கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைக்கேசரி 2011.09

Page 1
கந்தரோடைகாட்டும்
முதுவெளிச்சம்
 
 

USA...USS 1000
US$ 1000 UK.GB£ 600 OCH 1000 EUROPE.EUe 700

Page 2
O
STRENGTHEN
HAR ROOTS Within
USe the GINAL
NOUriShe
Sri Arkem Phar 12/1/1, Prince o Colom Te: O0941
 
 
 

Formulo
BiOItineX
Hair. Skin-Nail Nourisher
Kemin
anka maceuticals if Wales Avenue, bO-14,
1 2470290

Page 3
S.A. in
Kingfisher. A Colombo to
You can now experience our consistent on-time enjoy the benefits of King Club, India's most re.
Flyer Program, when you fly India's favourite air you can also plan your vacation with Kingfis
discover breathtaking delights of India.
 

lines connects dia Via Chennai
performance and arding Frequent nie. What's more
er Holidays and
A R. L. N E S

Page 4

SOL” GODILIůLILLib :
மணற்காட்டில் புதையுண்டிருக்கும்
புனித அந்தோனியார் தேவாலயம்
உள்ளடக்கம்
14 திக்குவல்லை
முஹியிதின் ஜூம்ஆ மஸ்ஜித்
32
38
46
54
60
தமிழரின் பாரம்பரிய பாவனைப் பொருட்கள்
தமிழ் எழுத்துக்கலையின் தோற்றமும் வளர்ச்சி வரலாறும்
திருக்கோவில் கல்வெட்டுக்கள்
பர்மிங்ஹாம் வெங்கடேஸ்வரர் பாலாஜி கோயில்
மறைந்த பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி

Page 5
PUBLISHER Express Newspapers (Cey) (Pvt) Ltd. 185, Grandpass Road, Colombo 14, Sri Lanka.
TP +94 11 5234338 WWW. kalaikesari.com
EDITOR Annalaksmy Rajadurai editor(CDkalaikesari.com
SUB-EDITOR Bastiampillai Johnsan editor(CDkalaikesari.com
MEDIA CO-ORDINATOR Pragash Umachandraa
CONTRIBUTORS Prof. A. Shanmugathas Prof. S. Sivalingaraja Prof. P. Pushparatnam Prof. S. Jeyarasa Dr. K. Nageswaran K. Thangeswary Subashini Pathmanathan Thakshayiny Prabagar Pon. Theivendiran M. K. MaSilamani
PHOTOS
S. Surendiran Narthanam E. Rajarethnam
LAYOUT
S. A. Eswaran
ICT S. T. Thayalan
ADVERTISING A. Praveen marketing Ovirakesari.lk
CIRCULATION K. Dilip Kumar
SUBSCRIPTIONS Arjun Jeger arjun(G)expressnewspapers.net
PRODUCTION L. A. D. Joseph
ISSN 2012 - 6824
கலைக்கேசரி வா
கலைக்கேசரியின்
சந்திப்பதில் மகிழ்ச்சி கருத்துகளைத் தெரி தமிழர் தம் தொ6 நம் சமூகத்தினரிை தமது இருப்புக் குறி சமூகம், தனது ே சமூகத்தினருக்குத் இருக்கிறது என்பை சார்பான வரலாறு கட்டத்தில் நடைெ கிளம்புகின்றன. என தகவல்கள் தெளிவா வரலாறுகள் உரிய
கையளிக்கப்பட வே
தக்கதாகும். இவ்வன குறிப்பிடலாம்.
நன்றி
6.600Ti585lb
|نوع_F چھCUR
ھے کھeھ سکسیis skہ کلام
 

ஆசிரியர் பக்கம்
தமிழர் தம் வரலாறுகளை தெளிவாக பதிவு செய்தல் வேண்டும்
ாசகர்களுக்கு வணக்கம். ன் 21 ஆம் இதழின் மூலமாக உங்கள் அனைவரையும் அடைகிறோம். அத்துடன் கலைக்கேசரியைப் பாராட்டிக் விக்கும் வாசகர்களுக்கும் எமது நன்றிகள். ன்மைமிகு பண்பாடு, பாரம்பரியம் ஆகியன குறித்து இன்று டயே அதிகம் பேசப்படுவது ஒரு நல்ல சமிக்ஞையாகும். த்து ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய நிலையில் இருக்கும் நம் வர்களையும் பாரம்பரியங்களையும் இன்றைய இளம் தக்கமுறையில் எடுத்துக் கூறவேண்டிய கடமைப்பாட்டில் த நாம் கருத்தில் கொள்ள வேண்டும். தமிழர்களுக்குச் களில் இடைச்செருகல்களை உட்புகுத்துவது இக்கால பற்றுக் கொண்டிருப்பதாகவும் குறைகள் வெளிக் எவே தமிழர்தம் வரலாறு, பாரம்பரியம், பண்பாடு குறித்த கப் பதியப்பட வேண்டும் என்றும் ஈழத்தமிழரின் இன்றைய முறையில் பதிவுசெய்யப்பட்டு அடுத்த தலைமுறைக்கு ண்டும் என்றும் தமிழறிஞர்கள் கூறுவது ஆழ்ந்து சிந்திக்கத் கையில் துரித செயற்பாடுகள் அவசியமானது என்பதையும்

Page 6
កែខៃយ៉ាំរ៉ៃរឺ 06 தமிழர் வாழ்வியல்
கலைக்கேசரி அனுசரணையில் யாழ்ப்பாணப் பல் யாழ்ப்பாண வாழ்வியல் ெ தமிழ் மக்கள் தம் தொன்மை, பண்பாடு, கல ஆகியவற்றினை இளைய சமுதாயத்தினருக்கு எடுத்துக கொண்டியங்கிவரும் மாத இதழான கலைக்கேசரியின் ( அனுசரணையோடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், என்னும் தலைப்பில் பொருட்காட்சி ஒன்றினை மிகப் நடத்த முன் வந்திருக்கிறது என்ற செய்தியை நமது வாசக தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.
தமிழ்ப் பண்பாட்டு வேர்களை நாம் ஆழ ஊடுரு முக்கியத்துவத்தை நாம் மறந்து விடுதல் இயலாது. வரலா வாழ்வியலை , நமது இளைய சமுதாயம் அறிந்துகொள்ள தகும்.
அத்தகைய வரலாற்றுப் பண்பாட்டு முக்கியத்துவம் ( புலப்படுத்துவது சாலவும் பொருத்தமானது. 1974 ஆட வரலாற்று பொருட் கண்காட்சிக்குபின் யாழ்ப்பாணப் வரலாற்றை எடுத்துக் காட்டும் பொருட்காட்சியை நடத்த அடைகின்றது.
2011 செப்டம்பர் 24 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி காட்சி காலை 9 மணிமுதல் மலை 5 மணிவரை நடைபெ
கல்வி , கலை , கலாசாரம் , பண்பாடு , வைத்தியம் பொழுதுபோக்குகள் என பண்டைய யாழ்ப்பாண மக் பொருட்கள் , பண்டையப் பொருட்களின் மாதிரிகள் பெறப்பட்ட புராதனப் பொருட்கள் , புகைப்படங்கள் சின்னங்கள் எனப் பல்வேறு வகையான அம்சங்களும் ஆதாரபூர்வமாகச் சேகரித்துக்கொள்ளும் பணியில் யாழ்ப் கலைத்துறை மாணவர்களும் ஆர்வமாக ஈடுபட்டுக் கொன கூடிய அன்பர்களது உதவிகளும் மனப்பூர்வமாக நா நாட்களில் ஒரு புறமாக , தமிழர்தம் புராதனச் சிறப்ை நடைபெறவிருக்கின்றன என்பது வரலாற்றுத்துறையோடு மிகையில்லை. இதில் சில இந்திய அறிஞர்களும் கலந்து( மேலும் கலையார்வலர்களின் இரசனைக்குத் தீனி நிகழ்ச்சிகளும் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன மகிழவாய்ப்புள்ளது.
இம்மாபெரும் பொருட்காட்சி எவ்வெவ்விதமான பாடசாலை மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் இடம்பெறவிருக்கின்றது. பொருட்காட்சியில் வைக்கப் வைத்தே தரப்படவிருக்கின்றன.
இம்மாபெரும் பொருட் காட்சியினைப் பொதுமக்களு ჯ883 கூடியதாக , பஸ் போக்குவரத்துச் சேவை
வாங்கவும் அங்கு வசதிகள் செய்யப்பட
இவ்வரிய வாய்ப்பினை ஆர்வலி
பயன்படுத்திக் கொள்ளுமாறு கலைக்(
 
 
 

கலைக்கழகம் நடத்தும்
O O
பாருட்காட்சி
ாசாரம், வாழ்க்கை முறை றும் பிரதான நோக்கினைக் வேண்டுதலுக்கிணங்க அதன்
யாழ்ப்பாண வாழ்வியல் பிரமாண்டமான முறையில்
ர்களுக்குத் தெரியப்படுத்துவ தமிழர் வாழ்வியல்
வித் தேட முற்படுகையில் யாழ்ப்பாண தீபகற்பத்தின் ற்று முக்கியத்துவம் வாய்ந்த இக்குடாநாட்டின் பண்டைய வேண்டியது கட்டாயக் கடமையாகிறது என்று கூறினாலும்
கொண்ட பகுதியின் வாழ்வியலை பொருட்காட்சி மூலம் ம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தொல்லியல் கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை யாழ்ப்பாண பண்டைய முன்வந்திருப்பதையிட்டு கலைக்கேசரி மிகவும் மகிழ்ச்சி
தி வரை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இப்பொருட் ற சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
, சமயம் , நம்பிக்கைகள் , தொழில்கள், தொடர்பாடல் , ந்களின் வாழ்வியலைச் சித்திரித்துக் காட்டும் புராதனப் , கல்வெட்டுகள் , சாசனங்கள் , அகழ்வாராய்ச்சியில் வரைபடங்கள் , ஆடை அணிகலன்கள் , வழிபாட்டுச் இப்பொருட்காட்சியில் இடம்பெறுகின்றன. இவற்றினை பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறையினரும் மற்றும் ண்டிருக்கிறார்கள். இவற்றிற்கு தக்க பொருட்களை வழங்கக் டப்படுகிறது. பொருட்காட்சி நடைபெறும் குறிப்பிட்ட ப ஆதாரங்களுடன் ஆராயும் நோக்கில் கருத்தரங்குகளும் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒர் இனிப்பான செய்தி என்றால் கொள்ளவிருக்கிறார்கள்.
போடும் வகையில் தினமும் மாலை, கலை கலாசார
1. அத்துடன் யாழ்ப்பாண உணவு வகைகளையும் சுவைத்து
விடயங்களை உள்ளடக்கி இருக்கின்றது என்பதனை விளக்கும் வகையில் , 24 மணிநேரம் படக்காட்சியும் படும் பொருட்கள் குறித்த விளக்கங்களும் அவ்விடத்தில்
ம் பாடசாலை மாணவர்களும் கண்டு களித்துப் பயன்பெறக் வசதிகளும் மற்றும் பிரசுரங்கள், நூல்கள் போன்றவற்றை
விருக்கின்றன. ரர்களும், பொது மக்களும், மாணவர்களும் நன்கு கேசரி கேட்டுக்கொள்கிறது. - ஆசிரியர்
ழ்ப்பாண வாழ்வும் பண்பாடும்

Page 7

504 - 7875/- upwords 50 - 2450/. upwards
VS
EXCLUSIVE DENM COLLECTION
Now ovoice of
Go Soroth O'S
ESD 55
the Seventin Sense Of Innen" S Style
Molin Street Moesic City
e: O 24,2740
WWW e SOCIOS. C. On
Fino US On Www.fccebook.com/escrothos

Page 8
隠 .િ 意
। 豪
 

சேர்ந்த ரைனோ ஆவர்.
ரைனோவின் மூதாதையர்
அமசேலானியாவின் அரவக்கியன் ஆதிக்
குடிகள் மற்றும் வெனிசுலாவில் உள்ள
றினோக்கோ பள்ளத்தாக்கைச் சேர்ந்த ஆகியோர் ତTର୪T$
ரைனோ (Taino) என்றால் நல்ல பர் அல்லது 'மேலானவர் என்பதே அர்த்தமாகும்.
இவர்கள் தமக்குள் சண்டை
கொண்டதை
ன்பதால் அக்கருத்து சரியானது கொள்ளப்படுகிறது.
இவர்கள் அமைதியானவர்கள்.
டோபர் கொலம்பஸ் இப்புதிய உலகின் கடற்கரைக்கு போய்ச் ர்ந்தபோது சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரைனோ ஆதிவாசிகள் இருந் ார்கள் என மதிப்பிடப்பட்டது. ஆனால் ஸ்பானியர்களின் வருகையுடன் அந்த ஆதி மக்களின தொகை மிகவும் சுருங்கிப்போய் விட்டது. அது ஒரு பாரியகதையாகும்.
ரைனோ சமூகம் அடிப்படையில் ஒரு மரியாதையான கமாகும் மகிழ்ச்சியையும் நட்புறவையும் பேணும் இ
தாண்ட மக்கள் டெமினிக்கன்
குடியரசு சன் சல்வடோர் நாட்டைச்

Page 9
சமூகம் திறம்பட ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு சமூகமாகும். அவர்கள் வாழ்ந்த தீவுகள் அனைத்திலும் பெரும்பாலும் கமத் தொழில் சமூகமாகவே வாழ்ந்திருந்தனர்.
அவர்கள் தமது புரதத் தேவைக்கு இறைச்சி அல்லது மீனைச் சமைத்து அல்லது சமைக்காது உண்டனர். அத்துடன் பாம்புகள், வெளவவால்கள், பூச்சிகள், றவைகள், வாத்துகள் போன்றவற்றை வேட்டை டுவதன் மூலம் பெற்று உண்டனர். கடல் அல்லது ாவிகளில் இருந்து ஆமையையும் பிடித்து உண்டனர். தட்ட ஒரு வருடம் கொலம்பஸ் அவர்களுடன் வந்தார். அக்காலத்தில் பயிர்ச் செய்கை
டார்கள் சில மாதங்களுக்கு பின் அவர்களது 5(5)60l DUT60T
நடவடிக்கைகளின் காரணமாகச் சோர்வுற்றார்கள்.
ரைனோவின் தலைவன் கசிக் (cacidue) எனக் கூறப்படுபவன் ஸ்பானியக் குடியேற்றப் பகுதியில் தாக்குதல் நடத்தி அங்கு வசித்த மிகுதி ஸ்பானியர்களைக் கொன்றுவிட்டான். அவனது பெயர் கொனபோ என்பதாகும். சில காலங்களுக்கு பின் அங்குவந்த கொலம்பஸ் ஸ்பானியக் குடியேற்றப் - பகுதி
வெறுமையாக்கப்பட்டு எரிக்கப்பட்டதைக் கண்டு, அதிர்ச்சி அடைந்தார்.
இந்நடவடிக்கைகக்கு ரைனோக்களைப் பழிவாங்க
புதிய கவர்னரான நிக்கலஸ் டி ஒவன்டோ தீர்மானித்தான்.
80க்கும் மேற்பட்ட இந்திய ரைனோ ஆதிவாசித் தலைவர்களுக்கு உணவு சமைக்குமாறு கொனபோவின் விதவை மனைவியான அனகோனாவிடம் கேட்டுக் கொண்டான். அவ்விதமே உணவு சமைக்கப்பட்டு தலைவர்கள் எல்லோரும் ஒரிடத்தில் சமுகமளித்து விருந்து நடைபெறப்போகும் நேரத்தில் அவர்கள் தங்கியிருந்த இடத்தை, ஸ்பானியர்கள் தீக்கு இரையாக்கினார்கள்.
அதில் தப்பியோடியவர்கள் பின்னர் பிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து இருதரப்பினருக்குமிடையில் நெருக்கடி நிலை ஏற்பட்டது. அக்காலகட்டத்தில் ஸ்பானியர்களின் தோட்டங்களில் ரைனோகள் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இ ဒြို
- -
சிலர் தமது பயிர்ச் செய்கைகளை நாசமாக்கிவிட்டு கிராமத்தை விட்டுத்தப்பியோட முனைந்தார்கள். ஆனால்
அவர்களது திட்டம் கண்டுபிடிக்கப்பட்டு நிர்க்கதியாக
விடப்பட்டார்கள் ஏராளமான ரைனோ மக்கள் தற்கொலை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செய்து கொண்டார்கள்.
தங்கியிருந்தவர்களும் சில வருடங்களுக்கு பின் சின்னம்மை காரணமாக காலமானார்கள். இவ்விதமாக G),5ITG) bL 16YU Ul b அவரது சகாக்களும் ரைனோ சமூகத்தையே அழித்தொழித்தார்கள். இ

Page 10
மரவள்ளிக்கிழங்கு மா தயாரித்து குடலையில் சேமித்து வைக்கப்படுகிறது
 

ரைனோக்கள் தங்கத்தை தோண்டி எடுப்பதற்கு முயற்சிப்பதில்லை. அருவிகள் மற்றும் நதிகளின் கரைகளில் கற்களோடு கிடக்கும் தங்கக் கட்டிகளை பொறுக்கி எடுப்பார்கள். இந்தத் தங்கக் கட்டிகளை காதணிகள், மூக்கு அலங்கார அணிகள் ஆகியவற்றுக்குப் பாவிப்பார்கள். அத்துடன் தங்கக்கட்டியை மெல்லிய தகடாக்கி, விழாவுக்கான முக மூடிகள், இடுப்புப் பட்டிகள் மற்றும் கலைப் பொருட்களைச் செய்வார்கள். பருத்தியை உற்பத்தி செய்து ஏணை மற்றும் பெண்களின் ஆடை ஆகியவற்றுக்குப் பாவிப்பார்கள். சமய ரீதியான விழாக்கள் இவர்களது வாழ்வில் மிக முக்கிய இடத்தைப்பெறும். அப்போது நடனம், இசை ஆகியன முக்கியமாக விளங்கும். ஸெமிகதள் தங்களை நோய்கள், சூறாவளிகள், போர் அனர்த்தங்கள் ஆகியவற்றில் இருந்து காப்பாற்றுகின்றன என நம்புவதால் அவற்றின் அருளை வேண்டி மரவள்ளியில் (கஸாவா) செய்யப்பட்ட பாண், குடி வகைகள், புகையிலை ஆகியவற்றை நிவேதனமாக வைத்து வணங்குவர்.
வெண்கல நிறமுள்ள ரைனோ மக்கள் சராசரி உயரமும் கரடுமுரடான தலைமயிரும், பெரியதும் சற்று சாய்வானதுமான கண்களை உடையவர்கள். ஆண்கள் பொதுவாக நிர்வாணமாகத் திரிவர். அல்லது ஒரு சிறு துணியைக் கட்டியிருப்பர். திருமணமாகாத பெண்கள் ஆடையேதும் அணியாதிருக்க, திருமணமான பெண்கள் சிறு துணியை இடுப்பில் கட்டியிருப்பர். ரைனோக்கள் ஒரு சில கைப்பணிகளையே மேற்கொள்வர். பானை வனைதல், கூடைகள் பின்னுதல் மற்றும் கல், சலவைக்கல் மரம் ஆகியவற்றில் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் பொருட்களைச் செய்தார்கள். விவசாயம், வேட்டையில் மிகச் சிறந்தவர்களான ரைனோக்கள், சிறந்த மாலுமிகளாகவும் மீன் பிடிப்போராகவும், கட்டுமரம் செய் வோராகவும், கடல் L Ju J60OTLb செய்வோராகவும் விளங்குகின்றனர். விவசாயம், வேட்டையாடுதல், மீன் பிடித்தல் ஆகியவற்றில் தங்கியிருந்த ரைனோக்கள் முன்னேற்றமான மக்களாவர். இம்மூன்று வகை ரைனோ ஆதிவாசிகளிலும் பழைமைவாதிகளான ரைனோக்களின் வாழ்க்கை மற்றும் சமூக அமைப்புக் குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் நிறையவே அறிந்து வைத்திருந்தார்கள். தற் போதுள்ள கியூபா, ஹைட்டி டொமினிக்கன் குடியரசு, பேர்ட்டோறிக்கோ மற்றும் பஹமா தீவுகளின் சில பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வுகளில் தரவுகள் பலவும் கிடைத்திருக்கின்றன. புதிய உலகைக் கண்டுபிடித்த மாலுமிகளான கிறிஸ்டோபர் கொலம்பஸ் மற்றும் ஐரோப்பியர்கள் ஆகியோரால் எழுதப்பட்ட விபரங்களோடு இக்கண்டுபிடிப்புகள் ஒத்திருப்பதைக் கண்டு பிடித்துள்ளனர்.
கியூபா மற்றும் தீவுகளின் கடற்கரைகளில், கொலம்பஸ் பல பெரிய கிராமங்களைக் கண்டுபிடித்தார். ஒவ்வொரு கிராமமும் ஒரு தலைவரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. அத் தலைவன் கிராமத்தின் சமூகம் மற்றும் அரசியல்

Page 11
விடயங்களை மேற்பார்வை செய்தான். தலைவராக ஆணோ அல்லது பெண்ணோ வரமுடியும் சில கிராமங்கள் மாவட்டங்களாக ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரு தலைவரின் பரிபாலனத்தின் கீழ் இருந்தன. இந்த மாவட்டங்களும் குழுக்களாக பிரிக்கப்பட்டு பிராந்திய தலைவர்களின் கீழ் இருந்தன. மிகவும் பிரபலமான மாவட்டத் தலைவர் அவற்றுக்கு தலைவராக இருந்தார். ரைனோ அரசின் அமைப்பானது தற்போதைய ஐக்கிய அமெரிக்க ராஜ்யத்தின் அரசியல் அமைப்பை ஒத்திருக்கின்றது. பழைமைவாதிகளான ரைனோ மக்கள் உயர் குடியினர் மற்றும் சாதாரணர் என இரு வகையாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றார்கள். மூன்றாவது வகுப்பினர் என யாருமில்லை.
எல்லா கிராமங்களின் அமைப்பும் ஒரே மாதிரியானது. தலைவரின் வீடு மத்தியில் இருந்து அதனைச் சுற்றி மற்றவர்களின் வீடுகள் இருக்கும் ஒலைகளால் வேயப்பட்ட வீடுககளின் தரை மண் தரையாகவே இருக்கும். பெரும்பாலும் மக்கள் வீட்டுக்கு உள்ளே அல்லது வெளியே உள்ள சாக்குக் கட்டில்களில் தூங்குவார்கள். உணவு மற்றும் பொருட்கள் கூடைகளில் போடப்பட்டு சுவர்களில் தொங்க விடப்பட்டிருக்கும். தலைவனும் மற்றும் உயர் தராதரத்தினரும் சிம்மாசனம் போன்ற முக்காலிகளில் அமர்ந்திருப்பார்கள். அதனை டுகோ (duho) ତTତ୪T அழைப்பர். அதில் ஆன்மீக ரீதியாக உருவங்கள் அல்லது சின்னங்கள் செதுக்கப்பட்டிருக்கும். இந்த உருவங்களை சுமிஸ் (Zumis) என்பார்கள். இவை கிராமங்கள் எங்கும் காணப்படும். ஒவ்வொருவரது உடலிலும் வீடுகளிலும் சுமிஸ் காணப்படும். அலங்காரத்துக்கும், கடவுளை பெரு மைப்படுத்துவதற்கும், நல்லதிர்ஷ்டங்களை மற்றும் நல் வாய்ப்புகளின் சின்னமாகவும் சுமிஸ் பாவிக்கப்படுகின்றன. பழைமைவாதிகளான ரைனோ மக்கள் தமது சொந்த வாழ்வின் பல்வேறு அம்சங்களைக் காட்டும் விதமாகவும் தமது கிராமம் மற்றும் கலாசாரத்தைப் புலப்படுத்தும் விதமாகவும் தமது உடம்பில் அலங்காரம் செய்து கொள்வார்கள். பெரும்பாலும் மக்கள் குறைந்த ஆடைகளையே அணிவர் ஆனால் பெண்கள் திருமண ரீதியான அந்தஸ்தைக் காட்டும் வகையில் ஆடைகளை அணிந்திருப்பர். திருமணம் செய்யாத பெண்கள் அலங்காரமான தலை அணியை அணிந்திருக்க, திருமணமான பெண்கள் நகுவா (Naguva) எனக் கூறப்படும் குட்டைப் பாவாடைகளை அணிந்து காணப்படுவர். தலைவர் மற்றும் சாதாரணர்களைப் பிரித்துக் காட்டும் வகையில், இடுப்புப் பட்டிகள், நெக்லஸுகள், தலையணிகள் காணப்படும். விசேட நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களின் போது ஆண் - பெண் இருபாலாரும் தமது உடலில் நிறங்களைப் பூசிக்கொள்வார்கள். அது பெரும் பாலும் சிவப்பு நிறமாகவே இருக்கும். இந்தியர்கள் சிவப்புத்தோல் உள்ளவர்களாகத் தோன்றுவதை இந்த சிவப்பு வர்ணம் பூசும் வழக்கம் விளக்குவதாக இருக்கும்.

உணவு தயரிப்பில்
ஈடுபட்டிருக்கும் ரைனோக்ககள்
கைகளையும் கால்களையும் பயன்படுத்தாமல் 馨 戟 பந்து விளையாட்டு

Page 12
கலைக்கேசரி 12
வேட்டையாடுதல், மீன்பிடித்தல் மற்றும் மிருகங்களை பொறிவைத்துப் பிடித்தல் ஆகியவற்றுடன், பழைமை வாதிகளான ரைனோக்கள் பல்வேறு விதமான பயிர்களையும் காய்கறிகளையும் உண்பர். அவர்களது பிரதான பயிர் கஸவா (Cassava) ஆகும். இதனை பாண், சூப், பழரசம் மற்றும் உணவுகளுக்குப் பயன்படுத்துவர். கஸவாவுடன் சீனிக்கிழங்கு, மிளகு, 55 L (6Ŭ) @L) ஆகியவற்றையும் பயிரிடுகிறார்கள். இவற்றை இறைச்சி மற்றும் மீன் உணவுடன் சேர்த்து உண்பர். சமயச் சடங்குகளிலும் மற்றும் தின வேளைகளிலும் சுருட்டுபு கைப்பர். உணவும் சமயமும் ஒன்றுடன் ஒன்று கலந்ததாகவே இருக்கிறது. சுமிஸின் கூறப்பட்டுள்ள இரு
முதன்மைக் கடவுள்களில் ஒன்று யுகாஹ" கஸவா மற்றும்
கடல் தெய்வம் இதுவேஆகும்
உணவு தரும் இக்கடவுளை சம்பந்தப்படுத்தும் வகையில்,
ஸ சமிக்கு உணவு படைப்பார்கள்.
மற்றையது அதபே (Athabey) என்பதாகும். யுகாஹசவின் தாயாரான இத்தெய்வம், நீருக்கும் வானத்துக் குமான கடவுள் எனக் கருதப்
படுகிறது.
 
 
 
 
 
 
 

ரைனோ மக்களின் வாழ்வில் விளையாட்டும், பொழுது போக்கும் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றன. இறப்பர் பந்தை வைத்து கைகளையும் கால்களையும் உபயோகிக்காமல் இருதரப்பினர் ஒரு சற்சதுர விளையாட்டு மைதானத்தில் வைத்து விளையாடும் இவ்விளையாட்டு மிகவும் கஷ்டமானதாகும். இதை ஆண்கள் வேறாகவும் பெண்கள் மற்றொரு புறமாகவும் விளையாடுவர். கிராமத்தவரும் மாவட்டத்தினரும் கொலைகளுக்குப் பழிவாங்க தகராறுகளைத் தீர்த்துக்கொள்ள அல்லது தலைவர்களுக்கிடையில் ஒப்பந்தங்களை நடைமுறைப் படுத்த அடிக்கடி ஒருவரோடு ஒருவர் மோதுவர். பழைமை வாதிகளான ரைனோக்களைப் பொறுத்தவரை அவர்களுடைய மிகப்பெரும் வெற்றி, எதிரிகளைக் கொல்வதில் அல்ல, அவர்களது சொத்துக்களைப் பறித்துக் கொள்வதில் தான் தங்கியிருக்கின்றது. எதிரியை கொல்லாது விடுத்து ஆயுதங்கள் பதக்கங்கள் மற்றும் போர்ப் பொருட்களை சுவீகரித்துக் கொள்வதில் தான் அவனது பெயரும் புகழும் தங்கியிருக்கிறது. இந்த நடைமுறை கடைசியில் ரைனோக்கள் முற்றாக அழிக்கப்படவே உதவியது. போரில் ரைனோக்கள் ஸ்பானியர்களையும் கரிபியர்களையும் கொல்லாது விட்டுவிட அவர்கள் ரைனோக்களை மதிக்காமல் கொன்றுவிடுவர்.
பழைமைவாதிகளான ரைனோக்கள் மிகவும் பிரபலமாக இருந்தாலும் முக்கியமான குழுக்கள் மற்றைய தீவுகளில் வாழ்ந்தனர். கிழக்கு மற்றும் மேற்கு ரைனோக்கள் பழைமை வாதிகளான ரைனோக்கள் போலவே இருந்தனர். ஆனால் முன்னேற்றம் குறைந்தவர்களாக இருந்தனர். மேற்கு ரைனோக்கள் அமைதியானவர்கள். அவர்கள் கொலம்பஸையும் அவரது உதவியாளர்களையும் வரவேற்று உதவுபவர்களாக இருந்துள்ளனர். பழைமைவாதிகளான ரைனோக்கள் போர்க்குணம் கொண்டவர்களாயினும் அதிக வன்முறைச் சமூகமல்ல. கிழக்கு ரைனோக்கள் எதிர்ப்புணர்வு மிக்கவர்கள்.கரிபியர்களுக்கு அண்மையில் அவர்கள் வாழ்ந்ததன் காரணமாக
போர்க் குணங்கள் கொண்டவர்களாக இருந்தார்கள். தீவில் உள்ள கரிபியர்கள் வன்முறை யாளர்களாகவும் இரத்த

Page 13
வெறி கொண்டவர்களாகவும் இருந்தார்கள். நிரந்தரமான தலைவர்கள் இல்லாத காரணத்தால் அடிக்கடி ஒருவருக்கொருவர் சண்டை பிடிப்பவர்களாகவும் அயலவர்களிடம் மோதிக் கொள்பவர்களாகவும் இருந்தனர். கியூபாவின் மேற்கு எல்லையில் வாழ்ந்த சிறிய குழுவான குவன்ஹரபே, மற்றைய ஆதிக்குடிகளுடன் சேராமல் வாழ்பவர்களாக இருந்தார்கள்.
கொலம்பஸம் அவரது ஆட்களும் இத்தீவுகளில் காலடி எடுத்து வைத்ததையடுத்து அவர்களால் இந்த உள்ளூர் மக்கள் அடிமையாளர்களாகப் பிடிக்கப்பட்டார்கள். சித்திரவதைக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்டார்கள். முக்கியமாக அவர்கள் ஸ்பானியர்களின் போர் முறைகளைத் தெரியாதவர்களாகவும் மிகவும் பயந்தவர்களாகவும் இருந் தார்கள். அவர்கள் கொல்லப்படுவதற்கும் இம்சை செய்யப் படுவதற்கும் ஸ்பானியர்களின் தங்கம் தேடும் பேராசைதான் காரணமாக இருந்தது. அதுவுமல்லாமல் அப்பழங்குடி மக்களைப் பிடித்து அடிமைகளாக ஐரோப்பாவுக்கு கப்பல் மூலம் அனுப்பி வைத்தார்கள். உள்ளூர் வாசிகளை அவர்களுக்கு விளங்காத ஸ்பானிய மொழியில் தங்களுக்கு அவர்கள் அடிமை என வாசகமிட்டு அவர்களை அதை ஏற்க வைத்து அடிமையாக்கினார்கள். எதிர்த்தவர்களை ஸ்பானியர்கள் தாக்கினார்கள். ரைனோ கிராமங்களின் தலைவர்களின் அதிகாரத்தை அவமதிக்கும் நோக்கமாக பதின்மூன்று தலைவர்களை ஒன்று கூட்டி, அடிமைப் படுத்தப்பட்ட உள்ளூர் மக்கள் முன் வைத்து எரித்துக் கொன்றார்கள். அம்மாதிரியான பயங்கர நடவடிக்கை களினால் ரைனோ சனத்தொகை வேகமாகக் குறையத் தொடங்கியது.
ஹிஸ்பானியோவுக்கு கொலம்பஸ் காலடி வைத்த 1492ஆம் ஆண்டு காலகட்டத்தில் தீவில் வாழ்ந்திருந்த ரைனோ மக்களின் எண்ணிக்கை சுமார் 80 இலட்சம் எனக் கணக்கிடப்பட்டிருந்தது. 1496 ஆம் ஆண்டில் அது கிட்டத்தட்ட அரைவாசியாகக் குறைந்து விட்டது. 4 வருடங்களுக்குள் சுமார் 40 இலட்சம் பேராக குறைவடைந்து விட்டார்கள். 1535 ஆம் ஆண்டளவில் ஹிஸ்பானியோலாவில் முழு சனங்களும் அழிந்து விட்டார்கள். இதே மாதிரியான ஒர் அவல நிலைதான் அவர்கள் வாழ்ந்த எல்லாத் தீவுகளிலும் நிலவியது. இலட்சக்கணக்கான ரைனோ மக்களும் அவர்தம் கலாசாரமும் அழிக்கப்பட்டு விட்டதால் அவர்களது கடந்த கால சரித்திரத்தை அறிவதில் ஆராய்ச்சியாளர்கள் பெரிதும் கஷ்டமடைகின்றனர். தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் உள்ளூர் மக்கள் தாங்கள் ரைனோ மக்களின் வழித் தோன்றலே எனக் கூறி அவர்களது கலாசாரத்தைப் பின்பற்ற முயல்கின்றார்கள். கதைகள், புராணங்கள், இதிகாசங்கள், கலாசாரங்கள், வழக்கங்கள் ஆகியவற்றினை மீண்டும் மீண்டும் கூறுவதால் அவர்களது மூதாதையரின் நினைவுகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அது அமெரிக்காவின் முதலாவது மக்களின் பரம்பரைச் சொத்தாகும்.
- கங்கா

