட்ட விரும்பி இத்தகைய தவறு
களைச் செய்கின்றனர். இதனால் தமிழ் மொழியின் ஒசை
நயஞ் சீர் குலைகிற தென்பதை மொழிப் பற்று  ை- யார் ஒந்திக்கக் கடவரி
43攤

Page 31
இவ்வாறு வந்து வழங்கும் மொழிகள் டகர வரிசை, ரகர வரிசை, லகர வரிசை, றகர வரிசை என்பன வற்றில் சிற்சில எழுத்துக்களை மொழிக்கு முதலாகக் கொண்டு வருதலை நாம் காண்கிறோம், பெயரிடுதலில் மட்டுமல்லாமல் வேறு வகையாக கவும் அவ்வெழுத்துக்கள் புகுந்து விடுகின்றன, டம்பம், டாம் பீகம், டின்னர், டீசல் டேவிட், டைம், டொன்சுவான், டோசர், ட்றைவர் என்பவை டகர வரிசையைச் சேர்ந்தவை. ரத்தம், ராவு, ரீச்சர், ரீங்காரம், ருது என்பன ரகர வரிசையைச் சேர்ந் தவை, லம்பம், லாவண்யம், லிங்கம் , வீலை, லெற்றர், லேற், லைற், லொட்சு, லோகம் என்பன லகர வரிசையைச் சேர்ந்தவை றமணன், றாமன், றிம், நீடர் முதலியவை றகர வரிசையைச் சேர்ந்தவை. இப்போக்கு நீடித்தால் மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்களை வரையறுத்த இலக்கண நூல்கள் காட்சிப் பொருளாக மட்டுமே நின்றுவிடும்.
வளர்ந்துவரும் மொழியில் இலக்கணங்களும் மாறுபடுவதன் அவசியத்தை மறுக்கமுடியாது. தொல்காப்பியர் காலத்தில் மொழிக்கு மு த லி ல் வராவென விலக்கப்பட்ட சிகர வரிசையில் சில எழுத்துக்கள் மொழிக்கு முதலாவதை நன்னூ லார் விலக்கினாரல்லர். ஆனால் தமிழ் மரபுக்கு மாறுபட்ட ஒசையுடையவை மொழிக்கு முதலில் வருவதை ஏற்றுக்கொண் டால் தமிழ்மொழி மரபு சிதைந்து கொடுந்தமிழாகிவிடு மென் பதை நாம் மறக்கலாகாது.
தமிழிலக்கணத்தில் மொழிமுதலாதற்கு விலக் கப் பட்ட எழுத்துக்களில் தொடங்கும் ஆரிய மொழிச் சொற்கள் தமிழில் இடம்பெறும்போது அவை தமிழ் மரபு பிழையாது வழங்கச் செய்யும் வடமொழியாக்க விதி, வடமொழியாக்கம் என்ற தலைப்பில் வந்துள்ள நன்னூற் பதவியற் குத்திரம் பத்தொன் பது முதல் இருபத்திரண்டுவரை யுள்ளன. தமிழிற் புகுத்த வேண்டிய பிறமொழிகளையும் அவ்விதிகளுக்கமைய மாற்றி வழங்குதல் உசிதமாகும்.
மொழியின் ஈற்றில்வரும் எழுத்துக்கள்
மொழியின் இறுதியில் வரும் எழுத்துக்களையும் இவை யிவையென இலக்கண ஆசிரியர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்.
鐵44

இறுதியெழுத்துக்களாக வரக் கூடாவென வி ல க் இப் பட்ட சில எழுத்துக்கள் இன்று இக்கால எழுத்தாளர்களால் இறுதி யில் வருமாறு புகுத்தப்படுகின்றன. மொழி முதலில் வருதலி லிருந்து விலக்கப்பட்ட எழுத்துக்களிற் சில மொழிக்கு முதலில் வருவதுபோல இறுதியில் வருமெழுத்துக்கள் பெருமளவில் வருவ தில்லை. சில எழுத்துக்களே அவ்வாறு இறுதியில் வருவன. எனினும் பிறமொழிச் சொற்களைத் தமிழில் எழுதும்போது எழுத்தாளர் சிலர் இறுதியில் வராவெனக் கூறப்பட்ட சில எழுத் துக்களையும் வரச்செய்து விடுகின்றனர்.
உயிரெழுத்துக்களில் 'ஒள' என்னும் ஒரெழுத்துத் தவிர்ந்த ஏனைய எழுத்துக்கள் எல்லாம் மொழிக்கு இறுதியில் வருமெனக் கூறிய தொல்காப்பியர் அந்த எழுத்துக் கூட "க்" "வ்" என்னும் எழுத்துக்க்ளோடு இயைந்து மொழிக்கு இறுதியில் வருமெனக் கூறினார். ஆதலால் தொல்காப்பியர் பன்னிரண்டு உயிரெழுத்துக் களும் மொழியீறுதியில் வருமென்பதை உடன்பட்டார் எனவே கொள்ளலாம், எகர வுயிர் பற்றித் தொல்காப்பியர் கூறுமிடத்து எகரம் மெய்யோடு சேர்ந்து மொழியிறுதியில் வராதெனக் கூறி னார். எகரவுயிர் தனித்து அளபெடையில் இறுதியில் வரு வதையே அவர் எகரம் மொழியிறுதியில் வருமெனக் கூறினார். அத்தோடு ஒரே வுயிரும் நகர மெய்யோடு கூடி மட்டும் மொழி விறுதியில் வருமெனக் கூறினார். நொ என்பது அதற்குதாரணம். *நொ" என்பது துன்பப்படு என்றும் பொருளுடையது,
நன்னூலார் உயிர் எழுத்துக்கள் எல்லாம் மொழிக்கு இறுதி யில் வருமெனக் கூறினார். ஈறாகும் மெய்யெழுத்துக்கள் பற்றி யும் தொல்காப்பியருக்கும் நன்னூலாருக்குங் கருத்து வேறு பாடில்லையெனலாம். அவ்விருவர் கூற்றுப்படி மொழியிறுதியில் ஞ், ண், ந், ம், ன், ய்,ர், ல், வ், ழ், ள் என்னும் பதினொரு மெய் யெழுத்துக்களும் வருவனவாம். நன்னூலார் உயிரெழுத்துப் வன்னிரண்டும் மெய்யெழுத்துப் பதினோன்றும் குற்றியலுகரம் ஒன்றுஞ் சேர்ந்து மொழியிறுதியில் வருமெழுத்துக்கள் இருபத்து நான்கெனக் கூறினார். குற்றியலுக்ரம் மற்றைய உகரத்தில் அடங்குமாதலால் அதை யெடுத்துக் சொல்ல வேண்டிய அவசிய மில்லை. வல்லின மெய்யாறும் நகரமெய்யும் மொழியிறுதியில் வரமாட்டா வென்யது முக்கியம், இன்னொரு விதமாகக் கூறுவ
45鯊

Page 32
தானால், ஆறு வல்லின மெய்களும் நகர மெய்யுந் தவிர்ந்த ஏனைய மெய்கள் பதினொன்றும் மொழியீற்றில் வருமென்ப தாம். குற்றியலுகரமும் மொழிக்கீறாக நிற்குமென நன்னூலார் கூறியதற்கு உரையாசிரியர் சிலர், குற்றியலுகரம் புணர்ச்சி வேறுபாடுடைமையால் வேறாகக் கூறப்பட்ட தென்பர். முற்றிய லுகரமும் சில விடங்களிற் குற்றியலுகரம் போற் புணர்வதால் அது ஏற்றுக் கொள்ளப்படத் தக்கதன்று.
உயிரெழுத்துக்களில் நெட்டெழுத்துக்கள் ஒரெழுத்தொரு மொழியிலும் ஈறாக வருவன. பன்னிரண்டு உயிரெழுத்துக்களில் எகரவுயிர் தவிர்ந்த மற்றைய அனைத்தும் மெய்யுடன் சேர்ந்து உயிர்மெய்யாகி மொழியில் ஈறாகவரும். அளபெடையிலும் உயிர்க் குறில்கள் எல்லாம் மொழியீறாகியும் வரும். உயிரெழுத் துக்கள் மொழியீற்றில் வருவதை உதாரண மூலங் காண்போம். பல, பலா, கரி, தீ, கடு, பூ, சேஎ தே, தை, நொ, போ, கெள என வரும் பதினொரு மெய்யெழுத்துக்களும் மொழி யிறுதியில் வருவத்ற்கு உதாரணம்; உரிஞ், மண், பொருந், மரம், பொன், வேய், வேர், வேல், தெவ், வீழ், வான் என வரும்.
சேஎ - எருது, தே - தெய்வம், நொ - துன்பப்படு, கெள - வாயாற் பற்று, வெள - கொள்ளையிடு, உரிஞ் - உராய்தல், பொருந் - பொருந்துதல், தெவ் - பகை.
நன்னூலார் மொழிக்கு இறுதியில் வருமெழுத்துக்கள் இருபத்து நான் கெனக் கூறத் தொல்காப்பியர் குற்றியலுகரந் தவிர்ந்த இருபத்து மூன்றெழுத்துக்களையுங் கூறினார்டு நேமிநாத ஆசிரியர் பதினெட்டெழுத்துக்களே மொழிக்கிறுதியில் வருவனவெனக் கூறு வர். அவர் கூறிய பதினெட்டெழுத்துக்களும் எவையெனக் காண்போம், உயிர் எழுத்துக்களில் எ, ஒ, ஒள என்னும் மூன்றும் ஒழிந்த ஒன்பதும் ன், ன், ம் என்னும் மெல்லின மெய்களில் மூன்றும், இடையின மெய்கள் ஆறுமாம். நன்னூலார் கூறியவற் றில் உயிர் வருக்கத்தில் மூன்றையும் ஞ், ந் என்னும் மெல்லின மெய்களிரண்டையும் குற்றியலுகரத்தையும் நேமிநாத நூலுடை யார் இறுதியில் வருமெழுத்துக்களிற் சேர்த்திலர். இது இக்கால வழக்குக்கு மிகப் பொருத்தமுடையதென்பதில் ஐயமில்லை. எகரம்
鐵46

அளபெடையில் மட்டும் ஈறாவது. "நொ" என்னும் ஒரு சொல்லில் மட்டும் ஒகரம் ஈறாவது ஞகர நகரங்கள் உரிஞ், பொருந் என் னும் வழக்கற்ற சொற்களிலன்றி வேறு மொழிகளில் வராதவை. குற்றியலுகரம் உகரவுயிரில் அடங்குவது. எனவே நேமிநாதகாரர் கூற்றுப்படி பதினெட்டு எழுத்துக்களே மொழிக்கு ஈறாவனவென் பது கொள்ளத்தக்கதாகும்.
வல்லின மெய்களிற் சில ஊர்ப் பெயர், மக்கள் பெயர், சமுதி திரப் பெயர், மலைகளின் பெயர் என்பவற்றைக் குறிக்க மொழி யிறுதியில் வருவதைத் தவிர்க்க முடியாதிருக்கிறது, காரித்திக், பேர்ச், டேவிட், பாத், போப், கோற் என வருவது சர்வ சாதா ரணமாகிவிட்டது. இவற்றிற் சிலவற்றை எழுத் து வழக்கில் ஈறாகும் எழுத்துக்களோடு ஒத்துப்போகுமாறு மாற்றமுடியுமேனும் பேச்சு வழக்கில் அது முடியாத செயல் என்பதில் ஐயமில்லை. அத்திலாந்திக், பசுபிக், ஆர்டிக், குஜராத், மார்ச், சோப் முதலிய மொழிகளைத் தமிழுருவம்பெறச் செய்தால் அவை குறித்த பொருள் சுட்டாவாய்த் தடுமாற்ற நிலையை உண்டாக்குமென் பதை மறுக்கமுடியாது. இன்னோரன்ன இடங்களில் தமிழ் மரபை நிலைநிறுத்தி மய்க்கஞ் செய்வதைத் தவிர்த்து இவை வேற்றுமொழியென்பதைக் காட்டக் குறியீட்டைப் பயன்படுத் துவதே மொழி வளர்ச்சிக்கு உகந்ததாகும். இது எழுத்து வழக்கில் மட்டுமே கை கூடுவது. மாற்றக் கூடியனவற்றை மாற்றித் தமிழ் உருவம் பெறச்செய்வது அறிஞர் கடனாம்.
மொழியிடையில் மயங்கும் எழுத்துக்கள்
சொற்களின் இடையில் எந்த மெய்யெழுத்து எ ந் த மெய் செழுத்துடன் ஒத்து நடக்கும் என்பதையறிந்து ஒத் துப் போக முடியாத எழுத்துக்களை விலக்கி எழுதுவது தமிழ்மொழி மரபு பேணுவாரி கடனாம். தமிழ் இலக்கண நூலார் ஒத்துப்போகும் எழுத்துக்களை மயங்கும் எழுத்துக்கள் என்பர். பத்தி என்பது ஒரு வடசொல். இதைச் சிலர் பக்தி என ஆரியமொழியில் உள்ள வாறே எழுதக் காண்கிறோம். இங்கு கவனிக்கவேண்டியது என்னவெனில் ககர மெய் தகர மெய்யோடு மயங்காது என்பதே. இவ்விரு எழுத்துக்களையும் வலிந்து மயங்க வைத்தல் மொழியின் இனிமையைச் சிதைப்பதாகும். இடைநிலை மெய்ம்
47灘

Page 33
மயக்கம் பற்றி இலக்கண நூலார் கருத்தையறிந்து அதற்கேற்ற வகையில் மயங்கும் எழுத்துக்களையே இணையவைப்பது மொழி யைப் பாதுகாப்பார் கடனாகும்.
குறித்த ஒரு மெய்யெழுத்து அதே மெய்யுடன் மயங்குவது உடனிலை மெய்ம் மயக்கமாம். அது பிறிதொரு மெய்யுடன் மயங் குவது வேற்றுநிலை மெய்ம் மயக்கம் எனப்படும். காக்கை என்னும் மொழியிலுள்ள இரண்டாமெழுத்தாகிய ககர மெய்யெழுத்து * கை ? என்னும் உயிர்மெய்யெழுத்தின் முதலிலுள்ள ககர மெய் யோடு மயங்கியமையால் அது உடனிலை மெய்ம் மயக்கமெனப் படும். அம்பலம் என்ற சொல்லிலுள்ள மகர மெய் மூன்றா மெழுத் தாகிய பகரவுயிர் மெய்யின் முன்னுறுப்பாகிய பகர மெய்யோடு மயங்கியமையால் இது வேற்று நிலை மெய்ம் மயக்கம் எனப்படும்.
க், ச், த், ப் என்னும் நான்கு மெய்களும் ஒழிந்த பதினான்கு மெய்களுந் தம்மோடு பிற மெய்கள் ஐயங்க இடங்கொடுத்து நிற்கும். இது வேற்று நிலை மெய்ம் மயக்கம் எனப்படும். ர் " "ழ்" என்னும் இரண்டெழுத்துக்களையுந் தவிர்ந்த ப தி ன m று மெய்யெழுத்துக்களும் தம்மொடுதாம் மயங்கும். இது உடனிலை மெய்ம் மயக்கம் எனப்படும். எ ன வே க், ச், த், ப் என்னும் நான்கு மெய்களும், பிற மெய்களோடு மயங்காவென்பதும் "ரி' "ழ்" என்னும் இரண்டுந் தம்மொடுதாம் மயங்காவென்பதும் பெறப்படும். எனவே இங்கு குறிப்பிட்ட க், ச், த், ப், ர், ழ் என்னும் ஆறு மெய்களுந் தவிர்ந்த பன்னிரு மெய்களுந் தம் மொடுதாம் மயங்குதலாகிய உடனிலை மெய்ம் மயக்கமும் தம் மொடு பிற மயங்குதலாகிய வேற்று நிலை மெய்ம் மயக்கமும் பெறுமென்பது தெளிவாகிறது.
உயிரி எழுத்துக்களுடன் மெய்யெழுத்துக்கள் மயங்குவதிற்கும் மெய்யெழுத்துக்களுடன் உயிரெழுத் துக்கள் மயங்குவதற்கும் இலக்கணகாரர் வரம்பு கட்டவில்லை. அவை வேண்டியவாறு மய்ங்குமென்பது அவர்கள் காட்டிய வழியாகும். கல், புள் என் பன உயிருடன் மெய் மயங்கின. க க ர மெய்யின்மேல் நின்ற அகர உயிரி. லகர மெய் அவ்வுயிரோடு மயங்கிற்று. அவ்வாறே புள் என்பதற்குங் காண்க, கா, பூ என்பவற்றில் ககர, பகர மெய்களுடன் ஆகார உயிரும், ஊகாரவுயிரும் மயங்கின. மயக்கம் என்பதற்குக் கூட்டம் இங்கு என்பது பொருளாகும்.
鯊48

உடனிலை மெய்ம் மயக்கத்தில் வந்த மெய்யே பி ன் னு ம் வந்து மயங்குவதால் அதற்குச் சிறப்பு விதி தேவையில்லை. ஆனால் வேற்றுநிலை மெய்ம் மயக்கத்தில் இன்ன மெய்யோடு இன்ன மெய் மயங்குமென வரையறைப்படுத்த வே ண் டி யி ரு த் தலின் சிறப்பு விதி தேவையாகும். அவ்வாறமைந்த சிறப்பு விதிகளையும் இலக்கண நூலார் வகுத்துத் தந்துள்ளனர்.
ககர மெய்யின் முன் ககர மெய்யும், வகர மெய்யின் முன் ககர மெய்யும் மயங்கும். சங்கம் என்பது வகர மெய்யின் முன் ககர மெய் மயங்கியதற்கு உதாரணம். தெவ்யாது என்பது வகர மெய்யின் முன் யகர மெய் மயங்கியதற்கு உதாரணம்.
ஞகர நகர மெய்களின் முன் அவற்றிற்கினமாகிய சகர, தகர மெய்களும், யகர மெய்யும் மயங்கும். பஞ்சு என்னுஞ் சொல் லில் ஞகர மெய்யின் முன் சகர மெய் மயங்கிற்று. பந்து என் பதில் நகர மெய்யின் முன் தகர மெய் மயங்கிற்று, உரிஞ்யாது. பொருந்யாது என்பவற்றில் ஞகர, நகர மெய்களின் முன் யகரம் மயங்கிற்று. ஞ், ந் என்பவற்றின் முன் யகரம் மயங்குவது இன்று பெரும்பாலுங் கையாளப்படுவதில்லை. பழைய உதாரணங்களே ஈண்டுங் காட்டப்பட்டன. 5令○9 C - C -
டகர, றகர மெய்களின் முன் க, ச, ப என்னும் மூ ன் று மெய்களும் மயங்கும். உட்கு என்பதில் டகர மெய்யின் முன் ககர மெய் மயங்கிற்று. கட்சி என்பதில் டகர மெய்யின் முன் சகர மெய் மயங்கிற்று. கற்க என்பதில் றகர மெய்யின்முன் ககர மெய் மயங்கிற்று. முயற்சி, கற்பு என்பவற்றிலும் இவ் வாறு சகர, பகர மெய்கள் மயங்கக் காணலாம்.
ண், ன் என்னும் மெய்களின் முன் அவற்றுக்கு இனமாகிய ட், ற், என்னும் மெய்களும் அவற்றோடு க், ச், ஞ், ப், ம், ய், வ் என்னும் ஏழு மெய்களும் மயங்கும். வண்டு, எண்கு, வெண் சோறு, வெண் ஞமலி, வெண்பல், வெண்மலர், மண்யாது, மண் வலிது என ணகரத்துடன் இனவெழுத்தாகிய டகர மெய்யும் மற்றைய ஏழு மெய்களும் மயங்கின.
நன்று, புன்கு. புன்செய், புன்ஞமலி, புன் பயிர், புன்மலர், பொன் யாது, பொன்வலிது என னகர மெய்யின் முன் ற க ர மெய்யும் மற்றைய ஏழு மெய்களும் மயங்கின.
49羲

Page 34
மகர மெய்யின் முன் ப், ய், வ் என்னும் மூன்று மெய்களும் மயங்கும். கம்பன், தளம் யாது, மனம் வலிது என மயங்கும்.
ய ர ழ என்னும் மெய்களின் முன் மொழிக்கு முதலாக வரும் க, ச, த, ந, ப, ம, வய, ஞ, B என்னும் பத்து மெய்களும் மயங் கும். வேய்கடிது, வேர்கடிது விழ்கடிது என ய், ர், ழ் என்னும் எழுத்துக்களின் முன் ககர மெய்மயங்கிற்று, சகரம் முதலியவற் துக்கும் இவ்வாறே ஒட்டிக் காண்க.
லகர ளகர மெய்களின் முன் க், ச், ப், வ், ய் என்னும் ஐந்து மெய்களும் மயங்கும். மேல் கடிது, வாள் கடிது என்பனவற்றைப் போல சிறிது பெரிது, வலிது, போது, என்பனவற்றையும் இணைத்துக் காண்க.
ஈறொற்றாய் மயங்குவன
யகர ரகர ழகர மெய்களின் முன் க், ச், த், ப், ங், ஞ், ந், ம், என்னும் எட்டு மெய்களும் தனி மெய்களாக அதாவது உயிரெழுத்துடன் சேராது நின்று மயங்கும். தமிழ்ச் சொற்களில் சொல்லின் இடையில் இரண்டு மெய்கள் இணைந்து வருவது" யின் அவற்றுள் முதலாவது எழுத்து ய், ர், ழ் என்பவற்றில் ஒன் நீாதல் வேண்டும். அதாவது ஈரொற்றாய் மயங்கும் எழுதி துக்கள் ய், ர், ழ் என்பனவே பாம். ர், ழ் என்னும் இரண்டு மெய்களும் தனிக்குற்றெழுத்தின் முன்வருதலில்லை. நெட் டெழுத் தின் முன்னேயே அவை வரும். வர்க்கம் என்வந்ததன்றேr வெனின் அது ஆரியச்சொல். அதை வருக்கம் என்றெழுதுவதே வடமொழியாக்கமாகும். பார், வாழ் என அவை நெடிலைச் சார்ந்து வரக் காணலாம், அவை ஈரொற்றாய் மயங்கும்போது அவற்றையடுத்து உயிர்மெய்யெழுத்து வருமாயின் அதிலுள் வ மெய்யெழுத்துஞ் சேர்ந்து மூன்று மெய்யாக மயங்கும். வேய்த் தோள், பார்த்தான், வாழ்க்கை என்பவற்றில் வேய்த் தோன் என்பதில் ய், த் என்னும் இருமெய்களோடு தோள் என்பதிலுள்ள தகர மெய்யும் மயங்கிற்று, அவ்வாறே பார்த்தான் என்பதில் ர், த் என்னும் இருமெய்களோடு "தா" என்பதிலுள்ள மெய்யும் வாழ்க்கை என்பதில் ழ், க் என்னும் இருமெய்களோடு ககர மெய்யும் மயங்கியவாறு காண்க. மெய்ம் மயக்கம் சாதா *மாக இருமெய்களின் கூட்டமாக அமைவதேனும் ய், , ழ்
鯊50

என்பன ஈரொற்றாய் மயங்கி மூன்றாவது உயிர்மெய்யின் முதலி லுள்ள மெய்யையுஞ் சேர்க்க மூன்றொற்று மயங்கக் காணலாம். ரகர ழகர மெய்கள் தனிக்குற்றெழுத்தைச் சேர்ந்து வர மாட்டா வென விலக்கப்பட்டபோதிலும் ரகரமெய்யை அவ்வாறு விலக்கு வது மொழிவளர்ச்சியில் இயலாத அாரியமாக உள்ள தென்பதுஞ் சிந்திக்கத்தக்கது. சர்ப்பம், அர்ப்பணம், வர்க்கம் என்பனவற்றில் தணிக்குற்றெழுத்தை யணைந்து ரகர மெய்வருவதை விலக்குவது கடின மென்றே தோன்றுகிறது. ழகரம் அவ்வாறு வருவதில்லை எனலாம். ரகரவொற்றுத் தனிக்குறிலைச் சேர்ந்து மொழிக்கு உறுப்பாகி விகுதி இடைச் சொல்லாய் வருதலைக் கொள்வாரு முள ரென நன்னூல் உ  ைர யா ரி சி ய ர் சிலர் கூறுவர். வந்தனர் என்பதில் இறுதியிலுள்ள 'அர்" என் னு ம் இடைச் சொல்லை அவர்கள் உதாரணமாகக் காட்டுவர். இது பொருத்தி மற்ற கூற்றாகும்,
மொழிப் போலி
நமது உபயோகத்துக் குரிய பொருள்களுள் எதையாவது போலி என்றறிந்தால் மக்கள் அதனை ஏற்கக் கூசுவர். போலி பயன்பாட்டிற் குறைந்தது அல்லது உதவாததென்பதே அதன் காரணமாகும். போலி என்பதன் கருத்து போன்றது என்ப தாகும். போன்றது என்பதால் அது நிசமானது அன்றென்னும் உண்மை புலப்படும். தாமரை போலும் முகம் என்றால் முகம் தாமரையை ஒருபுடை ஒத்திருக்குமேயன்றித் தாமரையாகிவிடாது. அது போலப் போலியுஞ் சிறிது குறைபாடுடைய தென்துே தவறான கருத்தல்ல. சமயம் என்ற மொழியைச் சமையம் என்று போலியாக எழுதலாம். ஆனால் பின்னையது முன்னையது போற் தரமான தன்று. ஆனாற் செய்யுள் முதலியவற்றிற் போலியும் பெரிதும் பயன்படுகிற தென்பதுண்மையே.
போலி, முதல், இடை, கடை என்றும் மூன்றிடத்தும் வருகின்றது. இவைமுறையே மொழிமுதற் போலி, மொழியிடைப் போலி மொழியிறுதிப் போலியெனப் பெயர் பெறும், அஃறி ணைப் பெயர்களின் ஈற்றில் நின்ற மகரமெய் சில விடங்களில் னகரமெய்யோடு ஒத்துப்போகக் காண்கிறோம். அதாவது மகர மெய் நின்றவிடத்து னகரம் வந்தும் பொருள் வேறுபடாது
51囊

Page 35
ஒத்து நடந்து போலியாகிறது. நிலம் என்பது நிலன் என்றும் கலம் என்பது கலன் என்றும் வழங்குவதுண்டு. இது மொழி
பிறுதிப் போலியாகும்.
மொழியிறுதிப் போலி பற்றிக் கூற வந்த நன்னூலார்,
"மகர விறுதி அஃறிணைப் பெயரின்
னகரமொடுறழா நடப்பன வுளவே" (நன். எழு. 67)
என்று கூறியுள்ளார். அஃறிணைப் பெயர்களில் மகர விறுதி அம் மகர மெய்வை நீக்கி அவ்விடத்தில் னகர மெய்யை ஏற்று நடப்பன வாகிய சொற்களும் உளவென்பதே இந்நூற் பாவின் பொருளா கும். அஃறிணைப் பெயரென ஆசிரியர் கூறியது பால்பகா
அஃறிணைப் பெயரையே பாகும்,
சுரும்பு கரும்பர் எனவும் வண்டு வண்டரி எனவும் வருவது முண்டு. இங்குக் குற்றியலுகர வீற்றுச் சொற்களில் உகரத்துக் குப் பதிலாக "அர்" என்பது போலியாக வருவதும் காணலாம். பந்தல் பந்தர் எனவும் சாம்பல் சாம்பர் எனவும் குடல் குடர் எனவுஞ் சில லகர விற்றுப் பெயர்களுக்கு ரகரமெய் போலியாக வருவதுமுண்டு. கூவம் கூவல் எனவும் பக்கம் பக்கல் எனவும் மகர மெய்க்கு லகரமெய் போலியாக வருவது முண்டு. ம தில் என் பது மதிள் எனவும் லகரத்துக்கு ளகரம் போலியாக வருவதையுங் காணலாம். நன்னூலார் இவற்றை எடுத்துக் கூறாதபோதிலும் ஆன்றோர் வழக்கிலுஞ் செய்யுளிலும் இவை இடம்பெறுதலின் விலக்கற் பாலன வல்ல வென்க.
மொழி மூவிடத்தும் போலிவருமென்பது மு ன் ன ரே கூறப்பட்டது. மொழியின் முதலிலும் சகர ஞகரங்களின் முன் அகரம் நிற்கவேண்டிய இடத்து ஐகாரம் போலியாக நிற்பதுமுண்டு. பசல் என்பது பைசல் எனவும் மஞ்சு என்பது மைஞ்சு எனவும் வரும். மயல் என்பது மையல் என வருவதும் மொழி முதற் போலியேயாம்.
மொழியிடையில் அமச்சு என்பது அமைச்சு எனவும் இலஞ்சி என்பது இலைஞ்சியெனவும் ஆரயர் என்பது அரையர் எனவும் வரும்,
籤52

எழுத்துப் பேனலி
மொழிகளில் ஒரெழுத்து நிற்கவேண்டிய இடத்து இன்னோ ரெழுத்து வந்து பொருள் மாறுபடாமல் நடப்பது போல எழுத்துக்களிலும் ஓரெழுத்துக்குப் பதிலாக இரண்டு அல்லது மூன்று எழுத்துக்கள் இயைந்து குறித்த ஒரி எழுத்தின் ஒலியை உண்டாக்குவது எழுத்துப் போலி எனப்படும். இதனை இலக்கண உரையாசிரியரிகள் பலர் சந்தியக்கரமெனத் தவறுதலாகக் கூறினர். ஆனால் நன்னூலாசிரியர் எழுத்திலக்கணம் பற்றிக் கூறுகையில்,
"எண் பெயரீ முறைபிறப் புருவ மாத்திரை
முதலீ றிடைநிலை போலி யென்றா பதம் புணர்ப் பெணப் பன்னிருபாற் றதுவே"
என எழுத்திய்ல் முதலாஞ் சூத்திரத்திற் கூறியதையும் நோக்காமல் வட நூல் வழக்கைத் தமிழ் நூல் வழக்கிற் புகுத்த முயன்றது வடமொழியிற் கொண்ட பற்றினாற் போலும். நன்னூலார்க்குச் சந்தியக்கரம் கூறுவதே கருத்தாயின் போலி என்று கூறியதன் மேற் சந்தியக்கரம் என்பதையுஞ் சேர்த்திருப்பர் என்பதைச் சிறிதுஞ் சிந்தியாது தமிழ் மொழியிற் கொள்ளப்படாத சந்தியக் கரத்தைப் புகுத்தியது தவறான தென்பதில் ஐயமில்லை. வித்து வான் கணேசையர் அவர்களும் சந்தியக்கரமெண்பது பிழையான தெனவும் போலியெழுத்து என்பதே கொள்ளத்தக்கதெனவும் நிறுவியுள்ளார். வித்துவான் அவர்கள் இதனைத் தமது தொல்காப்பிய எழுத்ததிகாரப் பதிப்பில் அனுபந்தமாக வெளி பீட்டுள்ளார். அதனை ஆண்டுக் காண்க. இந்த எழுத்துப் போலி சில உயிரெழுத்துக்கள் ஒலிக்குமாற்றைத் தெளிவுபடுத் தவும் செய்யுளில் சீர் சிதைவுறாது செய்யவும் பயன்படுவது.
'அகர இகரம் ஐகாரமாகும் (தொல். மொழிமரபு - 2) எனக் கூறுந் தொல்காப்பியர் அகரக் கூறும் இகரக் கூறும் சேர்ந்து ஐகாரம் போல ஒலிக்குமென்பதை வெளிப்படுத்துகிறார். அகரவுகரம் ஒளகாரமாகும். (தொல், மொழி 22) என்பதன் மூலம் அகரக் கூறும் உகரக் கூறுஞ் சேர்ந்து ஒளகாரம் போல இலிக்கும் என்பதைப் புலப்படுத்துகிறார். இந் நூற்வாக்களுக்குப் பாட வேறு சேடாக, 'அகர இகரம் எகரமாகும்" எனவும்
53鬣

Page 36
ஆதரவுகரம் ஒகரமாகும் எனவும் நூற்பாக்கள் உள்ளன. அகரக் கூறும் இகரக் கூறுஞ் சேர்ந்து எகரம் போல ஒலிக்கும் என்பதும் அகரக் கூறும் உகரக் கூறுஞ் சேர்ந்து ஒகரம் பேர்ல ஒலிக்கும் என் பதும் இவற்றின் பொருளாகும். இந் நூற்பாக்களும் எ,ஒ என்னும் எழுத்துக்கள் ஈரெழுத்து இய்ைந்து பிறப்பதை வெளிப்படுத்து ஆல் இவையுங் கொள்ளத்தக்கனவே. நன்னூலார் எழுத்துப் போலி பற்றி ஒரு குத்திரமே செய்துள்ளார்.
அம்மு னிகரம் யகர மென்றிவை எய்தி னை செய்ாத் திசைக்கு மவ்வோ ஒவ்வும் வவ்வும் ஒளவோ ரன்ன - (நன் எழு. 125)
அகரத்தின் முன் இகரமும் யகர மெய்யும் என்ற இவை ஒத்துப் பொருந்தினால் ஐ என்னும் நெட்டெழுத்து ஒலிக்கும். அகரத்தோடு உகரமும் வகர மெய்யும் ஒத்துப் பொருந்தினால் ஒள என்னும் நெட்டெழுத்து ஒலிக்கும். யசுர வகர மெய்கள் நடுவிற் கலக்குமென்பதை உணர்ந்து ஒலித்தல் வேண்டும். அ ய் இ  ைஐ, அ வ் உ = ஒள என வரும். வைத்திபன் என்ப தில் வையென நிற்கும் வகர மெய்மேல் ஏறிய ஐகாரம் ஒலிப்பது குல வகரத்தின் மேலேறிய அகரமும் யகர மெய்யுஞ் சேர்ந்து வயித்தியன் என ஒலித்துப் போலியாக அமைகின்றன. வைத்தியன் - ஐ பித்தியன். இவ்வாறே வையம் என்பது வய்யம் எனவும்,
ജ ഖ68 என்பது அய்வனம் எனவும் வருவதும் கவனித்தற்பாற்று.
ஒளவை என்பது அவ்வை,எனவும் பெளத்தர் என்பது பவுத்தர் எனவும், வெளவுதல் என்பது வவ்வுதல் எனவும் அகர வகர உகரக் கூறுகள் சேர்ந்தொலிப்பது காண்க. இதுவே போலியெழுத்துக் களின் பயன்பாடாகும். இதனாலன்றோ 'போலியெழுத்தைப் போற்றுதல் கடனே' என இலக்கணக் கொத்தாசிரியர் கூறியதும்
&T ବିଶଃ &.
எழுத்துக்களின் சாரியை
எழுத்துக்களைத் தனித்தனியாகச் சொல்லும்போது சாரியை கொடுத்துச் சொல்வது மரபு. அன், ஆன் முதலிய சொற்களில் வருஞ் சாரியைகளில் நின்றும் இவ்வெழுத்துச் சாரியைகள் வேறு பட்டன. சாரியை கொடாமல் எழுத்துக்களை உச்சரிப்பது சிரம மானது. அ, ஆ முதலிய எழுத்துக்களைச் சிறுவர்க்குச் சொல்
徽54

லிக்கொடுக்கும்போது அவற்றை ஆனா, ஆவன்னா முதலாகச் சொல்வது வழக்கம். அ என்பதை ஆவென நீட்டி அதனுடன் னா என்னுஞ் சாரியையுங் கொடுத்து ஆனாவெனவும், ஆ , என்பதை அன், ஆ என இரண்டு சாரியைகள் கொடுத்துஞ் சொல்லுவர். இது தவறுதலான உச்சரிப்பாக இருப்பினும், சிறுவர் சொல்வதற்கும், மனதிற் பதிப்பதற்கும் இலகுவான முறை. "ஆ" என்ற ஒலியை ஆவன்னா என்று சொல்வது தவறு என மொழி யியல் வல்லுனர்கள் கூறிவரும்போதிலும் இந்த முறையையே ஆசிரியரும் மாணவரும் பின்பற்றிவருகின்றனர். " ஆ " என்பது வெறும் ஓசை போலவும், ஆவன்னா என்பது ஒரு உருவத்தைச் சுட்டுதல் போலவும் இளைய மாணவர்கள் கருத்திற் படி ந் து விட்டது. எதிர்ப் பிரசாரங்கள் பல நடந்தபோதிலும் இம்முறை கைவிடப்படாது தொடர்வதற்கு இம்முறையிலுள்ள இ லகு த் தன்மையே காரணம் எனலாம்.
உயிர்க் குற்றெழுத்துக்களும், உயிர்மெய்க் குற்றெழுத்துக்களும் கரம், காரம், கான் என்ற மூன்று சாரியைகளில் ஏதாவது ஒன்று சேர்த்துக் கூறப்படும். " அ " என்பதை எடுத்துக்கொண்டால் அது அகரம் அல்லது அகாரம் அல்லது அஃகான் எனக் கூறப் படும். உயிர் மெய்க் குறிலாகிய "க" என்பது ககரம், சுகாரம், கஃகான் எனக் கூறப்படும் உயிர் நெட்டெழுத்துக்கள் " காரம் " என்னுஞ் சாரியை பெற்றுவரும். ஆகாரம், ஈகாரம், ஊகாரம் என வரும். ஐகார, ஒளகாரங்கள் காரச் சாரியையோடு கான் சாரியையும் பெற்றுவரும். ஐகாரம், ஐ லான், ஒளகாரம், ஒளகான் என வரும், மெய்யெழுத்துக்கள் * அ" என்னுஞ் சாரியை பெற்று வரும். க என்பது முதலாக வரும். ககர மெய் என வருவதுங் கொள்ளப்படும். உயிர்மெய் நெடில்கள் சாரியை பெறாமல் கா, என்றும் சாரியை பெற்றுக் ககர வாதாரம் என்பது முதலாகவும் வரும், ஆய்தம் என்பது தனித்து நில்லாமையின் அதனை இடை யில் வைத்துப் பின்னர் கேனம் என்னுஞ் சாரியையுஞ் சேர்ந்து அஃகேனம் என வழங்குவர்.
55溪

Page 37
2. பதவியல்
பதம்
பதம் என்பது ஒரு வடசொல். இதனைச் சொல்லெனினும் மொழியெனினும் பொருந்தும், மொழி, சொல், கிளவி என்னுந் தமிழ்ச் சொற்களுளவாகவும் பதம் என்பதை நன்னூலார் இவ்விடத்திற் பயன் படுத்தியதற்குக் காரணமுண்டென்னும் உரையாசிரியர்களும் உளர். இவ்வியலிற் கூறப்படும் இலக்கணங் இன் ஆரியமொழியிலிருந்து பெறப்பட்டன வென்பதற்கு அறிகுறி அம்மொழிப் பெயரையே நன்னூலார் சூட்டினாரென்பது அவர்கள் கருத்து. தொல்காப்பியம் என்னும் தொன்மையும் முழுமையும் வாய்ந்த நூலிற் கூட இவ்வியலிற் கூறப்பட்ட முக்கியமான இலக்கணங்களைக் காண முடியாது. இப்பதவியலிற் கூறப்பட்ட பெரும்பாலான இலக்கணங்களைத் தமிழ் மொழியில் முதன்முதலிற் புகுத்தியவர் நன்னூலாசிரியர் பவணந்தி முனிவரே. இவ்வியலிற் பதங்களைப் பகுபதம், டகாப்பதம் என வகுத்து அவற்றின் உறுப்புக்களை இரண்டு முதல் ஆறெனக் இாட்டிய பெருமை அவருக்குண்டு.
எழுத்துக்கள் தனித்து நின்றேனும், பிற எழுத்துக்களோடு கூடிநின்றேனும் பொருள் குறித்து வருமாயின் அது பதமாகும். பொருளுணர்த்தி வரும் எழுத்தில்லாத ஒ  ைச யு ம், பொருள் உணர்த்தாது வரும் எழுத்தோசையும் பதமெனப்படா இ டி யோசை, மரம் முறியுமோசை, பிராணிகள் இத்தும் ஓசை என் பன எழுத்தில்லாத ஒசைகள். ஆதலால் அவை ப த ம் எனப் படா. "இறிது பலுதுறி எ ன் பன எழுத்தோசையாயினும் பொருள் குறித்து வராமையால் பதமாகா, பதத்தை ஆசிரியர் தொல்காப்பியர், ஒரெழுத்தொரு மொழி, ஈரெழுத்தொரு மொழி இரண்டிறந்திசைக்குந் தொடர்மொழியென மூன்று வகைப்படுத்து வர். ஒன்று இரண்டு, பலவென்பது வட நூல் வழக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அனைத்தும் பன்மை என்பது தமிழ் வழக்காதல்பற்றி நன்னூலாரி தனியெழுத்து மொழி, பலவெழுத்து மொழியென இருபாற்படுத்திக் கூறினார். தனியெழுத்து மொழிகள் அனைத்தும் பகாப்பதங்களே. தொடர் மொழிப் பதங்கள் அனைத்தும் பகுபதம், பகாப்பதம் என்னும் இரு பிரிவினுள் அடங்கும். பகுபதம்
靈56

என்பது பகுக்கக் கூடிய அதாவது பிரிக்கக் கூடிய பதமாகும். பகாப்பதமாவது பகுக்கமுடியாத இயல்பினையுடைய பதமாகும். பகாப்பதங்களைப் பிரித்தால் பிரிக்கப்பட்ட கூறுகள் எவ்வகைப் பயனுமின்றிக் கெடும். பகுபதத்தைப் பலவுறுப்புக்களாற் பொருத் தப்பட்ட ஒரு முழுமையான பொருளுக்கு ஒப்பிடலாம். அதுே போலப் பகாப்பதத்தைப் பிரிக்க முடியாததும் பிரித்தாற் பிரிக் கப்பட்ட பாகங்கள் பயன்பாடற்றுப் போவதுமான ஒரு பொரு ளுக்கு ஒப்பிடலாம். எழுத்துக்களால் ஆய து ம் பொருள் குறிப்பதுமாயினும் பிரித்தாற் பயன்படாததாதலால் பகாப்பது மாயிற்று என்பதுங் கருத்தில் இருத்தத் தக்கது.
கலப்பை என்பது உழவன் உழுதொழிலைச் செய்வதற்குப் பயன்படுத்தும் ஒரு கருவி. இதில் மேழி, படவாள், கொழு, இறுபிடி, ஏர்க் சால், நந்தை முதலிய உறுப்புக்கள் உள. இவற் றைத் தனித் தனி உறுப்புக்களாகப் பிரிக்கவுஞ் சேர்க்கவும் முடியும், இது ஓரளவுக்குப் பகுபதத்தின் இயல்பைப் புலப்படுத்துவதாகும், உண்டான் என்ற பகுபதத்தை எடுத்துக் கொள்வோம். இப் பதத்தை "உண்" என்னும் ஒருறுப்பாகவும் "ஆன்" என்னும் மற்றோ குறுப்பாகவும் "ட்" என்னும் பிறிதோருறுப்பாகவும் பிரிக்கலாம். பிரிக்கப்பட்டபோதும் அவை பயன்பாடுள்ளன வாதலால் அவை சேர்ந்த பதம் பகுபதம் என்னுந் தகுதியைப் பெற்று விடுகிறது. இப்பகுபதத்தில் "உண்' என்பது தொழிலை யுணர்த்துகிறது."ஆன்" என்பது தொழிலைச் செய்தானை உணர்த்துகிறது. "ட்" என்பது இாலத்தை யுணர்த்துகிறது. இவ்வாறு ஒவ்வொருறுப்பும் ஏதோ ஒரு வகையிற் பயன்படப் பிரிவதால் இது பகுபதம் என்னுற் தகுதியைப் பெற்றுவிடுகிறது.
பஜாப் பதத்தை ஒரு மண்பானைக்கு ஒப்பிடலாம். பானைக்கும் விளிம்பு கழுத்து முதலிய உறுப்புக்கள் உள. ஆனால் அவற் றைப் பிரித்தால் பானை என்ற நிலை மாறுவதோடு மேலும் அதைப் பானை போக்குவது முடியாது. பானை பயனற்றுப் போய் விடும் இதனையே நன்னூலார்,
4ே பகுப்பாற் பயனற் றிடுகுறி யாகி
முன்னே யொன்றாப் முடிந்தியல் கின்ற பெயர்வினை இடையுரி நான்கும் பகாப்பதம் (நன், பத. 4)
57蠍

Page 38
என்று கூறினார். பகாப்பதம் பெயர்ப்பகாப்பதம், வினைப்பகாப் பதம், இடைப்பகாப்பதம் உரிப்பகாப்பதம் என நான்கு வகைப் படும் பகுபதம் பெயர்ப்பகுபதம் வினைப்பகுபதம் என இரு கூறு மட்டும் உடைத்து. இடையுரிச் சொற்கள் பகுபதங்களாக வருவ தில்லை. வினைப் பகுபதத்தைத் தெரிநிலை வினைப்பகுபதம் குறிப்பு வினைப்பகுபதம் என இரண்டாகவும் வினையாலனையும், பெயர்ப் பகுபதத்தையுஞ் சேர்த்து மூன்றாகவும் வகுக்கலாம்,
பெயர்ப் பகாப்பதங்கள் நிலம், நீர், தீ, காற்று, வான் என வரும். வினைப் பகாப்பதம் - நட, வா, உண், திண், படு, பாடு, எனவரும்
இடைப் பகாப்பதம் - மற்று, மன், போல, என, ஏ, அன் எனவரும் உரிப்பகாப்பதம் - சால, உறு, தவ, நனி, கூர் என வரும்.
இப்பகாப்பதங்களைப் பிரிக்க முடியாதென்பதை இவ்வுதா ரணங்கள் மூலமறிக. பிரித்தால் எழுத்தாகி விடுமேயன்றி பதத்தின் உறுப்பாக வராது. பானையைப் பிரித்தபோது எவ்வாறோ அவ்வாறேயாகும். |
ஒரெழுத் தொருமொழிகள்
ஒரெழுத் தொரு மொழிகள் அனைத்தும் பகா ப் ப த ம் என்பதை முன்னர்க் கண்டோம் தமிழ் மொழியில் ஒரெழுத்தொரு மொழியாக வரும் எழுத்துக்கள் எத்தனை யெனச் சிந்திப்போம். உயிர் வருக்கத்தில் ஆறு எழுத்துக்களும் மகர வருக்கத்தில் ஆறு எழுத்துக்களும் தகர, பகர நகர வரிசைகளில் த னி த் த னி ஐவைந்தும், ககர வகர, சகர வரிசைகளில் தனித்தனி நான்கும் யரை வரிசையில் ஒன்றும் இவற்றோடு நொ, து, என்னும் இரண்டுஞ் சேர ஓரெழுத் தொரு பதம் நாற்பத்திரண்டாகும். இவை வருமாற்றை யினிக் காண்போம்.
உயிர் வருக்கம் - ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஒ என ஆறு. மகர வருக்கம் - மா, மீ, மூ, மே, மை, மோ, என ஆறு. தகர வருக்கம் - தா, தீ, தூ, தே, தை என ஐந்து பகர வருக்கம் - பா, பூ, பே, பை, போ என ஐந்து பகர வீகாரம் ஆகிய இடக்கர்ச் சொல்லையுஞ் சேர்த்தால்
ஆறாகும்.
籤58

நகர வருக்கம் - நா, நீ, நே, நை, நோ என ஐந்து ககர வருக்கம் - கா, கூ, கை, கோ என நான்கு. வகர வருக்கம் - வா, வீ, வை. வெள என நான்கு, இவற்றோடு வே" என்பதையுஞ் சேர்த்தால் ஐந்தாகும். சகர வருக்கம் - சா, சீ, சே, சோ என நான்காகும் பகர வருக்கம் - யா என ஒன்றாகும். இப் பகுங்களோடு நொ, து என்றும் இரண்டுஞ் சேர்க்க்ப் படும். இவ்வாறு வரும்போது சிறப்பில்லாதனவென நல்னுரலார் சேர்க்கா தொழிந்த பகரவீகாரம் (பி) வகர ஏகாரம் (வே) ஆகிய இரண்டையுஞ் சேர்க்கத் தமிழ் மொழியில் உள்ள ஓரெழுத் தொரு மொழி நாற்பத்து நான்காகும்.
ஊ - இறைச்சி, ஏ ன் அம்பு, ஐ-அழகு, ஓ - மதகுநீர் தாங்கும் பலகை, மீ - மேல், மூ - முதுமை, மே மேல், மை - முகில், ஆடு, மோ - முகர், தே - இனிமை, பே - அச்சம், நுரை, நே - அன்பு, நோ - நோவு, வீ - மலர், வெள - பற்று, சோ - மதில், நோ.துன் பப்படு, து - உண் என இவ்வோரெழுத்து மொழிகள் பொருள் படும்.
பகுபதம்
பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறுங் காரணமாக வருகின்ற பெயர்ச் சொற்களும் தெரிநிலை வினை, குறிப்பு வினை எனப்படும் வினைச்சொற்களும் வினை யாலணையும் பெயர்களும் பகுபதங்களாம்.
பொன்னன் என்பது பொருள் காரணமாக வந்த பெயர்ப்
பகுபதம் தன்னாகத்தான் என்பது இடங் காரணமாக் வந்த பெயர்ப்
பகுபதம் சுவாதியான் எ ன் ப து கால ங் காரணமாக வந்து பெயர்ப்
பகுபதம் ப ல் ல ன் எ ன் பது சினை காரணமாக வந்த பெயர்ப்
பகுபதம் si; if? Eu Gör எ ன் பது குணங் காரணமாக வந்த பெயரிப்
பகுபதம் இது இன எண் என்பது தொழில் காரணமாக வந்த பெயர்ப்
பகுபதம்
வினைச் சொற்கள் அனைத்தும் பகுபதங்களாதலால் அவற் றுக்கு உதாரணம் காட்டவேண்டியதில்லை. எனினும் வகைக் கொரு உதாரணங் காட்டுவோம்.
59籤
^ படிம

Page 39
s
வந்தான் என்பது தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம் குழையன் என்பது குறிப்பு வினைமுற்றுப் பகுபதம்
வந்த என்பது தெரிநிலை வினைப் பெயரெச்சப் பகுபதம் வந்து என்பது தெரிநிலைவினை வினையெச்சப் பகுபதம் நல்ல என்பது குறிப்பு வினைப் பெயரெச்சப் பகுபதம்
மெல்ல என்பது குறிப்பு வினை வினை யெச்சப் பகுபதம் இவையெல்லாம் உடன்பாட்டு முற்றுக்களும் எச்சங்களுமாம்.
வந்திலன் என்பது எதிர்மறை வினைமுற்றுப் பகுதம் வராது என்பது எதிர்மறை வினையெச்சப் பகுபதிம் வராது என்பது எதிர்மறைப் பெயரெச்சப் பகுபதம் வந்தவன் என்பது வினையாலணையும் பெயர்ப் பகுபதம்.
பெயர்ப் பகுபதங்கள் பொருளிடங் காலஞ் சினை குணற் தொழில் என்ற ஆறுங் காரணமாக வருதலோடு இடைச்சொல், உரிச்சொல், வினைச் சொல் என்பனவற்றினிடமாகவும் பிறக்கும்.
அவன், எவன், பிறன் என்பவற்றுக்கு இடைச்சொற்கள் பகுதியாக வந்தன.
கடியன, சான்றன எனப் பெயர்ப் பகுபதங்களுக்கு கடி
சால் என்னும் உரிச்சொற்கள் பகுதியாக வந்தன.
பெயர்ப் பகுபதங்களுக்கு வினைச் சொற்களும் சிறுபான்மை பகுதியாக வரும் அறிஞன் என்பதற்கு அறி என்னும் வினை பகுதியாயிற்று.
குைபதவுறுப்புக்கள்
பகுபதவுறுப்புக்கள் பகுதி, விகுதி, இடை நிலை, சாரியை
சந்தி விகாரம் எனலாறாகும். இந்த ஆறுறுப்புக்களும் எல்லாப்
பகுபதங்களிலும் வருவதில்லை, சில பகுபதங்களிற் பகுதி விகுதி என ஈருப்புக்களே கா ன ப் ப டு குே பதங்களில் மூன்று உறுப்புக்களும் வேறு சிலவற்றில் நான்கும், இன்னுஞ் சிலவற்றில் ஐந்தும், ஒரு சிலவற்றில் ஆறும் உறுப் புக்களாக வரும் பகுபதங்கள் இரண்டு முதல் ஆறு உறுப்புக்கள் ஈறாக வருவதை உதாரணமாக முகத்தால் விளக்குவோம்.
疆60

U (, ) O
g)
圈可 僵酸
粤响 圈可
g动 氮醉。 gi? 信弼 哈丽 gé 鬼9可
演9F
ஓ ஜூெ
?· *| =飒 翻历| � 娜娜 ** 据《回喻 gf 剧”—囊) # * | –徽省) 3息)ro 圆圈sg gkP喻 德命喻 g)니T 象)喻 影)Q rn (29) s-o3&g「@歸
藏
喻
| శ్న "ళీ |
嘎呜岛
soof, „oe), „ươ, u, 屬官部。過 @7é過
És aesso „se, „une, ure
@&s*信。é @L略
!No.臀
素)凤)
量)@giaegers
匈&s*7。喻=īgs
-sarī
!!!!!!A學德~혁
----T@
±獄變娜娜
白劑シに「C
T 』屬geg@n
●』シe
soogste Q』Q&gb* goa’sı 卿fe肃 go urtesës gouafg@giaere 但图阁藏—9 - 管唇9阁崛感n 儒幡!) �@solo 49@gotosso goeie gourno)
goso
念之岛活

Page 40
பகுபதங்களிற் பகுதி முதலில் நிற்பதென்பதும் விகுதி இறுதி யில் நிற்பதென்பதும் இடைநிலை இடையில் நிற்பதென்பதும் அறிதற்பால. பகுதி முதலில் நிற்பதால் முதனிலையெனவும் விகுதி இறுதியில் நிற்பதால் இறுதி திலையெனவும் கூறப்படும். பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நிற்பது இடைநிலை, சந்தி பகுதிக்கும் இடைநிலைக்கும இடையில் வருவது பகுதியையும், இடைநிலையையும் ஒத்துப்போகச்செய்யும் உறுப்பாதலால் சந்தி எனப்பட்டது. எழுத் தோ எழுத்துக்களோ விகாரப்பட்டு நிற்பது வி%ாரம் எனப்படும். சா என்பதைப் பகு தி யாகக் கொண்ட செத் தான் என்னும் மொழியில் சா" என்பதே "செ" என நிற்ப தால் அது விகாரமாகும். நடந்தனன் என்பதில் நட என்னும் பகுதியையும் "த்" என்னும் இடைநிலையையும் சந்து செய்வது "த்" என்னும் எழுத்தாகும். அதுவே "த்" என்னும் நிலை மாறி "ந்" என வருவது விகாரமாகும். விகுதியைச் சார்ந் தொலிப்பது சாரியையாகும். நடந்தனன் என்பதில் விகுதியைச் சார்ந்து நிற்கும் 'அன்' என்பது சாரியையாகும்.
இடைநிலை
பகுதி பற்றிப் பகுபத வுறுப்புக்கள் என்ற தலையங்கத்தி இலும் பகுபதம் என்ற தலையங்கத்திலும் நன்கு ஆராயப்பட்ட மையால் இப்போது பகுதிபற்றிப் பேசாமல் இடைநிலை பற்றிக் கவனிப்போம். சாரியை, சந்தி, விகாரம் என்பன பெயரளவில் முடியும இலக்கிணத்த வாதலாலும் அவை பற்றி முன்னர் கூறப் பட்டதனாலும் இப்போது இடைநிவை பற்றிச் சிந்திப்போம். இடைநிலை யென்பது இடையில் நிற்பதென்பது முன்னருங் கூறப்பட்டது. வினைப்பகுபதங்களிற் பெரும்பாலுங் காலங் காட்டும் உறுப்பு இடைநிலையேயாம். விகுதியும் பகுதியுளு சிற்சில விடங்களிற் காலங்காட்டு மென்பது உண்மையே யாயினும் இடை நிலையே காலங்காட்டு முறுப்பென இலக்கண வல்லோரால் கொள்ளப்படுவது. இ  ைட நிலை ஒன்றிற்கே காலங்காட்டும் பண்புளது. காலம் இறப்பு நிகழ்வு எதிர்வு என மூவகைப்படும். காலங்காட்டுதலில் ஒவ்வொரு காலத்துக்கும் வெவ்வேறான இடைநிலைகள் உள, த், ட், ற், இன் என்பன இறந்த காலங் காட்டும் இடைநிலைகள், ஆநின்று, கின்று, கிறு என்பன நிகழ் காலங்காட்டும் இடைநிலைகள் ப், வ் என்பன எதிர்காலங்
藥62

காட்டும் இடைநிலைகள். செத் தான் என்பதில் 'த் என்பது இறந்த காலங் காட்டும் இடைநிலை உண்டான் என்பதில் ரீட்" இறந்க காலங் காட்டும் இடைநிலை கற்றான் என்பதில் ற் உம் போயினான் என்பதில் "இன்" உம் இறந்த கால இடைநிலைகள், உண்ணா நின்றான் என்பதில் ஆநின்று என்பது நிகழ்காலம் காட்டும் இடைநிலை. உண்கின்றான் என்பதில் கின்று என்பது நிகழ்காலங் காட்டும் இடைநிலை. உண்கிறான். என்பதில் கிறு என்பது நிகழ் காலங் காட்டும் இடைநிலை.
உண்பான் என்பதில் "ப்" எதிர் காலங் காட்டும் இடை நிலை, வருவான் என்பதில் 'வ்' எதிர்காலங் காட் டு ம் இடைநிலை. பெயர்ச் சொற்களில் இடைநிலைகள் உண் டேனும் அவை காலங்காட்டும் உ று ப் பா க வருவதில்லை. கொலைஞன் என்பதில் "ஞ்" என்றும் இடைநிலை வந்தாலும் அது காலங்காட்டும் ஆற்றலற்றது. காலங்காட்டுவது வினைச் சொல்லின் பண்பாதலால் மற்றைய எச்சொற்களுங் காலங் காட்டும் இடைநிலை பெறுவதில்லை.
காலங் காட்டும் விகுதிகள்
காலங்காட்டும் உறுப்பு இடைநிலையேயெனினும் விகுதி களுஞ் சில விடங்களில் காலங்காட்டுவதுண்டு. விகுதிகள் காலங் காட்டு மாற்றை யினிக் கவனிப்போம். விகு தி க ள் காலங் காட்டுவது பற்றி நன்னூலார் ஒரு நூற்பாவில் விகுதிகளை எடுத்துக் காட்டி அவைகாட்டுங் காலங்களையுந் தெளிவாகக் கூறியுள்ளார். அந்நூற்பா வருமாறு:
9 நவ்வொ டுகர வும்மை நிகழ் பல்லவும்
தவ்வோ டிறப்பு மெதிர்வும் டவ்வொடு சழிவுங் சவ்வோ டெதிர்வுமின் னேவல் வியங்கோ விம்மார் எதிர்வும் பாந்தஞ் செலவொடு வரவுஞ் செய்யுநிகழ் பெதிரிவும் எதிர்மறை மும்மையும் ஏற்கு மீங்கே "  ை(நன். வேத 18)
இந்நூற்பாவை மனனஞ் செய்து கொண்டால் விகுதிகளில்
எவையெவை எவ்வெக் காலங் காட்டும் என்பதை ந ன் கு உணர்ந்து கொள்ளலாம்,
63鬣

Page 41
றகரத்தோடு சேர்ந்துவரும் "உ" உம்" என்னும் விகுதிகள் நிகழ்காலந்தவிர்ந்த இறந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் காட்டுமென்பது முதல்விதி. றகரத்தோடு சேர்ந்த "உ" "நு" எனவும் 'உம்'றும்" எனவும் வந்தே இறந்த காலமும் எதிர்கால முங் காட்டின. சென்று சென்றும் என்பன சென்றேன் சென் றேம் எனப் பெரிருள்பட்டு இறந்த காலங்காட்டின. சேறு, சேறும் என்பன செல்வேன் செல்வேம் எனப் பொருள்பட்டு
எதிர்காலங் காட்டும்.
தகர மெய்யோடு சேர்ந்த 'உ' 'உம்' என்பனவும் இறந்த காலத்தையும் எதிர்காலத்தையுங் காட்டின.
வந்து வந்தும் என்பன வந்தேன் வந்தேம் எனப் பொருள் பட்டு இறந்தகாலமும் வருது வருதும் என்பன வருவேன் வரு வோம் எனப்பொருள்பட்டு எதிர்காலமுங் காட்டின. டகரத் தோடு சேர்ந்த 'உ' 'உம்' என்பனவும் இறந்த காலங்காட்டும். உண்டு உண்டும் என்பன உண்டேன் உண்டோம் எனப்பொருள்
பட்டு இறந்தகாலங் காட்டின.
ககர மெய்யோடு சேர்ந்த "உ" வும் 'உம்' மும் எதிர்காலங் காட்டுவன.
அவை உண்டு எனவந்து உண்பேன் எனவும் உண்கும் என வந்து உண்போம் எனவும் பொருள் படும்.
ஏவல்வினை விகுதியாகிய மின் என்பதும் வியங்கோள் விகுதிகளும் இகர விகுதியும் மார்விகுதியும் எதிர்காலத்தைக் காட்டுவன. உண்மின் எனயின் விகுதியும் வாழ்க, வாழிய, வாழியர் என்னும் வியங்கோள் விகுதிகளும் சேறி (செல்வாய்) என இகர விருதியும் உண்மார் (உண்பார்) என மார் விகுதியும் எதிர்காலங்காட்டின. "ப" என்னும் விகுதி உண்ப எனவந்து உண் பார், உண்டார் என இடமறிந்து எதிர்காலத்தையும் இறந்த காலத்தையுங் காட்டும், செய்யும் என்னும் 'உம்' மீறு நிகழ் காலத்தையும் எதிர்காலத்தையுங் காட்டும்.
எதிர்மறை மூன்று காலத்தையுங் கனட்டிவரும் - உண்ணா என்பதை முக்காலத்தோடும் இயைத்துக் காண்க. இங்குக் கீாட்டப்பட்ட விகுதிகள் சில இன்று வழக்கில் மிகமிகக் குறைவு.
鐵 64

பொதுசன நூகைம
பகுதிகாலங் காட்டுதல் * យកផ្លាសំខាrb
சில சொற்களில் இடைநிலை காலங்காட்டாமலும் விகுதிகள் காலங்காட்டாமலும் பகுதிகளே காலங் காட்டுவதும். உண்டு. பகுதி நின்றபடியே நின்று காலங்காட்ட மாட்டாது. அது இரட்டித்து நின்றே காலங்காட்டும். புக்கான், தொட்டர்ன், விட்டான், பட்டான் என்பனவற்றின் பகுதிகள் புகு, தொடு, விடு, படு என்பனவேயாம். இப்பகுதிகள் இரட்டித்தே புக் கான் முதலிய சொற்களை ஆக்குகின்றன. பகுதியிரட்டித்தவுடனே அவை காலந்தோன்ற நிற்கின்றன. புக்கான் முதலிய சொற்கள் இறந்த காலத்தைக் காட்டுவன. புகு என்பது புக்கு எனப் பகுதி யிரட்டித்து ஐம்பால் காட்டும் விகுதிகளோடு சேர்ந்து புக்கான், புக்காள், புக்கார், புக்கது, புக்கன எனவந்து இறந்தகாலம் உணர்த்தியது காண்க. மற்றைப் காலங்களோடு சேரும்போது அக்காலங்காட்டும் இடைநிலைகளோடு புணருமேயன்றிப் பகுதி பிரட்டிப்பதில்லை. புகு + கின்று + ஆன் - புகுகின்றான் எனவும் புகு + வ் + ஆன் - புகுவான் எனவும் வரும், பகுதியிரட்டித்துக் காலங்காட்டுமேனும் காலங்காட்டுதலில் பகுதிக்கும் ஒரு உரிமை யுண்டென்பது இதனாற் பெறப்படுகிறது.
பண்புப் பகுதிகளும் அவைபெறும் விகாரங்களும்
பண்புப்பகுதிகள் உரிச்சொற்களெனவும் உரிச்சொற்களை வேர்ச் சொல் லா க க் கொண்டவை யெனவும் கருதப்படக் கூடியவை. பண்புப்பதம் பெயராக வரும்போது பண்புப் பெயர் ஆகி விடுகிறது. இவை உருபுகொள்ளும்போது பெயர்த்தன்மை நிறைந்து விடுகிறது. காலங்காட்டாமலும் உருபு ஏற்கும் நிலையில் இல்லாமலும் நிற்கும் போதே அவை உரிச்சொற்க ளாகப் பேசப்படும். உரிச் சொல்லியலில் உரிச்சொல்லின் இயல்பு தெளிவாக விளக்கப்படும். பண்புப் பகாப் பதங்களாக உள்ள இவற்றிற் சிலவற்றை நன்னூலாசிரியர் எடுத்துக் காட்டுவதோடு இவையும் இவைபோல்வனவும் இவற்றுக்கு எதிர்ச்சொற்களாக வருவனவும் பகாநிலைப் பண்புப் பதங்கள் என்பரி. அவர் கூறிய நூற்பா பின்வருமாறமைகிறது.
*" செம்மை சிறுமை சேய்மை தீமை
வெம்மை புதுமை மென்மை மேன்மை திண்மை யுண்மை நுண்மை யிவற்றெதிர் இன்னவும் பண்பிற் பகாநிலைப் பதமே (நன், பத - 8)
65徽

Page 42
இன்னவும் என்பதனால் தழுவப்படும் பண்பிற் பகா நிலைப் பதங்களும் பலவுள இவை போல்வனபிற வென்றதனால் மடமை, புலமை. இளமை, முதுமை, குறுமை, நெடுமை முத லியன வெல்லரங் கொள்வர்.
இவற்றெதிரி எனக் கூறியமையால் செம்மைக்கு வெண்மை, கருமை முதலியவும் சிறுமைக்குப் பெருமையும் சேய்மைக்கு அண்? மையும் தீமைக்கு நன்மையும் வெம்மைக்குத் தண்மையும் புது மைக்குப் பழமையும் மென்மைக்கு வன்மையும் இவ்வாறே பிறவுங் கொள்க, பண்பிற் பகாநிலைப் பதமென நன்னூலார் கூறிய இவை பகுதியாக நிற்றலால் மேலும் பகுக்க முடியாதவை என லாம். இப்பண்புப் பகாப்பதங்களைப் பகுதியாகக் கொண்டு வருஞ் சொற்கள் அடையும் விகாரங்களையும் நன்னூலார் எடுத் துக் காட்டியுள்ளார். அதற்கு அவர் கூறிய நூற்பாவைத் தருகிறோம்.
ஈறுபோதல் இடையுகர மிய்யாதல்
ஆதி நீடல் அடியகரம் ஐயாதல்
தன்னொற் றிரட்டல் முன்னின்ற மெய்திரிதல்
இன மிக லினையவும் பண்பிற் கியல்பே - (நன், பத, 9)
என்பதே அந் நூற்பா. இவ்விதிக் கமையச் சில பண்புப் பகுபதங்களைப் பிரித்தும் புணர்த்தியுங் காட்டுவது அவசியம்.
நல்லன் என்னும் வகுபதம் நன்மை + அன் எனப்பிரியும், ஈறு போதல் என்ற விதிப்படி மை ஈறு கெட்டு நன்+அன் எணநிற்கும் முன்னின்ற மெய்திரிதல் என்ற விதிப்படி "நன்’ என்பதிலுள்ள னகர மெய் லகர மெய்யாகத் திரிந்து நல் + அன் எனநிற்கும். நல் + அன் என்பது தணிக்குறில் முன்னொற்றுயிர் வரினிரட்டும் என்ற விதிப்படி நலல் 4 அன் என நின்று உடன்மேலுயிர் ஒன்றி நல்லன் எனவரும்.
பாசி என்பது பசுமை + இ எனப்பிரியும். ஈறுபோதல் என்ற விதிப்படி "மை" கெட்டு பசு + இ என நிற்கும். ஆதி நீடல் என்ற விதிப்படி பாசு + இ எனவரும். இதில் சகர மெய்யின் மேல் ஏறிய உகிரவுயிர் குற்றியலுகரமாதலால் உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும் என்ற விதிப்படி பாச் + இ என நிற்கும் பின் னர் உடன் மேலுயிர்வந் தொன்றுவதியல்பே என்ற விதிப்படி வாசி எனவரும்,
鯊66

செய்யன் என்பது செம்மை + அன் எனப்பிரிபடும் ஈறுபோதல் என்ற விதிப்படி "மை" கெட்டு செம்+அன் என நிற்கும் முன் னின்ற மெய்திரிதல் என்ற விதிப்படி செம் என்பது செய்யெனத் திரிந்து தனிக் குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும் என்ற விதிப்படி செய்ய+ அன் என நின்று உடன்மேலுயிர் வந்தொன்றுவ தியல்பே என்றவிதிப்படி செய்யன் என்றாயிற்று,
ல்ேவேறு வகை விகுதிகள்
விகுதிகள் பற்றி வினையியலில் ஆராயப்பட விருப்பினும் இங்கும் பகுபதங்களை விளங்குவதற்குத் தேவையான அளவில் விகுதிகளை எடுத்துக் காட்டுவது பொருத்தமானதே. படர்க்கை வினைமுற்றுக்கள் ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன் பால் பலவின்பால் என ஐந்து வகைப்படும். ஆண்பாற் படர்க்கை வினை முற்று அன், ஆன் என்பவற்றை விகுதிகளாகக் கொண்டுவரும். பெண்பாற் படர்க்கை வினை முற்று அள், ஆள் என்பவற்றை விகுதிகளாகக் கொண்டுவரும். பலர்பாற் படர்க்கை வினை முற்று அர், ஆர், ப, மார் என்பவற்றை விகுதிகளாகக் கொண்டு வரும் ஒன்றன் பாற்படர்க்கை வினைமுற்று கு, டு, து, று என்ப இற்றை விகுதிகளாகக் கொண்டுவரும், பலவின்பாற் படர்க்கை வினைமுற்று, அ, ஆ என்பவற்றை விகுதிகளாகக் கொண்டு வரும், தன்மை பொருமை வினைமுற்று என், ஏன் அல். முதலிய இற்றை விகுதிகளாகக் கொண்டுவரும். தன்மைப் பன்மை வினை முற்று அம் ஆம், எம், ஏம் என்பவற்றை விகுதிகளாகக்கொண்டு வரும், முன்னிலை ஒருமை வினைமுற்று ஐ, ஆய் முதலியவற்றை விகுதிகளாகக் கொண்டு வரும். முன்னிலைப் பன்மை வினை முற்று இர், ஈர் முதலியவற்றை விகுதிகளாகக் கொண்டு வரும்
வியங்கோள் வினைமுற்று க, ய என்பவற்றை விகுதிகளாகக் கொண்டுவரும் ,
குறிப்பு வினைமுற்றும் அன், ஆன் முதலாகச் சொல்லப் பட்டவிகுதிகளைப் பாலுக்கு அமைவாகப் பெற்றுவரும்,
தெரிநிலை வினைப் பெயரெச்ச விகுதிகள் அ, உம் என்பன. தெரிநிலை வினை வினையெச்ச விகுதிகள் ஐ. இ, ய் முதலிய பலவாகும்.
67 徽

Page 43
குறிப்பு வினையெச்ச விகுதிகள் அ, றி, து, ஆல் முதலியன்
மேலே காட்டப் பெற்ற விகுதிளுக்கு உதாரணங் காண்போம்.
அன், ஆன் - நடந்தனன், நடந்தான் ஆண்பால் அள், ஆள் - நடந்தனள், நடந்தான் பெண்பால் அர், ஆரி - நடந்தனர், நடந்தார் பலர்பால் து, று - நடந்தது, போயிற்று ஒன்றன்பால் நடந்தன, நடவா பலவின் பால் - نتیجه وlتگی என், ஏன் - நடந்தனென். நடவேன் தன்மையொருமை அம், ஆம் - நடந்தனம் நடப்பாம் தன்மைப்பன்மை ஐ, ஆய் - நடந்தனை நடவாய் முன்னிலை ஒருமை
இர், ஈர் - நடந்தனிர் நடந்தீர் முன்னிலைப் பன்மை AS KAJ? - வாழ்க, வாழிய வி பங்கோள் வினை உம் - நடக்கும் செய்யும் என் முற்று
குறிப்பு வினைமுற்றுக்கள் கரியன், கரியான் என ஆண்பாலி லும் கரியள் கரியாள் எனப் பெண் பாலிலும் கரியர் எனப் பலர் பாலிலும் கரிது என ஒன்றன் பாலிலும் கரிய ஆரியன வெனப் பலவின் பாலிலும் வரும்.
அ, உம் - நடந்த நடக்கும் தெரிநிலை வினைப் பெயரெச்சம்
உ, இ - நடந்து, ஒடி தெரிநிலை வினை வினையெச்சம் அ - கரிய, பெரிய குறிப்பு வினைப் பெயரெச்சம் * ஃஅ, றி - மெல்ல, அன்றி குறிப்புவினை வினையெச்சம்
s தொழிற் பெயர் விகுதிகள்
s பெயர்கள், பொருட் பெயர் முதலாக ஆறுவகையினவாயினும்
தொழிற் பெயர்களும் பண்புப் பெயர்களுமே விகுதிகள் பெற்று "
* வருவன. இவ்விரண்டினுள்ளுந் தொழிற் பெயர்களே பல்வேறு வகைமாற்றத்திற்கு இடனாக நிற்பவை. ஆதலால் தொழிற் பெயர் பற்றிச் சிந்திப்பது அவசியம். அறுவகைப் பெயர்களிலும் தொழிற் பெயர் பண்புப் பெயர்களுக்கன்றி மற்றைய பெயர் களுக்கு விகுதிகள் இல்லை. இவற்றின் தொழிற் பண்பும் குணப் பண்பும் அவை பல்வேறு வகை வடிவு பெறுவதற்குக் காரணமா கும். தொழிற் பெயர் விகுதிகளாக நன்னூல் உரையாசிரியர்கள் இருபத்தொரு விகுதிகளைக் கூறுவதோடு என்பவும் பிறவுமாம்
籤 68

| "15 Հոր shar:b என மேலும் விகுதிகள் பெருகுவதற்கு இடஞ் செய்துள்ளனர்.உ அவர்கள் கூறிய விகுதிகளாவன: தல், அல் அம் , ஐ, கை, வை, கு, பு, உ, தி, சி, வி, உள், காடு, பாடு, அரவு, ஆனை, மை, து, ஆல், இல் என்பன e இவ் விகுதிகள் சொல்லில் அமையும்போது முறையே நடத்தல், ஆடல் வாட்டம், கொலை, நடக்கை, பார்வை, போக்கு, நடப்பு, வரவு, மறதி, உணர்ச்சி, கல்வி விக்குள், சாக்காடு, கோட்பாடு (கொள்கை) தேற்றரவு (தேற்று தல்) வாரானை (வருதல்) நடவாமை, பாய்த்து (பாய்தல்) தழால் (தழுவுதல்) எழில் (எழுதல்) எனவரும். இங்குக் காட்டிய தொழிற் பெயர்களெல்லாம் விகுதி பெற்று வந்தவை.
தொழிற் பெயர்களுள் முதனிலைத் தொழிற் பெயர் எனவும் முதனிலை திரிந்த தொழிற் பெயர் எனவும் இருவகை யுள, அடித்தல் என்பது சில விடங்களில அடியெனவும் நிற்கும். இது தொழிற் பெயர் விகுதி குன்றி முதனிலையாய் நின்று தொழிற்பெயராதலால் முதனிலைத் தொழிற் பெயராயிற்று. அறி என்பது அறிதலையுணர்த்தும் போதும் உரை என்பது உரைத்தல் என்பதை யுணர்த்தும்போதும் முதனிலைத் தொழிற் பெயர் எனப்படும்.
கெடுதல் என்பது தல்விகுதி கெட்டு கெடு என்னும் முதனிலை திரிந்து கேடு என நிற்கும்போது முதனிலை திரிந்த தொழிற் பெயராகும். இ  ைட யி டு த ல் என்பது இடையீடு எனவும் கொள்ளல் என்பது கோள் எனவும் வரும்போதும் முதனிலை திரிந்த தொழிற் பெயர்களாம்.
மை என்னுந் தொழிற் பெயர் விகுதி நடந்தமை நடக்கின் றமை என இறந்தகால நிகழ்கால இடைநிலைகளோடு கூடியும் து என்னுந் தொழிற் பெயர் விகுதி நடந்தது, நடக்கின்றது நடப்பது என முக்கால இடைநிலைகளோடு கூடியும் வரு மென்பது நன்னூலுரையாசிரியர் சிலர் கருத்து. இவை காலங் இாட்டுவதோடு உருபும் ஏற்றலால் இவற்றைத் தொழிற் பெயர் என்னாது வினையாலணையும் பெயருள் அடக்குவதே பொருத்தி மூடைத்து, பெயர் காலங்காட்டாதும் வினை உருபேற்காதும் வருமென்பதே தொல்லாசிரியர்கள் கருத்தாகும். வினையாலணை யும் பெயர் இதற்கு விதிவிலக்கு நடந்தவன் என்றும் வினையா
69藥

Page 44
இணையும் பெயர் ஆண்பாலையுணர்த்துவதுபோல நடந்தது ஒன்றன் பாலையும் நடந்தவை பலவின் பாலையுங் குறித்துவருவ தோடு காலமுங்காட்டுவதால் வினையாலணையும் பெயரென்பது மிகமிகப் பொருத்தமாகும். நடந்த என்ற பெயரெச்சமென்னும் அனைச் சொல்லே மை விகுதி பெற்று நடந்தமை எனவும் நடக்கின்ற என்பதே நடக்கின்றமை எனவும், 'து' விகுதி பெற்று நடந்தது நடக்கின்றது எனவும் வருதலால் அ ைவதொழிற் பெம் ராதா என்பது வெளிப்படை. பெயர் உருபேற்றலும் வினை கிாலங் காட்டுதலும் வினையாலணையும் பெயர் உருபேற்றலுங் காலங் காட்டுதலும் இயல்பாகவுடையன வென்க. செய்து என்னும் எச்சம் தன்கருத்தாவின் வினை மட்டுமே கொள்ளுமென்பது போல எப் பெயரும் காலங்காட்டாமை அவற்றுக்கு இலக்கணம் என்பது கடைப்பிடித்தல் அவசியம்.
பண்புப் பெயர் விகுதிகள்
பண்புப் பெயர் விகுதிகள் இவையிவையென நன்னுரல் உரையாசிரியர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர். மை, ஐ, சி, பு, உ, கு, றி, று, அம், நர் என்பனவும் பிறவுமாம் என்பர். இவற் றுக்கு உதாரணம் முறையே வருமாறு - நன்மை, தொல்லை. மாட்சி, மாண்பு, மழவு, நன்கு நன்றி, நன்று, நலம், நன்னர், திட்பம் முதலியனவாம். பண்புச் சொற்கள் உருபேற்றுப் பெய ராகவும் உருபேற்காது பெயரொடும் வினையொடும் உருவு தடுமாறி உரிச்சொல்லாதலையும் உரியியலில் எடுத்துக் கா: டுதும். மையிற்றுப் பண்புப் பெயர்களே பெரும்பாலும் உப யோகத்திலுள்ளன.
வெவ்வேறு பொருள் தரும் விகுதிகள்
இ, ஐ, அம் என்னும் மூன்று விகுதிகளும் வினைமுதற் பொருளையுஞ் செயப்படு பொருளையும் கருவிப் பொருளையும் உணர்த்தும், அலரி, பறவை. எச்சம் என்பன வினை முதற் பொருளை உணர்த்தின. அலர்வது எதுவோ அதுவே அலரி யாதலாலும் பறப்பது எதுவோ அது பறவை யாதலாலும் எஞ்சி நிற்பது எதுவோ அதுவே எச்சt&ாதலாலும் அவை மூன்றும்
靈70

வினைமுதற் பொருளை யுணர்த்தின. அலர்வதற்கு வினை முதல் அலரி யாதலாலும் பறப்பதற்கு வினை முதல் பறவை யாதலாலும் எஞ்சுதற்கு வினைமுதல் எச்சமாதலாலும் இவை வினை முதற் பொருளை யுணர்த்தின வென்பது கருதத்தக்கது.
ஊருணி, தொடை, நீத்தம் என்பன மூன்றுஞ் செயப்படு பொருளை யுணர்த்தின. ஊராரால் உண்ணப்படுவது, தொடுக் கப்படுவது நீந்தப்படுவது எனப்பொருள் தருவன இவை.
மண்வெட்டி, பார்வை, நோக்கம் என்பன கருவிப்பொருளை யுணர்த்தின. மண்ணை வெட்டுதற்குக் கருவி மண்வெட்டி யாதலாலும் பார்ப்பதற்குக் கருவி பார்வை (கண்) ஆதலாலும் நோக்குதற்குக் கருவி நோக்கம் ஆதலாலும் இவை கருவிப் பொருளை யுணர்த்தின.
விடு, ஒழி என்னும் விகுதிகள் துணிவுப் பொருளையுணர்த்தும் செய்து விட்டான். விட்டொழிந்தான் எனவரும்.
கொள் என்னும் விகுதி தன் செயலையுணர்த்தும், அடித்துக் கொண்டான், பிடித்துக் கொண்டான் என்பன உதாரணங்க ளாகும், らイ○9 。 س)"م
படு, உண் என்னும் விகுதிகள் செயப்பாட்டு வினைப் பொரு ளையுணர்த்தும் கட்டப்பட்டான், கட்டுண்டான் எனவரும்.
மை விகுதி தன்மைப் பொருளை யுணர்த்தும் ஆண்மை, பெண்மை என்பன இதற்கு உதாரணங்களாகும்.
இரு, இடு உறு என்னும் விகுதிகள் தமக்கென ஒரு பொரு வின்றிப் பகுதிப் பொருள் விகுதிகளாக வரும், எழுந்திருக்கின் நான் உரைத்திடுகின்றான் சொல்லலுறுகின்றான் எனவரும்.
புணர்ந்து கெடும் விகுதிகள்
முன்னிலை ஏவலொருமை ஆய்விகுதி பெரும்பாலும் புணர்ந்து கெட்டு நிற்பதுண்டு. நீ நடவாய் என்பது நீ நட எனவும் நீ சொல்வாய் என்பது நீ சொல் எனவும் ஆய்விகுதி புணர்ந்து கெட்டு நிற்கின்றன. விகுதிகளோடு இயைந்து பொருள்தர வேண்டியவை விகுதியை ஒழித்து நிற்பதால் இவ்விகுதிகளை இலக்கணகாரர் புணர்ந்து கெட்டின வென்பர்.
71鯊

Page 45
பெயரெச்ச விகுதியும் புணர்ந்து கெட்டு நிற்கும் இடங்களு முள கொன்றகளிறு கொல்கின்ற களிறு, கொல்லும் இளிறு என்பனவற்றிலுள்ள விகுதி புணர்ந்து கெட்டுக் கொல்களிறு என வரக் காணலாம் ஒடாத குதிரை என்பதும். ஒடாக்குதிரை எனப் பெயரெச்ச விகுதி புணர்த்து கெட்டு நின்றது
வினை முதற் பொருளை யு ண ர் த் து ம் இகர விகுதியும் புணர்ந்து கெட்டு நிற்பதுண்டு. காய், தளிர், பூ, கணி என வரும். காய்ப்பது காய் எனவும் தளிர்ப்பது தளிர் எனவும் பூப்பது பூ எனவும் கனிவது கனியெனவும் வரும்போது வினை முதற் பொரு ளுணர்ந்தும் இதர விகுதி புணர்ந்து கெட்டு நின்றது.
செயப்படு பொருளுணர்த்தும் ஐகார விகுதியும் புணர்ந்து கெட்டு நிற்பதுமுண்டு. உண்ணப்படுவது ஊண் எனவும் தின்னப் படுவது தீன் எனவும் கொள்ளப்படுவது கோள் எனவும் வரும். இவற்றில் செயப்படுபொருளை யுணர்த்தும் ஐகார விகுதி புணர்ந்து கெட்டு நின்றது.
பிறவினை விகுதிகள்
தன்வினை பிறவினை பற்றி வினையியலுள் விரிவாக ஆரா யப்பட விருப்பதால் இங்கு சுருக்கமாகப் பிறவினை விகுதிகளையும் அவற்றிற்கு உதாரணங்களையுந் தருகிறோம் வி. பி. கு, சு, டு து, பு, று என்பன பிறவினை விகுதிகளாகும். இவ் விகுதிகளுடன் சேர்ந்து பிறவினைகள் வருவதற்குதாரணம் வருமாறு: செய்வி. நடப்பி, போக்கு, பாய்ச்சு, உருட்டு, நடத்து எழுப்பு துயிற்று எனவரும்.
தரை தேய் என்பன தன்வினை பிறவினைகளுக்குப் பொது வாய முதனிலைகள், கரைந்தான் தன்வினை கரைத்தாள் பிற வினை, தேய்ந்தான் தன்வினை தேய்த்தாள் பிறவினை. இவை விகுதி வேண்டாது வருவன.
பிறவினைப் பொருளைத் தரும்போது இரைத்தான் தேய்த் தான் என உடன்பாட்டிலும் கரைத்திலன் தேய்த்தின்ை என எதிர்மறையிலும் வல்லெழுத்து மிக்கு வருவதும் தன்வினைப் பொருளைத் தரும்போது கரைந்தான் கரைந்திலன் என வலி மிகாது வருவதும் கருதற் பாற்று.
鷲 72

eாதரசன நூலகம் o If f big FTerry to வினைகளை இணைத்தறிதல் ዪ..................... ] -
வினைகள் தன்வினை பிறவினை எனவும் செய்வினை செயப் பாட்டு வினையெனவும் முன்னிலை வினை ஏவல் வினையெனவும் விதிவினை மறைவினையெனவும் தன்மை வினை முன்னிலைவினை படர்க்கை வினை வெனவும் ஒருமை வினை பன்மை வினையென வும் இன்னும் வேறு வகையாகவும் வகுக்கப்படலாம். வினை யியலில் இவை பற்றியறிய வாய்ப்புளதாயினும் பதம் என்ற வகை யில் இங்குஞ் சிறிது சிந்திப்பது பொருத்தமானதே.
தன்வினை பிறவினை
கருத்தா தன் தொழிற் பயனைத் தானே யடைவது தன் வினை யெனவும் கருத்தாவின் தொழிற்பயனைப் பிறர் அல்லது பிற அடைவது பிறவினை எனவும் ஒருவாறு கூறலாம், வெளுத் தான் என்னும் பதத்தை எடுத்துக் கொள்வோம். இப்பதம் வெளு என்னும் பகுதியும் ஆன் என்னும் விகுதியுமாகிய இரண்டு முக்கிய உறுப்புக்களைக் கொண்டது. இவ்வினைச் சொல் இருவேறு வகையாகப் பொருள் தரத்தக்கது. வெளுத்தான் என் பதில் ஆன் என்னும் விகுதியாற் சுட்டப்படும் பொருளே வெளுத் ததாயின் அது தன்வினை எனப்படும். பகுதியும் விகுதியும் பொருளால் இயைந்து நிற்பது தன்வினை எனக் கொள்ளலாம். வெளுத்தது விகுதியாற் பெறப்படுங் கருத்தாவல்லாது வேறொன் றாயின் அது பிறவினையாகும். வெளுத்தான் என்பது தானே வெளுத்தான் என்னும் பொருளை யுணர்த்துவதோ அன்றோ என்பதை யறிந்து அது தன்வினையோ பிறவினையோ என்பது தீர்மானிக்கப்படும். கரைந்தான் என்பது தன்வினை, கரைத் தான் என்பது பிறவினை. இங்கு மெல்லின மெய் பெற்றுத் தன்வினை யாகவும் வல்லின மெய்பெற்றுப் பிறவினையாகவும் வருதல் தெளியப்படும். இங்கும் பகுதி விகுதிக்குரிய ஒற்றுமை நயத்தால் தன்வினையாவதும் வேற்றுமை நயத்தால் பிறவினையாவதும் கவனிக்கத்தக்கது. கரைதல் ஆன்விகுதிக் குரிய பொருட்காயின் அது தன்வினையெனவும் அவ்வாறில்லாத வேறொரு பொருட் காயின் அது பிறவினை யெனவுங் கொள்ளலாம். வி. பி முதலிய பிறவினை விகுதிகளைப் பெற்று வரும்போது பிறவினை தானே தெரிய நிற்குமேனும் பகுதிக்கும் விகுதிக்கும் உரிய ஒற்றுமை
73

