கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

Page 1
பேராசிரியர் சபா ஜெயராச
 

லக்கியப் பேரவை

Page 2


Page 3

தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்
MOTHER TONGUE EDUCATION
AND TEACHING
கலாநிதி. சபா.ஜெயராசா
வெளியீடு இலங்கை முற்போக்கு-கலை இலக்கியப் பேரவை
十
கார்த்திகேசன் நினைவுக்குழு

Page 4
நூல் ; தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்
நூலாசிரியர் : கலாநிதி. சபா.ஜெயராசா
வெளியீடு ; முற்போக்கு கலை இலக்கியப்பேரவை மற்றும்
கார்த்திகேசன் நினைவுக்குழு
முகவரி : I, இராஜசிங்கவீதி
கொழும்பு -O6
வெளியீட்டுத் திகதி : o3/lo/2OO7
அச்சுப்பதிப்பு : டெக்னோ பிறிண்டர்ஸ்
55, Dr. E.A. குரே மாவத்தை, கொழும்பு - 6. 6lg5I.(BLu : O777-3O192O
விலை : IBLIII -2
ISBN 978-955-1810-00-9

தோழர் மு.கார்த்திகேசன் ஒரு நிறுவனம். சோஷ" லிசத்தின் குறியீடு. அரசியல் தீர்க்கதரிசி. ஒரு புத்திஜீவி. ஆழ்ந்த சிந்தனையாளன். தோழர் கார்த்திகேசன் மார்க்ஸிச - லெனினிஸ் -மாஒ சேதுங் சிந்தனைகளையும் கோட்பாடு" களையும் இலங்கை வாழ் அனைத்து மக்களின் விமோ" சனத்திற்கும், சுபீட்ச வாழ்விற்குமாக திரிபறக் கற்று, நன்கு ஆராய்ந்து, அதன்படி தனது இயக்கத் தோழர்களையும், ஏனையோரையும் வழிநடாத்திச் செயற்பட்டவர். இவர் எழுத்தால், பேச்சால் ஆங்கிலமும், செந்தமிழும் பெருமை பெறச் செய்தவர். அவரது மொழியாற்றலையும், சிறந்த இலக்கிய, சமூக அறிவினையும், கணிதப் புலமையையும் பிரயோகித்து தலைசிறந்த ஆசிரியராகவும், அதிபராகவும் பிரசித்தி பெற்றவர்.

Page 5
தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

முன்னுரை
கோளமயமாக்கலின் எதிர்விளைவுகள் தாய்மொழிகள் மீதான சந்தேகங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன. கல்வியியல் நோக்கில் தாய்மொழியின் விசைப்பாடுகளை அறியத் தவறிவிடுமளவுக்கு கோளமயமாக்கல் எதிர்விசையின் அழுத்தங்கள் எழுகை கொண்டுள்ளன. இந்நிலையில் தாய்மொழி பற்றிய தெளிவான புலக்காட்சியைத் தருக்க நோக்கிலும் ஆய்வு நோக்கிலும் வெளிப்படுத்துமாறு நண்பர்கள் நீர்வை பொன்னையன், தம்பு சிவசுப்பிரமணியம், தெ.மதுசூதனன், உலகநாதர் நவரத்தினம், ஆகியோர் வேண்டிக் கொண்டனர்.
தாய்மொழி வழிக்கல்வி என்பது உலக மொழிகளையோ, பிராந்திய மொழிகளையோ கற்றுக் கொள்வதற்குத் தடையான செயற்பாடு அன்று என்பதனை முதற்கண் நினைவு கொள்ளல் வேண்டும். உலகின் பெரும்பாலான மக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் பரிச்சியமுடையவர்களாக மாறிக் கொண்டிருக்கின்றனர்.
மனித மூளையின் ஆற்றல்களை ஆராய்ந்து வரும் நவீன உளவியலாளர்கள் பல மொழிகளைக் கற்றுக் கொள்ளக் கூடிய திறனும், கொள்ளக் கூடிய ஆற்றலும் அதற்கு உண்டு என்பதை வலியுறுத்தி யுள்ளனர். நவீன கற்பித்தல் முறையியல்களைப் பயன்படுத்தி மொழிகளைக் கற்பிக்கும் செயற்பாடுகள் வளர்ச்சியடையும் பொழுது பாடசாலைகள் “மொழித் தொழிற்சாலைகளாக" மேலெழுகை கொள்ளும். நிதானமாக நோக்கும்பொழுது, தாய்மொழியின் நிராகரிப்பு கல்வியின் நிராகரிப்பு ஆகின்றது.
(885. Tuile 6 Tege), - FLIIT-6sguy1&It இணுவில்
கலாநிதி. சபா.ஜெயராசா -5-

Page 6
தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

பொருளடக்கம்
மொழிப்பண்புகள்
மொழியும் மெய்யியலும்
தாய் மொழிக்கல்விக்கோட்பாடுகள்
மொழித்திரட்டற் செயற்பாடு
தாய்மொழியின் இயல்புகள்
உளமொழியியல்
சமூக மொழியியல்
மொழி கற்பித்தலில் சீர்மிய நுட்பங்களைப் பயன்படுத்துதல்
வாய்மொழி அணுகுமுறையும் சந்தர்ப்பநிலை மொழி கற்பித்தலும்
தொடர்பாடல் நிலை மொழி கற்பித்தல்
ஒலிமொழி முறைக் கற்பித்தல்.
கருத்தேற்றக் கற்பித்தல்
இயற்கை அணுகுமுறை மொழிக்கற்பித்தல்.
முழுநிலை உடற் கூற்றுத்துலங்கல்
வாசிப்புத்திறன்களை மேம்படுத்தல்
எழுத்துக் கற்பித்தல்
கட்டுரையும் கற்பித்தலும்
கவிதையும் கற்பித்தலும்
தமிழ் இலக்கிய வரலாறு
மொழிபெயர்ப்பும் மொழி வளமும்
நிறைவுரையின் தொடக்கம்
கலாநிதி. சபா.ஜெயராசா
O9
14
19
24
29
33
39
44
ქნ6
62
67
7O
74
78
84
90
IOO
II6
12
126
-7-

Page 7
-8-
தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

மொழிப் பண்புகள்
சமூகமே மொழியின் தாயகமாகின்றது. சமூக மாற்றமும் வளர்ச்சியும் மொழியிலே தொடர்ச்சியான செல்வாக்குச் செலுத்திய வண்ணமிருக்கும். ஒலிக்குறியீடுகளினாலும் எழுத்துக் குறியீடுகளினாலும் மொழி ஆக்கம் பெறுகின்றது. ஒலிக் குறியீடுகளைக் கொண்ட பேச்சு மொழியே காலத்தால் வெகுவாக முந்தியது. எழுத்து மொழிசுமார் ஏழாயிரம் ஆண்டு வரலாற்றையே கொண்டுள்ளது. மனித உழைப்பால் உருவாக்கப்பட்ட கருவிகளுள் உருவமாகவும் அருவமாகவும் தொழிற்படக் கூடிய உன்னதமான கருவியாக மொழியே அமைந்துள்ளது. உழைப்பால் உருவாக்கம் பெற்ற மொழி மனித உழைப்பை வினையாற்றல் பெறச் செய்வதற்கு ஏற்றவாறும் வளமாக்கப்பட்டுள்ளது.
ஆற்றலும், அனுபவங்களும், ஒரு தலைமுறையினரிடமிருந்து இன்னொரு தலைமுறையினருக்குக் கையளிக்கப்படுவதற்கு மொழியே துணைநிற்கின்றது. மனித வினைப்பாடுகளும் எதிர்வினைப்பாடுகளும் மொழியால் வடிவமைக்கவும்படுகின்றன. தூண்டிவிடவும்படுகின்றன. அறிவையும் அனுபவங்களையும் களஞ்சியப்படுத்தும் தொழிற்பாட் டையும் மொழி செயற்படுத்திய வண்ணமுள்ளது. சிந்தனையை இயக்கவும், நெறிப்படுத்தவும் மொழியே கருவியாகி நிற்கின்றது.
மனித மனவெழுச்சிகளைத் தூண்டவும், மீள வலியுறுத்தவும், வலுவிழக்கச் செய்யவும் மொழியே வலிமையான கருவியாகின்றது. நினைவுப் பதிவுகளுக்கும், அவற்றை மீட்டெடுத்தலுக்கும் மொழியே துணை நிற்கின்றது.
சொற்களும் சொற்றொடர்களும் முடிவிலியாக இருப்பதுடன், சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு நிலைமாற்றங்களுக்குமுரியவை. நிலைமாற்றத்துக்கு ஒர் எடுத்துக்காட்டு வருமாறு: (அ) "தங்க வாள்” என்னும் போது அது தங்கத்தினால் செய்த வாளைக்
குறிப்பிடுகின்றது.
கலாநிதி. சபா.ஜெயராசா -9-

Page 8
(ஆ) “தங்கச் சுரங்கம்” என்று கூறும்போது அது தங்கத்தினாற் செய்த
சுரங்கத்தைக் குறிக்கமாட்டாது.
இவ்வாறாக மொழியின் சிக்கற்படும் தன்மைகளை விளங்கிக் கொள்வதற்கும், எடுத்தாள்வதற்கும் ஒருவரது சமூக வாழ்க்கையோடு இணைந்து நிற்கும் தாய்மொழியே பிரயோக வலிமை கொண்ட மொழியாகின்றது. மொழி ஒரு செயற் றொகுதியாகவும், வரன்முறையான இயல்புகள் மற்றும் வரன்முறை சாரா இயல்புகள் முதலியவற்றை கொண்டதாகவும், அருவ நிலைப்பட்ட பண்புகளை உள்ளடக்கியதாகவும், சிக்கலாகவும் அமைந்திருப்பதால் ஒவ்வொருவருடனும் ஒன்றித்து வாழும் தாய்மொழியே தேர்ச்சிக்கும் (Competency) ஆற்றுகைக்கும் (Performance) உரிய பலமுடைய மொழியாகின்றது.
பயன்பாட்டின்போது சொற்கள் தமக்கு ஆரம்பத்திலே தரப்பட்ட பொருளையும் கடந்து வேறுபல பொருள் கோடலையும் ஏற்படுத்தலாம். தனக்குத் தரப்பட்ட கருத்தை இழந்தும் செயற்படலாம். குறிப்பிட்ட பண்பாட்டுச் சூழலில் குறிப்பிட்ட ஒரு சொல் புதிய ஒருகருத்தைக் கையளிப்பதற்கும் பயன்படுத்தப்படலாம். சசூர் (1857-1913) விற்யெஸ்ரின் (1889-1951) முதலாம் மொழியியலாளர் மொழியின் இந்த சிக்கற்பாடு களை விரிவான ஆய்வுகளுக்கு உட்படுத்தியிருக்கின்றார்கள்.
சமூகக் கருவியாக விளங்கும் மொழி ஒருவரைச் சமூகத்தோடு இயைபுகொண்டு வாழவைக்கும் (Socialisation) செயல்முறையிலே பங்கு கொள்கின்றது. சமூக உறவு முறைகளை அறிவுறுத்துதல், சமூக வகிபங்குகளை ஏற்பதற்கு உதவுதல், சமூக நியமங்களை அறிந்து கொள்வதற்குக் கருவியாதல், சமூகப் புலக்காட்சியைத் தோற்றுவித்தல் முதலிய பல்வேறு தொழிற்பாடுகளும் மொழியின்றி நிகழமாட்டா.
கற்றுக் கொள்ளப்படவேண்டிய தேவையைக் கொண்டதே மொழி வரன்முறை சார்ந்த வகையிலும் வரன்முறை சாரா வகையிலும் மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. கற்றுக்கொள்ளும் செயற்பாட்டில் தாய் மொழியே வேற்று மொழிகளிலும் வாய்ப்பான நிலையில் அமைந்திருக்கும். குழந்தைகளினால் முதலிலே பேச்சு மொழியே கற்றுக்கொள்ளப்படுகின்றது. தாய்மொழியே சிந்தனைக்குரிய வலுவான அடித்தளத்தை அமைக்கின்றது. பேச்சு மொழியைக் கற்பதுடன் சமாந்தரமாக உச்சரிப்பும் அளிக்கை நடையும் (Presentation Style) உருவாக்கப்படுகின்றது. உளப் படிமங்களை உருவாக்கிக் கொள்வதற்கும் பேச்சுமொழியே ஆரம்ப நிலைத் தளமிடுகின்றது. கேட்கும் செயற்பாடு பேச்சு மொழியை வளம்படுத்துவதற்குரிய ஒலிப்படிமங்களை உள்ளத்திலே உருவாக்குகின்றது.
-10- தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

தெரிந்தவற்றிலிருந்து தெரியாதவற்றை நோக்கி நகர்ந்து செல்வதற்கும் ஆரம்பத்தில் பேச்சு மொழியே நுழைவாயிலமைத்துக் கொடுக்கின்றது. சிறாரின் உசாவல் விருப்புக்குரிய (Curiosity) பொருத்தமான கருவியாகவும் பேச்சுத்தாய்மொழியே அமைகின்றது. சிறாரின் ஆரம்பகால அறிவுத் திரட்டலும், அனுபவத் திரட்டல்களும் பேச்சு மொழியைத் தளமாகக் கொண்டே கட்டியெழுப்பப்படுகின்றன.
வரன்முறையான கல்விச் செயற்பாடுகளுடன் வாசிப்பும் எழுத்தும் வளர்ச்சியடையத் தொடங்குகின்றன. ஒலிப்படிமங்களுக்கு எழுத்து வடிவம் கொடுத்தல் படிப்படியாக வளர்ச்சியடையத் தொடங்குகின்றது. ஒலிக்குரிய எழுத்துக்களைத் தெரிவு செய்தல், நிறுத்தற் குறியீடுகளைப் பயன்படுத்துதல், எழுத்து வினைப்பாட்டுக்குரிய ஆற்றல்களைப் பெறு: தல் முதலியவை கற்றுக் கொள்ளப்படும் செயற்பாடுகளாகின்றன.
கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் ஆகியவை ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டு நிற்கும் அடிப்படை மொழித்திறன்களாகும். அறி. வைத் திரட்டிக் கொள்வதற்கு இவைகளே அடிப்படைகளாக அமை" கின்றன.
ஒவ்வொருவரும் தம்மைப் பற்றிய படிமத்தை வளர்த்துக் கொள்வ: தற்கும் தன்னிலையை (Self) வளர்த்துக் கொள்வதற்கும் மொழியே துணை நிற்கின்றது. தன்னிலை என்பது சமூகத்தால் உருவாக்கப்படும் படிமமாகும். தன்னிலையை அடிப்படையாகக் கொண்டே ஊக்கல் முகிழ்த்தெழுகின்றது. ஆளுமைப் பரிமாணங்கள் வளர்ச்சியடையத் தொடங்குகின்றன. பறிப்பு (Exploitation)நிகழும் சமூகங்களில் மொழியும் பறிப்புக்குப் பொருத்தமான கருவியாக்கப்பட்டு பறிக்கப்படுவோரின் தன்னிலையிலும், ஆளுமையிலும் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.
சமூக நியமங்கள், சடங்குகள், அறிவுரைகள், அறவுரைகள் முதலியவை சமூக இயல்புக்கு ஏற்றவாறு தன்னிலையை வடிவமைக்கின்றன. பால்நிலை வேறுபாடு, சமூக நிலை வேறுபாடு, முதலியனவற்றுக்குப் பொருந்தக் கூடியவாறும் தன்னிலை உருவாக்கம் நிகழ்த்தப்படுகிறது.
தாம் வாழும் சமூகத்துக்குரிய பண்பாட்டை ஒருவர் திரட்டிக் கொள்வதிலும் குறித்த பண்பாட்டுக்குரிய வகிபங்குகள், சடங்கு" முறைகள், மரபுகள் முதலியவை மொழிவாயிலாக மீளவலியுறுத்தப்படுகின்றன. இதனை மேற்கொள்வதற்கென மொழியின் சிறப்பு வடிவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பழமொழிகள், வாய்மொழிப் பாடல்கள், கதைகள், சடங்குப்பாடல்கள் முதலியவை பண்பாட்டைக் கையளிக்கும் மொழி சார்ந்த சிறப்பு வடிவங்களாகின்றன.
கலாநிதி. சபா.ஜெயராசா -II

Page 9
மொழி ஒரு புறம் தூய அறிவையும், மறுபுறம் பிரயோக அறிவையும் தன்னகத்தே கொண்டுள்ளது. பிரயோக அறிவிலே தொழிநுட்ப அறிவு இடம் பெறுகின்றது. ஒவ்வொரு பண்பாடும் தனது சமூக இயல்புக்" கேற்றவாறு தொழில்நுட்ப அறிவைக் கொண்டிருக்கும். மரபுவழித் தொழில்நுட்ப அறிவு மொழி வடிவிலும் செயல் வடிவிலும் வாழையடி வாழையாகக் கையளிக்கப்பட்டு வருகின்றது.
மொழியின் பிறிதொரு பரிமாணம் அழகியல் அறிவைத் தாங்கிநிற்றலாகும். இசை, நடனம், ஆடல், பாடல், ஒவியம், சிற்பம், இலக்கியம், நாடகம் என்றவாறு ஒவ்வொரு மொழியும் தனது பண்பாட்டுக்குரிய அழகியல் வடிவங்களைத் தன்னகத்தே கொண்டி" ருக்கும். இந்த அழகியல் வடிவங்கள் குறித்த மொழியைப் பேசுவோருக்குரிய "மனச் சுகம் தரும்” வடிவங்களாகவும், மனவெழுச்சிகளுக்குப் பயிற்சிகளை வழங்கும் வடிவங்களாகவுமுள்ளன. மொழி மீது உறுபற்றை (Sentiment) வளர்த்துக் கொள்வதற்கும் மொழிதாங்கி நிற்கும் அழகியல் வடிவங்களே விசையூட்டிய வண்ணமுள்ளன.
மனித உறவுகளை மீட்டெடுத்து நினைவு கூர்ந்து அசைபோடுவதற்கும் மொழியே துணை நிற்கின்றது. அன்னை, தந்தை, பாட்டன், பாட்டி, மாமா, மாமி, நண்பன், நண்பி, ஆசிரியர், அயலவர் முதலியோர் உடன் இல்லா நிலையிலும் அவர்களை மீட்டெடுத்து உறவாடும் உளவியல் செயல்முறையையும் மொழி வழங்கி நிற்கின்றது. இந்த உளவியல் செயல்முறை தாய்மொழிக்குரியமுக்கியத்துவத்துக்கு மேலும் வலுவூட்டி நிற்கின்றது.
பொதுத்தன்மை கொண்டிருக்கும் மொழி ஒவ்வொருவருக்குமுரிய தனித்துவ நடையை (Style) உருவாக்குவதற்கும் வெளிப்படுத்துவதற்கு" முரிய வளத்தையும் கொண்டுள்ளது. மொழியிலுள்ள சொற்களைத் தெரிந்தெடுத்து நிரல் செய்யும் முறையாலும், கோவைப்படுத்தும் முறையாலும் “தனித்துவமான நடை" உருவாக்கப்பட்டு வருகின்றது. இத்தகைய செயற்பாட்டைப் புரிவோர் “சொல்லெடுத்து சுவை சேர்ப்போர்” எனவும் அழைக்கப்படுதல் உண்டு. இந்நிலையில் மொழியின் அசைவெழுச்சி (Articulation) மேலோங்கி நிற்கும்.
பிற பண்பாடுகளை உள்வாங்கும் திறன் கொண்ட சமூகங்களின் மொழியும், பிறமொழிகளை வேகமாக உள்வாங்கும் திறன் கொண்டதாக அமையும்.
மொழியால் பெரும் உரையங்களும் (Meta narratives) சிறு உரையங்களும் உருவாக்கப்படக்கூடியவை. அழகியல் வடிவங்களும்,
-12- தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

அறிவியல் வடிவங்களும் உருவாக்கப்படக்கூடியவை மொழி விளையாட் டால் உருவாக்கப்படும் பெரும் உரையங்கள் அகிலப் பெறுமதி கொண்டவை என்று உந்தப்படுவதனால் அவை பற்றிய எச்சரிக்கை அவசியம் என்றும் பின்னவீனத்துவவாதிகள் குறிப்பிடுதல் மொழி பற்றிய நோக்கை ஆழப்படுத்துவதற்கு ஒருவகையிலே துணைசெய்கின்றது.
கலாநிதி. சபா.ஜெயராசா - 13

Page 10
மொழியும் மெய்யியலும்
மொழியும், கருத்துக் கையளிப்பும் சிந்தனையும் பற்றிய கிளறல் தெளிவை (Clarification) ஏற்படுத்துதலே மெய்யியலின் தலையாய இலக்காகின்றது. மெய்யியலின் மேலைப்புலத் தொடக்குனர்களாக விளங்கிய கிரேக்கர்கள் தமது தாய்மொழியிலேயே கருத்து வினைப்பாடுகளை முன்னெடுத்தனர். மெய்யியலின் பெருமளவு நேரம் இன்று மொழியிலே செலவிடப்பட்டு வருகின்றது. மொழிச் சிக்கல்களை அவிழ்க்க முனைதல் மெய்யியலின் நடுவண் செயற்பாடாக அமைகின்றது.
முதலாம் ஒழுங்கமைப்பு, இரண்டாம் ஒழுங்கமைப்பு என்ற இரண்டு பரிமாணங்களை மொழி கொண்டுள்ளது. இவற்றை பின்வரும் எடுத்துக்காட்டுகளினால் விளக்கலாம்.
முதலாம் ஒழுங்கமைப்பு : “இதனைச் செய்வது சரியான செயற்பாடாக அமையுமா?”
இரண்டாம் ஒழுங்கமைப்பு : “சரியானதா” என்று சொல்லப்படுவதன் பொருள் என்ன?”
இரண்டாம் ஒழுங்கமைப்பு, முதலாம் ஒழுங்கமைப்புத் தொடர்பான கிளறல் தெளிவை ஏற்படுத்துவதற்குச் சிறப்பாக வேண்டப்படுகின்றது. மொழியின் இரண்டாம் ஒழுங்கமைப்பின் மீதே மெய்யியலாளர்கள் கூடிய கவனத்தைச் செலுத்தி வருகின்றனர்.
சமூக இருப்பிலிருந்தும் சமூக இயக்கங்களிலிருந்தும் மொழி வளர்ச்சி பெற்று வருகின்றது. அறிவுத் தொடர்பாடலும் அனுபவத் தொடர்பாடலும் மொழி ஊடகத்தின் வழியாகவே நிகழ்த்தப்படுகின்றன. இதன் போது நிகழும் அவலங்களை நீக்குவதற்குக் கல்வியியலும் மெய்யியலும் முனைந்துள்ளன. கிரேக்க நாட்டு ஆரம்பக்கால மெய்யியலும் கல்வியியலும் உரையாடல் தழுவியதாக அமைந்தது. அதன் வளர்ச்சி நிலையில் பகுப்பாய்தலும் விதிவிளக்குதலும் வளர்ச்சியடையத் தொடங்கின. மெய்யியலின் தொடக்க காலம் முதல் இன்றுவரை
-14- தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

சொற்களின் பொருளறியும் செற்பாடுகளிலேதான் பெருமளவு காலம் செலவழிக்கப்பட்டு வருகின்றது.
மொழியை அடியொற்றியே தருக்கவியலும், அறிவாய்வியலும், மொழிபற்றிய மெய்யியலும் வளர்ச்சியடையத் தொடங்கின. மொழி பற்றிய ஆய்வில் முக்கியமானது சரியா, தவறா என்பது பற்றிய சீர்தூக்கல் (Verification). கருத்துமொழிவு ஒன்று சரியானதா அல்லது தவறானதா என்பதைக் கண்டறிய முற்படும் பொழுது மொழியின் குறிப்பிடும் பண்பு (Pointing Function) அல்லது நிலைவிபரிப்புப் பணிபு, முதலில் முக்கியத்துவம் பெறுகின்றது. கருத்து மொழிவு சரியானதா தவறானதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்குரிய அளவை நியாயப்பாடு அல்லது தருக்கம் வலிமை ஒலிப்புக் கொண்டதா (Sound) என்பது அடுத்து நோக்கப்படுகின்றது. புறச்சார்புநிலைகளில் அது தங்கியுள்ளதா என்பதை நோக்குதலும் அதனுடன் இணைந்த வகையிலே முக்கியம் பெறுகின்றது.
மொழி மிகுந்த சிக்கல் பொருந்தியது. பல்வேறு தளங்களிலே பயன்படுத்தப்படுவது. அகவய நிலைகளிலிருந்து புறவய எல்லைகள் வரை பயன்படுத்தப்படுவது. இந்த அனைத்து நிலைகளிலும் மொழிப் பயன்பாட்டை வினைத்திறனுடன் முன்னெடுத்துச் செல்வதற்குத் தாய் மொழித்தளமே ஒவ்வொருவருக்கும் இயல்பானதாயும், வலிமை கொண்டதாகவும் அமைகின்றது.
மொழி பற்றிய ஆய்வை முன்னெடுத்தவர்கள் அளவைசார் புலனறிவாதத்தை முன்மொழிந்தனர். பேர்ரண் ரஸல், விற்யெஸ்ரின், அயர் முதலியோர் இவ்வாதத்தை முன்னெடுத்தனர். கணிதவியலின் அளவைசார் அடிப்படைகளையும், புறவயப்பண்புகளையும் ரஸல் விளக்கிவலியுறுத்தினார். அவரது அணுகுமுறைகள் மொழி மீதும் விரிவாக்கம் செய்யப்பட்டன. மொழி தொடர்பான சீர்தூக்கற் கோட்" பாட்டை முன்வைத்த அயர் சரியையும் தவறையும் ஒப்புநோக்கலும் மொழியின் கருத்தாக்கமும் ஒத்த பண்புடையவை என விளக்கினார்.
புலனறிவு சார்ந்த அனுபவ வழி ஒப்புநோக்கப்பட்டு உண்மை நிறுவப்படும் பொழுதுதான் கருத்தாக்கம் சாத்தியப்படும் என இங்கு வலியுறுத்தப்படுகின்றது. இது வலிமை கொண்ட ஒப்பு நோக்கல் வடிவமாகின்றது. வலிமை கொண்ட வடிவத்துக்கு ஒர் எடுத்துக்காட்டு
வருமாறு:
* “அந்தப் பாடசாலையில் பத்து ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்” குறித்த பாடசாலைக்குச் சென்று பத்து ஆசிரியர்களையும் காணும் பொழுது கருத்தாக்கம் உறுதி பெறுகின்றது.
கலாநிதி. சபா.ஜெயராசா -15

Page 11
வலிமை குன்றிய ஒரு வடிவத்துக்கு எடுத்துக்காட்டுவருமாறு: *இந்தப் பிரபஞ்சத்தில் உயிர் வாழ்க்கைக்கு ஆதரமளிக்கும் வேறு
கோள்களும் உள்ளன”
ஏனைய கோள்களைப் பரீட்சித்த பின்னர் தான் இங்கே கருத்தாக்கம் உறுதிபெறும். கண்டுபிடிப்புக்கள் வாயிலாகவே இது உறுதிசெய்யப்பட வேண்டியுள்ளது.
உண்மைக்கு எதிரான மொழிவுகள் கருத்தற்றவையாகின்றன.
மெய்யியல் என்பது மொழி பற்றிய ஆய்வைத் தவிர வேறொன்றில்லை என்பர். கருத்தற்றவற்றையும் கருத்துள்ளவற்றையும் வேறு பிரித்" தறிதல் வேண்டும். புறவய அணுகுமுறைகளைப் பயன்படுத்தி உண்மை" கள் கண்டறியப்படல் வேண்டும். அயர் எழுதிய "மொழியும், உண்மை" யும் அளவையும்” (Language Truth and Logic) என்றநூல் மெய்யியலும் மொழியும் பற்றிய நோக்கில் மேலும் முன்னேற்றங்களை ஏற்படுத்தியது.
கல்வியியல் நோக்கிலும், மெய்யியல் நோக்கிலும் மொழிக்கும் புலக்காட்சிக்குமுள்ள தொடர்புகள் ஆழ்ந்து நோக்கப்படலாயின. கணித அடிப்படைகளில் மட்டும் மொழியை நோக்கமுடியாது, பட்டறிவு அடிப்படையிலும் நோக்குதல் அவசியம் என்ற கருத்து வலியுறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டது. பட்டறிவு அல்லது அனுபவங்கள் தவறானவை" யாயும், வழுக்கள் கொண்டதாகவும் அமையலாம். “கண்ணால் காண்பது எல்லாம் காதால் கேட்பது எல்லாம் உண்மையாக இருக்கமாட்டாது என்பதற்குப் பல எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. காட்சிகளுக்கு வியாக்கியானம் (Interpretation) கொடுக்கும் பொழுது தவறான வியாக்கியானங்களும் கொடுக்கப்படலாம். புலக்காட்சி திரிபுபடுத்தப்பட்டவையாயும் அமையலாம்.
மொழியிலே குறிப்பிட்ட ஒன்றை (Particular) விளக்குவதற்குப் பொதுவான (General) சொல்லைப் பயன்படுத்துவதனாலும் குழப்பமான நிலைகள் ஏற்படுகின்றன. உதாரணமாக "அம்மா” என்ற பொதுச் சொல்லை வைத்துக்கொண்டு ஒவ்வொருவரதும் தத்தமது அம்மாவின் தனித்துவங்களைக் கண்டறிய முடியாது.
சொற்களும் அவற்றுக்குரிய பொருள்களும் தொடர்பான பிரச்சினைகளை விடுவித்தலிலே மெய்யியலின் தலையாய பிரச்சினைகளில் ஒன்றாக மேலெழுந்துள்ளது. மொழி என்பதை ஒரு வாழ்க்கை முறையாக (Form of Life) அண்மைக்காலத்துக் கல்வியியலாளரும் மெய்யியலாளரும் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில்
- 16- தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

வாழ்க்கையின் வேறுபட்டதும், மாறுபட்டதுமான பண்புகளுக்கு ஏற்றவாறு அதன் கருத்தமைவுகளை அல்லது பொருள் கோடலை நிதானப்படுத்த வேண்டியுள்ளது.
மொழியின் இயல்பை விளக்குவதற்கு அதனை சதுரங்க விளையாட்டுக்கு ஒப்புமை செய்தல் உண்டு. அங்கே அங்கீகரிக்கப்பட்ட விதிகள் கையாளப்படும் அதே வேளை சந்தர்ப்பம் மற்றும் சூழமைவுக்கேற்றவாறு அசைவுகள் இயக்கப்படும். மொழி ஒரு கருவி. அதனைப் பயன்படுத்துவோரை அடிப்படையாகக் கொண்டே கருத்துக் கோடலை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
பயன்படுத்தும் அறிகைத் தளத்துக்கு ஏற்றவாறு மொழியின் இயல்புகள் வேறுபடும். இலக்கிய ஆக்கங்களிலே பயன்படுத்தப்படும் மொழி சில சமயங்களிலே உளநலம் பாதிக்கப்பட்டவர்களின் மொழிக்கு (Language of Madness) ஒப்புமை செய்யப்படுதல் உண்டு. உதாரணமாக ஒரு பைத்தியக்காரன் "சந்திரனை உருக்கித் தங்கநகை செய்யப் போகின்றேன்" என்றால் அவனுக்குப்பித்தம் தலைக்கேறிவிட்டது என்று கூறுவர். ஆனால் அதே சித்திரிப்பை ஒரு கவிஞன் கூறினால் அதனை ஒர் உன்னதமான கற்பனை என்று கூறுவர்.
இதனைத்தவிர சமயம் சார்ந்த மொழி என்ற இன்னொரு வகை மொழியும் உண்டு. அகயவயப்பண்பு, ஊகங்கள், நம்பிக்கைகள் முதலியவை சமயம் சார்ந்த மொழியிலே மேலோங்கிக் காணப்படும். இது அறிவியல் மொழியிலும் வேறுபட்ட பண்புகளைக் கொண்டது. அருள்நிலை (Mystic) அனுபவங்களை மொழி வடிவில் வெளியிடும் பொழுது அவற்றை விளங்கிக் கொள்ளலும் கடினமாகின்றது. எடுத்துக்காட்டாக வள்ளலாரின் அருள் நிலை அனுபவம் ஒன்று வருமாறு:
"வானத்தின் மீது மயிலாடக் கண்டேன் மயில் குயிலாச் சுதடி.”
சமய மொழியைப் போன்று அறவியல் மொழியும் (Ethical Language) தனித்துவமானது. நன்மை, தீமை முதலாம் அறவியற் சொற்களின் பொருள் சந்தர்ப்ப வேறுபாடுகளையும் தனியாள் வேறுபாடுகளையும் கொண்டது. விபரண அறவியலின் மொழி நேரடி வெளிப்பாட்டுப் பண்பினைக் கொண்டது. சரியோ பிழையோ என்பதைக் குறிப்பிடாது, நடந்தவற்றை நடந்தவாறே சித்தரிப்பது "விபரண அறவியல் மொழி"யாகின்றது. நன்மை தீமை பற்றி விளக்கும் "நியம அறவியல் மொழி” குறிப்பிட்ட செயல் நன்மையானதா அல்லது தீமையானதா
கலாநிதி. சபா.ஜெயராசா - 17

Page 12
என்பவற்றை விளக்கும் பண்புடையது. அது விழுமியங்களைத் தாங்கும் மொழியாக அமையும்.
மொழி பற்றிய ஆய்விலே தீவிர கவனம் செலுத்திய பின்னவீனத்துவவாதிகள் "கட்டுமான உடைப்பு" (Deconstruction) என்ற எண்ணக் கருவை முன்வைத்தார்கள். "மொழி, தன்னைப் பற்றிய திறனாய்வைத் தன்னுள்ளே கொண்டுள்ளது" என்று ழாக் தெரிதா குறிப்பிட்டுள்ளார். மொழியால் உருவாக்கப்பட்ட நூலியம் (Text) நூலாசிரியரை முரண்படுத்தும் கட்டமைப்பைத் தன்னுள்ளே கொண்டுள்ளது. நூலியம் என்பது ஒருமுகமான தோற்றப்பாட்டிலிருந்து நீங்கிப் பன்முகமான அர்த்தங்களை வாசகர் மேற்கொள்வதற்குரிய கட்டற்ற சுதந்திரத்தை வழங்குகின்றது. எழுத்து வடிவிலான எந்த நூலியமும் தன்னைத்தானே அழித்துக் கொள்வதற்குரிய வலுவைத் தன்னுள்ளே கொண்டுள்ளது என்பதைக் கட்டுமான உடைப்பு வாதம் வலியுறுத்துகின்றது.
கட்டமைப்புவாதிகள் மற்றும் பின் கட்டமைப்புவாதிகள் ஆகியோரும் மொழியின் இயல்பினைத் திறனாய்வுக்கு உட்படுத்தி யிருக்கின்றார்கள். சொல் குறிப்பான் (Signifier) என்றும் அதன் வழியாக சுட்டப்படும் பொருள் குறிப்பீடு (Signified) என்றும் குறிப்பிடப்படும். இரண்டுக்குமுள்ள இணைப்பின் பலவீனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இரண்டுக்குமுள்ள தொடர்புகள் நனவுமனத்துடன் இணைந்தவையா அல்லது நனவிலி மனத்துடன் இணைந்தவையா என்ற வினாக்களும் எழுப்பப்படுகின்றன.
ஒரு குறிப்பிட்ட குறியின் அர்த்தம் அதன் சூழலின் உறவுமுறைக" ளாலே தீர்மானிக்கப்படுகின்றது என்றும் அந்தக் குறிதான் இயங்குகின்ற அமைப்பின் ஏனைய குறிகளோடு எத்தகைய உறவு நிலையில் நிற்கின்றது என்பதன் வாயிலாகவே அதன் அர்த்தமும் பொருளும் உருவாக்கப்படுகின்றது என்று கட்டமைப்பு வாதிகள் குறிப்பிடுவர்.
மொழிபற்றிய விளக்கத்தில் நனவிலி மனத்தின் முக்கியத்துவம் லாகானால் விபரமாக விளக்கப்பட்டுள்ளது. நனவிலி மனத்தை விளங்கிக் கொள்வதற்கு மொழிபற்றிய விளக்கம் இன்றியமையாதது என்று வலியுறுத்தப்படுகின்றது குறிப்பானுக்கும் குறிப்பீட்டுக்குமுள்ள தொடர்பு நனவிலி வழியான தொடர்பு என்றும் முன்மொழியப்பட்டுள்ளது.
இவ்வாறாக மெய்யியலாளரின் மொழி பற்றிய தேடல் முடிவிலாத் தொடர் தேடலாகவே அமைந்த வண்ணமுள்ளது.
தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

தாய் மொழியும் கல்விக் கோட்பாடுகளும்
கல்விக் கோட்பாடுகளில் மிகவும் தொன்மையானதாக விளங்கும் இலட்சியவாதம் (idealism) மானிடப் பண்புக் கல்விச் செயற்பாடுகளை வலியுறுத்தும் வேளை தாய்மொழிக் கல்வியின் தேவையை ஆழ வலியுறுத்தியுள்ளது. பிளேட்டே கொமினியஸ், பெஸ்டலோசி, புரோபல், றஸ்க் மற்றும் பேர்சிநன் போன்ற பல இலட்சிவாதக் கல்வியலாளர் தாய்மொழியின் முக்கியத்துவத்தை விதந்து குறிப்பிட்டுள்ளனர்.
காரணங் காணும் திறன், சிந்திக்கும் திறன், அறவழி ஒழுகும் திறன் முதலியவற்றை வளர்ப்பதற்குத் தாய்மொழியே உன்னதமான கருவி என்பது இவர்களின் துணிபு. சிந்தனை விருத்தியில் கணித பாடத்துக்கு வழங்கிய அதியுன்னதமான முக்கியத்துவத்தை இலட்சியவாதிகள் தாய்மொழிக்கும் வழங்கினார்கள். தேசத்தின் ஆன்மீக வலுவைக் கட்டியெழுப்பவும், வரலாற்றுத் தொடர்ச்சியைப் பேணவும், முன்னேற்றங்களைப் பராமரிக்கவும் வேண்டிய நிறுவனமாகப் பாடசாலை தொழிற்படும் பொழுது தாய்மொழிக் கல்வியின் முக்கியத்துவம் மேலும் மீள வலியுறுத்தப்படுகின்றது.
கல்வியின் முப்பெரும் நோக்கங்களை வலியுறுத்திய இலட்சியவாதி யாகிய ஜோன் அமொஸ் கொமினியஸ் (1592-1670) அந்த நோக்கங்களை அடைவதற்குத் தாய்மொழியே ஏற்புடையது என்பதைத் திட்டவட்ட" மாகக் குறிப்பிட்டார். அவர் குறிப்பிட்ட முப்பெரும் கல்வி நோக்கங்களும் வருமாறு. 1. வாழ்க்கையில் வெற்றிபெறுவதற்குரிய அறிவைப் பெற்றுக்
கொடுத்தல். 2. அறம் மற்றும் ஒழுக்கம் சார்ந்த மேம்பாடுகளுக்குரிய அறிவை
வழங்குதல். 3. மனிதரிடையே தெய்வீக ஈடுபாட்டை ஏற்படுத்துதல்.
கலாநிதி. சபா.ஜெயராசா

Page 13
மேற்கூறியவை தாய்மொழிக் கல்வியினால் சாத்தியப்படக் கூடியவை என அவர் குறிப்பிட்டுள்ளார். பன்னிரண்டு வயதுக்குப் பின்னரே இலத்தீன் போன்ற பிறமொழிகளைக் கற்பிக்க வேண்டும் என்பது அவரது கருத்தாக அமைந்தது. நடைமுறைப் பயனுடையதாகக் கல்வி அமைவதற்கும், தன்னிலை சார்ந்த அனுபவங்களை வளர்ப்பதற்கும், புற அழுத்தங்களின்றி இயக்கப்படுவதற்கும், சமத்துவமாக வழங்கப்படுவதற்கும் தாய்மொழியே பயிற்று மொழியாக இருத்தலின் இன்றியமையாமை இவரால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
குழந்தையின் உள்ளார்ந்த திறன்களை வளர்த்தெடுப்பதற்கும், அவர்களின் விருப்பங்களைத் தழுவிக் கற்பிப்பதற்கும் மகிழ்ச்சிகரமான கற்றலை முன்னெடுப்பதற்கும் தாய்மொழி வழிக் கற்பித்தல் துணை நிற்கும் என்பதை ஜோன் கென்டிறிக் பெஸ்டலோசி (1746-1827) தெளிவாக வலியுறுத்தியுள்ளார். சமூகத்தின் மாதிரிச் சிற்றுருவமாகப் பாடசாலை இயங்கவேண்டுமென வலியுறுத்திய புரோபல் பாடசாலையைச் சூழவுள்ள சமூகத்தின் மொழியே பாடசாலையின் மொழியாக இருத்தல் வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். சிறாரின் முழுமையான மேம்பாட்டை (Complete Development) தாய்மொழியை நிராகரித்து உருவாக்கிவிட முடியாது.
இலட்சியவாதிகளுள் ஒருவராகிய ஹேர்னே (H.H.Horne) சித்த விருத்திக்கும் கல்விக்குமுள்ள தொடர்புகளை ஆராயும் பொழுது தாய் மொழியின் தேவையை வலியுறுத்தியுள்ளார்.
இலட்சியவாதிகளைத் தொடர்ந்து இயற்பண்புவாதிகளும் (Naturalists) தாய்மொழிக் கல்வியின் முக்கியத்துவத்தை சிறப்புப்படுத்தியுள்ளனர். இயற்கையோடு ஒன்றித்து வாழ்தல் தாய்மொழியோடு இணைந்த தோற்றப்பாடு ஆகும். சமூக இயற்பண்புவாதம், உளவியல் இயற்பண்பு வாதம், பெளதிக இயற்பண்பு வாதம் ஆகியவை தாய்மொழிக் கல்வி யுடன் நேரடியாக இணைந்தவை.
இயற்பண்புவாதியாகிய ரூசோ (1712-1778) எதிர்மறைக் கல்வியை (Negative Education) வலியுறுத்தினார். எதிர்மறைக் கல்வி என்பது சுயகல்வி அல்லது தற்கல்வி (Self Education) ஆகின்றது. தற்கல்வி தாய்மொழியை அடிப்படையாகக் கொண்டதும், உடலின் புலன்சார் உறுப்புக்களைத் தழுவியதுமாகின்றது. சிறாரை உடல்நலமுள்ளவர்களாகவும், தன்னிறைவு மிக்கவர்களாகவும் வளர்த்தெடுக்கும் செயற்பாட்டில் தாய்மொழிக்குப் பதிலீடு வேறெதுவும் இல்லை என்பது இயற்பண்பு வாதிகளின் முடிபு.
-20- தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

இயற்பண்புவாதிகளுள் ஒருவராகிய கேர்பேர்ட் ஸ்பென்சர் (18201903) தாம் 1861 ஆம் ஆண்டிலே வெளியிட்ட "கல்வி" என்ற நூலிலே கல்விசார் நோக்கங்களைப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
1. தன்னைத்தானே பாதுகாத்துப் பராமரித்துக் கொள்ளல். 2. வாழ்க்கைக்குரிய பொருளீட்டிக்கொள்ளல். 3. பயனுள்ள பெற்றோராகத் தொழிற்படல். 4. நல்ல பிரசையாகத் தொழிற்படல்.
5
. நல்ல பொழுதுபோக்கை உருவாக்கிக் கொள்ளும் திறன்களை
வளர்த்துக் கொள்ளல்.
மேற்கூறிய இலக்குகளை அடைவதற்குரிய கற்பித்தற் செயல்முறையானது தெரிந்ததிலிருந்து தெரியாதவற்றை நோக்கிச் செல்வதாகவும், எளிதிலிருந்து சிக்கலை நோக்கிச் செல்வதாகவும் அமைக்கப்படல் வேண்டும் என வலியுறுத்தும் பொழுது தாய்மொழியின் தேவையும் முக்கியத்துவமும் மேலெழுச்சிகொள்ளுகின்றன.
கல்விச் செயல்முறை வாழ்க்கை தொடர்பான பயன்களுக்குத் துணை நிற்றல் வேண்டுமென வலியுறுத்தும் பயன்கொள் வாதமும் (Pragmatism) தாய்மொழிக் கல்வியின் தேவையை முன்மொழிகின்றது. மனித உழைப்பின் மாண்பை வலியுறுத்தும் பயன்கொள்வாதம் நனவுமனத்துச் சிந்தனை ஊற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றது. வில்லியம் ஜேம்ஸ் (1842 -1910) நனவு ஊற்றின் சிந்தனைகளை வலியுறுத்தும் வேளை நனவு மனத்தின் சிந்தனைகளுடன் நேரடியான தொடர்புகள் கொண்ட தாய்மொழியின் முக்கியத்துவமும் பயன்பாடும் சிறப்புப் பெறுதலை அறிய முடிகின்றது.
பயன்வாதக் கல்விச் செயல் முறைகளை வலியுறுத்தியவர்களுள் ஜோன் டுயி (1859-1952) அவர்களும் முக்கியமானவர். அவரால் தெறித்தல் சிந்தனையின் முக்கியத்துவமும், பிரச்சினை விடுவித்தல் தேவையும் வலியுறுத்தப்படும் பொழுது, தாய்மொழிக்கல்வி இயல்பாகவே வலுப்பெறத் தொடங்குகின்றது. பிரச்சினையை இனங்காணல், பிரச்சினை தொடர்பான தெளிவு கொள்ளல், தீர்வுக்குரிய கருதுகோளை உருவாக்குதல், ஒப்புநோக்கி உறுதிப்பாடு கொள்ளல், கருதுகோளின் பொருத்தப்பாட்டை இனங்காணல் முதலிய கல்விச்செயற்பாடுகளிலே தாய்மொழியின் சாத்தியப்பாடே ஒப்பீட்டளவில் முக்கியத்துவம் பெறுகின்றது.
கலாநிதி சபா.ஜெயராசா -21