& ឆ្នាអ្វីដែ
13
ரைனோக்களின் கைவினைப் பொருட்கள்

Page 14
கலைக்கேசரி கி 14 கட்டடக்கலை
திக்குவல்லை முஹியி
த்தறைக்கும் தங்காலைக்கும் இடையே LD IT கரையோரப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஊரே திக்குவல்லை. இது நீள்கரை என்றும் பொருள் தரும் வகையில் திக்கு வல்லையென பெயர் பெற்றிருப்பது பொருத்தமுடையதாகும். இவ்வூரையண்டிய மேலும் மூன்று மீன்பிடிக் கிராமங்கள் குவல்ல என்று பெயர் பெற்று விளங்குகின்றன. மஹவெல்ல, குடாவெல்ல, நில்வெல்ல என்ற கிராமங்களே இவை.
திக்குவல்லை நீங்கலாக ஏனைய மூன்று கிராமங்களும் 100 வீதம் சிங்கள மக்களின் வாழ்விடங்களாகும். எனினும் திக்குவெல்லைப் பிரதேசத்தில் யோனகபுர என்ற முஸ்ஸிம் கிராமம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். திக்குவல்லை பெலியத்தைப் பழைய வீதியில் அமைந்துள்ள இக்கிராமத்தில் சுமார் 5000 முஸ்ஸிம்கள் வாழ்ந்து வருகின்றனர்
 

ஒரு காலத்தில் இவ்வூர் பழங்குடி மக்கள் தெவிநுவரவாவுவ, என்ற இடத்தில் வாழ்ந்து வந்தனர். சுமார் 1520களில் போர்த்துக்கேயர் தெவிநுவர மீது படையெடுத்தனர். இங்குள்ள விஷ்ணு தேவாலயத்தை கொள்ளையடிப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. அச்சமயம் அங்கிருந்த இந்துக்களும், முஸ்லிம்களும் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர்.
இங்கிருந்து இடம் பெயர்ந்த சில முஸ்லிம்கள் திக்குவல்லை, ஒடி பொக்குன என்ற பகுதியில் குடியேறி அங்கு பள்ளிவாசல் ஒன்றையும் நிறுவி வாழ்ந்து வந்தனர். எனினும் இப்பகுதியில் போதிய பாதுகாப்பு இல்லாமல் இருந்தபடியால், தற்போதுள்ள யோனகபுர என்ற இடத்திற்கு அவர்கள் இடம் பெயர்ந்தனர். முன்னர் முஸ்லிம் வீதியென வழங்கப்பட்ட இப்பகுதி 1957 ஆம்
ஆண்டு யோனகபுர என்று பெயர் மாற்றம் பெற்றது. மேலும்

Page 15
யோனகபுர உப தபால் கந்தோர் என்ற பெயரில் தபால் கந்தோர் ஒன்றும் அங்கு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
இக்கிராமத்தில் மேற்குத் திசையில் ஸியம்பலாவெவ, என்ற வாவி அமைந்துள்ளது. இதன் கிழக்குக் கரையோரத்திலேயே முஸ்லிம்கள் குடியேறினர். முன்னர் சிறந்த வாவியாக விளங்கிய இந்நீர்த்தேக்கம் பின்னர் வயல் நிலமாக மாற்றம் பெற்று அதில் நெற் பயிர்ச் செய்கையும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது அது சதுப்பு நிலமாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
1684ஆம் ஆண்டளவில் இவ்வாவிக்கு முகம் காட்டியவாறு அதன் எதிர்த்திசையில் திக்குவல்லை ஜும்ஆப் பள்ளிவாசல் கட்டப்பட்டது. இற்றைக்கு 100 ஆண்டுகளுக்கு முன் அப்பள்ளிவாசல் இடிந்து போகும் அபாய நிலையை எதிர்நோக்கியது. எனவே அதனை புனர்நிர்மாணம் செய்வதற்காக ஊர் மக்கள் தீர்மானித்தனர். எனினும் பள்ளிவாசலை இடித்து விடுவதன் மூலம் இறைசாபம் ஏற்படுமோ என்று மக்கள் அஞ்சுவதன் காரணமாக அதை தகர்த்து விடுவதற்கு அவர்கள் தயங்கினர். அச்சந்தர்ப்பத்தில் தென் இந்தியாவைச் சேர்ந்த மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் அங்கு விஜயம் செய்திருந்தார். அவர்களின் வழி காட்டலின் Gutiର) பழைய பள்ளிவாசல் உடைக்கப்பட்டு அவ்விடத்தில் புதுப்பள்ளிவாசல் கட்டப்பட்டது.
அவ்வமயம் இவ்வூர் பிள்ளைகளுக்கு அல்குர்ஆன் கற்றுத் தருவதற்காக வெலிகாமத்திலிருந்து விஜயம் செய்திருந்த அப்துல் வஹ்ஹாப் லெப்பை அவர்களிடம் ஜும்ஆ பிரசங்கம் நிகழ்த்துமாறு மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். அதற்கமைய முதலாவது ஜும்ஆ பிரசங்கம் அரங்கேறியது. இதனைக் கண்டு மகிழ்ச்சியடைந்த மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் அப்துல் வஹ்ஹா லெப்பை அவர்களை நோக்கி 'நீங்கள் செய்த காரியம் ஹைர் லெப்பை ஹைர் என்றார். அது முதல் ஊர் மக்கள் அவரை ’ஹைர் லெப்பை எனறு அழைக்கலாயினர்.
மேலும் திக்குவல்லை ஜும்ஆ பள்ளிவாசல் வரலாற்றிலே அப்துல்லா மெளலானா அவர்களின் பங்களிப்பு மறைக்க முடியாதது. யேமன் தேசத்தைச் சேர்ந்த இவர் மேற்கொண்டு வந்த மார்க்க சேவை
காரணமாக அவருக்கு மாத்தறை, திக்குவல்லை *
பிரதேசத்தில் சில பகுதிகளிலும் பெரும் மதிப்பும் செல்வாக்கும் இருந்து வந்தது.
மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் கால கட்டடத்தில் ஒழுங்கான முகப்பைப் பெற்றிருக்க வில்லை. அந்தக் குறையை அப்துல்லாஹ் மெளலானா அவர்கள் நிவர்த்தி செய்து வைத்தார்கள். இன்னும் அழியாச் சின்னமாக விளங்கும் பள்ளிவாசல் முகப்பு அன்னாரின் அறிவுரையின் பேரில் கட்டப்பட்டதாகும்.
 


Page 16
EssonGuó, Eöjë in ki 16
இஸ்லாமிய கட்டடக்கலை நுணுக்கங்கள் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அந்த முகப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
மேலும் மிகவும் பழைமை வாய்ந்த பள்ளிவாசலின் நிர்மாண காலத்தை எடுத்துக் காட்டும் வண்ணம் அதன் உச்சியில் 1684 என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிவாசலுக்குப் பக்கத்தில் மத்ரஸா ரழியீயா என்ற அறபு மத்ரஸா ஒன்றையும் மெளலானா அவர்கள் ஆரம்பித்து வைத்தார்கள். சில காலம் அறபு மத்ரஸாவாக இயங்கி வந்த அது பின்னர் இன்றுவரை குர்ஆன் மத்ஸாவாக இயங்கி வருகிறது.
மேலும், பள்ளிவாசலிலும் அதன் வளாகத்திலும் தொழுகை தவிர வேறு சடங்குகளும் நடைபெற்று வந்த போது, அன்னதானமும் வழங்கப்பட்டு வந்தது. இவைகளுக்காக மேலதிக இடவசதி தேவைப்பட்டது. எனவே மூன்று தசாப்தங்களுக்கு முன் இப்பள்ளி வாசலுடன் சேர்ந்தாற்போல் பக்கத்தில் கட்டடம் ஒன்று எழுப்பப்பட்டது.
இது இவ்வாறிருக்க இப்பள்ளிவாசல் இன்னும் சிறப்பாக புனர்நிர்மாணம் செய்யப்பட வேண்டுமென மக்கள் விரும்பினர். எனவே 1882ஆம் ஆண்டளவில் லிபியத் தூதுவராலயத்தின் நிதி உதவி மூலம் அதற்கான பணி மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் பள்ளிவாசலின் பின்புறத்தில் 40 X 40 சதுர அடி பரப்பு கொண்ட பகுதி 'லிலப் இட்டுக்கட்டப்பட்டது. இந்நிர்மாணப் பணியை யோனகபுர மக்கள் காங்கிரஸ் என்ற இலங்கை லிபிய நட்புறவுச் சங்கம் முன்னெடுத்துச் சென்றது. இதன் மேற்பரப்பு நிர்மாண வேலை ஊர் மக்களின் உதவி மூலம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் பள்ளிவாசலின் முகப்பு நீங்கலாக ஏனைய பாகமும் அதன் மேற்பரப்பும் திக்குவல்லை லிமாயாஸ் நிறுவன உரிமையாளரின் நிதி மூலம் கட்டப்பட்டது.
இது இவ்வாறிருக்க யோனகபுர கிராம மக்கள் தொகை அதிகரித்து வருகின்ற இக்கால கட்டத்தில் இப்பள்ளிவாசல் மேலும், விஸ்தரிக்கப்பட வேண்டுமென உணரப்பட்டது. எனவே, வேறு பல சடங்குகளுக்கு என பள்ளி வாசலுக்குப் புறம்பாக நிர்மாணிக்கப்பட்டிருந்த கட்டடப் பகுதியை பள்ளிவாசலுடன் இணைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. அதற்கமைய அது உடைக்கப்பட்டு தற்போது அதில் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணி முடிவுறும் தறுவாயில் சுமார் 2000 பேர் தொழத்தக்க விசாலமான கம்பீரமான பள்ளிவாசலாகப் புதுப்பொலிவுடன் திக்குவல்லைப் பள்ளிவாசல் காட்சி
- அபூ ஷஹ்மி


Page 17
To place your
advertisement
IM
கலைக்கேசரி
CUT&RE 接辑苓 裘琴莓S FASHIN HogWikst8
Contact US OM
+94 11 5322733/734/7
ΟΥ тarketingOvirakesari.
 
 
 
 
 

Send the World's Best
Home Appliances
o your loved ones in
Sri Lanka
"ww.sincerslic
Simply visit the website of Sri Lanka's No. 1 retailer of home appliances. Choose any number of items among over 300 models from 33 of the world's leading brands and make your payment by credit card. We'll deliver them to your loved ones in any part of Sri Lanka. Guaranteed
ssI r ജ
Waldkeise HITACHI Panasionie

Page 18
கலைக்கேசரி 彦 18 புராதன செல்வம்
யாழ்ப்பாணக் குடாநாடு பற்றி புது வெளிச்சம் ஊ
UL I ழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள மிக முக்கியமான தொல்லியல் மையங்களில் கந்தரோடைக்குச் சிறப்பான ஓர் இடம் உண்டு. கந்தரோடையானது யாழ்ப்பாண நகரில் இருந்து கிட்டத்தட்ட 6 மைல் தொலைவில் உள்ள சுன்னாகம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. கந்தரோடையில் 1917 ஆம் ஆண்டு போல் பீரிஸ் என்பவர் மேற்கொண்ட தொல்லியல் மேலாய்வு மூலம் மிக முக்கியமானதும், அரியதுமான பல தொல்லியல், வரலாற்றுச் சான்றுகள் கண்டு பிடிக்கப்பட்டன. மேலும் குடாநாட்டு வரலாற்றுப் பக்கங்களை முதன் முதலாக வெளிச்சத்துக்கு கொண்டு வந்த பெருமை போல் பீரிஸ் அவர்களையே சாரும்.
பின்னர் 1946 ஆம் ஆண்டு, 1956 ஆம் ஆண்டு மற்றும் 1964 ஆம் ஆண்டுக் காலப் பகுதிகளில் தொல்லியல் திணைக்களம் சில ஆய்வுகளை இங்கு மேற்கொண்ட
 
 

ப வரலாற்றுக்கு நம்பகரமான ாட்டும் கந்தரோடை
பேராசிரியர் ப. புஸ்பரட்ணம்
காரணத்தால், கந்தரோடையின் வரலாற்றுப் பழைமை மேலும் முன்னெடுக்கப்பட்டது. இருந்தாலும் அங்குள்ள பெளத்த வழிபாட்டுத் தலங்களை மீள் புனரமைப்புச் செய்வதில் காட்டியளவு ஆர்வத்தை விட அதற்கு முந்திய வரலாற்றைப் பற்றிய ஆய்வில் அதிகம் ஆர்வம் காட்டப்படவில்லை என்றே கூறவேண்டும். ஆனால் முதன் முதலாக 1971 ஆம் ஆண்டு பென்சில்வேனியப் பல்கலைக்கழக அரும்பொருள் ஆய்வாளர் விமலா பேக்லே திட்டமிட்டு, விஞ்ஞான முறையில் மேற்கொண்ட ஆய்வுகள் மூலம், குடாநாட்டின் புராதனக் குடியிருப்பு கந்தரோடையை மையமாக கொண்டு உருவாகியது என்ற உண்மை வெளிவந்தது. இந்த ஆய்விலே மூன்று வகையான வரலாற்று அம்சங்கள் கண்டறியப்பட்டன. பூர்வீக மக்கள்,
வரலாற்றுக் காலச் சின்னங்கள், பெளத்த மதச் சின்னங்கள்
ஆகியனவே அவையாகும்.

Page 19
இங்கு குறிப்பிடப்பட்ட வரலாற்றுக்கு முற்பட்ட கால பூர்வீக மக்கள் பற்றிய தொல்லியற் சான்றுகள் சிறப்பாக நோக்கத்தக்கது. அந்த தொல்லியற் சின்னங்களை விரிவான முறையிலும், விஞ்ஞான முறைப்படியும் ஆய்வுக்கு உட்படுத்திய விமலா பேக்லே, இந்த மக்களும், தென்னிந்தியாவின் தென் பகுதியில் வாழ்கின்ற மக்களும் ஒரே இனத்தவர்கள் என்றும், அவர்கள் அங்கிருந்து இங்கு வந்து குடியேறி இருக்கலாம் அல்லது இங்கு வாழ்ந்த மக்கள் அம்மக்களோடு நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கலாம் என்னும் கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இப்பண்பாட்டைத்தான் பெருங் கற்காலப் பண்பாடு என்றும் மிக அண்மைக் காலமாக இரும்புக் காலப் பண்பாடு என்றும் பெயரிட்டு அழைத்து வருகின்றனர். இற்றைக்கு ஏறத்தாழ 2400 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப் பண்பாட்டுக்குரிய மக்கள் இங்கு குடியேறி
ஏறத்தாழ பத்து அடி நீள, அகலத்தில் ஆய்வுக் குழிகள் ஏற்படுத்தப்பட்டு, கிட்டத்தட்ட 14-15 அடி ஆழம் வரை இரண்டு குழிகளும் அகழ்வு செய்யப்பட்டு, அதன் இயற்கை மண் அறியப்படும் வரை அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இருக்கலாம் என்பது விமலா பேக்லேயின் கருத்தாகும். இக்குடியிருப்புகள் கந்தரோடை தொட்டு பொம்பரிப்பு வரை பரவியிருந்ததை அவர் தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தியிருந்தார்.
1990 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் கலாநிதி இரகுபதி அவர்கள் மேற்கொண்ட கள ஆய்வு மூலமும், இதை ஒத்ததான அல்லது இதற்குப் பிந்திய வரலாற்றுக் காலத்தைச் சேர்ந்த நாற்பது குடியிருப்புக்கள் அவரால் அடையாளம் காணப்பட்டிருப்பதுடன், அந்த நாற்பது குடியிருப்புக்களின் தலைமைக் குடியிருப்பாகக் கந்தரோடையை அவர் குறிப்பிட்டிருந்தார்.
இத்தகைய ஒரு சூழ்நிலையில்தான் கந்தரோடையின் பூர்வீக மக்களின் பண்பாடு பற்றியும், அவர்களின் பூர்வீக உண்மைகளையும், அதன் காலத்தையும் கணித்தறியும் நோக்கில் இலங்கைத் தொல்லியற் திணைக்களமானது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறையுடன் இணைந்து கடந்த நான்கு மாத காலமாக திட்டமிட்ட, விஞ்ஞான பூர்வமான ஒரு அகழ்வு ஆய்வை மேற்கொண்டிருந்தது. இவ் அகழ்வின் போது விமலா பேக்லே அவர்களால் அகழ்வு செய்யப்பட்ட இடத்திற்குச் சற்றுத் தொலைவில் கிழக்குப் பக்கமாகவும், மேற்குப் பக்கமாகவும் இரு குழிகள் தெரிவு செய்யப்பட்டன.
ஏறத்தாழ பத்து அடி நீள, அகலத்தில் இவ் ஆய்வுக் குழிகள் ஏற்படுத்தப்பட்டு, கிட்டத்தட்ட 14-15 அடி ஆழம் வரை இரண்டு குழிகளும் அகழ்வு செய்யப்பட்டு,


Page 20

அதன் இயற்கை மண் அறியப்படும் வரை இவ் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இவ் இரு ஆய்வுக் குழிகளிலும் மிக முக்கியமாக நோக்க வேண்டிய விடயம் என்னவெனில், கிட்டத்தட்ட முப்பத்தாறு கலாசார மண் அடுக்குக்கள் அங்கு கண்டறியப்பட்டுள்ளன. அக்கலாசாரத்தில் மிகத் தொன்மையானது, தென்னிந்தியாவை ஒத்த இரும்புக்கால அல்லது பெருங்கற்கால பண்பாட்டுக்கு உரியது என்பதாகும். அப்பண்பாட்டுக்குரிய மக்கள் அங்கு குடியேறியதைத் தொடர்ந்து இன்று வரை அந்தப் பிரதேசத்தில் அம்மக்களின் வழி வந்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பதை அக்கலாசார மண் அடுக்குகள் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.
அதன் அடிப்படையில்தான் இப்பண்பாட்டுக்குரிய கலாசார அடிப்படையில் இக்குழிகளை மிக முக்கியமாக நான்கு பிரிவுகளாக நாங்கள் வகுத்திருந்தோம். ஒன்று புரோட்டோ ஹிஸ்டரி ஆகும். அதாவது வரலாற்று உதய கால மக்கள் ஆவார்கள். அவர்கள் இந்த இரும்புக் காலம் அல்லது பெருங்கற்காலப் பண்பாட்டுக்கு உரியவர்கள். அதை அடுத்து வரலாற்றுத் தொடக்க கால மக்கள். அந்தக் கால கட்டத்தில் பெருங்கற்காலப் பண்பாட்டு வழி வந்த மக்கள் தென்னிந்தியா, வட இந்தியா, கிரேக்கம், ரோம் போன்ற நாடுகளோடு நெருங்கிய வணிக உறவை கொண்டிருந்தார்கள் என்பதற்கு அவர்கள் பாவித்த மட்பாண்டங்கள், நாணயங்கள் என்பன இங்கு பெருமளவில் கண்டறியப்பட்டுள்ளன.
அதன் தொடர்ச்சியாக பெளத்தம் பரவியமைக்கான சில ஆதாரங்கள். இவ் ஆதாரங்கள் இவ் ஆய்வுக் குழிகளில் கண்டெடுக்கப்படாவிட்டாலும், அதற்கு வெளியே ஏற்கனவே கண்டறியப்பட்டதனால் இலங்கையின் ஏனைய பகுதிகளில் பெளத்தம் பரவியது போல, யாழ்ப்பாணத்திலும் சம காலத்திலோ அல்லது காலம் தாழ்த்தியோ பரவியிருக்கலாம் என்று கருத இடமுண்டு. ஏனெனில் யாழ்ப்பாணத்தில் மட்டுமல்லாமல், யாழ்ப்பாணத்திற்கு எதிரே உள்ள தமிழகத்திலும் இவை போன்ற பெளத்த எச்சங்கள் காணப்படுவதால், பெளத்தம் தென்னாசிய நாடுகளுக்கு கி.மு மூன்றாம் நூற்றாண்டுகளில் பொதுவான செல்வாக்கு மிக்க மதமாக வளர்ந்தமை உறுதிப்படுத்துகின்றன. இதற்குப் பின்னர் வரலாற்றுக் கால ஆதாரங்கள் காணப்படுகிறன.
அஃதாவது இக்கால கட்டத்தில் சோழர், அராபியருடைய உறபுெ இருந்தமைக்கான மட்பாண்டங்கள் L ]ᎶNᏇ கண்டறியப்பட்டுள்ளன. அதை அடுத்து போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் காலம் வரையான பல்வேறு 6) 160)35LLITGOT தொல்பொருட் சின்னங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்தப் பண்பாட்டுச் சின்னங்களின் மேற்படையில்தான் தற்கால மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவ் அகழ்வு ஆராட்சியிலே மூன்று வகையான முக்கியத்துவம் அறியப்பட்டுள்ளன. ஒன்று

Page 21
யாழ்ப்பாணக் குடாநாட்டின் தொடக்க கால மக்கள் இரும்புக் காலம் அல்லது பெருங்கற்காலப் பண்பாட்டுக்கு உரியவர்கள் என்ற விமலா பேக்லேயின் கருத்து மிக ஆழமாகவும், உறுதியாகவும் இப்போது கண்டறியப்பட்டுள்ளது. இரண்டாவது காரணம் என்னவெனில்; விமலா பேக்லே மேலோட்டமாக மக்களின் தொடக்க காலத்தை இற்றைக்கு 2400 ஆண்டுகள் என எடுத்துக் கொண்டாலும், தற்போது கிடைத்த ஆதாரங்களைப் பார்க்கும்போது இற்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னரே அங்கு குடியேற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது.
ஏனெனில் தமிழகத்திலும் தென்னிந்தியாவின் ஏனைய இடங்களிலும் இப்பண்பாடு தொடர்பாக கிடைத்த மிகத் தொன்மையான மட்பாண்டங்கள், காலத்தைக் கணிக்கக் கூடிய சான்றுகள் என்பன கந்தரோடையிலும் கண்டறியப்பட்டுள்ளன. கந்தரோடையின் அமைவிடம் தென்னிந்திய இலங்கை உறவில் குறுக்கு நிலமாக இருப்பதனால், இலங்கையின் ஏனைய பகுதிகளில் இம்மக்களும், பண்பாடும் பரவ முன்னர் குடாநாட்டில் உள்ள கந்தரோடையில் இக்குடியேற்றமும், பண்பாடும் முதலில் ஏற்பட்டிருக்கலாம் என்பது தெரிய வருகின்றது.
கந்தரோடை அகழ்வின்போது, பூர்வீக மக்கள் குடியேறிய காலத்தில் இருந்து இன்று வரை அப்பிரதேசத்தில் மக்கள் தொடர்ந்து வாழ்ந்து வருவதையும், அம்மக்களின்
GET 5606uó(35éFrfil, DEL
Please complete the form given below, along with your Cheque/N (Ceylon) (Pvt) Limited' and send it to our Head Office at No.185. Tel:+94-11-5322700/5738046 Fax:+94-11-55 17773 For more details, please contact. Overseas Subscriptions Arjur Local Subscriptions S. Sar
Online Payment: www.kalaikesari.com/Subscri
ORDER FORM : Title
on, First Nomeه
羲 懿荔羲、森黏$森囊歉 ថាចយាចាប៉ាឃី ពេkm કિર્દૂ ફિriફિ Institution Manager Subscriptions 器 Apartment, Kalaikesari 器 No. 185, Grandpass Road, Colombo - 14, 份 Streef / Roc
8 :
Sri Lanka. Èrownicy Te: +94-11-5322783 / +94-11-5738046 Count Fax :--94-11-5517773 гу E-mail: subscription(a)kalaikesari.com Amo Unto En
Cheque should be drawin in favour of Mode of pc
E Linmi O
xpress Newspapers (Ceylon) (Pvt) Limited Online Pay
 
 
 
 
 
 
 
 
 
 

& கலைக்கேசரி 21
தொழினுட்பம், பண்பாடு, வாழ்வியல், பொருளாதாரம் ஆகியவற்றில் கால ரீதியான மாற்றங்கள் ஏற்பட்டன என்பதையும் இந்த அகழ்வின் மூலம் மிகத் தெளிவாகக் கண்டறியக் கூடியதாக இருந்தமை மிக முக்கியமான ஒரு அம்சமாகக் கருத்ப்படுகின்றன.
மேலும் வரலாற்றுக் காலம் என்று சொல்லப்படுகின்ற கி.மு மூன்றாம் நூற்றாண்டில் இருந்து கந்தரோடை வட இந்தியா, தென்னிந்தியா அதிலும் குறிப்பாகத் தமிழகத்தோடு மட்டுமல்லாமல் ரோம நாட்டுடனும், கிரேக்க நாட்டுடனும், கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னர் அரேபியருடனும், கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர் சீனாவுடனும் குறிப்பாகச் சோழருடனும், தமிழகத்துடனும், கி.பி. பதினாறாம் நூற்றாண்டு முதல் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகியோரிடம் உறவுகள் இங்கு ஏற்பட்டமைக்கான செறிவான ஆதாரங்களும், தொல்லியற் சான்றுகளும் கிடைத்துள்ளன. இது கந்தரோடையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வின் மிக முக்கிய மாற்றத்தையும், விளைவுகளையும் எடுத்துக்
காட்டுவதோடு, கந்தரோடையானது யாழ்ப்பாணக் குடாநாடு பற்றிய வரலாற்றுக்கு நம்பகரமான புது வெளிச்சம் ஊட்டும் சான்றுகளாகவும் இவை
காணப்படுகின்றன.
தொகுப்பு - உமா பிரகாஷ்
WERED TOYOUR HIOME
Money Order written in favour of "Express Newspapers Grandpass Road, Colombo 14, Sri Lanka.
-on arjun(a)expressnewspapers.net/Mobile:+94 777 801034 ndrasegar – +94 77 5359106 / +94 - 11 - 5322783
otion
: Mr. Mrs. / Miss Dr. Prof.
Other Nos ............................................................................................
1d ...................................................................... .
διαίe ................................................................................................
closed .............. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . (12 / 6 issues)
yment : Cheque / Money Order
ment : www.kalaikesari.com/Subscription

Page 22
கலைக்கேசரி கி 22 நடனக்கலை
கேரளத்தின்
துள்ளல்
த்தமிழ் நாடுகளில் முதன்மைபெற்று விளங்கிய (LD பண்டைய சேரநாடே இன்று கேரளா என்ற
பெயரைப் பெறுகின்றது. கேரளத்தின் மரபுவழிப்பட்ட நிகழ்த்து கலைகளில் துள்ளல் ஆட்டங்கள் மிக்க சிறப்பு வாய்ந்தவையும் மனதைக் கொள்ளை கொள்ளும் தன்மையும் மிக்கவை. குதித்து ஆடும் தன்மைமிக்க ஆட்டமாக இது அமைவதால் துள்ளல் எனும் பெயரை இவ்வாடற்கலை பெறுகின்றது. கி.மு 2 ஆம் நூற்றாண்டுக்குரியதெனக் கருதப்படும் பரதரின் நாட்டிய சாஸ்திர வகையில் கூத்தின் ஒரு வளர்ச்சியுற்ற பிரிவாக ஆய்வாளர்கள் இதனைக் கருதுவர். நாட்டிய நாடக வகையினைச் சேர்ந்த நிகழ்த்து கலையான துள்ளல் கேரளத்தின் அடித்தட்டு மக்களது தனிக் கலையாக உருவாகியதெனலாம். இவ்வாடற் கலையினை மகா
விஷ்ணுவுக்குரிய தெய்வீகக் கலையாகவே கேரளத்தின்
அடித்தட்டு மக்கள் கருதுகின்றனர். கி.பி 18ஆம்
 

மக்கள் கலை
ܬܐ é8,ŤILÖID
நூற்றாண்டின் தொடக்க காலத்தே பாலக்காடு மாவட்டம் ஒட்டப்பாளத்தை அண்டிய கிள்ளிக்குறிசி மங்கலம் எனும் கிராமத்தில் வாழ்ந்தவரும் நம்பியார் சமூகத்தைச் சேர்ந்தவரும் மக்கள் கவிஞர் என பெரிதும் போற்றப்பட்டவருமான குஞ்சன் நம்பியாரே இவ்வாடற் கலையின் பிதாமகனாவார். இவரால் எழுதப்பட்ட துள்ளல் நாடகங்கள் சாமானிய மக்களின் இலக்கியங்களாக நிலை பெறுவதைப் பார்க்கின்றோம். துள்ளல் கிராமியக் கலைவடிவமாக உருவாக்கம் பெற்றிருப்பினும் இதன் கலைத்துவமானது வியந்து போற்றத்தக்கதாகவேயுள்ளது. அன்றைய கால கட்டத்தே கேரளத்தின் அடித்தட்டுச் சமூகங்களாகக் கருதப்பட்ட சாக்கையர் மற்றும் நம்பியார் போன்ற சாதியினரில் பல தலைசிறந்த கலைஞர்கள் வாழ்ந்துள்ளனர். அத்தகையோரில் குஞ்சன் நம்பியார்
ஒருவராவார். விழாக் காலங்களில் முழவு எனும் மத்தளம் வாசிப்பது இவரது தொழிலாக இருந்தது.

