கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யூனிட் ரஸ்ட்: வருமானமும், முன்னேற்ற நிதியமும் 1992 - 1993

Page 1
வருமான
91660TL
1992 மார்ச் 25 முத
 
 

னிட் ரஸ்ட்
னமும், முன்னேற்ற நிதியமும்
டறிக்கை
ல் 1993 மார்ச் 31 வரை

Page 2
1992ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற வியாபார
சந்தைப்படுத்துவோரின் மாநாட்டு பின்னறிக்கை
 
 

சீபாங்க் யூனிட் ரஸ்ட்
ஆண்டு அறிக்கையும் கணக்குகளும் 1993.
கூட்டிணைப்புத் தகவல்
நம்பிக்கைப் பொறுப்பாளரும் கட்டுக்காப்பாளரு
இலங்கை வங்கி
கொழும்பு 1. நிதியத்தின் முகாமையாளரும் பதிவாளரும் த யூனிற் டிரஸ்ட் மேனஜ்மன்ற் கம்பனி (பிரைவேட்) லிமிட்டெட், 3ஆம் மாடி, வெஸ்ட் விங் இலங்கை வங்கிக் கட்டிடம், யோர்க் வீதி, கொழும்பு 1.
முகாமைக் கம்பெனியின் பணிப்பாளர்கள் தேசபந்து கரு ஜயசூரிய
தவிசாளர் (1992.11.10 முதல் பதவி விலகினார்)
திரு. மனோ செல்வநாதன் பிரதித் தவிசாளர்
திரு. ஏ. கதிரவேலுப்பிள்ளை நிறைவேற்றுப் பணிப்பாளர்
திரு. ஏ.பி. குறியன்
(நியமத்தர் - யூனிற் டிரஸ்ட் ஒவ் இந்தியா)
திரு. என்.எஸ். டுல்லொக் (நியமத்தர் - வார்ட்லி இன்வெஸ்ட்மென்ட் சர்வீசஸ் (ஹொங்கொங்) லிமிட்டட்) (1992.8.17 முதல் பதவி விலகினார்.)
திரு. ஜி.பி. மில்லர் (நியமத்தர் - வார்ட்லி இன்வெஸ்ட்மென்ட் சர்வீசஸ் (ஹொங்கொங்) லிமிட்டட்) 1992.8.17 முதல் நியமிக்கப்பட்டார்.
திரு.
திரு. (திரு.
திரு. ரெக்ஸ் பிலிப்ஸ்
(1992.8.17 முதல் பதவி விலகிய திரு. என்.எஸ்.
டுல்லொக்குக்குப் பதிலாள்)
திரு. ஜோன் கார்பெண்டர் (திரு. ஜி.பி. மில்லருக்குப் பதிலாள்)
ஏ.ஜி. வீரசிங்க
டி.சி.ஆர். குணவர்தன மனோ செல்வநாதனுக்குப் பதிலாள்)
"முதலீட்டு ஆலோசனைக் குழாம் உறுப்பினர்கள்
தேசபந்து அஜித் ஜயரட்ண தவிசாளர் - போர்ப்ஸ் அன்ட் வாக்கர்ஸ் லிமிட்டட்
தேசபந்து டி.எஸ். ஜயசுந்தர தவிசாளர் - ஹேலிஸ் குறுப் ஒப் கம்பெனிகள்
திரு. ஏ.எஸ். ஜயவர்தன செயலாளர் - கைத்தொழில் விஞ்ஞான, தொழினுட்பவியல் அமைச்சு (1993.3.31 முதல் பதவி விலகினார்)
திரு. டபிள்யு. டி. லஷ்மன் பொருளாதாரப் பேராசிரியரும், பட்டதாரிகள் கற்கைகள் வளாகத் தலைவரும், கொழும்பு பல்கலைக்கழகம்
திரு. டென்னிஸன் ரொட்ரிகோ முகாமைப் பணிப்பாளர் - கெப்பிற்றல் டெவலப்மென்ற் அன்ட் இன்வெஸ்ட்மன்ற் கம்பனி லிமிட்டட்
திரு. ஹரி செல்வநாதன்
பிரதித் தவிசாளர் கார்ஸன் கம்பர்பெட்ஜ் அன்ட் கம்பெனி லிமிட்டட்
திரு. கே. சிவகணநாதன்
பிரதிப் பொது முகாமையாளர் நிதி, திட்டமிடல், இலங்கை வங்கி,
கணக்காய்வாளர்கள் கூப்பர்ஸ் அன்ட் லைப்ரன்ட், சச்சிதானந்தா, பசுபதி அன்ட் கம்பெனி வரைவு பெற்ற கணக்காளர்கள்
சந்தைப்படுத்தல் முகவர்கள் - இலங்கை வங்கி - காஸன் கம்பர்பெட்ஜ் அன்ட் கம்பெனி லிமிட்டட்
- மேர்ச்சன்ட் பாங்க் ஒப் பூரீ லங்கா லிமிட்டட் - வங்கிகள் உள்ளிட்ட 17
கூட்டிணைப்புக் குழுக்கள்
- 50 தனியாட்கள்
LSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSS

Page 3
சீபாங்க் யூனிட் ரஸ்ட் ஆண்டு அறிக்கையும் கணக்குகளும் 1993.
முகாமையாளரின் அறிக்கை
பொருளாதாரச் சூழல்
1992ஆம் ஆண்டானது, சாதகமான கொடுப்பனவு மீதி மூலமும், நாட்டின் கைத் தொழில் ஏற்றுமதிகள் முனைப்பாக அதிகரித்ததன் மூலமும், 4.3 சதவீத பொருளாதார வளர்ச்சியைக் கண்டது. பெரியளவிலான பொருளாதார ஸ்திரப் படுத்தலையும், அரசிறை வருமான ஒன்றுதிரட்டலையும் கருதிய அரசாங்கத்தின் நிகழ்ச்சித்திட்டம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டது. 1992ஆம் ஆண்டில் வளர்ச்சிவீதம் மட்டமானதாக இருந்ததற்குப் பின்னணிக் காரணம் நீண்டகால வரட்சி காரணமாக கமத்தொழில் உற்பத்தி வீழ்ச்சியடைந்தமையும், வடகிழக்கு பிரச்சினை காரணமாக பாரிய மூலவளங்களை விரிவுறுத்த வேண்டியிருந்தமையும், அனைத்துலகையும் பாதிக்கும் பின்னடைவு காரணமாக சர்வதேச சந்தையில் காணப்பட்ட தேக்க நிலையுமே ஆகும்.
கருத்தைக் கவரும் வகையில் முறையே 9 சதவீதமாகவும், 5.3 சதவீதமாகவும் வளர்ச்சிகண்ட கைத்தொழிற் துறையும், சேவைகள் துறையும் 1992ஆம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்களித்தன. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய மூலகாரணியாக தனியார்துறை அமைவதற்கு அரசாங்கம் எடுத்த தொடர்ச்சியான முயற்சியின் பயனாக தனியார் தொழிற்றுறையின் விளைவளவு பகிரங்கத் தொழிற்றுறையிலும் பார்க்க (உண்மையாக) 20 சதவீதத்தினால் அதிகரித்திருந்தது. பகிரங்கத் தொழிற்றுறை 19 சதவீதத்தினால் வீழ்ச்சி கண்டிருந்தது.
அனைத்துலகையும் பாதிக்கும் பின்னடைவு எப்படியிருந்தபோதிலும், நாட்டிற்கு உல்லாசப் பிரயாணிகளின் வருகையானது முந்திய ஆண்டிலும் பார்க்க 15 சதவீத குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டி நின்றது. உல்லாசப் பிரயாணத்துறை முழுவளவிலான சேவைத்துறைக்கு குறிப்பிடத்தக்க பங்களித்துள்ளது. சந்தை நாட்டம் கொண்ட பொருளாதாரம் நோக்கி அரசாங்கம் எடுத்த பெருமுயற்சியினாலும், உயர் வளர்ச்சிவீதங்களை எய்தப்பெறுவதில் வெளிநாட்டு மூலதனத்தின் முக்கியத்துவத்தை அரசாங்கம் ஏற்றங்கீகரித்தமையினாலும் உந்தப்பெற்ற வெளிநாட்டு நேரடி முதலிடு ஆண்டின்போது கணிசமான வளர்ச்சி கண்டது. முழுமொத்த உண்ணாட்டு உற்பத்தியின் ஒரு விகிதம் என்றவகையில் உண்ணாட்டுச் சேமிப்புக்கள் 1991ஆம் ஆண்டில் 12,70 சதவீதமாக இருந்து 1992ஆம் ஆண்டில் 15.3 சதவீதமாக அதிகரித்துள்ளன. தனிப்பட்ட சேமிப்புக்களில் உள்ள கணிசமான அதிகரிப்பும், அரசாங்கம் சேமித்ததை எடுத்துச் செலவு செய்வதில் உள்ள குறைவும் காரணமாகவே அதிகரிக்கப்பட்ட சேமிப்புக்கள் உருவாகின.
பணச்சந்தையும் வட்டிவீதங்களும்
1992ஆம் ஆண்டு முழுவதிலும், அதன்பின்னர் தொடர்ந்தும் பணச்சந்தையில் திறைசேரி உண்டியல்களும், வைப்புச் சான்றிதழ்களும் ஆதிக்கம் செலுத்தின. திறைசேரி உண்டியல் சந்தையை நடாத்துவதில் சந்தை நாட்டமும், இம்முறைமையில் அதிகரித்துக் காணப்பட்ட கைமேல் பணம் பெறத்தகும் நிலையும் ஆரம்பச் சந்தையை ஆண்டு முழுவதும் முனைப்பாக நிலைநிறுத்தின. திறைசேரி உண்டியல்களிலும், வங்கிகளுக்கிடையிலான
அழைப்புப் பணச்சந்தையிலும் பிரதிபலிக்கப்பட்டவாறு, 1992ஆம் ஆண்டின் போது வட்டிவீதங்கள், உயர்வீத பணவிரிவாக்கம் காரணமாகவும், வரவுசெலவுத் திட்டப்
0 LSSSLSSSLSLSLS
 

