கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுனாமியினால் பாதிப்புற்ற பாடசாலைகளை முகாமை செய்தல்

Page 1

பினால் பாதிப்புற்ற
F6)6)556)6 ாமைசெய்தல்: குமுறையைத் தேடுதல்
1. சின்னத்தம்பி

Page 2

சுனாமியினால் பாதிப்புற்ற பாடசாலைகளை முகாமைசெய்தல் :
புதிய அணுகுமுறையைத் தேடுதல்
மா. சின்னத்தம்பி தலைவர், கல்வியியல் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
யாழ்ப்பாணம்.

Page 3
ஆசிரியத்துவ நோக்கு x*
வெளியீடு : 01
நூல்
ஆசிரியர் :
பதிப்பு
வெளியீடு:
அச்சு :
விலை :
* சுனாமியால் பாதிப்புற்ற பாடசாலைகளை
முகாமை செய்தல் : புதிய அணுகுமுறையைத் தேடுதல்
மா. சின்னத்தம்பி தலைவர், கல்வியியல் துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாணம்
யூன் 2005
அகவிழி 49/1 மடவெலிகட வீதி இராஜகிரிய
டெக்னோ பிரின்ட் 55, ஈ.ஏ.குரே மாவத்தை, கொழும்பு - 06
eijunt : 30.00
 

பதிப்புரை
ஆசிரியர்களின் அறிவு திறன்களின் விருத்திக்காகவும் மற்றும் புதிய கல்விச் செல்நெறிகளின் புத்தாக்கங்கள் பற்றிய தேடலுக்காகவும் "அகவிழி" மாத இதழாக தொடர்ந்து வெளிவருகிறது.
அகவிழியின் நோக்கம் மாத இதழாக வெளிவருவது மட்டுமல்ல. மேலும் கல்வியியற் கருத்துக்களைக் கொண்ட சிறு சிறு நூல்களை வெளியிடுவது கூட அதன் நோக்கங்களில் ஒன்று. ஆக அந்த அடிப்படையில் தான் "சுனாமியால் பாதிப்புற்ற பாடசாலைகளை முகாமை செய்தல் புதிய அணுகுமுறையைத் தேடுதல்" என்ற இந்த நூலும் வெளிவருகின்றது.
தற்போது தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் கல்வித்துறையில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளன. குறிப்பாக பாடசாலைச் சமூகம், மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஏற்பட்ட சுனாமி பேரலைத் தாக்கத்தால் பாடசாலைகள் பல முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன. பல பாடசாலைகளின் செயற்பாடுகள் தடைப்பட்டுள்ளன. இந்நிலையில் சுனாமியினால் பாதிப்புற்ற பாடசாலைகளை முகாமை செய்யும் நோக்கில் புதிய அணுகுமுறைகள் குறித்த தேடல் நமக்கு உடனடித் தேவையாகவும் அவசியமாகவும் அவசரமாகவும் உள்ளது. அந்த அடிப்படையில் தான் சமூகத்தேவை கருதி இந்நூலை நாம் வெளியிடுகின்றோம்.
இத்தேவையை நிறைவு செய்யும் வகையில் முதுநிலை விரிவுரையாளர் மா. சின்னத்தம்பி அவர்கள் சமகாலப் பொருத்தம்
3

Page 4
கருதி இந்நூலை வெளியிட நமக்குத் துணையாக இருந்துள்ளார். அவருக்கு எமது நன்றிகள். மேலும் ஆசிரியர் சமூகம் மட்டுமன்றிக் கல்வித்துறையின் மேம்பாட்டில் அக்கறை கொண்ட அனைவருக்கும் இந்நூல் பயன்படும். அதில் நமக்கு நம்பிக்கையுண்டு. சமகாலத்தில் தமிழ்க் கல்விச் சமூகம் எதிர்கொள்ளும் சவால்களையும் பிரச்சினைகளையும் புரிந்து கொள்வதற்கும் அவற்றிலிருந்து மீண்டு வருவதற்கும் உரிய வழிமுறைகள், மாற்று அணுகு முறைகள் மீதான கவனயீர்ப்பு தவிர்க்க முடியாதது. அந்த ரீதியில் இந்நூல் வெளிவருகின்றது.
இந்நூலை வெளியிடுவதற்கு துணையாக இருந்த விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்துக்கும், இந்நூலின் வருகைக்குக் காரணமாகவிருந்த அனைவருக்கும் நன்றிகள்.
தெ. மதுசூதனன் ஆசிரியர் - அகவிழி

சுனாமியினால் பாதிப்புற்ற பாடசாலைகளை முகாமைசெய்தல் :
புதிய அணுகுமுறையைத் தேடுதல்
அறிமுகம் :
2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி ஆசியப் பிரதேசத்தில் நிகழ்ந்த பேரலைத் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கை முக்கியமானது. இலங்கையின் குடித்தொகை, மற்றும் பொருளாதார வலிமை என்பவற்றினடிப்படையில் இப்பாதிப்பு தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இருபதுவருட யுத்தத்தினால் நிலைகுலைந்து போயிருந்த பொருளாதார, சமூக கட்டமைப்பில் இப் பாதிப்பு அடிப்படை நெருக்கடிகளை உருவாக்கிவிட்டது.
இலங்கையின் கடற்கரையோர மாவட்டங்களில் உள்ள பிரதேசங்களே இப்பாதிப்புக்குள்ளாகின. இலங்கைத்தீவின் தெற்கு, கிழக்கு, வடக்கு கடற்கரையோரங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டன. மேற்குக் கரையோரத்தில் ஓரளவு பாதிப்பே ஏற்பட்டிருந்தது. இதனால் கடற்கரையோர பொருளாதார கட்டமைப்புக்கள் சிதைந்தன, குடும்பங்கள் உருக்குலைந்து போயின. தனிநபர்கள் தன்னம்பிக்கையைத் தொலைத்து விட்டு துயரத்துடன் நின்றனர்.

Page 5
கரையோரக் கிராமங்களின் பொருளாதார வலயமாகவும், வாழ்வாதார வளமாகவும் நம்பிக்கையூட்டி வந்த கடல் அச்சுறுத்தும் விசையாகிவிட்டது. மீன் பிடித்தொழில் அபாயகரமானதாகவும் அவநம்பிக்கைக்குரியதாகவும் மாறியது, அதைச் சார்ந்திருந்த துணைத்துறைகள் சமநிலை இழந்தன. இத்துறை வருமானங்களில் தங்கியிருந்த சமூகத்துறைகள் நிலைகுலைந்தன. அவ்வாறு பாதிக்கப்பட்ட சமூகத்துறைகளில் முதன்மையானது பாடசாலைகளை உள்ளடக்கிய கல்வித்துறையாகும். இக்கல்வித் துறையை மீண்டும் துளிர்க்கச் செய்வதற்கு பாடசாலை முறையை செயற்படுமாறு துாண்டுவது அவசியமாகிறது. இது பற்றியே இங்கு கவனம் செலுத்தப்படுகிறது.
சுனாமிப் பாதிப்புக்களை பாதிக்கப்பட்ட பிரதேச ரீதியில் நோக்கப்படுமிடத்து இரு பகுதிகள் இனங்காணக் கூடியனவாகும்.
1. தெற்கு கடலோர பிரதேசமும் அதனையண்டிய மேற்குக்
கரையோரங்களும். இவை சாதாரணமாக செயற்பட்டு வந்த கல்வி நிறுவனங்களைக் கொண்டிருந்தன. தென்மாகாண சிறப்பு அபிவிருத்தித் திட்டத்திற்குட்பட்ட அபிவிருத்தி நிகழ்வுகளையும் பயன்களையும் அனுபவித்தன. சுனாமி பாதிப்பு முதல் அழிவாகவும், அதிர்ச்சியாகவும் நோக்கப்பட்டது. இவை இலங்கை அரசின் அபிவிருத்தி நிழலுக்குட்பட்டவை. இதனால் மீட்சியில் சிரமங்கள் ஏதுமில்லை.
2. கிழக்கு மற்றும் வடக்கு கடலோரப் பிரதேசங்கள்
இவை அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, யாழ்ப்பாண பிரதேசங்களைக் கொண்டனவாகும். இருபது வருட யுத்தத்தில் தேசிய பொருளாதார, மற்றும் நவீனத்துவத்தின் வெளிச்சம் படாதிருக்கும் பிரதேசமாகவும் நெருக்கடிகளுள் செயற்படும் பிரதேசமாகவும் உள்ளன. யுத்தப் பாதிப்பிலிருந்து மீள்வதற்கு முன்னதாகவே இரண்டாவது அழிவை எதிர் நோக்கிய பிரதேசங்கள் இவை, இங்கு 46 பாடசாலைகள் முற்றாக சேதமடைந்தன. இப்பிரதேசத்தில் 2861 சிறுவர்கள் தாய் அல்லது தந்தையை
6

இழந்துள்ளனர். இலங்கைத் தீவு முழுவதும் 80,000 மாணவர்கள் ஏதோ வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மீட்சிக்கான அணுகுமுறை
மீட்சி என்பது நுண்பாக முறையில் (Micro Approach) அணுகப் படவேண்டும். தனித்தனியான மாணவன் தனித்தனியான ஆசிரியர், தனித் தனியான பாடசாலை என நோக்கி துயரங்கள், பாதிப்புக்களிலிருந்து மீட்டல் அவசியம்.
அதேபோன்று பேரின முறையிலும் (Macro Approach) அணுகப்படவேண்டும். பிரதேசம் முழுவதனையும் புதிய மாதிரியில் - தொகுதி மாதிரியில் நோக்கி புதிய கட்டமைப்பை உருவாக்குதல் வேண்டும். பிரதேச தேவைக்கேற்ற பொருளாதார, சமூக உட்கட்டமைப்புடன் ஒன்றிணைந்த வகையில் பாடசாலை மற்றும் கல்விப் புனரமைப்பை உருவாக்குதல் அவசியம்.
நுண்பாக அணுகுமுறை கீழிலிருந்து மேல்நோக்கியதாயமையும் போது பேரின அணுகுமுறை மேலிருந்து கீழ்நோக்கியதாயமையும் போது இரண்டும் பொருத்தமான வகையில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். அத்தகைய செயன்முறை அகல்விரிவுப் பண்புடைய கல்வி மற்றும் பாடசாலைப் புனரமைப்புக்கு உதவும்.
சுனாமி போன்ற பேரலை அனர்த்தம் இலங்கையின் வரலாற்றில் அனுபவம் பெறாத ஒன்று ஆகும். முதல் துயரமாகவும், முதல் அச்சுறுத்தலாகவும், முதல் இழப்பு மாதிரியாகவும் இது அமைந்துவிட்டது.
இதன் காரணமாக பின்பற்றுவதற்கேற்ற எமக்குப் பொருத்தமான தீர்வு மாதிரி ஏதுமில்லை. இதனால் நாம் தான் புதிய முன்மாதிரி ஒன்றை வடிவமைக்க வேண்டும். இதையொத்த வேறு இழப்புக்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள முடியும். எனினும் பிறநாட்டு நடைமுறையை அதேவடிவில் பின்பற்றல் கூடாது, எமக்குரிய அனுவங்களுடன் புதிய விஞ்ஞான ரீதியிலான - பகுத்தறிவுச் சிந்தனைகளையும் ஒருங்கிணைக்க வேண்டும்.

Page 6
மாற்றுச்சிந்தனையை வளர்த்துக் கொண்டு செயற்படுத்தும் திட்டமாக அவ்வெண்ணங்களை மாற்ற வேண்டும். திட்டம், நிகழ்ச்சித்திட்டம், செயற்திட்டம், வேலைத்திட்டம் என்ற தொடர்புடைய பலபடி நிலைகளில் அவற்றை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும்.
அவற்றின் செயல் மாதிரி திட்ட அனுபவங்களை பிரச்சினையினால் பாதிக்கப்பட்ட பகுதியில் பிரயோகித்துப் பார்க்க வேண்டும். தோல்வி ஏற்பட்டால் அதனையும் அனுபவமாக கருத வேண்டும். அதன்படி சிறு "மாற்றங்களைச் செய்ய வேண்டும். மாற்றங்கள் ஏற்கத்தக்க நல்ல அம்சங்கள்" என்ற உணர்வுடன் செயற்படத்தயாராக இருத்தல் வேண்டும்.
இவ்வாறு படிப் படியாக து,ழலுக்கும், பிரச்சினையின் தீவிரத்துக்கும் ஏற்றதாக நடைமுறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். இதில் பங்கேற்கும் நிறுவனத்தலைவர்கள் இதில் முழுமையான ஈடுபாட்டுடன் செயற்பட வேண்டும். தமது முழு ஆற்றலையும் செயல்வடிவமாக்கிவிடும் உன்னத உணர்வுடையவர்களாக பாடசாலை அதிபர்கள் மாறிவிட வேண்டும்.
இவ்வாறு புதிய சிந்தனைகளைக் கொண்ட கல்வியியலாளர் எண்ணங்களையும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நீண்ட காலம் பணியாற்றி வரும் செயற்பாட்டாளர் (Actors) பணிகளையும் ஒருங்கிணைத்தல் வேண்டும்.
பாதிப்பும் இழப்பும்
சுனாமியினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நன்கு உணரத்தக்கவை இழப்புக்களே. இழப்புகளின் வழியாக உருவான மன அழுத்தம், விரக்தி, நீடிக்கும் சோகம், துயரம் என்பவற்றைக் கொண்ட மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், அதிபர்கள் கொண்ட கல்விச் சமூகம், இப்பிரதேசத்தின் பின்னணியாகும்.
இப்பிரதேச கல்விப் பொறுப்புதாரர் பலரும் பல்வகையான இழப்புக்களைச் சந்தித்துள்ளனர்.