Page 46
யின்மை அதைப் பிறவினை யாக்கிற்றென்பதும் பொருத்த மானதே. போ என்ற பகுதியே பிறவினை விகுதியாகிய "கு" என்பதைப் பெற்று போக்கு என நிற்கிறது. ஆன் விகுதியாற் குறிப்பிடப்படுபவன் போதலுக்கு உரியன் அல்லன் ஆதலால் போக்கினான் என்பது பி ற வி  ைன யா யி ற் று. கருத்தா தானே தொழிற் பயனை யடைவதைத் தன்வினை யென்பதும் கருத்தாவின் ஏவற்தொழிலைப் பிறர் செய்வதை உணர்த்தும் வினை பிற வினை யென்பதும் விகுதி பெற்றுவரும் பிறவினை களை விளக்கப் போதியதாகும். செய்தான் தன்வினை செய் வித்தான் பிறவினையென்பது குறிப்பிடத்தக்கது. செய்வித்தான் என்பதிலுள்ள "வி" விகுதி விப்பி என வந்து செய்விப்பித்தான் என வரும்போது ஈரேவலாகவும் மூன்றாவது கருத்தாவே செய்வா னாகவும் வரக் காணலாம். செய்யென்பதற் குரிய கருத்தா வொன்று செய்வித்தான் என்பதற்குரிய கருத்தா வேறொன்று செய்விப்பி என்பதற்குரிய கருத்தா முன்னைய இரண்டிற்கும் வேறானது. ஒருவன் ஏவ அந்த ஏவலைக் கொண்டு வேறொரு வனைச் செயற்படுத்தி அவ்வேலையை முடிப்பதையே செய் விப்பித்தான் என்பது உணர்த்துகிறது.
செய்வினை செயற்பாட்டுவினை
செய்வினை செயப்பாட்டு வினைகள் பற்றிச் சிந்திப்போம். அவன் சோற்றை யுண்டான் என்பது ஒரு செய்வினை வாக்கியம். அவன் எழு வாயாகவும் உண்டான் பயனிலை யாகவும் சோறு செயப்படுபொருளாகவும் வருவது கருத்த்தக்கது. ஒரு கருத்தா கருமத்தைச் செய்து அக்கருமத்தால் வரும் செயப்படுபொருளை யும் தானே யுறுவது செய்வினை வாக்கியம். அவன் பானையை வனைந்தான் என்ற செய்வினை வாக்கியம் செய்வானையுஞ் செயலையும் செயப்படுபொருளையுந் தெளிவாகக் காட்டிச் செய் வினை வாக்கியமாக நிற்கிறது. இந்த வாக்கியத்தையே அவனால் பானை வனையப்பட்டது. என்றாக்கும்போது முதல் வாக்கியத்திற் செயப்படு பொருளாக நின்ற பானை எழுவா போகிறது. எழுவாய் மூன்றாம் வேற்றுமையாக உருமாறு கிறது. செயப்படுபொருள் எழுவாய்ாக முக்கியத்துவம் பெறும் போது அது செ யப் பா ட் டு வினையாகின்றது. செயப்பட்ட பொருள் வினைமுதலாதலால் அது முக்கியத்துவம் பெற்றுச் செயப்பட்ட வினையாதலால் அது செயப்பாட்டு வினையாயிற்று என்பதும் பொருந்தும்,
囊74

முன்னிலை வினை ஏவல்வினை *ួយកញ៉ា
முன்னின்றான் தொழில் செய்தலை யுணர்த்தும் வினை முன்னிலை வினை யெனவும் முன்னின்றாசை த் தொழிற்படுத் தும் வினை ஏவல் வினை எனவும் படும். உண்டனை என்பது முன்னின்றான் தொழிலையுணர்த்துவதால் முன்னிலை வினை யெனப்படும். உண்பீர் என்பது முன்னின்றாணை உண்ணும்படி ஏவும் வினையாதலால் ஏவல் வினையாயிற்று. முன்னிலை வினை யும் ஏவல் வினையும் முன்னிலை யிடத்திற்கே யுரியவை. முன் னிலை யானின் தொழிற்பாட்டையுணர்த்துவதால் அது முன் னிலை வினையாயிற்று. மற்றையது முன்நின்றானைத் தொழில் செய்யுமாறு ஏவுவதாதலால் ஏவல் வினையாயிற்று. இ, ஐ, ஆய், என்னும் மூன்று விகுதிகளும் முன்னிலை ஒருமை வினை முற்றுக் குரியன. உண்ணா நின்றி (உண்கின்றாய்) உண்கின்றணை, உண் கின்றாய் என்பன உதாரணங்களாகும். இர், ஈர் என்னும் இரண்டீற்றனவும் முன்னிலைப் பன்மைகளாம். உண்டனி,
உண்டீர் எனவரும் ,
ஆய், இ. அல், ஏல், ஆல் என்னும் விகுதிகளைப் பெற்றி வருவன ஏவலொருமை வினை முற்றுக்களாம், உண்ணாய், உண்ணுதி, உண்ணல் (உண்ணாதே) உண்ணேல், மறால் (மறாதே) என்பன முறையே உதாரணங்களாம்.
ஏவற்பன்மை மின், ஈர், உம் என்னும் விகுதிகளைப் பெற்று வரும். உண்மின், உண்ணிர், உண்ணும் என்பன ஏவற்பன்மை வினைமுற்றுக்களுக்கு உதாரணங்களாகும்.
உடன்பிாட்டு வினை எதிர்மறை வினை
தொழில் நிகழ்ச்சி நடைபெறுவதைக் குறிக்கும் வினை உடன்பாட்டு வினை அல்லது விதிவினை எனப்படும், தொழில் நிகழ்ச்சி நடைபெறாத்தன்மையைக் குறிப்பது எதிர்மறை வினை யாகும். உண்டான் என்பது உடன்பாட்டு வினை. இங்கே உண் ஒனுதல் ஆகிய தொழில் நடைபெற்றிருப்பதால் அது உடன்பா டாயிற்று. உண்டிலன் என்பது எதிர்மறை வினையாகும். இங்கு உண்ணுதல் தொழில் தடைபெறாமையையே காண்கிறோம். அதனால் இது மறை வினையாயிற்று. கந்தன் நிலத்தைக்கொத்தி னான் என்பது உடன்பாட்டு வினை வாக்கியம். கந்தன் சோதறை உண்டிலன் என்பது எதிர்மறை வினை வாக்கியம்
75婆

Page 47
எதிர்மறை வினைகள் இல், அல், ஆ என்னும் எதிர்மறை இடை நிலைகளைப் பெற்றுவரும், செய்திலன் என்பது இல் என்னும் எதிர்மறை இடைநிலையைப் பெற்றுவந்தது. நடக்கலன் என்பது அல் என்னும் எதிர்மறையிடைநிலை பெற்று வந்தது. நடவான் என்பது "ஆ" என்னும் எதிர்மறை யிடைநிலை பெற்று வந்தது. அல்லன், இலன் என்பன குறிப்பு வினைமுற்றுக்கள். ஏனைய வினைகளெல்லாம் வினையியலுள் ஆராயப்படும்.
ஒரு விகுதி பல பொருள் குறித்து வருதல்
"அ" என்னும் விகுதி வினையெச்ச விகுதியாகவும் பெயரெச்ச விகுதியாகவும் பலவின்பாற் படர்க்கை வினைமுற்று விகுதியாக வும் வியங்கோள் வினைமுற்று விகுதியாகவும் வரும்,
1. உண்ண, மெல்ல - வினையெச்ச விகுதி 2. செய்த, பெரிய - பெயரெச்ச விகுதி
வந்தன, கொடியன - பலவின் பாற் படர்க்கை வினை முற்று விகுதி 4. எழுந்தருள வ. வியங்கோள் வினைமுற்று விகுதி
“அம்” என்னும் விகுதி பல பொருள் குறித்து வருமாறு:
1. நடந்தனம், பெரியம் - தன்மைப் பன்மை விகுதி 2 . ஆட்டம், நாட்டம் - தொழிற் பெயர் விகுதி 3. நலம், குணம் - பண்புப் பெயர் விகுதி 3. 6.Tájerub - வினை முதற் பொருள் விகுதி 5. நீத்தம் - செயப்படு பொருள் விகுதி 6. நோக்கம் - கருவிப் பொருள் விகுதி
"அல்" என்னும் விகுதி glé, furt-i. - தொழிற் பெயர் விகுதி 8. உண்பல், செய்வல் - தன்மை யொருமை வினைமுற்று விகுதி 3. எனல், செயல் - வியங்கோள் வினை முற்று விகுதி ச், கொளல், பேசல் - எதிர்மறை வியங்கோள் விகுதி 5. வாரல், தேறல் - எதிர்மறை ஏவல் வினைமுற்று விகுதி 6. தோன்றல் (மகன்) - வினைமுதற் பொருள் விகுதி
懿76

4 -
7. 9
6 அன்" என்னும் விகுதி
அறிஞன், வலைஞன் - ஆண்பாற் படரிக்கைப் பெயர்விகுதி
வந்தனன் - ஆண்பாற் படர்க்கை வினைமுற்று விகுதி
செய்வன் (செய்வேன்)-தன்மை யொருமை வினைமுற்று
விகுதி
வலியன், கடுவன் - ஒன்றன்பாற் படர்க்கைப் பெயர் விகுதி
"ஆ" விகுதி நடவா - பலவின் பாற் படர்க்கை எதிர்மறை வினை
முற்று விகுதி செய்யா - வினையெச்ச விகுதி
"ஆல்" விகுதி ஒரால் (ஒருவுதல்) - தொழிற் பெயர் விகுதி உண்டால் - தெரிநிலை வினையெச்ச விகுதி அல்லால் - குறிப்பு வினை யெச்ச விகுதி மறால் (மறுக்காதே) - எதிர்மறை ஏவலொருமை விகுதி
*ஆன்" விகுதி பெரியான் - ஆண்பாற் படர்க்கைப் பெயர் விகுதி வந்தான் - ஆண்பாற் படர்க்கை வினைமுற்று விகுதி
"இ" விகுதி 6ჭმწy Gტ} - ஆண்பாற் படரிக்கைப் பெயர் விகுதி
பொன்னி - பெண்பாற் படர்க்கைப் பெயர் விகுதி நாற்காலி, பலகணி - ஒன்றன்பாற் படர்க்கைப்
பெயர் விகுதி வருதி - முன்னிலை யொருமை விகுதி ஒ - வினையெச்ச விகுதி அலரி - வினை முதற் பொருள் விகுதி
ஊருணி - செயப்படு பொருள் விகுதி மண்வெட்டி - கருவிப் பொருள் விகுதி காட்டுதி  ைமுன்னிலை ஏவலொருமை விகுதி காட்டி (காட்டுக) - வியங்கோள் வினை முற்று விகுதி
77鯊

Page 48
"ஐ" விகுதி
1. செய்தனை - முன்னிலை யொருமை விகுதி
விலை - தொழிற் பெயர் விகுதி 3. தொல்லை - பண்புப் பெயரி விகுதி 4. பறவை - வினை முதற் பொருள் விகுதி 5. கொடை - செயப்படு பொருள் விகுதி 6. tu nrrif66 - கருவிப் பொருள் விகுதி
சிறு விகுதி
1. போயிற்று - ஒன்றன்பாற் படர்க்கை வினைமுற்று விகுதி 2. நன்று ட பண்புப் பெயர் விகுதி
8. சென்று (சென்றேன்) - தன்மையொருமை
வினைமுற்று விகுதி
4. பயிற்று - பிறவினை விகுதி
'து' விகுதி 1ல் நடந்தது - ஒன்றன்பாற் படர்க்கை வினைமுற்று வீகுதி
தி, கைத்து (செல்வம்) - ஒன்றன்பாற் படர்க்கைப் பெயர்விகுதி 3, நடத்து - பிறவினை விகுதி 4. பாய்த்து (பாய்தல்) தொழிற் பெயர் விகுதி 8. வந்து வந்தேன்) தன்மை யொருமை வினைமுற்று விகுதி
*** afleg35) 1. கேள்வி - தொழிற் பெயர் விகுதி B. () of a . பிறவினை விகுதி
வடமொழி யாக்கம்
வடமொழி யென்பது தமிழில் வந்து வழங்கும் ஆரிய மொழி என்பர் ஒரு சாரிலக்கண ஆசிரியர். அது மட்டுமல்லாமல் ஆரிய மொழிக்கும் வட மொழி என்னும் பெயருண்டு, ஆரியம் வட மொழியெனவுத் தமிழ் தென்மொழி யெனவும் வழங்கும் வழக் கமும் புதுவதன்று - ஆரிய மொழிச் சொற்கள் தமிழில் வந்து வழங்குவதற்குத் தமிழ் இலக்கண ஆசிரியர்கள் அமைத்த இலக் கண வரம்பு பற்றிச் சிந்திப்பது அவசியம். ஆரிய மொழியில் உயிர் எழுத்துக்கள் அச்சு எனவும் மெய்யெழுத்துக்கள் அல் எனவும் பெயர் பெறும், ஆரிய மொழியில் உயிரெழுத்துக்கள்
灘 78

பதினாறு, மெய்யெழுத்துக்கள் முப்பத்தேழு. உயிரி எழுத்துக் களில் ஆரியமொழியில் இ ல் லா த ன வாய்த்தமிழ் மொழியில் உள்ள எழுத்துக்கள் எ. ஒ என்னும் இரண்டுமாம். உயிர்க்குறில் எனப்படும் இவ்விரண்டெழுத்துக்களும் இல்லாத போதிலும் இவற்றின் நெட்டொலி யுடையனவாய ஏ, ஓ என்னும் இரண்டும் ஆரிய மொழியில் உள. தமிழ்மொழியில் இல்லாதனவாய் ஆரிய மொழியிலுள்ள உயிரெழுத்துக்கள் ஆறு. ஏனைய பத்தெழுத்துக் களும் ஆரியத்துக்குந் தமிழுக்கும் பொது வெழுத்துக்களாம். அவை அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ஏ, ஐ, ஒ, ஒள என்பன. மெய்யெழுத் துக்களுள் பூழ், ற், ன் என்பன மூன்றுத் தமிழ் மொழிக்கேயுரிய சிறப்பெழுத்துக்கள். இருபத்திரண்டெழுத்துக்கள் ஆரிய மொழிக் கேயுரிய சிறப்பெழுத்துக்கள் க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ள் என்னும் பதினைந்தும் இருமொழிக்கும் பொதுவான எழுத்துக்களாம். ஆரிய மொழியில் உள்ள சொற்கள் தற்சமம், தற்வேம் என்னும் இருவகையாகத் தமிழில் வந்து வழங்கு மென்பர்.
ஆரியத்திற்கும் தமிழிற்கும் பொதுவெழுத்தாலாகி விகார மின்றித் தமிழில் வந்து வழங்கும் வடமொழி தற்சமம் எனப் படும், அமலம், கமலம், கார ண ம் என்பன இருமொழிக்கும் பொதுவெழுத்துக்களாலாய தற்சம மொழிகள். இத்தகைய ஆரியச் சொற்கள் தமிழில் வந்து வழங்குவதற்கு அவை வரிவடிவில் தமிழ் எழுத்து வடிவம் பேறவேண்டுமேயன்றி வேறு இலக்கணக் கட்டுப்பாடுகள் தேவையில்லை.
ஆரியத்துக்கே யுரிய சிறப்பெழுத்தால் ஆனவையும் ஆரியத் துக்குரிய சிறப்பெழுத்தோடு இருமொழிக்கும் உரியவையான பொதுவெழுத்தால் ஆனவையுமென தற்பவம் இருவகைப்படும். 1. ஆரியச் சிறப்பெழுத்துக்களால் மட்டும் ஆனவை 2. ஆரியச் சிறப்பெழுத்தாலும் இருமொழிப் பொதுவெழுத்தாலும் ஆனவை. சுகி, போகி, சுத்தி என்பவை ஆரிய மொழிச்சிறப் பெழுத்துக் களால் ஆகி விகாரம் பெற்றுத் தமிழ் வரிவடிவும் தமிழ் ஒலி வடிவும் பெற்றுத் தமிழில் வந்து லழங்குந் தற்வே மொழிகளாம். மேலே காட்டப்பட்ட தற்பவ உருவம் பெற்ற வடமொழிகளை ஆரிய மொழியெழுத்துக்களால் எழுதிக் காட்டி ஒலித்தால் எல்லா எழுத்துக்களுத் தமிழில் இல்லாத ஒலிவடிவம் பெற்றவை துென்பது நன்கு விளங்கும். ககர சகர தகர பகர வருக்கங்களி
79繫

Page 49
லுள்ள ஆரிய எழுத்துக்களில் முதலாவதாக வரும் ஒரு எழுத் து மாத்திரம் இருமொழிக்கும் பொதுவானது, மற்றையவை ஆரிய மொழிச் சிறப்பெழுத்துக்கள். 9600 GM பொதுவெழுத்தாகி விகாரம் பெற்றே தமிழில் வந்து வழங்க முடியும். இவை முன் னர்க் கூறிய தற்பவ மொழிகளில் முதலாம் வகையைச் சேர்ந்
தவை.
தற்பவ மொழிகளில் இரண்டாம் வகையைச் சேர்ந்தவற்றுக் குதாரணம் அரி, அரன், சயம், ஞானம் எனவரும் அரி என்ப தன் முதலிலுள்ள அ என்பது ஆரிய மொழியிலுள்ள 'ஹ' என்ற எழுத்துப்பெற்ற விகார வடிவு. இரண்டாவதெழுத்து இரு மொழிக்கும் பொது வெழுத்து, அரன், முதலியவற்றிலும் இவ் வாறே பொது சிறப்பு ஆகிய இருவகை எழுத்துக்களையுங் கண்டு
கொள்க.
ஆரிய வெழுத்துத் தமிழில் விகார மடையுமாறு
ஆரிய மொழியிலுள்ள உயிரெழுத்துக்களிலும் மெய்யெழுத் துக்களிலும் உள்ள பல வெழுத்துக்கள் தமிழில் இல்லையென் பதை முன்னர்க் கண்டோம். உயிரெழுத் து க் களி ல் முதல் ஆறெழுத்துக்களும் தமிழில் உள்ளது போலவே ஒலிவடிவு பெற்று ஆரியத்தில் இருப்பினும் ஆரியத்தில் உள்ள ஏழாம் எட்டாம் எழுத்துக்கள் தமிழில் இல்லை. தமிழில் இல்லாத ஒலிகளைக் கொண்ட ஆரியச் சொற்களைத் தமிழில் எழுதும் போது தமிழ் எழுத்துக்களாலேயே எழுதிக் காட்டவேண்டியுள் ளது. அதனால் ஆரிய உயிரெழுத்துக்களில் ஏழாவதுயிர் எவ் வாறெழுதப்பட வேண்டுமென்பதற்கு நன்னூலார் விதி யமைத் துள்ளார். நன்னூலார் விதியமைப்பதற்குப் பலநூற்றாண்டு களுக்குமுன் எழுந்த இலக்கியங்களில் இத்திரிபு பேணப்பட்டுள் ளது. இலக்கியங் கண்டதற்கு இலக்கண மியம்பியவர்களே இலக்கண ஆசிரியர்கள். ஏழாவது வடமொழி உயிரெழுத்து "இ" யாகவும் "இர்’ ஆகவும் திரிந்து வருமென்பது இலக்கண விதி. இடபம் விருத்தம் என்பன ஏழாவது உயிர் "இ" யாகவும் இர்" ஆகவுந் திரிந்ததற்கு உதாரணங்களாகும். ஆரியத்துள் «S do lத, ப, என்னும் ஐந்து வருக்கங்களிலுமுள்ள முதலாமெழுத்துக்கு அடுத்துவரும் மூன்ழெழுத்துக்களும் முதலாமெழுத்தாகத் திரிந்து தமிழ் ஒலி வடிவைப் பெற்றுவரும். நகம் (உகிர்) நாகம், மேகம்
鬣 80

l " ᏓᎨ?* ᎦᏐᏗᎢ6ᏈᏈTᎥó
என்பன ககர வரிசையிலுள்ள பின் மூ ன் றெழுத் து க்களும்"
முதலெழுத்துக்களாகத் திரிவதற்குதாரணங்களாகும். சவி, விசயம், சருச்சரை என்பன சகர வரிசை எழுத்துக்கள் முதலாமெழுத்துக் களாகத் திரிந்து தமிழில் வழங்குவதற்குதாரணம். பீடம். சடம், கூடம், என்பன டகர வருக்கத்துக்கு உதாரணம். தலம், தினம், தரை என்பன தகர வகுக்கத் திரிபுக்கு உதாரணம். பலம் (பயன்) பலம் (வலிமை) பாரம் என்பன பகர வரிசை திரிவதற் குதாரணமாகும்.
எட்டாவது ஆரிய மெய்ழுெத்தாகிய "ஜ" என்பது சகரமாக வேனும் யகரமாகவேனுந் திரியும், ஜலம் என்பது சலம் என வரும். ஜமதங்கி என்பது யமதங்கி எனவும் பங்கஜம் என்பது பங்கப்ம் எனவும் மொழிமுதலிலும் இடையிலும் யகர மாகத் திரிந்தன. முப்பதாவது மெய் மொழிமுதல் இறுதிகளில் சகர மாகவும் நடுவில் சகரம் அல்லது யகரம் ஆகவும் விகாரம்பெறு.ே சங்கரன் என்பது, மொழி முதலில் திரிந்தது. ஆசை என்பது மொழியிறுதியில் திரிந்தது. பாசம், நேயம் என்பன மொழி யிடையில் திரிந்தன.
முப்பத்தொன்றாம் மெய்யாகிய ஷ " என்பது முதலில் சகர பeாகவும், இடை கடைகளில் டகரமாகவுந் திரியும், சண்முகம் என்பது முதலிலுள்ள , ஷ ச ' வாகத் திரிந்து வந்தது. விடய்ம், பாடை என்பன இடையிலும், கடையிலும் ஷ ட ' வாகத் திரிந்து வந்தன. முப்பத்திரண்டாம் மெய்யாகிய ஸ " என்பது முதலில் சகரமாகவும், இடையில் சகரமாகவும் தகரமாகவும் திரியும் சபை மொழி முதலிற் சகரமாகத் திரிந்து வந்தது. வாசம் மாதம் என்பன இடையில் சகரமாகவும், தகரமாகவுந் திரிந்து வந்தன,
முப்பத்து மூன்றாம் மெய்யாகிய ஹ என்பது மொழி முதலில் அதில் ஏறி நின்ற உயிராகவும், இடையில் இகரமாகவும் வரும் அரி. ஆரம் இமம், ஏமம் என ஏறிநின்ற உயி ரா 8 வந்தன, மோகம் மொழியிடையிற் ஹ " . و ی வாகத் திரித்து வந்தது.
முப்பத்தைந்தாம் மெய்யாகிய கூy " என்பது இரண்டு ககர மாகத் திரியும். பக்ஷம் என்பது பக்கம் எனவும், பக்ஷணம் என் பது பக்கணம் எனவும் வரும்,
6 81 鬣

Page 50
மொழியிறுதி ஆகாரமானது ஐகாரமாகவும், மொழியிறுதி ஈகாரமானது இகரமாகவுந் திரியும், மாலா, மாலை எனவும் புரீ, புரி எனவும் வரும்.
தமிழ் மொழியில் மொழிக்கு முதலில் வராவென விலக்கப் பட்ட ரகரம் முதலிய எழுத்துக்கள் பின்வருமாறு மொழிக்கு முதவில் வரும். ரகரம் அகர, இகர, உகரங்களில் ஏற்ற ஒன்றைப் பொருந்தி மொழிக்கு முதலில் வரும், ரங்கம் அரங்கம் எனவும், ராமன் இராமன் எனவும், ரோமம் உரோமம் எனவும் வரும். லகரம் இ, உ என்னும் இ ர ண் டெ முத் து க் க ளி ல் ஒன்றைப் பொருந்தி வரும். லாபம் இலாபம் எனவும், லோபம் உலோபம் எனவும் வரும். யகரம் மொழிக்கு முதலாகும் எனத் தொல்காப்பியர் கூறிற்றிலர் என்பது ஒரு சாராசிரியர் கொள்கை. அவ்வாறாயின் யகரம் இகரத்தை முன்வைத்து மொழிக்கு முதலாக வரும். யமன் என்பது இயமன் எனவும், யக்கன் என்பது இயக்கன் எனவும் வரும்.
ஆரிய எழுத் து க் க ளி ல் இரண்டெழுத்துக்கள் இயைந்து ஒரெழுத்துப் போல ஒலி வடிவிலும் வரி வடிவிலும் வருவதுண்டு. காவ்யம் என்னும் மொழியில் வ், ய என்னும் இரண்டெழுத்தும் ஒரெழுத்தாக ஆரிய மொழியில் வருவதை அம்மொழியெழுத் துக்களால் எழுதிக் காணலாம். இவ் வா று ஈரெழுத்துக்கள் இணைந்து வருமிடங்களில் இகரங் கொடுத்து காவியம் என வட மொழியாகத் தமிழில் வழங்குவர். இவ்வாறே வக்ரம், சுக்லம் என்பன வக்கிரம், சுக்கிலம் எனத் தமிழில் வந்து வழங்கும்.
மகர வகரங்கள் இணைந்து வரும்போது அவை உகரம் பெற்று வடமொழிப் பெயர் பெறும். பத்மம் என்பது பதுமம் எனவும், பக்வம் பக்குவம் எனவும் வரும் . மகர வகரங்களுக்கு முன்னின்ற எழுத்துக்களே உகரம்பெற்றன,
இணைந்து நின்ற நகரத்துக்கு அகரம் வரும். ரத் ன ம் அரதனம் என வரும். இணைந்து நின்ற ரகரத்துக்கு உ க ரம் வரும். அர்த்தம் என்பது அருத்தம் என வரும்.
தொல்காப்பியரும் பதம் பற்றிய நோக்கும்
தொல்காப்பியர் பதவியல் என்றோரியல் வகுத்துச் சொற் இளைப் பகுதி, விகுதி, இடைநிலை முதலாக பிரித்துக்காட்
82

டாது போனாலும் அவர் பகுதி, விகுதி, இடைநிலை முதலிய வாகச் சொற்களைப் பிரிக்க வழிகாட்டியிருக்கிறார் எ ன் பதை
மறுக்க முடியாது.
தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் இடங்களுக்குரிய இறுதிகளை அவர் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார். அன், ஆன் அள், ஆள் என்னும் நான்கும் ஒருவர் மருங் கிற் படர்க்கைச் சொல்லேயெனவும், அரி, ஆர், ப என வரும் மூன்றும் பல்லோர் மருங்கிற் படர்க்கைச் சொல்லேயெனவும் இவ்வாறே ஒன்றன்பால் பலவின் பால் இறுதி நிலைகளும், த ன்  ைம, முன்னிலைகளுக்குரிய ஈறுகளும்  ெத ர ல் கா ப் பி ய ர | ல் தெளிவாக எடுத்துப் பேசப்பட்டுள. சாரியை பற்றியுந் தொல் காப்பியத்தில் பற்பலவிடங்களிற் பேசப்படுகிறது. எனவே வட மொழி வழக்குப் பற்றி நன்னூலார் காட்டிய பதவியல் இலக் கணங்கள் தொல்காப்பியர்க்கும் உடன்பாடானவை எ ன் ப தி ல் ஐயமில்லை. சொற்களில் உறுப்புக்கள் பிரித்துப் பயன்படுப்பதை யுந் தொல்காப்பியர் விலக்கினாரல்லர்.
* தநநுஎ எனும் அவைமுத லாகிய கினை நுதற் பெயரும் பிரிப்பப் பிரியா"
( தொல்காப். எச், 14 )
என்பதன் மூலம் த, ந, நு, எ என்பவற்றை முதலாகவுடைய உறவுநுதலிவரும் பெயர்களான தமர், நமர், துமர் எமர் என் பன பிரிக்கப் பிரியா என்று தொல்காப்பியங் கூறுவது கொண்டு தொல்காப்பியர் பிரிக்கப்படும் பதம், பிரிக்கப்படாப் பதமென இரண்டு கூறாகப் பதங்களை வைத்தாரென்பது தெளிவாக ப் புலப்படுகிறது. தொல்காப்பியரி பத ங் களை ஒரெழுத்தொரு மொழி, ஈரெழுத்தொரு மொழி, இரண்டுக்கு மேற்பட்டுவருந் தொடரிமொழியென மூன்றாக வகுத்துள்ளார். ந ன் னுர ல |ார் ஒரெழுத்தொரு மொழி அல்லாத எல்லாவற்றையுந் தொடர் மொழியெனவே கொண்டார். ஈரெழுத்தொரு மொழியும் நெடிற் றொடர்க் குற்றியலுகரத்துக்கும் பயன்படுவதால் தொல்காப்பியர் ஈரெழுத்தொரு மொழி கொண்டதிலுந் தவறில்லையென்க. வடநூலார் ஒன்று, இரண்டு, பலவெனக் கொண்டு இலக்கணம் அமைத்தது நோக்கித் தொல்காப்பியர் இவ்வாறு பாகுபடுத்தி னாரி என்பாருமுளர். எவ்வாறாயினும் தொல்காப்பியருடைய
83囊

Page 51
மதவமைப்பு நன்னூலார்க்கு வழிகாட்டியாக அமைந்ததோடு மேலும் விரிவு செய்ய வட நூலார் கண்ட முடிபுகளும் நன்னூலார்க்குந் துணையாயினவென்பது பொருத்தமாகும்.
3. புணரியல்
புணர்ச்சி இன்னதென்பது
தமிழ்மொழிச் சொற்கள் வாக்கியங்களில் வரும்போது அவை ஒன்றோடொன்று இயைந்து நிற்றல் வேண்டும் என்பது ம ர பு. இயைதல் என்பதையே தமிழிலக்கண காரர் புணர்ச்சி என்பர். ஆங்கிலம் முதலிய பெரும்பாலான மொழிகளில் சொற்கள் வருஞ் சொல்லோடு நின்ற சொல் எத்தகைய மாற்றமும் பெறாது ஒரு பொருளுக்குப் பக்கத்தில் வைத்த இன்னொரு பொருள் போல நிற்கும். தமிழ்மொழி தொடுத்துவிட்ட புகையிரதப்பெட்டிகள் போல் ஒன்றோடு மற்றையது தொடர்புபட்டு நிற்கும். மாற்றம் வேண்டாது வரும் சொற்களிற்கூடப் புணர்ச்சியுண்டென்பது தமிழ் இலக்கண நூலுடையார் கொள்கை. கந்தன் எ ன் ற சொல் லைத் தொடர்ந்து வந்தான் என்ற சொல் வருகின்றது. இச் சொற்கள் மாற்றமின்றிக் கந்தன் வந்தான் என்றே நிற்கின்றன. ஆனால் இங்கும் இயைதல் என்னும் புணர்ச்சியுண்டென்பதை நாம் உளங்கொளல் வேண்டும். அது இயல்பு புணர்ச்சியாம். மாற்றம் பெற்றுவரும்போது அது விகாரப் புணர்ச்சி எனப்படும். எனவே புணர்ச்சி இயல்பு புணர்ச்சி, விகாரப் புணர்ச்சி என
இரு as 65 at a LGA.
தொல்காப்பியர் புணரும் இரு மொழிகளில் முதலில் நிற் குஞ் சொல்லை நிறுத்த சொல் என்பர். அச்சொல்லோடியை யப் பின்வருஞ் சொல்லைக் குறித்து வரு கிளவி என்பர். நன் னுரலார் நிறுத்த சொல்லை நிலை மொழியெனவும் குறித் து வரு கிளவிகை வருமொழியெனவுங் கூறுவர். வாக்கியங்களில் நிலை மொழி வருமொழிகளைத் தீர்மானிப்பது பற்றி அறிதல் வேண்டும். இந்தன் வந்தான் என்பதில் கந்தன் நிலைமொழி, வந்தான் வருமொழி. கந்தன் வந்து போனான் என்பதில் கந்தன் என்னுஞ் சொல்லையும் வந்து எள்னுஞ் சொல்லையும் எடுக்கும் போது கற்தன் நின்ை மொழி, வந்து வருமொழி. அ. த ன்
靈84

மேல் வந்து போனான் என்பதையெடுக்கும் போது வந்து நிலை மொழி, போனான் வருமொழி. இவ்வாறே இரண்டு சொற்கள் சேரும்போது ஒரு புணர்ச்சியும், மூன்று சொற்கள் சேரும்போது
இரண்டு புணர்ச்சியு ம், நான்கு சொற்கள் சேரும்போது மூன்று புணர்ச்சியும் மேலும் இவ்வாறே வாக்கியத்திற் பத்துச் சொற்கள் வருமாயின் ஒன்பது புணர்ச்சியுங் கொள்ளப்படும். இப்புணர்ச்சி மாற்றம் பெற்றும் பெறாமலும் வருமென முன்னர்க் கண்டோம்.
மாற்றம் பெறாதது இயல்பு புணர்ச்சியென்பதும் மாற்றம் பெறுவது விகாரப் புணர்ச்சி என்பதும் ஆங்கு அறியப்பட்டவை. விகாரம் தோன்றல், திரிதல், கெடுதல் என மூன்று வகைப்படும். இவை
உலக வழக்கிலுஞ் செய்யுள் வழக்கிலும் வரும் விகாரங்களாகும். செய்யுளில் இவற்றோடு வலித்தல், மெலித் த ல், நீட்டல், குறுக்கல், விரித்தல், தொகுத்தல் என்னும் விகாரங்களும் வருவன el rabo
புணர்ச்சி எதற்கு?
தமிழ் மொழியில் பிற மொழிகள் பலவற்றில் இல்லாதவனை யில் சொற்கள் புணர்ந்து வருவது எதற்கு என்பது சிந்திக்கத் தக்கது. எழுத்துக்களின் பிறப்புப் பற்றி எழுத்தியலிற் கூறியுள் ளோம். எழுத்துக்கள் பிறக்குமிடம், அவை பிறத்தற்காய முயற்சி என்பவற்றுக்கமையவே புணர்ச்சி நிகழ்கிறது. நிலை மொழியின் ஈற்றெழுத்திற்குரிய முயற்சிப் பிறப்பும், வருமொழி முதலெழுத் துக்குரிய முயற்சிப் பிறப்பும் தம் முள் ஒ ர ள வுக்கு ஒத்துப் போவனவாயின் ஆங்கு நிலை மொழியின் ஈற்றிலோ அன்றி வரு மொழியின் முதலிலோ மாற் ற மேற்பட வேண்டிய அவசியம் இல்லாமற்போய் விடுகிறது. நின்றசொல்லின் முதலெழுத்துக்காய முயற்சிப் பிறப்பு வருமொழி முதலெழுத்துக்குரிய முயற்சி ப் பிறப்போடு ஒத்துப்போகாதாயின் அங்கு தோன்றல் மு த வி ய விகாரங்களில் ஒன்றையேனும், பலவற்றையேனும் ஏற்படுத்தி இரு சொல்லையும் உச்சரிப்புக்கு இதமாம்படி செய்தல் மூலம் சொல்வானுக்குச் சிரமமில்லாமற் செய்வது புணர்ச்சியின் நோக்க மாகும். கந்தன் என்பதிலுள்ள ஈற்றெழுத்தின் தோற்றம் எழுந்த பிறகு வந்தான் என்பதிலுள்ள வகரத்தை முன்னைய ன் " என்னும் எழுத்துப் பிறந்த முயற்சிகளை வேறுபடுத்த அவகாச மிருத்தலால் அங்கு விகாரந் தேவைப்படாதாயிற்று. கந்தன் +கு
85羲

Page 52
என்பது இந்தற்கு என வரும், ணகர மெய்யை ஒலித்த பிறகு தகரம் வருவதற்கு அவகாசமின்மையால் மாற்றம் ஏற்படுகிறது. நிலை மொழியீறுதியெழுத்தின் தோற்றத்துக்கு ஒவ்வாததாகக் கு" என்பது வருதலால் அதில் மாற்றஞ் செய்யவேண்டியது அவசியமாகிறது. கந்தன் என்னுஞ்சொல்லிலுள்ள ணகரவொற்றை றகர வொற்றாகத் திரிக்கும்போது அதனோடு குகர வுயிர்மெய் ஒத்துப்போக முடிகிறது. பிறப்பியலுக்கும் புணரியலுக்குமிடையே நெருங்கிய தொடர்பிருப்பதை நாம் மறத்தலாகாது. கந்தன்+கு = கந்தற்கு என விகாரம்பெற்றாலுங் கந்தன் + குழந்தை= கந்தன் குழந்தை என வருகிறதே அது எப்படி என்பது வினா. இந்தன் என்ற சொல் ஒலிக்கப்பட்டுச் சிறிது நேரஞ் சென்ற பின் குழந்தை என்ற சொல் ஒலிக்கப்படுதலால் னகர மெய்யை ஒலித்த உறுப்பு முயற்சி குகரத்தை ஒலித்தற்காம் உறுப்பு மு ய ந் சி க்கு மாற அவகாசம் இருத்தலால் எத்தகைய மாற்றமும் அங்கு தேவை யில்லாமற் போய்விடுகிறது. கந்தன் குழந்தையென்பது கந்தன் குழந்தையாவான் எனவும், கந்தனது குழந்தை எனவும் பொருள்
t_lt-EvfTth.
காயா+கோடு என்பது காயாக்கோடு எனவும், காயாங்கோடு எனவும் வருதலால் காயா என்பது இயல்பாகப் புணரமுடியா தெனினும் வந்த மெய்யெழுத்து மிகுந்தும், வந்த மெய்யெழுத்துக் கினமான ஐகர மெய் மிகுந்தும் வருவதெவ்வாறெனில் அ து வழக்க நியதி அல்லது மரபு பற்றியதாகும். காயாங்கோடு என்ற நிலையில் பலாங்கோடு என வராமைக்கும் அதுவே கார ண மாகும். மரபு பேணவேண்டியது மொழியைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கும் அது திரிபெய்தி வேற்றுருவம் நேரா ம ல் தடுத்தற்கும் அவசியமாம்.
தமிழ்மொழியின் இனிய ஓசை
தமிழ் மொழியில் உரப்பியும் கனைத்தும் சொல்லவேண்டிய எழுத்துக்கள் இல்லை. வல்லினம் என ஓரினம் இரு ப் பி னும் மற்றைய மொழிகளிலுள்ள கடின ஓசையை அவை பெறுவதில்லை. " யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இ னி தா வ தெங்குங் காணோம் " எனச் சுப்பிரமணிய பாரதியாரி கூறிய தற்கும் த மிழ் மொ ழி யில் உள் ள ஒலி த ய ஞ் சான்ற
繳 86

எழுத்துக்களும், அவற்றின் புணர்ச்சி நுட்பங்களுமே காரணம் என்பதை மறுக்கமுடியாது. ழ, ள என்னும் இரண்டெழுத்துக்கள் தமிழ் மொழியில் எதற்காக என்று வினவுவோரும் உளர். இவ் விரண்டெழுத்துக்களையும் அவற்றின் ஓசை நுட்பமறிந்து நாம் பேசக் கற்றுக்கொண்டால் அவற்றின் இன்றியமையாமை நன்கு விளங்கும். தமிழ் மொழியின் விழுமிய ஓசைக்கு ழகர வருக்கம் பெரிதுந் துணை புரிகிறதென்பது உண்மையே. பழ ம் என்று சொல்லும்போது அந்த மொழியின் இடையிலுள்ள ழகர வுயிரி மெய் சரியாக உச்சரிக்கப்பட்டால் பழத்தின் இனிமைக் குறிப்பு ஒலியிலுந் தொனிக்கும். அழகு என்பதும் அத்தகையதே. அழகு, அளகு என்னுஞ் சொற்கள் தமிழ் மொழியில் உள்ளன. அளகு என்பது கோழி முதலிய பிராணிகளின் பெண்ணினத்தைக் குறிப்பது இரு சொற்களையும் உச்சரிக்கும்போது ழகர, ளகர வேறுபாடு கேட்டார்க்குப் புலனாக ஒலியாக்கால் தமிழ்மொழியின் அருத்தத்தையும் இனிமையையுஞ் சிதைத்தவர்களாவோம். ழகர, ளகரங்களேயன்றி லகரம் எனும் ஒன்று ம் இவற்றுக்கு ஒத்த ஓசையுடையதாக வருகிறது. அதன் ஒசை வேறுபாடும் உணரவேண்டியதே. இதேபோல ரகர, றகரங்களையுஞ் சரியாக உச்சரிக்க முடியாதவர்களும் உளர். 1 நிறையுயிர் முயற்சியின் உள்வளி துரப்ப " என்று நன்னூலார் கூறியதில் நிறையுயிர் என்று சுட்டப்பட்டது எழுத்துக்களைச் சரியாகி ஒலித்தற்காம் பூரண வலுவுண்மையைக் குறித்ததாகும்.
உயிரீறு மெய்யீறு
தமிழ் மொழியிற் சொற்கள் உயிரி ஈற்றனவாக அ ல் ல து மெய்யீற்றனவாகவே அமையும். வந்தான் எ ன் பது னகர வொற்றீறாவதால் அது மெய்யீறு. சென்றது என்பதில் து" என்னுந் தகர மெய்ம்மேல் ஏறிய உகரவீறாதலால் அது உயிரீறு, து" என்னும் உயிர்மெய்யில் உகர உயிர் ஒலியே இறுதியில் உள்ளதாதலால் உயிரீறாயிற்று. அதுபோல வருமொழி முதலும் உயிரி எழுத்தாக அ ல் ல து மெய்யெழுத்தாகவே அமையும். வந்தான் என்பதில் வகர மெய்யின் ஒலியே முதலில் நிற்பதால் அது மெய்ம்முதல் மொழியாயிற்று. உண்டாள் என்பதில் உகர வுயிரெழுத்து முதலில் நிற்பதால் அது உயிர்முதல்மொழியாயிற்று. ஆகவே எல்லாச் சொற்களையும் உயிரி முதல் மொழி, மெய்ம்
87礦

Page 53
முதல் மொழி, உயிரீற்று மொழி, மெய்யீற்றுமொழி என வகைப் படுத்தலாம். அதனால் புணரியலை உயிரீற்றுப் புணரியல், மெய்யீற்றுப் புணரியல் என இரண்டாக வகுத்தார் நன்னூலார். அதனோடு உருபு புணருமாற்றை விளக்கும் உருபு புணரியலையுஞ் சேர்த்துப் புணரியலை மூன்றாக்கினார். நின்ற சொல் லி ன் இறுதியெழுத்தே வந்த சொல்லின் முதலெழுத்தைத் தன்னோடு ஒத்துப்போகச் செய்தலால் நின்ற சொல்லின் இறுதியை நோக் கிப் புணரியல் வகுக்கப்பட்டதென்க. எ ன வே வருமொழியை நோக்கி உயிர் முதற் புணரியல், மெய்ம்முதற் புணரியல் எ ன வகுக்க வேண்டாவாயிற்று.
ஆசிரியர் தொல்காப்பியர் சொற் புணர்ச்சியை ஆறு இயல்க ளாக்கி விரித்துக் கூறினார். அவர் அவற்றுக்கு புணரியல், தொகை மரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றிய லுகரப் புணரியல் என்று பெயரிட்டார். அவரது நூல் விரிந்த நூலாதலின் அவ்வாறு விரித்தோதப்பட்டதெனவும். நன்னூல் சுருங்கிய நூலாதலின் சுருக்கமாக ஒதப்பட்டதெனவும் உணர்க. இலக்கணம் விரித்துப் பேசப்படும் தொல்காப்பியத்தை இ ன் று தொடவும் மாணவர்கள் அஞ்சுகின்றனர்; ஆசிரியர்கள் கூசுகின் றனர். நன்னூல் ஒரளவிற்குப் பயன்படுத்தப்பட்டாலும் புணரியற் சூத்திரங்களை மனப்பாடஞ் செய்யப் பின்னிற்கின்றனர். சொற் களை விதிப்பிரகாரம் புணர்த்தும் பயிற்சி வலுவுறுவதற்குச் சூத்திரங்களை மனப்பாடஞ் செய்வதே சிறந்த வழியாகும். ஆதலால் புணரியல்களுட் சூத்திரங்களையும் ஆங்காங்கு எடுத்துக் காட்டுவது அவசியமாகிறது. செய்யுளும் புணர்ச்சி தழுவுதல் அவசியம்
செய்யுள்களை எழுதும் போது அனைத்துப் புணர்ச்சி விதிகளுந் தழுவப்படுவது அவசியம். பொருள் விளக்கத்திற்காக அவற்றைப் பிரித்தெழுதல் வேண்டின் செய்யுளின் இயல்பு வடிவத்தை முதலிற் காட்டிய பின்பே அது செய்யப்படல் வேண்டும். உரைநடையில் அத்தஇைபை கீட்டுப்பாடு ஏதும் இல்லையெனினும் உரைநடையிலும் கடினமான புணர்ச்சிகள் தவிர்க்கப்பட்டாலும் மற்றைய புணர்ச்சிகள் கைநெகிழவிடப் படக் கூடியனவல்ல. தமிழ்மொழியின் தனித்தன்மை பேணப் படுவதற்கு புணரிச்சிக் கிரமம் வழுவாமையும் முக்கியமான தொரு காரணமென்பதை நாம் மறந்துவிடலா இாது.
鐵 88

al 萎 பாணம் نظb""_____ / புணர்ச்சி வகைகள் "-wal
சொற் புணர்ச்சி வேற்றுமைப் புணர்ச்சி அல்வழிப் புணர்ச்சி என இரு வகைப்படும். உயர் திணை அல்லாத திணை அஃறிணையானாற் போல வேற்றுமை அல்லாத வழி அல்வழி யாகும். வேற்றுமைகள் எட்டெனினும் வேறுபடுத்தும் உருபு இல்லாத முதலாம் வேற்றுமையும் எட்டாம் வேற்றுமையும் விலக்கப்பட்டுப் புணரியலில் வேற்றுமை ஆறாகவே கொள்ளப் படும். அல்வழி வினை, பண்பு, உவமை, உம்மை, அன்மொழி, எழுவாய், விளி, பெயரெச்சம், வினையெச்சம், தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினை முற்று, இடைச்சொல், உரிச்சொல், அடுக்குச்சொல் எனப் பதினான்காம். இவற்றுடன் பெயரெச்சம் வினையெச்சங்களைத் தெரிநிலை வினைப் பெயரெச்சம், குறிப்பு வினைப் பெயரெச்சம் என இரண்டாக்கியும் வினையெச்சத் தையும் அவ்வாறே தெரிநிலை வினை வினையெச்சம் குறிப்பு வினை வினையெச்சம் என வேறுபடுத்தி இரண்டு கூட்டிப் பதினாறாகவுங் கொள்ளலாம்.
வேற்றுமை வழிக்கு உதாரணம்
வேற்றுமையுருபுகள் மறைந்து நிற்க மொழிகள் புணர்வது வேற்றுமைத் தொகையாகும். வேற்றுமைத் தொகைகளை உருபு கொடுத்து விரித்து எத்தொகை யெனக் கண்டறியலாமேயன்றி வேற்றுமையுருபுகளை விரித்தெழுதின் அவை வேற்றுமைத் தொகையாகா. ஆறு வேற்றுமைத் தொகைகளையும் உதாரண முகத்தால் அறிவோம்.
வேற்றுமை sa l-ġ5 FT sussessi għal தெனக்க
உருபு 1. இரண்டாம் வேற்றுமை நிலங்கடந்தான் 83 2-(5- 2. மூன்றாம் வேற்றுமை கல்லெறிந்தான் ஆல் உருபு 3. நான்காம் வேற்றுமை மன்னன் மகள் (5 -05 4. ஐந்தாம் வேற்றுமை மலை வீழ் அருவி இன் உருபு 5. ஆறாம் வேற்றுமை କuntଜୋ ଶଙ୍ଖା’ର୍ଦtଶନ୍ଧଣ୍ଡ அது உருபு 6. ஏழாம் வேற்றுமை வீடு புகுந்தாள் இல் உருபு அல்வழிக்கு உதாரணம்
1. வினைத்தொகை கொல்யானை
2. பண்புத்தொகை இருங்குவளை
89鐵

Page 54
3. உவமைத்தொல்ை மதிமுகம்
4. உம்மைத்தொகை இராப்பகல் 5. அன்மொழித் தொகை பொற்றொடி வந்தாள் 8, எழுவாய்த் தொடர் வேலன் வந்தான் 7. விளித்தொடர் வேலா வா 8. பெயரெச்சத் தொடர் வந்த வேலன் 9. வினையெச்சத் தொடர் வந்து போனான்
10. தெரிநிலை வினைமுற்றுத் தொடர் வந்தான் வேலன் 11. குறிப்பு வினைமுற்றுத் தொடர் Ger y fflun y gŵr (Banja)6ŵr
12. இடைச் சொற்றொடர் மற்றொன்று 18. உரிச்சொற்றொடர் தனி பேதை 14. அடுக்குத் தொடர் unruh in the
இயல்புப் புணர்ச்சி விகாரப் புணர்ச்சி
புணர்ச்சி, இயல்பு புணர்ச்சி விகாரப் புணர்ச்சி என இரு வகைப்படுமென்பது முன்னரே காட்டப்பட்டது. சொற்கள் எத்தகைய வேறுபாடுமின்றிப் புணரும் புணர்ச்சி இயல்பு புணர்ச்சி என்பதும் தோன்றல் திரிதல் முதலாகச் சொல்லப் பட்ட விகாரங்கள் பெற்றுப் புணரும் புணர்ச்சி விகாரப் புணர்ச்சியென்பதும் ஆங்குக் கூறப்பட்டனவே. நிலம் வலிது என்பது இயல்பு புணர்ச்சி பெற்றது. பூச்செடியென்பது விகாரப் புணரிச்சி. இங்கு சகர மெய் தோன்றல் விகாரமாக வந்தது.
பூ * செடி என்பதே பூச்செடியெனப் புணர்ந்தது.
மரம் + கொத்தினான் என்பது மரங் கொத்தினான் எனப் புணரும். இங்கே நிலைமொழியீற்றிலுள்ள மகரவொற்று ங்கர வொற்றாகத் திரிந்து புணர்ந்தது. எனவே இது திரிதல் விகாரம் பெற்ற புணர்ச்சியாகும்.
நிலம் + வலயம் ஊக நில வலயம் எனப் புணரும். இங்கே நிலைமொழியீற்றிலுள்ள மகர மெய் கெட்டுப் புணர்ந்தது. இவ்வாறு ஒரு புணர்ச்சியில் ஒரு விகாரம் மட்டும் வருதலின்றி இரண்டு விகாரம் மூன்று விகாரமென வருதலுமுண்டு. நிலை மொழி வருமொழிகள் முழுவதும் விகாரப்பட்டு வருதலுமுண்டு.
廳90

ஆறு + பத்து = அறுபது இங்கே நிலைமொழியின் முதலாகிய ஆ என்னும் உயிரெழுத்து "அ" எனத் திரிந்து வருமொழியின் இடையிலுள்ள தகர மெய்கெட்டது.
பனை + காய் = பனங்காய். இதில் நிலைமொழியீற்றி லுள்ள உயிர்மெய் கெட்டு அம் என்னுஞ் சாரியை தோன்றியது.
ஒன்பது + பத்து தொண்ணுாறு நிலைமொழி வரு மொழிகள் முதல் ஈறு இடைநிலை என்னும் மூன்றிடத்தும் விகாரப்பட்டன.
செய்யுள் விகாரம்
செய்யுள் விகாரங்கள் வலித்தல், மெலித்தல், நீட்டல், குறுக்கல், விரித்தல், தொகுத்தல் என ஆறென்பது முன்னர்க் காட்டப்பட்டது. அவற்றையிப்போது உதாரணங்களுடன் நோக்கு வோம். வலித்தல் விகாரமென்பது மெல்லெழுத்தை வல்லெழுத் தாக்குவதாம். மெலித்தல் விகாரமென்பது வல்லெழுத்தை மெல்லெழுத்தாக்குதலாம். நீட்டல் விகாரம் என்பது குற்றெ ழுத்தை நெட்டெழுத்தாக்குதலாம். குறுக்கல் விகாரமென்பது நெட்டெழுத்தைக் குற்றெழுத்தாக்குவதாம். விரித்தல் விகார மென்பது இல்லாத எழுத்தை வருவித்துச் சேர்த்தலாகும். தொகுத்தல் விகாரம் என்பது உள்ள எழுத்தை நீக்குவதாகும். இவ்விகாரங்களனைத்தும் விகாரமின்றிச் சொல்லப்படும் போது செய்யுளில் அசை, சீர் தனை என்பன சிதைவுறுதல் நோக்கி விகாரப்படுத்தலால் செய்யுள் விகாரமாயின. உரைநடையிலோ உலக வழக்கிலோ அத்தகைய இடர்ப்பாடின்மையால் அவை ஆங்கு வருவதில்லை.
வலித்தல் விகாரம் - "குறுத்தாட் பூதஞ் சுமந்த வறக்கதி ராழியெம் அண்ணலைத் தொழினே' - இங்குக் குறுந்தாட் பூதம் என நிற்கவேண்டியது தகர மெல்லொற்றுத் தகர வல் லொற்றாகிக் குறுத்தாட் பூதம் என வந்தது.
மெலித்தல் விகாரம் - தண்டையி னினக்கிளி கடிவோன் - பண்டையனல்லள் மானோக்கின்ளே” . இங்கு தட்டையென நிற்றற்பாலது தண்டையென வல்லொற்று மெல்லொற்றாய் வந்தது. தட்டை என்பது கிளிகடியுங் கருவி.
91 ప్లా

Page 55
நீட்டல் விகாரம் ம ஈசன் எந்தை யிணையடி நீழலே?" இங்கு நிழலே என நிற்றற்பாலது நீழலே என நீட்டல் விகாரம் பெற்றது.
குறுக்கல் விகாரம் - 'யானை பெருத்தந் திருந்த விலங் இலை வேற்றென்னன் - திருத்தாரி நன்றென்றேன் தியேன்" இங்குத் தீயேன் என நீண்டு நிற்றற்பாலது தியேன் எனக் குறுகி நின்றது.
விரித்தல் விகாரம் - 'நெல் விளையும்மே" - என்பதில் விளையுமேயென நிற்றற்பாலது விளையும்மே என மகர மெய் விரிந்து நின்றது.
தொகுத்தல் விகாரம் . 'நீ நாடுகென' - இங்கே நாடுகலென நிற்கவேண்டியது அகரம் தொக்கு "நாடுகென" என நின்றது.
புணரியலில் எடுத்தாளப்படும் பொதுக் கருத்துக்கள்
புணரியலில் எடுத்தாளப்படும் சில பொதுக் கருத்துக் களையும் இங்கு தருதல் பொருத்தமானதே. அவற்றுள் விதியீறு என்பது ஒன்று. விதியீறாவது இயல்பாக நின்ற உயிரி றேனும் ஒற்றிறேனும் போய் வேறோர் எழுத்தீறாக நிற்பது மரம் + அடி = மரவடி. இங்கே மரம் என்பதிலுள்ள மகர வொற்றுப்போய் மர + அடி என நிற்கும். அதாவது மரை வொற்று நீங்கி ரகர உயிர்மெய்யீறாய் நின்றது.
நாற்கணம் என்பது புணரியலுட் பலவிடங்களிலும் எடுத் தாளப்படுவதால் அவை பற்றியும் அறிதல் வேண்டும். வன் அணம், மென்கணம், இடைக்கணம், உயிர்க்கணம் என்பனவே நாற்கணமாகும். வன்கணம் என்பது வல்லெழுத்துக்களின் கூட்டமாகும். வன்கணம் என்னும் போது அச்சொல் க, ச, ட, த, ப, ற என்னும் ஆறு வல்லின மெய்யெழுத்தையுங் குறிக்கும் ,
மென்கணம் - மெல்லெழுத்துக்கிவின் கூட்டம், அவை ந ஞ ண ந ம ன என்பனவாகிய ஆறெழுத்துக்கனையுங் குறிக்கும்.
叢92

இடைக்கணம் - ய ர ல வ ழ ள என்னும் ஆறு இடை யின மெய்களும் இடைக்கணங்களாம்.
உயிர்க்கணம் - பன்னிரண்டு உயிரெழுத்துக்களும் உயிரிக் கணத்தைச் சேர்ந்தவையாம்,
புணர்ச்சியுட் சாரியைகள்
சொற்கள் புணரும் போது அவற்றிடையே சாரியைகள் வந்து இயைவதுமுண்டு. வேற்றுமையுருபுகள் புணரும் போது அவற்றிடையே தோன்றுஞ் சாரியைகளுள் "இன்" என்பதும் ஒன்றாகும். இன் என்பது சாரியையாகவும் வரும் வேற்றுமை உருபாகவும் இரும். சாரியையாக வரும் "இன்" என்பதை வேற்றுமையுருபெனக் கருதுவோரும் உளர். தமிழ் இலக்கிய வரலாறு என்பதைத் தமிழ் இலக்கியத்தின் வரலாறு என விரித்துத் தமிழ் இலக்கிய வரலாறு என்பது ஐந்தாம் வேற்றுமைத் தொகையெணத் தமது நூலுட் குறிப்பிட்ட நூலாசிரியரும் உளர். தமிழ் இலக்கிய வரலாறு என்பது தமிழ் இலக்கியத்தினது வரலாறு என விரிந்து ஆறாம் வேற்றுமைத் தொகையாகும் என்பது உண்மை நிலையாகும். இன் சாரியை
பற்றித் தொல்காப்பியர் கூறுவது கவனிக்கத்தக்கது.
"இன்னென வரூஉம் வேற்றுமை யுருபிற்கு
இன்னென் சாரியை யின்மை வேண்டும்" (தொல், புண.29)
இதன் மூலம் தொல்காப்பியர் கூறுவது என்னவெனில் 'இன்' என்னும் உருபு பெற்றுவரும் ஐந்தாம் வேற்றுமைக்கு அவ்வுருபோடு இன் என்னுஞ் சாரியை வருதல் கூடாது என்ப தாகும். மற்றைய வேற்றுமையுருபுகளுடன் இன் சாரியை வருதலைத் தொல்காப்பியர் விலக்கினாரல்லர். பூனையினை அடித்தான், இல்லினால் எறிந்தான், தனயனிற்குக் கொடுத்தான், நாயினது குட்டி, கல்லின் கண் இருந்தான் என ஐந்தாம் வேற்றுமையல்லாத மற்றைய வேற்றுமையுருபுகளுடன் இன் சாரியை வந்தவாறு காண்க, தொல்காப்பியர் புணர்ச்சிக்கண் வருமெனக் கூறிய சாரிய்ைகளைப் பின்வரும் நூற்பா எடுத்துக் காட்டுகிறது.
93纂

Page 56
அவைதாம்,
"இன்னே அற்றே அத்தே அம்மே ஒன்னே ஆனே அக்கிே இக்கே அன்னென் கிளவி யுளப்படப் பிறவும் அன்ன வென்ப சாரியை மொழியே" (தொல், எழு,புண.17)
இன், அற்று, அத்து, எம். ஒன், ஆன், அக்கு, இக்கு அன் என்பவற்றோடு அவை போல்வன பிறவுஞ் சாரியை பாகுமென்பர்.
4. உயிரீற்றுப் புணரியல்
எல்லா ஈற்றின் முன்னும் இயல்பாகப் புணர்வன
மொழியின் இறுதியில் வரும் எல்லா எழுத்துக்களின் முன்னும் ஞ, ந, ம, ய, வ என்னும் ஐந்தெழுத்துக்களின் வரிசையிலுள்ள எல்லா எழுத்துக்களையும் முதலாகவுடைய மொழிகள் வருமொழியாக வரும்போது பெரும்பாலும் இயல் பாகப் புணரும். இந்த ஐந்து வரிசை எழுத்துக்களும் முயற்சிப் பிறப்பால் எல்லா எழுத்துக்களுடனும் ஒத்துப்போவனவாதலால் இயல்பாகப் புணர்கின்றன. இவற்றுள்ளுஞ் சில இயல்பாக வருதலின்றி வேறுவகையாக வருவதுமுண்டு. அவற்றுக்குச் சிறப்பு விதிகள் உள.
தனிக்குற்றெழுத்தின் பின் நின்ற யகர மெய்க்கும் மெய்யைச் சார்ந்தும் சாராதும் வரும் ஐகாரத்துக்கும் நொ. து என்பவற் றுக்கும் முன்வரும் மெல்லினங்கள் அம்மெல்லின மெய்மிக்கு வருவதுண்டு.
பல 4 ஞாயிறு ஊ பலஞாயிறு, பனை + வலிது=பனை வலிது, பொன் + மலிவு = பொன் மலிவு, கல் + யானை = கல்யானை, வாள் + வலிது  ைவாள்வலிது. இவை எல்லா ஈற்றின் முன்னும் ஞகரம் முதலியன இயல்பாதற்கு உதாரணம்.
மெய் ஆ நீண்டது - மெய்ந்நீண்டது, கை + நீண்டது ஊ கைந்நீண்டது, நொ ஆ நாகா : நொந்தாகா, து 4 நாகா = துந்நாகா என மெல்லினம் மிக்குவந்தது.
攤 94

'எண்மூ வெழுத்திற் றெல்வகை மொழிக்கும்
முன்வரு ஞ ந ம ய வக்கி வியல்பும்" - (நன். உயி, 8) என்னுஞ் சூத்திரப் பகுதியை மனப்பாடஞ் செய்தால் இயல்பாக வருவதைக்காட்ட உதவும்.
'குறில்வழி யத்தணி யைந் நொது முன்மெலி மிகலுமாம்" எனவரும் முற்குத்திரப் பகுதி மெல்லினம் மிகுவதை வெளிப் உடுத்த உதவும். பொதுப் பெயர் உயர்தினைப் பெயர்கள்
பொதுப் பெயர் உயர்தினைப் பெயர்கள் என்பவற்றின் ஈற்றுமெய் வல்லினம்வரின் இயல்பாகும்.
சாத்தன் என்பது பொதுப்பெயர். இது ஒருமனிதனையுங் குறிக்கலாம். ஒரு எருத்தையுங் குறிக்கலாம்.
சாத்தன் கட்டையன், சாத்தன் சிறியன், இவ்வாறு தீயன் பெரியன் என்பவற்றையுங் கூட்டி இயல்பாதல் காண்க.
சாத்தன் என்பதோடு கரிது, சிறுது, தீது, பெரிது முதலாய வற்றைக்கூட்டி அஃறிணையிலும் இயல்பாவது காண்க.
உயிரெழுத்துக்கள், ய, ர என்னும் எழுத்துக்கள் நிலை மொழியீற்றில் வரும் போதும் இயல்பாகப் புணரும். அவ்வாறு வருதலை சாத்தி, தாய், அவர் என்னும் நிலைமொழிகளின் முன் வல்லின எழுத்தை முதலாகக் கொண்ட வருமொழிகளைக்
கூட்டியுணர்க.
சாத்தி + க ண் டா ஸ் - சாத்தி கண்டாள், தாய் -- போனாள்  ைதாய் போனாள், அவர் + சாடினார் : அவர்
சாடினார் எனவரும்.
சில உயர் திணைப் பெயர்களின் முன் வல்லினம் வந்து புணரும் போது விகாரப்பட்டு வரும்.
குமரன் + கோட்டம் என்பது குமரக் கோட்டம் எனவும் குமரகோட்டம் எனவும் ஈறுகெட்டு வல்லெழுத்துமிக்கும் ஈறு
്യഭ്
கெட்டு இயல்பாகவும் வரும்,
வேளாளன் + பிள்ளை - வேளாண் பிள்ளை எனவரும். ஈற்று 'அன்' கெட்டு ளகர மெய் ணகர மெய்யாகத் திரிந்து முடிந்தது.
95鬣

Page 57
பார்ப்பான் + கன்னி ஊ பார்ப்பனக் கன்னி ஈனவரும். இது ஈற்றயல் குறுகி அகரச் சாரிலை பெற்று வருமொழி வல்லெழுத்து மிக்கு முடிந்தது.
மக்கள் + சுட்டு ஊ மக்கட்சுட்டு எனவரும். இதில் ளகர மெய் டகர மெய்யாகத் திரிந்தது.
இங்கு காட்டிய புணர்ச்சிகள் பற்றி ஞாபகப்படுத்தவேண்டிய நூற்பா,
**பொதுப்பெய ருயர்திணைப் பெயர்க ளிற்று மெய் வலிவரின் இயல்பாம் ஆவியரமுன் வன்மை) மிகாசில விகரமா முயர்திணை' - நன். உயி.9) என்பது.
இதில் மூன்று விதிகள் கூறப்பட்டுள்ளன.
1. பொதுப்பெயர் உயர்தினைப் பெயர் களிறு வலிவர இயல்
t. j тај б).
2. உயிரி, ய, ர, முன் இயல்பாதல்.
உயர்திணையிற் சில விகாரப்படுதல். என்பனவே அவை,
வினாப் பெயர் விளிப் பெயர் புணர்தல்
நிலைமொழியிறுதியில் நிற்கும் யா என்னும் வினா முன்னும் ஏனைய ஏ, ஆ, ஒ என்னும் வினாக்கள் முன்னும் உயிரீறும்
மெய்யீறுமாகிய விளிப்பெயர்களுக்கு முன்னும் வருமொழி வல்லெழுத்துக்கள் இயல்பாகப் புணரும்.
சாத்தனா, சாத்தனே, சாத்தனோ என்னும் வினாப்பெயர் களின் முன் கண்டான், சென்றான், தந்தான், போனான் என்னும் வல்லின மெய்யை முதலாகவுடைய சொற்களைக் கூட்டி இயல்பாவது காண்க. யா என்னும் வினாமுன் வருமாற்றை வந்தாயா கந்தா, சாந்தா தேவா, பூதா என் பவற்றைக் கூட்டி இயல்பாதல் காண்க,
விளிப்பெயர்களாகிய பொன்னா, பிள்ளாய், தோழி, மக்காள் என்பவற்றின் முன்னும் கொள், செல், தா, போ என்பவற்றைக் கூட்டி இயல்பாதல் அறிக்
鷲96

முன்னிலை வினை முன்னும் ஏவல் முன்னும் வல்லினம் புணர்தல்
உயிரையும் ய, ர, ழ என்னும் மூன்று மெய்களையும் ஈறாகவுடைய முன்னிலை வினைமுற்றுக்களும் ஏவல் வினை முற்றுக்களும் அவற்றின் முன்வரும் க, ச, த, பக்கள் இயல் பாகவும் விகற்பமாயும் வரும், இயல்பாக வருதலே பெரும்பாலும் நிகழும். விகற்பமாவது இயல்பாயும் மிக்கும் வருவது.
உண்டனன், உண்டாய், உண்டீர் என்பவற்றோடு கொற்றா, சாத்தா, தேவா, பூதா என்பவற்றைக் கூட்டி இயல்பாதல் $(Tତ୍t&s.
வா, பாய், சேர், வாழ் என்னும் ஏவல்வினை முன்னும் கொற்றா முதலிய வண்கணங்களைக் கூட்டி இகல்பாதல் அறியப்படும்.
விகற்பித்து வருதலுக்கு நட கொற்றா, நடக்கொற்றா என வருமெனச் சில உரையாசிரியர்கள் கூறுவர். வல்லினம் மிக்கு வருதல் இக்காலத்தரிதென்க.
உயிர்முன் உயிர் புணர்தல்
உயிர் ஈற்று மொழிமுன் உயிர் முதல்மொழி வந்து புணரு மாற்றிற்கு நன்னூலாசிரியர் கூறியுள்ள நூற்பாவை மணனஞ் செய்துவைத்திருப்பது உதவியாக இருக்கும்.
"இ ஈ ஐ வழி யவ்வு மேனை
உயிர்வழி வவ்வும் ஏமுனிவ் விருமையும் உயிர்வரி னுடம்படு மெய்யென் றாகும்."
(நன். உயிரீற். 12)
நிலைமொழியீற்றில் நின்ற இகர, ஈகார, ஐகாரங்களுக்கு முன்னே உயிரெழுத்தை முதலாகக் கொண்ட வருமொழி வருமாயின் அவ்விரண்டு உயிர்களையும் உடன்படுத்துமுகமாக இயகர மெய் தோன்றும்.
மணி 4 அழகு - மணியழகு எனவும், தீ + எரிகிறது : தீயெரிகிறது எனவும், மலை + அரிது = மலையரிது எனவும் இகர, ஈகார ஐகாரங்களின் முன் யகரவுடம் படுமெய் வந்தது.
ア 97鯊

Page 58
விள + அழகு = விளவழகு, பலா + அரும்பியது - பலா வரும்பியது, கடு + அரிது = கடுவரிது, பூ + அழகு = பூவழகு, நொ + அழகு = நொவ்வழகு, நோ + அழகு = நோவழகு, கெள + அழகு கெளவழகு என ஏனைய உயிர்களாகிய அ, ஆ, உ, ஊ, ஒ, ஓ, ஒள என்னும் உயிர்களின் முன் வகர உடம்படுமெய் வந்தது. சே + அடி வ சேவடி, சேயடி என வகர யகர உடம்படுமெய்களை ஏகார உயிர்பெற்று வந்தது. உடம்படு மெய்யென்பது நிலைமொழியீற்றிலும் வருமொழி முதலிலும் நின்ற உயிரெழுத்துக்களை உடன்படுத்தும் மெய் ஆகும். உடம்பாக அடுக்கும் மெய்யெனினுமாம்.
எகர வினா முச்சுட்டின் முன் நாற்கணம் புணர்தல்
எகர வினாவிடைச் சொல்லுக்கும் மூன்று சுட்டிடைச் சொற்களுக்கும் முன்னே வருமொழி முதலில் உயிரெழுத்தேனும் யகர மெய்யெழுத்தேனும் வந்தால் வகர மெய்யும், யகர மெய்யொழிந்த பிற மெய்கள் வந்தால் வந்த மெய்யும் மிக்கு வரும். செய்யுளில் சுட்டெழுத்து நீளுமிடத்து யகர மெய் தோன்றும் .
எ + அணி ஊ எவ்வணி, அ + அணி ஊ அ வ் வ ணி, இ + அணி = இவ்வணி, உ + அணி = உவ்வணி, எ + யானை = எவ்யானை. என எகர வினாமுசுட்டின் முன் உயிரும் யகரமும் வர வகர மெய் தோன்றிற்று,
இவற்றின் யகர மொழிந்த ஏனைய மெய்கள் வரும்போது வந்தமெய்மிகுவதற்கு உதாரணம். எ, அ, இ, உ என்பனவற்றை நிறுத்தி களிறு, சேனை, தடி, படை என்பவற்றை வருமொழி ஆக்கும் போது வந்த மெ ய் யி க் கு எக்குதிரை என்பது முதலாக வரும், செய்யுளில் அ & இடை  ைஆயிடையென வரும். இது சுட்டு நீண்டவிடத்து யகரந் தோன்றியமைக்குதாரணம்,
உகரத்தின் முன் உயிரும் யகரமும் புணர்தல்
உயிர்வரி னுக்குறள் மெய்விட் டோடும்
யவ்வழி னிய்யாம் முற்றுமற் ரொரோவழி.
(நன். உயிரீற்.14)
感98

நிலைமொழியிறுதி குற்றியலுகரமாக இருப்பின் வருமொழி முதலில் உயிரை முதலாகவுடைய சொல் வருமாயின் குற்றிய
லுகரம் தான் நின்ற மெய்யை விட்டோடிவிடும்.
கொக்கு + அலகு = கொக்க் + அலகு என நின்று மெய்யின் மேல் உயிரேறிக் கொக்கலகு எனவரும். ஏனைக் குற்றியலுகர மொழிகளுக்கு முன்னும் உயிர் முதல் மொழியை வருவித்தால் குற்றியலுகரங்கெடுவதைக் காணலாம். யவ்வரின் இய்யாம்" என்பதால் வரகு + யாது = வரகியாது எனவரும். இது குற்றிய லுகரம் இகரமாகத் திரித்ததற்கு உதாரணம், ஏழு என்பதில் உகரம் இடையின மெய்யின் மேல் ஏறிநின்றது, ஏழு என்பதன் முன் எடுத்தான் என்பதைச் சேர்க்கும் போது ஏழெடுத்தான் என வருகிறது. இங்கு முற்றியலுகரமும் உயிர் வரும்போது கெடுவதைக் காணலாம்.
உயிரீற்றின் முன் வல்லினம் புணர்தல்
இயல்பிறாகவேனும் விதியீறாகவேனும் நின்ற உயிரீற்று
நிலைமொழியின் முன் க, ச, த, ப என்பவற்றுள் ஒன்றை
முதலாகவுடைய வருமொழி வருமாயின் வந்தமெய் மிக்குப்
புணரும். பின்னர் சிறப்பு விதியிற் கூறப்படாத சொற்கள்
அனைத்தும் இவ்வாறு மிக்குப் புணருமெனக் காண்க.
ஆட 4 சென்றான் = ஆடச்சென்றான், ஒடா + குதிரை = ஒடாக்குதிரை, தேடி + சென்றான் - தேடிச்சென்றான் என்பது முதலாக இயைத்துக் காண்க. இதற்குத் தரப்பட்ட நன்னூற் சூத்திரம் பின்வருமாறமைகிறது.
* இயல்பினும் விதியினும் நின்ற வுயிர்முன்
கசதப மிகும் வித வாதன மன்னே."
(நன். உயிரீற். 15) என்பது.
உயிரீற்று மரப் பெயர்க்குச் சிறப்பு விதி
வேற்றுமைப் புணர்ச்சியில் உயிரீற்றையுடைய மரப் பெயர்கள் சிலவற்றின் முன் க, ச, த, ப என்னும் வன்கணம் வருமாயின் வந்த வல்லெழுத்தின் இன ம்ெல்லெழுத்து மிக்கு முடிவது முண்டு,
விள + காய் ஊ விளங்காய் எனவும் மா + பழம் என மாம்பழம் எனவும் காயா + கோடு க காயாங்கோடு எனவும் வரும் . காய்
99囊
Y

Page 59
என்பதற்கு இனமான நகர மெய்யும் பழம் என்பதில் பகரத்துக் கினமான மகர மெய்யும் கோடு என்பதற்கினமான நுகர மெய்யும் மிக்கு முடிந்தமை காண்க. பலாக்காய், அத்திப்பூ என்பன வல்லினம் மிக்கன்றி முடியா .
அகரவீற்றின் முன் வல்லினமியல்பாதல்
உயிரீற்றின் முன் க, ச, த, ப க்கள் மிக்கு வருவதையும் இனமெல்லெழுத்து மிக்கு வருவதையும் முன்னர்க் கண்டோம். இப்போது சில அகர வீற்றின் முன் வல்லினம் இயல்பாதலைக் காண்போம்.
செய்யிய என்னும் வினையெச்சம் அகரவீற்றுப் பெய ரெச்சம், அகரவீற்று முற்று, அகரவீற்று ஆறாம் வேற்றுமை உருபு அகரவீற்று அஃறிணைப் பன்மைச் சொற்கள், அம்ம என்னும் உரையசையிடைச் சொல் ஆகியவற்றின் முன் வன் கணமான க, ச, த, ப க்களை முதலாகவுடைய மொழிகள் வருமாயின் இயல்பாகப் புணரும்.
உண்ணிய + சென்றான் = உண்ணிய சென்றான் எனவும் செய்யியவென்னும் வினையெச்சத்தின் முன் இயல்பாயிற்று.
உண்ட + குதிரை = உண்ட குதிரை, பெயரெச்சத்தின் முன் இயல்பாயிற்று.
உண்டன + குதிரைகள்  ைஉண்டன குதிரைகள். இங்கு அகர வீற்றுமுற்றின் முன் இயல் பாயிற்று.
தன + கைகள் - தன கைகள். இங்கு ஆறாம் வேற்றுமை ஆறனுருபின் முன் இயல்பாயிற்று.
பல + குதிரைகள் என பல குதிரைகள். இங்கு அஃறிணைப் பன்மை முன் இயல்பாயிற்று.
அம்ம + கொற்றா  ைஅம்ம கொற்றா என உரையசைச் சொல் முன் இயல்பாயிற்று. ஏனைய வல்லின முதலெழுத்துச் சொற்களோடும் ஒட்டி இயல்பாதல் அறிக.
வாழிய என்னும் அகரவீற்றுச் சொல் முன் வல்லினம் வரும்போது வகர மெய்கெட்டு இயல்பாகப் புணரும். வாழிய + சாதிதா : வாழி சாத்தா எனவரும்.
囊 100

 ̄- ܘܢܛ
சாவ என்னும் மொழியின் ஈற்றுயிரி மெய்கெடுதலும் விதியாகும். சாவ & குத்தினான் = சாக்குத்தினான் எனவும் வரும்.
வலசில என்னும் மொழிகள் புணர்தல்
பல, சில என்னுஞ் சொற்கள் தம்மோடு தாம் வரும்போது இயல்பாக வருதலும் வந்தவெழுத்து மிக்கு நிலைமொழியிறுதியில் உள்ள அகரவுயிர் நீங்க லகரம் றகரமாக வருதலுமுண்டு பல, சில என்பவற்றுக்கு முன்னே வன்கணம் வரும்போது அகரம் நிற்பதும் நீங்குவதுமாகிய விகற்பம் பெறுதலுமுண்டு.
1. இயல்பாக வருதல் - பலபல, சில சில 2. மிக்கு வருதல் - பலப்பல, சிலச்சில 3. லகரம் றகரமாதல் - பற்பல சிற்சில
4. பிறவரின் விகற்பமாதல் - பல 4. பகல் = பலபகல் எனவும் சில + பகல்  ைசிலபகல் எனவும் பற்பகல், சிற்பகல் எனவும்
வரும்,
ஆகாரத்தின் முன் வல்லினம் புணர்தல்
ஆ, மா, மியா, என்பவற்றின் முன்னும் ஆகாரவிற்றுப் பலவின்பாற் படர்க்கை எதிர்மறை வினைமுற்றுக்கு முன்னும் வல்லினம் வரும்போது இயல்பாகப் புணரும்.
ஆ + குறிது  ைஆகுறிது எனவும், மா + குறிது = மாகுறிது எனவும், ஆ, மா என்பவற்றுக்கு முன் வல்லினம் இயல்பாயிற்று. மற்றைய வல்லெழுத்துக்களோடுஞ் சேர்த்துக் காண்க.
கேண்மியா + பூதா என்பது கேண்மியா பூதாவென மியா என்னும் உரையசை முன் இயல்பாயிற்று.
உண்ணா + குதிரைகள் என்பது உண்ணாகுதிரைகள் என ஆகார வீற்று எதிர்மறைப் பலவின்பாற் படர்க்கை முன் இயல் பாயிற்று. நிலா என்னுஞ் சொல் புணர்தல்
செய்யுளில் நிலாவென்னுஞ் சொல் ஆகாரங் குறுகுதலும்
அவ்வாறு குறுகி உகரமேற்றலும் இயல்பாதலுமாகிய மூன்று நிலைகளைப் பெறும்.
101 N

Page 60
1. நில விரி காணல்" - நிலா என்பதிலுள்ள ஆகாரங்
குறுகி அகரமாயிற்று.
2. "என் செயுமோ நிலவு' - ஆகாரங் குறுகி உகரமேற்றது.
3. 'நிலா வணங்கு" - இயல்பாக வந்தது.
அன்றி இன்றி என்பன புணர்தல்
அன்றி, இன்றி என்னும் வினையெச்சங்களின் இகரங்கள் செய்யுளில் உகரமாக வருதலுமுண்டு ,
"வாளன்று பிடியா வன்கணாடவர்" இங்கு அன்றி என்பது "அன்று ஆயிற்று.
'உப்பின்று புற்கை யுண்கமா கொற்கையோனே' - இங்கு இன்றி என்னும் வினையெச்சம் இன்று என வந்தது.
புளி என்பது புணர்தல்
சுவைப் பெயராகிய புளி என்பதன் முன்னரி வல்லினம் வரும்போது வந்த எழுத்தின் இனமெல்லெழுத்துத் தோன்றுவது முண்டு. புளி + கறி புளிங்கறி எனவும் புளி + சோறு = புளிஞ் சோறு எனவும் வரும். பொது விதிப்படி வல்லினம் மிகுதலே பெரும்பான்மை என்க.
இகர ஐகார வீறு புணர்தல்
அல்வழியில் இ, ஐ என்பவற்றுக்கு முன்னே வல்லினத்தை முதலாகவுடைய வருமொழி வருமாயின் இயல்பாக வருவதும் மிக்கு வருவதும் விகற்பித்து வருவதுமுண்டு.
புலி + சிறிது = புலிசிறிது யானை + பெரிது - யானை பெரிது என இயல்பாயிற்று.
மார்கழி - திங்கள் = மார்கழித் திங்கள் எனவும், தை 4 திங்கள் = தைத்திங்கள் எனவும் இகர முன்பும் ஐகார முன்பும் வல்லினம் மிக்கது.
கிளி + குறிது = கிளிக்குறிது, கிளி குறிது எனவும், திணை சிறிது, தினைச் சிறிது என விகற்பித்தும் வந்தன.
குற்றியலுகரத்தின் முன் வல்லினம் புணர்தல்
வன்றொடர்க் குற்றியலுகரந் தவிர்ந்த ஏனைய ஐந்து
தொடரிக் குற்றியலுகரங்களின் முன்னும் வல்லினம் வந்தால் இயல்பாகப் புணரும்.
藻102

நாகு + கரிது = நாகு அரிது என நெடிற்றொடர்
முன் இயல்பாயிற்று. வரகு + சிறிது = வரகு சிறிது என உயிரித்தொடரி
முன் இயல்பாயிற்று. நுங்கு + குடித்தான் = நுங்கு குடித்தான் என மெற்றொடரி
முன் இயல்பாயிற்று. செய்து + காட்டினான் = செய்து காட்டினான் என இடைத்
தொடர் முன் இயல்பாயிற்று.
எஃகு + கூரிது = எஃகு கூரிது என ஆய்தத் தொடர்
முன் இயல்பாயிற்று. வன்றொடர் - கொட்டு * பனை = கொட்டுப்பனை என மிக்கு வந்தது.
ஏழாம் வேற்றுமை இடப்பொருளுணர நின்ற அங்கு, இங்கு, உங்கு, எங்கு, யாங்கு, ஆண்டு, ஈண்டு முதலாய மென்றொடர்க் குற்றியலுகர வீற்றுச் சொற்களின் முன் வல்லினம் மிக்கு வருதலுண்டு.
அங்குச் சென்றான், இங்குப் போனான் என வரும் மற்றையவற்றோடும் வல்லின மொழிகளைச் சேர்த்து மிக்கு வருதல் காண்க.
வேற்றுமையில் குற்றியலுகரம் புணர்தல்
இடைத் தொடர், ஆய்தத் தொடர், இடையே ஒற்றுமிகாத நெடிற்றொடர் உயிர்த் தொடர் என்பனவற்றின் முன் வேற்று மையில் வல்லினம் இயல்பாகப் புணரும். இடையே ஒற்று மிகுந்த நெடிற் தொடர் உயிர்த் தொடர் யாவை யெனின் வீடு என்னும் நெடிற் றொடர் வீட்டு எனவும் வயிறு என்னும் உயிர்த்தொடரி வயிற்று எனவும் நிற்பனவாகும். இவை வேற்றுமைவழிக்குரிய இலக்கணம்.
மார்பு + கடுமை : மார்பு கடுமையென இடைத்தொடர்
இயல்பாயிற்று.
எஃகு + சிறுமை = எஃகு சிறுமையென ஆய்தத் தொடர் முன்
இயல்பாயிற்று.
103蠢

Page 61
நாகு + தீமை ஊ நாகு தீமையென ஒற்றிடைமிகாத நெடில்
மூன் இவல்பாயிற்று. வரகு + கதிர் = வரகு கதிரி என ஒற்றிடைமிகாத உயிர்த்
தொடர் முன் இயல்பாயிற்று.
வன்றொடர் முன்னும் மென்றொடர் முன்னும் வலிமிக்கு வரும். வண்டுக்கால், கொக்குச்சிறை என்பன உதாரணங்களாகும்.
நெடிற்றொடர் உயிர்த்தொடர் புணர்தல்
"நெடிலோ டுயிர்த்தொடர்க் குற்றுக ரங்களுள்
டறவொற் றிரட்டும் வேற்றுமை மிகவே” (நன். உயி,33)
நெடிற்றொடர், உயிர்த்தொடர் ஆகிய இருவகைக் குற்றிய லுகர வீற்றுச் சொற்களின் முன் வேற்றுமையில் ட, ற என்னும் ஒற்றுக்கள் இரட்டித்து வரும்.
ஆடு * கால் = ஆட்டுக்கால் என நெடிற்றொடரி முன் டகரவொற்று இரட்டித்து வந்தது.
சோறு + வளம் சோற்றுவளம் என றகரவொற்று இரட்டி வந்தது.
வயிறு + கழலை  ைவயிற்றுக் கழலை என உயிர்த்தொடர் முன் வல்லொற்றிரட்டி வந்தது.
டறவொற்றுக்கள் அல் வழியில் இரட்டுதலும் பிற வொற்றுக்கள் சிறுபான்மையிரட்டுதலுங் கொள்ளப்படும்.
காடு + அரண் ம காட்டரண் எனவும் களிறு + யானை : களிற் றுயானை எனவும் நெடிற்றொடர் உயிர்த்தொடர்களின் முன் ட, ற வொற்றுக்கள் அல் வழியில் இரட்டின.
வெருகு + கண் = வெருக்குக் கண் எனவும் எருது + மாடு க எருத்துமாடு எனவும் வேற்றுமையிலும் அல் வழியிலும் பிற வொற்றுக்கள் இரட்டின.
மென்றொடர் முன் நாற்கணம் புணர்தல்
"மென்றொடர் மொழியுட் சிலவேற் றுமையில்
தம்மின வன்றொட ராகா மன்னே" (நன். உயி. 34)
懿104

மென்றொடர்க் குற்றியலுகரங்களுள் சில வேற்றுமை வழியில் வன்றொடரிக் குற்றியலுகரமாகா. எனவே பல வன் றொடர்க் குற்றியலுகரமாகும். மருந்து என்பது மருத்து என வரும்போது வன்றொடராகும்.
மருந்து + பை  ைமருத்துப்பை எனவும், குரங்கு + மனம் வ குரக்கு மனம் எனவும் வன்றொடராயின. இவை வேற்றுமையில்
வண்டு + கால் = வண்டுக்கால் எனவும், சங்கு + இனம் ஊ
சங்கினம் எனவும் வன்றொடராகாது வந்தன.
நஞ்சு + மனம் - நச்சு மனம் எனவும், இரும்பு + மனம் ை இருப்பு மனம் எனவும் அல் வழியில் வன்றொடராயின.
குரங்கு + குட்டி = குரங்குக் குட்டியென்வும் குரக்குக் குட்டி யெனவும் வேற்றுமையில் விகற்பித்து வந்தன.
அன்பு + தளை = அன்புத் தளையெனவும் அற்புத் தளை யெனவும் அல்வழியில் விகற்பித்து வந்தன.
மென்றொடர்க் குற்றியலுகரங்களுட் சில ஐயீறு பெற்றுப் புணர்வதுமுண்டு. பண்டு + காலம் = பண்டைக்காலம் எனவும் இன்று + நாள் = இற்றை நாள் எனவும், முந்து + வளம் = முந்தை வளம் எனவும், அன்று + கூலி = அற்றைக் கூலி எனவும் வரும்.
5今○9 Cン (ー
திசைப் பெயர்கள் புணர்தல்
"திசையொடு திசையும் பிறவுஞ் சேரின்
நிலையீற் றுயிர்மெய் கவ்வொற்று நீங்கலும் றகரம் னலவாத் திகிதலு மாம்பிற" (நன். உயி,36) திசைப் பெயரோடு திசைப் பெயர் சேரும் போது நிலை மொழியீற்றிலே நின்ற உயிர்மெய்யும் அதன் முன்னின்ற ககர மெய்யும் கெடுதலும், ஈற்றுயிர் மெய்கெட்டு றகர மெய் னகர மெய்யாகவேனும் லகர மெய்யாகவேனுந் திரிதலும் இடம் பெறும்.
வடக்கு + கிழக்கு = வடகிழக்கு ஆகும். ஈற்றுயிர் மெய்யும் அதன் முன்னின்ற மெய்யுங்கெட்டு ‘வட" என நின்று வட கிழக்கு ஆயிற்று.
105灘

Page 62
வடக்கு டி மேற்கு = வடமேற்கு என வருவதற்கும் இதுவே விதியாகும். திசைப் பெயரோடு பிற பெயரி சேரும் போதும் மேற்கூறிய விதியைப் பெறும்.
குணக்கு + திசை = குணதிசை எனவும், குடக்கு $ திசை = குடதிசை எனவும் வரும்.
தெற்கு + கிழக்கு = தென்கிழக்கு எனவரும், தெற்கு என்பதிலுள்ள ஈற்றுயிர்மெய் கெட்டு தெற்" என நின்று றகரம் னகரமாகத் திரிந்து தென்கிழக்கென வந்தது.
மேற்கு + காற்று = மேல்காற்று. இங்கே ஈற்றுயிர்மெய் கெட்டு றகரவொற்று லகரவொற்றாகத் திரிந்தது.
சூத்திரத்தில் பிற என்ற மிகைச் சொல் சேர்க்கப்பட்டிருத் தலால் கிழக்கு ஆ காற்று = கீழ்காற்று என உயிர்மெய்யும் ககரவொற்றும் அகரமுங்கெட்டு முதல் நீண்டு வந்தது.
தெங்கு என்பதற்குச் சிறப்பு விதி
தெங்கு என்னும் மென்றொடர்க் குற்றியலுகரத்தின் முன் காய் என்பது வருமாயின் தெங்கு என்ற சொல்லின் முதல் எழுத்து நீண்டு அதானது "தேங்கு' என நின்று, ஈற்றிலுள்ள உயிர்மெய்கெட்டு தேங் + காய் = தேங்காய் எனவரும்.
தெங்கு நீண் டீற்றுயிர் மெய்கெடுங் காய்வரின்"(நன்.உயி.37) என்னுஞ் சூத்திரம் நினைவில் இருத்தத் தக்கது.
எண்ணுப் பெயர்கள் புணருமாறு
வருமொழியில் எண்ணலளவைப் பெயரும் நிறுத்தல், முகத்தல் முதலாய அளவைப் பெயர்களும் வருமாயின் ஒன்று, இரண்டு என்னும் எண்ணுப் பெயரி நிலைமொழியில் நிற்கும் போது அவற்றின் ஈற்றுயிர்மெய்கெட்டு ஒன், எனவும் இரண்டு என்பதன் ஈற்றுயிர் மெய்கெட்டு இரண் எனவும் நிற்கும். பின் அவை முதல் நீண்டு ஒன், ஈரண் என நிற்கும். ஒன் என்பதிலுள்ள ணகரவொற்று ரகரவொற்றாகத் திரிந்து ஒர் எனவும் அவ்வாறே ஈரண் என்பதன் ஈற்று ணகர மெய்யும் அதன் முன்னுள்ள அகரமுங் கெட்டு ஈரி எனவும் நிற்கும்.
藝106