Page 14
அறிவு சமூக முன்னேற்றத்துக்குப் பயன்படல் வேண்டும் என்பதும் பயன்கொள்வாதத்தின் நோக்காகும். அறிவு சமூகத்துக்குப் பயன்படல் வேண்டும் என வலியுறுத்தும் பொழுதும் சனநாயக மரபுகள் கல்வியால் முன்னெடுக்கப்படுதலை ஊக்குவிக்கும் பொழுதும், தாய்மொழியின் முக்" கியத்துவம் மேலெழச் செய்யப்படுகின்றது. கல்வியில் பயன்கொள்வாதத்தை வலியுறுத்திய பேர்ட்டன் ரசல் (1872-1970) மனிதரின் ஆக்கமலர்ச்சி கல்வியால் வெளிக்கொண்டு வரப்படுதலின் தேவையை குறிப்பிட்டுள்ளார். உளவியல் அடிப்படையில் ஆக்கத்திறன் வெளிப்பாட்டுக்கும் தாய்மொழிக்கும் நேரடியான இணைப்பு இருத்தல் மீளவலியுறுத்தத்தக்கது.
சிறாரிடத்து நான்கு வகையான விருப்புக்கள் உள்ளதாக பயன்கொள் வாதக் கல்வியிலே குறிப்பிடப்பட்டுள்ளது. அவை: (1) பேசுதல் (2) தேடுதல் அல்லது கண்டறிதல் (3) ஆக்கமலர்ச்சி வெளிப்பாடு (4) கலை வெளிப்பாடுகள். இவை அனைத்தும் தாய்மொழியோடு இணைந்த செயற்பாடுகள் என்பதை மனங்கொள்ளல் வேண்டும்.
மனித அவலங்களைக் குவியப்படுத்தியும், உள்ளார்ந்த மனித முரண்பாடுகள் மீது கவனத்தைச் செலுத்தியும், இன்மைக்கும் இருப்புக்கு" முள்ள தொடர்புகளை ஊன்றி நோக்கியும் உருவாக்கப்பட்ட இருப்பியம் (Existentialism) தனது தனித்துவத்துக்குரிய கல்விச் சிந்தனைகளை வெளியிட்டுள்ளது. உணர்மையின் அகவயப்பாடு இருப்பியத்திலே வலியுறுத்தப்படும் பொழுது ஒவ்வொருவரதும் அகவயப்பாடான சிந்தனைக்கும் தன்னிலைவயப்பட்ட மொழிக்குமிடையேயுள்ள தொடர்புகள் மீள வலியுறுத்தப்படுகின்றன. ஒவ்வொருவரிடத்தும் உட்பொதிந்துள்ள உள்ளார்ந்த உண்மையை (InnerTruth) உணரச் செய்தலே இருப்பியக் கல்வியின் உன்னதமான நோக்கமாகக் கொள்ளப்படுகின்றது. மனிதர்கள் பயத்தோடும், பதகளிப்போடும், குற்றவுணர்ச்சிகளோடும், விரக்திகளோடும் வாழ்ந்த வண்ணமுள்ளனர். இந்நிலையிற் கல்விச் செயற்பாடுகள் அவர்களது அகவயமான மனவுணர்வுகளைக் குவியப்படுத்தி உருவாக்கப்பட வேண்டியுள்ளது என்பது இருப்பியத்தின் ஆதங்கம்.
கல்வியில் மொழிக்கு அதீத முக்கியத்துவத்தை அளவைசார் புலனறி வாதம் (Logical Positicism) வழங்கியுள்ளது. மொழி தாங்கி நிற்கும் கருத்தைக் கண்டறிதலின் முக்கியத்துவத்தை அளவை சார் புலனறிவாதி. கள் குவியப்படுத்துகின்ற வேளை தாய் மொழியும் விளக்கம் பெறலும் வலியுறுத்தப்படுகின்றன. பிறமொழி ஒன்றினுரடாக சரியானதா தவறானதா என்ற கருத்து விளக்கச் சீர்தூக்கலை (Verification) மேற்கொள்வதைக் காட்டிலும், ஒருவர் தமக்குக் கூடிய பரிச்சியமுடைய தாய்மொழியிலே அதனை மேற்கொள்ளல் எளிதானதாகும்.
-22- தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

மெய்யியலிலே தோற்றம் பெற்று மேலெழுந்த மானிட வாதமும் (Humanism) தாய்மொழிக்கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளது. மனிதரைக் கடந்த உண்மை வேறெதுவும் இல்லையெனக் குறிப்பிடும் மானிடவாதம் சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் ஆகியவற்றை முக்கியப்படுத்துகின்றது. இனத்துவத்திலோ மொழிகளிலோ ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்பது இவ்வாதத்தின் முன்மொழிவு. மனிதர் தமது சிந்தனைகளைக் கட்டுப்பாடுகளின்றி வெளிப்படுத்த வேண்டிய உரிமை உடையவர்கள் என்ற உறுதிப்பாட்டுக்கு வரும் பொழுது தாய்மொழி தாழ்வில்லாத முக்கியத்துவத்தைப் பெறுகின்றது.
மானிடவாதத்தை உட்பொருளாகக் கொண்ட உளவியல் மனிதரால் அடையப்பட வேண்டிய "தன்னியல் நிறைவை”க் குவியப்படுத்துகின்றது. தாய்மொழியைப் புறந்தள்ளி தன்னியல் நிறைவை அடைதல் சாத்தியமற்றது என்பதை மனங்கொள்ள வேண்டியுள்ளது. தாய்மொழியை நிராகரித்து ஒருவரது ஆளுமையை முழு நிறைவாக வளர்த்துக் கொள்ளவும் (tpig-tuft gil.
கல்விமொழி தாய்மொழியாகவே இருத்தல் வேண்டுமென வலியுறுத்திய மானிடவாதிகள் தாய்மொழிவாயிலாகவே படைப்பாற்றல் மலர்ச்சியும், தன்னியல் வெளிப்பாடும் (Originality) மேலோங்க முடியும் என குறிப்பிடுகின்றனர். அதேவேளை வேறுமொழிகளைக் கற்று மானிடப் புரிந்துணர்வை வளர்த்துக் கொள்வதையும் அவர்கள் முக்கியப்படுத்தியுள்ளனர்.
தாய்மொழியே கல்வி மொழியாக இருத்தல் வேண்டும் என்பதை மார்க்சியம் தெளிவாக வலியுறுத்தியுள்ளது. சுரண்டலற்ற சமூகத்தளத்திலே தான் சுரண்டப்படாத மனித ஆளுமை உருவாக்கம் பெற முடியும். பொருளாதார சுரண்டல், பண்பாட்டுச் சுரண்டல், இனத்துவ சுரண்டல், மொழிச் சுரண்டல் என்ற பல நிலைகளிலும் விடுவிக்கப்படும் ஒரு சமூகத்திலே தான் தனிமனித ஆளுமை உடைவுகளின்றி வளர்த்தெடுக்" கப்பட முடியும். என்பது மார்க்சியத்தின் உள்ளடக்கம். ஒடுக்குவோர் தமக்குச் சார்பான கல்விமுறைமையையும் கல்வி மொழியையும் ஒடுக்கப்படுவோர் மீது திணித்துச் செயற்படுத்திய வண்ணமிருப்பர். காலனித்துவக் கல்வியில் இந்தப் பண்புகளே மேலோங்கியிரந்தன. பின்காலனித்துவத்திலிருந்து ஒடுக்கப்பட்டோரை விடுப்பதற்கு வினைத்திறன் மிக்கதாய் மொழிக்கல்வி பயனுள்ள நடைமுறையாகின்றது.
கலாநிதி. சபா.ஜெயராசா -23

Page 15
மொழித்திரட்டற் செயற்பாடு
சமூக வாழ்க்கையின் தேவைகளுள் ஒன்றாக மேலெழுந்து நிற்பது மொழியைத் திரட்டிக் கொள்ளும் (Aquisition) செயற்பாடாகும். மூன்று வயது நிறைவடைவதற்கு முன்னரே சராசரியான ஒரு குழந்தை தனது தாய்மொழியில் உள்ள அனைத்து ஒலிகளையும் அறிந்து கொள்கின்றது. (Myron H. Dembo, (1991) Applying Educational psychology in the class room, London Longman, p.102) அத்துடன் ஆறு வயதை அடைவதற்கு முன்னதாகவே தாய்மொழியின் அதிகபட்சமான இலக்கண அமைதி: களை அறிந்து கொள்கின்றது.
மொழியைத் திரட்டிக் கொள்ளல் பற்றி விளக்க வந்த நடத்தை உளவியலாளர்கள் மொழியைக் கற்றுக்கொள்ளும் செயற்பாடு ஏனைய நடத்தைகளைக் கற்றல் போன்று பாவனை செய்தலாலும் (Imitation) மீளவலியுறுத்தலாலும் நிகழ்வதாகக் கூறுவர். தூண்டி, துலங்கல், மீளவலியுறுத்தல் என்ற வகையிலே மொழியைத் திரட்டிக்கொள்ளும் செயற்பாடு பொறிமுறையாக நிகழ்வதாக கூறும் நடத்தைவாதிகள் சிக்கலான செயற்பாட்டினை எளிமையாகச் சுருக்கிவிடுகின்றனர்.
மொழித் திரட்டல் தொடர்பாக சோம்ஸ்கி வேறுபட்ட கருத்தை முன்வைத்துள்ளார். (Chomsky, 1965) மொழியைத் திரட்டிக்கொள்ளும் வழிமுறையுடன் (Device) தான் ஒவ்வொரு மனிதரும் பிறக்கின்றனர். இந்த உள்ளார்ந்த ஆற்றல் இருப்பதன் காரணமாகவே ஒவ்வொருவரும் தாம் முன்னர் கேட்டிராத வசனங்களைக் கிரகித்துக் கொள்ளவும், புதிய வசனங்களை ஆக்கவும் வல்லவர்களாக இருக்கின்றனர்.
மொழியைத் திரட்டிக்கொள்ளல் தொடர்பாக ரூசிய உளவியலாளர் வைகோட்சி (Vygotsky, 1978) முன்மொழிந்த கருத்துக்கள் மிகவும் முக்கியமானவை. சூழலில் உள்ள மனிதர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டிய தேவையே ஒருவரின் மொழி வளர்ச்சியின் தொடக்க நிலையாக அமைகின்றது. கற்றலுக்கும், விருத்திக்குமிடையே ஊடியைபு (Mediation) செய்து வைப்பதில் மொழியே சிறப்பார்ந்த வகிபங்கைக்
-24- தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

கொண்டுள்ளது. சிறாரின் வளர்ச்சியின் போதும் மேம்பாட்டின் போதும் மொழியானது உள்ளார்ந்த பேச்சாக (Internal Speech) மாற்றியமைக்கப்படுகின்றது. இது உள்ளார்ந்த நிலையில் சிறாரின் சிந்தனைச் செயல்முறையை ஒழுங்கமைக்கின்றது.
மொழிவிருத்தி தொடர்பாக வைக்கோட்சி முன்வைத்துள்ள முக்கியமான கருத்தாக "அண்மைநிலை அபிவிருத்தி வலயம்" (Zone of Proximal Development) அமைந்துள்ளது. சிறாரின் தற்போதைய விருத்தி மட்டத்துக்கும் அவர்களிடம் உட்பொதிந்துள்ள ஆற்றலின் விருத்தி மட்டத்துக்குமுள்ள இடைவெளியை இந்த எண்ணக்கரு புலப்படுத்தி யுள்ளது.
GOLDITup5ĵuug5g56ö (6g5/TL Lñil urT35 3#lg6hgf6ï (Krashen (1982) principles and practice of second Language acquisition, Oxford, Pergamon) gugosi (6) எண்ணக் கருக்களை வேறுபடுத்தி விளக்கியுள்ளார். ஒன்று மொழியைத் திரட்டிக் கொள்ளல், மற்றையது கற்றல். மொழியைத் திரட்டிக் கொள்ளல் என்பது நனவிவிமனதுடன் இணைந்த செயற்பாடு என்றும் அது இயற்கையாக நிகழும் தொடர்பாடலுடன் இணைந்தது என்றும் அச்செயற்பாட்டிற் கருத்துக் கோடலுக்கே சிறப்பார்ந்த இடமளிக்கப்படுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் கற்றல் என்பது நனவு உள்ளத்துடன் தொடர்புடைய வரண்முறையான தொழிற்பாடு என்பது அவருடைய கருத்து. மேலும் மொழியைத் திரட்டிக் கொள்ளும் பொழுது விதிகளினூடாக மொழியை அறிந்து கொள்வதில்லை மாறாக மொழிக்கு முகம் கொடுத்தல் வாயிலாகவும் மொழி தொடர்பான முற்கவிப்பை (ExpOSure) அனுபவிப்பதன் வாயிலாகவும் மொழித்திரட்டல் இடம் பெறுகின்றது.
குழந்தையுடன் தொடர்பாடலை மேற்கொள்ளும் பெற்றோரும் பெரியோரும் மொழியின் எளிமையான வடிவங்களையே பயன்படுத்துவர். எளிமையாக்கப்பட்ட இந்த மொழி "சிறுங்கை" (Mothererese) எனப்படும். இம்மொழியில் வரையறுக்கப்பட்ட மொழி இலக்கணம் பற்றிக் கவலை கொள்ளப்படுதல் இல்லை. இங்கே பேச்சு எளிமையாகச் சுருக்கப்படுகின்றது. சிறிய சொற்றொடர்கள் மீள மீள உச்சரிக்கப்படுகின்றன. கருத்துக்கு இங்கு முதன்மை தரப்படும் வேளை, மாமூலான மொழிக்கட்டமைப்பு புறந்தள்ளப்படுகின்றது. மொழியைப் பேசும் திறன் என்பது பயிற்சியினால் நிகழ்வதில்லை என்றும், மொழியைக் கேட்பதாலும் வாசிப்பதாலுமே பேச்சுத்திறன் மேம்பாடு கொள்வதாகவும் கிறாசென் குறிப்பிட்டுள்ளார்.
கலாநிதி. சபா.ஜெயராசா -25

Page 16
நணவு உள்ளத்தோடும் நனவிலி உள்ளத்தோடும் நெருங்கி உறவாடும் மொழியாக தாய்மொழியே அமைகின்றது. மொழித்திரட்டலின் அடிப்படையாக அமையும் "சிறுங்கை"யும் தாய்மொழியை அடிப்படையாகக் கொண்டே நிகழ்த்தப்படுகின்றது. இவ்வாறாக ஆழ்ந்து பதிந்து முன்னேற்றம் பெற்றுவரும் தாய்மொழியை நிராகரித்துக் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்தலும், வேறு மொழிகளைக் கல்வி மொழியாக்குதலும் வாழ்க்கை நீட்சியிலே தொடர்ச்சியான பின்னடைவு களையே ஏற்படுத்தும்.
இணைத்தல், தொடர்புபடுத்தல், முயன்று தவறுதல், பாவனை செய்தல் முதலாம் செயற்பாடுகளின் வாயிலாக மொழிவிருத்தி முன்னெடுக்கப்படுகின்றது. தூண்டியாகவும், துலங்கலாகவும் மொழி தொழிற்பட்டவண்ணமுள்ளது. தூண்டியையும் துலங்கலையும் செப்பனிட்டுச் செழுமைப்படுத்தலும் மொழிவிருத்தியின் வழியாக நிகழ்ந்து கொண்டிருக்கும் செயற்பாடுகளாகும். மனித நடத்தைகளைக் கட்டுப்படுத்தும் பலம் பொருந்திய கருவியாக மொழியே அமைகின்றது. தனக்குள் தானே பேசிக்கொள்ளல் வாயிலாக குழந்தை தனது நடத்தைகளை ஒழுங்கமைத்துக் கொள்கின்றது.
மொழி விருத்திக்கும் நுண்மதி விருத்திக்கும் நேரான தொடர்புகள் உள்ளன. மொழி விருத்தி பின்னடைதல் நுண்மதி விருத்தியின் பின்னடைவாகவே உளவியலிற் கொள்ளப்படுகின்றது. குழந்தை விருத்தியில் இரண்டாம் வயதைத் தொடர்ந்து கிரகிப்பு நிலைப்பட்ட பேச்சு வளர்ச்சியடையத் தொடங்கும். சிறாரின் வயது வளர்ச்சிக்கும் அவர்களது மொழிக் களஞ்சிய வளர்ச்சிக்குமிடையேயுள்ள தொடர்புகள் விரிவான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அந்த ஆய்வுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற தரவுகள் பின் வருமாறு தொகுத்துத் தரப்படுகின்றது.
வயது அறிந்துகொள்ளப்படும்
அடிப்படை சொற்கள்
4 5,6OO
9,6OO
6 14,700
7 21,200
8 26,300
IO 34,300
-26- தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

சிறார் நிலையில் மொழி தொடர்பான துலங்கற் பண்புகளே மேலோங்கியிருக்கும். எடுத்துக்காட்டாக தண்ணிர் என்றதும், அதனைப் பருகும் பண்பிலேதான் சிறாரின் சிந்தனையும், மனவெழுச்சியும் தொடர்புபட்டிருக்கும், நுண்மதி வளர்ச்சி மற்றும் அறிவு வளர்ச்சியின் போதுதான் அதன் விபரணப் பண்பை அறியவும் வெளிப்படுத்தவும் தொடங்குவர்.
மொழி விருத்தியில் நிகழும் பிறிதொரு பரிமாணம் துலங்கல் மொழி வெளிப்பாட்டின் நீட்சியாகும். குழந்தை நிலையின் ஆரம்பத்தில் பேச்சு மொழி தொடங்கும் பொழுது ஒரு சொல் வடிவிலான துலங்கலே மேலோங்கியிருக்கும். படிப்படியாக ஒரு சொல்லாலான துலங்கல் பலசொற்களாலான துலங்கலாக வளர்ச்சியடையத் தொடங்கும்.
வயது வளர்ச்சிக்கும் கூடுதலான சொற்களைப் பயன்படுத்தி வசனங்களை ஆக்கக் கூடிய திறன்களுக்குமுள்ள தொடர்புகள் பற்றி உளவியலாளர்கள் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டனர். அவற்றின் தொகுப்பு கீழே தரப்படுகின்றது.
6) It gif வகுப்பு வசனம் ஒன்றிலே பயன்படுத்தக்
கூடிய சொற்களின் எண்ணிக்கை
8 3 10.0
9 4 10.9
IO 11.O
II 6 11.1
I2 7 I2.8
13 8 13.7
14 9 13.9
சொற்களைத் திரட்டிக் கொள்வதிலே பால்நிலை வேறுபாடுகளையும் உளவியலாளர் அவதானித்துள்ளனர். மேற்குறிப்பிட்ட வயது வீச்சுக்களிலே பெண்பாலார் ஆண்பாலாரிலும் கூடுதலான சொற்களை வசனங்களிலே பயன்படுத்தும் திறனும் கண்டறியப்பட்டுள்ளது. சொற்பயன்பாட்டிலே பின்னடைவுகளைக் கொண்ட சிறார்களின் கல்வி அடைவுகளிலும் பின்னடைவுகள் கண்டறியப்பட்டுள்ளன.
தாய்மொழியே குழந்தையால் விரைவாகத் திரட்டிக் கொள்ளப்படும் மொழியாக இருத்தலினால் அதுவே பயிற்றுவித்தலுக்கு இயல்பான கல்வி மொழியாகின்றது.
கலாநிதி. சபா.ஜெயராசா -27

Page 17
மொழியின் ஒரு பிரதான பண்பு எண்ணக்கருவாக்கத்துடன் (Concept formation) தொடர்புபட்டு நிற்றலாகும். சொற்கள் எண்ணக்கருக்களை வெளிப்படுத்தும் குறியீடுகளாகவுள்ளன. ஒரு பொருளின் தனித்துவமான பண்பும் ஏனையவற்றிலிருந்து அது மாறுபட்டு நிற்றலும், எண்ணக்கருவுக்குரிய பரிமாணங்களாகும். ஒத்த தன்மைகளைக் கொண்டவற்றை ஒன்றிணைத்துப் பொதுமை கண்டு பொருள் தருதலும் எண்ணக்கருவின் பிறிதொரு பரிமாணமாகின்றது. உதாரணமாக பறக்கும் உயிரினங்கள் "பறவைகள்” என்றவாறு எண்ணக் கருவாக்கம் பெறுகின்றன.
உருவ வடிவான எண்ணக்கருவாக்கமே சிறாரிடத்து முதலில் இடம் பெறுகின்றது. அதனைத் தொடர்ந்து அருவ வடிவான எண்ணக் கருவாக்கம் வளர்ச்சியடையத் தொடங்குகின்றது. பலவகைப்பட்ட அனுபவ ஏற்பாடுகள் குழந்தைகளின் எண்ணக்கருவாக்க விருத்தியை மேம்படுத்தும். அனுபவங்களும் இடைவினைகளும் வறிதாக இருக்கும் பொழுது சொற்கள் தாங்கி நிற்கும் எண்ணக்கருக்களை முழுமையாக விளங்கிக் கொள்ள முடியாதிருக்கும்.
எண்ணக்கரு சார்ந்த அறிவு வளர்ச்சி எளிமையிலிருந்து சிக்கலை நோக்கி நகர்ந்து செல்லும் செயற்பாடுகளை உள்ளடக்கியது. எளிமையான பொருள் விளக்கத்திலிருந்து சிக்கலான பொருள் விளக்கங்களை நோக்கி நகர்ந்து செல்வதற்கு பல்வேறு எண்ணக்கருக்" களுக்கிடையேயுள்ள தொடர்புகளும் ஒவ்வோர் எண்ணக்கரு பற்றிய ஆழமும் பற்றிய அறிவு இன்றியமையாது வேண்டப்படுகின்றது. எண்ணக்கரு சார்ந்த அறிவு வளர்ச்சியடைந்து செல்லும் பொழுது, அறிவின் இலக்குகளை அடைதலும், அறிவுசார்ந்த பிரச்சினைகளை விடுவித்தலும் எளிதான செயற்பாடுகளாக அமையும்.
மொழி என்பது ஒரு சுயாதீனமான ஊடகமன்று. அது நடுநிலையான ஊடகமும் அன்று. மொழியைத் தாங்கி நிற்கும் சமூகத்தின் இயல்பையும், கட்டமைப்பையும், ஏற்றத்தாழ்வுகளையும் முரண்பாடுகளையும் விளங்கிக் கொள்வதன் வாயிலாகவே மொழியை விளங்கிக் கொள்ள முடியும். சமூக நிகழ்ச்சித் திட்டத்தின் பங்காளியாக மொழி தொழிற்பட்ட வண்ணமிருக்கும்.
தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும் س28

தாய்மொழியின் இயல்புகள்
தாய்மொழி "இயற்கையான மொழி" (Natural language) என்றும் அழைக்கப்படும். தாய் தந்தையுடன் பேசும் மொழி, வீட்டிலே பேசும் மொழி என்றவாறு தாய்மொழியின் அடிப்படைகள் அமையும். தாய்மொழி என்ற எண்ணக்கருவை நொதுமலாக நோக்கும் ஆய்வாளர்கள் அதனை வரையறை செய்தல் கடினம் என்றவகையில் கருத்து முன்மொழிவுகளை வைத்துள்ளனர். ஒருவரது சிந்தனையிலும் எண்ணக்கருவாக்கத்திலும், உணர்ச்சி வெளிப்பாடுகளிலும், கற்பனைகளிலும் தாய்மொழியே வாழ்க்கை முழுவதும் தொடர்ந்த வண்ணமிருக்கும். கருத்து வெளிப்பாட்டுக்குத் தாய்மொழியே மிகுந்த இலகுவான கருவியாக இருக்கும்.
தாய்மொழியோடு தேவைக்குரிய இன்னொரு மொழியைப் பயன்படுத்தும் திறன்களைப் பெற்றுக்கொள்ளும் பொழுது இருமொழி யாற்றல் (Bilingualism) வளர்ச்சியடைகின்றது. உலகக் குடித்தொகையில் எழுபது சதவீதமானோர் இருமொழியாற்றல் படைத்தவர்கள் என்றே கூறப்படுகின்றது. (Trask, RL, (2004) p30) மூன்று மொழிகளுக்கு மேல் பேசும் ஆற்றலுடையோர் பன்மொழியாற்றலுள்ளோர் என அழைக்கப்படுவர்.
தாய்மொழி, பேச்சுமொழி, நியமமொழி என்ற இரு பிரிவுகளை உள்ளடக்கியிருக்கும் நிலையில் அவற்றைப் பேசுவோர் இலகுவில் இரண்டுக்கும் பழக்கமுடையோராய் இருப்பர். இரண்டுக்குமிடையே முரண்பாடுகள் தோன்றாத இணக்கப்பாடான உளநிலையை அவர்கள் அனுபவிப்பர். அடிப்படைச்சொல் ஒழுங்கமைப்பை எளிதாக விளங்கிக் கொள்ளும் மொழியாகத் தாய்மொழியே விளங்குகின்றது. தமிழ்மொழி யில் பெயர்ச்சொல், செயப்படுபொருள், வினைச்சொல் என்றவகையில் பொதுவாக வசன ஒழுங்கமைப்பு அமைகின்றது. பேச்சிலும் எழுத்திலும், ஒருங்கிணைப்பு இசைவை ஏற்படுத்திக்கொள்வதற்கு தாய்மொழியே ஒருவருக்கு வளமான மொழியாகவும், இலாவகமான மொழியாகவும் அமையும்.
கலாநிதி. சபா.ஜெயராசா -29

Page 18
தாய்மொழியின பிறிதொரு பரிமாணம் தொடர்பாடல் தேர்ச்சியைக் கொண்ட மொழியாக வளமுடன் அமைந்திருத்தலாகும். பொருத்தப்பாடுடைய மொழிப் பிரயோகங்களை முன்னெடுப்பதற்கும் தாய்மொழியே இலாவகமான மொழியாக அமைகின்றது. தாய்மொழி உருத்தாவல் (conicity) நிலையில் விசைமிக்க பண்பைக் கொண்டது. அதாவது சொல்லுக்கும் பொருளுக்குமிடையே நேரடியான இணைப்பு வலு இருத்தல் “உருத்தாவல்” என்பதால் விளக்கப்படும். சில சொற்கள் அவற்றுக்குரிய ஒலிக்கட்டமைப்பின் வாயிலாகவே பொருளுணர்ந்தது. இச்சொல் “ஒலித்தாவல்” (Onomatopoeia) சொல் எனப்படும். ஒலித்தாவல் குறித்த பண்பாட்டுடன் தொடர்புடையதாக இருக்கும். தமிழ் மரபில் காகத்தின் குரல் “காகா” எனப்படும். இதனை அடியொற்றி “காகம்” என்ற சொல் அமையப்பெற்றது. ஆனால் ஆங்கில மரபில் காகத்தின் ஒலி "Crow" எனப் புலக்காட்சி கொள்ளப்படலாயிற்று.
தாய்மொழிபுலக்காட்சி வளப்பாட்டுக்கும் கற்றல் வளப்பாட்டுக்கும் பொருத்தமான மொழியாதலை “சொல்மலர்ச்சி” (Inflection) என்ற செயற்பாட்டினால் விளக்கலாம். குறிப்பிட்ட ஒருசொல் சில சேர்மானங்களுடன் பல்வேறு வடிவங்களைப் பெறுதலை இந்த எண்ணக்கரு புலப்படுத்தும். தாய்மொழி ஒருவருடன் கூடிவாழும் மொழியாதலால் சொல் மலர்ச்சிக் கோலங்களை எளிதாக விளங்கிக் கொள்ளும் ஏற்புடைமைகள் காணப்படும். உதாரணமாக அரசு என்ற ஒருமைப் பெயர்ச்சொல்லுடன் “கள்” விகுதி சேர்க்கப்படும் பொழுது “அரசுகள்” என்ற பன்மையாகின்றது. அதனுடன் "இயல்" சேர்க்கப்படும் பொழுது "அரசியல்" என்ற அறிவியலாகின்றது. தாய்மொழி பயிற்று மொழியாகும் பொழுது விளக்கம் என்ற செயற்பாடு எளிதாகின்றது. குறைந்த உள ஆற்றலுடன் (Mental Energy) கூடுதலான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாகவுள்ளது.
சொல் மலர்ச்சி உலகின் பெரும்பாலான மொழிகளிலே காணப்பட்டாலும் எல்லாமொழிகளிலும் காணப்படுகின்றது என்று கூறமுடியாது. எடுத்துக் காட்டாக வியத்நாமிய மொழியிலே சொல்மலர்ச்சி காணப்படுதல் இல்லை.
தாய்மொழி ஒருவருக்குரிய பயிற்றுமொழி என்ற நிலையில் அனுகூலமாயிருப்பதற்குரிய பிறிதொரு காரணம் வசனங்களில் அமையப்பெறும் ஒலிப்பு வேறுபாடுகளை இலகுவில் இனங்கண்டு பொருள்கொள்ளும் வாய்ப்பு இருத்தலாகும். இது “அகத்தொனியம்” (Intonation) எனப்படும். தாய்மொழியின் அகத் தொனியம் நன்கு பழக்கத்துக்குக்குரியதாக இருத்தலினால் ஆசிரியர் தரும் தொடர்பாடல்
-30- தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

எளிதான விளக்கத்துக்கு உள்ளாகின்றது. இந்நிலையில் உளவலுவை மிச்சப்படுத்தி கருத்திலே கவன ஊன்றலை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கச்செய்யும்.
தாய்மொழி உள்ளுணர்வு (Intution) எழுகையுடன் இணைந்தது. தாய், தந்தை, குடும்ப உறுப்பினர், சகபாடிகள் என்ற மனித வாஞ்சைகளை அகத்திலே படிமமாக்கும் மொழியுடன் தொடர்புடையது. மனவளத்துடனும் உள்ளுணர்வுடனும் கலந்து நிற்கும் தாய்மொழி ஒருவருக்குரிய ஏற்புடைய மொழியாக அமைந்துள்ளது. இந்நிலையிலே தாய்மொழி தன்னிலை உணர்வுகளுடன் இணைந்த சுயபிரக்ஞை மொழியாக அமைகின்றது. மொழி பற்றிய விழிப்புணர்ச்சியை அது தூண்டிய வண்ணமிருக்கும்.
ஒருவருக்குரிய இனத்துவ அடையாளங்களையும், பண்பாட்டு அடையாளங்களையும் அவருக்குரிய தாய்மொழியே தாங்கி தாங்கி நிற்பதனால் அவரிடமிருந்து தாய்மொழியைப் பிரித்தெடுத்தல் மனித மாண்பையும், உரிமையையும் மீறும் செயலாக அமையும்.
தாய்மொழியைப் பொறுத்தவரை “மொழி இயலாமை” என்ற பேச்சுக்கே இடமில்லை. பிறமொழி ஒன்றைப் பயிற்று மொழியாக்கும் பொழுது மனத்திலமையும் கருத்துக்களுக்கு மொழிவடிவம் கொடுக்கும் பொழுது சில சமயங்களிலே இயலாமை நிலையும், இடறல் நிலைகளும் ஏற்படலாம். இந்த அவலங்கள் தாய்மொழியைப் பயிற்று மொழியாகக் கொள்ளும் பொழுது, ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. தாய்மொழி இயலுமையை (Fluency) உள்ளடக்கிய மொழியாகும்.
இருபதாம் நூற்றாண்டில் மொழியியலாளர் "தொழிற்படும் எழுத்தறிவு" (Functional Literacy) என்ற எண்ணக்கருவை முன்வைத்" தனர். அடிப்படை எழுத்தறிவுடன் எழுத்தாட்சி கொண்ட உலகில் ஒருவரைத் தொழிற்பட வைப்பதற்குரிய ஆற்றல் "தொழிற்படும் எழுத்தறிவு" என்ற எண்ணக்கருவினாற் புலப்படுத்தப்படும். குறுகிய காலத்திலே தொழிற்படும் எழுத்தறிவை இயங்கவைப்பதற்குத் தாய்மொழியே இயல்பான மொழியாகவும், ஏற்புடைய மொழியாகவும் அமைகின்றது.
தொடர்பாடலைப் பொறுத்தவரை தாய்மொழியே இயல்பான ஊடகமாக அமைகின்றது. தாய்மொழி வாயிலாக கருத்துக்களை நிரற்கோடலாக்கள் (Encoding) எளிதான செயல்முறையாகின்றது. கற்கும் வேறு மொழியொன்றில் நிரற்கோடலாக்கத்தைச் செய்யும் பொழுது கூடுதலான உளவலுவைப் பிரயோகிக்க வேண்டியிருக்கும். மொழியிய
கலாநிதி. சபா.ஜெயராசா -3 II

Page 19
லாளர் முதலாம் நிலை ஊடகமாக எழுத்தையும் கொள்வர். இவை இரண்டும் தாய்மொழியில் இலகுமிக்க செயற்பாடுகளாக அமையும்.
மொழியில் இடம்பெறும் நுண்ணிய வேறுபாடுகளை விளங்கிக் கொள்வதற்குத் தாய்மொழியே வலுவுள்ள தொடர்பாடலாகின்றது. சில சொற்கள் ஒத்தவடிவங்களாக இருக்கும். ஆனால் கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருக்கும். இவை தாழ்நிலை இணையங்கள் (Minimal Pairs) எனப்படும். எடுத்துக்காட்டாக அளி" அழி, கண்ணன் "கன்னன், பலம் -பழம், அவல் - அவள் முதலியவற்றைக் குறிப்பிடலாம். தாய்மொழி உள்ளத்தோடு ஒட்டிவாழும் மொழியாக இருப்பதனால் இந்த வேறுபாடுகளைத் தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.
தாய்மொழி தொடர்ந்து பழக்கமுறும் மொழியாக இருப்பதனால் சொற்களின் பெயர்ச்சிகளை (Movements) எளிதில் இனங்காணக் கூடியதாகவுமிருக்கும். எடுத்துக்காட்டு ஒன்றினைப் பார்ப்போமானால், "இதன் பொருள் யாது?” என்பதில் யாது வினாச்சொல்லாக அமைகின்றது. "யாதுமாகி நின்றாய் காளி” என்பதில் “யாது" என்பது "எல்லாம்” என்ற பொருளுணர்த்தி நிற்கின்றது. மொழியுடன் வாழும் பொழுதுதான் இந்தப் பொருட் பெயர்ச்சிகளை அறிந்துகொள்ள முடியும்.
தாய்மொழியுடன் "உறுபற்று" (Sentiment) என்பது கலந்திருக்கும். தாய் தந்தையர் பேசும்மொழி, உறவினர் பேசும்மொழி, அவர்களாற் கையளிக்கப்படும் நூல்கள் மற்றும் எழுத்தாக்கங்கள் என்ற அடிப்படை களிலே உறுபற்று வளர்ந்து செல்லும். இந்த உறுபற்று உளவியல் சார்ந்த மனநிறைவை வழங்குவதாகவும், கடந்த காலங்களை மீட்டெடுப்பதன் வாயிலாக உளத்திருத்தியைத் தருவதாகவும் அமையும்.
இதனால் தாய்மொழியே தன்னியல் நிறைவை நோக்கிய அசைவியத்தை முன்னெடுக்கவல்லது.
தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

உளமொழியியல்
உள்ளத்துக்கும் மொழிக்குமுள்ள தொடர்புகளை ஆராயும் அறிகை உளமொழியியல் (Psycho Linguistics) ஆகின்றது. 1950ஆம் ஆண்டைத் தொடர்ந்து இது தனித்த ஒர் ஆய்வுத்துறையாக முகிழ்த்தெழத் தொடங்கியது. அறிகை உளவியலின் ஒரு பகுதியாக மொழியியலைக் கருதி நோம்சோம்ஸ்கி என்பார் தமது ஆய்வுகளை முன்னெடுத்த வேளை உளமொழியியல் ஆய்வு புலமை வலிமையைப் பெறத் தொடங்கியதாயினும், சிக்மன்ட் பிராய்ட்டின் நனவிலி உள்ளம் பற்றிய ஆய்வுகளில் மொழியின் உளவியல் ஊடாட்டம் ஏற்கனவே ஆய்வுகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
உளப்பகுப்பு உளவியலை முன்னெடுத்த சிக்மன் பிராய்டு (18591939) நனவிலி உள்ளத்திலே புதைந்திருக்கும் உணர்வுகளும் மொழியும் மனித நடத்தைகளிலே ஆழ்ந்து செலுத்தும் செல்வாக்குகளை விரிவாக விளக்கலானார். உளப்பகுப்பு உளவியலை அடியொற்றித் தமது ஆய்வுகளை முன்னெடுத்த லக்கான் (1901-1981) நனவிலி மனத்துக்கும் மொழிக்குமுள்ள தொடர்புகளை மேலும் விரிவான ஆய்வுகளுக்கு உட்படுத்தினார். குழந்தைப் பருவத்திலிருந்தே அடுக்கப்பட்ட உந்தல்களின் களமாக நனவிலிமனம் அமைந்திருத்தலை பிராட்டு சுட்டிக் காட்டினார். கனவுகள், வாய் தவறிவிழும் சொற்கள், சிலவகையான விகடத்துணுக்குகள் முதலியவை நனவிலி மனத்தின் வெளிப்பாடுகள் என்று கொள்ளப்படுகின்றன. இலக்கியப் படைப்புக்களும் கலைவெளிப்பாடுகளும் நனவிலி மனத்தின் சொல்லாடல்களென மரபுவழி உளப்பகுப்பு உளவியல் கருதியது. லகான் நனவிலி மனத்தை நேரடியாக மொழியுடன் தொடர்புபடுத்த முயன்றார். நனவிலிஉள்ளம் மொழி போன்று அமைப்பாக்கம் பெற்றுள்ளது” என்பது லகானுடைய கருத்து.
அமுக்கப்பட்ட இச்சைகளினதும் மொழியினதும் பொருத்தமற்ற இணைப்பினால் நனவிலிமனம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது லகானுடைய முன்மொழிவு. மொழித் தொடர்பாடலில் குறிப்பானுக்கும்
கலாநிதி. சபா.ஜெயராசா

Page 20
குறிப்பீட்டுக்குமிடையே நேர்த் தொடர்புகள் இல்லையென வலியுறுத்தும் லகான் அவை இரண்டினுக்குமிடையே நனவிலி கொள்ளும் குறுக்கீட்டினை முக்கியப்படுத்துகின்றார். மனிதப் பிறப்பை இல்லாமை அல்லது குறை (LACK) என்பதுடன் தொடர்புபடுத்திக்காணும் லகான், இது மொழியுள்ளிட்ட அனைத்துவிதச் செயற்பாடுகளிலும் ஊடுருவிச் செல்வதாக விளக்குகின்றார். தன்னிலை (Self) மொழியை ஒருவர் உருவாக்கத் தொடங்கும் பொழுது நனவிலியும் உருவாக்கம்பெறத் தொடங்குகின்றது. சுருக்கிக்கொள்ள முடியாத ஒற்றை நிலைமொழிக் குறிப்பானை (Unitary Signifier) சுற்றியவாறு நனவிலி உருவாக்கம் பெறுகின்றது. மொழியின் அமைப்பானது மனிதத்தன்னிலைக்கும் நடப்பு உலகினுக்குமிடையே பிளவுகளை ஏற்படுத்தி விடுகின்றது என்றவாறு லகானுடைய உளமொழியியல் கருத்துக்கள் மேலெழுகின்றன.
உளமொழியியல் ஆய்வில் "பேச்சு இழப்பு" என்பதும் தீவிர நோக்கலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மொழியிழப்பு அல்லது பேச்சு இழப்பு அப்பாசியா (Aphasia) எனவும் அழைக்கப்படும். இது பேச்சு மறதி அல்லது மொழி மறதியை அதாவது பேச்சின் இல்லாமையைக் குறிப்பிடும். மூளையின் மொழித்திறன் பாதிப்படைவதனால் இது ஏற்படுகின்றது. பேச்சின் ஒழுங்குக்குலைவு (Disorder) இதன் இன்னொரு வெளிப்பாடாகும். மூளையின் குறிப்பிட்ட ஒரு பகுதி பாதிப்புக்கு உள்ளாவதாக போல் புறோகா என்ற பிரஞ்சு மருத்துவர் குறிப்பிட்டுள்ளார். அவரது ஆய்வுக்குப் பின்னர் மூளையின் குறிப்பிட்ட அந்தப்பகுதி "புறோகாஸ் பகுதி” என பெயரிடப்பட்டுள்ளது.
பொருத்தமற்ற பேச்சு வெளிப்பாடுகள் ஏற்படுவதற்கு மூளையின் வேறோரு பகுதியின் பாதிப்பே காரணம் என ஜேர்மனிய நரம்பியல் நிபுணர் கார்ல் வேர்னிக்கே கண்டறிந்தார். அதனைத் தொடர்ந்து மூளையின் அப்பகுதிக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. மூளையின் குறிப்பிட்ட அப்பகுதி பாதிக்கப்பட்டவர்கள் சரளமாகப் பேசுவார்கள் ஆனால் அந்தப் பேச்சு பொருத்தமற்ற பேச்சாகவும் அர்த்தமற்ற பேச்சாகவும் காணப்படும்.
இத்துறையில் மேலும் ஆய்வுகளை மேற்கொண்டவர்கள் வரிசையில் அமெரிக்க நரம்பியல் நிபுணர் நோர்மன் கெஸ் விண்ட் குறிப்பிடத்தக்கவர். மூளையிலுள்ள "ஆர்குவேற் பசிசிக்குலஸ்" (Arcuate Fasciculus) என்ற பகுதி பாதிப்புக்கு உள்ளாகும் போது இன்னொரு வகையான பேச்சு இழப்பு தோன்றுவதாக இவர் விளக்கியுள்ளார். இது "கடத்தற் பேச்சிழப்பு (Conduction Aphasia) எனப்படும்.
-34- தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

அப்பாசியா என்பது வெறுமனே பேச்சு இழப்பு மட்டுமல்ல, பேச்சைப் புலக்காட்சி கொள்ளலில் ஏற்படும் தடுமாற்றமும் இழப்பும் என்று கொள்ளப்படுகின்றது. அண்மைக் காலமாக மூளையின் இயல்புகளை அறிய ஊடுகாண் பொறிகள் (Scanners) பயன்படுத்தப்பட்டு ஆய்வுகள் மேலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
உளமொழியியல் ஆய்வில் “மொழி இயல்பூக்கம்" (Language linStinct) என்ற எண்ணக்கருவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மொழியைத் திரட்டிக்கொள்ளும் முனைப்பு ஒவ்வொருவரிடத்தும் இயல்பாகவே காணப்படுகின்றது என இந்த எண்ணக்கருவை வலியுறுத்துவோர் குறிப்பிடுகின்றனர். செவிப்புலனும் கட்புலனும், மூளையின் தொழிற்பாடுகளும் இயல்பாகவே மொழியை உள்வாங்கிக் கொள்ளும் மரபு அணுநிலைப்பட்ட ஏற்புடைமைகளைக் கொண்டுள்ளன என்று விளக்கப்படுகின்றது. மொழியே இல்லாத சூழலிலே வாழும் குழந்தைகள் தமக்கென ஒரு மொழியை உருவாக்கிக் கொள்வர் என்றும் மொழி இயல்பூக்கத்தை வலியுறுத்துவோர் குறிப்பிட்டுள்ளனர். மனிதருக்கு இயல்பாகக் கிடைக்கப்பெற்ற மேற்கூறிய உயிரியல் நிலைப்பட்ட கொடையை அடிப்படையாகக் கொண்டு கனேடிய உளமொழியியலாளராகிய ஸப்ரிவெண் பினர்கர் என்பவர் 1990 ஆம் ஆண்டில் “மொழிஇயல்பூக்கம்" என்ற மேற்கூறிய எண்ணக்கருவை உருவாக்கினார்.
ஒருவர் மொழியை எவ்வாறு திரட்டிக்கொள்கின்றார் என்பதை நடத்தைவாதக் கண்ணோட்டத்தில் ஸ்கின்னர் விளக்கியதுடன் "சொல் சார் நடத்தை” என்ற நூலை 1957 ஆம் ஆண்டில் அவர் வெளியிட்டார். இதனை அறிகைவாத உளமொழியியலாளராகிய சோம்ஸ்கி முற்றாக நிராகரித்து தமது ஆய்வுகளை வெளியிட்டார். மொழிக்கற்றல் என்பது தூண்டி - துலங்கல் என்ற பொறிமுறையான வகையில் இடம்பெறுவதல்ல. மூளையின் அறிகை அமைப்பின் செயற்பாடுகளையும் முக்கியத்துவத்தையும் நடத்தை உளவியலாளர் கருத்திற் கொள்ளாமை அடிப்படையான குறைபாடாகக் குறிப்பிடத்தக்கது.
1973ஆம் ஆண்டில் ரோஜர் பிரவுணர் என்பார் வெளியிட்ட “ஒரு முதலாம் மொழி” என்ற நூலில் குழந்தைகளின் மொழித்திரட்டல் படிமுறைகள் தெளிவாக வெளியிடப்பட்டுள்ளன. முதலில் குழந்தை" களிடத்தே இடம்பெறுவது "கூ” ஒலி (Cooing) அதனைத் தொடர்ந்து முண்மழலை (Babbing)யும் தொடர்ந்து ஒரு சொல் மழலையும், பின்னர் இரு சொற்பேச்சும் என்றவாறு மொழி வளர்ச்சி இடம்பெறத் தொடங்கும். இதனைத் தொடர்ந்து நிகழும் மொழி வளர்ச்சியைத்
கலாநிதி. சபா.ஜெயராசா -35

Page 21
திட்டவட்டமான படிநிலைக் கட்டமைப்புக்குள் விளக்குதல் எளிதன்று. தொடர்ந்து நிகழும் மொழி வளர்ச்சியில் வினாவுதலும், மறுதலித்தலும் முக்கியமான உளவியல் நிகழ்ச்சிகளாகக் கருதப்படும். சிறுவயதிலே தாய்மொழியைக் குழந்தைகள் திரட்டிக் கொள்ளல் தொடர்பான திட்டவட்டமான விதிகளும் கோட்பாடுகளும் இதுவரை உருவாக்கப்படாதிருத்தல் முக்கியமான ஒரு தோற்றப்பாடாகவுள்ளது.
இந்நிலையில் சோம்ஸ்கி அவர்கள் மனிதரின் பிறப்புரிமையோடு கூடிய உள்ளார்ந்த திறன் பற்றிய கருதுகோளை (InnateneSSHypothesis) வெளியிட்டார். மொழியைத் திரட்டிக்கொள்ளும் வழிமை (Language acquisition Device) மனித மூளையிலே பிறப்புடன் கூடிய உருவாக்கல் நிகழ்ச்சியென அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை Lad என்ற சுருக்கக் குறியீட்டால் அவர் விளக்கியுள்ளார். இந்த முன்மொழிவும் தீவிர விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஒரு புதிய சொல்லின் பொருளைக் குழந்தையால் விளங்க முடியாதிருக்கும் நிலை மொழித் திரட்டல் தொடர்பான தருக்கப் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் மொழியைத் திரட்டிக் கொள்ளல் என்பது செயலூக்கம் குன்றிய ஒரு செயற்பாடு அன்று. அது செயலூக்கம் மிக்க (Active) செயற்பாடு என்பதை உளமொழியியலாளர் வலியுறுத்துகின்றனர். சிறார் செயலூக்கமுடன் தமக்குரிய மொழியைக் கட்டுமை செய்கின்றனர். தமக்குக் கிடைக்கப்பெறும் முற்கோடல்களைக் (Clues) கொண்டு தமக்கே உரிய இலக்கண விதிகளை உருவாக்கி மொழியைத் திரட்டிக் கொள்ளும் செயல் வளர்ந்து செல்லும் நிலையைத் தொடர்ந்து பொதுவான இலக்கண அமைதி கொள்ளலும் செழுமைப்படுத்தலும் முன்னேற்றம் பெறத் தொடங்குகின்றன.
அறிகை உளவியலாளர் மொழிவிருத்தியை மூளையின் அறிகை அமைப்போடும், எண்ணக்கருவாக்கத்தோடும், புலக்காட்சி கொள்ளலோடும் தொடர்புபடுத்தி விளக்குகின்றனர். மனிதர் உலகைப் புலக்காட்சி கொள்ளலும், சிக்கலான புறச்சூழலை வகைப்படுத்தித் தெளிவாக்கிக் கொள்ளலும், எண்ணக்கருவாக்கம் செய்து கொள்ளலும் என்ற செயற்பாடுகள் மொழியுடன் கொண்டுள்ள தொடர்பையும், உறவையும் அறிகை உளவியலாளர் விரிவான ஆய்வுகளுக்கு உட்படுத்தியுள்ளனர். அறிகை உளவியலை அடியொற்றி அறிகை மொழியியல்", "அறிகை இலக்கணம்” முதலாம் ஆய்வுத்துறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
அறிகை உளவியலின் வளர்ச்சி "அறிகை விஞ்ஞானம்" என்ற துறைக்கு இட்டுச்சென்றுள்ளது. மனித மூளையின் அமைப்பும்
-36- தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