நிறுவன இழப்புக்கள்:
சுனாமிப் பாதிப்புக்குட்பட்ட பிரதேசமக்கள் தமது வதிவிட வீடுகளை இழந்துள்ளனர். இது அவர்களது நாளாந்த வாழ்க்கை ஒழுங்கு பாதுகாப்பு, சுத்தம், சேமிப்பு போன்ற எல்லாவற்றையும் இல்லாமற் செய்து விட்டது. அவநம்பிக்கை நிறைந்த மாந்தராகி விட்டனர் அவர்கள்.
பிள்ளைகள் படித்து வந்த பாடசாலைகளும் அடியோடு இடிந்து விழுந்து விட்டன. பாடசாலைகள் இருந்த இடமும் தெரியவில்லை. இதனால் கடற்கரையோர கிராமியப் பிள்ளை படிப்பு என்பதிலிருந்து விடுபட்டு குழந்தை ஊழியராக மாறிவிடுவதற்கு இந்நிலைமை காரணமாகிவிடுகிறது. வறிய கிராமங்களில் பாடசாலைப் பருவம்தான் "குழந்தைத்தனம் " என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வாய்ப்பளிக்கிறது. இந்த வாய்ப்பை ஏராளமான பிள்ளைகள் தற்போது இழந்து விட்டார்கள்.
இப்பிரதேசங்களிலிருந்த கோவில்கள், தேவாலயங்கள் என்பன கூட அழிந்துவிட்டன. சமூக மக்கள் பலரும் ஒன்று கூடுகின்ற பரஸ்பர நட்பைப் பகிர்ந்து கொள்ளும் ஆன்ம பாதுகாப்பை வழங்கும். நிலையங்களாக விளங்கியவை இவ்வழிபாட்டுத்தலங்கள் தான். இவை அழிந்து போனதால் சமூக உறவுகளிலான இணைப்பு இல்லாமற் போய்விட்டது.
இவ்வாறு கரையோர கிராமிய வாழ்வை உயிர்த்துடிப்புடன் மிளிரச் செய்த வீடு, வாசல், பள்ளிக்கூடம், கோவில்கள் போன்ற எல்லா நிறுவனங்களும் அழிந்ததால் கிராமிய கட்டமைப்பும் ஒழுங்கும், அழகும், தொழிற்பாடும் உருக்குலைந்து போய்விட்டன.
தாவரமும் பொருளாதார உட்கட்டமைப்பும்:
சுனாமி பாதிப்பதற்கு முன்பு இப்பிரதேசங்களைப் பாதுகாக்கும் வகையில் இயற்கைத்தாவரங்கள், சிறுகாடுகள் இருந்தன. இவை அழிந்து போய் மண்மூடிய மேடுகளாயுள்ளன. இதனால் காலநிலைச்

Page 7
சமநிலை இல்லாதுபோயிற்று. ஆசிரியர்கள் பிள்ளைகளை வைத்துக் கற்பிக்க நிழல் தந்த மரங்கள் ஏதுமில்லை. கிராமிய இயற்கை வகுப்பறைகளான மரநிழல்கள் இல்லாமற் போய்விட்டன. கடற்கரைக் கிராமங்கள் தம் பசுமை முகங்களை இழந்து விட்டன.
இதே போல் இப்பிரதேசத்தில் மக்கள் வாழ்வுக்கும் பொருளாதார தேட்டத்துக்கும் கல்வி மேம்பாட்டிற்கும் அடிப்படையாக இருந்த குடிநீர் வசதிகள், போக்குவரத்துப் பாதைகள், கூட்டுறவுச்சங்கங்கள், சந்தைகள் போன்ற பலவும் சிதைந்து விட்டன. இவை இல்லாததால் கிராமிய கல்விப் பின்னணியே சிதைந்து விட்டது.
உதிரிகளான தனிமனிதர்கள்
ஏராளமான சிறுவர் சிறுமியர் அனாதைகளாகிவிட்டனர். தாய் அல்லது தந்தையை அல்லது இருவரையுமே இழந்து விட்டனர். அன்பு, பாதுகாப்பு உதவி என்ற எல்லாவற்றையும் வழங்கி வந்த பெற்றோரை இழந்த பிள்ளைகள் மன இறுக்கம், விரக்தி, ஆழமான சோகம், துயர் மிகுந்த ஏகாந்தம் என்பவற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். இவர்கள் படிப்பது, பரீட்சைக்குத் தோற்றுவது என்பதல்ல இப்போதைய பிரச்சினை. அவர்களை சாதாரண பிள்ளைகளாக மாற்றுவதே முழு முதற் தேவையாகும். இது நிறைவேறினால் மாத்திரமே மாணவருக்கான ஆகக் குறைந்த உளரீதியான தகுதியை இச்சிறுவர் பெறுவர்.
இவ்வாறே சகோதர சகோதரிகளை இழந்து நிற்கும் பள்ளிப் பருவப் பிள்ளைகள் ஏராளமானவர்கள் உள்ளனர். அவர்கள் பிள்ளை வயது உணர்வையும், பழக்கங்களையும், விளையாட்டுக்களையும் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை இழந்து துவண்டு போயுள்ளனர்.
இதேபோல் துள்ளித்திரிந்து, சண்டையிட்டு பகிர்ந்துண்டு மகிழ்வுற்று வளர்ந்தபோது இணைந்திருந்த பலதோழர்களையும், தோழியரையும் இழந்து நிற்கும் சிறார் மிக அதிகம். விபரிக்க முடியாத மன அழுத்தத்துடன் இவர்கள் வாழ்கின்றனர். இவர்களால் சாதாரண பிள்ளைகள் போல் உணர்வுகளை வெளிப்படுத்த முடிவதில்லை. சிரித்து மகிழ்வதை மறந்து பல நாட்களாகிவிட்டன.
10

தமக்குப் பாடம் போதித்த ஆசிரியர், உற்றார், உறவினர் பலரையும் பிள்ளைகள் இழந்து நிற்கின்றனர். இந்த இழப்புகளின் கனதியை துல்லியமாக உணரும் வயதிலும் நிலையிலும் அதிகளவு மாணவர்கள் இல்லை, என்பது மற்றொரு சோகம்.
பல சின்னஞ்சிறு பிள்ளைகள் தம்முடன் கொஞ்சி விளையாடி நட்புணர்வுடன் பழகிய செல்லப் பிராணிகளான கிளி, புறா, கோழிக்குஞ்சுகள், நாய்க்குட்டிகள், பூனைக்குட்டிகள் போன்ற எல்லாவற்றையும் இழந்து விட்டனர். அவர்களது விருப்பப்படியெல்லாம். துாக்கித்திரிந்த செல்லம் கொஞ்சிய அந்த சின்னஞ்சிறு உயிரினங்களின் இழப்புக்கள் அப்பிள்ளைகளின் தாமரை உள்ளங்களின் மீது பாறாங்கல் வீழ்ந்தது போலாகி விட்டது. இதனால் ஒரு துன்யமாகிப் போன அன்புலகையே அவர்கள் விழித்துப் பார்த்தபடியுள்ளனர். அவர்களது உணர்வு பூர்வமான புலக்காட்சியில் அன்பு ஆதரவு விளையாட்டு, தோழமை போன்ற எவ்வித பாதுகாப்புமற்று ஏக்கமும், பயமும், ஆழமான துயரமும் கலந்து விரக்தியுணர்வுடன் வாழ்கின்றனர். இந்த உள்ளத்தை அப்பியசோகத்திலிருந்து அவர்களை முதலில் வெளியே மீட்டெடுக்க வேண்டும். ஏனையோரை ஒத்த சாதாரண உணர்வு கொண்டவர்களாக அவர்களை மாற்ற வேண்டும். இதன் பின்பே கற்பித்தலைத் தொடங்க முடியும் என்பதைப் பாடசாலைகள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
பாடசாலைக் கட்டமைப்பும் சூழலும் :
பாடசாலை நாட்களிலும் பாடவேளைகளிலும் வினைத்திறனுடையதாகவும், வினைத்திறன் மிக்கதாகவும் கற்றல், கற்பித்தல் நடைபெறுவதை உறுதிப்படுத்துவதில் பாடசாலை நடைபெறுவதை உறுதிப்படுத்துவதில் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் முக்கியத்துவம் உடையன. வறிய சமூகங்களில் பாதுகாப்பான மகிழ்ச்சிகரமான பெளதிக வசதிகளைப் பெரும்பாலான பிள்ளைகள் தமது வீடுகளில் பெற்றுக் கொள்வதில்லை, பாடசாலைகளில் தான் அதனை அனுபவிக்கின்றனர். காற்றோட்டமான, வெளிச்சம் போதியளவுள்ளதும் இடவசதி கொண்டதுமான சீமெந்துக்கட்டிட
11

Page 8
வகுப்பறைகளும் தளபாடங்களும் கற்றலுக்குப் பெரிதும் துணை நிற்பன. சுனாமியினால் இப் பிரதேசத்தின் பெரும் பாலான பாடசாலைகளில் இவை அனைத்தும் அழிந்து போய்விட்டன. பல பாடசாலைகள், யுத்தம் காரணமாக ஒரு போதும் பாதுகாப்பான நிரந்தர வகுப்பறைகள் கொண்ட கட்டிடவசதிகளைப் பெற்றதேயில்லை. முல்லைத்தீவுப் பிரதேசத்தில் அத்தகைய பாடசாலையொன்று புதிதாக நிர்மாணித்த கட்டிடத்திற்கு தமது பிள்ளைகளை மாற்றுதற்குரிய ஆயத்தப் பணிகளை மேற்கொண்டபோது சுனாமி ஏற்பட்டு முற்றாகவே அக்கட்டிடத் தொகுதி அழிந்துபோன துயர அனுபவத்தை வெளியிட்டிருந்தது. ஒரு போதும் நிரந்தரக் கட்டிடத்திலும், வகுப்பறையிலும் கல்விகற்காது தமது பாடசாலைக் காலம் முடிந்து போனதாக அப்பாடசாலை மாணவர் வருத்தம் தெரிவித்தனர். கட்டிடத்தொகுதிகள் மாத்திரமன்றி தளபாடங்களையும் முற்றாகவே இழந்த பாடசாலைகளும் அதிகமாயிருந்தன.
பாடசாலைகளிலிருந்த ஆய்வு கூடங்கள், நுாலகங்கள், பிரார்த்தனை மண்டபங்கள் போன்ற எல்லா கட்டிடங்களும் அழிந்துவிட்டன. மாணவர் மற்றும் ஆசிரியருக்கான குடிநீர்வசதிகள், கழிவறைகள் போன்றனவும் பாவனைக்கு ஒவ்வாதனவாகிவிட்டன. பாடசாலையும் வகுப்பறையும் ஏறக்குறைய ஒரு அகதிகள் தங்குமிடம் போல் மாறிவிட்டது. பலபிள்ளைகள் சொந்த வீடுகளை இழந்து அகதிமுகாமில் வசித்து அகதிமுகாம் போல் மாறிவிட்ட பாடசாலைகளுக்கே கற்பதற்கு வருவதைக் காண முடிந்தது. அவர்களது பள்ளிப்பருவம் முழுவதும் இவ்வாறு அமைந்து விடுவதை வடக்கு கிழக்குப் பிரதேசத்தில் பெருந் தொகையான மாணவர் தம் அனுபவத்தில் தெரிவித்திருந்தனர்.
சுனாமி பாதித்த பிரதேசங்களில் 182 பாடசாலைகள் முற்றாகவே அழிந்து போயிருந்தன. 98 பாடசாலைகள் தமது சொந்த இடங்களில் செயற்பட முடியாமல் புதிய - வேறு அமைவிடங்களுக்கு மாற்றப்பட்டிருந்தன. இது பிள்ளைகள், மற்றும் ஆசிரியரைப் பொறுத்து மீண்டும் இடம் பெயர் உணர்வையே ஏற்படுத்தியிருந்தது. உள்ளூர் மட்டத்தில் இடம் பெயர்ந்த மக்கள் வசித்து வந்த முகாம்களாக
2

செயற்பட்டு வந்த 282 பாடசாலைகளும் சேதமடைந்திருந்தன. இது மீண்டும் இடம் பெயர்வு சார்ந்த உணர்வுகளையும். விரக்தியையும் வலுப்படுத்தியிருந்தது.
சுனாமியின் தாக்கத்தினால் இலங்கை முழுவதிலும் 35,100 வீடுகள் முற்றாகவும் 47, 500 வீடுகள் ஓரளவும் சேதமடைந்திருந்த நிலைமையை பாடசாலைகளின் அழிவுடன் தொடர்புபடுத்திப் பார்ப்பதன் மூலம் கல்வி தொடர்பான பாதிப்புக்கள், விரக்தி என்பவற்றை உணர்ந்து கொள்ளமுடியும். ஏனெனில் பிள்ளைகள் வீடுகளிலிருந்து புறப்பட்டு கல்வி பெறுதற்கென பாடசாலை வருகின்றனர், கல்விச் செயற்பாடுகள் நிறைவுற்ற நிலையில் ஓய்வு பெறவும், மீண்டும் கற்கவும் வீடு செல்கின்றனர். இந்த இரண்டு தொடர்புநிலைகளும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுவிட்ட சமூகம் ஒன்றில் எவ்வாறு கற்றல் - கற்பித்தல் மகிழ்ச்சிகரமாகவும், ஊக்கம் தரும் வகையிலும் நிகழ முடியும்?
பிள்ளைகளைப் பள்ளிக்கனுப்புவதற்கான வீட்டுச் சூழல் கூட கேள்விக்குறியாகிப் போனதை நாம் உணர்ந்து கொள்ளமுடியும். சுனாமி பாதிப்பினால் 275,000 தொழில் வாய்ப்புக்கள் இழக்கப்பட்டுவிட்டன. இதனால் அவற்றிலிருந்து கிடைத்த வருமானங்களையும் மக்கள் இழந்து விட்டனர். இந்த நிலையில கல்விக்கான முன்னுரிமையையும் உதவிகளையும் பெற்றோர் மாற்றிவிடுவர்.
யுத்தம் தொடர்ந்த வடக்கு - கிழக்குப் பிரதேசங்களில் இடம் பெயர்ந்து வாழ்ந்த மக்கள் தொகை அதிகம் என்பது தெரிந்த உண்மை. ஆனால் இடம் பெயர்ந்து வாழ்ந்த 550, 000 பேர் சுனாமிப் பாதிப்பினால் மீண்டும் பாதிக்கப்பட்டுவிட்டனர். இலங்கையில் குழாய் நீர்வசதிகளை வழங்கிவந்த 10 குழாய் நீர் விநியோகத்திட்டங்கள் பாதிக்கப்பட்டுவிட்டன. இதனால் 50, 000 வீடுகளுக்கிருந்த இணைப்புக்களும் பாதிக்கப்பட்டுவிட்டன. தோண்டப்பட்டிருந்த கிணறுகளுக்குள் கடல் நீர் புகுந்துவிட்டது. இவற்றைச் சீரமைப்புச் செய்வதற்கு 20 பில்லியன் ( 20, 000 மில்லியன் ) ரூபா தேவையென மதிப்பிடப்பட்டுள்ளது. இது குடிநீர் விநியோகப் பாதிப்பின் அளவை மதிப்பிடுவதற்கு உதவுகின்றது.
13