ஒன்று + ஆயிரம் = ஒராயிரம் எனவும், ஒன்று + உயிரி = ஒருயிர் எனவும் வரும்.
இரண்டு + ஆயிரம் = ஈராயிரம் எனவும் இரண்டு + உயிர் = ஈருயிர் எனவும் வரும். ஒன்று இரண்டு என்பன திரிந்த நிலையில் நிற்பதை வைத்து ஓர் * ஆயிரம் என்றும் ஈர் + ஆயிரம் என்றும் புணர்த்தலாம்.
மூன்று என்னும் எண்ணின் முதல்குறுகி ஈற்றுயிர் மெய் கெட்டு முன்" என நிற்கும். அவ்வாறே ஆறு ஏழு என்பனவுங் குறுகி அறு எழு என நிற்கும். மூன்று, முன் என நின்று ஈற்று மெய்கெட்டு மு 4 நூறு 9 முந்நூறு என வரும்.
ஆறு சீ பத்து = அறுபது எனவும் ஏழு + பத்து = எழுபது எனவும் வரும். ஏழு குறுகி எழு என நின்று ஈற்றுயிர்கெட்டு ஏழ் என நிற்கும். ஏழு + கடல் ஏழ்கடல் எனவரும்.
ஒன்று இரண்டு என்பவற்றுக்குச் சிறப்புவிதி
ஒன்று என்பது ஒன் என நிற்கும் எனவும் இரண்டு என்பது ஈரண் என நின்று ஈற்றுமெய்யும் அகரமுங்கெட ஈர் என நிற்கும் எனவும் முன்னர்க் கண்டோம். அவ்வாறு மட்டுமன்றி ஒன் என நின்ற னகர மெய் ரகர மெய்யாகி ஒர் எனவும் இரண்டு முன்னரே ஈற்றுயிர் மெய்கெட்டு இரண் என நின்று ணகர மெய்யும் ரகரத்திளுள்ள அகரவுயிருங்கெட்டு இர் எனவும் நிற்கும் இவையிரண்டும் உகரம்பெற்று ஒரு எனவும் இரு எனவும் வரும். ஆதலால்
ஒன்று + ஆயிரம் = ஒராயிரம் என ஒன்று முதல் நீண்டு ஈற்றுயிர் மெய்கெட்டு னகரம் ரகரமாயிற்று.
இரண்டு + ஆயிரம் ஈராயிரம் என வரும். இரண்டு முதல் நீண்டு ஈற்றுயிர் மெய்யும் ணகர மெய்யும் அகரவுயிருங்கெட்டன.
ஒன்று * ஆயிரம் = ஒராயிரம், இரண்டு + ஆயிரம் = இராயிரம் என்பன முதல் நீளாமல் ரகர மெய்யின் மேல் உகரம் பெற்று வந்தன. ,
ஒன்று + நாள் = ஒருநாள், இரண்டு + நாள் = இருநாள் என முதல் நீளாமல் ரகர மெய்யின் மேல் உகரம் பெற்று வந்தன.
107灘

Page 63
மூன்று என்பது புணர்தல்
மூன்று என்னும் எண் வருமொழி வந்து புணரும் போது
இறுதிகெட்டு நின்று அதன் னகர மெய்கெட்டு "மூ" என
நிற்பதும் வருமொழியின் மெய் மிக்கு வருதலும் உண்டு.
மூன்று + ஆயிரம் = மூவாயிரம் எனவும் மூன்று + உலகு = மூவுலகு எனவும் வரும். இவை உயிர்வர முதல் குறுகாமல் ஈற்றுயிர் மெய்யும் னகர மெய்யுங்கெட்டன. மூன்று + காலம் = முக்காலம், மூன்று + நூறு = முந்நூறு, மூன்று + வட்டி = முவ் வட்டி என மெய்வர முதல் குறுகி ஈற்றுயிர் மெய்கெட்டு னகர மெய் வந்த மெய்யாகத் திரிந்தது.
நான்கு என்னும் எண் புணர்தல்
"நான்கன் மெய்யே லறவாகும்மே" (நன். உயி. 41) நான்கு என்பதன் ஈறுகெட்டு நான் என நின்று னகர
மெய் "ல" அல்லது ற வாகத் திரியும். நான்கு + அடி,
நான் + அடி, நால் + அடி = நாலடி எனறாயிற்று.
நான்கு + பத்து என்பதும் மேற்காட்டியவாறு மாற்றம் பெற்று னகர மெய் றகர மெய்யாகத் திரிந்து நாற்பது என வந்தது.
ஐந்து என்னும் எண் புணர்தல்
"ஐந்தனொற் றடைவது மினமுங் கேடும்" (நன் உயி,48)
இறுதியுயிர் மெய்கெட நின்ற ஐந்து என்னும் எண்ணின் நகரவொற்றானது வரும் மெய்யாகத் திரிவதும் வரும் மெய்க்கு இனமாகத் திரிவதும் கெடுதலுமாகிய மூன்று நிலைகளைப் பெறும். 1. ஐந்து * மூன்று = ஜம்மூன்று. இங்கு மெல்லினம் வர நகரம்
வருமெய்யாகத் திரிந்தது. .ே ஐந்து + கலம் - ஐங்கலம், இங்கு வல்லினம் வர நகரம்
வருமெய்க்கு இனமாகத் திரிந்தது.
3. ஐந்து சி ஒன்று = ஐயொன்று, ஐந்து + வட்டி = ஐவட்டி
என உயிரும் இடையினமும் வர நகரங்கெட்டது.
ఫ్లో 108

எட்டு என்னும் எண் புணர்தல்
"எட்ட லுடம்பு ணல்வாகு மென்ப" (நன். உயி. 48)
இறுதியுயிர் மெய் கெட்டு நின்ற எட்டு என்னும் எண்ணினது
டகர மெய் ணகர மெய்யாகத் திரியும்.
எட்டு + பத்து = என்பது. இங்கு உயிர்மெய் கெட்டு டகர மெய் ணகர மெய்யாகத் திரிந்தது.
ஒன்பது என்னும் எண் புணர்தல்
ஒன்பது என்னும் எண்ணுடனே பத்து அல்லது நூறு என்னும் எண் வருமொழியாக வருமாயின் வருமொழிகளாகிய பத்து, நூறு என்பவற்றை முறையே நுாறு, ஆயிரம் எனத் திரித்து நிலைமொழி முதலிலுள்ள ஒகரவுயிரோடு தகர மெய்யைச் சேர்த்து நிலைமொழியிறுதியிலுள்ள பது என்பதை அகற்றி நிலைமொழியில் உள்ள னகர மெய்யை னகர மெய்யாகவும் ளகர மெய்யாகவுத் திரிப்பது முறையாகும்.
1. ஒன்பது + பத்து, ஒன் + நூறு,
தொன் + நூறு, தொண் + நூறு = தொண்ணுாறு 2. ஒன்பது 4 நூறு , ஒன் + ஆயிரம்,
தொன் + ஆயிரம், தொள் + ஆயிரம் = தொள்ளாயிரம்
இதற்கு நன்னூலார் தந்த சூத்திரம் வருமாறு. 'ஒன்பா னொடுபத்து நூறு மொன்றின் முன்னதி னேனைய முரணி யொ வ்வொடு தகரம் நிறீப் பஃதகற்றி னவ்வை நிரலே ணளவாத் திரிப்பது தெறியே" (நன். உயிரீற். 44)
பத்து என்னும் எண் புணர்தல்
பத்து என்னும் எண்ணின் முன்னே ஒன்று முதலாகிய பத்து எண்களும் ஆயிரம்" கோடி என்னும் எண்ணுப் பெயர்களும் நிறைப் பெயர், அளவுப் பெயர், பிற பெயர் என்பனவும் வருமாயின் பத்து என்பதன் ஈற்றிலுள்ள உயிர்மெய்யைக் கெடுத்து, இன் சாரியை அல்லது இற்றுச் சாரியையில் ஏதாவது ஒன்றை இடமறிந்து சேர்த்தல் வேண்டும். பத்து + ஒன்று = பதினொன்று, பதிற்றொன்று எனவரும். பத்து 8 ஆயிரம் = பதினாயிரம், பதிற்றாயிரம் எனவரும்.
109鯊

Page 64
பத்து 4 கோடி = பதின்கோடி, பதிற்றுக்கோடி எனவரும் தீது ஸீ கலம் = பதின்கலம், பதிற்றுக்கலம் எனவரும் .
பத்து + மடங்கு = பதின்மடங்கு, பதிற்றுமடங்கு எனவரும்.
இரண்டு என்னும் எண்ணுப் பெயர் முன் வருமாயின் நிலைமொழியாகிய பத்து என்பதன் ஈற்றில் நின்ற உயிர்மெய் மறைய "பத்" என்பதன் ஈற்று மெய்யெழுத்து னகர மெய் ஆகும் .
பத்து 4) இரண்டு = பன்னிரண்டு எனவரும்.
பத்து 4 ஒன்று = பன்னொன்று எனவும்
அத்து + மூன்று = பன்மூன்று எனவும்
பத்து + நான்கு = பன்னான்கு என வ ரு த  ைல யு ம்
காணலாம்.
*இரண்டு முன்வரிற் பத்தினிற் றுயிர் மெய்
கரந்திட வொற்று னவ்வாகு மென்ப" (நன். உயிரீற். 48)
ஒன்பதொழிந்த ஒன்பது எண்கள் தம்மொடுதாம் புணர்தல்
ஒன்று முதலாகப் பத்து ஈறாகவுள்ள எண்களுள் ஒன்பது என்னும் ஒன்றினையுந் தவிர்ந்த ஒன்பது எண்களும் இரட்டிக்கும் போது நிலைமொழியினது முதலெழுத்து அல்லாதவைகள் எல்லாங்கெட உயிர் முதலாய எண்வரின் வகர மெய்யும் மெய்யும் முதலாகிய எண்வரின் வந்த மெய்யும் மிகுதல் முறை ஆகும்.
ஒன்று + ஒன்று = ஒவ்வொன்று எனவரும். இரண்டு + இரண்டு = இவ்விரண்டு எனவரும், மூன்று 9 மூன்று = மும்மூன்று எனவரும். நான்கு + நான்கு = நந்நான்கு எனவரும்,
இதற்குச் சூத்திரம்,
*ஒன்பதொழித்த எண்ணொன்பது மிரட்டின்
முன்னதன் முன்னல வோட வுயிர்வரின் வவ்வும் மெய்வரின் வந்ததும் மினல்நெறி" (நன், உயிரி. 49)
談110

பூ என்னும் பெயர் புணர்தல்
三莎
"பூப்பெயர் முன்னர் இனமென்மையுந் தோன்றும்"
(நன். உயி. 50)
பூவென்னும் பெயர்ச் சொல்லின் முன்னே வல்லினம் முன்னர்க் காட்டிய பொதுவிதியால் மிகுதலேயன்றி அவற்றிற் கினமாகிய மெல்லினம் மிகுதலுமுண்டு.
பூ + கொடி = பூங்கொடி, பூ + சோலை = பூஞ்சோலை, பூ + தண்டு = பூந்தண்டு எனவரும். பொதுவிதிப்படி பூச்சோலை, பூக்கொடி, பூத்தண்டு என வருவதுமுண்டு.
இடைச்சொல் ஏ, ஓ புணர்தல்
"இடைச் சொல் ஏ ஒ முன் வரி னியல்பே'
இடைச் சொற்களாகிய ஏகார ஓகாரங்களின் முன்னே வல்லினம் வந்தால் பொதுவிதியால் மிகாது இயல்பாக வரும். அவனே + கொண்டான் = அவனே கொண்டான் எனவும் அவனோ + கொண்டான் = அவனோ கொண்டான் எனவும் வரும்.
ஈற்று யாவினா விளிப்பெயர்கள் இயல்பாதல் முன்னரே கூறப்பட்டதால் மற்றையவற்றுக்கே கொள்க.
ஐகார வீறு புணர்தல்
வேற்றுமை யாயின் ஐகான் இறுமொழி
ஈற்றழி வோடுமம் ஏற்பவு முனவே" (நன். உயிரீற். 52) ஐகார வீற்றுச் சொற்கள் வேற்றுமைப் புணர்ச்சிக் கண் வருமாயின் ஈற்று ஐகாரங் கெடுதலுடனே அம்சாரியை பெற்று முடிவனவுஞ் சிலவுளவாம்.
வழுதுணை + காய் = வழுதுணங்காய், தாழை + பூ = தாழdம் என ஐகாரஸ் கெட்டு அம் சாரியை பெற்றுவந்தன.
புன்னை + கானல் = புன்னையங்காணல் எனவும் முல்லை + புறவம் = முல்லையம் புறவம் எனவும் ஐகாரங் கெடாமல் அம் சாரியை பெற்றுவந்தன. முல்லைப் புறவம் கொல்லைச் சாரல் என வல்லினம் மிகுவதைப் பொதுவிதியாற் கொள்க.
111靈

Page 65
பினை முன் வல்லினம் முதலியன புணர்தல்
பனை என்னும் பெயர் முன் கொடி என்பது வருமாயின் வந்தது மிகுதலும் க, ச, த, ப க்கள் வருமாயின் நிலைமொழி யீற்று ஐகாரங்கெட்டு அம் சாரியை பெறுதலும் திரள் என்னுஞ் சொல் வருமாயின் வந்தது மிகுதலோடு ஐ போய் அம் சாரியை பெறுதலும் அட்டு என்னுஞ் சொல் வருமாயின் ஐகாரங்கெட்டு வருமொழி அகரம் ஆகாரமாதலும் உண்டு, இவ்விதிகள் வேற்றுமைப் புணர்ச்சிக்கேயுரியன.
பனை + கொடி = பனைக்கொடி கொடி வர வலிமிக்கது.
பனை + கரீப் = பனங்காய். ஐகெட்டு அம் சாரியை பெற்றது. பனை + திரள் = பனைத்திரள், பனந்திரள் என விகற்பித்தது. பனை + அட்டு = பனாட்டு. ஐகெட்டு அகரம் ஆகாரமாயிற்று.
5. மெய்யீற்றுப் புணரியல்
மெய்யீறாக நின்ற நிலைமொழிகளின் முன் உயிர் முதலாக வேனும் மெய் முதலாகவேனும் உள்ள வருமொழிகள் புணரு மாற்றைக் கூறுவதால் இவ்வியல் மெய்யீற்றுப் புணரியலாயிற்று. உயிர்மெய் முதலாகிய வருமொழிவரினும் அது மெய்யை முதற் கொண்டு நிற்றலால் மெய்ம் முதன் மொழியாகவே கொள்ளப் படும். மெய்யீற்று நிலைமொழிப்ெனவே உயிர்மெய்யீறாக வரும் மொழிகளும் உயிரீறாகக் கொள்ளப்படுதலால் அவை மெய் யிற்றுப் புணரியலில் இடம்பெறாவென்பதும் அவை உயிரீற்றுப் புணரியலில் இடம்பெறுமென்பதும் முன்னரே அறியப்பட்டவை. மெய்யின் முன் உயிர் புணர்தல்
நிலைமொழி மெய்யீறாக நிற்கும் மொழிகள் உயிர் (L356)7l. வருமொழிகள் வரும்போது நிலைமொழியிறுதி மெய் உயிரேற இடங்கொடுத்து நிற்கும். இதனையே நன்னூலார், "உடன் மேலுயிர் வந்தொன்றுவதியல்பே" (நன். மெய்யீற். 1)
எனக்கூறுவர்.
பழம் ஒ உதிர்ந்தது - பழமுதிர்ந்தது எனவரும். இதில் பழம் என்பதன் இறுதியில் நின்ற மகரவொற்றின் மேல் உதிர்ந்தது என்னும் வருமொழி முதலில் உள்ள உகரமேறிப்
It?

பழமுதிர்ந்தது என வந்தது. வேல் + எறித்தான் என்பது வேலெறிந்தான் எனவருவதற்கும் இதுவே விதியாகும். இப் புணர்ச்சி இலக்கண ஆசிரியர்களால் இயல்பு புணர்ச்சியாகக் கொள்ளப்பட்டது. நின்ற எழுத்தும் வந்த எழுத்தும் எவ்வித மாற்றமுமின்றிப் புணர்வதாலேயே இது இயல்பு புணர்ச்சி யாயிற்று. தொல்காப்பியர் உயிரையும் மெய்யையும் அன்றி உயிர்மெய்யைப் பிறிதோர் எழுத்தாகக் கொள்ளாமைக்கும் இது காரணமாகலாம்.
தனிக் குறில் முன் மெய் புணர்தல்
தனிக் குறில் என்பது முன்னரே விளக்கப்பட்டது. ஒரு குற்றெழுத்து வரும்போது அது தணிக்குற்றெழுத்து எனப் படும். மண் என்னும் மொழியில் மிகரவுயிர்மெய் தனிக்குற் றெழுத்து. என் என்பதில் எகரவுயிருந் தனிக் குற்றெழுத்தே ஆகும். மண் + அரிது, என் + உயிர் என்பன புணரும் போது மண்ணரிது எனவும் என்னுயிர் எனவும் வரும். மண் என்பதில் உள்ள ணகர மெய் இரட்டித்து மண்ண் என ஈரொற்றாக நின்று எடுத்தான் என்பதிலுள்ள எகரவுயிர் இறுதி னகர மெய்யின் மேல் ஏறி மண்ண் + எடுத்தான் = மண்ணெடுத்தான் எனவரும். என் + உயிர் = என்னுயிர் எனத் தனிக் குறில் முன்னொற்று உயிர்வர இரட்டித்து உடன் மேல் உயிரேறி முடிந்தது. -
யகரமொழிந்த மெய்ம் முன் யகரம் புணர்தல்
பகரம் என்னும் மெய்யையொழித்து மொழிக் கீறாக வருமெனப்பட்டவற்றில் மிகுதி பத்து மெய்களும் தமக்கு முன்னே யகரம் வருமாயின் இகரம் இடையில் வந்துசேரும்,
வேள் + இாவன் = வேளியாவன் எனவும் மண் ஜ் யாத்த படி மண்ணியத்த எனவும் வரும். இவ்வாறே பிறமெய்களை ஈறாகக்
கொண்ட மொழிகளுக்கு முன்னும் யகரம் வர இகரந் துன்னுதல் $rt ଜffilitas,
இவ்வாறு புணர்தலுக்கு வழிவகுக்கும் நன்னூற் சூத்திரம்
®ಕ್ತಿಗಿ?
"தன்னொழி மெய்ம்முன் யவ்வரி னிகரந்
துன்னு மென்று துணிதரு முளரே' (தன், மெப், )ே
8 113嶽

Page 66
துணிநரும் உளர் என்பதனால் வேள்யாவன், மண்யாத்த என இயல்பாக வருவதும் ஏற்றுக்கொள்ளப்படும்.
னகர னகர வீறு புணர்தல்
நிலைமொழியீற்றில் நின்ற ணகர னகர மெய்கள் வரு மொழி முதலிலே வல்லினம் வருமாயின் முறையே டகர மெய்யாகவும் றகர மெய்யாகவுந் திரியும். மெல்லினமும் இடையினமும் வந்தால் இயல்பாகப் புணரும். கண் 9 களிறு : ஆட்களிறு எனவும், பொன் + சிலை = பொற்சிலை எனவும் வரும்.
மண் + மாட்சி : மண்மாட்சி எனவும், பொன் + வன்மை = பொன் வன்  ைம யெ னவு ம் மெல்லினமும் இடையினமும் வரவியல்பாயின.
* எண்ண வல்லினம் வரடறவும் பிறவரின் இயல்பு மாகும் வேற்றுமைக் கல்வழிக்கு அனைத்து மெய் வரினு மியல்பா கும்மே”
(நன். மெய்யீற். )ே
னகர னகர வீறுகள் புணர்தல்
தனிக் குற்றெழுத்தைச் சாராது வரும் னகர னகர மேய்கள் வருமொழிக்கு முதலாக வந்த நகரம் றகரமாகவேனும் னகரமாகவேனுந் திரிந்த பின் கெட்டுவிடும். வருமொழி நகரந் திரிதலை நன்னூலாசிரியர் 'னல முன் றனவும் ணள முன் உணவும்” என்னுஞ் சூத்திரத்தால் எடுத்தோதுவரி,
துரண் + நன்று, துரண் + ணன்று என அாணன்று எனவும் ஜோன் + நல்லன், கோன் + னல்லன் - கோனல்லன் எனவும் வரும்.
"குறிலணை வில்ாை ணனக்கள் வந்த
நகரந் திரிந்துழி நண்ணுங் கேடே" (நன், மெய்யீற். ?)
னகர வீற்றுச் சாதிப் பெயர்கள் புணர்தல்
னகரத்தை இறுதியாகவுடைய சாதிப் பெயர்கள் வல்லினம் வரும்போது ஈறு திரியாமல் இயல்பாதலும் அகரச் சாரியையைப் பெற்றுவருதலுாேம்.
獵114

எயின் + குடி = எயின் குடி எனவும் எயினக் குடி எனவும் வரும், எயின் + சேரி = எயின் சேரி எனவும் எயினச் சேரி எனவும்
வரும்.
மீன் என்னும் மொழி புணர்தல்
மீன் என்னும் பெயரிலுள்ள ணகரம் வேற்றுமைப் புணர்ச்சியில் றகரமாகத் திரிந்துந் திரியாமலும் நிற்கும்.
மீன் + கண் n மீன்கண் எனவும், மீற்கண் எனவும் விகற்பித்து
வந்தது.
தேன் என்னும் மொழி புணர்தல்
தேன் என்னும் மொழியின் ஈற்று ணகர மெய்யானது வல்லினம் மெல்லினம் இடையினம் என்பவற்றுள் ஏதாவதொன்று வருமொழியில் வருமாயின் இயல்பாதலும் மெல்லினம் வந்தால் இயல்பாதலோடு இறுதிமெய் கெடுதலும் வல்லினம் வந்தால் இயல்பாதலோடு னகர மெய்இெட வல்லினமாவது அதற்கு இனமான மெல்லினமாவது மிகுந்து வரவும் பெறும்.
தேன் + குடித்தான் - தேன் குடித்தான், தேன் + யாது = தேன் பாது என இயல்பாயிற்று.
தேன் + மொழி = தேன்மொழி எனவும் தேமொழி எனவும் இயல்பாயும் னகர மெய் அழிந்தும் வந்தது. தேன் + குழம்பு : தேன்குழம்பு எனவும் தேக்குழம்பு எனவும் தேங்குழம்பு எனவும் இயல்பாயும் வல்லினம் மிக்கும் மெலி மிக்கும் வரும்.
தேன்மொழி மெய்வரின் இயல்பும் மென்மை
மேவி னிறுதி யழிவும் வலிவரின் ஈறுபோய் வலிமெலி மிகலுமா மிருவழி ' (நன், மெய்.11)
எகின் என்னும் மொழி புணர்தல்
மரத்தைக் குறிக்காது அன்ன்ப் பறவையைக் குறிக்கும் எகின் என்னுஞ் சொல்லின் முன் வல்லினம் வர இயல்பாதலும் அகரச் சாரியை பொருந்த வல்லினமாவது அதற்கு இனமாகி: மெல்லினமாவது மிகுதலுமுண்டு.
1153

Page 67
எகின் + தலை - எகின் தலையென இயல்பாயிற்று. எகின் + டிள் - எகிணப்புள் எனவும் எகினம்புள் எனவும் அகரச் சாரியை பெற்று வலிமிக்கும் வலிக்கு இனமான மெலி மிக்கும் வந்தன.
தன் என் என்னும் மொழிகள் புணர்தல்
தன், என் என்னும் மொழிகளின் முன் வல்லினம் வந்தால் னகரம் இயல்வாதலும் றகரமாகத் திரிதலும் பெறும். நின் என்பது இயல்பாக வரும்.
தன் + பகை அதன்பகை என இயல்பாயும் தற்பகை என விகாரமாயும் வரும். என் + பகை - என்பதை என இயல்பரயும் எற்பகையென விகார
மாயும் வரும்.
தன் + கொலை = தற்கொலை என னகர மெய் றகர மெய் போகத் திரிந்து வந்தது.
மகர வீறு புணர்தல் ( பொதுவிதி )
'மவ்வீ றொற்றழிந் துயிரி றொப்பவும்
வன்மைக் இனமாத் திரிபவு மாகும்" (நன். மெய்யீ.16) மகர மெய்துை இறுதியிலுள்ள சொற்கள் நாற்கணமும் வந்து புணரும் போது இறுதியிலுள்ள மகர மெய்கெட்டு உயிரீற்றுச் சொற்கள் போலப் புணர்வதும் வல்லினம் வந்து புணருமாயின் மகர மெய் கெடாமல் அவற்றிற்கு இனமான மெல்லெழுத்தாகத் திரிவதுமுண்டு.
வட்டம் + ஆழி = வட்டவாழி என வந்தது. இதில் மவ்விறு கெட்டு வட்ட + ஆழி என நின்று வகரவுடம்படு மெய்பெற்று முடிந்தது.
மரம் + அடி = மரவடி. இதுவும் முன்னைய சொற் போலப் புணர்ந்தது.
மரம் + சிறிது - மரஞ்சிறிது. நம் + கை = நங்கை, இவை மகர வீறுகெட்டு இனவெழுத்தாகத் திரிந்து வந்தன.
மரம் + பெரிது = மரம் பெரிது. இதில் பகர வல்லெழுத்து வந்ததால் மகரம் கேரத்துக்கு இனமாகத் திரிதல் வேண்டாது இயல்பாக நின்றது.
灘116

மகர வீற்றுச் சிறப்பு விதி
*வேற்றுமை மப்போய் வலிமெலி புறழ்வும்
அல்வழி யுயிரிடை வரினியல் பும்முள" (நன், மெய்.17) வேற்றுமைப் புணர்ச்சியில் வல்லினம் வந்தால் மகர வீறு கெட்டு வல்லினமாவது அவற்றுக்கினமான மெல்லின மாவது மிகுதலும் அல்வழியில் உயிரும் இடையினமும் வந்தால் கெடாது இயல்பாதலும் உளவாம்.
குளம் + கரை ஐ குளக்கரை, குளங்கரை இங்கு மகர மெய் போய் வலிமெலியுறழ்ந்தது. இது வேற்றுமைப் புணர்ச்சி. அல்வழியில் குளம் + அழகிது - குளமழகிது மரம் + வலிது 20 மரம் வலிது என உயிர், இடையினம் என்பன வர இயல்பாயிற்று,
அ%ம் என்னுஞ் சொற் புணர்ச்சி
"அக முனர்ச் செவிகைவரி னிடையன கெடும்"
(நன். மெயீ, 13)
அகம் என்னுஞ் சொல்லின் முன் செவி, கை என்பன வருமாயின் நிலைமொழியிறுதியில் நின்ற மகரம் வன்மைக் கினமாகத் திரிதலேயன்றி அதன் நடுவில் நின்ற ககர மெய்யும் அதன் மேலேறிய அகரவுயிருங் கெட்டும் வரும், அகம் + கை, அம் + கை ப ஆங்கை என மகரவொற்று ககர வொற்றுக்கினமாகிய ககர வொற்றாகத் திரிந்தது. அகம் + செவி - அஞ்செவி. இதுவும் முன்னையது போலவே புணர்ந்தது.
யரழ வீற்றின் முன் வல்லினம் புணர்தல்
யகர ரகர ழகர மெய்களின் முன் க ச த ப க்கள் வருமாயின் அல்வழியில் இயல்பாயும் மிக்கும் வரும். வேற்றுமையில் மிகுதலும் வல்லினமாவது மெல்லினமாவது மிகுந்து விகற்பித் தலுமுண்டு. வேய் + கடிது - வேய் கடிது எனவும் மெய் + கீர்த்தி = மெய்க்கீர்த்தி எனவும் வரும் அல்வழியில் இவ்வாறு வந்தன. வேய் + குழல் யா வேய்க்குழல், வேய்ங்குழல் என வேற்றுமையில் வுல்லினம் மிக்கும் இனமாகத் திரிந்தும் வந்தன.
117靈

Page 68
வாய் + புகுவது என வாய் புகுவது என வேற்றுமையில் இயல் பாகும்.
பாழ் + கிணறு வ ைபாழ்க்கிணறு, பாழ்ங்கிணறு என அல்வழியில் உறழ்ந்து வரும்.
*யரழ முன்னர்க் கசதப அல்வழி இயல்பு மிகலுமாம் வேற்றுமை மிகலு மினத்தோ டுறழ்தலும் விதிமேல்"
(நன். மெய்யீற். 21} தமிழ் தாழ் என்பவற்றுக்குச் சிறப்பு விதி
வேற்றுமைப் புணர்ச்சியில் தமிழ் என்னும் நிலைமொழி நாற்கணமும் வந்தால் அகரச் சாரியை பொருந்தவும் பெறும். தாழ் என்னுஞ் சொல்லின் முன்னே கோல் என்னுஞ் சொல் வருமொழியாக வந்து பொருந்துமேல் அரைச் FrrfloMW பொருந்தப்பெறும்.
தமிழ் + பிள்ளை - தமிழப் பிள்ளை எனவும், தமிழ் +நாகன் வ தமிழநாகன் எனவும் தமிழ் + வளவன் பாது தமிழவளவன் எனவும் தமிழ் + அரசன் மா தமிழவரசன் எனவும் நாற்கணமும் வர அகரச் சாரியை பெற்றுவரும்,
இவ்வாறன்றிப் பொதுவிதி பெற்றுத் தமிழ்ப்பிள்ளை எனவும் தமிழ் நாகன் எனவும் தமிழ் வளவன் எனவும் தமிழரசன் எனவும் வருவதுமுண்டு. தாழ் + கோல் = தாழக் கோல் என வரும் கீழ் என்னும் மொழி புணர்தல்
கீழ் என்னுஞ் சொல் நிலைமொழியாக நிற்க வருமொழி யாக வல்லினத்தை முதலானவுடைய மொழிகள் வந்தால் இஆல்பாகவும் மிக்கும் வரும். இதனை விகற்பமாகும் என்பர். கீழ் + குலம் வ ைகீழ்குலம், கீழ்க்குலம் எனவும் கீழ் + சாதி வ கீழ்சாதி, கீழ்ச்சாதி எனவும் வரும்.
"கீழின்முன் வன்மை விகற்பமு மாகும்' (தன். மெய்யீற்.28)
லகர ளகர வீது புணர்தல்
நிலைமொழியிறுதியிலுள்ள லகர, ளகர மெய்கள் வரு மொழி முதலில் வல்லினம் வருமாயின் முறையே றகர டஜர
獵118

மெய்யாகத் திரியும். ஆனால் அல்வழியில் அவ்வாறு றகர டகரமாகத் திரிந்தும் திரியாமலும் உறழ்ந்து வரும். உறழ்தல் ஒருகால் இயல்பாயும் ஒருகால் விகாரமாயும் வருதல்.
இால் + குறை  ைகாற்குறை எனவும், முள் + குறை - முட் குறையெனவும் வேற்றுமையில் வல்லினம் வர றகர, டகரங் களாகத் திரிந்து வந்தன.
அல்வழியில் கசல் + குறிது = கால் குறிது, காற்குறிது எனவும் முன் + குறிது - முட்குறிது, முள் குறிது எனவும் வல்லினம் வர உறழ்ந்து வந்தன.
வேற்றுமை அல்வழியிரண்டினும் லகர, ளகர வீறுகள் மெல்லினம் வந்தால் னகர ணகர மெய்களாகத் திரிதலும் இடையினம் வந்தால் இயல்பாதலும் பொருந்தும்.
கல் + தெரிந்தது என கன்னெரிந்தது எனவும் வாள் + மாண்டது ம்ை வாண்மாண்டது எனவும் அல்வழியில் லகர னகரங்கள் னகர னகர மெய்களாகத் திரிந்தன. கில் + மலை ய இன்மலை, வாள் + மாண்பு = வாண்மாண்பு என வேற்றுமையில் லகர னகரங்கள் னகர ணகர மெய்களாகத் திரிந்தன. கால் + யாது = கால்வாது எனவும் முள் + வலிது கா முள்வலிது எனவும் அல்வழியில் இயல்பாக வந்தன.
கல் + யானை வ கல்யானை எனவும், தோள் + வலிமை ம தோள் வலிமையெனவும் வேற்றுமையில் இயல்பாக வந்தன.
'லள வேற் றுமையிற் றடவு மல்வழி
யவற்றோ டுறழ்வும் வலிவரி னாமெலி மேவி னணவும் இடைவரி னியல்பும் ஆகு மிருவழி இமானு மென்ப" (நன், மெய்யீற். 24) முற் கூறப்பட்ட விதிகளெல்லாம் இச் சூத்திரத்தில் அமைந்துள்ளன.
குறில் செறி லகர னகர வீற்றுச் சிறப்பு விதி
நிலைமொழியில் தனிக் குறிலின் பின் நின்ற லகர னகர மெய்கள் அல்வழிப் புணர்ச்சியில் தகரம் வருமொழி முதலில் வருமாயின் றகர, டகர மெய்களாகத் திரிதலேயன்றி ஆய்த மாகத் திரிதலையும் பொருந்தும்,
119囊

Page 69
கல் + தீது = கஃறீது. முள் + தீது முஃடீது என வரும்.
*குறில் வழி வளத்தவ் வணையி னாய் தம்
ஆகவும் பெறுஉ மல்வழியானே" (நன். மெய்யீற். 25)
குறில் செறியாத லகர ளகர வீறு புணர்தல்
தனிக் குறிலைச் சாராத லகர, ளகர மெய்கள் அல்வழிப் புணர்ச்சியில் வருமொழிக்கு முதலாக வந்த தகரம் றகர, டகரங் களாகத் திரிந்த பின் கெடுதலும் அல்வழி வேற்றுமை ஆகியூ ஈரிடத்தும் வருமொழி முதலாக வந்த நகரம் னகர ணகரங் களாகத் திரிந்த பின் கெடுதலும் அல்வழி வேற்றுமை ஆகியூ ஈரிடத்தும் வருமொழி முதலாக வந்த நகரம் னகர னகரங் களாகத் திரிந்த பின் தாம் கெடுதலும் வல்லினம் வருமாயின் அல்வழிப் புணர்ச்சியில் இயல்பாதலுந் திரிதலும் வேற்றுமைப் புணர்ச்சியில் திரியாது இயல்பாதலுமுண்டு.
தோன்றல் + தீயன் -ா தோன்றறியன் எனவும் வேள் + தீயன் - வேடீவன் எனவும் அல்வழியில் தகரந் திரிய லகர னகரங்கள்
கெட்டன.
தோன்றல் + நல்லன் அா தோன்றனல்லன் எனவும் வேள் + நல்லன் வர வேணல்லன் எனவும் அல்வழியில் வந்த நகரத் திரிய ல ன க் கெட்டன.
தோன்றல் + நன்மை - தோன்றனன்மை எனவும் -- நன்மை - வேணன்மை எனவும் வேற்றுமையில் வந்த நகரத் திரிய லனக் கெட்டன.
இால் + கடிது - கால்கடிது எனவும், மரங்கள் + கடிய - மரங்கள் கடிய எனவும் அல்வழியில் விகற்பியாமல் இயல்பாயின. வேல் + படை  ைவேற்படை எனவும். வாள் + படை வா வா படை எனவும் விகற்பியாமல் திரிந்து வந்தன.
'குறில்செறி யாலள அல்வழி வந்த தகரந் திரிந்த பிற் கேடுமீ ரிடத்தும் வருநத் திரித்து பின் மாய்வும் வலிவரின் இயல்புந் திரியுமாவன வுளப்பிற" (நன், மெய்யீற். 26)
囊120

லகர ளகர வீற்றுத் தொழிற் பெயர் புணர்தல்
Gಲಿ 8pr 6767 மெய்களை இறுதியாகவுடைய தொழிற் பெயர்களின் முன் வல்லினம் வந்தால் அல்வழியிலும் வேற்றுமை யிலும் இயல்பாகப் புணரும், ஆடல் + சிறந்தது  ைஆடல்சிறந்தது எனவும், கோள் + வலிது = கோள்வலிது எனவும் அல்வழியில்
இயல்பாகப் புணர்ந்தது.
ஆடல் + வன்மை = ஆடல்வன்மை, விக்குள் + வன்மை = விக்குள்வன்மையென வேற்றுமையில் இயல்பாயின.
*வல்" என்பதற்குச் சிறப்பு விதி
வல்லென்னும் பெயர் இருவழியிலுந் தொழிற் பெயர் போல யகரமல்லாத மெய்கள் வந்தால் உகரச் சாரியை பெறும். பலகை நாய் என்னும் பெயர்கள் வந்தாலும் பிற பெயர்கள் வந்தாலும் வேற்றுமையில் உகரச் சாரியையேயன்றி அகரச் சாரியையும் பெற்று வரும்.
வல் + கடிது = வல்லுக்கடிது எனவும் வல் + இடுமை = வல்லுக்கடுமையெனவும் இருவழியிலும் யகரமல்லாத மெய் வர உஇரச் சாரியை பெற்றது.
வல் + பலகை = வல்லுப்பலகையெனவும் வல்லப் பலகையெனவும் வல் + நாய் = வல்லுநாய் எனவும் வல்ல நாய் எனவும் உகரச் சாரியையேயன்றி அகரச் சாரியையும் பெற்று வந்தன.
வல் + புலி வல்லுப்புலி, வல்லப்புலி எனவும், வல் + குதிரை = வல்லுக் குதிரை வல்லக் குதிரையெனவும், பிற வர உரைச் சாரியையும் அகரச் சாரியையும் பெற்றுவந்தன.
வேல்லே தொழிற்பெய ரற்றிரு வழியும்
பலகைநாய் வரினும் வேற்றுமைக் கவ்வுமாம்"
( நன், மெய்யீற். இ8 ) நெல், செல், கொல், சொல் என்பன புணர்தல்
நெல், செல், கொல், சொல் என்னும் இந்நான்கு சொற் களும் அல்வழியிலும் ஈற்று லகர மெய் றகர மெய்யாகத் திரியும். வேற்றுமையில் உறழ்ந்து வருதல் போதுவிதியாற் பெறப்பட்டமையின் அல்வழிக்கு றகரமாதல் கூறவேண்டிய
121攤

Page 70
நெல் + கடிது = நெற்கடிது, செல் * கடிது = சொற்கடிது, கொல் + தீது = கொற்றிது, சொல் + பெரிது = சொற்பெரிது எனவரும்
"நெல்லுஞ் செல்லுங் கொல்லுஞ் சொல்லும்
அல்வழி யானும் றகர மாகும்" (நன். மெய்யீற். 29)
இல் என்னுஞ் சொல் புணர்தல்
இல் என்னும் இன்மைப் பண்புணர்த்துஞ் சொற்கு ஐகாரச் சாரியை பொருந்த வல்லினம் மிக்கும் மிகாமலும் விகற்பித்தலும் ஆகாரச் சாரியை பொருந்த அவ்விடத்து வருகின்ற வல்லினம் மிகுதலும் இயல்பாதலும் ஆகிய நிலைகளைப் பெறும். 1 இல் + பொருள் = இல்லைப் பொருள் எனவும், இல்லை பொருள் எனவும் ஐகாரச் சாரியை வர வன்மை விகற் பித்தது. 2. இல் + பொருள் = இல்லாப் பொருள் என ஆகிாரச் சாரியை
பெற வலிமிக்கது. இ. இல் + பொருள் = இல்பொருள் என இயல்பாயிற்று.
இல்லெ னின்மைச் சொற்கை யடைய வன்மை விகற்பமு மாகா ரத்தொடு வன்மை யாகலு மியல்பு மாகும்" (நன். மெய்யீற். 30) தெவ் என்னும் மொழி புணர்தல்
தெவ் என்னும் பெயர்முன் பகரமல்லாத மெய்கள் வரு மொழி முதலில் வந்தால் உகரச் சாரியை பெற்றுப் புணரும். வருமொழி முதலில் மகரம் வந்தால் நிலைமொழியீற்று வகர மெய் சாரியை பெறாமல் மகர மெய்யாகத் திரியவும் பெறும், தெவ் என்பது பகைமையாகும். அது ஆகுபெயராகப் பகை வினையும் உணர்த்தும், தெவ் + கடிது = தெவ்வுக்கடிது எனவும், தெவ் என்பதோடு நன்று, வலிது என்னும் மெல்லின இடையின மொழிகளைச் சேர்த்து உகரச் சாரியை பெறுவது காணலாம். தெவ் + கடுமை = தெவ்வுக் கடுமை என வேற்றுமையிலும் உஇரர் சாரியை பெறுதல் காணலாம்,
தெவ் + மன்னர் = தெம்மன்னர் எனவும், தெவ் ஜி முனை = தெம்முனை எனவும், மகரம் வர வகரம் மிகரமாகத் திரிந்தது.
畿122

● r - ' * झा या काळ्या FTFASID
et FF þar er GT6Norto
 ை. 6 தெவ்வென் மொழியே தொழிற்பெய ரற்றே ம.
மவ்வரின் வஃகான் மவ்வு மாகும்" (நண், மெய்யி. 99}
தகர நகரத் திரிவு (வருமொழியில்)
*னலமுன் றனவும் ணளமுன் டணவும்
ஆகுந் தநக்க ணாயுங் காலே" ( நன். மெய்மீற். 84 )
னகர லகர மெய்களின் முன்வரும் தகர நகரகங்கள் முறைவே றகர னகரங்களாகவும் ணகர, ளகர மெய்களின் முன் தகர நகரங்கள் முறையே டகர ணகரங்களாகவும் வரும்.
பொன் + தீது = பொன்றிது என அல்வழியிலும் பொன் + தீமை= பொற்றீமை என வேற்றுமையிலும் வரும்.
கல் + நன்று = கன்னன்று அல்வழி கல் + நன்மை = கன்னன்மை வேற்றுமை.
மண் + தீது = மண்டீது, அல்வழி, மண் ஓ தீமை = மட்டீமை வேற்றுமை.
மண் + நன்று ம ண் ண ன் று அல்வழி, மண் ஆ நன்மை = மண்ணன்மை வேற்றுமை,
முள் + தீது = முட்டீது அல்வழி முன் + தீமை = முட்டீமை வேற்றுமை.
முள் + நன்று ஈ முண்ணன்று அல்வழி முள் ஆ நன்மை வ முண்ணன்மிை வேற்றுமை,
三今○ 9 ・ こ Cー
வடமொழிப் புணர்ச்சி
வடசொற்கள் நிலைமொழி வருமொழிவிரண்டும் உயிர் ஈறாகவும் உயிர் முதலாகவும் நிற்கும் போது ஒன்றோடொன்று புணருங்கால் வடமொழிப் புணர்ச்சியையே பெறும் வடமொழி யாளர் புணர்ச்சியைச் சந்தியென்பர்.
நிலைமொழியிறுதியுயிரும் வருமொழி முதல் உயிரும் புணர் வதைத் தீர்க்க சந்தி, குணசந்தி, விருத்தி சந்தியென மூன்று
பிரிவாகக் கூறுவர். தீர்க்க சந்தி மூன்று வகையாகவும் மற்றையவை இவ்விரண்டு வகையாகவும் வரும் ,
123纂

Page 71
தீர்க்க சந்தி,
1. அ, ஆ முன் அ, ஆ புணர்தல்
அகர ஆகாரங்களில் ஒன்று நிலைமொழியீறாக நிற்க வருமொழி முதலாக அகர ஆகாரங்களில் ஒன்று வருமாயின் நிலைமொழியீறும் வருமொழி முதலுங்கெட அவற்றுக்குப் பதிலாக ஒரு ஆகாரந் தோன்றும். பத + அம்புயம் பதாம்புயம் எனவும், சதா + ஆனந்தம் = சதானந்தம் எனவும் வரும். இதனைப் பின்வரும் விதியை மனதில் வைத்துக் கொ ள் வ த ன் மூலம் தினைவில் வைத்திருக்கலாம்.
'அ ஆவின் முன் அ ஆவரின்
ஈறு முதலுங் கெட ஆவொன்று தோன்றும்" நன்னூல் உரைகாரர். 2. இ, ஈயின் முன் இ, ஈ புணர்தல்
நிலைமொழியிறுதி இ, ஈ என்னும் எழுத்துக்களில் ஒன்றாக நிற்ப வருமொழி முதலிலும் இ, ஈ என்பவற்றில் ஒன்று வருமாயின் நிலைமொழியிறுதி உயிரும் வருமொழி முதல் உயிருங்கெட ஈ என்பதொன்று தோன்றும். கவி 4 இந்திரன் - கவிந்திரன், கிரி+ ஈசன் - கிரீசன் எண் வம் æÊ + இந்திரன் ஊ மகீந்திரன், நதி + ஈசன் நதீசன் எனவும் வரும்.
"இFயின் முன் இவரின் ஈறு முதலுங்கெட
ஈயொன்று தோன்றும்" என்பது விதி. 3. உ, ஊவின் முன் உ, ஊ, புணர்தல்
குரு + உபதேசம் = குரூபதேசம் எனவும், சுயம்பு ழ் உப தேசம் = சுயம்பூபதேசம் எனவும், சிந்து + ஊர்மி = சிந்தூர்மி எனவும், சுயம்பு + ஊர்ச்சிதம் = சுயம்பூரிச்சிதம் எனவும் வரும், தீர்க்க சந்தி மூன்று வகைப்படும். தீர்க்கம்-நெடில்,
உ ஊவின் முன் உ ஊ வரின் ஈறுமுதலுங்கெட ஊவொன்று தோன்றும்' குணசந்தி 1. அ, ஆ முன் இ, ஈ புணர்தல்
அகர ஆகாரங்களின் முன் இகர ஈகாரங்களில் ஒன்று
வந்தால் அவ்விரண்டுங்கெட ஓர் ஏகாரந் தோன்றும்.
屬124

தேவ + இந்திரன், தேவேந்திரன் தேவ + ஈசன்=தேவேசன் எனவும் நரா + இந்திரன் = நரேந்திரன், ரமா + ஈசன் ை ரமேசன் எனவும் வரும். அ, ஆவின் முன் இ, ஈவரின் ஈறுமுதலுங்கெட ஏயொன்று தோன்றும்.
அ, ஆவின் முன் உ, ஊ வருதல் அகர ஆகாரங்களின் முன் உகர ஊகாரங்களில் ஒன்று வருமாயின் அவ்விரண்டுங்கெட ஒர் ஒகாரந் தோன்றும். சூரிய + உதயம் = சூரியோதயம் ஞான + ஊர்ச்சிதன் என ஞானோர்ச்சிதன் எனவும், - கங்கா + உற்பத்தி = கங்கோற்பத்தி, தயா + ஊரிச்சிதன் க தயோர்ச்சிதன் எனவும் வரும் "அஆவின் முன் உஊவரின் ஈறும் முதலுங்கெட ஒவொன்று தோன்றும்"
விருத்தி சந்தி
.
2.
e
அகர ஆகாரங்களில் ஒன்றன்முன் எகர ஜகாரங்களில் ஒன்று வந்தால் ஈறும் முதலுங்கெட ஒரு ஐகாரந் தோன்றும். பரம + ஏகாந்தி = பரமைகாந்தி, சர்வ 4 ஜஸ்வரியம் = சர்வைஸ்வரியம் எனவும், தேவதா + ஏகத்துவம் தேவதைகத்துவம், தேவதா + ஐக்கியம் - தேவதைக்கியம் எனவும் வரும். 'அ ஆவின் முன் ஏ ஐவரின் ஈறுமுதலுங்கெட ஐயொன்று
தோன்றும்" அகர ஆகாரங்களில் ஒன்றன்முன் ஒகார ஒளகாரங்களில் ஒன்று வந்தால் அவ்விரண்டுங்கெட ஒர் ஒளகாரந் தோன்றும். வந + ஒஷதி ஐ வநெளஷதி. திவ்விய + ஒளஷதம் ஐ திவ்யெளஷதம் எனவும், மகா + ஒஷதி  ைமகெளஷதி. மகா * ஒளதார்யம் = மகெள தார்யம் எனவும் வரும்.
"அ ஆவின்முன் ஒ ஒளவரின் ஈறும் முதலுங்கெட
ஒள வொன்று தோன்றும்"
125懿

Page 72
6. உருபு புணரியல்
சங்ககால இலக்கிலங்களையெடுத்துப் பார்ப்போமானால் அவற்றில் வேற்றுமையுருபுகளை மிக அரிதாகவே காண்போம். சொற்கள் வேற்றுமையுருபு விரியாமல் தொகையாகவே நிற்பது அக்காலப் பெருவழக்கு, பிற்காலத்தில் வேற்றுமையுருபுகள் பெரும்பாலும் விரிந்து நிற்க எழுதுவதும் பேசுவதும் வழக்க மாகிவிட்டன. வேற்றுமையுருபைச் சேர்த்து எழுதுவதனால் பொருள் தெளிவுபடுகிறதென்பது உண்மையே. கல்லெறிந்தான் என்பது கல்லையெறிந்தான் எனவும் கல்லால் எறிந்தான் எனவும் கல்லுக்கு எறிந்தான் எனவும் பொருள்படுதலால் சொல்வான் கருத்து எதுவென்றறிவதற்குச் சந்தர்ப்ப சூழ்நிலைகளே துணை புரிகின்றன. ஆனாற் கல்லை எறிந்தானென்று சொல்லும் போது பொருள் மயக்கமில்லாமல் தெளிவுபடுகின்றதென்பதை மறுக்கமுடியாது. ஆதலால் பிற்கால இலக்கியங்களில் வேற்றுமை உருபுகள் பெரும்பாலும் விரிந்தே நிற்கக் காண்கிறோம்.
நிலைமொழிகளை உயிரீறு மெய்யீறாது வகுத்தபோது உயிரீற்றுப் புணரியல் மெய்யீற்றுப் புணரியல்களில் அடங்காத எந்த மொழியும் இருக்கமுடியாது. ஆதலால் உருபுகளின் புணர்ச்சியும் ஏதோ ஒரு ஈற்றில் அடங்கியே தீரவேண்டுமென் பதில் மறுப்புக்கு இடமேயில்லை. ஆனால் அங்குக் கூறப்பட்ட விதி இளில் அடங்காதவற்றை அடக்குவதற்கே உருபு புணரியல் என் றோரில் வகுக்கவேண்டி நேர்ந்ததென்க.
நன்னூலார் உருபுகள் பெயர் முதலாக எட்டெனக்கூறி அவ்வெட்டும் ஒருவன், ஒருத்தி, பலர், ஒன்று, பல என்னும் ஐம்பாற்சொற்களோடுஞ் சேர்ந்து ஒவ்வொன்றும் எட்டெட்டாகி மொத்தமாக நாற்பதாகும் என்று கூறினார். நன்னூலார் எல்லா வேற்றுமைக்கும் ஒவ்வொருருபை மாத்திரங் கூறினா ரல்லர். மூன்றாம் வேற்றுமைக்கு ஆல், ஆன், ஒடு, ஒடு என நான்குருபும் ஐந்தாம் வேற்றுமைக்கு இல், இன் என்னும் இரண்டுருபும் ஆறாம் வேற்றுமைக்கு அது, ஆது, அ என மூன்றுருபும் ஏழாம் வேற்றுமைக்கு கண் ஆதியாகும் என்று கூறிவிட்டுப் பின் கண் முதலாகிய இருபத்தெட்டுருபுகளுங் கூறியுள்ளார். அவரே பின்னர் எட்டுருபுகளை மாத்திரம் ஐம்பாலோடும் உறழ்ந்து நாற்பது என்று தொகையுங் கூறினார்.
鷲126

உண்மையில் வேற்றுமையுருபுகள் பலவென்பதில் அவர்க்குங் கருத்துவேறுபாடிருக்க முடியாது. 2-GTE) Lly புணருமிடத்து உயிரீற்றுப் புணரியல் மெய்யீற்றுப் புணரியல்களுள் பெரும் பாலன அடங்குதலால் உருபுகளை ஒரு வேற்றுமைக்கு ஒன்றாக வரையறை செய்து நாற்பதெனக் கூறினார் போலும். "பெயர்வழித் தம்பொருள் தரவரு முருபே"
(நன். உருபு, 2 }
வேற்றுமையுருபுகள் தமக்குரிய பொருளைக் கொடுக்கப் பெயர்க்கு முன் வருமென்பது இச்சூத்திரத்தின் பொருளாம். இது பெயரியலுள் வேற்றுமை பற்றிக் கூறப்பட்ட போதும் வெளிப்படுத்தப்படும் கருத்தேயாகும். உயிரீற்றுப் புணர்ச்சி மெய்யீற்றுப் புணர்ச்சி என்பவற்றில் கூறப்பட்ட விதிகளில் உருபு புணர்ச்சிக்கும் பொருத்தமானவற்றைக் கொள்ளும்படி மேல்வருஞ் சூத்திரம் அமைகிறது.
"ஒற்றுயிர் முதலீற் ருருபுகள் புணர்ச்சியின்
ஒக்குமன் னப்பெயர் வேற்றுமைப் புணரிப்பே'
( நன் உருபு. 3 )
நம்பி வாழ்வு என்பது, "ஆவி யரமுன் வன்மை மிகா” என்ற சூத்திர விதிப்படி நம்பி வாழ்வு என இயல்பாக வந்தது. அது உருபு மிக்கு வரும்போது நம்பி + கண் + வாழ்வு என விரிந்து புணரும். நம்பி + கண் என்பது 'ஆவி பரமுன் வன்மை மிகா" என்ற விதிப்படி இயல்பாயிற்று. கண் + வாழ்வு என்பதும் "ணன வல்லினம் வரட்டறவும் = பிறவரின் இயல்புமாகும் என்ற விதிப்படி பிறவரின் இயல்பாயிற்று. எனவே நம்பி கண் வாழ்வு என்பது முன்னரே சொல்லப்பட்ட விதிகளுக்கமையப் புணர்ந்தது.
ஒக்குமன் என்பதில் மன் என்பது பெரும்பாலும் என்பதைக் குறிப்பதால் சிறுபான்மை ஒவ்வாமலும் வருமென்பது பெறப்படும். நம்பி * கு = நம்பிக்கு எனவரும், இது, "ஆவி யரமுன் வன்மை மிகா' என்ற விதிக்கடங்காது வல்லொற்று மிக்கு வந்தது. புணர்ச்சியில் சாரியை இடம்பெறுதல்
பதத்தின் முன்னே பதமாவது உருபாவது புணருமிடத்து ஒரு சாரியையாயினும் பல சாரியையாயினும் வருதலும் வராமல்
127鑼

Page 73
விடுதலும் ஒன்றினிடமாக வருதல் வராது தவிர்தல் என்னும் உறழ்ச்சியும் பெறும்.
நட என்பதனோடு அன்விகுதி புணரும் போது காலங் காட்டும் இடைநிலையும் பெற்று விகுதிக்கு முன் சாரியையும் இயைந்து நடந்தனன், நடக்கின்றனன் என வரும்.
நடந்தான் என்பதில் விகுதி சாரியை பெறாமற் புணர்ந்தது, நடந்தன. நடந்த என்பவற்றில் விகுதி அன் சாரியை பெற்றும் பெறாமலும் புணர்ந்தன.
பதப்புணர்ச்சியில் புளியங்காய் என்பது ஆம் சாரியை பெற்றது. புளிக்கறி என்பதில் சாரியை தவிர்ந்தது.
நெல்லின் குப்பை, நெற்குப்பை எனச் சாரியை பெற்றும் பெறாமலும் விகற்பித்தது.
உருபு புணர்ச்சியில் அவற்றை எனவரும் போது அற்றுச் சாரியை வெற்றது.
தான் + ஐ = தன்னை எனவரும் போது சாரியை தவிர்ந்தது. ஆ என்பது ஐ பெற்று ஆனை என வரும் போது சாரியை பெற்றது, ஆவை எனவரும் போது சாரியை தவிர்த்தது.
ஆ என்பது சாரியை பெற்றும் பெறாமலும் உருபுடன் புணரும்.
பொதுவான சாரிலைகள்
அன் ஆன் இன் அல் அற்று இற்று அத்து அம் தம் நம் நும் ஏ அ2. ஐகுன இன்ன பிறவும் பொதுச்சா ரியையே (தன் உருபு. 5)
இங்குப் பதினேழு பொதுச் சாரியைகள் கூறப்பட்டுள்ளன. இவை விகுதி, பதம் என்பவற்றோடுந் தனி மொழியிலும் வரும்.
ஒன்று + கூட்டம் = ஒன்றன் கூட்டம், இங்கு பதத்தோடு பதம் புணர அன் சாரியை வந்தது.
பல + ஐ = பலவற்றை, இங்கு ஐயுருக் புணர அற்றுச் சாரியை வந்தது. தொடையல் என்பது தனிமொழியில் அல் என்னுஞ் சாரியை வந்தது. பிறவற்றையும் இவ்வாறே பகுத்துக் காண்க.
籌128

எல்லாம் என்பதற்குச் சிறப்பு விதி
எல்லாம் என்பது இருதிணைப் பொதுப்பெயர், அஃறிணையில் அதனோடு ஆறுருபுகளும் புணரும் போது அற்றுச் சாரியை பெற்றுப் பின்னர் உருபு வந்து அதன்மேல் உம் சாரியை பெறும். எல்லாம் + ஐ = எல்லாவற்றையும் எனவும் எல்லாம் + ஆல் = எல்லாவற்றாலும் எனவும் எல்லாம் + கு = எல்லாவற்றுக்கும் எனவும் இவ்வாறு வரும் ,
எல்லாம் என்பது உய்ர்திணையாயின் நம் என்பது உருபுக்கு முன்வந்து இறுதியில் உம் பொருந்தும். எல்லாம் & நம் + ஐ + உம் ய எல்லா நம்மையும் என வரும். அவ்வாறே எல்லா நம்மாலும் எல்லா நமக்கும் என்பது முதலாகப் பிறவுருபுக ளோடும் சேர்க்குக. எல்லா நம்மையும் என்பதற்கு எல்லாரையும்
என்பது பொருளாம்.
"எல்லா மென்ப திழிதிணையாயின்
அற்றோ டுருபின் மேலும் முறுமே
அற்றேல் நம்மிடை யடைந்தற் றாகும்" (நன். உருபு. 6)
எல்லாரும் எல்லீரும்
எல்லாரும் எல்லீரும் என்பவற்றோடு உருபுகள் புணரு
மாயீன் இறுதியில் உள்ள உம் என்பதை நீக்கி தம்" என்னுஞ் சாரியையையும் நும் என்னுஞ் சாரியையையும் முறையே இணைத்து முன்னரே நீக்கப்பட்ட "உக்" என்பதை உருபின் பின் சேர்த்து முடித்தல் வேண்டும்.
எல்லாரும் என்பது எல்லார் என நின்று தம் என்பது சேர்ந்து எல்லார் தம் என நின்று உருபு சேர்ந்து எல்லார் தம்மை என நின்று அதன் மேல் உம் சேர்ந்து எல்லார் தம்மையும் எனவரும், எல்லீரும் என்பதும் எல்லீர் என நின்று நும் சேர்ந்து அதன் மேல் இடம் பெற்று எல்லீர் நும்மையும் என வரும்,
"எல்லாரு மெல்லீரு மென்பவற் றும்மை
தள்ளி திரலே தம்நும் சாரப் புல்லு முருபின் பின்ன ரும்மே”
p
(தன் உரு. 7)
9 129鑽

Page 74
தான் முதலிய பெயர்களுக்குச் சிறப்பு விதி
உருபுகள் புணருமிடத்துத் தான், தாம், நாம் என்பன முதல் குறுகும். அதாவது இவை தன், தம், நம் என நிற்கும். யான், யாம், நீ, நீர் என்பன முறையே என், எம், நின், நுல் என நிற்கும். தான் முதலாகச் சொல்லப்பட்ட இவ்வேழு பெயரோடும் "கு" உருபு புணருமிடத்து அகரச் சாரியை பெறும். ஆறாம் வேற்றுமையுருபுகளாய் அது, ஆது, அ என்பன புணருமிடத்துந் தணிக்குறில் முன் ஒற்று இரட்டாது நிற்கும். தான் + ஐ = தன்னை, தாம் + ஐ = தம்மை, நாம் + ஐ = நம்மை என வரும்.
யான் + ஐ = என்னை. யாம் + ஐ = எம்மை, நீ + ஐ = நின்னை, நீரி + ஐ = நும்மை என வரும். தன் + கு = தனக்கு என "கு" உருபு வர அகரச் சாரியை பெற்றது. நீ என்பது உன் எனவும் நீர் என்பது உம் எனவுந் திரியும்.
தன் + அது = தனது எனத் தனிக் குறில் முன்றொற்றிரட்டாது வந்தது.
ஆ, மா, கோ என்னுஞ் சொற்கள் புணர்தல்
ஆ, மா, கோ என்னுஞ் சொற்கள் உருபு வந்து புணரு மிடத்து னகரச் சாரியையைப் பொருந்தி வருதலுமுண்டு.
ஆ என்பது பசு, மா என்பது மிருகத்தின் பொதுப்பெயர், கோ என்பது தலைவன் .
ஆ + ஐ  ைஆணை எனவும், மா + ஐ = மானை எனவும், கோ+ ஐ = கோனை எனவும் வரும். இவை, ஆவை, மாவை, கோவை என வருதலுமுண்டு.
குவ்வுருபு புணரும் போது ஆவினுக்கு என இன் சாரியையுடன் உகரச் சாரியை பெறுவதும் ஆவுக்கு என இன் சாரியையின்றி உகரச் சாரியை ஒன்றே பெறுவதுமுண்டு.
ஐ, ஆல் முதலிய பிறவுருபுகள் புணரும் போது ஆவினை, ஆவினால் என இன் சாரியை பெறுவது ங் கொள்ளப்படும்.
懿130

*リ
ஆ, மா என்பதை ஆவும் மாவும் என இரண்டாக எடாது" ஆமா என ஒன்றாக எடுத்து, ஆ, மா, கோ முதலிய உருபு புணரிச்சியை அதற்குங் கொள்ளலாம்.
'ஆ டிா கோ னவ் வணையவும் பெறுமே"
(தன் உருபு, 9)
ஒருபது என்பது புணருமாறு
ஒன்று முதல் எட்டு வரையுள்ள எண்ணுப் பெயர்களோடு புணர்ந்த பத்து என்னும் எண்ணுப் பெயர்முன் ஆறு உருபு களும் புணருமிடத்து ஆன் சாரியை வந்தால் பத்து என்னும் எண்ணினது வகர மெய் ஒன்றுமே நிற்க அதன்மேல் நின்ற எல்லா எழுத்துக்களுங்கெடும். ஒன்பது என்னும் எண்ணின் முன்னும் ஆன் சாரியை வந்தால் இவ்வாறேயாகும். அதாவது பகர மெங் மாத்திரம் நிற்க மேல் நின்ற எல்லா எழுத்துக் களுங்கெடும். ஒருபது + ஐ, ஒருப் + ஆன் + ஐ = ஒருபானை, ஒருவதை , ஒரு பஃதை எனவும் வரும்.
'ஒன்று முதலெட் டீறா மெண்ணுரர்
பத்தின்முன் னான்வரிற் பவ்வொற் றொழியமேல்
எல்லா மோடு மொன்பது மிற்றே" ( நன், 2-35ւկ. 10 ) வகர வீற்றுச் சுட்டுப் பெயர்கள் புணர்தல்
அவ், இவ், உவ் என்னும் வகர வீற்றுச் சுட்டுப் பெயர் களின் முன் உருபுகள் வந்து புணரும் போது அற்று என்னுஞ் சாரியை பெற்று வரும். அவ் 4 ஐ  ைஅவற்றை, இவ் + ஐ = இவற்றை, உவ் + ஐ = இவற்றை என வரும். அவற்றினை, இவற்றினை, உவற்றினை, என அற்றுச் சாரியை யோடு இன் சாரியை பெறுவதும் உண்டு. அ + ஐ எல் அவை, இ + ஐ = இவை, உ + ஐ = உவை எனத் தனிக்குறில் முன்னொற்று இரட்டாமற் புணர்வதுங் கொள்ளப் C (Lib. அவை, இவை என நின்று இற்றுச் சாரியை பெற்று அவை பிற்றை, இவையிற்றை எனவருவதுங் கொள்ளப்படும்.
*வவ்விறு சுட்டிற் கற்றுதல் வழிய்ே" (நன், உருபு, 11)
131囊

Page 75
அஃது, இஃது முதலிய சுட்டுப் பெயர்கள்
அஃது, இஃது, உஃது என்னுஞ் சுட்டுப் பெயர்களின் முன் உருபுகள் வருமிடத்து அன் சாரியை பெறும7யின் ஆய்தங்கெடும். அஃது * ஐ, அஃது 4 அன் + ஐ = அதனை என வரும். அன் சாரியை வராவிட்டால், அஃதை, இஃதை,
உஃதை எனவரும்.
"சுட்டின் முன் ஆய்தம் அன்வரிற் கெடுமே”
( நன், உரு 12 )
எழுத்திலக்கணம் முற்றும்
囊132
 

சொல்லதிகாரம்

Page 76

வாங் ஐ:இதர [:fಳಿ:
"廖学üförö
1. பெயர்ச் சொல்லியல்
தமிழ்மொழியில் உள்ள நால்வகைச் சொற்களில் முதலாவ தாக வைத்தெண்ணப்படுவது பெயர்ச் சொல்லே வினைச் சொல் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்ததாயினும் பெயரின் வழியேயது தோன்றுவதாகும். வேறுவிதமாகச் சொல்வதானால் பெயர் குறிக்கும் பொருள் முதலியவற்றின் செயற்பாடே வினையாகும். பொருளின் புடைபெயர்ச்சியே வினையென்பர் இலக்கண ஆசிரியர்கள். பெயர்ச் சொற்களைப் பல்வேறு வகைகளாற் பாகுபடுத்திக் காட்டலாம். உயர்திணை என்றும் அஃறிணை என்றும் இருவகையாற் சொல்லலாம். பொருட் பெயரி, இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், குணப் ப்ெயரி, தொழிற்பெயரென ஆறுவகையாக்கலாம். இன்னொரு விதமாக இடுகுறிப்வெயர், காரணப்பெயர் என இருபாகு பாட்டுள்ளும் அடக்கலாம். பிறிதொரு வகையாக இயற்யெரி, ஆகுபெயர் என்ற இருவகையிலும் அடக்கலாம். ஆண்பால், பெண் பால், பலர்பால், ஒன்றன்பால் பலவின்யால் எனப் பெயர்ச்சொல் முழுவதையும் ஐந்து பாலுள்ளும் அடக்கலாம். எல்லாப் பெயரி களையுந் தன்மைப் பெயரி, முன்னிலைப் பெயர், படரிக்கைப் பெயரென மூன்றிடங்களிலும் அடக்கலாம். பால் பற்றிப் பெயர்களை ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால் என்ற முப்பாலுள்ளும் அடங்கச் செய்யலாம். ஆண் தொகுதி பெண் தொகுதி என்னும் இரண்டின் கூட்டுத் தொகுதிகள் பலர்பாலும் ஒன்றின் தொகுதி பலவின்பாலுமாம்.
இவ்வாறு பலவேறு வழிகளில் பாகுபடுத்தப்படும் பெயர் என்பது எத்தகையது என்பது சிந்தித்தற்பாற்று. பெயர் காலந் தோன்றாதென்துேம் வேற்றுமையுருபேற்கும் இயல்பினது என் பதும் அறியப்படவேண்டியவை, காலந்தோன்ற நிற்குஞ் சொல் வினைச்சொல் எனவும் அது வேற்றுமையுருபு ஏற்காதென்பதும் தெரிந்திருத்தல் வேண்டும். ஆனால் வினைச்சொல் பெயர்த் தன்மைப்பட்டு வினையாலணையும் பெயராக வரும்போது அது
135灘

Page 77
வேற்றுமையுருபேற்குமென்பதும் காலந்தோன்ற நிற்கும் என் பதுந் தெரிந்துகொள்ள வேண்டியவை. வினையாலணையும் மெய்ரை நரமடங்கல் போல்வதென்பரி இலக்கணகாரர். நர மடங்கல் மனிதன் போலவும் சிங்கம் போலவும் காட்சியளிப்பது போல வினையாலணையும் பெயரும் முன்புறம் பெயராகவும் பின்புறம் வினையாகவும் நிற்கும்.
உயர்திணைப் ைெயர் அஃறிணைப் பெயர்
உய்ர்திணைப் பெப்ரெனவும், அஃறிணைப் பெயரெனவும் பெயர் இரண்டு வகைப்படுமென்பதை மேலேயெடுத்துரைத் தோம். ஆனால் பெயர்களிற் சில உய்ர்திணைக்கும் அஃறி ணைக்குஞ் செல்வனவாகவும் உள. அவற்றை விரவுத்திணை என்பர் இலக்கணநூலாரி, உய்ர்தினைய்ென்பது எதுவெனப் பழந் தமிழ் இலக்கண ஆசிரியராகிய் தொல்காப்பியரிடம் விசாரித்தால் அவர்,
உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே'
( தொல், கிளவிப்ாக்கம். 1 ) என்பர். அதாவது மக்களைச் சுட்டிவரும் பெயரிகள் உப்ரி திணையாகும் என்பர் தொல்காப்பிய்ர். இச்சூத்திரத்துக்கு உரை வரைந்த சேனாவரையரீ மக்களென்று கருதப்படும் பொருளை ஆசிரியர் உய்ர்திணை என்று சொல்வர் என்கிறார். தொல்காப்பியர் அஃறிணையை நமக்கு அறிமுகப்படுத்தும் போது முன்னர்க் காட்டப்பட்ட சூத்திரத்தின் இரண்டாவது அடியில், 'அஃறிணை என்மனார் அவரல பிறவே" என்று கூறுகிறார். மக்களென்று கருதப்படாத பொருளை அஃறிணை என்று சொல்லுவர் என்பது அதன் பொருளாகும். மேலும் அச்சூத்திரத்து மூன்றாவது அடியில், "ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே' என்கிறார். அவ்விரு திணை மேலுஞ் சொற்கள் நிகழுமென்பது மூன்றாவது அடியின் பொருளாகும். தொல்காப்பியச் சூத்திரத்தை ஒரே பார்வையிற் காண்போம்.
"உயரீதிணை என்மனாரி மக்கட் சுட்டே
அஃறிணை என்மனாரி அவரல பிறவே
ஆயிரு திணையின் இசைக்குமன் சொல்லே"
{ தொல், கிளவி, )
鐵136

இச்சூத்திரத்தின் முழுப் பொருளையுஞ் சுருக்கமாகக் கூறின் மக்களைக் குறித்துவரும் பெயர்கள் உயர்தினைப் பெயர்கள், மற்றைய உயிருள் பொருள் உயிரில் பொருள் அனைத்தும் அஃறிணையாகும் என்பதாம். தொல்காப்பியரின் திணை பகுப்பு மிகமிகத் தெளிவானதும் அறிவுபூர்வமானதுமாகும்.
சொற்களை உயர்திணைச் சொல், அஃறிணைசி சொல் என இரண்டாக வகுத்தாரேனும் நன்னூலார். "மக்கள், தேவர் நரகர் உயர்திணை' என்று கூறியதன் மூலம் தேவரையும் நரகரையும் மக்களுடன் சேர்த்து உயர்திணையெனக் கூறியது நடுநின்றாய்வார்க்குப் பொருத்தமற்றதெனவேபடும். தேவரி தேவலோக வாசிகள் எனவும் நரகரி நரகலோக வாசிகள் எனவுங் கொண்டு அவர்களையும் மக்கட் பகுப்பில் சேர்த்தது தொல்காப்பியரி கருத்துக்கு மாறானது மட்டுமன்றிப் பகுத்தறி வாளருக்கும் பொருத்தமற்றதாகவேபடுமென்பதில் ஐயமில்லை. உலக வழக்கிலும் தேவரும், நரகிரும் உயர்திணையாகவும், அஃறிணையாக்வுங் வழங் கி வ ர க் காண்கின்றோமாதலால் அவற்றை உயர்திணையென்பது சரியானதாகக் கொள்ள முடியாது. மக்கள் வழாநிலையில் அஃறிணையாக வருவதில்லை. ஆதலால் மக்களோடு தேவரையும், நரகரையுஞ் சேர்த்தது நன்னூலார் காலச் சமயச் சூழலில் எழுந்த குழப்பமேயன்றி வேறல்ல. மக்களாகப் பிறந்து புண்ணியமிகுதியால் தேவராகவும் பாவமிகுதியால் நரகராகவும் பிறப்பரென்ற சமயக் கோட்பாடே தேவரையும் தரகரையும் நன்னூலார் பார்வையில் உயர்தினை யாக்கிற்றென்பது மிகையாகாது. சூரியன் உதித்தான், சூரியன் உதித்தது, சந்திரன் உதித்தான், சந்திரன் மறைந்தது, கலி நீங்கினான் - கலி நீங்கியது எனவும், ஆதிசேடன் எழுந்தான், ஆதிசேடன் எழுந்தது, கார்க்கோடகன் தீண்டினான், கார்க் கோடகன் தீண்டிற்று எனவும், தேவரும், நரகரும் உவரி திணையாகவும், அஃறிணையாகவும் வ ர க் கா ண் கி றோ ம். கடவுளைக் கூட உயர்திணையாகவும், அஃறிணையாகவுஞ் சொல்லலாம். கடவுள் இருக்கிறார். தெய்வம் இருக்கிறது என்பன நோக்கத்தக்கவை.
தேவர் என்று நன்னூலார் கூறுந் தெய்வம் பற்றியும் ஆண்மைத் தன்மை திரிந்து பெண்மைத் தன்மை மிக்கு விளங்கும் பேடு பற்றியும் அவற்றின் திணைபால் பற்றியும்
137鷲

Page 78
தொல்காப்பியரீ வரையறை செய்துள்ளார். தொல்காப்பியரி கருத்துப்படி மக்கள் அல்லாத எல்லாம் அஃறிணை என்று வரையறை செய்யப்பட்டபடியால் அவற்றில் உயர்திணையாகவும் வரக்கூடியவற்றை உயர்திணைக்கும் சேர்க்க வேண்டியது அவர்க்குக் கடனாயிற்று. அதனால் தெய்வத்தைச் சுட்டி வரும் பெயர்கள் ஆண்பால், பெண்பால் தெரியநின்று உயர் திணையாகுமென்று வரையறை செய்தார். தெய்வஞ் சுட்டிய பெயர்கள் உயர்திணை மருங்கிலும் வைத்து வழங்கப்படுமென்று கூறிய தொல்காப்பியர் அவற்றோடு பெண்மை சுட்டி ஆண்மை திரிந்த பெயர்களையும் தெய்வஞ் சட்டிய பெயர்கள் போல உயர்திணையிலும் வழங்கப்படுமென்று கூறினார். ஆண்மை திரிந்த பெயர்களும் தெய்வஞ் சுட்டிய பெயர்களும் அஃறிணைக்கேயுரியனவாயினும் அவை பால் தெரிய நின்று உயர்திணையாகும் என்ற தொல்காப்பியரி கருத்துப் போற்றத் தக்கதே. பெண்மை சுட்டிய ஆண்மை திரிந்த பெயரேயன்றிப் பெண்மை திரிந்து ஆண்மை சுட்டும் பெயர்பற்றி ஏதுங் கூற்றிலர்.
"பெருமையும் உரனும் ஆடுஉ மேன" (தொல், கள, 7 ) எனக் கூறிய தொல்காப்பியரி வேடி, அலி என்பன ஆண் பாலுக்குரியவாய் வழங்குவதை ஏற்றிலர் எனவே கொள்ளக் கிடக்கிறது. அல்லாக்கால் பெண்மை சுட்டிய ஆண்மை திரிந்த வெயர் போல ஆண்மை கட்டிய பெண்மை திரிந்த பெயர் பற்றியுங் கூறியிருப்பாரன்றோ? ஆண்மையற்ற எதனையும் ஆண்பாலென்றல் தொல்காப்பியர் கருத்தன்றென்க. நன்னூல் ஆசிரியர்,
"பெண்மைவிட்டாணவாவுவ பேடாண்பால் ஆண்மை விட் டல்லதவாவுவ பெண்பால் இருமையு மஃறிணை யன்னவுமாகும்" ( நன். பெய. 7 ) என்பதன் மூலம் ஆணும் Mெண்ணுமற்ற உரு ஆண்மையை அவாவி ஆடவர் போலச் செயற்பட்டால் ஆண்பால் எனவும், பெண்மையை அவாவிப் பெண்போலச் செயற்பட்டால் பெண் பால் எனவும், அவையிரண்டும் அஃறிணையாகவும் வருமெனவுங் கூறினார். நன்னூல் உரையாசிரியர்கள் பெண்மையைவிட்டு ஆண்மையை அவாவும் பேடு அலியெனவும் ஆண்மையைவிட்டுப் பெண்மையை அவாவும் பேடு பேடியெனவுங் கூறுவர். அலி
鐵138

.
வந்தான், பேடி வந்தாள் என்பதும், அலி வந்தது, பேடி வந்தது என்பதும் நன்னூல் உரையாசிரியர்கள் கூற்று.
குடி, அடிமை, வேந்து, குழவி, விருந்து, குருடு, செவிடு (முதலிய உறுப்புக்குறையுடையவை) மகவு. ஆண்மை, உயிரி, உடம்பு எ ன் பன வெல் லா ம் உயர்திணைக்குரியவாயினும் அஃறிணையாகச் சொல்லுதல் வழுவன்றென நேமி நா த நூலுடையார் கூறுவர்.
தொல்காப்பியரும் குடிமை, ஆண்மை, இளமை, மூப்பு முதலாகப் பதினெட்டுப் பெயர்களை எ டு த் து க் கூ றி அவை உயர்திணைக்குரியவாயினும் அஃறிணையிலுகி கூறப்படு மென்பர். ( கிளவியாக்கம் 57 ம் சூத்திரத்தில் இவை பற்றிப் பேசப்பட்டுள்ளது )
பொருட்வெயர் முதலறுவகைப் பெயர்
பொருட்பெய்ர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், குணப்பெயர், தொழிற்பெயிரெனப் பெயர்ச்சொல் முழுவதையும் இவ்வாறு வகையுள் அடக்கலாம். இவற்றை இன்னும் விரிவு படுத்திப் பொருட்பெயர் முதலியவற்றை மேலும் பிரித்து கிளைய்ால் வருபெயர் எண்ணால் வருபெயர் என வேறுபடுத்தி ஆறிறந்த பலவாக்வுங் கொள்ளலாம். இத்தொகை குறைத்து ஆறிலுங் குறைவாகவுங் கொள்ளலாம். பொருள், இடம், சினை என்பவற்றைப் பொருளென ஒன்றாக்கி குணம், தொழில் என் பவற்றைப் பண்பென ஒன்றாக்கிப் பொருள், காலம், பண்பு என மூன்றாக்குவாரும் உளர். சிவஞானமுனிவர் இவ்வாறு மூன்றாக்கிக் காட்டுவர். பொருளில் அடங்குபவை சுற்றமும் எண்ணுங் குழுவும் என மூன்றாக்குவர் நன்னூலார், இடப் பெயர்களில் முல்லை, குறிஞ்சி முதலிய திணைப் பெயர் களையும், தேசம், ஊர்வான், அகம், புறம் என்பனவற்றையும் அடக்குவர். காலம் என்பது நொடி முதலாக யுகம் ஈறாகப் பரந்து விரிந்து செல்லும், தோள், குழல், மார்பு முதலாகிய உறுப்புக்கள் சினையில் அடங்கும். அளவு, அறிவு, ஒப்பு, வடிவு, நிறம் என்பன முதலாகக் குணம் பாகுபடுத்தப்படும். ஒதல், ஈதல் முதலாகத் தொழில் பல்வகைப்படும். பொருட்பெயரென இவையனைத்தையும் அடக்குவதும் ஒருமுறையாகும். பொன், கட்டில் மேசை முதலிய்ன பொருட்பெயர்கள், காணி, தோட்டம்,
139灘

Page 79
வயல் முதலாயின இடப்பெயர்கள். நாள், மாதம், இருது, ஆண்டு முதலாயின காலப் பெயர்கள். கண், காது, மூக்கு என்பன சினைப்பெயர்கள். மகிழ்ச்சி, கோபம், துக்கம் முதலியன குணப்பெயர்கள். நடத்தல், ஒடல், ஆடல் என்பன தொழிற் பெயர்கள். இவ்வாறு வகைப் பெயர்களையிடமாகக் கொண்டு ஆண்பால், பெண்பால் முதலிய ஐம்பாற் பெயர்களையும் ஆக்கலாம்.
பொருளால் வருபெயர் (ஆண்பால்
பொருளால் வருபெயர் ஐம்பாலுள்ளும் வருமாற்றை இனிக் காண்போம். முதலில் ஆண்பாற் பெயர்களைப் பார்ப்போம்.
தமன், நமன், நுமன் என்பன கிளையால் வருபெயர்கள். ஒருவன் எண்ணால் வருபெயர் சங்கத்தான் முதலியன குழுவால் வருபெயர்கள். விசேடமாக ஆண்பாலைக் குறிக்கும் பெயர்களுஞ் சிலவுள. அவை, நம்பி, ஆடு உ, விடலை, கோ, வேள், குரிசில் என்வனவாம். இவை பொதுவானவை.
இடித்தால் வருமெயர்கள்
இடப்பெய்ர்களைக் கொண்டு அவை சார்ந்த பெயர்களை ஆக்கலாம். பாலை என்பது ஒரு நிலப்பெயர். அதைக் கொண்டு பாலையான் என ஆண்பாற் பெயரை ஆக்கலாம். இவ்வாறே முல்லை, மருதம், நெய்தல், குறிஞ்சி என்பவற்றிக்கும் ஆண்பாற் பெயர்களை ஆக்கலாம். இடையன், ஆயன் முல்லைக்கும், மறவன், எயினன் பாலைக்கும் ஊரன், மன்னன் மருதத்துக்கும் சேரீப்பன், துறைவன் நெய்தலுக்கும் வரும். இன்னும் தேசம், ஊரி, வான், அகம், புறம் என்ற இடப்பெயர்களைக் கொண்டும் ஆண்பாற் பெயர் முதலியவற்றை ஆக்கமுடியும்.
காலத்தால் வருபெயர்
வருடம், இருது, மாதம் என்பவற்றாலும் பெயர்கள் ஆக்கப்படும். அவை காலத்தால் வருபெயர்களாகும்
மூவாட்டையன், பிரபவன் என்பன வருடத்தாலும் வேனி
லான் கூதிரான் என்பன இருதுவாலும் சித்திரையான், தையான் என்பன மாதத்தாலும் வருபெயர்கள்.
靈140

சினையால் வருபெயர்
தோளால் வருபெயர் திணி தோளன், குழல் என்னுஞ் சினையால் வருபெயர் சரி குழலன், மார்பால் வருபெயரி வளர மார்பன. குறுந்தானன், நெடுங்கையின், பல்லன், உதடன் என்பனவும் சினையால் வருபெயர்களே.
குணத்தால் வருபெயர்
அளவால் வருபெயர்கள் பெரியன், சிறியன் என்பன. அறிவால் வருபெயர் அறிஞன், புலவன் என்பன. ஒப்பால் வரு பெயர் பொன்னொப்பான், புலியனையன், வடிவால் வருபெயரி கூணன், குறளன், நிறத்தால் வருபெய்ர் கரியன் செய்யன், இன்னும் கதி (மனிதன், தேவன்) சாதி, குடி, சிறப்பு என்பவற்றாலும் ஆண்பாற் பெயர்கள் வரும்.
தொழிலால் வருமெயர்
தொழிலால் வருபெயர்கள்  ைஒதுவான், ஈவான், நடையன் முதலியன.
இடைச்சொல்லால் வருபெயர்
சுட்டு, வினா, பிற, மற்று என்பவற்றாலும் பாலறிய நிற்கும் பெயர்கள் வரும். அவன், இவன், உவன் சுட்டால் வருபெயர்கள்.
பிறன், மற்றையான் என்பன பிறமற்று என்னும் இடைச் சொற்களால் வந்தன. நம்பி, விடலை முதலியவற்றையும் இங்குச் சேர்க்கலாம்.
உயர்தினைப் பெண்பாற் பெயர்கள்
உயர்திணை ஆண்பாலுக்குக் கூறப்பட்ட பொருள் முதலாற னுள்ளும் பெண்பால் ஈறாகிய னகர மெய் இகர உயிர் என் பவற்றை இறுதியாகக் கொண்டு பெண்பாலைச் சுட்டிவருவன பெண்பாற் பெயர்களாம். பெண்பாற் பெயர்களும் பொருள், இடம், காலம், முதலிய அறுவகையிலும் வரும்.
நிலப்பெய்ரிகள் அன் விகுதியை அள் விகுதியாக்கிப் பெறப் படாதன பல. எயினன் என்பது எயினள் என வராது எயிற்றி என வரும்.
141鯊

Page 80
இவற்றோடு தோழி, செவிலி, மகடூஉ, நங்கை, தையல் என்பனவும் பெண்பாற் பெயர்களேயாம். இவற்றோடு பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் என்னும் ஏழு பருவப் பெண்களுங் கொள்ளப்படும். இன்னும் இகுளை, மாது, பெண்டு என்பனவும் பெண்பாற் பேயர்களே.
உயர்திணைப் பலர்பாற் பெயர்கள்
முன்னர்க் கூறப்பட்ட பொருள் முதலாறுள் பலர்பாலுக் கேற்ற ரகர மெய்யை இறுதியாகக் கொண்டு வருவனவும் கள் என்பதை இறுதியாக ஏற்றுவரும் பலர்பாற் சொற்களுங் கொள்ளப்படும்,
பொருளால் வருபெயர் (பலர்பால்) தமர், நமர் என்பன. இடத்தால் வருபெயர் குறவர், எயினர் முதலியன.
காலத்தால் வருபெயர் மூவாட்டையார், முதுவேனிலார், சித்திரையார் முதலியன. இவ்வாறே சினையால், குணத்தால், தொழிலால் வருபெயர்களுக்கும் பலர்பால் விகுதி கொடுத்துக் $(tଶର୍ଦ୍t୫.
லைப்பால் பற்றிய ஒரு நோக்கு
பலர்பால் என்பது ஆண்பாலுட் பலரைக் குறிப்பதாகவும், பெண்பாலுட் பலரைக் குறிப்பதாகவும் ஆண்பால், பெண் பாலாகிய இருபாலுள்ளும் பலரைக் குறிப்பதாகவும் வரும். அன்பரி என்பது அன்பன் என்னும் ஆண்பாலுட் பலரைக் குறிப்பதாகவும் அன்பினள் எனப்படும். பெண்பாலுட் பலரைக் குறிப்பதாகவும் இருபாலருஞ் சேர்ந்த பலரைக் குறிப்பதாகவும் வரும். போயினர் என்ற பலர்பால் வினைமுற்றும் ஆண்கள் பலரி போயினர் என்றோ, பெண்கள் பலர் போயினரென்றோ ஆணும், பெண்ணுமாகச் சேர்ந்த பலர் போயினர் என்றோ வழங்கக் காண்கிறோம். பலர்பால் வினைமுற்றை எத்தகைய மயக்கமுமின்றி வழங்குவோர், பலர்பாற் பெய்ர்களை வழங்கும் போது தடுமாறுவதைக் காண்கிறாம். பண்டிதன் என்பது ஆண்பாற் படரிக்கைப்பெயர். பண்டிதை என்பது பெண்பாற் படர்க்கைப்பெயரி. பண்டிதரி என்பது ஆண்பாலுக்கும் பெண் பானுக்கும் பொதுவான படரிக்கைப்பெயர். இது பலர்பாற்
囊142

பெயராயினும் அது மரியாதைப் பன்மையாக ஒரு பண்டிதனை அல்லது பண்டிதையைக் குறிப்பதுமுண்டு. அல்லாக்ாேல் பண்டிதன் எனப்படும் ஆண்பாற் படரிக்கையில் வரும் பலரையும் அவ்வாறே பண்டிதை எனப்படும் பெண்பாற் படரிக்கையில் வரும் பலரையும் அல்லாக்கால் இருபாலாருஞ் சேர்ந்த பலரையுங் குறிப்பதாகும். பண்டிதர் என்பது ஆண்பாலைச் சேர்ந்து பலரை அல்லது மரியாதைப் பன்மையாக ஆண்பாலைச் சேர்ந்த ஒருவரை மட்டுங் குறிப்பதெனவும் பெண்பாலில் பண்டிதரி என்ற சொல் மரியாதைப் பன்மையாக ஒருவரைக் குறிப்பிடாது எனவுங் கருதுந்தவறான எண்ணத் தமிழ் கற்றவர் மத்தியிலும் இருப்பதைச் சர்வ சாதாரணமாகக் காண்கிறோம்.
ஆணைக் குறிக்கும் பெயர்க்கு முன் பண்டிதர் என்ற பலர்பாலை மரியாதைப் பன்மையாக வழங்குவோர், பெண்பாற் பெயர்க்கு முன் பண்டிதை எனக் குறிப்பிடுவது இப்போது படித்தவர்கள் மத்தியிலுங் காணப்படுகிறது. ஆண்பால் இய்ற் பெய்ர் முன் பண்டிதன் என்று குறிப்பிட்டால் பெண்பால் இய்ற் பெயர் முன் பண்டிதை எனக் குறிப்பிடுவது பொருத்தமுடைய தாகும். ஆண்பாற் பெயர்க்கு முன் சிறப்புப் பெயர்க்கு மரியாதைப் பன்மையைக் கொடுத்துவிட்டுப் பெண்பாற் பெயர்க்கு முன் அவ்வாறு மரியாதைப் பன்மைச் சிறப்புப் பெயரைத் தவிர்ப்பது தவறாகும். சில பெயர்கள் ஆண்பாலுக்கு மட்டும் உரிய்ன. சில பெய்ர்கள் பெண்பாலுக்கு மட்டும் உரிய்ன. கணவன் என்பது ஆண்பாலை மட்டுங் குறிப்பது. அது கணவர் என்று வரும் போது கணவன் என்னும் பெயர்க்குகிமை பூண்ட ஆண்பாலாரையே குறிக்கும். மனைவி என்பதும் அவ்வாறே பெண்ணொருத்தியைய்ே குறிக்கும். மனைவியர் என்னும் பன்மைப் பெய்ரும் பெண்பாற் பன்மைப் பெய்ரே. இல்லாள் என்பதற்கு நேரான எதிர்ப்பாற்சொல் தமிழில் இல்லை. இல்லான் என்பது இல்லாதவள் என்பதையுணர்த்துமே பன்றி இல்லறத்தானைக் குறியாது. கணவன் என்பதை, ஆண் பாலை மட்டும் உணர்த்தும் பலர்பாற் சொல்லாகக் கணவர் என்று குறிப்பிடலாம். மனைவியை மனைவியர் எனக் கூறலாம். இல்லாளை அவ்வாறு பலர்பாற் சொல்லாக வழங்கும் மரபு தமிழில் இல்லை. இல்லதென் இல்லவள் மாண்பானால்" என்பதில் இல்லவள் என்பது இல்லாள் பலரையுங் குறித்தால்
鷲143

