கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மேகமலைகளின் ராகங்கள்

Page 1


Page 2

மேகமலைகளின் ராகங்கள்
மொழிவரதன்
மலையக வெளியீட்டகம் 57, மகிந்த பிளேஸ் கொழும்பு 6

Page 3
*,
Eighth Publication of வெளியீடு 8
Hill Country Publishing House மலேயக பதிப்பகம் 57 Mahinda Place 57 மகிந்த பிளேஸ் Colombo - 6 கொழும்பு - 6
"Megamalaigalin Ragangal” மேகமலைகளின் ராகங்கள் A Collection of Short Stories சிறுகதைத் தொகுதி
(C) Molivaradhan C) மொழிவரதன் (C. Mahalingam B. A ) சி. மகாலிங்சம் (பி. ஏ.) Ei loon Ha. Estate இல்டன் ஹோல் தோட்டம் Lindula விந்துலே
First Edition - Nov., 88 முதற் பதிப்பு = நவம்பர் 88
அட்டை ஓவியம்
Cover Designed By எஸ். துரைசாமி
S. Doraisamy
அச்சுப் பதிப்பு ருேயல் பிரின் டர்ஸ் 190 கொழும்பு வீதி கண்டி,
Printed By Royal Printers
90, Colombo Street, Kandy.
Price Rs. 19.50 விலை ரூ. 1950
 
 
 

மண்ணில் வேர் பதித்தவர்
பல்கலைக்கழகத்தில் பயின்றவேளை தனக்குப்பரிசு ஈட்டி தந்த "மேகமலைகளின் ராகங்கள்" என்ற தலைப்புச் சிறுகதை யைக் கொண்ட இத்தொகுதியை ஆக்கியளித்திருக்கும் மொழிவரதன் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு பெறு பவர்கள் தொடர்ந்து எழுதுவதில்லை என்ற குற்றச்சாட்டை பொய்யாக்கி நிற்பவர்; பயிலும் காலத்தோடு தன் படிப்பு முடிந்ததென்றெண்ண மறுப்பவர்.
மலைப்பிராந்திய சூழலை மாத்திரமே சித்தரிக்கும் குறுகிய வட்டத்துக்குள் சில எழுத்தாளர்கள் சிக்குண்டு தவிப்பதாக குற்றம் சுமத்தப்படுகின்றது. 'க 'றுப் பர் படைக்கும் இலக்கியம் கறுப்பரை மாத்திரம்தான் விவரிக் குமா? கறுப்பரை பிரதிபலிக்காவிட்டால் மக்களை ஒதுக்கி விட்ட எழுத்தாளன் என்ற குறை ஏற்படாதா?’ என் றெல்லாம் 1940களில் சூடு பிடித்த விவாதத்தை வித்திட்டு வளர்த்து கறுப்பு கலையம்சத்தை வெளிப்படுத்தும் இலக்கி த்தை அ மெ ரிக் க நீக்ரோக்கள் இன்று தம்மிடையே ரோக்யமாக வளர்த்தெடுத்திருக்கின்றனர். அத் த கு ஆரோக்ய வளர்ச்சிக்கு மலையகமும் இன்று தன்னைத் தயார்
டுத்திக் கொண்டிருக்கின்றது
கடற்கரை மணலைக் கை களி ல் அள்ளித்துளாவி ஆனந்தமடையும் சிறுவர்களை மலைப்பிராந்திய கதைகளில் எதிர்பார்க்கக்கூடாது; தேயிலைக் கொட்டைகளை தோலுரித்து

Page 4
தரையில் உராசி அதில் தோன்றுகின்ற இளம் வெது வெதுப்பைத் தம்கைகளில் வைத்து சூடேற்றி மகிழும் சுட்டிச் சிறுவர்களையே எதிர்பார்க்க வேண்டும். இந்த எதிர் பார்ப்பு குறுகிய மனுேபாவம் ஆகிவிடாது. மாருக -
வாழும் சூழலை தங்கள் எழுத்துக்களில் பிரதிபலிக் காத எழுத்தாளர்கள் - ஆற்றல் பெற்ற எழுத்தாளர்களா யிருந்தபோதும் . தேடுவாரற்றுப் போயிருப்பதை ந ம து காலத்திலேயே கண்டு வருகின்ருேம் எனவே மண்ணில் வேர் பதித்து வளர்வதை நமது எழுத்தாளர்கள் ஆரோக்யமான தாகக் கருத வேண்டும்.
அப்படி உருவான ஒர் இலக்கியகர்த்தாவான மொழி வரதன் கவிஞரும், கதாசிரியருமாவார். அவர் படைத்தவை களுள் ஒன்பது சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல்.
இந்த கதைகள் ஏற்கனவே இலங்கை சஞ்சிகைகளில் வெளிவந்தவைகளாகும்; மலைநாட்டில் மாற்றம் தேடிய சில ஏடுகளிலும் அவைகள் வெளிவந்திருக்கின்றன. அவைகளில் சிலவற்றை அப்போதே நான் வாசித்ததுண்டு. முதன் முறை யாக சிலவற்றை இத்தொகுதியிலேயே வாசிக்கின்றேன். இந்த அநுபவம் உங்களில் சிலருக்கும் ஏற்படலாம். இன்னும் பலர் முதன் முறையாக இவைகளை வாசிக்கும் அநுபவத் துக்கு உள்ளாகலாம்.
பத்திரிகைகளில் வெளிவருகின்ற படைப்புக்கள் நூலு ருவில் வெளிவரவேண்டிய அவசியத்தை உணர்த்துவதற்கு இந்த அநுபவம் நிறையவே பயன்படும். மூன்று தசாப்தங் களுக்கு முன்னரேயே இலங்கை எழுத்தாளர்களில் சிலர் மலையகப் பின்னணியில் சிறுகதைகளை எழுதியிருக்கின்றர்கள். இதற்கு பின்னர் சிறுகதைகள் படைக்க ஆரம்பித்த மலையக எழுத்தாளர்கள் தாமும் மலையகப்பகைப்புலத்தில் சிறுகதை
 

f (98. &tՐԱp3 *"Asia.
リ* 嘉雲羅
麒讓警變寫蒂艦 களை எழுத ஆரம்பித் 嘉、 ந்த ஆரம்பம் அவசிய யமானதும், ஆரோக்யமானதுமாக வளர ஆரம்பித்தது மலையகச்சிறுகதைகள் என அடைமொழி கொடுத்துச் சிறப் பிக்கப்படும் அளவுக்கு அவைகளில் வேறுபாடு தெரிந்தது. அந்த வேறுபாடு கதையமைப்பில், கருப்பொருளில், கை யாண்ட மொழி நடையில் எனப்பலவிதத்தில் முத்திரைப் பதிக்க ஆரம்பித்தது.
கூலி, கள்ளத்தோணி, தோட்டகாட்டான் என்று தலைமுறை கணக்கில் உதாசீன படுத்தப்பட்ட அநுபவங்களை தமது மூதாதையர்களிடமிருந்து பெற்றுக் கொண்டிருப்பதை அவர்களது எழுத்துக்கள் வெளிப்படுத்தின.
மலைநாட்டிலிருந்து வெளிவருகின்ற இந்த ஐந்தாவது சிறுகதைத் தொகுதியிலும் சொல்லத் தெரியாத சோகத்தை, சொல்லமுடியாத வேகத்தை, சொல் லத் துடிக்கின்ற பாவத்தை நீங்கள் பார்க்கலாம்.
"வழி" என்ற முதல் சிறுகதையில் எத்தனைச் சிரமங் களுக்கு மத்தியிலும் தனது சகோதரி ஒருத்தியைப் படிக்க வைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட 18 வயது கதா பாத்திரத்தின் மன உணர்வுகளை, அழகான பிராந்திய மொழி நடையில் பார்க்கின்ருேம்.
தவறுகள் மன்னிக்கக்கூடியவை” என்ற கதையில் வறுமையின் மறுபெயரான உழைப்பை விற்கும் கூலியான வெள்ளையன் தவறு நேரும் போது தற்கொலை முடிவாவு தில்லை என்று காட்டுகின்றன்
"அவர்களை இனி தடுக்க முடியாது" தலைப்புக்கேற்ற வாறே கொல்லன் பட்டறை அடுப்பாகி தகிக்கும் மக்களைப் பற்றி கூறுகிறது.

Page 5
இன்று சுவடிழந்து போன பெரியகங்காணிகளைப் பற்றிய நினைப்பை எழுப்புகிறது 'புதிய சுவடுகள்:
கசந்து போனதும் காய்ந்து உதிர்ந்ததுமான நினைவு களைப் பகிர்ந்து கொள்பவர்கள் அதிலும் சமூகத்தைப் பற்றிய சிந்தனைகளை பகிர்ந்து கொள்பவர்கள் பிரிவதில்லை என்பதை கூறும் பிரிந்து செல்லும் ஒரு தோழன்'
தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்டால் தமது வாழ் வில் ஒளிவீசும் என்று அரசியல் வாதிகளின் பேச்சை நம்பி ஏமாறும் மக்கள் வாழ்வில் மா ற் ற ம் தேவையெனில் போராட்டம் ஒன்று வேண்டும் என்று கூறும் மேகமலைகளின் ராகங்கள்"
" ஐந்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திக்கொண்ட ஒருவனைப்பற்றி வாசித்து முடித்ததும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் 'கோளயா" இன்னும் கறுப்பு ஆச்சி. தன்மானம் என்ற சிறுகதைகளென்று எல்லாக் கதைகளிலும் ஒடுகிற ஒற்றைச் சரடு மலையக மக்களின் வாழ்க்கையம்சம் என்ப தைப்பார்க்கும்போது, நிலத்தில் வேர் பதித்து ஆரோக்ய மாக எழுந்து நிற்கும் பெருமரத்தைப் போல மொழிவர தனின் எதிர்காலம் என் கண்களில் படுகின்றது.
மீன் நீரிலிருப்பதைக் கூறும் கையோடு மீனிலும் நீர் இருக்கிறது என்று எழுத்தாளன் இலகுவில் உணர்த்திவிடு வான். பிரசங்கத் தொனியாக அது படுவதுண்டு தனது வாதத்திறமையை நீதிபதி விளங்கி கொள்ளவில்லை எனத் தெரிந்தவுடன் நான் உங்களுக்குத் தெளிவில்லாமல் பேசி விட்டேனே. rather I, was not clear to you 6T6örgy கூறும் வழக்குரைஞரின் சாதுர்யம் இல்லை என்பதற்காக வழக்குரைஞரைத்தவிர வேறெவர்க்கும் பேச வருவதில்லை என்று ஆகிவிடுவதில்லை என்று பார்க்கும் போது தமிழ் சிறு கதைத்துறைக்கு வளம் சேர்க்கும் புதிய வரவாக இத் தொகுதி விளங்கப்போவது நிச்சயம்.
சாரல் நாடன்.
டன்சினேன், பூண்டுலோயா, 5-1 1 - 988
 

கெழுப்பு தமிழ்ச சங்
மலையக கலை, இலக்கிய ஆரத்திற்கு மேலும் ஒரு கலை மணியை கோர்ப்பது போல் மேகமலைகளின் ராகங்களை தருவதில் உள்ளம் மகிழ்கிறேன். சுய ஆக்கங்களை நூலுருவில் கொணர்வது என்பது சிரம்சாத்தியமான ஒன்ருகும் மலைய கத்தின் ஓர் இலக்கியவாதியும், விமர்சகருமான திரு. மு. நித்தியானந்தன் ஒரு முறை குறிப்பிட்டது போல், "பாதை யையும் நாமே வெட்டி பயணமும் செய்ய வேண்டி உள்ளமையை மறுத்தல் இயலாது. இவ்வாறன நிலையில் ஓர் எழுத்தாளன் தனது ஆக்கத்தை நூலுருவில் காண்பது ன்பது ஒரு தாய் சுகபிரசவத்தின் பின்பு தன் குழந்தையை உள்ளப்பூரிப்போடு பார்ப்பதைப் போன்றது அன்றே? ே
மேகமலைகளின் ராகங்களை வெளிக் கொணர்வதில் ஆக்கமும் ஊக்கமும் அளித்தவர் சிலர். எனினும் இருதட வைகள் அது தன் பயணத்தில் தடைப்பட்டமையை என் நஞ்சம் மறக்கவில்லை. எது எவ்வாறெனினும் திரு. மாத்தளை டிவேலன், திரு. அந்தனி ஜீவா, திரு. சாரல் நாடன் ஆகியோர் காட்டிய ஆர்வத்தினை நான் மறத்தல் இயலாது. அந்த வகையில் உண்மையிலேயே மேகமலைகளின் ராகங்கள் இன்று உங்கள் கரங்களில் தவழ்கின்றது என்ருல் அது திரு. சு. முரளிதரனின் இடைவிடாத தூண்டுதல்களும் ஒத்தாசையுமே ஆகும். அவருக்கு எப்படி நன்றி சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. ' - ' '
அட்டைப்பட ஓவியர் துரைசாமிக்கும் கண்டி ருேயல் அச்சகத்தார்க்கும், ஊழியர்க்கும் நன்றி நவிலாது இவ்வுரை பூரணத்துவம் பெருது. அவர்களுக்கும் என் நன்றிகள்.
ல்டன்ஹோல் தோட்டம், லிந்துலை. மொழிவரதன்

Page 6
தி
ப்புரை
மலையக எழுத்தாளர்களின் படைப்பிலக்கிய ஆற்றலை வெளிப்படுத்தும் ஆக்க இலக்கிய முயற்சிகள் நூலுருவில் வெளிவர வேண்டியது காலத்தின் தேவையும், கடமையு மாகும். மலையக வெளியீட்டகத்தின் எட்டாவது வெளியீடா கவும் முதல் சிறுகதைத் தொகுதியாகவும் மொழிவரதனின் 'மேகமலையின் ராகங்கள்' வெளிவருகின்றது.
இலக்கிய சஞ்சிகைகளிலும், பத்திரிகைகளிலும் அவ்வப் போது மலர்ந்த இவரது படைப்புகளை தொகுதியாகப் படித்துப் பார்க்கும் பொழுது படைப்பாளியின் ஆற்றலையும் அறிந்து கொள்ள முடிகிறது.
மலையகத்தில் கல்விப் பணியாற்றிவரும் மலையகப் பட்டதாரியான நூலாசிரியர் அக்கரப்பத்தனை தமிழ் மகா வித்தியாலய அதிபராகப் பணிபுரிந்து வருகிருர்,
மலையக இலக்கியத்துறை இவரிடமிருந்து இன்னும் பல ஆக்க இலக்கிய முயற்சிகளை எதிர்பார்க்கிறது.
57 மகிந்த பிளேஸ் அந்தனி ஜீவா கொழும்பு - 6 மலையக வெளியீட்டகம்

له که lyPنابع }***g4قي)m @f{
1 سیم ழி
அம்மா செத்து போச்சு, அதுக்கு பொறகு குடும்ப பாரம் ஏ தலையில விழுந்திடுச்சி.
சகோதரி மூன்று பேருடன் அம்மாவையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஏவுட்டு பொறுப்பு. இப்படி ஒரு பொறுப்ப இந்த பதினெட்டாவது வயசுல எனக்குக் குடுக்க அப்பா நெனச்சு இருக்கான். ஆன.?
நாட்டுக்கு எந்த நாளும் போயி, போயி கள்ளுக் குடிச்சி வயித்து வலி வந்து அது செத்து போச்சு! அதுதான் செத்துப் போச்சே, இனி அதைப்பற்றி நெனச்சி என்ன புரயோசனம்.?
ஏ அம்மாதான் நோயாளி அவ வேலையில சீக்கு அறு வது ரூவாயிலதான் குடும்பம் நடக்க வேண்டியிருக்கு. தங் கச்சிமாரும் சிறுசுக. எனக்கு அடுத்துதான் விசி, அது வேதளை" பள்ளிக்கூடத்தில் ஒன்பதாம் வகுப்பு வாசிக்குது. அதுக்கான ஸ்கூலு செலவையும் நான் தான் கவனிக்கணும். வேறே யாருக்காக..?
மாமே, மச்சான், எனம், சனம் எல்லா சும்மா பொய்யி essee ஏதோ நல்லது கெட்டதுக்கு வருவாங்க. வேறே என்ன ஒதவ போருங்க..? அவங்க நிலையும் அப்படித்தான். நம்ம நெலையில அவ படிப்புச் செலவும் ஒரு பெரிய செலவுதான்..!
அப்பா செத்த பொறகு விசிய ஸ்கூலுக்கு அனுப்பாம நிறுத்தச் சொல்லி பலபேரு சொன்னங்க. அதுல 'சாக்குக் காரே இருக்கானே சன்னசி அவனும் ஒருத்தே. அவே

Page 7
0.
ஸ்கூலுக்கு அனுப்பாதேன்னு ஒத்தக்கால்ல நின்ஞன். ஆன நா முடியாதுன்னுட்டேன். அவ ஸ்கூலுக்குப் போகட்டும். நல் லாப் படிக்கட்டும் நமக்குத்தான் நாலு எழுத்துத் தெரியாது. அவளாவது நம்ம தலைமொறையில படிச்சவளா இருக் கட்டுணு நெனச்சேன் அந்த சாக்குக்காரே இருக்கிருனே. ஆமா அந்த சன்னசிப் பய அவே பொல்லாதவே, அவே
ஏவுட்டு தங்கச்சிய ஸ்கூலுக்கு அனுப்பாம நிப்பாட்டச் சொன் னதுக்கு வேறே காரணம் இருந்திச்சி. ஏன்னு அவே வீட்டுப் புள்ளைய எல்லாம் வதளைக்குப் படிக்கப் போகுதுக. அதோட இந்தப் பயவுட்டு - சீனு பயவுட்டு தங்கச்சியையும் எப்புடி அனுப்பலாம்.? எங்கிற பொருமை. அந்த விசயம் பொற குதான் எனக்குத் தெரியவந்துச்சு. அவே என்ன நெனச்சுக் கிட்டா? அந்த ஸ்கூலு அவுக அப்பேவுட்டோ? ஒப்பேன் தன் ஞன.? அதுக்காக வேண்டிதான் நம்ம விசிய வதளைக்கு என்ன கஷ்டப்பட்டாவது அனுப்பனுமுன்னு நெனச்சு அனுப் புறேன்.
சீஸன் டிக்கெட்டு எடுக்க மாசாமாசம் அவளுக்கு காசு குடுக்கனும் , ஸ்கூல்ல வெளையாட்டு கிளையாட்டுன்னு காசு குடுக்க வேண்டி கெடக்கு. தெனமு ஒரு பத்து இருபது சதமாவது கையில இருக்க வே ண் டா மா? அ து க் கு GјG5599/ub.
மத்த புள்ளையல போல அவளும் உடுத்த வேணும்? வெள்ளை கவுனு வாங்கிக் குடுக்கனும். சப்பாத்து மேசோடு இப்படியே பார்க்கப்போன. ஒரு தொகையே வந்திடும் போல,
ஒவ்வொரு நேரத்தில இதெல்லாம் யோசிச்சுப் பார்த்தா ஏவுட்டு தலையே வெடிச்சிடும்போல. இருக்கு,
நம்ம தோட்டத்த பார்த்தா அழகாதான் இருக்கு. தேயிலையெல்லாம் பச்சைப் பச்சேன்னு கண்ணுக்கு குளிரா இருக்கு. ருேட்டு நல்லாதா இருக்கு. தண்ணிக் காலும் நல் லாதா இருக்கு. ஆன, நம்ம தோட்டத்து ஸ்கூல பார்க்கயில தான் எழவா இருக்கு. இந்த தோட்டத்து ஸ்கூலு ஒழுங்கா

