கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொழும்புத் தமிழ்ச் சங்கம் செய்தி மடல் 2011.07

Page 1
ESP
சங்: உறுப்பினர்களுக்கு மட்டும்
澳。 கொழும் " ဖြိုးခုစ္စုပ္မ္ဟု၊ G வெளியீடு : 021 மாதம்
கொழும்புத் தமிழ்ச் சங்க இணையத்தளத் “Fெய்தி tடல்" என்பதன் பிரசுர வடிவம் ! இ8)ணயத்தளத்திற்கு விஜயம் செய்யுங்கள். SIGI; 5:0 u uġ5g5e NM-Liib:www.colombotamilsangam.com தொலைபேசி இல 2363759 தெஐலநகல் : 236381
pausd *
முப்பாலுடன்கடழ முத்
முப்பா லெடுத்து முறையாய்த் எப்போதும் இனிக்கின்ற 8 ஒப்பாக ஒளிர்ந்திட்ட தமிழ்ச்ச அன்னையரும் ஆடவருப அப்பாலைச் சுமந்தங்கு அத்த அணிநடையின் இசைக்ே முப்பா லுடன்கூடி முத்தமிழுப் இச்சங்கம் தனிலேறி எழி
குறளுக்கு விழாவெடுத்த கெ
தமிழுக்கு விழாவெடுத்த அறத்துக்குப் பொருளுரைத்த திறத்துக்கு நாமெடுத்த தெ புறத்துக்கு வேண்டியது பொழு புதுமையாய்க் காமம் பூர உறவுக்குப் பாலம் உருவாக் ஊருக்குத் திருக்குறள் உ
பத்தாண்டு கடந்தாலும் வள்t முத்தாக விழாவெடுத்தோம் இத்தோடு நிற்காது எம்மருை வித்தாக இட்டவற்றைச் சொத்
ܓܡܗܐ ' ); அத்தி - யானை
t
iña
 
 
 
 

புத் தமிழ்ச் சங்கம்
() ()
irá5 UDL
: 39. ஆண்டு : 2011
ல் "எம்மைப் பற்றி” என்னும் பகுதியிலுள்ள ம்மடலாகும். மேலும் விபரங்களுக்கு எமது
L665,6016,36t); tamilsangamcolomboGyahoo.com
info(a)colombotamilsangam.com
தமிழும் நடந்ததுவே
தமிழ்கலந்து இனிய விழாவுக்கு ங்க விழாக்கான ) அளவின்றிக் கூடினரே தியது அசைந்துவர கற்ப அழுகூர்தி ஆடிவர b நடந்துவந்து லாய் இருந்ததுவே.
ாழும்புத் தமிழ்ச்சங்கம் தலைமைச் சங்கமென்போம் அருமைப் புலவனவன் ய்வீகத் திருவிழாவாம் நளென்றே யுரைத்து ணமாய் வடித்தெடுத்து கி வென்றிட்டார் க்க ஒலித்திட்டார்.
நவன் குறளுக்கு pடியவில்லை யெமதுபணி மப் பெரும்புலவோர் தாகக் காத்திடுவோம்.
ப.க.மகாதேவா

Page 2
ஆடி மாதம் தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் பற்றிய uñ6dirumurrir68io61, I இலக்கிபகளம் - 58 01.07.2011 இன்றைய நிகழ்வு பதிப்புத்துறைச் செயலாளர் திரு.க.இரகுபரன் அவர்களின் தலைமையில் தொடங்கியது. செல்வி திவ்யா யோகராஜாவின் தமிழ் வாழ்த்துடன், தலைவர் தனதுரையில் கலை இலக்கிய ஈடுபாடுடைய, மக்களால் நன்கு அறியப்பட்டவரும் தற்சமயம் அவுஸ்திரேலியாவில் பாரதி பள்ளியை நடாத்தி வருபவருமான மாவை நித்தியானந்தன் அவர்களை வரவேற்று, தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்றதில் நன்மையும் உண்டு. தீமையும் உண்டு. திரு.நித்தியானந்தன் அவர்கள் அதை நன்மையாக்கி விட்டார். தமது செயற்பாட்டின் மூலமாக நவீன சாதனங்களுடன் அடுத்த தலைமுறைக்கான தமிழ் கல்விச் செயற்பாட்டினை மேற்கொண்டுள்ளார். அவரை வாழ்த்தி “அடுத்த தலை முறைக்கான கலை இலக்கியம்" பற்றி உரையாற்றும் படிபணித்தார். எமது சங்கத்தின் மாலை நேர நிகழ்வுகள் பற்றி வாழ்த்துக் கூறி பேசுவதை விட கலந்துரையாடல்கள் பயன்மிக்கது என்றார். கருத்துப் பரிமாறல் மூலம் அடுத்த தலைமுறையினை நாம் நெறிப்படுத்தலாம். பெரும்பாலும் வயதானவர்கள் பங்கு பற்றும் இந்த நிகழ்ச்சிகளில் சிறார்களையும் மாணவர்களையும் ஈடுபடுத்த வேண்டு) என்றார். இடைவிடாத தனியார் வகுப்புக்களும் தொலைக்காட்சியில் தொடர்ச்சியாக காட்டப்படும் தொடர் நாடகங்களும் இந்த முயற்சிக்கு தடைபோடு கின்றன. ஆவுஸ்திரேலியாவில் எல்லா தொலைக்காட்சிகளும் குறைந்தது நாளொன்றிக்கு 3 மணி நேரம் சிறுவர் நிகழ்ச்சிகளை கட்டாயமாக ஒளிபரப்ப வேண்டும். அங்கே 16 வருடமாக தமிழ்ப் பாடசாலைகளை நடாத்தி வருவதாகவும் 250 மாணவர்கள் வரை பயனடைவதாகவும் கூறினார். தமிழ் மொழியில் பேசுதல், கதைகள், கட்டுரைகள் வரைதல். சிறுவருக்கான நாடகங்களை நடாத்துதல் என்பன மூலம் சிறார்கள் ஒன்றுபட்டு வளர்ச்சி பெறுகிறார்கள். கணிதம் படிக்கும் மாணவர்களுக்கும் கலை இலக்கியம் தேவைப்படுகிறது. படிப்பு மட்டுமல்ல மனிதன் கற்பனை ஆற்றல் மிக்கவனாக ஆக வேண்டும். படங்களை பார்த்து கதை கள் எழுதும் பயிற்சி பரவலாக அளிக்கப்படுகிறது. ஆங்கிலம் மூலமாக கற்கும் மான வருக்கு தமிழிள் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும். அதற்கு கலை இலக்கி யம் பெரிதும் உதவுகின்றது. எமது நாட்டில் பேராசிரியர் மெளனகுரு அவர்களின் கூத்துக்களின் புதுவடிவங்களை புதிய யுக்தியுடன் தொழில் நுட்பமாக பயன்படுத்தி மக்களி.ையே செல்வாக்கு பெற வைத்தமையை பாராட்டினார். "இராவனேசன் நாடகம் DVD, CI) க்களிலும் இடம்பெறுகின்றது. ஆனால் எமது மக்கள் யுத்த பாதிப்புக் களில் இன்னும் உள்ளதால் கலை, இலக்கியங்களை வரவேற்பது சற்று குறைவு தான். எமது கலாசாரம், பண்பாடு என்பவற்றில் எதை வருங்கால சந்ததியினருக்கு கையளிக்கப்போகின்றோம்? என்ற கேள்வியை ஒவ்வொருவரும் கேட்க வேண்டும்.
 

அபுேற்திரேலியாவில் தமிழ் புத்தகங்களையும் எழுதி வெளியிட்டுள்ளதாக கூறினார். நவீனத்துவம், பால், உண்மைத்துவம் போன்ற 3 விடயங்களை இளைஞர் மத்தியில் சிந்தனை விதைகளை விதைக்க வேண்டும் என்றார். தமிழ் வாழ்த்துடன் நிகழ்ச்சி 7.30 இற்கு நிறைவு பெற்றது.
02.07.2011 "கதை கதையாம் காரணமாம்” என்ற நிகழ்வில் செல்வி
ஹேமப்பிரிந்தினி ஜனகன் கலந்து கொண்டு சிறுவர்களுக்கான கருத்து மிக்க கதைகளைக் கூறி மகிழ்வித்தார். அறிவோர்ஒன்று கூடல் 465 06.07.2011 இன்றைய அறிவோர்ஒன்றுகூடல்நிகழ்வில் ஆட்சிக்குழு உறுப்பினர் திருமதி அ.புவனேஸ்வரி தலைமையில் தொடங்கியது. “சித்த வைத்தியத்தின் சமகாலத் தேவைகள்" பற்றி சித்த வைத்தியர் ஆர்.சிவகுருநாதன் உரை நிகழ்த்தினார். அறிமுகஉரையில் தலைவர், வைத்தியரையும் உறவினர்களையும் பார்வையாளர்களையும் வரவேற்று பேசும் போது வைத்தியர் அவர்கள் முன்னாள் சங்கத்தின் தலைவர் பொன்னம்பலம் அவர்களின் பேரனார் என்றும் கூறி சித்த :ைபத்தியம் முதலில் தமிழ் நாட்டில் தோன்றி பின்னர் மேலைநாட்டிற்கு பரவியது என்றார். ஆயுள்வேதம், ஹோமியோபதி, யுனானி என்று பலவகை நாட்டு 6ைத்தியங்களில் சித்த வைத்தியமும் ஒன்று என்றார். சித்த வைத்தியம் பக்க விளைவு அற்றது. இயற்கை மூலிகைகளைக் கொண்டு மருந்துகள் தயாரிக்கப் படுகின்றன என்று கூறி திரு சிவகுருநாதனை பேச அழைத்தார்.
“உலகெலாம் உணர்ந்தோதற் கரியவன்" என்ற புராணத்துடன் ஆரம்பித்த 6ைத்தியர் அவர்கள் 1980 ஜி.சி.ஈ.உயர்தரப் பரீட்சையின் பின்பு சென்னை சென்று மேற் படிப்பினை மேற்கொண்டு பெளதீக உயிரியல் என்ற பாடத்தினை தெரிவு செuது அதன் வழியில் இயற்கை வைத்தியத் துறையுள் ஈடுபட்டார். மருந்துகளில் உற்பத்தி துறை பற்றி விரிவாக கற்றார். பக்க விளைவு அல்லாத மருந்துகளை எப்படி தயாரிக்கலாம் என்பதை ஆய்வு செய்தார். மருந்துகளின் கசப்பு, புளிப்பு காரணமாக பொதுமக்களின் நாட்டம் குறைவு. இந்த மருந்துகள் கூட நவீன முறைகளில் தயாரிக்கப்படுகின்றன. சென்னை, டெல்லி, இமாலயா போன்ற இடங்களில் மூ68கைகள் பற்றிய ஆய்வு இடம் பெறுகின்றன. இந்திய வைத்திய முறைக்கு இலங்கையில் பெரிய விளம்பரம் செய்கின்றனர். கேரளா நாட்டின் எண்ணெய் வைத்தியம், எண்ணெய்க்குளிப்பு என்பன முக்கியத்துவம் பெறுகின்றன. வயிற்றைச் சத்தடம் செய்ய பேதி மருந்து மற்றும் கபால பேதி, மூக்கினூடாக கழிவுகள் வெளியேற்றுவதற்குரிய வைத்தியம் செய்து, ஒரு சிறுவன் சித்த வைத்தியத்தால் Liலtணடைந்தான். மருந்தை தொடர்ந்து பயன்படுத்தாவிட்டால், மீண்டும் நோய் வந்துவிடும் என்ற பயமும் நோயாளிகளிடம் உண்டு. மேலைத்தேய வைத்தியம் ஒரு நோயை மாற்றி, பிறிதொரு நோய்க்கு வழிவகுத்துச் செல்லும். சூரியனுடனும்,
கெ:புத் தமிழ்ச்சங்க செய்தி

