கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செங்கதிர் 2011.04
Page 1
Sayeaud Sai
Page 2
бов е боротестаро நிறைவினை முன்னிட்டு வேல் அமுதன் பாரிய சேவை கட்டணக் குறைப்பு
விபரங்களுக்குத் தனிமனித நிறுவனர் “சுயதெரிவு முறை முன்னோழ மூத்த, புகழ்பூத்த, சர்வதேச, சகலருக்குமான திருமண ஆலோசகர்/ஆற்றுப்படுத்துநர் குரும்பசிட்டியூர், ல் அமுதனுடன் தங்கள், புதன், வெள்ளி ா, சனி, ஞாயிறு நண்பகலிலோ தயங்காது
தொடர்புகெ ள்ளலாம் :
8.3.3 மெற் றாமாழமனை (வெள்ளவத்தை காவல்
நிைலயத்திற்கு எதிராக, நிலப்பக்கம், 33 ஆம் ஒழுங்கை வழி) 55ஆம் ஒழுங்கை, வெள்ளவத்தை, கொழும்பு-06.
கல்மண்மக்கள் தெரிவுக்குச் சுயதெரிவு முறையேT
கோன்னத மணவாழ்வுக்குக் குரும்பசிட்டியூர்
மாயெழு வே:
தோற்றம் 30.01.2008
(40
சித்திரை 2011(தி.வ.ஆண்டு-204
ஆசிரியர்:
செங்கதிரோன்
GBIT.(3Luf/TP -065-2227876 O77-2602634
LfloorGoT(6586) / E.mail
Senkathirgopalagmail.com
துணை ஆசிரியர்: அன்படிகன் குளும்ை
இலட்சியம் இல்லாமல் இலக்கியம் இல்லை
பெருக்குவோம் - 22
* ஆபிரிக்க பெண்கள்
பன்டக்கும் இலக்கியம்
* தம்பிலுவில் தமிழ்ப்புலவர்
அலாவுதீன்களின் 10 *அற்புதீளக்கு 10
சுழற்சிமுறை ஓயாது
O சீச்சி. (குறும்பாக்கள்) 4)
ாட்டார் பாடல்களில்
() တ္တိနှီဒ္ဓါဓါနီီ၊uနီ "လှီနှီနိ 9 சொல்வளம்
கதைகூறும் குறள் - 19
Eb 605
o இடி முழக்கம் மின்னல் மழை 05
(மொழிபெயர்ப்பு)
தொலைபேசிTP 0777492861|ஒரு நண்பனின் கதை
LfairgOT(6586)/E.mail - (சிறுகதை)
croos aGDyahoo.com 9 ஆளுமை (குறுங்கதை) 38
மீண்டும் ତ୍ର ଓ காதல் கதை 4S
தொடர்பு முகவரி (தொடர் நாவல்)
செங்கதிரோன்
ಸ್ಪ್ರತಿಹತ್ಥಞ್ಞಂ॥ ஆசிரியர் பக்கம்
19, மேல்மாடித் தெரு, 编 爱,酸
மட்டக்களப்பு, 9 அதிதிப் பக்கம் 03
இலங்கை. «» Lugilea (15
Contact : 6 விளாசல் வீரக்குட்டி 42
Senkathiron T.Gopalakrishnan || 0 öğślif(ypaslið 43
19, Upstair Road, 0 பகிர்வு S0)
Batticaloa, 录
Sri lanka. 6 வானவில்
&áŝasfi]a56ßä@ @äÃOMINGJGARMADAĞ
(1) செங்கதிர்சித்தி ை20
Page 3
ஆசிரியர் பக்கம்
“செங்கதிர் வாசகர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
நாவல் - சிறுகதை - கவிதை - நாடகம் - ஆய்வு - சிறுவர் இலக்கியம் மற்றும் பல்துறை என்று சிறந்த படைப்புகளுக்கு வருடாவருடம் இலங்கை சாகித்திய மண்டலத்தினூடாக அரசு பரிசுகளை வழங்கி வருகிறது. மாகாண அரசுகளும் கலை இலக்கியத்துறைகளுக்குப் பரிசுகளை வழங்கி வருகின்றன. இச்செயற்பாடுகள் வரவேற்கப்பட வேண்டியவைதான். ஆனால் இப்பரிசுத் திட்டத்தின்கீழ் கலை இலக்கிய வளர்ச்சிக்குக் காத்திரமான பங்காற்றிவருகின்ற இலக்கியச் சிற்றிதழ்கள் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. சம்மந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் கவனத்தில் - கருத்தில் சிற்றிதழ்கள் இதுவரை எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பது துரதிஸ்டமே. இலங்கைத் தமிழ்ச்சூழலில் இலக்கியச் சிற்றிதழ்கள் மிகவும் சிரமங்களுக் கிடையிலேதான் இலக்கியதாகம் கொண்ட சிலரால் வெளியிடப்படுகின்றன. எனவே இவைகளையும் ஊக்குவிக்கும் வகையில் சிற்றிதழ்களிலும் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து வருடாவருடம் பரிசுகள் வழங்கும் திட்டமொன்றினை எதிர்காலத்தில் இலங்கை அரச சாகித்தியமண்டலமும் மாகாண அரசுகளும் அறிமுகம் செய்ய வேண்டும் என்று “செங்கதிர்” வேண்டுகோள் விடுக்க விரும்புகிறது.
- செங்கதிரோன்
அன்பானவர்களே! உங்களால் இயன்ற அன்பளிப்புக்களை வழங்கி “செங்கதிர்” இன் வரவுக்கும் வளர்ச்சிக்கும் உதவுங்கள்.
-ஆசிரியர்= (2) செங்கள் in 20
“செங்கதிர்’ இதழின் இம்மாத அதிதி எழுத்தாளர் கலாபூஷணம் அப்துல் மஜீது முஹம்மது பாறுாக் அவர்களாவார்.
அம்பாரை மாவட்டம், கல்முனை - மருதமுனை - அப்துல் மஜீது - சபியா உம்மா தம்பதிகளின் இளைய புதல்வனான நான் 25.02.1948 ஆம் ஆண்டு பிறந்தேன். இப்போது எனது வயது 63 ஆகும்.
மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் பழைய மாணவனான நான் இதுவரையில் 67 கவிதைகளையும் , 14 சிறுகதைகளையும், 14 ஆங்கில மொழி பெயர்ப்புச் சிறுகதைகளையும் 03 உருவகக் கதைகளையும் 06 கட்டுரைகளையும் எழுதி இலக்கியப் பங்களிப்புச் செய்துள்ளேன். வானொலி (இஸ்லாமிய கானங்கள்)ப் பாடல்களையும் யாத்து வழங்கியுள்ளதோடு பல்வேறு கவியரங்கம் நிகழ்ச்சிகளிலும் பங்கு பற்றியுள்ளேன்.
புன்னகை வேந்தன், வஸிகரன் என்னும் புனை பெயர்களில் தினக்கதிர், மித்திரன் வாரமலர், வீரகேசரி, தினக்குரல், இளம்பிறை, மல்லிகை, ஜனவேகம், அக்னி, பூங்காவனம், முனைப்பு, தினபதி மற்றும் பத்திரிகைகளில் எனது சிருஸ்டிகள் பிரசுரம் பெற்றுள்ளன.
மறைந்த இலக்கியப் பேராசான் மருதூர்க் கொத்தன் அவர்களை
நெறியாளராகக் கொண்டு “முக்கனி இலக்கிய வட்டம்’ என்னும் அமைப்பையும் மருதமுனையில் நடாத்தி வந்துள்ளேன்.
(3) Msikiöśli fisio 2o
Page 4
ஆங்கில மொழியில் ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக “இங்கிலிஷ் கிங்டம் என்னும் ஆங்கில அமைப்பையும் மருதமுனையில் உருவாக்கிப் பல்வேறு சேவைகளையும் வழங்கியுள்ளேன்.
இப்போது எனது முழுக் கவனத்தையும் மனம்கவர்ந்த ஆங்கில மொழிச் சிறுகதைகளைத் தமிழ் வடிவமாக்குவதில் ஈடுபடுத்தியுள்ளேன். இதுவரையில்
8ே பேராசிரியர் சுனந்த மகேந்திரா & பாத்ராஜி மகிந்தா ஜெயதிலக்க & சாவித்திரிஉடவத்த & டி.எல்.சிறிமன்ன 8ே பிறிஸ்சில்லா பெரைரா 8ே உசுலா பி.விஜேசுரிய & புண்ணியகாந்த விஜயநாயக்க 8ே பி.எம். ஜெயதிலக்க 9ே ஜி.நேருஜா 8ே இந்து கமகே & ஏ.ஏ.பார்த்தலோமியஸ் 8ே அலான் சில்லிரோ 8ே போதிரி சாஸ்திரி
ஆகியோரின் சிறுகதைகளில் ஒவ்வொன்றை தமிழ் வடிவமாக்கியுள்ளேன்.
சதாம் றுாமி என்னும் புதல்வனும் சிம்றானா என்னும் புதல்வியுமாக இரண்டு பிள்ளைகள் எனக்கு உண்டு. தொழில் ரீதியாக ஆங்கிலம் ‘டைப்பிங்’ செய்துவருகின்றேன். அகில இலங்கை சமாதான நீதவானாகவும் அரச அங்கீகாரம் பெற்ற மொழி பெயர்ப்பாளராகவும் இருந்து வருகின்றேன்.
எனது முகவரி;-
சிம்றானாஸ், 136, மரைக்கார் வீதி, மருதமுனை-04, 32314,
(8urgo' - 067 3692670.
(4) செங்கதிர்சித்திரை20
மொழி பெயர்ப்புச் சிறுகதை
இடி முழக்கம் மின்னல் LD60)g stilis) 696 lb : Waiting for rainy days (Daily news 05.01.2011) By: S.Perumal (616).QuebLDIT6in) தமிழாக்கம் : கலாபூஷணம் அ.மு.பாறுாக்
அறுபதாம் ஆண்டின் தொடர்ச்சியான காலப்பகுதி, பாரிய சோதனைகளைச் சுமந்த வண்ணமிருந்தன. கடுமையான வரட்சியும் வெப்பமும் இரத்தினபுரி மாவட்டத்தை முற்றுகையிட்டிருந்தன.
இன்றைய மூத்த தலைமுறையினர் அன்றைய இளவயதினர் இந்தக் காலகட்டத்தின் துயரங்கள் தோய்ந்த கதையைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நீண்டகாலமாக மழைவீழ்ச்சி இல்லாத நிலைமை நீடித்தது. நீர் வீழ்ச்சிகள், நதிகள் வரண்டுபோய்க் கிடந்தன. மொத்தமாகச் சொல்லப்போனால் தண்ணிரைக் காண முடியாத நிலைமை - வரட்சியின் ஆதிக்கம் மேலோங்கியிருந்தது.
வேளாண்மைச் செய்கை, சேனைப் பயிர்ச் செய்கை யாவும் கைவிடப்பட்டிருந்தன. செழிப்புடன் ஜொலிப்புடன் விளங்கிய காலு கங்கையும் தனது சிறப்பையும் கம்பீரத்தையும் இழந்து காணப்பட்டது.
காடுகளில், புதர்களில் வாழ்ந்து வந்த மிருகங்களும் பிராணிகளும் தாகம் தீர்த்துக்கொள்ள நீர் இல்லாமல் மக்கள் வாழும் கிராமங்களை நோக்கிப் படையெடுத்தன.
விவசாயிகளும் தொழிலாளர்களும் தமது வாழ்வாதாரம் பற்றிச் சிந்திக்கத் தொடங்கியிருந்தார்கள். தோட்டப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாகவே முடங்கிப் போயிருந்தது. உணவும் தண்ணிரும் இல்லாத பரிதாப நிலைமை அவர்களை வாட்டி வதைத்தன. இதனிடையே தேயிலை, றப்பர் பெருந்தோட்ட முகாமைத்துவமும் எதிர் கொள்ளும் அதீதமான செலவீனங்களால் அதனுடைய நிர்வாகப் பணிகளும் முடங்கிப்போய்விட்டிருந்தன.
அதன் காரணமாக அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் தோட்டங்களை விட்டும் வெளியேறி பிற மாவட்டங்களில் வேலை தேடும் முயற்சிக்கு ஆளாக்கப்பட்டிருந்தனர். அதுமட்டுமல்லாமல் பக்கத்திலுள்ள
(5) Máis fa 20
Page 5
கிராமங்களுக்கும் போய் ஏதாவது வேலை கிடைக்குமா என்னும் நோக்கத்தில் இருந்து கொண்டிருந்தார்கள்.
இவ்வாறான இக்கட்டான நிலைமையில் கறுப்பண்ணா என்னும் தொழிலாளி வேலை தேடிப் புறப்பட்டுக் கொண்டிருந்தான். தன்னோடு நாலு உறுப்பினர் அடங்கிய குடும்பத்துக்காக அவன் தீவிரமாக உழைக்க வேண்டியிருந்தது. மனைவியோடு இரண்டு பெண் பிள்ளைகள் அவனுக்கு இருந்தார்கள்.
பிற மாவட்டங்களை நோக்கி அதாவது கிளிநொச்சி, வவுனியா முதலான பிராந்தியங்களுக்கும் அதிகமானோர் போகத் தலைப்பட்டிருந்தனர்.
ஆனால் அவ்வாறு தூர இடங்களைநோக்கிப் போகாமல் இரத்தினபுரி பட்டணத்தை நோக்கி நடைபோட்டான் கறுப்பண்ணா. அவன் வாழும் இடத்திலிருந்து பத்து மைல் தொலை தூரத்தில் இரத்தினபுரி நகரம் அமைந்திருந்தது. இந்த நகரத்தின் மலையுச்சியில் அதிக எண்ணிக்கையிலான தேயிலைத் தோட்டங்கள் காட்சியளித்தன. அதன் மறுபுறத்தில் ஆதம்ஸ் மலைச்சிகரம் அமைந்திருந்தது.
ஒருநாள் ஞாயிறு அதிகாலையில் தனது அறையை விட்டு வெளியேறி வேலை தேடும் படலத்தை ஆரம்பித்து பெரு நடைபோட்டான். அரைவாசி சவமான நிலையில் பட்டினி காரணமாக அவனது பிஞ்சுக் குழந்தைகள் காட்சி கொடுத்த பரிதாபமான நிலைமை அவன் உள்ளத்தில் உலா வந்தன. ஒவ்வொரு நரம்புகளையும் முள்ளாகத் குத்திக் கொண்டிருந்தன.
புராதன சிறம்பம்சங்களை கொண்ட இரத்தினபுரி மாநகரம் மாணிக்கம் விளையும் பட்டணமாக உன்னதம் பெற்றிருந்தது - கீர்த்தி பெற்றிருந்தது. எப்படியாவது அந்தப் பட்டணத்தில் ஒரு வேலை தனக்குக் கிடைத்துவிடவேண்டும் என்ற உணர்வும் ஆவலும் அவன் மனதில் உச்ச நிலை கொண்டிருந்தது.
அவனது தீவிரமான பிரயத்தனம் காரணமாக ஒரு இடத்தை அங்கே வந்தடைந்தான். ஆனால் ஏற்கனவே பலர் அங்கே திரண்டு நின்றிருந்தனர். வேலை பெற்றுக் கொள்வதற்காக வந்திருந்த அவனைக்கண்டதும் அவர்கள் வெறுப்புடன் நேக்கினார்கள். அதனால் அவன் சங்கடப்பட்டான். மனதில் துயரங்கள் அதிகரித்த நிலையில் - தனது பரிதாபமான நிலையை அங்கு நின்றிருந்த தலைவரான போத்தா என்பவரிடம் விரிவாக எடுத்துச் சொன்னான். அவைகளைத் தெளிவாகப் புரிந்து கொண்ட தலைவர் மற்றவர்களிடமும் கலந்து பேசியதன் பயனாக - கறுப்பண்ணா வேலை
(6) செங்கதிர்சித்திர2று
பெற்றுக் கொள்ள முடிந்தது. எல்லாம் வல்ல இறைவனின் கிருபையும், கருணையும் உள்வாங்கப்பட்டிருந்ததனால் கொஞ்சம் பணத்தை இந்த வேலையின் மூலமாக சம்பாத்தியம் தேடிக்கொண்டான். கறுப்பண்ணா பணத்தைப் பெற்றுக் கொண்டதும் சக தொழிலாளர்களுக்கும் இதயபூர்வமான நன்றிகளைச் சொல்லிவிட்டுக் கிளம்பினான். அவன் பட்டணத்தின் வியாபார நிலையங்களை அடைந்ததும் ஆகாரப் பொருட்கள் உட்பட தேவையான சாமான்களை வாங்கிக்கொண்டு அவைகளைப் பொதி செய்து தோளில் வைத்துச் சுமந்தவண்ணம் தன் இல்லம் நோக்கி நடை போட்டான் கறுப்பண்ணா.
ஏறக்குறைய ஐந்து மைல்கள் தூரம் நடைபோட்ட காரணத்தினால் அவன் உடல் தளர்ந்தபோன நிலையில் களுமாத்தயா என்ற இளவயதுக்கால நண்பனை தனது ஞாபகத்துக்குக் கொண்டு வந்தான். அவனையும் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் அவன் மனதில் உதயமானது. அத்துடன் களுமாத்தயாவின் வீடும் போகும் பாதையில்தான் அமைந்துள்ளது என்பதையும் அறிந்திருந்தான். இருவரும் தமது பெயர்களில் ஒரே சீரான அர்த்தமே கொண்டிருந்தார்கள். களுமாத்தயா - கறுப்பண்ணா இருவரும் பின்பற்றுகின்ற சமயம், மொழி வேறுபட்டிருந்தாலும் அவர்கள் பரஸ்பரம், அன்பு, பாசம் கொண்டிருந்தார்கள். ஒரு காலத்தில் களுமாத்தயாவும் தோட்டத்தில் வேலை செய்து வந்தான். ஆனால் அவன் தோட்டத்தில் தங்கிவாழ வில்லை. அதிக எண்ணிக்கையில் ஆண்கள், பெண்கள் தங்கி வாழ்ந்ததனால் அவன் அங்கே தங்கி வாழ விரும்பி இருக்க்வில்லை. ஆனால் அனைவரும் சகோதர பாசம், நல்லெண்ணம், விருந்தோம்பல், புரிந்துணர்வுடனும் இருந்தார்கள். அரசியல் ஆதிக்க வேறுபாடுகள் அங்கே காணப்படவில்லை. அங்கே சோபிநோனா என்ற பெண்ணும் வேலை செய்து வந்தாள்.
களுமாத்தயா சோபிநோனா நட்புறவும் வளர்ந்தது. இறுதியில் திருமணம் செய்து இல்லற வாழ்க்கையில் இணைந்து கொண்டார்கிள். மண வாழ்க்கையின் பின்னர் இருவருமே தோட்டத்தில் வேலை செய்வதை நிறுத்திக் கொண்டார்கள்.
களுமாத்தயாவின் வீட்டைக் கண்டுபிடித்து முன் கேட் அருகில் வந்து நின்றான் கறுப்பண்ணா. அவனைக்கண்டதும் ஆனந்தம் மிகவே கட்டியணைத்து வரவேற்றான் களுமாத்தயா. இருவரும் மனம் விட்டுப் பேசிக் கொண்டார்கள். தனது இக்கட்டான நிலை பற்றியும் விளக்கிச் சொன்னான் கறுப்பண்ணா. மேலும் தனது துயரக்கதையைக் கேட்கவோ பரிகாரம் செய்யவோ எவரும் முன்வரவில்லை என்றும் நொந்துபோன மனப்பாங்குடன் களுமாத்தயாவிடம் விரிவாக எடுத்துச் சொன்னான்
(7) செங்கதிர்சித்தின2று
Page 6
கறுப் பணி னா. மேலும் தமது பிரஜாவுரிமை, வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் எவருமே தம்மைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்றும் அக்கறை காட்டவில்லை என்றும் சலிப்புடன் சொல்லி வைத்தான். கறுப்பண்ணாவின் துயரக்கதை கேட்டு மனம் உருகிப்போனான் நண்பன் களுமாத்தயா.
“உன்னுடைய உடல் உழைப்பை உறிஞ்சிக் குடித்துச்சுகம் கண்ட தோட்ட முகாமைத்துவம் உனது பரிதாப நிலை கணிடு உதவவோ கருணைகாட்டவோ முன்வரவில்லையே” என்று கருத்துவெளியிட்டான் களுமாத்தயா.
மேலும் கறுப்பண்ணா தொடர்ந்து “வெள்ளைக்கார நிருவாகம் இருந்த காலத்தில் நாங்கள் மதிக்கப்பட்டடோம். எங்களின் நலன்கள் கவனிக்கப்பட்டன. எங்களின் அவலமான நிலை கண்டு ஆதரவு காட்டினார்கள். ஆகாரம் வழங்கினார்கள். உண்மையாகவே அந்தக்காலம் பொன்னான காலம்தான்’ என்று சொன்னான். இதைக்கேட்ட களுமாத்தயா ‘அப்படியல்ல நீ செல்வது தவறு. வெள்ளைக்கார துரைமார் உனது உழைப்பைச் சுரண்டி சொகுசான வாழ்க்கை வாழ்ந்தார்கள். நண்பா உனக்கு ஞாபகம் இருக்கிறதா இந்த வெள்ளைக்காரர்தான் உனது மூதாதையரை இங்கே இந்த நாட்டிலே இறக்குமதி செய்தார்கள்.
அவர்களின் உழைப்பை அற்ப சம்பளம் கொடுத்துவாங்கிச் செல்வம் குவித்தார்கள். அதே வேளை அவர்கள் நாட்டை விட்டு வெளியேறிப்போகும் நிலை வந்தபோது உனது சமூகத்துக்காக எந்தவிதமான நன்மைகளைத் தந்துவிட்டுப் போனார்கள்.’ என்று பெரிய பிரசங்கமே நிகழ்த்தி விளக்கம் கொடுத்தான் கறுப்பண்ணாவுக்கு. "ஆமா நீ செல்வது உண்மைதான். அவங்க நாட்டை விட்டு வெளியேறிப்போன போது எங்களைப்போன்ற தொழிலாளர் வர்க்கத்துக்கு எந்தவிதமான உபகாரமும் செஞ்சிட்டுப்போகல்ல” என்று கறுப்பண்ணா சொன்னான்.
இந்தச் சந்தர்ப்பத்தில் இருவருக்கும் தேநீர் பலகாரம் பரிமாறினாள் சோபிநோனா. மேலும் பலகாரங்கள் தீன்சுவைப்பண்டங்கள் அடங்கிய பார்சலையும் கறுப்பண்ணாவிடம் கொடுத்தாள். மனைவி பிள்ளைகளுக்குக் கொடுக்கும்படியாகவும் வேண்டிக் கொண்டாள். பகல் பொழுது மறையும் நிலை வந்தபோது உடனே களுமாத்தயா வீட்டின் பின் பக்கம் சென்று கிழங்கு, காயப் கறிகள், தேங் காயப் எல்லாம் கொண்டு வந்து கறுப்பண்ணாவிடம் கொடுத்தான். அதன் மூலம் அவன் மீது உள்ள அதீதமான அன்பையும் ஆதரவையும் வெளிப்படுத்தினான்.
(8) செங்கதிர்சித்திரை20
மேலும் “உனக்கு இடர் துயரங்கள் வரும்போது வெட்கப்படாமல் என்னிடம் வா. உனக்கு நான் உபகாரம் செய்ய ஆயத்தமாகவே இருப்பன்’ என்றும் உறுதியுடன் சொன்னான் களுமாத்தயா. இதைக்கேட்டு கறுப்பண்ணாவின் கண்களின் நீர் கசிந்தது. பின்னர் இருவருக்கும் நன்றி சொல்லிவிட்டு பாரிய சுமைகளை தோளில் தாங்கிய வண்ணம் வீடு நோக்கி நடைபோட்டான்.
