கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2011.09

Page 1
50வது ஆண்டை நோக்கி.
8 DSG
வீச்சு மிக்க சி வியக்கத்தக்க
செய்டெம்பர் 2011
 

SSSàS :
›ቆችቕqላ 6ါ(_/nဉ်ကြရ်ခံ ஜிலA
ந்தனையாளன் -
நல்ல நண்பனி!
விலை 40/-

Page 2
திருடீன சேவை
15 வருடத் திருமணசேவை நிறைவினை முன்னிட்டு வேல் அழுதன் பாரிய சேவைக் கட்டணக் குறைப்பு
Slub:
விவரங்களுக்குத் தனிமனித நிறுவநர், சுயதெரிவுமுறை
முன்னோழ முத்த புகழ் பூத்த சர்வதேச சகலருக்கு மான திருமண் ஆலோசகர் / இற்றுப்படுத்துநர் குரும்ப
சி.ழயூர் , மாலியழ வேல் அமுதறுடன் திங்கள், புதன், வெள்ளி மாலையிலோ, சனி, ஞாயிறு நண்பகலி லேயோ தயங்காது தொடர்புகொள்ளலாம்
தொலைபேசி: 48,73929, 236.0694, 236.0488
சந்திப்பு: முன்னேற்பாடு ஒழுங்குமுறை
முகவரி: 8-3-3 மெற்றோ மாடிமனை (வெள்ளவத்தை காவல் நிலையத்திற்கு எதிராக, நிலப் பக்கம், 33ஆம் ஒழுங்கை வழி) 55ம் ஒழுங்கை, வெள்ளவத்தை, கொழும்பு-06
சுலப மணமக்கள் தெரிவுக்குச் சிறந்த முறை சுயதெரிவுமுறையே ரம்மிய மணவாழ்வுக்குக் குரும்பசிட்டியூர் மாயெழு வேல் அமுதனே!
 

ஆடுதல் பாடுதல் சித்திரம் : ©ួយខ្សនវិជ្ជា នៅតែប្រែ ខ្សង់ថ្លៃ
( :( (' '
2_SB) { rtytశ్రjpg pycnj(కిణః!! இலங்கை நாடாளுமன்றத்தில் மாத்திர தான் ஓர் இலக்கியச் சஞ்சிகை விதந்து பார ட்டப் பெற்ற பெறுமதி மிக்க சம்பவம் இடம் பெற்றுள்ளது. இங்கு பாரTLப்பட்ட சஞ் சிகை மல்லிகை. இதனை நாடாளுமன்ற
so(47}g செய்ததுடன் எதிர்காலச் சந்ததியினருக்காக ஆவணப்படுத்தியுமுள்ளது. அத்துடன் உலக வரலாற்றில் முதன் முதலில் சலு ஐக்குள் இருந்து வெளிவந்த இலக்கிய yuTT yyyMM C yyyyMM yST TTTTTS
50 - ஆவது ஆண்டை நேரக்கி.
68řů6 Libuír
388 ഠ/%" ീഴൂ
.(8 &്.ങ്ങി. ജു.ങ്ങ്6.68 616ി வரும் தொடர் சிற்றேடு மாத்திரமல்ல அது ஒர் ஆரோக்கியமான இலக்கிய ဖွံ့အဲမွဲu.Jင်ဒ်ဗီး]] முமாகும்.
kyyyyyyOSkLk Ltmyy S yyTTM LT S S MTTTyyLSTMS sg, gyügékj5) is367 QJtrg JF6876liasirt
201/4, Sri Kathiresan St, Colombo - 13.
Tel232072
mallikaijeeva Gyahoo.com
நீங்கள் நம்புவதையும் விட, எனது எளிமை நம்பகரமானது!
இலக்கிய உலகில் இத்தனை கால மாக அர்ப்பணிப்பு உணர்வுடன் என்னை நானே ஒப்புக்கொடுத்து உழைத்து வந் திருந்த போதிலும்கூட, பலர் என் ஆத்ம உணர்வை இதுவரை காலமும் புரிந்து கொள்ளவில்லையோ என அடிக்கடி சந்தேகப்படுவதுண்டு, நான்.
தெருத் தெருவாகச் சுற்றிச் சுழன்று இன்றும் கூட - நாற்பத்தைந்து ஆண்டு களுக்குப் பின்னரும் - மல்லிகை இதழ் களை விற்றுத் திரியும் என்னைப் பற்றி நெருங்கிய நண்பர்கள்கூட, மிக மிக மலின மாக நினைத்து விட்டார்களோ என்ற சமு சயம் சமீப காலங்களாக என் அடிமனதில் மெல்ல மெல்லப் பரவி வரத்தான் செய் கின்றது. அநுபவ வெளிப்பாடுதான், இது.
சிலர், ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். எனது எளிமை காந்தீய எளிமை. நானே இயல்பாக வரித்துக் கொண்ட எளிமை. இதைச் சரிவரப் புரிந்து கொண்டி ராத மல்லிகை ரசிகர்களில் சிலர் மலினத் தனமாக நினைத்து விடுகின்றனரோ என நான் அடிக்கடி மனசுக்குள் சந்தேகம் கொள் கின்றேன். எனது இதய உணர்வைச் சரி வரப் புரிந்துகொள்ளாதவர்களின் உறவைத் தொடர்ந்து பேண மாட்டேன்! -
- நான் பார்வைக்கு ரொம்பவும் எளிமையான வன்தான். மென்மையாக நேசிக்கத் தெரிந்தவன்தான். ஆனாலும், நெருப்பன்.
கடந்த காலங்களில் எழுத்தில்
என்னை மோசமாகச் சாடியவர்களைக்

Page 3
கூட, அட்டையில் அவர்களது உருவத் தைப் பதிவு செய்து வந்துள்ளேன்.
DIT65T LD6opus on Lib. 960LLJL- pru கர்கள் மறைந்து போகலாம். நாளை என் றொரு காலம் வரும். அந்தக் கால கட்டத் தில், இலக்கிய ஆவணமாக மேற்கோள் காட்டி நிற்கப்போவது இத்தகைய எழுத்து வடிவங்களே - சாட்சிப் பதிவுகளே!
இந்தப் பாரிய வரலாற்றுப் பார்வையுட னேயேதான் இந்த முகப்பு அட்டைப் பதிவு வேலைகளை ஆரம்பித்தேன். அட்டைப்பட உருவப் பதிவு நூல்கள் இதுவரையும் 4 புத்தகங்களாக வெளிவந்து விட்டன. அந் நூல்களில் 197 பேரை அட்டைப்பட உருவங்களாக பதிவு செய்துள்ளேன்.
பொதுவாக, நான் சகலரிடமும் மென்மையாகவும், எளிமையாகவும், பண் பாடாகவும் கதைப்பவன். மனந்திறந்து பழகி வருபவன்.
அந்த அடிப்படை மானுட நேசிப்பின் நிமித்தமாகவே, நேரில் சந்திக்கும் வேளை களில் நெருக்கமானவர்களிடம் "உங்களு டைய புகைப்படமொன்றிருந்தால் தாருங் களேன்!” என மனந்திறந்து மரியாதை யுடன் வேண்டுகோளாக அவர்களிடம் தெரிவிப்பேன்.
அதற்கு அவர்கள் காட்டும் 'பந்தா இருக்கிறதே, என் நேர்மையான அணுகு முறையை அவர்களது பிரதிபலிப்பு கொச் சைப்படுத்துவதாக அமைந்து மனதைப் புண்படுத்தி விடும்.
ஏதோ உச்சத்தில் ஏறி நின்று கொண்டு, மல்லிகையின் ஆசிரியர் கேட் கிறார் என்பதைக்கூடக் கவனத்தில் கொள்ளாமல், அவர்கள் வார்த்தைகளில் காட்டும் பந்தா மொழி என்னை சில சமயங் களில் எரிச்சலடைய வைத்துவிடும்.
Ldio sóRna en Lulu a-gallb பதித்து வெளிவருவது ரதோ கம்மா இலேசான சங்கதியல்ல.
ST6UTsi alanupiah ng Arabo, su6o L, è il 9nfrd uoan Dèb பின்னரும் காலாதி காலமாகப் பேசப்பம் ஆவணப் பதிவு
6760TgöI 676fi6obudesopunu qub, Uypdbaniypüb கங்களையும் தவறாகப் புரிந்துகொண்டவர் கள், தம்மைத் தாமே திருத்திக்கொள்வது இனியாவது நல்லது.
- இல்லாவிடில் எனது நட்பைப் புதுப் பித்துக்கொள்ளத் தேவையில்லை.
நமக்குள் - படைப்பாளிகளுக்குள் - கருத்து முரண்பாடுகள் இருக்கலாம். பேதங் கள் இயல்பாகத் தென்படலாம். ஆனால், மன உட்குரோதங்கள் அறவே இருக்கக் கூடாது. நாம் ஒருவரை ஒருவர் கனம் பண்ணி நடந்துகொண்டால்ே போதும், எதிர் காலத்திற்கான சுபீட்சமான இலக்கியப் பரம் பரையை உருவாக்கியவர்களாக வருங் காலத்தில் கணிக்கப்படுவோம்.
வளர்ந்து வரும் புதிய இலக்கியத் தலைமுறையினர், நம்மையும் விட ஆழ மான - அகலமான ஒரு சர்வதேசத் தகவல் தொடர்பு வட்டத்திற்குள் தம்மைத் தாமே ஆட்படுத்திக் கொண்டு, இயங்கி வருப வர்கள். இதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நான் மொத்தமாக ஆசைப்படுவது எனது தாய்ப் பாஷை, சர்வதேசமெங்கும் எதிரொலி எழுப்ப வேண்டும் என்பதேதான். அதற்காகவே நான் என்னை அர்ப்பணித்து உழைத்து வருகின்றேன்.
சின்னதோ பெரியதோ - வரலாற்றில் பேசப்படப் போகின்ற மாசிகை மல்லிகை. இதைப் புரிந்துகொண்டாலே போதும்
ewanamumuo

யுத்தகம் வெளிSடுபவர்களே, அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்?
இன்று இந்த நாட்டிலிருந்து தமிழில் வாரம் ஒரு புத்தகம் வெளிவந்து கொண்டேயிருக்கின்றது.
பாட நூல்களை இங்கு நாம் குறிப்பிடவில்லை. படைப்பிலக்கியப் புத்தகங்களே வாரா வாரம் கிழக்கு மாகாணம், வட பிரதேசம், மலையகம், தலைநகரம் என்று சுற்று வட்டத்தில் வெளிவந்து கொண்டேயிருக்கின்றன.
அநேகமான புத்தகங்களுக்கு பரபரப்பாக வெளியீட்டு விழாக்களும் வைக்கப்பட்டு பிரபலப்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த அந்த வெளியீட்டு விழாக்களில் தனி அபிமானிகளால் கொள்வனவு செய்யப்படும் ஒரு சில நூல்களைத் தவிர, ஏனையவை யாவுமே முடக்கப்பட்டு, தூசியப் படிய அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த மண்ணில் காலங் காலமாக எழுத்தாளர்களுக்கும், புத்தகம் வெளியிடும் படைப்பாளிகளுக்கும் இதுதான் கண் கண்ட மிச்சமாகத் தெரிய வந்துள்ளது.
இந்த அவல நிலையைப் போக்குவார், யார்?
நாட்டில் பரந்துபட்டு இயங்கும் புத்தக விற்பனவு நிலைய அதிபர்களைக் கேட்டால், நாங்க நம்ம நாட்டுப் புத்தகங்களை விற்பனை செய்யவா, மறுக்கிறோம்? ஒருவருமே தேடி வந்து கேட்டு வாங்குவதில்லையே? எனக் கையை அகல விரித்துப் பதில் சொல்லுகின்றனர். ஆனால், தமிழ்நாட்டு நூல்களை ஒராண்டு, இரண்டாண்டுகளாகக் காவலிருந்து விற்பனைக்குப் பெற்றுக்கொள்கின்றனர்.
பரபரப்பாக விற்று முடிக்கவும் செய்கின்றனர்.
இதற்கு இந்த நாட்டுப் புத்தகம் வெளியிடும் தனிநபர் படைப்பாளிகள் ஒன்று திரண்டு, இயக்கம் நடத்தி, நமது வெளியீடுகளைச் சந்தைப்படுத்த ஆவன செய்தல் வேண்டும்.
இந்த மண்ணில் நூல்களை வெளியிடும் நம்மவர்கள், தனித் தனியாகக் குரல் எழுப்பி எந்தவிதமான எதிர்காலப் பிரயோசனமும் நமது படைப்புகளுக்குக் கிட்டப் போவதில்லை. காலம் காலமாக எமது கைக் காசைச் செலவழித்து நமது நூல்களை வெளியிட்டு வைத்து விட்டு, ஒரு சிலர் தமது நூல்களுக்கு வெளியீட்டு விழா நடத்திவிட்டு, மிஞ்சிப் போன புத்தகங்களைச் சிக்காராக ஒரு சில காட்போட் பெட்டிகளில் கட்டித் தூசி படிய வைத்து விட்டு, கையைக் கட்டிக்கொண்டு சும்மா இருக்கப் போகின்றோமா, என்ன?
படைப்பாளிகளுக்கு முன்னால் இன்று பாரிய பிரச்சினையாகத் தோன்றுவதுதான் இந்தப் புத்தக விற்பனைப் பிரச்சினைதான்!

Page 4
அட்டைப்படம்
சமூகநேயம் லிக்க கல்வியாளரும், இலக்கிய ஆர்வலருமான இரா.சிவசந்திரன்
- க.சட்டநாதன்
வேலணையூர் தந்த கல்விமான்களில் பேராசிரியர் இரா.சிவசந்திரன் அவர்கள், முதன்மை வரிசையில் வைத்து எண்ணத்தக்கவர்.
கல்வி கேள்விகளில் சிறந்த குடும்பப் பின்னணி அவரை தகைசால் கல்வியாளராக ஆக்கியதில் வியப்பேதுமில்லை. அவருடைய தந்தையார் "இறைமணி சிதரம்பிள்ளை இராசரத்தினம் அவர்களும், தாயார் திருமதி உருக்குமணி இராசரத்தினம் அவர்களும் நல்லாசிரியர்கள். இவரது உடன்பிறப்புகளும் ஆசிரியர்களாகவும், அதிபர்களாகவும், கல்வி அதிகாரிகளாகவும், வங்கியாளர்களாகவும், ஊடகவியலாளர்களாகவும் sled யாற்றி நற்பெயர் பெற்றவர்கள்.
இந்தப் பின்னணி இரா.சிவசந்திரன் அவர்களைப் புடம்போட்டதோடு, கசடறக் கற்ற புலமையாளராகவும் ஆக்கியுள்ளது.
நிலைக் கல்வியை வேலணை மத்திய மகா வித்தியாலயம், செங்குந்தா இந்துக் கல்லூரி, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி ஆகியவற்றிலும் கற்றார்.
தனது பட்டப் படிப்பை பேராதனைப் பல்கலைக்கழகத்திலும், பட்ட மேற்படிப்பை சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றார்.
புவியியற் பாடத்தில் அதிகப் பிரீதியும், நாட்டமும் உள்ள இவர், தனது பட்டப் படிப்புக்கு அப்பாடத்தினையே சிறப்புப் பாடமாகப் பயின்று, உயர்சித்தி பெற்றார். அவர் பட்ட மேற்படிப்புக்கு எடுத்துக்கொண்ட ஆய்வு விடயங்கள் 'வன்னிப் பிரதேச விவசாயம்' மற்றும் மலையகத் தமிழர் சமூகப் பொருளாதார நிலை' என்பனவாகும்.
கடந்த நூற்றாண்டில் எழுபதுகளில் தனது பல்கலைக்கழக ஆசிரியப் பணியை ஆரம்பித்த இவர் உதவி விரிவுரையாளராக பேராதனைப் பல்கலைக்கழகத்திலும், களனிப் பல்கலைக்கழகத்திலும் பணியாற்றியுள்ளார்.
மல்லிகை செப்டெம்பர் 2011 & 4

எண்பதுகளில் யாழ்ப்பாணப் பல் கலைக்கழகம் வந்த இவர், பல்கலைக்கழ கத்திலிருந்து ஓய்வுபெறும் காலம் வரை விரிவுரையாளராக, சிரேஷ்ட விரிவுரையாள ராக, பேராசிரியராக, புவியியற் துறைத் தலைவராக, கலைப்பீடாதிபதியாக பல் வேறு நிலைகளில் கடமையாற்றியுள்ளார்.
பல்கலைக்கழக ஆசானாக இவரது பணி மகத்தானது. மாணவர்களிடம் தோழ மையுடன் பழகும் இவர், அதேசமயம் கண்டிப்பு மிக்கவராகவும் இருந்தார். மான வர்களது ஆய்வு மனப்பாங்கை இனங் கண்டு அவர்களை வழிநடத்தியதோடமை யாது, பாடப்புலத்துக்கு அப்பாற்சென்று, அவர்களை நற்சமூக மனிதர்களாக, சக மனித நாட்டமுள்ளவர்களாக, கற்றதொழு கும் பண்பாளர்களாக ஆக்கியமை இவரது பணிகளுள் தலையாயது என்று கூறலாம்.
இவர் பல்கலைக்கழகத்தில் இருந்த காலத்தில் இன்னொரு அரும்பணியையும் ஆற்றியுள்ளார். புறநிலைப் Lւgւնւ4&sh அலகு என்ற துறையைத் திட்டமிட்டு, ஒருங்கமைத்து பல்வேறு துறைசார் புலமையாளர்களை பல்கலைக்கழகத் திற்கு உள்ளேயும், வெளியேயும் பெற்று அவர்கள் துணையுடன் ஏறக்குறைய 30 அடிப்படைக் கற்கை நெறிகளை ஒழுங்கு படுத்தி நடாத்தியுள்ளார். இப்பணி சமூக நோக்குச் சார்ந்த ஒன்றாகும். வகுப்புகளில் பல் தொழில்சார் பல்வேறு தரப்பிலுள்ளவர்கள், குறிப்பாக அதிக கல்விப் புலமை இல்லாதவர்கள் இவ்வகுப்புகளில் கலந்து பயனடைந்தார் கள். அவர்களைப் பொறுத்தவரை பல் கலைக்கழகம் வந்து வகுப்புகளில் கலந்து கொண்டமை பெரிய விஷயமாகவே இருந்தது. சமூகத்துடன் பல்கலைக்கழ கத்தை இணைத்ததில் இவ்வலகு பெரும்
பங்காற்றியது. குறித்துரைக்கத்தக்க சில அடிப்படை கற்கை நெறிகளென சில வற்றை குறிப்பிடலாம். புகைப்படக் கலை, அலுவலக முகாமைத்துவம், அடிப்படை ஆங்கிலம், பொது வாழ்வுக்கான Sg(3uur கப் பொறியியல், உணவகங்களின் முகா மைத்துவம், இதழியல், உளவளத்துணை, சுக வாழ்வு, சைவ சித்தாந்தம். மேற்படி கற்கை நெறிகளில் ப்ங்குபற்றியதன் மூலம் சமூகத்தில் இருந்து பலர் பயன்பெற்ற தோடு, இது எமது பல்கலைக்கழகம் என்ற மனப்பாங்கை வளர்ந்து சமூகத்தையும், பல்கலைக்கழகத்தையும் ஒன்றிணைக்க வழி கோலியது.
பல்கலைக்கழகத்தில் இருந்த காலத் திலும் அதன் பின்னரும் இவர் ஆர்வம் காட்டியது எமது பிரதேச வளங்களையும், சமூக மேம்பாட்டையும் வளர்த்தெடுக்கும் ஆய்வுத் துறையாகும்.
இவரது பலதரப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சர்வதேச ஆய்வுச் சஞ்சிகை களிலும், உள்ளுர் ஆய்வுச் சஞ்சிகை களிலும் வெளிவந்துள்ளன. இவரது ஆய்வில் முதன்மை பெற்ற விடயங்கள் வடக்கு கிழக்கு பிரதேசங்களின் வளங் களுடனும், மக்கள் வாழ்வுடனும் தொடர்பு கொண்டவையாகும். நிலவளம், நீர்வளம், குடியிருப்பின் தோற்றம், வளர்ச்சி, குடிப் பெயர்வுகள், விவசாய மேம்பாடு, சூழல் CupidurGS போன்றவற்றை கட்டுரைகள் Ցաo செய்தன. மற்றும் மலையகத் தமிழர் சமூக பொருள்ாதார நிலை பற்றியும் இவரது ஆய்வுக் கட்டுரைகள் பேசு கின்றன.
பல்வேறு சந்தர்ப்பங்களில் உதய தாரகை, வீரகேசரி, தினகரன், ஈழநாடு, ஈழ முரசு, தினக்குரல், திசை ஆகிய தினசரி
மல்லிகை செப்டெம்பர் 2011 & 5

Page 5
களிலும், மல்லிகை, ஊற்று, நங்கூரம், தமிழ்க்கலை ஆகிய சஞ்சிகைகளிலும் இலகு தமிழில் பலரும் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் பல கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். அக்கட்டுரைகளும் சமூகப் பயன்பாடு மிக்கவையாகும்.
சிவாவிடம் ஒரு பத்திரிகையாளனின் மலைப்பு ஊறலிப்பாய் இருந்தமையால் தான் காலாண்டு இதழான 'அகிலத்தின் ஆசிரியராகவும், அறிவியல் இதழான ஊற்று, இலக்கியச் சஞ்சிகையான பூரணி ஆகியவற்றில் உதவி ஆசிரியராகவும் அவ ரால் பணியாற்ற முடிந்திருக்கிறது.
ஏலவே கூறியவை சிவசந்திரனின் ஒரு முகம் எனின், அவரது ஆளுமை விகசிப்பின் இன்னொரு முகம் அவரது கலை இலக்கியம் சார்ந்த ஆர்வங் களாகும்.
இவர் கால்பதித்த ஆக்க இலக்கியத் துறைகளாக சிறுகதை, நாடகம் ஆகிய வற்றைக் குறிப்பிடலாம்.
மிகவும் இளமையில் எழுத ஆரம் பித்த இவர், 1965 தொடக்கம் 1976 வரை இருபது கதைகளையே எழுதியுள்ளார். இச்சிறுகதைகள் அவர்து புனைவாற் றலைக் கோடிட்டுக் காட்டுபவையாக அமைந்துள்ளன. வடிவ அமைதி கொண் டுள்ள இக்கதைகளில், இயல்பான மொழி நடையும் துல்லியமான பேச்சுவழக்கும் அமைந்துள்ளன.
குறிப்பாக இவரது புனைவுகள் ஒரு வகை லட்சியப் பிடிப்புடன் வாழ எத்தனிக் கும் மனிதர்களைக் காட்ட முயற்சிக் கின்றன. அந்த மனிதர்கள் எத்தகைய புறச் சூழலோடும் எதிர்ப்புத்தன்மை ஏது மில்லாமல் இசைந்து போகக்கூடியவர் களாக இருக்கிறார்கள்.
இவர் காமம் சார்ந்த விஷயங்களை தமது கதைகளில் மிக நுட்பமாகவும் விரசம் ஏதுமில்லாமலும் சொல்லி வரு வதில் சமர்த்தராக இருக்கிறார்.
மனோரதியக் கசிவு இவரது கதை களில் விரவி வருவதற்கான காரணம் இல்லாமலில்லை. கதைகள் எழுதிய காலம் இவரது இளமைக் காலமாகும். அதை நம்மால் புரிந்துகொள்ள முடி கிறது.
சிவாவினுடைய நாடகங்களைப் பார்க்கும் சந்தர்ப்பமோ, பிரதிகளை படிக் கும் வாய்ப்போ எனக்குக் கிடைக்க வில்லை. ஆனால் அந்நாடகங்கள் பெற்ற வரவேற்பும் பரிசில்களும் ஒர் அங்கீகாரத்தை அவருக்குப் பெற்றுத் தந்துள்ளது. பேராதனைப் பல்கலைக் கழகத்தில் அரங்கேற்றிய துடிக்கும் இதயங்கள்', 'வீட்டில் ஆகிய நாடகங்கள் பற்றி எழுபதுகளில் பயின்ற மாணவர்கள் வியந்து பேசியதை நான் கேட்டிருக் கின்றேன்.
இலக்கியம் சார்ந்து அவர் மேற் கொண்ட இன்னொரு முயற்சி கலைத்தரம் மிக்க திரைப்படங்களை பார்வையாள ருக்கு இலவசமாக காட்சிப்படுத்தியமை யாகும்.
யாழ் பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் இணைப்பாளர் என்ற வகையில் திரைப்பட வட்டம் ஒன்றை அமைத்து அவரால் செயற்பட முடிந்தது. திரையிடப்பட்ட படங்கள் வீடியோத் திரைப்படங்களாக இருந்தபோதும்
அவை பயனுடையவை.
மல்லிகை செப்டெம்பர் 2011 & 6

இத்திரைப்பட வட்டம் உலகத்தரம் வாய்ந்த திரைப்பட மேதைகளின் படங் களைத் திரையிட்டது. உதாரணங்கள் சில பதர் பாஞ்காலி, அகான்துக், அபராஜிதோ, சத்கதி, The Chees Players, மந்தன், மம்மூ, சுபைதா, பரோமா, திரு திருமதி ஐயர், தேசதானம், பயங்கரவாதி, கம்பெரலியா, பியானோ வாசிப்பவன், பேர்னாட்டா அல்பாவின் soo, asb usus)asassi, Dance with the wind, gLiribassrgest suffsir, The Earth, The Fire, The Water gGQ6lurbopl6ör sy மான தமிழ்த் திரைப்படங்களும் assTeLLJIL607.
சிவா தனது கல்விப் பணிகள், கலை இலக்கிய முயற்சிகளுக்கு அப் பால் தன்னை ஒரு பூரணமான சமூக மனிதனாகவே இனங்காட்டிக் கொண் டுள்ளார். அவ்வகையில் அவரது பணிகள் குறிப்பிட்டு கூறக்கூடியன வாகும்.
பல்கலைக்கழகத்திலும் மற்றும் பல பொது நிறுவனங்களிலும் பல்வேறு பட்ட நிலைகளில் தலைவராக, உப தலைவராக, பொதுச் செயலாளராக, Gesu u6oT6TT JT5, D u Gesu JesomrsnTgimress, பொருளாளராக, மாணவ ஆலோசக ராக செயற்பட்டு வந்துள்ளார். வருகிறார்.
தற்பொழுது ஆய்வு, அபிவிருத்தி மையமான சிந்தனைக் கூடத்தின் பணிப்பாளராக பணியாற்றி வரும் இவர், 'நூலகம்’ எனும் எண்மிய இணையத்தளத்தின் செயற்பாடு களிலும் கணிசமான பங்களிப்பினை நல்கி வருகிறார்.
இம்முயற்சிகளின் பரிணாம நகர்வு தான் இவரை தமிழ்மொழி மீதும், தமிழ்த் தேசியத்தின் மீதும் பற்றுறுதியுள்ள அரசியல்வாதியாக நமக்கு இனங்காட்டி யுள்ளது. ‘கண்டதுகள் நிண்டதுகள் அல்ல கற்றறிந்தோர் மட்டுமே அரசியலுக்கு வர வேண்டும் என்பது இவரது வேணவா. அது நிறைவேற வேண்டும் அது நிறைவேறும்.
சிவாவின் இப்பணிகளுக்கு உடனி ருந்து உதவுபவர் அவரது இனிய தோழியும் துணைவியுமான சரோஜா சிவசந்திரன் ஆவார். மகளிர் அபிவிருத்தி நிலையப் பணிப்பாளராகச் செயற்படும் அவர் கூட மிகச் சிறந்த சமூக நலம் பேணும் சேவகி யாவார். இவரது மகளிர் அபிவிருத்தி நிலையம் குறிப்பாக பெண்களின் சமூக மேம்பாடு, சமத்துவம், அவர் தம் உரிமை கள் சார்பான கருத்தரங்குகளை நடாத்துவ தோடு பெண்களுக்கு இலவச சட்ட ஆலோ சனைகளையும் வழங்கி வருகிறது. அத்துடன் நங்கை’ எனும் சஞ்சிகை யையும் பெண்கள் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு வெளியிடப்பட்டு வருகிறது.
சிவாவினுடைய பிள்ளைகள் இருவர், மகள் யாழினி அரவிந்தன் பல் வைத்திய ராக கனடாவில் பணியாற்றி வருகின்றார். மகன் பாரதி கணனிப் பொறியியலாளராகக் கொழும்பில் வேலை பார்க்கிறார்.
சிவாவிடம் தமிழ் மக்களும், தமிழ் இலக்கிய உலகத்தினரும் நிறையவே எதிர் அவர்களது அபிலாஷைகளை நிறைவேற்றும் ஒர்ம மும், மனப்பக்குவமும் அவரிடம் போதி யளவு உண்டு.
பார்க்கிறார்கள்.
மல்லிகை செப்டெம்பர் 2011 & 7

Page 6
அநேக நாட்களாகவே பரிமளத்திற்கு அந்த ஆசை கூடிக் கொண்டேதான் போனது. வாழ்க்கையில் ஒரே யொரு முறையாவது சிகரட் குடித்துப் பார்த்துவிட வேண்டுமென்று துடித்துக் கொண்டே இருந்தாள். எத்தனை வகையான சிகரெட்டுகள், பிரிஸ்டல், கோலிவ், மல்பரா. போதாக் குறைக்கு பீடி. சுருட்டு. என்று ஒவ்வொன்றையும் வகை வகையாக அல்லவா குடிக்கிறார்கள்.
பரிமளம் கண்டிருக்கிறாள், ஒரு சிலர் சிகரட் புகையை வளையம் வளையமாக விடுவதையும், ஒரு சிலர் புகையை உள்ளேயே வைத்து விழுங்கி விடுவதையும்.
நுனியை வாயில் வைத்துக் கன்னக்குழி உட்செல்லும் அளவிற்கு அந்தப் புகையை உள்ளிழுத்து, ஆறுதலாய் அதை அனுபவித்து. வாயினுள்ளேயே ஒரு சில நொடிகள் அப்புகையை நிறுத்தி, பின் மெதுவாக. மிக மிக மெதுவாக உஹம். என்று என்று வெளியேற்றி. கண்கள் மூடி.
அப்பப்பா! தானும் ஒரே ஒருமுறை எப்படியாவது இதைக் குடித்துப் பார்க்க வேண்டுமென்று பரிமளம் உறுதியாய் நினைத்துக் கொண்டாள். ஆனால் அதற்கான சந்தர்ப்பம்தான் கிட்டாமலேயே போய்க் கொண்டி ருந்தது.
என்னவென்று கடையில் சிகரெட் வாங்குவது.? சுதா கடையிலென்றால் யாருக்கு. யாருக்கு என்று கேட்டு கேட்டுத்தான் சுதாவின் அப்பா வியாபாரம் செய்வது வழமை. யாராவது சிறுபிள்ளையை அனுப்பி வாங்கிவர விடலாமென் றாலும், பரிமளத்திற்கு எதற்குச் சிகரெட் என்று அந்தக் கடைக்காரன் யோசிக்கக் கூடும்.
இந்த ஆசை வருவதற்குக் காரணமே அந்தச் சுவையான ஒரு சம்பவம் தான். மார்கழி மாதமென்றாலே மலை நாடெங்கும் குளிர் உடலைப் பிய்த்து உதறும். விடியற் காலையிலும், மாலை நேரங்களிலும் சிலு. சிலுவென்று உடலெல்லாம் வெடவெடத்துப் போய்க் கிடக்கும்.
மல்லிகை செப்டெம்பர் 2011 & 8
 
 
 
 

