கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்துசாதனம் 2011.06.16

Page 1
| (16.06.
at Tanai
suit is
மனவளமும், பொருள் வளமும் நிறைந்த குடிமக்களையும்
சிறியவையும், பெரியவையுமாய்ச் சிவமணமும், தமிழ் மணமும்
பரப்பும் முப்பதுக்கு மேற்பட்ட திருக்கோவில்களையும்
தன்னகத்தே கொண்டுள்ள 薑 கரைநகரிலே
திருக்கோவில் என்பதுடன் வேறும் Hou சிறப்புக் மிளிர்வது ஈழத்துச் சிதம்பரம் என்றால் காலத்த - மிகப்பழைய - கோவில் என்ற பெருமையுடன் திகழ்வது 6LT66 ஐயனார்கோவில் ஆகும்
வியாவில் ஐயனர் கோவில் முகம்
 

瑟
web Whinduorgan.com e-mail editor Ohinduorgan.com
25 IT. 50.00
মৃত্যু6006ক্টা
வரலாற்றைக் கொண்டவை; ஒன்றுடனொன்று மிக நெருங்கிய
தொடர்பையுங்கொண்டவை.
தமிழரசர்களின் ஆட்சி யாழ்ப்பாணத்தில் ஓங்கியிருந்த காலம் அது தென்னிந்தியாவின் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து இங்கு வந்த குளக்கோட்டன் என்பவர் இங்குள்ள சில பிரதேசங்களின் ஆட்சியாளராக இருந்தார் சோழ அரச பரம்பரையைச் சேர்ந்த ജൂഖ് unសាស ஐயனார்
கோயிலைக் கட்டுவித்தவராவார். சோழர்களின் கட்டடச்சிற்பப் பாணியில் உருவாக்கப்பட்ட இவ்வாலயம் ஏழு நிலை மாட
இராசகோபுரத்தைக் டிருந்தது சிறப்பம்சமாகும்.
புத் தோற்றமும், பண்டிகையும்

Page 2
இந்துசாதனம் 6.
அலைகடல் மத்தியில் அருளொளிவீசும் நயினாதீவு நாகபூசணி அம்பாளின் இராசகோபுரத்தில் ஏற்றப்பட்ட தீய ஒளியை இந்த வியாவில் ஜயனாரின் இராசகோபுரத்தி லிருந்தும் அங்கு ஏற்றப்பட்ட தீப ஒளியை பொன்னாலை வரதராஜப் பெருமானின் இராஜகோபுரத்திலிருந்தும் அங்கு ஏற்றப்பட்டதீப ஒளியை மாவைக்கந்தனின் இராஜகோபுரத்திலிருந்தும் தரிசிக்கக் கூடிய அளவுக்கு அந்த நான்கு கோபுரங்களும் விண்ணைத் தொட்டு விட்ட வெற்றிக் களிப்புடன் கம்பீரமாக நின்றன எனத் தம்
முன்னோர் சொன்னதை நினைத்து வியப்பிற் சிலிப்பவர்கள் பலர்
இன்றும் இருக்கின்றார்கள்.
அந்தக் காலப்பகுதியில், காவிரிப்பூம் பட்டினத்திலிருந்து காரைதீவுக்கு வந்து குடியேறிய முத்துமாணிக்கம்செட்டியார் என்பவர், பாரிய கப்பல்களை வைத்து இரு நாடுகளுக்குமிடையே பல்வேறு வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். குளக்கோட்டுமகராசாவின் கட்டளைக் கிணங்க அவர் கோவிலுக் குரிய தெய்வத் திருவுருவங்களையும், கோவிற்பூசைப் பொருட்களையும் உத்தரகோச மங்யிைலிருந்து மங்களேஸ்வரக் குருக்கள், சுந்தரேஸ்வரக்குருக்கள் ஆகிய சிவாச்சாரியார்கள் இருவரையும் பரிசாரப் பிராமணர்களையும் 1517 ஆம் ஆண்டில் ஊர்காவற்றுறைக்குத் தன் கப்பலில் கொண்டுவந்து சேர்த்தார். குளக்கோட்டு மகாராசா தன் பரிவாரங்களோடு சென்று அனைவரையும் உள்ளன்புடன் வரவேற்று, குருக்கள் மாரை முத்துப்பல்லக்கில் ஏற்றித்தன் அரண்மனைக்கு அழைத்துச் சென்று , வேண்டிய உபசாரங்கள் செய்தபின் மீண்டும் ஐயனார், ஆலயத்தின் ஈசான பாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மட
வளாகத்தில் அவர்களைத் தங்க வைத்தார்.
அந்தக் குளக்கோட்டு மகாராசாவின் ஏற்பாட்டில் முத்து மாணிக்கசெட்டியார், கோவிலின் ஸ்தானிகராயிருக்க, மேற்கூறிய குருக்கள்மாரின் தலைமையில் ஐயனார் கோவிலின் பிரதிஷ்டா கும்பாபிஷேகம் கி.பி 1518 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 25 ஆம் திகதி நடைபெற்றது. ஆகம ரீதியாகவும் பக்தி பூர்வமாகவும் மஹாகும்பாபிஷேகத்தையும், மண்டலாபிஷேகத்தையும் நிறை வேற்றியதுடன், தொடர்ந்து நித்திய நைமித்திகக் கிரியைகளையும்
 

6,2O 86gr el, Golf Oil
மேற்கொண்ட குருக்கள்மாரின் சிவப் பொலிவினாலும் செயற்பாட்டு ஒழுங்கினாலும் பெரும்மகிழ்ச்சியும் பூரண திருப்தியுமடைந்த குளக்கோட்ட மகாராசா பூசை உரிமை உட்பட கோவிலின் ஏனைய உரிமைகள் அனைத்தையும் மங்களேஸ்வரக் குருக்கள் சுந்தரேஸ்ரக்குருக்கள் ஆகிய அந்த இருவருக்கும் அவர்களின் சந்ததியினருக்கும் கொடுப்பதாகச் செப்புப் பட்டயம் எழுதி
வழங்கினார்.
மங்களேஸ்வரக் குருக்களின் பின்னர் , அவருடைய மகன் சூரியநாராயணக் குருக்கள் காலத்தில் - 1618ஆம் ஆண்டில் ஊர்ககாவற்றுறைக்கு வந்த - மதவெறி என்பதன் மறுபெயரான - போத்துக்கீசர் இந்தக் கோயிலை, இடித்தழிக்கும் நோக்குடன் கோபுரவாசற் கதவைத் திறக்கப் போனார்கள்; ஆனால் இரத்தமாக வாந்தியெடுத்து இறந்துவிட்டார்கள். 1658 ஆம் ஆண்டில் இங்கு வந்த ஒல்லாந்தரும் கோவிலை இடிக்க முனைந்தபோது, நாலுபேர் கண் தெரியாதவர்களாகவும் இருவர் நடக்க முடியாதவர்களாகவும் ஆகிவிட்டபடியால் இடிக்கும் நோக்கத்தை அடையமுடியாமல் ,திரும்பிச் சென்றார்கள்
அந்நியரின் இத்தகைய அடாத்துக்களுக்கு அஞ்சி அப்போதையபூசகரான கனகசபாபதிக் குருக்கள் திருவுருவங்கள் அனைத்தையும் நில அறை ஒன்றினுள் வைத்து , இரகசியமாகத் தன் பூசைப் பணிகளை மேற்கொண்டார்.
சில நாள்களின் பின்னர் மீண்டும் வியாவிலுக்கு வந்த ஒல்லாந்தரால் , விக்கிரகங்கள் எதுவுமின்றி வெறுமையாக இருந்த கட்டிடத்தைத்தான் இடித்தழிக்க முடிந்தது . இங்கிருந்து அவர்கள் எடுத்துச் சென்ற கற்களைக் கொண்டுதான்
ஊர்காவற்றுறைக் கடற்கோட்டையை அவர்கள் கட்டினார்கள்.
நில அறைக்குள் விக்கிரகங்களுக்குப் பூசை செய்யப்படுவதை அறிந்த அவர்கள் அவற்றை எடுத்துக் கிணறொன்றினுட் போட்டார்கள் , வீரன் என்பவனை வெட்டிக்
கொன்றார்கள் ; தேரையும் வாகனங்களையும் கடலுக்குட் தள்ளினார்கள் பெறுமதி மிக்க தங்க, வெள்ளி ஆபரணங்களைத்
தம்முடன் கொண்டுசென்றார்கள்.

Page 3
இந்துசாதனம் 6.O
கிணற்றுட்போடப்பட்டிருந்த ஐயனார் விக்கிரகத்தை, சில காலத்தின் பின், அன்பரொருவர் எடுத்துச் சென்று காரைநகரின் வடகீழ்த் திசையில் ஓரிடத்தில் மறைந்து வைத்ததையும் , ஆண்டி என்வரின் கனவின் மூலம் அந்த விக்கிரகம் அடையாளம் காணப்பட்டுத் திண்ணைக்களியில் சிறிய ஆலயமொன்றிற் பிரதிஷ்டை செய்யப்பட்டதையும் , அக்கோவிலுடன் இணைந்து உருவாகி வளர்ந்ததே ஈழத்துச் சிதம்பரம் என்பதையும் அனைவரும் அறிவர்.
உத்தரகோசமங்ககையிலிருந்து இங்கு அழைத்வதுரப் பெற்ற
மங்களேஸ்வரக்குருக்கள், சுந்தரேஸ்வரக்குருக்கள் ஆகியோருக் கும் அவர்களுடைய சந்ததியினருக்குமே வியாவில் ஐயனார் கோவிலின் பூசை உரிமையையும் ஏனைய உரிமைகளையும் குளக்கோட்டு மகாராசா செப்புப் பட்டயத்தின் மூலம் கொடுத்ததை யும், கால மாற்றத்தினால் வியாவில் ஐயனார் திண்ணைக் களியிற் பிரதிஷ்டை செய்யப்பட்டதைத்தொடர்ந்து மங்களேஸ்வரக் குருக்களின் சந்தியினரே ஈழத்துச் சிதம்பரம் என இன்று புகழ் பெற்றுள்ள அக்கோவிலின் பூசகர்களாகப் பணி புரிந்து வருவதையும் நோக்கும் போது இறையருளின் துணை கொண்டு நன்னோக்கத்துடன் எழுதப்படும் வாசகங்கள் , மந்திரங்களைப் போல் என்றுமே உயிருள்ள வாசகங்களாய் உரிய செயற்பாடுகளை உருவாக்கி ஊக்கமூட்டும் வாசகங்களாய் அமையும் என்பது
புலனாகும்.
போத்துக் கீசரைப்போல், தீவிர மதவெறியர்களாக அவர் களுக்குப் பின் வந்த ஒல்லாந்தர் இருக்காவிட்டாலும் அவர்களும் சில கோவில்களை இடித்தழித்தனர் என்பதற்கு வியாவில் ஐயனார் கோயில் போன்றவை சான்றாக உள்ளன. ஆனால் அவர்களுக்குப் பின்னர் 1796 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்த ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் இந்துசமயம் அதிக சுதந்திரத்துடன் வளர்ச்சியடையத் தொடங்கியது. முன்னர் இடிக்கப்பட்ட கோவில்கள் பல மீண்டும் கட்டப்பெற்றும் புதுப்பிக்கப்பெற்றும் கும்பாஷேகம் செய்விக்கப்பெற்றன.
 

62O கர ஆனி O
வியாவிலிலிருந்த ஐயப்ப பக்தர்கள், சிறுகோயிலொன்றை அமைத்து ஐயனாரை வைத்து வழிபடத்தொடங்கினர்.
அடியார்களின் பக்தி வளர ஐயனாரின் திருவருளும் பெருக, சிறிய கோவிலுக்குப்பதிலாக இப்போது சிறப்புடன் விளங்குகின்ற, சற்றுப்பெரிய அளவிலான கோவிலைக் கட்டி 1972ஆம் ஆண்டில் மஹா கும்பாபிஷேகத்தை நிறைவேற்றுவித்தனர். காலத்துக்குக் காலம் பல்வேறு திருப்பணிகள் செய்யப் பெற்று 1989, 1999,2009 ஆகிய ஆண்டுகளிலும் கும்பாபிஷேகங்கள் நிகழ்த்தப் பெற்றன.
நாகர்களின் மொழியில் "பெருவெளி" என்ற கருத்தைக் கொண்ட "வியாவில்" பதியிலே அருளொளி வீசிக் கொண்டிருக்கும் அழகான இந்தக் கோவிலில், பூரணை, புஷ்கலாம்பிகை ஆகிய தேவியர் இருவருடன் அரிஹர புத்திரராகிய ஐயனார் கருவறையில் வீற்றிருந்து கருணை மழை பொழிகின்றார். பிள்ளையார், வைரவர், ஆகியோருக்குத் தனிச்சந்நிதானங்கள் உண்டு மகாமண்டபம், வசந்ததமண்டபம் , சுற்றுமதில் போன்ற இன்றியமையா அமைப்புக்களுடன் அடக்கமாகக் காட்சியளிக்கும் இக்கோவிலில் ஆடி அமாவாசையை அந்தமாகக் கொண்டு பிரம்மோற்சவம் எனும் ஆண்டுப் பெருந்திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. சமீபத்தில் உருவாக்கப்பெற்ற அழகிய தேரில் அரிகர புத்திரர் திரு வீதி வலம் வரும் சிறப்புக் காட்சியிற்திளைக்கவும் அண்மையிலுள்ள கடற்கரையில் அடுத்த நாள் நடைபெறும் ஆடிஅமாவாசைத் தீர்த்த விழாவிற் கலந்து கொண்டு திருவருட்பேற்றைப் பெறுவதற்கும் பிதிர்க்கடனை நிறைவேற்றுவதற்கும் பெருந்திரளான அடியார்கள் கூடுவர். பிரம்மறுநீ சு. சுஜீவ சர்மா பிரம்மபூரீ சு. ராஜித சர்மா ஆகியோர் நித்திய பூசகர்களாகப் பணியாற்றும் இக்கோவிலின் மஹோற்சவக்குருவாக இருப்பவர் பூரீ விஷ்ணுழரீ க.ச சோமாஸ்கந்தகுருக்கள் . "மக்கள் பணியே மகேசன் பணி" சீவ சேவையே சிவசேவை போன்ற பொன் மொழிகளின் கருத்தைப் பூரணமாக உணர்ந்து அதைச் சீராக நடை முறைப்படுத்தும் செயற்பாடுகளில் இக்கோவில் நிர்வாகத்தினர் சமீப காலமாக ஈடுபட்டுவருவது பாராட்டிற்குரியது.
பாடசாலைகளுக்குக் கணினிகள், பாலர் பாடசாலைகளுக்குத் தளபாடங்கள், ஏழை மாணவர்களுக்குப் பாலர் வகுப்பு முதல் பல்கலைக் கழகம் வரை கற்பதற்கான நிதியுதவி , தேவையான வர்களுக்குத் துவிச்சக்கர வண்டி , கரைநகர் வைத்தியசாலை யின் புனரமைப்புக்கான உதவி ஏழை மக்களின் வாழ்வா தாரத்தை உயர்த்துவதற்காகச் சுயதொழில்களை மேற்கொள் வதற்குத் தேவையான உபகரணங்கள் போன்றவை காலத்துக்குக் காலம் வழங்கப்பட்டு வருகின்றன; க.பொத. சா.த.உத ஐந்தாம் ஆண்டுப் புலமைப் பரிசிற் பரீட்சை முதலியவற்றில் அதிக புள்ளிகளை பெறுவோர் பாராட்டிக் கெளரவிக்கப்படுகின்றனர். தன் பெயரால் இத்தகைய பல்வேறுபட்ட சமய, சமூக, கல்விப்
பணிகளைச் சிறப்பாக மேற்கொள்வதற்காக வியாவில்
->

Page 4
இந்துசாதனம் 6.O
ஐயனாராலேயே விசேடமாகத் தெரிவு செய்யப்பபெற்றவரைப் போல், எந்நேரமும் மிகுந்த சுறுசுறுப்புடன், இயங்கிவரும் ஆலயத்தின் பரிபாலகரும் மஹாராணி புடைவை நிலையத்தின் உரிமையாளருமான திரு.க. சோமசேகரம், தன் செந்த நிதியுடன், உள்ளுரிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் வசிக்கும் பெருமக்கள் அளிக்கும் நன் கொடைகளையும் சேர்ந்து எவ்வித குறையுமின்றி இப்பணிகளை ஆற்றி வருவதுடன், இவற்றை மேலும் விஸ்தரிப் பதிலும் கவனஞ் செலுத்தி வருகின்றனர்.
ஈழத்துச்சிதம்பரம் தேவஸ்தானத்திலே ஐம்பது ஆண்டு களுக்கு மேலாகப் பிரதம சிவாச்சாரியாராகப் பணி புரிந்து, அதன் வளர்ச்சிக்கும் அதனூடாகச் சைவ சமயத்தின் வளர்ச்சிக்கும் பெரும்பணி புரிந்த வேதாகம கிரியாபூஷணம், வேதாகம புராண சூட்சுமதர்சி,அமரர்சிவபூரீ ச. கணபதீஸ்வதரக் குருக்கள் அவர்களின் நினைவை நிரந்தரமாக்கும் வகையில் வியாவில் ஐயனார் கோவில் வளாகக்த்தில் அமைக்கப்பெற்றுள்ள "கணபதீஸ்வரக்குருக்கள் நூலகம் "சமயம் சம்பந்தமான தமிழ் , சமஸ்கிருத நூல்களையும் குருக்கள் தன்கைப்பட எழுதிய ஏட்டுச் சுவடிகள் பலவற்றையும் தன்னகத்தே கொண்டு, சைவசமயஅறிஞர்கள் ஆராய்ச்சி மாணவர்கள் போன்றவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றது. இந்நூலகத்தின் உருவாக்கத்துக்காக முழுமூச்சுடன் உழைத்து குருக்களவர்களின் மகன் மூதறிஞர் க. வைத்தீஸ்வரக்குருக்களைக் கொண்டு அதைத் திறப்பித்த க. சோமசேகரம் , மேலும் பல அரிய நூல்கள் அதில் இடம் பெறவேண்டும் என்பதிற் கண்ணும் கருத்துமாக
உள்ளார்.
ஆலயத்தில் விபூதி தயாரித்தும், பசு மாடுகளை வளர்த்தும் தென்னந் தோட்டம் அமைத்தும் ஏனைய ஆலயங்களுக்கு எப்போதும் வீயூதி, பால், இளநீர் முதலியவை இலவசமாக வழங்கப்படுவது. இவ்வாலயம் மேற்கொள்ளும் சமயப் பணிகளின்
வேறொரு பரிமாணமாகும்.
வியாவில் ஐயனாரை வணங்கி அருள் பெறுவதற்கு மட்டுமல்லாமல் , ஆலயத்தில் மேற் கெள்ளப்படும் பல்வேறு சமய, சமூகப்பணிகளை நேரே பார்த்துப் பயன் பெறவும் நீங்கள் மேற்கொள்ளும் புனிதப் பயணம், உங்களுடைய சமய, ஆன்மீக நம்பிக்கைகளிலும் செயற்பாடுகளிலும் புதிய ஒளியைப் பாய்ச்சும் என்பது திண்ணம்.
முக்கிய குறிப்பு
உத்தரகோசமங்கையிலிருந்து, வியாவில்
ஐயனார் கோவிற் பூசைக்கென அழைத்துவரப்பட்ட