சீபாங்க் யூனிட் ரஸ்ட் ஆண்டு அறிக்கையும் கணக்குகளும் 1993.
முகாமையாளரின் அறிக்கை
பற்றாக்குறைக்கு நிதிவசதியளிக்க அதிகளவு பணம் அரசாங்கத்திற்கு தேவைப் பட்டதாலும், உயர் பணவீக்கத் தாக்கத்திற்கு உட்பட்டிருந்தன.
6 மாதம் முதல் 1 ஆண்டு வரையிலான திறைசேரி உண்டியல்கள் மீதான வரவுகள் 1992ஆம் ஆண்டு இறுதியில் ஆண்டொன்றுக்கு 18 சதவீதம் முதல் 19 சதவீதம் வரையில் வேறுபட்ட அதேவேளையில், குறுகிய கால வங்கிவைப்பு வீதங்கள், முதிர்வு காலத்தைப் பொறுத்து, ஆண்டொன்றுக்கு 18 முதல் 20 சதம் வீதம் வரையில் வேறுபட்டன. 12 மாத வைப்புக்குச்செலுத்தப்படும் வீதம் 20 சதவீதமாகும். அழைப்புப் பணம்மீதான வட்டி வீதங்கள் 1992ஆம் ஆண்டின்போது 10 சதவீதம் முதல் 32 சதவீதம் வலையில் பரந்துபட்ட அளவில் மாறுபட்டன.
திறைசேரி உண்டியல்கள் சராசரி வரவு
22.0000%
20000%
200000%
19,000%
--سے پ18,0000%E
170000%
16,000.0%
i
1993ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் வட்டிவீதங்கள்மீது அதிக தாக்கம் காணப்பட்டது. 12 மாத திறைசேரி உண்டியல்கள்மீதான வரவு 21.9 சதவீதமாக உயர்ந்தது. 3 மாத, 6 மாத திறைசேரி உண்டியல்கள்மீதான வரவு, முறையே 19.8 சதவீதமாகவும், 20.5 சதவீதமாகவும் உயர்ந்தது. 1993ஆம் ஆண்டின் முதல் அரையாண்டின் போது அழைப்புப் பணச்சந்தையில் உள்ள வட்டிவீதங்கள், இம்முறைமையில் உள்ள கைமேல் பணம்பெறத்தகு நிலைமைக்கும், ஒதுக்கு முகாமை மீதான மத்திய வங்கிக் கொள்கைக்கும் இணங்க 16 சதவீதம் முதல் 32 சதவீதம் வரையில் தொடர்ந்து மாறுபட்டன.
முலதனச் சந்தை
ஒப்புரவுகளுக்கான ஆரம்பச் சந்தை
அரசாங்கத்தின் தனியார் மயப்படுத்தல் முயற்சியும், தனியார் துறையினர் ஒப்புரவு நிதி வசதியளிப்புக்கு மாறியமையும் சேர்ந்து 1992/93ஆம் ஆண்டின்போது ஒப்புரவுகளுக்கான
LSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSL S

Page 4
சீபாங்க் யூனிட் ரஸ்ட் ஆண்டு அறிக்கையும் கணக்குகளும் 1993.
முகாமையாளரின் அறிக்கை
ஆரம்பச் சந்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தின. 1993 மார்ச்சு 31 அன்று முடிவடைந்தத 15 மாத காலப்பகுதியின்போது, 3 கம்பெனிகளில் அதன் ஒப்புரவுப் பங்கீடுபாடுகளை களைப்பதன்மூலம்/கைதுறப்பதன் மூலம் 2500 மில்லியன் ரூபாவை திறைசேரி சேகரிக்கக்கூடியதாகவிருந்தது. இவை ஒருங்கொத்து கொ.ப.ப. பரிவர்த்தனையில் நிரற்படுத்தப்பட்டன. இதைவிட, 15 புதிய வழங்கல்களையும், 41 உரிமைப்பங்கீட்டு வழங்கல்களையும் வழங்குவதன் மூலம் தனியார் துறை 3290 மில்லியன் ரூபாவைத் திரட்டியது.
1992ஆம் ஆண்டின்போதும், 1993ஆம் ஆண்டின் முதல் காலாண்டின்போதும் ஆரம்பச் சந்தை கண்ட படிப்படியான முன்னேற்றம் 1993ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் நிலைக்கவில்லை. அதேவேளையில், மேற்கொண்டு தனியார் மயப்படுத்தலுக்கான அறிகுறிகளும், ஒப்புரவுச் சந்தையைப் பிடிப்பதற்கு தனியார் துறையினர் கொண்ட நாட்டமும், 1993/94ஆம் ஆண்டின்போது நியாயமான பெரிய அளவு முயற்சிகளாக இருந்தன. ஆரம்பச் சந்தையில் எடுக்கப்பட்ட நிலையானளவு முயற்சி, ஒப்புரவுகளுக்கான இரண்டாந்தரச் சந்தையின் அபிவிருத்திக்கு நன்கு ஊக்கமளிப்பதாக அமைந்தது.
கடன் பிணையங்களுக்கான ஆரம்பச் சந்தை
நாட்டின் கடன் பிணையங்கள் சந்தை அதன் ஆரம்ப நிலையிலேயே உள்ளது. இச் சந்தை ஒருசில அரசாங்கக் கடன் பங்குத் தொகுதிகளுடனும், மிகச் சில பங்குத் தொகுதிக் கடன் சாதனங்களுடனும், அநேகமாகச் செழிப்பற்ற நிலையில் இருப்பதுடன்,தனியார் துறை அதில் நாட்டம் கொள்ளாத நிலையிலும் உள்ளது. தற்போதுள்ள உயர்ந்த திறைசேரி உண்டியல் வரவுகள் பிரச்சினைகளைச் சிக்கலாக்குவதுடன், பொருத்தமான கொடுகடன் வகுதிப்படுத்தல் நிறுவனங்களும், நிறுவனஞ்சார் முதலிட்டாளர்களுடன் கொடுகடன் வகுதிப்படுத்தல் செயல்முறைகளும் இல்லாத நிலை இச்சந்தையின் வளர்ச்சிக்குத் தடையாகக் காணப்படுகின்றது. மூலதனச் சந்தையின் முழுவளவிலான அபிவிருத்திக்கு கடன் பிணையங்களில் முனைப்பானவொரு சந்தை மிக்க அத்தியாவசியமானது என்பது வலியுறுத்தப்பட வேண்டும்.
ஒப்புரவுகளுக்கான இரண்டாந்தரச் சந்தை
ஆரம்பச் சந்தை கண்ட துரித வளர்ச்சி எவ்வாறாயினும், கொழும்பு பங்குத் தொகுதிப் பரிவர்த்தனைக்குப் பரவலாக்கப்படவில்லை. 1992ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் மிகைத்துப் பெறுமதியிடப்பட்ட பங்குத் தொகுதிச் சந்தை, தீவிரமான 2 ஆண்டு செயற்பாட்டின் பின்னர், 1992 பெப்புருவரி ஆரம்பத்தில் சீராக்கப்பட ஆரம்பித்தது. அதே வேளையில் ஒருசில சந்தர்ப்பங்களில் இனிய நம்பிக்கை நிலை உகந்ததான சந்தைக்கு இட்டுச் சென்றபோதிலும், அத்தகைய நிலைமைகள் குறுகிய காலமே நிலைத்தன. சந்தைநிலை தொடர்ந்து வீழ்ச்சி கண்டது. கொ.ப.ப விலை மாறுபட்டுச் சுட்டி பலவீன நிலையை எடுத்துக் காட்டியது, இது, (1992-சனவரி) 1250இலிருந்து (1992-திசெம்பர்) 826க்கு (34%) வீழ்ச்சி கண்டது. கொ.ப.ப அனைத்துப் பங்குச் சுட்டி (24%) வீழ்ச்சி கண்டது. இத்தகைய பின்னடைவு 1993 முதல் காலாண்டின் அதிக பகுதிக்கு நீடித்தது. சுட்டிகள் 1993 மார்ச்சு 31ஆம் தேதியளவில் மேலும் 5% வீழ்ச்சியைப் பதிந்திருந்தன.
4 m
 