அடிக்கடி தேநீர் பருகுவதும், சோளம், பலாக்கொட்டை, கிழங்கு என்று ஏதாவதொன்றை அவித்து. விளையாடிக் கொண்டே சுடச்சுடச் சாப்பிடுவதும் அப்போதெல்லாம் பழக்கத்தில் இருந்தது.
குளிர் தாங்க முடியாத ஒரு சிலர், சிறியதொரு தகரத்துண்டை வீட்டி னுள் போட்டு, அதன் மேல் குச்சி களை அடுக்கி, நெருப்பு மூட்டி அந்த நெருப்பைச் சுற்றி அமர்ந்து கொள்ளு வார்கள்.
கைகள் இரண்டையும் நெருப் பிடம் காட்டி காட்டி அந்தச் சூட்டை உள்ளங்கைகளுக்குள் ஏந்தி, அதை முகம் கால் உடல் என்று எல்லா இடத்திலும் வைத்து இன்பப்படு வார்கள். சூடு கூடிக்கொண்டு போவதை விட, சுற்றி அமர்பவர் களது கதையின் சுவாரசியம் தான் அதிகரித்துக் கொண்டே போகும்.
அதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்தில் தான் பரிமளத்துடன் சரியாக ஆறேழு பேர் கூடிப்போயினர். மகாலட்சுமி மிகவும் உற்சாகத்துடன் இந்தப் புதிய முறையிலான ஒரு விளையாட்டைச் செய்து காட்டினாள்.
ஒரு துண்டு கடதாசியை எடுத்துச் சுருளாகச் சுற்றிக்கொள்ள வேண்டும். அதை நல்ல மெல்லிசாக சுற்றிச் சுற்றி ஓரளவிற்கு நீளமாக வைத்துக் கொள்ளுவதுதான் பாது அந்தச் சுருளின் நுனியைப் பற்ற வைத்து அதை
காப்பு. பின்,
மற்றய நுனியை வாயில் வைத்து புகையை உள்ளிழுத்தால் ஒரு தொகையான
அணைக்காமலேயே
புகை வாயிற்குள் சேரும்.
ஆண்கள் புகைப்பதையொப்ப, அந்தப் புகையை விதம் விதமாக வெளியே விட்டு அகமகிழ முடியும். எப்படியும் இரண்டு மூன்று முறை புகையை உள்ளிழுக்க முன்பே யே, கடதாசி எரிந்து கையடிக்கு வந்துவிடும். அதன் பிறகு அதை விசிவிட்டுப் புதிய கடதாசியில் மீண்டும் சுருள் செய்ய வேண்டும். இந்த அனுபவம் தான். இதே இந்த அனுபவம் தான். பரிமளத்தின் வெளி சொல்ல முடி யாத அந்த ஆசைக்கு காரணமே.
இந்தக் கடதாசி சுருளே இந்தள விற்கு இன்பமாய் இருக்கும் போது உண்மையான சிகரெட்...!!!
தான் மட்டுமே ஆசைப்பட்டுக் கொண்டிருந்தால் நிறைவேற வாய்ப்பே இல்லையெனத் தெரிந்து, மற்றவர்களையும் தூண்டி விட எத்தனித்தாள் அவள்.
அனேகமாக எல்லோரும் விருப் பம் என்றார்கள். மகாலட்சுமி தன் அண்ணாவின் சிகரட் ஒன்றை திருடிக் கொண்டு வருவதாய் ஒப்புக் கொண்டாள். இன்னும் மகேஸ். யோகேஸ்வரி எல் லோருமாய்ப் பத்தாம் நம்பர் மலை
சுதா.
யைச் சிறந்த இடமென தீர்மானித்து வைத்துக் கொண்டார்கள்.
Losios6sodas Gas LGL bur 2011 奉 9

Page 7
ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை யில் இவர்கள் அத்தனை பேரும் கீரை தேட தேயிலை மலைக்குப் போவதாய் வீட்டில் கூறிவிட்டு ஒவ்வொரு பேக்கையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டார்கள்.
பத்தாம் நம்பர் மலை காடு மண்டிக் கிடப்பதால் அங்கே கீரை யும் அதிகம். மறைவிடமும் அதிகம். நடு மலைக்கே சென்று ஒரு தேயிலைக் காணை தெரிவு செய்து சத்தமிடாமல் அமர்ந்துகொள்கிறார் கள். எங்கோ தூரத்தில் கதை சத்தமும் சிரிப்புச் சத்தமும் கேட்ப தாய்த் தோன்றுகிறது. இருக்கும்.?
பூனை நடையில் தேடி அந்தச் சத்தம் வந்த திசையைக் கண்டதும்,
uf IT pyrray5
பரிமளம் மூச்சடைத்துப் போனாள். தன் பதினாறு வயதான தம்பி யும் அவன் வயதையொத்த சில பையன்களும் ஏதோ செய்து கொண்டிருந்தார்கள்.
என்னதான் செய்கிறார்களா யிருக்கும்.!
மற்றவர்களை நிறுத்திவிட்டு பரிமளம் மட்டும் உள்நுழைந்து ஒரு தேயிலை வாது சந்துக்குள் அவர் களை அவதானித்தாள்.
அவர்கள் கையிலும் சிகரெட். ஆனால் அதை ஏதோ செய் கிறார்கள்.
சிகரட்டுக்குள் இருக்கும் தூள் வகையைத் தட்டி தட்டி ஒரு
கடதாசியில் கொட்டி விட்டு, காய வைத்த ஏதோ ஒரு வகை இலையை நொறுக்கி, தூளாக்கி. அந்தத் தூளை சிகரட் இடைவெளிக்குள் நிரப்புகிறார்கள். பின் ஏற்கனவே கொட்டி வைத்த சிகரட் தூளையும் இறுதியாய் வைத்து அடைத்து. ஒரு முழு சிகரட்டை உருவாக்கி. பரிமளத்தின் தம்பிதான் அதை பற்ற வைத்து முதலாவதாய் வாயினுள் வைக்கிறான்.
அந்தப் புகை உள்ளே செல்லச் செல்ல. அவனுக்குள் ஏராளமான மாற்றங்கள் தெரிகிறது. அப்படியே கண்கள் மூடி சொக்கிப் போனவ னாய் வாங்கில் சாய்ந்து கிறங்கிப் போய். அடுத்து மற்றவன் பின் அடுத்தவன்.
சிகரட் சுற்றிச் சுற்றி இழுக்கப் படுகிறது.
அவர்கள் ஒவ்வொருவரும் தங் களை மறந்து ஏதோ ஒரு உலகத்தில் மிதக்கும் பாவனையில் அந்த இன் புத்தை அனுபவிப்பதாய்ப் பரிமளத் திற்குத் தோன்றியது.
அவளால் தன்னைச் சுதாகரிக்க முடியவில்லை. கை, கால், உடல் எல்லாமே நடுங்கத் தொடங்கியது. கையில் தான் பத்திரப்படுத்தியிருந்த தீப்பெட்டியையும், அந்த ஒற்றைச் சிகரட்டையும் நசுக்கி, பிய்த்து ஒரு
கானுக்குள் எறிந்து விட்டு, "ஐயையோ. ஐயையோ..” எனக் கத்தியபடி வீட்டுக்கு ஒடத் தொடங்கினாள்.
மல்லிகை செப்டெம்பர் 2011 & 10

தெனகம சிரிவர்தனவின் “நண்பர்கள்’ (மித்துரே) ஆத்ம சுத்தம் எதிர்கொள்ளும்
நெருக்கடி
மொழிபெயர்ப்பு; எம்.எச்.எம்.ஷம்ஸ்
- மேமன்கவி
சிங்கள மொழி படைப்புத் துறையில்
தெனகம சிரிவர்தன குறிப்பிடத்தக்க ஒருவர். அவர் எழுதிய "மித்துரோ” எனும் குறு நாவலை எம்.எச்.எம்.ஷம்ஸ் அவர்கள் 2004 ஆம் ஆண்டாளவில் “நண்பர்கள்” எனும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தார். அவரது மறைவுக்குப் பிறகு தெனகம அவர்கள் அதை நூலாக வெளியிட்டுள்ளார். மறைந்த எம்.எச்.எம்.ஷம்ஸ் அவர்கள் பன்முக ஆற்றல் மிக்கவராகத் திகழ்ந்தார். குறிப்பாக அவர் சிங்கள-தமிழ் மொழி பெயர்ப்புத் துறைக்கு ஆற்றிச் சென்ற பணி அளப்பரியது. அத்தோடு ஈழத்து முஸ்லிம் சமூகச் சூழலில் பல படைப்பாளிகளை உருவாக்கிச் சென்றுள்ளார். அவரது நூல்கள் சரியான முறையில் நூல் உருவம் பெறாத நிலையில் (அவரது கவிதைகள், சிறுகதைகள், விமர்சனக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் எனப் பல படைப்புகள் உள்ளன. அவரது “ஒரு கிராமத்தின் கதை” என்ற நாவல் மட் டும் அச்சாகி இருக்கிறது. மற்ற சில கட்டுரைகள் சிறு பிரசுரங்களாக மட்டுமே வெளிவந்துள்ளன.) அவர் மொழிபெயர்த்த தெனகம அவர்களின் "நண்பர்கள்” என்ற இந்த குறுநாவலைப் பற்றி சில கருத்துக்களை முன்வைக்கலாம் என நினைக்கிறேன்.
நம் நாட்டின் இரு மொழிகளில் எழுதப்படும் கலை இலக்கியப் படைப்புகள், சிங்களத்திலும், தமிழிலும் பரஸ்பரம் மொழிபெயர்க்கப்படும் பணிகள் பல காலமாக நடந்தேறி வந்துள்ளன. இன்று அம்முயற்சி பரவலாக நடைபெற்று வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. அதேவேளை அத்தகைய முயற்சியின் பொழுது, மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள், மூவின மக்களின் சமூக கலாசார விழுமியங்களை
மல்லிகை செப்டெம்பர் 2011 & 11

Page 8
அடையாளப்படுத்தும், அறிமுகப்படுத்தும் வகையிலும், மூவின மக்கள் மத்தியில் நிலவிய ஒருமைபாட்டை, புரிந்துணர்வை எடுத்துக் காட்டும் வகையிலான படைப்பு கள் மட்டுமே இத்திட்டத்தில் தேர்ந்தெடுக் கப்பட்டன. இன்றைய நிலையிலும் மொழிபெயர்க்க தேர்ந்தெடுக்கும் படைப்புகள் குறிப்பாக, மூவீன மக்கள் மத்தியில் நிலவ வேண்டிய, நிலவிய ஒருமைப்பாட்டை, புரிந்துணர்வை அடை யாளப்படுத்தும் ஒரு சமூக அரசியல் தேவை இருக்கிறது.
இத்தகைய படைப்புகள் படைக்கும் பொழுதும், மொழிபெயர்க்கப்படும் பொழு தும் கவனதில் இருத்த வேண்டிய இரண்டு விடயங்கள் உண்டு, ஒன்று, இத்தகைய படைப்புகள் பிரசாரப் பாங் கானவை. அதனால் அத்தகைய படைப் புகளை இயந்திரப் பாங்காகப் படைத்து விடலாம் என்ற ஒரு கருத்து சிலரிடம் உண்டு. ஆனால் இத்தகையப் படைப்பு களைப் படைப்பது என்பது கத்தி மேல் நடப்பதற்கு ஒப்பானதாகும். ஏனெனில் இத்தகைய படைப்புகளை மிகக் கவன மாக படைக்க வேண்டி இருக்கிறது. தப்பித் தவறியேனும் ஒரு பக்கச் சார்ப்பு நிலை அத்தகைய படைப்பை படைக் கும் படைப்பாளி அறியாமல் வெளிப்பட கூடிய ஆபத்து இருக்கிறது என்பதை அப்படைப்பாளி மனதில் இருத்திக்
அத்தகைய படைப்பு மொழிபெயர்க் கப்படும் பொழுது இன்னொரு ஆபத்தி னையும் எதிர்கொள்கிறது. மூலமொழி படைப்பாளி அப்படைப்பில் கொண்டி ருக்கும் கருத்து நிலைக்கு ஆபத்து வராத நிலையில் மொழிபெயர்க்கப்பட வேண்டிய தேவையும் மொழிபெயர்ப் பாளருக்கு இருக்கிறது. இத்தகைய
ஆபத்துகளை இவ்வாறான படைப்புகள் எதிர்கொள்ளாமல் இருப்பதற்கு, அப் படைப்பைப் படைக்கும் படைப்பாளி கொண்டிருக்கும் கருத்து நிலையில் 'ஓர் உறுதி நிலையும் அப்படைப்பை மொழி பெயர்க்கும் மொழிபெயர்பாளருக்கு, மூல மொழி படைப்பாளி கொண்டிருக்கும் கருத்து நிலையில் சரியான தெளிவும், அக்கருத்து நிலையுடன் உடன்பாடான தன்மையும் இருத்தல் வேண்டும்.
இத்தகைய பார்வையுடன் வஷம்ஸ் அவர்கள் மொழிபெயர்த்த , தெனகம அவர்களின் நண்பர்கள்’ எனும் குறு நாவலை நோக்கலாம். தெனகம் அவர் கள் இடதுசாரியச் சிந்தனை மிக்கவர். நம் நாட்டு இனப்பிரச்சினை வர்க்க ரீதி யாகப் பார்க்கப்பட வேண்டும் என்ற கருத்துக் கொண்டவர். அத்தகைய ஒரு சிந்தனையைத்தான் ஷம்ஸ் அவர்களும் கொண்டிருந்தார் என்பதனால் அவரால் தெனகமவின் இந்த நாவலைச் சிறப்பான முறையில் மொழிபெயர்க்க முடிந்திருக் கிறது.
இந்த நாவலில் தெனகம இதுவரை கால நம் நாட்டு இனப்பிரச்சினை என்பது வர்க்கப் பிரச்சினையாகப் பார்க்கப்பட்டி ருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், நாவலின் முதல் பகுதியில் இன்றைய யதார்த்தச் சித்தரிப்பின் மூலம் எடுத்து காட்டுகிறார். முதலாளிகள் அவர்கள் எந்த இனத்தைச் சார்ந்தவர் களாக இருப்பினும், அவர்கள் முதலாளி களக இருப்பதனால் அவர்கள் ஓர் இனம் என்றும், தொழிலாளிகள் எந்த இனத் தைச் சார்ந்தவர்களாக இருப்பினும் அவர்கள் தொழிலாளிகளாக இருப்பத னால் அவர்கள் ஓர் இனம் என்பதையும் வாசகர் மனதில் பதியும் வகையில்
மல்லிகை செப்டெம்பர் 2011 & 12

நாவலில் ஆழமாகச் சித்தரித்துச் செல்கிறார். அத்தோடு அதிகார வர்க்கம் தான் (முதலாளிகள் - அவர்கள் நவீன நிலப் பிரபுகளாகவும் பரிமாணம் பெறு கிறார்கள்) இன முரண்பாடுகளின் உரு வாக்கத்திற்கு மறைமுகமாகச் செயற் பட்டு வந்துள்ளத்ை பகிரங்கமாக எடுத்துக் காட்டுகிறார்.
பல வருடங்களுக்கு முன்னால் திரு கோணமலைப் பகுதியில் குடியமர்த்தப் படும் சிங்கள சமூகத்தினருக்கும், அங்கு வாழ்ந்து கொண்டிருந்த தமிழ்ச் சமூகத் தினருக்குமிடையில் நிலவிய ஒருமைப் பாட்டை, நேச உணர்வைச் சித்தரிக்கும் வகையில் நாவல் ஆரம்பம் ஆகுகிறது. அடுத்து நாட்டில் பல்வேறு பகுதியில் நடைபெறும் கலவரச் சூழலினால், தமிழர்களால் சிங்களவர்களுக்கும், சிங்களவர்களால் தமிழர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் காலகாட்டத்தைச் சித்தரிக்கிறார். அந்த வகையில் திரு கோணமலையில் தமிழர்களால் சிங்கள வர்கள் பாதிக்கப்படுவதைப் பிரதானமாக நாவலில் காட்டி (அதில் ஒரு அம்சமாக - முதலாளிகளாக இருப்பினும், தமிழ் முதலாளி சிங்கள முதலாளியின் கடையை ஆள் வைத்து உடைப்பது என்பது வரை அடங்கும்) நாட்டில் வேறு பகுதியில் சிங்களவர்களால் தமிழர்கள் பாதிக்கபடுவதைப் போகிற போக்கில் ஒரு செய்தியாக மட்டுமே சொல்லிப் போகிறார் கதாசியிரியர். நாவலின் இத்தகைய கட்டமைப்பால் கதாசிரியர் கொண்டிருக்கும் கருத்து நிலையின் அடிப்படையில் கொண்டிருக்க வேண்டிய சமநிலை குலைந்து, ஒரு பக்கச் சார்பு நிலை தோன்றுவது போலான ஒரு வாசிப்பை வாசகன் வாசிக்கக் கூடிய தோற்றத்தை நாவலின் இரண்டாம் பகுதி
எதிர்கொள்கிறது. இதே நிலை நாவலின் இறுதிப் பகுதியின் ஒரு சித்திரிப்பின் மூலமும் ஏற்படுகிறது. அதாவது, அங்கு வசிக்கும் சிங்களக் குடும்பத்தினரையும் அவர்களின் வீட்டையும் உடைமை களையும் அன்றிரவு தமிழர்கள் தாக்க வரப்போவதாகத் தமிழ் பையன் கோபால் தன் தோழன் நிமலிடம் கூற, கோபாலின் முன் அறிவிப்பின் பயனாக அவர்கள் காட்டில் ஒளிந்து கொண்டு தம் உயிர் களைக் காப்பாற்றிக் கொள்கிறார்கள். ஆனால் காட்டில் ஒளிந்து கொண்டு உயிர் தப்பும் சிங்கள மக்கள் நிமல் என்ற அந்தப் பையனால்தான் தாங்கள் உயிர் தப்பியதாக அடிக்கடி கூறி அவனைப் பாராட்டி, நன்றி கூறு கிறார்கள். ஆனால் நிமலோ கோபால் தகவல் சொல்லியதன் பயனாக நாம் உயிர் தப்பினோம் என்று அவர்களுக்கு எடுத்து சொல்வதில்லை. அப்படி சொல்ல ஒரு சந்தப்பம் வரும் பொழுதும் கூட அவன் அதனைச் சொல்வதில்லை. அதாவது காட்டில் ஒளிந்து கொண்டி ருக்கும் அவர்களைத் தேடிவரும் கோபலைக் கண்டதும் அம்மக்கள் ஓரிடத்தில் ஒளிந்து கொண்டு, நிமலை மட்டும் கோபாலைச் சந்திக்க அனுப்பு வார்கள். அப்பொழுது அவர்கள் நிமலிடம் சொல்லும் வார்த்தைகள்
"அது கோபால்தான். நான் அவ னிடம் போறேன்” என்றான் நிமல்.
"அது நல்லது. நாங்க இருக்கிற இடத்தை அவனிடம் சொல்லாதே" என்கிறார்கள் எல்லோரும்.
இந்த இடத்திலேனும் அவர்களுக்கு நிமல் கோபாலின் உதவியை, அவனது அவர்கள் மீதான அக்கறையை எடுத்துச் சொல்லவில்லை. இவ்வளவுக்கும்
மல்லிகை செப்டெம்பர் 2011 & 13

Page 9
காட்டில் ஒளிந்து கொண்டிருக்கும் அவர்கள் பசி போக்கப் பாண் கொடுத்து போக வந்திருக்கிறான் என அறிந்திருந் தும் நிமலைப் பார்த்து காட்டில் ஒளிந் திருக்கும் அப்பெண்கள் சொல்லு கிறார்கள்,
"மகன். நீ இல்லாவிட்டால் நாங்கள் தப்பியிருக்க மாட்டோம்” என்றார்கள் பெண்கள்.
அப்பொழுதும் கோபால் பற்றிச் சொல்வதில் நிமல் மெளனம் சாதிக் கிறான். இப்படி நிமலை மெளனம் சாதிக்க வைத்ததன் மூலம் இந்த நாவ லின் ஆரம்பத்திலும் சரி, இறுதியிலும் சரி நெருக்கமாகச் சித்திரிக்கப்பட்ட அவ் விருவர்களிடேயே நிலவிய நேசத்தின் ஆத்ம சுத்தம் நாவலின் இவ்விடத்தில் பலஹினப்பட்டு விடுகிறது. இதில் சோகம் என்னவென்றால் அவர்களின் அந்த நேசத்தின் ஆத்ம சுத்தம் கோபால் தகவல் சொல்லுவதன் மூலம் பேணப் பட்டிருப்பினும் கூட, மிக அழுத்தமாகப் பறைசாற்றிச் சொல்லபட்டிருக்க வேண் டிய ஓர் இடத்தில்தான் அது பலஹினப் படுத்தபட்டுள்ளது என்பதுதான். நூலின் இத்தகைய சித்தரிப்புகளின் இடத்தில் தான் கதாசிரியர் எந்தக் கருத்து நிலை யுடன் அந்த நாவலை எழுதினாரோ அக் கருத்து நிலையில் பேணப்பட வேண்டிய சமநிலை குலைந்து, ஒரு பக்கச் சார்பு நிலையாக வாசிக்கப்படுவதிலும் ஆபத்து இருக்கிறது.
ஆனால், இச்சம்பவம் மூலம் ஆசிரி யர் இன்னொரு விடயத்தை நமக்கு அடையாளப்படுத்துகிறார். அவ்விரு இனங்கள் எவ்வளவு தான் நெருக்க மாகப் பழகி இருந்தாலும், வர்க்க உணர்வுடன் ஒன்றிணைந்திருந்தாலும்,
இன முரண்பாடு கிளறப்பட்டு, இரு இனங் களிடேயே கலவர நிலை முற்றிய நாள் தொடக்கம் இரு இனங்களிடையே சந்தேகப் பார்வை, நம்பிக்கையின்மை என்பவை ஏற்பட்டு விட்டது என்பதைக் காட்டி இருக்கிறார். அதேவேளை இனக் குரோதம் என்பதெலாம் வளர்ந்த மனிதர் களிடையே மட்டும் தான். கள்ளம் கபட மிலாச் சிறுவர்களிடம் இல்லை என்பதை நிமல் - கோபால் நேசம் முதல் கொண்டு கலவர சூழ்நிலை பற்றிய எந்தக் கவலையுமின்றி பட்டம் விட்டு கொண்டி ருக்கும் நிமலின் தம்பி சுனில் கோபாலின் தம்பி தங்கவேலு வரை யிலான சிறுவர்கள் இந்த நாவலின் மூலம் ஆதாரமாக்குகிறார்கள்.
அடுத்து, கிழக்கு பகுதியை களமா கக் கொண்டு இந்த நாவல் படைக்கப் பட்டிருக்கும் நிலையில் முஸ்லிம் சமூகத் தினருக்கும் சிங்கள - தமிழ் சமூகத்தி னருக்கு இடையில் எத்தகைய உறவு நிலவியது என்பதைக் காட்டுவதற்கு நல்லதொரு சந்தர்ப்பமாக அமைந்திருந் தது. ஆனால் அத்தகைய உறவைப் பற்றிய ஒரு சிறிய அளவான பிரஸ்தா பிப்பும் இந்த நாவலில் இல்லை. இதன் காரணமாகக் கதாசிரியர் முஸ்லிம் சமூகத்தினரை ஏன் தவிர்த்தார் என்ற ஒரு கேள்வி வாசகனின் மனதில் எழு கிறது. அப்படி முஸ்லிம் சமூகத்தினரைப் பற்றி இதில் பேசப்பட்டிருக்குமானால் மூவின இனங்களிடையிலான உற வாடலைச் சித்திரிக்கும் ஒரு நாவலாக, இந்த நாவல் பரிமாணம் பெற்றிருக்கும்.
இலங்கை போன்ற பல்லின மக்கள் வாழும் நாட்டில் எழக்கூடாத, எழுந்து விட்ட இனங்களிடேயே முரண்பாடுகள், விளைந்த விளைவுகள் மீண்டும் எழா
மல்லிகை செப்டெம்பர் 2011 & 14

வண்ணம் மூவீன மக்களை ஒன்று படுத்தும் வகையிலான கலை இலக்கி யங்கள் படைக்கப்பட வேண்டும். மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட நாம், அவ்வாறு ஒன்றுபடுத்தும் பணியின் ஊடாக (குறிப்பாக கலை இலக்கியங்கள் மூலம்) நாம் கொண்டிருக்கும் கருத்து நிலைக்கு எதிர்மறையான அர்த்தங் கள் எழுந்து விடக்கூடாது என்பதை யிட்டும் நாம் கவனமாக இருத்தல் வேண்டும். இன்றைய சூழலில் வாசிப் பின் அரசியல் மொழியை அர்த்தப் படுத்திக் கொள்வதையிட்ட கோட்பாடு களின் பரவல் போன்றவைகளின் காரணமாக, மொழியை அடிப்படை யாகக் கொண்ட எந்தப் பிரதியையும் அர்த்த மாற்றத்திற்கு ஆளாகும் நிலை நிலவுகிறது. அதனால் நாம் படைக்கும் பிரதிகளில் அல்லது நாம் மொழி பெயர்க்கும் பிரதிகளில் நாம் அல்லது மூல மொழிப் படைப்பாளி கொண்டி ருக்கும் கருத்து நிலைக்கு, எதிர்மறை யான நிலையை அர்த்தப்படுத்திக் கொள்ளும் வகையிலான, 'சந்தர்ப் பங்கள் நம் பிரதிகளில் அமைந்து விடக்கூடாது என்ற பிரக்ஞையுடன் செயற்பட வேண்டி இருக்கிறது.
அந்த வகையில் அத்தகைய எதிர்மறையான நிலையான அர்த்தப் படுத்தலுக்கான சில சந்தர்ப்பங்கள் எம்.எச்.எம்.ஷம்ஸ் அவர்கள் மொழி பெயர்த்த தெனகம சிரிவர்த்தன அவர் களின் நண்பர்கள் (மித்துரோ) என்ற இந்த நாவலில், துரதிர்ஷ்டவசமாக எட்டிப் பார்த்தாலும், ஒட்டு மொத்த நாவலின் வழியாகப் பார்க்குமிடத்து, இன்றைய சூழலில் சொல்லபட வேண்டிய சேதியினை அழுத்தமாகச்
சொல்லுகின்ற நாவல் என்ற வகையிலும், மேலும்இன் னொரு விடயத்தில் நமது விசேட கவனத்தை இந்த நாவல் பெறு கிறது. இதுவரை தமிழில் என் அளவில் வாசிக்கப்பட்ட சிங்கள மொழிபெயர்ப்பு நாவல்களில் முன்வைக்கப்படாத ஒரு சிந்தனைதான் - இன முரண்பாட்டினை வர்க்க முரண்பாடாக பார்க்கும் பார்வை. இந்த பார்வையையும் ஆழமாக பேசுகின்ற நாவல் என்ற வகையிலும் சிங்கள மொழி யிலிருந்து தமிழில் நமக்கு கிடைத் திருக்கும் நாவல்களில் நாம், அதிகமாகத் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும் நாவல்களின் வரிசையில் இந்த நாவலும் சேர்ந்து கொள்கிறது. இதுவே தெனகம சிரிவர்தன அவர்களின் இந்த நாவலின் முக்கியத்துவம் ஆகும்.
பத்தாண்டுச் சந்து செலுத்தி )ே
IltelefabhIII
புதிய ஆண்டு பிறந்து
சந்தாக்களைப் புதுப்பித்துக் கொள்ளவும்.
மனந் திறந்து மல்லிகை யுடன் ஒத்துழையுங்கள். ஏனெ C) னில் மல்லிகை உங்கள் ஒவ் வொருவ ரினதும் இலக்கியக் ○ குரலாகும்.
அசட்டை செய்வோருக்கு முன்னறிவித்தலின்றி இதழ் நிறுத்தப்படும்.
CD
-ஆசிரியர்
மல்லிகை செப்டெம்பர் 2011 & 15

Page 10
ගිළීග්‍රාහී ජිජ්ජ්lගුණිණිණි.
- பெரிய ஐங்கரன்
கண்ணில்லாச் சிறு பூச்சியொன்று இமையோடு மோதுண்டு என் கண்ணுக்குள் புகுந்தது.
உருட்டியது, வலித்தது இமை திறக்க முடியவில்லை.
விரலை விட்டு மெல்ல விழியோரம் தடவினேன்.
பூச்சியின் கால்கள் வந்தன முதலில்.
பின்னர்
சின்னச் சிறகு
தலை, கைகள், குடல் என ஒன்றன் பின் ஒன்றாக,
துண்டு துண்டாய்ப் போச்சு கண்ணில்லாப் பூச்சி.
மல்லிகை செப்டெம்பர் 2011 & 16

நெஞ்சில் பிறர் துன்பத்தைக் காணும்போது, தனது
துன்பம் போல எண்ணி வருந்தும் இயல்புடைய
Y ஒருவரும், பிறர் துன்பத்தைக் கருதாத ஒருவரும்
FFTcp6T6T யாப்பிலக்கணம் படித்துக் கவிதை செய்யப்
பழகுவாராயின் முந்தியவர் உண்மையான
கவிதை எழுதுவார். பிந்தியவர் பதங்களைப்
6Top55IT6TIT பின்னுவார். இப்படியேதான் ஒவ்வொன்றிலும்.
முருகபூபதிU6) 1972இல் 'கனவுகள் ஆயிரம்' என்ற சிறு
கதை மல்லிகையில் பிரசுரமானதன் மூலம்
IDGof6fpIT லெ.முருகபூபதி என்ற எழுத்தாளர் ஈழத்தமிழ்
இலக்கிய உலகிற்கு அறிமுகமானார். எனது
h ÓLI முதல் சிறுகதையும் அதே ஆண்டில்தான் வெளி O வந்தது என்பது தற்செயலான ஒற்றுமை.
60 நாங்கள் இலக்கியப் பரப்பினுள் நுழைந்த
அந்தக் காலம் மிகவும் ஆரோக்கியமானது.
ஈழத்தில் வெளிவரும் பத்திரிகைகள், சஞ்சிகை
4a கள் எல்லாவற்றையும் நாங்கள் படிப்போம். djs Lö6t a- றறையும ந guguru
தற்செயலாக வீட்டில் படிக்காது போனாலும், பாடசாலை நூலகத்தில் தவறவிட மாட்டோம்.
- கோகிலா மகேந்திரன்
நல்ல சிறுகதை அல்லது கவிதை
கண்ணில் படும்போது அதைப் பாராட்டி அல்லது விமர்சித்துச் சக எழுத்தாளருக்கு அல்லது பிரசுரித்த பத்திரிகைக்கு ஒரு கடிதம் உடனே எழுதிவிடுவோம்.
எழுத்தாளர்கள் மட்டுமல்ல, வாசகர்கள், நேயர்கள் பலரும்கூட அதைச் செய்வார்கள். வானொலியில் 'இசையும் கதையும் நிகழ்ச்சியில் எமது ஒரு கதை ஒலிபரப்பினால் கூட, அடுத்த வாரத்தில் ஐந்து அல்லது பத்துக் கடிதங்களை எதிர்பார்க்கலாம். எழுத்தாளர் பலரும் முகம் தெரியாமலே அறிமுகம் ஆவோம். அப்படித்தான் முருகபூபதி எனக்கு அறிமுக
T.
அப்போது தெல்லிப்பழையில் எனது சொந்த வீட்டில் நான் வாழ்ந்தேன். (சொந்த வீட்டில் வாழ்வது என்பது மறந்துபோய்க் கனகாலம் ஆகிவிட்டபடியால் அதைச் சொல்ல நேரிடு கிறது.) எனது ஆசிரியத் தொழில் வருமானம் செலவுக்குத் தாராளம். ஆகவே, ஒய்வு நேரங் களில் அற்புதமாக இலக்கியம் செய்யவும், இலக்கிய உறவுகளை வளர்க்கவும் முடிந்தது. வாழ்வு மிக அமைதியர்க எளிமையாக இருந்தது. அதிக பணம் சேர்த்தல் மட்டும்தான் வாழ்வின் இலக்கு என்று யாரும் ஒடுபட்டுத் திரியவில்லை. வாசிப்பதும், எழுதுவதும், விவாதிப்பதும் அருமையான சுகம் என்றிருந்தது அந்தக் காலம்.
1977 முதல் 1987 வரை முருகபூபதி வீரகேசரியில் முதலில் ஒப்புநோக்காளராகவும்
மல்லிகை செப்டெம்பர் 2011 季 17