நூலகம்
இருந்தா நம்ம புள்ளைய"ஏ டவுனுக்கு"போகுதுக? தெனமும் இந்தத் தோட்டத்தில இருந்து இரண்டு மைல் நடந்து ஆலிஎலைக்குப் போகனும், அங்கிருந்து பஸ் புடிச்சி வதளைக்குப் போக வேணும். கொமறு புள்ளையதானே? பஸ்லேயும் ஏதோ கரச்சலாம். நம்ம தோட்டத்து கண்டாக்கையா மகேன் கண் ணடிச்சானம். :
அன்னைக்கி ஒரு நாள். ஒரு சோடி சப்பாத்து வேணுமுன்னு விசி கேட்டாள். என்ன செய்ய..? எனக்கு வாங்கிக்குடுக்க ஆசைதான். அவ மனசு குளிரும்படியா
உதவி செய்யனுமுன்னுதான் நானும் நெனைக்கிறேன். நானும் கோழிக்குஞ்சை வளர்க்கிறேன். ஒழைக்கிறேன். ஆணு என்னு செய்ய செல நேரத்தில அது கேக்கிறத வாங்கிக் குடுக்க முடி யாம போய்ருது.
கொழுந்து கிள்ளுரவவுட்டு புள்ள எப்படி சிலுக்கு புழுக்குன்னு நடக்க முடியும்.? அவ செருப்புத்தான் போட்டுக்கிட்டுப் போரு, சப்பாத்து தேவைதானே..?
s2. Dr. . . . . . அவ-விசி அத கேட்கிற நேரத்தில் எவ்வளவு பணிவோட கேட்டாள். அதை நெனைக்கையிலேதான் எனக்கு கண்ணெல்லாம் கொளமாகுது. அவ்வுட்டு அந்த பணிவுக்குக் காரணம் ஏவுட்டு மொரட்டுக் குணமில்ல. நா உண்மையிலே இன்னும் அவளை ஒரு கொழந்தை மாதிரிதான் நெனைக்கிறேன் நம்ம வீட்டு நெலைய நெனச்சிருப்பா. LITT Gub!
நம்மஞம் மத்தவுங்களோட கொஞ்சமாவது ஒத்துப்
போனுதானே? இல்லேன்ஞ ஒலகம் என்ன சொல்லும். அந்த சீனு பய தங்கச்சிய பாரு. அப்பா இல்லாத புள்ள அந்த சீனு பய கவனிக்க இல்ல. அதுதான் அப்புடி
போவது, அப்புடிண்ணு சொல்லாது.
கூலிக்காரவுட்டு புள்ளையன்ன எல்லோருக்கும் எளக் காரம் தானே? சப்பாத்துக்கு பதினறு ரூபா ஐம்பது சதமா

Page 8
12
வது வேணுமுண்ணு சொன்னள். அந்தக் காசுக்கு இன்னும் எத்தனையோ வயித்துப்பாட்டுக்கான செலவு இருக்குதே.
கொச்சிக்கா வெல, அரிசி வெல, எல்லா ஏறுது ஆணு நம்ம சம்பளம் ஏறுவதில்லையே. ஒரு நாளைக்கு நா ஒழைக்கி ஒழைப்பு ஒரு இருத்த கொச்சிக்காய்க்கே பத்தாதே.சீ என்ன பொழைப்பு? நாய்ப்பட்ட பொழைப்பு.
இந்த மாதிரி சனி ய ன் புடிச்ச நெனவெல்லாம் ராவைக்குத்தான் வருது. அதுவும் சரிதான். பகலைக்கி எனக்கு எங்க நேரம் இருக்கு? பலதையும் யோசிக்க..?
எல்லாம் கசப்பான வெஷயங்கள்தான். ஆன கசப்பா இருந்தால் என்ன. கசப்பான மருந்தா இருந் லும் நோய் குணமாகனுமுன்ன குடிக்கத்தானே வேணும். அதுபோல இதெல்லாம் யோசிச்சுத்தான் நம்ம பார்க்கனும். இதெல்லாம் நெசந்தானே? இதுக்கெல்லாம் என்னதான் வழி. p
விசி படிக்கட்டும், படிச்சிட்டு வரட்டும். அது போல மத்தவங்களும் படிச்சிட்டு வரட்டும். வேலைகிடைக்குமா? அவுங்களாவது இதுக்கெல்லாம் வழிவெட்ட மாட்டாங் 856rit............?
நம்ம அவுங்களுக்கு நல்ல ஸ்கூலு கட்டிக் குடுக்கனும், காலம் மாறி வருது. அவுங்க கொள்கைக்கும் நம்ம கொள்கைக்கும் செலவேளை ஒத்து வருவதில்ல. S-2 (GB) ஒண்ணு நிச்சயம்; நம்ம சனங்களுக்கு ஒரு வழிய காட்டுவாங்க De eo e o go o o Oeso அது போராட்டமாதான் இருக்கும்.? ஆமா. நம்மஞம் மொழங்கை சொறிஞ்சி சொறிஞ்சி என்னுத்தைக் 56itGBLrub?
- குமரன் - மறுபிரசுரம் "கொழுந்து" (1987)
 

* 畿、 g 13. ஒதாதி 總
மன்னிக்கக் கூடியவை
懿
வெள்ளையன் வேகமாக நடந்தான். அவனது மனம் பிழையாக ஓடும் கடிகாரத்தின் பெரிய முள்ளைப் போல் ஓடிக் கொண்டிருந்தது. அவன் வேகமாக நடந்து கொண்டிரு ந்தான். பஸ்சில் பிரயாணம் செய்யும் போது பின்னுேக்கி ஒடும் காட்சிகளைப் போல, அவனுக்கு எதிரே எதிர்ப்பட்ட சவுக்கு மரங்கள், முருங்கை மரங்கள் எல்லாம் தென்பட்டன.
கரிய பெரிய உயர்ந்த மலைகள் அவனது உள்ளத்தைப் போல் கறுத்துவிட்டதோ என்று வியந்தான். வழமையாக அவன் காணும் மலைகள், இன்று அவை ஏதோ எல்லாம் கெட்ட சகுன வடிவம் கொண்டது போல் அவனுக்குப் பட்டன. -
மலையிலிருந்து வடிந்தோடி வரும் சிற்ருேடைகளில், நீர் வீழ்ச்சிகளில் அவன் மனதைப் பறிகொடுத்திருக்கிருன், அந்த அழகுக் காட்சிகளை எழுத்தில், ஒவியத்தில் வடிக்க அவனுக்கு அறிவில்லைதான், என்ருலும் கூட அந்த அழகுக் கோலங்களை இரசித்து உள்ளம் மகிழ மட்டும் அவன் அறிந்திருந்தான்.
அவன் தனது தோட்டத்தின் பணிய கணக்கிலிருந்து மேல் தோட்டத்திற்கு இப்போது வந்து கொண்டிருக் கின்றன். அவன் காலையில்தான் பணி ய கணக்கிற்குப் போனன். ஆனல் திடீரென திரும்பிக் கொண்டிருக்கின்ருன். பணிய கணக்கிலிருந்து மேல் கணக்கிற்கு ஏறக்குறைய மூன்று

Page 9
14
மைல்கள், பணிய கணக்குப் பள்ளம். மேல் கணக்கு உயரம். கீழிருந்து மேலே வரும் ஏற்றம், பழக்கமில்லாதவர்கள் இதில் பயணம் செய்வது சற்றுச் சிரமம். இதெல்லாம் வெள்ளை யனுக்கென்ன ஒரு பொருட்டா! அவன் பிறந்து வளர்ந்தது அங்கேதானே. அவன் உருண்டு புரண்டு வராத தோட்டத்தின் இடம் எங்கே இருக்கின்றது.?
அப்படியான அவனுக்கே அன்று எல்லாம் புதுமையாக இருந்தது. பாதைகள், தேயிலைகள், குறுக்குகள் எல்லாம் அவ னது கண்களால் பார்க்க முடியாத காட்சிகளாகத் தென் Lull-607.
கரைத்த மாவை தோசைக் கல்லிலே ஊற்றியது போல் காலை வெயில் அவனது நெற்றியிலே பட்டுச் சுட்டது.
முன்னே தெரிந்த குறுக் கு சிவனெளிபாத மலைக் குறுக்குப் போலப் பட்டது என்ருலும் அவன் எட்டி நடந் தான் - -
சூடேறிய நீர் குளிர்ந்தது போல், அவனது (pé5 மெங்கும் வியர்வை புள்ளி போட்டிருந்தது.
அந்தத் தோட்டத்திலுள்ள சிறந்த கவ்வாத்துக்காரர் களில் அவனும் ஒருவன். முன்னர் இருந்த நல்ல கவ்வாத்துக் காரர்கள் எல்லாம் இந்தியா போய்விட்டனர். இ த ஞ ல் எங்கே கவ்வாத்து என்ருலும் வெள்ளையனும் கட்டாயம் நிற்க வேண்டிருந்தது.
நல்ல சா ப் பாட்டு இராமன், பெரிய சாப்பாட்டு "பிளேட்டை ஒரு சில வினடிகளில் காலி செய்துவிட்டு வழித்து நக்குவது போல வெள்ளையனும் மிக வேகமாக அணு யாசமாக கவ்வாத்துக் கத்தியை வீசி தேயிலைச் செடிகளை வெட்டி எறிந்துவிட்டு வெற்றிலை சப்பிக் கொண்டிருப்பான்.
பணிய கணக்கில் கவ்வாத்து நடந்ததால் கணக்கப் பிள்ளை அவனையும் அங்கே அனுப்பி இருந்தார். அவன் அங்கே

**整 ♔ || 5,
நூலகம் வேலை செய்து கொண்டிருக்கும் போதுதான் அந்த விசயத் தைக் கேள்விப்பட்டான். அவனுக்கு அடுத்த நிரையில் நின்ற ராமசாமி கிண்டலாக அந்தக் கதையைச் சொன்னன். பரமு
அவன் தங்கையை. வெள்ளையன் கையில் அகப்பட்டி ருந்த அந்தத் தேயிலை வாதை வெட்டி வீசியவாறு மலையை விட்டு இறங்கியவன் இதோ. வீடு நோக்கிப் போய்க்
கொண்டிருக்கின்ருன், அவனது கையில் காலையில் நல்ல மா' கல்லில் தீட்டப்பட்ட உருக்கேறிய கத்தி காலை வெயில் பட்டு பளபளக்கின்றது. அதை சுழற்றியவாறே அவன் வேகமாக நடக்கிருன்.
வெள்ளையன் அந்த இரண்டு மைல்களை எப்படிக் கடந் தான் என்பது அவனுக்கே புரியவில்லை. படுக்கையில் நீண்ட நேரத்தினை செலவழித்து விட்டு நேரஞ் சென்று கோச்சியைப் பிடிக்க ஓடும் பிரயாணியைப் போல் அவன் நடந்தான். இன்னும் ஒரு மைல் நடந்துவிட்டால் வீடு.
வெள்ளையன் அந்தத் தோட்டத்திலேயே ஒரு தனி யான கொள்கையை உடையவன். பணம், பொருள், பகட்டு இவற்றுக்கு அடிமையாகாதவன். ஒவ்வொரு மனிதனுக்கும் கொள்கை வேண்டும், ஒழுக்கம் வேண்டும், மனிதாபிமானம் வேண்டும் என்றெல்லாம் நினைப்பவன். இவைகளைப்பற்றிப் பேச அவனுக்குத் தெரியாது. ஏனெனில் எமது மேடைகள் அவனை ஏற்காது. அந்த மேடைகளில் ஏறும் "தகுதிகள் அவ னிடம் இல்லை. மேலும் அவன் போலிக் கல்வியையும் கற்க αίθουόους
அந்தத் தோட்டத்துப் பாடசாலையை பார்த்திருக் கிருன். அங்கே சில நாட்கள் வாத்தியாரின் மரக்கறித் தோட் டத்திலே புல் புடுங்கியும் இருக்கின்றன். எனினும் அவனைப் படிக்க வைக்க எவரும் முயலவில்லை. காரணம் தந்தையற்ற அவனுக்கு ஒரு தங்கையும், தாயும் இருந்தமையினல் வறுமை யின் மறுபெயரான உழைப்பை விற்கும் கூலியானன்.

Page 10
16
வெள்ளையன் நல்லவனுய் நடைமுறையில் வாழ்ந்து காட்டும் நடைமுறை உதாரணம்.
அப்படியான வெள்ளையனுக்கு இராமசாமி பேசிய பேச்சு நியாயமான கோபத்தை உண்டாக்கியதில் தவறேதும் இருக்காது. என்ருலும் எதிலும் உண்மையை அறிந்து செயல் படத் துடிப்பவன் அவன். எனவேதான் உண்மையைத் தேடி வீடு நோக்கி வருகின்றன்.
அவனது வீட்டு முற்றத்தில் நிற்கும் பலாமரம் தெரி கின்றது. அவன் அதைப் பார்த்தவாறே வேகமாக நடக் கின்றன் அவனது கையிலுள்ள கவ்வாத்துக் கத்தி வெயிலில் ஒளி பட்டு பளபளக்கின்றது. அவன் நடக்க நடக்க அந்தப் பலாமரத்தின் கீழ் பகுதியும் கொஞ்சம் கொஞ்சமாக திரைப் படம் போல் தெரிகின்றது. ஊடே கயிறு ஒன்றும் மரத்தின் வாதில் கட்டப்பட்டு ஆடுவதும் தெரிகின்றது.
ஓ! அதென்ன சனக்கூட்டம். கள்வனுக்கு பொலிஸ் காரனைக் கண்டது போல் வெள்ளையனுக்கு கயிற்றினை கண் பதும் இருக்கின்றது. அவன் மனதில் ஆயிரம் படங்கள் ஒரே கணத்தில் ஒடி மறைகின்றன. அவன் ஓடுகின்றன்.
"assiéidig......... 0 0.9 ,0.6,0.
கூடிநிற்கும் சனக்கூட்டத்தை விலக்கிவிட்டு கத்து கிருன். வந்த ஆவேசத்துடன் மரத்திலேறி கையிலிருந்த கத்தி யால் கயிற்றினை வெட்டுகிருன், பரமு அவனை அப்படியே தாங்கிப் பிடிக்கின்றன். மூர்ச்சை அடைந்திருந்த அவன தங்கை விழித்துப் பார்த்தவாறு கத்துகிருள்.
*அண்ணுச்சி, என்னை சாகவிடு, நா கெட்டுப் போயிட் டேன். 0 0 0 0 0 0 O | O | O
"இல்லைத் தங்கச்சி; நீ கெட்டுப் போகல! தவறிப் போயிட்ட?

17
பரமு திகைத்து நிற்கிருன் வெள்ளையன் இருவரையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைகிருன். அவனது கையிலிருந்த கத்தி அனுதரவாக தரையிலே கிடக்கின்றது.
பரமு தேம்பித் தேம்பி அழும் குரல் வெளியே நிற்பவர் களுக்குக் கேட்கின்றது. ஏதோ அசுத்தத்தினைச் சுத்தப் படுத்திய மன நிறைவுடன் நிற்கின்றன் வெள்ளையன். பரமு சுவரோரம் குந்தியிருக்கிருன்,
ஆம். அவன் உண்மையிலேயே வெள்ளையன்தான்.
- மல்லிகை = (1981)

Page 11
8
3. அவர்களை இனித்தடுக்க முடியாது
செத்த வீடு போல் இருக்கிறது அந்த லயம், ஒரே அமைதி. ஒருவர் முகத்திலும் களை இல்லை. ஆடு மாடுகள் தன் இஸ்டம் போல அலைகின்றன
நாய்கள் சுதந்திரம் போல லயங்களினுள் நுழைந்து பார்த்து விட்டு நாக்கை வெளியே தொங்கப் போட்ட வண் ணம் வெளியேறுகின்றன.
ஒருவர் வீட்டிலும் அடுப்பு எரியவில்லை. அந்த அடுப்பு களிலே பூனைகள் உறங்குகின்றன.
கோடை வெயில் பட்டு சவசவத்துப் போன பாகற் கொடியாய் சின்னஞ் சிறுசுகள் தாய் தந்தையரின் மடிகளிலே கிடந்து நெளிகின்றன - அட்டை புகையிலைச் சாறு பட்டு தவிப்பது போல்,
முனியன் வழமை போல் வயிற்றுப் பாட்டுக்கு என்ன வழி..? என்று யோசித்துக் கொண்டு நிற்கின்றன்.
நாற்பது நாற்பத்தைந்து வருடங்களை அதே தோட் டத்திலே கழித்து விட்டவன் அவன். அவன் நட்ட தேயிலை வளர்ந்து அதனல் அந்தத் தோட்டத்திற்கும் இந்த நாட் டுக்கும் எவவளவோ பலன். ஆனல் அவனுக்கு?