சீபாங்க் யூனிட் ரஸ்ட் ஆண்டு அறிக்கையும் கணக்குகளும் 1993.
முகாமையாளரின் அறிக்கை
கொபப சுட்டி அசைவு
i
s
1992-93 காலப்பகுதியின்போது பங்குச்சந்தையில் காணப்பட்ட மந்த நிலைக்கு பின்வரும் காரணிகளை சார்த்தியுரைக்கலாம்.
(அ) முதலிட்டாளர்கள் இரண்டாந்தரச் சந்தையிலிருந்து ஆரம்பச் சந்தைக்கு மாறியமை.
(ஆ) இரண்டாந்தரச் சந்தையில் வெளிநாட்டு முதலிடுகள் குறிப்பிடத்தக்களவு
குறைந்திருந்தமை.
(இ) திறைசேரி உண்டியல்களும், ஏனைய பணச்சந்தைச் சாதனங்களும் மீதான
உயர் வரவுகள் காரணமாகப் பங்குத்தொகுதிச் சந்தையிலிருந்து பணச்
சந்தைக்கு நிதிகள் இடம்மாறியமை.
(fF) முன்னணித் தொகுதிக் கம்பெனிகளின் கூட்டிணைப்புச் சம்பாத்தியங்கள்
முதலிட்டாளரின் எதிர்பார்ப்புக்களைச் சமாளிக்கப் போதியனவாக இல்லாமை.
மாகாண சபைத் தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றிபெற்றதைத் தொடர்ந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெருமளவில் சந்தையில் மீள நுழைந்தமை காரணமாகவும் ஊக வாணிகஞ் செய்வோர் மீள உருவாகியமை காரணமாகவும் 1993 யூன் மாத முதல் வார ஆரம்பத்தில் சந்தை வளர்ச்சி காண ஆரம்பித்தது. இவ்வாறு மாற்றம் கண்ட பெறுபேறுகள் கொழும்பு பங்குத்தொகுதிச் சந்தை விலை வேறுபாட்டுச் சுட்டியில் நன்கு பிரதிபலிக்கப்பட்டன. இச்சுட்டி 1993 யூன் இறுதியளவில் 7 சத வீதத்தினால் அதிகரித்தது. அனைத்துப் பங்குச்சுட்டியும் 7 சதவீத்தினால் அதிகரித்தது. சந்தைச் சுட்டிகளில் ஏற்பட்ட இந்த எழுச்சிக்குப் பொதுவாக வங்கித்தொழில் துறையும், குறிப்பாக தே.அ.(N.D.B.)வங்கியும் இ.அ.நி.(DFCC) கூட்டுத்தாபனமும் காரணிகளாக அமைந்தன. இந்த எழுச்சி நிலையாதாரமான விலையுயர்வுக்கு இட்டுச் செல்லாவிடினும், அது 199293 காலப்பகுதியின்போது நிலவிய அளவிலும் பார்க்க உயர்ந்த அளவில் சந்தை ஒன்றுதிரட்டலுக்கு இட்டுச் செல்லக் கூடியதாக இருக்கும்.
LSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSS 0

Page 5
சீபாங்க் யூனிட் ரஸ்ட் ஆண்டு அறிக்கையும் கணக்குகளும் 1993.
முகாமையாளரின் அறிக்கை
கொழும்பு பங்குத்தொகுதிப் பரிவர்த்தனை-யூன் 1993
85.00 800.00 __۔- === کس سے 7sco கை அனைத்துப்பங்கு 7000 L கலைவேறுபாடு
600.00 ーイエ 5500
s 踪
, 驾
நிதிய விற்பனைகளும், முதலீட்டாளர் சேவைகளும்
வங்கிவைப்புக்களிலும், திறைசேரி உண்டியல்களிலும் உயர் வட்டி வீதங்கள் நிலவியபோதும், ஊக்கங்கெடுப்பதான பங்குத்தொகுதிச் சந்தை செயல்நிறைவேற்றுமை காணப்பட்டபோதிலும், நிதியமானது முதலிடுசெய்யும் பொதுமக்களிடையே அமோக ஆதரவைப் பெறுவதாக இருந்தது. நிர்ணயிக்கப்பட்ட கொடை முனைவுக் காலப்பகுதியின்போது இடம்பெற்ற 50 மில்லியன் ரூபா விற்பனைகளுடன் ஒப்பிடும்போது, நிர்ணயிக்கப்பட்ட கொடைமுனைவுக் காலப் பகுதி முடிவடைந்ததிலிருந்து (அதாவது 1992 மே 1 முதல் 1993 மார்ச்சு 31 வரையில்) இடம்பெற்ற 40 மில்லியன் ரூபா கூறு விற்பனைகள் கணிசமானவையாகக் காணப்பட்டன. இது நிறுவன முதலீட்டாளர்களும், சில்லறை முதலிட்டாளர்களும் சிபேங்க் கூறு நம்பிக்கைப் பொறுப்பில் வைத்திருக்கும் நம்பிக்கையை எண்பிப்பதாக உள்ளது. ஆய்வுக்குட்பட்ட காலப்பகுதியின்போது (அதாவது 1992 மார்ச்சு 25 முதல் 1993 மார்ச்சு 31 வரையில்) இடம்பெற்ற 902 மில்லியன் ரூபா மொத்த கூறு விற்பனைகளே நாட்டில் ஏதேனும் தனியொரு கூறு நம்பிக்கைப் பொறுப்பினால் திரட்டப்பட்ட உச்சச் சேகரிப்பு எனக் கூறலாம். கூறு நம்பிக்கை பொறுப்புத் தொழிற்றுறையில் நான்காவதாகக் கடைசியாக நுழைந்த சீபேங்க் யூனிற் டிரஸ்ட் குறுகியவொரு காலப்பகுதியில் படைத்த இச்சாதனை பெரு வரேவற்புக்குகுரியதாகும்.
நாடு முழுவதிலும் எமது விற்பனைகளின் புழக்கத்தை அதிகரித்து, எமது கூறு வைத்திருப்போருக்கான சேவைகளை முன்னேற்றும் முயற்சியில், மென்மேலும் முகவர்களை நியமிப்பதன்மூலமும், கூறு நம்பிக்கைப் பொறுப்பு முதலீடு ஒரு நீண்டகால முதலிடு ஆகும் என்னும் கருத்தை ஒவ்வொருவரும் உணரச் செய்வதற்கென இம்முகவர்களுக்கு கிரமமான கருத்தரங்குகளை நடாத்துவதன் மூலமும் எமது சந்தைப்படுத்தல் முகவராண்மைப் பிரிவை விரிவுபடுத்தி வலுப்படுத்தியுள்ளோம்.
 

சீபாங்க் யூனிட் ரஸ்ட் ஆண்டு அறிக்கையும் கணக்குகளும் 1993.
முகாமையாளரின் அறிக்கை
நிதியத்தின் முகாமையும் நிதியத்தின் செயல்நிறைவேற்றமும்
நிதியத்தின் முகாமை
நிதியத்தின் முகாமையானது ஒரு சிக்கல் வாய்ந்த முதலீட்டு முகாமைச் செயற்பாட்டு நடைமுறையாகும். இந்நடைமுறை பொருத்தமான முதலிட்டுக் கொள்கையொன்றின் மூலமாகவும் ஆராய்ச்சி கருதிய முதலிட்டு அணுகுமுறையொன்றைப் பின்பற்றியும் நிதியத்தின் குறிக்கோள்களை எய்தப்பெற முயற்சி செய்கின்றது. வருமான வளர்ச்சி நிதியம் ஒன்று என்ற வகையில், சீபேங்க் கூறு நம்பிக்கைப் பொறுப்பின் முதலீட்டுக் கொள்கைகள் கணிசமான வருமானம் பிறப்பாக்கத்தையும் நடுத்தர காலம் முதல் நீண்டகாலம் வரையில் என்ற அடிப்படையில் நியாயமான உண்மையான மூலதன வளர்ச்சியையும் பெற்றுக்கொள்ளும் வண்ணம் வகுத்தமைக்கப்பட்டுள்ளன. வருமான வளர்ச்சி நிதியங்களுக்கு “பொருத்தமான" சொத்துப் பகிர்வுப் பற்றி வெவ்வேறு கோட்பாடுகள் நிலவியபோதிலும் சிபேங்க் கூறு நம்பிக்கைப் பொறுப்பின் முகாமையாளர்கள் என்ற வகையில் நாம், பொருளாதாரச் சூழலையும் நடைமுறையிலுள்ள வட்டவீத அமைப்பையும் தொடர்பு படுத்தி பங்குத் தொகுதிச் சந்தை செயல்நிறைவேற்றத்தை மீளாய்வுசெய்து, நிலையான வருமானப் பிணையங்களில் 60:40-60%மும் ஒப்புரவுகளில் 40%மும் என்ற சொத்துப் பகிர்வு விகிதாசாரத்தின்மீது தொழிற்படுவது பொருத்தமானது எனக் கருதினோம். இந்த விகிதாசாரம் திருமறை காட்டிய வழியாக கொள்ளப்பட்ட ஒன்றல்ல. பொதுவான பொருளாதார சூழலிலும், பண மற்றும் மூலதனச் சந்தைகளிலும் உருவாகிவரும் போக்குகளைப் பொறுத்து எமது முதலிட்டுக் கொள்கை முனைப்போடு செயலாற்ற வழிவகுக்கிறது.
திறைசேரி உண்டியல்கள், வங்கிவைப்புக்கள் மற்றும் மீள்கொடுப்பனவு உடன்படிக்கைகள் போன்ற பணச்சந்தைச் சாதனங்களில் நாளுக்குநாள் எடுக்கப்படும் முதலிட்டுத் தீர்மானங்கள், பொதுவில் வட்டிவீதங்களையும், வெவ்வேறு முதிர்வுக்காலங்களான, கடந்தகால, தற்போதைய திறைசேரி உண்டியல் வரவுகளையும் கருத்திற்கொண்டு நாம் எடுக்கும் தீர்மானங்களேயாகும். கம்பெனிகளின் ஸ்திரத்தன்மையும், சம்பாத்திய மற்றும் வளர்ச்சி சாத்தியக்கூறுகளையும், விலை ஏற்ற இறக்கங்களையும், சந்தை அபிப்பிராயங்களையும் அடிப்படையாகக் கொண்டே ஒப்புரவு முதலீட்டுப் பட்டியலுக்கான பங்குத்தொகுதி தேர்ந்தெடுக்கப்படுகின்றது. முதலிட்டுத் தீர்மானங்கள் அவசியமான அடிப்படைப் பகுப்பாய்வுகொண்டு ஆதாரப்படுத்தப்பட்டவையாகவே உள்ளன.
நிதியத்தின் செயல்நிறைவேற்றம்
பங்குத்தொகுதி மற்றும் பணச்சந்தைகளில் உள்ள போக்குகளையும், இப்போக்குகளை அறிந்துகொள்வதில் முகாமையாளருக்குள்ள நிபுணத்துவத்தையும் அனுபவத்தையும் பொறுத்தே ஒரு காலப்பகுதிக்கான கூறு நம்பிக்கைப் பொறுப்பின் செயல்நிறைவேற்றம் அமைகிறது. மேலும், ஏனைய கூறு நம்பிக்கைப் பொறுப்புக்களுக்கு எதிரெதிரான இக்கூறு நம்பிக்கைப் பொறுப்பின் செயல் நிறைவேற்றமும், நம்பிக்கைப் பொறுப்பினால்
mmmmmmm 7