பிரதான வீதியை அடைந்ததும் கொஞ்சம் இளைப்பாறும் நோக்குடன் சுமைகளைக்கீழே இறக்கிவைத்து சிரமபரிகாரம் செய்து கொண்டான். பின்னர் சிறிபாத மலையில் கோயில் கொண்டுள்ள கடவுளை நோக்கி வணக்கம் செலுத்தினான். எனது குற்றங்களை மன்னித்துவிடு. எனக்கு நல் வாழ்வு கொடு என கடவுளை வேண்டி இரு கன்னங்களிலும் அறைந்து கொண்டான். அதன்பின் அவன் வதனத்தில் புதிய மலர்ச்சி உண்டானது. பகல் மறைந்து இருளின் ஆதிக்கம் ஆரம்பமானது. நடையில் வேகம் காட்டினான். தோளில் பாரிய சுமை வேறு. மலை உச்சியை அடைந்தபோது பயங்கரமான இருட்டு. மூங்கில்தடி யொன்றை எடுத்து தீப்பந்தம் தயாரித்துக் கொண்டு வேக நடைபோட்டான். பிள்ளைகள் நித்திரைக்குப் போகுமுன் வீட்டுக்குப் போய்விட வேண்டும் என்பதனால்.
சில தினங்களின் பின்னர் தனது இருப்பிடத்தின் முன்னால் உள்ள சிறிய சுவரில் உட்கார்ந்து கொண்டிருந்தான் கறுப்பண்ணா. வடக்குப் புற ஆகாய வெளியில் பாரிய கறுப்பு மேகங்கள் நிலை பெற்றிருந்தன. ஏதோ நடக்கப்போகிறது என மனதில் எண்ணிக் கொண்டான். அத்தருணம் தனது பெயரைச் சொல்லி யாரோ அழைக்கும் குரல் கேட்டது. திரும்பினான். அங்கே தபால்காரன் நின்றுகொண்டிருந்தான். “கறுப்பண்ணா உனக்கு பதிவுத் தபாலில் கடிதம் வந்துள்ளது. இதில கையொப்பத்த வைச்சிட்டு கடிதத்தை எடுத்துக்க” என்று சொன்னான்.
“என்ன கடிதமோ. ?
“இது பிரஜாவுரிமைப்பகுதியில இருந்து உனக்கு வந்திருக்கு. உனக்கு பிரஜா உரிமை கிடைச்சிருக்கு” என்று சொன்னான் தபால்காரன்.
மழையும் வரப்போகிறது என்று சொன்னவாறு அவன் மறைந்து போனான்.
ஆகாயத்தை நோக்கி வணக்கம் செலுத்தினான். மழைக்கடவுளுக்கும் நன்றி சொன்னான் கறுப்பண்ணா.“மீனாட்சி! நமக்கு பிரஜா உரிமை
கிடைச்சிருக்கு”என்று மனைவியை அழைத்துச் சொன்னான். அடுத்த வினாடி இடி முழக்கம் மின்னல் அசுரவேகத்துடன் மழைபெய்தது.ா
(9) செங்கதிர்சித்தின2று
Page 7
அலாவுதீன்கலின் அற்புத விளக்கு ! கைநிறைய 率 காசு பண்ணுவதற்காய் ஷெல்லிகுரசன் கல்விப்பட்டங்கள் கங்கணம் கட்டும் காலம் இதவாக!
கல்வியின் அர்த்தம் அறிவு என்பதற்குமேலாக கறந்தெடுக்கும் ‘பண’ பரிமாற்றம் என்பதாய் பரிணாமம் பெற்றுவிட்டது? இதயத்தை சுத்திகரிக்க எழுந்த படிப்புக்கள் விழுந்த மாணத்தக்கு குறிசுடும் விவேகத்தை வளர்த்தவிட்டன:
பெயருக்குப் பின்னாலோ முன்னாலோ பெருமைப்படத் தக்கதாய் பட்டங்கள் பொறிக்கப்பட்டாலும் அந்த பட்டங்களுக்கேற்ற பண்பாட்டு விழுமியங்கள் ઈ6ofLii) தலைமறைவாகிவிடுகின்றன! ஒருவன் பல்கலைக்கழக படியிறங்கி வருமுன்னரே அவனின் பட்டங்கள் கல்யாணச் சந்தையில்
(10) செங்கதிர்சித்தினு20
கோடிகளுக்கு பேரம் பேசப்பட்டு
96.6060,
அந்தஸ்தின் உச்சிக்கு அழைத்துச் சென்று விடுகிறத!
உயிர்த்தடிப்பை பரிசோதிக்க வந்தவர்
நோயாளியின் பணத்தடிப்பின் பலத்தை நாடிபிடித்தப் பார்க்கும் முனைப்பில் நீதிக்காக போடப்பட்ட கறுப்புக்கோட்டுகள் சில அநீதிகளை வெளியெடுத்து ‘அள்ளி யெடுத்து மகிழ்கின்றன!
பொதவேலைத் திட்ட மதிப்பீடுகள் அனுமதிக்கப்பட்டவுடனேயே உள்வீட்டு பணப் பெட்டிகள் உப்பிப் பெருத்துவிடுகின்றன!
கல்வி கண்ணைத் திறந்த காலம் மருவி எண்ணப்படி பட்டங்களை இயந்திரகதியில் உற்பத்தி பண்ணிவிடும் கனவுத் தொழிற்சாலைகளின் வியாபாரம் கல்விச் சந்தையில் களைகட்டுகிறது:
(1) விசங்கதிர்சித்தின2று
Page 8
Bnini UNLõbö6Mõb 5ööGlüLITLööõi
வயலற் சறோஜா சந்திரசேகரம்.
நாட்டார் பாடல்கள் என்று கூறும் போது, ஏட்டுக் கல்வி அறிவு பெரும்பாலும் இல்லாத நாட்டுப்புற மக்களால், பாடப்பட்டு வரும் பாடல்கள்தான் நாட்டார் பாடல்கள் எனலாம். இவை குழந்தை பிறந்தவுடன் மருத்துவிச்சி பாடலிற் தொடங்கி இறப்பின் பின் பாடப்படும் ஒப்பாரி வரை நாற்பது வகைப்பாடல்களை இனங்காணலாம். கள்ளங்கபடமற்ற வெள்ளை உள்ளங்களின் உணர்ச்சி வெளிப்பாடுகள்தான் இப்பாடல்கள். நதி மூலங்களையும், ரிஷிமூலங்களையும் காணமுடியாதிருப்பது போல இந்நாட்டார் பாடல்களின் மூலங்களையும் காணமுடியாது. வாய்மொழி வாயிலாக வளர் நீது எழுத் துருப் பெற்றவைதானி இவை. முறைசாராக்கல்வியின் முதற்படி இவையெனலாம். 1846ல் வில்லியம் ஜேம்ஸ்தோமஸ் முதல் முதலில் ஆங்கிலத்தில் ‘.’போக்லோர்’ (Folk Lore) எனக்குறிப்பிட்டார். அதாவது “நாட்டுப்பபுறவியல்”. இதில் ஒரு அம்சமே ‘போக் சோங்ஸ்’ (Folk Songs) நாட்டார் பாடல்கள். பல்வேறு அறிஞர்களும், மேதைகளும் இவற்றை ஆய்வுசெய்து நூல் உரு கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதே. இவற்றுள் தத்துவப்பாடல்களை நோக்குவோம்.
வாழ்க்கையில் எல்லாமே நிலையற்றது என்பதைச் சிந்திக்கவைத்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது தத்துவமாகும். நாட்டுப்புற மக்கள் கூட, வாய் மொழிப் பாடல்கள் மூலம் தத்துவப் பாடல்களை, தலைமுறைக்குத் தலைமுறை கைமாற்றியும் உள்ளார்கள். ஆழமான தத்துவங்களை நாசூக்காக நயம்படப் பாடியும் உள்ளார்கள். ஆய்வாளர்கள் இப்பாடல்களை மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளார்கள்.
1. உண்மைத்தத்துவம்
2. இறைதத்துவம்
3. விதித்தத்துவம். உண்மைத் தத்துவத்தை உணர்த்தும் ஒரு பாடலைநோக்குவோம்.
ஆம ஆயிரம் முட்டயிட்டு ஆனபலன் ஒன்றுமில்ல - எங்கிட கொம்பன் னொரு குட்டிபோட்டா - அது கோடி பெறும் ஊரவர்க்கு,
(12) செங்கதிர்சித்திலு20
சமூகத்திற்கு எந்தவிதத்திலும் பிரயோசனம் இல்லாதவர்கள் எத்தனை பேர் பிறந்தாலும் ஒன்றுதான் இறந்தாலும் ஒன்றுதான். இவர்களால் சமூகத்திற்கோ - மக்களுக்கோ பயனேதும் கிடையாது, ஆனால் நற்பண்பும், நல்லறிவும், பிறகினேகமும் உள்ள ஒருவன் பிறந்தால் அவனால் ஆயிரக்கணக்கானோர் பயனடைவார்கள். ஆமை ஆயிரம் முட்டையிட்டும் பயன் பெரிதாக இல்லை. ஆனால் கொம்பன் அதாவது யானை ஒரு குட்டிபோட்டால் அது கோடி பெறும். பயனற்ற பிறவிகளை ஆமைக்கும் பயனுடையோரை யானைக்கும் ஒப்பிட்டு உவமித்து அழகாகப் பாடியுள்ளார்கள். “ஆனை கறுத்தாலும் ஆயிரம் பொன்’ என்ற பழமொழிகூட ஆனையின் பெறுமதியைக் கூறுவதாகவே அமைந்துள்ளது. கொம்பன் யானை பிறந்தாலும் பொன்தான் இறந்தாலும் பொன்தான். இன்னோர் தத்துவப்பாடலை நோக்குவோம்.
ஆனையோடு ஆன
அசைந்தணையும் அல்லாமல் பூனையோடு ஆன - என்றும் புணர்ந்தணையப் போறதில்ல
உலகில் ஆற்றலும், அறிவும், நற்பண்பும் உள்ள உயர்குல மக்கள் தங்களைப் போன்றமக்களோடுதாள் பழகுவார்கள். உறவாடி மகிழ்வார்கள், பண்பாடற்ற பரதேசிகளோடு இவர்கள் உறவுவைக்க விரும்பமாட்டார்கள். தண்ணிரோடுதான் தண்ணிர் சேரும், எண்ணெய்யோடு தண்ணிர் ஒரு போதும் சேராது. பலம் கூடிய மக்கள் வசதி, அந்தஸ்து, படிப்பு, பணம் கூடியோர் தம்மைவிட குறைந்தவர்களோடு ஒட்டி உறவாடமாட்டார்கள். கிராமங்களிற் கூட நல்லொழுக்கம், கெளரவம், அந்தஸ்து, உயர்குலம், கோத்திரம் பேணப்பட்டு வருவதை இப்பாடல் சித்தரிக்கின்றது. உவமைகளும் உதாரணங்களும் மிகச்சிறப்பாகவே கையாளப்பட்டுள்ளது. யானைக்கும், பூனைக்கும் இடையிலான உறவு மலைக்கும், மடுவிற்கும் இடையிலான உறவாகவே உணரப்படுகின்றது. கிழக்கிலங்கை வாழ் மக்களின் கவித்துவத்திற்கு இப்பாடல் சிறந்த சான்றாகும். கிராமியப் பாடல களில அனேகமாக மணி வாசனைச் சொற்களே பிரயோகிக்கப்படுகிறது. இங்கு “ஆன” என்பது யானையையே குறித்து நிற்கின்றது.
அடுத்து விதித்தத்துவத்தை நோக்குவோம். “ஆதி எழுதினதை அழித்தெழுத முடியாது’ என்பது பழமொழி.
(13) செங்கதிர்சித்திரை20
Page 9
ஆரும் எழுதினத அழிச் செழுதிப் போட்டிரலாம் அந்த ஆதி எழுதினத - அவன் அழிச் செழுதப் போறதில்ல
இறைவனால் எழுதப்பட்ட விதியைமாற்ற முடியாது. எது, எப்போது, எங்கு, எப்படி, ஏன், எவ்வாறு நடக்கவேணுமோ அது அங்கே அப்படியே நிகழும் என்ற ஆழமான தத்துவத்தை ஏடறியா, எழுத்தறியா பாமரமக்கள் பாடிவைத்துள்ளது பெருவியப்பே. எல்லாம் அவன் செயல் என்ற தத்துவம் கிராமமக்களிடையே வேரூன்றி இருப்பதை இப்பாடல் துல்லியமாகப் பறைசாற்றுகிறது. இதே தத்துவத்தை ஆணித்தரமாகப் பாடப்பட்ட பாடல் ളങ്ങ[],
மண்டையில் எழுதி மயித்தால மூடினத ஆரறிவார் இவ்வுலகில் - அந்த ஆதிவல்ேேன் தானறிவான்.
இறைவன் மனிதனுக்கு நடக்க வேண்டிய அனைத்தையும் ஏற்கனவே எழுதி முடித்து விட்டான். அதை முன்கூட்டியே எவராலும் அறிய முடியாது. வாழ்க்கையில் நிகழும் போதுதான் காணமுடியும். ஒருவனுக்கு மரணம் வரும்வேளையில் துறைபோன வைத்தியனின் சிகிச்சைகூட பயணிக்காது போகலாம். அதுதான் இறைவன் முன்கூட்டியே மண்டையில் எழுதியதை யாருமே மாற்ற முடியாது. ஏதாவது செயல் ஒன்று நடக்க வேண்டுமென்று இறைவன் ஏற்கனவே தீர்மானித்து எழுதி வைத்திருந்தால் அதை யார் தடுத்தாலும் அது குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட முறையில் நடந்தே தீரும். ஒரு பெண்ணுக்கு இன்னார்தான் கணவன் என்று இறைவன் ஏற்கனவே நிச்சயித்திருந்தால் அவன் எங்கிருந்தாலும் தேடிவந்து அப்பெண்ணைத் திருமணம் முடிப்பான் என்பதை கீழ்வரும் பாடல் பறை சாற்றுகிறது.
சந்தித்தாறுாகும் தலையெழுத்தும் உண்டுமெண்டா தெண்டிக்கத் தேவயில்லை - தாலி தேடிவரும் காலடிக்கு.
இவ்வாறு ஆழமான தத்துவங்களை நாட்டார் பாடல்கள் தந்துள்ளன.ா
செங்கதிர்சித்திரை20
ஒரு மாலைப்பொழுதும்
11.03.2011 மாலை ஆறுமணி. கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபம். ‘இலக்கியக் களம்” எனும் இனிய நிகழ்வின் ஆரம்பம். அன்றைய நிகழ்வின் தலைவர் அ.பற்குணன் அவர்கள். அந்த ஒன்றுகூடலின் பேச்சுத் தலைப்பு ‘குறுங்கதைகளும் நானும் என்பது. உரையாற்ற இருப்பவர் திரு.வேல் அமுதன். நாடறிந்த எழுத்தாளர். செயல்முறையான திருமண ஆற்றுப்படுத்துநர். ஒரு நூற்றைத் தாண்டிய குறுங்கதைகளை அண்மைக்காலமாகப் படைத்து வருகிறவர். சிறுகதை சகாப்தத்திற்குப்பின்பு குறுங்கதை உருவகங்கள் நீண்ட இடைவெளிக்குப் பின்பு இவரால் மீண்டும் நினைவூட்டப்படுகின்றன. தினக்குரல் , மல்லிகை, ஞானம், செங்கதிர், ஒலை என இதழ்கள் இவரை இனம் கண்டு கொண்டிருக்கின்றன. இவற்றுள் “செங்கதிர் தவறாது தன் இதழிலும் இடம் கொடுத்து வருகிறது. “குறுங்’ என்ற சொல்லுக்கு வரும் விளக்கம் ‘மணிச் செறிவு என்பது. எனவே ‘மணிச்செறிவு கதைகள் என அழைக்கின்றேன்.
இன்றைய கூட்ட வரவு வழமையானதைவிட சற்று அதிகமென்கிறார் ஆர்வலர் ஒருவர். இன்று பலராலும் கணிக்கப்படாத ஒரு துறையாகவே குறுங்கதை படைப்புக்கள் உள்ளன என்ற அமுதனின் ஆதங்கத்திற்கு அன்று வித்தியாசமான விடை காத்திருந்தது. “குறுங்கதை’ இது எப்படி எங்கிருந்து உருவானது. சிறுகதைகளுக்குப் பின்னால் இதன் பங்களிப்பு எத்தகையது? சிறப்புப்பெறுமா? இதன் பிதாமகன் யார்? “உருவகக் கதைகள்’ என்பவற்றின் மாற்றமா? இவை போன்ற கேள்விகளை மனதுள் சுமந்துகொண்டே உள்ளே நுழைகின்றேன். தலைவர் தமது தலைமை உரையைத் தொடங்குகிறார். அந்த உரையில் வேல் அமுதன் பற்றிய அறிமுகம் தொடர்கிறது. அந்நேரம் பார்த்து எனது சிந்தனை பின்னோக்கிப் பறக்க ஆரம்பிக்கிறது. அங்கே நிழலாகத் தெரியும் சிலரின் முகங்கள்.
5) செங்கதிர்சித்தின2று
Page 10
1.எஸ்.பொ : பாடசாலை நாட்களில் நான் படித்திருந்த குறுங்கதைகள் எஸ்.பொவின் கீதைக்கதைகள்தான். அவை தத்துவார்த்தமான சமுதாயப் பார்வையை வெளிப்படுத்தியவை. குறிஞ்சிமலர் , பொன்விலங்கு, மணிபல்லவம் தொடர் நவீனங்களுக்காக “கலி கி’ எப்போ கரமெட்டுமென்று காத்துக்கிடந்த காலங்களில் எஸ்.பொவின் இந்தக் கீதைக்கதைகள் என்னைத் தொட்டன. கல்கி நிறுவனம் இக் கதைகளை நூலாக்க முயற்சித்ததும் அதற்கான அங்கீகாரம் இவரிடமிருந்து கிடைக்கவில்லையென்பதும் பின் நாளில் நான் அறிந்த செய்திகள். தன் கதைகளின் ஒரு எழுத்தைக் கூட மாற்றியமைக்க எஸ்.பொ இடம்தரவில்லையாம். நான் அறிந்து கொண்ட அந்தக் காலத்தில் தமிழில் என்னால் படிக்க முடிந்த முதல் குறுங்கதை என்பது எஸ்.பொ. வினுடைய “கீதைக்கதைகள்” தான்.
2.ராஜாஜி : இந்திய உப கண்டத்தின் மகாதேசாதிபதியாக இருந்தவர். இளைப் பாறியபின் ‘சக்கரவர்த்தி திருமகன்’ என கல்கியில் இராமகதையை எழுதிவந்தவர் இவர். “கண்ணன் கதைகள்’ எனும் இவரது குறுங்கதைகள் சில கல்கியில் வந்ததுண்டு. முற்றிலும் பகவத்கீதையை உபதேசம் செய்த கதைகளாக இவை இருந்தன. அந்த ஆன்மீகம் அன்று என்னைக்கவரவில்லை. இன்றும் கவரவில்லை.
3.பாலுமகேந்திரா : நாம் தமிழில் குறள், குறுநாவல், குறுங்கதை, குறும் பா என்று கண்ட அடுக்கில் பாலுமகேந்திரா அறிமுகப்படுத்திய 'குறுந்திரை’ விசேடமானது. அதற்கான குறுங்கதைகள் அற்புதமான பல செய்திகளைத்தந்தவை. ஆயினும் அவை சினிமாவுடன் நின்றுவிட்டன.
4.கவிஞர் காசி ஆனந்தன் : சுந்தரின் சிரித்திரனுக்காக கவிஞர் எழுதிய மிகச் சிறிய “மாத்திரைக் கதைகள்’ அன்றும் இன்றும் இதயத்தை தொட்டு நிற்பவை. இவை உருவகக் கதைகள் என்றும் கூறப்பட்டன. ஆனால் கவிஞர் தன் கதைகளை “காசி ஆனந்தன் கதைகள்’ என்றே நூலாக்கியிருக்கிறார். அ.ஹிணை பொருட்களையும் உயிரினங்களையும் பேச வைத்து நமக்கு சில படிப்பினைகளை பார்க்க வைத்த கதைகள் இவை. சென்னை காந்தளகத்தின் வெளியீடாக உள்ளது. இவை குறுங்கதைகள் என ஒப்புக் கொள்ளப்படின் இதுவே முதல் தமிழ் குறுங்கதை நூலாக நான் கண்டது என்பேன். கவிஞரின் நறுக்கு” தரும் படிப்பினைகளை இவைகளும் தருகின்றன. நறுக்கு கூடக் 'குறும்பா' என அழைக்கப்படுமோ?
05. தென்கச்சி சுவாமி நாதன் : நாளுக்கொரு குறுங்கதை எனப்
(e) செங்கதிர்சித்தின20
பேச்சுத் தமிழிலேயே அகில இந்திய வானொலியில் அசத்தியவர் தென்கச்சி சுவாமி நாதன். நாற்பது வரிகளுள் அவர் தந்த கதைகள் இன்று வரை குறுங்கதைகள் எனக் குறிப்பிடப்படவில்லை. எனினும் ஆயிரக் கணக்கான கதைகளை அன்றாடம் சொல்லி முடித்தார் தென் கச்சியார் . பத்திரிகைகளுக்கு எழுதியவை மிகக்குறைவு. அதனால் பல நூற்றுக் கணக்கான கதைகள் கிடைக்காமலே போய்விட்டன. இவ்வளவுதான் என எவரும் எண்ண முடியாத அளவு எடுத்துச் சொன்னவர் தென்கச்சிதான். அந்த அழகான சிறிய இல்லத்தின் மேல்மாடியில் அவர் வைத்திருந்த நூலகத்தில் கூட அவை கிடைக்கவில்லை. நான் அறிந்தவரை படித்தவரை நேரில் பார்த்ததுவரை தென்கச்சிதான் குறுங்கதைகளைக் கொட்டித் தந்தவர் என்பேன்.
06.மாஸ்டர் சிவலிங்கம் : வரைவின்றிக் கதைகளை அள்ளித்தரும் மாஸ்டர் சிவலிங்கம் சின்னஞ்சிறுசுகளை சிரிக்க வைத்து சிந்திக்க வைக்கிறவர். பத்திரிகை , வானொலி, தொலைக் காட்சி என இவர் குட்டிக் கதைகள் கொடிகட்டிப் பறந்தன. ஆயினும் அவை குறுங்கதைகள் என குறிப்பிடப்படவில்லை. ஆரம்ப காலம் வில்லுப்பாட்டு மூலம் இக் கதைகள் வெளிவந்தன. இவரது கதைகட்கு கவிஞர் காசி ஆனந்தன் கவிதை படைத்ததும் முழக்கம் முருகப்பாவின் குரலில் அது ஓங்கி ஒலித்ததும் மறக்க முடியாத சிலிர்க்கும் நினைவுகள்.
7.அகஸ்தியர் : குறுங்கதை ஆக்கங்களை இலங்கையில் முதலில் தந்தவர் இவர்தான் என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் அவற்றை நுகர முடியவில்லை.
8. சாந்தன் : ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் மணிக்கதைகளாக வடித்து நம்மை மகிழ்வித்தவர் சாந்தன். அதன்பின் நீண்ட மெளனம் நிலைப்பதைப் பார்க்க முடிகிறது.
