கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஒரு நாடும் மூன்று நண்பர்களும்

Page 1


Page 2


Page 3

ஒரு நாரும் மூன்று நண்பர்களும்
(குறுநாவல்கள்)
- மொழிவரதன் -
வெளியீடு
சாரல் வெளியீட்டகம் கொட்டகலை.
ി Ky ებზ у 6)WONA)
1977, பேராதனை வீதி, கனடி 08 - 234755

Page 4
வெளியீடு
முதற்பதிப்பு
நூற்பெயர்
உரிமை
வெளியீடு
பதிப்பு
அட்டைப்படம் :
விலை
: 4
: GöFüGLubuff 2001
: ஒரு நாடும் மூன்று நண்பர்களும
(மூன்று குறுநாவல்கள்)
: வெளியீட்டகத்தாருக்கு
: சாரல் வெளியீட்டகம்,
7, பல்கூட்டுச்சந்தை, ரொசிட்டா கடை வீதி, கொட்டகலை.
: ஞானம் பதிப்பகம்,
19/7 பேராதனை வீதி, கண்டி. 08 - 234755
நா.ஆனந்தன்
:90/=
ISBN 955 - 8354 - 06 - 6

சமர்ப்பணம்
என்னை ஈன்று இந்த மண்ணையும் மக்களையும் நேசிக்க உணர்வூட்டி விண்ணுலகம் சென்ற
எனது தந்தை பழனிவேல் கருப்பையா அவர்களுக்கும் தாயார் கண்மணிக்கும்

Page 5
வெளியீட் C6)
மெது வெளியீட்டகத்தின் நான்காவது வெளியீடு ‘ஒரு நாடும் மூன்று நண்பர்களும்'.
சிறுகதைகளைப் போலவே பல குறு நாவல்கள் மலைநாட்டிலிருந்து எழுதப்பட்டிருக் கின்றன. பல்வேறு போட்டிகளுக்கென எழுதப்பட்ட அவைகள் இங்கும் அங்குமாக உறங்கிக் கொண்டிருக்கின்றன.
அவைகளில் ‘மூன்றை உங்களுக்குத் தருவதில் மகிழ்கிறோம்.
7, பல்கூட்டுச் சந்தை, நிர்வாகி, ரொசிட்டா கடை வீதி, சாரல் வெளியீட்டகம் கொட்டகலை.

என்னுரை
எனது மூன்று குறுநாவல்களும் ஒரே தொகுதியாகி வெளிவருவதையிட்டு மனம் மகிழ்கிறேன். அவை ஒவ்வொரு காலகட்டத்தில் எழுதப்பட்டவையாகும்.
அவ்வவ் காலப்பிரச்சினைகளை மையமாகக் கொண்டு எழுந்தவையாகும். என்றாலும் சில பிரச்சினைகள் காலத்தைக் கடந்து தொடர்ந்தும் நிகழ்வனவாகி உள்ளன.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நான் பயின்ற காலத்தில் பெற்ற சுயஅனுபவங்களின் கலவையாகி வெளி வந்ததே ‘ஒரு நாடும் மூன்று நண்பர்களும் குறுநாவல்.
எனது உள்ளத்தில் ஆழ்ந்து உறைந்துபோன பசுமை நினைவுகள் அவைகள். சிறிபால, சந்திரன், கணபதி, சுஜாதா, சுருட்டைத்தலை சுந்தரம் இன்றுமே உயிரோடு உலாவும் மனித ஜீவன்கள்.
அந்த அழகான எழில்மிகு மஞ்சள்பூ தாங்கிய மரங்கள், மகாவலி நதியை முத்தமிட்டெழும் மூங்கில்கள் இன்றும் வாழுபவை.
அந்த் மனித ஜீவாத்மாக்களின் ஆசாபாசங்கள், பிரச் சினைகள், உணர்வுகள், கனவுகள் பொதுவானவையாகும்.
அவர்கள் வெறும் வார்ப்புகள் அல்ல. இந்நாட்டு தேசியப்பிரச்சினையின் பிறப்புக்கள். இவர்கள் இதமாக வாழ முடியாதா? இவர்களின் இன இணக்கப்பாட்டுக்கான இதயத் தாகங்கள் தீராதா? என்ற ஆதங்கம் இக்குறுநாவலினுடாக இழையோடுகிறது. இந்நாட்டில் காலங்காலமாக அரசியல் செய்பவர்களால் பேசப்படுவதற்கும், ஆளப்படுவதற்கும், அடக்கப் படுவதற்கும் ஆயுதமாகிப்போன இனமுரண்பாடு நாவலின் நாடி யாகவும், நாதமாகவும் உள்ளது. தெற்கிலே காலியிலிருந்து வந்த சிறிபால, மலையகத்திலிருந்து வந்த சந்திரன், யாழ்ப்பாணத் திலிருந்து வந்த கணபதி இன்றும் எரிந்து கொண்டிருக்கின்ற
O
இந்தப் பிரதேச மக்களது உணர்வுகளுக்குச் சொந்தக்காரர்கள்.
‘புதிய மலர்கள் மலர்கின்றன, உழைக்கும் ஒரு

Page 6
தோட்டத் தொழிலாளி வர்க்கத்தினதும் சிங்களக் கூலிவிவசாயக் கூட்டத்தினதும் வாரிசுகளினது கதையாகும்.
பிரித்தானிய ஏகாதிபத்தியத்தினதும் தேசிய முதலாளித் துவத்தினதும் குளறுபடிகளால் சிக்கலாக்கப்பட்டதே இவர்களது பிரச்சினை ஆகும். பல வரலாற்று ஆசிரியர்களாலும்கூட இந்தியத் தமிழர் கண்டிய அல்லது மலையக சிங்கள விவசாயி களினது எதிரிகளாகக் காட்டப்பட்டுள்ளமை விசனத்துக்குரிய தாகும்.
உழைப்பை மாத்திரமே மூலதனமாக இந்த மலை களில் இட்டவர்கள் பெருந்தோட்டத் தொழிலாளர்கள். அவர்கள்தம் வாழ்வும் கனவும் வறுமையும் பெருமூச்சுக்களும் அந்த உயர்ந்த மலைகளில் ஒலித்த வண்ணமே இன்றும் உள்ளன.
பசுமையான அழகான வயல் வெளிகளும் மேகங் களும் சூழ்ந்த தேயிலைத் தளிர்களும் வளமாகச் செழித்துக் கிடக்க ஏன் இவ்விரு இனங்களும் நேச உணர்வுடன் வாழ முடியாது? இவர்களின் இவ்விணக்கப்பாட்டுக்கு தடையாக இருப்பது யார்?, எது? போன்ற இன்னோரன்ன கேள்விகளையும் பதில்களையும் புதிய மலர்கள் மலர்கின்றன தருகின்றது.
நிலப்பசி மற்றொரு குறுநாவல். ஒரு பாடசாலையைக் களமாகக் கொண்டு இக்கதை நகர்கின்றது.
மனித தேவைகள் பல. உணவு, உடை, உறையுள், பாதுகாப்பு எனப்பல. அந்த வகையில் நிலமும் - இடமும் மனிதனின் ஒரு தேவையே. மலையகப் பாடசாலைகளில் மற்றொரு சாபக்கேடான காணிப் பிரச்சினை, நில அத்துமீறல்கள் இந்நாவலில் பேசப்படுகிறது.
நிலத்தேவையும் ஒரு பசிதான். ஆனால் தனி மனிதனுக்கு ஏன் அவ்வளவு ஆனது? சின்னையாவைப் போன் றோர் சுயமாகச் சிந்தியாதவரை வெகுஜன எழுச்சியே இதற்குப் பதிலாக அமையும் என்பதை கதை சொல்லிச் செல்கிறது.
இந்தத் தொகுதி வெளிவரப் பலர் காரணமாக இருந் துள்ளனர்.
“எழுதுங்க சேர்” என்று என்னை அன்புடன் நொந்து கொள்ளும் எனது இலக்கிய நண்பரும் எனது இலக்கிய

ஊற்றுக்கு உயிர் கொடுப்பவருமான அந்தனி ஜீவா அதில் ஒருவர்.
எழுத்தாளர்கள் தம் நூலை எப்படியாவது வெளிக் கொணரல் வேண்டும் என்று வேகத்துடன் செயற்படும் நண்பர் சாரல்நாடன் மற்றொருவர். எனது நன்றிக்கு மிகஉரித்தான அவர் பணி விதந்துரைக்க வேண்டியது.
அத்தோடு இணைந்து “ஞானம் இதழாசிரியர் திரு தி.ஞானசேகரன் ஞானத்தில் எனக்கொரு களத்தைத் தந்து உற்சாக மூட்டியவர்.
மேலும் முரளிதரன், கெ.சற்குருநாதன் போன்றோர் களும் உற்சாக மூட்டியோராவார்.
இவை அனைத்திற்கும் ஒரு இணை பாலமாகக் களமாகித் திகழ்வது கொட்டக்கலை இலக்கியவட்டம் எனில் மறுப்பதற்கில்லை. புதுத்தெம்புடன் புறப்பட்ட இவ்விலக்கிய வட்டத்திற்கும் நன்றியுடையவனாக உள்ளேன்.
‘ஒரு நாடும் மூன்று நண்பர்களும் குறுநாவல் வெளிவர சாரல் வெளியீட்டகம் காரணமாகி இருந்துள்ளது.
எது எவ்வாறெனினும் எழுத்தாளனைப் பொறுத்த வரையில் ஆக்கவெளிப்பாடு என்பது ஒரு பிரசவவேதனை.
என்னுள் புதைந்துபோன கருக்கள் கதையாகி குறுநாவலாகி உங்கள் கரங்களில் இன்று தவழ்கின்றன.
இவ்வேளை என் எழுத்துலகப் பிரவேசத்திற்குக் காரண மாக இருந்த பதுளை கவிஞர் சாரணாகையூம், ராசீக், நிஸார், ஆசிரியர்கள் செ.கணேசலிங்கன், மு.நித்தியானந்தன், காரை செ.சுந்தரம்பிள்ளை போன்றோரை நினைவுகூர்வதில் பெருமை யடைகிறேன்.
- மொழிவரதன்
கொட்டகலை
24-09-2001

Page 7

1.
O புதிய மலர்கள்
O மலர்கின்றன
பனி பொழியும் காலை. வெண்மேகக் கூட்டங்கள் எங்கும் பரவிக்கிடக்கின்றன.
ராஜா, அனுலா வரும் அந்த ஒற்றையடிப் பாதையையே பார்த்துக் கொண்டு நிற்கின்றான். வெண்மேகப் போர்வைக்கிடையிலும் தூரத்தே அனுலா வருவது அவனுக்கு 'கறுப்பு நெகிட்டிவ்வில் தெரியும் உருவம் போல் மங்கலாகத் தெரிகிறது.
பச்சைநிற வயல் வெளியினிடையே உள்ள அந்த ஒற்றையடிப் பாதையிலே அவளது சிவந்த கால்கள் மேலும் அழகு பெறுகின்றன. வயல் தண்ணில் முழுகி எழுந்துவரும் காலைக்காற்று அவளது கவுனுடன் கொஞ்சுகிறது.
"குட் மோனிங்" அவளது குரல் நளினமாய் ஒலிக்கிறது. "குட் மோனிங்" அலறும் அலாரமாய் பதிலுக்கு ஒலித்து அடங்கு கிறது அவனது குரல்.
இருவரும் நடக்கின்றனர். ஆதவனின் சூடான கதிர்கள் அவர் களது பின்புறத்திலே விழுகின்றன.
ராஜாவின் இருபது இருபத்திரண்டு வருட கால வாழ்க்கையிலே எத்தனையோ சிங்கள சகோதர சகோதரிகளுடன் பழகி உள்ளான். இதன் பலனாக அவன் பெற்ற அநுபவங்கள் பல. என்றாலும்கூட அவன் அனுலாவுடன் பழகியதன் பின்னர்தான் பல விஷயங்களையும் அவர்களைப் பற்றிய பல விளக்கங்களையும் பெற்றான் எனலாம். அனுலாவுடன் பழகியதன் பின்னர்தான் சிங்கள விவசாயிகளது பிரச்சினைகளையும் உணர்வுகளையும் நன்கு உணரக்கூடியதாக இருந்தது. அவள் தனது சிந்தனையைச் சரியான வகையிலே பிரயோகித்து விவசாயிகளினதும் தொழிலாளர்களினதும் பிரச்சினைகளைத் தொட்டுக் காட்டக் கூடியவளாய்

Page 8
இருந்தாள். அதற்குக் காரணம் அவளும் ஒரு கூலி விவசாயியின் மகளாய் இருந்தமையாகும்.
இருவரும் நடக்கின்றார்கள். எங்கும் ஒரே மாணவ, மாணவியர் கூட்டம். அந்த நேரத்திற்கே உரிய 'சரக் சரக்' எனும் பாதணிகளின் இரைச்சல், தோட்டப் பகுதியிலிருந்தும் கிராமப் பகுதியிலிருந்தும் வரும் பாடசாலைப் பிள்ளைகள் வரும் பாதை அது. வழமையாக அவர்கள் நடந்துவரும் பாதை. அனுலா ராஜா இருவரையும் பொறுத்தவரையில் அவர்களது கடந்த சுமார் ஆறுவருட காலப் பழக்கத்திலே தம்மைச் சார்ந்த இனத்தின் பிரச்சினைகளை உணர்ந்திருக்கின்றனர். நேற்று தோட்டத்தொழிலாளரின் வாழ்வைப்பற்றிக் கதைத்தபோது மனங்கலங்கிய
அவள் இன்றும் அதனைப்பற்றி ஏதாவது சொல்வாள் என்றே ராஜா
நினைத்தான். அவள் நேற்றுவிட்ட இடத்திலிருந்து கதையை ஆரம்பித் தாள்.
"சிங்கள விவசாயியின் பிரச்சினையைவிட தோட்டத்தொழி லாளரின் பிரச்சினை சில வழிகளில் மாறுபட்டதாகவே உள்ளது. சிங்கள விவசாயியைப் பொறுத்தவரையில் அவன்தான் இந்நாட்டின் பிரஜை என்பதை உறுதிப்படுத்தவேண்டிய அவசியமில்லை. அப்படி ஒரு பிரச் சினையே அவனுக்கு இல்லை. அவனுக்கு சாதாரணமாக இந்நாட்டின் பிரஜை என்ற ரீதியிலே எத்தனையோ சலுகைகள் கிடைக்க இடமிருக் கிறது.”
இடையிலே குறுக்கிட்ட ராஜா சொன்னான்:
"தோட்டத் தொழிலாளியின் வாழ்விலே."
"அவனது வாழ்வே நிர்க்கதியாய் உள்ளது. இந்நாட்டிலே பிறந்து இந்த மண்ணுக்கே தம்மை அர்ப்பணித்து வாழும் அவர்களை நாட்டை விட்டே வெளியேற்ற சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. உழைப்பவரின் சக்தியைப் பயன்படுத்தி நாட்டினை அபிவிருத்தி செய்வதனை விட்டுவிட்டு அந்த உழைப்பை இழக்க இந்நாடு கங்கணங்கட்டிக் கொண்டிருக்கிறது. இதிலிருந்து அவர்களின் சுயவடிவம் தெரிகிறது" என்றாள் அவள்.
“ஒரு பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த நீங்கள் இவ்வளவு தெளிவாக எங்களது நிலையை உணர்ந்து கொண்டதற்காக நான் சந்தோஷப்படுகிறேன். இப்ப நம்ம ரெண்டு பேரும் வெவ்வேறு மொழி பேசுபவர்களாக இருந்தாலும்கூட ஒரு விஷயத்தில் நம்ம ரெண்டு பேரும் ஒன்று படுறம்.”
அவள் குறுக்கிட்டுச் சொன்னாள்:
"நம்ம ரெண்டு பேருமே ஒழைக்கிறவங்களுடைய பிள்ளைகள் என்ற ரீதியில ஒன்று படுறம்.”
10 ஒரு நாடும் மூன்று நண்பர்களும்

"ஆமா சாதி, மத, மொழி இவை எல்லாவற்றிற்கும் மேலாக இங்க நம்ம ரெண்டுபேரும் வர்க்க உணர்வுக்கே முதன்மை கொடுக்கிறோம் என நினைக்கிறேன். ஆனா இந்த உணர்வைத்தான் காலங்காலமாகப் பல சக்திகள் மழுங்கடிக்க சதி செஞ்சிச்சு."
"நீங்க சொல்லறது உண்மைதான்.”
அவன் தொடர்ந்தான்:
"பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும் சரி, முதலாளித்துவமும் சரி, தேசிய முதலாளித்துவமும் சரி இந்த உணர்வைத்தான் விரும்பாமல் இருந்துச்சு. பிரிட்டிஷார் தேயிலைத் தோட்டங்களை இங்கே உண்டாக்கியபோது உள்நாட்டு சிங்கள விவசாயிகள் ஏதோ உழைக்க முன்வராதது உண்மையாய் இருக்கலாம். ஆனா, அதற்கும் மேலாக ஏகாதிபத்தியம் ஒரு சிறுபான்மை இனத்தவரான தமிழர்களைக் கொணர்ந்து குடியேற்றிய போது கண்டியில் சிங்களவர்களின் காணிகள் பறிமுதலாக்கப்பட்டது உண்மைதானே?” -
அவள் சொன்னாள்:
"பறிமுதலாக்கப்பட்டது மாத்திரமா? எவ்வளவோ குறைந்த விலைக்கு அவை விற்கப்பட்டன. இது கண்டியர்களின் மனதை பெரிதும் புண்படுத்திய ஒரு செயலாகும்."
"ஆம், இதுவே சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் ஒரு பகைமையாயிற்று. இவ்விரு சமூகங்களுக்குமிடையே அமைந்த இரும்புத் திரையாயிற்று. இதனை ஏகாதிபத்தியமும் அதன்பின் முதலாளித்துவமும் நிரந்தர பகையுணர்வாக மாற்றுவதில் பின் நிற்கவில்லை. அவர்கள் விதைத்த அந்த விதை முளைத்து இன்று நச்சுவாடை வீசுகிறது." என்றான் அவன்.
"இலங்கையைப் பொறுத்தவரையில் இரு பெரும் சமூகங்கள் இருப்பதனை என்னால் உணரமுடிகிறது. அவர்களுக்கு இரண்டு விதமான மொழிகளும், சமயங்களும் இருக்கின்றன. கடந்த நூறு நூற்றைம்பது வருடகால மலைநாட்டுத் தொழிலாளரின் வாழ்விலே மட்டுமல்லாது இலங்கைத்தமிழ் விவசாயிகளின் வாழ்விலேயும்கூட அவர்களது தமிழ் மொழியும் அரசியல் வியாபாரப் பொருளாக்கப்பட்டிருப்பதை எவராலும் மறுக்கமுடியாது. இதேபோல பெரும்பான்மை இனத்தவரின் வாழ்விலேயும் கூட விவசாயிகள் என்ற ரீதியிலே சிறுபான்மை தொழிலாளர் விவசாயி இனத்துடன் இணைய இதுவே பலரால் பிழையான விளக்கங்களுடன் அரசியல் வியாபாரமாக்கப்பட்டுள்ளது என்பதனை மறுக்க முடியாது.” என்றாள் அவள்.
"தமிழர்களைப் பொறுத்த வரையில் நான் ஒன்றைத் தெளிவாக
உங்களுக்கு விளங்கப்படுத்த விரும்புகிறேன். அவர்கள் எப்போதுமே
மொழிவரதன் 11

Page 9
இந்நாட்டுக்கு விசுவாசமாகத்தான் இருக்க விரும்புகிறார்கள். ஆனா அந்த விசுவாசத்திற்கு உரமிடும் வகையில் இந்நாட்டு சனநாயக அரசாங்கம் என்றழைக்கப்படும் அரசுகளின் நடவடிக்கைகள் அமைய வில்லை. இதனால் விரக்தியும் வெறுப்பும் அவர்கள் இதயங்களிலே கனல்விட்டுக் கொண்டிருக்கின்றன. எனினும் புதிய சமுதாயமோ அதை எதிர்த்துப் போராடி தங்கள் இரத்தத்தையும் தியாகம் செய்யத் தயாராகி விட்டது."
அவர்களது நடை சற்று தடைப்பட்டது.
தூரத்தே தேயிலை மலைகளில் பல நிறங்களில் மெழுகு ரெட்டை அணிந்துகொண்டு பெண்கள் கொழுந்தெடுத்துக் கொண்டிருக்கும் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். அந்த உழைக்கும் கரங்களின் நளினத்தையும் அதேநேரத்தில் அவர்களின் களங்கமில்லாத சிரிப்புக்குப் பின்னே மறைந்து கிடக்கும் இருளையும் அவளால் உணர முடிந்ததுபோல், முதலில் அவர்களைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் பின்னர் அதனை விரும்பாதவள்போல், “கொடுமை! கொடுமை!!” எனச் சத்த மிட்டாள்.
சலசலத்தோடும் ஒரு சிற்றாற்றின் ஓரத்திலே நின்று அவள் அவ்வாறு கத்தியது அவன் இதயத்துள் அலவாங்கை இறக்கியதுபோல் இருந்தது!
“அனுலா.”
அவனது குரல் அந்தச் சிற்றாற்றின் சலசலப்புக்கிடையிலும் அவ்வாற்றின் கரையினிலே வளர்ந்தோங்கி நிற்கும் மூங்கில்களினது அசைவின் சப்தங்களுக்கிடையிலும், தூரத்தே சவுக்கு மரங்களில் இருந்து பாடிக்கொண்டிருக்கும் கரிச்சான் குருவிகளது குரல்களுக்கிடையிலும் மேலோங்கி ஒலித்தது. அவன் சொல்கிறான்:
"அனுலா, வெறும் உணர்ச்சிமயமான கோஷங்களோ நடவடிக்
கைகளோ வெற்றி பெறமுடியாது. எந்தவோர் கணத்திலும் சரி வாழ்க்கை யில் நாம் மேடுபள்ளங்களைக் காணும்போது உணர்ச்சிவசப்பட்டு விடுவது உண்மையே. ஆனா அதற்காக நாம் திடீரென்ற ஒரு சிலரின் புரட்சி களையோ சிந்தனைகளையோ சரியென்று எண்ணி தஞ்சம் அடைந்து விடுதல் கூடாது. ஒவ்வொரு இனத்தையும் சரியான வகையிலே இனங்கண்டு கொள்வதே ஒரு பெரிய கடமை."
"நீங்க சொல்வதன் உள்ளர்த்தம் விளங்குகிறது. சோஷலிஸம், சமத்துவம், சனநாயகம் என்பவையெல்லாம் கூட இன்றைய நிலையில் எப்படி எப்படியெல்லாமோ மாறி வருகின்றன. தொழிலாளர்களையும் விவசாயிகளையும் மயக்கும் மாயக்கண்ணாடிகளாக இவ்வார்த்தைகள் மாறி வருகின்றன." என்றாள் அவள்.
12 ஒரு நாடும் மூன்று நண்பர்களும்