Page 6
சீபாங்க் யூனிட் ரஸ்ட் ஆண்டு அறிக்கையும் கணக்குகளும் 1993
முகாமையாளரின் அறிக்கை
மேற்கொள்ளப்படும் சொத்துப் பகிர்வுக் கொள்கைகளைப் பொறுத்தே அமைகின்றது.
1993 மார்ச்சு 31 அன்று முடிவடைந்த காலப்பகுதியின்போது நிதியத்தின் ஒரு கூறுக்கான தேறிய சொத்துப் பெறுமதி, அனைத்துப் பங்குச் சுட்டியினால் பிரதிபலிக்கப்பட்டவாறு பங்குச்சந்தையில் உள்ள 27% வீழ்ச்சிக்கு எதிராக 4.1% வளர்ச்சி கண்டுள்ளது. நம்பிக்கைப் பொறுப்பு முதலிட்டுப் பட்டியல் உயர்வான செயல்நிறைவேற்றம் காணுவதற்கு அதன் அறிவுதுட்பஞ் சார்ந்த சொத்தப் பகிர்வுக் கொள்கைகளும், தரமான பங்குத்தொகுதிகளைத் தேர்ந்தெடுத்தலுமே அடிப்படைக் காரணம் எனக் கூறலாம். கூறு நம்பிக்கைப்பொறுப்பு விலைகளை, மாற்று சேமிப்புச் சாதனங்கள் மீதான குறுகியகால வட்டி வீதங்களுடன் ஒப்பிடுவது பயனற்ற செயலாகும். காரணம் கூறு நம்பிக்கைப் பொறுப்பில் உள்ள முதலிடுகள் நடுத்தரகாலம் முதல் நீண்டகாலம் வரையிலான ஒரு முதலிடாகும். எனவே, குறுகிய காலத்திற்கான வரவை ஒப்பிட்டுப் பார்ப்பது தொழிற்றுறையின் நயநலம்பற்றி பிழைவழியுய்க்கும் கருத்துக்களைத் தோற்றுவிப்பதாகவே அமையக்கூடும். கூறு நம்பிக்கைப்பொறுப்பினது நிதிகளின் அளவு, முதலிட்டுக் கொள்கைகள் என்பன போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு, பணச்சந்தையிலும், மூலதன மற்றும் பங்குத்தொகுதிச் சந்தையிலும் உருவாகி வரும் வாய்ப்புக்களில் ஆதாயம் பெறமுடியுமா எனப் பார்ப்பதே மிகப் பொருத்தமானதாகும்.
கொ.ப.ப. சுட்டிக்கு எதிராக சீபேங்க் கூறு நம்பிக்கைப் பொறுப்பு விலை அசைவு
115.00
105.00
95.00 = ن = م
8500
அலைகத்துக்கு
75.00
- விலைவேறுபாடு
ஆகுசெலவு 6500
5500
零
i
i
முதலீட்டுப் பட்டியல் பற்றிய மீளாய்வு
1993 மார்ச்சு 31 அன்று இறுதியில் உள்ளவாறு, நிதியம், 271 மில்லியன் ரூபாவை திறைசேரி உண்டியல்களிலும், 21 மில்லியன் ரூபாவைத் தொகுதிக்கடன் பத்திரங்களிலும், 28O மில்லியன் ரூபாவை ஒப்புரவுச் சாதனங்களிலும் முதலிடு செய்திருந்தது. மீதிப்பணம், நம்பிக்கைப்பொறுப்பினால் மேற்கொள்ளப்படும் முதலீட்டுக் கொள்கைக்கு
0 LLLSSSSSSLSSSSSSLS
 
 
 
 
 
 
 

சீபாங்க் யூனிட் ரஸ்ட் ஆண்டு அறிக்கையும் கணக்குகளும் 1993.
முகாமையாளரின் அறிக்கை
இணங்க நிலையான வருமானத்திலும், ஒப்புரவுப் பிணையங்களிலும் முதலிடு செய்யப்படுவதற்குக் காத்திருப்பனவாக வங்கி வைப்புக்களிலும் / மீள் கொள்வனவு உடன்படிக்கைகளிலும் வைப்பிலிடப்பட்டிருந்தது. "நிதிகளை முழுமையாக முதலிடு செய்யப்பெறுவது" என்பது கூடியளவு நேரம் செலவிடப்படவேண்டிய ஒரு தொழிற்பாடாகும். மேலும் 1992/93ஆம் ஆண்டு முழுவதும் நிலவிவரும் பங்குத் தொகுதி மற்றும் பணச்சந்தைச் சூழலில் முதலிடுசெய்யும் நடைமுறைக்கு உன்னிப்பான கவனம் தேவைப்படும். மேலும், மூலதனச் சந்தை சாதனங்களுக்கான அபிவிருத்தி குன்றிய இரண்டாந்தர அணுகுவழியும், கூறு நம்பிக்கைப்பொறுப்புக் கோவையினாலும் நம்பிக்கைப்பொறுப்பு உறுதியினாலும் விதிக்கப்படும் மட்டுப்பாடுகளும் இந்நடைமுறையை மேலும் கடினமாக்குகின்றன.
சொத்துப் பகிர்வு மார்ச்சு 93 சொத்துப்பகிர்வு யூன் 93
34°uxçoxGuild 13%
தி. உண்டியல் 57%
sauju. 287X
ஒப்புரவு 33%
ஒப்புரவு 27% (ouxaučil 8X
பாரிய பணச்சந்தை முதலிடான திறைசேரி உண்டியல்களில் உள்ள நிதியத்தின் முதலிடு, வரவுப் பெறுபேறுகளுக்கு இணங்க 3, 6, 12 மாத முதிர்வுக் காலங்களுக்கு நீடிக்கப்பட்டதாக இருப்பதுடன், நீண்டகாலத்திற்கான வட்டிவீதங்களின் அடிப்படையிலான எமது திட்ட ஏற்பாடுகளை ஆதாரமாகவும் கொண்டுள்ளன. 1993 மார்ச்சு இறுதியளவில், திறைசேரி உண்டியல் முதலீட்டுப் பட்டியலின் 54% 12 மாத உண்டியல்களிலும், 44% 3 மாத உண்டியல்களிலும் கணக்குக் காட்டப்பட்டிருந்தன.
திறைசேரி உண்டியல் முதலீட்டுப்பட்டியல் மீதான வரவு
20.50%
-
3 மாதம்
20.00%
19.50%
19.00%
18.50%
18.00%
1750%
17.00% +
16.50% t l
9

Page 7
சீபாங்க் யூனிட் ரஸ்ட் ஆண்டு அறிக்கையும் கணக்குகளும் 1993.
முகாமையாளரின் அறிக்கை
எவ்வாறாயினும், 1993 ஏப்பிரல் மாதத்திற்கும், 1993 யூன் மாதத்திற்கும் இடையில் 6 மாத திறைசேரி உண்டியல் வரவுகளில் முன்னேற்றம் காணப்பட்டு, முதலிட்டுப் பட்டியலில் விளிம்பு மாற்றம் ஒன்று எற்பட்டது. ஆய்வுக்குட்பட்ட காலப்பகுதியின்போது தொகுதிக்கடன் பத்திரங்கள் போன்ற ஏனைய நிலையான வருமானப் பிணையங்கள் இல்லாதிருந்த காரணத்தினால் அத்தகைய சாதனங்களில் இந்நிதிகளின் முதலிடு வரையறுக்கப்பட்ட சிறிய நூற்றுவீதமாகவே இருந்தது.
ஒப்புரவிலான இந்நிதியத்தின் முதலிடுடு 11 துறைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 52 கம்பெனிகளில் செய்யப்பட்டிருந்தது. நிதியத்தின் ஒப்புரவு மூலதனப் பட்டியலில் வங்கித்தொழில், காப்புறுதி, நிதி என்பன பெரிய துறைகளாகவும், அவற்றைத் தொடர்ந்து உற்பத்தித்துறை, பாதஅணி, ஹோட்டல்துறை என்பனவும் இடம்பெற்றன. நிதியத்தின் ஒப்புரவு முதலீட்டுப் பட்டியலின் துறைசார் செயல்நிறைவேற்றமானது.1993.6.30 அன்று, சந்தைச் செயல்நிறைவேற்றத்தைவிட சிறிது உயர்வானதாகவே இருந்தது. இதற்குக் காரணம் ஒவ்வொரு பங்குத்தொகுதியினதும் பெருமதிப்பு, தேர்ந்தெடுக்கப்பட்ட பங்குத்தொகுதிகளின் தரம் ஆகிய இரண்டினதும் கூட்டத்தாக்கமே ஆகும்.
ஒப்புரவு முதலீட்டுப்பட்டியலின் துறைகள் செய்நிறைவேற்றம்-1993 யூன் 30 அன்றுள்ளவாறு
வர்த்தகம்
பண்டகசாலை
சேவைகள்
எண்ணெய்
(3Dunfessi
உற்பத்தித்தொழில் ஆதனம்
முதலிட்டு
ஹோட்டல்கள்
பாதஅணி
நிருமானம் இரசாயனப்பொருள்
உணவு
வங்கித்தொழில்
1993/94ஆம் ஆண்டுக்கான எதிர்கால வாய்ப்பு வளம்
புதிய அரசாங்கம், சந்தை நாட்டம் கொண்ட பொருளாதாரக் கொள்கைகளை தொடருவதற்கான அதன் நோக்கத்தை மீள வலியுறுத்தியமையானது ஒருவித ஸ்திரத்தன்மை எற்படவும், புதிய அபிவிருத்தி யுகம் காணவும் வழிவகுப்பதாக இருக்கும்.
0 SLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLS
 