Page 81
சாதியொருமை என்பாருமுளர் இச்சொற்கு நேர்பன்மை காண்டல் இல்லைப்ாகும்.
புலவன் என்பது புலவர் என வரும்போது ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவாகிய பலர்பாற் படர்க்கைப் பெயர், இது பெண் பாலுள் புலவி என வருதலில்லை. புல வி யெ ன் ப து தலைவனுக்கும், தலைவிக்கும் இடையே வருஞ் சிறு பிணக்கு என்பர். புலத்தியென்பது ஆடையொலிக்கும் ( வெளுக்கும் ) பெண்ணைக் குறிக்குமேயன்றி புலமையுடையாளைக் குறியாது. புலவன் ஆண் பால் ஒருமையையும், புலவர் ஆண், பெண் பன்மை யையுங் குறிப்பதாகும். அமைச்சன் என்பதற்கும் பெண் பால் தமிழ்மொழியில் இல்லை. அது அமைச்சர் என வரும்போது இருபாலுக்குந் தனித்தனிவருவதுண்டு. அது ஒருவரைக் குறித்தால் மரியாதைப் பன்மை, பலரைக் குறித்தால் பலர்பாற் படர்க்கைப் Gal u aw u tħ,
உயர்திணைப் பலர்பாற் பெயர்கள் என்பதன் கீழ்க் காட்டப் பட்ட அனைத்து உதாரணங்களும் ஆண்பாற் பன்மை, பெண் பாற் பன்மை. இருபாற் பன்மை என்னும் முக் கூற்றுக்கும் உரியனவாகும். எனினும் பலர்பாற் பெயர்களுட் சில ஆண் பாற் பன்மைக்கும், வேறு சில பெண்பாற் பன்மைக்கும் மட்டும் உரியவென்பது மேலே காட்டப்பெற்ற உதாரணங்களிலிருந்து நன்கு புலனாகும். பலர்பால் பற்றிப் பேசியவிடத்து இவ்வேறு பாடுகளுந் தெரிந்திருக்கவேண்டுமென்பதாற் கூற வே ண் டி வ தாயிற்று.
ஆண் பாலுக்கும், பெண் பாலுக்கும் உரிய ஈறுகளின்றி இரு பாலுக்குஞ் செல்லும் பெயர்களுந் தமிழ் மொ ழி யில் உள. நோயாளி என்பது அத்தனையதே. அது நோயாளி வந்தான் எனவும், நோயாளி வந்தாள் எனவும் வரும். இவ்வாறே அகதி, உலோபி, ஏழை, மேதாவி, துரோகி முதலியனவும் ஆண் பெண் என்னும் இரு பாற்கும் உரியவை. இவைகள் விகுதிபெற்றும் பலர்பாலைச் சுட்டி வரும்.
அஃறிணை ஒன்றன்பாற் பெயர்கள்
மொழிக்கு முதலில் வரும் எ, யா, ஏ என்னும் எழுத்துக்
களைக்கொண்ட வினாப் பெயர்களும் அ, இ, உ என்ற சுட் டெழுத்துக்களைக் கொண்ட சுட்டுப் பெயர்களும் பொருள்
鑿144

عمله ناسم................
முதலாகத் தொழில் ஈறாகக் கூறப்பட்ட அறுவகைப் பெயர்களும் "து" என்னும் விகுதி பெற்று வரும்போது அஃறிணை ஒன்றன் பாற் பெயர்களாகும்.
எது?, ஏது?, யாது? அது, இது, உது என வினாப் பொருளிலுஞ்
சுட்டுப் பொருளிலும் வந்த ஒன்றன்பாற் பெயர்களைக் காணலாம். குழையது, நாட்டது, பூசந்தது கொம்பினது, சிறியது, ஆடலது எனப் பொருள் முதலாறும் அடியாகப் பிறந்த ஒ ன் ற ன்பாற் பெயர்கள் வரும்.
அஃறிணைப் பலவின் பாற் பெயர்கள்
வினாவெழுத்துக்களுடனும், சுட்டெழுத்துக்களுடனும் வரும் வையீற்றுப் பெயர்களும், அகரவீற்றுப் பெயர்களும், கள் என் னும் விகுதியீற்றுப் பெயரீகளும், பொருள் முதலாகத் தொழில் ஈறாக வரும் பெயர்களில் பலவின்பால் விகுதிபெற்ற பெயர்களும், ஒன்றல்லாத இரண்டு முதலாய எண் பெயர்களும்,
உள்ள, இல்ல, பல்ல, சில்ல, உள, இல, பல, சில என்பன வும் பலவின் பாற் பெயர்களாகும்.
எவை, ஏவை, இபா என வினாவும் அவை, இவை. உவை எனச் சுட்டும் வரும் குழையன அகத்தின. மூலத்தவை, மூலத் தன. கோட்டவை, கோட்டன, கரியவை, கரியன, ஆடலவை, ஆடலன எனப் பொருள் முதலாறும் பலவின் பால் விகுதி பெற்று வந்த பலவின் பாற் படர்க்கைப் பெயர்களாகும்.
கள் விகுதி பற்றிய ஒரு நோக்கு
ஆசிரியர் தொல்காப்பியர் 'கள்' என்னும் விகுதியோடு சேர்ந்துவரும் இயற் பெயர்கள் பலவின்பாற் படர்க்கைப் பெயருக் குரியன வெனக் கூறுவர்.
*கன்னொடு சிவனும் அவ்வியற் பெயரே கொள்வழி யுடைய பலவறி சொற்கே"
(தொல் பெய, 15
என்பது கள் விகுதி பற்றி அவர் கூறிய நூற்பாவாகும். அவர் அஃறிணைப் பலவின் பாற்குரித்தாகக் கூறிய கள் விகுதி இன்று உயர்திணைப் பலர் பாற்கும் உரிமைபூண்டு நிற்கிறது. அவர் என்பது பன்மைச் சொல்லாயினும் அது இன்று ஒருவரைச் சுட்டு
O 145羲

Page 82
வதற்கு மரியாதைப் பன்மையாக வழங்குகிறது. அது பன்மைசுட்ட வேண்டிற் கள் விகுதி பெற்றே வரவேண்டியுள்ளது. அவர்கள் என்று சொல்லும்போதே அது பலர்பாற் பன்மையாக அமை கின்றது, மனிதர் என்பதும் பன்மைப் பெயராக இருந்துங்கூட மனிதர்கள் என வரும்போதே அது பலர்பாற் படர்க்கைப் பெய ரென வெளிப்படுகிறது. அந்த மனிதர் என்ன சொன்னார் என வினாவும்போது பலர்சாலுக்குரிய மனிதர் என்னும் பெயர் மரியாதை குறித்த ஒருமையாகவே நிற்கிறது. மனிதர்கள் என வரும்போதே அது பலர்பாற் படர்க்கைப் பெயராக அமைகிறது. உயர்திணையிற் கள் விகுதி இணைந்து வருதலைத் தொல்காப் பியர் விலக்கினாலும் அவருக்குப் பிற்பட்ட காலத்தில் கள் விகுதி உயர்தினையிலும் பேரு வழக்காக வந்து வழங்குவதாயிற்று. கள் பெரும்பாலும் விகுதிமேல் விகுதியாகவே வருகிறது. ஆனால் மக்கள் என்ற சொல்லைத் தொல்காப்பியர் தமது தொல்காப் பியத்திற் பல இடங்களில் எடுத்துச் சொல்லியிருக்கிறார். மக்கள் என்பது கள்ளிறு பெற்ற பலர்பாற் பெயர். உயர் திணையிற் கள்ளிறு வருமென அவர் கூறாத போதிலும் அ வ ர் த 7 ம் அச்சொல்லை எடுத்தாண்டதன் மூலம் கள் ஈற்றுப்பெயர்கள் உ ய ர் தி  ைன யி லும் வருமென ஏற்றுக்கொண்டாரெனவே கொள்ளலாம். தொல்காப்பியரி காலத்தில் உயர்திணையிற் "கள்" ஈறு வருதல் அருகிய வழக்காதலால் அவர் அதை எடுத் துக் காட்டாது விட்டார்போலும்.
இடுகுறிப் பெயர், காரணப் பெயர்
பெயர்கள் அனைத்தையும் இடுகுறிப் பெய்ரெனவும், காரணப் பெயரெனவும் இரண்டாக வகுக்கலாமென்று முன்னர்க் கூறப்பட்டது. அவ்விரண்டு வகையும் பொதுச் சிறப்பு நோக்கில் நான்காகவும் வகுக்கப்படும். அவையாவன இடுகுறிப் பொதுப் பெய்ர், இடுகுறிச் சிறப்புப் பெயர், காரணப் பொதுப் பெயர், காரணச் சிறப்புப் பெயர் என்பனவாம். இவை இட்டுமல்லாமல் காரண இடுகுறிப் பெயர் என்பது மொன்றுண்டு.
ஒரு காரணமும் இல்லாமல் வழங்கி வரும் பெய்ர் இடுகுறிப் பெயராம். இது தன்னினஞ் சார் சிலவற்றுக்குப் பொதுவாக வழங்கி வரும்போது இடுகுறிப் பொதுப்பேயராம், ஒன்றற்கே சிறப்பாய் வழங்கும் பெயர் இடுகுறிச் சிறம்புப் பெயராம்.
籃146

இடுகுறிப் பெயர்களுள் பொதுவாய் வரும் பெயர்களுக்கு மரம் என்பதை உதாரணமாகக் காட்டலாம். மரம் என்பது இடுகுறிப் பெயராக வரும்போது மரத்தின் வகைகளான ஒவ்வொன்றும் இடுகுறிச் சிறப்புப் பெயராகும். வாழை, மா, பலா, தெங்கு என்பன இடுகுறிச் சிறப்புப் பெயர்கள். மா இடுகுறிச் சிறப்புப் பெயராக இருந்தபோதும் பல்வேறு வகை மாமரங்களைச் சொல் லும் போது மா இடுகுறிப் பொதுப் பெயராகவும், அதன் பல்வேறு இன மாமரங்கள் இடுகுறிச் சிறப்புப் பெயராகவும் அமைந்துவிடுகின்றன. ஆதலால் இடுகுறிப் பொதுச் சிறப்பு என்பன நியதிப் பெயராயில்லாமல் மாறுந் தன்மையுள்ளனவாக அமையும் என்பது ஞாபகத்தில் இருத்தவேண்டியது. யாதாயினும் ஒரு காரணம் பற்றி வழங்கும் பெயர் காரணப் பெயராகும். அணி என்பது அணியப்படும் ஆபரணங்கள் அனைத் தி ற் கும் பொதுவாய் நிற்றலாற் காரணப் பொதுப் பெயராயிற்று. அணி யென்பது புனைவன, பூண்பன அனைத்துக்கும் பொதுவாய் வருதி லாலேயே காரணப் பொதுப் பெயராயிற்று. வளையல் என்பது கையில் அணியப்படும் அணியை மட்டுங் குறிப்பதால் காரணச் சிறப்புப் பெயராயிற்று. இலங்கையர் என்பது இலங்கையிலுள்ள எல்லோரையுங் குறிப்பதால் காரணப் பொதுப்பெயர். இலங்கைத் தமிழர் என்று கூறும்போது அது காரணச் சிறப்புப் பெயராகின் றது, இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர் என்பவற்றை நோக்கும் போது தமிழர் என்பது காரணப் பொதுப் பெயராகவும், இந்தியத் தமிழர் என்பது காரணச் சிறப்புப் பெயராகவும் அமைகிறது. முதல், சினை என்பவை மாற்றமடைவதுபோல பொது, சிறப்பு என்பனவும் சந்தர்ப்பத்துக்கேற்ற வகையில் பொதுச் சிறப்பிலிருந்து நீங்கி வருவதையும் ஞாபகத்தில் வைத் திருத்தல் வேண்டும். மனிதனை நோக்கக் கை சினையாகிறது. விரலை நோக்கக் கை முதலாகிறது.
காரண இடுகுறிப் பெயர்
காரண இடுகுறியென்பது காரணத்தை நோக்கும் போது அக்காரணத்தையுடைய பலவற்றுக்கும் வழங்கக் கூடிய பெயராக விருப்பினும் அவ்வாறு வழங்காமல் அக்காரணத்தையுடைய ஒரு பொருளுக்கே வழங்கும் பெயராகும்.
முள்ளியென்பது ஒரு செடியின் பெயர். முள்ளையுடைய செடியாதலால் அது அப்பெயர் பெற்றது. ஆனால் முள்ளை
147籤

Page 83
புடைய செடிகள் முள்ளியல்லாத பலவுள. ஆனால் அவற்றை முள்ளியென வழங்குவதில்லை. காரணங் கருதாமல் இடுகுறி வாகவே அப்பெயர் வழங்கப்படுகிறது. எனினும் அங்கு அப் பெயர்க்குக் காரணமில்லாமவில்லை. அந்தணன் என்பதுங் காரண இடுகுறிப்பெயர். அந்தணன் என்பது அழகிய தண்ணளி யுடையவன் எனப் பொருள்படும். ஆயினும் அப்பண்பு கிடைத்த அனைவரையும் அதீ தணரென வழங்குவதில்லை. பிராமணர்களே அந்தணர் எனச் சொல்லப்படுகின்றனர். ஆதலால் அதுவுங் காரண இடுகுறிப்பெயரேயாகும். முக்கண்ணன் என்பது சிவனை மட்டுங் குறிக்கும் போது காரண இடுகுறிப்பெயராகிறது. தேவர்கள் மூன்று கண்ணுடையர் என்பதால் அவர்களைக் குறியாது சிவனை மட்டுங் குறித்துக் காரண இடுகுறியாயிற்று. கறங்கு என்பது மது. -
இடுகுறி காரணக் குறிகளை நன்னூலாசிரியர் இடுகுறி மரபு, இடுகுறியாக்கம் எனவும், காரணக் குறி மரபு காரணக் குறிப்ாக்கம் எனவும் மேலும் பாகுபாடு செய்வர். மரபு என்பது குறித்த ஒருவரால் ஆக்கப்பட்டதாகாது தொன்றுதொட்டு வழங்கிவருவது. ஆக்கமென்பது புதுவதாகப் புலவர்களாலும் ஆன்றோராலும் ஆக்கப்படுவது.
மரம், தெங்கு, பனை என்றாங்கு வரும் இடுகுறிப் பொதுப் பெயரும் இடுகுறிச் சிறப்புப் பெயரும் இடுகுறி மரபுப் பெயரில் அடங்கும்.
அவன், அவள் பறவை என்பன சுாரணக்குறி மரபுப் பெயர்களாம். இடுகுறியாக்கத்துக்குப் Guntů ur மொழிப் புலவர் தமது செய்யுள் ஒன்றில் முருகக் கடவுளுக்கு முட்டை யென்று பெயரிட்டதை எடுத்துக் காட்டுவர்.
"பொன்போலுங் கள்ளிப் பொறி பறக்குங் காணலிலே என் பேதை செல்லற் கியைந்தனளே - மின்போலும் மாணவேல் முட்டைக்கு மாறாய தெவ்வரி போன் கான வேல் முட்டைக்குங் காடு"
என்பதே அச் செய்யுளாகும். காரணக் குறியாக்கம் - பொன்னன், பூணன், மலைமகள் என்பன இடுகுறியாக்கத்திற்கு உதாரணங்கள் அரிய வாயினுந் தேவர் பெயரை மனிதருக்கு இட்டு வழங்குவதைக் கொள்ளலாம் 6T6öt.fi, -
鯊148

இயற்பெயர், ஆகுபெயர்
பெயரிகள் அனைத்தையும் இயற்பெயர் ஆகுபெயரி என இருவகையுள் அடக்கலாம் என்பது இவ்வியலின் தொடக்கத்திற் கூறப்பட்டது. இயற்பெயர்கள் வழக்குச் செய்யுள் என்னும் இரண்டிலும் பெரு வரவிற்றாய் வழங்குதலினால் இயற்பெயர் பற்றியதிகங் கூறவேண்டியதில்லை. தாமரை என்பது இயற் பெயர். தாமரைச் செடியைக் குறிக்கும் போது அது இயற் பெயர். அது தாமரை மலரைக் குறிக்கும் போது ஆகுபெயர். பொருள்களுக்கு வழங்கி வ ரு ம் பெயர்களெல்லாம் இயற் பெயர்களே. அவை தம்மோடு தொடர்புடைய பொருளைச் கட்டும்போது ஆகுபெயராம்.
ஆகுபெயர்
குறிப்பாற் பொருளுணர்த்துஞ் சொற்களில் ஆகுபெயரும் ஒன்றென்பர். ஆகுபெயராவது ஒன்றன் இயற்பெயர் அதனோடு சம்பந்தப்பட்ட பிறிதொன்றுக்குத் தொன்றுதொட்டு வழங்கி வருவதென்பர். நேரே தன் பொருளை உணர்த்தும் பெயர் இயற்பெயர். இது அவ்வாறுணர்த்தாமையால் ஆகுபெயராயிற்று.
ஆசிரியர் தொல்காப்பியர் ஆகுபெயரை எழு வகைத்தாகக் கூறியுள்ளார். அவர் கூறியவற்றுள் முதலாவது முதலிற் கூறுஞ் சினை யறி கிளவி என்பது. அதாவது முதற் பொருளைச் சொல்ல அதன் சினைப்பொருளை உணர்வதே அது. இது நன்னூலார் கூற்றுப்படி பொருளாகுபெயராம். தொல்காப்பியர் கூறிய இரண்டாவது ஆகுபெயர் சினையிற் கூறும் முதலறி கிளவி என்பது. இது நன்னூலார் கூறுஞ் சினையாகு பெயராம். மூன்றாவதாகத் தொல்காப்பியர் கூறும் ஆகுபெயர் பிறந்த வழிக் கூறல் என்பது. இது நன்னூலாரி கருத்தின்படி இடவாகு பெயராகும். நான்காவதாகத் தொல்காப்பியர் கூறும் ஆகு பெயர் பண்புகொள் பெயர் என்பது. இது நன்னூலார் கூறுங் குணவாகு பெயர், தொழிலாகு பெயர் இரண்டையுஞ் சுட்டும். குணமுந் தொழிலும் பண்பென ஒன்றில் அடங்கும் என்பது இலக்கண ஆசிரியர்களின் கருத்து. தொல்காப்பியரி இந்நான் கனுள்ளும் பொருளாகுபெயர், சினையாகுபெயர், இடவாகு பெயர், குணவாகுபெயர், தொழிலாகுபெயர், என ஐந்தையும் அடக்கினார். பிறந்த வழிக் கூறல் என்பதில் இடத்தைமட்டு
149蠶

Page 84
மல்லாமல் காலத்தையும் அடக்கலாம். உரோகிணி வந்தாள். என்னும் போது உரோகிணி நட்சத்திரத்திற் பிறந்தவஹென அதைக் காலவாகு பெயர் என்பர் நன்னூலார். Gassr@besmrtů QuLufî நான்கு ஆகுபெயர் கூறி ஆறு ஆகுபெயர்களைக் கொள்ள வைத்தார் என்பது பொருந்தும். இவற்றோடு தொல்காப்பியர் இன்றது மொழிதல், இருபெயரொட்டு, வினை முதலுரைக்குங் கிளவியென மூன்று கூட்டுவரி, இயன்றது மொழிதல் என்பதற்கு உரையாசிரியர்கள் காரியத்தாற் கூறுவது எனவும், இருபெறு ரொட்டு என்பதற்கு இரு பெர்கள் சேர்ந்து நின்று 总@ பெய்ரீப் பொருளை உணர்த்துவது எனவும், வினை முதலு ரைக்குங் கிளவி என்பதற்கு வினை முதலைச் சொல்ல அவ் வினை முதலாலிய்ன்ற பொருளைக் குறிப்பது எனவும் கூறுவர். இவற்றோடு அளவையாகுபெய்ரி, நிறைமாகுபெய்ர் என வேறி ரண்டுஞ் சேர்ப்பர். அதனால் தோல்கரடி கூறிய்வற்றுள் பொருள் முதலாறும் அளவையாகு பெய்ருட்பட நான்கும் அடங்கு அவர் கூறிய் ஆகுபெயர் பத்து எல்லாம்.
நன்னூலார் பொருள் முதலிய ஆறினோடு அளவையாகு பேய்ர், சொல்லாகுபெறர், தானியாகுபெய்ர், அருவியாகுபெய்ர், ஆாரியவாகுபெப்ர், கருத்தாவாகுபெயர், உவமைப்ாகுபெறுர் என்பனவுஞ் சேர்த்து பதின்மூன்று வகிைய்ாகுபெயர் கூறினார். உரைய்ாசிரியர்கன் அளவை என்பதை எடுத்தல், முகத்தல், எண்ணல், நீட்டல் எனப்பிரித்து மேலும் மூன்று கூட்டிப் பதினாறாக்குவர்.
பதினாறு வகை ஆகுபெயர்களும் விளக்கமும்
தன்னூலார் கூறிய ஆகுபெயர்களின் வலைகளை இங்குத்
தந்து அவற்றிக்குரிய் விளக்கங்களையுந் தருதும்.
1. பொருளாகுபெய்ரி - தாமரை சூடினாவி - இங்கு தாமரை என்ற பொருளின் பெயர் அதன் சினையாகிய் [-4 ଦ୍ଵିତଜ୍ଞ குறித்துப் பொருளாகு பெயராயிற்று.
2. இடவாகுபெயர் - ஊர் சிரீக்கும். ஊர் என்னும் இடப் பெயரி அங்குள்ள மக்களைக் குறித்தலால் இடவாகு பெயராயிற்று.
鬣150

0.
.
| 3.
காலவாகுபெயர் - உரோகிணி வந்தாள். உரோகிணி என்னும் நட்சத்திரத்தின் பெயர். அந்நாளிற் பிறந்தவளைக் குறித்தலால் க்ாலவாகுபெயர். சினையாகுபெயர் - வெற்றிலை நட்டான். இலை என்னும் சினைப்பெய்ர் இலையையுடைய் கொடியைக் குறித்தலால் சினைப்ாகுபெயர் - சேனாவரையர் இலை நட்டு வாழும், பூ நட்டு வாழும் எனச் சினைப்பெயர் முதன்மேல் வத்ததென உதாரணங் காட்டுவர்.
குணவாகுபெய்ர் - பச்சையுடுத்தான். இங்குப் பச்சை யென்பது பச்சை நிறமுடைய் ஆடையைக் குறித்தலால் குணவாகுபெயர். தொழிலாகுபெய்ர் - பொரியல் உண்டான். இங்கே பொரியல் என்பது பொரித்தல் தொழிலுக்கு இடமான உணவைக் குறித்தலால் தொழிலாகுபெய்ர். எண்ணலளவையாகுபெயர் - கன்னத்தில் ஒன்று கொடுத் தான். இங்கே ஒன்று என்னும் எண்ணுப்பெயர் அறை தலைக்குறித்து எண்ணலளவைப்ாயிற்று. நிறுத்தலளவையாகுபெயர் - இரண்டு கிலோ தந்தாள் என்பது இரண்டு கிலோ நிறையுள்ள பொருளைக் குறித் தலால் நிறுத்தலளவையாகு பெயராயிற்று. முகத்தலளவைய்ாகுபெப்ர் - உலையில் இரண்டு கொத்துப் போட்டாள். இங்கே கொத்து அவ்வளவுள்ள அரிசிய்ைக் குறிப்பதால் முகத்தலளவையாகுபெயர். நீட்டலளவைப்ாகுபெயரி - மூன்று யார் எனக்கும் போதும், இங்கு யார் என்னும் நீட்டலளவை அவ்வளவையுடைய துணியைக் குறிப்பதால் நீட்டலளவை ஆகுபெய்ரி. சொல்லாகுபெயர் - இந்நூற்கு உரை செய்தான். இங்கு உரை என்பது பொருளைக் குறித்தலால் சொல்லாகு
தானியாகுபெய்ர் - விணக்கு முரிந்தது. விளக்கு எரியும் பகுதிய்ைக் குறிப்பது அது அதன் கீழ்ப் பகுதிப்ாகிய தண்டைக் குறிப்பதால் தானிய்ாகுபெய்ர், இடவாகு பெயர்க்கு இது நேர்மாறானது. அங்கு இடம் இடத்தி
151 鬣

Page 85
லுள்ள பொருளைக் குறிக்கும். இங்கு இடத்திலுள்ள பொருள் இடத்தைக் குறிப்பதென வேறுபாடறிக, உலக்கை யுடன் செல்வானை உலக்கை என்றழைத்தலுமது.
13. கருவியாகுபெயர் திருவாய்மொழி ஒதினான். இங்கே மொழி என்னுங் கருவியின் பெய்ர் அக்கருவியால் ஆய் நூலைக் குறித்தலால் கருவியாகுபெயர்.
14. காரியவாகுபெயர் - அலங்காரம் படித்தான். இங்கு அலங் காரம் எனப்படும் காரியத்தின் பெயர் அதனையறிவித் தற்குக் காரணமாகிய நூலைக் குறித்தலால் காரியவாகு பெயர்.
15. கருத்தாவாகுபெயர் - திருவள்ளுவர் படித்தான். திருவள் ளுவர் என்னுங் கருத்தாவின் பெயர் அக்கருத்தாவாற் செய்யப்பட்ட நூலுக்காதலால் கருத்தாவாகுபெயர்.
16 உவமையாகுபெயர் - பாவை வந்தாள். இங்குப் பாவை யென்னும் உவ மா ன த் தி ன் பெயர் உவமேயமாகிய பெண்ணைக் குறித்தலால் உவமையாகுபெயர்.
தொல்காப்பியர் ஆகுபெயரின் ஏழுவகைகளை முதலிற் கூறினார். பின்னர் அளவையாகுபெயர் பற்றியும் உவமையாகு வெயர் பற்றியுங் கூறினார். நன்னூல் கூறிய அனைத்தையும் தொல்காப்பியர் கூறிய்வற்றால் தழுவலாம் என்பது அறிஞர் கருத்து.
ஆகு பெயரை விடாத ஆகுபெயர், விட்ட ஆகுபெயர், இரு மடியாகு பெயர், மும்மடியாகு பெயர், அடையடுத்த ஆகுபெயர். இரு பெயரொட்டாகு பெயர் எனவும் பாகுபடுத்தியுரைப்பர். புளி தின்றான் என்பதில் புளி என்னுஞ் சுவைப் பெயர் அச் சுவையையுடைய பழத்தைக் குறிக்கும்போதும், அச்சுவையை விடாது நிற்பதால் அது விடாத ஆகுபெயர்.
ஊரி சிரிக்கும் என்பதில் ஊர் என்னும் பெயரி அங்குள்ள மக்களைக் குறிக்கும்போது ஊர் என்பது தன்தன்மை இழந்து நிற்பதால் இது விட்ட ஆகுபெயராகும்.
புளி தின்றான் என்னும்போது புளி என்னுஞ் சுவைப்பெயர் அச்சுவையையுடைய பழத்தைக் குறிக்கும்போது ஆகுபெயர்.
驚152

புளி முளைத்தது என்னும்போது புளியென்னுஞ் சுவைப் பெயர் அச்சுவையையுடைய மரத்திற்காகி, அது பின் முளைக்கா தலால் இருமடியாகுபெயர்.
கார் நிகர் கொடைக்கை என்னும்போது கார் என்னும் நிறப் பெயர் மேகத்திற்காகி மேகத்தின் பெயர் அது பெய்யுங் காலத் தைக் குறித்தலால் இருமடியாகு பெயர்.
கார் அறுத்தது என வரும்போது கார் என்னும் நிறப்பெயர் அந்நிறத்தையுடைய மேகத்திற்காகிப் பின்னர் அம்மேகம் பெய் யுங் காலத்தைக் குறித்து அதன்மேல் அக்காலத்தில் விளையும் பயிரைக் குறித்தலால் மும்மடியாகு பெயராகும்.
வெற்றிலை நட்டான், அறுபதம், முரலுஞ்சோலை என்ப வற்றில் வெறுமையிலை வெற்றிலை எனவும், ஆறு + பதம் அறு பதம் எனவும், அடையடுத்துக் கொடிய்ையும் வண்டையுங் குறித்த லால் இவை அடையடுத்த ஆகுபெயர் எனப்படும்.
வகரக் கிளவி, மக்கட் சுட்டு என்பவற்றில் ஒரு பெயர்க்கு இரு பெய்ரி ஒட்டி நிற்ப அவற்றுள் முன்மொழியாகிய கிளவி, சுட்டு என்பன ஆகு பெயராய் முறையே எழுத்து, பொருள் என் பனவற்றை உணர்த்தலால் இவை இரு பெயரொட்டாகு பெயர் எனவே படும். இரு பெய்ரொட்டாகு பெயர் என்பதைத் தொல் காப்பியர் மட்டும் எடுத்துக் கூறியுள்ளார். சேனாவரையர் பொற் றொடி, தாழ்குழல் என்பவற்றை உதாரணங் காட்டி இரு பெய ரொட்டாகு பெய்ரும், அன்மொழித் தொகையும் ஒன்றே என்பர் இரு பெயரொட்டாகு பெய்ர் அன்மொழித் தொகைய்ாகாதெனச் சிவஞான முனிவர் சூத்திர விருத்தியில் கூறுவர்.
ஆகுபெயரும், அன்மொழித் தொகையும்
ஆகு பெயரும் அன்மொழித் தொகையும் ஒன்றா அல்லது வெவ்வேறா என்பது இலக்கண உலகில் நீண்டகாலமாக விவாதிக் கப்பட்டு வரும் விடயமாகும். தொல்காப்பியச் சொல்லதிகாரத் துக்குச் சிறந்த உரையெழுதியவரும், இலக்கண வித்தகர் எனக் கொண்டாடப்படுபவருமாகிய் சேனாவரைமர் இரு பெயரொட்டு எனத் தொல்காப்பியர் கூறும் ஆகுபெயரும் அன்மொழித் தொகை யும் ஒன்றேயெனச் சாதிப்பர். தொகையெனக் கருதும்போது
153鐵

Page 86
இரு பெயரொட்டாகு பெயர் அன்மொழித் தொகையெனவும், பெயர் என நோக்கும்போது ஆகுபெய்ரேயெனவுங் கூறுவர். ஆனால் தொல்காப்பியச் சூத்திர விருத்தி ஆசிரியரி அன்மொழித் தொகை வேறு இரு பெய்ரொட்டாகு பெயர் வேறு எனக் கூறுவர். இ ர ண் டு க்கு மு ரிய இலக்கணங்களைக் கூர்ந்து நோக்கினால் இரண்டும் வெவ்வேறென்பது விளக்கமாகும்.
ஆகுபெயர் ஒரு சொல்லாய் வரும். அன் மொழித்தொகை இரண்டு முதலிய சொற்கள் தொக்கு வரும். அ ன் மொ ழி த் தொகை செய்யுள் செய்வோன், விய்ப்பு முதலிய காரணத்தினால் தன் கூற்றாகவேனும், பிறன் கூற்றாகவேனும் கூறுவதாக ஆங்காங்கே வரும். ஆகு பெயரில் குறித்த ஒரு சொல் முதல் சினை முதலிய தொடர்புகளால் வேறு பொருளை யுணர்த்தும், அன்மொழித் தொகைய்ானது வேற்றுமைத் தொகை முதலாய தொகைகள் தொக்கு நிற்கும் ஆற்றலால் வேறு பொரு ளுணர்த்தும் ஆகுபெயர் தொன்று தொட்டுவரும். எவர் அதை அவ்வாறாக்கினார் என்பது புலப்படாமல் நிற்கும். அன்மொழித் தொகை புதிதுபுதிதாக ஆக்கப்படும். ஆகுபெயரும் அன்மொழித் தொகையும் கூறப்பட்டதல்லாத பொருளை யுணர்த்துவதனால் தம்முள் ஒப்பனவேனும் வேறுபாடுகள் பலவாகும். இரு பெய ரொட்டு எனத் தொல்காப்பியர் கூறியதில் இரு மொழிகள் வந்தன வன்றோவெனில் சிவஞானமுனிவர் முதலியோர் வகரக் கிளவி, மக்கட் சுட்டு என்பன இரண்டும் ஒட்டியொரு சொல்லாய் நின்று பொருளுணர்த்துவதால் அது ஆகுபெயர் ஆகுமேயன்றி அன் மொழித் தொகையாகாதென்பர்.
இருபெயரொட்டு என்பதில் தொல்காப்பியர் பொற்றொடி முதலியவற்றை அன்மொழித்தொகை எனக் கொள்கிறார் என்ற கருத்துச் சேனாவரையரது. நன்னூலார் ஆகுபெயரில் இருபெய ரொட்டு என்பதை ஒன்றாகக் கூறாமையாலும் குறிப்பிற் பொகு ளுணர்த்துவனவற்றைக் கூறப் புகுந்த நன்னூலார் ஆகுபெயர் அன்மொழியெனவிரண்டையுங் கூறுதலாலும் நன்னூலார்க்கு ஆகுபெயரும் அன்மொழித் தொகையும் வெவ்வேறென்பதே யுடன்பாடாகும். தொல்காப்பியர் கருத்தென சேனாவரையர் மட்டுமல்லாமல் வித்துவான் சி. கணேசையரும் அன்மொழித் தொனை ஆகுபெயருள் அடங்குமெனக் கூறினார். தொல்காப்பியர் கருத்து மேலும் ஆராய்ப்படவேண்டியவொன்றென்க. இரு பெயரொட்டு என்பதில் வினைத்தொகை அடங்காது என்பதும் சிந்திக்க வேண்டிய்து,
154

பால் மற்றிப் பெயர்களை வகுத்தல்
திணையை உயரீதிணை, அஃறிணை என இரண்டாகவேனும் விரவுத் திணையையுஞ் சேர்த்து மூன்றாகவேனும் வகுக்கலாம். பால் பற்றி வகுக்கும் போது ஐந்து வகையாக வகுக்கப்படும். உயர்திணைப் பெயர்கள் ஆண்பால், பெண்பால், பலரிபால் என மூன்றாகவும் அஃறிணைப் பெயர்கள் ஒன்றன்பால், பலவின் பால் என இரண்டாகவும் வகுக்கப்படும். விரவுத்திணை உயர் திணை அல்லது அஃறிணையில் அடங்குதலால் பால் வகுப்பு ஐந்தாகவே வரும். பொருட்பெயர் முதலாக அறுவகையுள் எல்லாப் பெயர்களும் அடங்குமென்பது முன்னர்க் காட்டப் பட்டது. பொருட்பெயரீ முதலியன கிளை எண் குழு முதற் பலவாக வருவதையும் பொருட் பெயர் முதலிய பெயர்ப் பாகு பாட்டில் விரிவாகக் காட்டியிருத்தலால் அவற்றை மீண்டுங் காட்ட வேண்டியதில்லை. னகர மெய்யை இறுதியாகக் கொண்டு வரும் பெயர்கள் உயர்திணை ஆண்பாற் பெயர்கள் எனவும், ளகர மெய்யை இறுதியாகக் கொண்டு வரும் பெயர்கள் பெண்பாற் பெயர்களெனவும் , S மெய்யையிறுதிய்ாகக் கொண்டு வரும் பெயர்கள் பலர்பாற் பெயர்களெனவும் அறியலாம். அஃறிணைப் பெயர்களிற் பொதுவாக 'து' என்னும் ஈறுபற்றி வருவன ஒன்றன்பாற் பெயர்களேனவும், வையீறு, அகர வீறு ஆகியவற்றைக் கொண்டவை பலவின்பால் எனவும் அறிய்த்தகும். இவற்றின் விரிவைப் பொருட்பெயர் முதலிய அறுவகைப் பெயருங் கூறியவிடத்துக் காண்க.
மூவகையிடம்
தன்மை, முன்னிலை, படர்க்கை என இடம் மூவகைப் படுமென்பதை முன்னரே அறிந்துள்ளோம். தன்மை என்பது பேசுவோனைக் குறிப்பாதாகும். முன்னிலையென்பது கேட் போனைக் குறிப்பதாகும். படர்க்கை பேசப்படுவோனைக் குறிப் பதாகும். நான் என்பது பேசுவோனைக் குறிக்குஞ் சொல். நீ என்பது கேட்போனைக் குறிப்பது, அவன், அவள் முதலியன பேசப்படுவோரைக் குறிப்பன. இவன், இவள் முதலிய பெயரி அளும் பேசப்படும் பொருளைக் குறித்தலால் படர்க்கையிடத்தில்
வரும்
155鷲

Page 87
தன்மை, முன்னிலைப் பெயர்களை உயர் திணை, அஃறிணை இரண்டிற்கும் உரிய விரவுத் திணைப் பெயர்களாகக் கொண் டார் நன்னூலார். ஆனால் தொல்காப்பியர் தன்மையை உயர் திணை யெனவும், முன்னிலையை விரவுத்திணையெனவுங் கூறி னார். பேசுவோன் மக்களினத்தைச் சேர்ந்தவனாகவேயிருப்பான். ஆதலால் தொல்காப்பியர் தன்மையை உயர்திணையென வகுத்தது பெரிதும் பொருத்தமுடையதாகும். தன்மையை உயர் திணை என்று கொண்டாலும் அதற்குப் பாலுணரித்தும் உறுப் பில்லை. அது ஆணோ, பெண்ணோ என்று அறியப்படாது. ஒருமை, பன்மையை மட்டும் உணர்த்தும், படர்க்கிைப் பெயர் களுக்கு பாலுணர்த்தும் உறுப்புக்கள் இருத்தலால் அவற்றைத் தினையொடு சார்த்தி என்ன பாலெனவும் அறியமுடியும். தன்மைப்பெயர் ஆண், பெண் பாலறிய நில்லாமையாற் போலும் நன்னூலாரி அதனையும் முன்னிலையோடு சேர்த்து விரவுத் திணையுள் அடக்கினார். எனினும் தொல்காப்பியரது பகுப்பு முறையே பொருத்தமானதென்பது ஊன்றி நோக்குவார்க்குப் புலனாகும். நான் வந்தேன் என்ற சொற்றொடர் கேட்பின் "நான்" என்பதாத் குறிப்பிடப்படும் பொருள் மக்களுள் அடங்குமேனும் ஆண், பெண் என்ற வேறுபாடறிய நில்லா மையின் அதனை விரவுத்தினையென்பது பொருத்தமானதெனக் கொள்ளமுடியாது. நீ என்பது ஒரு விலங்கையோ, பறவையையோ குறித்து ஒருவன் பேசமுடியுமாதலால் அதனைப் பொதுத்திணை யென்பது எவர்க்கும் உடன்பாடானதே.
தன்மை யான், நான், யாம், நாம் என்றும் முன்னிலை எல்லீர், நீயிர், நீவிர், நீர், நீ என்றும் தன்மை, முன்னிலை தவிர்ந்த அனைத்தும் படரிக்கை என்றும் நன்னூலார் கூறுவர். நன்னூல் பெயரியல் இருபத்தெட்டாவது சூத்திரம் இதனை எடுத்துக் காட்டுகிறது. தொல்காப்பியர் உயர்திணைப் பெப்ரி களைக் கூறுமிடத்து, யான், யாம், நாம் என வரூஉம் பெயரும் என்று தன்மைப் பெயர்களைக் குறிப்பிடுகிறார். நான் என்ற பெயரை அவரங்குச் சுட்டவில்லையென்பது கருதத்தக்கது. தன்மைப் பெயர்களையும் மற்றைய பால் தெரிய நிற்கும் பெயர்களோடு சேர்த்துத் தொல்காப்பியர் பாலறி வந்த உயர்திணைப்பெயரே என்று குறிப்பிட்டிருப்பது ஆராயத்தக்கது. தன்மைப் பெயர்கள் ஒருமை, பன்மையுணர்த்துவனவேயன்றி
蠢156

ஆண், பெண் பால்களையுணர்த்தாவென்பது தெரிந்ததே. இச் சூத்திரப் பகுதிக்கு விளக்கஞ் சொல்ல வந்த சேனாவரையரி, 'யான் என்பது ஒருவன், ஒருத்தியென்னும் பகுதியுணர்த்தா தாயினும் அத்திணையொருமையுணர்தி தலின் பாலறி வந்த பெயராம். அல்லாதுTஉம் பாலறி வந்தவெணப் பன்மை பற்றிக் கூறினாரெனினும் அமையும்" என்பரி. பாலறி வந்த பல பெயர்களையுஞ் சேர்த்தெண்ணியதால் தன்மைப் பெயரையும் உயர்திணை யென்பது பற்றி அவற்றுடன் சேர்த்துப் பாலறி வந்த உயர்தினைப் பெயரெனக் கூறினாரென்பது சேனாவரையர் உரையின் இறுதிப் பகுதிக்குரிய விளக்கமாகும்.
தொழிற்பெயர் இடம் உணர்தல்
தொழிற் பெயர்கள் எல்லாம் படர்க்கையிடத்தைச் சேர்ந் தவை. வெட்டல் என்பது முதலாய தொழிற்பெயர்கள் படரிக்கை யிடத்திற்கேயுரியவென்பது தெளிவாகிறது, வினையாலணையும் பெயர் தன்மை முன்னிலை, படர்க்கை என்னும் மூவிடத் திற்கும் உரியதாகும். உண்டேனை என்பதில் உண்டேன் என்னும் வினைமுற்று வேற்றுமையுருபேற்று வினையாலணையும் பெயராகியும் தன்மையிடத்தையேயுணர்த்துகிறது. உண்டாயை என்பது முன்னிலையையும் உண்டானை என்பது படர்க்கை யையும் உணர்த்தக் காணலாம்.
**வினையின் பெயரே படர்க்கை வினையா
லனையும் பெயரே யாண்டு யாகும்" (நன், யெ, 29 )
என்னும் நூற்பாவில் வினையின் பெயர் எனக் குறிப்பிட்டது தொழிற் பெயரைeே, தொழிற்பெயர், என்து வருகை, நினது வருகை, அவனது வருகை என வருதலால் மூன்றிடங்களுக்கும் உரியதோவென ஐயுறுவார்க்கு ஐயமறுப்பதே இந்நூற்பா. எனது வருகை உனது வருகை என வந்தாலும் வருகை யென்னுந் தொழிற் பெயர் படர்க்கையிடத்துக்கு மட்டுமே உரியதாகும். யான்வருகை அவசியமா என்றவிடத்து வருகை என்பது வருதல் என்ற பொருளைத் தந்து படர்க்கையிடமாதல் வெளிப்படை,
தொழிற்  ெப ய ரீ க ள் சிலவிடங்களிற் காலங்காட்டி வருமெனச் சிலர் கூறுவர். உண்டமை, உண்கின்றமை என்பன முறையே இறந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் உணர்த்து
157懿

Page 88
கின்றனவெனக் காட்டுவர். உண்ட, உண்கின்ற என்னும் பெய ரெச்சங்கள் தொழிற் பெயர் விகுதி பெற்றமையால் எச்சங்கள் காலங்காட்டிய பின் விகு தி சேர்ந்தமையாலன்றி தொழிற் பெயர்கள் காலங்காட்டின வல்லவெனவுணர்க. இப்பெயர்கள் காலங்காட்டியதோடு உருபு ஏற்கும் நிலையிலிருப்பது கருதத் தக்கது. வளர்ந்து வரும் மொழிகளில் ஒரு மொழி இன்னொரு மொழியாவதற்குச் சந்தர்ப்பங்களுள. அவை ஆங்காங்கு எடுத் துக்காட்டப்வட்டுள. காலங்காட்டும் பெயர்கள் வினையாலணை
யும் பெயர்களில் அடக்கத்தக்கவை.
வினை பாலணையும் பெயர் நர மடங்கல் போல்வதென முன்னுங் கூறினோம். பெயராகவும் வினையாகவும் இருந்து பெயர்ந்தன்மைப்பட்ட தென்பதால் அதுவும் பெயரியலில் ஆராயப்படுவதாயிற்று. பதவியலில் து விகுதி பெற்ற பெயர்கள் காலங்காட்டுவது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இலக்கிய உரையாசிரியர்கள் சிலர் அவற்றை வினைப்பெய்ர் என்று கூறி வினையாலணையும் பெயரில் அடக்குவர். வினை யின் பெயர் எனத் தொழிற் பெயரை நன்னூலார் கூறியது மதினுட்பம் வாய்ந்த கூற்று. வினையின் அதாவது தொழிலின் பெயரே வினைப்பெயர். இது காலங்காட்டுவது எவ்வாற்றானும் பொருந்தாது. காலங்காட்டின் அது வினையாலணையும் பெய ராகும். தொழிற் பெயரும் வினையாலணையும் பெயரும் வினையினின்று பிறக்கும் பெயர்களாதலால் தம்முள் ஒக்கு மேனும் தொழிற்பெயர் தொழிலுக்குப் பெயராகவும் வினையா லணையும் பெயர் தொழிலையுடைய பொருளுக்குப் பெய்ராகவும் வருதல் அவை தம்முள் வேற்றுமையென் க. காலந்தோன்றாது நிற்பது தொழிற்பெயரெனவும் காலந்தோன்ற நிற்பது வினையா லணையும் பெயரெனவும் மற்றொரு வேறுபாடும் உளங்கொளத் தக்கது. பெயர்கள் காலங்காட்டா வென்பது இலக்கண ஆசிரி யர்கள் கருத்தாகும்.
விரவுத்திணைப் பெயர்கள்
உயர்திணைப் பெயர்க்ள் அஃறிணைப் பெயர்கள் என்பன பற்றி முன்னர்க் கூறப்பட்டது. எல்லாப் பெயர்களும் உயர் திணையில் அல்லது அஃறிணையில் அடங்கு மென்பதும் முன்னர்ப்
纂158

பெறப்பட்டது. ஆயினுஞ் சில பெயர்கள் உயர்திணைக்குச் செல்வனவாயும் அஃறிணைக்கும் வருவனவாயும் உள்ளன. அவற்றையே இலக்கண நூலார் விரவுத்திணையுள் அடக்குவர், விரவுத் திணையுள் அடங்கும் பெயர்கள் பற்றிச் சிறிது விசாரிப்பது பொருத்தமாகும். விரவுத் திணைப் பெயர்கள் வினையோடுசேரும் வழியல்லது எத்திணைக்குரியவென அறியப்படா வென்பதுங் குறிப் பிடத்தக்கது. விரவுத் திணைப் பெயர்களாகத் தொல்காப்பியரி, இயற்பெயரி, சினைப் பெப்ர், சினை முதற்பெயரி, முறைப்பெயர் என்பவற்றோடு தாம், தான், எல்லாம், நீ பிர், நீ என்பனவும் இவையோடெத்தவையும் வருமென்பர். சேனாவரையர் இவை யோடொத்தவை யென்பதில் மகவு குழவி என்பவற்றையுஞ் சேர்ப்பரி. மகவு குரங்கு முதலியவற்றுக்கும் குழவி குஞ்சரத் துக்கும் இளமைப் பெயராக வருமென்பர். இவை மக்களின் இளமைப் பெயர்களைக் குறிப்பது வெளிப்ப.ை முதற் பெயர் ஆண், பெண் ஒன்று பலவென நான் இாகும். சினைப் பெயரும் அவ்வாறே நான்காகும். சினைமுதற் பெயரும் முன்னையவை போல நான்காகும் முறைப்பெயர் ஆண், பெண் என இரண் டாகும். நன்னூலார் இவற்றொடு தன்மைப் பெயர்களையும் விரவுத் திணையிற் சேர்ப்பர். முதற் பெயர் என்பது சாத்தன், வேலன் என வழங்குமியல்பினவாய்க் காரணமின்றி ஒரு பொரு ளைப் பற்றிவரும் இடுகுறிப்பெயர்கள். சினைப் பெயர் என்பது உறுப்பு என்பதைக் குறித்து முதற் பொருள் மேல் வருவது, சினைமுதற் பெயரென்பது சினைப் பெயரும் முதற்பெயருஞ் சேர்ந்து ஒரு பெயராக வருவது.
சாத்தன் . ஆண்மை முதற்பெயர். சாத் தன் இவன் எனவும் சாத்தன் இவ்வெருது எனவும் வருவதால் விரவுத் திணையில் ஆண்மை முதற் பெயராயிற்று.
சாத்தி - பெண்மை முதற்பெயர். இதுவும் பெண்ணையும் பசு முதலிய் பிராணிகளையுங் குறித்து வரும். மேல் வருவனவற்றையும் இவ்வாறு சேர்த்தறிக் .
கோதை வ ஒருமை முதற்பெயர் - கோதைகள் - பன்மை முதற் பெயர் = முடவன் ஆண்மைச் சினைப்பெயர் ள முடத்தி - பெண் மைச் சினைப்பெயர் செவியிலி - ஒருமைச் சினைப்பெயர் - செவியிலிகள் - பன்மைச் சினைப் பெயர். முடக் கொற்றன் -
159鬣

Page 89
ஆண்மைச் சினைமுதற் பெயர் - முடிக்கொற்றி வெண்மைச் சினை முதற் பெய்ர். கொடும்புற மருதி - ஒருமைச் சினை முதற் பெயர். கொடும் புற மருதிகள் - பன்மைச் சினை முதற் பெயர், தந்தை - ஆண்மை முறைப் பெயர். தாய் - பெண்மை முறைப் பெயர். தொல்காப்பியர் கூறிய விரவுத்திணைப் பெயர்களுடன் தன்மைப் பெயர்களையும் விரவுத்தினையிற் G36F fift "Lurî நன்னூலார்.
மால்பகா அஃறிணைப் பெயர்
அஃறிணைப் பெயர் ஒருமையுணர்த்தும் "து" விகுதியோ பன்மையுணர்த்தும் வைகள் என்னும் விகுதிகளோ இன்றி வரும்போது அவை பால் எதுவென அறிய முடியாமல் நிற்கும். அவை பால் பகா அஃறிணைப் பெயரென வழங்கும். அப் பெயர்கள் அஃறிணையில் ஒன்றன்பால் பலவின்பால் ஆகிய இருபால்களுக்கும் உரியவாய் வழங்கும். இவை, இவற்றை யடுத்து வரும் வினைச் சொற்களாற் பாற் பொதுமை நீங்கி இன்ன பால் என்று துணியப்படும்.
பறவை வந்தது ஒன்றன்பால் பறவை வந்தன - பலவின் பால் மரம் வளர்ந்தது, மரம் வளர்ந்தன. இவை அடுத்து வந்த வினைச்சொல்லால் ஒன்றன்பாலையும் பலவின் பாலை யும் உணர்த்தின. இவை கள் என்னும் விகுதி பெற்றுப் பால் பகா அஃறிணைப் பெயர் என்ற நிலை நீங்கிப் பலவின்பால் ஆவது கவனிக்கத் தக்கது. க்ள் விகுதி இல்லாத காலத்தில் வழக்கிலிருந்த பால் பகிாவஃறிணை இன்று பால் புலப்பட நிற்பது கருத்திற் கொள்ளத்தக்கது. "கள்" விகுதி பெறாத போது ஒருமையையும், பெற்றபோது ப ன் மை யை யு ம் உணர்த்துவது இக்கால வழக்கு.
வழக்கு
வாழும் மொழிகள் உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் மாற்றங்களைப் பெறுவதைத் தவிர்க்கமுடியாது. இலக்கண வழக்கே மொழியின் உயிர்நாடியாயினும், இலக்கணத் துக்குப் புறம்பான வழக்குகளும் மொழியிற் புகுந்து விடுவது இயல்பே. இலக்கண வரம்புள் அடங்காத சொற்கள் மொழி
鑿160

நடையின் சுவைக்காகவும் அழகூட்டுதற்காகவும் கேட்போர் நுண்ணிதின் உணர்ந்து பொருள் விளங்குவதற்காகவும் பயன்படுத் தப்படுகின்றன. தமிழில் உள்ள சொற்களை இலக்கணச் சொல் என வும் இலக்கணத்தில் வழுவினாலும் ஏற்றுக் கொள்ளுஞ் சொற்களெனவும் இருவகையாக வகுக்கலாம் அவற் றையே இலக்கண ஆசிரியர்கள் இயல்பு வழக்கு தகுதி வழக்கென இருவேறு வகைப் படுத்திக் கூறுவர். இயல்பு வழக்காவது எப் பொருட்கு எச்சொல் அமைந்ததோ அப்பொருளை அச்சொல் லரற் சொல்லுவதாகும். இயில்பு வழக்கை இலக்கணமுடையது இலக்கணப்போலி ருேஉ எணமூன்று வ  ைல் ப் படுத்து வ ரி இலக்கண ஆசிரியர்கள்.
தகுதி வழக்காவது இயல்பான சொல்லாற் சொல்வது தகுதி யற்ற தென்று கண்டு தகுதியான சொல்லாற் சொல்வ தாகும். இதனையும் இடக்கரடக்கல், மங்கலம், குழு உக்குறியென மூன்றாக வகுப்பர்.
இலக்கண முடைய தென்பது இலக்கண மரபு பேணி வழங்கி வருஞ்சொற்கள். இச்சொற்கள் மொழிப் பாதுகாப்புக்கு இன்றி யமையாதவை. நிலம், நீர், அன்பு, அழகு, ஆண், பெண். என்பவற்றை இலக்கணமுடைய சொற்களுக்கு உதாரணமாகக்
gi:Portu. C. L62) for Lobo.
இலக்கணப் போலி என்பது இலக்கணமுடையது போலத் தொன்று தொட்டு வழங்கப்பட்டு வருவது இல்லம் ஒன்றில் அதன் உள்ளே செல்வதற்காக அமைக்கப்பட்ட இடம் இல்லின் வாய்போன்றது. அதனை இல்வாயென்பது இலக்கணச் சொல், ஆனால் தொன்று தொட்டு அதனை இல்வாய் என வழங்காமல் வாயில் என வழங்குவதே வழக்காறாயிற்று இது இலக்கணப் போலி எனப்படும். போலி யென்பது போன்ற தென்னும் பொருளை யுடையது. ஆதலால் இயல்பு வழக்கில் இவ்விலக் கணப்போலி சான்றோரால் தழுவப்படலாயிற்று. இல்லுக்கு முன்னுள்ள இடம் இல்முன் என அழைக்கப்படுவதே முறையாகும் ஆனால் அது அவ்வாறன்றி முன்றில் என்றே அழைக்கப் படுகிறது. முன்னில் என வரற்பாலது முன்றில் என வருவதும் மரபின்பாற் பட்டதாகும். அரண்மீ stଙy $' $ଜଙ୍ଘି ଶଙ୍ଖିର୍ସାଙ୍ଗ୍
1 161灘

Page 90
மேலிடத்தைக் குறிக்க வழங்குஞ்சொல் மீகண் என வழங்குவதும் இலக்கணப் போலியேயாம். கோவில் கோயில் எனவும் பொதுவில் பொதியில் எனவும் வழங்குவதும் இலக்கணம் Surgis Ge.
மரூஉ என்பது இலக்கணச் சொற்களிற் சில வெழுத்துக் கெட்டும் சில வெழுத்துத் தோன்றியும் சில வெழுத்துத் திரிந்தும் மருவி வழங்குவது. இது தொன்று தொட்டு வருதலின்றிச் சொல்வோன் குறிப்பினால் மருவி வரும். அருமருந்தன்ன பிள்ளை என்பதை அருமந்த பிள்ளை யென்றும் தஞ்சாவூர் என்பதைத் தஞ்சை யென்றும் சுன்னாகம் என்பதைச் சுன்னை என்றும் வழங்குவது, அ, இ, உ என்னுஞ் சுட்டுக்களை அந்த, இந்த, உந்த என வழங்குவதும் மரூஉவின் பாற்படும்.
தகுதி வழக்கில் இடக்கர் என்பது அவையல் கிளவியாகும். அவையின் கட் சொல்லத்தகாத சொல்லே அது வாகும். நன்
* மக்களிடத்தே சொல்லத்த இாத சொல் என்பாருமுளர். இந்த
இடக்கர்ச் சொல்லை அதன் அமைப்பை மாற்றி, சொல்லத் தக்க சொல்லால் சொல்வது இடக்கரடக்கலாகும் மலங்கழுவி வருவேனென்பதைக் கால் கழுவி வருவேனென்றோ முகங்கழுவி வருவேனென்றோ சொல்லுவது முறையாகும். பகரவொற்றின் மேல் ஈகாரம் ஏறிவரும் (பீ) இடக்கர்ச் சொல்லைப் பவ் வீ என் றாவது பகரவீகாரம் என்றாவது தலைக்குறை கமல மென்றாவது சொல்வது இடக்கரடக்கலாகும். தலைக்குறை கமலம் என்பது முதலெழுத்தில்லாத கமலம், அதாவது மலம் என்பதாகும். மூத்திரத்தை நீரல்லீரம் என்பதும் செம்பினேற்றை கருமுக மந்தியென ஆண்பெண் இடக்கருறுப்புக்களைச் சொல்வதும் இடக்கரடக்கலேயாம்.
மங்கலமென்பது மங்கலமில்லாத சொல்லை அவ்வாறே சொல்வது நல்லதல்லவென்று அதனை மறைத்துப் பிறிதொரு மங்கல வாய்ப்பாட்டாற் சொல்வதாகும். செத்தாரைத் துஞ்சி னார் என்றும் காராட்டை வெள்ளாடு என்றும் கெட்டதைப் பெருகிற்றென்றும் அமங்கல வாரத்தை மங்கல வாரமென்றுங் கூறுவது மங்கல வழக்காகும்.
குழு உக்குறியென்பது ஒரு கூட்டாத்தார் யாதேனும் ஒரு காரணம் பற்றி ஒரு பொருளைக் குறிக்குஞ் சொற்குறியை யொழித்துத் தமக்கேற்ற வேறொரு சொற்குறிப்ாற் சொல்வது,
靈162

ܓܢܝܙܕܗܪܘܗܠܐܬܪܚܐ ܙܐ ܐ
~n.
வேடரி, கள்ளைச் சொல் விணம்பியென்றும் வொற்கொல்லர் பொன்னைப்பறியென்றும் வழங்குவது குழு உக்குறியாகும்.
தொல்காப்பியரீ இடக்கரடக்கல் பற்றி "அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல்" (தொல். எச். 41) எனக் கூறியுள்ளார். சபையிலே சொல்லத்தகாத சொல்லை மறைத்துச் சொல்லுக என்பது அதன் பொருளாகும். அவ்வாறு மறைக்கும் போதும் மருவி வந்து வழக்கிற் புகுந்துள்ள சொற்களை மறைக்க வேண்டாம் என்றும் அவர் ஆணை தந்துள்ளார். சேனாவரையர் ஆப்பி, ஆனையிலண்டம் என்பன மருவி வழங்குவனவாதலால் மறைக்கவேண்டியதில்லையென்பர்.
தகுதி பற்றியும் இயல்பு பற்றியும் வழங்குஞ் சொற்களில் நேரீச் சொல்லேயன்றிப் பக்கச் சொல்லுங் இடியப்படாவென்பது தொல்காப்பியரி கருத்து. தகுதியென்பதற்குச் சேனாவரையரி தந்த விளக்கமும் இங்குச் சிந்திக்கத்தக்கது. "தகுதியென்பது அப்பொருட்குரிய சொல்லாற் சொல்வது நீர்மையன்று என்று அது களைந்து தக்கதொரு வாய்பாட்டாற் கூறுதல்" என்பர். அதற்கு உதாரணங் காட்டும்வழி செத்தாரைத் துஞ்சினார் என்றலும் சுடுகாட்டை நன்காடு என்ற லும் ஒலையைத் திரு முகம் என்றலும் கெட்டதனைப் பெருகிற்று என்றலும் என இத்தொடக்கத்தனவென்பர். தகுதி வழக்கில் நன்னூலார் காட்டிய மங்கலத்தை மட்டும் எடுத்துக் காட்டியுள்ளார். இடக்கரடக்கலையும் இவ்விடத்துக் கூறாது பிறிரோரிடத்துக் கூறியுள்ளார். மரூஉ முடிவையும் தகுதியென்பதன் பாற் படுத்தியே சேனாவரையர் உரை வரைந்துள்ளார்." குழு உக்குறி யென்பதைச் சேனாவரையர் சிறிதும் ஏற்றுக்கொள்ளவில்லை. குழுவின் வந்த குறுநிலை வழக்கு சான்றோர் செய்யுளிலும், வழக்கிலும் கொள்ளப்படாதாதலால் அது ஏற்றுக்கொள்ள முடியாததெனக் கைவிட்டுள்ளார். உண்மையில் ஒவ்வொரு கூட்டத்தார் வழக்குக்கும் இலக்கணம் அமைக்கப்புகின் மொழி மரபு நிலை திரியும் என்பதை மறுக்கமுடியாது. சொற்களின் வகை - இயற்சொல், திரிசொல்
தமிழ்மொழியில் உள்ள சொற்களைப் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நான்காக வகுப்பர். இந்நான்கனுள்ளும் பெயர்ச்சொல்லும், வினைச் சொல்லுமே முக்கியமானவை.
163鯊

Page 91
சொல்லெனப் படுப பெயரே வினையென் றாயிரண் டென்ப வறிந்திசி னோரே'
(தொல். பெயர். கீ) என்பதாலும் அவற்றையடுத்து வரும், "இடைச்சொற் கிளவியும். உரிச்சொற் கிளவியும் - அவற்றுவழி மருங்கிற்றோன்று மென்ப" (தொல், பெய. 5 ) என்பதாலும் இவ்வுண்மை பெறப்படும்.
இடைச்சொற்களும், உரிச்சொற்களும், பெ & ர் ச் சொல், வினைச்சொல் என்பவற்றைச் சார்ந்தே வருதலால் இவற்றைப் பெயரோடும், வி  ைன யோ டு ம் ஒரு சேர வைத்திலர் தொல்காப்பியர். அவர் இயற்சொல், திரிசொல், வடசொல், திசைச்சொல் எனச் சொற்களை மேலும் நான்காக வகுப்பர்.
நன்னூலாரி சொற்களைப் பெயர், வினை, இடை, உரியென நான்காக வகுத்து மேலும் அவையொவ்வொன்றையும் இயற்சொல், திரிசெனல் என இவ்விரண்டாக்கி அவற்றோடு வடசொல்லையுந் , திசைச்சொல்லையுஞ் சேர்த்துச் சொற் களைப் பத்தாக்குவர் என நன்னூல் உரையாசிரியர்கள் கூறுவர்.
தொல்காப்பியர் இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என நான்கு வகைப்படுத்தினாரேனும் சேனாவரையர் திரிசொல் என்னும் பாகுபாடு பெயருக்கு மட்டும் உரியதெனக் கொண்டு பெயரியற்சொல், பெயர்த்திரி சொல், வினையியற் சொல், இடையியற்சொல், உரியியற்சொல், திசைச்சொல், வட சொல் எனச் சொற்களை ஏழு வகையாக்குவர்.
நன்னூல் உரையாசிரியர்கள் நன்னூலார் பத்து வகைச் சொற்களைக் கூறினாரெனக் கொண்டு அவற்றுக்கு உதாரணமூங் காட்டியுள்ளார். இயற்சொல் என்னவென்பதை விளக்க வந்த நன்னூலார்,
"செந்தமிழாகித் திரிகா தியார்க்குத்
தம்பொருள் விளக்குந் தன்மைய வியற்சொல்" என்றும்
அவ்வாறன்றி ஒரு பொருள் குறித்த பல சொல்லாகியும் பல பொருள் குறித்த ஒரு சொல்லாகியும் வருந் திரிசொல் என்றுங் கூறுவர்.
*鯊164

நன்னூலாரி இயற்சொல், திரிசொல்லென்பன பெயர் வீணையிடையுரியடுத்து நான்குமாம் எனக்கூறினாரன்றி எட்டு மாம் எனக் கூறாமையாலும் இயற்சொல், திரிசொற் பற்றிய நன்னூலார் கருத்துந் தெளிவானதாகத் தெரியவில்லை. பத்தென வகுத்தவர்கள் நன்னூல் உரையாசிரியர்களே. இவ்வுரையாசிரி யர்கள் இப்பத்து வகைக்கும் உதாரணமுங் காட்டியுள்ளனர். தன்னுரலுரையாசிரியர்கள் வகுத்த வத்து வகையையும் அவர்கள் காட்டிய உதாரண முகத்தால் விளக்குவோம்.
பெயரியற்சொல் - மண், பொன், மரம் என்பன. பெயர்திரிசொல் - கிள்ளை, சுகம், தத்தை. இவை கிளியென் பதைக் குறித்தவை. காசு என்பது குற்றம், பொன், மணி முதலிய பலபொருள் குறித்தது. வினையியற்சொல் நடந்தான், வந்தான் என்பன. வினைத்திரிசொல் - படர்ந்தான், ஏகினான், சென்றான் என்பன போனான் என்னும் ஒரு பொருள் குறித்து வந்த திரி சொற்கள். வரைந்தான் என்பது நீக்கினான், கொண்டான், எழுதினான் என்னும் பலபொருள் குறித்த ஒரு வினைத் இரிசொல். இடையியற்சொல்- அவனை, அவனால் என்பவற்றிலுள்ள 'ஐ',
ஆல் என்பன. 5< صAO0, Cسے) مس இடைத்திரிசொல் - சேறும், வருதும் என்பவற்றிலுள்ள றும், தும் விகுதிகள் தன்மைப் பன்மை எதிர்காலம் என்னும் ஒரு பொருள் குறித்த பல இடைத் திரிகொல் கொல் என்பது ஐயம், வினா முதலிது பல பொருள் குறித்த ஒரு இடைத்திரிசொல். உயியற்சொல் - அன்பு, அழகு என்பன. இவை பண்புப் பெயராக இருப்பவும் இவற்றை உரியியற் சொல்லுக்கு உதாரணமாகக் காட்டியுள்ளனர். உரித்திரிசொல் - சால, உறு, தவ, நனி என்பன மிகுதி யென்னும் ஒரு பொருளைக் குறித்து வந்த பல உரித்திரிசொற்கள். கடி என்பது காப்பு கூர்மை, அச்சம் முதலிய பலபொருளைக் குறித்து வந்த ஒர் உரித் திரிசொல்,
165囊

Page 92
"இயற் சொல் திரி சொல் திசைச் சொல் வடசொலென் றனைத்தே செய்யு வீட்டச் சொல்லே' ( தொல், எச். 1 )
என்னும் சூத்திரவுரையில் உரையாசிரியர் {$afଜ୍’ (Tଈଧ୍ୟ ଜଳ or illuff", "பெயர், வினை, இடை, உரி என்பன இயற்சொற் பாகுபாடாகலான், இயற்சொல் அந்நான்கு பாகுபாட்டாலுஞ் செய்யுட்குரித்தாம். திரிசொற் பெயராயல்லது வாரா" எனக் கூறியுள்ளார். வினை முதலியவற்றில் திரிசொல் காணமுற்பட்ட உ  ைர யா சிரியர் ல ள் காட்டிய உதாரணங்களையெல்லாம் பொருந்தாதவையெனச் சேனாவரையர் நிலைநாட்டுவர். திசைச் சொற்கள், வடசொற்கள் என்பவற்றிலும் பெயர்ச்சொற்களே தமிழில் வந்து வழங்குமெனவும் வினைச்சொற்கள் வந்து வழங்காவெனவும் அவர் கூறுவர்.
இயற்சொல், திரிசொல் பற்றிய ஒரு நோக்கு
இயற்சொல், திரிசொல் பற்றிய நன்னூலார் கொள்கையை உரையாசிரியர்கள் தாம் விரும்பியவாறு திரிவுபடுத்திவிட்டனர் என்பதில் ஐயமில்லை. சேனாவரையர் சொற்களை எழுவகை யாகத் தொல்காப்பியர் பாகுபடுத்தியிருப்பதாகக் கூறுவர். அவை பெயரிலுயற்சொல், பெயரித்திரிசொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல், திசைச்சொல், வடசொல் எனக் இாட்டுவர். வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொற்களில் அவர் திரிசொற் கொண்டிலர்"
நன்னூலார் சொல்லின் பாகுபாடுணர்த்தும் நூற்பா G/GLOrry
"அதுவே, இயற்சொல், திரிசொல் இயல்பிற் பெயர்வினை
எனவிரண் டாகும் இடையுரி யடுத்து நான்குமாந் திசைவடசொல் லணுகாவழி" (நன் பெய.13)
இச்சூத்திரத்துக்கு உரையாசிரிலர்கள் கா ட் டி ய வ  ைர போருத்தமுடையதாகத் தெரியவில்லை. முதலில் சொல்லை இயற்சொல், திரிசொல் என இரண்டாக்கிய நன்னூலார் பின்னர் இயல்பில் (இயற்சொல்லில்) பெயர், வினை என்னும் இரண்டையுஞ் சேர்த்து இயற்சொல்லைப் பெயரீயற்சொல், வினையியற்சொல் என இரண்டாக்கினார். இவற்றோடு இடைச்சொல், உரிச்சொல் என்பவற்றையுஞ் சேர்த்தால்
靈166

இயற்சொல் நான்காகும் எனவும், திசை வட சொற்களைச் சேராதவிடத்து இயற்சொல் நான்கெனவும் அவற்றையும் சேர்த்து திரிசொல்லுங் கூட்டின் சொற்கள் எழுவகைப்படுமென நன்னூலார் கருத்து இலகுவாக அறியக்கூடியதாக உள்ளது. இதைவிடுத்து இயல்பிற் பெயர்வினை எனவருவதில் இயல்பில்" என்ற சொற்பொருளையுஞ் சீர்தூக்கிப்பாராமல் திரிசொல்லையும் வினை இடை, உரி மூன்றிற்கும் உரியவாக்கியது உரையாசிரியர் களின் வேண்டாத கொள்கையாகும்.
திரிசொற் பற்றியும் தொல்காப்பியர் கருத்தும் நன்னூலார் கருத்தும் ஆராயவேண்டியவை. தொல்காப்பியர்,
ஒரு பொருள் குறித்த வேறு சொல் லாகியும் வேறு பொருள் குறித்த ஒருசொல் லாகியும் இருபாற் றென்ப திரிசொற் கிளவி" (தொல்.எச். 3) என்பர்.
ஒரு பொருளைக் குறித்த பல சொற்களாயும், பல பொருள்களைக் குறித்த ஒரு சொல்லாகியும் வருவதே திரிசொல்லென இச்சூத்திரத்துக்கு உரையாசிரியர்கள் பொருள் கூறுவர். நன்னூலாரும் இதே கருத்தையே கூறினும் அரிதுணர் பொருளன திருசொல் என்று கூறியது பொருத்தமுடையதாகத் தெரியவில்லை. கல்லார்க்கு அரியவான சொற்கள் கற்றார்க்கு எளியனவாதலால் அக்கூற்றுப் பொருத்தமற்றதாகவே தெரிகிறது. நேரே தம்பொருள் விளக்குவன இயற்சொல் எனவும், குறிப்பால் தம்பொருளுணர்த்துவன திரிசொல் எனவுங் கொள்வது பொருத்தமுடையதோவென எண்ணத் தோன் று கிற து; அவ்வாறாயின் இயல்பு வழக்கு, தகுதி வழக்கு என்பவற்றில் இலக்கணமுடையது தவிர்ந்த அனைத்தும் ஒன்றொழி பொதுச் சொல், விகாரம், தகுதி, ஆகுபெயர், அன்மொழி ஆகிய அனைத்துந் திரிசொல் எனக் கொள்ளத்தகும். இவற்றில் ஒரு பொருள் குறித்த வேறு சொல்லும், வேறு பொருள் குறித்த ஒரு சொல்லும் உளவாதலும் சிந்திக்கத்தக்கது. அல்லாமலும் வரை, குன்று, பொருப்பு, சிலம்பு என்பன மலை என்னும் ஒரு பொருள் குறித்த பல திரிசொற்களெனவும் மா என்பது, மரம், விலங்கு குதிரை, இலக்குமி முதலிய பல பொருள் குறித்த ஒரு சொல்லெனவுங் கொள்ளலாமோ என அறிஞர்கள் சிந்திக்கக்கடவர்,
167擦

Page 93
திசைச்செனல்
தொல்காப்பியரும், நன்னூலாரும் தமிழ்மொழியில் டிகுந்து வழங்குவனவற்றில் ஒரு சாரண திசைச்சொல் எனவுங் கூறுவரி, திசைச்சொல்லாகத் தொல்காப்பியர் கொண்டவை செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிரு நிலத்து மொழிகளையேயென்வது அவர் கூறிய,
"செந்தமிழ் நிலஞ்சேரி பன்னிரு நிலத்தினுந்
தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி? (தொல், எச். 4) என்பதனால் அறியமுடிகிறது. இப்பன்னிரு நிலத்து மொழிகளும் திசைமொழிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு நன்னூலாரி காலத்தில் மேலும் பல மொழிகள் திசைமொழிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. இவ்வுண்மையை நன்னூலாரி திசைச்சொல் பற்றிக் கூறிய சூத்திரம் வெளிப்படுத்துகிறது. தன்னுரலார், "செந்தமிழ் நிலஞ்சேரி பன்னிரு நிலத்தினும் ஒன்பதிற் றிரண்டிற் றமிழொழி நிலத்தினும் தங்குறிப்பினவே திசைச் சொற் கிளவி" (நன். பெயரி.16) என்பர்
செந்தமிழ் நாட்டைச் சேர்ந்த பன்னிரு நிலத்திலும் வழங்கும் மொழிகளும் தமிழொழிந்த பதினேழு நாடுகளில் வழங்கும் மொழிகளும் அவற்றுக்குரிய சொந்த நிலத்திலுள்ள மக்கள் பேசும் மொழிக்குரிய பொருளோடு செந்தமிழ் நாட்டில் வந்து வழங்குவன திசைச்சொல்லென்பது நன்னூலார் கருத்து. செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த கொடுந் தமிழ் நாடுகள் பன்னிரண்டும் எவையென்பதைப் பின்வரும் பாடல் எடுத்துக் இாட்டுகிறது.
"தென்பாண்டி குட்டாய் குடங் கற்கா வெண்பூழி
பன்றி யருவா வதன் வடக்கு - நன்றாய சீதம் மலாடு புணனாடு செந்தமிழ்சே ரேதமில் பன்னிருநாட் டெண்' என்பது அப்பாடல் . பசுவைப் வெற்றம் என்பதும் சோற்றைச் சொன்றி என்பதும் தென்பாண்டி நாட்டுச்சொல். தாயைத் தள்ளை என்பது குட்ட நாட்டுச்சொல். தந்தையை அச்சன் என்பது குட நாட்டுச்சொல். வஞ்சரைக் கையர் என்பது கற்கா நாட்டுச்சொல்.
囊168

தோட்டத்தைக் கிழார் என்பது வேணாட்டுச்சொல். པའི་ས།། ས་ ༨.......................... இறுகுளத்தைப் பாழி என்பது பூழி நாட்டுச்சொல். வயலைச் செய் என்பது பன்றி நாட்டுச்சொல் சிறுகுளத்தைக் கேணி என்பது அருவா நாட்டுச்சொல். புளியை எகின் என்பது அருவா வடதலை நாட்டுச்சொல். தோழனை எலுவன் என்பது சீத நாட்டுச்சொல் நல்லநீரை வெள்ளம் என்பது மலையமா நாட்டுச்சொல்,
தாயை ஆய் என்பது புணனாட்டுச்சொல்.
செந்தமிழ் நாட்டைச் சேர்ந்த பதினேழு நிலங்கள் எவை என்பதைக் கீழ்வரும் பாடல் காட்டுகிறது.
சிேகேளஞ் சோனகம் சாலகஞ்
சீனந் துளுக் குடகம் ைொங்கணங் கன்னடம் கொல்லந்
தெலுங்கம் கலிங்கம் வங்கங் கங்க மகதம் கடாரங்
கடவுங் கடுங் குசம்ை தங்கும் புகழ்த் தமிழ்
சூழ் பதினேழ்புவி தாமிவையே" மாமரத்தைக் கொக்கு என்பது துளுவ நாட்டுச்சொல். அகப்படுதலைச் சிக்குதல் என்பது கன்னட நாட்டுச்சொல். சொல்லுதலைச் செப்புதல் என்பதுதெலுங்கு நாட்டுச்சொல். மற்றையவற்றுக்கு உரையாசிரியர்கள் உதாரனந் தந்திலர். வந்தவழிக் காண்கவென்றேயொழிந்தார்.
திசைச்சொல்லெனவும் அச்சொல் எந்த நாட்டுக்குரிய சொல்லெனவும் உரையாசிரியர்கள் எடுத்துக்காட்டிய சொற்களிற் பல தமிழ்மொழியில் அடிப்பட்ட சான்றோர் வழக்கிலுஞ் செய்யுளிலும் இடம்பெற்று வருவதை நாம் காண்கிறோம். எனவே அவை செந்தமிழ் நாட்டுச்சொற்கள் அல்லவென்பதும் அவை திசைச்சொல்லாகவே தமிழில் வந்து வழங்குவனவென்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடியனவல்ல. தமிழ்மொழியிலிருந்தே அவை வேற்றுநாட்டு மொழிகளிற் புகுந்தனவென்றோ அல்லது இரு நாடுகளுக்கும் ஒத்த உரிமையை வென்றோ துெ 7 ஸ் லு துே அறிவுடைமையாகும்.
169囊

Page 94
இக்காலத்தில் புதுவதாகத் தமிழில் வந்து இடம்பிடித்துள்ள வேற்றுநாட்டு மொழிகளைத் திசைச்சொல்லில் அடக்கவேண்டும் அல்லது அவற்றுக்குப் புறம்பான ஒரு பெயர் கொடுத்துச் சேர்க்கவேண்டும். அவற்றைத் தமிழில் வந்து வழங்காமல் தள்ளிவைப்பது முடியாத செயலென்பதை மறுக்கவியலாது. மேலைநாட்டு மொழியாளராய போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என்போர் எமது நாட்டை ஆட்சிபுரிந்தமைய்ாலும் வாணிபம், மருத்துவம், போக்குவரவு முதலிய தொடர்புகளாலும் தமிழ்மொழியிற் பிறமொழிச் சொற்கள் பல புகுந்துள்ளன. இவை பெரும்பாலும் மொழிக்கு முதலாகாவென விலக்கப்பட்ட எழுத்துக்களை மொழிக்கு முதலிற் கொண்டும் இடையில் மயங்காவென விலக்கப்பட்ட எழுத்துக்கள் மயங்கியும் இறுதியில் வராவென விலக்கப்பட்ட் எழுத்துக்கள் இறுதியில் வந்து ந் தமிழின் சிறப்பையுந் தனித்துவத்தையும் அழிக்க முனைகின்றன. இவற்றையேற்றுக் கொண்டாலுந் தமிழ்மொழிக்குரிய சிறப்பம் சங்களைப் பொருந்தி வழங்கவைப்பதே தமிழ் அறிஞர் கடனாம்.
தமிழில் வந்து வழங்கும் வேற்றுநாட்டு மொழிகளை இனிக் கவனிப்போம்.
கிரேக்க நாட்டுடன் தமிழ்மக்கள் பழங்காலத்தில் தொடர்பு உடையவர்களாக இருந்தமையால் கிரேக்க மொழிச்சொற்கள் சில தமிழ்மொழியில் இடம்பெற்றுள்ளன. இச்சொற்கள் சங்க இலக்கியங்களிலேயே இடம்பெற்றிருப்பதைப் பார்க்கும் போது இவை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே தமிழ் மொழியில் இடம்பெற்றனவென்பது புலனாகிறது. சென்னைத் தமிழ் அகராதியில் கிரேக்க நாடு முதலிய நாட்டு மொழிகள் எவையெவை தமிழில் இடம்பெற்றனவென்பது எடுத்துக்காட்டப் பட்டுள்ளது. தமிழ்ச் சொற்கள் எகித்து முதலிய நாட்டு மொழிகளில் இடம்பெற்றமையையும் ஆய்வாளர்கள் கூறுவர். ஓரை (நேரம்), மத்திகை (குதிரைச் சவுக்கு), சுருங்கை யவனர் முதலியன தமிழில் வந்து வழங்குங் கிரேக்க மொழிச்சொற்கள். அராபியர்களும் தமிழ் நா ட் டு ட ன் பழங்காலந்தொட்டே தொடர்புடையவர்களாக விளங்கினர். இதன் பேறாக அரபு மொழிச்சொற்களுந் தமிழில் இடம்பெற்றுள்ளன.
鬣170

இமாம் என்பது இசுலாமிய சமயத் தலைவரைக் குறிக்கும் அரபுச்சொல். இலாகா, சைத் தான், தகவல், தாக்கிது, வசூல் என்பன அரபு மொழியிலிருந்து தமிழில் வந்து வழங்குஞ் சொற்களிற் சில.
பாரசீக நாட்டுடனுந் தமிழ் மக்களுக்கு அரசியல், வியாபாரம் என்பனவற்றால், தொடர்பிருந்ததாகத் தெரிய வருகிறது. அதனால் பாரசீக மொழிகளுந் தமிழில் இடம் பெற்று வழங்கி வருகின்றன.
சர்க்கார், சிப்பந்தி, சுமார், துப்பாக்கி, முலாம், சால்வை, சமுக்காளம் முதலியன பாரசீக மொழியிலிருந்து தமிழில் வந்து வழங்குகின்றன.
முகம்மதியரிகள் தமிழ்நாட்டை ஆண்டபோது அவர்களின் உருது மொழிச்சொற்கள் பல தமிழ்மொழியில் இடம் பிடித் துள்ளன. உருது மொழிச்சொற்கள் பலநூற்றுக்கணக்கானவை தமிழில் வந்து வழங்குவதாகச் சென்னைத் தமிழ் அகராதி எடுத்துக்காட்டுகிறது. அசல், அத்தர், அண்டா, அனா, அம்பாரம், அமுல், ஆசாமி, இராசினாமா, இறாத்தல், சராசரி, சாமான் என்பன உருது மொழிச்சொற்கள்.
போர்த்துக்கேயர் தமிழ்நாட்டை ஆண்டபோது ஈழ நாட்டிலும் அவர்களின் ஆதிக்கம் வலுப்பெற்றிருந்தது. அதனால் அவர்களது மொழியும் தமிழில் இடம்பிடித்துக்கொண்டது.
அலுமாரி, அலவாங்கு அன்னாசி, ஏலம், கடுதாசி, கதிரை கொரடா, கோப்பை, பாதிரி, பீங்கான், பீப்பா, விறாந்தை வாங்கு. சன்னல் (சாளரம்), மேத்திரி என்பனவும் அவை முதலாய பலவும் போர்த்துக்கேய மொழிச் சொற்கள்
போர்த்துக்கேயருக்குப் பின் இலங்கையில் இால் பதித்தவரிகள் ஒல்லாந்தர். அவர்கள் ஆட்சி செய்ததன் பலனாக நம் மொழியில் ஒல்லாந்த மொழிச் சொற்களும் சேர்ந்து கொண்டன.
உலாந்தா, கக்கூசு, சாக்கு துட்டு, தோம்பு முதலியன ஒல்லாந்த மொழிச் சொற்கள்
ஆங்கிலேயர் இந்தியாவையும், இலங்க்ை முழுவதையும் ஆண்ட
வர்கள். அவர்கள் ஆட்சிபுரிந்ததால் மட்டுமன்றி ஆங்கில மொழி உலக மொழியாகவும் அரசியல், பொருளியல், விஞ்ஞானவியல்
171徽

Page 95
முதலியவற்றில் வளர்ச்சி கண்ட மொழியாகவும் இருப்பதனால் அவர்களின் ஆட்சி நீங்கிய பிறகும் அம்மொழிச் சொற்கள் தமிழ் மொழியில் இடம்பிடித்து வருகின்றன, பழைய காலத்தில் ஆரிய மொழி தமிழ்மொழியிற் பெற்றிருந்த செல்வாக்கை இன்று ஆங்கில மொழி பெற்றுவிட்டது. எழுத்து வழக்கில் மட்டுமன்றிப் பேச்சு வழக்கிலும் தமிழ் மக்கள் ஆங்கில மொழிச் சொற்கள் பலவற்றைப் 2யன்படுத்தி வருகின்றனர், ஆங்கிலம் படியாதவர்கள் கூட ஆங்கிலத்திற் சில சொற்களையாவது கலந்து பேசுவதால் மட்டுமே தாங்கள் நாகரிகவான்க்ளாகி விடலாமென எண்ணுகின்றனர். தமிழிற் கையொப்பமிட்டாலே தமக்குக் கெளரவமில்லையென்று கருதி ஆங்கிலத்திற் கையொப்பமிடுகின்றனர். ஆங்கில மொழி தமிழில் அளவுகடந்து புகுவது தமிழ்மொழிப் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைக்கு என்பதை நாம் மறத்தலாகாது. ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை ஆக்குவதன் மூலமும் ஆங்கிலச் சொற்களைத் தமிழிலக்கணத்துக்கமைய மாற்றியமைப்பதன் மூலமுமே தமிழைப் பாதுகாக்க முடியும்.
இஞ்சினியர், ஒட்டல், கவண்மேந்து, கம்பனி, கொமிட்டி, கலண்டர், கோடு, கோப்பி, சீமேந்து, சைக்கிள், பெற்றோல், பேப்பர், பென்சில், பொலிசு, மனேச்சரி, மைல், மோட்டார்க் கார், ரெயில், வங்கி, இறப்பர், வசு என்பனவெல்லாம் தமிழில் வழங்கும் ஆங்கில மொழிகளே.
வடசெறல்
ஆரிய மொழியிலிருந்து தமிழ் மொழியில் வந்து வழங்குஞ் சொற்களை வடமொழியென்பது சில இலக்கண ஆசிரியர்களின் கருத்து. ஆனால் ஆரியமொழியே வடமொழியென்பது ஒரு சாராசிரியர் முடிபு. இன்று உலக மொழிகள் பலவற்றில் ஆங்கில மொழியின் ஆதிக்கம் பெருகியிருப்பதுபோல முன்னொரு காலத் தில் ஆரியமொழியின் ஆதிக்கம் தமிழில் பல்கிப் பெருகியிருந்தது. தமிழ் இலக்கண ஆசிரியர்கள் அம்மொழியின் சிறப்பு நோக்கியே திசை மொழிகளில் ஒன்றாக அதனைக் கொள்ளாமல் அதற்குத் தனியிடங் கொடுத்தனர். தொல்காப்பியர் காலத்துக்கு முன்னரே ஆரியமொழிச் சொற்கள் தமிழ் மொழியில் வழக்கில் இருந்தன என்பதற்குத் தொல்காப்பியமே சான்றாக அமைகிறது. தொல் காப்பியத்திலேயே ஆரியமொழிச் சொற்கள் தமிழில் வந்து வழங்கு
囊172

வதற்கு இலக்கணங் கூறப்பட்டுள்ளது. தொல்காப்பியர் ஆரிய மொழி தமிழில் வந்து வழங்குவதற்கு அவை முதலில் தமிழ்க் கோலம் புனையப்படவேண்டும் என்கிறார். சங்க காலந்தொட்டு வட மொழிகள் தமிழில் வந்து வழங்குகின்றன. ஆனால் அவை தமிழ்ம்ொழி போலவே எழுத்தாலும் உச்சரிப்பாலும் மாற்றி அமைக்கப்பட்டிருப்பது அக்கால மக்கள் தமிழ் மொழிப் பாது காப்பில் எவ்வளவு சிரத்தையோடு ஈடுபட்டனர் என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. தொல்காப்பியர் வடமொழிகள் அம்மொழியெழுத்துக்களில் நீங்கித் தமிழெழுத்துக்களால் ஆக்கப் படவேண்டுமென்பதை வலியுறுத்துகிறார். அவர்,
* வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே"
(தொல் எச் 8)
என்று கூறுகிறார். இந்நூற்பாவுக்கு உரையெழுதிய சேனா வரையர், "வடசொற் கிளவியாவது வட சொற்கேயுரிய வெனுஞ் சிறப்பெழுத்தினீங்கி இரு சார்மொழிக்கும் பொதுவாகிய எழுத் தானியன்ற சொல்லாம் ' என்பர். தமிழ் மொழியில் ஆரிய மொழிச் சொற்களை அம்மொழி எழுத்துக்களையுங் கலந்தெழுது வோர் தொல்காப்பியர் கூறி ய வட மொழியாக்கம் பற்றிய கூற்றைச் சிந்தித்து வடவெழுத்தை நீக்கி முழுவதுந் தமிழெழுத் தால் எழுத முயல்வார்களாக, ஜலம், கஷ்டம், பகதி ஸ்நானம் முதலிய சொற்களில் வரும் ஆரிய எழுத்துக்கள் இன்றுந் தமிழ் எழுத்தாளர்களால் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றைத் தமிழ் எழுத்துக்களால் எழுதவேண்டுமென்பதற்குத் தொல்காப்பியர் தந்த ஆணையை நினைவுபடுத்துவோம். சேனாவரையர் கருத்துப் படி பார்ப்பின் இரு மொழிகளுக்கும் பொது வான தற்சம மொழிகளேயன்றித் தற்பவ மொழிகள் வடமொழிகளாக வருவ தில்லை என்ற கருத்து வலியுறுகிறது. தொல்காப்பியர் கூறிய இன்னொரு குத்திரம் தற்பவ மொழிகளுக்கும் இடஞ் செய்வதாக உள்ளது. அச்சூத்திரம் "சிதைந்தன வரினும் இயைந் தன வரையார்" என்பது (தொல். எச் 8) , சிதைந்தன என்ப தற்குக் கிருஷ்ணன் என்பது கண்ணன் எனவும், விஞ்ஞாபனம் என்பது விண்ணாணம் எனவும் வருபவை எனக் கூறு வ தும் பொருத்தமுடையதாக்த் தெரிகிறது.
173豪