• Disast) '
பஞ்சம் - பட்டினி! இதுதான் அவ னது வாழ்வில் அவன் கண்டது. முனியனுக்கு மட்டுமல்ல அவனைச் சார்ந்த அந்த இனத்தவர்க்கே இதெல்லாம் இப்பொழுது விளங்கு கிறது. இனியும் அவர்கள் மேல் ஏறிகுதிரை ஓட்ட முடியாது.
ஏழு மணி சங்கு அலறுகிறது!
மழை பெய்த தேயிலை மலையில் கால்கள் லாவகமாக இறங்குவது போல் ஏதோ ஒன்று சுர்ரென அவனது இதயத் துள் இறங்குகிறது. ஒ! இன்றைய சாப்பாட்டுக்கு என்ன செய்வது? அவன் மூளையைப் போட்டுத் தயிராய் கடைந்து யோசிக்கிருன். இதே கேள்வியையே அந் த க் கூட்டமும் கேட்டுக் கொண்டிருக்கின்றது.
நேற்றுவரை அவை கேள்விகளாக இருந்திருக்கலாம். ஆனல் கே ள் விகள் கேள்விகளாகவே இருந்திடுவதில்லை. உழைப்பவரின் உள்ளங்கள் என்ருே கனன்று கொண்டிருக் கின்றன. அவை. . ஓர் நாள் பற்றி எரியலாம்.
காலைப்பணி விலக அந்தக் காம்பராவினுள் அடைந்து கிடந்த ஜீவன்களும் எழுந்து விட்டன.
இந்தப் பதினேழாம் நம்பர் லயத்தின் தொங்கல் காம் பராவினுள் வாழும் சிதம்பரம் கத்துகிருன், அவனது குரலை யும் அமுக்கி விடுவது போல் அவ ன தி மனைவியின் குரல் மேலோங்கி நிற்கிறது! 臀
"ஐயோ ஏ புள்ளைய வந்து பாருங்களேன், எங்கள விட்டுட்டு போயிட்டாளெ"
அழுகை, ஒப்பாரி, முனகல் அந்தக் காம்பராவை ஆக்கிரமிக்கின்றன!
முனியன் சாதாரணமாக பே சாம ல் முன்வாசலில் அமர்ந்திருக்கிருன். அவனுக்கு இது என்ன புது விசயமா? இது போல் எத்தனையோ பட்டினிச் சாவை அவன் கண்டு விட்டான். இன்று தினந்தினம் அவன் காணுவதெல்லாம்

Page 12
20
பிணக்கோலம்! அவற்றையெல்லாம் கண்டு கண்டு அவன் இதயம் கொ ல் ல ன் பட்ட றை அடுப்பாகத்தணலாகிக் கொண்டிருக்கின்றது!
சா வீட்டில் செத்துப் போனதற்காக அழுகுரல் கேட்கின்றது. இவன் வீட்டில் சோற்றுக்காக அழுகுரல் கேட்கின்றது. அவனது மனைவி பொன்னம்மா கேட்கிருள்
'ஏங்க நம்ம புள்ளையஞக்கும் இந்தக்கதிதான? அந்தத் தொங்கக் காம்பரா சிதம்பரத்தின் பையனுக்கு எ ன் ஞ வந்துச்சு...? அவனுக்கென்ன நோயா? நொடியா? ஒழுங்கா சாப்பாடே இல்லியாம் நம்ம புள்ளைய ஒரு மாசமா ஒழுங்கா சாப்பிடாம கிடக்குதுகளே?"
*ʻGul urTôör60TublDnr...ʼ
முனியனுக்கு இந்த ஆவேசம் எங்கிருந்து வந்ததென்று தெரியவில்லை. அடர்ந்த இருண்ட காட்டினின்றும் நடு இரவில் எழும் ஒரு பயங்கர மிருகத்தின் பயங்கர குரலோசை போல் இருக்கின்றது அவனது குரலோசை,
அந்தக் காம்பிராவினில் பிள்ளைகளினதும் மனைவி யினதும் சத்தம் அவனது காதை அடைக்கின்றது!
இப்பொழுது அவனது மனக்கண்ணிலே தெரிவதெல் லாம் பஞ்சத்தால் வாழும் தன் இனங்களே - -
*பொன்னம்மா அழுகாத" நாங்க மாத்திரம் பஞ்சத் தால வாடல இந்தத் தோட்டமே வாடுதே, பார்த்தியா? அந்தக்கட்சி. இந்தக் கட்சி.சி. எந்தக் கட்சி வந்தாலும் என்ன..? "வோட்டுப் போட்டு பிரச்சினையைத் தீர்க்க முடி யாது. நாமளும் தான் எத்தனை அரசாங்கத்தினைப் பார்த்திட் G3 errub...??? ^38::::.:.:::MI--........ .,:״ ','...' : ': 'ن: بي

நூலகம் 'அந்த ஐந்தாம் நம்பர் லயத்தைப் பார்த்தியா? அதில இருந்த ஆள் எல்லாம் எங்கே.? ஆன நம்ம சனம் பஞ்சத்தால சாகக் கூடாது. நமக்கு இல்லாத சாப்பாடு வேறு யாருக்கு. அதை நம்ம எடுக்கணும்."
முனியன் ஏதோ ஒரு முடிவுடன் அந்தத் தோட்டத்து கூட்டுறவுக் கடையை நோக்கி நடக்கிருன்.
அங்கே பெரிய "கியூ வரிசை நிற்கின்றது.
"ஆளுக்கு கால் இருத்தல் பாணும்.? இது எதுக்கு? ஒழைக்கிற எங்களுக்கு எந்த மூலைக்கு?"
"உசுரு இருந்தாத் தானே வேலை வாங்கலாம். அதுக் குத்தான் இந்தப்பாணு'
"நல்லா சாப்பிட்டா போராடுவாங்க. அதை அடக் கத்தான் இப்படி.."
பாண் கியூவில் உள்ளவர்களின் குரல்கள் இவை.
"இந்தப் பாணில் என்ன இருக்கு? முனியன் அங் குள்ளவர்களிடம் கேட்கிருன்,
"மண்ணுங்கட்டி இருக்கு புழு இருக்கு' சரவணன் எரிச்சலுடன் பதிலளிக்கிருன்.
"எங்களுக்கு பாண் போதாது, பாண் வேண்டாம்." முனியன் குரல் ஓங்கி நிற்கிறது.
*"எங்களுக்குத் தான பஞ்சம், எங்களை ஆள்ரவங்க ளுக்குப் பஞ்சமில்லியா?" முனியன் கேட்கிருன். ۔۔۔۔۔۔
"கியூ' வரிசை உடைகின்றது.

Page 13
22
"நாங்கள் சாகத் தயார், ஆன பஞ்சத்தால இல்லே?"
*சீ என்னத்தைக் கண்டோம். பறிச்செடுப்போம், தின்போம், வேறுவழி.?"
"ஆமா, நாங்க என்ன குதிரைகளா?
"இனிமே சவாரிவிட முடியாது"
கூட்டம் அந்தக் கூட்டுறவுக் கடைக்குள் புகுந்து மாமூட்டைகளைச் சுமந்து செல்கின்றது.
அவர்களை விலக்க முயன்றவர்கள், அடக்க முயன்ற வர்கள் தோற்று விட்டார்கள்.
இதே வேளை தூரத்திலே உள்ள உச்சிமலையிலிருந்து சோகக் குரல்கள் காற்ருேடு காற்ருய் கலந்து வருகின்றன:
"அப்பா..! அப்பா..!! பாப்பா? செத்து போச்சு"
முனியாவூட்டு கொழந்தை செத்துப் போச்சாம்!
o Lurra Lurr... ?”
முனியன் குரல் அந்த உயர்ந்த மலையில் பட்டு எதி ரொலிக்கிறது!
அவன் ஓடுகிறன். அவனேடு ஒரு கூட்டமே ஒடு கின்றது. அவர்கள் எதிரில் படுவதெல்லாம் துகளாகிறது.
அவர்களை இனித் தடுக்க முடியாது. அவர்கள் இன்று கொல்லன் பட்டறை அடுப்பாகி
தகிக்கின்ருர்கள்!
= பூங்குன்றம் (1976)

. . . . . .23 கொழும்பு தமிழ்ச்சங்கக்
4.
நடுநிசி ஊர் உறங்கிக் கொண்டிருந்தது. கடுங் குளிர் வேலுவையும் வாட்டியது.
வேலு தனது மகளின் கல்யாணத்தைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்தான். தூரத்தே குப்பி விளக்கு மங்கலாக ஒளி வீசிக் கொண்டிருந்தது. அந்த விளக்குக்கும் தனக்கும் ஏதோ ஒரு விதத்தில் ஒற்றுமை இருப்பதாக அவன் உள்ளம் சொல்லியது.
போர்த்திருந்த சாக்கைத்தளர்த்தி விட்டு நிமிர்ந்து உட்கார்ந்தான். அவனையறியாமலே அவனது கண்கள் அந்த விளக்கை உற்று நோக்கின. இடையிடையே காற்று வீசிய போதிலும் அந்த வீட்டின் இருளை நீக்கி, ஒளியைப் பரப்ப முயன்று கொண்டிருந்தது அந்த விளக்கு.
வேலு ஒரு முறை கனைத்துக் கொண்டான். அவனது தலையிலே ஒரு பெரிய சுமை இருப்பது போல் அவனுக்குத் தோன்றியது. அவனுக்கெதிரே அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தாள் அவனது மகள் பூரணம்.
அவள் உறங்கும் போதும் ஓர் அழகு இருக்கத்தான் செய்தது. அவளது கருங்கூந்தல் கலைந்து கிடந்தது. உறக்கத் திலே அவளது நெஞ்சம் விம்மி அடங்கியது.
இப்படி ஒர் அழகு சிலையைப் பெற்றெடுத்ததை இட்டு வேலுவுக்குப் பெருமை. அவனுக்கு வேறு பிள்ளைகளும் உண்டு. ஆனல் அவையெல்லாம் ஆண் குழந்தைகள், பூரணம்தான் முத்தவள்.

Page 14
24
வேலுவுக்கு மாத்திரம் எ ன் ன, அவனது மனைவி செல்லம்மாவுக்கும் மூத்தவளான பூரணத்தின் மீது தான் விருப்பம், பூரணம் அடக்கமானவள் என்பதனுல் மட்டுமல்ல அவள் அதிர்ஷ்டக்காரி என்று ஒரு சோதிடன் அவர்களுக்குக் கூறி இருந்தான். ۔۔۔۔۔۔۔۔
மகள் பூரணம் ஐந்தாம் வகுப்பு வரை படித்து பாஸ் பண்ணி இருப்பது வேலுவுக்குப் பூரண திருப்தி, தனது மகள் ஐந்தாம் வகுப்புவரை பாஸ் பண்ணி இருப்பதை வீட்டுக்கு வருபவர்களுக்குப் பெருமையுடன் கூறுவான் அவன்.
வேலு அந்த இரவில் விழித்திருந்ததற்கும் காரணம் இருக்கிறது. அவன் பூரணத்தின் கல்யாணத்தைப் பற்றித் தான் யோசித்துக் கொண்டிருந்தான். இது வி ஷ ய மாக புருேக்கர் பொன்னையாவிடம் சொல்லிவைத்தான். அவரும் கவனிப்பதாகக் கூறியிருந்தார்.
ரொக்கித்தன்னையில் ஒரு பை ய ன் இருப்பதாகப் பொன்னையா சொன்னர். பை ய னை ப் பற்றி அவருக்கே உரித்தான பாணியில் கூறி யும் விட்டார். பேச்சுக்கள் தொடர்ந்து நடைபெற்றன. கல்யாணம் நிச்சயமாகும் என்று கூறும் அளவுக்கு விஷயம் வந்துவிட்டது. ஆனல் எதற்கும் பணம் வேண்டுமே; இதைப்பற்றித்தான் அவன் யோசித்துக் கொண்டிருக்கிருன்,
அவனது மனக் கண்களிலே அந்தத் தோட்டத்துப் பெரியகங்காணி தான் தோன்றினர். அவர்தான் அந்தத் தோட்டத்திலே-தொழிலாளர்களுக்கு இடையிலே கொஞ்சம் *பசை' உள்ளவர். தொழிலாளர்களுக்கு வட்டிக்குப் பணம் கொடுக்கும் ஒரு குட்டி 'பாய்" அவர்,
அவர் கங்காணிதானே? அவருக்கு எப்படிப் பணம் வந்தது? அவரைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு இதைப் பற்றிக் கவலையே இல்லை.
 

நூலகம்
வேலு போன்ற ஏழைத் தொழிலாளர்கள் கள்ளத் தனமாக உழைத்துக் கொடுக்க இருக்கும்வரை அவருக்கு என்ன குறை? ஒவ்வொரு மாதமும் அநேகமாக ஒரு சிறு தொகையாவது கங் காணி க்கு வேலு கொடுத்தேயாக வேண்டும்.
கங்காணி சாமர்த்தியசாலி. அ வரி டம் மாடுகள் இருந்தன. தினமும் எப்படியும் இரண்டு மூன்று பேர் அவற்றைக் கவனிப்பார்கள். துரைக்கெல்லாம் இது தெரியும் படியாக அவர் நடந்து கொள்வதில்லை அவருடைய நீண்ட கால அனுபவத்தில் இதெல்லாம் தெரியாமலா அவர் இருப் Lisrff?
வேலுவுக்கு கங்காணியின் நினைவு மனதிலே உதித்தவுட னேயே பெரிய ஆறுதல், மகள் பூரணத்தின் கல்யாணப் பிரச் சினை எல்லாம் தீர்ந்து விட்டது போல் இருந்தது; சாக்கை இழுத்துப் போர்த்திக் கொண்டு அப்படியே உறங்கி விட்டான். -
மறுநாள் மாலை பாக்கு, வெற்றிலையுடன் ஒரு கறுப்புப் போத்தலையும் வாங்கிக் கொண்டு கங்காணி வீட்டை நோக்கி நடந்தான் வேலு.
கங்காணியின் வீட்டில் அவனை முதன் முதல் அவரது நாய்தான் வரவேற்றது. கங்காணி உள்ளே காரசாரமாகப் பேசிக் கொண்டிருந்தார். வேலுவைக் கண்டதும் அவருக்கு ஒரே ஆச்சரியம்,
*டேய்! என்னடா இதெல்லாம். p
வேலு ஒன்றும் பேசவில்லை. தான் கொண்டுவந்த
வற்றை அவரிடம் கையளித்தான். வீழ்ந்து ஒரு கும்பிடு போட்டான். பின்னர் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின.

Page 15
ண விஷயத்தைச் சொன்னன். ஆயிரம் ரூபாய் வண்டும் என்றன். கங்காணி யோசித்துக் கொண்டிருந்தார்.
"வேலு. நா சொல்லுறேன்னு கோவிச்சுக்கிராத.
ஆயிரம் இல்ல இரண்டாயிரமும் குடுப்பன். ஆன முந்தி மாதிரி இப்ப யாரை நம்புறது? தாயும் புள்ளையுமானலும் வாயும்
வயிறும் வேறு. பணம் கேட்கிருங்களேண்ணு பணம் குடுத்தா
எவே திரு ம்பிக் குடுக்கிறன் do O. ...?"
வேலு விழித்தான் எப்படியாவது பண ம் தேவை பூரணத்துக்குக் கல்யாணம் கட்டியாக வேண்டுமே.
"ஐயா. நீங்க சொல்லுறது சரிதானுங்க. ஆணு என்ன அப்படி நெனைக்காதீங்க. நாங்க ஏழைங்க, நீங்க சும்மா எனக்குப் பணம் தரவேண்டாம், நீங்க என்னு வட்டி போடு ரியலோ போட்டுக்கிடுங்க. வட்டியைத் தந்திடுறேன். எனக்கு எப்படிச்சரி முழுப்பணத்தையும் தந்திடுங்க.." என்ருன் வேலு.
"அது சரியப்பா. நா ஒன்னைய நம்புறேன். இல்லேண்ணு சொல்லல்ல ஆன எதுக்கும் ஒரு அத்தாட்சி வேணும் நகை
நட்டு இருந்தா கொண்டுவந்து குடுத்திட்டுச் சல்லிய வாங் கிட்டு போ..."
வேலுவுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. 'ஆனல், செல்லம்மா நகையைக் குடுத்தாத்தானே கங்காணிக் கிட்ட பணம் வாங்கலாம்? அதோட அவவுட்டு காப்பு மோதிரம் இதெல்லாம் அழிச்சுத்தானே பூரண த் துக் கு * நெக்லஸ்சு' பண்ணணும் அப்புடீன்னு எப்படிக் கங்காணிக் கிட்ட நகையைக் குடுக்காமப் பணத்தை வாங்குகிறது."
வேலுவுக்கு மூளை வேலை செய்ய வில்லை.
 
 
 

நூலகம் "என்னுப்பா வேலு கப்பகவுந்து"போச்சா? கன்னத் திலே கையை வச்சுக்கிட்டு யோசிக்கிறியே. அவ மகளுக்குக் கல்யாணம் காட்சி செய்யானுமுன்ன அவவுட்டு நகையைக் குடுக்கச் சொல்லு."
வேலுவுக்கு உடம்பெல்லாம் சூடேறியது. எதிர்பாராத விதமாகக் கங்காணியின் கன்னத்திலே பளார் பளார் என
"கொந்தரக்கு வெட்டிச் சம்பாதித்த பணத்தை யெல்லாம் கள்ளத்தனமா வாங்கிக்கிட்டு இப்ப அந்தப் பணத் தையே எனக்கிட்டு குடுத்து வட்டிப் போட பார்க்கிற"? வேலு இரைந்தான்.
சத்தத்தைக் கேட்டுக் கங்காணியின் மகன் ஒடோடி வந்து முத்து வைப் பிடித்துக் கொண்டான். பெரிய கூட்டமே கூடி விட்டது. கூட்டத்தில் இருந்த தலைவர் சின்னையா வேலுவைச் சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தார்.
வேலுவுக்குப் போகும் போதிருந்த நம்பிக்கை எல்லாம் பொடியாயின. நடையிலும் தளர்வேற்பட்டது.
வெண் நிலவு விண்ணில் வலம் வந்து கொண்டிருந்தது. வெளவால்கள் அங்கும் இங்கும் பறந்தடித்தன. தேயிலைச் செடிகள் மீது நிலவின் ஒளிபட்டுப் பளபளத்தன.
வேலு அ மை தி யாக நடந்து கொண்டிருந்தான். அவனுக்கு ஒரே குழப்பம். கங்காணிக்குச் செய்த உதவி எல்லாம் வீணுனதையிட்டு அவனுக்குக் கவலைதான்!
'நாம நல்லாத்தானே ஒழைக்கிருேம். நம்ம சனம் விடி வெள்ளனையே எந்திரிச்சுத்தானே வேலைக்குப் போவுது. ஆன ஏ நமக்கு இந்தக் கஷ்டம்! இந்த நேரத்தில் தான் அடுத்த வீட்டுத்தம்பி சொன்னது அவனுக்கு ஞா ப க ம் வந்தது.

