கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொழும்புத் தமிழ்ச் சங்கம் செய்தி மடல் 2011.08

Page 1
சங்க உறுப்பினர்களுக்கு மட்டும்
கொழும்
邯、 Ꮆha,Ꮔ
:קטלאי
வெளியீடு : 022 மாதம்
கொழும்புத் தமிழ்ச் சங்க இணையத்தளத்தி “Fெய்தி மடல்" என்பதன் பிரசுர வடிவம் இ இணையத்தளத்திற்கு விஜயம் செய்யுங்கள். Sa GIRTugbasib:www.colombotamilsangam.com தொலைபேசி இல . 2363759
தொலைநகல் : 2361381
கொழும்புத் தமிழ்ச் சங்கத் 2011ஆம் ஆண்டு செப்டெ (ஞாயிற்றுக்கிழமை) காலை10 மண்டபத்தில் தலைவர் தலைமையில் நடைபெறும்.
இக்கூட்டத்திற்கான அற அங்கத்தவர்களுக்கு அனுப்ப
அனைவரையும் சமூகம் த வேண்டுகின்றோம்.
மு.கதிர்காமநாதன் ஆ.இரகுபதி ட தலைவர் பொதுச்5ெ
[မြှားအံ့|ူး၊
 
 
 
 
 
 

புத் தமிழ்ச் சங்கம்
Ďg5 UDL6ťo
ஆவணி ஆண்டு : 2011
ல் "எம்மைப் பற்றி” என்னும் பகுதியிலுள்ள ம்மடலாகும். மேலும் விபரங்களுக்கு எமது
fairgorgia 6i): tamilsangamcolomboGyahoo.com
infoG)colombotamilsangam.com
《དོ། C)ཁག་བོད་ཡམས་ཡམས་ཡམས་ཡམས་ལ་ཡང་།།
ஆண்டுப்
கூட்ட
தின் ஆண்டுப்பொதுக் கூட்டம் ம்பர் மாதம் 25ஆம் திகதி ).OO மணிக்கு சங்கரப்பிள்ளை
திரு.மு.கதிர்காமநாதன்
பிவித்தல் ஏற்கனவே சங்க ப்பட்டுள்ளது.
ந்து சிறப்பிக்குமாறு அன்புடன்
1லழுநீதரன் செதிருச்செல்வன் பலாளர் நிதிச்செயலாளர்

Page 2
ஆவணி மாதம் தமிழ்ச் சாங்கத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் பற்றிய
fissrum'dir6-ban
அறிவோர்ஒன்றுகூடல் - 468 03.03.2011 இன்றைய அறிவோர் ஒன்றுகூடல் நிகழ்வுக்கு ஆட்சிக்குழு உறுப் பினார் திருமதி பத்மா சோமகாந்தன் அவர்கள் தலைமை வகித்தார். திரு.மா.குலமணி அவர்கள் "தமிழிசையின் மறுவாழ்வு" என்ற தலைப்பில்உரையாற்றினார். தலைவர் தனது உரையில் இன்று தமிழ்ச் சங்கத்தில் இடம்பெறும் மிகவும் கனதியான, காத்திரமான ஒருதலைப்பு இது. திரு.குலமணி அவர்கள் முன்னாள் கணக்காய்வளார். சில காலம் இலண்டனில் வசித்தவர். தமிழிசை பற்றிய அக்கறை கொண்டவர். இலண்டனில் தமிழர்தகவல்நிலையம் ஒன்றைநடத்தியவர். தமிழிசைக்கு மறைந்த பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் பங்களிப்பு பற்றியும் உ8Dரயாற்றினர்.
தமிழிசைக்குமறுவாழ்வுகிடைக்குமா? என்ற கேள்வியுடன்உரைஞர் தனதுரையை ஆரம்பித்தார். அச்சகம் நடாத்தி பல நூல்களை வெளி யிட்டதாக கூறினார். இசைத்தமிழ், தமிழிசை என்ற பதங்களைப் பற்றிக் கூறி சுவாமி விபுலானந்தர் அடிகள் “யாழ்நூல்" என்ற இசைவடிவ நூலினை ஆக்குவதற்கு காரணமாக இருந்தவர் தமிழ்நாட்டில் வாழ்ந்த ஏபிரகாம்பண்டிதர்அவர்களாகும் தண்டபாணிதேசிகர்அவர்கள் அன்ைன மலைப் பல்கலைக்கழகத்தில் "தாமரை பூத்த தடா” பாடலை பாடுவதற்கு வரவேற்பு இருந்தது. தமிழிசையின் தோற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த வர்கள் தமிழர்களாவர். குலம், மதம், ஜாதி அடிப்படையில் பிரிந்திருந்த தமிழர்கள். வடமொழி, தெலுங்கு கீர்த்தனைகளுக்கு முதலிடம் கொடுத் தனர். “கமலம் பாதகமலம்" என்று ஜேசுதாஸ்பாடும் பாடலைப்பற்றியும் குலமணி அவர்கள் கூறினார். கர்நாடக இசை என்பது தமிழ் இசைதான். தெலுங்குக் கீர்த்தனைகள் பின்னர் சேர்க்கப்பட்டவை. தேவாரம் பாடிய மூலர் வாழ்ந்த காலத்தில் தெலுங்கு இசைப்பாடல்கள் இருக்கவில்லை. ராஜேந்திரசோழனின் ஆட்சியில்தமிழிசைவிழிப்புப்பெற்றது. கம்போடியா வரை தமிழிசையின்செல்வாக்கு பரந்திருந்தது. அங்கு உள்ள கோவிலில் எமது திருவாசகப் பாடல்களை வேறு மொழியில் பாடுகிறார்கள்.
அவற்றைஏபிரகாம்பண்டிதர்விளக்கியுள்ளார். ஏபிரகாம்பண்டிதரின்
 

வழியில் வந்தவர்தான் இசைஞானிஇளையராஜா. செம்மொழிமாநாட்டில் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பதை கேளிர் என்று ஆங்கில இசைக்கு ஏற்பஏ.ஆர்.ரகுமான்விரித்துபாடினார். அதுதவறு. அந்தளவுக்கு தமிழர்கள் தாழ்ந்து போய் விட்டார்கள். செம்மொழி பெருவிழாவில் தமிழிசைக்கு சிறிய இடம்தான் தரப்பட்டது. கர்நாடக இசைதமிழிசையே என்று கருணானந்த சுவாமிகள் அடித்துக் கூறினார். ஏபிரகாம்பண்டிதர் கிருஸ்தவர். ஆனாலும் தமிழிசையில் இந்து சமயப் படைப்பினைப் பற்றியும் ஆய்வுசெய்தார். அவரது புதல்வர்கள், பேரப்பிள்ளைகளும் கூட அவரது பணியினைத்தொடர்ந்து செய்தனர். கொள்ளுப்பேத்திஇப்பொழுது தமிழிச்ை பேராசிரியராக பணிபுரிகின்றார். 1336பக்கங்கள் கொண்ட கருணானந்த சாகரம் இசை நூல் 1971இல் எழுதப்பட்டது. பண், சுருதி என்ற பற்றித் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஏபிரகாம் பண்டிதரின் நூலுக்கு உடவே.சுவாமிநாத ஐயர் முகவுரை எழுதியுள்ளார். இத்தகைய சிறப்பு பெற்றதமிழிசை வாழுமா? என்பது எதிர்கால இசை ஆய்வாளரின் கையில்தான் இருக்கிறது" என்று கூறி நல்லதொரு உரையை நிறைவு செய்தார்.
@. ບລ໋ະສົມຂ້g6mb = 62 05.08.2011 இன்றைய இலக்கியக்களம் நிகழ்வில் துணைத் தலைவி செல்வி சற்சொரூபவதிநாதன் அவர்களின் தலைமையில் வெற்றி வானொலி, தொலைக்காட்சிபணிப்பாளர் R.லோஷன் அவர்கள் "இலத்திரனிவயல் ஊடகங்கள் எதிர்நோக்கும் சவால்கள்" என்ற தலைப்பில் உரை யாற்றினார். தலைமையுரையில் திரு.லோஷன் அவர்கள் பற்றிக் கூறு கையில் "அவர் ஒரு கலை, ஊடக பாரம்பரியத்தில் வந்தவர். இளமை யிலேயே பல ஊடக அனுபவங்களை பெற்றவர்” என்றார். "ஊடகங்களி லும் திருட்டு கெட்டித்தனமாக செய்யப்படுகிறது. ஊடகவியலாளருக்கு உடல், உள ரீதியான ஊறுகள் விளையிக்கப்படுகின்றன. குறை இழைத் தவர்கள் எப்படியோ தப்பிக் கொள்கின்றனர்” என்றார்.
திரு.R.லோஷன் தனதுரையின் போது, தாம் ஊடகத்துறையில் இணைந்தபோது 'கலையொலி என்ற24 மணிநேர வானொலிமுதலில் தனியாரினால் ஆரம்பிக்கப்பட்டு பின்பு"சுவர்ண ஒலி ஆகியது. அதற் கிடையில் சக்தி வானொலி தொடங்கியது. "முதலில் சக்தியில் பணி யாற்றிபின்பு கரியனுக்கு வந்து சிலகாலத்தின் பின்பு வெற்றி வானொலி