அவர்கள் இருவரும் அவர்களது பாடசாலையில் நெருங்கிக் கொண்டிருந்தார்கள். இருவரினது பாடசாலைகளும் தூரத்தூரவே இருந்தன. மாதா கோயிலில் மணி ஏழு அடித்தது. இருவரும் இரண்டு திசைகளை நோக்கி நடந்தனர் பாடசாலைக்கு.
ராஜா, அனுலா இருவரும் தினமும் தங்களது வீட்டிலிருந்து ஏறக்குறைய பல மைல்கள் நடந்தே பதுளைக்குப் படிக்க வரவேண்டி இருந்தது. அவளது கிராமத்துக்கும் பாடசாலைக்கும் ஏறக்குறைய மூன்று மைல்கள். ராஜாவுக்கோ அதைவிட தூரமாகும். அவன் ஏறக்குறைய ஆறு மைல்கள் அவனது தோட்டத்திலிருந்து வரவேண்டி இருந்தது. மேலும் இருவருமே அரசியல் கொள்கைகளிலும் இயக்கங்களிலும் ஒத்த கொள்கை உடையவர்களாக இருந்தார்கள்.
Ω.
ஒருநாள் சந்தித்து மிக நீண்ட நேரம் உரையாடிய பின்னர் ராஜா அனுலாவை சந்திக்கவேயில்லை. முதலில் அவனுக்கு காரணம் விளங்காதிருந்தது. பின்னர்தான் விளங்கியது.
அது நெல் அறுவடைகாலம். ஆகவே அனுலாவுக்கும் வயலிலே வேலையிருக்கும் அவளும் பாடசாலைக்கு முழுக்குப்போட்டுவிட்டு வயலில் இறங்கிடுவாள். இம்முறையும் அவ்வாறே அவளுக்கு வேலை அதிகம். ராஜா உயர்ந்த அந்த மலையுச்சியிலிருந்து வயல்வெளிகள் பரந்து கிடக்கும் பள்ளமான நாட்டுப் புறத்தைப் பார்த்தான். தங்கம் கரைந்தோடுவதுபோல் நீரருவிகள் பொன்னிற மண்ணைக் கரைத்துக் கொண்டு ஓடின. வெள்ளியைக் கரைத்துத் தெளிப்பதுபோல் சிறு நீர்வீழ்ச்சிகள் நீரைத் தெளித்தன. மரகதம் போல் தேயிலைச் செல்வி அந்தக் காலை வேளையில் பனிமுத்து சிந்தி மினுமினுத்தாள்!
வயலிலே அறுவடை நடந்துகொண்டிருந்தது. உழவர்களின் வியர்வைத் துளிகள் நெல்மணிகளாக பிரசவித் திருந்தன.
கூலி விவசாயிகளின் கூட்டத்திலே ஒரு குடும்பமான அனுலாவின் குடும்பமும் அதோ அந்தக் கூட்டத்தினரைப் போலவே நெல் அறுத்துக் கொடுப்பார்கள்.
அவன் அதற்கு மேலும் அங்கு நிற்கவில்லை. வழமையான தனது பாடசாலைப் பயணத்தைத் தொடர்ந்தான். வெறுமையான அவனது
| மொழிவரதன் 13

Page 10
காலின் பாதங்களை, செத்தவனின் உடம்பைக் குளிர் விறைக்க வைப்பது போல் விறைக்க வைத்தது. மீண்டும் ஒரு வாரகாலம் சென்றது. அவன் அனுலாவைச் சந்தித்தான்.
"ggish solutr?" அவன் விஷமச் சிரிப்புடன் ஒரு கேள்வியைக் கேட்டான். அவள் விளையாட்டுத்தனம் ஏதும் இல்லாமல் பதிலளித்தாள். "ஆமா, ஆனா எங்கள் வயலில் அறுவடை இல்லே. நெல் அறுத்துக் கொடுத்தோம்."
இலங்கையின் சரித்திரத்தைப்பற்றி அவள் கதைக்கத் தொடங் கினாள். சரித்திர நூல்களையும் அதன் ஆசிரியர்களையும்பற்றிக் குறைப் பட்டுக் கொண்டாள். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகளான சில சரித்திர ஆசிரியர்கள் எவ்வாறு சரித்திரத்தைத் திரித்துக் கூறியுள் ளார்கள் என்பதையிட்டுக் கொதித்தாள்!
அவள் பெரிய அறிவாளியல்ல. ஆனால் அரசியல் துறையில் நெருங்கிய தொடர்புடையவள். சிந்தனைச் செறிவுமிக்கவள். அதுதான் அவளது பரந்து விரிந்த அரசியல் பேச்சுக்குக் காரணம்.
அவன் ஒரு கேள்விக் குண்டைத் தூக்கிப் போட்டான். “1838ஆம் ஆண்டளவில் இந்தியத் தொழிலாளர்கள் வந்தபோது கண்டியரின் நிலங்களை ஏகாதிபத்தியம் பறிமுதலாக்கியதே. இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"
“என்ன நினைக்க இருக்கிறது.? எய்தவன் இருக்க அம்பை நோகலாமா? இந்தியத் தொழிலாளர்கள் மீது என்ன குறைகூற முடியும்? அவர்கள் உழைப்பிற்காக வந்தவர்கள். அதுவும் இந்தக் காலத்தில் 1838ஆம் ஆண்டளவில் இந்தியாவில் ஏற்பட்ட பெரும் பஞ்சமே காரணமாக அமைந்தது. மேலும் அந்தக் காலத்தில் நாடுவிட்டு நாடுசென்று வாழுவதும் ஒரு பிரச்சினை அல்லவே. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் குடியேற்றக் கொள்கையின்படி இலாபநோக்கத்திற்காகத் தொழிலாளர் களைக் குடியேற்றுவதும் ஓர் அம்சம்தானே?"
"தமிழர்களின் குடியேற்றத்தை பற்றித் தவறான அபிப்பிராயம் இலங்கையில் சில அரசியல் கட்சியினரிடையே உள்ளது. தமிழர்கள் இலங்கையில் பெரும்பான்மை இனத்தவரின் இன, மத, மொழி கொள்கைகளுக்கு மாறானவர்கள் என்று கருதப்படுகிறது. இதனையே முக்கிய சரத்தாகக் கொண்டு தங்களது தேர்தல் விஞ்ஞாபனங்களிலேகூட தமிழர்களை வெளியேற்றவேண்டும் என்றும் பிரசாரம் செய்யப்பட்டது. இவ்வாறான வெளிப்படையான பிரசாரங்களுக்கும் கொள்கைகளுக்கும் இடையே மறைமுகமான ஓர் உண்மை ஒளிந்து கிடக்கிறது.”
அனுலா இடைமறித்துச் சொன்னாள்.
14 ஒரு நாடும் மூன்று நண்பர்களும்

"அவ்வாறான பிரசாரமும் கொள்கையும் ஒருசில பிற்போக்குச் சக்திகளினாலும் சந்தர்ப்பவாதிகளினாலுமே செய்யப்பட்டது என்பதை நீங்கள் உணரவேண்டும். மாறாக உண்மையான முற்போக்குச் சக்திகள் இதற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. அவை இவர்களது இந்தப் பிரசாரத்தையும் கொள்கைகளையும் வன்மையாகவே கண்டித்தன. கண்டித்தும் வருகின்றன. அந்த முற்போக்கு இயக்கம் எந்தவொரு தொழி லாளரையும் இழக்கத் தயாராகவில்லை. ஆனால் தேசிய முதலாளித்துவக் கும்பலோ எத்தனையோ இலட்சம் தொழிலாளர்களை இழக்கத் தயாராகி விட்டது. வழியும் செய்துவிட்டது. இங்கேதான் கறுப்பு முதலாளிகளின் சுயரூபம் தெரிகிறது.”
ராஜா உடனே சொன்னான்: "இதுதான் பாராளுமன்ற சனநாயகம். வோட்டு, தேர்தல் (சனநாயகம்), என்பதன் மறு அர்த்தங்கள். சுயவடிவங்கள்."
ராஜா சிரித்தான். அவளும் சிரித்தாள். இருவரினது சிரிப்பும் ஒன்றாய்க் கலந்தொலித்தன. அணில்கள் மரத்துக்கு மரம் தாவிச் சென்றன.
அவர்கள் அமைதியாக நடந்துகொண்டிருந்தார்கள். அந்த றோடு வெள்ளை சரளை றோடு ஆதலால் 'சரக் சரக்' என்று ஒலி எழுந்தது. அந்த ஒலிக்குப் பின்னணியாக எங்கோ ஒரு மரங்கொத்தி மரத்தைக் கொத்தும் ஒலியும் கேட்டுக் கொண்டிருந்தது.
"ஓ, நான் ஒரு விஷயத்தைச் சொல்ல மறந்துவிட்டேன். நீங்கதான் இடையில குறுக்கிட்டு விட்டீர்கள். பிற்போக்குச் சக்திகள் மலையகத் தமிழர்களைப் பற்றி தவறான பிரசாரம் செய்தனவென்றும் ஆனால் அதற்குப் பின்னே ஓர் உண்மை மறைந்து கிடந்தது என்றும் சொன்னேனே அதனைத்தான்."
"அதென்ன..?” - அவன் ஆவல் ததும்பும் குரலுடன் கேட்டான். "இலங்கையிலே பெரும்பான்மையான சிங்கள விவசாயிகளுடன் இலங்கையின் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் வர்க்க ரீதியில் இணைந்தால் அது முதலாளித்துவத்திற்கு ஆபத்து என்பதனை பிற்போக்குச் சக்திகள் நன்கு அறிந்திருந்தன. வர்க்க உணர்வை மழுங் கடிக்கவும், தங்களது நலன்களைப் பாதுகாக்கவும் அவை காலங்காலமாக முயன்று வந்தன. மலையக மக்கள் மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப கால இயக்கங்கள், சங்கங்கள் எல்லாம் தெளிவான சீரிய அரசியல் வர்க்க உணர்வுடன் ஆரம்பிக்கப்படவில்லை. அவற்றை ஆரம்பித்தவர் களினிடையே எத்தனையோ கருத்து முரண்பாடுகள் இருந்தன. குறிப்பாகக் கூறப்போனால் அந்த இயக்கங்கள், சங்கங்கள் எல்லாம் இந்திய மயமான தாக, சார்புடையதாக அமைந்திருந்தன. அவர்கள் தங்கள் தலைவர்களாக
| மொழிவரதன் 15

Page 11
இந்தியத் தலைவர்களையே ஏற்றார்கள். தொழிலாளிகளினதும் விவசாயி களினதும் தலைவர்களையல்ல."
"ஏன்?" அவள் குறுக்கிட்டுக் கேட்டாள். "தமிழர்களுக்குத் தமிழர்கள்தான் வழிகாட்ட முடியும்; அதுவே சரியானது என்பதனை அவர்கள் உள்நோக்கமாகக் கொண்டிருக்கலாம். இங்கேயும் வர்க்க ரீதியில் ஒன்றுபடுவதனை தவிர்த்து தமிழர் சிங்களவர் என்ற ரீதியில் ஒன்றுபட்டிருப்பதனைக் காணக்கூடியதாக இருக்கிற தல்லவா?”
"இந்தியத் தலைவர்களைத் தமது தலைவர்களாக இலங்கையின் இயக்கங்கள் கொண்டமையே ஒரு பெருந்தவறாகும். இதிலிருந்தே இந்த இயக்கங்களின் தாற்பரியம் புரிகின்றது."
"உண்மைதான். எனினும் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். “என்னா?” "இந்தியத் தலைவர் என்ற காரணத்திற்காக அவர்களை நாம் புறக்கணிக்கத் தேவையில்லை. ஆனால் அவர்கள் எந்த வர்க்க நலனுக் காக உழைக்க முன்வருகிறார்கள் என்பதனை அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.”
அவர்கள் கதைத்துக் கொண்டே நடந்தார்கள். நேரம் போனதே தெரியவில்லை. அவர்கள் பிரிந்து செல்லவேண்டிய சந்தியும் வந்துவிட்டது. "நீங்கள் ஒரு நாளைக்கு எங்கள் வீட்டுக்கு வரவேண்டும்." அவள் வேண்டினாள்.
"இதில் என்ன இருக்கின்றது. அடுத்த வாரம் வரமுயல்கின்றேன். ਸu."
"இப்படிச் சொல்லி நீங்கள் என்னை ஏமாற்றக் கூடாது.” "இல்லை, ஏமாற்றமாட்டேன். நான் நிச்சயம் வருவேன்.” "நான் உங்களைப்பற்றி என் அம்மா, அப்பா, அண்ணா என்னுடைய அவர் எல்லோரிடமும் கூறியுள்ளேன்.” "என்னுடைய அவர். அது யார்?" அவள் மணம் முடிக்கவிருக்கும் அவளது சொந்த மாமன் மகனை அவனுக்கு நன்றாகத் தெரியும். அவன் ஒரு "மெக்கானிக், இலங்கை போக்குவரத்துச் சபையில் வேலை செய்கிறான். என்றாலும் சும்மா விஷமத்தனமாக அவன் அப்படியொரு கேள்வியைக் கேட்டுவைத்தான். "அவர்தான்” என்று அவள் கூறிவிட்டு அவர்கள் கடந்து வந்த பாதையைப் பார்த்தாள். அங்கே அவள் குறிப்பிடப்போன அவரே - ‘சரத் வந்துகொண்டிருந்தார்.
ராஜா சொன்னான் "ஆ! உன் மச்சானுக்கு ஆயிசு நூறு."
16 ஒரு நாடும் மூன்று நண்பர்களும்

அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு அவன் புறப்பட்டான்.
ராஜா அந்தச் சோடியைத் திரும்பிப் பார்த்தான். பின் நடந்தான். தூரத்தே பசும்போர்வையுள் தன்னுடலைத் திணித்திருந்த தேயிலைச் செல்வி வெண்ணுடை தரித்து மகிழ்வதைக் கண்டான்.
3.
அனுலாவின் வேண்டுகோளுக்கிணங்க அவன் ஒரு நாள் அவளது வீட்டுக்குப் புறப்பட்டான். மிகவும் அழகும் எளிமையும் நிறைந்த குக்கிராமமாகவே தூரத்தே இருந்து பார்க்கும் பொழுதே அக்கிராமம் தென்பட்டது. வறுமையின் சின்னமாய் வயல் வெளிகளை அண்டி ஆங்காங்கே சிறுசிறு குடிசைகள் அமைந்திருந்தன. உழைப்பை ஈந்து ஒன்றுமில்லாமல் வாழும் குடிமக்கள் இவர்கள் என்பதினை இது புலனாக்கியது. குடிசைகள் தென்னோலையினால் வேயப்பட்டிருந்தன.
அவன் சென்ற அவ்வேளை நெற்பயிர்கள் வளர்ந்து கண்ணுக்கும் பசுமையாய் இருந்தன. வயல் வெளியின் தீரத்தில் நின்றிருந்த தென்னை மரங்களும், பாக்கு மரங்களும் வயலுக்கும் கிராமத்துக்கும் எழிலூட்டின. ஒற்றையடிப் பாதைகளால்தான் அக்கிராமம் இணைக்கப் பட்டிருந்தது. இடையிடையே குறுக்கிட்ட ஓடைகளைக் கடக்க மரப் பாலங்கள் இடப்பட்டிருந்தன.
அனுலாவினது வீடும் ஒரு சாதாரண குடிசைதான். அவனது குறிப்பின்படி அவளிது வீட்டை அவன் அடைந்தபோது வயதான ஒரு மூதாட்டி அவனை வரவேற்றாள்.
அவனைப் பற்றிய விபரம் ஒன்றுமறியாத அவள் திகைத்துக் கொண்டு நிற்கையில் அனுலா வந்துவிட்டாள். அவனை அவளது ஆச்சியான அந்த வயதான மூதாட்டிக்கு அறிமுகஞ் செய்துவைத்தாள். ஏறக்குறைய எழுபத்தைந்து வயதை எட்டிவிட்ட உடம்பு அவளது உடம்பு. நல்ல கறுப்பு. வெள்ளை வெளேரென பஞ்சுபோல் தலைமுடி வெளுத்துவிட்டது. இலவம் பஞ்சு காற்றுக்குப் பறப்பதுபோல் வெள்ளை முடிகள் பறந்தன.
ஓரளவு தமிழ் பேசினாள் ஆச்சி. சில தமிழ்ச் சொற்கள் நல்ல உச்சரிப்புடன் தெளிவாக இருந்தன. சில சொற்கள் சிங்கள மொழி வாசனையுடன் கலந்தொலித்தன. மொத்தத்தில் அது ஒரு தமிழ் சிங்கள கலப்பட மொழியாக இருந்தது. அவனுக்கு இதொன்றும் புதிய அநுபவம்
| மொழிவரதன் 17

Page 12
அல்ல. அவன் பிறந்து அவனுக்கு நல்ல ஞாபகம் பிறந்ததிலிருந்து நாள்தோறும் இதேபோன்று எத்தனையோ சிங்கள மக்களின் பேச்சை அவன் கேட்டிருந்தான்.
கூலி விவசாயி குடும்பத்தைச் சார்ந்த அனுலாவின் குடிசைக்கும் வெறும் கூலி விவசாயிகளான தோட்டத் தொழிலாளிகளின் "லயத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமையை அவனது மனம் சிந்தித்தது. எப்போதோ பன்றிக் குடிசைபோல் வரிசையாக கட்டப்பட்ட ‘லயங்கள் அங்கே வியர்வையைச் சிந்தும் இனத்தவர்க்கு. ஒழுகும் கூரை, சுகாதார முறையான வீடமைப்பிற்கும் அப்பாற்பட்ட அறைகள், தாய், தகப்பன், பிள்ளை யாவரும் ஓர் அறையுள் அடைந்து கிடக்கும் அவலம், ஒரு மனிதனுக்குரிய ஆசாபாசங்கள் - அதன் எதிர் விளைவுகள். அவனால் அதற்கு மேலேயும் சிந்திக்க முடியவில்லை. அவன் பெருமூச்சுடன் அமைதியானான்.
"எங்க வீடு சின்ன வீடுதான்; வசதி குறைவு” ஆச்சி மெதுவாக இவ்வாறு கூறிவிட்டு அவனைப் பார்த்தாள். அவளது அந்தப் பார்வையிலே ஒரு பெரிய காவியமே அடங்கியதுபோல் அவன் உணர்ந்தான். அவர்களது வீட்டுக்குச் சென்ற விருந்தாளியான அவனை சிறந்த முறையில் உபசரிக்க முடியாத தங்களது ஏழ்மையின் கொடுமையை அவளது அந்த வார்த்தைகள் கூறாமல் கூறின. அந்தக் குடிசை அமைந்திருந்த முறை, அங்கிருந்த தளபாடச் சாமான்களின் தன்மை யாவும் அவர்களது வாழ்வின் பின்னணியைப் படம்பிடித்துக் காட்டின.
"எங்களது வீடும் இப்படித்தான். வசதி மிகமிகக் குறைவுதான். அதனால் எனக்கு இவையெல்லாம் ஒன்றும் புதிய அநுபவமல்ல."
"நாங்களும் இந்த வீட்டை உடைத்து சரிப்படுத்த எண்ணுவதுண்டு தான். எண்ணி எண்ணியே எங்கள் காலமும் போய்விட்டது. பேரப் பிள்ளைகள் பிறந்தும் வீடு என்றோ உள்ள நிலையில்தான் இன்னுமே உள்ளது.”
இவ்வேளை தேநீர்க் கோப்பையுடன் வந்த அனுலா தேநீர்க் கோப்பையை அவனிடம் கொடுத்துவிட்டுச் சொன்னாள்:
"வீடு எங்க தாத்தா கட்டின மாதிரித்தான் இருக்கு. ஆனா எங்க ஆச்சிக்குத்தான் வயசு போயிருக்கு."
"உண்மைதான்” எனப் பேர்த்தியின் பேச்சை ஏற்றுக்கொண்டு ஆச்சி தொடர்ந்தாள்.
"நாங்கள் பரம்பரை பரம்பரையாக விவசாயிகள்தான். எனது தாய் தந்தையர் பிறந்ததும் உழைத்ததும் மடிந்ததும் இதே மண்ணில்தான்.
18 ஒரு நாடும் மூன்று நண்பர்களும்