Page 16
28
4.நாம சுரண்டப்பட்டோம், சுரண்டப்படுகிாேரம் ஆணு இனிமே சுரண்டப்படக் கூடாது. ஒழைக்கிற நாமெல் லாம் ஒரே இனமாகணும். பெரிய கங்காணி இருக்கிருனே அவனும் ஒரு சுரண்டல் பேர்வழிதான்.
'அவேங்கிட்ட ஏ கல்யாணம் காட்சின்னு பணம் கேட்டுப்போரீய பெரிய தடபுடலா கல்யாணம் வேணும். ரிஜிஸ்ரர் பண்ணினல் போதும்."
வேலுவின் காதுகளிலே இந்த வார்த்தைகள் ஒலித்துக் கொண்டிருந்தன. அவன் இப்போது வேகமாக நடந்து கொண்டிருந்தான். 'நமக்கேன் பெரிய கல்யாணம். அது பணம் படைத்தவங்க செய்யிற வேலை. நமக்கு அது வேணும் என அவன் தனக்குள்ளே சொல்லிக் கொண்டான்.
வேலு வீட்டை அடைந்தான். வேலுவின் முகத்தைப் பார்த்தவுடனேயே செல்லம்மாவுக்கு விளங்கி விட்டது ஏதோ "எடக்கு மொடக்கா'" நடந்திருக்குன்னு; அவள் முடிவு செய்து கொண்டாள். அவள் ஒன்றுமே பேசவில்லை.
வேலு கால் கை கழுவிவிட்டு வந்தான். செல்லம்மா வைப் பார்த்து சொன்னன்:-
*ஏ புள்ளே! பூரணிக்குக் கல்யாணம் ஆகனுமுண்ணு நகை நட்டை பெரிய கங்காணிக்கிட்ட அடகு வைக்கணு மாம். இல்லேண்ணு பணம் இல்லையாம். நமக்கு இந்தப் பெரிய கல்யாணம் எல்லாம் வேணும். "ரிஜிஸ்டரு" பண்ணி விடுவோம்."
'ஏ அப்புடி சொல்லுரீய? தலேச்சேன் புள்ளைக்கு சீரும் செறப்புமாதான் கல்யாணம் செய்யனும், அதுவும் நமக்கு எத்தனை பொம்புல புள்ளைய இருக்கு.? ஒரே ஒரு புள்ள? மத்தவங்கதான் ஆம்புளைய அவேங்களைப் பத்திக் கவலை இல்லே. எப்படியோ தலைய கடன் வச்சாவது நம்ம பூரணத்துக்கு கல்யாணத்தை செறப்பாச் செஞ்சிறனும்."
இப்படிச் செல்லம்மா சொன்னலும் வேலு வி ன் முடிவை இனி மேல் எவராலும் மாற்ற முடியவே முடியாது.
வேலு ஒரு புதிய பாதையில் நடக்க காலடி எடுத்து
வைத்து விட்டான்.
- சிந்தாமணி, (1973)

பிரிந்து செல்
ஒரு தோழ5
எனது நண்பன் பாலன் கடிதம் எழுதி இருக்கின்ருன். နွား இந்தியா போக வேண்டிய நேரம் வந்தாயிற்று என்றும் இறுதியாக அவனை வந்து காணும்படியும் எழுதி இருக்கின்றன். ஆம், சாதாரண வழக்கிலே சொல்வார்கள், என்ன செய்ய அவன் போக வேண்டிய நேரம் வந்திடுச்சே என்று, அது போலத்தான் இந்தியா பயணமும், அது
மரணத்திற்கு வந்த அழைப்பு போலத்தான்.
நான் மீண்டும் அந்தக் கடிதத்தினைப் பார்க்கின் றேன். மீண்டும் பார்க்கின்றேன். என இதயமே உருகி மழுகாய் ஓடுவது போல் ஒரு பிரமை. என் இதயத்தை ஏதோ செய்கின்றது. நான் ஏன் இப்படி ஆகின்றேன்.
அவனுடன் பழகிய அந்த நினைவுகள் எனக்கு ஞாப த்திற்கு வருகிறது. மாட்டில் பால் கறந்து வீடுகளுக்கு கொடுத்துவிட்டு ஒட்டமும் நடையுமாய் அவன் அ ந் த
நினைவுக்கு வருகின்றன. படிப்பு என்ற வாசம் அறியாத குடும்பத்தில் பிறந்து நாமாவது படிக்க வேண்டும் என்ற அவனது ஆர்வம், துடிப்பு என்னைக் கவர்ந்தது.

Page 17
30
படிப்பில் கெட்டிக்காரன் என்றல் என்ன? அவன் படித்து உத்தியோகம் அன்ருே பார்க்க வேண்டும். இவ் வமைப்பிலே எல்லோரும் எதிர் பார்ப்பது அது தானே? ஆனல் பாலன் அதற்கு முரண் அன்ருே? அவன் படித்து சித்தியடைந்தது உண்மை, ஆனல் அவன் மண்வெட்டியை அன்ருே பிடித்துவிட்டான். ''
"ஏன்டா உனக்கு இந்த நிலைமை? நீ என்ன படித்தும் முட்டாளாய் இருக்கிறியே! நான் கேட்டேன்.
அவன் சிரித்தான்.
"நம்ம பரம்பரையே இ ன் னு ம் உருப்படவில்லை, நமக்கு என்ன உத்தியோகம்? உத்தியோகத்திற்கு போரது பிறகு சமுதாயத்திற்கு வேலை செய்யிறது. இதெல்லாம் சரிவராது. நான் தொழிலாளியாகவே இருக்கப் போறேன். அப்பத்தான் அவர்களிடத்திலே வேலை செய்ய முடியும்."
அவனது இந்த விளக்கங்கள் எனக்கு அன்று புரிந்ததே இல்லை. அவற்றினைத் தீர ஆராய்வதும் இல்லை. படிக்கிருேம் உத்தியோகம் பார்க்கத்தானே? வேறெதற்கு?
எனது கருத்துக்களை கேட்டு அவன் சிரிப்பான்.
"எல்லோரும் இப்புடி நினைச்சதாலே தான் நம்ம சமுகம் இப்புடி இருக்கு. நம்ம படிப்பது காற்சட்டைப் போட்டு "வைட் கொலர் ஜொப்புக்கு இல்லே அது இன்னும் நல்லா மக்கள் நலனுக்காக உழைக்க."
"பாலா நீ என்னடா இப்படி சிந்திக்கிற உன்னல இதெல்லாம் முடியுமா..?
 
 
 
 
 
 
 

"塑"。幟 s
billi a)39545
இப்படியும் நான் கேட்பேன். அவன் அதே அந்தப் பழைய சிரிப்புடன் சொல்வான்.
"என்னுல முடியாமல் போகலாம் . என் பரம்பரை யால முடியும்.!"
பாலா உன்னைப் புரிந்து கொள்கின்ற காலமும் வருமா? என்று நினைப்பேன். என்னைப்பற்றி நீ புரிந்து கொள்கின்ற காலம் வரும் என்று நினைப்பேன்.
பாலனின் கடிதம் எனது கையில், ஏதேதோ யோசிக் கின்றேன், சேர்ட்டை மாற்றிக்கொண்டு அவனது "குயின்ஸ்” தோட்டத்தை நோக்கி புறப்பட ஆயத்தமாகிறேன்.
"அம்மா கந்தசாமி வீட்டுக்குப் போறேன். அவனும் இந்தியா போருளும். அம்மாவிடம் கூறுகின்றேன்.
"என்னடா சொல் லு ற நானுந்தான் கேள்விப்பட் டேன். பிரிஞ்சு போறதுன அது கடைசிதான் அவள் அழு கிருள் "ஏன்டா எங்களை இப்புடி கொண்டுவந்து வெறட் Gastóluu ...... A)
"நான் போயிட்டு வாறேன்."
'... LSL LSL S LSSSLL 0L S 0SL S SLS LS LSLSS LSL LS ...'
"அம்மா நாளைக்குத்தான் திரும்பி வருவேன்"
ஆலி - எலையிலிருந்து மூன்று மைல் இருக்கும் அந்தக் குறுக்குப் பாதை. அது பாம்பு போல் மண் நிறமாய் சில இடங்களில் பச்சைப் பசேலென பச்சைப் பாம்பு போலவும் நீண்டு அகன்று இப்படியே செல்கிறது. உயர்ந்து உயர்ந்து மேகத்தினைத் தொட்டிட செல்வது போல் உயர்ந்து செல் கின்றது. இந்த மலையில் ஏறி இறங்கி கொழுந்து பறித்து

Page 18
32
ஓர் உழைக்கும் வர்க்கத்தின் கண்ணீர் இன்று பிரிவு என்னும் ஆருய் ஓடுகின்றது.
பாலாவைப் போல எத்தனையோ பாலாக்கள் இந்த நாட்டை விட்டு போகின்றர்கள்?
பாலா எழுதி நடித்த அந்த நாடகம் எனக்கு ஞாப கத்திற்கு வருகின்றது. "அந் த க் கால ம் மலை ஏறிப் போச்சுங்க" என்ற அந்த நாடகத்திலே "ஐயா தொரையலே காற்சட்டையை கழட்டுங்க; காலம் மாறிப் போச்சுங்க, கவ்வாத்து கத்தியை எடுங்க!" இப்படி பாலன் பேசி நடித்த போது மெய் சிலிர்த்தது. கலங்கும் என் கண்களை துடைத்துக் கொண்டு நடையை எட்டி வைக்கின்றேன்.
அவன் என்னைவிட்டு பிரிந்து போவது தான் என்னை வருத்துகின்றது.
அவன் எப்படி போகாமல் இருக்க முடியும்? இரண்டு நாட்டுத் தலைவர்கள் பாலா போன்ற எத்தனையோ பாலாக் களின் தலை விதியை தீர்மானித்துவிட்ட விசயம் அன்ருே இது? பாலா போன்ற லட்சக் கணக்கான பாலாக்களும் என்ன வெறும் பண்டப்பொருட்கள் தானு? சுய விருப்பு வெறுப்பு என்பன. அவர்களுக்கு தேவையற்ற விசயங்களா? ஒரு பாலாவின் விருப்பத்தை மூன்ரும் நபர் ஒருவர் தீர் மானித்துவிட முடியுமா?
குயின்ஸ் தோட்ட பிள்ளையார் மரத்தடியை அடைந்த போது என் நெஞ்சை அடைத்தது. பாலா! உனது சிந்த னைகள் கருத்துக்கள் இன்று எனக்கு புரிகின்றன. ஒ! நீ சொல்வது தான் எவ்வளவு உண்மை!
எப்ப்டியோ பாலாவின் லயத்தை அ டை ந் தே ன். லயத்தின் முன்னே கூட்டம் கூடி நிற்கிறது. பிரிவுத் துயரம் ஒரு கூட்டமாகி நிற்கிறது. இந்த உழைக்கும் கூட்டத்தின் ஏக்கங்கள், தவிப்புகள், ஆசைகள், கனவுகள், துடிப்புக்கள்

rea. . . . .33 If 3.56 இதெல்லாம் தான் பிரிவுத் துயரத்தின் மொத்தப் பருமன? மதிப்பீடா? இல் லை இல்லை கண்ணீரென்னும் மசியால்" காவியம் படைத்து விட்ட இந்த உழைக்கும் வர்க்கத்தின் பிரிவுத் துயரத்திற்கு எல்லை ஏது? மதிப்பீடு ஏது?
“ LI T6a) IT . . . . . .
நான் ஏன் தேமுகிறேன்.
*தம்பி.வாங்க.வாங்க.உங்களை எல்லாம் விட்டிட்டு போருேம்.! பாலாவின் தாயார் புலம்புவது கேட்கிறது.
"அண்ணே! அண்ணே!! நாங்க போகப் போருேம். இனி எப்ப உங்களை எ ல் லா ம் காணப் போகிருேம்." பாலாவின் தங்கை தேமுவது கேட்கின்றது.
குமுறிக் கொண்டிருந்த எரிமலை வெடித்துச்சிதறியது போல் உள்ளச்சிறையில் உறங்கிக்கிடந்த துயரமலை வெடித் துச் சிதறுகின்றது!
ஐயோ.நான் போகப் போறேன்டா? "ஓ! என் பாலா நீயுமா..?"
நான் பதட்டத்துடன் கேட்கின்றேன். அவன் ஒரு சில நிமிடம் திகைக்கின்ருன், பி ன் னர் நிதானத்திற்கு வருகின்றன். அவன் அதே பழைய பாலா' வாக மாறு கின்றன். அவன் சொல்கிருன்.
*யாரும் அழ வேண்டாம். நாங்க பொழைப்புக்கு வந்தோம். அதே போல பொழைப்புக்கு போ ருே ம். ஒழைக்கிருேம் சாப்பிடுகிருேம். நம்ம உழைச்சு சாப்பிடும் சாதி, நம்ம கவலைப்படக் கூடாது."
எப்படி மணிமணியாக சொல்லுகிருன்.

Page 19
| 34
நம்ம எங்கே ே ஒழைக்கனும், ஒண்ணு சேரனும் போராடனும்."
陂 ', ' ' -
அவன் பேசுவது "ஒரு பிரச்சாரம் போல இருக் கின்றது. ஆங்கே சிவந்து கலங்கி நிற்கும் பல சோடி கண் களுக்கு சிவப்பு ஒளி காட்டுகின்ருன் பாலா. எனக்கு இப் போது அவனது போக்கு நன்ருக விளங்குகின்றது. ஒரு மாற்றம், மிடுக்கு, தைரியம், நம்பிக்கை அவனது நடையிலே அந்த நிமிடமே பளிச்சிடுகின்றது.
போன லும் நம்ம இனத்திற்காகி
எனது கரங்களைப் பற்றி அழைத் து ச் சென்று ஸ்தோப்பில் பாய் விரிக்கின்ருன்,
"அந்தக் காலத்தில நான் இந்கத் தோட்டத்துக்கு வந்த நேரத்தில ஒரு தொரைப் பயல் இருந்தான்."
உள்ளே காம்பிராவில் பாலாவின் பாட்டி கசந்து போனதும், காய்ந்தும் உதிர்ந்ததுமான தன்கதையை சொல் கிருள் அவளது வாய் பார்த்து வாயில்லா ஜீவன் நாய் தான் அமர்ந்திருக்கிறது.
"இப்புடி எல்லாம் இருந்து பிரிந்து போருேம்." பிரிவுத் துயரம் பாட்டியின் தொண்டையை அடைக்கின்றது.
நான் அமைதியாக இருந்த வண்ணம் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். ஒரு வ ர லா ற் று நிகழ்ச்சியை ஜீரணித்திருந்த அந்தப் பாட்டியின் உடம்பு மலையக வரலாறு போலவே, எலும்பும் தோலுமாய் கூனிக் குறுகி நடை முறை உதாரணமாய் - சான்ரு ய் ஒரு பாயில் சரிந்து கிடக் கின்றது.
இந்திய பயணத்திற்கான ஆயத்தம் காம்பிராவின்
அலங்கோலத்திலே தெரிகின்றது. சாமான்கள் பெட்டிகளில் அடைக்கப்பட்டும், படாமலும் கிடக்கின்றது.

»:35
涧、 பால்ா கொணர்ந்து கொடுத்த சர்யத் தண்ணீரைப் பருகிவிட்டு அவனை ப் பார்க்கின்றேன். அவன் ஏதோ என்னிடம் கதை க் க விரும்புவது போல் தெரிகின்றது. அதற்கு இங்கே ஏற்ற சூழ்நிலை இல்லை என்பது போல் சுற்றும் முற்றும் அவன் பார்க்கின்றன்.
*வா, கீழே போயிட்டு வருவோம்.
அவன் பதில் ஏதும் சொல்லவில்லை. அவனது வாயில் பீடி புகைகிறது.
வெளியில் குளிர் அதிகம் இல்லை. வெயில் இன்னும் இறங்கவில்லை. டிக்வெலை தோட்டத்தின் மலை அடிவாரத்தில் சூரியன் இறங்குவது போல் தெரிகிறது. நாங்கள் சிறு நீர் வீழ்ச்சி காணப்பட்ட இடத்தை அடைந்தோம், அது ஓர் ஒதுக்குப்புறம்.
"அது நல்ல யோசனை தான். நான் சொல்கிறேன்.
அந்த மாலை வேளையில் எங்களின் "மனே நிலையில் அந்தச் சின்ன நீர் வீழ்ச்சியும் கூட தே மு வது போல் எங்களுக்குள் ஒரு பிரமை
நாங்கள் அங்கு கி ட ந் த கற்பாறைகளின் மேல் அமர்ந்தோம். அவன் பேசத் தொடங்குகிருன்,
"நம்ம சனம் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த நேரம் கையில கொண்டு வந்ததுதான் என்ன? இந் த வயிற்றுக்காக நம்ம சனம் இரண்டு கை களை நம்பியே இப்ப திரும்பவும் இந்த வயிற்றுக்காக இந்த இரண்டு கைகளையும் நம்பியே போருேம். நம்ம ஒழைச் சோம், ஒழைச்சோம் யாருக்காக, வெள்ளையனுக்காக ஒழைச் சோம். ஒழைக்கிற நம்ம சனத்திற்காக, விடிவுக்காக நம்ம ஒழைக்கலை இதுதான் நம்ம செய்த பெரிய தவறு ஆமா. நம்ம விடுதலைக்காகவும் ஒழைக்கனும். என்ன சொல்ற?