Page 11
பின்னர் ஆசிரிய பீடத்தில் துணை ஆசிரிய ராகவும் பணிபுரிந்த காலப்பகுதியில் எனது இரண்டாவது நூலாகிய முரண்பாடுகளின் அறுவடை' என்ற சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழாவிற்கு நீர்கொழும்பிலி ருந்து தெல்லிப்பழை கல்லூரிக்கு வந்திருந்தார்.
Lo asm g 60Tmt ås
அப்போதுதான் முகம் தெரிந்த அறி முகமாயிற்று. எனது சிறுகதைகள் சிலவும் சமகாலத்தில் எழுதத் தொடங்கிய புலோலி யூர் ஆ.இரத்தினவேலோனது சிறுகதைகள் சிலவும் சேர்ந்து அறிமுக விழா என்ற பெய ரில் வர இருந்த நூலில் ஒவ்வொரு சிறு கதைக்குமான ஒரு விமர்சனத்தையும் சேர்க்க விரும்பியிருந்தோம். 1980ஆம் ஆண்டு ஈழநாடு வாரமலரில் புத்தாண்டு விசேட சிறுகதையாகப் பிரசுரமாகியிருந்த எனது'நெருடலும் ஓர் அசைவும் என்ற சிறு கதைக்கு முருகபூபதி எழுதிய விமர் சனத்தை அத்தொகுதியில் பிரசுரித்திருந் தோம். இவ்வாறாக இந்த இலக்கிய நட்புத் தொடர்ந்தது.
1987இல் முருகபூபதி அவுஸ்திரேலி யாவுக்குப் புலம்பெயர்ந்து விடுகிறார். இந் திய அமைதி காக்கும் படையின் அகோரப் பிடியினுள் திணறிப்போய் நாங்கள். அவுஸ் திரேலியாவிலிருந்து இலக்கியப் பணியைத் தொடர்ந்த அவரிடமிருந்து கடிதங்கள் இடையிடையே வரும்.
யுத்தத்தில் பெற்றோரை இழந்து, கல்வியைத் தொடர முடியாத பிள்ளை களுக்கு உதவ வேண்டும் என்று அவரது குரல் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. தெல்லிப் பழை மகாஜனாக் கல்லூரியில் இருந்து அவ்வாறான சில பிள்ளைகளின் விபரங் களை நான் அனுப்பியதும், அவர்கள் நிதி யுதவி பெற்றதும் நல்ல பசுமையான நினைவுகளாய் இன்றும்.
அவுஸ்திரேலியாவில் கடந்த 24 வருட மாக இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ஸ்தாபக உறுப்பினரான இவர் இப்போது அதன் துணை நிதிச் செயலாள ராகப் பணிபுரிகிறார்.
புலம்பெயர் நாடுகளில் இருந்து இலங் கைப் பத்திரிகைகளுக்கும், சஞ்சிகைகளுக் கும் தொடர்ந்து எழுதி வந்த சில எழுத்தாளர் களில் முருகபூபதி முக்கியமானவர் என் பதை மறக்க முடியாது.
சிறுகதைத் தொகுதிகள், பயணக் கட் டுரை, சிறுவர் இலக்கியம், கடித இலக் கியம், நேர்காணல், நாவல் என்று இதுவரை யில் 17இற்கும் மேற்பட்ட நூல்களை இவர் வெளியிட்டிருந்தாலும், சிறுகதை எழுத் தாளர் என்ற பெயரே இன்றுவரை ஊன்றி நிற்பதாக எனக்குப்படுகிறது.
"சுமையின் பங்காளிகள் சிறுகதைத் தொகுதிக்காக 1976இலும், பறவைகள் நாவலுக்காக 2002இலும் இலங்கையில் தேசிய சாகித்திய விருதை இவர் வென்றார். அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநில ஈழத் தமிழ்ச் சங்கம் 1998இல் இவருக்கு மகத் தான இலக்கியப் பணிக்கான விருதையும் 2004இல் மெல்பன் தமிழ்ச் சங்கம் முறிலழுநீ ஆறுமுக நாவலர் விருதையும் வழங்கிச் சிறப்பித்திருந்தன.
மனிதர் துன்பப்படுவதைத் தொலைக் காட்சி ஊடாகத்தானும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாத ஒரு மனிதர் முருக பூபதி. 2004இல் சுனாமி அநர்த்தம் நிகழ்ந்த காலப்பகுதியில் நான் அவுஸ்திரேலியா வுக்கு வந்திருந்தேன். அப்போது இவர் ஓடி ஒடி உடுதுணிகள் சேர்த்த முறையையும், அதை இலங்கை க்கு அனுப்பப்பட்ட பாட்டையும் அவதானித்தேன். அத்தகைய நேரங்களில்தான் முருகபூபதி அவர்களின் ஆற்றலையும் முழுமையாகத் தரிசிக்க
மல்லிகை செப்டெம்பர் 2011 & 18

முடியும். தானும் உணவு உறக்கமின்றி ஒடித் தன்னைச் சுற்றியுள்ள பலரையும் ஒடவைத்துக் கொண்டிருப்பார். இந்த இயல்பை அறிந்துதான் போலும் 2002 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா தின மன்று விக்ரோரியா மாநில டெறயின் மா நகர சபை சிறந்த பிரஜைக்கான விருதை இவருக்கு வழங்கி கெளரவித்தது.
சமூக வாழ்வில் தங்களை அதிகம் ஈடுபடுத்திக் கொள்பவர்களின் வாழ்வுக் காலம் அதிகமானது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தான், தனது குடும்பம் என்பதற்கு அப்பால் ஒரு வாழ்வு இருப் பதை முருகபூபதி எப்போதும் மனதில் கொண்டவர் என்பதற்கு, இலங்கையில் நீர்கொழும்பு இலக்கிய வட்டம், விஜயரத் தினம் இந்து மத்திய கல்லூரி பழைய மாணவர் மன்றம், இந்து இளைஞர் மன் றம், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆகியனவும் அவுஸ்திரேலியா வில் தமிழ் அகதிகள் கழகம், அவுஸ்திரேலியத்
பகரும்.
தன்னோடு எப்போதும் பலரையும் இணைத்து அணைத்துச் செல்லும் போக்கு இவரிடம் இருப்பதற்கு இவர் தொகுப்பாளராக இருந்து பதிப்பித்த 'உயிர்ப்பு' (சிறுகதைத் தொகுதி), 'வான வில்’ (கவிதைத் தொகுப்பு), "Being Alive' (ஆங்கில சிறுகதைத் தொகுதி), சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் மலர், கட்டுரைக் கோவை ஆகியன சாட்சி களாகின்றன.
பத்திரிகை ஆசிரியர் என்ற இவரது பணி, வீரகேசரியின் ஆசிரிய குழுவி லிருந்து தொடங்கி அவுஸ்திரேலியாவில் மக்கள் குரல், அவுஸ்திரேலிய முரசு, உதயம் ஆகியனவற்றின் ஆசிரிய குழு வில் நீடித்ததை அவதானிக்க முடிகிறது.
அவுஸ்திரேலியாவுக்கு எந்தத் தமிழ் எழுத் தாளர் வந்தாலும் அது முருகபூபதிக்குத் தெரியா மல் போகாது. எங்கள் வீட்டில் வந்து தங்கிச் செல்லுங்கள் என்று அழைப்பு விடுத்து விருந் துபசாரம் செய்யவும் இவர் தவறுவதில்லை. எழுத்தாளர் விழாக்கள் நடத்துவதில் இவரது பெயர் பிரபலமானது.
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் தாபக உறுப்பினராகவிருந்து அவுஸ்திரேலியாவில் இவர் வருடந்தோறும் முன்னின்று எழுத்தாளர் விழாக்களை நடத்தி வருவது அனைவரும் அறிந்தது. ஆயினும் பலரது கருத்தையும், கவனத்தையும் ஈர்த்தது இந்த ஆண்டு தொடக்கத்தில் இவர் முன் னின்று இலங்கையில் நடத்திய முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு.
இந்த மாநாட்டுக்கு எதிராக எழுந்த பலத்த விமர்சனங்கள் இவரது பெயரை உலகறிய வைத்தன. எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடிப்பார் என்ற பதிவை இந்த மாநாடு ஆழப்படுத்தியது.
ஒருவர் தனது வாழ்வில் மகன், சகோ தரன், கணவன், தந்தை, அயல்வீட்டுக்காரன், உறவினன் என்று பல வகிபங்குகளை ஏற்றுக் கொண்டாலும், இயல்பு ஒன்றுதான் உயர்ந்து நிற்பது. ஒன்றினால் சிறக்கும்போது மற்றை யவை தாழ்ந்துவிடாது பார்த்துக் கொள்வதும் அவசியம்.
நெஞ்சில் ஈரமுள்ள ஒரு எழுத்தாளர் என்ற பாத்திரமே முருகபூபதி அவர்களின் வாழ்வில் விஞ்சி நிற்பதாக எவரும் இலகுவாக இனம் &n6007 (փլգաւծ.
இது அவருக்கு மணிவிழா ஆண்டு. தனது மணிவிழாப் பரிசாக உள்ளும் புறமும், காலங் களும் கணங்களும், சொல்ல மறந்த கதைகள் ஆகிய நூல்களை அவர் வெளியிடவிருப்பதாக அறிகின்றோம்.முருகபூபதி தனது குடும்பத் தாருடன் பல்லாண்டு வாழவும் இலக்கியப் பணியில் தொடரவும் வாழ்த்துவோம்.
மல்லிகை செப்டெம்பர் 2011 & 19

Page 12
மெல்oனில் குடத்த ഴത്രജ്രജ്ഞ് (Oജിയ്ക്കഴd
- கிருஷ்ணமூர்த்தி
படைப்பிலக்கியவாதியும், பத்திரிகையாளருமான முருகபூபதியின் மணிவிழா கடந்த ஜூலை 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை மெல்பனில் மல்கிறேன் சமூக மண்டபத்தில் நடைபெற்றது. முருகபூபதி தற்போது அங்கம் வகிக்கும் இலங்கை மாணவர் கல்விநிதியம் மற்றும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் ஆகியன இணைந்து இந்த மணிவிழாவினை ஒழுங்கு செய்திருந்தன. முருகபூபதி விரும்பியவாறே இவ்விழாவில் பொன்னாடைகளோ, பூமாலைகளோ இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ், சிங்களம், முஸ்லிம் ஆகிய மூவினங்களையும் சேர்ந்தவர்கள் உரை நிகழ்த்தியமையும் குறிப்பிடத்தக்கது. டொக்டர் நடேசன் தலைமையில் நடைபெற்ற இம்மணிவிழாவில் தமிழ் அபிமானியும், மனித உரிமை ஆர்வலருமான திரு. லயனல் போப்பகே நெருக்கடியான அரசியல் காலகட்டத்தில் எழுத்தாளர்கள் கலைஞர்களின் பங்கும் பணியும் என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் விரிவுரையாற்றினார்.
மேற்கு அவுஸ்திரேலியா மாநிலத்தில் மோடெக் பல்கலைக்கழக பொருளியல் பேராசிரியர் அமீர் அலியின் சிறுபான்மை சமூகங்களின் ஒற்றுமை என்ற தலைப்பில் அமைந்த கட்டுரையை ஜனாப் செய்யத் அலவி சமர்ப்பித்தார்.
அவுஸ்திரேலிய தமிழர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் சட்டத்தரணி செ.ரவீந்திரன் படைப்பிலக்கியவாதியின் மனிதநேயம் என்ற தலைப்பிலும், அவுஸ்திரேலிய தமிழ் அகதிகள் கழகத்தின் முன்னாள் தலைவர் திரு. எஸ்.கொர்னேலியஸ் தமிழ் அகதிகள் கழகத்தில் முருகபூபதியின் பணி தொடர்பாகவும், இலங்கை மாணவர் கல்வி நிதியத்தில் முருகபூபதியின் பங்களிப்பு தொடர்பாக நிதியத்தின் நிதிச் செயலாளர் திருமதி. வித்தியா முறிஸ்கந்தராஜாவும், அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைக்சங்கத்தின் எழுத்தாளர் விழாக்களில்
மல்லிகை செப்டெம்பர் 2011 & 20

முருகபூபதியின் செயற்பாடுகள் பற்றி சங்கத்தின் செயலாளர் திருமதி. கெளசல்யா அன்ரனிப்பிள்ளையும் உரையாற்றினர். கவிஞர்கள் ஆவூரான் சந்திரன், நிர்மலன் சிவா ஆசியோர் கவி வாழ்த்துச் சமர்ப்பித்தனர்.
கலை, இலக்கிய சங்கத்தின் சார் பில் நினைவுப் பரிசும் முருகபூபதிக்கு வழங்கப்பட்டது. கல்வி நிதியத்தின் தலைவர் டொக்டர் மதிவதனி சந்தி ரானந்த் நிதியத்தின் சார்பில் முருக
பூபதிக்கு நினைவுப் பரிசு வழங்கினார். [x
திருமதி. மாலதி முருகபூபதியும், முருக பூபதியின் புதல்விகள் திருமதி. பிரிய ாதேவி முகுந்தன், பாரதி ஜேம்ஸ் ஆகி யோரும் உரையாற்றினர்.
நிகழ்ச்சியின் இறுதியில் ஏற்புரை வழங்கிய முருகபூபதி, மணிவிழாவை ஒழுங்கு செய்த குழுவினருக்கும், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அன்பர் களுக்கும், தனது படைப்புகளை தொடர்ச்சியாக வெளியிட்டுவரும் இதழ்கள், ஊடகங்கள் மற்றும் இணை யத்தளங்களுக்கும், தனது பெற்றோர், ஆசான்கள், வழிகாட்டிகளுக்கும், கலை இலக்கிய, ஊடகத்துறை நண்பர் களுக்கும் நன்றி தெரிவித்தார். அத் துடன் தன்னை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியமல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா, ஊடாகத்துறையில்
அறிமுகப்படுத்திய வீரகேசரி நிறுவனத் தினர் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்
தார். இராப்போசனத்துடன் மணிவிழா நிறைவடைந்தது.
Happy Photo
Excellent Photographers Modern Computerized Photography For Wedding Portraits & Child Sittings
S
Photo Copies of Identity Cards (NIC), Passport & Driving Licences Within 15 Minutes
300, Modera Street, Colombo - 15. Te: 2526345
S
N
SNAAMX
மல்லிகை செப்டெம்பர் 2011 & 21

Page 13
கடிதங்கள்
மல்லிகை ஆவணி இதழ் கிடைக்கப் பெற்றேன், நன்றி. பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் மறைவு பற்றிய ஆசிரியரின் கட்டுரை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாட்டு மாநிலக் குழுவின் அறிக்கை, பேராசிரியர் நுஃமான் அவர்களின் கட்டுரை ஆகியவற்றை மேற்படி இதழில் முழுமையாக வாசித்தேன். பேராசிரியர் சிவத்தம்பி எத்துணை பெறுமதியான வாழ்க்கை யொன்றை வாழ்ந்துள்ளார் என்று வியக்கத் தோன்றுகின்றது. இவரது மரணம் தமிழ்ப் பற்றாளர்களுக்கும், விசேஷமாக இடதுசாரி சிந்தனையாளர்களுக்கும், கல்விச் சமூகத்துக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இவரது ஆத்மா சாந்தியடைய மல்லிகை வாசகர்களின் சார்பாகப் பிரார்த்தனை செய்கின்றேன்.
கா.தவபாலன் பேராதனை
நானொரு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவன். ஆரம்ப காலகட்டங் களில் சும்மா படிப்பதற்காகத்தான் மல்லிகை இதழ்களை நானெடுத்து வாசித்து வருவது வழக்கம்.
காலம் போகப் போக, அதைத் தொடர்ந்து படிப்பதில் ஒருவிதமான ஈர்ப்பு எனக்கு ஏற்பட்டது. தொடர்ந்து ஓர் இதழ்கூட விட்டுப் போகாமல் படித்துச் சுவைக்க வேண்டுமென்ற ஓர் அறிவுத் தேவை ஏற்பட்டு விட்டது.
மல்லிகையை மாதா மாதம் என்னைப் போன்ற பல்கலைக்கழக மாணவர் களும் தொடர்ந்து படித்து வருகின்றனர் என்பதையும் நீங்கள் மறக்கக்கூடாது.
உங்களது தூண்டில் கேள்வி பதில் எம்மைப் போன்றவர்களுக்கு மிக மிகத் தேவையான ஒரு பகுதி. எத்தனையோ புத்தம் புதுத் தகவல்களை அதிலிருந்து
இவை எல்லாவற்றையும் விட, இந்த மண்ணில் இன்றுவரையும் வாழ்ந்து கொண்டு வரும் ஒரு மன உறுதி மிக்க மனிதனைப் புரிந்துகொள்ள முடிகின்றது.
அ.விக்னேஸ்வரன் நல்லூர் மல்லிகை செப்டெம்பர் 2011 & 22

இம்மாத மல்லிகை கிடைத்த தும் ஆனந்தம். நண்பர் எஸ்.எல்.எம். ஹனிபா அவர்களது புகைப்படத்தை அட்டையில் கண்டதுதான் காரணம். கலையைக் கலைக்காக நேசித்து, அதன் நேர்த்தியில் கிறங்குபவர் அவர். அவரது படைப்புகள் எங்களை அற்புத மனநிலைக்குள் ஆழ்த்தி விடும். அவரது மக்கத்துச் சால்வை Ad-Leulus) LJ60LLys6061T LJ195g) ரசித்தவன், நான். காலம் கடந்தாவது மல்லிகை அவரை அட்டையில் போட்டு, அருமையான கட்டுரையை ஒட்டமாவடி வீ.ஏ. ஜூனைத் அவர் களைக் கொண்டு எழுதச் செய்த தற்கு ஜீவாவை எவ்வளவு பாராட்டி னாலும் தகும்.
அடுத்து சிவத்தம்பி பற்றிய நுஃமான் அவர்களது கட்டுரை சிறப் பாகச் சொல்லப்பட வேண்டியது. உற வின் நெருக்கத்தில் ஆரம்பித்து பேரா சிரியரின் புலமையின் செழுமையை எடுத்துக் காட்டும் சீரிய கட்டுரை.
திக்குவல்லை கமால் மொழி பெயர்த்த ஜயதிலக கம்மெல்லரவின் புரியாத புதிர் மிக வித்தியாசமான படைப்பு. எல்லாம் கிட்டியிருந்தும் ஒரு மனித மனம் சலனத்தில் ஆழ்ந்து, சேற்றில் மூழ்குவதில் கிளர்ந்தெழுந்து, அழுக்கைக் கழுவ ஒடிச்செல்வதை அற்புதமாகச் சித் தரிக்கிறது. பாசாங்கான ஆசார நிய மங்களைப் புறந்தள்ளி நிஜ வாழ்வின் மறைவிடங்களை வெளிப்படையாகப் பேசிகிறது என நினைக்கிறேன்.
ஆனந்தியின் நல்ல மனம் வேண்டும் கவனத்தில் எடுக்க வேண்டிய படைப்பு என்பதில் ஐயமில்லை. ஒரு சாதாரண சம்பவம்தான். சகலத்திலும் குற்றத்தைத் தேடும் வக்கிர மனங்களால், கள்ளமற்ற வெள்ளை உள்ளங்களில் ஏற்படும் கறையை கவிதைக்கும் ஆத்மார்த்த தேடலுக்கும் இடைப்பட்ட நடையில் சொல்வது வித்தியாசமான அனுபவத் தைத் தந்தது.
எம்.கே.முருகானந்தன் கொழும்பு 6.
மல்லிகை இதழை நீண்ட கால மாகவே படித்து வருகின்றேன். ஆரம்ப காலத்திலிருந்தே வாசித்து வருகின் றேன்.
ஒர் ஆரோக்கியமான திசைவழியில் ஈழத்து இலக்கியத்தை வளர்த்தெடுப் பதில் மல்லிகையின் பங்கு, அளிப்பரியது என்பது எனக்கு ஏற்கனவே தெரியும்.
இன்று தேசம் முழுவதும் பல புதுப் புது இளம் எழுத்தாளர்கள் உருவாகி வந்து கொண்டிருக்கின்றனர் என்பது நீங்கள் உணராததல்ல. இந்த இளம் தலைமுறைப் படைப்பாளிகளை ஒழுங்கு படுத்தி, வளர்த்தெடுப்பது மிக முக்கிய மான வேலைகளில் ஒன்று. இதை ஆசிரியர் கவனத்தில் கொள்வது முக்கிய LDIT60Tg5IT5lb.
எனவே, மல்லிகையை இன்னு மின்னும் பொது மக்களிடம் - குறிப்பாக இளந்தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க வேண்டியது நமது கடமைகளில் ஒன்றாகும்.
மல்லிகை செப்டெம்பர் 2011 & 23

Page 14
பல இளைஞர்களிடம் சந்தா செலுத்துவதற்கான பொருளாதார வசதி இருப்பதில்லை. அவர்கள் மல்லி கையை சுலபமாகவும் வசதியாகவும் பெற்றுக்கொள்வது எப்படி?
சஞ்சிகையை மாதா மாதம் வெளி யிட்டு வைப்பதை விட, மல்லிகைத் தளத்தைக் கவனத்தில் கொண்டு, இலக்கியக் கூட்டங்களை அடிக்கடிப் பரந்தளவில் ஒழுங்கு செய்தால் என்ன?
சுற்றிச் சுற்றி ஒரே முகங்களை எழுத வைத்து, அவர்களது படைப்பு களையும், எழுத்துக்களையுமே பிர சுரஞ் செய்வதை விடுத்து, பல்வேறு வகைப்பட்ட பிரதேசங்களில் வாழ்ந்து வரும் எழுத்தாளர்களை அணுகி, அவர்களது எழுத்துக்களையும் மல்லி கையில் பிரசுரித்தால் என்ன? பல புதுப் புது எழுத்தாளர்களை உருவாக்கிய
பெருமையும், தகைமையும் மல்லி கைக்குச் சேரட்டுமே!
யாழ்ப்பாணத்தில் அந்தக் குச் சொழுங்கைக்குள்ளே இருந்து வெளி வந்த மல்லிகைக் காலத்தை நான் மீண்டும் நினைத்துப் பார்க்கின்றேன். மல்லிகைக்கு அன்றிலிருந்து இன்று வரைக்கும் தார்மீகப் பலமாக, இலக் கிய சக்தியாக இருந்து வந்தவர்கள் - இயங்கி வந்தவர்கள் - தரமான இலக்கிய நெஞ்சங்களேயாவார்கள்.
இது மல்லிகை தானாக தேடி யடைந்த சொத்தாகும்.
துணிந்து புதுப் புது வழிகளில் மல்லிகையைக் கொண்டு செல்லுங் கள். நாம் துணையாக பின்தொடர்
(36. Irrib.
நல்லூர்
ச.சர்வேஸ்வரன்
மனதார வாழ்த்துகின்றோல்
பிரபல எழுத்தாளர் ‘சுதாராஜ் தம்பதியினரின் மூத்த மகள் தேறுகா அவர்களுக்கும், திரு. செல்லசாமி தம்பதியினரின் மகன் வசீகரன் அவர்களுக்கும் சமீபத்தில் கொழும்பு, வெள்ளவத்தையில் மிக மிகச் சிறப்பான முறையில் திருணம் நடந்தேறியது. மணமக்களை மல்லிகை
மனப்பூர்வமாக வாழ்த்தி மகிழ்கின்றது.
- ஆசிரியர்
மல்லிகை செப்டெம்பர் 2011 & 24
 
 

அண்மையில் ஜீவநதியின் நாலாம் ஆண்டு மலர் வெளியீட்டு விழா யாழ்பாணம் அல்வாயில் கலையகத்தில் இடம்பெற்றது. விழாவின் சிறப்புக் கவியரங்கத்தில் கவி பாட நானும் வசீம் அக்ரமும் அழைக்கப்பட்டிருந்தோம். ஆரம்பத்தில் நோன்பு என்பதால் யாழ்ப்பாணம் செல்லுவதில் எனக்கு உடன்பாடு இருக்கவில்லை. ஆனால் ஜீவநதியின் ஆசிரியர் பரணியின் அன்பு வேண்டுகோள், தம்பி துஷயந்தனின் வேண்டுகோள் இவைகளை மறுக்க முடியவில்லை. நான் வருவதாக ஒத்துக் கொண்டேன். வசீம் அக்ரமும் வருவதாக ஒத்துக்கொண்டார்.
ஆரம்பத்திலிருந்தே யாழ்ப்பாணம் செல்ல வேண்டும் என்ற மனக்கொதிப்பு எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. சந்தர்ப்பம் கிடைக்காதா? என்று இருந்த போதுதான் வதிரி சி.ரவீந்திரனின் மீண்டு வந்த நாட்கள் வெளியீட்டு விழா பற்றிய செய்திகள் வெளிவந்தன, அதில் மேமன்கவி, திக்குவல்லை கமால், உபாலி லீலாரத்னா ஆகியோர் கலந்து கொள்ளவிருப்பதாகவும் மேமன்கவி மூலமாக அறிந்து கொண்டேன்.
ഴ്ചക്രീC%്ക്രമീമമ (C/2dova V6 (266226ó.
- நாச்சியாதீவு பர்வீன்
ரவீந்திரன் அவர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நானும் யாழ்ப்பாணம் வர விரும்புவதை சொன்னேன். அதற்கவர் அனுமதியளிக்கவே குறிப்பிட்ட நிகழ்வுக்கு முதல் நாளே நான் யாழ்ப்பாணத்திற்கு கிளம்பிவிட்டேன்.
அது ஒரு வெள்ளிக்கிழமை. வவுனியாவில் ஜும்மா தொழுகை. அத்தோடு பகல் உணவும் (நோன்புக்கு முந்திய காலம் இது என்பதை வாசகர்கள் கருதிற் கொள்க) அங்கேயே சாப்பிட்டு விட்டு பி.ப. 230 மணிக்குப் பருத்தித்துறை நோக்கிய பஸ்ஸில் எனது பயணம் தொடர்ந்தது.
நெல்லியடியில் இறங்கிய பத்து நிமிடங்களுக்குள் ரவீந்திரன் அவர்கள் தனது காரில் அங்கு வந்து சேர்ந்து விட்டார். ஏலவே மேமன்கவி, திக்குவல்லைக் கமால் மற்றும் லீலா ரத்னா ஆகியோர் வதிரியை அடைந்திருந்தனர். எங்களுக்கு கலாநிதி கருணாநிதி அவர்களின் வீடு தங்குவதற்கு வழங்கப்பட்டது, அங்கிருந்த அவரது உறவினர் எம்மை நல்ல முறையில் கவனித்துக் கொண்டார்கள். இரவு தெணியானை சந்திக்கச் சென்றோம். அன்பாக வரவேற்றார். கலகலப்பான மனிதர்.
தெணியான் அவர்களின் பூச்சியங்கள் பூச்சியமல்ல' என்ற மல்லிகைத் தொடர் என்னை மிகவும் கவர்ந்தது மட்டுமன்றி, நான் 'பேனாவால் பேசுகிறேன்’ என்ற
மல்லிகை செப்டெம்பர் 2011 & 25

Page 15
தொடர் எழுதுவதற்கும் அதுதான் காரணம் என்ற உண்மையைச் சொன் னேன், சந்தோசப்பட்டார். இடையில் ஜீவ நதியின் ஆசிரியர் பரணிதரனும் துணை ஆசிரியர் துஷ்யந்தனும் வந்து எம்மோடு இணைந்து கொண்டார்கள். இதற்கிடை யில் திடீரென்று மின்சாரம் நின்று போக திருமதி. தெணியான் விளக்குகளை ஏற்றி வெளிச்சத்தை தந்தார்.
எங்களது பேச்சு முழுக்க முழுக்க இலக்கியமாகவே இருந்தது. போர் ஓய்ந் ததன் பின்னரான மக்களின் அன்றாட இயல்பு நிலை வாழ்க்கை மெல்லத் திரும்புவதாகவே எனக்குபட்டது. வெகு நேரம் பேசிவிட்டு விடைபெற்றோம். திருமதி. தெணியான் தந்த யாழ்ப்பாணக் d560J 660)Lub, (85.Bc5lb 3,606).JLLITEB இருந்தன. இரவுச் சாப்பாட்டின் பின்னர் எல்லோரும் உறங்கிப் போனோம்.
சனிக்கிழமை காலை ஏலவே ஏற் பாடு செய்யப்பட்டதன் பிரகாரம் நிகழ்வு கள் இடம்பெற்றன. அருமையான விழா வாக அந்த விழா அமைந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில்தான் பரணிதரன் என்னிடம் வேண்டுகோள் விடுத்தார். ஜீவநதியின் நாலாம் ஆண்டு மலர் வெளியீட்டு நிகழ் வின் போது சிறப்புக் கவியரங்கத்தில் கவிபாட வரவேண்டுமென்று. நானும் ஒத்துக் கொண்டேன். பின்னர் காயல் பட்டின இலக்கிய மாநாட்டில் கலந்து கொண்டு ஜூலை பதினாறாம் திகதி நாடு திரும்பும் மட்டுக்கும் இது பற்றிய ஞாபகம் அற்றவனாகவே இருந்தேன்.
பதினேழாம் திகதி பரணிதரனின்
தொலைபேசி அழைப்பு இரண்டு வேண்டு கோளுடன் சிணுங்கியது. முதலாவது
காயல்பட்டின அனுபவங்களை ஜீவ நதிக்கு எழுத வேண்டும் என்றும், இரண் டாவது சிறப்புக் கவியரங்கத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் முன்னரே நான் ஒத்துக் கொண்ட விடயம் என்ப தால் ஆம் என்றேன். வசீமும் வருவதற்கு ஒத்துக் கொண்டார்.
ஆகஸ்ட் ஆறாம் திகதி மாலை 3 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்படும் என்று அழைப்பிதழ் சொல்லியது. இதற் கிடையில் கவியரங்கத்தில் வாசிக்க கவிதை வேறு எழுத வேண்டும். தலைப் பும் தரப்பட்டு விட்டது. "மெய்ப்பட வேண்டும் கவிதையை ஒருவாறு டைப் பண்ணி முடித்தாகி விட்டது. இனி யென்ன யாழ்ப்பாணம் நோக்கிய பயணம் தான்.
ஆகஸ்ட் ஆறாம் திகதி சஹார் சாப்பாட்டுடன் மிஹிந்தலை நோக்கி எனது பயணம் ஆரம்பமாகி விட்டது. நண்பன் நசுவர் மோ.பைக்கில் என்னை கொண்டுபோய் மிகிந்தலையில் விட்டார். வசீம் கஹடகஸ் திகிலியவிலிருந்து மிகிந்தலைக்கு வருவதாகத் திட்டம். நான் போய்ச் சுமார் இருபது நிமிடங் களில் வசீம் வந்தார். வசீம் வந்து சுமார் நாற்பது நிமிடங்களின் பின்னரே வவுனியாவுக்கான பஸ் வந்தது. நானும் வசீமும் நிறைய விடயங்களை அலசி னோம். குறிப்பாகப் படிகளை எப்படி இன்னும் தரமாகக் கொண்டு வரலாம், படிகளின் கால தாமதத்தை எப்படித் தவிர்க்கலாம் என்பன எங்களது பேச்சில் அடங்கியிருந்த முக்கிய விடயம். இதற் கிடையில் மதவாச்சியில் வைத்து டிக் கெட் பரிசோதகர்கள் ஏறிவிட்டார்கள். நான் எங்களது டிக்கெட்களைச் சரி
மல்லிகை செப்டெம்பர் 2011 & 26

பார்த்துக் கொண்டேன்.
ஆம். அப்போதுதான் அவரைக் கண்டேன். இக்கிரிகொள்ளாவையைச் சேர்ந்தவர். இலக்கியத்தின் மீது ஆழ்ந்த விருப்புக் கொண்டவர் மட்டுமல்ல மிகச் சிறந்த நாடக நடிகர். இப்போது டிக்கெட் பரிசோதகராக கடமையாற்றும் அவரின் பெயர் அசீஸ். காணுகின்ற பொழுது களில் எல்லாம் நாடகங்கள் பற்றிப் பேசு வார். எனது கவிதைகள் பற்றிய விமர் சனங்களை அவ்வப்போது சொல்லுவார். இன்று மிக நீண்ட நாளைக்குப் பின்னர் அவரைக் காண்கிறேன், நாம் பயணம் செய்யும் பஸ்ஸின் டிக்கெட் பரிசோதக ராக எம்மைக் கண்டவுடன் வழமையான அதே புன்னகை தனது வேலைகளை முடித்து விட்டு எம்மருகில் வந்தார். எமது பயணம் பற்றிக் கேட்டார், சொன்னோம். பல விடயங்கள் பற்றிப் பேசினார். குறிப் பிட்ட ஒரு தரிப்பிடத்தில் விடைபெற்று இறங்கினார்.
காலை எட்டு மணியிருக்கும் வவுனி யாவை வந்தடைந்து விட்டோம். இதற் கிடையில் வதிரி சி.ரவீந்திரன், மன்னார் சிஹார், துஷ்யந்தன் ஆகியோர் பல தடவை அலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு எமது வருகையை உறுதி செய்தனர். இதற்கிடையில் பரணிதரன் நோன்பு திறக்கும் ஏற்பாடுகளுக்கு என்ன செய்ய வேண்டும்? என்று கேட்கக் கஞ்சி இருந்தால் போதும் என்று நான் கூறி வைத்தேன். உண்மையில் நோன்புக் கஞ்சியின் ருசி குடித்துப் பார்த்தால் தான் தெரியும். அதுவும் நோன்பு திறக் கும் போது அங்குள்ள உணவு வகை யில் கஞ்சிக்கு பிரதான இடம் இருக்கும்.
காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டோம். உண்மையில் பருத்தித்துறை பஸ்ஸில் சென்றால் நெல்லியடியில் இறங்கி அல் வாய்க்கு செல்ல இலகுவாகும் என்பது முன்னரான எனது பயணத்தின் போதான அனுபவமாகும். ஆனால் பருத்தித்துறை பஸ் தாமதமாகும் என்று அறிந்ததினால் யாழ்ப்பாண பஸ்ஸில் ஏறிக் கொண் டோம். இடையில் கொடிகாமத்தில் இறங்க வேண்டும் என்ற விடயத்தை ரவீந்திரன் அவர்கள் ஏலவே கூறி யிருந்தார்.
ஆம். எமது பயணம் யாழ்ப்பாணம் நோக்கி இல்லை. அல்வாயை நோக்கி SJ bLLDTGóluubi.
வவுனியாவுக்கும் யாழ்ப்பாணத்திற் கும் இடையிலான பிரதேசம் பற்றிய அவதானக் குறிப்புகளை வேறொரு கட்டுரையில் அலாதியாக எழுத வேண்டும். கடும் வறட்சியுடனான இந்தப் பிரதேசத்தில் ஆங்கங்கே சில மண் குடி சைகள். சில குடும்பங்கள் கோவிலை அண்டிய பிரதேசங்களில் தமக்கான வாழிடங்களை அமைத்துக் கொண் டுள்ளனர்.
மனிதனுக்கான அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறை யுள் இவற்றைப் பெற்றுக்கொள்வதில் இந்த மக்கள் கடும் சிரமத்தை மேற் கொள்ள வேண்டியிருக்கும். இந்த மக்களின் தலைவிதியை எந்த இதய முள்ளவனும் அங்கீகரிக்க மாட்டான். இன்னொரு சமூகத்தை இப்படி அவல வாழ்வுடன் படைத்து விடக் கூடாது என்று இறைவனிடம் விண்ணப்பம் வைத்தது எனது மனது.
மல்லிகை செப்டெம்பர் 2011 & 27