Page 9
சுனாமி பாதிப் பின் காரணமாக மின்சார வசதிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டு விட்டன. 222.660 வீட்டுத்துறையினரின் மின்சாரத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்தன. இவை வீட்டில் படிப்பதற்கான பிள்ளைகளின் வசதி, ஊக்கம் என்பவற்றை வெகுவாகப் பாதித்து விட்டிருந்தது.
பாடசாலைகள் சீராக இயங்குவதற்கு பிள்ளைகள் மற்றும் ஆசிரியர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஆகியோருக்கான நலத்துறை வசதிகள் மிகவும் அவசியமானவை. ஆனால் சுனாமி சுகாதார மற்றும் நலத்துறை வசதிகள் மீதும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தமை இங்கு நோக்கப்பட வேண்டும். 72 மருத்துவமனைகள் முற்றாகவே சிதைந்து போயிருந்தன. சிகிச்சை நிலையங்கள், மருந்தகங்கள், மருத்துவ அலுவலகங்கள் என்பவற்றை உள்ளடக்கியதான 363 வசதிநிலையங்களும் முற்றாகவே அழிந்திருந்தன. இதற்குரிய புனரமைப்புக்கு மாத்திரம் 10 பில்லியன் ( 10, 000 மில்லியன் ) ரூபா தேவைப்படுகின்றது என்பது இப்பாதிப்பின் அளவினை மதிப்பிட்டுக் கொள்ள உதவுகின்றது.
பாடசாலைகளும் கல்வியும் தனியான துனியப் பிரதேசத்தில் தொழிற்படக் கூடியனவல்ல. மக்களின் பொருளாதார வசதிகள், வசிப்பிட வசதிகள் குடிநீர், சுகாதார வசதிகள், மின்சார விநியோக ஏற்பாடுகள் என்பவற்றைக் கொண்ட சமூக கட்டமைப்பின் மீது தான் பாடசாலைக்கல்வி செயற்பட முடியும் என்பதை நினைவு கூருதல் மிகவும் அவசியம். அத்தகைய பகைப்புலத்தில் தான் பாடசாலைக் கல்வியின் சமூகரீதியிலான தொழிற்பாட்டை விளங்கிக் கொள்ள முடியும். சுனாமி அத்தகைய சமூக கட்டமைப்பை மிக மோசமாகப் பாதித்த நிலையில் அவற்றுடன் இணைந்து அவற்றில் தங்கியிருக்கும் குடும் பங்களிலிருந்து வருகின்ற ஆசிரியர்கள் எவ்வாறு ஊக்கத்துடனும், அதீத கவனத்துடனும் கற்பித்தல் பணிகளில் ஈடுபடமுடியும்? பிள்ளைகளின் உளவளத்துணையாளராக எவ்வாறு தொழிற்படமுடியும்? அவ்வாறே அத்தகைய வசதியீனங்கள் நிறைந்த சமூக வாழ்விலிருக்கும் பிள்ளைகள் எவ்வாறு ஒழுங்காக பாடசாலைக்கு சமூகமளிக்க முடியும்? பெற்றோர் அதற்கு எவ்வாறு
14

உதவிகளும் ஒத்தாசைகளும் வழங்க முடியும்? பாடசாலைக்கு வரமுடிந்தாலும், அப்பிள்ளைகள் எவ்வாறு கற்கும் உளநிலையையும் ஊக்கத்தையும் கொண்டிருப்பர்? இவை பாடசாலைக்கல்வியின் வினைத்திறனை அதிகளவில் பாதித்து விட்டன. இதேபோல் கற்றல் - கற்பித்தல் தொடர்பான விளைதிறன் அளவையும் அவை வெகுவாகப் பாதித்துள்ளன.
சுனாமி பல சமூகங்களில் பெண்களின் இறப்பை அதிகரித்து விட்டது. ஒக்ஸ்ஃபாம் அவுஸ்திரேலியா (Oxfam Australia) என்ற நிறுவத்தின் நிர்வாக இயக்குனர் அன்ட் ரூ ஹே வெற் (ANDREW HEWETT) கூற்று இவ்வாறு அமைகிறது:-
"தற்போது கிடைக்கும் தகவல்களினடிப்படையில் நோக்கும் போது சில கிராமங்களில் கொல்லப்பட்டவர்களில் 80 சத வீதமானோர் பெண்கள் எனத் தெரிய வருகிறது. இது சமூகத்தில் பால்வகைச் சமநிலையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் முழுச் சமூகத்தையுமே பலமட்டங்களில் இது தொடர்ச்சியாகப் பாதிக்கும் என்பதை உணரமுடிகிறது. ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்களுக்கு அதிகம் நீச்சல் தெரியாமையும் இதற்குக் காரணமாகும்."
இலங்கையில் சுனாமிப்பேரலைப்பாதிப்பினால் கிராமங்களில் பெண்கள் இறந்தபோது, பல பிள்ளைகள் தமது தாயாரையும், சகோதரிகளையும் இழந்து நின்றனர். இதனால் குடும்பம் என்பதன் சமநிலையும் குடும்ப விழுமியமும் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுவிட்டன. இது பாடசாலைமயம் (Schooling) தொடர்பாக மிகப் பெரியபாதிப்பை நீண்டகாலத்திற்கு நிச்சயமாக ஏற்படுத்தும் என்பது உண்மையாகும்.
சுனாமியினால் பெற்றோர் இருவரையும் இழந்த பிள்ளைகள் 1044 பேர் என்றும் 3,500 பிள்ளைகள் பெற்றோரில் ஒருவரை இழந்துள்ளனர் என்றும் வடக்கு கிழக்கில் பெற்றோர் இருவரையும் இழந்த பிள்ளைகள் 740 பேர் என்றும் 2121பேர் ஒரு பெற்றோரை (தாய் அல்லது தந்தையை இழந்திருந்தனர் என்றும் குழந்தைகள்
15

Page 10
பராமரிப்புத்திணைக்களம் தெரிவித்துள்ளது. தென்மாகாணத்தில் முறையே பெற்றோர் இருவரையும் இழந்துநின்ற பிள்ளைகள் 249 பேர் என்றும், 1243 பேர் ஒரு பெற்றோரை இழந்துள்ளனர் என்றும் மேல் மாகாணத்தில் இதேதொகை முறையே 42 பிள்ளைகளாகவும் 64 பிள்ளைகளாகவும் காணப்பட்டனர் என்றும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு பெற்றோர் இருவரையும் அல்லது பெற்றோரில் ஒருவரை இழந்து நிற்கும் பிள்ளைகள் பாடசாலைக்கு வருவதற்கான ஊக்கத்தை எங்கிருந்து பெறுவர்? எவ்வாறு வீட்டிலிருந்து உதவிகளும் ஊக்கமும் அவர்களுக்குக் கிடைக்கும்? எப்போது சாதாரண பிள்ளைகளுக்குரிய அறிவு மற்றும் உணர்வு நிலைகளுக்கு அவர்கள் திரும்புவர்?
இத்தகைய பிரச்சினை பிள்ளைகள் பாடசாலை வருவதை அதிகம் பாதிக்கிறது. பாடசாலைக்கு வருகின்ற பிள்ளைகளும் கற்றலுக்குரிய மனோநிலையில் இல்லை. இந்த நிலைமைகளும் சுனாமி பாதிப்புப் பிரதேசங்களில் பாடசாலைக் கல்வியின் வினைத்திறன் மற்றும் விளைநிறன் மீது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பாதிப்பு நீண்ட காலத்திற்கு தொடருவதற்கான சாத்தியப்பாடுகளுமிருக்கின்றன.
பாடசாலைகளின் பொறுப்புதாரர்கள்:
பாடசாலைகள் தற்போது பல்வேறு பொறுப்புதாரர்களுடன் தொடர்புடையதாக செயற்பட்டு வருகின்றன. சுனாமி தாக்கம்
இத்தகைய பொறுப்புதாரர்களை அதிகம் பாதித்த போது அப்பாதிப்புக்கள் இயல்பாகவே பாடசாலைகள் மீது அதிக தாக்கத்தை
ஏற்படுத்தின.
பாடசாலைகளின் செயற்பாடுகளில் தாக்கம் ஏற்படுத்துவோராக பின்வருவோர் காணப்படுகின்றனர்.
1. மாணவர்கள்
2. ஆசிரியர்கள்
16

பெற்றோர் கல்வித்திணைக்கள அலுவலர், அதிபரும் நிர்வாகிகளும் தேசிய கல்வி நிறுவகம் அரச சார்பற்ற நிறுவகங்கள்
சமூக நிறுவனங்கள் 9. வியாபார நிறுவனங்கள்
இத்தகைய பொறுப் புதாரர்களில் சுனாமி பாதிப்புப் பிரதேசத்திற்கு வெளியே செயற்படுகின்ற தேசிய கல்வி நிறுவகம் மாத்திரமே பாதிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் சிலவற்றில் அரசசார்பற்ற நிறுவனங்கள் கூட பாதிக்கப்பட்டிருந்தன. ஏனைய எல்லா பொறுப்புதாரரும் ஏதோ ஒரு வகையில் சுனாமியினால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதன் காரணமாக பாடசாலைகள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டன.
சுகாதார கல்வி தேசியகல்வி நலத்துறை அலுவலர் நிறுவகம் நிறுவனங்கள்
பெற்றோர் -> பாடசாலை K-— DIT GOOTGNU
வியாபார, சமூக கைத்தொழில் நிறுவனங்கள் ஆசிரியர் நிறுவனங்கள்.
விளக்கப்படம் 1 : பாடசாலைப் பொறுப்புதாரர்
17

Page 11
இப்பாடசாலைகள் மாணவரை மையமாகக் கொண்டவை. எத்தகைய பொறுப்புதாரர் மீதும் ஏற்படும் பாதிப்பு அடுத்தகட்டத்தில் மாணவர் மீதான பாதிப்பாகிவிடும்.
சுனாமியால் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் இறந்தபோது அல்லது உடல் மற்றும் உளரீதியில் அவர்கள் பாதிக்கப்பட்டபோது பாடசாலையின் தொழிற்பாடுகளும் பாதிக்கப்பட்டன. பாடசாலைக்குச் செல்லும் விருப்பம் வீழ்ச்சியுற்றது. சென்றாலும் கற்றலில் ஈடுபாடுகாட்டமுடியாத உளநிலையுடன் மாணவரும் கற்பிக்க முடியாத உளப்பாதிப்புடன் ஆசிரியரும் இருந்தனர். பெற்றோர் கடுமையான பாதிப்புக்களுக்கு உள்ளானபோது தமது வாழ்வாதார தேவைகள் தொடர்பாகவும் தாம் இழந்து விட்ட குடும்ப உறுப்பினர் பற்றியும் மிகுந்த வேதனையுடன் இருந்ததால் பள்ளிக்குப் பிள்ளைகளை அனுப்புதல் பற்றி அக்கறை காட்டவில்லை. அதற்கான உதவியும் ஊக்கமும் வழங்கும் நிலையிலும் பெற்றோர் இருக்கவில்லை. பாடசாலைகளும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் பாடசாலைமயம் தொடர்பான எந்த ஒரு உணர்வுமற்றவர்களாகவே பெருந்தொகையான பெற்றோரிருந்தனர். இது பாடசாலைகளின் ஒழுங்கான தொழிற்பாட்டை வெகுவாகப் பாதிப்பதாயிருந்தது.
கல்வித் திணைக்களங்களின் புவியியல் அமைவிடமும், தளபாடங்களும், பதிவேடுகளும் வாகனங்களும், தொடர்பாடல் கட்டமைப்பும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தன. பள்ளிகளை கண்காணித்தல், உதவுதல் தொடர்பாக எவ்வித கவனத்தையும் அவை செலுத்த முடியவில்லை. இது பாடசாலைகளின் இயங்குதன்மையைப் பாதிப்பதாயிருந்தது. அடிப்படையான தகவல்கள், தரவுகள் என்பவற்றை திரட்டுவதிலும், அவசர மனிதாபிமான உதவிகளை மேற்கொள்வதிலும் ஈடுபாடுகாட்ட வேண்டியிருந்தது. இதனால் கல்விசார் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட முடியாதிருந்தது.
அரச சார்பற்ற நிறுவனங்கள், சமூக நிறுவனங்கள், குறித்த பிரதேசத்தின் உற்பத்தி, வியாபார நிறுவனங்கள் போன்றனவும் பாதிக்கப்பட்டிருந்தன. பாதிக்கப்படாதிருந்தவை கூட மனிதாபிமான
18