Page 23
துள்ளலின் தோற்றுவாய் பற்றி இருவேறு தகவல்கள் பெறப்படுகின்றன. அம்பலப்புளா மகாராஜா ஒரு சாக்கியர் கூத்துக் குழுவினை வைத்திருந்தார் எனவும் அதில் குஞ்சன் நம்பியார் மத்தளக் கலைஞராக இருந்ததாகவும் ஒரு முறை ஒரு பொது நிகழ்வில் சாக்கியர் கூத்து இடம்பெற்றபோது மத்தளம் வாசித்துக் கொண்டிருந்த குஞ்சன் நம்பியார் ஆர்வமேலீட்டால் மத்தளத்தை அடித்தவண்ணம் துள்ளிக் குதித்து ஆடத்தொடங்கினார் எனவும் அதனைப் பொதுமக்கள் ஆர்வத்தோடு பார்த்து இரசித்ததாகவும் இந்த நிகழ்வே ஒட்டம் துள்ளலுக்கு கால்கோளாய் அமைந்ததாகவும் பொதுவாகக் கூறப்பட்டுவந்தது. எனினும் அண்மைய ஆய்வுகளில் பெறப்பட்ட பின்வரும் தகவல்களே இதன் தோற்றுவாய்க்கு ஏற்புடையதென இன்று பல ஆய்வாளர்களாலும் கருதப்படுவதைப் பார்க்கின்றோம்.
அம்பலப்புளா மன்னரது சாக்கியர் கூத்துக் குழுவில் நம்பியார் சமூகத்தைச் சேர்ந்த குஞ்சன் என்பவர் மத்தளக் கலைஞராக இருந்தார். அக்குழுவில் இடம்பெற்றிருந்த ஏனைய அனைவரும் சாக்கையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சாதீயத்தின் இறுக்கத் தன்மைமிக்க அன்றைய கேரளத்துச் சமூகக் கட்டமைப்பில் அடித்தட்டு மக்களிடையேயும் வேற்றுமைகள் தென்படவே செய்தன. நம்பியார் சமூகத்தைவிட தாங்கள் சற்று மேலானவர்கள் என்ற மனோபாவம் அன்று சாக்கையர் பலரிடம் குடிகொண்டே இருந்தது. அம்பலப்புளா கூத்துக் குழுவினரிடமும் இத்தன்மை தென்படவே செய்தது. குஞ்சன் நம்பியார் தலைசிறந்த மத்தளக் கலைஞராக விளங்கினாலும் அவர்கள் அவரைப் பெரிதாக மதிப்பது கிடையாது. இந்த நிலையில் ஒருநாள் அம்பலப்புளா கிருஷ்ணன் கோவில் நாடக சாலையில் சாக்கியர் கூத்து நடைபெற்றுக் கொண்டிருந்த போது குஞ்சன் நம்பியார் வாசித்த மிழவில் (மத்தளம்) சிறிது தவறு நேர்ந்தபோது அவர் மத்தளத்தை சரியாக வாசிக்க வில்லையெனக் கூடியிருந்தவர்கள் ஏளனம் செய்ய இதனால் மனமுடைந்து போன குஞ்சன் எதுவும் பேசாதவராக வீட்டுக்குத் திரும்பி விட்டார். இதன்பின்னர் கூத்துக் குழுவினர் சாக்கையர் சமூகத்தைச் சேர்ந்த வேறு ஒருவரை மத்தளக் கலைஞராக வைத்து சாக்கியர் கூத்தினை தொடர்ந்து நடத்தினர். இந்நிலையில் ஒருநாள் கோவிலின் முன்புறமாக பெருங் கூட்டத்தினிடையே சாக்கியர் கூத்து நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மிகுந்த வேதனையும் வைராக்கியமும் கொண்டவரான குஞ்சன் தன்னை அலங்கரித்துக்கொண்டு இடுப்பில் மத்தளத்தைக் கட்டியவாறு ஆலயத்தை நோக்கி விரைந்து வந்தார். ஆலயத்தின் பின்புறமாகச் சென்ற அவர் மத்தளத்தை அடித்துக் கொண்டு துள்ளிக் குதித்து பாடி ஆடலானார். கோவிலின் முன்புறத்தே சாக்கியர் கூத்தினை பார்த்துக் கொண்டிருந்த சனக் கூட்டம் கோவிலின் பின்புறத்துே குவியத் தொடங்க, சாக்கியர் கூத்தும் இடைநடுவில்" நிறுத்தப்படலாயிற்று. அங்கு குஞ்சன் ஆடிய ஆட்டமே

ថាញញម៉ាញ៉ែអើ
23
நம்பியார் மற்றும் பறையர் போன்ற அடித்தட்டு சமூகத்தினரின் கூத்தாக உருவெடுத்ததோடு அதன் பின்னர் துள்ளல் எனும் பெயரினையும் பெறுவதாயிற்று.
துள்ளலானது சாக்கியர் கூத்தினைப் போலன்றி எளிமையான மலையாளச் சொற்களாலான இசைப் பாக்களைக் கொண்டமைவதால் அது மக்கள் செல்வாக்கினைப் பெற்ற கலையாக வேகமாக வளரத் தொடங்கியது. சாமான்ய மக்களின் வாழ்க்கை முறைமை, அவர்கள் எதிர்நோக்கும் அன்றாடப் பிரச்சினைகள், யாரையும் புண்படுத்தாத தன்மையில் நகைச் சுவையோடு கூடிய சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் போன்றவற்றை உள்வாங்கி இனிய இசைப்பாக்களைக் கொண்டு குஞ்சன் நம்பியார் எழுதிய எல்லாக் கூத்துக்களுமே மக்களிடம் பெரும் வரவேற்பினை பெறலாயின. அவர் இந்நாட்டிய நாடகங்களுக்கான கதையம்சங்களை இராமாயணம், மகாபாரதம் மற்றும் பாகவதம் போன்ற புராண இதிகாச காப்பியங்களிலிருந்து தேர்ந்தெடுக்கலானார். அவர் கேரளத்தின் மண்வாசனை மிக்க கவிஞரான தன்மையில்
இதற்கான இனிய பாடல்களை சிறப்பாக அவரால் எழுத
முடிந்தது. தனது படைப்பான துள்ளல் கூத்துக்களை

Page 24
550806 (E5F 4 24
கோவில்களில் மாத்திரமன்றி எல்லாப் பொது இடங்களிலும் எக்காலத்திற்கும் ஏற்றவகையில் அவர் மாற்றியமைத்தார். ஐம்பதுக்கும் மேற்பட்ட கூத்துக்களை அவர் எழுதியிருக்கின்றார்.
கேரளத்தின் சமூகத்தன்மையை முக்கியப் படுத்தியதாக துள்ளல் நடனங்கள் ஒட்டம் துள்ளல், பறையன் துள்ளல், சீத்தங்கன் துள்ளல் என வேறுபடுவதைப் பார்க்கின்றோம். இதில் ஒட்டம் துள்ளல் பொது நிலைப்பட்டும் பறையன் துள்ளல் அச் சாதியினருக்காகவும் சீத்தங்கன் துள்ளல் வசதிவாய்ப்பில் சற்று மேல் உயர்ந்த அடித்தட்டு மக்களுக்காகவும் குஞ்சன் நம்பியாரால் உருவாக்கப் பட்டதாக ஒரு பொதுவான கருத்து நிலவினாலும் கலைஞரின் சாதீயத்தை விடுத்து அவ்வாட்ட வடிவங்களின் ஒப்பனைகள், இசைப்பாடல்கள், ராக வகைகள் மற்றும்
தாள அமைப்பு போன்றவையால் அவற்றின் வேறுபாடு
 

தீர்மானிக்கப்படுவதாகவே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கேரளத்தின் மரபுவழிப்பட்ட செவ்வியல் கலையான கதகளி வசதி படைத்த மேல்மட்ட மக்களின் ஆடற்கலையாக கருதப்பட்ட நிலையில் துள்ளல் ஏழை மக்களின் கதகளியென்ற சிறப்பினை இன்று பெற்றுள்ளது. காலம்சென்ற பாரதப் பிரதமர் பண்டிதர் ஜகவர்லால் நேரு அவர்களே துள்ளலை ஏழைகளின் கதகளியென முதலில் பெருமைப்படுத்தியவராவார்.
இதில் ஒருவர் பாடி நடிக்க இன்னொருவர் மத்தளம் வாசிக்க மற்றுமொருவர் சல்லாரியைக் கொண்டு நட்டுவாங்கம் பண்ணுவார். இவ்விரு வாத்தியக் கலைஞர்களும் நடிகருக்குப் சற்றுப் பின்னால் நிற்பர். தேவைப்படும் நிலையில் இவர்கள் இருவரும் பக்கப் பாட்டுக்காரர்களாகவும் செயல்படுவர். பார்வைக்கு இது கதகளியைப் போல் தோற்றம் பெறினும் துள்ளலானது செவ்வியல் நெறிக்குள் வராத கிராமியக் கலை வடிவமாகவே இன்றும் உள்ளது. அத்தோடு கதகளியைப் போன்ற அரங்க முறைகளையும் இது கொண்டதல்ல. வேண்டியபோது விரும்பிய இடத்தில் இதனை ஆட முடியும். இதில் பொதுவாக பறையன் துள்ளல் முற்பகல் வேளையிலும் சீத்தங்கன் துள்ளல் பிற்பகலிலும் ஒட்டம்
துள்ளல் மாலைப் பொழுதானதும் ஆடப்படுவதைக் காணலாம்.
ஒட்டம் துள்ளலின் ஒப்பனையானது வண்ண
ஆடைகளைக் கொண்டதோடு மிக்க எளிமையானதுமாகும். நெற்றி மற்றும் கன்னத்திலிருந்து நாடி வரை இரு பக்கமாகவும் வெள்ளை வர்ணமும் பச்சை வர்ணமும் தீட்டுவர். புருவத்திற்கு கறுப்பு நிறமும் உதட்டிற்கு சிவப்பு நிறமும் பூசுவர். நெற்றியில் கறுப்பு வெள்ளை நிறத்தாலான பெரிய அளவினைக் கொண்ட பொட்டொன்று வைப்பர். உதடுகளை சிவப்பாக மாற்றுவர். கண் இமை மற்றும் புருவங்களுக்கு கறுப்பு மை தீட்டுவர். இம்முக அலங்காரமானது பெரும்பாலும் கதகளியை ஒத்ததாக அமைந்திருக்கும். தலைப்பாகையானது gS)rf L b போன்றதாகத் தென்படும். அதன் அடிப்பாகம் குண்டல
வடிவிலமையும். தங்கம் வெள்ளி மற்றும் வர்ணங்களைக் கொண்ட நிறக் கடதாசிகளுடன் கண்ணாடி இழைகளையும் கொண்டு வளைந்த பாம்புவடிவில் இத் தலைப்பாகையை அமைப்பர். கழுத்தில் வர்ண அட்டிகையை அணிவர். மார்பில் கவசமும் தோள்பட்டை மற்றும் மணிக்கட்டுகளில் மரத்தாலான அழகிய வர்ண வேலைப்பாடுகளைக் கொண்டதான அணிகலன்களையும் அணிவர். இடுப்பில் ரிபன் பாவாடை கட்டி காலில் சலங்கை அணிவர். ஆட்ட நிகழ்வானது தொடக்கத்தே மன்னரங், கணபதி(கணேச வந்தனம்), பள்ளிவட்டம் (சரஸ்வதி வந்தனம்), பூபதி(பூமித்தாய் வந்தனம்) எனும் வரிசையில் அமையும். தொடர்ந்து கதையம்சம் நிகழும். ஆட்ட முறைகள் பறையன் துள்ளல் மற்றும் சீத்தங்கன் துள்ளலிலும் பார்க்க மேலோங்கியதாகவே தென்படும்.

Page 25
ஒட்டம் துள்ளல் நாடகங்களுக்காக குஞ்சன் நம்பியார் எழுதிய பாடல்கள் காலத்தை வென்றவையாகவேயுள்ளன. பிலாகரி, சங்கராபரணம், காம்போதி, நாட்டக்குறிஞ்சி, மோகனம், ஆனந்தபைரவி, புன்னாகவராளி போன்ற இராகங்களுடன் மிக அரிதாகவுள்ள இந்திசா மற்றும் இந்தோளம் போன்ற ராகங்களையும் அவரது பாடல்கள் கொண்டுள்ளமையை மிக முக்கியமாக இங்கு குறிப்பிடவேண்டும்.
பொதுவாக இரண்டு மணித்தியாலங்களைக்கொண்ட நிகழ்வாக ஒட்டம் துள்ளல் அமைகின்றது. இதில் ஒவ்வொரு வரியாகப் பாடிப் பாடி ஆடுவர். நடிகரே இதில் பாடுவார். இதன் போது முகம், கண், கை, கால், உடம்பு என ஒவ்வொரு அங்கமும் அபிநயத்தை வெளிப்படுத்தும். நவரசங்களையும் வெளிக்காட்டும் தன்மையில் குறித்த கலைஞர் மிகப் பயிற்சி பெற வேண்டியவராகின்றார். நிகழ்வின்போது காட்சிக்கு காட்சி இடைவெளி ஏற்படும் நிலையிலும் நடிகர் களைப்படையும் போதும்
பார்வையாளர்களின் கவனம் மாறாதிருக்க
நடனங்களோ வாத்திய இசையோ இடைக்கிடை இடம்பெறுவதுமுண்டு.
ஒட்டம் துள்ளலில் ருக்மணி சுயம்வரம், சத்தியபாமா சுயம்வரம், அகலிகை மோட்சம், சீதா சுயம்வரம், இராவண துவம்சம், நளசரிதம், ராமனு சரிதம், போவர்த்தன சரிதம் போன்ற நாடகங்கள் மிகப் புகழ்வாய்ந்தவையாகும்.
பறையன் துள்ளல் மெதுவான ஆட்ட முறையினைக் கொண்டதாக அமையும். அதன் ஒப்பனையில் கண் புருவத்தில் கறுப்புமை தீட்டுவர். உடம்பில் சாம்பலையும் சந்தனத்தையும் பூசுவர். வலது
காலில் மட்டும் சலங்கை அணிவர். இடுப்பில் சிவப்பு நிறத்
துணியை அணிவர். திரிபுர தகனம், நளாயினி சரிதம், பாஞ்சாலி சுயம்வரம், கீசக வதம், கும்பகர்ண ಸ್ನ್ಯ! அரிச்சந்திர சரிதம், தக்ஷ யாகம் போன்ற நாடகங்கள் பறையன் துள்ளலில் மிகப் பிரசித்தமானவையாகும்.
சீத்தங்கன் துள்ளலில் கொண்டை போட்டு பனையோலையினால் ஆன தாமரைப் பூவைப் போன்ற தலைக் கிரீடத்தைச் சூடுவர். வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்துணியை இடுப்பில் சுற்றிக் கட்டியதாக முழங்கால் வரையும் பாவாடை போன்ற ஆடை அணிவர். முகத்துக்கு வர்ணம் பூசாது கண் புருவத்திற்கு மட்டும் மை தீட்டுவர். இரு காலிலும் சலங்கை அணிவர். அழகிய வர்ணம்
தீட்டப்பட்ட மரத்தினாலான வளையல்கள், அட்டிகை, இடுப்புப் பட்டி, தோள் பட்டி போன்ற நகைகளை அணிவர்.
கிருஷ்ண லீலா, பிரகலாத சரித்திரம், துருவ சரித்திரம், தேனுகா வதம், ஹரிணி சுயம்வரம், காளியாமர்த்தனம் போன்ற நாடகங்கள் சீத்தங்கன் துள்ளலில் மிக்க புகழ்பெற்றவை ஆகும். இந்நாடகங்களது இசைப் பாடல்களில் அடானா, ஆனந்த பைரவி, துக்க காந்தார
நாட்டக் குறிஞ்சி, பூபாளம், முகாரி, நீலாம்பரி, மலஹ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

遠 ថាញញត្អែ
25
சங்கராபரணம் போன்ற இராகங்களும் ஏக்க தாளம், கும்ப தாளம், சாபு தாளம், சம்ப தாளம், மர்ம தாளம், லக்சுமி தாளம் போன்ற தாளங்களும் பயின்று வருவதை நம்மால் அவதானிக்க முடியும்.
நாட்டிய நாடக வகையினைச் சார்ந்த ஆடற் கலையாகவும் கிராமிய வடிவத்திற்கும் செவ்வியல் வடிவத்திற்கும் இடையேயான நிகழ்த்து கலையாகவும் மிளிர்ந்து gTLDITGOfluj மக்களை சுண்டியிழுத்துக் கொண்டிருக்கும் துள்ளல் ஆட்டங்கள் கேரளத்தின் தனித்துவம் மிக்க மக்கள் கலையாகவே இன்று பெருமையுடன் போற்றப்பட்டுவருகின்றது.*
- தாக்ஷாயினி பிரபாகர்
நடனத்துறை விரிவுரையாளர் கிழக்குப் பல்கலைக்கழகம்

Page 26
EED ਹੋ 26 இசைக்கலை
தமிழரது பண்பாட் புராதன வாத்த
மிழரின் பண்பாட்டு விழுமியங்களுடன் ஒன்றி வளம் பெற்று வழி வந்த வீணை, ஆய கலைகள் அறுபத்து நான்கிற்கும் அதிபதியாய் விளங்கும் சரஸ்வதி தேவியின் திருக்கரங்களில் தவழும் உன்னத வாத்தியமாகும். இந்து மதத்திலும், தமிழ் இலக்கியங்களிலும், பண்டைய சிற்பக்கலையிலும், ஒவியக்கலையிலும், அதி முக்கிய வாத்தியமாக அன்றும், இன்றும் விளங்குவது யாழின் வழிதோற்றலாகக் காலம் காலமாகக் கருதிக் கையாளப்படும் வீணை என்னும் நரம்பிசை வாத்தியமாகும்.
இத் தெய்வீக கலையம்சம் செறிந்த நாரிசை வாத்தியமானது, தொன்மை வாய்ந்தது. ஆன்மீகம் சார்ந்தது,
வரலாற்றுப் பெருமைமிக்கது. இலங்கை மன்னன்
 

டுத் தொடர்புடைய தியமான வீணை
இராவணன் வீணை வாசிப்பதில் உயர்ந்தவனாகவும் அவனது வீணை இசையில் எல்லாம் வல்ல சிவபிரானே லயித்ததாகவும் கம்பராமாயண காப்பியத்தில் நாம் இன்றும் காணமுடிகின்றது.
இன்று தமிழ் கலையுலகில் அரங்கத்தை அலங்கரிக்கும் அதி சிறப்பு வாத்தியங்களின் வரிசையில் முக்கிய இடம் பிடித்துள்ள வாத்தியமாக விளங்குவது வீணை என்றால் அது மிகையாகாது. தனி இசை வாத்தியமாகவும், பக்க வாத்தியமாகவும் இவ்வரிய வாத்திய இசை வடிவம் முக்கிய இடம் பிடித்துள்ளது. பலா மரமே இவ்விசைக் கருவியினை வடிவமைக்க பெரிதும் பயன்படுத்தப்படும் மூலப் பொருளாகக் கருதப்பட்டவிடத்தும் ஒவ்வொரு வகையான வீணையைப் பொறுத்து வீணை செய்யப்பயன்படுத்தப்படும் மரமும் மாற்றமுறுகின்றது.
பொதுவாக நாம் தமிழ்க் கலை உலகில் வீணை என வர்ணித்துக் கையாளும் வாத்தியமானது சரஸ்வதிதேவியின் திருக்கரங்களில் காணப்படும் வீணையான சரஸ்வதி வீணை அல்லது இரகுநாத வீணை அல்லது தஞ்சாவூர் வீணையென்று அழைக்கப்படும். தஞ்சையை ஆண்ட மன்னனான இரகுநாத மன்னனின் காலத்தில் சிறப்புற வடிவமைக்கப்பட்ட வீணையே மேற் குறிப்பிட்ட பெயர்களைத் தாங்கிய வீணை இசைக்
கருவியாகும்.
இது தவிர நடைமுறையில் பல வகைப்பட்ட வீணை இசைவாத்தியங்கள் இன்று வழக்கத்தில் இடம்பெற்ற போதும் பொதுப்படையில் மேலே குறிப்பிட்ட
பெயர்களைத் தாங்கிய தஞ்சாவூர் வீணையே புழக்கத்திலும் தமிழரின் பாரம்பரிய நாரிசை வாத்தியமாகவும்
பிரபல்யம் பெற்று விளங்குகின்றது.
மேற்குறிப்பிடப்படும் வீணை ஆனது உற்பத்தி செய்யப்படும் இடத்தின் தன்மைக்கு ஏற்ற வகையிலும் அதன் ஒட்டு மொத்த அழகியல் அலங்கரிப்பு உருவ அமைப்பிலும் தஞ்சாவூர் வீணை சிறந்த அலங்கரிப்புடன் எடை கூடியதாகவும் விளங்குகின்றது.
அதே SFL DULJL b மைசூர் வீணையானது அலங்கரிப்பிலும், வடிவமைப்பிலும் குறைந்ததாகவும், முன்குடமானது அளவில் பெரியதாகவும் ༄། ཟླ་ཡང་ས་ངོས་ விளங்குகின்றது. அவ்வாறே தஞ்சாவூர் வீணையின் (சரஸ்வதி வீணை) மற்றுமொரு

Page 27
உற்பத்தி பூமியாக திருவானந்தபுரம் விளங்குகின்றது. திருவானந்தபுர வீணை எடையில் குறைவானதாகவும் நீளத்தில் கூடியதாகவும் விளங்குகின்றது. தஞ்சாவூர் வீணை (சரஸ்வதி வீணை), மைசூர், மற்றும் திருவானந்தபுரம், ஆகிய இடங்களை உற்பத்தி மையமாகக் கொண்டு விளங்குவதுடன் அடிப்படையில் அதன் அலங்கரிப்பு, உருவ வடிவமைப்பு என்பன மாற்றம் பெற்ற போதும் அதன் பாவனை, நுட்பவியல், நுணுக்க வடிவமைப்பு என்பன வற்றில் எவ்வித மாற்றமும் இடம்பெறவில்லை.
கர்நாடக இசை உலகில் அதி உன்னத இடத்தைப்பெற்ற வீணை தஞ்சாவூர் வீணை அல்லது சரஸ்வதி வீணை அல்லது இரகுநாத வீணை எனப் பல வகைப் பெயர்களால் குறிப்பிட்டு அழைக்கப்படினும் யாவும் ஒரே வகையான வீணையே ஆகும். பொதுவாக சாதாரண மக்களால் வீணை வாசித்தல் எனக் குறிப்பிட்டு அழைக்கப்பட்டாலும், வீணை மீட்டல் என்றே கட்டுக்கோப்பான வகையில் வரையறுத்துக் குறிப்பிட்டு அழைக்கப்படுகின்றது.
இவ்வீணை எஃகு, வெண்கலம், வெள்ளி, பித்தளை ஆகிய நான்கு உலோகங்களையும் பயன்படுத்திச் செய்யப்படுகின்றது. வீணை மீட்டல் பயன்பாட்டிற்கு நான்கு தந்திகள் பயன்படுத்தப்படும் அதே சமயம் மூன்று தந்திகள் தாள லயத்தைப் பேண பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது.
பலவிதமான பகுதிகளைக் கொண்டதாக இக்குறிப்பிட்ட வீணை இடம்பெறுகின்றது. குடம், குடத்தின் மேல் புறத்தே இரு பக்கமும் பொருத்தப்பட்டிருக்கும் அம்சம் காடிச் சங்கையாகும். காடிச்சங்கையின்மேல் மெழுகுச் சட்டத்தின் மீது வெண்கல மெட்டுகள் பொருத்தப்பட்டிருக்கும். இதில் ஒட்டு மொத்தமாக இருபத்திநான்கு மெட்டுகள் இடம்பெறுகின்றன.
குடத்திற்கு சமப்படுத்தும் வகையில் சுரக்காயும், ஏழு பிரடைகள், கழுத்துப்பகுதி, கீழ் நோக்கியதாக யாழின் முகம் அமையப்பெற்றதாகவும் காணப்படும். ஏழுவகைக் கம்பிகளிலும் ஏழு லங்கர்கள் பிணைக்கப்பட்டிருக்கும். இவ்வேழு லங்கர்களின் மேல் அரிய சிறப்பு நுட்பச் சுருதி சேர்க்கும் வகையில் வளையங்கள், மற்றும் ஏழு தந்திகள்,
 
 
 
 

& கலைக்கேசரி 27
என்பன பிணைக்கப்பட்டு இருப்பது வழமையாகும். குடம் அமையப்பெற்ற பகுதி பெருத்தும், கழுத்துப் பகுதி சிறுத்தும் காணப்படுதல் சிறப்பம்சமாகும். ஏறத்தாழ ஐம்பத்திரண்டு அங்குல நீளத்தைக் கொண்டதாக இவ்வீணை அமையப் பெற்றதாகவும், கமக அசைவுகளை இசைக்கேற்றவாறு நெளிவு சுழிவுகளுக்கேற்ற வகையில், மற்றும் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ற வகையில் இவ்வரிய இசை வாத்தியம் மீட்கப்படுகின்றது.
இன்று தமிழ் கலையுலகில் அரங்கத்தை அலங்கரிக்கும் அதி சிறப்பு வாத்தியங்களின் வரிசையில் முக்கிய இடம் பிடித்துள்ள வாத்தியமாக விளங்குவது வீணை என்றால் அது மிகையாகாது. தனி இசை வாத்தியமாகவும், பக்க வாத்தியமாகவும் இவ்வரிய வாத்திய இசை வடிவம் முக்கிய இடம் பிடித்துள்ளது. சுரக்காயில் அரியவகை ஒவியங்கள் தீட்டப்பட்டு கலை அம்ச வெளிப்பாட்டின் சின்னமாய் விளங்கும். இன்று இச் சுரக்காய் பயன்பாட்டிற்குப் பதில் பெப்பர் இழைகள், பல்கலவை நாரிழைக் கண்ணாடிகள், அலுமினியம் போன்ற அரிய (o) II (6Õ)d55 பாரமற்ற மென் உலோகங்கள் கையாளப்படுகின்றன.
இவ்வீணையில் மீட்கப்படும் நான்கு தந்திகளும் முறையே, சாஸ்திரிக ரீதியில் நான்கு பெயர்களைக் கொண்ட தந்திகளாக அமைந்துள்ளன. அவை முறையே அனுமந்திரம், மந்திரம், பஞ்சமம், மற்றும் சாரணய் ஆகும். மூன்று தாள தந்திகளைக் கொண்டதாக அமையும் தந்திகள் முறையே பக்க சாரணி, பக்க பஞ்சமம் மற்றும் தீ வீர சாரணி ஆகிய சிறப்புப் பெயர்கள் சூட்டப்பட்டு அழைக்கப்படுகின்றன.

Page 28
கலைக்கேசரி 28
இவ்விணையின் அலங்கரிப்பு மற்றும்
வேலைப்பாடுகளுக்கு யானைத் தந்தமும், மான் ശ്
/*Տ கொம்பும் பயன்படுவது குறிப்பிடத்தக்கது.
வீணையின் வகையில் இடம்பெறும்
மற்றுமொரு வீணை ருத்திர வீணையாகும்.
இப்புராதன வாத்தியமானது குறிப்பாக துர்பத' ༄།
எனக் குறிப்பிடப்படும் வாத்தியத்துடன் தொடர்புபட்டதாக அமைவதாகும். புராதன காலங்களில், மறைகள் ஒதும்போதும் இவ் ருத்திர வீணை பயன்படுத்தப்பட்டதாக அறிகின்றோம்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் குறிப்பாக இந்திய சாஸ்திரீக இசை அமைப்பிற்கு இவ் வீணை இசையானது பெரிதும் பயன்படுத்தப்பட்டது எனலாம். அண்மைக் காலத்தில் இவ்விணைப் பயன்பாடானது பெரிதும் அருகிவிட்டது. ஆயினும் இன்று அதன் பாவனை உலகளாவிய ரீதியில் பயன்பட்டு வருவதை ஆங்காங்கே அவதானிக்க முடிகின்றது.
கர்நாடக இசை உலகில் அதி உன்னத இடத்தைப்பெற்ற வீணை தஞ்சாவூர் வீணை அல்லது சரஸ்வதி வீணை அல்லது இரகுநாத வீணை எனப் பல வகைப் பெயர்களால் குறிப்பிட்டு அழைக்கப்படினும் யாவும் ஒரே
வகையான வீணையே ஆகும்.
தேக்கு மரத்திலும் வீணை செய்யப்படும் அதன் உள் பக்கம் வெற்றிடமாக்கப்பட்ட மரமே பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது. ஏனைய வீணைகளைப் போன்று தந்திகள் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு சமாந்தரமாகப் பிணைக்கப்பட்டு உள்ளமை வழமையாகும். இவ்வீணை இரண்டு பெரிய பூசணி உருவங்களைத் தாங்கியதாக அமையப்பெற்றுள்ளது.
 
 
 

ஆன்மாவினுள் அறிவு முகிழ்க்க வீணை, முள்ளந் தண்டினையும் சங்கீதப் படைப்பினையும் ஒருங்கே தூண்டுகிறது எனக் கருதப்படுகிறது.
'யுட்சாட் சியா மொகிடின் தர்கார என்பவர் பலதரப்பட்ட உத்தியல் பாவனை மாற்றங்களை இவ் வீணையில் கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத் தக்கதாகும். இதன் விளைவாக குறைந்தளவு தாழ்வு சுருதி நிலையினைப் பேணும் வாத்தியமாக இது கருதப்பட்டது. அதிக சித்திர வேலைப்பாடுகள் செறிந்த வாத்தியமாக இது கருதப்படுகின்றது. வடஇந்திய இசைப் பண்பாட்டிலேயே பெரிதும் இவ்விசைவாத்தியம் பயன்படுத்தப்படுகின்றது.
அடுத்து வீணை என்ற பார்வை வரிசையில் இடம்பெறும் மற்றுமொரு வாத்தியம் வச்சிர வீணையாகும். இது பெரிதும் வட இந்திய சாஸ்திரீக சங்கீதத்தில் முக்கிய இடம்பெறும் வாத்தியமாக மிளிர்கின்றது.
அடிப்படையில் நான்கு முக்கிய தந்திகளையும் ஐந்து இரண்டாந்தர தந்திகளையும் பதின்மூன்று துணைக் கம்பிகளையும் கொண்டு விளங்குவது இவ் வச்சிர வீணையாகும். மேலும் இவ் வச்சிர வீணையானது பெரிதும் வட இந்திய இசைக்கே பயன்படுத்தப்படுகின்றது. ஆயினும் வச்சிர வீணையின் வழித் தோன்றல்களாகக் கர்நாடக இசை உலகில் பயன்படும் வீணையானது சித்திர வீணையென போற்றப்படுகின்றது. இது வச்சிர வீணை மற்றும் கோட்டு வாத்தியம் ஆகியவற்றின் கூட்டுச் சேர்க்கையில்
உருவானதாகும். இந்த வகையில் வீணையின் வகைகள்
பலவகைப்படுகின்றன. அவ்வாறே அதன் பயன்பாடும் மாற்றம் பெறுகின்றன.து
- சுபாசினி பத்மநாதன்

Page 29
/
籌...
�
 
 
 
 
 

g69 Złosz (ZZ I Ozoz ose L. I. L-hiquối) loo oso punolo “Osz L

Page 30
G&L DITTârfuluñi IFK HIT. 6 SEBUAILLITTEFIT - மன் காசிச் செட்டி (1807 - 1860) அவர்களது
வாழ்வும் வினைப்பாடுகளும் காலனித்துவ காலத்தில் மேலெழுந்த மாற்றுக் கருத்தியலின் முகிழ்ப்பாக அமைந்தன. தேசியம் என்ற எண்ணக் கருவும் அதற்குரிய செயற்பாடுகளும் பரவலாக எழுச்சி கொள்வதற்கு முன்னரே காசிச்செட்டி அவர்களது செயற்பாடுகள் மேலெழத் தொடங்கியமை சிறப்பாக நோக்கப்பட வேண்டிய ஒர் அவதானிப்பாகும். அதாவது ஆறுமுக நாவலர், சேர். பொன். இராமநாதன், சேர். பொன். அருணாசலம், சி.வை. தாமோதரம்பிள்ளை ஆகிய எழுகுழாத்தினரது (ELITES) வினைப்பாடுகளுக்கு முன்னரே காசிச் செட்டி அவர்களது கல்வி மற்றும் சமூக நிலைப்பட்ட செயற்பணிகள் மேலெழுந்து விட்டன.
இவரது மூதாதையர் தமிழகத்துத் திருநெல்வேலியில் இருந்து புலம்பெயர்ந்து வந்து இலங்கையின் கல்பிட்டியிலே குடியேறினர். அக்காலத்தில் இடம்பெற்ற மத மாற்றம் அவர்களையும் தழுவிக்கொண்டது.
காலனித்துவ சமூக பொருளாதார பண்பாட்டு நிலைகளில் அதி கூடிய இறுக்கம் பெற்றிருந்த காலத்திலே சமூக நிலையிலே நிலைக்குத்து ஏற்றத்தைப் பெற்றுக் கொள்வதற்கு மதமாற்றம் அடிப்படையாக அமைந்தது. பிரித்தானியர் ஆட்சியின் பிற் கூற்றிலே அந்த இறுகிய நிலை மாற்றுச் செயற்பாடுகளினால் வலுவிழக்கலாயிற்று. சைமன்
 
 