Page 20
36
"ஆமா, சொல்லு!" நான் அவனை ப் பேச வைக் கின்றேன்
'ஒழைக்கிற சனத்திற்காக போராடுனுங்க கொஞ்ச பேரு என்னத்த போராடுனங்க? இந்த நாட்டுக்கும் நமக்கும் என்ன உறவு? என்ன சம்பந்தம், இது அவுங்களுக்கு விளங் கலை, பின் எப்படி போராட்டம் நடத்த முடியும்?"
'நீ சொல்லுறது உண்மைதான், இந்த நாட்டில் நம்ம நிலைமை என்ன? நம்மில உள்ள சக்தி என்ன? இது பலருக்கு புரியல: இதனுல்தான் உன்னைப் போன்றவங்களு டைய விசயங்களில் நம்பிக்கை குறையிறது?
'நம்பிக்கை இல்லை என்பது பிழை, ஒழைக்கிற இனத் தக்கு இதுதான் ஒரேவழி. இதைவிட்டு வேறு எந்த வழியி லேயும் போக முடியாது. அப்படி போன அது கிழிஞ்ச சேலையை தைக்கிற மாதிரித்தான். தவறு ஏற்படும் அத்த வறை திருத்தனும், வேறு வழியில்லை."
அவன் கதைத்துக் கொண்டே போகிருன், அவன் வாழ்வில் அவன் அனுபவ பூர்வமாகப்பட்டத் துன்பங்கள் தோட்டத்தில் பட்ட அடிகள் அதிலே தொனிக்கின்றது. உலகைப் பற்றி சமூகத்தினைப் பற்றி அவன் கொண்ட சித்தாந்த அறிவு நடை முறையோடு கலந்து நடைமுறை அறிவு சித்தாந்த அறிவோடு கலந்து நடைமுறைக்கும் கொள்கைக்குமாய் தாவி ஏறி இறங்குகின்றது.
அவன் முன்னே சீ! நான் ஒரு தூசு மில்லை.
இப்படி எல்லாம் பேசுறியே எங்க ளை எல்லாம் விட்டுட்டு பிரிந்து தானே போகப்போறே.?
e o ou நான் கோழை யாகிறேன்.

37 "g" ¥ lates
அவன் சிரிக்கின்ருன், அவன் சொல்கிருன். "நம்ம எல்லாம் விடிவுக்காக ஒழைக்கனும், நான் இந்தியாவுக்கு போஞலும் இதைத்தான் செய்வேன். ந ம க் கு எல்லாம் ஒண்ணுதான், எந்த நாடும் நமக்கு சும்மா சோறு போட வில்லை. ! ?
அவன் இப்படியே கதை க் கி ரு ன். பொழுதும் போகிறது.
அவன் செல்ல வேண்டிய அந்தப் புதன்கிழமையும் வந்தது. காலையில் நேரத்தோடு எழுந்து பாலா வீடு நோக்கி புறப்பட்டேன்; அந்தத் தோட்டத்தில் பலரும் அவன் வீட்டுக்கு வந்திருந்தனர்.
"ஐயோ! என்னை ஏன் விட்டுட்டு போறிய? நஞ்சு குடுத்து கொன்னுட்டுப்போங்க"
"ஐயோ! போ றீ யளே, இனி எங்கே காணப்
"கடைசியா ஒங்களை எல்லாம் ஒருக்கா நல்லாப் பார்க்கனும் போல இருக்கு."
‘போய் கடதாசி போடுங்க.
*சரி புறப்படுங்க ரெயிலுக்கு நேரமாச்சு."
இப்படி எத்தனை குரல்கள் ஒலிக்கின்றன.
பாலாவின் தாய் ஆசை தீர தேயிலை மலையை பார்க் கிருள். இந்த வையகத்து குளமெல்லாம் அவள் கண்ணில் தான் நமக்குத்தெரிகிறது.
அந்தப் பச்சைத் தேயிலைத் தளிரை தனது கரங்க
ளால் வருடி அதைத் தொட்டுக் கும்பிட்டு கடைசி முறை யாக ஏதோ புலம்புகிருள். தோட்டத்து லொரி டிரைவர்

Page 21
38
ஹர்ண" அமர்த்துகிருன், பாலாவின் தாய் தேயிலைத் தளிரை குனிந்து தொட்டுத் தொட்டு இதோ மூன்ருவது முறையாக தொடுகிருள் அவள் கண்களிலிருந்து இரண்டு சொட்டுக் கண்ணீர் தேயிலை இலையில் பட்டு அதுவும் சிதறி அவளது இரத்தம் படிந்த அந்த சிவ ந் த மண் ணில் விழுகின்றது. யாருடையதோ ஒரு வலியகாரம் அவளை இழுத்து லொரிக்குள் தள்ளுகின்றது.
லொரி டிரைவர் லொரியை விரட்டுகிருன் அவர்கள் ஒரு புதிய பயணத்தை ஆரம் பித் து வி ட் டா ர் கள் என்னுள்ளே புகுந்துவிட்ட பாலா என்னையும் புதிய வாழ் வுக்கு தயார்ப்படுத்தி விட்டான். ஒரு நம்பிக்கை, உணர்வு, துடிப்பு என்னுள் எழுகின்றது.!
"பாலா! இனி நீ பிரியவே மாட்டாய் அடா..!"
= 'பாரதி 1978

6 கறுப்பு ஆச்சி
எந்த நேரமும் "ஹோர்ன்' அலறும் சத்தம் - கார்கள், பஸ்கள், சைக்கிள்களின் இரைச்சல் குடிகாரர்களின் இடர்!.
இரவில் இரண்டாவது சினிமாக் காட்சி முடிந்து போகிறவர்களின் அலறல்! இத்தனை தொல்லைகளுக்கிடை யிலும் அந்தப் பெரிய பலாமரத்தின் கீழ் இருந்த குடிசையில் எந்நேரமும் அமைதி நிலவியது.
எனக்குப் பத்து வயது நடந்து கொண்டிருந்த காலம் முதல் அந்தக் குடிசை அப்படியேதான் இருக்கின்றது. நான் பாடசாலைக்குப் போகும் பொழுது அந்தக் குடிசைக்குச்
சல்வதுண்டு.
அந்தக் குடிசை வெளித் தோற்றத்திற்குக் குடிசை போல் தெரிந்தாலும் - அதில் வசித்த கறுப்பு ஆச்சியின் உள்ளம் பெரிய கோபுரம் போலவே உயர்ந்து நிற்கிறது.
'தம்பி வாங்க. வாங்க" என்று அந்த ஆச்சி நாங்கள் பாடசாலை முடிந்து வீடு திரும்புகையில் கூப்பிடுவாள். தண்ணிர் கொடுப்பாள். அது எங்களுக்குத் தேனுமிர்தமாய் இனிக்கும்.
காரணம் தண்ணிர்தான் எ ங்கள் பாடசாலையில் பெரிய பிரச்சினை! எது அத்தியாவசியமோ அது எங்கள் பாடசாலையில் இல்லை

Page 22
40
பாடசாலையில் தண்ணிர்ப் பிரச்சினை இருக்கையில் யாராவது அழைத்துத் தண்ணிர் கொடுத்தால் எப்படி இருக்கும்?
அந்தக் கறுப்பு ஆச்சி எனது மனதில் சிலை மாதிரி அப்படியே நினைவில் நிற்கிருள். அந்தக் குடிசை ஒரு சிறந்த கலைஞனின் கைவண்ணத்தில் உருவான சித்திரம் போல் என் இதயத்தில் ஆழப் பதிந்து போய்விட்டது.
அந்தக் குடிசையிலேயே ஆச்சிதான் மிகவும் சிறந் தவள். அங்குள்ள தாத்தாவை எனக்குப் பிடிக்காது.
'நீ எதுக்குத் தண்ணிர் கொடுக்கிருய்? உனக்கு வேறு வேலை இல்லையா? மில்லுக்கு வா. வந்து அரிசி பொடை அதிலாவது கொஞ்சம் பணம் கிடைக்கும்" என்று ஆச்சியை அந்தத் தாத்தா திட்டுவார்.
ஆலுைம் அந்த ஏச்சும் பேச்சும் சிறிது நேரத்துக்குத் தான். பின்னர் அவர்கள் இருவரும் ஒன்ருகிவிடுவார்கள்.
பக்கத்தில் உள்ள ஒரு துரையின் மில்லில்தான் தாத் தாவுக்கு வேலை, ஊரிலேயே பெரிய பணக்காரர் அந்தத் துரைதான். அவரை எவரும் பெயர் குறிப்பிட்டுப் பேசு வதில்லை. எல்லோருக்கும் அவர் துரைதான்,
தாத்தாவின் சம்பளத்திலேயே அந் த க் குடும்பம் வாழ்ந்தது. தாத்தா மாடாய் உழைப்பதை நான் கண்டிருக் கிறேன்.
பகலில் பாடசாலை முடிந்து நான் திரும்புகையில் அந்தத் தாத்தாவைக் காண்பதுண்டு. அவர் உடம்பெல்லாம் ஒரே தூசியாக இருக்கும். வியர்வை வழிந்து கொண் டிருக்கும். உண்மையாக மனச்சாட்சிப்படி உழைப்பவர்
அவர் . இதில் சந்தேகமே இல்லை.

ஆச்சி கிழிந்த சேலையைஉே த்தியிருப்பாள். தாத் தாவும் அப்படித்தான். அது ஏன் என்று அந்த நேரத்தில் எனக்குப் புரிய வில்லை.
மழைகாலத்தில் எனக்கு இரவெல்லாம் ஒரே பயமாக இருக்கும். மழையினல் கறுப்பு ஆச்சியின் குடிசை என்ன வாகும்? பலாமரம் முறிந்து குடிசை மீது வீழ்ந்துவிட்டால் ஆச்சியைக் காண முடியாதே, பிறகு யார் ந ம க் குத் தண்ணீர் கொடுப்பார்கள்? - இப்படி எல்லாம் நினைப்பேன். அப்படியே தூங்கிடுவேன்.
காலையில் எழுந்து பாடசாலைக்குப் போகும்போது ஆச்சியின் குடிசையைப் பார்ப்பேன். குடிசை அப்படியேதான் இருக்கும். பிறகு என்ன.. ? எனக்கு ஒரே கொண்டாட்டம் தான்.
இப்படி எத்தனையோ முறை நினைத்ததுண்டு, ஏங்கிய துண்டு. மழையும் = இடி முழக்கத்துடன் பே யாட்டம். போட்டதுண்டு. ஆனல், குடிசை அப்படியேதான் இருந்தது.
ஒரு நாள் ஆச்சியின் குடிசைக்குத் தண்ணிர் அருந்தப் போனேன். அன்று அங்கு தண்ணீர் இல்லை. ஆச்சி தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தாள். எனக்கும் என்னுடைய நண்பன் ராமுவுக்கும் தேநீர் கொடுத்தாள்.
அந்த நேரம் அவ்வழியாக வந்த எனது அப்பா நான் தேநீர் அருந்துவதைப் பார்த்து விட்டார். என் கையிலிருந்த கிளாஸ் வெளியே தரையில் போய் விழுந்து உடைந்து சிதறியது! என் கன்னத்தில் பளார் பளrர் என அறைகள் விழுந்தன! அப்பா என்னை இழுத்துச் சென்ருர்,
எனக்கு அன்று ஒன்றும் விளங்கவில்லை. நான் போகும் போது அந்த உடைந்த கிளாஸைப் பார்த்தேன். அது என் மனசைப் போலவே உடைந்து நாலா பக்கமும் சிதறிக் கிடந்தது!

Page 23
49
வீட்டுக்கு வந்த பின்னர்தான் நாங்கள் கறுப்பு ஆச்சி வீட்டில் தண்ணர் அருந்தக் கூடாது, சாப்பிடக் கூடாது
என்பது தெரிந்தது.
நான் அம்மாவிடம் இது பற்றிக் கேட்டேன் அவள் ஏதோ சாதி, குலம் என்று சொன்னுள். அன்று எனக்கு அவை ஒன்றுமே புரியவில்லை.
அந்தச் சம்பவத்தின் பின் எனக்கு ஏதும் தருவதற்கு ஆச்சிக்குப் பயம். நான் உயர்ந்த சாதிக்காரனம். அவர்கள் வீட்டில் சாப்பிடக் கூடாதாம். அப்படி இருந்தும் அவள் என்னைப் புறக்கணிக்கவே இல்லை.
எனது அப்பா வீதியில் வருகிருரா என்பதைப் பார்க் கும்படி ஏனைய சிறுவர்களிடம் கூறி விட்டு எனக்குத் தண்ணிர் தருவாள் ஆச்சி. ஆயினும் அப்பா இட்ட தடை நான் சுதந்திரத்துடன் அந்தக் குடிசைக்குள் நுழைவதைத் தடுத்து விட்டது.
எனது பாடசாலைப் பருவம் முடிவடைந்தது. நானும் படித்து முடித்து வேலைக்குச் சென்றேன். வயதும் இருபதாகி விட்டது நீண்ட நாட்களின் பின் விடுமுறையில் வீட்டுக்கு வந்திருக்கிறேன்.
எனது நினைவுச் சுழற்சியிலிருந்து விடுபட்டு இருக் கையிலிருந்து எழ முயன்றேன். அம்மா எதிரில் உட்கார்ந் திருப்பதை அப்பொழுதுதான் கண்டேன்.
*என்ன தம்பி யோசனை? தேத்தண்ணி குடிக்கலையா? ஒனக்குப் புடிச்ச பருப்புவடை செஞ்சு வச்சிருக்கிறேன்.' என்று கூறினர் அம்மா.
நான் எதுவுமே கூறவில்லை. அமைதியாக குளியல் அறையை நோக்கி நடந்தேன். முகம் கழுவினேன். உடை மாற்றிக் கொண்டு அம்மா முன் வந்து நின்றேன்.
 

, , 9 43 * ''' á '','% A). மேசையிலே "எனக்காகச் செய்யப்பட்ட பருப்பு வடை இன்னும் ஏதேதோவெல்லாம் வாசனை மூலம் என்னை அழைத்தன - தூதுவிட்டன. KAWIN
'தம்பி தேத்தண்ணி குடி' என்ருர் அம்மா.
நான் அமைதியாக அம்மாவைப் பார்த்தபடியே நின்று
கொண்டிருந்தேன். நெஞ்சில் அந்தக் கறுப்பு ஆச்சியின், உருவமும், பேச்சும், குடிசையும், தாத்தாவின் உருவமும்
மாறி மாறித் தோன்றித் தோன்றி மறைந்தன.
என்ருே ஒரு நாள் நான் சிறுவனுக இருந்த போது
அப்பா அந்தக் கறுப்பு ஆச்சி கொடுத்த தேநீர்க் கிளாஸை உடைத்த சம்பவம் என் இதயத்தை உறுத்தியது! காலமும், படிப்பும், புதிய சிந்தனைகளும் எனக்களித்த போதனைகள் தெளிந்த அறிவுக்கு காலாயின.
"நான் கறுப்பு ஆச்சி வீட்டுக்குப் போக வேண்டும்" என்றேன்.
திடமாகவும் உறுதியோடும் இதனை க் கூறினேன். பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்த அப்பா சீற்றத்துடன் என்னைப் பார் த் தார். 'டீ வேண்டா மா?' என்று கேட்டார்.
"ஆச்சி வீட்டில் அருந்துவேன்' என்றேன்.
'குடிச்சிட்டு இங்கேதானே வருவே?" என்று முடுக் கினர் அப்பா.
"வேறே எங்கே...? இங்கேயேதான்." என்றேன்.
நான் ருேட்டுக்கு வந்து விட்ட பின்னரும் அப்பாவின் பேச்சுகள் சாடையாக எனது காதில் வீழ்ந்தன.

Page 24
44
ஆச்சி வீட்டை நெருங்கினேன். அதே பழைய தகரம். தார் வாளியிலிருந்து எடுத்துப் போடப்பட்ட அதே தகரம். இடையிடையே பல துவாரங்கள். நான் உள்ளே போய் தண்ணிர் அருந்த அமரும் வாங்கு அப் படி யே தா ன் இருந்தது.
ஆச்சியின் குடிசையை அடைந்தேன். உள்ளே நுழைந் தேன். என்ருே நான் பார்த்த குப்பிலாம்பு எரிந்து கொண்டிருந்தது.
குடிசையின் ஒரு மூலையில் சுருண்டு படுத்திருந்த தாத்தா என்னைக் கண்டதும் தட்டுத் தடுமாறி எழுந்தார். "யாரு அது?" என்று கேட்டார்.
"நான்தான் தாத்தா குமார்" என்று கூறினேன்.
ஆ. நீயா?" என்ருர், அவர் இமைகள் படபடத்தன. என்னை உற்று நோக்கினர். பின்னர் "இரு தம்பி’.
என்ருர், நான் அமர்ந்தேன்.
'தம்பிக்குத் தேத்தண்ணி கொண்டு வா" என்ருர், அவரது மகள் தேநீர் தயாரிக்கத் தொடங்கினுள்.
திடீரென்று அந்தப் பழைய சம்பவம் அவருக்கு நினை வில் வந்துவிட்டது போலும், "வேணும்மா தேத்தண்ணி ஊத்தாத" என்கிருர்,
'இல்லை கொண்டு வரட்டும்.’’ என்று நான் சிரித்துக் கொண்டே சொன்னேன்.
'நீங்கள் இங்கு வந்தது அப்பாவுக்குத் தெரியுமா?" என்று கேட்டார் தாத்தா.
"ஆம்" என்றேன்.
 
 
 
 
 
 

45
"அவர் ஏதும் சொன்னுரா?" என்று அழுத்தமாகக் கேட்டார் தாத்தா,
'இல்லை, அது சரி எங்கே ஆச்சி?" என்று அங்கும் இங்கும் பார்த்தபடி கேட்டேன்.
"அவ எங்கள விட்டுட்டு போயிட்டா தம்பி" என்று தழுதளத்த குரலில் கூறினர் தாத்தா.
"ஆச்சி." என்று எனது தேக பலத்தையெல்லாம் குரலாகத் திரட்டிக் கத்தினேன். அதில் அன்பும், பரிவும், பாசமும் இழையோடின. அவற்றின் முன் குலம், கோத்திரம்
எல்லாம் தோற்றுப் போய்விட்டன.
சிந்தாமணி - 1986
N s "كالهدهد
لاؤ ظامونه كاكای

Page 25
ராகங்கள்
மாலை வேளை. லயங்களிலெல்லாம் சட்டிப் பானை களின் = பாத்திரங்களின் சத்தம். வேலை முடிந்து வீடு வந்த பெண்கள் கூட்டம் இரவு சாப்பாடு சமைத்திட ஆயத்தம் செய்கின்றது.
கமலா! அவள் தான் ஏழாம் நம்பர் லயத்தின் மூன் ருவது காம்பராவில் வாழும் மாரிமுத்துவின் மூத்தமகள். மாரிமுத்துவுக்கு அவள் செல்லக் குழந்தைதான். அவள் மட்டும் அவனுக்கு குழந்தை இல்லை. அவளுக்கும் பின்னலே இன்னும் ஐந்து. பெண்டுகள் அதில் மூன்று.
ஆ1 எத்தனை வருடங்கள். இதே லயம். இதே நேரம், இதே வேலை. l
இந்தத் தோட்டம் தேயிலை மலை. வெயிலும் மழை யும் பணியும் குளிரும் - அவளது உடல் கண்ட சுகம் தான் என்ன? ஓடி வரும் ஓடைகள் பாடிவரும் பாடல்கள். 'கிசு கிசு வென அவை எழுப்பும் - ஒசைகள் எழுப்பும் மறைமுக அர்த்தம் தான் என்ன? வாட்டும் குளிரினிடையே ஊற்ருய் உதிக்கும் அந்தப் பாழும் நினைவுகள்.?
அவளுக்கும் வயது வந்திருச்சே. ஆனல். இந்த 'ஆனலுக்கு" வரையறை இல்லையே. ! அவள் நிலை . அவள் எண்ணங்களை உடனே நிறைவேற்றும் நிலையில் இல்லையே.
 