9.செங்கதிரோன் : கொழும்புத் தமிழ்சங்க வெளியீடான “ஓலையில்’ அதன் ஆசிரியர் செங்கதிரோன் அவர்கள் ஒரிரு பக்கங்களுக்கு மேற்படாத வகையில் மிகவும் இறுக்கமான உருவகக் கதைகளை மாதா மாதம் எழுதினார். ஆனாலும் அவை குறுங்கதைகள் எனக் குறிப்பிடப்படவில்லை. உருவகம் என்றே குறிப்பிடப்பட்டது. இத்தகவலை எனக்குத் தந்தவர் வேல் அமுதன் அவர்களே.
10. வேல் அமுதன் : இவரது ‘அறுவடை தொடங்கி இன்றைய இறுதிக் குறுங்கதைவரை படித்து இருக்கிறேன். அவற்றுள் காணப்படும்
(17) G5iii fisio2O
Page 11
பாடங்கள் பலவிதமானவை. மிகமிகச் சிறியதான பலவீனங்கள் அல்லது தவறுகள் எப்படிச் சமுதாயத்தைப் பாதிக்கின்றன என்பதை படம் போட்டுக் காட்டும் பாணியை இரசித்திருக்கிறேன். அவரது தொழிலில் ஏற்படும் அனுபவங்கள் அந்த ஆக்கங்களுக்கு அடித்தளமாயுள்ளன. பெரும்பாலான படைப்புக்கள் அந்தத் தொழிலின் அனுபவங்களே எனவும் ஏன் இவர் அதிலிருந்து வேறு களத்துக்கு வெளிவர மறுக்கிறார் எனவும் சிலர் குறைகூறுவதை கேட்டிருக்கிறேன். இவரது கதைக் கருக்களில் பெரும்பாலானவை இவரது தொழில் சார்ந்திருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஒரு படைப்பாளியினது பார்வை தன் முன்னால் முதலில் தெரிவதையே பதிவாக்குகிறது. அகிலனின் 'பாவை விளக்கு அதற்கோர் உதாரணம். ஊரில் பொலி வளைக்கின்ற மாடு பசி வரும்போது பக்கத்தே தெரியும் பசும் புல்லை எண்ணி ஏங்காது. தன் கீழ் உள்ள வைக்கோலையே தின்னும், அது நியதியானது.
கற்பனை ஓட்டம் நின்று மீண்டும் நினைவுகள் மண்டபத்துள் வருகின்றன. அமுதன் தன் அனுபவத்தைப் பேச ஆரம்பிக்கிறார். என்னை எழுத்துலகுக்கு அறிமுகப்படுத்தியதே குறுங்கதைதான் என்கிறார். அந்த முதற்கதை அன்றைய ஈழநாடு ஆசிரியர் கரன் அவர்களால் பாராட்டி எழுதப்பட்டதையும் படித்துக் காட்டுகிறார். அந்த எழுத்துப் பிரவேசத்தின் சத்திய வேட்கையை அவர் சொல்வதற்கு ஆரம்பிக்கிறாார்.
“அப்போ நான் பன்னிரண்டு வயதுள்ள மாணவன். குரும்பசிட்டி சன்மார்க்க சபைக்கு போய் வருவேன். சன்மார்க்க சபையால் ஒழுங்கு செய்யப்பட்ட சந்நிதி கோவிலுக்கான நடைபவனி யாத்திரையில் நானும் கலந்து கொள்கின்றேன். வழியில் வரண்டுபோன என் நாவுக்கு நீர் கேட்டு அங்கிருந்த தண்ணிர்ப்பந்தல் ஒன்றை நாடிப்போகிறேன். நான் சிறுவன். வெளி உலகுக்கு பழக்கப்படாதவன். அப்பா இல்லாது அம்மாவின் கண்டிப்பான அரவணைப்பில் வளர்க்கப்படுகிறவன். தாகத்தைத் தணிக்க தண்ணிர் கேட்கப்போன என்னை அங்கிருந்தவர் கேட்டார். ‘தம்பி உள்ளோ வெளியோ’ என. எனக்குப் புரியவைக்கும் அந்தப்பேரம் தெரியாது. நா வரண்டிருந்தது. நீர் தேவையாயிற்று. எதையாவது ஒன்றைச் சொல்லி நீரை அருந்த எண்ணியவன் ‘வெளியே’ என்றேன். குளிர்பான வெற்றுப்போத்தல் ஒன்றினுள் நீர் நிரப்பப்பட்டு என்முன் நீட்டப்பட்டது. நீரை அருந்திய பின் நின்று அவதானித்தேன். உள்ளோ வெளியோ என்பதன் அர்த்தம் புரிந்தது. மூக்குப் பேணிக்கும் போத்தலுக்குமுள்ள வித்தியாசத்தை விளங்கிக் கொண்டேன். என் மூளையைச் சுரண்டியும்
(18) 6 Siófia fiŝo 20
விட்டன அந்தச் செயற்பாடுகள். அன்றுதான் வீட்டுக்கு வெளியே உள்ள சமுதாயத்தின் சகதி நாற்றத்தையும் நுகர்ந்து கொண்டேன். அந்த நிகழ்வு என் மனதுள் விழுந்த முதலாவது வலுவான அடியாயிற்று. கட்டுப் பெட்டியாக ஒரு கனவுலகின் குறுங்கோட்பாட்டினுள் இருந்த எனக்கு இப்போ வெளி உலகம் தெரிந்தது. கனவுலகம் கலைந்து போனதால் காட்டமான எண்ணங்கள் எழுந்தன.
இந்தச் சமுதாயத்துக்காக எதையாவது நான் செய்தாக வேண்டும். என் ஆற்றலை அளவிட்டுக் கொண்டேன். மனம் குழம்பிப்போன அந்தச் சிறுவயதில் வார்த்தைகள் என்னைத்தேடி வந்தன. ஒரு தெளிவான பாதையையும் காட்டின. எழுதுவது என்று தீர்மானம் எடுத்துக் கொண்டேன். ‘உள்ளோ வெளியோ’ என்ற அனுபவத்தில் ஏற்பட்ட ஒர்மம் எழுத்துகளாகின. எழுத ஆரம்பித்தேன். அந்த முதல் கதை கரன் ஐயாவின் கரங்களால் பாராட்டி எழுதப்பட்டபோது அதை ஒரு மிகப்பெரிய விருதாக எண்ணிக் கொண்டேன். வறுமைதான் என் உடன் பிறப்பு. வாழ்க்கைதான் என் ஆசான். சிறுகதைகள் எழுதத் தொடங்கினேன். அவை நூலாகவும் வந்தன. சாகித்யப் பரிசினையும் பெற்றுக் கொண்டன. அப்போதுங்கூட எனக்கிருந்த ஆசை இந்தக் குறுங்கதை வடிவம்தான். கரன் ஐயாவின் ஆசீர்வாதம் இன்னும் என்னை வழிநடத்துகிறது. எழுதுவினைஞனாக , எழுத்தாளனாக , நாடக ஆசிரியனாக , இலக்கிய அமைப்புக்களின் நிறுவனராக, சுயமரியாதை இயக்கமான அறிவு இயக்கத்தின் அமைப்பாளனாக என எல்லாம் வாழ்ந்த என் வாழ்வு 1983 ஆடி கலவரத்தின் பின்னால் அங்காடியானது. அந்தச் சோதனைகள் என்னைச் துவளச் செய்யவில்லை. ஆனால் துரத்தி வந்தன. மீண்டும் தலைநகர் வாழ்க்கை. வருமானம் தேட வேண்டிய சூழ்நிலை. துணிந்து ஒரு அவதாரமெடுப்பு. அதன் பெயரே திருமண ஆற்றுப்படுத்துநர் என்பது. இந்தத் தொழில் எனக்கு தந்துவரும் அனுபவங்கள் அநேகம். அவைகளின் அநேகமான வெளிப்பாடுகளே இக் குறுங்கதைகள். இவை தொடர்ந்து வர வேண்டுமென்பதில் என்னைத் தூண்டிவருகிறவர் செங்கதிரோன். அவருக்கு என் நன்றிகளை இங்கு கூறியாக வேண்டும்.
என்னுடைய எல்லையைக் கடந்து நீச்சல் அடிக்கும் எண்ணம் எனக்கில்லை. எதையும் விசுவாசமாகச் சொல்ல ஆசைப்படுகின்றேன். அதில் தொங்கி நிற்கும் கேள்விகட்கு வாசகர்கள்தான் விடையை காண்பார்கள். ஒரு மாற்றத்தின் அறிகுறி தெரியுமாயின் அதுவே என் எழுத்தால் வந்த வெற்றி” என முடிக்கிறார் அமுதன்.
இந்தக் களத்தில் முதலில் பேசிய திருமதி.பத்மா சோம காந்தன் அவர்கள்
(19) செங்கதிர்சித்திரை20
Page 12
அமுதனின் பணிவை நன்கு பாராட்டினார். அங்கீகரிக்கப்பட்ட எழுத்தாளரான அமுதன் சபையின் அங்கீகாரம் கேட்பது எப்படி? என்றார். அப்பால் பேசிய எழுத்தாளர் விஜயன் அவர்களின் கருத்துக்கள் ஆழமாக இருந்தன. எங்கோ ஒரு பொடி வைத்துப் பேசினார் விஜயன். எனினும் அவர் நோக்கம் நேர்மையானதும் வரவேற்கப்படவேணடியதுமாகும். மற்றும் தலைவர் உட்பட குறிப்புகள் தந்தோர் அனைவரும் அன்றைய நிகழ்வைப் பாராட்டினர். அந்த இலக்கியக்களம் இதய நிறைவைத் தந்தது.
அமுதனின் ஏறத்தாழ அத்தனை குறுங்கதைகளையும் படித்திருக்கின்றேன். 35 ஆண்டுகளாக அவரது இலக்கியப் பணியை அறிவேன். "அறுவடையில் தொடங்கிய அந்தப் பயணம் இன்றைய இறுதியான குறுங்கதை வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அது ஆத்மார்த்தமான நட்பின் அடையாளமாகவும் இருக்கிறது. என்னைக் குறள் கதை எழுதுமாறு குண்டுசியாகக் குத்துகிறவர் அமுதன். தூண்டிக் கொண்டே இருப்பவர் செங்கதிரோன். எனது அறிவுக்கு எட்டியவரை தென்கச்சி சுவாமிநாதனுக்கு அடுத்து அதிகமான குறுங்கதைகளைத் தந்திருக்கிறவர் அமுதன் தான். இவைகள் ஒரு வகையில் காலத்தை அளக்கும் கதைகள். விடுபட்டுப்போன ஒரு துறைக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டி வருவதால் அமுதன் பாராட்டப்பட வேண்டியவர்.
கவிஞர் வைரமுத்து சொல்கிறார் “நாவல் என்பது தெருவில் நின்று உலகத்தைப் பார்ப்பது. சிறுகதை என்பது வீட்டிலிருந்து வெளி உலகத்தைப் பார்ப்பது. இது சாளரப் பார்வை எனப்படலாம்.’’ ஆனால் அமுதனின் கூற்றுப்படி குறுங்கதை என்பது வீட்டின் வெளிக் கதவில் நடுவில் பொருத்தப்பட்டிருக்கும் ஊடுருவல் கண்ணாடி துவாரத்தினுடே வெளி உலகைப் பார்ப்பது. இது கதவு இடுக்கின் ஊடே பார்ப்பது எனலாம். சிறுகதையைப் போல் குறுங் கதை முடிவில் அதன் விடையை வெளிக்கொணர்வதில்லை. குறுங்கதை தன் முடிவை வாசகனிடமே விட்டுவிடுகிறது. இதுதான் இரண்டிற்கும் பாரிய மாற்றம்.
*இலக்கியம் ஒரு செய்தி” என ஒரு முறை சா.ம.செல்வரெத்தினம் அடிகள் (கரவையூர் செல்வம்) அவர் இலங்கை அறிவு இயக்கத்தின் தலைவராக இருந்தபோது எனக்குச் சொன்னதாக ஒரு ஞாபகம். அழகான ஆழமான செய்திகளைச் சொல்வதனால் குறுங்கதைகளும் இலக்கியப் பரப்பில் நாளை வந்து விடலாம். இன்றைய கனவுகள் நாளைக்கு நனவுகளாகும்போது அதுவும் சாத்தியமாகி விடும். கரிகூடப் பொன்னாகும் போது காலத்தை அளக்கும் இந்தக் கதைகள் இலக்கியமாகி விடாதா? என்ன?
- கோத்திரன் - e0 செங்கதிர்சித்தின20
O ஒரு நண்பனின் கதை
skogUpG faf,2glUGbpf
அது ஒர் உள்ளுர் ஒழுங்கை, மணல் வீதி. அவ்வீதி அருகாக சீமைக்கிளுவை மரங்களும் பூவரசு மரங்களும் செழித்து வளர்ந்திருந்தன. அண்ணமார் கோயில் ஆலமரங்களும், அணி னா வாசிக சாலை அரசமரமும் அவையோடு சேர் நீ து எப்போதும் குளிர் மையை அளர் ளரி வீசிக்கொண்டே இருந்தன. அவ்வீதியால் பயணம் செய்யும் எவரேனும் அந்த மணலில் ஆற அமர்ந்து போனால் தான் அவர்கள் மனதுக்கும் ஒரு நிம்மதி வரும்.
நான் தமிழ்ப்பாட ஆசிரியன். வழமைபோல் அவ்வீதியால் விறுவிறு என்று பாடசாலைக்குப் போய்க் கொண்டிருந்தேன். திருச்செல்வம் என்னைக் கண்டு தலையாட்டினார். பதிலுக்கு நானும் தலையாட்டிவிட்டுச் சென்றேன்.
அவன் என் பள்ளித் தோழன். அவன் எனக்கொருநல்ல நண்பன். இப்போதெல்லாம் அவன் என்னொடு நின்று கதைக்கமாட்டான். என்னைக் காணும் நேரம் கூச்சப்பட்டு ஒதுங்குவது போல் ஒதுங்குவான். அவனை எப்போது பார்த்தாலும் பாவமாகவே இருக்கும்.
முந்தினதுபோல் அவன் என்னுடன் பழகவேண்டும் என்று நினைப்பேன். அவன் தனக்குள் தாழ்வு மனப்பான்மை கொண்டு எனக்கு மரியாதை தந்து ஒதுங்கிக் கொள்வான். அவனோடு நீண்ட நேரம் கதைக்க வேண்டும். எப்பவும் பழகவேண்டும்! என்றுநினைப்பேன். இப்பவெல்லாம் நான்
(e) செங்கதிர்சித்தின20
Page 13
அப்படியொரு சந்தர்ப்பத்திற்காகவே அவனிடமிருந்து எதிர்பார்த்துக் காத்திருப்பேன். ஆனால் அப்படியொரு சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கவே இல்லை. ஆதலால் அவன் எனக்குத் தலையாட்டிவிட்டுச் செல்லும் பொழுதுகள் என் மனதுக்கு ஓரளவு மன நிம்மதியைத் தந்தன.
திருச்செல்வமும் நானும் ஒரே வகுப்பில்தான் படித்தோம். எங்கள் வகுப்பில் அவன் படிப்பிலும் விளையாட்டிலும் நல்ல கெட்டிக்காரன். அவன் எங்கள் வகுப்பு மாணவத் தலைவனாகவும் இருந்தான். அவன் எப்போதும் அமைதியாகவே இருப்பான்.
யாருக்கும் தீங்கு வரும் எந்தவொரு செய்கையும் அவன் செய்யமாட்டான். பிறர் மனம் நோகும்படி நடக்கவும் மாட்டான். அப்போது எனது நடத்தைகள் திருச்செல்வத்தின்செயற்பாடுகளுக்குஎதிர்மாறாகவே இருக்கும். இதனால் மாணவர்கள் பலர் என்னோடு பழக விரும்பமாட்டார்கள். அப்படி யாராவது பழகினாலும் சிறு பயத்தோடுதான் பழகுவார்கள். அவர்களின் மிரளும் விழி அவர்களின் பயத்தை காட்டிக் கொடுத்துவிடும்.
என் வகுப்பில் நான்தான் முதல்தர சண்டியன். என் வகுப்பில் என்ன, எனக்கு ஒரு வயது இரண்டு வயது மூத்தவர்கள் ஒரு சிலரும் எனக்குப்பயம்தான். நான் யாரோடு சண்டை செய்தாலும் அவற்றிலிருந்து என்னைத் தடுத்து நிறுத்துவது திருச்செல்வம்தான். அவன் எது சொன்னாலும் நான் கேட்பேன். அவன் நல்லதுதான் எப்போதும் செய்வான்.
நான் அவனோடு கூடித் திரியும் நேரங்களில் நானும் ஒரு அமைதியானவனாகவே திரிவேன். அவனோடு எப்போதும், எந்நேரமும் பழகினால் எனக்கும் நல்ல பழக்கம் வரும் என்று என் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் நம்பிக்கை வந்தது. நானும் மிக விருப்போடு அவனுடன் பழகினேன். கொஞ்சம் கொஞ்சமாகப் படிப்பிலும் நாட்டம் காட்டி வந்தேன்.
எனது அம்மாவும், அப்பாவும் மிகவும் சந்தோசமாக இருந்தார்கள். திருச்செல்வத்தைக் கண்டு கதைப்பார்கள். என்னைப்பற்றி விசாரிப்பார்கள்.
“தம்பி திருச்செல்வம். உவன் மகிழ் உங்களோட பழகினதுக்குப் பிறகுதான் படிக்கிறான்” என்று அப்பா சொல்லி முடிப்பதற்குள், இடையில் அம்மா குறுக்கிட்டுக் கதைத்தார்.
“பின்னுக்கு. மகிழ் படிப்பில் கெட்டிக்காரனாக வருவான் எண்டு சாத்திரக்காரனும் சொன்னவர்” என்றார் அம்மா.
(2) Gräsål Aking 20
நான் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் பின்னால் இருந்துகொண்டே மென்மையாகச் சிரித்தேன், அதற்குப் பதில் சிரிப்பாக திருச்செல்வமும் சிரித்து நின்றான். இதற்கிடையில் “ஐயோ. என்ற அம்மா! என்ர அப்பாச்சி.!’ என்று உரத்துக் குரல் எடுத்து அழுது கொண்டே ஓடி வந்தாள் எனது பத்து வயதுத் தங்கச்சி.
அவள் காலில் இருந்து இரத்தம் கொட்டென்று கொட்டிக் கொண்டிருந்தது. அவள் வலது காலினை காகமுள் தைத்திருந்தது.
அவள் சண்முகம் கடைக்குப் போய் வந்தவள், வழியில் அந்தக் காகமுள் இருந்தது. அந்த வழியில் உயரமான ஒரு பனை நின்றது. அதில் காகம் கூடு கட்டி முட்டை இட்டு குஞ்சு பொரித்திருந்தது. அந்தக் கூட்டிலிருந்துதான் காகமுள் விழுந்திருக்கின்றது.
அந்த வழியால் சற்று முன்னர்தான் நான் வந்திருந்தேன். அந்தக் காக முள்ளினை நான் கண்டனான். அதை எடுத்து ஒதுக்காகப்போட வேண்டும் என்றும் நினைத்தேன். பிறகு அதை மறந்து உதாசீனமாக வந்துவிட்டேன். தங்கச்சி அந்த முள்ளுக் குத்துறதுக்கு நானும் ஒரு காரணமாக இருந்து விட்டேன்! என்று நான் எனக்குள் சஞ்சரித்துக் கொண்டேன்.
திருச்செல்வம் வழி தெருவில் குறுக்காக ஏதாவது இருந்தால் அதை ஒதுக்கி வைத்துவிட்டுத்தான் வருவான். அது மட்டுமில்லாமல் நாய், ஆடு, மாடு இப்படி ஏதாவது உயிரினங்கள் படுத்திருந்தால் கூட அவைகளைக் கலைத்து அப்பால் ஒதுக்கி விட்டுத்தான் போவான்.
என்னை நினைக்க எனக்கே வெட்கமாக இருந்தது. ஏன் நான் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறேன்! என்னால்தான் என் தங்கச்சிக்கும் இப்படியொரு தண்டனை சந்தோசமாக இருந்த அம்மாவும், தங்கச்சியின் காலில் இருந்து வெளியேறிய இரத்தத்தைக் கண்டு கண் கலங்கி அழுது GustLITir.
அப்பா ஈரத்துணியால் காயப்பட்ட இடத்தைச் சுற்றி கட்டுப் போட்டார். இரத்தம் வெளியே சிந்துவது ஓரளவு தடைப்பட்டது. அம்மாவின் மடியில் இருந்து கொண்டு குண்டுப் பலகைமேல் காலினை வைத்திருந்தபடி இருந்தாள் தங்கச் சி. ஆனாலும் தங்கச்சி அழும் அழுகை நின்றுவிடவில்லை.
அப்பா அடுப்படி சென்று ஈயக்கரண்டிக்குள் ஒரளவு நல்லெண்ணை விட்டு அதற்குள் மஞ்சள் தூளும் சிறு உப்புத் தூளும் போட்டு எரிந்து
(e) செங்கதிர்சித்திர2று
Page 14
கொண்டிருக்கும் நெருப்புக் கொள்ளிமேல் கரண்டியை வைத்து சூடாக்கிக் கொண்டிருந்தார்.
அதை வெளியே எடுத்து சூடு கொஞ்சம் ஆறும்படியாக “ஊ. ஊ. என்று உலைந்து ஊதினார்.
நான் தங்கச்சியின் கைகள் இரண்டையும் கெட்டியாக அழுத்திப் பிடித்தேன். கால்கள் இரண்டையும் திருச்செல்வம் அழுத்திப் பிடித்தான். சூடாக்கிய மஞ்சள் எண்ணையினை முள்ளுக் குத்திய இடத்தில் மூன்று துளிகளை விட்டார் அப்பா. அதனால் ஏற்பட்ட வேதனை சுர்ர். என்று உச்சந்தலைக்கு ஏறியிருந்தது. வேதனை தாங்கமாட்டாமல் தங்கச்சி குழறி அழுதாள். அயல் வீட்டுக்காரர் எல்லோரும் எங்கள் வீட்டு முற்றத்திற்கு வந்திருந்தார்கள்.
நீளமாகக் கிழித்த வெள்ளைத் துணிக்குள் சூடேறிய மஞ்சள் மாவை வைத்து காயப்பட்ட இடத்தில் வைத்துக் கட்டினார். அவள் விக்கலெடுத்து அழுவதை பார்த்ததும் என் கண்ணுக்குள் கண்ணிர் முட்டிக் கொண்டு 6up5@l。
அம்மாவின் மனது நல்லாகவே கழண்டு போயிருந்தது. பெத்த மனம் பித்து. பிள்ளை மனம் கல்லு என்பார்கள். அம்மாவுக்கு நானும் ஒரு பிள்ளைதானே! அம்மாவைப் போல் என் மனதும் பித்தாகியிருந்தது.
என் நிலை கண்ட திருச்செல்வம் என்னைக் கெட்டியாகக் கூட்டிக் கொண்டு தன் வீட்டுக்குப் போனான். தங்கச்சியை நினைத்து நல்லாகவே மனது கனத்து உழைந்து கொண்டிருந்தது.
“நாளைக்குக் கணித பாட சோதனை இதிலை இருந்து இந்தக் கணக்குகளைச் செய்து பார்!’ என்று சொல்லிவிட்டு திருச்செல்வம் அடுக்களை நோக்கிச் சென்றான்.