Page 3
யில் இணைந்து தற்பொழுது வெற்றி தொலைக்காட்சிப் பணிப்பாளராக விளங்குகிறார் எனக் கூறினார். "ஊடகத்துறை சவால்கள் நிறைந்தது. அரசியல், சினிமா, இணையத்தளம் என்ற வகையில் விரிந்துள்ளது. ஊடகத்தாக்குதல்களுக்கு ஆளாகாத ஊடகவியலாளர்கள் மிகக் குறைவு. 201t இல் இது வரை 61O ஊடகத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இலத்திரனியல் ஊடகத்தாக்குதல்கள் குறைவு. முகம் தெரியாததாக்குதல் களும் உண்டு. தொலைக்காட்சிகளில் கேளிக்கை நிகழ்ச்சிகள் தான் அதிகம். இருந்தும் கூட, உடைப்பு, எரிப்பு என்வற்றுக்கு உள்ளாகியிருக் கின்றன. இதற்கு போட்டித் தன்மையும் காரணமாகவிருக்கலாம்.
இணையத்தளங்களில் தொழில்நுட்ப ரீதியான போட்டிகள்
காணப்படுகின்றன. சர்வதேச ரீதியிலும் போட்டிகள் காணப்படுகின்றன. வானொலி, தொலைக்காட்சி நிலையங்களுக்கு இணையத் தளங்களி லிருந்து கிடைக்கும் செய்திகளினால் பாதிப்பு ஏற்படுகின்றன. இதனால் En Gör News Justin, Breaking News 6TGöru6OT eigš54ę 66óluJúLUTá GörgDGOT. பிராந்திய வானொலி நிலையங்கள் சில அனுமதி பெறப்படாதவை. புத்தளத்தில் 2, வன்னியில் 3, யாழ்ப்பாணத்தில் 1 என்று இயங்கு கின்றன. அடுத்தது மதிப்பீடுகள், தரப்படுத்துதல் என்பனவாகும். மிகக் குறைந்த வாக்காளர் மத்தியில் கணக்கெடுப்பு நடாத்தப்பட்டு முதலிடம் வழங்கப்படுகிறது. Agancy channels மூலம் தான் தரப்படுத்தல் ஏற்படுத் தட்படுகின்றது. இது ஒரு சவாலாகும். ஒலிபரப்பாளராக தெரிவு செய்யப் பட்டவர்களை விடதிறமைமிக்கவர்கள் வெளியில் உள்ளன. சிலர் Under employed ஆக விருப்பர். பின்னர் விலகிவிடுவர். தமிழை இலக்கண உச்சரிப்புடன் பேசுவது கூட ஒரு சிக்கலான விடயமாகவுள்ளது. பிழை யாக எழுதிக் கொடுப்பதை திருத்தாமல் அப்படியே வாசிப்பவர்களும் உள்ளனர். பொது அறிவு மிகக் குறைந்த மட்டத்தில் உள்ளவர்களும் பணிக்கு வருகின்றனர். சில ஊடகங்கள் சினிமாவை, நடிகர்களை மையமாக வைத்து நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்கின்றன. தொலைக் காட்சி தொடர் நாடகங்கள் மூலம் மக்களின் ரசனை மமுங்கடிக்கப்படு கிறது. இதைமாற்றவேண்டும். வெற்றிTVநாடகங்களுக்கு ஈடாக திரைப் படங்களை ஒளிபரப்பு செய்கின்றது. செய்தி வாசிப்பவர்களுக்கு "லகர", "ளகர வேறுப்பாடுகள் தெரிவதில்லை. தமது நிறுவனத்தில் முறையான பயிற்சிகள் Workshopநடாத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளதாகக் கூறினார். தரிையார் நிறுவனங்கள் விளம்பரங்களுக்கு முதலிடம் கொடுப்பதை
 
 

suum
தவிர்க்க முடியாது. செய்திகளில் பொய் சொல்வதை தவிர்த்து. அப்படி யான செய்திகளை விட்டுவிடுவதும் உண்டு. மிகப் பயனுள்ள விடயங் களை பகிர்ந்து கொண்டதிரு.லோஷன் அவர்களை தலைவர் பரிசளித்துப் பாராட்டினார். நல்ல நிகழ்ச்சியில் பங்கு கொண்ட மனநிறைவுடன் நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.
நூலகம் (சிறுவர் பகுதி)
06.08.2:011 "கதை கதையாம் காரணமாம்" என்ற நிகழ்வில் திருமதி ரஜனி சந்திரலிங்கம் கலந்து கொண்டு சிறுவர்களுக்கான கருத்து மிக்க கதை களைக் கூறி மகிழ்வித்தார்.
அறிவோர்ஒன்றுகூடல் - 469 10.0B.2011 இன்றைய அறிவோர் ஒன்றுகூடல் நிகழ்வுக்கு கல்விக்குழுச் செயலாளர் திரு.மா.கணபதிப்பிள்ளை அவர்கள் தலைமை தாங்கினார். "ஆங்கில மொழிக் கல்வியின் நேர் மற்றும் எதிர்வினை” என்ற தலைப்பில் சட்டத்தரணிதிரு.வி.புவிதரன் அவர்கள் உரையாற்றினார். தலைவர் தனது அறிமுக உரையில், பேச்சாளர் புகழ்பூத்த சட்டத்தரணி திரு.சி.வி.விவேகானந்தன் அவர்களின் வழிவந்தவர். அவரது புதல்வர் நல்லதொரு தலைப்பினை தெரிந்தெடுத்துள்ளார். ஒருவர் தமது கருத்தைச் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லாமல் விடுவது ஒரு துரோகமாகும் திரு.S.J.V.செல்வநாயகத்தின் பாசறையில் வந்த திரு.V.N.நவரத்தினம் அவர்கள் 1964ஆம் ஆண்டில் அரசாங்கம்“அடை யாள அட்டை” மகோதாவை விவாதித்த போது, அது "நாய்க்கு சங்கிலி கட்டுவது போன்றது" என்றார். பின் வந்த காலங்களில் நாம் அதை உணர்ந்து கொண்டோம் அவர் ஒரு தீர்க்கதரசி மாதிரிக் கூறினார்.
அண்மையில் கனடாவில் அவர் இறக்கும் முன்பு இதை நினைவு கூர்ந்து எழுதினார். திரு.சி.வி.விவேகானந்தனும் பல தடவைகள் பல கட்டுரைகளை எழுதியிருந்தார். அவரது மகன் ஒரு விரிவுரையாளரும் önl-.
திரு.வி.புவிதரன் தமது உரையின் போது ஒரு கலந்துரையாடலுக்கு களம் அமைத்துக் கொடுத்தார். 1960இற்கு முன்பு ஆங்கில மொழி மூலம் கல்வி கற்பிக்கப்பட்டது. கல்விமட்டுமல்ல ஆங்கிலக் கலாசாரமும் நிலவி வந்தது. அன்றைய தமிழ் விரிவுரையாளர்கள் கைலாசபதி,
Imæ1} | iuHmi:Im
wwunwuam seus numnyuwung
கெயூம்புத் தமிழ்ச் சங்க செய்தி மடல்