ரீதியிலமைந்த அடிப்படைத் தேவைகளில் உதவுவதிலேயே கவனம் செலுத்தின. பள்ளிக்குப் பிள்ளைகளை அனுப்புதல், கற்றலில் ஈடுபடுத்துதல் போன்ற நோக்கங்கள் முன்னுரிமை பெற முடியவில்லை.
இத்தகைய பொறுப்புதாரர் தொடர்பான பாதிப்புக்கள், முன்னுரிமை மாற்றங்கள் கல்வி தொடர்பானதும் பாடசாலை தொடர்பானதுமான பணிகளை வேகமற்றதாக்கியிருந்தன.
மாணவர் தொடர்பான பொறுப்புதாரர்
சுனாமியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இருந்த மாணவர்கள் அவர்களுடன் தொடர்புடைய பலரின் செயல்கள், உணர்வுகள், மனவெழுச்சிகள், மனப்பான்மைகள் தொடர்பாக ஏற்பட்டிருந்த மாற்றங்களினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
விளக்கப்படம் 2 மாணவர் மீது தாக்கம் ஏற்படுத்தும் பொறுப்புதாரர்களை (Stake Holders) துல்லியமாகக் காட்டுகின்றது.
விளக்கப்படம் 2 : மாணவர் பொறுப்புதாரர்
கடைக்காரர் தனியார்கல்வி நிலையங்கள் சகோதரர்
சகபாடிகள் -> மாணவர் * பெற்றோர்
பகுதிநேர ஊடகங்கள் தொழில்
ஆசிரியர் வழங்குநர்
மூலம் : கட்டுரை ஆசிரியரால் தயாரிக்கப்பட்டது.
19

Page 12
இவர்கள் அனைவருமே சுனாமியினால் ஏதோ ஒருவகையில் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலைமை பிள்ளைகளின் மானிடவியல் மற்றும் சமூக சூழல் தொடர்பாக ஒரு வெறுமையை ஏற்படுத்தியிருந்தது. விபரிக்க முடியாத ஒரு துயரத்தை உருவாக்கியிருந்தது. உடல் மற்றும் உளச் செயற்பாடுகளில் சமநிலையற்ற தன்மையை ஏற்படுத்தியிருந்தது. மாணவர்களுக்குத் தேவையான பொருள்சார் உதவிகள் தடைப்பட்டன. உணர்வுகளை இயல்பாக பகிர்ந்து கொள்ளும் வாய்ப்புக்கள் அற்றுப்போயின, பயம் கலந்த வெறுமை அவர்களை ஆக்கி ரமித்திருந்தது. அவநம்பிக்கை நிறைந்த நோக்குடன் துனியத்தை நோக்கி - பாதுகாப்பு ஏதுமின்றி செயல்படுவதாக மாணவர்கள் உணர்ந்தனர். ஊடகங்களின் வெளிப்பாடுகள் பல சமயங்களில் அவர்களது துயரங்களை மீளவலியுறுத்தின; விரக்தியைப் பன்மடங்காக்கின.
பெற்றோர், சகோதரர், மற்றும் உறவினர் எவருமற்ற நிலையிலிருந்த சிறுவர்களின் வாழ்வுநிலை மோசமடைந்தது. பலர் சிறுவர் ஊழியராகினர், பாலியல் துன்புறுத்தலுக்கும் இலக்காகினர், விருப்பமில்லாத ஒரு வாழ்வுப்பொறி முறைக்குள் அவர்கள் தள்ளப்பட்டனர்.
இத்தகைய பாதிப்புகளுடன் ஓரளவு தப்பிய பிள்ளைகள்தான் மீண்டும் பாடசாலை சென்றனர். மனச்சுமையும் ஏக்கமும், விரக்தியும் அவநம்பிக்கையும் நிறைந்த சிறுவர்களே பாடசாலைகளின் வகுப்பறைகளை நிறைத்தனர்.
முகாமைத்துவ மறுபரிசீலனை
இத்தகைய நெருக்கடிகளுக்குட்பட்ட பாடசாலைகளை முகாமைத்துவம் செய்வது தொடர்பாக பல கேள்விகள் எழுந்துள்ளன.
1. பாடசாலைப் பெளதிக நிலைமைகளை எவ்வாறு மாற்றுவது? (வகுப்பறை, தளபாடம் தொடர்பானவை)
2. பிள்ளைகளுக்குரிய பொருள் சார் (உணவு சீருடை மருந்து,
பாதணி, போன்ற உதவிகளை எவ்வாறு வழங்குவது?
20

கற்றல் உபகரணங்களை (பாடப்புத்தகங்கள், எழுது கருவிகள், பயிற்சிக்கொப்பிகள் போன்ற) எவ்வாறு போதியளவில் பெற்றுக்கொடுப்பது?
மாணவர்கள் உளரீதியில் பாதிக்கப்பட்டுள்ள போது மீண்டும் எவ்வாறு சாதாரண பிள்ளைகளாக மாற்றுவது.
மகிழ்ச்சிகரமாக கற்பதற்கு எத்தகைய மாற்றங்களை வகுப்பறையிலும், பாடசாலையிலும், பாடசாலைக்கு வெளியேயும் ஏற்படுத்துவது?
எண்ணங்கள், கருத்துக்கள், அனுபவங்கள், நெருக்கடிகள் என்பவற்றை சாதகமான விளைவுகள் பெறும் வகையில் பிள்ளைகள் தமக் கிடையிலும் ஆசிரியர்களுடனும் இடைவினையுறவு கொள்ள எவ்வாறு உதவுவது?
குடும்பங்களினால் வழங்கப்பட்ட உதவிகள் தடைப்பட்ட நிலையில் (உணவு, பாடநூல்கள், பயணக் கட்டணங்கள் போன்றன) பாடசாலைகள் அவற்றை எவ்வாறு பெற்றுக்கொடுப்பது?
வகுப்பறைகளில் அல்லது வகுப்பறைகள் இல்லாத வெளிகள் மற்றும் மரநிழல்களில் கற்றல் - கற்பித்தலை மேற்கொள்ள எவ்வாறு உதவியும் ஊக்கமும் வழங்குவது?
இவற்றுக்கு விடை காண்பதும், அதன்படியான புதிய செயற்
திட்டங்களை நடைமுறைப்படுத்துவதும் பாடசாலை முகாமைத்துறை
யினராகிய அதிபர், உபஅதிபர், பகுதித்தலைவர்கள், வகுப்பாசிரியர்,
மற்றும் மாணவத் தலைவர்களினது கடமையும் பொறுப்பும்
நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.
பாடசாலை அதிபர்கள் வழமையான நிர்வாகிகள் போலவோ,
முறைசார் முகாமையாளர் போலவோ செயற்படுவதால் எவ்வித விளைவுகளையும் ஏற்படுத்தி விட முடியாது. அவர்கள் சிறந்த தலைவர்கள் போல் செயற்பட ஆயத்தமாக வேண்டும். முறைசாராத
மாதிரியில் (Non - formal) பல செயற்பாடுகளை மேற்கொள்ள
21

Page 13
முன் வரவேண்டும். மேலதிகமான வளங்களை கண்டறிந்து பயன்படுத்துவதில் மிகுந்த உற்சாகமுடையவராக இருத்தல் வேண்டும். நெருக்கடி முகாமைத்துவ நுட்பங்களை உரியவாறு கையாளவேண்டும். துரித செயலணி ஒன்றை தமக்கு உதவியாக பாடசாலை மட்டத்தில் உருவாக்கிக் கொள்ளவேண்டும். உளவளப்பணிக்குரிய வள ஆளணியினரை திரட்டி உரிய செயற்திட்டம் ஒன்றையும் தயாரித்துக் கொள்ள வேண்டும்.
முகாமைத்துவ செயற்பாடுகள் ஒவ்வொன்றையும் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்து பொருத்தமான முறையில் மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்.
பாதிக்கப்பட்ட பாடசாலைகளை மீளவும் தொடக்கி நடாத்த முனையும் அதிபர்களும், உதவி அதிபர்களும் இத்தகைய படிமுறைச் செயற்பாடுகளில் கவனம் செலுத்துவதவசியம்.
சாதாரண நிலைமைகளில் கடைப்பிடித்து வந்த முகாமைத்துவ எண்ணங்கள், கோட்பாடுகள், நம்பிக்கைகள் நடைமுறைகள் என்பவற்றின் செல்வாக்கு தம் மீது அதிகம் படாதவாறு பார்த்துக் கொள்வதில் அதிபர் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.
புதிய பிரச்சினைகள், புதிய தேவைகள், புதிய விளைவுகள் நோக்கியதாக நவீன முகாமைத்துவ சிந்தனையுடனும் புதிய உணர்வுடனும் அதிபர்கள் இப் பாடசாலைகளை நிர்வகிக்க முன்வரவேண்டும். பிள்ளை நேயப் பாடசாலைகளாக அவற்றை இயக்க வேண்டும், நீண்ட நேரம் செயற்படும் உளப்பாங்கையும் விருத்தி செய்தல் வேண்டும், ஆசிரியர், மாணவர் முகாமைத்துவ ஆளணி என்போர் மானிட உணர்வுடன் பணி நோக்கிச் செயற்படும் துழலை விருத்தி செய்ய வேண்டும்.
நெருக்கடியிலிருந்து மீளும் வரை இத்தகைய புதிய முகாமைத்துவம் அவசியமாகவும், அவசரமாகவும் வேண்டப்படுகின்றது.
22

புதிய வேலைத்திட்டங்கள்:
சுனாமியினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை முகாமைத்துவம் செய்யும் அதிபர்கள் பல புதிய சிந்தனைகளுடன், புதிய அணுகுமுறைகளையும், வேறுபட்ட உபாயங்கள் மற்றும் நுட்பங்களையும் கையாள வேண்டும்.
மாற்றங்களை முகாமை செய்வது தொடர்பாக பின்வரும் அடிப்படை எண்ணக்கருக்களை அதிபர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். 1. குறிக்கோள்கள் (Purpose) - மாற்றம் செய்வது தொடர்பாக தெளிவான கொள்கையொன்றைக் கொண்டிருக்க வேண்டும். அதனடிப்படையில் புதிய திசைகாட்டல் முறைகளைக் கையாளுதல் வேண்டும்.
2. கட்டமைப்பு (Structure) - பாடசாலையில் பல கற்கைநெறிகள், கல்விமட்டங்கள், கலைத்திட்ட புறக்கலைத்திட்ட செயற்பாடுகள் என்பவற்றை தெளிவான பல கூறுகளாகவும், துணைக் கூறுகளாகவும் ஒழுங்குபடுத்தி நிர்வாக முறைமை ஒன்றை வடிவமைத்துக் கொள்ள வேண்டும்.
3. செயன் முறை (Process) - தாமதமின்றி, வினைத்திறனுடன் பாடசாலைமட்ட நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ தொழிற்பாடுகளை மேற்கொள்வதனூடாக செயல் நோக்கியதான, நெகிழ்ச்சியுடைய, வெளிப்படையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். இவை ஒழுங்காகவும், ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாகவும் அமைவதை உறுதிப்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம்.
4. பணியாட்கள் (People) - பாடசாலையில் பணியாற்றும் ஊழியர்களில் ஆசிரியர்கள் முக்கியமானவர்கள். ஏனைய கல்வி சாரா ஊழியர்கள் சிற்றுாழியர்கள் போன்றோரும் ஈடுபாட்டுடன் வேலை செய்வதை உறுதிப்படுத்துவதும் அவசியம்.
அதிபர் ஒவ்வொரு தனிநபரையும் கெளரவமாக அதேசமயம்
23

Page 14
கண்டிப்புடன் நடாத்துவது மிகவும் அவசியம், அவர்களிடையில் புரிந்துணர்வு, ஒற்றுமை என்பவற்றை முன்னேற்றுவதன் மூலம் இலக்குகளுக்காக பணியாற்றும் ஒரே குழுவினர் என்ற
மனப்பாங்கை வளர்த்து விட வேண்டும்.
5. மெய்மை (Realism) - பாடசாலை தொடர்பான எல்லாச்
செயற்பாடுகளிலும் உரிய பின்னுாட்டல்களைப் பெற்று நிலைமைக்குத்தக்கதாக நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறையில் எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ள - வேண்டும்.
6. untL&T606)& gp6) (Environment) - UTL3, T66) GT66 (D
நிறுவனம் அது தொழிற்படும் சமூகச் சூழலுடன் தங்குதடையற்ற வகையில் தொடர்புபட்டு இயங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.
பாடசாலைக்கான உள்ளீடுகளை சமூகத்திலிருந்து பெறுவதிலும் வெளியீடுகளை சமூகத்திற்கு வழங்குவதிலும் தெளிவான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.
7. சமநிலை பேணல் (Balance) - பாடசாலையில் மாற்றங்களை
அறிமுகப்படுத்தும் போது இயல்பான வகையில் தொடர்ச்சியான முன்னேற்றங்களை ஏற்படுத்தவேண்டும். மாற்றங்கள் பாடசாலைக்குள்ளே எவ்விதமுரண்பாடுகளையும், நெருக்கடிகளையும் உருவாக்காதவகையில் பொருத்தமான வழிமுறைகளின் மூலம் செயற்படுத்த வேண்டும்.
இத்தகைய எண் ணக் கருக்கள் பற்றிய தெளிவான
அறிவுடையவராக செயற் பட அதிபர் முனையும் போது பின்வருவனவற்றில் கருத்துான்றுதல் வேண்டும்.
9 மாற்றங்கள் பற்றிய தெளிவான எண்ணங்களை
உருவாக்கவேண்டும்.
9 மாற்றங்கள் தொடர்பான விருப் பங்களையும் தீர்மானங்களையும் நடைமுறைச் செயல்களாக மாற்றி விடவேண்டும்.
24