 
 
 
 

«:/MIT, " MMMRNASA
{'#'ಸ್ಟಿ' ܐܬܐ s (y
பச்சை விறகுகளை அடுப்பினுள் நுழைத்து நெருப்பை
மூட்டிட அவள் எடுக்கும் முயற்சிகள் தோல்வியடைய
அவள் மனப்புகை போல் அடுப்புப் புகை கிளம்பி காற்றில் சுழன்றடிக்கின்றது!
*“母G。.母G”” என்ன வெறகு இது எரிய மாட்டேங்குது.
W இந்த அடுப்போட மாரடிக்க எண்ணுல் இயலாது . டேய்
தம்பி அடுத்த வீட்டு அக்கா கிட்டக் கொஞ்சம் காஞ்ச வெறகு இருந்தா வாங்கிக்கின்னு வா."
அவளது இதய வேதனைப் பொறிகள் சொற்களாகி, வசனங்களாகி வசையாக உருப் பெறுகிறது.
“ւնԱ......ւն է՚
மீண்டும் ஊதுகிருள்.
*தோட்டத்திலேயும் தான் வெறகு பொறக்க முடி UITSI. காஞ்ச கட்டை ஒடிச்சாலும் தெண்டந்தான். தொரைக்கி. அவருக்கென்ன 'அப்பு' ஆக்கி வைப்பான்."
மீண்டும் தம்பியைக் கூப்பிடுகிருள். அவன் பாடம் படிக்கிருன்.
"பொறுத்தார் பூமியாள்வார் பொங்கினர் காடாள் Grrrit””
"கடவுளை நம்பினேர் கைவிடப் Lurrfio o இடையில் சிறிது அமைதி. பக்கங்களைப் புரட்டுகிருன்.
*நாய் நன்றியுள்ள மிருகம். அது தனது எசமானக்
கண்டால் வாலை ஆட்டும். 9.
கமலம் அடுப்பு ஊதுவதை விட்டுவிட்டு அவனைப் பார்க்கிருள். அவன் அதனைக் கவனிக்கவில்லை. அவனுக்கு அவள் கூப்பிட்டதும் ஞாபகத்தில் இல்லை. அவன் புத்தகத் தோடு ஒன்றிப் போய்க்கிடக்கின்றன்.
47

Page 26
*(8լ մյ தம்பி நான் கூப்பிட்டது ஒனக்கு கேட்கலியா ஏன்டா அடுத்த வீட்டு அக்காகிட்ட காஞ் ச வெறகு வாங்கிட்டு வா! படிக்கிருராம் படிப்பு. பொறுத்தார் பூமி யாள்வார்.கடவுளை நம்பினேர் கைவிடப்படார். இது என்ன படிப்பு ஒலகத்தோட ஒத்துப் போகாத படிப்பு ஏன்டா பொங்கினர் பூமியாள்வார்னு படி, நம்ம பொறுத்துத் தான் இப்படி இருக்கிருேம். p.9
r ஏ ஒனக்கு ஒன்னுந் தெரியாது பொறுத்தாருچ» * | பூமியாள் வார்னுதான் எங்க வாத்தியாரு படிச்சிக் குடுத் தாரு நீ சொல்றது பிழை."
ஏதோ ஒரு பெரிய பிழையைக் கண்டு பிடித்து விட்டதன் பெருமை அவனுக்கு. அவன் எழும்பி துள்ளிக் குதிக்கிருன். அவள் விறகுக் கேட்டு வாங்கி வரும்படி விரட்டு கிருள்.
இந்தப்படிப்பு. பாடங்கள். அவளது இதயத் திலே 'பளிச்சென' அந்த "அவரின்' நினைவு தோன்றி, மின்னல் போல் உடன் மறையாது அப்படியே நிற்கிறது. !
"ஆ" அவர் தான் இந்தப்படிப்பு இந்த அமைப்பைப் பற்றி எவ்வளவு அருமையாக விளக்கம் கொடுப்பார். அவருக் கெப்படி இதெல்லாம் தெரியும்.? அவர் எப்படி உண்மை களைக் கண்டு கொள்கிருர்? எல்லாம் அவர் போகும் அந்த
வழியில் கிடைத்தது தான.?
சிச்சீ. ! என்ன யோசனை இந்த நேரம்? பானையில் தண்ணியை ஊற்றி அடுப்பில் வைத்து விட்டு அரிசி இருக் கின்றதா எனப் பார்க்கிருள். "குடுச்சாக்கின் அடியில்
 

.. 49.
#^#్ళM#్య ||KO Efes. O சிறிது நேரத்திற்கு முன் அவளது இதயத்தின் அடித் தளத்திலிருந்து புறப்பட்டு வந்து இதயத்தின் மேற்பரப்பில் நினைவுச் சுழிகளை ஒன்ருய் இரண்டாய், பலவாய் தோற்று வித்த அந்த "அவர் நினைவுகள் மெல்லன மறைந்தன.
இப்போது. இந்த அரிசியை ஆக்கி எத்தனைபேர்
சாப்பிடுவது என்ற கேள்வி நெடுமரமாய் உள்ளத்திலே ஓங்கி வளர்கின்றது.
கஞ்சியாவது காச்சுவோம். அவள் தனக்குள் தீர் மானித்துக் கொண்டு நெல்லையும், கல்லையும் பொறுக்கு கிருள்.
அவள் தம்பி கொணர்ந்த காய்ந்த விறகு நெருப்பை மூட்ட உதவுகிறது.
அரிசியை உலையில் போடு கிருள். 'உள்ளே. நாயாளியான அவளது தாய் முனங்கும் முனங்கலும் இருமலும் கேட்கின்றது. இருமலும் தடிமலும் இருமலும் தடிமலுமாய் அவள் படுத்தப்படுக்கையாக எ த் தனை வருடங்களை ஒட்டி விட்டாள்.எத்தனைக் காலமாக அந்தத் தாயும் இப்படியே வாழ்ந்திட்டாள்.'?
ஒரு நல்ல மருந்தெடுத்துக் கொடுப்பதென்ருலும் தாட்டத்து ஆஸ்பத்திரியிலா? அது சாத்தியமாகும்?
"அரசாங்க ஆஸ்பத்திரிக்கி போயி அவளுக்கு பணி
முடுக்கு செய்ய ஆளா இருக்கு.? அவளுக்கு அந்த நோய், ஐயோ!
இந்த வீட்டில் அவளுக்குத் gasfur ஒரு காம்பரா ருக்கா?
நா கண்ணை மூட முந்தி அவளுக்கும் ஒரு வழி"
சய்யனும்' ஒரு தாய்க்கே உரிய ஒரு சாதாரண இந்த சை வார்த்தைகளையும், அம்மாவின் ஏக்கம் நிறைந்த

Page 27
5წ0)
பார்வைகளையும் பல தடவை, பலதடவை கேட்டு விட்டாள் பார்த்து விட்டாள்.
ஸ்தோப்பிலிருந்து அடுப்பூதும் கமலத்திற்கும் அம்மா வின் ஏக்கங்கள் கேட்கிறது. பொங்கி வரும் ஆசைகளை 'மனக்கட்டுப்பாட்டால்" அடக்குவது போல் பொங்கி வரும் உலையில் அகப்பையை விட்டுத்துலாவுகிருள். உலையும் தற் காலிகமாக அமைதி பெறுகிறது.
அவளோடு ஒத்த வயதுடைய செம்பகம், காமாட்சி. எல்லாம் இன்று கைக்குழந்தையோட "குக் குக்." அம்மா இருமும் சத்தம் மீண்டும் மீண்டும்.
அடுத்த வீட்டுக் கருப்பண்ணன் குடித்து விட்டு வந்து போடும் சத்தம் = சண்டை - தூஷண வார்த்தைகள் - அதன் அர்த்தங்கள் - அழுத்தங்கள் அவனது மனைவி “காளியின்" கூப்பாடு.
கமலம் அமைதியாக கஞ்சியை இறக்கி வைத்து விட்டு ‘துவையல்" அரைக்க அம்மியில் கொச்சிக்காயை வைத்து தட்டுகிருள்.
தூரத்திலே அந்த அவர் பாடும் புல்லாங் குழல், ஒசை கேட்கிறது. தன்பெடையை இழந்து தவிக்கும் ஒரு சோகக் குயிலின் இதய விம்மல்கள் அதிலே தொனிக்கின்றன.
தைமாதக் குளிரினிலே அப்பாடசாலைத்தாங்கி வரும் தென்றல் மலை முகட்டில் இடியுண்டு கிராதி வழியே உள் நுழைந்து. அவளது நெஞ்சகங்களின் மேல் கிடந்த சேலைத் தலைப்பை விலக்கி விளையாடுகிறது.
"ஆ, ! என்னு கூதல்?"
இந்த நேரத்தில் அவளது அப்பா அன்ருெரு நாள் சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது.

57
*கமலாவுக்கு வயசு வந்திருச்சு, கல்யாணம் கட்டி வைக்கனும். நம்ம நெலமையில பெருசா அவளுக்கு என்ன செய்ய முடியும்? கட்டிக்கிட்டு போறவேன் சும்மாவா கட்டிக் கினு போவான்.? அத்தோட சின்னஞ்சிறுசுக அதுக" கல் யாணம் கட்டி வாழ ஒரு காம்பரா வேணும்.? நானும் எத்தனையோ தடவை தொறைக்கிட்டே கேட்டுட்டேன். அவே என்ன சொல்ருன்? லயம் இல்லே லயம் இல்லே என் கிருன். இருக்கிற இந்த வீட்டில அல்லாட்டி நம்ம வீட்டுக்கு வருகிற மாப்பிள்ளை வீட்டிலேயும் தான் - இந்த மாதிரித் தான் இருக்கும். எப்புடி நம்ம புள்ளே கஸ்டப்படப் போவுதோ தெரியல. இந்த வெள்ளைக் காரனையெல்லாம் ஒதைச்சி வெறட்டி நம்ம கைக்கு இந்த நெலம் வந்தா..? நம் ம ஒவ்வொருவருக்கும் காம் பரா கிடைக்காமலா போயிரும்.
அம்மியில் அரைத்த துவையலை வழித்து கிண்ணத்தில் வைத்து விட்டு கைகளைக் கழுவுகிருள்.
*அ ப் பா வும் அப்பாவுட்டு யோ ச னை யு ம்..?? அவளுக்குள் சிரிப்பு!
*தோட்டத்தை தேசிய மயமாக்கினு காணி குடுப் பாங்க. நாமே குடிசைக்கட்டி வெவசாயம் செஞ்சு வாழலாம் அப்புடீண்ணு சொன்னங்க. நம்ம தோட்டத்தையும் தான் அரசாங்கம் எடுத்துச்சு. "நீலக்கொடிக்கு கீழே ஒரு எம். பி. பேசினது அவளுக்கு நல்ல ஞாபகம்.
தொழிலாளி எல்லாம் இனிமே தோட்டச் சொந்தக் காரங்க ஆக்கப் போருேம்."
கைதட்டல் கரகோஷம் = ஊர்வலம் - நீலக்கொடிகள் காற்றில் சடசடத்தன!
அந்தக் கூட்டம் முடிந்ததன் பின்பு அவள் அவரைக் கண்ட போது அவன் சொன்னன்.

Page 28
5,2
'நிச்சயம் இதெல்லாம் நடக்காது இ தெ ல் லா ம் ஏமாற்று ஏன்ன இப்பவும் கூட தொழிலாளி ஆட்சி வரல்ல இது பாராளுமன்ற ஆட்சி இது முதலாளிங்க ஆட்சித்தான். வேணுமுணு நான் போயி காணி கேட்டுப் பார்க்கிறேன். காம்பரா கேட்டுப் பார்க்கிறேன்.”
அவள் நினைவில் தோன்றி மறைகின்றன.
அவன் அதே அந்தப் பழைய ஆபீசுக்குப் போகிருன், அதே கதிரைகள், மேசைகள், அதே பழைய துரையின் கதிரையில் ஒரு புதிய துரை. எங்கோ ஒரு தேர்தல் கூட்டத் தில் வாய்கிழியக்கத்திக் கொண்டிருந்த ஆசாமிதான்" புதிய துரை,
வாசலில் யன்னலண்டை நின்ற அவனைப் பார்த்து விட்டுக்கிளாக்கர் புதிய துரையிடம் ஏதோ சொல்கிருர்,
அவன் அமைதியாக நிற்கிருன்.
புதிய கறுப்புத்துரை ஏதேதோ ஆங்கிலத்தில் விளாசு கிருர், ஒரு சில ஆங்கில வார்த்தைகள் அவனது காதினுள் விழுகின்றன.பட்றபள், பொலிடிக்ஸ், ஸ்றைக் அவன் அடிக் கடி கேட்கும் வார்த்தைகள்,
ஆபீஸ் சுறு சுறுப்பாக இயங்குகிறது. சில புது முகங்கள் இரண்டாவது மூன்ருவது கிளாக்கர் ஐயாக்களைக் காணவில்லை. அவர்களது வேலை காலி, காரணம் அவர்கள் U N P. யாம். நம்ம புதிய துரை தொழிலாளியோ? தெரியுது தெரியுது. அசல் தொழிலாளிதான்.அவனுக்குள் ஒரு நக்கல்!
அந்தப் பழைய கிளாக்கர் அதே மாதிரிதான் நடக் கின்ருர்,
'துரையைப் பார்க்க முடியாது"
'காம்பரா வெஷயமா?"
'காம்பரா கெடைக்காது."
SL S LSL L S S SSSLS S SS SS SSL SSS S LLL LLSL L L S LSSL SL LS SS SL S 0LSS0 LSSSS SLL SS
 
 

கோழுமபுதமழச சை
சிட்டிஸன் ஒனக்கு இல்லே, s f داراللهی
அவனுக்கு மீண்டும் அதே அனுபவங்கள். என்ருலும் துரைக்கு சலாம் போட்டு விட்டு அவன் நிற்கிறன்.
துரையின் தலைக்கு மேலே இங்கிலாந்து பாராளுமன்றக் கட்டிடத்தின் "அழகான" படம். அதன் கீழே இலங்கையில் சோஷலிஸம் பேசுவோரின் படங்கள்.
துரையைப் பார்க்கிருன். பழைய துரைக்கு இருந்த அதே முகம் - ஏதோ ஒரு அசிங்கமான பார்க்கக் கூடாத ஒன்றைப் பார்ப்பது போன்ற கஸ்டமான பார்வை.
"என்னு வேணும்.ஆ.?"
பழை ய வெள்ளைக்காரத்துரைக்கும் தமிழ் பேச வராது. இதே போலத்தான் கேட்பார். 'ச்சா" இவரும் இந்தக் கறுப்புத்துரையும் அதே போலத்தான் கேட்கிருர், அவனுக்குள் சிரிப்பு!
'நமக்கு வீடு சின்னது கல்யாணம் கட்டப்போறேன். காம்பரா ஒண்ணு வேணும்."
'ஆ.! காம்பரா? அது எங்கே இருக்கு? நீ பொம்பல கொண்டு வாரது. பழைய காம்பராவிலே ‘எட்ஜஸ் பண்ணி இருக்கப்பாரு. லயம் கட்ட சல்லி இல்லைத்தானே?"
'ஒரே லயத்தில காம்பராவில எப்புடி இருக்கிறது. துரைக்குத் தெரியுந்தானே நம்ம கஸ்டம்.??"
'கரண்ட தயக் நே. - செய்ய ஒண்ணும் இல்லே. நமக்கும் மிச்சம் கவலைதான். ஆணு ஆண்டுவ சொல்ற மாதிரிதான் நாசெய்ய வேணும்."

Page 29
9. S qSS S S SSLLLLL S0 LL LL LLLLLLLLSS S LLS0L SSL LLLL LLL 0LL 0S SSLL0LL0SL SLLLL S S0LLLSLS LLLLS SL LLL LLS
துரை யோசிக்கிருர், சிகரட் துணை செய்கிறது.
"ஆ.! நீ என்ன சங்கம்.? சிவ ப் புச் சங்கம் சிவப்புக்கு வேலை செய்யிறது. ஏ அரசாங்க சங்கத்திலே சேரப் படாது? அரசாங்கம் எல்லா உதவியும் செய்யிறது தானே?
"அரசாங்க சங்கத்தில எனக்கு நம்பிக்கை இல்லே, நம்ம சங்கத்திலதான் நமக்கு நம்பிக்கை."
"ஆண்டுவ சங்கத்தில தொரேமார் எல்லாம் இருக் கிறது. ஒனக்கு ஒதவி கிடைக்குந்தானே?"
"ஓங்க சங்கம் எப்புடி எங்க பிரச்சினையைத் தீர்க்க முடியும்.?"
"இந்தச் சிவ ப் புக் கட்சிக்காரன் இப்புடித்தான் ட்றபள் பண்ணுறது. காம்பரா கிடையாது”
அவன் நிமிர்ந்து நிற்கிருன் அவன் அரசாங்க சங்கத் தில் சேரத் தயார் இல்லை ஆண்டாண்டு காலம் நடந்து வருகிற அடக்கு முறைக்கு எதிராக எதிர்த்து நிற்கிற அணி அன்றே அவன் அணி. இவனுக்கும் இப்படி எத்தனைப்
flag sait...?
*தொழிலாளியை எல்லாம் முதலாளி ஆக்கப் போகி ருேம்."
அவன் இதயத்துள் அலையலையாய் கடல் அலைபோல் வந்து மோதுகிறது.
நீண் ட ஊர்வலங்கள் கோஷங்கள் பேச்சுக்கள் - கொடிகள் மீண்டும் மீண்டும் அவன் மனக் கண்ணிலே தோன்றி மறைகின்றன.
 