Page 3
சந்திரனுடனும் மனித வாழ்க்கை இணைக்கப்பட்டுள்ளது. சூரியோதயத்துடன் எமது 85ட1ை0 தொடங்குகிறது. சந்திரனுக்கும் பெண்களின் மாதவிடாய் நோய்க்கும் தொடர்பு உண்டு. கிரியா, யோக, ஞான நிலைகளில் சடப்பொருள்கள் அதிகம். தியான நிலையங்களில் பலவித பயிற்சிகள் அளிக்கிறார்கள். ஆனால் நாம் வைத்தியரின் ஆலோசனைப்படிதான் உடற்பயிற்சிகளை நாடவேண்டும். எங்கள் உள்நாட்டு குருகுல கல்விமுறை மாற்றப்பட்டு மேலைத்தேய கல்விமுறை புகுத்தப் பட்டதனால் ப3) விளைவுகள் ஏற்பட்டன. "அக்குபஞ்சர்" முறையினை தமிழர்கள் முன்பே கண்டு பிடித்து விட்டனர். பிறந்தவுடன் காதுகுத்தல் என்பதும் அத்தகைய தொன்று. தபலிழர்களின் மூலிகை சம்பந்தமான நூல்களை மேலைநாட்டினர் ஆய்வு செய்து மருந்துகளை கண்டு பிடித்து எமக்கு அனுப்புகின்றனர். எமது காவடி எடுக்கும் முறையில் காணப்படும் படிமுறைகள் வியக்க வைக்கின்றன. மனிதனுடைய மின்காந்த அலைகளை கம்பியூட்டர் மூலம் கணிப்பீடு செய்யும் முறை இங்கு உண்டு. ஹோமியோபதி தமிழ் நாட்டிலிருந்து தான் ஜெர்மனிக்குச் சென்றது. 1300 ஊறல் மருந்துகளை 75% மூலிகைகள் மூலம் அறிமுகப்படுத்தினர். வாதநோய் பேரிய பிரச்சினையாக உள்ளது. மலச்சிக்கல் மனச் சிக்கலை ஏற்படுத்துகிறது. மிளகு, சீரகம், உள்ளி போன்றவற்றின் மருத்துவ உண்மை களையும் வைத்தியர் விளக்கினார். இலக்கியக்களம் - 59 08.07.2011 இன்றைய இலக்கியக்களம் நிகழ்வு துணைச்செயலாளர் திரு.ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. உரையாளராக என்.கே.அசோக்பரன் (சட்டத்துறை மாணவன்) பங்கேற்றார். தமிழ்வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்வில், முதலில் மறைந்த பேரறிஞர் பேராசிரியர் திரு.கா, சிவத்தம்பி அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இலக்கியக்களம் வரலாற்றில் ஒரு மைல்கல் ஆக அமைந்த இன்றைய உரையை LS SSSSS S S S S SSSSC SS S S S S SSS S SS "பட்டினத்தார் பாடல்கள் - ஒரு பார்வை” என்பதாகும். அற்புதமான மொழிநடை, பேச்சு வன்மை, கருத்தாழம் ஒருங்கே அமையப் பெற்ற உரையாகும்.
தலைமையுரையில் பேச்சாளரை அறிமுகப்படுத்திய தலைவர் இன்றைய தலைப்பிற்கும் பேசியவரின் வயதிற்கும் பொருத்தமில்லை. காரணம் "வாழ்க்கையின் நிலையாமை” தான் பட்டினத்தாரின் பாடல்களின் மூலமாகும். 6.ாழ்க்கையின் தொடக்கத்தில் உள்ள இளைஞர் என்ன கூறுகிறார் பார்ப்டோம் என்றார். றோயல் கல்லூரி பழைய மாணவன், சட்டத்துறை மாணவன், தமிழ் இலக்கியத்தில் அவருக்கு இருந்த ஆர்வம் பற்றி நாம் அறிந்துள்ளோம் என்றார் தலைவர்.
திரு.அசோக்பரன் தனதுரையில், வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டியவை என்று நாம் கருதுபவற்றை விட இறைவனை நாடி அடைவது எப்படி என்பதுதான் பட்டினத்தாரினர் பாடல்களின் தொனி, பட்டடினத்தார் பாடல்கள் நினைவஞ்சலிப்
கொழும்புத் தமிழ்ச் சங்க செய்தி மடல்
 

புத்தகங்களில் வெளியிடப்படுகின்றன. “வந்தவரெல்லாம் இங்கே தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கு இடம் ஏது?" என்று பாடினார் கண்ணதாசன். நேற்று இருந்தவர் இன்று இல்லை என்ற பெருமையைக் கொண்டது இந்த பூவுலகம் என்றார் வள்ளுவர். "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என்றார் பட்28ணத்தார். திருமூலர் தமது பாடல்களில் ஊரெல்லாம் கூடி ஏங்கி அழுது சுட்டுவிட்டு நீரில் மூழ்கி எழுந்தவுடன் எல்லாவற்றையும் மறந்து விடும் மனித வாழ்க்கை என்றார். வணிகராக செல்வத்தில் திகழ்ந்த பட்டினத்தடிகள் நிலையாமையை உRார்ந்து துறவறம் பூண்டார். தமது தாயாரின் மறைவின் போது, கதிகலங்கிய திருவெனன்காடர் என்ற பட்டினத்தடிகள். "ஐயிரு திங்களாய்” என்று மனமுருகி பா.60ாார். துறவி எப்படி பற்றுள்ளவர் ஆக முடியும்? என்ற கேள்வி எழுகிறது. அதற்குரிய பதில் தாயையும் இறைவனாக கண் டார் பட்டினத்தடிகள் . குபேரனுடைய அவதாரம் பட்டடினத்தடிகள். சுகோதரண்யர் எனப்படும் இவர் திருவேள்ைகாடர் என்றழைக்கப்பட்டார். துறவியாக தெருவில் கோவனத்துடன் திரியும் இவரைக் கண்டு தமக்கையார் விஷம் கலந்த அப்பத்தைக் கொடுக்க. அ6தக் கூரையில் எறிந்து "ஒட்டப்பம் வீட்டைச் சுடும்" என்று கூறி வீட்டை எரித்தார் பட்டினத்தடிகள். பத்திராசிரியர் என்பவர் இவரது சீடரானார். "வீடு வரை உறவு வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ" என்று கர்ைணதாசன் எழுதினார். அந்த உண்மையை மக்களிடையே முன்பே பரப்பியவர் பட்டினத்தடிகள். யோகர் சுவாமிகள் "எதுவும் யாமறியோம்" என்றார். நீ செய்த பா:புன்ைனனிடம் மட்டும் தான் கடைசி வரை கூட வரும் என்றார். பட்டினத்தடிகள் பிறக்கும் போது கொண்டு வருவதும் இல்லை. இறக்கும் போது கொண்டு போவது எதுவுமில்லை. நிலையாமை பற்றி பட்டினத்தடிகள் வலியுறுத்திக் கூறினாலும் எத்தனைபேர் அவரைப் பின்பற்றுகின்றனர்? பேராசையைக் குறைத்து வாழ்வாங்கு வாழ வேண்டும் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை கொண்டவர்கள் நரகத்தையே அடைவர். இருந்தும் கூட மக்கள் அலைந்து ஓடித்திரிவது எதற்காக? என்ற கருத்தையே பட்டினத்தடிகள் பாடல்கள் எமக்கு உEர்த்திநிற்கின்றன. பேச்சாளருக்கு பொதுச்செயலாளர் பரிசு அளித்துக் கெளரவித்தார். நூ'60கம் (சிறுவர் பகுதி) 09 07.2011 "கதை கதையாம் காரணமாம்" என்ற நிகழ்வில் செல்வி ஹேமப்பிரிந்தினி ஜனகன் கலந்து கொண்டு சிறுவர்களுக்கான கருத்து மிக்க கதைகளைக் கூறி மகிழ்வித்தார்.
அறிவோர்ஒன்று கூடல் = 466
13.107.2011 இன்றைய அறிவோர் ஒன்று கூடல் நிகழ்வு கல்விக்குழுச் செLலாளர் திரு.மா,கணபதிப் பிள்ளை அவர்களின் தலைமையில் தொடங்கியது. "சமூகமேம்பாட்டை நோக்கிய ஊடகக்கல்வியின் அவசியம்" பற்றி ஊடகவியல் முதுமாணி திரு.எஸ்.மோசேஸ் அவர்கள் உரை நிகழ்த்தினார். தலைமையுரையில் திரு.எஸ்.மோசேஸ் அவர்களை வரவேற்றுப் பேசும் போது,
LLSLSLSL0 LLLLLYLLLLLLSLSYSLLLLSLLLLLLSLSLS
SLLSLSLLTS SCLCLLeSSSSSLSLLSLLSLLLLLLLL LLLLLLLLSLSSLLSSLLSMMMSSMSGMMMLMSSSLSSSMSSSMMSSSMLMMBLBLMS
( கெ:புத் தமிழ்ச் சங்க செய்தி மடல்