பாடசாலை மட்டத்தில் சிரேஷ்ட ஆசிரியர், தகைமைமிக்க ஆசிரியர் போன்றவர்களின் அனுபவங்களை அங்கீகரித்து மதிப்பளிக்க வேண்டும்.
மாற்றங்கள் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளையும் நெகிழ்ச்சியுடைய வகையில் திட்டமிடவேண்டும். கிடைக்கும் வளங்களை அத்திட்டத்திற்கு பொருத்தமானதாக மாற்றுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
சில நடவடிக்கைகளில் எதிர்பாராத பின்னடைவுகள் ஏற்படும். அவற்றைக் கண்டு மனம் தளருதல் கூடாது. அவற்றை அனுபவங்களாக ஏற்று அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
நடவடிக்கைகள் பலவற்றை செயல்படுத்தும் போது தழ் நிலைகளை இணக்கமானதாக மாற்றியமைப்பதில் அதீத கவனம் செலுத்த வேண்டும்.
மேற்கொள்ளப்படுகின்ற பல்வேறு மாற்றங்கள் தொடர்பான தெளிவான விளக்கங்களை பாடசாலையின் பொறுப்புதாரர்கள் (முன்னே குறிப்பிடப்பட்டுள்ளது) பலருக்கும் விளக்க வேண்டும். இதன் மூலம் முரண்பாடுகள் எழாது தவிர்த்து விடலாம், அவர்களிடமிருந்து பூரண ஒத்துழைப்பையும் பெற்றுக் கொள்ளலாம்.
பாடசாலை ஆசிரியர்கள் பலரும் வழமையான கற்பித்தற் பணிக்கும் புறம்பாக பல்வேறு விஷேட திறன்களையும் தேர்ச்சிகளையும் கொண்டிருப்பர். அத்தகைய அசாதாரண திறன்களை பாடசாலை முன்னேற்றத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் முகாமைத்துவம் அவர்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மாற்றங்கள் தொடர்பான செயல் முறைகளில் ஆசிரியர்கள் அதிகம் ஈடுபடும் போது அவர்கள் பிரச்சினைகளை எதிர் கொள்ளாதவாறு அவர்களைப் பாதுகாத்தல் வேண்டும்.
25

Page 15
அவர்கள் மனவிரக்தியடையாதவாறு அவர்களுக்கு வேண்டிய ஊக்கங்களையும் வழங்கவேண்டும்.
9 பாடசாலையில் பலநிலைகளில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு பல புதிய முடிவுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த முடிவுகள் பல பணியாளரை பல மட்டங்களில் பாதிப்பதாயிருக்கும். இதன் காரணமாக எந்தவொரு முடிவையும் மேற்கொள்ளும் போது நியாயமான முறையில் செயற்படவேண்டும்.
9 மாற்றங்களை நடைமுறைப்படுத்திக் கொள்வதற்கு உதவுகின்ற ஆசிரியர்கள், மற்றும் அலுவலக ஊழியர் போன்றோருக்கு பொருத்தமான வெகுமதிகளை வழங்கும் நடைமுறைகளை மிகுந்த ஊக்கத்துடன் மேற்கொள்ள வேண்டும். 9 தேவையான விளைவுகளை உருவாக்கும் வகையில், பொருத்தமான வேளைகளில், தகவல்களை தேவைப்படுவோருக்கு வழங்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இத்தகைய எல்லா அம்சங்களையும் கவனத்திற் கொண்டு பாதிக்கப்பட்ட பாடசாலைகளை வழமைக்கு மாற்ற பின்வரும் நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.
வகுப்பறை நிலைமைகளை மாற்றியமைத்தல் :-
புதிதாக அமைக்கப்படும் வகுப்பறைகள் போதியளவு இடவசதி கொண்டனவாக இருத்தல் வேண்டும். தற்காலிகமாக அமைக்கப்படினும் கூட போதியளவு இடவசதி கொண்டனவாக இருப்பது மிகவும் அவசியமாகும்.
போதியளவு எண் ணிக்கையில் மாணவர்களுக்குரிய மேசைகளும், கதிரைகளும் வழங்கப்படல் வேண்டும் வசதியாக அமர்ந்து கொள்வதற்கு வேண்டியதாக இவற்றை வடிவமைப்பதால் பிள்ளைகளது உளரீதியான துன்பங்களைத் தணிக்க முடியும்.
26

வகுப்பறைகளில் ஆசிரியர் எல்லாப்பிள்ளைகளுடனும் தங்குதடையின்றி தொடர்பு கொள்வதற்கும், அசைந்து சென்று கற்பிப்பதற்கும் ஏற்ற இடவசதி இருத்தல் வேண்டும். ஆரம்ப வகுப்புக்களாயின் இடவசதி மேலும் கூடுதலாகத் தேவைப் படும். விளையாட்டு வகுப் பறைச் செயற்பாடுகள் என்பவற்றுக்கு இவை மிகவும் அவசியமானவை. தனித்தனியாக ஒவ்வொரு பிள்ளையினதும் தேவை மற்றும் பிரச்சினைகளை ஆசிரியர் அறிந்து பிள்ளைகளுடன் அளவளாவி இடைவினையுறவை மேம்படுத்திக் கொண்டு கற்பிப்பதற்கு ஏற்றதாக வகுப்பறையில் போதிய இடவசதியை ஏற்படுத்துதல் அவசியமாகும்.
பொதுவான வகுப்பறை நிலைமைகளுக்கும் இத்தகைய இடவசதி இன்றியமையாததாகவேயுள்ளது. எனினும் சுனாமியின் பாதிப்புக்குட்பட்ட பிள்ளைகளின் வகுப்பறையில் மேலதிக கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் இடவசதியை ஏற்படுத்துவதில் விசேட கவனம் செலுத்த வேண்டும். சுனாமியினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் ஆசிரியரின் அந்நியோன்யமான வழிகாட்டல்களையும் உதவிகளையும் வேண்டிநிற்கின்றனர். இதற்கேற்றதாக வகுப்பறை வசதிகளை உறுதிப்படுத்திக் கொள்வதிலும் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.
நிரந்தரமான வகுப்பறைகள் அமைக்கப்படுமிடத்து வகுப்பறைச் சுவர்களுக்கு மென்மையான வர்ணங்களைப் பூசுதல் விரும்பத்தக்கது. இயன்றவரை அழகிய பூக்கள், பறவைகள் கொண்ட ஒவியங்களையும் பார்வைக்குரியதாக வைத்துக் கொள்ளலாம். பிள்ளைகளின் துயர உணர்வுகளைத் துளிர்க்கச் செய்யாத வகையிலான அழகிய ஓவியங்களைத் தெரிவு செய்து வகுப்பறையை அழகுபடுத்துவதற்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
வகுப்பறையில் பிள்ளைகளுக்கு மிருதுவான உணர்வுகளையும், மகிழ்ச்சிகரமான மனோபாவங்களையும் முன்னேற்றக்கூடிய அழகான வர்ணப்படங்களை கொண்ட வாசிப்புக்குரிய துணைநூல்கள் பலவற்றை வகுப்பறைகளில் வைப்பதற்கு வசதி செய்து கொடுக்கப்படல் வேண்டும்.
27

Page 16
வகுப்பறைகளில் தேவையான அளவுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கச் செய்தல் வேண்டும். குடிநீருக்காக பரபரப்புடன் அலைவதைத் தவிர்ப்பதற்கு இத்தகைய ஏற்பாடு மிகவும் அவசியமாகின்றது.
பிள்ளைகளுக்கான விஷேட வதிவிடம் :-
சுனாமியினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளைப் பொறுத்தவரை "வீடு" பற்றிய எண்ணக்கரு வேறானதாகிவிட்டது. தாய் தந்தை இருவரதும் உதவியும் அன்பும் அரவணைப்பும் பாதுகாப்பும், வசதிகளும் கொண்ட வதிவிடமே வீடு என்பது சாதாரண பிள்ளைகளின் புலக்காட்சியில் நிலைத்திருக்கும்.
ஆனால் சுனாமி தாக்கத்திற்குள்ளான பிள்ளைகளைப் பொறுத்தவரை வீடு என்பது பின்வரும் எண்ணங்களுக்குரியதாகும்.
வீடு என்ற பெளதிக கட்டிடம் எதுவுமில்லை.
வீட்டில் நிழலும், பயனும் தந்த பயிரினங்கள் எதுவுமில்லை.
பிள்ளைகளோடு அன்புரிமையுடன் பழகி ஒடித்திரிந்து அவர்களுக்கு மகிழ்வுணர்வை ஊட்டிய செல்லப் பிராணிகள் எதுவும் உயிருடனில்லை. பயன் தந்த வீட்டு மிருகங்களும் ஏதுமில்லை.
குதூகலத்துடன் தம்மை எதிர்பார்த்துக் காத்திருந்து, தம்மைக்கண்ட போது அரவணைத்து கொஞ்சிக் குலாவிய பெற்ற அன்னை இல்லை.
வாஞ்சையோடு கதைத்து எல்லா உதவிகளையும் செய்து, வேண்டிய இடமெல்லாம் அழைத்துச் செல்லும் அப்பாவும் இல்லை,
தம் மோடு விளையாடி, சண்டையிட்டு மறுகணம் நேசத்துடன் உரிமை கொண்டாடிச் சிரித்து மகிழும் உடன் பிறப்புக்கள் எவருமேயில்லை.
28

தான் படிக்கும் மேசை, புத்தகங்கள், பாடசாலைப்பை, விளக்கு எதுவுமேயில்லை.
நினைத்த போதெல்லாம் ஓடிப்போய் கைவிரலால் கோடுபோட்டு ஓடியாடி விளையாடிய மணல் முற்றமேயில்லை.
இத்தகைய இழந்துபோன சந்தோஷங்களை நினைவுக்கு கொண்டு வந்து கனமான சோகத்தை நிலை நிறுத்தி, உணர்வுகளை உறைய வைக்கும் எண்ணக்கருவாகவே 'வீடு' பற்றிய சிந்தனை விளங்குகிறது. பிள்ளைகள் வீடு என்பதோடு எல்லாவற்றையுமே இழந்து விட்டிருப்பதுதான் சோகத்தின் உச்சநிலை.
இத்தகைய பிள்ளைகளை மீண்டும் சாதாரணமானவர்களாக மாற்றவேண்டும். சாதாரண உணர்வும் நடத்தையும் துலங்கலும் கொண்டவர்களாக மாற்றவேண்டும். இதுவே முதலாவது ஆயத்தப் பணியாகும்.
இரண்டாவது பணி கற்கும் மனோநிலையை - தயார் நிலையை உருவாக்குவதாகும். இதன்பின்புதான் மாணவர் என்ற தகுதிநிலையை அவர்கள் பெறுவர்.
இந்த இரண்டு படிநிலை மாற்றங்களையும் பிள்ளைகளிடம் ஏற்படுத்துவதானால், இதற்குப் வதிவிட வசதி வழங்கப்படல் வேண்டும். இப்பிள்ளைகளுக்கென சிறப்பான வதிவிட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுதல் அவசியம். இயன்ற வரை ஒவ்வொரு பாடசாலைப் பிள்ளைகளுக்கும் தனித்தனியான வதிவிடங்களை உருவாக்கிப் பேணுவது மிகவும் அவசியம்.
இத்தகைய வதிவிட ஏற்பாடுகள் தொடர்பாக பின்வருவன - வற்றில் கவனம் செலுத்தவேண்டும்.
பாடசாலைகளுக்கு மிகவும் அண்மையில் பிள்ளைகளின்
வதிவிடங்களை உருவாக்குதல்.
பிள்ளைகளுக்குரிய குடிநீர் வசதி, ”குளிப்பதற்கான நீர் பெறும் வசதி. பாதுகாப்பான கழிவறை,
29

Page 17
விளையாடுவதற்கான இடவசதி என்பவற்றை அங்கு உருவாக்க வேண்டும்.
பிள்ளைகளுக்குப் போதுமான உணவு கிடைக்க ஏற்பாடு செய்தல் வேண்டும். அத்துடன் அவை ஊட்டம் நிறைந்ததாக இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். உணவுகிடைக்கும் நேர ஏற்பாடுகளையும் ஒழுங்குபடுத்தவேண்டும். உணவுத்தெரிவு, உண்பது தொடர்பாக பிள்ளைகளுக்கு உளரீதியான நெருக்கடி எதனையும் உருவாக்காது பார்த்துக் கொள்ளவேண்டும். தமது வீட்டு வசதிகளுடன் ஒப்பிட்டு ஏங்கும் துழ் நிலைகளை உருவாக்கி விடாது மிகவும் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். உணவு தொடர்பாக போதிய சுதந்திரத்தைப் பிள்ளைகள் அனுபவிப்பதை உறுதிப்படுத்த வேண்டும். உணவு உண்ணும் வேளைகளில் தமக்கிடையே பிள்ளைகள் விடயங்களையும் மனவெழுச்சிகளையும் பகிர்ந்து கொள்வதற்கு ஏற்ற வாய்ப்புக் களும் ஊக்குவிப்புக்களும் இந்த வதிவிடங்களில் வழங்கப்படல் வேண்டும்.
இந்த வதிவிடங்களில் பிள்ளைகளை குதூகலிக்கச் செய்யும் பொழுதுபோக்கு வசதிகளையும் ஏற்பாடு செய்தல் வேண்டும். இசைப் பாடல்களையும், இசையையும் கேட்பதற்கு ஏற்ற வசதிகள் செய்து கொடுக்கப்படல் வேண்டும். பிள்ளைகள் தாம் பாடல்களைப் பாட விரும்பினால் அதற்கு எவ்வித செய்ற் கையான கட்டுப்பாடுகளையும் விதித்தல் ஆகாது. மனவெழுச்சிக்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். உள்ளக விளையாட்டுகள் விளையாடுதற்கான வாய்ப்புக்களும் சுதந்திரமும், வசதிகளும் பிள்ளைகளுக்குப் போதியளவுக்கு வழங்குதல் அவசியம்.
பிள்ளைகள் வெளியேயும் ஒடித்திரிந்து குழாமாக இணைந்து உடலும், உள்ளமும் இணைந்து குதுாகலிக்கும் விளையாட்டுக்களை 30