காசிச் செட்டி அவர்களது தந்தையார் கபிரியேல் காசிச்செட்டி அவர்கள் தமது தந்தை வழியில் முன்னெடுக்கப்பட்ட மத மாற்றத்தின் தொடர்ச்சியை வழு வாது கடைப்பிடிக்க வேண்டிய நிலைக்கு உள்ளாக்கினார். அவர் ஒல்லாந்து செமினெரியிலே டச்சு மொழியை ஆழ்ந்து கற்றார். அதன் காரணமாக அவர் கல்பிட்டி பிரதேசத்தின் முதலியாராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் செயற்படும் உத்தியோகத்தைப் பெற்றுக் கொண்டார்.
காலனித்துவ ஆட்சியின் முக்கிய விசைகளுள் ஒன்றாக கிறிஸ்தவ மதத்துடன் இணைந்த கல்வி தொழிற்பட்டது. கல்வியோடு இணைந்தே சமூக மேலுயர்ச்சியைத் தக்க வைக்கவும் நேர்நிலையில் உயர்த்தவும் முடிந்தது. கல்பிட்டி கிறிஸ்தவத் தமிழ்ப் பாடசாலை, கொழும்பு கிறிஸ்தவ உயர் பாடசாலை முதலியவற்றிலே வரன் முறையான கல்வியைக் கற்றதுடன் புத்தளத்திலே படைப்பிரிவு அதிகாரியாக இருந்த சிமித் என்பவரிடம் ஆங்கில மொழி மற்றும் இலக்கியங்களை ஆழ்ந்து கற்றுக் கொண்டார். தமிழ் மரபிலே ஆழ்ந்து வேரூன்றியிருந்த தானாகக் கற்றல்' (சுயகற்றல்) என்ற செயற்பாடு பிரித்தானியர் ஆட்சியின் கால நிலைவரங்களோடு இணைந்த பன் மொழிச் சுய கற்றலாக வளர்ச்சியடைந்தது. அக்காலத்து உயர் குலத்தினர் பன்மொழிகளை அறிந்திருக்க வேண்டிய தேவையுமிருந்தது. சைமன் காசிச் செட்டி அவர்கள், தமிழ், இலத்தீன், ஆங்கிலம், சிங்களம், பாளி, அரபு, டச்சு, போர்த்துக்கீசம் ஆகிய பன்மொழிகளையும் கற்றறிந்து இருந்தார்.
பன்மொழி அறிவு காரணமாக அவர் கல்பிட்டிப் பிரதேச நீதிமன்ற மொழி பெயர்ப்பாளராகவும் அதனைத் தொடர்ந்து சிலாபம் பகுதியின் முதலியார், மணியகாரர் அரச வழக்கறிஞர் முதலாம் பதவிகளையும் வகித்தார். 1838 ஆம் ஆண்டிலே சட்ட நிரூபண சபையின் தமிழ்ப் பிரதிநிதியாக நியமனம் பெற்ற அவர், அதிலிருந்து விலகி 1845 ஆம் ஆண்டிலே இலங்கை மக்களில் இருந்து நியமனம் பெற்ற முதலாவது நிர்வாக அதிகாரியானார். காலனித்துவ கருத்தியலைத் திறனாய்வு செய்தோர் வரிசையிலே சைமன் காசிச் செட்டி அவர்களுக்குத் தனியிடம் உண்டு. காலனித்துவ விசைக்குள் இருந்தவாறு மாற்றுக் கருத்துக்களை வைப்பதன் தருக்கநிலை வளர்ச்சியே பிற்காலத்திலே பெரிதாக முகிழ்த்தெழுந்த விடுதலை இயக்கமாகும். இலங்கையின் அரசியல் விடுதலை இயக்கங்கள் சட்டசபையை முன்னிலைப் படுத்தி மேலெழுந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நாட்டின் ஆட்சி முறைமையிலும், நிர்வாக சேவையிலும் சுதேசிகளுக்குக் கூடுதலான இடம் தரப்படல் வேண்டுமெனற கருத்தை அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். காலனித்துவ ஆட்சியில் நிகழ்ந்த முக்கியமான எதிர்ப்புக்கு சுதேச அடையாளங்களைத் தேடிக் கண்டறிதலும், ஆவணப்படுத்துதலும் பtள வலியுறுத்தலுமாக அமைந்தது. அந்த வகையில் அவர் எழுதிய நூல்கள் முக்கியமானவை. தமிழர்களின் பழக்க

Page 31
வழக்கங்கள், சாதிய முறைமை தமிழ்ப் புலவர்கள், இலங்கையின் நிலைமை, இலங்கையிலும் தமிழகத்திலும் வாழ்ந்த புலவர்களும், வள்ளல்களும், தமிழ் மொழியும் இலக்கியங்களும், இலங்கைப் படக்குறிப்புகள், கல்பிட்டியிலே கண்டெடுக்கப்பட்ட தொன்மையான நாணயங்கள், பண்டைக்காலம் முதல் டச்சு ஆட்சி வரை யாழ்ப்பாண வரலாறு, அரசுச் செப்புப் பட்டயத்தின் மொழி பெயர்ப்பு, உயிரியல் பற்றிய தமிழ் நூற் குறிப்புக்கள், பிளினி குறிப்பிடும் குதிரை மலை, தமிழ் நூல்களின் காலம் தமிழ் செய்யுளின் பழைமை முதலாம் பெருமளவிலான ஆக்கங்களை அவர் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது. தமி ழோடு இணைந்த தேசிய அடையாள உருவாக்கமும் அவரது எழுத்தாக்கங்களிலே காணப்பட்டன. அந்த வகையிலே அவர் எழுதிய முஸ்லீம்களின் பழக்க வழக்கங்கள், மாலை தீவின் சிங்கள மொழியும், ரொடியர்கள் முதலாம் ஆக்கங்கள் குறிப்பிடத்தக்கவை. அக்காலத்தின் புகழ் பூத்த சஞ்சிகைகளிலும் அவரது ஆக்கங்கள் வெளிவந்தன. சென்னை அரச கசெட், இலங்கை அரச கசெட், கொழும்பு ஜேர்ணல், அரச ஆசியக் கழகத்தின் சஞ்சிகை, கொழும்பு ஒப்சேவர், இலங்கை மகெசின் முதலானவற்றில் அவர் எழுதிய ஆக்கங்கள் குறிப்பிடத்தக்கவை.
சொல்லியம் அல்லது அகராதிக்கலை ஆக்க வளர்ச்சியிலும் அவரது பங்களிப்பு விதந்து குறிப்பிட
வேண்டியுள்ளது. சமஸ்கிருதம் மற்றும் தமிழகராதி,
 

<ិ យម្បិញម៉ាហ្សែ 31
தமிழர்களிடையே நிலவும் பிறமொழிச் சொற்களும், தொடர்களும், தமிழ் மற்றும் ஆங்கில லெக்சிக்கன் ஆகிய ஆக்கங்களையும் அவர் மேற் கொண்டார். காசிச் செட்டி அவர்களது அயராத ஆய்வு முயற்சிகளின் வழியாக வெளி வந்த 'சிலோன் கசற்றியர் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியுள்ளது. இலங்கை பற்றிய அனைத்தையும் உள்ள டக்கிய அகன்று அமைந்த (COMPREHENSIVE) ஆக்கமாக அது அமைந்துள்ளது. தமிழ் மொழியையும் பண்பாட்டையும் முன்னிலைப்படுத்தித் தேசியத் தளத்தின் ஆக்கத்துக்குரிய எழுத்தாக்கங்களை முன்வைத்த ஆய்வறி வாளருள் சைமன் காசிச் செட்டி அவர்கள் தனித்துவமானவர். தமிழ் பண்பாட்டின் வேர்களையும் அடையாளங்களையும் ஆய்வறிநிலையிலே எழுச்சி கொள்வதற்குரிய புலமைத்தளத்தை அவர் ஏற்படுத்திக் கொடுத்தார். பின் வந்த புலமையாளர் தமது ஆய்வுகளை நெடிது முன்னெடுப்பதற்குரிய அறிகை நுழைவாயில்கள் அவரால் அமைத்துக் கொடுக்கப்பட்டன.
தாய்மொழியே போதனா மொழியாக இருத்தல் வேண்டுமென்ற அவரது உறுதியான கருத்து சமகாலத்திலே தளம்பலுறும் மத்தியதர வகுப்பினரது கல்வி மொழி பற்றிய கருத்துக்கு செவ்விய வழிகாட்டலாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அவர் தமது சொந்த மூலதனத்தாலும் உழைப்பாலும் கல்பிட்டியில் ஒரு தமிழ்ப் பாடசாலையை
நிறுவியும் இயக்கியும் வந்தமை நினைவு கொள்ளத்தக்கது

Page 32
32 ry fly
புழக்கத்தில் இருந்து ம பாரம்பரிய பாத்திரங்களும்
ண்டைக் காலத்தில் தமிழ் மக்களின் பாரம்பரிய LI வழக்கத்தில் இருந்த பயன்பாட்டுப் பொருட்கள் பலவற்றை பொதுவாக எடுத்து நோக்கும் போது, தேவைக்கு ஏற்றவகையில்அவை அருகிப்போயின. ஆரம்பத்தில் மனித நாகரீக வளர்ச்சியின் படிக்கல்லாக, மட்பாண்டங்கள் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆயினும் காலக்கிரமத்தில் பாவனைப் பிரயோகத்திற்கும் மற்றும் தேவைக்கும் வசதிக்கும் அமைய, பலதரப்பட்ட உலோகங்களாலான பாவனைப் பொருட்கள், புழக்கத்தில் வந்தன.
இத்தகைய பாத்திரங்கள் தேவைக்கமைய பித்தளை, செப்பு என்னும் உலோகப்பொருட்களுக்கு ஈய முலாம் பூசப்பட்ட நிலையில் சமையலுக்கு பயன்படுத்தப்பட்டன. பொதுவாக பல வடிவமைப்புக்களைக் கொண்ட பித்தளை பாத்திரங்களுக்கு உள்ளே சீரிய வகையில் ஈயம் என்னும் பாதுகாப்பு முலாம் பூசப்பட்ட சில பாத்திரங்கள் இன்றும் தேவைக்கமைய அதே வடிவமைப்பில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆயினும் இன்று சில வழக்கொழிந்து போயின. உதாரணமாக தண்ணிர் சுட வைக்கும் கிடாரம், நெல் வேகவைக்கும் கிடாரம், பொங்கலுக்குப் பயன்படுத்தப்படும் சருவம், பித்தளைச் செம்பு, பித்தளைக் குடம், பித்தளை மூக்குப்பேணி, பித்தளை வெற்றிலைத் தட்டம், பித்தளைத் தாம்பாளங்கள், பித்தளைச் சருவச்சட்டிகள் என்பன இன்றைய பயன்பாட்டில் இல்லாது போயின. எது எவ்வாறாயினும் ஈயம் பூசப்பட்ட செப்புச் சருவம் போன்றன சூரிய பொங்கல் போன்ற சம்பிரதாய தேவைகளுக்கு இன்றும் பயன்பாட்டில் இருந்து
 
 
 

றைந்துபோன தமிழரின் ம் பாவனைப்பொருட்களும்
வருகின்றன. ஆயினும் அரிசி அரிக்கும் அரிக்கன் சட்டி போன்ற சமையல் பாத்திரங்கள் இன்று அறவே வழக்கத்தில் இல்லாது போயின.
அவ்வாறே பொதுவாக சமைத்த கறி தாங்கிய பாத்திரங்களாக தூக்குச் சட்டி, பித்தளைப் பாத்திரங்கள் என்பன பயன்படுத்தப்பட்டன. தூக்குச் சட்டியானது மொத்தம் நான்கு அல்லது ஐந்து கிண்ணங்களை ஒருங்கே கொண்டு விளங்கியது. ஆயினும் காலக்கிரமத்தில் தூக்குச் சட்டியானது அலுமினியம் மற்றும் எவர் சில்வரால் செய்யப்பட்டதாக அமையப் பெற்றுள்ளது. இன்று கறிகளைச் சூடாக வைத்து 'சூடு பாதுகாக்கும் பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய பாத்திரங்களின் வருகையால் பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட பாத்திரங்களின் பாவனை படிப்படியாக வழக்கொழிந்து போயின. பித்தளை பாத்திரங்களைச் சுத்தம் செய்ய அல்லது துலக்கச் சாம்பல், மண், பழப்புளி, காலக்கிரமத்தில் எலுமிச்சம் புளி போன்றவை பயன்படுத்தப்பட்டிருந்தன.
இவை தவிர வெற்றிலைத் தட்டம், சுண்ணாம்புக் கிண்ணம், பித்தளை தட்டங்கள், பாக்கு வெட்டி, பாக்கு இடிக்கும் உரல், குத்துவிளக்கு, கைவிளக்கு போன்ற பொதுவான பாவனைப் பொருட்கள் கூட இன்று வழக்கொழிந்து போயின. அது மட்டுமன்றி பலவகையான பித்தளை மற்றும் செப்புத் தட்டங்கள் என்பன பொதுவாக புழக்கத்தில் இருந்து மறைந்து விட்டன. குத்து விளக்குகள், பெரிய வகைத் தட்டங்களான தாம்பாளங்கள் பல வகை அரிய அலங்காரங்கள் செதுக்கப்பட்ட தட்டங்கள் என்பன
முன்பு நாளாந்தப் புழக்கத்தில் இருந்தன. ஆயினும் இன்று

Page 33
இத்தகைய வீட்டுப் பாவனைப் பொருட்கள் யாவும் பெருமளவு வழக்கொழிந்து போயின. எதுஎவ்வாறாயினும் பித்தளைப் பாத்திரங்களின் பயன்பாடு அருகி வரக் காரணம் யாது என நாம் ஊகிக்குமிடத்து சில சாதாரண முடிவுகளுக்கு வரக் கூடியதாகவுள்ளது.
பித்தளைப் பாத்திரங்களாவன பாரம் கூடியவையாகவும், சுத்தம் செய்ய கடினமானவையாகவும் விளங்குகின்றன. அத்துடன் அலுமினியம் என்னும் மென் உலோகப் பாவனையானது இலகுவில் சுத்தம் செய்யக் கூடியதாகவும் பாரம் குறைந்தவையாகவும் தேவைக்கமைய பயன்படுத்தக் கூடியவையாகவும் பல அளவுகளில், பல வடிவங்களில் வியாபாரச் சந்தையில் மலிவான விலைகளில் கொள்வனவு செய்யகூடியதாக வந்தமையும் பித்தளையின் பயன்பாட்டை அருகிப்போகச் செய்தது எனலாம். மேலும் பித்தளையாலான இட்லிப் பானை, இருந்தபடி வேலை செய்யப் கூடிய சமையல் அறைப் பலகை, அரிவாள், இருந்தபடி வேலை செய்ய கூடிய தேங்காய் திருவலை போன்றவற்றின் பயன்பாடு கணிசமான அளவு வழக்கொ ழிந்து விட்டதுடன் நகரப்புற நவீன இயந்திரவியல் வாழ்க்கை முறையில் இருந்தும் நழுவி விட்டன எனலாம். தேங்காய்த் திருவலைக்குப் பதில் மின்னியல் திருவலை, மேசையில் பூட்டிப் பயன்படுத்தப்படும் திருவலை என்பன காலக்கிரமத்தில் வழக்கத்தில் வந்தன. இவை எல்லாவற்றிற்கும் மேல் பொதி செய்யப்பட்ட தேங்காய்ப் பால் அல்லது உலர்ந்ததேங்காய்ப் பால் மா என்பன இன்று பெரிதும் நகர்ப்புறங்களில் சமையலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
அரிவாளுக்குப் பதில் இன்று பல வகைப்பட்ட கத்திகள் பொதுவாக நடைமுறையில் பயன்படுத்தப்படுகின்றன. முன்பு பானையில் குடிநீர் தேவைக்கு நீரைச் சுடவைத்து குவளைகளில் சேமித்து சேகரித்துவைப்பது வழமையாகும். ஆயினும் இன்று மின்னியல் சுத்திகரிப்பு உபகரணங்களே இத் தேவைக்குப் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் முற்காலத்தில் சாணத்தால் மெழுகி சூட்டு அடுப்புக்கள் கட்டப்பட்டு, புகை வெளியேறப் புகைக்கூடு கட்டப்பட்டதாக அமைந்திருந்தது. இச்சூட்டு அடுப்பானது விறகை எரிபொருளாகக் ஊடகமாகக் கொண்டு விளங்கியது. காலக்கிரமத்தில் அதன் பாவனைப் பயன்பாடானது நடைமுறைக் கஷ்டங்களால் குறிப்பாக நகர்ப் புறப் பாவனையில் கணிசமான அளவு குறைவடைந்து இதனை ஈடுசெய்யும் வகையில் மண்ணெ ண்ணெய் அடுப்புகள் பாவனைக்கு வந்தபோதிலும் இன்று நவீன முறையில் சமையல் அடுப்புகள் வந்துள்ளன.
இவை தவிர பித்தளையிலான கலையம்சம் செறிந்த சாம்பிராணித் தட்டங்கள் என்பன முன்பு பயன்படுத்தப்பட்டு வந்தன. எனவே காலத்தின் தேவைக்கு அமைய நாளாந்தப் பாத்திரப் புழக்கத்திலும் மாற்றம் நிகழ்ந் துள்ளதை எம்மால் அவதானிக்க முடிகின்றது.ஆ
- அபிலாஷிணி வாசுதேவன்
 


Page 34
យម្បិញម៉ាញ៉ែអ្វី - 34 அட்டைபடக் கட்டுரை
 

மணல்காடு
மர்மங்கள்
ழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறை பிரதேச UL ITT செயலகப் பிரிவினுள் அமைந்துள்ள மணல்காடு தெற்காசியாவில் மிக நீண்ட கடற்கரைப் பிரதேசம் என்ற பெருமையைப் பெற்றுத் திகழ்கின்றது. சுட்டிபுரம் அம்மன் கோவில் வீதியில் வடக்காகச் சென்றால் மணல் காட்டை அடையலாம். பெயருக்கு ஏற்ப மணல் வெளியாகையால் இதை ஒரு மணல் செறிந்த பாலைநிலம் எனலாம். காமினி பொன்சேகா நடித்த 'வெலிகத்தர என்ற சிங்களத்திரைப் படத்தின் படப்பிடிப்பு இங்கு நடத்தப்பட்டமையானது இதன் இயற்கை அழகுக்கு சான்று பகருகின்றது. இந்த மணல் காட்டில் இருந்துதான் வன்னி மற்றும் குடாநாட்டுக்குத் தேவையான மணல் பெறப்படுகின்றது. இங்கு கண்ணாடி மணல்
இருப்பதாகவும் கனியவியலாளர் கணித்துள்ளனர்.

Page 35
மணல் காட்டில் சில இடங்களில் சவுக்கு மரங்கள் நாட்டப்பட்டுள்ளன. இவை பருவகாலத்தின் போது பலமாக வீசும் மணல் காற்றின் பாதிப்பிலிருந்து அப்பகுதி கிராமங்களை பாதுகாக்கும் பொருட்டு நாட்டப்பட்டன. இப்போது களவாக மரம் வெட்டுபவர்களால் அவை வெட்டப்பட்டு வருகின்றன.
மணல் காட்டில் ஆலயம் ஒன்று புதையுண்டிருக்கின்றது. மணலில் புதையுண்ட இந்த ஆலயம் புனித அந்தோனியார் ஆலயம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆலய சுற்றாடலில் நாணயங்கள், சிலைகள் போன்ற வரலாற்றுச் சின்னங்கள் அகப்பட்டு வருகின்றன. அருகில் உள்ள மண்மேட்டில் கிறிஸ்தவ சேமக்காலை ஒன்று காணப்படுகின்றது. இந்த மண்மேட்டின் காரணமாக அருகிலுள்ள கிராமங்கள் கடற்கோளின் போது காப்பாற்றப்பட்டதாக அறியமுடிந்தது.
இப்பகுதியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்வின்போது அகப்பட்ட வல்லிபுரம் செப்பேடு முக்கியமானது. இந்த வல்லிபுரம் செப்பேடு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தது
என்று வரலாற்றறிஞர்கள் கருதுகின்றார்கள். இச்செப்பேடு
 

& {}ញម៉ារ៉ៃរឺ
35
|அட்டைப்படக் விளக்கம் :
மணலில் புதையுண்டு தற்போது வெளித்தெரிய ஆரம்பித்திருக்கும் ஆலயம் மேற்கூரைகள் கதவு, ஜன்னல்கள் எதுவும் அற்றதாகவும் அழிவுற்ற சுவர்களைக் கொண்ட ¬ தாகவும் சுமார் 40 அடி நீளத்தைத் கொண்டதாகவும் காணப்படுகின்றது. தற்போது இந்த வரலாற்றுப் சிறப்பு மிக்க சின்னத்தைப் பாதுகாக்கும் செயற் திட்டங்கள் ஆலய நிர்வாகம் மற்றும் பொறுப்புமிக்க அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தமிழ் பிராகிருத மொழியில் எழுதப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறு வல்லிபுரம் செப்பேடு கண்டுபிடிக்கப்பட்ட வடமராட்சியில், பருத்தித்துறைக்கு அண்மையில் மணல் மேடுகள் பொருந்தி இருக்கின்ற வல்லிபுரமே பூர்வகால சிங்கை நகராகும். காற்றடித்து அல்லது மழை பெய்து விட்ட பின் வல்லிபுர மணல் மேடுகளில் அநேக பழைய பொருட்கள் வெளிப்படுகின்றன. இங்கே பல இடங்களில் பூர்வகாலக் கலவோடுகள், பெரிய வீதி இருந்ததற்கான அடையாளங்கள் இந்த மணல்காட்டுப் பகுதியில் காணப்படுவதால் இப்பகுதி ஆதிகாலத்தில் மிகப் பிரபலமான நகராக விளங்கியுள்ளது என ஊகிக்க

Page 36
EE
36
முடிகின்றது. இப்பகுதியில் ஒரு பெரிய துறைமுகம் காணப்பட்டுள்ளதுடன் இங்கிருந்து கப்பல்கள் போக்குவரத்து செய்தன என்றும் இப்பொழுதும் இந்த இடம் கப்பல்துறை என்றும் அழைக்கப்படுகின்றது. இவ்வாறு பேராசிரியர் கணபதிப்பிள்ளை எழுதிய இலங்கை வாழ் தமிழர் வரலாறு' என்னும் நூலில் குறிப்பு காணப்படுகின்றது.
வடமராட்சியில் புலோலிப் பகுதியில் 1700 ஆம் ஆண்டளவில் முதன் முதலாக புனித சூசையப்பர் ஆலயம் கட்டப்பட்டது. வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள புனித செபஸ்தியார் ஆலயமும் 1700 ஆம் ஆண்டில் கட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இதேபோல் பருத்தித்துறை நகரிலிருந்து கிழக்கே 500 மீற்றர் தூரத்தில் புனித தோமையார் ஆலயம் அமையப்பெற்றுள்ளது. இந்தத் தோமையார் ஆலயத்திலிருந்து ஏழு மைல் தொலைவில் கரையோரப் பகுதியில் அமைந்துள்ளது மணற்காடு புனித அந்தோனியார் ஆலயம்.
1894 ஆம் ஆண்டு இந்த ஆலயத்தைக் கட்டுவதற்கு நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, 1910 ஆம் ஆண்டு அருட்தந்தை ஒலிவ் என்பவரினால் கட்டிமுடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இவ்வாலயம் கடற்கரையிலிருந்து தெற்கே 500 மீற்றர் தூரத்தில் மேற்கு நோக்கிய பெரிய வாசலைக் கொண்டும், சக்கிறிஸ்டி அறையை கிழக்கு நோக்கியதாகக் கொண்டும் அமையப்பெற்றிருந்தது. ஆனால் தென்மேற் பருவப் பெயர்ச்சிக் காற்றினால் மணல் வீசப்பட்டு ஆலயம்
படிப்படியாக மூடப்படத் தொடங்கியது. அந்த கிராமத்தைச்
 

சுற்றி மணல் குன்றுகள் எழுந்தன. ஆரம்பத்தில் கோவிலை மணல் மூடுவதை தடுப்பதற்காக கற்கள் அடுக்கப்பட்டன. மணல் புயலினால் அடுக்கப்பட்ட கற்களும் மூடப்பட, ஆலயம் உட்பட அருகிலிருந்த கிராமமே மணலால் மூடப்பட்டது. தற்போது கற்கள் அடுக்கப்பட்ட பகுதியும் ஆலயமும் வெளித்தெரிய ஆரம்பித்துள்ளன. இதற்கான காரணம் லொறிகளில் மணல் எடுத்துச் செல்வதும் சவுக்கு மரங்கள் வளர்க்கப்பட்டமையும் ஆகும்.
புனித அந்தோனியார் ஆலயம் மணலாற் சூழப்பட்டடதையடுத்து அதிவணக்கத்துக்குரிய கியோமர் ஆண்டகை மூடப்பட்ட ஆலயத்திற்குப் பதிலாக இரண்டு கிலோமீற்றர் தொலைவிலுள்ள கடற்கரைக் கிராமத்தில் இன்னொரு ஆலயத்தைக் கட்டுமாறு பணித்தார். இந்தக் கட்டளையை ஏற்று பொதுமக்கள் தமக்குச் சொந்தமான காணியில் 30 பரப்புக்காணியை கோவிலுக்கு தானமாக வழங்கினார்கள். இக்காணி ஆலடி மணற்காடு என அழைக்கப்படுகின்றது. 1923 ஆம் ஆண்டில் புதிய ஆலயத்திற்கு அத்திவாரம் இடப்பட்டு 1933 ஆம் ஆண்டில் திருவிழா திருப்பலியுடன் ஆரம்பமானது. இந்த ஆலயத்தை அமைப்பதற்கு பருத்தித்துறையிலிருந்து முருகைக்கற்கள், கல், சீமெந்து போன்ற கட்டடப் பொருட்களை வாகன வசதியின்மையால் மீனவர்கள் கடல்வழியாக தமது சிறிய வள்ளங்களில் எடுத்து வந்திருந்தார்கள். இந்த ஆலயம்
கடல்பார்த்த ஆலயமாக அமைக்கப்பட்டுள்ளது.
- பி. ஜோன்சன்
ܝܛܐ

Page 37
உடப்பு பூரீதிரெளபதை அம்மன் ஆலய தீ மிதிப்பு e-Lily, க்மணி சத்தியபாமா சமேத பூரீ பார்த்தச pcik.ಸಿಪಿ விழா 蠶 பிரசித்த வருடாவருடம் த்தீமிதிப்பு விழா மிகவும் சி இவ்வாலயத்தில் இடம்பெறுகின்றது. இந்நிகழ்ச்சியில் சைவ ஆசார சீலர்களாய்,பக்தி மேலிட கலந்து கொள்கி பெரும்பாலான பக்தர்கள் மிதித்து தமது நேர்த்திக்கட நிறைவேற்றுவது மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியாகும்.
காவடி எடுத்தல், பால் குடம் எடுத்தல், அங்கப் பிரத செய்தல் உட்பட பல்வேறு பிரதிக்ஞைகளை வைத்து மக்கள் தமது நேர்த்திக் கடன்களை பயபக் நிறைவேற்றுவது தமிழர் தம் மரபாகும். அந்த வன கோவில் முன்றலில் தீ மிதித்தலும் ஒன்றாகும். இலங்ை பொறுத்தவரை, ஒரு சில அம்மன் ஆலயங்களில் இத்தீ நிகழ்ச்சி இடம்பெற்றுவருகின்றது. அதில் முக்கியமானது 器 திரெளபதையம்மன் ஆலயத்தில் திருவிழாவின் போது பறும் தீமிதிப்பு நிகழச்சி எனில் மிகையாகாது. ஆடி ம இங்கு கொடியேறி திருவிழா நடைபெறும் கொடி தினத்திலிருந்து ஆலயத்தின் அர்த்த மண்ட ரளபதாதேவி அம்பாளின் முன் தொடர் ஏற்றப்பட்டிருக்கும் தூண்டாமணி விளக்கில் இருந்தே தி விழாவுக்கான மூலத் தீச்சுடர் எடுக்கப்படும். அ கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருக்கும்.
பெரும் பெரும் மரக் கட்டைகளைக் கொண்டு வந்து கு காலையிலே எரியூட்டி, கட்டைகள் நன்றாக எரிந்து, தீக் ஆனதும் அவை தட்டித்தட்டிச் சமப்படுத்தப்பட்டு, கட்டைகள் வெளியே எடுக்கப்பட்டு, செந்தணல்கள் ஒ சதுர மேடைபோல் பக்கத்தே மணல் அணை செய்யப்படும். அத்தகையதொரு செந்தணல் குவியலில் பூசகர்களைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான அடியார்களு பாள் மீது கொண்ட பூரண பக்தியைப் பலமாகக் கொண் பதித்து நடந்து செல்வது மெய் சிலிர்க்க வைக்கும் காட்சி வ்வாலய உற்சவங்கள் மரபு ரீதியான விழாக்களாக பெறுவதும், முன்னோர்கள் கட்டிக்காத்த திருவிழா முறை அப்படியே பிசகாமல் நடைபெறுவதும் இவ்வால சிறப்பம்சமே.
 
 


Page 38
கலைக்கேசரி கீ 38 செம்மொழி
தமிழ் எழுத்துக்கலையி வரலாறும் ஒரு மொ
(சென்ற இதழ் தொடர்ச்சி)
மிழ் பிராமி எழுத்துகள் சாசனங்களில் மட்டுமன்றி த முத்திரைகளிலும் மோதிரங்களிலும் எழுதப்பட்டு உள்ளன. பானைகள், மட்பாண்டங்களின் கழுத்துப் பகுதியில் எழுதப் பட்டுள்ளமை தமிழ் பிராமியின் சிறப்பம்சமாகும். அழகன் குளம், அரிக்கமேடு, கொடும ணல் முதலான இடங்களில் நடைபெற்ற அகழ்வாய்வுகளில் இத்தகைய எழுத்து பொறித்த கலவோடுகள் நூற்றுக்கணக் கிலே கிடைத்துள்ளன. உப அன், வேள் இ. சாம்பன், தித் தன், பேர் ஆவதன், கண்ணன், ஆதன், பதுமாற்கோதை, வி சாகன் போன்ற பெயர்கள் அவற்றில் உள்ளன. தமிழ் பிராமி யில் எழுதிய கலவோடுகள் நூற்றுக்கணக்கில் ஈழத்திலே கிடைத்துள்ளமை குறிப்பிடற்குரியது. அநுராதபுரத்திலே மையப்பகுதியில் அகழ்வாய்வுகள் நடைபெற்ற காலத்தில் நூற்றுக்கும் மேலான பிராமி எழுத்துகள் பொறித்த கலவோடுகள் கிடைத்தன. அவ்வகழ்வாய்வுகள் மூலம் பெறப்பட்ட எல்லாக் கலவோடுகளும் வெளியிடப்படின் பெளத்த சமயம் இலங்கையிலே அறிமுகமாகிய காலத்தில் அநுராதபுரம் அடங்கிய வடபகுதிகளிற் கணிசமான தொகையினராகிய மக்கள் தமிழ்மொழி பேசினார்கள் என்ற
கருத்து மேலும் உறுதியாகிவிடும்.
தமிழ் பிராமி வரிவடிவங்கள் வட்டெழுத்து முறையின்
வளர்ச்சிக்கு மூலமாயிருந்தன. பல்லவர் காலத்திலே
சமஸ்கிருத மொழியை எழுதுவதற்குத் தமிழகத்தில் உருவாக்கப்பட்ட கிரந்த எழுத்துகளும் சோழப் பேரரசர்
 

ன் தோற்றமும் வளர்ச்சி ழியியலாய்வு நோக்கு
கலாநிதி. கனகசபாபதி நாகேஸ்வரன்.
காலத்திலே தென்னிந்தியாவிலும், ஈழத்திலும் பரவி வழமையாகி விட்ட தமிழ் வரி வடிவங்களும் தமிழ் பிராமி எழுத்துகளை மூலமாகக் கொண்டவை என்ற கருத்துகள் பெரிதும் மனங் கொள்ளத்தக்கவை.
அசோகனது பிராமிக் கல்வெட்டுகளில் மொழி கலாநிதி நடன காசிநாதன் இது குறித்து எழுதும் விவரணங்கள் பின்வருமாறு:
'இ கரத்திலிருந்து 'ஈ' காரத்தையும் வேறுபடுத்திக்காட்ட மேலும் ஒரு புள்ளியைச் சேர்த்திருக்கின்றார்கள். இம்முறை தமிழ் நாட்டில் நெடிலிலிருந்து குறிலாகப் பயன்படுத்திப் புள்ளியிடும் முறையை ஒட்டியதாகும் என்றும் ஆனால் அவர்கள் குறிலுக்குப் பதிலாக நெடிலுக்குப் புள்ளியிட்டிருக்கின்றனர் என்றும் அவர்கள் கூறுவது சிந்திக்கத்தக்கது.
மெய்யைப் புள்ளியிட்டுக் காட்டுவதும் "எ கர 'ஒ' கரத்துக்குப் புள்ளியிடுவதும் தொல்காப்பிய காலத்தில் நிகழ்ந்திருக்கின்றது. அதே போன்று அறச்சலூர், புகழுர்க் கல்வெட்டுகளின் காலமான கி.மு. 2 முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டிற்குள் உள்ள காலகட்டத்தைச் சார்ந்ததாகத்தான் தொல்காப்பியம் இருத்தல் வேண்டும். மெய்யைக் குறிக்கப் புள்ளியிடும் எமுத்துக்கள் வழங்கி வந்த காலம் தொல்காப்பிய காலத்துக்கும் முந்தியது. தொல்காப்பியத்தில் பல இடங்களில் 'என் மனார் புலவர் என்ப என்ற சொற்கள்
காணப்படுகின்றன. அவை தொல்காப்பியர் காலத்துக்கு
முன்னிருந்த நிலைமையைக் குறிப்பதாகும்.

