கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்துசாதனம் 2011.07.17

Page 1
  

Page 2
இந்துசாதனம் 7,C
கதலி வனச்சோலை என்று கவிஞர்களும் நீரவாபீபுரம் என்று வடமொழி வல்லாரும் வாழ்த்துகிற நீர்வேலியிலே அதன் நடுநாயகமாக ஒரு பிள்ளையார் கோயில் இருக்கிறது. பெயர் அரசகேசரிப் பிள்ளையார் பிள்ளையார் எப்போது இங்கே வந்தார்? எப்படி வந்தார்? எவ்வாறு அரசகேசரிப் பிள்ளையார் ஆனார்? கல்வெட்டுச் சான்றுகள் இல்லா விட்டாலும் வாய்வழியாகவும் நூல்வழியாகவும் கிடைக்கும் பல செய்திகள் இவற்றுக்கு விடை தருகின்றன. அவற்றுள் முக்கியமான இடத்தைப் பெறுபவை அரசகேசரி கண்ட கனவின் விபரங்கள்.
நீர்வேலி அரசகேசரிப் பிள்ளைiர் கோவிலின் அமைக்கப்பட்டுள்ள அரசகேசரி திருவுருவச் TsekzlmmTTT LSLekeOO OLmmkk tLL tLLtLOTtSteS e eOlLtLLtLlsOss seYeLekOTYLLDY S YSTTTTLLmkOTS emLte seOeOm TSeOsk மூகவடிவேல், திரு.சுகுமார், அரசஆதிபர் திருமதி இஷல்டா சுகுtt, பிரதேச செயலர் ஐ.பிரதீபன், OemS eOemmBmmse seseOeOeOeOeBS sTmmOslmlmm S ksyymyBuS lmBOOkL mkeB BDDmDS DBSttllmmBmltmtllLS STS
கனவு.? கனவுகள் பற்றி நம் புராணங்கள் பலவற்றைக் கூறுகின்றன; ஜோதிட நூல்கள் பலன்கள் சொல்லுகின்றன. விஞ்ஞானமும் பல ஆய்வுகள் செய்கின்றது. ஆனால். அரசகேசரி கண்ட கனவு ஒர் ஆலயத்தையே உருவாக்கிவிட்டது.
婆婆婆
ஆழ்ந்த உறக்கத்திற் கிடந்த அரச கேசரியின் முன், ஆனைமாமுகப் பெருவள்ளல் காட்சியளிக்கின்றான். அழகும் குளிர்மையும் நிறைந்த அந்த அற்புதமான இடம்; அமிர்த மயமான தீர்த்தமும் பனந்தோப்பும் சூழ்ந்த அந்தப் புனித பூமி அவனுடைய ஆளுகைக்கு உட்பட்ட நீர்வேலிப் பிரதேசமா? அங்கே வந்து தன்னைத் தரிசிக்கும்படி ஆனைமுகன் அழைக்கின்றானா?
கண்டது கனவுதான் என்று தெரிந்தபோதும், சிறிது நேரத்தில் அது கலைந்துவிட்டதை உணர்ந்த போதிலும் அவனால் அந்தக் கனவை மறக்க முடியவில்லை.
விடிந்ததும் புரவி பறந்தது. நல்லூரின் மந்திரி மனையிலிருந்து, அரசகேசரி இராஜவீதியின் வழியூடாக நீர்வேலிக்குப்பறந்தான்.
தேடினான். தேடினான். தேடினான். ஆராக் காதலுடன் ஆழமான பக்தியுடன் ஆனைமுகனைத் தேடினான். நீரூரிலுள்ள வடலி, பனங்காடெல்லாம் தன் படைவீரர்களுடன் சேர்ந்து தேடித் தேடிக் களைத்துவிட்டான். சூரியன் உச்சியில் நிற்க, நா வரண்டது. நிலை குலைந்த பாவரசன் இப்போது தண்ணிரைத் தேடினான். ஒரு பக்கலில் சிறிய நீரூற்றைக் கண்டு அள்ளிப் பருகினான். ஆஹா. அற்புதம். உள்ளே சென்ற நீர் உணர்வூட்டியது. உயிரூட்டியது. அப்படி ஒர் இனிமை. கற்கண்டும் கரும்புச் சாறும் கலந்து
ឆ្នា }ళ్లదొడ్లక్షj} ---
O
 
 

7.2OII கர ஆடி 01
கொடுத்தது போல இருந்தது.
விழி விரிய நோக்கியபோது விநாயகரும், பாலாம்பிகை - பரமேஸ்வரரும் சிலை வடிவில் நிலை பெற்று இருப்பது தெரிந்தது.
கனவில் கண்டது நிஜத்தில். ஆடினான். பாடினான். "தேடிக் கண்டு கொண்டேன்" என்று கூவினான். ஆலயமொன்றை
அமைக்க அன்றே, அப்போதே சித்தம் கொண்டான்.
யாழ்ப்பாணத்தை ஆண்ட தமிழ் அரசர்கள் விநாயகர் வழிபாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர்களாகவே வாழ்ந்திருக்கி றார்கள். இதற்கு நல்லூர் கைலாச பிள்ளையார், இணுவில் பரராஜசேகரப்பிள்ளையார், உரும்பிராய் கருணாகரப் பிள்ளையார் போன்ற ஆலயங்கள் சான்று. இவற்றுடன் நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் ஆலயமும் சேர்கின்றது.
ஆனால். அந்த ஆலயம் எவ்வாறு தோற்றமளித்தது? அதன் சிறப்பம்சங்கள் யாவை? இவற்றை ஊகித்துப் பார்க்கக்கூட முடியாத அளவுக்கு, போர்த்துக்கீச மதவெறி சில ஆண்டுகளின் பின் அதை இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டது. எனினும் போர்த்துக்கீசரின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளியிட்ட ஒல்லாந்தர் காலத்தில் ஊர் மக்களின் உள்ளார்ந்த பக்தியின் விளைவாக அதே இடத்தில் மீண்டும் ஓர் ஆலயம் எழுந்தது. இந்து ஆலயங்கள் பற்றி 1792 ஆம் ஆண்டில் ஒல்லாந்த அரசு தயாரித்த பதிவேட்டில் இந்த ஆலயம் பற்றிய குறிப்புக்களும் இடம்பெற்றன.
படிப்படியாக வளர்ச்சி பெற்று நீரூரின் நடுநாயகமாக ஐந்தடுக்கு இராஜகோபுரத்துடன் கம்பீரமாக இன்று காட்சியளிக்கும் இந்த அரசகேசரிப் பிள்ளையார் கோவிலின்
சிறப்புப் பெயர் செம்பாட்டுப்பிள்ளையார் கோவில்,
"அதென்ன செம்பாட்டுப்பிள்ளையார்.?" என்கின்றீர்களா?
ஈழத்தமிழில் முதன் முதலில் காவியம் கண்ட அரசகேசரி தான் எழுதிய இரகுவம்சத்தை இந்த ஆனைமுகத்தானின் திருமுன்றலில் தான் வெளியீடு செய்தானாம் இவ்வாறு செம் (செம்மையான) பாட்டுக்களால் ஆன இரகுவம்சம் அரங்கேறிய தலம் ஆதலால் செம்பாட்டுப்பிள்ளையார் கோவில் என்கிறார்கள்
ஆலய பரிபாலனம் பற்றி ஆராய்ந்த போது 1880 - 1893 வரை பூரீமான் கதிர்காமர் ஐயம்பிள்ளை என்ற சிவநெறிச் செல்வராலும் 1894-1903 வரை அக்கால ஆலய குருவாலும் 1904-1907 வரை எழுவர் கொண்ட அடியவர் குழுவினாலும் 1907-1949 வரை, 42 ஆண்டுகள் "அப்பாச்சாமிக் குருக்கள்" என ஊரார் நேசித்துப் போற்றிய சிவபூரீ சுவாமிநாத - ராமஸ்வாமிக் குருக்களாலும் ஆலயம் பரிபாலிக்கப்பட்டமை தெரிகின்றது. குருக்கள் அவர்கள் அமரரானதும் 1949இல் அறங்காவலர் சபையிடம் சட்டபூர்வமாக ஒப்படைக்கப்பட்டு இன்றுவரை சபையின் நிர்வாகமே தொடர்
கின்றது.
இவ்வாலயத்தில் மரபுவழியான குரு பாரம்பரியமும் தொடர்வது சிறப்பிற்குரியதாகும். 1947 வரை முன் குறிப்பிட்ட அப்பாச்சாமிக்
குருக்களே அறங்காவலராயும் அர்ச்சகராயும் விளங்கினார். -->

Page 3
இந்துசாதனம் 7C
அவருக்குப் பின், அவர் மருகரும் கோப்பாய் நாவலர் வித்தியாலய முதல்வராகப் பணியாற்றியவருமான கார்த்திகேச ஐயரும், பின் சாம்ப சதாசிவக் குருக்களும் இங்கு சிறப்புற இறை பணியாற்றியுள்ளனர். இன்று சா. சோமதேவக் குருக்கள் இப்பணியைச் சீராகத் தொடர்கிறார்; சோ. சிவஜெயக்குருக்கள் தந்தையாரின் பணிக்கு உதவிபுரிந்து வருகிறார்.
ஸ்தபதி ஏகாம்பரம் அவர்களின் கை வண்ணத்தில் 1967 இல்
சிற்ப சித்திரத் தேர் இங்கு உருப்பெற்றிருக்கிறது. யாழகத்தின் புகழ் பூத்த தேர்களுள் ஒன்றாகக் கருதப்பெறும். இத்தேரில் சாரதியான பிரம்மாவின் சாரதீயத் திறனும் பாயும் குதிரைகளின் எழுச்சியும்
வீரமும் கண்டு ரசிக்க வேண்டியவை.
1932, 1951, 1973, 1995 ஆம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் கண்ட இத்தலம் இவ்வாண்டு -2011லும் கும்பநீராட்டுப் பெருவிழாக் கண்டிருக்கிறது. இவ்வாண்டுக் கும்பாபிஷேகத்தின் போது அரசகேசரிக்கு சிலை உருவாக்கப்பெற்று ஆலயத்தின் எதிரே பிரதிஷ்டை செய்யப்பெற்றமை ஆலயம் சார்ந்தோரின் வரலாற்றுணர்வைப் பிரதிபலிக்கிறது.
ஆவணி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தியாகிய விநாயகர் அவதரித்த விநாயக சதுர்த்தியை முன்னிட்டு மறுநாள் கொடியேறி 11 நாட்கள் மஹோற்சவம் நடைபெற்று அடுத்து வரும் பூரண்ையில்
S S S S S S S MMOe S e SeO S SO M S OO OSO ee e S M e S M e S e eO e SS உள்நாடு இந்துசாதன
தனிப்பிரதி 50/- ஆண்டுச் சந்தா : ரூபா 600/-
வெளிநாடு
Australia (AUS) - 35 Europe - 25 India (Indian Rs) - 500 Malaysia (RM) . = 50 Canada (S) 35 UK (E) 15 Other (USS) 25
Q三、
 

7.2O கற ஆடி 01
நிறைவுபெறுவது இவ்வாலயத்தின் நீண்டகால வழக்கம்.
ஆலயச் சூழலை வளப்படுத்தும் வகையில் அறப்பணி நிலையங்கள் பல உருவாகியுள்ளன. பூரீ கணேசா அறநெறிப் பாடசாலை, பூரீ கணேசா முன்பள்ளி, பூரீ கணேசா சனசமூக நிலையம், திருநாவுக்கரசு நாயனார் குருபூஜைமடம், சீ.சீ தமிழ்க் கலவன் பாடசாலை போன்றன இவற்றில் குறிப்பிடத்தக்கன.
அரசர்களால் மட்டுமல்ல அந்தணர்களாலும் துறவிகளாலும் வணிகர்களாலும் விவசாயிகளாலும் போற்றி வணங்கப்பெறுபவர் அரசகேசரியான் என்ற பூரீ ராஜசிம்மன். அண்மையில் சிவப்பேறுற்ற தூயவர் 'சிவத்தொண்டன் செல்லத்துரை சுவாமிகளின் குலதெய்வம் இவரே. ஆலயத்தில் கந்தபுராணம், பெரியபுராணம், திருவாதவூரடிகள் புராணம், பிள்ளையார் கதை என்பன மரபு தவறாமல் படனம் செய்யப்பெற்று வருகின்றன. இதனை ஆலய அறங்காவலர் சபை முக்கியஸ்தரான ச.க. முருகையா அவர்கள்
அர்ப்பணிப்புடன் நெறிப்படுத்தி வருகின்றார்கள். ஆலயத்ைைதச்
சார்ந்த இளைஞர்களும் ஆனைமுகப் பெருமானிடம் மிக்க பக்தியோடு செயற்பட்டு வருகிறார்கள்.
மூன்று கருவறைகள்-அவற்றில் முறையே பூரீ ராஜசிம்மன் என்ற அரசகேசரிப் பிள்ளையார், வைத்தீஸ்வரர், பாலாம்பிகை என்று சிவக்குடும்பமே காட்சி கொடுக்கிறது. ஆலயம் ஒரு சிவாலயத்திற்குரிய அனைத்து அம்சங்களும் உடையதாக உள்ளது. ஆலய தல விருக்ஷமாக பவளமல்லிகையும் நெல்லியும் விளங்கு கின்றன.
நிகழ இருக்கிற ஆவணி மஹோற்சவத்தில் நீர்வேலிக்கு வந்து நீங்களும் ஆனைமாமுகவன் அருள் பெறலாமே?
"என்னை நினைத்தடிமை கொண்டென் இடர் கெடுத்துத் தன்னை நினையத் தருகின்றான் - புன்னை விரசுமகிழ் சோலை வியன் நாரையூர் முக்கண் அரசு மகிழ் அத்திமுகத்தான்"
جیسے ہ_', 'تز:';
--- 

Page 4
6OUTElb LbhgabIilib
இந்துசாதனம் ஆனி 2011, 06ஆம் பக்கத் தொடர்ச்சி.
ஒரு சிலர் குயுக்தியாய்ப்பூச்சியம் ஒர் எண்ணே அல்ல என்றும், அது வெறுமையைக் குறிக்கும் ஓர் அடையாளம் என்றும் உரைக்கத் தலைப்படுவர்.
அவர் கருத்தும் வலிமையற்றதே. (பூச்சிய விடயத்தில் விஞ்ஞானம்பூச்சியமாகவே இருக்கிறது). ஒன்றில் இருந்து ஒன்று போனால் வரும் விடை பூச்சியம் என்கின்றனர். இவ்விடத்தில் அவர்கள் வெறுமை என்பதைப் பூச்சியத்தின் பெறுமதியாக்குகின்றனர். பின் இவர்களே, எண் ஒன்றினை பூச்சியத்தால் பிரிக்க வரும் விடை முடிவிலி என்கின்றனர்.
ஒன்றும் இல்லாத ஒன்றினால், ஒர் எண்ணை பிரிக்க அதே எண்ணே மீண்டும் வரவேண்டும். ஆனால், இவர்களோ அப்பிரித்தலின் விடையாய் முடிவிலியை உரைக்கின்றனர்.
இவ்விடத்தில் அவர்களால் பூச்சியத்திற்கு, அறியமுடியாத ஒரு நுண் பெறுமதிவழங்கப்படுகின்றது. இவ்விடயத்தில் இவ்விஞ்ஞானகாரர்களின் அடிப்படையே ஆட்டம் காண்கின்றது. குறித்த ஓர் எண்ணுக்கான பெறுமதி வரையறுக்கப்பட்டது எனும் இவர் கருத்து,
பூச்சிய விடயத்தில் மாறுபடுதல் தெளிவாகிறது. ஓர் இடத்தில் பெறுமதி அற்றதாயும், மற்றோர் இடத்தில் நுண்பெறுமதி உள்ளதாயும் உரைக்கப்படும், பூச்சியம் பற்றியவிஞ்ஞானத்தின் கருத்தறிய தனித்துதவித்து நிற்கின்றனர் இவ்விஞ்ஞானக்காரர்கள். பூச்சியத்திற்குப் பெறுமதி இல்லை என்றும் சொல்ல முடியவில்லை. இருப்பதாயும் கொள்ள முடியவில்லை.
இந்நிலையில் "அன்றே என்னின் அன்றேயாம். ஆம் என்று உரைக்கின் ஆமேயாம்" எனும் கம்பனது கடவுள் கொள்கையே
கணக்கினது கொள்கையுமாதல் கண்கூடாகிறது.
காட்சிக்கு அகப்படாதவர் என்பதாற் கடவுட் கொள்கை விஞ்ஞான அறிவுக்கு அடிப்படையாக இருக்கின்ற கணி கம்பவnரிதி, ஓர் உண்மையை நிரூபிப்பதற்குக் காட்சிப்
ஆகமப்பிரமாணம் ஆகியவற்றையும் அறிவுலகம் ஏற்று

D72O
-AY கம்பவாரிதி இ. ஜெயராஜ்
பூச்சியம் என்பது ஒன்றும் இல்லை எனின் பூச்சியத்தில் இருந்து ஒன்றை கழிப்பது எங்ங்ணம்? பூச்சியத்தில் இருந்து ஒன்றை கழிக்க வரும் எண்ணை, (-1) என உரைக்கின்றனர். இல்லாத ஒன்றில் இருந்து ஒன்றை கழிப்பது எங்ங்ணம் என்றும், அதற்கு விடை வருதல் எங்ங்ணம் என்றம் கேட்டால் அஃது கற்பனை எண் என்று உரைத்து தப்பிக்கப்பார்க்கின்றனர். காட்சிப்பிரமாணம் தவிர்ந்த மற்றவற்றைஏற்காதவர்கள், கற்பனை எண்ணை ஏற்றக்கொள்வது எங்ங்ணம்? முடிவில் விஞ்ஞானமும் "கற்பனை கடந்த சோதியாய்" ஆவதைக் காண்கிறோம்.
மொத்தத்தில் காட்சிப்பிரமாணமேபிரமாணம். விஞ்ஞானமே உண்மைகளின் அடிப்படை உண்மை வேறு, கற்பனை வேறு, அறிவுக்கு அகப்படாதது ஏதும் இல்லை. வரையறுத்து உரைக்கப்படாதது எல்லாம் பொய்யே. எல்லைகள் அற்றது என்று எப்பொருளும் இல்லை. என்றெல்லாம் உரைப்பாரை நோக்கி மேல் நிரூபணங்களால் வினாக்கள் பின்வருமாறு வரிசைப்
படுத்தப்படுகின்றன.
மேலும், கீழுமாய் முடிவற்ற எண்கள் பற்றி என்ன சொல்லப் போகிறீர்கள்? முடிவறறபொருளுக்கு குறியீடு இட்டது எங்ங்ணம்? அறிவுநிலையில் கற்பனை எண் என்பது சாத்தியமா? பூச்சியம் ஓர் எண்ணா? எண்ணன்றா? எண்ணாயின் அதன் பெறுமதி என்ன? எண் அன்றாயின் அது ஏன் கணிதத்தில் பயன்படுத்தப் படுகின்றது? இக்கேள்விகளுக்குபதிலளிக்க வல்லார் யார்? மேல் நிரூபணப்படி,
கணிதக் கொள்கை சரியானால் கடவுள கொள்கையும் சரியே.
யை மறுப்பவர்கள் பகுத்தறிவாதிகள், அவர்கள் நம்பும் தத்தின் பலவீனத்தை முரண்பாட்டைச் சுட்டிக் காட்டும் பிரமாணத்தை மட்டுமல்லாமல், அனுமானப் பிரமாணம்,
கொள்கின்றதுஎன்பதைவிளக்குகின்றார்.