எங்கள் முதாதையர், அடுத்து நாங்கள், அதற்கடுத்து இவர்கள் காலமும் ஓடுகிறது. ஓடிவிட்டது." ஆச்சி பெருமூச்செறிந்தாள்.
ஆச்சி என்ன யோசிக்கிறாள் என்பதை அவனால் அனுமானிக்க முடிநதது. அவளது இதயம் கடந்த காலத்தை நினைத்து ஏங்குகிறது. நடந்து முடிந்தவைகளைப் பற்றி எண்ணி அழுகிறது!
அவள் சொன்னாள்: “எனது கணவர் - அனுலாவின் தாத்தா இறந்ததே ஒரு காணித் தகராறில் தான்.” என்றவாறு நிறுத்தினாள்.
தேயிலையின் இலையிலிருந்து வடியும் பனிநீர்போல் அவளது மங்கிய குழிவிழுந்த கண்களிலிருந்து கண்ணிர் வடிவதை அவன் கண்ணுற்றான். ஆத்திரத்தாலும், கோபத்தாலும் அவளது உடல் குலுங்கியது.
"ஏன். ஏன். இப்படி அழ வேண்டாம். ராஜா பதட்டமடைந்தான். அனுலா, ஆச்சியின் கண்ணிர்த் துளிகளை அவளது வெள்ளைச் சேலைத் தலைப்பால் துடைத்துவிட்டுச் சொன்னாள்:
"நடந்து முடிந்தவைகளை நினைத்து வருந்தி அழுது என்னா பயன்.?" என்றாள்.
அமைதி நிலவிற்று. ராஜாவின் குரல் ஒலித்தது. "நான் உங்கள் அப்பா எப்படி இறந்தார் என்பதை அறிய விரும்புகிறேன்.”
穷
"நாங்கள் பரம்பரையாக இதே கிராமத்தில்தான் வாழ்ந்து வருகி றோம். அனுலாவின், தாத்தாவிற்கு ஒரு நண்பர். அவருக்கு ஏறக்குறைய ஐந்து ஏக்கர் நிலம் சொந்தமாய் இருந்தது. அவருக்குப் பணக்கஷடம் வந்தபடியால் அந்நிலத்தை ஒரு நிலவுடமையாளனுக்கு ஈடுவைப்பது போல் எழுதிக்கொடுத்து பணம்பெற்று விதை நெல்வாங்கியும் உரம் வாங்கியும் பணத்தை செலவழித்திருக்கிறார். ஆனால் அந்த ஆளுக்கு குறித்த நாளில் பணத்தைக் கொடுத்துத் திருப்ப முடியவில்லை. அவ்வேளை பணங்கொடுத்தவன் வட்டி கேட்டிருக்கிறான். இதனால் இரண்டு பேருக்குமிடையே வாக்குத்தர்க்கம் ஏற்பட்டு முடிவில் கொலையில் முடிந்துவிட்டது. ஒருநாள் இரவில் இவளது தாத்தாவும் அவரது நண்பரும் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும்போது அந்த பணங்கொடுத்தவன் ஆட்களைத் தயார் பண்ணி அந்த ஆளை அடித்திருக்கிறார்கள். இவரும் அந்த ஆளுடன் வந்தபடியால் அடிக்கவேண்டாமென மன்றாடியிருக்கிறார். இவரும் அவர்களைத் தாக்கியிருக்கிறார். அந்த ஆட்கள்." அவள் அதனைச் சொல்லவில்லை. ஆச்சியின் கண்ணிர்தான் அக்கதையின்
மொழிவரதன் 19

Page 13
முடிவைச் சொன்னது.
“எங்க தாத்தாவை மண்வெட்டியால் வெட்டிக் கொன்று விட்டார்கள்" அனுலா சொன்னாள்.
ஒரு பல்லியின் "கீச் கீச்" என்ற சத்தம் மட்டுமே ஒரு சில நிமிடம் அந்தக் குடிசையில் ஒலித்தது. அங்கே மூன்று உள்ளங்கள் ஒரே நேரத்தில் அந்தக் கோரக்காட்சியை எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தன.
"பொலிசுக்கு சொல்லவில்லையா?" - ஒரு தேவையில்லாத, பிரயோசனமற்ற கேள்வியை சும்மா கேட்டுவைத்தான் அவன்.
“பொலிசா? எஜமானுக்கு வாலாட்டும் நாய்கள்.” - அனுலா சீறினாள்!
"அவர்களால் ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களைக் குற்றஞ் சொல்லி என்னா பயன்?” என்றாள் ஆச்சி.
“இங்கே இந்த ஆட்சியிலே பணத்தால் நீதியை வாங்கவும் முடியும், விற்கவும் முடியும். நாங்கள் ஏழைகள், நாங்கள் எப்படி பணமில்லாது நீதியை வாங்கமுடியும்?” இப்படிக் கேட்டாள் அனுலா.
"உண்மைதான். உண்மைதான்” என ராஜா பலமாக தலையை ஆட்டினான்.
ஓர் உள்ளம் நடந்ததை நினைத்து அழுகிறது. அதனால் அழத்தான் முடிகிறது. காரண காரியங்களை ஆராயத் தெரியவில்லை. இது ஆச்சியின் உள்ளம்!
மற்றோர் உள்ளம் ஒவ்வொரு செயலுக்கும் பின்னே மறைந்து கிடக்கும் பின்னணியை நன்றாக உணர்கிறது. காரண காரியங்களை உணர்ந்து நீதியை நாமே தேட வேண்டும் எனத் துள்ளி எழுகிறது - இது அனுலாவின் உள்ளம்.
குறிப்பிட்ட இவ்விரு பேருக்குமிடையிலே உள்ள மாற்றங்கள், முரண்பாடுகள், வளர்ச்சிகள்தான் எத்தனை?
ராஜா சொன்னான்: “ஒழைக்கிறவங்களுடைய நிலத்தை வாங்கவும் கூறு போடவுமே ஒரு வர்க்கம் இங்கே இருக்கு. இது மேல்மட்ட அமைப்பின் ஒரு பகுதியாக உள்ளது. பணச் செல்வாக்கும், நீதி சம்பந்தமான செல்வாக்கும் மட்டுமல்ல. பலம் பொருந்திய, ஆனா போலி அரசியல் செல்வாக்கும் பெற்றதாக உள்ளது. உண்மைகளை உழைக்கும் வர்க்கம் உணராத வரை போலிகளைக் களைந்தெறியாதவரை உங்கள் தாத்தாவைப்போல்
20 ஒரு நாடும் மூன்று நண்பர்களும்

இன்னும் எத்தனையோ உயிர்கள் இம்மண்ணிலே உருளவுள்ளன. அந்த உயிர்களின் மரணத்திற்கு நீதி எங்கே கிடைக்கப் போகிறது.? நாம் நீதி தேடிப் புறப்படாதவரை?”
ஆச்சி அமைதியாகச் சிரித்துக் கொண்டிருந்தாள்! வாலிப மிடுக் குடன் ராஜா ஏதோ உளறுவதாக அவளது மனதுக்குப்பட்டது போலிருந் தது அவளது சிரிப்பு. உண்மையில் அவள் அப்படித்தான் நினைக்கிறாள்.
இதை உணர்ந்து கொண்ட அனுலா சொன்னாள்: “உங்களைப் போலவேதான் நானும் ஏதாவது பேசத்தொடங்கி னால் ஆச்சி ஒரு வறட்டுச் சிரிப்புச் சிரிக்கிறாள். ஏதோ நாம் அறியாத் தனமாகக் கதைப்பதாக எண்ணுகிறாள். இது அவளது குறையில்லை. அவள் வந்த வழி இப்படி எண்ணத் தூண்டுகின்றது." ராஜா இடை மறித்துச் சொன்னான்: "புதிய சமுதாயத்தின் சிந்தனையைப் பற்றி பழைய சமுதாயம் இப்படி எடை போடுவதுண்டுதான். காரணம் தறிகெட்டுத் திரியும் மேல் வர்க்கப் பரம்பரையின் வாரிசுகளுடன் நெறியுடன் வாழத் துடிக்கும் மற்றோர் புதிய சமுதாயத்தையும் இணைத்து எடைபோடுவதுதான். இது எவ்வளவு தவறு? இவ்விரண்டிற்கும் இடையே வேறுபாடு உள்ளது. இதனை அவர்கள் உணரவேண்டிய காலமும் விரைவில் வரும்"
இப்படியே கதை தொடர்ந்தது. நேரமும் கழிந்தது. நிழல் படியாத வேளையாகிவிட்டது. ஆனால் வயற்காற்று சில்சில் என்று வீசியது. நெற்பயிர்கள் களிநடம் புரிந்தன. வெள்ளைக் கொக்குகள் கூட்டமாய் வயல் வெளியினுள் இறங்கின. இந்தக் காட்சிகளை அவன் சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கவிஞனல்ல. ஆனால் இயற்கையின் கோலங்கள் மனித சக்தி பயன்படுத்தும் அற்புதக் கலையைப் பற்றி அறிந்தவன்.
“இந்தச் சூழல் உங்களுக்குப் பிடிச்சிருக்கா?” அனுலா அவனது இரசனையின் வெளிப்பாட்டைப் புரிந்துகொண்டே இப்படிக் கேட்டாள்.
“இதற்கான பதிலும் உங்களுக்குத் தெரியும்" என்றவாறு அவ்விரு வரிடமும் விடைபெற்று நடந்தான அவன்.
அவனது வருகைக்கு நன்றி கூறுவதுபோல் தென்னோலைகள் “கிறிச் கிறிச்சென ஒன்றோடொன்று ஊராய்ந்து சத்தமிட்டன.
| மொழிவரதன் 21

Page 14
4.
ராஜா லயத்தின் "ஸ்தோப்பிலே அமர்ந்திருக்கிறான். அதுதான் அவனது படிக்கும் அறை, படுக்கும் அறை எல்லாம். அந்த ஸ்தோப்பிலேயே தனது காலடிக்குக் கீழே படுத்துக்கிடக்கும் தம்பி தங்கையர்களின் கூட்டமும் வேறு. விறாந்தை வழியே உள்ளே புகுந்த பனிச்சாரல் அவனைத் தொட்டு என்ன என்று கேட்கின்றது? விறாந்தையின் இடைவெளிகளை மறைக்கக் கட்டப்பட்டிருந்த பழைய சாக்கும் தனது இயலாமையைக் காட்டி நிற்கின்றது. கரிபிடித்து, புகை பிடித்து, பிய்ந்து நைந்து போய்க் கிடக்கும் சாக்கின் ஓட்டைகளின் வழியே காற்று உள்ளே புகுந்து விளையாடுகின்றது.
தனது இரண்டு கால்களையும் சாக்குக்குள் திணித்துக் கொண்டும் ஒரு படங்குச் சாக்கைப் போர்த்துக் கொண்டும் ராஜா உட்கார்ந்திருக் கின்றான். அவனது உதடுகள் பனிக்காற்றால் வெடிப்புண்டு கிடக்கின்றன. கைகளோ விறைத்த வண்ணம் இருக்கின்றன.
அவனெதிரே பாடப்புத்தகங்கள் விரிந்து பரந்து சிதறிக் கிடக்கின்றன. பாடங்கள், பாடப்புத்தகங்கள், பாடசாலைகள்..? அவனுக்கே அவனை அறியாமல் சிரிப்பு வருகின்றது. குப்பிலாம்பு அவனது எண்ணத் தைப் போலவே மங்கி மங்கி எரிகின்றது.
ராஜா அவனையே கேட்டுக்கொள்கிறான். "நான் படிக்கும் இந்தப் படிப்பு யாருக்காக?"
ஏதோ ஒரு சிலருக்கு வெள்ளைக் காற்சட்டை அணிந்து உலவித் திரியும் உத்தியோகத்தை அளிப்பதற்காக சமுக அந்தஸ்த்து ஏற்றத்தாழ்வு என்பவற்றை இந்தக் கல்வி கற்பிக்கின்றது. நான் படித்து முன்னேறி விட்டேன் என்றால் எனக்கும் இதோ இந்த மண்ணுக்குள்ளே மாண்டு கிடக்கும் எனது மூதாதையரின் எலும்புகளுக்கும் சம்பந்தமில்லாது செய்து விடுகிறது. வெறும் கல்வி. புத்தகக் கல்வி. இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் சம்பந்தமேயில்லாத கல்வி. எங்கோவுள்ள மண்ணினது வாசனை அந்தக் கல்வியிலே கமழ்கிறது. உளுத்துப்போன அந்நாட்டுக்கே உரிய பண்பாட்டொளி அதிலே சிந்துகின்றது. இந்தச் சமூகத்துக்கு உதவாத கல்வி, தூ! அவனுள்ளே ஒரு கேள்வி எழுகின்றது. அவனைப் பொறுத்தவரை அந்தக் கல்வி ஒரு கருவி. அவனது இலட்சியத்தை அடைய அவ்வளவே. அந்த இலட்சியம் அவனது இனத்தைப் பற்றியது. இந்த சமூக அமைப்பைத் தூக்கி எறியாதவரை - இதே படிப்புத் தான். அவனது சிந்தனை தொடர்கின்றது.
எங்கோ வயல்வெளியினிலே உழவர்கள் உழும் சத்தம் கேட்கின்றது. அந்த “ஒ. ஒ." உழவர்களின் குரல் அவனுக்குக் கேட்கிறது.
22 ஒரு நாடும் மூன்று நண்பர்களும்

சிங்கள விவசாயிகள் நெல் அறுவடைக் காலங்களில் பாடும் பாடல்கள் அவனுக்கு நினைவுக்கு வருகின்றன. நிலா பொழியும் அந்த இரவுகள்தான் எத்தனை இன்பமயமானவை. நிலம்தான் விவசாயியின் சொத்து என்பர். ஆனால் இங்கே அவர்களின் உழைப்பிற்கும் இந்த நிலத்திற்கும்தான் என்ன சம்பந்தம்? அவனது சிந்தையிலே மின்னல் ஒளிபோல் ஒரு வெடிப்பு ஏற்பட்டு அது தொடர்கின்றது. அதுபோல் இந்த உயர்ந்த மலைகள் தேயிலைச் செடிகள் இவைகளுக்கிடையே அவர்களது உழைப்பு.? அந்த மலைகளுக்கும் அவர்களது உழைப்புக்கும் என்ன சம்பந்தம்? நாங்கள் என்ன வெறும் சக்கைகளா?
W ஒருநாள் அனுலா சொன்னாள்: “இன்று முதலாளித்துவக் கட்சிகள்கூட சோஷலிஸம் பேச ஆரம்பித்துவிட்டன. அதுவும்கூட முதலாளித்துவ அமைப்பில் ஓர் அரசியல் தந்திரமே. தங்களது அரசியல் கோட்பாடுகளுக்கு முரணான கொள்கைகளையும் கூட தங்களது கோட்பாடுகளுக்குள் திணித்துவிட எண்ணும் இப்போக்கு விசித்திரமானது. இன்னுமே தொழிலாளர்கள் நிலத்திற்கும் தமக்குமிடையே உள்ள பிணைப்பை உணராமல் இருப்பதற்கு அவர்கள் என்ன வெறும் சக்கைகளா? இல்லை. பச்சையை சிலர் பார்க்கும் முயற்சி வெற்றிபெற முடியாது. பச்சை பச்சைதான் என்பதை தொழிலாளர் இனம் இன்று கண்டு கொண்டது."
இரவு தனது பயணத்தைத் தொடங்கி எவ்வளவோ நேரமாகி விட்டது. ராஜாவும் உறக்கத்தை வரவழைக்கிறான். ஆனால் அவனது மனவிழிப்புக்கு முன்னே உறக்கம் எப்படி வரும்!
5
பங்களாவின் உள்ளே புகுந்த புகையைக் கண்டு யன்னலைத் திறந்து புல்லுமலைப் பக்கம் பார்க்கிறான் துரை காடெல். புல்லுமலை எரிவது நன்றாகத் தெரிகின்றது. குளிர்ந்த காற்று நீலப் புகையையும் சேர்த்து இழுத்து தோட்டமெல்லாம் புகைக் காடாக்குகின்றது. கரித்தூள்கள் பசிய தேயிலை இலைகளிலே வந்து படிகின்றன.
ராஜாவின் தலைமையில் ஒரு கூட்டம் அங்கே காடழித்துக் கொண்டிருக்கிறது. தோட்டமே அங்கு திரண்டு நிற்கின்றது. ராஜாவின் மூக்கினிலே வியர்வைத் துளிகள் முத்தாய் அரும்பி நிற்கின்றன. பனியன் நனைந்து நாறுகின்றது. பண்டா, மாணிக்கம், அனுலா அங்கே வேலையில்
மும்முரமாய் ஈடுபட்டிருக்கின்றனர்.
| மொழிவரதன் 23

Page 15
"எனது தோட்டமே எரிகின்றது. நாட்டாட்களும், தோட்டக் கூலிகளும் கொள்ளை அடிக்கிறார்கள். உடனே வரவும்." துரை காடெல் பொலிசுக்குச் சொல்லுகிறான்.
"இதோ வருகிறோம்" இது பொலிசின் பதில். நாட்டுச் சனங்களும், தோட்டச் சனங்களும் அந்தத் தோட்டத்தை ஆக்கிரமித்து விட்டார்கள். இனிமேல் அவர்கள் பிடித்த இடத்தை விடப் போவதில்லை.
தோட்டச் சனமே திரண்டு வந்து கொண்டிருக்கிறது. மண்வெட்டி, கத்தி ஆகியவற்றுடன் அவர்களின் முகங்கள் இரத்தமாய் சிவந்து கிடக்கின்றன - தீ சுவாலை விட்டு எரிகிறது!
ராஜா முழு மூச்சுடன் அந்தத் தோட்டத் தொழிலாளர் வாழ்வுடன் தன்னையும் இணைத்துக் கொள்ளத் தீர்மானித்துவிட்டான்.
பொலிஸ் ஜீப் தூரத்தே வருவது தெரிகிறது. என்றாலும் தொழிலாளர்கள் பயப்படவில்லை. அவர்கள் அந்த நிலத்தை விட்டுப் போகப்போவதில்லை.
பொலிசுடன் வந்த துரை காடெல் சொல்கிறான்: "இந்தத் தோட்டம் என்னுடையது. நீங்கள் எல்லோரும் வெளியேற வேண்டும். இல்லாட்டி சுட்டுத்தள்ளுவேன்.”
"முடியாது - முடியாது. இந்த நிலம் எங்களுக்கே. முதலாளித் துவம் ஒழிக. ஏகாதிபத்தியம் ஒழிக...!"
எல்லாக் குரல்களும் ஒன்றாய் ஒலிக்கின்றன. “முடியாது. முடியாது.” பண்டா கத்துகிறான். அவனது கையிலே மண்வெட்டி இருக்கிறது. வேட்டுக்கள் முழங்குகின்றன. அதையும் மறைத்துக்கொண்டு வருகின்றன பல குரல்கள்.
"நாங்கள் வெளியேறமாட்டோம்.” "ஐயோ. அம்மா." "ஐயோ. அம்மே." ஜீப்கள் எரிகின்றன; இரத்தங்கள் செம்மண்ணில் பீரிட்டுப்பாய் கின்றன.
என்றாலும் செஞ்சிவப்பு மலர்கள் பூத்தவண்ணம்தான் இருக் கின்றன. வேட்டுக்கள்தான் தீர்ந்துவிட்டன.
- 1975 - (ஞானம் - ஆகஸ்ட் 2001)
24 ஒரு நாடும் மூன்று நண்பர்களும்

O ஒரு நாரும்
O O O
மூனறு நனயாகளும
அக்பர் விடுதியின் மேல்மாடியில் சிறிபாலவும் சந்திரனும் நின்று கொண்டிருந்தார்கள். மாலை வேளை அது. அங்கிருந்து பார்க்க பேராதனை வளாகத்தின் விடுதிக் கட்டிடங்கள் ஆங்காங்கே தென் பட்டன.
உயர்ந்த மலையின் உச்சியில் மார்க்கஸ் மண்டபம், அதன் கீழே J.P, அதன் எதிர்ப்புறத்தே ஹில்டா., சங்க மித்தா, இராமநாதன். இப்படித் தொடர்ந்தன.
செழித்துப் பூத்துக் குலுங்கி நிற்கும் இளங்குமரியைத் தழுவி நிற்பதுபோல் ஹந்தான மலைப் பகுதியின் வெண்ணிற மேகங்கள் மலையைத் தழுவிக்கிடந்தன. மாவலியின் இளங்காற்றுக்கு அம் மேகங்கள் மேலாடை விலகுவதுபோல் விலகின. செல்லமாய் ஊர்ந்தன. இது கண்டு வானம் சிவந்து கிடந்தது.
மாலை வேளைகளில் சிறியாலாவும் சந்திரனும் அந்த மாடியினின்றும் அதனைப் பார்த்து இரசிப்பது வழக்கம். சிறியாலாவும் சந்திரனும் ஒரே வருடத்தினரே. இருவரும் தற்போது இரண்டாம் வருடம்.
| மொழிவரதன் 25