62O கர ஆணி 0
மங்களேஸ்வரக்குருக்கள் சுந்ததேஸ்வரக் குருக்கள் ஆகியோரின் முன்னோர், சாஞ்சீபுரத்திலிருந்து உத்தர சோசமங்கைக்கு வந்தவர்கள். அவர்களுள் முதல் வரான சிவசுப்பிரமணியக் குருக்கள், எழுத்தாணியால் பனைஒலை, ஏடுகளில் எழுதிய நாட்குறிப்புக்களை, அவருடைய சந்ததயினர் தொடர்ந்து எழுதினார்கள். குடும்பத் தகவல்கள், கோவில் நிகழ்ச்சிகள், முக்கியமான சமுதாய, அரசியல் நிகழ்ச்சிகளை, எவ்வித கூட்டல் குறைத்தலுமின்றி, நடந்தபடியே எழுதினார்கள். யாரையும் திருப்திப்படுத்தும் நோக்கமோ கண்டிக்கின்ற; குறைகாண்கின்ற நோக்கமே சிறிதுமின்றி, உண்மைக்கு மதிப்பளித்து எழுதப்பட்ட குறிப்புக்கள் ஆதலால் போத்துக்கீசர் இரத்தவாந்தி எடுத்ததும் ஒல்லாந்தர் கண்பார்வை இழந்ததும் இருவர் நடக்க முடியாதவர்களாய் ஆனதும் உண்மைச் சம்பவங்களாவும், "அரசன் அன்றறுப்பான், தெய்வம் நின்றறுக்கும் " என்பதற்கு, மாறாக, தீமை செய்வோரையும் தீமை செய்ய முயல்வோரையும் சில
சந்தர்பங்களில், இறைவன் உடனேயே தண்டித்துத் தடுப்பான்
என்பதற்கு உதாரணங்களாகவும் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இறுதியாகச் சிவழீ ச. கணபதீஸ்வரக் குருக்களால் தொடர்ந்து எழுதப்பெற்ற அவ்வேடு, மூதறிஞர் க. வைத்தீஸ்கரக்குருக்களின் பாதுகாப்பில் இருந்த போதிலும் காரைநகரிலிருந்து மக்கள் இடம் பெயர்ந்த காலப் பகுதியில் யாரோ ஒருவரிடம் கைமாறிவிட்டது. எனினும் 1967ஆம் ஆண்டில் அமரத்துவமடைந்த சிவபூீ கணபதிஸ்வரக் குருக்கள் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வெளியிடப்பெற்ற "ஆன்ம தர்சநம்" என்னும் நூலில், ஏட்டில் எழுதப்பெற்றிருந்த விபரங்கள் யாவும் அச்சிடப்பட்டிருந்தன என்பது ஆறுதலளிக்கும் செய்தி யாகும். 人

Page 5
னக்கும் LEb(b5)
இந்துசாதனம் வைகாசி 2011, 21ஆம் பக்கத் தொடர்ச்சி.
Tெனவே, விஞ்ஞானத்தின் அடிப்படையாய் அமையும் எண்களின் நம்பகத்தன்மை அசைந்தால், விஞ்ஞானம் அசைவுறும் என்பதும், அவ்விஞ்ஞானத்தை நம்பி, வைக்கப்படும் பகுத்தறிவுவாதம் அசையும் என்பதும், சொல்லாமலே தெளிவாகும். அது சாத்தியமா? ஆராய்வோம்.
இறைநம்பிக்கையாளர்களால் கூறப்படும் இறை, எல்லைகளற்ற பொருள் எனும் கூற்றே பகுத்தறிவுவாதிகளால் முதலில்கேலி செய்யப்படும் விடயமாகிறது. எல்லைப்படுத்தப்படாத பொருளும் உண்டா?
இது அவர்கள் தொடுக்கும் வினா.
"ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும் சோதி " எனும் ஆத்திகர்களின் இறை பற்றிய கூற்றை அவர்கள் முற்றாய் நிராகரிப்பார்.
இக்கருத்தை மனதிருத்தி அவர்தம் விஞ்ஞான அடிப்படையான கணிதத்துள் நுழைவோம்.
கணிதத்தின் அடிப்படையிலான எண்களுள் மிகப்பெரிய எண் எது? பதிலிறுப்போர் எத்தகு பெரிய எண்ணைப்பதிலாய் உரைப்பினும், அதனோடு ஒன்றைக் கூட்ட அடுத்த பெரிய எண் வந்துவிடும், இவ்வுண்மையறிந்த கணித மேதைகள் எண்களின் உயர்வரிசை, முடிவற்றது எனத் தெளிவாய் உரைத்தனர். அக்கருத்தை உரைக்க முடிவிலி எனும் தொடரை அவர்கள் பாவித்தனர்.
முடிவிலி என்பதனை குறிக்க கணிதத்தில் 0 எனும்
கண்ணில் கணக்கூடியவற்றையே உண்மையென ஏற்றுச் காண முடியாத காரணத்தால், "கடவுள்" என்று ஒருவர் நம்பிக்கைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் அவர்கள் ஆ கணித'த்தின் பலவீனத்தை- குறைபாட்டை - விளக்கு வாதத்தை வலுவிழக்கச் செய்கின்றார் கம்பவாரிதி "தினம் வாசகர்களுககரிக நன்றியுடன் மறுபிரசுரம் செய்கின்றோம் வெளியானது,
 

b62O கர ஆணி 01
குறியீடு பாவிக்கப்படுகிறது. சிந்தனையில்லா கணித மாணவர்கள் இக்குறியீட்டினையே ஒரு எண்ணாய்க் கருதி மயங்குவர். உண்மையில் இக்குறியீடு உரைக்கும் செய்தி முடிவில்லாதது என்பதேயாம். எனவே, கணித அடிப்படையான எண்களின் மேல் நிலையும், முடிவற்றதாகவே விஞ்ஞானத்தால் உரைக்கப் படுகின்றது. இனி இறங்கு வரிசையில் எண்களில் கடைசி எண் எது? இது அடுத்த கேள்வி . அங்கும் கணிதமேதைகள் முடிவிலி என்பததையே பதிலாய் உரைக்கின்றனர். விஞ்ஞானத் தின் அடிப்படை கணிதம் என்றும் கணிதத்தின் அடிப்படை எண்கள் என்றும் அறிந்தோம் இத் தொடர்பில் எண்களே விஞ்ஞானத் தின் முதல் நிலையாகின்றன. விஞ்ஞானத்தின் முதல் நிலையான எண்களும், முடிவும், தொடக்கமும் அவவையே எனும் உண்மை மேல் ஆய்வால் வெளிப்பட கடவுள் மட்டுமன்றிக் கணக்கும் ஆதியும், அந்தமும் அற்றதுதான் எனத் தெரிந்து கொள்கிறோம்.
அடுத்து, இறைக்கும் உருவம் கொடுப்பது பற்றிய ஒரு பிரச்சனை நாத்திகர்களால் கிளப்பப்படுகின்றது. தொடக்கமும் முடிவும் அற்ற பொருள் என்று இறையை உரைப்பின் பின்னர் அதற்கு வடிவம் கற்பிப்பது எங்ங்ணம்? இதுவே, அவர்தம் வினா. அது பற்றியும் சிந்தித்தல் அவசியமாகின்றது. இவ்விஞ்ஞான வாதிகள் எண்களைப் பூச்சியத்திற்கு மேற்பட்டவை, கீழ்ப்பட்டவை:
என இரு கூறாய்ப்பிரிக்கிறனர்.
கெரிள்ளி முடியும். எனக் கூறுபவர்கள் பகுத்தறிவுவாதிகள், இல்லை என்பது அவர்களின் நிலைப்பாடு தம்முடைய ஆதாரமf8 அடிப்படையாகக் கொள்ளும் "விஞ்ஞரின - வதன் மூலம், 'கடவுள் இல்லை' என்ற நிரீச் அரவாதிகளின் *குரல்" நாளிதழில் வெளியான இத்தொடரை இந்துசாதன ; இதன் முதற் பகுதி "இந்துசாதனம் வைகாசி 2011இதழில்
D5

Page 6
இந்துசாதனம் 6O
இவற்றுள் பூச்சியத்திற்கு மேற்பட்ட எண்களுக்கு (+) அடையாளமும் கீழ்ப்பட்ட எண்களுக்கு (-) அடையாளமும் இடுகின்றனர்.இவர்களில் சிலர், எண்களின் மேல் வரிசை நிறைவெண்ணாய் முடிவிலியியைக் குறிக்கும்போது (+)அடையாளத்தையும், கீழ் வரிசை நிறைவெண்ணாய் முடிவிலியைக் குறிக்கும் போது (-) அடையாளத்தையும் இடுகின்றனர்.
முடிவிலிஎனும் அடையாளம் முடிவற்றது எனும் கருத்தையே உரைகின்றது. அங்ங்ணமாயின் எதுவென தெரியாத முடிவற்ற ஒரு எண்ணுக்கு, இவர்கள் (-),(+) அடையாளம் இட்டது எங்ங்ணம்? ஒருவேளை மேல் வரிசை எண்கள் அனைத்தும் (+) அடையாளத்தைக் கொண்டதாலும் கீழ்வரிசை எண்கள் அனைத்தும் (-) அடையாளத்தைக் கொண்டதாலும் மேலும் கீழும் வரும் முடிவிலிகுறிக்கும் எண்களும் அவ்வடையாளங்களையே கொள்ளும் என அவர்கள்
வாதிடக்கூடும்.
அங்ங்ணம் அவர்கள் உரைப்பின் , அவர்களை நோக்கி ஒரு வினா கிளம்பும். அறியப்படாத ஒரு எண்ணுக்கு வரிசை நோக்கி அடையாளமிடுதல் அனுமானப்பிரமாணமே அன்றிகாட்சிப்பிரமாணம் ஆகுமா? என்பதுவே அவ்வினா? அனுமாப்பிரமாணத்தை அவர்கள் ஒத்துக்கொள்வது இல்லை. எனவே, அவர் கருத்துப்படியே அவர்களின் வாதம் தவறாகிறது. ஊகத்தால் அடையாளமிடுதல் கணித தேவைக்கு அவசியம் என்று அவர் உரைப்பின் அதனையே தான் கடவுள் கொள்கையாளரும் செய்தனர். என்பதை ஒப்ப வேண்டும். எனவே, இவ்விடயத்திலும் கணக்கும், கடவுளும் ஒன்றாகின்றன. பகுத்தறிவுதான் விஞ்ஞானத்தின் அடிப்படை
வாசகர்கள் கவனத்திற்கு
சென்ற இதழில் ஆரம்பமான இ
இதனை அனுமானப் பிரமாணட
புகை உண்டெனில் அவ்விடத்தி
ஊகித்தறிவது அதற்காம் உத
இவை தவிர உயர்ந்தோர் சொ6
என்ற வரிகளையும் சே
 

S2O கர ஆணி 01
என்றுரைக்கும் அவர்களை நோக்கி மற்றொரு கேள்வியும் எழுகிறது.
கணித எண் வரிசையில் பூச்சயத்தை ஓர் எண்ணாகவே அவர்கள் உரைக்கின்றனர். எண்கள் அனைத்தும் வரையறுக்கப்பட்ட பெறுமதி கொண்டவை என்பதே இவர்தம் உறுதியான கொள்கை இக் கொள்கையை வைத்தே கணிதத்தை இவர்கள் விருத்தி செய்கின்றனர்.
5இல் ஒன்று5 தரம் அடங்கும் 5இல் இரண்டு2தரம் அடங்கிஒன்றுமிகுதியாகும். 5இல் மூன்று தரம் அடங்கி இரண்டுமிகுதியாகும். இங்ங்னமாய் எண்களுக்கான தொடர்பினை உறுதி செய்து கணிதத்தினை இவர்கள் வளர்ப்பர். இங்குதான் கேள்வி பிறக்கிறது. இவ் எண்களுக்கான தொடர்புகள் தர்க்கரீதியானவை எனின், அவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும்பூச்சிய எண் இத்தர்க்க எல்லைக்குள் அடங்குமா? இதுவே விஸ்வரூபம் எடுக்கும் கேள்வியாம். மேல் கேள்வியை விரிக்க,
ஐயங்கள் வளர்த்துக் கொண்டே போகின்றன.
பூச்சியம் ஒர் எண் ஆனால், எத்தனை பூச்சியள் சேர்ந்தால் 01உருவாகும்? இது திகைப்பூட்டும் முதல் கேள்வி எண்கள் (-),(+) அடையாளங்களை கொண்டவை. பூச்சியமும் ஓர் எண்ணானால் அதற்கான
அடையாளம் எது? பூச்சியத்தின் மேல் (+) வும், கீழ் (-) வும் வருவதற்கான காரணங்கள் என்ன?
வினாக்கள் இங்ங்ணமாய் விரிகின்றன.
விடை சொல்லி விஞ்ஞானத்தை காக்கவல்லார் யாரே?
லுவுரும்.
த்தொடரில்,
ம் என்பர் என்பதை அடுத்து,
நில் நெருப்பு உண்டு என்று
ாரணம்.
ல்ல ஒப்புவது என்பது,
சர்த்து வாசியுங்கள்.
5

Page 7
இந்துசாதனம் 6.O
சமயம் ஒரு வ
கலாநிதி மனோன்ம
உலகில் நாம் காணும் இரு சுடர்கள் சூரியனும் சந்திரனும் ஆகும் இயற்கையில் சூரியனும் சந்திரனும் இருள் நீக்கும் சுடர்கள். எமது வாழ்வில் இரவையும், பகலையும் எமக்கு காட்டி நிற்பதும் இவையே, சூரியனுக்குப் பகலவன், ஞாயிறு, கதிரவன், கனலி, இரவி, வெய்யோன் போன்ற வேறு பெயர்களும் வழக்கிலுண்டு. அதேபோல் சந்திரனுக்கும் திங்கள், மதி, நிலவு போன்ற பெயர்களும் வழக்கிலுண்டு. நிகண்டு என்னும் தொகுப்பு நூலில் இரு சுடர்களுக்கும் வழங்கும் பெயர்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
இருசுடர்களும் வழிபாட்டில் தொடர்புற்றிருந்ததைப் பல இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. சங்க இலக்கியத் தொகுப்பு நூலிகளில் ஒன்றான அகநானூற்றின் 239 ஆம் பாடல் வருமாறு ஒருபதிவைச் செய்துள்ளது.
"ஒள் இழை மகளிர் உயர்பிறை தொழுஉம்
புல்லென் மாலை.
ஒளி மிகுந்த அணிகலன்களை அணிந்த பெண்கள் உயர்ந்த
பிறையை மாலைக்காலத்திலே தொழுகின்றார்கள். இப்பாடலடி
களுக்கு உரை செய்த உரையாசிரியர் மணமாகாத பெண்கள்
பகல் இரவு என்ற ஒரு நாளின் கூறுபாட்டைக் சந்திரன் ஆகிய இருபெருஞ் சுடர்களும் வழி உடலிலுள்ள மூட்டுக்களுக்குச் சூரிய வழிபாட் தேவையானஉயிர்ச்சத்து,சூரிய ஒளிக்கதிர்க
வளர் பிறையைத் தொழும் மரபுடையவர்களென விளக்கியுள்ளார்.
இம்மரபு இன்றுவரை தொடர்வது குறிப்பிடத்தக்கது.
சிலப்பதிகாரம் என்னும் பேரிலக்கியம் சூரியனையும், சந்திரனையும் வாழ்த்திப்பாடுவதன் மூலம் இருசுடர்களும் வழிபடப் பட்டதைப்பதிவு செய்துள்ளது.
"திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் கொங்கலர்தார்ச்சென்னி குளிர்வெண்குடை போன்றிவ் வங்கண் உலகலளித்தலான்" "ஞாயிறு போற்றுதம் ஞாயிறு போற்றுதம் காவிரி நாடன் திகிரிபோற் பொற் கோட்டு மேருவலந்திரித்லான்"
எனப் பேரிலக்கியத்தின் மங்கல வாழ்த்துப்பாடல் பகுதியிலேயே முதலில் இளங்கோவடிகள் இருசுடர் வழிபாட்டு நடைமுறையைச் சிறப்பாக ஆவணமாக்கியுள்ளார். ஞாயிறு,திங்கள் எனத் தமிழ்ச் சொற்களால் இரு சுடரையும் குறிப்பிட்டுள்ளார். எமக்கு ஒளியைத் தரும் இருசுடர்களும் வழிபாட்டிற்குரியன என்பதைச் சமயமும் நிலை நிறுத்தியுள்ளது. நவக்கிரக நிலையில் ஞாயிறும் திங்களும் இன்றுவரை வழிபடப்பட்டுவருகின்றன.
 