தொழிற்பாடும் அறிகை விஞ்ஞானத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சூழலோடு தழுவிக்கொள்ளும்திறன், புதிய தகவல்களைத் தன்னமைவாக்கிக் கொள்ளும்திறன் முதலியவை அறிகை விஞ்ஞானத்தின் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. பல நுண்ணிய சிறப்புப் பண்புகளைப் புரியக்கூடியதான கூறுகளையும், அவற்றினூடே நிகழும் இடைவினைகளையும் கொண்ட செயற்றொகுதியாக விளங்கும் மூளையின் தொழிற்பாடுகள் கணனியின் தொழிற்பாடுகளுக்கு ஒப்புமை செய்யப்பட்டுள்ளன. தகவல்களின் உள்ளீடு, மூளையிலே உள்ளீடு செய்யப்பட்ட தகவல்களை நிரற்படுத்தி ஒழுங்கமைத்தல், நினைவிற் பதித்தல், வேண்டியபோது மீட்டெடுத்தல் முதலிய செயற்பாடுகளில் மனித மூளையும் கணினியும் ஒப்புமை கொள்கின்றன.
இதன் தொடர்ச்சியாக உளமொழியியல் ஆய்வாளர்கள் மூளையில் நிகழும் மொழிச்செழுமைச் செயல்முறை (Language Processing) யையும் ஆய்வுகளுக்கு உட்படுத்தியுள்ளனர். மொழியைக் கிரகித்தல், மொழியை ஆற்றுகைக்கு ஏற்றவாறு உருவாக்கிக்கொள்ளல், ஆகியவை மூளையில் நிகழும் முக்கியமான மொழிச் செழுமைச் செயல் முறைகளாகும். மொழியைப் பேசும்பொழுதும் பிறர் பேசுவதை விளங்கிக்கொள்ளும் போதும், தகவல்களைக் கிரகிக்கும் பொழுதும் மூளையில் நிகழும் விரிவானதும் சிக்கல் பொருந்தியதுமான தொழிற்பாடு மொழிச்செழுமைச் செயல்முறை என்று குறிப்பிடப்படுகின்றது. இந்தச் செயல்முறையிலே தடங்கலும் பாதிப்புக்களும் ஏற்படும்பொழுது மொழிவழுக்" கள் ஏற்படுகின்றன. மொழிச்செழுமைச் செயல்முறையை வளம்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை ஆசிரியர் மேற்கொள்ளாதவிடத்து மொழிவழுக்கள் ஏற்படும் சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும்.
மொழியின் கட்டமைப்புக்கும், உலகைப் புலக்காட்சி கொள்ளலுக்குமிடையே நேரடியான இணைப்புக்கள் உண்டு. உலகை விளங்கி அலகீடு செய்வதற்குரிய கருவியாக மொழியே அமைந்துள்ளது. மொழிக்கட்டமைப்பிலே வேறுபாடுகள் காணப்படுமிடத்து உலகைப் புலக்காட்சி கொள்ளலிலும் விளங்கிக்கொள்ளலிலும் வேறுபாடுகள் ஏற்படுகின்றன. உதாரணமாக வண்ணங்கள் (நிறங்கள்) நூற்றுக்கணக்கான வகைப்பட்டவை. அவற்றுக்கிடையே நுண்ணிதான செறிவு வேறுபாடுகள் காணப்படுகின்றன. இவ்வாறாக நுண்ணிதாக அமைந்” துள்ள நூற்றுக்கணக்கான நிறங்களைக் குறிப்பிடுவதற்கான சொற்கள் உருவாக்கப்படவில்லை.
இதனை மேலும் விளக்குவதற்கு இன்னோர் எடுத்துக்காட்டையும் குறிப்பிடலாம். மனித மனவெழுச்சிகளுள் முக்கியமானதொன்றாக
கலாநிதி. சபா.ஜெயராசா -37

Page 22
"பயம்” விளங்குகின்றது. உளவியலடிப்படையில் பகுப்பாய்வு செய்யும் பொழுது, பயத்தில் எத்தனையோ வகைகள் இருத்தல் உணரப்படுகின்ற" தாயினும் அவை ஒவ்வொன்றையும் விளக்குவதற்குரிய தனித்தனிச் சொற்கள் உருவாக்கப்படவில்லை. இருப்பில் உள்ள "பயம்" என்ற சொல்லே எல்லாப் பயங்களையும் குறிப்பிடுவதற்கு எடுத்தாளப்படுகின்றது. இதை வேறுவிதமாகக் கூறுவதானால் மட்டுப்பாடு கொண்ட ஒரே சொல்லின் வழியாக அனைத்துப் பயங்களையும் புலக்காட்சி கொள்ளும் மட்டுப்பாடான நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
மனவெழுச்சிகளுக்கும் மொழி வெளியீடுகளுக்குமுள்ள தொடர்பு களும் உளமொழியியலிலே ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பிட்ட மனவெழுச்சிகளுக்கும் சொற்களைப் பிரயோகிப்பதற்குமுரிய தொடர்புகள் ஆராயப்படுவதுடன், உச்சரிப்பு, ஒலிஅழுத்தங்கள் முதலாம் இணைப்புக்களும் உளவியலாளரால் நோக்கப்படுகின்றன.
மார்க்சியக் கண்ணோட்டத்திலும் உளமொழியியல் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சமூகக்கட்டமைப்பு, சமூக இடைவினைகள் ஒருவரின் உள்ளார்ந்த பேச்சாக அமைதலும், சிந்தனைச் செயல்முறை" யில் அது தாக்கம் விளைவித்தலும் ரூசிய உளவியல் விஞ்ஞானியாகிய வைகோட்சியினால் (Vygotsky, 1978) விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
கற்றல் கற்பித்தற் செயற்பாடுகள் மொழியூடகத்தின் வழியாக முன்னெடுக்கப்படுவதனால், உளமொழியியல் பற்றிய அறிவும் விளக்கமும் வினைத்திறன் மிக்க ஆசிரியத்துவத்துக்குரிய இன்றியமை" யாத தேவைகளாகின்றன. ஆனால் எமது சூழலில் உளமொழியியல் தொடர்பான கருத்து வினைப்பாடுகள் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன. உளமொழியியல் பற்றிய அடிப்படை யான புலக்காட்சி, ஆசிரியர்களுக்கு மட்டுமன்றி பெற்றோர்களும் வேண்டப்படுகின்றது. மனித உறவுகளைப் புரிந்து கொள்வதற்கும் உளமொழியியல் வழியமைக்கின்றது.
-38- தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

சமூக மொழியியல்
சமூகத்துக்கும் மொழிக்குமுள்ள தொடர்புகள் சமூக மொழியியலில் (Socio Linguistics) ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றது. சுவிஸ் நாட்டு மொழியியலாளராகிய சசூர் (Saussure) இத்துறையிலே கூடுதலான புலமை நடவடிக்கைகளை மேற்கொண்டு விரிவான ஆய்வுகளுக்கு வழிவகுத்தார். இவரைத் தொடர்ந்து யுறில் வெயின்றிச், சார்ல்ஸ் பேர்குசன், ஜோசுவா பிஸ்மன், வில்லியம் லபோவ் முதலானோர் சமூக மொழியியல் துறையில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
சமூக இயல்புக்கு ஏற்றவாறு மொழியின் இயல்புகள் அமைந்” திருத்தல், சமூக நிரலமைப்புக்கு ஏற்றவாறு மொழிப்பண்புகள் மாறுபடல், சமூகக் குழுக்களின் தன்மைகளுக்கு ஏற்றவாறு மொழியின் இயல்புகள் வேறுபடல், தொழில் முறைமைகளுக்கு ஏற்றவாறு மொழியாற்றுகை மாறுபடல், வயது வேறுபாடு, மற்றும் பால்நிலை வேறுபாடு என்பவற்றுக்கு ஏற்றவாறு மொழிக்கோலங்கள் வேறுபடல் முதலானவை சமூகமொழியியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படுகின்றன.
மொழிவளர்ச்சியினதும் மொழிமாற்றத்தினதும் சமூக சூழமைவுகள் மொழியியலாளரின் கவனத்தை மேலும் ஈர்க்கத் தொடங்கியுள்ளன. எத்தகைய சமூக விசைகள் மொழி வளர்ச்சியிலும் மொழிமாற்றத்திலும் பங்களிப்புச் செய்கின்றன என்பதும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றது. இந்நிலையில் "மொழியின் சமூக வரலாறு" என்பது முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளது.
சமூக மொழியியலுக்குரிய அறிகை விசையை மார்க்சியம் வழங்கியுள்ளது. உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியை விளக்கிய முன்னோடியாக சார்ல்ஸ் டார்வின் விளங்குகின்றார், அவ்வாறே சமூகத்தின் பரிணாம வளர்ச்சியையும், அவ்வளர்ச்சிக்குப் பின்புலமாக அமையும் இயங்கியல் தருக்கத்தையும் கார்ல்மார்க்ஸ் விளக்கியுள்ளார். சமூக மொழியியலை விளங்கிக்கொள்வதற்கும், விளக்குவதற்கும் மார்க்சிய இயங்கியல் வலுவான தருக்கமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கலாநிதி. சபா.ஜெயராசா -39

Page 23
சமூக நிரலமைப்பில் மேலோங்கியுள்ளோர் தமது சமூக நிலையை மீள வலியுறுத்தலுக்கு உள்ளாக்கும் வரன்முறையான (Formal) மொழி மீது ஒப்பீட்டளவிலே கூடிய கவனம் செலுத்துதல் உண்டு. ஆனால் கூலி உழைப்பவர்கள் மத்தியில் வரன்முறை சாராத நெகிழ்மொழி (Slang) ஒப்பீட்டளவிலே கூடுதலான பயன்பாடடில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. மேலும் உயர்வகுப்பினருக்குரிய மொழிப் பயன்பாட்டில் ஆட்சி அதிகாரத்திலுள்ள மொழியோ அல்லது ஆங்கிலமோ மேலோங்கி நிற்கும். ஆனால் கூலிஉழைப்பவர் மத்தியில் அவர்களின் தாய்மொழிப் பயன்பாடே மேலோங்கி நிற்கும். தாய்மொழியும், நெகிழ்மொழியும்
அவர்களது வர்க்க அடையாளங்களாக நிலைத்து நிற்கும்.
நெகிழ்மொழியென்பது மொழியின் “நோயுற்ற" வடிவமன்று. அதனை மொழிக்குவளம் சேர்க்கும் வடிவமாகக் கொள்ளுதலே பொருத்தமானது. இலக்கிய ஆக்கங்களுக்கும், நடப்பியலைப் புலப்படுத்துவதற்கும் நெகிழ்மொழியின் வகிபங்கு மிகவும் முக்கியமானது. மொழியின் வலுச்செறிவைக் (Vitality) கண்டறிவதற்குரிய குறியீடாகவும் நெகிழ்மொழி அமைந்துள்ளது.
இனக்குழும அடையாளத்தைக் கண்டறிவதற்கும் மொழியே வலுவான சாதனமாக அமைகின்றது. குறித்த மொழித்தாக்குதலுக்கு உள்ளாகும் பொழுது, அது அந்த மொழியைப் பேசும் இனக்குழுமத்தின் மீது விடுக்கப்படும் தாக்குதலாகக் கருதப்படுமளவுக்கு மொழியும் இனக்குழும அடையாளமும் ஒண்றிணைந்துள்ளன. இந்நிலையில் மொழி வெறுமனே தொடர்புச்சாதனம் என்ற நிலையையும் கடந்த ஆழ்ந்த சுவடுகளைக் கொண்டிருத்தல் குறிப்பிடத்தக்கது. அந்நிலையில் குறித்த இனக்குழுமத்தினர் தமது மொழி பழைமையானதென்றும் அழகுமிக்கதென்றும், மேலானது என்றும் கருதுதலை வெறும் பாமர (Folk) அணுகுமுறை என்று சுருக்கியோ, குறுக்கியோ கூறிவிட முடியாது.
மொழியின் தொழிற்பாட்டுக்கும் குறித்த மொழியைப் பேசும் சமூகத்தின் தொழிற்பாட்டுக்குமிடையே நேரடியான இணைப்பு உண்டு. இந்நிலையில் மொழி வெறுமனே தொடர்பு ஊடகம் என்ற நிலையையும் கடந்து ஆளுமை செலுத்துகின்றது. இந்நிலையில் மொழியின் தொழிற்பாடுகள் பின்வருமாறு விரிவடைகின்றன.
1. மரபுகளைப் பாதுகாத்தலும், கையளித்தலும். 2. சமூக அடையாளங்களைப் பாதுகாத்தலும் கையளித்தலும்.
3. தகவல்களைப் பாதுகாத்தலும் கையளித்தலும்.
-40- தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

4. சமூகத் தொழிற்பாடுகளுக்கும் இசைவாக்கத்துக்குமான கருவியாக
இயங்குதல்.
5. குறித்த இனக்குழுமத்தின் அங்கத்துவத்தைப் புலப்படுத்துதல். 6. சமூகம் பற்றியதும், சூழல் பற்றியதும், உலகம் பற்றியதுமான
உளக்கட்டுமையை (Mental Construct) ஏற்படுத்துதல்.
7. இடைவினைகளால் உருவாக்கம் பெறும் மனவெழுச்சிகளுக்கு
வெளிப்பாடுகளுக்கு வடிவம் கொடுத்தல். 8. தனிமனிதரைச் சமூக மனிதராக நிலைநிறுத்துதற்குத் துணை செய்தல். 9. சமூகச் செயற்பாடுகளைத் தூண்டுதலும் தணித்தலும். 10. தமக்கும், பிறர்க்கும் மகிழ்ச்சியூட்டிக் கொள்ளல்.
சமூக மொழியியலின் சமகால வளர்ச்சியில் திறனாய்வுக் கருத்து aflapart 71 //TA (31 y Leyl 74 viruvay" (Critical Discourse Analysis) அண்மைக்காலமாக வளர்ச்சிபெறத் தொடங்கியுள்ளது. நூலியத்தை (Text) அதன் மரபு வழிவந்த மொழிக்கட்டமைப்பை அடியொற்றி ஆராயாது, சமூகச் சூழமைவை அடிப்படையாகக் கொண்டு ஆராய்தலை இது விளக்குகின்றது. எத்தகைய சமூகச் சூழமைவிலே குறிப்பிட்ட நூலியம் ஆக்கம் பெற்றுள்ளது என்பதை ஆராயும் பொழுது விரிந்த புலக்காட்சி மேலெழுகின்றது. குறிப்பிட்ட நூலியம் எவ்வாறு தோற்றம் பெற்றது. எந்த இலக்குமாந்தரை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றது, நூலியத்தை ஆக்கியோரது இலக்குகள் எந்த அளவில் எட்டப்பட்டன. குறிப்பிட்ட நூலியத்திலே மறைந்து கிடக்கும் நிகழ்ச்சித் திட்டம் யாது என்றவாறு இந்த ஆய்வுமுறை சமூகத்தில் நூலியத்தின் பங்கினை முக்கியத்துவப்படுத்தியுள்ளது.
சமூக நிரலமைப்பின் தாழ்மட்டங்களில் வாழ்வோரைக் கல்வி நிலையில் அன்னியப்படுத்துவதற்கும், மொழி என்ற கருவியைப் பயன்படுத்தி அவர்களை நிராகரிப்புக்கு உள்ளாக்குவதற்குமென "பற்றாக்குறைக் கருதுகோள்" (Deficit Hypothesis) உருவாக்கப்பட்" டிருத்தலை இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது. அதாவது மொழியியல் ஆய்வுகள் ஒடுக்குமுறைக்கு எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைக் கண்டறிவதற்கு இந்தக் கருதுகோள் குறிக்காட்டியாகவுள்ளது. இக் கருதுகோளின் பொருள் என்னவென்றால், உழைப்பாளர் வர்க்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிக்கலான கல்விக்கருத்துக்களை வெளியிடுவதற்குரிய இலக்கணம் மற்றும் சொற்களஞ்சியங்களைப் போதுமான அளவிலே கொண்டிருக்கவில்லை என்பதாகும். இதனால்
கலாநிதி. சபா.ஜெயராசா -41

Page 24
தொழிலாளர் வகுப்பு மாணவர்கள் கல்விநிலையங்களிலே பின்னடைவுகளை எதிர்கொள்ளல் தவிர்க்க முடியாதுள்ளது என்றும் விளக்கப்படு
கின்றது.
கல்விமுறையையும் கல்விமொழியையும் மேட்டுக்குடியினர் தமக்குச் சார்பாகக் கட்டமைப்புச் செய்துவிட்டு தொழிலாளர் வகுப்புக் குழந்தைகள் அதற்குப் பொருந்துகின்றனர் இல்லை என்று கூறுதல் சமூக நீதியாகாது. இதன் தொடர்ச்சியாக தொழிலாளர் வகுப்பினரது பேச்சுமொழி தாழ்ந்ததென்றும், வழுக்கள் நிரம்பியதென்றும் முற்றிலும் தவறான கருத்தேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
சமூக நிரலமைப்புக்கும் மொழியின் பெளவியப்பாட்டுக்குமுரிய (Politeness) தொடர்புகள் பற்றியும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சமூக நிரலமைப்பில் மேல்நிலையில் உள்ளோர் தம்மிலும் தாழ்ந்தோர் தம்மிடம் பேசும்பொழுது பெளவியப்பாட்டைப் பொதுவாக எதிர்பார்க்கின்றனர். பெளவியப்பாட்டுக்குரிய விதிகள் பண்பாட்டு வேறுபாடுகளைக் கொண்டவை. சொற்களைத் தெரிவு செய்தல், உச்சரிப்புமுறைமை, பொருள் குறிப்பிடும் முறைமை, போன்ற பலநிலைகளிலே பெளவியப்பாடு வெளிப்படும். ஆங்கில மொழியில் பெளவியப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு "Please" என்ற தயவுச்சொல் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது. தமிழ் மொழியில் பெளவியப்பாட்டைப் புலப்படுத்துவதற்கு "ஓ" என்ற பின்னொட்டுப் பயன்படுத்தப் படுதல் உண்டு. ஓர் எடுத்துக்காட்டு, செய்யுங்கோ, பாருங்கோ, கேளுங்கோ என்பவை சில எடுத்துக்காட்டுகள் - வடமராட்சிக் கிராமங்களில் "என்ன” என்ற வினா பெளவியமாக்கப்படும்போது “என்னங்கோ” என எடுத்தாளப்படுகின்றது.
பெளவிய வெளிப்பாட்டின் இன்னொரு வகை பேசுபவர் தம்மைத் தாழ்த்தி உரைத்தலாகும். தமது அறிவை தமது அந்தஸ்த்தை, தமது உடற்பலத்தைக் கூடத்தாழ்த்திக் கூறல் வாயிலாகப் பெளவியம் வெளிப்படுத்தப்படுகின்றது.
சமூகக் குழுவினருடைய இலட்சியங்களும், நடத்தைகளும் மொழியுடன் நேரடியான தொடர்புகள் கொண்டவை. சுரண்டலுக்கு உட்படுவோர் சுரண்டுவோரைப் புகழ்வதுபோல் இகழும் மொழியைப் பயன்படுத்துதல் உண்டு. எடுத்துக்காட்டாக முதலாளியை, "மூனா” என்ற சொல்லால் அழைத்தலுண்டு. மூனா என்பதை “முட்டாள்" என்றும் அவர்கள் மறைமுகமாகக் குறிப்பிடுவர்.
- 42- தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

குறிப்பிட்ட சமூக நிரலமைப்பில் வாழ்வோரிடத்து குறிப்பிட்ட சில சொற்கள் கூடுதலாகப் பயன்படுத்தப்படுதலையும் சமூகமொழியில் ஆய்வாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். சொற்களின் மீடிறன் (Frequency) அளவீடுகளால் இந்த நடப்பியல் வெளிப்படுத்தப்படுகின்றது.
காலனித்துவ ஆட்சியிலும், சமகாலத்துப் பின்னைய முதலாளித்" துவத்தின் தொடர்ச்சியிலும், மொழியும் அதிகாரமும் ஒன்றிணைக்கப்பட்டிருந்தன. மொழியும் மொழியால் உருவாக்கப்படும் எழுத்தாக்கங்களும் எவ்வாறு அதிகாரத்தின் கருவிகளாகவும், அவைகளே அதிகாரமாகவும் மேலெழுந்து நின்றமையை மிசேல்பூக்கோ தமது ஆய்வுகளின் வழியாக வெளிக்கொண்டு வந்துள்ளனர்.
சமூக மொழியியல் பற்றிய அறிவு ஆசிரியர்களுக்கு இன்றியமையாதது. சமூக அடித்தளத்து மாணவர்களின் அறிகை நிலைகளைப் புரிந்து கொள்வதற்கும், அவர்களாற் புரிந்துகொள்ளக் கூடியவாறு கற்பித்தலை ஒழுங்கமைப்பதற்கும் சமூக அடிநிலை மாந்தரின் மொழிக்கோலங்களை அறிந்து கற்பித்தலிலே ஆசிரியர்கள் பயன்படுத்த வேண்டியுள்ளது. அவர்களது மொழி தாழ்ந்ததென்றோ, வழுக்கள் நிரம்பியதென்றோ ஆசிரியர் கருதலாகாது. அவர்களது மொழியின் ஆற்றல்களை அறிந்து அவற்றைக் கற்பித்தலிலே பயன்படுத்துதல் வேண்டும்.
இடைவிலகல் மற்றும் தாழ் அடைவுகளைப் பெறுதல் முதலிய செயற்பாடுகள் அடிநிலை மாந்தர்களது சிறார்களிடத்து மிகையாகக் காணப்படுகின்றன. கற்பித்தல் மொழியில் அன்னியப்பாடு காணப்படுதலும் இதற்குரிய காரணிகளுள் ஒன்றாகும். அதாவது சிறாருடன் இயைபு கொண்ட தாய்மொழிக்கும், அவர்களுக்கு வழங்கப்படும் கற்பித்தல் மொழிக்குமிடையே இசைவுப் பிறழ்வு காணப்படுமாயின் கற்றலிலே பின்னடைவுகள் எதிர்நோக்கப்படும்.
கலாநிதி. சபா.ஜெயராசா -43

Page 25
மொழி கற்பித்தலில் சீர்மிய நுட்பங்களைப் பயன்படுத்துதல்
சீர்மிய நுட்பங்களைக் கற்பித்தலிலே பயன்படுத்தும் பொழுது வினைத்திறன்மிக்க கற்றல் விளைவுகள் கண்டறியப்பட்டுள்ளன. சிக்காகோவிலுள்ள லொயோலா பல்கலைக்கழகத்து உளவியற் பேராசிரியர் சார்ல்ஸ் எ.கரன் அவர்கள் இந்த நுட்பத்தை மொழி கற்பித்தலிலே பயன்படுத்திப் பயனுள்ள விளைவுகளைக் கண்டறிந்தார். தமது நுட்பவியலுக்கு அவர் "சமுதாய மொழி கற்றல்" (Community Language Learning (CLL)-) 6 TGðigpı GuuLurf "LT iii.
சீர்மியத்திலே பல வகையான நுட்பவியல்கள் இருந்தாலும் இவர் கார்ல் ரெஜர்ஸ் அவர்களின் நுட்பவியலையே தெரிந்தெடுத்துப் பயன்படுத்தலானார். சீர்மியர் சீர்மிய நாடியை ஒத்துணர்வுடன் விளங்கிக் கொள்ளல் (Empathetic Understanding) இங்கே முதற்கண் முன்னெடுக்கப்படுகின்றது. ஆசிரியர் சீர்மியராகவும் மாணவர் சீர்மியநாடியாகவும் தொழிற்பட்டு மொழியைக் கற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். ஆசிரியர் - மாணவர் என்ற பாரம்பரியமான தொடர்புகளில் இருந்து விடுபட்டு "சீர்மிய நாடி" என்ற புதிய தொடர்பும் இசைவும் மாணவரால் மேற்கொள்ளப்படும். சீர்மியச் செயற்பாட்டுக்கும் இங்கு மேற்கொள்ளப்படும் கற்பித்தலுக்குமிடையேயுள்ள ஒப்புகைகள் வருமாறு. 1. சீர்மியரும் சீர்மிய நாடியும் சீர்மியத்துக்கு மனமுவந்து இணக்கமுறுவர் -> வகுப்பறையில் அறிவு பெற்றவரும் கற்பவரும் மொழிகற்பதற்கு மனமுவந்து இணங்கிக் கொள்வர். 2. சீர்மியநாடி மனவெழுச்சி கலந்த மொழியில் தமது பிரச்சினைகளை வெளியிடுவர். -> கற்பவர் அறிவு பெற்றவருக்கு கற்றல் தொடர்பான தனது செய்தியை உணர்ச்சி கலந்த நிலையில் அளிக்கை செய்வார்.
-44- தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

3. சீர்மியர் ஆழ்ந்து செவிமடுப்பார் -> அறிவு பெற்றவர்கள் அறிவு
தேடுவோர் கூறுபவற்றை ஆழ்ந்து செவிமடுப்பர்.
4. சீர்மியர் சீர்மியநாடியின் செய்திகளை அவரால் அறிகைப்படுத்தப்படக் கூடிய மொழியில் மீளவுரைப்பர் -> அறிவு பெற்றோர்அறிவு தேடுவோரின் கருத்துக்களை அவர்களுக்குரிய மொழியிலே மீளளிக்கை செய்வர்.
5. சீர்மியநாடி சீர்மியர் வழங்கிய செய்திகளின் சரியமைவை (Accuracy) மதிப்பீடு செய்வர் -> அறிவுதேடுவோர் அறிவுபெற்றோர் வழங்கிய செய்திகளைத் தமது மொழியில் மீளவுரைப்பர்.
6. சீர்மிய நிகழ்ச்சியின் இடைவினைகள் மீது தெறித்தலை மேற்கொள்வர் -> மொழிகற்றல் வகுப்பில் நிகழ்ந்த கருத்துப் பரிமாற்றங்களையும் செய்திகளையும் கற்போர் தெறித்துக் காட்டுவர். இக்கற்பித்தல் முறையில் மனவெழுச்சியும் உணர்ச்சியும் கலந்த நிலையில் மாணவர்கள் "முழுமையான” காட்சிக்கு உட்படுத்தப்படுவதுடன் அவர்களின் மொழித்திறன்களும் நடத்தைத்திறன்களும் முழுமையாக நோக்கப்படுகின்றன.
இந்த முறையியல் இரண்டாம்மொழி கற்பித்தலுக்கும் பயன்படுத்தப்படுகின்றது. இந்த நுட்பத்தை மக்கி என்பார் மொழியை "மாற்றிப் பொருத்துதல்" (Alternation) என்ற எண்ணக்கருவால் அழைப்பார். குறிப்பிட்ட முறையியலில் கற்கும் பாடம் முதலிலே தாய்மொழியில் நிகழ்த்தப்படும் அதனைத் தொடர்ந்து இரண்டாம் மொழியில் வழங்கப்படும். இதனால் இரண்டாம்மொழியின் கருத்து எளிதில் விளக்கத்துக்கு உள்ளாக்கப்படுவதுடன் தாய்மொழியை மற்ற மொழியுடன் மாற்றிப் பொருத்தக்கூடியதாகவுமிருக்கும் மேற்கூறியவை சீர்மிய அடிப்படைகளில் மேற்கொள்ளப்படும்.
கரனுடைய மாணவராகிய லா போர்ஜ் (La Forge,1983) என்பார் இத்துறையில் விரிவான ஆய்வுகளை மேலும் மேற்கொண்டு, "சமூகச் G&Lab(p60puits GLDITlf" at airp (Language as Social Process) 6T6ip கோட்பாட்டை முன்வைத்தார். “தொடர்பாடல் நிலைப்பட்ட மொழி” என்பதிலும் இது வேறுபட்டது. மரபுவழித் தொடர்பியலிலே கூறப்பட்ட “செய்தி வழங்குனர் - செய்தி பெறுனர்” என்ற மாதிரிகையை லாபோர்ஜ் நிராகரிக்கின்றார். தொடர்பாடல் என்பது வெறுமனே செய்தி கடத்தல் என்பதிலிருந்து மேம்பாடு கொண்டதென அவர் விளக்குகின்றார். செய்தியை வழங்குவோர் ஒரே நேரத்திலே பொருளாகவும், பொருட்
கலாநிதி சபா.ஜெயராசா -45

Page 26
குறிப்பீடாகவும் அமைதலை அவர் சுட்டிக்காட்டுகின்றார். தொடர்பாடலில் பின்னூட்டலின் முக்கியத்துவத்தை உள்ளடக்கிய செயற்பாட்டை "சமூகச் செயல் முறையாகமொழி” என்ற கோட்பாட்டிலே அவர் விபரிக்கின்றார்.
சமூகச் செயல்முறையாக மொழி என்பது பின்வரும் ஆறுபண்புக் கூறுகளைக் கொண்டது.
1. அது மனிதரை முழுமையாக உள்ளடக்கிய செயல்முறை. 2. அது கல்விச் செயல்முறையாகவும் அமைகின்றது.
3. ஆளிடைத் தொடர்புகள் கொண்ட செயல்முறையாக விளங்கு"
கின்றது.
4. மேம்பாடு அல்லது விருத்தி கொண்ட செயல்முறையாக இடம்
பெறுகின்றது.
5. தொடர்பாடல் செயல்முறையை உள்ளடக்கியவாறும் அமைகின்றது. 6. அது ஒரு பண்பாட்டுச் செயல்முறையாகவும் இடம் பெறுகின்றது.
மேற்கூறிய பண்புக்கூறுகளை உள்ளடக்கியதாக சமுதாயமொழி கற்பித்தல் நுட்பங்கள் இடம்பெறுகின்றன. “மொழியே மக்கள், மொழியே மக்களின் நெருங்கிய ஊடாட்டம்; மொழியே மக்களின் துலங்கல்” என்றவாறு விளக்கம் முன்னெடுக்கப்படுகின்றது. கற்போருக்கிடையே இடைவினைகள், கற்போருக்கும் கற்பிப்போருக்குமிடையே இடை வினைகள் ஆகியவை இங்கே முக்கியத்துவமாக்கப்பட்டுள்ளன. கற்போருக்கும் கற்பிப்போருக்குமான இடைவினைகள் மனவெழுச்சிப் பரிமாற்றங்களோடு கலந்து நிற்பதனால் வகுப்பறையானது உளவியல் நிலைப்பட்ட "சமூதாயமாக" மாற்றமடைகின்றது. இதனால் கற்பதற்குரிய வளமான சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றது.
இலக்குமொழியில் எவ்வாறு தமது கருத்தை எடுத்துரைக்க வேண்டும் என்று கற்போர் கேட்க, தெரிந்தோர் (Knower) அதனைச் சொல்லிக் கொடுப்பார்கள், படிப்படியாக இந்த ஆற்றல் வளர்ந்து சென்று இறுதி நிலையிலே கற்போர் தற்றுணிபுடன் செயற்படும் நிலையை அடைவர். இடைவினைகள் சமநிலையில் இருப்போரிடத்தும் நிகழும். தம்மோடு சமநிலையில் இல்லாதோரிடத்தும் நிகழும்.
கற்றல் என்பது தகவல்களைத் திரட்டுதலும், விளங்குதலும் ஆகிய நுண்மதிச் செயற்பாடு என்ற கருத்தே மேலையுலகில் நீண்டகாலமாக நிலவிவந்தது. இந்நிலையில் தனிநபரது அகமும், மனவெழுச்சிகளும்
-46- தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

ஈடுபடுத்தப்படாத நிலையை "சமுதாய மொழிகற்கும்" செயற்பாட்டினர் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், மேலையுலகில் மரபுவழி நடத்தை" வாதக் கற்றல் முறைமை, மாணவரின் அக ஈடுபாட்டை முழுமையாக ஈடுபடுத்தாத செயலூக்கம் குன்றிய முறைமையாக இருத்தலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த மட்டுப்பாடுகள் சமுதாய மொழிக்" கற்றலிலே மாற்றியமைக்கப்படுகின்றன.
சமுதாய மொழி கற்றல் சிறாரின் வளர்ச்சியோடிணைந்த ஐந்து
படிநிலைகளை உள்ளடக்கியதாக விளக்கப்படுகின்றது.
l.
முதலாவதாக பிறப்போடு இணைந்த படிநிலையில் பாதுகாப்பு உணர்வும், பற்றுக்கோடான உணர்வும் நிலைநிறுத்தப்படும். இரண்டாவது கட்டத்தில் கற்கும் ஆற்றல் முன்னேற்றம் பெறுகின்றது. பெற்றோரிடமிருந்து விடுபடும் சுயாதீனம் ஒரளவு முன்னேற்றம் பெறத்தொடங்கும்.
மூன்றாவது கட்டத்தில் சுயாதீனப் பேச்சு எழத்தொடங்கும். தமக்குரிய தனித்துவ வெளிப்பாட்டுத் துலங்கல் மேலெழத் தொடங்கும். பிறரால் வழங்கப்படும் கேட்டுக் “கொள்ளப்படாத ஆலோசனைகளை” நிராகரிப்புக்கு உள்ளாக்குவர்.
நான்காவது கட்டத்தில் திறனாய்வுகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் படிப்படியாக வளர்ச்சியடையத் தொடங்கும்.
ஐந்தாவது கட்டத்தில் மொழித்தெளிவும், மொழிநடையியலை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் வளர்ச்சியடையத் தொடங்கும். இந்தச் செயல்முறையின் வளர்ச்சி சிறாரை வளர்ந்தோர் என்ற நிலைக்கு இட்டுச்செல்லும் மொழிக்கற்றல் என்பது ஒரு புதிய சமூகத் தொடர்பைக் கற்றுக் கொள்ளலாகின்றது. அது ஒன்றிணைந்த சமூக அனுபவங்களைக் கற்றுக் கொள்ளலாகின்றது. மற்றவர்களுடன் போட்டியிடுதல் மற்றும் தனிமைப்படல் என்ற மரபுவழிப் பாடசாலைக் கற்பித்தல் முறைமை இங்கே தகர்ப்புக்கு உள்ளாக்கப்படுகின்றது.
சீர்மியத்தை அடியொற்றிய கற்றல் கற்பித்தலை கரன் அவர்கள்
SARD என்ற குறியீட்டினால் குறிப்பிடப்பட்டுள்ளார். அதன் விளக்கம்
வருமாறு:
கலாநிதி. சபா.ஜெயராசா -47

Page 27
S - இது பாதுகாப்பைக் குறிப்பிடும்.
A - இது கவன ஈர்ப்பையும் கற்கும் போது ஏற்றமடையும் எழுபலத்
தையும் குறிப்பிடுகின்றது. - இது நினைவிற் பதித்தலையும் தெறித்தலையும் குறிப்பிடுகின்றது. - வேறு பிரித்தறிதலை இது குறிப்பிடுகின்றது. மொழியின் ஓர் அலகு மற்றையவற்றுடன் எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளது எவ்வாறு வேறுபட்டள்ளது என்பன வேறு பிரித்து அறியப்படும். வகுப்பறைக்கு வெளியிலும் மொழியைப் பயன்படுத்தும் திறனும் இதைத் தொடர்ந்து வளர்ச்சியடையும்.
சமுதாயமொழி கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகள் பின்வரும் செயற்பாடுகளை உள்ளடக்கியதாக அமையும்.
1. மொழி பெயர்த்தல் :
மாணவர் சொல்வதை ஆசிரியர் இலக்கு மொழியில் மொழி
பெயர்த்துக் கூறுவர். ஆசிரியரின் மொழிபெயர்ப்பை மாணவர்கள் மீள
ஒப்புவிப்பர்.
2. குழுவேலை :
மாணவர்கள் சிறுசிறு குழுக்களாகப் பிரிந்து மொழிச் செயற்பாடு
களில் ஈடுபடுவர்.
3. ஒலிப்பதிவு செய்தல் :
மாணவர்கள் இலக்குமொழியிலே தமது உரையாடல்களைப் பதிவு
செய்வர்.
4. மொழியியல் நோக்கு :
தாம் ஒலிப்பதிவு செய்த உரையாடல்களை மொழியல் நோக்கில்
மாணவர் ஆய்வு செய்வர்.
5. பகுப்பாய்வு :
குறிப்பிட்ட இலக்கண விதிகள் எவ்வாறு இடம் பெற்றுள்ளன என்பதை மாணவர்கள் பகுப்பாய்வு செய்வர்.
6. தெறித்தலும் உற்றுநோக்கலும் :
மாணவர்கள் தமது அனுபவங்களையும் உணர்வுகளையும் தெறித்துக் கூறுவதுடன் மேலும் வெளிப்படவிருக்கும் கருத்துக்களை ஆழ்ந்து எதிர்பார்த்து நிற்பர்.
-48- தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

7. செவிமடுத்தல் :
ஆசிரியரின் தனி உரையை மாணவர்கள் ஆழ்ந்து செவிமடுப்பர்.
8. கட்டற்ற உரையாடல் :
மாணவர் ஆசிரியருடன் கட்டற்றமுறையில் உரையாடுவதற்கு ஊக்கமளிக்கப்படுவர்.
மாணவரின் வகிபங்குகள்
மாணவர்கள் கற்கும் சமுதாயத்தின் உறுப்பினராகி தமது குழுவினருடன் மனந்திறந்து இடைவினை கொள்வர். விடயம் தெரிந்தோர் கூறுபவற்றை ஆழ்ந்து செவிமடுப்பர். தமது ஆழ்ந்த உணர்வுகளையும், கவலைகளையும், மகிழ்ச்சிகளையும் வெளியிட்டு வகுப்பிலுள்ள ஏனைய கற்போருக்குரிய சீர்மியர் என்ற வகிபங்கை மேற்கொள்வர். மாணவர் தொழிற்படும் சீர்மியநிலை மொழிகற்றல் குழுக்கள் பொதுவாக ஆறு தொடக்கம் பன்னிரண்டு உறுப்பினர்களைக் கொண்டதாக அமையும்.
ஆசிரியரின் வகிபங்குகள்
கார்ல் ரேஜர்சின் சீர்மிய முன்மொழிவுகளை அடியொற்றி ஆசிரியர் தொழிற்படுவார். மனவெழுச்சி சார்ந்த மொழித்தொடர்பாடலுக்கு முக்கியமளித்து ஆசிரியர் தொழிற்படுவார். மாணவரின் உணர்ச்சிகலந்த மொழியை விளங்கிக்கொண்டு ஆசிரியர் அறிகைநிலை மொழியிலே பதில் வழங்குவார். ஆழ்ந்த தனியாள் ஈடுபாட்டுடன் கற்றலை மேம்படுத்துவதற்கு ஆசிரியர் உதவுதல் வேண்டும். உளப்பிரச்சினைகளை ஆழ்ந்து விளங்குதலுடன் கற்பித்தல் தொடர்புபட்டிருக்கும். முன்னர் குறிப்பிட்ட மாணவரின் ஐந்து வளர்ச்சிப்படிநிலைகளையும் அறிந்து ஆசிரியர் தொழிற்படல் வேண்டும். கற்றல் வளர வளர திறனாய்வுகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை மாணவர்கள் பெற்றுக்கொள்வர்.
மாணவர்கள் கட்டற்ற முறையிலே கருத்துப்பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கும் கற்றுக்கொள்வதற்குமுரிய பாதுகாப்பான சூழலை ஆசிரியர் ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும்.
பாடநூல்கள் இங்கே முக்கியம் பெறுவதில்லை ஏனெனில் அவை மொழி தொடர்பான ஒரு திணிப்பு நடவடிக்கையையே மேற்கொள்கின்றன. மாணவர் குழுவாக இருந்து தாம் கற்றுக் கொள்வதற்குரிய சாதனங்களைத் தாமே தயாரித்துக்கொள்ளல் வேண்டும். மாணவர்களுக்
கலாநிதி சபா.ஜெயராசா -49

Page 28
காகவே சாதனங்கள் அன்றி, சாதனங்களுக்காக மாணவர்கள் அல்லர் என்பது இங்கு முன்னெடுக்கப்படும்.
கற்றலை மாணவரின் உணர்வுகளுடனும், செயற்பாடுகளுடனும், சீர்மியத்துடனும் ஒன்றிணைக்கும் பாங்குகள் தமிழர்களது கல்வி மரபிலே காணப்பட்ட ஒரு தோற்றப்பாடாகும். தமிழர்களது சீர்மிய நடவடிக்கைகளோடு இணைந்த கற்பித்தல் நடவடிக்கைகள் சடங்குகளோடும் ஐந்து பூதங்களோடு இசைவு கொண்டு வாழ்தலோடும் தொடர்புபட்டிருந்தன. கற்றல் கற்பித்தலோடு சீர்மியத்தை இணைத்தல் ஒரு புதிய தரிசனம் அன்று. ஆனால் மேலைப்புலத்தில் இது வரன்முறையான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுக் கட்டமைப்புச் செய்யப்பட்டுள்ளது.
-50- தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

வாய்மொழி அணுகுமுறையும் சந்தர்ப்பநிலை மொழி கற்பித்தலும்
பிரித்தானியாவிலுள்ள பிரயோகநிலை மொழியியலாளரின் ஆய்வுகளை அடியொற்றி இக்கற்பித்தல்முறை உருவாக்கப்பட்டது. இத்துறையில் ஹரோல்ட் பாமர் மற்றும் ஏ.எஸ் ஹோர்ன்பி ஆகிய மொழி கற்பித்தல் நிபுணர்களின் பங்களிப்பு முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது. வாய்மொழி வழிக்கற்பித்தல் ஒரு பழைமையான முறையாக இருந்தாலும் அதனை அறிவியல் பூர்வமாகப் புதுக்கியமைப்பதற்கு இவர்கள் முயன்றார்கள்.
தாய்மொழியையோ அல்லது பிறமொழிகளையோ கற்றுக்கொள்வ. தற்கு சொற்களஞ்சிய அறிவு அடிப்படையானது என்பது இங்கே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மொழிகற்றலில் வாசிப்பின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகின்றது. வாசிப்புத்திறனை மேம்படுத்திக்கொள்வதற்கு சொற்களஞ்சிய விருத்தி அடிப்படையானதாகும். இவற்றின் பின்னணியில் உருவாக்கம் பெற்ற வாய்மொழி அணுகுமுறையும் சந்தர்ப்பநிலை மொழிகற்பித்தலும் நேர்க் கற்பித்தல்முறை (Direct Method)யிலிருந்து வேறுபட்டவை. இது நடத்தைவாதக் கற்றற் கோட்பாட்டை அடியொற்றி உருவாக்கப்பட்டது. இங்கு கற்றல் நிலைமைகளிலும் பார்க்க கற்கும் செயல்முறைக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகின்றது.
மொழிக்கற்றலைப் "பழக்கம் உருவாக்கல்” என்று இவர்கள் கருதுகின்றார்கள். இலக்கணம் கற்றலில் விதிவருவித்தல் முறையின் முக்கியத்துவம் இவர்களால் வலியுறுத்தப்படுகின்றது. சொற்களின் பொருளும் வசனக் கட்டமைப்புக்களும் விளக்கியோ அல்லது விபரித்தோ இங்கே கூறப்படமாட்டாது. குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் அவை எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டு விளக்கம் பெறுமாறு மாணவர்கள் தூண்டப்படுவார்கள். முன்னைய சந்தர்ப்பங்களிலே பெற்ற அனுபவங்களை பின்னைய
கலாநிதி. சபா.ஜெயராசா -5 II

Page 29
பொருத்தமான சந்தர்ப்பங்கள் வரும்பொழுது மாணவர்கள் பொதுமை" யாக்கம் செய்ககொள்வர்.
வகுப்பறைச் சந்தர்ப்பத்திலே கற்றவற்றையும் மாணவர்கள் வேறு இடங்களிலே பொதுமையாக்கம் செய்துகொள்வார்கள். கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் என்ற நான்கு அடிப்படைத்திறன்களிலும் நடைமுறை ஆற்றல்களை வளர்த்தல் சந்தர்ப்பநிலை மொழி கற்றலின் பிரதான இலக்குகளாக அமையும். திறன்கள் அமைப்பியல் அடிப்படை யில் அணுகப்படும். உச்சரிப்பும், இலக்கணமும் மிகுந்த திட்டநுட்பத்துடன் கற்பிக்கப்படும். எத்தகைய சிரமமெடுத்தும் தவறுகளைத் தவிர்த்துக்கொள்வதற்குரிய பயிற்சி தரப்படும். மொழியின் அடிப்படை அமைப்புக்கள் மற்றும் வசன ஒழுங்கமைப்பு முதலியவற்றைத் தன்னியக்கமாகக் கட்டுப்படுத்திக்கொள்வதற்குரிய பயிற்சிகள் வழங்கப்படும்.
பேச்சுப் பயிற்சியை அடிப்படையாகக் கொண்டு வாசிப்புப் பயிற்சியும் எழுத்துப் பயிற்சியும் வளர்த்தெடுக்கப்படும். அதாவது புதிய சொற்கட்டமைப்பும் புதிய சொற்களஞ்சியமும் வாய்மொழி வாயி. லாகவே முதலிற் சொல்லிக் கொடுக்கப்படும். வாய்மொழி அனுபவங்களே பெறுமதிமிக்க அனுபவங்களாகக் கருதப்படுகின்றன.
சந்தர்ப்பநிலை மொழி கற்பித்தல் திட்டவட்டமான பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. அடிப்படையான மொழிக்" கட்டுமானங்களைக் கொண்ட பட்டியலும், வசனக் கட்டமைப்புக்களைக் கொண்டபட்டியலும் அளிக்கைக்கு ஏற்றவாறு ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும். வசனக் கட்டமைப்புக்கு எடுத்துக்காட்டுகள் வருமாறு.
(அ) குறிப்பீட்டு வசனங்கள் - "இன்று மழை பெய்யும்” (ஆ) வினா வசனங்கள் - “இன்று மழை பெய்யுமா?”
(இ) வேண்டல் வசனங்கள் - "எனக்கு உணவு வேண்டும்"
(ஈ) கட்டளை வசனங்கள் - “அந்த வேலையைச் செய்”
அமைப்பியல் அடிப்படையில் மொழியை நோக்குதலும் கற்பித்தலும் இங்கே முன்னெடுக்கப்படுகின்றன. பேச்சே மொழியின் அடிப்படையாகக் கொள்ளப்படுகின்றது.
மொழி கற்பித்தலில் சந்தர்ப்பம் என்று கூறுகையில் அதிலே பல விடயங்கள் உள்ளடக்குகின்றன. காட்சி வடிவிலான பொருட்கள், படங்கள், நிஜப் பொருட்கள் முதலியவற்றுடன் செயல்வழியாகவும்
-52- தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