Page 5
இந்துசாதனம் 7C
விடையேறும் விமலன்
உலகில் செல்வச் சிறப்பிற்கு ஊர்தி அல்லது வாகனம் ஒரு சிறந்த அறிகுறியாக உள்ளது. குடி மக்களில் செல்வராய் உள்ளோர்க்குச் சிவிகை ஏற்றம் சிறப்புத் தந்தது. "சிவிகையிற் செல்லும் நிலைமை முற்பிறப்பில் அறம் செய்தவர்கட்கே கிடைக்கும்" என்பதைத்திருவள்ளுவரும்,
"அறத்தாறிதுவென வேண்டா, சிவிகை பொறுத்தானோ டூர்ந்தானிடை"
என்ற திருக்குறளிற் குறிக்கின்றார். பண்டை நாளிற் புலவர்களைப் புரவலர்கள் சிவிகையில் ஏற்றிச் சிறப்பித்தனர். அறத்துறைப் பெருமான் திருஞானசம்பந்தருக்கு முத்துச்சிவிகை அளித்தமையும் இங்கு கருதற்பாலது.
இனி யானை, குதிரை, தேர்' என்பன அரசர்க்குரிய ஊர்திகளாகக் கொள்ளப்பட்டன. தேர்களிற் பூட்டப்படும் குதிரைகளின் எண்ணிக்கை அவரவர் தகுதிக்கேற்ப வேறுபடும். அண்மைக் காலம்வரையில் குடிமக்கள் தங்கள் வண்டிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட குதிரைகளைப்பூட்டலாகாது என்ற கட்டுப்பாடு இருந்தது. ஆளுநர்கள் இரண்டு குதிரைகள் பூட்டிய வண்டியிற் செல்லலாம் நான்கு குதிரைகள் பூட்டிய வண்டியில் இராசப் பிரதிநிதிகள் தாம் செல்ல வேண்டும் என்ற மரபுகள் இருந்தன. புராணங்களில் வரும் தேவர்கள், அசுரர்களின் தேர்களில் ஆயிரக்கணக்கான குதிரைகளும், சிங்கங்களும் பூட்டப்பட்டிருந் தனவாக அறிகின்றோம். இவற்றாலெல்லாம் அறிவது என்ன? செல்வத்திற்கும், அதிகாரத்திற்கும் ஊர்திகள் சிறந்த அடையாளங் களாய் விளங்கின என்பதே.
குதிரைகளைத் தேர்களிற் பூட்டி அத்தேர்களின் மேல் ஏறிச் செல்வதைவிடக் குதிரைகளின் மேலே ஏறிச் செல்வது சிறப்பாகக் கருதப்பட்டது. குதிரைகளின் மேல் ஏறிச் செல்வதினும் யானையின் மேல் ஏறிச் செல்வது பெருமையைத் தந்தது.
"யானைமேற் கொண்டு சென்றார் இவளிமேற் கொண்டு வந்தார்" (முன்பு குதிரைமேல் வந்தவர், இப்பொழுது யானைமேல் போகின்றார்) என்று புகழ்ச்சோழரை ஒரிடத்தில் சேக்கிழார் சிறப்பிக்கின்றார். இதனால் குதிரைமேற் செல்வோர் படைஞரும், அமைச்சருமேயாக, அரசராய் இருப்போர் - சிறப்பாக அரசர்க்கரசராய் இருப்போர் - யானைமீதே ஏறிச் சென்றனர்.
"மத்த யானை ஏறி மன்னர் சூழ வருவீர்காள்" என்று சுந்தரரும்பாடுகின்றார். மக்களைப்போலவே தேவர்களும் வாகனச் சிறப்பை விரும்புகின்றவர்களாகக் காணப்படுகின்றனர். ஆட்டுக்கிடாய், எருமைக்கடா, மான் முதலிய வாகனங்கள் எளிய தேவர்கட்கு உரியனவாக, செல்வத்திற் சிறந்த குபேரனுக்குப்புட்பக விமானமும், அதிகாரத்திற் சிறந்த இந்திரனுக்கு நான்கு தந்தங்களை உடையஐராவதம்' என்னும் வெள்ளை யானையும் வாகனமாய்

72O
உள்ளன. இன்னும் உலகத்தைப் படைத்தும், காத்தும் நிற்பவராய், இவர்களின் மேம்பட்ட பிரம, விட்டுணுக்களுக்குப் பறக்கும் பறவைகள் வாகனம் ஆகின்றன. பிரமனுக்குப் பறவைகளுட் சிறந்த அன்னமும், திருமாலுக்குப் புள்ளரசாகிய கருடனும் வாகனங்கள்
என்பது நன்கறியப்பட்டது.
இந்நிலையில் சிவபெருமானுக்கு வாகனமாவது எது என்று நோக்கினால் நகைப்புத்தான் தோன்றுகின்றது. அஃதாவது ஒற்றைக் காளையே அப்பெருமானுக்கு வாகனம். பலவகைப்பட்ட வாகனங்களில் காளை ஒரு வாகனமாகவே கருதப்படுவது இல்லை. அது, வண்டிகளில் வேண்டுமானால், பூட்டப்படுமன்றி நேரே வாகனமாக அமைவதில்லை. காளை பூட்டிய வண்டிகளைப் பார வண்டிகளாகவே பண்டைய நூல்கள் கூறுகின்றன. ஒற்றை மாட்டு வண்டி முற்காலத்தில் எங்கும் சொல்லப்படவே இல்லை. பொதிமாட்டுக்காரர்' எனப்படுகின்ற சில வணிகக் கூட்டத்தினர் பொதிகளைக் காளைகளின் மேல் ஏற்றிச் செல்வது உண்டு. மாடு மேய்க்கும் சிறார்கள் சிலவேளைகளில் விளையாட்டிற்காக மாட்டின்மேல் ஏறிச்செல்வர். எனவே எவரேனும், எக் காரணம் பற்றியாவது காளை மேல் ஏறிச்செல்வார்களாயின் அவர்களது செயல் நகைப்புக்கு உரியதாவதன்றிப் பெருமையாவது இல்லை. ஆயினும், சிவபெருமான் காளையையே வாகனமாகக் கொண்டது., பித்தன்' என்னும் காரணத்தாற்போலும்!
இனி, திரிபுர சங்கார காலத்தில் திருமால் சிவபெருமானுக்கு இடப ஊர்தியாய் உருக்கொண்டு தாங்கியதற்கும் காரணம் சிவபெருமான் முன்பே இடப வாகனனாய் இருந்ததே கந்தபுராணம் கூறுகின்றது. ஆகவே, சிவபெருமான் முதலில் இடபத்தை வாகனமாகக்கொண்ட வரலாறு, ஒரு பிரளய காலத்தில் அறக்கடவுள் (தருமதேவதை) தனது அழிவிற்கு அஞ்சி இடப உருவம் கொண்டு சிவபெருமானிடம் சரணடைய, அதனை அப்பெருமான் தனக்கு வாகனமாக ஏற்றுக்கொண்டான் என்பதே
என அப்புராணம் அவ்வரலாற்றை விரித்துரைக்கின்றது.
இவ்விருவகை வரலாறு பற்றிச் சிவபெருமானது விடை ஊர்தி இரண்டு வகையாகச் சொல்லப்படுகின்றது. போர்க்காலத்தில் திருமால் உருமாறி வந்த இடபம், மால்விடை’ என்றும்,போர்விடை’ என்றும் சொல்லப்படும். அறக்கடவுள் உருமாறி வந்த இடபம், அறவிடை’ என்றும், அருள்விடை’ என்றும் சொல்லப்படும். இருவிடைகளும் இரண்டு உண்மைகளைத் தெரிவிக்கும்.
திருமாலுக்கு "புருடோத்தமன் என்று பெயர் உண்டு. தத்துவக் கொள்கையில் உயிர், 'புருடன்’ என்னும் பெயரால் குறிக்கப்படும். எனவே, புருடோத்தமன்' என்பது, உயிர்களுள் சிறந்தவன் எனப் பொருள் தருவதாகும். 'நாராயணன்' என்னும் பெயர்க்கும், உயிர்த் தொகுதியை ஒத்து நிற்பவன் என்பதே பொருள் என்பது சிவஞான
லதாடர்ச்சி 14ஆம் பக்கம் -->

Page 6
இந்துசாதனம் 7C
கடவுளைக் காணமுயல்பவர்களைப் பக்தர்கள் எ என்றும் குறிப்பிடுவது சைவத்தமிழ் மரபு. தமிழ் யாழ்ப்பாணத்திற் சித்தர்கள் சிலர் வாழ்ந்து சிவமணம் ப நல்லூர்த் தேரடியின் தெய்வீகச் சிறப்பையும் அதைப் ே விளக்குகின்றார், அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டு
அன்பர் திரு.சிவயோகசுந்தரம்.
தேரடியின் தெய்வீகக்
நிம்மைப் போன்ற சாதாரண மக்களுக்கு அலங்காரக் கந்தனாகவும் ஆடம்பரக் கந்தனாகவும் காட்சியளிக்கும் நல்லைக் கந்தன், அருள் சுரக்கும் கந்தனாகப் பல சித்தர்களையும் யோகியர்களையும் தன்பாற் கவர்ந்து அவர்களின் கண்கண்ட தெய்வமாக விளங்குகின்றான் என்பதுமறுக்க முடியாத உண்மை.
நல்லூரானின் தேரடியையும் வீதியையும் தமது இருப்பிட மாகவும், தமது ஆன்மீக தாகத்தைத் தீர்க்கும் புனித பூமியாகவும் வரித்துக்கொண்ட தெய்வீகப் பிறவிகள் பலர். தேர்முட்டியைத் தன் இருப்பிடமாகக் கொண்டு "தேரடிச் சித்தர்" எனப் பெயர் பெற்றவர் செல்லப்பா சுவாமிகள்.
இந்தியாவிலுள்ள பெங்களூர் என்னுமிடத்தில் உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவர் தான் விசாரித்த வழக்கொன்றில் கொலைக் குற்றவாளி ஒருவனுக்குத் தூக்குத் தண்டனை விதிக்க வேண்டிய நிலையில், "இவன் ஆர்? நான் ஆர்? இவனுக்குத் தூக்குத் தண்டனை விதிப்பதற்கு நான் ஆர்?" என ஆழ்ந்து சிந்தித்து, தான் வகித்த நீதியரசர் பதவியை உடனடியாகவே உதறித் தள்ளினார்; சைவத் துறவியாகி "முத்தியானந்தா" என்ற தீட்சா நாமம் பூண்டு நேரே யாழ்ப்பாணத்திற்கு வந்தார். யாழ்ப்பாணம் பெரிய கடையை அடுத்துள்ள பகுதிகளில் அவர் உலாவத் தொடங்கினார். பொன்னம்மா மில் உரிமையாளரான செட்டியார் ஒருவர் கடையிற் குருநாதன் என அன்பு பாராட்டி இவரை ஆதரித்தார். ஆன்மீக நாட்டம் மிக்க அனைவராலும் கடையிற் சுவாமிகள் என அழைக்கப் பட்ட அவர், நல்லூர், கைதடி, தீவகம் ஆகிய பகுதிகளில் அடிக்கடி காணப்பட்டார். அவருடைய அருளாற் சகல சௌபாக்கியங்களும் பெற்ற கைதடியைச் சேர்ந்த அடியார் ஒருவர், கைதடி வீரகத்தி விநாயகர் ஆலயத்திற்குத் தீர்த்த மடம் நிறுவி, கடையிற் சுவாமிகள், தன்னை ஆசீர்வதிக்கும் காட்சியைத் தத்ரூபமாக அதில் வரைந்துள்ளார்.
கடையிற் சுவாமிகள், மாலை வேளைகளில் நல்லூர்க் கோவிலைச் சுற்றியுள்ள வீதிகளில் ஒடிக்கொண்டிருப்பார். அடியவர்கள், நோயாளிகள் எனப் பலர், அவரைப் பின் தொடர்ந்து ஒடுவர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினை இருக்கும். சிலருக்குக் கடையிற் சுவாமிகள் தன் கையில் வைத்திருக்கும் ஏதாவதொன்றைக் கொடுப்பார்; சிலரைத் தொட்டு ஆசீர்வதிப்பார்; சிலர் மேல், தன் உமிழ் நீரைத் துப்புவார். ஒவ்வொருவருடைய பிரச்சினைகளும் பிணியும் அந்தக் கணமே நீங்கிவிடும். யோகர் சுவாமிகள், கடையிற் சுவாமிகளைப் பற்றிப் பரவசமாக, "கடையிற் சுவாமிகள், புத்தர், யேசுவிலும் பார்க்க எவ்வளவோ மேலானவர். கிருஷ்ண பரமாத்மாவைப் போல் பல லீலைகளைப் புரிந்தவர்" எனக் கூறுவார்.
O

7.2O a5g Geup O
ன்றும், கடவுளைக் கண்டு தெளிந்தவர்களைச் சித்தர்கள் மக்களின் பாரம்பரியப் பிரதேசங்களுள் ஒன்றான ரப்பியிருக்கின்றார்கள். நல்லைக் கந்தன் கோயிலின் - ாணிப் பெருக்கிய சித்தர்களின் ஆன்மீகப் பணிகளையும் , ஆன்மீகத் திசையிலே தன் தாயகத்தையும் காணும்
சிறப்பு
ஒருநாள் மாலை வேளையில், நல்லூர் வீதியில் ஒடும் போது,
திரு. ம. சிவயோகசுந்தரம்
தேர்முட்டியடியில், கைகள் விலங்கிடப்பட்ட நிலையில் ஒரு பைத்தியத்தை உற்று நோக்கிய கடையிற் சுவாமிகள், "பைத்தியம் முற்றிவிட்டது. அவிழ்த்து விடுங்கள்" என்று அங்கு நின்ற அந்தப் பைத்தியத்தின் உறவினருக்கு அறிவுறுத்தினார். அவர்தான் "விசர்ச் செல்லப்பர்" என அறியப்பட்ட செல்லப்பா சுவாமிகள். அவர், தனது நிரந்தர இருப்பிடமாக நல்லூர்த் தேர்முட்டியையே தேர்ந்தெடுத்திருந்தார். பகல் வேளைகளிற் தேர்முட்டிப் படிகளில் இருப்பார். மானிடர் துயிலும் நடுச்சாம வேளைகளில் நல்லூரானின் மூலஸ்தானத்தைப் பார்த்து, இரண்டு கைகளையும் உயர்த்தி "பரம பிதாவே பரம பிதாவே" என அழுது கண்ணிர் மல்கி அப்பெருமானை வணங்குவார்.
இளைஞராக இருந்த யோகர் சுவாமிகள் தன்னுடன் கூடித் திரியும் விதானையார் திருஞானசம்பந்தர், துரையப்பா என்போருடன் கொழும்புத்துறையிலிருந்து நடந்து வந்து நல்லூரானைத் தரிசிக்கும் வழக்கமுடையவர். தம்முடன் எவரையும் அண்ட விடாத செல்லப்பர், ஆரம்ப காலங்களில் திருஞான சம்பந்தருடன் திருநெல்வேலி, வண்ணார்பண்ணை, கைதடி முதலிய இடங்களுக்குப் பகலிற் பிச்சையேற்கச் செல்வார். யோகர் சுவாமிகளாற் கைதடியில் அமர்த்தப்பெற்ற மார்க்கண்டு சுவாமிகளின் குடிசை அமைந்திருந்த வளவிலிருந்த வீட்டிற்கும் செல்லப்பர் சென்றதுண்டு. ஆனால் அந்த வீட்டுக்காரருக்கு, செல்லப்பர் யார் என்பதை அறியும் வாய்ப்பு இல்லாமற் போய்விட்டது. நல்லூரைப் போலக் கைதடியும் கடையிற் சுவாமிகள், செல்லப்பர், யோகர் சுவாமிகள், குடைச் சுவாமிகள், மார்க்கண்டு சுவாமிகள் போன்றவர்களுடன் வேறும் பல உள்நாட்டு, வெளிநாட்டுத் துறவிகளையும் கவர்ந்திழுக்கும் புனித பூமியாகத் திகழ்ந்துள்ளது.
ஆரம்ப காலத்திற் சில சமயங்களில் யோகர் சுவாமிகள் கொழும்புத்துறையிலிருந்து நல்லூருக்கு அங்கப்பிரதட்சணமாகச் சென்றுள்ளார் என அவருடைய மருகர் வைத்தியலிங்கம் மூலம் அறிய முடிந்தது. வழமைபோல், ஒரு நாள் யோகர் சுவாமிகள் நல்லூர்த் தேரடிப் பக்கம் சென்றபோது, எதிர்பாராத அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. யோகரை உற்று நோக்கிய செல்லப்பர், "யாரடா நீ? பாரடா உள்ளே"என அதட்டினார்.
அந்த முதற் பார்வையிலேயே யோகர் சுவாமிகள் குருவருளைப்
பெற்றுவிட்டார். அந்த அற்புத அனுபவத்தை அவர் தெளிவாக,
"தேரடியில் தேசிகனைத் தரிசித்தேன்; அன்றே யான் பெற்றேன்
அருள்" என்றும், "தேர்டியில் நான் பெற்ற சிவயோகம், சொல்ல
முடியாத சுகத்தைத் தந்துவிட்டது" என்றும் "நற்சிந்தனை" யிற்
கூறியுள்ளார். நல்லூரானையும் செல்லப்பரையும் தமது முழுமுதற்
-- Σ

Page 7
இந்துசாதனம் 7.O
கடவுளாகக் கொண்ட யோகர், தேரடியில் செல்லப்பருடன் தன் பெரும்பாலான நேரத்தைக் கழித்தார். செல்லப்பருக்குக் குருவுமில்லை; சீடனுமில்லை. இறைவனே மானிட ரூபத்திற் செல்லப்பராக வந்தார் என்பதை யோகர் நன்குணர்ந்து கொண்டார். செல்லப்பர், யோகர் சுவாமிகளுக்கு வழங்கிய, "ஒரு பொல்லாப்புமில்லை", எல்லாம் எப்பவோ முடிந்த காரியம்",
"நாமறியோம்", "முழுதுமுண்மை", ஆகிய மகா வாக்கியங்களை, உலகத்திலுள்ள அனைத்து மதத்தினரும் இன்று போற்றுவதையும், அவற்றின் தத்துவங்களை ஆராய்ந்து உணர்வதையும் எம்மால் காண முடிகின்றது.
நல்லூரானின் பெருமைகளை யோகரைப் போல் வேறு எவருமே பாடவில்லை என்று துணிந்து கூறலாம். ரமண மகரிஷிக்கு அண்ணாமலையான் அமைந்ததைப் போல, யோகருக்கு நல்லூரான் அமைந்தருளினான். "நல்லூரான் திருவடியை நான் நினைத்த மாத்திரத்தில், இரவு பகல் காணேனடி" என்றும், "பஞ்சம்படை வந்தாலும் பாரெல்லாம் வெந்தாலும் அஞ்சுவமோ நாங்களடி, ஆறுமுகன் தஞ்சமடி" என்றும், "நல்லூரானை வந்தொருக்கால் நாம் விழுந்து கும்பிட்டால், வில்லங்கம் எல்லாம் இல்லாமற்போகுமே" என்றும் உணர்வுபூர்வமாக பாடியுள்ளார்.
தாமாகவே கைதடிக்குச் சென்ற யோகர் சுவாமிகளால் ஆட்கொள்ளப்பட்டவர் கைதடி மெளன முனிவர் மார்க்கண்டு சுவாமிகள். அகத்திய முனிவருக்குப் போகர் போல, யோகர் சுவாமிகளுக்குமார்க்கண்டர் எனலாம். யோகரின் முதன்மைச் சீடர் அவர், "சிவதொண்டர்களுக்கு வழிகாட்டியாக மார்க்கண்டனை விட்டுள்ளேன்" என யோகராற் குறிப்பிடப் பெற்ற பெருமைக் குரியவர்.
நல்லூரானிடம் மிகுந்த ஈடுபாடு கொண்ட மார்க்கண்டர், ஒரு நாள் தன் குருநாதருக்கு முன்னால் நின்றபடி, அன்று நடைபெறவிருந்த நல்லூரானின் தேர்த்திருவிழாவுக்குச் செல்லும் தன் ஆவலை வெளியிட்டார். அப்போது யோகர் மார்க்கண்டரின் உடம்பைக் காட்டி, "இதுதான் நல்லூர், இது தான் தேர்" என்று கூறினர். எனினும், நல்லூருக்குச் சென்று நல்லூரானின் தேர்த் திருக்காட்சியைத் தரிசித்துவருமாறும் கூறினார்.
அதிகாலை வேளையில் கைதடியிலிருந்து நல்லூருக்குச் சென்று வீதிவலம்வந்து தேரடியைத் தரிசிக்கும் வழக்கத்தை, தான் சமாதியாகும் வரை மார்க்கண்டு சுவாமிகள் மேற்கொண்டிருந்தார் என்பது குறிக்கத் தக்கது. இலங்கையின் மஹா தேசாதிபதியாக இருந்த சோல்பரி பிரபுவின் மகன் ராம்ஸ்போதம் என்பவர் ஒரு தடவை யோகர் சுவாமிகளைத் தரிசிக்கச் சென்றார். அங்கிருந்த அன்பர் ஒருவர் மஹா தேசாதிபதியின் (கவர்ணர் ஜெனரல்) மகன் என அவரை யோகர் சுவாமிகளுக்கு அறிமுகஞ் செய்தார். அப்போது யோகர், "கவர்ணரும் நானே, ஜெனரலும் நானே" என்று கூறினர். கடவுளைக் காண வேண்டும் என்ற ஆவலை அடக் முடியாதிருந்த ராம்ஸ்போதத்துக்கு ஒரு திருவாதிரை நன்னாளில் ஞானாபிஷேகம் செய்து "சந்த சுவாமி" என்ற தீட்சா நாமத்தையும் சூட்டினர். பின்னர், ஆன்ம ஈடேற்றத்துக்காக அவரை மார்க்கண்டு சுவாமிகளிடம் ஒப்படைத்து, அடிக்கடி கைதடிக்குச் சென்று அவரைக் கண்காணித்து வந்தார் யோகர்; "கண்டா மிருகத்தைப் போல இரு உனக்கு நீயே எசமான், நல்லூரானை மறவாதே" போன்ற நற்சிந்தனைகளைச் சாந்த சுவாமிக்குப் போதித்தார்.