Page 16
ஓமந்தை செக் பொயிண்ட் முன்னர் போல கெடுபிடி இல்லை. இருந்தும் மக் களின் மனநிலை மாற்றத்தை இந்த செக் பொயிண்டில் அவதானிக்க முடிந்தது. யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதன் பின்னர் மக்கள் சாதாரண வாழ்க்கையை விரும்புகிறார்கள் என்பதை மக்களின் முகங்கள் தெளிவாகச் சொல்லியது. ஜசி செக் பண்ணினார்கள். வேறொன்றும் பெரிதாக நடக்கவில்லை. முறிகண்டியில் சுமார் அரைமணி நேரம் பஸ் தாமதமா கியது. நாங்கள் நோன்பு என்பதனால் நான் கீழே இறங்கவில்லை. வசீம் கொஞ்சம் கீழே இறங்கி ஏறினார். மாங் குளம், கிளிநொச்சி என்று பஸ் வன்னி நிலத்தை தாண்டிச் சென்று கொண்டி ருந்தது. இடையில் போரின் வடுக்கள் ஆறாத காயங்களாக ஒவ்வொரு பிர தேசத்திலும் காணப்பட்டன. தலைகளை இழந்த முண்டங்களாகப் பனை மரங்கள், குண்டு துளைத்துப் பாழடைந்து போய்க் காணப்படும் வீடுகள் எல்லாம் மயானத் தின் வடிவில்தான் இருந்தது. ஆங் காங்கே மீள்குடியேற்றக் கிராமங்கள் செழிப்புடன் இருந்தாலும், மக்களின் இயல்பு நிலை இன்னும் திரும்பவில்லை என்ற யதார்த்தங்களை கதை பேசி நின்றன ஒரு அனாதையாக.
பி.ப. 12.30 மணிக்கு கொடிகாமத் தில் வந்து இறங்கினோம். நாம் இறங்கிய இடத்திலேயே கொடிகாமம் ஜும்மா மஸ்ஜித் என்ற பெயர்ப் பலகை கண்ட வுடன் ஆச்சரியம் எமக்கு. பக்கத்து சலூனில் கேட்டபோது கேற்றைத் திறந்து பின்புறம் செல்லுமாறு கூறினார்.
கேற் மூடியிருந்தது. எட்டிப்பார்த் தால் தாடி, தொப்பி, ஜப்பாவுடனான
ஒரு இளம் மவுலவி, எம்மைக் கண்டு கேற்றைத் திறந்தார். அவர் மட்டும்தான் அங்கே இருந்தார். சொந்த ஊர் தோப்பூர். இங்கு வந்து ஆறுமாதங்கள். முஸ்லிம் குடியாட்டங்கள் 1985களுக்கு முன்னர் இருந்ததாகவும் இப்போது ஒரு சில வியாபாரிகள் மட்டுமே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த யுத்தம் இனங் களுக்கிடையில் பிளவுகளையும், உடைவுகளையும் ஏற்படுத்திவிட்டு சென்று விட்டது. பிளவுகளைச் சரிக்கட்டு வதுதான் எத்துனை சிரமமானது.
லுகர் தொழுகையை முடித்து விட்டு, கொடிகாமத்திலிருந்து நெல்லி யடியை நோக்கிப் பயணமானோம். சுமார் 45 நிமிடப் பயணம். நெல்லியடி வந்து விட்டது. அங்கே எமக்காகப் பரணி தரனும், துஷ்யந்தனும் காத்திருந்தனர். நெல்லியடியிலிருந்து அல்வாய்க்கு வெறும் ஐந்து நிமிடப் பயணம். பயணக் களைப்பு உடம்பில் அசதியைக் கூட்டி இருந்தது.
பரணிதரனின் வீடும் கலையகமும் அங்குதான் இருந்தது. அங்குதான் நிகழ்வுகளும் நடைபெற இருந்தன. கலா நிதி. கலாமணி மற்றும் திருமதி. கலா மணி ஆகியோர் எம்மை அன்புடன் வர வேற்றனர். திருமதி. கலாமணி அனுராத புரம் கலாவயில் ஆசிரியராகப் பணி புரிந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அது மட்டுமல்ல நாச்சியா தீவுக்குப் பணி மாற்றம் கிடைத்து ஒரு நாள் வந்து வேலை செய்த அனுபவத் தையும் குறிப்பிட்டார். எங்களுடன் மிக நட்புடன் பழகிய அவர்கள் நீண்ட நாட் கள் பழகிய நண்பர்களைப் போலவே எம்மோடு நடந்து கொண்டனர்.
மல்லிகை செப்டெம்பர் 2011 & 28

மேல்மாடியில் சிஹார் உறங்கிக் கொண்டு இருந்தார். நாங்களும் கொஞ் சம் ஓய்வெடுத்துக் கொண்டோம். நேரம் சரியாக மூன்று மணி. பரணி தரன் எம்மை வந்து அழைத்தார். இதற் கிடையில் கூட்டம் மெல்லச் சேர ஆரம் பித்தது. கவியரங்கில் கவிபாட இருந்த அமல்ராஜ் வந்து அறிமுகமாகினார். யோகேஷ் வந்திருந்தார். மெய்ப்பட வேண்டும் கவியரங்கின் தலைவர் வதிரி சி.ரவீந்தரனும் வந்துவிட்டார்.
நிகழ்வுகள் ஆரம்பிக்கப்படும் போது நேரம் சரியாக மூன்று ஐந்து. தலைமை தெணியான். அசத்தலான தலைவர்தான். கலகலப்பான பேச் சாளர். அளந்து பேசினார். நிகழ்வு களில் ஜீவநதி கவிதைகளை யாழ் பல்கலைகழக விரிவுரையாளர் ராஜேஷ் கண்ணாவும், சிறுகதைகளை யாழ் கல்வியற் கல்லூரி விரிவுரை யாளர் ஞானசக்தி கணேசநாதன் அவர் களும், கட்டுரை மற்றும் நேர்காணல் களை ஆசிரியரும், பிரபல்யமான விமர் சகருமான ஆனா. பாவனந்தி அவர் களும் நிகழ்த்தினர்கள். நிகழ்வுகள் மிக மிக நேர்த்தியாகவும் கலைத்துவ மாகவும் இருந்தன.
இறுதியாகச் சிறப்புக் கவியரங் கம், வதிரி சி.ரவீந்திரனின் தலைமை யில் இடம்பெற்றது. நான், வசீம் அக்ரம், அமல்ராஜ், துஷயந்தன், செ. கணேசன், க.சின்னாராயண், மன்னார் சிஹார் ஆகியோர் கவிதை வாசிக்க அழைக்கப்பட்டிருந்தோம். தலைப்பு மெய்ப்பட வேண்டும். அதில் வசீம் அக்ரம் கவிதை வாசிக்க வில்லை. கவியரங்கம் துவங்கியது.
பார்வையாளர்கள் கதிரையில் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டார்கள்.
தலைவர், கவியரங்க தலைவர் தலைப்புக்கேற்ற விதத்தில் அறிமுகம் செய்து விட்டு முதலாவதாக என்னைக் கவிபாட அழைத்தார். நான் கவிபாடி விட்டு,
பிட்டும் தேங்காய்ப் பூவும் போன்றது நமது உறவு. வெற்றுப் பேச்சுகளால் வேறென்ன சாதித்தோம் நட்பை மறந்து விட்டோம் நாளும் சந்தேகம் விட்டு விடுவோம். எல்லாம் விட்டு விடுவோம் கட்டிப்பிடித்து கைலாகு செய்து கண்ணர்த் துளிகளால் நம் காயம் அகற்றுவோம்
என்ற வரிகளுடன் முடித்தேன். சபை கரகோசித்தது. எனக்குக் கண்கள் கலங்கின. அவை உண்மையிலேயே என் உள்மனதில் இருந்து வந்த வரிகள். அடுத்து வந்த ஒவ்வொருவரும் கலக்கி னார்கள். குறிப்பாக மன்னார் சிகார், அமல் ராஜ் ஆகியோரின் கவிதைகள் அற்புதமாக இருந்தன. துஷ்யந்தனின் கவிதை நீளம் அதிகம். ஆனால் நல்ல கவிதை. அடுத்த வர்களினதும் தான்.
ஒருவாறு எல்லாம் முடிந்து விட்டது. கவியரங்கம் பார்வையாளர்களால் வெகு வாகப் பாராட்டப்பட்டது. அதிகமானவர்கள் எமது கவிதை பற்றிய பாராட்டினைத் தெரி வித்தனர். பேராசிரியர் கருணாநிதி வந்து கை தந்தார். நல்ல கவிதை தம்பி என்றார். மல்லிகை மூலமாக நானும் வசீமும் யாழ்ப் பாண பிரதேசத்திற்கு அறிமுகமாகி
மல்லிகை செப்டெம்பர் 2011 & 29

Page 17
யிருந்தோம். வசீமுடன் சிலர் கதைத்துக் கொண்டு இருந்தனர். அமல்ராஜ் மற்றும் சிஹாரையும் பலர் பாராட்டினர். அந்த நேரத்தில் ஒரு ஆசிரியை வந்து உங்கள் கவிதை மிக நன்றாக இருந்தது என்று பாராட்டினார் நான் நெகிழ்ந்து போனேன்.
நாங்கள் நோன்பு திறக்கும் நேரம் பரணியின் அம்மா கஞ்சிச் சட்டியுடன் மாடிக்கு ஏறுவது தெரிந்தது. நோன்பு திறக்கும் சம்பிரதாயம் பற்றி அவர் களுக்குத் தெரியாததால் கஞ்சியை மட்டுமே அவர்கள் ஏற்பாடு செய்திருந் தார்கள். பரணி என்னிடம் கேட்டபோது நான் சொல்லாதது மடத்தனம் என்று புரிந்தது மட்டுமல்ல, சமாளிக்க வேண்டிய நிர்ப்பந்தம். கஞ்சி, வாழைப் பழம் இவைகளைக் கொண்டு நோன்பை திறந்தோம். இரவுச் சாப்பாட்டை எடுத்து விட்டுச் செல்லுமாறு கலாமணி குடும் பத்தினர் எம்மை வற்புறுத்தினர். நாம் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. காரணம் அவசரமாக நாம் வீடு திரும்ப வேண்டிய நிர்பந்தம் இருந்தது. அடுத்த நாள் வசீம் அக்ரமுக்கு முக்கியமான வேலை இருந்தது. எனவே நாம் விடை பெற்றுக் கிளம்பினோம். தெணியான் இன்னும் சிலர் எம்மை தங்கி விட்டு மறுநாள் செல்லுமாறு கேட்டுக் கொண் டனர். ஆனால் நோன்பு காலமாதலால் நாம் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.
கலாமணி அவர்கள் யாழ்ப்பாணம் செல்வதற்கு எமக்கான வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
யாழ் கல்வியற் கல்லூரி விரிவுரை யாளர் ஞானசக்தி கணேசநாதன் அவர் களது வாகனம்தான் அது. அவர்
கணவன், மகள் மூன்று பேர் நிகழ்வுக்கு வந்திருந்தனர். நல்ல கலகலப்பான குடும்பம். எம்மை யாழ்ப்பான பஸ் நிலையத்தில் இறக்கி விட்டனர். அவர் களும் எம்மை தங்கிச் செல்லுமாறு வேண்டினர். ஆனால் நாம் ஒத்துக் கொள்ளவில்லை. சிகாரும் எம்மோடு வந்திருந்தார். அவர் இக்கிரிகொல்லா வையில் இறங்கி மன்னார் செல்வதாக உத்தேசம்,
நேரம் எட்டு முப்பதாக இருந்தது. கொழும்புக்கான ஒரு பஸ் தயாராக இருந்தது. பஸ் ஒன்பது முப்பதுக்கு தான் புறப்படும் என்று நடத்துனர் சொன்னார். பசி வேறு வயிற்றைக் கிள்ளியது. நடத்துனரிடம் சொல்லிவிட்டு முன்னாள் இருந்த கடையினுள் புகுந்தோம். ஒருவாறு பசி தீர்ந்தது.
அப்போதுதான் மல்லிகை காரி யாலயம், ஜோசப் சலூன், கஸ்தூரியார் வீதி இவைகள் ஞாபகம் வந்தன. மல்லிகை ஜீவா அடிக்கடி சொல்லும் அந்த மூத்திர ஒழுங்கையைப் பார்க்க வேண்டும் என்ற அவா எழுந்தது. கடைக் காரரிடமும் இன்னும் சிலரிடமும் விசாரித் தோம் உதட்டைப் பிதுக்கினார்கள். அது மிகத் தூரத்தில் உள்ளது என்று ஒருவர் கூறினார். என்ன செய்ய அதைப் பார்க்க கட்டாயம் ஒரு விசிட் அடிக்க வேண்டும் என்றார் வசீம். உண்மைதான் என்று நானும் சிஹாரும் தலையாட்டி விட்டு பஸ்ஸில் வந்தமர்ந்தோம்.
அன்றைய இனிமையான நினைவு களை என் மனம் அசைபோட ஆரம்பித்தது.
மல்லிகை செப்டெம்பர் 2011 & 30

SigtNuHldð - elor eldð elsbstraf
இஸ்ஸத் அமீன் இஸ்கந்தர்
ஆங்கிலத்தில் - ஹம்ஃபிரே டேவிஸ் தமிழில் - அஷ்ரஃப் சிஹாப்தீன்
இஸ்ஸத் அமீன் இஸ்கந்தர், ஆரம்பப் பாடசாலை முதலே எனது வகுப்புத் தோழன். உயரத்தில் கொஞ்சம் சிறியவனாக இருந்த போதும் அவனது உடல் அமைப்பு அகன்றது, உறுதியானது. கறுத்த ஆனால் மிருதுவான தலை முடி கொண்ட அவனது தலை கொஞ்சம் பெரியதுதான். கண்ணாடி அணிவான். பணிவும் தாழ்மையும் கொண்ட அடக்கமான புன்னகை முகம். (சிலவேளை சந்தேகத்துக்குரியவனைாகவும், சிலவேளை அறிவாழம் கொண்டவனாகவும், சில வேளை துன்பத்தில் நொந்தவனைப்போல் பணிவுக்குரியவனாகவும் தோற்ற மளிப்பான்.)
அவனது கால்களில் ஒன்று செயற்கையானது. ஊன்றுகோல் பயன் படுத்துவான். நடக்கும் போதுவழுக்கிவிடாதிருக்கவும், ஊன்றி நடக்கையில் சத்தம் எழுப்பாதிருக்கவும் ஊன்றுகோலின் அடிப்பகுதியில் ஒரு றப்பர்துண்டு பொருத்தப் பட்டிருந்தது. காலுறை, சப்பாத்து, பாடசாலைச் சீருடையான நீண்ட காற்சட்டை ஆகியவற்றில் அவனது செயற்கைக் கால் மறைந்திருப்பதால் அவனைப் பார்த்தால் வித்தியாசமெதுவும் தெரியாது.
ஒவ்வொரு நாட் காலையிலும் ஊன்றுகோலில் உடற்பாரம் சாய்த்து நொண்டியபடி வகுப்புக்கு வருவான். செயற்கைக் காலை இழுத்துக் கொண்டு ஆடி அசைந்து ஒவ்வொரு அடியாக வைத்து வகுப்பின் தொங்கலுக்கு வந்து சேர்வான். யன்னலுக்கு அருகேயுள்ள மூலையில் உள்ள ஆசனத்தில் அமர்ந்த பிறகு தனது ஊன்றுகோலைக் கீழே வைத்து விடுவான். அதன் பின்னர் அதைப் பற்றிக் கவனம் செலுத்த மாட்டான்.
பிறகு பாடங்களில் முற்று முழுதாக மூழ்கி விடுவான். ஆசிரியர் சொல்லும் யாவற்றையும் மிகக் கவனமாகக் குறிப்பெடுத்துக் கொள்வான். பாடம் நடக்கும் போது தனது புருவம் சுருக்கி உள்வாங்கிக் கொள்வான். கை உயர்த்திச்சந்தேகங்களை நிவர்த்தித்துக் கொள்ளுவான். அந்த மாணவர் குழுவுக்குள் ஏனைய மாணவர்கள் போலவே தன்னை மாற்றிக் கொள்வான். தனது உடற்குறைபாடு, ஊன்றுகோல் பற்றிய நினைவே இல்லாதவனாகத் தன்னை ஆக்கிக் கொள்ளுவான்.
மல்லிகை செப்டெம்பர் 2011 & 31

Page 18
இடைவேளைக்கான மணி சீராக ஒலிக்கும் போது அனைத்து மாணவர் களதும் மகிழ்ச்சி ஆரவாரத்தில் மொத்தச் சத்தமும் கலகலத்து இரைச் சல் எழும்பும். கைகளில் அவர்கள் எதை வைத்திருந்தாலும் அதை வீசிவிட்டு ஒரு வரையொருவர் தள்ளி விட்டுக் கொண்டு வெளியேறிக் கொண்டிருப் பார்கள். வகுப்பறைக் கதவு வரைக்கும் முரட்டுத்தனமாக வெளியேறும் அவர் கள் பின்னர் மைதானத்தை நோக்கி ஒழுங்கு முறையில் செல்லத் தொடங்கு வார்கள். இஸ்ஸத் அமீன் மட்டும் ஏதோ ஆதிகால வேண்டுதலை நிறைவேற்றக் காத்திருந்தவன் போல அந்த மணியோ சையை எதிர்கொள்ளுவான்.
தீர்க்கதரிசனம் ஒன்றுக்காகக் காத் திருந்தவன் போலத் தனது பயிற்சிப் புத்தகத்தை மூடிவிட்டுக்குனிந்து தனது பையைத் திறந்து பாண் துண்டுகளை யும் கொமிக்ஸ் கதைப் புத்தகத்தையும் கைகளில் எடுப்பான். பாண் துண்டு களைச் சாப்பிட்டவாறே கொமிக்ஸ் கதைப் புத்தகத்தை விரித்துப் படிக்க ஆரம்பிப்பான். ஆர்வமாகவோ அனு தாபத்துடனோ அவனை நோக்கும் ஏனைய மாணவர்களைப் பார்த்து மைய மாகச் சிரித்து விட்டுத் தொடர்ந்து வாசிப்பான். அவன் வாசிப்பில் தீவிர ஆர்வமுடையவன் என்பதை அவனது செயற்பாடு சொல்லாமல் சொல்லி நிற்கும். அந்த வாசிப்பு ஆர்வம்தான் கீழே மைதானத்தை நோக்கிச் செல்லா மல் அவனைத் தடுத்து வைத்திருந்தது.
அதுதான் முதல் முறையாக எனது எனது துவிச்சக்கரவண்டியைப் பாட
சாலை வளாகத்துக்குள் கொண்டு சென்ற முதல் சந்தர்ப்பமாகும். அன்று ஒரு வியாழக்கிழமையாக இருந்தது. பிற் பகலாதலால் பாடசாலை மைதானம் பெரும்பாலும் ஒய்வாக இருந்தது. தூரத்து மூலையில் சில மாணவர்கள் உதை பந்தாடிக்கொண்டிருந்தார்கள். நான் எனது துவிச்சக்கர வண்டியை ஒட்டத் தொடங்கினேன். மைதானத் துக்கு முன்னாலும் பின்னாலும் மரங் களை வட்டமிட்டுச் செலுத்திக் கொண்டிருந்தேன்.
அப்படிச் செலுத்திக் கொண்டி ருந்த போது ஒரு துவிச்சக்கரவண்டிப் போட்டி ஒன்றில் கலந்து கொண்டு அதைச் செலுத்துவது போன்று கற் பனை பண்ணியபடி வண்டியை மிதித்து வேகமாகச் செலுத்தினேன். சத் தம் எனது சுவாசப் பையைத் தொட் டது. "சீமாட்டிகளே. சீமான்களே. இதோ. உலகத் துவிச்சக்கர வண்டிச் சம்பியன் சிப்." எனது சிந்ததையின் பார்வையில். பொதுமக்களும் பெரு மனிதர்களும் போட்டியாளர்களும் தெரிந்தார்கள். நான் போட்டியாளர களில் ஒருவனாக இருந்தேன். பார்வை யாளர்களின் ஆரவாரத்தையும் சீழ்க்கை யொலிகளையும் என்னால் கேட்க முடிந்தது. நான்தான் எப்போதுமே முதலிடத்துக்கு வருவேன். இப் போதும் இதோ. மற்றவர்களை விட நானே முதலில் வந்து கோட்டைத் தாண்டினேன். பாராட்டுதல்களும் பூக் கொத்துகளும் முத்தங்களுமாய்த் திணறிக் கொண்டிருந்தேன்.
இவ்வாறு நான் எனது துவிச்சக்கர வண்டியோட்ட விளையாட்டைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்
மல்லிகை செப்டெம்பர் 2011 தீ 32

தேன். அப்போது என்னை யாரோ உற்று நோக்கிக் கொண்டிருப்பது போன்ற ஒர் உணர்வு என்னில் ஏற் பட்டது. நான் சட்டெனத் திரும்பிய போது ஆய்வு கூடப் படிகளில் இஸ்ஸத் அமீன் சிக்கந்தர் உட்கார்ந் திருப்பதைக் கண்டேன். நான் துவிச் சக்கர வண்டியோட ஆரம்பித்ததி லிருந்து அவன் என்னை அவதானித் துக் கொண்டிருந்திருக்கிறான். இரு வரதும் விழிகள் சந்தித்துக் கொண்ட போது புன்னகைத்தபடி கையசைத் துக் கொண்டோம். நான் அவன் அமர்ந்திருந்த இடத்துக்குச் சென்ற தும் அவன் எழுந்து நிற்பதற்கான முயற்சியைச் செய்ய ஆரம்பித்தான். ஒரு கையை சுவரில் ஊன்றி மறு கை யில் தனது ஊன்றுகோலை இறுகப் பற்றி தனது உடலை நிமிர்த்த ஆரம் பித்தான். எழுந்து நின்ற பிறகு இரண்டு அடிகள் முன் வைத்து என் அருகே வந்தான்.
கிட்டே வந்ததும் துவிச்சக்கர வண்டியை ஆராய ஆரம்பித்தான். கைப்பிடியைப் பற்றிப் பிடித்தான். மணியைப் பலமுறை அடித்துப்பார்த் தான். பின்னர் வளைந்து சைக்கிளின் முன்சக்கரத்தின் கம்பிகளைத் தடவிப் பார்த்தான். தாழ்ந்த குரலில் சொன் னான்:-
"அழகான சைக்கிள்!" பெருமை பொங்க உடனே நான் சொன்னேன்:-
“இதுரலி-24, சைக்கிளேட்டப் போட்டிகளுக்கென வடிவமைக் கப்பட்ட சக்கரங்கள். மூன்று வேகங்கள்.”
நான் சொன்னவையெல்லாம் சரி தானா என்று சைக்கிளை மீண்டும் ஒரு முறை ஆர்வத்துடன் ஆராய்ந்தான். பிறகு கேட்டான்:-
“கைகளை மேலே உயர்த்திக் கொண்டு உனக்கு சைக்கிளோட்டத் தெரியுமா?"
அவனது கேள்விக்கு இசைந்து நான் சைக்கிளில் ஏறினேன். சைக்கிளோட்டத் தில் நான் ஒரு விண்ணன் என்று அவனுக் குக் காட்ட வேண்டும் என்று விரும்பி னேன். எனது முழுப் பலத்தையும் செலுத்தி பெடல் மிதித்து உச்ச வேகத் துக்கு வந்தேன். சைக்கிள் எனது கட்டுப் பாட்டுக்குள் அதிர்ந்தது. பிறகு சைக்கிள் கைப்பிடிகளிலிருந்து எனது கரங்களை ஆகாயத்தை நோக்கி உயர்த்திப் பிடித் தேன். முடிந்த தூரத்தை அவ்வாறு கடந்து விட்டு மீண்டும் நிலைக்கு வந்து சைக் கிளைத் திருப்பி மைதானத்தின் நடுவில் வந்தடைந்தேன். சைக்கிளை அவனருகே நிறுத்தி இறங்கியவாறு கேட்டேன்:-
"இப்போது உனக்குச் சந்தோசமா."
அவன் எனக்குப்பதிலளிக்கவில்லை. ஒரு பேரார்வத்துடன் புலமை கொண்ட ஒருவனைப்போல் தலையை வளைத்துச் சைக்கிளை அளந்து கொண்டிருந்தான். பிறகு தனது ஊன்றுகோல் உதவியுடன் ஒரிரு அடிகள் முன் வைத்து நடந்து சைக்கிளுக்கு மிக நெருக்கமாக வந்தான். சைக்கிளிண் கைப்பிடியைப் பற்றிப் பிடித்துக் கொண்டு மிக மெல்லிய குரலில் என்னிடம் கேட்டான்:-
"நான் ஒரு முறை சவாரி செய்து பார்க்கட்டுமா..?"
கேட்டு விட்டு "தயவு செய்து."
மல்லிகை செப்டெம்பர் 2011 * 33

Page 19
என்று பல முறை கெஞ்சத் தொடங்கி னான்.
அவனது வேண்டுகோளைக் கவனத்தில் கொள்ளாமல் அவனை உற்றுப் பார்த்தேன். தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்ளவோ மீள் நிலைக்குத் திரும்பவோ முடியாத வகையில் யாராலோ உந்தப்பட்டு முன்னுக்குத் தள்ளிவிடப்பட்ட ஒருவனைப் போல அந்தக் கணத்தில் அவன் தோன்றினான். அவனது கேள்விக்கு என்னிடமிருந்து பதில் வராதமையினால் கைப்பிடியைப் பற்றி முரட்டுத்தனமாக உலுக்கியபடி கோபத்துடன் "நானும் ஒரு சவாரி செய்யட்டுமா? என்று உன்னிடம் கேட் டேன்” என்று சத்தமிட்டுக் கேட்டான். பதிலுக்குக் காத்திராமல் சைக்கிளில் உந்தி ஏற அவன் முயன்றதில் நாங் களிருவரும் ஒருவர் மேல் ஒருவர் விழுந்தோம்.
அந்தக் கணத்தில் நான் எதைப் பற்றி யோசித்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஏதோ ஒரு உத்வேகத் துடன் நானாகவே அவனைச் சைக் கிளில் ஏற்றிவிடமுயற்சித்துக் கொண்டி ருந்தேன். என்னுடைய தோளில் அவ னது முழுப் பாரத்தையும் சாய்த்து ஊன்றுகோலின் உதவியுடன் தளர்வில் லாமல் முயற்சி செய்து ஒருவாறு உடம்பை சைக்கிளில் ஏற்றிக் கொண் டான். தனது வலுவுள்ள காலை ஒரு பக்க பெடவில் வைத்தான். ஊனமுற்ற காலை பெடவில் படாமல் நீட்டி வைத்தபடி வலுவுள்ள காலால் ஒரு பெடலை மிதிப்பது அவனது திட்ட மாக இருந்தது. இது உண்மையில் சிரம மானகாரியமாக இருந்தபோதும் கடை சியில் ஒருவாறு அது சாத்தியப்பட்டது.
இஸ்ஸத் ஒருவாறு சமாளித்து ஆசனத்தில் அமர்ந்து விட்டான். அவ னது பின்புறமாக எனது கையினால் மெதுவாகவும் கவனமாகவும் தள்ள சைக்கிள் நகர ஆரம்பித்தது. அவன் பெடலை மிதிக்கத் தொடங்க நான்கை விட்டேன். சைக்கிள் சில கணங்கள் நிலை தடுமாறிக் குலுங்கிய போதும் ஒருவாறு அதைச் சமநிலைக்குக் கொண்டு வந்தான். ஒற்றைப் பெடவில் சைக்கிளைச் செலுத்துவதற்கு அவன் தனது முழுப்பலத்தையும் உபயோகிக்க வேண்டியிருந்த அதேநேரம் தன்னை சமநிலையில் வைத்திருக்கவும் வேண்டி யவனாக இருந்தான். சைக்கிள் மெது வாக நகர்ந்து முதலாவது மரத்தைத் தாண்டியது. பிறகு சிற்றுண்டிச்சாலை யைத் தாண்டியதும் நான் உற்சாகத்தால் சத்தமிட்டேன்.
“வெல்டன் இஸ்ஸத்”
அவனால் நேராகச் செல்ல முடிந்த தூரம் வரைக்கும் அதாவது மைதானத் தின் எல்லை வரைக்கும் சென்றான். எல்லையில் அவன் சைக்கிளைத் திருப பிக் கொள்ள வேண்டும். அதை நினைத் ததும் என்னைப் பயம் பிடித்துக்கொண் டது. ஆனால் ஒரு திறமையான சைக் கிள் ஒட்டக்காரனைப்போல் கவனமா கத் திருப்பி மற்றப் பாதையால் அவன் திரும்பி வந்தபோது சைக்கிளை முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடிய வனாகவும் தைரியம் உள்ளவனாகவும் தெரிந்தான். கியர்களை மாற்றி வேகங் களை அதிகரித்துக் காற்றைக் கிளித்துக் கொண்டு வேகம் பிடித்து அவன்சைக்கி ளோட்டினான். அவனது கேசம் காற்றில் கலைந்து பறந்தது.
மல்லிகை செப்டெம்பர் 2011 தீ 34

ஒரு தடவை நேரில் வந்து பார்வையிடுங்கள்
நீங்கள் இந்த மண்ணில் மலரும் இலக்கிய நூல்களை மனதார நேசிப்பவரா? - தயவு செய்து ஒருதடவை மல்லிகைப் பந்தலுக்கு நேரடியாக வந்து மல்லிகைப் பந்தல் இதுவரையும் வெளியிட்டுள்ள புத்தகங்களை ஒருமுறை
பார்வையிடுங்கள்.
செடிகளுக்கிடையில் உள்ள நீடிக் கப்பட்ட ஒற்றையடிப் பாதையூடாக அவனது சைக்கிள் பறந்தது. அடர்த்தி யான இலைகளைக் கொண்ட அந்த செடிகளூடாக அவன் சென்ற போது அவனது தோற்றம் மறைவதும் இடை வெளிகளுக்குள் தெரிவதுமாக இருந் தது. உண்மையில் அவன் சாதித்து விட்டான். வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல் அவனது வேகம் இருந் தது. ஒட்டிக் கொண்டே திரும்பிப் பார்க்கவும் நிமிரவும் அவனால் முடிந் ததை நான் அவதானித்தேன். அவன் எழுப்பிய வரண்ட, வித்தியாசமான, அழுவதைப் போன்ற உடைந்த நீண்ட காலமாக அவனது நெஞ்சுக்குள் சிறைப் பட்டிருந்த மகிழ்ச்சிக் குரல் மைதானம் முழுவதும் எதிரொலித்தது. அவன் சத்தமிட்டுக் குரல் எழுப்பினான்:-
"ι μπO5... ιπO5 π..."
சற்று நேரத்தில் நான் அவனருகே ஒடிச் சென்றேன். சைக்கிள் மைதானத் தில் ஒரு புறத்தே கிடந்தது. அதன்
சக்கரம் விர்ரென ஒலியெழுப்பியபடி சுழன்று கொண்டிருந்தது. காலுறையும் சப்பாத்தும் அணிந்தபடி பழுப்பு நிறமான அவனது செயற்கைக் கால் துண்டித்து வீசப்பட்ட அங்கம் போல தனியே கிடந்தது.
இஸ்ஸத் முகம் குப்புற வீழ்ந்து கிடந்தான். செயற்கைக் கால் பொருத் தப்படும் தனது காலின் ஊனமான இடத்தில் அவன் கையை வைத்தி ருந்தான். அவனது கையில் இரத்தம் பீறிட்டுப் புழுதி படிந்திருந்தது. இரத்தம் அவனது கிழிந்த காற்சட்டை வரை பரவியிருந்தது. நான் அவனைக் கூப்பிட்ட போது மெதுவாகத் தலை உயர்த்தினான். அவனது நெற்றியிலும் உதட்டிலும் இரத்தக் காயங்கள் இருந்தன. கண்ணாடியற்ற அவனது முகம் வழமைக்கு மாறான தோற்றத் தைக் காட்டியது.
ஒரு குரூரமான புன்னகையுடன் என்னை ஒரு கணம் உற்று நோக்கியபடி பலவீனமான குரலில் கேட்டான்:-
"நான் சைக்கிள் ஒட்டியதைப் பார்த்தாய்தானே!"
மல்லிகை செப்டெம்பர் 2011 தீ 35