 

சீபாங்க் யூனிட் ரஸ்ட் ஆண்டு அறிக்கையும் கணக்குகளும் 1993.
முகாமையாளரின் அறிக்கை
அபிவிருத்தியடைந்த நாடுகளில் தொடரும் பின்னடைவு இலங்கையின் ஏற்றுமதித் துறைக்குப் பாதகமாக இருக்கும் அதே வேளையில், ஆண்டின்போது கமத்தொழில் விளைச்சலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமும், தேசிய விளைவளவுக்குத் தனியார் துறையினரின் பங்களிப்பும், நாடு 1993ஆம் ஆண்டுக்கு 6% திட்டமிட்ட பொரளாதார வளர்ச்சிபெறுவதற்கு இட்டுச்செல்லும் சாத்தியம் காணப்படுகின்றது. இது ஆண்டின் முதல் அரையாண்டில் மந்த நிலையில் இருந்த மூலதனச் சந்தைக்கு ஊக்கமளிப்பதாக அமையும். கடந்தசில வாரங்களில் சுட்டிகளில் உயர்வீதங்களைக் காட்டிய ஒப்புரவுக்கான இரண்டாந்தரச் சந்தை 1992ஆம் ஆண்டில் நிலவியதிலும் பார்க்க உயர்ந்த மட்டத்தில் ஒன்றுதிரட்டப்படும் சாத்தியம் காணப்படடுகின்றது.
பணிப்பாளர் சபையில் மாற்றங்கள்
ஆய்வுக்குட்ட ஆண்டின்போது தேசபந்து கரு ஜயசூரிய ஜெர்மனிக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டதன்மேல், சபையின் தவிசாளர் பதவியிலிருந்து விலகினார். வார்ட்லி இன்வெஸ்ட்மென்ட் சர்வீசஸ் லிமிட்டட்டினால் பெயர்குறித்த நியமிக்கப்பட்ட ஒரு பணிப்பாளரான திரு. நைஜல் டுல்லொக் 1992 ஆவணி 17 முதல் பதவி விலகினார். திரு. ஜி.பி. மில்லர் திரு. டுல்லொக்கின் இடத்தில் பெயர்குறித்து நியமிக்கப்பட்டடார். அவர்களது திறமையான வழிகாட்டலுக்கும், நெறிப்படுத்தலுக்கும், சபை, தனது மனப்பூர்வமான பாராட்டுதல்களையும் கனிவான நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது. சபையிலுள்ள எனது சகாக்கள் அனைவரும், முதலீட்டு ஆலோசனைக் குழாத்தின் உறுப்பினர்களும் காட்டிய நெறிப்படுத்தலுக்கும், வழிகாட்டலுக்குமாக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இறுதியாக, சீபேங்க் யூனிற் டிரஸ்டுக்கு ஒத்துழைப்பும், உதவியும் வழங்கிய சந்தைப்படுத்தல் முகவர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன், அனைத்து மட்டங்களிலும் உள்ள கம்பெனியின் ஊழியர்கள் ஆற்றிய சேவைகளுக்கு முகாமைத்துவத்தின் மனப்பூர்வமான பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒப்பம்:
lo ബ്ര 6)4ని బుగ్రDకి రెకా ፅ
மனோ செல்வநாதன் பிரதித் தவிசாளர் யூனிற் ரஸ்ட் மே ன்ற் கம்பெனி (பிரைவேட்) லிமிட்டட் (நம்பிக்கைப்பொறுப்பின் முகாமையாளர்கள்)
1993 யூலை 30ஆம் தேதி.

Page 8
சீபாங்க் யூனிட் ரஸ்ட் ஆண்டு அறிக்கையும் கணக்குகளும் 1993.
சீபேங்க் கூறு நம்பிக்கைப்பொறுப்பில் கூறு வைத்திருப்போருக்கு கணக்காய்வாளரின் அறிக்கை
l. நம்பிக்கைப்பொறுப்பு உறுதியின்கீழ் தமது பொறுப்புக்களை நிறைவேற்றுவதில், கூறு நம்பிக்கைப்பொறுப்பு முகாமையாளர்களான யூனிற் டிரஸ்ட் மனேஜ்மென்ற் கம்பெனி (பிரைவேட்) லிமிட்டட்டினால் தயாரிக்கப்பட்டதும், 13 முதல் 23 வரையிலான பக்கங்களில் தரப்பட்டுள்ளவையுமான சிபேங்க் கூறு நம்பிக்கைப் பொறுப்பின் நிதிசார் கூற்றுக்களை நாம் கணக்காய்வு செய்தோம்.
2. எமது கணக்காய்வு, இலங்கையின் கணக்காய்வு நியமங்களுக்கு இணங்க
நிறைவேற்றப்பட்டது. எமது அறிவுக்கும், நம்பிக்கைக்கும் எட்டியவரையில், எமது கணக்காய்வு நோக்கங்களுக்கு அவசியமான அனைத்து தகவலையும், விளக்கங்களையும் நாம் பெற்றுக்கொண்டோம்.
3. எமது அபிப்பிராயப்படி, முறையான கணக்கு ஏடுகள் முகாமையாளரினால்
பேணப்பட்டுள்ளன. அவற்றிற்கு இணங்கவுள்ள நிதிசார் கூற்றுக்கள் 1982ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க, கம்பெனிகள் சட்டத்தினாலும், கூறு நம்பிக்கைக் பொறுப்பு உறுதியினாலும், இலங்கைப் பிணையங்கள், பரிவர்த்தனை ஆணைக்குழுவின் கூறு நம்பிக்கைப்பொறுப்புக் கோவையினாலும் தேவைப்படுத்தப்பட்ட தகவலை, அவை தேவைப்படுத்தும் அதேமுறையில் தருகின்றன. மேலும், நிதிசார் கூற்றுக்கள் 1993 மார்ச்சு 31 அன்றுள்ளவாறு நிதியத்தின் நிதிசார் நிலைமையின் உண்மையானதும், நியாயமானதுமான நோக்கீடு ஒன்றையும், 1992 மார்ச்சு 25 முதல் 1993 மார்ச்சு 31 வரையிலான காலப்பகுதிக்கு அதன் தொழிற்பாடுகளையும், நிதிகளின் மூலத்தையும் பிரயோகத்தையும் தருகின்றது. நிதிசார் கூற்றுக்கள் பொதுவில் எற்றுக்கொள்ள்ப்பட்ட கணக்கீட்டு நெறிகளுக்கு இணங்கத் தயரிக்கப்பட்டுளளன.
ஒப்பம்
கூப்பர்ஸ் அன்ட் லைப்ரன்ட், சச்சிதானந்தா, பசுபதி அன்ட் கம்பெனி. வரைவுபெற்ற கணக்காளர்கள்.
கொழும்பு. 1993 யூலை 30
12

சீபாங்க் யூனிட் ரஸ்ட் ஆண்டு அறிக்கையும் கணக்குகளும் 1993.
தொழிற்பாடுகள் பற்றிய கூற்று=
1992 zorňákov 25 (2Agaiý 1993 zorňážar 37 வரையிலான காலப்பகுதிக்கானது
குறிப்பு ரூ. 000ல்
மொத்த வருமானம் 78,586 செலவுகள் 4 (፲7,134)
தேறிய வருமானம் 6,452 முதலிடுகளின் விற்பனைமீது தேறிப் பெறப்பட்ட தேறிய நட்டம் (902)
வரிவிதிப்புக்கு முன்னர் தேறிய வருமானம் 60,550
வரிவிதிப்பு 6 இல்லை வரிவிதிப்புக்குப் பின்னர் தேறிய வருமானம் 60.5SO
சமப்படுத்தல் உருவாக்கப்பட்ட கூறுகள்மீது பெறப்பட்டது 16,671 மீட்டெடுக்கப்பட்ட கூறுகள்மீது கழிக்கப்பட்டது (34)
16,637
77,187 மொத்த வருமானம்
இறுதிப் பகிர்ந்தளிப்பு 7 (71,200)
ஆண்டுக்கு வைத்திருக்கப்படும் வருமானம் 5,987
முற்கொணரப்பட்ட பகிர்ந்தளிக்கப்படாத வருமானம் இல்லை முற்கொண்டுசெல்லப்பட்ட பகிர்ந்தளிக்கப்படாத வருமானம் 5,987
17 முதல் 24 வரையிலான பக்கங்களில் உள்ள குறிப்புக்கள் இக்கணக்குகளின் பகுதியாக அமைகின்றன.
கணக்காய்வாளர் அறிக்கை - பக்கம் 12
mmmmmm 13