நான் அந்த மேசை முன் இருந்த கதிரையில் உட்கார்ந்தேன். அடுக்களைக்குள் சென்றவன் இரண்டு தேநீர் கொண்டு வந்தான். அவனும் நானும் சுவைத்து சுவைத்து குடித்தோம். உடைந்து போன மனதுக்கு ஒத்தடம் தருவது போல் தேநீர் சுவையாக இருந்தது.
கொஞ்ச நேரம் செல்ல இரண்டு பேரும் சேர்ந்து படிக்கத் தொடங்கினோம். எனக்குத் தெரியாத கணக்குகளை திருச்செல்வம் சொல்லித்தந்து கொண்டே இருந்தான். நான் செய்த தவறும், அதனால் என் தங்கை
(4) Biblifika 20
அனுபவித்த துன்பங்களும் என் நெஞ்சை அடிக்கடி கீறிக் கிழித்துச் சென்றன.
திருச்செலவத்தின் நினைவுகளோடு பாடசாலை வாசலைச் சென்றடைகின்றேன். பாடசாலையில் முதல் மணி அடிக்கப்படுகின்றது. வாசலில் இறங்கி மோட்டார் சைக்கிளை உள்ளே உருட்டிச் சென்று வாகை மரத்துக்குக் கீழிருந்த கொட்டகைக்குள் நிறுத்திவிட்டு மளமள என்று அதிபர் அறை நோக்கி நடந்துகொண்டிருந்தேன். இப்போது இரண்டாவது மணியும் அடிக்கப்படுகின்றது.
அன்று இரண்டாம் பாடவேளை முடிந்து அலுவலர் அறைக்குள் நான் இருக்கிறேன். ஏழாம் வகுப்பு மாணவன் ஒருவன் ஓடி வருகிறான். “சேர். சேர். வர்ணன் மயங்கி விழுந்து போனான்.” என்று ஒரு வித பதட்டத்துடன் சொல்லிக் கொண்டு நின்றான்.
அந்த வகுப்பு நோக்கி நான் ஒடிப் போகின்றேன். வேறொரு மாணவன் அவனைத் தூக்கி கெட்டியாக நிமிர்த்தி இருத்திப் பிடித்து வைத்திருந்தான். அவன் ஓரளவு மயக்கம் தெளிந்திருந்தான். ஒரு மாணவன் கொப்பி ஒன்றினால் காற்று வரும்படி பலமாக விசுக்கிக் கொண்டிருந்தான்.
திருச்செல்வத்தின் இளைய மகன்தான் வர்ணன். “ஏன் பிள்ளைகள்.! வர்னனுக்கு என்ன நடந்தது.”
* சேர். வர்ணன் காலையில சாப்பிடாமல் வந்தவன். அதுதான் மயங்கி விழுந்தவன்.” பக்கத்து வகுப்பு மாணவி ஒருத்தி துருத்திக்கொண்டு சொன்னாள்.
அதிபரும் ஓடி வந்து என்ன? ஏது நடந்தது? என்று விசாரிக்கிறார். விசாரித்துவிட்டு
“மகிழ் சேர்! பையனை அவன் வீட்டிலை கொண்டு போய் விட்டிட்டு வாங்க.” அதிபர் அன்பாக என்னிடம் வினவி நின்றார்.
அவன் என் மோட்டார் சைக்கிளில் இருந்து கொண்டான்.
“தம்பி! என்னை கெட்டியாய் பிடிச்சுக் கொண்டிருங்க” என்றுசொல்லியபடி மோட்டார் சைக்கிளை மெது மெதுவாக திருச்செல்வம் வீடு நோக்கி நகர்த்திக் கொண்டிருந்தேன்.
திருச்செல்வம் பாவம்! தாய், தகப்பனுக்கு அவன் ஒரு செல்லப்பிள்ளை.
25) Máis fie 2Ca
Page 15
அவனுக்கு அப்பிடியொரு நிகழ்வு நடந்திருக்கா விட்டால் அவன் இன்று ஒரு என்சினியராகவோ அல்லது போனால் ஒரு டாக்டராகவோ வந்திருப்பான். அப்படியொரு கொடுரமான சம்பவம் 1987 ஆம் ஆண்டு நடைபெற்றது.
வடமராட்சியை நோக்கி இலங்கை இராணுவம் பாரிய நடவடிக்கை ஒன்றை மேற்கொணி டிருந்தது. தாயும், தகப்பனும் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்கள். தாய் கற்பழிக்கப்பட்டு இறந்தாள் என்று அவன் பிறகுதான் அறிந்திருந்தான். அன்றிலிருந்து அவன் சித்தசுவாதீனம் பிடித்தவனாகச் சில காலம் திரிந்திருக்கிறான். இதனால் அவன் படிப்பும் இடை நடுவில் நின்றது.
சில காலம் கழித்து, கூலி வேலைக்குப் போய் வந்தவன். சின்ன வயதில் கல்யாணம் செய்தான். நான்கு பிள்ளைகளின் தந்தையாகிய அவன் மிகக் கஸ்டப்பட்டு உழைக்கத் தொடங்கினான்.
கடும் உழைப்பினால் அவன் உடல் நல்லாகவே வலிந்து கொள்ளும். அந்த வலி தெரியாமல் இருக்கக் குடிக்கவும் பழகியிருந்தான். கள்ளு மட்டும்தான் குடிப்பான். அவனைப் பொறுத்தமட்டில் அந்த நேரம் அவனின் உடல் அலுப்புப் பறந்து போவதாகவே அவனுக்கு அது உணர்த்தும்.
நாட்கள் செல்லச் செல்ல குடிக்காமல் இருக்க அவனால் முடியவில்லை. அவன் குடித்து விட்டு தன் வீட்டிலோ, அல்லது வெளியிலோ சண்டையோ! சச்சரவோ! இருக்காது. எவரோடும். சோலி சுரட்டில்லாமல் எல்லோருக்கும் பிடித்தவனாக வாழ்ந்தான். ஆனாலும் என்ன! இந்தக் குடியினால் சில பொழுதுகள் அவன் வீட்டு அடுப்புக்குள் பூனை கூடப் படுத்திருக்கும்.
இப்படியொரு சூழலில்தான் இன்று வர்ணனும் சாப்பிடாமல் பள்ளிக்கூடம் சென்றிருக்கிறான்! அதுதான் அவன் மயங்கி விழுந்திருக்கிறான்! என்ற நினைவுகளோடு திருச்செல்வத்தின் வீட்டு வாசலில் வந்து நிற்கிறேன்.
திருச்செல்வத்தின் மனைவி சியாமளா பதகளித்தபடி ஓடி வந்தாள். “ஒன்றுக்கும் பயப்படாதேங்கோ! உங்கள் மகனுக்கு ஒன்றும் இல்லை மயங்கி விழுந்தவன் இப்ப தெளிந்திட்டான்.!’
“சாப்பாடு பிந்திப் போட்டுதெண்டு சொல்லிப்போட்டு அழுது கொண்டு போனவன்” என்று சொல்லியபடி சியாமளா மகனின் தலைக்கேசங்களை கீழிருந்து மேலாக தடவி விட்டாள். அவனைத் தன்னொடு அணைத்தபடி கண் கலங்கி நின்றாள்.
26) GUiiiiiiiiiii fiŝo 20
திருச்செல்வம் அப்பத்தான் வந்து கொண்டிருந்தான்.
“என்ன எங்கட வீட்டுக்கு ஒரு நாளும் வராத மகிழ் வந்திருக்கீங்கள்” திருச்செல்வம் கதையைத் தொடங்கினான்.
“திரு.வர்ணன் பள்ளிக்கூடத்தில் மயங்கிவிழுந்திட்டான். அவனைக் கூட்டி வந்து விட்டனான்’ பவ்வியமாக அவனுக்கு விடயத்தை எடுத்துச் சொன்னேன்.
நிலத்தில் போடப்பட்ட பாயிலே மகன் படுத்திருந்தான். சியாமளா விசிறியால் வீசிக்கொண்டிருந்தாள். அதில் இருந்து வந்த மெல்லிய காற்று அவனை மென்மையாகத் தூங்க வைத்துக் கொண்டிருந்தது.
நான் போய் வாறேன் என்று சொல்லிக் கிளம்பி வந்தேன். என்னை வழி அனுப்புவதற்காக திருச்செல்வம் என் பின்னே வந்து கொண்டிருந்தான். இப்போது என் மனது தளம்பிக் கொண்டிருந்தது. நீண்டநாட்களாக அவனிடம் கேட்க வேண்டும் என்று நினைத்ததை இன்றே கேட்டால் என்ன! என்று நினைத்தேன்! அந்த விடயம் பற்றி அவனிடம் கேட்கட்டுமா? விடட்டுமா? என்று அங்கலாய்த்தேன்.
படக்கென்று திரும்பினேன். நான்அப்படித் திரும்புவேன் என்று திருச்செல்வம் கொஞ்சமும் நினைத்திருக்க மாட்டான்.
“திரு! நான் ஒன்று கேட்பேன் குறை நினைக்க கூடாது!”
“பிரச்சினை இல்லை. என்னவென்று சொல்லுங்க மகிழ்”
“எங்கட வாசிகசாலை தலைவர் நீங்கள் தானாம்” என்று சொன்னேன் நான். சொல்லிவிட்டு எனக்குள் ஒரு பூடகமாகச் சிரித்துக் கொண்டேன்.
நிர்வாகம் என்று ஒன்று, இற்றைக்கு இரண்டு வருடங்களாக இல்லை. வாசிகசாலை செயற்பாடுகள் இயங்கிச் சுதோ! இல்லையோ! வாசிகசாலையில பேப்பராவது இருக்க வேண்டும் என்று நினைத்துத் தான் திருச்செல்வம் மட்டும் அதைப் பெறுப்பேற்றவன். தலைவர், செயலாளர், பொருளாளர், நிர்வாக சபை உறுப்பினர்கள் எல்லாரும் திருச்செல்வம்தான். அதுதான் எனக்கு அப்படியொரு சிரிப்பு வந்தது.
“ஓம்.! மகிழ். அதுக்கு இப்ப என்ன மகிழ்"
“இரண்டு வருசமாக ஆருமே கவனிக்காத வாசிகசாலை! சனங்களும் முந்தினது போல் ஒத்துழைப்பும் இல்லை! வாசிகசாலையில காசும்
magine
Page 16
இல்லை! ஆனால் ஒவ்வொரு நாளும் இரண்டு பேப்பர் வருகுது. உதுக்கெப்படி காசு சேர்த்துச் செய்யுறியள்.’ நான் இப்படிக் கேட்டு விட்ட கேள்வி சரியோ! பிழையோ! கேட்க வேண்டும் போல் தோன்றிற்று. கேட்டும் விட்டேன்.
திருச்செல்வம் சிரித்தான். அவன் சிரிப்பதன் அர்த்தம் எதுவும் எனக்கு விளங்கவில்லை.
“என்ன திரு! நான் கதை கேக்கிறன். நீங்கள் சிரிச்சுக் கொண்டு நிக்கிறியள். கட்டாயம் எங்கட ஊர்ச்சனம் காசு தந்திருக்கமாட்டார்கள். அப்படியென்றால் உங்கட பணத்தைவிட்டுத்தானே இப்படிப் பேப்பரை எடுத்துப் போடுறியள்.”
ஓம். ஓம். மகிழ்! நான்தான் ஒவ்வொரு நாளும் இரண்டு பேப்பர்கள் எடுத்துப் போடுகிறனான்.”
“ஏன் நீங்கள் மட்டும் முறிய வேணும்! நீங்களும் கூலி வேலைக்குப் போறது. எப்பிடி இதை உங்களால மட்டும் செய்ய முடியுது”
L SS L L LLS L LS LS LS L L LSL L LSL LS LSS L L L SL L S LS S L S LSL LSLS SL L L L LS 0L LY L L L L 0L LL LLL LLL 0L L 0L LLLLLS LLL LT LL LLL Y LLL LLLL LL LLLL L L L L L L L L L L L 0L LLL LLLL LL LLLL LLL C L
மகிழ்மெளனியாக வந்து கொண்டிருந்தான். “என்ன திரு மெளனமாக நிக்கிறியள்.”
“அது வந்து. வந்து..!” என்று திருச்செல்வம் கதையை இழுத்து நீட்டினான். “சொல்லுங்கோ..! இதிலஎன்ன இருக்கு! நான் உங்களை தப்பாக நினைக்கமாட்டன். சொல்லுங்க” மீண்டும் மீண்டும் அவனுக்கு அரையண்டம் கொடுத்து நின்றேன். எப்பிடியோ அவனுக்கு நானும் உதவி செய்ய வேண்டும் என்ற அந்த உயரிய நோக்கிற்காகவே அப்படிக் கேட்டு நின்றேன்.
“இப்ப நான் ஒரு நாளைக்கு குடிக்கிறதில இரண்டு போத்திலை குறைச்சிட்டன், மகிழ்!” என்று திருச்செல்வம் சொல்லி முடித்தார். சற்று நேரத்துக்கு திகைப்பில் அகப்பட்ட நான்,
“அப்படியென்றால் எங்கள் வாசிகசாலையை, திரு நீங்கள் மட்டும்தான் இயக்க வேண்டும்.” என்று கூறிக்கொண்டே, மோட்டார் சைக்கிளில் ஏறி அமர்ந்து கொண்டேன்.
அண்ணா வாசிகசாலை நல்ல அழகாக என் கண்களுக்குள் தெரிந்து கொண்டிருந்தது.ா
9ேவி 20
பன்மொழிப்புலவர் த.கனகரத்தினம் மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள் இவை இறுதியில் வரும் எழுத்துக்கள் இவையென்ற நியதியுண்டு. அத்துடன் சொற்களில் இடையில் இன்ன இன்ன எழுத்துக்கள் தாம் மயங்கும் என்னும் நியதியுமுண்டு. இலக்கணக்காரரில் நன்னூலாார் முதனிலை, இறுதிநிலை, இடைநிலை மயக்கம் என்பவற்றிக்குச் சூத்திரங்கள் செய்துள்ளனர்.
பன்னிரண்டு உயிர் எழுத்துக்களும் க,ச,த,ந,ப,ம,வ,ய,ளு,ங் எனும் பத்து உயிர் மெய்களும் மொழிக்கு முதலில் வரும்.
“பன்னி ருயிருங் க, ச, த, ந, ப, ம, வ, ய ஞ, ங், வீ ரைந்துயிர் மெய்யு மொழி முதல்” என்பது நன்னூற் சூத்திரம்.
உயிர் எஎழுத்துக்களும் ஞ, ண, ந, ம, ன, ய, ர,ல, வ,ழ,ள என்பனவும் குற்றியலுகரமும் மொழியின் இறுதியில் வரும்.
“ஆவி ஞணந மன யரலவ ழள மெய் சாயு முகரநா லாறு மீறே” என்பது அதற்குரிய நன்னூற் சூத்திரமாகும்.
இடைநிலை மயக்கத்தில் க, ச, த, ப என்னும் நான்கும் தம்மோடு தாமே மயங்கும் ர, ழ என்னுமிரண்டும் தம்மோடு பிறவே மயங்கும். ஒழிந்த பன்னிரண்டு மெய்யும் தம்மோடு தாமும் பிறவும் மயங்கும்
பிற மொழிச் சொற்களைத் தமிழிலே எழுத்துப் பெயர்த்து எழுதும்போது கைக் கொள்ளப்பட வேண்டிய இலக்கண விதியுண்டு. மூலச் சொல்லிலுள்ள ஒலிக்குக் கிட்டவும் இருத்தல் வேண்டும். தமிழ் எழுத்துக்களின் மயக்க விதிக்கு அமையவும் இருத்தல் வேண்டும். முதல் கடைசி எழுத்து விதிகளுக்கு அமைவாகவும் இருத்தல் வேண்டும். மேற்கே வளரும் புத்தம் புதிய கலைகளைத் தழிழுக்கு கொண்டு வந்து தமிழை வளம்படுத்த இந்த எழுத்துப் பெயர்ப்பும் அவசியமாகிறது. இம்முயற்சியில் ஆரம்ப காலத்தில் பிறமொழிப் பெயர்களை எவ்வாறெல்லாம் தமிழாக்கம் செய்தார்கள் தெரியுமா?
29 G8zi5ili fiŝhoj 2G
Page 17
Dudley Stamp என்ற (இடட்லித் தாம்பு) இட்டிலித் தாம்பு ஆக கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகியது. Bus பசுவாக எழுதப்பட்டது. இந்துக்குஸ் - இந்தக்குசு வெனப்பட்டது. Libson - இலிச்சன், Davy - தேவி, சிமித் - சிமித்து, ஷேக்ஷ்பியர்-செகப்பிரியர் ஆனார்.
Thompson - Qg5TLDLF66, Darwin - g5IT66i Volta - 2 (36ITDDT
என எழுதப்பட்டன, உச்சரிக்கப்பட்டன. கிரந்த எழுத்துக்களாகிய ஸ, ஷ, ஐ, ஹ என்ற நான்குஎழுத்துக்களை வைத்துக் கொண்டால் உச்சரிப்பிலுள்ள பிரச்சினையை ஒருவாறு தவிர்த்துக் கொள்ளலாம். கிரந்த எழுத்துக்களை கலக்காமல், ஓரளவுக்கு மூல உச்சரிப்பை விட்டு வெகுதூரம் விலகிச் செல்லாமல் எழுதுவதற்கும் அறிஞர்கள் சில முறைகளை விதந்துரைக்கின்றனர். வேற்றினத்தாரின் பெயர்களையும் வேற்றிடங்களின் பெயர்களையும் மட்டும் எழுதுவதில் முதல் நிலை, இறுதி நிலை, விதிகளையும் மயக்க விதிகளையும் தளர்த்துமாறு அவர்கள் வேண்டுகின்றனர். மற்றைய பொதுச் சொற்களுக்கு நன்னூலாரின் இலக்கண விதிகளை அப்படியே கொள்ளுமாறு கூறியுள்ளனர். Electron
இலத்திரனாகவும், புஸ்தகம் புத்தகமாகவும் இருப்பதையே விரும்புகின்றனர். இவைகள் மொழியுடன் இரண்டறக்கலந்து ஒன்றி நம் மொழியை வளப்படுத்தும் என்பதே அவர்களது வாதமாகும். சிறப்புப் பெயர்கள் அவ்வாறு சேர்வதால் நமது மொழி வளம் பெறாது. எனவே தான் சிறப்புப் பெயர்களை கூடிய வரையில் உள்ளவாறே உச்சரிக்கவும் எழுதவும் முன் குறிப்பிட்ட நான்கு கிரந்த எழுத்துக்களையும் பயன்படுத்துவோமாக.
விஞ்ஞானத் தமிழைப் பற்றியும் நாம் கருத்தில் கொள்ளல் வேண்டும். மக்கள் நாவிலும் சாதாரண மூல ஒலியுடன் வழங்கும் விஞ்ஞானச் சொற்கள் உள, ஒட்சிசன், லேசர், றேடர் போன்றன. இவை மிகப் பொது வழக்கில் உள்ளவை. உதாரணமாகப் Plastic Radio என்பதைப் பிளார்த்திக்கு இரேடியோ என்று மாற்றத் தேவை இல்லை. பிளாச்சிக் றேடியோ என்றோ பிளாத்திக் றேடியோ என்று எழுதலாம். உச்சரிக்கலாம். இவற்றுள்ளும் பிளாச்சிக் றேடியோ என்பது மிகக் கிட்டிய தமிழ் எழுத்துக்களைக் கொண்டது. பிளாத்திக் றேடியோ என்பது கிரந்த எழுத்தைக் கொண்டதாகும்.
30 Gift for 20
ஆபிரிக்க பெண்கள் படைக்கும் இலக்கியம் ~ அடக்கப்பட்டவர்களால் அடக்கப்படுபவர்களின் குரல் கரோலின்குமா-(Carolyn Kumah),தமிழாக்கம்:சா.திருவேனிசங்கமம்
(சென்ற இதழ்த் தொடர்ச்சி. )
பெண்களை இலட்சியப்படுத்தும் தோற்றப்பாடு பொதுவாக ஆபிரிக்க இலக்கிய மரபில் காணப்படும் பண்பாகும். இப் பண்பு நீக்ரோத்துவ (Negritute) இலக்கிய மரபில் சிறப்பாக காணப்படுகிறது. நீக்ரோத்துவம் என்னும் சொல் பல்வேறு வியாக்கியானங்களைத் தரக்கூடியது. ஆயினும் ஆபிரிக்க சிறப்புரிமையையும் அதன் மீதான தற்பெருமையையும் பெருமிதத்தையும் அது சுட்டுகிறது. இந்த இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான லியோபோல்ட் செடார் செங்கோர் நீக்குரோத்துவம் ஆபிரிக்க நாகரிகத்தின் மொத்த மதிப்பீடு என்கிறார். ஆபிரிக்க இலக்கியத்தின் வளமார்ந்த மரபுகளை உள்வாங்கி நீக்குரோத்துவ கவிஞர்கள் காலனித்துவம், அடிமைத்தனம், தன்மானம் என்பவை பற்றி கவிதை மழை பொழிந்தனர். மேலும் "இருண்ட கண்டம்’, “காட்டு மிராண்டிகள் என்ற காலனித்துவம் உருவாக்கியிருந்த கற்பிதங்களை உடைக்க இந்த பண்பாட்டு அறிவார்ந்த இயக்கம் முயன்றது. ஆயினும் ஆபிரிக்க பெணிகள் இவற்றில அக்கறையில்லாதவர்கள் என்ற தோற்றத்தை அது வெளிப்படுத்தியது.
அவ்வாறான வெளிப்பாடுகளில் ஒன்று ‘ஆபிரிக்க மாதா” என்ற பிம்பமாகும். ‘பிரெஞ்சு மொழி ஆபிரிக்க பெண் எழுத்தாளர்கள்’ என்ற நூலில் ஜரெனி டி அல்மெய்டா எழுதுகிறார். ஆபிரிக்காவை பேணி வளர்க்கும் தாய்க்கு ஒப்பிடுவதால் ஆபிரிக்க மாதாவுக்கு மொத்த கண்டத்தில் ஒரு பகுதி கொடுக்கப்படுகிறது. அதன் விளைவாக ஆபிரிக்க பெண்களும் அவர்களின் அநுபவமும் இலட்சியமயமாக்கப்படுகின்றன. புதிரானதாகவும் குறியீடாகவும் உருமாற்றம் அடைகின்றன. “நாங்கள் ஆபிரிக்க மாதாவுகுகு காணிக்கையாக்கப்பட்டிருக்கும் நினைவஞ்சலிக் கவிதைகளை கேட்டு இனியும் திருப்தியடைய தயாரில்லை. ஆண்களோடு சேர்ந்து ஆபிரிக்க மாதா உணர்வலைகளில் மிதக்கவும் முடியாது.” என்கிறார் பா. இந்த நீக்ரோத்துவ கவிஞர்களும் எழுத்தாளர்களும்
6) செங்கதிர்சித்தினு20
Page 18
ஆபிரிக்க பெண்களை போற்றி புகழ்பாடி அவர்களை வெறும் பூசைப் பொருளாக்கிவிடுகிறார்கள் என்று கண்டிருக்கிறார் பா. இந்த கருத்து பெண்களை அவர்களின் நாளாந்த இருப்பில் இருந்து தூர விலக்கிவிடுகிறது என்று சாடுகிறார் அல்மெய்டா. ஆபிரிக்க மாதா உருவகத்தை ஆண் பெண் அதிகார உறவு தொடர்பில் வைத்துப் பார்க்க வேண்டும் என்கிறார் ஸ்ரோட்டன். அவரின் விளக்கம் நீக்ரோத்துவ இலக்கியத்தின் அடிப்படைகளை விளக்குவதாகவும் உள்ளது.