விளையாடுதற்கும். போதிய வசதிகளை வழங்க வேண்டும். போதியளவு சுதந்திரம் உண்டு என்பதையும் பிள்ளைகள் உணரும்படி செய்தல் வேண்டும்.
புனரமைப்புக்கான மனித வளம்
சுனாமியின் பாதிப்புகளிலிருந்து பாடசாலைகளையும் அதனுடன் இணைந்த சமூகப் பின்னணியையும்பொருத்தமான முறையில் முன்னேற்றுவதற்கு மனிதவளம் தேவைப்படுகின்றது. இந்த மனிதவளத்தைப் பெறுவதற்கு புதிய ஆட்களையும் தெரிவு செய்து பயிற்றுவித்தல் வேண்டும். ஏற்கனவே பணியாற்றும் ஊழியர்களைப் பொறுத்து மேலதிக நேரம் வேலை செய்யுமாறு துாண்டுதலும் அதற்கான உதவிகளை வழங்குதலும் அவசியமாகும்.
பாடசாலை அதிபர்கள் பிற சமூக நிறுவனங்களின் உதவியோடு மேலதிக மனிதமணித்தியாலங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வரலாம். பொதுவாக பின்வரும் வகையில் மேலதிக மனிதவளத்தை விருத்தி செய்து கொள்ள வேண்டும்.
செவிலித்தாய் பாடசாலை ஆளணியினர் பல்கலைக்கழக மாணவர் சமூக நிறுவன உறுப்பினர்
பாடசாலை மட்ட உளவள ஆளணியினர்
G&Gilsigismus (COMMUNITY MOTHERS)
பெற்றோர் இருவரையும், அல்லது ஒருவரை இழந்த பிள்ளைகள் பலர் உள்ளனர். உடன் பிறந்த சகோதரர் எல்லோரையும் இழந்தவர்கள் உள்ளனர். நெருங்கிய உறவினர் எவருமே இல்லாதவர்களாக பலர் உள்ளனர்.
இவர்களுடன் நெருங்கிப்பழகவும், உரிமையுடன் அன்பு
செலுத்தவும் பாச உணர்வுடன் உதவிகளை நாடிச் சென்று செய்யவும்
3.

Page 18
கூடிய செவிலித்த தாய்மார் பலரை நியமித்து இப்பிள்ளைகளைப் பேணவேண்டியது மிகவும் அவசியம்.
அதே பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாகவும் பிள்ளைகளின் சமூக கலாச்சார பின்னணிகளை விளங்கிக் கொண்டு அதற்கு இசைந்து செல்லக் கூடிய உளப்பாங்கும், உணர்வும் உடையவர்களாகவும் இச் செவிலித் தாய்மார் தொழிற் படவேண்டும்.
நடுத்தர வயது கொண்ட பெண்பிள்ளைகளைத் தெரிவு செய்து இதுபற்றிய தெளிவான அறிவையும் அறிவுறுத்தல்களையும், பயிற்சியையும் வழங்க வேண்டும். சுத்தமான உடை மற்றும் சுகாதார பழக்க வழக்கங்கள் உடையவராக இவர்களைப் பயிற்றுவிக்க வேண்டும். ஆனால் உடை அணிவதில் போதிய சுதந்திரம் இந் செவிலித் தாய்மாருக்கு வழங்கப்பட முடியும். எனினும் சில பயன்தரு அறிவுறுத்தல்கள் இது தொடர்பாகவும் வழங்கப்பட வேண்டும்.
உளவளத்துணைப் பயிற்சியும் போதியளவில் இவர்களுக்கு வழங்கப்படவேண்டும். பிள்ளைகள் தொடர்பாகவும் இவர்கள் ஆற்றவேண்டிய பணி தொடர்பாகவும் உண்மையான ஈடுபாட்டை ஏற்படுத்துவது பயிற்சிமுறையின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
பாடசாலை நாட்களிலும், பாடசாலை வேளைகளிலும், பிள்ளைகளுக்கு ஒத்தாசை புரிபவர்களாக இவர்கள் இயங்குதல் அவசியம். பாடசாலை செல்லும் போதும். திரும்பி வரும் போதும் உதவியாளராகச் செயற்படவேண்டும். வதிவிடங்களில் அதிகம் உதவவேண்டியதில்லை. எனினும் பொழுது போக்காக வெளியே அழைத்துச் சென்று பாதுகாப்பாகவும் அன்புரிமையோடும் பழகி கவனத்துடன் திரும்ப அழைத்து வரவேண்டும். எல்லாவகையிலும் பெற்றதாயின் பரிவோடு பிள்ளைகளைப் பேணுவோராக செயல் படுவதே இவர்களது தொழிற்கடமையாக இருத்தல் வேண்டும்.
இவர்களுக்கு போதிய உணவு, வேதனம், உடைகளுக்கான மானியம், இருப்பிட ஏற்பாடு என்பவற்றை வழங்க வேண்டும். பிள்ளைகள் பற்றிய உளவியல், உணவு மற்றும் சுகாதார நற்பழக்கங்கள், உளவளத்துணை அறிவு போன்றவற்றைப் போதியளவு கற்பித்து போதிய பயிற்சியையும் வழங்கி இசயற்பட அனுமதிக்க வேண்டும்.

சுனாமியினால் பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமியரை மீண்டும் உயிரோட்டமுள்ள சிறார்களாகவும், எதிர்காலத்தில் உளவியற் பலம் மிக்க குடிமக்களாகவும் மாற்றுவதற்கு இவ்வகைச் செவிலித்தாய்மார்
அவசியமானவர்களாகவுள்ளனர்.
பாடசாலை ஆளணியினர்
பாடசாலைகளில் சுனாமிக்குப் பிந்திய புதிய மாதிரி முகாமைத்துவ நடைமுறைகளை நிறைவேற்றுவதற்கு மேலதிக மனிதவளம் தேவைப்படுகிறது. இவர்களைத் தேடிப் பெறுவது முக்கியமான தேவையாகும்.
பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள் பின்வருவோரை இதற்கெனப் பயன்படுத்திக் கொள்ள முடியும். 1. நிரந்தர ஆசிரியர்கள் : இவர்கள் தமது வழமையான வேலை நேரத்திற்குப்புறம்பாக மேலதிக நேரம் வேலை செய்யவேண்டி ஏற்படும். இதனை நீடித்த வேலை நேரம் என்று அழைக்க முடியும். எவ்வாறு நீடித்த வேலை நேரத்தை உருவாக்குவது என்பது பற்றி இதன் பிற்பகுதியில் முன்மொழிவு தரப்படுகின்றது. 2.தற்காலிக உதவியாளர் குறிப்பிட்ட பாடசாலை எச் சமூகத்தில் செயற்படுகின்றதோ அங்கிருந்தே உதவியாளர்களைப் பெற்றுக் கொள்வதை இது குறிப்பிடுகின்றது. மேலதிக வேலை காணப்படுகின்ற காலம் வரை மாத்திரம் இவர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒருவார காலத்திற்கு ஒருவர் எத்தனை மணித்தியாலங்கள் பணியாற்ற முடியும் என்பதைத் தெளிவாகத் தீர்மானிப்பது அதிபர் கடமையாகும். தேவைப்படுகின்ற மேலதிக மொத்த மணித்தியாலங்களை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றித் தெளிவான எண்ணங்களைக் கொண்டிருத்தல் அவசியமாகும்.
படித்த, வேலை ஏதுமற்ற மகளிர் மற்றும் இளைஞர்களைத் தெரிவுசெய்து கொண்டு இவ்வகைப் பயிற்சியை வழங்கமுடியும். இவர்கள் மூன்று நிலைகளில் நியமிக்கப்படலாம்.
33

Page 19
1. பாடசாலைகளில் கண்காணித்து உதவுவோர். பாடசாலை வேளைகளில் பிள்ளைகளுக்கு அனுசரணையாளராக தொழிற்படல்.
2. பாடசாலை விட்ட பின் பெற்றோருக்கும் வீட்டில் உள்ள ஏனையோருக்கும் உதவும் வகையில், தொழிற்படுதல்.
3. பிள்ளைகளைத் தேடிச் சென்று பகிரங்கமாக உதவுதல் வேண்டும். இது ஒருவகையான பரிகாரக் கற்பித்தல் முறையாகும். பாடசாலை விட்ட பின்னும், மாலைவேளைகளிலும், வார இறுதி விடுமுறை நாட்களிலும் மேலதிக உதவிகளை வழங்கவும் பரிகாரக்கற்பித்தலை வழங்கவும் இவர்கள் உதவுவர்.
இத்தகைய தற்காலிக உதவியாளர்களுக்குரிய உளவியல் ஊக்கம் வழங்கப்படவேண்டும். போதுமான வெகுமதிகளை வழங்குவதோடு, விடுமுறை மற்றும் சலுகைகளையும் வழங்க வேண்டும். இத்தகைய பணிகளில் ஈடுபடுவோர் எதிர்காலத்தில் பயன்பெறும் வகையில் அவர்களது பதவியுயர்வுக்கான புள்ளிகளை வழங்குவது பற்றியும் தெளிவாக அறிவுறுத்துவது மிகவும் அவசியமாகும்.
இவ்வாறு ஆதரவு வழங்கும் செயற்திட்டமாக இதனை மாற்றியமைத்தல் வேண்டும்.
பல்கலைக் கழக மாணவர் :
பாடசாலைகள் இயங்கும் புவியியல் பிரதேசங்களில் (மாவட்டம், கல்விவலயம், கல்விக்கோட்டம், கிராமம் என்ற நிலைகளில்) வசிக்கும் பல்கலைக்கழக மாணவர்களின் உதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் நீண்ட நேரம் பணியாற்றக் கூடியவர்கள், ஊக்கம் நிறைந்தவர்கள், வெகுமதிகள் அல்லது வேதனங்களை எதிர்பாராது உதவி செய்யக்கூடியவர்கள். அவர்களது விடுமுறை நாட்களை மிகச் சரியாகத்திட்ட மிட்டுப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தேவைப்படின் இவர்கள் சில நாட்களை மேலதிக லீவு பெற்றும் செயற்படக் கூடியவர்கள். இதனால் எத்தனை மாணவர்களை எத்தனை
34

மனிதமணித்தியாலங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதைத் தீர்மானித்து இத்தகைய பாடசாலைகளின் விருத்திக்குப் பயன்படுத்திக் கொள்ளமுடியும்.
இதே வகையில் குறித்த பிரதேசங்களில் உள்ள உயர் தொழில்நுட்பக்கல்லுாரி மாணவர்கள், சுனாமிப்பாதிப்புக்குட்படாத பாடசாலைகளின் உயர்தரவகுப்பு மாணவர்கள் ஆகியோரையும் புனரமைப்புச் செயலணியாக உருவாக்கி, சில பணிகளை ஒப்படைத்து நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். இத்தகைய இளைஞர் அணியினர் மிகவும் ஊக்கத்துடன் பாடசாலைகள் புத்துயிர்பெறும் செயற்திட்டங்களில் ஈடுபடுத்தப்படக் கூடியவர்கள் என்பதை பாடசாலை அதிபர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
சமூக நிறுவன உறுப்பினர்:
சுனாமியினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் செயற்படுகின்ற சனசமூக நிலையங்கள் இளைஞர் விளையாட்டுக் கழகங்கள், மாதர் மன்றங்கள், நற்பணிமன்றங்கள் போன்ற பல்வேறு சமூகநிறுவனங்களுடனும் தொடர்பு கொண்டு தமது பாடசாலைகளை மீளவும் செயற்படுத்துவதற்கான மேலதிக மனிதவளத் தேவைக்கு உதவுமாறு அதிபர்கள் கேட்க வேண்டும். அவர்களுடன் கலந்துரையாடி சிலதுணைச் செயற்திட்டங்களை நிறைவேற்றுவதற்கான மனிதசக்தியைப் பெற்றுக் கொள்ளவேண்டும். அவர்கள் வழங்கவிருக்கும் மனித மணித்தியாலங்களையும் திட்டமிட்டுப் பயன்படுத்திக் கொள்வது நடைமுறை சாத்தியமானது. ஆனால் திட்டமிட்டுச் செயற்படுவது மிகவும் முக்கியமானது.
இத்தகைய புனரமைப்புக்கு உதவுவதற்கு கிடைக்கத்தக்க மனித வளமாக இனங்காணப்படுவோருக்கு பாடசாலை பின்வருவனவற்றை வழங்க வேண்டும்.
1 செயற்திட்டவேலைகள், உளவளத்துணை தொடர்பான குறுகிய காலபயிற்சியை செறிவான முறையில் வழங்குதல்.
2. போதுமான பணவருமானத்தை (சம்பளத்தை) துண்டு
முறையில் - பணியாற்றும் மணித்தியால அடிப்படையில்
35

Page 20
வழங்குதல். இது உதவி மாதிரியிலானது என்பதையும் பணியாற்றுவோருக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
தனிநபர்களாயின் சிரமதான முறையில் உதவுமாறு கேட்பதில் தவறேதுமில்லை.
3. பணியாற்றும் குடும்பத் தலைவர் அல்லது குடும்பத் தலைவியர் இதில் ஈடுபடும் போது அத்தியாவசிய பண்டப் பொதிகளை நாளாந்தம் வெகுமதியாக வழங்கி ஊக்குவிக்கலாம். இதற்கு வேண்டிய பண்டங்களை பல்வேறு உற்பத்தி, வியாபார நிறுவனங்களிடமிருந்து அன்பளிப்பாகத் திரட்ட முயற்சி செய்தல் வேண்டும். இது வெற்றியளிப்பின் பண்டப் பொதியை மெய்வருமானமாக வழங்குவது எளிதாகிவிடும்.
4. இவ்வாறு தன்னார்வத்துடன் பணவருமான எதிர்பார்க்கை ஏதுமின்றி உதவும் பாடசாலை, பல்கலைக்கழக, தொழில்நுட்பக் கல்லுாரி மாணவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட சேவைச்சான்றிதழ்களை வழங்கவேண்டும். எதிர்காலத்தில் உயர்கல்வி நிறுவனங்களிலான அனுமதி தொழில்வாய்ப்பு என்பவற்றைப் பெறுவதற்கு மதிப்பெண்களைப் பெற்றுத் தருவனவாக அத்தகைய சான்றிதழ்களை அங்கீகாரத்துடன் வழங்குவதும் பயனுடைய நடைமுறையாகும்.
5. இவற்றுக்குரிய நிதி மற்றும் நிறுவன உதவிகளை அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பெரிய தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றிடமிருந்தும் பெற்றுக் கொள்ள வேண்டும்.
பாடசாலை அதிபர்களை மிகவும் கவனமாக குறுங்கால அகல்விரிவுத்திட்டம் ஒன்றை வடிவமைத்து, அதற்குட்பட்ட பல செயற்திட்டங்களையும் தயாரித்து அதனடிப்படையில் மேலதிக மனிதவளத்தைப் பெற்று பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
36