Page 4
முன்னராக மறைந்த தமிழ் ஆசான் பேராசிரியர் கா.சிவத்தம்பிக்கு சபையினர் அஞ்சலி செலுத்தினர். தலைவர் தமதுரையில் திரு.மோசேஸ் அவர்கள் ஒரு எம்.ஏ.பட்டதாரி. இவர், சமூகமேம்பாட்டை நோக்கிய ஊடகக்கல்வியின் அவசியம் பற்றி உரையாற்ற உள்ளார். அனுபவமிக்க ஊடகவியல் விரிவுரையாளர் பல விருதுகள் பெற்றவர். சர்வதேச ரீதியில் அறியப்பட்டவர். கலாநிதிப் பட்ட ஆய்வுகளை மேற்கொள்கிறார். துணைவியார் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர். ஒரு மகன் உண்டு. 97% மான படித்த மக்கள் வாழும் நாட்டில் 600000 வரையி லான வாக்குகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் எமது நாட்டு சனநாயகம் இருக்கும் நிலையில் ஊடக அச்சுறுத்தல் பற்றி சொல்லவே தேவையில்லை என்று கூறி உரையாளரை உரை நிகழ்த்தும் படி அழைத்தார்.
உரைஞர் தமிழ்த் தாயை வணங்கி 1997 முதல் தனக்கு அறிமுகமான மறைந்த பேரறிஞருக்கு அஞ்சலி செலுத்தி தமதுரையை தொடங்கினார். ஊடக கல்வி என்பதற்கு முன்பு ஊடகத்தின் இன்றைய நிலை பற்றி நோக்கினார். காட்டு மிராண்டித்தனம், அநாகரிகம், நாகரீகம் என்ற மூவகை சமூகத்தின் மத்தியில் ஊடகம் பற்றி பேச வேண்டும். பொருளாதாரம், சார்ந்த சூழல், தனிமனித, குடும்ப அமைப்புக்கள் இவற்றின் சமூக மேம்பாடுகள் என்பவற்றிற்கு ஊடகம் பயன்படுகிறது. சமூகம் மேம்பாடுடைய, சமூகப் புரள்வு ஏற்படுத்துகின்றது. செய்திப் பரிமாற்றம், இலத்திரனியல் அபிவிருத்தி, மின்னியல் சாதனங்கள், இணையத்தளம் என்ற வகையில் ஊடகம் வளர்ச்சியடைந்துள்ளது. Medium, Mediaவாக அமைந்து சாதன வழிப்பட்டுள்ளது. MASS என்பது சனத்தொகையினை குறிக்கும் 19826ன் பின்பு தொலைக்காட்சி அறிமுகமாகும் மட்டும் வானொலி முக்கிய பங்கு வகித்தது. Observations அதாவது அவதானிப்பு என்பது மக்கள் மத்தியில் வளர ஊடகம் பணியாற்றியுள்ளது. ஏற்றுக் கொள்ளுதல், ஏற்றுக்
ஊடகம், தனியார் ஊடகம் என்பவை பிரிவுகளாக உள்ளன. இலங்கையில் இன (92. Liao.ujiao $25.5lb &uirrigélypg). Tamil Media, Muslim Media Forum 6T66tu60T6Lib உண்டு நிழற்.டம் எடுத்தல், வீடியோ தொழில்நுட்பம் என்பனவும் ஊடகத்ததுடன் தில்லுமுல்லு முற்பட்டுக் கொண்டிருக்கின்றன. சமூகத்தில் விரும்பப்படாத நிகழ்வுகள் நடக்கின்றன. சிந்திக்க வேண்டிய கட்டாய நிலை உண்டு. ஒரு ஊடகத்தின் செயற்பாட்டினைப் பார்த்து மற்ற ஊடகம் நிலைப்பாட்டினை மாற்றுகிறது. உண்மை மறைக்கப்படுகின்றது. பொய்கள் ஏற்றுக்கொள்ள வைக்கப்படுகின்றன. ஊடகம் பற்றிய கல்வி அறிவு வாழ்வியல் நோக்கு சம்பந்தப் பட்டது. சந்ததி சீரழியும் போது ஊடகக்கல்வியறிவு தேவை. சட்டத்துறை சமுகம் பற்றிய அறிவு என்பன ஊடகங்களுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும். மனித உடலுக்குநரம்புத் தொகுதி மாதிரி சமூக பரிமாற்றத்திற்கு ஊடகம் அவசியம் என்று கூறி தனதுரையை முடித்தார்.
கொழும்புத் தமிழ்க் சங்க செய்தி மடல்)
 
 

。纜芯 ஆண் al
--- ===== அற்றைத்திங்கள் - "சிற்பி" சரவணபவன் 14.07.2011 இன்றைய அற்றைத் திங்கள் நிகழ்வுக்கு சங்கத் தலைவர் திரு.மு.கதிர்காமநாதன் அவர்கள் 懿。_ #
டுசிற்பி சரவணபவன் அபேர்கள் கலந்து கொண்டு சிறப்பித் ரீ. தலைவர் தனது அறிமுகவுரையில் 1945இல் ஸ்கந்தவரோதயவில் பயின்றவர். “கலைச்செல்வி என்ற மாத இதழை வெற்றிகரமாக நடாத்தியவர். மூத்த எழுத்தாளர்; பல புத்தகங்களையும் எழுதி வெளியிட்டவர். முற்போக்கு சிந்தனையாளர் என்றார். -
சகலருக்கும் வணக்கம் தெரிவித்த சிற்பி அவர்கள் “அற்றைத்திங்கள் அ6:வெண்ணிலவில் என்ற கவிதை முதலடிகளைப் பாடித் தொடங்கினார். ஞானம் பத்திரிகையில் கலைச்செல்வி பற்றி எழுதி வருவதாக கூறிய பேச்சாளர், தாம் அதைத் தவிர்த்து தனது அனுபவங்களையும் சந்தித்த எழுத்தாளர்கள் பற்றியும் கூற விழைந்தார். தமக்கு கற்பித்த தமிழக அறிஞர் ஒரு வாரத்தில் ஒரு நாள் இலக்கியப் பாடல் ஒன்றை பூரணமாக விளங்கப்படுத்துவதை வழமையாக கொ65ண்டிருந்தார். பாடல்களை விளங்கப்படுத்தி அதன் பொழிப்பினை எழுதும்படி மாணவர்களிடம் கூறுவார். பொழிப்புரையை வாசித்த பின்புநீர் சதாசிவ ஐயருக்குச் செந்தக்காரனா? என்று கேட்டார். யாழ்ப்பான ஆரிய பாஷா சங்கத் தலைவர் சதாசிவ ஐயர். ஆசிரியர் பதவியிலிருந்து கல்வி நிர்வாக சேவைக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்த போதும் தாம் ஆசிரிய தொழிலையே மேல் எனக் கொண்டதாகக் கூறினார். மாணவர்களின் மத்தியில் மாணவர் மன்றங்களை ஏற்படுத்த முயற்சி செய்ததாக கூறினார். தலைமை தாங்கும் பண்பினை மாணவர் களிடையே வளர்ப்பதற்கு பெரிதும் உழைத்தார். அதன் மூலம் சஞ்சிகைகள் வெளியிடுவதற்கு அடிகோலினார். 1953/54 சுதந்திரன் பத்திரிகையில் சிறுகதைப் போட்டியில் பங்குபற்றினேன். முதல் பரிசை பத்மா சோமகாந்தனும், இரண்டாம் பரிசை டானியலும் பெற்றனர். ஆனால் போட்டி பற்றி விமர்சனங்களும் எழுந்தன. இதன் மூலம் எஸ்.பொ.வுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. பிற்காலத்தில் கைலாசபதியுடனும் கூட கருத்து முரண்பட ஏதுவாயிற்று. முற்போக்கு எழுத்தாளர் கூட சில சமயங்களில் பாகுபாடாக நடக்கின்றனர் என்ற கருதுகோள் கூட ஏற்பட்டது. தீபம் பத்திரிகையில் "இலங்கைப் பக்கம்” என்ற தொடர்கட்டுரையை நீர்ைட காலமாக எழுதியதாக கூறினார். இந்தியப் பத்திரிகைகளில் எமது எழுத்தாளர்களின் கதைகள் இடம்பெறச் செய்வதில் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. எமது எழுத்தாளர்களிடையில் கூட முரண்பாடுகள் இடம் பெற்றன. கனக செந்திநாதன், இலங்கையர்கோன் ஆகியோரின் ஆக்கங்கள் அக்காலத்தில் பிரபல்யம் பெற்றவை. செ.கணேசலிங்கம் அக்காலத்தில் நிறைய கதைகளை எழுதியுள்ளார். இந்தியாவில் கல்வி கற்ற போது ஏற்பட்ட சுவராசியமான சம்|வங்களையும் நினைவு கூர்ந்தார். “பதவி துறந்தவர்” என்ற தமது கதைக்கு அகில உலக சிறுகதைப் போட்டியில் 2ம் பரிசு கிடைத்தது. கனகசெந்திநாதன் ஆட்சேபனை தெரிவித்தார். ஒரு கதையினை பெண்கள் வாசிக்க முடியாது என்று
LLLLLL LLLLLL LLLLLLLLS SSLSLLLSLLLLL S LS L TLTSSL SLL LSLSLS
(கெழுபுத் தமிழ்ச் சங்க செய்தி மடல்

Page 5
குறிப்பிட்டனர். அதாவது தவறாக நடந்த பெண் வெளியில் வரும் போது இரண்டு புத்த கோவில்களும் வரும் வெளியில் தெரிந்தன என்ற வாக்கியத்திற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். முற்போக்கு சார்ந்த எழுத்தாளர் என்றாலும் தாம் நேர்மை, நியாயம் என்பவற்றிற்கு கட்டுப்பட்டதாகத் தான் தமது கலைச்செல்வி பத்திரிகைகள் நடாத்தியதாக கூறினார். தலைவர் சிற்பி அவர்களுக்கு சங்தத் தமிழ் பரிசளித்தார். நிகழ்வு இனிதே நிறைவெய்தியது. இலக்கியக்களம் 60 15.07.2011 இன்றைய இலக்கியக்களம் நிகழ்வு ஆட்சிக்குழு உறுப்பினர் திருமதி சந்தரபவானி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. "ஊடல் ஒழுக்கத்தில் பெண்களின் உணர்வு நிலை" என்ற தலைப்பில் இலங்கை மன்றக் கல்லூரியின் விரிவுரையாளர் செல்வி விஜிதா சிவபாலன் அவர்கள் உரையாற்றினார். அறிமுக உரையில் தலைவர் விஜிதா சிவபாலன் அவர்கள் இலங்கை மன்றக் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரியும் ஒரு பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரி. முதுமாணிப்பட்ட ஆய்வில் உள்ளவர். சிறந்த தமிழ் அறிஞர் என்பது அவரது உரையில் நாம் உணரக் கூடியதாகவிருக்கும் என்று கூறி அவரைட் பேச அழைத்தார்.
பேச்சாளர் தமதுரையில் முக்கியமாக சங்ககால, சங்கமருவிய கால நிலை மைகளை ஆய்வு செய்தார். சமகாலத்தில் ஐந்திணைகள் பற்றி கூறும்போது ஒவ்வொரு காலமும் ஒவ்வொரு வகையில் சிறப்புக்குரியது என்றார். குறிஞ்சி காதலுக்கும், முல்லை இருத்தல், மருதம் ஊடல், நெய்தல் இரங்கல், பாலை பிரிதல் என்று வகைப்படுத்தினர். எல்லா வகை நிலங்களிலும் எல்லா வகை ஒழுக்கங் களும் காணப்ட்டாலும் சிறப்பாக மேற் கூறிய பண்புகள் காணப்பட்டன. மருதம் ஊடலுக்கு குறிப்பிடப்பட்டதுடன் அங்கு வளமான பொருளாதாரம் காணப்பட்டது. வயலும் வயல்சார்ந்த நிலங்களில் செழிப்பு, தொழில் முறை காணப்பட்டன. எனவே தலைவன ஓய்வுகாலத்தில் ஆடல்பாடல்களில் ஈடுபடும்போது பிற பெண்களுடனான அறிமுகம் ஏற்படும். இதை உணர்ந்த தலைவி காட்டும் ஒரு மென்மை வாய்ந்த எதிர்ப்புத்தான் ஐடல் ஊடல் காதலுக்கு இன்பம் என்றார் வள்ளுவர். அந்த ஊடல் எல்லை மீறும் போது பரஸ்பரம் சந்தேக உணர்வுகள் ஏற்படுகின்றன. இவற்றை நிவர்த்தி செய்ய தலைவி பல முறைகளைக் கையாளுகின்றார். ஒரு தோழியின் உதவி தேவைப்படுகிறது. சில சமயங்களில் தலைவன் தொடர்பு கொண்டிருந்த விலை மாதரிடமும் பேச வேண்டிய நிலையும் ஏற்படும். ஊடலின் போது தலைவி காட்டும் உணர்வுகள், மெளனம், பேசிக் கொள்ளாமை என்பவை இலக்கி யத்தில் சிறப்பி.ம் பெறுகின்றன. சிலப்பதிகாரத்தில் கோவலன் - மாதவி உறவு பற்றி சிறப்பாக {{sறுகிறார் இளங்வோடிகள், மாதவிக்கு விலை மாதினை விட கூடிய அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது. அவள் கோவலனுடன் மட்டும் உறவு கொண்டிருந்த ஸ். ஆனால் சங்ககால இலக்கியங்களில் பரத்தை ஒழுக்கம் என்பது கூடாத ஒழுக்கம் என வரையறுக்கப்பட்டது. சேரிபரத்தை என்பவள் தொழில்
(08 - - - கொழும்புத் தமிழ்ச் சங்க செய்தி மடல்)