“பேசுபவர் ஒரு ஆண். மேற்கத்திய கல்விபெற்ற புத்திஜீவி. கேட்பவர் ஒரு பெண். அந்த ஆண் தனது சமூக அரசியல் நோக்குக்கமைய கலையையும் பொருளையும் தீர்மானிக்கிறான். அவள் இங்கே பாலியல் அழகியல் பாடு பொருளாகிறாள். அவள் சிறுமியாக, அழகிய யுவதியாக, பேணிவளர்க்கும் தாயாக ஏதோ ஒரு வடிவம் எடுக்கிறாள். கவிதைகள் அவனின் அறிவுடமையை போற்றி புகழும்போது அவளின் உடம்புக்கு மாத்திரம் கப்பம் செலுத்துகின்றன.”
ஆண் எழுத்தாளர்கள் அவளைபோற்றி புகழும்போது அவள் வெறும் பொருளாக - பேசா மடந்தையாக இருக்கிறாள்.ஒகுண்டிப் இவைகளுக்கு மாறான எழுத்தாளர் என்று சூகி வாதியாங்கோவை அடையாளம் காண்கிறார். ஆனால் ஸ்ரோட்டன் அதனை ஏற்றுக் கொள்வில்லை. அவரின் புகழ் பெற்ற படைப்பான குறிக்கப்படும் இரத்தத்தின் 35p 56f66) (3u (Petals of blood) Gugoi 856f6oi usi 856Tf i L விதந்துரைக்கப்படவில்லை என்கிறார். ஆபிரிக்க மாதா, விபச்சாரி உருவகங்களுக்காக அவரை கண்டிக்கிறார் ஸ்ரோட்டன்.
ஆபிரிக்க பெண் எழுத்தாளர்களின் ஒன்றிணைந்த முயற்சிகாரணமாக சுய மதிப்பீடும் சுயசார்பும் கொண்ட பாத்திரப் படைப்புகள் அதிகம் வெளிவருகின்றன. அவைகள் “சுயரூபமும் அறிவு நுட்பமும் உள் உணர்வும் கொண்டவைகளாகவும் உள்ளன. இவைகள். இதுவரை பெண்கள் வாழ்வில் ஆண் எழுத்தாளர்கள் கண்டெடுக்காதவைகள்’ என்று இலோயட் பிரெளன் கூறுகிறார். மேலும் புத்தகங்களை ஓர் ஆயுதமாக கொண்டால் மரியமே பா கூறுகிறார். பெண்களின் படைப்புக்கள் பால் பேதத்தை தாங்கி நிற்கும் அமைப்புக்கள், நிறுவனங்கள், சித்தாந்தங்கள் யாவற்றையும் நீர்மூலமாக்கும் தன்மை கொண்டவை. பெண் எழுத்தாளர் தன்னை மூன்று தன்மைகளுக்கு உட்படுத்த வேண்டும் என்கிறார் ஒகுண்டிப். அது அவர் பெண்ணாக,
62) செங்கதிர்சித்தி ை20
எழுத்தாளராக, மூன்றாம் உலக நபராக என்று மூன்று தளங்களில் இயங்க வேண்டும். உண்மையில் பல பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் இந்த மூன்று அம்சங்களின் பிரதிபலிப்புகளாக உள்ளன. இவற்றையும் விட அவை இப் பரந்த உலகத்தில் பெண் களது பல வேறு அடையாளங்களை வெளிக்காட்டுகின்றன. இப் படைப்புக்களில் சித்தரிக்கப்படும் பெண்கள் பல்பரிமாணம் கொண்டவர்களாக உள்ளனர். இனியும் அவர்களின் சித்தரிப்புக்கள் மையப் பொருளிலிருந்து விலகியவர்களாக இருக்காது. நாங்கள் இனி சமகால ஆபிரிக்க இலக்கியத்திற்கு முக்கிய பங்களிப்புக்களை வழங்கிய ஒரு பெண் எழுத்தாளர் ஒருவரின் செயல்பாடுகளை நோக்குவோம்.
கலாநிதி அபெனா பூஸியா ஒரு பெண்ணிய புலமையாளர். கவிஞர். சிறுகதையாசிரியர். இவர் தற்போது அமெரிக்காவில் படிப்பிக்கின்றார். மேற்கு ஆபிரிக்காவில் உள்ள கானாவில் பிறந்த பூஸியா தனது நாட்டிலும் மற்றும் ஒல்லாந்து, மெச்சிக்கோ, இங்கிலாந்து போன்ற இடங்களிலும் கல்வி பயின்றவர். அவர் நாடு கடத்தப்பட்ட காலத்தில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் தனது கலாநிதிப் பட்டப்பப்பை முடித்தார். உலகின் பல பாகங்களிலும் வாழ்ந்த அநுபவம் அவரின் கவிதைப் படைப்புக்களில் பிரதி பலிக்கிறது. விடுதலை, பலிபீடம், ஒரு பட்டினி கிடந்த நல்லவனின் பேரின்பம் ஆகிய கவிதைகளின் விபரணம் இங்கே தரப்படுகிறது.
பெண்களுக்கு சுதந்திரமும் அதிகாரமும் வழங்குமாறு விடுதலை பிரகடனம் செய்கிறது. உணர்வும் ஆளுமையும் நிறைந்த பெண்கள் வாழ்நாள் பூராவும் சித்திரவதைக்குட்பட்டார்கள். மற்றவர்களின் இழிவுக்கும் பொய்மைக்கும் இனியும் அவர்கள் ஆளாக முடியாது நூற்றாண்டுகளாக அவர்கள் வடித்த கண்ணிரால் அவர்களுக்கு நடந்த ஏமாற்றுகளால் அவர்களின் பார்வை கூர்மையடைந்துவிட்டது. அவர்கள் அடக்கப் பயன் பட்ட மொழியில் இன்று தேர்ச்சியடைந்துவிட்டார்கள். இன்பத்திற்கும் துன்பத்திற்கும் கோபத்திற்கும் துயரத்திற்குமிடையே உள்ள சமநிலைதான் பெண்மை. இதுதான் ஞானத்தின் முடிவு என்கிறார் பூஸியா. அவர்கள் பலவீனமான பாலினர் அல்ல. இடுக்கண் வருங்கால் நகும் வகையினர். ஆனால் அவர்கள் அறியாமையின் இலட்சியங்களின் உடைவுகளின் தன் அழிப்பின் பலிக்கடாக்களாக மாறியுள்ளனர். அதனால் அவர்களின் உணர்வு கொழுந்துவிட்டு எரிகிறது. அவர்கள் முன்னர் பயந்தவைகளை யெல்லாம் இப்போது எதிர் கொள்ளத் துணிந்து விட்டனர்.
63) Geá5šli fišlo 20
Page 19
அவர்களின் வாழ்க்கையை சிதறடித்த மனிதர்கள் தப்ப முடியாது. அந்த மனிதர்களின் எண்ணத்தைவிட்டு வெகுதூரம் பெண்களின் நோக்கு செல்கிறது என்கிறார் பூஸியா. குழந்தைகளுக்காக தந்தையர்களுக்காக கணவர்களுக்குாக பெண்கள் கடுமையாக உழைக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்களுக்காக ஒன்றையும் சொந்தமாக்கி கொள்ளவில்லை. அன்னையர்களும் புதல் வியர்களும் படிப்படியாக சுதந்திரத்தை கேட்கின்றனர். அவர்கள் தம் காலடியில் புதைந்து போன செல்வங்களை தோண்டத் தொடங்கியுள்ளனர்.
அரசியல் குடும்ப காரியங்களில் பெண்களது பாரிய பங்களிப்பு இருந்தபோதிலும் அது பற்றிப் பெரிதாக அறியப்படவில்லை என்று “பலிபீடத்தின் அழைப்பு’ கவிதையில் பூஸியா வருத்தப்படுகிறார். இந்த கவிதையை கூறுபவர் தனது ஞானஸ்தானத்தின் போதும் அதன் அடுத்த கட்ட நடவடிக்கையின் போதும் தாய் புரிந்த பணிகளை விபரிக்கிறார். அவளின் தாய் விருந்தினர்களுக்காக வீட்டை தயார் படுத்தினாள். மக்களின் உடுப்புக் களையும் தொப்பிகளையும் தைத் தாள். கொண்டாட்டத்துக்கு வேண்டிய அனைத்து காரியங்களையும் நிறைவேற்றினாள். அவளின் தந்தையோ இவைகள் ஒன்றையும் செய்யவில்லை. ‘என்றும் அன்புடனும் நம்பிக்கையுடனும்’ என்று ஒரு கடிதம் மாத்திரம் எழுதிப்போட்டார். ஆனால் பைபிளில் அவருக்கு தனியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தாயின் அன்புக்கும் பராமரிப்பிற்கும் அங்கு இடமேதுமில்லை.
வரலாறு பூராவிலும் பெண்களின் பணிகள் மிகவும் அவசியமாக இருந்திருக்கின்றன. அவைகள் கடுமையானவை. உடலுழைப்பு அதிகம் தேவைப்படுபவை. ஆனால் குடும்பத்தாலும் சமூகத்தாலும் அதிகம் மதிக்கப்படுவதில்லை. ஆனால் ஆண்களின் பணிகள் மாத்திரம் கருத்தில் கொள்ளப்படுகின்றன.
தந்தையான கடவுளிடம் பூஸியா கேட்கிறார் 'தாய் எங்களை மன்னிப்பவள்’ கடந்த காலங்களில் மறைந்து போன மண்ணுலகத்து தாய்மாரையும் விண்ணுலகத்து தாய்மாரையும் ஒப்பிட்டு படைப்பில் பெண்களின் பங்களிப்பை வலியுறுத்துகிறார் பூஸியா அவர்கள். பூசிக்கப்பட வேண்டியவர்கள் என்கிறார். பூஸியாவினுடைய மூன்றாவது "நிவேதனம்’ வீட்டிலும் வெளியிலும் பெண்கள் குறைத்து மதிக்கப்படுதல் ஒழிந்து கிறிஸ்தவர்கள்வணங்கும் ஆண் கடவுளின் அதிகாரங்கள் யாவும்
64) Gorrissé faian 20
பெண்களுக்கு கிட்ட வேண்டும் என்பதாகும். இனியும் அவர்களை சமாதானப்படுத்த முடியாது. கிறிஸ்தவம் உலகம் பூராவிலும் கிளர்ச்சிகளின் சுவாலையை தணிக்க பயன்பட்டு வந்திருக்கிறது. அடிமைகளும் மற்றவர்களும் கிறிஸ்தவர்களின் கடவுளை பிரார்த்தித்தால் விடுதலை கிட்டும் என்று தமது துயர்களைய போராடவில்லை. இந்த கடவுளின் குழந்தைகள் நெடிய நாற்பது வருடங்கள் துன்பப்பட்டு விட்டார்கள். இனி அவர்கள் போராடத் தொடங்கி விட்டனர்.
தனது கவிதையை பூஸியா இவ்வாறு முடிக்கிறார். நேர்மையின் பொருட்டாக ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பசியோடும் தாகத்தோடும் இருக்கத் தேவையில்லை. அவர் மக்களிடம் சொல்கிறார், தலைமுறையாக வரும் வெறுமையை நீக்கி நிறைவால் நிரப்புங்கள். இழப்பீடு வழங்கப்படும். தேவைப்படுபவர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
நிச்சயமாக அபேனா பூஸியா ஒரு ஆற்றல் வாய்ந்த கவிஞர். அவரது கவிதை அவரின் பல்வேறு தனித்துவங்களையும் அனுபவங்களையும் தெரிவிக்கிறது. அவரும் அவருக்கிணையான மற்றவர்களும் ஆண் எழுத்தாளர் பெற்ற அந்தஸ்தை பெற தகுதியுடையவர்கள். டிஅல்மெய்டா பெண் படைப்பாளிகளின் அரசியல் முக்கியத்தை வலியுறுத்தும் வழியில் பெண்களை அவர்கள் இலக்கியத்தில் சித்தரித்த பான்மையை விளக்குகிறார்.
“அவர்களின் பாத்திரங்கள் வெறுமனே பார்வையாளர்கள் மாத்திரம் இல்லை. செயலாளிகளும்கூட. அவர்கள் ஒரமாக இருக்கவில்லை. மையமாக இருக்கிறார்கள். அவர்கள் ஆராய்கின்றனர். புலம்புகின்றனர். நாசம் விளைவிக்கின்றனர். நிவாரணம் காண்கின்றனர்.”
இதனால் பெண் எழுத்தாளர்களின் படைப் புக் கள் மகிமை பொருந்தியனவாக மாறிவருகின்றன. அதிஷ்டவசமாக ஆபிரிக்க நூல்களில் வெளியீட்டு நிறுவனங்கள் பெருகி வருகின்றன. இதனால் பெண் படைப்பாளிகளின் தொகையும் அதிகரித்து வருகிறது. மேலும் ஆபிரிக்காவிலும் வெளியிலும் உள்ள பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டங்களில் இப் படைப்புக்கள் உள்ளடக்கப்படுகின்றன. அதனால் படைப் பாளிகள் தமது நூல்கள் தொடர்பான கருத்துக்களை மாணவர்களிடம் விளக்க முடிகிறது. இதனாலும் சமூக பொருளாதார தாக்கங்களுக்கு வழியேற்படுகின்றன.ா
35) Hőigéi fia 20.
Page 20
சமுற்சிமுறை ஓயாது
பிறர் துயரில் பங்கேற்று, ஏறாவூர் தாஹிர் துயரகற்றும் வழிதொடுத்து பிறர் நலனில் மனம் வைத்து, úîTuITGDri LKB:56Ölgub..... வறுமையிலும் பொறுமையுடன் வாய்மைநிலை தவறாது பெருமையுடன் வாழ்வதையே பெரும்பேறாய் நினைவதிலும். சிறுவரிடம் கூட முகம் சுளியாமல் அன்புவமாழி இனிமையுடன் மொழிதலிலும். இதயநிறைவடைதலிலும் எதிரிகளும் வெட்கமுறும் ஏற்றபணி செய்தலிலும் உதிரிகளாய் எவரையும் உதறாதிருத்தலிலும். விழுபவர்கள் எழுவதற்கு விரைந்து கரம் கொடுத்து அகதிகளை, அபலைகளை அகம் குளிர வைத்தலிலும். இனம், வமாழியைக் கடந்து பணி இராப்பகலாய்புரிதலிலும். DØTb 566b 6FT6d, 6hFTI6D1T6io மணம் கமழச் செய்தலிலும். மனநிறைவைக் கண்டுயர்வர் மனிதத்தில் வாழ்பவர்கள்!
来源
36) செங்கதிர்சித்திஅ2று
பிறர் மனதை நோகடித்து, பிறர் பொருளைப்பறித்தெடுத்து, வறுமை நிலை கொண்டோரை வாட்டி வதைத்தெடுத்து, ஒற்றுமையைச் சீர்குலைத்து, வேற்றுமையில் தினம் குளித்து, வாய்மைக்கு வாய்ப்யூட்டு வழங்கி மகிழ்தலிலும். சீறிச்சினத்தலிலும். சீர்வரிசை கேட்டலிலும். நம்பிக்கை, நாணயத்தை
தரம் கெட்ட செயல்களுக்கு தலைமை வகித்தலிலும். விழுபவரின் நெஞ்சேறி விலா நொறுங்க மிதித்தலிலும். இனமென்றும், மதமென்றும் இடைவெளிகள் அமைத்தலிலும். இதயநிறைவடைவர் இதய இருளுடையோர்
米
இத்தகையோர், இவ்வாறு இத்தரையில் வாழும் வரை பெருவெள்ளம், மண்சரிவு, பெருக்கெடுக்கும் சுனாமியலை, சுழன்றடிக்கும்புயற்காற்றின் சுழற்சிமுறை ஓயாது
来 水 米
37) செங்கதிர்சித்தின20
Page 21
முருகமூர்த்தி கோவிலை அண்மித்த அவ்வூர் முற்சந்தி மூலைக் கடைதான் அந்தச் சலூன். சலூன் உரிமையாளரை உங்களுக்கு அவசியம் அறிமுகம் செய்ய வேண்டும். அவர்தான் படிக்காத மேதை கந்தசாமி.
படிக்காத’ என்னும் போது கல்லூரியோ பல்கலைக்கழகமோ படிக்கல் ஏறாதவர் என்பதுதான் கருத்து. ஆனால் வாசிப்பதிலும் அவதானிப்பதிலும் ஆழ்ந்து சிந்திப்பதிலும் உச்சம்; கேள்வி ஞானம் ஜாஸ்தி. அவர் வாய் திறந்தால் வருவது வெற்று வார்த்தைகளல்ல-முத்துக்கள்!
கடந்த ஞாயிறு பின்னேரம். எங்களது சின்னத்தம்பி முதலாளி கந்தசாமியிடம் சிகை அலங்காரம் செய்வித்துக் கொண்டு இருந்த வேளை ஒரு காரசாரமான கதையாடல் வந்துவிட்டது.
குறுக்கிட்ட கந்தசாமி “முருகன் கடவுள் எங்களை போலை மனிதனல்ல. முருகனுக்கு ரண்டு பெண்சாதி என்பது ஒரு உயர்ந்த தத்துவம். அதாவது தெய்வானை என்பது தெய்வேந்திரனின் மகள். வள்ளி என்பது குறமகள். அவை எதைக் குறிக்கிறது என்றால் வைச சமயத்தில் உயர்ச்சி தாழ்ச்சி வர்க்க பேதமில்லை கறுப்பு சிவப்பு நிற பேதமில்லை; பேச்சு கலியாணமும் காதற் கலியாணமும் ஏற்புடையவை என்பதையே, எனத் தத்துவார்த்தமாக விளக்கினார்.
உண்மையில் நான் திகைத்துப் போனேன். கந்தசாமியா இப்பிடிப் பேசுகிறார் என மலைத்துப் போனேன். கந்தசாமி கலைஞன் மட்டுமல்ல அறிஞனும் தான் என்பது எனது முடிவு. அந்நேரம் சின்னத்தம்பி முதலாளியின் சிகை அலங்கார வேலையும் முடிவடைந்ததால் ‘கந்தசாமி! தம்பி நான் எவ்வளவு தரவேணும்? எனக் கேட்டார்.
“நூறு ரூபா தானே முதலாளி.” “என்னடா தம்பி எனக்குத் தலையிலை முடியில்லை. வழுக்கை பக்கப் பாட்டிலை அதாவது காதடியிலை கொஞ்ச மயிரடா ? ஏன் இவ்வளவு
ESTgi?”
“முதலாளி மற்றவைக்கு மளமளவென வெட்டலாம். உங்களுக்குத் தேடித் தேடியல்லோ வெட்டினது” கந்தசாமியின் சாதுரியமான பேச்சு முதலாளியின் வாயை அடைத்துவிட்டது.
68) ia 2a
தம்பிலுவில் தமிழ்ப் புலவர்
சி.வில்லியம்பிள்ளை
ஈழத்தின் கிழக்கு மாகாணத்தின் அம்பாரை மாவட்டம் திருக்கோவில் பிரதேச செயலகப் lf if 6f 65 அமைந்துள்ள அழகிய கிராமம் தம் பிலுவில் . நானில வளம் சூழி தனித்தமிழ் கிராமமான இங்கு பழந்தமிழ் புலவர்பலர் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அவர் களில ஒருவரே சி.வில்லியம்பிள்ளை. இவரின் தந்தை சில வா. தாய் சந்தனப் பிள்ளை. இவர்களின் இல்லறச் சோலையிலே பஞ்சபுஸ்பங்களாக ஐந்து பிள்ளைகளைப் பெற்றெடுத்தனர். அவர்கள் ஒருவரும் இன்று உயிருடன் இல்லை.
சி.வில்லியம்பிள்ளை 1891 இல் பிறந்தார். ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் மிசனரிப் பாடசாலையில் கல்வி கற்றாலும் தமிழையும் சைவத்தையும் தனது நயனங்களாக நேசித்தார். தனது சுயார்வத்தால் சோதிடக் கலையைக் கற்று சாஸ்த்திரியார் எனவும் பெயர் பெற்றார். ஆங்கிலேயருடன் சேர்ந்து சமூக சேவைகளில் ஈடுபட்டதால் இவரின் திறமையறிந்து ‘விதானை யார் ’ வேலை வழங்கப் பட்டது. உத்தியோகத்துடன் மட்டும் நின்று விடாது உள்ளத்து உணர்வுளை வெளிப்படுத்தும் இலக்கியத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இவர் எழுதிய நூல்கள் கையெழுத்துப் பிரதிகளாகவே இருந்து அழிந்து போயின. அவற்றுள் சில.
பவளேந்திரன் நாடகம், கண்டிராசன் சரிதை, புவுனேந்திரன் விலாசம், நச்சுப் பொய்கைச் சருக்கம், சுந்தர விலாசம், மதுரை வீரன், இரத்தினாபுரி இரகசியம்(நாவல்), மஞ்சடபூதம்(நாவல்), திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமிகள் துதிப்பாடல், திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி திருப்பதிகம், திருக்கோயில் சித்திரவேலாயுத சுவமி திருக்கைலாய ஊஞ்சற் பாக்கள் ஆகும். இவற்றுள் ஒரு நூலாவது அச்சுப் பெறாமை மனவருத்தமான செயலாகும்.
39
Page 22
திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி கல்யாண ஊஞ்சற் கவியில் ஒருபாடல்
தேவர் புகழ் கதிர்காமம் தில்லை மண்டுர் சித்தாண்டி போரேறு தீவ மேலாம் தாவுமாரை யம்பதி வெருகலம்பதிச்
சன்னிதிகள் முதலான தலங்கள் தோறும் மேவியே வலம்வருமுன் அடியார் தங்கள்
வினை நீக்கிக் கதியளிக்கும் விண்ணோர் நாதா பூவுலக மேத்து திருக்கோயில் மேவும்
புள்ளிமயில் வாகனனே ஆடீ ரூஞ்சல்
இவர் தம்பிலுவில் சித்தி விநாயகர் திருக்கோயில் சித்திரவேலாயுதர் ஆலய நிர்வாகசபைத் தலைவராகவும் இருந்து பல பணியாற்றினார்.
எல்லோரிடமும் இனிமையாகப் பழகும் சுபாவம் கொண்ட இவர் சமூகத்தில் ஏற்படுகின்ற பிரச்சனைகளை எளியமுறையில் தீர்த்து வைக்கும் தனித்திறன் கொண்டிருந்தார். ‘ஐயா’ என எல்லோரும் மரியாதையுடன் அழைக்கப்படும் இவர் ஆங்கிலேயருடன் நெருங்கிப் பழகியதால் அவர்களின் உதவி பெற்று பல சமூகப் பணிகளில் ஈடுபட்டார்.
இவரது பெருமையைபேணும் முகமாக திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி கல்யாண ஊஞ்சற்பாட்டு ஆடி அமாவாசைத் தீர்த்தத் திருவிழா பூசையின் பின் பாடப்பட்டு வருகின்றன. தம்பிலுவில் முதலாம் பிரிவில் உள்ள வீதிக்கு வில்லியம்பிள்ளை வீதி எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
-திருமதி. ஜெகதீஸ்வரி நாதன்(தம்பிலுவில் ஜெகா)
0 Máis fin 2c
சீச்சீ. (குறும்பாக்கள்)
a vastaaf ad/defeafald உயிரினும் மேன்தமிழெனிறே, பாட்டும் væðasv{ð c/æfe/Ibó பாரினுக்கே எடுத்தோதும் நிலைகுலைவ தேன் இழிவின் நாட்டம்?