 

- 青崖 El G.S,
- "எல்லாம் இந்தப் புதிய துரையைப் போன்றவர் களுக்குத்தான் "வாசியாகுது.
நீண்ட அமைதி. துரை தலையை ஆட்டுகிருர்,
‘எங்க ஆட்சியிலதான் எங்க பிரச்சினையைத் தீர்க்க முடியும்."
9. LLSLLSLLSL LSLLSLLLLS LL LLL LLLL L LLLSLS SSS SSS LS LS SS L LSS
துரையின் சிரிப்பு யன்னலினூடாக பாய்ந்த காற்றில் கலந்து காடு மேடு எங்கும் சென்றே ஒலிக்கிறது.
அவன் ஆப்பிஸை விட்டு இறங்கி நடக்கிருன்.
இந்தக் கதைகளை எல்லாம் அவன் கமலத்திடம் சொன்ன போது அது மூளையின் ஒரு பகுதியிலே அடிமனத் திலே புதைந்து போய்விட்டது. போல, மீண்டும் மீண்டும் இதே நினைவுகளை அவன் நினைவு படுத்தக் காரணம் இல்லா மல் இல்லை.
ஓ! அவளுக்கும் அவனுக்கும் கல்யாணம் என்ருல் ஒரு காம்பரா வேணும் தானே? இல்லை இதுபோல் இன்னும் எத்தனை உள்ளங்களுக்கு.
இந்த ஆட்சியிலேயும் ஒண்ணும் நடக்காது. தொழி லாளி விவசாயி ஒன்றுபட்டு போராடுவதாலேயே இதை மாற்றலாம் என்பாரே அவர், இந்தப் பச்சையும் நீலமும் எல்லாமே போலிதான். இதில் என்ன சந்தேகம்.? நம்ம இரத்தத்தை உறிஞ்சிற கூட்டங்கள்!.
அப்பா, தம்பி தங்கைகள் எல்லோருக்கும் கஞ்சியை ஊற்றி பங்கிடுகிருள். நடு நடுங்கும் கடுங்குளிரினில் சுடச் சுடக் கஞ்சி குடிப்பது ஏதோ இதமாகத் தான் இருக்கிறது.

Page 30
56
ஆனல் அவள் சிந்தனை எங்கேயோ?
"என்னும்மா ஏ ஒரு மாதிரியா இருக்கிற? LD2hua) எவனும் பேசினனு?"
'இல்லே அ ப் பா ஒண்ணுமில்ல. நல்லாத்தானே இருக்கிறேன்."
அவள் அப்பா அவளை நன்முகப் பார்க்கிருன் "ஏம்மா ஒரு கதை கேள்விப்பட்டேன். அது உண்மையா?"
அவள் இதயம், மணிக்கூண்டின் மூன்ருவது முள் போல் சுற்றுகிறது. வழக்கத்திற்கு மாருக ஓடும் பழுது பட்ட மணிக்கூண்டின் முள்ளைப்போல் அர்த்த மின்றி ஒடு கிறது. "ஆ"
"தொங்க வீட்டு ராமுவுக்கும் ஒனக்கும் தொடர் புண்ணு கவ்வாத்துக் காட்டில கதைச்சாங்கே. @@
இல்லே இல்லே அதெல்லாம் பொய்."
தன் மகளை நன்முகப் பார்க்கிருன் அவன். நல்ல உரத்தில வளர்ந்து அழகாக வெட்டப்பட்டு பார்ப்பவரை வசீகரித்து நிற்கும் "சைப்பிரஸ்" போல என்னுமாதிரி இவளும் வளர்ந்திட்டா? இவளுக்கும் ஒரு கல்யாணம். தனிக்குடித்தனம் காம்பரா? சுட்டக் கஞ்சி குரல் வளையி னுாடாக உள் இறங்குகையில் இதயத்தைச் சுடுகிறது!
அவளோ. அப்பா ஏன் பேசாம இருக்கி ரு ர் அவளுக்கு முன்னல - ஐயோ எனக்கு வெட்கமா இருக்குதே அவளேயும் அறியாமல் அவள் குரல் அப்பாவை அழைக் கிறது," -
*அப்பா??
 
 
 
 
 
 
 

57
"நா அதை குறைவா சொல்லல்ல. ஆன உண்மை எனக்குத் தெரியணும். நானும் பல மாதிரி யோசிச்சிட்டேன். வயசுக்கு வந்தப் பொண்ணு. எத்தனை வருஷ மாச்சு. ஏம்மா அதுல என்ன தப்பு? அவே நல்ல பொடியன் ஒ மனசுக்குப் புடிச்சா சரி.
SLL LSL LS S LSLLL S 0 CL L0LL LLL LLLL CS LS S LS S S S S S S S SL S LSLLLS LSSSL LSL LSL 0LLL LSL LLL LLS
அவள் சிக்கித்து நிற்கிருள்!
உழைக்கிற வர்க்கத்திற்காக உழைக்கிற வழியில போற அவரோட ‘வாழ்ற பாக்கியம் கெடச்சுச்சே?
என்னும்மா பேசாம இருக்கிற? இதுவரைக்கும் அந்தத் தம்பி அரசியல் வெஷயமா சொன்னது எதுவும் தப்பினதில்லேயே. அவரு வழி தானே சரியா படுது. அந்த மாதிரி ஆள்தாம்மா இந்தத் தோட்டத்துக்கும் ஏமகளுக்கும் வேணும்."
அவள் சிரிக்கிருள், "நம்ம எல்லாத்துக்கும் எல்லாம் கிடைக்கிற நாள் வந்தே தீரும். அப்பா அதுக்கு அவரு சொல்ற மாதிரி போராடணும்."
தூரத்தே புல்லாங்குழல் வாசிக்கும் ஒசை. அதனூடே அவன் இசைக்கும் அந்தப் போராட்டப் பாடல்கள்.
* 1976ம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழகத்தில் நடாத்தப்
பட்ட சிறுகதைப் பெற்ற கதை.

Page 31
58
8 கோளாயா
"பொறலந்த, ஆவேலி கல்பாலம், கந்தப்பொல, புறுாக்சைட், ருகலை."
"பொறலந்த ஆவேலி, கல்பாலம், கந்தப்பொல, புறுரக்சைட், ருகலை."
ஹஏஸ் வேன் பையன் கத்துகிருன்.
வேன் நுவரெலியாவின் தனியார் வாகனம் நிறுத்து மிடத்திலிருந்து புறப்பட்டு தபால் கந்தோருக்கு முன்னல் ஒரு சுழற்சி சுழன்று ஒடியது.
அவ்விடத்திலிருந்து கூப்பிடு தொலைவிலுள்ள பஸ் தரிப்பில் இருக்கும் ஆட்களை இழுப்பதே இந்த சுழற்சியின் சூட்சுமம்.
பையன் மீண்டும் கத்துகிருன்.
"பொட்டக் நவ த் தி ன் ட் ட - கொஞ்சம் நிறுத் துங்கள்."
'கொகேத யன்னே? ஆ. என் ட என்ட வீட் தென்னங்?"
குழந்தையுடன் நின்ற ஓர் அம்மாவை ஒரு மாதிரி வேனுக்குள் ஏற்றிவிட்டான்.
மீண்டும் வேன் தனியார் வாகனங்கள் நிறுத்துமிடத் தில் நிறுத்தப்பட்டது. உள்ளே இருந்தவர்கள் தமக்குள் முனகிக் கொண்டார்கள். பையன் அதனைப் புரிந்து கொண்டு சிங்களத்தில் கூறுகிறன்.

體 ፳፱oyነ፡ 敷 凯 PAYA W59
// శిరీAD 'இப்போ போருேம். போருேம், பஸ்சுக்கு முன்னல் எப்படியும் போய் விடுவோம்.'
மீண்டும் அதே ஓசை, அதே அந்த இல்லாத வீட்டை” ஏற்படுத்திக் கொடுக்கும் திறமையின் வெளிப்பாடு,
எப்படியோ வேன் புறப்படுகிறது.
மூட்டைகள் அடைந்தது போல் மனிதக் கூட்டம் திணிக்கப்பட்டிருக்கிறது. தன்னை ஒரு வாறு ஆசுவாசப் படுத்திக் கொள்ளும் பையன் உதட்டில் துண்டு சிகரெட் விளையாடுகிறது. கரியநிறம் பரட்டைத்தலை, நல்ல சிங்களப் பேச்சு, பரபரப்புமிக்க சண்கள் அரையில் நாசுக்காய் கட்டப் பட்டிருக்கும் சாரம். இத்தியாதிகளுடன் தினமும் இந்த மஹத்தியா வேனில் தொங்கிக் கொண்டு வரும் "கோளயா" தான் சுப்பிரமணியம் அவனை சுப்பு என்றே அழைப்பார்கள். என்ருலும் தனது தோட்டத்து ஆட்கள் அப்படி அழைப் பதை எல்லாம் அவன் விரும்புவதில்லை,
அலவாங்கு தோட்டத்தில் முத்துசாமி, கருப்பாயி தம்பதிகளுக்கு பத்தாவது கடைக்குட்டியாக வந்து இப்பூ வுலகில் உதித்தவன்தான் சுப்பிரமணியம். நிறத்தில் கருப் பாயியையும், முகவெட்டில் முத்துசாமியையும் நினைவுபடுத்து LIGAGOTe
பத்தாவதுபிள்ளையாக வந்தவன் படிக்க முடியுமா? தோட்டத்துப் பாடசாலையில் ஒரு ஐந்தாம் வகுப்பு வரை வாசித்தான். சனநெருக்கம் நிறைந்த அவர்கள் வீட்டுக் காம்பராவில் இரவில் படுக்கக் கூட இடமில்லாத வேளையில் படிக்க சூழல்' உருவாகவில்லை. ஏதோ ஒப்பம் வைக்க நாலு எழுத்து தெரிஞ்சா பத்தாதா? என்ற காலனித்துவத்தின் மறுபிறவி முத்துசாமி பையனையும் உருப்பட விடவில்லை. ஐந்தாம் வகுப்புடன் படிப்பை முடித்து குருவி, நண்டு, ஒணுன் அடித்துத்திரிந்த சுப்பிரணியத்தை சிறிது நாளில்

Page 32
60
டவுனில் சுருட்டுக் கடை வைத்திருக்கும் ஆறுமுகத் திடம் கொண்டு போய் விட்டான். வெற்றிலை, பாக்கு, பழம், சுண்ணும்பு, இனிப்பு, புகையிலை, எனப்பல்வகை பொருட் களை விற்கும் வியாபாரியான ஆறுமுகம், சாப்பாடு கொடுத்து மாதம் ஐம்பது பையனின் பெயரில் புத்தகத்தில் போடுவ தாகக் கூறி வேலைக்கு சேர்த்துக் கொண்டார்.
"சும்மா இருந்து சாப்பிட இயலுமா? ஏதாவது நாலு பணம் ஒழைக்க வேண்டாம். என்ற கொள்கையின் அடிப் படையில் அவன் கடையில் சேர்க்கப்பட்டான்.
'நீர் ஒன்றும் கவலைப்படாதேயும். பையனை நாங்கள் பார்த்துக் கொள்கிருேம்."
என முதலாளி உறுதிமொழி பகர்ந்தார். அதி காலை யில் எழுவது கடையின் முற்பகுதியை, வாசலை கழுவுவது. மஞ்சள் நீர் தெளிப்பது, ஊதுபத்தி பற்ற வைப் ப து. வெற்றிலையை பிரித்து அடுக்குவது சாமான் கட்டிக் கொடுப் பது மா லை யி ல் "பில்கலக்ஷன்" போவது. இப்படியே சுப்பிரமணியமும் சுருட்டுக் கடையில் சுழலலானன்.
காலம் ஓடியது. சுப்பிரமணியம் துருதுருத்தவன். நகரில் நாலையும் கற்றுக்கொண்டான். எல்லோருக்கும் தன்னை அறி முகம் செய்து கொண்டான். நகரம் அவனுக்குப் பிடித்தது. அவன் நகரைப் பிடித்துக் கொண்டான்.
இவ்வேளையில். தீபாவளி களை கட்டியது.
முத்துசாமி தீபாவளிக்கு பையனை வீட்டுக்கு அழைத்து வர கடைக்கு வந்தான் முதலாளியிடம் விசயத்தைக் கூறி பையனின் சம்பளத்தைக் கேட்டான். புத்தகத்தில் பணம் உள்ளதாகக் கூறிய முதலாளி 50 ரூபாவுடனும், ஒரு சாரத் துடனும் பையனை வீட்டுக்கு அனுப்ப முயன்ருர்,

2. ' " " ", "sy"
தண்ணிை கொஞ்சம் 'பாவித்து விட்டு வந்திருந்த முத்துசாமி கண்டபடி உளரத் தொடங்கி விட்டான். அவன் போட்ட சத்தம் அந்தக் கடைக்கு முன் ஒரு கூட்டத்தை யே கூட்டி விட்டது. மானம் போவதை உணர்ந்த முதலாளி ஏதோ கொடுப்பதைக் கொடுத்து கணக்கைத் தீர்த்தார்.
தீபாவளி கலகலப்பு முடிய சுப்பிரமணியம் மீண்டும் டவுன் கடைக்குப் போகவில்லை. அவன் ல யம் வழியே நகர பாணியில் திரிந்தான். முத்துசாமி மீண்டும் பையனைப் பற்றி யோசித்தான். அவனை எப்படியாவது சம்பாதிக்கும் ஆளாக்க வேண்டும் என்ற எண்ணம் மீண் டு ம் துளிர் விட்ட வேளையில் 'மஹத்தயா? வேன் ஞாபகமும் கோளயா வேலையும் மனதில் நிழலாடியது,
நாட்டுக்கு "மஹத்தயா' வீட்டுக்கு கள்ளுக்குடிக்கப் போன முத்துசாமி கோளயா வேலையையும் ஒழுங் கு பண்ணிக் கொண்டான். அது அடுத்த நாளே நடைமுறைக்கு வந்தது.
வேன் கந்தப்பளையை வந்தடைந்தது. எங்கும் பணிப் புகார் மண்டலம் மிக லாவகமாக கதவைத் திறந்து ஆட் களை "பயிண்ட பண்ணினன் கந்தப்பளைக்கு பணத்தைக் கொடுத்து அங்கு இறங்காது உள்ளே இருந்த ஓர் அம்மா வைச் சாடினன். பரவாயில்லை, தமிழ்ப்பையனின் வாயில் சிங்களத்தூஷணம் நன்ருகத்தான் ஒலித்தது.
கிழங்கு தோட்டத்தில் வேலைக்கு வரும் கூட்டம் வேனுக்குள் நுழைந்தது. புளி மூட்டைகளை அடுக்குமாப் போல் யாவரையும் திணித்தான்.
"அன்னைக்குமாதிரி அரை குறை காசு குடுக்கிறதில்லே முழுக்காசு வேனும்."
என ஒரு சிவலை அம்மாவைப்பார்த்து எச்சரித்தான்.
வெற்றிலைக் காவி நிறைந்த தனது வாயைத் திறந்து எல் லோருக்கும் காட்டிச் சிரித்த அந்த அம்மாள்,

Page 33
62
"என்னுத்தம்பி முத்துசாமி மவனே பேச்சுக் கூட கொளறுதே, அட நானதாண்டா ஒன்னை மடியில போட்டு கால்கை கழுவி வளர்த்த அம்முணி..."
என்ருள்.
அதனைக் காதில் போட்டுக் கொள்ளாத சுப்பிரமணியம் வேன் புறப்பட "ரைட்" போட்டு விட்டு ஒடித் தொத்தி ஏறினன். அவனது ஷேர்ட்டும், தலைமயிரும் கந்தப்பளை காற்றுக்கு அழகு காட்டியது.
"புறுாக்சைட், சூரியகந்த, ருகலை"
99 99 P p
- சுப்பிரமணியம் கத்தினன். காரணம் கந்தப்பளை இறைச்சிக் கடைக்குப்பக்கத்தில் ஒரு கூட்டம் நின்றதுதான் டிரைவரும் சற்று நிறுத்திப் பார்த்தார் அவர்கள் சிரித்த படியே ருேட்டோடு நடந்தனர். பளபளக்கும் உடலில் மினுமினுக்கும் கவுன்கள் காற்றுக்கு யெளவனம். காட்டின வேன் காரணின் கரம் ஹோனில் பட்டு ஒலித்தது.
சுப்பிரமணியம் ருேட்டு வளைவில் கழுத்தை நீட்டிப் பார்த்தான்.
"கவுதோ ஹாய்பைகாரயோ?"
யாரோ பெரிய ஹாய்பைகாரர்கள் என முனகிக் கொண்டான்,
"ஆ, காசு எடுங்க. எடுங்க"
என தனது விரல் இடுக்கில் இருக்கும் நோட்டுக்களைச் சரி செய்து கொண்டு பிரயாணிகளை மிரட்டினன்.
*காசு குடுத்துதானே போருேம் சும்மாவா போருேம் இறங்கையிலே தாருேம்.

egy
63
area gas
வன்"இரைந்தான்.
வேன் ஓடியது. தனதுஉடலை உள்ளே சீட்டுகளுக் கின்டயில் திணித்து, நுழைத்து நோட்டுக்களைக் கறந்தான் சுப்பிரமணியம்.
வேன் புறூக்சைட் சந்தி வந்த நின்றது ஒரு பெரிய கூட்டம் வேனுக்காக காத்து நின்றது ஒரு சிறிய கூட்டம் வேனிலிருந்து இறங்கியது.
சுப்பிரமணியம் மீண்டும் மனித மூட்டைகளை உள்ளே அடுக்கினன் நல்ல சனம் டிரைவருக்கு நல்ல சந் தோஷம் வழமைபோல் 'ஹரி ஹரி எனக் கத்தி ன ன் சுப்பிரமணியம். வேன் குலுக்கலுடன் புறப்பட்டது. சுப்பு பின்னல் தொத்திக் கொண்டு வந்தான்.
திடீரென வேனின் முன்னுல் நாய் ஒன்று பாய்ந்தது. டிரைவர் பிரேக் ஒன்று போட்டான். மீண்டும் வேன் திடீரெனப் புறப்பட்டது முதல் பிரேக்குடன் கீழே விழுந்த சுப்பு பாதையில் கிடக்க வேன் வேகமாக ஓடியது அவனுக் கும் வேனுக்கும் இடையே இடைவெளி நீண்டுகொண்டிருக்க பிரயாணிகள்,
'கோளயா விழுந்திட்டான்"
'கோளயா விழுந்திட்டான்"
என அலறினர்கள்.
வேன் நிறுத்தப்பட்டது. எல்லோரும் ஒடோடி வந்து சுப்புவைத் தூக்கினர்கள். மண்டையில் அடிபட்டு இரத்தம் ஓடியது. வேனுக்குள் ஏற்றப்பட்ட சுப்பு இருகலை நோக்கி எடுத்துச் செல்லப்பட்டான்.
அவன் மயக்கத்தில் ஆழ்ந்திருந்தான். முனகினன்.
"ஆவேலி,. பொரலந்த. கல்பால. . ம் 'ஆ.வே.லி. பொரலந்த. கல்.பா.ல.ம். இ.ரு.க.ல?"
'4......Gal...... მწ)., 9 °
"இந்த நாட்டில் இது போல் இன்னும் எத்தனை *கோளயாக்கள்". சுப்பிரமணியமாய் பண்டாவாய்
நஸிராய். பிஞ்சுவயதில் உழைப்பை விற்கின்றனர்."