முறையில் மட்டுமே. ஆனால் காதல் பரத்தை அன்பு சம்பந்தப்பட்டவள். ஆணுக் (தச் சாதகமான சமூக அமைப்பு காணப்பட்ட சங்க காலத்தில் பெண்களின் உணர்வுகள் அவ்வளவு மதிக்கப்பட்டதில்லை. ஊடல் பிரிவின் போது தன் முனைப்பும் (Ego) முக்கிய இடம் வகிக்கிறது. இது ஆண் பெண் இருபாலாருக்கும் உண்டு. தாழ்வு மனப்பாண்மை, காழ்ப்புணர்ச்சி என்பனவும் சளிப்பினை உண்டு பண்ணும்; இடைவெளியை அதிகப்படுத்தும். இறுதியில் பெண் ஆணை மன்னிப்பதன் மூலம் மீண்டும் கூடல் ஏற்படும். அதற்கு காரணம் பெண்ணின் வாழ்க்கை நிலை. அவள் நல்ல பெயரினையும் குடும்பத்திலேயே இபூக்கும் அபாயம் ஒரு குற்றமும் செய்யாமல் தொடர்பாடல் உடல்மொழி (Body Language) என்பன ஐளடலில் முக்கிய குணாம்சமாகும். ஒரு வகையில் இலக்கியங்கள் கூ. ஒரு பக்கச் சார்புடையவைதான். பரத்தையுடன் சேரும் தலைவனுக்கு குழந்தைகள் கிடைப்பதாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. மாதவி துறவறம் பூன்ைடாள். ஆனால் சகலரும் அப்படி செய்ய முடியுமா? பெண்களின் வாழ்க்கை கேள்விக் குறியாகிவிடும். திருமணம் செய்ய வாய்ப்பு இல்லாத பெண்ணினம் அதிகரிக்க இடமாகிறது. தலைவன் தான் பிரிந்து செல்கிறான். தலைவி பிரிந்து செல்வதில்லை. பிரிந்துவிட்டால் அவள் வாழ்க்கை என்ன ஆவது? எனவே மீணன்டும் சேர வேண்டிய நிர்ப்பந்தம். அதற்கு கற்பு என்ற அடையாளம், கற்பு எனபது ஒரு குலத்தவருக்கு மட்டும் தானா? பல விதமான கேள்விகளை நம்மிடையே எழுப்பிச் சென்ற விஜிதா சிவபாலனின் உரை, நாவன்மை, மொழி நடை சொற்செறிவு என்பவை ஒருங்கே கொண்ட சிறந்த உரையாக அமைந்தது. பலரும் வாழ்த்துக் கூறினர். தலைவர் சங்கத்தமிழ் வழங்கி கெளரவித்தார். அத்துடன் நிகழ்வு இனிதே நிறைவெய்தியது. நூலகம் (சிறுவர் பகுதி) 16.07.2011 "கதை கதையாம் காரணமாம்" என்ற நிகழ்வில் செல்வி பாமினி சுவாமிநாதன் கலந்து கொண்டு சிறுவர்களுக்கான கருத்து மிக்க கதைகளைக் கூறி மகிழ்வித்தார். அறிவோர்ஒன்று கூடல் 467 20.07.2011 அறிவோர் ஒன்று கூடல் நிகழ்வுக்கு ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.க.ஞானசேகரம் அவர்கள் தலைமை தாங்கினார். "தமிழ்மொழிப் பாட நூலாக்கத்தில் ஆசிரியர்களின் பங்கு" என்னும் தலைப்பில் பேச்சாளராக 85ல நிதி உலகநாதர் நவரட்னம் அவர்கள் கலந்து சிறப்பித்தார். தலைவர் தமது அறிமுகவுரையில் பாடநூல்கள் ஒரு நாட்டின் தேசிய இலக்கு கல்வி இலக்கு. நூலாக்கம் செய்யப்பட்டு அச்சிடப்பட்டு கற்பித்தல் நடைபெறுகிறது. நூலாக்கத்தை அறிமுகம் செய்த சோமேரியன் என்ற அறிஞர் ஒரு கல்விப் புரட்சியை உருவாக்கினார். தமிழ்மொழி நூலாக்கத்தில் எழுத்து, கருத்து, இலக்கணம் என்பன கருந்திலெடுக்கப்படும். 8ம் வகுப்பு நூலில் எழுதப்படாத வரலாறு என்ற பாடத்தில்
ஒரே கதையில் ஒரு கதாபாத்திரத்திற்கு இரண்டு பெயர்கள் பயன்படுத்தப்பட்டு
09
※2 3.* 。 မိ်မ်း »ဖါး