Page 16
இருவரும் ஒரே பாடநெறியையே செய்தனர். அதேபோல் பாடங்களும் ஒன்றே. ஆனால் மூல மொழிகள்தான் வித்தியாசம்.
சிறிபால ஒல்லிய உடம்பு, நல்ல உயரம். அமைதியான முகம். பாவைக்கு மயிர் வைத்ததுபோல் அவன் தலைமயிர் சிலிப்பிக் கொண் டிருக்கும். எண்ணெய் வைத்து வகிடு எடுத்து வாரிட முயற்சித்திருப்பது அவனது தலை மயிரினைப் பார்க்கையில் புரியும். சிரிப்பு அவன் முகத்திற்கு ஓர் அழகு. கவலையற்ற ஒரு குழந்தையின் சிரிப்புப்போல் அவனது சிரிப்பு இருக்கும் சிறிபாலவைக் கண்டு சிரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். பழகும்போதுகூட பண்புடன் பழகத் துடிக்கும் உள்ளம் அவனது. மற்ற நண்பர்களின் மாற்றுக் கருத்துக்களை உன்னிப்பாகக் கவனித்துக் கேட்பவன் அவன். ஆனாலும் அவன் தாராளவாதியல்ல. தன் கருத்துக்களை மற்றவர்கள்மேல் திணிக்க எண்ணும் போக்குடை யோனும் அல்ல.
இத்தகைய பண்பெல்லாம் உடையவன் சிறிபால என்பதனை அறிந்து சந்திரன் நண்பனாகவில்லை. அப்படிப் புரிந்துகொள்ள, அறிய, அந்த வாய்ப்பும்கூட இல்லையே. ஆனால் ஒரு திரிபுவாத அரசியலில் வளாகம் சிக்கிவிட்டதே என்று எண்ணிக் கவலைகொள்ளும் நெஞ்சங் களில் இரண்டு நெஞ்சங்களாக சந்திரனும் சிறிபாலவும் எங்கெங்கோ இடம்பெற்ற கருத்து மோதல்களின்போது ஒரே கருத்தை ஒலித்த இரண்டு குரல்களாக இருவரும் காணப்பட அதுவே உறவுக்கு ஊன்று கோலாயிற்று. இது தவிர அவர்கள் வளாகத்திற்கு வரும்முன்னே தெரிந்திருக்க நியாயமேதுமிருக்கவில்லை.
சிறிபால மேற்கு மாகாணத்தின் கரையோரத்தில் காலிப் பகுதியின் ஒரு குக்கிராமத்தின் வாசி. தன் இனத்தவர்களே, சிங்களவர் களே பெரும்பான்மையினர் வாழும் பிரதேசத்தின் பிரதிநிதி அவன்.
சந்திரன் அந்தக் காலிப் பகுதியின் எதிர்த்திசையான கிழக்குப் பகுதியில் மலைநாட்டுப் பகுதியினைச் சார்ந்தவன். அவன் ஒரு மலையகப் பிரதிநிதி. இரத்தம் படிந்த வரலாற்றினைப் படைத்த பரம்பரையின் வாரிசு அவன்.
இந்த இரண்டு மனிதர்களும் சந்தித்துப் பழக நண்பர்களாக மேலோட்டமானதும், அற்பமானதுமான ஒரு சில பொதுப் பண்புகள்தான் காரணமோ? அப்படிச் சில அற்பக் காரணங்கள், உறவுகள் நிலைத்திருக்க அடிப்படைக் காரணங்களாகி விடுவதில்லை. வரலாற்றினையும், இயங்கி யலையும், விஞ்ஞானத்தினையும் சரியாக விளங்கிக்கொண்டவர்கள், உறவுகள் வெறுமனே ஒரு காரணமுமின்றி ஏற்படுவதில்லை என்பதை அறிவர்.
ஆம், சந்திரன் சிறி என்ற அந்த இரண்டு உள்ளங்கள் நெருங்கி
26 ஒரு நாடும் மூன்று நண்பர்களும்

நண்பர்களாக அவர்கள் இருவருமே அடக்கி ஒடுக்கப்பட்ட இனங்களி னின்றும் வந்தவர்கள் என்பதுவே ஒர் அடிப்படைக் காரணமா யிற்று எனலாம்.
நீண்ட நேரம் வெகு அமைதியாக நின்றிருந்த சிறி, அக்பர் விடுதிக் கழிவுச் சாப்பாடு பொறுக்குவதற்காக வந்து கொண்டிருந்த ஒரு தாயையும், அவளது குழந்தையையும், அந்தச் சின்னஞ் சிறுமியையும் சுடடிக காடடினான.
"அதோ. பார்த்தாயா?”
அவன் விரல் காட்டிய திக்கில் தன் பார்வையைச் செலுத்தினான் சந்திரன்.
"ஓ! அவர்கள, அவர்கள் எந்நாளும் இங்கேதான் வருகிறார்கள். உனக்குத் தெரியாதா அவுங்களுக்கும் வயிறு இருக்கே. பசிக்காதோ?”
சந்திரன் சிலவேளைகளில் இப்படித்தான். சிறிபால சீரியஸாகச் சொல்வதை மிக இலேசாக எடுத்து அதனையும் கிண்டலாகக் கதைப்பான். இப்பொழுதும் அப்படித்தான் அவனது பதில் இருக்கின்றது. இது சிறிக்கு சில வேளைகளில் பிடிப்பதில்லை. எனினும் சந்திரன் இது போன்ற விடயங்களில் உணர்வு உள்ளவன் என்பதனை அறிவான். அதனால் அவன் இப்படிப் பதில் கூறுகையில் அதனைப் பெரிதாக அவன் எடுத்துக் கொள்வதில்லை.
சந்திரனின் பதிலைக் கேட்டு அவன் சொன்னான்,
"இந்தக் குடும்பம் இப்படியே எத்தனை காலத்துக்கு வாழ்வது?”
"அவுங்க இப்படித்தான் வாழமுடியும்.”
“இது ஒரு முக்கிய விசயம்தான். இந்தமாதிரி பிரச்சினை இப்பொழுது ஏற்பட்டதல்ல. இது வரலாற்று ரீதியானது. இலங்கை சுதந்திரம் அடையும் முன்னரே இப்படித்தான். தமிழ் இலக்கியத்திலேயும் இப்படியான விசயங்கள் வருது. அதாவது அந்தக் காலத்தில் இல்லாதவங்களுக்கு அரசன் கொடை வழங்குவானாம். அதனால் கொடை வள்ளல் என்று பெயர் பெறுவான். பிச்சைக்காரன் இருந்தால்தான் அரசன் கொடை வள்ளல் ஆக முடியும்.”
இருவரும் பலமாகச் சிரித்தனர்.
மாவலியாள் இளங்காற்றுடன் கலந்துவந்து அவர்கள் இருவரி னதும் ஷேர்ட்டுக்களையும் தலை மயிரையும் தழுவிச் சென்றாள்.
சிறி சொன்னான், “தமிழிலே மாத்திரம் இல்லை, சிங்களத்திலேயும் எந்த மொழியிலும், இனத்திலேயும் இப்படித்தான். சிலர் உறிஞ்சி வாழ, பலர் பட்டினியால் கிடக்க. பின் அந்த சிலருக்குள் சமூக சேவையாளர்கள் கொடை வள்ளல்கள். ச்சா. நல்ல ஒரு புதுமையான
| மொழிவரதன் 27

Page 17
விஷயம். என்னா சொல்கிறாய்.”
“இந்தப் புதுமையான விஷயத்திலே ஒன்னும் புதுமை இல்லேங்கிறத விஞ்ஞானம் தெளிவாக்கி இருக்கு. இதனால அந்தச் சிலர் மிச்சம் பயப்படுறாங்க. பிச்சைக்காரர்கள் உருவாகினாத்தான் அந்தப் பணக்காரர்கள் வாழமுடியும். இந்த அமைப்பு அதனாலதான் பிச்சைக்காரர்களை உருவாக்குது. இவர்கள் வாழ்க்கை சிக்கலானது. இதோ, இது ஒரு பிச்சைக்காரக் குடும்பம். அதோ, அவளின் தோளில் தொங்கிய வண்ணம் கிடக்கும் அந்தச் சின்னஞ்சிறு ‘பபா அவளது வாரிசு. அந்தத் தாயின் கைகளைப் பற்றியவண்ணம் நடந்துவரும் அந்தச் சின்னஞ்சிறு சிறுமி மற்றொரு வாரிசு. அப்படிச் சமூகம் இவர்களை ஏற்றுக்கொண்டு விடவில்லை. ஒரு பிச்சைக்காரியின் பிள்ளையா? சமூகம் அவள் எவ்வளவு நல்லவளாக இருந்தாலும் மூக்கின்மேல் விரலை வைக்கிறது.”
சிறி அமைதியாக இருக்கின்றான். அவன் ஆழமாக ஏதோ யோசிக்கிறான்.
சந்திரன் ஏதோ சொல்லத் தொடங்கினான். அவன் அதனை செவிமடுத்துக் கேட்பதாக இல்லை. அதனால் அவனும் கதையாமல் இருந்தான்.
அவர்கள் இருவரது பார்வையும் அந்தக் குடும்பத்தின்மேல்தான் நிலைக்குத்தி நிற்கிறது.
அக்பர் விடுதியின் டைனிங் ஹோலில் வெளிப்புறத்தில் எச்சில் இலை சாப்பாட்டிற்காக எட்டிப்பார்த்த வண்ணம் அவர்கள் நிற்பது நன்றாகத் தெரிகிறது.
சிறி சந்திரனைப் பார்த்துச் சிரிக்கிறான். "நீ ஏன் சிரிக்கிறாய்?" அவன் சிரிப்பை அடக்கவில்லை. பலமாகச் சிரிக்கிறான். "சும்மா பல்லைக் காட்டாதே. விஷயத்தைச் சொல்.” அவன் சொல்கிறான், "நாங்கள் கதைக்கிறோம். கதைக்கிறோம். செயல்படுவதாக இல்லையே."
இடையிலே குறுக்கிட்டுச் சந்திரன் சொல்கிறான், "இந்தச் சமூகத்தின் மாற்றத்திற்கான போராட்டத்தில் நாம் தடைக்கற்களாக மாட்டோம்."
"இது நிச்சயம்தான்” அவன், ஆம் என்பதற்கு ஓணான்போல் தலையை ஆட்டுகிறான். சிறி கேட்கிறான், “அந்தச் சின்னஞ்சிறு சிறுமிக்கு எத்தனை வயசிருக்கும்?"
28 ஒரு நாடும் மூன்று நண்பர்களும்

“ஒன்பது அல்லது பத்து வயசு இருக்கும்." "இன்னும் மூன்று அல்லது நான்கு வயதில்" "அவள் ருது ஆவாள்." "அதன் பின்.” "அவள் ஒரு குமரி” சிறி இதனைப் பலமாக மறுத்து விட்டுச் சொல்கிறான், “அவள் ஒரு விபச்சாரி.”
சந்திரன் வாயடைத்து நிற்கிறான். அதற்குப் பதில் சொல்ல முடியாது. மறுக்கவும் முடியாது. ஆனால் அதனைச் ஜீரணிக்கக் கஷ்டமாக இருக்கிறது. அவன் ஏன் இப்படிக் கதைக்கிறான். அந்தச் சின்னஞ்சிறு சிறுமியைப் பார்த்து அவனுக்குக் கோபம் வருகிறது. அந்தத் தாயின் சேலைத் தலைப்பைப் பிடித்த வண்ணம் நிற்கும் அவளைப் பார்த்து எப்படிச் சொல்வது?
“சிறி, நீ எப்படி அப்படிச் சொல்ல முடியும்?" சந்திரன் உரத்த குரலில் கேட்கிறான்.
"அதுதான் உண்மை. இதை நீ ஏற்றே ஆக வேண்டும். யதார்த்தம் இதுதான்."
சந்திரன் அமைதியானான். அவன் அந்தத் தாயைக் காட்டிக் கேட்டான். "அவளும் அப்படியே?
"அதெப்படிச் சொல்ல முடியும்" "அவர்களிடம் என்ன இருக்கிறது” அவன் திரும்பிக் கேட்கிறான். என்ன இருக்கிறது நியாயமான கேள்வி. வீடு, நிலம், தொழில். சிறி சொல்கிறான், "அவர்களிடம் இருப்பது." அவன் வசனத்தைப் பூரணப்படுத்தவில்லை. சந்திரன் கேட்கிறான், "அதுதான் மூலதனமா?” “சரியாகக் கேட்டாய், அதுதான் மூலதனம்." மக்கள் வரலாற்றின் துயரம் படிந்த ஏடுகளைப் புரட்டிப் படித்து விட்டுக் கண்கலங்கும் ஒரு நேர்மைமிகு வரலாற்று ஆசிரியனைப்போல் சிறியும் சந்திரனும் கலங்கி நின்றார்கள்.
சிறி சொன்னான், "இது இந்தச் சிறுமியுடையது மாத்திரமல்ல, இதுபோல ஆயிரம் ஆயிரம் பேருடைய பிரச்சினை. ஒரு சமூக முழுமைக்கான மாற்றத்தின் மூலம் ஓர் அங்கமான இப்பிரச்சினையையும் தீர்க்கமுடியும்.”
வளாகம் இருளில் மூழ்கிக் கொண்டிருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக மின்விளக்குகள் பளிச் பளிச்சென ஒளி வெள்ளம்
பரப்பின.
மொழிவரதன் 29

Page 18
டின்னர் வேளையில் டைனிங் ஹோலில் சிறியைப் பார்த்தான் சந்திரன். வழமைக்குமாறாக அவன் முகம் சற்று வாடிப்போய் இருந்தது. டின்னர் வேளையில் விடுதிச் சாப்பாடு பற்றிய சர்ச்சை எழுந்தது. அந்தச் சாப்பாட்டு மேசைக்கேயுரிய பிரச்சனைகள் அவை.
"நான் இதுமாதிரி வீட்டில் என்றால் தூக்கி எறிஞ்சு போடுவன். ஓம் இதென்ன சாப்பாடா?”
"நாளைக்கு கோழி ஒன்று சாப்பிடனும்" சலவைக்குப் போய் வந்த அடையாளம் மாறாதவண்ணம் உடையணிந்த ஒருவர் இப்படிக் கூறுகிறார்.
சந்திரனுக்குச் சிரிப்புத் தாங்க முடியவில்லை. அவன் சிரிக்கிறான். “இறைச்சி இல்லாம நான் வீட்டில சாப்பிட்டது கிடையாது.” ஒருவர்.
“ஆதாரம்.? சிறி கேட்கிறான். சிரிப்பு டைனிங் ஹோலையே ஆட்டிப் படைக்கிறது. சிறிக்குப் பக்கத்திலே ஒருவன் சாப்பிட்டுக்கொண்டிருந்தான். அவன் சோறு முழுவதும் சாப்பிடவில்லை. வைத்துவிட்டு எழும்பிவிட்டான். அதற்காகவே காத்திருந்த சிறுவன் ஒருவன் ஓடிவந்து அதில் உள்ளதை எடுத்து ஒரு பேப்பரில் கொட்டிக்கொண்டு ஓடுகிறான். விடுதிச் சேவகன் கையில் தும்புத்தடியுடன் அவனை விரட்டுகிறான். அவனோ மின்னல் வேகத்தில் எலிபோல் ஓடி மறைகிறான்.
"இந்தச் சனியன்கள் ஏன் இங்கே வருகுதுகள்?" சுருட்டைத்தலை சுந்தரம் கேட்கிறான்.
"அதுதானே, இவுனுவளுக்கு தாய் தகப்பனுவள் இல்லையா?” பளில் கேட்கிறான்.
"அவர்களில் பலருக்கு தகப்பன் இல்லை. சிலருக்குத் தாய் இல்லை. இன்னுஞ் சிலர் அனாதை, பிரச்சினைக்குரியவர்கள். இவ் வமைப்பின் அறுவடைகள்."
திடீரென, குறுக்காக சிறுவன் ஒருவன் ஓடினான். "ஐயோ . அம்மே. " இது பையனின் அவலக் குரல்.
ஓடிப்போய்ப் பார்த்தோம். பையனின் மண்டையிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அவன் அந்தத் தாயின் மடியில் கிடந்தான். "இவனை ஏன் இப்படி அடித்தீர்கள்?" அவன் சிங்களத்தில் வைதான்.
அவள் தனது முந்தானைச் சேலையைக் கிழித்து வழிந்த இரத்தத்தினை துடைத்தாள். அவன் - பையன், அவள் பெற்றெடுத்த குழந்தையல்ல. அந்தப் பையன் யாரோ, அவள் யாரோ. ஆனால்
30 ஒரு நாடும் மூன்று நண்பர்களும்

ஏதோ ஒன்று அவர்களை இணைத்தது.
அதுதான் "வர்க்கப் பாசம்' "டேய். டேய் சந்திரன் நில்லடா, நானும் வாரன்." இது கணபதியின் குரல்.
"என்னடா சத்தம் போடுகிறாய். உலக்கையன்" சந்திரன், கணபதியுடன் கதைக்கும்போது அவனைப் போலவே யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் கதைக்க அவனுக்கும் ஆசைதான். சிலவேளைகளில் அவன் அப்படிக் கதைக்கிறான். ஏனென்றால் அவனுக்கும் அப்படிப் பேசத் தெரியும் என்ற ஒரு பெருமைக்கு. ஆனால் ஏனோ அவனால் அதனை வழக்கப்படுத்திக்கொள்ள முடியவில்லை.
எப்படியோ. தாய்ப்பாஷை - பேச்சு மொழி இவைகளுக்கு ஓரினம் கொடுக்கும் இடம் உயர்ந்ததுதான். சந்திரன் விதிவிலக்காக முடியுமோ.
சந்திரன் வளாகத்தில் சந்தித்த நண்பர்களுள் கணபதியும் ஒருவன். யாழ்ப்பாணத்தில் ஒரு கிராமம் அவனது ஊர். விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவன். மண்ணைக் கிண்டி, மழையை நம்பி வாழும் வர்க்கத்தின் குடும்பத்தினைச் சார்ந்தவன். அந்தச் சூழலுக்கே உரிய அரசியல் பின்னணியில் வளர்ந்தவன்.
பொதுநோக்கில் அவன் உணர்வுமிக்க இளைஞன். குடுகுடு என அவன் ஓட்டமும் நடையுமாய் போகும்வேகம் அவன் கால்களுக்குச் சில்லுவண்டி பூட்டியதுபோல் இருக்கும்.
செனட் கட்டிடத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்த சந்திரன் கணபதியின் குரல், கேட்டு அப்படியே நின்றான். அவன் பார்த்து நின்ற 'ஆர்ட்ஸ் புளக்கின் பக்கத்தில் மரத்தடியில் இரண்டு ஜோடிகள் அமர்ந்திருப்பது தெரிந்தது.
ஓடிவந்த கணபதி வந்ததும் வராததுமாகச் சொன்னான், "என்னடா மச்சான், விஷயம் தெரியுமே." அவனுக்கு மூச்சு வாங்கியது.
“என்னடா விஷயம் சொல்லு. சொல்லு." அவன் அவசரப் படுத்தினான்.
"யாழ்ப்பாணத்திலே பொலிஸ் அட்டுழியமாம். பேப்பரில் அதெல்லாம் ஒன்றுமில்லை.
குறுக்கிட்டுச் சந்திரன் கேட்டான், "உனக்கு எப்படித் தெரியும், கடிதம் வந்ததோ?”
“என்ர பிரண்ட் ஒருத்தன் முழு விபரமும் எழுதியிருக்கிறான். சும்மா நிண்ட பொடின்களையெல்லாம் பிடிச்சு அடக்கினமாம். முன்பு எதிர்க்கட்சிக்காரர்ட கூட்டத்திற்கு தடை போட்டவங்கள். இப்போ
፵?
| மொழிவரதன் 31

Page 19
அன்றைக்கு அரசாங்கக் கட்சியைச் சார்ந்தவையள் கூட்டம் நடந்திருக்கு அரசாங்கத்தில இருக்கிற தமிழ் மந்திரியும் வந்திருந்தவராம். பொலிசுக்காரர் கூட்டம் கூடக்கூடாது என்று அடிச்சுக் கலைச்சவங்களாம். சனங்கள் எல்லாம் அந்த மந்திரியைப் போய் சூழ்ந்திருக்கு. பொலிசுக் காரன் எல்லோரையும் அடிச்சுக் கலைச்சவனாம்.”
"பிறகு.?” “பிறகென்ன. முன்பெல்லாம் மினிஸ்ரர் உத்தரவுக்குக் கீழ்நின்று வேலை செஞ்சவங்கள் இவங்கள். இப்போ பொலிசுக்குத்தானே சகல அதிகாரமும் கொடுத்துக்கிடக்கு."
சந்திரன் ஒன்றும் பேசவில்லை. "நான் இதற்குச் சும்மாவிடப் போவதில்லை. பழி எடுத்தே தீருவேன்” கணபதி கர்ஜித்தான்.
இருவரும் செனட்டைக் கடந்து லைபிறரியை அண்மிக் கொண்டிருந்தார்கள.
பச்சையும், நீலமும், சிவப்பும், மஞ்சலும். பல வண்ண நிறமாய் உடைகள் மினிஸ்கேட்டுக்கள், சாரிகள் ஆர்ட்ஸ் புளக்கிற்கும், லைப்பிறரிக்கும் செனட்டுக்கும், ஹ"ஷ் கென்டினுக்குமாய் அலைந்தன. இருவரும் ஒன்றும் கதைக்கவில்லை. எனினும் சந்திரன் ஆறுதலாக இதுபற்றிக் கதைக்க விரும்பினான். இக்கதையைக் கணபதி கூறத்தொடங்கியவுடனேயே அவன் அப்படி நினைத்துக் கொண்டான்.
லைப்பிறரிக்கு முன்னால் இடதுபுற இருக்கையில் அமர்ந்திருந்த சிறி, "ஹலோ. கணபதி., சந்திரன்.” என்றான்.
அவனையும் அழைத்துக்கொண்டு நண்பர்கள் ஹ"ஷ் கென்டீன் நோக்கி நடந்தனர்.
"நாம் அந்த விசயத்தைப் பற்றிக் கதைப்போம். விவாதிப்போம். சந்திரன், இவையளோடை எமக்கு என்ன கதை. எல்லாம் இதுகளால்தான் வாறது. ”. கணபதி இப்படிக் கூறினான். அவனது மனோநிலையில் அவன் அப்படித்தான் கதைக்க முடியும். ஏனெனில் பொலிஸ் அட்டுழியம் என்பதும் ஒரு சிறுபான்மை இனத்திற்கு எதிரான அட்டுழியமாகத்தான் தாண்டவமாடுது.
பாராளுமன்றவாதிகள் இனரீதியான தூண்டுதல்கள் மூலம் காணத்துடிக்கும் சுய இலாபங்களுக்கு இது அவசியம்தானே. பொலிஸ் அட்டூழியம் என்பதும்கூட மெல்லிய மேலோட்டமான விஷயம் அல்ல. அது அடிப்படை விஷயங்களுடன் சம்பந்தப்பட்டது.
சிறி மூன்று சாயத்தண்ணிக் - காட்டை வாங்கி வந்தான். மூவரும் அதனைக் குடிக்க ஆரம்பித்தனர்.
32 ஒரு நாடும் மூன்று நண்பர்களும்