 
 
 
 
 
 

6。2O量I கர ஆனி O
பாழ்வியல் -29
ணி சண்முகதாஸ்
சமய அடியார்களின் தேவாரப் பாடல்களில் இரு சுடர்களும் வழிபடப்பட்டமை குறிப்பிடப்பட்டுள்ளது. ஞானசம்பந்தருடைய கோளறுப் பதிகத்தின் முதற்பாடல் வழிபாட்டு நிலையில் இரு தன்மைகளைக் குறிப்பிடுகின்றது.
"வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடி மேலணிந்தென் உளமே புகுந்த வதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனிபாம்பிரண்டும் முடனே ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே"
இப்பாடலில் ஞாயிறு, திங்கள் என்னும் இரு கோள்களும் வழிபடப்படுவதை விளக்கும் ஞானசம்பந்தர் இறைவன் திங்களை முடிமேல் அணிந்திருப்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
இறைவனை யே இர வியும் மதியும் என நாவுக்கரசர் குறிப்பிட்டுள்ளார்.
கணிப்பதற்குப் பெருமளவில் உதவும் சூரியன், பாட்டுக்குரியனவாகவும் திகழ்கின்றன. நமது டுமூலம் அசைவு ஏற்படுகின்றது. தோலுக்குத்
"இரவியும் மதியும் விண்ணும் இருநிலம் புனலுங்காற்றும் உரகமார்பவனமெட்டுத்திசையொளியுருவமானாய்"
என நாவுக்கரசர் இயற்கைத் தோற்றங்களான இரவியும், மதியும் இறைவனே என வழுத்திப்பாடியுள்ளார். செஞ்சடையிலே நிலாவை வைத்திருப்பதையும் குறிப்பிட்டுள்ளார்.திருவையாற்றிலே திங்கள் மதிக் கண்ணியானைக் கண்ட திருக்காட்சியையும் அப்பர்
UTyuj66TITsi.
இயற்கையின் பேராற்றலை வழிபட்ட நமது முன்னோர் களின் வாழ்வியலில் இருசுடர்களும் பெரிதும் போற்றப்பட்டன. பகல் , இரவு என்ற ஒரு நாளின் கூறுபாட்டைக் கணிப்பதற்கு ஞாயிறும் திங்களும் பெரிதும் உதவின. காலையில் சூரிய வழிபாடு செய்வதும் மாலையில் பிறையைத் தொழுதுவழி படுவதும் காலத்தின் கடப்பிற்கு ஏற்ற நடைமுறையாகப் பின்பற்றப்பட்டன.
மனித வாழ்வியலில் பகலவனின் ஆற்றல் விளைபொருள் நிலையிலும் பெரிதும் தொடர்பு பட்டிருந்தது.பகலவனின் வெப்பம்
மழைக்குக் காரணமாக அமைந்ததால் உழுதுண்டு வாழ்வு
----->

Page 8
இந்துசாதனம் 6.
நடத்திய உழவர் சூரியனுக்குச் சிறப்பாகப் பொங்கல் மடையிட்டு வழிபாடு செய்யும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தனர். தைப்பொங்கல்" என தை மாதப்பிறப்பன்று வீட்டு முற்றத்தில் உலையேற்றிப் பொங்கல் மடையிட்டு வழிபடும் மரபு இன்று வரை தொடர்கிறது.
நாளாந்தம் சூரியனை வணங்குவதும் எமது சமய நடைமுறையாக உள்ளது. இதனால் உடலும் உள்ளமும் உறுதியடையும் என்ற நம்பிக்கை இன்றுவரை நிலவுகிறது. நமது உடலில் உள்ள மூட்டுக்களுக்கு இவ்வழிபாட்டின் மூலம் அசைவு ஏற்படுகிறது. தோலுக்கு வேண்டிய விற்றமின் , காலைச் சூரியஒளிக்கதிர்களில் நிறைய உண்டு. அதற்குக் கல்சிய உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் திறலும் உண்டென அறிவியல் துறை ஆய்வுகள் கூறுகின்றன. நோய்க்கிருமிகளின்றும் பாதுகாப்புப் பெறுவதற்கும் சூரியக் கதிர்கள் தான் உத வுகின்றன. அகலா வயது முதிர்ச்சி, தொப்பை வயிறு
என்பவற்றையும் சூரிய நமஸ்காரத்தால் கட்டுப்படுத்தலாம்.
இன்று மின்சாரம் பாவனைக்கு வந்த பின்னர் இரு சுடர் பற்றிய பண்டைய நடைமுறைகள் மறக்கப்பட்டு வருகின்றன. சூரியன் வருகையைப் பற்றியோ சந்திரன் வருகையைப் பற்றியோ
ra
Pas ~t
LLLTTLLTTeeLTLTTOOeTTeTLLTTTTTTTTTLLTTeeTTeTTTTLTTeL TTOTTe
இந்துசாதன
உள்நாடு
தனிப்பிரதி : 50/- ஆண்டுச் சந்தா : ரூபா 600/-
வெளிநாடு
Australia (AUS) 35
Europe 25
India (Indian Rs) 500
Malaysia (RM) 50
Canada (S) - 35
UK (£) - 15
Other (USS) - 25
LLLTLLSTLTLTLLSTLSTLLTLLLLLTLLSTLTLLTLLLLLTLLLLLTLLTLLTLLTLTLTLLLLL

D6.2O a5pr eyLeaf Oil
யாரும் கவலைப்படுவதில்லை. விஞ்ஞானம் இயற்கையோடியைந்து வாழ்வையும் வழிபாட்டு நடைமுறைகளையும் புறந்தள்ளி விட்டது. குறிப்பாக இளந்தலை முறையினர் மின்சாரம் ஆற்றல் பெற்றது என்ற நிலைப்பாட்டில் வாழ்வை நடத்துகின்றனர். இரு சுடர்களும் எமக்கு காலக்கணிப்பையும் காட்டி நிற்கின்றன என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது. அமாவாசை, பூரணை போன்று சொற்கள் திங்களின் நடமாட்டத்தையும் காலக்கட்டமைப் பையும் எமக்கு
நன்கு விளக்கிநிற்கின்றன.
திங்கள் என்ற சொல் ஒரு நாளின்பெயராகவும் ஒரு மாத அளவைக் குறிப்பதாகவும் உள்ளது. வட மொழிப்பண்பாடு தமிழ் மொழியில் வந்து கலந்த போது வடசொற்களுக்கும் பயன்பாட்டில் வந்துஇணைந்து கொண்டன. பகலவனின் பணியைச் சிலப்பதிகாரத்துக் கண்ணகி தெளிவாய் காட்டியுள்ளாள் தன் கணவன் கோவலன் கள்வனெனப் பழி கூறப்பட்டுக் கொலை யுண்டிறந்தபோது காய்கதிர்ச் செல்வனையே அழைத்துத் தன் கணவன் கள்வனோ? எனக் கேட்கிறாள் , உலகைவலம் வரும் காய்கதிர்ச் செல்வன் எல்லாவற்றையும் காணும் ஆற்றல் படைத்தவன் . அதனால் எமது முன்னோரும் வாழ்வியலில் இரு
சுடர் வழிபாட்டை நம்பிக்கையோடு மேற்கொண்டிருந்தனர்.
ത് - ക്രr ഢേ
காசோலைகள் Saiva Paripalana Sabai
ACCount No. 1090946
என்று எழுதப்பெறுதல் வேண்டும்.
அனுப்பவேண்டிய முகவரி
கெளரவ முகாமையாளர் இந்துசாதனம்
இல,66, கல்லூரி வீதி, யாழ்ப்பாணம்.
TLTLLTLSTLTLLTLLTLLLLSSTLSTLLTLLTLLTLSTLTLLLLLTLTLSTLTLLLLLTLS

Page 9
இந்துசாதனம் I6.(
நாவலர்பெருமான்கள்
அறிமுகம்:
ழரீலழரீ ஆறுமுகநாவலர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்து,சைவத்தையும்தமிழையும் அழியாமல் காப்பாற்றியதோடு, அவற்றின் மறுமலர்ச்சியின் பொருட்டும்அரும்பபெரும் பணிகளை ஆற்றியவர் . சைவ, தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்திற்குத் தலைமகனாகவிளங்கியவர். ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசின் அநுசரணையுடன், ஈழத்திலும் , தமிழ்நாட்டிலும் நடைபெற்றுவந்த, சைவத் தமிழ்மக்களின், சமய, மொழி, கல்வி, பண்பாட்டு, கலாச்சார அழிப்பு முயற்சிகளுக்குத், தனிமனித இயக்கமாக நின்று எதிர்ப்புக் குரல் எழுப்பியதோடு , மக்கள் மத்தியில் அவைபற்றிய ஒரு விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்தியவர். நாவலர் மறைவிற்குப் பின், நாவலர் ஞானபரம்பரை ஒன்று உருவாகி, அவரின் சிந்தனைகளுக்குச் செயல் வடிவம் கொடுத்ததோடு , அவர் பணிகளையும் - குறிப்பாகச் சைவ, கல்விப் பணிகளையும் -
தொடர்ந்தது.
கல்விச் சிந்தனைகள்
தமிழ்மரபு பண்டுதொட்டுக் கல்வி நெறியினைச் சைவசமய உணர்வோடு வளர்த்து வந்துள்ளது. உலகியல் பூச்சு இருந்திருப் பினும், ஆன்மிகமே கல்வியின் உயிராக விளங்கி வருகின்றது. இத்தகைய வைசத்தமிழ்க் கல்விப் பண்பும், மரபும் இன்றுவரை வளர்ச்சி பெற்றும், விரிவு பெற்றும் வருவதைக் காணலாம். நாவலர் பெருமானின் கல்விச் சிந்தனைகளும் அதே மரபு வழியிலேயே ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மரபுவழிக் கல்விக்குப்புத்துயிர் அளித்த அதேவேளை, கால உணர்வோடும், கால ஓட்டத்தோடும் ஏற்பட்ட கல்வித் தேவைகளையும் அவர் புறக்கணிக்கவில்லை.
"முன்னைப்பழம்பொருட்கும் முன்னைப்பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே"
- திருவாசகம் பழமைக்குப் பழைமையாய், புதுமைக்குப் புதுமையாய் விளங்குபவர் சிவபெருமான். சைவமரபுக் கல்வியும் அத்தகையதே என எண்ணிய நாவலர், தமது கல்விக் கோட்பாடுகளையும் அந்த நிலைப்பாட்டில் நின்று வழங்கியுள்ளார். சைவநெறியையும்,தமிழ் நெறியையும் வளர்ப்பதற்கும், மறுமலர்ச்சியடையச் செய்வதற்கும் கல்வியைக் கருவியாகப் பயன்படுத்த விழைந்தார் என்பதற்குச் சான்றுகள் பல உள்ளன. அவ்விரண்டையும் காப்பாற்றி , பேணி வளர்த்து அடுத்த தலைமுறையினருக்கு கைளிப்பதற்குக் கல்விக் கூடங்களின் தேவையையும், இன்றியமையாமையையும் நாவலர் உணர்ந்திருந்தார்.
நாவலரின் கல்விச் சிந்தனைகளில், சைவ சமயமே பிரதான இடத்தைப் பிடித்திருந்தது. சைவப் பண்பாடு, சைவ ஆசார ஒழுக்கங்கள், சைவமெய்யியல், சைவக் கலைகள், கலாச்சாரம்
O

6.2O கர ஆணி 01
ஸ்வி நெறி
göIomTaFTLól (BFITLmööBJih
என்பற்றை உணர்த்துவதும், அவற்றில் நம்பிக்கையும், பற்றையும் ஏற்படுத்துவதுமே கல்விநெறியின் அடிப்படையாகக் கொண்டிருந் தவர் நாவலர் . நாவலர் பாடசாலை மாணவர்களுக்கென எழுதி வெளியிட்ட சைவ வினாவிடை, பாலபாடம் முதலிய பாடநூல்கள் அனைத்துமே சைவஆசாரங்கள், பண்பாட்டு விழுமியங்கள், சைவஒழுக்கம் என்பவற்றைப் பாட உள்ளடக்கமாகவும், பாடப்
பொருளாகவும் கொண்டுள்ளன.
கல்வியில் சைவநெறியையும், தமிழ்நெறியையும் , பழைமையையும், பண்பாட்டையும் இணைத்துக் கொள்ளுதல், நாவலர் வாழ்ந்த காலப்பகுதியின் தேவையாக இருந்தது. அதேவேளை, ஆங்கிலக் கல்வியின் நல்ல அம்சங்களையும் சேர்த்துக்கொள்ளுதல் அன்றைய காலத்தின் தேவையாகவும் அமைந்தது. நாவலர் இரண்டையும் செய்தார்; இரண்டிற்குமிடையே இணக்கமும் கண்டார். அந்தவகையில் நாவலரால் பெரும் சிரமத்தின் மத்தியில் நிறுவப்பட்டதே வண்ணார்பண் ணை சைவப்பிரகாச வித்தியாசாலை (1848).
பத்தென்பதாம் நூற்றாண்டில், கல்வி, மனித ஆக்கச் சாதனம் என்ற நிலையிலிருந்து விலகி உழைக்கும் கருவியாக, உத்தியோகம் வழங்கும் ஊடகமாக மாறத் தொடங்கியது. மக்களும் அத்தகைய கல்வியையே நாடினார்கள். ஆங்கிலக் கல்வி முக்கியத்துவம் பெறத் தொடங்கியகாலம், சைவ மாணவர்கள் தமது சைவநெறியை இழந்து ஆங்கிலக் கல்வியைப் பெறவேண்டி யிருந்தது. இந்த நேரத்தில்ற்றான், சைவசமயச் சூழலில் ஆங்கிலக் கல்வி போதித்தல் என்னும் கல்விக் கருத்து உருவாக்கப்பட்டது. சைவத் தமிழ் மரபும், ஆங்கிலக் கல்வி முறைமையும் இருவித முரண்படாக் கல்விப் பண்பினை இணைத்து வளர்க்க முடியும்
என்னும் கோட்பாட்டினையும் நாவலர் வழங்கினார்.
கல்வி மக்களைச் சுபீட்சமாக வாழ வழிவகுப்பது ஆன்ம ஈடேற்றத்திற்குக் கருவியாவது என்னும் கல்விச்சிந்தனையை நாவலர் கொண்டிருந்தார். கல்வி ஆன்மிகவளர்ச்சிக்கும்; சமூக, பொருளதார விருத்திக்கும் கருவியாக விளங்கவேண்டும் என்னும் கருதுடையராக இருந்தார்.
மனிதரில் முருகியல் உணர்வும் வளர்ச்சிபெறும் போதே, ஆளுமை விருத்தி பெறுகிறது என்னும் கல்விச் சிந்தனையினால் உந்தப்பட்ட நாவலர் பெருமான் தாம்வகுத்த கலைத்திட்டத்திற் சிற்பம், ஒவியம், இசை, பண்ணிசை பேர்ன்ற கவின்கலைகளையும்
சேர்த்துக் கொண்டார்.
ஒருநாடு அரசியல் விடுதலை பெறுவதற்கு முன்னர்; சமய மொழி, கல்வி, கலாச்சார உணர்வு விடுதலை பெறவேண்டியதன்
அவசியத்தை வற்புறுத்தி, அதற்காக உழைத்தவர் நாவலர் -->

Page 10
இந்துசாதனம் 6.O
பெருமான். தமிழ்மொழி போதனா மொழியாக விளங்கவேண்டும் . தாய்மொழிமூலமே ஒருவர் தமது முழுமையை முட்டின்றி வெளிப்படுத்த முடியும் . மேலும் மொழி என்பது வெறுமேன கருத்து வெளிப்பாட்டுக் கருவிமாத்திரம் அன்று. மொழி என்பது அம்மொழி பேசுபவரின் நயக்கத்தக்க நாகரிகம், பண்பாடு, கலை, கலாச்சாரம், மரபு, பாரம்பரியம், ஆன்மிக விழுமியங்கள் ஆகியவற்றையும் எடுத்து விளம்புவது. ஒர் இனத்தின் தாய்மொழி, சமயம் என்பன சிதையின், அவ்வினமும் சிதைந்துவிடும். இத்தகைய கருத்துக்களையுடையராய்த் திகழ்ந்தவர் நாவலர் பெருமான்.
தாய்மொழிக்கல்வியை வலியுறுத்திய நாவலர், ஆங்கில மொழி கற்றலையும் வற்புறுத்தினார். சைவ ஆங்கிலப்பாடசாலை (1870)யைநிறுவியமை யிலிருந்து இது தெரிய வருகிறது. தாய்மொழிமூலம் ஆளுமை, பண்பாடு, ஆன்மிகம், மொழிப்பற்று சைவ நெறிப்பற்று என்பன வளருகின்றன. ஆங்கில மொழிமூலம் உலக அறிவு, விஞ்ஞான தொழில்நுட்ப அறிவு, உலகியல், நெறி வளம்பெறுகின்றன.
முறைசார் பாடசாலைக் கல்வியின் தேவையை உணர்த்திய நாவலர் பெருமான் முறைசாராக் கல்விமூலம் வளர்ந்தோர் களுக்கேற்ற கல்விநெறியினையும் வகுத்தார். ஆலயங்களிலும், மடங்களிலும் இத்தகைய கல்வியைப் பொதுமக்களுக்கு வழங்கவேண்டும் என்று சிந்தித்துச் செயற்பட்டார். சொற் பொழிவுகள், பிரசங்கங்கள், புராணபடனம், பண்ணிசை, கூட்டுப்பிராத்த்தனை என்பன மூலம், இத்தகைய கல்வி வழங்கப் பட்டது. வாழ்நாட்கல்வித் தத்துவமாகவும் இது மலர்ந்தது. இது பொருட்டு முன்னர் செய்யுள் வடிவத்திலிருந்த பெரியபுராணம், திருவிளையாடற்புராணம், கந்தபுராணம் என்பவற்றை வசனநடையில் எழுதி வெளியிட்டார். அச்சுயந்திர சாலையையும் நிறுவினார். பொதுமக்கள், ஆசிரியர்துணையின்றி அந்த வசனநூல்களை வாசித்து விளங்கிக் கொள்ளக்கூடிய முறையில் இருந்தது. வளந்தோர் கல்வி, வாழ்நாட்கல்வி, எல்லோருக்குங் கல்வி, பொதுமக்கள் கல்வி, தாய்மொழிக்கல்வி, சமயக்கல்வி, உலகியற்கல்வி, மொழிக்கல்வி, முருகியல்கல்வி போன்ற பலவற்றின் முக்கியத்துவத்தையும் நாவலர் அறிந்திருந்தார் என அறியமுடிகிறது. அதேவேளை, வாசிப்பதாலேயே, சுயகற்றல் இடம்பெறுகிறது என்பதையும், நூல்களை வாசிக்கும் பழக்கத்தை மக்களிடையே பரப்பவேண்டும் என்ற கொள்கையையும் கொண்டி
ருந்தார்.
பல பழந்தமிழ் நூல்களை அச்சேற்றியமை, பாடநூல்களை எழுதிவெளியிட்டமை, வசனநூல்களை இயற்றியமை என்பன நாவலரின் அந்த எண்ணத்தை நிறைவு செய்வதாக அமைந்
துள்ளன.
நாவலரின், முறைசார் பாடசாலைக் கல்வி, முறைசாரா வளர்ந்தோர் கல்விச் சிந்தனைகளும் செயற்பாடுகளும்,
பெரும்பான்மையும் சைவநெறி, சைவ ஒழுக்கம், தமிழ்ப் பண்பாடு,