Page 96
இடைக்காலத்தில் தமிழ்மொழிச் சொற்களையும், ஆரிய மொழிச் சொற்களையுங் கலந்தெழுதுவதை மேன்மைக்குரியதாகக் கருதியோரும் உளர். இவர்களின் முயற்சியால் மணிப்பிரவாள நடை என்பதோர் புதிய வசன நடை தமிழிற் புகுந்தது. மணி என்பது தமிழ்ச்சொல். பிரவாளம் என்பது பவழத்தைக் குறிக்கும் ஆரிய மொழி. மணி யு ம் பிரவாளமும் சேர்ந்த அணிகலன் மாட்சி பெறுவதுபோல இவ்வுரை நடையுங் கவர்ச்சிமிக்கு விளங் கும் என்பது அவர்கள் எண்ணம். ஆனால் அந்நடை நீண்ட காலம் வாழமுடியாமல் மடிந்துவிட்டது. தமிழ் மொழியைப் பெரிதும் பாதிக்கக்கூடிய இந்நடை நீண்ட நாள் வாழமுடியாமற் போனது தமிழன்னை செய்த தவப் பயனேயெனலாம்,
நன்னூலார் கூறிய வடமொழியாக்கம் பற்றிய கருத்துக்கள் பதவியலுள் விரித்துக் கூறப்பட்டுள. ஆங்குக் காண்க. வேற்றுமை பற்றிய விளக்கம்
வேற்றுமை என்றால் என்னவென்பது சிந்தனைக்குரிய விடய மாகும். விகாரம் என்பதே வேற்றுமையாகும். இயல்பு என்பதற் கெதிரான மொழியே வேற்றுமை." இயல்பான ஒரு பொருள் பல்வேறு வகையாகத் தொழிற்படும்போது அங்கு வேற்றுமை பிறக்கிறது. பெயர்ப் பொருள் பல்வேறு வகையாக வேறுபடுவது மொழியின் நிலைப்பாடாகும். பெயர்ப்பொருள் வேறுபாடுகளை உணர்த்துவன உருபுகளாகும். அந்நிலையில் வேறுவிடுவது பெய ராகவும், வேறுபடுத்துவது உருபாகவுங் காணப்படும். பெயரே வேற்றுமையடைவதால் அதனையே வேற்றுமை என்பாரும், பெயரை நோக்கிவரும் வினையே பெயர் வேறுபடக் காரணமாத லால் அதனையே வேற்றுமையென்பாருமென ஆசிரியர் பலராவரி என இலக்கணக் கொத்து நூலாசிரியர் கூறுவர். கூர்ந்து நோக்கும் போது இம்மூன்றும் வேற்றுமையாகக் கொள்ளப்படுதலில் நியாய முண்டு. மரம் என்ற சொல் மரத்தை என்று வரும்போது வேற்றுமையடைகிறது. அவ்வாறு சொல்லை வேற்றுமைப்படுத்து வது உருபு என்பது எவருமறிந்ததே. மரம் என்ற சொல் தறித் தான் என்ற சொல்லை வருமொழியாகக் கொள்ளும்போது மரந் இறித்தான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையாகவும், மரத்தைத் தறித்தான் என இரண்டாம் வேற்றுமை விரியாகவும் இருகிறது. அதனால் சொல்லை வேற்றுமைப் படுத்துவதில்
獵174

உருபின் பங்களிப்புப் போல பொருளை வேற்றுமைப்படுத்துவதில் முடிக்குஞ் சொல்லின் பங்களிப்பும் உளதாதல் தெ விரிவு. எனினுஞ் சொல்லை வேற்றுமைப் படுத்துவதாகிய உருபையே முக்கியமானதாக இலக்கண நூலாசிரியர்கள் கொள்வர். பெயர் வேறுபடும்போது அதனை வேறுபடுத்தும் வேற்றுமை உருபுகள் ஐ, ஆல், கு. இன், அது, கண் என ஆறாம். மரத்தை, மரத் தால் முதலிய வேற்றுமைப்பட்ட சொற்களோடு ஒப்பிடும்போது மரம் என்பதும் அவற்றின் வேறுபட்டு வேற்றுமையெனக் கொள் ளம்படுவதாயிற்று என்பாருமுளர். அங்ங்ணங் கொள்ளாது மரம் என்னும் இது ஸ்பான பெயர்ப் பொருள் வினை முதலாக வேறு படுதல் முதலாம் வேற்றுமையெனல் அறிவியலுக்கு ஒக்கும். விளி வேற்றுமை பெயரது விகாரம் ஆதலால் அதுவும் வே ற் று மை யெனப்பட்டுப் பொருள் செய் வேற்றுமைகள் எட்டாயின. எனி னும் புணரியலில் வேற்றுமை ஆறாகவே கொள்ளப்படுகிறது ஏனெனில் வேற்றுமைத் தொகையிற் பெயரும் விளியுஞ் சேர்க்கப் படாததால் அங்கு வேற்றுமை ஆறேயாயிற்று. நன் னுர லா ர் ெேபயரே ஐ, ஆல், கு, இன், அது, கண், விளி என்றாகும். அவற்றின் பெயர் முறை" (நன். பெய. 35) என்பர். இந்த வேற் றுமைகளுக்குப் பெயரிடுவதில் இலக்கணக்காரர் நகர்ப்புறங்களில் வீடுகளுக்குந், தெருக்களுக்கும் இலக்கமிட்டு வேறுபடுத்துவது போல ஒன்று முதலாக எண் சுட்டியே வேறுபாடு காட்டுவர். அதாவது முதலாம் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை எனத் தொடர்ந்து எட்டாம் வேற்றுமை வரை பாகுபடுத்துவர். தன்னையேற்ற பெயரினது பொருளை வேறு படுத்துவது வேற்றுமை என ஆறுமுகநாவலர் வேற்றுமைக்கு வரைவிலக்கணங் கூறுவர். இதனால் உருபையே அவர் வேற்றுமை யெனக் கொண்டார் என்பது புலனாகிறது.
முதலாம் வேற்றுமை
முதலாம் வேற்றுமைக்கு உருபில்லை. திரிபில்லாத பெயரே முதலாம் வேற்றுமையாகும். முதலாம் வேற்றுமையின் பொருள் வினைமுதல் அல்லது எழுவாய் எனப்படும். சாதிதன் வந்தான் என்ற வாக்கியத்தில் சாத்தன் என்பது திரிபில்லாத பெயராகும். இவ்வாக்கியத்தில் சாத்தன் என்பது வினைமுதல் அல்லது எழுவாய் எனப்படும். "எழுவாயுருபு திரிபில் பெயரே" (நன், பெய 36) என்பது நன்னுரல், திரிபில்லாத பெயரை வேற்றுமை
175據

Page 97
என்றதற்குக் காரணம் தானே தன் பொருளைக் கருத்தாப் பொருளாக வேறுபடுத்துவதால் என்பர் உரையாசிரியர்கள். எழுவாய்ப் பொருள் என்பது பயனிலையாற் குறிப் பி டு ந் தொழிலைச் செய்வதற்கு முதலாயுள்ள பொருள் என்பதாகும். எமுவாய் வேற்றுமை தனக்குப் பயனிலையாக வினை, பெயர், வினா என்பவற்றுள் ஒன்  ைற க் கொண்டு வரும், வேலன் வந்தான் என்பதில் வந்தான் என்பது வினை யாதலால் இது வினை கொண்டு வந்தது. ஆ பல வென்பதில் பல வென்பது பெயராதலாற் பெயர் கொண்டு வந்தது. அவன் யார்? என் பதில் யார் என்பது வினாவாதலால் வினாக் கொண்டு வந்தது.
எழுவாய் வேற்றுமைக்கு உருபில்லாது போயினும் அது ஆனவன், ஆகின்றவன், ஆவான், என்பவன் முதலாக ஐம்பா லினும் வருஞ் சொல்லுருபுகளைக் கொண்டு வரும். இச் சொல்லுருபுகள் திரிபில்லாத பெயராகிய எழுவாயின் நிலையை மேலும் உறுதி செய்ய உதவுவனவாம். வாக்கியங்களில் சில விடத்து இம் முதலாம் வேற்றுமை தோன்றாது நிற்றலுமுண்டு. அவ்வாறு தோன்றாது நிற்கும் போது அது தோன்றா எழுவாய் எனப்படும். " போனாய்" என்பதையறிந்தேன். என்பதில் நீ என்பது தோன்றா எழுவாயாக நிற்கிறது. நீயிரி, நீவிர், நான் என்பன மூன்றும் எழுவாயல்லாத வேறு வேற்றுமை யுருபுகளை யேற்கமாட்டா. யாம் என்பது எம் எனவும் யான் என்பது என் எனவும் வரும். யான் என் என வருவதுபோல நான் என் பதும் என்னென வருமெனக் கொண்டாலென்ன எனச் சிலர் யோசிக்கக் கூடும். யான் என்னாதல் கொண்டு நான் என்னாகும் என்பது தவறு, 'ய', "எ" என்பன முயற்சிப் பிறப்பில் அடிதா சம்பந்தமுறும் இயைபுண்டு. "எ" என்பதற்கும் 'ந' என்பதற்கும் அவ்வித சம்பந்த மில்லை. முயற்சிப் பிறப்புத் தொடர்பு பற்றியே யார் எவர், ய்ாவன் - எவன், ய்ாது - எது, யாங்கு எங்கு என்ற இயைபிருத்தலும் கவனிக்கத்தகும். நான் என்பது நன்" என்று வராதாதலால் நான் என்பது பிறவுருகளை ஏலா தெனக் கூறுவாருமுளர், கருத்தா ஏவுதற் கருத்தா இயற்றுதற் கருத்தா என இருவகைப்படும். அரசன் கோயிலைக் கட்டி னான் என்பதில் அரசன் ஏவுதற் கருத்தா, தச்சன் கோயி லைக் கட்டினான்-என்பதில் தச்சன் இய்ற்றுதற் கருத்தா. முதலாம் வேற்றுமைய்ை ஏற்கும் வினையில் செயற்படு பொருள் குன்றிய
靈176

KA" I "*", "", "***"MAR" AS, KARA
வினை குன்றாத வினை யென்றிருவகையுள. அவன் வந்தான்" என்பதில் வந்தரின் என்ற வினை செயப்படு பொருளை ஏற் காததால் அது செயப்படு பொருள் குன்றிய வாக்கியம். மாடு மேய்ந்தது என்பதில் மேய்ந்தது என்னும் வினை புல்லு என்னும் செயப்படு பொருளை ஏற்றலால் அது செயப்படு பொருள் குன்றாத வாக்கியம்.
முதலாம் வேற்றுமை பற்றிக் கூறவந்த தொல்காப்பியர், * அவற்றுள்,
எழுவாய் வேற்றுமை பெயர் தோன்று நிலையே' (தொல், வேற். 4) என்றார். பெயரீ தோன்றிய துணையாய் நிற்கும் நிலையென்பதை விளக்கப்புகுந்த சேனாவரையர், *பெயர் தோன்றிய துணையாய் நிற்கும் நிலையாவது உருபும் விளியும் ஏலாது பிறிதொன்றனோடு தொகாது நிற்கும் நிலை" யென்பர். உருபேற்றல், பெயரி வருமொழியோடு சேர்ந்து தொக்கு வேற்றுமைத் தொஅையாகி வருதல் என்பவற்றை விலக்கவே அவர் அவ்வாறு கூறினார். நன்னூலார், வினை பெயர் வினாக்கொள வருதல் என்று சு ட் டி ய  ைத த் தொல்காப்பியர், பொருண்மை, சுட்டல், வியங்கொள வருதல், வினாவிற்கேற்றல் முதலாக அறுவகைப்படுத்திக் கூறுவர். அவர் கூறிய ஆறையும் நன்னூலார் கூறிய முன்றனுள் அடக்கலாம். இனி இருபெயர்கள் ஒட்டி வந்து பயனிலை கொள்வதையும் தொல்காப்பியர் முதலாம் வேற்றுமைக்கு உரித்து என்கிறார். யானை கிடந்தது என்று ஒரு பெயர் மட்டுமல்லாமல் யானைக் கோடு கிடந்தது என இருபெயரொட்டி எழுவாய்ாக வருதலையே அவர் இங்குக் குறிப்பிட்டுள்ளார்.
இரண்ட்ரம் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமைக்கு உருபு ஐயாகும். முதலாம் வேற்றுமைப் பொருள் எழுவாய் என்பது போல இரண்டாம் வேற்றுமைப் பொருள் செய்ப்படு பொருளாம். இச் செயப்படு பொருள் ஒன்றையே நன்னூலாருந் தொல்காப்பியரும் பலபட விரித்துரைப்பர். தொல்காப்பியர் காப்பின், ஒப்பின், ஊர்தியின், இழையின், ஒப்பின், புகழின், பழியின் என்பன முதலாகச் சிதைப்பின் என்பது ஈறாக இருபத்தெட்டினையெண்ணி அதன் மேலும் அன்ன பிறவும் என்றுங் கூறுவர். இவையெல்லாஞ்
T 2& 177

Page 98
செயப்படுபொருள் என ஒன்றாயடகிகும். இயற்றப்படுவதும் வேறுபடுக்கப்படுவதும் எய்தப்படுவதுமெனச் செயப்படுபொருள் மூன்று வகைப்படுமென்ற சேனாவரையர் தொல்காப்பியர் கூறிய இருபத்தெட்டுந் தாங்கூறிய முன்றன் விரியேயென்பர். எயிலைக் காத்தான், புலியையொத்தான், தேரையூர்ந்தான், எயிலையிழைத்தான் என்பது முதலாக இவற்றுக்கு உதாரணங் காட்டலாம்,
நன்னூலார் இரண்டாம் வேற்றுமைப் பொருள் "ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமையா தியாகும்" என்பர். தாங்கூறிய்வற்றில் அடங்காதவற்றையும் அடக்குதற்கு ஆதியாகும் என்றுங் கூறினார்.
குடத்தை வனைந்தான் ா ஆக்கப்படுபொருள். கோட்டையையிடித்தான் - அழிக்கப்படுபொருள். ஊரைச் சேர்ந்தான் அடையப்படுபொருள். வீட்டை விட்டான்  ைநீக்கப்படுபொருள். புலியையொப்பான் - ஒக்கப்படுபொருள். பொன்னையுடையான் - உடைமைப்பொருள்.
ஆதியென்பதனால் வீட்டை விரும்பினான், நூற்பொருளை அறிந்தான். முதலானவையுங் கொள்ளப்படுமென்பர்.
அரசன் பகைவரைச் சிறைச்சாலையை அடைவித்தனன். பசுவைப் பாலைக் கறந் தான் என்பவற்றை இலக்கணக் கொத்தாசிரியர் ஈருருபிணைதல் என்ற விதியில் அடக்குவர். இவற்றைப் பகைவரைச் சிறைச்சாலைக்கு அனுப்பினான் எனவும் பசுவினது பாலைக் கறந்தான் எனவும் வழங்குவதே சிறப்பென்க.
மூன்றாம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமையுருபுகள் ஆல், ஆன், ஒடு, ஒடு என்பனவென்பர் நன்னூலார். தொல்காப்பியர் மூன்றாம் வேற்றுமையை ஒடுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவியென்பர். அது வினை முதலுங் கருவியுமாகிய இரண்டையும் பொருளாக உடையதெனவும் அவர் கூறுவர். ஆனால் உரையாசிரியர்கள், ஆன் உருபையுந் தழுவி அவ்வேற்றுமைக்கு ஒடு, ஆன் என்ற உருபுகளையுரிமையாக்குவர். சேனாவரையர் வினை முதலுக்குங்
鯊178

கருவிக்கும் ஒடுவுருபு இக்காலத்தில் அருகியல்லது வாராது எனக் கூறுதலின் மூன்றாம் வேற்றுமைக்கு ஆல் உருபும், ஆன் உருபுமே இக்காலத்திற் பெரிதும் பயன்படுத்தப்படும் என்பது புலனாகும். தொல்காப்பியர் ஒடுவெனப் பெயரிய வேற்றுமை என்றதனால் ஒடுவுருபே அவர் காலத்தில் மூன்றாம் வேற்றுமைக்குச் சிறப்புரிமை பெற்றிருந்தது என்பதுங் கருதத்தக்கது.
ஆல், ஆன், ஒடு, ஒடு என்னும் நான்குருபுகளை நன்னூலார் பொதுப்படக் கூறினாரேனும் ஆல், ஆன் உருபுகளுக்குக் கருவிப் பொருளுங் கருதாப் பொருளும் ஒடு, ஒடு உருபு களு க் கு உடனிகழ்ச்சிப் பொருளுஞ் சிறந்தனவென உரையாசிரியர்கள் கூறுவர். கருவியெனினும் காரணமெனினும் ஒக்கும். காரணம் முதற் காரணம், துணைக் காரணம், நிமித்த காரணம் என மூன்று வகைப்படும். குடத்திற்கு முதற்காரணம் மண், துணைக் காரணம் குடத்தை உருவாக்கும் வரையும் பயன்படும் தண்ட சக்கரம் முதலியன. நிமித்த காரணம் குயவன். கருத்தாவும் ஏவுதற் கருத்தா இயற்றுதற் கருத்தாவென இரு வகைப்படும். அதன் விபரம் முதலாம் வேற்றுமையுட் கூறப்பட்டது. கருவி யாவது கருத்தா தொழில் செய்வதற்குச் சாதனமாக அமைவது. வாளால் வெட்டினான் என்றவிடத்து வெட்டுதல் கருத்தாவின் தொழில். அத்தொழிலுக்குச் சாதனமாயிருப்பது வாள். ஆதலால் அது கருவிப் பொருளாகும். வாளால் வெட்டினான் என வருதல் போல வாளான் வெட்டினான் எனவும் வரும். இங்கு ஆன் உருபு வந்தது. ஆசிரியனோடு மாணவன் வந்தான் என்பதில் ஒடு உருபு உடனிகழ்ச்சிப் பொருளில் வந்தது. இது ஆசிரியனொடு மாணவன் வந்தான் என ஒடுவுருபோடு வருதலும் உண்டு.
தொல்காப்பியர் " ஒரு வினை ஒடுச் சொல் உயர் பின் வழித்தே" (தொல், வேற். மய, 8) என்று கூறியுள்ளார். ஒடுவுருபு கொடுத்துச் சொல்லுமிடத்து உயர்ந்த பொருளை முன்வைத்தும் இழிந்த பொருளைப் பின் வைத்தும் சொல்லுதல் மரபு என்பர். ஆசிரியன், மாணவன் என்ற இருவரிலும் ஆசிரியன் உயர்ந்தவ னாதலால் ஆசிரியனொடு மாணவன் வந்தான் என ஆசிரியனை முன்வைத்துச் சொல்லுதல் மரபு என்பது அவர் கருத்து நாயொடு நம்பி வந்தான் என இழிந்த பொருள் முன்வைக்கப்
179鐵

Page 99
படுவது முண்டென்று காட்டி நம்பி வந்த வினைக்கு (வேட்டைக்கு) நாய் சிறத்தலால் நாய் முன்வைக்கப்பட்டதென உரைய்ாசிரியரிகள் கூறுவர்.
மூன்றாம் வேற்றுமைச் சொல்லுருபுகளாக கொண்டு உடன் என்பன வரும். வாள் கொண்டு வெட்டினான், தந்தையுடன் மைந்தன் வந்தான் என்பன இவற்றுக்கு உதாரணங்களாகும்.
ஆசிரியர் தொல்காப்பியர் * அதனினியறல், அதற்றகு கிளவி' - (தொல். வேற் 13 ) என வருஞ் சூத்திரத்தால் மூன்றாம் வேற்றுமைப் பொருளை நன்கு விரித்து விளக்குவர். அவையெல்லாம் கருவி, கருத்தா உடனிகழ்வு என்பவற்றில் ஒருவாறு அடங்கும்.
நான்காம் வேற்றுமை
நான்காம் வேற்றுமைக்கு உருபு கு" என்பதும் இலக்கண ஆசிரியர் க ள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதே. " நான்காகுவதே கு எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி'- (தொல், வேற். 14 ) எனத் தொல்காப்பியரும் " நான்காவத னுருபாகு ங் குவ்வே "- (தன். பெ. கீ ) என நன்னூலாருங் கூறுவர். “ எப் பொருளாயினுங் கொள்ளு மதுவே ” எனக் கூறுந் தொல்காப்பியர் கோடற் பொருளையே நான்காம் வேற்றுமைக்குரிய பொதுப் பொருளாகக் கூறி, மேலும் அப் பொருளை விரித்துப் பலவாறாகக் கூறுவர். நன்னூலார் சுருக்க மாக கொடை, பகை, நேர்ச்சி, தகவு, அதுவாதல், பொருட்டு முறை ஆதியாக வருமென்பர். முதலாம் வேற்றுமைக்கு எழுவாயும் இரண்டாம் வேற்றுமைக்குச் செயப்படு பொருளும் மூன்றrம் வேற்றுமைக்குக் கருவிப் பொருளும் போல நான் க ரீ ம் வேற்றுமைக்குக் கோடற்பொருள் வருமென்க. தொல்காப்பியர் * எப்பொருளாயினுங் கொள்ளுமதுவே " யெனக் கூறியது போல நன்னூலார், " இதற்கு இதுவெனல் பொருளே " எ ன் ப ர். இருவர் கூற்றும் வேறுபாடின்றி யொரு பொருளையே தருவன. நன்னூலார் நான்காம் வேற்றுமைப் பொருளை விரிக்குமிடத்துக் கொடை, பகை, நேர்ச்சி, தகவு, அதுவாதல், பொருட்டு, முறை ஆதியாக விரிப்பர். என முன்னர்க் கண்டோம். கொடையெனவே கொள்ளுதற் பொருளும், பகையெனவே பகை தொடர்ப் பொருளும் நேர்ச்சி எனவே நட்புத் தொடர்ப் பொருளும் தகவு
ఫ్లో 180

எனவே தகுதியுடைப் பொருளும் அதுவாதல் எனவே முதற் காரண காரியப் பொருளும் பொருட்டு எனவே நிமித்த காரண காரிய்ப் பொருளும் முறை டெனவே முறைக்கியை பொருளுங் கொளப்படும்.
இவற்றிற்கு உதாரணம் வருமாறு
கொள்ளுதற் பொருள் - யாசகருக்குப் பொன்னைக்
கொடுத்தான். பகை தொடர் பொருள் - பாம்புக்குப் பகை கீரி
நட்புத் தொடர் பொருள் - வேலனுக்கு நண்பன் குமரன், தகுதியுடைப் பொருள் - அரசர்க்கு உரியது முடி,
முதற் காரண காரியப்பொருள் - குண்டலத்துக்குப் பொன் - பொன்குண்டலமாக மாறி அதனோடிருத்தலால் முதற் காரணமாயிற்று.
நிமித்த காரண காரியப்பொருள் - கூலிக்கு வேலை செய் தான் - கூலியின் நிமித்தமே வேலை செய்யப்பட்டதாத இFல்
முறைக்கியை பொருள் - சாத்தனுக்கு மகன் கொற்றன் இவ்வேற்றுமை எல்லைப் பொருளில் வருதலும் உண்டு, மதுரைக்கு வடக்குச் சிதம்பரம் எனவும் சாத் தனு க்கு நெடியன் கொற்றன் எனவும் வரும். பொருட்டு நிமித்தம் என்பன சொல்லுருபுகளாகி வரும், இவ்வுருபின்மேல் ஆக வென்பதுஞ் சொல்லுருபாக வரும்,
கூலியின் பொருட்டு வேலை செய்தான். கூலியின் நிமித்தம் வேலை செய்தான். கூலிக்காது வேலை செய்தான் என்பன
உதாரணங்களாகும்,
ஐந்தாம் வேற்றுமை
ஐந்தாகுவதே இன் எனப்பெயரிய வே ற் று  ைம க் கிளவி என்பதும் இதனின் இற்று இது என்பதுவே அதன் பொருள் என்பதும் தொல்காப்பியர் கருத்தாகும் இதனின் இற்று இது வென்பது இதனினும் இத்தன்மையுடையது இது வென்னும் பொருளையுடையதாம். தொல்காப்பியர் "இன்" என்பதே
181鑿

Page 100
ஐந்தாம் வேற்றுமை உருபெனக் கூற நன்னூலாரி இல், இன் என்னும் இரண்டும் ஐந்தாம் வேற்றுமை யுருபுகள் எனக்கூறுவர். தொல்காப்பியரி கூறிய் இன்” என்பதே எழுத்துத்திரிந்து "இல்" என வழங்கப்பட்டதாகவுங் கொள்ளலாம். ஐந்தாம் வேற்றுமைப் பொருளை விரித்துக் கூ று மி ட தீ து வண்ணம், வடிவு, அளவு, சுவை முதலாக இருபத்தெட்டுப் பொருளில் வருமெனக் கூறி அதன் மேலும் அன்ன பிறவும் எனக்கூறி அவை போன்ற பிறவற்றையுங் கொள்ளுமாறு ஆணை தருவர். காக்கையிற் கரிது களம் பழம் என்பதை வண்ணத்திற்கும் இதனின் வட்ட மிது என்பதை வடிவுக்கும் இதனின் நெடிதிது என்பதை அளவுக்கும் இவைபோல மற்றைப் வற்றுக்கும் உரையாசிரியர்கள் உதாரணங் காட்டுவர்.
நன்னூலார், "ஐந்தாவத னுருபு இல்லும் இன்னும்
நீங்கலொப்பு எல்லை ஏதுப்பொருளே’
(நன். பெங்க். 42}
எனக் கூறுவர். ஐந்தாம் வேற்றுமைக்கு உருபு இல்லும் இன்னும் எனவும் அவ்வேற்றுமைப் பொருள் நீக்கப் பொருள், ஒப்புப் பொருள், எல்லைப் பொருள் ஏதுப் பொருள் எனவுங் கூறுவர். தொல்காப்பியர் கூறிய எல்லாப் பொருளும் அடங்கக்கூடிய்தாக நன்னூலார் செய்த சூத்திரம் அமைந்துள்ளது. தொல்காப்பிப்ர் இதனின் இற்று இது வெனக் கூறிய பொருளையே பின்னர்ட் பல்வேறு வகையாக விரித்துள்ளார். நன்னூலார் தொல்காப் பியர் கூறிய எல்லாவற்றையுந் தொகுத்து நீங்கல் முதலாகிய நான்கு பொருள்களில் அடக்கி யுள்ளார். இல்லுருபு ஏழாம் வேற்றுமைக்கு முக்கியமானது. அதனை நன்னூலார் ஐந்தாம் வேற்றுமைக்கும் உரிமை யுள்ளதாக்கினார். ஏழாம் வேற்றுமை பில் வரும் இல்லுருபு இ ட ப் பொரு வி ல் வரும் H6Bayleio இருந்தான் என்பது அதற்கு உதாரணமாகும். ஐந்தாம் வேற்றுமை "இல்" உருபு நீக்கப் பொருளில் வரும் மலையில் வீழ்அருவி மென்பது அதற்கு உதாரணமாகும். காக்கையிற் கரிது கணம் பழம் என்பது ஐந்தாம் வேற்றுமை ஒப்புப் பொருளுக்குக் காட்டப்பட்ட உதாரணமாகும். காக்கை போலக் கரிது களம் பழம் என்றால் அது ஒப்புப் பொருளைத் தரும். ாேக்கையிலும் பார்க்கக் கரிது களம் பழம் என்றால் அது எல்லைப் பொருள் என்பதையும் ஞாபகஞ் செய்தல் நலமாகும்.
鑒182

நீக்கப் பொருள் - மலையின் வீழ் அருவி ஒப்புப் போருள் - மதியின் மாசறு முகம் எல்லைப் பொருண் - மதுரையின் வடக்குச் சிதம்பரம்
ஏதுப்பொருள் - கல்வியிற் பெரியன் கம்பன், கல்வி ஏதுவாகப் பெரிய்ன் எனப் பொருள் படும்.
நீக்கப் பொருளிலும் எல்லைப் பொருளிலும் இன், இல் உருபுகளின்மேல் நின்று, இருந்து என்பவை சில விடங்களிற் சொல்லுருபுகளாக வரும், ஊரினின்று நீங்கினான், ஊரிலிருந்து
போனான் எனவரும்.
ஆறாம் வேற்றுமை
'ஆறாகுவதே - அதுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி' (தொல், வேற். மல், 15) என்பது தொல்காப்பியம். ஆறாவது வேற்றுமை அது வென்னும் வேற்றுமைச் சொல்லால் வருவ தென்பது அச்சூத்திரப் பொருள். தன்னினும் பிறிதினும் இதனது இது வென வருதலே அவ்வேற்றுமையின் இயல்பு என்பதும் அவர்கருத்து. தன்னினும் பிறிதினும் என்பதைத் தற்கிழமை பிறிதின் கிழமைகளில் அடக்குவர் உரையாசிரியர். ஆறாம் வேற்றுமை தன்னான் வந்த தற்கிழமையும் பிறிதான் வந்த பிறிதின் கிழமையும் என இரு கிழமைப்பொருளில் வருமெனவும் உரையாசிரியர்கள் விரித்துரைப்பர். சாத்தனது கையென்பது தற்கிழமை. கிழமை என்ற சொற்கு உரிமை அல்லது சம்பந்தம் எனப் பொருள் கூறலாம். கந்தனது பசு வென்பது பிறிதின் கிழமை, சாத்னோடு கை சம்பந்தப் ப ட் டி ரு ப் ப த ல் கும் கந்தனோடு பசு சம்பந்தப் பட்டிருப்பதற்கும் உள்ள வேறுபாடு தெளிவானது. கை தன்னோடு சம்பந்தமுடைய தற்கிழமை, பசு பிறிதோடு சம்பந்த முள்ள பிறிதின் கிழமை,
தொல்காப்பியர் ஆறாம் வேற்றுமைப் பொருளை இயற்கை யின், உடைமையின், முறைமையின் முதலாகப் பல்வேறு வகை யாக விரித்துக் கூறுவர்.
நன்னூலார் ஆறாம் வேற்மை ஒருமைக்கு அதுவும் ஆதுவும் பன்மைக்கு "அ" என்பதும் உருபாம் என்பர். அ வ ர் த ய் கிழமையை விரிக்கும்போது, பண்பு உறுப்பு ஒன்றன் கூட்டம்
183鬣

Page 101
பல வினிட்டம் திரிபினாக்கம் என வகைப் படுத்துவர். பண்பு என்பதில் குணப் பண்புந் தொழிற் பண்பும் அடங்கும். எனவே பொருள், இடம் காலம் என்னும் மூன்றும் பிறிதின் கிழமையில் வருமென உரையாசிரியர்கள் கூறுவர். தற்கிழமை பிறிதின் கிழமைகளுக்கு உதாரணங் காண்போம்.
பண்புத் தற்கிழமை (குணம்) சாத்தனது கருமை பண்புத் தற்கிழமை (தொழில்) சாத்தனது வரவு
உறுப்புத் தற்கிழமை - சாத்தனது கை
ஒன்றன்கூட்டத் தற்கிழமை - மாத்தரது கூட்டம் பலவினிட்டத் தற்கிழமை படைகளது கூட்டம் திரிபினாக்கத் தற்கிழமை - நெல்லினது பொரி
மாந்தரது கூட்டம் என்பதில், ஒருபொருளே கூடியிருப்பதும் படைகளது கூட்டம் என்பதில் யானை, குதிரை, தேர், காலான் என்ற பலவகை கூடியிருப்பதுங் கவனிக்க வேண்டியவை.
இவையைந்துந் தற்கிழமை. இனிப் பிறிதின் கிழமை வருமாறு:
பொருட் பிறிதின் கிழமை - சாத்த னது பசு இடப் பிறிதின் கிழமை ா சாத்தனது வீடு காலப் பிறிதின் கிழமை ா சாத்தனது நாள்
இவ்வேற்றுமையில் இராகுவினது தலை, எனது உயிர் என்ப வற்றில் உடையவனும் உடைமைப் பொருளும் வேறாகாத ஒற்றுமைப் பொருளில் வந்தன. இராகு தலைய்ே வடிவானவன் என்பதும் நான் என்பது உயிரே என்பதும் அறிய வேண்டியவுை
ஆறாம் வேற்றுமை யுருபுகள் நிற்க வேண்டிய இடத்தில் உடைய வென்பது சொல்லுருபாக வரும் சாத்தனுடைய கை, சாத்தனுடைய வீடு எனவரும்.
அது உருபு உயர்திணையில் வராது. அதனால் எனது மகன் எனச் சொல்வது வழாநிலை யன்று. அது வழுவமைதியாகக் கொள்ளப்படவேண்டியது. வழுவெனத் தள்ளி விட முடியாது. எனக்கு மகன் என நான்காம் வேற்றுமை யுருபு கொடுத்துச் சொல்வதே வழாநிலை யாகும்.
ஏழாம் வேற்றுமை
ஏழாகுவதே - கண்ணெனப் பெயரிப் வேற்றுமைக் கிளவி (தொ வேற். 21 என்பர் தெரில் காப்பிய்லி, அது விள்ை
纂184

செய்யிடம் முதலாக வருமெனவுங் கூறுவர். கண் என்னும் உருபேயலோது கால், புறம், அகம் முதலாய பல வுருபுகளும் ஏழாம் வேற்றுமைக்குரிய வென்பரி அவர்,
நன்னூலார் ஏழாம் வேற்றுமை யுருபு கண் ஆதியாகும் எனவும் பொருள், இடம் காலம், சினை குணம், தொழில் என்னும் ஆறும் தற்கிழமை பிறிதின் கிழமையென்னும் இரண்டி லும் வருதல் இவ்வேற்றுமைப் பொருள் எனவுங் கூறுவர். இவ் வேற்றுமைக்கு இடப் பொருளே பொதுப் பொருளாகும்.
உதாரணம் வருமாறு:
பொருட் தற்கிழமை - மணியின்கண் ஒளி பொருட் பிறிதின்கிழமை - பனையின் கண் அன்றில் இடத் தற்கிழமை - ஊரிற்கண் இல்லம் இடப் பிறிதின் கிழமை - ஆகாயத்தின் கட் பருந்து காலத் தற்கிழமை - தாளின்கண் நாழிகை காலப் பிறிதின் கிழமை ஊ வேனிற்கண் பாதிரி பூக்கும் சினைத் தற்கிழமை - கையின்கண் உள்ளது விரல் சினைப் பிறிதின்கிழமை - கையின் கண் உள்ளது காப்பு குணத் தற்கிழமை - கறுப்பின் கண் உள்ளது அழகு குணப் பிறிதின் கிழமை - இளமையின் கண் செல்வம் தொழிற் தற்கிழமை - ஆடற் கண் உள்ளது சதி
தொழிற் பிறிதின் கிழமை - ஆடற்கண் பாட்டுப் பாடப்பட்டது
நன்னூலார் இடப் பொருள் உருபாக கண், கால், இடை இடை தலை வாய் திசை முதலாகப் பலவுருபுகள் கூறியுள் ளார். இவற்றை இலக்கியங்களில் ஆங்காங்குக் காணலாம்.
எட்டாம் வேற்றுமை
எட்டாம் வேற்றுமையை விளிவேற்றுமை எனவுஞ் சொல்வரி, இவ் வேற்றுமையை உணர்த்தத் தொல்காப்பியர் விளிமரபு என் னும் ஒரியலை அமைத்துள்ளார். அவர் பல பெய்ர்களையும் எடுத்தோதி அவை எவ்வாறு விளிப்பொருளில் வருமெனவுங்
இாட்டுவரீ
நன்னூலாரி எட்டாம் வேற்றுமை எவ்வெவ் மாற்றங்களைப் பெற்று வருமெனக் கூறுகிறார். பெயரின் ஈறு திரிதல், ஈறுகுன்று
185影

Page 102
தல் ஈறு மிகுதல், இயல்பாக நிற்றல், ஈற்றயல் திரிதல் என்பனவே அவர்காட்டிய விளிவேற்றுமைக்குரிய நிலைப்பாடாகும். விளி வேற்றுமையின் பொருள் படர்க்கையோரைத் தன்முகமாகத் தானழைப்பது என்பர். படர்க்கையோரி விளிக்கப்படும் போது முன்னிலையிடத்துக்கு உரியவராவர்.
ஈறு திரிதல் - அன்னை என்பது அன்னாய் எனவும் தந்தை தந்தாயெனவும் வரும் இவை அன்னையே எனவுத் தந்தையே எனவும் வருதலுமுண்டு. ஈறு குன்றுதல் என அரசன் என்பது அரச எனவும் சோழன் சோழ எனவும் வரும், ஈறு மிகுதல் - மகன் மகனே எனவும் தந்தை, தந்தையே, எனவும் வரும். இயல்பாக வருதல் - நம்பி, தோழி, சாத்தன், என்பன இயல்பாக வரும்.
இவையும் நம்பியே, தோழி, தோழியே, சாத்த, சாத்தனே எனவும் வரும். ஈற்றயல் திரிதல் - மக்கள், மக்காள் எனவும், புலவர், புலவீi எனவும் வரும். ஈறுகுன்றி, ஈற்றயல் திரிந்து, ஈறுமிகுந்தும் வரும் - அண்ணன் என்பது ஈறுகுன்றி அண்ண என வரும் அப்பன் என்பது ஈறுகுன்றி அயல்திரிந்து அப்பா எனவரும் அண்ணன் என்பது அண்ணாவோ என வரும்போது ஈறுகுன்றி அயல் திரிந்து மிக்கு வந்தது.
சிறுபான்மை அளபெடுத்தும் விளியாகும். அம்மான் என்பது அம்மாஅன் என அளபெடுத்து விளியாயிற்று.
படர்க்கைப்பெயர்களே விளியுருவேற்கத் தகுதியுடையனவாயி னும் அவற்றுள்ளும் சில விளியுரு பேற்பதில்லை. விளியுருபோலப் படரிக்கைப் பெயர்களையும் தொல்காப்பியரும் நன்னூலாகும் எடுத்துக்காட்டியுள்ளனர். வினாப் பெயர்கள், சுட்டுப்பெயர்கள், தூ, வை என்பவற்றை யீறாகக் கொண்ட அஃறிணை யிருபாற் பெயர்கள் தாம், தான் என்பனவும் இவை போல்வன பிறவும் so6ffléé647 eu Lfr 676öTurf.
எவன், யாவன், அவன், இவன், உவன், அது, அவை என்பன விளிக்கப்படாத பெயர்கள். இன்னும் யான், யாம் முதலிய தன் மைப் பெயர்களும் நீர் முதலிய முன்னிலைப் பெயர்களும் விளிக்கப் படாதவையாம், படர்க்கையோரை முன்னிலைப் படுத்துவதே விளிவேற்றுமையின் இயல்பாகும்
藻 186

உருபு மயக்கம்
உருபு மயக்கமாவது ஒரு வேற்றுமையின் உருபு நிற்க வேண்டிய விடத்து இன்னொரு வேற்றுமையுருபு வந்து நின்றும் பொருள் ஒத்து நடப்பதாகும். உருபு மாறிநிற்பினும் அவ்விடத்து நிற்க வேண்டிய னேற்றுமையுருபின் பொருளே கொள்ளப்படும். உருவு எவ்வாறு நிற்பினும் பொருள் எவ் வேற்றுமைக்குரியதோ அவ் வேற்றுமையாகவே கொள்ளப்படும். உருபு வழியதல்ல பொருள் பொருள்வழியதே உருபு எனல் இதனால் விளங்கும். இங்ஙன மாத வின் உருபு பெயர்ப்பொருளை வேறுபடுத்தலால் வேற்றுமை என்ற முடிபு சரியோ எனல் ஆராய்தற் பாலதாகும். தொல்காப்பியரி,
*யாதனுகுபிற் கூரிற்றாயினும்
பொருள்சென் மருங்கின் வேற்றுமைசாரும்" ( தொல், வேற். மய, 24 ) என்பதன் மூலம் உருபின் வலுவற்ற தன்மையை வெளிப்படுத்துவர் நன்னூலாருந் தமது நூலில் இச்சூத்திரத்தை அனுமதித்துள்ளார். வேற்றுமைக்கு உருபினும் பார்க்கப் பொருனே முக்கியமானதாதலால் உருபைக் கருதாது பொருளைக் கருதியே எந்த வேற்றுமையென்பதைத் தீர்மானிக்க வேண்டுமென இரு பெரும் இலக்கண ஆசிரியர்களும் வலியுறுத்துவர். இந்நகரிக்கே வாழ்கின்றோம் என்பதில் 'கு' உருபு நின்றாலும் அது இந் நகரில் வாழ்கின்றோம் எனப்பொருள்படுவதால் ஏழாம் வேற்றுமை யென்றும் இடப் பொருளென்றுந் துணியப்படும். காலத்தினாற் செய்த நன்றியென்பது மூன்றாம் வேற்றுமை ஆல் உருபு பெற்று வந்ததேனும் அவ்வுருபுக்குரிய பொருளைத் தராமல் காலத்திரி செய்த நன்றியென இடப்பொருளே பெறப்படுவதால் அது மூன் நாம் வேற்றுமை உருபு மயக்கமெனக் கொண்டு ஏழாம் வேற்றுமை இடப் பொருள் எனத் துணிதல் வேண்டும். நாகுவேயொடு நக்கு வீங்குதோள் என்பது நாகுவேயை நகைத்து வீங்கிய தோள் எனப்பொருள் தகுதலால் இது உருபு மயக்கம் எனக்கொண்டு இரண்டாம் வேற்றுமையாகத் துணிதல் வேண்டும். வேய் = மூங்கில்
பொருள் மயக்கம்
வேற்றுமையில் உருபு மயங்குவதுபோலப் பொருள் மயங்கு
வதுமுண்டு. உருபு மயங்கி வரும்போது உருபு மயக்கம் எனப் படுவது போலப் பொருள் மயங்கி வரும்போது பொருள் மயகிகம்
187靈

Page 103
எனப்படும். நன்னூலார் பொருள் மயக்கம் இரண்டு பொருள் முதலாக ஏழுவொருள் ஈறாமையங்கி வருமென்பர். தெய்வத்தை வணங்கினான் எண்ணது இரண்டாம் வேற்றுமைப் லொருள்படும். அது தெய்வத்துக்கு வணக்கம் என வரும்போது நான்காம் வேற்றுமையாகும்.
தற்சேர்ந்தார் என்பது தன்னைச் சேர்ந்தார் எனவும், தன் னொடு சேர்ந்தார் எனவும், தன்கட் சேர்ந்தார் எனவும் மூன்று வேற்றுமைப் பொருள்களால் மயங்கிற்று. இவ்வாறே இரண்டு முதலாக ஏழு பொருள் வரையும் மயகீகுவதற்கு நன்னூல் உரை காரர் உதாரணங் காட்டுவர். தூணைச் சார்ந்தான் என்பது தூணின் கட்சார்ந்தான் என வருவதும் பொருள் மயக்கமேயாகும். இரண்டாம் வேற்றுமைப் பொருளையும் ஏழாம் வேற்றுமைப் பொருளையுந் தருதலால் இது பொருள் மயக்கமென்பது தெளி வாகப் புலப்படுகிறது. இதனைத் தொல்காப்பிய உரையாசிரி பர்கள் உருபு மயக்கம் எனக்கூறியது தவறாகும். சேனாவரையர் அரசர்கட்சார்ந்தான். அரசரைச் சார்ந்தான் என வருமேய்ன்றி தூணின் கட்சார்தான் என வருவது வழுவென்று கூறினார். அவர் கூற்றும் இக்கால வழக்கிற்குப் வொருத்தமற்றதென வேணடும். உறுப் பைச் சார்ந்துவரும் வினைச் சொற்கு இரண்டாம் வேற்றுமையும் ஏழாம் வேற்றுமையும் ஒத்த தன்மையாய் வருமென்பர் தொல் காப்பியர். கோட்டைக் குறைத்தான் கோட்டின் கட் குறைத்தான் என உதாரணங் காட்டுவர் உரையாசிரியரி,
அச்சப் பொருளுக்கு இரண்டாம் வேற்றுமையும் ஐ ந் தி 7 ம் வேற்றுமையும் ஒத்தவியல்புடையவென்சர் தொல்காப்பியர். பழியையஞ்சும் எனவும், பழியினஞ்சும் எனவும் வரும்.
வாழ்தற் பொருளில் ஆறாம் வேற்றுமையும் ஏழாம் வேற் றுமையும் மயங்கு மென்பர். காட்டது வானை என வருதலே பன்றிக் காட்டின் கண் இாணை எனவும் வரும் நாக்ரி பலி என்பது தாகரிக்குப் பலியெனவும் நாகரது பலியெனவும் நான்காம் ஆறாம் வேற்றுமைப் பொருள்கள் மயங்கு மெனவுந் தொல்காப்பிய கூறுவர்.
வேற்றுமைப் பொருள் கல ள முடிக்குஞ் சொல்
ஐந்தாம் வேற்றுமை எல்லைப் பொருளில் வரும் இன் உருபும் ஆறாம் வேற்றுமை அது வுருவும் பெயரைக் கொண்டு முடியும்,
囊 188

அவையல்லாத வேற்றுமைகளெல்லாம் வினையைக் கொண்டு முடியும். நான்காம் வேற்றுமையும் ஏ ழ 7 ம் வேற்றுமையும் வினையைமட்டுமல்லாமல் பெயரையுங் கொண்டு மு டி யும். எழுவாய் வேற்றுமை பெயரையும் வினையையும் வினாவையுங் கொண்டு முடிதல் ஆங்குக் கூறப்பட்டது.
மதுரையின் வடக்குச் சிதம்பரம் என்பதில் எல்லைஇன் பெயர் கொண்டது. சாத்தனது கை என்பதில் அது என்னும் ஆறாம் வேற்றுமை பெயரீ கொண்டது. சாத்தன் வந்தான், குடத்தை வணைந்தான், வாளால் வெட்டினான். சாத்தனுக்குக் கொடுத் தான், நோயினிங்கினான், அவையின் கண் இருந்தான் இவற்றில் எல்லையின்னும் அதுவுந் தவிர்ந்த மற்றைய வேற்றுமைகள் வினை கொண்டன.
* எல்லை யின்னும் அதுவும் பெயர்கொளும்
அல்ல வினைகொளும் நான்கே Nருமையும் புல்லும் பெரும்பாலு மென்மனார் புலவர் "
( நன். பெய. 62 )
என்ற குத்திர விதியைத் தழுவிய உதாரணங்களே மேலே காட்டப்பட்டன. முதலாம் வேற்றுமை பெயரைத் தழுவி நிற்பதும் உண்டு. ஆ பல என்பது அதற்குதாரணம்.
உருமேற்கும் பெயர்கள் சாரியை வெறுதல்
பெயர்கள் உருபேற்கும் போது சொல்லுவதற்கு இலகுவாக
இருத்தற் பொருட்டும் ஒசை நயம் வேண்டியும் சாரியை கொடுத்
துச் சொல்வது மரபு. தான் + கு என வரும்போது தான் என்பது
முதல் குறுகி தன் என நின்று அகரச் சாரியை பெற்றுத் தனக்கு இான வரக்காணலாம்.
பறவை + ஐ இது பறவையை எனவும் பறவையினை எனவும் வரும், பறவையினை என வரும்போது இன் சாரியை பெற்று வந்தது.
கல்+கு என்பது கல்லுக்கு gY Gambif" உ ரு புக் கு மு ன் உகரச் சாரியைபெற்றது. கல்லினுக்கு என வரும்போது உகரசி சாரிவைக்கு முன் இன் சாரியையும் பெற்று வந்தது.
189鬣*

Page 104
சுட்டுப் பெயர்களும் வினாப் பெயர்களும் அன்சாரியை பெற்று வரும்.
அது + ஐ = அதனை, இது + ஐ = இதனை, உது + ஐ = உதனை எனவும், எது + ஐ = எதனை எனவும் கட்டுப் பெயர்களும், வினாப் பெயர்களும் அன் சாரியை பெற்று வந்தன. அவை சாரியை பெறாமல் அதை, இதை, உதை, எதை எனவும் வரும் .
மூன்றாம் வேற்றும்ை ஒடுவுருபு ஏற்குமிடத்துப் பகுதி பிரட்டித்து வருதலுமுண்டு. அது + ஓடு = { அத்து எனப் பகுதி பிரட்டித்து) அத்தோடு என வரும் அன் சாரியை பெற்று அதனோடு எனவும் வரும்.
அவை + ஐ  ைஅவற்றை, அவற்றினை என அற்றுச் சரியை பெறுதலும் அற்றுச் சாரியையோடு இன் சாரியை பெறுதலுமுண்டு.
பண்படியாகப் பிறந்த கரிய, பெரிய முதலிய எச்சங்களும் ஆற்றுச் சாரியை பெறுதலும் அற்றுச் சாரியையோடு இன் சாரியை பெறுதலுமுண்டு. கரியவற்றை, பெரியவற்றை எனவும், கரியவற்றினை, பெரியவற்றினை எனவும் வரும்,
பல, சிலவென்பன அற்றுச் சாரியை பெற்றுப் பலவற்றை, சிலவற்றை எனவரும். மேலும் இன் சாரியை பெற்றுப் பலவற்றிணை, சிலவற்றினை எனவும் வருவதுண்டு.
யா என்னும் வினாப்பெயரும் யாவற்றை என அற்றுச் சாரியை பெற்று வரும். மரம் என்பது அத்துச் சாரியை பெற்று மரத்தை, மரத்தால், மரத்துக்கு என்பன முதலாக வரும்.
எல்லாம் + ஐ = எல்லாவற்றையும் என மகர வீறுகெட்டு அற்றுச் சாரியை பெற்று இறுதியில் உம் சேர்ந்து வரும்.
வேற்றுமையுருபேற்குங்கால் பெயர்கள் இன் சாரியை பெறுவது பெருவழக்காதலால் இ ன் னெ ன் னு ம், ஐந்தாம் வேற்றுமையுருபு ஏற்கும் போது அது இன் சாரியை பெறாதெனத் தொல்காப்பியர் கூறியதுங் காண்க,
疆190

2. வினைச்
வினைச் சொல் எவையெனல்
விேனையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது
நினையுங் காலைக் காலமொடு தோன்றும்"
(தொல். வினை. 1 ) என்பது தொல்காப்பியம். இந்நூற்பாவின் மூலம் வினையின் பொதுவிலக்கணத்தை ஆசிரியர் தொல்காப்பியர் சுருக்கமாகவும் அதே வேளை மிகமிகத் தெளிவாகவுங் கூறி யு ள் ளா ரி. வினையெனப் பெயரிட்டு வழங்குஞ் வேற்றுமை புருபுகளை ஏற்றலின்றிக் கிாலந்தோன்ற நிற்பதென்பது அவர் கருத்து. இக்கருத்து இலக்கண ஆசிரியர்கள் அனைவருக்கும் உடன்பாடானதே. காலம் என்பதைக் கூடத் தொல்காப்பியர், காலந் தாமே மூன்றென மொழிய" ( தொல், வினை. 2 ) என்றொரு சூத்திரத்தாற் கூறி அதற்கு விளக்கமாக இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றா அம்முக்காலமும்" (தொல், வினை, 3) என்பர். வினைகளிற் காலத்தை வெளிப்படையாகக் காட்டு வனவும் குறிப்பாற் காட்டுவனவும் என இருவகை கூறுவர். காலத்தை வெளிப்படையாகக் காட்டுவன தெரிநிலை வினை யெனவுங் குறிப்பாற் காட்டுவன குறிப்பு வினையெனவும் அறிதற்பாற்று. இவ்வினைச் சொற்களில் ஒரு சாரன உயர் திணைக்குரியன. மற்றொரு சாரண அஃறிணைக்குரியன. பிறிதோர் சாரண இரு திணைக்கும் உரியன. எனவே திணை பற்றி வினைச் சொற்கள் மூன்று வகைப்படும்.
நன்னூல் சுருக்க நூலாதலின் பதவியல் பெயரியல் களிற் புலப்பட வைக்கப்பட்ட வினையிலக்கணங்களை மீண்டுங் கூறாது வினைச்சொல் மூலம் அறியற்பாலனவற்றில் முக்கியமான வற்றையே முதலில் எடுத்துக் கூறப்புகுந்துள்ளது, வினைச் சொல்லால் அறியற்பாலனவாகிய செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறுந்தருவது வினையென வினையியலின் தொடக்கத்தில் நன்னூல் எடுத்துக் கூறுகிறது. *செய்" என்பது தனித்து அதனையே குறிப்பதன்று. அது ஒரு வாய்பாட்டுச்சொல், நட, உண், படு, பாடு முதலிய பல
蠶191

Page 105
முதனிலைகளையுங் குறிக்கும் ஒரு பொதுச்சொல், செய்பவன்? என ஆண்பால் மேல் வைத்துக் கூறினாரேனும் ஒரு மொழி யொழிந்த தன்னினமனைத்தையுஞ் சுட்டுமென்பது இலக்கண மாதலால் செய்பவள், செய்பவர், செய்வது, செய்வன என்னும் ஐந்து பாலுக்கும் உரிய் வி ைன க ளு ங் கொள்ளப்படும். வணைந்தான் என்பது ஒரு தெரிநிலை வினைமுற்றுச் சொல் அச்சொல் வனைபவனாகிய குயவன் என்னுஞ் செய்பவனையும் வனைதலுக்கு முதற் கருவியாகிய மண்ணையும், துணைக் கருவி யாகிய தண்ட சக்கரம் முதலியவற்றையும் வனைதற்கு உரித் தாகிய இடம் என்னும் நிலத்தையும் வனைதலாகிய செயலையும் இறந்த காலத்தையும் குடம் முதலிய செயப்படுபொருளையும் உணர்த்துவது கவனிக்கத்தக்கது. ஆறுந்தருவது வினைவென்பதில் ஆறும் என்பதை எச்சவும்மையாக்கி ஆறிற் குறைந்த தொகை யினைத் தருவதும் வினையென்பதையும் உளங்கொள்ளல் வேண்டும். செயப்படுபொருள் குன்றாத வினைமட்டுமே ஆறுந் தருவதாகும்.
வினைமுற்றுக்க்ளிற் பகுதியாற் செயலும் விகுதியாற் செய்பவனும் இடைநிலையாற் காலமும் வெளிப்படையாகத் தோன்றும், மற்றையவை குறிப்பாற் தோன்றும். குறிப்பு வினையானது பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்பவற்றில் ஏதாவதொன்றின் இடமாகத் தோன்றிச் செய்பவனை மட்டும் அறிவிப்பதாகும்.
வினைச் சொற்களின் பாகுபாடு
வினைச் சொல்லானது வினையெச்சம், பெயரெச்சம், வினைமுற்று என மூன்று வகைப்படும். வினையெச்சம் என்பது வினையை எஞ்சி நிற்பது எனவும், பெயரெச்சம் என்பது பெயரையெஞ்சி நிற்பது எனவும் பொருள்படும். அதாவது வினை யெச்சம் வினையைக் கொண்டு முடிவது எனவும், பெயரெச்சம் பெயரைக் கொண்டு முடிவதெனவும்படும். முற்றுவினை அல்லது வினைமுற்று தானாகவே முடிவுற்று நிற்கும். நடந்து வந்தான் என்பதில் நடந்து என்பது வினையெச்சம். அது வந்தான் என்ற வினையைக் கொண்டே முடிவுபெறுகிறது. நடந்த மனிதன் என்பதில் நடந்த என்பது பெயரெச்சம். அது மனிதன் என்ற பெயரைக் கொண்டே முடிவுபெறுகிறது. நடந்தான் என்பது
鐵 192

வினைமுற்று. அது தானாகவே முடிந்து நிற்கிறது. சிலவேளை களில் நடந்தான் அவன் என்று பெயரைத் தழுவி நிற்பது முண்டு, வினையெச்சமும், பெயரெச்சமுந் திணை, பால், இடங்களுக்குப் பொதுவாய் நிற்கும். வந்து போனான் என்பதில் வினையெச்சம் உயர்திணை ஆண்பாற் படர்க்கையையும் வந்து போனாய் என்பதில் வினையெச்சம் விரவுத்திணையில் முன்னிலை யொருமையையும் உணர்த்தியதைக் காணலாம். இவ்வாறே பெய்ரெச்சத்துக்கும் எச்சத்தைப் பெயருடன் இணைத்துக் காண்க. சில வினைகள் உடன்பாட்டுக்கும் எதிர்மறைக்கும் பொதுவாயும் நிற்கும். சாவான் என்பது சாகமாட்டான் எனவுஞ் செத்தே போவான் எனவும் எதிர்மறைக்கும் உடன்பாட்டுக்கும் பொதுவாய் வந்தது. செய்யாய் என்பதும் அத்தகையதே.
உடன்பாட்டுக்கும் எதிர்மறைக்கும் பொதுவாய் வருவது போல தன்வினைக்கும், பிறவினைக்கும் பொதுவாய் வருவதும் செய்வினைக்குஞ் செயப்பாட்டுவினைக்கும் பொதுவாய் வருவது முண்டு. வெளுத்தான் என்பது தான் வெளுத்தான் எனப் பொருள்படும் போது தன்வினை, துணியை வெளுத்தான் எனப் பொருள்படும் போது பிறவினை, கொன்றயானையென்பது கொலைத் தொழிலைச் செய்த யானையெனப் பொருள்படும் போது செய்வினை கொல்லப்பட்ட யானையெனப் பொருள்
படும்போது செயப்பாட்டுவினை.
வினைமுற்றுக்களின் பாகுபாடு
ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின் பால் என்ற ஐம்பால்களையும் மூன்று காலத்திலும் வைத்துறழ வரும் படர்க்கை வினைமுற்றுக்கள் பதினைந்தாகும். ஒருமை பன்மை என்பவற்றால் வேறுபடுந் தன்மை வினைமுற்றுக்களை மூன்று காலத்தாலும் உறழத் தன்மை வினைமுற்றுக்கள் ஆறாம் 6 முன்னிலை வினைமுற்றுக்களும் ஒருமை பன்மை என்ற வேறு பாடுபற்றி முக்காலத்தாலும் உறழ ஆறாம். ஆதலால் தெரிநிலை வினைமுற்றுப் படர்க்கையில் பதினைந்தும் தன்மை முன்னிலை களில் பன்னிரண்டுமாக இருபத்தேழாகும்:
ஆண்பாலில் நடந்தான், நடக்கிறான், நடப்பான் என வருவனவற்றை பெண்பால், பலர்பால், ஒன்றன்பால் பலவின் வால் என்பவற்றோடுங் கூட்டி ஐந்துபாலுக்கும் பதினைந்தாதல்
፴፮ff 6õõÍፊ፰ • -
GB 193鬣

Page 106
  

Page 107
யெச்சம் என்பனவும் இருதிணைக்கும் பொதுவாக வரும் வினைகளெனக் கொள்வர். தொல்காப்பியர் தன்மையை திணையில் வைத்துக் கூறியமையால் தன்மைப் பெயர்களையோ தன்மை வினை முற் று க் க  ைள லோ விரவுத்திணையென்பது அவர்க்கு உடன்பாடன்று. தொல்காப்பியருடைய பகுப்பே ஏற்றுக்கொள்ளத்தக்கதெனினும் தன்னுரலே இக் க ர ல த் ஒரு பெரிதும் பயிலப்பட்டு வருவதால் நன்னூலாருடைய பாகு பாட்டையும் இங்குக் காட்டவேண்டியது அவசியமாயிற்று.
தன்மையொருமை வினைமுற்றுக்கள்
தன்மையொருமை வினைமுற்றுக்கள் கு, டு, து, Ա}} என்பவற்றோடு அல், அன், என். ஏன் என்னும் ஈறுகளை யுடையவாய் உயர்திணை, அஃறிணை என்னும் இருதிணைக்கும் உரியவாய் ஆண், பெண் ஒன்று என்னும் முப்பாற்கும் உT வையாய் வருமென்பது நன்னூலார் கருத்து,
"குடுதுறு வென்னுங் குன்றிய லுகரமோ
டல்அன் என் ஏன் ஆகு மீற்ற இருதிணை முக்கூற் றொருமைதி தன்மை (நன்.வினை.12) முக்கூறு என்பது ஆண், பெண்பால்களோடு ஒன்றன் பாலையுங் குறிப்பதாகும்.
தன்மையொருமை வினைமுற்றுப் பற்றித் தொல்காப்பியர் கூறுவதையும் நோக்குவது நல்லது. கு, டு, து, று என்னும் நான் கீற்றோடு என், ஏன், அல் என்னும் மூன்றையுஞ் சேர்த்து இவ்வேழும் ஒருமையுணர்த்துந் தன்மைச் சொற்களின் ஈறாக வருமென்பர் தொல்காப்பியர். அவர் அன் என்னும் ஈறு தன்மையொருமைக்குரியதாகக் குறிப்பிடவில்லை. அன் ஈறு உயர்தினை ஆண்பாலுக்கேயுரியதென்பது தொல்காப்பியர் கருத்து. பிற்காலத்தில் அன் ஈறு தன்மையொருமைக்கும் உரியதாக இலக்கியங்கள் ஏற்றுக்கொண்டமையால் நன்னூலார் அன் ஈறுந் தன்மையொருமைக்குரியதாகக் கூறினாரி, யான் உண்டனன், உண்கின்றனன், உண்பன் என்னும் வழக்குத் தொல்காப்பியர் காலத்தில் இல்லை. அன் ஈறு தன்மை யொருமையில் வருவதை வழுவமைதியாகக் கொள்ளலாமே யன்றி வழா நிலையாகக் கொள்ளமுடியாது.
靈 196

யான் உண்கு என்பதில் உண்கு என்பது உண்பேன் எனப் பொருள் தந்து எதிர்காலங் காட்டிற்று.
யான் வந்து என்பது யான் வந்தேன் எனப் பொருள்தரு மேல் தன்மையொருமை. வருது என்பது வருவேன் எனப் பொருள் தருமேல் தன்மையொருமை. சென்று சேறு என்பனவும் சென்றேன், செல்வேன் எனப் பொருள் தருதலால் இறந்த காலமும் எதிர்காலமுங் காட்டுந் தன்மையொருமை வினை
முற்றுக்களாயின.
அல் - செய்வல் - எதிர்கால வினைமுற்று. என் - உண்டனென், உண்கின்றனென், உண்பென் என மூன்று
காலத்திலும் வந்தது. ஏன் - உண்டேன், உண்கின்றேன், உண்பேன் என வரும் அன் - உண்டனன், உண்கின்றனன், உண்பன் என வரும் குறிப்பு வினைமுற்றுக்கள் - அன் - குழைமன், என் - குழையென், ஏன் - குழையேன் என வரும்.
செய்கு என்னும் வினைமுற்று வினையொடு முடியு மென்பதும் அவ்வாறு முடியினும் அது முற்றுச் சொல்லில் திரியாது என்பதும் இலக்கண ஆசிரியர் கருத்து செய்கும் என்னும் பன்மையும் வினைமுற்றோடு முடியும் என்பர். செய்கு வந்தேன், செய்கும் சென்றேம் என வரும்.
உளப்பாட்டுத் தன்மைப் பன்மை வினைமுற்றுக்கள்
தன்மைப் பன்பை வினை முற்றுக்கிள் வேறு இடங்களைச் சேராத தனித் தன்மைப் பன்மை வினை முற்றுக்களாயும் தன்மையோடு முன்னிலையுஞ் சேர்ந்தனவாயும் தன்மையோடு படரிக்கையையுஞ் சேர்ந்தனவாயும் மற்றுந் தன்மையோடு முன்னிலை படர்க்கை என்பவற்றைச் சேர்ந்தனவாயும் வரும். தனித் தன்மைப் பன்மையாக வன்றி முன்னிலை படர்க்கை என்பவற்றையுஞ் சேர்த்து வரும்போது அது உளப்பாட்டுத் தன்மைப் பன்மை வினைமுற்று எனப்படும். மற்றைய இடத் தாரையும் உளப்படுத்திவருதலால் அது அப்பெயர் பெற்றது. தன்மைப் பன்மை வினை முற்றுக்கள் அம், ஆம், எம். ஏம், ஓம், கும், டும், தும், றும் என்பனவாம்.
197懿

Page 108
யாம் வந்தனம், யாம் வந்தாம், வாம் வந்தனெம், வந்தேம், வந்தோம் இவ்வாறே யாம் உண்கும், யாம் உண்டும், வருதும் சேறும் எனத் தனித் தன்மையில் வந்தன.
ஆம், ஆம் என்னுந் தன்மைப் பன்மையிறுகள் முன்னிலை யாரையும் உளப்படுத்தி வரும். தன்மை யொருமை முன்னிலை ஒருமை பன்மைகளையும் தன்மைப் ப ன் மை மு ன் னி  ைல ஒருமை பன்மைகளையும் உளப்படுத்தி வரும்.
யானும் நீயும் வந்தனம், யானும் நீயும் வந்தாம் யானும் நீவிரும் வந்தனம், யாமும் நீயும் வந்தனம் யாமும் நீவிரும் வந்தனம் என அம், ஆம் என்பன முன்னிலையாரை உளப் படுத்தி வந்தன.
எம், ஏம். ஓம் என்பன த ன்  ைம யொருமையோடு படர்க்கை ஒருமை பன்மைகளையும் தன்மைப் பன்மையோடு படர்க்கை யொருமை பன்மைகளையும் உளப்படுத்தி வரும். யானும் அவனும் வந்தனெம், வந்தேம், வந்தோம் எனவரும். யாமும் அவனும் வந்தணெம், வந்தேம், வந்தோம் எனவரும். கானும் அவர்களும் வத்தனெம், வந்தேம், வந்தோம் எனவரும் யாமும் அவர்களும் வந்தனெம், வந்தேம், வந்தோம் ଶTଜଙ୍ଘ ଭାr@l}} இவ்விதிக்குமாறாக் தன்மை, முன்னிலையை உளப்படுத்தி எம், ஏம், ஒம் ஈறுகள் வருவதும் படர்க்கைய்ை உளப்படுத்தி அம், ஆம் என்னும் ஈறுகள் வருவதும் சகிசமாகிவிட்டது. இவையும் புதியன புகுதலாக ஏற்றுக் கொள்ளத்தக்கனவே யென்ன.
யானும் நீயும் அவனும் உண்கும், உண்டும், வருதும், சேறும் என தன்மையானது முன்னிலை படர்க்கீையாகிய ஈரிடத்தாரையும் உளப்படுத்தி வருவதும் அவ்வாறே தன்மைப் பன்மை யாமும் நீயும் அவனும் உண்கும் என யாமும் என்பதோடு முன்னிலை படரிக்கைப் பன்மைகள் வருவதுங் கொள்க.
முன்னிலை யொருமை வினைமுற்று
முன்னிலை வினை முற்றுக்கள் வீரவுத்திணையைச் சேர்ந் தவை என்பதில் தொல்காப்பியரி, நன்னூலாரி, வீரசோழிய
காரர், நேமிநாதமுடையார் எனப்பிலரிக்கும் கருத்து வேறு பாடில்லை. ஐ. ஆய், இ. என்னும் மூன்றிற்று வினை முற்றுக்
鯊198

இளும். ஏவற் பொருளில் வரும் எல்லாவினை முற்றுக்களும் ஆண்பால் பெண்பால் ஒன்றன்பால் ஆகிய முப்பாலுக்கும் பொது வாகிய ஒருமை வினைமுற்றுக்களாம். š
ஏவலின் வருவன, "நட, வா, மடி, சீ, விடு, கூ" என்னும் முதலையுடைய வாய் நன்னூல் வினையியலுட் கூறப்பட்ட இருபத்து மூன்றிற்று மொழிகளுமாம். அவை ஆண் பெண், ஒன்று என்னும் முப்பாற்குமுரிய முன்னிலை யொருமை வினை முற்றுக் களாம், நட, வா முதலியன முன்னிலைக்குரிய ஆய்" முதலியப் விகுதிகள் புணர்ந்து கெட்டு வந்தன வென்பது மரபு.
ஐ - உண்டனை, உ ண் கி ன் ற  ைன, உண்பை எனவும்
குழையை எனவும் வரும்.
ஆய்-உண்டாய் உண்கிறாய், உண்பாய் எனவும் குழையாய் எனவும் வரும்.
இ = உண்டி, உண்ணா நின்றி, சேறி எனவும் வில்லி எனவும் வரும்.
முன்னிலைப் பன்மை வினைமுற்று
இர், ஈர், என்னும் இரண்டீற்றவாய் வரும் வினைமுற்றுக்கள் உயர்திணை அஃறிணை என்னும் இருதிணைகளுக்கும் பொது வாகிய முன்னிலைப் பன்மை வினை முற்றுக்களாம்.
இர் - உண்டனிர் உண்கின்றனிர், உண்பீர், குழையிர் எனவரும்,
ஈரீ - உண்டீர், உண்கின்றீர், உண்பீர். குழையீர் எனவரும், மின் என்பது முன்னிலை ஏவற் பன்மை வினைமுற்றாக வரும்: உண்மின் என்பது உதாரணமாகும். உண் ணி ர், உண்ணும் என்பனவும் ஏவற் பன்மை வினைமுற்றாக வரும். உளப்பாட்டு முன்னிலைப் பன்மை வினைமுற்று
முன்னிலை படரிக்கை யென்பன தன்மையோடு சேரும் போது தன்மைப் பன்மை வினைமுற்றைக் கொண்டு Glyp E, GRAJ GUMP5 உளப்பாட்டுத் தன்மைப் பன்மை வினைமுற்று என்னும் பகுதியிற் கண்டோம்; அதுபோல முன்னிலையோடு கூடிய படர்க்கையும்
199鬣

Page 109
முன்னிலைப் பன்மை வினைமுற்றைக் கொண்டு முடியும். தன்மை யோடு முன்னிலை படர்க்கைகளைச் சேர்ப்பதும் முன்னிலை யோடு படர்க்கையைச் சேர்ப்பது மன்றிப் படர்க்கையோடு முன்னிலை தன்மைகளைச் சேர்ப்பதும் முன்னிலையோடு தன்மை
 ைய்ச் சேர்ப்பதும் மரபன்று.
நீயும் அவனும் உண்டனிர். எனத் தெரிநிலை வினையிலும் நீயும் அவனும் குழையீர் எனக் குறிப்பு வினையிலும் வரும். அவனும் நீயும் எணவரினும் முன்னிலை முடிவு பெற்றே வரும். அவனும் என்னும் படரிக்கை முன்வந்து நீயும் என்பது சேரினும் அது முன்னிலை யோடுகூடிய படர்க்கையே யாகும். படர்க்கை முடிபு கொடுக்கப்படா தென்பது முக்கியம். முன்னிலை ஒரு மையோடு மட்டுமன்றி முன்னிலைப் பன்மையோடும் படர்க்கை யொருமையேனும் படர்க்கைப் பன்மையேனுஞ் சேர்க்கப்பட் டாலும் முன்னிலைப் பன்மை ஈறு கொண்டே முடியும்.
நீங்களும் அவனும் வந்தீர்கள். நீங்களும் அவர் களும் வந்தீர்கள் என உதாரணங் காட்டலாம்.
வியங்கோள் வினை முற்று
நன்னூலார் வியங்கோள் வினைமுற்று விகுதிக்ளாக க, ய, ர் என்பவற்றைக் கூறுகிறார். வினைமுற்று ஐம்பால் மூவிடங்களுக்கும் பொதுவான தென்பது நன்னூலார் கூற்று. வியங்கோள் என்பது ஏவலைக் கொள்வது என்னும் பொருள்படு மென்பரி சில உரையாசிரியர்கள், வியவர் என்ற சொல் ஏவலர் எனப்பொருள் படுவதைச் சீவக சிந்தாமணிச் செய்யுள் ஒன்றின் மூலம் எடுத்துக்காட்டுவர். ஏ. வ  ைல க் கொள்வது என்னும் பொருள்படுமேனும் ஏவல் வினைக்கும் வியங்கோள் வினைக்கும் வேறுபாடுண்டென்பதை அறிவது அவசியம். ஏவல் வினை கட்டளையிடுங் கருத்தில் மட்டுமேவரும் வியம் - ஏவல் கோள் - வேண்டிக் கொள்ளுதல். ஏவலை ஏற்கு மாறு வேண்டுதல். இவ்விளக்கத்தால் ஏவுமளவிலல்லாது ஏைேல ஏற்க வேண்டிக் கொள்ளுதலான ஒரு கெளரவத் தன்மையும் வியங்கோளுக் குரியதாகும். வியங்கோள்வினை கட்டளையிடுதலில் மாத்திரமல்லாமல் வாழ்த்துதல் வைதல் முதலாக - 62} பொருள்களில் வரும். ஏவல் வினை முன்னிலையிடம் ஒன்றிற்கே யுரியதாகும். வியங்கோள் வினை தன்மை, மு ன் னி  ைல
靈200

படர்க்கை ஆகிய மூன்றிடங்களிலும் வரும். ஏவல் வினைக்கு ஒருமை பன்மை என்ற வேறுபாடுண்டு. வியங்கோள் வினைக்கு அப்பாகுபாடில்லை. அது ஒருமைக்கும் பன்மைக்கும் வருவது: நன்னூலார் வியங்கோள் வினைமுற்று விகுதிகளாக க, ய, ரி என்னும் மூன்றை மட்டுங் கூறினாரேனும் அவற்றோடு வேறு பல விகுதிகளைப் பெற்றும் வியங்கோள் வினை முற்றுவருவதை இலக்கியங்கள் எடுத்துக் காட்டுகின்றன. 43, ILI Greiru Joo தனித்து நிற்றல்போல ரகர வொற்றுத் தனித்து நில்லாது யகரத்தோடு கூடி 'யர்" என நிற்கும்.
வாழ்க, வாழிய, வாழியர் என்பவற்றை யான், யாம், நீ, நீர், அவன், அவள், அவர், அது, அவை என்பனவாகிய மூவிட ஐம்பாற் பெயர்களோடுங் கூட்டி அவ்வினை முற்று ஐம்பால் மூவிடங்களிலும் வருமாறு காணலாம். "நான் மறை யறங்கள் ஓங்க" என்பதில் ஓங்க என்பது ஒரு வியங்கோள் வினைமுற்று. அது ஒங்கு என்னும் பகுதியும் 'அ' என்னும் விகுதியும் உடையது. ஆதலால் அகர வீற்று வியங்கோளும் உண்டென்பது பெறப் படுகிறது. ஓங்குக என்பதே ஒங்கவெனக் 'கு' என்னும் எழுத்துத் தொக்குகின்றதெனச் சாதிப்பதும் ஒன்று.
மக்கட் பதடி யெனல்" என்பதில் எனல் என்பதற்கு என்க என்பதே பொருளாதலால் "அல்" மற்று வியங்கோளும் உண் டென்பது பெறப்படும்.
காட்டி என்னும் இகர வீற்று வினைமுற்றுங் காட்டுகவெனப் பொருள் தருதலால் இகர வீற்று வியங்கோள் வினையும் உண் டென்பது பெறப்படும்.
மாசிலனாதல் என்னுத் தல்லீற்று வினைமுற்றும் வியங்கோட் பொருளைத் தருதலால் தல்லீற்று வியங்கோள் வினைமுற்றும் உண்டென்பது பெறப்படும்.
எனவே இ, ய, பேர், அ. அல், இ, தல் என்னும் ஈறுகளை வியங்கோள் வினைமுற்றானது பெற்றுவருமென்க. இவற்றோடு உண்ணவேண்டும் என்பதில் வேண்டும் என்னது ஏவற்வொருள் தருவதாயினும் ஐம்பால் மூவிடங்களுக்குஞ் செல்வதால் அதனை உம் ஈற்று வியங்கோள் வினைமுற்று என்பதும் பொருத்தமானதே.
201藥

Page 110
வெல்க, சிறக்க, ஒங்குக என்பன வாழ்த்துதற் பொருளில் வந்த வியங்கோள் வினைமுற்றுக்கள்.
வருக, உண்க என்பன வேண்டிக் கோடற் பொருளில் வந்தன. கெடுக, அழிக என்பன வைதற் பொருளில் வந்தன
செய்க, செல்க என்பன ஏவுதற் பொருள் அல்லது பணித்தற் பொருளில் வந்தன.
வியங்கோன் வினைமுற்றுப் பற்றிய தொல்காப்பியர் கருத் தையும் அறிவது அவசியம். அவர் அதுபற்றிக் கூறிய நூற்பா 67(5LOst); அவற்றுள்,
முன்னிலை நன்மை யாயீ ரிடத்தும்
மன்னா தாகும் வியங்கோட் கிளவி" (தொல், வினை 29) என்பதாகும். தொல்காப்பியர் கருத்துப்படி வியங்கோள் வினை பெரும்பாலும் படர்க்கைக்கே உரியதென்பது பெறப்படுகிறது. சேனாவரையர் மன்னாதாகும் என்பதனால் தன்மை முன்னிலை களில் சிறு வரவிற்றாய் வருமெனக் கூறுவர். மன்னுதல் என்பதற்குப் பெரும் பான்மையும் நிகழ்தல் எனப் பொருள் கூறுவர் சேனாவரையர், தொல்காப்பியர் வியங்கோள் வினைக்கு ஈறு கூறிற்றிலர். உரையாசிரியர்கள் தொல்காப்பியத்திற் பல விடங்களிலும் பல்வேறு வகை ஈறுபட வியங்கோட் சொல் பயன் படுத்தப்பட்டிருத்தலின் அவை கொண்டு வியங்கோளிற் றினை உணர வைத்தார் தொல்காப்பியர் என்பர். மேலுஞ் சேனாவரையர் தன்மைக்கண் ஏவலில்லை முன்னிலைக் கண் ஏவல் வருவதுண்டேற் கொள்க வென்றுங் கூறினார், ஏவல் முன்னிலைக்கே உரிய்தாதலால் சேனாவரையருரை திரிவுபடுத்தப் பட்டுள்ளது போலும்.
பெயரெச்சம்
வினைச் சொல் பெயரெச்சம் வினையெச்சம் வினைமுற்று என் மூன்று வகைப்படுமென அறிவோம். இப்போது பெயரெச்சம் பற்றிச் சிந்திப்போம். பெயரெச்சம் என்பது பெயரை எஞ்சி நிற்பது அல்லது பெயரைக் கொண்டு முடிவதென முன்னர்க் கண்டோம். பெயரெச்சம் என்பது பெயரில் ஒரு வகையென இலக்கணங் கற்கப் புகும் மாணவர்க்கு மயக்கந் தரும் வகையில்
藥202

அப் பெயர் அமைந்துள்ளது. ஆனால் அது வினைச் சொல்லின் இலக்கணமாகிய காலந் தோன்ற நின்ற எச்சமாவதோடு பொருளின் புடை பெயர்ச்சியை அதாவது பொருளின் தொழிற் பாட்டை உணர்த்துவதால் அது வினைச் சொல்லின் ஒரு வகையே யென்பது தெளிவு படுத்தப்படுதல் அவசியம். பெப் ரெச்சங்களை வாய்பாடுகள் மூலம் இலக்கண ஆசிரியரிகள் எடுத்துக் காட்டுவர். செய்த, செய்கின்ற, செய்யும் என்னும் மூன்று வாய்பாடுகளின் வழியாகப் பெயரெச்சம் வருமென்பர் நன்னூலார். நட என்னும் வினையடியைக் கொண்டு நடந்த நடக்கின்ற நடக்கும் எனப் பெயரெச்சங்கள் தோன்றும், பெயரெச்சமுற் தெரிநிலை வினைப் பெயரெச்சம் குறிப்பு வினைப் பெயரெச்சம் ଶ ଶଙ୍ଖ இருவகைப்படும். காலமுஞ் செயலும் வெளிப்படையாக வருவது தெரிநிலை வினைப் பெயரெச்ச மென்பதும் காலங் குறிப்பால் உணர நிற்பது குறிப்பு வினைப் பெயரெச்சம் எனவும் உணரத்தகும். முடிக்குஞ் சொல்லால் பால் உணரப்படும் உண்ட மனிதன் என்று வரும் போது செய்பவன் ஆகிய ஆண்பால் புலப்படத் தோன்றும், வனைந்த குடம் எனவரும் போது செய்பொருள் வெளிப்படும். உண்டகலம் என்னும் போது கருவி புலப்படும். உண்ட வீடு என்னும் போது நிலம் தெரிய நிற்கும், உண்ட இரவு என்னும் போது காலமுந் தெரிய நிற்கும். உண்ட சோறு என்பதில் சோறு என்னுஞ் செய் பொருள் புலப் படும், உண்ட என்பதில் செயல் உண்ணுதல் என்பதும் காலம் இறந்த காலம் என்பதும் அவ்வெச்சத்தால் நேரே பெறப்படுவன வாம். செய்த செய்கின்ற செய்யும் என்னும் உடன்பாட்டு வாய்பாடுகளாற் கூறினாரேனும் செய்யாத முதலிய எதிரி மறை வாய்பாட்டெச்சங்களும் கொள்ளப்படும்.
பெயரெச்ச வாப்பாடுகளைக் கூறப்புகுந்த தொல்காப்பியர் செய்யும் செய்த வென்னும் இரு வாய்பாடுகளே கூறினார். எனினும் செய்யும் என்னும் வாய்பாட்டெச்சம் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் குறித்து வருவது தெளிவு செய்கின்ற என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சங்கள் தொல்காப்பியர் காலத்திற்குப் பின்னரே தமிழ் இலக்கிய வழக்கிலும் உலக வழக்கிலும் புகுந் திருத்தல் வேண்டும். செய்யும் என்னும் வாய்பாட்டு முற்றினையும் செய்யும் என்னும் வாய்பாட்டெச்சத்தையும் வெவ்வேறானவை
203醬

Page 111
என அறிதல் வேண்டும். செய்யும் என்னும் முற்று பலரீபாற் படர்க்கையிலும் முன்னிலை தன்மையிலும் வராதென விலக்கப் பட்டது. ஆனால் செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம் பலர்பாற் படர்க்கை முன்னிலை தன்மை என்னும் வேறுபாடில் லாமல் எல்லா விடத்திலும் வருவது. செய்யும் என்னும் முற்றுப் பற்றி இவ்வியலில் பிறிதோரிடத்து ஆராய்வோம்.
செய்யும் என்னும் எச்சத்தின் இறுதியிலிள்ள உயிர் மெய் யெழுத்துக் கெடுதலும் செய்யுளில் உம் என்பது உந்து என வருதலும் அது முற்றாங்கால் உயிராயினும் உயிர் மெய்யாயினும் கெடுதலுமுண்டு. ஆகும் பொருள் ஆம் பொருள் என்றும் வாவும் புரவி என்பதுவாம் புரவி யென்றும் எச்சத்து உயிர்மெய் கெட்டது 3 பாயும் என்பது செய்யுளில் சில விடங்களில் பாயுந்து என வரும் போலும் என்பது போன்ம் என உயிர் கெட்டும் லகரம் னகர மாகவும், முடியும் என்பது முடிமே என உயிரி மெய் கெட்டும் வரும். குணமாகும் என்பது குணமாம் என வழக்கில் உயிர் மெய் கெட்டது
கரிய பெரிய வென்பன குறிப்பு வினைப் பெயரெச்சங்கள்,
வினையெச்சமீ
வினையெச்சம் வினையை எஞ்சி நிற்பது அ ல் ல து வினையைக் கொண்டு முடிவது எனப் வொருள்படும் பெய ரெச்சத்தைப் போலவே வினையெச்சத்தின் மூலமும் செயல் காலம் என்பன பெறப்படும். உண்டு வந்தான் என்பதில் உண்டு என்னும் எச்சத்தின் மூலம் உண்டல் என்னுஞ் செயலும் இறந்த காலமும் மட்டுமே பெறப்படும். பால் முதலிய்ன அவ்வெச்சத்தை முடித்து நிற்கும் வினை முற்றால் உணரப்படும். வினையெச்சம் நேரே வினைமுற்றைக் கொண்டு மு டி யா ம ல் வருவதுமுண்டு. உண்டு வந்தான் என்பதில் உண்டு என்னும் எச்சம் நேரே வந் தான் என்ற வினையைக் கொண்டு முடிந்தது. உண்டு வந்து போனான் என்பதில் உண்டு என்னும் போது உண்டு என்னும் செய்து என்னும் வாய்பாட்டெச்சம் வந்து என்னும் எச்சத்தைக் கொண்டு பின்னர் ஈரெச்சங்களும் போனான் என்னும் முற்றைக் கொண்டு முடிந்தன. வந்து போன சாத்தன் என்பதில் வந்து என்னும் வினையெச்சம் போன என்னும் பெயரெச்சத்தைத் தழுவ போன என்னும் பெ2ரெச்சம் சாத்தன் என்ற பெயரைக்
藥204

கொண்டு முடிந்தது. உண்டு வந்தவன் போனான் என்பதில் உண்டு என்னும் வினையெச்சம் வந்தவன் என்னும் வினையா லனையும் பெயரைக் கொண்டு பின் போனான் என்னும் முற்றோடு முடிந்தது. உண்டு வருதல் நன்று என்பதில் உண்டு என்னும் வினையெச்சம் வருதல் என்னுந் தொழிற் பெயரிலுள்ள வினையடியோடு முடிந்தது.
எச்சங்கள் காலங்காட்டுவன வாதலால் இன்ன இன்ன எச்சம் இன்ன இன்ன காலங்காட்டுமென இலக்கண ஆசிரியர்கள் வகுத் துள்ளார்கள். நன்னூலார் இறந்த கால வினையெச்சம் ஐந்தும் நிகழ்கால வினையெச்சம் ஒன்றும் எதிர்கால வினையெச்சம் ஆறு மாகப் பன்னிரு வாய்பாட்டெச்சங்களை எடுத்துக் கூறியுள்ளார். இவ்வாய்பாடுகளிற் சில இக்கால இலக்கியங்களிலோ அல்லது உலக வழக்கிலோ கைக்கொள்ளப் படுவதில்லை. இக் காலத்தில் இறந்த கால வினையெச்சமாக செய்து என்பதும் நிகழ்கால வினையெச்சமாக செய என்பதும் எதிர்கால வினையெச்சமாக செயின் என்பதுமே பெரும்பாலும் பயன்படுத்தப் படுகின்றன. இறந்தகால வினையெச்சங்கள் நான்கும் எதிர்கால வினையெச்சங் களில் ஐந்தும் இன்று பெரும்பாலும் வழக்கிற் பயன்படாதவை எனினும் பழைய காலச் செய்யுள் ஆய்வுக்கு அவை பயன்படுவதால் அவற்றையும் எடுத்துக் காட்டுவது அவசியம். நன்னூலார் கூறாத செயற்கு என்னும் எச்சம் எதிர்காலத்துக்குரியதாகப் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
நன்னூலார் கூறிய வினையெச்ச வாய்பாடுகள் வருமாறு:- இறந்தகால வினையெச்சங்கள் - செய்து, செய்பு, செய்யா, செய்யூ, செய்தென என ஐந்தாம் நிகழ்கால வினையெச்சம் - செய என்பதொன்றேயாம் எதிர்கால வினையெச்சம் - செய்யின், செய்யிய, செய்யியர், வான்
பான், பாக்கு என ஆறாம்.
இப் பன்னிரண்டு வாய்பாடுகளிலும் செய்து என்பதொன்று மட்டும் இடை நிலையாற் காலங் காட்டியது. மற்றைய பதினொரு வாய்பாட்டெச்சங்களும் விகுதியாற் காலங் காட்டின.
செய்து முதலிய ஐந்து வாய்பாடுகளும் இறந்த காலம் உணர்த்துவதற்கு உதாரணம்.
205鱷

Page 112
செய்து - உண்டு வந்தான்; செய்பு - உண்குபு போனான். செய்யா - பெய்யாக் கெடுக்கும் மழை, செய்யூ - காணுஉ நின் றான். செய்தென - உண்டெனச் சென்றான் என வரும்.
செயவெனெச்சம் உண்ண வந்தான் என நிகழ்காலங் காட் டிற்று, செய்யின் முதலிய எச்சங்கள் எதிர்காலங் காட்டுதற்கு உதாரணம் - செயின் - உண்ணின் வருவான். செய்யிய - பாடிய சென்றான் செய்யியர் = உண்ணியர் வந்தனர். வான் - கொல் வான் சென்றான். பான் - தின்பான் போனான், பாக்கு,
உண்பாக்கு வருவான் என வரும்.
செயவென்னெச்சம் நிகழ்காலங் காட்டுவதாகக் குறிக்கப்பட்ட போதும் அது இறந்த காலத்தையும் எதிர் காலத்தையுங் காட்ட வும் வல்லது. காரணப் பொருளில் வரும்போது இறந்த காலத் தையும் காரியப் பொருளில் வரும்போது எதிர் காலத்தையுங் காட்டும். மழைபெய்ய நெல் விளைந்தது என்ற வழி மழை பெய்தல் நெல் விளைதற்குக் காரணமாதலால் பெய்ய என்னும் செயவெ னெச்சம் இறந்த காலங் காட்டிற்று, நெல் விளைய முன்னமே மழை பெய்ததாதலால் பெய்ய என்பது பெய்தபின் எனப் பொருள் தந்தது. நெல் விளைய மழை பெய்தது என்பதில் பெய்தலின் காரியம் விளைதலாதலாற் காரியப் பொருளி ல் எதிர்காலங் காட்டிற்று. நெல் விளைதற்கு மழை பெய்தது என்பதே பொரு ளாகும்.
தொல்காப்பியர் வினையெச்ச வாய்பாடுகளாகி செய்து, செய்யூ, செய்பு, செய்தென, செய்யியர், செய்யிய, செயின், செய, செயற்கு என ஒன்பது வாய்பாடுகள் கூறியுள்ளார்; அவர் வான், பான், பாக்கு என்பவற்றைக் கூறிற்றிலர். அவர் கூறியவற்றில் செய்து, செய்யூ, செய்பு, செய்தென என்னும் நான்கும் இறந்த காலத்தையும் செய என்பது நிகழ்காலத்தையும் மற்றைய நான் கும் எதிர்காலத்தையுங் காட்டும்.
தொல்காப்பியர் முன்னர்க் கூறிய் ஒன்பது வினையெச்சங் களோடு பின் முன், கால், கடை, வழி, இடத்து, எனக்காலங் கருதிவரும் ஆறு ஈறுகளையுடையவும் வினையெச்சம் என்பர். எனவே தொல்காப்பியர் பதினைந்து வினையெச்ச ஈறுகள் கூறி னாரெனக் கொள்ளலாம்.
鯊206