7.2O கர ஆடி 01
சாந்த சுவாமியும் தன் குருநாதனின் போதனைப்படி வெறுங்காலுடன், வெறும் மேலுடன் நாலு முழவேட்டி மட்டும் அணிந்து நல்லூரானைத் தரிசிக்கச் செல்லும் வழக்கத்தை உடையவராயிருந்தார். தாடி மீசை வைத்திருந்த சாந்த சுவாமியைப் பார்த்து, "தாடியும் மீசையும் வெளி வேடங்கள் என யோகர் சுவாமிகள் குறிப்பிட்டதைக் கேட்டவுடன் அவற்றையும் அவர் அகற்றினார். மார்க்கண்டு சுவாமிகளுக்குப் பணிவிடை செய்யும் நேரந்தவிர்ந்த ஏனைய வேளைகளில், தனியாக இருந்து தன்னை உணரத் தலைப்பட்டார் சாந்த சுவாமி.
அமெரிக்கரான சுப்பிரமுனிய சுவாமி, முதன் முதலில் யாழ்ப்பாணத்துக்கு வந்தபோது, அவரை அழைத்து வந்த அளவெட்டியைச் சேர்ந்த செட்டியார், யோகர் சுவாமியைத் தரிசித்துவிட்டுப் பின்னர் நல்லூருக்குப் போகலாம் என்றார். ஆனால், முதலில் நல்லூரானைத் தரிசித்துவிட்டு யோகர் சுவாமியிடம் செல்ல வேண்டும் எனப் பதில் கூறி, முதலில் நல்லூரானைத் தரிசித்தபின், ஒருவித பதற்றத்துடன் யாருடனும் எதுவும் பேசாமல் காரில் ஏறிக் கொழும்புத்துறைக்குச் சென்றார். யோகர் சுவாமியின் படலையைச் சுப்பிரமுனிய சுவாமி திறக்க "Subramuniya what have you seen in Nallur?" (situry(p6tful, நல்லூரில் நீ என்னத்தைக் கண்டாய்?) என யோகர் சுவாமிகள் (65'5, "Swami have seen you in Nallur" (fióIIILs g) sile,6061T நல்லூர் மூலஸ்தானத்திற் கண்டேன்) என ஆச்சரியத்துடன் பதிலளித்தார்.
இதே போல், உயர்நீதிமன்ற நீதியரசராக இருந்த அக்பர் என்னும் இஸ்லாமிய அன்பருக்கும் ஒரு முறை நல்லூர் மூலஸ்தானத்தில் யோகர் சுவாமிகள் வீற்றிருந்ததைக் கண்டுள்ளார். அதனால் "நல்லூரானும் யோகர் சுவாமிகளும் இருக்கும்வரை யாழ்ப்பாணத்தவருக்கு ஒரு குறையும் நேராது" என அவர் அடிக்கடி கூறுவார்.
"நல்லூரானே நமக்குக் கதி" என அடிக்கடி கூறும் யோகர் சுவாமிகள் தனது வேட்டி முடிச்சிலிருந்து காசு கொடுத்து நல்லூரானுக்கு அபிஷேகம் செய்விக்குமாறு அடியவர்களை அனுப்புவதுண்டு. 1958 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின்போது அப்போதைய யாழ். அரச அதிபராக இருந்த திரு.ம.ழரீகாந்தாவைக் கூப்பிட்டு, நல்லூரானுக்கு அபிஷேகம் செய்விக்குமாறு கட்டளையிட்டார். அந்த அபிஷேக வைபவத்தில், எட்டு வயதுச் சிறுவனாக இருந்த இந்தக் கட்டுரையாளனான நானும் எனது மைத்துனர் முத்துக்குமாரசாமியுடன்கலந்து கொண்டேன். அபிஷேகம் முடிந்த பின்னர் குருக்கள் ஐயாவிடம் காளாஞ்சியை வாங்கும்படி அங்கிருந்த அடியார்கள், சிறுவனான என்னிடம் கூற நானும் பயபக்தியுடன் அதை வாங்கிக் கொண்டேன். பின்னர் 1983 ஆம் ஆண்டுக் கலவரத்தின்போது என் முன்னால் பலர் துடிதுடித்து இறந்து கொண்டிருக்க நான் மட்டும் மயிரிழையில் உயிர்தப்பியதுக்கு, காளாஞ்சியை முன்னர் நான் வாங்கியதுதான் காரணம் என நான் முழுமையாக நம்புகின்றேன்.
"நல்லைப் பதிக்கரசே! நல்லைப் பதிக்கரசே!
நல்ல வழி கர்ட்டிநாயேனை ஆண்டிடா" என்ற யோகர் சுவாமிகளின் நற்சிந்தனைக் கேற்ப எமது அல்லல்களையும் துன்பங்களையும் நீக்கி எங்கள் எல்லோரையும் என்றென்றும் காத்தருளுமாறு நல்லூரான் பதம் பணிவோம். 崇

Page 8
இந்துசாதனம் 7.
ல்லல் பிறவியி றுப்பது எங்க
பிறவாத பேறுதான் பெருமபேறு; இந்தப் பிறவியின் 1 இப்பிறவியினை மதித்து வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து, கிடைக்கும் என்றமையக் கருத்தை விரித்துரைக்கின்றார் கட்(
நிTம்பள்ளியில் படிக்கின்றோம். படித்துமுடிந்ததும்பத்தாவது வகுப்புத் தேர்வினை எழுதுகின்றோம். தேர்வு எழுதுவதன் நோக்கம் என்ன? மீண்டும் பத்தாவது வகுப்பில் படிப்பதற்கா? இல்லை மேல் வகுப்புக்குச் செல்ல வேண்டும் என்பதே நமது நோக்கமாகும். படித்த வகுப்பிற்கே திரும்பவும் வந்து படிப்பதற்கு எவரும் விரும்புவதில்லை. நாம் இவ்வுலகில் பிறவி எடுத்துவிட்டோம். வாழ்ந்து முடிந்ததும் இறந்து விடுகின்றோம். நாம் இறந்தபின் மீண்டும் இந்த உலகத்தில் பிறப்பது என்றால், படித்த வகுப்பிற்கே திரும்பவும் வருவது போல் தானே. கற்க வேண்டியவற்றை எல்லாம் கற்று மெய்ப் பொருளை உணர்ந்தவர்கள் மீண்டும் உலகில் வந்து பிறவாத நெறியினையே
நாடுவார்கள் என்கிறார் வள்ளுவர்.
"கற்றி ஈண்டுமெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றி ஈண்டுவாரா நெறி"
மற்று ஈண்டு வாரா நெறியே பக்தி நெறி என்கின்றனர் பரம ஞானிகள் இறைவனை மணிவாசகர் ஏத்தும் போது "மீண்டும் வாரா வழி அருள்புரிபவன்" என்பார். சாதாரணமாக ஓர் இடத்திற்குச் சென்றடையும் வழி எது என்றுதான் நாம் தேடுவோம். ஆனால் அருளாளர்களோ ஞானிகளோ இந்த உலகிற்கு நாம் மீண்டும் வந்துவிடாமல் இருப்பதற்கான வழியையே நாடுகின்றனர்.
மீண்டும் பிறப்பதற்கு நாம் ஏன் அஞ்சவேண்டும். பிறவி என்பது ஒர் உயிர், ஒர் உடலோடு சேர்வது தான் எனக் காண்கின்றோம். உயிருக்கு உயிராக ஒளிரும் இறைமையினைத் தன்னகத்தே கொண்ட உயிர் தன் உயர் நிலையினை மறந்து, உடலும் தானும் ஒன்று, என்று எண்ணி உடலோடு பொருந்திய ஐம்பொறிகளின் வேட்கை வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றது. ஆசையும் பாசமும் நம் உயிரை எங்கெங்கெல்லாமோ இழுத்துச் செல்கின்றன. உடலும் நம் உயிரும் ஒன்று எனக் கருதி அந்த மயக்கத்தால் நாம் அடையும் இடர்களுக்கு எல்லையே இல்லை. பொய்யான ஊனுடலை மெய் எனக் கருதி நின்று துன்பக் கடலிலே தவிப்பதாக பாடுகின்றார், மணிவாசகர்
"பொத்தை ஊன் சுவர், புழுப்பொதிந்து, உளுத்து
அசும்பு ஒழுகிய பொய்க்கூரை"
நம்மாழ்வாரோ இருள்நிறைந்த உலகில் இத்தகைய பிறவி இனி எனக்கு வேண்டாம் என்பார்." இருள்தரு மாஞாலத்துள்
இனிப்பிறவி யான் வேண்டேன். "வேண்டுங்கால் வேண்டும்

7.2O esp. 99 Ol
loGOT OTh.... ?
நயினை நா. யோகநாதன் B.A.
யன், இனிப் பிறவாமலிருப்பது தான். என்பதை உணர்ந்து, இறைவனை உருகி உருகி வழிபட்டால் இறவாத பெருவாழ்வு திரையாளர்.
பிறவாமை" என்பது வள்ளுவர் வாக்கு. சுந்தரரோ "கேட்பதெல்லாம் பிறவாமை கேட்டொழிந்தேன்" என்பார். "இக் காயம் நீக்கி இனி ஒரு காலத்தில் புக்குப் பிறவாமல் போம் வழி நாடுமின்" என்பது திருமந்திரம். இவ்வாறு அருளாளர்கள் எல்லோரும் இனிப்பிறவி வேண்டாத பேரின்ப நிலையையே நாடித் தேடிநிற்கின்றனர்.
இவ்வாறுபிறவியினை ஏன் ஞானிகள் வெறுக்கின்றனர். பிறவி என்பது ஒரு பிறவியுடன் நிற்பதில்லை. ஒவ்வொரு பிறவியும் அடுத்த பிறவிக்கு வித்தாகிவிடுகின்றது. எவ்வாறெனின் பொதுவாக வாழ்வில் நாம் புரியும் செயல் ஒவ்வொன்றின் பயனும் நம்மையே சேருகின்றது. நாம் இயற்றும் வினைகளின் பயன் நம்மையே பற்றுகின்றது. இதனையே வினைப் பயன் என்கின்றோம். நாம் இயற்றும் நற்செயல்கள் நற் பயனை நம் உயிரோடு இணைக்கின்றன. நாம் இழைக்கும் தீய செயல்கள் தீய பயனை நம் உயிருடன் சேர்க்கின்றன. எனவே நாம் செயல்களின் விளைவான நல்வினைப்பயன், தீவினைப்பயன் என்ற இருவகைப் பயன்களும் உயிரோடு ஒன்றிவிடுகின்றன. தூய்மையான நம் உயிரை, நல்வினை தீவினை என்ற இருவினைப் பயன்களும் பிணைத்து நிற்கின்றன.
ஒரு பிறவியில் விளையும் பயன் அந்தப் பிறவியோடு அழிந்து விடுவதில்லை. அந்தப்பயன் அடுத்த பிறவிக்கு வித்து ஆகின்றது. வினையின் பயனை அனுபவிப்பதற்காக வினையால் பீடிக்கப்பட்ட உயிர் அடுத்த பிறவி எடுக்கின்றது. அடுத்து எடுக்கும் பிறவியில் மேலும் வினைப் பயன்கள் அவற்றை அனுபவிப்பதற்கு மீண்டும் பிறப்பு மீண்டும் வினைப்பயன்கள். மீண்டும் பிறப்பு. இவ்வாறு சங்கிலித் தொடராக பிறவிகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு பிறவியிலும் வினைகள் சேர்ந்து கொண்டே போகின்றன. இதனால் பிறவிகள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. எனவே தான் பிறவியைப் "பெருங்கடல்" என்றார்
திருவள்ளுவர்.இந்தப்பெருங்கடலை நீந்திக் கடப்பது எவ்வாறு.
இறைவனின் திருவடிகளை இதயத்தில் இருத்தி நிற்போரால் தான் பிறவியாகிய பெருங்கடலை கடக்க இயலும். மற்றவர்களால் இயலாது என்பார் திருவள்ளுவர். "பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி சேராதார்" பிறவி எனும் இக்கடலை நீந்த தன் பேரருள் தந்து அருளினான்" என்று இறைவன் அருளைப்
பாடுவார் மணிவாசகர்.
-->

Page 9
இந்துசாதனம் 7.O
நம் உடல் எத்தனையோ வகையான நோய்களுக்கு உள்ளாகின்றது. அந் நோய்களைப் போக்குவதற்கென வைத்தியனூடாக மருந்துகளை நாம் உட்கொள்ளுகின்றோம். உடலுக்குப் பலவகை நோய் உண்டு என்றால், உயிருக்கும் ஒரு நோய் உண்டு. அதுதான் பிறவி என்கின்ற நோய் இந்தப் பிறவி என்ற நோயை அகற்றும் மருந்து எது? இறைவன் தான் அந்த மருந்து என்கின்றனர், அருளாளர்கள் "பிறவிப் பிணிக்கோர் மருந்தே" என்றும் "ஏனைய பிறப்பறுக்கும் எம் மருந்தே" என்றும் இறைவனை ஏத்துவார் மணிவாசகர். "அறிந்தனர் நோயை அறுக்கும் மருந்தே" என்று பிறவிநோயை அறுக்கும் மருந்தாகத் திருமாலைப் பாடுவார் நம்மாழ்வார். இங்கே பிறவிப் பிணி நோய் தீர்க்கும் வைத்திய நாதனாக இறைவனைக் காண்கின்றனர் அருளாளர்கள். பிறவிகளுக்கு வித்தாக வினைப் பயன் அமைகின்றது. வினைப் பயனாக விளைவது தான் பிறவி. எனவே தான், பிறவியை "வினைப்பிறவி என்கின்றனர். "வினைப் பிறவி என்கின்ற வேதனையில் அகப்பட்டு தனைச் சிறிதும் நினையாதே தளர்வு எய்திக் கிடப்பேனை" வினையின் பயனாக பிறவி எடுத்தமையால் தன்னை வினையேன் என்கின்றார் மணிவாசகர் மேலும் "வினையேனுடைய மெய்ப் பொருளே" என்றும் "பொல்லா
வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்" என்றும் கூறுவார் அவர்.
வினைப் பயனின் தாக்கத்தில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்வது என்பது இயலாததாகும். இறக்கும் பொழுது உடலை விட்டும் பிரியும் உயிரோடு, ஒன்றி மறு பிறவிக்குக் காரணமாய் இருக்கின்றது வினைப்பயன். எனவே, இதனை ஊழ்வினை என்பார்கள். (பழைய வினை) பிறவிக்கு வித்தாகும் ஊழ்வினை, பிறந்தபின் நிகழும் நம் வாழ்வையும் பாதிக்கின்றது. வாழ்விலே எதிர்பாராத கேடுகள், எத்தனையோ விளைகின்றன. நன் முயற்சிகள் பயனற்றுப் போகின்றன. எவ்வளவு ஊக்கத்துடன் உழைத்தாலும் ஊழ்வினையின் உறுத்துதலில் இருந்து நம்மால் தப்ப முடிவதில்லை. இந்த ஊழின் வலியினை உணர்த்தும் வகையில் "ஊழிற் பெருவலி யாவுள" என்று கேட்கின்றார் வள்ளுவர். ஆம் ஊழைக் காட்டிலும் வலிமை மிக்கது எதுவுமில்லை. அதாவது வினைப் பயனை விட ஆற்றல் மிக்கது எதுவுமில்லை என்பது புரிகின்றது.
பக்தி நெறி ஒன்றே வினைப்பயன்களில் இருந்து நாம் விடுதலை பெறுவதற்கு வழியாகும். என்கின்றனர் அருளாளர்கள். ஆன்மீக சீலர்கள் இதனை அனுபவ வாயிலாக உணர்த்தி இருக்கின்றார்கள். பண்டை வல்வினையை அறுத்து ஒழிக்கும் வழி ஒன்றுள்ளது சொல்லுகின்றேன் கேளுங்கள் என்பார் நாவுக்கரசர். "பண்டை வல்வினை பற்றறுக்கும் வகையுண்டு. சொல்லுவன் கேள்மின் ஒளிகிளர்வண்டு சேர் பொழில் சூழ்திருமாற்பேறுகண்டு கைதொழத் தீரும் கவலையே" என்பது அவர் வாக்கு.
ஒரு பொருளின் மீது தூசு படர்ந்திருந்தால் அதைத் துணியாலோ துடைப்பத்தாலேயோ தட்டிப் போக்கி விடுகின்றோம். அதன்மீது அழுக்குப் படிந்திருந்தால் தண்ணிரில் இட்டு அதனைக் கழுவுகின்றோம் அழுக்குப் பலமாகப் படிந்திருந்தால் சவர்க்காரம் போட்டுத் துவைத்து நீக்கி விடுகின்றோம். ஆனால், உலோகம்

72O atóp éag? OI
ஒன்றில் மட்டமான வேறோர் உலோகம் கலந்திருந்தால் அதை அகற்றுவது எப்படி? எளிதில் அதை அகற்ற முடிவதில்லை. தங்கத்திலே செம்பு கலந்திருக்கின்றது அதனால் தங்கத்தின் தரம் குறைகின்றது. இந்தச் செம்பை அகற்றித் தங்கத்தைத் தூய்மைப்படுத்துவதற்காக செம்பு கலந்த தங்கத்தை உருக்கின்றோம். உலோகம் போன்ற பொருள்களில் ஒன்றிக் கலந்துள்ளதை நீக்க வேண்டுமெனில் அந்த உலோகத்தை உருக்க வேண்டியுள்ளது.
இதேபோல் நம் உயிரோடு ஒன்றியுள்ள ஊழ்வினையைப் போக்க வேண்டுமெனில், நம் உயிர் உருகவேண்டும் என்கின்றனர் ஞானிகள். இறைவன் அருளினால் தான் நம் உயிர் உருகுகின்றது. நம் உள்ளமும், உயிரும், உருகிய நிலையில் கள்ளமாகக் கலந்து நிற்கும் கடிய வினைகள் கரைந்து போகின்றன. "உருகுவித்து என் உள்ளத்தின் உள்ளிருந்த கள்ளத்தை தள்ளிப் போக்கி" என்ற பாடுவார் நாவுக்கரசர். இறைவனின் அருட்பிரவாகத்தை கூறவந்த அடிகளார் "என்பு உள் உருக்கி இருவினையை ஈடு அழித்து துன்பம் களைந்து துவந்துவங்கள் தூய்மை செய்து முன்பு உள்ளவற்றை முழுது அழிய உட்புகுந்த அன்பின் குலாத்தில்லை ஆண்டானைத் கொண்டன்றே" என்பார்.
நம் உள்ளம் புகுந்த இறைவன் நம் எலும்புகளும் நெகிழும் படியாக நம்மை உருகச் செய்கின்றான். அவ்வாறு உருகச் செய்து நம்மைப் பற்றி நிற்கும் இருவினைகளின் வலிமையை அழிக்கின்றான். ஊழ்வினைகளை அகற்றி, முற்பிறவிகளில் சேர்ந்த வினைப்பயன் முழுவதும் அழித்து, நம் உயிரைத் தூய்மையாக்கி விடுகின்றான். அன்பு வடிவாகத் தில்லையிலே விளங்கும் ஆண்டவனின் கருணை இது என்கிறார் அடிகளார். இறைவனை நினைந்து என்பெலாம் உருகி நிற்கும் நிலையில் இருவினைகளும் அழிந்து விடுகின்றன என்ற பேருண்மையினை இங்கு நாம் உணருகின்றோம். இவ்வாறு இரு வினைகளையும் அறுத்து அழித்து விடுவதன் மூலம் இனியும் உடலிலே புகுந்து பிறவாமல் நம்மை உய்விக்கின்றான் இறைவன். இதனால் தான் பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்" "மாயப் பிறப்பறுக்கும் மன்னன்" அல்லல் பிறவி அறுப்பானே" என்றெல்லாம் இறைவனை மணிவாசகம் ஏத்துகின்றது.
அன்னை என்ற சொல்லைக் கேட்கின்றோம். உடனே உள்ளத்தை நெகிழ வைக்கும் அன்புணர்வு நம் மனத்திலே எழுகின்றது. அந்த அன்புணர்வுக்குக் காரணம் அன்னை என்ற மூன்று எழுத்துச் சொல்லா? இல்லை. நம்மைப்பெற்றெடுத்து சீராட்டிப்,பாராட்டி, தாலாட்டி, பரிந்து வளர்த்த தாய்மைப்பண்பினை நம் மனம் உணர்வுபூர்வமாக நினைக்கின்றது. அன்னை என்ற சொல்லைக் கேட்டவுடன், பத்து மாதங்கள் அவள் கருப்பையில் அவளது உடலின் உடலாக உதிரத்தின் உதிரமாக வளர்ந்தோமே என்ற உண்மையினை நாம் நினைந்து உணருகின்றோம். இவ்வாறு அன்னை என்ற சொலுடன் அன்னையின் பண்புகளும், அவளுடன் நமக்குள்ள ஒப்பற்ற உறவும் நம் நினைவுக்கு வருகின்றன. அதனால் தான் அன்னை என்றதும் அகத்தில் அன்புணர்வு பெருகுகின்றது.
ம்மை யாமலே நாம் உருகிவிடுகின்mோம். நம்மை அறி நாம் உருகிவிடு D

Page 10
இந்துசாதனம் 7C
இது போன்றே, இறைமை என்ற சொல்லை எண்ணும் போதும் இறைமை பற்றி நாம் என்னென்னவெல்லாம் அறிந்து கொண்டோமோ அவை அனைத்தும் நம் மனதில் எழவேண்டும். இறைமையினை நினைப்பதென்றால், அதன் பண்புகள் பற்றி நினைப்பதேயாகும். அவற்றை நம் உள்ளத்தில் உணர்வதே இறைமையினை நினைந்து உணர்வதாகும். ஆதியும் அந்தமும் இல்லாதது இறைமை அணுவிற்கும் அணுவாகவும், அண்டங்கள் அனைத்திற்கும் பெரிதாகவும் பாரோடு விண்ணாய் பரந்த பரம்பொருள் அது. அங்கு இங்கு எனாதபடி எங்கும் அது நிறைந்துள்ளது. உயிர்கள் அனைத்திலுமாக, உயிருக்கு உயிராக ஒளிர்வது. அண்ட சராசரங்களையும் ஆட்டிவைப்பது ஒப்பும், உவமையும் இல்லாதது, ஐம்புலனுக்கு அகப்படாதது, அறிவுக்கு அப்பாற்பட்டது எண்ணத்திற்கு எட்டாதது. இத்தகைய அரிய பெரிய பொருள், என் ஊனிலே புகுந்து உள்ளத்தில் உறைகின்றதே என்ற
உணர்வுநமக்கு எழ வேண்டும்.
இறைவா நீ என்னுடன் இசைந்து விட்டாய் என் உள்ளத்தோடு ஒன்றி விட்டாய், என் ஊனோடும் உயிரோடும் உள்ளத்தோடும் சங்கமமாகி விட்டபின் நான் என்று எதுவுமில்லை. நீயே நான் என்கின்ற நிலைக்கு நாம் மாறவேண்டும். "ஊனார் உடல் புகுந்தான் உயிர் கலந்தான் உளம் பிரியான்" என்றும் "நினைப்பவர் மனத்தை கோயிலாக் கொண்டவன்" என்றும் மணிவாசகன் கூறியது இதனையே. இந்த நிலையில தான் நாம் பிறவாத பேரின்ப பெரு வாழ்வுக்குத் தகுதியுடையவராகின்றோம். இறைவனும் பிறவா நெறி தந்த பேரருளாளன்" எனத் திருமந்திரம் கூறிய பேருண்மைக் குரியவனாக நமது அல்லல் பிறவியை அறுத்துநின்று பிறவிப்
பிணிக்கோர் மருந்தாகிவிடுகின்றான்.
தீவினைகள் மூன்று வகைப்படும். அை இவற்றைத் தொலைக்கக்கூடியது நாமஜபம்.
நோய் வந்தால் சில மருந்துகளை உட்கெ வர இருக்கும் நோயையும் சில மருந்துகளைச் விடவும். இயலும் அல்லவா?
அதுபோல் வர இருக்கும் தீவினைகை அர்ப்பணித்துக்கொள்வதால், போதிய அளவு ே சாதனைகளினால் விலக்கிக் கொண்டுவிடலாம்:
பொதுவாக மாசில்லா பக்தி கொண்டவ ஆண்டவனை வேண்டுவதில்லை. அப்படிப்ப
தாங்கும் சக்தியையும் ஆண்டவன் அருளால் பெ.
 