Page 39
தொல்காப்பியர் காலத்திலே பழைய சில எழுத்து மரபுகள் வழக்கொழிந்து விட்டன என்பது பெறப்படுகின்றது. நன்னூல் சூத்திரம் (98) தொல்லை வடிவான எல்லா எழுத்தும் என்று கூறுகின்றது. ஆகவே தொல்காப்பியம், நன்னூல் ஆகியவற்றின் காலங்களுக்கு முன்பதாகவே கருத்துக்கள் ஒரு நிலையான வடிவம் பெற்றிருந்தன என்பது புலப்படுகின்றது. அக்கால கட்டத்தில் தான் மாங்குளம் ஆகிய இடங்களில் உள்ள கல்வெட்டுகள் எழுதப்பெற்றிருத்தல் வேண்டும். ஆகவே அவை காலத்தினால் முந்தியவையாகின்றன. ஆதலால் தான் அவை கி.மு. 5 - 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவைகளாக இருக்கலாம் என்று கருதவேண்டியுள்ளது.
மேலும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பட்டிப்பு ரோலுவில் கிடைத்துள்ள கல்வெட்டும் இதற்கு உறுதுணையாகின்றது. அக்கல்வெட்டிலும் மெய்யைக் குறிக்கப் புள்ளியில்லை. மேலும் 'அ'கரம் ஏறிய மெய்யைக் காட்டப் பக்கக்கோடு ஒன்று இட்டும் 'ஆ' காரம் ஏறிய மெய்மைக் குறிக்கப் பக்கக் கோட்டோடு கீழ் நோக்கிய கோடு ஒன்று இட்டும் எழுதியிருப்பது மனதில் கொள்ள வேண்டியதாகும். இம்முறை மாங்குளம் ஆகிய இடத்தில் காணப்படும் கல்வெட்டுகளின் வளர்ச்சியைக் காண்பிப்பதாகக் கருதுதல் வேண்டும்.
தமிழகத்தில் பழந்தமிழ் எழுத்துப் பொறித்த கல்வெட்டுகள் மலைக் குகைகளில் மட்டுமல்லாமல் பானை ஒடுகள், காசுகள் ஆகியவற்றிலும் கிடைத்துள்ளன. அரிக்கமேடு, கொற்கை, உறையூர், காஞ்சிபுரம், கரூர், வல்லம் ஆகிய இடங்களில் நடைபெற்ற அகழ்வாய்வுகளில் பானை ஒடுகளில் இவ்வெழுத்துக்கள் பொறிக்கப் பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றது. வட ஆர்க்காடு மாவட்டம் செங்கத்துக்கு அருகில் உள்ள
ஆண்டிப்பட்டியில் கிடைத்த ஈயக்காசுகளில் இவ்
 

七工言
基 கலைக்கேசரி 39
வெழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப் பட்டிருக்கின்றது. இது அக்காலத்தில் மக்களிடத்தில் இவ்வெழுத்து பெற்றிருந்த செல்வாக்கைப் புலப்படுத்துவதாக உள்ளது. குறிப்பிட்ட ஒரு மதத்தவர் தான் இவ்வெழுத்தைப் பரப்பினர் என்ற கருத்தை உடைத்தெறிவதாக இதைக்கருதலாம். அனைத்து மக்களும் நன்கு அறிந்த ஒர் எழுத்தாக இது நிலவி வந்திருக்கின்றது. அவ்வாறெனில் தொன்றுதொட்டே இது வழங்கி வந்திருத்தல் வேண்டும் என்று நாம் ஊகிக்கலாம். பானை ஒடுகளிலும் குறிப்பாக கறுப்பு, சிவப்பு பானை ஒடுகளில் இவ்வெழுத்து எழுதப் பெற்றிருப்பது இவ்வெழுத்துகளின் பழைமை கி.மு. 5 - 4 ஆம் நூற்றாண்டு என்று கொள்வதற்கு மேலும் ஆதாரமாக அமைகிறது.
தமிழ் மொழிக்காக ஏற்படுத்தப்பட்ட இவ்வெழுத்தைப் பின்னாளில் பிராகிருத மொழி பயன்படுத்திக்கொண்டது என்னும் கருத்துக்குச் சான்றாகச் சாதவாகனர்களின் இரு மொழிக் காசுகளைக் கூறலாம். அக்காசுகளில் ஒரு பக்கத்தில் தமிழ்மொழியிலும் மற்றொரு பக்கத்தில் பிராகிருத மொழியிலும் எந்த மன்னனால் அக்காசு வெளியிடப்பட்டது என்பது குறிக்கப்பெற்றிருக்கும். இரு மொழிகளிலுமுள்ள வாசகங்கள் பழந்தமிழ் எழுத்திலே எழுதப்பட்டுள்ளன. ஆகவே தமிழ் எழுத்தைப் பின்னாளில் தமிழும் பிராகிருதமும் இணைந்து பயன்படுத்தியது தெளிவாகிறது. அண்மையில் டாக்டர். இரா. நாகசாமி அவர்கள் சாதவாகனர்களும் சாளுக்கியர்களும் வேளிர் வழி வந்தவர் என்று கூறியிருப்பது மேலும் சில ஊகங்களைக் கொள்வதற்குத் தூண்டு கோலாக அமைகிறது.
மொஹஞ்சதாரோ, ஹரப்பா நாகரீகம் முதற்காலத் திராவிடர் நாகரீகம் என்றும், அக்காலத்திய எழுத்துக்கள் முதற்காலத் திராவிட மொழியை எழுதுவதற்குப் பயன் பட்டிருக்கின்றன என்றும் ஐராவதம் மகாதேவன் போன்ற

Page 40
ຫຼືມີຕົວຂຶi 40
ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்தோடு அங்கு வேளிர்கள் வாழ்ந்து வந்தனர் என்று ஐ. மகாதேவன் கூறியுள்ளார். அந்நாகரீகம் அழிவுற்றதற்குக் கூறப்படும் காரணங்களில் இருந்தே ஆரியர் தாக்குதலையும் ஒரு காரணமாகக் கூறுகின்றனர். அவ்வாறு அவர்கள் தாக்கியதால் வேளிர்கள் தெற்குத் திசை நோக்கி நகர்ந்திருக்க கூடும். அதன் காரணமாகத் தான் குஜராத் மாநிலத்திலுள்ள லோத்தலில் அவர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள் என்றும் அங்கும் அவர்கள் அம்மொழியையும் எழுத்தையும் பயன்படுத்தியிருக்கின்றார்கள் என்றும் நம்பலாம்.
வேளிர்கள் தென்திசை நோக்கிச் சென்றதைத் தான் அகத்தியர் தலைமையில் ஒரு குழு தமிழ் நாட்டுக்கு வந்ததாகக் கூறப்படும் கதை தெரிவிப்பதாகவும் கருதலாம். அத்தோடு துவராபதியைத் தலைவராகக் கொண்ட கண்ணனின் வழிவந்த வேளிர் என்ற பெயரில் தமிழ் நாட்டில் இருந்திருப்பது வேளிர் கி.மு. 1000 அளவில் தென்திசை நோக்கி வர ஆரம்பித்து விட்டனர் என்பதைக் கூறுவதாக உள்ளது. அப்படி வந்தவர்கள் தாங்கள் அறிந்திருந்த எழுத்தையும் தென் திசைக்குக் கொண்டு வந்து மேலும் வளர்ச்சியைச் செய்திருக்கின்றனர். அதைத்தான் பாண்டிய(ன்) செப்பேடுகள்.
அகத்தியனோடு தமிழாய்ந்து என்று தெரிவிக்கின்றன என்று கருதலாம். அவ்வாறு ஆராய்ந்து வளப்படுத்திய எழுத்துக்கள் தாம் தமிழ்நாட்டுக் குகைகளிலும், பானை ஒடுகளிலும் காசுகளிலும் காணப்பெறும் எழுத்துக்கள் தமிழகத்தில் வளர்ச்சியடைந்த எழுத்தாக இருக்கின்ற காரணத்தால் தான் அண்மை நாடான இலங்கையில்
இவ்வெழுத்தில் ஆயிரக்கணக்கான கல்வெட்டுகளைக் காண முடிகிறது. மொஹஞ்சதாரோ, ஹரப்பா எழுத்துகளை அறிந்திருந்த வேளிர்கள் தென்திசை நோக்கி வந்து விட்டதாலும் மனப்பாடம் மூலமே பயின்று வந்த இந்தோ
 

ஆரியர் மட்டுமே இந்தியாவில் வட பகுதியில் தங்கி விட்டதாலும் ஹரப்பா நாகரீகத்துக்கும் மெளரியர் காலத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் வட பகுதியில் எழுத்து வளர முடியாத ஒரு நிலை ஏற்பட்டு விட்டது என்று ஊகிக்கலாம். பிராகிருத மொழியை எழுதுவதற்கு பயன்பட்ட இந்த எழுத்தை அசோகன் சில மாற்றங்களைச் செய்து தம் காலத்தில் பயன் படுத்தும் பல கல்வெட்டுகளைப் பொறித்திருக்கின்றான் என்று கருதலாம். மேலும் மெகஸ்தனிஸ் சந்திரகுப்த மெளரியர் காலத்தில் எழுத்துக்களே வழங்கவில்லை என்று கூறியிருப்பதும் இக்கருத்துக்கு வலுவூட்டுவதாக அமைகிறது.
தமிழகத்துத் தமிழ் எழுத்தின் பழைமைக்கு மற்றொரு காரணத்தையும் கூறலாம். தமிழகத்து மலைக் குகைகளில் காணப்பெறும் கல்வெட்டுக்கள் அனைத்தும் (மாங்குளம், புகழுர் கல்வெட்டைத் தவிர) ஓரிரு வரிகளிலேயே காணப்படுகின்றன. அவைகளின் மொழிகூட நல்ல வளர்ச்சியடைந்த ஒன்றாகத் தெரியவில்லை. கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி. பி. மூன்றாம் நூற்றாண்டெனச் சங்க காலத்தைக் குறிப்பிடுகிறார்கள். சங்க காலத்து இலக்கியங்களில் ஒரு பண்பட்ட மொழி நடையை நாம் காண முடிகிறது. ஆனால் மாங்குளம் போன்ற கல் வெட்டுகளில் பயிலப்பட்டுள்ள சொற்றொடர் வளர்ச்சிய டைந்த ஒன்றாகத் தெரியவில்லை. தொடக்க கட்டத்தில் (Primitive Stage) உள்ளதாகவே தோன்றுகிறது. 'கணிநந்தா சிரிய குவன் கே தம்மம்' (மாங்குளம்) போன்ற தொடர்களை உதாரணமாகக் காட்டலாம். பிறகு நன்றாக வளர்ச்சியடைந்த நிலையில் தான் கி.மு. 2 ஆம் நூற்றாண்டளவில் இவ்வெழுத்தின் தன்மையை விளக்கி
இலக்கணம் வகுக்கப்பட்டது. அதை
விளக்குவதற்காகத்தான் தொல்காப்பியம் விளங்குகிறது.

Page 41
பிறகு அந்த எழுத்தில் தான் கடைச்சங்க கால இலக்கியங்கள் எழுதப்பெற்றிருத்தல் வேண்டும்.
இவ்வெழுத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியில் இருவேறு வடிவான எழுத்துக்கள் உருவாகின்றன. ஒன்று நேர் கோடுகள் அப்படியே இருக்க படுக்கைக்கோடுகள் மட்டும் வளைந்து வளர்வது. இரண்டாவது நேர்க்கோடுகளும் படுக்கைக் கோடுகளும் வளைந்து வளர்வது. இவ்வளர்ச்சி கி.பி. 1-2 ஆம் நூற்றாண்டில் ஆரம்பமாகின்றது. கி.பி. 3-4 ஆம் நூற்றாண்டளவில் ஒரு கட்டத்தை அடைகிறது. அப் பொழுது ஒரு வகை எழுத்துக்கு (வளைவு வளைவாக உள்ள எழுத்துக்கு) "கண்ணெழுத்து என்று பெயர் வழங்கியிருக்கின்றது. இந்த வகை எழுத்தில் தான் சிலம்பு, மணிமேகலை, போன்ற இலக்கியங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. இவ்வெழுத்து மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்தது. இதற்கு 'வட்டெழுத்து என்று பெயர். சிலம்பும் மணிமேகலையும் மக்கள் காப்பியங்கள் என்றும் அவை முதலில் மக்கள் மத்தியில் நாட்டுப்புறப் பாடல்களாகவோ அல்லது நாடகங்களாகவோ வழக்கில் இருக்கின்றன என்ற கருத்திற்கேற்பவும் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்த வட்டெழுத்தால் அவை எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆதலால் இளங்கோ அடிகளாரும் அக்காலத்திய எழுத்தை 'கண்ணெழுத்து என் றும் அவ்வெழுத்தை எழுதுபவர்களைக் கண்ணெழுத் தாளர் என்றும் கூறிப்பிடுவர். ஆனால் அதே நேரத்தில் மன் னர்கள் அரசவையில் முதல்வகை எழுத்துச் செல்வாக்குப் பெற்றிருக்கிறது. கி.பி. 2-3 ஆம் நூற்றாண்டுக்கு பிறகு கி.பி. 6 ஆம் நூற்றாண்டு வரையில் ஆட்சி செய்த அரசர்கள் என்று கருதப்படும் களப்பிரர் காலத்தில் அரசவையில் பயன்படுத்திய எழுத்தை நாம் பார்க்க இயலவில்லை. அந்தக் காலகட்டத்துச் செப்புப் பட்டயங்கள் அல்லது காசுகள் ஏதேனும் கிடைக்குமாயின் இதிலிருந்து நாம்
 
 

遠 អ៊ែងហ្វិញតែអែ
41
தெரிந்துகொள்ள வழி பிறக்கும். கி.பி. ஆறாம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் சிம்மவர்மனின் செப்பேட்டில் திடீரென ஒரளவு வளர்ச்சி பெற்ற முதல் வகை எழுத்தை நாம் காண முடிகிறது. இது எவ்வாறு இயலும்? அதற்கு முந்திய நூற்றாண்டுகளில் வளர்ச்சி பெற்றிருந்தால் தானே இவ்வாறான எழுத்தை நாம் காணுதல் இயலும். ஆகவே அவ்வெழுத்துகள் உள்ள கல்வெட்டுக்களையோ செப்பேடுகளையோ அல்லது காசுகளையோ நாம் கண்டு
பிடித்தாதல் வேண்டும்.
இந்தக் காலகட்டத்தைச் g-Tibgs பல்லவர் செப்பேடுகளைக் காண்கிறோம். ஆனால் அவை ஆந்திரப் பகுதியிலிருந்து வெளிப்பட்டவையாதலால் அவை பிராகிருத மொழியிலும் வளர்ச்சியடைந்த பழந்தமிழ் எழுத்திலும் உள்ளன. இதற்குக் காரணம் சாதவாகனர் பழந்தமிழ் எழுத்தைப் பிராகிருதம், தமிழ் ஆகிய மொழிகளை எழுதுவதற்குப் பயன்படுத்தியமையே ஆகும். அவர்கள் வழிவந்த பல்லவர்களும் பழந்தமிழ் எழுத்தையே பிராகிருத மொழியை எழுதுவதற்குப் பயன்படுத்தி இருக்கின்றார்கள். கி.பி. 6 ஆம் நூற்றாண்டளவில் தமிழ் மொழியில் செப்புப் பட்டயத்தை அரசவை எழுத்தான முதல் வகைத் தமிழ் எழுத்தில் எழுதியிருக்கின்றார்கள். அத் தவகை யில் தான் முதன் முதலில் பள்ளன் கோவில் செப் பேட்டில் முதல் வகைத் தமிழ் எழுத்தைக் காணமுடிகிறது.


Page 42

யாழ்ப்பாணப் பண்பாடு: மறந்தவையும்
1ങ്ങppgഞഖub
பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா
அஷய வருஷம் பங்குனி மாதம் (1926 - 27) பூரீமான் சேனாதிராசா கொலை விசித்திரக் கவிகள் முதலாம் பாகம் என்னும் நூல் இருபது பக்கங்களைக் கொண்டது. இதனை இயற்றியவர் திருநெல்வேலி எம்.ஆர். வித்தியாவல்லி அம்மாள் என்பவர். (இந்த நூலை நல்லூரைச் சேர்ந்த இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபர் சபாபதி சிவானந்தன் அவர்கள் எமக்கு உபகரித்தார்கள்.) இந்த நூலின் முன்னட்டையிலே பின்வருமாறு குறிப்பிடப் பட்டுள்ளது.
'இது முன்னர் வெளிவந்த புத்தகங்களிலும் பார்க்கச் சரித்திரம் தொடர்பாக வீரம், சோகம், தாபம் முதலிய சகல விபரங்களும் அடங்கிய வெண்பா, விருத்தம், கலித்துறை, கும்மி, சிந்து முதலிய நூதன மெட்டுக்களாற் பார்ப்பவர் மனதைப் பிரமிக்கச் செய்யத்தக்க விதமாகவியற்றியது.
இந்த முகப்பு வாசகத்தில் இருந்து சேனாதிராசா கொலைபற்றி இந்நூல் வெளிவருவதற்கு முன்னரே வேறு பாடல்களும் வெளி வந்தன என அறியமுடிகின்றது. இன்றும் முதியோர் வாயில் வழங்கும்
பண்டாரக் குளத்தடி முத்தன் கொண்டானே சேனாதி ராசாவை
என்ற பாடல் இந்நூலில் இடம்பெறவில்லை. இப்பாடல் இந்நூலுக்கு முன்தோன்றிய பாடலாக இருக்க வேண்டும்.
இந்த அரைவாய் மொழிப்பாடல் நூல் ஒரு பெண்ணினாற் பாடப்பட்டமை மிகவும் அவதானத்திற்கு உரியது. ஏறத்தாழ இதேகாலப் பகுதியில் மயிலிட்டி ஞானாம்பிகை என்னும் பெண்மணி மேலைத்தேய மதுபான வேடிக்கைக் கும்மி என்னும் அரைவாய் மொழிப் பாடல் நூல் ஒன்றை எழுதியுள்ளார். (இந்நூலைப் பேராசிரியர் செ.யோகராசா எனக்கு உபகரித்தார்.) பதினெட்டுப் பக்கங்களைக் கொண்ட இந்த நூல் முன்அட்டை இன்றிக் காணப்படுகின்றது. அதனால் ஆண்டைச் சரியாக அறியமுடியவில்லை. ஈழத்து அரைவாய் மொழிப்பாடல் மரபிலே பெண்பாற் புலவர்களும்" இருந் திருக்கின்றார்கள் என்பது மிகுந்த கவனத்திற்குரியது. சேனாதிராசா கொலை விசித்திர கவிகள் என்னும் நூலின் அவையடக்கம் பின்வருமாறு
'கண்மணியாகிய சேனாதிராசன் கதைகளையோர் பெண்மணியாகிய பேதை கவிவழி பேசியதால் பண்ணிசை குற்றம் பார்த்துப் பிடித்திடும் பாவலர்காள் விண்மணியாம் என விரும்பியுரைத்து விளம்புவர்ே நல்லூர்த் திருவிழாக் காலங்களில் இப்புத்தகத்தை ஒருவர் பாடிக்காட்டி விற்பனை செய்தார் என்று முதியவர்

Page 43
ஒருவர் கூறினார். (தகவல் மயிலு முருகேசு 85 வயது - 1978) இத்தகவலைத் தந்த முதியவர் அதிலுள்ள பாடல்களையும் வாய்மொழியாகவே பாடிக்காட்டினார்.
சேனாதிராசா கொலை விசித்திரக்கவிகள் என்னும் நூலில் இருந்து வகைமாதிரிக்குச் சிலபாடல்களைச் சுட்டிக் காட்டலாம்.
'நொண்டிச் சிந்து சற்சனரே சொல்லக் கேளும் - இந்த தாரணியெலாம் புகழும் கோவை நகரில் சிற்பர னருளினாலே - சகல செல்வமும் படைத்திலங்கு நல்லகுலத்தில் (சற்சனரே) குன்றனைய குணம் படைத்தோன் - குமார சூரியகுலத்துதித்த குழந்தை யென்பர் வன்றிறல் சேனாதிராசா - என்று வையகத்தார் சொல்லுவார்கள் ஐயா நேசர்கள் (சற்சனரே) இவ்வாறு தொடங்கும் இப்பாடலைத் தொடர்ந்து பிசெந் நெல் செறி நல்லை நகர்வாசன்" என்ற வர்ணமெட்டு என வரும் பாடல் அமைகின்றது. அதைத்தொடர்ந்து பச்சை மலை பவள மலை என்ற வர்ண மெட்டு எனப் பின்வரும் பாடல் அமைகின்றது.
சாயவேட்டி யொன்றெடுத்துத் தானரையில் மாட்டி தம்பி தானரையில் மாட்டி தன்கையாற் சால்வைதனை தலையினிலே சூட்டி வாயினிலே தாம்பூலத்தை வாங்கியவர் போட்டார் தம்பி வாங்கியவர் போட்டார். இவ்வாறு அமையும் பாடல்கள் பல உள்ளன. மக்கள் கூடும் இடங்களில் இசையோடும் ஒரளவு அபிநயத்தோடும் பாடிக் காட்டத்தக்க வகையிலே இப்பாடல்கள் அமைந்துள்ளமையைக் காணலாம்.
சேனாதிராசா கொலை வழக்கு விசாரணை பற்றிக் கூறுமிடங்கள் மிகவும் சுவைபயப்பனவாக உள்ளன. வகை மாதிரிக்குப் பின்வரும் பாடலைச் சுட்டிக்காட்டலாம்.
'குறுக்குக் கேள்விகள் அனேகமானதாகவே கூட்டிற் துரைச்சாமி தம்புவுங் கேட்டிட நறுக்குத் தலைக்காரன் முத்துத்தா னென்றவள் நாட்டினா ளஞ்சாது பாருமடி ஆயிரத்துத் தொளாயிரத்து அறுபதாம் ஆண்டளவிலே, யாழ்ப்பாணத்தில் பரப்பரப்பாகப் பேசப்பட்டு வந்த கோகிலாம்பாள் கொலை வழக்கு பற்றியும் பல அரைவாய்மொழிப் பாடல்கள் தோன்றின. இப் பாடல்களைப் பாடிக்காட்டிப் பத்துச்சதம், இருபது சதத்திற்கு இவ் அரைவாய்மொழிப் பாடல் நூல்களை விற்பனை செய்ததை இக்கட்டுரை ஆசிரியரும் கண்டிருக்கின்றார். இவற்றை இயற்றியவர்களின் பெயர்களை அறிய முடியவில்லை.
இந்தச் சிறு நூல்களை (பச்சை, சிவப்பு, மஞ்சள் நிறங்களில் அவை இருந்தன.) கையிலே கொண்டு பாடித்


Page 44
44
திரிந்து விற்பனை செய்தவரைக் கோயில் விழாக்களிலே நாம் கண்டிருக்கிறோம். என் நினைவில் உள்ள சிறு பகுதியை இங்கு சுட்டிக் காட்டலாம்.
'உருத்திர புரம் கேசு உறுதியான கேசு அழுத்தமாகப் பேப்பர்களைத் திருத்தமாக நானும் பார்த்துப் பொருத்தமாகப் பாடிவந்தேன் தெரியுமா? - இது உருத்திரபுரம் கேசுதானே புரியுமா? இந்த இடத்திலே முச்சந்தி இலக்கியம் என்னும் நூலை எழுதிய டாக்டர் ஆ. இரா. வேங்கடாசலபதி குறிப்பிடுவ தைச் சுட்டிக் காட்டுவது நலம்.
'.சாண்டில்யன் 1930 களின் இடைப்பகுதியில் சுதேசமித்திரன் நாளிதழில் நிருபராகப் பணியாற்றினார். அப் போது
நீதி மன்ற வழக்கு விசாரணைகளைப் பற்றி விரிவா கச்செய்திகளை எழுதி வெளியிட்டிருக்கிறார்கள். அதைப் பற்றி
அவர் பின்வருமாறு நினைவு கூர்ந்துள்ளார். 'குப்புபாய் கற்பழித்த வழக்கு, கிராமணி கொலை வழக்கு . அப்பொழுதெல்லாம் இந்த மாதிரி வழக்குகளுக்கு அன்று மாலையே சூளைக் கவிஞர் ஒருவர் பாட்டு போட்டு விற்பார். நான் வழக்குகளை வரிவிடாமல் குறுக்கு விசாரணை உட்படப் பிரசுரித்ததில் அவருக்கு அதிகம் வேலையில்லாது போயிற்று. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த சுதேச நாட்டியம், ஈழகேசரி, ஈழநாடு முதலான பத்திரிகைகள் கொலைவழக்குகள் பற்றிய விடயங்களை மிக விபரமாக வெளியிட்டன. அதனாலே பத்திரிகையின் விற்பனை அதிகரித்ததும் குறிப்பிடத்தக்கது.
பத்திரிகைகளைப் படிக்க முடியாதவர்களும் படிக்க வசதியற்றவர்களும் அத்தைகைய கொலை வழக்கு விபரங்களை அரைவாய்மொழிப்பாடல்களினூடே அறிந்து இரசித்து வந்துள்ளனர். உணர்வுபூர்வமாகச் சிறப்பான ஓசையுடன் இவை பாடிக்காட்டப்பட்டபடியால் பொது மக்கள் மத்தியில் ஆழமாகப்பதிந்து வாய்மொழியாக
வழங்கி வரலாயிற்று எனலாம்.
 

பரபரப்பான கொலைகள் பற்றி எழுத அரைவாய் மொழிப்பாடல்களைக் கூத்து, நாடகம் இவற்றிலே (இடைப்பிறவரலாகப்) பாடும் மரபும் இருந்துள்ளது. பெரும்பாலும் ஹார்மோனிய வித்துவான் (பெட்டிக்காரன்) அல்லது பபூன் இத்தகைய பாடல்களைப் பாடுவதுண்டு. அறுபதுகளில் கீரிமலையில் நடைபெற்ற முக்கொலை பற்றிய அரைவாய்மொழிப்பாடல்கள் பல நாடக மேடைகளிலே பாடப்பட்டன. பார்வையாளர்களாலே பெரிதும் விரும்பப்பட்ட இந்தப்பாடல்கள் திரும்பத் திரும்ப நாடகமேடைகளிற் பாடப்பட்டதும் உண்டு. என் நினைவில் உள்ள பாடலின் ஒரு பகுதி பின்வருமாறு
முக்கொலையே இது முழுக்கொலையே இக்கொலை நடந்த தெங்கள் பக்கஊரிலே - அதைக் கேட்க வேர்க்குமே - கண் பார்க்கக் கூசுமே இதுபோலவே ஆட்டுக்கடா களவெடுத்த வழக்குப் பற்றியும் அரைவாய் மொழிப்பாடல்கள் யாழ்ப்பாணத்துக் கூத்து மேடைகளில் இடைப்பிறவரலாகப் பாடப்பட்டு வந்தன. என் நினைவில் உள்ள சில அடிகள் பின்வருமாறு:
நாட்டினிலே உலைக்குப் போட அரிசி இல்லையே வீட்டினிலே விறகு கூட எரிவதில்லையே வெளியில் பார்த்தால் பட்டுவேட்டி சிலுக்குச் சால்வை ஆட்டுக்கள்ளரே' இத்தகைய பாடல்கள் பல எம்மத்தியில் இருந்து மறைந்து போயின.
செந்நெறிப்பாங்கான இலக்கியங்களைப் படைத்த மரபு வழிப்புலமையாளர்கள் சிற்சில சந்தர்ப்பங்களிலே பாடிய (இயற்றிய) பாடல்களும் அச்சுவாகனம் ஏறாது (அச்சில் வந்ததோ தெரியவில்லை) வாய்மொழியாகக் கையளிக்கப்பட்டுள்ளமையைக் கண்டுகொள்ள முடிகின் றது. மிக அண்மைக்காலம் வரை வாய்மொழியாக வழங்கிய முருகேச பண்டிதர் இயற்றிய பாடல்கள் சிலவற்றைத் தி.சதாசிவஐயர் பதிவு செய்துள்ளார்.
தொடரும்.

Page 45
Features 5100
DUAL SIA SLIMPHONE WITH METALICFINISH WGA CAERA *翡B翡了靛毒霹E蕾 * WOE0 RECORDER * WOE0 PLAYERAP43GP&AW AUDIO PLAYER P3& AAC STEREO BETOOTH 4 GBEXPANDABLEEMORY P BIG50 SCREEN *靛E匣蚤C円
FACEBOOK & YAHOO
DUAL SIM
DIGITAL CAMERA
* UNLIMITED SÅS
BIG QVGA SCREEN
DUAL TORCH
DIGITAL CAMERA, WTH WIDEOPLAYER e MEMORYUPTO 86B
* FAM REDIO & P3PLAYER
Price: Rs. 4990
Features 310 ANDROID 2.2
s GPS & AGPS *2嗣PCA藤ER憩
PORTABLE HOTSPOT ROUTER & ODEM. HSDPA. 7.2 KBPS WWF & USB ĦETHERING EXCHAGESUPPORT 16GBEXPANDABLE MEMORY *PUSH翡
PROXIITY SENSOR FACEBOOK & YA HOO
Price: Rs.22,100/-
Dearlier Name & Address
Kandy: Cellular Store #02A, De Soysa Lane, Kandy, Tel 081222059/0777 i5255.
Vavuniya: Nile Marketing (Pvt) Ltd. #09, ist cross street, Vavuniya, Tel 0777585910, NEliya: Jojos Marketing (Pyt) Ltd. # 51-A, 51-1-1, New Bazaar Street, N'Eliya, Tel: 0773123633/0755893893, Kalmunai Clear Coin,
#06, Main Street, Maruthamunai. Tel:0777774232 Kegalle: Ceylon Beverages. # 199, 2nd floor, Main Street, Kegalle, Tel:07.155123123 Puttalam; Steel Mobile (Pvt) Ltd, #48, Kurunagala Road, Puttalam, Te;074893910/77070 Bandarwela: Shen Cellular # 1 CHaputhale Road, Bandarawela (0777223838) Polgahawela: İsmi Lanka (Pvt) Ltd. #246, Bandawa, Polga havela, Valachchena: Minan PhoneShop, Walachchene,
|Mannar Rajith PhoneShop, #02, New Bustand Mannar, Tel: 0770888777 آر
Colombo: FS Mobile Center his85,
Colombo, if, fel:19773622 699 Gampha: Sagara Trading, #272B, Wa 鬣7鬣230 Kirildiwela: Sri Tell Cellular, Wagamul Maharagama; Chinthana GSM (Pvt) Lt Adaharagama: Chinthana GSM (Pvt) LÈ Weyangoda; Rangana Cellular, #f70/ ኽéቷ 0ፖi237i37† Higurakgoda: S&P Communication. Higurakgoda, Tel:0776300222 A ''Pdfa: Northern Distribilitofs, Ney tj Galle Wimarsha Communication, #87 Galle: BSK Cellular, 3rd floor, P& Ci Pelawatta: Digiphone Technologies. A
Tel; 萄725557557
 
 
 
 
 
 

Features 5454.
· DUALSIA
« Sills PHONE WITH#ETALICFINSH
ar 3 MPCA MAERA * WOBO RECORDER
VIDEOPLAYER MP4,3GP&AW AUDIO PLAYER P3& AAC STEREO BLUETOOTH 翡E美PANDA8且汪薰E幕Q淳 * BG 5.0 SCREEN
FACEBOOK & YAHOO
Price: Rs.6400
O
(TOUCHSCREEN)
· DUALSIM
B 3,2 MP (CAERA
s STEREO BLUE TOOTH
WF
a VIDEOPLAYER MP4,3GP&AW
ቆ AUDIO PዚAYE፵ ዘዘF3& AAC
GPRS
EXPANDABLE EMORY UP
TO 8GB STANDBYTIAE240 HRs FACEBOOK & YAHOO OPERA 10 8CMSCREEN
Price: Rs. 11,399
Features 5170
DÅ SÅ
* #GÅ CAMERA i WiiC RECORDER * VibE0 PLAYERMP4,3GP&AV *霹PLAYER藤P3惑嘉薰°
STEREO BLUETOOTH *蚤鬣E証霹罩翡PTO&GB
STANDBYTE 300 HRS FACEBOOK & YAHOO
M5350
e AS
PONE AS A MODE FONTSETTING UNLIMITEDSMS de EG QVGA SCREEN
STEREO BLUETOOTH DIGITAL CAMERAWITHVIDEO リECORDEXPANDABLE
EORY UPTO 8GB FÅ FREDO & AP 3 PLAYER
Features 1200
22 P CAMERA STEREO BLUE TOOTH
WF VIDEO PLAYERMP43GP&AW
• AUDIO PዚAWE# ዘዘዖ3 & AAC DIGITALZOOM OPTICALZOOM EXPANDABLE MEMORY UPTO 64GB XENON FLASH FACEBOOK & YAHOO *0PER薰妮
DISPLAY 262K
鞑
Price: Rs.22,300/-
Ground floor, 2nd Cross, Street,
humula Road, Asgiriya, Gampha,
Road, Kiridiwela, Tel 07541750
l, 101 A, Highlevel Road, Maharagama,
l, 63, Dehiwala Road, Maharagama. , kain Street, Weyangoda,
439, De Senanayaka Street,
s Stand, Anuradhapura, Tel: 077757558 f, foris Road, lddā, Galē, y Building, Galle, Tel: 0773061644 athugana Road, Pelawatta,
solice Fax. 94112586727
LANKA TRADER COM (PYT) LTD
Hotline: 0712371371)
O712373373
Tel:94114339385 | 4339386

Page 46
証匾 46 தொல்லியல்
திருக்கோவில் 8
தமிழகத்தில் ஆறுபடை வீடுகள் போல கிழக்கிலங்கையில் ஆறுபடை வீடுகள் என நினைக்கக் கூடிய பல முருகஸ்தலங்கள் அமையப் பெற்றுள்ளன. அவை கதிர்காமம் தொடக்கம் உகந்தை, திருக்கோவில், மண்டுர், கோவில் போரதீவு, தாந்தாமலை, வெருகல் போன்ற முருக ஸ்தலங்களாகும். இவை வேல் வழிபாட்டைக் கொண்டவை. திருப்படைக் கோவில்கள் எனவும் தேசத்துக் கோவில்கள் எனவும் அழைக்கப்படுவன. இவை எல்லாம் கதிர்காமத்தை மையமாகக் கொண்டே தோற்றம் பெற்றன. இவற்றிலே திருக்கோவில் முக்கியவேல் வழிபாட்டுத் தலமாகும். திருக்கோவில் என கோவிலின் பெயராலே ஊரும் அழைக்கப்படும் விசேடம் பெற்றது.
மட்டக்களப்புக்கு தெற்கே சுமார் 50 மைல் தூரத்தில் திருக்கோவில் உள்ளது. பண்டைய மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்திருந்த திருக்கோவில் 1962 ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டம் பிரிக்கப்பட்ட போது அம்பாறை மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டது.
பழங்காலத்தில் உன்னரதகிரி, நார்முனை, வெள்ளை நாவற்பதி, கண்டபாணத்துறை என்ற பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன. பின்னர் திருக்கோவில் என பெயர் பெற்றது. தமிழகத்தின் திருச்செந்தூரை நினைவூட்டும் வகையில் கடற்கரையோரம் அமையப்பெற்றுள்ளது. பண்டைய மன்னர்களால் கல்வெட்டுகள் பொறிக்கப்படும்
நிவந்தங்கள்
வழங்கப்பட்டதுமான தலமாகும்.
 