S.2O a5 étof OI
சான்றாண்மை, நீதி நெறிமுறைகள் என்பவற்றை வளர்க்கும் கல்வி நெறிகளாகவே காணப்பட்டன. அறநெறி, விழுமியங்கள் சார்ந்த கல்வியையே வழங்க விழைந்தார்.
"கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு" என்ற தமிழ்மரபுக் கல்விச்சிந்தனைக்கேற்ப, ஒருவர் எனறுங் கற்றுக்கொண்டேயிருக்க வேண்டும் என்கிறார் நாவலர். "கல்வியை, இளமைதொட்டு மரணபரியந்தம் வரையும் விடாமற் கற்கவேண்டும் " என்பது நாவலர் கூற்று. திருவள்ளுவரின் " சாந்துணையுங்கல்வி" என்ற கூற்றுடன் நாவலரின் கருத்து
ஒப்பிட்டு நோக்குதற்குரியது.
தமிழ் மொழி, சைவசமயப் பண்பு, அறநெறி,சைவநிதி ஆகியவற்றை அடியொற்றிக் கல்விச் சழுதாயத்தை உருவாக்க நாவலர் முயன்றார். இக்கல்விச் சமுதாயத்தைத்தான், "ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர்" சமுதாயம் எனப் பழந்தமிழர் அழைத்தனர் போலும், நாவலர் கருத்துப்படி"கல்விக்குப் பயன் அறிவு:அறிவுக்குப்பயன் ஒழுக்கம்" ஆகும். கற்றபடி ஒழுகவும் வேண்டும் என்பது நாவலர் கருத்து.
" கல்வியில்லாதவர் முருக்கம் பூவுக்குச் சமமாவர்
O ஆதலினால், யாவரும் கல்வியைச் சிறிதும் அவமதியாது வருந்திக் கற்றல் வேண்டும். சிறிது கற்ற மாத்திரத்தால் அமையாது மேன்மேலும் கற்றல் வேண்டும்"
-(நாவலர் பாலபாடம் 4)
இதிலிருந்து கல்வி எல்லோரும் கற்கவேண்டும் என்னும் உயரிய கொள்கையுடையவராய் நாவலர் இருந்தார், என்பது புலனாகின்றது.
"எல்லோருக்கும் கல்வி" என்னும் கோட்பாடு நடைமுறைச் சாத்தியமுள்ளதாக அமையவேண்டுமாகில். கல்வி இலவசமாக அளிக்கப்படுதல் அவசியமாகும் . கல்வியிலே மிகக் விருப்பமும் இடையறா முயற்சியுமுள்ள பிள்ளைகளுள்ளே வறிய பிள்ளை களுக்கு அன்னமும் வஸ்திரமும் புத்தகமும் கொடுத்தல்வேண்டும் என்கிறார் நாவலர். இங்கு தற்போதைய புலமைப்பரிசிலை
ஒத்தகருத்து வெளிப்படாதலை அவதானிக்கலாம்.
ஆசிரியர் இலக்கணம்
கல்விச் சிந்தனைகளை வழங்கிய நாவலர், ஆசிரியர் களுக்கும் வரைவிலக்கணம் அமைத்தார். ஆசிரியர்களே கல்வி புகட்டுபவர்களாக அமைவதால், அவர்கள் நடை, உடை, பாவனை, ஒழுக்கம் என்பவற்றில் முன்மாதிரியாக விளங்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். "சரீர சுகத்துக்கு ஏதுவாகிய அன்னவஸ்திரம் முதலியவற்றையும் , ஆன்மசுகத்துக்கேதுவாகிய ஞானத்தையும் கொடுப்பது வித்தையேயாதலின், எல்லாத்தானங் களிலும் வித்தியாதானமே சிறந்தது", என்பது நாவலர் முடிபு.
"கல்வி என்பது விளக்கேற்றல்" என்று நாவலர் கூறுவார். கல்வி எனும் விளக்கிலிருந்து.பல கல்வி விளக்குகள் ஏற்றப்படவேண்டும்.
------>

Page 11
இந்துசாதனம் 6.
ஆசிரியர்கள் தாம் கற்றிருந்தபடி நல்வழியில் ஒழுகி, மாண்புள்ள மாணவர்களுக்குக் கல்வியைச் சிந்தனையோடு கற்பித்து, அவர் களுக்கு உறுதியையும் கற்பிக்க வேண்டும் என்று கூறி நிற்பர். உறுதி என்பதும் மனத்திலும் செயலிலும் உறுதிகொளல். " ஆசிரியர் தாங்கற்ற கல்வியை நன்மாணக்கர்களுக்குக் கருணையோடு கற்பியாதவர் காட்டிலே நச்சுமரமாவர்." (நான்காம்
பாலபாடம்)
நாவலரின் ஐந்தாண்டுக் கல்வித்திட்டம்
நாவலர் பெருமானே இவ்வளவில் திருப்தியடைந்தாரில்லை. கற்று வல்ல உபாத்தியாயர்களையும், சைவப் பிரசாரகர்களையும் சிறப்பாயதொரு முறையில் உற்பத்தி செய்து, திட்டமான ஒழுங்கு முறையில் மோலாய நிலைத்த பயனை வருவிக்க முயன்றார். அம்முயற்சியே நாவலர் கருத்தகத்தே குடிகொண்டிருந்த ஐந்தாண்டுத்திட்டம். திட்ட விளக்கம்பின்வருமாறு.
வருடந்தோறும் இருபதின்மர் வளர்ந்த மாணவர் - ஒழுக்க சீலமும், விவேகமும் ஆரோக்கியமும் உடையவர் - தேர்ந்தெடுக்கப்பட்டு ஐந்து வருடம் பயிற்சி பெறுவர். ஐந்தாம் வருடத்தில் நூறு மாணவர்கள் கொண்ட ஐந்து வகுப்புக்கள்
இறைவனுக்கு அபிஷேகிக்கப்படும் ப பஞ்சாமிருதம் இருவகைப்படும். ஒன்று இரச பஞ் கூட்டிச் செய்யப்படுவது.இரண்டாவது பழ பஞ்ச் (மற்றும் பாவகைகளும் உதாரணம்: பேரீச்சம்ப பஞ்சாமிர்தமும் கூட்டித் தயாரிக்கப்படுவதா பெற்றுள்ளதில் இருந்தே நோயற்ற பெருவா புலனாகிறதல்லவா? இங்கு சேர்க்கப்படும் நெய், கெட்டுப்போகாமலும் பாதுகாக்கின்றன. மஞ் என்பவற்றில் உயிர்ச்சத்து A, C என்பன அதிகள6 நீக்குகின்றன. பலாப்பழம் கபம், பித்தம் சம்பர் கூறப்பட்டாலும் இதில் சேர்ந்துள்ள தேனான வாய்ந்தது. எனவேதான் முக்காலத்தில் உண்டார்கள்போலும். பஞ்சாமிருதமானது
அருமருந்தாகவும் விளங்குகின்றது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6.2O கர ஆணி 01
இருக்கும் . ஐந்தாம் வருட முடிவில் இருபதின்மர் பயிற்சி முடிந்து வெளியேற,புதியவர்கள் இருபதின்மர் முதலாம் வருட வகுப்பிற் சேர்க்கப்படுவர். பயிற்சி முடிந்த இருபதின்மரில் ஒரு பகுதியார் கற்று வல்ல உபாத்தியாயராயிருப்பர். ஏைையோர் சைவப் பிரசாரகராயிருப்பர். முக்கிய ஸ்தலந்தோறும் சைவப்பிரசாரகர்கள் நியமனம்பெற்று, கோயிற் பூசை முதலிய கிரமங்களைச் சாத்திர முறைப்படி நடத்துவதற்குப் பூசகர்களுக்கும், அதிகாரிகளுக்கும் , உசாத்துணைவராயும், வழிகாட்டியாயும் இருப்பர். பெற்றோருடன் கலந்து பிள்ளைகள் உரிய காலத்தில் சமய தீட்சை பெற்றுச் சமயசார முடையவர்களாதற்கு வழிசெய்வர். பயிற்சிக் காலத்தும், பின்னும் முட்டுப்பாடின்றி இருந்தற்குப் பொருளாதாரத்திட்டம் புறம்பாக உண்டு.
கற்றுவல்ல உபாத்தியாயர்கள் ஊர்தோறும் சைவப்பாட சாலைகள் தாபித்துச் சமய நூல்களையும், கருவி நூல்களையும் கற்பித்து, சைவப்பிரசாரகரோடும், பெற்றோரோடும் இணைந்து
நடப்பர்.
கற்றுவல்ல ஆசிரியர்களுக்குப் பொருள் வருவாய்க்கு நாவவலர் வழிசெய்திருக்கின்றார். 人
நசாமிருதம்
ஞ்சாமிருதம் பிரசாதமாக விநியோகிக்கப்படும். நசாமிருதம். பால், தயிர், நெய், தேன், சர்க்கரை Fாமிருதம்: வாழைப்பழம், பலாப்பழம், மாம்பழம், ழம், விளாம்பழம்) என்பனவும் மேற்படி இரச கும். அமிர்தம் என்ற சொல் இங்கு இடம் ழ்விற்கு உதவும் தன்மைவாய்ந்தது என்பது தேன் என்பன அதில் சேர்ந்து பழவகைகளைக் சள்நிறக் கனிகளான மாம்பழம், பலாப்பழம் வில் உள்ளன. மலச்சிக்கலையும் இப்பழவகைகள் தமான நோய்களை ஏற்படுத்தவல்லது என்று து கப பித்த தோஷங்களை முறிக்கும் தன்மை பலாச்சுளைகளை தேனில் ஊறவைத்து
போசாக்கு மிக்கதாகவும் நோய் நீக்கும்
-சித்தமருத்துவ கலாநிதி. சே.சிவசண்முகராஜா
షా دحجستجیگسار(تگ) بدحجاجیکسلا s a r - 2؟

Page 12
இந்துசாதனம் 6.O
திருச்சிற்றம்பலம் வாழ்க அந்தணர் வானவரானினம் வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக ஆழ்க தீயதெல்லாமரனாமமே ஆழ்க வையக முந்துயர் தீர்கவே. திருச்சிற்றம்பலம் இந்து சாதனம் Hindu Organ
e-mail: editorGhindu organ.com
ay GB) obofi Lf5" robó 2 (r6.ó6.2ór)
ன்? ஏன அளவாலும் அடர்த்தியாலும் ஆழமான சமுத்திரம் போன்று விளங்கும் இந்துசமயத்தத்துவங்களை -
மிகச் சாதாரண மக்களும் தெளிவாக விளங்கிக் கொண்டு அந்தத் தத்துவங்கள் குறிக்கும் உன்னதமான நோக்கங்களுக்கு இசைவாகத்தம் வாழ்க்கையை அமைத்தக் கொண்டு -
பேரளவில் மட்டும் இந்துக்களாக வாழும்பேதைமையை நீக்கி
நடைமுறையிலும் நல்ல இந்து சமயிகளாக வாழ வேண்டிய கடப்பாட்டை வலியுறுத்தி
அப்படி வாழ்வதற்கு அவர்களைத்துண்டும் வகையில் - தத்துவச் சிந்தனைகள் - திருமறை, திருமுறை சம்பந்தமான விபரங்கள் - விளக்கங்கள் - சமயச் சான்றோர்களின் வாழ்க்கைச் சாதனைகள் - ஆலய வரலாறுகள்- கிரியை விளக்கங்கள் - இந்து சமய அற்புதங்கள் - போன்றவற்றை
சமீப காலமாக மித அதிக அளவிலே, தம்மகத்தே கொண்டு வெளியாகும் "இந்து சாதனம்" இதழ்களில்
இந்தியத் துணைக் கண்டத்தில் - சமயச் சார்பின் மையைத் தன் அரசியல் யாப்பிலே அசைக்க முடியாத அளவுக்கு இறுக்கமான ஓர் அம்சமாகக் கொண்டுள்ள இந்தியக்துணைக் கண்டத்தில் - நடைபெறும் சில அரசியல் நிகழ்ச்சிகள் பற்றிய கருத்துக்கள் இடம்பெறுவது
எந்த அளவுக்குத் தேவையானது? - எந்த அளவுக்குப் பொருத்த LOTGOT?
கேள்விகளை எழுப்புவோர் தொகை சிறியதாக இருந்தாலும்
பதில்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் கொண்டோர் பலராகிப்பரந்திருப்பதை நம்மால் ஊகிக்க முடிகின்றது; உணர்ந்து கொள்ளவும் முடிகின்றது.
எந்த ஒரு சமயத்துடனும் தன்னை இனங்காட்டிக் கொள்ளாமல் எல்லாச் சமயங்களையும் சமமாக ஓர் அரசு மதித்துச் செயற்படுவதும்
எந்த ஒரு சமயத்தினருக்கும் பிரத்தியேகமான நன்மை களையோ - பிரத்தியேகமான தீமைகளையோ அரசு செய்யாமலிருப்பதுமே
 

62O கர ஆணி O!
இந்திய அரசியல் யாப்பிலுள்ள ' சமயச்சார்பின்மை" என்பதன் சரியான விளக்கங்கள் என்பதையும் சமயங்களை எதிர்பதையோ ஒரேயடியாகப் புறக்கணிப்பதையோ தன் உள்ளார்ந்த நோக்கமாக அது கொண்டிருக்கவில்லை என்பதையும் சிந்தித்தால்
வாழ்வாங்கு வாழ்வதற்கு வழிகாட்டுபவை ororů பெரும்பாலான சமயங்கள் விதந்துரைக்கும் அன்பு, அறம், உண்மை, நேர்மை, பரந்த மனப்பான்மை, தியாகசிந்தை, போன்ற விழுமியங்களை - இந்து சமயம் சற்று அதிகமாகவே வவியுறுத்துகின்றது என்பதற்காக - அரசியலுக்குத் தேவை யற்றவை எனக் கருதி ஒதுக்குவதுதான் சமயச்சார்பின்மை எனக் கருதுவது தவறென்பதும் -
அந்த விழுமியங்களின் அடிப்படையில் அரசியல் செயற்பாடுகளைத் திட்டமிடுவதும் நடைமுறைப்படுத்துவதும் அவற்றை அறம் சார்ந்த அரசியல் என்ற உன்னதமான நிலைக்கு
rằưsnh –
என்பதும் எளிதிற் புலானகும் - நாட்டுமக்கள் அனைவரையும் ஒரே மக்கட்தொகுப்பாகக் கருதி . அவர்களுடைய அமைதியான , மகிழ்ச்சியான வாழ்க்கையை ஆக்கபூர்வமான முன்னேற்றத்தை- உறுதிப்படுத்தும்நோக்கிலே சில திட்டங்களைத் தீட்டி சட்டங்களை உருவாக்கி அவற்றைச் சரியாக நடைமுறைப்படுத்துவதை அரசு தன் கடமையாகச் செய்து கொண்டிருக்க
மக்கள் ஒவ்வொருவரையும் H. g666IITg5 6dBooLLI மனத்தையும் - தனித்தனியாக அணுகி - தன் போதனைகளாலும் சோதனைகளாலும் அந்த மனத்தை நல்வழிக்கு InIIbb அமைதியையும் மகிழ்ச்சியையும் உருவாக்கும் பணியில் ஈடுபசின்றதுசமயம் -
ஆகவே - மக்களாட்சி நடைபெறுகின்ற ஒருநாட்டில்
" மக்களின் நல்வாழ்வு " என்ற குறிக்கோளை அடைவதற்கு வெவ்வேறு வழிமுறைகளை கையாளும் அரசு சமயம் ஆகிய இரண்டும் - ஒன்றிலுள்ள நல்ல அம்சங்களை மற்றையது உள்வாங்கிக் கொள்ளுதல் வரவேற்கக் கூடியதும் இன்றியமை யாததுமாகும். என்பதையும் -
நல்லரசே வல்லரசு, என்ற உன்னத நிலையை அடையும் நோக்குடன் மஹாத்மா காந்தி ராஜாஜி போன்ற மகத்தான தைைலவர்கள் உருவாக்கிய இந்திய ஆட்சிப் பண்பின் அடித்தளமாகத் தேசபக்தியும் தெய்யபக்தியும் உறுதியான முறையில் இணைந்தும் பிணைந்துமிருக்கின்றனஎன்பதையும் -
இன்றைய இந்திய ஆட்சியாளர்கள் உணராமலிருப்பது நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய சாபமாகிவிட்டது
எனினும் அந்த உண்மைகளை உணர்ந்து அவற்றின் அடிப்படையில் தம் தேசத்தை வழிநடத்த வேண்டும் என்ற நோக்கங் கொண்ட சிலராவது இருக்கின்றார்கள் என்பதற்கு அன்னாஹஸாரே பேன்றவர்கள் எடுத்துக் காட்டாகத் திகழ்வதைச் சுட்டிக்காட்டி வரவேற்கும் நோக்கிலும் -
சக்தி வாய்ந்த அணு ஆயுதங்களைக் கொண்ட மிகப் பெரிய வல்லரசாக இந்தியாவை வளர்க்கும் முனைப்பில் தன் பாரம்பரிய விழுமியங்களை - ஆன்மீகப் பரிமாணங்களை இந்தியா புறக்கணிப்பதை-கைகழுவிவிடுவதை
மேற் போந்தவர்களின் நடவடிக்கைகள் ஓரளவாவது கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கையை அழுத்தும் நோக்கிலும் -
1靴
"இந்து சாதனம் " வெளியிட்டும் கருத்துக்கள் அதனுடைய நோக்கங்களுக்கும் செயற்பாடுகளுக்கும் 396onoroorooooru என்பதை அந்தக் கருத்துக்களைப் பற்றி ஆறுதலாக - ஆழமாகச் சிந்தித்துப்பார்ப்பவர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகிறோம். 人

Page 13
இந்துசாதனம் 6.O.(
ܛܠܠ_K
4* நாவலர் சரிதமோது
கவிஞர் திரு. இ. இர
(இந்துசாதனம் - 2011 வைகாசினி
509.மலமளிவாதை நீங்கு மாஞானிமாரும்பூர்வ
மலமவை தாக்கா வாறும் மாசிவானந்தம் மேன்மேல் நிலமதில் வளர வேண்டிநிமலன்பல் மேனியோடு உலவு மெய்யார் வேடம் உவப்புடன் தொழுல் நன்றென்றார்
50. நித்திரை செய்வார் கையில் நிறைபொருளவருங்காணா
தித்திரைநீங்கல்போல இகசிவஞானிமார்க்கும் முத்தரை கிரியை தாமே முழுவதும் நீங்குமல்லால் அத்தரையவர்கள் தாமே அவைகளைத் தவிர்ப்பரல்லார்
51. பிரபுவின் பணிகளுள்ளே பிரியவுட்தொழில்கள் செய்வார்
பரவிடுபுறத்தொழிற்கும் பாத்(தி)யதை யுடையராவார் புரபுறப் பணிகட்குள்ளார் உட்தொழிற் குதவார் போல அரனற மார்க்கமாக அமைபணி நான்கிலுள்ளும்
512. மேற்பணி செய்வாரெல்லாம் கீழ்ப்பணிக்குரியராவார்
மேற்பணிக்குரியராகார் கீழ்ப்பணிசெய்வாரெல்லாம் போற்றரு கிரியை யாகப் புலகரியவைகளுள்ளே ஆற்றலுள்ஞானி மார்க்கம் நான்கினுக்குரியராவார்.
513. நலசிவஞான சித்தியாரதிற் புகன்ற வாறே
உலவிடு யோகி யாவர் உரியவர் மூன்றி னுக்கும் புலமையுள் கிரியா வாதி போற்றுதற்குரிய (இ)ரண்டும் நிலமதிற் சரியை கொள்வார் நிகழ்த்துவர் அஃது ஒன்றே.
514 சதமணிக்கோவை கூற்றாய் சமயசாரியார்கள்
சிதமுள்ள தலங்கள் சென்றே ஞானத்திற் சரியையான பதமவை வணங்கிப் பாடல் பாடிச்சிவாநபூதி வதிபெரு வாழ்வு கண்டார் வழிபடல் கடனா மென்றே.
515. வகுத்துள பாதம் நான்கில் வழிபடுமடியரெல்லாம்
அகத்தெழு கருத்தினாலே அடிதொழுல் மாறும் போது முகத்தெழு கருணை வாரும் முறைகளும் வேறு என்றே இகத்தவ ரறியுமாறே இதன் பொருள் சிறிது சொல்வாம்.
516. பகுத்ததையறிதலில்லா பார்லிங்க மேனிதன்னை
சகத்தினிற் சிவமாமென்றே சரியையர் வழிபடுங்கால் நெகத்தகு வருளையெம்மான் நேரினில் வந்திடாதும் பகுத்தெதிர் வெளிப்படாதும் பரிவுடனருளை யீவார்.
57. அருவவப் பொருளதாகும் அரனுமீசானம் போன்ற
பெருமையுள் மந்(தி) ரஞ் சேர்ந்தே பாரினிற் கொண்டார்லிங்கத் திருவுருவெனத் தெளிந்தே மந்திரநியாசந்தாலே அருவுருவதனையேற்றி அடைவர் வாழ்வை யென்றார்.
518. இருதய மெங்கும் காணும் இறையவன் யோகிமாரின் திருவுரு மீதும் நின்றே பூசை கொண்டருள் வாரென்றே தருவெனும் யோகிமார்கள் சாத்(தி) யமந்திரங்களாலே அருநநல்மேனி போற்றி அருளினைப் பெறுவர் தேரீர்.
59. இவ்விருதிறத்தினார்க்கும் இறையவன் கடைந்த போது
அவ்வரையிருந்து தோன்றும் அக்கினிப் பிளம்பு போலும்
 