Page 20
- ச. முருகானந்தன்
மக்களை அதிகம் சென்றடைகின்ற அல்லது அதிகமான மக்களால் வாசிக்கப் படுகின்ற இலக்கியங்கள் ஜனரஞ்சக இலக்கியமாகக் கருதப்பட்டாலும், இது எந்தளவுக்கு பொருத்தமான கூற்று என்று ஐயப்பாடு இன்றும் இருந்துகொண்டே வரு கிறது. ஆழமாக நோக்கினால் மலினமான சுவைகளை எழச்செய்வதுடன், திரிபுபடுத் தும் மட்டகரமான கருத்துக் கையளிப்பை நுகர்வோரிடம் ஏற்படுத்தும் இலக்கியங் களை ஜனரஞ்சக இலக்கியமாகக் கொள்ளுதல் முன்னைய கூற்றைவிட நெருக்கமாக இருப்பதாகப்படுகிறது. இன் னொருபுறம் பார்த்தால் இவ்வாறான சார மற்ற மலினச் சுவை இலக்கியங்களே அதிகமானோரால் வாசிக்கப்படுகின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.
உறுப்பற்றுகளைத துளாவி உள வெளிச்சியைத் தூண்டும் இவ்வாறான இலக்கியங்களால் சமூகத்திற்கான பயன் மிகு பெறுமானம் எதுவுமில்லை என்று கருதப்படுகிறது. உளவெளிச்சியைத் தூண்டுவதற்காகப் பாலியல் விவகாரங் களையும், பெண் பாலுறுப்புகளையும் எழுத்தில் மிகையாக வர்ணிக்கின்ற மிகைப் பால்மையை பல மலினமான இலக்கியங்களில் தரிசிக்க முடிகின்றது. அத்துடன் வன்செயலைத் தூண்டுவன ShurTs6b, பயமூட்டுவனவாகவும், மிகை யான கற்பனைகளைக் கொண்டவையாக வும் இவ்வகையான சில படைப்புகள் அமைந்திருக்கின்றன. காதல் எனும் மாய மான் மிதமாகவும், அதி உணர்ச்சிபூர்வ மாகவும் சித்தரிக்கப்பட்டு, காதலை விட் டால் உலகில் வேறு எதுவுமில்லை என் பது போலவும் ஒரு தோற்றப்பாட்டினை பல ஜனரஞ்சகப் படைப்பாளிகள் கையாள்கின் றனர். இவ்வகையான படைப்புகளில்
மல்லிகை செப்டெம்பர் 2011 தீ 36

சமூக மேம்பாட்டிற்கான சிந்தனைகள் மிக அரிதாகவே தூவப்பட்டுள்ளன. இவ்வா றான மலின இலக்கியங்கள் கலை இலக்கியங்கள் சுவைப்பதற்காகவே மட்டு மானவையாக வார்க்கப்படுவதனால், வாச கரின் பணமும், உழைப்பு நேரமும் வீணடிக்கப்படுகிறது. வாசகர் இவ்விரய மாதலை உணராத வண்ணம் இவ்வகை இலக்கியங்கள் வாசகனை ஈர்த்து மாய வலையில் சிக்க வைத்துள்ளதால், அவர் கள் அதிலிருந்து மீண்டெழுந்து தரமான வாசகர்களாதலும் தடுக்கப்பட்டுள்ளது.
பொது விருப்பு இலக்கியங்கள் யாவும் ஜனரஞ்சக இலக்கியங்களா? என்ற கேள்வியும் இன்னொருபுறம் எழுகின்றது. ஆரோக்கியமான வாசகர்கள் நிறைந்த ஒரு சமூகத்தில் பொது விருப்பு இலக்கிய மாக ஜனரஞ்சக இலக்கியம் மட்டுமே இருக்க முடியாதல்லவா? எனினும் பொது விருப்பு இலக்கியங்களாக இருக்கும் பல படைப்புகளில் தரம் என்பது கருத்திற் கொள்ளப்படாததை அவதானிக்கலாம். இப்படைப்புகளிலுள்ள அழகியல் பண்பு கள் கூட குறிப்பிடத்தக்கதாக இருப்ப தில்லை. அத்துடன் யதார்த்தத்திற்கும் இப்படைப்புகளுக்குமான இடைவெளி அகலித்ததாகவே இருக்கும். மேலும் சமூக மேம்பாட்டிற்கான வகிபாகம் பூஜ்ஜியத் திற்கு அண்மித்ததாகவே இருக்கும்.
@5血色 உயர்நிலை இலக்கிய உருவாக்கங்களில் காத்திர отsл விடயங்களும், கலைப்பாங்கும், சமூக அக்கறையும் மேலோங்கி இருக்கும். ஜனரஞ்சக இலக்கியப் படைப்புகளில் இருக்கும் வலிந்து உருவாக்கப்படும் கலைக்கு மாறாக வாழ்க்கை நிலவரங் களில் இருந்து மேலெழும் யதார்த்தமான
மாறாக
வாழ்க்கை அனுபவங்களோடு இணைந்த sists உயர்நிலை இலக்கியங்களில் அதிகம் காணப்பட்டது. எமது நாட்டில் முற் போக்கு இலக்கியங்களில் மாயச் சுவை மூழ்கலிலிருந்து மீண்டெழ வைக்கும் அம்சங்கள் முனைப்பாக இருந்தன. யதார்த்த வாழ்வுக்கும், மேம்பாட்டுக்கும் மிக நெருக்கமாக அமைந்துள்ள இப் படைப்புகளில் உயர் வாசிப்புக்கான கவனக் குவிப்பும் முனைப்பாயிருந்தன. இலங்கையில் மார்க்சீய எழுத்தாளர்கள் மாத்திரமன்றி பிறரது படைப்புகளும் சமூக அக்கறையுடன் உருவாக்கப்படுகின்றன. இவ்வாறான பண்புகள் எமது நாட்டின் சிறந்த மார்க்சிய விமர்சகர்களாக இருந்த வர்களால் ஏற்பட்டிருக்கலாம். எவ்வாறா யினும் இது ஓர் ஆரோக்கியமான வெளிப் பாடே ஆகும்.
ஈழத்தில் அதிக படைப்புகளை உரு வாக்கிய படைப்பாளிகளின் பொது விருப்பு இலக்கியங்களில் கூட கணிசமான சமூக அக்கறையைக் காணமுடிகிறது. ஓரளவு பக்குவப்பட்ட எழுத்தாளர்களில் பலரின் ஜனரஞ்சகமான படைப்புகளில் கூட ஒரளவு யதார்த்தப் பண்புகளையும் கான முடிகிறது. இவ்வாறான படைப்புகள் பலரைச் சென்றடைவதனால் இவற்றி னுாடாக சமூக மேம்பாடு சார்ந்த விடயங் களை சிறிதளவிலேனும் பரம்பலடையச் செய்திட முடிகிறது.
சாமான்ய வாசகன் உயர்நிலை இலக்கியங்களை ஒதுக்கி விடும் இன்றைய நிலையில் பொது விருப்பு இலக்கியங்களூடாக நல்ல விடயங்களை கையளித்தல் காலத்தின் தேவை.
மல்லிகை செப்டெம்பர் 2011 & 37

Page 21
இரசனைக் குறிப்பு:
Subistfuă
சிந்தனையைக் கூர்மைப்படுத்தும் நாவல்
- LDm. Lum6vérslæLb
'மணமும் விதியும்' என்ற நாவல், பிரபல முற்போக்கு எழுத்தாளர் செ.கணேசலிங்கன் படைத்துச் சென்னை, குமரன் பப்பிளிஷர்ஸ்ரால் வெளியிடப்பட்டது. பக்கங்கள் 175இல் நாவலின் கதை விரிகின்றது. இந்நாவலாசிரியர் படைத்த மற்றொரு பிரபல நாவலான நீண்ட பயணம்' நாவலோடு ஒப்பிடுகையில் இந்நாவல் குறைந்த பக்கப் பருமனைக் கொண்டதாகவே இருக்கின்றது. இருந்தாலும் உள்ளே சொல்லப்பட்டிருக்கும் கதை ஒரு பெரு நாவலைப் படித்த திருப்தியையே அளிக்கின்றது. இன்றைய நாவல் புனைவை நோக்கும் போது; இலங்கையிலும், தமிழகத்திலும் வெளியாகிக் கொண்டிருக்கும் இவ்வகை நூல்கள் மிகவும் குறைந்த பக்கங்களைக் கொண்டிருப்பதையே கான முடிகின்றது. ஏனிப்படி ஏற்பட்டது? என்ற கேள்வி வாசகருக்கு எழலாம்
அமரர் பேராசிரியர் கல்கி படைத்த ஈராயிரம் பக்கங்களுக்கும் மேலான 'அலை யோசை’ நாவலுள் மூழ்கியெழுந்தவன் தமிழ் நாவல் வாசகன். தொடர்ந்து அகிலன், சாண்டில்யன் போன்றோரும் தலையணைக்கு ஒத்ததான நாவல்களையே தந்துள்ளனர். அத்தாக்கம் ஈழத்து நாவலாசிரியரிடமும் இருந்துள்ளது. இளங்கீரன், தெணியான், செங்கை ஆழியான் போன்றோரும் தமது நாவல்களை அதிக பக்கங்களில் எடுத்துரைத் திருக்கின்றனர். ஆனால் இன்று கிடைக்கும் நாவல்கள், களிசான் பொக்கற்றுள் சுருட்டி வைக்கக் கூடியதாக இருப்பது, தமிழ் நாவல் வாசிப்பு அருகி விட்டதோ? என்ற ஏக்கத்தை விதைக்கின்றது
கடுகதியில் சுழன்று கொண்டிருக்கும் வாழ்வின் சூழலில் வாழ்ந்து கொண்டிருக் கிறோம். பலதரப்பட்ட பிரச்சினைகளால் குடும்பங்கள் அல்லாடிக் கொண்டிருக்கின்றன. வாழ்க்கைச் செலவு நாளுக்கு நாள் விஸ்வரூபமெடுக்கின்றது. செட்டியாரும் ஒருநாள் முட்டுப்படுவார்’ என்ற அநுபவ வெளிப்பாட்டுக்கமைய, ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கும் மல்லிகை செப்டெம்பர் 2011 & 38
 

நிதி வளப் பிரச்சினை எனத் தகவல்கள் கசிக்கின்றன. பாடசாலை மாண வரைப் பொறுத்த மட்டில் பாடசாலைப் படிப்பு நேரம் போக, ரியூசன் படிப்பு அலுவலகர்களுக்கு ஆளுக்காள் கைத்தொலைபேசி கதைத்தல், இவை களைப் புறந்தள்ளி நூல் வாசிப்பில் நாட்டம் கொண்டாலும் ஐந்நூறு அல் லது அதற்கும் மேலான பக்கங்களில் நாவல் வாசிக்க இயலுமா? படித்துப் பெற்றது மனதில் தான் தங்குமா?
கதைகளை
நாவல் பரிமாணங்களைச் சம காலத் தொலைக்காட்சித் தொடர் நாட கங்களில் இரசிக்க முடியுமெனத் தற் போது அறிஞர்கள் கருத்துரைக்கின்ற னர். நாளொன்றுக்கு இருபத்தைந்துக் கும் மேலான தொலைக்காட்சி நாடகங் கள் ஒளிபரப்பாகின்றன. கட்புலனுக் கும், செவிப்புலனுக்கும் விருந்தளிக் கின்றன. எனவே வாசகர்கள் நூல் வாசிப்பைத் துறந்து, தொலைக்காட்சி நாடகங்களின் இரசிகர்களாகின்றனர்.
தொலைக்காட்சி அல்லது வானொலியில் மாணவர்கள் கிரிக் கெட்டை இரசிப்பதன் மூலமாக அவர் களது ஈர்ப்பு புனைகதைகள் படிப்ப தற்குச் செல்லாது இரத்தினியல் osTL கங்களுக்குச் செல்கின்றது. வாழ்க் கைச் செலவைத் தாக்குப் பிடிக்க முடியாது திணறும் மக்களால் அதிக பனங் கொடுத்துப் பருமனான நாவல் களை வாசிக்க முடியுமா? பக்கங்கள் கூடினால் விலை அதிகரிக்கு மல்லவா? சக நாவலாசிரியர்களைப் போல், செ.கணேசலிங்கனும் இத்தாக்
கங்களை உணர்ந்தே மணமும் விதியும் என்ற இந் நாவலைச் சொற்ப பக்கங்களில் படைத்திருப்பாரென நிறுவ லாம்! ஆனால் ‘கடுகு சிறிது காரம் பெரி தென்ற அபிப்பிராயந்தான் நாவலை மிகுந்த அக்கறையோடு படித்ததன் பின் மனதில் தேறியது.
'திருமணச் சடங்கு என்று பெயர். திரு எனும் செல்வமுமில்லை. மணமுமில்லை என்ற நோக்கில் சமகாலத் தமிழ்த் திரு மணங்களை நிலைப்படுத்தும் புத்திஜீவி ஆசிரியையான அமுதாவைப் பெற்றோர் கள் திருமணத்துக்குள் வீழ்த்துகின்றனர். அவள் ஏற்கனவே மனதால் பூஜித்த, மாவோயிஸ்ட் அரவிந்தனை, அவன் சீதனம் கேட்காதவனென்றதும் மதிப் பிறக்கம் செய்து, 'பெண்ணாகி வந்ததொரு மாயப் பிசாசிம் பிடித்து என்னைப் புண் னாய் குழியில் தள்ளிப் பணம் பறிக்க வந்துள்ளது என்ற பட்டினத்தார் வழியில் பெண் பற்றிச் சிந்திக்கும், பன ஆவேசம் பிடித்த, அரச பள்ளியொன்றி அதிகாரி யான சந்தானத்துக்கு மனைவியாக்கு கின்றனர். இலஞ்சமென அமுதாவால் கருதப்படும் சீதனமும் சந்தானத்துக்குப் புரள் கிறது. மிதமிஞ்சிய வன்புணர்ச்சி, பண மமதை, மது, மனைவி மீது சந்தேகம் என்பவற்றின் ஒட்டுமொத்தக் குறியீடு சந்தானமென அமுதா கண்டறிகிறாள். தனது செலவிலே வீட்டுப் பராமரிப்பைச் செய்துவரும் அமுதாவுக்கு அடியும் உதையும் கிடைக்கின்றன.
'குடும்ப வாழ்க்கை வேண்டுமென் றால், பகைமையற்ற முரண்பாடாக எடுத்து, முடிந்தவரை அமைதி பேணுவது நல்லது என்ற அரவிந்தனின் வழி
மல்லிகை செப்டெம்பர் 2011 & 39

Page 22
காட்டலை உள்வாங்கி மூன்றாண்டுகள் அமுதா குடும்பம் நடத்துகிறாள். ஆண் குழந்தையொன்றும் கிடைக்கின்றது. இருந்தும் ஒரு புத்திஜீவிக்குரிய அறிவுத் தளத்தில், பெண்ணிய உந்தல் பெற்றவ ளாய், மூன்றாண்டு கால குடும்ப வாழ் வைத் துறந்து, குழந்தையோடு பிறந்த வீடேறுகிறாள். சந்தானம் விவாகரத்து நோட்டீஸ் அனுப்புகிறான்.
இதுவே. இந்நாவலின் கதையின் வெட்டுமுகமாகும். பெண்ணிய, மாவோ யிஸ்ட் சிந்தனை ஊட்டம் பெற்ற சமகாலப் புத்திஜீவிகளின் வாழ்க்கை யைத் திறனாய்வுக்குட்படுத்தும் ஒரு சிறந்த குடும்ப நாவல் இதுவாகும். தனது தொடர்ச்சியான புனைவியலாக்க ஊழி யத்துக்குப் பவள விழாக் கொண்டாடத் தக்க தகைமையாளர், செ. கணேச லிங்கன். இத்தகைய பண்பட்ட ஒரு நாவலாசிரியரின் படைப்புச் சோடை போகுமா? திருப்தியைத்தான் தரு கின்றது. எந்தவொரு வட்டார வழக்கை யும் அடையாளப்படுத்தாத, பொதுவான பேச்சாடலில் நாவல் கதை மிகச் சுவாரஸ்யமாக எடுத்துரைக்கப்பட் டுள்ளது. அனைத்துத் தமிழ் பேசு வோருக்கும் தோதாக இருக்கிறது. இத் தன்மையான உத்தியில் பெரும்பாலான தனது நாவல்களைப் படைத்தவர் அமரர் பேராசிரியர் மு.வரதராசன். இவரது காலத்திலேயே வட்டார வழக்குத் தென் பட்டிருந்தாலும், அவைகளுக்குள் தன்னை விழுத்தாது சகலருக்கும் பொது வானதொரு பேச்சாடலில் புனைவிலக் கியம் படைத்தவர். ஆனால் அவர் கை யாண்ட பேச்சாடல்கள் நீண்டு விரிவுரை
களாக இருந்தன. இந்நாவல் பேச்சாடல் அந்தகையதல்லாது குறுகியதாகவே இருக்கின்றது.
மு.வரதராசனின் நாவல்களோடு இணைக்கத்தக்க இன்னொரு ஒருமைப் பாடும் ‘மணமும் விதியும்' நாவலுக் குண்டு. அவரது நாவல்களிலும் இந்நாவ லில் வரும் அரவிந்தன் போன்ற ஆழ்ந்த புலமையாளரொருவர் கதாபாத்திரமாக இருப்பார். எனவே உத்தி, கதை மாந்தர் என்பவற்றில் மு.வ.வின் நாவல்களோடு இசைவுள்ளதாக இந்நாவல் காணப்படு கிறது. கருத்தியல் சிந்தனையில் செ.க. வும் மு.வ.வம் முரணானவர்களென்பது இங்கு சுட்டப்பட வேண்டியதே அந்த வகையில் இந்நாவலும் தனித்துவமான தாகவேயுள்ளது.
நலிவுற்ற மக்களைச் சீண்டிப் பார்க் கும் சில சொல்லாடல்களையும் இந் நாவலில் வாசிக்க முடிகின்றது.
பெண் குழந்தையை வளர்த்து ஒரு வனுக்குக் கட்டிக்கொடுக்க லஞ்சப் பணம் வேண்டும். அதற்கு வாய்ப் பில்லாத நிலையை முன்கூட்டியே உணர்ந்து கொலை செய்துவிட் முயல் கிறார்கள். ஏழைக் குடும்பங்களிலேயே இது நிகழ்கிறது.’ (பக்:67)
‘எவரையாவது சின்ன வீடாக வைத்திருக்க முயல்வான். அதற்குத் தானே ஏழைப் பெண்கள் படை இருக் கிறதே.’ (பக்.20)
“தலித் பெண்கள் துணிச்சலோடு வாழ்கிறார்கள் என்பர். கணவன் கொடுமை செய்யின் மற்றோர் பகுதியில் வேறொரு கணவனைத் தேடிக்கொள்
மல்லிகை செப்டெம்பர் 2011 & 40

கிறார்கள். மேல்தட்டுப் பெண்கள்தான் ஒரே கணவன் இல்லாவிட்டால், வாழ்வு சுருங்குகிறதே என்று கவலைப்படு கிறார்கள்.’ (பக்:60)
“அமெரிக்காவில் அடிமைக் கறுப் பினப் பெண்களைப் பாலுறவுக்குத் தாராளமாக வெள்ளை அமெரிக்கர் பயன் படுத்தினர். அதேவேளை தமது வெள்ளை மனைவியரை மிக்க கட்டுப் பாட்டில் வைத்திருந்தனர்.” (பக்:65)
இப்பேச்சாடல்கள் நலிவுற்ற - பஞ்சம், கறுப்பின மக்களைச் சிசுக் கொலையாளிகள், விபச்சாரிகள் என இழிவுபடுத்துகின்றன இது முதலாளிய மேற்றட்டினருக்குரிய சொல்லாடல்கள். இவற்றைத் தவிர்த்திருக்கலாம்.
'கன்பீசியஸ் சீனாவில் தோல்வி கண்டவரே. மாவோ போன்ற புரட்சி யாளர் அவரை எதிர்த்தனர். இன்றைய சீனத் தலைவர்களால் சட்ட விதிகள் மூலம் லஞ்சம், ஊழல், கொலை, கொள்ளை, ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்க முடியா நிலையில் கன்பீசியஸ் பிரச் சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்’ (பக்.57) என்ற அரவிந்தனின் கருத்துரைப்பு நாவலில் காணப்படுகிறது. மாசேதுங்கினால் கட்டி யெழுப்பிய நவ சீனத்தில் இன்று அவரது தொண்டர்களும், சீடர்களும் அவரது சிந்தனையைக் காலாவதியாக்கி, முதலாளித்துவக் கட்டமைப்புக்கு வழி கோலுவதையே மீண்டும் கன்பீசியஸ் என்ற வழிமாறல் வெளிக்காட்டுகிறது. அதிகாரமும் மக்களும் அப்படி இருக்கும் போது அரவிந்தன் எதிர்பார்க்கும் 'முரண் பாடுகள் கூர்மையடையச் சோசலிச சமுதாயம் கட்டும் தேவை தவிர்க்க
முடியாததாகிவிடும் (பக்-150) என்ற கருதுகோள் எப்படிச் சாத்தியமாகும்? நெடுந்துாரப் பயணம்தான்!
இப்படியாகப் பல சிந்தனைகளின் ஊற்றுக் கண்ணாக இந்நாவல் அமைந் திருக்கிறது.
'மணமும் விதியும்' என்ற தலைப் புச் சற்றுத் தடுமாற்றத்தையே ஏற்படுத்து கிறது. சமுதாயத்தில் பல பாய்ச்சல் களை ஏற்படுத்தத் தூண்டும் இத்தகைய நாவல் தலைப்பில் 'விதியும்’ என்ற பழைமைவாதப் பதம் வரலாமா? மாயையை ஏற்படுத்தக் கூடியது. தவிர்த் திருக்கலாம்.
ஈழத்தில் தமிழ்ப் படைப்புகளை நூலாக்கும் படைப்பாளிகள் வயிற்றில் நெருப்பை அள்ளிக் கட்டுவது போன்ற நிலை உண்டு. இந்நூல்களை உரிய முறையில் காட்சிப்படுத்துவதற்கே நூல் விற்பனையாளர்கள் தயக்கம் காட்டு கிறார்கள். இந்நிலை, நாற்பதுக்கும் மேற் பட்ட நூல்களை படைத்துள்ள செ.கணேசலிங்கனின் இந்நாவலுக்கும் ஏற்படக் கூடாது. இது உகந்த முறையில் தமிழ் வாசகனுக்கு இனங்காட்டப்பட்டு, செ.க.வின் நாவல் படைப்புத் திறன் பரம்பலாக்கப்பட வேண்டும். மணமும் விதியும்’ என்ற நாவலுக்கான ஆய் வரங்குகள் இங்கும், தமிழ்நாட்டிலும், வெளிநாடுகளிலும் நடைபெற வேண்டும்.
ஆக, பெண்ணியச் சிந்தனையை முற்போக்குப் பாதையில் தரிசிக்க வைக் கிறது இந்நாவல். அனைத்து வாசகரும் படித்து மகிழலாம்.
மல்லிகை செப்டெம்பர் 2011 & 41

Page 23
ங்கை
சிீத்5ை
- வேல் அமுதன்
கலாநிதி பத்மநாதனுக்குத் திருமணப் பதிவு லண்டனில் நடந்தது.
அதற்கான அனுமதி அவரின் தந்தை தம்பிஐயாவிடமிருந்து கிடைத்தது. தம்பி ஐயா தொலைபேசியிற் சொன்னவை : “எங்கடை ஊர் லண்டன் மணியமவை சங்கையான ஆட்கள் தம்பி. மணியத்தாற்ரை பேத்தி லிலா குடும்பம் உங்கை லண்டனிலைதான் இருக்கினம். லிலா எம்.பி.ஏ.பட்டதாரி. படத்திலை பாத்தன். பிள்ளை லட்சணமாக இருக்கிறாள். சாதகத்தையும் பாப்பித்தன். நல்ல பொருத்தம். அவை உங்களுக்கு லிலாவின்ரை புகைப்படத்தை ஈ-மெயில் பண்ணுவின்மாம். அவளை உங்களுக்கு நல்லாகப் பிடிக்கும். குடுக்கல் வாங்கல் பிரச்சினையே வராது. கலியாண எழுத்துக்கு நீ சம்மதி. பிறகு கலியாணத்தை, இங்கை கொழும்பிலை ஜாம் ஜாம்மெனச் செய்வமே!”
கலாநிதி புகைப்படங்களையும், Face Bookஇல் விபரங்களையும், கணனி வழியாகக் கதைத்ததிலும் மனப்பூர்வமாகத் திருப்திப்பட்டார்.
திருமணப் பதிவு ஆடம்பரமாக நடந்ததைத் தொடர்ந்து, கலாநிதியும் லீலாவும் அடிக்கடி தொலைபேசியில் பேசி மகிழ்ந்தனர்.
திருமணப் பதிவு முடிந்த அடுத்த ஞாயிறு. மதிய போசனத்திற்குக் கலாநிதிக்கு அழைப்பு வர, அதனைச் சந்தோஷமாக ஏற்று, லிலாவின் பங்களாவுக்குப் போயிருந்தார்.
அவருக்குச் செங்கம்பள வரவேற்பு. ராஜ மரியாதை. லிலா தன் கையாலேயே சாதத்தைப் பரிமாறினாள்.
லீலா சாதத்தைப் பரிவுடன் பரிமாறிய வேளை வலக்கை கட்டைவிரலைத் தவிர, அவளின் நாலு விரல்களிலும் மோதிரங்கள் மின்னுவதையும் கலாநிதி கவனித்துக் கொண்டார்.
லீலாவின் அறையுள் அவளோடு தனிமையில் இருந்தவேளை, ஒரு கேள்வியைக் கேட்டார். “எப்பிடி லிலா நாலு மோதிரம்?”
"ஒண்டு நீங்க போட்டது. மற்றவை மூண்டும் முன்னைய Boy Friends போட்டது. பழைய Friendshipபையும் மறக்கக் கூடாதுதானே?”
இரு நாட்கள் ஒடி மறைந்தன. எதிர்பாராதது அரங்கேறியது. கலாநிதி சார்பில் அவரின் சட்டத்தரணி துரைராஜா லிலாவுக்குத் திருமண பதிவு ரத்து அறிவித்தல் பதிவுத் தபாலாக அனுப்பி வைத்தமையே அது!
மல்லிகை செப்டெம்பர் 2011 தீ 42

தொழில்நுடீU மகிழ்ச்சியான ஒரு நிறுவனம் Happy Digital Centre(Pvt) Ltd
மேமன்கவி
விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி யானது இன்று பல்வேறு துறைகளி லும் பெரும் மாற்றங்களையும், வளர்ச் சியையும் ஏற்படுத்திக் கொண்டிருக் கிறது. அந்த அச்சுக்கலை தொழில் bli u g5 3560) Buf), Lỗ (Printing Technology), Digital 6035(JLJLi களை அச்சடிக்கும் துறையிலும் (Photography Printing) பெரும் மாற்றங்களையும், வளர்ச்சியையும் தந்துள்ளது. இலங்கையில் Digital தொழில் நுட்பமானது மேற்குறித்த இரு துறையினையும் பெருந் தொழில் துறையாக மாற்றிக் கொண்டிருக்கிறது. இத்தகைய Digital துறையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி, திறந்த பொருளாதாரத்தின் காரண மாக, எல்லாத் துறைகளிலும் போட்டிச் சந்தை ஒன்று உருவாகியதால், அதனால் எதிர்கொள்ளும் சவால்கள், நெருக்கடிகள் மத்தியிலும், தனது 10வது வருடப் பூர்த்தியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறதுHappy Digital Centre.
கடந்த 30.08.2011 அன்று கொழும்பு 12, ஆமர் வீதி 75/1, இலக்கக் கட்டி டத்தில் தனது புதிய காட்சியறை ஒன்றினை திறந்து வைத்தது. இத் தறப்பு விழாவுடன் மேலும் அதிஉயர் நுட் Usk B6ir GB5IT606L Digital அச்சுத்துறை இயந்திரம் உட்பிரவேசிக்கிறது.
கடந்த காலத்தில் Digital அச்சுக்கலைத் துறையில் கணிசமான முறையில் முன்னேற்றகர மான முறைகளைக் கை யாண்டு, Digital அச்சுக்கலைத் துறையில் Happy நிறுவனம் தன்னைத் தாக்க
மல்லிகை செப்டெம்பர் 2011 & 43

Page 24
விலையில் அதிவேகத்துடன் கூடிய, உயர் தரத்திலான அச்சு முறைமையை நடை முறைப்படுத்தத் தொடங்கி யுள்ளது.
நாம் மேலே குறிப்பிட் டது போல், கடந்த காலத்தில் குறிப்பிட்ட காகித வகையில் மட்டுமே அச்சடிக்க முடிந்த சூழலில், எல்லா வகையான காகித வகையிலும் அச் சடித்து கொள்ளக் கூடிய தொழில் நுட் பத் தைக்
வைத்து வந்துள்ளது. அந்த வகையில் ஒரு சில குறிப் பிட்ட ஒரு சில காகித வகை யில் மட்டுமே Digital முறை யில் அச்சடிக்கும் பாணியில் பணியாற்றிக் கொண்டிருந்த Happy நிறுவனம், கடந்த 30082011 அன்று ஆரம்பித்த காட்சியறையில் கொண்டு வந்திருக்கும் அச்சு இயந் திரத்தின் மூலம், நியாயமான
கொண்டிருப்பது இந்த இயந்திரத்தின் முதல் விசேடத்தன்மையாகும். அடுத்து,
இந்த இயந்திரத்தின் அதிவிசேட தன்மையாகக் கூறுவதென்றால் காகிதம் அல் லாத PlasticCeramic போன்றவற்றி லும் அச்சடிக்கக் கூடிய வசதியையும் நுட்பத்தை
யும் கொண்டிருப்பதே JIT(5b.
உதாரணத்திற்கு Plastic- Ceramic (3LT6613 வைகளால் உருவாக்கப்
மல்லிகை செப்டெம்பர் 2011 & 44
 
 
 

பட்ட பரிசு பொருட்கள் மீதும் வாடிக்கையாளர் தேவைக்கேற்ப அச்சடித் துக் கொள்ளும் வசதி யானது ஒரு முனனேற்ற மான தொழில்நுட்பம் என லாம். அதன் காரணமாக வாடிக் கையாளருக்கு தேவையான பிளாஸ்டிக் அடையாள அட்டைகள், விலாச அட்டைகள், சான் றிதழ்கள், சிடி கவர்கள், நூல்களுக்கான அட்டைப்படங்கள் போன்ற பலவற்றை நியாயமான விலையில், அதிவேகத்துடன், உயர் தரத் திலான துல் லியமான முறையில் அச்சடித்துக்கொள்ளும் சந்தப்ப்பத்தை Happy நிறுவனம் உருவாக்கியதன் மூலம், அச்சுச் சந்தையில் உயர்தரமான தொழில்நுட்பத்தைத் தனக்கதே கொண்ட ஒரு நிறுவனம் என்ற அடையாளத்தைப் பெற்றுக் கொள்கிறது.
Digital புகைப்படங் களை அச்சடிக்கும் முறையிலும் Happy நிறுவனம் மென்மேலும் புதிய நுட்பங்களை அறி முப்படுத்தி வருகிறது. அதன் Digital தொழில் சார் புகைப்பட நிபுணர் களுக்கு பயன் மிக்க ஒரு நிறுவனமாகவும் Happy Digital Centre திகழ்கிறது.
Happy 5036.16015 தின் இத்தகைய வளர்ச்சிக்கு அதன் நிறுவனர் திலீபன் டொமினிக் ஜீவா அவர்களின் ஆர்வம் மிக்க, தேடல் மிக்க உழைப்பும், திட்டமிட்ட லும் அடி ஆதாரமாக இருக்கிறது. அத்தோடு அவருக்குச் சிறப்பான முறையில் ஒத்துழைக்கும் ஊழியர்களை கொண்டிருப்பதும் Happy நிறுவனத்தின் சிறப்பான அம்சமாகும். இன்று இலங்கையில் Digital அச்சுத்துறையில் மிகப் பரிச்சயமான ஒரு நிறுவன மாக திகழ்கின்றதுடன், Digital அச்சுத்துறையில் தொடர்ந்து புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தும் ஒரு நிறுவனம் என்ற படிமத்தை Happy Digital Centre நிறுவனம் பெற்றிருக்கிறது என்று சொல்வது மிகையான கூற்று அன்று.
மல்லிகை செப்டெம்பர் 2011 & 45

Page 25
இருந்த இடத்தில் எல்லாமே உனக்கு வருந்தி உழைக்க வாய்ப்பின்றிப் போனபோது, முப்பது வயதிலேயே ஐயோ மூட்டுவலி முடியவில்லை களைக்குது என்னாலை ஏலாது! என்ற ஏக்கக் குரல்கள். ஆனால்,
அறுபதிலும் அவர்களால் மட்டும் எப்படி அலுப்பில்லாமல் நோயில்லாமல் நிமிர்ந்து உலாவர முடிகிறது? இன்னமும் அதே பழைய கம்பீரமும் துடிநடையும் இலட்சிய வெறியும் ஒய்வில்லா உழைப்பும் பற்றும் பாசமும் எப்படி அவர்களுக்கு மட்டும் எல்லாம்.
குரக்கனுக்கும் பாணுக்குமான இடைவெளியா? கைகளுக்கும் கருவிகளுக்குமான இடைவெளியா? பழைமைக்கும் புதுமைக்குமான இடைவெளியா? எயார் கொண்டிசன் அறைக்குள் கூல் றிங்ஸ் அருந்திக்கொண்டிருப்பவனே சற்று சிந்தித்துப் பார்!
மல்லிகை செப்டெம்பர் 2011 & 46