நீயிர் பொய் கூறிய பின் மெய் கூறுவாரி யார்? நீயிஷ்வாறு கூறுகின்ற பின் உரைப்பதுண்டோ? எனவும் விடுத்தக்கால், விடுத் தக்கடை, விடுத்தவழி விடுத்தவிடத்து எனவும் இவ்விறுகள் பற்றி வரும் வினையெச்சங்கள் கொள்ளப்படும். பின் இறப்பும் நிகழ்வும் பற்றியும் முன் இறந்த காலம் பற்றியும் கால் ஈறு மூன்று காலமும் பற்றியும் கடை முதலியன இறந்த காலம் பற்றியும் வருமென்பர். பின், முன், கால், கடை என்பன தொல்காப்பியரால் ஏழாம் வேற்றுமை யுருபுகளாகவுங் கூறப்பட்டன. ஏழாம் வேற் றுமைப் பொருள் இடமெனக் கூறப்பட்டதால் வழி, இடம் என் பனவும் இவற்றில் அடங்கும். வினை கொண்டு முடிவதால் இவை ஏழாம் வேற்றுமை யுருபுகளாக இருந்தாலும் இவை வினையெச் சங்களுமாம் என்பது தொல்காப்பியர் கருத்துப் போலும். இன்னும் இடப் பொருளுணர்த்தும் அவைவேறு வினையெச்சப் பொருளில் வரும் இவை வேறு என்பதுந் தொல்காப்பியர் கருத்தாகலாம். சேனாவரையர் இவற்றுக்குக் காட்டிய உதாரணங்களை நோக்குழி இக் கருத்து வலுவுள்ளதாகிறது. மரத்தின் பின் இருந்தான் என் பதில் பின் ஏழாம் வேற்றுமையுருபு. எனவே இடைச்சொல். பொப் கூறிய பின் உய்யமாட்டான் என்பதில் பின் வினையெச்ச
வாய்பாடென அறிக.
நன்னூலார் இவையனைத்தையும் இடப் பொருளுருபாகக் கொண்டமையால் வினையெச்சங்களாகக் காட்டாது விட்டுவிட் டார் என்பது பொருத்தமானதே. இங்கும் சேனாவரைவர் காட் டிய உதாரணங்களைப் பார்க்கும்போது நன்னூலாரி கூறி ய வினையெச்ச இலக்கணம் நிறைவுடையதாகத் தெரியவில்லை.
எச்சங்களில் தன் கருத்தாவின் வினை கொள்வன
நன்னூலார் தாங் கூறிய வினையெச்சங்களுள் முதலில் நான்கும் ஈற்றில் மூன்றும் வினை முதல் கொள்ளும் எனக் கூறினார். அவர் முதலிற் கூறியவை, செய்து, செய்பு, செய்யா, செய்யூ என்பனவாம். ஈற்றில் மூன்று வான், பான், பாக்கு, என்பன. தாங் கூறிய மற்றைய வினையெச்சங்கள் தன் கருத்தாவின் வினையை யும் பிறகருத்தாவின் வினையையும் கொண்டு முடியும் என்பதும் அவர் கூற்று. வினைமுதல் கொள்ளும் என்பதற்குத் தன் கருத் தாவின் வினைகொண்டு முடியுமென்பதே கருத்தாகும். வினை யெச்சத்தின் பகுதிக்குரிய கருத்தாவும் அது கொண்டு முடியும்
207體

Page 113
வினைமுற்றுக்குரிய கருத்தாவும் ஒன்றாக இருக்கும் வழி அது தன் கருத்தாவின் வினை கொண்டு முடிந்ததாகும் மரம் பட்டு விழுந்தது என்பதில் படுதல் மரத்திற்குரிய வினை விழு தலும் மரத்திற்குரிய வினையாதலால் செய்து என்னும் எச்சம் தன் கருத்தாவின் வினை கொண்டு முடிந்தது. மரம் படக் குருவி கூடு கட்டியது. என்பதில் பட என்பதற்குக் கருத்தா மரமும் கட்டியது என்னும் முற்றுக்குக் கருத்தா குருவியு மாதலால் செய வெனெச்சம் பிற கருத்தாவின் வினை கொண்டு முடிந்தது.
தன் கருத்தாவின் வினை கொண்டு முடியும் எச்சங்களும் இவை முடியுமாறும் .
செய்து - வேலன் நடந்து போனான்
செய்பு - வேலன் உண்குபு போனான்
செய்யா - மேகம் பெய்யாக் கெடுக்கும்
செய்யூ - தாயைக் காணுT மகள் மகிழ்ந்தாள்
ଜunt ଜଙ୍ଘି - புலி கொல்வான் சென்றது
LAY657  ைவேடர் அலைப்பான் புகுந்தனர்
cifră (g, - வள்ளல் தருபாக்கு வருவான்
தன் கருத்தாவின் வினையும் பிற கருத்தாவின் வினையுங் கொள்ளுமென ஒதப்பட்ட ஐந்து வாய்ப்பாட்டெச்சங்களும் எவ்வாறு வரினும் விலக்கப்படாவாதலால் உதாரணங் காட்டப் பட வேண்டிய அவசிய மில்லை. செய்து என்னும் வாய்பாடு பற்றி வரும் ஒடி, போய் என்பனவும் தன் கரு த் தா வின் வினையை மட்டுங் கொண்டு முடிவனவாம்.
சினையின் வினை சினைக்குரிய முற்றோடு முடியாமல் சினைக் குரிய முதலைக் குறிக்கும் முற்றோடு முடியினும் விலக்கப்
*சினை வினை சினையொடும் முதலொடுஞ் செறியும்'. (நன். வினை. 28) என்னும் நூற்பாவும் இதனையே வலியுறுத்து கிறது கால் ஒடிந்து விழுந்தது என்பதில் கால் என்பது சினை அதற்குரிய வினை ஒடிந்து என்பதும் விழுந்தது என்பதும் ஆதலால் தன் கருத்தாவின் வினை கொண்ட தென்பது தெளிவாகப் புலப்படுகிறது.
鷲208

வேலன் கால் ஒடிந்து விழுந்தான் என்பதில் கால் என்னுஞ் சினைககுரிய வினையாகிய ஒடிந்து என்பது கால் என்னுஞ் சினையின் முதலாகிய வேலனின் வினையாம் விழுந்தான் என்பதனோடு மூடிந்தது. அவ்வாறு முடியினும் ைெனக்கும் முதலுக்குமுரிய ஒற்றுமை நயம் பற்றி அது தன் கருத்தாவின் விைை கொண்டு முடிந்ததாகவே கொள்ளப்படும்.
"முதனிலை மூன்றும் வினைமுதல் முடி பின" (தொல். வினை. 33) என்னுந் தொல்காப்பியர் செய்து, செய்யூ, செய்பு என்னும் மூன்றினையுமே தன் கருத்தாவின் இணைகொண்டு முடிவனவாகக் கூறியுள்ளார். செய்யா என்னும் தினை பெய்ச்சி சைப்பாடு தொல்காப்பியராஜ் கூறப்படாத தென்பதையும் அதனையுஞ் சேர்த்துக் கூறிய நன்னூலார் அதனையுஞ் சேர்த்து முதலில் தான்கும் என்று கூறினாரென்க.
பிற எச்சங்களும் வினைமுதல் வினை கொண்டு முடிவன வாயினும் இலக்கண உலகில் பெரிதும் எடுத்தாளப் படுவது செய்து என்னும் எச்சமேயாம். ஆதலால் செய்து என்னும் சத்தின் மேல் வைத்து அது தன் கருத்தாவின் வினை கொண்டு முடிதலை இலக்கணகாரர் கூறிய தடைவிடைகளால் நோக்கு
(36 TLÈ),
கோழி கூவிப் பொழுது விடிந்தது - என்னும் வாக்கியத்தில் கூவியது கோழியில் வினையாகவும் விடிந்தது பொழுதின் வினை யாகவும் இருத்தலால் கூவி என்னுஞ் செய்து என்னும் வாய்பாட் டெச்சம் பிறகருத்தாவின் வினைகொண்டதன்றோ என்பது வினா, இலக்கண ஆசிரியர்கள் சிலர் கூவி என்னும் எச்சத்தைப் பிறவினையாக மாற்றிக் கோழியைக் கூ வு வித் துப் பொழுது விடிந்தது என்று கொண்டு கூவுவித்ததும் விடிந்ததும் (CAL PFCup G35 காதலால் அது தன் கருத்தாவின் வினை இெரண்டதென்பர். வேறு சிலர் செய்து என்னும் எச்சத்தைச் செயவென்னும் எச்சமாக மாற்றிக் கோழி கூவப் பொழுது விடிந்ததென்று கொண்டு செய வெனெச்சம் பிறகருத்தாவின் வினை கொண்ட
Q: ಇನ್ನು ಶಿ; சாதிப்பர்.
"சொல்திரியினும் பொருள் திரியா வினைக்குறை (நன். வினை. 27) என்பது கொண்டு செய வென்னெச்சம் செய்து என்னும் எச்சமாகத் திரிந்து நின்றாலும் செய வுெனெச்சத்துக்
4 209鬣

Page 114
குரிய பொருளில் திரியாது என்று காட்டி அது செய வென் னெச்சமேயெனச் சாதிப்பர். எவ்வாறாயினும் செய்து என்னும் எச்சம் தன் கருத்தாவின் வினையேயன்றிப் பிற கருத்தாவின் வினை கொண்டு முடியாதென்பதில் இ லக் கண நூலாசிரியர் உரையாசிரியர் அனைவரும் ஒன்றுபட்ட கருத்துடையர் என் பதில் ஐயமில்லை.
அவளும் அவனுஞ் சிற்றில் இழைத்துஞ் சிறுபறையறைந்தும் விளையாடுப" என்பதில் இழைத்து அறைந்து என்பன செய்து என்னும் வாய்பாட்டெச்சங்கள். இவற்றில் சிற்றில் இழைத்தல் அவளுக்குரியவினை. சிறுபறையறைதல் அவனுக்குரிய வினை, செய்து என்னும் எச்சம் தன் கருத்தாவின் வினை கொள்ளும் போது அது வேறொன்றற்குப் பொதுவாக வரக்கூடாதென்னுங் கட்டுப்பாடின்மையின் விளையாடுவள், விளையாடுவன் முடியாமல் இருவருக்கும் பொது வினையாகிய விளையாடுப விளையாடுவர்) என்பதனோடு முடிந்ததும் தன்கருத்தாவின்
செய்யும் என்னும் வாய்பாட்டு முற்று
பேல்லோர் படர்க்கை முன்னிலை தன்மையிற் செல்லாதாகுஞ் செய்யுமென் முற்றே" (நன், வினை,29) என்பர் தன்னுரலார். அதாவது செய்யும் என்னும் வாய்பாட்டு முற்றுச் சொல் பலர்பாற் படர்க்கை முன்னிலை, தன்மைஅளில் வராது என்பது அவர் கருத்து. எனவே படர்த்தையில் ஆண் பெண்பால்களிலும் ஒன்றன்பால் பலவின் பால்களிலும் ఓగిf7్వతహాగా வருமென்பது கருத்து அவள் வரும், அவன் வரும், அது வரும், அவை வரும் எனவே வருமென்பது பெறப்படுகிறது.
இச் செய்யும் என்னும் முற்றை இக்காலத்தில் ஆண் பெண் பால்களிலும் பயன்படுத்துவார் அரியர் என்றே கூறலாம் அவன் இதைச் செய்யும் என்பதும் அவள் இதை உண்ணும் என்பதும் தவறான சொற்பிரயோகம் எனக் கருதுமளவுக்கு வந்துவிட்டன. ஆனால் இலக்கியங்களில், இவ்வனம் புக்கான் கூறை கோட்படும் எனவும் இச்சுனையில் இவள் நீராடும் எனவும் வருவது இய்ல்பு. தொல்காப்பியர் கருத்தும் பலரீபாற் படரிக்கை முன்னிலை தன்மை ஆகிய மூன்றும் நிகழுங் காலத்துச் செய்யும் என்னும் முற்றுசி சொல்லோடு பொருந்தா
囊210

கீருத்தே நன்னூலார் கருத்து மென்பது இதனால் தெளிவாகிறது செய்யும் என்னும் எச்சம் எல்லா இடத்திற்கும் எல்லாப் போலுக்கும் வருமென்பதும் செய்யும் என்னும் முற்றுக்கே இவ் விலக்கு என்பதும் உளங்கொளற்பால,
நீர் உண்ணும் எனச் செய்யும் என் முற்று முன்னிலைப் பன்மை யில் புதியன புகுதலாக வழங்கி வருகிறது. அது விலக்கற் பாலதன்று.
முற்றெச்சம்
வினை முற்றுச்சொல் சிலவிடங்களில் வினையெச்சப் பொரு ளைத் தந்து நிற்றலும் உண்டு. இவ்வாறு எச்சப் பொருளைத் தரும் முற்று இலக்கணகாரரால் முற்றெச்சம் என வழங்கப்பட்டு வருகிறது, குறிப்பு வினைமுற்றுச் சொல் குறிப்பு வினை வினை யெச்சமாக வருதலுண்டு, கண்டனன், வணங்கினான் என்பது கண்டு வணங்கினான் எனப் பொருள்படுவதால் கண்டனன் என்பது கண்டு என்னும் எச்சமாகிறது. அது இ ய ல் பா ன எச்சமாகாது முற்றே எச்சமாகத் திரிந்ததாதலால் முற்றெச்சம் எனப்படுகிறது. சாத்தன் வில்லினன் வந்தான் என்பதில் வில்லினையுடையனாய் வந்தான் எனப் பொருள்படுவதால் வில் லினன் என்னும் குறிப்பு வினைமுற்று குறிப்பு வினை வினை யெச்சமாயிற்று, குழையின்ை கொற்றன் வந்தான் என்பது குழையினை யுடைய கொற்றன் வந்தான் எனப் பொருள்படுவ தால் குறிப்பு வினைமுற்று குறிப்புவினைப் பெயரெச்சமாயிற்று. உண்டான் சாத்தான் வந்தான் என்பதில் உண்ட சாத்தன் எனப் பொருள்படும்போது தெரிநிலை வினைமுற்றுப் பெயரெச்சமாக
வந்தது. யார் எவன் என்னுங் குறிப்பு வினைமுற்றுக்கள்
யார் என்னும் வினாப் பொருளைத் தருங் குறிப்பு வினை முற்று உயர்திணைப் படர்க்கை ஆண் பால், பெண் பால், பலர் பால் என்னும் மூன்று பால்களுக்கும் உரிமையுடையதாய் வரும். ஆனால் இக்காலத்தில் யார் என்னும் வினா வினைக் குறிப்பு முற்று தன்மையிலும் முன்னிலையிலும் நூல் வழக்கு உலக வழக்கு ஆகிய இரு வழக்கிலும் பயின்றுவரக் காண்கிறோம். அது மட்டுமல்ல அஃறிணையிலும் ய்ார் என்பது புகுந்துவிட்டது.
211鯊

Page 115
அவன் இபrர் ? அவள் யார்? அலர் யார்? என உயர்திணை முப்பாலுள்ளும் வந்தது, தொல்காப்பியரி,
போஅர் என்னும் வினாவின் கிளவி
அத்திணை மருங்கின் முப்பாற்கு முரித்தே"
 ை(தொல், வினை 13) எனவும், நன்னூலாசிரியர்,
சோரென் வினாவினைக் குறிப்புயர் முப்பால்" - ( நன். வினை 30) எனவுங் கூறுமிலக்கணம் இன்று புதியின புகுதலாக தன்மை முன்னிலைகளிலும் வழங்கிவரக் காண்கிறோம். நான் யார்? நாம் யார்? நீ யார்? நீர் யார்? எனத் தன்மை, முன் னிலைகளிலும் பெரு வழக்காக வழங்கல் காண்கிறோம். நான் ஆர் என் நெஞ்சம் ஆர்? என நெஞ்சம் என்னும் அஃறிணை யோடும் யார் என்பது வழங்குவது செய்யுள் வழக்கு, உ ல இ வழக்கிலும் யார் என்பது இருதிணை ஐம்பால் மூவிடங்களிலும் ஏற்ற பெற்றி வழங்கக் காண்கிறோம்.
எவன் என்னும் வினாப் பொருளைத் தரும் குறிப்பு விண்ண முற்றுச் சொல் அஃறிணைப் படரிக்கை இரு பால்களுக்கும் உரிய தாகும். அதாவது ஒன்றன்பால், பலவின்பால் ஆகிய் இருபாற் கும் உரியதாகும். எவன் என்பதை ஆண்டால் முற்று என மயங்கு தல் கூடாது. அது வேறு. இக்குறிப்பு வினைமுற்று வேறு. இங்கு எவன் என்பது எது எனவும், எவையெனவும் பொருள்படும், இதில் அன் என்பது ஒன்ற ன்பாலுக்கும், பலவின் பாலுக்கும் பொதுவான விகுதியாகும். தொல்காப்பியர் காலத்தில் எவன் என வழங்கிய குறிப்பு வினைமுற்று இடையிலுள்ள வகர அகன உயிர்மெய்யை நீக்கி என் என வழங்குவதும் அதுவே பின்பு அகர வீறு பெற்று என்ன? என வழங்குவதுமுண்டு. இன்று அது என்ன, என்னே, என்னோ, ஏன் எனப் பலவாறு விகாரப்பட்டு
வழங்கக் காணலாம்.
“எவனென் வினாவினைக் குறிப் பிழியிருபால்" என்பதன் மூலம் இழிந்த அஃறிணைக்குரிய ஒன்றன் பால், பலவின் பால் களுக்கு மட்டுமே அது உரியதாகக் கொள்ளப்பட்டதென்பது வெளிப்படை. அதன் திரிபுகள் புதியன புகுதலாக ஏற்றுக்கொள்
னப்பட்டவை என்க,
蔓212

3. தொடர் மொழியியல்
தொடர்மொழி என்ன என்பது
தொடர் மொழியாவது யாதெனில் பொருள் புலப்படும்படி தொடர்ந்து நிற்குஞ் சொற்களின் கூட்டமாம். இத் தொடர் மொழி இரண்டு அல்லது அதற்குமேற்பட்ட சொற்கள் தொடர்ந்து நிற்க வருவதாம். தொடர்மொழியானது எச்சத் தொடர் மொழி முற்றுத் தொடர்மொழியென இரு வகைப்படும். எச்சத் தொடர் மொழி முடிவுபெறாத தாய் முடிவுபெற்று நிற்கும் வாக்கியத்துககு உறுப்பாக வருவது முற்றுத் தொடர்மொழியாவது 67 (pan at ube பயனிலையும் உள்ளதாய்ச் செயப்படுபொருள் மு த வி யூ வற்றோடு கூடியேனுங் கூடாதேனும் வருவதாம். அந்த மனிதன் என்பதும் கைக்கடிகாரம் என்பதும் எச்சத் தொடர் மொழிசகு உதாரணங்களாம். வேலன் உண்டான் ; வேலன் சோற்றை யுண்டான் ; வேலன் சோற்றை வயிறார உண்டான் என்பவை முற்றுத் தொடர் மொழி க் கு உதாரணங்களாகும். எச்சித் தொடர்கள், முற்றுத் தொடர் எனப்படும் வாக்கியமாக இல்லா திருந்தாலும் வாக்கியத்துக்கு உறுப்பாக வருவன. அந்த மனிதன் என்னும் எச்சத் தொடருடன் போனான் என்னும் வினையைச் சேர்க்கும்போது அது, அந்த மனிதன் போனான் என முற்றுத் தொடர் மொழியாகிறது. கைக்கடிகாரம் என்பதும் அந்த எச்சத் தொடருக்குப் பொருத்தமான சொல்லோ அல்லது சொற் றொடரோ வரும்போது முற்றுத் தொடர்மொழியாகும். கைக் கடிகாரம் வாங்கினான் என்றபோது அது முற்றுத் தொடராக மாற்றம் பெறுகிறது. அவன் காசுக்குக் கைக்கடிகாரம் வாங்கி ாைன் என்பதில் எச்சத் தொடர் மேலும் பல சொற்கள் வந்து முற்றுத் தொடராக மாற்றம் பெறுகிறது. வேலன் உண்டான் என்னும் முற்றுத் தொடரில் ஒரு எழுவாயும் ஒரு பயனிலை யும் வந்து ஒரு முற்றுத் தொடராயது. வேலன் சோற்றை உண்டான் என்பது எழுவாயும், பயனிலையுஞ் செய்ப்படுபொருளும் வந்து மூற்றுத் தொடர்மொழியாயிற்று. வேலன் சோற்றை வயிறார உண்டான் என்பதில் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் களோடு உண்டான் என்னும் பயனிலைக்கு அடைமொழியும் வந்து முற்றுத் தொடர் மொழியாயிற்று. எச்சத் தொடர் மொழிகளில்
213鬣

Page 116
பயனிலை இடம்பெறுமாயின் அது வாக்கியத்துக்குரிய அதாவது முற்றுத் தொடருக்குரிய பண்பைப் பெற்றுவிடும். சோற்றை யுண்டான் என்பது முழுமையான முற்றுத் தொடர் அல்லவாயி னும் பயனிலை மூலம் தோன்றா எழுவாயாகி அவன் என்பது அறியப்பட்டு முற்றுத்தொடர் ஆகிறது. முற்றுத் தொடரை வாக்கியம் எனவும், எச்சத் தொடரைக் குறைவாக்கியம் ଶTଣଙ୍ଖଜy iଛି!
கூறலாம்.
தொகை நிலை, தொகாநிலைத் தொடர்கள்
சொல்லோடு சொல் தொடருந் தொடர்ச்சி தொகை நிலைத் தொடர் எனவுந், தொகா நிலைத் தொடர் எனவும் இருவகைப் படும். வேற்றுமையுரு முதலியன தொக்கு (மறைந்து) நிற்பத் சொற்கள் தொடர்வது தொகை நிலைத் தொடர் எனப்படும். உருபு முதலியன வெளிப்படையாக நிற்பச் சொற்கள் தொடர்ந்து வருவது தொகா நிலைத் தொடர் எனப்படும்.
தொகைநிலைத் தொடர்மொழி வே ற் று மை த் தொகை, வினைத் தொகை, பண்புத் தொகை, உவமைத் தொகை, உம் மைத் தொகிை, அன்மொழித் தொகை என் ஆறு வகைப்படும்.
தொகா நிலைத் தொடர், எழுவாய்த் தொடர். விளி தி தொடர், பெயரெச்சத் தொடர் வினையெச்சத் தொடர், தெரிநிலை வினைமுற்றுத் தொடர், குறிப்பு வினைமுற்றுத் தொடர், இடைச்சொற்றொடர், உரிச் சொற்றொடர், அடுக்குத் தொடரி என ஒன்பது வகைப்படும்.
தொகை நிலைத் தொடர்களை ஒவ்வொன்றாக விரித்து விளக்கவேண்டியிருத்தலின் சொல்லில் முடியும் இலக்கணத்தலாய தொகா நிலைத் தொடர்களுக்கு உதாரணத் தந்து அதன்மேல் தொகை நிலைத் தொடர்களை விளக்குதல் சாலும். இவற்றுக்கு உதாரணம் புணரியலில் தரப்பட்டதாயினும் தொடர்மொழி யியலை மட்டும் நோக்குவோர்க்கு வசதியாக இங்குஞ் தரப்படு இன்றன.
1. சாத்தன் வந்தான்  ைஎழுவாய்த் தொடர் 2 சாத்தா வா - விளித் தொடர் 8. வந்த சாத்தன் - பெயரெச்சத் தொடரி
鱗214

4. வந்து போனான் - வினையெச்சத் தொடர் 5. வந்தான் சாத்தன் கை தெரிநிலை வினைமுற்றுத் தொடர் .ே குழையன் சாத்தன் - குறிப்பு வினைமுற்றுத் தொடர் 7. மற்றொன்று - இடைச் சொற்றொடர் 8. நனி பேதை - உரிச் சொற்றொடரி 9. பாம்பு பாம்பு - அடுக்குச் சொற்றொடர்.
தொகாநிலைத் தொடர்மொழிகளில் எழுவாய், விளி பெய
வெளிப்பட்டு நிற்றலால் அவை பற்றி விரித்துரைக்க வேண்டிய அவசியமில்லை.
எவ்வகைத் தொடரிலாயினுஞ் சொற்கள் தொடர்ந்து நிற்கும் போது திணை, பால், இடம் மூன்றினும் மாறுபடாது நிற்றல் வேண்டும். மாறுபடுமாயின் அது வழு வாக்கியமெனக் கைவிடப் படும். வழுவமைதியாக ஏற்கக் கூடிய்வை பின்னர்ப் பேசப்படும்.
தொகை நிலைத் தொடர்மொழி வேற்றுமைத் தொகை
தொனை நிலைத் தொடர் மொழிகள் வேற்றுமைத் தொகை வினைத் தொகை, பண்புத் தொகை, உவமைத் தொகை,
முன்னரே கூறப்பட்டது. இவற்றுள் முதலாவதாகக் கூறப்பட்ட வேற்றுமைத் தொகை, இரண்டாம் வேற்றுமை முதலாக ஏழாம் வேற்றுமையீறாக ஆறுவகைப்படும். அவையும் முறையே இரண் டாம் வேற்றுமைத் தொகை, மூன்றாம் வேற்றுமைத் தொகை, நான்காம் வேற்றுமைத் தொகை, ஐந்தாம் வேற்றுழைத் தொகை, ஆறாம் வேற்றுமைத் தொகை, ஏழாம் வேற்றுமைத் தொகை யென வழங்கப்படும். முதலாம் வேற்றுமைக்கு உருபு இன்மைப்ால் அது தொகுமாறில்லை. எட்டாம் வேற்றுமையும் பெயரது விகாரமாதலால் அதுவுந் தொக்கு வருதல் இயலாது.
இரண்டாம் வேற்றுமைத் தொகை அவ்வேற்றுமைக்குரிய ஐயுருபு தொக்குவரும். குடத்தை வனைந்தான் என்பது வேற் றுமை விரியாதலால் அது தொகாநிலைத் தொடர் மொழியாகும். குடம் வனைந்தான் என ஐயுருபு தொக்கு வருவதே இரண்டாம் வேற்றுமைத் தொகையாகும். கல்லெறிந்தான் என்பது கல்லை
2.1 5 ႏွစ္ထိဇ္ဇ

Page 117
எறிந்தான், கல்லால் எறிந்தான், கல்லிற்கு எறிந்தான் என வெவ்வேறு வேற்றுமையுருபுகளும் விரிந்து வருதலால் சொல் வானுக்குங் கேட்டானுக்குமுரிய சந்தர்ப்ப உணர்வால் அது இன்ன வேற்றுமைத் தொகையென உணரப்படும். மட்குடம் என்பது மூன்றாம் வேற்றுமைத் தொகை, அது மண்ணால் ஆகிய குடம் என விரியும். ஆல் உருபோடு ஆகிய என்னும் பயனுந் தொக்கு வருவதால் அது மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையாகும். உருபும் பொருளுந் தொக்க தொகை என்பrரும் உளர். -
நான்காம் வேற்றுமைத் தொகைக்கு உதாரணம் - சிவன் மைந்தன் என்பது. இது சிவனுக்கு மைந்தன் என நான் இாம் வேற்றுமை உருபு விரிதலால் நான்காம் வேற்றுமைத் தொகை ஆயிற்று.
ஊர் நீங்கினான் என்பது ஐந்தாம் வேற்றுமைத் தொகை, அது ஊரின் நீங்கினானென விரியும்.
முருகன் கை என்பது ஆறாம் வேற்றுமைத் தொகை, శ్రీస్త్ర விரியும்போது முருகனது கையென விரியும். அது என்பது ஆறாம் வேற்றுமை உருபு
குன்றக்குமரன் எண்பது ஏழாம் வேற்றுமைத் தொகை அது குன்றத்தின்கட் குமரன் என விரியும். கண் ஏழாம் வேற்றுமை
2.(5 to
அறுவகை வேற்றுமைத் தொகைகளிலும் இரண்டாம் வேற் றுமையும், ஏழாம் வேற்றுமையும் இடையில் மாத்திரமல்லாமல் இறுதியிலும் தொக்கு வருமென்பது தொல் 8ாப்பியரி இருத்து, கடந்தான் நிலம் என்பது இடந்தான் நிலத்தை லென விரிவதால் இறுதியில் தொக்கது. இருந்தான் குன்றத்து என்பது இருந்தான் குன்றத்துக்கண் என விரிவதால் இதுவும் இறுதியில் தொக்க தென்க.
வினைத் தொகை
நன்னூலார் 19 இாலங் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை" நன். பொது 23) என்பர். காலங்காட்டும் உறுப்புக்களாய இடை நிலை விகுதியென்பன தோன்றாது நிற்ப வரும் பெயரெச்சிடிே
廳216

வினை த்தொகை என்பது அந் நூற்பாவின் பொருளாகும். காலங் 8ரவாது வரும் பெயரெச்சம் வினைத்தொகையாகாதது மட்டு மன்றி வேறெத் தொகையிலும் படாது பெயரெச்சத் தொகா நிலைத் தொடராகும். பெயரெச்சமும் வினைச்சொல் ஆதலால் காலங்காட்டி நிற்றல் அதன் பண்பாகும். காலங் காட்டாதபோது அதாவது காலங் காட்டும் உறுப்புத் தொக்கு வரும்போது அது வினைத் தொகையாகும். ஆசிரியர் தொல்காப்பியர், வினையின்
என்பது வினைத்தொகை என்பதாகும். காலத்தியலும் என்பது காலப்பொருளே பொருளாக வரும் என்பதாகும். காலங்காட்டும் உறுப்புக்கள் இல்லாது பகுதி மாத்திரையாய் நின்றாலும் தொகை யாற்றலாற் காலம் பெறப்படுமென்சு, முத னி  ைல ம ட் டு ம் நின்றாலும் அம்முதனிலை பெயரெச்சப் பொருளை உணர்த்தும். கொல் யானை என்ற வினைத்தொகை நிலைத் தொடரை யெடுத்துக் கொண்டால் கொல் என்னும் பகுதி மட்டும் நிற்க ஏனைய விகுதியும் இடைநிலையுங் கெட்டு நிற்பதைக் காண லாம். அவை கெட்டுநின்ற கொல் என்னும் பகுதி கொன்ற யானை, கொல்கின்ற யானை, கொல்லும் ய ர  ைன என முக்காலமுந் தந்து நிற்பது அறியத்தக்கது. கொல் என்பது பெயரெச்சத்தின் பகு தி யாக இருந்தும் அது யானை என்னும் பெயரைக்கொண்டே முடிகிறது. வினைத்தொகை முன்னும் பின்னும் வருகின்ற சொற் குறிப்பால் ஏ ற் ற  ெவ | ரு காலத்தை யு ண ர் த் து வ தா க வு ம், முக்காலத்தையுங் இாட்டுவதாகவும் வரும் தோய், தயிர் என்பது சொற் குறிப் பால் தோய்ந்த தயிர் என இறந்த காலத்தையும், பெய் மழை என்பது பெய்கின்ற மழையென நிகழ்காலத்தையும், அழிபொருள் என்பது அழியும் பொருள் என எதிர்காலத்தையுங் காட்டுவது காண்க. உழுபடை என்பது உழுத படை, உழுகின்ற படை, உழும் படையென முக்காலமும் பெறப்பட நின்றது. த ந் த பொருள் என்பது தரு பொருள் எனப் பகுதி விகாரப்பட்டு வினைத்தொகையாக வந்தது.
பண்புத் தொகை
பண்பை விளக்கும் மொழிகளாகிய ஆகிய, முதலியன தொக்கு
வருவதையும் ஒரு பொருள் மேல் இரு பெயர் வந்தொட்டி நிற்
பதையும் பண்புத்தொகிை என்பர். நன்னூலார்,
217醬

Page 118
"பண்பை விளக்கும் மொழிதொக் எனவும் ஒருபொருட் கிருபெயர் வந்தவுங் குணத்தொகை"
(நன். பொது 14)
என்பது அவர் கூறிய நூற்பா. சாரைப் பாம்பு என்பது ஒரு பொருட்கிரு பெயரி வந்தன. சாரை என்பதனால் பாம்பு என்பது புலப்படலால் சாரைப்பாம்பு என்பது ஒரு பொருட்கிரு பெயரி வந்தனவென்பது வெளிப்படை. இதனை இரு Gouveau (CLT TIL "-(6) பண்புத்தொகை என்பரி. கருங் குதிரை என்பது கருமையாகிய குதிரை என விரிக்கப்படுதலால் பண்புத்தொகையாயிற்று.
தொல்காப்பியரி வண்ணம், வடிவு, அளவு, சுவை முதலாய பலவும் அதன் குணந் தழுவி நின்று இன்னது இதுவ்ென வரும் இயல்பினது பண்புத் தொகை என்பர். கருங் குதிரை என்பது வண்ணப் பண்பு, வட்டப் பலகை என்பது வடிவப்பண்பு, நெடுங் கோல் என்பது அளவுப் பண்பு. தீங்கரும்பு என்பது சுவைப் பண்பு. இவை பண்புருபு கொடுத்து விரிக்கப்படுதலால் பண்புத் தொகையாம். இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில் சாரை என்பது விசேடிப்பதாகவும், பாம்பு என்பது விசேடிக்கப்படுவ தாகவும் அமையும், சாரை என்ற அளவாளே பாம்பு என்பது பெறப்படுதலின் சாரை என்பதேயமையும். பாம்பு என்று சொல்ல வேண்டா என ஒரு தடையை எழுப்பி உலக வழக்கில் சொற் சுருக்கத்தை மட்டும் நோக்காமல் பொருட்டெளிவையுங் கருதுவ தால் அவ்வாறு சாரைப் பாம்பு எனக் கூறுவது விலக்கப்படா தென்பரி சேனாவரையர். கருங் குதிரை என்பதில் இருமை என் பதன் வேர்ச் சொல் "கரு" எனவும், செம்மையென்பதன் வேர்ச் சொல் "செவ்" எனவுங் காட்டுவர் சேனாவரையர், கருங் குதிரை என்பதில் கரு என்பது உரிச் சொல்லாகவும், கருமையென்பது பண்புப் பெயராகவும் வரும். கருமையையுடைய குதிரையென விரித்து அது இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையெனச் சொல்வதும் பொருள் நிலையால் ஒக்கு மேனுஞ் சொல்நிலையால் ஒவ்வாதென்பர் சில உரையாசிரியர்கள்.
உவமைத் தொகை
"உவமவுருபிலகு உவமத்தொகையே" - (தன். பொது 13) என்பர் நன்னூலார், உவமவுருபிலது என்று கூறினாரேனும்
鬣218

உவமவுருபு தொக்குவருவது உவமைத்தொகை என்பதே ஆசிரியர் கருத்தாகும். உவமையென்பது நான்கு பகுதிகளைக் கொண்டது. அவை உவமானம், உவமேயம், உவமவுருபு, பொதுத் தன்மை என்பனவாம். பால் மொழி என்ற எச்சத்தொடரில் பால் என்ற உவமானமும், மொழி என்ற உவமேயமும் வந்தன. பல போலும் மொழி என்ற தொடரில் உவமான உவமேயங்க ளோடு போலும் என்னும் உவமவுருபும் வந்தது. பால்போலும் இன்மொழி என்பதில் முன்னைய முன்றினோடு இனிமை என்ப தைக் குறிக்கும் இன்னென்னும் பொதுத் தன்மையும் வந்தது. இவற்றில் உவமவுரு தொக்கு வரும்போது அது உவமைத் தொகையாகிவிடுகிறது.
உவமை தோன்றுவதற்கு நிலைக்களம் நான்கு என்பர் தொல் பியரி, தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் உவமவியல் என்ற பகுதியில்,
வினை பயன் மெய்யுரு வென்ற நான்கே வஇைபெற வந்த உவமத் தோற்றம்"
- (தொல், உவம 1)
என இந்நூற்பா வருகிறது. வினையென்பது தொழிலையும் பயன் என்பது பிரயோசனத்தையும் அதாவது பயன்பாட்டிையும் மெய்யென்பது வடிவையும், உருவென்பது நிறத்தையுங் குறிக்கும். இந்நால்வகை உவமங்களுக்கும் உரிய உருபுகளையுந் தொல்காப் பியர் தனித்தனியாக எடுத்துக் கூறுவரி, அவையெல்லாம் இவ் விடத்தில் கூறப்படவேண்டியனவல்ல. தொல்காப்பியர்,
உவமத் தொகையே உவமவியல" ( தொல், எச், 18 ) என்பர். இதற்கு உரை கூறிய சேனாவரையர், உவமத்தொகை, உவமயுருபு தொடர்ப்பொருள்போலப் பொருளுணர்த்தும் என்ப?. உவமவுருபு நின்று பொருள் விளக்குவதுபோல உவமவுருபின்றியும் பொருள் விளங்க நிற்பது உவமைத் தொகையென்பதே தொல் காப்பிப்ர் கருத்தென்கிறார் சேனாவரையர். புலியன்ன சாத்தன் என்பதைப் புலிச் சாத்தன் என்றும், மயிலன்ன மாதரி என்பதை மயில் மாதர் என்றுஞ் சொல்லின் அவை உவமையுரு பின்றிக் குறித்த பொருளை விளக்காவாதலின் அவை தவிர்க்கப்படுமெனச் சேனாவரைப்ரி கூறுவதிலிருந்து உருபின்றியும் பொருள் புலப் பாடுள்ளதே உவமைத்தொகை என்பது நன்கு புலப்படுகிறது.
219籃
ཚ

Page 119
ஆனால் நன்னூ லுரையாசிரியர்கள் சிலர் சேனாவரையர் விலக் கிய புலிச் சாத் தன் என்பதை வினையுவ மத்துக்கு உதாரண மாகக் காட்டுவர். சேனாவரையர் புலிப் பாய்த்துள் என்பதை வினையுவமத்துக்கு உதாரணமாகக் காட்டுவர். அது புலிபோலப் பாயும் பாய்ச்சல் எனப் பொருள்படும் என்ப. நன்னூல் உரை யூாசிரியர்கள் காட்டிய உதாரணங்களை அவர் காட்டியவாறு தருதும்
வினையுவமத் தொகை - புலிக்கொற்றன், குருவி கூப்பிட்
67 . புலிபோலும் வினையமைந்த கொற்றன் என்பதும், குருவி கூலியாங்குக் கூப்பிட்டான் என்பதுமே அவற்றின் பொரு ளாகும்.
2. பயனுவமம் - மழைக்கை, கற்பக வள்ளல் என்பன. இவை மழைபோலக் கொடுக்குங் கையெனவும், கற்பக தரு போலக் கொடுக்கும் வள்ளல் எனவும் பொருள்படும் 8. மெய்யுவமம்  ைதுடியிடை வேய்த்தோள்.
இவை துடி (உடுக்கு) போன்ற இடையெனவும், வேய் (மூங்கில்) போன்ற தோளெனவும் பொருள்படும். 4. உருபுவமம்  ைகார்க்கூந்தல், பவள வாய்.
இவை மேகம் போன்ற கூந்தல் எனவும், பவளம் போன்ற வாய் எனவும் பொருள்படும்
இவற்றை விடப் பன்மொழித் தொடர் என்பதொன்றுங் காட்டுர்ை நன்னூல் உரையாசிரியர் சிலர். அதற்குதாரணமாக மரகதக் கிளிமொழியென்பதையும் இருள் மழைக்கை என்பதை யுங் காட்டுவர்.
நன்னூலார் நான்குவகை உவமங்களுக்கும் பொதுவான சில உவமையுருபுகளுங் கூறியுள்ளார். அவர் அவ்வுருபுகளை விளக் கத்தந்த நூற்பா,
மானக் கடுப்ப இயைய ஏய்ப்ப நேர நிகர அன்ன இன்ன என்பதும் பிறவும் உவமத்துருபே" (நன் போது, )ே என்பது உவமத்தொகை யெனினும் உவமைத்தொகை யெனினும் ஒக்கும்.
醬220

உம்மைத் தொகை
உம் என்னும் இடைச்சொல் தொக்கு வருவது உம்மைத் தொகையாகும். வேற்றுமை யுருபு தொக்கு வருவது வேற்று மைத்தொகை யெனவும் காலந்தொக்கு வருவது வினைத் தொகையெனவும் பண்புருபு தொக்கு வருவது பண்புத் தொகை யெனவும் உவமவுருபு தொக்கு வருவது உவமத் தொகை யென வும் அறிந்தோம். அவ்வாறே உம் என்னும் இடைச் சொல் தொக்கு வருவது உம்மைத்தொகை என்றவாறாம். இந்த உம்மைத் தொகை அளவை என்ற ஒன்றினிடமாகவரும், ஆகு பெயர்க்கண் அவை எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என நான்காக வருமெனக் கண்டோம். ஈண்டும் அவ்வாறே எண்ண லும்மைத் தொகை, எடுத்தலும்மைத்தொகை, மு ஐ து த ஆ உம்மைத்தொகை, நீட்டல் உம்மைத் தொகையென நான்கு
வகையாகக் கொள்ளப்படும்.
1. எண்ணலும் மைத்தொகை - ஒன்றேகால், கபிலபரணர் என வரும். இவை ஒன்றுங் காலும் கபிலனும் பரணனும் எனப் பொருள்படும். 2. எடுத்தலும்மைத்தொகை கழஞ்சேகால், தொடியே கஃத எனவரும். இவை கழஞ்சுங்காலும் தொடியும் கஃசுவும் எனப்பொருள்படும். 8. முக த் த லும் மை த் தொகை - கலனே குறுணி, நாழி யாழாக்கு எனவரும் இவை கலனுங் குறுணியும் நாழியும் ஆழாக்கும் எனப்பொருள்படும். 1. நீட்டலும்மைத் தொகை - சாணங்குலம், மு ழ ஞ் சா எண் எனவரும் இவை சாணும் அங்குலமும் முழமுஞ் சாணும் எனப் பொருள்படும்.
உம்மைத்தொகை பன்மொழித் தொடராகவும் வரும், சேர சோழ பாண்டியர் என்பதும் புலிவிற் கெண்டை என்பதும் பன், மொழி உம்மைத் தெர்டர்க்கு உதாரணங்களாகும்.
உம்மைத் தொகையில் உம்மை இடையில் மாத்திரந்தொகுதி வின்றி இறுதியினுள் தொக்கு நிற்குமென்க. உம்மைத்தொகை நிலைத் தொடர்விரிந்தால் இடைச்சொற் றொகாநிலைத் தொட ராகும்.
221鬣

Page 120
உயர்திணை யொருமையில் வருகின்ற உம்மைத் தொகை &ள் பலர்பால் விகுதிகளை இறுதியிற் பெற்றுவரும். கபிலனும் பரணனும் என்பது கபிலபரணர் என்றும் சேரனுஞ் சோழனும் பாண்டியனும் என்பது சேரசோழபாண்டியர் என்றும் வரும். நன்னூலார்,
“உயர்திணை யும்மைத் தொகை பலரீறே" -(நன். பொது 11) yass கூறினாராயினும் அஃறிணையிலும் விரவுத்திணையிலும் பன் மையையுணர்த்தும் கள், அரி என்னும் ஈறுகள் வருவது முண்டு. உண்மையும் இன்மையும் என்பது உண்மையின்மைகள் எனவும் இரவும் பகலும் என்பது இராப் பகல்கள் எனவும் தந்திையுந் தாயும் என்பது தந்தை தாயார் எனவும் வருவ துண்டு. உம்மைத்தொகை இரு பெயர்களில் அல்லது பல பெயர்களில் தொக்கு வருமென்பர் தொல்காப்பியர். அவ்வாறு வருவதற்கு உதாரணங்கள் மு ன் னர் க் காட்டப்பட்டவற்றில் AD 6007 (B).
அன்மொழித் தொகை
அன்மொழி யெ ன் பது அல்+மொழி எனப்பிரிக்கப்படும். அல்+ வழி என்பது அல்வழியென வருவது போலக் கொள்க. அன்மொழி அல்லாத மொழியெனப் பொருள்படும். மற்றைய தொகைகளில் பெரும்பாலுந் தொக்குவரும் உருபு முதலியன இடையில்வரும். அன்மொழித் தொகையிற் தொகைப்பொருள் இறுதியிலேயே தொக்கு வரும். ஆதலால் சொல்லப்பட்டன அல்லாத மொழியிற் பொருள் சிறந்து நிற்பது அன்மொழித் தொகை யென்பது பொருத்த முடைத்தாகும். து டி யி  ைட என்னும் அன்மொழியில்துடியிலும் இடையிலும் பொருள் சிறந்து நிற்றலின்றி அத்தகைய இடையை யுடையாள் மேலேயே பொருள் சிறந்து நின்றது.
அன்மொழித் தொகை, தொலை மொழிகள் எனக் கூறப் பட்ட வேற்றுமைத்தொகை, வினைத் தொகை, பண்புத் தொகை உவமைத் தொகை, உம்மைத் தொகை ஆகிய ஐந்து தொகை இளையுந் தனக்கு நிலைக் களனாகக் கொண்டு வரும். அவ்வாறு அன்மொழித் தொகை பிறத்தலை உதாரண மூலங் காட்டுதும்,
徽222

มี ๑
வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிற ந் த அன்மொழித் தொகை,
பூங்குழல் வந்தாள் என்பது இதற்கு உதாரணமாகும். பூவை லணிந்த கு ழ லை யு  ைடய பெண் என்பது இதன் பொருளாகும். பூங்குழல் என்பது பூவையணிந்த கூந்தலைக் குறிக்கும் போது இரண்டாம் வேற்றுமைத் தொகை. அது பெண்ணைக் குறிக்கும்போது இர ண் டாம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாயிற்று. வினைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை தாழ்குழல் போனாள் என்பதற்குத் தாழ்ந்த குழலை யுடைய பெண் போனாள் என்பது பொருளாகும். தாழ் குழல் என்பது முதலில் தாழ்ந்த கூந்தல்ைக் குறிக் கிறது. எனவே வினைத் தொகைப்ாகும். பின்னர் அது பெண்ணைக் குறித்து வினைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாயிற்று. பண்புத் தொகைப் புறத்தும் பிறந்த அன்மொழித்தொகை, கருங்குழல் என்பது கருமைத்தாகிய கூந்தலைக் குறிக்கும் போது பண்புத்தொகை. அது கருங்குழல் வந்தாள் என்று வரும்போது கருங்கூந்தலையுடைய பெண்ணைக் குறிப்ப தால் பண்புத் தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித் தொகையாயிற்று. உவமத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை, பவழ வாய் வந்தாள் என்பதில் பவழவாய் என்பது பவழம் போலும் வாய்ைக் குறித்து உவமைத் தொகையாகும். அத் தொகையே பெண்ணைக் குறிக் கும் போது உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாயிற்று. உம்மைத் தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை. உயிர்மெய் யென்பது உயிரையும் மெய்யையும் குறிக்கும் போது உம்மைத்தொகை, உயிரும் மெய்யுங் கூடிப்பிறந்த உயிர்மெய்யெழுத்தைக் குறிக்கும் போது உம்மைத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித் தொகை யாயிற்று.
தொகைகளிற் பொருள் சிறந்து நிற்கும் இடங்கள்
தொகைகளிற் பொருள் சிறந்து நிற்கும் இடங்களை யு ம்
இலக்கண ஆசிரியர்கள் ஆ ரா ய் ந் தெடுத் தோதியுள்ளார்கள்.
223鬣

Page 121
தொகைகளிற் பொருள் முன்மொழியிற் சிறந்து நிற்றலும் பின் மொழியிற் சிறந்து நிற்றலும் இருமொழிகளிலும் பொருள் சிறந்து நிற்றலும் அவ்விரு மொழிகளிலும் பொருள் சிறவாது அன்மொழியிற் பொருள் சிறந்து நிற்றலு மெனப்பொருள் சிறந்து நிற்குமிடங்கள் நான்கு என்பர் தொல்லாசிரியர், அவரைப் பின்பற்றி நன்னூலாரும் பொருள் சிறந்து நிற்குமிடங்களை வகுத்துக் காட்டியுள்ளார்.
குடம் வனைந்தான் என்பதிற் குடம் என்பது தனக்கின மாகிய பானை சட்டி யென்பவற்றை விலக்கி நிற்றலால் முன் மொழியிற் பொருள் சிறந்து நின்றது.
நிலம் உழுதான் என்பதில் உழுதான் என்பது கொத்தினான் கிளறினான் என்னும் வேறு தொழில்களை விலக்கி நிற்பதால் உழுதான் என்னும் பின் மொழியிற் பொருள் சிறந்து நின்றது.
இராப்பகல் என்பது இரவும் பகலும் எனப் பொருள்பட்டு இரு மொழிகளிலும் பொருள் சிறந்து நின்றது.
பூங்குழல் என்பது பூவிலுங்குழலிலும் பொருள் சிறவாமல் பூங்குழலையுடையூாள் என்னும் அன்மொழியிற் பொருள் சிறந்து நின்றது.
இரட்டைக் கிளவி
முடிவுறாத சொற்றொடர்களில் இர ட்  ைட க் கிளவியும் ஒன்றாகும். இதையும் எச்சத்தொடர் என க் கொள்ளலாம். ஆனால் இரட்டைக்கிளவி முற்றுத் தோடர்க்குறுப்பாகி நிற்பது முண்டு. இரட்டைக் கிளவி யென்பது இரட்டைச் சொல் எனப் பொருள்படும். கிளவி சொல் என்பன மொழியின் பரியாய நாமங்கள், இரட்டைக் கிளவி பற்றித் தொல்காப்பியர் கூறிய நூற்பாவையே நன்நூலாரும் அனுவதித்து மொழிந்துள்ளர்.
'இரட்டைக் கிளவி இரட்டிற் பிரிந்திசையா" - (தொல் - கிள. 48) நன். பொ. து. 45) இரட்டைச் சொற்கள் அவ்வாறு இரட்டித்து வருதலில் நின்றும் பிரிந்து ஒலிக்கமாட்டா வென்பது இந் நூற்பாவின் கருத்து, இரட்டைக்கிளவியை வலிந்து பிரித்துக் கூறின் குறித்த பொருளைத் தராதாதலால் அது இரட்டித்து நிற்றலில் நின்றும் பிரிந்து ஒலிக்கமாட்டா தென்பது இவ்விரு இலக்கண ஆசிரியரிதங் கொள்கையுமாகும்.
224
 

- سامسس "" سسسسسسسسه
இரட்டைச் சொற்போல இரட்டைப் பிள்ளையென மனித ருள்ளும் இரட்டைக்குட்டி இரட்டைக் கன்று என விலங்கி னுள்ளுங் காண்கிறோம். இரட்டைப்பிள்ளை, குட்டி, கன்று ஆதியன தனித்தனியாகப் பிரிந்து நிற்கும். பிரிவதால் ஊறேதும் இல்லை. இரட்டைச்சொல் அவ்வாறு பிரிந்தால் ஊறுபடும். இரட்டைக் கிளவியை இவையிரட்டை பூவிரட்டை என்பவற் றோடு ஒப்பிட்டுப் பேசுவர் இலக்கணகாரர். அடுக்குந் தொடரும் இரட்டைக் கிளவியும் வந்த சொல்லே மீண்டும் வருதலால் இதனையும் அடுக்குத்தொடரில் அடக்கலாமோ வின்பதுவினா. அடுக்குத்தொடர் மக்களிரட்டையும் விலங்கிரட்டையும் போலத் தனித்தனி பிரிக்கப்பட்டும் ஒவ்வொன்றும் பொருள் கொடுத்து நிற்கும், இரட்டைக் கிளவி பிரிப்பின்றி இரண்டுஞ் சேர்ந்த ஆற்றலாற் பொருள் கொ டு த் து வ ரு ம். அது மட்டுமன்றி இரட்டைக் கிளவியில் வந்த சொல் இரண்டுமுறை வருவதே யன்றி யதற்குமேல் வராது. அடுக்குத் தொடர் ஏற்ற பெற்றி இரண்டல்லாது மூன்று நான்கு முறையும் அடுக்கிவரும். இவையே அடுக்குத் தொடருக்கும் இரட்டைக்கிளவிக்கு முரிய வேறுபாடாகும். இரட்டைக்கிளவி இசை பற்றியுங் குறிப்புப் பற்றியும் பண்பு பற்றியும் வருமென்பர். கடகடத்தது, சல சலத்தது என்பவை இசை பற்றி வந்தன. இவை கடகட வென்னும் ஒசையையும் சலசலவென்னும் ஓசையையும் புலப்
படுத்தி நிற்றலால் இசைபற்றி வந்தன. ○イ○? と 。
கறு கறுத்தது, பளபளத்தது என்பவை பண்பு பற்றி வந்தன, இங்கு பளபளத்தல் கறுகறுத்தல் என்னும் நிறவேறுபாடுகள் புலப்பட நிற்றலால் இவை பண்பு பற்றி வந்தன.
தட தடத்தார், கிறு கிறுத்தார் என்பன குறிப்புப் பற்றி வந்தன. குறிப்பு என்பது மனத்தாற் குறித்துணரப்படுவது என்பர் சேனாவரையர். தொல்காப்பிய உரியியல் முதலாஞ் சூத்திரவுரையில் சேனாவரைய்ர் கருத்தையறியலாம். இந்த நுட்பங்களை விளங்கி இசை, குறிப்பு பண்பென இரட்டைக் கிளவியைப் பாகுபாடு செய்யாமல் பண்பு என்ற ஒரு அளவு கோலில் மூன்றையும் அடக்குவது முறையாகும்.
பர பர என்ற இரட்டைக் கிளவியை எடுத்துக் கொண்டு அது முற்றுத் தொடரில் எவ்வெவ்வாறு பயன்படுத்தப் படுகிற
5 225 টুঞ্জ

Page 122
தென்பதைப் பார்ப்போம், பர பரத்தது என வினை முற்றாகவும் பர பரப்பு எனத் தொழிற் பெயராகவும் பர பரவென என்று வினையெச்சமாகவும் பர பரப்பானவெனப் பெயரெச்சமாகவும் ஆர்காணலாம். இப்படி இவற்றை ஏற்ற முடிக்குஞ் சொற்கள் தொடுத்து முற்றுத் தொடர் ஆக்கலாம். மற்றைய இரட்டைக் இளவிகளும் பல்வேறு வகையாகப் பயன்படுத்தப் படுகின்றன.
தொல்காப்பியரும் நன்னூலாரும் இரட்டைக் கி ள விக்கு இனமான இணைமொழித்தொடர் அடுக்கிடுக்குத் தொடர் என்ப வற்றையெல்லாம் இரட்டைக் கிளவியிலேய்ே அடக்கினர் போலும். இக்கால ஆசிரியர் சிலர் அவற்றைச்சிறுச்சிறு வேறுபாடு காரண மாத வெவ்வேறாக அடக்கிக் காட்டுவர். அவற்றை மேலே இவனிப்போம். -
துடி துடித்தது என்பதை இரட்டைக் கிளவிக்கு உதாரணங் காட்டிய உரையாசிரியர்கள் துடி துடித்தது என்பதில் பிள்ளை ilLU ġi) பிரிந்திசைக்குமாயினும் முன்னையது பிரிந்திசையாமையால் இரட்டைக் கிளவியேயா மென்பர். இத ன ஈ ல் அடுக்கிடுக்குத் தொடரெனக் கூறப்படுவன அனைத்தும் பின்னைய மொழிகள் பிரிந்திசைத்தாலும் முன்னைய மொழிகள் பிரிந்திசையாமை யால் அவையும் இரட்டைக் கிளவிகளேயென்பது நன்னூல் உரையாசிரியர்கள் கருத்தென்பது புல ன ரீ கி ற து, எனினும் இணைமொழிகளில் இரண்டும் பிரிந்திசைப்பதாலும் அவைமுன் மொழியும் பின்மொழியும் வேறுபட்டு நிற்றலாலும் அவற்றை இரட்டைக்கிளவி யென எவருங் கூற முற்படார். இந்நோக்கில் இருமொழியும் பிரிந்திசையாதன இரட்டைக் கிளவியெனவும் இரு மொழியும் ஒன்றுக்கொன்று இனமானவையாய் பிரிந்திசைப் பது இணை மொழியெனவும் முன்மொழி பிரிந்திசையாமலும் பின்மொழி பிரிந்திசைத்தும் வருவது அடுக்கிடுக்குத் தொடர் எனவும் ஒருமொழி இரு முறையும் இரண்டிறந்த பல முறையும் வருவது அ டு க் குத் தொடரெனவுங் கொள்வது பொருத்த மானதே.
இணை மொழித் தொடர்
ஓசை நயம் பற்றியுங் கருத்தாழம் பற்றியும் அடுத்தடுத்து வரும் இரு மொழிகளில் ஒன்றைப் போல மற்றொன்று இல்லாது போயினும் ஒன்றுக் கொன்று ஏதோ ஒருவகைத் தொடர்புபற்றி
鷲226

ஒத்துப்போகும் இரண்டு மொழிகள் இணைந்து வருவது இனி" மொழித் தொடராகும். ஒன்றுக் கொன்று எதிரான கருத் துடையனவாக வேனும் முன்மொழிப் பொருளைப் பின் மொழிப் பொருள் தெளிவு படுத்துவதாகவேனும் வந்து இருமொழியுஞ் சேர்ந்து சொல்லும் பொருளைத் தெளிவாக அழுத்தந் திருத்த மாக்குவது இணைமொழித் தொடரின் பண்பாகும்,
ஏறக்குறைய, கிட்டத்தட்ட, ஈடும் எடுப்பும் ஒளிப்பு மறைப்பு, விருப்பு வெறுப்பு, கொடுக்கல் வாங்கல், தங்கு தடை என்பன இணை மொழித் தொடர்க்கு உதாரணங்களாகும். ஏற என்பது ஒரு மொழி. குறைய வென்பது இன்னொருமொழி. இரண்டும் வேறுபட்ட பொருளுடைய வாயினும் தி ரி பி ன் றி இயைந்து இணைந்து வருகின்றன. அதனால் அவை இணை மொழிகளாகின்றன. இரட்டைக்கிளவிபோல வந்த மொழியே பின்னும் வருதலின்றியும் அடுக்குத் தொடர் போல பிரிக்கக்கூடி யே மொழிகளாக வந்த மொழியே பின்னும் வராமல் வேறுபட்ட மொழிகள் இணைவதால் இணை மொழியாயிற் றென்பதும் பொருந்தும். கிட்டத்தட்ட என்பதில் கிட்ட என்பது அண்மித் தலையும் தட்டவென்பது மேலே போதலையுங் குறித்தாலும் அவையிணைந்து ஒரு பொதுக்கருத்தை வெளிப்படுத்து கின்றன. இத்தொடர் குறிப்பிடப்படும் பொருளுக்கு அழுத்தத் தந்து நிற்ப தாகும் கிட்டத்தட்ட என்பதும் ஏறக்குறைய வென்பதும் ஒரு பொருளை அ ண் ண ள வா அ அ ல் ல து குத்து மதிப்பாகக்
காட்டுவதாகும்,
அடுக்கிடுக்குத் தொடர்
முன்மொழியும் பின்மொழியும் ஒன்றாகிப் பிரிக்கமுடியா திருப்பது இரட்டைமொழி. முன்மொழியும் பின் மொழியும் ஒன்றுக் கொன்று முரண்பட்ட வாயினும் ப டா த வா யி னும் இணைந்து நின்று பொருள் தருவது இ  ைண மொழி. ஒரு பொருளைச் சுட்டும் இரு மொழிகளில் முதலில் வரும் மொழி விகாரப்பட்டு இரண்டாவது மொழியோடியைந்து இரண்டாவது மொழியின் பொருளை மிகுத்துக் காட்டுவது அடுக்கிடுக்குத் தொடராகும். கன்னங்கரிய என்பதை அடுக்கிடுக்குத் தொடர் என்பர். கன்னம் என்பது இரண்டாவது வருங் கரிய என்னும்
227鬣

Page 123
மொழியின் திரிபாகும். இவை அடுக்கிவரினும் அவற்றிடையே இடுக்குப்பாடுநேர்ந்து வருதலால் அவற்றை அ டு க் கி டு க் குத் தொடர் என்றனர் போலும்
அண்ணணித்து என்பதில் அணித்து என்னும் மொழியின் திரிபே அண் எனமுன்நிற்குங்குறை மொழியாகும். இவையி ரண்டுஞ் சேர்ந்து மிக அணித்து என்னும் பொருள்ைத் தருகின் றது இத் தொடர். செக்கச்சிவந்த என்பதிலும் சிவந்த சிவந்த என்னும் இருமொழிகளில் முதன்மொழி செக்க எனவந்து சிவந்த என்பதனோடடுக்கி மிகச் சிவந்த என்னும் பொருளைத் தந்தது. இவ்வாறே நடு நடுங்கி, பென்னம் பெரிய, வெட்டவெளி என்பனவும் அடுக்கிடுக்குத் தொடராமாறு கண்டு கொள்க.
அடுக்குத் தொடர்
ஒரு சொல் எவ்வகை மாற்றமும் இல்லாமல் அடுக்கி வரு மாயின் அது அடுக்குத் தொடர் எனப்படும். பெரியபெரிய என்பது அடுக்குத் தொடர். அது பென்னம் பெரிய என வரும்போது அடுக்கிடுக்குத் தொடராகும். சிறிய பெரிய என வரின் இணை மொழித் தொடராகும். இவ்வேறுபாடுகளை உணர்ந்து கடைப் பிடிப்பது அவசியம். இரட்டைக் கிளவி, இணைமொழி, அடுக் கிடுக்குத் தொடர் என்பவற்றில் அடுக்கு இரு முறை மட்டுமே வரும். ஆனால் அடுக்குத் தொடரில் அடுக்கு இரு முறை, மும் முறை, நான்முறையும் வரும். எவ்வெவ்விடங்களில் அவை இரு முறை, மும்முறை, நான்முறையடுக்கும் என்பதற்கும் இலக்கண ஆசிரியர்கள் வழிகாட்டியுள்ளனர். நன்னூலார் அடுக்குத்தொடர் பற்றிக் கூறும்போது,
"அசைநிலை பொருணிலை யிசை நிறைக் கொருசொல் இரண்டு மூன்று நான் கெல்லைமுறை யடுக்கும்"
- (நன். பொது 44) என்பர். அசை நிலையில் வரும்போது இரண்டுமுறை அடுக்கு வதும் வொருள் நிலையில் வரும்போது இரண்டு அல்லது மூன்று முறை அடுக்கி வருவதும், இசை நிறையில் வரும்போது இரண்டு அல்லது மூன்று அல்லது நான்கு முறை அடுக்கிவருவதும் இலக் கண முடிபாகும்.
அன்றே அன்றே - அசை நிலையில் இரு முறை அடுக்கி வந்தது. இது செய்யுளில் ஓசையை நிரப்பவரும் பொருளில்லாத சொற் பிரயோகம்,
鐵828

பொருள் நிலை என்பது விரைவுப் பொருள், கோபப்பொருள் அச்சப் பொருள் முதலியனவாகக் கொள்ளப்படும்.
உண்டேன் உண்டேன் - இங்கு விரைவுப் பொருள் பற்றி இரு முறை அடுக்கி வந்தது,
போ போ போ. இங்கே விரைவுப் பொருள் பற்றி மும்முறை அடுக்கி வந்தது.
எய் எய் எனவும், எறி எறி எறி எனவும் கோபப் பொருளில் இரு முறையும், மும்முறையும் அடுக்கி வந்தன.
வாழ்க வாழ்க வருக வருக வருக என மகிழ்ச்சிப் பொரு ளில் இரு முறையும் மும்முறையும் அடுக்கி வந்தன.
பாம்பு பாம்பு; தீ தீ தீ என அச்சப் பொருளில் இரு முறை யும் மும்முறையும் அடுக்கி வந்தன.
"ஏ ஏ யிவளொருத்தி பேடியோ வென்றார்" இங்கு இசை நிறையில் இரு முறை அடுக்கி வந்தது.
"நல்குமே நல்குமே நல்குமே நாமகள்" இங்கு இசை நிறை யில் மும்முறை அடுக்கி வந்தது.
பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ இங்கு இசை நிறை யில் நான்கு முறை அடுக்கி வந்தது.
ஆசிரியரி தொல் காப்பியர் அடுக்குத் தொடர் பற்றிக் கூறு வதையும் ஒப்ப நோக்குதல் பொருத்த முடைத்து. அவர் அடுக்கு மொழி பற்றிக் கூறிய நூற்பா வருமாறு
"இசைநிறை யசைநிலை பொருளொடு புணர்தலென்
றவைமூன் றென்ப வொருசொல் லடுக்வே"
(தொல், எச், 15) "இசை நிறையும் அசை நிலையும் பொருள் வேறுபாட்டோடு புணர்வதுமென ஒரு சொல்லடுக்கு அம்மூன்று வகைப்படும் " என்பது அச்சூத்திரத்திற்குச் சேனாவரையர் கூறிய உரையாகும். "ஏ ஏ ஏ ஏ அம்பல் மொழிந்தனள்" என்றது இசை நிறை மற்றோ மற்றோ அன்றே அன்றே என்பன அசைநிலை,
229囊

Page 124
பாம்பு பாம்பு அவன் அவன்; வைதேன் வைதேன்; உண்டு உண்டு போம் போம் என்பன முறையானே விரைவும் துணிவும் உடம்பாடும் ஒரு தொழில் பல்கால் நிகழ்தலுமாகிய வேறுபாடு உணர்த்தவிற் பொருளொடு புணர்தல் என்பர் சேனாவரையர், தொல்காப்பியர் இசை நிறையடுக்கின் உச்ச எல்லை நான்காகும் என்பர். விரைசொல்லடுக்கு அதாவது பொருளொடு புணர்தல் என்னும் அடுக்கு மூன்று வரம்பாகும் என்பர். அதுை நிலையடுக் குப் பற்றியுந் தொல்காப்பியர் கூறியுள்ளார். அடுக்குத் தொடர் பற்றித் தொல்காப்பியர் கருத்துக்கும். நன்னூலார் கருத்துக்கும் அதிகம் வேறுபாடில்லை எனலாம்.
குசேலோ பாக்கியான நூலாசிரியர் வல்லூர்த் தேவராசபிள்ளை
வீரைசொல்லடுக்கின் எல்லை யைத் தமது நூலில் அழகாகப் பயன்படுத்தியுள்ளார். குசேலர் கண்ணன் தரிசனம் பெறக் காத் திருப்பதைத் தூதுவர் மூலம் அறிந்த கண்ணன் சொன்னதாகத் தூதுவர் மீண்டு வந்து குசேலரிடங் கூறியபோது, " போயழைத் திடுமினின்னே போயிழைத் திடுமினின்னே போயழைத் திடுமி னின்னே என விரை பொருளிற் சொற்றான்" எனக் கூறிவிட்டு மேலுங் கூறுகையில், இலக்கணமின்மை நோக்கி இதற்கு மேற் சொற்றானல்லன் என்கின்றனர். 'விரை சொல்லடுக்கு மூன்று வரம்பாகும்" என்பது இலக்கணமாதலால் அதற்கு மேற் சொல் வது வழுவாகுமென்று கொண்டு நான்காவது அல்லது அதற்கு மேற்பட்ட தரங் கூறினானல்லன் என்பது அவர் கூற்று.
தனிச்சொல் அடுக்கி வருவதேயன்றிச் சொற்றொடர் அடுக்கி வருமென்பதும் குசேலோ பாக்கியானத்தாற் பெறப்படுகிறது. உறங்குவாய் ' உறங்குவாய் இனிக் கிடந்துறங்குவாய் " என வருங் கம்பராமாயாணத்தில் மூன்று வரம்பாக வரும் பொரு னிலை படுக்கின் இடையே " இனிக் கிடந்து " என்னும் பிற மொழித் தொடர் வந்தும் அவ்வடுக்குத் தொடரின் அழகு மேலும் ஒருபடி கூடியிருப்பதும் ஈண்டுச் சிந்திக்கத்தக்கது. இதை இடை யிட்ட அடுக்குத்தொடர் எனக் கூறலாம். போ போ ஓடிப் போ எனவும், போ போ ஒடி ஒடிப் போ எனவும் வருவது காண்க.
மரபுச் சொற்றொடர்
மரபுச் சொற்றொடர் என்பது பேச்சு வழக்கிலும், நூல் வழக்கிலும் மொழிக்கு அழகு தந்து பொருளைக் குறிப் பால்
盪230

-----
உணர்த்துவதாகும். இச்சொற்றொடரிகள் இன்னாராலாக்கப் பட்டன என்றில்லாமல் வழக்கிற் புகுந்து வழங்கிவருவன. ஆகு பெயர் போலவே மரபுத் தொடரையுந் தொன்றுதொட்டு வழங்கி வருவதெனக் கூறலாம். மரபுத் தொடர்க்கு இலக்கிணைத்தொடர் என்றொரு பெயருமுண்டு. இது இலக்கணத்துக்குப் புறம்பான தாயினும் இலக்கணத்தை விட்டு நீங்காததாதலால் ஏற்றுக்கொள் வப்பட்டது. இத்தொடர்கள் பொருளை நேரே புலப்படுத்தாமல் சிந்திக்க வைத்துக் குறிப்பால் பொருளுணர நிற்பனவாகும். முகத் தில் கரி பூசிவிட்டான் என்றொருவன் கூறும்போது அவன் முகத் தில் கரி பூசப்பட்டிருக்கிறதா என நாம் சிந்திக்க மாட்டோம். ஆனால் ஏதோ ஒருவகையில் அவனை அவமானப்படுத்திவிட்டான் எனவே உணர்வோம். ஒற்றைக்காலில் நிற்றல் என்ற மரபுத் தொடரை எடுத்துக்கொள்வோம். இது இலக்கணத் தொடராக இருந்தால் இரண்டு இாலிருந்தும் ஏதோ ஒரு காரணத்தால் மறு கால் பழுதுபட்ட நிலையில் ஒரு காலில் நிற்றலையே குறிக்கும். ஆனால் உலக வழக்கில் இத்தொடர் குறிக்கும் பொருள் இதுவன்று. இடைவிடாது முயல்வதையும். பிடிவாதமாக நிற்றலையும் ஒற்றைக் காலில் நிற்றல் என்கிறோம். இது நேர்ப் பொருளை விட்டுக் குறிப்புப் பொருளைப் பாரம்பரியமாக உணர்த்தி வருதலால் இதனை மரபுத் தொடர் என்கிறோம்.
குறிப்பாகப் பொருளையுணர்த்துவது மேடைப் பேச்சிலும் பேச்சு வழக்கிலும் பெரிதும் வேண்டப்படுவது. பேச்சில் சுவைய்ையுண்டாக்குவதற்கும் அழகும் பொலிவும் ஏற்படவும் மரபுச் சொற்கள் பெருந்துணைபுரிவன. தமிழ்மொழியிலுள்ள மரபுசி சொற்றொடர்கள் பல நூற்றுக்கணக்கானவை. தமிழ் மொழியின் செழுமைக்கும் இயல்பான இலக்கிய நயத்திற்கும் இம்மரபுத் தொடர்கள் எடுத்துக்காட்டாவன.
இத்தொடர்களில் ஒரு சிலவற்றை மாத்திரம் இங்குத் தருவது பொருத்தமாகும். உடல் உறுப்புக்களில் ஒவ்வொன்றையும் பற்றிப் பல்வேறு மரபுச் சொற்றொடர்கள் வழங்குகின்றன.
தலை பற்றியன
மரபுத்தொடர் பொருள் விளக்கம் தலைக்கேறுதல் செருக்குக் காட்டுதல் திலே காட்டுதல் மறைப்பு வெளிப்படுதல் தலை கீழாய் நடத்தல் முறைதவறிச் செல்லுதல்
231鯊

Page 125
தோள் பற்றியாை தோள் கொடுத்தல் தோளிலிருந்து செவியைக் கடித்தல் பல் பற்றியவை
பல்லிளித்தல்
பல்லைக் கிடித்தல்
நா பற்றியவை தாக்கு நீளுதல் நாக்குத் தெறிக்கப் பேசுதல் முகம் பற்றியவை முகங் காட்டுதல் முகங் கோணுதல் வயிறு பற்றியன வயிற்றிலடித்தல் வயிற்றைக் கலக்குதல் வாய் பற்றியன வாய் காட்டுதல் வாயில் மண்போடுதல் செவி பற்றியன செவிமடுத்தல் செவிசாய்த்தல்
பற்றியன கழுவுதல்
தருதல்
பொறுப்பேற்றல் ஆதரிப்பவனை வஞ்சித்தல்
கெஞ்சுதல் மிகு துன்பந் தருவதைச் சகித்தல்
அளவு கடந்து பேசுதல் அன்பரை வைதல்
இானவெளிப்படுதல்
வெறுப்பை வெளிப்படுத்துதல்
வாழ்வைக் கெடுத்தல் மிகப்பெருங் கிலேசமடைதல்
எதிர்த்துப் பேசுதல் அன்பருக்குத் தீங்கிழைத்தல்
விருப்புடன் கேட்டல் இணக்கத்தோடு கேட்டல்
தொடர்பை விட்டுவிடுதல் உதவி செய்தல்
இங்குக் கூறப்பட்ட உறுப்புப் பற்றிய மரபுத் தொடரிகள்
மேலும் பலப்பலவுள்ளன.
கூறப்படாத
உறுப்புக்கள்
பற்றி
யனவும் பலவாகும். உறுப்புக்கள் பற்றியல்லாது வரும் மரபுத்
தொடர்களும் பலவாகும். பலவுள. ஆண்டுக் காண்க.
பழமொழித் தொடர்
பழமொழிகளும் நம்
மரபுத்தொடர் சார்ந்த நூல்களில்
நாட்டில் தொன்றுதொட்டு வழங்கி
வருவன. பதினெண் கீழ்க் கணக்கு நூல்கள் எழுந்த காலத்துக்கு
藥232

முன்பிருந்தே பழமொழிகளின் தேவை தமிழறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது. சங்கம் மருவிய கால இலக்கியம் எனக் கருதப்படும் கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்று பழமொழி பென்பது முன்னுறையரையர் GTGü"LjGhi [yrrë) இயற்றப்பட்ட இந்நூலில் நானூறு செய்யுள்கள் உள. அச்செய்யுள்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பழமொழியை ஆசிரியர் பயன் படுத்தியுள்ளார். பழமொழிகள் மொழி வளர்ச்சிக்கும் ஒழுக்கப் பண்பாட்டு வளர்ச்சிக்கும் மிகமிகப் பயன்படுவன.
நம்நாட்டில் ஆயிரக்கணக்கான பழமொழிகள் வழக்கில் உள்ளன. அவற்றையெல்லாந் தொகுத்து ஒரு நூலை வெளிப் படுத்தினாற் கூட அது பெரிதும் பயன்படும் என்பதில் ஐயமில்லை. பழமொழிகள் பழைய மொழிகளாகவும் இருக்கலாம். ஆனால் அவை பழுத்துக் கனிந்த மொழிகள். அவற் றி ன் சிறப்பை உணர்ந்து கொள்வதற்கு ஒரு சில பழமொழிகள் மட்டும் இங்குத் தரப்படுகின்றன. முன்னரே பல்வேறு பழமொழிகள் பல்வேறு ஆசிலியர்களால் வெளியிடப்பட்டுள்ளன. பழமொழிகள் பற்றி அந்நூல்களில் அறிந்து கொள்க,
பழமொழிகள் படித்தவர்கள் நாவில் மட்டுந் தவழ்பவை வல்ல பாமரரும் பழமொழிகளை ஏற்ற இடமறிந்து பயன் படுத்தித் தாங்கள் சொல்லக் கருதிய பொருளைக் கேட்போர் மனதில் இலகுவாகப் பதியச் செய்து விடுகின்றனர். பழமொழி களிற் சில வழுமொழிகளாகவும் உள்ளன. அவற்றின் வழுக் இளைந்து அவை எவ்வாறிருக்க வேண்டுமென எடுத்துக்காட்டிய அறிஞர்களும் உளர். அவற்றில் ஒரு பழ மொழியை மட்டும் இங்கு எடுத்துக் காட்டலாம். தாயைப் பழித்தாலுந் தண்ணீரைப் பழியாதே" என்பது இன்று வழக்கிலுள்ள ஒரு பழமொழி. பழிக்கப்படத் தகாதவர்களில் தாய் முக்கியமான ஒருவரென் பதை எவரும் மறுக்கத்துணியார். ஆனால் அத்தகைய ளாகிய தாயைப் பழித்தாலுந் தண்ணீரைப் பழியாதே என்பது அப்பிழை மொழியின் பொருளாகும். தண்ணீரைப் பழியாதே யென்ற பழமொழிப்படி தண்ணீரில் சுத்தம் அசுத்தம் என்பன கருதாது - அதனைப்பழிக்காது பயன்படுத்துவோமானால் அது எத்துணை ஏதந் தருமென்பதை எவருமறிவர். இப்பிழை மொழி தாயைப் பிழைத்தாலுந் தண்ணிரைப் பிழையாதே' யெனப் பழமொழி
233鬣

Page 126
யாக இருக்கவேண்டு மென்பர். பிழைக்கக் கூடாத தாயைப் பிழைத்தாலுந் தண்ணிருக்குப் பிழை செய்து விடாதே என்பது அப்பழமொழியின் அறிவார்ந்த பொருளாகும், பழமொழிகளை இடமறிந்து பயன்படுத்துவது அவசியம். வழக்கிலுள்ள சில பழ மொழிகளை இனிக் காண்போம்.
l
8.
4.
7.
8.
9.
0.
1 Ιο
14
}5.
6.
17.
18
9.
தன் முதுகிற் புண்ணுந் தன்மனையாள் குற்றமுந் தன் கண் ணுக்குத் தோன்றா. அரைக் கொத்தரிசி அன்னதானம்; விடியவிடிய மேளம். அறையில் ஆடியல்லவா அம்பலத்தில் ஆடவேண்டும். அற்பனுக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியிற் குடை
பிடிப்பான் அரைக் காசுக்குப்போன மானம் ஆயிரம் பொன் கொடுத்
தாலும் மீளாது ஆயிரம் பனையுள்ள அப்பனின் மகனுக்குப் பல்லுக்குத்த
ஈர்க்கில்லை, இரவற் புடைவையில் இது நல்ல கொய்யகம். உப்பிட்ட பண்டமும் உபாயமுள்ள நெஞ்சமுந் தட்டியுடை
யாமல் தானேயுடையும். உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா? தலையிடியுங் காய்ச்சலுந் தனக்குத் தனக்கு வந்தால்
தெரியும் நக்குகிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்க மென்ன? பகலிற் பக்கம் பார்த்துப் பேசு இரவிலானால் அதுவும்
பேசாதே.
பாட்டு வாய்த்தாற் கிழவியும் பாடுவாள் மாமியுடைத்தால் மண்சட்டி மருமகள் உடைத்தாற்
பொன்கட்டி, பொரி மாவை மெச்சினrன் பொக்கைவாயன், மழைக்காலிருட்டானாலும் மந்தி கொப்பிழக்கப் பாயாது. முக்காலுங் காகம் முழுகிக் குளித்தாலும் வெள்ளைக்
கொக்காகுமா? வைத்தாற் குடுமி சிரைத்தால் மொட்டை வேண்டாப் பெண்டிர் கை பட்டாற் குற்றம், கால்
பட்டாற் குற்றம்.
囊234

20. விளக்குமாற்றுக்குப் பட்டுக் குஞ்சமா? 21. குடிப்பது தண்ணீர் கொப்பளிப்பது 28. ஆடத்தெரியாத தேவடியாள் அரங்கு கோணலென்பாளாம் 23. தாயைப்போல பிள்ளை நூலைப்போல சீலை 24. ஆர் ஆத்தாள் செத்தாலும் பொழுது விடிந்தாற் தெரியும். 25. பாம்பறியும் பாம்பினது கரல்,
பழமொழிகளை மேலும் தேடிப் பிடித்துப் பயிற்சி பண்ணு வது தமிழறிவு வளரப் பெரிதும் உதவும்.
ஒல பழமொழிகள் திருத்தமுடியாதவையாக இருப்பதையுங் காண்கிறோம். இவை பற்றியுஞ் இந்திப்பது நல்லது. கொன்றிடப் பாவந்தின்றிடத் தீரும்" என்பது அவ்வகைக்கு ஒரு உதாரண மாகும். அதாவது கொலையைச் செய்வதனால் உண்டாகும் பாவம் அக்கொல்லப்பட்ட பிராணியின் உடம்பைத் தின்பதால் நீங்கிவிடும் என்பது இதன் கருத்தாகும் - மக்களைத் தீயவழியிற் செல்லத்தூண்டும் இப்புது மொழி பழமொழிகளுள் ஒன்றாக வைத்தெண்ணப்படத் தக்கதன்று. ஆனால் களவெடுத்தாலும் பொய்சொல்லாதே என்னும் பழமொழி களவெடுக்கத்தூண்டுவ தாகக் கொள்ளமுடியாது. களவெடுத்தாலும் என்பதிலுள்ள உம்மையிடைச்சொல் களவெடுக்கக் கூடாது என்பதை வலி யுறுத்தி நிற்கிறது. பொய் சொல்லுதல் என்ற தீய செயலொன் றிற்கு மற்றொரு தீய செயல் மூலம் அதன் அளவுகடந்த தீமை விளங்கச் சொல்லியிருப்பதால் இப்பழமொழி தள்ளி வைக்கத் தகுந்ததன்று "கொன்றிடப் பாவற் தின்றிடத் தீரும் என்னும் இதாடர் மொழி கொலை புலாலுண்ணல் என்னும் இரு தீச் செயல்களிலும் ஈடுபடத்தூண்டுவதால் அது கொள்ளத்தக்க தன்று.
உவமைத் தொடர்கள்
தொல்காப்பியரி உவமை என்னும் ஓரணியையே தமது பெருநூலுட் கூறியுள்ளார். இந்த உவ  ைம யணி யொன்றி லிருந்தே மற்றைய அணிகளெல்லாம் பிறப்பனவென்பர். தமிழ் இலக்கியங்களின் சிறப்புக்கு உவமையின் பங்களிப்பு மிகமிகப் பெரியது. உண்மைப் பொருளைக் கண்டறிய உதவும் காட்சி முதலாய அளவைகளில் உவமையும் ஒன்றென்பார் சிலர்: ஆப்
335鬣

Page 127
போன்றது ஆமா என்று அறிந்தா னொருவன் காட்டு வழிய்ே சென்றக்கால் ஆப்போலும் விலங்கு ஒன்றினைக் கண்டு அது ஆமா வெனத்துணியும் என்பர். உவமைத்தொடர்களை அவற் றின் பொருளை நன்கு விளங்கிப் பயன்படுத்துவதே அத்தொடர் களின் பொருளைச் சிதையாமல் வைத்திருக்கும் வழியாகும். அல்லாக்கால் ஆப்பிழுத்த குரங்குபோல இடர்ப்பட நேரிடும் என்க. உவமைத் தொடர்களும் உலக வழக்கிலுஞ் செய்யுள் வழக்கிலும் பலப்பலவுள்ளன. இங்குச் சில உவமைத் தொடர் களை மட்டும் எடுத்துக் காட்டுதல் சாலும்,
1. அடியற்ற மரம் போல 2. அத்தி பூத் தா ற் போல * அழிலிடைப்பட்ட மெழுகு போல 4. ஆடியோய்ந்த பம்பரம் போல 5. ஆலையில் அகப்பட்ட கரும்பு போல 6. ஆப்பிழுத்த குரங்கு போல 7, இடியோசை கேட்ட நாகம் போல 8- இரண்டு தோணியிற் கால் வைத்தது போல 9. உடுக்கை இழந்தவன் கை போல 10. உருத்திராக்கப் பூனை போல 11. எடுப்பார் கைப்பிள்ளை போல 12, ஏவற்பேய் கூரையைப் பி டு ங் கி யது போல 18, ஒடும் புளிய்ம் பழமும் போல 14. ஓரச்சிலே உருக்கி வார்த்தாற் போல 15. கடல் மடை திறந்தாற் போல 16. கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல 17. காட்டில் எறித்த நிலாப் போல 18, காய்ந்த மாடு கம்பிலே விழுந்தது போல 19, குளிக்கப் போய்ச் சேறு பூசியது போல 20. கூலிக்கு மாரடிப்பது போல 21. சர்க்கீரைப் பத்தரில் தேன்மாரி பெய்தாற் போல 22 வட்ட வட்டத் தோசை போல 23, எரிந்து வீட்டில் தூண் போல 24, யானைக் கூட்டத்தில் சிங்கம் போல 25, மலையின் மேல் மயில் வீழ்ந்தது போல,
சில உவமைத் தொடர்களும் காலகதியில் திரிந்து பிழையாக வழங்கப்படுகின்றன. சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி பெய்தாற் போல எனவரும் உவமைத் தொடரி பிழையானது என்பர். சரிக்கரைப் பந்தரில் தேன் மாரி பெய்வதில்லை. ஆனால் பெய்தால் அது போலவென இல்பொருள் உவமையாக அதனைக் கொள்வாரும் உளர். ஆனால் அவ்வுவமைத் தொடர் "சர்க்கரைப் பத்தரில் தேன்மாரி பெய்தாற் போல’ என்றிருந்தால் அதன் பொருள் தெளிவாகும் என்பார் சிலர். ஆலையில் கருப்பஞ்சாறு
擲236

@
போலத் தெரிகிறது. தொடர்மொழிப் பொருளை உணர்த்தும் ஒரு மொழி
ஒரு நிலையும் மொழி
டும் வழி பத்தர் எனப்படுதலால் அது பொருத்தமுடையது
பல சொற்கள் சேர்ந்து வருந் தொடர்மொழியின் பொருளை
மொழியால் அல்லது இருமொழியால் உணர்த்தக் கூடிய
வழக்கிலுள்ளது. தமிழ்மொழியில் இத்தகைய
மொழிகள் பலவுள. அவற்றிற் சிலவற்றை இங்குக் காண்போம்.
.
C.
அங்கதம்
அந்தப்புரம்
அநாதர்
ஆட்டாவதானி
சதாவதானி
சுருங்கை
பஞ்சமா பாதகம்
L Ir a9f6292 A09
நொதுமில் பட்டிமண்டபம்
வெளிப்படைப் பொருளில் புகழ்ந்தும் ம  ைற மு கீ மா க இகழ்ந்துங் கூறுவது. அரண்மனையில் மகளிர் தங்கு தற்கமைந்த தனியிடம். ஆதரிப்பதற்கு எ வ ரு மற் ற நிலையிலுள்ளோர். ஒரே சமயத்தில் எட்டு விடயங் களை அவதானிக்க வல்லவன். ஒரே நேரத்தில் நூறு விடயங் களை அவதானிப்பவன். நிலத்தின் கீழ் அமைக்கப்படும் இரகசிய வழி. பொய், கொலை, களவு, கள்ளு, அாமம் என்பன. ப  ைக மே ற் சென்ற வரசன் படையுடன் தங்குமிடம், நட்பும் பகீையுமற்ற நிலை, சமயவாதிகள் கூடி விவாதிக்கு மிடம்,
ஒட்டிய சமயத் துறுபொருள் வாதிகள் பட்டி மண்டபத்துப் பாங்கறிந் தேறுமின்" - என
மணிமேகலையில் வருவது எனவும் வழங்கும். சிறுபட்டியென்துே கட்டுக்கடங்காதவனைக் குறிப்பதாகக் கலித்தொகை கூறும் பட்டி என்பது வித்துவ சபைய்ைக் குறிக்கும். அது போல முழுமகன் என்பது மூடனைக் குறிப்பதுங் காண்க
காண்க. இது பட்டிமன்றம்
237徽

Page 128
Y.
2.
3.
4.
5.
6
7.
8.
29.
20.
fel
署署。
&3。
வெள்ளிவிழா
பொன்விழா
வைரவிழா
மெய்ப்பாடு
நூன்முகம்
அணிந்துரை
தீர்க்க தரிசி
நாத்திகன்
ஆத்திகன்
புருடார்த்தம் வடக்கிருத்தல்
வஞ்சிப்போர்
வெள்ளோட்டம்
懿238
இருபத்தைந்தாவது ஆ ன் டு முடிவில் எடுக்கும் விழா, ஐம்பதாண்டு முடிவில் எடுக்கும் விழா, அறுபதாண்டு முடிவில் எடுக்கும் விழா
உள்ளத்தே நிகழும் உணர்ச் சிகள் புறத்தார்க்குத் தோன்று மாறு மெய் ( உடம்பு ) யில் தோன்றும் வேறுபாடு. நூலாசிரியர் தா மிய நீ றி ே நூலைப் பற்றி மு த லி ற்
கூறுமுரைe நூலைப் பற்றி நூல் செய் யாதவரால் எழுதப்படும் புகழ்ந் துரை. இது புறவுரை, தந்துரை புனைந்துரையெனவும் படும். எதிர்கால நிகழ்ச்சிகளையறியும் ஆற்றல் படைத்தவன். கடவுள் இ ல்  ைல கொள்கையுடன் வாழ்பவன்,
கடவுட் கொள்கையுடையவன்.
என்ற
அறம், பொருள் இன்பம், வீடு, உயிரை விடும் எண்ணத்துடன் வடதிசை நோக்கி 2lୱୟଂ ଶମ୍ଭୁ மறுத்திருத்தல் (தற்கொலை முறைகளில் ஒன்று) மண்ணாசை கொண்ட ஒரு மன்னன் மேல் அவனையடக்கும் நோக்குடன் பே ா ர் மேற் செல்லுதல். புதிதாகச் செய்த தேர் முதலிய வற்றை முதன்முதலாக ஒட்டிப் பார்த்தல்,