 
 
 
 
 
 
 
 
 

7.2O 5g &p Ol
பிறவித் துன்பங்களைக் கண்டு அஞ்சிநிற்கும் நெஞ்சங்கள் நம் உயிரின் உயர்ந்த தன்மை என்ன என்பதையும், உடலிலே சிக்குண்டு கிடக்கும் உயிர்படும் அல்லல்களையும், புலன்களின் நாட்டத்தால் புரியப்படும் புன்மைச் செயல்களால் விளையும் வினைப்பயன் களையும், ஒர்ந்து உயர்ந்து சிந்தித்துத் தெளியும் நிலையில் பிறவாத பேறுதான் பெரும்பேறு என்ற உண்மையினை உணர்ந்து கொள்ளவேண்டும். இந்தப் பிறவியின் பயன், இனிப் பிறவாமல் இருப்பது தான் என்பதை உணர்ந்து இப்பிறவியை மதித்து அதற்கேற்ப வையத்தில் வாழ்வாங்கு வாழவேண்டும். "வாய்த்தது நம் தமக்கு ஈது ஒர் பிறவி மதித்திடுமின்" என்ற அடிகளாரின் வேண்டுதல் நம் எல்லோரையும் சிந்திக்க வைத்து
சீரயவாழ்க்கைக்கு அழைத்துச் செல்வதாய் அமையவேண்டும்.
நாம் ஒவ்வொருவரும் இறை நாட்டமும் ஆன்மீக தாகமும் உள்ளவர்களாகி மனம் பக்குவப்படும்போது தொல்லையிரும்பிறவி சூழும் தனைநீக்கி அல்லல் அறுத்து ஆனந்தமாக்கிவிட்ட பெருவாழ்வை பெறும் பாக்கிய சாலிகளாக ஆவோம். நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன் நினையாது ஒருபோதும் இருந்தறியேன் என உளம் உருகி வழிபடும்போது இமைப்பொழுதும் எம் நெஞ்சில் நீங்காதவனாக இறைவன் இருந்து மீட்டிங்கு வந்து வினைப் பிறவி சாராமல் நம்மை அணுக்கிரகிப்பான் என்பதை நாம் எப்போதும் நெஞ்சில் நிலைநிறுத்திக் கொள்வோமாக. அந்த ஆன்மீக பலத்துடன் கூடிய நம்பிக்கையுடன் நாம் இருப்போமாயின் அல்லல் பிறவியை அறுக்கும் பேரின்பப் பெருவாழ்வு நமக்கு வாய்க்கும் என்பதை துணிந்து கூறிவிடலாமன்றோ.
வ வந்தவை, வந்திருப்பவை. வர இருப்பவை.
ாண்டு நோயை நீக்கிக்கொள்கின்றோம். மேலும், சாப்பிடுவதனால் முன்பே தவிர்த்துக்கொண்டு
ளயும் இறைவனிடம் முழுமையாகத் தன்னை மற்கொள்ளப்படும் ஜபம், தியானம் போன்ற தவ அல்லது வெகுவாகக் குறைத்துவிடலாம். பர்கள், துன்பங்கள் நீங்க வேண்டும் என்றுகூட ட்டவர்கள் துன்பம் சூழ்ந்தபோதும் அதைத் றுகிறார்கள். -சுவாமி கமலாநந்தர்

Page 11
இந்துசாதனம் 7.O
སྙིལ་ : நாவலர் சரிதமோது Y கவிஞர் திரு. இ. இர
(இந்துசாதனம் - 2011ஆனி 13
530. நித்திய பூசையில்லாநிலமுள கோவிலெல்லாம்
கைத்தரு பொருளை யீந்தும் கருதவை நிகழ வைத்தும் பத்தியுளயிஷேகங்கள் பாரினில் நடத்து வீரேல் உத்தம புண்(ணி)ய மீதே உள்ளத்திற் தேரு மென்றார்.
531. புரிதவருறைமடங்கள் போற்றிடுமாலயங்கள்
விரியுடிட்கரணியாதிவியன்புவி சிதையில் நரலில் வரிமுறை விதியே மீண்டும் வடித்தவர் பயனெடுத்தே தெரி பிரமாணமாகச் சிவபுண்(ணி)யத் தெளிவும் சொன்னார்.
532. முன்னவர் கோவிற் பூசை முறைவிதியாற்றில் நாட்டில் மன்னவர்நீதியோங்கும் மாரியும் பெய்யுங் காலம் கன்னலும் கனியும் தெங்கும் கமுகொடுகழனியெல்லாம் செந்நெலும் விளைந்து மாந்தர் செகமதில் வாழ்வர் சுகமே.
533. சேதமுற்றவைகள் முன்போற் செய்திடவேண்டுஞ்செல்வம்
காதலுள் ஒருவராலோ கனிமனர் சிலரினாலோ மேதினியாற்றலரிதால் மேன்மையுள் சைவ ரெல்லாம் தீதிதையகற்றச்சேரா திருந்திடின் சித்திக்காதே.
534. அரிதினு மரிது வன்றோ நம்மவ ரொன்று கூடல்
அரிததஐக்கியத்தோடிணைந்துவக் கரும மாற்றல் தரிதம பகைமை யெல்லாம் தரணியில் நனிபாராட்டி புரிவதைக் குலைத்தல் தானே புவியினில் வழக்க மென்றார்.
535. இப்படியுறைவதாலே எம்தமிழ் சைவமாந்தர்
செப்பிடுநெறியிலேயும் சீரினை யடைந்திடாதே அப்பரமார்க்கத்தாரும் அன்னிய பாஷை யாரும் தப்புற மதிக்கப் பெற்றே தலையது கவிழ்கின்றார்கள்.
536. பெருபகை சோதரர்பிதாவினுக் கிடையூறென்றால்
இருபகை மறந்து தாதைக் குறுவிடையூறுநீக்கி தருமவர்க்கன்பராகித்தாமினி தொழுகல் போல குருவிறைக் கினியராயே குவலயத் தொழுகவேண்டும்
537. பிரமனும் மாலும் போற்றிப் பரவரிநாத னெங்கள்
பரமபிதாவென்றோதும் பரைசிவற் கினியராக தரணியினொழுகல் தானே சைவருக்கினிதென்றோதி வரமிதை வாங்கிச் சேர்ந்த வாழ்வுக்கு முயலுமென்றார்.
538. ஈங்குரை சுட்டிப் போந்த இவைகளையெண்ணிமாந்தர் தாங்கொழு பகைமை நீங்கித் தம்முளைக் கியராய்க் கூடி தேங்கிடுகோவில் வேண்டுந்திருப்பணி பூசையெல்லாம் ஒங்கிடநிறைவாயாற்றவுங்களாலியன்ற மட்டும்
539. வாக்கொடுகாயத்தாலும் வழங்கிடுபொருளினாலும்
தேக்குமுத்தமோத்தமத்துத் திருப்பணியிவைகளெம்மால் தாக்கொடு உரைத்து வைத்த நல்விதி சிரத்தை யோடே ஆக்கிநற் புகழும் புண்யமும் அடைந்துலகுய்யுமாறும்
540. திருதருநீறுபூணர் தெய்வமாப் பணிகளாற்ற
பெருவருளதனை வாரிப்பீடுறச்செய்யுமாறும்
 

7.2O 65pr &qip Ol
ம் நற்றமிழ் மாலை
Tooru IIT gossroofit
ஆம் பக்கத்தின் தொடர்ச்சி.)
541.
542.
543.
544.
545.
546.
547.
548.
549.
550.
கருதவை முடியப் பரம காருண்ய வாரியாம்சிவன் திருவடி பிரார்த்திக்கின்றேன் திருச்சிற்றம் பலமே யென்றார்
வருமொரு பிரபவாண்டு வளர்பிறை மாசி ஒன்றாந் திருவுடையறுபத்தெட்டில் சென்னையில் முதலியார்வை அருநிதியாகு பச்சையப்பர்கல்லூரி தேர்ந்தே வருபெரும் பணிக ளாற்ற வைத்தனர் (இ)ரண்டாம் கூட்டம்.
வித்தகரறிஞரெல்லாம் விளங்கிடு சபையின் முன்னே அத்தவரக்கிராசன அதிபதியாயிருந்தே பித்துடை புண்ணியத்துள் பெருமைகள் யாவுந்தேக்கி இத்தரை யுரைத்ததெல்லாமினிமையா யெடுத்துச்சொல்வாம்.
தமக்கினிமை வஞ்சகரே தாந்தாமுதற் சாரார் தமக்கினியார் தம்முதற்சார்ந்தாரெனுங் குறளெடுத்தே தமக்குந்தாம் வஞ்சகராவாரிவரேயென்றும்பின்னர் தமக்குத்தாமினியராவதிவர்தா மென்றுஞ் சொன்னார்
துன்பினில் வெறுப்பு மான்மா இன்பினில் விருப்புமாதல் என்றுமுள் இயற்கையேனுமெதுதன்ப மின்ப மென்றும் துன்பினில் நின்றும் நீங்கியின்பினையடையு மார்க்கம் இன்னதென்றுள்ளவாறு மிகமதி லறிய மாடடார்.
சிதம்பரத்தாடுகின்ற சிவபெருமானார் தாமே சுதந்திர ராவரல்லார் துன்பினின் நின்றும் நீங்கி இதந்தரு மின்பங்காணஇவர்சக்தி யுடையரல்லர் நிதம்பிற வான்மாக்கள்பரதந்திர ராவரென்றார்
முத்தனையுண்மை நோக்கி முழுமுதற் கடவுளாரின் சித்தியை வேண்டியான்மா வழிபட்டு ஒழுகினல்லால் புத்தியிலின்ப துன்ப மறிதலும் நீங்கியின்பை யித்தவரை பெறுதலென்று மியலாதென்றறியுமென்றார்.
நித்தியமானதாகநிலைபேரின்பமாகும் முத்தியதொன்றே யென்றும் முழுநிறைவாகு மற்றை உய்த்துணரின்ப மெல்லா முட்பூவிற் தேன்போலென்ற சத்தியமுணரல் வேண்டும் சகத்தின ரெனவுரைத்தார்.
விடையமரிறையையேற்ற விதிப்படி சிரத்தையோடு அடைவழி தொழுதல் வேண்டுமவையுறு கருவியாக வடைசிவஞான மேயமுத்தியின் வாயிலாகும் நடைமுறை வகைகழேழாம் நவின்றிடக் கேழுமென்றார்
அத்துவ சுத்தியாகியடைநிருவான தீட்சை சித்தியதான பின்னே சித்தாந்த சாத்(தி)ர மோதல் நித்தமுமோது வித்தல் நீள்பொருளவைகள் கேட்டல் தத்துவமவைகேட்பித்தல் சார்பொருள் சிந்தையேற்றல்
கேடறுமிவைகள் பற்றிக்கேட்டதைச் சிந்தித்தஃதே நாடரி வழியா மென்று நமதுளம் தெளிதல் பின்னால் தேடலிற் தெளிந்தவாறே திருவெனவுரைசெய்நிட்டை கூடலென்றிவைகள் தாமே குறித்துள ஏழுமாகும்.
(...فارحYصعله)

Page 12
இந்துசாதனம் 7O
திருச்சிற்றம்பலம் வாழ்க அந்தணர் வானவரானினம் வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக ஆழ்க தீயதெல்லாமரனாமமே &gas 606)ILIö5 (pigLiširasool. திருச்சிற்றம்பலம் இந்து சாதனம் Hindu Organ
e-mail: editorGhindu organ.com
கர வuல ஆடி பமீ" 1ஆம் உ (r7.27.22r)
அஹிம்சையின் ஆற்றல்
அஹிம்சை என்பது கோழைகளின் ஆயுதம் என்பதும்-வேறு எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்கக்கூடிய ஆற்றலோ ஆளுமையோ சிறிதும் இல்லாதவர்களே அஹிம்சைப் போராட்டங் களில் ஈடுபடுகின்றார்கள் என்பதும்
முற்றிலும் பொருத்தமற்ற - உண்மைக்குப் புறம்பான - தவறான கருத்துக்கள் என்பதையும்
மாறாக
நெஞ்சில் உறுதியும், நோக்கிற் புனிதமும், வாக்கில் உண்மையின் ஒளிவீச்சும் இணைந்த சுத்த வீரர்கள்தம் சித்தத்தெளிவுடன் ஈடுபடும் நேர்மையான செயற்பாடே அஹிம்சைப்போராட்டம் என்பதையும்
அந்த உறுதி - உண்மையின் ஒளி - சித்தத் தெளிவு - செயற்பாட்டு நேர்மை - போன்றவற்றின் கூட்டுச் சக்தி வெற்றியைத் தவிர வேறு எதையுமே ஈட்டித்தரமாட்டாது என்பதையும்
நீண்ட நெடுங்காலத்தின் பின் மீண்டும் நடைபெற்ற வரலாற்றின் பக்கங்களுக்கு வளம் சேர்க்கும் நிகழ்ச்சி ஒன்று - எவ்வித சந்தேகத்துக்கோ மயக்கத்துக்கோ இடமின்றிச் சரியாக நிரூபித்திருக்கின்றது -
இந்தியத் தலைநகரமான புதுடில்லியிலே நடைபெற்ற சத்தியாக்கிரக நிகழ்ச்சியையே நாம் குறிப்பிடுகின்றோம் என்பதை այլն -
அன்னாஹஸாரே என்ற காந்தியவாதியே அந்தநிகழ்ச்சியின் “a55” pöruuass6OTIITaf66quio asmful I நாயகனாகவுமிருந்து காவிய நாயகனாக முகிழ்த்து வரலாற்றுச் சாதனை படைத்தவர் என்பதையும் -
சமய நம்பிக்கையும் சாத்வீகப் போக்குமுடைய நமது வாசகர்கள் சரியாகவே ஊகித்திருப்பார்கள் என்பதில் எள்ளளவு சந்தேகமும் எமக்கில்லை.
ஆன்மீகக் கோட்பாடுகளின் அடிப்படையிலே அரசியற் சமுதாய வாழ்க்கையை அமைத்து - பழம்பெரும் பண்பாட்டு விழுமியங்களின் தனிப்பெரும் களஞ்சியமாகத் திகழ்ந்தமை
1.
 

7.2O a6g e9ıp Oı
இந்தியாவின்பண்டைய வரலாறு என்றால் -
அன்னியரின் ஆக்கிரமிப்பால் - தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலைதவறிக்கெட்டும் பாழ்பட்டுநின்றதும்
கடவுள் நம்பிக்கையும், கருணை உள்ளமும், கடமை யுணர்ச்சியும் - கண்ணியச் செயற்பாடும் நிறைந்த காந்தி மஹாத்மாவால் - கத்தியின்றி இரத்தமின்றி மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தின் விளைவாகச் சுதந்திரப்பேறு சித்தித்ததும் -
அன்பு, அறம், அஹிம்சை, உண்மை, நேர்மை, தேச பக்தி, தெய்வபக்தி போன்ற விழுமியங்களைத் தம் அரசியற் செயற்பாடு களின் ஆணிவேராய்க் கொண்டிருந்த காந்தீய அரசியல்வாதிகள் - ஆட்சியாளர்கள் போன்றவர்களின் செம்மையான வழிகாட்டலில் - பழமையின் சாரத்தையும் புதுமையின் பொருத்தமான - போற்றக்கூடிய - பண்புகளையும், கலந்து - உலகின் பெரும்பாலான நாடுகளின் மதிப்பையும், மரியாதையையும் வென்றெடுத்து - முன்னோடிநாடாக மிளிர்ந்தமை - அதன்பிற்கால வரலாறு. என்றால் -
சுதந்திரம் என்பது சுயநலத்தைப்பெருக்குதல்அரசியல் என்பது அகப்பட்டவற்றைச் சுருட்டுதல் - முதலான மூன்றாந்தரச் சிந்தனைகளுடன்
பணத்தை விட்டெறிந்து பற்றிக்கொண்ட பதவிச் சொகுசுடன் தம் சொந்தப் பொருளாதாரத்தையும் சொந்த பந்தங்களின் பொருள தாரத்தையும் கட்டி எழுப்புவதன் மூலம் நாட்டைக் குட்டிச்சுவராக்கும் குறுமதியாளர்களின் குள்ளத்தனத் தால் குடங்கிப்போய் - குறுகிப்போய்-குழம்பிப்போய்க்கிடப்பது அதன் இக்கால வரலாறு
பரிதாபத்துக்கும் பரிகசிப்பிற்குமுரிய இந்த நிலையை மாற்றி - கெடுமதி படைத்த குள்ள நரிகளின் கொட்டத்தை அடக்கி ஒடுக்கி - அழித்து ஒழிக்கும் வகையில் - ஊழலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் - நாட்டின் பிரதமராகவோ நிதிபதியாகவோ கூட இருந்தாலும் -
அவர்களை விசாரிப்பதற்கும் - குற்றவாளியாகக் காணப் படுவோர் மீது ஆகக் குறைந்தது பத்து ஆண்டுகாலச் சிறைத் தண்டனை விதிப்பதற்கும் அதிகாரமுடைய - அரச பிரதிநிதிகள் மட்டுமல்லாமல் பொதுமக்களின் பிரதிநிதிகளும் அங்கம் வகிக்கும் ஜன்லோக்பால் என்ற அமைப்பை உருவாக்கிச் செயற்பட வைக்க (β6)Ισώπ08th.
என்ற கோரிக்கை தொடர்பான சகல அம்சங்களையும் நிறைவேற்றும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இந்திய நாடாளுமன்றம் உறுதியளித்தமைதான் அன்னா ஹஸாரோ மேற்கொண்ட அஹிம்சைப் போராட்டம் - உண்ணாவிரதம் - விளைவித்த வெற்றியின் உள்ளீடு
போராட்டத்தைத் தடுப்பதற்கு - ஆரம்பிக்கப்பட்டதன் பின் இடையிலே குழப்புவதற்கும் ஆட்சியிலுள்ள சூழ்ச்சியாளர்களும் அதிகாரத் திமிர் பிடித்த ஊழற் பெருச்சாளிகளும் தீட்டிய திட்டங்கள் எல்லாமே -
அன்னா ஹஸாரேயின் ஆன்மீக உறுதியின் முன் - பொங்கி எழுந்த பொதுமக்களின் ஆதரவுப் (3Lugopolu aciropoir - 6|LIrg,6 mgumuirů (3umru6íll Loor -
ஈட்டிய வெற்றியை இதயங்கனிந்து வரவேற்கும் நாம் - இத்தகைய போராட்டங்கள் இன்னமும் தொடரும் என்ற அறிவித்தலை இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் வரவேற்கும் நாம் - இந்தியாவின் செல்வாக்கிற்குட்பட்ட சிறிய நாடுகளில் அன்னா ஹஸாரே போன்றோர் அவதரிக்கும் நாள் எந்நாளே என்ற நியாயமான, ஏக்கத்தை வெளிப்படுத்தவும் விரும்புகின்றோம். 人

Page 13
TO
சமயம் ஒரு வ
கலாநிதி மனோன்ம
ஆடை, அலங்காரம் மனித வாழ்வியலில் இணைந்திருப்பது. மனிதன் காட்டு வாழ்வு காலத்தில் இயற்கையின் வெப்ப தட்பநிலைகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஆடை பயன்படுத்தப்பட்டது. வெப்பகாலத்தில் தழைகளாலும் குளிரான காலத்தில் விலங்குகளின் தோலினாலும் ஆடைகள் செய்யப்பட்டன. பின்னர் காலத்துக்குக் காலம் ஏற்பட்ட பிறபண்பாட்டுக் கலப்பினால் ஆடையில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. எனினும் ஆடை, மனிதன் இறைசிந்தனையோடு இணைந்தபோது பண்பாட்டுக் குறியீடாக அமைந்தது.
தமிழர் வாழ்வியலில் சமயத்தின் சின்னமாக ஆடை இறையுருவங்களோடு இணைத்துப் பக்திப்பாடல்களிலே பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றை இப்போது மீளநோக்கினால் எமது முன்னோர்களின் ஆடை பற்றிய எண்ணங்களை நன்கு விளங்கிக்கொள்ள முடியும். நாயன்மார் பாடிய தேவாரங் களில்ஆடை பற்றிய பலகுறிப்புகள் காணப்படுகின்றன. ஆடையின் நிறம், ஆடையின் தன்மை என்பனவற்றை விளக்கும் பாடல்கள் பல
96.
துவராடைய வேடத்தார், மதகளிற்றுரிவை போர்த்த மைந்தர் எனச் சிவனுடைய ஆடை புகழ்ந்து பேசப்பட்டுள்ளது. அப்பர் பாடிய தேவாரம் ஒன்றில் வரும் ஆடை பற்றிய குறிப்பு இங்கு கவனத்திற்குரியது.
"தொடுத்த மலரொடுதாபமுஞ் சாந்துங்கொண்டெப்பொழுதும் அடுத்து வணங்கு மயனொடு மாலுக்குங் காண்பரியான் பொடிக்கொண்டனிந்து பொன்னாகியதில்லைச் சிற்றம்பலவன்
உடுத்ததுகில் கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே"
தொடுத்தமலர், தூபம், சாந்துகொண்டு சென்று எப்பொழுதும் தில்லையில் உறையும் சிற்றம்பலவனை வணங்கும் அடியவரான அப்பர் தான் கண்ட இறைவன் திருக்கோலத்தை இப்பாடலிலே காட்சிப்படுத்தியுள்ளார். பொடி அணிந்த பொன்மேனி. அவர் அணிந்திருக்கும் திருநீறு கவின்தருகிறது. இறைவன் உடுத்த துகில் கண்ட கண்களால் இனிவேறொன்றையும் காணமுடியா தென அப்பர் கூறுகிறார். வழிபடச் சென்றவர் இறைவன் உடுத்த ஆடையை உற்றுநோக்கியுள்ளார்.
இன்னோர் பாடலில் இறைவன் பட்டுடுத்துத் தோல் போர்த்துப் பாம்பொன்றை ஆர்த்திருக்குங் காட்சியைக் காட்டுகிறது. புலித்தோலை அரையில் அசைத்த காட்சியை வேறொருபாடல் சுட்டியுள்ளது. இறைவன் அணிந்திருக்கும் ஆடை பற்றிய குறிப்பு ஆண்களின் ஆடைப்பண்பாடு பற்றிய கருத்தின் அடித்தளமாக உள்ளது. வழிபாடு செய்யும்போது இறையுருக்களின் ஆடைக்கோலங்களை மனதிற் பதிய வைக்கும் அதேவேளையில் தனது ஆடைபற்றிய கருத்தையும் மனிதன் எண்ணுவது இயல்பே.
 