நினைவுகளில் 6Tales6iT g5lb60LJuJIT அண்ணர்
x - முருகபூபதி
தி.ஜானகிராமன் எழுதிய கதையொன்றிலே ஒரு வசனம் இப்படி வந்ததாக ஞாபகம்.
தரையில் வரைந்த கோலம், எழுந்து நின்றது போல். செளந்தர்ய உபாசகரான அவர், ஒரு பெண்ணை அவ்வாறு வர்ணிப்பார்.
எங்கள் அச்செழு பண்யைார் என நண்பர் மல்லிகை ஜீவா வர்ணிக்கும் தம்பையா அண்ணர், தமது நினைவின் அலைகள் சுயசரிதை நூலை இவ்வாறு ஆரம்பிக்கின்றார்.
உரும்பிராய்ச் சந்தி - சிலுவையை நிலத்தில் கிடத்தி வைத்தாற் போன்றதொரு சந்தி.
ஜானகிராமன் கோலத்தை நிமிர்த்துகிறார். தம்பையா சந்தியை கிடத்துகிறார். படைப் பாளிகளுக்கு இப்படி அபூர்வமாகவே கற்பனை தோன்றும். லா.ச.ரா. எழுதுவார், அவள் இடுப்பின் வளைவில் குடத்தின் வளைவு ஏறியது என்று.
அபூர்வமாக வந்துவிழும் சித்திரங்களை எம்மால் எப்படி மறக்க முடியாதோ அப்படித் தான் தம்பையா அண்ணர் என்ற அபூர்வ மனிதரையும் மறக்க முடியாது.
மேலும் ஐந்து வருடங்கள் வாழ்ந்திருப்பாராகில் நாம் அவருக்கு பவளவிழாக் கொண்டாடியிருப்போம்.
நான் போகிறேன் நண்பர்களே - நீங்கள் கொண்டாடுங்கள்' என்று அவர் தனக்குள் நினைத்துக்கொண்டு, ஆழ்ந்த துயில் கொண்டிருக்க வேண்டும். அது மீளாத்துயில்.
ஒருவரது மரணத்தைக் கொண்டாட முடியுமா? முடியும். நிச்சயமாக முடியும்.
6Tulg?
மறைந்தவரை நினைத்து எமது எண்ண அலைகளை எழுப்பி, அந்த அலை களுக்குள் எம்மை நாமே சுயவிமர்சனமும் செய்துகொண்டு கொண்டாடலாம். அவ்வாறு
மல்லிகை செப்டெம்பர் 2011 & 47

Page 26
என்றென்றும் எம்மால் கொண்டாடப்படக் கூடியவர் மந்திரப் புன்னகைக்குச் சொந்தக் காரரான தம்பையா அண்ணர்.
1983 இனச்சங்கார அவலங்கள் முடிந்து மாதங்கள் கழிந்து, 1984ஆம் ஆண்டு பிறக்கிறது. மார்ச் மாதம் முதல் வாரம் முடிந்து மாலை நேரம் கொழும்பு வந்துள்ள ஜீவாவை சந்திக்க முறிகதிரேசன் வீதிக்குச் செல்கிறேன். அங்கே நண்பர்கள் செல்வமும், மணியும் இணைந்து நடத்திய நிறுவனத்தில் ஜீவாவையும் தம்பையா அண்ணரையும் சந்திக்கின்றேன்.
“வேலையால் களைத்து வாரீர். வாரும் ரீ குடிக்கப் போவோம்.” மலர்ந்த முகத்துடன் என்னையும் ஜீவாவையும் அழைத்துக் கொண்டு ஐந்துலாம்புச் சந்தியில் ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் செல்கிறார், அண்ாைர்.
அங்கே எதிர்பாராத விதமாக எனக்கு ஒரு அழைப்பு விடுக்கிறார்.
"தம்பி. இந்த மாதம் 18ஆம் திகதி (18.03.1984) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப் பாணம் வீரசிங்கம் மண்டபத்தின் முன் ஹோலில் எனது கடலில் கலந்தது கண்ணிர் கதைத் தொகுப்பு வெளியீட்டு விழா. நீரும் வந்து பேசுகிறீர். சரிதானே.”
நான் திகைப்புடன், என்ன அண்ணா, இப்படி திடீரென்று.” இழுக்கின்றேன்.
"நீர் வாரீர். அவ்வளவுதான்.” சற்று உரத்துச் சொன்னவர், எழுந்து எனது சேர்ட் பொக்கட்டுக்குள் ஒரு நூறு ரூபா தாளைச் செருகினார். இதனை உமது பஸ் செலவுக்கு வைத்துக்கொள்ளும்.
எனது வாழ்வில் இது மறக்க முடியாத அனுபவம். தம்பையா அண்ணர் சொன்ன பிரகாரம் அந்த நிகழ்வு 18.03.1984 காலை
9 மணிக்கு நடந்தது. யாழ். சமூக முன் னேற்றக் கழக சமாசம் அதனை ஒழுங்கு செய்திருந்தது. ஆர்.எம்.நாகலிங்கம் தலைமை தாங்கினார். நானும் டானியலும் செல்வமும் உரையாற்றினோம். கே.கணேஷ் வருவதாக இருந்தது. அவ ரால் ஏனோ வரமுடியாது போனது.
சவரக்கத்தியை பிடித்துக்கொண்டே, பேனாவும் பிடித்தவர், எங்கள் மல்லிகை ஜீவா மாத்திரம்தான் என நினைத்திருந் தேன். தம்பையா அண்ணரும் தனது தொழிலைத் துறந்து முழுநேர எழுத்தாள ராகியிருந்தால், இவரும் ஜீவாவைப் போன்று பாஷாணத்தில் புழுத்த புழு என்று முழங்கியிருக்கக்கூடும். நல்ல காலம் ஜீவாவின் தனித்துவம் அவரால் காப்பாற்றப்பட்டது.
தம்பையா அண்ணர் தனது தொழி லில் தீவிர கவனம் செலுத்தினார். உரும் பிராயின் அந்த செம்பாட்டு மண்ணில் கடுமையாக உழைத்தார். அதனால் இலக் கிய உலகிற்கு அவரது இரண்டு நூல்கள் மாத்திரமே வரவாகின. கடலில் கலந்தது கண்ணிர் (சிறுகதை), நினைவின் அலைகள் (சுயசரிதை),
1950ஆம் ஆண்டளவில் மலேசியா வுக்குச் சென்றவர், பத்து ஆண்டுகள் கழித்து தாயகம் திரும்புகிறார். சுமார் 23 வருடங்களுக்குப் பின்னர் தான் எழுதிய கதைகளைத் தேடிப் பெறுகிறார். 1984இல் கதைத் தொகுப்பை வெளியிடுகிறார். 1977 இல் அவரது சுயசரிதை வெளியாகிறது.
அவர் எழுத்துலகில் சஞ்சரித்த காலம் சொற்பம்தான். ஆனால், இலக்கிய வாதிகளின் நெஞ்சங்களில் பலகாலம் சஞ்சரித்தவர் என்பதற்கு ஆதாரமாகத் திகழ்வது அவரது மறைவுக்குப் பின்பு
மல்லிகை செப்டெம்பர் 2011 & 48

வெளியான மலர். பலர் தம்பையா அண்ணரின் உன்னதமான குணங்களை இம்மலரில் சிலாகித்து கொண்டாடியிருக் கின்றனர்.
புறக்கோட்டையில் அவரது ஒரியண் டல் சலூன் இலக்கிய வட்டாரத்தில் நல்ல பிரபலம் பெற்றிருக்கிறது. நான் எழுதத் தொடங்கிய காலத்தில் ஜீவாவை கொழும் பில் பெரும்பாலும் இங்குதான் சந்திப்பேன். ஜீவா கொழும்பு வராத நாட்களிலும் நேரம் கிடைக்கும்போது அந்தப் பக்கம் நான் செல்வேன். என்னை அருகேயுள்ள கோல்டன் கபேக்கு அழைத்துச் சென்று உபசரிப்பார்.
எனது முதலாவது கதை கனவுகள் ஆயிரம் மல்லிகையில் வெளியான காலம். அதுபற்றிய முதல் விமர்சனத்தையும் தம்பையா அண்ணரின் ஒரியண்டல் சலூனில் வானொலியில்தான் கேட்டேன். விமர்சித்தவர் ரத்தினசபாபதி ஐயர். எனக் காக அவரது குரலை ரேப்பில் பதிவுசெய்து வைத்து நான் வந்ததும் அதனைச் செவிமெடுக்கச் செய்தவர். இப்படியாக எனது வாழ்வில் மறக்கவே முடியாத சில 5 businessfelt சூத்திரதாரி g51 b60oulu unt அண்ணர்.
கவிச் சக்கரவர்த்தி கம்பனுக்கு ஒரே ஒரு சடையப்ப வள்ளல்தான் நண்பராகக் கிடைத்தார். மல்லிகை ஜீவா கம்பனை விட பாக்கியசாலி. ஜீவாவுக்கு கிடைத்த பல சடையப்ப வள்ளல்களில் தம்பையா அண்ணரும் ஒருவர். ஏனையோரை விரல்விட்டு எண்ணி விடலாம்.
தம்பையா ஜீவாவுக்கு மாத்திரம் அல்ல, மேலும் பலருக்கும் - தான் சார்ந் திருந்த சமூகத்திற்கும் முன்னுதாரண மான சடையப்ப வள்ளல். இதனை
அவரது மறைவுக்குப் பின்பே தெரிந்து கொண்டேன்.
அவுஸ்திரேலியாவுக்கு நான் புலம் பெயர்ந்து சுமார் பதினொரு ஆண்டுகளின் பின்னர் இலங்கை வந்திருந்தேன். அச் சமயம் நண்பர் ராஜழுநீகாந்தனுக்கு தின கரனில் பிரதம ஆசிரியர் பதவி கிடைத் திருந்தது. அவரைப் பாராட்டுவதற்காகவும், என்னை வரவேற்பதற்காகவும் அக்காலப் பகுதியில் கொழும்பில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த கருத்தரங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்காகவும் முற் டோக்கு எழுத்தாளர் சங்கம் ஒரு சந்திப்பை துரை. விஸ்வநாதன் அவர்களின் வியா பாரத் தலத்தின் மேல் மாடியில் நடத்தியது.
நான் மகனுடன் இச்சந்திப்புக்குச் சென்றிருந்தேன். கூட்டம் தொடங்கி சற்று தாமதமாக ஒரு நீண்ட குடையுடன் வந்தார், எங்கள் தம்பையா அண்ணர். என்னைக் கண்டதும் குடையை தரையில் போட்டுவிட்டு என்னை வாரி அணைத்து கன்னங்களில் முத்தமிட்டார். வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்த மகனைத் தழுவிக் கொண்டார்.
அவரது குடை தரையில் விழுந்து எழுப்பிய ஓசையும், அவரது பரவசமான அரவணைப்பும் அந்தச் சபையிலிருந்தவர் களை ஒருகணம் சிலிர்க்க வைத்துவிட் டது. அது பலரும் கூடியிருந்த சபையென்று அவர் பார்க்கவில்லை. மற்றவர்கள் எல் லோரும் நீண்ட இடைவெளிக்குப்பின்னர் என்னைப் பார்த்து கைகுலுக்கி, வாழ்த்தி வரவேற்ற போது, அந்நிகழ்வுக்குச் சற்று தாமதமாக வந்த தம்பையா அண்ணர் அவ் வாறு கட்டி அனைத்தபோது ஒரு தந்தை யின் பாசத்தை உணர்ந்தேன்.
மல்லிகை செப்டெம்பர் 2011 & 49

Page 27
அந்தக் கணங்களையும் என்னால் மறக்க முடியாது. கொழும்பில் நின்ற நாட் களில் சுகதுக்கங்களை பரஸ்பரம் பகிர்ந்து கொண்டோம்.
"அண்ணை. நான் அவுஸ்திரேலியா வுக்குப் போகும்போது நீங்கள் ஜீவாவின் நண்பராக இருந்தீங்க. இப்போது திரும்பி வந்திருக்கிறேன். ஜீவாவின் சம்பந்தியாக உங்களைப் பார்க்கின்றேன்’ என்றேன்.
"ஒமோம். இதனைக் கொண்டாட வேண்டும். வீட்டுக்கு வாரும்’ என்று அழைத்துச் சென்று உபசரித்தார்.
"இவ்வளவு காலமும் உம்மை ஒரி யண்டலுக்குப் பக்கத்தில் கோல்டன் கபே யில்தான் உபசரித்தேன். இன்று முதல், இனி எங்கட கொழும்பு மட்டக்குளிய வீட்டில்தான் உமக்கு உபசரிப்பு” என்றார். அவரது முன்னைய கொழும்பு வாழ்வு - கலியாணம் பண்ணியும் பிரம்மச்சாரி யாகத்தான் கழிந்தது. குடும்பம் அப் பொழுது உரும்பிராயில் இருந்தது. அவர் மாத்திரம் கொழும்பிலிருந்து தொழிலைக் கவனித்து வந்தார்.
பல வருடங்களுக்கு முன்னர் தம்பையா அண்ணருடனும் நண்பர் செல் வத்துடனும் மேமன்கவியை அழைத் துக்கொண்டு, சைக்கிள் சவாரியாக குரும்ப சிட்டிக்கு பயணம் மேற்கொண்ட தகவலை ஏற்கனவே கனக.செந்தி நினைவுக் கட்டுரையில் பதிவு செய்துள்ளேன். அந்த நாள் நினைவுகளையும் மீட்டிக்கொண் டோம்.
அவர் மறைந்த செய்தி அறிந்து எனது கவலையை ஆழ்ந்த அனுதாபமாக தொலைபேசி ஊடாக பகிர்ந்து கொண் டேன். 2002ஆம் ஆண்டு மனைவி மாலதி யையும் அழைத்துக்கொண்டு மட்டக்குளிக் குத் துக்கம் விசாரிப்பதற்காகச் சென்றிருந் தேன்.
அந்த வீட்டில் தம்பையா அண்ணர் பெரிய உருவப்படமாகக் காட்சி அளிக் கிறார்.
é.
'வாடாப்பா. வந்து கோப்பி குடித்து, எனது மனைவி மக்கள் பேரப் பிள்ளைகளுடன் உரையாடு” என்று அவர்
முகம் மலர்ந்து அழைப்பது போலிருந்தது.
A. R. R. HAR DRESSERS
89, Church Road, Matakuliya, Colombo - 15.
I Tel: 0112527219
முற்றிலும் ജിലേ பெற்ற சலூன்
மல்லிகை செப்டெம்பர் 2011 & 50
 
 

சிங்களத்தில் கே.சுனில் சாந்த
புலம்பல்
தமிழில் திக்குவல்லை கமால்
ஆறு வருடங்களுக்கு முன்பு காலஞ்சென்ற தனது மனைவியின் மிக நெருங்கிய தோழியான ரத்னாவதி ஆசிரியையின் மரணச் சடங்கிற்கு சென்று திரும்பிய சிரியாரத்ன, வீட்டுக்குள் செல்லாமல் முன்னால் நின்ற வேப்ப மரத்தடி வாங்கில் அமர்ந்துகொண்டார். முப்பது வருடங்களுக்கு முன்பு தானும் போடி ஹாமினேயும் சேர்ந்து கட்டியெழுப்பிய வீட்டின் முன் பக்கம் மூத்த மகனால் உடைக்கப்பட்டு புதுவடிவம் பெற்றிருப்பது அவருக்குத் தெரிந்தது. பலாக் குற்றி யினால் செய்யப்பட்ட தூண்களின் மீது அமைக்கப்பட்டிருந்த கூரை இப்போ தில்லை. அதன் கீழ் இடவசதியோடிருந்த பகுதி உடைக்கப்பட்டு அமைக்கப்பட்ட விறாந்தை சிவப்பு மெழுகினால் பளபளத்தது. தான் சாய்ந்திருக்கப் பழகியிருந்த சாய்கதிரையும் வெற்றிலைச் செப்பு வைக்கும் சிறுமேசையும் சுவரில் கொழுவி யிருந்த மான் கொம்பும் மருமகளினால் விறகு மடுவத்திற்கு அனுப்பப்பட்டு புதிப்பாணியில் சொகுசுக் கதிரைத் தொகுதியொன்று அங்கு போடப்பட்டிருந்தது. சுதுஹாமினே இருந்திருந்தால் எந்தவகையிலும் அந்த சாய்கதிரையை அகற்ற அனுமதித்திருக்க மாட்டாளென அவர் எண்ணினார். அந்த மரத்தை இருப் பிடமாக அமைத்துக்கொண்டிருந்த கொக்குக்கூட்டம் மர்லையாவதைத் தொடர்ந்து சத்தமிட்டபடி மரத்தை நாடி வந்தபோது சிரியாரத்ன மேலே பார்த்தார். சிலு சிலுத்து அசையும் வேப்ப மரக்கிளைகளுக்கூடாகப் பலகைத் துண்டுகளால் அமைக் கப்பட்ட கூடுகளும், அங்கு கூடும் கொக்குகளும் அவருக்குத் தெரிந்தன. கீழே யுள்ள கிளையொன்றில் நின்ற கொண்டைக் குருவிகள் கீச்சிட்டபடி தமது அலகு களால் சிறகுகளை துடைத்துக்கொண்டன. அணிலொன்று டிங்டாங் என்றபடி அங்குமிங்கும் பாய்ந்தோடுவது தனது கிளையைத் தேடித்தானோவென்று அவர் நினைத்தார். இந்தக் காட்சிகளால் உந்தப்பட்ட சிரியாரத்னவுக்கு சுதுஹாமினே நினைவுக்கு வந்தாள். திருமணத்தின் பின்பு சுதுஹாமினேயுடன் ஊர்ப் பாட சாலைக்கு மாற்றமெடுத்துக்கொண்டு வந்து விடொன்றை அமைத்துக்கொள்ள இந்த இடத்தை சாத்தியமாக்கிய விதம் அவருக்கு ஞாபகம் வந்தது.
“பாருங்க வேம்பு மரமொன்றும் இருக்கே”
“வேம்பு அல்ல காணியொன்றென்றால் அதில் ஏதாவது மரங்கள் இருக்கா விட்டால் அழகாக இருக்காதும்மா.”
மல்லிகை செப்டெம்பர் 2011 & 51

Page 28
“அதென்றால் உண்டுதான். நாங் கள் வீட்டைக் கட்டி இந்த மரத்தடியில் இருக்கையொன்று செய்து கொள் வோம்.”
"அதென்னத்துக்கு?”
"ஏன் எங்களுக்கு ஒய்வு கிடைக் கும்போது சும்மா உட்கார்ந்திருக்க.”
“உங்களுக்கும் நல்ல யோசனைகள் வருமென்ன” என்று சொன்ன சிரிய ரத்ன வீட்டுக்குக் குடிவந்த அன்றைய தினமே எஞ்சியிருந்த பறாளை, பலகை களைக் கொண்டு வேப்ப மரத்தடியில் இருக்கை அமைத்துக் கொண்டார். அதன் பின்னர் ஆண்டுதோறும் அது புதுப்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வு களை நினைவூட்டிய சிரியரத்ன மீண் டும் மரத்தைத் திரும்பிப் பார்த்தார்.
"இப்போது மூன்று பேரால் கட்டி யணைக்க முடியாதளவுக்கு மரம் பருத்து விட்டது” என்று தனக்கே சொல்லிக் கொண்டார். பயணம் போய் வந்ததும் வழக்கம் போல் மடித் தடி வாங்கில் நீண்டநேரம் அமர்ந் திருக்க சிரியரத்ன எழுந்து, வேப்பிலை யொன்றை பிடுங்கி வாயில் போட்டுக் கொண்டு, தளம் மினுக்கப்பட்ட விறாந்தைக் கூடாக தனதறைக்குச் சென்றார்.
"ரத்னாவலி நோனாவின் மரணச் சடங்கிற்கு போய்வந்த பின்பு மாமா ரொம்பவும் மாறிப்போய்விட்டார்.”
"ஏதாவது சுகவினமோ தெரியல்ல" உதயரத்ன விசாரித்தான்.
'பார்த்த பார்வைக்கு அப்படி
அவருக்கு ஒன்றுமில்லை. ஆனா இப்போ பெரும்பாலும் அறைக்குள்
ளேயே அடைப்பட்டுக் கிடக்கிறார் பாருங்க. சிலநேரம் மரத்தடி வாங்கில் அமர்ந்து யோசித்துக்கொண்டிருப் பார்.”
"அம்மா இல்லாமல் போனபிறகு அப்பா அவ்வப்போது ரத்னாவலி ரீச்சர் வீட்டுக்கு மட்டுமே போவார். அவ புருஷனோட கதைத்துக் கொண்டிருப் பார். ரத்னாவலி நோனா அப்பாவை அங்கு போனால் ஒருநாளும் சாப்பிடக் கொடுக்காமல் விடமாட்டா..” என்று சொன்ன உதயரத்ன அப்பாவுக்கு ஏதாவது பெரிய நோய் என்று மீண்டும் நினைத்தான்.
"நாளை அப்பாவை டாக்டருக்கு காட்டுவம் கீதா. தற்செயலாக ஏதா வது நடந்துவிட்டால். இந்தக் காணி பூமிய இன்னும் ஒரு ஒழுங்குக்கு கொண்டுவரவுமில்லை.”
நன்றாகக் உபசரித்தா.
“அதென்னா உண்மைதான். தங்கச்சிக்கும் தம்பிமாருக்கும் கொடுக் கிறதொன்றைக் கொடுத்து, எஞ்சியதை நம்ம பிள்ளைங்க இருவருக்கும் எழுதிவிட்டால் நல்லது.”
"தம்பி தங்கச்சிமாருக்கு இது சம் பந்தமா ஒன்றும் சொல்லியனுப்ப வேணாம். நான் சொல்லும் வரையில்.”
"ஐயோ நான் எதற்கு அதச் சொல்லப் போகணும்.”
அடுத்தநாள் கடும் கெஞ்சுதலைத் தொடர்ந்து சிரியரத்னவை தனியார்
மருத்துவமனையொன்றுக்கு அழைத்துச் சென்றனர்.
மல்லிகை செப்டெம்பர் 2011 & 52

“பெரிதாக நோயொன்றுமில்லை. பிரஷர் கொஞ்சம்கூட. நான் தாற மருந்து குடியுங்கோ. அதிகம் கவலைப் படவோ, யோசிக்கவோ வேணாம். என்ன தொழில் செய்தார்?’ சிரிய ரத்னவை பரிசோதித்த டாக்டர் கேட்டார்.
‘நான் நாற்பது வருஷமாக படிப்பித்தேன். இப்ப பென்ஷன் எடுத்து இரண்டு வருடம். எனக்கு அப்படி ஒரு வருத்தமுமில்லை.”
"அருமையான தொழில்தான் செய் திருக்கிறீங்க. எதற்கும் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது.” டாக்டர் சொன்னார்.
அன்று வேலை விட்டு வந்த உதய ரத்ன, சுகதுக்கத்தைப் பற்றி கீதாவிடம் விசாரித்தான்.
"மாமாவுக்கு பிறஷர் கொஞ்சம் கூட” என்றாள்.
"உண்மையா? அப்படியென்றால் மருந்தைக் கொஞ்சம் நேரத்துக்கு கொடுக்கணும். பிரஷர் உள்ளவங் களுக்கு சீக்கிரமா பொரடைஸிஸ் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கேள்விப் பட்டிருக்கன். தவறுதலாகவாவது அப்படி நோயொன்று ஏற்பட்டால் பெரிய தொல்லையாயிடும்.”
0 0 0
"அப்பப்பா என்னை ஆற்றுக்கு குளிக்க கூட்டிட்டுப் போங்க.” சனிக் கிழமையன்று பாட்டனின் கதையைக் கேட்டுக்கொண்டிருந்த பேரன் சிரிய ரத்னவைப் பார்த்தபடி சொன்னான்.
ஹ்.. ஆற்றுக்குப் போறது
நல்லதுதான். ஆனால் அப்பா அதுக்கு விருப்பமில்லையே.”
V O ஏன் அப்படி?
“பிள்ளையின் வகுப்பு
சுணங்குமே”
"ஐயோ அப்பப்பா. கிளாஸ். ஒவ்வொரு நாளும் கிளாஸ். எனக்கு வேணாமென்று போயிருக்கு.” பிள்ளை கோபத்தோடு சொன்னான்.
பேரனின் தலையைத் தடவிய சிரியரத்ன அவனது முகத்தைப் பார்த்தார். அந்த முகத்தில் குழந்தைத் தனத்தைக் காணமுடியவில்லை. இருமணி நேரமாவது சுதந்திரமின்றி புத்தகங்களுக்குள் புதைந்திருப்பதால் சிறுவனின் முகம் விகாரமடைந்து போயுள்ளதாக அவர் நினைத்தார். என்னவென்று தெரியாத போட்டிக்குத் தயார்படுத்தப்படும் குதிரை போல தனது பேரன் பாடங்களுக்குள் பலாத்காரமாகப் புகுத்தப்பட்டுள்ளமை அவனது கவலைக்குக் காரணமாகியது. அவர் மிகுந்த பாசத்தோடு பேரனின் தலையைத் தடவிக் கொடுத்தார்.
நாளாந்தம்
"அப்பா.”
“என்ன பெரியவன்?”
“தம்பிமார் இரண்டு பேரும் காரியாலயத்தில் என்னோடு கதைத்தார்கள்.”
“uib... GTGðrasvanumruh?”
"இல்லை இனி உங்கட உடல் நிலையைப் பற்றியும் கேட்டாங்க. மற்றது இந்த காணி பூமியைப் பற்றியும் ஞாபகப்படுத்தினாங்க.”
மல்லிகை செப்டெம்பர் 2011 & 53

Page 29
“காணி பூமி பற்றி.”
"ஒம். இதையும் ஒரு முடிவுக்கு கொண்டுவந்தால் நல்லதுதானே.”
“இனி நீ என்ன சொன்னாய்?”
"அப்பாவுக்கு சொல்வதாகச் சொன்னன். வேறென்னதான் சொல்ல. எனக்கென்றால் இப்படி அவசர மொன்றுமில்லை.”
"தங்கச்சி கதைத்தாளா?”
“இல்லை. தம்பிமார் தங்கச்சி யோட கதைத்த பின்புதான் எனக் கெடுத்திருக்கிறாங்களென்று நினைக் கிறன்.”
"இதை எழுதுவதென்றால் இனி சின்னவனுக்குத்தான் இந்த விட்ட எழுதணும்.”
“அதெப்படி செய்ய முடியும் அப்பா? நான் இப்போதே நிறையப் பணத்தை வீட்டுக்காக செலவழித்திருக் கிறனே. கீதா அவங்க வீட்டால் கொண்டுவந்த பணத்தையும் எனக்குத் தந்தாள்.”
"அப்படியென்றா என்ன செய்ற தென்று எனக்கு விளங்கவில்லை. நீங்களெல்லாம் கதைத்த பிறகு வந்து சொல்லுங்க.”
"இல்லை அப்பா. தங்கச்சிக்கும் தம்பிமாருக்கும் அந்த றப்பர் காணிய மூன்றாகப் பிரித்துக் கொடுப்பம். அப்பா விரும்பமென்றா வயலையும் இந்த வீட்டையும் எனது பிள்ளைகள் இருவருக்கும் எழுதுங்க. எனக்கென் றால் இந்தக் காணி பூமி பற்றி அவ் வளவு ஆசையில்லை.”
'றப்பர் காணிய மூன்று பேருக்கும் எழுதலாம். ஆனா மூத்த மகனுக்கு பெரிய பங்கென்பதால் உங்களுக்கிடை யில் சண்டை சச்சரவு வருமே.”
‘என்னத்துக்கு சண்ட பிடிக் கணும். அப்பா அம்மா இருவரையும் கவனித்தவன் நான். அப்பாவைப் பார்ப்பதற்காவது ஒருவராவது மாதம் ஒருதடவையாவது வாராங்களா?”
'இருந்தாலும் அவங்க மூணு பேரும் என்னைப் பார்த்துக்கொள்ளச் சொல்லி காசனுப்புறாங்களல்லவா? அடிக்கடி வந்துபோக நேரமில்லாம லிருக்கும்.”
'இருந்திருந்து அனுப்புறாங்க தான். அப்படி அனுப்புறதால என்ன தான் செய்ய முடியும்?”
"இல்லை. அவங்களால் முடிந்த வகையிலதானே அனுப்ப முடியு மென்று சொல்றன். ம். எனக்கு பென்ஷன் கிடைக்குதுதானே.”
ம். அப்பாவின் பென்ஷன் பிள்ளையின் கிளாஸ் பீஸ் கட்டவே காணாது. பரவாயில்லை. அப்பா விரும்புற முறையில் இதை செய்து போட்டீங்களென்றால் நல்லது” என்ற உதயாரத்ன கோபத்தோடு வெளியே சென்றது சிரியாரத்னவுக்கு விளங் கியது.
ஆழமாக யோசித்ததன் பின்னர் சிரியாரத்ன தனது இளைய புதல்வர்கள் இருவருக்கும் மகளுக்கும் மூன்று கடி தங்கள் எழுதியனுப்பினார். மகளும் நடு இளையவனும் சுமார் ஒரு வாரத் தில் எழுதிய கடிதத்தில் தாங்கள் இப்பொழுது நல்ல நிலையில் வாழ்வ
மல்லிகை செப்டெம்பர் 2011 & 54

தாகவும் வீடு, காணிக்காக பிரச்சி னைப்படாது அப்பா தருவதொன்றை பெற்றுக்கொள்வதாகத் தெரிவித் திருந்தனர். இரண்டாம் தடவையாக சின்ன மகனுக்கெழுதிய கடிதத்திற்கு மூன்று வாரத்தின் பின்னர், தந்தைக்கு மதிப்பளிக்குமுகமாக மட்டுமே இப் பதிலை எழுதுவதாகத் தெரிவித்திருந் தான். அச்சிறு கடிதத்தில் தனக்கு காணி பூமி பற்றி எந்த ஆசையும் இல்லையென்றும், இருக்க இடமில் லாதவர்களுக்கே நிலபுலன் கிடைக்க வேண்டுமென்றும், பொதுச் சொத்து டைமைச் சமுதாயமொன்றையே தான் மிகவும் விரும்புவதாகவும், அப்படிப் பட்ட சமுதானமொன்றை இந்த நாட் டில் உருவாக்குவதே தனது ஒரே எதிர்பார்ப்பென்றும் அதில் குறிப் பிட்டிருந்தான். இவற்றை விளங்கிக் கொள்ளத்தக்க கல்வியைத் தந்த அம்மா, அப்பா மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளதாகவும், அப்பாவுக்கு விருப்பமானவர்களுக்குச் சொத்துக் களை வழங்க முடியுமென்றும் குறிப் பிட்டிருந்தான். அதேபோன்று தான் எந்தச் சந்தர்ப்பத்திலும் மூத்த அண் ணனுடன் நிலபுலன் தொடர்பாகக் கதைக்கவில்லை என்றும் எழுதி யிருந்தான்.
சின்னத் தம்பியின் கடிதம் கிடைத்து இரண்டே வாரத்தில் சிரிய ரத்ன தனது நிலபுலன்களை பிள்ளை களின் பெயர்களுக்குப் பதிவு செய் தார். சின்னவன் ஆட்சேபித்திருந்த போதிலும், அவனது பெயருக்கும் அரை ஏக்கர் இறப்பர் தோட்டம் எழுதிவிட்டு நொத்தாரிஸ் கந்தோரி
தானொரு சுதந்திர புருஷரென்று நினைத் தார். இருந்தாலும் மூத்த மகனும் மரு மகளும் அவ்வப்போது சொத்துக்களை எழுதித்தர வேண்டுமென்ற தொல்லை யும், சின்னவன் காணி பூமியை எழுதித் தர வேண்டுமென்று கேட்டதாக பெரிய வன் சொன்ன பொய்யும் அவரைச் சற்றே குழப்பி வேதனை அளித்தது.
மீண்டும் இந்தச் சுற்றோட்டம் அதிகரித்ததினால் மருத்துவமனைக்குச் சென்றுவந்த சிரியாரத்ன ஒருநாள் வேப்ப மரத்தடியில் அமர்ந்திருந்தார். விட்டுக்குச் சற்றுத் தொலைவாக விதியில் வாகன மொன்று நிறுத்தும் சத்தம் அவருக்குக் கேட்டது. சற்று நேரத்தில் இன்னொருவ னோடு வந்த மூத்தமகன் வேப்ப மரத் திற்கு முன்னால் நின்றனர். வந்த புது முகம் வேப்ப மரத்தை நன்றாகவே அவ தானித்தார். மிகுந்த திருப்தியோடு கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த புது முகம் மூத்த மகனோடு வீட்டினுள்ளே சென்று சற்று நேரத்தின் பின் வெளிப் பட்டு வந்த வாகனத்திலேயே செல்வது தெரிந்தது.
‘நேற்றுப் பின்னேரம் யாரோ வந்தாங்களே..?”
“தெரியல்ல மாமா. ரத்னாவிடம் தான் கேக்கணும்.” கீதா எதையோ
மறைக்க முயற்சித்தபடி சொன்னாள்.
“ஹகும்.’’ என்ற சிரியாரத்ன வெளியே வந்து வேப்ப மரத்தைப் பார்த் தான். பெரிய மரத்திலிருந்து இலைகள் உதிர்வது அவருக்குத் தெரிந்தது. இலை செறிந்த மரத்தின் இடையிடையே மரச் சிதறல்களால் அமைக்கப்பட்டிருந்த கொக்குக் கூடுகளைக் கண்டார். சில கூடு களிலிருந்து குஞ்சுகள் இரை கேட்டுச்
மல்லிகை செப்டெம்பர் 2011 & 55