Page 4
சியைத்தம்பி போன்றோர் ஆங்கிலத்திலும் புலமை பெற்று தமிழின் பெரு மையை உலகறியச் செய்ய ஆங்கில மொழியை பயன்படுத்தினர். ஆங்கிலத்தை பிரிட்டன் எமது நாட்டிற்கு ஏற்றுமதி செய்தது. விஞ்ஞானம், தொழில்நுட்பம் என்பவற்றிற்கு ஆங்கிலத்தின் பயன்பாடு உணரப் பட்டது. பாடநூல்களை விளங்கிக் கொள்ளுதல் இலகு என்று சொல்லப் பட்டது. பின்பு தமிழ் மொழிமூலக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு. நாடளாவிய ரீதியில் கல்வி மறுமலர்ச்சி ஏற்பட்டது. ஆங்கில மொழி ஒரளவு புறக்கணிக்கப்பட்டது. மீண்டும் ஆங்கிலத்தின் தேவை உணரப் பட்ட போது பிரச்சினை உருவாகியது. வளங்கள் மங்கி புலமையாளர் கள் இல்லாமற் போயினர். இருந்தும் தமிழில் பாடிப்பிப்பதா? ஆங்கிலத் தில் படிப்பிப்பதா? என்ற குழப்பநிலை எமது மக்களிடையே ஏற்பட்டுள்ளது. “சனத்தொகையும் மொழியும்" என நோக்கின், சிங்கள மொழிப்பிரிவின ருக்கு பாதிப்பு இல்லை. தமிழ்மொழிப் பிரிவினருக்கு பாதிப்பு உண்டு. தமிழ்க் கல்வி மூலம் கூடுதலானவர்கள் சித்தி பெற்றும் கூட ஏதோ ஒரு வகையில் பாதிப்பு ஏற்படுத்தப்படுகின்றது. ஆங்கிலக் கல்வி மூலம் இதை நிவர்த்தி செய்யலாமா? என்பதும் கேள்விக் குறி. சில பாடசாலைகளில் ஆங்கில/தமிழ் மொழிமூலப்பிரிவினரிடையே ஏற்றத்தாழ்வுகள் உண்டு. தமிழைப் பேசத் தெரியாது என்று போலியாக பெருமை கொள்ளும் தமிழரும் உள்ளன. இப்படியே போனால் தமிழினம், தமிழ் மொழி என்பன எதிர்காலத்தில் கேள்விக்குறியாகிவிடும் எனக் கூறிதனதுரையை நிறைவு செய்தார்.
இலக்கியக்களம் - 63 12.08.2011 இன்றைய இலக்கியகளம் நிகழ்வுக்கு ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.க.நீலகண்டன் அவர்கள் தலைமை தாங்கினார். "நீதிதவிர் என்ற தலைப்பில் சட்டத்தரணிதிரு.ந.காண்டீபன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். தலைவர், காண்டீபனை அறிமுகப்படுத்தும்போது "இவர் ஒரு கவிஞராவாரர். இவரது கவிதையினை நான் ரசிப்பதுண்டு. இந்து மாமன்ற நிகழ்ச்சிகளிலும் கவி பாடியுள்ளார். இவர் செந்தமிழ் உணர்வாளர். செம்மண் உள்ள பன்னாலை என்ற இடத்தினை பிறப்பிட மாகக் கொண்டவர்” என்றார்.
காண்டீபன் தமது உரையில் தன்னைப் பாதித்த கவிதைகளில் "நீதி தவிர்” என்ற தலைப்பிற்கு ஏற்ப தெரிவு செய்து உங்கள் முன் சமர்ப்பிப்ப
LSLLLLLSSLLLLLL
(06 KAP*Mynwyr கொழும்புத் தமிழ்ச் சங்க செய்தி மடல்)

தாகக் கூறினார். ஈழத்தில் நடந்த போராட்ட வடிவங்களை கவிஞர்களால் மட்டும் தான் வெளிக் கொண்டு வர முடியும். அத்தகைய உணர்ச்சிக் கவிஞர்களை அடையாளம் காண்பதில் மகிழ்வதாகக் கூறினார். "ஆடியும் பிறந்தாச்சு கூடிக் கூழும் குடித்தாச்சு, திரை கடலோடி திரவியம் குவித் தோம் இனி என்ன செய்வோம்?” ஆட்சியில் பங்கு கேட்டால் ஆக்கினை விளைவிக்கிறார்கள் என்கிறார்கள். மாவை வரோதயன் எழுதிய கடவுள் உயிரோடு தான் இருக்கின்றானா?” என்ற கவிதை இது. முருகையன் தமது கவிதையில், கைலாசபதியுடன் இணைந்து அறிஞர் வெல்லுவது திண்மை கத்தியின்றி இரத்தமின்றி ஆரம்பித்த போர் வெல்லுமப்பா என்றார். டாக்டர் E.S.மகேந்திரராஜா அவர்கள் மேன்மை கொள் சைவ நீதி விளங்கட்டுமே என்றார். திரு.பற்குணம் "துயர்நீதிமன்றம்" என்ற தமது கவிதையில் தீர்ப்புகள் குறை மாதச் சிறை. 20 வருட ஆயுட் சிறை என்றார். உணர்ச்சிக் கவி காசி ஆனந்தன் “செருப்புக்களை வெளியே போட்டு உள்ளே போகிறது அழுக்கு” என்று கவி பாடினார். அத்துடன் அவரது விடுதலை வேட்கைப் பாடல்கள் தமிழ் நெஞ்சங்களை நெகிழ வைத்தன என்றார். இவை எல்லாம் எதற்கு வழிவகுத்தன என்பதைச் சிந்திக்க வேண்டும். வன விலங்கு திணைக்கள அதிகாரியான அப்பா வின் வீடு எத்தனை அலங்காரத்தைப் பெற்றிருக்கின்றன என்பதுவும் சிந்திக்கப்பட வேண்டும். தலைவர் தமது குறிப்புரையில் பேச்சாளருக்கு பாராட்டுரை வழங்கி பரிசளித்துக் கெளவித்தார். இரு சட்டத்தரணிகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் சட்டப் பிரச்சினைகலந்துரையாடப்படும் என்று எதிர்பார்த்ததாக வருகை தந்த சிலர் குறிப்பிட்டனர். இலக்கியக்
களத்தை இலக்கியச் சிந்தனைக்கு பயன்படுத்தியதாக திரு.ந.காண்டீபன் குறிப்பிட்டார். தமிழ் வாழ்த்துடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
நூ'60கம் (சிறுவர் பகுதி)
13.)3.2011 "கதை கதையாம் காரணமாம்" என்ற நிகழ்வில் செல்வி பாமினி சுவாமிநாதன் கலந்து கொண்டு சிறுவர்களுக்கான கருத்து மிக்க கதைகளைக் கூறி மகிழ்வித்தார்.
"கதாப்பிரசாங்கம் - கலைப்பயிற்சி ஆரம்பநிகழ்ச்சி” 13.108.2011 நோன்மதி தினத்தன்று தமிழ்ச் சங்கம் புதிய நிகழ்ச்சி ஒன்றினை ஒழுங்கு செய்துள்ளது. கதாப்பிரசங்கம் - கலைப்பயிற்சி - ஆரம்ப
Rigg |
aspera nyuw kahawensgarwa
(கெழகத்
தமிழ்த் சிங்க செய்தி மடல்