 
 
 
 

கல்வெடீடுத்தள்
திருக்கோவில் வளவில் நான்கு கல்வெட்டுகள் காணப்பட் டன. அவை தூண்கல்வெட்டுகள், துண்டுக் கல்வெட்டுகள் என வகைப்படுத்தலாம். இக்கல்வெட்டுகளை கலாநிதி வேலுப்பிள்ளை, கலாநிதி இந்திரபாலா, எஸ்.ஒ. கனகரெட் ணம், தங்கேஸ்வரி போன்றோர் ஆய்வு செய்து கருத்துக் களை வெளியிட்டுள்ளனர். திருக்கோவில் தூண் கல்வெட்டு
ஒரு சதுரத்தூணில் பொறிக்கப்பட்ட கல்வெட்டின் மூன்று பக்கங்களும் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டும் நான்காவது பக்கம் மயிலின் உருவம் ஆயுதம் ஒன்றுடன் பொறிக்கப்பட்டதாக அமையப்பெற்றுள்ளது. தூண்கல்வெட்டு வாசகம்
பக்கம் (அ) கல்வெட்டு எழுத்துக்களும் விளக்கமும்
பூரீ சுங் - பூரீ சங்
95 GUIOT – 95 GUAT தி பரும - தி பரம
ரானா தி - ரான தி றி புவன - றி புவன சசிகி நா - ச்சக்கிர வததக - வத்திக ள பூரீ வி - ள் பூரீ வி
é9FCCV GINJOT - 29FCCV GJØT குதேவ - குதேவ
குெ ஆ - ருகு ஆ னடுப - ண்டுப

Page 47
ததா வ - த் தாவ
திவ தை - தில் தை
மரதம - மாதம்
20 தியதி - 20 தியதி இக்கல்வெட்டின் விளக்கம் வருமாறு
பூரீ சங்கபோதி பரமரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் பூரீ விஜயபாகு தேவர்க்கு ஆண்டு பத்தாவதில் தை மாதம் 20 தியதி பக் (ஆ) கல்வெட்டு எழுத்துகளும் விளக்கமும்
சிவனான - சிவனான
சங்கரக - சங்கர (க்)
கோயி - கோயி
லுககு - லுக்கு
கொடு - கொடு
தவோ - த்வொ
விலர - வில இ
தை தன - ன்த தண்
மத துக - மத் துக்
கு அகி - கு அகி
த ம செ - தம் செ (ய்)
தானாஇ - தாணுகி
ல கெங் - ல் கொங்
கை கக - கை க்க
ரை யில - ரை யில்
கா ரா ம ப - காராம்ப
சு வைக - சு வைக்
கொ நத - கொன்ற
பரவதனா - பாவத்தை
த கெரள - த் கொள்
ள கடவ - ளக்கட
ராகவும - வராகவும் விளக்கம் வருமாறு :-
சிவனான சங்கரக் கோவிலுக்கு கொடுத்த வொவில இந்த தர்மத்திற்கு அகிதம் செய்தானாகில் கெங்கைக் கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவத்தைக் கொள்ளக் கடவராகவும்.
இக்கல்வெட்டில் குறிப்பிடும் வோவில என்ற இடப்பெயர் சிங்ள வோவில என்பதன் திரிபு எனவும் இது இக்கோவிலுக்கு நான்கு மைல் தூரத்தில் உள்ளது எனவும் எஸ்.ஒ.கனகரெட்ணம், ஹியுநெவில் எனக் குறிப்பிட்டு உள்ளனர். இக்கருத்து தவறானது எனவும், தம்பிலுவில் பகுதியை சேர்ந்த கோவில் ஒன்றினை சேர்ந்தது எனவும் பேராசிரியர் இந்திரபாலா கூறியுள்ளார். கலாநிதி வேலுப்பிள்ளை கூறுவது :-
பூரீசங்க போதி என்னும் பெயர் அனேக சிங்கள அரசர்களுக்கு பதவிப் பெயராக உள்ளது. முதலாம் விஜயபாகு இப்பெயரைக் கொண்டிருந்தான். சோழர் இலங்கையை கைப்பற்ற முன்னர் அபயசலாமேவன் என்ற
பட்டப்பெயரை 1ஆம் விஜயபாகுவுக்கு முன்னரும்
பின்னரும் வந்தோர் பூரீசங்கபோதி என்ற பெயரையும்
 
 

47
シ
க்கலைக்கேசரி

Page 48
貫
கலைக்கேசரி கி 48
பதவிப் பெயராகக் கொண்டனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். இவர் மேலும் கூறுவது :
விக்கிரமசிங்காவின் அரச பட்டியலின்படி விஜயபாகு எனப் பெயருடையோர் பலர் ஆட்சி செய்துள்ள குறுகிய காலமே ஆட்சி செய்துள்ளனர் எனவே இக்கல்வெட்டு ஐந்தாம் விஜயபாகு அல்லது ஆறாம் விஜயபாகுவின் உடையதாக இருக்கலாம் எனக் கூறியுள்ளார். (கி.பி. 1398 - 1410) காலப்பகுதிக்குரியது என்கிறார். பேராசிரியர் இந்திரபாலாவின் கருத்து
இலங்கையில் விஜயபாகு என்ற பெயரைத் தாங்கிய மன்னர் அறுவர் ஆட்சி செய்துள்ளனர். அவர்களில் முதலாம் விஜயவும் ஆறாம் விஜயபாகுவுமே பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி புரிந்துள்ளனர். இக்கல்வெட்டு
பத்தாவது ஆண்டில் எனக் குறிப்பிடுவதால் இவ்விருவருள்
 
 
 

ஒருவரே இக்கல்வெட்டில் குறிப்பிடும் விஜயபாகு எனவும் இருவரும் பூரீசங்கபோதி என்ற விருதுப் பெயரைத் தாங்கி இருந்தாலும் எழுத்துகள் பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்துகள் போல இருப்பதால் இக்கல்வெட்டு குறிப்பிடும் மன்னன் ஆறாம் விஜயபாகுவே என்கிறார். இவன் காலம் கி.பி. 1519 ஆகும்.
தங்கேஸ்வரியின் கூற்று :
மேற்படி கூற்றுகள் மறு பரிசீலனைக்கு உரியவை. அதற் கான காரணம் வருமாறு :
அ. கலிங்க விஜயபாகு என்ற பெயருடன் மாகோன் என்பவன் இலங்கையில் இருபத்தொரு வருடம் ஆட்சி புரிந்ததாக சூளவம்சம் குறிப்பிடுகிறது. மாகோன் ஒரு புகழ் பெற்ற தமிழ் மன்னன். எனவே இது மாகோனது ஆட்சிக் காலத்தில் பொறித்த கல்வெட்டாக இருக்க முடியும்.
ஆ. இக்கல்வெட்டில் பெரும்பாலும் கி.பி. 13 ஆம் நூற்றாண்டுக்குரிய எழுத்துக்கள் காணப்படுவதோடு சு. இ. போன்ற எழுத்துக்கள் வளர்ச்சிஅடையாத முறையில் கி.பி. 8 ஆம், 9 ஆம் நூற்றாண்டுக்குரிய எழுத்துகள் போன்றும் உள்ளன.
இ. இக்கல்வெட்டில் குறிப்பிட்டுள்ள சிவஞானசங்கரர் என்னும் பெயருடைய ஒருவர் இக்கோயிலுக்கு கொடுத்த வோவில கருத்துக் கொள்ள முடியும் என இந்திரபாலா நினைப்பதும் தவறானது. இரண்டாவது கல்வெட்டில் சிவஞான சங்கரின் பூரீ விஜயபாகு தேவர்க்கு எனக் குறிப்பிடுவதனால் இது முரனான கருத்தாக உள்ளது. மேற் குறிப்பிட்டுள்ள விஜயபாகு கருத்துகளால் இக்கல்வெட்டில் குறிப்பிட்டுள்ள விஜயபாகு கலிங்க மாகன் எனக் கொள்வதே பொருத்தமானது. இக்கல்வெட்டில் இடம் பெறும் திரிபுவனச் சக்கரவர்த்தி அடைமொழி கி.பி. 12ஆம் நூற்றாண்டு காலத்து மெய்கீர்த்திகளில் இடம் பெறுவதும் இக்கருத்தை மேலும் வலுவூட்டுகிறது. எனவே இக்கல்வெட்டு மாகோன் காலத்தது என்பது பொருந்தாது.
துண்டுக் கல்வெட்டு
ஏறக்குறைய 2 அடி நீள அகலமுடைய சதுர கருங்கல் துண்டிலே இக்கல் வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 12 வரிகள் இருக்கலாம். ஆனால் மிகவும் அழிவுற்ற நிலை யில் இக்கல்வெட்டு காணப்பட்டது. எல்லா
வரிகளையும் வாசிக்க முடியா விட்டாலும் முடிந்தளவு எட்டு வரிகளில் உள்ள எழுத்து கள் வருமாறு கல்வெட்டு வாசகம்
பூரீ மத சங்க போதி வரமரானா திறி புவன சகதிரிய வத்திகன ரான சிவநான சங்தரிககள சிரி விசய வாகு தேவருகு
யாணடு கயவதிலனாத மாயததி திருக கோயில் சிததர வே லாயுத சுவாமி கோயிலுககு

Page 49
கிளகசூ கடல ளா மேறகு தலை பூரீ மத் சங்கபோதி வர்மரான திரிபுவனச் சக்கரவர்திகளா
ன சிவஞான சங்கரிகள் பூரீ விஜயபாகு தேவர்க்கு யாண்டு கய வதில் தை மாதத்தில் திருக் கோவில் சித்திரவே லாயுத சுவாமி கோயிலுக்கு இனக்கு கடல் மேற்கு தலை திருத்திய வாசகம்
பூரீமத் சங்கபோதி வர்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகளான சிவஞானசங்கரிகள் விஜயபாகு தேவருக்கு பத்தாவது ஆண்டு தை மாதத்தில் திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி கோவிலுக்கு கிழக்கு கடலும் நேர் மேற்கு தலைக்கல் என வாசிக்க முடியும்
கலாநிதி இந்திரபாலா, கலாநிதி வேலுப்பிள்ளை இருவரும் இக்கல்வெட்டையும் பதினாறாம் நூற்றாண்டுக்குரியதாகவே கூறியதோடு இக்கல்வெட்டிலும் குறிப்பிட்டுள்ள விஜபாகு ஆறாம் விஜயபாகு என்றே கருதுகின்றனர். சைவர்கள் இவனுக்கு சிவஞானசங்கரர் என்ற விருதைக் கொடுத்திருக்கலாம் என்றும் தமது கருத்துகளை கூறியுள்ளனர். தங்கேஸ்வரியின் கருத்து வருமாறு
இக்கூற்று ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. சில கண்டி மன்னர்களை தமிழ் மக்கள் மதித்துப் போற்றுவதை வரலாற்றில் கண்டுள்ளோம். அவர்கள் நாயக்க சைவ மன் னர், ஆனால் விஜயபாகு அப்படி அல்ல. தமிழ் மக்கள் ஞான சங்கரர் என்ற விருதைக் கொடுத்து மதிக்குமளவிற்கு தொண்டாற்றவும் இல்லை.
மேலும் பெயர்களைக் கொண்டு மட்டும் கல்வெட்டுகளின் காலத்தை நிர்ணயிக்க முடியாது. எழுத்தமைப்பு, வாசகத்தின் அமைப்பு முதலியனவும் 羲 கவனத்தில் கொள்ளப்பட்டு பரிசீலிக்க வேண்டும்.
மாகோன் வகுத்த வன்னிமை SM
மகோன் திருக்கோவில் நிர்வாகம், தொண்டுகள் தொடர்பாக வகுத்த வன்னிமை பற்றி சில கல்வெட்டுப் பாடல்கள் மூலம் அறிய முடிகிறது. அவற்றுள் இரு பாடல்கள் வருமாறு 製
அ. கண்டனொடு சருகுபில்லி கட்டபப்ததன் கருதரிய கவுத்தனு மத்தியாயன் மண்டலத்தில் பொன்னாச்சி வயித்தியென்று வோவ சியர் மக்களிலே வருணமாக்கிப் பண்டு முறை தவறமல் ஏழகுடியாய் பகுத்தீசர் பணிபுரியப் பரவனியாய் அண்டர் தமைச் சாட்சி வைத்துத் தத்தம் வாங்கி அரனகத்து ஊழியராய் அமைத்துச் சொரிவாக்
(உம்பாய்) ஆ. சொல்லரிய விளக்கேற்ற பூ வெடுத்தல் தூசகற்றல் சாணமிடல் அணிவிளக்கல் நல்ல மலர் மாலை கட்டல் மேளம் மீட்டல்
 
 
 
 
 

& கலைக்கேசரி 49
நற்சந்தன மரைத்திடுதல் நெல்லுக்குத்தல் துல்லியமாய் வளர்ச்சி விகை ஏற்றிச் செல்லல் தாலி கட்டல் அமுது வைத்தல் முதன்மைப் பார்ப்பர். வல்ல பதம் நீர் வார்த்தல் அகத்தில் கொண்டு புரியுமென்று மாகோனும் வகுத்துப் பின்னும்,
(3ஆம் பாடல்) இக்கல்வெட்டுப் பாடலில் குறிப்பிட்டபடியே திருக் கோவில் பகுதியில் குடிகள் வகுக்கப்பட்டு கோவில் நிர்வாகம் நடைபெறுகிறது. இவ்வாறு மாகோன் விடுதி வன்னிமை கலி ஆண்டு 4250 (கி.பி. 1148) என மட்டக்களப்பு மானிமியம் கூறுகிறது. ஏற்கனவே நாம் கூறிய மாகோன் காலத்திற்கும் இங்கு குறிப்பிடும் ஆண்டுகளுக்கும் ஆண்டுகள் சற்று வித்தியாசம் காணப்படுகிறது. இது கலி ஆண்டுக் கணிப்பில் ஏற்பட்ட தவறு எனலாம்.
ஆகவே திருக்கோவில், கொக்கட்டிச் சோலை முதிய திருப்படைக் கோவில்களில் L DIT GJESITGðIT வகுத்த வன்னிமையே இன்றும் நிர்வாக நடைமுறையில் உள்ளன. எனவே திருக்கோவில் காணப்படும் தூண், துண்டுக் கல் வெட்டுகள் திரிபுவனச் சக்கரவர்த்தி என கி.பி. வரை முழு இலங்கையுமே ஆட்சி செய்த கலிங்க விஜயபாகு எனப்பட்ட கலிங்கமாகன் என்பதே பொருத்தமானது. லிங்க வழிபாடு உடைய மாகன் சிவஞான சங்கரர் என அழைக்கப் பட்டதிலும் ஆச்சரியமில்லை.
(தொடரும்) - செல்வி. க. தங்கேஸ்வரி B. A. - தொல்லியல் சிறப்பு

Page 50
இராமாயணத்தில் இலங்கை - 12
DIG பிரதிஷ்
ராண இதி L) தலங்களுடன்
பெருமான் முன்னேஸ்வர தே செய்ததனால் பீடித் அருளப்பட்ட வாக் சுவர்ண லிங்கம் 1 தேவஸ்தானம் என புனித நதியாக போற்றி மதிக்கப்ப இத்திருத்தலத்தை வாழ்க்கையில் செய அத்தலத்திற்கு அத்த நீக்கவல்ல தலம் மு இத்தகைய மகிc வேறொன்றுமில்லை இல்லை என்றும் தக் உயிர்களைக் .ெ போதனை. இராவன என்ற உயர் பிறப் இல்லாதொழிக்கும் முன்னேஸ்வரத்தின் பிராட்டியாரோடு | ஆனந்தங்கொண்டு, அடியார்க்கெளியரே நீக்கி ஆண்டருள வரையாது கொடுத்தி உனது பிரம்மஹத்தி கிழக்கிலும் தெற்கி கேதீஸ்வரம், கோ நாமத்தோடு மூன்று இராமேஸ்வரத்திலும் செய்யக்கடவாய், ! நான்கையும் முறைே ஆனந்த தாண்ட6 தேவஸ்தானத்தில் அடையாளம் காட்டி
முன்னேஸ்வரப் தேவஸ்தானத்திற்கு
என்னும் புண்ண
பெயரோடு
செய்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னாவாரியில் ருநீஇராமர் டை செய்த செம்மண் லிங்கம்
காசமான இராமாயணம் முன்னேஸ்வரத்தின் இரண்டு தொடர்புபட்டுத் திகழ்கின்றது. முதலாவது பரமேஸ்வரப் வடிவாம்பிகையோடு பூரீஇராமருக்கு காட்சி கொடுத்த வஸ்தானம். மற்றையது பூரீஇராமர், இராவணனை வதம் த பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் பொருட்டு பெருமானால் குக்கிணங்க மானாவாரி என்னும் இடத்தில் பூரீஇராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இது மானாவாரி இராமலிங்க அழைக்கப்படுகின்றது.
கங்கையும் புனித தலமாக காசியும் இந்து மக்களால் டுகின்றது. இவையிரண்டிற்கும் நிகராக முன்னேஸ்வரமும் ஒட்டி பாய்ந்தோடும் மாயவனாறும் திகழ்கின்றன. உலகியல் ப்த பாவத்தைப் போக்குவதற்காக காசிக்குச் செல்வது மரபு. கைய மகிமையுண்டு. அதேபோல், காசியில் செய்த பாவத்தை Dன்னேஸ்வரம் என்று முன்னேஸ்வர மான்மியம் கூறுகின்றது. மையூடாக வேதசாஸ்திரத்திற்கு மேலான சாஸ்திரம் ) என்றும் சங்கரனுக்கு மேலான தெய்வம் வேறொன்றும் க்சன கைலாய புராணமாலை சிறப்பாகக் கூறியிருக்கின்றது. கால்வதனால் தோஷம் உண்டாகும் என்பது வேதங்களின் னன் போன்ற ஈஸ்வர அந்தஸ்தும் விஷ்ரவத முனிவரின் மகன் பும் கொண்ட ஒர் உயிரைக் கொன்றதனால் பரம்பரையை சக்தி படைத்த பிரம்மஹத்தி தோஷம் பூரீஇராமரைப் பீடித்தது. மகிமையை உணர்ந்த பூரீஇராமர் அத்தேவஸ்தானத்தில் சீதா பரமேஸ்வரப் பெருமானுடைய திருக்கோலத்தைக் கண்டு, கண்ணிர் பெருக, ‘என் ஆருயிர்த் தெய்வமே! 1 அடியேனை பின்தொடர்ந்து வரும் பிரம்மஹத்தி தோசத்தை வேண்டும் என்று பிரார்த்திக்க, வேண்டுவார் வேண்டுவதை திடும், முன்னேஸ்வரப் பெருமான் திருவுளம் மகிழ்ந்து ராமா தி தோசம் நீங்கும் பொருட்டு இலங்காபுரியில் வடக்கிலும் லுெம் விளங்கும் சிவ ஆலயங்களாகிய முன்னேஸ்வரம், ணேஸ்வரம் என்னும் மூன்று ஷேத்திரங்களிலும் உனது சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய். அதன்பின் இந்தியாவில் ள்ள சேதுக்கரையில் ஒரு சிவலிங்கத்தையும் பிரதிஷ்டை புருஷாத்தங்களாகிய அறம், பொருள், இன்பம், வீடு என்னும் யே பெற்று வாழக் கடவாய்' என்று திருவாய் மலர்ந்தருளினார். வம் புரிந்து நின்ற பூரீஇராம பிரான் 'சுவாமி இந்த முன்னேஸ்வர சிவலிங்கப் பிரதிஷ்டை செய்யக்கூடிய ஷேத்திரத்தை அருள வேண்டும்’ என்று பிரார்த்தித்தார். பெருமான் கருணை கூர்ந்து ராமா இந்த முன்னேஸ்வர வடக்குத் திசையில் மாயவனாற்றுக்கு வடபாகத்தில் மானாவாரி ரிய இடமுண்டு. இந்த இடத்தில் இராமலிங்கம் என்னும் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்யக் கடவாய்' என்று அருளிச் மறைந்தருளினார்.
அப்போது முன்னைநாதப் பெருமானது திருவாக்கைக் கேட்ட இராமபிரான் களிப்படைந்து, முன்னைநாத சுவாமியின்

Page 51
அருளினால் தெரிந்து கொண்ட மானாவாரி என்ற இடத்தையடைந்து விசுவகர்மாவினால் ஆலய நிர்மாணம் செய்யப்பட்டு, ஆனி மாதமும் பூர்வபட்ச திருதியைத் திதியும் புதன்கிழமையும் கூடிய முகூர்த்தத்தில் இராமலிங்கம் என்ற திருநாமம் விளங்க சுவர்ணலிங்கத்தை பரிவார மூர்த்திகளோடு பிரதிஷ்டை செய்தார்.
இந்த ஆவுடையார் வஸ்திரம் அற்ற நிலையில் செந்நிறம் கொண்டது. சதுர வடிவத்தில் தோற்றம் தரும். பூரீஇராமரால் மணல் கொண்டு உருவாக்கப்பட்டது GT65T நம்பப்படுகின்றது. சுவர்ணம் என அழைக்கப்படுவதன் காரணம் பொன்னை ஒத்த சிவப்பு நிறத்தைக் கொண்ட மணலினால் இந்த லிங்கம் உருவாக்கப்பட்டமை காரணமாக இருக்கலாம்.
இராம பிரானால் இந்த இலிங்கம் பிரதிஷ்டை செய்யப்படும் போது நில மட்டத்திலேயே ஆவுடையார்
வைக்கப்பட்டது. காலம் காலமாக தமிழ், சிங்கள மக்கள்
இந்த லிங்கத்தையே வணங்கி வந்தார்கள். கடந்த 12 வருடங்களுக்கு முன்னர் தான் ஆவுடையார் ஆறு அடிகளுக்கு உயர்த்தப்பட்டு கும்பாபிஷேகம் இந்த தேவஸ்தானத்தில் இடம்பெற்றது. இதன்போது இரட்டைக்களரி நிலையில் இரட்டைத்தளம் கொண்ட தூபி
 

& கலைக்கேசரி 51
அமைக்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டில் தைமாதம் பாலஸ்தாபனமும் ஆனி மாதம் கும்பாபிஷேகமும் வரலாற்றுச் சிறப்புமிக்க இத்திருத்தலத்தில் நடைபெற உள்ளது.
வரலாற்றுக் காலம் முதல் ஆலய சூழலில் வசிக்கும் தமிழ், சிங்கள மக்கள் 'பழைய கோவில் அல்லது "ஈஸ்வரதெய்யோ’ என அழைத்து அன்னதானம் போன்ற ஆலய திருப்பணி காரியங்களில் ஈடுபடுகின்றார்கள். தமிழ் மக்களால் 'நேர்த்தி வைப்பதுபோல் சிங்கள மக்களும் இங்கு நம்பிக்கையுடன் வந்து 'பாரம்கட்டி செல்கின்றார்கள். பெரும்பாலும் திருமணம், குழந்தைப் பாக்கியம், வெளிநாட்டுப்பயணம் ஆகிய வேண்டுதல்களை முன்வைத்து இராமலிங்க ஈஸ்வரனிடம் பக்தர்கள் வேண்டுதல் செய்கின்றார்கள்.
புத்தளம் - கொழும்பு வீதியில் மானாவாரி எனத் தமிழிலும் ராஜகதழுவ ଗTଗ013F சிங்களத்திலும் அழைக்கப்படும் சந்தியில் பிரிந்து செல்லும் சிறிய வீதியினூடாக சுமார் 200 மீற்றர் செல்லும் போது குறிப்பிட்ட தேவஸ்தானத்தை அடைய முடியும்.
ஆலயத்தில் தற்போது செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கா
தேவிக்கும் வியாழக்கிழமைகளில் தகஷ்சனாமூர்த்திக்கும்

Page 52

சனிக்கிழமைகளில் சனீஸ்வரனுக்கும் விசேட பூஜைகள் நடைபெறுவதால் மக்கள் இத்தினங்களில் பெருமளவில் கூடுகின்றனர். -
இவ்வாறு இன்றும் இராமாயண காலத்து பெருமை பேசும் மானாவாரி இராமலிங்கத்திற்கு இராமன் அபிஷாகாதி பூசை செய்வதற்காக மாயவனாற்றை வரவழைத்து பிரார்த்தித்து வரங்களைப் பெற்றார். குருநாகல் பகுதியிலிருந்து பெருக்கெடுத்து ஓடிவரும் மாயவனாறு முன்னேஸ்வர ஆலயத்திற்கு வடக்குப் பக்கமாக ஓடி சிலாபம் கடற்கரையில் கலக்கின்றது.
இது மாயாநதம், மாயாநதி, மாயவன் ஆறு, தெதுறு ஒயா
எனும் பல பெயர்களினால் அழைக்கப்படுகின்றது. முன்னேஸ்வரத் தீர்த்தம் மாயவனாறு ஆகும். இந் நதிக்கரையில் வருடாந்தம் ஆவணி மஹோற்சவத்தின் ஆவணி பெளர்ணமியின்போது பூரீமுன்னேஸ்வரப் பெருமானுக்கு பாரம்பரியமான தீர்த்த உற்சவம் நடைபெற்று வருகின்றது. இதற்காகவே பண்டுதொட்டு சேர் பொன் அருணாசலம் பரம்பரையினரால் பரிபாலிக்கப்பட்டு வருகின்ற வடிவழகி தோட்டத்தில் இருக்கும் திருமடத்தில் அன்னதானம் வழங்கப்பட்டு வருவதும் அடியவர்களின் துயர் தீர்ப்பதுமான சிறப்பும் தொடர்ந்தும் நிலவி வருகின்றது.
இவ்வாறு இராமபிரான் சுவர்ண லிங்கத்தை மானாவாரியில் பிரதிஷ்டை செய்தபின் சீதாபிராட்டி மற்றும் பரிவாரங்களோடு புஷ்பக விமானத்திலேறி திருக்கோணமலையை அடைந்தார். அங்கு முன்னேஸ்வரப் பெருமான் அருளியது போல் வெள்ளியினால் லிங்கத்தை பிரதிஷ்டை செய்தார். ஆனிமாத பூர்வபட்ச பஞ்சமித் திதியும் வெள்ளிக்கிழமையும் கூடிய வேளையில் ரெளப்பிய லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இதையடுத்து இராமபிரான் சிதாபிராட்டி மற்றும் தமது பரிவாரங்களுடன் மன்னாரிலுள்ள கேதீஸ்வர தேவஸ்தானத்தை அடைந்து ரத்தினத்தினால் லிங்கத்தை பிரதிஷ்டை செய்தார். இது ஆனி மாத பூர்வ பட்ச சப்தமி திதியும் ஞாயிற்றுக்கிழமையும் கூடிய சுப முகூர்த்தத்தில் நடைபெற்றது.
இதையடுத்து சேதுக்கரையிலுள்ள இராமேஸ்வரத்தை அடைந்த இராமபிரான் மற்றும் சீதாபிராட்டி ஆகியோர் ஆனிமாதத் பூர்வ பக்கூடித் தசமி திதியும் அத்த நட்சதிரமும் புதன்கிழமையும் கூடிய சுபமுகூர்த்தத்தில் சைகத லிங்கத்தை (மணல்) பிரதிஷ்டை செய்தார்.
இவ்வாறு முன்னேஸ்வரத்தில் முன்னைநாத பெருமான் அருளியதைப் போன்று மானாவாரி, திருகோணமலை, திருக்கேதீஸ்வரம், இராமேஸ்வரம் போன்ற தலங்களில் இராம நாமங்களில் லிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து பிரம்மஹத்தி தோஷம், மாபாதகங்கள் நீங்கி சர்வ பேறுகளையும் அடைந்தார்.
- மிருணாளினி

Page 53
Trillium Residencies is a truly enchanting place. It is elegant and comfortable, with an ambience all its own. For those who call it home, it has given new meaning to the concept of luxury living.
Now you too can share this experience. Come, be part of our final masterpiece - the East Wing.
Limited apartments available. Hurry, reserve yours...
 