Page 6
iki شتين كلمة ".
குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளனர். பேச்சாளர் ஒரு M.A. பட்டதாரி பின்பு கலாநிதிப் பட்டம் பெற்று நூலகத்துறையிலும், கல்வித்துறையிலும் பல பதவிகளை வகித்தவர் என்று கூறி அவரை உரையாற்ற அழைத்தார்.
கலாநிதி நவரட்ணம் தமதுரையில் கல்வி நூற்றாண்டு மலரில் புத்தகம் பற்றி சொல்லப்பட்டுள்ளது. கல்வியின் உயிர் மையம் நூல்கள். மொழி என்றால் என்ன? அது தொடர்பாடல் கருவி. நூலாக்கம் சம்பந்தமாக 1960இற்கு முன்னைய நிலை பற்றி தாம் ஆராயவுள்ளதாக கூறினார். 1960இற்கு பின்பு தேசிய பாடநூல் கழகத்திற்கு அத்துறை வழங்கப்பட்டுள்ளது. அதற்குமுன்பு L-1 என்பது முதல் மொழி. அது தாய்மொழி அல்லது கற்கும் மொழி எனப்படும். அன்று ஆங்கில மொழி, தமிழுL) ஆங்கிலமும், தனித்தமிழ் என்ற வகையில் இருந்தன. 1924இல் பாடநூல்கள் தமிழ் நாட்டிலிருந்து வந்தன. மொத்தமாக 50 நூல்கள் வரையில் இறப்பு:ருந்: கல்வி நூற்றாண்டு மலரில் சில்வா என்பவர் எழுதும் போது த 2ழ் நூலகள் பற்றி குறிப்புகள் தரவுகள் இல்லை என்றார் முன்னைய நூல்களில் லக்கணத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படவில்ல்ை.கேட்டல் பேசுதல், த்தல், எழுதுதல் என்ற ஆறுமுக நாவலரின் அடிப்படையில் 10ம் வகுப்பு இலக்கணம் படிப்பிக்கப்படவில்லை. தமிழ்மொழியும் தமிழ் இலக்கியமும் ட்டன. மொழி வீச்சு வேறுபட்டிருந்தது. தனலட்சுமிபுத்தகசாலை சகல b6ாயும் அச்சிட்டு வெளியிட்டது:பாலபோதினி 17முறை மீள் பதிப்புப் ஆக்கியவ ன் பெயர் குறிப்பிடப்படவில்லை. பண்டிதர் பரம்பரை இருந்த
காலத்தில் கற்பித்தலில் நேர்மையான நடைமுறை இருந்தது. பின்பு பிளவுகள் ஏற்பட்டன. வகுப்பறை வயது அடிப்படையில் அல்ல அறிவு அடிப்படையில் அமைய வேண்டும். அந்தக் காலத்தில் அச்சகங்கள் கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் மட்டும் காணப்பட்டன. அரசாங்கம் பாடநூல்களை ஏற்பதற்கு முன்பு எமது பங்களிப்பு என்ன? எமது கிராமங்களின் பதிவு எவை? பதிவுகள் இல்லை, ஈழகேசரி பொன்னையா, நல்லதம்பிப்பிள்ளை பணிகள் சிறப்புடையவை. பேராசிரியர் தில்லைநாதனும், பேராசிரியர் சுசீந்திரராஜாவும் சில ஆய்வுகளை செய்ய முன்வந்துள்ளனர். மெண்டிஸ் எழுதிய நம் முன்னோர் அளித்த அருஞ்செல்வம் சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இன்று அந்த நிலை இல்லை. பொதுச் செயலாளர் பரிசளித்துக் கெளரவித்தார். நிகழ்வு இனிதே நிறைவெய்தியது. திருக்குறள் மாநாடு - 2011 22, 23, 24.07.2011 எமது தமிழ்ச் சங்கம் 2000ஆம் ஆண்டிற்கு பின்பு, இம் முறை திருக்குள் மாநாட்டினை வெகுசிறப்பாக நடாத்தி முடித்துள்ளது.
“கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கத்தக." என்ற வள்ளுவப் பெருமானின் குறளுக்கு அமைவாக கல்வியே சமூகத்தின் மேம்பாட்டிற்குமுதற்கரு என்ற கொள்கைக்கு சிந்தனை வடிவம் கொடுத்த தலைவர் மு.கதிர்காமநாதனின் வழிகாட்டலில் கல்விக் குழு செயலாளர் திரு.மா,கணபதிப்பிள்ளையின் ஏற்பாட்டில் யூலை 22, 23, 24ஆம் நாட்களில்,
கொழும்புத் தமிழ்ச் சங்க செய்தி மடல்)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(எம்மையெல்லாம் பேருவகை பெற வைத்த திருக்குறள் மாநாடு இடம்பெற்றது. 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப.4.30மணிக்கு பம்பலப்பிட்டி கதிரேசன் கோவிலிலிருந்து தொடங்கிய அலங்கார ஊர்வலம் குடை, கொடி, ஆலவட்டத்துடன் மாலை 5.30 மணிக்கு எமது மண்டபத்தை வந்தடைந்தது. வள்ளுவப் பெருந்தகையின் திருவுருவப் படத்துடன் திருக்குறள் ஏடுகளுடன் யானை முன்வர ஆபிரக்கணக்கான தமிழ் ஆர்வலர்களும் பாடசாலை மாணவர்களும், சங்க உறுப்பினர்களும் எமது தலைவரின் தலைமையில் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இக்காட்சியினை கொழும்பு வாழ் மக்கள் அனைவரும் விப்புடன் பார்த்துநின்றனர். திருமதி பத்மா சோம காந்தன் ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவ மாணவியரை நெறிப்படுத்தினார்.
முதல் நாள் தொடக்க விழா சரியாக 6.OOLமணிக்கு திரு.மு.கதிர்காமநாதன் தலைமையில் திரு.கா.பொ.இரத்தினம் அரங்கில் தொடங்கியது.திரு.இராஜதுரை தம்பதிகள் மங்கல விளக்கேற்ற திரு.அருணந்தி ஆரூரன் தமிழ் வாழ்த்தினை இ65சத்தார். 蓟 செயலாளர் வேற்புரைநிகழ்த்தினார். தலைவர் தமது
ASqMSuSASuS uSAAA y,22%నికి
"தலைமையுரையில் இந்த மாநாட்டின் நோக்கத்தினைப் பற்றி கூறுகையில் தமிழ்
ாணவர்களும் குறளின் மேன்மையை அறிந்து கொள்ளவும் தத்தம் எதிர்கால் நல்வாழ்விற்கான நெறிப்படுத்தலுக்கும் இவ்விழா உதவும் என்றார். தொடக்கவுரையீர் :# பரும்,கல்விக்குழுச் செயலாளரு மாகிப்திருமாகன்பதிப்பிள்ளை அவர்கள் கவர் த்தினம் அவர்களின் காலத்தில் தாம் திருக்குறள் போட்டிகளில் பங்கு பற்றியதை நினைவு கூர்ந்து, அத்தகைய போட்டிகளை நடாத்தி 45இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கவிருப்பது, இன்று தமிழ்ச்சங்கம் பெற்ற வெற்றி என்றும் கூறினார். சிறப்புச் சொற்பொழிவாற்றிய பேராசிரியர் அரங்க ராமலிங்கம் (சென்னைப் பல்கலைக்கழகம்) "திருக்குறளில் இறைநெறி" என்ற தலைப்பில் உரையாற்றி திருக் குறள் இறைவனைப் பற்றி எதனையும் கூறவில்லை என்று விமர்சிப்பவர்களுக்கு பதிலுரை வழங்கினார். மாநாட்டுச் சிறப்பு மலரை எமது துனைத் தலைவர்களில் ஒருவரான வைத்தியகலாநிதி ஜின்னாஹற் ஷரிபுத்தீன் அவர்கள் வெளியிட்டு 6ைத்தார், "முப்பால் என்ற பெயரை இம்மலருக்கு வழங்கிய காரணத்தைக் கூறினார். திருமதி ஜெயந்தி விநோதன் முதற் பிரதியை பெற்று சிறப்பித்தார். 500 ரூபா நிர்ன பிக்கப்பட். மலர் விழாநாட்களில் ரூபா 300ஆக குறைக்கப்பட்டு எல்லோருக்கும் மலர் கிடைக்க வழி செய்யப்பட்டது. கலாசூரி திருமதி வாசுகி ஜெகதீஸ்வரனின் நெறியாள் கையில் நாட்டிய கலாமந்திர் மாணவியரின் "திருக்குறட் பரதம்" என்ற நடன நிகழ்ச்சி இடம் பெற்றது. எமது நிதிச்செயலாளர் திருச்செல்வனின் நன்றி புரையுடன் முதல் நாள் நிகழ்வு நிறைவு பெற்றது. மண்டபம் நிறைந்த மக்கள் கூட்டத்தினை மகிழ்வுற வைத்தது. 菁
இரண்டாம்நாள்நிகழ்வுகாலை, மாலை என இருபிரிவுகளாக இடம்பெற்றது. காலை ஆய்வரங்கு 9.30 மணிக்கு தனிநாயகம் அடிகளாரின் அரங்கில்
0YLLLSLLLSLSLSLLLLLLGLLLSLLLSLSLSLSY
al इंका:का-या सिञ्छला கெஜம்புத் தமிழ்ச் சங்க செய்தி மடல்
ଓଳିଙ୍ଗ

Page 7
தொடங்கியது. சட்டத்தரணி கந்தையா நீலகண்டன் தலைமை தாங்கினார். மங்கல விளக்கினை திரு.எஸ்.திருஞானசம்பந்தர் அவர்கள் ஏற்றி வைக்க திருமதி ஹேமாவதி கபிலதாஸ், திருமதி நீதிமதி யோகராஜன் ஆகியோர் தமிழ் வாழ்த்துப் பாடினர். துணைத் தலைவர் திரு.ந.கணேசலிங்கம் வரவேற்புரை நிகழ்த்த திரு.கந்தையா நீலகண்டன் தலைமையுரையாற்றினார். இம்மாநாட்டினை ஒழுங்கு செய்த சங்கத் தலைவரைப் பாராட்டி, தாமும் மாநாட்டில் பங்கு கொள்வதில் பெருமிதம் கொண்டார். பாலர் பிரிவு பேச்சுப் போட்டியில் முதற் பரிசு பெற்ற பதுளை தொட்டு6)ாக6) தமிழ் கனிஷ்ட வித்தியாலய மானவி செல்வி தனுஷா ராஜமானனிக்கம் உரையாற்றினார். "வள்ளுவர் காட்டும் வாழ்வியல்" என்ற தலைப்பில் சிறபடிச் சொற்பொழிவினை முனைவர் சீர்காழி விராமதாஸ் அவர்கள் ஆற்றினார். சிறப்பு நிகழ்ச்சியாக ஆய்வரங்கிற்கு பேராசிரியர் சிதில்லைநாதன் தலைடை தாங்கி நெறிப்படுத்தினார். திருக்குறளில் கல்வியியல் நோக்கு பற்றி திறந்த பல்கலைக்கழகத்தின் திரு.சி.ரி.இராஜேந்திராவும், அரசியல் நோக்குபற்றி கலாநிதி துரை மனோகரனும் ஒப்பியல் நோக்கு பற்றி பேராசிரியர் செ.யோகராசாவும் பெண்ணிய நோக்கு பற்றி கலாநிதி வ.மகேஸ்வரனும் பன்முக நோக்கில் திருக்குறள் என்ற சிறப்புற ஆய்வு செய்தனர். துணைச் செயலாளர் திரு.ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி அவர்களின் நன்றியுரை யுடன் காலை நிகழ்வு நிறைவுபேற்றது. நிகழ்ச்சிகளை திரு.ப.க.மகாதேவா தொகுத்து வழங்கினர்.
சனிக்கிழமை மாலை நிகழ்வுகள் விபுலானந்தர் அடிகள் அரங்கில் திரு.ந.கருணை ஆனந்தன் அவர்களின் மங்கல விளக்கேற்றலுடன் தொடங்கியது. திருமதி சொர்ாைலதா பிரதாபன் தமிழ் வாழ்த்தினை இசைக்க திரு.ஆ.குகளுமுர்த்தி அவர்கள் வரவேற்புரைநிகழ்த்தினார். நிகழ்வுக்குதலைமை தாங்கிய பேராசிரியர் சபா ஜெயராசா அவர்கள் தமது தலைமையுரையில் திருக்குறளின் மேன்மை பற்றியும் சமுதாய வாழ்வில் அது வகிக்கும் பங்கு பற்றியும் கூறினார். சைவப்புலவர் சு.செல்லத்துரை அவர்கள் தமது தொடக்கவுரையில் "திருக்குறள் வாழும் வரை தமிழும் வாழும்" என்றும் தமிழ் வாழும் வரை தமிழர்களும் வாழ்வார்கள் என்றும் கூறினார். அதன் பின்பு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பதக்கங்களை தலைவரும், பரிசில்களை அன்பளிப்புச் செய்த பெருமக்களும், சான்றிதழ்களை எமது செயலாளரும் வழங்கினார்கள். பனப்பரிச, பதக்கங்கள், சான்றிதழ்கள் என்பன வழங்கப்பட்டன. மத்திய பிரிவு பேச்சுப் போட்டியில் முதற்பரிசு பெற்ற கிளிநொச்சி திருவையாறு மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த செல்வி சாமந்தி நகுலகுமார் உரைாயற்றினார். சிறப்புச் சொற்பொழி வாற்றிய திரு.அரங்க ராமலிங்கம் அவர்கள் "திருக்குறளில் சித்தர் நெறி பற்றி உரையாற்றினார். சித்தர்கள் மரணமடைவதில்லை மீளவும் பிறப்பதில்லை. அவர்கள் சமாதி நிலை அடைகிறார்கள் என்ற வகையில் பேசினார். சைவ மங்கையர் கழக மாணவியரின் "செம்மொழிநடனம்"திருமதிகீதாஞ்சலி சுதர்சனின் நெறிப்படுத்தவில் இடம்பெற்றது. திரு.அ.பற்குணன் நன்றியுரை ஆற்றினார்.
(? 莓” :கொழும்புத் தமிழிச் சங்க செய்தி zန္တီ) ]