Page 5
நிகழ்ச்சி காலை 9.30 மணிக்கு தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.மு.கதிர்காமநாதன் தலைமையில் தொடங்கியது. ஆற்றுகை முறை .ை0யை பயிற்றுவிப்பவராக, கானதமிழ்மணி, சைவப்புலவர் சிவத்திரு எட).எஸ்.ழுநீதயாளன் அவர்கள் கலந்துகொண்டார். இவருடன்இணைந்து சப்ரகமுவ பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் கலாநிதிநாகேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினார். கதாப்பிரசங்கம், கதா காலட்சேபம், பண்ணிசை என்பவற்றின் அவசியம் எமது சமூகத்தில் உணரப்பட்டுள்ளது என்று தலைவர் அவர்கள் தொடக்கவுரையில் குறிப் பிட்டார். இயல், இசை, நாடகம் மூன்றும் ஒன்றிணைந்து வருவது தமிழ் Lெ)ாழியில் மட்டும்தான் என முரீதயாளன் கூறினார். இத்துறையில் டெயர் போனவர்கள் அறிஞர்களாக விருக்க வேண்டும். அந்த வகையில் எLது நாட்டில் அத்தகைய மேன்மையாளர்கள் மிகவும் குறைவு. அவர் களை இளம் சமூதாயத்தின் மத்தியில் நாம் அடையாளம் கண்டு உரு வாக்குதல் வேண்டும். தமிழ் மொழியினை சைவத்திலிருந்து பிரித்து வி. முடியாது. மற்றைய மதங்களையும் மதித்து ஏற்றுக் கொண்டது சைவசமயம் மட்டும்தான் என்பதை முதலில் நாம் உணரவேண்டும்.
கலாநிதிநாகேஸ்வரன் தமதுரையின்போது திருமுருக கிருபானந்த வாரியாரின் கதா காலச்சேபத்தினைப் பற்றி எமக்கு நினைவுட்டி சில பா.ல்களைப் பாடினார். முரீதயாளன் ஏனைய கலைஞர்களுடனும் சேர்ந்து 45 நிமிடங்களுக்கு ஒரு கதா காலட்சேபத்தினை ஆற்றுப்படுத் தினார். இளைய சமூகத்தினருக்காக ஏற்படுத்தப்பட்ட இந்நிகழ்ச்சி போது மr{ன மாணவர்களின் வரவினைப் பெற்றிருக்கவில்லை. எதிர்காலத்தில் அந்த குறையினை நீக்குவதற்கு வழிவகை செய்யப்படும் என்று தலைவர் நன்றியுரையின் போது கூறினார். இருந்தபோதும் பெருமளவு சாகீத ஆசிரியர்களும், ஊடக சமூகத்தினரும் இந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றிச் சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நண்ைபகல் 12 மணிக்கு நிறவெய்தியது. ஒவ்வொரு நோன்மதி தினத்திலும் இத்தகைய பயனுள்ள நிகழ்ச்சியினை தமிழ்ச்சங்கம் ஒழுங்கு செய்யும் என்று தலைவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
அற்றைத்திங்கள் - திரு.காசுபதி நடராசா
13.08.2011 இன்றைய அற்றைத்திங்கள் நிகழ்வு தலைவர் திரு.மு.கதிர்காம நாதன் தலைமையில் நடைபெற்றது. தலைவர் தனது அறிமுகவுரையில்
(0.3 கொழும்புத் தமிழ்ச் சங்க செய்தி மடல்)

Tipu
st who narrowruns
மட்டக்களப்பு “ஆரையம்பதியைச் சேர்ந்த திரு.காசுபதிநடராசா அவர்கள் ஓய்வு பெற்ற உள்ளூராட்சி மேலதிக ஆணையாளர், சிறு சஞ்சிகைகள் உட்பட 50இற்கு மேற்பட்ட கட்டுரைகள் வரைந்துள்ளார் ஒரு சமூகவி யலாளர்” என்று கூறினார். திரு.காசுபதிநடராசா அவர்களின் உரை தொடங்குவதற்கு முன்பதாக தமிழ்ச் சங்க வெளியீடான சங்கத் தமிழ் தலைவர்திரு.மு.கதிர்காமநாதன் அவர்களினால் வெளியிட்டுவைக்கப் பட்டது. நூலின் முதல் பிரதியை தமிழ் சங்க ஆட்சிக் குழு உறுப்பினர் திரு.கதிரவேலு மகாதேவா அவர்கள் துணைத்தலைவர் பேராசிரியர் சபா ஜெயராசா அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார். தலைவர் சிறப்புப் பிரதியை திரு.காசுபதிநடராசா அவர்களுக்கு வழங்கிக் கெளர வித்தார். சபையில் உள்ளவர்களுக்கும் பிரதிகள் வழங்கப்பட்டன.
திரு.காசுபதி நடராசா அவர்கள் தமது உரையில் தாம் ஏற்கனவே ஒரு நூல் வெளியீட்டுக்காக சங்கரப்பிள்ளை மண்டபத்துக்கு வந்திருந் தமையை நினைவுகூர்ந்து தமிழ்ச் சங்கத்தில் உரையாற்றுவதில் பெருமை கொள்வதாக கூறினார். தாம் ஆயுட்கால உறுப்பினராக சங்கத் துடன் இணைந்துள்ளதாகவும் கூறினார். பேராசிரியர்கள் சபா ஜெயராசா, சந்திரசேகரன் மற்றும் பத்மா சோமகாந்தனுடன் தனக்குள்ள தொடர்பு கள் பற்றிச் சொன்னார். (1941இல் பிறந்து 1969இல் அரச சேவையில் இணைந்து 2001இல் ஓய்வுபெற்றதாகவும் கூறினார்) தமது வாழ்க்கை யில் சந்தித்த பேராசிரியர் பத்மநாதன், மெளனகுரு ஆகியோர் மேன்மை கண்டுள்ளதைப் பாராட்டி, தாம் திருமதி சாந்தி சச்சிதானந்தன் அவர் களின் விழுதுகள் என்ற அமைப்பில் இணைந்துள்ளதாக கூறினார். ஒரு வெடி விபத்தில் தாமும் மனைவியும் உயிர்தப்பிய விந்தை பற்றியும் தனது நண்பர் குழாத்தில் அனைவரும் பல்வேறு சம்பவங்களில் உயிர் இழந்து விட்டதாகவும். தான் மட்டும்தான் எஞ்சியுள்ளதாகவும் கூறினார். அன்றைய இளைஞர்கள் தமிழ்உணர்வு, தேசியப் பற்றுமிக்கவர்களாக வும், செயல் வீரர்களகவும் விளங்கினர். சுவாமி விபுலானந்தர் மன்றம் அமைத்து அவருக்கு நூற்றாண்டு விழா நடாத்த எடுத்துக் கொண்ட முயற்சி பற்றியும், நண்பர் ஒருவர் 18 அரை வடிவ விபுலானந்தருக்கு சிலைகளை உருவாக்கி அன்பளிப்புச் செய்தார் என்றும், அவை இன்னும் ஆங்காங்கே காணப்படுவதாகவும் சொன்னார். அவரது நினைவுதினம் மார்ச் 3ம் திகதி என்றார். மட்டக்களப்பு அபிவிருத்தி சபை உருவாக்கப் பட்டது. கே.எஸ்.சிவகுமாரன் அவர்களும் இணைந்திருந்தார். 2001இல்
பூெம்புத்தமிழ்ச் சங்க செய்தி மடல் 09)

Page 6
எயிட்ஸ் விழிப்புணர்வுக் குழுவிலும் பணியாற்றியுள்ளதாக கூறினார். சாதாரண அலுவலராக இணைந்த போதும் பட்டதாரிகளுக்கான பதவி உயர்வு தமக்கும் வழங்கப்பட்டமை பற்றிக் கூறினார். எளிமையும், பெருமையற்ற பண்புகளும் கொண்ட அவர் தமது உண்மைப் பெயர் காசிபதி நடராசா என்றும் கூறி உரையை நிறைவு செய்தார்.
அறிவோர்ஒனிறுகடல் - 470 17.03.2011 இன்றைய அறிவோர் ஒன்றுகூடல் தலைவர் திரு.மு.கதிர்காம
நாதன் அவர்களில் தலைமையில் நடைபெற்றது. "இலங்கை அரசிய 6ை:0மப்பும் அடிப்படை மனித உரிமைகளும்” என்ற தலைப்பில் சட்டத்துறை மூத்த விரிவுரையாளர் திரு.அ.சர்வேஸ்வரன் உரையாற் றினார். தலைவர் தமது உரையில் அரசியலமைப்பின் முகியத்துவம் பற்றியும், அடிப்படை மனித உரிமை மீறல்களால் ஏற்படும் பாதிப்புக்கள் பற்றியும் கூறினார். பொதுமக்கள் இந்த இரண்டு விடயங்களிலும் தெளி வான அறிவினைப் பெற்றிருக்க வேண்டும். திரு.அ.சர்வேஸ்வரன் கொழும்பு பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர், சட்ட முதுமாணிப் பட்டதாரி, யாழ்.பல்கலைக்கழக வருகைதரும் விரிவுரையாளர். ஒரு சட்டத்தரணி மட்டுமல்ல சட்ட ஆய்வாளரும் கூட என்றார்.
ஐ.டரைஞர் தனதுரையின் போது சட்டம் சம்பந்தமான ஆய்வில் தமிழ்ச் சங்கமும் அக்கறை செலுத்த வேண்டும். சட்டம் ஆங்கிலம், இலத்தீன்மொழிகளில் தோற்றம் பெற்றாலும் தற்பொழுதுதமிழ்நாட்டினை வி. எமது நாட்டில் தமிழ்மொழியில் சட்ட ஆய்வுகள் கூடுதலாக உள்ளன. அனுமதிப்பத்திரம், உரிமம் Permit Licence என்ற வகையில் தமிழ் சொற் கள் அபிவிருத்தியடைந்துள்ளன. அடிப்படை உரிமைகள் என்பது நாட்டின் சாதாரண கருழ்நிலையிலும், போர்க்காலகழ்நிலையிலும் வெவ் வேறு வகையில் வியாக்கியானம் பெறுகின்றன. மனித உரிமைகளும் அன்வாறே. மனிதாபிமானச் சட்டங்கள், மனித உரிமைச் சட்டங்கள் மனிதாபிமான சட்டங்கள் என்ற இருவகை உள்ளன. இந்து மதத்தில் கடவுளர்கள், ஆயுதங்களுடன் காணப்படுவர். மற்ற சமயங்களில் அவைாறு இல்லை. எனவே தர்ம யுத்தம் என்பது இந்துசமயத்தில் 9-6xor(6. Humanitarion Activities 676örgDu45555l606oTuquib éol6oupüu6)j 856.5L) 2-600r(6. The war is not there but the conflict is still there 616org சிலர் கூறுகின்றனர். warமுடிவுற்றதும் Confict முடிவடைந்து விட்டது
(10
கொழும்புத் தமிழ்ச் சங்க செய்தி மடல்)