24. மெய்க்கீர்த்தி - கல்லில் அல்லது செப்பேட்டில்
பொறிக்கப்படும் புகழ். - உரிமை கொண்டாடுவதற்குச் FIT595 on எழுத் துரு வில் அமைந்த உறுதி. இங்குக் காட்டிய தொடர்மொழிகள் மட்டுமல்லாமல் தமிழில் வழங்கும் அழகிய சொற்றொடர்கள், நொடிகள், விடுகதைகள் முதலிய பலவுள்ளன. அவற்றையெல்லாம் விரிப்பிற் பெருகும்.
25. ஆவணம்
4. பொதுவியல்
பொதுவியல் விளக்கம்
நால் வகைச் சொற்களாகிய பெயர் வினை, இடை உரி ன்பவை சார்ந்த இயல்களிற் கூறப்படாதவையாயும் ஒன்றிற்கு உடும் உரித்தாகாமல் இரண்டு முதலியவற்றுக்கு உரியனவாயு முள்ள இலக்கணங்களைக் கூறுதலால் இவ்வியல் பொது வி ய லாயிற்று. உதாரணமாக வழுவமைதி என்பதை எடுத்துக்கொள் வோம். இது பெயர், வினை முதலாய அனைத்துச் சொற்களுக் கும் உரியது. அதனால் இதனைப் பெயரிச்சொல்லியல், வினைச் சொல்லியல் என்பவற்றுக்கும் இடைச் Gymrái) Gő7aLuđio, priėjo odego mrd) லியல் என்பனவற்றுக்கும் இடையே வைப்பது பொருத்தமாகும். நன்னூலாரும் அவ்வாறே பெயரியல் வினையியல் முடிந்து இடைச் இ. உரிச்சொல் தொடங்குவதற்கு முன் வைத்துள்ளார். தொல்காப்பியர் இதனை நால்வகைச் சொற்களின் இலக்கணங் களுங் கூறி முடித்த பின் சொல்லதிகார இறுதியியலாக எச்சவியல் பெயர்கொடுத்து வைத்துள்ளார். மற்றைய இயல்களிற் சொல்லாது எஞ்சி நின்றவற்றை எல்லாம் அவர் எச்சவியலுள் வைத்துள்ளார். அவர் எச்சயவிலெனப் பெயரிட்டதும், இறுதி யில் வைத்ததும் பொருத்தமானதே.
இங்குப் பொதுவியலிற் கூறப்படுவனவும் எஞ்சி நின்றனவே யாயினும் பொதுவானவை என்பதை வற்புறுத்தும் நோக்கமாகப் பொதுவியல் நடுவே வைக்கப்பட்டது. இவ்வியலுட் பொதுவான
239獵

Page 129
வற்றை மட்டுமன்றி அவ்வவ்வியல்களுக்குத் தனித்தனி உரிமை யானவற்றுள்ளும் கூறப்படாதனவற்றையுங் கூறவேண்டிய அவசிய முள்ளது" வழுவமைதியை முதலில் எடுத்துக்கொள்வோம்.
வழாநிலை, வழுவமைதி, வழு
திணை, பால், இடம், காலம், வினா, விடை, மரபு என்னும் ஏழும் மயங்கி வரும்போது வழுவெனப்படும். மயக்கம் என்பது உடனிலை மெய்ம்மயக்கம் முதலியவற்றில் ஒத்துப்போதலையும் இவ்விடத்து ஒத்துப் போகாமையையுங் குறிப்பதாகும். இவை மயங்காமல் வரும்போது வழுவற்றவையாகும். வழுவற்ற நிலையே வழாநிலையாகும். வழா நிலையே இலக்கணத்துக்கு அமைந்த தாகும். அவன் வந்தான் என்ற முற்றுத்தொடரில் அவன் என்ற உயர் திணையாண்பாற் சொல் வந்தான் எ ன் ற உயர்திணை ஆண்பால் வினைமுற்றைத் தழுவி நிற்பதால் அது வழா நிலை எனப்படும். அவன் வந்தான் என்பதை அவன் வந்தது என்று கூறினால் அது திணை மயக்கமாகும். உயர்திணை எனப் படும் அவன் அஃறிணை எனப்படும் வந்தது என்பதோடு மயங் கியதால் திணை மயக்கமாயிற்று. இதனை அவன் வந் தா ள் என்று கூறினாற் பால் வழுவாகும். அவன் வந்தேன் என்பது இட வழுவாகும். அவன் படர்க்கைப் பெ ய ர T க வும், வந்தேன் என்பது தன்மை வினைமுற்றாகவும் வந்ததால் இட வழுவாயிற்று. நாளைவந்தான் என்பது காலவழு. இங்கு வந்தவன் ஆணோ பெண்ணோ என்பது வினா வழு. வந்தவள் என்னும் போது பெண் என்பதறியப்பட்டுப் பின்னும் ஆணா பெண்ணா என ஐயமெழுப்புவது இலக்கண மன்றாதலால் அது வினா வழு வாகும். இவன் யார் என்னும் வினாவுக்கு இவன் ஆணல்லன் என விடையிறுத்தால் அது விடை வழுவாகும். இது வினாவின் மூலமே அறியப்பட்ட ஆண்பாலை விடையளிப்போனும் உடன் பட்டுப் பின்னர் மறுதலிப்பது பொருந்தாமையால் அது விடை வழுவாயிற்று. ஆடு மேய்ப்பானை இடையன் என்னாது பாகன் என்றலும், ஆட்டுப் பிழுக்கையைச் சாணம் என்றலும் மரபு வழு வாகும். இவற்றோடு நீ வந்தீர் எனவும், நீர் வந்தாய் எனவும் வருவனவற்றை எண் வழுவென்பாரும் உளர். எ ண் பr லு லீ அடங்குதலின் அதனைத் தனித்துக் கூறும் அவசியமில்லை.
繁240

நீயென்பது உயர்திணையில் வரும்போது ஆண் அல்லது பெண் பாலையும், அஃறிணையில் வரும்போது ஒன்றன் பாலையுஞ் சுட்டி நிற்குமென்பது தெரிந்ததே.
இலக்கணமுடையனவாக வரும் வழா நிலைகளே மொழி வழக்கில் எக்காலத்துக்கும் ஏற்புடையனவாகும். வழாநிலையல்ல வாயினும் யாதேனுமோர் காரணம் பற்றி இலக்கணகாரரால் ஏற்றுக்கொள்வனவுமுள. அவையே வழுவமைதியெனப்படும். உயர்திணை எழுவாயைச் சேர்ந்து தாமும் எழுவாயாக நிற்கும் பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகிய ஆறும் உய்ர்திணை வினை முற் றைக் கொண்டு முடிந்தாலும் ஏற்றுக் கொள்ளப்படுவது வழுவமைதியாகும் நம்பிக்குப் பொன் பெரிது என்பது வழாநிலை. நம்பி பொன் பெரியன் எனக் கூறுவது வழு வமைதியாகும். அவ்வாறே நம்பி நாடு பெரியன் என இடமும் நம்பி வாழ்நாட் பெரியன் எனக் காலமும் நம்பி மூக்குக் கூரியன் என உறுப்பும், நம்பி குடிமை நல்லன் எனக் குணமும், நம்பி நடை கடியன் எனத் தொழிலும் மயங்கி வழுவமைதியாயின. நம்பிக்கு மூக்குக் கூரிது என்று கூறின் வழாநிலையெனவும், நம்பி மூக்குக் கூரியன் என்பது வழுவமைதியெனவுங் கொள்க. வழுவமைதி களைத் திணை முதலாக எடுத்துக் காட்டுதும்,
திணை, பால், வழுவமைதி
திணை, பால்களை வழா நிலையாக வைத்துக்கொள்ளாமல் வழுவமைதி என்ற நிலைக்குத் தள்ளுங் காரணிகள் சிலவுள. விருப்பு, வெறுப்பு என்னும் உணர்ச்சிகளினால் பால், திணைகள் வழா நிலையிலிருந்து வழுவி வழுவமைதியாக வருவதை நாம் காண்கிறோம்.
ஒருவன் தனது புதல்வன் மேலுள்ள அ ன் பு காரணமாக அவனை அம்மை என்பதும், வந்தா ள் என்பதும் வழுவாகக்கொள் ளப்படா. அவன் புதல்வனைப் பார்த்து என்னம்மை வந்தாள் எனக் கூறுவது விருப்பினால் திணையும் பாலும் வழுவினாலும் வழுவமைதியாயிற்று,
ஒருவன் வந்தான் என்பதை அம்மனிதன் மேலுள்ள உயர்வு கருதி ஒருவர் வந்தார் என்று கூறுகிறோம். இது பால் வழு வமைதி.
6 241 鯊

Page 130
"தாயாகித் தலையளிக்குந் தண்டுறையூரன்" - சிறப்பினால் ஆண்பால் பெண்பாலாயிற்று. ஊரன் ஆண்பால் என்பதும், தாய் பெண்பாலென்பதும் கருதற்பாற்று.
"எனைத் துணையர் ஆயினு மென்னாந் தினைத் துணையுந்
தேரான் பிறனில் புகல்" - (திருக்குறள்)
இங்கு கோபத்தினால் பலர்பால் ஆண்பாலாயிற்று. எனைத் துணைப்ரி - பலரிபால், தேரான் - ஆண்பால், இதுவும் பால் வழுவமைதி,
ஒரு ஆண் மகனை அவன் செயல் கண்டு இவன் பெண் என்று கூறுவது இழிப்பினால் ஆண்பால் பெண் பாலாயிற்று.
ஒரு பசுவை என்னம்மை வந்தாள் என்று கூறுவது மகிழ்ச்சி யினால் அஃறிணை உயர்திணையாயிற்று,
தூது சென்ற கிளியைப் பசுங்கிளியார் எனக் கூறுவது உயர்த் திச் சொல்லும் நோக்கால் அஃறிணை உயர்திணையாயிற்று. ஒன்றன்பால் பலர்பாலுமாயிற்று. பிறவும் இவ்வாறே காண்க.
ஒருமைச் சொற்குப் பன்மைச் சொல் முடிபு கொடுத்தலும், பன்மைச் சொற்கு ஒருமைச் சொல் முடிபுகொடுத்தலும் ஒரிடச் சொல், பிறிதோரிடத்துக்குரிய முடிபு பெறுதலும் வழுவென்று கருதப்படாது வழுவமைதியாக ஏற்றுக் கொள்வதற்கு ஏதாவது ஒரு காரணம் இருப்பது அவசியம். வெயில் எல்லாம் மறைந்தது மேகம் என்பதில் வெயில் என்ற ஒருமைச் சொல்லோடு எல்லாம் என்னும் பன்மைச் சொல் சேர்த்துச் சொல்லப்பட்டதும் இரண்டு கண்ணுஞ் சிவந்தது என்பதில் இரண்டு என்னும் பன்மைச்சொல் லோடு சிவந்தது என்னும் ஒருமைச் சொல் சேர்த்துக் கூறப்பட்ட தும் வழுவமைதியாகும்,
திணை, பால், மரபு வழுவமைதி
திணைகளும், பால்களும் வெவ்வேறு வினைக்குரிய வெவ் வேறு பொருள்களும் க்லந்து ஒரு தொடராக வரும்போது அவை சிறப்பினாலும், மிகுதியினாலும் இழித்துக் கூறுதலாலும் ஒரு முடிவைப் பெற்று வருவது வழுவமைதியாகும்.
藥242

1. பிரபுவுங் குதிரையும் வந்தார்கள் என்பதில் உயர்திணையும் அஃறிணையுங் கலந்து சிறப்பினால் உயர்தினை முடியைப் பெற்றன.
2. "பார்ப்பார், தவரே, சுமந்தார் பிணிப்பட்டார் மூத்தாரி இளையார் என்றிவர்கள்' என்பதில் உயர்திணைக்குரியவை பல சேர்ந்திருப்பதால் பசுவென்பதும் உயர்திணை மு டி பு பெற்றது. இது மிகுதியென்பதால் வழுவமைதியாயிற்று.
3. "மூர்க்கனும் முதலையுங் கொண்டது விடா" என்பதில் இரு திணையுங் கலந்து வந்தபோதும் இழித்துக் கூறுதலால் அஃ றிணை முடிபுபெற்றது.
இவை மூன்றுந் திணை வழுவமைதி.
தானுந் தையலும் வந்தெனை யாண்டனன் - இங்கு ஆண் பாலும், பெண்பாலும் விரவி ஆண்பால் முடிபு பெற்றன. ஆண் சிறந்தவன் ஆதலாலென் க.
தோழனுந் தானும் வந்தான், தோழியுந் தானும் வந்தாள் என்பனவும் சிறப்பினால் ஒருமை முடிபுபெற்றன. இவை பால் வழுவமைதி,
கறியுஞ் சோறுமுண்டான். மாலையும் முடியுங் கவித்தாள் என்பவற்றில் 'சோறு உண்டான், கறி தின்றான் என வரவேண்டி யது வழா நிலை. சோற்றுக்குரிய சிறப்பினால் கறிக்குஞ் சோற்றுக்குரிய வினை கொடுத்து முடிப்பது மரபு வழுவமைதி, மாலையும் முடியுங் கவித்தான் என்பதில் மாலை சூடினான், முடி குவித்தான் என வராமல் சிறப்பினால் முடிக்குரிய வினை கொடுத்துச் சொல்லியது மரபு வழுவமைதி, மாலையிலும் முடி சிறந்த தென்பதறிக.
இட வழுவமைதி
சாத்தன் தாய் இவை செய்வலோ என்பதில் செய்வல் என் னும் தன்மை வினைக்கேற்ப தான் என்று வராமல் படர்க்கைச் சொல் பயன்படுத்தப்பட்டது இட வழுவமைதியாகும்.
நீயோ அவனோ யாரிது செய்தார்? என்பதில் நீயோ அவனோ யாரிது செய்தீர் என முன்னிலைச் சொல் வரவேண்டிய இடத் துப் படக்கைச் சொல் வந்தது இட வழுவமைதியாகும்.
243囊

Page 131
யானோ அவனோ யாரிது செய்தார் என்பதும், யானோ? அவனோ யாரிது செய்தோம் என வருவதே வழாநிலை, மாறி வந்து வழுவமைதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தா, வா என்பன தன்மைக்கும் முன்னிலைக்கும் உரியன வாகத் தொல் காப்பியங் கூறும், செல், கொடு என்பன படர்க் கையிடத்துக்கு உரியன எனவுங் கூறும் .
*தருசொல் வருசொல் ஆயிரு கிளவியும்
தன்மை முன்னிலை யாயீரிடத்த" (தொல். கிளவி 29) எனவும் செலவுச் சொல்லையுங், கொடைச் சொல்லையுங் குறித்து *ஏனையிரண்டும் ஏனையிடத்த" (தொல், கிளவி 30) எனவும் அவர் கூறியதுகொண்டு உணரலாம். எனக்குத் தந்தான், உனக்குத் தந்தான்; என்னிடம் வந்தான்; உன்னிடம் வந்தான்; அவனிடஞ் சென்றான் அவனுக்குக் கொடுத்தான் என வருதலே வழா நிலையாகும். இவை மாறி வரும்போது அதாவது அவனுக்குத் தந்தான், அவனிடம் வந்தான் என்னிடஞ் சென்றான்; உனகி குக் கொடுத்தான் என வருவனவெல்லாம் வழுவமைதியாகும். நன்னூலார் இந்நான்கு சொற்களும் படர்க்கைக்கு உரியனவெனக் கூறி தரல், வரல் ஆகிய இரண்டும் முன்னிலைகளையும் ஏற்கும் எனக் கூறினார். நன்னூலார் கருத்துப்படி தரல், வரல் இரண்டும் படர்க்கைவில் வருவது வழா நிலையாகும். இதில் தொல்காப்
பியர் கருத்தே மிக மிகப் பொருத்தமானது.
கால வழுவ மைதி
முக்காலத்திலும் நிலை பெற்றுள்ளதை நிகழுங் காலத்தாற் சொல்லவேண்டும். அவ்வாறு மூ ன் று கா ல மு ம் பெறப்படக் கூடியதாக ஒரு காலத்தாற் சொல்வதும் வழுவமைதியேயாகும். மலை நிற்கிறது. தெய்வம் இருக்கிறது . கடவுள் காக்கிறார் என்பன இதற்கு உதாரணங்களாம். நிகழுங்காலத்தாற் சொல் வது மட்டுமன்றி எதிர்காலத்தாற் கூறுவதும் வழக்காறாகும். மலை நிற்கும். தெய்வங் கேட்கும் என்பன இதற்கு உதாரணங் களாகும்.
விரைவு பற்றியும் மிகுதி பற்றியும் தெளிவுபற்றியும் இவை யேது மின்றி இயல்பாகச் சொல்லும் போதுங் காலங்கள் மாறுபட வருவதுமுண்டு. உண்ணக்காத்திருப்பான் ஒருவனை
蠶244

அழைத்துப்போக வந்தான் ஒருவன் இன்னும் உண்டிலையோ என்றவழியுண்டேன், உண்டேன் என்பான். உண்பேன் என்பதே வழாதிலையாகும். உண்டேன் என இறந்த காலத்தாற் கூறுவது வழா நிலை யன்றாயினும் வழுவமைதியாக ஏற்றுக்கொள்ளப் படும். உண்டு கொண்டிருப்போன் உண்கின்றேன் எ ன் னா து உண்டேன் என்பதும் வழுவமைதியேயாம். செறிந்த புதர்க் காடாதலால் அக்காட்டிற் புகுவான் கூறை கொள்ளப்படுவான் எனக்கூறுவதே முறையாயினும், மிகுதி பற்றி அக்காட்டுட்புகு வான் கூறை கோட்பட்டான் என இறந்தகாலத்தாற் கூறுவது கால வழுவமைதியாகும். களவு செய்யப்புகுவோன் கையறுப் புண்டான் என்பதும் கால வழுவமைதி. இவை மிகுதி பற்றி எதிர்காலம் இறந்த காலமாயின. அறஞ்செய்யிற் சுவர்க்கம் புக்கான் என்பதும் எறும்பு முட்டை கொண்டு திட்டையேறின் மழை பெய்தது என்பதும் முறையே ஆகமம் காட்சி என்னும் அளவைகளால் தெளிவாக அறியப்பட்டன வாதலிற் தெளிவு பற்றிக் கால வழுவமைதியாயின.
யாம் பண்டு விளையாடும் சோலையிது என்பதும் யாம் பண்டு விளையாடுகிறதிச் சோலை யென்பதும் இறந்தகாலம் எதிர்காலத்தாலும் நிகழ்காலத்தாலும் எக்காரணமும் இன்றி இய்ல்பாகக் கூறப்பட்ட வழுவமைதியாம்.
வினா, விடை வழுவாமைக் காத்தல்
திணையினை வெளிப்படக் காட்டிவரும் பொருள்களிலும் பாலினை வெளிப்படக் காட்டிவரும் பொருள்களிலும் ஐந் தோன்றிய விடத்து அத்திணைகளுக்கும் பால்களுக்கும் பொதுவான சொல்லாற் சொல்வதும் உண்மையாகத் துணிந்த பொருளின் மேல் அது அல்லாத தன்மையை வைத்துச் சொல்வதும் வழு வேற்படாமற் காக்கும் வழியாகும்.
முதலில் வினா வழுவாமற் காத்தல் பற்றிச் சிந்திப்போம், ஒருவனுக்கு ஒரிடத்தில் தோன்றும் ஒரு பொருளில் திணையையந் தோன்றுகிறதென வைத்துக் கொள் வோ ம், குற்றியோ மகனோ வெனச் சந்தேகிக்கின்றானானால் அவன் குற்றிக்கும் மகனுக்கும் பொதுவான சொல்லால் வினாவுவதே வழுநேராமற் காத்தலாம். குற்றிக்கும் மகனுக்கும் பொதுவான சொல் உரு வென்பது அந்தப் பொதுச் சொல்லைக் கொடுத்துக் குற்றியே
245鐵

Page 132
மகனோ அங்கே தோன்றுகிற உரு எனக்கூறலே வழுக்காத்து லாம். தோன்றுகின்றவனென்றோ தோன்றுகின்றது என்றோ வினாவில் திணை வழுவும் பால் வழுவுமாம்.
உயர்திணையிற் பால் ஐய்ந் தோன்றுமிடத்து அதாவது ஆண்மகனோ பெண்மகளோ என ஐயந் தோன்றிய விடத்து ஆண்மகனோ பெண்மகளோ அங்குத் தோன்றுபவர் எனப் பொதுச் சொல்லால் வினாவுதலே முறையாகும். தோன்று கின்றவன் அல்லது தோன்றுகின்றவள் எனக் கூறின் பால்
வழுவாம்.
அஃறிணையிற் கால் ஐயந் தோன்றிய விடத்தும் பொதுச் சொல்லால் வி ன வி வழு க் காத்தல் வேண்டும். அதாவது ஒன்றோ பலவோ என ஐய ந் தோ ன் றிய விட த் து ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவான சொல்லால் வினாதல் வேண்டும். மாடு பால்பகா அஃறிணை யாதலால் ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவாய அச் சொல்லைப் ப யன் படுத் தி ஒன்றோ பலவோ இவ்வயலுட் புகுந்த மாடு என வினாவுவது முறையாகும்.
இனி விடை வழுவாமற் காத்தல் பற்றிச் சிந்திப்போம். குற்றியோ மகனோ என ஐயப்பட்டு வினாவிய விடத்துத் துணிந்தபொருள் மகனாயின் குற்றியல்லன் எனவும் துணிந்த பொருள் குற்றியாயின் மகனன்று எனவுங் கூறுதலே வழுக் காத்தலாகும்.
பாலில் ஆண்பாலோ பெண்பாலோ வென்று ஐயப்பாடுற்று வினாவிய விடத்துத் துணிந்த பொருள் ஆண்மகனாயின் பெண் மகள் அல்லன் எனவுந் துணிந்த பொருள் பெண்மகளாயின் ஆண்மகனல்லள் எனவுங் கூறுதல் முறையாகும்.
ஒன்றோ பலவோவென அஃறிணையிற் பால் ஐயந்தோன்றிய விடத்து துணிந்த பொருள் ஒன்றாயின் பலவன்று எனவும் துணிந்த பொருள் பலவாயின் ஒன்றல்ல எனவுங் கூறுதல் ஏற் புடைத்தாகும்.
மரபு வழுவாமற் காத்தல்
" எப்பொரு ளெச்சொலி னெவ்வr றுய்ர்ந்தோரி
செப்பின ரப்படிச் செப்புதல் மரபே" - (தன். பொது. 31)
ফুছ্‌ 246

எப்பொருளை எச்சொல்லால் எவ்வாறு உ ய ரீ ந் தோர் கூறினரோ அப்படிக் கூறுவதே மரபு என்பது இந்நூற்பாவின் பொருளாகும். மரபு என்பது இலக்கணம் முழுவதற்கும் ஒரு அளவுகோலாகும். மரபு திரியுமானால் இலக்கணத்தால் ஆம்பயனேது மில்லை. மரபுவழுவாமற் காத்தலுக்காகத் தொல்காப்பியத்தில் இறுதியியல் மரபியலாக அமைந்துள்ளது. இளமைப் பெயர்கள், ஆண் பெண் பெயர்கள் ஓ ர றிவு யிர் முதலாக ஆறறிவுயிர் இறுதியாகவுள்ள உயிர்க்குணம். ஆதியாம் மரபுகள் அவ்வியலில் விரிவாக விளக்கப்பட்டுள. புல்வகையின் உறுப்புக்கள் மரவகையின் உறுப்புக்கள், நூலின் மரபு ஆதியாம் பல்வேறு மரபுசார்ந்த கருத்துக்கள் மரபியலுட் பேசப்படுகின்றன. இம்மரபு வழுவாமற் காத்தல் உலக வழக்குக்குஞ் செய்யுள் வழக்குக்கும் இன்றியமையாத தென்பதை எவரும் அறிதல் வேண்டும்.
உலகில் இலாப்பொருளையும் இத்துணையளவின என்றறிந்த பொருள்களையும் வினைச் சொல்லோடு கூட்டிமுடித்துச் சொல் லும்போது முற்றும்மை கொடுத்துச் சொல்ல வேண்டும் என்பது ஒரு விதியாகும். பவளக்கோட்டு நீல யானை எங்கு மில்லாத தாதலால் அதனைச் சொல்லும்போது பவளக்கோட்டு நீல்யானை சாதவாகனன் கோயிலுள் இல்லை என்று சொல்லாமல் பவளக் கோட்டு நீலயானை சாதவாகனன் கோயிலுள்ளும் இல்லை என்று சொல்லுவதும் தமிழ்நாட்டரசர் மூவர் என்பது அறிய்ப் பட்ட பொருளாதலின் தமிழ்நாட்டு வேந்தர் மூவர் வந்தாரி என்று கூறாமல் மூவரும் வந்தார் என்று கூறவேண்டியதும் மரபு காத்தலாகும்.
ஈ தா, கொடு என்னும் மூன்று சொற்களும் ஒன்றைப்பெற விழைந்து நிற்பானது இரப்புரைகளாகும். ஈ என்பது இழிந்தவன் உயர்ந்தவளிடம் இரந்து கேட்கும்போது பயன்படுத்தும் மொழி யாகும் தா என்பது ஒப்போன் இரப்புரையாகும். கொடு என்பது உயர்ந்தோன் இரப்புரையாகும். இம்மரபு கடைப்பிடிப் பதும் அவசியம். இவை இன்று மாறிவருவதை விலக்கமுடியாது. இவற்றை வழுவமதியாக ஏற்றுக் கொள்வதே வழி.
செயப்படு பொருளைச் செய்யும் பொருள்போலச் சொல்லு தலும் வழக்கில் உரியது. இம் மாட்டையான் கொண்டேன்
247藥

Page 133
என்பதை இம்மாடு யான் கொண்டது என்பதும் திண்ணை மெழு கப்பட்ட தென்பதைத் திண்ணை மெழுகிற்று என்பதும் இவ் வெழுத்தாணியான் எழுதியது; இவ் வீடுயான் இருந்தது என்பன முதலாயினவும் இதில் அடங்கும்.
பொருள்களெல்லாம் இயற்  ைஇப் பொருள் செயற்கைப் பொருள் என இருவகைப்படும். அவற்றில் இயற்கைப் பொருளை இத்தன்மைத்து என்று கூறுவது மரபாகும். நிலம் வலிது; நீர்தண்ணிது; தீ வெய்து மயிர்கரிது; பால் வெளிது எனக் காரணம் சொல்லாமற் கூறுதல் மரபு வழுவமைதியாக ஏற்றுக் கொள்ளப்படும். நிலம் முதலியவற்றில் வலிது முதலியன இயல் பாயமைந்து கிடக்க மேலும் வினை கொடுத்துச் சொல்லுதலால் வழுவமைதியாயிற்று.
வெளிப்படையாகப் பொருளை உணர்த்துதலே மரபாயினும் குறிப்பாற் பொருளுணரச் சொல்வதும் மரபு வழுவமைதியாக ஏற்றுக் கொள்ளப்படும். குழை கொண்டு கோழியெறியும் வாழ்க் கையர் என்பது காதணியினால் கோழியை எறிந்து துரத்துபவர் எனப்பொருள்பட்டு மிக்க செல்வர் என்பதைப் புலப்படுத்திற்று,
அஃறிணைப் பொருளை உணர்தினைப் பொருள்போல வைத்துக் கூறுவதும் வழாநிலையன்று வழுவமைதியேயாம்.
அஃறிணைப் பொருள்களைக் கேட்பனபோலவும் சொல்வன போலவும் இயங்குவன போலவும் தொழிலைச் செய்வன போல வும் சொல்லுதல் சான்றோரால் ஏற்றுக் கொள்ளப்படும் .
"நன்னீரை வாழி அளிச்சமே நின்னினும்
மென்னிரள் யாம் வீழ் பவள்" - என்னுந் திருக்குறளில் திலைமகன் அனிசப்பூவைக் கேட்பன போலக் கூறியது மரபு வழுவமைதி.
"கண் உரைக்கும் மாற்றம் அறிந் தே ன்" என்பதில் கண் என்னும் அஃறிணைப் பொருள் பேசுவது போலக் கூறப்பட்டது.
இவ்வழி அவ்வூர்க்குப் போகும் என்பது வழியாகிய அஃறி ணைப் பொருள் நடப்பது போலச் சொல்லப்பட்டது.
藥248

ਲ தன் நீெஞ்சே தன்னைச் சுடும் - இதில் நெஞ்சு என்னும்அஃறிணைப் பொருள் செய்வது போலச் சொல்லப்பட்டது. இவையெல்லாம் வழாநிலையாக வல்லாமல் வழுவாக இருப்பி னும் உணர்ச்சியை வெளிப்படுத்துவதற்கு உதவலின் வழுவமைதி யாக ஏற்றுக் கொள்ளப்பட்டன.
வினாவும் விடிையும்
ஆசிரியா தொல்காப்பியர் வினா, விடை பற்றிச் செப்பும் வினாவும் வழாஅல் ஒம்பல்" (தொ. கின. 14) எனக் கூறுகிறார். செப்பு என்பது விடையாகும். ஆதலால் விடையையும் வினா வையும் வழுவாமற் காத்துக்கொள்க என்பதே இந்நூற்பாவின் பொருளாகும். இந்நூற்பாவுக்கு உரையெழுதியவரும் உரையா சிரியர் எனப்பிற உரையாசிரியர்களால் போற்றப்படுபவருமாகிய இளம்பூரணர் செப்பு அறுவகைப்படுமெனவும் வினா ஐந்து வகைப்படுமெனவுங் கூறினார். அவர் கூற்றுப்படி செப்பு வினா வெதிர் வினாதல், ஏவல், மறுத்தல், உற்றதுரைத்தல் உறுவது கூறல் உடம்படுதல் என ஆறுவகைப்படுமென்பதும் வினா அறி வொப்புக் காண்டல், அவனறிவு தான் காண்டல், மெய்யவற் குக் காட்டல், அறியான் வினா, ஜயவினா என ஐந்து வகைப் படுமென்பதும் பெறப்படுகிறது.
சேனாவரையர் செப்பு செவ்வணிறையும், இறைபயப்வது மென இருவகைப்படு மெனவும் வினா அறிபொருள் வினா, அறியான் வினா ஜயவினா வென மூவகைப்படு மெனவுங் கூறி னார். செவ்வணிறை என்பது நேரிவிடை, இறைபயப்பது என்பது குறிப்பால் விடையையுணர்த்துவது.
நன்னூலாசிரியர் பவணந்தி முனிவர் உரையாசிரியர் கூறிய இவற்றோடு மேலுஞ் சில கூட்டி அறுவகை வினாவும் எண்வகை விடை யுங் கூறியுள்ளார். வினாவின் வகைகளை அறிவுறுத்து முகமாக அவர் கூறிய நூற்பா வருமாறு:
* அறிவு அறியாமை யையுறல் கொளல் கொடை
ஏவல் தரும்வினா ஆறும் இழுக்கார்" - (நன். வொது. 34)
இவர் கூறிய வினாவகையை விளக்கமாகக் கூறின், அறிபொருள் வினா, அறியான் வினா ஐயுறல் வினா, கொளல் வினா கொடை வினா ஏவல்வினா என ஆறுவகைப்படு மென்பது பெறப்படும்.
249囊

Page 134
ஆசிரியன் மாணவனிடம் இச் சூத்திரத்திற்குப் பொருள் யாது என வினாவுவது அறிபொருள் வினாவாகும். ஆசிரியன் பொருளை அறிந்து வைத்து வினாவுதலால் அது அறிபொருள் வினாவாயிற்று,
மாணக்கன் ஆசிரியனிடம் இச்சூத்திரத்திற்குப் பொருள் யாது என வினாவுவது அறியான் வினாவாகும். மாணவன் சூத்திரப் பொருளை அறியாமல் வினாவுதலால் அறியான் வினாவாயிற்று.
குற்றியோ மகனோ ? எனவினாவுவது ஐயவினா. குற்றி, மகன் என்ற் இரண்டில் ஒன்றின் மேல் துணிபு பிறவாமையால் அது ஐய்வினாவாயிற்று, பாகற்காய் உளதோ வணிகீரே என் பது கொளல் வினால் அதனைக் கொள்ளும் பொருட்டே வினா வுதலால் கொளல் வினாவாயிற்று.
வேலனுக்கு ஆடையில்லையோ வென்பது கொடைவினா, ஆடையில்லாவிட்டாற் கொடுக்குங் கருத்தினனாய் வினாவலின் இது கொடைவினாவாயிற்று.
சாத்தா உண்டாயா என்பது ஏவல்வினா. இது இனிப் போயுண் என ஏவற் பொருளைத் தருமிடத்து ஏவல் வினாவா கும். இது ஜயவினாவாகவும் அறியான் வினாகாகவும் பிற வாறும் வருதலுண்டு. சந்தர்ப்ப சூழ்நிலைகளால் எவ்வினா வெனத் தீர்மானிக்கப்படும்.
தான் கண்டசூத்திரப் பொருளும் பிறனொருவன் கண்ட பொருளும் ஒத்திருக்கிறதா என வினாவின் அது இளம் பூரணர் கூறிய அறிவொப்புக் காண்டலாகும். அவன் அறிந்திருக்கின் நானா. என்பதை அறியும் பொருட்டு வினாவில் அது அவனறிவு தான் காண்டலாகும். உண்மையை உணர்த்துங் கருத்தில் வினாவில் அது மெய்யவற்குக் கா ட்ட லா கும். அறியாது வினாவும்போதும் ஐயுற்று வினாவும்போதும் அவை அறியான் வினாவாகவும் ஐயுறல் வினாவாகவும் வரும். சேனாவரையர் கூறிய மூவகை வினாவும் வெளிப்படை
விடைகள் பற்றி நன்னூலார் கூறியவற்றைப் பாரிப்போம். தன்னுரலார் விடைகள் எட்டுவகைப்படுமெனக் கூறியதோடு அவ்வெட்டினையும் இருவேறு வகைகளாகப் பாகுபடுத்தியுங் காட்டுவர். அவர் கூறிய எட்டு வகைகளில் சுட்டுவிடை, மறை
藥250

விடை, நேர்விடை, ஏவல்விடை, வினாவெதிர் வினாதல் விடை உற்றதுரைத்தல் விடை உறுவது கூறல் விடை, இனமொழிவிடை என்பன அடங்கும்.
இவற்றுள் சுட்டு விடை, எதிர்மறை விடை நேர் விடை என்பவற்றை வெளிப்படை விடையெனவும் மற்றையவற்றைக் குறிப்பால் விடையுணர்த்துவன வெனவுங் கூறினார்.
கறக்கிறபசு எது வென்பதற்கு "இது" என்பது சுட்டு விடை.
பாடசாலைக்குச் செல்வாயா என்னும் வினாவுக்குச் செல் லேன் என்பது எதிர்மறை விடை,
பாடசாலைக்குச் செல்லாயா என்னும் வினாவுக்குச் செல் வேன் என்பது நேர்விடை. இவை மூன்றும் வெளிப்படை விடைகளாகும். இது செய்வாய்ா என்னும் வினாவுக்கு நீ செய் என்பது ஏவல்விடை. இது செய்வாயா என்றும் வினாவுக்கு செய் ய்ேனா என்பது வினாவெதிர் வினாதல்விடை.
இது செய்வாயா என்னும் வினாவுக்கு உடம்பு நொந்தது என்பது உற்றதுரைத்தல் விடை,
அதேவினாவுக்கு உடம்பு நோகும் என்பது உறுவது கூறல் விடை. கொழும்புக்குப் போவாயா என்னும் வினாவுக்கு இந்தியா வுக்குப் போவேன் என்பது இனமொழி விடை.
பின்னைய ஐந்தும் குறிப்பாற் பொருளுணர்த்தும் விடை
இளாம்.
செய்யுள்களுக்குப் பொருள் கொள்ளுதல்
உரைநடையிற் போலல்லாமல் செய்யுள் நடையிற் கவிஞன் கருதிய பொருளை இது வெனத் தீர்மானிப்பது கடினமானது. உரைநடையில் ஒவ்வொரு வாக்கியத்திலும் பொருள் முடிவு பெற்று நிற்கும். செய்யுளில் சில விட ங் களி ல் பொருள் ஒழுங்குற அமைவதில்லை. ஒரு செய்யுளில் எடுத்துக் கொண்ட பொருள் முடிவுறாமல் பல செய்யுள்களுக்குப் பின்னரும் முடிவ துண்டு. முத்தகச் செய்யுள் செய்யுள்தோறும் பொருள் முடிவு பெற்று நிற்கும். ஆனால் குளகம் பலபாட்டு ஒருவினை
251鬣

Page 135
கொண்டு முடியும். முத்தகச் செய்யுள் ஒரு சே ய் யு ளில் முடிவு பெறுவதாயினும் சொற்கள் பொருளுக்கேற்ப அமையாமல் தேடிப்பிடித்து இயைத்துப் பொருள் கொள்ளவேண்டிய் நிலையும் ஏற்படும்.
புலவன் எடுத்துக் கொண்ட ஒரு கருத்து முடிவுறுவதற்கு அவன் சொற்களை ஒழுங்காக அமைக்கச் சில விடங்களில் செய்யுள் இலக்கணம் தடையாக அமைந்து விடுகிறது. புலவன் சொற்களைச் செய்யுள் இலக்கணஞ் சிதையாதிருத்தற் பொருட் டுத் தான் விரும்பிய எ ன் வி ட த் து ம் வைத்துச் சொல்லும் அதிகாரமுள்ளவன். ஆற் றொழு க் கு ப் போலச் செய்யுளில் சொற்கள் ஒழுங்குற அமைவதும் செய்யுளின் முதற் சொல்லைக் கடைசிச் சொல்லோடு இயைத்துப் பொருள் கொள்ள அமைப் பதும் இன்னும் பல் வேறு வகை யி ல் சொற்களைவைப்பதும் புலவனுக்குரிய அதிகாரமாகும்.
கவிதை இலக்கணந் தெரிந்தோர் பொருள்கொள்வதற்குரிய வழிவகைகளை ஆராய்ந்து கூறியுள்ளனர். பொருள்கோளின் பெயர்களாக அவர்கள் கூறியுள்ளவை எட்டுவகைப்படும் அவை யாற்றொழுக்கு. மொழிமாற்று, நிரனிறை, விற்பூண், தாப் பிசை, அளைமறிபாப்பு, கொண்டு கூட்டு, அ டி ம றி மா ற் று என்பனவாம்.
1. யாற்றுநீர்
யாற்றுநீர் என்பது ஆறு எவ்வாறு ஒழுங்குபட இடையீ டின்றிச் செல்கிறதோ அவ்வகையில் செய்யுளும் பொருள் கொள் வதற்கு ஏற்றவகையாக அமைந்து ஒழுங்காகச் செல்லும் நடை யாகும். இதற்கு உதாரணமாக
*சொல்லருஞ் சூற்பகம் பாம்பின் தோற்றம் போல் மெல்லவே கருவிருந் தீன்று மேலலார் செல்வமே போற்றவை நிறுவித் தேர்ந்த நூற் இல்விசேரி மாந்தரி னிறைஞ்சிக் காய்த்தவே" - என்னுஞ் சிந்தாமணிச் செய்யுளைக காட்டலாம். இச் செய்யுளில் பொருளுக்கியையக் கொண்டு கூட்டிப் பொருள் கொள்ள வேண்டியதில்லை. இச் செய்யுளின் சொற்கள் பொருளுக் கியைய ஒழுங்கு பட் டு ச் செ ல் கி ன் ற ன. நெற்பயிர்கள்
鯊 252

கருவுற்ற பாம்பின் தோற்றம்போலாகி அக்கருவையின்று பின்னர் கீழ்மக்கள் செல்வம் பெற்றால் இறுமாந்து நடப்பதுபோல் இாட்சிதந்து பின்பு விளையுங் கால் கல்விபெற்ற பெரியாரைப் போலத் தலைதாழ்த்தி விளைவுற்றன எனப் பொருளுஞ் சொல்லும் ஒழுங்காக அமைந்திருப்பதைக் காணலாம்.
மொழிமாற்றுப் பொருள் கோள்
பொருளுக்கேற்பச் சொற்களை ஒர் அடியுள் மாற்றியமைத் துப் பொருள் கொள்ள நிற்பது மொ ழி மாற் று ப் பொருள் கோளாகும். சொற்களை ஒவ்வொரு அடியிலும் மாற்றுவ தென்பது இப்பொருள் கோளின் முக்கிய அம்ச மாகும்.
*சுரையாழ அம்மி மிதப்ப வரையனைய
யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப கானக நாடன் சுனை ' - எ ன் பது மொழிமாற்றுப் பொருள் கோளுக்கு உதாரணமாகும். இப்பாட்டில் சுரைமிதப்ப அம்மிய்ாழ என ஒரடியிலும் யானைக்குநிலை முயற்கு நீத்து என மறு அடியிலும் மாற்றிப்பொருள் கொள்ள வைத்தலால் இது மொழிமாற்றுப் பொருள் கோளாகும். 3. நிரனிறைப் பொருள் கோள்
நிரனிறை எதிர் நிரனிறையென இப்பொருள் கோளை இரு வகைப்படுத்தலாம். நன்னூலார் நிரனிறைப் பொருள் கோளில் எதிர்நிரனிறைப் பொருள் கோளையும் அடக்கிக் கூறினார். சொற்களையும் அவை கொள்ளும் பயனிலைகளையும் நிறுத்திய முறையாற் பொருள் கொள்ளச் செய்வது நிரனிறைப் பொருள் கோளெனவும் அ வ் வா றி ன் றி முதற் சொன்ன சொல்லின் பயனிலை இறுதியிலும் இரண்டாவதன் பயனிலை இறுதிக்கு முதலாகவும் மூன்றாவதன் பயனிலை அதற்கு முதலாகவும் அவ்வாறே கடைசிச் சொல்லின் பயனிலை முதலாவதாகவும் வைத்துப் பொருள் கொள்ள நிற்பது நிரனிறைப் பொருள் கோளாகும், இதற்குரிய உதாரணச் செய்யுள் வருமாறு :- உடுத்ததுவும் மேய்த்ததுவும் உம்பர்கோன் தன்னால் எடுத்ததுவும் பள்ளிக் கியையப் - படுத்ததுவும் அந்நா ளெறிந்ததுவும் அன்பி னிரந்ததுவும் பொன்னா வரையிலைகாய் பூ"
253鯊

Page 136
இவ்வெண்பாவில் உடுத்தது பொன்; மேய்த்தது ஆ எடுத்தது வரை படுத்தது இலை; எறிந்தது காய்; இரந்தது பூ (பூமி) என உடுத்தது முதலாக வைக்கப்பட்ட சொற் களின் பயனிலைகள் ஒழுங்காக  ைவ க் க ப்ப ட் ட  ைம ய ர ல் இது நிரனிறைப் பொருள்கோளாகும்.
"வான்முகிலும் மின்னும் வருநிலத்து வீழ்ந்ததுபோல் தானுங் குழலுந் தனிவீழ்ந்தான்"
இச் செய்யுளில் முதலில் வைக்கப்பட்டது முகில் இரண்டா வது வைக்கப்பட்டது மின்(னல்) ஆனால் முகிலோடியையும் குழல் பின்னும் மின்னோடியையும் தான் முன்னுமாக வைக்கப்பட்டமை யால் அது எதிர் நிரனிறையாயிற்று.
4. பூட்டுவிற் மொருள் கோள்
ஒரு செய்யுளின் முதற் சொல் அல்லது சீர் கடைசிச் சொல்லோடு அல்லது சீரோடு பொருந்திப் பொருள் கொள்ளத் தக்கதாக அமையும் பொருள்கோள் பூட்டுவிற் பொருள் கோள் எனப்படும். வில் இருதலைகளும் நாணினால் இணைக்கப்படுவது போல் இப்பொருள்கோள் இருப்பதால் அப்பெயர் பெற்றது. இப்பொருள் கோளுக்கு கீல்வருஞ் செய்யுள் உதாரணமாகும்
"திறந்திடுமின் தீயவை பிற்காண்டு மாதர் இறந்து படிற்பெரிதா மேதம் - உறந்தையர்கோன் தண்ணார மார்பன் தமிழர் பெருமானைக் கண்ணாரக் காணக் கதவு' - இச் செய்யுளில் முதற் சீராகிய திறந்திடுமின் என்பது கடைசிச் சொல்லா யும் சீராயு முள்ள கதவு என்பதனோடியைந்து திறந்திடுமின் கதவு எனப் பொருள் தந்து பூட்டுவிற் பொருள் கோளாயிற்று.
5. தாப்பிசைப் பொருள்கோள்
நடுவில் நின்ற சொல்லானது முதலிலுங் கடைசியிலும் நின்ற சொற்களோடு இயைந்து பொருளை விளக்குவது தாப்பிசைப் பொருள் கோளாகும். தாப்பு என்பது ஊஞ்சற்கயிறு ஆகும். ஊஞ்சற் கயிறு மத்தியில் நின்றுகொண்டு முன்னும் பின்னும் சென்று வருவதுபோல இப்பொருள்கோள் அமைந்திருத்தலால் தாப்பிசைப் பொருள்கோள் எனப்பட்டது.
藥254

'உண்ணாமை யுள்ள துயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யா தளறு' - எ ன் னு ம் குறள் வெண்பா தாப்பிசைப் பொருள் கோளுக்கு உதாரணமாகும். இச்செய்யுளில் நடுவில் நின்ற ஊன் என்னுஞ் சொல்லானது ஊன் உண்ணாமையுள்ளதுயிர் நிலையெனவும். ஊன் உண்ண அண்ணாத்தல் செய்யாதளறு எனவும் இருபக்கமும் இ  ையற் து பொருள் பயக்கக் காணலாம்.
6. அளைமறிப்ாப்புப் பொருள் கோன்
அளைமறிபாப்பு என்பது புற்றினுள்ளே மடங்கிக்கிடக்கும் பாம்பு எனப் பொருள்படும், பாம்பு புற்றினுள் தலையை முன் வைத்துச் செல்லுமாயினும் தலைமேலாகவும் மற்றை உடற் பகுதி கீழாகவும் மடங்கிக் கிடப்பதுபோல கவியின் இறுதியடி முதலில் எடுக்கப்பட்டுப் பின்னர் இறுதிக்கு முதல்வரியும் பின்னரி அதற்கு முதல்வரியும் அப்பால் முதல்வரியுமாக எடுக்கப்பட்டுப் பொருள் கொள்ளும்முறை அ  ைள ம றி பாப் பு ப் பொருள் கோளாகும். பாம்பின் தலை புற்றுள் முதலிற் சென்றாலும் பாம்பு வெளிப்படும் போது தலையே முதலில் மேல்வருவது கவனிக்கத்தக்கது. அது போல ச் செய்யுளின் இறுதியடியே பொருள் கோளில் முதலில் வருவதால் இது அளை மறிபாப்புப் பொருள் கோளெனப்பட்டது.
'சூழ்ந்த வினையாக்கை சுடவிளிந்து நாற்கதியிற்
சுழல்வார் தாமும் மூழ்ந்த பிணிநலிய முன்செய்த வினையென்றே
முனிவோர் தாமும் தாழ்ந்த உணர்வினராய்த தாளுடைந்து தண்டூன்றித்
தளர்வார் தாமும் வாழ்ந்த பொழுதினே வானெய்து நெறிமுற்றி
முய்லா தாரே'
இச்செய்யுளில் வாழ்ந்த பொழுதினே வானெய்து நெறி முற்றி முயலாதார், தாழ்ந்த உணரிவினராய்த் தண்டூன்றித் தளர்வார்; மூழ்ந்த பிணி ந லிய முன் செய்த வினையென்றே முனிவார்; சூழ்ந்த வினையாக்கை சுடவிளிந்து நாற் க தி யி ற் சுழல்வார் எனத் தலைகீழாய் இடையிலும் முதலிலுஞ் சென்று கூடுதல் கருதத்தக்கது.
255難

Page 137
7. கொண்டு கூட்டுப் பொருள் கோள்
கவிதையில் ஆங்காங்குச் சிதறிக் கிடக்கும் சொற்களைப் பொருளுக்கேற்பச் சேர்த்து அதாவது கொண்டு கூட்டிப்பொளுள் கொள்வது கொண்டு கூ ட் டு ப் பொருள் கோளாகும். இப் பொருள்கோளுக்கு உதாரணச் செய்யுள் வருமாறு:
"தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட பைங்கூந்தல் வெண்கோழி முட்டை யுடைத்தன்ன மாமேனி அஞ்சனத் தன்ன பசலை தணிவாமே வங்கத்துச் சென்றார் வரின்" - இச்செய்யுளில் வங்கத்துச் சென்றார் வரின் அஞ்சனத்தன்ன பைங்கூந்தலையுடையாளது மாமேனிமேல் தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட வெண் கோழி முட்டையுடைத்தன்ன பசலை துணிவாமே எனச் சொற் களைப் பொருளுக்கியையக் கொண்டு கூட்ட வேண்டியிருத்தலின் இது கொண்டு கூட்டுப்பொருள் கோளெனப்பட்டது.
8. அடிமறிமாற்றுப் பொருள் கோள்
அடிமறிமாற்றுப் பொருள்கோள் இருவகைப்படும் பொருளுக் கேற்ப எங்கிருந்தாலும் சொற்களை இடமறிந்து எ டு த் து க் கூட்டிப்பொருள் கொள்வன ஒருவகை.
நான்கடி கொண்ட செய்யுளில் எ வ் வடி  ைய எடுத்து எவ்விடத்தில் வைத்தாலும் பொருளும் ஓசையுங் கவிதை இலக்கண முஞ் சிதையாமல் நின்று பயன்படுவன மற்றொரு வகை, ஏற்புழிக் கூட்டும் அடிமறிமாற்றுப் பொருள்கோளுக்கு உதாரணச் செய்யுள் வருமாறு:-
'நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பந் துடையார்
கொடுத்துத் தான் துய்ப்பினும் மீண்டுங்கா லீண்டும் மிடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம் விடுக்கும் வினையுலந்தக் கால்" பல இக்கவியில் கொடுத்துத் தான் துய்ப்பினு மீண்டுங்கால் ஈண்டும், விடுக்கும் வினை யுலந்தக்கால் மிடுக்குற்றுப் பற்றி னு ம் நில்லாது செல்வம் (இஃதறியார்) நடுக்குற்றுத் தற்சேர்ந்தாரி துன்வந்துடையாரி எனச் செய்யுளின் அடிகளைப் பொருளுக்கு ஏற்றவாறு எடுத்துக் கூட்டல் காணலாம். இதனை ஏற்புழிக் கூட்டும் அடிமறி மாற்று என்பர்.
囊256

"மரகத மணிப் பணிசெய் மாளிகைக ளொருசாரி
அரிமணி யழுத்தியன ஆலயம தொருசாரி எரிமணி யழுத்தியன வில்லின்வித மொருசாரி தருணமணி முத்தினிய லுஞ்சதன மொருசாரி" - இச் செய்யுளில் எந்த அடிய்ை எடுத்து எவ்விடத்தில் வைத்தாலும் பொருளும் ஒசையும் மாறுபடாமை கா ன ல 7 ம், இதனை பொருளிசைமாறா அடிமறிமாற்று எனலாம்.
தமிழில் வந்து வழங்கும் வடசொற்கள் எதிர்மறைப் பொருள் தருதல்
வடமொழியில் அ, ந, நி, வி, கு என்னும் எழுத்துக்கள் குறித்த சொல்லின் முன்வந்து அவற்றின் எ தி ரீ ம  ைற ப் பொருளையுணர்த்துகின்றன. நியாயம் - அநியாயம் எனவும் புஞ்சகம் - நபுஞ்சகம் எனவும் மலன் - நிமலன் எனவும், விமலன் எனவும் தர்க்கம் = குதர்க்கம் எனவும் மொழிக்கு முதலில் வந்த இவ்வெழுத்துக்கள் அம்மொழியின் எ தி ரீ ம ன ற ப் பொருளைத் தந்திருப்பது கவனிக்கத் தக்கது.
うイ<つ9 。乙。と
குறித்த சில மொழிகளின் மொழிப்பொருளை நீக்கி எதிர் மறைப் பொருளை யுண்டாக்குவதற்கு அம்மொழிகளின் முன் நகரம் சேர்க்கப்படுவதுண்டு. நகரம் முதலில் சேர்க்கப்பட்டால் மொழியில் ஏற்படும் மாற்றங்களை நேமிநாத நூலாசிரியர் பின்வருமாறு எடுத்துக் காட்டுவர்.
நேர்ந்த மொழிப் பொருளை நீக்க வருநகரஞ்
சார்ந்த துடலாயிற் தன்னுடல்போம் - சார்ந்ததுதான்
ஆவியேல் தன்னாவி முன்னாகும்' - என்பது அவர்காட்டிய செய்யுட்பகுதி, வடமொழியில் ஒரு சொல்லுக்கு உரிய பொருளை நீக்கி அதை எதிர்மறைப் பொருள்படச் செ ய் வ த ந் கு அம்மொழியின் முன் நகரவுயிரி மெய் சேர்க்கப்படும். அந்நகரஞ் சார்ந்த மொழியின் முதலெழுத்து மெய்யாயிருப்பின் நக்ரம் தன் மெய் கெட்டு 'அ' என முன்வருமொழியோடியையும், சார்ந்த மொழியின் முதலெழுத்து உயிராயின் நகரமானது தன் உயிரெழுத்து முன்னின்று "அந்' எனமாறி முன்வரும் மொழி யோடியையும் என்பது இச்செய்யுட் பகுதிக்குரிய பொருளாகும்.
7 257鑽

Page 138
களங்கன் என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். இது களங்கமுடைப்வன் எனப் பொருள்படும். அதனைக் களங்கமற்ற வன் என்ற பொருள் படச் செய்ய வேண்டுமாயின் 'ந' என்னும் எழுத்து முதலிற் சேர்க்கப்படும். அது ந * களங்கன் என நிற்கும் களங்கன் என்னும் மொழியின் முன் நிற்பது "க்" என்னும் மெய் யெழுத்தாகையால் நகரவுயிரி மெய்யின் மெய்யெழுத்துக் கெட்டு "அ" என்னும் உயிரெழுத்து மட்டும் நின்று அ + களங்கன் = அகளங்கன் எனவரும். இவ்வாறே த + தர்மம் = அதர்மம் எனவும் ந + விவேகம் = அவிவேகம் எனவும் வரும்,
இனி உயிர் முதன் மொழியாகிய ஏகம் என்பதன் முன் நகரம் எவ்வாறு நேர்ந்த மொழிப் பொருளை நீக்குமெனக் காண் போம். ந + ஏகம் என்பது சார்ந்தது "ஏ" என்னும் உயிராக விருத்தலால் 'ந' என்பதிலுள்ள உயிர் முன்வந்து 'அந்' என நின்று அந் + ஏகம் = அநேகம் என மெய்யின்மேல் உயிரேறி முடியும். ந + அர்த்தம்  ைஅநர்த்தம் எனவும் ந + ஆயாசம் - அநாயாசம் எனவும் வரும்.
தத்திதாந்தம்
ஒரு வட சொல் சிறிது மாற்றமடைந்து தன்னோடு இயைபு பட்ட பொருணை உணர்த்தி நிற்பதை வடநூலார் தத்திதாந்தம் எனக் கூறுவர். தசரதன் என்ற மொழி சிறிது மாற்றமடைந்து தாசரதி என நின்று தசரதனுடைய மகன் எனப் பொருள்படும் அதேபோல ஜானகி என்பதில் ஜனகன் என்றசொல் சிறிது மாற்றமடைந்து ஜனகன் மகள் சீதை எனம் பொருள் தரும். இதேபோலக் குருகுலத்தவர் என்பது தத்திதாந்தப் பெயராக கெளரவர் எனவும் பாண்டுவின் மக்கள் பாண்டவர் எனவும் வரும். விதர்ப்ப தேசத்தை ஆள்பவன் வைதர்ப்பன் எனவும் நிடத தேசத்தை பாண்டவன் (நளன்) பற்றிய நூல் நைடதம் எனவும் சிவனைப் பற்றிய மதம் சைவம் எனவும் விஷ்ணுவை வழிபடுபவன் வைணவன் எனவும் தத்திதாந்தப் பெயர்கள் வரும்.
வீரசோழிய காரர் தத்திதப்படலம் என்றொருபடலம் வகுத்துத் தமிழிலுந் தத்திதப் பெயர்கள் வருமென்பர். அவர் கூறியவற்றைச் சுருக்கமாகத் தருவோம்g வலையினாலுண்பவன் வலையன் அல்லது வலைஞன் என்னும் வேதத்தையுரைப்பான் வேதியன் என்றும் மருந்தைப் பண்ணுவான் மருத்துவன் என்றும்
鐵258

கூத்தைப் பயிலுவான் கூத்தன் என்றும் சோதிடத்தை யெண்ணு வான் சோதிடன் என்றும் வட சொல்லிலும் தமிழ்ச் சொல்லிலும் தத்திதாந்தப் பெயர் காட்டுவர். இவ்வாறு வடமொழிச் சொற் களையல்லாமல் தமிழ்ச் சொற்களையும் வலிந்து தத்திதாந்தத்துள் அடக்குவது தொல்காப்பியர் நன்னூலார் முதலிய தமிழ் இலக்கண ஆசிரியர்க்கு உடன்பாடன் றென்க. வடமொழிப் GLUffesar திரிபு பட்டுப் பொருள் உணர்த்துவது போல இவை உணர்த் தாதையின் அவருரை கொள்ளத் தக்கதன்று.
அம்பு என்பது நீர், பங்கம் என்பதுசேறு. இவற்றுட்டோன் றியதால் அம்புஜம், பங்கஜம் எனவரும் குறிப்புச் சொற்களும் பெயர்ச்சொற்கள் வேறு பொருள் பயந்து நின்று தத்திதாந்த மாயின எனவும் வீரசோழிய நூலுடையார் கூறுவர். நீருள் தோன்றியது அம்புஜம் எனவும் சேற்றுள் தோன்றியது பங்கஜம் என்றும் உணர்க. அவையிரண்டுந் தாமரையைக் குறிப்பன இவையும் நேர்ப் பொருள் உணர்த்தலின் தத்திதாந்தமாகா Galaivas.
உபசார வழக்கு
ஒன்றை இன்னொன்றாகச் சொல்லியும் க்ருதிய பொருளைப் புலப்படுத்தி விடுவது உபசார வழக்காகும்" இவ்வுபசார வழக்கில் காரணங் காரியமாகச் சொல்லப்படுவதும் காரியங் காரணமாகச் சொல்லப்படுவதும் குணத்தைக் குணியாகவும் குணியைக் குண மாகவும் சொல்லப்படுவதும் இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின் மேலாகச் சொல்லப்படுவதும் சினை வினை முதல் வினையாகச் சொல்லப்படுவதும் முதலாக ஒன்றின் இயல்பை இன்னொன்றின் இயல்பாகக் கூறுதல் இவ்வுபசார வழக்கில் அடங்கும்.
தீவினை என்னுஞ் செருக்கு என்பதற்குத் தீவினையால் வரும் இயக்கம் என்பதே பொருளாதலால் காரணம் காரியமாக உபசரிக் கப்பட்டது. பிறப்பென்னும் பேதமை யென்பதில் பிறப்புக்குக் காரணமாகிய அவித்தை எனப் பொருள்படுவதால் காரியங் காரணமாக உபசரிக்கப்பட்டது இல்லவள் மாண்பானால் என்பது மனைவி நற்குண நற்செய்கையுடையவளானால் எனப் பொருள் படுவதால் குணம் குணியாக உபசரிக்கப்பட்டது. இடுக்கண் களைவதாம் நட்பு என்பதில் இடுக்கண் களைபவர் நண்பரி எனப் பொருள்படுவதால் குணியின் வினை குணத்தின் வினையாக
259鬣

Page 139
உபசரிக்கப்பட்டிது. இந்தல் பானை நாழியரிசி பொங்கும் எல் பதில் நாழியரிசி பொங்குதற்கு இடமா மெனப் பொருள் தருதலால் இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின் மேலாக வந்தது. வண்டி அச்சுமுறியும் என்பதில் அச்சு என்னும் சினையின் வினையாகிய முறிதல் என்பது வண்டி என்னும் முதலின் மேலாக வந்தது. சினவாள் என்பது வாளையுடையவளது சினம் வாளின் மேலேற்றப்பட்டதால் உடைப்ானின் குணம் உடைமையின் மேலாக வந்த உபசாரமாயிற்று "செவிகைப்ப, நாற்றங்கேட்பினும் கண்ணாற் பருகும் என்பனவும் ஒன்றின் புலன்மற் றொன்றின் மேலேற்றப்பட்ட உபசாரமாகும். ஒருவனை ஒருவர் என்பதும் உபசார வழக்கேயாகும்.
சாதி யொருமை
ஒரு சொல்லானது ஒருமையிறு தோன்ற நின்று நீ தோன் றாது நின்றும் ஒருமை பன்மை யீறாக் வந்து முடிக்குஞ் சொல் உளதாக நின்றும் இலதாக நின்றும் தானே பன்மைப் பொருள் உணர்த்துவது சாதியொருமை. இல்வாழ்வான் எ ன் பா ன் என்பது சாதியொருமை. அது ஆண்பாலுக்குரிய ஈறுபெற்றும் ஒருவனை மட்டுங் குறியாமல் அவ்வினத்தைச் சேர்ந்த பலரையுங் குறித்தலால் சாதி யொருமையாயிற்று, தென்புலத்தாரி தெய்வம் என்பதில் தெய்வம் என்னும் சொல் தேவர் எனப் பன்மை சுட்டுதலால் தெய்வம் என்பது சாதி யொருமையாயிற்று.
எதிர்மறையிலக்கணை
ஒரு சொல் தனக்கு இயல்பான பொருளை யுணர்த்தாது அதற்கு எதிர்மறையான பொருளை யுணர்த்துவது எதிர்மறை பிலக்கணை எனத் தகும், நிரப்பு என்ற சொல் நிரம்புதல் என நேர்ப்பொருளுடையது. அது இல்லாமையிாகிய வறுமையை உணர்த்துவதால் அது எதிர் மறையிலக்கணையாகும். அழுக் கறுத்தல் என்பது குற்றத்தை நீக்குதல் என்னும் பொருளுடையது. அது குற்றத்துட் குற்றமாகிய பொறாமையைக் குறித்து எதிரி மறைப் பொருள் தந்தது. உடம்போடுயிரிடை நட்பு என்பது நட் பின்மையைக் குறித்து எதிர்மறைப் பொருள் தந்தது. புண்ணிய சனம் என்பது அரக்கரைக் குறிக்கும் போதும் முழுமகன் என்பது மூடனைக் குறிக்கும் போதும் பட்டிஎன்னும் கீழ்மகனைக் குறிக்குஞ் சொல் பட்டி மண்டபம் என வித்துவ சபையைக் குறிக்கும் போதும் எதிர்மறையிலக்கணையாயின.
叢260

5. இடிைச் சொல்லியல்
இடைச்சொல் பற்றிய விளக்கம்
தமிழ் மொழியில் பெயர்ச் சொல்லும் வினைச் சொல்லுமே முக்கிய இடத்தினை வகிப்பனவென்பதில் இலக்கண ஆசிரியர்கள் எவருக்குங் கருத்து வேறுபாடில்லை. அ த னா ல் பெயரும் வினையுமே சொற்கள் எனவும் இடைச்சொல்லும் உரிச்சொல் லும் அவற்றின் வழியே தோன்றுவன வென்றுந் தொல்காப்பியர் செப்புவர். எவ்வாறாயினும் தமிழ்மொழியின் வளர்ச்சிக்குஞ் செழுமைக்கும் இடைச் சொற்களின் பங்களிப்பு குறைத்து மதிக்கக் கூடியது ஒன்றன்று. இடைச்சொல் எ ன் ப த b கு இலக்கண நூலாசிரியர் பலர் பல்வேறுவகையாக இலக்கணங் கூறுவர். பெயரும் வினையுமாகாது அவற்றின் வேறுமாகாது இடைநிகரணவாய் நிற்றலின் இடைச்சொல்லெனப் பெயரி பெற்றனவென்பரி ஒரு சாராசிரியர். தனித்து நடக்க மாட்டா தனவாய்ப் பெயரையும் வினையையுஞ் சார்ந்து நடத்தலால் இடைச் சொல்லாயின வென்பர் வேறுசிலர், மொழிக்கு முன்னும் பின்னும் வருமாயினும் பெரும்பான்மையும் இடையில் வருதலின் இடைச்சொல்லாயிற்று என்பர் தொல் காப்பியச் சொல்லதிகார உரையாரிசியரி சேனாவரையர், பெ ய ரு ம் வி  ைன யு ம் போலத் தனித்து நடக்கும் ஆற் ற ல் இல்லாதவையாய் அப்பெயரையும் வினையையுஞ் சார்ந்து அவற்றின் அகத்தும் புறத்தும் வருதலால் இடைச்சொல்லெனப் பெயர் பெற்ற தென்பர் இன்னொரு சாரார். எவர் எவ்வாறு கூறினும் இங்குக் கூறப்பட்ட காரணங்கள் அனைத்தும் இடைச்சொல் லென்பதற்குப் பொருத்தமானவையே என்பதில் ஆட்சேபனைக் கிடமில்லை, இடைச்சொற்கள் காலத்துக்குக் காலம் பெருகி வருவதை நாம் காண்கிறோம். தொல்காப்பியர் காலத்தில் இல்லாத இடைச் சொற்களை நன்னூலிற் காண்கிறோம். நன் னுாலார் சொல்லாத இடைச்சொற்கள் பல இன்று வழக்கினுட் புகுந்திருப்பதை நாம் தெளிவாக உணர்கிறோம்.
இடைச் சொல்லென்பன பெயரோடும் லி  ைன யோ டு ம் வழக்குப் பெற்றிய்லும்; தாமாக நடக்கும் இயல்பில வென்பது தொல்காப்பியர் இடைச் சொற்குக் கூறிய வரைவிலக்கணமாகும்.
261鯊

Page 140
சார்ந்து வருதல் உரிச் சொற்கும் உரியதாயினும் தனக்கெனப் பொருள் வேறில்லாமை இடைச் சொற்குச் சிறப்பிலக்கணம் என்பது சேனாவரையர் கருத்து. இடைச்சொல் தான் சார்ந்து வருஞ் சொல்லின் வேறாய் வருதலேயன்றி அச்சொற்கு உறுப் பாய் வருதலும் கொள்ளப்படும். அவன், இவன், உவன் எனப் பெயருள்ளும் உண்டவன் உண்டான் என வினையுள்ளும் இடைச் சொற்கள் உறுப்பாகி வந்தன.
இடைச் சொல்லுக்கும் உரிச் சொல் லு க்கு ம் வேறுபாடு காட்டவந்த சேனாவரையிர் இடைச்சொல் பொருள் குறித்து வராததென்றும் உரிச்சொல் பொருள் குறித்து வருவது என்றுங் கூறினாரேனும் இடைச்சொற்களிலுஞ் சில பெயர் வினைகளைச் சாராதே பொருள் குறித்துவரக் காண்கிறோம். போல, புரைய ஒப்ப முதலிய உவமவிடைச் சொற்கள் தமக்கெனப் பொருள் வேறாகவுடையன வென்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. போல முதலியன வினையெச்சமாகத் தொழிற்படுதலையுங் காண்கி றோம். அது பின்னரீக் காட்டப்படும். இனி, அப்ப, ஆனால், ஆயின், எனின் என்பன இடைச் செர்ற்களாகக் கருதப்படுபவை. எனினும் அவற்றுக் கெல்லாந் தனித்தனி பொருளிருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
"இடையெனப் படுப பெயரொடும் வினையொடும்
நடைபெற்றியலுந் தமக்கியல் பிலலே" - (தொல்,இடை) எனத் தொல்காப்பியர் இடைச் சொற்குக் கூறிய இலக்கணம் மிகமிகப் பொருத்தமானதே. இடைச்சொற்கள் தாமாக இயங்கி வரும் ஆற்றலில்லனவாய்ப் பெயரோடும் வி  ைன யோ டு ஞ சார்ந்து இயங்கிவருவன வென்பதே தொல்காப்பியர் இடைச் சொற்குக் கூறிய இலக்கணம். இடைச் சொற்களிற் சில பொருள் குறித்து வருவன வேனும் அவையுந் தணித்தியங்கும் ஆற்ற லற்றவை யென்பதை நாம் மறத்தல் கூடாது; பொருளைக் குறிப்பன பெயராகவும் பெயர்ப்பொருள்ை முடிப்பன வினையா? கவும் அவற்றைச் சார்ந்து அவற்றின் இயக்கத்தால் தாமும் இயங்குவன இடையெனவும் கூறுவது நணி பொருந்தும்,
இடைச் சொற்களின் வகைகள்
ஐமுதலாகச் சொல்லப்பட்ட வேற்றுமை புருபுகளும் விகுதி முதலிய வினையுருபுகளும் அன் முதலிய சாரியையுருபு
靈 262

errrggp Ĉu EU (76292 rŭo
களும் போல முதலிய உவமவுருபுகளும் தத்தமக்குரிய பொருளை புணர்த்தி வரும் ஏ, ஓ முதலியவைகளும் வேறு பொருளின் றிச் செய்யுளில் இசை நிறைத்தற்காக வருவனவும் அசைநிலை மாதி இரையாக வருவனவும் தத்தங் குறிப்பினாற் பொருளுணர்த்தி வருவனவுமென எட்டுவகைப்படு மென்பர் நன்னூலார்
இடைச் சொற்கள் தரும் பொருள்களையும் இலக்கணகாரர் விரித்து விளக்குவர். தெரிநிலைப் பொருள், தேற்றப்பொருள், ஐயப்பொருள், முற்றுப் பொருள், எண்ணற் பொருள், சிறப்புப் பொருள், எதிர்மறைப் பொருள், எச்சப்பொருள், வினாப் பொருள், விழைவுப் பொருள், ஒழியிசைப் பொருள், பிரிநிலைப் பொருள், கழிதற் பொருள், ஆக்கப்பொருள் எனப் பதினான்கு வகைப் பொருள்களை நன்னூலார் இடைச்சொற்கள் தரும் பொருள்களாகக் காட்டியுள்ளார். உரைகாரரி சுட்டுப்பொருள் இடப்பொருள், காலப்பொருள், காலவிடங்களின் எல்லைப் பொருள், தொழில் இடங்களின் பன்மைப்பொருள், விகற்பப் பொருள், இரக்கப்பொருள், வியப்புப்பொருள், பயனின்மைப் பொருள், இகழ்ச்சிப் பொருள், உயர்வுப்பொருள் என்பனவும் இடைச்சொற் பொருள்களாம் என்பர். நன்னூலாசிரியர் கூறிய இடைச்சொற்களுக்கு உதாரணங்கள் பின்னர்த்தரப்படும்.
உரையாசிரியர்கள் காட்டியவற்றுக்கு உதாரணம் வருமாறு: ஒட்டுப் பொருள் தந்தவை - அவன், இவன், உவன் என்பன. வினாப்பொருள் தந்தவை-எவன், யாவன், (2) au mir Gör Gr6 BY AT 6T 6ö7 Lu GADSIM
அ, இ, உ என்பன சுட்டிடைச் சொற்கள். எ. யா, ஆ, ஒ என்பன வினாவிடைச் சொற்கள். இடப் பொருளுணர்த்துவன - முன், பின் என்பன. காலப் பொருளுணர்த்துவன உமுன் பின் என்பன காலப்பொரு ளுந்தருவன
கால இடங்களின் எல்லைப் பொருளைத்தருவது - இனி
இனிச் செய்வேன் (காலம்) இனி எம்மூரி (இடம்)
தொழில் இடங்களின் பன்மைப் பொருளைத் தருவன. தொறும் தோறும்
செய்தொறும் (தொழில்) ஊர் தோறும் (இடம்) விகற்பப் பொருளைத் தருவன. ஆவது, ஆதல், ஆயினும்,
5 free
263籤

Page 141
பத்தாவது எட்டாவது கொடு, பத்தாதல் எட்டாதல் கொடு, பத்தாயினும் எட்டாயினுங் கொடு, பத்துத்தான் எட்டுத் தான் கொடு,
இரக்கப் பொருளைத் தருவன - அந்தோ ஐயோ! ஆ முதலியவை,
அந்தோ இழந்தான், ஐயோ! இழந்தான், ஆ! இழந்தான். வியப்புப்பொருளைத் தருவன - அம்மா, ஆ, ஒ. அம்மா, பெரிது ஆ பெரிது. ஒ! பெரிது. வயனின்மைப் பொருளைத் தருவன வாளா, சும்மா, கொன்னே, வாளா விருந்தான், சும்மா வந்தான், கொன்னே கழிந்தது. இகழ்ச்சிப் பொருளைத் தருவன - சீ, சிச்சி, சீசீ சீச்சி, சை, சீ இதைச் செய்தாயே, சிச்சீ இங்கு வரவேண்டாம்; சீசீ எனது மு ன் னி  ைல யி ல் வராதே, சிச்சி வயிறு வளர்க்கைக்கு மானமழியாதே. சை ப்ெனத் திரியேல். உயர்வுப் பொருளையுணர்த்துவது - ந.
நப் பின்னை, நப்பூதனார், நக்கீரன் சொற்களின் இடையில் மாத்திரம் வருதலின்றி தாம்சார்ந்து வருஞ் சொற்கு முன்னும் பின்னும் வருதலும் தம்மீறுவேறுபட்டு வருதலும் வேறொரு இடைச்சொல் இடைச்சொல்லின் முன் வருதலும் ஆகிய அத்தன்மைகள் இடைச் சொற்கு உரியவென்பர் தொல்காப்பியர், இவற்றிற்கு அவர் கூறிய நூற்பா
"அவைதாம்,
முன்னும் பின்னும் மொழிப்டுத்து வருதலும் தம்மீறு திரிதலும் பிறிதவண் நிலையலும் அன்னவை யெல்லாம் உரிய வென்ப" (தொல், இடை8) என்பது. அது மன், கேண்மியா என்பன சrரிந்து வரும் மொழிக்கு முன் வந்தன. கொன்னூர், ஒ ஒவினிதே என்பன சார்ந்த மொழி யைப் பின்னடுத்து வந்தன. "உடனுயிர் போகுக தில்ல" - இங்கு தில்லென்பது ஈறுதிரிந்து தில்லவென வந்தது. "வருகதில்" அம்மவெஞ்சேரி சேர" - இங்கு வேறொரு இடைச்சொல் வந்தது. தில், அம்ம என்பன இடைச் சொற்கள்,
ஏகார விடைச் சொல்
தத்தமிக்குரிய பொருள்களை யுணர்த்தி வரும் இடைச்சொற் களில் ஏகார இடைச்சொல்லும் ஒன்றாகும். ஏ. கா வி  ைட ச்
藥264

சொல் பிரிநிலைப் பொருள், வினா ப் பொருள், எண்ணுப் பொருள், ஈற்றசைப் பொருள், தேற்றப்பொருள், இசை நிறைப் பொருள் என ஆறு பொருள்களையும் உணர்த்தி வருமென்பர் நன்னூலார், தொல்காப்பியர் இவ்வாறு வகைப்பொருள்களுள் இசை நிறைப்பொருள் ஒன்று தவிர்ந்த ஐந்து பொருள்களையுந் தரும் ஏகார விடைச்சொல் எனக் கூறினார்.
பிரிநிலை - இவனே கொன்றான் என்பதில் ஒரு கூட்டத் திற்குள் ஒருவனைப் பிரித்தெடுத்து அவன் தன்மையுணர்த்துவ தால் இது பிரிநிலையே காரமாயிற்று. இவ்வாறு பொருள் கொள்ளாமல் ஏகாரத்தை வினாவாக்கி இவனே கொன்றால் என்பது வினாப்பொருளாகவும் கொள்ளப்படும். இவன்தான் கொன்றான் வேறு யாருங் கொன்றிலர் எனப் பொருள்படும் போது அது தேற்றப்பொருள் பட்டதாகக் கொள்ளப்படும். இவனே கொன்றான் என்பது இவன் கொன்றிலன் என்னும் பொருளைத் தருமாயின் அது எதிர்மறைப் பொருளையுந்தரும். எதிர்மறைப் பொருள் தொல்காப்பியராலும் நன்னூலாராலும் கூறப்படாத தாயினும் அப்பொருளும் ஏகாரவிடைச் சொற்கு உண்டென்பது பெறப்படும். சந்தர்ப்ப சூழ்நிலைகள் கொண்டு எப்பொருள் என்பது தீர்மானிக்கப்படும். மேல்வரும் பொருள் களுக்குக் காட்டப்பட்ட உதாரணங்களும் அவையல்லாத வேறு பொருள்களையுந் தருவதை உய்த்துணர்ந்து கொள்க.
வினா - நீயே வாங்கினாய்? இது நீயா வாங்கினாயா? என
வினாப் பொருளைத் தருதலால் வினாவாயிற்று
எண் - நிலமே நீரே தீயே வானே வளியேயெனப் பூதங்கள் ஐந்து என்பதில் ஏகாரங்கள் எண்ணுதலால் எண்ணாயிற்று. ஈற்றசை - 'இயம்புவன் எழுத்தே" - என்பதில் ரகாரம் வேறு பொருளின்றி ஈற்றில் அசைத்து நி ற் ற லா ல் ஈற்றசை யாயிற்று.
தேற்றம் - உண்டே யிறப்பு - என்பதில் ஏகாரம் இறப்புண்டென்பதைத் தெளிவுபடுத்தலால் தேற்றமாயிற்று. இசைநிறை - ஏ ஏ யிவளொருத்தி பேடியோ வென்றார். இங்கு வேறு பொருளின்றிச் செய்யுளோசையை நிறைத்து நிற் றலால் இசைநிறை யாயிற்று.
265囊。

Page 142
ஏ ஏ பேதை என இகழ்ச்சிப் பொருளிலும் ஏகாரம் வருகிறது. நன்னூலார் காட்டிய ஆறு பொருள்களுடன் எதிர்மறைப் பொருள், இகழ்ச்சிப் பொருள் ஆகிய இரண்டையுஞ் சேர்த்து ஏகாரவிடைச் சொல் எட்டுப் பொருள்தருமென்பதுங் கவனிக்கற் தக்கது.
ேேபிரிநிலை வினாவெண் ஈற்றசை தேற்றம்
இசைநிறை யெனவா றேகா ரம்மே" (நன். இடை 3) என்பது நன்னூலார் கூறிய நூற்பா,
ஒகார விடைச் சொல்
ஒகாரவிடைச் சொல், ஒழியிசைப் பொருள், வினாப்பொருள், சிறப்புப் பொருள், எதிர்மறைப் பொருள், தெரிநிலைப் பொருள் கழிந்ததற் கிரங்குதற் பொருள், அசை நிலைப் பொருள். பிரிநிலைப் பொருள் என எண் வகைப் பொருள் தளுமென்பர் நன்னூலார். தொல்காப்பியர் இவற்றுட் கழிந்ததற் கிரங்கல், அசை நிலை என்னும் இரண்டு தவிர்த்து அறுவகைப் பொருள் கூறினார்.
ஒழியிசைப் பொருள் = படித்தற்கோ வந்தான் என்பது படித் தற்கண்று விளையாட என ஒழிந்த பொருளைத் தரு மிடத்து ஒழியிசையாகும். வேறு வகையாகப் பொருள் கொண்டு வேறு பொருள் தந்ததாகவுங் கொள்ளலாம். வினாப் பொருள் - குற்றியோ மகனோ எ ன் பது குற்றியா மகனா என வினவுதற் பொருள்தருதலால் வினாவாயிற்று.
சிறப்பு - சிறப்பு என்பது உயரீவு சிறப்பு எனவும், இழிவு சிறப்பு எனவும் இரு வகைப்படும். ஒஒ பெரியன் என்பது ஒருவனது பெருமையை உணர்த்துவதனால் உயர்வு சிறப்பு. ஒ ஓ கொடியன் என்பது ஒருவனது சிறுமையை உணர்த்துவதால் இழிவு சிறப்பு.
எதிர்மறை - அவனோ வாங்கினான் என்பது அவன் வாங்கினானல்லன் என எதிர்மறைப் பொருளைத் தரும்போது எதிர்மறையாகும்.
தெரிநிலை - ஆணோ அதுவுமன்று பெண்ணோ அதுவுமன்று
என்னும் போது அவ்விரு தன்மையும் இல்லாத அலியை வெளிப்படையாகத் தெரியக் காட்டுதலால் தெரிநிலை யாயிற்று.
囊266

இழிந்ததற் கிரங்குதல் - ஒஓ தமக்கொரு நன்மையுணராரி என்
பதில் ஒகாரம் கழிந்ததற் கிரங்கல் ஆயிற்று. அசைநிலை - சொல்லுவன் கேண்மினோ என்பதில் ஒகாரம் எப்பொருளுந் த ரா து நிற்றலால் அசை நிலை யாயிற்று. பிரிநிலை - அவர்களுள் இவனோ செய்தான் என்பது ஒருவனைப்
பலருள்ளும் பிரித்தெடுப்பதால் பிரிநிலையாயிற்று. ஒகாரம் ஐயப்பொருளில் வருவதுமுண்டு. எ ட் டோ பத்தோ தருவார் என்பது ஐயப்பொருளில் வந்தது. 'ஒழியிசை வினாச் சிறப்பு எதிர்மறை தெரிநிலை கழிவு அசைநிலை பிரிப்பெனவெட் டோவே"
(நன். இடை, 4) என்பது நன்னூல்.
உம் என்னும் இடைச்சொல்
உம்மையிடைச் சொல் எதிர்மறை, சிறப்பு, ஐயம். எச்சம், முற்று, அளவை, தெரிநிலை, ஆக்கம் என்னும் எட்டுப் பொருள்களையுணர்த்தி வருமென்பரி நன்னூலார், தொல்காப் பியரும் இந்த எட்டுப் பொருள்களும் உம் எ ன் னு ம் இடைம் சொற்கு உரியவெனக் கூறுவர். நன்னூலார் அளவை என்று குறிப் பிட்டதைத் தொல்காப்பியர் எண் எனக் கூறுவர்.
எதிர்மறை - சாத்தன் வருதற்கும் உரியன் என்பது பெரும் பாலும் வராமைக்கே உரியன் எனப் பொருள் தரும்போது எதிர்மறைப் பொருள் தந்தது. இது வருதற்கும் வராமைக் கும் உரியன் என ஐயப்படும்போது ஐயப்பொருளையுற் தரும்.
ஒறப்பு - சிறப்பு உயர்வு சிறப்பு, இழிவு சிறப்பு என இரு வகைப்படும். குறவரும் மருளுங் குன்றம் என்பது மரு ளாது குன்றேறும் வன்மையுடைய குறவரி எனப் பொருள் படுவதால் உயர்வு சிறப்பும்மையாயிற்று. சில இலக் கண உரையாசிரியர்கள் குன்றின் உயர்வைச் சிறப்பித்தது இவ்வும்மையென்பf. "உம்" இடைச்சொற் பெற்ற சொல் குறவர் ஆதலால் குறவர்க்கே உயரிவு பெறப்படவேண்டும். சேனாவரையரும் தமதுரையில் குறவரது உயர்வையே
267灘

Page 143
குறிப்பிட்டார். குறவர் வழியாக மலையும் உயர்வுபெற் றிருந்தாலும் குறவர்க்கே அவ்வும்மை உரியதென்க, "புலைய்னும் விரும்பாப் புன்புலால் யாக்கை" என்பது புலையனது இழிவைச் சிறப்பித்தலால் இழிவு சிறப்பும்மை யாயிற்று. புலையன் வாயிலாக யாக்கையும் இழிவு பெற்றா லும் உம்மைபெற்ற சொற்கே இழிவு தோன்றுதல் முறை பென்கு,
அளவை - சோழனும் பாண்டிய்னும் வந்தனர்" இது எண்ணி
நிற்றலால் எண் அல்லது அனவை எனப்படும். தெரிநிலை - நீ கேட்ட பத்தும் எட்டும் என்பவற்றில் பத்துற் தரேன் என்றவிடத்து எட்டுந் தருவேன் எனப் பொருள் படுவதால் தெரி நிலைதுாயிற்று. ஆக்கம் - படிப்பும் ஆயிற்று என்பது உழைப்பும் ஆயிற்று எனப்
பொருள் தருமிடத்து ஆக்கப்பொருள் பயந்தது.
இடைச்சொற்குச் சிறப்பு விதிகளும் உள. முற் றும்மை யொரோவழி எச்சமுமாகும்" என்பதனால் முற்
o gaub"
றும்மை எச்சப்பொருள் தருவதும் பெறப்படுகிறது. எச்சப் பொருள்படுதல் பெரும்பாலும் எதிர்மறையிலாகும், எல் லாரும் வந்திலளி என்றால் சிலர் வந்தார் என எச்சப் பொருள்படுவது காண்க. பத்துங் கொடார் என்றாற் சில கொடுப்பர் எ ன ப் பொருள்படுவதும் எச்சப்பொருளே யாகும்.
எச்சப் பொருளில் வரும் உம்மை செவ்வெண்ணில் (உம்மை வெறாது வருவது) வருமாயின் ஈற்றில் நிற்கும். கல்வி, செல்வம், ஒழுக்கம், குடிப் பிறப்பும் பெறுவாருமுனர் என்பது செவ்வெண் னில் வந்து இறுதியில் உம் பெற்றது.
'எச்சம் சிறப்பே ஐயம் எதிர்மறை
முற்றே எண்ணே தெரிநிலை யாக்கமென்று அப்பால் எட்டே உம்மைச் சொல்லே'
(தொல், இடை 7) என்பது தொல்காப்பியம்.
*எதிர்மறை சிறப்பு ஐயமெச்ச முற்றளவை தெரிநிலை யாக்கமோ டும்மை ப்ெட்டே'
(நன். இடை 6. என்பது தன்னுரல்,
靈268

என என்று, என்னும் இடிைச்சொற்கள்
என என்று, என்னும் இடைச்சொற்கள் வினை, பெயர், குறிப்பு, இசை, எண், பண்பு என்னும் ஆறு பொருள்களிலும் வருமென்பது நன்னூலாரி கூற்று. தொல்காப்பியரும் இவ்விரு இடைசி சொற்களுக்கும் அந்த ஆறு பொருள்களையுமே குறிப் பிட்டுள்ளார். வினையோடியைதல் - மகன் பிறந்தானெனத் தந்தையுவந்தான். இங்கே எனவென்னும் இடைச்சொல் பிறந்தான் என்னும் வினையோடியைந்தது. மகன் பிறந்தானென்று தந்தை யுவந்தான். இதில் என்று என்னும் இடைச்சொல் வினை யோடியைந்தது. பெய்ரோடியைதல் - அழுக்காறென ஒரு பாவி. இங்கு என என்பது அழுக்காறு என்னும் பெயரோடியைந்தது. அழுக் காறு என்று ஒரு பாவி - இதில் என்று G). LLI
ரோடியைந்தது. குறிப்போடியைதல் - பொள்ளென வாங்கே புறம் வேராரி, ல் என எனும் இடைச்சொல் 9 பொள் " என்னும் இதி னும் இ @l
விரைவுக் குறிப்போடியைந்தது. பொள்ளென்று ஆங்கே புறம் வேராரி என்பதில் என்று என்பது குறிப்போடியைந்தது. இசையோடியைந்தது - ஒல்லென வொலித்தது. இது இ சை
யோடிசைந்தது. இசையென்பது ஒலியைக் குறிக்கும், ஒல்லென்று ஒலித்தது என்பதும் அது. எண்ணோடியைந்தது - நிலமென நீரென தீயென - இது எண்ணோடியைந்தது. நிலமென்று நீரென்று, தீயென்று இதுவும் எண்ணோடியைந்தது. பண்போடியைந்தது - வெள்ளென விளர்த்தது. இதில் வெள்"
ளென்ற பண்போடியைந்தது. வெள்ளென்று விளர்த்தது என்பது மது. தொகை பெற்றும் பெறாதும் வரும் இடைச்சொற்கள்
பெயர்ச் சொற்களிடத்தே எண்ணிடைச் சொல் தொக்கு வரு ஒன்ற செவ்வெண்ணும் ஏ, என்றா. எனா என்னும் மூன்றிடைச் சொல்லுமாகிய நான்கும் தொகை பெற்று வருவனவாம். உம், என்று, என, ஒடு எலும் நான்கிடைச் சொற்களும் தொகை வெற்றும் பெறாமலும் வரும்
269徽

Page 144
செவ்வெண் - சாத்தன் கொற்றன் இருவரும் வந்தார். இங்கு சாத்தன், கொற்றன் என்பன எண்ணிடைச் சொல் பெறா மல் வந்து இரண்டு என்னுந் தொகைபெற்றது. ஏ இடைச்சொல் - சாத்தனே கொற்றனே இருவரும் வந்தார். என்றா இடைச்சொல் - சாத்தனென்றா கொற்றனென்றா
இருவரும் வத்தார். எனா இடைச்சொல் - சாத்தனெனாக் கொற்றனெனா இரு
வரும் வந்தார். இவை நான்கும் எண் பெற்றுவந்தன. தொகை பெற்றும் பெறாமலும் வருவன உம் இடைச்சொல் - சாத்தனும் கொற்றணும் இருவரும் வந்தார் - எண் பெற்றது சாத்தனுங் கொற்றணும் வந்தார் - எண்பெறாதது என்று இடைச்சொல் - சாத்தனென்று கொற்றனென்று இருவருளர் - எண் பெற்றது
சாத்தனேன்று கொற்றனென்று உளர் - எண் பெறாதது என இடைச்சொல் - சாத்தனெனக் கொற்றனென இருவருளர் - எண் பெற்றது சாத்தனெனக் கொற்றனெ உளர் - எண் பெறாதது ஒடு இடைச்சொல் - சாத்தனோடு கொற்றனோடு இருவருளர் - எண் பெற்றது சாத்தனோடு கொற்றனோடுளர் - எண் பெறாதது
பெயர்ச் செவ்வெண்ணும், உம்மைத்தொகையும் ஒரே மாதிரி யானவை போலக் காணப்பட்டாலும் அவற்றில் வேறுபாடுண்டு, சாத்தன் கொற்றன் இருவரும் வந்தார் இது செவ்வெண். சேர சோழ, பாண்டியர் உம்மைத் தொகை. இவற்றில் செவ்வெண் என்பது தனித்தனி மொழியாக விட்டிசைத்து வரும். உம்மைத் தொகை ஒரு மொழிபோலப் பிரிந்திசையாது வரும். இதுவே வேறுபாடாகும்.
தில் என்னும் இடைச்சொல்
தில் என்னும் இடைச்சொல் விழைவு, காலம், ஒழியிசை ஆகிய மூன்று பொருள்களையும் உணர்த்தும், விழைவுப் பொருள் - அரிவைய்ைப் பெறுகதில் லம்ம யானே. இங்கே அரிவையைப் பெறுவதிலுள்ள ஆசை வெளிப்படுத் தப்படுவதால் விழைவுப் பொருளில் வந்தது.
靈270