Page 9
சீபாங்க் யூனிட் ரஸ்ட் ஆண்டு அறிக்கையும் கணக்குகளும் 1993.
தொழிற்பாடுகள் பற்றிய கூற்று
1993 மார்ச்சு 37 அன்றுள்ளவாறு குறிப்பு ரூ.000ல்
சந்தைப்பெறுமதியில்/ஆகுசெலவில் முதலிடுகள் 8 633,07
கடனாளிகள் உருவாக்கலுக்குப் பெறத்தக்க தொகை 42 செலுத்தித் தீர்த்தலுக்குக் காத்திருக்கும் விற்பனைகள் 6,511 திரண்டவருமானம் 9 17,623
ஏனையவை
காசு, வங்கி மீதிகள் O 24,647
266,924
கடன்கொடுநர்கள்-ஓராண்டுக்குள்
போமதியாக வரும் தொகைகள் ஒழித்துக்கட்டலுக்குச் செலுத்தப்படற்
பாலதான தொகை இல்லை செலுத்தித்தீர்த்தலுக்குக் காத்திருக்கும் கொள்வனவுகள் (2,346) திரண்ட செலவுகள் (6,271) செலுத்தப்படற்பாலதான பகிர்ந்தளிப்பு (71,200) செலுத்தப்படற்பாலதான மொத்த விற்பனை வரவுவரி (600)
தேறிய நடப்புச் சொத்துக்கள் 176,507
தேறிய சொத்துக்கள் SO9,614
மூலதனக் கணக்கு 2 8O3,758 முற்கொண்டுசெல்லப்பட்ட பகிர்ந்தளிக்கப்படாத வருமானம் 5,987
809,745 ஒத்திவைக்கப்பட்ட அரசிறைச் செலவினம் (131)
809,614
இக்கணக்குகள் 1993 யூலை 30ஆம் தேதியன்று பணிப்பாளர்களினால் அங்கீகரிக்கப்பட்டது.
யூனட் ரஸ்ட் மனேஜ்மன்ட் கம்பெனி (பிரைவேட்)
விமிட்டட்டின் பணிப்பாளர்கள் (நம்பிக்கைப் பொறுப்பின் முகாமையாளர்கள்)
17 முதல் 24 வரையிலான பக்கங்களில் உள்ள குறிப்புக்கள் இக்கணக்குகளின்
பகுதியாக அமைகின்றன.
கணக்காய்வாளர் அறிக்கை - பக்கம் 12
00 LSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLS

சீபாங்க் யூனிட் ரஸ்ட்
ஆண்டு அறிக்கையும் கணக்குகளும் 1993.
நிதிநிலைமையில் எற்பட்ட மாற்றங்கள் பற்றிய
1992 zo/vijat 25 (upsaj 1993 avia 37
வரையிலான காலப்பகுதிக்கு
நிதிகளின் மூலம் ஆண்டுக்கான வருமானம்
நிதிகளின் அசைவை உட்படுத்தாத விடயப்
பொருட்களுக்குச் சீராக்கல் பதிவழிக்கப்பட்ட ஒத்திவைக்கப்பட்ட
அரசிறைச் செலவினம்
முதலிடுகளின் விற்பனை மீதான நட்டம்
தொழிற்பாடுகளிலிருந்து நிதிகள் ஏனைய மூலகங்களிலிருந்து நிதிகள் கூறுகளை உருவாக்குவதன்மீது பெறப்பட்ட
விற்கப்பட்ட முதலிடுகள்மீதான விற்றுவரவுகள்
மொத்த மூலகங்கள்
நிதிகளின் பிரயோகம் கூறுகளை இல்லாதாக்குவதன்மீது செலுத்தப்பட்ட
முதலிடுகளின் கொள்வனவு ஒத்திவைக்கப்பட்ட அரசிறைச் செலவினம்
தேறிய நடப்புச் சொத்துக்களில் அதிகரிப்பு தேறிய நடப்புச் சொத்துக்களில் அதிகரிப்பு பின்வருமாறு ஆக்கப்பட்டுள்ளது: கடனாளிகளில் அதிகரிப்பு பகிர்ந்தளிப்பு நீங்கலாக கடன்கொடுநர் களில் அதிகரிப்பு தேறிய திரவ நிதிகளில் அசைவு வங்கி, காசு மீதிகள்
கணக்காய்வாளர் அறிக்கை - பக்கம் 12
ரூ.000ல்
546,949
7.256.229
1,452
7,931,997
6O
25,277
(19,217)
din DD) -
ബ്ര,000ഭ
77,187
902
78,118
8,O3,178
8,18,296
(7,933,589)
247,707
6,060
24,647
247,707
SSSSLSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS 00

Page 10
சீபாங்க் யூனிட் ரஸ்ட் ஆண்டு அறிக்கையும் கணக்குகளும் 1993.
தேறிய சொத்துக்களில் உள்ள மாற்றங்கள் பற்றியகூற்று
1992 மார்ச்சு 25 மதல் 1993 மார்ச்சு 37 வரையிலான காலப்பகுதிக்கு
gOOOdು
தேறிய வருமானம் 61,452
முதலிடுகளின் விற்பனைமீது பெறப்பட்ட தேறிய நட்டம் (902)
தேறிய சமப்படுத்தல் 16,637
77,187
பகிர்ந்தளிப்பு (71.200) தொழிற்பாடுகளின் விளைவான தேறிய சொத்துக்களில் அதிகரிப்பு 5,987
கூறுகளின் விற்பனையும் மீள் கொள்வனவும் காரணமாக தேறிய சொத்துக்களில் அதிகரிப்பு / (குறைவு) கூறுகளை உருவாக்குவதன்மீது பெறப்பட்ட காசு 846,949 கூறுகள் இல்லாதாக்கப்பட்டதன்மீது கொடுக்கப்பட்ட காசு (1,452)
845,497 காலப்பகுதிக்கு தேறிப்பெறப்படாத தேய்மானம் (41,739) முற்கொண்டுசெல்லப்பட்ட ஒத்திவைக்கப்பட்ட அரசிறைச் செலவினம் (131)
தேறிய சொத்துக்களில் அதிகரிப்பு 809,614 தேறிய சொத்துக்கள் காலப்பகுதி ஆரம்பத்தில் இல்லை
காலப்பகுதி இறுதியில் 809,614
தேறிய சொத்துக்களில் அதிகரிப்பு 809,614
கணக்காய்வாளர் அறிக்கை - பக்கம் 12
16 m

சீபாங்க் யூனிட் ரஸ்ட் ஆண்டு அறிக்கையும் கணக்குகளும் 1993.
1993 மார்ச்சு 31 அன்றுள்ளவாறு
I.
கணக்கீட்டுக் கொள்கைகள்
(9)
(ஆ)
(g)
கணக்கீட்டு அடிப்படை
விலைகோரப்படும் முதலிடுகளின் பெறுமான மதிப்பீட்டில் தவிர வரலாற்று ரீதியான கணக்கீட்டு ஆகுசெலவு அடிப்படையிலேயே நிதிசார் கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. விலைகோரப்படும் முதலிடுகள் நிதிசார் கூற்றுக்களில் சந்தைப்பெறுமதியிலேயே கூறப்பட்டுள்ளன.
வருமானம்
ஒப்புரவுகள் மீதான பங்கிலாபங்களும், நிலையான வட்டிப் பங்குத் தொகுதிகள் மீதான வட்டியும், பிணையுமானது பங்கிலாபமின்றி கோரப்படும் போது, அங்கீகரிக்கப்பட்டுள்ளன. வட்டியும், பொதுமக்கள் வாங்காத நிறுவனப் பங்குத் தரகுப்பணமும், ஏனைய வருமானமும் திரளுகை அடிப்படையில் கணக்குக் காட்டப்பட்டுள்ளன.
பெறுமான மதிப்பீடு
விலைகோரப்படும் மதலிடுகள் இறுதிச்சந்தை வீதங்களில் மதிப்பிடப்பட்டன. சந்தை வீதங்கள் கிடைக்கத்தக்கனவாக இல்லாவிடின், விலைகோரப்படும் முதலிடுகள் நியாயமான பெறுமான மதிப்பீட்டின்படி எடுத்துக் கூறப்பட்டுள்ளன. வட்டியுடன்கூடிய முதலிடுகள் ஆகுசெலவில் பெறுமானம் மதிப்பிடப்பட்டுள்ளன. வட்டியுடன் கூடிய முதலிடுகளை மதிப்பிட உகந்தமுறை திரண்ட வட்டி எதனையும் கழித்து சந்தைப்பெறுமதிப்படி மதிப்பிடுவதே அகும். அத்தகைய திரண்ட வட்டி, வருமானம் தொடர்புபட்ட விடயப்பொருள் ஒன்றாக ஐந்தொகையில் உள்ளடக்கப்படும். எவ்வாறாயினும், அத்தகைய முதலிடுகளுக்கு இலங்கையில் உள்ள இரண்டாந்தரச் சந்தையானது சந்தைப் பெறுமதிகள் நிச்சயிக்கப்படக்கூடிய அளவுக்கு விருத்தியடைந்தில்லாத காரணத்தினால், வட்டியுடன் கூடிய முதலிடுகளை ஆகுசெலவில் மதிப்பிடும் முறையையே நம்பிக்கைப்பொறுப்பு தற்போது கைக்கொள்கிறது. திரண்ட வட்டியானது ஐந்தொகையில வருமானம் தொடர்புபட்ட விடயம் ஒன்றாக உள்ளடக்கப்பட்டுள்ளது.
கணக்காய்வாளர் அறிக்கை பக்கம் 12