பாடசாலைமட்ட உளவள ஆளணியினர்:
பாடசாலைப் பிள்ளைகளின் மன அழுத்தங்களிலிருந்தும், உணர்வு இறுக்க நிலையிலிருந்தும் அவர்களை மீட்க வேண்டும். எதிர்காலம் பற்றிய நம்பிக்கை உணர்வை துளிர்விடச் செய்தல் வேண்டும். சாதாரண பிள்ளைகள் போன்று செயற்படக் கூடியவர்களாக உடல், மனவெழுச்சி, நடத்தை தொடர்பாக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் , ஞாபக சக்தியை விருத்தி செய்ய வேண்டும். எல்லாவற்றையும் இழந்து விடவில்லை என்பதை உணர்த்த வேண்டும். புத்துயிர்பெற முடியும் என்று அவர்களை நம்பச் செய்யவேண்டும். சூழலையும் மனிதர்களையும் தன்னையும் நம்பிக்கையுணர்வுடன் நோக்கும்படி செய்தல் வேண்டும். இவைதான் சுனாமி பாடசாலைகளை உயிர்பெறச் செய்தற்கான வழிமுறை ஆகும். இதை நிறைவேற்றாத வரையில் பெளதிக ரீதியிலான புனரமைப்பு எவ்வித விளைநிறனையும் ஏற்படுத்தி விட முடியாது என்பதைப் பாடசாலை அதிபர்கள் உண்மையாக நம்பவேண்டும்.
இதற்கான உளவள ஆளணியினரை பாடசாலை மட்டத்தில் உருவாக்க வேண்டும். இதற்குப் பின்வனவற்றில் கவனம் செலுத்த முடியும்.
1 சர்வதேச மற்றும் தேசிய நிறுவனங்களிடமிருந்தும் உள்ளூர் நிறுவனங்களிடமிருந்தும் உளவளத்துணைட் பயிற்சியைப் பெற்றுக் கொடுத்தல் வேண்டும். தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்களிடம் பொறுமை, கடினஉழைப்பு பிறருக்காக பணியாற்றும் உன்னதமனபாங்கு தொடர்பாடல் திறன்கள் என்பவற்றை அவர்களிடம் விருத்தி செய்ய வேண்டும்.
துயருறுருவோரை மீட்டல் என்ற உயரிய நற் 160ணியில் தாம் ஈடுபடுகிறோம் என்ற மேன்மையான எ600 ,00ாத்தையும், உணர்வையும் வளர்த்தல் வேண்டும்.
இத்தகைய பயிற்சிக்கு ஆண் ஆசிரியர்க. 01யும் பெண் ஆசிரியர்களையும் தெரிவு செய்ய முடியும்.
37

Page 21
தற்போது ஏராளமான நிறுவனங்களிடமிருந்து உளவளத் துணை நிபுணர்கள் வருகின்றனர். பாடசாலை அதிபர்களின் சுய ஊக்கத்தைப் பொறுத்து இத்தகைய பயிற்சி வசதிகளைப் பெற்றுக் கொடுக்க முடியும்.
ஆசிரியர்கள் எல்லோரும் உளவளத்துணை பற்றிய அடிப்படை எண்ணக் கருவை விளங்கிக் கொள்வதற்கு உதவியாக சுனாமியினால் பாதிக்கப்ப்ட்ட பாடசாலைகளில் கற்பிக் கும் எல்லா ஆசிரியருக்கும் குறுகிய கால முன்னாரம் ப பயிற்சி உளவத் துணைசார்ந்து வழங்கப் படவேண்டும் . இவை பற்றிய வாசிப் பு நூல்களையும் வழங்குதல் வேண்டும்.
இத்தகைய அறிவைப் பெற்றபின் பிள்ளைகளுக்கு பாடங்களைக் கற்பிக்கும்போது பொருத்தமான இடங்களில் உளவளத்துணை வழிகாட்டல் எண்ணக் கருக்களையும் ஒருங்கிணைத்து போதிக்கும்படி அறிவுறுத்தவேண்டும். இதமான முறையில் விடய ஒருங்கிணைப்பை மேற்கொள்வதற்கு உரிய ஆரம்ப பயிற்சியை பல்கலைக்கழக உதவியுடன் மேற்கொள்ள வேண்டும்.
பாடசாலையில் வழமையான பாடவேளைகளுக்குப் புறம்பாக வேலை செய்வதன் அவசியத்தை ஆசிரியர்களுக்கு உணர்த்தவேண்டும். நீண்ட காலத்தில் நன்மையளிக்கும் குறுகிய காலசிரமம், என்பதை தெளிவுபடுத்த வேண்டும். நீண்ட நேரத்தை பாடசாலையிலும் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுடனும் செலவிடுபவர்களாக ஆசிரியர்களை மாற்றவேண்டும், விருப்பத்துடன் நீண்ட நேரத்தை செலவிடக்கூடிய உன்னதமான நிறுவனம் பாடசாலை என்ற உணர்வை ஆசிரியர்களிடம் ஏற்படுத்த அதிபர் முயலவேண்டும். தமது செயற்பாடுகள் மூலமாக இதே உணர்வைப் பிள்ளைகளிடம் ஏற்படுத்த ஆசிரியர் ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும். அதிபர் இந்த இரு விடயங்களிலும் கவனம் செலுத்த முடியும்.
38

4. இத்தகைய மாதிரியில் ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டுமென எதிர்பார்ப்பது எந்தளவுக்கு நியாயமானதோ அதேயளவுக்கு அவர்களுக்கான சில அடிப்படை வசதிகளையும், உதவிகளையும் வழங்கி அவர்களை ஊக்குவிப்பதும் பாடசாலை முகாமைத்துவத்தின் கடமை
என்பதையும் உணர்ந்து அதிபர்கள் செயற்பட வேண்டும்.
இடவசதி ஒய்வு இடவசதி, தேநீர் வசதி, காகிதாதிகள் கிடைக்கச்செய்தல், போக்குவரத்து சலுகைகள் போன்றவற்றைக் கிடைக்கச் செய்வதிலும் இத்தகைய பாடசாலை அதிபர்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும். ஆசிரிய நலனினும் பாடசாலை அக்கறை கொள்கிறது. என ஆசிரியர்கள் நம்பும் வகையில் அதிபர்கள் சில வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
5. இத்தகைய செயற்பாடுகள் எல்லாம் எடுத்த எடுப்பில் முழுமை பெறமுடியாது. ஏனெனில் பாடசாலை சிதைந்து விட்டது. பாடசாலையுள்ள சமூகம் அச் சத்திலும் அவநம்பிக்கையிலும் உழல்கிறது. தனது இருப்பு, எதிர்காலம் பற்றிய சந்தேகத்துடன் சமூகம் திணறுகிறது. ஆசிரியர்கள் துன்பங்களை அனுபவிக்கின்றனர்.
அதிபர்கள் நேரடியாகவோ அல்லது உறவினர் நண்பர் தொடர்பிலோ இழப்புக்களையும், துயரங்களையும் சந்தித்தவர்கள். இதுதான் சுனாமிப்பாதிப்புக்குட்பட்ட பாடசாலைகளின் யதார்த்த பூர்வமான தளநிலைமை. இதனை விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஸ்திரமற்ற பின்னணி கொண்ட பாடசாலைகளில் மேற்கொள்ளப்படும் பரீட்சார்த்த முயற்சிகளில் பலவீனங்கள் காணப்படுவது இயல்பு.
இதனால் அதிபர்கள் இத்தகைய செயற்பாடுகளை காலத்திற்குக் காலம் மதிப்பீடு செய்தல் வேண்டும். அதிலிருந்து பலவீனங்களை இனங்காண வேண்டும். படிப்படியாக அவற்றை நீக்க வேண்டும், தேவையான மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் அடிக்கடி
39

Page 22
ஆசிரியர்களுடன் முறைசார்ந்த வகையிலும், முறைசாராத வகையிலும் கலந்துரையாடி கருத்துக்களையும். உணர்வுகளையும் பரிமாறிக் கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் தெரிவிக்கும் நியாய பூர்வமான மாற்றங்களைச் செய்ய வேண்டும், உதவிகளையும் ஊக்கங்களையும் தயங்காது வழங்க வேண்டும்.
சமூகத்தை துயரங்களிலிருந்து மீட்பது கல்வியின் கட்டாய கடமை என்பதை உணர்ந்து இப்பாதிக்கப்பட்ட பாடசாலை அதிபர்கள் எல்லோரும் செயற்படவேண்டும்.
பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் அதிபர்களும், அப்பிரதேச கல்விப்பணிப்பாளர்களும் காலத்துக்குக்காலம் ஒன்று கூடி இத்தகைய புதிய முகாமைத்துவ அனுபவங்கள், வெற்றி, தோல்வி போன்றவற்றை கலந்துரையாடி மதிப்பீடு செய்தல் வேண்டும். நன்மை செய்வதற்கான அணியினர் என்று எண்ணவேண்டுமேயொழிய பணித்துறை அதிகாரிகள் என்று நினைத்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளக் கூடாது, மதிப்பீடுகளையும் அத்தகைய நோக்குடன் செய்தல் ஆகாது.
இத்தகைய ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட எல்லாச் செயற்பாடுகளையும் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மேற்கொள்ளுமிடத்து பிரச்சினைகளிலிருந்து வெளியேவந்து விடலாம். முன்னேற்றத்தை நோக்கி நம்பிக்கையுடன் பாடசாலைகள் நகர முடியும்.
புதிய நேரவளம் :
சுனாமியினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை குறுகிய காலத்தில் வழமையான நிலைக்குக் கொண்டு வருவதானால் கூடிய மனிதஉழைப்பு தேவைப்படுகின்றது. இதற்காக பாடசாலைகளுக்கான ஆட்களின் எண்ணிக்கையை உடனடியாக அதிகரித்தல் சாத்தியமானதல்ல. அவ்வாறு அதிகரிப்பதானாலும் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் பணியாற்றும் தகமை மற்றும் மனப்பாங்குடன் புதியவர்கள் வருவார்களா என்பதிலும் பிரச்சினைகள் உள்ளன. பெளதிக கட்டமைப்பும் சமூக ஒழுங்கமைப்பும், பாடசாலைகளின் தொழிற்படும் பொறிமுறையும் சிதைவுற்ற நிலையில் மேலதிகமாக
40

ஆசிரியர்களையும் பிறபணியாளர்களையும் அமர்த்துவது புதிய நெருக்கடிகளையும் தொழில் விரயங்களையும் ஏற்படுத்திவிடும். இதன் காரணமாக இதற்குரிய மாற்று வழிமுறை பற்றிச் சிந்திப்பது மிகவும் அவசியமும், பயனுடையதுமாகும். இத்தகைய மாற்று வழிமுறையே நீடித்த வேலை நேரத்தை உருவாக்குதலாகும். இது பல நாடுகளிலும் பாடசாலைகளை வினைத்திறனுடையதாக்குவதற்குக் கையாளப்படுகிறது. எமது நாட்டிலும் இத்தகைய நடைமுறைகள் முன்பு பல வருடங்களாக இருந்து வந்தன. பின் ஏற்பட்ட சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்கள் மற்றும் நெருக்கடிகளினால் இந்த நடைமுறைகள் அற்றுப் போய்விட்டன. தற்போது அதனை வலியுறுத்துவதற்கான தேவை ஏற்பட்டுள்ளது.
பாடசாலைகள் செயற்படுதற்கென நியம அளவு நேரங்கள் தேசிய ரீதியில் விதித்துரைக்கப்பட்டுள்ளன. அவை,
9 நாளொன்றுக்கு சராசரியாக 6மணித்தியாலம்.
9 வருடமொன்றுக்கு பாடசாலை இயங்கும் நாட்கள்
சராசரியாக 200.
9 வருடமொன்றுக்கு கற்பித்தல், மற்றும் புறக்கலைத்திட்ட செயற்பாடுகளுக்குரியதாக கிடைக்கும் மணித்தியாலங்கள் 200x6 - 1200 மணித்தியாலம்.
சாதாரண நிலைமைகளில் இயங்கும் பாடசாலைகளுக்குக் கூட இந்த நியமநேரம் போதுமானதாயிருப்பதில்லை.
சுனாமி நெருக்கடிக்குப் பின் புதிய உத்வேகத்தில் செறிவாக பல செயற்பாடுகளையும் மேற்கொள்ள இந்த நியமநேரம் போதாது. இதனால் பணியாற்றுதற்கான மேலதிக நேரத்தைப் பாடசாலை அதிபர்கள் தான் உருவாக்க வேண்டும். கல்வித்திணைக்கள அலுவலர்கள் இதனை ஆதரிக்க வேண்டும். நீடித்த வேலை நேரத்தைப் பற்றிய எண்ணக்கருவை பின்வருமாறு விளக்கமுடியும்.
9 ஒரு வருடத்தில் பயன்படுத்துவதற்கு கிடைக்கத்தக்க மனித
மணித்தியாலங்கள் 365 x 24 - 8760 (a)
41