S2O aspr eaf Ol
ம் நற்றமிழ் மாலை 2. ாசையா குகதாசன் s、ペ རྫོང་།
18 ஆம் பக்கத்தின் தொடர்ச்சி.)
கைமுலை கறந்த பால் போல் கருதுமந் திரங்கள் ஒத அவ்வர் விரும்புமேனியில்லருள் செய்வாரென்றார்.
520.முத்தியை யதவுநாதன் முறுவலுள்முகத்தனாகி
மெய்த்தவ ஞானிமார்கள் முதற்திறத்தார்கள் போல உய்த்தெழுவழிபாடற்ற ஒரிடம் குறித்திடாதே யகத்துள வன்பாற் போற்றக் கருணையனாகிநின்றே.
521. கன்றினை நினைந்த ஆதன்களிபெருங்காதலாலே
குன்றினைநிகர்த்த தான கோமுலை சொரிபால் போல அன்னவர் கருணை கூர்வந்தவ் அன்பதாமாகியன்பர் முன்னுறநாடி வந்தே முடிவில வரத்தை மீவான்.
522.பூரணரவர்கள் வாழும் புவனமும் பொதுவா மன்றே
பாருணர்பூதிமான்கள் பாரிலுள்பதிகள் சென்றே காரணராகிநின்றார் கழலிணை தொழுதரென்றால் ஒருணர்வில்லா நாங்கள் உரை செயவுண்டோவென்றார்.
523. பற்றிலராகிப் பாருள் சிலர்பரஞானமாகும்
நற்பவனியும் ஞான அநுபவமடைந்திடாதும் பெற்றிடுஅபரஞான சாத்திர ஞானமெல்லாம் சற்குருகுலத்திருந்தே சரிவரப்பெற்றிடாதும்
524.விரிவார் சரியையோடு கிரியைகள் முறைமை யேற்றுப் புரிவார்தமையிகழ்ந்தும் புன்நெறியதனிற் சென்றே திரிபேர் ஞானியாங்கள் தேருங்களெனப்பு கல்வார் எரிவாய்நகரத்திற்கே இரையாகுகின்றாரென்றார்
525. தக்கஞானத்தின் முத்திநெறியொடுஞான சார்யம்
மிக்கவாசாரியாரிம் மேதினியிலையதாலே சொக்கவே பணிகளிந்த சுந்தரக் குரவர் மார்கள் தக்கவாசாரியாருள் தரணியிலுயர்ந்தோரென்றார்.
526.மையணி குழலிமார்கள் மையலிற் தமைப்புகழ்ந்தே
செய்யுரையவையில் மேலாம் சேல்விழி கணிகை மாயம் கைவருமயக்க முறும் கனியிதழ் வாயின் வாக்கால் மெய்யது புளகமாகிமேனிசி லிர்த்தாற் போல
527. சிவணவன் தலைப்பு கழ்ந்தேதானுரை வேதத்தினிதே
தவரவரன்பராகு சமய ஆசாரியார்கள் அவரது வாய்மலர்ந்தே யருளிடு திருமுறைமேல் தவனமும் விருப்பு மாயேயர்ச்சனை பாட்டேயென்றார்.
528.சொற்றமிழ் பாடுமென்றே சுந்தரர்க் குரைசெய் ஈசன்
நற்றவப்பதிகள் நாடிநவதிருப்பதிகம் பாடி அற்புதமாற்று மாறே அவரது பாடல் பெற்றே
உற்றிடுதலங்கள் தானே உத்தமோத்தமகு மாகும்.
529.ஆதலிற் சைவ மார்க்கம் அநுட்டிக்கும் நாமெல்லோரும் ஒதிடுவரம்புள் நின்றே உளசிவஸ்தலங்களெல்லாம் காதலராய்ப்பணிந்தும் கீலமானவைபுதுக்கி சீதகும் பாபிஷேகம் செய்திடும் புண்(ணி)ய மென்றார்.
(... نقاره) مل)

Page 14
இந்துசாதனம் 6.O.
மெய்யுரை
suiloooo mas opofonii
முநீலழுநீகாசிவாசி முத்துக்குமாரசுவாமித்தம்பிரான்
இ ந்தத் தலைப்பிலே எழுதப்பெறும் செய்திகளுக்குச் சில
அடிப்படைகளையும் எழுதித் தொடர்வது பொருந்தியதாக இருக்குமென்று எண்ணுகின்றோம்.
முதலாவதாகத் தெரிந்துகொள்ள வேண்டியது தன் உடைமை
-உரிமை; பொதுஉடைமை-உரிமை.
தன் உடைமையை, தான் எப்படி வேண்டுமானாலும் கையாளலாம் என்றாலும், அதிலும் பிறர் நலம் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மகிழ்வுந்து வைத்துக்கொண்டு நாம் இயக்கலாம். பிறர்மீது மோதாமல், பேருந்து பொதுவுடைமை - அதை நான் இயக்க வேண்டும், எனக்கும் உரிமை உண்டு என்பது
தவறல்லவா?
அதுபோலத்தான் தன் இடத்தில் தனக்காகச் செய்யும் பூசை ஆன்மார்த்தம்.
திருக்கோயிலில் நடைபெறும் பூசை பரார்த்தம் - அது பொதுநலம் - உலக நலனுக்காகச் செய்யப்பெறுவது என்பதை
உணர்ந்து செயற்பட வேண்டும்.
திருமுறைகளில் ஆன்மார்த்த, பரார்த்த (திருக்கோயில்) பூசை பற்றிய குறிப்புக்கள் உண்டு. அதை உணரவும் வேண்டும். ஒன்றை மற்றொன்றாக எண்ணிக் குழப்பாமல்- குழம்பாமலும் இருக்க
வேண்டும்.
ஆன்மார்த்தத்தில் அகப்பூசை, புறப்பூசைக் குறிப்புக்களும் உண்டு. தன்வினை பிறவினைக் குறிப்புக்களும் உண்டு.
பாடல்களில் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள், வினை முடிபு என்று எதையும் சிந்தியாமல் மனம்போன போக்கிலெல்லாம்
எழுதும் நிலைகண்டு நெஞ்சுபொறுக்குதில்லை.
திருஞானசம்பந்தப் பெருமான் அருளியுள்ள தேவாரத்தில், "தீ வளர்க்கும் நீண்ட கையை உடைய அந்தணர்கள், உன்னை நினையும் மனத்தவராயிருப்பதால் அவர்கள் செய்யும் அறுவகைத் தொழில்களில் எத்தொழிலில் தீவினை ஏற்பட்டாலும் அதற்குப் பகையாயிருந்து தீர்ப்பவன் நீ" என்று கூறியுள்ளார். அப்பாடல் அடிகள் வருமாறு:
"அனற்படுதடைக்கையவர் எத்தொழில ரேனும்
நினைப்புடை மனத்தவர் வினைப் பகையும் நீயே"
இப்பாடலில் எழுவாய் அனற்படு தடக்கையர் என்ற சொல்
1.

S2O கர ஆணி 01
"வேதநெறி தழைத்தோங்க மிகு சைவத் துறை விளங்க" என்ற தலைப்பிற் கயிலை மகா முனிவர் பூரீலபூரீ காசிவாசி முத்துக்குமார சுவாமித் தம்பிரரின் அவர்கள் எழுதிய கருத்துக்களை 2011 தை இதழ் தொடக்கம் 2011 வைகாசி இதழ் வரை வெளியிட்டோம். "மெய்யுரை" என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட கருத்துக்களை இந்த இதழிற் காணலாம்.
ஆகும். இதனை வழிவழியாய் உரையாசிரியர்கள் பின்பற்றி யுள்ளனர். எத்தொழிலரேனும் என்பதை எழுவாயாகக் கொள்ளல்
தவறான முடிபுக்குக் கொண்டுசென்றுவிடும்.
அடுத்து,மொழி-வேதாகமம்பற்றியது.
பிராந்திய மொழி, தேசமொழி, உலக மொழி என்று மும்மொழி உலகியலில் உள்ளது. சைவத்தில் உலக நலன் கருதிச் செய்யும் திருக்கோயில் வழிபாட்டில் உலகெங்கும் ஒரு மொழி பயன்பாட்டில் உள்ளது. அது யாருக்கும் தாய்மொழியாக, பேசும் மொழியாக இல்லை. இறைவனே அருளிய இறைமொழி. அதில் மொழித்து வேஷம் எழத் தேவையில்லை. "மேன்மைகொள் சைவ நீதி
விளங்குக உலகமெல்லாம்" என்பதுவே நமதுகுறிக்கோள்.
வேத ஆகமங்களை ஏற்றுக்கொண்டதே சித்தாந்த சைவம். திருநெறிய தமிழ்நெறி.
திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் பாடத் தொடங்கிய
சேக்கிழார் பெருமானின் முதற் பாடல்.
"வேத நெறிதழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப் பூதபரம்பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர் பாதமலர்தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்" என்பது,
'திருஞானசம்பந்தப் பெருமான் அவதாரத்தால், அவர் அருளிய திருநெறிய தமிழால், வேதாகமத்தை வெறுத்த சமண, சாக்கியர்தம் அயல் வழக்கு அழிந்தொழிந்தது. இன்னும் வேதாகம நெறியை அயல்வழக்கு என்பதுபோல் எழுதுவதும், பேசுவதும் திருநெறிய தமிழ் திருமுறைநெறியாகாது?
வேதங்கள் சிவபெருமான் அருளியவை. சிவபெருமான் திருநடனத்தைப்பற்றிக் கூறும்போது திருமூலர்,
"வேதங்க ளாட மிகுவாகமமாட" என்றும், "நாதத்தினிலாடி நாற்பதத்தேயாடி வேதத்திலாடித் தழலந்த மீதாடி" என்றும்,
பாடியுள்ளார். சிவபெருமான் வேதத்தையே கோவணமாகச் சாத்தியவர் அல்லரோ?
"தஞ்ச மாமறைக் கோவண ஆடை" தரித்தவராகச்
சிவபெருமானை அமர்நீதி நாயனார் புராணத்தில் நாம்
காண்கின்றோம்.
-->

Page 15
இந்துசாதனம் 6.O
வேதத்திற் பயன்தான் சைவம் என்பதனை சண்டேசுர நாயனார் புராணத்தில்,
"விண்ணின் பயனாம் பொழி மழையும்
வேதப் பயனாம் சைவமும் போல்"
என்று சேக்கிழார் பெருமான் அருளியுள்ளார்.
சிவபெருமானின் சிலம்பாகவும் வேதங்கள் உள்ளன.
"வையகம் பொலிய மறைச்சிலம்பு ஆர்ப்ப" சிவபெருமான் வந்ததனைத் தடுத்தாட்கொண்ட
புராணத்தில் பார்க்கின்றோம்.
திருமலைச் சிறப்பை உரைக்க வந்த சேக்கிழார் பெருமான்,
"மேன்மை தான்மறை நாதமும் விஞ்சையர் ஞான வீணையின் ஒசையும் கார்எதிர் தானமாக்கள் முழக்கமும் தாவில்சீர் வானதுந்துபிஆர்ப்பவும் மருங்கெலாம்"
ஒலித்ததாகக் கூறியுள்ளார்.
திருநாட்டுச் சிறப்பைக் கூறும்போதும், "யூபவேள்விப்பெரும் பெயர்ச்சாலை தோறும்
பிறங்கிய புகை"
நிரம்பியதைக் குறிப்பிட்டுள்ளார். அறவேள்வியே திருநாட்டுச் சிறப்புக்களுக்குக் காரணமாக இருந்துள்ளது.
திருநகரச் சிறப்பைக் கூறும்போதும், "வேத ஒசையும் வீணையின் ஒசையும் சோதிவானவர் தோத்திர ஓசையும்"
ஒலித்ததாகக் கூறியுள்ளார். தில்லைவாழ்அந்தணர் புராணத்தில் "வருமுறை எரிமூன்று ஒம்பி
மன்உயிர் அருளால் மல்கத் தருமமே பொருளாக் கொண்டு
தத்துவ நெறியிற் செல்லும் அருமறை நான்கினோடு ஆறு
அங்கமும் பயின்று வல்லார்"
என்றுகூறி, உலக நலனுக்காக வேள்வி இயற்றப்படுவதை விளக்கியுள்ளார். திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணத் திலும் காஞ்சிநகர்ச்சிறப்பினைப்பின்வருமாறு விவரிக்கிறார்.
"அருமறை அந்தணர் மன்னும் இருக்கை ஆன
ஆகுதியின் புகை அடுத்த அம்பொன் மாடப் பெருமறுகு தொறும் வேள்விச்சாலை எங்கும்
பெறும் அவிப்பாகம் கொடுக்கும் பெற்றிமேலோர் வருமுறைமை அழைக்கவிடு மந்திரம் எம்மருங்கும்" என்று வரும் பாடலடிகளால் நாடு, நகரம் ஆகியவற்றின் சிறப்புக்கு மறையவர் நடத்தும் வேள்வியும், அவர்கள் ஒதும்
வேதமும் காரணம் என்பதை அறியலாம்.
திருஞானசம்பந்தப் பெருமான் திருவாவடுதுறையில் தம் தந்தையார் வேள்வி செய்வதனுக்கு ஆகிய காலம் வந்து

62O கர ஆணி 01
அணைவுற்றபோது, இறைவனிடம் விண்ணப்பித்து பொற்கிழி
பெற்றார். அதனைத்தம் தந்தையாரிடம் கொடுத்தபோது, "ஆதிமாமறை விதியினால் ஆறுசூழ் வேணி நாத னாரை முன் ஆகவே புரியும் நல்வேள்வி தீது நீங்க நீர் செய்யவும் திருக்கழுமலத்து வேத வேதியர் அனைவரும் செய்யவும் மிகுமால்"
என்று பாடியிருப்பதைப் பார்க்கும்போது, வேத வேள்வியின்
தன்மையை நன்கு உணரலாம்.
திருத்தொண்டர் புராணத்தில் 63 நாயன்மாருள் அந்தணர்கள் மட்டுமே வேள்வி செய்திருப்பதைக் காண்கிறோம். அந்தணர் அல்லாத எந்த நாயன்மாரும் வேள்வி செய்ததாக
வரலாறு இல்லை.
சமுதாயம் நலம்பெற இயற்றப்படும் வேள்வியின் பலன் கிடைக்கவேண்டுமானால் உரிய முறையில் உரியவர்களால் அது
செய்யப்படவேண்டும்.
"ஆசறமறைப் புலவர் ஆசிரியர் காட்டும் மாசறு சடங்கின்வழி மந்திர முதாத்த ஒசையனு தாத்தசொரி தந்தழுவ வோதி வாசவ னிருக்கையிலிருந்தெரி வளர்ப்பான்"
(உதாத்தம் - எடுத்தல், அனுதாத்தம் - படுத்தல். சொரிதம் - நலிதல்.வாசவனிருக்கை-கீழ்த்திசை)
என்பது திருவிளையாடற் புராணம்.
"இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்"
என்று திருவள்ளுவரும் நவின்றிருக்கின்றார்.
கலியை வாராமல் விரட்டுவது வேள்விப்புகையே என்பதனை, "கற்றாங்கெரியோப்பிக்கலியை வாராமே செற்றார் வாழ்தில்லைச் சிற்றம்பலம்மேய முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே பற்றாநின்றாரைப் பற்றா பாவமே"
என்ற தேவாரப்பாடல் மூலம் அறிகிறோம்.
"மந்திரம் நான்மறையாகிவானவர் சிந்தையுள் நின்றவர் தம்மையாள்வன செந்தழல் ஒம்பிய செம்மை வேதியர்க் கந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே"
என்ற தேவாரப் பாடல், நான்மறை ஒதும் வேதியர் சிறப்பை எடுத்துரைக்கிறது.
வேள்வி- ஓமம்:
திருநாவுக்கரசர் தேவாரச் செய்தியைக் காண்போம். விருப்பம் என்பதற்குக் காமம் என்ற சொல்லைப் பயன்படுத்துவது உண்டு. காமியம் என்பது மனம்போன போக்கில் விரும்பும் செயல்களையே பெரும்பாலுமாகக் குறிக்கும். சுயநல நோக்குடன், பணத்தாசையுடன், புகழாசையுடன், வீண் வீறாப்புக்காகச் செய்யும்
செயல்கள் காமியமே ஆகும்.
-->

Page 16
இந்துசாதனம் 6.O.
"இஷ்ட காம்ய சித்திரஸ்து" என்று சங்கல்ப வசனத்தில் சொல்லும்போது காமியம் என்பது நல்விருப்பத்தைக் குறிக்கும். நியாயமான, விதிப்படியான விருப்பங்கள் வெற்றிபெற வேண்டியவையே ஆகும். மோட்சவேட்கைகூட ஒரு நல்ல விருப்பமே - காம்யமே! ஆனால் பொதுவாகக் "காமியம் செய்து காலங் கழியாதே", "காமியத் தழுந்தி யிளையாதே" என்றெல்லாம் அறிவுரைகளாகச் சொல்லும்போது, அங்கே காமியம் என்பது நல் விருப்பங்களைக் குறிக்காது. வீணான விருப்பங்களால் பயனற்ற செயல்கள் செய்து வெட்டியாகப் பொழுது போக்காதே, வீணான ஆசைகளில் அழுந்தி உழலாதே என்பன அவ் அறிவுரைகளின் பொருளாகும்.
காமியம் செய்வது ஒரு பிழை. காலம் கழித்தலாகிய "பொழுது போக்கிப் புறக்கணித்தல்" ஒரு பிழை. இவ்விரு பிழைகளும் மனிதனுக்கு ஈடேற்றம் வாராவண்ணம் தடுத்துவிடும்.
நற்காரியம், சத்காரியங்களாகிய உயர் காமியங்கள் தடையின்றி நிறைவேற வேண்டுமானால், என்னென்ன செய்யலாம்? - என்பதற்கும் முன்னோர்களாகிய சமயப் பெரியவர்கள் பல வழிகள் சொல்லியுள்ளார்கள். "நாளும் திருமுறைகளை ஒதுதல்" என்பது நற்காரியங்கள் வெற்றி பெற உதவும் நல்ல உபாயமாகும். அதை நாட் கடமையாக வைத்துக்கொள்வதே மிக நல்லது. தேவாரத் திருப்பதிகங்களின் திருக்கடைக் காப்புச் செய்யுள்களில் அவ்வப்பதிகங்களை ஒதினார்
பெறத்தகும் நன்மைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன.
புதுவீடு கட்டிப் புதுமனைப் புகுவிழா நிகழ்த்தினால், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் முதலியன செய்கிறோம். தோஷ நிவர்த்திக்காக - தற்பாதுகாப்புக்காக இவ்வாறாகக் ஹோமங்கள்
செய்யும் வழக்கம், பல்வேறு காலங்களில் தேவையாகிறது.
அக்னி காரியம் என்பதை அக்னியம் என்பதுபோல, ஹோம காரியங்களை "ஒமியம்" என்பது ஒரு வழக்கமாகும். ஒமியம் தேவையான காலங்களில் செய்வது மட்டுமன்றி நாட்கடமைகளுள் ஒன்றாகவே செய்யும் வழக்கமும் உண்டு. "அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும் முத்தீ" (புறம் - 2) என்பன போன்ற சங்கப் பாடல் தொடர்களால், தொல் பழங் காலங்களிலும் நாட்
கடமையாகவே அந்தணர்கள்"ஒமியம்" செய்தமையை அறியலாம்.
தக்க வேள்வியாசான்களைக் கொண்டு, வேத மந்திரங்கள் உள்ளடக்கமான ஆகமங்களின்படி, ஒமியம் செய்வது உலக நலனுக்கு உகந்த, சிவ புண்ணியச் செயலாகும். பொழுது போகாமையால் வெற்றுக் காமியம் செய்து காலம் கழிப்பவர்கள் திருக்கோயில்களில் இத்தகு ஒமியங்கள் நிகழ்த்துவித்து உலக
நலனுக்கும் சமுதாய நன்மைக்கும் துணை செய்யவேண்டும்.
இல்லங்களில் வேள்விகள் செய்யும்போது செய்விப்போன்
கர்த்தா என்ன செய்ய வேண்டும்?திருக்கோயில்களில் வேள்விகள்
1.