சைகை வழியாகவும் கற்பிக்கப்படும். மொழியின் கருத்துக்கள் கையளிப்புச் செய்யப்படும் இலக்கண விளக்கங்களோ விபரணங்களோ இன்றி புதிய சொற்களும் வசனங்களும் உதாரணங்களுடன் காண்பிக்கப்படும். வாய்மொழிச் செயற்பாடுகளும் பொருத்தமான வேளைகளில் முன்னெடுக்கப்படும். வழிகாட்டலின் அடிப்படையில் மீளச் சொல்லல், சொல்வதெழுதல், முதலியனவும் மேற்கொள்ளப்படும். சோடியாகச் செயற்படல், குழுவேலை முதலியவற்றுக்கும் முன்னுரிமை தரப்படும்.
தொடக்க நிலையில் ஆசிரியர் சொல்வதைக் கேட்டு மீளச் சொல்லல் வேண்டும். அது தொடர்பான வினாக்களுக்கு மாணவர் துலங்குதல் வேண்டும். தவறான உச்சரிப்பும் செயற்பாடுகளும் எவ்விதப்பட்டும் நிறுத்தப்படும். ஆசிரியரது கட்டுப்பாடுகளே இங்கு மேலோங்கி நிற்கும்.
ஆசிரியர் அளிக்கை செய்யும் "காட்டுருவாக" தொழிற்படுவார். மொழிகற்பிப்பதற்குப் பொருத்தமான சந்தர்ப்பக் கட்டமைப்பை ஆசிரியரே உருவாக்கல் வேண்டும். ஒரு குயிலுவக் கூட்டிசையை நெறிப்படுத்துபவர் இசையை ஆற்றுகை செய்வோரிடமிருந்து வரவழைத்தல் போன்று ஆசிரியர் தொழிற்படுமாறு தூண்டப்படுகின்றார். கேள்விகள், கட்டளைகள், சைககள் முதலியவற்றால் சரியான மொழி வெளிப்பாடுகளைத் தூண்டுதல் ஆசிரியரின் செயற்பாடாகின்றது. பாடவளர்ச்சியின்போது ஆசிரியரின் கட்டுப்பாடுகள் ஒரளவு தளர்த்தப்படும்.
வேறுபட்ட இலக்கணக் கட்டமைப்புக்களைக் கொண்ட நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட பாடநூல்கள் கற்பித்தலுக்கெனப் பயன்படுத்தப்படும். நன்கு திட்டமிடப்பட்ட காண்பியங்கள் பாடங்களோடு இணைக்கப்படும். கற்பித்தற் செயல்முறையின்போது பாடநூல்கள் துணைச் சாதனங்களாகவே எடுத்தாளப்படும். ஆசிரியரின் முனைப்புக்களே மேலோங்கிய நிலையிலிருக்கும்.
சந்தர்ப்பநிலை மொழிகற்றலில் ஒரு பாடவேளை நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். அவை வருமாறு:
1. உச்சரிப்புப் பயிற்சி
2. மீட்டல்
3. புதிய சொற்களை அல்லது புதிய அமைப்புக்களை அளிக்கை செய்தல் 4. வாய்மொழிப் பயிற்சி
கலாநிதி. சபா.ஜெயராசா -53

Page 30
சொற்களை விளக்குவதற்குரிய பெருந்தொகையான பொருட்களை ஆசிரியர் திரட்டிவைத்திருத்தல் வேண்டும். பொருட்களையும், சொற்களையும் இணைத்துக் கற்பிக்கும் பொழுதும், மீளவலியுறுத்தும் பொழுதும் மாணவர்களிடத்து நடத்தை உருவாக்கம் ஏற்படுத்தப்படுகின்றது.
சொற்களுக்கும் வசனங்களுக்குமுரிய பயிற்சியை வழங்கும்போது சொற்களைத் தனிமைப்படுத்தி உச்சரிக்கும்பொழுது மாணவர் கூடிய விளக்கம் பெறுவர். ஓர் எடுத்துக்காட்டு வருமாறு:
"Loот. மரத்தில். பழங்கள். உண்டு” குழுவிலுள்ளோர் இந்த வசனத்தைக் கூட்டாக மீள ஒப்புவிக்கும் பொழுது நேரத்தையும் சொற்களுக்குரிய ஒலி அழுத்தங்களையும் ஆசிரியர் சைககளாற் காட்டலாம். தனித்தனித்தனி மாணவர்களைப் சொல்ல வைத்து லகர, ழகர ஒலி வேறுபாட்டு அழுத்தங்களுடன் உச்சரிக்கின்றார்களா என்பதைக் கவனிக்கலாம்.
சந்தர்ப்பநிலை மொழிகற்பித்தலை அடிப்படையாகக் கொண்ட பாடநூல்கள் பரவலாக வெளிவரத் தொடங்கியுள்ளன. படங்களையும் சொற்களையும் இணைத்தல், படத்தொடர்ச்சிகளையும் வசனங்களையும் இணைத்தல், வசன அமைப்புக்களை விளங்கி அதேஅமைப்புக் கொண்ட வசனங்களை உருவாக்குதல், ஒலிப்பில் ஒரளவு ஒற்றுமை கொண்ட சொற்களை இனங்காணுதல், ஒரே கோவை கீழ் இணையக்கூடிய சொற்களைக் கண்டறிதல், தரப்பட்ட கட்டளைகளைச் செய்து காட்டுதல் முதலாம் விடயங்கள் அத்தகைய பாடநூல்களிலே இடம்பெற்றுள்ளன. சொற்களஞ்சியக் கட்டுப்பாட்டையும் இலக்கணக்கட்டுப்பாட்டையும் வளர்ப்பதற்குரிய ஏற்புடைமைகளை அந்தப் பாடநூல்கள் கொண்டுள்ளன.
அவுஸ்திரேலியா, நியுகினி மற்றும் பசுபிக் பிரதேசங்களில் சந்தர்ப்ப மொழி கற்பித்தல் தொடர்பான பொருத்தமான கற்பித்தற் சாதனங்களை குளோறியா ராரி உருவாக்கியுள்ளார். அச்சாதனங்கள் ராரி சாதனங்கள் (Tate Materials) என அழைக்கப்படுகின்றன. சந்தர்ப்பநிலை மொழி கற்பித்தல் பேச்சுமொழிப் பயிற்சியுடன் ஆரம்பிப்பதால் சாதனங்களும் பேச்சு வடிவை முதன்மைப்படுத்தித் தயாரிக்கப்பட்டள்ளன.
ஆசிரிய வாண்மைப்பயிற்சியில் "அமைப்பியல்" (Structuralism) பற்றிய விளக்கமும் திறனாய்வும் இணைக்கப்படும் பொழுதுதான் இந்த முறையியலை வினைத்திறனுடன் பாடசாலைகளிலே செயற்படுத்த
தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும் --54۔

முடியும். அமைப்பியல் பற்றிய தெளிவான அறிவும் அதன்பின்னைய வளர்ச்சியும் பற்றிய தெளிவு ஆசிரியர்களுக்கு இன்றியமையாதவை.
அமைப்பியல் அணுகுமுறைகள் தொடர்பான திறனாய்வுகளை முன்வைத்த நோம்சோம்ஸ்கி அது தனித்துவமான வாக்கிய அமைப்புக்களையும், மொழிக்குரிய ஆக்கமலர்ச்சியையும் விளக்குவதற்கும் போதாமை கொண்டிருத்தலைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
கலாநிதி. சபா.ஜெயராசா -55

Page 31
தொடர்பாடல் நிலைப்பட்ட மொழி கற்பித்தல்
பிரித்தானிய மொழியியலாளர் டி.எ.வில்கின்ஸ் ஆய்வுகளைத் தொடர்ந்து தொடர்பாடல்நிலை மொழிகற்பித்தல் நுட்பவியல் வளர்ச்சியடையத் தொடங்கியது. மரபு வழிமொழி கற்பித்தலில் வலியுறுத்தப்பட்ட இலக்கண எண்ணக்கருக்கள், மற்றும் சொற்களஞ்" சியம் முதலியவற்றிலே கவனம் செலுத்தாது, தொடர்பாடல் பரிமாணங்களை அவர் முக்கியத்துவப்படுத்தினார். அதாவது தொடர்பாடலை விளங்கிக் கொள்ளலும், கருத்துக்களை வெளிப்படுத்தும் திறன்களை வளர்த்துக் கொள்ளலும் இங்கே குவியப்படுத்தப்படுகின்றன.
தொடர்பாடலின்போது இரண்டு வகையான கருத்தாக்கங்கள் கையளிக்கப்படுவதாக வில்கின்ஸ் குறிப்பிடுகின்றார். அவை வருமாறு.
1. கருத்தமைவு (Notional) சார்ந்தவை. 2. தொடர்பாடல் தொழிற்பாடு சார்ந்தவை
கருதமைவு சார்ந்த பிரிவில் நேரம், எண்பெறுமானங்கள், மீடிறன், தொடர்ச்சி முதலியவை இடம் பெறும். தொடர்பாடல் தொழிற்பாட்டில் வேண்டுதல், நிராகரித்தல், வழங்குதல் முதலியவை இடம்பெறும். இவ்வகையான திறன்களை வளர்த்துக்கொள்ளலே இங்கு முன்னுரிமைப்படுத்தப்படுகின்றது.
மொழியின் தொழிற்பாட்டுக்கும் அமைப்புக்கும் இந்த நுட்பவியல் முக்கியத்தும் வழங்குகின்றது. தொடர்பாடல் வழியாகவே மொழி திரட்டிக்கொள்ளப்படுதல் இங்கே வலியுறுத்தப்படுகின்றது. இக் கற்பித்தல் முறையின் சிறப்புப்பண்புகளாக பின்வருவன அமைகின்றன.
1. கருத்துக் கையளித்தலும், கருத்தை விளங்கிக்கொள்ளலும்
முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன.
-56- தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

IO.
11.
12.
மனனம் செய்தல் முக்கியம் பெறுதல் இல்லை. மாறாக, உரையாடல் தொழிற்பாட்டைச் சுற்றியே கற்பித்தல் இடம் பெறுகின்றது. சூழமைவுப்படுத்தல் (Contextualisation) முன்னுரிமை பெறுகின்றது. மொழிகற்றல் என்பது தொடர்பாடல் தேவையை நிறைவேற்றுவதற்கென வலியுறுத்தப்படுகின்றது. மொழிகற்றல் என்பது தொடர்பாடலுக்கே என மேலும் வலியுறுத்தப்படுகின்றது. கிரகித்துக் கொள்ளப்படத்தக்க உச்சரிப்பு முறைமை முக்கியத்துவம் பெறுகின்றது. கற்போரின் வயது மற்றும் விருப்பு நிலைகளுக்கு ஏற்றவாறு
கற்போரால் ஏற்றுக்கொள்ளப்படத்தக்க எந்த தொடர்பாடல் நுட்பங்களும் பயன்படுத்தப்படும்.
தொடர்பாடலின் போது ஏற்படும் சிரமங்கள் கூர்ந்து நோக்கப்பட்டுப் பொருத்தமான பரிகார நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும். தொடர்பாடல் செயற்பாட்டில் ஆசிரியரின் ஊக்குவிப்பு நடவடிக்கை" கள் தொடர்ந்த வண்ணமிருக்கும். முயன்று தவறுதல் வாயிலாக மொழி உருவாக்கப்படும். சரளமாகத் தொடர்பாடல் கொள்ளும் திறன் வளர்த்தெடுக்கப்படும் பொழுது, மொழியின் திட்பநுட்பமான பரிமாணங்கள் சூழமைவைக் கொண்டே தீர்மானிக்கப்படும். பேச்சாலும், எழுத்தாலும் பிறருடன் மொழிசார்ந்த இடைவினை" களை மேற்கொள்ளும்படி மாணவர்கள் தூண்டப்படுவார்கள்.
முதலாம் மொழியைக் கற்றுக்கொள்ளும் பொழுது பின்வரும்
மொழித் தொழிற்பாடுகள் இடம்பெறுதல் இனங்காணப்பட்டுள்ளன.
l.
கருவிசார் தொழிற்பாடுகள் : அதாவது தமக்குத் தேவையானவற்றைப் பெற்றுக் கொள்ளும் வகையில் மொழியைப் பயன்படுத்துதல். நெறிப்படுத்தும் தொழிற்பாடுகள் : நடத்தைகளை ஒழுங்கமைப்பதற்கும் ஆற்றுப்படுத்துவதற்கும் மொழியைப் பயன்படுத்துதலை இது குறிப்பிடுகின்றது.
கலாநிதி. சபா.ஜெயராசா -57

Page 32
3. இடைவினைத் தொழிற்பாடுகள் :
மற்றவர்களுடன் ஊடாட்டங் கொள்வதற்கு மொழி பயன்படுத்தப்படுகின்றது.
4. தனியாள் தொழிற்பாடுகள் :
தமது மனவெழுச்சிகளையும், உணர்ச்சிகளையும், கருத்துக்களையும்
வெளிப்படுத்துவதற்குரிய மொழியாட்சியை இது குறிப்பிடுகின்றது.
5. கண்டறிதற் தொழிற்பாடுகள் :
கற்பதற்கும், கண்டறிவதற்கும், விளங்கிக் கொள்வதற்குமுரிய மொழிப்பயன்பாடுகள் விளக்கம் பெறுகின்றன. 6. கற்பனைத் தொழிற்பாடுகள் :
கற்பனை உலகை உருவாக்குவதற்கும், ஆக்க மலர்ச்சிக்கும் உரியவாறு மொழியைப் பயன்படுத்துதல் இப்பிரிவில் இடம்பெறும். 7. பிரநிதித்துவத்தொழிற்பாடுகள் :
தகவல்களைப் பரிமாற்றம் செய்து தொடர்பாடல் கொள்வதற்கு மொழியை உபயோகித்தல் இங்கே குறிப்பிடப்படுகின்றது.
மேற்கூறிய அனுபவங்களை அடியொற்றி தொடர்பாடல் நிலைப்பட்ட மொழி கற்பித்தலிலே நிகழ்ந்து வரும் தொடர்ச்சியான ஆய்வுகள் வழியாக அதனை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கனாலேயும் சுவெயினும் (Canale and Swain, 1980) மேற்கொண்ட ஆய்வுகளின் வழியாக மொழியின் தொடர்பாடல் தேர்ச்சியின் பின்வரும் பரிமாணங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவை வருமாறு:
1. இலக்கண தேர்ச்சி 2. சமூக மொழித் தேர்ச்சி 3. உரைவினை (Discourse)த் தேர்ச்சி 4. உறுதிறன் (Strategic) தேர்ச்சி இலக்கணத் தேர்ச்சியில் சொற்களஞ்சியத்தை வளம்படுத்தலும், வாக்கிய ஒழுங்கமைப்பை நிர்மாணித்தலும், வரன்முறைகளைப் பராமரித்தலும் இடம் பெறுகின்றன.
சமூக மொழித் தேர்ச்சியில் தொடர்பாடல் நிகழும் சமூகச் சூழமைவை விளங்கிக் கொள்ளல், சமூக வகிபங்குகளுக்குரிய மொழியை விளங்கிக் கொள்ளல், இடைவினைகளுக்குரிய மொழியை அறிந்து
-58- தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

கொள்ளல், சமூக அனுபவங்களை மொழிவழியாகப் பகிர்ந்து கொள்ளல் முதலியவை இடம் பெறுகின்றன.
உரைவினைத் தேர்ச்சியில் தனியாள் செய்திகளுக்கு வியாக்கியானம் செய்யும் திறன், கருத்துக்கள் எவ்வாறு பரிமாற்றம் செய்து கொள்ளப்படுகின்றன என்பவற்றைக் கண்டு கொள்ளும் திறன் முதலியவை உள்ளடங்குகின்றன.
உறுதிறன் தேர்ச்சியில் தொடர்பாடலைத் தொடங்கும் திறன், பராமரிக்கும் திறன், முடித்துவைக்கும் திறன் தொடர்பாடலை திசைதிருப்பும் திறன் முதலியவை இடம் பெறுகின்றன.
தொடர்பாடல் நிலைப்பட்ட மொழிக்கற்பித்தல் வளமானதும் பல்வேறு திறன்களை ஒன்றிணைக்கும் வகையிலும் உருவாக்கப்பட்ட" தொன்றாகும். இந்தமுறையில் மொழியைக் கருத்தை வெளிப்படுத்தும் செயற்றொகுதியாகக் கருதுகின்றது. இடைவினைகளும் தொடர்பாடலும் இங்கே முதன்மைப்படுத்தப்படுகின்றன. மொழியின் கட்டமைப்பு தொடர்பாடல் தொழிற்பாட்டை பிரதிபலிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளதென்பது இங்கு வலியுறுத்தப்படுகின்றது.
கற்பித்தலின்பொழுது தொடர்பாடலை அடியொற்றிய செயற்பாடு" கள் முன்னெடுக்கப்படும். கருத்துள்ள செயற்பணிகள் முன்வைக்கப்படும். கற்போரால் பெறப்படும் கருத்து விளக்கம் கற்றற் செயல்முறைக்கு அனுசரணையாக அமையும். பொறிமுறையான மொழிப்பயிற்சிகள் இடம் பெறுதல் தவிர்க்கப்படும். கருத்தமைந்த மொழிப் பயன்பாடு முன்னெடுக்கப்படும். இக்கற்பித்தலில் அறிகைப்பண்புகள் மீதும் நடத்தைப் பணிபுகள் மீதும் சமூகப் பணிபுகள் மீதும் கவனம் செலுத்தப்படும்.
பொருத்தமான நடத்தைகளை அறிதிரட்டல் செய்யும் உளச் செயற்பாடுகள் அறிகைப்பண்பில் இடம்பெறும். நடப்பு நிலைச் சூழலின் மத்தியிலே மாணவர்களைத் தன்னியக்கமாகத் தொழிற்பாடு கொள்ளவைக்கும் தடையில்லா மொழியாற்றுகைச் செயற்பாடு நடத்தைவாதம் சார்ந்த பரிமாணமாக அமையும்.
உள்ளடக்கமட்டத்திலும், இணைப்புமட்டத்திலும் வெளிப்பாட்டுக்" குரிய வழிமுறையாக மொழியைப் பயன்படுத்துதல் இவ்வகை மொழி கற்பித்தலின் சிறப்பார்ந்த இலக்காகக் கருதப்படுகின்றது. மொழிநிலையிலும் கருவிநிலையிலும், மொழியைச் செயலமைப்பு நிலையில் வளர்த்" தெடுத்தலும் கற்பித்தல் இலக்குகளுள் ஒன்றாக அமைகின்றது.
கலாநிதி. சபா.ஜெயராசா -59

Page 33
இவற்றைத்தவிர ஏனைய இலக்குகள் வருமாறு:
1. மனவெழுச்சி நிலையிலும், ஆளிடைத்தொடர்பு நிலையிலும் விழுமியங்களை வெளியிடவும், தீர்ப்புக் கூறலை வெளியிடவும் மொழியைக் கருவியாகப் பயன்படுத்தும் திறன்களை வளர்த்தல்.
2. வழுக்களை அறிந்து கொள்ளல், பரிகாரக் கற்பித்தல் முதலியவற்றை உள்ளடக்கியதாக தனியாள் கற்றல் தேவைகளின் மட்டங்களில் மொழியைப் பயன்படுத்தும் ஆற்றல்களை வளர்த்தல்.
3. தாய்மொழியில் மட்டுமன்றிப் பிற மொழிகளிலும் தொடர்பாடல்
ஆற்றல்களை வளர்த்துக் கொள்ளல்.
மொழியின் அடிப்படைத் திறன்களாகிய கேட்டல், பேசுதல், வாசித்தல் எழுதுதல் என்ற அனைத்தும் தொடர்பாடல்நுட்பவியலைப் பயன்படுத்தியே கற்பிக்கப்படும். மாணவரின் தேர்ச்சி மட்டங்களை அடிப்படையாகக் கொண்டு தொடர்பாடல் நிலைக் கற்பித்தல் ஒழுங்கமைக்கப்படும். இதற்குரிய பாடத்திட்டத்தில் செய்திகளை விளங்கிக்கொள்ளல், சந்தேகங்களில் இருந்து விடுபடுவதற்குரிய வினாக்களைக் கேட்டல், மேலும் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்குரிய வினாக்களை எழுப்புதல், குறிப்பெடுத்தல், அளிக்கைக்குரியவாறு எடுத்த குறிப்புக்களை ஒழுங்கமைத்தல், செய்தியை வாயால் அளிக்கை செய்தல் முதலாம் செயற்பாடுகள் பாடத்திட்டத்திலே உள்ளடக்கப்படும்.
கேட்டலையும், கேட்டலை அடிப்படையாகக் கொண்ட தொடர்பாடலையும் மாணவர்களிடத்தே வளர்க்கும் பொருட்டு "மாறுகை” (JigSaw)க் கேட்டற்பயிற்சி வழங்கப்படும். அதாவது வேறுவேறுபட்ட உள்ளடக்கம் கொண்ட ஒலிப்பதிவைச் செவிமடுக்குமாறு மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்படுவார்கள். அவ்வாறு செவிமடுக்கப்பட்ட உள்ளடக்கத்தை ஏனைய மாணவர்களுக்குச் சொல்லிக் காட்டும் பயிற்சி வகுப்பறைச் செயற்பாடுகளிலே இடம் பெறச் செய்யப்படும்.
தொழிற்பாட்டு நிலைத் தொடர்பாடலை வளர்க்கும் பொருட்டுப் பின்வரும் பயிற்சிகள் வகுப்பறையிலே வழங்கப்படும்.
1. படங்களை ஒப்பீடு செய்து ஒரே நிலைப்பண்புகளையும் வேறுபடும்
பண்புகளையும் இனங்கண்டு வெளிப்படுத்துதல்.
2. தொடர்ச்சியான படங்களிலே காணப்படும் சம்பவத் தொடர்ச்சி.
களைக் கூறுதல்.
-60- தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

3. தேசப்படங்களிலே அல்லது காண்பியங்களிலே காணப்படும்
விடுபட்ட கூறுகளைக் கண்டறிந்து வெளிப்படுத்துதல்.
4. திரைக்குப் பின்னாலிருந்து ஒருவர் சொல்வதைக் கேட்டு ஏனைய மாணவர்கள் மொழிவழித் துலங்குதல், படம் வரைதல், பிரச்சினை விடுவித்தல் முதலாம் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
சமூக இடைவினைகளை வளர்க்கும் பொருட்டு பின்வரும் செயற்பாடுகள் வகுப்பறையிலே முன்னெடுக்கப்படும்.
1. வகிபங்கு ஏற்று நடித்தல்
2 மாதிரிகளைப் பின்பற்றிச் செய்தல்
3 இணக்கல் (Improvisation) வேலைகள் செய்தல்
4. விவாதங்கள் நடத்துதல்
5 கேலி விளையாட்டுக்கள் (Skits)
தொடர்பாடற் செயற்பாடுகளை வளம்படுத்துதலும், கற்றல் - கற்பித்தற் குழுவில் தானும் ஒர் உறுப்பினராகக் கலந்து தொழிற்படலும் ஆசிரியரின் சிறப்பார்ந்த கடமைகளாகும். மாணவரின் தேவைகளைப் பகுத்தாராய்தலும், குழுச் செயல்முறையின் முகாமையாளராக இருத்தலும், சீர்மியராக இயங்குதலும் ஆசிரியரின் பிற கடமைகளாக வலியுறுத்தப்படுகின்றன.
மாணவரின் இயல்புகளுக்கு ஏற்றவாறு சிறிய உரையாடல்களில் இருந்து பெரிய உரையாடல்கள் வரை ஆசிரியர் தெரிவு செய்யலாம். ஆசிரியர் சரியான உச்சரிப்புக்களுக்கும், சொற்களைத் தெரிவு செய்தலுக்கும் வழிகாட்டுவர். உரையாடல்களை அடியொற்றியே வினாக்கள் வழங்கப்படும். உரையாடல்களை அடியொற்றி மாணவரின் தனிப்பட்ட அனுபவங்களை வெளிப்படுத்தக்கூடிய வினாக்களும் கேட்கப்படும். உரையாடலின் போது உச்சரிப்பு, இலக்கணம், சொற்களஞ்சியம் ஆகிய மூன்று பரிமாணங்களிலும் கவனம் செலுத்தப்படும்.
மனிதத் தொடர்பாடலை வலியுறுத்தும் மானிட நேய அணுகுமுறை" யாக இது அமைந்துள்ளது. மொழி கற்பித்தலில் மாணவர் மீது மேற்" கொள்ளப்பட்ட திணிப்புமுறைகளுக்கு மாற்றீடாக இது அமைந்துள்ளது.
கலாநிதி. சபா.ஜெயராசா -61

Page 34
ஒலி மொழி முறைக் கற்பித்தல்
தாய் மொழியை மட்டுமன்றி பிறமொழிகளைக் கற்பிப்பதற்குமுரிய ஒர் வழிமுறையாக "ஒலிமொழி முறை" (Audio Lingual Method) அமைகின்றது. 1950 ஆண்டுக்குப் பின்னர் இக்கற்பித்தல் முறை வளர்ச்சியடையத் தொடங்கியது. உலக மொழிகளைப் படிக்க வேண்டிய தேவைகளின் வளர்ச்சி, கற்பித்தலியலிலே புதிய புதிய முறையியல்களைக் கண்டறிவதற்குரிய முயற்சிகளை முன்னெடுத்து வருதலும் குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் நெல்சன்புறுரக்ஸ் என்பார் "ஒலி மொழி முறை" என்ற பெயரை 1964ஆம் ஆண்டிலே சூட்டினார். மொழி கற்பித்தலைக் கலை என்ற நிலையிலிருந்து விஞ்ஞானம் என்ற நிலைக்கு மாற்றுவதற்கு இந்தக் கற்பித்தல் முறை வழிவகுத்தது.
அமைப்பு மொழியியலை அடிப்படையாகக் கொண்டு ஒலிமொழி முறை உருவாக்கப்பட்டுள்ளது. பாரம்பரியமான இலக்கண முறைக்கு மறுதலிப்புத் தெரிவிக்கும் வகையில் ஒலிமொழி முறை முன் மொழியப்பட்டுள்ளது. மொழியியலாளர் விஞ்ஞான பூர்வமாக மொழியை ஆராய முற்படத் தொடங்க, மொழியியல் வேகமாக வளர்ச்சியடையத் தொடங்கியது. கருத்துக்களை நிரற்கோடல் செய்யும் கட்டமைப்புடன் இணைந்த தொகுதியாக மொழியை அணுகும் முறைமை எழுச்சியுற்றது. மொழி தொடர்பான அமைப்பியல் அணுகுமுறை பின்வரும் பரிமாணங்களைக் கொண்டுள்ளது.
1. மொழியில் அமைந்துள்ள தனிமங்கள் தமக்குரிய அமைப்புக்களைக் கொண்ட வகையில் தெளிவான விதிகளை உள்ளடக்கியதாகவும் செவ்விதாகவும் அமைக்கப்பட்டுள்ளன.
2. மொழியைப் பல்வேறு அமைப்புக்களின் அடிப்படையில் விளங்கிக்
கொள்ள முடியும்.
3. சிறிய சில அமைப்புக்களில் இருந்து பெரிய அமைப்புக்கள் வரை
மொழியை நிரற்படுத்தலாம்.
-62- தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

4. ஒத்த தனிமங்களைக் கொண்ட சிறு அமைப்பிலிருந்து ஆரம்பிக்கும் மொழியானது வசனங்கள் என்ற பெரிய அமைப்புவரை பெயர்ச்சிகொள்ளுகின்றது.
அமைப்பியல் மொழியியலாளர் மொழியின் அடிப்படை ஊடகம் வாய்மொழிப் பேச்சு என வலியுறுத்துகின்றனர். பேச்சே மொழியாகின்றது. பல மொழிகள் எழுத்து வழக்கின்றியே பேச்சு வடிவில் இயங்கு" கின்றன. மொழியின் முதல்வடிவம் பேச்சு. இரண்டாவது வடிவமே எழுத்து. இதனால் மொழி கற்பித்தலில் பேச்சுக்கே முன்னுரிமை தரவேண்டியுள்ளது. “மொழியைக் கற்பியுங்கள் மொழி பற்றிக் கற்பிப்பதை அல்ல” என்ற வாசகம் ஒன்பதாவது உலக மொழியியல் மாநாட்டில் வில்லியம் மவுல்டனால் முன்வைக்கப்பட்டது.
ஒலிமொழி முறைமை நடத்தைவாத உளவியல் தளத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது. இங்கே நடத்தையை முகிழ்த்தெழச் செய்யும் தூண்டியும் அதைத் தொடர்ந்து நிகழும் துலங்கலும் வலியுறுத்தப்படுகின்றது. பொருத்தமாக வெளியிடப்படும் துலங்கலை மீள வலியுறுத்தலும் நடத்தைவாதக் கற்றலைச் சாராம்" சப்படுத்துகின்றது. மேற்கூறிய கருத்துக்கள் ஒலி மொழி கற்பித்தலில் வலியுறுத்தப்படுகின்றன. மொழிக்குரிய தூண்டியை விளங்கிச் சரியான துலங்கலை ஏற்படுத்தும் செயற்பாடுகள் இங்கே முன்னெடுக்கப்படுகின்றன. மொழி என்பது சொல்சார்ந்த நடத்தை (Verbal Behaviour) என வலியுறுத்தப்படுகின்றது. எந்த மொழியையும் முதலிலே பேச்சு அடிப்படையிலே கற்றுக் கொள்ளல் வேண்டும். பின்னர் எழுத்தை நோக்கி நகருதலே பொருத்தமானது.
ஒலிமொழி முறைமையின் பிரதான பண்புகளைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம். 1. மொழியின் அமைப்பியல் கூடுதலான கவனத்துக்கு உட்படுத்தப்
படுகின்றது.
2. அமைப்பை அடிப்படையாகக் கொண்ட பேச்சுக்கு முன்னுரிமை
வழங்கப்படுகின்றது. 3. அமைப்புக்களுடன் ஒலிப்புக்கள், சொற்கள், வசனங்கள் முதலியவற்”
றுக்கும் முக்கியத்துவம் தரப்படுகின்றது. 4. L655pp6) (Over Learning) gig. 6).JG5upl;55 iLIG)dilai pg5!. 5. இலக்கண விபரிப்புகள் தவிர்த்துக் கொள்ளப்படுகின்றன.
கலாநிதி. சபா.ஜெயராசா -63

Page 35
6. பேச்சுப் பயிற்சியில் ஆற்றல்பெற்ற பின்னரே வாசிப்பும் எழுத்தும்
கற்பிக்கப்படும்.
7. மொழி என்பது ஒரு நடத்தையாகவும் பழக்கமாகவும் கொள்ளப்படு
கின்றது.
8. பேச்சு மொழிக்குரிய தெரிவுகளை ஆசிரியரே மேற்கொள்வார். 9. பேச்சு மொழியின் போது மொழித்திட்பநுட்பங்கள் பராமரிக்கப்படும்.
10. மொழிக் கட்டுமானத்தின் தேர்ச்சியையும், பேச்சு வழிமுறைகளையும்
அடிப்படையாக வைத்து ஊக்குவிப்புகள் முன்னெடுக்கப்படும்.
புறுாக்ஸ் என்பார் ஒலி மொழிக்கற்பித்தலின் குறுங்கால மற்றும் நெடுங்கால இலக்குகளை விபரித்துள்ளார். குறுங்கால இலக்குகளுள், பேசுவதைக் கிரகித்தல், திட்பநுட்பமான உச்சரிப்பு, பேச்சுக்குறியீடுகளை இனங்காணல், அச்சிலே தரப்பட்டவற்றை இனங்காணல் திறன்களை வளர்த்துக் கொள்ளல் முதலியவை உள்ளடக்கப்படுகின்றன. குறைந்தபட்சம் ஒருவரை இரு மொழி ஆற்றலுள்ளவராக வளர்த்தெடுத்தல் நீண்ட இலக்காகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒலி மொழி கற்பித்தலின்போது உச்சரிப்பில் மிகுந்த கவனம் செலுத்தப்படும். பேச்சுச் சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு பொருத்தமாகவும், உடனடியாகத் துலங்கவதற்குரியவாறும் பயிற்சிகள் வழங்கப்படும் வாய்மொழித்திறன்களை வளர்த்துக் கொள்வதற்குரியவாறான சொற்களஞ்சிய மேம்பாட்டிலும் கவனம் செலுத்தப்படும். கேட்டலும் பற்றிப் பேசுதலும், மீளச் சொல்லிப் பயிற்சி செய்வதன் வாயிலாக நினைவிற் பதித்துக்கொள்ளலுமாகிய செயற்பாடுகள் வளர்த்துக் கொள்ளப்படும். ஒலி வேறுபாடுகளையும், ஒலிவேறுபாடுகளின் போது கருத்து வேறுபாடுகளையும் கண்டறிவதற்கான பயிற்சிகள் வழங்கப்படும். வகை மாதிரிக்கு ஓர் எடுத்துக்காட்டு வருமாறு: களி, கழி, கரி கறி கடி, கதி கலி கசி கணி கவி, கனி
வகுப்பு வளர வளர மேலும் மேலும் சிக்கலான பேச்சுப் பயிற்சிகளும், அவற்றை அடியொற்றிய சிக்கலான எழுத்துப்பயிற்சிகளும் வழங்கப்படும். ஒலி மொழி கற்பித்தல் தொடர்பான சில பயிற்சிகள் வருமாறு.
-64- தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

(1)
(2)
(3)
(4)
(5)
(6)
வசனங்களை விரிவாக்குதல் :
* நான் கண்டேன்.
* நான் அவளைக் கண்டேன்.
* நான் நேற்று அவளைக் கண்டேன்.
* நான் நேற்றுப் பாடசாலைக்குப் போகும் போது அவளைக்
கண்டேன்.
k
பதிற்சொற்களைப் பயன்படுத்துதல் * நான் பாடினேன். * நாங்கள் பாடினோம். * அவள் பாடினாள். * அவர்கள் பாடினர்.
冰
மீள் வடிவாக்கல் * குமுதாவும் நானும் வந்தோம். * அவளும் நானும் வந்தோம். * என்னுடன் குமுதா வந்தாள்.
米
வசனங்களை முடித்துவைத்தல் * நான் வீட்டுக்கு வரும் பொழுது நீ.
* நான் படிக்கும் பொழுது நீ. * நான் விளையாடும் போது நீங்கள் .
வசன ஒழுங்கமைப்பை மாற்றுதல் * காலையில் எழுந்து நான் அம்மாவுடன் படிப்பேன்.
* நான் காலையில் எழுந்து அம்மாவுடன் படிப்பேன்.
冰
வசனங்களைச் சுருக்கியமைத்தல் * உனது கையை மேசையின் மேல் வை.
உனது கையை மேசையில் வை. உனது கையை அங்கு வை. கையை அங்குவை.
கலாநிதி. சபா.ஜெயராசா -65

Page 36
வசனங்களை இணைத்தல், நேர்நிலைகளை எதிர்மறைகளாக்குதல், பெண்பாலை ஆண்பாலாக்குதல் அதிகாரத் தொனிப்புள்ள வசனங்களை பணிவுத் தொனிப்புள்ள வசனங்களாக்குதல். தன்வினை வசனங்களைப் பிறவினை வசனங்களாக்குதல், பொது அறிவிப்புத் தரும் வசனங்களைச் செறிவுமிக்க அறிவிப்பு வசனங்களாக மாற்றுதல் குழப்பியுள்ள வசனங்களை ஒழுங்குபடுத்துதல். முதலான வாய்மொழிப் பயிற்சிகளை வழங்கலாம்.
இக்கற்பித்தல் முறையில் ஆசிரியர் முக்கியமான பங்கை வகிக்க வேண்டியுள்ளது. மாணவர்களைச் செயலூக்கம்மிக்கவர்களாக வைத்" திருக்கும் பொறுப்பு ஆசிரியருக்குரியது. சரியான பேச்சுக்கும் உச்சரிப்புக்கும் வழிகாட்டுநராக ஆசிரியரே தொழிற்பட வேண்டியுள்ளது. மெளனிகளாக இருக்கச் செய்யாது, வாய்திறந்து மாணவர்களைப் பேச வைக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியருக்குரியது. பேச வைப்பதற்கு சிறுகதைகளும் பயனுள்ள சாதனங்களாக அமையும்.
மாதிரியான உரைக்கோப்பு ஒன்றை முதலிலே ஆசிரியர் அளிக்கை செய்தல் வேண்டும். தெரிவு செய்யப்படும் உரைக்கோப்பு மாணவரின் விருப்பத்துக்கும் சந்தர்ப்பத்துக்கும் பொருத்தமானதாக இருத்தல் அவசியம். மாணவர்கள் சரியாகப் பேசிக்கொள்ளும் வரை இடைவிடாத பயிற்சி ஆசிரியரால் முன்னெடுத்தச் செல்லப்படும்.
ஒலி மொழி முறைமையின் வளர்ச்சியின் போது அதற்கு எதிரான திறனாய்வுகளும் எழுப்பப்படலாயின. வசனங்கள் என்பவை பார்த்துப் பின்பற்றப்படுவதால் உருவாக்கப்படுதல் இல்லை என்றும் பேசுவோரின் தேர்ச்சியிலிருந்து முகிழ்த்தெழச் செய்வதால் உருவாக்கப்படுகின்றன என்பதும் ஒரு முக்கியமான திறனாய்வாகும். ஒலிமொழிமுறைமைக்குப் பின்புலமாக அமைந்த நடத்தைவாத அணுகுமுறையை அறிகை உளவியலாளர் தீவிர திறனாய்வுக்கு உட்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. அதாவது, மனித மூளையிலே நிகழும் விருத்திநிலைகளையும் அறிகைத் திரட்டில் நிகழும் மாற்றங்களையும் நடத்தை வாதிகள் கருத்திற் கொள்ளாமை குறிப்பிடத்தக்கது.
தூண்டி, துலங்கல், மீளவலியுறுத்தல் என்ற பொறிமுறையான செயற்பாடுகளுக்குள் மட்டும் மொழி கட்டுண்டு கிடப்பதில்லை. மொழியின் அறிகைத் தொழிற்பாட்டையும், கற்பனை இயக்க நுண்முறைகளையும் நடத்தைவாதிகள் ஆழ்ந்து பரிசீலிக்கவில்லை என்ற திறனாய்வும் முன்வைக்கப்பட்டுள்ளது.
-66- தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

கருத்தேற்றக் கற்பித்தல்
இக்கற்பித்தல் முறை நனவிலி மனத்தையும் மொழிகற்பித்தலையும் இணைக்கும் செயற்பாட்டைக் கொண்டுள்ளது. பல்கேரிய உள மருத்துவராகிய ஜேர்யிலொசனேவ் இதனை வளர்த்து நிறைவடிவாக்கம் பெறச் செய்தார். மனிதர்மீது செல்வாக்குச் செலுத்தும் நனவிலியினதும் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதுமான காரணங்களை விரிவாக ஆராய்ந்த பின் கருத்தேற்றக் கற்பித்தல் முறை (Suggestopedia) உருவாக்கப்பட்டது. நனவிலியின் செல்வாக்குகளை கற்பித்தல் நோக்கிலே திருப்பி, பயன்மிக்க உச்சவிளைவுகளை ஏற்படுத்துதலை கருத்தேற்றக் கற்பித்தல் சாராம்சமாகக் கொண்டுள்ளது.
கனவுகளைத் தூண்டக் கூடிய விநோதமான வகுப்பறை ஒழுங்கமைப்புடன் கருத்தேற்றக் கற்பித்தல் ஆரம்பிக்கின்றது. வகுப்பறை அலங்காரம், தளபாடங்கள், காண்பியங்கள், இசை என்பவை கனவுகளைத் தூண்டும் விநோதமான எடுப்புடன் உருவாக்கப்பட்டிருக்கும். கற்பித்தலையும் சீர்மியத்தையும் தவிர வேறெந்தத் துறைகளிலும் இந்த முறையியலைப் பயன்படுத்துதல் மிகுந்த கடினமானது லொசனேவின் ஆய்வுகளின்படி (Lozaanow, 1978) இந்தமுறையியலைப் பயன்படுத்துவதால் மாணவர்களிடத்து நிகழும் மனனம் செய்யும் முயற்சியில் இருபத்தைந்து மடங்கு அதிகரிப்புக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே கடினமான சூத்திரங்களை மாணவர்கள் மனனம் செய்து நினைவகத்திலே வைத்திருப்பதற்கு இதுவே பொருத்தமான கற்றல் கற்பித்தல் முறைமையாகக் கொள்ளப்படுகின்றது. ஆசிரியர் இதமான ஒலிப்புக்களை மேற்கொள்ளலும் கற்பித்தல் பேச்சின்போது ஒலி அழுத்தங்களைத் திட்டமிட்டுப் பிரயோகித்தலும் இங்கு சிறப்பென முன்னெடுக்கப்படுகின்றன.
மனத்தை ஒரு நிலைப்படுத்தல், ஒத்திசைவான சுவாசப் பயிற்சி, கற்பதற்கான மனவெழுச்சி தழுவிய இங்கிதமான சூழல் முதலியவற்றின் முக்கியத்துவமான நிலைகள் உணரப்பட்டுள்ளன. உறக்கத்துக்கும் விழிப்புக்குமுள்ள இடைவெளி இங்கே வலியுறுத்தப்படுகின்றது.
கலாநிதி. சபா.ஜெயராசா -67

Page 37
இசையும், இசை ஒத்திசைவுகளும் கற்றலுக்குரிய இதமான சூழலை ஏற்படுத்தும். தீமைகளை விரட்டியடிப்பதற்குத் தொல்குடியினரது சடங்குகளிலே இசை பயன்படுத்தப்பட்டிருத்தல் குறிப்பிட்டுக் கூறக் கூடிய ஒரு நிகழ்ச்சியாகும். பைபிளின் பழைய ஏற்பாட்டிலும் இச்செய்தி குறிப்பிடப்பட்டள்ளது. (Samuel, 12:23)
இசைச் சிகிச்சை பற்றி கஸ்ரன் விளக்கும்போது (1968) மூன்று முக்கியமான தொழிற்பாடுகளைக் குறிப்பிடுகின்றார். அவை: 1. ஆளிடைத் தொடர்புகளை வளமாக்கிப் பராமரித்துக் கொள்ளத்
துணை நிற்கின்றது.
2. தன்னிலை மேம்பாட்டுக்குத் துணை செய்கின்றது. தற்கணிப்பை உயர்த்த உதவுகின்றது. தன்னிறைவை அடைதல் வாயிலாக இது முன்னெடுக்கப்படுகின்றது. இதன் வாயிலாக இசையும் அதன் ஒத்திசைவும் மனித ஆற்றலுக்கு வலுவூட்டி நிற்பதுடன், செயற்பாடுகளில் ஒழுங்கமைப்பையும் ஏற்படுத்துகின்றது. 3. மொழி வாயிலாகச் சமர்ப்பிக்கப்படும் விடயங்களை ஆற அமர இருந்து மனத்திலே கட்டமைப்புச் செய்வதற்கும் நிரற்படுத்துவதற்கும், இசை துணைநிற்கின்றது.
கருத்தேற்றக் கற்பித்தலின் சிறப்பார்ந்த நடவடிக்கையாக அமைவது மாணவர்களது மனத்தில் ஆசிரியர் நிகழ்த்தும் கருத்தேற்றமாகும். மனத்திலே கற்க வேண்டியவற்றைப் பதியச் செய்வதற்கும் தடைகளைத் தகர்ப்பதற்குமுரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதலும் உளநிலை ஒய்வை (Psycho Relaxation) ஏற்படுத்துதலும் இங்கே முக்கியத்துவம் பெறுகின்றன. ஆசிரியரின் மிகவுன்னதமான வகிபாகத்தை மாணவர்க்கு உணர்த்துதலும், இக்கற்பித்தலில் முன்மொழியப்படுகின்றது.
குறிப்பிட்ட கற்றல் அலகை ஆழ்மனத்திலே பதிய வைப்பதற்குரிய பொருத்தமான இசை வடிவத்தைத் தெரிந்தெடுத்தல் இங்கே முக்கியத் துவம் பெறுகின்றது. வயலின் போன்ற நரம்புக் கருவிகளின் இசை கூடிய செல்வாக்கை விளைவித்தல் லெய்சிக்கில் உள்ள கார்ல்மார்க்ஸ் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இருந்து தெரிய வருகின்றது. இசையை வழங்கும்போது முதலில் மனத்தை ஒய்வு நிலைக்குக் கொண்டுவருதலும், அதனைத் தொடர்ந்து கற்க வேண்டிய மொழியலகை அளிக்கை செய்தலும் இடம் பெறும். அமைதியான மனம் கற்றலை உள்வாங்கக் கூடிய தயார்நிலையிலிருத்தல் குறிப்பிடத்தக்கது.
-68- தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