“யாழ்ப்பாணத்தில் பொலிஸ் அட்டுழியம் பற்றிச் சொன்னாய். - சந்திரன்.
"அது சரியா?” "அது பிழை, பொலிஸ் அப்படித்தான் செய்யும்." "பேந்தென்ன கதைக்க வேண்டிக் கிடக்கு. பொலிஸ் செஞ்சால் உங்களுக்கு சம்மதந்தானே. அப்புடித்தான் செய்யுமென்றால், அது சரியே?” கணபதி ஆத்திரத்துடன் தேநீர் குடித்தது பாதி குடிக்காதது பாதியுமாய் எழுந்து செல்ல நாற்காலியை இழுத்துக்கொண்டு கிழம்பினான். அவன் முகம் வியர்த்திருந்தது.
சந்திரன் எழுந்து சென்று அவனை அமரும்படி வேண்டிவிட்டு மூன்று சிகரட் வேண்டச் சென்றான்.
கணபதி தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் பொலிஸ் விடயத் தினைப் பற்றி சிறியிடம் கூறினான். சிகரட் பற்றவைத்தவுடன் கதை சூடுபிடிக்க ஆரம்பித்தது.
விபரங்கள் அறிந்து கொண்ட சிறி சொன்னான், "பொலிஸ் அப்படித்தான் செய்யும் என்றால், பொலிஸ் செய்வது சரி என்று அர்த்தப் படாது. பொலிஸ் என்றால் என்ன என்பது பற்றி, அரசு என்றால் என்ன என்பது பற்றி, அறிந்து கொண்டவர்களின் பதில் இப்படித்தான் சுருக்கமாக இருக்க முடியும். அரசு தன்னைப் பாதுகாக்க வேண்டியுள்ளது. அதற்கு பொலிஸ் உள்ளது எனலாம். சிறுபான்மை இனத்தவரின் இயக்கமும்கூட அரசைப் பாதிக்கலாம் என அரசு எண்ணினால், அது பொலிஸை ஏவி அதனைக் கலைக்கலாம். பெரும்பான்மையோர் மத்தியில் சிறுபான்மை யோரைப் பற்றித் தவறான எண்ணத்தை உண்டாக்கும் வகையில் இந்த விஷயத்தினை அவர்கள் கையாளலாம். பொலிஸ் என்பது தனிப்பட்டதும் பிரத்தியேகமானதுமல்ல."
"நீர் சொல்வதெல்லாம் சரி, ஆனால் பொலிஸ் அட்டுழியம் என்பது ஏனோ குறிப்பாக வடக்கேதான் நடக்குது. அது ஏன் அப்படி? அது ஒரு ஏகாதிபத்தியம்தான் ஏவுது. அதனை நாங்கள் எதிர்க்கிறோம். ஓர் இனம் இன்னோர் இனத்தினை ஆழ்வதா? அது இருக்கக் கூடாது. இது ஒரு இன ரீதியான அடக்கு முறையே” என்றான் கணபதி.
சந்திரன் ஒன்றும் கதைக்கவில்லை. அவர்கள் கதைக்கட்டும் என்பதுபோல் அவன் இருந்தான்.
கணபதியைப் பார்த்து சிறி சொன்னான், " பொலிஸின் அட்டுழியம் இன்றைக்கு வடக்கில்தான் அதிகமாக நடக்குது. இதனை நாங்கள் மறுக்கவில்லை. இதனை நாங்கள் எதிர்க்கிறோம். பொலிஸ் எந்த இனத்தினை அடக்கினாலும் அது பிழையான விஷயமே. அது அடக்கு
| மொழிவரதன் 33

Page 20
முறையே. நீங்கள் சொல்வதுபோல் பெரும்பான்மையோர் இதில் சம்பந்தப் படவில்லை. இதனை நீங்கள் உணரவேண்டும். நம்மை ஆள்வது யார், குறுகிய இனவாதிகள். அவர்கள் ஏன் அப்படிச் செய்தல் வேண்டும் என்பதனை யோசித்தல் வேண்டும். இன்று வடக்கில் இப்படி நடக்கிறது உண்மை. ஆனால் நீங்கள் கூறுவதுபோல் வேறு இனத்திற்கும் அப்படியில்லை, நடக்கவில்லை என்று கதைப்பது பிழை. இங்கு நீங்கள் இவ்விஷயத்தினை முழுமையாகப் பார்க்கவில்லை.”
சந்திரன் குறுக்கிட்டான். “கணபதி, நீ ஒரு விஷயத்தினை ஒரு பக்கம் மட்டுமே பார்க்கிறாய். உங்களது விஷயத்தினை நான் மறுக்கவில்லை. அரசு தன்னைப் பாதுகாக்க எதுவும் செய்யும். மலையகத்திலே பொலிஸின் அநியாயம் கொஞ்சமோ? நியாயமான கோரிக்கை வேலை நிறுத்தம் என்றாலும் பொலிஸ் வரும். லயம் வழியே பெண்கள். அதை ஏன் கேட்கிறாய்? கீனாக்கொல்லை என்னும் தோட்டத்தில சுடப்பட்டு அனாதைப் பிணம்போல தொழிலாளி முனிசிப்பல் வண்டியில் தூக்கிப்போடப்பட்டு புதைக்கப்பட்டான். எந்த இனம் என்றாலும் பொலிசு ரூபம் ஒன்றே"
இடைமறித்த சிறி சொன்னான், “கணபதி இது ஒரு முக்கியமான விஷயம். ஒவ்வொரு இனமும் கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம்.”
"உண்மைதான். எங்கள் தமிழ் இனம் இதை என்றைக்கும் எதிர்க்கும்.”
"1971ஆம் ஆண்டு விஷயம் தெரியுந்தானே?” சந்திரன். "ஓம்" "கதிர்காமத்தில் கமலாவதி கொல்லப்பட்டாள் தெரியுந்தானே..? “ஓ. அது ஒரு பயங்கரமான நிகழ்ச்சி." "1971ஆம் ஆண்டு சம்பவத்திலே அரசைப் பாதுகாக்க வேண்டி ஏற்பட்டது. பொலிஸ் அழைக்கப்பட்டது. அந்த விஷயத்திலே பல பிரச்சினைகள் இருக்கு. ஆனால் எப்படியோ. அதில அதிகம் சம்பந்தப்பட்ட இனம் அழிக்கப்பட்டது. பல இளைஞர்கள் பொலிஸ். அட்டுழியம். கமலாவதி.”
கணபதி குறுக்கிட்டுச் சென்னான், "ஓ, அந்தக் கமலாவதியின் முகம் என் மனசில படம்போட்ட மாதிரிக் கிடக்கு. எனக்கு ஒரு தங்கை இருக்கு. சரியா அறிமுக அட்டையில இருந்த கமலாவதியின் முகம் மாதிரித்தான். அதை நினைக்கையில கஸ்டமாகத்தான் இருக்கு."
கணபதி கொஞ்சம் உணர்ச்சி வசப்படுகிறான். "நீர் ஏன் அழவேண்டும்? கமலாவதிக்காக." சந்திரன் இப்படிக் கேட்கிறான். குத்தலாகவும் கிண்டலாகவும். அர்த்தத்துடன்.
34 ஒரு நாடும் மூன்று நண்பர்களும்

அவன் அப்படித்தான். சிலவேளைகளில் தன் பக்கத்தில் நியாயம் இருப்பின் அதனையே பெரிய ஆயுதமாகக்கொண்டு திடீரென மற்றவர் மேல் பாய்ச்சிடுவான்.
சிறிக்கு இது பிடிப்பதில்லை. அவன் சொல்கிறாள், "மோடயா, சந்திரன் இதனை விளங்கிக் கொண்டான். "கணபதி, உணர்வுகள் இதயத்துடிப்புகள் எல்லாம் எல்லா இனத் திற்கும் ஒன்றுதான். தோட்டா உன்னில் பாய்ந்தால் என்ன. சிறியின் உடலில் பாய்ந்தால் என்ன வருத்தம் ஒன்றுதான். இதனைத்தான் இரண்டு இனங்களுமே உணரவேண்டும்” சிறி இப்படிச் சொன்னான்.
கணபதி இதனை ஏற்கவில்லை. அவன் ஏதோ சொல்ல முயற் சிப்பதுபோல் தெரிந்தது. அவனைப் போலவே அவன் அவன் உதடுகளுக் கிடையில் அகப்பட்டுக் கொண்ட சிகரெட் ஜிவ்வென சிவந்திருந்தது.
"பரஸ்பரம் உணர வேண்டும். ஓரினம் மற்ற இனத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் இதெல்லாம் பேய்க்கதை. அரசியலவாதிகள் இப்படித் தான் கதைப்பினம். நடைமுறையில் அப்படியெல்லாம் நடக்காது. எங்கே நடக்குது? காலங்காலமாக இப்படித்தான் சிலர் கதைச்சு வருகினம். வடக்கில ஒரு கதை தெற்கில ஒரு கதை.” கணபதி விளாசினான்.
"இது முழுக்க முழுக்க உண்மை. இதனை நான் மறுக்கவில்லை. இரு பகுதியினருமே அப்படித்தான். காரணம், எப்படியோ எம்.பி. ஆகிடணும். யார் அடிபட்டாலும் அவர்களுக்கென்ன. இந்த ஆட்சியில இதுதான் நடக்கும். இன்னும் நிலைமை மோசமாகும்.”
"அப்படியென்றால்..?” கணபதி வினாக்குறி எழுப்புகிறான். “ஏதோ தொழிலாள, விவசாய ஆட்சி. அதிலதான் சோஷலிஸ." கணபதி நக்கலாகச் சொன்னான்.
"அங்கேயும் இரண்டு இனங்களும் புரிந்து செயல்படனும். இல்லையென்றால் சாத்தியமில்லை." இப்படிச் சந்திரன், சிறி இருவம் சொன்னார்கள்.
கணபதி விரக்தியுடன் சிரித்தான், “ஹே.” என்றவாறு ஹ"ஸ் கென்டீனிலிருந்து எழுந்து நடந்தான்.
"கணபதி, நில்லு. நாங்களும் வருகிறோம்." சந்திரன் சொன்னான்.
அவன் திரும்பிப் பார்த்து சிரித்துவிட்டு வெகு வேகமாக நடந்தான். “போகும் வேகத்தில் பாதை தவறிப் போகப் போகிறான்”
舞
சிறி.
"அது தவிர்க்க முடியாது. ஆனால் சரியான பாதைக்கு வருவான், நம்மளைச் சந்திப்பான்." - சந்திரன்.
| மொழிவரதன் 35

Page 21
"அதெப்படி?” "இருப்பது ஒரே பாதைதானே.?”
அந்தத் தவணை ஆரம்பத்தில் இருந்து சந்திரனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. ஆண்டுக்கு ஒருமுறை விடுதியில் நடைபெறும் சோஷல்' எனும் பூர்ஷ"வா திருவிழா ஆரம்பமாகி இருந்தது.
வசதியுள்ளவர்கள் ஒருநாள் கூடிக் கூத்தாடும் ஒரு விழாவாகத் தான் அது இருந்தது. வசதியுள்ளவர்கள், வசதியற்றவரின் ஏழ்மைமிகு பார்வையில் இன்பம் கொள்ளும் ஒரு விசயமாகத்தான் அது திகழ்ந்தது. பல்கலைக்கழகங்களில் அந்தக்காலங்களில் படித்த வசதிபடைத்த வர்க்கம் போற்றி வளர்த்த, இனிது வளர்த்த கலாசாரம். இதற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் அளிப்பது?
வளாகச் சூழலுக்குள் வந்து அகப்பட்டுக்கொண்டவனுக்கு இது ஒரு பிரச்சினைதான்.
இந்தச் சோஷல் என்ற சங்கதி ஆரம்பமானவுடனேயே அவன் பல கதைகளைக் கேள்விப்பட்டுவிட்டான். அவை அவன் மனதைத் தாக்கின.
இந்தச் சோஷல் பெரும்பாலும் பெண்களுக்கிடையே பிரபல்யம் பெற்றிருந்தது. இது போன்ற விடயங்களில் ஆர்வம் கொண்ட ஒரு விரிவுரையாளர் சொன்னது அவனுக்கு ஞாபகத்திற்கு வந்தது.
"பெண் பிள்ளைகள் எவ்வளவு ஆசையா உடுப்புக்களைக் கொண்டுவந்து வச்சிருக்குங்கள். நகைளும் கொண்டுவந்து வச்சிருக் குங்கள். ஆனால் அவையஞக்கு அதெல்லாம் போட்டுப் பார்க்க ஒரு வழியுமில்லையே. சோஷல் என்றால் அவையஞக்கு ஒரு சந்தோஷம். நன்றாகப் போட்டு அனுபவிக்கலாம். இதெல்லாம் செய்யனும் தம்பி." பட்டுல சாரி, நைலக்ஸ் சாரி, நெக்லஸ் நகைகள் இப்படி. எல்லாவற்றையும் போட்டுப்பார்க்க, அனுபவிக்க வசதிபடைத்தவர்களுக்கு இது ஒரு வாய்ப்பாம். விசேடமாகப் பெண்களைப் பொறுத்து அவர் கூறியிருப்பது உண்மையே. ஏனெனில் பெண்களைப் பொறுத்தவரையில் இயல்பாக உள்ள சில குணங்களும் ஆசைகளும் இந்த வளாகச் சூழலுக்குள் ஏற்படும் நாகரிக உந்துதலும் ஒரு பெண்ணை இப்படிச் சிக்கவைக்கவே செய்யும்.
இளவட்டங்களுக்கிடையில் பெண்களைப்பற்றி இப்படிக் கதைத்து அவர்கள் மனதைக் கவர்ந்திழுக்க அந்த விரிவுரையாளர் முயன்ற வேளையில் அங்கே நின்றிருந்த சந்திரன் கேட்கிறான்,
36 ஒரு நாடும் மூன்று நண்பர்களும்

"பட்டு சாரி, நைலெக்ஸ் சாரி. நகை. பணம் ஏதுமற்ற பெண்கள் என்ன செய்வார்கள்?"
சந்திரனின் கேள்விக்கு என்ன பதில் அவரால் சொல்ல முடியும்' நேர்மைமிகு ஓர் உள்ளம் இப்படித்தான் இந்த விசயத்தை அணுக முடியும்.
சோஷல் என்பது வெறுமனே தம்மிடம் இருக்கும் வசதி, நிலை என்பவற்றினை வெளிக்காட்டச் செய்திடும் ஒரு வழிமுறையாகுமா? இந்த அமைப்பு, கலாசாரம் யாருடையது?
அது அப்படித்தான் இருக்க முடியும். அந்த விரிவுரையாளர் தெளிவாகக் கூறியிருக்கிறார். அந்தப் போலியான ஓட்டத்தில் நாமும் ஒடி வெற்றிபெற வேண்டும். வேண்டுமா?
சந்திரன் இப்படிப் பலவாறு சிந்தித்தபடி தனது கட்டிலில் மல்லாக்கப் படுத்துக் கிடந்தான்.
விடுதிகளின் அறைகளிலும் லைபிரரியிலும், பொது அறை களிலும், கென்டீனிலும் எங்கும் ஒரே சோஷல் மயமாகத்தான் இருந்தது. தனது அறைக்குப் பக்கத்து அறையில் உள்ள நண்பன் சோஷலுக்காக அறையையே வெள்ளையடித்துக் கொண்டிருந்தான். அது ஒரு பெரிய ஆர்ப்பாட்டமாய் அவனுக்குக் கேட்டுக்கொண்டிருந்தது.
இன்று சந்திரனுக்கு இரண்டு “லெக்ஸர் இருந்தது. அதுவும் கென்ஸல். அவன் மனமும் நன்றாக இல்லை. ஏதோ ஓர் அலுப்பில் பேசாமல் வந்து படுத்துக் கிடந்தான். எங்கேயாவது போவோமா? இப்படி யோசிக்கிறான். பின்னர் பேசாமல் கிடக்கிறான். நேரத்தினைப் பார்த்தான். நேரம் நான்கு நாற்பத்தைந்து.
"டொக்ஸ் பார்க்கப் போவோமா? என்றொரு யோசனை. எழுந்தான், முகத்தினை அலம்பிக்கொண்டு புறப்பட்டான். ஆர்ட்ஸ் தியேட்டர் பக்கம் நோக்கி.
முன்னால் போய்க்கொண்டிருந்த இராமநாதன் ஏதோ பெரிய சத்தம்போட்டு அலம்பிக்கொண்டு போய்க்கொண்டிருந்தான்.
சந்திரன் எட்டி நடந்து அவன் கிட்டச் சென்றான். "உனக்குத் தெரியுமே, சாரதா சேலை கஜே அடிச்சது? சாரதா என்பவள் யாரிடமோ ஒசி சேலை வாங்கி அணிந்திருக் கிறாள். அதற்குத்தான் இந்த 'கஜே - கசே எனப்படுகிறது.
சந்திரன் கேட்டான், “யாரிடம்?" "நீர் என்ன கெம்பஸ்லதான் இருக்கிறீரா?, அவள் ரோஜாக்கிட்ட தான் கஜே வேண்டியவள். இப்ப பொடியள் ஹில்டாவிலிருந்து அதுதானே கத்துகினம், சாரி கஜே என்று." இப்படிச் சொல்லிவிட்டு அவன் பலமாகச்
| மொழிவரதன் 37

Page 22
சிரிக்கிறான்.
இவன் சத்தம்கேட்டு அக்பர் பாலத்தினைத் தொட்டவண்ணம் லளர்ந்திருந்த மரத்திலிருந்த குரங்குக் கூட்டம் பாய்ந்து மாவலி நதியின் ஒரத்தில் நிற்கும் மூங்கில் மரம் நோக்கி ஓடுகிறது.
உயர்ந்து வளர்ந்துநின்ற மூங்கில் ஒட்டகச் சிவிங்கிபோல் குனிந்து நீரைத்தொட்டு மேலெழும்புகிறது.
"ஏன் அவள் கஜே அடிச்சவா?” "ராமநாதன் சோஷல் நடந்ததல்லவா. அதுக்குத்தான்" "அவகிட்ட சாரி இல்ல. அதுதான் கஜே அடிச்சிருக்கிறா.” "இல்லையென்றால் ஏன் கஜே அடிப்பான்? இருக்கிறதை உடுத் திறதுதானே?"
"எல்லோரும் உடுத்திப் போகையிலே அவள் மாத்திரம் எப்படி அப்புடிப்போக முடியும்? அதற்கும் மனோ தைரியம் வேணும்."
பதில் இல்லை. சந்திரன் இராமநாதனைப் பார்த்துக் கேட்டான், “நீ ஏன் அருணாசலம் சோஷலுக்கு சுபாசினுடைய சேட்டைக் கஜே அடிச்ச.?"
"அது எங்களுக்குள்ள அடிச்சுக்கொண்டம்.” "அவன் என்ன.. , தான் ஷேர்ட் கொடுத்ததாகச் சொல்லித் திரியிறானே? சொல். கஜே அடிச்சாலும் அப்புடி அடிக்கணும்"
"இது ஒரு போலித்தனம்." "நீங்கள் எல்லாம் அப்படித்தான் கதைப்பியள். நீர் என்ன எண்டி சோஷலோ.., எங்கட ஹோல்லேயும் சிலர் சில சிங்களப் பொடியளோட கூடிக் கொண்டு இப்படித் திரியினம்."
"நான் எண்டி சோஷல் இல்லே. அதிலேயும் ஏதும் தப்பில்லை." "ஏன் உம்மை யாரும் இன்வைட் பண்ணவில்லையோ?” "நான் மறுத்தேன். ஆனால் கலந்து கொள்வேன். தவிர்க்க முடியாத நெலமை”
ஆர்ட்ஸ் தியேட்டரில் அவ்வளவு கூட்டம் இல்லை. இந்தியாவைப் பற்றிய செய்திப் படம் அது. படம் சுவரஷ்யமாக இல்லை. இராமநாதனும் இரசிப்பதாக இல்லை. அவன் பக்கத்திலே இருந்த நண்பனுடன் கதைக்கத் தொடங்கினான்.
“அவன் மூர்த்தி சோஷலுக்குப் பன்னிரண்டு பேரை அழைச்சவனாம். அருணாச்சலம் சோஷல்ல ஒரு எழுப்பு எழுப்பியவன் அவனல்லே. சாப்பாடு என்னா, மப்பு. ஆ அவன் கலக்கிவிட்டான் மச்சான்."
"கேள்விப்பட்டன்” என்றான் அவன்.
38 ஒரு நாடும் மூன்று நண்பர்களும்