72O 5 épi OI
བཅུའི་ཊི་༡༧བྱ་
ாழ்வியல் -29 சில் ,
னரி சண்முகதாஸ் இ> ༣
ܠܶܗ ܐܶܓ݁ܳ>
மனிதனின் முதல் தேவை வயிற்றுப் பசியைத் தீர்ப்பதுவே, அடுத்து உடை தேவையானது. வழிபாட்டிற்கு மக்களை ஆற்றுப் படுத்த விரும்பிய சமயகுரவர் பாடலில் இதுபற்றிய குறிப்பு உளது.
"சோறு கூறையின்றியே துவண்டு தரமாய் நமக்
கேறுசுற்றமென்கவே யிடுக்கணுய்ப்பதன் முனம்
ஆறுமோர் சடையினானாதியானை செற்றவன்
நாறு தேன் மலர்ப்பொழினலங் கொள்காழி சேர்மினே"
இங்கு சோறும் கூறையும் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளன. நாம்
அல்லற்படும் போது இறைவன் தலத்திலே சென்று வழிபாடு செய்வதே நல்லது எனக் கூறிய அறிவுரை இன்றுவரை ஏற்கக் கூடியதாக உள்ளது. கூறை என ஆடை குறிப்பிடப்பட்டுள்ளது. கூறுபடுத்தி அணியப்படுவதால் கூறை எனப்பட்டது. வேட்டி, சால்வை எனக் கூறுபடுத்தப்பட்ட ஆடை ஆண்களுக்கு உரியதாகவுள்ளது. கூறைப்புடைவை எனப் பெண்கள் ஆடையிலும்
கூறை இன்றுவரை வழக்கிலுள்ளது.
அடுத்து அலங்காரம் இறையுருவங்களுக்குச் செய்யப்பட்ட முறைமையையும் தேவாரப் பாடல்கள் பதிவு செய்துள்ளன. பாதாதி கேசமாக அலங்காரம் செய்யப்படும். காலிலே கழல். அரையிலே பாம்பு, கையிலும் பாம்பு, கழுத்திலே ஆரம், காதிலே தோடு, தலையிலே பிறை எனச் சிவனுடைய அலங்காரக் கோலம் பாடப்பட்டுள்ளது. இவற்றுடன் மலர்களாலும் அலங்காரம் நடைபெற்றுள்ளது. மிளிர்கொன்றை அணிதல், வெண்ணிறு அணிதல் என்பன அழகுக்கு அழகூட்டுவதாக உள்ளன. கவினைத்தருவது நீறு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இயற்கையான அழகோடு மேலதிகமாக அழகூட்டுவதற்கு இன்றும் முகப்பூச்சுப்பூசுவோர்பலருள்ளார்.
தலையலங்காரம் பற்றிய நிலையில் சிவன் சூடும் பிள்ளைப்பிறையும் புனலும் குறிப்பிடப்பட்டுள்ளன. அலங்காரமான தோற்றத்தைக் கண்டு பரவசமாகி நிற்பதை அப்பர் பாடலிற் சுட்டியுள்ளார்.
"தாண்டுசுடர் மேனித்தா நீறாடிச் சூலங்கையேந்தியோர் சுழல்வாய்நாகம் பூண்டுபொறியரவங்காதிற்பெய்து பொற்சடைகளவைதாழப்புரி வெண்ணுரலர் நீண்டு கிடந்திலங்கு திங்கள் சூடி நெடுந்தெருவே வந்தெனது நெஞ்சங் கொண்டார் வேண்டுநடைநடக்கும் வெள்ளேறேறி வெண்காடுமேவியவி கிர்தனாரே' இப்பாடலில் வீதியுலா வருகின்ற சிவனுடைய திருக்கோலம் பாடப்பட்டுள்ள்து. திருவெண்காட்டுத் திருத்தலத்திலே எழுந்தருளியிருக்கும் சிவன் உற்சவ காலங்களில் வீதிஉலாவரும் காட்சியை அப்பர் அழகான சொற்சித்திரமாக வரைந்து
காட்டியுள்ளார்; மேனியிலே வெண்ணிறு நிறையப் பூசிய கோலம். --- -- ο

Page 14
இந்துசாதனம் 7.O
சூலங்கையிலேந்தி வருகிறார்; பாம்பைக் கழுத்திலே பூண்டுள்ளார்; புள்ளியுடைய பாம்பை காதிலே சுற்றியுள்ளார்; சிவந்த நீண்ட சடைகள் தாழ்ந்திருக்கின்றன; மார்பிலே முப்புரி வெண்ணுரல் அணிந்துள்ளார். சடையிலே விளங்குகின்ற திங்களைச் சூடியுள்ளார். இத்தகைய கவின் கொண்ட தோற்றத்திலே சிவன் நெடுந்தெருவிலே உலாவருகின்றபோது அடியார் நெஞ்சிலே அக்கோலம் அழியாத கோலமாகப் பதிந்துவிடுகிறது.
இன்று திருக்கோயில்களில் நடைபெறும் திருவிழாவில் சுவாமி ஊர்வலம் வருகின்றபோது இக்கவின்நிறை காட்சியைக் காணலாம். அன்று நடைபெற்றது போலவே இன்றும் இறைவனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா நடைபெறுகின்றது. அண்மையில் நல்லூர்க் கந்தனின் திருவிழா நடைபெறவுள்ளது. ஒவ்வொரு நாளும் வேற்பெருமான் அலங்காரக் கோலத்தோடு வீதி உலா வருகை
05ஆம் பக்கத் தொடர்ச்சி.
பாடியத்துள் இனிது விளக்கப்பட்டுள்ளது. ஆகவே, சிவபெருமான் மால்விடை ஊர்தல், 'உயிர்களைத் தன்வழி நடத்தும் தலைவன், என்னும் உண்மையையே உணர்த்துவதாகும். காளையின் சாதிப்பெயர் பசு என்பது இப்பெயரும் உயிர்களை உணர்த்தும். ஆதலால் பெற்றம் ஊரும் பெரியோன்' என்பதும் மேற்கூறிய
உண்மையையே தெரிவிப்பதாகும்.
இனி, சிவபெருமான் அறவிடை ஊர்தல், அறத்திற்குத் தலைவனாய், உலக நலத்தின் பொருட்டு அதனை நன்கு நடத்தும் முதல்வனாதலைக் குறிக்கும். இன்னும் விடையை அறம் என்னாது, அறக்கடவுள்' என்பதனால், அதுவும் ஓர் உயிரே என்பது அறியப்படும். மாயோன், அறக்கடவுள்' என்னும் இருவருள், மாயோன் பெத்தான்மாக்களைக் குறிக்கும் முறையிலும், அறக்கடவுள் முத்தான்மாக்களைக் குறிக்கும் முறையிலும் அமைந்து நிற்றல் அறியலாம். இதனால், சிவபெருமான் பெத்தரும், முத்தரும் ஆகிய இருவகை ஆன்மாக்களுக்கும் அவரவர் நிலையில் நின்று அவரவர்களை ஏற்ற பெற்றியால் நடத்துபவன் என்பது உணரப்படுகின்றது. பெத்தர் - பாசத்தில் கட்டுப்பட்டவர் முத்தர்அதனின்றும் விடுபட்டவர்.
சிவபெருமானது இடப ஊர்தி இரு வகையாய் அமைந்திருத்தல் உற்றுநோக்கினால் விளங்கும். சிவபெருமானைத் திரும்பி நோக்காது தன் கண் சென்றவாறு நேரே நோக்கி நிற்பது ஒருவகை. இதனையே போர்விடை’ என்றும் பாயும் மால்விடை என்றும் கூறுவர். இது சிவனை உள்நோக்கி உணராத
பெத்தான்மாக்களைக் குறிக்கும்.
கண்சென்றவாறு நோக்காது திரும்பிச் சிவபெருமானை நோக்கி நிற்பது மற்றொரு வகை. இதனையே அறவிடை’ என்பர். இது புறத்தே உலகத்தை நோக்காது அகத்தே இறைவனை நோக்கும் முத்தான்மாக்களைக் குறிக்கும். திருக்கோயில்களில்
1

,2OH கர ஆடி O
தருவார். அந்த அலங்காரத்தினுடைய தொடக்க நிலையை மேற்காட்டிய அப்பர் பாடல் நன்கு விளக்கி நிற்கிறது. இன்றைய தலைமுறையினர் அலங்காரப் பண்பாடு அண்மைக் காலத்தது என எண்ணுகின்றனர். அவர்களுக்கு அலங்காரத் திருவிழா எமது சமய வாழ்வியலில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே தொடங்கப் பெற்றதை அப்பர் பாடல் சான்றாக நின்று விளக்குகிறது. அலங்காரக் கந்தன்' என்ற சிறப்பான அடைமொழி பெற்ற கந்தனின் அலங்காரம் பற்றிய அடிப்படையான திட்டமிடல் தேவாரங்களிலிருந்துதான் பெறப்பட்டது. அலங்காரமாக வந்து எம்மனதைக் குளிரவைக்கும் இறைவன் எம்மையும் அலங்காரம் செய்யத்துாண்டுகிறான். பலர் பார்த்து வியந்து நிற்க நாமும் நெடுந்தெருக்களிலே நடந்து செல்ல ஆசைப்படுகின்றோம். அதனால் ஆடை, அணிகளைத் தேடி அணிகிறோம். எமது சமய வாழ்வியலில் ஆடையும் அலங்காரமும் என்றும் நிலைத்து நிற்பவை.
マ「cー*
சிவபெருமான் திருமுன்பு அப்பெருமானையே நோக்கி நிற்கின்ற இடபம் இந்த அறவிடையே, "முத்தி பெற்றோர் சிவமேயாவர் என்னும் கருத்தினால் சிவபெருமானுக்கு உரிய நந்தி எனும் பெயர் இந்த அறவிடைக்கும் வழங்குகின்றது. சிவபெருமான் விடையேறும் விமலனாய் நிற்பது இத்துணை உண்மைகளை விளக்கி நிற்பதால் அதனை அருளாளர் பலவிடத்தும் எடுத்தோதிப் போற்றுகின்றனர். திருஞானசம்பந்தர் சிவபெருமானது திருச்செவியைச் சிறப்பித்து அருளிச்செய்த முதல்த் தொடராகிய "தோடுடைய செவியன்" என்றதை, அடுத்து, "விடையேறி" என இதனையே அருளிச் செய்தார். ஆகவே, உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அவனது திருக்கோலங்களில் இத்திருக்கோலமே இரண்டாவதாக அவரது உள்ளத்தைக் கவர்ந்தமை தெளிவு. திருநாவுக்கரசரும் தமது முதற் திருப்பதிகத்தில் சிவபெருமானை விளித்த முதற்தொண்டர் "ஏற்றாய்"-இடப வாகனத்தை உடையாய்-என்பதே.
"உற்றவர்க்கு உதவும் பெருமானை
ஊர்வ தொன்றுடை யான்உம்பர் கோனை
காணக் கண் அடியேன் பெற்றவாறே"
என்று பாடுவார் சுந்தரர். இறைவன் இவ்வுலகை உய்விக்க உமையாளோடு உருவு கொண்டு எழுந்தருளி வந்தமையைக் குறிக்குமிடத்தில்
"ஏறுடைஈசன்இப் புவனியை உய்யக்
கூறுடை மங்கையும் தானும்வந்தருளி"
என ஏறுடை ஈசனையே மாணிக்க வாசகர் குறிக்கின்றார். இன்னும் "பாயும் விடை அரன் தில்லை" என்பது அவர் தில்லைத் திருக்கூத்தனைச் சிறப்பித்த தொடர்.
இடபம் சிவபெருமானுக்கு ஊர்தியாதலோடு, கொடியாய் விளங்குதலையும் அருள் நூல்கள் ஆங்காங்கு எடுத்தியம்பும்.
4.

Page 15
இந்துசாதனம் O
bifili
த்ெதுணைச் சிறந்த மருந்தாயினும் காலம், இடம், பிணியின்
நிலை, சரீரபலம் முதலியன நோக்கி ஏற்ற அனுபானம் பத்தியம் என்பவற்றோடு உட்கொண்டாலன்றிப்பயன்தராதென்பது அனுபவ சித்தாந்தம். அதுபோலவே மேன்மை பொருந்திய விபூதியையும் அதை ஆக்கவேண்டிய விதிப்படி ஆக்கி, அணிய வேண்டிய விதிப்படியணிந்து விதிவிலக்காகிய அனுபானங்களைச் சிரத்ைைதயுடன் கைக்கொண்டு வருவோமாயின் அளத்தற்கரிய
இம்மை மறுமைப் பயன்களைப் பெறலாமென்பதற்கையமில்லை.
கன்றின்று பத்துத் தினத்துக்குட்பட்டதும், கன்று பிரசவியாத கிடாரியும், நோயுடையதும், மலடும், கர்ப்பமுள்ளதும், வால், காது, கொம்பு முதலிய அவயவங்களறுந்ததும் ஆதியான குற்றமுள்ள பசுக்களைத் தவிர்த்துச் சிறந்து விளங்கும் பசுக்களில், பங்குனி மாதத்தில், பாசானம் என்னும் நெல்லினது தாளை மேய்ந்த பசுவின் சாணத்தை, அட்டமி, அமாவாசை பெளர்ணமி சதுர்த்தசித் திதிகளில், தாமரையிலையிலேந்தி, மேலுள்ளவழும்பை யொழித்து, வாமதேவ மந்திரத்தை உச்சரித்துப் பஞ்சகெளவியம் விட்டுப் பிசைந்து, தற்புருட மந்திரத்தை உச்சரித்துக் கையாலுருண்டை செய்து, உலர வைத்து, பின்னர் ஒமாக்கினியில் சம்பா நெற்பதருடன் வைத்து ஈசான மந்திரத்தை உச்சரித்துச் சுட்டெடுத்து, சுத்த வெண்மையான நீற்றைச் சேர்த்து கோடி வஸ்திரத்தில் வடிகட்டி, ஒருபுதுப்பாண்டத்தில் நிரப்பி காயத்திரி மந்திரஞ் சொல்லி மலர் சாத்தி வணங்கி, மல்லிகை, முல்லை, பாதிரி, சிறுசண்பகம் முதலிய வாசனை மலர்களைச் சத்தியோசாத மந்திரஞ் செபித்து இட்டு, புதிய வஸ்திரத்தினால் விபூதியிருக்கும் பாண்டத்தின் வாயை மூடிக்கட்டி, "இதுவே நம் திரவியம், இதுவே நம் செல்வம், இதுவே நமக்கு இம்மை மறுமைப் பயனை நல்க வல்ல வருட் பிரசாதம்" என்று வாயார வழுத்திப் பாதுகாத்து வைத்திருக்க வேண்டிய முதன்மை வாய்ந்தது விபூதி.
தினந்தோறுமணிந்து கொள்வதற்காகச் சிறுபாகவிபூதியைப் பட்டுப்பையிலேனும், சம்புடத்திலேனும், சுரைக்குடுகையிலேனும், மான்தோல், புலித்தோல் என்னுமிவைகளாற் செய்யப்பட்ட
பையிலேனும் எடுத்துவைத்துத்தரிக்கவேண்டும்.
"பண்டுசெய்த நல்வினைப் பயனாகச் சைவ சமயத் பற்றிருந்தும், சிவ சின்மைாகிய விபூதியின் மகிமையை உை தத்துவங்களைப் பறந்து கிடக்கும் நூல்களில் ஆராய்ந்தறி இன்றியமையாமையையும் சிறிதளவேனும் விளங்க வைக்க ே இந்தக் கட்டுரையை எழுதத் துணிந்தேன் என்ற குறிப்புடன் மு வைரமுத்து "மெய் கண்டார் நெறி" என்ற இதழில் எழுதிய இ இளைஞர்களின் நன்மை கருதி வெளியிடுகின்றோம்.