நிகழ்வினை திருமதி வசந்தி தயாபரனும், திரு.செல்வதிருச்செல்வனும் தொகுத்து வழங்கினார்.
மூன்றாம் நாள் இறுதி நிகழ்ச்சிகள் காலை 9.30 மணிக்கு பேராசிரியர் உவைஸ் அரங்கில் திரு.ஆறுமுகம் லோகேஸ்வரன், திருமதி ரஜனி லோகேஸ்வரன் தம்பதிகளின் மங்கல விளக்கேற்றலுடன் தொடங்கியது. திருமதி நிலானி கோபிசங்கர் தமிழ் வாழ்த்து இசைத்தார். வைத்தியகலாநிதி திருானசேகரன் வரவேற்புரை பகன்றார். நிகழ்வுக்கு தலைமை வகித்த பேராசிரியர் திரு.சோ.சந்திரசேகரம் அவர்கள் 2000 ஆண்டு நடாத்தப்பட்ட மாநாடு பற்றி நினைவுகூர்ந்தார். அத்துடன் திருக்குறளின் வழி தமிழர்கள் வாழவேண்டும் என்றார். சேல்வி சற்சொரூபவதி நாதன் அவர்கள் தொடக்கவுரை நிகழ்த்தினார். முன்னைய திருக்குறள் மாநாட்டில்தான் ஆற்றிய உரையினை நினைவுகூர்ந்தார். பேச்சுப் போட்டியில் முதற்பரிசு (கீழ்ப்பிரிவு) பெற்ற மாணவி செல்வி அபிராமி நகுலகுமார் (கிளி/திருவையாறு மகாவித்தியாலம்) உரையாற்றினார். இன்றைய ஆLவரங்கு பேராசிரியர் சண்முகதாஸ் தலைமையில் வழிவழி வள்ளுவர் என்ற தலைப்பில் இடம் பெற்றது. "வள்ளுவத்தில் எண்" என்ற தலைப்பில் கலாநிதி மனோன்மணி சண்முதாசும், "திருக்குறள் பனுவலும் அதன் வாசிப்பும்" என்ற தலைப்பில் பேராசிரியர் சி.மெளனகுருவும், "திருக்குறளை கையாளல்" என்ற தலைப்பில் பேராசிரியர் திருமதி சித்ரலேகா மெளனகுருவும், அகத்தினை மரபில் காமத்துப் பால்" என்ற தலைப்பில் கலாநிதி முநீ.பிரசாந்தனும், "பாயிரமரபில் திருக்குறட் பாயிரம்” என்ற தலைப்பில் திரு.க.இரகுபரனும் ஆய்வரங்கில் சிறப்புச் செய்தனர். இன்றைய நிகழ்வில் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் திரு.க.அரசரத்தினம் அவர்களின் நகைச்சுவை நிறைந்த சிறப்புச் சொற்பொழிவு எல்லாரது பாராட் புனையும் பெற்றது. நன்றியுரையை திருமதி வசந்தி தயாபரண் நிகழ்த்தினார். தொகுப்புரையை திரு.எஸ்.எழில்வேந்தன் வழங்கினார்.
ஞாயிறு மாலை இறுதிநாள்நிகழ்வு பி.ப.5.00 மணிக்கு திரு.தி.த.கனகசுந்தரம் அரங்கில் சங்கத் தலைவர் திரு.மு.கதிர்காமநாதன் தலைமையில் தொடங்கியது. திரு திருமதி சி.கணபதிப்பிள்ளை தம்பதிகள் மங்கல விளக்கேற்ற திரு.தி.கருணா கரன் தமிழ் வாழ்த்திசைத்தார். எமது உறுப்புரிமைச் செயலாளர் திரு.ப.க.மகாதேவா வரவேற்புரை நிகழ்த்தினார். திரு.மு.கதிர்காமநாதன் தமது தலைமையுரையில் "மாநாட்டின் வெற்றியில் மகிழ்வுறுவதாகவும், நூற்றுக்கணக்கான மாணவர்களை எமது மாநாட்டினை நோக்கி திசை திரும்ப வைத்துள்ள தாகவும், வரும் காலம் சிறப்பாக மிளிரும்' என்றும் கூறினார். தொடர்ந்து வருடாவருடம் மாநாடு இடம்பெறும் என்றும் கூறினார். திருமதி பத்மா சோமகாந்தன் அவர்கள் தொடக்கவுரை நிகழ்த்தினார். மாநாடு வெற்றிக்கான காரணகர்த்தாக் களை பாராட்டி பேசினார். சிறப்புச் சொற்பொழிவாற்றிய பேராசிரியர் திரு.அரங்க ராமலிங்கம் அவர்கள் "திருக்குறள் - சில புதிய பார்வைகள்” என்ற தலைப்பில் நாம் மேற்கொள்ள வேர்ேடிய 25 கடமைகள் பற்றி குறிப்பிட்டுக் கூறினார். மேற் பிரிவு பேச்சுப்
கொழுப்புத் தமிழ்ச் சங்க செய்தி மடல்

Page 8
போட்டியில் முதற் பரிசு பெற்ற செல்வன் அஜன் பாலகுமரன் றோயல் கல்லூரி மாணவன்) தமது பேச்சின் மூலம் அவையினரைக் கவர்ந்தார். இறுதி நிகழ்வாக சிறப்புப் பட்டிமண்டபத்தினை கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்கள் நடுவராக இருந்து நெறிப்படுத்தினார். வள்ளுவர் பெரிதும் வலியுறுத்துவது இல்லறமே என்று கலாநிதி பிரசாந்தனும், துறவறமாண்பையே என்று சலலிசனும் ஊழின் வலியை என்று கு.பாலச6:ன்முகனும் வாதம் புரிந்தார்கள். கம்பவாரிதி தமது தீர்ப்பின் போது பல நீதி மொழிகளை எமக்கு திருக்குறளின் மூலம் வழங்கியதுடன் இல்லறச் சிறப்பே யாவற்றுள்ளும் தலையானது என்று கூறினார். திரு.சி.பாஸ்க்கரா நன்றியுரை வழங்க 1)ாநாடு இனிதே நிறைவு பெற்றது. மூன்று நாட்களும் தவப்பொழுதாக கழிந்தன! பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் “நினைவுப் பரவல்' 27.07.2011 இந்நிகழ்வு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு.மு.கதிர்காமநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. திருமதி சொர்ணலதா பிரதாபனின் தமிழ் வாழ்த்துடன் தொடங்கியது. முதலில் அமரர் பேராசிரியர் சிவத்தம்பியின் மறைவுக்கு 2 நிமிட மெளனஞ்சலி செலுத்தப்பட்டது. அமரரின் உருவப்படத்திற்கு பேராசிரியர் அ.சண்முதாஸ் அவர்கள் மலர்மாலை அணிவித்தார். திரு.சி.பாஸ்க்கரா தமது தொடக்கவுரையில் உலகறிந்த பெருமகன் பேராசிரியர் க சிவத்தம்பியுடன் தமக்கு இருந்த தனிப்பட்ட உறவு பற்றிக் கூறினார். அவர் தமிழ் கூறும் நல்லுலகில் சிறந்த ஆளுமையை கொண்டிருந்தார். பாராளுமன்ற மொழி பெயர்ப்பாளராகவும், பேராசிரியராகவும், நாடக நடிகராகவும் பணிபுரிந்தவர். 2010 செம்மொழி மாநாட்டில் பெரிதும் கெளரவிக்கப்பட்டவர். அவர் தமிழ் தேசியத்தின் ஒரு அபிமானி, யாழ்.பிரஜைகள் குழுத்தலைவர். இறுதியாக எமது "கோபுர மலருக்கு" வாழ்த்துச்செய்தி எழுதியனுப்பினார் என்றார். தலைவர் தமது தலைமையுரையில் பேராசிரியரினால் தமிழ் வளர்ந்தது. தமிழால் நாம் வளர்ந்தோம். அவரது நினைவு விழாவை ஒவ்வொரு ஆண்டும் நடாத்துவோம். அவர் பல வருங்களாக எமது காப்பாளராக விளங்கினார். பேராசிரியர் சிவத்தம்பி பற்றியே ஆய்64 நடாத்தி டாக்டர் பட்டம் பெற முடியும். எமது விழாக்களுக்கு நாம் அவரை சுமந்து வந்தோம் என்பதை விட தமிழை நாம் சுமந்து வந்தோம் என்பது தான் சரியானது என்றார்.
பேராசிரியர் சண்முதாஸ் அவர்கள் தமது நினைவுப் பேருரையில் "நினைவுப் பரவல்” என்பது பொருத்தமான சொற்தொடர். 40 வருடங்களுக்கு முன்பு நாம் பேராசிரியருடன் பணிபுரிந்தபோது அவர் "வரலாற்றின் முன்னேற்றம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். கர்ணன்போர், நொண்டி நாடகங்களில் தாம் நடித்த போது பேராசிரியர் வித்தியானந்தன் மூலமாக அறிமுகமானேன் என்றார். வித்தி போதய வித்தியாலங்கார யாழ் பல்கலைக்கழகங்களில் துணைப் பேராசிரியர் பதவி வெற்றிடமான போது திரு.கா.சிவத்தம்பியின் பொருட்டு தாம் அம்பதவிகளில் போட்டியிடவில்லை என்றார். யாழ். பல்கலைக்கழகத்தில் வாழ்நாள்
கொழும்புத் தமிழ்ச் சங்க செய்தி மடல்)
 