என்று கூறுபவரும் நம்நாட்டில் உள்ளனர். இராமயணத்தில் Just War என்பது, இன்றுபோய் நாளை வா என்று ராமன் ராவணனை நோக்கிச் சொல்வதில் புரிகிறது. நீதிமன்றங்களில் விசித்திரமான தீர்ப்புகள் உள்ளன. அவை பற்றியும் சர்வேஸ்வரன் கூறினார். டெல்லியில் ஒரு பால் உறவை நியாயப்படுத்தி வழங்கிய மேல் நீதிமன்ற தீர்ப்பினை இயற்கைக்கு மாறானது என்று கூறி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மனித 2-floLDE6ft 1.Olb, 11b, 12Lb. 13 b, 14-Lib geab6floo 6).j60d85uG55 பட்டுள்ள மத சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் என்பவை அடங்கும். இந்து மதத்தவர் மனைவி இருக்கும்போது மறு மணம்செய்தால்அது முதல்மனைவியின் அடிப்படைச்சுதந்திர மீறலாகும். இஸ்லாமியர்கள் விதவை, அனாதைப் பெண்களைக் காப்பாற்றுவதற் காக பலதார மனத்தினை வலியுறுத்தினர். அதற்காக மதம் மாறுபவர் கள் ஏற்கப்படுதில்லை. பாடசாலை அனுமதி மறுப்பு, பதவி உயர்வு மறுப்பு, பல்கலைக்கழக பிரவேச அனுமதி மறுப்பு என்பவை சில. நீதியரசர் Mark Fernando அவர்கள் பல்கலைக்கழக அனுமதி மறுப்பு தொடர்பாக சரியாக தீர்ப்பினை வழங்கியிருந்தார். இலங்கை - இந்தியா ஒப்பந்தத்தில் 13வது அரசியல் அமைப்புத் திருத்தம இரு மாகாணங் களின் இணைப்பினை பற்றி கூறுகின்றது. ஜனாதிபதி நினைத்தால் அதை மீளவும் செயற்படுத்த முடியும். ஆனால் சிலர் அச்சட்டத்தை வலு விழக்கச் செய்யவும், அதை நீக்கவும் முயல்கின்றனர். கூறப்பட்ட கருத் துக்களை ஏற்றுக் கொண்டு தலைவர்கள் சட்டத்தைநடைமுறைப்படுத்த முன்வரவேண்டும் என்றார். நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.
66 ເຮົudaຮ6mb - 64 19.08.2011 இன்றைய இலக்கியக்களம் நிகழ்ச்சிக்கு ஆட்சிக்குழு உறுப்பினர்
Infa" in uses hands in
சைவப்புலவர் செல்லத்துரை அவர்கள் தலைமை வகித்தார். பழம்பெரும் எழுத்தாளர் திரு.நா.பஞ்சாட்சரம் அவர்கள் "இலக்கியத்தில் மனிதனும் யதார்த்தமும்” என்ற தலைப்பில் உரையாற்றினார். இவரை அறிமுகப் படுத்திய தலைவர், இவர் 1968/69 காலப்பகுதியில் சுதந்திரன் பத்திரி கையில் கவிதைகள், சிறுகதைகள் எழுதினார். 1975/76இல் தமிழ் எழுத்தாளர் பேரவையின் செயற்குழு உறுப்பினராக இருந்தவர். 1968/69 இல் கல்விக் கழகத்தில் பங்கு பற்றியவர் என்று கூறிபேச்சாளரை உரை யாற்றுமாறு கேட்டுக்கொண்டார்.
கெழும்புத்தமிழ்ச் க்க செய்தி மடல் 1ן (

Page 7
இலக்கியச் செயற்பாடுகளில் இருந்து சில காலமாக ஒதுங்கியிருந்த போதிலும், இலக்கியக்கள நிகழ்ச்சியில் செயலாளரின் வேண்டுகோளுக் கிEணங்க சில கருத்துக்களை மாத்திரம் கூற விழைவதாக கூறினார். அண்மைய இலக்கிய நடைமுறைகள் பற்றிவிமர்சனக் கண்ணோட்டத் தில் கூறுவதை விட சில காலங்களுக்கு முன்பு தமிழகத்திலும், இலங் கையிலும் ஏற்பட்ட இலக்கிய மறுமலர்ச்சி பற்றியும் அந்த மாற்றங்கள் மக்கள் மத்தியில் சென்றடைந்தனவா? என்பது தான் எனது சிந்தனை யாகவுள்ளது என்று கூறிய திரு.பஞ்சாட்சரம் அவர்கள், திராவிட பாரம் பரியம் இலக்கிய உலகில் இடம் பிடித்த பின்னர் சங்ககால இலக்கியங் களைவிட சமகால இலக்கியங்கள் முதலிடம் பெற்றன. அந்த வகையில் மனிதாபிமானம், குடும்ப ரீதியான மனிதத்தன்மை என்பவை இலக்கி யங்களில் இடம்பெறத்தொடங்கின. இலங்கையில் மார்க்கசியம் மற்றும் சீர்திருத்தக் கருத்துக்கள் இடம் பெறும் வகையில் கதை, கட்டுரைகள், கவிதைகள் எழுதப்பட்டன. பாரதி காலத்திலேயே சாதியம், சமவுடமை பற்றிய கருத்துக்கள் இலக்கியங்களில் இடம்பெற்றபோதும், 1960களில் மறுமலர்ச்சி ஏற்படத்தொடங்கியது. டானியல், ஜீவா போன்ற ஈழத்து எழுத்தாளர்கள் பெருமளவில் உருவாகினர். ஆனால் எத்தனை கருத் துக்களைக் கூறினாலும் அவை எல்லாம் மக்கள் மனதில் எந்தளவுக்கு இடம் பெற்றன என்றால் அது குறைவாகவே இருந்தது. அரசியலுக்காக வும் வேறு காரணங்களுக்காகவும் சில ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறத் தவறவில்லை. அவை எல்லாம் நாளடைவில் மறைந்து போயின. தமிழகத்தில் கம்ப ராமாயணத்தை எதிர்த்து அறிஞர்களே பிரசாரம் செய்தனர். ஆனால் மக்கள் மனதில் இருந்த அந்த இலக்கியங்களை அகற்ற முடியவில்லை என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
நூலகம் (சிறுவர் பகுதி) 20.08.2011 "கதை கதையாம் காரணமாம்” என்ற நிகழ்வில் செல்வி
இந்துஜா இரட்ணானந்தன் கலந்து கொண்டு சிறுவர்களுக்கான கருத்து மிக்க கதைகளைக் கூறி மகிழ்வித்தார்.
அறிவோர்ஒன்று கூடல் - 471
24.08.2011 அறிவோர்ஒன்று கூடல் நிகழ்வுக்கு இலக்கியக்குழுச் செயலாளர்
திரு.எஸ்.எழில்வேந்தன் அவர்கள் தலைமை வகித்தார். "மெல்லிசையும்
C2.
கொழும்புத் தமிழ்ச் சங்க செய்தி மடல்)