S2O a5g ear o
செய்யும்போது, அடியார்கள் - பக்தர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்னும் இவையற்றிச் சிந்திப்போம்.
இல்லங்களில் வேள்வி செய்யும் நாட்களில் வேள்வி முடிந்ததும், சுற்றத்தினர் (அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள்) விருந்தினர்கள் (புதியவர்கள்) சிலரையாவது அழைத்து உணவு வழங்க வேண்டும். யாக சேக்ஷத்தை யாகம் செய்வித்தோர் தம்
உணவுடன் சேர்த்து உண்ண வேண்டும்.
உணவுண்ண அழைக்கப்பட்ட சுற்றத்தினரும் விருந்தினரும் யாகம் தொடங்குவதற்கு முன்னதாகவே வரச்செய்து வரவேற்பதே நல்லது. ஒமியம் தொடங்கிய பிறகு கர்த்தாவின் செய்விப்போனின் உள்ளம், ஒமியத்தின் அதிநுட்பமான தெய்விகச் செயற்பாட்டிலேயே
ஊன்றிப்பதிய வேண்டும்.
வேள்வி ஆசான் ஆகம விதிப் பிறழ்ச்சிகள் ஏற்படாமல், விரையான் வெகுளான் விரும்பி, கிரமம்படி, அழுத்தம் திருத்தமாக
மந்திரங்களை உச்சரித்தவண்ணம் பணிகளைச் செய்யவேண்டும்.
செய்விப்போன், குச்சிகள் எரியும் குண்டமாக வேடிக்கை பார்க்காமல், தேவர்களும், தேவதேவனும் எழுந்தருளும் புனிதமான தலமாக அதை உணரவேண்டும். தழலைக் கண்டவுடன் பெருமானின் தழல் புரைமேனி, அவன் உள்ளத்து உணர்வுக்கு
வரவேண்டும்.
அங்கே அக்னி தேவன் உதயமாகித் தன்னிடம் இடப்படும் பொருட்களைப் புனிதமாக்கி, அவி உணவாக மாற்றும் சிறப்பை உள்ளத்தால் உணர்ந்து மகிழ வேண்டும். "ஸ்வாகா" என்ற மந்திர நாதம் கேட்கும்போதெல்லாம், அக்கினி தேவரின் பத்தினியாகிய ஸ்வாகா தேவி, அவி உணவை, அவ்வத் தெய்வங்களுக்கு-அவி உணவின் ஆன்றோருக்குப் படைப்பதை உள்ளத்து உணர்ந்து
குதுகலிக்க வேண்டும்.
திருக்கோயில் வேள்விகள், பக்கதர்களின் பொன், பொருள் காணிக்கைகளால் நடைபெறுவதே சிறப்பாகும். அவ்வண்ணம் கடமை செய்த பக்தர்கள் ஒமியம் நடைபெறும் வேளையில் அங்கு இருக்கவேண்டும். வீட்டில் இருந்தபடி உள்ளத்து உணர்கிறேன் என்று சொல்வது ஓமியத்தை அவமதிப்பதாகும். எனவே, அங்கு முன்னர் எழுதியவாறு உள்ளத்து உணர வேண்டும். பொதுவாகவே காமியம் செய்து காலம் கழித்தல் பிழையாகும். ஒமியம் செய்யும் காலத்தில் காமியம் செய்து காலம் கழித்தல் ஒளியாக எழுந்தருளும் பெருமானை மதியாத பாவமும் ஆகும். ஆகவேதான்,
"காமியம் செய்து காலம் கழியாதே
ஒமியம் செய்து, அங்கு உள்ளத்து உணர்மினோ" என்று அருளிச் செய்தார்திருநாவுக்கரசர்.
ஒமியம் செய்து என்பதில் எல்லோரும் ஒமம் செய்யலாம் என்ற பொருள் இல்லை. அங்கு என்ற சொல் இடப்பொருளே தரும்.
-->

Page 17
இந்துசாதனம் 6.
(எந்த மந்திரத்தைச் சொல்லி ஓமம்? என்பதை எண்ணிப்பார்க்க வேண்டாமா?) - "தமிழில் திருமுறைகளைச் சொல்லி" என்று எங்கும் எதிலும் இல்லை.
"அரசன் கோயிலைக் கட்டினான்" என்பதில் கட்டினான் என்று வந்தாலும், அவன் ஏவுதற் கருத்தாதான். "கோயிலில் அருச்சனை செய்து வந்தேன்" என்று நாம் சொன்னால், நாம் ஏவுதற்கு கருத்தாதான். இது இலக்கணம், ஒமியம் செய்து கொண்டிருப்ப வர்கள் உள்ளம், கிரியைகளில் மந்திரங்களில்தான் செல்லும். உள்ளத்து உணரும் தியான நிலைக்கு அவர்கள் வரமுடியாது. ஏவுதற் கருத்தாதான் அங்கு தியானித்து உள்ளத்து உணர முடியும். செய்ய வேண்டிய வேள்வி, வேத மந்திரங்கள்
உள்ளிட்ட ஆகம வேள்வியேயன்றி வேறில்லை.
"காமி யஞ்செய்து காலங் கழியாதே
ஒமியஞ்செய்தங் குள்ளத் துணர்மினோ
சாமியோடு சரச்சு வதியவள்
கோமி யும்முறை யுங்குட மூக்கிலே"
(திருக்குடமூக்கு)
ஒமியம் - ஓம காரியம். புறத்தே அக்னிகாரியத்தையும், அகத்தே ஆறாதார யோகத்தையும் உணர்த்தும், குண்டலிகத் தானமான உந்தியில் ஞான அனலை எழுப்பி, அதனுள் விந்துத் தானத்து அமிழ்தமான நெய்யைச் சுழுமுனை இடை நாடிகளாகிய சுருக்கு சுருவங்களால் ஒமித்தல். உள்ளத்து அர்ச்சித்தலாவது - புறப்பூசைபோல அகத்தே கொல்லாமை முதலிய அட்ட புட்பங்கொண்டு வழிபடல். (திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்.
5ஆம் திருமுறை-பக்கம் 390-தருமையாதீனப்பதிப்பு-1997)
"ஒமஞ்செய்துமுணர்மின்களுள்ளத்தால்"
(திருக்கடம்பந்துறை)
தமிழகச் சைவம் இந்நாளில் ஒரு சாபக்கேட்டிற்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது. சைவத் திருமுறைகளும் சைவ சாத்திரங்களும் போற்றும் வேத - ஆகமச் செல்வத்தைத் தமிழின் பேரால் சிதைத்துவருவதும், அத்தீய செயலுக்குத் திருமுறைகளைப் பயன்படுத்தி வருவதும் கொடுமையிலும் கொடுமை. காக்கக்
கடமைப்பட்ட சைவ ஆதீனத் திருமடங்கள் இணைந்து, காக்க
செயற்பட இறையருளைச் சிந்திப்போம்!
"நாம் தீய வழியில் ஈட்டும் பொருள் இந்த உலகில் பொருள் நம் மரணத்தின்பின் கொடும் துன்பங் நிரந்தர ஆனந்தத்தைப் பெறவிரும்புபவர்கள் தீய
 

6.2O asp: eLeaf Ol
திருமுறைகளைப் பெரியபுராணப் பாடல்கொண்டே காண்டல் வேண்டும். வேள்வி,ஒமங்கள் இயற்றும் உரிமை அந்தணர்களுக்கே உண்டு என்று பெரியபுராணம் நிறுவியுள்ளது. பிறர் இவற்றை இயற்ற உரிமை பெறவில்லை. கண்ணில் அறுவை சிகிச்சை செய்ய நாட்டு மருத்துவர்க்கு உரிமை இல்லை. பெரிய புராணம் ஒர் இடத்திற்கூட அந்தணர் அல்லாதவர் வேள்வி, ஓமம் இயற்றியதாகக் கூறவில்லை. தெய்வச் சேக்கிழார் "சாதிகள் நெறியில் தப்பா" என்றே அருளியுள்ளார். தமிழ் இலக்கண இலக்கிய நூல்கள் எதிலும்கூட அந்தணர் அல்லாதார் ஒமம் செய்ததாகவோ, வேதமல்லாத தமிழ் - திருமுறை மந்திரங்களைப் பயன்படுத்தியதாகவோ இல்லை.
ஞானசம்பந்தர்பாடல்:
"அனல்படு தடக்கையர்" என்று தொடங்கும் பாடலுக்கு விபரீத அர்த்தம் கற்பிக்க முயலுகின்றனர். "அனல்படுதடக்கையர்" அந்தணர்களே. அவர்கள் அறுதொழில் இயற்றுவோர். வேறு தொழில்கள் அவர்கள் செய்யக்கூடாது அதற்குத் தேவையும் இல்லை.
அறுதொழில் இயற்றுவோர் வேறு தொழிலும் செய்தால் அது நற்கருமம் ஆகாது. என்றாலும் சிவனாரை முழுமுதற் கடவுளாகக் கொண்டு, அறுதொழிலையும் அவர்கள் இயற்றி வருவதால் அவர்கள் செய்யும் வினையால் விளைவதையும் சிவனார் தீர்த்து வைப்பார். சிவனார் அத்தீவினைக்குப்பகைவராக இருந்து அதைத்
தீர்த்துவைப்பர் என்பதே மெய்யுரை.
"அப்பரடிகள், ஓமம் செய்து ஏத்துமின்' என்று அருளியுள்ளார். திருஞானசம்பந்தர், 'அனல் ஏத்தும் வழிபாட்டை எத்தொழி லாளரும் செய்து வழிபடுக என அருளியுள்ளார்" என்று மேற்கோள் குறியுடன் காட்டியுள்ளது அப்பரடிகள், திருஞான சம்பந்தர் மொழியும் அல்ல - மொழி பொருளும் அல்ல. - "வஞ்சித் தொழுகும்" - என்று தொடங்கும் நீதி நெறி விளக்கப்பாடலும், "காணா, ரெனச் செய்யார் மாணாவினை." என்ற பழமொழியும்
நினைக்கத்தகும்.
"மனிதரில் தலையாய மனிதர்" என்று அப்பர் பெருமான் உணர்த்தியுள்ளதையும், "இறையனார் களவியல் உரை"யில் வரும்
"கடையினார் நிலை"யும் எண்ணி அமைவோம்.
சிவ சிவ
t مح۔
さてc**
ஆனந்தத்தைக் கொடுக்கிறது. ஆனால் அதே களை அனுபவிக்கக் காரணமாகிறது. ஆகவே
வழியில் பொருளை ஈட்டவே கூடாது"
- "மகரிஜி அத்ரி"

Page 18
இந்துசாதனம் 6.O.
மானிடப் பிறவியின்
அறிவின் உத்திகளால் நகர்த்தப்படுவது அறிவியல். உணர்வினை ஆதாரமாகக் கொண்டது அருளியல். பத்தொன்ப தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ்நாட்டில் வாழ்ந்த இரு சகேதரர்கள் இரட்டைப் புலவர்கள் என அழைக்கப்பட்டார்கள். ஒருவர் கால் நடக்க முடியாத நொண்டி மற்றயவர் கண்பார்வை இல்லாத குருடர் . குருட்டுப்புலவர் நொண்டிப் புலவரைத் தன் தோள்மேல் தூக்கிக் கொள்வார். நொண்டிப் புலவர் போக வேண்டிய பாதையினைக் காட்டுவார். இவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருந்து வாழ்ந்து வந்தார்கள். சமயம் இல்லாத விஞ்ஞானம் நொண்டி, விஞ்ஞானம் இல்லாத சமயம் குருடு என்றார் மாபெரும் விஞ்ஞானியாகிய அல்பேர்ட் யென்ஸ்ரன் "விஞ்ஞானம் மூட நம்பிக்கையின் எதிரியே ஒழியச் சமயத்தின் எதிரியன்று" என்பது மூதறிஞர் ராஜாஜியின் கூற்றும் ஆகும்.
நாம் சிலவற்றை உணர்ந்து கொள்கின்றோம் சிலவற்றை அறிந்து கொள்கின்றோம் அறிவு உணர்வு இரண்டும் மனிதனின் தனித்தனியான பண்புகள் மலரின் மணத்தைக் கண்ணாலோ காதாலோ நுகர முடியாது மூக்கால் தான் முகர வேண்டும். சித்திரத்தின் அழகினை கண்ணால் தான் கண்டுகளிக்க முடியும். ஐம்புலன் களின் சக்திக்கு ஒர் எல்லைக் கோடு இருப்பது போல அறிவின் ஆற்றலுக்கும் எல்லைக் கோடு உண்டு.
நமது அறிவினாலோ புலன்களினாலோ இறைவனைக் காண நினைப்பது ஒருவன் தன் தோளிலே தான் ஏறி நிற்பதையும் வண்டிச் சக்கரத்தை உருட்டிப் பார்ப்பதையும் ஒக்கும் என உபநிடதங்கள் கூறுகின்றன. அறிவில் மட்டுமே நம்பிக்கை கொண்டவர்கள் அறிவின் ஆற்றலால் எதையும் சாதிக்கமுடியும். வெற்றிகொள்ள முடியும் என எண்ணுகின்றனர். அறிவால் அறிய முடியாதது உண்டு என்பதை உணர்வது தான் அறிவறியாமை
கடந்த அறிவாகும்.
அறிவு அறிவு என்று அரற்றிக் கொண்டு இருக்க வேண்டாம். அறிவின் அறியாமையை நாம் அறிவதில்லை.அறிவின் அறியா மையைக் கடந்து உண்மையறிவை நாம் பெற்று விட்டால் அறிவால் அறிய முடியாத இறைமை என்ற அழகினை நாம் காண முடியும் என்பதைத் தவயோகி திருமூலநாயனார் தனது தமிழ் மந்திரமாகிய திருமந்திரத்தில் குறிப்பிடுகின்றார்.
அறிவு அறிவு என்று அரற்றும் உலகம் அறிவறியாமை யாரும் அறியார் அறிவறியாமை கடந்து அறிவானால் அறிவறியாமை அழகியவாறே

S2O கர ஆணி 01
மாண்பு
சிவத்தமிழ் வித்தகர் - சிவ. மகாலிங்கம்
அறிவியல் கண்டுள்ள முடிவுகள், தீர்ப்புக்கள் , சாதனங்கள் என்பவற்றைப் பற்றி அறியும் படி மெய்ப்பித்துக் காட்ட முடியும். ஆனால் உள்ளத்து உணர்வாக உள்ள இறைமையினை மெய்ப்பித்துக் காட்டமுடியாது. அது ஆய்வுகளுக்கும் சோதனை களுக்கும் அப்பாற்பட்டது. முகத்துக்கண்ணால் பார்த்து முடிவுக்கு வர முடியாது. அக்கண்ணால் பார்த்துத்தான் முடிவுக்கு வரலாம். எல்லாவற்றையும் அறிவால் அறியமுடியாது அனுபவத்தால் தான் உணர முடியும் . அனுபூதி நிலையாகிய தெய்வீக நிலை ஏற்பட்டால் இறைவனை அகத்திலே காண முடியும் . என்றே திருமந்திரம் கூறுகின்றது.
முகத்தில் கண் கொண்டுபார்க்கின்ற மூடர்காள்
அகத்தில் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம்
மகட்குத் தாய் தன் மணாள னோடாடிய
சுகத்தைச் சொல் என்றாற் சொல்லுமா றெங்ங்னே,
அப்பிள் மரத்தடியில் உட்கார்ந்திருந்த நியூட்டன் மரத்தி லிருந்து மண்மீது விழுந்த அப்பிள்பழம்பூமிக்குள் இருந்த ஈர்ப்புச் சக்தியின் விளைவால் தான் விளைந்தது என்ற உண்மையைத் தனது அறிவால் அறிந்து கொண்டான். ஆனால் இந்த ஈர்ப்புச்சக்தி பூமிக்கு எவ்வாறு வந்தது என்பதை ஐசாக் நியூட்டனோ, அவன் வழிவந்த விஞ்ஞானிகளோ இன்று வரை
கூறிவில்லை.
ஆதவனுக்கு ஒளி எப்படி வந்தது? நிலவில் குளிர்ச்சி எவ்வாறு வந்தது? தீயிலே வெப்பம் எவ்வாறு கலந்துள்ளது என்று விஞ்ஞானம் விளக்க முடியாத வினாக்களுக்கு எல்லாம் மெய்ஞ்ஞானம் பதில் தந்துள்ளது. இவற்றிற்கு இறைவன் தான் முழுமுதற் காரணம் என்பதை மணிவாசகரின் தெய்வவாசகமாகிய
திருவாசகத்தின் திருவண்டப்பகுதி தெளிவாக விளக்குகின்றது.
"அருக்கனிற் சோதி அமைந்தோன் திருத்தகு மதியில் தண்மை வைத்தோன் திண்திறல் தீயின் வெம்மை செய்தோன் பொய்தீர் வானிற் கலப்பு வைத்தோன் மேதகு காலின் ஊக்கங்கண்டோன் நிழல் திகழ் நீரில் இன்சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட மண்ணின் திண்மை வைத்தோன் என்றென் றெனைப் பலகோடி யெனைப் பல பிறவும் அனைத்தனைத்தவ்வையின் அடைந்தோன்" ஒன்று நம் அறிவுக்கு அப்பாற்பட்டது என்பதைக் கண்டு அது தான் இறைமையின் இயக்கம் என்று உணர்த்தும் முறை அருளியலைச் சார்ந்தது. அறிவியலின் ஆற்றல் தடைப்பட்ட நிலையில் அருளியல் தொடங்குகின்றது. அறிவுகொண்டு காண இயலாததை உணர்வுகொண்டு அது காண்கின்றது.
->