திருமணத்தை வெடிங் எண்றே கூறல் தினந்தோறும் "பங்ஷன் எண்றே ஒடன் அரியதமிழ் மொழிகொண்று அம்மாவை "மம்மி யென்று பெருமையுடன் கூறுபவர் மூடர்
saíøføvsgöflugíkóømav 'amučio stravaõiguió 6ølófá ‘te’ ‘87ÜLifo உண்ணுவது "டிபணி லஞ்சு உடையவில்லைத் தமிழ் நெஞ்சு..? alajókódý ur‘8Franá, LmaíøročLó
நன்றி தமிழ் மறுந்து விட்டார்ரங்கியூ" நாள் விடிந்தான் "மோனிங்,சேர் அங்கிள் சென்றதிசை எண்லாமே சிரிப்பதுவும் "இஸ்மாயின் கொண்றுகின் பண்ணவுளம் பொங்கும்
நண்வரவு 'வெண்கம் என ஆச்சு நடை"வோக்கிங் ரோக்கிங்தானி போச்சு எண்லையின்7ை இனிய மொழி இருக்கையிலேன் இழிவு வழி.? நண்லதமிழ்நாவமர்த்து மற சீச்சி
(4) Osińssifika 20
- கவிஞர் நிலா குமிழின் தான்
Page 23
“ஆ. மெள்ள. மெள்ள உழுந்திராத இதென்னடா வைரமுத்து விடியக் காலத் திலேயே தள்ளம்பாறுறா? “டயபிற்றிசெண்டு இங்கிலிஸில சொல்லுற சீனி வருத்தக் காரனெலுவா நீ ராவு குளிசபோடல்லையா? போட்டநீயா? பிறகேன் தள்ளம்பாறிவாறா? அடடே வருசம் புறக்க முதலே போட்டனியா? உனக்கிருக்கிற வருத்தத்துக்கு சாராயம் துப்பரவா ஒத்துவராதே’ டாகுத்தர் மார் உனக்கிட்டச் சொல்லல்லையா?”
“சொன்னவங்கதான் வீரக்குட்டியண்ண. புறகும் அவால் உடல்ல. நாலஞ்சிமாதம் சாராயம், தேத்தண்ணி ஒண்டும் குடிக்காமல் பல்லக்கடிச்சித்து இருந்தன். வருசம் புறந்ததும் எல்லாத்தையும் மறந்துபொயித்தன். நம்மட சீவியம் இன்னும் கொஞ்சக் காலம்தானே வாறவருசம் கிடக்கிறனோ என்னவோ? அதுக்குள்ள என்ன பத்தியமும் கித்தியமும்!”
“அப்படியெல்லாம் சொல்லாத வைரமுத்து! நீ கூத்துப்பழக்கிற திறமான அணி ணாவியாரெலுவா? நாங்கதான் செத்துப் போனாலும் நீ கனகாலத்துக்குச் சீவிக்கவேணும். எதிலையும் கொஞ்சம் அவதானமாக இருக்க வேணும். அதுசரி உனக்கு விடியக் காலத்திலேயே வருசம் புறந்திருக்கு. ஆனா பதினொரு மணிக்குத்தானாமே புத்தாண்டு புறக்குதெண்டு ஒரு பஞ்சாங்கத்திலயும் இன்னுமொரு பஞ்சாங்கத்தில ஒருமணிக்குமெண்டு போட்டிருக்கு. இதென்னடா கூத்து இது. மனிசர் எத நம்புற? மத்தவனுகளெல்லாம் நம்மளப்பார்த்துச் சிரிக்கிறானுகளே நல்ல வேளை பதினஞ்சாம் பதினாறாம் திகதியில வருசம் புறக்குமெண்டு ஏதாவது பஞ்சாங்கங்கள் சொல்லியிருந்தா சனம் என்ன பாடுபட்டிருக்கும்! எனக்கெண்டா தலகிலயெல்லாம் சுத்துது! நான் பதினொரு மணிபோலதான் முழுகுவன்! அதுக்குப் புறகுதான் கைவிசேசம் வாங்கவேணும்! அப்பசரி நான் வரப்போறன். அதுசரி இந்தமுற வருசத்துக்கு நம்மட ஊரிலெண்டாலும் நீ கூத்தக்கித்தப்பழக்கல்லையா? பழக்கி முடிஞ்சா? நீதான் உடமாட்டயே! எப்ப அரங்கேத்தம். சனிக்கிழம ராவைக்கா? நானும் கட்டாயம் வருவன். விடிய விடிய இருந்து கூத்துப்பாக்க வேணும். நேரத்துக்கு நீபோய் மாமாங்கத்தீர்த்தக்கரக் குளத்தில உழுந்து முழுகு. நானும் அங்கதான் வருவன். மெள்ள மெள்ளக் கவனமாப் போ. நானும் வரப்போறன்.”
(42) GSkafifiálio 20
S 恋 S O O O O ஜி எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வழங்கிய @ தமிழியல் விருது -
- அன்புமணி
மட்/எழுத்தாளர் ஊக் குவிப்பு மையத்தினி இரண்டாவது விருது வழங்கும் விழா - 27.03.2011 மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் ஆண்டுதோறும் நடாத்துகின்ற மேற்படி வைபவம் இவ்வாண்டு 27.03.2011 இல் மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் இடம்பெற்றது. அமரர் கவிஞர் பாண்டியூரன் பெயரில் மண்டபம் அமைந்தது.
இவ்வைபவத்தில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு - கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் கலந்து கொண்டார். சிறப்பு விரு நீ தினர்களாக தமிழறிஞர் அகளங்கனி , வவுனியுர் இரா.உதயணன்(லண்டன்), கவிஞர் சு.முரளிதரன் ஆகியோரும் கெளரவ விருந்தினராக மட்டக்களப்பு அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்களும் கலந்து கொண்டனர்.
விருதுகள் வழங்குவதற்கு முன்னர் விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றன. வரவேற்புரையை டொக்டர் ஆர்.றுசாந்தன்(ஒவியர் கிக்கோ) நிகழ்த்தினார். அது வெறுமனே வரவேற்புரையாக இல்லாமல் ஆய்வுரையாகவே அமைந்தது. அதனால் அதிக நேரத்தையும் எடுத்துக் கொண்டது. அடுத்து வணபிதா சிறிதரன் சில்வஸ்டர் வாழ்த்துரை வழங்கினார். இரத்தினச் சுருக்கமாக அவ்வுரை அமைந்தது. அடுத்து ஓ.கே.குணநாதன் நிகழ்த்திய அறிமுக உரை. பலரும் எதிர்பார்த்திருந்த முக்கியமான தகவல் கிடைத்தது. எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் உருவான விதம் - அகில இலங்கை ரீதியில் பல்வேறு துறைகளுக்குமான நூல்களைப் பெற்று நடுவர் குழுவினரால் மதிப்பீடு செய்யப்படும் விதம் முதலிய சகல விபரங்களையும் அவர் சாங்கோபாங்கமாக கூறினார். நேரம் அதிகம் எடுத்தாலும் அது தேவையாகவே இருந்தது. அவ்வாறே
(3) súsi fán 2a
Page 24
தமிழறிஞர் அகளங்கனின் சிறப்புரை ஒரு சிறந்த தமிழ் விரிவுரையாக அமைந்தது. அதைத் தொடர்ந்து ஏனைய சிறப்பு விருந்தினர்களின் உரைகள் அமைந்தன. பிரதம விருந்தினரின் உரை அதிர்ச்சி வைத்தியமாக அமைந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேற்படி செயற்பாடுகள் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். நூல்களை நிபுணர் குழுக்கள் மூலம் மதிப்பீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு துறைக்கும் ரூ.10,000/= பொற்கிழி வழங்குவதற்கான அனுசரணையாளரை ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழியல் விருது வழங்குவதற்கான விழாவை ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவை அனைத்தையும் ஓ.கே.குணநாதன் தனது உதவியாளர்களுடன் மேற்கொள்கிறார். அந்தவகையில் அவர் ஒரு தனிநபர் நிறுவனமாகவே செயற்படுகின்றார்.
பல இலக்கிய அமைப்புக்கள் செய்வதுபோல ஊர் கூடிச் செக்குத் தள்ளுவதில் அவருக்கு நம்பிக்கையில்லை. எனவே தனியாகவே எல்லா ஏற்பாடுகளையும் செய்கிறார். மாற்று ஒழுங்குகள் முதலிய அனைத்தும் அவர் கண்காணிப்பிலேயே நடைபெறுகின்றன. அதனால் எந்தவித பிசிறும் இல்லாமல் நிகழ்வுகள் நடந்தேறுகின்றன. அந்தவகையில் இந்த மகத்தான சாதனையை நிகழ்த்தும் ஓ.கே.குணநாதனை எவ்வளவு பாராட்டினாலும் g5(5LD.
மட்/புனித சிசிலியா பெண்கள் கல்லூரி சாதனை படைத்துள்ளது
2010 ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தமிழ் ஆங்கில ஊடக மொழியை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்ற பரீட்சையில் இரு ஊடக மொழிகளிலும் தோற்றிய மாணவர்களில் மட்/புனித சிசிலியா பெண்கள் கல்லூரி மாணவி செல்வி பிரணவி வரதராஜன் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளார். “செங்கதிர் இன் பாராட்டுக்கள்.
(4) செங்கதிர்சிதிர20
மீண்டும் ஒரு காதல் கதை
- திருக்கோவில் யோகா.யோகேந்திரன்
ராதாவுக்கு கணி னணி கூறியதைக் கேட்டதும் கண்கள் பனித்தன. அவனது நல்ல மனசை நோகடிக்க வேண்டியதாய்ப் போச்சே என மனம் வருந்தினாள். அந்த வருத்தத்துடன் உங்களை ப்பற்றி எனக்குத் தெரியாதா அத்தான்? நான் உங்களு க்குச் செய்தது மிகப் பெரிய துரோகம். ஆனால் நான் வேணுமென றெல லா ம அப்படிச் செய்யல்ல அது
ما
எனக்கு தவிர்க்க முடியாமப் போச்சு.”
“பரவாயில்லம்மா. அது எனக்குத் தெரியும். ஆனா நீ இப்பிடி இருக்கிறதையும் மாமா மாமி உன்னைப்பார்த்து கவலைப்படுவதையும் என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியல்ல. நீ எப்பிடியும் கல்யாணம் செய்யத்தான் வேணும். அது உன்னால் விரும்பப்படுற ஜயலத்தாக இருக்க வேணும். முடியாமப்போனா உன் அத்தான் கண்ணனாக இருக்க வேணும். இதுக்கு உன் வாக்குறுதி எனக்குத் தேவை.”
“அத்தான் உங்கட கற்பனையைச் சிதறடிச்சு வேற ஒருத்தரை நான் விரும்பியபோதும் இன்னமும் அவரையே நினைச்சுக் கொண்டிருக்கிற போதும் எனக்காகக் கவலைப்படவும் என்னைக் கல்யாணம் செய்ய நினைக்கவும் கூடிய உங்கள் பெருந்தன்மைக்கு முன்னால் நான் அப்பட்டமான சுயநலக்காரி. என்னை மன்னிச்சுக் கொள்ளுங்க. இந்த ரெண்டு வருசத்துக்குள்ள ஜயலத் கிடைக்காமல் போனா நீங்க சொல்கிற
45) Gioiiiii. 20.
Page 25
மாதிரி உங்கட நிபந்தனையை ஏற்றுக் கொள்றன்.” குரல் பிசிறடித்தது ராதாவுக்கு.
இந்த வாக்குறுதியை ராதா முழுமனத்தோடு தரவில்லை என்பதை கண்ணன் உணராமல் இல்லை. இருந்தும் அவளது கரங்களைப்பற்றி “தாங்யூ ராதா தாங்யூ சோமச். இருந்தாலும் சொல்றன் ராதா. உன் ஜயலத் உனக்கு கிடைக்க வேண்டும். நீ சந்தோஷமாக வாழ வேண்டும். இப்படியொனதொரு வாக்குறுதியை உன்னிடம் கேட்டுப் பெற்றுக் கொண்டதற்கு என்னை மன்னிச்சுக்கோ. இப்படி நான் கேட்டதற்கு என்மேல கோபமொன்றுமில்லையே.”
“இல்லத்தான். சத்தியமாக உங்கமேல எந்தவிதமான கோபமும் இல்ல.”
சூழ் நிலையின் அசாதாரண நிலைமையை இயல்புக்குக் கொண்டுவர விரும்பிய ராதா “அதுசரி! உங்கள் அமெரிக்கப் பயணம் எப்போ?”
என்று கேட்டாள்.
“இன்னும் ஒன்றரை மாதத்தில் புறப்பட வேண்டி வரலாம் என அறிஞ்சன். அதுக்கிடையில் நிறைய வேலைகள் செய்ய வேண்டி இருக்கும்.’
“மத்தியானம் இங்க சாப்பிடுங்களன் அத்தான். இன்றைக்கு உங்களுக்கு லீவுதானே?”
“லிவுதான். இன்றைக்கு குவாட்டஸ்சுல ஒரு பார்ட்டி. நம்மட காண்டீபனுக்கு முதற் குழந்தை கிடைச்சதுக்காக லஞ்ச் தாறான். நான் அங்க சாப்பிடுறன்.”
“அப்பசரி.’
“நான் பிறகுவந்து மாமா மாமியைச் சந்திக்கிறன் வரட்டுமா?’
“gf.”
அங்கிருந்து கண்ணன் புறப்பட்டுப் போவதைப் பார்த்துக் கொண்டு நின்ற ராதாவின் வாய் “கண்ணன் அத்தான் ஒரு ஜெம்’ என முணுமுணுத்துக்
கொண்டது.
அது அமைதியும் அழகும் செழிப்பும் கொண்ட ஒரு தென்னந்தோட்டம்.
6) செங்கதிர்சித்தின20
எந்த நேரமும் சிலுசிலுவென்ற காற்று ஒருபுறம். ஆர்ப்பரிக்கும் கடலோசை, வாகன இரைச்சல்களோ தொழிற்சாலைகளின் பேரொலிகளோ சனங்களின் ஆரவாரங்களோ இல்லாத அந்த மெளனப் பிரதேசத்தில் சுற்றி வரத் தென்னை மரக்கிற்று மிளநீருமான சூழலில் அமைக்கப்பட்ட அழகிய சிறு வீட்டில் சிந்தனையோடு படுத்துக் கிடக்கிறான் ஜயலத்.
அந்த வீடு ஒரு ஆச்சிரமம் போல மூங்கில்களினாலும் பலகைகளினாலும் வடிவமைக்கப்பட்டு தென்னங் கிடுகுகளினால் கூரையிடப்பட்டிருந்தது. வீட்டைச் சுற்றி அழகிய பூந்தோட்டம். ரோஜாவும் மல்லிகையும் செவ்வரத்தையும் மயில் கொன்றைகளுமாக வீட்டின் சுற்றுப் புறத்தை வண்ணமயப்படுத்திக் கொண்டிருந்தன.
அங்கு தங்கியிருந்த ஜயலத்திற்கு எந்தவிதமான குறையுமில்லை. அவனைப் பரிவுடன் கவனிக்கவும் வேளாவேளைக்கு விதம்விதமாக சமையல் செய்யவும் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி. எடுபிடி வேலைகளுக்காக ஒரு சிறு பையன். நேரத்திற்கு குளிப்பு . சாப்பாடு. பொழுது போக்கிற்கு வானொலி.
இடைஇடையே வந்து அவனை நலம் விசாரித்து உரையாடிச் செல்லும் தொழிலதிபர் கார்த்திகேயன். அவருடன் வந்து மென் மழலை கொட்டிச் செல்லும் அவனது செல்ல மகள் நிலுக்கா. இப்படியாக அவனுக்கு பொழுதுகள் கழிந்து கொண்டிருக்கின்றன.
அவனது மகள் வந்து போகும் ஒவ்வொ தடவைகளிலும் அம்மாவை விசாரிக்காமல் போவதேயில்லை. அந்தப் பிஞ்சு தன்னால் எவ்வாறெல்லாம் ஏமாற்றப்படுகின்றதென்பதை எண்ணியெண்ணி மனம் குமைவான் ஜயலத். அவனுக்கு இதயத்தை பிழிகிறாற்போல் வலிக்கும்.
அவனுக்கு விழிகளில்ஒளி இல்லை. மனசில் அமைதியில்லை. அடிக்கடி அவனது உதடுகள் “ராதா மாவ சமாவென்ன” என முணுமுணுக்கும். ஆம் இந்த நிலையில் தன்னை மன்னிக்குமாறு மானசீகமாக ராதாவிடம் வேண்டுவதைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லை.
ராதா என்னும் இனிய பெண்ணின் வாழ்வில் குறுக்கிட நேர்ந்த விதியை எண்ணி மனம் வருந்துவான் ஜயலத். சிறப்பாக ஒரு எதிர்காலம் அமைய இருந்த ஒரு நல்ல பெண்ணின் மனசு கலைய தான் காரணமாகி விட்ட குற்ற உணர்வு அவனை வதைத்தது. ஏற்கனவே முடிவு செய்தபடி அவளது வாழக்கை அமைந்து அவள் சந்தோஷமாக வாழவேண்டுமென்று மனசாரப் பிரார்த்தித்துக் கொள்வான்.
(47) Geliofilifikation 20
Page 26
கல்லடியில் தான் தங்கியிருந்த வாடகை வீட்டிற்கு தன்னைச் தேடிச் சென்று அவள் எப்படி ஏமாந்திருப்பாள் என்னவெல்லாம் நினைத்திருப்பாள் என யோசிக்கும்போது மிகவும் வேதனைப்படுவான். மறுகணம் அவள் என்னவாவது நினைத்துக்கொள்ளட்டும். தன்னை ஒரு நம்பிக்கை துரோகி ஏமாற்றுக்காரன் என எண்ணித் திட்டட்டும். பரவாயில்ல. எப்படியாவது அவள் தன்னை வெறுத்து மனசுமாறி அவள் திருமணம் செய்து நிம்மதியாக வாழ வேண்டும் என நினைப்பான். ராதா தன்னை வீட்டில் வந்து பார்த்து தான் இல்லை. வீட்டை விட்டு சென்றவிட்டதை அறிந்ததும் தன்னைப்பற்றி என்ன நினைத்திருப்பாள்? மனசை மாற்றிக் கொண்டிருப்பாளா? இல்லாவிட்டால் இன்னும் என்னை நினைத்துக் கொண்டிருப்பாளா என்றும் யோசிப்பான் ஜயலத்.
அவள் ஒரு அன்பானவள். நல்ல சிந்தனை கொண்டவள். பிடிவாதக்காரி. அதே சமயம் மென்மையானவள். எத்தனையோ கட்டுப்பாட்டுடன் இருந்த என்னையே தனது அன்பால் திசைமாறச் செய்தவள். அவளுக்கு மனசளவில் என்னைப் பிடித்திருந்தபோதும் அவளருகில் நிற்கக்கூடத் தகுதியற்றவன் நான். அவளைவிட்டு விலகிட நான் எடுத்த முடிவு மிகச் சரியானதுதான் எனத் தன் மனசுக்கு ஆறுதல் கூறிக் கொள்வான் அவன்.
சிறுவயதிலிருந்தே ஒரே வீட்டில் ஒன்றாக வளர்ந்த காரணத்தால் கண்ணன்மேல் காதலும் ஈடுபாடும் ஏற்படுவதற்குப் பதிலாக அவளுக்கு அன்பும் மரியாதையுமே ஏற்பட்டிருப்பதற்கு உளவியல் சார்ந்த காரணங்கள் உண்டென்பதை அவன் அறிவான். அவளைவிட ஆறுவயது கூடியவனான கண்ணன் தன் சிறுவயதில் பெரியவர்கள் தமக்குள் கூறியவற்றைக் கேட்டுக்கொண்டபடி ராதாவைத் தன் மனைவியாக வரித்துக்கொண்டு அதே உணர்வுடன் வளர்ந்ததிலும் தவறில்லை என்பதும் ஜயலத்திற்கு புரிந்தவிடயம்தான்.
தான் இடை நடுவில் குறுக்கிடாதிருந்தால் ராதா எந்த மாற்றுக் கருத்துக்களுக்கும் இடமளிக்காமல் கண்ணணை மணந்திருப்பாள். என்னதானென்றாலும் அவள் கண்ணணுக்குரியவள். அவனையே அவள் மணக்க வேண்டும். அதுவே நியாயம். இப்படியெல்லாம் தனக்குள்ளே சிந்திப்பதும் தனக்குள்ளே தீர்ப்புக்கூறிக் கொள்வதும் அவனால் தவிர்க்க முடியாதிருந்தது.
ராதாவை ஜயலத் முதன் முதலாக சந்தித்ததே ஒரு விசித்திரமான அனுபவம். தன் வாழ்வில் ஏற்பட்ட அந்த நிகழ்வை மனக்கண்முன்
(8) GABIÑős filio 20
கொணர்ந்து ஒவ்வொன்றாக நினைத்துப்பார்ப்பான் ஜயலத். அப்போது அவனது விழிமூடிய முகத்தில் கூட ஒரு பரவசம் தோன்றி மறையும்.
கிழக்கிலங்கையின் எழில் கொஞ்சும் இடங்களில் ஒன்றுதான் கல்லடிக் கடற்கரை. “சிலோன் மெரீனா’ என வர்ணிக்கப்படும் மிக விசாலமான அழகிய மணற் பிரதேசம். ஒரு பிற்பகல் வேளையில் கடற்கரையில் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருக்கிறான் ஜயலத். அவன் ஒரு ஜனரஞ்சக சிங்கள எழுத்தாளன். கதையின் கருவை மனசிலே சுமந்து தன் இரண்டரை வயது மகள் நிலுாக்காவை தோளிலே சுமந்து கடற்கரையில் வந்து எழுத உட்கார்ந்தானென்றால் கதையின் வரிகள் அலைஅலையாக பேனா முனையில் கரையொதுங்கும் அவனுக்கு.
அப்பாவுக்கு நன்றாக எழுதுவதற்கு கடற்கரை என்றால் மகளுக்கு குதுாகலமாக விளையாடக் கடற்கரை. வழக்கம்போல அவன் தீவிரமாக எழுதிக் கொண்டிருக்க நிலு விளையாடிக் கொண்டிருந்தாள்.
குழந்தை மணலை அள்ளி விளையாடுவதும் தான் கொண்டுவந்த சிறு சிறு பிளாஸ்டிக் கிண்ணங்களில் மணலை நிரப்புவதும் மண்பிட்டு செய்வதும் கடற்கரை மணலில் திரியும் சிறு நண்டுகளை பிடிக்க துரத்தி ஓடுவதும் கடற்கரையை ஒட்டிச் செல்லும் கிறவல் பாதையால் வாகனங்கள் செல்லும் போது கைகொட்டி ஆரவாரம் செய்வதுமாக இருந்தாள்.
அடிக்கடி குழந்தையைக் கவனித்தபடி எழுதும் அவன் சில சமயம் எழுதுவதை விட்டு விட்டு குழந்தையின் குதூகலத்தையும் குறும்பையும் ரசித்தபடி உட்கார்ந்திருந்திருப்பதும்உண்டு.
பின் ஒருவாறு தன்னைச் சுதாகரித்துக் கொண்டு மீண்டும் எழுதுவான். அவ்வாறு எழுதிக் கொண்டிருக்கும் போது “தாத்தி. அம்மி அவில்லா மகே அம்மி அவில்லா’ எனச் சத்தமிட்டபடி குழந்தை நிலூ ஓடுவதையும் குழந்தையை நோக்கி சிரித்தபடி ஒரு பெண் வந்து கொண்டிருப்பதையும் கண்ட ஜயலத் குழப்பமடைந்தான்.