Page 11
சீபாங்க் யூனிட் ரஸ்ட் ஆண்டு அறிக்கையும் கணக்குகளும் 1993.
(ஈ) வரிவிதிப்பு
அனுமதிக்கப்படற்பாலனவல்லாத விடயப்பொருட்களுக்கும் முன்னுணரத்தக்க எதிர்காலப்பகுதியில் உள்ளபடியான வரிவிதிப்புக்கு உள்ளவாகும் சாத்தியமற்ற அளவுக்கு முன்னேற்பட்டு வித்தியாசங்களுக்கும் சீராக்கங்கள் செய்யப்பட்டு, அந்த ஆண்டுக்கான பெறுபேறுகளின் அடிப்படையிலே வரிவிதிப்பு அமைகின்றது. கணக்குகளில் அவை அங்கீகரிக்கப்பட்டுள்ள கணக்கீட்டுக் காலப்பகுதியினின்றும் வேறுபட்டவொரு கணக்கீட்டுக் காலப் பகுதியில் குறித்த சில வருமான, செலவின விடயப்பொருட்களை வரிநோக்கங்களுக்காக அங்கீகரிப்பதனாலேயே முன்னேற்பாட்ட வேறுபாடுகள் எழுகின்றன. ஏதேனும் திரண்ட நட்டங்களின் வரிநன்மைகளினால் குறைக்கப்பட்டவாறான ஏனைய முன்னேற்பாடு வேறுபாடுகளின் வரித்தாக்கமானது ஒத்திவைக்கப்பட்ட வரிப்பொறுப்பு ஒன்றாகக் கருதப்படுகின்றது. (நிதிசார் கூற்றுக்களின் 6ஆம் குறிப்பில் விளங்கப்படுத்தப்பட்டவாறு, சீபேங்க் கூறு நம்பிக்கைப் பொறுப்பு 5 ஆண்டுக் காலப்பகுதிக்கு வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது).
(உ) பெறப்படற்பாலன
திரண்ட வருமானமும், கடனாளிகளும் தேறிப்பெறப்படற்பாலதான அவற்றின் பெறுமதிப்படி காட்டப்பட்டுள்ளன.
2. வழங்கலில் உள்ள கூறுக்கள்
1993 மார்ச்சு 31 அன்று 88,999,636.00 கூறுகள் வழங்கலில் உள்ளன. 1993 மார்ச்சு 31 அன்று கொடைமுனைவு விலை ஒரு கூறுக்கு ரூ. 10.48 சதமாகவும், ஏலங்கூறப்பட்ட விலை ஒரு கூறுக்கு ரூ. 9.87 சதமாகவும் இருந்தது.
அத்தேதியன்றுள்ளவாறு ஒரு கூறுக்கான தேறிய சொத்துப் பெறுமதி ரூ. 9.90 சதமாகும். ஒரு கூறுக்கான ஏலங்கூறப்பட்ட மற்றும் கொடைமுனைவு விலையும், ஒரு கூறுக்கான தேறிய சொத்துப் பெறுமதியும 1993 மார்ச்சு 31 அன்றுள்ளவாறு ஒரு கூறுக்கு 80 சதம் பகிர்ந்தளிப்பதற்கு சீராக்கம் செய்யப்படுமுன்னரே கணிக்கப்படுகின்றன. நம்பிக்கைப் பொறுப்பானது கூறுகளின் வழங்கலுக்கும் மீட்டெடுப்புக்கும் முன்னோக்கிய விலை குறித்தல்” நடைமுறையையே பின்பற்றுகிறது.
கணக்காய்வாளர் அறிக்கை - பக்கம் 12
000 SLLLSSSSSSSSSSSSSSLSSSSSSLSSS

சீபாங்க் யூனிட் ரஸ்ட் ஆண்டு அறிக்கையும் கணக்குகளும் 1993.
3. மொத்த வருமானம் ரூ. 000ல்
பங்கிலாபங்கள் 3,207 அழைப்பு வைப்புக்கள்மீதான வட்டி 7,829 தொகுதிக்கடன்கள் மீதான வட்டி 3,648 திறைசேரி உண்டியல்கள்மீதான கழிவு
வருமானம் - ஆரம்பம் 42,34五 - இரண்டாந்தரம் 4,272 மீள்கொள்வனவு உடன்படிக்கைகள்
மீதான வட்டி 7,176 பொதுமக்கள் வாங்காத நிறுவனப்
பங்குத் தரகுப்பணம் 3.
78,586
4. செலவுகள் св. ооосо
முகாமையாளர் கட்டணம் 7,677 நம்பிக்கைப்பொறுப்பாளர் கட்டணம் 1,28O ஒப்புரவுப் பங்குகளின் விற்பனைமீதான செலவுகளுக்கு ஏற்பாடு 3,479
வட்டி வருமானம், ஒப்புரவுப் பங்குகளின் விற்பனை ஆகியவற்றின்மீதான மொத்த விற்பனை
வரவு வரி 4,422
மத்திய வைப்பகத் தொகதிக்
கட்டணம் பதிவழிக்கப்பட்ட ஒத்திவைக்கப்பட்ட அரசிறைச்
செலவினம் 29 ஏனைய செலவுகள் 36 வங்கிக் கட்டணங்கள் 5
17.34
ஏனைய செலவுகள் பிரதானமாக அச்சிடல், எழுதுகருவிச் செலவுகளையும் திறைசேரி உண்டியல் செலவுகளையும் உள்ளடக்குகின்றன (e)..124,190)
கணக்காளர் அறிக்கை - பக்கம் 12

Page 12
சீபாங்க் யூனிட் ரஸ்ட் ஆண்டு அறிக்கையும் கணக்குகளும் 1993.
5. முதலீடுகளின் விற்பனை மீது தேறிப்பெறப்பட்ட
தேறிய நட்டம்
ஒப்புரவுப் பங்குகளின் விற்பனைமீது பெறப்பட்ட விற்றுவரவுகள 49,257 ஒப்புரவுப் பங்குகள்விற்பனையின் சராசரிஆகுசெலவு (50,159)
(902)
6. வரிவிதிப்பு
நம்பிக்கைப்பொறுப்பின் இலாபங்கள், அது தொழில்
தொடங்கியதிலிருந்து 5 ஆண்டுக் காலப்பகுதிக்கு, 1979ஆம் ஆண்டின் 28ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் 22ஈஈஈஈ என்னும் பிரிவின் கீழ் வருமானவரியிலிருந்து விலக்களிக்கப் பட்டனவாக இருப்பதுடன், 1992 மார்ச்சு 27ஆம் தேதியன்று கசெற்றில் Gau6fluiult it ul- அறிவித்தல்மூலம் இந்நம்பிக்கைப்பொறுப்பு நிதியமைச்சரினால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகவும் இருக்கின்றது.
1979ஆம் ஆண்டின் 28ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் 14 (அ) ஆம் பிரிவின்கீழ் பங்குகளின் விற்பனையிலிருந்து எழும் மூலதன ஈட்டங்கள் மீதான வருமான வரியிலிருந்தும் நம்பிக்கைப் பொறுப்பு விலக்களிக்கப்பட்டதாக உள்ளது.
6. பகிர்ந்தளிப்பு
(அ) 1993 மார்ச்சு 31 அன்றுள்ளவாறு, வழங்கலில் உள்ள மொத்த எண்ணிக்கையான கூறுகளாகிய 88.999,636.80 கூறுகள்மீது ஒரு கூறுக்கு 80 சதத்திலான இறுதிப் பங்கிலாபத்தை நம்பிக்கைப்பொறுப்பு வெளிப்படுத்தியுள்ளது.
(ஆ) கூறு நம்பிக்கைப் பொறுப்புக்களின் கணக்கீட்டு நடைமுறைக்கு இணங்க, ஒப்புரவு முதலீட்டுப் பட்டியலின் பெறுமான மதிப்பீடுமீது எழுகின்ற 4.738,754.86 ரூபாவிலான தேறிப் பெறப்படாத தேறிய தேய்மானம், பகிர்ந்தளிப்புக்குக் கிடைக்கத்த தக்க வருமானத்தைப் பெறுவதில் "தொழிற்பாடுகள் பற்றிய கூற்றில்” கருத்திற்கெடுக்கப்படவில்லை.
(இ) 1992 மார்ச்சு 25ஆம் தேதியன்று கூறுகள் வழங்கத் தொடங்கியதிலிருந்து 7 நாட்களுக்கான வருமானத்தைப் பரதிபலிப்பதான ரூ. 208,740.27 சதத்திலான 1992 ஏப்பிரல் 1ஆம் தேதிக்கு முந்திய வருமானம் “தொழிற்பாடுகள் பற்றிய கூற்றில்” அடங்கியுள்ளது. ஆனால் சீபேங்க் கூறு நம்பிக்கைப்பொறுப்பு உறுதியின் 20ஆம் பந்திக்கு இணங்கப் பகிர்ந்தளிக்கப்படவில்லை.
கணக்காய்வாளர் அறிக்கை - பக்கம் 12
00 LSLSLSLSLSLSLSLSL