Page 19
இந்துசாதனம் 6.O.
அறிவியலோடு அருளியல் இணைந்து செயற்படுமானால் இறைமையின் இனிமையினை சுகத்தினை நம்மால் உணரமுடியும் மேலை நாட்டில் அரசோச்சிய விஞ்ஞான நாகரிகத்தை மெய்ஞ்ஞான வழிக்குக் கொண்டு வந்தவர் வீரத்துறவி விவேகானந்தர். இரத்த வெறியுடன் யுத்த சந்நதம் கொண்டு ஆடிய அசோகனை ஆன்மீக நாட்டமுள்ளவனாக மாற்றிய
பெருமை புத்த பகவானயே சாரும்.
அறிவியலின் வளர்சியினால் பல பெளதிக வசதிகளை மனிதன் பெற்றிருக்கின்றான். மனித வாழ்வின் தேவைகள் பல நிறைவேற்றியுள்ளன. பல மைல்களுக்கு அப்பால் இருக்கும் உறவுகளோடு முகம் பார்த்துக் கதைக்க கூடிய அளவிற்கு தொலைத் தொடர்பு வசதிகள் ஏற்பட்டுள்ளன. மனிதனின் உடலில் ஏற்படும் நோய்களில் பலவற்றுக்கு தீர்வு காணக் கூடிய வகையில் மருந்துவம் அபரிதமான வளர்ச்சியினைப் பெற்றுள்ளது. ஒரு சில மணித்தியாலங்களில் பல மைல்களைக் கடந்து செல்வதற்கான பிரயாண வசதிகள் ஏற்பட்டுள்ளன. உடம்பால் செய்யும் வேலைகள் பலவற்றை இயந்திரங்களே செய்கின்றன. வாழ்க்கை வசதிகள் பெருகிவிட்ட நிலையில் வாழும் மனிதனின் அகத்தில் என்றும் புயலும் சூறாவளியுமே வீசுகிறது. மனம் கொதித்துப் போய் கொந்தளிப்பு நிலையிலேயே என்றும் உள்ளது. நிறையச் செல்வம் வளம் உள்ள மனிதன் நிம்மதியாக நித்திரை கொள்ள முடியாமல் தவிக்கிறான். தமது சொந்த மண்ணில் சுதந்திரமாக நடமாடித் திரிவதற்கே அருஞ்சுகிறான். ஏன் நமக்கு இந்த அவலநிலை ? என்று நாம் அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் பெரும்பாலான மனிதர்களிடம்
படிப்பாலும், பணத்தாலும் கடவுளைக் க
இறைவனைக் காண முடியும்.
தனக்குள்ளேயே கடவுளிருக்க
தேடுகிறோம். எந்த நேரம் நம்மால் இறைவ
அதுமட்டுமே நம்முடைய நேரம் எவ்வ:
தோமோ; அவ்வளவு மட்டுமே நம்மு மன்னித்துவிடுவது மனிதத்தன்மை શ્રઝ
தன்மை.
 
 

5。201I கர ஆணி 01
இறையுணர்வு நீங்கப் பெற்று இரையுணர்வே தலை விரித்தாடுகிறது. "உண்டிருந்து வாழ்வதற்கே உரைக்கின்றீர் உரையிரே" என்ற நிலையில் பலர் வாழஆரம்பித்து விட்டார்கள். மனிதனின் மனம் குப்பைத் தொட்டியாக மாறி வருகிறது. அழுக்காறு , அவா, வெகுளி இன்னாச்சொல் ஆகிய நான்கையும் நீக்கி வாழ்வதே அறவாழ்வு என்கிறார் வள்ளுவர்.
அழுக்காறு அவா வெகுளிஇன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்
என்பது வள்ளுவர் வாக்கு. பொய், கயமை, சினம், சோம்பர் , கவலை, மயக்கம் , வீண்புழுக்கம் , அச்சம் என்னும் அகப் பேய்களை எல்லாம் ஞானம் என்கிற வாளால் வெட்டி வீழ்த்த வேண்டும் என்று வீரா வேசம் கொண்டு முழங் கின்றார்
பாரதியார்.
மனித மனம் தூய்மையாக இருந்தால் தான் அறிவியல் வளர்ச்சியின் பெறுபேறுகளை அவனால் பூரணமாக அனுபவிக்க முடியும் . சீவனுக்குள்ளே சிவமணம் பூத்த நிலையில் அகத்திலே அருள் பிரகாசிக்குபடியாக இருந்தால் அவனால் கண்டறியப்படும் அறிவியல் உண்மைகளும் சமூகப் பயன்பாடு 96.6065 அமையும் . அருளியலும் அறிவியலும் சேர்ந்து பிரகாசிப்பவர்களே நாட்டின் தலைவர்களாக உருவாக்க வேண்டும். அதிகாரிகளாக உயரவேண்டும். ஆன்மீகத் தலைவர்களாக மிளிர வேண்டும் , சமுதாய சிற்பிகளாகத் திகழவேண்டும். என்ற புனிதமான வேண்டுதல் நிறைவேற நாம் அனைவரும் இறையருளைப்பிராத்திப்போமாக . 人
و عیلہ بنیخیج
M
காண முடியாது. பக்தி ஒன்றினால்தான்
எங்கெங்கேயோ நாம் இறைவனைத்
னுடைய திருநாமம் நினைக்கப்பட்டதோ
ளவு பொருளை அறவழியில் செலவழித்
டைய பொருள். பிறர் குற்றங்களை
* அப்படியே மறந்து விடுவது தெய்வத்
திருமுருக கிருபானந்த வாரியார்.

Page 20
இந்துசாதனம் 6.O.
"வேதத்திலுள்ளதுநீறு வெந்துயர் தீர்ப்பதுநீறு போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பதுநீறு ஒதத் தகுவதுநீறுஉண்மையிலுள்ளதுநீறு சீதப் புனல்வயல் சூழ்ந்த திருவாலவாயான் றிருநீறே"
ஆதியந்தமில்லாத முழுமுதற் கடவுளாகிய சிவபொருமானை வழிபடும் சைவ சமயிகளாகிய நமக்கு இன்றியமையாத சிவ சின்னங்களாகவுள்ள விபூதியும், உருத்திராக்கமுமாம். இவ் விரண்டி னும் விபூதி அளத்தற்கரிய பெருமை வாய்ந்தது. மானுடப்பிறவியெடுத்த நாமெல்லாம் பெறவேண்டிய நிலையான உறுதிப்பொருள்கள் அறம், பொருள், இன்பம், வீடு (தர்ம அர்த்த, காம , மோகூடிம்) என்னும் நான்காகும் இவற்றைத் தவறாது அளிக்கவல்லது விபூதி அதன் மகிமையை நான்கு வேதங்களுமே அளத்தற்கரிதெனக் கூறுமாயின் சிற்றறிவுடைய நாம் எவ்வாறு உணரமுடியும்.
விபூதியின் மகிமையையும், அதற்குரிய விதிகளையும் , மந்திரங்களையும், கிரியைகளையும், அதன் அருட் செயல்களை யும், தத்துவங்களையும் எடுத்துரைக்காத சமய நூல்களில்லை யெனலாம். வடமொழியிலே இருக்கும் யசுர், சாமம், அதர்வணம் . என்னும் நான்கு வேதங்களிலும், அவற்றின் ஞானகாண்டமாகிய உபநிடதங்கள் பலவற்றிலும் விபூதியின் சிறப்பு ஆங்காங்கு எடுத்துக் கூறப்பட்டதுமன்றி, "பஸ்ம சாபால உபநிடதம்" என்னும் ஓர் உபநிடதம் தனியே விபூதி யின் பெருமை யை விளக்க எழுந்தது. அன்றியும், காமிதம் முதலாக வாதுளம் ஈறாககவுள்ள் இருபத் தெட்டு ஆகமங்களிலும், அவற்றின் பிரிவுகாளாகிய பல உபாகமங்களிலும், புராணங்களிலும், பாரதம், இராமாயணம் என்னும் இதிகாசங்களிலும், இவற்றின் வழிவந்த அளவற்ற பல நூல்களிலும் விபூதியின் அற்புத இலட்சணங்களும், மகிமை களும் பரக்க விரித்துரைக்கப்படிருக்கின்றன என அந்நூல்களை யாராய்ந்த பேரறிஞர்கள் கூறியிருக்கின்றனர்.
இப்படியே தமிழ் நூல்களிலும் பலவற்றுள் விபூதியின் பெருமையைக் காணலாம். தமிழ் வேதமாகிய தேவாரத்திலே ஆங்காங்கு பல விடங்களில் திருநீற்றின் பெருமையயை நாயன் மாராகிய புண்ணியமுர்த்திகள் தம் திருவாய் மொழிகளால் நமக்குணர்த்தியிருக்கின்றனர். திருஞானசம்பந்தப் பெருந்தகை
பண்டு செய்த நல்வினைப் பயனாகச் சைவ சமயத்திற்
பற்றிருந்தும், சிவ சின்மைாகிய விபூதியின் மகிமையை விபூதியின் தத்துவங்களைப் பரந்து கிடக்கும் நூல்களி பெருமையும் இன்றியமையாமையையும் சிறிதளவேனுட திருவருளை முன்னிட்டு இந்தக் கட்டுரையை எழுதத் காரியதரிசிகளுள் ஒருவரான அமரர்மு. வைரமுத்து"மெt இக்கால வாசகர்களின், குறிப்பாகமாணவர்கள், இளைஞர்

i2O கர ஆணி 01
மு. வைரமுத்து
யோ திருநீற்றுப்பதிகம் என்னும் ஒரு முழுப் பதிகத்தையே , நாமெல்லாம் அந்நீற்றின் மகிமையுைணர்ந்து கடைந்தேறும் வண்ணம் பாடியருளினார்.
விபூதி உருத்திராக்கங்கள் சிவ சின்னமெனவும், சிவவேட மெனவும் கூறப்படும்.
"செம்மலர் நோன்றாள் சேரலொட்டா
வம்மலங்கழி இயன்பரொடு மரீஇ
மாலற நேய மலிந்தவர் வேடமு
மாலயந் தானுமரனெனத்தொழுமே."
எனச்சைவ சித்தாந்த முதல் நூலாகிய சிவஞானபோதமே கூறுதலால் சிவவேடங்களில் ஒன்றாகிய விபூதியும் சிவமெனவே வணங்குதற் குரியதுவாம். சிவபெருமானுடைய பெருமை எவ்வாறு அளவிடற்கரிதோ அதுபோல விபூதியின் பெருமையும் அளவிடமுடியாததென்பர் அறிஞர்.
வேதகங்களிலும் அவற்றின் ஞானகாண்டமாகிய உபநிடதங்களிலும் திருநீறணிதல் பிரமவித்தையின் ஓர் அங்கமாகக் கருதப்பட்டு, அதை வேத விதிப்படி உண்டாக்கும் முறையும், அதைத் தாரணஞ் செய்யும் முறையும் விரிவாக வோதப்பட்டிருக்கும் காரணத்தால் வைதீகர்களின் ஆசாரத்தில் விபூதி தாரண சம்பிரதாயம் நீண்ட காலமாகவிருந்து வந்ததென எண்ணுதற்கிடமுண்டு வைதீக மார்க்கத்தை அனுட்டிப்பவர் களுக்கும் திருநீறுதரித்தல் அவர்கள் செய்யும் எல்லாக் கருமங்களுக்கும் ஒர் முக்கிய அங்கமாக நிரூபிக்கப்பட்டிருந்த தென்பதற்கு ஐயமில்லை.
சைவசமயிகளாகிய நமக்கோ விபூதியானது நம்முயிரினும் மேலாக ஒம்பும் தகைமையுடையது. ஆணவம், கன்மம், மாயை யென்னும் மும்மலங்களினாலே பந்திக்கப்பட்டிருக்கும் காரணத் தால் பசுக்களெனப்படும் நமக்குப் பசு பதியாகிய ஆண்டவன் அந்த மும்மல பந்தங்களினின்றும் நீக்கி நிலையான பேரின்ப வாழ்வை நல்குவதற்கு ஏற்படுத்திய சமய சாதனங்களுள் விபூதிதரித்தல் ஓர் சிறந்த சாதனமாகும். மேலான அந்த விபூதி தன்னை யணிந்தவர்களுக்கு எஞ்ஞான்றும் நன்மையினையே பயப்பதுமன்றித் தீமையை யொழிப்பதுமாய், இம்மைப்யனுடன் அடைதற்குரிய மறுமைப் பயனையுமளிக்கும் வல்லமையுள்ளது.
- S»
பிறந்து, சமயப் பற்றற்று வாழ்பவர் பலர். ஓரளவு சமயப் உணராது அதை அலட்சியஞ் செய்யபவர்களும் பலர். ல் ஆராய்ந்தறிய அவகாசமில்லாதவர்களுக்கு, அதன் விளங்க வைக்க வேண்டும் என்னும் பேராசையினால், துணிந்தேன்" என் குறிப்புடன் முன்னைநாள் நிரந்தரக் கண்டார் நெறி" என்ற இதழில் எழுதிய இக்கட்டுரையை, களின் நன்மை கருதி வெளியிடுகின்றோம்.
O

Page 21
இந்துசாதனம் 6C
ஆன்மாக்களிடத்துக் கருணையே திருமேனியாகவுடைய பசுபதி" "உங்களை நான் ஆட்கொள்ளுவேன்" என்னும் உறுதிமொழிக்கு அறிகுறியாக உவந்தளித்த சின்னமே விபூதியாகும். ஒருவனையே தனக்கு நாயகனாகக்கொண்ட பதிவிரதையானவள் தன் நாயகனாற் கொடுக்கப்பட்ட மாங்கல்யம், மோதிரம் முதலிய வற்றைத் தன்கற்பு நிலைக்குச்சாதனமாகத்தரிதுப் போற்று வாளன்றே? அது போலவே சிவபொருமானையே பரமபதியாகக் கொண்டு வழிபடும் ஒவ்வொருவருக்கும்தத்தம் அன்புநிலைக்கும் அடிமைத் திறனுக்கும் அடையாளமாகத் தரிக்கத்தக்க சிவசின்னம் விபூதியே.
இத்துணைப் பெருமையையுடைய விபூதி, பஸிதம் , பஸ்மம், கூடிரம் , ரகூைடி என்னும் பெயர் களாலும் வழங்கப்படும். விபூதி என்பதற்கு மேலான ஐசுவரியம் என்று பொருள். வி-மேலான பூதி- ஐசுவரியம் எனவே தன்னைத் தரித்தவர்களுக்கு என்றும் அழிவில்லாத மேலான ஐசுவரியத்தைத் தரவல்லது விபூதியாகும். அன்றியும் விநாயகன் என்ற சொல்லுக்குத் தனக்கு மேல் ஒரு நாயனில்லாதவன் என்று பொருள் கொள்வதுபோல விபூதிக்கு தனக்கு மோலான ஐஸ்வரியம் வேறொன்று இல்லாதது என்று பொருள் கொள்வதும் முறையாகும். இன்னும், வி- சிவபொருமான், பூ - பாவனை, தி-அடைதல் எனப்பெருள் கொண்டு சிவத்துவ பாவணையை விளக்கும் இயல்புடையது எனப் பொருள் கொள்வதற்கும் உரித்துடையதாய் நிற்கின்றது. விபூதி என்னும் பதம் , பாவங்களை யெல்லாம் நீக்கலால் நீறு எனவும், பஸ்மம் எனவும் ; அறியாமையழியும்படி சிவாஞனத்தினாற் சிவத்ததை விளக்கியருளும் திறமை வாய்ந்ததால் பசிதம் எனவும்; உயிர் களின் மலத்தைப் கழுவுவதால் கூடிராம் (சாரம்) எனவும்: ஆன்மாக்களைத் துன்பத்தினின்றும் இரட்சித்தலால் இரகூைடி எனவும் வழங்கப்பட்டுவருகின்றது.
விபூதியானது, விதிக்கப்பட்டநல்லிலக்கணங்களமைந்த பசுவின் சாணத்தைக் கொள்ள வேண்டிய முறைப்படி கொண்டு , மந்திரங்களால் உருட்டி , அக்கினியினால் தகிப்பித்த நீறாகும் . வேதவிதிப்படி சொல்லப்பட்டயாகக்கினியினால் தகிக்கப்பட்ட நீறு " வைதீக விபூதி " என்றும்; சிவாகம விதிப்படி சிவதீகூைடி செய்யப்பட்ட அக்கினியால் தகிக்கக்பட்ட நீறு சைவ விபூதி என்றும் விபூதி திறப்படும். "வைதீக விபூதிபுத்தியை (அதாவது போகத்தை) அளிக்கு மென்றும் ; சைவ விபூதி, புத்தி, முத்தியா கிய இருபேறுகளையும் தருமென்றும் சொல்வர் அறிஞர்.
விபூதியை உண்டாக்குவதற்குப் பசுவின் சாணத்தை ஏன் தெரிந்தெடுக்க விதியுண்டானது எனப்பலர் ஐயுறுவதுண்டு. வெண்மையான நீறே வேண்டப்படுவததாயின் அதை மிருகங்களுட் சிறந்த யானை, குதிரை, மான், முதலிய மிருகங்களின் இலண்டத்தைக் கொண்டோ, அல்லது வேறு பெருள்களைக் கொண்டோ ஆக்காது பசுவின் சாணத்தையே கொண்டு ஆக்குவதற்குப் போதிய பல காரணங்களை விபூதியின் பிரபா வத்தைக் கூறவந்த நூல்கள் கூறத்தவறவில்லை.
மும்மலங்களாற் கட்டுண்ட ஆன்மாக்கள் பசு எனப்படுதல் போலக் கோக்களும் (கோ-பசு) ஆயராற் கட்டப்பட்டுப்