"அதுல ஒரு விசேஷம் இருக்கு. தெரியுமோ உனக்கு."
“என்ன விசேஷம்?”
"பத்து கேள்சுக்கு இன்விட்டேசன் கொடுத்தான். பத்துப்பேரும் வந்தவையளாம். நீர் என்ன செய்யப் போறிர்? உனக்கு கொலேஜ் மேட்டு, விலேஜ் மேட். எல்லாம் பார்க்கப்போனால் பதினைந்து பேரை யாவது அழைக்க வேண்டாமா?”
"ஓம், சுபாசுக்கு பத்து கேள்சை இன்வைட் பண்ண முடியுமென் றால் நான்மட்டும் என்ன சும்மாவே. நான் செய்வன்."
“பெரிய செலவு வருமே”
“ஓ, அதென்ன பெரிய காரியமே, வீட்ட கடிதம் எழுதினால். ஒரு இருநூறு கேட்டு. எல்லாம் செய்யலாம். நானும் பாரும் சுபாசுபோல எழுப்புறன்."
திரையிலே படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
“காசுக்கு எழுதினனியோ?” சந்திரன் இராமநாதனைக் கேட்கிறான்.
"ஓம்"
“எதுக்கு?”
"சோஷலுக்கு."
“எவ்வளவு?”
"இருநூறு ரூபாவுக்கு”
"என்னெண்டு கடிதம் எழுதின? சோஷலுககென்றா?
"சீ, சி.இல்ல. ஒருமாதிரி எழுதினன்"
"கொப்பர் என்ன செய்யிறவர்?"
“கமம்"
இராமநாதன் மாத்திரம் அல்ல சந்திரன்களாலும் இந்த இளம் வயதில் பல்கலைக்கழகம் போன்றவற்றின் சூழலாதிக்கத்தினின்றும் அவ்வளவு விரைவில் தப்பிச்செல்ல முடியாது.
சரியான சிந்தனை, சரியான பாதை. இதுதான் அவசியத்தேவை.
லைபிரரியின் ஐந்தாவது மாடியிலிருந்த கிரவுண்ட் புளோர்க்கு வருவதற்காக சந்திரன் "லிப்ட்"க்காக காத்துக் கொண்டிருந்தான். இன்னொரு பெண்ணும் நின்றிருந்தாள்.
லிப்ட் வந்து நின்றது. கதவு திறந்தது. அப்பெண் உள் நுழைந்தாள். சரி, போகட்டும் நாம் ஏன் அதற்குள் உள் நுழைவான் என நினைத்தவண்ணம் அவன் நின்றிருந்தான்.
மொழிவரதன் 39

Page 23
அவள் ஆங்கிலத்தில் கேட்டாள், "என்னுடன் வர விருப்ப மில்லையா?”
சந்திரன் ஏறிக்கொண்டான். அவள் சொன்னாள், "நான் உங்களுடன் வர விருப்பம், கிரவுண்ட் புளோர் வரைக்கும்" சந்திரன் அந்தச் சந்திப்பிற்குப் பிறகு ஒரு நாள் சிறியைக் கண்டபோது அவள் அவனுடன் இருப்பதைக் கண்டான். அவள்தான் அவன் கூறும் 'சுஜாதா. அவனது அன்புக் காதலி என்பதையும் புரிந்து கொண்டான்.
வளாகத்தில் காலடி எடுத்து வைத்ததும் தொடங்கிய அவர்கள் காதல் இன்று கொடிகட்டிப் பறக்கிறது. இருவரும் மிக நெருங்கிப் பழகிவிட்டார்கள். அவர்கள் கதையை ஆர்ட்ஸ் புளொக், லவ்வர்ஸ் பார்க், ஹந்தானை மலை என்பன வாயிருந்தால் கதை கதையாகக் கூறும்.
சிறி - சுஜாதா, இதனை வளாகம் அறியும். சுஜாதா நாகரிக மோகம் உடையவள் என்பதனை நடை உடையில் காணலாம். சோஷல் காலம் ஆரம்பமாகி உள்ளது. சுஜாதா இதில் முக்கிய பங்கு எடுப்பாள்.
சிறி.? சிறியை அவள் அழைத்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால் இவன்.?
அவர்கள் இருவருக்கும் இது பற்றித் தர்க்கம் நடந்திருக்கின்றது. இது அவனது கதைகளிலிருந்து தெரிகிறது. இவன் இறுதியில் போக உடன்பட்டிருக்கிறான் போலத் தெரிகிறது.
சந்திரன் இப்படி அவனது கதைகளிலிருந்து அனுமானித்துக் கொண்டு பேசாமல் இருந்தான்.
சிறி சொன்னான், "சந்திரன் இந்தச் சோஷல்ல கலந்துகொள்ள விருப்பமில்லைத்தான். ஆனால் என்ன செய்ய, நான் கலந்து கொள்ளா விட்டால் சோஷல் நடக்காமல் இருக்கப் போவதில்லை. நான் சாதாரண மான முறையில் கலந்துகொள்ளப் போகிறேன்."
சந்திரன் சிரித்து விட்டுச் சொன்னான், “சுஜாத்தாவுக்காக என்று சொல்.”
" அவளுக்காகவுந்தான். சோஷல் ஒரு கலாசாரம் சம்பந்தப்பட்ட பிரச்சினை. இதனை மாற்ற ஒரு சூறாவளி வேண்டும்” சிறி இப்படிக் கூறினான்.
பரந்துபட்டதும், வெகுஜன ரீதியானதும், பலமிக்கதுமான ஒரு மாற்றம் இதுபோல் இன்னும் எத்தனையோ முதலாளித்துவ கலாசாரங்
40 ஒரு நாடும் மூன்று நண்பர்களும்

களை இழுத்துச் செல்ல முடியும்.
“புறப்படு நேரமாச்சு" சந்திரன் தோளில் தட்டினான்.
சங்கமித்தாவில் இன்று சோஷல். சந்திரனுக்கும் ஒரு இன்விட் டேசன் வந்துவிட்டது. சிறிக்கு சுஜாதா அனுப்பியிருந்தாள். எப்படியோ கதைத்து இறுதியில் இருவருமே புறப்பட ஆயத்தமானார்கள்.
சந்திரன் சூட்கேஸைத்திறந்தான். பயணத்துக்கென்றும், விசேட வைபவங்களுக்கென்றும் அவன் வைத்திருக்கும் அந்த சேர்ட்டும், காற் சட்டையும் அவனைப் போலவே கிடந்தது. ஷ"வைத் தூசிதட்டி காலில் மாட்டிக்கொண்டு கிளம்பினான்.
சிறியும் கிளம்பினான். அவர்களின் முன்னே இராமநாதன், கந்தசாமி,கணபதி எல்லோரும் போய்க்கொண்டிருப்பது தெரிந்தது. இராமநாதன் மிகக் கலகலப்பாக இருந்தான். லவ்வர்ஸ் பார்க்கினூடாகப் போகும்போதே பாடல், ஆடல் சத்தம் கேட்கத் தொடங்கியது.
தம் தம் என முழங்கும் மேனாட்டு வாத்திய இசைக் கருவிகளுக் கேற்ற காக்காய் வலிப்பு நடனங்களுக்கு ஏற்ற பாடல்கள் ஒலித்தன. கணிர் கணிர், தம் தம் என ஓர் ஒழுங்கில் இசைக்கப்படும் இன்னிசை காது செவிடாகும்படி ஒலிக்கிறது. சும்மா இருந்த கிழவனையும் தலை யாட்ட வைக்கிறது.
சங்கமித்தா அன்று சுவர்க்க மித்தாவாக ஒளிர்கிறது. சிவப்பு, பச்சை, நீலம். மஞ்சள் என காகிதங்கள் காற்றில் பறந்தன. பலவர்ண ஒளி வெள்ளம் பாய்ந்தது.
குசலங்கள், அன்பு விசாரிப்புகள், அன்புத் தொல்லைகள், சிணுங்கல்கள். பட்டுப் பூச்சி பறப்பதுபோல் பெண்பூச்சிகள் பறந்தோடித் திரிந்தன. சங்கமித்தாவின் பொது அறையில் ஆடலும் பாடலும் நடந்தன. ஒரு பெண் இடுப்பை வளைத்து வளைத்து ஆடிக்கொண்டிருந் தாள். அவளைச் சுற்றி ஆண்கள் ஆடினார்கள்.
சந்திரனுக்கு அழைப்பு லிடுத்த பெஜ்மேட் அவனை வந்து ழைத்துச் சென்றாள்.
சிறி நின்றிருந்தான், சுஜாதாவைப் பார்த்தவண்ணம். அவன் ஒருத்தியிடம் தான் வந்திருப்பதாகவும், சுஜாத்தாவுக்குச் சொல்லும்படியும் கூறினான்.
நேரம் போய்க் கொண்டிருந்தது. நேரம் செல்லச்செல்ல சாராயம் யர் நெடியும் வீசத் தொடங்கியது.
| மொழிவரதன் 41

Page 24
சிறி சொல்லி அனுப்பிய பெண் வந்தாள். “இன்னும் கொஞ்ச நேரத்தில் அவள் வருவாள்." அவள் கூறிச் சென்றாள்.
கூச்சல்கள், ஆர்ப்பாட்டங்கள் , காரண காரியமற்ற வெற்றுச் சிரிப்புகள், வெற்றுப் புன்னகைகள் தொடர்ந்தன. சுஜாதா தூரத்தே வருவது தெரிந்தது. ஒரு சாதாரண உடையில் அவள் வந்துகொண்டிருந் தாள்.
சிறிக்கு ஒன்றும் விளங்கவில்லை. சிலவேளை நாம்தாம் தாமத மாகி விட்டோமா, நாம் வரவில்லையென அவள் நினைத்து விட்டாளோ அவன் இப்படி யோசித்தான்.
அவன் அருகில் கிடந்த நாற்காலியில் அமர்ந்த அவள், அவன் கையைப் பிடித்தவாறு சொன்னாள், “வெளியே போவோமா?”
இருவரும் நடந்தார்கள். "உனக்கென்ன நடந்தது? நீ, கலந்து கொள்ளவில்லையா? சுகவீனமா?” படபடவெனக் கேள்விகளை சிறி அடுக்கினான்.
அவள் ஒன்றும் பேசவில்லை. ஒல்லிய உயர்ந்த அவனது உருவத்தை ஏறஇறங்கப் பார்த்துவிட்டு சிரித்தாள். அவள் சொன்னாள், "நான் கலந்துகொள்ளவில்லை. நான் எனது மனதை இறுதியில் மாற்றிக் கொண்டேன்.”
சிறிக்குப் புதிதாக இருந்தது. அவன் சொன்னான், “ இதில் ஒன்றும் பெரிய தவறில்லை. நாம் கலந்துகொள்ளலாம். எனினும் இந்தக் கலாசாரத்தைப் பற்றிக் கவனத்தில் எடுத்தல் நலம்."
ஹில்டாவுக்கு வரவிருக்கும் படிக்கட்டுக்கருகில் கிடக்கும் கல்லில் இருவரும் அமர்ந்தார்கள்.
"நீ என்னை மன்னிக்க வேணும். எனக்காக என்று எதையும் நீ செய்யக் கூடாது. இந்த விஷயம் நம் உறவைப் பாதிக்கக்கூடாது."
"இல்லை, இது ஒரு தேவையற்ற விஷயம்தானே. நான் முக்கியப் படுத்த விரும்பவில்லை."
"ஏன் இதுபற்றி நான் கதைத்த போதெல்லாம் அமைதியாக இருந்தாயே. பின் ஏன் இன்று இப்படி?”
* உண்மைதான். ஆனால் எங்கள் விடுதியில் இன்று ஒரு சம்பவம் நடந்தது." அவள் சொன்னாள்.
" என்ன சம்பவம்? அவன் கேட்டான். "அதனால்தான் நான் உங்களுக்கு அக்பருக்கு டெலிபோன் பண்ணவில்லை, வரும்படி. வரவேண்டாம் என்று சொல்லும் துணிவும் எனக்குக் கிடையாது."
42 ஒரு நாடும் மூன்று நண்பர்களும்

"அது சரி, என்ன நடந்தது?" “எனது பெட்ஜ் மேட் ஒருத்தி, அவளுக்குக் காதுக்குப் போட்டுக் கொள்ள நகையில்லையாம். இன்னொரு சீனியர் பெட்டையிடம் இரவல் கேட்டிருக்கிறாள். அவள் நகையைக் கொடுத்துவிட்டு விடுதியில் பெரிய காட்டுனுடன் நோட்டீஸ் போட்டுவிட்டாள்.”
*பிறகு?” "அப்படிக் கேட்டு வாங்கியவள் எனது ரூம்மேட்.” "அப்படியா?” "நான் அந்த நோட்டீஸைக் கிழித்தெடுத்தேன். அவள் கொடுத்த அந்த நகையை அதுல சுத்தி அவள் முகத்தில வீசி எறிந்தேன். ஒ, இந்தச் சமூகம் இப்படியா இருக்கவேண்டும். எனது ரூம்மேட் அழுகிறாள்." சிறி மனதுள் எண்ணிக்கொண்டான், ‘ஓர் இளம் பெண்ணின் டீன் ஏஜில் ஏற்படும் மிகச் சாதாரணமான ஆசைகள். சிறி ஒன்றும் கதைக்கவில்லை. அவள் கதைக்கட்டும் என்றிருந்தான்.
கதை தொடர்ந்தது. சிறி கதையைச் சுருக்கிக் கொண்டு விடுதிக்குப் புறப்படலாம் என எண்ணினான். "நான் போகட்டுமா?. சிறி.
"வேண்டாம், இப்பொழுதுதான் விஷயத்திற்கு வந்திருக்கிறோம்." "அது என்ன, விளங்கவில்லை.” "வாருங்கள்” என அழைத்துக் கொண்டு அவள் போனாள். சங்கமித்தாவின் டைனிங் ஹோலைச் சுற்றி இந்த அமைப்பின் அறுவடைகள், நாளைய உலகை ஆளப்போகும் சின்னஞ்சிறுசுகள். பட்டினிக் கூட்டம் காத்துநின்றது.
ஒரு தாய். அவளது இடுப்பில் ஒரு குழந்தை. அவளின் முந்தானையைப் பிடித்தவண்ணம் மற்றொன்று. அவர்கள் அங்கே நின்றார்கள்.
சுஜாதா தனது பிளேட் சாப்பாட்டையும் இன்னொன்றையும் எடுத்து வந்தாள். ஒன்றை சிறியிடம் கொடுத்தாள். மற்றதை அந்தத் தாயை நோக்கி நீட்டினாள். அந்தத் தாயின் இடுப்பில் இருந்த சின்னஞ்சிறு 'பபா அந்த அவித்த முட்டையை ஆசையோடு தொட்டு இழுத்தெடுக்க
இன்னும் சிலர் இப்படி சாப்பாட்டைக் கொடுப்பது தெரிந்தது. சிறி அப்படியே நின்றான். அவித்த முட்டையை இழுத்தெடுத்திட முயன்ற அந்தச் சின்ன பபாவின் முகம் இதயத்தில் ஆழப்பதிந்துவிட்டது.
சிறியின் தோளில் யாரோ கை வைப்பது தெரிந்தது. திரும்பிப் பார்த்தான். சந்திரன் நின்றிருந்தான். அங்கு அவர்கள் கதைப்பதற்கு
| மொழிவரதன் 43

Page 25
ஏதுமில்லை. சந்திரன், சிறி இவர்களைப்போல் அதிகம் கதைக்காத சுஜாதாவின் முகத்தில் புன்னகை தவழ்ந்தது.
கணபதி, சிறி, சந்திரன் மூவரும் அடிக்கடி சந்திக்கும் சந்தர்ப்பம் தற்போது கிடைத்தது. ஏனெனில் இதுதான் அவர்கள் மூவருக்கும் கடைசி வருடம் கடைசித் தவணை. இதனால் பரீட்சைக்கு ஆயத்தப்படுத்த வேண்டியிருந்தது. லைபிரரியில் மூவரும் வந்து படித்துவிட்டு இரவில் எட்டு மணியளவில்தான் திரும்புவர்.
வளாகத்தினை விட்டு நீங்கி கிராமம் செல்ல வேண்டிய காலம் நெருங்க அவர்கள் மனதுக்குக் கஸ்டமாகத்தான் இருந்தது. கிராமத்தி லிருந்து வந்து படித்து கிராமத்திற்குத் திரும்பும் நாம் கிராமத்திற்குக் கொடுக்க இருப்பது என்ன?
கிராமத்தின் வாழ்வுக்கும் இங்கே வந்து படித்த படிப்புக்கும் உள்ள சம்பந்தம்தான் என்ன? அவர்களைப் பொறுத்தவரையில் மட்டுமல்ல எல்லோரையும் பொறுத்தவரையிலும் அவைகள் கேள்விக்குறிகள் தான்.? வெள்ளை ஏகாதிபத்தியத்தின் கீழ் நிர்வாக ஒழுங்குக்காக மக்கள் செய்த கல்விச் சீர்திருத்தம் எமது பாடசாலைப் பாடமுறையாக உள்ளது. ஆனால் புதிய கல்விச் சீர்திருத்தம் இதனை மாற்றி அமைக்கும். இப்படி எவரோ பேசியிருந்ததை எல்லோரும் வாசித்திருப்பார்கள்.
ஒரு கல்வித்துறையின் மாற்றம் ஒரு சமூகத்தின் மாற்றமாகுமா? இல்லை, வெறும் சீர்திருத்தமாகவே இருத்தல் முடியும். அப்படியாயின் தொடர்ந்தும் கேள்விக்குறிகள்தானா?
அடுத்தது என்ன செய்யலாம் என்ற திட்டமற்ற படிப்பின் சூன்ய வெளியில் சந்திரனுக்கு படிப்பே அன்று ஓடவில்லை.
வழமையாக எட்டு மணிக்கு பெல் அடிக்கும்வரை படித்துக் கொண்டிருக்கும் சந்திரன் இன்று நேரத்துடனேயே அறைக்கு வந்திட்டான். சாப்பிட்டுவிட்டு கட்டிலில் அமர்ந்தான்.
முன்னும் பின்னும் முரண்பாடால் ஓடும் சில திரைப்படங்கள் போல எண்ணங்கள் ஓடின. இந்த நேரத்தினில் அந்த உயர்ந்த மலையின் உச்சியில் இருக்கும் லயத்தினில் சுருண்டுகிடக்கும் அந்த மக்கள் கூட்டத்தைப்பற்றி நினைத்தான்.
கந்தசாமி கள்ளுக் குடித்துவிட்டு வழமைபோல் லயத்தில் கத்துவான்தானே..?. பெருமாள், சுப்பிரமணியம் அந்தப் பிள்ளைக் காம்பராவின் கோடியில் அமர்ந்தவண்ணம் அரசியல் பேசிக் கொண்டிருப் பார்கள். நடுங்கும் குளிர் உலகினில் ஆங்கே ஒரு வாழ்வு நடக்கின்றது. முன்னும் பின்னும் தொடர்பின்றி, தொடர்பாயும் மீண்டும் மீண்டும்
44 ஒரு நாடும் மூன்று நண்பர்களும்

எண்ணங்கள். அவன் மேசையைப் பார்க்கிறான். நோட்சுகள் குவிந்து கிடக்கின்றன.
சந்திரனுடைய அறைக்கு வெளியே கணபதியின் குரல் கேட்கிறது. பரீட்சை நேரம்தான், எனினும் கணபதி அரசியலைவிடான்.
“இனவிடுதலைதான் இதுக்கு ஒரேவழி. பெரும்பான்மை இனம்தான் சிறுபான்மை இனத்தை அமுக்குது. எங்களுக்கு நாடு வேண்டும்."
கதவைத் திறந்து கொண்டு சந்திரன் கேட்டான், "ஏன் அமுக்குது?" "சிறுபான்மை இனத்தவர் என்றபடியால்.” “எப்படி அமுக்குது?" "பல்கலைக்கழகப் பிரவேசம், வேலைவாய்ப்பு, அரசாங்கப் பதவி உயர்வு, மொழி விசயமாக."
“மலையகத்திலேயும்தானே ஒதுக்கல் இருக்கு. அடக்கு முறை இருக்கு." சந்திரன் தொடர்கிறான்.
"நீ சொல்வதுபோல் பிரச்சினை தீராது. ஒரு பெரும்பான்மை வர்க்கமான தொழிலாளி வர்க்கத்தின் ஆட்சி அதிகாரத்தின் கீழ்தான் இதனைத் தீர்க்க முடியும். ஏனெனில், இற்றைக்கு இந்தப் பிரச்சினைக்கு தூபம் போட்டுக் கொண்டிருப்பதும், தமக்கு சாதகமாக இதனைப் பயன் படுத்துவதும், எம்.பி. என்ற பட்டம்பெற வாக்குச் சாவடிகளை நம்பிவாழும் தமிழ் சிங்கள ஒருசில முதலாளித்துவ இனவாதிகளே.”
"அரசின் நடவடிக்கைகள் சரியா?” கணபதி கேட்கிறான். "அரசின் நடவடிக்கை பிழையானது. அதற்கு எதிரான உணர்வு நியாயமானது. ஆனால் அவற்றைப் பயன்படுத்துவது மீண்டும் சில பிற்போக்குவாதக் கும்பல்களே. புதிய பாதையும், புதிய தலைமைத்து வத்தையும் நீங்கள் எடுக்க வேண்டும்."
அவர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த பக்கத்து அறை நண்பன் கதவைத் திறந்து எட்டிப்பார்த்தான். அது சத்தம்போட வேண்டாம் என்பதற்கு அறிகுறி.
கணபதி போய்விட்டான். படிப்பது, படுப்பது இப்படிக் காலம் ஓடியது பரீட்சையும் வந்தது பரீட்சையும் எழுதி முடித்தார்கள்
சிறியால, சந்திரன், கணபதி, சுஜாதா பரீட்சை முடிய கிராமத்தினை நோக்கிப் புறப்பட ஆயத்தம் செய்தார்கள்.
கண்ணிர் மல்கும் கண்களுடன் சுஜாதா சிறியுடன் திரிவதனை சந்திரன் கண்டான். பொங்கும் இளமையின் பருவத்தில் அவர்கள்
[ மொழிவரதன் 45