7.2O &u GBig Ol
மு. வைரமுத்து
காலை, உச்சிநேரம், மாலை என்னுஞ் சந்தியா காலம் மூன்றினும், சூரியனுதயம், அஸ்தமனம் ஆகுங்காலங்களினும், மலசல விமோசனஞ் செய்து செளசம் பண்ணி ஆசமனஞ் செய்தபின்னும்; பூசைக்கு முன்னும் பின்னும், போசனத்துக்கு முன்னும் பின்னும், நித்திரைக்கு முன்னும், நித்திரை விட்டெழுந்த பின்னும், பூனை, எலி, நாய், காகம், கொக்கு, பன்றியாகியவை தீண்டிய காலங்களிலும், பிதுர்க்கிரியை, யாகம், செபம், ஓமம், சிவபூசை முதலிய நித்திய கர்மங்கள் செய்யுங் காலங்களிலும் அவசியம் விபூதியணிந்து கொள்ளவேண்டும். விபூதி தாரணமில்லாது எந்தக் கர்மத்தையாவது நாம் செய்தல்கூடாது. விபூதியணியாது செய்யப்படும் கருமங்கள் ஒன்றிற் பலன் கொடாதொழியும் அல்லது துர்ப்பலனைக் கொடுக்குமென்று நூல்கள் முழங்குகின்றன.
விபூதி யணியாதவன் முகம் சுடுகாட்டுக்குச் சமானமாகும். அக்கருத்துப் பற்றியே நமக்கு வழிகாட்ட வந்த ஒளவைப் பிராட்டியும் "நீறில்லா நெற்றிபாழ்"எனச் சுருங்கக்கூறி விளங்க வைத்தாள்.
திருக்கோயிலில்லாத திருவிலூரும்
"திருவெண்ணிறனியாத திருவிலூரும் பருக்கோடிப்பத்திமையாய்ப்பாடாவூரும்
பாங்கினோடு பலதளிகளில்லாவூரும் விருப்போடுவெண்சங்க மூதாவுரும்
விதானமும் வெண்கொடியுமில்லாவூரும் அருப்போடு மலர்பறித்திட்டுண்ணாவூரும்
அவையெல்லா மூரல்ல அடவிகாடே" என்கின்றார் அப்பரடிகள். மெய்யன்போடு தினமும் விபூதியணிந்து கொள்ளாத மக்கள் வாழும் ஊர் கொடு மிருகங்கள் வாழும் காட்டுக்குச் சமானமாகும். மணிவாசகப் பெருமான் தம் திருவாசகத்தில்,
"பிணியெல்லாம் வரினுமஞ்சேன் பிறப்பினோடிறப்பு மஞ்சேன் துணிநிலாவணியினான்றன் தொழும்பரோடழுந்தியம்மா திணிநிலம் பிளந்துங் காணாச் சேவடி பரவி வெண்ணி றணிகிலாதவரைக் கண்டா லம்மநா மஞ்சுமாறே" என்று திருநீறணியாத பாவிகளின் முகதரிசனம் தமக்கெத்துணை அச்சத்தை விளைக்குமென்பதை ஆணித்தரமாகக் கூறுகின்றார்.
->
திற் பிறந்தும், சமயப் பற்றற்று வாழ்பவர் பலர். ஓரளவு சமயப் ரைாது அதை அலட்சியஞ் செய்பவர்களும் பலர் விபூதியின் ய அவகாசமில்லாதவர்களுக்கு, அதன் பெருமையையும், வண்டும், என்னும் பேராசையினால், திருவருளை முன்னிட்டு Dன்னைநாள் நிரந்தரக் காரியதரிசிகளுள் ஒருவரான அமரர் மு.
க்கட்டுரையை இக் கால வாசகர்களின் குறிப்பாக மாணவர்கள்

Page 16
இந்துசாதனம் 7C
விபூதியை உத்தூளனமாகவும் திரிபுண்டரமாகவும் தரிக்க வேண்டும். உத்தூளனம்= பரவப்பூசுதல்
திரிபுண்டரம்=முக்குறியாகத்தரித்தல்
சிவதீகூைடி பெறாத ஆடவர்களும், பெண்களும், வைதீக வழியொழுகும் சந்நியாசிகளும், பிரமசாரியும், வானப் பிரஸ்தனும், கன்னிகையும் உச்சிக் காலத்துப் பின் சலம் கூட்டாமல் உத்துரளணமாக விபூதி தரிக்கவேண்டியது விதி. தீகூைடி பெற்ற வர்களும் காலை, உச்சி, மாலை என்னும் மூன்று காலங்களிலுமே நீருடன் கூட்டித் திரிபுண்டரமாக விபூதி தரிக்கலாம். மற்றைக் காலங்களிலெல்லாம் உத்தூளனமாகவே திருநீறு தரிக்கப்பட
வேண்டும் மென்று ஆகம நூல்கள் கூறுகின்றன.
விபூதியை ஆக்கிக்கொள்வதற்கும், அதை நித்திய அங்கமாக வணிந்து கொள்வதற்கும், ஒவ்வொருவருணத்தார்க்கும், ஒவ்வொரு ஆச்சிரமத்தாருக்கும் எத்தனையோ விதிவிலக்குகள் வேதாகமங்களிலுண்டு. விபூதியிற்றானும் பல வகையுண்டு. விபூதியை வாங்கியணியும் முறைமையினையும், தரிக்கக்கூடாத விபூதிகளையும் தரிக்கலாகாத இடங்களையும், தரிக்குமளவு களையும், தரிக்குமிடங்களையும் உத்துளனதாரணம், திரிபுண்டரதாரணம் என்பவற்றின் வகைகளையும் வேறுபாடு களையும், இன்னோரன்ன பலவிபரங்களையும் வேதாகமங்களின் வழிநூல்களில் பரக்கக் காணலாம். இவற்றை யெல்லாம் சில பேரறிஞர்கள் ஆராய்ந்து பொருளறியும் அறிவும் ஆற்றலுமில்லாத நம் போல்வாருக்குப் பயன்படும்படி, அவசியம் வேண்டற்பாலன வற்றைச் சிறந்த சிறு நூல்களாகத் தொகுத்துப் பிரசுரித்திருக் கின்றார்கள். யாழ்ப்பாணத்து மேலைப்பு லோலி நா. கதிரவேற்பிள்ளையவர்கள் இயற்றிய "சைவ பூஷண சந்திரிகை" என்னும் அரியநூலும், சிதம்பரம் மறைஞானசம்பந்த நாயனார் அருளிச் செய்த "சைவசமயநெறி"யும் அதற்கு யாழ்ப்பாணத்து நுல்லூர் ஆறுமுகநாவலர் அவர்கள் செய்தவுரையும், விபூதியின் பிரபாவங்களைக் குறித்தும் அதனைத் தரித்துப்பயன் பெறுதற்குரிய விதிகளைக் குறித்தும் விபரமாயறிந்து கொள்ள விரும்புவோர் அவசியம் கற்க வேண்டிய நூல்களாம்.
இனி விபூதியானது மேனிமேலணியப்படும் பொருளாக இருக்கின்றதுமன்றி மருந்தாகவும் உட்கொள்ளும் மேன்மையுடை யது. வாழ்க்கையில் எல்லாவற்றையும் அனுட்டித்தற்கும் அதனால் இம்மைப் பயன்களை அனுபவித்தற்கும் மறுமைப் பயன்களைப் பெறுதற்கும் சாதனமாயுள்ள உடம்பை நீடித்தகாலம் நிலைபெறச் செய்தற்கு வேண்டப்படுவனவற்றைக் கூறுகின்ற ஆயுள்வேத மென்னும் உபவேதமும் திருநீற்றைப் பூசும் மருந்தாகவும், புசிக்கும் மருந்தாகவும் வியந்து கூறுகின்றது. ஆயுள் வேதமும் பல சித்தர் நூல்களும் மாயாகாரியமான நம் உடம்பைப்பீடிக்கும் வியாதிகட்குப் பரிகாரமாக. மணி, மந்திரம், ஒளடதம் என்னும் மூன்று வழிகளைக் காட்டுகின்றன. இரசமணி முதலிய மணிகளும் சுளுக்கு மந்திரம்,
YVA van: * SMIT*"*NA

72O 86g eg. OI
கருட மந்திரம் முதலிய மந்திரங்களும், குளிகை, சூரணம், பற்பம், இலேகியம் முதலிய ஒளடதங்களும் நம் சரீரங்களைப் பீடிக்கும் வியாதிகளுக்குப் பரிகாரமாகுமேயன்றி எல்லா நோய்களுக்கும் மூலகாரணமாகிய பிறவி நோய்க்குப் பரிகாரமாகா தேகப் பிணியையும் பிறவிப்பிணியையும் ஒருங்கே நீக்கும் உருத்திராக்க மணியும், திருவைந்தெழுத்தாம் மந்திரமும், விபூதியாகிய ஒளடதமுமே உண்மையான மணிமந்திர ஒளடதங்களாகக் கொள்வர் அறிஞர். இவற்றை அனுட்டித்தே நம் சமய குரவர்களும் சமயாசாரியர்களும் பிறவிப் பிணியீறாக எல்லாப்பிணிகளையும் நீங்கி, நித்தியானந்த வாழ்வையடைந்தனர். தாம் கண்ட உண்மையை உலகத்தோர்க்குணர்த்தவும், கூன்பாண்டியனது வெப்ப நோயும் எம்மனோரது பிறவிநோயும் நீங்குதற்கும், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருநீற்றுப்பதிகத்தை ஒதியருளினார். விபூதியின் மகிமைக்கு இத்திருப்பதிகம் ஆகிய ஒரு சான்றேபோதுமன்றோ?
"முத்தி தருவது நீறு முனிவரணிவது நீறு சத்தியமாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு பத்திதருவது நீறு பரவவினியதுநீறு சித்திதருவது நீறு திருவாலவாயான் திருநீறே" என்று நம்மையாளவந்த திருஞானசம்பந்தரே சொன்னால் விபூதியின் பெருமையை வேறிடத் தாராய வேண்டுமோ? இத்துணைப் பெருமை வாய்ந்த விபூதியை, அதன் மகத்துவத்தை நன்குணராத காரணத்தால் அனேகர் அலட்சியம் செய்வது வருந்தத்தக்கதே. மந்திரமும் தந்திரமும் மருந்து மாகித் தீராநோய் தீர்த்தருளவல்ல ஞானப்பொருளாகிய விபூதியை விதிமுறை தவறாது அணிந்து எல்லோரும் பயன்பெற வேண்டும். கோயில் களில் அர்ச்சகர்கள் தாமும் சில சமயங்களில் அருமருந்தன்ன விபூதியை மிகவும் இலேசாகக் கிடைக்கும் பொருள்போலக் கருதி அள்ளிக் காற்றில் பறக்கும்படி வழங்குவதைக் காண்கின்றோம். வாங்குபவர்களும் அதை அலட்சியமாகப் பெற்றுப் பணிவின்றிப் பூசியும் எஞ்சியதைக் காற்றில் ஊதியும் நிலத்தில் சிந்தியும் அவமதிப்பதையும் காணலாம். இக்குற்றங்கள் சிவநிந்தைக்குச்
சமானமாகும். அவசியம் தவிர்க்கப்படவேண்டியன.
எவரிடத்தும் விபூதியை வாங்கும்போது இருகைகளையும் கூப்பி வழிபட்டு, பணிவுடன் உள்ளங்கையினிலதைப் பெற்று நிலத்தில் சிந்தவிடாதும் காற்றில் பறக்க விடாதும், கிழககே யாயினும் வடக்கேயாயினும் நோக்கி நின்று அண்ணாந்து "சிவசிவ" என்று சொல்லி, தாம் வழிபடு தெய்வத்தை மனத்தில் தியானித்து, வலக்கையின் நடுவிரல் மூன்றினாலும் சிரசிலும் நெற்றியிலும் நெஞ்சிலும் அணியவேண்டும். சுவாமி சந்நிதானத் திலும், குரு சிவனடியார் அக்கினி முன்னிலையிலும் அவற்றின் எதிர் நின்று அணியாது முகத்தைத் திருப்பி நின்று விபூதியை யணிவது விதி.
திருநீற்றின் ஒளி விளங்க எல்லாம் வல்ல இறைவனை வழுத்து
வோமாக.

Page 17
இந்துசாதனம் 7, O
திருவிழாவும் அன்ன
திருவிழாக் காலங்களில், கேளிக்கை நிலையங்களாகச் சில
குறிப்பிடும் கட்டுரையாளர், அன்னதானத்துடன் அறிவுத்தா6 அன்தைான வேளைகளில் நிலவும் குறைபாடுகளும் நீக்கப்பட
எமது பிரதேசங்களில் திருவிழாக்கள் களைகட்டியுள்ளது. திருவிழாக்கள் தொடங்கிவிட்டால் கோவிலுடன் தொடர்புடைய இடங்களில் தெய்வீக மனத்திற்குக் குறைவிருக்காது. கண்ணிற்கும், கருத்திற்கும் இனிமை தருகின்ற காரணத்தால் பண்டைக்காலம் முதல் திருவிழாக்கள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன.
இற்றைக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒவ்வொரு ஊரிலும் முருகனுக்கு அன்புடன் விழா எடுக்கப்பட்ட செய்தி திருமுருகாற்றுப்படையில் உள்ளது. பார்க்குமிடமெங்கணும் நீக்கமற நிறைந்திருக்கும் பரிபூரண ஆனந்தன் முருகன். இவனை வசப்படுத்த விழா எடுக்கிறார்கள். தங்கள் தங்கள் அறிவுக்கு எட்டிய வரையில் விழாக்களை மேற்கொள்கிறார்கள்.
சிறிய தினை அரிசியைப் பூக்களோடு கலந்து வைத்து அந்த நிலத்து வழக்கப்படி ஆட்டை அறுத்து பூசை வைக்கிறார்கள். விழாவை ஆரம்பிக்கும் வகையில் கோழிக்கொடியை நட்டு விழாவுக்குரிய அமைப்பை ஏற்படுத்துகின்றார்கள். இப்படி ஒவ்வொரு ஊரிலும் விழாவுக்குரிய அமைப்பு எற்படுத்தப்பட்டு விழா நடைபெறுகின்றது.
"சிறுதினை மலரொடுவிரைஇ, மறி அறுத்து வாரணக்கொடியொடு வயிற்படநிறீஇ ஊர் ஊர் கொண்ட் சீர்கெழு விழவினும்"
என இச்செய்தியை நக்கீரர் குறிப்பிடுகின்றார்.
காவிரிப் பூம்பட்டினத்தில் இந்திரவிழா எடுத்து செய்தி சிலப்பதிகாரத்தில் வருகின்றது. அங்கும் விழாவிற்கு அறிகுறியாகக் கொடியேற்றப்படுகின்றது. இந்திரன் கோவிலில் (தருநிலைக் கோட்டத்தில்) அட்டமங்கலத்தோடு ஐராவதம் தீட்டப்பட்ட நெடுங்கொடியை வானில் ஏற்றினர் என இச்செய்தி காணப்படுகின்றது.
"தங்கிய கொள்கைத் தருநிலைக் கோட்டத்து மங்கல நெடுங்கொடிவானுற எடுத்து"
விழாக்களில் முக்கிய அம்சமாக மக்களுக்கு அறிவூட்டும் செயற்பாடு இடம்பெற வேண்டும். இங்கு தான் மக்கள் மொழியில் இறை பெருமை எடுத்துரைக்கப்படுவது அவசியமாகின்றது. சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் இந்திரவிழாவில் சொற்பொழிவு இடம்பெற்றதாக வரும் செய்திநமக்கு நல்லதோர் முன்னுதாரணம்.
"அறவோர்பள்ளியும் அறனோம் படையும் புறநிலைக்கோட்டத்துப் புண்ணியத் தானமும் திறவோர் உரைக்கும் செயல் சிறந்தொருபால்"

7.2O 6g elige Ol
ாதானமும்
த்தமிழ்ச் சொல்லழகர் ச.லலீசன் M.A. (தமிழ்), M.Ed.
ஆலயங்கள் ஆக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் எனக் மும் இணைய வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறார். வேண்டும்.
என இச்செய்தி சிலப்பதிகாரத்திற் பேசப்படுகின்றது. அதாவது, அறவோர் பள்ளிகளிலும் அறத்தைப் போற்றும் அறச்சாலைகளிலும் மதில் புறத்தே உள்ள புண்ணிய இடங்களிலும் அறத்தின் கூறுபாடு உணர்ந்தோர் அறம் போதிக்கும் செயலை மேற்கொண்டனர். எனவே திருவிழாக்களின் போது நல்லுபதேசங்கள் இடம்பெறுவது
சாலப்பொருத்தமானதாக அமையும்.
எமது கண்கள் பெற்ற பயன் திருவிழாக்களைக் கண்டு களித்தலே என்பார் திருஞானசம்பந்தர். எனவே கண் களிக்கும்படி நல்விழாக்களை ஆலயங்களில் அமைக்க வேண்டும். ஆலயங்களைக் கேளிக்கைத் தானம் ஆக்காது பக்தி மணக்கும் புனித இடமாகப் பேணுவதில் அனைவரும் ஆர்வம் காட்ட வேண்டும்.
ஆலயங்களைக் கேளிக்கைத் தானம் ஆக்குதல் குளிக்கப் போய்ச் சேறு பூசுவதற்கு ஒப்பானது. கேளிக்கை களியாட்டம் முதலியவற்றை அனுபவிக்க வேண்டுமெனின் அதற்கெனப் பிரத்தியேகமாக ஒரு மைதானத்தை ஒதுக்கி இவற்றை மேற்கொள்வது அறிவுடைமையாக அமையும். அதனை விடுத்து ஆலய அமைதிக்குப்பங்கம் விளைவிக்கும் முகமாகவும், பக்தியைக் கொச்சைப்படுத்தும் விதமாகவும் விழாக்களை அமைப்பதுதான் வேதனைக்குரியதாக உள்ளது.
திருவிழாக்களை அர்த்தமுள்ளதாக அமைத்துக்கொள்ள இக்காலங்களில் அன்னதானம் வழங்குவதும் சாலச் சிறந்ததாகும். எதைக் கொடுத்தாலும் திருப்தியடையாத ஒருவனுக்கு உண்டி கொடுப்பதன் மூலம் "போதும்" எனக் கூற வைக்கலாம். உலகிலே பிறந்தார் பெறும் பயன் சிவபெருமானுடைய அடியவர்களுக்கு அன்னமளித்தலும், இறைவனுடைய நல்விழாவைக் கண்டு களிப்புறலுமே என ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.
"மண்ணினிற் பிறந்தார் பெறும்பயன்மதிசூடும் அண்ணலார் அடியார் தமைஅமுது செய்வித்தல் கண்ணினால் அவர் நல்விழாப் பொலிவுகண்டார்தல்
உண்மையாமெனில் உலகர்முன் வருகென உரைப்பார்" என
என்பைப் பெண்ணுருவாக மாற்றும் அற்புதத்தைச் சம்பந்தர் மேற்கொண்டபோது திருவிழாப்பற்றியும், அன்னதானம் கொடுப்பது பற்றியும் மேற்கண்டவாறு இணைத்துப் பாடியதைச் சேக்கிழார் குறிப்பிடுகின்றார்.
அன்னதானம் வழங்கலின் முக்கியத்துவத்தை உரைக்கும்
வகையில் சேக்கிழாரின் பெரியபுராணம் சுமார் 30
லதாடர்ச்சி 20ஆம் பக்கம். -->

Page 18
இந்துசாதனம் 7.O.
வெற்றி என்பது.
ந்ெத ஒருவனும் ஒரு காரியத்தைச் செய்யும் போது, அந்தக் காரியத்தைச் செய்வதன் நோக்கம் என்ன என்பதை வைத்தே அவன் எத்தகையவன் எனக் கணிக்கப்படுகின்றான். ஒரு செயலைப் பார்க்கும்போது அது கொடுமையாகத் தோன்றினாலும், அதன் நோக்கம் நல்லதானால் இறைவன் மன்னிக்கிறான்.
செயலை மாற்றியமைப்பதால் அது நல்ல செயல் ஆகாது. செயலுக்கான நோக்கத்தை மாற்றியமைப்பதால், செயல் நல்லதாகலாம். வெற்றியையும் தரும். தோல்வியால் ஏற்படும் உணர்வை, ஓர் அநுபவமாக எடுத்துக் கொள்ளும் போது, அது மேலும் முயற்சியைத் தூண்டுவதாய் அமையும்.
இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி எல்லாவற்றையும் அநுபவமாக எடுத்துக்கொள்ளவேண்டும். எதிலும் சமநிலையாய் இருக்க வேண்டும். உண்மையான வெற்றி உடையவன், எந்த ஒரு துக்கத்தாலும் பாதிக்கப்படாதவனே. வெற்றியின் அளவு கோலாக பணம், சொத்து, வங்கியின் வைப்புகளை எடுத்துக் கொள்ளு கிறார்கள். அது முற்றிலும் தவறு. எவ்வளவு பெற்றாலும் ஒட்டைப் பானையில் தண்ணீர் ஊற்றினால் போல் எமது மனம் இருக்க வேண்டும். எண்ணங்கள் நல்ல எண்ணங்களாக மாற்றி அமைக்கப்படும்போது, அவை வலிமை பெறுகின்றன. நோக்கம் நல்லதாக இருக்கும்போது வெற்றி நிச்சயம். போற்றுதலை ஏற்காத சமநிலையில் இருக்க வேண்டும். அவ்வாறு திட்டுதலையும் ஏற்காது இருக்கும்போது, திட்டுதல் திட்டுபவனிடத்திலேயே இருக்கும். எம்மைத் தாக்காது. வெற்றியும் தோல்வியும் பாடத்தைப் புகட்டுகின்றன. அதனால் இரண்டையுமே வெறும் அநுபவமாக எடுத்துக் கொண்டால் எதுவும் எம்மைப் பாதிக்காது . எங்கு சென்றாலும் மனம் பந்தப் படுத்தப்படாமல் இருக்குமேயானால், செயல்கள் எல்லாம் அநுபவமாக உணரப்படும்.
எம்மை வென்றால் எமக்கு ஒரு கேடில்லை'வெற்றி என்பது ஒரு செயலின் பின்னாலுள்ள நோக்கத்தை அடைவதுதான்.
'இராவணன் ஜடாயுவை வெட்ட கீழே விழுந்தது பறவை. ஜடாயுவின் நோக்கம் சீதையைக் காப்பது. இராவணனின் நோக்கம் சீதையை அடைவது. இங்கே இராவணன் வென்றான் என்று யாராவது கூறுவீர்களா?
மகாத்மா காந்தி வாழ்க்கையில் வென்றவரா? தோற்றவரா? எத்தனையோ இன்னல்களுக்கு மத்தியில் அஹிம்சைப் போர் புரிந்தவராய், இறுதியில் கொலை செய்யப்பட்டவராயினும், அவரது நோக்கத்தைப் பொறுத்தமட்டில் வென்றவரே அவரது பவித்ரமான தோற்றம், நேர்மை, அஹிம்சை, சத்தியம் நிறைந்த ஆத்மவெளிப்பாட்டினால், எதிரியும் மரியாதை செய்யும் சக்தியைப் பெற்றிருந்தார்.
மலரால் அடித்த மன்மதன் நெற்றிக்கண் பார்வையால் எரிக்கப்பட்டான். ஆனால், கல்லால் அடித்த சாக்கிய நாயனார் கைலையில் பக்கத்தில் அமர்த்தப்பட்டார். அனைத்தும் நோக்கத்தின் விளைவே என்பதை உணருகின்றோம் அல்லவா?
இறைவன் நம்மை சோதிப்பான். ஆனால், கை விடமாட்டான். தன் - நம்பிக்கை இருப்பின் செய்யும் செயல்களுக்கு ஏற்றதாக
1