சீபாங்க் யூனிட் ரஸ்ட் ஆண்டு அறிக்கையும் கணக்குகளும் 1993.
8. முதலீட்டுப் பட்டியல்
ஒப்புரவு முதலீடுகள் வைத்திருப்பு சந்தைப் மொத்ததேறிய
பெறுமதி சொத்துக்களின்
விகிதம்
schlusssär Quwst g,000ൽ
வங்கிகள், நிதி, காப்புறுதி
இலங்கை வர்த்தக வங்கி லிமிட்டட் 144,637 27,915 3.45 கொமர்ஷல் லிசிங் கம்பெனி லிமிட்டட் 1,500 75 O.O. இலங்கை அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம் 4,772 8,351 1.03 ஹட்டன் நாஷனல் வங்கி லிமிட்டட் 57,215 22,028 2.72 லங்கா ஒரிக்ஸ் லிசிங் கம்பெனி லிமிட்டட் 8O,266 10,435 1.29 மேர்ச்சன்ட் பாங்க் ஒவ் பூரீலங்கா லிமிட்டட் 123,400 4,813 O.60 சம்பத் வங்கி லிமிட்டட் 235,790 5,423 O.67 சேலான் வங்கி லிமிட்டம் 255,7OO II, 187 1.38 யூனியன் அஷரன்ஸ் லிமிட்டட் 36,5OO 1,277 O.6
பானவகைகள், உணவு புகையிலை
சிலோன் டுபாக்கோ கம்பெனி லிமிட். 2O,OOO 520 O.O6 டிஸ்ரிலரிஸ் கம்பெனி லிமிட்டட் 546,3OO 6,009 0.74 லங்கா மில்க் பூட்ஸ் aouél." 175,6OO 3.951 O.49 நெஸ்லே (லங்கா) லிமிட்டட் OOOO 170 O.02 பயர் பெவரேஜஸ் கம்பெனி லிமிட்டட் 76,925 4,442 O.55 டபிள்யுஎம்மெண்டிஸ் அன்ட் கம்பெனி லிமிட்டட் 23,900 86O O. 11
இரசாயனப் பொருட்களும் மருந்தாக்கற்
பொருட்களும்
கெமெனெக்ஸ் லிமிட்டட் 2,922 517 0.06 கெமிக்கல் இன்டஸ்றிஸ்(கொழும்பு) லிமிட். 5,OOO 450 O.05 கெமிக்கல் இன்டஸ்றிஸ்(கொழும்பு) லிமிட்.
(வாக்களிக்காதது) 51,93O 4,2O6 O.52 கிளாக்ஸோ சிலோன் லிமிட்டட் 24,550 1,50Ꮞ 0.19 லங்கெம் சிலோன் லிமிட்டட் 9,700 289 0.03 ரெக்கிற் அன்ட் கொல்மன் சிலோன் லிமிட். 17,726 1,436 O.8 பாதணிகளும் புடவைகளும்
ஏசியன் கொட்டன் மில்ஸ் லிமிட்டட் 43,2OO 810 O.IO பாட்டா ஷு கம்பனி ஒப் சிலோன் லிமிட் 25,400 845 O.O

Page 13
சீபாங்க் யூனிட் ரஸ்ட் ஆண்டு அறிக்கையும் கணக்குகளும் 1993.
கொரியா சிலோன் வூட்வியர் மனுபக்சரிங் லிமிட் 27,865
பூகொட ரெக்ஸ்ரைல்ஸ் லங்கா லிமிட்டட்
ஹோட்டல்களும் பிரயாணங்களும் ஹபரண லொட்ஜ் லிமிட்டட் கண்டி வோக் இன் லிமிட்டட் ரேணுகா சிற்றி ஹோட்டல் லிமிட். ரிவேரினா ஹோட்டல்ஸ் லிமிட்ட் வாக்கர்ஸ் டூர்ஸ் லிமிட்ட் முதலிட்டு நம்பிக்கைப் பொறுப்பு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங் லிமிட்டட் காணி ஆதனம் புரொப்பட்டி டெவலப்மென்ற் லிமிட்டட் உற்பத்தித் தொழில் அக்மீ அலுமினியம் கம்பெனி லிமிட்டட் புளுடயமண்ட் ஜூவலரி வேர்ல்ட்வைட் லிமிட். போகல கிரபப்ட் லங்கா லிமிட்டட் சென்ட்ரல் இன்டஸ்றிஸ் லிமிட்டட் சிலோன் கிரெய்ன் எலிவேற்றர்ஸ் லிமிட். சிலோன் ஒட்சிசன் லிமிட்டட் கொம்பக் மொரிசன்
லங்கா ரைல்ஸ் லிமிட்டட் பெல்வத்தை சீனிக் கம்பெனி லிமிட்டெட் ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பெனி லிமிட். நம்சன் இன்டர்நாஷனல் லிமிட்டட் Gilpit riffson
அசோசியேட்டட் மோட்டார்வேய்ஸ் லிமிட் யுனைட்டட் மோட்டர்ஸ் லங்கா லிமிட்டட் சேவைகள்
அயிட்கன் ஸ்பென்ஸ் அன்ட் கம்பெனி லிமிட்.
வர்த்தகத்தொழில் ஹேலிஸ் லிமிட்டட் ஹேரெக் மார்க்கட்டிங் லிமிட்டட் முன்கொண்டு செல்லப்பட்ட மீதி
கணக்காய்வாளர் அறிக்கை - பக்கம் 12
543OO
32,900
3O898
O,OOO
71,900
27.4OO
43,6O
&3,4OO
14,OOO
19,900
2243OO
1955O
68,166
73,400
189,3OO
215,775
400
34,3OO
OOOO
232.950
42, OO
3O2OO
24. OXO
OOOO
8,439
855
126,807
1.57
1,560
3,64
1,466
8,286
409
29
1,346
9,564
6,476
6,973
2,224
6,581
2,915
3OO
25,625
1,484
7.399
7,061
350
222,464
1.04
O.
S.66
0.9
0.9
0.50
0.39
0.8
1.02
0.05
O.O
O.O3
O.7
1.8
O.8
O.86
O.27
O.82
O.36
O.O4
ö.及6
O.8
O.92
O.88
O.04
27.47
00L LSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSL

சீபாங்க் யூனிட் ரஸ்ட் ஆண்டு அறிக்கையும் கணக்குகளும் 1993.
1993 மார்ச்சு 31 அன்றுள்ளவாறு
கம்பெனியின் பெயர் முன்கொணரப்பட்ட மீதி ஜேம்ஸ் பின்லே அன்ட் கம்பெனி
(கொழும்பு) லிமிட்டட் 15,OOO சோ வலஸ் அன்ட் ஹெட்ஜஸ் லிமிட்டட் 25,350 சிங்கர்டுரீலங்கா) லிமிட்டட் O6,400
குறித்தொதுக்கலுக்குக் காத்திருக்கும்
பங்கு விண்ணப்பப்பணம் லங்கா செரமிக்ஸ் லிமிட்டட் 5OOOO தேசிய அபிவிருத்தி வங்கி லிமிட்டட் 10,300 ஒப்புரவு முதலீட்டின் மொத்தப் பெறுமதி தொகுதிக் கடன்கள்
கணனி டயர்கள் லிமிட்டட்(வட்டி 19.6937%) திறைசேரி உண்டியல்கள் ஆரம்ப வட்டி(16.97%-20.06%) இரண்டாந்தர வட்டி(16.95%-18.53%) மீள்-கொள்வனவு உடன்படிக்கைகள்
(வட்டி 13.5%-16.75%)
முதலீடுகளின் மொத்தப் பெறுமதி 9. திரண்ட வருமானம்
பெறத்தக்க பங்கிலாபம்
திறைசேரி உண்டியல்மீது பெறத்தக்க கழிவு-ஆரம்பம்
-இரண்டாந்தரம்
பெறத்தக்க வட்டி - வங்கி வைப்புக்கள் மீது
கொள்வனவு உடன்படிக்கைகள்மீது
கணக்காய்வாளர் அறிக்கை - பக்கம் 12
222,464
975
1,255
7,235
231.929
1,250
5,515
238,694
ey.OOOai 21,OOO
ரூ.000ல்
155,188
116,225
102,000 373,413
633,107
_294
2
60
12,28
578
3,940
4.
17,623

Page 14
திரு. ஏ. நிறைவே
திரு.
பொ:
திரு. ஆர்.என்.கே. பிரசாத் நிதி முகாமையாளர்
இந்தியாவின் யுனிட்ரஸ்ட்டுக்கு பதி
திரு. ஜே.எச்.டீ.பீ அபேரத்ன இணை, நிதி முகாமையாளர்
செல்வி. ஆர். இராஜபக்ஸ கனிஷ்ட பணிப்பாளர்
யூனிட் ரஸ்ட் மெனே
3ம் மாடி, வெஸ்ட் விங், இலங்.ை தொலைபேசி 327857, 44

ாமைத்துவ குழு
கதிரேவலுப்பிள்ளை பற்றுப் பணிப்பாளர்
பீ.ஜே. வின்சன்ட் து முகாமையாளர்
திரு. எம்.எம். மொஹமட்
முகாமையாளர், நிதியும் ஸாள் கணக்கியலு to
செல்வி, பீ.ஏ. செனவிரட்ன நிறைவேற்று முகாமைத்துனர்
செல்வி கே.எம். சொயிஸ்ா
ரெஜிஸ்தார்
திரு. கே.பீ.எஸ். பண்டார சந்தைப்படுததுனர்
ஜ்மன்ட் கம்பனி (பிறைவட்) லிமிடெட் க வங்கி கட்டிடம், யோர்க் வீதி, கொழும்ப 01 鲇403 一 4,430266
s.