கற்போரின் மனநிலை அல்லது மனப்பக்குவம் இம்முறையியலில் ஆழ்ந்த கவனத்துக்கு உட்படுத்தப்படுகின்றது.
நனவிலி மனத்தின் இயல்போடும் ஊக்கலோடும் மொழிகற்றலை இணைக்கும் பொழுது, ஆழ்ந்த பதிதல் ஏற்படுகின்றது. மொழியின் சிறப்பார்ந்த பரிமாணங்களுள் ஒன்றாக விளங்கும் ஆக்க மலர்ச்சியைத் தூண்டி விடுவதற்கும் நனவிலி மனத்தின் ஊக்கல் வளமான பின்புலத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. பெரும் ஆற்றல்களினதும், விசைகளினதும் உறங்கும் நிலையே நனவிலி மனம் என்று கொள்ளப்படுகின்றது. மொழித்திறன்களை நனவிலி மனவிசைகளுடன் தொடர்புபடுத்தும் பொழுது வினைத்திறன்மிக்க வெளிப்பாடுகளைத் தூண்டிவிட முடியும்.
கருத்தேற்றக் கற்பித்தல் மரபு வழியான யோக முறையோடும், தியான முறையோடும், உள ஒருங்கிணைப்பு முறையோடும் இணைந்தது. சுவாசச் சமநிலை உளச்சமநிலைக்கு அடிப்படையாகக் கருதப்படுகின்றது. ஒத்திசைவுள்ள சுவாசப் பயிற்சிக்கு மாணவர் உள்ளாக்கப்படுவர். எந்த மாணவர்க்கும் பொருத்தமான முறையிலே குறித்த அறிவு கையளிக்கப்பட முடியும் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அறிவை கையளிக்க முடியாதவர்கள் என்ற பேச்சுக்கு இடமில்லை. கற்றலுக்குத் தடையாக இருக்கும் குறுக்கீடுகள் ஒருமைப்பாட்டை வளர்த்துக் கொள்ளல் வாயிலாகக் களைந்தெறியப்படும்.
இதனை ஒரு மாற்றுவகையான கற்பித்தல் முறையொன்று குறிப்பிடலாம். நனவிலி மனத்தைக் குவியப்படுத்திக் கற்பித்தல் முன்னெடுக்கப்படுவதால், இது தனித்துவமுடைய ஒரு முறையியலாகவும் கருதப்படுகின்றது. மரபுவழியான கற்பித்தல் மேலோட்டமான நனவு உள்ளத்தோடு நிகழ்த்தப்படும் தொடர்பாடலாகவும், கருத்தேற்றக் கற்பித்தல், ஆழ்ந்த நனவிலி உள்ளத்தோடு நிகழ்த்தப்படும் இதமான செயற்பாடாகவும் கருதப்படுகின்றது. நெகிழ்ச்சியான உளநிலையின் ஆற்றலை இக்கற்பித்தல் குவியப்படுத்தி நிற்கின்றது.
கலாநிதி. சபா.ஜெயராசா -69

Page 38
இயற்கை அணுகுமுறை மொழிகற்பித்தல்
இஸ்பானிய மொழிக் கற்பித்தல் அனுபவங்களை அடியொற்றி ரார்சி ரெறல் (Terrel, 1983) என்பவரால் "இயற்கை அணுகுமுறை (The Natural Approach) உருவாக்கப்பட்டது. கற்பித்தல் நிலையில் ரெறலின் அனுபவங்களையும் கோட்பாட்டு நிலையில் பிரயோக மொழியியலாளர் கிறெசென் அவர்களது ஆய்வுகளையும் அடியொற்றி இந்த அணுகுமுறைக்கு முழுமையான வடிவம் கொடுக்கப்பட்டது. இயற்கை என்பதன் விளக்கம் யாதெனில், இயல்பானது, உளவியல் மயப்பட்டது, நேரடியானது, சீர்திருத்தப்பட்டது, பகுப்பாய்வுப் பண்பு கொண்டது, பின்பற்றிச் செய்யக்கூடியது முதலியனவாகும். அதாவது இலக்கண அழுத்தங்களைப் பொருட்படுத்தாது கற்றலை முன்னெடுத் தலே இங்கு வலியுறுத்தப்படுகின்றது. பயிற்சிகளிலும் பார்க்க மாணவர்க்கு வழங்கப்படும் மொழி உள்ளிட்டுக்கு (Input) இங்கு முதன்மை வழங்கப்படுகின்றது. மொழியைக் கிரகித்துக் கொள்ளலுக்கு இங்கே அதீத முக்கியத்துவம் தரப்படுகின்றது.
தொடர்பாடலே மொழியின் அடிப்படைத் தொழிற்பாடாகக் கருதப்படுகின்றது. மொழியின் கோட்பாட்டுக் கட்டமைப்புக்கு இவர்கள் வலியுறுத்தல் வழங்கவில்லை. சொற்களும் அவற்றுக்குரிய கருத்துக்களும் முதன்மைப்படுத்தப்படுகின்றன. தொடர்பாடலில் இலக்கணம் என்பது ஒரு துணை ஆதாரமாக மட்டுமே தொழிற்படுகின்றது. அதுவே முதல் நிலையாகாது என்பது இவர்களின் துணிபு. செய்தியும் கருத்துமே தொடர்பாடலில் மேலோங்கி நிற்கின்றன. செய்தியை வடிவமைத்தலும், விளங்கிக் கொள்ளலுமே மொழியில் தலைப்பட்டு நிற்கும் செயற்பாடுகளாகும்.
இரண்டாம் மொழி கற்பித்தலுக்கு மட்டுமன்றி முதலாம் மொழி கற்பித்தலுக்கும் இந்த அணுகுமுறை துணை செய்வதாக அமையும், வரன் முறையான இலக்கணத்தைக் கற்பதற்கு முன்னரே குழந்தைகள் தாய்
-70- தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

மொழி வாயிலான தொடர்பாடலை மேற்கொள்ளத் தொடங்கி விடுகின்றார்கள். சரளமான பேச்சிலும் ஈடுபடுகின்றார்கள்.
தாய்மொழியைத் திரட்டிக் கொள்ளல் இயற்கையாக நிகழும் செயற்பாடாகும். ஒருவரால் முனைப்புடன் அறியப்படாது, நனவிலி பூர்வமாக அது இயற்கையாக நிகழ்கின்றது. இந்தச் செயற்பாடு இரண்டாம் மொழியைத் திரட்டிக் கொள்வதற்கும் விரிவுபெறும். கற்றல் என்பது நனவுபூர்வமாக நிகழ்த்தப்படும் செயற்பாடாகும். இதனால் இந்த அணுகுமுறையில் "கற்றல்" என்பதும் "திரட்டிக் கொள்ளல்" என்பதும் வேறு வேறுபட்ட செயற்பாடாக நோக்கப்படுகின்றன.
திரட்டிக் கொள்ளப்பட்ட மொழியாற்றலை நெறிகை செய்து செம்மைப்படுத்தி வெளியீடு செய்வதற்கே கற்றல் துணை நிற்கும். கற்போரின் ஊக்கல், தன்னம்பிக்கை உறுதிமிக்க தற் படிமம், பதகளிப்புக்கு உள்ளாகாமை முதலிய காரணிகளும் மொழியாற்றல்களை வளர்த்துக் கொள்வதற்குத் துணையாக அமையும். தாக்கம் விளைவிக்கும் எதிர்மறை மனவெழுச்சிகள் தாழ்ந்த நிலையிலிருக்கும் பொழுது, கூடுதலான மொழி உள்ளீடுகளை ஒருவரால் உள்வாங்கக் கூடியதாக இருக்கும். நம்பிக்கையுடன் மொழிசார்ந்த இடைவினைகளை அப்போது மேற்கொள்ளக்கூடியதாகவுமிருக்கும். பிறமொழி ஒன்றைப் பேசுவதற்குப் பயப்படுதலும், பதகளிப்பாதலும் மொழியை உள்வாங்குதலிலும், மொழியை வெளியிடுதலிலும் எதிர்நிலையான பாதிப்புக்களை ஏற்படுத்தும்.
மொழி கற்பிக்கும் பொழுது மாணவரால் கிரகித்துக் கொள்ளப்படத்தக்க வகையில் இயன்றளவு கூடுதலான உள்ளீடுகளை வழங்குதல் வேண்டும். கேட்டலுக்கும் வாசித்தலுக்கும் கூடுதலான முக்கியத்துவம் அளிக்கப்படும் வேளை பேச்சு தானாக முகிழ்த்தெழுதல் சாத்தியமாகும். நெருக்குவாரமற்ற வகுப்பறைச் சூழல் மொழியைத் திரட்டிக் கொள்வதற்குரிய வாய்ப்பான நிலையை ஏற்படுத்திக் கொடுக்கும்.
நான்கு வகையான பிரிவுகளில் இவர்கள் மொழிகற்றல் இலக்குகளை விளக்குகின்றார்கள். அவை வருமாறு: 1. பேச்சுவடிவான அடிப்படைத் தொடர்பாடல் திறன்களை வளர்த்துக்
கொள்ளல் - எடுத்துக் காட்டாக பொது விடயங்களிலே நிகழ்த்தப் படும் அறிவிப்புக்களைக் கேட்டலும், துலங்குதலும்.
கலாநிதி. சபா.ஜெயராசா -71

Page 39
2. எழுத்து வடிவிலான அடிப்படைத் தொடர்பாடல் திறன்களை வளர்த்துக் கொள்ளல் - எடுத்துக்காட்டாக தனிப்பட்ட கடிதங்களை வாசித்தலும் எழுதுதலும்.
3. பேச்சு வடிவிலான புலமைக் கற்றல் திறன்கள் - எடுத்துக்காட்டாக
விரிவுரைகளைச் செவிமடுத்தல்.
4. எழுத்து வடிவிலான புலமை நிலைக் கற்றல் திறன்கள் - எடுத்துக்
காட்டாக விரிவுரைக் குறிப்புக்களை எடுக்கும் திறன்
கற்போரின் வகிபங்குகள் மொழி விருத்தி மட்டங்களுக்கு ஏற்றவாறு மாறுபடும். எதைப் பேசவேண்டும், எப்படிப் பேச வேண்டும், எத்தகைய மொழிப் பிரயோகங்கள் வேண்டப்படுகின்றன என் பற்றுக்கு ஏற்றவாறான தீர்மானங்களுக்கு ஏற்றவாறு கற்போரின் வகிபங்குகள் மாற்றமடையும்.
இரண்டாம் மொழி ஒன்றைக் கற்கும் பொழுது முதலில் பேசுவதற்கு முந்திய கட்டம் இடம் பெறும். இங்கே மொழிச் செயற்பாட்டில் பங்குபற்றல் நிகழுமேயன்றி இலக்கு மொழியிலே துலங்கல் முக்கியத்துவம் பெறமாட்டாது. அடுத்ததாக நிகழும் ஆரம்ப மொழிக்கட்டத்தில் தனிச் சொற்களால் அல்லது சிறிய தொடர்களால் துலங்கல் நிகழ்த்தப்படும். இதனைத் தொடர்ந்து பேச்சு முகிழ்த்தெழும் கட்டம் உருவாகின்றது.
ஏனைய கற்போருடன் இணைந்து மாணவர்கள் தொடர்பாடற் பயிற்சிகளில் ஈடுபடல் வேண்டும். இதன் வாயிலாக மொழித் திறன்களைப் படிப்படியாக வளர்த்துக் கொள்ளல் வேண்டும்.
பொருத்தமான மொழி உள்ளீடுகளைத் தொடர்ச்சியாக வழங்கல் ஆசிரியரின் முக்கிய கடமையாகின்றது. மகிழ்ச்சியான வகுப்பறைச் சூழலை ஏற்படுத்திக் கொடுத்தலும் ஆசிரியரின் சிறப்பார்ந்த செயற்பாடாகின்றது. மாணவர்கள் தயார் நிலைக்கு வருவதற்கு முன்னர் அவர்களைப் பேசச் செய்வதற்கும் ஆசிரியர் முயற்சிக்கமாட்டார். கற்றலுக்குரிய வளமான துணைச்சாதனங்களைத் திரட்டிக் கொடுத்தலும் ஆசிரியரின் கடமையாகின்றது. கற்பித்தலின் போது முழுநிலை உடற்கூற்றுத் துலங்கல் நுட்பவியல்களும் ஒன்றிணைத்துச் செயற்படுத் தப்படும்.
முறை சாராச் சூழலில் ஒருவர் எவ்வாறு முதலாம் மொழியையும் இரண்டாம் மொழியையும் இயல்பாகத் திரட்டிக் கொள்கின்றார்கள் என்பவற்றை நுணுகி ஆராய்ந்து இயற்கை அணுகுமுறை உருவாக்கப்
-72- தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

பட்டுள்ளது. இலக்கணத் திட்பநுட்பங்களுக்கு ஏற்ப ஒருவரது மொழித்திறனைப் பலவந்தமாக முன்னெடுத்தல் இதன் நோக்கமன்று. கிரகிக்கத்தக்க மொழி உள்ளீடுகளையும், பொருள் பொதிந்த மொழிச் செயற்பாடுகளையும் வழங்கி மொழியாற்றலை மேம்படுத்துதலே இந்த அணுமுமுறையின் உள்ளடக்கமாகின்றது.
முதலாம் மொழி மற்றும் இரண்டாம் மொழியைக் கற்பித்தல் தொடர்பான விரிவான ஆய்வுகளை மொழியியலாளரும், கல்வியியலாளரும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றார்கள். வேகமாகவும் வினைத்திறனுடனும் மொழியைத் திரட்டிக் கொள்ளும் செயற்பாட்டில் பேச்சு மொழியின் முக்கியத்துவமும், கேட்டுக் கிரகித்துக் கொள்ளலின் முக்கியத்துவமும், தொடர்பாடலின் இன்றியமையாமையும் அதீத வலியுறுத்தல்களுக்கு உள்ளாகின்றன.
கலாநிதி. சபா.ஜெயராசா -73

Page 40
முழுநிலை உடற்கூற்றுத்துலங்கல்
மொழிக் கற்றலை உடலியக்கத் தொழிற்பாடுகளுடன் இணைத்து உருவாக்கப்பட்ட முறையியலாக "முழுநிலை உடற்கூற்றுத் துலங்கல்” (Total Physical Response) மேலெழுந்துள்ளது. கலிபோர்னியாவிலுள்ள சன்ஜோஸ் அரச பல்கலைக்கழகத்து உளவியற் பேராசிரியர் ஜேம்ஸ் அசெர் என்பவரால் இந்த முறையியல் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. கற்றற் கோட்பாடுகள், மானிடவாத ஆசிரியம், மற்றும் விருத்தி உளவியல் ஆகியவற்றின் ஒன்றிணைப்பு இந்த முறையியலுக்குரிய விசையை வழங்கியுள்ளது.
வாய்மொழிச் செயற்பாடுகளையும் உடலியக்கங்களையும் ஒன்றிணைப்பதால், மொழியை நினைவிற்பதித்தலும் மீட்டெடுத்தலும், வினைத்திறனுடன் நிகழும் என "தடயக் கோட்பாடு" (Trace Theory) வலியுறுத்துகின்றது. முதலாம் மொழித் திரட்டல் தொடர்பான சிறாரின் செயற்பாட்டுக்கும் வளர்ந்தோரின் வெற்றிகரமான இரண்டாம் மொழித் திரட்டற் செயற்பாட்டுக்குமிடையே சமாந்தரமான இணைப்புக்கள் காணப்படுகின்றன. கட்டளைகளை அடியொற்றியே சிறாரின் பேச்சு ஆரம்பிக்கின்றது. சொல்வழியாகத் துலங்குவதற்கு முன்னதாக அவர்கள் உடல் வழியாகவே துலங்குகின்றார்கள்.
இவ்வாறாகத் தாய்மொழியூடாட்டத்தில் சிறார் மேற்கொள்ளும் செயல்முறையை வளர்ந்தோர் இரண்டாம் மொழியைத் திரட்டிக் கொள்ளும் போது பின்பற்றப்படவேண்டியதாக அமைகின்றது.
மொழி கற்றலில் மனவெழுச்சிக் காரணிகளின் முக்கியத்துவத்தை மானிடப் பண்பு உளவியல் வலியுறுத்துகின்றது. மனவெழுச்சியோடிணைந்த பேச்சு உளநெருக்கு வாரங்களைத் தணித்துக் கற்றலை விசைப்படுத்துகின்றது. மொழி கற்பிக்கும் பொழுது கிரகித்தற் பயிற்சியே முதலில் முன்னுரிமைப்படுத்தப்படல் வேண்டும். மொழிக் கட்டு" மானத்தைக் காட்டிலும் கருத்து விளக்கத்துக்கே முக்கியத்துவம் தருதலுடன் கற்றலின் வழியாக கற்போரின் உளநெருக்குவாரங்களைத் தணிப்பதற்கு உதவுதலே சிறந்த கற்பித்தலாகின்றது.
-74- தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

நடத்தை வாத உளவியல் அடிப்படையில் குழந்தையொன்று மொழியை எவ்வாறு கற்றுக் கொள்கின்றது என்பதை ஜோன் டி சிசிகோ பின்வருமாறு விளக்குகின்றார். ஒரு வயதுக் குழந்தையை நோக்கி"பந்து" என்றும் அதனை எடுக்குமாறும் தாய் கூறுகின்றார். வீட்டில் எழுப்பப் படும் பலவித ஒலிகளில் இருந்து "பந்து" என்ற ஒலியைக் குழந்தை வேறுபடுத்திக் காண்கின்றது. பந்தைத் தேடியெடுத்து தாயிடம் கொண்டு வந்து காட்டி குழந்தை துலங்குகின்றது. சூழலில் உள்ள ஏனைய ஒலிகளிலும் பார்க்க குறிப்பிட்ட ஒலிக்குக் குழந்தை வேகமாகத் துலங்குகின்றது. மீள வலியுறுத்தற் செயற்பாடே இவ்வாறான விரைந்த துலங்கலை ஏற்படுத்தியுள்ளதென்றுகொள்ள வேண்டியுள்ளது. தாய் தந்தையரின் வேண்டுகளுக்கு உடலியக்க நிலையிலே துலங்குவதனால் தாய்மொழி வேகமாகக் கற்றுக் கொள்ளப்படுகின்றது.
முழுநிலை உடற்கூற்று நிலைத் துலங்கற் கற்றல் வலது மூளையுடன் இணைந்த கற்றலாகின்றது. மனவெழுச்சி கலந்த நிலையில் மொழி கற்பிக்கப்படும் பொழுது அது வலதுமூளையுடன் இணைந்த செயற்பாடாகின்றது.
பேச்சுத்திறன்களை வளர்த்தெடுத்தலே மொழி கற்பித்தலின் தலையாய நோக்கம் என இவர்கள் குறிப்பிடுகின்றனர். மொழித்திறன்களைப் பெற்றுக் கொள்வதற்குரிய வழிமுறையாகக் கிரகித்தல் அமைகின்றது. கேட்டலும், ஆற்றுகை செய்தலும் இக்கற்பித்தலிலே வலியுறுத்தப்படுகின்றன. தனித்தனியாகவும் கூட்டாகவும் மாணவர்கள் ஆசிரியரின் வேண்டுகோள்களைச் செய்து காட்டல் வேண்டும். விநோதமான கட்டளைகளைச் செய்து காட்டுவதன் வாயிலாகவும் கற்றல் சுவையுடன் முன்னெடுக்கப்படும்.
மாணவர்களை நடிகர்களாகவும், ஆசிரியரை நெறியாளராகவும் கொண்ட கற்பித்தல் முறை இதுவெனக் குறிப்பிடப்படுகின்றது. "அறிகை சார்ந்த அறிபடத்தை (MAP) மாணவர்கள் உருவாக்கிக் கொள்வதற்குரிய உடற்கூற்றுத் துலங்கற் பயிற்சிகளை ஆசிரியர் வழங்க வேண்டும்.
முழுநிலை உடற் கூற்றுத் துலங்கல் அடிப்படையில் வினைச் சொற்கள் கற்பித்தலுக்கு சில எடுத்துக்காட்டுகள் வருமாறு: வினைச் சொற்களைச் சொல்லும் பொழுது மாணவர்கள் உடலியக்கத்தை மேற்கொண்டு சொல்லியும் செய்தும் காட்டல் வேண்டும்.
கலாநிதி. சபா.ஜெயராசா ? _

Page 41
கழுவுதல் - உங்கள் முகம்
உங்கள் கைகள்
உங்கள் கோப்பை
எடுங்கள் - உங்கள் பேனாவை
உங்கள் பென்சிலை
உங்கள் புத்தகத்தை
பாருங்கள்- உங்கள் மேசையை உங்கள் கதிரையை உங்கள் சப்பாத்தை வரைதற் செயற்பாடுகள் வாயிலாக மொழித்திறன்களை வளர்த்தல்.
வட்டம் வரைக நீள் சதுரம் வரைக மாங்காய் வரைக
இயக்குதல் வாயிலாக மொழியறிவை மேம்படுத்தல்
கணினியை இயக்குதல் உந்துருளியை இயக்குதல் மிதிவண்டியை இயக்குதல் தொலைக்காட்சிப் பெட்டியை இயக்குதல் அடுக்குதல் வாயிலாக மொழி வளத்தை ஏற்படுத்துதல்.
நேர்க்கோட்டில் அடுக்குதல் ஒன்றின் மேல் மற்றையதை அடுக்குதல் ஏறு நிரைப்படுத்தி அடுக்குதல் செய்தல் வாயிலாக மொழியறிதல் - உடலியக்கத்தாற் பிற பொருட்களைக் செய்தல்.
சூடேற்றுதல் குளிரூட்டுதல் தேநீர் தயாரித்தல்
பாமர் என்பவர் வினைப்பாடுகளின் வாயிலாக ஆங்கில மொழி கற்றல் (English Through Actions) என்ற முறையியலை உருவாக்கினார்.
-76- தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

இதனை மேலும் விரிவாக்கியும், மேலும் உளவியல் மயப்படுத்தியும் முழுநிலை உடற்கூற்றுத் துலங்கல் உருவாக்கப்பட்டது. கிரகித்துக் கொள்ளப்படத்தக்க உள்ளிட்டுக்கும், உளநெருக்குவாரங்களில் இருந்து விடுதலையளிப்பதற்கும் வல்ல ஏற்பாடுகள் முழுநிலை உடற்கூற்றுத் துலங்களிலே விரிவாக உருவாக்கப்பட்டுள்ளன.
ஆரம்பநிலை மொழிகற்றலுக்கே இம்முறையியல் கூடியளவு பொருத்தமுடையதாகக் காணப்படுகின்றது. முன்பள்ளிக் கூடங்களிலும், ஆரம்பப் பள்ளிக்கூடியங்களிலும் இந்த முறையியலைப் பயன்படுத்தி மொழி கற்பிக்கப்பட்ட வேளை மாணவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் செயற்படுதல் கண்டறியப்பட்டுள்ளது. வேறுமுறையியல்களுடன் இதனை இணைத்துப் பயன்படுத்தவும் முடியும். கற்ற விடயங்களை இடம் மாற்றுவதற்குரிய பயிற்சிகளும் இந்த முறையியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. குறுகிய காலத்தில் வினைத்திறனுடன் மொழியைக் கற்பிப்பதற்குரிய சிக்கன நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
மொழியின் இயக்கம் வினைச் சொற்களைச் சூழ்ந்தே நிகழ்கின்றது. வினைச் சொற்களும் செயற்பாடுகளும் இயல்பாகவே ஒன்றிணைந்” துள்ளமை இக்கற்பித்தல் முறையியலுக்கு வலிமை சேர்க்கின்றது. வினைச் சொற்களை நடுநாயகமாகக் கொண்டே கற்றல் ஒழுங்கமைக்கப்படுகின்றது. இதுவே இக்கற்பித்தலின் தளமாகவும் பலமாகவும் அமைகின்றது.
கலாநிதி. சபா.ஜெயராசா -7グ

Page 42
வாசிப்புத்திறன்களை மேம்படுத்துதல்
கடந்த சில ஆண்டுகளாக அறிகை விஞ்ஞானிகள் சிறார்களின் வாசிப்புத்திறன் தொடர்பாக விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். மொழி கற்பித்தலை மேலும் வளம்படுத்துவதற்கும், சிறார்க்குரிய நூல்களை எழுதுவதற்கும் அந்த ஆய்வின் முடிவுகள் பெருமளவிலே பயன்படத் தொடங்கியுள்ளன. வாசிப்புக்கற்பித்தலில் அனைத்தையும் உள்ளடக்கிய (Whole Language) செயல்முறையைப் பயன்படுத்துதலால் கூடிய பயன்விளைவுகள் எட்டப்படுமென ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன. அதாவது வாசிப்போடு இணைந்த காண்பியங்கள், கலந்துரையாடல்கள், தூண்டுதலளிக்கும் போட்டிகள், எழுத்துப் பயிற்சிகள், ஒழுங்கமைந்த திறன்விருத்திகள் முதலியவை ஒன்றிணைக்" கப்படல் வேண்டுமென்ற முடிவுகள் மேலெழுந்துள்ளன.
வாசிப்புச் செயற்பாட்டினை ஏனைய மொழிக்கலைகளுடன் ஒன்றிணைத்துச் செயற்படுத்த வேண்டியுள்ளது. கேட்டல், பேசுதல், பார்த்துக்கிரகித்தல், எழுதுதல் என்பவை ஏனைய மொழிக் கலைகளாகின்றன. இவற்றை ஒன்றிணைத்துச் செயற்படும் சூழலாக்கம் “மொழிச் G)F6sarà espa” (Language Rich Environment) 6TGöp Jospi' IG) b. மொழிச் செல்வச்சூழல் சிறந்த அச்சுச் செல்வச்சூழலையும் நூல் வெளி யீட்டுச் சூழலையும் உள்ளடக்கியதாக அமையும். அதாவது வாசிப்புக்" குரிய பலவகையான நூல்களையும் நூலாக்கங்களையும் உள்ளடக்கிய தாக அமையும்.
பொது வாசிப்பை வளர்க்கும் பொழுது, வாசிப்புச் சார்ந்த சிறப்புத் திறன்களை மேற்கொள்ளும் முயற்சிகளையும் முன்னெடுத்தல் வேண்டும். அவையாவன:
1. அச்சுப் பதிவியல் ஒளித்திரை சார்ந்த எண்ணக்கருக்கள் 2. எழுத்து வடிவங்களை இனங்காணும்திறன். 3. ஒலிக்கட்டமைப்பை விளங்கிக்கொள்ளல்
-78- தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

4. சொற்கட்டமைப்பை இனங்காணல் 5. Gif|TGöGLDIT565 (Word Attack) 6. வாசிப்பில் தன்னைத்தானே நெறிகை செய்தல்.
மேற்கூறிய திறன்களை ஒழுங்கமைந்த முறையிலே முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளல் வேண்டும். ஆரம்பப் பாடசாலைகளுக்குவரும் மாணவர்கள் வேறுவேறுபட்ட ஒலிமொழி அனுபவங்களுடனும், அச்சுமொழி அனுபவங்களுடனும் வருகின்றனர். குடும்பச் சூழலால் அச்சுச் செல்வ அனுபவங்களை மிகுதியாகப் பெற்றுக் கொள்ளும் சிறுவர்களும் இருக்கிறார்கள்.
வாசித்தலுக்கு அடிப்படையாக அமைவது எழுத்துக்களை இனங்காணும் திறனாகும். எழுத்துக்களை இனங்காணல் எளிதாகும் பொழுது, அதற்கெனச் செலவிடப்படும் மூளைவலு (Mental Energy) விடுவிக்கப்படுகின்றது. மீதப்படுத்தப்படும் உளவலு வாசிப்புக்குரிய நுழைவாயிலை எளிதாக்கிவிடுகின்றது. எழுத்துக்களையும் அவற்றுக்குரிய ஒலிப்பையும் சிறார் முதலிலே கற்றுக்கொள்ளுகின்றனர். சில எழுத்துக்களிடையே காணப்படும் அமைப்பு இணக்கப்பாடு அல்லது எழுத்துவடிவ இணக்கப்பாடு வாசித்தலிலே சிறார்க்குச் சிக்கலை ஏற்படுத்தி விடுகின்றது. எடுத்துக்காட்டாக பா, டா dp முதலியவற்றைக் குறிப்பிடலாம். எழுத்தின் வடிவத்தையும் பெயரையும் இணைக்கும் காண்பியங்களைப் பார்த்தவாறு பாடுதல் முன்பள்ளிக் கற்பித்தலிலே பயன்தரக்கூடிய ஓர் அனுபவமாகும். சொற்கள் ஒலிகளால் ஆக்கப்படுகின்றன என்ற அனுபவத்தைப் பெறத்தவறுமிடத்து சிறாரின் வாசித்தல் திறன்களில் பின்னடைவுகளே ஏற்படுகின்றன. சொற்களின் ஒலிவடிவத்தையும் எழுத்துவடிவத்தையும் தொடர்புபடுத்திக் கற்காதவிடத்து ஆங்கிலமொழி வாசிப்பில் எழும் பிரச்சினை ஒன்று கீழே தரப்படுகின்றது.
Hat - 65/TÚLí)
What - 616760T
தமிழ்மொழி வாசிப்பில் அரவுகளின் ஒலி வடிவத்தையும் எழுத்துவடிவத்தையும் நோக்காதவிடத்து வாசித்தல் தீவிர பாதிப்புக்கு உள்ளாகும். சில எடுத்துக்காட்டுகள் வருமாறு:-
(1) செல் - சொல்
(2) கற்று " காற்று
(3) பேடு - போடு
கலாநிதி. சபா.ஜெயராசா -79

Page 43
சிறார் இலகுவாகக் குழப்பமடையக் கூடிய எழுத்துக்களை அறிந்த
அவற்றைக் குவியப்படுத்திக் கற்பித்தலிலே கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஒலிகளின் தொடர்ச்சியாகவே பேச்சு எழுகின்றது. சொற்களை உருவாக்கும் ஒலி அலகுகளைத் தொடர்புபடுத்தும் ஆற்றல்கள் சிறாரிடத்து வளர்க்கப்படல் வேண்டும். எடுத்துக்காட்டு வருமாறு:
th பூமாலை
மயில் ar மயில் இறகு - மயிலிறகு
வாசித்தலின் போது "ஒலியுணர்வு" என்ற செயற்பாட்டினைக் குழந்தை உளவியலாளர் ஆழ்ந்து வற்புறுத்தி வருகின்றனர் (Bill Honig, (2001) Teaching our Children to Read, California, Corwin press, INC) இந்நிலையில் ஒலிகளை வேறுபடுத்தும் பயிற்சி மற்றும் ஒலிசார்ந்த உளப்படிமங்களை உருவாக்கிக்கொள்ளும் பயிற்சி முதலியவற்றை சிறாரிடத்து வளர்த்தெடுத்துக்கொள்ளல் வாசிப்புத்திறன்களை வளர்த்தெடுத்துக் கொள்ளலுக்கு அடிப்படையாகின்றது. ஒலிகள் இணைந்து சொல்வடிவெடுத்தலை “மொழியுடன் வாழ்வதன்" வாயிலாகவே வளப்படுத்திக் கொள்ள முடியும்.
ஒலியுணர்வை வளர்ப்பதற்குரிய இசையும் அசைவும், ஒலி விளையாட்டுக்கள், பொம்மைகளோடு இணைந்து பேசுதல், ஒலிமாலை வளையம் முதலிய செயற்பாடுகளைச் சிறாருக்கு வழங்கி அவர்களின் முன்னேற்றத்தைப் பொருத்தமாக கணிப்பீடு செய்து, பின்னடைவில் உள்ள மாணவர்களை நோக்கி முன்னேற்றகரமான உறுதலையீடுகளை (Interventions) முன்னெடுத்தல் வேண்டும்.
ஒலியுணர்வை வளர்ப்பதற்கான பயிற்சியை பின்வரும்படி நிலைகளில் முன்னெடுக்கலாம்.
1. எளிமையான வசனங்களில் உள்ள சொற்களைப் பிரித்தறிதல்.
2. ஒத்திசைவுச் சொற்களை இனங்காணலும், உருவாக்கலும் - காடு,
மாடு, நாடு, வீடு.
3. சொற்களின் கட்டுமானத்தைப் பிரித்தறிதல் - பூமாலை-பூ+ மாலை 4. சொற்களின் இடை ஒலிகளை நிரப்புத்திறன்களை உருவாக்குதல்
Լէ - 6ծ)6ծ
பூ மாலை
-80- தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

5. ஒரெழுத்தின் ஒலி சொற்களுக்கு ஏற்றவாறு மாறுபடுதலைக் கற்றும்
கொள்ளல்
1. காகம்
2. அகம்
3. மங்களம்
4. கடிகாரம்
சிறாரிடத்து அதிக பயன்பாட்டில் உள்ள சொற்களை எழுதுவதற்கும் வாசிப்பதற்குமே முதலில் பயிற்சியளித்தல் வேண்டும். இச்சொற்களில் இருந்தே ஏனைய சொற்களுக்கு நகருதல் பொருத்தமான கற்பித்தல் முறையாகும். எழுதப்பட்ட சொற்களைத் தன்னியக்கமாக இனங்காணும் திறன்களை வளர்க்க நீண்ட பயிற்சிகள் துணை செய்யும். சொற்களைத் தன்னியக்கமாக இனங்காணும்திறன் வளர்ச்சியடையத் தொடங்க வாசிப்பின் வேகம் அதிகரித்துச்செல்லும், இந்நிலையில் மூளையின் வலுவைக் கருத்தறிதலோடு தொடர்புபடுத்தித் திருப்பிவிட முடியும்.
வாசிப்புப் பயிற்சியில் நிரற்கோடற்குலைப்பும் (Decoding) கிரகித்தலும் சிறப்பார்ந்த இடங்களைப் பெறுகின்றன. சில ஆய்வாளர்கள் நிரற்கோடற் குலைப்பையும் தன்னியக்கமாகச் சொற்களை இனங்கண்டு வாசித்தலையும் ஒரேவிதமான செயல்கள் என்று கூறுகின்றனர். ஆனால் வேறு சில ஆய்வாளர்கள் இரண்டினுக்குமிடையே வேறுபாடுகள் காண முனைந்துள்ளனர். (Bill Honig, 2001) சொற்களை உச்சரித்து வாசிக்கும் முனைப்புமிக்க செயற்பாட்டுக்கு அழுத்தங்கொடுத்தல் இங்கே முக்கியத்துவம் பெறுகின்றது.
அச்சடிக்கப்பட்ட சொல்லை ஒலிவடிவ சொல்லாக நிலை மாற்றுதலே நிரற்கோடற் குலைப்பு எனப்படுகின்றது. எழுத்துக்கும் அதற்குரிய ஒலிக்குமுள்ள தொடர்புகளை இனங்கண்டு வாசித்தலை மேற்கொள்ளல் இங்கே முக்கியத்துவம் பெறுகின்றது.
முதன்மைநிலை ஒன்றில் வாசிப்புத்திறனை வேகப்படுத்திக் கொள்ள முடியாதவர்களால் பின்னர் அத்திறன்களை மீட்டெடுத்தல் மிகுந்த கடினமானது. இத்தோற்றப்பாடு "மத்தியுவிளைவு" (Matthew Effect) எனப்படும். பெரும்பாலும் தாழ்ந்த வருமானம் கொண்ட சூழலில் வாழும் சிறார்களிடத்து இத்தோற்றப்பாடு காணப்படுகின்றது. அதாவது செல்வந்தர்கள் வாய்ப்புமிக்கோராக மாறுகின்றனர். ஏழைகள் ஏழைகளாகவே கல்விநிலையிலே தாழ்த்தப்படுகின்றனர்.
கலாநிதி. சபா.ஜெயராசா -81

Page 44
வெற்றிகரமான வாசித்தலை முன்னெடுப்பதற்கு சொல்வதெழுதற் பயிற்சி துணையாக இருக்கும். சொல்வதெழுதலில் பின்னடைந்துள்ளோர் வாசிப்பிலும் பின்னடைவு கொண்டவர்களாகவே இருப்பர். சொற்களுக்கும் ஒலிக்குமுள்ள தொடர்புகளை இனங்காணுவதற்கும் மீள வலியுறுத்திக்கொள்வதற்கும் சொல்வதெழுதற் பயிற்சி நேரடியான பங்களிப்பைச் செய்கின்றது. வேகமாக எழுதுதல், சரியாக எழுதுதல், கிரகித்தல், சரியான உச்சரிப்பு, எண்ணக்கருவாக்கம் முதலிய பல ஆற்றல்களை வளர்ப்பதற்கு சொல்வதெழுதற் பயிற்சித்துணை செய்யும்.
சொற்களை ஆசிரியர்கள் சரியாகவும் தெளிவாகவும் உச்சரித்துச் சொல்லாதவிடத்து, மாணவரின் வாசிப்புத்திறன் பாதிக்கப்படுதலும் கண்டறியப்பட்டுள்ளது. புதியசொற்களை மகிழ்ச்சியுடன் கற்கும் சூழலை ஆசிரியர் ஏற்படுத்திக்கொடுத்தல் வேண்டும். (Enjoy Learning New Words) இந்த மரபு வளர்க்கப்படாமையால், புதிய சொல்வடிவங்களைப் பார்த்து, "விளங்கவில்லை" என்று கோணலடையும் பண்பாடு வளர்ந்தோர் நிலையில் ஏற்படுத்தப்படுவதுடன் அறிவுசார்ந்த பின்னடைவை நோக்கியப் பெயர்ச்சி தூண்டப்படுகின்றது.
வாசிப்பின் சமகால வளர்ச்சி ஒளித்திரை அல்லது கணினித் திரை நோக்கிய வாசிப்பை நோக்கி வளர்ந்து வருகின்றது. இந்நிலையில் வாசிப்பின் முக்கியத்துவம் மேலும் வலுவடையத் தொடங்கியுள்ளது. அதிகம் அதிகமாக வாசிக்க வேண்டிய தேவையை சமகாலத் தொடர்பாடல் வளர்ச்சி ஏற்படுத்தி வருகின்றது.
முன்பள்ளி நிலையிலிருந்தே சிறாரின் வாசிப்புக்கலை வளர்ச்சியிலே தீவிர கவனம் செலுத்தவேண்டியுள்ளது. "பின்னர் வளர்க்கலாம்” என்று வாசிப்புப் பயிற்சியை ஒத்திவைத்தல் சிறாரின் அறிவு வளர்ச்சியிலும் தேடல் வளர்ச்சியிலும் மேலும் பின்னடைவுகளையே ஏற்படுத்தும்
இடைநிலை மட்டத்து வாசிப்புப் பயிற்சிகளை மேலும் ஆழமாக" வும், பன்முகப்பாங்குடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. இலங்கையின் இடைநிலைமட்ட வாசிப்புத்திறன் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளன. (தமிழ்மொழியும் இலக்கியமும், தரம் 10, ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி, 2007)
1. உயிர்த்துடிப்புள்ள, காட்டுருவாக்கச் செயல்திறனுடைய வாசகராகச்
செயற்படுவர்.
2. விளக்கத்தோடும் பொருளுக்கேற்ற உணர்ச்சியோடும் வாசிப்பார்.
-82- தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

3. வாசிப்பதன் மூலம் இலக்கியத்துக்கும் சமூகத்துக்குமிடையிலான
தொடர்பை அறிவர்.
கிரகித்துப்பொருள் உணர்ந்தமை புலப்பட வாசிப்பர். கிரகித்துப்பொருள் அறிந்து வாசிப்பர். குறித்த நோக்கத்துக்காக வாசிப்பர். நடைமுறைத் தேவைகளுக்காக வாசிப்பர்.
பல்வேறு நோக்கங்களுக்காக வாசிப்பர்.
ஆக்கத்திறனை மேம்படுத்துவதற்காக வாசிப்பவர்.
10. பல்வேறு படைப்புக்களை நுணுகி வாசித்து, அவற்றில் கையாளப்
பட்டுள்ள உத்திகள் கருத்துக்கள் என்பவற்றை விமர்சிப்பர்.
11. மொழித்திறன்களை விருத்தி செய்வதற்காக வாசிப்பர்.
12. தரப்பட்ட பாடப்பரப்புகளில் வருகின்ற பயன்பாட்டு இலக்கணத்தை
இனங்கண்டு பயன்படுத்துவர்.
13. ஆர்வத்துடன் வாசிப்பர். 14. ஆக்கங்களை வாசித்துப்பெற்ற அனுபவங்களை ஏனையவர்களுடன்
பகிர்ந்து கொள்வர்.
வாசிப்பின் முக்கியத்துவம் மேலும் மேலும் வளர்ச்சியடைந்து வரும் சமகாலச் சூழலில் வாசிப்புத்திறன்களைச் செம்மையுற வளர்க்க வேண்டிய பெரும் பொறுப்புடன் பாடசாலைகள் இயங்க வேண்டியுள்
GT6.
சுயமாகக் கற்கும் செயற்பாடு வாசிப்பு வளர்ச்சியுடன் இணைந்த செயற்பாடு என்பதை மனங்கொள்ள வேண்டியுள்ளது. நவீன கல்வியில் வலியுறுத்தப்படும் "கற்பதற்காகக்கற்றல்" என்பதிலும் வாசிப்பின் முக்கியத்துவமே மேலோங்கியுள்ளது. வாசிப்பைத் தளர்வுறச் செய்யும் புறவிசைகளை இனங்காணுதலும் ஒடுக்குதலும் ஒன்றிணைந்த வகையிலே மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன.
வாசிப்பின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுமளவுக்கு அதன் நடைமுறைகளிலே உரியகவனம் செலுத்தப்படாதிருத்தல் சமகாலக் கல்விச்செயற்பாட்டின் இடைவெளியைப் புலப்படுத்தி நிற்கின்றது.
கலாநிதி. சபா.ஜெயராசா -83

Page 45
எழுத்துக் கற்பித்தல்
எழுத்துப் பற்றிய புலக்காட்சி, மற்றும் எழுத்துணர்வு உந்தல் ஆகியவை ஆரம்பநிலைகளில் மகிழ்ச்சியுடனும் உள்ளுணர்வுடனும் வளர்க்கப்பட வேண்டியுள்ளன. விரல்களிலே தூரிகையைப் பற்றி விரும்பியவாறு வண்ணங்களைக் கையாளும் மகிழ்ச்சியிலிருந்து நெறிப்பாடு கொண்ட நேர்க்கோடு, கிடைக்கோடு, வட்டம் சுழித்தல் என்றவாறு வரைபுகளை முன்னேற்றம் பெறச்செய்தல் வேண்டும். இவற்றைத் தொடர்ந்து நேர்க்கோடுகளையும் கிடைக்கோடுகளையும் இணைத்தல் கிடைக்கோடுகளில் ஆரம்பித்து நேர்க்கோட்டுக்குச் செல்லல், முதலாம் எளிய பயிற்சிகளை இசையுடனும், காண்பியங்களுடனும் விளையாட்டுக்களுடனும் கற்பித்தல் வேண்டும்.
எளிமையான பயிற்சிகளில் இருந்து சிறிது சிக்கலடையும் பயிற்சிகளுக்கு மாணவர்கள் மகிழ்ச்சியுடன் நகர்ந்து செல்வதற்குரிய திட்டமிடல் முக்கியமானது. கிடைக்கோட்டைத் தொடர்ந்து வட்டம் சுழித்தல், நேர்க்கோட்டைத் தொடர்ந்து வட்டம் சுழித்தல், தொடர்ச்சி யாக வட்டம் சுழித்தல் என்றவாறு பயிற்சிகளைத் தொடர்ந்து எழுத்துக் கற்பித்தலை ஆரம்பிக்கலாம் எழுத்துக்கற்பித்தலை ஆரம்பிப்பதற்கு முன்னர் கட்புலன், செவிப்புலன், தொடுபுலன் முதலியவற்றால் எழுத்துக்களை உணரவும், புலக்காட்சி கொள்ளவும் செய்தல் வேண்டும். வண்ணங்களால் எழுத்துக்களைப் பார்த்தல், மணல் எழுத்துக்களையும் இத எழுத்துக்களையும் கைகளால் தொட்டு அனுபவித்துப்பார்த்தல், எழுத்துக்களை பல்வேறு ஒலிகளால் உச்சரிப்பதைக் கேட்டல், முதலாம் மகிழ்ச்சியான செயற்பாடுகளுக்குப் பின்னரே எழுத்துக்களை எழுத ஆரம்பித்தல் வேண்டும்.
தமிழ் எழுத்துக்களில் 'அ' ஒரு சிறப்புவாய்ந்த எழுத்தாகும். எழுத்தை எழுதுவதற்குரிய அடிப்படைத்திறன்களாகிய நேர்க்கோடிடல், கிடைக்கோடிடல், வட்டம் சுழித்தல் ஆகிய மூன்றும் 'அ' என்ற எழுத்திலே காணப்படுதல் குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் தாம் விரும்பிய எழுத்துக்களை எழுதுவதற்குரிய சந்தர்ப்பங்களும், முதல்
-84- தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

எழுத்தை அடிப்படையாகக் கொண்ட சொற்களைத் தெரிவு செய்வதற்குரிய வாய்ப்புக்களும் வழங்கப்படல் வேண்டும்.
எழுத்துக் கற்பித்தலில் வினா நுட்பங்கள் பயன்படக்கூடியவை. எடுத்துக்காட்டாக "அம்மா” என்பதன் முதல் எழுத்து என்ன? கடைசி எழுத்து என்ன? என்றவாறு வினவி, சரியான விடைக்குப் பாராட்டு வழங்கலாம். எழுத்துப் பயிற்சியில் ஒர் எழுத்தைப் பெரிதாக எழுதுதல், சிறிதாக எழுதுதல், அடைப்புக்குள் எழுதுதல் என்பவை முக்கியமானவை. தொடர்ந்து நெடுங்கோட்டில் நீட்டி எழுதுதல், பக்கவாட்டில் கிடைநீட்சியில் எழுதுதல் முதலியவை மாணவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் அனுபவங்களாக அமையும்.
எழுத்துப் பயிற்சியில் இடைவெளி நிரப்பலும், முதன்மைநிலை ஒன்றில் மாணவர்களுக்கு மிக்கமகிழ்ச்சியைக் கொடுக்கும். இடைவெளி நிரப்பலில் நடு எழுத்தை நிரப்பல் (அடமா) முன்னெழுத்தை நிரப்பல் (ட ம்மா) கடை எழுத்தை நிரப்பல் (அம்.ட) என்றவாறு பலநிலைகளிலே பயிற்சிகளை வழங்கல் வேண்டும். எழுத்துப் பயிற்சியுடன் இணைந்த முக்கிய செயற்பாடு சொல்லாக்கப் பயிற்சியாகும். எடுத்துக்காட்டாக “அ” என்ற முதலெழுத்தை வைத்து சொற்களை ஆக்கும்படியும் எழுதும்படியும் மாணவர்களை வேண்டலாம். எழுத்து அட்டைகள் தயாரித்தல், சொல்லட்டைகள் தயாரித்தல், மடியம் (Folder) தயாரித்தல், சாளர நகர்ச்சி (Window Move) தயாரித்தல், முதலாம் ஒப்படைகள் மாணவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
எழுதுவதற்கு முன்னதாக அறிந்துகொள்ளும் பயிற்சியும்,
தகவல்களைத் திரட்டும் பயிற்சியும் “முன்னெழுத்து” (PreWriting) என்று கூறப்படும். எழுத்துப்பிழைகளைத் தவிர்த்துக்கொள்வதற்கும், வளமான எழுத்தாக்கங்களை மேற்கொள்வதற்கும் “முன்னெழுத்து" அனுபவம் துணைசெய்யும். இதன் தொடர்ச்சியும் வளர்ச்சியுமாக இடைநிலை வகுப்பு மட்டங்களில் நான்கு படிநிலைகளைக் கொண்ட பயிற்சி முன்னெடுக்கப்படல் வேண்டும். நான்கு படிநிலை மட்டங்களும் வருமாறு:
(1) முன்னெழுத்து
(2) முதல் வரைபு
(3) மீள் நோக்கல்
(4) தருகை முனையம் (Editing)
கலாநிதி. சபா.ஜெயராசா -85

Page 46
எழுத்துத்திறன்களையும் சொல்லாட்சியையும் வளர்த்துக் கொள்வதற்கு சொல்லியம் (Dictionary) பலவழிகளிலும் துணை நிற்கும். சொல்லியத்தை உசாவும் திறன்களை முதன்மை நிலைகளிலிருந்தே வளர்த்துக்கொள்ளல் வேண்டும். இதன் பொருட்டு சிறார்க்குரிய சொல்லியம், நடுத்தர வயதினருக்குரிய சொல்லியங்கள் வெளிவந்த வண்ணமுள்ளன.
எழுத்து அட்டைகளைச் சிதறவிட்டு அவற்றிலிருந்து சொற்களை ஆக்கும் பயிற்சி, சொல்லட்டைகளைச் சிதறவிட்டு அவற்றிலிருந்து வசனங்களை ஆக்கும் பயிற்சி, படங்களையும் சொற்களையும் இணைக்கும் பயிற்சி, படங்களையும் வசனங்களையும் இணைக்கும் பயிற்சி முதலியவை மாணவர்களுக்கு மகிழ்ச்சியை வழங்குவதுடன், எழுத்தாகத் திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்கும் துணையாக அமையும்.
இடைநிலை வகுப்புக்களில் எழுத்தாற்றலை வளர்ப்பதற்கு சொல் இணையங்களை (Webs) ஆக்கல், மூளை விசைப்படுத்தல் (Brain Stoming) முதலாம் நுட்பங்கள் பயன்விளைவிக்கக் கூடியவை.
எழுத்துக் கற்பித்தலிலே பயன்படுத்தக்கூடிய பிறிதொரு நுட்பமாக "கட்டற்ற எழுது" (Free Writing) அமைகின்றது. விரும்பிய தலைப்பில் விரும்பியவாறு எழுதத்தூண்டுதலே இங்கு முனைப்புப் பெறும் வேளை, மதிப்பீடு, கணிப்பிட்டுத் தீர்ப்புக் கூறலும் ஒத்தி வைக்கப்படும்.
சொற்களை வகைப்படுத்தி சொல்வங்கியை (Word Bank) ஏற்படுத்தும் செயற்பாடும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் சொல் வங்கியை அமைப்பதற்கு மாணவர் விரும்பிய வகைப்பாட்டுத் தெரிவுகளுக்குச் சந்தர்ப்பம் வழங்கலாம். எவ்விதமாகவும் சொற்களை வகைப்படுத்திச் சொல் வங்கியை உருவாக்கலாம். பெயர், வினை, பெயரடை என்றவாறு விரும்பிய வகைப்பாட்டிலே சொல்வங்கியை அமைக்கலாம். “சொல்வதல்ல காட்டல்” என்ற விளையாட்டும் மாணவர்களிடத்து உற்சாகத்தை ஏற்படுத்தும்.
சிறிய கதைகளை ஆக்குதலும் எழுத்துப்பயிற்சியை முன்னெடுப்பதற்குத் துணைசெய்யும், கதையைத் தொடக்கி வைத்து முடிவை எழுதும்படிகூறல், பன்முகப்பட்ட முடிவுகளுக்கான வாய்ப்புக்களைக் கூறியபன்மை அணுகுமுறைகளை ஏற்படுத்துதல் முதலியவை எழுதும் ஆற்றலை ஆக்கமலர்ச்சியுடன் இணைப்பதற்குரிய பெயர்ச்சியை ஏற்படுத்தும் பாத்திர இயல்புகளை இனங்காணலும் எழுதுதலும் மேலும் உற்சாகமளிக்கும் மொழிச்செயற்பாடாகும். பாத்திர இயல்புகளைப்
-86- தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

புலக்காட்சி கொள்ளல் ஆக்கமலர்ச்சியை முன்னெடுப்பதற்குத் துணையாக அமையும். பாத்திரங்களை இனங்காண்பதற்கு நிறுவற் பட்டி" யலைப் (Checklist) பயன்படுத்தலாம்.
எழுத்துத்திறனை மேம்படுத்துவதற்குரிய நுட்பங்களுள் ஒன்றாக "உரையாடல் எழுத்து" அமையும். இருவர் உரையாடல் செய்தலை எழுத்து வடிவாக்கும் பொழுது, பாத்திரப் புலக்காட்சியும், குறித்த பாத்திரங்களுக்குரிய கருத்து வெளிப்பாடுகளும் எழுத்து வீச்சுக்குள் கொண்டு வரப்படும். நகைச்சுவை உரையாடல்கள் மாணவர்களிடத்து மகிழ்ச்சியைத் தூண்டும் இத்தொடர்பில் நகையங்களை (Comics) ஆக்கும் ஒப்படைகளையும் மாணவர்களுக்கு வழங்கலாம்.
வசனங்களை நீட்டுதல், வசனங்களை இணைத்தல் முதலாம் பயிற்சிகளை இடைநிலைமட்ட மாணவர்களுக்கு வழங்கலாம்.
எழுத்தாக்க வகைகளை அறிந்திருத்தல் சிறந்த எழுத்தாக்கப் பயிற்சி களை வழங்குவதற்குத் துணையாக அமையும். எழுத்தாக்க வகைகள் வருமாறு:
1. தனியாள் அனுபவ உரை 2. தன் வரலாறு 3. அறிக்கைகள் 4. நகைச்சுவை எழுத்தாக்கம் 5. நொடிகள் 6. கவிதைகள் 7. நாட்குறிப்பு 8. பற்றுச்சீட்டுக்கள் 9. பட்டியல்கள் 10. போட்டிகள் 11. அழைப்பிதழ்கள் 12. நடப்பியற் புனைவுகள் 13. ஆசிரியர் தலைப்புக்கள் 14. திறனாய்வுகள் 15. வர்த்தக எழுத்தாக்கங்கள் 16. செய்திகள் 17. வரலாறு 18. விளம்பரங்கள் 19. நாடகங்கள் 20. உரையாடல்கள் 21. நேர்காணல் 22. கடிதங்கள் 23. விண்ணப்பப்படிவங்கள் 24. பேச்சுக்கள் 25. ஆலோசனைகள் 26. விதப்புரைகள் 27. கற்பனைப்புனைவுகள் 28. விவரணங்கள்
29. நேரடிஅறிக்கை
30. சுலோகங்கள் அல்லது பதாகை வசனங்கள்
கலாநிதி, சபா.ஜெயராசா -87.