போசிரியராகவும் விளங்கி D.Lit பட்டத்தினையும் பெற்றார். (கெளரவ பட்டம்). விதானையார் வீடு வானொலி நாடகத்தில் அசல் விதானையராக நடித்து பாராட்டப்பட்டார். நண்பர்களுக்கு திருமண தரகராக பணிபுரிந்ததைக் கண்ட இ6ரது பெற்றோர் இவரை கொழும்பு சாஹிரா கல்லூரியில் படிக்க அனுப்பினர். அங்கு படித்து ஆசிரியராக பணிபுரிந்து. மாணவ சமுதாயத்தை உயர்த்தியவர். மாாவ மன்றங்களை உருவாக்கி தலைமைப் பயிற்சி பெற வைத்தவர். (Leadershi) சிங்கள, ஆங்கில மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றார். முற்போக்கு எழுத்தாளர்களுடன் இணைந்து பணியாற்றிய போதும் சந்நிதி முருகனை தனது குலதெய்வமாக வழிபட்டார். தமிழகத்தில் பணியாற்றி மாணவர்களை நெறிப்படுத்தி இன்றளவும் தொடர்புகளை வைத்திருந்தார். அங்கு செல்லும் போது மாணவர்கள் இல்ரைச் சுமந்து சென்றனர். அவர் மறைந்த பொழுது அஞ்சலிக் கூட்டங்கள் நடத்தி, இவரது மாணவரான தமிழகப் பேராசிரியர் அரசு அவர்கள் இறுதிச் சடங்கிலும் இங்கு கலந்து கொண்டார்.
முன்னாள் கலாச்சாரத்திணைக்கள மேலதிக பணிப்பாளர் திரு.S.H.M.ஜெமீல் பேராசிரியர் மானவராக சாஹிரா கல்லூரியிலும் பின்பு பல்கலைக்கழகத்திலும் இவரிடம் கற்றார். சாஹிரா முன்னாள் அதிபர் M.M.அஸிஸ் அவர்களின் ஞாபகார்த்த உ6ரயின்போது Being aTamil and SriLankan என்ற வகையில் உரையாற்றினர். இவரிடம் தமிழ் கற்ற தமிழ், இஸ்லாம் மாணவர்கள் A சித்தி பெற்றார்கள் (AL பரீட்சை) இளங்கீரன். HMB மொஹீதின், சில்லையூர் செல்வராஜன், ரகுநாதன் ஆகியோர் இவரது பாசறையில் வளர்ந்தவர்கள் என்றார்.
தினக்குரல் ஆசிரியர் திரு.வீ.தனபாலசிங்கம் அவர்கள் தாம் அவரது கரவட்டியைச் சேர்ந்தவராகவிருந்த போதும் 1997இல் தான் நேரடியாக அறிமுகமானார். தினக்குரல் முதலில் பிரசுரிக்கப்பட்ட போதும் 15வது ஆண்டு மலரின் போதும் வாழ்த்து செய்தி எழுதியவர். தினக்குரலும் வாழ வேண்டும். பிரதம ஆசிரியரும் வாழ வேண்டும் என்று கூறுவார். ஊடகவியலாளருடன் நெருங்கிய உறவு கொண்டவர். இவரைப் போன்ற ஒரு மனிதன் எமக்கு இனிக் கிடைக்க போவதில்லை என்றார்.
எமது சங்கத்தின் செயலாளர் ஆ.இரகுபதிபாலழுநீதரன் உரையாற்றும்போது பேராசிரியருக்கும் தமக்கும் 40 வருட தொடர்பு தமது தந்தையுடனும் மாமானர் சானாவுடனும் தொடர்பினை பேணியவர். அவர் எழுத்தாளர் கோமல் சுவாமிநாதன் அவர்களுக்கு வழங்கிய பேட்டியில் எமது தேசியம், மொழி, எமது வேதனைகள் பற்றிக் கூறியுள்ளார். எமது சங்க ‘ஓலை’ என்ற வெளியீட்டில் பேராசிரியர் 75வது பிறந்த நாள் பற்றி சிறப்பு இதழ் வெளியிட்டோம் என்றார்.
வீரகேசரி ஆசிரியர் திரு.பிரபாகன், தனதுரையில் பேராசிரியர் செம்மொழி LDாராட்டில் கலந்து கொள்ளும்போது, தம்முடன் தொடர்புடன் இருந்ததாகவும் என்றும் அவர் மாநாட்டில் பேசும் போது ஒலிவாங்கி செயலழிந்த போது கலைஞர் கருRாநிதி உடன் நடவடிக்கை எடுத்ததாகவும் ஸ்ரீதிமக்கள் சத்தம் போடாமல்
gaudi AJI ANNAIREANN varieti irisí is varies is
(கொந்த் தமிழ்ச் சங்க செய்தி மல்

Page 9
மெளனL சாதித்து பேராசிரியரை கெளரவப்படுத்தியதாகவும் கூறினார். சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் திரு.அரங்க ராமலிங்கம் தனது அஞ்சலி உரையில் நினைவஞ்சலி நிகழ்வில் தாம் பங்கு பற்றியது பெரும் பாக்கியம் என்றார். செம்மொழி மாநாட்டில் தாமும் பங்கு கொண்டதாகவும் அவரின் உரையின் சிறப்பு பற்றியும் கூறினார். அவர் மறைந்தவுடன் தமிழகத்தில் அஞ்சலிக் கூட்டங்கள் பல நடந்ததாகவும் பத்திரிகைகள் அனைத்தும் செய்தி வெளியிட்டதாகவும் கூறினார். திரு.வி.க.விருது பெற்ற ஒரே ஒரு ஈழத்து அறிஞர் திரு.கா.சிவத்தம்பிதான் என்றார். அவரது உழைப்பு, நட்புரிமை என்பது தான் அவரது வெற்றியின் இரகசியம் என்றார். அவரது 80வது அகவை நிறைவின் “முத்து விழாவின்" நாம் காணமுடியாதது துரதிஷ்டம் என்றார். திரு.ப.க.மகாதேவாவின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.
இலக்கியக்களம் - 62 29.07.2011 இன்றைய இலக்கியக்களம் நிகழ்வு செல்வி திவ்யா யோகராஜா வின் தமிழ் வாழ்த்துடன் தொடங்கியது, நிகழ்வுக்கு ஆட்சிக்குழு உறுப்பினர் WS செந்தில்நாதன் அவர்கள் தலைமை தாங்கினார். இன்றைய இலக்கியகளத்தில் கலந்துகொண்ட கலாநிதி மீரா வில்லவராயர் அவர்கள் "தியாகராஜ சுவாமிகளும் ஏனைய வாக்கேயகாரர்களும்” என்ற தலைப்பில் உரையாற்றினார். தலைவர் தனது அறிமுக உரையில், தாமும் மீரா அவர்களின் பெரியதாயாரும் 1947ல் ஒன்றாக பல்கலைக்கழகத்தில் கற்றதாகவும். இவர் திருவானந்த புரத்தில் M.A. பட்டத்தையும் தமிழகத்தின் P.H.ID பட்டத்தையும் இசைத்துறையில் பெற்றுள்ளார். பகவதி சிரோன்மணியிடம் சங்கீதம் கற்றவர் என்று அறிமுகப் படுத்தினார். கலாநிதி மீரா வில்லவராயர் தமது உரையின்போது எந்தவொரு ஆய்வும் இன்னொரு ஆய்விற்கு வழிவிட்டுச் செல்வதாகவும் தமிழிசை மூவரினதும் சங்கீத மூர்த்திகளையும் ஒப்பு நோக்கும்போது எழுந்த கருத்துக்கள் 3 உபதலைப்புக் களுடன் அமையும் () தியாகராஜ சுவாமிகளின் இசைச்சிறப்பு (2) தியாகராஜ சுவாமிகளுக்கு பின்னரான ஏனைய சங்கீத விற்பன்னர்கள் பற்றியது (3) இன்றைய காலகட்டத்தில் இசை வடிவம். பழங்காலம் வரதருக்கு முற்பட்ட காலம், மத்திய காலம், புரந்தரதாசர் காலம் 18ஆம், 19ஆம் நூற்றாண்டில் சங்கீத மும்மூர்த்தி கர்நாடக சங்கீதத்தில் பெயர் பெற்றிருந்த காலம். ஏன் தியாகராஜ சுவாமிகளுக்கு மட்டும் ஆராதனை விழா எடுக்கப்படுகின்றது. அக்காலத்தில் தஞ்சாவுரிலும், ஐரோப்பிய நாடுகளில் கூட இசை வடிவங்கள் காணப்பட்டன. தியாகராஜரின் இசை சுருதிகள் முத்திரை பெற்றவை. அழகான சாரீர வர்ண மெட்டுக்கள் சிலவற்றை மீரா அவர்கள் அழகாகப் பாடிக்காட்டினார். இடைக்கிடை) தியாகராஜ சுவாமிகள் திருவாரூரில் #டள்ள திருவையாற்றில் பிறந்த போதும் அவர் தெலுங்கு மொழி பேசுபவர். எனினும் தமிழ்நாட்டு இசைவடிவங்களை சிறப்பாக சம்பந்தர், திருநாவுக்கரசர் கால இசை வடிவங்களிலும் இவர் பயன்படுத்தினார். இவரது குலதெய்வம் ராமபிரான் ஆகும். கொத்துக் கீர்தனைகளையும் இயற்றினார். தல
YLLLLLSYLLLSSLSLSLSSLL LSLSYLLLLLLYL LLLLLSZZS
(16 கொழுமித் தமிழ்ச்சங்க செய்தி மடல்
 

கீரந்தனைகளையும் இயற்றினார். யாவரும் பாடக்கூடிய மெட்டுகளையும் பாடினார். (சீதா ராம கல்யாண வைபோகம்) ஊஞ்சல்பாட்டும் பாடினார். நாடோடிமெட்டுக்களில் கூ. பாடல்கள் உண்டு. பல வேதாந்த தத்துவங்களையும் சங்கீத சாஸ்திரங்களின் உErபைகளையும் வெளிப்படுத்தினார். பிரகலாத பக்தி விஜயம், சீதாராம விஜயம் போன்ற இசை நாடகங்களையும் சுவாமிகள் இயற்றினார். தியாகராஜரும் ஏனையவர்களும் (அருளாளர்கள்) தியாகராஜருக்கு முற்பட்ட, சமகால பிற்காலம் என்ற அடிப்படையில் தொட்டுக் காட்டினார்.
ரோச்சனா, கமல ரோச்சனா பாடலை பாடிக் காட்டினர் என்று கூறிய மீரா அ6யர்கள் "பிடியதனுருவுமை கொளமிகுகரியது” பாடல் அமைப்பிலும் தியாகராஜர் பாபுயுள்ளார். எமது காலத்தில் சினிமா பாடல்களிலும் இவரது கீர்த்தனைகள் இடம் பெற்றன. "சிந்து பைரவி", "தில்லானா மோகனம்பாள்" திரைப்படங்களில் உள்ள பாடல்களைக் கூறலாம். நாவுக்கரசரின் திருத்தாண்டகம் இவரது இசைக் கிருதிகளில் இடம் பெற்றது. "வஞ்சகப் புகழ்ச்சி" என்ற ஒரு இசை வடிவம் சுந்தரர் காலத்தில் இடம்பெற்றது. இறைவனை இகழ்வதுபோல் புகழ்தல் அப்பரை மன்னன் அழைத்த போது அவர் புறக்கணித்தார். அதேமாதிரிதியாகராஜரும் செய்துள்ளர். "நாமார்க்கும் குடி பல்லோம்” என்ற தேவாரத்தை ஞாபகப்படுத்தினார். மிகச் சிறந்த ஒரு இசைப் பேச்சினை கேட்டு மகிழ்ந்தோம். தலைவர் பரிசளித்து மீரா அவர்களை கொரவித்தார்.
இலங்கையர்கோனி சிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழா
30.07.2011 கொழும்புத் தமிழ்ச்சங்கம் நடாத்திய "இலங்கையர்கோன் சிறுகதைப் போட்டி - 2011 பரிசளிப்பு விழா” தலைவர் திரு.மு.கதிர்காமநாதன் தலைமையில் பி.ப.5.30மணிக்கு இடம் பெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஒய்வு பெற்ற மாவட்ட நீதிபதி விகடகவி மு.திருநாவுக்கரசு கலந்து கொண்டார். இலங்கையர்கோன் அவர்களின் புதல்வர் சி.ஜெயவர்மன் அனுசரணை வழங்கினார். விழாவினை திருமதி பத்மா சோமகாந்தன் தமிழ் வாழ்த்துடன் தொடங்கி வைத்தார். இலக்கியக்குழுச் செயலாளர் திரு.எஸ்.எழில்வேந்தன் வரவேற்புரை நிகழ்த்தினார். தலைவர் தமது தலைமையுரையில் மகன் தந்தைக்கு ஆற்றும் ஐடதவி இவன் தந்தை எந்நோற்றான் கொல் என்னும் சொல் - என்ற குறளுக்கு அமைய ஒரு பெரும் பணியினை மேற் கொண்டுள்ளார். முதல் மூன்று பரிசில்களையும் 10 ஆறுதல் பரிசில்களையும் அவர் வழங்க முன்வந்துள்ளார். அது ம்ை இலங்கையர்கோன் மறைந்து சரியாக 50 ஆண்டு நிறைவில் இந்த விழா நடக்கிறது. இலங்கையர்கோன் சிறுகதை, நாடக எழுத்தாளர்; நாடாளவிய ரீதியில் புகழ் பெற்றவர். திரு.ஜெயவர்மன் பரிசுக்காக, இலங்கையர்கோன் நிதியத்திற்கு புறLLாக 40,000 ரூபாவினை அன்பளிப்புச் செய்துள்ளார் என்றார். பிரதம விருந்தினர் தனதுரையில் இலங்கையர்கோன் ஒரு வழியில் தமது உறவினர் என்றும் தமிழிலக்கயம், கூத்து,நாடகம் என்பவற்றின் மீது கொண்ட ஆர்வத்தினால் தான் இலங்கையர்கோனை முன்பே அறிந்திருந்ததாகவும் கூறினார். அவர் எழுதிய
LLLLSLLLLLL0L SLLLLLLLLSLLLLLSLLLSLSLLLLLSLSSSLLLLS
вентез метятитете «инвазиатти
(கொழம்புத் தமிழ்ச் சங்க செய்தி மடல்