Page 26
சந்தித்தார்கள். பூத்துக் குலுங்கி நிற்கும் பூமரங்களும், சூழலும், சுற்றாடலும் அவர்களின் அக்காதலுக்கு பாய் விரித்தன. அந்தப் பசிய இளம் நினைவுகள். ஓ பொல்லாதவைதான்!
அவர்கள் எல்லோரும் பிரியவேண்டிய காலம் வந்துவிட்டது. கணபதி யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்டான். அவனை வழியனுப்ப சிறி சந்திரன் இருவரும் சரஸஉயன ஸ்டேஸன்வரை சென்றார்கள். சிறியைப் போன்ற ஒரு நண்பனைச் சந்திப்பதில் அவன் பெற்றுக்கொண்ட அனுபவங்களைப் பரிமாறிக்கொண்டான்.
பிரிவுத்துயரம் அவன் முகத்தில் கரியினைப் பூசியிருந்தது. அவன் எவ்வளவுதான் அதை மறைக்க முயன்றாலும் ஏதோ ஒரு கருநிழல் அவனது முகத்தினில் வீழ்ந்தே கிடந்தது.
"சிறி, நாங்கள் ஒரு நாட்டில்தான் இருக்கிறோம். சந்திப்போம் உன்னை என்னால் மறக்க முடியாது.”
"கணபதி! நீ எங்கு சென்றாலும் என்ன, நாம் ஒரே நாட்டுக்குள் தான் இருக்கிறோம். ஒரே நாட்டுக்குள்ளேயே இருக்க முயல்வோம்” என்றான் சிறி.
“என்ன முடிவென்றாலும் என்ன, இரு இனங்களினதும் பரஸ்பர உறவு அத்தியாவசியமானது.” என்றான் கணபதி.
ஊ. ஊ. எனக் கூச்சலிட்டபடி கோச்சு வண்டி புறப்பட்டது. கோச்சு வண்டியிலிருந்து ஒரு கரம் நீண்டுகொண்டே இருந்தது.
۔ ظ9Hg கணபதியின் நேசக்கரம!
- 1978 م.
46 ஒரு நாடும் மூன்று நண்பர்களும்

O நிலப்பசி பசிய மலைகளால் சூழ்ந்திருந்தது அந்தப் பள்ளிக்கூடம். உயர்ந்த குன்றுகள், சவுக்கு மரங்கள், முருங்கை மரங்கள் அப்பாடசாலைக்கு அழகூட்டின.
அதிபர் விஜயசிங்கம் முதன்முறை அப்பள்ளிக்கூட வாயிலை அண்மித்தபோது மனம் மகிழ்ச்சியால் நிரம்பி வழிந்தது.
ஆ எவ்வளவு அழகான இடம், அந்தப் பாடசாலையின் கிழக்குப் புறத்திலே ஒரு தேவாலயம், மற்றொரு புறத்திலே முஸ்லிம்களின் பள்ளிவாசல். மற்றொரு புறத்திலே பெளத்தர்களின் விகாரை. அதன் பக்கத்திலேயே இந்துக்களின் இந்துக் கோயில்.
பாடசாலையைச் சூழ ஒடுகிறது ஓர் ஆறு. சிறுசிறு ஓடைகளும்கூட மேலும் அழகூட்டுகின்றன. எந்நேரமும் ஒரு மெல்லிய சில்லெனும் காற்றும் மெதுவாக வீசுகிறது.
இந்த ரம்மியமான காட்சிகளுக்கு அணி சேர்ப்பதுபோல், மேகக் கூட்டங்கள் பாசமிகு தாய் தனது செல்வங்களை ஆர அள்ளித் தழுவுவது போல் ஆரத்தழுவி மகிழ்கிறது. ஒ! இந்தப் பள்ளியை உயர்த்தலாம், பள்ளிக்கூடத்திற்கே உரிய இலட்சணங்கள் பல உள்ளன.
அழகான பெரிய இந்த மைதானம் மாணவர்கள்தம் உடற்பயிற்சி விளையாட்டுத் துறைக்கு ஒரு 'பிளஸ் பொயின்ட் இதன் நடுவே ஒரு பெரிய மலை இருந்ததாகக் கேள்வி. அதை வெட்டி சீர் செய்தவர்களுக்கு நன்றி சொல்லாமல் இயலாது.
மொழிவரதன் 47

Page 27
இந்தக் கற்பனைக் கனவுகளுடன் அந்தப் பாடசாலைக்கு வந்தவர்தான் அதிபர் விஜயசிங்கம். இந்தப் பாடசாலைக்கு ஒரு பாதை இல்லையே என்பதும் அவருக்கு ஒரு குறைதான். என்றாலும் அதனையும் வெல்லலாம் என்று எண்ணிக்கொண்டார்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு மேலும் மேலும் தேவை நிலம்.
ஒரு சிறிய மாணவர் தொகையுடன் ஆரம்பித்தது இந்தப் பாடசாலை. அதுவும் சிங்களப் பாடசாலையின் ஒரு பகுதியாக இருந்து, பல நல்ல மனிதர்களின் முயற்சியால் தற்போதைய இடத்துக்கு வந்து சேர்ந்தது இந்தப் பாடசாலை. பெற்றார்களின் முயற்சியால் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் 75,000/- ரூபாய்க்கு கட்டப்பட்டதே பிரதான மண்டபம், அது அன்று போதுமானதாக இருந்தது.
ஆனால் இன்று. அதோ முள்ளங்கி, லீக்ஸ், கரட் போடப்பட்டு பச்சைப்பசும் தளிர்களுடன் காணப்படும் தோட்டமும் பாடசாலைக்குரிய நிலத்தில் தோன்றியதுதான். அந்தக் காணியும் கிடைத்தால் எவ்வளவு இந்தப் பாடசாலை உயரும்?
ஒரு பழைய மாணவன் சொன்னது விஜயசிங்கத்தின் மூளையில் 'பளிர் எனப் பளிச்சிட்டது.
"சேர், இந்தக் காணியில் நாங்க விவசாய பாடத்திற்கு தோட்டம் போட்டோம். நிறைய மரக்கறி நட்டோம். பொறகு அந்த இடம் சின்னை யாவால் பறிக்கப் பட்டிருச்சி. அதோ தெரியிதே கானு. அது வரைக்கும் ஸ்கூல் காணி இருந்திச்சி. பெறகு அந்த கமகே அதைப் புடிச்சிட்டாரு. அந்தாப் பாருங்க. அந்த ஆத்துக்குப் போறத்துண்டு, அது மயானத் துக்குக் குடுத்த துண்டு. சேர், சின்னையா அந்த கமகேவுட்டு காணிய புடிச்சிட்டாரு. அது வழக்கில போயி. ஏதேதோ ஆயி முடிஞ்சிரிச்சி. இதுக்கெல்லாம் நாம்தான் ஒரு வகையில காரணம். நம்மஞம் ஸ்கூல் விசயத்தில கவனம் இல்லாமல் இருந்திட்டோம்."
குறுக்கிட்ட அதிபர் கேட்டார், “ஏப்பா பாடசாலை அபிவிருத்திச் சங்கம், ஊர்ச்சனங்க இதை கவனிக்கலையா?”
"கவனிக்கலேன்னு சொல்ல ஏலாது. ஆனா சின்னையா அந்நேரம் ஊருல் பெரிய ஆளு. கோயில்ல தர்மகர்தா. பல வியாபாரம் அவர் கையிலை இருந்துச்சு. பொலிசு எல்லாம் அவரு கையில. இந்த நிலையில யாரு அவரை எதிர்க்க முடியும். சனங்களும் வெளுத்ததெல்லாம் பால் என்று நெனைக்கிறவங்கதானே. அவரும் பாடசாலையில பல பதவிகளை பெற்றிருந்தாரு, பல வேலைகளையும் அவரு செஞ்சாரு. அதனால அவர யாரும் சந்தேகிக்கல்ல."
4s ஒரு நாடும் மூன்று நண்பர்களும்

விஜயசிங்கத்திற்கு சில விசயங்கள் தெளிவாகின. சின்னை யாவுக்கு ஸ்டார் வேலை செய்துள்ளது. அரசியல், ஆள்பலம், பணபலம் அதிகாரம் கையிலிருந்தது.
பிரதான நகரத்திலிருந்து வெகு தூரத்திலே அமைந்திருந்த அந்தப் பசிய ஊர் தொடர்பாடலில் இன்றைய காலத்திலேயே "இப்படி என்றால், முப்பது வருடங்களுக்கு முன் எப்படி இருந்திருக்கும்.? "இழு இழு என இழுவை வண்டிகளாய் இன்டர்நெட் யுகத்திலே இருக்கும்போது அன்று எப்படி இருந்திருக்கும்? கல்விநிலை எப்படி இருந்திருக்கும்?
விஜயசிங்கத்திற்கு தலை கனத்தது! நெற்றி சுருங்கியது அவர் முன்னே ஒரு நீண்ட பாதை பரந்து விரிந்தது. பாடசாலை, கட்டிடம், காணி, நிலம் பழைய மாணவர்கள், ஊர்ச்சனங்கள், அரசியல்வாதிகள், தொழிற்சங்கவாதிகள். என எண்ண அலைகள் வட்ட வட்ங்களாக சுழன்று சுழன்று பரந்தது.
வட்ட வலைப்பின்னலின் நடுவே இருக்கும் சிலந்திபோல் எண்ணச் சுழல்களின் நடுவிலே இருந்தார் விஜயசிங்கம்.
நாட்கள் நகர்ந்தன. ஒருநாள் சின்னையா தன் எதிரே எதிர்ப்பட்ட விஜயசிங்கத்தை தின்னுவதுபோல் பார்த்தார்.
“என்னா மாஸ்டர், நீங்கள் பொலிசிலை என்ரி போட்டிங்களாமே. என்னா ஆதாரத்தை வச்சி போட்டீங்க?"
"இல்லையே, நாங்க என்ரி ஒண்ணும் போடலியே." "மாஸ்டருக்கு இந்த ஸ்கூல் ‘மெப் தெரியுமா, மாயம் தெரியுமா, நீங்க இப்ப வந்தவங்க. நாங்கள்தான் இந்த ஸ்கூல் கட்டினவங்க. நா காணி குடுக்காட்டி இந்த வைஸ்பிரின்சிபல் குவாட்டர்ஸ் கட்டியிருக்க மாட்டாங்க."
"நீங்க சொல்லுறது உண்மையா பொய்யாண்ணு எனக்குத் தெரியாது. ஆனா, எந்த அதிபர் வந்தாலும் இந்தப் பாடசாலை காணி விடயமா விபரம் கேட்கும்போது இதைத்தான் செய்வாங்க. நானும் அதைத்தான் செய்றேன். ஆனா ஒண்ணு, நா பொலிசில என்ரி போடல்ல. நீங்க அதை நம்பாட்டி. என்ரியின் பிரதியை கொண்டுவந்து தாங்களேன்." "இல்லை, தெரியாத விசயத்தில மாஸ்டர் தலைபோடக்கூடாது. மாஸ்டருக்கு கோடு, வழக்கு தெரியாது. நா அதுக்கெல்லாம் பயந்தவன் இல்ல. இந்த சின்னையாப்பத்தி கேள்விப்பட்டுருப்பீங்க. அந்தாப் பாருங்க, அந்தக் குவாட்டர்ஸ், சயன்ஸ் லெப், இதற்கு நடுவிலதான் ஏவுட்டுக் காணி மாயம் போகுது. அந்தப் பாஸ் வீட்டுக் கங்குல பாருங்க நிற்குது கொய்யாமரம், அதுல இருந்து இப்படியே நெட்டுக்கு பாருங்க. இதுதான் ஸ்கூல் காணி எல்லை.
நாங்கதான் காணி அளந்தோம் மாஸ்டர். ஏன் சும்மா
| மொழிவரதன் 49

Page 28
பிரச்சினையிலே மாட்டிக்கிறீங்க. ஸ்கூலும் நாந்தானே கட்டினேன். இந்த மார்ல அப்ப எவே இருந்தா. எனக்கிட்ட இருக்கு ஆதாரம் ແDI mb ບໍ່.”
"சரி, சரி நல்லது. இதை நிரூபிச்சு காணியை நீங்க எடுக்க முடியுமுனா எடுங்க. அது நல்லதுதானே. எங்களுக்கு சரியான தீர்ப்புத் தான் வேறும், ஒங்ககிட்ட புரூவ் இருக்குணு சொல்லுரீங்க. நீங்க அதைச் செய்யுங்க. ஏன் அதைச் செய்யாம இருக்கிறீங்க."
சின்னையா ஒரு அசட்டுச் சிரிப்பு சிரித்துவிட்டுச் சொன்னார், "காணி நம்ம காணிதானே. அப்புறம் என்னத்துக்கு நிரூபிக்கணும், கோட்டுக்குப் போகணும். வழக்குக்கு நா பயமில்ல. அதெல்லாம் என்னா செய்யணுமுன்னு எனக்குத் தெரியும்.”
அதிபரும் சின்ளையாவும் ஏதோ சூடாகக் கதைப்பது சுற்றுப் புறத்தில் ஒரு பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கவேண்டும். கடைகளின் ஜன்னல்களிலிருந்து பல தலைகள் நீண்டன. ஆனால் எவரும் வந்து ‘என்ன பிரச்சினை? என்று கேட்கத் துணியவில்லை. சின்னையா நிற்கிறார் என்றால், அங்கே ஏதோ விவகாரம் என்று அர்த்தம். நமக்கேன் வம்பு, சோலி, தொரட்டு என்றிருப்போர் பலர். அதுவும் இந்த ஊரிலா..? கேட்கவேண்டும்?
“ரெளடித்தனத்திற்கும், கேடித்தனத்திற்கும் கெட்டித்தனம் என்றொரு நாமம் புது மொழியாய் இருப்பது ஓர் உண்மையாய் போய் விட்டதோ? அவர் எப்படியும் விட்டுக்கொடுக்கமாட்டார்.
என்றாலும் அவரது பூர்வீக வரலாறு தெரிந்தோர் பலர் உள்ளனர். அவரும் எங்கோ இருந்து வந்து வியாபாரத்தை ஆரம்பித்தவர்தான்.
குவாட்டர்சுக்கு வந்த விஜயசிங்கம் யோசித்தார், இந்தப் பாடசாலைக்கு நிலம் அவசியந்தானே. ஒரே வகுப்பில் எழுபது பிள்ளை களும்கூட உள்ளனர். பல வசதிகள் இந்தப் பாடசாலைக்குத் தேவை. மாணவர்களுக்கு விடுதி தேவை. இதனை ஒரு மத்திய வித்தியாலயம் ஆக்கலாம். நீர்ப்பிரச்சனை வராது. மைதானத்திற்கு கீழே கிணறு வெட்டி பம்பி மூலம் நீர்த்தாங்கிக்கு கொடுக்கலாம். ஒரு விளையாட்டுப் பாடசாலைபோல் இதனை விவசாயப் பாடசாலை ஆக்கலாம்.
அவரது எண்ணங்கள் பரந்தவை, விசாலமானவையும்கூட.
“பிரதேச செயலாளர் மட்டத்தில் கிராமிய பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின்கிழ் எமது பாடசாலையும் தெரிவு செய்யப் பட்டிருப்பது ஒரு நல்ல செய்தியாகும். 'ஆக்ராஸ் எனும் இப்பிரதேசத்தில் இந்தப் பாடசாலை மாத்திரமே தெரியப்பட்டிருக்கிறது. இது ஜனாதிபதியின்
so ஒரு நாடும் மூன்று நண்பர்களும்

நேரடிக் கண்காணிப்பின் கீழ், கல்வி அமைச்சரின் பங்களிப்புடன் நடை முறைப்படுத்தப்படுகிறது. எனவே பல கட்டிடங்கள், தளபாடங்கள், உயகரணங்கள் எமக்குக் கிடைக்க உள்ளன. இதற்கேற்ப பாடசாலையை ஒழுங்கமைத்துக் கொள்ளவேண்டும்."
அதிபர் விஜயசிங்கம் பாடசாலை அபிவிருத்திச்சங்கக் கூட்டத்தில் உரையாற்றுகிறார். டி.எஸ்.டி. திட்டத்தின் பலாபலன்களை எடுத்து விளக்கு கிறார்.
"இத்திட்டத்தின் கீழ் இப்பாடசாலை தெரியப்பட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் காரணமாய் இருந்துள்ளனர். எனவே அதனையும் நாம் மறத்தல் கூடாது. அடுத்து அபிவிருத்திக்கு இடம் தேவையாகும். செயற் பாட்டறை, கணனிஅறை, தொழில்நுட்பஅறை, மனை இயல் கூடம், விவசாயக்கூடம், நூலகம் இப்படிப் பல வர உள்ளன. எனவே பாடசாலை அபிவிருத்திச் சங்கம் காணிப் பிரச்சினையை முன்னெடுத்தல் வேண்டும்.” இப்படி விஜயசிங்கம் கூறி, நுவரெலிய பாராளுமன்ற உறுப் பினர்களைக் கண்டு கதைத்து ஆவன செய்ய வேண்டும் என்றும் கூறினார். இடையிலே குறுக்கிட்ட சண்முகம், " காணியைப் பெற பலமுறை சமாதான முயற்சி செய்தாகிவிட்டது. இனி போராட்டம் முலம்தான் அதனை அடையலாம். அங்கே கட்டப்பட்டிருக்கும் வீட்டை உடைத்தெறிய வேண்டும். பெற்றோர்கள் திரண்டு வந்து எமது காணிக்குரிய மாயத்தில் முள்ளுக்கம்பி அடித்தல் வேண்டும். ஸ்கூலில் அன்று ஒரு ஸ்றைக் செய்தல் வேண்டும். சின்னையாக்கிட்ட கதைச்சி வேலை இல்ல. அவரு எல்லாத்துக்கும் தொப்பி போட்டு விட்டுறுவாரு தோட்டத்து தொழிலாளர் எல்லாம் அன்றைக்கு ஸ்ரைக் பண்ணச் சொல்லுங்கள்" என்றார்.
இதற்குப் பதில் அளித்த விஜயசிங்கம், "முதலில் சட்டப்படியான நடவடிக்கைகளையே நாம் மேற்கொள்ளல் வேண்டும். இந்த நிலம் அவருக்கு விவசாயம் செய்ய மாத்திரமே வழங்கப்பட்டது. அவர் பொறகு புறம்போக்கு நிலத்தையும் துப்பரவு செய்து பிடித்துக் கொண்டார். அவருக்கு அரசியல் செல்வாக்கு இருந்ததால் காலப்போக்கிலே அந்த இடத்தை அபிவிருத்தி செய்து ‘விவசாய பெர்மிட் வாங்கிக் கொண்டார். இதற்குத் தனியான படம் அவரிடம் உள்ளது. இரண்டு ஏக்கர் முப்பத்திரண்டு பேர்ச்சஸ் அவரிடம் இருக்கு. அவர் பாடசாலைக்கு உரிய காணிய குடுக்கணும். பாடசாலை அபிவிருத்திக்கு அந்த நிலம் தேவைன்னு அரசு எடுத்துக் கொடுத்தல் வேணும்" என்றார்.
பாடசாலை அபிவிருத்திச் செயலாளர் இதனை ஏற்றுக் கொண்டாலும், "இது எவ்வளவு காலத்தில் நடக்கும்.? இப்பக்கூட பத்து வருஷங்கள் இப்படித்தானே நடக்குது. மத்திய மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் கட்டிடத்திற்கு கூரைபோடாது தடுத்தார். ஆனால்
| மொழிவரதன் 51