Page 47
எழுத்துக்கற்பித்தல் தொடர்பான ஆய்வுகளும் கருத்தரங்குகளும், செயலமர்வுகளும் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருவதன் காரணமாக அண்மைக்காலமாக எழுத்துக்கற்பித்தல் துறையிலே முன்னேற்றங்கள் 6Jibul G. 6 ICD-digip607. (Barbara Z. Boone (1996) Tools for Writing, California, Corwin Press, INC) SD GMTGLIGö seguiu@y5GONGIT uyib, (635T fiunt Gö ஆய்வுகளையும் அடியொற்றி எழுத்துக் கற்பித்தலுக்குரிய கவர்ச்சியான மென்பொருள்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
முதன்மை நிலைகளிலே எழுத்துக்கற்பித்தலில் ஊன்றிய கவனம் செலுத்தப்படாதுவிட்டால், இடைநிலைகளில் மொழியாற்றல்களை வளர்த்தல் பாரிய பின்னடைவுகளை எதிர்கொள்ளநேரிடும். இலங்கையைப் பொறுத்தவரை வேண்டிய வாண்மைப் பயிற்சி பெறாதவர்களும் ஆரம்பநிலைக் கற்பித்தலிலே ஈடுபடுத்தப்படுவதனால் மாணவரின் மொழிவிருத்தி பின்னடைவுகளை எதிர்கொண்டு வருகின்றது. தாய்மொழி, உலகமொழி, தேசியமொழி ஆகிய அனைத்திலும் இந்தப் பின்னடைவுகள் உற்றுநோக்கல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றன.
இலங்கையின் இடைநிலைக் கல்வித்தமிழ்மொழி எழுத்துத்திறன் விருத்தி தொடர்பான பின்வரும் குறிப்புக்கள் தரப்பட்டுள்ளன. (தமிழ் மொழித்துறை, மொழிகள் மானுடவியல், சமூக விஞ்ஞானபீடம், தேசிய கல்வி நிறுவகம், 2007)
1. அவதானமாகக் கிரகித்து எழுத்துப்பொறி முறைகளையும், எழுத்தாக்க நுட்பங்களையும் அனுசரித்து இலக்கண வழுவின்றித் தெளிவாக எழுதுவர்.
2. கிரகித்து எழுதுவர் குறிப்பெடுத்தவற்றை சொந்த நடையில்
விரித்தெழுதல்.
3. பாடப்பரப்புகளில் இனங்கண்டு விளங்கிக்கொண்ட பயன்பாட்டு
இலக்கணத்தைப் பொருத்தமாகப் பிரயோகிப்பர்.
4. குறிப்பெடுத்தல்.
5. கிரகித்த விடயங்களைச் சுருக்கி எழுதுதல்.
6. வாசித்துக் கிரகித்தவற்றைத் தமது மொழிநடையில் தெளிவாக
எழுதுவர்.
7. எழுத்தாக்கத்தில் பொருத்தமான நுட்பங்களைப் பயன்படுத்துவர்.
8. கிரகித்த விடயங்களை விமர்சித்து எழுதுவர்.
-88- தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

9. பல்வேறு சந்தர்ப்பங்களுக்கும் நோக்கங்களுக்கும் ஏற்றவாறு
எழுதுவர்.
10. நாளாந்தத் தேவைகளுக்காக எழுதுவர்.
11. பல்வேறு நோக்கங்களுக்கு ஏற்றவாறு எழுதுவர்.
12. படைப்புக்களை வாசித்த அனுபவங்களினூடாக சுய ஆக்கங்களை
எழுதுவர்.
13. பந்தி எழுதுவர்.
14. குறிப்பெடுத்த விடயங்களைத் தேவைக்கும் வாசகருக்கும்
பொருத்தமான வடிவத்தில் வெளிக்கொணர்வர்.
15. சுய அனுபவங்கள், அபிப்பிராயங்கள், அவதானிப்பு, கருத்துக்களை
வெளிப்படுத்தி எழுதுவர்.
தரம் பத்துக்கான மேற்கூறிய ஆற்றல்களை வளர்த்தெடுக்கும் செயற்பாடுகள் முதன்மைநிலைகளில் இருந்தே படிப்படியாகக் கட்டியெழுப்பப்படல் வேண்டும். இந்தப்பணியைச் செய்வதற்குப் பாடசாலைகள் தவறுமிடத்து மொழித் தொடர்பாடலிற் பின்தள்ளப்பட்ட சமூகத்தையே எதிர்கொள்ள நேரிடும்.
அண்மைக் காலத்தைய பொதுப் பரீட்சைகளின் பெறுபேறுகளைப் பகுத்தாராயும் பொழுது மொழிப் பாடத்திற் காணப்படும் பின்னடைவு களை "ஒருதற்காலிக நிகழ்வு" என்று தள்ளிவைத்துவிட முடியாது. ஆழந்து சிந்தித்துப் பல நிலைகளிலே செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய தேவையைப் பொதுபரீட்சைகளின் மொழிப் பின்னடைவு துல்லியமாகக் காட்டி வருகின்றது. மொழியாற்றலிலே பின்னடைவுகள் ஏற்படுமிடத்து அது ஏனைய பாடங்களின் ஆற்றுகைகளிலும் தாக்கம் விளைவிக்கும் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
கலாநிதி. சபா.ஜெயராசா -89

Page 48
கட்டுரையும் கற்பித்தலும்
கைத்தொழிற் புரட்சியோடும், அதனோடிணைந்த அறிவுக் கையளிப்போடும் எழுச்சிபெறத் தொடங்கிய உரைநடை ஆக்கமாக கட்டுரை வடிவம் மலர்ச்சி பெறத்தொடங்கியது. இலக்கியவடிவம் என்ற வகையில் கவிதையே காலத்தால் முந்தியது. கவிதைக்குரிய ஓசைச் செறிவும், தொழில் முறைகளோடு கொண்டிருந்த இணைப்பும் அதன் ஆக்கத்தை முந்தச்செய்தது. நியமமான கல்வி வளர்ச்சியும் அதனோடிணைந்த தருக்க சிந்தனையின் வளர்ச்சியும் உரைநடையினதும் கட்டுரை யினதும் வளர்ச்சிக்கு இட்டுச்சென்றன.
கிரேக்க நாட்டில் கிறீஸ்துவுக்கு முற்பட்ட வினா - விடை தழுவிய தருக்க வளர்ச்சி உரைநடையாக்கங்களை வளம்படுத்திய உலக நிகழ்ச்சிகளுள் முக்கியமானது. தொன்மையான வணிக வளர்ச்சியோடிணைந்த பொருட்பரிமாற்றங்களை அடியொற்றிய மொழிசார்ந்த கருத்துப்பரிமாற்றங்கள் மேலுயர்ச்சி பெறலாயின. வணிக நிலைப்பட்ட கருத்துப் பரிமாற்றங்களில் வினா - விடை நுட்பங்கள் சிறப்புப்பெற்றிருத்தல் குறிப்பிடத்தக்கது.
தமிழக அறிவுப் புலத்தில் உரைநடை "பாட்டிடைவைத்த குறிப்பு" என்று தொல்காப்பியத்திலே குறிப்பிடப்பட்டது. சமூக வாழ்க்கையிலே பாவின் மேலோங்கல் நிலையை இது சுட்டிக்காட்டுகின்றது. தமிழகத்தில் வணிகம் படிப்படியாக வளர்ச்சியடையத் தொடங்க உரைநடை புதிய பரிமாணங்களைப்பெற்று வளரலாயிற்று. தமிழகத்து வணிக வளர்ச்சி யோடு உரையாசிரியர் மரபும் வளரலாயிற்று.
அச்சுப்பொறியின் கண்டுபிடிப்பும், பயன்பாடும் உரைநடை வளர்ச்சிக்குரிய தளக்கட்டுமானங்களை விரிவாக்கின. உரைநடையில் உருவான தொண்மையான இலக்கியவடிவம், மக்களின் வாழ்நிலை தழுவிய அனுபவங்களையும், கற்பனைகளையும் அடியொற்றிய நாட்டார்கதைகள்தான். அச்சுப்பொறியின் வளர்ச்சியோடும், நாடுகாண் பயணங்களோடும், நகரவளர்ச்சியோடும், கைத்தொழிற்புரட்சியின்
-90- தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

விரிவாக்கத்தோடும் உரைநடை தழுவிய புதிய இலக்கிய வடிவங்கள் வளர்ச்சியடையத் தொடங்கின. சிறுகதை, நாவல், கட்டுரை, திறனாய்வு, முதலாம் உரைநடை வடிவங்கள் புதிய வாழ்க்கை இருப்பினதும், இயக்கங்களினதும் வெளிப்பாடுகளாக எழுச்சியுற்றன. இவற்றுள் கட்டுரை வடிவம் வரன்முறையான கல்விவளர்ச்சியில் நேரடியாக எடுத்தாளப்படும் உரைநடை வடிவங்களுள் கூடுதலான முக்கியத்துவத்தைப் பெறத்தொடங்கியது.
வாய்மொழிக் கட்டுரைகள் எழுத்துக்கட்டுரைகள் என்ற இரண்டு வடிவங்களும் அறிவுக் கையளிப்பிலே சிறப்பிடம் பெறுகின்றன. தமிழ் மரபிலே வாய்மொழிக் கட்டுரைகள் நாட்டார் கட்டுரைகள், நாட்டார் நிலைசாரா (Non Folk)க் கட்டுரைகள் என இருவகைப்படும். தமது அறிவு, அனுபவம், ஆற்றல் முதலியவற்றைப் பேச்சு வடிவிலும் வரன் முறைசாரா வகையிலும் (Non Formal) வழங்குதல் வாய்மொழிக் கட்டுரைகளாகும். வரன்முறை சார்ந்தவகையில் ஆசிரியர் தம்மிடம் பயில வருவோருக்கு அறிவையும் அனுபவங்களையும் நன்கு ஒழுங்கமைத்து வாய்மொழி வாயிலாகக் கையளிப்புச் செய்யும் கட்டுப்பாடான உரை வடிவம் நாட்டார் நிலை சாரா வாய்மொழிக் கட்டுரை” எனப்படும். நாட்டார் வாய்மொழிக் கட்டுரையில் நெகிழ்ச்சிப் பாங்கு கூடுதலாகக் காணப்படும். நாட்டார் நிலை வாய்மொழிக்கட்டுரையின் மேலெழுந்த வடிவமாக சொற்பொழிவு, பிரசங்கம், கதாப்பிரசங்கம் முதலியவை அமைகின்றன.
கடந்த நூற்றாண்டின் தொடக்ககாலங்களில் வாய்மொழிக் கட்டுரை வடிவத்தையும், எழுத்துக்கட்டுரை வடிவத்தையும் தமிழ்மொழியில் வளமாக வளர்த்தவர்களுள் ஆறுமுகநாவலர் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர். வரண்முறை சார்ந்த மற்றும் வரன்முறை சாரா கல்விச் செயற்பாடுகளில் இந்த இருகட்டுரை வடிவங்களையும் வினைத்திறனுடன் அவர் பயன்படுத்தினார். மேலைத் தேயக் கல்விச் செயல்முறைகளில் கட்டுரைகள் கொண்டிருந்த முக்கியத்துவத்தை ஆறுமுகநாவலர் ஆழ்ந்து அறிந்திருந்தமை அவரது செயற்பாடுகளை வினையாற்றல் பெறச்செய்தது.
மேலைப்புலக் கல்விச் செயற்பாடுகளில் கட்டுரைகளினதும், பாடநூலாக்கத்தினதும் முக்கியத்துவம் ஜோன் அமொஸ் கொமினியஸ் என்பவரால் வலியுறுத்தப்பட்டது. 1592ஆம் ஆண்டிலே கிழக்கு மொறாவியாவிலே பிறந்து ஜேர்மனியில் உள்ள ஹைடில் பேர்க் பல்கலைக்கழகத்திலே பயின்று புரெட்டெஸ்தாந்து பாதிரியாராக வாழ்ந்த கொமீஸிய சே"பாடநூலாக்கத்தின் தந்தை” என்று அழைக்கப்படுகிறார். படங்களும், பயிற்றுவிப்பு முறைளும், இணைந்த பாடநூலாக்கத்தை
கலாநிதி. சபா.ஜெயராசா -9 سI-

Page 49
உருவாக்கிய உலக முன்னோடியாக கொமினிய சே விளங்கினார். கொமீனியசின் கல்விப்பணிகளை பார்சிவல் பாதிரியாரூடாக அறிந்து கொள்ளும் வாய்ப்புக்களை ஆறுமுகநாவலர் பெற்றிருந்தார். அந்த அனுபவங்கள் ஆறுமுகநாவலரது கல்விப்பணிகளையும், பாடநூலாக்கங்களையும், கட்டுரையாக்கங்களையும் வளப்படுத்திக் கொள்வதற்குத் துணையாக அமைந்தன.
ஆறுமுக நாவலர் மேற்கொண்ட உரைநடையாக்கங்கள் தமிழிலே கட்டுரை வடிவம் வளம் பெறுவதற்குரிய பரந்த தளத்தை அமைப்பதற்குத் துணை செய்தன. அவர் எழுதிய பெரியபுராண வசனம், கந்தபுராண வசனம், திருவிளையாடற் புராண வசனம் முதலியனவும் பால பாடங்களும், சைவ வினாவிடையும் அவர் பதிப்பித்த உரைநூல்களும் தமிழிலே கட்டுரையாக்கம் வளம் பெறுவதற்குரிய பின்புலமாக அமைந்தன.
இராமலிங்க அடிகளார், அம்பிகைபாகர், சிவஞானமுனிவர், கூழங்கைத் தம்பிரான், விசாகப் பெருமாளையர், மயிலேறும் பெருமாள் பிள்ளை, வீரமாமுனிவர், தாண்டவராயர், பேராசிரியர் சுந்தரம்பிள்ளை, சபாபதி நாவலர், மயூரம் வேதநாயகம் பிள்ளை, கதிரைவேற்பிள்ளை, கனகசபைப்பிள்ளை, கனகசுந்தரம்பிள்ளை, சுன்னாகம் குமாரசாமிப்புலவர், பரிதிமாற் கலைஞர், நாவலர் சோமசுந்தர பாரதியார், செல்வக் கேசவராய முதலியார், உ.வே.சாமிநாதையர், சதாசிவ ஐயர், வைத்திலிங்கம் பிள்ளை, திரு.வி.கல்யாணசுந்தரனார் போன்ற பலர் தமிழிலே கட்டுரையாக்கங்கள் மேம்பாடு கொள்வதற்குரிய ஆளுமைத் தடங்களைப் பதித்தனர்.
அறிவியல் சார்ந்த கட்டுரையாக்கங்கள் தமிழிலே இடம் பெறுவதற்குரிய தடம் பதித்தவர்களுள் விபுலாநந்த அடிகள் சிறப்பிடம் பெறுகின்றார். பொருத்தமான புதிய கலைச்சொற்களையும், கனதியான புறவய அணுகுமுறைகளையும் பயன்படுத்தி கட்டுரையாக்கம் மேற்கொள்வதற்குரிய நவீன நுழைவாயிலை விபுலாநந்த அடிகளார் அமைத்துத் தந்துள்ளார். யாழ்நூலின் ஒவ்வோர் இதழும் அவரின் கட்டுரையாக்கத்திறனது ஆழங்களைப் புலப்படுத்தும்.
தமிழ்மொழி உயர்கல்வி மொழியாக வளர்ச்சி பெறத்தொடங்க, கட்டுரையாக்கங்கள் மேலும் வளம்பெறத் தொடங்கின. சமூக விஞ்ஞானப் பாடங்களைப் பல்கலைக்கழக மட்டத்திலே பயிற்றுவித்த பேராசிரியர் ந.பாலகிருஷ்ணன், பேராசிரியர். சோ.செல்வநாயகம், பேராசிரியர் எஸ்.பத்மநாதன், பேராசிரியர் ப.சந்திரசேகரம், பேராசிரியர்
-92- தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

கா.இந்திரபாலா, முதலியோர் சமூக விஞ்ஞான பாடங்கள் தழுவிய கட்டுரையாக்கங்களை தமிழில் மேற்கொள்வதற்குரிய அறிகைத் தளங்களை அமைத்தனர்.
புதிய கலைச்சொற்களைத் தமிழில் ஆக்குவதற்குரிய பங்களிப்புக்களை பேராசிரியர் கணபதிப்பிள்ளை, பேராசிரியர். சு.வித்தியானந்தன், பேராசிரியர்.க.கைலாசபதி, பேராசிரியர் கா.சிவத்தம்பி, கலாநிதி வ.பொன்னையா, இ.இரத்தினம், இலட்சுமண ஐயர், இ.முருகையன், செ.வேலாயுதபிள்ளை முதலியோர் மேற்கொண்டனர். கட்டுரையாக்கம் தமிழிலே வளம்பெறுவதற்குப் பதிய கலைச்சொற்கள் அறிகைத் தளம் அமைத்தன. சமூக விஞ்ஞானத்துறைகள் இயற்கை விஞ்ஞானத்துறைகள் முதலியவற்றில் ஆய்வறிவாளர்களும் மாணவர்களும் மேற்கொண்டுவரும் முயற்சிகள் தமிழ்மொழியிற் கட்டுரையாக்க வளர்ச்சிக்கு விசைகளாகின்றன.
தமிழ்மொழியிலே கட்டுரையாக்கம் வளர்ச்சியும் வளமும் பெறுவதற்கு எதிரிடையான நிகழ்ச்சிகளும் இடம்பெறலாயின. மொழி பற்றிய விளக்கக்குறைவினால் இந்த நிகழ்ச்சி ஏற்பட்டது. புதிய அறிவைப் புலப்படுத்துவதற்குரிய தமிழுக்குப் புதுவரவான கலைச்சொற்களைப் பயன்படுத்திக் கட்டுரையாக்கங்கள் மேற்கொள்ளப்பட்டவேளை “விளங்கவில்லை” என்ற எதிர்வாதத்தைச் சிலர் முன்வைத்தனர். புதிய கலைச்சொற்களை விளங்கிக்கொள்ள முயலும் முயற்சிச் சோம்பல் காரணமாக அவர்கள் முன்வைத்த “விளங்கவில்லை” என்ற வாதம் முனைப்புப் பெற்றது.
புதிய எண்ணக்கருக்களை விளக்குவதற்குப் புதிய கலைச் சொல்லாக்கம் தவிர்க்க முடியாததேவை என்பதை ஆய்வறிவாளர் தொடர்ந்து வலியுறுத்தியமையால் தமிழிலே சொல்வளம் அதிகரிக்கத் தொடங்கியது. திட்பநுட்பமான சொற்பிரயோகங்கள் தமிழில் இடம் பெறத்தொடங்கின. வளர்ந்து வரும் புதிய அறிவுத்துறைகளை உள்வாங்கும் பாய்ச்சலிலைக் கட்டுரையாக்கங்கள் முன்னெடுத்தன. இதன் தொடர்ச்சி. யும் வளர்ச்சியுமாக உயர்பட்டங்களுக்குரிய ஆய்வுகளை மேற்கொள்ளக்கூடிய பரிமாணங்களைத் தமிழ்மொழி பெறத்தொடங்கியது.
ஒரு சமூகத்தின் அறிவாற்றலை வெளிப்படுத்தும் குறியீடுகளாக அமைவது தரமான கட்டுரையாக்கங்கள்தான். கட்டுரைகள் நீண்ட வீச்சுக் கொண்டவை ஒரு முனைவில் அதிக உணர்ச்சிப்பாங்கும், மனவெழுச்சிக் கோலமும் கொண்ட அகவயமான கட்டுரையாக்கங்கள் அமைகின்றன. மறுமுனைவில் முற்றிலும் தருக்கநிலைக்கு உட்பட்ட விஞ்ஞானக்
கலாநிதி. சபா.ஜெயராசா 93یہ--

Page 50
கட்டுரை எழுத்தாக்கங்கள் அமைகின்றன. முன்னையது இலக்கியக் கட்டுரைகள் என்றும் பின்னையது அறிவியற் கட்டுரைகள் என்றும் பொதுவாக அழைக்கப்படும், முன்னையது கவிதைமொழி தழுவியதாகவும், பின்னையது அறிவியல் எண்ணக்கருக்களை விட்டுச் சற்றேனும் விலகாத வகையிலும் அமைக்கப்படும். கருத்துக்களை நிறுவுவதற்குரிய பலம்மிக்க சான்றாதாரங்களும் அடிக்குறிப்புக்களும் அறிவியற் கட்டுரையாக்கங்களிலே இடம்பெறும். குறித்த அறிவியல் துறைகளிலே அடிப்படை அறிவில்லாவிடில் அறிவியற் கட்டுரை விளங்கிக் கொள்ளுதல் கடினமாக இருக்கும். இவ்வாறான கட்டுரையாக்கங்களே அறிவு வளர்ச்சியினதும் மொழி வளர்ச்சியினதும் குறிகாட்டிகளாக அமையும்.
II
கட்டுரை கற்பித்தல் பல்வேறு நோக்கங்களை உள்ளடக்கிய செயற்பாடாகும். உணர்ச்சிகளையும், அறிவியற் சிந்தனைகளையும் உரை வடிவில் ஒழுங்குபடுத்தி வெளியிடும் திறன்களை மாணவரிடத்து வளர்த்" தெடுத்தல் கட்டுரை கற்பித்தலின் மேலான நோக்கமாகின்றது. மொழி வடிவிலே நன்கு நெறிப்படுத்திய தொடர்பாடல் திறன்களை வளர்ப்பதற்குப் பயன்மிக்க கற்பித்தல் வடிவமாகக் கட்டுரை வடிவங்கள் அமை" கின்றன. கட்டுரை கற்பித்தல் சமகாலக்கல்வியின் உன்னதமான செயற்பாடுகளுள் ஒன்றெனக் கருதப்படுகின்றது. வினைத்திறன்மிக்க தொடர்பாடலை மேற்கொள்ளல் காலத்தின் தேவையாக முகிழ்த்தெழுந்துள்ளது.
எண்ணக்கருக்களை விளங்கிக்கொள்ளும் ஆற்றல், கருத்துணர் ஆற்றல், மொழிவழித்தெளிவை நோக்கி நகர்ந்து செல்லும்திறன், கருத்தாழம் நோக்கில் பொருத்தமான சொற்களைத் தெரிவு செய்யும் திறன் முதலியவற்றைப் பயிற்றுவிப்பதற்கு கட்டுரைகள் பதிலீடு அற்ற சாதனங்களாக அமைகின்றன.
மொழிவழி ஆற்றுகை அறிவை மேம்படுத்தவும், ஆய்வுத்திறன் களைக் கூர்மைப்படுத்தவும் கட்டுரைகளே பயன்தரும் வடிவங்களாக நிமிர்கின்றன. மாணவர்கள் தமக்குரிய பொது அறிவையும் சிறப்புத் துறைகள் சார்ந்த அறிவையும் கட்டுரைகள் வாயிலாகவே பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையிலுள்ளனர். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வொன்றில் இலங்கையின் வார ஏடுகளில் கதைகளை வாசித்தலிலும் கட்டுரைகளை வாசித்தலிலே வாசகர்கள் கூடிய ஆர்வம் காட்டுதல் கண்டறியப்பட்டுள்ளது. சிறுகதை நாவல் போன்ற இலக்கிய வடிவங்களைக் காட்டிலும் கல்வி நோக்கிலே கட்டுரைகளின்
-94- தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

பயனுடைமை (Utility) மேலோங்கியிருத்தலும் இவ்வாறான தோற்றப்பாட்டுக்குரிய பிறிதொரு காரணியாகும்.
சமூக பொருளாதார மற்றும் அரசியற் பிரச்சினைகள் மேலோங்கிய வேளைகளிலே பிரச்சினையின் பன்முகவடிவங்களை தருக்க பூர்வமாகவும், பல்வேறு கோணங்கள் வழியாகவும் ஆராயவேண்டிய தேவைகள் எழும்நிலையில் கட்டுரையாக்கங்கள் ஏனைய கலை வடிவங்களை மீறி மேற்பாய்ச்சல் கொள்ளும்நிலை கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் நாவல், சிறுகதை,நாடகம் போன்ற வடிவங்கள் கட்டுரைகளின் செல்வாக்குகளை உள்வாங்கத் தொடங்கியுள்ளன. புனைவுகள் நேர்வுறுதி (Fact) தழுவிச்செல்லும் வளர்ச்சிகளைக் காணக்கூடியதாகவுள்ளது.
மரபுவழி வாசிப்பு முறைமையிலிருந்து முகிழ்த்தெழும் பிறிதோர் எண்ணக்கரு தோற்றம் பெற்றுள்ளது. அது மேம்பாடுசார் வாசிப்பு (Developmental Reading) 6TGOT LuLu G3) Lib... 5Feup35 62ĵoj (65rT 687 Lö LDgögpuub இயற்கை விஞ்ஞானத்துறைகளில் மேம்பாடுசார் வாசிப்பை மேற்கொள்வதற்கு கட்டுரை கற்பித்தல் அடிப்படையாக அமைகின்றது.
நவீன உலகின் பெரும்பாலான தகவற் பரிமாற்றங்கள், மற்றும் அறிவுப் பரிமாற்றங்கள் கட்டுரைகள் வாயிலாகவே மேற்கொள்ளப்படுகின்றன. அரசியற் தகவல்கள் அரசியற் கட்டுரைகள் வாயிலாகவும், சமூகவியல் தகவல்கள் சமூகவியற் கட்டுரைகள் வாயிலாகவும், அறிவியல் தகவல்கள் அறிவியற் கட்டுரைகள் வாயிலாகவும் பரிமாற்றம் செய்யப்படுகின்றன. உலகின் வளர்ந்துவரும் தகவல்களோடு மாணவர்களைச் சங்கமிக்கச் செய்வதற்கு கட்டுரை அனுபவங்களே தவிாக்கமுடியாது வேண்டப்படுகின்றன.
மாணவரின் அறிவைத் தொழிற்படும் அறிவாக (Functional Knowledge) உருவாக்கிக் கொடுப்பதற்கு கட்டுரை வாசிப்பும், கட்டுரை எழுதுதலும் பலம்மிக்க விசைகளாக அமைகின்றன. கட்டுரை வளம் மாணவரிடத்தே செறிவடையும் பொழுது, அவர்களது அறிகைத் தொழிற்பாடுகளிலிலும் வினைத்திறன்மிக்க வளர்ச்சிகள் ஏற்படத் தொடங்குகின்றன.
மாணவரின் சிந்தனைகளைத் தருக்கப்படுத்தியும், ஒழுங்குபடுத்தி யும், எழுதப்பழக்குவதற்கு கட்டுரைப் பயிற்சியே மிகவும் பொருத்தமான பயிற்சியாக அமைதல் குறிப்பிடத்தக்கது. நடுவனாக அமையும் உள்ளடக்கத்தை மீளவலியுறுத்தியும், விளக்கியும், விபரித்தும், கூர்ம்மைப்படுத்தியும், ஆதாரப்படுத்தியும் எழுதப்படுவதே கட்டுரை. இது கருத்துக்களின் கோவைப்படுத்திய வடிவமாகையால் “கோப்புரை” என்று
கலாநிதி. சபா.ஜெயராசா -95

Page 51
மறைமலை அடிகள் குறிப்பிட்டார். கட்டுரை கற்பித்தல் வழியாக மாணவர் கருத்துக்களைத் தொகுத்தும், வகுத்தும், கோவைப்படுத்தியும் கூறும் ஆற்றல் பெறுகின்றன.
சிந்தனை ஒழுங்கமைப்பின் செவ்விய உரைவடிவமே கட்டுரையாகின்றது. கட்டுரை கற்பித்தல் சிந்தனை ஒழுங்குபடுத்தலுக்கும், அறிவைத் திரட்டிக்கொள்வதற்குமுரிய புலமைப் பயிற்சியை வழங்குகின்றது. மாணவரின் முதிர்ச்சிக்கேற்றவாறு பொருத்தமான புலமைப்பயிற்சிகளை வழங்குதல் ஆசிரியருக்குரிய பணியாகின்றது.
மொழித்தெளிவையும், கருத்துத் தெளிவையும், சிந்தனைத் தெளிவையும் மாணவர்களிடத்து ஏற்படுத்துதல் கட்டுரை கற்பித்தலின் பிறிதொரு நோக்கமாகும்.
பரந்து விரிந்த சிந்தனைகளைத் தெளிவுறச் சுருக்கிக் கூறும் ஆற்றலையும், குறித்த ஒரு பொருள் பற்றி விரித்துக்கூறும் ஆற்றலையும் மாணவர்களிடத்து வளர்த்தெடுப்பதற்கு கட்டுரைப் பயிற்சியும் கட்டுரையாக்கமும் துணை செய்கின்றன. கூறும்பொருள் பற்றியும் கூறும்முறை பற்றியும் ஆழ்ந்து சிந்திப்பதற்குக் கட்டுரைக்கல்வி பயன்படுகின்றது. எத்தகைய தேவைக்கு எவ்வாறு கூறல் வேண்டும் என்ற எடுத்தியம்பும் திறனை மாணவரிடத்து வளம்பெறச் செய்வதற்கு கட்டுரை கற்பித்தல் பயன்மிக்க வழிமுறையாக அமைகின்றது.
கட்டுரை என்பது பன்முகத்தன்மைகள் கொண்ட வடிவம். நவீன உலகின் வளர்ச்சியானது அறிவிலும் தொழிற்பாடுகளிலும் பன்முகப்பாங்குகளை நோக்கியே நகர்ந்து செல்கின்றது. இது விரிசிந்தனையுடன் (DivergentTinking) இணைந்த ஒரு தோற்றப்பாடாகும் சிந்தனையிலே பன்முகப்பாடு, சுவையிலே பன்முகப்பாடு, அணுகுமுறைகளிலே பன்முகப்பாடு, என்றவாறு பன்முகப்பாடுகள் வளர்ச்சியுற்றுச் செல்லுதல் மாணவரின் ஆளுமையைப் பலநிலைகளிலே கட்டமைப்புச் செய்வதற்" குத் துணையாக அமையும். பிறரது கருத்துக்களைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதற்கும் பன்முகச் சிந்தனைகள் வழிவகுக்கும்.
கட்டுரை வடிவம் பின்வரும் வகைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றது.
1. விளக்கக் கட்டுரை 2. கற்பனைக் கட்டுரை 3. வரலாற்றுக்கட்டுரை 4. வருணனைக்கட்டுரை 5. தருக்கியற்கட்டுரை 6. இலக்கியக்கட்டுரை
-96- தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

7. திறனாய்வுக்கட்டுரை 8. ஆராய்ச்சிக்கட்டுரை
9. அறிவுரைக்கட்டுரை 10. அறிவியற்கட்டுரை 11. பாவனைக்கட்டுரை 12. நகைச்சுவைக்கட்டுரை 13. சமயக்கட்டுரை 14. விவாதக்கட்டுரை 15. வேண்டற்கட்டுரை 16. பாராட்டுக்கட்டுரை அல்லது
புகழ்ச்சிக்கட்டுரை 17. சுருக்கக்கட்டுரை 18. தழுவற்கட்டுரை
19. மொழிபெயர்ப்புக்கட்டுரை 20. புலமைக்கட்டுரை
கட்டுரை கற்பிக்கும் ஆசிரியர் மாணவரது அறிவமைப்பைத் தழுவிக் கட்டுரைப் பொருளையும் கற்பித்தல் முறையினையும் தெரிவுசெய்தல் வேண்டும். கட்டுரைத் தலைப்புக்குரியவாறு முன்னர் அறிந்த பொருட்பரப்பை நினைவு கூர்ந்தவாறு அறிய பொருளையும் தகவல்களையும் உள்ளடக்கிய கலந்துரையாடலை ஆசிரியர் முன்னெடுக்கும்பொழுது மாணவர் பங்களிப்புக்கு இடமளித்தல் முக்கியமானது. தகவல்களைத் திரட்டிக்கொள்ளும் வழிமுறைகளையும், மூலகங்களையும் தெரிந்து மாணவரின் செயற்பாடுகளைத் தூண்டிவிடுதல் வேண்டும். “கற்பதற்காகக் கற்றல்" என்ற செயற்பாடு இங்கே முக்கியத்துவம் பெறுகின்றது. அறியும் வழிகளைக் காட்டுதல் அறிவதற்கு நுழைவாயிலாகின்றது.
நூல்கள், இதழ்கள், அறிகைகள், ஆவணங்கள் முதலியவற்றை வாசித்தறிதல் மட்டுமன்றிகண்டறிதல், கேட்டறிதல், பரிசோதித்தறிதல் முதலிய திறன்களினுடாக கட்டுரை எழுதுவதற்கு முன்னதான பட்டறிவுத் திரட்டல்களை மேற்கொள்ளுமாறு ஆசிரியர் பொருத்தமான தூண்டிகளை வழங்குதல் முக்கியமானது.
திரட்டப்பட்ட தகவல்களைச் செப்பமாக ஒழுங்கமைத்தல் கட்டுரை கற்பித்தலின் அடுத்தபடி நிலையாக அமைகின்றது. தருக்கநிலையில் ஒழுங்கமைக்கும் திறன்களை மாணவர்களிடத்து வளர்த்தெடுத்தல் வேண்டும். கட்டுரையுடன் தொடர்புடைய சட்டகத்தை அமைத்து ஒவ்வோர் அமைப்பினுள்ளும் உள்ளடக்கப்பட வேண்டிய பொருட்பரப்பை ஒழுங்குபடுத்தலாம். தேர்வுகள் சிலவற்றில் அமைப்புக் கட்டுரை (Structured essay) எழுதுமாறு தரப்படுதல் உண்டு. அதாவது, கட்டுரையின் உள்ளமையும் தலைப்புக்கள் தரப்பட்டு அத்தலைப்புக்கள் எழுதுமாறு மாணவர் வேண்டப்படுதல் உண்டு.
திறந்த கட்டுரைத் தலைப்புக்களில் உள்ளமையும் பொருட்பரப்பைத் திரட்டி ஒழுங்கமைப்பைச் செப்பனாகச் செய்யும் நுட்பங்களை
கலாநிதி. சபா.ஜெயராசா -97

Page 52
மாணவர்களிடத்து வளர்த்தல் வேண்டும். உள்ளமையும் ஒழுங்கமைப்பைக் கட்டுரையின் வகைக்கும் நோக்கத்துக்கும் ஏற்றவாறு, கால ஒழுங்" கில், கருத்தொழுங்கில், வகைஒழுங்கில், கட்டமைப்புச் செய்யலாம். இவ்வாறு ஒழுங்கமைத்தல் “சட்டமிடல்” எனப்படும். இதனை “பொருள் ஒழுங்கு" என்றும் "அகநிரற்படுத்தல்" என்று கூறும் வழங்கங்களும் உண்டு.
இதனைத் தொடர்ந்து கட்டுரைப் பொருளுக்குப் பொருத்தமான மொழிவளத்துடன் எழுதுமாறு மாணவரை உற்சாகப்படுத்தலாம். வகுப்பு உயர்ந்து செல்லும் பொழுது நடையியல் (Style) பற்றிய உணர்வை மாணவர்களிடத்து ஏற்படுத்துதல் வேண்டும். மேல்வகுப்புக்களில் நடை மாதிரிகளை ஆசிரியர் அறிமுகம் செய்யலாம். சுவாமி விபுலாநந்தர், பேராசிரியர் சேதுப்பிள்ளை, பேராசிரியர் க.கைலாசபதி, பேராசிரியர் க.சிவத்தம்பி, பண்டிதமணி கணபதிப்பிள்ளை, புதுமைப்பித்தன், அண்ணாத்துரை, இ.முருகையன், வாசந்தி, சிவசங்கரி முதலியோரின் நடைகளை அறிமுகம் செய்யலாம்.
பொருட் பொலிவுடன் எழுதுமாறும், நடைச்சிறப்புடன் எழுதுமாறும், தேவைக்கேற்றவாறு தனிவாக்கியம், தொடர்வாக்கியம் முதலியவற்றை அமைக்குமாறும் மாணவரை உற்சாகப்படுத்தல் வேண்டும். வாக்கியங்கள் பொருள் இசைவுடன் முன்னேறிச் செல்லுமாறு மாணவர்களுக்குத் தூண்டுதலளித்தலே சிறந்த கற்பித்தல் முறையாகும்.
கட்டுரை எழுதும் பொழுது பந்தியமைப்பின் முக்கியத்துவத்தையும் ஆசிரியர் குறிப்பிடுதல் வேண்டும். பந்தி என்பது “கருத்தலகு” என்றும் குறிப்பிடப்படும். கருத்துப் புலக்காட்சி உளவியலுடன் பந்தியமைப்பு இணைந்துள்ளது. குறித்த பந்தியொன்றில் இடம்பெறும் வாக்கியங்கள் அதற்குரிய கருத்தை வலிமைப்படுத்தியும், செறிவுபடுத்தியும் அமைக்கப்படும். குறித்த ஒரு பந்தி முன்னைய பந்தியின் தொடர்ச்சியாகவும், வளர்ச்சியாகவும், அமையும். பந்தியின் தனித்துவம் அதனை மற்றைய பந்திகளிலிருந்து வேறுபடுத்தி நிற்கும்.
கூறும் பொருளுக்கேற்றவாறு பந்தியின் அளவும் பருமனும் வேறுபட்டு நிற்கும். சில சமயங்களில் ஒரு வசனமே ஒரு பந்தியாதலும் கூடும். பந்தி அளவுக்கு மீறி நீண்டு செல்லுதலைத் தவிர்த்துக்கொள்ளல் வேண்டும். பந்தி அளவுக்கு மீறி நீண்டு செல்லும் பொழுது பொருட்பேறு அடிப்படையில் அதனைப் பிரித்தமைக்கும் பயிற்சி மாணவர்களுக்கு இருத்தல் வேண்டும்.
முகவுரை கருத்துக் கோப்பு நிறைவுப் பகுதி என்ற மூன்று பரிமாணங்களைக் கட்டுரைகள் பொதுவாகக் கொண்டிருக்கும். கருத்துக்
தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும் س-98

கோப்புடன் முகவுரையும் முடிவுரையும் நேரடியாகத் தொடர்புபட்டு நிற்கும். கட்டுரையின் அறிமுகமாகவும், நுழைவாயிலாகவும் அமையும் முகவுரையை பொருத்தமற்ற முறையிலே நீட்டியும் அகலித்தும் செல்லுதல் தகாது. சுருங்கச்சொல்லி விளங்கவைத்தல் கட்டுரையில் முகவுரையிலிருந்து நிறைவுரைவரை விரவி நிற்றல் வேண்டும்.
கட்டுரையின் நிறைவுரைப்பகுதி மிகவும் முக்கியமானதாகும். நிறைவுப் பகுதி முடிந்த முடிபாக அமையாது. உள்ளடக்கத்தை நிறைவு செய்வதாகவும் மேலும் அறிவைத்துரண்டுவதாகவும் அமைக்கப்படுதலே சிறந்தது. அறிவு என்பது முடிவிலி என்ற எண்ணக்கரு மாணவரின் உளப்பதிவாக இருத்தல் வேண்டும்.
கட்டுரை தொடர்பான புறவயமான கணிப்பீடுகள் ஆசிரியரால் மேற்கொள்ளப்படுதல் முக்கியமானது. கணிப்பீட்டில் பின்வருவனவற்றின் மீது கவனம் செலுத்துதலே சிறந்த அணுகுமுறையாகின்றது.
எழுத்து வழுக்கள் சொல் வழுக்கள் எண்ணக்கருத்தெளிவு கருத்துக்களின் ஒழுங்கமைப்பு தருக்க முரண்பாடுகள் நிறுத்தற் குறிகளைப் பயன்படுத்தும் திறன்.
தகவல்களின் இயல்பும் கொள்ளளவும்
தனித்துவமான வெளிப்பாடுகள்
மிகைப்படக் கூறலையும் குறைப்படக் கூறலையும் தவிர்த்துக் கொள்ளும் சமநிலைப்பாடு 10. கூட்டு மொத்தமான விளைவு (Effect) சமகால அறிவின் வெளிப்பாடுகள் கட்டுரைகளாகவே மேலெழுதல் குறிப்பிடத்தக்கது.
கலாநிதி. சபா.ஜெயராசா 99س-