7.2O கர ஆடி 01
ராஜினி தேவராஜன்
அனைத்தும் அமையும். யாகத்தின் போது, ஓம குண்டத்தில் "ஸ்வாகா, ஸ்வாகா" என்று சொல்லிக் கொண்டு எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகப் போடுவார்கள். எல்லாம் எனக்கு முன்னமோ, பின்னாலோ போய் விடும். எதுவும் என்னுடையது கிடையாது. எல்லாம் என்னுடன் தொடர்புடையவை. எல்லாம் இறைவனால் தரப்பட்டவை. அவ்வாறே ஒவ்வொரு செயலையும் இறைவனுக்கு அர்ப்பணிப்பதாக வாழ்க்கையையும் வேள்வியாக வாழ வேண்டும். வேள்விமயமான வாழ்க்கையை அநுபவிப்பவனாய் இருந்து, அநுபவங்களைப் பார்க்கும் போது அநுபவங்கள் ஒவ்வொன்றாக போய்க் கொண்டு இருக்கின்றன. புறத்திலே ஏற்படும் வெற்றி வெறும் அனுபவமே. அது பாடத்தை புகட்டும். அகத்திலே ஏற்படும் வெற்றி உண்மையானது. ஒன்றையுமே எனது என்று உரிமை கொண்டாடாது, பயன்படுத்தி வாழவேண்டும். அனைத்து செயல்களையும் இறைவனுக்கே அர்ப்பணமாகச் செய்ய வேணடும்.
சுயநலமற்று, பற்றற்று, பிரதிபலனை எதிர்பாராது கடமை உணர்வோடு, ஒருவரோ, பலரோ, தனியாகவோ கூடியோ, பிறன் நலன் பொருட்டோ, சமுதாய நலன் பொருட்டோ, உலக நலன் பொருட்டோ ஒரு செயலைச் செய்வது'வேள்வி எனப்படும்.
பஞ்சபூதங்களை நல்லமுறையில் தூய்மையாக வைத்து பாதுகாத்து தகாத விளைவுகள் ஏற்படாதவாறு காத்துப் பேணுதல் பூஜை ஆகும். ஒருவனின் அழகு அவனது ஆத்மாவின் தன்மையில் நிர்ணயிக்கப்படும். அவனது பெளதீக உடலின் வெளிப்புற அழகிலல்ல.
ஒருவன் உன்னைப்பற்றிக் குறை கூறினால், இறைவனால் இவன் உன்னிடம் அனுப்பட்டிருக்கின்றான் என நினைத்துக் கொண்டு, அவன் சொல்லும் குறைகளை ஒவ்வொன்றாக குறித்துக் கொண்டு, அதை ஒவ்வொன்றாக உன்னிடமிருந்து களைந்து கொள்ள வழிபார்த்து, முற்றாகவே அகற்றி விடு. உன்னைப் பற்றிக் கூடாமல் கதைப்பவன், உன்னை முழு மனிதனாக்க கடவுளால் அனுப்பட்டவன் என்று நினைத்துக்கொள்.
ஒரு தாய் தன் பிள்ளையை எந்தவித எதிர்பார்ப்புமின்றி, சிறிதும் தன் நலமற்றவளாய் பராமரித்து வளர்க்கிறாள். பெரியவனாகி அவன் தன்னைக் கண்டு கொள்ளாவிட்டாலும், எதுவித பராமரிப்பும் கிடைக்காத வளாய் இருந்தாலும், எக்கணமும் அவனுக்காக அவன் நல் வாழ்வுக்காக பிரார்த்தித்துக் கொண்டே இருக்கிறான். எது செய்தாலும் எந்த நிலையிலும் பொறுமையுடன் அவனது நலனையே நினைத்துக்கொண்டு எந்தவித எதிர்பார்ப்புமின்றி பிரார்த்தனை செய்பவள் ஒரு தாய் மட்டுமே. இது முற்றிலும் உண்மை. இங்கு அந்தப் பெற்ற தெய்வத்தின் தனித்துவமான முழுமையான நோக்கம், தன் பிள்ளையின் நலனே அன்றி வேறெதுவுமில்லை. இந்த உயர்ந்த நோக்கத்தைக் கொண்ட தாயானவள், என்றோ ஒரு நாள், இறைவனிடம் இருந்து அந்தப் பேரானந்தத்தை அடைவாள் என்பது நிச்சயம். எனவே வெற்றி என்பது நோக்கத்துக்கே அன்றி செயலுக்கு அல்ல என்பது திண்ணம்.

Page 19
இந்துசாதனம் 7C
பக்தி மார்க்கமே பரம6
ஆன்மா இறைவனுடைய திருவருளைப் பெறுவதற்கு இந்து சமயத் திருநூல்கள் பல்வேறு வழிகளைக் கூறியுள்ளன. கலியுகத்தில் இறைவனைப் பற்றிப் பிடிப்பதற்கு உகந்தது பக்தி மார்க்கம் என்றே நாரத மகரிஷி தனது பக்திச் சூத்திரத்தில் குறிப்பிடுகின்றார். அடியவர்கள் இறைவனைப் பற்றுவதற்குப் பக்தியாகிய வலையை வீச வேண்டும் என்கின்றார். மணிவாசகர் அடியவன் வீசுகின்ற பக்தி வலையில் இருந்து அப்பனாகிய இறைவன் தப்ப முடியாது என்பதைப் "பக்தி வலையில் படுவோன் காண்க" என்று தெய்வ வாசகமாகிய திருவாசகம் குறிப் பிடுகின்றது.
அன்பின் முதிர்வு நிலைதான் பக்தி. "அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்" என்றே தமிழ் மறைாயகிய திருக்குறளும் கூறுகின்றது. தூய அன்பினால் யாரையும் நம்வசப்படுத்தலாம் என்பது உலகியல் அனுபவம். அதிகார பலத்தாலோ ஆயுத பலத்தாலோ யாரையும் அடக்க முடியாது. இவ்வாறான அடக்கு முறைகள் நீண்ட காலம் நிலைப்பதில்லை. அன்பினால் கட்டுண்டு இருப்பவர்களின் பிணைப்பை எந்த ஒரு சக்தியாலும் அசைக்க முடியாது. கண்ணப்பனின் அன்பிற்குக் காளத்தியப்பன் கட்டுண்ட வரலாற்றைப் பெரியபுராணம் எடுத்து விளக்குகின்றது. காய் முற்றிக் கணியாக மாறுவதுபோல அன்பு முற்றிப் பக்தியாக பரிணமிக்கின்றது. பக்தி நெறியின் உயர்வு நிலைக்குச் சென்றுவிட்டால் அடியவன் பக்தனாகவே மாறிவிடு
வான்.
"பேர் அரையற்கு இங்ங்னே பித்து ஒருவர் ஆமாறும் ஆர் ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்"
என மணிவாசகப் பெருமானும் தனது திருவெம்பாவைப் பாடலில் பக்தனின் உயர்வுநிலையைப் பாடுகின்றார். இறை பித்துப் பிடித்த பக்தனின் நா எப்பொழுதும் இறை நாமத்தையே உச்சரிக்கும். ஹரி ஹரி என்று நாராயணின் நாமத்தை இடைவிடாது உச்சரித்த பொழுதும் என்னைப் பித்தன் என்று பேசுகின்றார்கள். இதற்காக என்னால் உம்மைக் கைவிட மடியுமா? என்று உணர்வு பூர்வமாகப் பாடுவதைத் திருமங்கை ஆழ்வாரின் பின்வரும்பாடலில் காணலாம்.
"அத்தா அரியே என்றுன்னை அழைக்கப் பித்தா என்று பிறர் பேசுகின்றார் என்னை முத்தே மலைமாணிக்கமே முளைக்கின்ற வித்தே உன்னை எங்ங்ணம் நான் விடுகேனே" பக்தி என்பது தான் இறைவன் என்ற இரண்டிலும் ஒருமை ஏற்பட்டதாக உணர்கின்ற உணர்வேயாகும். உண்மைச்
சமயத்தின் உயிர்நாடியாகத் திகழ்வது பக்தியே ஆகும்.

7.2O aög etig. Ol
OTip. Eisn'sb
சிவத்தமிழ் வித்தகர் - சிவ. மகாலிங்கம்
இறைவனைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்று மனித மனம் முயல்கின்ற முயற்சியே பக்தி ஆகும். ஆன்மாவிற்கும் இறைவனுக்கும் உள்ள உறவு ஒன்றை மட்டும் ஆன்மா விரும்பி நிற்பதே பக்தி எனப்படும்.
தன்னை மறந்து தற்பேதமில்லாமல் ஒரு செயலைச் செய்தால் அது உள்நின்று தூண்டும் இறையருளால் செய்யப் பெற்றதாகவும், இந்நிலையே உண்மையான பக்கதனின் நிலை என்றும் பெரியபுராணம் சித்தரிக்கின்றது. "சித்தம் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும் அத்தன்" என அடியவர்களின் செயல்கள் அனைத்தும் ஆண்டவனின் செயல்கள் என மணிவாசகரின்
திருவாசகமும் கூறுகின்றது.
அன்பு நெறியில் எது செய்தாலும் அது எம்பிரானுக்கு ஏற்றதாகும். என்பதைக் கண்ணப்ப நாயனார் புராணத்தின் ஊடாகச் சேக்கிழார் விளக்குகின்றார். குடுமித் தேவரைக் கண்ட மாத்திரத்தில் கண்ணப்பன் அன்புருவமாக மாறினார் என்பதைப் "பொங்கிய ஒளியின் நீழல் பொருவில் அன்புருவம் ஆனார்" எனப் பெரியபுராணம் குறிப்பிடுகின்றது.
ஆன்மா இறைவனை அடைவதற்காக, பகவத்கீதை கூறும் வழிகளில் பக்தியோகமும் ஒன்றாகும். நாரதர் பக்தியினை "ஆழ்ந்த இறைப்பற்று" என்று கூறுகின்றார். அன்பே கடவுள் என்ற உண்மைக்கு ஏற்ப வாழ்க்கை நடாத்துதலே பக்தி யோகம் என்பது யாக்ஞவல்லிய மகரிஷியின் கருத்தாகும். இறைவன் தம்மைக் கைவிடமாட்டான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை தான் பக்தி. அன்பின் மேலீட்டினால் தோன்றும் உரிமைப் பாட்டினை உண்மையைப் பக்தனின் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் வெளிப்படுத்திவிடும். அன்பின் மேலீட்டினால் ஏற்பட்ட உரிமை வாசகங்கள் பலவற்றை அருளாளர்களின் பாடல்களில் இருந்து அறியமுடிகிறது.
"ஆளாங்கிருப்பின் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால் வாளாங்கிருப்பின் திருவாரூரில் வாழ்ந்து போதீரே"
என் சுந்தரமூர்த்திசுவாமிகளின் வாக்கும்
"நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்குநாயகமே" என்ற மணிவாசகரின் பாடல் வரிகளும் இந்த
உண்மையினை எடுத்துக்கட்டுகின்றன.
உண்மையான பக்தன் இறைவனிடம் எதையும் கேட்டுப் பெறவேண்டிய தேவையில்லை. தன்னைப் பூரண சரணாகதியாகப்
பிரபக்தி நிலையில் நின்று வணங்கும் அடியவனுக்கு எதைக்
-->

Page 20
இந்துசாதனம் 7.O
கொடுத்தல் வேண்டும். அவனை எவ்வாறு வழி நடாத்துதல்
வேண்டும். என்பதையெல்லாம் இறைவனே பார்த்துக் கொள்வார்.
"வேண்டும் பரிசு ஒன்று உண்டென்னில் அதுவும் உன்தன் விருப்பன்றே"
என்றே தெய்வ வாசகமாகிய திருவாசகமும் கூறுகின்றது.
பக்தியிலேயே நடிப்பு இருத்தல் கூடாது. இறைவனிடம் அடியவன் வைக்கின்ற அன்பு இடையறாப் பேரன்பாக, இறவாத இன்ப அன்பாக, ஆவியோடாக்கை கசிந்துருகி வழிபடும் அன்பாக இருத்தல் வேண்டும். பஞ்சமா பாதகங்கள் அனைத்தையும் துணிந்து செய்து விட்டுப் பக்தனின் வேடம் பூண்டு பெரிய புராணத்திலே வரும் முத்தநாதன் போல நடிக்கின்ற வேடதாரிகள் பலரை நாம் நமது சமூகத்திலே காண்கின்றோம். பாமர மக்களின் அறியாமையைப் பயன்படுத்திப் பணம் சம்பாதிக்கும் வேடதாரிகளும், போலிச் சாமியார்களும், சமய வியாபாரிகளும் நிறைந்து காணப்படும் இப் பிரபஞ்சத்தில்தான் உண்மையான பக்தனும் வாழுகின்றான். உண்மையான பக்தர்களின் தொகை
لأحدثلحجد تغلاله:
O4 ஆம் பக்கத் தொடர்ச்சி. கடவுள் கொள்கை பிழையானால் கணிதக் கொள்கையும் பிழையே. கற்பனை கடந்து நிற்கும் பூச்சியத்தை முழுமையாய் விளங்க முடிந்தால்
கடவுளையும் விளங்கிவிடலாம். விஞ்ஞானமே முடிந்த முடிவென்றும், கடவுள் கொள்கை கற்பனை என்றும் வாதிடமுனைவார். மேல் வினாக்களுக்கு விடை தரதம்மைத்தயார்ப்படுத்த வேண்டும். இயலாமல் போயின்,
விஞ்ஞானத்தை கடந்தத கடவுள் கொள்கை
எனும் உண்மையை அவர்கள் ஒப்பவேண்டும்.
17ஆம் பக்கத் தொடர்ச்சி.
அடியவர்களுடைய கதைகளுடன் அன்னதானம் வழங்குவதைத் தொடர்புபடுத்துகின்றது. அன்னமிடலே தமது உயர் இலட்சியம் என வாழ்ந்த பெருமக்களைப் பெரியபுராணத்தில் தரிசிக்கின்றோம்.
தற்போது திருவிழாக் காலங்களில் அன்னதானம் வழங்கப்பட வேண்டும் என்ற உணர்வு பல ஆலயங்களைச் சார்ந்த அடியவர்களிடம் காணப்படுகின்றது. ஆயினும் இந்த அன்னதானங் களில் வலியோர் உடன் பயன் பெறுவதும் மெலியோர் இடமின்றி
ஒதுக்கப்படுவதுமான நடைமுறைகளைக் காண்கின்றோம்.

2O afi5g 62p. Ol
ஆலயத்தின் உள்ளே அதிகரித்துக் காணப்பட்டால் அந்த ஆலயம் தெய்வ சாந்நித்தியத்துடன் ஒளிவீசிப் பிரகாசிக்கும். அயோக்கியர் களின் கூடாரமாக ஆலயங்கள் மாறினால் நாட்டிலே அராஜகம் தலைவிரித்தாடும். தர்மமும், நீதியும் நிலை குலைந்துவிடும். இந்த உண்மையை ஆடவல்லானாகிய நடராஜப்பெருமான் உணர்த்த உணர்ந்துகொண்ட சேந்தனார் தான் அருளிய திருப்பல்லாண்டில்,
"மிண்டு மனத்தவர் போமின்கள் மெய்டியார்கள் விரைந்துவம்மின்" என்று உண்மை அடியார்களைக் கூவி அழைப்பதைக் காண
முடிகிறது.
உலகிற் பிறந்த ஒவ்வொரு மனிதரும் உடல்நோய், உளநோய், உயிர்நோய் ஆகிய மூவகை நோய்களால் பீடிக்கப்படுகின்றார்கள். மூவகை நோயும் நீங்குவதற்கு இறையருள் அவசியமாகும். பிரபக்தி நிலையில் நின்று இறைவனை வழிபட்டால் இப்பிணிகளில் இருந்து நீங்கலாம். சிறப்பாக உயிர் நோயாகிய பிறவி நோய் நீங்குவதற்கும், பேரானந்த நிலையாகிய வீடுபேற்றினைப்பெறுவதற்கும் பிரபக்திமார்க்கமே வழிகாட்டும். A
நிறைவாய் முடிவுரைப்பின் விஞ்ஞானத்தை அறிய கணிதத்தை அறிதலும், கணிதத்தை அறிய எண்களை அறிதலும், எண்களை அறிய, பூச்சியத்தை முழுமையாய் அறிதலும் அவசியமாம்.
பூச்சியத்தை அறிந்தவன்,
இறையின் இராச்சியத்தை அறிவான். கண்ணதாசன் கவிதை ஞாபகத்திற்கு வருகிறது. "பூச்சியத்திற் குள்ளே ஓர் இராச்சியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன். அவனைப்புரிந்துகொண்டால் அவன்தான் இறைவன்"
වූණි. முற்றுசி.
A
அன்னதானத்தில் இரத்தப்பிடிப்புள்ள இளைஞர்கள் முண்டியடித்து முதற்பந்தியில் இருந்துவிடுவது சமூக யதார்த்தம். அதேவேளை குழந்தை களுக்கும் முதியவர்களுக்கும் முன்னுரிமை வழங்கும் பழக்கம் நம்மத்தியில் காணப்படாமைமிகப்பெரும் குறைபாடாகும்.
இதைவிட அன்னதானத்திற்கெனப் பயன்படுத்தப்படும் இடம், பொருள்கள் என்பன குறித்த சுகாதாரத்திலும் கவனம்
செலுத்தப்படவேண்டும்.
ቆ}
په مل هم

Page 21
இந்துசாதனம் 7. Ο
சமயப் பண்பாட்டு நோக்கி
"சமயமே வாழ்வின் முழுமை. அது ஒரு பகுதியன்று" என்று இறையடியவர்களும், தீர்க்கதரிசிகளும் எமக்குச் சொல்லிச் சென்றவர்களாவர். அரிதான மானிடப் பிறப்பினை எடுத்து உலகியலில் பிறந்து வாழ்ந்து பகுத்தறிவுக் கண்கொண்டு இயற்கைச் சூழல் - அதன் இயக்கம் - மாற்றங்கள் என்பவற்றுக்கு எல்லையற்ற ஓர் சக்தி இருத்தல் வேண்டும் என்ற உணர்வின் வெறிப்பாடாகச் சமயம் தோன்றியது எனக்கூறலாம். இங்ங்ணம் இவ்வுலகில் தோன்றிய சமயங்கள் பலவாகும். இவையனைத்தும் தத்துவநிலையில் பொதுமைக் குணம்கொண்டவை. அவற்றுள் சில தனிப்பட்ட சமய குரவர்களால் தோற்றுவிக்கப்பட்டவை. இவ்வாறு தோற்றுவிக்கப்பட்ட சமயங்கள் வரிசையில் பெளத்தம், சமணம், கிறிஸ்தவம், இஸ்லாம், சீக்கியம் என்பன காணப்படுகின்றன. ஆனால் இந்து சமயம் தனியொருவரினாலோ அல்லது நிறுவனம் ஒன்றினாலோ தோற்றுவிக்கப்பட்டதல்ல. அது எவராலும் தோற்றுவிக்கப்பட்ட - நிறுவப்பட்ட ஒன்றன்று. உலகச் சமயங்களினின்றும் வேறுபட்டு மிகவும் தொன்மைச் சிறப்புக்குரியதோர் உயரிய நெறிச் சமயமாகும். ஆனாலும் தோன்றிய சமயங்கள் யாவும் மனிதனுள் உறையும் ஆத்மாவுடன் தொடர்புகொண்டுள்ளனவாகையால் பொதுமைக் குணம்
படைத்தவையாக உள்ள தன்மையும் குறிப்பிடத்தக்கது.
இந்து சமயம் தொன்மைச் சமயம் என்பதனாலேயேதான் "சனாதன தர்மம்", "வைதீக தர்மம்" எனப் பெயர் பெற்றது. சனாதன தருமம் என்பதற்கு என்றுமுள்ள சமயம் என்பது பொருளாகும். இந்து மதத்திற்குத் தோற்றுக்கால வரையறை இல்லை எனும் உண்மை "சனாதனம்" என அழைக்கப்படுவதனால்
புலப்படுகின்றது.
ஏனைய உயிரினத்துக்கு இல்லாத சிறப்பு பகுத்தறிவுப் பிராணியாகிய மனித இனத்துக்கு உண்டு. இத்தகையதான மனித இனம் உய்தி பெறும் நோக்கில் நன்னெறியினதாய் அமைந்த வாழ்வியல் நெறியே சமயம் ஆகும். மக்களை நன்நெறியில் - இலட்சிய நெறியில் - ஆன்மீக நெறியில் பக்குவப்படுத்துவனவே சமயங்கள் எனவும், அறியாமையின் ஆரவாரத்தினால் மக்கள் புரிந்திடும் தவறுகளினின்றும் அவர்களை மீட்டு நல்வினை நாட்டத்துக்கான நல்லறிவு புகட்டுவது சமயம் எனவும், துன்பங்கலந்த வாழ்வை துன்பங்கலவாத இன்ப வாழ்வாக மாற்ற முயலுகையில் கைகொடுத்து மக்களை வெற்றிக்கு இட்டுச் செல்வது சமயம் எனவும், இன்பப் பெருங்கடலாகிய இறைவனை அடைதற்கு உயிர்கள் ஊக்கமுடன் கடைப்பிடித்தொழுகும் ஓர் அறவழியே சமயம் எனவும், ஆன்ம நல மேம்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்ட ஒர் நெறியே சமயம் எனவும் அறிஞர்கள் பலரும்
பலவாறு பொருள்விளக்கம் தந்துள்ளனர்.