Page 23
பயன்படுத்தப்படுகின்ற தற்போதைய நியம மனித மணித்தியாலங்கள் 200 x 18 = 1200 (b)
9 பாடசாலை நாட்களிலேயே பயன்படுத்தப்படாதிருக்கும்
மனித மணித்தியாலங்கள். 200 x 18 = 3600 (c)
9 பாடசாலை நடைபெறாத நாட்களின் அடிப்படையில்
பயன்படாதிருக்கும் மனித மணித்தியாலங்கள். 165 x 24 = 3960 (d)
9 ஒரு வருட காலத்தில் பயன்படாதிருக்கும் ஆனால் பயன்படுத்துவதற்குக் கிடைக்கும் மொத்த மனித மணித்தியாலங்கள்.
(c) 200 x 18 - 5600
(d) 165 x 24 = 3960
மொத்தம் - 7560
இவ்வாறு பயன்படுத்தப்படாதிருக்கும் மனித மணித்தியாலங்கள் மிக அதிகமாகும். கிடைக்கத்தக்க நேரவளத்தில் ஏறக்குறைய 14 சதவீதம் மாத்திரமே எமது பாடசாலைகளில் பயன்படுத்தப்படுகிறது. வரலாறு காணாத சுனாமி இழப்புக்களை எதிர் கொண்ட ஒரு சமூகம் இந்த நேரவளத்தைப் பற்றிக் கவலை கொள்ளாதிருப்பது அபிவிருத்திக்கு நேர்மாறான செயலாகும். இத்தகைய நேரத்திலிருந்து கணிசமான மணித்தியாலங்களை பாடசாலை தனது பயன்பாட்டுக்கு உரியதாக்கிக் கொள்ள வேண்டும், இதில் பாடசாலை அதிபர்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.
இங்கு ஒரு உத்தேசத் திட்டம் பரிசீலனைக்காகத் தரப்படுகின்றது.
1. வாரநாட்கள் ஒவ்வொன்றிலும் வேலை நேரத்தை
3மணித்தியாலங்களினால் அதிகரித்தல் (8-5 மணி).
2. சீராகத் தொழிற்படும் வாரம் எனக் கொண்டால் 5
நாட்களுக்கும் 15 மணித்தியாலங்கள் கிடைத்தல்.
42

3. சனிக்கிழமையில் (8-5 மணிவரை) 9 மணித்தியாலங்கள்
கிடைத்தல்.
4. ஞாயிற்றுக்கிழமைகளில் (8-5 மணிவரை) 9 மணித்தி
யாலங்கள் கிடைத்தல்.
5. இதன்படி வாரம் ஒன்றுக்கு பெறக்கூடிய மணித்தியாலங்கள்
15-9 + 9 - 33.
6. வருடம் முழுவதிலும் பெறக் கூடிய மணித்தியாலங்கள் 52 வாரங்கள் x 33 மணித்தியாலங்கள் - 1716 மணித்தியாலங்கள்.
7. சாதாரண பாடசாலை மணித்தியாலங்களின் படி ( 6 மணித்தியாலப்படி) கிடைக்கத்தக்கதான பாடசாலை நாட்கள்
(1716/6) 286 ஆகும்.
8. மொத்தமாகப் பயன்படுத்தக் கூடிய பாடசாலை நாட்களின் மொத்த எண்ணிக்கை (200+286) 486 நாட்களாகும்.
நெருக்கடிகளிலிருந்து எமது சமூகத்தின் பிள்ளைகளை மீட்பதற்கு தற்காலிகமாக வேனும் இவ்வாறு பணியாற்றிலானென்ன? இவ்வாறு எமது எண்ணத்தையும் செயலையும் மாற்றிக் கொள்வோமா?
பாடசாலை தொழிற்படு நாட்களை இவ்வாறு வைத்துக் கொண்டு ஆசிரியர்களைப் பல அணியினராக்கி துழல் முறையில் நீடித்த வேலை நேரத்திற்கு பணியாற்றும் படி கேட்டுக் கொள்ளலாம்.
இவ்வாறு நெருக்கடி முகாமைத்துவத்தை மேற்கொண்டால் என்ன?
புதிய நேர அட்டவணை
பாடசாலையொன்றிற்கு கிடைக்கத்தக்க பெளதிக lெli), மனித வளம், நேரவளம் என்பவற்றைப் பொருத்தமான முறையில் ஒன்றிணைக்கும் உபாயமே நேர அட்டவணை என்பதை, விளங்கிக்
கொள்ள வேண்டும்.
43

Page 24
பாடசாலையின் வளங்களையும் தொழிற்பாடுகளையும் ஒரே சமயத்தில் கட்டுப்படுத்தும் முகாமைத்துவக் கருவியே நேர அட்டவணையாகும்.
புதிய முகாமைத்துவ தேவை சுனாமியினால் பாதிக்கப்பட்ட
பாடசாலைகளுக்கு இருப்பதால் நேரஅட்டவணை முகாமை
துவத்திலும் அதிபர்கள் சிறப்பாக கவனம் செலுத்த வேண்டும்.
நாளொன்றுக்கான இத்தகைய பாடசாலை மட்ட மாணவ -
ஆசிரியர் தொழிற்பாடுகளைத் திட்டமிடலாம். காலையிலிருந்து மாலை வரையிலான செயற்பாடுகளை பின்வருமாறு நிரல்படுத்தமுடியும்.
{)
{)
()
:
:
பிரார்த்தனையும் தியானமும்.
கற்பித்தல் - 2 பாடவேளை.
இசைவகுப்பு / குறுகிய திரைப்படம் பார்த்தல் / விளையாட்டு.
கற்பித்தல் 2 பாடவேளை.
ஓவியம் வரைதல் / பூந்தோட்ட பராமரிப்பு.
மதிய உணவு வழங்குதல்.
மாணவர் - ஓய்வு, தமக் கிடையே சுதந்திரமாகக் கலந்துரையாடி மகிழ்தல்.
கற்பித்தல் - 2 பாடவேளை.
பிள்ளைகளுக்கான உளவளத்துணைச் சேவையை வழங்குதல்.
பாடசாலை முடிவடைதல்.
பாடசாலைகளின் அதிபர்கள் தமது வள நிலைமை மற்றும் வசதிகளுக்கேற்ப இந்த நாளாந்த நிகழ்ச்சி நிரலை மாற்றியமைத்துக் கொள்ளலாம். இது ஒரு முன்மாதிரி நிகழ்ச்சி நிரல்தான் என்பதை மனங்கொள்ள வேண்டும்.

ஊக்குவிக்கும் நிகழ்ச்சித்திட்டங்கள்
சுனாமி பாதிப்புக்குட்பட்ட பாடசாலைகளை நெருக்கடியிலிருந்து மீட்டு வழமையான பாடசாலைக் கல்வி நிலைக்குக் கொண்டு வருவதானால் பாடசாலையை ஊக்குவிக்கும் ஒழுங்கான நிகழ்ச்சித் திட்டங்களையும் வடிவமைத்து நடைமுறைப்படுத்தி வரவேண்டும்.
இதற்காக அதிபர்களின் சிந்தனைக்கு பின் வருவன முன்மொழியப்படுகின்றன.
1. ஆசிரியர்கள், பகுதித் தலைவர்கள், வகுப்பாசிரியர், மாணவத்தலைவர் எல்லோரிடமும் நேர் மனப்பாங்கை விருத்தி செய்ய முயலுதல் வேண்டும். எதிர்மனப்பாங்கை அகற்றும் வாசகங்கள், படங்கள் என்பவற்றை மாணவரும் ஆசிரியரும் பார்க்கவும் வாசிக்கவும் வசதிசெய்தல் வேண்டும்.
2. பிரார்த்தனைகள். மாணவர் மன்றக்கூட்டங்கள், ஒன்று கூடல்கள், விழாக்கள் என்பவற்றின்போது சுயநம்பிக்கையைத் துாண்டும் வகையிலும், ஒன்றிணைந்து நன்மை பெறுவதை ஊக்குவிக்கும் வகையிலும், நெருக்கடிகளை நம்பிக்கையுடன் எதிர் கொள்வது பற்றியும் பேச்சுக்களையும் கலை நிகழ்ச்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
3. பிள்ளைகள் எதையாவது தாம் சாதிக்க வேண்டும் என்ற இலட்சியத்தை வரித்துக் கொள்வதற்கு ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும். கற்பித்தலின் போதும் ஏனைய சந்தர்ப்பங்களின் போதும் இதனை எல்லா ஆசிரியரும் தனியாகவும் ஒன்றிணைந்த வகையிலும் மேற்கொள்ள வேண்டும்.
4. கிடைக்கும் பாடசாலை வசதிகளைப் பயன்படுத்தி மகிழ்வுறும் மனப்பாங்கை வளர்ப்பதிலும் பாடசாலை நிர்வாகமும், ஆசிரியரும் தொடர்ந்து முயற்சித்து வருதல் வேண்டும்.
45

Page 25
5. தமது எண் ணங்களையும் , கருத்துக் களையும் , மனவெழுச்சிகளையும் ஒவ்வொரு பிள்ளையும் தமது சகபாடிகளுடன் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்வதைப் பாடசாலை ஊக்குவிக்க வேண்டும். நட்புணர்வு, சகோதரத்துவம் என்பவற்றை வளர்ப்பதற்கு இயன்றளவு இடையறாது பாடுபடல் வேண்டும். இத்தகைய சமூகத் திறன்களை வளர்ப்பதற்குரிய இணைக் கலைத்திட்ட செயற்பாடுகளையும் வடிவமைத்து நடை முறைப்படுத்த வேண்டும்.
இந்த ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டங்களைதிட்டமிட்டு, நடைமுறைப்படுத்தி மதிப்பீடு செய்து முன்னேற்றி வருவதற்குப் பொறுப்பாக ஒரு ஆசிரிய அணியை அதிபர் உருவாக்கி, உதவியளித்து, ஊக்கமளித்து வருதல் வேண்டும்.
உதவிச் செயலமைப்பை விருத்திசெய்தல் :
சுனாமி பாதிப்புக்குட்பட்ட எல்லாப் பாடசாலைகளும் தமக் கிடையே ஒன்றிணைந்து பொதுவான பல நிகழ்ச்சித திட்டங்களைத் தயாரித்தல் வேண்டும்.
சமூக மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் பிராந்திய மட்டத்திலும் பெறக் கூடிய வசதிகளையும் வாய்ப்புக்களையும் பெறுவதில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பாடசாலையும் கவனம் செலுத்தி வரவேண்டும். இதில் பாடசாலை அதிபரும் ஏனைய முகாமைத்துவ அணியினரும் கவனம் செலுத்திவருதல் வேண்டும்.
சர்வதேச ரீதியில் இத்தகைய பாடசாலைகள் தொடர்பாக நடைபெறும் கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளின் முடிவுகளையும் அந்த ம்ட்டத்திலிருந்து கிடைக்கக்கூடிய உதவிகளையும் கண்டறிந்து அவற்றையும் பெறவேண்டும். இணையத்தளத்திலிருந்தும், சஞ்சிகைகளிலிருந்தும் இவற்றை அறிந்து அதன் பயன்களை பாடசாலை பெற்றுக் கொள்வதையும் உறுதிப்படுத்தவேண்டும்.
46

முடிவுரை
இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளவை சிந்தனை ரீதியில் பொருத்தமானவை என இனங்காணப்பட்டவைதான்.
பாடசாலைகளின் அதிபர்கள்தான் செயற்பாட்டாளர்கள். அவர்களுக்கே உண்மையான சவால்கள், நெருக்கடிகள், பிரச்சினைகள் தெரிய வரும்.
இதனால் சுனாமியினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் அதிபர்களே எவற்றை, எப்போது, எவ்வாறு நிறைவேற்ற வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும்.
ஆனால் அதிபர்கள் நேர் மனப்பாங்குடனும், நம்பிக்கையுடனும் தொலை நோக்குடனும் சமூக நலன்களுக்காக குறுங்கால சிரமங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். தோல்விகள் என்பவை செயல்களை தடை செய்யவல்லன, என்று கருதாது மாற்று வழிமுறைகளைத் தேடுமாறு துாண்டுவன என்று எண்ண வேண்டும்.
மாற்றங்களை முகாமை செய்யும்திறன்களையும் வளர்த்து புதிய இடர் முகாமைத்துவ நடைமுறைகளை செயல்படுத்தும் போது சுனாமி பாதிப்புகளிலிருந்து மாணவர்களையும், பாடசாலைகளையும், சமூகத்தையும் பாதுகாத்து மீண்டும் நிமிர்வோம், முன்னேறுவோம் என்று நம்பவேண்டும். அத்தகைய நம்பிக்கையுடன் தொடர்ந்து செயற்பட வேண்டும், எமது தொலைதுார முன்னேற்றத்தை எட்டிப்பிடிக்க இவை அனைத்தும் அவசியமாயுள்ளன.
REFERENCE:
1. Everard, K.B and Morris, Geoffrey (1996), Effective School
Management, PCP Ltd, London.
2. PATTANAYAK, BISWAJEET (2005), Human Resource
Management, Prentice Hall of India Private Ltd, New Delhi.
47

Page 26
CHAUBE, S.P and CHAUBE A (1997) School Organisation, Vikas Publishing House Private Ltd, New Delhi.
RAI, B.C, (1988) Education and Society PRAKASHAN KENDRA, Lucknow.
TAFREN (2005) Rebuilding The Nation Ceylon Daily NewsLake House. Colombo 24-04-2005.
PEIRIS, MANJARI (2005), Replanning Lives: The Issues Ceylon Daily News, Lake House, Colombo. 03-03-2005.
DISSANAIKE THURUKA (2005) Important Concerns in child rehabilitation Lake House - Colombo - 15-03-2005.
48


Page 27
తాయా