யாரோ ஒரு பெண்ணைத் தன் தாயென நினைத்துக் கொண்டு ஓடுகிறதே
இந்தப் பிள்ளை என எண்ணியவனாக எழுதிய தாள்களை சுருட்டி எடுத்துக் கொண்டு அவர்களை நோக்கிச் சென்றான் ஜயலத்.
(49) sidstfikston 20
- கதை தொடரும்.
Page 27
(6)
BTTTTTGTS LGTTTTLLLLLLL SLLLLLLSLTTTLLTTGLLLLS SSSLTssTTTT sTLLTsTLS நீங்களி பgதீததை-பாரீதீததை-கேட்டதை-அறிநீததை இங்கே பகிரீநீது கொளிளுங்களி
“மீளாத காதல்’; கதை பற்றிய ஒரு பார்வை:-
- தம்புசிவா
காகிதாதிகள் விற்பனைக்கடை வைத்திருக்கும் ஒருவர் ஒரு பிரபல நடிகைமேல் கொண்டிருந்த அளவற்ற காதலை கருப்பொருளாக கொண்டு பிரபல ரஸ்ய எழுத்தாளர் மாக்ஸிம் கார்க்கி “மீளாத காதல்’ என்னும் காதல் கதையைப் புனைந்துள்ளார். இக்கதையை டி.என்.ராமச்சந்திரன் தமிழாக்கம் செய்ய சென்னை நியூ சென்சுரி புத்தக நிறுவனத்தினர் நூலாக 2005 இல் வெளிக்கொணர்ந்துள்ளனர்.
இலக்கியத்திற்கு ஒரு சிறப்பு உண்டு; படைப்பின் நோக்கமும் அதன் தன்மையும் படிப்பவர் நெஞ்சம் அகலாதபடி நகர்த்திச் செல்லும் விதமும் தான் அந்தப்படைப்பிற்கு கிட்டும் வெற்றி. கதையில் பேசப்படும்விவாதங்கள் சம்பவங்கள் யாவும் நேரிலே காட்சிகளாய் விரிகிறது. “ஸ்டேஷனரி கடை வைத்திருக்கும் பீட்டர் நாடகநடிகை லாரிஸாவால் கவரப்படுகிறான். ஒரு நடிகையுடன் சிநேகிதமாய் இருந்து காதலனாகமாறி அவளுடன் வாழ்ந்த நாட்கள் எப்படிப்பட்டதாய் இருந்தன என்பதைக் கதை நாயகன் பீட்டர் சொல்லும் விதம் அருமை.
அவள் செல்லும் இடமெல்லாம் சென்று, அவள் பருகும் மதுபானங்களைப் பருகி அவள் அங்கம் தெரிய நடிப்பதையும் ஜீரணித்துக் கொண்டு அவன் முன்னே பலர் அவளையடைய பந்தயம் வைப்பதையும் கண்டும் மேலும் அவளுடைய சுகயினத்திற்கு வைத்தியம் பார்க்க வந்த டாக்டருடன் ஏற்பட்ட பிணைப்பையும் ஒரே மாதத்தில் ஒரே சமயத்தில் அவளுக்கு இரு காதலர் இருந்துள்ளனர் என்பதைத் தெரிந்து கொண்டும் கூட தன்மானப் பிரச்சினையை ஒதுக்கிவைத்துவிட்டு அவள் மீது கொண்டிருந்த காதல் உண்மையானது என்பதை ஊர்ஜிதம் செய்கிறான் இக்கதையின் நாயகன். அவள் இறந்தபிறகும் அவள் நினைவோடு வாழ்வதையே நோக்காகக் கொண்ட மீளாத காதல்
சில சந்தர்ப்பங்களில் அவள் ஏற்றுக்கொள்ளாத விடயங்களைக் கூட
50 löását fiai 20
பீட்டர் சொல்லியுமுள்ளான். “லாரிஸா எனக்கு வாழ்க்கையில் குறிக்கோள் ஒன்றுண்டு. நாடக அரங்கிலுள்ள ஆபாசங்கள் அனைத்தையும் ஒழித்துவிடவேண்டுமென்று விரும்புகிறேன். இன்றைய பெண் உலகத்தின் உயரிய பண்பை உலகமறியச் செய்ய வேண்டுமென்று கருதுகிறேன். வெறும் காதல் மட்டுமல்ல பிள்ளைப்பேறு பெறும் தாய்மை மட்டுமல்ல இன்றைய பெண் புதிதாக ஒன்றை விரும்புகிறாள். அந்தப் பதுமை என்ன? அதை அவள் அடைய வேண்டும்’ என்று மனதில் தோன்றிய எண்ணக்கருத்துக்களை முன்வைக்கிறான்.
அதற்கு லாரிஸா “அது எனக்குத் தெரியாது. இதுபோன்ற வார்த்தைகளை பிற்காலத்தில் ஆயிரந்தடவை கேட்டிருப்பேன். நாடக உலகில் என்பாடு மிகக் கஷ்டம். பொதுமக்கள் எனக்கு குறுக்கே நிற்கிறார்கள். எனது வாழ்க்கைக்குத் தடங்கல் செய்கிறார்கள். எனது முற்போக்குக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள். என்னை சதா தொந்தரவு செய்கிறார்கள். என் லட்சியத்துக்கு இடையூறு செய்கிறார்கள். இறுதியில் இதுமாதிரி பிணங்களாகிறார்கள். எனக்கு எவருமே தேவையில்லை.” லாரிஸா இதுபோல பேசிக்கொண்டே போனாள். நெருப்பை அணைக்கத் தண்ணிரை ஊற்றுவது மாதிரி அவள் குடித்துத் தீர்த்தாள். அவனும் குடித்து தேம்பி தேம்பி அழுதான். லாரிஸாவுக்காகவும் அழுதான். தனக்காகவும் அழுதான். கடைசியாக அவளுக்காகவும் அழுதழுது அவள்டம் முழந்தாளிட்டு உயிருள்ளளவும் அவளிடம் நன்றியுள்ள நாய்போல் நடப்பதாகச் சபதம் செய்தான்.
ஒரு கட்டத்தில் லாரிஸா தன்னை உணர்ந்து பீட்டரைப் பார்த்து ‘என்னால் உன் வாழ்வு சீர்குலைந்து போய்விட்டதே' என்று வருத்தம் தெரிவிப்பது கதைக்கு ஒரு முக்கிய பொருளாகவே விளங்கிடினும் வயது நாற்பதுக்கு மேல் அவளுடைய அழகு குறைய ஆரம்பிக்கையில் எந்த ஒரு நடிகையும் தன் இயலாமையின் காரணமாய் கவர்ச்சியெனும் அஸ்திரத்தை இயல்பாகவே கையில் எடுக்கும்போது அது அவனுக்குப் பிடிக்காதிருந்தது.
இரண்டு முரண்பட்ட எண்ணங்கள், அபிலாசைகள், கொள்கைகள் போக்குகள் நடத்தைகள் இடையேயும் மனத்தில் ஏற்பட்ட ஆழமான காதலுக்காக வாழும் பீட்டர் என்ற ஆண் கதாபாத்திரம் எவ்வளவு தூரத்துக்கு விட்டுக் கொடுப்புடன் வாழ்ந்துள்ளான் என்பதைக் கதைவாசிப்பவர்கள் நன்கு புரிந்து கொள்வார்கள்.
லாரிஸாவை தன் சகோதரன் காதலிப்பதாகச் சொன்னபோதும் “தம்பி!
6) செங்கதிர்சித்தின2று
Page 28
அவள் வருஷப் பிறப்பிலிருந்து என் காதலியாகிவிட்டாள்’ என்று பீட்டர் சொல்லுகிறான். அங்கு நாடகக்காலம் முடிவுக்குவரும் தருணம். அந்தக்காலத்திற்குள் லாரிஸாவும் நானும் சினேகிதர்களாகிவிட்டோம். அப்பொழுது அவளுடைய ஆழங்கானா எல்லையற்ற அழகுக்கடலில் மயங்கித் திளைத்திருந்தேன். அவள் தன்னுடைய பெருவாரியான பணத்தை நாடகத் தொழிலில் போட்டிருந்தாள். நான் தொழில் முறையில் அவளுக்குத் தக்க ஆலோசனைகளைச் சொல்லிவந்தேன். அவள் என்னுடைய நேர்மையையும் நாணயத் தன்மையையும் பாராட்டினாள். ஒரு நாள் பகல். சாப்பாடு முடிந்த தருணம் அவளுடைய மனநிலையை அறிந்து கொள்வதற்காக என் சகோதரன் கோலியா அவளிடம் காதல் கொண்டிருந்த விஷயத்தைக் கூறினேன். முதலில் அவள் அதைப் பொருட்படுத்தவில்லை. “தாங்கள் எந்த முறையில் இங்கு இருக்கிறீர்கள். தங்களுடைய சகோதரன் சார்பாகவா அல்லது அவருடைய விரோதியாகவா?’ என்று சொல்லி திடீரென்று கோபத்தோடு முகத்தை முறித்துக் கொண்டு “எத்தனையோ வாலிபர்கள், வயோதிபர்கள், சிப்பாய்கள், உத்தியோகத்தர்கள், புரட்சிக்காரர்கள், அரசியல்வாதிகள் என்மீது வேண்டியமட்டும் காதல் கொண்டிருக்கிறார்கள்’ என்று கூறி “நான் என்னுடைய வேலையைத் திறமையோடு செய்ய நீங்கள் விடமாட்டீர்கள் போலிருக்கிறதே! எவருடைய காதலும் அன்பும் என்னை ஒன்றும் செய்து விடாது” என்கிறாள் லாரிஸா.
“அவளுடைய வார்த்தைகள் எனக்கு நம்பிக்கையை ஊட்டின. அப்போது அவளிடம் நான் அளவற்ற பிரேமை கொண்டிருந்தேன். அச்சமயம் அதை நான் அவ்வளவாக உணரவில்லை. ஆனால் அவளை முதல் தடவையாகக் கண்டது முதலே காதலித்து விட்டேன் என்பதை உணர்ந்தேன். எல்லாம் திடீர். எல்லாச் சம்பவங்களும் திடீரென்றுதான் ஏற்படுகின்றன. இத்தகைய கூற்றின் ஓடாக பீட்டர் தனது உண்மையான மனநிலையை எடுத்துக் காட்டுகின்றான்.
ஒரு முறை லாரிஸாவிடமிருந்து பீட்டருக்குக் கடிதம் ஒன்று வந்தது. அதில் ‘நான் தங்கள் மனைவி என்று நீங்கள் தற்பெருமையடித்துக் கொள்வதாக உங்கள் சகோதரர் கூறுகிறார் அது உண்மையானால் உடனே பதில் எழுதுங்கள். தங்களை நான் யோக்கியர் என்று கருதுகின்றேன். அதனால் உடனடியான பதிலை எதிர்பார்க்கிறேன்.’ என்று எழுதப்பட்டடிருந்தது.
“நான் யோக்கியன் என்ற முறையில் பதில் எழுத முடியவில்லை. அவள் பொருட்டு நான் என்னைக் காதலித்து, விரும்பி கல்யாணம் செய்துகொள்ள
32) fiff6fåfoậuI ou
நினைத்த பெண்ணை இழந்தேன். அவள் பொருட்டு என் சகோதரன் மீதிருந்த அன்பையும் இழந்தேன். அவள் பொருட்டு என் வாழ்க்கையும் சிதறுண்டதாக உணர்ந்தேன். என்றாலும் முடிவாக ‘இல்லை’ என்ற ஒரே வார்த்தையில் தந்தியொன்றை நான் அவளுக்கு அனுப்பிவைத்தேன்’ என்கிறான் பீட்டர்.
இந்தக்கதையில் கதாசிரியர் எண்ணக்கருத்துக்களும் ஆங்காங்கே உருப்பெற்றிருப்பதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. “பணக்காரர்கள் தங்கள் பணப் பெருமையைப் பீத்திக்கொள்வதற்கு வைத்திருப்பது மாதிரி படித்தவர்களும் தங்களிடையே பல கருத்துக்களை வைத்திருப்பார்கள். எண்ணங்களையும் கருத்துக்களையும் கவனித்துக் கையாள வேண்டும். ஏனெனில் எது சரி எது தவறு என்பதை யாரும் உண்மையில் உணரார். எண்ணம் சரியாக கையாளாதவரை அது மனிதனுக்கு விபத்தாக முடியும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக்கதையின் நாயகன் தான் விரும்பும் லாரிஸா எப்படியானவளாக இருந்தபோதிலும் அவளைப்பிரிய மனமில்லாதவனாகவே இருக்கிறான். மனிதன் அவனுடைய எண்ணங்களினால் வாழவில்லை. ஆனால் அறிவற்ற ஆசையால் வாழ்கிறான்.
பீட்டர் சொல்லுகிறான் - லாரிஸாவினுடைய நடத்தையோ எனக்கு ஆச்சரியமூட்டியது. அவளுடைய பெருமை எங்கே? ஒய்யாரம் எங்கே? அப்பேர்ப்பட்டவள் பிச்சைக்காரன் தன் புண்ணைக்காட்டி பிச்சை யாசிப்பதுபோல் அவள் தன் அங்கத்தை நாடக மேடைகளில் காட்டுகிறாளே என்று நினைத்து நினைத்து அழுதிருக்கிறேன். கடைசியாக ஒரு சமயம் இதை மகாதவறு என்று ஒத்துக்கொண்டாள். என் கழுத்தின் மீது கையை போட்டு “நான் தங்கள் வாழ்வை நாசமாக்கிவிட்டேனே! எனதருமைப்பீட்டரே என்னை மன்னித்துவிடுங்கள். என்னைக்கட்டி முத்தமிடுங்கள்!” என்றாள். நானும் முத்தமிட்டேன். அவளுடைய துன்பத்தைத் துடைக்க அதை செய்தேன். அழுதழுது முத்தமிட்டேன் என்கிறான்.
அவளுக்கு அப்பொழுது வயது நாற்பத்திநான்கு. அவளுக்கு இருதயநோய் ஏற்பட்டுவிட்டது. அவள் எந்த நிமிஷத்திலும் இறந்துவிடக்கூடுமென டாக்டர்கள் முடிவு சொன்னார்கள். கடைசியாக அவள் என்னோடு வெளிநாடு செல்ல ஒத்துக் கொண்டாள். அவள் கடற்கரைப்பட்டினத்தையே விரும்பினாள். இராக்காலங்களில் எனக்கு என்னமோ மன அமைதி இருந்ததில்லை. இது மாதிரியான சந்தர்ப்பங்களில் காதலுக்குப்
59 செங்கதிர்ரித்தின20
Page 29
பாத்திரமானவள் உடன் இருக்க வேண்டியது அத்தியாவசியமாகிறது. ஆகவே லாரிஸாவோடு வாழ்ந்தது வெறும் வாழ்க்கை என்று சொல்லமுடியாது. அவள் மூச்சு விடுவது கஷ்டமாகக் காணப்பட்டது. அவளைக்கண்ணிமைபோல் காத்து வந்தேன். நான் அவள் அறையில் மணிக்கணக்காக உட்கார்ந்திருப்பேன். அவளும் அன்போடு “எனதருமை பீட்டரே! என்பக்கத்தில் உட்காருங்கள்’ என்றாள்.
கடைசியாக அவளால் பேச முடியாதபோது நான் அவள் காலடியில் குனிந்து என் முகத்தை மூடிக்கொண்டு “என் அன்பே என்காதலே! நீ சாகக்கூடாது’ என்று பிரார்த்தனை செய்தேன். ஒருவன் தான் அருமையாக காதலித்த காதலியைப் பறிகொடுப்பதென்றால் அது மிக மிக சகிக்க முடியாத வேதனையாகும். இந்த சொல்லமுடியாத மனவேதனையோடு இருநூற்றெட்டு நாட்கள் கழித்தேன். இருநூற்றொன்பதாம் நாள் லாரிஸா இறந்தாள். அங்கு குன்றின் பக்கமிருந்த சிறிய மாதாகோவிலின் தோட்டத்தில் அவளைப் புதைத்தேன்.
கடைசியாக நான் ரஷ்யாவுக்கு வந்து இந்த இடத்தில் இருந்து கொண்டேன். ஏனெனில் லாரிஸா வாழ்ந்த இடம் இந்த எதிர் வீடுதான். எங்களுடைய கதையே இங்குதான் ஆரம்பமாகிறது. நான் அவளுடைய போட்டோக்களை அச்சிட்டு விற்பனை செய்து வருகின்றேன். அதுவும் லாபத்துக்காக விற்பனை செய்யவில்லை. பூச் சாடியிலுள்ள மலர்களைத்தான் அவள் கடைசி முறையாக அடுக்கி வைத்திருந்தாள். ஆனால் அவைகளும் மங்கிப்போய்விட்டன. அவைகளைக்காப்பாற்றி வைக்க அளவற்ற பிரயாசைப் பட்டேன். அனைத்தும் பயனற்றுப்போயின என்று அங்கலாயப் க்கும் பீட்டர் அவள் நினைவோடு வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
இந்த மீளாத காதல் ரஷ்ய மொழியில் முதன் முறையாக) 1925 ஆம் ஆணி டு வெளிவந்தது. “எனக் குதி தெரிந்தவற்றைத் தானி நாணி எழுதுகிறேனர். எனக் குதி தெரியாதவற்றை நான் ஒருபோதும் எழுதுவதில்லை.” என்று கூறும் முற்போக்கு எழுத்தாளர் மாக்ஸிம் கார்க்கியின் இக்கதை அவரின் உன்னதங்களிலி மிகச் சிறந்தது. எனி பது ஆண்டுகளுக்குப் பின் தமிழில் வெளிவந்துள்ளது. கதை சிறிதாக இருந்தாலும் படிக்க சுவாரஸ்யமாகவே இருக்கிறது. அக் காலத்திலிருந்து இக் காலம் வரை ஒரு நடிகையை காதலித்தால் அவள் எப்படியெல்லாம் இருப்பாள் அல்லது வாழ்வாள் என்பதற்கு இக்கதை ஓர் எடுத்துக்காட்டு. لم
6Grisófilifosfor 201
தோல3ள்
பாம்பு தோலைக் கழற்றி வைத்துவிட்டுப் புறப்பட்டது. ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்த பக்கம் அது போனது அங்கே நின்ற தனியன் ஆட்டிடம் “அதோ பார். பாம்பு உன்னுடையவர்கள் இருக்கும் இடத்தை நோக்கித்தான் போகிறது.
நச்சுப்பாம்பு - பல்பட்டாலே போதும்.” என்று கூறியது சேவல். ‘அப்படி ஒன்றும் நடந்துவிடாது. பாம்பு தோலைக் கழற்றி புதிதாய்ப்பிறந்திருக்கிறது. என்றது தனியன் ஆடு. சிறிது நேரத்தில் ஆடுகளின் அலறல் புல்வெளியை உலுக்கியது. ஓசை வந்த திசை நோக்கி தனியன் ஆடும் சேவலும் ஓடின. அங்கே, பாவம் .அப்பாவி ஆடுகள் இரண்டு பாம்புக்குப் பலியாகிச் செத்துக்கிடந்தன.
சேவல் சொல்லியது:
“பல்லைக்கழற்றாத பாம்பு தோலைக் கழற்றி என்ன? வாலைக்கழற்றி என்ன?”
நன்றி: "காசி ஆனந்தன் கதைகள்?
©न्म சித்தி ை20
Page 30
WIWIÖIWluIOL WHI\biu
தமிழ் உலகத்தின் ‘பாவேந்தர்’ என்பவர் புதுவையின் கனகசுப்புரத்தினம் என்னும் பாரதிதாசன். 1891 ஏப்பிரல் 29 ம் நாள் அவரது பிறந்ததினம். அப்பா பெயர் கனகசபை, அம்மா பெயர் இலக்குமி அம்மாள். நான்கு பிள்ளைகளில் இவர் மூன்றாமவர். மனவுறுதியும் வாதிக்கும் தன்மையும் சிறுவயதிலேயே அவர் சிந்தையுள் ஆட்கொண்டவை. நிமிர்ந்து நடப்பார். நெருப்பாயப் கொதிப் பார் . சிறுமை கணி டால் சீறி எழுவார். தமிழைப்பழித்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன் என்பார். மதிக்காத எதிரியை மிதிக்கவும் தயங்கார். அது ‘தமிழ்த்திமிர்’ என்றுதான் எண்ணப்படுகின்றது. 37 ஆண்டுகள் தான் விரும்பியபடியே தமிழ்மணக்கும் ஆசிரியத் தொழிலில் தரித்து நின்றவர். நெடியதும் உயரியதுமான அவர் தமிழ்ப்பணிக்கும் நாட்டுப்பணிக்கும் ஈடில்லை. பெரியாரைத் துணை கொண்ட பேரறிவாளனாக அவர் வாழ்ந்திருந்தார். அவரது உவமைகள், சந்தப்பாங்கு, உணர்த்தல்கள் என்பன உயரிய நோக்கானவை. தமிழர்க்கு விருந்தானவை.
சித்தர்கள், குமரகுருபரர் போன்றவர்களின் சாயலைக் கூட இவரிடம் ஆய்வாளர்கள் கண்டிருக்கின்றார்கள். பதினெட்டு வயதில் தமிழாசிரியராகப் பணியேற்றபோதே வயது பற்றிய சர்ச்சை எழுந்தது. தைரியமாக அதை எதிர் கொண்டார். நீதிமன்றம் சென்று நியாயம் கேட்டார். 1908ல் அவர் விரும்பிய தமிழ் ஆசிரியர் பதவியும் மகாகவி பாரதியாரின் அறிமுகமும் கிடைக்கின்றது. “எங்கெங்கு காணினும் சக்தியடா...” எனத் தொடங்கும் பாடலுடன் பாரதியின் கவிதா மண்டலத்துள் கனக சுப்புரத்தினம் “பாரதிதாசன்’ ஆகிறார். அதன்பின் அவரது பாடல்கள் தூண்டலும் துலங்கலுமாக வெளிவருகின்றன. சுப்புரத்தினம் செல்வச் செழிப்பில் வளர்ந்தவர். அவர் அப்பா பிரான்சுக்கு கப்பல் வணிகம் செய்தவர். எனினும் பிற்காலத்தில் சிறிது தளர்விருந்தது. இளம் வயதிலேயே
56) செங்கதிர்சித்தின20
இவருக்குத் தமிழ்ப் பற்று ஊட்டியவரே இவர் அப்பாதான். அதனாலேயே இவர் தமிழ் ஆசிரியர் தொழிலில் நாட்டம் கொண்டார். சுப்புரத்தினம் பாரதிதாசன் ஆன கதை மிகவும் சுவையானது. ஒரு திருமண வீட்டில் நண்பர்கள் கேட்டுக் கொள்ள இவர் பாரதியின் நாட்டுப் பாடலை இசைக்க அங்கு வந்திருந்த மகாகவி அதைக்கேட்டு ஆனந்திக்க இவரை அழைத்து "நான்தான் பாரதி. அந்தப்பாடலின் ஆசிரியர்” என்று சொல்ல பாரதியாரின் ஒளிபொருந்திய கண்கள் இவரை ஈர்க்க உண்டானதுதான் அந்த இணைப்பு.