நானும்" என்னும் தலைப்பில் ஊடகவியலாளர் திரு.அருணா செல்லத்துரை அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அவரை வரவேற்று உரையாற்றிய தலைவர், திரு.அருணா செல்லத்துரை அறி முகம் தேவைப்பட்டவரல்ல இருந்தாலும் சம்பிரதாயப்படி கூறினால் அவர் ஒரு அறிவிப்பாளரும்நிகழ்ச்சித்தயாரிப்பாளரும் கூட. 1977ஆம் ஆண்டில் மெல்லிசை கலைஞர்களைத் தெரிவு செய்வதில் ஆரம்ப கர்த்தவாக விளங்கி 1975/76 இல் இளைஞர் மறைத்தை நாடத்திய போது தாம் அதில் பங்கு பற்றியதாகவும் கூறினார். அரங்கேற்றம் என்ற நிகழ்வில் ஈழத்துப் பாடல்களை அறிமுகம் செய்து வைத்தார். நான் எழுதிய பாடலுக்கு அந்த நாட்களிலேயே 200/= ரூபா சன்மானம் பெற்றுத் தந்தவர் செல்லத்துரை அவர்கள்.
உரைஞர் உரையாற்றிய போது தமக்கும் மெல்லிசைக்கும் உள்ள தொடர்பு பற்றிக் கூறினார். தன்னிடம் மெல்லிசை பயிற்சி பெற்ற திரு.மா.சத்தியமூர்த்தி அவர்கள் லண்டனில் இருந்து இலங்கை வந்து தமது CD வெளியீட்டிற்காக தமது ஆசியைக் கேட்டு பெற்றுக்கொண்டமை தமது பணிக்குக் கிடைத்த அங்கீகாரமாக கொள்கிறேன் என்று கூறினார். அதை அறிந்த ஒருசிங்கள் நண்பர் கூறும்போது "சொன்னதைக் கிளி சொல்லும், சொல்லாததை கிளி சொல்லாது” என்று அனடமொழி யில் கூறினார். எமது ஈழத்துக் கலைஞர்களின் திறமைகள் பல்வேறு காரணங்களுக்காக மறைக்கப்பட்டு வந்தன வர்த்தக தேசிய ஒலிபரப்பு சேவைகளில் பணிபுரிபவர்கள் தங்களுக்கிடையேயான போட்டி மனப் பான்மையினால் கலைஞர்களைப் பாதிப்படைய செய்கின்றனர். ஈழத்து தமிழ்க் கலைஞர்களுக்காக உழைத்த ஒரு நிறுவனமாக தேசிய சேவை விளங்கியது. இந்தியப் பாடல்களையே அதிகம் ஒலிபரப்பிய சிங்கள சேவை பின்பு 1/2 மணி நேரம் தவிர மற்றைய நேரங்களில் தனிச் சிங்களப் பாடல்களையே ஒலிபரப்பின. அந்த வகை முன்னேற்றம் எம் மவர் மத்தியில் காணப்படவில்லை. தேசிய சேவையில் கூட ஈழத்து மெல்லிசைப் பாடல்கள் இடம்பெறுவது குறைவு. வர்த்தக சேவையில் தென்னிந்தியப் பாடல்களை ஒலிபரப்புவதில் போட்டி, தனியர் வானொலி, தொலைக்காட்சிகளும் அதையே செய்கின்றன. தாம் அறிமுகப்படுத்திய முல்லைச் சகோதரிகளின் "பாடுபடு நண்பா பரிசு தரும் பூமி” போன்ற பாடலை நினைவுட்டினார். மீனா மகாதேவன், கோகிலா, சுபத்திரா, ஜெயதேவி விக்னேஸ்வரன், S.T.R.கணபதிப்பிள்ளை, T.கிருஷ்ணன்
LLLLLL LL maxis inunquesme II
( கெயூம்புத் தமிழ்ச் சங்க செய்தி மடல் 1s }

Page 8
போன்ற மெல்லிசைப் பாடகர்களையும் கவிஞர் முத்தழகு, M.A.குலசீல நாதன், S.K.பரராஜசிங்கம் போன்ற மெல்லிசை/சினிமா கலைஞர்களை யும் நினைவு கூர்ந்தார். ரொக்சாமி, R.முத்துச்சாமி, மோகன்ராஜ், M செல்வராஜா போன்ற இசையமைப்பாளர்களும் A.K.கருணாகரன்
போன்ற இசை வல்லுநர்களும் மெல்லிசைக்கு ஆற்றிய தொண்டு பற்றி சுவைபடக் கூறினார். ஈழத்துப்பாடல்கள் என்ற நிகழ்ச்சியை அறிவிப் பாEார் விவியன் நமசிவாயம் தொடக்கிவைத்தார். தான் ஒலித் தென்றல் எ6:ற ஒலிப் பேழை இரண்டினையும் ஒரு நூலையும் வெளியிட்டதாக வும் தொலைக்காட்சி சேவையிலும் பணியாற்றி அங்கும் பல பணிகளில் பாங்களிப்புச் செய்துள்ளதாகவும் கூறினார். "உதயதரிசனம்” என்ற நிகழ்ச்சியும், M.S.செல்வராஜாவுடன் இணைந்து 55 பாடல்களைக் கொண்ட ஒலிப்பேழை வெளியிட்டதும். தமது சாதனை என்றார். இன்று சகலதும் மாறிவிட்டது. எமது பணியை மீளவும் தொடங்க வேண்டிய
காலம் வந்துள்ளதெனக் கூறி சிறப்பான உரையை நிறைவுசெய்தார்.
36Odisasuascrub - 64
26.08.2011 இன்றைய இலக்கியக்களம் நிகழ்வுக்கு ஆட்சிக்குழு உறுப்பினர்
திரு.க.மகாதேவா அவர்கள் தலைமை தாங்கினார். "விவேக சிந்தாமணி ஒரு பார்வை” என்னும் தலைப்பில் சைவமங்யைர் வித்தியாலயத்தில் கற்பிக்கும் அரசியல் விஞ்ஞான ஆசிரியை திருமதி வளர்மதி சுமாதரன் அவர்கள் உரையாற்றுவார் எனக் கூறிய திரு.க.மகாதேவா அவர்கள் தளதுரையில், பேச்சாளர் தனது பட்டப் படிப்புக்கு அப்பாற்பட்ட இலக்கியம் பற்றி இங்கு உரையாற்றவுள்ளார். 135 பாடல்களைக் கொண்டு தொகுக் கட்பட்ட விவேக சிந்தாமணியிலிருந்து ஒருபாடலை உங்களுக்குக் கூறு வதன்மூலம் அதன் சிறப்பை நீங்கள் உணரலாம். “ஆபத்துக்கு குதவாப் பிலtளை எனத்தொடங்கும் பாடலில் அந்த வேளைக்கு உதவாதபிள்ளை, அன்னம், தண்ணிர். பெண்டிர், வேந்தர், சீடன், தீர்த்தம் ஆகிய ஏழாலும் எதுவித பயனுமில்லை" என்ற செய்தியைக் கூறியதோடு பேச்சாளரைப் டே அழைத்தார்.
திருமதி சுமாதரன் உரையாற்றும் போது "எனது குடும்பம் ஒரு
எளிமையான குடும்பம். எனது அப்பா ஆசிரியர், அம்மா பாலபண்டிதர், அவர்கள் சிறுவயதிலிருந்து எனக்கு ஊட்டிய கல்வியின் பயனால் தயழும் சைவமும் எனது விருப்பமான பாடங்களாக இருந்தன.
{1} ..." ". கொழும்புத் தமிழ்ச் சங்க செய்தி மடல்)