Page 34
64
9 தன்மானம்
மணி ஐந்தரை இருக்கும். அது மாரி காலம். ஒரே இருள், பனி, குளிர், ஈரலை கூட வாட்டி வதைப்பது போல் அக்குளிர் இருந்தது. (, 3
சில்லென்று நீரை எடுத்து வரும் காற்று ஸ்தோப்பு கிராதி வழியே உள் நுழைந்து தூக்கத்தில் ஆழ்ந்திருந்த வர்களை சீண்டி சிரித்தது.
மாரியாயி திடுக்கிட்டு எழுந்தாள். நிதானக் கணக்கில்
நேரத்தினை பார்த்தாள். எப்படியும் ஐந்து மணி தாண்டி யிருக்கும்.
அடுப்பில் நிறைந்திருந்த சாம் ப லை கரண்டியால்
சுரண்டி எடுத்துவிட்டு, விறகை வைத்து நெருப்பை மூட்டினள்.
மாரியாயியின் வழமையான வேலைகள் இவை, அவளது வாழ்க்கை ஒட்டத்தில் ஒவ்வொரு மணிச் சில்லுகள். அவை சுழன்ருல்தான் வாழ்க்கை வண்டியும் நகரும்,
அவள் தேயிலை மலை ஏறத்தான் வேண்டும். பனி குளிரில் வாடத்தான் வேண்டும். அவற்றை எல்லாம் மாற்ற முடியாது. மாற்றுவதென்ருலும் காலம்தான் பதில் கூற வேண்டும்.
மாரியாயி கேத்தலை அடுப்பில் வைத்து நீரை சூடாக் தியபோது அவளது மகன் தங்கராசுவின் ஞாபகம் வந்தது. நேற்று இரவும் நெடு நேரம் வரை அவன் அழுதுவிட்டுப் படுத்ததும் ஞாபகத்திற்கு வந்தது
 

li jt, எல்லாம் ஒரு வெள்ளை ஷேர்ட்டுக்காகத்தான். அதனை ண்ணியபோது அவளது மனம் துடித்தது.
தங்கராசுவும் இரண்டு மாதங்களாய் ஒரு வெள்ளை ஷேர்ட்டினைக் கேட்டு நிற்கின்றன். அவனது பள்ளிக்கூடத் தில் எல்லோரும் வெள்ளை ஷேர்ட் அணிய வேண்டும் என்று பணித்துள்ளார்கள் இது அவளுக்கு ஒரு பெரிய தலைப்பா ரமாக இருந்தது!
*“
மாரியாயியும் ஷேர்ட்டை வாங்கி கொ டு க் க வே விரும்பினள். ஆனல் எதிர்பாராத செலவுகள் குறுக்கே நின்றன. அதில் ஒன்று அவளது மூத்த மகள் பருவம் எய் தியது. அந்தச் சடங்கு சம்பிரதாயங்கள் ஒருவாறு நிறை வேறும் வேளையில் இளையவனுக்கு அம்மை கண்டது.
இப்படியே தொடர்கின்ற முடிவில்லாத துயரக் கதை ஒரே அவலத் தன்மையுடனேயே ஒடிக் கொண்டிருக் கின்றது. அன்ருட வாழ்க்கைச் செலவும் உயர்ந்து கொண்டு போகின்றது. மாரியாயிக்கு என்ன செய்வதென்றே தெரிய வில்லை. எப்படியாவது இந்த மாதம் வாங்கிக் கொடுப் போம் எனத் தனது மனதுக்குள் உறுதி எ டு த் து க் கொண்டாள் மாரியாயி.
அன்றும் ஷேர்ட் இல்லாமல் பாடசாலை போக முடியா தென தங்கராசு கூறியது ஞாபகத்திற்கு வந்தது. அந்த நினைவுகளுடனேயே அவள் வீட்டு வேலைகளை மிக வேகமாக செய்ய ஆரம்பித்தாள்.
சோறு, கறி வேறென்ன பெரிதாக செய்து கிழித்திட முடியும்?
உள்ளே காம்பராவுக்குள் தங்கராசு மு ன குவ து கேட்டது "தூக்கத்தில் முனகுகிருன் போல' என அவள் மனதுள் நினைத்தவாறே காம்பராவுக்குள் எட்டிப் பார்த் தாள். தங்கராசு படுக்கையை விட்டு எழுந்து உட்கார்ந்

Page 35
翰G
திருந்தவாறு அழுது கொண்டிருந்தான். மற்ற ஜீவன்கள் எல்லாம் அங்கும் இங்குமாகப் பஞ்சு மூட்டைகளாகக் கிடந் தன.
மாரியாயி தங்கராக அருகில் போய்
'ஏன் அழுற வா தேத்தண்ணி குடிக்கலாம்" என்ருள்
'எனக்கு ஷேர்ட் வேணும். என்று அழுதான்.
மாரியாயி அவனை ஆதரவாக அழைத்துச் சென்று ஆறுதல் சொன்னுள். கொதித்து சுட்ட நீரில் நிறைய சீனி போட்டு “பிளேண்டி' தயார் செய்து கொடுத்து தாஜா பண்ணினுள். அந்தக் குளிரில் அது அவனுக்கு இதமாய் இருந்தாலும் வேண்டா வெறுப்பாகக் குடித்துக் கொண்டே "ஷேர்ட்டு இல்லாட்டி நான் ஸ்கூலுக்கு போகமாட்டேன்' என்று பிடிவாதம் செய்தான்."
மாரியாயிக்கு நிலைமையைச் சமாளிக்க நேரம் இல்லை. அவளுக்கு சோலி அதிகம் பிள்ளைகளுக்கு சாப் பாடு கொடுக்க வேண்டும். பாடசாலைக்கு அனுப்ப வேண்டும். தானும் மலை ஏற வேண்டும் அதுவும் இன்றைக்கு மேமலை உச்சியில் கொழுந்து. அந்த அவசரத்தில் அவள்.
"சரி சரி நீ இரு. ஸ்கூலுக்கு போகாத" என்றவாறு அ வ ள து வேலை க ளை ச் செய்யத் தொ ட ங் கி  ைள். தங்கராசுவுக்கு அந்தப் பதிலும் திருப்தி அளிக்கவில்லை.
'எனக்கு நாளைக்கு ஸ்கூலுக்கு போறதுக்கு முன்னமே ஷேர்ட்டு வாங்கித்தா...' என சிணுங்கினன்.
வெட்டிய கத்தரிக்காயை தாச்சியில் இட்டு வதக்கிய அவள், "சரி...சரி எப்படியாவது இன்னைக்கி ஷேர்ட் வாங்கித் தாரேன்' என்ருள்.

N," " " (" " "m"
67
இதற்கிடையில் الملله j iij, ki anför ம் எழும்பி ஆர்ப்பாட்டம் செய்ய எல்லோரின் தேவைகளையும் கவனித்து முடித்து பாடசாலைக்கு அனுப்ப முயன்ருள்.
தங்கராசு எதிலும் திருப்தி அடையாதவனுய் முனகிக் காண்டே இருந்தான்
“இன்னைக்கி ஒரு ஆள் ஸ்கூல் கட்...' என்று சின்ன
ன் சொன்னன். அது கேட்டு தங்கராசு ஏழு மணி சங்கு
போல் வீரிட்டான். மாரியாயி இந்த அக்கப்போரை அடக்க
சின்னவன் முதுகில் இரண்டு வைத்தாள் தங்கராசுவின் உள்ளம் குளிர்ந்தது
தங்கராசு அம்மாவின் ஏகபுதல்வன் போல் செல்ல மாகவும் ருங்கியாகவும் பலகைக் கட்டையில் அமர்ந்து கொண்டு அழகு காட்டிஞன்.
தங்கராசுவுக்கு இன்னும் தி ரு ப் தி ஏற்படவில்லை பின்னர் திடீரென, 'நானும் ஸ்கூலுக்கு போறேன்’ என்று அழுதான்
"சரி சரி நீயும் போ, நாளைக்கு வெள்ளை ஷேர்ட்டு வாங்கித் தாரேன். வாத்தியாருக்கிட்டேயும் சொல்லு.'
தங்கராசு மனம் மாறி உடனே சகல கடன்களையும் முடித்துக் கொண்டு தாயாருடன் பள்ளிக் கூடத்துக்குப் புறப்பட்டான். -
தங்கராசுவும், மாரியாயியும் சாளை ருேட்டு வழியே நடந்தனர். ஏனைய பிள்ளைகள் யாவரும் முன்னரே புறப் பட்டு விட்டனர். மாரியாயி போகும் வழியிலே போய். முச்சந்தியில் பிரிந்தால் கீழ் ருே ட் டி ல் த ங் க ராசு பாடசாலைக்கு போக வேண்டியது தான்.
அவர்கள் போய்க் கொண்டிருந்த அதே நேரம் அதே வழியாக பள்ளிக்கூட வாத்தியார் ஒருவரும் வந்து கொண் டிருந்தார். தங்கராசு அதனைக் கண்டு கொண்டான். தனது

Page 36
68
அம் மா வின் முன்முனையைப் பிடித்து இழுத்தவாறே, "வாத்தியாரு வாருரு." என்ருன்.
மாரியாயி வாத்தியாரைக் கண்டவுடன் சற்றுத் தயங் கியவாறே சேலையைச் சரி செய்து கொண்டாள்.
"சார்' என்ருள்.
ஏன்" என்றவாறே அவர் நின்ருர்,
மாரியாயி தனது வீட்டுப் பிரச்சினையையும், பையனின் வெள்ளை ஷேர்ட்டு விவகாரத்தையும் கூறினுள். வாத்தி யாரின் நெற்றியில் மின்னல் கோடாய் சுருக்கங்கள் படர்ந் தன.
"வெள்ளை ஷேர்ட்டு கட்டாயம் போட வேண்டும் என்று ஒன்றில்லை. ஆனல் எல்லாப் பிள்ளையஞம் போடயிக்க பையனும் போட்டாத்தான் நல்லா இருக்கும். இல்லேன்ன பையனுக்கு தாழ்வு சிக்கல் ஏற்படும்’ என்ருர்,
அடுத்த மாதம் கட்டாயம் வாங்கிக் குடுக்கிறேனுங்க, பையனை அதுவரைக்கும் அது பத்தி கேட்காதீய." என்று கூறிவிட்டு கூடையைத் தூக்கிக் கொண்டு புறப்பட ஆயத்த மானுள் மாரியாயி.
"சரி...சரி. வசதிபோல வாங்கி குடுங்கோ நான் ஹெட் மாஸ்டருக்கு இது பத்தி சொல்றன்.'
பெரிய இக்கட்டிலிருந்து விடுபட்ட ஒருவனைப் போல தங்கராசு வாத்தியாருக்கு முன்னதாகவே குறுக்கு ருேட்டில் இறங்கி பாடசாலையை நோக்கி ஒடிஞன்.
சாளை ருேட்டில் இறங்கி நடந்த வாத்தியாருக்கு ஷேர்ட் விவகாரம் உள்ளத்தைக் குடைந்தது.

ܗܼ. ,"*, - مر
69
சாதாரண ஷேர்ட் விவகாரமாக இருந்தாலும் அது எவ்வளவு தூரம் மாணவனின் உள்ளத்தில் பாதிப்பை ஏற் படுத்துகிறது என்பதை எண்ணினர். ஏழ்ழை, வறுமை, துன்பம், கல்வி முன்னேற்றம் இப்படி பல் சொற்கள் சிந்தனை வட்டத்துக்குள் சுழன்றன.
தங்கராசுவுக்கு ஒரு வெள்ளை ஷேர்ட் வாங் கி க் கொடுக்க வேண்டும் என அவர் தீர்மானித்து விட்டார். ஒரு கடைக்குள் நுழைந்து தங்கராசுவுக்கு அளவான வெள்ளை ஷேர்ட் ஒன்றை வாங் கி க் கொண்டு பாடசாலைக்குச் GeFGörgrř.
பாடசாலை விடும் வேளையில் தங்கராசுவை தனியாக அழைத்துப் பார்சலை கொடுத்தார். பார்சலை வாங்கி பிரித்து பார்த்த தங்கராசு, "நன்றி. வேண்டாம் சார்.” எனக் குழைந்தான். نة يثية د تيم ؟ أسسه * * * و تمتة ، له من
கந்தசாமி ஆசிரியர் எவ்வளவு கூறியும் அவன் பார்சலை ஏற்கவில்லை. نے عیخ "ii" : 4 ***** *,18:3:بن مرتبہ تنة بنیاد رہ
,
"அம்மா வாங்கித் தரும் சேர்.” என்று மாத்திரம்
அவன் சொன்னன். ٹیب۔
அந்தப் பழைய ஷேர்ட்டை அணிந்து கொண்டே அவன் பாடசாலைக்குச் சென்று கொண்டிருக்கின்றன். தனக்குப் புதிய ஷேர்ட் இல்லையே என அவன் இப்பொழுது அடம் பிடிப்பதே இல்லை.
சிந்தாம்ணி 1981
= 、 கொழும்பு *!pക് (ജ.
ქr“ჯეჯ% 尊 ###్క

Page 37
ഥീ u5 வெளியீட்டகத்தின் வெ ளியீடுகள்.
リ。 من كلية .3 . تعدل: -
* சி. வி. சில சிந்தனைகள் (1986) 17-50
- சாரல் நாடன்
* தியாக யந்திரங்கள் (1986) 1 1s00 వ##; } -- சு. முரளிதரன் ܫܬ * குறிஞ்சி தென்ன்வன் கவிதைகள் (1987) " 12:00 - குறிஞ்சி தென்னவன்
* யெளவனம் (1987) r. . . . 25=00 氹”、 - தேவதாசன் ஜெயசிங்
கூடைக்குள் தேச்ம் (1988) ་་་་་་་་་་་་་་་་་་་ 10-00
- சு முரளிதரன் -
தேசபக்தன் கோ. நடேசய்யர் (1988) 75-00
- சாரல் நாடன்
* ஒவியம் (1988) 000
 ைசி. ஏ. எலியாசன்
* லாவண்யம் (1988) 25 00 سے
- தேவதாசன் ஜெயசிங்
HILL COUNTRY PUBLISHING HOUSE * * * * 57. MAHINDA PLACE
" + js ܫ MBO 6 ,(p今+"° ாழுமபு:தமிசி SRI LAN KA
繳 rrga}35 ÁÁD
 
 
 


Page 38
மேகமலைகளின் ராகங் களைத் தரும் மொழிவரதன் ஊவாப்பகுதியின் ஹாலிஎல வை பிறப்பிடமாக கொண்ட வர். ஹாலிஎல மு வி. - பதுளை சரஸ்வதி த ம. வி. ஆகியவற் றின் பழைய மாணவரும் பேராதனைப் பல்கலைக் கழக கலைப் பட்டதாரியுமாவார்.
அறுபதுகளின் பிற்பகுதி யில் எழுதத் தொடங்கிய இவர் குமரன், பூங்குன்றம், மல்லிகை பாரதி, சிந்தாமணி, தினகரன் வீரகேசரி, கொ ந் த ளி ப் பு இன்ஸா, நதி, ம ணி ம ல ர் (வானெலி) முதலியவற்றில் கவிதைகளுடாகவும் கதை களூடாகவும் ஏ ரா ள மா Gð வா சக ர் களை சந் தி த் து வசீகரித்துக் கொண்டவர்.
 

இவரின் ஆரம்பகால எழுத் துக்கள் சாரணுகையூம் நிசார், தமிழ்மாறன், செ. கணேச லிங்கன், மு. நித்தியானந்தன், செ. சற்குணநாதன் முதலா னுேரின் விமர்சிப்புகளாலும் ஊக்குவிப்புகளாலும் நெறிப் படுத்தப் பட்டிருப்பது பிற் கால எழுத் து க ளி ன் பிர காசிப்புச் சூ ட் சு ம த் தை வெளிக்காட்டுகிறது.
இவரின் சிறு க தை க ள் பேராதனைப் பல்கலைக்கழக த மி ழ் ச் சங்க பரிசினையும் கொழும்பு தமிழ்ச்சங்க பரி சினையும் பெற்றிருப்பதோடு கலாவல்லி சஞ்சிகையின் குறு நாவல் போட்டியிலும் இவரது குறுநாவலான "புதய மலர்கள் மலர்கின்றன" பரிசுபெற்றுள் Tெது.
தற்போது நு | அக்கரப் பத்தனை கொத்தணி தலைமைப் பாடசாலையில் கொ த் த னி அதிபராக கடமையாற்றுகிருர், ஹாலிஎல மறுமலர்ச்சி மன்றம், பதுளை சிந்தனை ஒன்றியம், கண்டி நதி இலக்கிய வட்டம் முதலிய இலக்கிய இயக்கங் களோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த இவர் தற் போது மலையக கல்வி அபி விருத்தியில் நாட்டங் கொண் டுள்ளார்.
சு. முரளிதரன் தினகரன் (31-10-88)