 

RM
リー エ エ E N ○ E 3 A place you fall in love with
Trillium Residencies Limited. # 153 Eivitigala Mawatha, Colombo 8. Phone: 2686488 Email: infoGOtrillium. Ik Web: WWW trillium.K

Page 54
Gos Gšī š 54 arůh Irů Gunti
பிரசித்தி Uពីយ៍ក៏ចេញ៉ា ភាសាកំច6L
வாமி விவேகானந்தர் 1893 இல் அமெரிக்காவில் இடம் * பெற்ற உலக சமயங்களின் பாராளுமன்றத்தில் இந்து சமயத்தின் உயர் தனிச் சிறப்பை அது விவரிக்கும் உலகந்தழுவிய உன்னதமான ஒருமைக் கோட்பாட்டின் ஆழ அகலங்களை ஆணித்தரமாக எடுத்து விளக்கிய உலகப் புகழ்பெற்ற சிக்காகோ உரை மேற்குலகில் இந்து சமயம் பற்றி ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து பாரதம், இலங்கை போன்ற கீழை நாடுகளிலிருந்து அங்கு சென்று குடியேறியவர்கள் தங்கள் சமயம், பண்பாடு, வாழ்வியல் விழுமியங்கள் அனைத்தையும் கைக்கொண்டு வாழ்ந்ததுடன் அவற்றினை அந்நாடுகளில் பரப்பவும் முயற்சித்தனர். அண்மைக் காலங்களில் அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா எனப் பல நாடுகளில் இந்து சமயமும் அது சார்ந்த தத்துவங்கள், பண்பாடு, கோயிற் கட்டட சிற்பக் கலைகள், இசை, நடனம், நாட்டியம், நாடகம் என நாகரீகக் கூறுகள் எல்லாம் மிகச் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாகக் கோயிலை மையமாகக் கொண்டு
தென்னிந்தியாவில் மறுமலர்ச்சியுற்ற கோயிற் பண்பாடு
மேற்குலக நாடுகளிலும் வளர ஆரம்பித்துள்ளது என்பதனை இன்று அந்நாடுகளில் நிர்மாணிக்கப்பட்டுக் கிரமந் தவறாது பூசை வழிபாடுகள் இடம் பெற்று வரும் கோயில்கள் எடுத்துக் காட்டுகின்றன. மேற்படி நாடுகளில் ஏற்பட்டு
 

பெற்ற 0வரர் பாலாஜி கோயில்
வரும் இந்துப் பண்பாட்டின் விரிவாக்கத்திற்கான மிகச் சிறந்த உதாரணமாகப் பெரிய பிரித்தானியாவின் கைத் தொழில் நகரமெனப் பிரசித்தி பெற்ற பர்மிங்காம் (Birmingham) நகரில் நிறுவப்பட்டுள்ள பூரீ வெங்கடேஸ்வர பாலாஜி கோயிலைக் குறிப்பிடலாம்.
நிர்மாணிக்கப்பட்டுப் பன்னிரண்டு ஆண்டுகள் நிறைவுறும் இக்கோயில் பிரித்தானியாவில் மட்டுமன்றி ஐரோப்பிய நாடுகளிலும் நிறுவப்பட்டுள்ள இந்து நிறுவனங்களில் தலையாயது எனக் கணிக்கப்படுகின்றது. வழிபாட்டு நிறுவனம் என்ற வகையில் வாத்திக்கான் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அடுத்து பெரு மெண்ணிக்கையில் பக்தர்கள் கூடும் தென்னிந்தியத் திருப்பதி வெங்கடேஸ்வரருக்கு இணையாக - ஒத்ததாக இக்கோயில் காணப்படுகின்றது. பல ஆயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள தென்னிந்தியத் திருப்பதி வெங்கடேஸ்வரர் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு அரிதாகவுள்ள ஐரோப்பாவில் வாழும் குறிப்பாகப் பெரிய பிரித்தானியாவில் வாழும் பாலாஜி பக்தர்கள் வழிபடுவதற்கு வசதியாகவே இக்கோயில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
பர்மிங்காம் பிரதேசத்திலுள்ள திவிடேல் (Tividale) 21 ஏக்கர் பரந்த நிலப்பரப்பில் 450 அடி நீளமும் 200 அடி அகலமுங் கொண்ட வளாகத்தினுள் மிக இட வசதியுடையதாக

Page 55
இக்கோயில் அமைந்துள்ளது. சமுத்திரம், கடல், ஆறு போன்ற நீர் நிலைகளின் பக்கத்தில் நிர்மாணிக்கப்படும் ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்படும் திருவுருவங்களில் மூர்த்திகரம், இறை சாந்நித்தியம் விசேடமாகச் சிறந்து பொலிந்திருக்குமென்ற இந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு அமைவாகத் தேம்ஸ் நதி பாயும் பக்கம் வடகிழக்காக இவ்வாலயம் அமைந்திருக்கின்றது. திரா விடக் கட்டடக் கலை எனச் சிறப்பித்துப் பேசப்படும் தென்னிந்தியக் கோயிற் கட்டடக் கலைப் பாணியில் மிகப் பிரமாண்டமான அளவில் அருளுணர்வும் ஆன்மீக ஒளியும் பரப்பும் ஓர் ஒப்பற்ற கலைக்கூடமாக இக் கோயில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை மனம் கொள்ளத்தக்கது.
ஸ்பெயின் நாட்டுக் கருங்கற்கள் இந்தியச் சிற்பிகளின் கை வண்ணத்தில் கலை நுணுக்கம் நிறைந்த கோயிற் கட்டடமாக உருவெடுத்துள்ளமை பார்ப்போரை மெய் சிலிர்க்கச் செய்கின்றது. 'கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' என்ற அருள் வாக்கின் படி கம்பீரமாக உயர்ந்து நிற்கும் வாயிற் கோபுரம் வருவோரை எல்லாம் 'வா, வா என அழைக்கின்றது. முதல் வணக்கம் கணபதிக்கே என்ற இந்து வழிபாட்டு மரபின்படி மூலவர் கோயிலின் முன்னரங் கின் வலப் பக்கத்தில் 1999 இல் விநாயகருக்கும் இடப் பக்கத்தில் 2000 இல் முருகனுக்கும்
கோயில்கள் நிறுவப்பட்டுள்ளன.
நேரே உயர்ந்த படிக்கட்டுகளைத் தாண்டிச் செல்ல இரு மருங்கிலும் கலையழகு மிளிரும் இரு வெள்ளை யானைகள் வரும் பக்தர்களை வரவேற்கிறது. தொடர்ந்து மேற்குலகில் திராவிடக் கட்டடக் கலையின் பரம்பலுக்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டாக ஐந்து தளங்களுடன் உயர்ந்து நிமிர்ந்து நின்று எழிலான தோற்றத்தில் இராசகோபுரம்
 
 
 
 
 
 
 
 
 
 

遠。 ញ៉ាញ់
55
காட்சி தருகிறத. இரு மாடிகளைக் கொண்ட மூலவர் கோயிற் கட்டடத்தின் கீழ்ப் பகுதி கோயில் நிர்வாக மண்டபங்கள், அலுவலக அறைகள் என அமைந்திருக்க மேற்தளத்திலே கோயில் அமைந்துள்ளது. பிரதான வாசல் வழியாக உள் நுழைய நின்ற திருக்கோலத்தில் அழகு அலங்காரமும் ஒருசேர வெங்கடேஸ்வரர் தரிசனம் கண்கொள்ளாக் காட்சியாக உள்ளத்தில் பதிந்த விடுகின்றது. மூலவரின் கோயில் 166 அடி நீளமும் 11 அடி அகலமும் உடையதாக அமைய 55 அடி உயரமான விமானத்தின் உச்சியில் கலசம் பொருத்தப்பட்டுள்ளது.
கண்ணாடி போல் பளிங்குக் கற்கள் பதிக்கப்பட்ட கோயிலின் முன் மண்டபம் சுமார் எழுநூறு பக்தர்கள் அமர்ந்திருக்கக் கூடிய விசாலமுடையது. கோயிலின் உள் வீதியில் மூலவருக்கு இடப் பக்கத்தில் அவரின் சக்தியாகிய பத்மாவதி தேவியும் வலப் பக்கத்தில் இராம பக்தனான அனுமனும் தனித் தனி பரிவாரக் கோயில்களில் காட்சி தருகின்றனர்.
உள் வீதியிற் பல இடங்களில் திராவிடச் சிற்பக்கலை மரபில் கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் மரத்தினாலான சிற்பங்கள் நிறைவாகப் பொருத்தப் பட்டுள்ளமை கோயிலின் கலையழகிற்கு மேலும் மெரு கூட்டுகின்றன. இவ்வாறு அளவிலும் அழகிலும் ஐக்கிய இராச்சியத்திலுள்ள மிகப் பிரமாண்டமான கட்டட சிற்பக் கலைப் பெட்டகமாக ஆகம சாஸ்திர விதிகளுக்கமைவாக நிர்மாணிக்கப்பட்ட இக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் 2006 ஆம் ஆண்டு, ஆவணி மாதம் வெகு விமரிசையாக நிறைவேறியது.
பூசை ஆராதனையின் போது, ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் 'ஓம் நமோநாராயணா, ஓம் வெங்கடேஸ்வராய நமஹ' என எழுதப்பட்ட விஷ்ணு நாமங்களும் சுலோகங்களும் அடங்கிய பத்திரம் மண்டபம்
நிறைந்திருக்கும் பக்தர்களிடம் கொடுக்கப்படுகின்றது.

Page 56
ឆ្នាតែងៃទី 塞 56
கொடுக்கப்பட்ட இறை நாமங்களையும் சுலோகங் களையும் எல்லோரும் மென்மையான இனிய இசையில் அட்சரசுத்தியுடன் ஒதுகின்றார்கள். தீபாராதனை இடம் பெறுகின்றது. அந்த இறை நாம சங்கீர்த்தன தெய்வீக ஒலி மண்டபம் முழுவதும் பரவி ஓர் ஆன்மீக அலையாகப் பரந்து எல்லோர் உள்ளத்தையும் உணர்வையும் வெங்கடேஸ்வரரின் தெய்வீகக் காட்சியில் ஒன்ற வைக்கின்றது.
நாராயணனுக்கு முன்பிருந்த அந்த ஒரு மணி நேரமும் உண்மையில் வார்த்தைகளில் வடிக்க முடியாத ஒர் இறையனுபவ உணர்வு நிறைந்த பூரண திருப்தியுடன் பக்தர்கள் கோபுர வாயிலால் வெளியே வருகின்றனர்.
விஷ்ணுவிற்கான இக்கோயிலில் சைவத்தின் முழு முதற் தெய்வமான சிவனுக்கும் தனிக் கோயில் நிர்மாணிக்கப் பட்டு புனித கங்கையில் (Gangotr) இருந்தெடுக்கப்பட்ட சுயம்புலிங்கம், பார்வதி, நந்தி ஆகிய தெய்வ விக்கிரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டு 2010 ஆவணியில் கும்பாபிஷேகமும் மிகச் சிறப்பாக நிறை வேற்றப்பட்டது. கோயில் வளாகத்தினுள் பூரீ ரங்க நாதருக்கும் நவக்கிரகங்களுக்கும் தனித் தனியாகக் கோயில்கள் உள்ளன.
இக்கோயிலில் மகா சிவராத்திரி, நவராத்திரி, சதுர்த்தி, கந்தவுஷ்டி, பூறீனிவாச கல்யாணம், இராம நவமி, அகண்ட விஷ்ணு சகஸ்ரநாமம், இலட்சார்ச்சனை, அனுமன் ஜெயந்தி, தீபாவளி, தமிழ் புதுவருடப் பிறப்பு, தெலுங்கு புதுவருடப்பிறப்பு எனப் பல வகையான பூசைகளும் விழாக்களும் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப் படுகின்றன. இத்திருவிழாக்கள் எல்லாம் பூசை தீபாராதனைகளுடன் நடைபெறுகின்றன. மிகத் தரமான இசைக்கச்சேரி, இந்தியாவிலிருந்து வரவழைக்கப்படும் சிறப்புத் தேர்ச்சி பெற்ற கலைஞர்களின் பரதநாட்டியம், குச்சுப்புடி, கதகளி போன்ற நடன நிகழ்வுகள் வாத்திய விருந்துகள், அனுபூபதி பெற்ற இந்தியச் சுவாமிகளின்
 
 
 
 

உரைகள் போன்றன உள்ளத்திற்கும் உணர்வுக்கும் ஆக்கந் தரும் உன்னதமான நிகழ்வுகளுடனேயே விழாக்கள் நிறைவுறுவது விசேடமாகக் குறிப்பிடப்பட வேண்டும்.
இக்கோயிலில் கடவுள் வழிபாடு அல்லது சமய வழிபாடு என்பதற்கும் மேலாக ஆன்மிகம் என்ற தளத்தில் நின்று செயற்படுகின்றது. இந்து சமயம் உலகிற்கு அளித்த மிகமிகவுயர்ந்த தத்துவங்களை, தர்மங்களை, வாழ்வியல் விழுமியங்களை, மனித நேய ஒருமைப்பாட்டினை அங்கு கூடும் பக்தர்களுக்கும் மிகச் சிறப்பாக ஆன்மிக வாழ்விற்குச் சவால் விடும் உலோகாயுத உலகிற்கு முகம் கொடுத்து வாழ வேண்டிய இளைஞர்களுக்கும் உணர்த்தும் வகையிலேயே கோயிற் செயற்பாடுகள் வடிவமைக்கப் பட்டுள்ளன. இன்றைய இளைஞர்களை நல்வழிப்

Page 57
படுத்துதலே சமயத்தின் முக்கிய இலக்காக அமைய வேண்டுமென்பதே கோயில் நிர்வாகத்தின் தலையாய எண்ணமாக இருக்கின்றது என்பதனை அவர்களின் ஒவ்வொரு செயற்பாட்டிலும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இதற்காக 8 - 21 வயதுக்குட்பட்ட இளைஞர்களை ஒன்று சேர்க்கும்
1. பாலாஜி இளைஞர் குழாம் 2. பாலாஜி இளைஞர் தினம் 3. பாலாஜி இளைஞர் கோடைகால முகாம் 4. பாலாஜி இளைஞர் குளிர்கால முகாம் எனப் பல நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. பல இன, மொழி, மதம் சார்ந்த இளைஞர்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கு கொள்ளும் மேற்படி நிகழ்வுகள் அவர்களைச் சமூகத்தின் நற்பிரஜைகளாக உருவாக்குவதற்காகவே ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. இந் நிகழ்வுகளின் போது இளைஞர்களுக்கு வதிவிடப் பயிற்சியாகத் தியானம், யோகாசனம், இந்து சமயம், இந்து தர்மம் சார்ந்த விரிவுரைகள், அவ் விரிவுரைகள் தொடர்பில் இளைஞர்கள் பங்கு கொள்ளும் விவாத அரங்குகள், விளையாட்டுகள், தலைமைத்துவப் பயிற்சி என அவர்தம் ஈடுபாட்டை அதிகரிக்கும் வகையிலான பன் முகப்படுத்தப் பட்ட முழுமையான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இவற்றின் மூலம் இந்துப் பண்பாட்டின் பாரம்பரியங்களை அவர்கள் உள்ளத்தில் ஆழப் பதித்து நற்பிரஜைகளாக உருவாக வழிகாட்டப்படுகின்றது.
இக்கோயில் இந்து மதத்தவர்களுக்கு மட்டுமன்றி ஏனைய அனைத்துச் சமயத்தினரையும் அரவணைத்துச் செல்லும் உயரிய நோக்குடன் அவர்களின் சமய வழி பாட்டுக்கென ஏழு சமயக் குன்றுகள் என்ற பெயரில் கோயில் வளாகத்தினுள் ஒவ்வொரு சமயத்தவர்களுக்கும் இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வேற்றுமையில் ஒற்றுமை காணும் கோயில் நிர்வாகத்தினரின் மிக முற்
போக்கான செயற்பாடு எல்லோரினதும் ஏகோபித்த
 

& கலைக்கேசரி 57
பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
கோயிலின் ஒரங்கமாகப் பெளத்த கட்டடக் கலைப் பாணியில் இரு பிரார்த்தனை மண்டபங்கள், சமையலறைக் கல்வி, கலாசார நிகழ்வுகள் நடத்தக்கூடிய வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள சமூக மண்டபம் எல்லாச் சமயத்த வரும் தங்கள் தங்கள் கொண்டாட்டங்களை வெகு விமரிசையாகக் கொண்டாடுவதற்குக் கொடுக்கப் படுகின்றது.
ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்கள் தினம் தினம் வருவதனைக் கவனத்திற்கெடுத்து அவர்களுக்குத் திருப்திகரமான சேவையினை வழங்கும் நோக்குடன் சேவை மனப்பாங்குடைய தொண்டர் குழாம் ஏற்படுத்தப்பட்டு நன் முறையில் செயல்படுகின்றது. முக்கிய திருவிழாக்களின் போதும் வார விடுமுறையின் போதும் ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது குறிப்பிடத்தக்கது. கோயிற் தொண்டர் சபையே அன்னதானம் வழங்குதலையும் மிக நேர்த்தியாகச் செய்கின்றது.
கோயில், வழிபாட்டிடமாக மட்டுமன்றி ஆன்மீகம் சேவை, இன, மத, மொழி வேறுபாடின்றி அனைவரையும் அரவணைத்தல் இயற்கையினைப் போற்றுதல் என்ற இந் நான்கு இலக்குகளையும் அடைவதற்காக இளைஞர் களையும் உள்ளடக்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு ஒழுங்க மைக்கப்பட்ட திட்டங்களுக்கு அமைவாகச் செயற்பாடுகள் முன் எடுக்கப்படுகின்றன.
சமய நிறுவனமாயிருந்தும் கோயிலினால் முன் எடுக்கப்படும் சில செயற்பாடுகள் Later. சமூகமொன்றில் சமய, சமூக, கலாசார வேறுபாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வு, ஒற்றுமை, ஒருங்கிணைப்பு சமாதானம் என்பன வளர்ந்து செழிக்க மகத்தான பணியாற்றி வருகின்றமையினைச் சம்பந்தப்பட்டவர்கள் மனந் திறந்து பாராட்டியுள்ளனர்.
- மு. க. மாசிலாமணி

Page 58
ម៉ាញ៉ាម៉ារ៉ៃរឺ 58 நினைவுத்திரை
மருதமலை மாமணியே முரு மதுரை எஸ்.
றிவனார், சிகண்டியார், செயிற்றியனார் என்று தமிழிசை நுணுக்கங்களை தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஈந்த சங்கப் புலவர்களின் தங்கத் தொனி சாகாவரம் பெற்று, அவனி முழுவதும் பவனி வருகின்றது. பண்ணோடமைந்ததே பாட்டு என்பது இலக்கண வித்தகர்களின் கூற்று. ஆயகலைகள் அறுபத்து நான்கிலும், கவினுறு கலைகள் யாவும் குரு சிஷ்ய முறையிலே வளர்ந்து மிளிர்ந்தன என்பதைக் காப்பியங்கள் காவியங்கள் மூலமாகவும் வேறு வழிகளிலும் அறிகிறோம்.
குரு இன்றி எவ்வித்தையும் திருப்பெறாது என்பர். இசைக்கலை இதற்கு விதிவிலக்கல்ல. 40 ஆம் ஆண்டு காலப்பகுதியில் புகழ்பெற்ற இசை மேதை காஞ்சிவரம்
 

கையா' என்று உருக வைத்த
சோமசுந்தரம்
நயினாப்பிள்ளை அவர்களின் நாமம் மிக பிரசித்தமானது. மேடையில் அமர்ந்து ஒரு பாடகர் இசைக்கச்சேரி செய்யும் போது இவர் சுருதி, ஸ்வரம், இராகம், தாளம், பாவம் எப்படி என்பதை ஆராய்ந்தபடியே இரசிப்பார்.
அத்தனையும் மொத்தமாக நயினாப்பிள்ளை அவர்களிடம் அமைந்திருந்தது. இசையார்வம்மிக்க இளைஞன் சித்தூர் சுப்பிரமணியபிள்ளை இவரிடம் குரு சிஷ்ய முறையில் இசைபயின்று வித்துவான் நிலையை அடைந்தார்.
48 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைப்பேராசிரியராயும், யாழிலும் கடமையாற்றியவர். மிகச் சுத்தமாகவும் தெளிவாகவும் பாட வல்லவர். எம் நாட்டு பல இசை ஆசிரியர்களையும் உருவாக்கி புகழ்பெற்றவர். இந்த இசை மேதையிடம் குரு சிஷ்ய பரம்பரையில் வந்த வித்துவானே மருதமலையைத் தந்த மதுரகான வேலன். கவின் கலைகள் பயிலும் மாணவர்களுக்கு இத்தகைய மேதைகளின் ஆற்றல்கள் வழி காட்டுமென்று எண்ணியே நினைவுத்திரையில் மீட்க நேர்ந்தது.
முடிசூடா மன்னனாக இசை உலகில் வலம் வந்த மதுரை எஸ். சோமசுந்தரம் அவர்களே ‘தேவரின் உலகம் காக்கும் வேலையா என்று உருகிய பெரும் வித்துவான் ஆவார். அக் காலத்தில் மும்மூர்த்திகளுடைய தெலுங்கு, சமஸ்கிருதம், தமிழ் பாடல்கள் கச்சேரிகளில் ஒலிக்கும். தெலுங்கு கூடுதல் இடத்தை பிடிக்கும். மதுரையில் நல்ல இசைச்சூழலில் பிறந்து வளர்ந்த சோமசுந்தரம் அவர்களுக்கு இசையே சிறு வயது முதல் வசமாகியது. பத்து வயதுப் பாலகனாய் இருக்கும் போதே தொடையில் தாளம் போட்டு பாடி ஆச்சரியப்பட வைத்த மேதை உள்ளூர் நாதஸ்வர, இசை வித்துவான்களிடம் கற்றதை வைத்து, அசுர பயிற்சியால் நல்ல குரல் வளம் பெற்று இளம் வித்துவானாகப் புகழ் பெற்றவர்.
இவரது விடிகாலைப் பயிற்சியையும் இசைத் துடிப்பையும் மேலும் வளர்க்க மகா வித்துவான் சித்தூர் சுப் பிரமணியபிள்ளை அவர்களிடம் குரு சிஷ்ய முறையில் வாழ்ந்து இசை பயில அனுப்பினர். ஏற்கனவே, பல்லவியிலும் கற்பனாஸ்வரப் பிரயோக முறையிலும் தாளக் கட்டுபாட்டிலும் பிரசித்திபெற்ற குருவிடமிருந்து சகலதையும் மிகக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட சோமு, அக்கால வித்தவான்களைப் பின் தள்ளும் அளவிற்கு
முன்னேறினார்.
இவரே சிறந்த சீடன் என உணர்ந்த குரு மனம் வைத்துப் பாடங்களையும் மெருகூட்டி தன் உடன்பாடும்
வாய்ப்பையும் ஏற்படுத்தியது இவருக்கு பெரும்பேறு

Page 59
ஆயிற்று. டில்லி வரை கச்சேரி வாய்ப்பும் வந்தன. அகில இந்திய வானொலியில் சம்மேளனக் கச்சேரியும் சபா கச்சேரிகளும், இவரில்லத்தைத் தட்டின.
ஊடகங்கள் இவரது படத்தைப் போட்டு பக்கங்களை நிரப்பின. அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைத்துறைப் பேராசிரியர் ஆகும் வாய்ப்பும் கிட்டியது எமது நாட்டு மாணவ செல்வங்களுக்கு ஒரு வரப்பிரசாதமே. தமிழிசைத் தாகம் கொண்டவர்களுக்குக் கேட்கவா வேண்டும் 2 மாரி மழை போல் தமிழ் இசையை வாரி வழங்கினார்.
மதுரைச் சபாவில் மாபெரும் கச்சேரிக்கு ஏற்பாடு இரசிக வெள்ளம் உள்ளங்கனிய 'இன்பமெல்லாம் தருவாயே சுந்தரனாம் சோமசுந்தரன் இங்கிருக்க என்று தன்யாசி இராகத்தில் உருகிப்பாட ஆரம்பித்ததும் ஒரே நிசப்தம். மதுரை சோமசுந்தரப் பெருமானை எண்ணி வித்துவான் சோமு தன்னையும் இணைத்தாரே என்று உருகியவாறு கண்ணிரைத் துடைத்தனர். இப்படி எத்தனையோ சந்தர்ப்பங்கள்.
வருடாவருடம் திருவையாறு இசை உற்சவத்தில் இவர் நிகழ்வு தவறாது இருக்கும். வழமை போன்று விசேட கச்சேரிகளில் குன்னக்குடி வைத்திய நாத ஐயரின் வயலின் பக்கவாத்தியமாக அமையும். தெலுங்குப் பண்டிதர்களிடம் பாடல்களின் கருத்துக்குப் பொருத்தமாகப் பிரித்து இசைகூட்டிக் கீர்த்தனைகளைப் பாடும் முறை சகலரையும் பிரமித்து மகிழ வைக்கும்.
தமிழிசைச் சங்கத்திலும் இவரது மார்கழிக் கச்சேரி நிச்சயம் தவறாது கருத்தாழமுள்ள உருப்படிகள் தேனாய்ப் பாயும். ஈற்றில் இராக மாலிகையில் அமைந்த நாட்டைக் குறிஞ்சியில் என்னும் பாடலும் 'மாடு மேய்க்கும் கண்ணா என்ற தேஷ் இராகப் பாடலும் தவறாது இடம் பெறும். கடின பயிற்சியின் போறாக திரிஸ்தாயி சஞ்சாரம் செய்ய குரல் வளம் இடம்தந்தது.
பல்லவி பாடும் போது சபை நிசப்தமாகும். ஏன்? இராக ஆலாபனை, தாளம் பாடும் வேகம், பல்லவி திரி காலப் பகுதியும், திஸ்ர அமைப்பு, கற்பனாஸ்வரம், குறைப்பு, தீர்மானம், இராக மாலிகையில் ஸ்வரப் பிரஸ்த்தாரம், தாளத்தின் அமைப்பு எல்லாம் அரைமணி நேரம்போவதே தெரியாது மெய் மறக்க வைக்கும்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சூழல் தமிழிசை மேலும் வளர மதுரை சோமு அவர்களுக்கு மாபெரும் உந்து சக்தியானது. வயலின் மேதை குன்னக்குடி வைத்தியநாதன் இவரது உற்ற நண்பராகையால் அவரது இசை அமைப்பில் உருவானதே 'மருத மலை மாமணி என்ற பாடலாகும். முருகன் பெருமையை உணர்த்தும் கந்தன் கருணை கைகொடுத்தது. திரைப்படத்தில் இவரது பாடல் இடம்பெற வேண்டுமென்ற நீண்ட நாள் ஆசையும் தயாரிப்பாளர் சிந்தனையில் உதித்தது.
குன்னக்குடி மேதையின் இசை அமைப்பில் அவரே பக்க வாத்தியமாக முருகன் பெருமை கூறும் 'மருதமலை உதித்தது. கருத்திற்கு பொருத்தமான சொல்லடுக்கு, இசை

喜 កែឆ្នាថ្ងៃ
59
காட்சியமைப்பு எல்லாம் முருகன் சந்நிதியையே முன்னிறுத்தி, பக்தி நிலையை உருவாக்கியது.
அத்தனைக்கும் மேலாக, வழமையான திரை இசை போல் அல்லாமல், சாஸ்திரீய இசை அமைப்புடன், விறுவிறுப்பாகவும் நெகிழ வைக்கும் முறையில், இராகத்தை கையாண்டு இசைத்தர்பாரோ என வியக்க தர்பாரி கானடாவை பல்வித நெளிவு சுளிவுடன் வெளிக் கொண்டு வந்தது அவரது ஆற்றலை முழு உலகமும் புகழ்ந்தது.
இந்துஸ்தானி இசை வித்துவான்கள், பிர்க்கா, கமகம் வைப்பதில் பிரபல்யம் மிக்கவர்கள். அவர்களே இவரது திரிஸ்தாயி சஞ்சாரத்தை மேல்ஸ்தாயியிலேயே பிர்க்கா வைத்துப் பாடியதையும் புகழ்ந்தனர். அவரது கடின பயிற்சி, குருவின் ஆசீர்வாதம், மக்கள் ஆதரவு ஆகியவையே என்னைப் பாடவைத்தது என்று விகடன் பேட்டியில் கூறி மகிழ்ந்தார். அவரது இறுவட்டு, ஒலிநாடா சாகாவரம் பெற்றவை. இசை ஆர்வலர்கள் காதாரக் கேட்டால், இசை பற்றிய நுணுக்கங்கள் அத்தனையும் புரியும். மதுரை சோம சுந்தரம் அவர்கள் ஏராளமான சீடர்களைப் போஷித்து வளர்த்தார்கள். கழுகுமலை கந்தசாமி அவர்களும் சீடர்களில் ஒரவரே.
கலைமாமணி பொன். தெய்வேந்திரன்

Page 60
យងាញថាម៊ឺfi 廖 60 சிறப்புக் கட்டுரை
மறைந்த பேராசிரியர் ச
1932ஆம் ஆண்டு வைகாசி மாதம் 10ஆம் நாளன்று பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி கரவெட்டியில் பிறந்தார். இவர் பிறக்கும் நாளன்று இவருடைய தந்தையார் யாழ்ப்பாணத்தில் யோகர் சுவாமிகளைப் பார்க்கச் சென்றிருந்தார். தந்தையார் பண்டிதர் கார்த்திகேசு அவர்கள் சுவாமிகளிடம் சென்றபோது அவர் 'டேய்! உனக்குச் சிவத்தம்பி பிறந்திட்டானடா, இங்கை என்ன செய்யிறா. ஒடு வீட்ட" என்று கலைத்தாராம். சிவத்தம்பியின் பெயர் வரலாறு இது.
கரவெட்டி விக்கினேஸ்வராக் கல்லூரியிலும் கொழும்பு ஸாகிராக் கல்லூரியிலும் கல்வி கற்ற பேராசிரியர் சிவத்தம்பி இலங்கைப் பல்கலைக்கழகத்திலே தமிழ், பொருளியல், வரலாறு ஆகிய பாடங்களைக் கற்று பொதுக் கலைமாணிப் பட்டம் பெற்றார். பொதுக் கலைமாணிப் பட்டத்துடன் உயர் கல்வியினையோ உயர் உத்தியோகத்தையோ இலகுவாகப் பெற்றுவிட முடியாது. ஆனால் அவருடைய தனித்துவமான திறன்களும் விடா முயற்சியும் உயர் பட்டங்களையும் உயர் உத்தி யோகங்களையும் பெற்றுக்கொடுத்தன. இலங்கைப் பல்கலைக் கழகத்திலே முதுமாணிப் பட்டத்தினையும் பெற்றார். ஐக்கிய இராச்சியத்தில் பர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் உலகப் புகழ்பெற்ற பேராசிரியர் தொம்சனுடைய வழிகாட்டலிலே கலாநிதிப் பட்டம் பெற்றார். வித்தியோதயப் பல்கலைக் கழகத்திலும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் பணிசெய்து தகைசார் வாழ்நாட் பேராசிரியரக ஒய்வுபெற்றார். சுவீடன் உப்சாலாப் பல்கலைக் கழகத்திலும் கேம்பிறிட்ஜ் பல்கலைக் கழகத்திலும் புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்திலும் விரிவுரைகள் ஆற்றினார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம் அவரை உயர் ஆய்வுப் புலமையாளராக அழைத்துச் சிறப்புச்செய்தது. அவருக்குக் கிடைத்த புலமை விருதுகள், பரிசில்கள் பல.
பேராசிரியர் சிவத்தம்பி பல்கலைக் கழகத்திலே ஆசிரியராகப் பணி ஆற்றுவதற்கு முன்னர் அவர் கல்வி கற்ற ஸாஹிராக் கல்லூரியிலே தமிழ் கற்பித்தார். அவரிடம் கற்ற மாணவர்கள்
அ வ ரு  ைட ய
கற் பித்த ல்
 
 
 
 
 
 

- --992 O O கார்த்திகேசு சிவத்தம்பி முகதாஸ் தகைசார் வாழ்நாட் பேராசிரியர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
பற்றி சிலாகித்துக் கூறுவார்கள். சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியில் பாடசாலைகளிலே சினிமாப் பாடல்களை யாராவது படிப்பித்தால் அந்த ஆசிரியரை மற்றவர்கள் மகிழ்வுடன் நோக்கமாட்டார்கள். ஆனால் சிவத்தம்பி தமிழ் இலக்கியச் செய்யுட்களைக் கற்பிக்கும்போது அவற்றுக்கு நிகரான சினிமாப் பாடல்களையும் கூறியபோது தமிழ் எங்களுக்கு இனித்தது' என்று அவரிடம் கற்ற ஜனாப் எம்.எச்.எம். ஜமீல் கூறுவார். 1960ஆம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக் கழகத்தின் முதலாண்டுத் தேர்விலே மூன்று பேர் தமிழ்ப் பாடத்தில் ‘ஏ’ சித்தி பெற்றனர். அவர்கள் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளராக இருந்து ஒய்வுபெற்ற ஜனாப் எம்.எச்.எம். ஜமீல், தற்போது அவுஸ்திரேலியாவிலுள்ள மேர்டோக் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஏ.சி.எல். அமீர் அலி, காலஞ்சென்ற முன்னாள் மன்னார் அரச அதிபர் மக்பூல் ஆகியோராவர். அவர்களுள் முதலிருவரும்
ஸாஹிராக் கல்லூரியில் சிவத்தம்பியிடம் தமிழ் கற்றவர்கள். அடுத்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் ஒருவர் மட்டும் தமிழ்ப் பாடத்தில் ‘ஏ’ சித்தி பெற்றார். அவர் ஸாஹிராக்