"புலவர்கள் சபையில் கூடிப் புன்கவியாளர் சார்ந்தால் நலமென்றே சொல்வதல்லால் நவில்வரோ பெரியோர் குற்றம்" இப்பாடல் வரிகளை எனது அவையடக்கமாகக் கூறிக் கொள்கிறேன். நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பார்கள். ஒரு குடும்பத்தில் அன்பு, பண்பு, அறிவுப் பரிவர்த்தனை இருக்க வேண்டும். இன்றைய அவசர உலகத்தில் இவை அருகி வருகின்றன. நல்லாரைக் காண்பதுவும் நன்றே. அறிவியல் வளர்ச்சி எம்மை வழிதவறிச் செல்லும் வகையில் பூதாகாரமாகக் காட்சியளிக்கிறது."
இவ்வாறு ஒரு அறிமுகவுரையைத் தொடங்கி "இந்தியா சென்ற போது விவேக சிந்தாமணியை வாங்கி அதைப் படித்ததால் அதிலிருந்து சில நல்ல கருத்துகளைக் கூறவிழைகிறேன். இந்நூல் எளியநடையில் எழுதப்பட்ட ஒரு சிறய தொகுப்பு நூல். மக்கள் விரும்பிப் படிக்கக் கூடிய ஓர் அறிவுநூல், ஒரு நீதிநூல். துன்பம் வந்தால் தொடர்ந்து வரும் கல்லா மகள் குடும்பத்துக்கு இடும்பை போன்றநல்ல கருத்துக்களைக்கொண்டது. சிந்திப்பதற்கு சிந்திப்பன தருவது.
சிந்தாமணி என்ற பெயரை முதலில் தமிழுலகுக்குத் தந்த சீவக சிந்தாமணி. தேவர்-அசுரர் பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்டது தான் சிந்தாமணி எனக் கூறப்படுகிறது. விவேகசிந்தாமணி நாயக்கர் காலத்தில் தொகுக்கப்பட்டதாக அறியப்படுகிறது. தொகுத்தவர் யார் என்பது தெரியவில்லை. சிந்தாமணி உள்ளவர்கள் எதை வரும்பினாலும் கிடைக்கும் என்பது ஒரு ஐதீகம். இந்நூல் சிவப்பிரகாசர் காலத்துக்குப் பின்னரும் தனிப் பாடல்கள் தோன்றுவதற்கு முன்னரும் தொகுக்கப்பட்டிருக்கலாம்.
சீவாகசிந்தாமணி, அபிதான சிந்தாமணி, மருத்துவ சிந்தாமணி, சோதிட சிந்தாமணி எனப் பல நூல்களுண்டு. விவேக சிந்தாமணியின் சிறப்புக் கருதி இதை வேறுபடுத்திக் காட்டவே விவேக சிந்தாமணி எனப் பெயரிடப்பட்டதாகக் கலைக்களஞ்சியம் கூறுகின்றது. ஏழு பிள்ளை நல்ல தங்காள்கதை மூலம் இது சிறப்புப் பெற்றதாகக் கூறப்படுகிறது. “அல்லல் போம் வல்வினைபோம் என்ற விநாயகர் துதியுடன் ஆரம்பித்து பல பழமொழிகளையும், விடுகதைகளையும் வடமொழிப் பாடல்களையும், சிற்றின்பம் பற்றிய செய்திகளையும் கொண்ட ஒரு சிறந்தநூல். தொகுத் தவர் ஒரு இந்துவாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
யாத்திரை செல்லும் போது எடுத்துச் செல்லவேண்டிய பொருட்கள்
LLLLLL YLLLLLLSSSSSLLLL0LSSSSSS Kourwasgneae sw
கெழும்புத் தமிழ்ச் சங்க செய்தி மடல் 115)

Page 9
பற்றிக் கூறும போது தண்டுலம், மிளகுதூள். புளியுப்பு எனத் தொடங்கும் Rc5 பாடல் வருகிறது. இதை அடிப்படையாக வைத்தே பாரதிதாசன் “சீப்புக் கண்ணாடி" எனத் தொடங்கும் ஒரு பாடலைப் பாடியுள்ளார். கம்பர் பாடடிய தனிப்பாடல்களும் இந்நூலிலுண்டு. கிட்டத்தட்ட 50 நீதிப் பாடல்கள் இந்நூலிலுண்டு. நீதியை நீதியாகத் தேடுவதோடு நீதியாயச் செலவுசெய்ய வேண்டும். இந்நூல் நாயக்கர் காலத்தில் தோன்றிய ஒரு சிறந்த நூலாகும். "மரம் பழுத்தால் வெளவால்", "அற்ற குளத்தில் அனு நீர்ப்பறவைபோல்”, “புத்திமான், பலவான்", "வேலியே பயிரை மேய்ந்தாற் போல்” போன்ற பல பழமொழிகளுண்டு. சேலை கட்டிய மாதரை நம்பக் கூடாது. பெண்டுகள் சேர்நதிடில் பெரிய சண்டை. இவ்வாறு பெண் களைக் குறைத்துப்பாடியவையும் இந்நூலில் உண்டு. நாயக்கர் காலத்தி ளேயே மூக்குத்தி அறிமுகமானதாக கருதப்படுகிறது. அதுபற்றிய பாடலும் <0 r(6.
ஓர் ஆட்சியாளன் சிங்கம் போல் வீரமும் நரிபோல் தந்திரமும் கொண்டவனாக இருந்தல் வேண்டும் எனக் கூறப்படுகிறது. வடமொழி, தெலுங்குப் பாடல்கள் இந்நூலிலுண்டு. நீக்கப்படவேண்டிய பாடல்களு முEண்டு. சில குறைகள் இருந்தாலும் நாயக்கர் காலத் தமிழ் இலக்கியத் துக்குக் கிடைத்த இன்பப் பரிசு இதுவாகும். இவ்வாறு பல அரிய கருத்துக் களைக் கூறி பாடல்களையும் வாசித்துக் காட்டி நல்லதொரு உரையை நிறைவு செய்தார்.
grooasb (a giguri U(355)
27.03.2011 "கதை கதையாம் காரணமாம்” என்ற நிகழ்வில் செல்வி சிவரூபி சதாசிவம் கலந்து கொண்டு சிறுவர்களுக்கான கருத்து மிக்க கதை களைக் கூறி மகிழ்வித்தார்.
ஆரோக்கிய வாழ்வுக்கான கலந்துரையாடல்
31.07.2011 வழமையாக மாத இறுதி ஞாயிற்றுக்கிழமை காலையில் நடை பெறும் நிகழ்வை சங்கத் தலைவர் திரு.மு.கதிர்காமநாதன் தொடக்கி வைத்தார். திரு.கா.வைத்திஸ்வரன் அவர்கள் நிகழ்ச்சி இணைப் பா8ாராக செயற்பாட்டார். “உடற்பருமனைத் தவிர்ப்போம்” என்ற பொருளில் அன்றைய ஆரோக்கிய வாழ்வுக்கான கலந்துரையாடல் நடைபெற்றது. வயதானவர்களில் 30% மேலானவர்கள் உடற்பருமனாக
(16 | ------
 