Page 53
கவிதையும் கற்பித்தலும்
தொல்குடியினரது சமூக வாழ்க்கையின் இயக்கங்கள் மொழி வடி" வாகத் தோற்றுவித்த மேம்பட்ட வடிவமாகவே வாய்மொழிக் கவிதைகள் அமைந்தன. வேட்டையாடலின் போது விலங்குகளைப் பாவனை செய்து எழுப்பிய ஒலிகளும், தொன்மையான கருவிகளின் பயன்பாட்டின்போது தோற்றம் பெற்ற ஒலிகளும் கூட்டு வாழ்க்கையின் தொடர்பாடல் சொற்களும் கவிதையை உருவாக்குவதற்குரிய அடிப்படைமொழி அலகுகளாயின.
எழுத்துருவாக்கம் நிலைபேறு கொள்ளத்தொடங்க வாய்மொழிக் கவிதைகள் எழுத்து வடிவ நிலை மாற்றத்தைப் பெற்றவேளை முன்னர் எடுத்தாளப்பெற்ற ஒலி அலகுகளின் தொடர்ச்சி பராமரிக்கப்பட்டமைக்கு புறநானூறு நூற்று எண்பத்து எட்டாம் பாடலில் இருந்து பெறப்பட்ட அடிகளைக் குறிப்பிடலாம்.
"குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டுந் தொட்டுங் கவ்வியும் துழந்தும் நெய்யுடை யடிசில் மெய்பட விதிர்த்தும்..!!!
மொழியின் சிக்கனமான வடிவமாகவும், குறைந்தமொழி உள்ளிட்டுடன் கூடிய விளைவுகளைத் தரக்கூடிய வடிவமாகவும் கவிதை அமைகின்றது. வாழ்க்கையின் அறியப்படாத ஆழங்களை ஊடுருவித் தேடி மொழியால் சிறைப்பிடிக்க எத்தனிக்கும் வடிவமாகவும் கவிதை அமைகின்றது. கவிஞர் முருகையனது கவிதை ஒன்று இத்தொடர்பில் இணைத்து நோக்குதற்குரியது.
“ஊடுபோய் எதையும் உள்புகுந்தேறி ஒடி ஒடி அலசும் நுனி கொண்ட மோடியான வடிவேலது வாங்கி மூசி வீசுபவர் பாவலர் ஆவார்”
-100- தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

உரைநடை மேலும் நகர முடியாத எல்லையிலிருந்து கவிதை ஆரம்பிக்கின்றது. செறிவான மொழிப்பிரயோகத்துடன் இணைந்த ஓசையும், படிமவாக்கங்களும் கவிதையின் தேவையைக் கல்வியிலே வலியுறுத்திய வண்ணமுள்ளன. ஒசையையும் செறிவான படிமவாக்கத்" தையும் தாங்கிய சம்பந்தர் தேவாரம் ஒன்று தரப்படுகின்றது.
"புல னைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி
அறி வழிந்திட்ட ஐம்பேலுந்தி அலமந்த போதாக அஞ்சேல் என்று
அருள் செய்வான் அமருங் கோயில் வலம் வந்த மட வார்கள் நடமாட
முழவதிர மழை யென் றஞ்சி சிலமந்தி அலமந்து மரமேறி
முகில் பார்க்கும் திருவையாறே”
தொன்மையான தொழில்களை ஆற்றும்பொழுது ஒரு செயலை மீளtளச் செய்தலும் அதனோடிணைந்த ஒலிப்பும் தவிர்க்க முடியாதிருந்” தன. உதாரணமாக விறகு வெட்டும் பொழுதும், ஒடம் வலிக்கும் பொழுது ஒரே அசைவை மீளமீளச் செய்தலும், ஒரே ஒலிப்பு மீளமீள வருதலும் கவிதையை ஆக்குவதற்குரிய முன்னேற்பாடான சூழல் அனுபவங்களாக இருந்தன. இந்த அனுபவங்கள் ஒரே சொல்லை மீளமீளப் பயன்படுத்தலால் மொழித் தொடர்பாடலில் செறிவுமிக்க விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்ற புலக்காட்சிக்கு வழியமைத்தன. சத்தி முத்துப் புலவர் நாராயை மீளமீள விளித்தல் கருத்துக்கையளிப்பின் மீளவலியுறுத்தலாகின்றது.
"நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்."
(தனிப்பாடல் திரட்டு)
சோழன் ஒளவையை நோக்கி "எந்தவூர்?" என்று வினவியதற்கு ஒளவை அளித்த பதிலில் ஒரே மொழி அலகை மீளமீளப் பயன்படுத்தும் நுட்பம் மேலும் செறிவுடன் பயன்படுத்தப்படுதல் பின் வரும் எடுத்துக்காட்டினாற் புலப்பாடு கொள்கின்றது.
"கால்நொந்தேன், நொந்தேன், கடுகி வழிநடந்தேன்
யான் வந்த தூரம் எளிதன்று - கூனல்
கலாநிதி. சபா.ஜெயராசா -101

Page 54
கருந்தேனுக்கு அண்ணாந்த காவிரி சூழ்நாடா இருந்தேனுக்கு எங்கே இடம்?"
(தனிப்பாடல் திரட்டு)
கவிதை "கிளர் பண்புகளைக் கொண்டது. அதாவது ஒரு கவிதை அடிக்கு எப்பொழுதும் ஒரே கருத்து மட்டுமே இருக்கும் என்று கூறமுடியாது. படிப்பவரது உளநிலைக்கும், மனவெழுச்சி நிலைக்கும் ஏற்ப பொருள்கோடல் மாறியவண்ணமிருக்கும். கவிதையின் இயல்பு பன்மையான துலங்களைத்தரும் விசைகளைக் கொண்டிருத்தலாகும்.
இதனால் கவிதை பன்முகமான வாசிப்புக்கு இடமளித்த வண்ணமிருக்கும். இது "பல்லினவியல்" (Polysemy) என்று குறிப்பிடப்படும். இதனை விளக்கும் கவிதை ஒன்று வருமாறு.
பொறுக்கி யெடுத்த கண்ணாடித்துண்ட
மாலைகளின் களியாட்டம் இக் கிறுக்கற் கவிதையின் விளையாட்டுச் சொப்பணம்.
கவிதையடிகளின் சிறப்பு அதன் அடிகள் தொடர் நினைவுகளுடன் நீடித்து நிற்றலாகும். அதாவது, மனித மூளையின் நீண்டகால நினைவகத்தில் களஞ்சியப்படுத்திவைக்கப்படத்தக்க ஏற்புடைமைகளைக் கவிதையடிகள் கொண்டிருக்கும். நாட்டார் கவிதைகள் ஆழ்ந்த சுவறிய வாழ்க்கை அனுபவங்களுடன் தொடர்புபட்டு நின்றமையால் நீண்டகால நினைவுக் களஞ்சியத்தோடு இயல்பாக இணைந்து கொண்டன. கூட்டு வாழ்க்கையில் தனிமனித உணர்வுகள் குறித்த நபருக்குரிய உணர்வுகளாக மட்டும் அமையவில்லை அனைவருக்குமுரிய பொது உணர்வாக அவை இடம்பெற்றன. இந்த நீட்சியையும் விரிவாக்கத்தையும் கவிதை நினைவுகள் தாங்கிநின்றன. இறவா (Immortal)வரிகளைக் கவிதைகள் கொண்டிருத்தல் சமூகத்தின் இயக்கத்துக்கும் கவிதைக்குமுள்ள இணைப்பின் பிறிதொரு பரிமாணத்தைப் புலப்படுத்துகின்றது.
கவிஞருக்கும் சமூகத்துக்குமிடையே ஓயாத பரிமாற்றம் நிகழ்ந்த வண்ணமுள்ளது. இந்தப் பரிமாற்றமே கவிதைக்குரிய பலமாக மாற்றம் பெறுகின்றது. இதனை வெளிப்படுத்தும் கவிதை வருமாறு:
“ஏழையின் குடிசையில் அடுப்பும் விளக்கும் தவிர எல்லாமே எரிகின்றன"
சமூக இடைவினைகள் முடிவிலியாகிய தொடர்ச்சியைக் கொண்டவை. அதன் தெறிப்பு கவிதையிற்படியும் பொழுது கவிதையும்
-102- தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

முடிவிலா மறைப்பொருளைத் தாங்கிய வண்ணம் மேலெழுகின்றது. முடிவிலாப் பொருளைக் கவிதை கையளிக்க முயலும் பொழுது, அதில் உடனடியாகப் பொருள் புலப்படாத மறையும் முனைப்புக்களும், படிப்போரின் கற்பனையைத் தூண்டும் "அனுமதிச் சீட்டுக்களும்” உள்ளடக்கப்பட்டிருக்கும். இப்பண்புகளை குறித்துக்காட்டுவதற்கு பாரதியாரின் பின்வரும் கவிதையை முன்வைக்கலாம்.
"அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்திற்குஞ் சென்று மூப்பென்று முண்டோ தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்" கவிதையின் சொற்கள் பொருளின் உயிர்ப்போடு புலக்காட்சியைச் சட்டெனத் தொடர்புபடுத்தி நிற்கும். எல்லை நிலையிலுள்ள சொற்களைக் கவிஞர்கள் புறந்தள்ளி விடுவதால், கவிதையின் ஒலிப்பும் பொருளும் கருத்தை உணர்த்தும் வலுவோடு ஒன்றித்து நிற்கும். எடுத்துக் காட்டாக பாரதிதாசனின் பின்வரும் அடிகளைக் குறிப்பிட்டுக் காட்டலாம்.
“அருவிகள் வயிரத் தொட்டில் அடர்கொடி பச்சைப்பட்டே குருவிகள் தங்கக்கட்டி குளிர் மலர் மணியின் குப்பை" நனவின் எல்லையில் கனவைச் சிறைப்பிடித்தலும், கனவின் எல்லையில் நனவைச் சிறைப்பிடித்தலும் கவிதையின் பண்புகளாகவுள்ளன. இதுவும் சமூக இயக்கத்தைத் தழுவிய காட்சிகளாகவேயுள்ளது. அதாவது மனிதர் தொழிற்படும் நிலை நனவாகவும், ஒய்வு நிலையின் ஒரு பரிமாணம் கனவாகவும் அமைகின்றது. தொழிற்படும் நிலையும், ஒய்வு நிலையும் ஒன்றுடன் மற்றையது பரிமாற்றம் மேற்கொள்ளும் செயல் முறைகளாகும். மனிதரிடத்தே தோன்றும் கற்பனைகள் இவ்வாறான பரிமாற்றங்களின் முகிழ்ப்பாகத் தோற்றம் பெறுகின்றன. இதன் தெறிப்பைப் பாரதியாரின் பின்வரும் கவிதையிலே காணமுடியும்.
"முன்னிக் கவிதை வெறிமூண்டே நனவழியப் பட்டப்பகலிலே பாவலர்க்குத் தோன்றுவதாம் நெட்டைக் கனவினிகழ்ச்சியிலே கண்டேன்யான்"
கலாநிதி. சபா.ஜெயராசா -103

Page 55
சமூக இயக்கத்தின்போது தோன்றும் அவலங்களையும் நெருக்கு
வாரங்களையும் "அறியாநிலை"அறியும் நிலை" என்ற இருவழித் தோற்றங்களுக்கு உள்ளாக்கப்படுதல் உண்டு. அறியாநிலை ஒருவித சுவைப்பையும் அறியும்நிலை இன்னொரு வகையான சுவைப்பையும் ஏற்படுத்துதல் உண்டு. அறியாநிலையின் சுவைப்பை முருகையனின் பின்வரும் கவிதை அடிகள் புலப்படுத்தும்.
"அன்றெல்லாம் நாங்கள்
அறியா இளஞ் சிறுவர்
குன்றருகே நின்று
குழலூதிக் கொண்டிருப்போம்."
அறியும் நிலையின் ஒரு முக்கியமான பரிமாணம் முந்தியதை மறுத்தலாகும். மணிவாசகரது திருவாசகத்தில் முந்தியதை மறுதல் என்ற அறிகைப் பரிமாணம் பரவலாகக் காணப்படுகின்றது. முந்தியதை மறுத்தல் என்பது ஒருவர் தாம் முன்னர் செய்ததவறுகளை உணர்ந்து அவற்றைத் தூற்றுதலும் நொந்து போதலும் என்பவற்றுடன், முன்னோர் செய்த தவறுகளை மீளாய்ந்து மறுத்தலுமாக அமைகின்றது. இதற்கு எடுத்துக்காட்டாக பாரதியின் பின்வரும் அடிகளைக் குறிப்பிடலாம்.
"சூத்திரனுக்கொரு நீதி - தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி சாத்திரம் சொல்லிடுமாயின் - அது சாத்திரமன்று சதியென்று கண்டோம்”
முந்தியதை மறுத்தல் அழகு நீங்கிய பிரசாரமாக மாறும் அபாயத்தைத் தவிர்த்தல் "கவிதைவிசையை"ப் பிரயோகித்தலுடன் இணைந்த செயற்பாடாகும்.
கவிதையின் பரிணாம வளர்ச்சியில் நிகழ்ந்த சிறப்பான நிகழ்ச்சி செழுமைபெறவும் செம்மை பெறலுமாகும். சமூக வாழ்க்கையிலே நிகழ்ந்து வந்த மாற்றங்களுக்குச் சமாந்தரமாக தொடர்பாடலிலும் சொற்களஞ்சியத்திலும் வளர்ச்சிகள் ஏற்படலாயின. சொற்களஞ்சியத்தில் ஏற்பட்ட வளர்ச்சி சொற்களைத் தெரிவுசெய்வதற்குரிய வாய்ப்புக்களை அதிகரிக்கச் செய்வதற்குரிய வாய்ப்புக்களை அதிகரிக்கச் செய்தன. சமூக வாழ்க்கையில் ஏற்பட்ட வளர்ச்சிகளையும் சொற்களஞ்சியத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்களையும் ஒப்புநோக்குவதற்கு சங்ககாலக் கவிதைகளையும், சோழர் காலக் கவிதைகளையும் தெரிவுசெய்யலாம்.
-104- தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

சங்ககாலக் கவிதைகளின் வடிவம் சீர்திருத்தி அமைக்கப்படாத கருவிகளின் இயல்பைப் புலப்படுத்தி நிற்கின்றன. பிற்காலத்திற் கவிதைக் கட்டுமானம் செழுமையும் மெருகும் பெறுவதை பின்வரும் சோழர் காலத்துக் கவிதையிலே தெளிவாகக் காணமுடியும். இது கவிதைக் கட்டமைப்பின் மேல்நோக்கிய அசைவியத்தைப் புலப்படுத்தும்.
"பஞ்சி ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க செஞ்செவிய கஞ்சம் நிமிர் சீறடியர் ஆகி அஞ்சொல் இள மஞ்ஞை என அன்னமென மின்னும் வஞ்சி என நஞ்சமென வஞ்ச மகள் வந்தாள்"
இசையின் செல்வாக்கு கவிதையில் விரவத் தொடங்க பிற்காலத்தில்
முழுமையான இசைவடிவம் பெற்ற கீர்த்தனைகளும் திருதிகளும் தோற்றம் பெற்றன. கவிதையின் நீண்ட வீச்சின் ஒர் எல்லையில் கிருதி களும் மறுஎல்லையில் உரைநடையை அண்மிக்கும் கவிதை வடிவங்களும் வளர்ச்சி பெறலாயின. உரைநடையை அண்மிக்கும் வடிவங்கள் தாழ்ந்தவை என்று கூறுதல் தவறான அணுகுமுறையாகும். இசை சார்ந்த கவிதையில் இசைப்படிமங்கள் மேலோங்கியிருத்தல் போன்று உரைநடையை அண்மிக்கும் கவிதையில் உரைப்படிமங்கள் மேலோங்கி நிற்கும். முன்னையது இராகங்களின் தொடுகையோடு இணைந்த படிமங்களாகவும் பின்னையது காண்பிய நிலைப்படிமங்களாகவும் அமையும். மாதிரிக்கு உரைநடையை அண்மிக்கும் கவிதை ஒன்றை நோக்கலாம்.
இந்நாட்டின்
வருங்கால மன்னர்க்கு
மணி முடி சூட "
பள்ளிக்கூட நிராகரிப்புக்கு
உள்ளான முகாம்
வாழ் சிறுவர்க்குத் தரப்படும்
எதிர்கால வாக்குச் சீட்டுகள்.
கவிதையின் ஆக்கம் ஒருவித இணக்கல்' செயல் முறையோடு
இணைந்தது. மேலைப்புலத்திறனாய்வாளர் இதனை 'பிறிக்கொலாச்' (Bricolage) என்று குறிப்பிடுவர். அமைப்பு மானிடவியலாளராகிய லெவி ஸ்றாஸ் இந்த எண்ணக்கருவைப் பயன்படுத்தினார். எப்பொருள்கள் கைகளுக்கு உடனடியாகக் கிடைக்கின்றனவோ அவற்றைத் தருணத்துக்கு ஏற்றவாறு ஆக்கமலர்ச்சியுடன் கையாளுதலை இணக்கல்' என்ற
கலாநிதி. சபா.ஜெயராசா -105

Page 56
எண்ணக்கரு புலப்படுத்தும் மொழிசார்ந்த “பிறிகொலாச்" செயல்முறையின் வளர்ச்சியை கவிதை வரலாற்றிலே கண்டுகொள்ள முடியும். கவிதை மட்டுமல்ல மொழி இவ்வாறான பிறிகொலாச்" செயல் முறையின் வாயிலாகவே வளர்ச்சிபெற்று வந்துள்ளதென அமைப்பு மானிட6îuuGvITGMTii (Structural Anthropologist) (5póı'ul îGGui.
இந்நிலையில் கவிதை என்பது கவிஞர்களுக்குமட்டுமுரிய தனியுரிமைப்பொருள் அன்று. யாரும் தமது கையிலிருப்பிலுள்ள சொற்களை தருணத்துக்கு ஏற்றவாறு பயன்படுத்தி உணர்வுக்கு மொழிவடிவம் கொடுக்கலாம். கவிதைக்குரிய யாப்பு மற்றும் அணி இலக்கண வலியுறுத்தல் சமூகவளர்ச்சியோடு சமாந்தரமாக நிகழ்ந்த கல்விச்செயற்பாட்டின் முனைவுப்பாட்டோடு (Polarization) ஏற்பட்ட தோற்றப்பாடாகும். சாமானியர்க்கான கல்வி ஒருபுறமும் மேலோங்கியோர்க்கான கல்வி இன்னொரு புறமாக முனைவுப்பாடு கொண்ட வேளை சாமானியர்க்கான கல்வியில் நெகிழ்ச்சிப்பாங்கும் மேலோங்கி யோர்க்கான கல்வியில் இலக்கண இறுக்கப்பாடுகளும் வலியுறுத்” தல்களும் நிலைநிறுத்தப்படலாயின.
இந்த இலக்கண இறுக்கப்பாடுகள் கவிதையின் தெறித்தல் (Reflection) பண்பிலும் தாக்கங்களை ஏற்படுத்தத் தொடங்கின. தெறித்தலில் வரையறைக்கு உட்பட்ட இலக்கணக் கட்டுக்கோப்பினை இறுகத்தழுவி நிற்றல் ஒரு துருவமாகவும், மாமூலமான இலக்கண வைப்பு முறைமை" களை உதறிவிடும் தெறித்தல் இன்னொரு புறமாகவும் மேலெழுந்தன.
தெறித்தலின் இன்னொரு பரிமாணம் நேர்த்தெறித்தலில் இருந்து அழகியல் தோய்ந்த தெறித்தல் வரையான நீண்ட வீச்சை உள்ளடக்கிநிற்றலாகும். நேர்த்தெறித்தல் புனைவுகளற்ற விபரணமாக அமையும். அழ" கியல் சார்ந்த தெறித்தல், புனவு நுட்பங்களை உள்ளடக்கியதாக அமையும்.
காலை உதிரும் கருநாவற் பழம் உதிரும் நாலு மணிகழிய நந்தாவில் மணியொலிக்கும்
(நந்தாவில் என்பது ஒரு கிராமத்துக் கோயில்) மேற்கூறியவை காலை நிகழ்ச்சியை நேரடியாகத்தெறித்துக் காட்டும் அமைப்புக்கு ஓர் எடுத்துக்காட்டு “தங்கம் உருக்கித்தளல் குறைத்துத் தேனாக்கி எங்கும் பரப்பியதோர் இங்கிதம்." என்ற பாரதியாரின் கவிதை அழகியல் தோய்ந்த தெறித்தலாக உருவெடுத்துள்ளது.
-106- தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

கவிதையின் பகுப்பாய்வில் குறிப்பான் அல்லது குறிமை (Signifier) குறிப்பொருள் (Signified) ஆகிய இருபண்புகள் நோக்குதற்குரியவை. இரண்டுக்குமிடையே நனவு நிலைத்தொடர்பு காணப்படுகின்றது என்ற கருத்தை ழாக்லகான் மறுத்துரைக்கின்றார். அவை இரண்டுக்குமிடையே நனவிலி நிலைத் தொடர்பே காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதாவது குறித்த ஒரு பொருளைச் சுட்டுவதற்கு அதற்குரிய சொல்லைத் தெரிந்தெடுத்துப் பயன்படுத்தும் பொழுது, அது பல்வேறு உளப் படிமங்கள் தழுவிய கருத்துக்களை வாசிப்போரிடத்து ஏற்படுத்திவிடும். குறி. பொருள் சுயாதீனமாக மிதக்கும்பண்பு கொண்டதென பின்னவீனத்துவ வாதிகள் குறிப்பிடுவர். குறிமை என்ற ஒரு தண்டிலிருந்து வேறுவேறுபட்ட பண்புகள் கொண்ட கிளைகள் முளைத் தெழும் என்று தெலியுஸ் (Deleuze) என்ற பின்னவீனத்துவ எழுத்தாளர் குறிப்பிடுவர். இதனை அவர் "பிறழ்மலர்ச்சி" (Rhizomatic) என்ற எண் ணக்கருவால் விளக்குவார். ஒவ்வொருவரது மனத்திலும் ஒரேசொல் வெவ்வேறு விதமாகப் பயணித்த வண்ணமிருக்கும்.
இது தொடர்பாக நாங்கள் மேற்கொண்ட ஒரு செயல் நிலைத் திறனாய்வைக் குறிப்பிடலாம். பாரதியாரின் "அக்கினிக்குஞ்சு" என்ற படிமம் மனத்திலே தோற்றுவித்த கருத்து வடிவத்தை எழுதித்தரும்படி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களிடம் கேட்கப்பட்டபொழுது அவர்கள் தந்த விடைகளிற் சில வருமாறு: கோழிக்குஞ்சு, தீப்பெட்டி, நெருப்புத்தணல், கர்ப்பூரம் எரிதல், தீப்பந்தம், லைற்றர், நெருப்புக்கோழி, மின்னல், மின்பொறி வெளிச்சம், எரியும்வாயு அடுப்பு, தீச்சுவாலை, ஹோம குண்டம், மத்தாப்பு வெளிச்சம். இலக்கியங்களிலே சிறப்பாகக் கவிதைகளிலே இடம் பெறும் சொற்களும், தொடர்களும், வசனங்களும் படிப்போரிடத்து வேறுபட்டதும், மாறுபட்டதுமான உளப்படிமங்களைத் தோற்றுவிக்க வல்லவை. கவிதையின் மொழி சிக்கலான வலைப்பின்னல் போன்றது. மத்திய நிலையம் என்று ஒன்றில்லை. விரும்பிய எந்த இடத்திலும் சொல்லுக்கும் பொருளுக்குமிடையே இணைப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும். அதாவது கவிதையின் மொழி இணையத்தளம் போன்றது.
கவிதையின் பிறிதொரு பண்பு அதிலே பயன்படுத்தப்படும் குறிப்பான்களின் நடப்பியலுக்கும் மேலான தொழிற்பாடுகளைப் புரிதலாகும். இது அளவு மீறிய நடப்பியல் (Hypercality) எனப்படும். இது நடப்பியலை விரிவுபடுத்தி விடுகின்றது. படிப்போரிடத்து அதிகப்படியான நடப்பியல் விளைவுகளை (Effects) ஏற்படுத்தி விடுகின்றது.
கலாநிதி. சபா.ஜெயராசா - 107

Page 57
கவிதையின் இயல்பு அதன் மொழிக் கட்டுமானத்தின் வாயிலாக
மாற்றுவகையான புலக்காட்சிகளை மேலெழச் செய்தலாகும். மாற்றுப் புலக்காட்சியைத் தூண்டவல்ல தாயுமானவரின் கவிதையொன்று வருமாறு:
“நெஞ்சமே கோயில்
நினைவே சுகந்தம்
அன்பே மஞ்சன நீர்
பூஜை கொள்ளவாராய் பராபரமே”
இக்கவிதையில் நெஞ்சு, நினைவு, அன்பு முதலானவை படிமநிலையில் நிலைமாற்றத்துக்கு உள்ளாக்கப்படுகின்றன. நிலைமாற்றப்பணி கவிதைக்குரிய பலத்தை மீளவலியுறுத்தி நிற்கின்றது. நிலைமாற்றத்தின் வழியாகப் புதிய படிமவாக்கத்துக்கு இட்டுச் செல்லும் புலமைப் பித்தனின் கவிதை ஒன்று வருமாறு:
"செவ்வந்திப் பூக்களில் செய்தவீடு வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு”
I
கவிதை கற்பித்தல் கல்வியியல் சார்ந்தபல்வேறு நோக்கங்களை உள்ளடக்கிநிற்கின்றது. அறிகை மற்றும் எழுச்சி என்ற பரிமாணங்களின் வழியாக மாணவரின் ஆளுமையை வளர்த்தெடுத்தல் கவிதை கற்பித்தலின் தலையாய நோக்கமாகக் கொள்ளப்படுகின்றது. மாணவரின் மனவெழுச்சிகள் மற்றும் எதிர்மனவெழுச்சிகளை விளங்கிக் கொள்ளல் என்பனவும் சிறப்பார்ந்த நோக்கங்களாக இடம் பெறுகின்றன.
கவிஞரது புலக்காட்சியை அறியச் செய்தலும், அதனை அடியொற்றி மாணவரது அழகியல் சார்ந்த தீர்ப்புக்கூறும் திறனை (Aesthetic Judgement) வளப்படுத்துதலும் கவிதை கற்பித்தலின் நோக்கங்களாகின்றன. கவிதைப் படைப்பு கவிஞரின் புலக்காட்சியின் மொழிசார்ந்த கட்டுமானமாகின்றது. பறிப்பை உள்ளீடாகக் கொண்ட ஒரு மனிதன் பற்றிய மஹா கவியின் புலக்காட்சி வருமாறு.
“சொந்தத்திற் கார் கொழும்பிற் காணி சோக்கான வீடுவயல் கேணி இந்தளவும் கொண்டு வரின் இக்கணமே வாணியின்பாற் சிந்தை இழப்பான் தண்டபாணி"
-108- தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

கவிதை கற்பித்தல் கவிஞரின் புலக்காட்சியைத் தெரியப்படுத்தல் மட்டுமன்றி கவிஞர் வாழ்ந்த காலப்பகுதியின் இயல்பை மாணவர்களுக்குத் தெரியப்படுத்துதலாகவும் அமைகின்றது. வாழ்க்கையின் இருப்புக்கும் கவிதையின் தெறிப்புக்குமுள்ள இணைப்பை மாணவர்கள் புலக்காட்சி கொள்வதற்கும் வாய்ப்பளிக்கப்படுகின்றது.
கவிதையூடாக அழகியல் தொடர்பான அணுகுமுறைகளை மாணவர்கள் அறிந்து கொள்ளும் படி செய்தலும் பிறிதொரு கற்பித்தல் நோக்கமாகின்றது. கிரேக்க சிந்தனையாளர்கள் அழகு பற்றிக் கொண்டிருந்த அறிகை மரபுகளும், மத்திய காலச் சிந்தனைகளில் முன்வைக்கப்பட்ட சமயப்படிமங்கள் தொடர்பான கருத்துக்களும், ஹியுமினுடைய சுவைபற்றிய அவதானிப்புக்களும், காண்டினுடைய அழகியல் அனுபவங்கள் பற்றிய பகுப்பாய்வுகளும் மாணவர்களால் அறிந்து கொள்ளப்பட வேண்டிய அடிப்படைகளாகவுள்ளன. மனித சிந்தனை வளர்ச்சியை மாணவர்கள் அறிந்து கொள்ளச் செய்தலும் நோக்கங்களுள் ஒன்றாகின்றது.
சமூக இருப்பின் வெளிப்பாடாக கவிதை மேலெழுவதால் கவிதையினுாடாக சமூகம் பற்றிய அறிகையை மாணவர்களுக்குக் கையளித்தலும் நோக்குடைய செயலாக அமைகின்றது. சமூகம் பற்றிய தெளிவான அறிகை கல்வியின் நடைமுறையையும், பிரயோகங்களையும் நெறிகை செய்வதற்கு உறுதுணை செய்தல் உளங்கொள்ளத்தக்கது. இதனால் அறி. வின் தொழிற்பாட்டு நடவடிக்கைகள் வினைத்திறனுக்கு உள்ளாக்கப்படும்.
மாணவரிடத்து படைப்பாற்றல் மலர்ச்சியை ஏற்படுத்துதலும் கவிதை கற்பித்தலின் வழியாக முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளன. படைப்பாற்ற" லின் செயல்முறை வடிவங்களே புத்தாக்கங்களாயும், புதிய கண்டுபிடிப்புக்" களாயும் மேலெழுகின்றன. படைப்பாற்றல் மலர்ச்சி எளிமையான வெளிப்பாடுகளில் இருந்து சிக்கலான வெளிப்பாடுகள் வரை விரிந்து செல்லும். மொழிவடிவப் படைப்பாற்றிலை ஊக்குவிப்பதற்கு கவிதை கற்பித்தல் பொருத்தமான வழிமுறையாகின்றது. எடுத்துக்காட்டாக படைப்பாக்கப் பின்னலில் அன்பு என்ற எண்ணக்கரு எவ்வாறு கட்டமைப்புச் செய்யப்படுகின்றது என்பதற்கு வகை மாதிரி ஒன்று வருமாறு.
“அன்பெனும் பிடியில் அகப்படும் மலையே அன்பெனும் குடில்புகும் அரசே அன்பெனும் வலைக்குட்படும் பொருளே அன்பெனும் கருத்தமர் அமுதே"
கலாநிதி. சபா.ஜெயராசா - 109

Page 58
இராமலிங்க வள்ளலாரின் மேற்கூறிய இலகுவான கவிதையை எடுத்துக்காட்டாக அல்லது மாதிரிகையை முன்வைத்து இடைநிலை வகுப்பு மாணவரின் படைப்பாற்றலை வெளிப்படுத்துமாறு கவிதை எழுதத் தூண்டலாம். படிக்கத் தொடங்கிய காலத்திலிருந்து எந்த வகுப்பிலும், எந்த வயதிலும் கவிதை எழுதமுடியும். படைப்பாற்றலுடன் தொடர்புடையது தன்னிலை மலர்ச்சி (Individuality) யாகும். ஒவ்வொரு மாணவரிடத்தும் அவர்களது உடல், உள்ளம், மனவெழுச்சி மற்றும் மொழியாற்றல் முதலாம் தனித்தவங்களை வளர்த்தெடுத்தல் கவிதை கற்பித்தலின் பிறிதொரு நோக்கமாகும்.
மாணவரிடத்து வளமான கற்பனையாற்றலைத் தூண்டுதலும், வளர்த்தெடுத்தலும் நோக்கங்களாகின்றன. கற்பனை என்பது கட்டற்றதும் முடிவிலியானதுான உளச் செயற்பாடு, கற்பனை எவ்வாறு பொதி செய்யப்படுகின்றது என்பதைக் காட்டும் சுபத்திரனின் கவிதை ஒன்று வருமாறு:
"அக்கினிப் பெருமூச்சு அசைகிறது கிராமத்தின் தென்னை மரங்கள் சூரியனைக் கொய்து தலையிற் சூடிக் கொள்கின்றன" கற்பனையை வெளியிடுவதனால் மாணவரின் உள அழுத்தங்களும் நெருக்குவாரங்களும் தணித்தலுக்கு உள்ளாக்கப்பட்டு உளச்சுகம் நோக்கி நகர்த்தப்படுகின்றது. நனவிலி அழுத்தங்கள் வெளியிடப்படுவதனால் உளம் இங்கிதமடையத் தொடங்குகின்றது. கவிதை கற்பித்தலின் உன்னத நோக்கங்களுள் ஒன்றாக அமைவது மாணவர்களுக்கு உளச்சுகம் கிடைக்கப் பெறுதற்கு உதவுதலாகும்.
வாழ்க்கையில் நிகழும் முரண்பாடுகளை உய்த்துணர வைத்தலும் கவிதை புறவயத் தொடர்பாடலை விளக்கும் மஹாகவியின் கவிதை ஒன்று வருமாறு:
“ஆடை உணவோடு அடங்காது நம் தேவை வீடிருந்தால் மட்டும் விடியாது நம் வாழ்வு" வைரமுத்து புறவய அணுகுமுறையை வேறொரு முனைப்புடன் பின்வருமாறு முன்வைத்தார்.
-110- தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

“மாறி விடு புது ஆணையிடு தர்மங்கள் ஏங்குது சட்டங்கள் துரங்குது”
கவிதை கற்பித்தலின் உன்னத நோக்கங்களுள் ஒன்றாக அமைவது கவிதையின் உட்பொதிந்துள்ள விந்தையை மாணவர்கள் அறியச் செய்தலாகும். கவிதையின் உட்பொதிந்த ஆச்சரியம் பாரதியின் மொழியிற் பின்வருமாறுகுறிப்பிடப்படுகின்றது.
“காட்டு நெடுவானம் கடலெல்லாம் விந்தையெனில் பாட்டினைப் போல் ஆச்சரியம் பார்மிசை இல்லையடா"
முரண்பாடுகளை அறியச் செய்தல் கற்பித்தலின் இலக்காக
அமைகின்றது. வாழ்க்கைத் தளத்தின் முரண்பாடுகளை விளங்கிக் கொள்ளல் அறிகைச் செயற்பாடுகளைக் கூர்ம்மைப்படுத்துவதற்குத் துணையாக அமையும். முரண்பாடுகளைப் பொதுமையாக்கிக் கொள்ளும் பொழுது மேலும் விளக்கங்களும், தெளிவும் ஏற்படத் தொடங்கும். நாளாந்த வாழ்க்கையில் எதிர்கொண்ட முரண்பாட்டின் கவிதை வடிவம் ஒன்று வருமாறு:
வீழ்ந்தெழும் அடிமையின் நிதானம்
காற்று எஜமானுக்கு
உறக்கமில்லாப்பதற்றத்தை
ஏற்படுத்தி விட்டது
கவிதை கற்பித்தலின் பிறிதொரு நோக்கம் வினைத்திறன் மிக்க
தொடர்பாடல் ஆற்றலையும், தொடர்பாடலுக்குரிய வளமான மொழித் திறன்களையும் வளர்த்தெடுத்தலாகும். மொழியைத் திட்பநுட்பமாகவும் சிக்கனமாகவும் பயன்படுத்துதல் தொடர்பாடலுக்குரிய மொழி அடிப்படைகளாகும். புறவயத் தொடர்பாடல் மற்றும் அகவயத் தொடர்பாடல் என்ற இருநிலைகளைக் கொண்டதாக தொடர்பாடல் அமையும். இவற்றுள் அகவயத் தொடர்பாடல் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கு கவிதை கற்பித்தல் பெருமளவிலே துணை செய்யவல்லது. அகவயத் தொடர்பாடல் மனவெழுசசி கலந்ததாகவும், புறவயத்தொடர்பாடல் தருக்க வயப்பட்டதாகவும் அமையும். புறவயத் தொடர்பாடல் தருக்க வயப்பட்டதாகவும் அமையும். புறவயத் தொடர்பாடலை வளர்க்கவும் கவிதையாற்றல் பங்களிப்புச் செய்யவல்லது.
கலாநிதி. சபா.ஜெயராசா -III

Page 59
III
"கற்பித்தல்" என்ற எண்ணக்கருவில் அதிகாரப்பண்பும் கலந்துள்ளமை உலகம் தழுவிய தோற்றப்பாடாகவுள்ள நிலையில் கவிதையைக் கையளித்தலைக் கற்பித்தல் என்ற எண்ணக்கருவுக்குள் அடக்லாமா என்ற வினா முதற்கண் எழுகின்றது. மரபுவழியான அதிகாரப் பிரயோகங்களைக் கைவிட்ட மாணவர் குழாத்துடன் தானும் ஒரு பங்காளியாக நின்று ஆசிரியர் கவிதைக் கையளிப்பை மேற்கொள்ளல் வேண்டும்.
முதற்கண் கவிதை பற்றிய அறிவும் தெளிவும் ஆசிரியருக்கு இன்றியமையாதது. எமது கள ஆய்விலிருந்து கிடைக்கப் பெற்ற ஒரு தகவலை இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது. ஓர் ஆசிரியர் உரைவீச்சாக அமையும் புதுக்கவிதைகளை "கவிதைகள் அல்ல" என்று கூறி தமது அகவய முடிவை மாணவர் மீது திணித்த சம்பவமும் கண்டறியப்பட்" டுள்ளது. மாணவரது ஆவலையும் ஊக்கலையும் ஆசிரியர் தூண்டிவிட வேண்டுமேயன்றி எடுத்த எடுப்பிலே தீர்ப்புக் கூறி மாணவரின் உசாவல் விருப்புக்குத் தடையும் அணையும் இட்டு விடலாகாது.
மொழி கற்கும் போது கண்டறியப்பட வேண்டிய ஒரு கலை வடிவம் என்ற வாய்ப்பாட்டுக்குள் கவிதையைச் சுருக்கிவிடுதலும் பொருத்தமான கையளிப்பு நடவடிக்கையாகாது. சமூக உணர்வுகளோடும், மனவெழுச்சிகளோடு, அனுபவக் கையளிப்புக்களோடும் இடைவினைகளோடும் கவிதை ஊடுருவி நிற்கும் அகன்ற புலக்காட்சி கற்றலுக்கும் கற்பித்தலுக்குமுரிய முன்னேற்பாடான வளமாக அமையும்.
வாய்மொழியும் செவிப்புலனும் தழுவிய வடிவமாகவே கவிதைவேர் கொண்டு வளர்ந்து வந்தது. கவிதை கற்பித்தலில் முதற்கண் அதன் தோற்றுவாயாக அமையும். செவிப்புலன் தழுவிய கையளிப்பை மனங் கொள்ள வேண்டியுள்ளது. ஒசை, ஒத்திசைவு, ஒலியமைதி, செவிக்கு இதம் தரும் செப்பல், ஒதியுணர்தல் முதலாம் பரிமாணங்களை ஆசிரியரும் மாணவர்களும் அறிந்திருக்க வேண்டியுள்ளது.
மொழி கற்பித்தலிலே பயன்படுத்தப்படும் ஒலி மொழி (Audio Lingual) (yp6Op, GJIT uir@LDITys6) (yp6ONp, 2)6N3FufløOGODTÜL (Music Mixing) (ypGOip முதலியவற்றின் செறிவான பண்புகளை கவிதை கற்பித்தலின் போது ஆசிரியர் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஒசைக் கவிப்போடு கவிதையை வாசிக்கும் பயிற்சி ஆசிரியர்களுக்கு இன்றியமையாதது. "ஒசைப்படுத்தல்" "சங்கீதப்படுத்தலிலும் வேறுபட்ட எண்ணக்கருவாகும். சுருதி, சுரக்கட்டமைப்பு, தாளவைப்பு முறை ஆகிய அளவீடுகளுக்குள் கவிதையை உள்ளடக்கி அமைத்தலே "சங்கீதப்படுத்தல்" ஆகின்றது.
-112- தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

கவிதையின் உள்ளமைந்த ஒசைப்படுத்தலை அறிந்து ஆசிரியர் கவிதையை ஆற்றுகை செய்தல் வேண்டும். சங்கீதப்படுத்தலுக்கு நகர வேண்டியதில்லை. மாணவர் கவிதையினுள்ளே புகுந்து உறவாடுவதற்கு ஆசிரியரின் ஆற்றுகையே நுழைவாயிலாக அமையும் என்பதை ஆசிரியர் மனங்கொள்ளல் வேண்டும். ஆசிரியரின் ஆற்றுகையை மாதிரிகையாகக் கொண்டே மாணவரும் ஆற்றுகை செய்யமுயல்வதால், தமது ஆற்றுகை மீது ஆழ்ந்த கவனம் ஆசிரியர்களுக்கு இன்றியமையாதது.
வேறுவேறுபட்ட ஒசை வடிவங்களை ஆற்றுகை செய்யும் பயிற்சியை ஆசிரியர் செய்திருப்பின் அது கற்பித்தலுக்கு அனுகூலமாக அமையும். இசைக்கல்வியில் இடம் பெறும் ஒலி அசைவுகள் (கமகங்கள்) பற்றிய செய்முறை அறிவு ஆசிரியர்களின் ஆற்றுகை வளத்துக்குத் துணை செய்யும், கவிதை ஆற்றுகையின் போது "எழுநிலை" என்பது முக்கியமானது. ஒசை வெளிப்படவா சித்தலும், குரலை உள்ளடக்காது வாய்விட்டு வாசித்தலும், நேர்மனவனவெழுச்சிக்கலப்புடன் வாசித்தலும் "எழுநிலை ஆற்றுகை” யாவதற்குத் துணை செய்யும். எழுநிலை என்பது சோர்வு நீங்கிய உற்சாகத்தின் வெளிப்பாடாகும்.
முழுமைப்புல (Gestal) உளவியலை அடிப்படையாகக் கொண்டு கவிதையை முழுமையாக ஆற்றுகை செய்தல் வேண்டும். மாணவரின் வகுப்பு நிலைக்கேற்ற இவ்வாறு தெரிவு செய்து தரப்பட்ட கவிதையை துண்டாடாது, வசதிக்கேற்றவாறு பிரித்துக் கொள்ளாது முழுமையாக அளிக்கை செய்யும் பொழுது மாணவரால் ஒன்றிணைந்த புலக்காட்சியை இலகுவாக உருவாக்கிக் கொள்ள முடியும். கவிதைக் கற்பித்தலில் முழுமையிலிருந்து பகுதிக்குச் செல்லலே பொருத்தமானதென கற்பித்தலியல் ஆய்வுகள் வலியுறுத்துகின்றன.
உரைநடையை அண்மித்து நிற்கும் கவிதையை ஆற்றுகை செய்யும் பொழுது காட்சிப் படிமத்தை மாணவரிடத்து உருவாக்கும் வண்ணம் செறிவுடனும், தொனிப்புடனும் முழுமையாக வழங்குதல் வேண்டும். கவியரங்குகளிலே ஆற்றல் மிக்கோர் செய்யும் உரையெழுகை வாசித்தல் நுட்பம் ஆசிரியரது ஆற்றுகைக்குரிய மாதிரிகைத் தெரிவு செய்வதற்குத் துணை செய்யும். கவிதைப் புலக்காட்சியைச் செழுமைப் படுத்தும் வகையில் ஆற்றுகை இருத்தல் வேண்டும். மாணவர்கள் கவிதைக்குள் முழுமையாக நுழைவதற்குரிய முன்னெடுப்பாக (Lead) ஆசிரியரின் கவிதை அறிமுக ஆற்றுகை அமைதல் அவசியமாகின்றது.
கவிதையை முழுமையாக ஆசிரியர் ஆற்றுகை செய்தலை மாதிரிகையாகக் கொண்டு மாணவர் ஈடுபாடு கொண்ட ஆற்றுகையை
கலாநிதி. சபா.ஜெயராசா - II 3

Page 60
மேற்கொள்வதற்குத் தூண்டுதல் அளிக்கப்படல் வேண்டும். தனித்தனியாக மாணவர்கள் ஆற்றுகை செய்வதற்குச் சந்தர்ப்பம் வழங்குதல் போன்று குழுவாகத் துலங்கி ஆற்றுகை செய்வதற்கும் இடமளிக்கும் போது வகுப்பினரின் உற்சாகம் மேலும் எழுச்சி கொள்ளும்.
கவிதை கற்பித்தல் என்பது மனவெழுச்சி அனுபவங்களுடன் இணைந்துள்ளது. கவிதையைப் பொறிமுறையாக அறிமுகம் செய்யாது, மனவெழுச்சித் தூண்டலுடன் அறிமுகப்படுத்துதலே பொருத்தமான தயார்நிலைக்கு வழிவகுக்கும். கவிதை கற்பித்தலை மனவெழுச்சிநிலைக் கற்றலுடன் (Emotional Learning) ஒன்றிணைக்க வேண்டியுள்ளது. ஒசை தழுவிய அறிமுக வாசிப்பை மாணவர்கள் மேற்கொள்ளும் பொழுது தற்கருத்தேற்றத்தின் (Self Suggestion) வாயிலாக தமக்குரிய மனவெழுச்சித்தூண்டலை தாமே மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும். ஒசை தழுவிய முறையில் ஒருமுறை ஆற்றுகை செய்த பாடலை மீளவும் ஆற்றுகை செய்யும் பொழுது மனவெழுச்சித் தூண்டல் மீளவலியுறுத்தலுக்கு உள்ளாகும்.
கவிதையில் மாணவரை ஈடுபட வைத்தலே கவிதையை அறிமுகம் செய்தலின் முதலாவது நோக்கமாகும். உளவியலடிப்படையிலே கூறுவதானால், வல மூளையின் ஈடுபாட்டைத் தூண்டும் நடவடிக்கையாகவே கவிதை அறிமுகமும் அனுபவமும், அமையும். இதை விளக்கமாக அறிந்து கொள்வதற்கு, மனித மூளையின் வல அரைப்பகுதி மற்றும் இட அரைப்பகுதி ஆகியவற்றின் செயற்பாடுகளை நோக்க வேண்டியுள்ளது. இடமூளை காரண காரிய அறிகை முறைமையோடு இணைந்த தொழிற்பாடுகளை மேற்கொள்ளும் செயற்பிரிவைக் கொண்டுள்ளது. பாடசாலையின் கல்விச் செயற்பாடுகள் பெருமளவில் இடமூளையையும், வலக்கையையும் வளம்படுத்தும் வகையில் இடம் பெற்று வருகின்றன. மனித வலமூளை மனவெழுச்சிகளோடும் உணர்ச்சிகளோடும் அகவயமான தோழிற்பாடுகளோடும் இணைந்த பகுதியாகக் கூறப்படுகின்றது. எமது கல்விச் செயற்பாடுகளில் மனவெழுச்சிகளுக்குப் பயிற்சி தரும் நடவடிக்கைகள் ஒப்பீட்டளவிற் குறைவாகக் காணப்படுகின்றன.
முழுநிறைவான ஆளுமை வளர்ச்சி வலமூளையின் செயற்பாடுகளையும் இடமூளையின் செயற்பாடுகளையும் ஒருங்கே முன்னெடுப்பதால் அடையப்பட வேண்டியுள்ளது. இடமூளையின் செயற்பாடுகளை மட்டும் வளரச் செய்து சமநிலை கொண்ட ஆளுமை ஆக்கத்தினை உருவாக்கிக் கொள்ள முடியாது. இந்நிலையில் வள மூளையின் தொழிற்பாடுகளை வளம்படுத்துவதற்கு கவிதை அனுபங்களும், கவிதை
-114- தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