ബ~~-
.-ത്തi-.. −
காலப் பொருள் - பெற்றாங் கறிகதில் லம்ம இவ்வூரே. இது பெற்ற காலத்தில் அறிகவெனக் காலத்தை உணர்த்துவ தாற் காலப்பொருள்.
ஒழியிசை - வருகதில் லம்மவெஞ் சேரிசேர. இதில் வந்தால் இன்னது செய்வேனென ஒழிந்த பொருளைத் தருதலால்
ஒழியிசை.
மன் என்னும் இடைச்சொல்
மன் என்னும் இடைச்சொல் அசைநிலை, ஒழியிசை, ஆக்கம், கழிவு, மிகுதி, நிலைபேறு என்னும் ஆறு பொருளையும் உணர்த்தி வரும். அசைநிலை - அது மன் கொண்கன் தேரே. மன் வேறு பொருள்
பய்வாமையால் அசைநிலையாயிற் று.
ஒழியிசை - கூரியதோர் வாள்மன். இது இப்போது பழுதடைந்து விட்டதென ஒழிந்த பொருளைத் தருதலால் ஒழியிசை,
ஆக்கம் - பண்டு காடுமன் . இன்று நாடாயிற்று என்னும் ஆக்
கப் பொருளைத் தருதலால் ஆக்கம்.
கழிந்ததற் கிரங்கல் - சிறியகட் பெறினே யெமக்கீயுமன்னே
இதில் இந்நிகழ்ச்சி இப்போது கழிந்துவிட்டதென இரங்குத லால் கழிந்ததற்கு இரங்கலாயிற்று.
மிகுதி - எந்தை எமக்கீயுமன். இதில் மிகுதியும் ஈவான் என்
னும் பொருளைத் தருதலால் மிகுதியாயிற்று.
நிலையேறு - மன்னா வுலகத்து மன்னியது புரிமோ. இதில் நிலைபேறில்லாத உலகில் நிலைபெற்றதைச் செய்யென்ப தால் நிலைபேறு.
மற்று என்னும் இடைச்சொல்
மற்று என்னும் இடைச்சொல் வினை மாற்றுப்பொருள், அசைநிலைப் பொருள், வேறு என்னும் பொருள் ஆகிய மூன்று பொருள்களையுந் தரும். வினை மாற்று - "மற்றறிவாம் யாமிளையம் என்னனது. இதில் நல்வினையை விரைந்தறிவாம் என்னும் வினையை மாற்றி இனிமேல் விரையாமல் அறிவாம் என்னும் பொருளைத் தருதலால் வினை மாற்றாயிற்று.
271囊

Page 145
"வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்” என்னுங் குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகரி, பிறவாமையின் சிறப்புக் கூறி பின் அது வரும் வழி கூறத் தொடங்குகின்றமையின் " மற்று" வினை மாற் றின் கண் வந்தது எனக் கூறுவதுங் காண்க அசைநிலைப்பொருள் - "மற்றென்னையாள்க’ என்பதில் என்னை ஆள்க என்பதே பொருளாதலால் மற் று என்பது எப் பொருளுந் தராது அசைநிலையாயிற்று. வேறு என்னும் பொருள் - 'ஊழிற் பெருவலி யாவுள
மற்றொன்று சூழினுந் தான்முந் துறும்" - என்பதில் மற்று என்பது ஊழ் வினைக்கு எதிரானதோர் உபாயம் எனப் பொருள்படுத லால் அது வேறு (பிறிது) என்னும் பொருள் தந்தது. மற்று என்னும் இடைச்சொல் பின் என்னும் பொருளுந் தருவதாக உள்ளது. "மற்றிவஞங் கோற் கண்ணளாகுங் குனிந்து" என்பதில் மற்று என்பது பின் என்னும் பொருள் தந்தது.
மற்றை என்னும் இடைச்சொல்
மற்றை அல்லது மற்றையது என்பது மு த லி ற் சுட்டிய பொருளை ஒழித்து அதற்கு இனமாகிய பிறிதொரு பொருளைக் குறித்து வருவதாகும். இரண்டு பொருளை வைத்திருப்பான் அதில் ஒன்றைக் கொடுப்ப அதை வாங்க மறுத்து மற்றையதைத் தா என்பானாயின் அது சுட்டியதற்கு இனமாக வந்தது கான
6) rreb.
மற்று, மற்றை என்பன இரண்டுந் தனித்தனிச் சொற்களாத லால் அவற்றுக்குத் தனித்தனி இலக்கணம் வகுக்கப்பட்டதென்க,
கொல் என்னும் இடைச்சொல்
கொல் என்னும் இடைச்சொல் ஐயப்பொருளிலும் அசை நிலைப் பொருளிலும் வரும். சாத்தன் கொல் கொற்றன் கொல் வந்தான் என்பதில் சாத்தனோ கொற்றனோ வந்தான் என ஐயப்பொருளைத் தந்தது.
*" கற்றதனாலாய பயனென் கொல் ' - இங்கு கொல் என்பதற்கு வேறு பொருளேதுமின்மையால் அது அசை நிலை,
藥272

அவன் கொல் செய்தான் என்பதில் அவனோ செய்தான் என்னும் பொருள்பட நிற்றலால் வினாப் பொருளைத் தருவது é5/76ggy GRDITLb.
ஒடு தெய்ய வென்னும் இடைச் சொற்கள்
இந்த இரண்டு இடைச்சொற்களும் இசை நிறைப் பொருளைத் தருவனவாம்.
"விதைக் குறு வட்டில் போ தொடு பொதுள' - என்பதில் ஒடுவும் *சொல்லேன் தெய்ப் நின்னொடும் பெயர்த்தே" - என்பதில் தெய்யவும் இசை நிறைப் பொருளில் வந்தன.
அந்தில் ஆங்கு என்பன
இந்த இரண்டு இடைச்சொற்களும் அசை நிலைப்பொருளன வாயும், இடப்பொருளனவாயும் வரும்,
"அந்தில் கழலினன் கச்சினன்" இதில் அந்தில் என்னும் இடைச்சொல் வேறு பொருள்தராமையால் அசைநிலையாயிற்று.
வருமே சேயிழை அந்திற் கொழுநற் காணிய" இதில் அவ்விடத்து என்னும் பொருள்தருதலால் இடப்பொருட்டாயிற்று. "ஆங்கத் திறனல்ல யாங்கழற" - என்பதில் வேறு பொருள்படாததால் அசைநிலையாயிற்று.
"ஆங்காங்காயினு மாகுக" - இங்கு அவ்வவ்விடத்து எனப் பொருள்படுதலால் இடப்பொருட்டாயிற்று.
அம்ம என்னும் இடைச்சொல்
"அம்ம" என்னும் இடைச்சொல் உரையசைப் பொருள் தருவதாயும் கேள் என்ற ஏவற்பொருள் தருவதாயும் வரும்.
அது மற்றம்ம - என்பதில் வேறு பொருள்படாமல் வாக்கியச் சுவைபட வருதலால் உரையசையாயிற்று.
"அம்ம வாழி தோழி’ என்பதில் ஒன்று சொல்வேன் கேள் என்னும் ஏவற்பொருள் தந்து நிற்றலால் ஏவல் ஆயிற்று.
மா என்னும் இடைச்சொல்
மா என்னும் இடைச்சொல் வியங்கோள் வினையிடத்து வருகின்ற இடைச்சொல்லாகும்.
8 273懿

Page 146
புற்கை (புண்க்மா கொற்கை யோனே" இதில் மா என்னும் இடைச்சொல் உண்ஐ என்னும் வியங்கோள் வினைச் சொல்லையடுத்து வந்தது.
மூவி அசைச் சொற்கள்
அசைநிலையிடைச் சொற்களெனத் தொல்காப்பியர் கூறி யுள்ளன யா, கா, பிற, பிறக்கு, அரோ, போ, மாது என்னும் ஏழுமாம். ஆனால் நன்னூலார் இந்த ஏழினோடு இகும், சீன் குரை, ஒரும், போலும், இருந்து, இட்டு, அன்று. ஆம், தாம் தான், கின்று, நின்று என்னும் பதின்மூன்றிடைச் சொற்கள் சேர்த்து இருபது இடைச் சொற்களை எடுத்துக் காட்டியுள்ளார். முன்னிலை அசைச் சொற்கள் பின்னர்க் கூறப்படுதலால் இவை மூன்றிடத்துக்கும் உரிய வெ ன் கி. இவற்றிற்கு எப்பொருளும் இல்லாமையால் அவற்றை நீக்கிப் பொருள் கொள்ளப்படும்,
1. aurr - பா பன்னிருவரி மாணாக்கரி Â3. 6ff - இவட்காண்டிகா 3. பிற  ைஅல்ல பிற 4. பிறக்கு - பிறக்கதனுட் செல்லான் 5. அரேr - குயிலாலுமரோ 6. (8u ሀmr - வாழாதென்போ 7. மாது  ைவிளிந்தன்றுமாதோ 8. இகும்  ைகீாண்டிகும் அல்லமோ 9 . இன் டீ என்றிதின் 10. குரை - பல்குரைத் துன்பம் 11. ஒரும் - அஞ்சுவதோரும் அறனே 12. போலும் - மகிழ்த்தனன் போலும் 13. இருந்து - எழுந்திருந்தேன் 14. இட்டு - பிளந்திட்டாண் 15. அன்று - சேர்து மன்றே 18 ஆம் - பணியுமாம் என்னும் பெருமை 17. தாம் - நீர்தாம் செய்தீர் 18. தான்  ைநீதிான் செய்தாய் 18. கின்று - ஆசைப்பட்டிருக்கின்றேன்
20. நின்று - துணையாய் நின்றான் ❖።me

ஆசைப்பட்டிருக்கின்றேன் என்பது ஆசைப்பட்டேன் எனவும் துணையாய் நின்றான் என்பது துணையானான் எனவும்
பொருள்படுமிடத்து கின்று நின்று என்பன அசை நிலைகள்.
முன்னிலையசைச் சொற்கள்
முன்னிலையசைச் சொற்களாக மியா, இன, மோ, மதி, இகும், சின் என்னும் ஆறினையுந் தொல்காப்பியரி கூறினார், நன்னூலார் இவற்றில் இறுதியிரண்டாகிய இகும், சின் என்னும் இரண்டையுந் தவிர்த்து அத்தை இத்தை, வாழிய, மான, ஈ, யாழ என்னும் ஆறு கூட்டிப்பத்து இடைச்சொற்கள் கூறினார்.
1. மியா
8 gas → $nt ଜ0ifiଣ୍ଡ
S, Guatr ஊ மொழிமேன
46 மதி - கேண்மதி
5. அத்தை - செலீயரத்தை
இத்தை - நீயொன்று பாடித்தை 7. வாழிய - கானிய வாழிய 8. O (o) (T677 - தவிர்ந்தீக மாள
9 a fo - சென்றி பெரும 10. யாழ - நீயே செலவயர்ந்தி யாழ
இவையெல்லாம் பொருளி ன் றி முன்னிலையசைகளாக வந்தன.
ஆங்க என்னும் இடைச்சொல்
இதுவும் உரையசையாய் வரும், ஆங்கக் குயிலும் மயிலுங் அாட்டியென உதாரணங் கூறுவர், சேனாவரையர், ஆங்க என்ற இடைச்சொல் அவர் காட்டிய உதாரணத்தின்படி இடப் பொருளையுணர்த்துவதற்கும் உரிமையுடைத்தாகும்.
ஒப்பில் போலி
ஒப்பில் போலியென்பது பெரும்பாலும் போலும் என்ற சொல்லாகவே வரும். இது உவமை குறித்து வராது உரை யசையாகக் கட்டுரைச் சுவைபட வரும். மங்கலமென்பதோரி ஊருண்டு போலும் என்பதில் போலும் என்பதற்கு எத்தகைய பொருளுமில்லை. நெருப்வழற் சேர்ந்தக்கால் நெய்போல்வ
273驚

Page 147
தூஉம் என்பது மது, நெய்போல்வது என்று நெய்யல்லாத வேறொன்றைச் சுட்ட வந்ததாகாது, கட்டுரைச் சுவைபட நிற்றலின் அதுவும் உரையசையாக வந்த ஒப்பில் போலியேயாம்
இக்காலத்தில் வழங்குஞ் சில இடைச்சொற்கள்
ஆனால், அது காரணமாக, அல்லது. ஆதல், ஆயினும், ஆவது, இல்லாவிட்டால், என்றாலும், எனினும், அல்லாமல், அன்றி, தவிர, ஒழிய, ஆகட்டும், ஆகவே, ஆகையால், ஆதலால், ஆனாலும், என்றாலும், என்றாலுஞ் சரி. ஆயின், ஆனால், எனில், எனின், ஆனபோதிலும், இருந்தாலும், இருந்த போதும் எனப் பல வகையான இடைச்சொற்கள் உலக வழக்கிற் புகுந்துள்ளன. இவற்றைத் தனித் தனி வாக்கியத் தமைத்து இவை தரும் பொருள்களையுஞ் சிந்தித்துப் பார்த்தல் நல்ல பயிற்சியாகும். அப்ப, இப்ப, ஆம் முதலிய இடைச்சொற்களின் பிரயோக நிலைகளையுங் கண்டுபிடிப்பதும் இடைச்சொற்களை நன்கு விளங்க உதவும்.
6, உரிச் சொல்லியல்
உரிச்சொல் என்பது யாது?
பெயர்ச்சொல் உருபேற்று நிற்பது அல்லது உருபேற்கும் நிலையி லுள்ளது. வினைச்சொல் காலங்காட்டி நிற்பது அல்லது காலத்தைக் குறிப்பாற் காட்டுவது. இடைச்சொல் தனித்து நிற்கும்போது தனக்கெனப் பொருள் ஏதும் இலதாய் பெயரை அல்லது வினையைச்சார்ந்து பொருள் தெரிய நிற்பது. உரிச் சொல் பெயர்போல உருபேற்றலும் விளைபோலக் காலங்காட்டு வதும் இல்லதாயினுந் தனக்கெனப் பொருள் வேறுடையது. சிறிது மாற்றம் பெற்றும் பெறாமலும் பெயராகவும் வினையா, கவும் வர வல்லது. அந்நிலையில் அது பெயர்ச்சொல் அல்லது வினைச்சொல் எனப்படுகிறது. அவ்வாறன்றித் தனது பொருளை மட்டும் உணர்த்தி நின்று உரிச்சொல் எனப்படுவது, பெயர் வினைகளின் பண்பை யுணர்த்தி அவற்றிற்கு உரிமை பூண்டு நிற்றலின் உரிச்சொல் லென்பது காரணக் குறியென்பர். -
藥276

உரிச்சொல் பற்றி இலக்கண ஆசிரியர்கள் பலரும் பல்வேறு வகையாகக் கூறுவர். பிரயோக விவேக நூலாசிரியராகிய சுப்பிரமணிய தீட்சிதர் பதினென்பாடைச் சொல் தேசியச் சொல் அனைத்தும் உரிச்சொல்லே யெனக் கூறினார். அவர்கருத்துப்4 எல்லாச் சொல்லும் உரிச்சொல்லாதல் வேண்டும். நன்னூலா சிரியர் செய்யுட்குரியீன உரிச்சொல் என்று கூறினார். இவர் கூற்றுப்படி வழக்கில் உரிச்சொற்கள் வரமாட்டா என்பது பெறப் படுகிறது. ஆனால் தொல்காப்பியரும் நன்னூலாருங் கூறிய உரிச்சொற்களிற் பல வழக்கிலும் பயின்று வருவதை மறுக்
(2fô 41g. 8R J f7"g5/a
தொல்காப்பியரும் உரிச்சொல்லும்
தொல்காப்பியர் உரிச்சொல் பற்றிக் கூறியவற்றை ஆராயந் தால் அவர் 5 T L * g. EL e fé (agrdi விலக்கணம் பெரிதும் பொருத்தமுடைய தென்பது புலப்படும். தொல்காப் பியர் உரிச்சொல் தோன்று மிடங்களாக மூன்று கூறுகிறார்: இகை, குறிப்பு, பண்பு என்பனவே அந்த மூன்றுமாகும். உரிச் சொற்கள் பெயரினும் வினையினும் தம் உருதடுமாறி நிற்கும் என்பது அவர் கூறிய இரண்டாவது இலக்கணமாகும். அதாவது உரிச்சொல் பெயர் போலவும் வினை போலவுந் தோற்றங் காட்டும் என்பது அவர் கூற்றின் பொருள்போலத் தெரிகிறது. "பெயரினும் வினையினும் மெய்தடுமாறி' என்பது அவர் கூற் றாகும். தடுமாறி என்ற வார்த்தையைத் தொல்காப்பியர் தக்க வகையிற் பயன்படுத்தியுள்ளார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. கருமை என்னும் பண்புச் சொல்லை எடுத்துக் கொள்வோம். இது தொல்காப்பியர் கூறியவாறு உரிச்சொல் பிறப்பதற்கு நிலைக்களனாகிய பண்பு ஆதலால் உரிச்சொல் எனலாம். எனவே கருங்குதிரை யென்பதில் முதற்சொல் உரிச் சொல்லாகவும் இரண்டாவது சொல் பெயர்ச் சொல்லாகவுங் கொள்ளலாம். கருங்குதிரை யென்பது பண்புத் தொகைக்கும் உதாரணமாக வருகிறது. அப்போது கருமையாகிய குதிரையென விரித்து இருமை யென்பதைப் பண்புப் பெயர் என்பர். இருங் குதிரை யென்பதைக் கரியதாகிய குதிரை என விரிக்க வேண்டு மென்பது நச்சினார்க்கினியர் என்னும் தொல்காப்பிய எழுத்ததி கார உரையாசிரியர் கூற்று. கரும் பார்ப்பான் என்பதைக்
277籌

Page 148
கரியனாகிய பார்ப்பான் எனவும் கரும் பார்ப்பணி என்பதைக் கரியனாகிய பார்ப்பணி எனவும் விரிக்க வேண்டு மென்பதும் நச்சினார்க்கினியர் கருத்து கருமையாகிய குதிரை யென இலக்கண ஆசிரியர் சிலர் விரித்தாலும் அது பொருத்தமற்ற தென்பது தெளிவாகத் தெரிகிறது, குதிரை கருமை என்னும் பண்பாகாமல் கரியது என்னும் பண்பியாதலால் நச்சினார்க்கினியர் கூற்றுப் பொருத்தமானதே. கருங்குதிரை யென்பதைக் கருமையையுடைய இரையென விரித்து இரண்டாம் வேற்றுமை உருபும் பொருளுந் தொக்க தொகையாகவுங் காணலாம். கருமை என்பது கறுப்பு எனவும் பொருள்படும். அப்போது பெயராகிறது. கறுத்தான் என வரும் போது வினைச்சொல்லாகி விடுகிறது, உரிச் செல் பெயரினும் வினையினும் மெய் தடுமாறுவதற்கு இவ்வுதாரனம் ஒன்றே போதியதாகும்.
தொல்காப்பியர் உரிச்சொற்குக் கூறிய மூன்றாவது இலக்கணம், "ஒரு சொல் பல பொருட்குரிமை தோன்றினும்பல சொல் ஒரு பொருட்குரிமை தோன்றினும்" என்பது . இதன் கருத்து, ஓர் உரிச்சொல் நின்றே பலபொருட்கு உரிமை தோன்றி னாலுஞ்சரி அல்லது பலவுரிச்சொற்கள் நின்று ஒரு பொருட்குரிமை தோன்றினாலுஞ் சரி யென்பது. இக் கூற்றுக்கு உதாரணமாகக் கடியென்னுஞ் சொல்லை யெடுத்துக் கொண்டால் அது காப்பு கூர்மை, விரைவு, விளக்கம் எனப் பல பொருள்களுக்கு உரிமை பூண்டு நிற்றலையும் சால, உறு, தவ, நனி, கூர், கழி, என்னும் உரிச்சொற்களை எடுத்துக் கொண்டால் அவை மிகல் என்றும் ஒரு பொருளைத் தந்து நிற்றலையுங் காணலாம்.
மேலுந் தொல்காப்பியர் உரிச்சொற்குக் கூறிய நான்காவது இலக்கணம், "பயிலாதவற்றைப் பயின்றவை சார்த்தி. பொருள் வேறு கிளத்தல்" என்பது ஆசிரியர் சேனாவரையர் கருத்துப்படி பயிலப்படாத உயிர்ச்சொல்லைப் பெயர் வினைகளோடு சார்த்இப் பொருளுணர வேண்டும் என்பது பெறப்படுகிறது. அதாவது வெளிப்படப் பொருள் விளங்காத உரிச்சொற்களைப் பொருள் விளங்க நிற்கும் பெயரோடும் வினையோடுஞ் சார்த்திப் பொருளுணர வேண்டுமென்பதே அதன் பொருளாகும். செழுமை என்பது ஒரு உரிச்சொல். அது பண்புப் பெயராயும் வரும். செழுமை என்பதில் இருந்து செழிப்பு என்னும் பெயரும்
藥278

செழித்தது என்னும் வினையுந் தோன்றுகின்றன. அதனால் செழிப்பு என்ற பெயரோடாவது செழித்தது என்னும் வினையோடாவது சார்த்திச் செழுமை என்ற உரிச்சொல்லின் பொருளை உணர வேண்டும் என்பது அவர் கருத்து. பெயர் போலவும் வினைபோலவும் அவற்றிற்கு முதனிலையாயுந்தோன்றி இசை, குறிப்பு,பண்பு என்னும் பொருள்களுக்குத் தாமே உரியவாய் வருஞ் சொற்கள் உரிச்சொற்கள் என்று தொல்காப்பியர் கூறிய நான்கு இலக்கணங்களையுஞ் சேர்த்துச் சுருக்கமாகக் கூறலாம். தொல்காப்பியர் உரிச்சொற் பற்றி மேலுங் குறிப்பிடுகையில்,
வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா வெளிப்பட வாரா வுரிச்சொன் மேன"- (தொல், உரி, 2) என்பதால் வெளிப்பட வரும் உரிச் சொற்கள் பல வென்பதும் அவற்றை யெடுத்தோத வேண்டிய அவசியமில்லை யென்பதால் அவற்றைக் கூறாது விட்டுவிட்டார் என்பதும் பெறப்படுகிறது. மையீற்றுப் பண்புப் பதங்களெல்லாம் உரிச்சொல்லாகும் முதனிலையையும் உடையவை. செம்மை என்னும் பண்புப் பெயர் செவ்வாழையென வரும் போது உரிச்சொல்லாகி விடுகிறது. இத்தகைய உரிச்சொற்கள் எடுத்துக் காட்ட வேண்டியன வல்ல வென்பதும் தாம் எடுத்துக் காட்டுவன வெளிப்பட வாரா உரிச்சொற்கள் என்பதும் பெறப்படுகிறது.
நன்னூலாசிரியரும் உரிச் சொல்லும்
நன்னூலார் உரிச் சொற்பற்றிக் கூறியவற்ற்ை இணிக்
கிாண்போம்.
"பல்வகைப் பண்பும் பகர் பெயராகி
ஒரு குணம் பலகுணம் தழுவிப் பெயர்வினை
ஒருவா செய்யுட் குரியன வுரிச்சொல்" (நன். உரி, 1) என நன்னூலாசிரியர் உரிச்சொற் பற்றி நான்கு குறிப்புக்கள் தருகின் றார். ஒன்று பல்வகைப் பண்பும் பகர் பெயராதல். இரண்டு ஒரு குணப் பல குணந் தழுவி வருதல். மூன்று பெயர்வினைச் சொற் களை விட்டு நீங்காதவையாயிருத்தல், நான்கு செய்யுட்குரியன வாதல் என்பன உரிச்சொற்பற்றிய நன்னூலாரது விளக்கமாகும். பண்புப் பகா நிலைப் பதமெனப் பதவியலில் "செம்மை, சிறுமை, சேய்மை தீமை." என்பன முதலாகக் கூறி இவற்றுக்கு எதிர்மறை
279鐵

Page 149
யாக வருவனவும் இவை போல வருவனவும் எனக் கூறிய அனைத்தும் உரிச்சொற்களில் அடங்கு மென்கிறார் நன்னுரலா சிரியரி , அவர் கூறும் மற்றோ ரிலக்கணம் ஒரு குணந் தழுவியும் பலகுணத் தழுவியும் வருமென்பது. இது தொல்காப்பியர் கூறிய "ஒரு சொல் பல பொருட்குரிமை தோன்றினும் பல சொல் ஒரு பொருட்குரிமை தோன்றினும்" என்பதையே குறிக்கு மென்பது உரையாசிரியர்களின் கருத்து பெயர்வினை ஒருவா என்பதும் தொல்காப்பியரி கூறிய பெயரினும் வினையினும் மெய்தடுமாறி என்பதனையே குறிக்கும் எனலாம். கடைசியாக நன்னூலார் கூறியது செய்யுட்குரியன வுரிச்சொல் என்பது, உரிச் சொற்களிற் பல வழக்கிலும் பயின்று வருதலால் செய்யுட்குரியன வுரிச்சொல் என்பது பன்மை பற்றிய வழக்குப் போலும், செய்யுளிலேயே பெரும்பான்மையும் வருதலின் நன்னூலார் அவ்வாறு கூறினார் போலும் ,
நன்னூலாசிரியர் உயிரி உள்ளனவும் உயிர் இல்லனவுமாதிய பொருள்களின் குணப்பண்பு உரிச்சொல் எனக்கூறுவர். உயிருள் ளவை ஓரறிவுயிர் முதலாக ஐயறிவுயிர் இறுதியாக ஐந்து வகை படும். உயிருடைப் பொருள்களின் குணப்பண்பை அறிவு, அருள், ஆசை முதலாக முப்பத்திரண்டு வகைப்படுத்தி மேலும் இணைய என்பதால் அவற்றில் அடங்காதவற்றையுந் தழுவினார். உயிரில் பொருள்களின் குணப்பண்பை பல்வகைவடிவு இரு நாற்றம் (நறு நாற்றம், தீ நாற்றம்) ஐ வண்ணம் (வெண்மை, செம்மை, கருமை பொன்மை, பசுமை) அறுசுவை (கைப்பு, புளிப்பு, துவர்ப்பு உவர்ப்பு, இனிப்பு கார்ப்பு ஊறு எட்டு (வெம்மை, தண்மை, மென்மை, வன்மை, நொய்மை, சீர்மை, இழுமெனன், சருச்சரை என வகுப்பர். இனி உயிர்ப்பொருள் உயிரில்பொருள்களுக்கும் பொதுவாகிய தொழிற் பண்பை தோன்றல், மறைதல், வளர்தல் சுருங்கல், நீங்கல், அடைதல், நடுங்கல், இசைத்தல் ஈதல் என்னும் ஒன்பதும் பிறவுமெனவுங் கூறுவர். இவ்வாறு உரிச்சொற்கள் உயிர்ப்பொருளவாகிய ஐயறிவினமேலும் உயிரில் பொருளாகிய ஒன்றின் மேலும் இயைந்து பரந்து வருதலால் உரிச்சொற்களின் விரிவினை உணர விரும்புவோர் பிங்கலம் முதலாகிய நிண்டு நூல்களிற் கண்டு தெளிகவெனவுங் கூறுவர்.
靈280

_"திப்பினன, நன்னூலுரையாசிரியர் சிலர் இவை பண்புப் பெயராயினும் மற்றைப் பெயர் வினைகளை விட்டு நீங்காமையால் உரிச்சொல் லென வேறு ஒதப்பட்டன வென்றும் பெயர் வினைகளின்பண்பை யுணர்த்தி அவற்றுக்கு உரிமை பூண்டு நிற்பதால் உரிச்சொல் எனக் காரணப் பெயர் பெற்றன வென்றுங் கூறுவர். செய்யுளுக்கே உரியனவாய் வருதலின் உரிச்சொல் லெனப் பெயரி பெற்றன வெனவும் சிலர் கூறுவர். பண்புப்பதங்கள் பெயரிச் சொல்லா படங்குதலால் உரிச் சொல்லாகா வென்பது வெளிப்படை செய் யுட்குரியன உரிச்சொல் லென்பதும் குறைவுபாடுடைய தென முன்னர்க் கண்டோம். உரிச் சொல்லடியாகப் பெயரும் வினையுற் தோன்றுமென்பது கருத்தில் இருத்தத் தக்கது.
உரிச்சொல் தோன்றுதற்குரிய நிலைக்களம்
உரிச்சொல் தோன்றுவதற்கு நிலைக்களம் எனக் கறுப்படும் இசை, குறிப்பு, பண்பு என்பவை பற்றி விசாரிப்போம். இசை யென்பது ஒலியைக் குறிக்கும் எனவும் குறிப்பு என்பது மனத்தாற் குறித்துணரப்படுவது எனவும் பண்பு என்பது பொறியாலுணரப் படுங்குணம் எனவுங் கூறுவர் சேனாவரையர். உறு, தவ, நனி யென்பன பெயரினும் வினையிலும் மெய்தடுமாறாது தெளிவா gorfjiè Gage nr 65 எனவே வருதலின் "பெயரினும் வினையினும் மெய் தடுமாறி" எனத் தொல்காப்பியர் கூறியது பெரும் பான்மை பற்றியேயெனக் கூறினார் சேனாவரையர், து சொற்கள் மிகப்பலவென்பது பிரயோக விவேக நூலுடையார்க்கு மட்டுமன்றித் தொல்காப்பியருக்கும் நன்னூலாரிக்கும் பொதுவான கருத்து என்பதும் புலனாகிறது. நன்னூலார் உரிச்சொற்கள் பரந்துபட்டுச் செல்லுதலால் நால்வகைச் சொல்லும் உணர்த்துற் தமது நூலுள் அவற்றை முழுதுமுணர்த்துவது முடியாத காரியமாதலால் பிங்கலம் முதலாய நிகண்டுகளிற் கண்டுகொள்க வென்றார். தொல்காப்பியரும், "வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா" என்று உரிச்சொற்களைக் கூறுவதைக் குறைத்துக் கொண்டார். இசை, குறிப்பு, பண்பு என்பவற்றை நிலைக் களனாகக் கொண்டு தோன்றிய உரிச்சொற்களை உரிச்சொற் இளின் பொருள் விளக்கும் வழி ஆங்காங்குத் தருதும், பெயரினும் வினையினுந் தடுமாறாத உரிச்சொற்கள்
ஒருகுணற் தழுவிய உரிச்சொல்லென நன்னூலாராலும் வலசொல்லொரு பொருட்குரிமை தோ ன் றி னும் எனத்
281籌

Page 150
தொல்காப்பியராலும் எடுத்தோதப்பட்ட உரிச்சொற்களுக்கு இருபேராசிரியர்களுந் தந்த உதாரணங்களைப் பார்ப்போம். சால, உறு, தவ, நனி, கூர் கழி என்னும் ஆறுரிச்சொற்களும் மிகுதிப் பொருளுணரித்துவனவென நன்னூலார் கூறுவர். தொல்காப்பியர் இவற்றில் உறு, தவ, நனி என்னும் மூன்றையுமே மிகுதி செய்யும் பொருளவெனக் கூறினார். சால, கூரி, கழி என்பன நன்னூலாரால் மேலுஞ் சேர்க்கப் பட்டவை. உறு, தவ, நனி என்பன பெயரினும் வினையினும் மெய்தடுமாறாது உரிச்சொற்களாயே தி ற் பன வெ ன் பது சேனாவரையர் கருத்தென்பதை முன்னரே கண்டோம்.
நன்னூலார் காட்டிய மிகுதிப் பொருளுணர்த்தும் உரிச் சொற்களுக்கு உதாரணம் வருமாறு -
சாலப்பலர் என்பது மிகப்பலர் என்னும் பொருள்தரும், உறு புகழ், நனி பேதை, களி கூர்மனம், ( மகிழ்ச்சி மிகுமணம் என்பது இதன் பொருள்) கழிபெருங் காதல் என்பன இவற்றுக்கு உதாரணங்கிள். சால என்பது சால் என்னும் உரிச்சொல்லடி யாகப் பிறந்த குறிப்பு வினையெச்சம். இது வினையில் தடுமாறி வந்ததாயினும் மிகுதிப் பொருள் உணர்த்தும் ஒப்புமையால் மற்றையவற்றோடு ஒருங்கெண்ணப்பட்டது. கடியென்னும் உரிச்சொல்
ஒரு சொற் பல பொருட்குரிமை தோன்றினும் எனத் தொல்காப்பியராலும் பலகுணந் தழுவிய உரிச்சொல் என நன்னூலாராலும் எடுத்தோதப்பட்ட உரிச்சொற்களில் 'கடி' என்பதும் ஒன்றாகும். கடியென்னுஞ் சொல் காப்பு, கூர்மை, விரை, விளக்கம், அச்சம், சிறப்பு, விரைவு, மிகுதி, புதுமை, ஆர்த்தல், வரைவு, மன்றல், கரிப்பு என்னும் பதின் மூன்று பொருள்களையுந் தரவல்லது. விரை என்பது வாசனையென்னும் பொருளுடையது. கடியென்பது கடுவெனத் திரிந்தும் வரும். கடும்பகல், கடுங்கால் என வருதல் காண்க.
1. காப்பு - கடிநகர் 2. கூர்மை - கடிவேல்
விரை ( வாசனை ) - alg. Lon 606) கீ, அச்சம் - கடிப்பேய் 5. விளக்கம் - கடிமார்பன்
鱷282

6. சிறப்பு  ைகடியரண்
7. விரைவு - கடி சென்றான் 8. மிகுதி - கடி காற்று
9. புதுமை  ைகடிமணம்
10. ஆர்த்தல் ா கடிமுரசு
11. வரைவு -- Sig. Dg5 12. மன்றல் - கடிவினை 13. கரிப்பு - கடிமிளகு
இசைக் குறிப்புப் பற்றிய உரிச்சொற்கள்
இப்பகுதியில் நன்னூலார் எடுத்துக் காட்டிய உரிச்சொற் களுக்கு உரையாசிரியர்கள் காட்டிய உதாரணங்களைப் பார்க்கும் போது அவை பெயரினும் வினையினும் மெய் தடுமாறி நிற்றலைக் காண்கிறோம். இவற்றையெல்லாம் உரிச்சொற் களெனக் கொண்டால் பெயர்ச்சொற்கள் வினைச்சொற்கள் அனைத்துமே உரிச்சொற்களாகிவிடும். இச்சொற்கள் இசைக் குறிப்புப் பற்றிப் பிறந்தன வாதலால் இவற்றின் அடிச்சொல் உரிச்சொல்லாதல் வேண்டும் என்பதை மறுப்பதற்கில்லை. ெேமாழிப்பொருட் காரணம் விழிப்பத்தோன்றா" (தொல் - உரி-96) எனத் தொல்காப்பியர் உரியியலிற் கூறிய சூத்திரமும் நுனித்து நோக்கத்தக்கது. ஒரு குணந்தழுவிய பல உரிச்சொல் பற்றிக் கூறிய நன்னூலார் ஓசை என்பதைக் குறிக்கும் உரிச் சொற்களாக மாற்றம் நுவற்சி முதலாக மு ப் பத் தெ ட் டு ச் சொற்கள் கூறியுள்ளார் - அவையெல்லாம் ஈ ன் டு விரிக்கிற் பெருகும் .
தொல்காப்பியர் வெளிப்பட வா ரா வு ரி ச் சொல் என்று எழுத்துக்காட்டிய உரிச்சொற்களையும் அவற்றுக்குச் சேனா வரையர் காட்டிய உதாரணங்களையும் இங்குத்தந்து விளக்குவது பொருத்தமானதே. தொல்காப்பியர் கூறிய உரிச்சொற்கள் சங்கி இலக்கியங்களைக் கற்கப் புகுவார்க்குப் பெரிதும் பயன்பட வல்லனவாதலால் அவற்றை எடுத்துக் காட்டுவது அவசியம். இந்நூற்பாக்களை மனனஞ்செய்து கொண்டால் அவை இலக்கிய உணர்வுக்குப் பெரிதும் பயன்படும்.
283囊

Page 151
உரு புரை
"உருவுட்காகும் புரையுயர்வாகும் (தொல், உரி - 4) உட்கு என்பதற்கு அச்சம் என்பது பொருள். உருகெழுகடவுள் என்பது அதற்குதாரணமாகும்.
"புரைய மன்ற புரையோர் கேண்மை’ உயர்ந்தோர் நட்பு உயர்ந்த தென்பதி தன் பொருள்.புரை என்னும் இவ்வுரிச்சொல் உயர்வுப் பொருளோடு ஒப்புப்பொருளையுத் தரும், தாமரை புரையுங்காமரி சேவடி என்பது உதாரணம்.
புரை இழிவுப்பொருளையுந்தரும். புரை தீர் நல்லறம் என் பதில் புரை என்பது இழிவுப் பொருளையும் உணர்த்தும்,
குரு, கெழு
"குருவுங் கெழுவும் நிறனாகும்மே" - (தொல், உரி - 5) *குருமணித்தாலி" என்பதில் குரு நிறங்குறித்து வந்தது. "செங் கேழ் மென்கொடி கெழு எனத் தொல்காப்பியர் கூறிய உரிச் சொல் கேழ் என நின்றது. இவை நிறப்பண்பை உணர்த்தின.
செல்லல் இன்னல்
*செல்லன் இ ன் ன ல் இன்னாமையே" - தொல். உரி - 6) செல்லல் இன்னல் என்னும் இரண்டுரிச் சொற்களும் இன்னாமை எனப்படுந்துன்பத்தைக் குறிக்கும் என்றவாறு விதுன்மார் பணங்கிய செல்லல் - இன்னலியக்கத்து" என இவை குறிப் புணர்த்தின வென்பர் சேனாவரையர்.
இல்லல்
மல்லல் எ ன் னு ம் உரிச்சொல் வளன் என்னும் பொரு
ளுணர்த்திவரும். "மல்லல் வளனே: " . (தொல், உரி. 7) மல்லல்
மால்வரை யென்பது இதற்கு உதாரணமாகும்.
ஏ என்னும் உரிச்சொல்
**ஏ பெற்றாகும்" (தொல், உரி - 8) பெற்று என்பதன் க்ருத்து பெருக்கம் என்பதாகும், “ஏ கல்லடுக்கம்" என்பது இதற்குதாரணம். ஏகாரம் இடைச்சொல்லாதலோடு உரிச் சொல்லாகவும் வருமென்பர் தொல்காப்பியர் = உரிச்சொல்லாக வரும்போது தனக்கெனப் பொருள் உளதாகும்.
囊284

உகப்பு, உவப்பு
'உகப்பே உயர்தல் உவப்பே உவகை" (தொல், உரி = 8) ‘விசும்புகந்தாடாது" என்பது உயர்வையும் உவந்துவந் தார்வ நெஞ்சமொடு" என்பது உவகையையும் குறிப்பதைக் காணலாம். உகப்பு, உவப்பு என்ற இரு சொற்களதும் பொருள் வேறுபாடு கூர்ந்து கவனிக்கத்தக்கது. சா
பொதுசன நூலகம் மயப்பு என்னும் உரிச்சொல் யாழ்ப்பானம்
"பயப்பே பயனாம் - (தொல், உமீ"9)"பயப்பு என்பதன் பொருள் பயன் என்பது "பயவாக்களரனையர்" என்பது அதற்கு உதாரணமாகும். பசப்பு என்னும் உரிச்செனல்
'பசப்பு நிறனாகும்" (தொல், உரி. 10) மையில் வாண்முகம் பசப்புரும்மே” பசப்பு என்பது த லை வ  ைன ப் பிரிந்தமையால் உண்டாகும் நிறவேறுபாடு.
* இயைபே புணர்ச்சி" (தொல், உரி. - 1) இயைந் தொழுகும் என்பது இதற்குதாரணம் - இயைந்தொழுகும் என் றாற் புணர்ந்தொழுகும் என்பது பொருள்.
இசைப்பு என்னும் உரிச்சொல்
'இசைப்பு இசைய்ாகும்" (தொல், உரி. 12) யாழ் இசையூப் புக்கும் என்பதில் இசையூ என்பது இசைத்து எனப் பொருள்படு வதால் இசைப்பு இசையாயிற்று. இசையூ என்பது வினையெச்சம் இசைப்பு என்னும் உரிச்சொல்வினைவொடு உருத்தடுமாறி வந்தது.
அலமரல் தெருமரல்
'அலமரல் தெருமரல் ஆயிரண்டுஞ் சுழற்சி" (தொல்.உரி. 13) அலமரல் தெருமரல் ஆகிய இரு உரிச்சொற்களும் சுழற்சி என்னும் பொருளைத் தருவனவாம்'. 'அலமரலாயம்", "தெருமர லுள்ளமோடன்னை துஞ்சாள்" என்பன இப்பொருளைத் தருவன.
மழ, குழ என்பன
“மழவுங் குழவும் இளமைப் பொருள" - (தொல், உரி. 14) மழ வென்னுஞ் சொல்லும் குழ வென்னுஞ் சொல்லும் இளமைப் பொருள் உணர்தி துவன. மழகளிறு கு ழ க் க ன் று என்பன இளமைப் பொருள் உணர்த்தி வந்தன.
285響

Page 152
ர்ெத்தி மாலை என்பன
"சீர்த்தி மிகுபுகழ் மாலையியல்பே" - (தொல், உரி. 15) சீர்த்தியாளன் இவனே எனவும் இரவா மாலையன் எனவும் வரும். இவை மிகுபுகழையும் இயல்பையுங் குறித்து வந்தன.
கூர்ப்பு கழிவு
'கூர்ப்புங் கழிவு முள்ளது சிறக்கும்" - தொல் - உரி.16) இவ்விரண்டையும் நன்னூலார் சால உறு முதலிய உரிச்சொற் களோடு சேர்த்து மிகுதிப் பொருள் உணர்த்தும் எனக் கூறினார். இவற்றிற்குதாரணம் ஆண்டுக் கூறப்பட்டது.
கதழ்வு துனைவு
"கதழ்வுந் துனைவும் விரைமின் பொருள" (தொல், உரி-17) கதழ்பரி நெடுந்தேர் எனவும் துனைபரி எனவும் இவை விரைவுப் பொருளை உணர்த்தி வந்தன.
அதிர்வு விதிர்ப்பு
அதிர்வு, விதிர்ப்பு என்னும் இரண் டு உரிச்சொல்லும் நடுக்கம் என்ற குறிப்புப் பொருளையுணர்த்தும்' " அதிர வருவ தோரி நோய்" எனவும் "விதிர்ப்புறலறியா ஏ மக்காப்பினை" எனவும் இவையிரண்டும் நடுக்கம் என்ற பொருளையுணர்த்தின. * அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கஞ் செய்யும் " (தொல், உரி18) என்பது தொல்காப்பியம்.
வார்தல், போகல், ஒழுகல்
"வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையுஞ் செய்யும் பொருள"(தொல், உரி, 19) வார்தல், போகல், ஒழுகல் ஆகிய மூன்று சொற்களும் நேர்மையும் நெடுமையுமாகிய பண்புணர்த்தும்.
*வார்ந்திலங்கும் வையெயிறு", "வா ரீ க யிற் றொழுனை" எனவும் "போகு கொடி மருங்குல் வென்வேல் விடத்தரொடு காருடைபோகி" எனவும் ஒழுகு கொடி மருங்குல் மால் வரை யொழுகிய வாழை" எனவும் வார்தல், போகல் ஒழுகல் என்பன நேர்மை நெடுமை ஆகிய பொருள்களை யுணர்த்தின.
蠶286

தீர்தல் தீர்த்தல்
* தீர்தலுந் தீர்த்தலும் விடற்பொருட்டாகும்" ( தொல், a-fl. 20)
தீர்தல், தீர்த்தல் என்பன விடுதலாகிய குறிப்புணர்த்தும் துணையிற் தீர்ந்த கடுங்கன யானை" எனத் தீர்தல் விடுதற் குறிப்புணர்த்தும். தீர்த் த ல் விடற்பொருளில் வந்துழிக்கண்டு கொள்ஐ வென்பர் சேனாவரையபி.
கெட வரல் பண்ணை
"கெட வரல் பண்ணை யாயிரண்டும் விளையாட்டு" (தொல், உரி - 8 ) கெடவரல் பண்ணை என்ற இரண்டுரிச் சொற் களும் விளையாட்டு என்னும் பொருளைத்தரும். கெட வரலாறு மொடு" எனவும் பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொரு ளும் எனவும் இரண்டும் விளையாட்டு என்னும் பொருளுணர்த் தின.
தட கய, நளி என் பின
"தடவுங் கயவும் நளியும் பெருமை" (தொல், உரி, 22
தட, நய, நளி என்பன வெருமை என்னும் பண்பை உணர்த்துவனவாம். இவை பெருமையை உணர்த்துவதோடு தடவென்கிளவி கோட்டம் அதாவது வளைவு என்னும் பொருளையும் கயவென்னும் உரிச்சொல் மென்மையையும் நளியென்னும் உரிச்சொல் செறிவு என்னும் பொருளையும் உணர்த்திவருவதுண்டு என்கிறாரீ தொல்காப்பியர். அவர் கூறிய சூத்திரங்கள் வருமாறு.
"அவற்றுள்,
தடவென்கிளவி கோட்டமுஞ் செய்யும்" (தொல், உரி. 28) *கய வென்கிளவி மென்மையுமாகும்" (தொல், உரி. 24) "தனி வென் கிளவி செறிவு மாகும்" (தொல், உரி,28)
"தடமருப் பெருமை" எனவும், இயற்தலை மடப்பிடி எனவும், நளியிருள் எனவும் முறையே கோட்டம், மென்மை, செறிவு என்னும் பொருள்களையுணர்த்தின.
287鬣

Page 153
பழுது என்னும் உரிச்சொல்
"பழுது பயமின்றே" ( தொல், உரி. 26 ) பழுது கழி வாழ்நாள்" இது பயனின்றிக் கழிந்த வாழ்நாள் எனப் பொருள்பட்டுப் பயனின்மையை உணர்த்திற்று. சாயல் என்னும் உரிச்சொல்
"சாயல் மென்மை" (தொல், உரி. 27 ) "சாயல் மார்பு' என்பதில் சாயல் என்பது மென்மைப் பண்புணர்த்திற்று. முழுது என்னுஞ் சொல்
"முழு தென் கிளவி எஞ்சாப் பொருட்டே’ (தொல் உரி. 28) "மண் முழுதாண்ட, என்பதில் முழுது என்பது எஞ்சாமைப் பொருளை யுணர்த்தி வந்தது. வம்பு என்பது
வேம்பு நிலையின்மை' ( தொல், உரி, 29 ) வம்பு மாரி என்பதில் வம்பு என்பது நிலையின்மை என்னுல் குறிப்புணர்த்தியது. மாதர் என்பது
"மாதர் காதல்" (தொல், உரி. 30) மாதர் நோக்கு என்பது காதல் நோக்கு எனப் பொருள்படுவதால் மாதர் என்பது காதலையுணர்த்திற்று.
நம்பு, லே என்பன
'நம்பும் மேவும் நசையாகும்மே” (தொல் உரி. 31) நசை என்பது விருப்பம். நயந்து நாம் 'விட்ட நன்மொழி நம்பி’ எனவும், மேவுறையும் எனவும் நம்பு, மே என்பன நசை என்னும் பொருள் தந்தன. ஒய்தல், ஆய்தல், நிழத்தல், சாய் என்பன
ஒய்தல் ஆய்தல் நிழத்தல் சாய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்" (தொல் உரி. 82) இந்நான்கு உரிச்சொற்களும் நுணுக்கம் ஆகிய குறிப் புணர்த்தும். வேனிலுழந்த வறிதுயங்கு ஒய்களிறு" எனவும் "பாய்ந்தாய்ந்த தானை" எனவும் "நிழத்த யானை மேய்புலம் படர" எனவும் "கடும்புனற் சா அய்" எனவும் இவை உள்ளதன்
நுணுக்கம் உணர்த்தின.
靈288

புலம்பு என்னுஞ் சொல்
"புலம்பே தனிமை" (தொல், உரி. 83)
புலிப்பற் கேரத்த புலம்பு மணித்தாலி" என்பதில் புலம்பு என்னுஞ் சொல் தனிமை என்னுங் குறிப்புணர்த்தியது.
துவன்று என்னும் உரிச்சொல்
'துவன்று நிறைவாகும்’ (தொல், உரி. 34) 'ஆரிய துவன்றிய பேரிசை மூதூர்" - என்பதில் துவன்று என்னும் உரிச்சொல் நிறைவு என்னுங் குறிப்புணர்த்தி நின்றது. துவன்றியவென்பது பெயரெச்சமாயிற்று. அதன் அடிச்சொல் உரிச்சொல்லாகும்.
முரஞ்சல் என்பது
'முரஞ்சல் முதிர்வே" (தொல், உரி. 35) "சூல் முரஞ் செழிலியென்பதில் முரஞ்சு என்பது முதிர்வு
என்னுங் குறிப்புணர்த்தி வந்தது.
வெம்மை என்பது
*வெம்மை வேண்டல்" (தொல், உரி. 36) வெங்காமம் என்பதில் வெம்மை என்பது வேண்டல் (விரும்புதல்) என்னும் பண்புணர்த்தி வந்தது. வெம்மை என்பது பண்புப் பெயர். அதைத் தொல்க்ாப்பியர் உரிச் சொல்லுட் சேர்த்ததால் பண்புப் பெயர்களெல்லாம் உரிச் சொல்லடியாகப் பிறந்தனவென்பது உறுதிப்படுகிறது. வெங் காமம் என்பதில் வெம் என்பதே உரிச்சொல் என்க.
பொற்பு என்னுஞ் சொல்
"பொற்பே பொலிவு" (தொல், உரி. 37) பொற்பு என்ற உரிச்சொற்குப் பொருள் பொலிவு என்பது. 'பெருவரையடுக்கம் பொற்ப" இங்குப் பொற்பு என்பது பொலிவு என்னுங் குறிப் புணர்த்தி வந்தது.
வறிது என்பது
" வறிது சிறிதாகும்" ( தொல், உரி. 88 ) "வறிது வடக் கிறைஞ்சிய" என்பதில் வறிது என்பது சிறிது என்னுங் குறிப்புப் பொருள் உணர்த்தியது.
9 289 ఫ్లో

Page 154
ஏற்றம் என்ற உரிச்சொல்
ஏற்றம் என்ற உரிச்சொல் நினைவு, துணிவு ஆகிய பொருள்களைத் தரும். 'கானலஞ் சேர்ப்பன் கொடுமையேற்றி" எனவும் "எற்றேற்ற மில்லாருள் யானேற்ற மில்லாதேன்" எனவும் முறையே நினைவு துணிவு என்னும் பொருள்களை யுணர்த்தி வந்தன.
"ஏற்றம் நினைவுந் துணிவுமாகும்" (தொல், உரி. 39)
பினை பேண்
* பிணையும் பேணும் பெட்பின் பொருள" - (தொல் உரி,48)
பெட்பு என்பது புறந்தருதல் என்னும் பொருளுடைய தென்பர் சேனாவரையர். ' அரும்பிணை யகற்றி வேட்ட ஞாட்பினும்" எனவும் 'அமரர்ப் பேணியும் ஆவுதியருந்தியும்" எனவும் பிணை பேண் என்பன பெட்பின் பொருளாகிய புறந் தருதலை யுணர்த்தின. புறந்தருதல் - பாதுக்ாத்தல்
பணை என்னுமீ உரிச்சொல்
பனையே பிழைத்தல் பெருப்பு மாகும்" (தொல், உரி. 41) பணை என்னும் உரிச்சொல் பிழைத்தல், பெருப்பு ஆகிய இரு பொருள்களையுந் தரும். 'பனைத்து வீழ் பகழி’ என்பதில் பணை என்பது பிழைத்தலை யுணர்த்திற்று "வேய்மருள் பனைத் தோள்" என்பதில் பணை பெருத்தலாகிய குறிப்பை யுணர்த்திற்று.
படர் என்னும் உரிச்சொல்
'படரே உள்ளல் செலவுமாகும்" (தொல், உரி. 42) படர் என்னும் உரிச்சொல் உள்ளுதல் செல்லுதல் ஆகிய இரு பொருள்களையுந் தரும், "வள்ளியோரிப்படர்ந்து புள்ளிற் போகி' என்பது உள்ளலையும் "கறவை இன்று வயிற் படர" என்பது செலவையும் உணர்த்தின.
பையுள் சிறுமை என்பன
"பையுளுஞ் சிறுமையும் நோயின் பொருள' (தொல் உரி. 43) பையுள், சிறுமை என்ற இரு உரிச்சொற்களும் நோயாகிய குறிப்பையுணர்த்தும். "பையுண்மாலை" என்பதும் சிறுமையுறுப
செய்பறியவரே என்பதும் நேரியாகிய குறிப்புணர்த்தி வந்தன.
鬣290

எய்யாமை என்னும் உரிச்சொல்
"எய்யாமையே அறியாமையே" - (தொல் உரி. 44)
எய்யாமை என்னும் உரிச்சொல் அறியாமை எ ன் னு ம் குறிப்புணர்த்தும் "எய்யாமையலை நீயும் வருந்துதி” என்பதில் எய்யாமை அறிவின்மையாகிய குறிப்புணர்த்திற்று.
நன்று என்னுஞ் சொல்
'நன்று பெரிதாகும்" (தொல், உரி. 45) நன்று என்னும் உரிச்சொல் பெரிது என் னு ம் பொருளுணர்த்தும். நன்று மரிதுற்றனையாற் பெரும" என்பதில் நன்று என்பது பெரிது என்னுங் குறிப்புணர்த்திற்று. இங்கு, பெருமை எ ன் ன ர து பெரிது என்றதனால் நன்று என்பது வினையெச்சமாதல் கொள்ளு என்பர் சேனாவரையர். நன்மை என்பதே பண்பு நிலைக்களனாகத் தோன்றிய உரிச்சொல் அதை நன்று எனவாக்கி அது பெரிது என்ற குறிப்புவினைமுற்றுப் பொருளைத் தரு மென்றதனால் நன்று என்பது நன்றாக எனப் பொருள்பட்டு வினையெச்சமாயிற்றென்பது சேனாவரையர் கருத்துப்போலும்.
தா என்னும் உரிச்சொல்
"தாவே வலியும் வருத்தமு மாகும்" - (தொல், உரி. 46) தா என்னும் உரிச்சொல் வலி, வருத்தம் என்னும் இரு பொருளுணர்த்தும் என்றவாறு "தாவினன் பொன்றையெ பாவை எனவுங் ‘கருங் கட்டாக்கலைபெரும் பிறிதுற்றென எனவும் தா என்பது வலியும் வருத்தமுமாகிய குறிப்புணர்த்திற்று.
தெவு என்பது
"தெவுக் கொனற் பொருட்டே" - (தொல், உரி. 47) தெவு என்னும் உரிச்சொல் கொனற் பொருளை யுணர்த்தும்
தெவ்வு என்னுஞ் சொல்
"தெவ்வுப் பகையாகும்" (தொல், உரி. 48) தெவ்வு என்னும் உரிச்சொல் பகை என்னும் பொருளை யுணர்த்தும், தெவ்வுப்புலம் என்பதில் தெவ்வு என்பது பகையை யுணர்த்திற்று.
291鯊

Page 155
விறப்பு, உறப்பு, வெறுப்பு
*விறப்பும் உறப்பும் வெறுப்புஞ் செறிவே" (தொ."உரி. 49) “விறப்பு வெரூடப் பொருட்டு மாகும்" (தொல், உரி. 50) "விறப்பு என்பது செறிவுப் பொருளையும் அச்சப் பொரு ளையும் உணர்த்தும்,
'கம்பலை சும்பை), கலி. அழுங்கல்"
"கம்மலை கம்பை கலிய்ே அழுங்கல்
என்றிவை நான்கும் அரவப்பொருள்" (தொல், உரி. 51) கம்பலை, சும்மை, இலி, அழுங்கல் என்னும் நான்கு உரிச் சொற்களும் அரவப்பொருள் உண ரீ த் தும், அரவம் - ஓசை "கம்பலை மூதூர்" எனவும் ஒரு பெருஞ் சும்மை" எனவும் "கலிகொளாயம்" எனவும் "உயர்வுப் புணரிந்தன்றிவ் வழுங்கி இாரே" எனவும் கம்பலை, கம்மை, கலி, அழுங்கல் என்னும் நான்கும் அரவப்பொருள் உணர்த்தின.
அழுங்கல் என்னு உரிச்சொல்
*அழுங்கல் இரக்கமுங் கேடுமாகும்’ (தொல், உரி. 52)
அழுங்கல் என்னுஞ்சொல் அரவப்பொருளேயன்றி இரக்கம், கேடு என்னும் பொருள்களையும் உணர்த்தும், "செலவழுங் கினனால்" எனவும் "குணமழுங்கக் குற்றம் உழைநின்று கூறுஞ் சிறியவர்கட்கு" எனவும் அப்பொருள்கள் உணர்த்திற்று.
கழுமு என்னுஞ் சொல்
"கழுமென்கிளவி மயக்கஞ் செய்யும்" (தொல், உரி. 58) கழுமியஞாட்பு என்பதில் கழுமு என்னுஞ் சொல் மயக்கம்
என்னும் பொருள் தந்தது.
செழுமை என்னுஞ் சொல்
*செழுமை வளனுங் கொழுப்பு மாகும்" (தொல் உரி. 54)
செழும்பல்குன்றம் எனவும் செழுந்தடி நின்ற செந்நாய் எனவும்
செழுமை வளனுங் கொழுப்பு முணர்த்திற்று.
விழுமe எனனுஞ் சொல்
"விழுமஞ் சீர்மையும் சிறப்பும் இடும்பையும்"(தொல் உரி.55) விழுமியோர் காண்டொறுஞ் செய்வர் சிறப்பு" எனவும்
談292

வேற்றுமையில்லா விழுத்திணைப் பிறந்து" எனவும் 'நின்னுறு
விழுமங் களைந்தோன்' எனவும் சீர்மை, சிறப்பு இடும்பை
-
njabat en na Gorb
என்னும் பொருள்கள் தந்தது.
கருவி என்னுஞ் செனல்
-
கருவி தொகுதி" - (தொல், உரி. 56) - - - கருவி வானம் என்பதில் கருவியென்பது மின்னல், முழக்கு
முதலாதுவற்றின் தொகுதியைக் குறித்தது.
கமம் என்பது
"கமம் நிறைந்தியலும்" (தொல், உரி. 57) கமஞ்சூல் மாமழை என்பதில் கமம் நிறைவு எ ன் னு ரீல் குறிப்புணர்த்திற்று.
அரி என்பது
*அரியே ஐம்மை" - (தொல். உரி. 58) அரிமயிர்த்திரள் முன்கை என்பதில் அரி ஜம்மை (ஐது) என் னும் பொருளுணர்த்தி வந்தது.
கவவு என்னுஞ் சொல்
"கவவு அகத்திடுமே" - (தொல், உரி, 59) கவவுக்கை நெகிழ எ ன் ப தி ல் கவவு என்பது அகத்தீடு என்னும் பொருளுணர்த்தி வந்தது.
துவைத்தல் சிலைத்தல், இயம்பல், இரங்கல்
துவைத்தலுஞ் சிலைத்தலும் இலம்பலும் இரங்கலும்
இசைப்பொருட் கிளவி என்மனார் புலவரி - (தொல்-உரி-60)
இந்நான்கு சொற்களும் இசை (ஓசை)ப் பொருளுணர்த்தும் உரிச்சொற்களாம். “வரிவளைதுவைப்ப" "ஆமாதல்லேறு சிலைப்ப", "கடிமனையியம்ப" ஏறிரங்கிருளிடை" எனத்துவைத்தல் முதலிய நான்கும் இசைப்பொருள் உணர்த்தின.
'இரங்கல் கழிந்த பொருட்டுமாகும்" - (தொல், உரி. 61)
இரங்கல் கழிந்ததற்கு இரங்குதல் என்னும் பொருளையுந் தரும். "செய்திரங்காவினை" என்பதில் இர ங் கு த ல் கழிந்த பொருட்கிரங்கலாயிற்று
293籌

Page 156
இலம்பாடு ஒற்கம் என்பன
இலம்பாடு ஒற்கம் ஆபிரண்டும் வறுமை"- (தொல், உரி. 62) இலம்பாடு ஒற்கம் எனவரும் இரு உரிச்சொற்களும் வறு
மையை உணரித்தும், இலம்படு புலவர் ஏற்ற ை8 நிறைய எனவும்
ஒக்கல் ஒற்கம் சொலீஇய' எனவும் வரும்.
ஞெமிர்தல் பாய்தல்
ெேஞமிர்தலும் பாய்தலும் பரத்தநீ பொருள
(தொல், உரி. 63) தேருமணல் ஞெமிரிய திருநகர்" எனவும் பாய்புனல் எனவும் ளுெமிர்தலும் பாய்தலும் பரத்தற் பொருளில் வந்தன.
கவர்வு என்னுஞ் சொல்
"கவர்வு விருப்பாகும் = தொல், உரி. 64) கவர் நடைப் புரவி யெனக் கவர் விருப்பு என்னும் பொரு ளைத் தந்தது.
சேர் என்னும் உரிச்சொல்
6 ஒேரே திரட்சி" (தொல், உரி. 65) சேர்ந்து செறி குறங்கு" என சேர் என்னும் உரிச்சொல் திரட்சியை உணர்த்திற்று.
வியல் என்னுஞ் சொல்
விேயல் என் கிளவி அகலப் பொருட்டே"* (தொல், உரி. 66) வியனுலகம்" என வியல் என்னுஞ் சொல் அகலப் பொருள்
தந்தது.
பே, நாம், உரும் என்னுஞ் சொற்கள்
பே நாம் உருமென வரூஉங் கிளவி
ஆமுறை மூன்றும் அச்சப்பொருள” (சொல். உரி. 67) பே, நாம், உரும் என்ற மூன்று சொற்களும் அச்சப்
பொருள் உணர்த்துவன. பே முதிர் கடவுள்" "நாம் நல்லார்'
உருமில் சுற்றம் என இம்மூன்றும் அச்சப் பொருள் உணர்த்தினe
囊294

வயவென் இளவி
'வய வலி யாகும்" (தொல், உரி. 68) வயவென்னும் உரிச்சொல் வலியை உணர்த்தும் துன்னரும் துப்பின் வயமான் என்பதில் வயவென்பது வலியையுணரித்திற்று
வகள் என்னுஞ் சொல்
"வாள் ஒளியாகும்" (தொல், உரி. 69) வாண்முகம் என்பதில் வாள் என்பது ஒளியாகிய பண்பை யுணர்த்திற்று. துயவு என்னும் உரிச்சொல்
"துயவென் கிளவி அறிவின் திரியே" (தொல், உரி. 70 துயவுற்றேம் யாமாக என்பதில் துயவு என்னும் உரி சொல் அறிவின் திரியை உணர்த்தி வந்தது.
உயா வென்றது
"உயாவே உயங்கல்’ (தொல், உரி. 71) பேருந்திருற் றா விளிபயிற்றும் என்பதில் உயா வென்பது உமங்கல் என்றும்
பொருள் தந்தது.
உசா வென்றது
'உசாவே சூழ்ச்சி" (தொல், உரி, 72) உசாத்துணை என் பதில் உசா என்பது சூழ்ச்சி (ஆராய்தல்) என்னும் பொருளைத் தந்தது.
வயன வென்னுஞ் சொல்
'வயாவென் கிளவி வேட்கைப் பெருக்கம்" (தொல் உரி7) "வயவுறு மகளிர் வேட்டுவிைன் அல்லது - இகைவரி உண்ணா அருமண்ணினையே" - என்பதில் வயா வேட்கைப் பெரும் கம் உணர்த்திற்று. கறுப்பு சிவப்பு
"கறுப்பும் சிவப்புச் வெகுளிப் பொருள்" (தொல், உரி,74) கறுப்புஞ் சிவப்பும் வெகுளி ( கோபம் ) ப் பொருள் உணர்த்துவன. "நிற் கறுப்பதோர் அருங்கடி முனையன்" எனவும் "நீ சிவந்திறுத்த நீரழிபாக்கம்" எனவும் கறுப்பு சிவப்பும் வெகுனிப் பொருள் உணர்த்தின.
295

Page 157
கறுப்புமி சிவப்புமி வேறு பொருள் தருதல்
'நிறத்துரு உணர்த்தற்கும் உரிய என்ப" (தொல், உரி. 78) கறுத்த காயா, சிவந்த காந்தள் என நிற வேறுபாடுணர்த்தின. நொசிவு, நுழைவு, நுணங்கு
"நொசிவும் நுழைவும், நுணங்கும் நுண்மை"
(தொல், உரி. 76) 'நொசி மட மருங்குல்" எனவும், நுழைநூற் கலிங்கம் எனவும், "நுணங்கு துகில் நுடக்கம்" எனவும் இவை மூன்றும் நுண்மைப் பொருள் உணர்த்தின. புனிறு என் கிளவி
"புனிறென் கிளவி ஈன்றணிமைப் பொருட்டே"
(தொல், உரி, 77) புனிற்றா என்பது ஈன்றண்ணிய பசுவாதலால் புனிறு என்னுஞ் சொல் ஈன்றணிமைப் பொருளை உணர்த்திற்று.
ந ைவு என்னுஞ் சொல்
"நனவே களனும் அகலமுஞ் செய்யும்" (தொல், உரி. 78)
நனவுப் புகு விறலியிற் றோன்று நாடன் என நனவு கனனையும்
நனந்தலையுலகம் என நனவு அகலத்தையும் உணர்த்தின.
மத என்னுஞ் சொல்
"மதவே மடனும் வலியுமாகும்" (தொல், உரி. 79) மதவென்னும் உரிச்சொல் மடனும் வலியுமாகிய குறிப்புணர்த்தி வரும். பதவு மேய்ந்த மதவுநடை நல்லாள் என்பதில் மதவென் பது மடனையும் மத மிக்கு என்பதில் மதவென்பது வலியையும் உணர்த்தின. இது மேலும் இரு பொருள் தரும். "மிகுதியும் வனப்பும் ஆகலும் உரித்தே" (தொல், உரி. 80) மதவென்னுஞ் சொல் மிகுதி, வனப்பு ஆகிய இரு பொருள்களை யும் உணரித்தும், யாணர் என்னுஞ் சொல்
"புதிது படற் பொருட்டே மாணர்க் கிளவி'
( தொல், உரி. 81 ) மீனொடு பெயரும் யாணரூர" என்பதில் யாணர் என்பது வாரி புதிதாகப்படுதலாகிய குறிப்புணர்த்தும்.
鬣296

அமர்தல் எனுஞ் சொல்
"அமர்தல் மேவல்" (தொல், உரி. 82) " அ க ன ம ர் ந் து செய்யாளுறையும்" என்பதில் அமர்தல் மேவல் என்னும் பொருள் தந்தது.
பாண் என்பது
*யாணுக் கவினாகும் (தொல், உரி. 83) வாணது பசலை யென்பதில் யாண் என்பது கவினையுணர்த்தி வந்தது.
பரவு, பழிச்சு
"பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள’ (தொல், உரி. 84) *நெல்லுகுத்துப் பரவுங் கடவுளுமிலவே இதில் பரவு என்பது வழுத்துதற் பொருளில் வந்தது. கை தொழுஉப் பழிச்சி" இதில் பழிச்சு என்பது வழுத்துதற் பொருளில் வந்தது. கடியென் கிளவி
கடியென் கிளவி,
வரைவே கூர்மை காப்பே புதுமை விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே அச்சம் முன்தேற்று ஆயீரைந்தும் மெய்ப்படத் தோன்றும் பொருட்டா கும்மே.
(தொல், உரி. 85) கடியென்னுஞ் சொற் பொருள் முன்னரே விரிவாக விளக்கப் பட்டது. மேலும் 'கடி' என்னுஞ் சொற்கு இரு பொருள் தரு இறார் தொல்காப்பியரி,
"ஐயமுங் கரிப்பும் ஆகலு முரித்தே" (தொல், உரி. 86) 8 என்னும் உரிச் சொல்
* ஐ வியப்பாகும்" (தொல் உரி. 87) ஐதே காமம் என்பதில் ஐ வியப்புணர்த்தியது முனைவு என்பது
'முனைவு முனிவாகும்’ (தொல், சேற்று நிலை முனை இய செங்கட் காரான் என்பதில் முனைவு முனிவை உணர்த்திற்று வை என்னும் உரிச்சொல்
8வையே கூர்மை" (தொல். உரி. 89) வைநுனைப் பகழியென்பதில் வை என்னும் உரிச்சொல் கூர்மை
என்னும் பொருளை உணர்த்திற்று
297鐵

Page 158
எறுழ் என்பது
"எறுழ் வலியாகும்" (தொல், உரி, 90) போரெறுழ்த் திணிதோள் என்பதில் எறுழ் வலிமையை உணர்த்
திற்று.
உரிச்சொற் பொருள் கோள்
உரியியலில் தாம் எடுத்துக்காட்டிய உரிச்சொற்கள் தாங் கூறிய் பொருளேயல்லாமல் வேறுபொருள் தருமிடமும் உண் டென்பர் தொல்காப்பியர். அவற்றின் பொருளை அவை சார்ந்து வரும் சொற்களோடு இயைந்துத் துணிக வென்பது தொல்காப்பியர் ஆணை, முதனிலையும் இறுதி நிலையுமாகச் சொற்கள் பிரிந்து பொருளுணர்த்தல் உரிச்சொற்களுக்கு இல்லை பென்பதையும் அவர் கூறிவைத்துள்ளார். வினைச்சொற்களும், ஒரோ வழிப் பெயர்ச்சொற்களும் பிரித்துப் பொருளுணர நீற்றல் போல உரிச்சொற்கள் நிற்குமோவென ஐயுறுவார்க்கு ஐயமறுக்குமுகமாகத் தொல் காப்பியர் இதனை எடுத்துக்கூறினா ரென்க. இடைச்சொல் தனி நின்று பொருளுணர்த்தாமையின் அது பற்றிய ஆராய்ச்சி ஈண்டில்லையென்ன.
இடையுரிச் சொற்களுக்கு ஒரு விளக்கம்
இடைச்சொற்களாக இலக்கண ஆசிரியர்கள் எடுத்தோதிய சொற்கள் இடைச்சொல்லாந் தன்மையினின்றும் வழுவிப் பெயர் வினைச் சொற்களாதலும் உரிச்சொற்களும் அவ்வாறே பெயர் வினைகளாவதும் இயல்பு. அ என்பது ஒரு சுட்டிடைச் சொல். அச்சொல் அவன் என்று வரும்போது 'அன்' என்னும் இடைச் சொல்லாகிய விகுதி புணர்க்கப்படுகிறது. இரண்டு இடைச்சொற் கள் சேர்ந்து ஒரு பெயர்ச்சொல்லாகக் காண்கிறோம். சுட்டுப் பெயர்கள், வினாப் பெயர்கள். பிற, மற்று என்பவற்றால் ஆகும் பெயர்களெல்லாம் இடைச்சொல்லால் ஆனவையே.
உவமவுருபுகள் இடைச்சொல்லெனவே வழங்கப்படுகின்றன. போல என்பது ஒரு உவமவிடைச் சொல். இது புலியைப்போலப் பாய்ந்தான் என வரும்போது புலி இரண்டாம் வேற்றுமை உரு பேற்று நிற்கின்றது. இ ர ண் டா ம் வேற்றுமை உரு பேற்ற பெயர் வினைகொண்டு முடியுமென்பது இலக்கணகாரர்
驚298

அனைவர்க்கும் ஒப்ப முடிந்தவொன்று. 'எல்லையின்னும் அதுவும் பெயர்கொளும் அல்ல வினைகொளும்" என்பதனால் இரண் டாம் வேற்றுமை வினைகொண்டு முடியுமென்பதை ஏ ற் று கி கொள்ளவேண்டும். புலியைப் போலப் பாய்ந்தான் என வரும் போது புலியை என்பது போலும் என்பதைச் சார்ந்து பின்னர் பாய்ந்தான் என்னும் வினையைக்கொண்டு முடிகிறது. அதனால் போல என்பது இடைச்சொல் நிலைமாறி வினையெச்சமாகி விடுகிறது. ஆதலால் இடைச்சொற்களும் பெயர்ச் சொல்லாகவும் வினைச்சொல்லாகவும் உருமாற்றம்பெறுவது வெளிப்படை ஆத லால், போலும் என்பது இடைச்சொல்லாகவும் வினைச்சொல் லாகவும் வருமென்பது மறுக்கமுடியாத உண்மையாகும். இடைச் சொல் பெயரையும், வினையையுஞ் சார்ந்தன்றிப் பொருளுணர்த் தாதென்பது ஒரு பொது விதி. ஆனால் இதற்குப் புறனடையும் உண்டு. சில இடைச்சொற்கள் பொருள் தந்து நிற்பனவென்பதும் அவையே பெயராகவேனும் வினையாகவேனும் மாற்றம்பெறுவன வென்பதும் கவனித்தற்பாற்று.
முன் பின் என்பன ஏழாம் வேற்றுமை இடப்பொருளுருபாக வருவன. இவ்விடைச் சொற்கள் பெயர்த்தன்மைப்பட்டு முன்னுக் குப் போனான் பின்னால் இருந்தான் என்பது முதலாக உருபேற்கின்றன. தொல்காப்பியர் இடைச்சொல் பற்றிப் பேசுகை
"இடையெனப் படுப பெயரொடும் வினையொடும்
நடைபெற் றியலுந் தமக்கியல் பிலவே' (தொல் இடை 1) 6T6är Luf7.
பெயரொடும் வினையொடும் நடைபெற்றியலும் என்பதற்குச் சாதாரணமாகப் பெயரையும் வினையையுஞ் சார்ந்து வருமென்றே பொருள் காண்பர், அவ்வாறன்றி பெயராகவும் வினையாகவும் இடைச்சொற்கள் உருமாறுதற்கும் இச்சூத்திரம் இடஞ்செய்கின்ற தெனக் கொள்ளலாம்.
உரிச்சொற்கள் தமக்கெனப் பொருள் வேறுடைய வாய் இருத்த லால் அவை பெயர் போலவும், வினைபோலவுந் தம்மைக் காட் டிக் கொள்ளுதல் வெரும்பாலுங் காணப்படுகிறது.
299鬣

Page 159
'கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருள்" என்பர் தொல்காப் பியர். வெகுளியென்பது கோபம் என்னும் பண்புப்பெயர். கறுப்பு சிவப்பு என்பனவும் வெகுளியை உணர்த்தி பி Gade LuíîG3 unirao வருவதும், அதுவே கார்க்குழல் என வந்து பண்பையுணர்த்தி உரிச்சொல்லாவதுங் கவனிக்கத்தக்கது.
சொல்லிலக்கணம் முற்றும்
எழுத்திலக்கணமுஞ் சொல்லிலக்கணமும்
ஒருவாறு முற்றுப் பெற்றன.
画
画
蠟 300

பொருள டக்கம்
எழுத்தியல்
எழுத்து எவையெனல் உயிர் மெய்யெழுத்து ஆய்த வெழுத்து
உயிரளபெடை
ஒற்றளபெடை
குற்றியலுகரம்
குற்றியலிகரம்
ஐகாரக்குறுக்கம்
ஒளகாரக் குறுக்கம் ஐகார ஒளகாரம் பற்றிய ஒளி ஆய்வு மகரக் குறுக்கம் முதலெழுத்துக்களின் பாகுபாடு சுட்டெழுத்து
வினாவெழுத்து மெய்யெழுத்துக்களின் வகை இனவெழுத்து எழுத்துக்களின் வைப்பு முறை எழுத்துக்களின் பிறப்பு சார்பெழுத்துக்களுக்குப் பிறப்பு எழுத்துக்களின் வடிவம் எழுத்துக்களின் மாத்திரை மொழிக்கு முதலில்வரும் எழுத்துக்கள் மொழியின் ஈற்றில் வரும் எழுத்துக்கள் மொழியிடையில் மயங்கும் எழுத்துக்கள் ஈரொற்றாய் மயங்குவன மொழிப் போலி
எழுத்துப் போலி எழுத்துக்களின் சாரியை
301靈

Page 160
பதவியல்
பதம்
ஒரெழுத்தொரு மொழிகள்
பகுபதம்
பகுபத வுறுப்புக்கள்
இடைநிலை
காலங்காட்டும் விகுதிகள் பகுதி காலங்காட்டுதல் பண்புப் பகுதிகளும் அவைபெறும் விக்ரீரங்களும் பல்வேறுவகை விகுதிகள் தொழிற் பெயர் விகுதிகள் பண்புப் பெயரி விகுதிகள் வெவ்வேறு பொருள்தரும் விகுதிகள் புணர்ந்து கெடும் விகுதிகள் பிறவினை விகுதிகள் வினைகளை இணைத்தறிதல் தன்வினை பிறவினை செய்வினை செயப்பாட்டுவினை முன்னிலைவினை ஏவல்வினை வட மொழியாக்கம் ஆரிய்வெழுத்துத் தமிழில் விகாரமடையுமாறு தொல்காப்பியரும் பதம்பற்றிய நோக்கும்
புணரியல்
புணர்ச்சி இன்னதென்பது
புணர்ச்சி எதற்கு
தமிழ்மொழியின் இணியவோசை
உயிரீறு மெய்யீறு செய்யுளுட் புணர்ச்சி தழுவுதல் அவசியம் புணர்ச்சி வகைகள் இயல்பு புணர்ச்சி விகாரப்புணர்ச்சி செய்யுள் விகாரம் புணரியலில் எடுத்தாளப்படும் பொதுக் கருத்துக்கள் புணர்ச்சியுட் சாரியைகள்
蔓302
awa
56
53
59
60
62
63
65
65
67
68
70
70
7
73
73
7Ꮨ8
74.
*5
78
80
82
84
8莎
86
87
88
89
99
@翼
92
93

உயிரீற்றுப் புணரியல் 9 4
மெய்யீற்றுப் புணரியல் 18 உருபு புணரியல் 26
சொல்லதிகாரம்
பெயர்ச் சொல்லிய்ல் உயர்திணைப் பெயர் அஃறிணைப் பெயர் பொருட்பெயர் முதலறுவகைப் பெயர்
ஆண்பாற் பெயர்கள் · · · · பெண்பாற் பெயரிகள் பலர்பாற் பெயர்கள் பலர்பால் பற்றிய ஒரு நோக்கு அஃறிணை ஒன்றன்பாற் பெயர்கள் அஃறிணைப் பலவின்சாற் பெயர்கள் கள்விகுதி பற்றிய ஒரு நோக்கு இடுகுறிப் பெயர் காரணப் பெயர் காரண இடுகுறிப் பெயர் இயற்பெயர் ஆகுபெவர்
ஆகுபெயர் பதினாறுவகை ஆகுபெயரும் விள்க்கமும் ஆகுபெயரும் அன்மொழித் தொகையும் பால் பற்றிப் பெயர்களை வகுத்தல் மூவகையிடம் தொழிற் பெயர் இடம் உணர்த்தல் விரவுத் திணைப் பெயர்கள் பால் பகா அஃறிணைப் பெயரி
வழக்கு
சொற்களின் வகை (இயற் சொல், திரிசொல்) இயற்சொல் திரிசொல் பற்றிய ஒரு நோக்கு திசைச் சொல்
Gou LGA) 9Frr @i)
வேற்றுமை பற்றிய விளக்கம் முதலாம் வேற்றுமை இரண்டாம் வேற்றுமை மூன்றாம் வேற்றுமை
】25
132
"-in
༽ a -
5 or Ja Galakt 141 obů a zranou
---
powa
A 6017
"ש (60וה6
6) 1602 y
Sty
86
39
140
】4感
144
Ι. 4 ώ
145
14 }
47
49
49
150
153
16
155
57
58
60
6 (9.
】6$
66
168
17
174
75
77
8 17 ہے۔
303議

Page 161
நான்காம் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை
ஆறாம் வேற்றுமை
ஏழாம் வேற்றுமை
எட்டாம் வேற்றுமை
உருபு மய்க்கம்
பொருள் மயக்கம் வேற்றுமைப் பொருள்களை முடிக்குஞ் சொல் உருவேற்கும் பெயர்கள் சாரியை பெறுதல்
வினைச்சொல்லியல்
வினைச்சொல் எவையெனல் வினைச்சொற்களின் பாகுபாடு வினைமுற்றுக்களின் பாகுபாடு என்ப என்னும் முற்றுச் சொல் பற்றிய விளக்கம் தன்மை யொருமை வினை முற்றுக்கள் உளப்பாட்டுத் தன்மைப் பன்மை வினைமுற்றுக்கள் முன்னிலை யொருமைப் வினை முற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று வியங்கோள் வினை முற்று
பெயரெச்சம்
வினையெச்சம் எச்சங்களில் தன் கருத்தாவின் வினை கொள்வன செய்யும் என்னும் வாய்ப்னாட்டு முற்று. முற்றெச்சம் யார் எவன் என்னும் குறிப்புவினை முற்றுக்கள்
தொடர்மொழியியல்
தொடர்மொழி என்ன வென்பது தொகைநிலை தொகாநிலைத் தொடர்கள் வேற்றுமைத் தொகை
வினைத் தொகை
பண்புத் தொகை
உவமைத் தொகை
உம்மைத் தொகை
靈304
80
8.
83
厦84
85
87
87
188
89
19
92
93
94.
96.
97
98
199
200
20罗
205
2O7
210
2
2
£1.3
器星4
罗巫领
26
易】7
罗观岛
屬2麗

அண்மொழித் தொகை 。。。°2感
இரட்டைக் Garsi ... 384 இணை மொழித் தொடர் 226 அடுக்கிடுக்குத்தொடரி 。2&& அடுக்குத் தொடர் 。22& பழமொழித் தொடர் .0 0 2 سم உவமைத் தொடர் 35
தொடர் மொழிப் பொருளை யுணர்த்தும் ஒரு மொழி 237
பொதுவியல்
வழாநிலை, வழுவமைதி, வழு. 。240 திணைபால் வழுவமைதி 234 سس I திணை பால் மரபு வழுவமைதி 。岛42 இடவழுவமைதி ... 243 கால வழுவமைதி 8464%س வினா விடை வழுவாமற் காத்தல் ... 845 LDU |- வழுவாமற் காத்தல் 。°《6 வினாவும் விடையும் 。。。感49 செய்யுள்களுக்குப் பொருள் கொள்ளுதல் 201 யாற்றுநீர் முதலிய எண்வகைப் பொருள்கோள் ... 253 தமிழில் வந்து வழங்கும் வடசொற்கள் எதிர்மறைப்
பொருள் தருதல் 。25? தத்திதாந்தம் 。。。25& உபசாரவழக்கு _。忍59 சாதியொருமை 。。。恩6@ எதிரி மறையிலக்கனை 360
இடிைச்சொல்லியல்
இடைச்சொல் பற்றிய விளக்கம் ... 6 இடைச் சொற்களின் வகைகள் 2 6% س? ஏஅார விடைச்சொல் 28654 صست ஒகார விடைச்சொல் 2656 سس உம் என்னும் இடைச்சொல் 267 سے
தொகை பெற்றும் பெறாதும்வரும் இடைச்சொற்கள் - 269
305徽

Page 162
தில் என்னும் இடைச்சொல் மன் என்னும் இடைச்சொல் மற்று என்னும் இடைச்சொல் மற்றை என்னும் இடைச்செல் கொல் என்னும் இடைச்சொல் ஒடு தெய்ய வென்னும் இடைச்சொற்கள் அந்தில் ஆங்கு என்பன மா என்னும் இடைச்சொல் மூவிட அசைச் சொற்கள் முன்னிலை யசைச் சொற்கள் ஆங்க என்னும் இடைச்சொல் ஒப்பில் போலி இக்காலத்தில் வழங்குஞ் சில இடைச் சொற்கள்
உரிச்சொல் என்பது பாது தொல்காப்பியரும் உரிச்சொல்லும் நன்னூலாசிரியரும் உரிச் சொல்லும் உரிச்சொல் தோன்றுதற்குரிய நிலைக்களம் கடி என்னும் உரிச்சொல் இசைக் குறிப்புப் பற்றிய உரிச் சொற்கள் வெளிப்படவாரா உரிச் சொற்கள் ( உருபுரை - எறுழ் ஈறாக )
இடையுரிச் சொற்களுக்கு ஒரு விளக்கம்
^ ෆජ් " 6
つつمحرکس
靈 306
A 70
盛7】
27
易7盛
272
፰ 79
73
273
魯74
275
盛7颜
275
27
276
277
屬7@
381
282
岛&岛
284
盛98

υά (3 ώ
4.
霹9
岛露
32
34
36
4岛
4&
蟹9
59
60
60
@《
80
85
9
98
98
98
i 09
Z 1 9
1 7
4
E 4
A 48
რეკ /ჩ*
07
27
0
0.
03
22 இறுதியடி 07
07
36
30
9
33
25
05
20
2.
30
05
20
0.
25
28
29
0.
03
25
纷9
ति माता "ता - -
பிழைதிருத்தம் "சி"
பிழை திருத்தம் நகரமெய் want G ni கெடாமல் Can Littoo ருக்கலாம் இருக்கலாம் நூற்பாலின் (BIsölutressir நஇவரும் 9 ր) ov(19ւն நகரப் நகரம் பிறருக்கும் பிறக்கும் வடிவம் பெற்றன வடிவம் நீங்கப்
பெற்றன.
திகை திசை இங்கு என்பது стоћу да பகுங்களோடு பகுபதங்களோடு என்றும் என்னும் ஈருப்புக்களே (DOILitho (o 2.5 F J’688TLDITé5 De ABTTCTGOOT உண்டு an ada (), மூன்ழெழுத்து elpair ( )(19) முதலெழுத்துக்காய இறுதியெழுத்துக்காய உயிர்மெய் ou Y)} முகட்டின் முச்சுட்டின் மெய்யிக்கு மெய்மிக்கு யவ்வழி என்பது 6T 600T JADI மெய்யும் (2) Loui" முனவே முளவே தாழம்பு 9 ("Մ)ւու,
637 as GY7 696, Dr.
63 és y oITAT சொற்கடிது செற்கடிது
6.1677 L. GI o Ly"
6ö75 gr GOYT KALT இல்ாைதவள் (2) alba) ir na uhr
307 W

Page 163
67
68
79
夏83
84
18 7
1985
22及
225
感罗5
露罗6
240
露墨及
鳄53
2《盘
盛50
盛5及
盛52
25岛
277
278
盛&5
盛86
嶺308
8
27
09
易4
13
5
盛7
s
07
09
4
2.
2&
8
3
28
2&
6
02
3
திருசொல் புணனாடு கருதாப் சாத்னோடு
அனுமதித்து ஆகும் இறுதியினுள் அடுக்குந் வின்பது பிள்ளை
வந்தவன் என்றும் நிரனிறை கீள்வரும் ଈର୍ଷ୍ଯଭକ୍ଷ୍ମା (tá)
என்றும் போற்றவை நிரனிறை இகை
கரியனாகிய
பசப்புரும்மே விரைமின்
திரிசொல்
புனனாடு கருத்தாப் சாத்தனோடு இாலாள் அனுவதித்து ஆரும்
இறுதியினும்
அடுக்குத் வென்பது பின்னை
வந்த வள் என்னும் எதிர்நிரனிறை கீழ்வரூம் תח 6-8607
என்னும் போற்றலை எதிர்திரனிறை இசை கரியளாகிய பசப்பூரும்மே விரைவின்
 


Page 164

onalist at a
an out ,
செந்தமிழ் இலக்கண விளக்கம் (Nynon mi ili )
செய்யுளியலும் அணியியலும்
(Ա) այն սայո)
அகத்திணையியலும் புறத்திணையியலும்
(2) ar nela U(0)
மெய்ப்பாட்டியலும் மரபியலும்
(00שון מוחמן 60 מש)
ട109 = <
-ܨܚܚܚܚܚܚܚܚܚܓܹ

Page 165
'1', 'g')
அனவெட்டி பண்டிஆ இ அந்தமிழ் இலக்கண விளக்கம் ஏன் நூல் ஒன்று செய்து தமிழ் உலகு இந்நூல் பலுக்குத் போது ஒர் இத் என்றெண்ணாது தாதரர் இற்கிறோம் என்று எண்ணுற்படி 5 விரைக்கமும் இனி ஒபும் பொதுத்
氫鴻鑫匈多劉氦 墊氣龜源a 勇) ഉജ് ജുജ ത്രൂ , ട്രൂജ பகுதி பெறுவதாக,
■讀
நவம்புரை இவரியற்றும் இந்நூல் பொ ஆசிரிலுன் இதிர்இெரண்ஞம் இது ീ9 ജീUളുഴ ജൂഴീഴ ജുബ இலக்கண் விளக்இமுனர்வதற்குத் கொண்டுள்ளது .
ஆரம்பக் கல்வி இடைநிலைக் பல்கலைக்கழக இசனவர்களும் அவ நூல் இது
 

தர ஆலிங் இன் ஆ இ ர் இ ன் பெயரில் தமிழ் இல் ஜூ க்குத் தந்திருக்கிற சின் இன் ** 2ァリ ●あ●●ク。 ിപ്രൂ ஒன் இறு ஒழுங்குபடுத்தி இலகுவாக த எழுதப்பட்டிருக்கிறது.
இயில் இப்படியானதுெ ஒரு கம் இதனையுவந்தேற்றும்
魯•臺* @蟲蔓豪』
ஆத இ. நமவிேண்மீ
ള വിഭ ജൂഴി கற்பிக்கும் లో శ్రీ బ్రౌన్రాడ్షాత్ర ఛాన్స్ట్ర இரண் வர் உனப்பூர்வமான உதவுவதுமே தன்மையாக
கல்வி ஆசிரியர்களும் சியம் படித்த க வேண்டிய
■■ 臼委 பண்டிதல் மு. கந்தைய