Page 30
சத்தமிடுவது போல் அவருக்கு விளங்கி யது. அதற்குப் பதில் சொல்வது போல் தமது சொண்டுகளில் எதையோ சுமந்து வந்த கொக்குகள் அவற்றைக் குஞ்சு களின் வாயில் திணிப்பதை பார்த்துக் கொண்டிருந்த சிரியாரத்னாவின் மனம் அன்பினால் நிறைந்து சென்றது.
"விலங்குகளென்றாலும் அவையும் அம்மா அப்பாதானே’ அவர் தனக்கே சொல்லிக்கொண்டார். வேப்ப மரத் தின் சுற்றாடலைப் பார்த்த அவர் கண் களுக்கு, தன்னால் நடப்பட்ட வாழைப் பற்றை, ரம்புட்டான், பூக்கன்றுகள் எல்லாம் கண்களில் பட்டன. மரம் செடி கொடிகளால் நிறைந்துபோயுள்ள சுற்றாடலை நேடுநேரம் பார்த்து ரசித்த சிரியாரத்ன தனதறைக்குச் சென்று கட்டிலில் சாய்ந்தார். சற்று நேரத்தில் பெருமழை பொழிவது கேட்டது.
'மழையும் இப்போ அகால வேளையில்தான் பெய்யிது’ முணு முணுத்தபடி சிரியாரத்ன நித்திரையில் ஆழ்ந்தார்.
அடுத்தநாள் விடிகாலையில் புதிய குரல்கள் பல கேட்டுக் கண்விழித்த சிரியாரத்ன கட்டிலிலிருந்து எழுந்து முற்றத்துக்கு வந்தார். கம்பி, வாள், கோடரிகளோடு நின்ற மனிதர் பல ருடன் மூத்தமகன் கதைத்துக் கொண்டி ருப்பது தெரிந்தது. வந்திருந்தவர்களில் ஒருவன் மூத்தமகனிடம் ஏதோ சொல் வதைத் தொடர்ந்து தன்னை நோக்கி மகன் வருவதைக் கண்டு சிரியாரத்ன விறாந்தைக்கு வந்து கதிரையொன்றில் அமர்ந்து கொண்டார்.
á á 0 y
9l ILIT
渗 என்ன? ..ம் யார் வந்திருக்
இன்னக்கி தொழிலுக்கு
போகவில்லையா?”
காங்க.
“இன்றைக்கு லிவு போட்டன். வேலைக்கு ஆக்கள வரச்சொன்னன்.”
“வேல. என்ன வேல.”
"இல்லை அப்பா. அந்த மரம் சாகப் போகுது. அதனால அதனை வெட்டிவிட்டு அந்த இடத்தில் இரண்டு கடைக் காம்பரா கட்ட வேணும். அதுக் குத்தான் ஆக்கள வரச்சொன்னன்.”
"எந்த மரத்த வெட்டப் போறது?"
"அந்த பழைய வேப்ப மரம்.”
s என்ன. உனக்குப் பைத்தியமா?
“என்னப்பா. அது இருந்து ஏதா வது பயனிருக்கா? வெட்டி விற்றால் முப்பதினாயிரம் அளவு கிடைக்கலாம்."
“இல்லையில்லை. அந்த முப்பதி னாயிரத்தால் எனக்கு வேலயில்லை. அந்த மரத்தை நானும் உனது அம்மா வும் எவ்வளவு அன்போடு பராமரித் தோம். அப்படி வளர்த்த மரம் எங்கள் வாழ்நாள் முழுவதும் நிழல் தந்தது. அந்த மரத்தை வெட்ட வேண்டாம்.”
"அப்படிச் சொல்லி சரிவராது அப்பா. அவங்க வந்து நிற்கிறாங் களே.”
"அவங்கள திரும்பிப் போகச் சொல்லு.”
“எப்படிப் போகச் சொல்வது? நான் மரத்துக்கு காசும் எடுத்திட்டன்."
'அப்படியென்றால் அந்தக் காசைத் திருப்பிக் கொடுத்தனுப்பு.”
மல்லிகை செப்டெம்பர் 2011 & 56

& 6 99. 9|LILIT.
என்றுமில்லாதபடி உயர்தொனியில் மூத்தமகன் சொன்ன வார்த்தை வேகத் தால் திடுக்குற்ற சிரியாரத்ன மகனின் முகத்தைப் பார்த்தார்.
"அப்பா. நீங்க மரம் வளர்த்திருப் பாதுகாத்திருப்பீங்க. இருந் தாலும் இப்போ எங்களுக்கு எழுதித் தந்திட்டீங்களே. இனி எங்களுக்கு வேண்டிய முறையிலதான் வேலை செய்யணும். திரும்ப என்னத்துக்கு கையடிக்கிறீங்க?. அப்பா நீங்க என்ன சொன்னாலும் இன்னக்கி நான் இந்த மரத்த வெட்டுறன்' என்ற உதயரத்ன வேகமாக முற்றத்திற்குச் சென்றான்.
பீங்க.
ஒருநாளும் தனது முகத்தைப் பார்த்துக் கதைக்காத மூத்த மகனின் உத்வேகமான நடவடிக்கையால் அந்தும் குந்துமாகிய சிரியாரத்ன அருகிலிருந்த கதிரையில் அமர்ந்து தலையில் கை வைத்துக் கொண்டார்.
சற்று நேரத்தில் எழுந்த கோடரிச் சத்தத்தை சகிக்க முடியாத சிரியாரத்ன தனது அறைக்குச் சென்று கதவை மூடிக் கட்டிலில் சாய்ந்தார். அதன் பின் னர் தனக்குப் பயமூட்டும் கோடாரி வீச் சொலியிலிருந்து விடுபட கண்களை இறுக்கி மூடிக்கொண்டார். இருந்தும் மரத்தில் அடைந்திருந்த கொக்குக் கூட் டத்தின் குறவையினால் அவரது முயற்சி தோல்வியைத் தழுவியது. மெல்ல எழுந்து யன்னலருகே சென்ற சிரியாரத்ன கோடாரி வீச்சின் சத்தத் தினாலும், மரத்தின் குலுங்கலாலும் பயந்துபோய் தங்களது குஞ்சுகளோடு கூடுகளுக்கருகே பறந்து அடுத்த மரங் களை நாடியும் கீச்சிடும் கொக்குக் கூட்
டத்தையும் கண்டார். சற்று நேரம் அப் படியே பார்த்துக்கொண்டிருந்தபோது காகங்களும் மரத்தைச் சுற்றிச் சிறகடிப் பது தெரிந்தது.
குஞ்சுகளைக் கொத்தக் காகங் களும் இப்போதே வருகின்றன.
இப்படிச் சிந்தித்த அவர் மீண்டும் கட்டிலில் விழுந்தார்.
சிலமணி நேரமாக காதுகளைத் துளைக்கும் கோடரிச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. இறுதியாக அந்த சத் தத்தை அழுத்திக்கொண்டு கடும்புயல் கடந்து செல்வதுபோல் பெரும் சத்தம் கேட்டது. கூடவே கிளைகள் முறிந்து நசுக்கும் ஒலி எழுப்பிக்கொண்டு குற்று யிரான மரம் சரிந்து விழுந்தது. மரம் சரிந்து விழும்போது எழுந்த சத்தம் மரண ஒலமாகவே அவருக்குக் கேட் டது. தன்னை அறியாமலேயே கட்டிலி லிருந்து எழுந்த சிரியாரத்ன வெளிப் பாயும் எண்ணத்தோடு விறாந்தைக் கத வருகே வந்தார். நீண்டகாலமாக மாலை வேளையில் மறைந்து செல்லும் சூரியக் கதிர்களின் வீச்சை மறைத்துக் கொண்டிருந்த வேப்ப மரம் இல்லாத தால் சூரியக்கதிர்கள் நேரடியாகவே கண்களைத் தாக்கின. வலக்கையால் கண்கள்ை மறைத்துக்கொண்ட சிரியா ரத்ன சரிந்து விழுந்துள்ள மரத்தைப் பார்த்தார். காலை முதல் மரம் வெட் டிக் களைத்துப்போன பலர் மரக்குற்றி யின் மீது அமர்ந்திருப்பதோடு, அவர் களின் தொல்லையிலிருந்து தப்பிய காகங்கள் கொக்கு முட்டைகளையும், சத்தமிடும் குஞ்சுகளையும் அலகினால் கவ்விக்கொண்டு பறப்பது அவருக்குத் தெரிந்தது. தான் வளர்த்த பழ மரங்
மல்லிகை செப்டெம்பர் 2011 & 57

Page 31
களும், பூச்செடிகளும் மரக்குற்றியில் மூடுண்டு சிதைந்து போயுள்ளதைக் கண்டு மீண்டும் தனதறைக்குச் சென்று கட்டிலில் விழுந்தார்.
இரவு எட்டுமணியளவில் சிரியா ரத்னாவின் அறை மின்விளக்கை ஏற்றிய கீதா, “கொஞ்சம் சாப்பிட்டு விட்டுத் தூங்கினால் நல்லதுதானே மாமா..” என்றாள்.
"வேண்டாம். என்னால் சாப்பிட முடியாது. நீங்கள் சாப்பிட்டுவிட்டுத் தூங்குங்க.”
"ஏன் உடம்புக்கு வருத்தமா?”
'இல்லை. எனக்கு ஒரு நோயு மில்லை. தலை கொஞ்சம் வலிப்பது போலிருக்கு.”
'இருங்கோ, இரண்டு கொண்டு வாரன்” என்ற கீதா இரண்டு பெனலுடன் தண்ணீர்க் கோப்பையையும் கொண்டு வந்தாள். பெனடோல் இரண்டையும் விழுங்கும் சிரியாரத்னவின் முகத்தைப் பார்த்த அவளுக்கு அவரது கண்கள் வீங்கி யிருப்பது போலவும், அதில் கண்ணீர் படிந்திருப்பதும் தெரிந்தது.
நான் பெனடல்
"மாமாவின் கண்கள் கொஞ்சம் வீங்கியது போல.”
"எனக்கு இந்த தலை வலிப்பதால் தான் போலும்” என்ற சிரியாரத்ன தனது முகத்தை மறைத்துக் கொள்வதற் காக மறுபக்கம் திரும்பினார்.
O O. O. O.
"உதயரத்ன ஐயோ ஒடி வாருங் கோ.” அடுத்தநாள் காலை சிரியாரத்ன வுக்கு தேநீர் கொண்டுவந்த கீதா கத்தினாள்.
"ஏன் ஏன் என்ன நடந்தது?” உடுத்தியிருந்த சாரத்தை முடிச்சிட்டபடி உதயரத்ன ஓடிவந்தான்.
'மாமாவுக்கு என்னவோ நடந்திருக்கு.”
உதயரத்னவைப் பார்த்து அவர் ஏதோ சொல்ல முனைந்தபோதிலும், வாயிலிருந்து எந்த வார்த்தையும் வெளிப்படவில்லை. வலக்கையை ஏதோ மாற்றுத்தன்மை இருப்பது போல் தெரிந்தது.
உயர்த்த முற்பட்டபோதும்,
"ஏன் மாமாவின் கண்ணுக்கு ஏதோ நடந்திருக்கென்ன?’ கீதா கேட்டாள்.
"ஒம் நாம் அவசரமாக அப்பாவை வைத்தியசாலைக்குக் கொண்டு போவம்' என்றபடி உதயரத்ன வாகன மொன்றை ஏற்பாடுபண்ண நகரத்திற் குச் செல்லும் எண்ணத்தோடு முற்றத் திற்கிறங்கினான்.
மற்றைய நாட்களில் விதிக்குச் செல்லும் ஒற்றையடிப் பாதைக்குக் குறுக்கே விழுந்து கிடந்த வேப்பமரம் அவன் கண்களில் முட்டியது. கொஞ்ச நேரம் அதைப் பார்த்துக்கொண்டிருந்த அவன் மரத்திற்கு மேலாகப் பாய்ந்து பெரும் விதிக்குச் சென்றான்.
கீதாவும் உதயரத்னவும் அழைத்து வந்த சிரியாரத்னவை டாக்டர் நீண்ட நேரமாகப் பரிசோதித்தார். இடையீடின் றிக் கண்ணீர் வழியும் சற்றே விரிந்த நிலையில் காணப்பட்டதோடு, ஒருபக்க வாயிலிருந்து உமிழ்நீரும் வழிந்ததைப் பரிசீலித்த டாக்டர் சிரியாரத்னவின் குருதியோட்டத்தையும் நன்கு அவ தானித்தார்.
மல்லிகை செப்டெம்பர் 2011 & 58

"கொஞ்சம் வருத்தம். வோர்டில் நிறுத்த வேண்டிவரும்.” சோதனை களைத் தொடர்ந்து டாக்டர் கூறினார்.
"டொக்டர்' என்றபடி உதயரத்ன டாக்டரின் முகத்தைப் பார்த்தான்.
"ஒம். பொலைஸிஸ் ஏற்பட்டி ருக்கு. ஏதாவது பெரும் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கு என்று நினைக்கிறன்.
இருவரும் சேர்ந்தே தவறு செய்து விட்ட வெளிப்பாட்டை எதிர்பார்த்து கீதா உதயரத்னாவின் முகத்தைப அவ தானித்தாள். ஆனால் அந்த முகத் திலே பச்சாதாபத்திற்குப் பதிலாக இன்னொரு தொல்லை என்ற உணர்வே மேம்பட்டு நிற்பதாக அவள் நினைத்தாள்.
தனிப்பிரதி 40/- ಅಹG ಊ6ುಗೆ 200/-
மல்லிகை செப்டெம்பர் 2011 & 59

Page 32
சமரபாகு. சீள. உதயகுமாரின் செந்நீரும் கள்ளிரும்’ கடந்த துயரத்தின் இலக்கிய ஆவணம்.
- மேமன்கவி
சிமரபாகு, சீனா.உதயகுமார் 90களின் இறுதி தொடக்கம் எழுதத் தொடங்கி, 2000ம் ஆண்டு தொடக்கம் அதிக அளவில் சிறு கதைத் துறையிலும், கவிதைத் துறையிலும் பங்களிப்பு செய்துவரும் ஒரு படைப்பாளி. ஒரே தடவையில் உடைந்த நினைவுகள், வெற்றியுடன் ஆகிய இரு கவிதைத் தொகுப் புக்களையும், புள்ளி விபரவியல் எனும் நூலையும் தந்தவர். “செந்நீரும் கண்ணிரும்” இவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பு இத்தொகுப்பில் 18 கதைகள் அடங்கி யுள்ளன. இவரது 18 கதைகள் பின்வரும் விடயங்களைப் பேசுவனவையாக இருக்கின்றன.
அரச பதவி உள்ளவர்களின் அதிகாரமும், அவர் தம் நடத்தையும், யாழ்ப் பாணத்து சராசரி இளைஞனின் வாழ்வியல், கடந்த போர் சூழலில் வடபுலத்து மனித உயிர்களின் இழப்பும் அவலமும், அந்த அவலத்தின் மத்தியிலும் வெளிப்பட்ட மனித நேய உணர்வு (இதில் உயிரை காப்பாற்ற ஒடிக்கொண்டிருந்த மனிதர்களும், அந்த ஆபத்தை விளைவித்த அதே இராணுவத்தினர் சிலரும் இதில் அடங்குவர்) இன்றைய ஆணாதிக்க சூழலில் பெண்ணினம் பல்வேறு நிலைகளில் எதிர்கொள்கின்ற பல்வகையான பிரச்சினைகள். இவ்வாறான இவரது இக்கதைகளின் உள்ளடக்கங்கள் சமூகப் பிரக்ஞை மிக்கவையாக இருப்பதன் காரணமாக, கணிசமான இவரது கதைகள் கடந்த வரலாற்றின் ஆவணங்களாக மாறுவதற்கான சாத்தியங்களை அதிகம் கொண்டிருப்பினும் கூட, அக்கதைகளில் சிலவற்றை அவர் சொல்லியிருக்கும் முறைமையில் முன்னிற்கும் பலஹினங்களை எடுத்து காட்டுவதன் மூலம் மேலும் சிறுகதைத் துறையில் அவர் வளர்ச்சி பெற உதவும்.
சிறுகதை என்ற இலக்கிய உருவத்தினைப் பற்றிய பிரக்ஞையை உதய குமார் தன் பெரும்பாலான கதையாக்கங்களில் குறைத்துக் கொள்கிறார். ஒரு நாவலில் சொல்ல வேண்டியவைகளை ஒரு சிறுகதையில் சொல்லப் போய், அக் கதைகள் வாசகர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துவதில் பின்தங்கி விடுகின்றன.
மல்லிகை செப்டெம்பர் 2011 தீ 60
 

இத்தகைய தன்மை அவரது கதை களில் அளவில் சிறிதான கதைகளிலும் வெளிப்பட்டிருக்கிறது. அளவில் பெரி தான கதைகளிலும் வெளிப்பட்டிருக் கிறது. சிறுகதை அளவை பற்றிய இற்றை வரை முடிந்த முடிபு நம் வசம் இல்லாவிடினும், அளவில் பெரிதாக இருப்பினும் கூட, அதன் உள்ளடக்கம் ஒரு சிறுகதைக்குரிய அதாவது ஒரு பொறியினை கொண்டிருக்க வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளபட்ட ஒரு கூற்றா கும். அதாவது சிறுகதை என்பது ஒரு சிறு பொறியின் விரிவாக்கம் என்பது எல்லோரும் ஏற்றுக்கொண்ட ஒரு கூற்று.
உதயகுமார் சில கதைகளைத் தொடக்கி, அக்கதைகளின் மையப் பிரச் சினையை, அக்கதைகளின் மையப் பாத் திரத்தை விட்டு வேறு பிரச்சினைக்கு, வேறு ஒரு பாத்திரத்திற்குத் தாவி விடுதல், அக்கதைகளின் உருவச் செழுமையைக் கெடுத்து விடுகிறது.
அடுத்து இவரது சில கதைகளில் சில பாத்திரங்களின் பிரசன்னம் அல்லது இருப்பு சொல்லப்படும் கதையோடு எந்த விதத்திலும் தேவையற்றதாகவும் இருக் கின்றன. உதாராணமாக, இன்றைய பல்வேறு வளர்ச்சிக்கும் மத்தியிலும், பல் வேறு பிரச்சினைகளுக்குப் பின்னும், யாழ்ப்பாண சமூக அமைப்பில் சாதிய உணர்வு அழியவில்லை என்ற கருத்தை சிறப்பான முறையில் சொல்லும் இத் தொகுப்பின் சிறந்த கதைகளில் ஒன் றான “புதியதல்லவே” எனும் கதையைச் சொல்லும் பாத்திரத்தின் தேவை அக் கதையில் எதற்கு எனத் தெரியவில்லை.
எனும் கதையின் முடிவு வரியில் "இந்தக் கொடும் சமூகத்திலிருந்து தப்பி விட்டாள்
என்று மட்டும் என் மனம் நினைக்கிறது.” இக்கதையில் இந்த "என்’னின் தேவை என்னவாக இருந்தது என்ற கேள்வியும் வாசகர் மனதில் எழுகிறது. அதே வேளை, தன்னிலை நின்று சொல்லப் படும் கதைகளில் அந்த தன்னிலை இல்லாத இடத்தில் நிகழ்வுகின்ற நிகழ்வு களை எழுதிச் செல்வது கதை சொல் லும் முறையின் தவறாகத் தெரிகிறது.
உதாரணமாக "கதை கட்டுதல்” என்ற கதையை கபிலன் என்ற மாண வன் தன்னிலை நின்று சொல்ல, அவன் இல்லாத வேளை இரு ஆசிரியர்கள் சம்பாவழிக்கும் காட்சி இடம்பெறுகிறது. இது எப்படி? மேலும், சில கதைகளின் முடிவுகள் மூலம் அக்கதைகள் தாக்க பூர்வமான எந்தவொரு செய்தியினையும் சொல்லாமல் முடிந்து விடுகின்றன. உதாரணமாக "கடைசி பஸ்", "மலர் விழியாள்' ஆகிய கதைகளைக் குறிப் பாகச் சொல்லலாம். ஒரு நல்ல இலக் கியப் படைப்பு முடிந்த பின்னும் மனதில் ஒடிக்கொண்டிருக்க வேண்டும் என்று சொல்வார்கள். இக்கருத்தை உதய குமார் தனது எதிர்காலச் சிறந்த எழுத்துக்காக மனதில் இருத்திக் கொள்வது நல்லது.
பெண்ணினம் அதன் இருப்பை, சமூ கத்தில் அது எதிர்கொள்ளும் இன்னல் களை, போர் சூழலானாலுமென்ன, சாதா ரண நிலையானாலுமென்ன, அவ்வினம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றி பல கதைகளை எழுதி இருக்கிறார். பெண்ணிய அக்கறையுடன் பெண் களைப் பற்றி எழுதவரும் ஆண் படைப் பாளிகள் ஆனாலுமென்ன, பெண் படைப் பாளிகள் ஆனாலுமென்ன, அவர்களின் அப்படைப்புகளில் ஆணிய மொழியாடல்
மல்லிகை செப்டெம்பர் 2011 & 61

Page 33
இடம்பெற்று விடாது கவனித்துக் கொள்ள வேண்டும்.
உதயகுமாரும் அத்தகைய கதை களில், அவ்வாறான ஒரு கவனத்தை செலுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறான கதைகளில் அவர் ஆணிய பார்வையுடனான மொழியைக் கை யாண்டு இருக்கிறார். குறிப்பாகப் பெண் கதாபாத்திரங்களைப் பற்றிய வர்ணனை களில், அவர் தம் உடல் வெளி பற்றி ஆணிய பார்வையுடன் கூடிய (பெண் உடல் வெளியை ஒரு போகப் பொரு ளாக ரசிக்கும் பார்வை) மொழியை அவர் பயன்படுத்தி இருப்பது, அக்கதை களில் பெண்ணினம் மீது அவர் கொண் டிருக்கும் அக்கறைக்கு எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் நிலையை தோற்றுவித்து விடுகிறது.
உதாரணத்திற்கு "மலர் விழியாள்” எனும் கதையை எடுத்துக்கொண்டால் அதுவொரு தாய்க்கும் மகளுக்கும் இடை யிலான உறவைப் பற்றிய கதை. ஆனால் அக்கதையின் நடை ஒரு கிளர்ச்சி ஊட் டும் வகையில் அமைக்கப்பட்டதோடு, இறுதிவரை அக்கதை தாய்க்கும் மகளுக் கும் இடையிலான கதை என்று தெரிந்து விடக்கூடாது என்ற ஒரு சஸ்பென்ஸ"டன், அது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான கதை என்ற உணர்வை ஏற்படுத்தி இருப்பது, அது ஆணிய மொழி நோக்குடன் எழுதப்பட்ட கதையாக அதனை மாற்றி விடுகிறது. ஆனால், இத் தொகுப்பில் அமைந்துள்ள அவரது முத லாவது கதையான “சலனங்கள்” (இந்த கதைக்குதான் “கதை கட்டுதல்” எனப் பெயரிட்டு இருக்க வேண்டும்) மற்றும் "சுயநலம்” ஆகிய இரு கதைகளைப் பொறுத்தவரை, அத்தகைய மொழி கை யாளப்படாது மிக பொறுப்புடன்
(சலனங்கள் என்ற கதையில் சஸ்பென்ஸ் கையாளப்பட்டாலும், அது சொல்ல வந்த விடயத்தை களங்கப்படுத்தி விட வில்லை.) சுயநலம் கதையில் வடபுலத்து சமூகம் எதிர்கொண்ட இடப்பெயர்வு, புலப் பெயர்வு நிலைகளின் ஊடாக, அச்சமூ கத்து பெண்கள் மீதான பாலியல் ரீதி uJT60T Gg5T6b606) (Sexual arrestment) பற்றி பேச முனைந்தாலும், எந்த விதத் திலும் அக்கதையில் பெண் சார்ந்த ஆணிய பார்வையுடனான எந்தவொரு சொல்லாடலும் இடம்பெறவில்லை என்பது பாராட்டத்தக்கது.
இனி இத்தொகுப்பில் இடம்பெற் றுள்ள சிறந்த கதைகள் இக்குறிப்பில் ஏலவே சொல்லப்பட்ட சலனங்கள், சுய நலம், புதியதல்லவே ஆகிய கதைகள் போக, அடுத்து இத்தொகுப்பின் சிறந்த கதைகள் என நான் இனங்கண்ட கதை களைப் பற்றி இங்கு விசேடமாய் பேச வேண்டும். மாற்றங்கள், செந்நீரும் கண்ணிரும், சன்னங்கள் துரத்துகின்றன, மனிதன்! நாய் முட்கம்பிக் கூடு ஆகிய கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்ற மிக சிறந்த கதைகளாக எனக்குப் பட்டன. உருவச் செழுமையிலும் சிறப் பான முறையில் அமைந்திருப்பதுடன், அக்கதைகள் முடிந்த பின்னும் மனதில் ஒடிக்கொண்டிருப்பவை. அக்கதைகளின் முடிவுகள் கூட மனசில் ஒரு துயர நிலையை, மனிதநேய உணர்வின் தேவையை உணர்த்திச் செல்லக் கூடி யவை. அந்த வரிசையில் மாற்றங்கள் என்ற கதையைப் பற்றிச் சொல்வதென் றால், இக்குறிப்பின் ஆரம்பப் பகுதியில் நாம் குறிப்பிட்ட உதயகுமாரின் சில கதைகளின் உருவச் செழுமை குலைந்து போவதற்கான காரணங்களில் ஒன்றான, மையப் பாத்திரம், மற்றும் மையக் கரு ஆகியவற்றிலிருந்து விலகிச் செல்லுதல்
மல்லிகை செப்டெம்பர் 2011 தீ 62

என்ற தன்மை, இக்கதையிலும் வெளிப் பட்டாலும் அத்தன்மை இக்கதையில் ஓர் உத்தியாக பயன்பட்டிருப்பதன் மூலம், அக்கதையின் உருவச் செழுமைக்கு குந் தகம் விளைவிக்காது, அக்கதை சொல் லும் செய்தி வாசகனின் மனதில் ஆழ மாகப் பதிவதற்கு உதவியிருக்கிறது.
தில் அரச ஊழியர்களின் அதிகார நடத்தை பற்றி பேசுகின்ற அதேநேரம், வடபுலத்தில் நிலை கொண்ட இராணுவத் தினரிலும் மனித நேயமிக்கவர்கள் இருந் துள்ளார்கள் என்பதை மிகச் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறார்.
அடுத்து, இத்தொகுப்பின் தலைப்புக் கதையான செந்நீரும் கண்ணிரும் கதை இறுதிப் போரின் பொழுது, அப்போரின் கோரத்தால் பாதிக்கப்பட்ட அகதி முகா மில் அடைக்கப்பட்ட தம் செல்வ மகளை நினைத்து துயர் கொள்ளும் ஒரு பெற் றோரின் மனோநிலையை சித்திரிக்கிறது. அக்கதையில் பனைமரம், வடபுலத்து மக் கள் வேரோடு பிடிங்கி அவலத்திற்கு ஒரு குறியீடாக காட்டப்படுகிறது. அடுத்து சன்னங்கள் துரத்துகின்றன, மனிதன்! நாய்! முட்கம்பிக் கூடு ஆகிய கதைகள், இறுதிப் போரின் போது வடபுலத்து மக்கள் எதிர்கொண்ட அவலத்தின் நேரடி சித்தரிப்பாக அமைகின்றன. இக்கதைகள் பற்றி பேசும் பொழுது, செப்டம்பர் 11 அமெரிக்காவின் இரட்டை கோபுரங்களின் தாக்குதலை தொலைக்காட்சி ஊடகங் களில் பார்க்கக் கிடைத்தபொழுது, அக்காட்சிகள் மரணங்களின் நேர்முக வர்ணனையாகப் பார்த்த யுகத்தில் வாழ்ந்ததற்காக நாம் வெட்கத்தால் தலை குனிய வேண்டும் என எழுதப்பட்ட கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது. ஆனாலும் இறுதிப் போரின் பொழுதும் சரி கடந்தபோன போர் சூழலிலும் சரி
இலங்கையின் வட-கிழக்கு மக்கள் மனித மரணங்களை நேருக்கு நேராகப் பார்க்க கிடைத்த அந்த அவலத்தை எந்த வார்த் தைகளில் சொல்வது என்ற கேள்வி யையும் உதயகுமாரின் இந்த மூன்று கதைகளும் எழுப்பி விடுகின்றன.
அத்தகைய கோர அனுபவங்களை பேசுகின்ற இலக்கியங்கள் போருக்குப் 660TT60T us556) (Post War Period) வந்து கொண்டிருக்கின்றன. அந்த அவ லங்களை மீண்டும் மீண்டும் எழுதுவத னால் என்ன பயன்? என்று கேட்போரும் உண்டு. ஆனால் கடந்து போன அந்தக் கோரங்களை, அவலங்களைப் பற்றிய செய்திகள், போய் சேர வேண்டியவர் களுக்கு போய் சேரவேண்டும். அதன் மூலம் எதிர்காலத்தில் இலங்கையில் எந்தவொரு மனித உயிரும் அநியாமாக, கோராமாக போகக் கூடாது என்ற உணர் வையும், மனித நேயத்தையும் ஏற்படுத்த வும், புரிந்துணர்வு ஏற்படவும் இத்தகைய படைப்புகள் உதவும் என்பதே என் கணிப்பு.
(BJT(bäg5 î6ði6OTT60T (Post War) ஈழத்து இலக்கிய படைப்புலகம் பேசிக் கொண்டிருக்கும், பேசவேண்டிய உள்ள டக்கங்களைப் பேசியிருக்கின்றன என்ற வகையில் உதயகுமாரின் மேற்குறித்த கதைகள் சிறந்த இலக்கிய ஆவணங் களாக நமக்கு கிடைத்திருக்கின்றன.
இந்த ஆக்கங்களே சமரபாகு. சீனா. உதயகுமார் என்ற இளைய படைப்பாளி யைச் சிறப்பாக அடையாளப்படுத்திக் கொள்வதற்கு உதவும் முக்கிய படைப்பு களாகக் கருதப்படும் என்பதே என் கணிப்பு. அத்தகைய படைப்புகளை கொணி டிருப்பதே சமரபாகு. சீனா. உதயகுமாரின் "செந்நீரும் கண்ணிரும்” எனும் இச்சிறுகதைத் தொகுப்பின் சிறப் பாகும்.
மல்லிகை செப்டெம்பர் 2011 & 63

Page 34
இரவு நேர விரிந்த வானம், தெட்டத் தெளிவாகக் காட்சியளிக்கப் பெளர்ணமி நிலவு பாற்கிரணங்களைப் பகிர்ந்தளித்துக் கொண்டிருந்தது. வானில் ஆங்காங்கே நட்சத்திரங்களும் மின்னி மினுங்கிக் கொண்டிருக்க, இரவு ஒரு நட்சத்திரம் மட்டும் மினுங்கியவாறே, நான் இயற்கை நட்சத்திரமல்ல, செயற்கைக் கோள் எனப் பறைசாற்றியவாறே வானில் பவனி வந்துகொண்டிருந்தது.
இராப்பொழுதில் அப்பர் சைட் தேயிலை தோட்டம் எங்கும் அமைதி குடி கொண்டிருந்தது. இன்றுடன் கடந்துபோன ஐந்து நாட்களிலும் பங்குனி உத்தரத் திருவிழா இங்கு கோலாகலமாக நடைபெற்று நிறைவெய்தி இருந்தது. அன்ன தானம், தேர் பவனி திருவிழா, தீமிதிப்பு நிகழ்வுகள், இறுதிநாளில் மஞ்சள் நீராட்டு, கரகம் சூடிவிடுதல் என்பன ஜாம் ஜாம் என்று நடந்து நிறைவெய்தி யிருந்தது. இந்நிகழ்வுகளால் அப்பர் சைட் தேயிலைத் தோட்ட மக்களிடையே மனமகிழ்ச்சி பொங்கிப் பிரவாகித் திருந்தது.
அத்தோட்டத்தின் ஐந்தாம் நம்பர் 1 லயத்தின் (பிரிட்டிஷ்காரர்கள் இரவில் கட்டிக்கொடுத்த தொழிலாளர் குடியிருப்புகள்) முதல் காம்பிராவில்,
“என்ன மச்சா. ஏழர மணி d யாச்சி. வா கெழம்புவோ.” ரவி அவசரப்படுத்தினான்.
O O
“கொஞ்சம் இரு. ஒரு பெக் 西西Lü நாடகம எடுத்துக்கிறே. இல்லனா இந்த கூதல சமாளிக்கவே ஏழாது.” என்றபடி மு.சத்தியராஜா பரமசிவம் சாராயம் நிரம்பியிருந்த கிளாசை வாயில் வைத்து அண்ணாந்தபடி மடக் மடக் எனக் குடித்து முடித்துவிட்டு, கொஞ்சம் மிக்ஷர் கடலையை வாயினுள் போட்டுக்கொண்டு எழும்பினான்.
"ஆ. வேலுச்சாமியும் வந்துட்டான்' ரவி சந்தோஷமாகக் கூறினான்.
"பரமு அண்ணே இப்ப ஒவ்வொரு லயமா சுத்தினாத்தா பத்து மணிக்கு முன்னுக்கு இஸ்டேட்ல பாதி லயங்களயாவது முடிச்சிடலாம்.” வேலுச்சாமி நிலைமையை விளக்கினான்.
ké
ஆமா. அதுவு சரிதான்.” பரமசிவம் சிவப்புநிற கார்ட்போர்ட் பைலை எடுத்துக் கொண்டான்.
மஞ்சள் நிலவின் பாற்கிரணங்களுடைய உதவியுடன் கரடுமுரடான, வளைந்து நெளிந்து செல்லும் அந்த தோட்டத்து மண்பாதையின் ஊடாக மூவரும் முதலாம் மல்லிகை செப்டெம்பர் 2011 & 64
 