Page 61
கல்லூரியில் சிவத்தம்பியிடம் தமிழ் கற்ற கலாநிதி எம்.ஏ.எம். ஸகுக்ரி ஆவார். தமிழை விரும்பிக் கற்காத மாணவர் தொகை அதிகரிக்கும் இந்நேரத்தில் தமிழ் ஆசிரியர்கள், சிவத்தம்பி கல்லூரி ஆசிரியராகத் தமிழ்
கற்பித்த கதையை அறிதல் நன்மை பயக்கும்.
பேராசிரியர் சிவத்தம்பி பாராளுமன்றத்திலே சமகால மொழிபெயர்ப்பாளராகப் பணிசெய்த காரணத்தால் அவருக்கு மொழிபெயர்ப்புத் துறையிலே நல்ல பட்டறிவு ஏற்பட்டது. அதே வேளை அத்துறை தொடர்பான ஆய்வுகளையும் மேற்கொண்டார். இதன் விளைவுதான் அவர் 1966இல் கோலாலம்பூரில் நடைபெற்ற முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிலே மொழிபெயர்ப்புத் தொடர்பாகச் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரையாகும். 瑟
இவருடைய ஆய்வுத் திறனுக்கும் புகழுக்கும் காரணமாயிருந்தது அவருக்கிருந்த மும்மொழிப் புலமையாகும். தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளை அவர் நன்கு அறிந்திருந்தமையால் அவருக்குப் பல வாய்ப்புகள் ஏற்பட்டன. ஆங்கிலம் அவருடைய
ஆய்வுகளை உலகுக்கு நல்கின. சிங்களம் அவருக்குப் பல இலங்கைப் புலமையாளர்களுடன் தொடர்பேற்படுத்த வாய்ப்பளித்தது. அதனுடன் சிங்கள இலக்கியங்களை அறியவும் பெளத்த கலாசாரத்தினை நன்கு தெரிந்து கொள்ளவும் இம் மொழியறிவு அவருக்குப் பெரிதும் உதவியது.
பேராசிரியர் சிவத்தம்பியின் புலமையின் அடிநாதம் வரலாற்றுணர்வும் மரபின் பல்வேறு நெளிவு சுளிவுகளை நன்கு இனங்கண்டிருப்பதுமாகும். எந்த விடயத்தை எடுத்து ஆய்வு செய்தாலும் வரலாற்றுணர்வும் மரபின் போக்கும் அந்த ஆய்வினை வழிநடத்திச்செல்வனவாக அமைவதைக் காணக் கூடியதாக இருக்கும். இவற்றுக்குப் பக்கத் துணையாக அமைவது அவர் கையாளும் சொற்களும் சொற்றொடர்களும். தமிழ் நாட்டு இளைஞர்கள் பலர் இவருடைய ஆய்விலே ஈடுபாடு கொண்டமைக்கு இவர் கையாண்ட புதுமையான ஆனால் பொருத்தமான கலைச்சொற்களேயாகும். பேராசிரியருடைய சொற்புனைவு அவருடைய எழுத்துக்களுக்குக் கனதியைக் கொடுத்தது.
தமிழ் இலக்கியம், தமிழர் பண்பாடு, தமிழ் இலக்கிய விமரிசனம் தமிழ் நாடகம் பற்றி உலகில் எங்கெல்லாம் ஆய்வுகள் நடைபெறுகின்றனவோ அங்கெல்லாம் பேசும் பொருளாகப் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியினுடைய எழுத்துப் பணியும் உடனிருக்கும். இத்தகைய உலகப் புகழுடன் எங்களுடன் வாழ்ந்து கொண்டிருந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி.
இவரிடம் கற்ற மாணவர்களும் கற்காத மாணவர்களும் இவரைத் தங்கள் ஆசிரியராகக் கொள்ளும் வழக்கம் உண்டு. வித்தியோதயப் பல்கலைக்கழகத்திலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் திரு.சிவத்தம்பியிடம் கற்றவர்கள் இருக்கின்றனர். ஆனால் பேராசிரியர் மெளனகுருவோ,
 
 

சுந்தரம் டிவகலாலாவோ, க. சண்முகலிங்கமோ, கலாநிதி
தணிகாசலம்பிள்ளையோ, கலாநிதி மனோன்மணிமே நானோ அவரிடம் கற்றதில்லை. நாங்கள் எல்லோருமே பேராதனைப் பல்கலைக் கழகத்தில் படித்தவர்கள் பேராசிரியர் கைலாசபதியிடம் கற்றவர்கள். நாங்கள் எல்லோருமே பேராசிரியர் சிவத்தம்பியை எங்கள் ஆசிரியராக நினைத்து வருகிறோம். இது கற் பேரறிஞர்களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்பா
இதனாலேதான் இவரை ‘எங்கள் பிதாமகர் குறிப்பிடுகிறோம். ஆனால் 'எங்கள் பிதாமகன தமிழ்நாட்டிலுள்ள சிலரும் தங்கள் பிதாமக == கொள்ளும் சிறப்புத்தான் பேராசிரியர் சிவத்தம்பியின் உட சிறப்பாக அமைகின்றது. நாம் திசைநோக்கித் தொழுகின்ற வழக்கமுடையவர்களல்லவா? "எந்தரோ மஹானுபாவலு அந்தரீக்கு வந்தனமு" சொல்லும் மரபுடையவர்கள் நாம் இதிலிருந்து பேராசிரியர் சிவத்தம்பியும் தப்பமுடியாது. இப்பொழுது விண்ணை நோக்கித்தான் நாம் தொழவேண்டியுள்ளது.
பேராசிரியர் சிவத்தம்பியின் பலம் இருந்தட இருந்ததுதான். கல்லடிகள் போன்று எத்தளை சொல்லடிகள் விழுந்தாலும் இருந்தபடி இருக்கின்றன. எல்லோராலும் முடியாது.
'காய்த்தமரம் ஆதலினால்
கல்லெறிகள் பட்டவன்நி கல்லால் எறிந்தவர்க்கும்
கனிகொடுத்த பழமரம்நீ
என்று இவருடைய மாணவன் GLエー千_千 சிவலிங்கராஜா தன்னுடைய ஈழத்து செல்நெறிகள் என்னும் நூலைப் பேராசிரியருக்குக் காணிக்கையாக்கி எழுதிய கவிதைதான் இச்சந்தர்ப்பத்தில் என்னுடைய நினைவுக்கு வருகின்றது. இவருடைய இருப்பை அசைக்கப் பலர் முயன்றுள்ளமை சில வேளை
வெளியுலகுக்குத் தெரியாமல் இருக்கலாம். இவற்றுக்கு

Page 62
GOGO, (Bësëlin & 62
மேலாக நின்று ஒளிர்பவர்கள்தான் பேரறிஞர்கள். கல்லாநிதிகள்’ என்று சொன்னவர்களின் வாய்கள் தான் வெந்தனவேயொழிய, கலாநிதிகள் என்றும் கலாநிதிகளாக இருந்து வருவதற்கு உலகம் இன்றும் சாட்சியாக இருந்து வருகின்றது.
பேராசிரியர் சிவத்தம்பிக்கு வாய்ப்பாக இருந்தவற்றுள் ஒன்று அவருக்கிருந்த கொம்யுனிஸ்ட் கட்சிச் சார்பு ஆகும். கொம்யுனிஸ்ட் கட்சிச் சார்பு அவர் எழுத்துக்குச் சித்தாந்தத்தை நல்கியது. அதனுடன் ஒரு பரந்துபட்ட நண்பர் கூட்டத்தைக் கொடுத்தது. கருத்துக்கள் உதிரிகளாக இருப்பின் விளங்கிக் கொள்வது இலகுவாயிராது. அவை ஒரு சித்தாந்தப் பின்புலம் கொண்டவையாயின் மிக இலகுவாக விளங்கிக் கொள்ளமுடியும். இதுதான் அவருடைய எழுத்துக்களுக்கு மிகுந்த மதிப்புக்கிடைக்கக்
காரணமாயிற்று.
அவருடைய புலமைசார் திறமை குறித்துப் பல விடயங்களைக் கூறலாம். அவற்றுள் ஒன்று மிக விதந்து கூற வேண்டியுள்ளது. மரபு வழியான பண்டைய இலக்கியங்களை நவீன அரசியல், சமூகச் சிந்தனைகளின் அடிப்படையிலே நோக்கும் ஒரு திறன் அவரிடம் இருந்தது. அவர் சங்க இலக்கியங்கள் மற்றும் தொல்காப்பிய இலக்கணத்தையும் நுணுக்கமாக நோக்கியுள்ளார். இந்த வகையில் அவருடைய திணைக் கோட்பாடு பற்றிய ஆய்வினைக் குறிப்பிடலாம். தொல்காப்பியருடைய திணைக் கோட்பாடு வெறுமனே இலக்கியக் கோட்பாடு அல்ல, அது சமூக அசைவியக்கத்துடன் நெருங்கிய தொடர்புடையது என்பதைத் தெளிவாக அறிவுலகத்துக்கு அவர் தன்னுடைய எழுத்துக்களுடாகப் புலப்படுத்தினார். இதுபற்றி பேராசிரியர் நா. வானமாமலை பின்வருமாறு கூறுகிறார்: திணைக் கோட்பாட்டைப் புவியியல் பிரிவோடும் ஒவ்வோர் இலக்கிய மரபை இணைத்துச் சில
ஆய்வாளர்கள் ஆராய்ச்சி நடத்தியுள்ளார்கள். ஆனால்
 

சங்ககாலத் தமிழகத்தின் சமுதாய வளர்ச்சி நிலைகளை ஒருவழிப்போக்கான (Unilateral development) சமுதாய வளர்ச்சி விதியின் அடிப்படையிலும், அதே விதியின் செயல்பாடு ஒவ்வொரு புவியியல் சூழலுக்கேற்ற முறையில், அச்சூழலைத் தம் வாழ்க்கைக்கு ஏற்றபடி மாற்றியமைத்துக் கொள்ள மனிதர் பயன்படுத்திய உற்பத்திச் சக்திகளோடும், அறிவியல் திறமைகளோடும் தொடர்பு உள்ளது என்பதையும், இவ்விரண்டு சக்திகளிலுள்ள வேறுபாட்டால், ஒவ்வொரு புவியியல் பகுதியிலும் வளர்ச்சி விகிதம் வேறுபட்டிருப்பதையும், ஒரே காலத்தில் வேறுபட்ட நிலைகளில் காணப்படும் பண்பாடுகளையே திணைகளாக, இலக்கிய மரபுகளாகத் தொல்காப்பியர் அமைத்தார் என்பதையும் இவ்வாசிரியர் மார்க்சீய வெளிச்சத்தில் நிரூபிக்கிறார். பேராசிரியர் சிவத்தம்பியின் இலக்கியம்,விமரிசனம், வரலாறு, முறையியல் தொடர்பான கோட்பாடுகளுள் திணைக் கோட்பாடும் ஒன்றாகும்.
அவருடைய இன்னொரு கோட்பாடு தமிழில் இரண்டாவது பக்தி யுகம் பற்றியதாகும். பக்தி இலக்கியங்கள் பெருந் தொகையாகத் தோன்றிய பல்லவர் காலம் பற்றியே நாம் பெரிதாகப் பேசுவதுண்டு. அது தனித்துவமானதொன்று எனக் கொள்ளும் வேளையில், பேராசிரியர் சிவத்தம்பி, தமிழிலே ஓர் இரண்டாவது பக்தி யுகமும் நம்மிடமுண்டு என்னும் கருத்தினை முன்வைத்தார். முதலாவது பக்தி யுகத்திலே சிவனும் திருமாலும் பாட்டுடைத் தெய்வங்களாக இருந்தனர். ஆனால் சோழப் பெருமன்னர் காலத்துக்குப் பின்னர் தோன்றிய பக்திப் பாடல்களிலே முருகனும் அம்பாளும் பாட்டுடைத் தெய்வங்களாக அமைகின்றனர். குமரகுருபரர், அருணகிரியார், அபிராமிப்பட்டர் போன்றோருடைய பாசுரங்களை இச் சந்தர்ப்பத்தில் நாம் நினைத்துப் பார்க்கலாம். சோழர்காலக் காவிய மரபிலேயே கச்சியப்பருடைய கந்தபுராணத்துடன் மாற்றம் ஒன்று ஏற்படுகின்றது. குமரக் கடவுள் சங்க காலத்தின் பின்னர் இக்காலத்திலே முக்கியத்துவம் பெறுகின்றார். இரண்டாவது பக்தி யுக இலக்கியங்களிலே இன்னொரு பண்பும் காணப் படுகின்றது. சோழர் காலப் பிற்பகுதியிலே மெதுவாகத் தோற்றம் பெற்ற சைவ சித்தாந்தக் கருத்துக்கள் இக்கால இலக்கியங்களிலும் செல்வாக்கினைச் செலுத்த முற்பட்டன. இவ்வாறு இரண்டாவது பக்தி யுகம் என்றொரு கோட்பாட்டினை முன் வைத்ததால் அது நுண்ணாய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
பேராசிரியர் சிவத்தம்பி நாடகத் துறைக்கு ஆற்றிய பங்களிப்பினை இங்கு விவரிக்க வேண்டியுள்ளது. அரை நூற்றாண்டுக்கு முன்னர் மிகச் சிறந்த நாடக நடிகராக விளங்கியவர் சிவத்தம்பி அவர்கள். இலங்கை வானொலியிலே
'விதானையார் வீடு' என்னும் தொடர் நாடகம்

Page 63
அக்காலத்திலே நடைபெற்றுக் கொண்டிருந்தது. விதானையாராக அதிலே நடித்து வானொலி ரசிகர்களைக் கவர்ந்தவர். பின்னர் பல்கலைக் கழகத்திலே பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை எழுதிய 'உடையார் மிடுக்கு நாடகத்திலே உடையாராக நடித்துப் பாராட்டுப் பெற்றவர். நாடகங்கள் பலவற்றை நெறிப்படுத்தி மேடையேற்றுவதிலும் பேராசிரியர் தன் பங்களிப்பினைச் செய்துள்ளார். நாட்டார் கலைகளை மீட்டெடுக்கும் பணியிலே பேராசிரியர் சு.வித்தியானந்தன் ஈடுபட்டபொழுது அவருக்கு உதவியவர்களுள் இவரும் ஒருவராவார். கூத்து நூற் பிரதிகளை அச்சிட்டு வெளியிடுவதில் பண்டிதர் வீ.சீ.கந்தையா, சு.வித்தியானந்தன் ஆகியோர் ஆர்வங் காட்டினர். பேராசிரியர் சிவத்தம்பி மார்க்கண்டன் வாளபிமன் நாடகப் பிரதியினை நூலாகப் பதிப்பித்து 1963இல் வெளியிட்டார். நாடகத்திலே ஈடுபாடு கொண்ட சிவத்தம்பி நாடகத்திலேயே தன்னுடைய
கலாநிதிப் பட்ட ஆய்வினையும் மேற்கொள்ள எண்ணினார். 1963இல் பேராசிரியர் க. கைலாசபதி பர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் ஜோர்ஜ் தொம்சனுடைய வழிகாட்டலில் தமிழ் - கிரேக்க வீரயுகப் பாடல்களை ஒப்பிட்டு ஆராய்வதற்குச் சென்றார். பேராசிரியர் சிவத்தம்பியும் தமிழ் நாடக வரலாறு தொடர்பான தனது ஆய்வினை அதே பேராசிரியரின் வழிகாட்டலிலே மேற்கொள்வதற்கு 1968இல் இலண்டன் பயணமானார். Tamil Drama in Ancient Tamil Society (LIGóTGOLL 5L6b5. சமூகத்தில் நாடகம்) என்னும் விடயத்தினை ஆராய்ந்து கலாநிதிப் பட்டம் பெற்றார். நாடகமும் அரங்கியலும் என்னும் கற்கைநெறியினை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலே அறிமுகப்படுத்தி அதனைக் கற்பித்தார். அதனுடன் நுண்கலை என்னும் கற்கைநெறியினை அறிமுகப்படுத்துவதிலும் பேராசிரியர் பெரிதும் பங்களித்தார். இன்று பெருந் தொகையான தமிழ் மாணவர்கள் இக்கற்கை நெறிகளைக் கற்கின்றனர்.
தமிழ்ச் சினிமாவினுடைய அரசியல் பற்றி முதன்முதலாக விவரமாக ஆராய்ந்து பேராசிரியர் சிவத்தம்பி தமிழ்ச் சமூகமும் அதன் சினிமாவும் (1983) என்னும் ஒரு தனிப்பொருள் விரிவாய்வினை வெளியிட்டுள்ளார். இவ்வாய்வில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் தமிழ்த் திரை உலகுக்கும் இடையே இருந்த தொடர்பு நோக்கப்படுகின்றது. தி.மு.க. அரசியலுக்கும் தமிழ்நாட்டுச் சினிமாவுக்குமிடையே இருந்த ஊடாட்டம் தமிழ்நாட்டு அரசியலை எவ்வாறு பாதித்தது என்பதை அறியக் கூடியதாயுள்ளது. இப்பொருளுடன் தொடர்புடையதாக திராவிட இயக்கத்தின் தோற்றம், வளர்ச்சி விரிவாகவும் நுணுக்கமாகவும் விமர்சன நோக்கில் இன்னொரு நூலிலே கூறப்படுகின்றது. அந்நூல் திராவிட இயக்கக் கருத்து நிலையின் இன்றைய பொருத்தப்பாடு ஒரு வரலாற்று
 

ឆ្នាអ្វីទីក្រៅ
63
উঠে ଛୁଞ୍ଜ நோக்கு (1999) என்பதாகும். கருத்துக்கள் முன்னர் வெளிவந்த Understan Dravidian Movement Problems and Perspec என்னும் ஆங்கில நூலிலேயும் விவரிக்கப்பட்டு
நிறைவாக, பேராசிரியர் சிவத்தம்பியின் முக் --
எழுத்துக்களை மாணவர்களுடைய 赣 நிரைப்படுத்திக் காட்டுவது பயனுடையதாகுமென எண்ணுகிறோம். --
1. சங்ககால வரலாறும் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும் (2004
சங்க இலக்கியம் கவிதையும் கருத்தும் (2009) பண்டைத்தமிழ்ச் சமூகம் வரலாற்றுப் புரிதலை நே பண்டைத்தமிழ்ச் சமூகத்தில் நாடகம் (2005) * தொல்காப்பியமும் கவிதையும் (2007) தமிழின் கவிதையியல் (2007) 7. தமிழில் இலக்கிய விமர்சனம் (1987) 8. தமிழில் விமர்சன சிந்தனைகள் (2001) 9. தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் (1966) 10. நாவலும் வாழ்க்கையும் (1978) S. 11. தமிழில் இலக்கிய வரலாறு (1988) 12. உலகத் தமிழிலக்கிய வரலாறு (2005) 13. ஈழத்தின் தமிழிலக்கியச் சுடர்கள் (2010) 14. தமிழிலக்கியத்தில் மதமும் மானுடமும் (1983) 15. யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக்கொள்ளல் (1993) 16. அரங்கு ஒர் அறிமுகம் (1999)
மேலே தரப்பட்டுள்ளது பேராசிரியருடைய
முழுமையான நூற்பட்டியலல்ல. பல்தரப்பட்ட
6
மாணவர்கள் அவசியமாகப் பாரக்கவேண்டிய நூல்களை மட்டும் இங்கு தந்துள்ளோம். தமிழியல் துறை வளர்ச்சிக்கு அளப்பரும் பணியாற்றிய பேராசிரியர் சிவத்தம்பி 06.07.2011 அன்று தன்னுடைய புகழுடலை நம்மிடையே விட்டு 'காலம் ஆகிவிட்டார். அவருடைய ஆய்வுகளை நம்முடைய இளைய சந்ததி கற்று புதிய ஆய்வுகளை மேற்கொள்ள நாம் வழிகாட்டினால் அதுவுே பேராசிரியருக்கு நாம் செலுத்தும் மிக உயர்ந்த அஞ்சலியாகும்.
కళ

Page 64
கண்ணுக்கு மையழகு
மிழர் வாழ்வில் பெண்கள் அன்று தொட்டு இன்று
வரை நவரத்தினங்கள் பதித்த ஆபரணங்கள்
கொண்டும், தங்க அணிகலன்களைக் கொண்டும், இயற்கைப் பொருட்கள் கொண்டும் தங்களை அழகுபடுத்துவதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள் என்றால் அது மிகையாகாது. ஒருவருடைய முகமே முதலில் பார்வைக்கு தோன்றுவது. எனவே அழகு என்றாலே முதலில் முகத்தோற்றமே முக்கியமானதாகக் கருதப்படும். பெண்கள் தமது கண்களின் அழகு தோற்றத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அவர்கள் தங்கள் கண்களை அழகு படுத்துவதற்காகவும், தங்கள் கண்களைப்
பாதுகாப்பதற்காகவும் பல இயற்கை வழிமுறைகளை
 

காலங்காலமாகப் பின்பற்றி வந்திருக்கிறார்கள். அத்துடன் இதிகாசங்கள், புராணக் கதைகள் போன்ற பழந்தமிழர் இலக்கியங்களிலும், நாட்டுப்புற, கிராமியப் பாடல்களிலும் உள்ள அடிகளில் இருந்தும் கண்ணுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் எமக்குத் தெரிய வருகிறது.
நெய் திரள் நரம்பின் தந்த மழலையின் இயன்ற பாடல் தைவரு மகரவீணை தண்ணுமை தழுவித் தூங்க கைவழி நயனம் செல்ல கண்வழி மனமும் செல்ல ஐயந்தண் இடையர் ஆடும் ஆடக அரங்கு காண்பீர் கம்பராமாயாணத்தில் 'இனிமையான பாடலும், மகர வீணையின் இசையும் பொருந்தி இசைக்கும் போது, நடனம் ஆடுகின்ற மங்கையின் கை செல்கின்ற வழியிலே கண் செல்ல, கண் செல்கின்ற வழி பாவம் விளங்க, அவ்வழியில் அவளது மனமும் செல்ல, அழகிய இடையுடைய பெண்கள் ஆடும் அரங்குகள் இருந்தன’ என்கிறான் கம்பன். மேலும் "அயோத்தி மாநகரில் ஆடல் அரங்குகள் இருந்தன என்றும், அவற்றில் மடந்தையர் ஆடும்போது, அவர்களின் வேல் போன்ற கண்களின் வீச்சு, காமம் மிகுந்த இளைஞரின் நெஞ்சத்தை உருக்கும். அவர்களின் உயிர்களோ அப்பெண்களின் இடை போல் தேயும். ஆனால் ஆசை மட்டும் வளர்ந்து கொண்டே செல்லும்’ என்பதை கம்பன் இவ்வாறு மிக அழகாகச் சொல்கிறான்.
வ்கிடை மடந்தையர் ஆடுவார் அவர் கருங்கடைக் கண் அயில் காமர் நெஞ்சினை உருங்குவ் மற்று அவர் உயிர்கள் அன்னவர் மருங்குல் போல் தேய்வன் வளர்வது ஆசையே மேலும் இராமன், சீதை ஆகியோரின் உணர்வோடு
ஒன்றிய சந்திப்பை கீழ்க்கண்டவாறு கம்பன் உரைக்கிறான். இதில் இருந்தும் பழங்காலத்தில் கண்ணுக்கு இருந்த முக்கியத்துவம் புலப்படுகின்றது.
கண்ணொடு கண் இணை கவ்வி ஒன்றை ஒன்று உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் பழைமையான இலக்கியங்களில் பெண்களின் முகம், விழி, இடை மற்றும் மார்பு ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. பெண்ணின் முகத்தை நிலவு, மலர், நதி, இயற்கை போன்றவற்றுக்கு ஒப்பிட்டிருப்பதையும் நோக்கக்கூடியதாக உள்ளது.
மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வாண்முகத்தைப் பங்கயமென் றெண்ணிப் படிவண்டைச் செங்கையால் காத்தாள்; அக் கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே வேர்த்தாளைக் காண்/ மலரைக் கொய்பவளாகிய ஒரு பெண்ணின் ஒளி வீசும் முகத்தைச் செந்தாமரை மலர் என்று கருதி மொய்க்கின்ற வண்டுகளை, அவள் தனது செந்நிறமான கையால் தடுத்து நின்றாள். அக்கைகளையும் காந்தள் மலர் எனக் கருதி வண்டுகள் மொய்த்தன என நளவெண்பாவில்
கூறப்பட்டதில் இருந்து பெண்களை மலருக்கு

Page 65
ஒப்பிட்டமை நன்கு புலனாகிறது. 'காக்கா காக்கா! கண்ணுக்கு மை கொண்டு வா’ போன்ற வாய் மொழி இலக்கியங்கள் ஊடாகவும், நாட்டுப்புறப் பாடல்கள் மூலமாகவும் கண்ணின் முக்கியத்துவம் நன்கு புலப்படுகிறது.
காதலின் முக்கியமான அடையாளமாகவும் கண் கருதப்படுகிறது. கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை. என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏர்னின்னும் பேசவில்லை, கண்ணுக்கு மையழகு. கவிதைக்கு பொய்யழகு. அவரைக்கு பூவழகு. அவருக்கு நான் அழகு போன்ற தற்கால சினிமாக் கவி வரிகளைக் கூட உதாரணமாகக் கூறலாம்.
அக்காலம் முதல் இக்காலம் வரை பெண்களின் கண்களை கயல், வில், வாள் போன்றவற்றுக்கு ஒப்பிட்டுப் பேசும் வழக்கம் காணப்படுகிறது. பழங்காலத்தில் பெண்கள் தங்கள் கண்களைப் பாதுகாப்பதற்கும், அழகு படுத்துவதற்கும் குளிர்ந்த நீரையும், இயற்கையான முறையில் செய்யப்பட்ட கண் மையையும் பயன்படுத்தி வந்தார்கள்.
இயற்கையான முறையில் செய்யப்படும் கண் மையை சிறுவர் முதல் பெரியவர் வரை, ஆண் பெண் வேறுபாடின்றி இட்டு வந்தமையை நாம் அறிந்து கொள்கிறோம். ஆரம்ப காலங்களில் பாதுகாப்பிற்காகப் பூசப்பட்ட கண் மையானது, பின்னர் அழகிற்காக இடப்படும் வழக்கமாக மாறியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. மருத்துவக் குணங்கொண்ட கரிசலாங்கண்ணி விதையை எடுத்து, அதை நன்றாக வறுத்துப் பொடியாக்கி, அதனுடன் சுத்தமான எள் கொண்டு செய்யப்பட்ட நல்லெண்ணெய் கலந்து, இளம் சூடான நெருப்பில் பதமாகக் கலந்து தூய்மையான கண் மை தயாரிக்கப்படும்.
கரிசலாங்கண்ணியானது நிறைந்த மருத்துவக் குணங் கொண்ட ஒரு செடியாகும். நல்லெண்ணெய் என்பது உடலை குளிர்மைப் படுத்தக் கூடிய ஒன்றாகும். எனவே கரிசாலாங்கண்ணியும், நல்லெண்ணெயும் ஒன்று சேர்ந்து
கண்களுக்குக் குளிர்ச்சியையும், பாதுகாப்பையும் கொடுக்கும். கண் மையை கண்களின் கீழ் இமை மற்றும் மேல் இமை ஆகிய இரண்டு இமைகளுக்கும் பூ வேண்டும். இரண்டு இமைகளும் ஒன்றோடு ஒன் சேரும்போது கண்கள் சிறப்பாகப் பாதுகாக்கப்படும் என்பதே காரணம் ஆகும்.
பொதுவாக நாதஸ்வரக் கலைஞர்கள், தவி கலைஞர்கள் ஆகியோர் கண்களுக்கு கண் மை பூசும் வழக்கத்தைக் கொண்டவர்கள். காரணம் என்னவெனில்; தாங்கள் வாசிக்கும் தவில், நாதஸ்வர இசைக்கேற்றவாறு கண்களைப் பாவத்துடன் அசைத்து அழகாகத் தோன்றுவ தற்கும், சூழலிலுள்ள மாசுக்களில் இருந்து தங்கள் கண்களை பாதுகாப்பதற்குமே ஆகும்.
தற்காலத்தில் உள்ள அழகு நிலையங்களில் கண்களின்
கீழ் உள்ள கரு வளையங்களை நீக்குவதற்காகவும்,
 
 
 
 

& கலைக் &&#ff
65
கண்களுக்கு புத்துணர்ச்சி கொடுப்பதற்காகவும் பல்வேறுபட்ட வழிமுறைகளைப் பின்பற்றி வருகிறார்கள். 'கண்களுக்கு அடியில் செய்யப்படும் மசாஜ், குளிர்ந்த நீரில் பிழிந்த சுத்தமான பஞ்சை மூடிய கண்களின் மேல் வைப்பது, வெள்ளரிக்காய்த் துண்டுகளை மூடிய கண்களின் மேல் வைப்பது, தேவையான சந்தர்ப்பங்களில் அளவான மேக்கப் போன்றவற்றைக் கூறலாம்’ என்கிறார்கள் அழகுக் கலைஞர்கள்.
'சத்தான உணவு, பால், இயற்கைக் காய்கறி மற்றும் கனி வகைகள், தேவையான அளவு ஒய்வு, நல்ல தூக்கம், சுத்தமான காற்று, அளவான உடற்பயிற்சி முதலியனவும் மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதுடன் கண்களையும் அழகாக்கும்’ Ꮆ ᎢᎧᎼᎢ வைத்தியர்கள் கூறுகிறார்கள்.
ஆகவே வாழ்விலக்கணத்தை உலகிற்குக் கொடுத்த வள்ளுவன் கண்ணோடு கண் நோக்கும் போது வாய்ச் சொற்களுக்கு என்ன பயன் இருக்க முடியும் என்பதை,
கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல என அழகாக எடுத்துரைப்பதில் இருந்து கண்ணுக்கு உள்ள முக்கியத்துவம் நன்கு புலப்படுகிறது. எனவே கண் களை அழகாகவும், ஆரோக்கியமாகவும் பேணுவோம்.
- பிரியங்கா

Page 66
மேலதிக தகவல்களுக்
 

" விருது வென்ற யாழ் மன்
ற்கு சிறு விளம்பரதாரர்களை அன்புடன் வரவேற்கிறோம்!
*ளும் முற்றிலும் SIGUGLIEFD
藝。
Connect with Jaffna
mann.Ik

Page 67
*_r / "-" "-" "-" - 그 — — — —~~~~ ~ ~ __,--
*
(Rossogo Tso & -/6,
¿-/OOOoo@@@főisposo
曼
ŪĶŪ199€ 1,91‰)
*g|-
¿-/OOOZ, QD QQŪőılç09ft), JZI d信唱垣信hTTIs 信唱唱唱 ĢģĶĒgig hollsmaņols @Ų@mssing ĢĪhņIIae This -/ooooooool's
(Roscopo , Isso 8-79, og
 
 

LLLLLL LLLLL LLLLLLLSLLLLS 0LLKK LLLL 00 LLSYLLLL LLLLL S0LLKS
suuooo exue||os|^^^^^^ :qılı9$$rn100909@ Ç6ỹ 06ç ZILO :Q9oqiaocoolJoão) 8 – 96ç £çç ZILO ogong)ɑ900911@e) LLZ Zçç ZILO :fırıđicơ9f@ 61109T-G Z87 G/9 € / /O (1XƏL/||2O
opuj(woluoj)mongwuodao:!uwun.wap.offs
NA
Įılmáis spulsoņu-a Åo||od əJIT əund
旧 Ở 靛 ry 任 為 靛 详 Ç > 滑雪
*
(koosooo , Iso so-//logo osigoo ŋƆŋos)
; /^^^o-(1) Qs){TjóII000€, IZNI

Page 68
識
8.
thւ 05
கொ
ய் li fuq LA, B,
NinelelisCare, com
(
ய்
த்தை,
WAWA.
舞辭隸
மண்டல
靈
55/1, փմ
Printed and published by Express Newspapers (Ceylon)(F
 
 
 

கர்ப்பகாலத்திலும் பிரசவத்திற்கு
பின்னரும் தாயின் ஆரோக்கியத்தை பணுவதிலும் கருக்கட்டலுக்கான
嶺 சாத்தியக் கூறுகளையும் (Sub Fertility)
அக்கருக்கட்டலுக்கான(IVF) சாத்தியக்
கூறுகளையும் வழங்குவதன் மூலமும்
தொடர்ச்சியாக இனப்பெருக்க காலத்தின் பின்னரும் எமது தொழில்நுட்பத்திறன்களினுடாக எல்லா வயதுடைய பெண்மணி
களையும் பராமரிக்க நைன் வெல்ஸ்
ஆகிய நாங்கள் பொறுப்பாகவுள்ளோம்.
Pvt) Ltd, at No. 185, Crandpass road,Colombo -14, Sri Lanka.