Page 10
"விதானையார் வீடு" என்றநாடகத்தில் பேராசிரியர் கா.சிவத்தம்பி விதானையாராக நடித்துள்ளார். முத்தமிழ் வளர்த்த முச்சங்கத்திற்கு பிறகு 4வது சங்கம் உருத்திரா மாவத்தையில் உருவாகிவிட்டது என்றார். தமிழ் அழிந்து விடுமோ என்று நாவாலியுர் சோமசுந்தரப் புலவர் கருதினார். ஆனால் கொழும்புத் தமிழ்ச்சங்கம் தமிழைக் காப்பாற்றி விடும் என்றார். யாழ்ப்பான கலாசார அழிவு தொலைக் காட்சியினாலுL செல்லிடத் தொலைபேசியினாலும் ஏற்பட்டுள்ளது என்றார். வக்கிர எண்ணங்கள் நடை உடைபாவனைகள் என்பவற்றில் இளைஞர், யுவதிகளிடை யில் காணப்படும் அபரிதமான மாற்றங்கள் பயமுறுத்துகின்றன என்றார். விகடகவி அவர்கள். கம்பன், வள்ளுவர், இளங்கோ போல் உலகில் யாங்கணும் பிறந்ததில்லை என்று பாரதி கூறினார். பாரதி சந்தத் தமிழ்ப் பற்று இன்னும் மக்களிடையில் பரப்பப்படவேண்டும் என்றார். கலாநிதி வ.மகேஸ்வரன் தமது சிறப்புரையில் ஈழத்துச் சிறுகதை வளர்ச்சியில் இலங்கையர்கோனை முன்னிறுத்தி உரையாற்றினார். இலங்கையர்கோன் ஒரு ஆளுமை பொருந்திய எழுத்தாளர். ஈழம் என்ற பிராந்தியத் தில் உள்ள மக்கள் கூட்டத்தில் உணர்வுகளை அவர் கதைகள் பிரதிபலித்தன. அவரது “வெள்ளிப் பாதரசம்” என்ற கதை இன்றளவும் பேசப்படுகின்றது. 1930 - 49 வரை சமுக சீர்திருத்த காலம் 1950 - 60 முற்போக்கு காலம் 1961 - 83 புத்தெழுச்சிக் காலம் 1983 இற்குப்பின்னர் தமிழ்த் தேசிய காலம், என்ற வகையில் சிறுகதைகளின் வளர்ச்சியின் தோற்றப்பாடு அமைந்திருந்தது. மலையகத்தில் நடேசய்யர் பணி பற்றி தெளிவத்தை யோசப் தெளிவாக கூறியுள்ளார். முக்கியமான 10 எழுத்தாளர்களில் சம்பந்தனும், இலங்கையர்கோனும் முன்னிலை வகித்தவர் கள். “வெள்ளிப்பாதரசம்” பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பாட நூலாகவுள்ளது. "மச்சாள்” என்ற கதை பண்பாட்டுக் கோலமாக காட்டுகிறது. சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வினை வெளிப்படுத்துகிறது என்று கூறினார். 360 கதைகளில் முதல் பரிசினை கொழும்பு - 2, எஸ்.ஏ.நாகூர்கனி ரூ.15,000மும் சான்றிதழும் பெற்றார். இரண்டாவது பரிசாக அளவெட்டி வே.சிவராசா ரூ.10,000மும் சான்றிதழும் பெற்றார். மூண்றாவது பரிசாக சோ.ராமேஸ்வரம் ரூ.5,000மும் சான்றிதழும் பெற்றார் மேலும் 10பேர் ஆறுதல் பரிசு பெற்றார்கள். தலைவரும் திரு.ஜெயவர்மனும், விகடகவி அவர்களும் பரிசில்களை வழங்கி கெளரவித்தனர். திரு.ஜெயவர்மன் ஏற்புரை வழங்கும் போது தானும் எழில்வேந்தனும் தந்தையார் காலத்தில் சிறுவயதில் பழகியதாக கூறினார். எதிர்காலத்திலும் கொழும்புத் தமிழ்ச்சங்கம் முன்னெடுக்கும் பணிகளுக்கு உதவி செய்வேன் என்று கூறினார். நிகழ்வு இனிது நிறைவெய்தியது. பொதுச் செயலாளர் நன்றி கூறினார்.
g5Irr6Oasid» (ağfiy3j5YIri* u(ga5g55)
30.07.2011 "கதை கதையாம் காரணமாம்” என்ற நிகழ்வில் கலந்து செல்வி சதாசிவம் சிவரூபிகல்நது கொண்டு சிறுவர்களுக்கான கருத்து மிக க கதைகளைக் கூறி மகிழ்வித்தார்.
 

ஆரோக்கிய வாழ்வுக்கான கலந்துரையாடல் 31.07.2011 வழமையாக மாத இறுதி ஞாயிற்றுக்கிழமை காலையில் நடை பெறும் நிகழ்வை சங்கப் பொதுச் செயலாளர் திரு.ஆ.இரகுபதி பாலழுநீதரன் தொடக்கி வைக்க வைத்தியகலாநிதி சி.அனுஷ்யந்தன் அவர்கள் தலைமை தாங்கினார். தமிழ் வாழ்த்தினை திரு.சுப்பிரமணியம் பாலச்சந்திரன் அவர்கள் இசைத்தார், "உணவுத் தொகுதியில் ஏற்படும் புற்று நோய்" என்ற பொருள் பற்றிய விவாக்கவுரையை வைத்தியகலாநிதி முரளிதரன் வல்லிபுரநாதன் அவர்கள் வழங்கினார். மிகவும் முக்கியமான கருத்துக்களை அவர் கூறிய துடன் உ6ளவுக்கால்வாயில் எவ்விடங்களைப் பாதிக்கிறது? அதற்கான காரணியாது?, வயது மூத்தோர் மத்தியில் - இந்நோயை இறுதிக்கால் நோய் எனக் கூறக்காரணி யா? போன்ற கேள்விகளுக்கு வைத்தியகலாநிதி முரளிதரன் வல்லிபுரநாதன் மிகச் சிறப்பான முறையில் விளக்கம் அளித்தார்.
அவரைத் தொடந்து வைத்திய கலாநிதி சி.அனுஷ்யந்தன் அவர்கள் உணவு அகத்துறிஞ்சல் தொகுதியில் புற்றுநோய்? அவ்வசாதாரண நிலை எப்படிச் சம்பவிக்கிறது?, புற்றுநோய்க்கான சிகிச்சை யாது?, உணவு உட்கொள்ள முடிவதில்லை - அகத்துறிஞ்சல் சீரின்மை காரணியாது? போன்ற கேள்விகளுக்கு நல்ல பல கருத்துக்களை வழங்கினார். விளக்கப் படங்களையும் அவை யேருக்கு காண்பித்து ஒரு உபயோகமான உரையை வழங்கினார்.
அவரைத் தொடர்ந்து குடற்புற்றுநோய் - எப்படியான துன்பியலை நோயாளர் அனுபவிக்கிறார்கள்?, எப்படியான உணவுகளை இந்நோயாளர்களுக்கு சிபார்சு செய்கிறார்கள்? பச்சைக்காய்கறி, பழங்கள் உண்பதால் நன்மைகள் உண்டா? Promotional Work நோய் ஏற்படாது தவிர்ப்பதற்கான முயற்சிகள் யாவை? போன்ற கேள்விகளுக்கு வைத்தியகலாநிதி திருமதி சிவானந்தி இரகுபரன் சிறப்பான பல நன்மை பயக்கக் கூடிய கருத்துக்களை விளக்கமாக எடுத்துரைத்தார். தமிழர் (குறிப்பாக வடபகுதியினர்) ஏனைய சமூகத்தவர்களை விட இந்நோய்க்குக் கூடுதலாக (எண்ணிக்கை) பாதிப்படைகிறார்கள்? என்ற கேள்விக்கு வைத்திய கலாநிதி எஸ்.சண்முகதாஸ் அவர்கள் கருத்துக்களை வழங்கினார். மண்டபம் நிறைந்த ஜனத்திரளுடன் ஒரு பயன்தரத்தக்க கருத்தரங்காக இது அமைந்து LDக்களின் வரவேற்பைப் பெற்றது.
நன்றியுடையோம் ) சமூகந்தர முடியாத நாட்களில் சங்க நிகழ்வுகள் பற்றி செய்திகளைச் சேகரித்து தொகுப்புப் பணிக்கு உதவிய பொதுச் செயலாளர் திரு.ஆ.இரகுபதி பாலழறீதரன், ஆட்சிக்குழு உறுப்பினர் கதிரவேலு மகாதேவா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். "" ; MANCAyseviyeye *
தொகுப்பாளர்:- கந்தசாமி மகாதேவா - வடிவமைப்பு:- உறுப்பாண்மைக்குழுச் செயலாளர் திருமதி.கு.சத்தியஜோதி
ங் :ெதி மல்"

Page 11
费。 is áäià. La
ஸாம்ம்muான்
கொழுப்புத் தமிழ்ச் சங்கம்,
இல.07, 57ஆவது ஒழுங்கை,
 
 
 

ளூக்கும்இலவசமாக அடையாள
r
கள் பணியை இலகுவாக்கிக் | படத்தின் பின்புறத்தில் பெயர் |