Page 29
அவரால் விவசாயம் செய்வதை முழுமையாக தடுக்க இயலவில்லை. அவர் விவசாயம் செய்கிறார். ஆனா, நம்ம பக்கத்தில் நாம ஒண்ணும் செய்யல்ல. ஆமாம் கட்டிடத்துக்குக் கூரை போட்டா பொலிஸ்சால தடுக்க ஏலாதாம், அப்படின்னா கூரை போடுறதக்கு ஏங்கே சட்டத்திலே உத்தரவு இருக்கு. சின்னையா வீடு வாசல் வச்சி கட்டிப்போர், ஸ்கூல் வாய் பொத்தி இருக்கணுமா..? நாம போராட்டத்தில இறங்கணும். இல்லாட்டி இந்த ஸ்கூல் நிலத்தைப் பெற ஏலாது.” எனறார் பா.அ. சங்கச் செயலாளர் அந்தனி.
இதனை ஆதரித்துப் பலர் பேசினர். இடையிலே குறுக்கிட்ட விஜயசிங்கம் சொன்னார், “எப்போதும் ஓர் இலக்கை அடைய ஒரு பாதையை மாத்திரம் யோசித்தல் கூடாது, ஒரு மாற்று வழியும் வேண்டும், அதையும் யோசித்தல் வேண்டும். டி.எஸ்.டி. திட்டத்தின் கீழ் பல கட்டிடங்கள் வர உள்ளன. ஆனா, 'ஐயர் வருகிற வரைக்கும் அம்மாவாசை நில்லாதுண்ணு சொல்லுவாங்க. அதனால் ஏதாவது ஒரு கட்டிடத்தைப்போட ஆவன செய்யணும். இல்லாட்டி நிதி ஒதுக்கீடு போய்விடும். கட்டிடம் கட்ட இடம் இல்லை என்று இஞ்சினியர் ரிப்போர்ட் அனுப்பிவிடுவார். இதை வேறு பாடசாலைக்கு திருப்பி விடலாம். அதனால நா ஒரு யோசனை வச்சிருக்கிறேன்.”
“என்னா அந்த யோசனை..? பலரது குரல்கள் ஒரே நேரத்தில் ஒலித்தன. “நம்ம மைதானத்தில் அந்த தொங்க பகுதியை மூன்று மாடிக் கட்டிடத்திற்குக் குடுக்கலாம்.”
"அப்படி என்றால் மைதானம்.? "மைதானம் குறையாது. அந்தத் தோட்டக்காரரின் காணித்துண்டு எல்லையோட அந்தக் கட்டிடம் வரும். அந்தப் புல்லு மண்டிய பகுதியை குடுக்கிறதால மைதானம் குறையாது. லமதானத்தில போடப்படுற டிரக்குக்கு வெளியேதான் அந்தப் பகுதி இருக்கு. அதனால பெரிய பாதிப்பு இல்ல. இதேநேரம் நிலப்பிரச்சினையையும் பார்த்துக்கலாம்."
அதிபர் விஜயசிங்கம் தனது திட்டத்தை முன்வைத்தார். “என்றாலும் எங்களுக்கு இப்போது உடனடித்தேவை நிலம் தானே. இதை ஒரு கோரிக்கையா பெற்றோரின் ஒப்பம் பெற்று அனுப்பு வோம், கல்வி அமைச்சரை சந்திப்போம், எல்லா வழியிலேயும் முயற்சிப் போம்" என்றார் அதிபர்.
பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் இதனை ஏற்றுக் கொண்டனர். வந்த கட்டிடத்தை கைநழுவ விட்டுவிடக் கூடாது. என்பதில் பலர் கவனம் செலுத்தினர்.
52 ஒரு நாடும் மூன்று நண்பர்களும்

இவ்வேளை. கட்டிடம் கட்டவும், நிலத்தை அக்கவும் பொறியலாளர் வருகைதந்து சென்றனர். அந்தச் சூழலிலும் பெற்றார் மத்தியிலும் புது நம்பிக்கையும் துடிப்பும் பிறந்தது.
தூசி படிந்து கிடந்த கோவையை எடுத்து தூசி தட்டி நகர வைத்ததுபோல் கல்லூரி நிகழ்வுகளும் புதுத்தெம்பு பெறத்தொடங்கின. “ஏதோ ஒரு பாடசாலை, இங்கே என்ன பெரிசா நடக்கப்போவுது” "தோட்டத்துப் பிள்ளையதான் இங்கே படிக்குது.” “ஏதோ ஸ்கூலு நடக்குது." "இந்த ஸ்கூல்ல எந்த நாளும் பிரச்சினைதான்.” இப்படிப் பல விமரிசனங்கள். இந்தப் பள்ளிக்கூடம் பற்றி இருந்த படம் மெல்ல மெல்ல மங்கத் தொடங்கியது. காலையில் புலர்ந்த தாமரை யாய் பள்ளிக்கூடம் ஆனது. முற்றத்து மல்லிகை மணக்கத் தொடங்கியது. ஓர் உயிரோட்டமிக்க கூட்டம் உருவாகத் தொடங்கியது.
விஜயசிங்கத்தைக் காணும் சாதாரண பெற்றார் கூறினர், "சார், நாங்க என்னா செய்யனும் சொல்லுங்க. அத்துமீறிய கட்டிடத்தை உடைக் கணுமா? கம்பி அடிக்கணுமா? நாங்க வாரோம்.”
என்றாலும், துடிப்புமிக்க ஓர் இளைஞர் எங்கோ ஓர் கூட்டத்தில் கதைத்ததாக ஒரு கதை கேள்விப்பட்டார். “கட்டிடம் போடப்படுவதை எதிர்ப்பதாகவும் நிலத்தைப் பெறாது அதிபர் அங்கே என்னா செய்து கொண்டிருக்கிறார். இதை இப்படியே விடக் கூடாது என ஆவேசக்குரல் எழுப்பியதாகவும் கேள்விப்பட்டார்.
இதனைக் கேள்வியுற்ற பாடசாலை ஆசிரியர்கள் விஜய சிங்கத்தைக்கண்டு கதைத்தனர்.
“சேர், இவர்கள் காலத்துக்குக் காலம் பூக்கும் காளான்கள் போன்றவர்கள். ரொம்ப ஆத்திரமாகத்தான் கதைப்பாங்க. கதைப்பவர் களும் இவர்கள்தான், வரும் அதிபர்கள்மீது பழி போடுபவர்களும் இவர்கள்தான். இந்தப் பாடசாலை நிலத்தேவை தொடர்பாக இங்கு கடமை புரிந்த முன்னாள் அதிபர் திவ்வியராஜா சேர் நிறைய நடவடிக்கை மேற்கொண்டார். அவர், கட்டப்பட்டுக் கொண்டிருந்த கட்டிடத்தை நிறுத்தி னார். தொடர்ந்து இந்த இடம் தேவையென நடவடிக்கைகள் மேற்கொண் டார். ஆனால் அவருக்கும் பிரச்சனைகள் போட்டார்கள்.”
இவை அந்தப் பாடசாலை ஆசிரியர்களின் கூற்றுக்கள். கட்டிடவேலை ஒரு புறத்தில் சூடு பிடித்தது. மறுபுறத்தில் நிலப்பசியும் சூடு பிடித்தது.
இதற்கிடையில். அத்து மீறிப்பிடிக்கப்பட்ட நிலத்தை கிராம
| மொழிவரதன் 53

Page 30
சேவகர் ஊடாக கையளிக்குமாறு நுவரெலிய பிரதேச சபை செயலாளரிட மிருந்து கடிதம் ஒன்று சின்னையாவுக்குக் கையளிக்கப்பட்டது. எனவே, காணியை கையேற்க ஆவன செய்யுமாறு நுவரெலிய வலயக்கல்விப் பணிப்பாளர் அதிபரை அழைத்துக் கூறினார். உரிய தினத்தில் காணி அளக்கப்பட்டு கையளிக்கப்பட உள்ளதால் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரும் பிரசன்னமாயிருத்தல் வேண்டும் எனவும் கூறினார்.
ஆனால், சின்னையா அதற்கெதிராக புறக்டர் நோட்டீஸ் ஒன்றினை அனுப்பிவிட்டார். தான் இதுவரை விவசாயம் செய்து வந்த காணியை தர இயலாது என்றும், பாடசாலைக்கு அபிவிருத்திவேலைகள் எதுவும் நடைபெறவில்லை என்றும் அவரது வாதம் இருந்தது.
"இனி என்ன வழக்குதானே. வழக்கிலதான் வெல்லணும்." - வலயக் கல்விப்பணிப்பாளர் இப்படி அலுத்துக்கொண்டார்.
“சின்னையா வழக்கிலே பிறந்து, வழக்கிலே வளர்ந்து, வழக்கிலே வாழுபவர். அவருக்கு அந்தக் காலத்திலும் எத்தனையோ வழக்குகள்." "அவர் எதற்கும் அஞ்சார். இந்த வழக்கிலும் வெல்வார் அவுருக்கு ஷோர்ட் கட்' தெரியும்"
“ஒலகத்தை நாலா மடிச்சு பொக்கட்டில வச்சிடுவாரு” ஊரில் சிலர் இப்படி ஏன் கதைக்கிறார்கள்? ஏன் எதிர்நிலையாக யோசிக்கிறார்கள்? என்பது புரியவில்லை. ஆசிரியர் சின்னத்தம்பியும் கூட இதே பாணியிலேயே கதைப்பார்.
ஆனால் இடையிலே குறுக்கிட்ட கலுகாசலம் சொன்னார், "ஸ்கூல் வந்து பொதுச்சொத்து. அதிபர் ஆசிரியர் வருவாங்க போவாங்க. நம்ம புள்ளைய இங்கேதான் படிக்கணும். நம்ம நிலத்தை விட்டுக்கொடுக்க ஏலாது. எங்கள் பாடசாலை புள்ளையஸ் படிக்க வசதிகள் வேணும். அதைச்செய்ய காணி வேணும். சேர், நீங்க மனந் தளராதிங்க, நம்ப அடுத்தக்கட்ட வேலையை செய்வோம். கூரை போட்ட பிரச்சனைக்கு என்ரி போடுவோம்”
பா.அ. சங்க உறுப்பினர் சிலருடன் என்ரிபோட பொலிஸ் ஸ்டேசன் சென்றார் அதிபர். பொறுப்பதிகாரி அங்கு இருக்கவில்லை.
“ஒ. ஐ. சி. எங்க?" "இருக்கிறார், வீட்டில்” "வரமாட்டாரா?” "சொல்ல ஏலாது" "நாங்க என்ரி போட வந்துள்ளோம்" "அந்த ஸ்கூல் பிரச்சனைதானே.”
Ké 冷
DMT
54 ஒரு நாடும் மூன்று நண்பர்களும்

“கொஞ்சம் இருங்க, பார்ப்போம்" அவர்கள் வெளியே வந்து நின்றனர். சண்முகம் சொன்னார், "சேர், ஓ.ஐ.சி.ஐ மேற்படியார் கவனிச் சிட்டாரு போல. அவரு இன்னைக்கு வரமாட்டாரு. இங்கிருந்து டெலிபோன்பண்ணி சொல்லிடு வாங்க”
அந்தனி சொன்னார், "சரி, பாப்போமே. எங்க என்ரியை அவங்க ஏற்கத்தானே வேணும். இல்லாட்டி மேல போகவேண்டியதுதான்."
நேரம் போய்கொண்டிருந்தது. வழமைபோல பலர் அங்கு குழுமி யிருந்தனர். தோட்டத்தில் வழமையாக நடக்கும் அடிபிடிகள், களவுகள், குடும்பப் பிரச்சினைகள். விசாரணைக்காகக் காத்திருந்தன.
சின்னப் பிரச்சனைகளையும்கூட பெரிசாக்கும் மகிமை சாராயத் திற்கு இருக்கும்வரை காவல் நிலையங்களுக்கும் கோழிக்கறிதான்.
ஓ.ஐ.சி. இன்னும் வரவில்லை. அவரு இல்லாமல் இந்தப் பிரச் சினையை விசாரித்தல் இயலாது. சண்முகம் சொன்னதிலும் உண்மை இல்லாமலுமா இருக்கும்?
சண்முகம் சொன்னார். "சேர், இது சரி வராது. நாங்கள் கோல் ஒன்று போட்டுக் கதைப்போம். அவர் வராவிட்டா வேறு ஏதாவது மார்க்கம் இருக்காண்ணு பார்ப்போம்.”
அங்கிருந்த பொலிஸாரிடம் விசாரித்தபோது, " அவள் வரமாட்டார், நீங்கள் இங்குள்ளவரிடம் கூறி என்ரி போடலாம்” என்றார்.
அதிபரும் அப்படியே செய்தார். பாடசாலைக்குரிய இந்நிலப்பிரச்சினையின் ஒரமிசமான கூரை போட்ட விவகாரத்தை இவர்கள் ஏன் பெரிதாக எடுக்கவில்லை. என விஜயசிங்கம் யோசித்தார்.
அத்துமீறி காணிபிடித்தவருக்கு விவசாயம் செய்யமுடிகிறது. கூரைபோட முடிகிறது. நியாயத்திற்கு கட்டுப்படடிருக்கும் பாடசாலைக்கு எதுவும் செய்ய இயலவில்லை. இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும். பாடசாலை அபிவிருத்திச்சங்க சபையினருடன் கதைத்தார். பெற்றார், நலன் விரும்பிகள், தொண்டர், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரையும் இணைத்தார். பொதுக்கூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்தார். கூட்டம் கூடியது. கோஷங்கள் எழுந்தன. பாடசாலை மைதானத்தில் அனைவரும் கூடினர்.
"எங்களுக்கு காணி வேணும்." "எங்களுக்கு நிலம் வேணும்." “பாடசலையை அபிவிருத்தி செய்ய இடங்களு
"பிடித்த காணியைத் திருப்பிக் கொடு."
| மொழிவரதன் ss

Page 31
“னல்கூல் காணியிலிருந்து வெளியேறு." பொலிஸார் பாடசாலை நுழைவாயிலில் துப்பாக்கிகளுடன் நின்றனர். அவசரம் அவசரமாக ஓ.ஐ.சி. அதிபரைத் தேடி அதிபரின் காரியாலயத்திற்குள் நுழைந்தார். அவர் ஒரு ஞானியைப் போலவும் புத்தரைப் போலவும் கதைத்தார்.
"பிரின்ஸ்பால், போராட்டம் வேணாம். றோட்டுக்குப் புள்ளையள அனுப்பவேண்டம். நீங்க அதிபர் ஆசிரியர்தானே. ஒழுக்கம் படிப்பிக் கணும்"
இடையிலே குறுக்கிட்ட பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் சொன்னார், “இது சாத்விகப் போராட்டம், அஹிம்சைப் போராட்டம். எங்க பிரச்சினையை யாரும் கணக்கில எடுக்கல. டிஸிப் பிளின்பத்தி இப்ப பேச ஏலாது. நாங்க பிரச்சினை இல்லாம போவோம். நிலப்பிரச்சினை வெளியில வரணும். அதுக்கு இதுதான் ஒரே வழி.” விஜயசிங்கம் சொன்னார், "சும்மா கடதாசியிலை இந்தப் பிரச்சினையை தீர்க்க ஏலாது. அந்தக் கடுதாசியில 'என்ரியை எழுதி எழுதி ஆகப்போவது ஒண்ணுமில்லை. எங்கதேவையை நீங்க உணரணும்.” நிலம் என்பது ஒரு தேவை. ஒவ்வொரு மனிதனுக்கும் அது தேவை. ஏன் ஜீவராசிகளுக்குக் கூடத் தேவைதான். காகத்திற்கு கூடுகட்ட ஒரு மரக்கிளை தேவைதானே. கரிச்சானுக்கும் வங்கியில் ஒரு பொந்து தேவைப்படுகிறது. ஒவ்வொரு கிராமத்துக்கும் தேவை ஒவ்வொரு நாட்டுக்கும் தேவை. அது ஒரு பசி, வயிற்றுப்பசிக்கு உணவு. அதுவும் ஓரளவுதான் சாப்பிடலாம். அதற்கு மேல சாப்பிட் ஏலாது. அதுபோலத்தான் தனிமனிதனான சின்னையாவுக்கும் நிலத்தேவைதான். அதுக்காக அவருக்கு ஏன் அவ்வளவு ஆசை.
சமூகத்தின் பொதுத் தேவைக்காக நிலம்தேவை. ஓ.ஐ.சி. சொன்னார், “மாணவர்களை றோட்டுக்கு அனுப்ப வேண்டாம்.”
அவரது ஜீப் மெதுவாக பாடசாலையிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தது.
கோஷமிட்ட கூட்டம் வீதியில் இறங்கியது. அதிபர், ஆசிரியர், பெற்றோர், நலன் விரும்பிகள். அதில் சென்றனர். அக்கூட்டம் அந்த ஊருக்கு பல செய்திகளை சொல்லாமல் சொல்லியது.
மீண்டும் கூட்டம் பாடசாலையில் கூடியபோது, அமைச்சர், காணி உத்தியோகத்தர், கிராமசேவகர் எனப் பலர் அங்கு கூடியிருந்தனர். “பாடசாலை நிலத்தை மீளப் பெற்றுத்தாருங்கள்."
56 ஒரு நாடும் மூன்று நண்பர்களும்

“பாடசாலை காணிக்காக எதையும் இழப்போம்." உயர் வகுப்பு மாணவன் நாதன் முழங்கினான்.
அமைச்சர் அமைதிப்படுத்தி உரையாற்றினார். "காணிவிடயம் வழக்கில் உள்ளது. வழக்கு கண்டியில் உயர் நீதிமன்றத்தில் உள்ளது. கோர்ட்டில் வழக்கு உள்ளதால இப்ப நாங்கள் ஒண்ணும் செய்ய ஏலாது. ஆனால் வழக்கு விரைவுப்படுத்தலாம். பாடசாலைக்கு இடம், நிலம் தேவை. இதை வலியுறுத்துவோம். நல்ல புரக்டர்கொண்டு வழக்கைப் பேசலாம். நா இது விசயமாக கவனிப்பேன்."
அமைச்சர் சட்டப்படியான விளக்கத்தைக் கொடுத்தார். இதே நேரம் தூரத்தில் கிரவுண்டுக்கு பக்கத்தில் கட்டிடம் கட்டும் பாஸ்மாரின் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. எதிர்ப்புறத்தில் சின்னை யாவின் கிழங்குத் தோட்டத்தில் கிழங்குக்கு நீர் இறைக்கும் மோட்டார் பம்பி இயங்கிக்கொண்டிருந்தது.
கறுப்பு, மஞ்சள், சிவப்பு ரெட்டுக்களை தலையில் முக்காடாக்கிய பெண்கள் வேலை செய்துகொண்டிருந்தனர்.
ஆற்றோடு போகும் பாதைக்கருகில் கமகேயின் தோட்டத்தில் முள்ளங்கி மிக நன்றாகவே வளர்ந்து வந்திருந்தது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக 'நிலம் வேணும்' எனும் கோஷம் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது.
- 2001 -
藻 藻 潔
மொழிவரதன் 57

Page 32
ss ஒரு நாடும் மூன்று நண்பர்களும்


Page 33
D60)6) Ult ஒருவரான ஜேம்ஸ் ே இயற்பெயர் ஆரம்பக் & மகா வித் தேசிய பா இவர், 9 பல்கலைக்
பட்டதாரியானார். பட்டப்பின்படி உடைய மொழிவரதன் தற் மகாவித்தியாலய அதிபராகக் கட
இவரது சிறுகதைத்தொகு விமர்சகர்களின் பெரும் பார மெல்லிசைப் பாடல், றுநாெ ஆகிய துறைகளில் எழுதிவரும் ‘பூமா’, ‘சுழியோடி வேலன்' வெளியாகியுள்ளன.
இவரது கிணற்றுத் பேராதனைப் பல்கலைக்கழக போட்டியில் பாராட்டுப் பரிசினைட் கின்றன குறுநாவல் மலையக குறுநாவல் போட்டியில் பரிசும் ப
இவரது ஆக்கங்கள் விெ குன்றின் குரல், பாரதி, நதி, தினகரன், வீரகேசரி ஆகிய ஏடுக
சமூக நோக்கமும் தத் படைப்புகள் மலையக இலக்கிய
\ ISBN 955.
NEW GREEN LEAF PRINT HOUSE KANDY O7l-7
 
 

கத்தின் பிரபல எழுத்தாளர்களில் மொழிவரதன் ஹாலிஎல சென்ட் தாட்டத்தில் பிறந்தவர். இவரது கருப்பையா மகாலிங்கம். கல்வியை ஹாலிஎல முஸ்லிம் தியாலயம், பதுளை சரஸ்வதி டசாலை ஆகியவற்றில் பெற்ற டயர்கல்வியை பேராதனைப் கழகத்தில் பெற்று கலைப்
IL Dip-in-Edu. 5603560LDub போது கொட்டகலை தமிழ் டமையாற்றுகிறார்.
தி மேகமலைகளின் ராகங்கள் ாட்டைப் பெற்றது. கவிதை, பல், சிறுநாடகம், கட்டுரைகள் இவரது படைப்புகள் சுழியோடி’,
ஆகிய புனை பெயர்களிலும்
தவளைகள்' என்ற சிறுகதை த் தமிழ்ச்சங்கம் நடத்திய பெற்றது. ‘புதிய மலர்கள் மலர் இளைஞர் முன்னணி நடத்திய Tராட்டும் பெற்றது.
பற்றிமணி, குமரன், பூங்குன்றம், ஞானம், சிந்தாமணி, தினபதி, ளில் வெளியாகியுள்ளன.
துவ வீச்சும் கொண்ட இவரது த்திற்கு அணிசேர்க்கின்றன.
தி. ஞானசேகரன் g) floo)LDuJIT6Ts, ஞானம் பதிப்பகம்.
8354-06-6 ノ
O734