72O 5 ep. O1
ல் உபதேசம்
GoaFomů LỊGo6oir :- f. JImGOOTJITFIT B.A (Hons)
உயிர்கள் தோன்றிய காலம் தொட்டு சமயம் இருந்துவரு கின்றது. மனிதருள் உறையும் ஆன்மாக்களுக்கு தீனி போடுவது சமயமாகும். சமயம் என்ற தீனி சமய சிந்தனையாளர் பலரிடையே காலத்துக்காலம் கருத்து முரண்டபாடுகளையும் - தேவையற்ற வீண் விவாதங்களையும் தோற்றுவித்தது. இத்தகைய முரண் பாடுகளுக்கு சமயப் பெரியவர்கள், ஞானிகளது தூய்மையற்ற உயர்ந்த வார்த்தைகளும், அவ்வப்போது எழுந்த இலக்கியங்களும், இறைவன் அடியவர்களுக்காக நிகழ்த்திய திருவருட் செயல்களும் உபதேச வடிவங்களாகத் தோற்றுருவம் பெற்றன.
உலகச் சமயங்கள் பலவாக விரிந்து சென்றாலும் அவையாவும் வாழ்வியல் மேம்பாடு குறித்த நல்ல குறிக்கோள்களை நாடிச்செல்லுமாறு மக்களை வழிப்படுத்துவனவாக - ஆற்றுப்படுத் துவனவாக உள்ளன. மனிதனை ஆற்றுப்படுத்துவதற்கு வழங்கப்படும் அறிவுரைகளே, ஆன்றோரின் அருளுரைகளே
உபதேசங்களாகும்.
சமூகத்தில் வாழ்க்கை நலத்துக்கு உகந்த சிறந்த சீரிய வழியாகச் சமயம் வலியுறுத்தப்படுகிறது. உயிர்களை நடமாடுங் கோயில்களாகவே அது மதித்துப் போற்றச் செய்கின்றது.இதனை
"எவ்வுயிரும் பராபரன் சந்நிதியாகும் இலங்குமுயிர் உடலனைத்தும் ஈசன் கோயில்" என ஒரளுளாளர் திருவாக்குச் செப்புகின்றது. சுந்தரரும் இதே கருத்துள்ள பாடலைப்பாடியுள்ளார்.
"அசையாத கடவுள் கோயிலில் உள்ளது ஆனால் அதைவிடச் சிறந்தது அசையும் மனிதக் கோயில்கள் இந்த மனிதனுக்கு உதவினால் அது கோயிலில் இருக்கும் அவனுக்குப் போய்ச் சேரும்"
என்பது பாடலின்சாரம். இதனையே திருமூலரும் "படமாடக்கோயிற் பகவற்கொன்றீயில் நடமாடக் கோயில்நம்பர்க்கங்காகா நடமாடுங் கோயில் நம்பர்க்கொன்றியில் படமாடுங்கோயில் பகவற்க தாமே" எனக் கூறிச்செல்வதனைக் காணலாம். பிராமணராக இருந்தும் பூனூல் அணிய மறுத்து அக்கிரகாரத்தை விட்டு வெளியேறியவர் பசவண்ணர். இவர் கோயில்கள் தேவையில்லை மனிதனே கோயில்தான். ஆகவே ஆண்டவன் மனிதரிடம் வசிக்கின்றான் என்று கூறினார்.
"பணம் படைத்தவர்கள் சிவனே-உனக்கு கோயில் கட்டலாம் நானென்ன செய்வேன் நானோ ஏழை - ஆனால் என்னுடலே கோயில் தான் கால்கள் தாண்கள், தலை தங்கக் கோபுரம்,

Page 22
இந்துசாதனம் 7C
நிற்கும் இந்தக் கோயில்கள் இடிந்துவிடும் ஆனால் நடக்கும்
இந்தக் கோயில் இடியாது-இடியவே இடியாது.
என அவர் பாடிச்செல்கின்றார். பிராமண ஆதிக்கத்துக்கு எதிராக எழுப்பப்பட்ட குரலே இது என்கிறார்கள் ஆய்வாளர்கள். இருப்பினும் ஊனுடம்பு நடமாடுங் கோயில் என்பது ஒருமித்த கருத்தெனலாம். இவற்றை விளக்கமாக மக்கள் புரிந்து கொள்ளும் வகையிலும், புரிந்து அனுசரிக்கும் வகையிலும் இதிகாசங்கள், புராணங்கள், காப்பியங்கள், தோத்திரங்கள் என்பன பொதுவான நோக்கில் சமய அடிப்படையில் தோன்றியுள்ளன என
உணர்ந்துகொள்வது மேலானது.
வேற்றுமையில் ஒன்றுமை காண்பதும் அதன் வழி நின்று செய்படுவதும் சமய உணர்வின் சாரமாகும். சமய உணர்வினால் முகிழ்த்து மலர்ந்து காயாகிக் கனியாகி மலர்ந்து நிற்பது தான் சமயப்பண்பாடாகும். அத்தகையதான சமயப் பண்பாட்டினால் அமைக்கப்பட்ட சமய நிறுவனங்களே கோயில்களும் அவற்றைச் சார்ந்தெழுந்த திருமடங்களும், ஆதீனங்களும் மற்றும் அறச்சாலை களுமாகும்.
இத்தகையதான சமயமெனும் நீரோட்டத்தில் மக்களை சமய நாட்டம் பெறச் செய்வதற்கும், சமயம் ஒரு வாழ்வியல் என்னும் தன்மையை உணர்த்தும் வகையில் கருத்துக்களைப் போஷிப்பதற்கும் உபதேச மொழிகள் அவசியமாயிருக்கலாம். "உபதேசம் என்பது சமய போதம், தீட்ஷை, புத்தி போதனை எனவும் அருளுரை, அறிவுரை எனவும் பொருள்பட்டு நிற்கின்றது. சமய வாழ்வியலில் உபதேசம் என்பது ஞானியர் அருகிருந்து மந்திர வாக்கினைப் பெறுவதாகும். உபதேசம் என்றால் அருகான இடத்திலிருப்பது அல்லது இருப்பது எனவும் சொற்பொருள் காண்பர். நல்லறிவுள்ள ஞான ஆசாரியார் அல்லது குருமார் பக்குவப்படுவதற்குரிய மக்களைத் தேர்ந்தெடுத்துச் சீடர்களாகப் பாவித்து அருளுரைகளை வழங்குவர். அத்தகையதான அருளுரை மொழிகளே உபதேச மொழிகளாகப் போற்றப்படுகின்றன.உபதேசம் செய்பவர் போதகன், உபதேச கர்த்தா, குரு எனப்படுவர். உபதேசித்தல் என்பது போதித்தல், ஞானமூட்டுதல் எனவும் பொருள்படும்.
சமயக் கோட்பாடுகளைச் சீடர்களுக்குத் தக்கவாறு உணர்ந்து உபதேசிக்கும் ஞான உபதேச உத்தியினை "உபதேசக்கலை" என்றுரைப்பர். உபதேசக் கலை என்பதற்கு ஓரளவை எனவும் கடவுட் தன்மையை அறிவித்தல் எனவும் மதத்தத்துவப் போதனைமுறை எனவும் கருத்துரைப்பர். ஞான நூல் நோக்கில் அம்பலவாண தேசிகர் இயற்றிய உபதேச வெண்பா (14 பண்டார சாத்திரங்களில் ஒன்று) தட்சிணாமூர்த்தி தேசிகர் இயற்றிய பண்டார சாத்திரமாகிய உபதேச பஃறொடை ஆகியன சைவசமயத்தில் பெரிதும் போற்றப்படுவன. அவ்வாறே மணவாள மாமுனிகள் இயற்றிய உபதேசரத்தினமாலை என்பது ஒரு வைணவ சமய சம்பிரதாய நூலாகும். இது வைணவ சமய மரபில் பெரிதும் போற்றுதற்குரியதாக அமைந்துள்ளது.
உபதேசம் பெறுவதற்கென இடம், பருவம், சூழல் என்பன தொடர்பில் பக்குவ முதிர்ச்சி நிலை அவசியம். பொதுவாக

7.2O கர ஆடி 01
"உபதேசம்" என்பது யாவராலும் பயன்படுத்தற்குரிய ஒரு சொல்லாகும். "ஊருக்குத்தான் உபதேசம் உனக்கில்லை" என்ற சாதாரண நிலையிலிருந்து பக்குவ முதிர்ச்சி நிலையில் இறையருளாளர்களுக்கு இறைவன் புகட்டிய உயரிய நிலை வரை உபதேசங்கள் விரிந்து செல்கின்றன. இத்தகைய உபதேசப் பெருமையை உலகத்தவர்க்கு உணர்துவதற்காகவே சிவபெருமான் இளைய திருமகன் கந்தப்பெருமானிடம் ஒரு சீடன் போல் பணிவுடன் பிரணவப் பொருளான மந்திர உபதேசம் பெற்றருளினார் என்பது நினைந்து மனமுருகிக் களித்தற்குரியது. இவ்வகை உபதேசங்கள்பார்வையால், சைகையால், வார்த்தைகளால் வழங்கப்படும் என்பதும் ஈண்டு நினைவிற் கொள்ளத்தக்கது. கருத்தியல், தத்துவவியல், பண்பாட்டியல் என்னும் தளங்களினூடாக உபதேச மொழிக் கூறுகள் வெளிப்படுத்தப்பட் டுள்ளமையினை ஒரளவு உணர்ந்து கூறமுடியும்.
சைவ சமயத்தவர் தாம் சிறப்பாகக் கடைப்பிடிக்கும் சித்தாந்த நெறியில் குருவருளுக்கு முதன்மை கொடுத்துள்ளனர். "குருவருளின்றித் திருவருள் இல்லை" என்ற நம்பிக்கை கொண்டுள்ளனர். தாம் பிழையான நெறியில் செல்லும்போது இறைவனே மானுடச் சட்டையணிந்து தடுத்தாட்கொண்டு நன்னெறி செலுத்துகின்றார் என்பது இந்துக்களின் அழுத்தம் திருத்தமான நம்பிக்கையாகும். இறைவனே குருவாக வந்து சீடருக்கு உபதேசித்தருளிய அற்புதம் புராணங்களிலும்
அடியவர்களது வரலாறுகளிலும் காணக்கிடைக்கின்றது.
இவ்வகையிலே தான் இந்துமதம் குருபாரம்பரியத்துக்கு அதிமுதன்மை கொடுத்துப் பேணிவந்துள்ளது. நல்லறிவு என்பதன் திரண்ட உருவமே தெளிவுள்ள ஆசிரியர் எனலாம். உலகியலில் ஆசிரியர் என்பதையே உயர்த்தி அருளியலில் குரு அல்லது ஆசாரியர் என்பர். ஆசிரியர் என்ற சொல்லுக்கு குற்றங்களை ஒட்டுபவர் என்பது பொருளாகும். ஆசு குற்றம். இரியர் ஒட்டுபவர். அதாவது தன்னுடைய சொற்களாலும் நடத்தைகளாலும் மாணவனிடமுள்ள குற்றங்களை நீக்கியும், நீங்கிய குற்றங்கள்
மீண்டும் வராமலும் காப்பவர் ஆசிரியர் ஆவார்.
ஆசிரியரே குரு எனப் போற்றப்படுவார். மாதா, பிதா, குரு, தெய்வம் என்பர். மாதா, பிதாவுக்கு அடுத்த நிலையே குருவுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. "குருவில்லா வித்தை பாழ்" என்பது ஒளவையாரின் தீர்க்கமான சிந்தனை. மாதா, பிதா ஆகியோரது உபதேச வார்த்தைகளால் வளர்ந்து பக்குவமடைந்த பின்னர் குருவின் கரங்களுக்கு மாற்றப்படுகின்றோம். நல்லவர்களாகவும், பண்புள்ளவர்களாகவும், தயாள சிந்தை கொண்டவர்களாகவும் வாழ வேண்டும் என்ற தாயினது நாளாந்த உபதேசங்களும், என் மகன் படித்து நற்றொழில் பெற்று வாழவேண்டும் என்ற தந்தையினது நாளாந்த உபதேசங்களும் வாழ்வியலில் மாற்றத்தை ஏற்படுத்துவன. இத்தகைய மாற்றங்கள் ஏற்படக் குருவின் வழிகாட்டல் அவசியம் என்பதனை உணர்ந்து நற் சற்குருவை அடைய வழிகாட்டி நிற்பதும் உயர்வான உபதேசமே எனலாம். இதனால் நல்லாசிரியர் யார்? நல்லாசிரியர் அல்லாதவர் யார்? என
அறிகின்றோம். இவ்வகையில் யாரைக் குருவாகக்

Page 23
இந்துசாதனம் Ζ. Ο
கொள்ளவேண்டும் யாரைக் குருவாக் கொள்ளக்கூடாது என்று திருமூலர் கூறுவது மாணவர்களுக்கு விடுக்கும் எச்சரிக்கைச் செய்தியாகும்.
"குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார் குருட்டினை நீக்காக்குருவினைக்கொள்வார் குருடும் குருடும் குருட்டாட்டமாடிக் குருடும் குருடும் குழிவிழுந்தவாறே"
என்கிறார். அதாவது அறியாமையை நீக்கும் ஆசிரியரை நாடாமல் அறியாமையைப் போக்காதவனைக் குருவாக அடைவார்கள். அந்த மாணவரும் குருடர். ஆசிரியனும் குருடன், இரண்டு குருடுகளும் குருட்டாட்டம் ஆடி இரண்டும் குழியில் விழும் மேலேறமுடியாது. என்பதே திருமூலர் கருத்துரைக்கும் செயலாகும்.
வேத காலத்தில் இரிஷிகள் சமய குருவாக விளங்கி ஆத்ம ஞானம் பரவ உதவினர். உபநிடதங்களில் யஜ்ஞ வல்கியர், நாரதர், யமன். பிரஜாபதி, உத்தாலகர் போன்றோர் ஞானகுருவாக விளங்கினர். இவர்கள் மூலமாக வேத மறைஞான ஊற்றுக்கள் உபநிடதச் சிந்தனைகளாக வெளிக்கிளம்பி விரிவடைந்தன. எனவே வியாசமகரிஷியே எமது குருபாரம்பரியத்தின் ஆதர்ஷ புருஷராவார்.
வேதங்களின் ஞான காண்டமாகிய உபநிடதங்கள் ஓர் உபதேசத்தின் வெளிப்பாடு எனலாம். பக்குவமுள்ள சீடர்களுக்கும் குருவுக்கும் இடையேயான உரையாடல் வடிவங்களாக உபநிடதங்களாகக் காணப்படுகின்றது. உபநிடம் என்பது நெருங்கிக் கீழே இருத்தல், பக்குவமாய் அமர்ந்திருத்தல், அருகில் இருத்தல் எனும் பொருளை உணர்த்துவதாயுள்ளது. ஆகையால் பக்குவ நிலையிலுள்ள சீடன் தான் வாழும் உலகம் சார்ந்த, தனது ஜட உடலை இயக்குகின்ற உயிர் சார்ந்த, சட உலகினை இயக்கும் மேலான சக்தியாகிய இறைவன் சார்ந்த வகையில் எழுந்த பலதரப்பட்ட வினாக்களுக்கு விடைகாணும் நோக்கில் ஞானகுருவின் அருகிருந்து அல்லது பக்குவமாய் அமர்ந்திருந்து அல்லது நெருங்கிக் கீழே இருந்து பெற்ற உபதேசங்களே
உபநிடதங்கள் எனலாம்.
தனது மாணவனுக்காகக் குரு வேண்டிக்கொள்ளும் உயரிய
வேண்டுகோளை உபநிடதங்கள் எடுத்துரைக்கின்றன.
"ஹரி ஓம் சஹனாவவது சக நெள புனஃது, சகவீர்யம் கரவா வனஹ; தேஜஸ் விநா வதிதமஸ்துமாவித்விஷா வஹை ஒம்சாந்தி, சாந்தி, சாந்தி."
எல்லா உயிர்களும் எல்லா இடங்களும் கடவு இறைவன் --சிறப்பாகப் பிரகாசிக்கின்றான்.
அதற்கேற்ப அங்கு தெய்வத்தின் சாந்நித்தியம் விலக விலகச் சூரியன் வெளிப்படுவதுபோன்றது.
 

72O esp esp Ol
அதாவது "குரு சிஷ்யர்களாகிய எங்கள் இருவரையும் சேர்த்து பிரமம் காப்பாற்றட்டும். எங்கள் இருவரையும் சேர்த்து வளர்க்கட்டும், நாங்கள் இருவரும் சேர்ந்து வீரியத்துடன் உழைப் போம். எங்கள் கல்வி கூர்மையானதாகவும், ஒளிமிக்கதாகவும் விளங்கட்டும் ஒருபோதும் நாங்கள் ஒருவரையொருவர் வெறுக்காமல் இருக்கவேண்டும்." என்றவாறு அது பொருள் தருகின்றது. இங்கு உபதேசிப்பவரும் (குரு) உபதேசம் பெறுபவரும் (சீடர்) ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கும் அன்பு, இருவரினதும் குறிக்கோள், கல்வியில் ஆர்வம் (அக்கறை) கூட்டு உழைப்பு, சிறந்த அறிவு, வெறுப்பின்மை, செவிமடுக்கும் தன்மை என்பன புலனாகும்
தன்மை கவனிக்கத்தக்கது.
குருவைச் சிந்தித்தல், சேவித்தல், பேசுதல், நமஸ்கரித்தல் ஆகியன உயர்ந்த செயல்களாகும். குருவே தெய்வம், குருவே தர்மம், குருவிடம் நிலைத்தல் சிறந்த தவம் எனக் குருகீதை கூறுகின்றது. இறைவனே முதற்குரு எனவும் உயிர்களின் நல்வாழ்வுக்காக இறையருளால் தோன்றியவரே குரு எனவும் திருமூலர் கூறியுள்ள கருத்துக்கள் சிந்தனைக்குரியனவெனலாம்.
"குருவே சிவமெனக் கூறினன் நந்தி குருவே சிவமென்பது குறித்தோதார் குருவே சிவனுமாய் கோனுமாய் நிற்கும் குருவே உரையுணர்வற்றதோர் கோவே"
என்ற காரணத்தினாலேயே குருவாகிய இறைவனைச் சிவமென்று குறிப்பிட்டனர் சித்தாந்திகள் என்பது கோபால கிருஷ்ண ஜயரது கருத்தாகும்.
சாதாரணமாகக் குரு சீடனுக்குக் கூறும் வாசகமே உபதேசங்களாகும். குருவின் உபதேசங்களால் அருட்கண் விழிப்படையும் என்ற காரணத்தினால் திருமூலர் முதலாந் தந்திரத்தில் "உபதேசம்" என்ற தலைப்பில் அதன் சிறப்பைக் கூறுகின்றார். இதனை
"தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ்செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுருச்சிந்தித்தல் தானே"
எனவரும் அடிகளில் சிவகுருநாதரின் அருளினால் தெளிவு உண்டாகும் என்பது வற்புறுத்தப்படுகின்றது. லுவுரும்.
ی
...A ܝܫ
r cs.
ளின் இருப்பிடங்களே. எனினும் மனிதர்களிடம் அதிலும் உள்ளம் தூய்மையடைய அடைய
மேலும் மேலும் பிரகாசிக்கும். இதுவே மேகம்

Page 24
இந்துசாதனம் SS iz。
HINDU God GANAPATH
Prof. A. Sanmugada
The Japanese equivalent for "God" is Kami. This worship consists of several Kami. Each Kami is Worshipped for a particular need of man. In Hindhuism too, we have several gods, each for З particular need. But Vinayakar or Pillaiyar or Ganapathi is considered to be the god through whom we could approach all other deities. Some aspects of the Japanese Kami Worship Could be
compared with those of Ganapthi worship.
Mountain is considered to be an abode where deities could reside. As a house - hold deity, God Ganapathi is symbolized by a mini - mountain shaped figure (Conica shape) made out of cowdung or turmuric. But outside, for example, at riVerbeds, under the trees, near ant - hills, etc. He is symbolized by a stone. The sacred mirror or gohei symbolize the Japanese Kami and therefore, it is believed that Kami is figurele:SS.
Both types of worship seem to be 猪 connected 線 with agriculture. when Japan was primarily an agricultural country. through the shrine festivals the people sought after food crops
in the spring (Guaig snob) and expressed gratitude
Edited & Published by Mr.S.Shivasaravanabavan on behalf Printed at Harikanan Printers, No.424, K.K.S. Road Jaffna. 1 707,201
 
 
 
 
 

Ο Ζ 2OII ---
ANDTHE JAPANESEKAMI
S,
Ph.D. (Edinburgh)
for rich harvest in the fall (Saotoutsi sitcob). Throughout the Season prayers were offered for
protection against destructive wind, rain, drought
and insects. In Spirit this took the form or making
an offering of the first fruits to the Kami, and in expressing thanks for the remnant left for personal
USe.
The COW- dung and graSS that Symbolize Ganapthi represent soft and fertile soil and abundance of Crops respectively. The Jafna agriculturists always begin their first ploughing, first planting and harvesting only after worshipping Ganapathi. After the harvest, Pongal (gruel made by boiling rice, milk, redbeans and sugar) is made in the field itself with the rice obtained from that harvest. Pongal is Offered to Ganapthi. Rats and elephants can cause damage to the ice fields. Therefore, ratis worshipped as the sacred vehicle of Him. Since. He is an elephant - Faced deity. He is worshipped to contro the elephants from Causing damages to the fields. Like the Japanese, making an offering of the first fruits to Ganapthi is a practice
among the Hindhus.
S
නූ భట్ల
the Saiva Paripaliana Sabai, No.450, K.R.S. Road, Մaffna &
C1"Day of Adith thingal). Phone: 0212227678,0213202191