ஈடுபாடு, மற்றும்அகவயப்பாங்கான கற்பனையாக்க நடவடிக்கைகளும் துணை செய்யக்கூடியவை, என்பதை மனங்கொள்ள வேண்டியுள்ளது.
கவிதை அனுபவத்தை உளம் மேலோங்கிய அனுபவமாக மாற்றல் வேண்டும். கவிதை அனுபவத்தை அறிதல் உணர்தல் என்ற இருபரிமாணங்களிலும் இணைத்து முழுமையாக்குதலே பொருத்தமான கற்பித்தலாகின்றது. கவிதை கற்பித்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் நெகிழ்ச்சிப்பாங்கையே வலியுறுத்துகின்றன. அதாவது குறித்த வகுப்பு மட்டத்தில் குறிப்பிட்ட முறையைப் பயன்படுத்தித் தான் கற்பிக்க வேண்டுமென்ற நியமங்கள் எதுவுமில்லை. ஆனால் கவிதையை அறிமுகம் செய்து வைக்கும் பொழுது, தேவையற்றவற்றையும், சலிப்பூட்டும் உரைகளையும் ஆசிரியர் தவிர்த்துக் கொள்ளல் வேண்டும். கவிதையின் அறிமுகம் ஆவலின் தூண்டியாக இருத்தல் வேண்டுமே" யன்றி கவனக் கலைப்பான்களாக மாறிவிடக் கூடாது.
கவிதையை மீள மீளப்படித்து ஒவ்வொரு மாணவரும் மனத்தில் நிறுத்தி வாயில் ஒலிக்கும் வடிவமாக்கிக் கொள்ளல் வேண்டும்.
சொற்பொருள் அறிதல், கொண்டு கூட்டல், கருத்துரைகூறல், பொழிப்புரை தருதல், தொடைநயம், அணிநயம், இலக்கணக் கட்டமைப்பு, யாப்புக்கட்டமைப்பு முதலியவை படிப்படியாகப் பின்னர் கற்பிக்கப்படல் வேண்டும். கவிதை தொடர்பான கணிப்பீடுகள் ஆக்கமலர்ச்சியைத் தூண்டும் கணிப்பீடாகவும் மனவெழுச்சிகளை வெளிக்கொண்டு வருபவையாகவும் அமைக்கப்படுதலே சிறந்தது.
கவிதை கற்பித்தலின் ஒவ்வொரு படிநிலையிலும் மாணவரின் துலங்கலுக்கும் ஈடுபாட்டுக்கும் ஆசிரியர் உற்சாகமளிக்க வேண்டுமேயன்றி, திணிப்பு நடவடிக்கைகளைத் தவிர்த்துக் கொள்ளல் வேண்டும். கவிதை கற்பித்தல் என்பது வரையறுக்கப்பட்ட விதிகளை மீறிய கலையாக உயர்ச்சி கொள்கின்றது.
கலாநிதி. சபா.ஜெயராசா - II 5

Page 61
தமிழ் இலக்கிய வரலாறு
மொழி பற்றியதும், அதனைப் பேசும் மக்கள் பற்றியதுமானதுமான புலக்காட்சியை ஏற்படுத்திக் கொள்வதற்கு, இலக்கிய வரலாற்று ஆய்வுகள் ஒருவகையிலே துணை செய்யும். சமூக வளர்ச்சியும் மாற்றங்களும் இலக்கிய உட்பொருளிலும், வடிவங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்திய வண்ணமிருக்கும். ஆனால் எழுத்து வடிவ இலக்" கியங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு மக்கள் வாழ்க்கையைத் தரிசிக்க முற்படுதல் முழுமையான பார்வையை ஏற்படுத்திவிட முடியாது. ஏனெனில் தொண்மையான மற்றும் இடைக்கால எழுத்து வடிவ இலக்கிய ஆக்கள் சமூக நிரலமைப்பின் உயர்ந்தோரது இயல்புகளையே வெளிப்படுத்தி நின்றன. ஒருவகையில் அவை அதிகாரத்தின் வடிவமாக அமைந்துள்ளன.
ஆங்கிலக் கல்வியின் செல்வாக்கினுக்கு உட்பட்ட ஆய்வறிவாளர்கள் தமது அறிகையின் வழியாக தமிழ் இலக்கிய வரலாறு பற்றி எழுதலாயினர். இவ்வகையில் சி.வை.தாமோதரம் பிள்ளையவர்கள் தமிழ் இலக்கிய வளர்ச்சியைப் பின்வருமாறு நிரல்படுத்தினார்.
1. அபோத காலம் 2. அஷரகாலம் 3. இலக்கண காலம் 4. சமுதாய காலம் 5. அநாதார காலம் 6. சமணர் காலம் 7. இதிகாச காலம் 8. ஆதீன காலம்
தாம் புலக்காட்சிகொண்ட மேலோங்கிய பண்புகளை அடிப்படை யாகக் கொண்ட நிரற்படுத்தலை அவர் மேற்கொண்டார். சிறுபண்புகள், உதிரியான பண்புகள், சமூகத்தின் அடிநிலை மாந்தரின் கலை இலக்கியங்கள் முதலியவை மேற்கூறிய பெரும்கட்டமைப்புக்களில் நிராகரிப்புக்கு உட்பட்டன. தமிழ் இலக்கிய வரலாற்றை ஆராய்ந்த பின் வந்த ஆய்வாளர்களிடத்தும் இந்தப் பண்புகள் ஏதோ ஒருவகையில் தொடர்ந்து கொண்டிருந்தன.
-II6- தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

மேலைப்புலத்து மேலெழுந்த வாரியான வரலாற்றுப் பாகுபாட்டினை அடியொற்றி கமில் ஸ்வெலெபில், அ.சிதம்பரநாதன் செட்டியார், தேவநேயப் பாவாணர், மு.வரதராசன் முதலியோர் ஆதிகாலம், மத்தியகாலம், நவீனகாலம் என்ற “பெரும் பாகுபாடுகளை" அடியொற்றிய ஆய்வுகளை முன்னெடுத்தனர்.
பெரும் இலக்கிய வடிவங்கள், நிறுவனங்கள், பெரும் உரையங்கள் அல்லது பெருங்கதையாடல்களை அடிப்படையாகக் கொண்ட காலப்பகுப்பினை எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்கள் மேற்கொண்டார்கள். அவரது இலக்கிய வரலாற்றுக் காலப்பகுப்பு வருமாறு.
l.
முற்சங்க காலம் - கி.பி 100-350 தொகை நூற்காலம் - 400-500 பிற்சங்க காலம் - 600-750 பக்தி நூற்காலம் - 600-900 நீதி நூற்காலம் - 600-850 முற்காவிய காலம் - 750-1000 பிற்காவிய காலம் - 1100-1300 தத்துவ நூற்காலம் - 1000-1850
உரையியற் காலம் - 1200-1500
I
O.
புராண பிரபந்த காலம் - 1500-1850 11. தற்காலம் - 1850
சமூக வரலாற்றில் எண்ணிறைந்த நிகழ்ச்சிகளும், செயற்பாடுகளும் இடம் பெற்றிருக்கும். அவற்றுக்குத் தளமாகப் பெரும் சமூக விசைகளும், நுண்விசைகளும் தொழிற்பட்டிருக்கும், அவற்றை நுணித்து நோக்காத "திரட்டிய" மேலெழுந்த வாரியான பகுப்பு முறைகளே தமிழியல் ஆய்வுகளில் வளர்ச்சியுற்று வந்தன. இவ்வாறான அணுகுமுறையே பேராசிரியர் வி. செல்வநாயகம் அவர்களது தமிழ் இலக்கிய வரலாற்றுக் காலத் திரட்டல்களிலும் காணப்பட்டது.அவரது கால அடுத்து வருமாறு:
1. சங்க காலம் 2. சங்க மருவிய காலம் 3. பல்லவர் காலம் 4. சோழர் காலம் 5. நாயக்கர் காலம் 6. ஐரோப்பியர் காலம்
7. இருபதாம் நூற்றாண்டு
கலாநிதி. சபா.ஜெயராசா - II 7

Page 62
மேற்கூறிய வரலாற்று அணுகுமுறைகளில் இருந்து வேறுபட்ட வகையில் பேராசிரியர் கா.சிவத்தம்பியின் காலப்பகுப்பு அமைந்தது. மார்க்சிய முறையியல்கள் சிலவற்றை அடியொற்றி அவர் தமிழ் இலக்கிய வரலாற்றுக் காலகட்டங்களைப் பின்வருமாறு அட்டவணைப்" படுத்தினார்.
1. ஆரம்பம் முதல் கி.பி.600 ஆம் ஆண்டுக் காலப்பகுதி வரை 2. கி.பி 600 முதல் 1400 ஆம் ஆண்டு காலப்பகுதி வரை 3. கி.பி. 1400 முதல் 1800 ஆம் ஆண்டுக்காலப்பகுதி வரை
4. கி.பி. 1800 தொடக்கம் இக்காலப்பகுதி வரை
"51ółfiai)gajfu G.JGUTpf” (Litery History in Tamil) (1986) 67Güp தொடரை அவர் பயன்படுத்தினார். ஆரம்பம் முதல் கி.பி.600 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வீரயுகக்காலம், நிலப்பிரபுத்துவக்காலம், வணிகயுகக்காலம் என்றவாறு கூட்டுமொத்தப்படுத்திப் பெயர்சூட்டலின் சிக்கல்களை அவர்விளக்கியுள்ளமை பின்னவீனத்துவ சிந்தனைகளின் செல்வாக்கினை ஒருவகையிலே வெளிப்படுத்துகின்றது என்றும் கூறலாம்.
காலப்பகுதிகளின் எளிமையாக்கலும், பொதுமையாக்கலை (Generalisation) மேற்கொள்ளலும், சிக்கலான சமூகச் செயற்பாடுகள் பற்றிய நுட்பமான புலக்காட்சியினை ஏற்படுத்திவிடமாட்டா. வரலாற்றுக் கால கட்டவகுப்புக்களும் அவற்றுக்குரிய பொது எண்ணக் கருவாக்கத்தை மேற்கொண்டு பொதுப்பெயர் சூட்டுதலும் கல்வியியல் நோக்கில் மிகுந்த நிதானத்துடன் நோக்கப்பட வேண்டியுள்ளன.
தமிழ்ச் சமூகத்தின் உற்பத்திமுறைமையும், உறவுகளும், மேலாதிக்" கமும் பற்றிய விரிவான வரலாற்று ஆய்வுகள் மேற்கொள்ளப்படாதிருக்கும் நிலையில் இலக்கிய வரலாற்று வளர்ச்சி பற்றிய பகுப்பாய்வுகளை மேற்கொள்ளலும், காலகட்டங்களுக்குரிய பெயர் சூடுதலும் மேலோட்டமான அறிகை முறையாகவே அமையும். பேராசிரியர் க.கைலாசபதி மற்றும் பேராசிரியர் கா.சிவத்தம்பி ஆகியோர் இந்தக் கருத்தை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளனர்.
பொருளுற்பத்தி விசைகள் சமூக அசைவியக்கத்தை ஏற்படுத்துகின்றன. சமூகத்தில் பல்வேறு சிறுசிறு உற்பத்தி முறைகள் தொழிற்பட்" டுக் கொண்டிருக்கும் பன்முகப்பாடான நிலை கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்படல் வேண்டும். இவ்வாறு பன்முகப்பட்ட உற்பத்தி
-118- தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

முறைகள் செயற்பட்டு வந்தாலும் ஓர் உற்பத்தி முறை மேலோங்கி எழுந்து ஏனையவற்றைத் தன்மயமாக்கிக் கொண்டிருக்கும்.
இவ்வாறாக மேலோங்கிய உற்பத்திமுறை உலகிலுள்ள எல்லாப் பிரதேசங்களிலும் அச்சில் வார்த்தெடுத்தற்போன்ற ஒரே வடிவினதாக இருக்கும் என்று பொதுமையாக்கல் செய்தலும் பொருத்தமான அறிவுப் பிரயோகமாகாது.
குறித்த மொழியைப் பேசும் மக்கள், பல்லினப்பாங்குகள் கொண்ட" வர்களாயிருப்பர். அவர்கள் வாழும் புவியியற் பரப்பும் பன்முகப்பாங்கு கொண்டிருக்கும் அவர்களின் தொழில்களும் பன்முகப்பாங்கு கொண்டிருக்கும். சிந்தனைகளிலும் பன்முகப்பாங்கு காணப்படும். இவ்வாறான பல்வேறு உற்பத்தி முறைகளையும் தன்மயமாக்கி ஓர் உற்பத்தி முறை மேலோங்கியிருத்தல் தெளிவாகக் காணக்கூடிய ஒரு தோற்றப்பாடாகும். அதனோடு இணைந்ததாக மேலெழுச்சி கொண்ட சிந்தனை முனைப்புக்களையும் இனங்காணலாம். உதாரணமாக மூன்றாம் உலக நாடுகளிலே காணப்படும் தேசிய இனங்களின் எழுச்சியில் இவ்வாறான மேலோங்கிய சிந்தனையின் பொதுமைப்பாட்" டைக் காண முடியும். இவ்வாறான பொதுமையைச் சுட்டும் பெயரிடுதலை இலக்கிய வரலாற்றிலே பயன்படுத்தும் பொழுது அதன் உள்ளமைந்த பன்முகப்படுகளை மேவி மறைத்துவிடுதலும் பொருத்தமான வரலாற்று அறிகைச் செயற்பாடாகி விடமாட்டாது.
குறிப்பிட்ட தெரிவுகளின் அடிப்படையில் வரலாறு பின்னப்படுவதால், வரலாறு என்பது, புறவயமான நேர்வுகளின் (Objective Facts) அடிப்படையாக உருவாக்கப்பட்டுள்ளது என்று கூற முடியாது. இலக்" கியம் படைத்தவர்கள் தமது கண்ணோட்டத்தின் வழியாகவே சமூகத்தை" யும் பண்பாட்டையும் நோக்கியுள்ளார்கள். அவற்றிலிருந்து வரலாற்று முடிவுகளை முன்னெடுத்தல் எந்த அளவு புறவயமானதாக இருக்கும் என்ற வினா பேலெழுகின்றது.
இலக்கியப் பாடப்புக்களை முழுமையாகவும் மூலாதாரமாகவும் கொள்ளும் செயற்பாடு இலக்கிய வரலாற்றின் நம்பகத் தன்மையைப் பாதிக்கின்றது. நூலாசிரியர்களைக் கருத்துக்கோடல்களுக்குரிய மூலவர்களாகக் கொள்ளலும் வரலாற்றின் நம்பகத் தன்மையைப்
பாதிப்படையச் செய்யும். சமூக ஆக்கத்தோடு இணைந்த மொழியும் இலக்கிய ஆக்கங்களும் அதிகார அணியின் வெளியீட்டு வடிவமாக இருக்கும் நிலையில் அவற்றை அடியொற்றிய வரலாற்றுக் கட்டுமான அறிகைச் செயற்பாடுகள் மீளாய்வை வேண்டிநிற்கின்றன.
கலாநிதி சபா.ஜெயராசா -1 19

Page 63
தமது ஆய்வுகளில் வரலாற்றை உருவாக்கும் காரணிகள் மீதான புலக்காட்சியினை மார்க்சிய அணுகுமுறையாளர் தோற்றுவித்தனர். குறிப்பிட்ட இலக்கிய வகைகள், நடையியல் கலை நுட்பவியல் முதலியவை வளர்ச்சி பெறுவதற்கு அவற்றின் சூழவுள்ள சமூக விசைகளே காரணிகளாக அமைந்துவிடகின்றன. ஆனால் தமிழ் இலக்கிய வரலாற்றாசிரியர்கள் அந்த விசைகளின் பின்புலமாக அமைந்த முரண்பாடுகளை அறிந்து கொள்வதற்குரிய போதுமான ஆழங்களைத் தெரிவு செய்யவில்லை. சமூகத்தின் மேலோங்கியோரால் உருவாக்கப்பட்ட எதிர் இலக்கிய விசைகளைத் தரிசித்த அளவுக்கு நேர் இலக்கிய விசைகளைப் போதுமான வகையில் இனங்காட்டாமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் இலக்கியத்தின் வரலாற்றினை எழுதிய முதல்வராக சைமன் காசிச்செட்டி விளங்குகின்றார். அவர் எழுதிய The Tamil Plutarch (1859) முதல் இலக்கிய வரலாற்று நூலாக அமைகின்றது. அவர் காலத்திலிருந்து தமிழ் வரலாற்று நூல்களை எழுதியோர் முறையியல் (Methodology) பற்றி ஆழ்ந்த அக்கறை காட்டவில்லை. நவீன கல்வி மரபில் வந்தவர்களே முறையியலில் தீவிரகவனம் செலுத்தி இலக்கியத்தின் வரலாற்றை நோக்கலாயினர். முறையியலோடு இணைந்த பிறிதொரு பரிமாணம் கருத்தியலாகும். மேலோங்கிய இலக்கிய வடிவங்களில் அதிகாரத்தில் உள்ளோா புனைந்த “உண்மைபற்றி அணி நிரலை”இனங்காணத் தவறுமிடத்து இலக்கிய வரலாற்றைத் தெளிவாகக் கட்டுமை செய்து விடமுடியாது.
இலக்கிய வரலாற்றைப் பின்வரும் நிலைகளில் நோக்க முடியும்.
1. ஆள்புலங்களை அல்லது பிரதேசங்களை அடிப்படையாகக்
கொள்ளல்.
2. நிறுவனங்களை அடிப்படையாகக் கொள்ளல்.
3. இலக்கிய வடிவங்களை அடிப்படையாகக் கொள்ளல்.
4. சமூகத்தில் உருவான இயக்கங்களை அல்லது எழுச்சி பெற்ற
விசைகளை அடிப்படையாகக் கொள்ளல்.
மேற்கூறிய அனைத்து அடிப்படைகளும் எழுதுவோரின் கருத்தியலுடன் தொடர்புபட்டு நிற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-120- தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

மொழிபெயர்ப்பும் மொழிவளமும்
அறிவுத் தேடல் என்பது பலமொழிகளைக் கற்றலுடன் இணைந்த செயற்பாடாக இருந்து வந்துள்ளது. ஒரு மொழியால் மற்றைய மொழி வளம் பெறுதல் நீண்டகால வரலாற்று நிகழ்ச்சியாகின்றது. சம்ஸ்கிருத மொழியால் தமிழும், பாளிமொழியால் சிங்களமும், இலத்தீன் மொழியால் ஆங்கிலமும் வளம் பெற்று வந்த தொடர்ச்சியான காலச் சுவடுகளைக் காணமுடியும். ஒரு மொழியில் உள்ள அறிவுக்கருவூலங்களை இன்னொரு மொழிக்குக் கொண்டு செல்லல் அறிவு வளர்ச்சியை உந்தல் செய்வதுடன் மட்டும் நின்றுவிடாது, மானிட நேயத்தையும் உலக நோக்கையும் பலப்படுத்தி நிற்கும்.
தருமொழி அல்லது மூல மொழியின் இருப்பை இலக்கு மொழிக்கு அல்லது பெறு மொழிக்குக் கொண்டு செல்லல் மொழி பெயர்ப்பு எனப்படும். மொழி பெயர்ப்பு அறிவு நேர்மையுடன் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு புலமைச் செயல் முறையாகும். மூலமொழி அறியாதவன் மொழிபெயர்ப்பின் மீதே தங்கியிருக்க நேரிடுவதால் மொழி பெயர்ப்பின் நம்பகத்தன்மை முக்கியமானதாகும். உலக அறிவுப் பெருக்கமும், ஊடாட்டங்களும், கல்விச் செயற்பாடுகளின் வளர்ச்சியும் மொழி பெயர்ப்புக்களின் தேவையை மேலும் தூண்டி வருகின்றன. இந்நிலையின் மொழி பெயர்ப்பின் பண்புகளை அடிப்படையாக் கொண்டு பின்வரும் பாகுபாடுகளை மேற்கொள்ளலாம்.
1. Gb5ířů GolluuLuriůL (Transliteration)
எடுத்துக்காட்டாக (Pigiron) என்பதை "பன்றி இரும்பு" என எழுதுதலைக் குறிப்பிடலாம். மூலமொழியில் உள்ள சொற்களுக்கு இணையான சொற்களைக் கண்டு நேரடியாக மொழியாக்கம் செய்யும் நடவடிக்கையாக இது அமைகின்றது. நேரடியாகத் தெறிக்கும் நடவடிக்கை" யாக இது அமைகின்றதேயன்றி கருத்துத் துல்லியமாக்கப்பட்டள்ளதா என்பதே கேள்விக்குரியதாகின்றது.
2. Glompl GlLILLřůL (Translation)
மூலமொழியின் கருத்துக்களை இலக்கு மொழியின் இயல்புக்கும், மரபுகளுக்கும் ஏற்றவாறு புலமை நேர்மையுடன் மேற்கொள்ளப்படும்
கலாநிதி. சபா.ஜெயராசா -121

Page 64
பெயர்ப்பு நடவடிக்கையாக இருக்கும். இலக்குமொழியில் குறித்த எண்ணக்கருக்களை வெளிப்படுத்துவதற்குச் சொற்கள் இல்லாதவிடத்து புதிய சொற்களை உருவாக்கும் நடவடிக்கையும் இங்கு மேற்கொள்ளப்படும்.
3. ஆக்க மொழி பெயர்ப்பு (Transcreation)
இது மூலமொழியை அடியொற்றி இலக்கு மொழியில் விபரித்தும் பொருத்தமான இணைப்புக்களை மேற்கொண்டும், இலக்கியச் சுவையூட்டியும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை. தமிழ் மரபில் கம்ப இராமாயணம் ஆக்க மொழிபெயர்ப்புக்கு ஒருநல்ல எடுத்துக்காட்டு.
4. 9555 GLonghoutLifiL (Trans Corruption)
மூல மொழியில் உள்ளவற்றை இலக்குமொழியில் கேடுறுத்தித் தரும் மலினப்பட்ட செயற்பாடாக இது அமையும். எடுத்துக்காட்டாக Counseling என்பதை தமிழில் "ஆலோசனை வழங்கல்” என்று அமைத்தமையைக் குறிப்பிடலாம்.
கோட்பாட்டு நிலையிலும் ஆற்றுகை அல்லது நடைமுறை நிலையிலும் மொழிபெயர்ப்பு என்பது விரிவான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. மொழிபெயர்ப்புக்கள் இலக்கு மொழியின் இயல்புகளையும் பண்பாட்டு நியமங்களையும் முற்றாகத் தழுவி விடவேண்டுமென்ற கருத்துக்கு ஒரு சாரார் முதன்மையளிக்கின்றனர். இங்கு மூலமொழியின் தோன்றாமையும் இலக்கு மொழியின் தோற்றப்பாடும் வலியுறுத்தப்படுகின்றது. இதற்குமாறுபாடான கருத்தை வலியுறுத்துவோர். மூலப்பிரதியின் இயல்பும் பண்பாட்டுப் புலமும் இலக்குமொழியிலே பிரதிநிதித்துவப்படுத்தல் வேண்டுமென வற்புறுத்துவர். இருசாராரும் பலமான கருத்துக்" களை முன்வைத்தாலும் ஆக்க இலக்கிய மொழிபெயர்ப்புக்கும் அறிவியல் இலக்கிய மொழிபெயர்ப்புக்குமிடையே அடிப்படையான வேறுபாடு உண்டு. ஆக்க இலக்கியங்கள் மூலமொழியின் பண்பாட்டு நியமங்களோடு ஆழ்ந்த தொடர்புகளைக் கொண்டுள்ளமையால் வேறொரு பண்பாட்டுத்தளத்துக்கு அல்லது முரண்பாடான வேறொரு பண்பாட்டுத் தளத்துக்கு மொழியூடாகக் கொண்டு செல்லும் பொழுது பல இடர்களை எதிர்கொள்ள நேரிடும் கவிதையை மொழிபெயர்க்கும்போது ஏற்படும் இழப்பு கவிதைதான் என்று கூறப்படுகின்றது.
அறிவியலாக்கங்கள் புறவயத்தன்மை கொண்டுள்ளமையால் ஆக்க இலக்கியங்களில் எதிர்கொள்ளப்படும் இடர்பாடுகள் மேலெழுதல் இல்லை. ஆனால் அறிவியல் மொழி பெயர்ப்புக்களில் பொருத்தமான கலைச் சொற்களை இலக்கு மொழியிலே கண்டறிதலே பிரச்சினையாக இருக்கும். ஆக்க இலக்கியம் மற்றும் அறிவியல் மொழி பெயர்ப்புக்களில் இலக்கு மொழியில் திட்டவட்டமான சமனிகள் அல்லது நிகரன்களைக்
-122- தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

(Equivalent) கண்டறிதலே மொழிபெயர்ப்பாளருக்குள்ள பிரதான பிரச்சினையாகும். இந்நிலையில் மொழிபெயர்ப்பாளர் இருமொழிப் புலமை உள்ளவராக இருப்பதுடன் குறித்த துறை சார்ந்த அறிவாழமும் உடையவr ராகவும் இருத்தல் வேண்டும். தனித்துஇருமொழி அறிவு இருந்தால் மட்டும் பொருத்தமான மொழி பெயர்ப்பை மேற்கொள்ள முடியாது.
gill upil Lulb (Accuracy) Fifugal D61 (Correctness) 26TL6ft IL (Correspondence) இனங்காட்டல் (Identity) முதலாம் பரிமாணங்களை மொழி பெயர்ப்புக் கொண்டிருக்கும் பொழுதுதான் வினைத்திறன் கொண்ட மொழி பெயர்ப்பாகவும், மூல மொழியின் பொருத்தமான மீளாக்கமாகவும் தெறிப்பாகவும் அமையும். மூல மொழியின் அறிகைத் தளத்திலிருந்து பெயர்ச்சியோ விலகலோ இருத்தலாகாது.
"மொழி பெயர்ப்பும் மொழித்தூய்மையும்” என்ற விடயமும் இத் தொடர்பில் நோக்குதற்குரியவை. தமிழ் மொழியில் இடம்பெற்ற ஆரம்ப கால மொழிபெயர்ப்புகளில் சம்ஸ்கிருதச் சொற்கள் மிகையாக எடுத்தாளப்பட்டன. சில எடுத்துக் காட்டுகள் வருமாறு.
Insurance- ஸ்டோத்திரவாதம் எனப்பட்டது. பின்னர் தனித்தமிழ் மயப்படுத்தப்பட்டு காப்புறுதி என ஆக்கம் பெற்றது. போக்குவரத்துச் சாதனங்களைக் குறிப்பிடுவதற்கு "இரதம்" என்ற சொல் பரவலாக எடுத்தாளப்பட்டது. இன்று தொடருந்து, பாரவூர்தி, வானூர்தி, உந்துருளி, பேருந்து போன்ற சொல்லாக்கங்கள் இடம் பெறத் தொடங்கியுள்ளன. சமஸ்கிருத சொற்களைப் பயன்படுத்துதலும், சொற்கூறுகளைப் பயன்படுத்துதலும் படிப்படியாக கைவிடப்பட்டுத் தனித்தமிழ் நோக்கிய எழுச்சி இடம் பெறத் தொடங்கியுள்ளது.
மூல மொழியின் சிக்கலான சித்திரிப்பு இயல்புகள், இலக்கு மொழியிலும் சிக்கலான சித்திரிப்பாக வடிவமைக்கப்படுதல் மொழிபெயர்ப்பின் நம்பகத்தன்மையை வெளிப்படுத்தும். பிரெஞ்சு மொழியில் மிசேல் பூக்கோவின் பின்கட்டமைப்பியல் எழுத்தாக்கங்கள் மிகுந்த சிக்கல் நிரம்" பியதும், கனங்காத்திரமான மொழிப்பிரயோகத்துடன் தொடர்புடையதாகவும் காணப்பட்டன. அவற்றை ஆங்கில மொழியில் மொழிபெயர்ப்பாக்கம் செய்த பேராசிரியர்கள் எளிமைப்படுத்திமூலத்தை மலினமாக்காது கனதியும் உறுதியும் சிக்கலும் நிரம்பிய ஆங்கில மொழி வடிவத்தைக் கொடுத்தமையால் பூக்கோவின் சிந்தனைகள் ஆங்கில மொழியிலே காப்பாற்றப்பட்டன.
மொழிபெயர்ப்பின் போது இன்னொரு விடயமும் கவனிக்கப்பட வேண்டியுள்ளது. மூலமொழியின் சமூக விஞ்ஞான ஆக்கத்தை இலக்கு மொழியில் வழங்கும் பொழுது சமூகத்தின் இலக்குமாந்தர் பற்றிய
கலாநிதி. சபா.ஜெயராசா -123

Page 65
பிரக்ஞையும் முக்கியமானது. அதாவது சமூக நிரலமைப்பின் எந்த நிலையினருக்குக் குறிப்பிட்ட அறிவு சென்றடைதல் வேண்டுமென்ற குவிப்பு கவனத்துக்குரியது. தமிழில் மார்க்சிய இலக்கியங்களை மொழி பெயர்த்தவர்கள் பெரும்பாலும் மத்தியதர வகுப்பினரைக் குவியப்படுத்தி மொழியைப் பயன்படுத்தினார்களேயன்றி, அடிமட்ட மக்களைக் குவியப்படுத்தத் தவறியுள்ளனர். மார்க்சிய அறிகை அடிமட்ட மக்களிடத்து விளக்கம் கொள்ளப்படாமைக்கு இதுவும் ஒரு காரணியாகக் கூறப்படுகின்றது. மேற்குறித்த மொழிபெயர்ப்புக்கு வகை மாதிரியாக ஒரு சொல்லைக் குறிப்பிடலாம்.
Exploitation என்பதற்கு "சுரண்டல்” என்று சொல் நிகரியாக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணக்கருவை அடிமட்டத்து மக்களுக்குப் புலப்படுத்துவதற்கு "சுரண்டல்” என்பது பொருத்தமான சொல்லாக அமையவில்லை. அடித்தளமக்களின் வாழ்நிலையோடும், அனுபவங்களோடும் இணைந்த பல சொற்கள் இருக்கும் வேளை அவற்றைத் தேடிக் கண்டறிவதற்கு மொழி பெயர்ப்பாளர்கள் முயற்சிக்கவில்லை. அதற்கு இணையான தமிழ்ச் சொற்களைத் தேடியவேளை பின்வரும் சொற்கள் கூலி உழைப்பவர்களிடமிருந்து வெளிவந்தன. பறிப்பு, தறிப்பு, அள்ளல், முடக்கல், திருடல், தின்னல், கெளஷ்வல் மற்றும் கொத்தல். இந்நிலையில் "மொழியுள் மொழி பெயர்ப்பு" என்ற செயற்பாடும் தவிர்க்க முடியாது வேண்டப்படுகின்றது.
மூலமொழியில் இருந்து இலக்குமொழிக்குத் தரப்பட்டவற்றை தேவைகருதி மீள் வடிவமைத்தல் "மொழியுள் மொழி பெயர்ப்பு" எனப்படும். இந்நிலையில் மூல மொழி பிரதி இலக்குமொழிக்குக் கொண்டு வரப்படும் பொழுது பலமொழி பெயர்ப்புக்களுக்கு உள்ளாகும் வாய்ப்பு உண்டு என்பது புலனாகின்றது.
பல்வேறு காரணிகளினால் மொழிபெயர்ப்புக்கள் தோல்விகளைத் தழுவிக் கொள்கின்றன. இரு மொழிகளிலும் ஒருவருக்குரிய புலமைக்" குறைவு தோல்விக்குரிய முதற் காரணியாகின்றது. மொழி அறிவு இருந்தால் மட்டும் போதாது குறித்த பாடப்புலத்திலும் புலமை இருத்தல் வேண்டும். சுருக்கமானதும் பொருத்தமானதுமான கலைச் சொற்களைப் பயன்படுத்தாவிடத்து மொழிபெயர்ப்பின் தரம் வீழ்ச்சியடையும். எடுத்துக்காட்டாக CounSellor என்பதற்கு "உளவளத்துணை வழங்குபவர்” என்று மொழிபெயர்க்கும் பொழுது சுருக்கமற்றதும் தேவையற்றதுமான நீட்சி ஏற்படுத்தப்பட்ட விடுகின்றது. சுருக்கமானதும் பொருத்தமானதுமான சொற்களைக் கண்டறியாத நிலை அல்லது உருவாக்க முடியாத நிலை "சொற் பஞ்சம்"எனப்படும். சொற்பஞ்சம் ஏற்படும் பொழுது ஒர் எண்ணக்கருவை விளக்குவதற்குப் பல சொற்களைப் பயன்படுத்தி விரித்துரைக்க வேண்டிய தேவை மேலெழுகின்றது.
-124- தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

மொழிபெயர்க்கும் பொழுது மூலத்தின் ஆழவுரைப்பை இலக்குமொழியிலே கொண்டு வராது மேலெழுந்த வாரியாக உரைத்தலும், பொதுப்படையாக உரைத்தலும் தோல்வியின் தளத்துக்கு இட்டுச் சென்றுவிடும். இவ்வாறு பொதுப்படையாகக் கூறும் எளிமையாடல் நுண்மதி சார்ந்த நேர்மையாகக் கொள்ளப்படமாட்டாது. அறிவின் தரத்தை ஊறுபடுத்தும் செயலாக இது மாறி விடுகின்றது.
மொழிபெயர்க்கும் பொழுது வழக்கில் உள்ள சொற்களை அறியாது அல்லது வழக்கிலிருந்து நீங்கிய சொற்களை அறியாது செயற்படலும் மொழி பெயர்ப்பின் தரத்தைப் பாதிப்படையச் செய்யும்.
மொழிபெயர்ப்புக்கும் அரசியலுக்குமுள்ள தொடர்புகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. காலனித்துவ உருவாக்கத்தில் மொழியும், மொழிபெயர்ப்புக்களும் சிறப்பார்ந்த பங்குகளை வகித்தன. பின் காலனிய உருவாக்கத்தில் ஆங்கில மொழியும் ஆங்கிலத்திலிருந்து தேசிய மொழிகளில் மேற்கொள்ளப்பட்ட மொழிபெயர்ப்புக்களும் ஆங்கில மேலாதிக்கத்தின் வளர்ச்சி எவ்வாறு பங்களிப்புச் செய்துள்ளன என்பதும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
தேசிய மொழிகளிலும் இவ்வாறான மேலாதிக்கப் பண்பு வளர்வதை ஆய்வாளர் சுட்டிக் காட்டியுள்ளனர். எடுத்துக்காட்டாக இந்திய தேசிய மொழிகளில் இருந்து இந்திக்கு மேற்கொள்ளப்பட்ட மொழிபெயர்ப்புக்கள் குறைவாகவும் இந்தியிலிருந்து தேசிய மொழிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட மொழிபெயர்ப்புக்கள் மிகையாகவுமுள்ளன. தேசியமொழிகளைப் பேசுவோர் இந்திமொழி கற்றலுக்கு மிகையான ஆர்வம் காட்டும் வேளை, இந்திமொழிபேசுவோர் தேசிய மொழிகளைக் கற்றுக் கொள்வதற்கு ஆர்வம் காட்டுதல் இல்லை என்று கூறப்படுகின்றது.
மொழிபெயர்ப்புத் தொடர்பான பல்வேறு கருத்து முனைப்புக்கள் காணப்பட்டாலும், எந்தவொரு மொழியின் வளம்பாட்டுக்கும் மொழி பெயர்ப்புக்கள் வேண்டப்படுகின்றன. குறித்த மொழியின் இல்லாமையைப் போக்கும் நடவடிக்கைகள் மொழிபெயர்ப்புக்களையும் உள்ளடக்கி நிற்கின்றன. தாய்மொழிக்கல்வி வளமும் வலுவும் பெறுவதற்கு வினைத்திறன் கொண்ட மொழிபெயர்ப்புக்கள் தேவையாகின்றன.
கலாநிதி. சபா.ஜெயராசா -125

Page 66
நிறைவுரையின் தொடக்கம்
தாய்மொழி வழிக் கல்வி இயல்பானதும் இயற்கையானதுமான செயல்முறை. வாழ்வியல் வளத்தோடும், சிந்தனைவளத்தோடும் மனவெழுச்சிகளோடும் தாய்மொழி வளமுடன் இணைந்துள்ளது. தாய்மொழி வழிக் கல்வியிலிருந்து ஒருவரைப் பிரித்தெடுத்தல் கல்விச் செயல்முறையிலிருந்து பிரித்தெடுக்கும் நடவடிக்கையாகின்றது. தாய்மொழியின் இழப்புக் கல்வியின் இழப்பாகின்றது.
உலகளாவிய முறையில் அரசுகள் வளர்ச்சி பெற்ற வேளை கற்போரைச் சமூகத்திலிருந்து பிரித்தெடுக்கும் உபாயமாக வேற்றுமொழி வழிக்கல்வி ஒழுங்கமைக்கப்பட்டது. மேலையுலகில் இலத்தீன் மொழியும் இந்தியாவில் சம்ஸ்கிருதமும். பயிற்றுவிப்பு மொழியாக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்கு அறிவு எடுத்தாளப்பட்ட வரலாற்று வளர்ச்சியினை மிசேல் பூக்கோ விரிவாக ஆராய்ந்துள்ளமை நினைவு கொள்ளத்தக்கது.
எண்ணக் கருவாக்கம், உளவலுவின் வினைத்திறன் மிக்க செயற்பாடுகள், அறிவைத் தன் மயமாக்கல், அறிவின் பிரயோகம், சமூகத்தை விட்டுப் பிரிந்து அந்நியமாகாது நிற்றல் என்ற அனைத்து நேர்ப் பரிமாணங்களும் தாய்மொழிக்கல்வியால் நிறைவிக்கப்படுகின்றன. இதனால் தாய்மொழி வழிக் கல்வியே கல்விக்குரிய பெறுகை விகிதத்தை (Rate of Returns) அதிகரிக்க வல்லது. தாய்மொழியை நிராகரித்து ஒருவர் தன்னியல் நிறைவை (Sele Actualisation) எட்டவும் (ԼՔԼգԱIIT35l.
தாய் மொழி வழிக்கல்வி என்பது உணர்ச்சிகளுக்கும் மனவெழுச்சி களுக்கும் அப்பால் நின்று சிந்திக்கப்பட வேண்டிய தொன்றாகும். குறுகிய இலாபங்களுக்கு அப்பால் நின்றும் அதனை நோக்க வேண்டியுள்ளது.
காலனித்துவ ஆட்சியை நிலை நிறுத்துவதற்குக் கல்வியும் மொழியும் பலம்மிக்க கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டன. காலனித்துவ செயற்"
-126- தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்

பாடுகளின் போது நாட்டு வளங்கள் ஆட்சியாளர்களது கைகளுக்கும் அவர்களின் மொழி ஆளப்படுவோரிடத்தும் நிலை மாற்றப்பட்டன. அவர்களின் ஆட்சிமொழி வழியாக அளிக்கப்பட்ட கல்வி ஆளப்படுவோரின் சிந்தனையைப் "பணிவுள்ள சிந்தனை”யாக மாற்றம் பெறச் செய்தது. அல்லது மெளனிக்கச் செய்தது. அவர்களால் உருவாக்கப்பட்ட சுதேசமொழிப் பாடசாலைகள் திட்டமிடப்பட்டவாறு "தரங்குறைந்த” கல்வியை வழங்கின. இது ஒருவகையில் ஆளப்படுவோரிடத்துத் தாழ்வு மனோபாவத்தை வளர்ப்பதற்கும் ஆட்சியாளருக்கு உதவியது.
சமூகத்தில் நிலவிய முரண்பாடுகளை அடியொற்றி உருவாக்கம் பெற்ற தேசிய விடுதலை இயக்கங்கள் தேசிய மொழிகளையும் பண்பாட்டையும் மேலெழச் செய்தன. கலாயோகி ஆனந்தகுமாரசாமி, சேர்.பொன் அருணாசலம், சேர் பொன். இராமநாதன் முதலியோர் காலனித்துவத்தின் உள்வட்டத்தில் நின்றவாறு அதன் எதிர்ப்பாளராக மாறினர். தொடர்ந்து யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ் தாய்மொழி யின் போதனா முக்கியத்துவத்தை மேலும் வலியுறுத்தியது.
தாய்மொழிக்கல்வியை வளம்படுத்தும் பாட நூலாக்க முயற்சியையும், நூற்பதிப்பு நடவடிக்கைகளையும் ஏற்கனவே முன்னெடுத்த ஆறுமுகநாவலரும் சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்களும் யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரசின் நடவடிக்கைகளுக்கு ஆதர்ஸமாயினர். தாய்மொழிக் கல்வியை வளம்படுத்துவதற்குரிய கலைச்சொல்லாக்க முயற்சிக்கு சுவாமி விபுலாநந்தர் நுழைவாயிலமைத்தார்.
தேசிய எழுச்சியுடன் உருவாக்கம் பெற்ற இரு மொழி வல்லுனர்கள் தாய் மொழியின் வளத்துக்கும் வலுவுக்கும் பங்களிப்புச் செய்து வருதல் இந்தியாவிலும் இலங்கையிலும் காணப்படும் பொதுவான தோற்றப்பாடாகும். தாய்மொழியைப் பயிற்றுமொழியாகக் கொள்ளலும், அதன் பக்கபலமாக உலகமொழி ஒன்றைக் கற்றுக்கொள்ளலும் தேசிய மொழிகளைக் கற்றலும் வளர்ச்சியின் உந்தல் வேகத்தை அதிகரிக்கச் செய்யவல்லது. அறிவு என்பது சமூக வினைப்பாடாக (Social Action) மாறுவதற்கும் தாய்மொழிக் கல்வியே வழியமைக்கின்றது. ஒருவர் தமக்குரிய படிமத்தை வளர்த்துக் கொள்வதற்கும் தமது தேசியம் தமது பண்பாடு முதலாம் படிமங்களைக் கட்டியெழுப்புவதற்கும் தாய்மொழிக் கல்வியே தளமிடுகின்றது. இலங்கையில் கன்னங்கராவின் கல்விச் சீர்திருத்தங்களைத் தொடர்ந்து இலவசக்கல்வியுடன் இணைந்து தாய்மொழிக் கல்வி வளர்ச்சியுறலாயிற்று. இந்நிலையில் உலக மொழியாகிய ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்வதிலே அக்கறையும்
கலாநிதி. சபா.ஜெயராசா - II 27

Page 67
வினைத்திறனும் மேற்கொள்ளப்படாமையினால் எதிர்பார்த்த இலக்குகளை எட்ட முடியாமற் போய்விட்டது.
இலங்கையிற் பயிற்று மொழி மாற்றம் நிகழ்ந்த வேளை மனோபாவங்கள் தொடர்பான மாற்றங்கள் சமாந்தரமாக முன்னெடுக்கப்படவில்லை. சுதேசமொழியில் அறிவுள்ளோரும் ஆங்கில மனோபாவம் கொண்டவர்களும் கல்விச் செயல் முறையின் விளைவுகளாக வெளிவந்தமை வியப்பன்று. இதுவே பின்காலனித்துவத்தின் கல்வி வெளிப்பாடாக மேலெழுந்த இந்நிலையில் விரைந்து வீசத் தொடங்கி யுள்ள கோளமயமாக்கல் அலை மீண்டும் இந்நாட்டின் தாய்மொழிக் கல்வி மீது சவால்களை விடுக்கத் தொடங்கியுள்ளது. இலங்கையின் கல்வி பற்றிய தீர்மானங்கள் உயர் மத்தியதரத்து மேல்நிரையினரால் மேற்கொள்ளப்படுதல் கோளமயமாக்கல் எதிர் விசைக்கு மேலும் மெருகூட்டுகின்றது.
மனித மூளையின் ஆற்றல் தொடர்பாக அண்மைக் காலத்தில் நிகழ்ந்து வரும் ஆய்வுகள் ஒவ்வொரு மனிதரும் பலமொழிகளைக் கற்கக் கூடியதிறனும் ஆற்றலும் கொண்டவர்கள் என்பதைப் புலப்பாடு கொள்ளச் செய்துள்ளமை தாய்மொழியுடன் உலகமொழி, தேசிய மொழி முதலியவற்றைக் கற்றுக் கொள்ளும் செயற்பாடுகளுக்கு வலுச் சேர்க்கின்றது.
-128- தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்


Page 68


Page 69
பேராசி யாழ்ப்ப ტნიზმიქსto]] FLIT. (og ஆணித் துணிவு முதன்ை நுண்கை போது பாடநெ ଅୋitLiର
மார்த்தி
LDITg60ğ)IL—{ கலையி முன்னி கட்டுை நூல்கள் சான்றா வரப்பட
ஈழத்துப் சஞ்சிை இறுக்க Galafia எழுத்த வாய்ந்த
யாழ் ப 6) IGITigre ଅଧଃଶୟ୍ଯ வருகின் கொழும் இருக்கி
 
 
 

ரியர் சபா. ஜெயராசா ாணப் பல்கலைக் கழகத்தின் பல் துறைப் பேராசிரியரான ஜயராசா அவர்கள் தரமான கருத்துக்களைத் டன் முன்வைப்பதில் மயானவர். இராமநாதன் லப் பீடாதிபதியாக இருக்கும் அத்துறைசார்ந்த புதிய றிகளை உருவாக்கி வெற்றி
பம் சார்ந்து உளவியல், வியல், கல்வியியல், பல் கருத்துக்களை றுத்தி பல நூற்றுக் கணக்கான ரகளை எழுதியுள்ளார். பல
அவரின் ஆளுமைக்குச் க வெளிகொண்டு
டுள்ளன.
பத்திரிகைகளிலும் ககளிலும் இவரது மான கட்டுரைகள் பல ந்துள்ளன. பேச்சுவன்மையும் ாற்றலும் மதிநுட்பமும்
ஒரு அறிஞர்.
ல்கலைக் கழகத்தின் சியில் பெரும் ஈடுபாடு காட்டி யல் துறையை மேம்படுத்தி றார். இவர் தற்போது ம்பு தமிழ்ச் சங்கத் தலைவராக ன்றார்.