இருக்கிறார்கள்? காரணியாது?, நெஞ்சை இறுக்குதல், மூச்சுவிடக் கஷ்டம், மாரடைப்பு, அஞ்ஜைனாடுவலி). இவற்றுக்கும் உணவுப் பழக் கத்திற்கும் உண்டான தொடர்புகள் யாவை?, தாவர உணவின் சிறப்பு யாது? போன்ற கேள்விகளுக்கு வைத்தியகலாநிதி சி.அனுஷ்யந்தன் மகிஷம் சிறப்பான முறையில் விளக்கமாக பதில் அளித்தார், அதிஇரத்த அமுக்கம், நீரிழிவு, இருதய வியாதி, மூட்டுவாதம் முதலானவற்றுக்கும் எமது உணவுப் பழக்கவழக்கத்துக்குமான தொடர்பு யாது?. உணவு உடலில் படிமங்களாக இரத்தக் குழாய்களில் படிவதற்கான காரணி uLITg5? LJipu u uppu-LDn? &ềuğgöäs SpMTLiu Pup6ODLDuuma5 é960DLUL- pipu DIT?, ஆரோக்கியமாக உடலைப் பாதுகாக்க மூட்டுவலி, கைகால் உளைவு, கால் எரிவு, எனும்புகள் தேய்வடைதல், யாது செய்யலாம்? போன்ற கேள்விக்கு வைத்தியகலாநிதி முரளிதரன் வல்லிபுரநாதன் அவர்கள் மிகவும் பயனுள்ள முறையில் விளக்கமாகப் பதில் அளித்தார். அவரைத் தொடர்ந்து நடுத்தரவயதை அடையும் முன்பே முழங்கால் மடிக்க முடி யாது. மேல் மூச்சு வாங்குதல், முழங்கால் குத்துளைவு ஏற்படல் முதலானவைகள் ஏற்படக் காரணிகள் யாவை?, உடல் உழைப்பு/ அப்பியாசம் செய்வதன் அவசியம் யாது? எமது எடையைச் சீராக்க யாது செய்ய வேண்டும்?, அவ்வாறு தேய்வடைதலை எப்படித் தவிர்க் கலாம்?. சரிவிகித உணவுப் பழக்க வழக்கத்தை எப்படி ஏற்படுத்தலாம்? போன்ற கேள்விகளுக்கு வைத்தியகலாநிதி திருமதி இ.சிவானந்தி அவர்கள் நல்லதொரு பயனுள்ள பதிலைத்தந்தார். அவரைத் தொடர்ந்து மன அமைதியடையா நிலையில் கூடுதலாக உண்ணத் தூண்டுமா?, ஆழமான சுவாசப் பயிற்சியின் அவசியம் யாது? போன்ற கேள்விக்கு திரு.பா.இராசேந்திரா பயனுள்ள பதில்களைத் தந்தார். மண்டபம் நிறைந்த பார்வையாளர் மத்தியில் ஒரு பயன்தரத்தக்க கருத்தரங்காக இது அமைந்து மக்களின் வரவேற்பைப் பெற்றது.
அறிவோர்ஒளிறுகூடல் - 472
31.03.2011 இன்றைய அறிவோர் ஒன்று கூடலில் "ஒழுக்காற்று பரீட்சணை
களும் பின் நடவடிக்கையும்" என்னும் தலைப்பில் இளைப்பாறிய இலங்கை வாங்கி சிரேஷ்டமுகாமையாளர் திரு.மு.சுகுமரன் அவர்கள் உரையாற்றினார். உறுப்பாண்மைச் செயலாளர் திரு.ப.க.மகாதேவா இந்நிகழ்வுக்குத் தலைமை தாங்கி பேச்சாளர் பற்றிய ஒரு சிறிய அறி
{ଲିଖ ?!! Sči i:

Page 10
முகத்தைக் கூறினார். அத்துடன் பேசப்போகும் பொருளில் தலைப்பில் உள்ள மயக்கத்தையும் தெளிவுபடுத்தி பேச்சாளரை உரையாற்றுமாறு அழைத்தார்.
திரு.சுகுமரன் தனது உரையின் போது பரீட்சணை என்ற பதம் அதிகளவுபாவனையில் இல்லாதபடியால் பலரும் இதுபற்றி அறிந்திருக்க முடியாது என்றார். தொடர்ந்து பேசும்போது உலகின் பல நாடுகளிலும் நிதி சார்ந்த சட்ட திட்டங்கள் சரியாக அறிமுகப்படுத்தப்படவில்லை. வளர்ந்து வரும் இலங்கையில் பலர் தெரிந்தும் தெரியாதது போல் இருக் கின்றனர். தலைவர் கூறியதுபோலல்லாமல் வங்கி தவிர்ந்த பிற இடங் களிலும் நான் உதவி செய்துள்ளேன். தொழில் சார் தலைமையுடைய வர்கள் இருந்தபோதும் அரசதலையீடு காரணமாக சட்டதிட்டங்களுக்குப் புறம்பாக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
கைதவறியபிழைகள், பாரிய பிழைகள்என்பன இடம்பெற்றிருக்கலாம் பிழைவிட்டால் தொழிலாளர்களை கடமையிலிருந்து நீக்க வேண்டு மென்ற கொள்கையே கடைப்பிடிக்கப்படுகின்றது. தொழில் நீதிமன்றங் களில் பல விசாரணைகள் பின்தள்ளி வைக்கப்படுவதால் பல பின் விளைவுகள் ஏற்படுகின்றன. தீர்ப்பு தொழில் தருநருக்குச் சார்பாக இல்லாதவிடத்து அவ்வழக்கு இழுத்தடிக்கப்படுகிறது. இதனால் வளர்ந்து வரும் நாடுகளிலும் வளர்முக நாடுகளிலும் தொழிலாளர் குடும்பத்தினர் பாதிக்கப்படுகின்றனர்.
சட்டதிட்டங்கள் தெரியாத நிலையில் தொழிலாளரும் பாரிய தவறு களைச் செய்து விடுகின்றனர். ஏனைய திணைக்களங்களைப் பொறுத்த மட்டில் சில பாதிப்பு இருந்தபோதும் இலங்கை வங்கியின் நடவடிக்கை கள் மிகஉயர்ந்தநிலையிலுள்ளன. பரீட்சணைகளின்போது ஓர் அதிகாரி வழக்கைக் கொண்டு நடத்துபவர் குற்றஞ்சாட்டப்பட்டவர் உட்பட அங்கு பிரசன்னமாயிருப்பார்.
இம்மூவரும் சட்டதிட்டங்களைப் பற்றி நன்கு அறிந்தவர்களா என்றால் இல்லையென்றே கூறலாம். குற்றஞ்சாட்டப்பட்டவர் குற்ற வாளியே என்பதை நிரூபிக்கவே துண்டும் என்று எதிர்பார்ப்பிலேயே வழக்கை வழிநடத்துவார். வழிநடத்துபவர் குற்றாவளியா சுற்றவாளியா என்பதைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்துகின்றார். சட்டம் தெரிந்த வர்கள் இக்குழுவில் இருக்கவேண்டும்.
மேலதிகாரிகள் குழுவின்தலைவரது பரிந்துரையை வேத வாக்காக
 

l
எடுத்துக்கொண்டு குற்றஞ் சுமத்தப்பட்டவரை வீட்டுக்கு அனுப்பி விடு கின்றனர். இம்முறை மாற்றப்படவேண்டும் என நானுட்பட பலரும் விவாதித்தன் பயனாக சட்டம் மாற்ப்பட்டு தொழிலை ஒருவர் இழக்கும் பட்டத்தில் அவர் சார்ந்த குடும்பத்தினருக்கு நட்டஈடு வழங்குவதற்கு ஏற்ப நட்டஈடு வழங்கப்பட்டு வருகிறது.
தவறான முடிவொன்றின் காரணமாக வேலையிலிருந்த ஒருவர் நீக்கப்பட்டதற்கு எதிராக வாதாடி அவரை மீண்டும் நிலுவைச் சம்பளத் துடன் வேலைக்கு அமர்த்தச் செய்துள்ளேன். காணி ஈட்டுப்பிணையில் இடப்பட்ட திகதி அதிகாரிகளால் மாற்றப்பட்டிருந்தது. சட்ட அதிகாரியின் முத்திரையில் இடப்பட்ட திகதிமாற்றப்படவில்லை. மாற்றவம் முடியாது. அதைச் சுட்டிக்காட்டியே அவ்விசாரணையை வெற்றிபெறச் செய்தேன். சில விசாரணைகளில் சாட்சிகளைப் பார்க்காமல் வீட்டுக்கு அனுப்பு வது பாரிய சிக்கலை ஏற்படுத்துகிறது. இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக மனித உரிமை மீறல் தலைமையகத்துக்கு இதுவரை ஒருவர் கூடஇலங்கையிலிருந்துமுறையீடு செய்யவில்லையென்பதுஆச்சரியமே. நாமும் சட்டத்தை தெரிந்திருக்க வேண்டும். பல சுவையான சம்பவங் களைக் கூறி சில சந்தேகங்களுக்கு விளக்கமும் கூறிதனது உரையைப் பயனுள்ள நிகழ்வாக ஆக்கித்தந்த திரு.சுகுமரனைப் பலரும் வாழ்த்திய துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது.
தொகுப்பாளர்- கந்தசாமி மகாதேவா - வடிவமைப்பு:- உறுப்பாண்மைக்குழுச் செயலாளர் திருமதி.கு.சத்தியஜோதி
LLLLLL LLLLLSSLLLLSSS
pusę pagpupwegens
(கெ:தமிழ்ச்ங்கசெய்திமடல்

Page 11
# கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல.07, 57ஆவது ஒழுங்கை,