பாரதியாரின் அந்தரங்கச் செயலாளர் போல் பத்து ஆண்டுகள் பணியாற்றிய போதுதான் பல தேசீயத் தலைவர்களின் தொடர்பு ஏற்படுகின்றது. அதில் முதன்மையானவர் கப்பல் ஒட்டிய தமிழர் வ.உ.சி.அவர்கள், அதன்பின் வ.வே.சு.ஐயர், அரவிந்தர் என்று பலர் இவரின் தொண்டினைப் பெற்றார்கள். இவர்களின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாகிறார் பாரதிதாசன. அதன் பலனாக பல இரகசிய உளவுச் செய்திகளுடன் ஒன்றிப் போகிறார் பாரதிதாசன். அவர்களின் இரகசிய இருப்பிடங்களுக்கு உணவுகளையும் செய்திகளையும் ஒருநேரச் சுமந்திருக்கிறார். தமிழாசிரியராக சம்பாதித்த பணத்தின் பெரும்பகுதி இந்த விடுதலை வீரர்களைப்பாதுகாப்பதற்கே செலவு செய்யப்பட்டிருக்கின்றது. அந்த தேசப்பற்றை அவர் இறக்கும்வரை எவருக்கும் சொல்லி விளம்பரம் தேட முன்வந்ததில்லை. தோழர் ப.ஜீவானந்தம், குத்தூசி குருசாமி, குஞ்சியம் குருசாமி, மயிலை சீனி வெங்கடசாமி, மாயூரம் நடராஜன், சாமி சிதம்பரனார், நாரண துரைக்கண்ணன், பெரியார் ஈ.வே.ரா என்று பிற்காலத்தில் அவருடன் உறவாடி நின்றவர்கள் பலர் உண்டு.
வாஞ்சிநாதன் கதை இந்திய வரலாற்றின் ஒரு தியாகக்கதை என்பது பலருக்குத் தெரிந்தது. ஆனால் அதன் உள்ளே உள்ள "இரகசியங்கள்’ ஏராளம். அரவிந்தரின் தொடர்பால் உருவாக்கப்பட்ட ‘பாரதமாதா” மண்சிலைகளை பாரதிதாசன் வீடு வீடாகச் சென்று விநியோகம் செய்து வந்தார். நாளாந்தம் பாடசாலைக் கடமை முடிந்த பின் பாரதிதாசன் செய்திட்ட பணிகளில் இதுவும் ஒன்று. அப்படி ஒரு சிலைக்குள்ளேயே ‘ஆவர்’ துரையை மரணிக்க வைத்த துப்பாக்கியும் மறைத்து வைக்கப்பட்டது. அந்தத் துப்பாக்கியின் சொந்தக்காரர் வ.வே.சு.ஐயர். வாஞ்சிக்கு முன்பே சுடப்பயிற்சி அளித்தவரும் அவர்தான். ஆயினும் திருநெல்வேலியில் தங்கியுள்ள வாஞ்சிக்கு எப்படி இத் துப்பாக்கியை அனுப்பி வைப்பது? பாரதிதாசனே அப்பணியை ஏற்றவர். பாரதமாதா சிலையைப் பவ்வியமாக எடுத்துக் கொண்டு தமிழ் நாட்டு எல்லைப் பொலிசாரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு வெற்றிகரமாக
5) GPáősi fuissa 20
Page 31
அச்சிலையை உரியவரிடம் ஒப்படைத்துத் திரும்பினார் பாரதிதாசன். வாஞ்சியின் வரலாற்றில் இத் துப்பாக்கியின் சரிதம் சொல்லப்படவில்லை. ஆனால் வ.வே.சு. ஐயரின் வரலாற்றில் - பாரதிதாசனும் துப்பாக்கியும் கதை இருக்கிறது.
திட்டமிட்டபடி “ஆஷ்” துரை கொல்லப்பட்டு வாஞ்சிநாதன் தற்கொலை செய்து கொள்ள வாஞ்சியின் உயிர் நண்பரான மாடாசாமியை காவல்துறை துரத்தத் தொடங்கியது. பாரதியாரின் அறிவுறுத்தலில் புதுவைக்கு வந்த மாடாசாமியை பாதுகாத்தவர் பாரதிதாசன். அதன் பின்னரான பாரதியாரின் வேண்டுகோளிற்காக மாடாசாமியை இந்தோனேசியாவுக்கு தப்பிச் செல்ல உதவியவரும் இவர்தான். பாவேந்தர் மாறுவேடத்தில் கட்டுமரத்தின் மூலம் கடல் நடுவே தரித்து நின்ற இந்தோனேசியக் கப்பலுக்கு தைரியமாக நடுநிசியில் மாடாசாமியை அழைத்துச் சென்றிருக்கிறார். கப்பலில் ஏற்றிவிட்டுத் திரும்பியபோது ஆழ்கடலில் ரோந்து சென்ற பொலிசாரின் நீராவிப்படகின் கண்காணிப்பிலிருந்து தப்ப நடுக்கடலில் ஒன்றரை நாட்கள் அவர் தனியே தரித்து நின்றிருக்கிறார். அது பற்றிய தற்றுணிவையும் அயராத முயற்சியையும் அரவிந்தர் போற்றி இருக்கின்றார்.
தேசீயத்தின்பால் பெரியார்களின் தொடர்புகளின்பால் அவர் ஒன்றே கால் (15 மாதங்கள்) ஆண்டுகள் சிறைவாசம் செய்ய நேரிட்டது. திருமண நிச்சயதார்த்தம் சூட அவர் துணைவியார் பழனிஅம்மாளுடன் சிறையில்தான் நடந்தது. “நான் செய்ய வேண்டியது என்ன என்புதுதான் என்னுடைய சிந்தனையே தவிர பிறர் என்ன எண்ணுகிறார்கள் என்பது அல்ல” என்பார் இவர். அவரது அரசியல் பிரவேசம் 1955ல் நடந்தது. புதுவைச் சட்ட சபையின் தலைவர் ஆகிறார். அவர் தன் கருத்துச் சுதந்திரத்தில் கண்ணானவர் என்பதால் அரசியலிலும் கூட அவர் கடும் போக்காளராகவே கருதப்படுகின்றார். எதிர்ப்பு எங்கிருந்து வந்தாலும் திருப்பித்தாக்கும் திடமனம் அவருக்குண்டு. பிற்காலத்தில் அவரது வாரிசுகளாக அறிமுகப்படுத்திக் கொண்ட பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் சுப்புரத்தினதாசன் என்னும் கவிஞர் “சுரதா” என்பவர்களிடமும் இந்தப் பண்புகளைப் பார்க்க முடிகின்றது.
இந்திய தேசிய இயக்கத்தில் ஒரு காலத்தில் இவர் பங்களிப்பு மகத்தானது. சுயமரியாதை இயக்க கவிஞனாக - திராவிட இயக்கப் பாவேந்தராக பரவலாக அறியப் பெற்றுள்ள பாரதிதாசனை இந்திய தேசியக் கவிஞனாக அறிந்தவர் சிலரே. அவரது இந்தவரலாற்றுப் பாத்திரத்தை காங்கிரஸ் இயக்கம் முன்னெடுக்கவில்லை. திராவிட்ர் இயக்கம் சொல்ல
68) செங்கதிர்சித்திரை20
விரும்பவில்லை. பேராசிரியர் இரா இளவரசு “இந்திய விடுதலை இயக்கத்திலும் பாரதிதாசன்” என்னும் ஆய்வு நூலை வெளியிட்டுள்ளார். இவரது தேசியப்பாடல்கள் “தேச சேவைகளில் கே.எஸ்.பாரதிதாசன்” என்ற பெயரில் 33 பாடல்கள் வெளிவந்தன. அவரது தேசியப்பாடல்கள் ‘சிறுவர் சிறுமியர் தேசியகீதம்’, ‘தொண்டர் படைப்பாட்டு”, “கதர் இராட்டினம்’ என பாட்டு நூல்களாக வெளிவந்தன. காங்கிரஸ் அமைப்பைப்பற்றி பாரதியார் பாடாத குறையை பாரதிதாசன் நிறைவு செய்து எழுதிய ‘தேச மாமன்றம்” 1924 மார்ச் 13ல் வெளிவந்தது. காங்கிரசைப்போற்ற வேண்டும் அதில் சேரவேண்டுமென்று அழைப்பு விடுத்து சொல்வளம், கருத்துவளம் ஒன்றுக்கொன்று போட்டியிட எட்டுப்பாடல்களை எழுதியிருக்கிறார் இவர்.
1935 ல் முதன் முதல் பாட்டேடான “சிறீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம் வெளிவந்தது. அதன் ஆசிரியர் இவர். 1946 ல் அவரது கவிதா சஞ்சிகையாக “முல்லை’ முகிழ்ந்தது. அந்த ஆண்டிலேயே *புரட்சிக் கவிஞர் ” பட்டமும் 25000/= ஆன பண முடிப்பும் வழங்கப்படுகின்றது. வழங்கப்பட்ட பணமுடிப்பை கொடுத்தவரான ‘அண்ணா தன் கையில் வெள்ளித்தட்டில் வைத்திருக்க இவர் எடுத்துக் கொண்டார். தமிழ்க்கவிஞன் கரம் தாழ்ந்து பணம் பெறுவது இங்கே தவிர்க்கப்பட்டது. கெளரவம் காப்பாற்றப்பட்டது. சுயமரியாதைக் கோட்பாடு வெளிப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது கவிதைகளின் மூன்று தொகுதிகளாக வெளிவந்தன. “பாண்டியன் பரிசு” திரைப்பட முயற்சியும் நடந்தது. ஆனால் அத்திரைப்படம் வெளிவரவில்லை. மகாகவி பாரதியாரின் உறவினரும் தற்போது பாரதியாரைப் பற்றிய முழுமையான ஆய்வுகளையும் வரலாற்று வாழ்க்கை குறிப்புகளையும் மூன்று பெரிய நூல்களாக (3000 பக்கங்கள் வரை) தந்திருக்கும் மயிலை சீனி வெங்கடசாமி அவர்கள் தனது பாரதி தொகுப்பின் முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார். “பாரதியார் பற்றிய முழுக்குறிப்பும் வாழ்வும் தவறுகள் இன்றி எவ்வித தவிர்ப்புகளுமின்றி வெளிவர வேண்டுமெனவும் அவர் பற்றிய முழு நீளத் திரைப்படமொன்று உருவாக்கப்பட வேண்டுமென்றும் அவாவுற்றிருந்த பாரதிதாசனார் இன்று இருந்து என்னை வாழ்த்தியிருந்தால் என் முயற்சிகளுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக எண்ணியிருப்பேன்’ என.
பாரதிதாசனை தற்பெருமையும் முரட்டுத் தன்மையுள்ள மனிதர் எனச் சிலர் கூறுவதுண்டு. இப்படி ஒரு செய்தியின் பின்னணியில்தான் ஒரு முறை பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் அவரை சந்திக்கப்போனார். இவரது
() செங்கதிர்சித்தின20
Page 32
வருகையை பாவேந்தர் எதிர் கொண்ட விதம் இவர் கண்களை குளமாக்கியதாம். “மெழுகிய நிலத்தில் சிறு குழந்தையைப் போல் கால்களை பின்னால் மடக்கி உட்கார்ந்து கொண்டு இவர் அளித்த சங்க இலக்கியத் தமிழ் விருந்தில் இரண்டு மணிநேரமாக என்னை மறந்திருந்தேன்’ என்கிறார் பேராசிரியர். ‘என் வாழ் நாளில் மறக்க முடியாத கனிவினை அவரிடம் கண்டேன்’ என அ.ச.ஞானசம்பந்தன் தன் வாழ்க்கைக்குறிப்பில் எழுதியிருக்கிறார்.
பாவேந்தரின் ரசனைக் குறிப்பு ஒன்று. ஒரு திருமண வீட்டில் முன்னால்
கட்டப்பட்டிருந்த பூசணிக்காயையும் உள்ளே கறியாய் இருந்த பூசணிக்காயையும் கண்டு அவர் பாடியது.
மெய் வண்ண வீடுகட்ட
உனைத் தொங்க விடுகிறார்கள் செய்வண்ண வேலை செய்து
திருமாடம் முடிக்கின்றாய் நீ பொய் வண்ணப் பூசணிக்காய்
கறியுனைச் செய்து உண்டேன் - உன் கை வண்ணம் அங்கு கண்டேன்
கறி வண்ணம் இங்கு கண்டேன்”
பாரதிதாசனாரின் வாழ்நாளில் அவர் நெருங்கியிருந்த நட்புலகத்தில் மிகப் பெரிய மனிதர்கள் எல்லாம் இருந்திருக்கிறார்கள். “பட்டதைச் செய்வேன் பகைவருக்கஞ்சேன், வாய்ப்பு நேர்ந்தபோதெல்லாம் பிறரைத் தூக்கி விடுவதில் சோர்ந்ததே இல்லை. படிப்பும் தந்தேன். சோறு தந்தேன். தலையெடுக்கச் செய்தேன். என் தலைதனை அவர் அறுக்க முயன்றபோதும் சிரித்தேன்’ என அழகான வரிகளில் தன் வாழ்க்கையை விமர்சிக்கிறார் அவர். “தன்னைவிட அறிவில் முதிர்ந்த பெரியவர்களிடம் ஒன்றுபட்டுவாழ்தல் ஒருவருக்குரிய வலிமைகளிளெல்லாம் தலையானது” என்கிறது வள்ளுவம். பாரதிதாசனின் தனி வலிமை பற்றி குறள் சொல்லுவதைப்பார்ப்போம்.
“தம்மிற் பெரியார் தமரா வொழுகுதல் வன்மையு ளெல்லாம் தலை”
60 GFišGifiko 2Cu
(பெரியாரைத் துணை கோடல் - குறள் 444)
எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வழங்கும் தமிழியல் விருது - உ011
எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் ஆண்டுதோறும் ஈழத்திலும் வெளிநாடுகளிலும் வாழ்கின்ற ஈழத்து தமிழ்ப் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வண்ணம் தமிழியல் வித்தகர் பட்டமும் தமிழியல் விருதும் பொற்கிழியும் வழங்கிக் கெளரவித்து வருகின்றது.
இவ்வாண்டு கார்த்திகை மாதத்தில் இவ் விருதுகளை வழங்குவதற்கு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் செயல் வடிவம் கொண்டுள்ளது.
உயர்தலிழியல் விருது
இலக்கிய மேம்பாட்டுக்கு உரமாய் உழைத்த மிகச் சிறந்த மூத்த படைப்பாளி ஒருவருக்கு எழுத்தாளர் ஊக்குவிப்பு மைய ஸ்தாபகர் ஓ.கே.பாக்கியநாதன் உயர் தமிழியல் விருது வழங்கிக் கெளரவிக்கும்.
தலிழியல் விருதுதேெேழியல் வித்தகர்Uட்டஓ3 தமிழிலக்கிய மேம்பாட்டுக்கு உரமாய் உழைத்த மூத்த படைப்பாளிகள், ஊடகவியாளர்கள் 5 பேருக்கு தமிழியல் வித்தகர் பட்டத்துடன் தலா ரூபா.15,000 பொற் கிழி வவுனியுர் றி இராமகிருஷ்ணா - கமலநாயகி தமிழியல் விருதும் வழங்கிக் கெளரவிக்கும்.
மிகச் சிறந்த நூலுக்கான தலிழியல் விருது 2010 ஆம் ஆண்டில் வெளிவந்த சிறந்த நூலொன்றுக்கு ரூபா.30,000 பொற்கிழியுடன் சுவாமி விபுலானந்த அடிகளார் தமிழியல் விருதும் வழங்கிக் கெளரவிக்கும்.
சிறந்த நூல்களுக்கான தெேழியல் விருது 2010 ஆம் ஆண்டில் வெளிவந்த சிறந்த 13 நூல்களுக்கு தலா ரூபா10,000 பொற்சிழியுடன் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை தமிழியல் விருது
புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தின் தமிழியல் விருது
G) Gorkififiálio 2oa
Page 33
கல்விமான் க.முத்துலிங்கம் தமிழியல் விருது அருட்கலைவாரிதி சு.சண்முகவடிவேல் தமிழியல் விருது சிவநெறிப்புரவலர் சீ.ஏ.இராமஸ்வாமி தமிழியல் விருது நாவலாசிரியை பவளசுந்தரம்மா தமிழியல் விருது கலைஞர் ஓ.கே.கணபதிப்பிள்ளை தமிழியல் விருது பம்பைமடு நாகலிங்கம் - நல்லம்மா தமிழியல் விருது வணபிதா சந்திரா அடிகளார் தமிழியல் விருது. பதிவாளர் நாயகம் எஸ்.முத்துக்குமாரன் தமிழியல் விருது வித்தியாகிர்த்தி ந.சந்திரகுமார் தமிழியல் விருது செந்தமிழ்ச்செல்வர் சு.முரீகந்தராஜா தமிழியல் விருது பம்பைமடு கந்தையா இரஞ்சிதமலர் தமிழியல் விருது வழங்கிக் கெளரவிக்கும்
ஞ்லுர்திரைப்படத்திற்கான தலிழியல் விருது 2010 ஆண்டில் வெளிவந்த சிறந்த 2 குறுந்திரைப்படங்களுக்கு தலா ரூபா 10,000 பொற்கிழியுடன் கவிஞர் கல்லாறன். மு.கணபதிப்பிள்ளை தமிழியல் விருது துறையுர் வே. நாகேந்திரன் தமிழியலி விருதும் வழங்கிக் கெளரவிக்கும்
சிறப்புத் தழிெயல் விருது மிகச் சிறந்த வெளியீட்டகம்/பதிப்பகம் , நூல் வடிவமைப்பு/ அட்டைவடிவமைப்புக்கு தலா ரூபா 5,000 பொற்கிழியுடன் புரவலர் ந.ஜெகதீசன் தமிழியல் விருது புரவலர் எஸ்.சோலைமலைத்தேவர் தமிழியல் விருதும் வழங்கிக் கெளரவிக்கும்.
ஓவியருக்கானதலிழியல் விருது மிகச் சிறந்த ஒவியர் ஒருவருக்கு தலா ரூபா 5,000 பொற்கிழியுடன் ஒவியர் கிக்கோ தமிழியல் விருது வழங்கிக் கெளரவிக்கும்
அந்தவகையில் 2011 ஆம் ஆண்டு தமிழியல் விருதுக்கான நூல்களையும்
62) செங்கதிர்சித்திரை20
குறுந் திரைப்படங்களையும் தேர்வு செய்ய படைப்பாளிகளிடமிருந்து நூல்களையும் இறுவட்டுக்களையும் எதிர்பார்க்கிறது.
இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வாழ்கின்ற இலங்கையைத் தாயகமாகக் கொண்ட படைப்பாளிகள், 2010 ஆம் ஆண்டு தை 1ஆம் திகதி முதல் மார்கழி 31ஆம் திகதிவரை வெளிவந்த நூல்களையும் குறுந்திரைப்பட இறுவட்டுக்களையும் தேர்வுக்காக அனுப்பி வைக்கலாம்.
நாவல், சிறுகதை, கவிதை, குழந்தை இலக்கியம், சிறுவர் இலக்கியம், விடலை இலக்கியம், நாடகம், அறிவியல், ஆய்வியல், வரலாறு, பழந்தமிழ் இலக்கியம், மொழிபெயர்ப்பு, இனமத நல்லுறவு இலக்கியம், தொழிநுட்பம் எனப் பல்துறை சார்ந்த நூல்களையும், 30 நிமிடங்களுக்கு உட்பட்ட பல்துறை சார்ந்த குறுந்திரைப்பட இறுவட்டுக்களையும் தேர்வுக்காக அனுப்பி வைக்கலாம்.
தேர்வுக்காக பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் உள்ளடங்லாக சுயமாகத் தயாரிக்கப்பட்ட விபரப் பட்டியலுடன் நூலாயின் 4 பிரதிகளும் இறுவட்டாயின் 2 பிரதிகளும் 10.08.2011க்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டும்.
ஒரு படைப்பாளி எத்தனை வகையான படைப்புக்களையும் அனுப்பி வைக்கலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி
ஓ.கே.குணநாதன் (மேலாளர்) எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல.64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, மட்டக்களப்பு, இலங்கை தொலைபேசி இலக்கம் .0776041503.
() Påssifika 20
Page 34
இசெங்கதிர் தை,மாசி இதழ்கள் கிடைத்தன. மிக்க நன்றி.
அதிதிப்பக்கத்தில் புரவலர் அல்ஹாஜ் ஹாசிம் உமர் அவர்கள் கட்டுரை மிகவும் சிறப்பாக இருந்தது. புரவலர் என்பதற்கு மேலாக அவரது இலக்கிய ஆர்வம், அவரது படைப்பு, சமூகப் பணிகள் போன்ற பல விடயங்களையும் தந்திருந்தது அவரது முழுமையான ஆளுமையை காணத்தந்தது.
அதே போலவே நீத்தார்நினைவில் அமரர் வ.இராசையா பற்றிய குறிப்பும், எழுத்தாளர் இரா.உதயணன் அவர்களுடனான நேர்காணலும் சிறப்பாக இருந்தன.செங்கதிர் மேலும் சிறப்புற வாழ்த்துகிறேன்.
Dr.M.K.Muruganandan. 48/1, Dharmarama Road, Colombo - 06
ெேசங்கதிர் பெப்ரவரி 2011 இதழின் அதிதி புரவலர் ஹாசிம் உமர் மற்றும் எழுத்தாளர் இரா.உதயணன் ஆகியோரை ஜனவரியில் கொழும்பில் நடைபெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின்போது நேரில் சந்தித்து உரையாடியிருந்தாலும் கூட அவர்களைப்பற்றிய புதிய விபரங்களையெல்லாம் “செங்கதிர்’ மூலமே அறியக் கிடைத்தது. புரவலர் ஹாசிம் உமர் பற்றிய கட்டுரையைத் தந்த ஆசிரியர் செங்கதிரோனுக்கும், எழுத்தாளர் இரா.உதயணன் அவர்களுடனான நேர்காணலைத் தந்த துணை ஆசிரியர் அன்பழகன் குரூஸ் அவர்களுக்கும் பாராட்டுகள்.
செ.குணரத்தினம், அமிர்தகழி, மட்டக்களப்பு.
“செங்கதிர்’ ஆண்டுச் சந்தா : ரூ.1000/-க்குக் குறையாத இயன்ற அன்பளிப்பு
\, செங்கதிர் இன் வரவுக்கும் வளர்ச்சிக்கும் அன்பளிப்புச் செய்ய
விரும்பும் நலம் விரும்பிகள் (உதவும் கரங்கள்) தாங்கள் விரும்பும் தொகையை ஆசிரியரிடம் நேரில் வழங்கலாம்.
அலிலது
* மக்கள் வங்கி நகரக்கிளை), மட்டக்களப்பு, நடைமுறைக் கணக்கு
இல; 13100158588996 க்கு வைப்பிலிடலாம். People's Bank (Town Branch) Batticaloa. Current account No.: 113100.138588996 - For bank deposit
அலிலது * அல்சல் அலுவலகம், மட்டக்களப்பில் மாற்றக் கூடியவாறு
காசுக்கட்டளை அனுப்பலாம். Post Office, Batticaloa - For money orders
* காசோலைகள்/காசுக்கட்டளைகளைதகோபாலகிருஸ்ணன் எனப் Glucts. Cheques/Money orders in Favour of TGopalakrishnan
Page 35
எல்லாப் பொருட்களும் கப்பலுக்கு հից նիկ-Լ6յկ ՖԱջմI6) மட்டக்களப்பில் இருந்து வெளிவரும் சுவைத்திரள் நகைத்வைச் சஞ்சிகை မြို့မျိုးရှိပြီ வரவில்லை. கிறி ଦ୍ଯୁ......
தி,மட்டக்களப்பு O2 65351