 
 
 
 
 
 
 

நம்பர் லயத்தை நோக்கி நடக்கத் தொடங்கினர்.
டத்தைச் சேர்ந்தவர்கள். ஒழுங்காக வேலைக்குச் செல்லாமல் பொழுதைப் போக்கி உழைப்பின் மீது நம்பிக்கை யற்று ஊதாரித்தனமாக வாழ்பவர்கள். ரவியின் மச்சான் பரமசிவம் வேறு மாவட்டத்தின் தோட்டப்பகுதி ஒன்றை சேர்ந்தவன். இவனும் ஒரு ஊதாரித் தனமான சோம்பேறிதான்.
கடந்த வாரம் ரவி விட்டிற்கு வந்த பரமசிவம் இது திருவிழாக் காலம். தோட்டத் தொழிலாளர்களிடம் பணம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். எனவே தன்னுடைய மூன்று வயது குழந்தைக்குச் சத்திர சிகிச்சை செய்ய
உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் என்று பொய் சொல்லி, அப்பாவித் தோட்ட தொழிலாளர்களை ஏமாற்றிப் பணம் பறித்து, கிடைக்கும் பணத்தை நமக்குள் பிரித்து எடுத்துக் கொள்ள லாம் எனத் தன் கபட எண்ணத்தைத் தெரிவித்தான். ரவியும் இதற்கு உடன் பட்டு வேலுச்சாமியையும் கூட்டுச் சேர்த்தான். இந்த நோக்கத்தை நிறை வேற்றவே இக்கூட்டணி, முதலாம் நம்பர் லயத்தை நோக்கி தற்போது செல்கின்றது.
முதலாம் நம்பர் லயத்தின் முதல்
'அம்மா. அம்மா...' ரவி அழைத்தான்.
"யாரது.? ஆ. ரவி தம்பியா.”
கேட்டுக்கொண்டே உள்ளேயிருந்து
இளம் பெண் ஒருத்தி வெளியே வந்தாள்.
'அக்கா. ஏ. பபா (குழந்தை) ரொம்ப சுகமில்லாம போயி கண்டி பெரியாஸ் பத்திரீல இருக்குங்க. சொகப்படுத்த புள்ளக்கி ஒப்பரேஷன் செய்யனு. அதுக்கு அஞ்சு லச்ச ரூபா தேவனூ டக்டரு சொல்லிட்டாரு. அதுக்காக நீங்கதான் ஒரு ஒதவி செய்யனுங்க.." என்று பரமசிவம் அழு வது போல பாசாங்கு காட்டினான்.
அவனிடமிருந்த சிவப்பு நிற பைலை வாங்கிய ரவி அதனை திறந்தபடி, "இந்தா பாருங்க அக்கா! அந்த பபாவோட படோம்.” என்றான். உள்ளே ஒரு புகைப்படம். குழந்தை ஒன்று சிரித்தபடி அதிலிருந்தது.
"அய்யோ. அழகான புள்ள.” அந்தப் பெண்ணின் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வர, அந்தப் g) G)6) வாங்கினாள்.
“பாருங்க அக்கா; நம்ப தோட்
குடுத்திருக்காரு.." என முன் மொழிவு செய்தான், வேலுச்சாமி. பைலின் உள்ளே வெள்ளை நிறத் தானில் அத் தோட்டத்து கோயில் தர்ம கர்த்தாவின் பெயரும் பக்கத்தில் ஆயிரம் ரூபா தொகையும் எழுதப்பட்டு கையொப்ப மும் இடப்பட்டிருந்தது.
இதனைக் கண்ட அந்தப் பெண் இவர்களின் பேச்சை நம்பி உள்ளே சென்று நூறு ரூபாய்த் தாளை எடுத்து வந்து ரவியிடம் கொடுத்துப் பெயரைப் பதிவு செய்தாள்.
“கவலபடாம போங்க தம்பி.
மல்லிகை செப்டெம்பர் 2011 奉 65

Page 35
பபாவுக்கு நல்லா போயிரும்.” என்று பாசத்தைக் கொட்டினாள், அந்த இளம் பெண்.
முதல் திருட்டே திருப்தியாக இருந்ததினால், அம்மூவரும் குதூகல மாக அடுத்த வீட்டை நோக்கி நகர்ந்தனர்.
இவ்வாறாக முதலாம் நம்பர் லயத் திலுள்ள இருபது வீடுகளிலும் நிதி திரட்டல் அமோகமாக நடந்தேறி முடிந் தது. இப்போது இரண்டாம் நம்பர் லயத்திற்கு செல்லும் பாதையில் உள்ள சவுக்கு மரத்தின் கீழுள்ள பெரிய கற் களின் மீது மூவரும் அமர்ந்தனர்.
"அப்பாடா. ஒரு ரெண்டாயிரம் மாதிரி கெடச்சிருக்கு” ரவி உள்ளம் பூரித்தான்.
《焰
ம். பரவாயில்ல. அந்த பீடிய எடு.”
என்றான் பரமசிவம்.
மூவரும் பீடியை பற்ற வைத்து ஊதித் தள்ளினார்கள். பீடிப் புகை வெந்நிறத்துடன் வளைய வளையமாக மேல் நோக்கி சென்றுகொண்டிருக்க எங்கும் மயான அமைதி குடிகொண்டி ருந்தது.
பீடி எரிந்து முடிந்த கையோடு மூவரும் இரண்டாம் நம்பர் லயத்தை நோக்கி நடந்தனர். குளிர் முன்பை விடத் தற்போது அதிகமாக இருந்தது.
இரண்டாம் நம்பர் லயத்தின் முதல் வீடு.
"அக்கா. அக்கா.”
கொடுத்தான்.
ரவி குரல்
"யாரது..? என்ன விசயம்?” என்று கேட்டவாறே உயர்தரம் படிக்கும் கணேசன் இஸ்தோப்புக்கு வந்தான்.
உடனே பரமசிவம் குழந்தைக்கு சுகமில்லை என்ற பழைய பல்லவியைப் பாடினான். கணேசன் ஆச்சரியத்துடன் அந்த பைலைப் பார்த்தான். பின்னர் இலேசான புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டு,
"அண்ணே. நா நாளைக்கு கட்டாயம் இருநூறு ரூபா தாறே. இப்பனா இல்ல. நாளைக்கு வாங்க." கணேசன் கனிவாகக் கூறினான். மூவரும் அடுத்த வீட்டை நோக்கி
நகர்ந்தனர்.
இரண்டாம் நம்பர் லயத்திலும் வசூல் ஒரளவு நன்றாகவே நடந்து முடிந்தது. மூவரும் மீண்டும் அந்த சவுக்கு மரத்தின் கீழுள்ள பெரிய கற் களில் அமர்ந்தனர். இப்போது, குளிர் மேலும் அதிகரித்திருந்தது.
"ஒம்போதர (9.30) மணியாச்சி." வேலுச்சாமி நேரத்தை ஞாபகப்படுத்தி னான்.
"அப்பாடா. இனி இந்த கூதல்ல சுத்த ஏலாது. இன்னொரு பெக் எடுத் தாத்தா சரி..” என்றான் பரமசிவம், குளிர் தாங்க முடியாமல்.
-Զենքn. வீட்டுக்கு போவோம்” என்ற ரவி கருங் கல்லிருந்து எழும்பினான்.
எனக்கு பசிக்குது. வா
அவர்கள் மூவரும் ரவியின் வீட்டை நோக்கி நடந்தனர். இரவு ஏகாந்த நிலவின் பக்கத்தில் கொஞ்சம்
மல்லிகை செப்டெம்பர் 2011 & 66

மேகங்கள் வரத்தொடங்கின.
ரவியின் வீட்டில் இரவு நேர உணவு கோழிக்கறியுடன் ரவியின் மனைவியினால் பரிமாறப்படுகிறது. அவளும் இந்தக் கூட்டுத் திருட்டுக்கு ஒத்தாசை வழங்கினாள். மூன்று கிளாஸஅகளிலும் சாராயம் நிரம்பி யிருந்தது. இரவுச் சாப்பாட்டை முடிக் கும்போது மூவரும் நல்ல பதமாகிப் போனார்கள்.
"ஏ. மச்சா. இப்ப நம்ப ஆளுங் கல ஏமாத்த முடியல. அவே அவே கேள்வி கேட்க தொடங்கிட்டாங்க.” போதையில் பரமசிவம் உண்மையை உளறினான்.
“பரமு மச்சா. நீ சொல்றதுல கொஞ்சோ உண்மை இருக்கு. ஆனாலு இன்னு ஏமாளிங்க இந்த இஸ்டேட்ல இருக்காங்கதானே. ஹீ. ஹீ. ஹி..” என்றவாறு பல்லைக் காட்டி இளித்தான், ரவி.
“ரெண்டு லயத்துலயு மூவாயிரத்தி சொச்சத்துக்கு மேல தேட முடியல.” வேலுச்சாமி போதை யிலும் கணக்கில் கவனமாக பேசினான்.
“சரி. சரி. நாளக்கி மீதி லயத் தையு ஒரு கை பார்த்துபுடலா. இப்ப படுப்போ..” என்றவாறு பரமசிவம் கட்டிலில் சாய, இவனுடைய பாரம் தாங்காமல் கட்டில் கிறீச். கிறீச். என்று சப்தம் எழுப்பியது. ரவியும், வேலுச்சாமியும் நிலத்தில் விரிந்து கிடக் கும் பாயில் சென்று படுத்துக்கொண்
let
மறுநாள் விடிந்தது.
காலை சூரியன் தன் ஒளிக்கரங்
அணைக்கத் தொடங்கியிருந்தான்.
டக் டக் டக். என்று கதவு பல மாகத் தட்டப்படும் சத்தம் கேட்டு ரவி யின் மனைவி கதவினை திறந்தாள். வெளியே அப்பர் சைட் தேயிலைத் தோட்டத்தின் கோயில் தர்மகர்த்தாவும், சில தொழிலாளர்களும் நின்றுகொண் டிருந்தார்கள்.
"எங்க அந்த திருட்டுப் பயலுக.” கோயில் தர்மகர்த்தா ஆவேசமாகக் கத்தினார்.
பயத்தில் நடுங்கியபடியே ரவியின் மனைவி ரவியை அழைக்க, சத்தம் கேட்டு வெளியே வந்த ரவியின் கன் னத்தில் ஓங்கி அறைந்தார், தர்மகர்த்தா. ரவிக்கு நேற்று குடித்த சாராயத்தின் போதை முழுதும் இறங்கியது. அவன் திக்குமுக்காடிப் போனான்.
"ஏன்டா திருட்டு பயலுகலா. ஒங்க திருட்டு வேலைக்கு நா ஆயரூவோ குடுத்தேனு சொல்லி ஆளுங்கள ஏமாத்தவா பாக்குறீங்க.” தர்மகர்த்தா மீண்டும் ஆவேசமாக கர்ஜிக்க அங்கு ஆண்களும் பெண்களு மாக ஒரு கூட்டமே கூடத் தொடங் கியது. அக்கூட்டத்தை விலக்கிக் கொண்டு கணேசன் முன்னால் வந்தான். அதேநேரம் பரமசிவமும், வேலுச்சாமியும் தாம் கையும் மெய்யு மாக பிடிக்கப்பட்டதை உணர்ந்து கொண்டு, தப்பிச் செல்ல வழியில்லா மல் வீட்டுக்கு வெளியில் வந்து, சரணா கதியாகி நின்றனர்.
தர்மகர்த்தா அவர்களை அடிப்பதற்
மல்லிகை செப்டெம்பர் 2011 & 67

Page 36
குக் கையை ஓங்கினார். கூடியிருந்த சில தொழிலாளர்கள் அவரை தடுத்து விட்டனர். மூவர் கூட்டணியும் இரவில் நடத்திய நாடகம் எப்படி வெளிச் சத்துக்கு வந்தது.
நேற்று நடந்தது என்ன?
நேற்று மூவர் கூட்டணியும் கணே சன் வீட்டுக்கு சென்று திரும்பியவுடன், இவர்களின் நடவடிக்கையில் சந்தேகம்
கொண்டான், கணேசன். காரணம்
இவர்களிடம் குழந்தைக்குச் சத்திர சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது என்ப தற்கான மருத்துவ சான்றிதழ்களோ, வேறு உறுதிப்படுத்தக்கூடிய ஆவணங் களோ அவர்களிடம் இல்லை. மேலும் அரசாங்க மருத்துவமனைகளில் சத்திர சிகிச்சை இலவசமாகவே செய்யப் படும். இவற்றை நன்கு அறிந்து கொண்ட கணேசன் உடனடியாகக் கோயில் தர்மகர்த்தாவுடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு நிலை மையை கூறினான்.
தான் இந்த நிதி திரட்டும் குழு வினருக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்க வில்லை என்றும், அவ்வாறு கூறினால் தோட்டத் தொழிலாளர்கள் இவர்களை நம்பி பணம் தருவார்கள் என்பதற்காக இவர்கள் மூவரும் போட்ட திட்டம் இதுவென்பதும், நாளை இம்மூவரை யும் கையோடு பிடிக்க வேண்டும் என்றும் தர்மகர்த்தா கணேசனுக்கு விளக்கினார்.
விடயத்தை உள்ளங்கை நெல்லிக் கனி போல விளங்கிக்கொண்ட கணேசன், அப்போதே 119 என்ற இலக் கத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பொலிஸாருக்கு நிலைமை
யைக் கூறினான்.
நேற்று கணேசன் எடுத்த இந்த அதிரடியான முடிவுகளே, மூவர் கூட் டணியின் திருட்டை இன்று இவ்வாறு அம்பலப்படுத்தியிருக்கிறது.
இன்று,
திருடன் பெண்டாட்டி என்றைக் கும் கைம்பெண் என்பது போல ரவி யின் மனைவி கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தாள். பரமசிவம், ரவி, வேலுச்சாமி ஆகியோர் என்ன செய்வ தென்று தெரியாமல், திருதிருவென்று விழித்துக் கொண்டு நின்றார்கள்.
அப்போது பொலிஸாரின் ஜீப் வண்டி ஒன்று அத்தேயிலைத் தோட் டத்தின் மண்பாதை வழியாக ஊர்ந்து வந்து, முச்சந்தியில் வந்து நின்றது. அதிலிருந்து நான்கு பொலிஸாரும், ஒரு பொலிஸ் இன்ஸ்பெக்டரும் கீழிறங்கி வந்தனர்.
கணேசனும், தர்மகர்த்தாவும், வேறு சில தோட்டத் தொழிலாளர் களும் பொலிஸ் இன்ஸ்பெக்டரிடம் சாட்சியம் அளித்ததன் பின்னர் அம் மூவரையும் பொலிஸார் கைது செய்து, ஜீப் வண்டியில் ஏற்றினார்கள்.
பொலிஸ் ஜீப் வண்டி அந்தத் தேயிலைத் தோட்டத்தின் மண்பாதை வழியாக புழுதியையும், புகையையும் ஒன்றுசேரக் கிளப்பிக்கொண்டு சென் றது. சுற்றியிருந்த தேயிலைத் தளிர்கள் தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றிய ஒரு கும்பல் பிடிக்கப்பட்ட சந்தோஷத் தில் தமக்குள் சிரித்துக்கொண்டன.
மல்லிகை செப்டெம்பர் 2011 தீ68

ஜூண்டில்
இ பேராசிரியர்எம்.ஏ.நுஃமான் உங்களைப்பற்றி ஞானம் இதழில்மிகமிக நுட்பமான அவதானிப்புடன் எழுதியிருந்த கட்டுரையின் ஆழத்தைப் புரிந்து கொண்டு, அப்படியே பிரமித்துப் போய்விட்டேன். அதே நுஃமான் கட்டுரை மல்லிகையில் வந்திருக்கக் கூடாதா? என்று என் மனது சொன்னதையும் இங்கு பதிவுசெய்து கொள்ளுகின்றேன்.
அநுராதபுரம் வளிம் அக்ரம்
* கவிஞரின் அந்த ஞானம் கட்டுரையைப் படித்துப் பாரித்தபொழுது, மெய்யாகவே நெஞ்சு சிலிர்த்துப் போய்விட்டேன். வெகு ஆழமாகவும், வெகு வெகு நுட்பமாகவும் நுஃமான் அவர்கள் அக்கட்டாையை எழுதியுள்ளார். என்னைப் பற்றியதான வெகு நுட்பமான கவனிப்புக் கட்டுரையை மல்லிகையில் வெளியிடுவது சரியான இலக்கிய அணுகுமுறையல்ல என்பதே எனது கருத்தாகும்.
இந்தக் கவனிப்பையும், அணுகுமுறையையும் வாசித்துப் பாரித்தபோது, நான் இன்னு மின்னும் என்னை செழுமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம்தான் எனது அடி நெஞ்சில் வேரோடியது. குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டும்பட வேண்டும் எனச் சொல்வாரிகள். பாராட்டப்பட்டாலும் தகுதியானவரிகளின் கணிப்புத்தான் வரலாற்றில் பதிவு செய்யப்படும்.
O O O
இ கண்டி மாநகரில் 1961ம் ஆண்டு நடைபெற்ற சாஹித்திய விழாவில் அன்றைய பிரதமர் ருரீமாவோ அவர்களது கைகளால் முதன் முதலில் படைப்பு இலக்கியத்திற்கான பரிசைப் வயற்றுக்கொண்டீர்கள். அந்த மகிழ்ச்சிக்கீடான ஒரு சந்தோஷத்தைச் சமீபத்தில் நீங்கள் பெற்றுக் கொண்ட சம்பவத்தை என்னைப் போன்ற இலக்கிய இரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?
கண்டி எம். சரவணன்
மல்லிகை செப்டெம்பர் 2011 & 69

Page 37
* மகனுக்கு முதற் குழந்தை பிறந்திருந் தது. பெண் குழந்தை. மகிழ்ச்சி நிறைவுடன் யாழ் ஆஸ்பத்திரிக்கு ஒரு பகல் விரைந்து சென்றிருந்தேன். குழந்தையைத் தூக்கி வந்து காட்டிய மருத்துவத் தாதி, “தாய்க்கு அருத்ததாக உங்களுக்குத்தான் குழந்தை யைக் காட்டுகின்றேன். காரணம், உங்களை முன்னரே எனக்குத் தெரியும்’ என்று புன் முறுவல் பூத்தாள். சின்ன மூக்கு, சின்ன உதடுகள். குழந்தை கைகால்களை உதைத்த வண்ணம் சிணுங்கியது.
தர்ஷனா என்ற அக்குழந்தை வளர்ந் தது, படித்தது. தாத்தா என அன்பொழுகக் கடப்பிட்டு, மலர்ந்தது. கட்டம் கட்பமாக அக் குழந்தையை அவதானித்து வந்தேன். வித்தி யாசமான அறிவு வளத்துடன் வளர்ந்து, 9 uff LIzfüIIööTö soibrLábrDIödöft 6löFájrgDI படித்து முடித்துவிட்டு, தாய்நாடு திரும்பி யதும், அன்று பின்னேறும் அவளைச் சந்தித் தேன். மனசு பூரித்தது. “தாத்தா நான் உழைத்த என்னுடைய முதற் சம்பளத்தில் நான் மிச்சம் பிடிசீசு உங்களுக்காக வைதி திருந்த பணம் இது. இந்தாருங்கோ. இதை பத்திரமாக வைசிசுக்கொண்டு வேண்டியதை வாங்குங்கோ’ எனத் தந்தாள், எனது பேத்தி தர்ஷனா.
வமரியாகவே மனந்திறந்து சொல்லுகின் றேன். அன்று பிரதமரிடம் நான் பெற்ற 66oââulfü Liflörâğ Fdb(BaTLITö 6Tör (3LI65 எனக்குத் தந்த பணத்தைக் கைநீட்டி வாங் கும் போது, எனது சரிவாங்கமுமே ஒரு கணம் சந்தோஷத்தால் பூரித்துபுேல்லரித்து விம்மித் தணிந்தது.
- ob D600066r Dff என்றுமே மறக்க முடியாததொன்று.
- இதில் ஒரு நுட்பதி தகவலைக் கவனிக்க வேண்டும். ஒரு குழந்தை பிறந்து, வளர்ந்து, சர்வதேசம் சென்று உயர் கல்வி யைப் பூர்த்தி செய்துகொண்கு, ஊர் திரும் பிய காலகட்டத்திலும் இந்த மண்ணில் ஓர் இலக்கியச் சிற்றேரு வாழ்ந்துகொண்டு வந்திருக்கின்றது. இது ஒரு வரலாறு.
O. O. O
& எழுத்தாளர்கள் கொஞ்சப் பேர் இருக்கினம். வாய் கிழிய ஈழத்து இலக்கிய வளர்ச்சி, முன்னேற்றம், வரலாறு எனப் பேசித் திரிவினம். ஆனால், சகோதர எழுத்தாளர்கள் பல கஷ்ட நஷ்டங்களுக்கு மத்தியில் புத்தகங்களை வெளியிட்டு, அதற் கொரு வெளியீட்டு விழாவும் வைத் தால், புத்தகம் வாங்கக்கூட வேண் டாம், அந்தப்பக்கம் தலை வைத்துக் கூடப் படுக்க மாட்டார்கள். இவர் களினது இலக்கிய உபதேசத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
வெள்ளவத்தை ஆர்.ராமேஸ்வரன்
* உங்களுக்கு ஒரு கதை சொல்லட்டுமா? விழா அழைப்புகளுக்கு பொல்லு கொருத்து அனுப்பி வைத்த உடையார் கதைதான்
அது.
ஊரிலே செல்வாக்குள்ளவரி, அந்த ஊர் உடையார். எந்த நிகழ்ச்சிக்கு விரு தேடி வந்து அழைப்புக் கொருத்தாலும் அது TITT5 இருந்தாலும் நேரிலே போகமாட் பார்.அவரதுபாம்பரைக்குமதிப்புக் குறைச்ச லாம்.
பதிலாக தான் பாவிக்கும் கைப் பொல்லை அனுப்பி வைப்பாராம். கைத்தடி
மல்லிகை செப்டெம்பர் 2011 * 70

அங்கு ஒரு நாற்காலியில் வைக்கப்பட்டி ருக்குமாம். கடைசிக் காலத்தில் அவரி வின் ணுலகம் சென்றுவிப்பார். அவரது விருவளவு முழுவதும் கைத்தடிகள்தான் கண்ட மாதிரிசி
SðárGospuu för GoðdöCLöf6óð ©ÍLIguIT6Br வரிகள் தங்கள் தங்களது மணக்குரோதங் களையும், வெபிராயரிங்களையும் காட்டித் தங்களை உயர்வுப்பருத்திக் காட்ட முற் IILoIIfð.
உடையாருக்கு பொல்லாவது வந்து குவிந்தன. இவரிகளுக்கோ இவர்களது வீடு வெறிச்சோடித்தான் கடைசியில் காட்சிதரும். ஒரு குஞ்சு குருவிமான் கடட எட்டியே பாரிக்காது
O O. O.
* தமிழ்நாட்டார் பலர் திடீரெனப் பல கோணங்களில் நமது நாட்டுத் தமிழர்களுக்காக அடிக்கடி கண்ணிர் விட்டுப் பத்திரிகைகளில் தமது பெயரைப் பதிவு செய்து வருகின்ற னரே, என்ன காரணமாயிருக்கும்?
ஜாஎல எஸ்.தெய்வேந்திரன்
சி ஒரு புடலங்காயுமல்ல. இது நமக்காகக் கன்னி வடிக்கும் காலகட்ட8 சீசன் தத் தமது வபயரிகள் பேபியரில் இடம்பெற வேன் ருமே, அந்தச் சுய பிரபலத் திருதி. இந்த நாட்டுத் தமிழ்க் கலைஞர்களினது எழுதி தாளர்களினது படைப்புக்களைத் தெரிந் idðas Efasð örs rg Innrí Lirfaðér. ஆனால், கம்மா பந்தா காட்டி அறிக்கை விரு வாரிகள். தங்களது பெயரி அச்செழுத்தில் பரவலாக அடிபட வேண்டுமே, அதுதான் அடிப்படைக் காரணம்
- அத்துடன் சர்வதேசமெங்கும் நம்மவன் பரவி வாழுகின்றான். உலகெங்கும் தமது வியாபாரச் சந்தையை விஸ்தரிக்கும் நோக்க மும் இதற்கு பின்னால் உண்டு.
0 0 O
இ. இலக்கியம் சமூக மாற்றத்திற் கான ஒர் ஆயுதம் என்று தாங்கள் தற்போதும் நம்புகின்றீர்களா?
புலோலி புலோலியூரான்
“ŝ” r68ferFuIDITan5l 6ÐñCBIIIImgp EDITáôá6TILDáò6o, 6rf6LITIg(BD
0 0 0
& ஆரம்ப கால இலக்கிய நண்பர் களை இந்தக் காலகட்டத்தில் நீங் கள் நினைத்துப்பார்ப்பதுண்டா? கொக்குவில் ஆர். நிரஞ்சன் சி" என்னுடன் சமமாக இலக்கிய உலகில் பரிங்குகொண்டு வந்த பலf போய்ச் சேரிந்து 6ffLIT fabr. affluijs 65 6.a dranaruhi) இருந்து நண்பரி கணேசலிங்கன் கொழும்பு வந்திருந்தாரி. அவரை நேரில் சந்தித்து நெஞ்சு உருகினேன். மகன் குமரன் விட்டில் நண்பருடன் மதிய போசனம் அருந்தி, நெஞ்சு நெகிழ்ந்துருகினேன். என்னதான் சொன் னாலும், அந்தக்கால இலக்கிய நட்புக்கு ஒரு மகத்துவமான வரலாறு உண்டு என்பது உன்றையேதான்
0 0 (0.
& உங்களுக்கு வொரு வயதும் கூடும்போதும் என்ன மனநிலையை அடைகின்றீர்கள்?
புலோலி வேல் நந்தன்
மல்லிகை செப்டெம்பர் 2011 & 71

Page 38
* மரணத்தை நெருங்கிக் கொண்டிருக் கிறேன் என்பதை உணருவேன். அதற்காக நான் எந்தக் கட்டத்திலும் அச்சப்பட்டதே கிடை யாது. செய்த வேலைகளைச் செய்து முடித்து விட வேண்டுமே? என்ற மனநிலையுடன் வேலைகளையும் செய்து முடித்துவிட வேண் ரும் என்று அவசரப்பட்டு உழைப்பேன்.
0 0 O
இ, ஈழத்துஇலக்கியம் இழந்துவரும் இடைவெளிகளைக் குறித்து, உங் களது கருத்து என்ன?
கரவெட்டி க.சுகிர்தநேசன்
சி இழப்புக்கள் இயல்பாக இடம்பெறுபவை. அதற்காக நாம் குந்தியிருந்தபடி காலாதி காலமாக ஒலமிட்டு அமுதுகொண்டிருக்க முடியாது. தமிழுக்கு புதுப்பலத்தைத் தருப வரிகளையும், புதுப் பாதை காட்டுபவரிகளை யும் இனங்கண்டு உதவவேண்டும்.
O O O
& நண்பர் ஏ.ஜே.கனகரட்னாவை
நீங்கள் நினைத்துப் பார்ப்ப grair Lmr?
தெஹிவளை எஸ்.கார்த்திகேசன்
* அவருடன் வாரா வாரம் மனம் விட்டுப் பழகிய அந்த இனிமையான நாட்களை நான் அடிக்கடிநினைத்துப் பார்ப்பதுண்டு. மல்லிகை யின் வளர்ச்சியை அவர் மனதார நேசித்தார். என்னுடைய தனிப்பட்ட வளர்ச்சியிலும் கன் னும் கருத்துமாக இருந்தார். உண்மையாகச் சொல்லுகின்றேன். அவர் இத்தனை சீக்கிரத்தில் எம்மை Gifhd. மறைந்து விடுவார் எனக் கடு களவு கடநம்பவில்லை. மிகப் பெரிய இழப்பு அன்னாரது மறைவு.
0 0 O
& யாழ்ப்பாண மண்தான் உங் களை வளர்த்தெடுத்தது. மல்லிகைச் செடிக்கு ஆரம்ப காலத்தில் நீரூற்றி வளர்த்தெடுத்தது. இன்று பலகால மாக இந்த மண்ணை மறந்து கொழும்பானாக மாறிவிட்டீர்களே, இது நியாயம்தானா?
நல்லூர். எஸ்.சரவணன்
சி என்னை இந்தளவிற்கு வளர்த்தெடுத்த அந்த யாழ் மண்ணை நானெப்படி மறக்க முடியும்? வரவேண்டும். வந்து அங்கு வாழும் எனது சுற்றத்தவரிகளையும், இலக்கிய நண்பர் களையும் நேரில் பார்த்துக் கதைக்க வேண்டும் என்ற மண் ஆசை என்னிடம் நிறைய உண்டு. நிச்சயமாக வருவேன். வந்து உங்களையெல் லாம் நேரில் கண்டு கதைப்பேன் என்பதை
65taruuords offilia,6ir
& பற்பல எழுத்தாளர்கள் ஒன்று கூடும் பெருங் கூட்டத்தை விட, கருத் தொற்றுமையும், இலக்கிய ஆர்வமும் மிக்க படைப்பாளிகள் அடிக்கடி கூடி, மனந்திறந்து கதைத்து, விவாதித்து, தேநீர் அருந்திப்பின்பிரிந்துசெல்வது நல்லதல்லவா? இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?
மருதானை. எஸ்.மகேஸ்வரன்
* இதுதான் ஆரோக்கியமான இலக்கிய வளர்ச்சிக்கு உகந்த நடைமுறையாகும். முன்னர் பலகாலம் யாழ்பாணத்தில் நம்மில் பலர் கடைபிடித்த நடைமுறைத் திட்டம் இது. இதன் மூலம் பல ஆக்கபூர்வமான ஆலோசனை களைப் பெறலாம். நமக்கென்றொரு மணி மஹால் இப்போது உள்ளது. அதில் நாம் கடிக் கதைக்காைமல்லவா?
201/4, முரீகதிரேசன் வீதி, கொழும்பு 13 முகவரியில் வசிப்பவரும், மல்லிகை ஆசிரியரும், வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக, கொழும்பு விவேகானந்த மேடு, 103A, இலக்கத்திலுள்ள Lakshmi Printers துச்சகக்கில் வச்சிட்டு வெளியிடப் பெர்hmக.

曲鲁
நீங்கள் தரமான இலக்கியச் சுவைஞரா?
'மல்லிகைப்பந்தல் வெளியீடுகளைத் தொடர்ந்துபடியுங்கள் ہے نہ یہ نہ ہوY , 24 ق بھی ضاTسم سس۔
கடந்த ஆெண்டுகிளுக்கு மேலாக நம்து ைேணச் சார்ந்த படைப்பாளிகளின் பல்துறைப்பட்ட நூல்களை வெளியிட்டு வருகின்றது. மல்லிகைப் பந்தல் நிறுவனம்
மல்லிகைப்பந்தல் வெளியீடுகளை நீங்கள் வாங்கும் போது அதனது ஆதரவு மல்லிகை மாத இதழுக்கும் சுவறுகின்றது என்பதை ஆாபகத்தில் கொள்ளுங்கள்
மல்லிகைப் பந்தல் விதாலைபேசி: 232072

Page 39
Grand Upening -
3[]h Augլ
DATABASE PRINTING, BROCHURES, CAT GREETING CARDS, NAME TAGS, CD1 STICKERS, INVITATION CARDS, PROJECT
THANKING CARDS, CERTIFICATES, PLASTIC CARDS, SCRATCH
APPM (c. A
Digital Colour L.
No. 75 1/1, Sri Suma
Te: +94. 11 49 Web: Whock Co.
 
 

New Showroom Ist ZD|
ALOGUES, SOUVENIRS, BOOKMARKS, DVD COVERS, COLOURBIODATA, REPORTS, BOOK COVER, MENU CARDS,
BOOKS, POSTERS, CD STOMER, CARDS, VISITING CARDS.
CENTRE (PVT) LTD
ab & Digital Oiset Press
atissa Mawatha, Colombo - 12. 37336, -94. 117394592
E-mail: happy2002Olive.com