D62O கர ஆனி O
பசுவென்னும் பெயரைக் கொண்டிருக்கும் உண்மையினாலும் ; பசுக்களின் மலம் நீறாக்கப்படுதல்போல ஆன்மாக்களாகிய பசுக்களின் மலங்களுஞ் சிவஞானாக்கினியினால் தகிக்கப்படல் வேண்டுமென்னும் ஒப்புமை காரணத்தினாலும், பசுவின் மலமாகிய சாணத்தை அக்கினியினாற்சுட்டு நீறாக்கி அந்த வெண்ணிற்றை இடைவிடாது மேனியிற்பூசிநம்மும்மலங்களையும் பசுபதியாகிய முழுமுதற் கடவுள் தமது ஞானாக்கினியினாற் றகித்து நீறாக்க வேண்டும் என்னும் எம் பிராத்தனைக்கு அறிகுறியாக இருப்பது விபூதிதாரணம் என்பர் ஒருசாரார்.
அன்றி, பசுக்களுக்கு எமது சமய வாழ்வில் ஒர் உன்னத பதவியை நாமளிக்கின்றோமல்லவா? பசுக்கள் சிவபெருமானது சந்நிதிக் கண்ணுள்ள இடபதேவரின் இனமன்றோ. அவை தரும தேவதை சொரூபமெனப்படுவதாயும். தானங்களிற் சிறந்த கோதானப் பொருள்களாயும், தேவர்க்கும் முனிவர்க்கும் உண்டி யுதவும் காமதேனுவென்னும் தேவலோக பசுவின் வர்க்கத் தனவாக மதிக்கப்படும் காரணத்தால் ஆசிரியர் தொல்காப்பி யனாரும் அறுவகை வாழ்த்துப்பொருள்களுள் பசுவையும் ஒன்றாய் வைத்தாரென்பர் இன்னொரு சாரார்.
பசுவானது சாத்துவிக குணத்துக்கு இலக்கணமாவது; உலகு , அரசு, குடிகள் , அறம் முதலிய அவற்றால் தழைப்பன கண்ணபிரானால் பாதுகாக்கப்பட்டன; பிதிர்காரியம். தருப்பணம் தீகூைடி, யாகம், விவாகம்,விரதம், அதிதி பூஜை முதல் சிவாலயங்களில் நடைபெறும் வழிபாட்டுக் கருமங்களிறாகவுள்ள எல்லா நற்கிரியைகளுக்கும் புனிதமான பஞ்ச கெளவியங்களை உதவுவன; இன்னேரன்ன பலவித பெருமைகளையுடையன பசுக்களென்பர் மற்றோர் சாரார்.
இத்துணைப் பெருமை வாய்ந்த பசுக்களின் சாணமும் பலவித விசேடமுடையதென அறிஞர் கண்டனர். பசுவின் சாணத்தைப் போலத் தாவரங்களை வளர்க்கும் வஸ்து வேறொன்று மில்லை. பயிர்களுக்குறுதியளிப்பதுமன்றி அவற்றின் உரோகங்களையும் மாற்றும் சக்தி பசுவின் சாணிக்குண்டு. எவ்வித துர்க்கந்தங்களும் சாணத்தால் நீங்குமென்றும் நம்முன்னோர் கண்டு நீண்ட காலமாகச் சாணியைக் கொண்டு தாமிருக்கும் இல்லகங்ளையும் வழிபாட்டிற்குரிய கோயில்களையும் பரிசுத்தப்படுத்தும் முறையைக் கையாண்டனர். இச்சாண வரட்டி கொண்டு சமைத்தவுணவு மகாபுனிதமாயும் நோய் தீர்க்கும் மருந்தாயுமிருக்குமென்கின்றனர் பதார்த்தகுண நூலார். மேலைத் தேச விஞ்ஞானிகளுட்படப் பல தத்துவ சாஸ்திரிகளும் பசுவின் சாணியிடத்து உரோகங்களுக்குக் காரணமாகிய பல கிருமிகளை நாசஞ்செய்யும் வல்லமையும் சுகாததாரத்துக்கு இடர் விளைக்கும் துர்க்கந்தங்கள், நச்சுக் காற்றுக்களைப் பரிசுத்தப்படுத்தும் அபார சக்தியுமுண்டென்று ஒப்புக்கொள்கின்றனர். இன்ன விசேடங்கள் அமைந்த பசுவின் சாணத்தை,மந்திர பலத்தால் யாகாக்கினியிற் சுட்டுத் தகித்து நீறாக்கி வழிபட்டுப் புனிதமான முறையில் உபயோகித்தால் எத்துணைக் குணங்களையுஞ் செய்யுமென்பதை மறுக்க முடியாது. இஃதறிந்தன்றோ பசுவின் சாணங் கொண்டு விபூதி செய்ய விதித்தன இறைவநூல்கள்.
திவுரும்.

Page 22
பூேண்பறிகப் பா
இறை வழிபாட்டில் நமது மனம் அதிகமாக ஈடுபட, அது ஜபத்திற்குத் தயாராக ஆகிறது. இறைவனின் நாமத்தை ஜபிக்கும்போது அதன் மகிமையால் நமது மனம் அதில் லயிக்கத் தொடங்குகின்றது. தீவிரமான, மன ஒருமைப்பாட்டுடன் செய்யப்படும் ஜபமே இறைஞானத்தில் கொண்டுபோய் சேர்க்கிறது.
எனவே இறைவனை அறிவதற்கு அவனது நாமத்தை இடைவிடாமல் ஜபம் செய்வதே மிகவும் சிறந்த சாதனமாகும்.
"மந்திரத்தைத் திரும்ப திரும்பக் கூறுவதால் மனம் தூய்மை அடைகிறது. ஜபம் மட்டும் செய்தால் போதும். கடவுளின் தரிசனம் தானாகவே வந்துசேரும்" என்று அன்னை பூரீசாரதாதேவியார் குறிப்பிட்டார்.
பகவத் நாமத்தின் மகிமையை விளக்கும் அழகான ஒரு
புராணக்கதை உண்டு.
ஒரு சமயம் சத்தியபாமா பகவான்பூரீகிருஷ்ணரின் எடைக்கு எடை தங்கத்தை நிறுத்தி அந்தப் பொன்னைத் தானமாகக் கொடுப்பதாக வேண்டிக் கொண்டாள்.
அதன்படியே கிருஷ்ண பரமாத்மாவும் ஒரு தராசுத் தட்டில் உட்கார்ந்தார்; மற்றொரு தராசுத் தட்டு முழுவதும் தங்கத்தால் நிரப்பப்பட்டு எடை போடப்பட்டது. ஆனால் எவ்வளவு பொன் வைத்தும் கிருஷ்ணன் அமர்ந்திருந்த தராசுத் தட்டு கனமாகவே இருந்தது. அவர் அமர்ந்திருந்த தட்டு பூமியிலிருந்து எழவேயில்லை. சத்தியபாமா குழப்பினாள். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தாள். உடனே அவள் ருக்மிணியிடம் சென்று அவளிடம்
எல்லாவற்றையும் கூறி அவளது உதவியை நாடினாள்.
ருக்மிணி, "கவலைப்படாதே! நான் வருகிறேன்" என்று சொல்லி, கிருஷ்ணபகவான் தராசில் உட்கார்ந்திருந்த இடத்திற்கு வந்தாள். வந்தவுடன் ஒரு துளசித்தளத்தை எடுத்து பக்தி சிரத்தையுடன் அதன் மீது கிருஷ்ண நாமத்தை எழுதி அதை அந்தப் பொற்குவியல் இருந்த தராசுத் தட்டில் வைத்தாள். அவ்வளவுதான்! உடனே கிருஷ்ண பகவான் அமர்ந்திருந்த தட்டு மேலே எழும்பி, பொற்குவியல் நிரம்பியதட்டுக் கீழே சென்றது.
இந்தக் கதையே பகவத் நாமாவின் பெருமையைச் சிறப்பாக
விளக்குகிறது.
இறைவனும் அவன் நாமமும் ஒன்றே. இறைவனின் நாமத்தைப் பக்திசிரத்தையுடன் நாம் ஜபம் செய்துவந்தால் அவனை
அறிய நம்மால் இயலும்.
இறைவனை நமக்குத் தெரியப்படுத்தவதற்கு வேண்டிய சக்தி
அவன் நாமத்திற்கு உண்டு. ஆன்மிகச் சாதனையைத் தொடங்கும்
பலர் மிக விரைவில் சோர்வடைகிறார்கள். காரணம், எதிர்பார்த்த

5。2○Il கர ஆணி 01
Lipf சுவாமி விரேஸ்வரானந்தர்
பலன் உடனே கிடைக்கவில்லை என்பதுதான். ஆனால் ஆன்மிக சாதனை என்பதோ குறுகிய காலத்தில் பயனளிக்கக்கூடியதன்று. நெடுநாள் பயிற்சிக்குப் பிறகுதான் நிரந்தரமான பலனை இதில் எதிர்பார்க்கலாம்.
மனம் ஒரு நிலையடைந்து, அமைதி பெறுவதற்கு முன்பு நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை பல இருக்கின்றன. பல ஆண்டுகள் நமது ஆன்மிக சாதனை என்ற போராட்டத்தைத் தொடர்ந்து நாம் நடத்த வேண்டும்.
நீண்ட நெடுநாட்களாக ஒரு தகடு சுருட்டி வைக்கப்பட்டிருக் கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்தத் தகட்டை நாம் மீண்டு சம மட்டமாக அல்லது தட்டையாக ஆக்க வேண்டுமென்றால் அது அவ்வளவு சுலபமான காரியமல்ல. அந்தச் சுருளை நாம் பிரித்தோமானால் அது மீண்டும் சுருட்டிக்கொள்ளவே செய்யும். அதனால் அதை மீண்டும் தட்டையாக ஆக்க வேண்டுமென்றால், முதலில் அதை எதிர்ப்பக்கமாகச் சுருட்டிவிட்டு, பிறகு அதைக் கனமான ஒர் அழுத்தத்தின் கீழ் வைக்க வேண்டும். அப்போதுதான் அது மீண்டும் சமமட்டமாக ஆகும். நமது மனமும் சுருட்டி வைக்கப் பட்டிருக்கும் இந்தத் தகடுபோல் தான் இருக்கிறது. இந்தப் பிறவியிலும் சரி, இதற்கு முன்பு நாம் எடுத்த பல பிறவிகளிலும்சரி, நமது மனம் உலக இன்பங்களைப் பற்றியே நினைத்து நினைத்து அவற்றிலேயே ஊறிக்கிடக்கிறது. எனவே அதை நாம் உடனே நமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்து இறைவனைப் பற்றி நினைக்கச்
செய்வதென்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல.
மனம் எப்போதும் நமது பிடியிலிருந்து தப்பித்துக்கொள்ளவே பார்க்கிறது. அது வழிதவறிச் செல்லும்போதெல்லாம் அதை மீட்டு, மீண்டும் நமது இஷ்ட தெய்வத்தின் மீது தியானம் செய்யக்
கட்டாயப்படுத்தவேண்டும்.
மற்ற எண்ணங்கள் எல்லாவற்றையும் நீக்கி நமது இஷ்ட தெய்வத்தைப் பற்றிய எண்ணத்தை மட்டுமே மனதில் நிலை நிறுத்துவதற்குத் தீவிரமான பயிற்சி தேவை. இந்தப் பயிற்சியை - அப்பியாசத்தை - நீண்டகாலம் தொடர்ந்து விடாமுயற்சியுடன் நாம் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் தியானத்தில் நமக்குச் சுவை ஏற்படும்.
காமாலை நோய் கண்டுள்ளவர்களுக்குக் கற்கண்டே மருந்தாகக் கொடுக்கப்படுகின்றது. நோயின் கொடுமையினால் அவர்களுக்கு அப்போது கற்கண்டு கசப்பாகவே இருக்கும். ஆனால் தொடர்ந்து அதைச் சாப்பிடச் சாப்பிட, நோயும் குணமடைந்து கற்கண்டும் அவர்களுக்கு இனிக்கத் தொடங்கும். காலப்போக்கில் சிறிது சிறிதாக அவர்களுடைய நாவும் சுவையை
அறியத் தொடங்குகிறது.

Page 23
இந்துசாதனம் 6C
அதுபோலவே நாம் உலக இன்பம் என்ற காமாலை நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இந்த நமது நோய்க்கு இறைவனின் இனிய நாமமே அருமருந்து. அது முதலில் நமக்குக் கசப்பாகத்தான் இருக்கும். ஆனால் வேறு வழியில்லை. இறைவனின் நாமத்தை ஜபிக்க ஜபிக்க உலகப்பற்று நம்மிடமிருந்து சிறிது சிறிதாக விலகிப்போகும். காமாலை போன்ற இந்த உலகப் பந்ததத்திலிருந்து விடுபடும் நமக்கும் அப்போதுதான் இறைநாமம் கற்கண்டாக இனிக்கத்தொடங்கும்.
ஆத்மசாதனை என்பது முதலில் நமக்குப் பெரிய சோதனையாகவே இருக்கும். தியானம் என்பதோ எந்தவிதச் சுவையுமின்றி, சாரமற்ற ஒன்றாகவே தோன்றும். ஆனால் முயற்சி செய்து இந்த நிலையை சுலபமாகத் தாண்டிவிடலாம். அதன்பிறகு தியானத்தின் இனிமையை நாம் நன்கு அனுபவிக்கலாம்.
இறைவனை இந்தப் பிறவியிலேயே அறிய முடியும் என்ற திடமான நம்பிக்கைதான் நமக்கு வேண்டும். அந்த நம்பிக்கை இல்லாமல் ஆன்மிக வாழ்க்கையில் முன்னேறவே முடியாது. எந்தக் கட்டத்திலும் - எந்தச் சூழ்நிலையிலும் - நாம் நம் முயற்சியைத் தளரவிடக் கூடாது.
மனதிலுள்ள ஆசைகள் எல்லாவற்றையும் துறப்பதே வைராக்கியம். இந்த வைராக்கியத்தை நாம் பெற்றோமானால், நம்
மனம் தூய்மையடைந்துதியனாமும் நிலையாக ஆகிறது.
ஆசைகளே மனதைச் சலனமடையச் செய்கின்றன. ஆசைகளைத் துறந்தோமானால் மனமும அமைதியடைகின்றது. அப்படிப்பட்ட அமைதி பெற்ற மனத்தின் மூலமே இறைஞானமும் பெறமுடியும்.
எனவே மனத்துய்மை பெறவே நாம் முதலில் முயற்சி செய்ய
வேண்டும்.
மனம் எப்பொழுதும் நம் கண்காணிப்பின்கீழ் இருக்க வேண்டும். ஒரு காவல் அதிகாரிபோன்று அதை நாம் கவனித்துவர வேண்டும். தனது பாதையிலிருந்து அது எப்பொழுது விலகுகிறதோ, உடனே அப்பொழுதே அதைத் தட்டி மீண்டும் சரியான பாதைக்குக் கொண்டுவர வேண்டும். இந்த முயற்சியோ,
e 4-re
பார்க்காதே அத
袭 $ இந்த உலகம் முழுவதையுமே உனக் ۔
 

62O கர ஆணி. 01
நெருநாள்விப்பட வேண்டிய முயற்சி. நீண்ட நாட்கள் தொடர்ந்த பயிற்சிக்குப் பிறகு மன்ம் சரியான பாதையில் செல்லப் பழக்கப்பட்டுவிடும். அதன்பிறகு அதில் எந்தவித சலனமம் ஏற்பட வாய்ப்பு இருக்காது. மனக்கட்டுப்பாடு என்பதும் தானாகவே
ஏற்படும்.
"இறைஞானம் பெற்றவன் தவறான வழியில் செல்ல முடியாது" என்று பகவான் பூரீராம கிருஷ்ணர் அடிக்கடி சொல்வது வழக்கம். காரணம், இறைக்காட்சி பெறும் வரையில் அவன் உறுதியான மனக்கட்டுப்பாட்டுடன் வாழ்ந்தவன். எனவே இறைக் காட்சி பெற்ற பிறகு அவனது மனம் தீய வழியில் செல்லவே செல்லாது.செல்லவும் முடியாது.
புலன்களை அடக்குவதென்பது நமக்கு எவ்வளவு கடினமான காரியமோ, அது போன்று இறைவனை அறிந்தவனின் மனதிற்குத் தீய செயலைப் புரிவதென்பது கனவிலும் நடக்கக் கூடியதன்று. எனவே மனமே அனைத்தும் என்பது இவற்றிலிருந்து தெரிய வருகிறது.
மனக் கட்டுப்பாட்டோடு நாம் வாழ்ந்தோமானால் அதை வெல்லமுடியும். அது. நமக்கு அடிமையாகவும் செயற்படத் தொடங்கும்.
ஆகையால் நமது மனதை நாம் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டுமென்பது மிகவும் அவசியமாகிறது. அதை அதன் விருப்பப்படி விட்டு விட்டோமானால் எந்தத் துறையிலும்
எதையும் நம்மால் சாதிக்க முடியாது.
எனவே ஒடும் மனதைக் கடிவாளம் போட்டு நிறுத்தி, இறைவனின் பாதக் கமலங்களிலேயே எப்போதும் - சதா சர்வ காலமும் - நினைக்கச் செய்யவேண்டும். அது இறைவன்
நாமத்தை ஜபம் செய்தபடியே இருக்க வேண்டும்.
இறைவனின் நினைவு, அவன் நாமம், தியானம், அரு நூல்கள் ஆகியவற்றின் துணைகொண்டு மனதை எப்போதும்
இறைவனை நோக்கியே செல்லும்படி வற்புறுத்த வேண்டும்.
(நன்றி. பூரீ ராமகிருஷ்ண రోజు
-
A.
SK
ாடுமென்றால் LDD றவர்களின் குறைகளைப்
முள்ள குற்றங்களையே பார்.
னை ரீ சாரதாதேவி.
مختصر محمد بنت$مختلمتکبر ۔ \ح۔ میرےK s: a డ
X8):

Page 24
holds a Shaրkha in one ի
a¬ aonishekaܓ
下= エ = isheka the bathing part of a sacred water in puji greeted, bathed, dres cases, the main focu ceremony itself. This worship of the Shivali for of Vishnu known bath ag CereՈՕՈy a but also with milk, yog butter, sugar, and all bathing, the sacredim fed and praised with h
drums and other in
(ருத்ராபிஷேகம்)isperfor Special abhisheka Sangabhishekam.
In Indian myt
ed Sacred and
igious ceremonies, wn. Itisa major Hindu
the other The Sacred Wa draviyam (el Gagas age
Shell. One hundred and and eight (1008) shank ritual. After the usual rit o eneo itin the theerth The the ertha flowing fro to have medicinal power
it (108) or One thousand
lor this religious
inol, water helps to heel Would also helpo the pri Valampuri Sanku sausoLib ver, ale and preciou S. it Sree rangan, for examp
Edited Polished by Mr. Printed at Hainan Printers, N.
K.K.S. Road. Jaffna.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SH
, Ph.D., (Edin
Her
significance O part of the