கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பிரவாகினி 2011.06

Page 1
* біразил
WERC
ஆனி 2011
மானிட விடுதலையின் uெ
LDனித சமுதாயத்தில் ஒடுக்கு முறைகள் அன்று தொட்டு இன்றுவரை உள்ளன. ஒடுக்குமுறைகள் பல. அவையாவன இன, மத, சாதி, வகுப்பு, பிரதேச ரீதியாக நிகழ்கின்றது. இவற்றுக்கு எதிரான போராட்டங்களும்நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.
பால் மற்றும்
நிற ஒடுக்குமுறையானது குறிப்பாக தென்னாபிரிக்கா, சிம்பாவே, ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் ஓர் வரையறுப்பினை கொண்டதாக காணப்படுகிறது. இன ஒடுக்குமுறையானது இலங்கை, அயர்லாந்து பலஸ்தீனம், பென்சியா மற்றும் காஷ்மீரில் நடைபெறுவதும் அவற்றின் அழிவுகளும் சொல்ல முடியாத துயரங்களாக உள்ளது.
ஆனால் பெண்கள் மீதான ஒடுக்குமுறை உலகம் முழுவதும் பரந்து செறிந்து காணப்படுகின்றது. இவ் ஒடுக்குமுறை ஆனது பல வடிவங்களைக் கொண்டுள்ளமை அடிப்படை சீர் வாழ்விற்கே ஓர் சவாலாக அமைந்துள்ளது. இவ்வகை ஒடுக்குமுறையிலும் பெண்கள் ஒடுக்கப்படுவது வாழ்வியல் எல்லை கடந்த கலாச்சாரமாக உள்ளது. உலகம் முழுவதும் பெண்கள் மீதான ஒடுக்கு முறைக்கு எதிரான குரல்கள் பல தன்மைகளுடன் ஒலிக்கின்றன.
உதாரணமாக ஆணாதிக்கத்திற்கு இன பெண்களின் வி ஒருபுறமும், வெள்60 கத்தாலும். இன ஒ ஒடுக்கப்படும் கறு விடுதலை போராட்ட
அமைவதை கான போலவே தென் ஆ தலித் பெண்கள் உய
ஒடுக்குமுறைக்குள்6 தலித் இன ஆண பெண்களில் தாரா செலுத்துவது மறுக்
ஆணும் பெண்ணும் நிகரென
அறிவினில் ஓங்கி இவ்வையகம்
பிரவாகினி ஆனி 2011 இதழ் 32
 

பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்
செய்தி மடல்
இதழ் 32
ண்ணிலைச் சிந்தனைகள்
வெள்ளையின எதிரான வெள்ளை டுதலைப் போராட்டம் |ளயின ஆணாதிக் டுக்குமுறையாலும் ப்பின பெண்களின்
மானது மறுபுறமாக ண்கிறோம். இதே பூசிய சமூகங்களில் ர்சாதிக்காரர்களால்
ாாகும் அதேவேளை ாதிக்கம் அச் சமூக ‘ளமாக ஆதிக்கம் கப்படாத உண்மை.
ாக் கொள்வதால் தழைக்குமாம்
-பாரதியார்
எமது சூழல் இதற்குக் விதிவிலக்கல்ல. பேரினவாதம் ஒரு புறமாக இருக்கையில் ஆணாதிக்க ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வாழ்வது என்று மாறுமோ அன்றே மானிட விடுதலை பெறும் வாய்ப்புக்கள் கிட்டும். பெண்கள் விடுதலைப் போராட்டங்கள் ஊடறுத்துச் செல்லும் சமுதாயமானது மானுட விடுதலையை வேண்டுகிறது.
மானுட விடுதலை’ பற்றி சிந்திப்பதோ, பேசுவதோ பெண்ணிய சிந்தனைகளை உள்வாங்கி நடைமுறைப் படுத்துவது ஒவ்வொரு பிறவியின் கடன் என்பதை யாவரும் உணர்தல் காலத்தின் கட்டாயமாகி
மானிடப்
விட்டது.
இந்த இதழில்.
ம்ெ லெனின் அமைச்சரவையின்
முதல் பெண் அமைச்சர் . ம்ெ கவலையும், மன அந்தர
நிலைகளை .
செங்கடலும் தணிக்கையும் . நவால் இல் சதாவி உருது மொழி கவிதை தேவதாசிகள் குலமும் . தீர்மானம் எடுப்பதில் பெண்கள் . ஃபஹீமாவின் கவிதைகள். யுத்த பூமியில் இறுதிவரை. பெண்களின் முறைப்பாடுகள்.
தமிழ் எழுத்தாளர் ஆய்வரங்கில். ம்ெ பெரியதாய்

Page 2
லெனின் அமைச்சரவையி: அலெக்சாண்டிரா கொலென்ரெய்
1872 இல் உக்கிரேனில் அலெக்சாண்டிரா கொலென்ரெய் பிறந்தார். இவர் ஆரிச் பல்கலைக்கழகத்தில் அரசியல் பொருளாதாரத்தில் பட்டம்பெற்று நாடு திரும்பியதும் ரஸ்ய சமூக ஜனநாயகக் கட்சியில் இணைந்து கொண்டார். பின்னர் லெனியின் தலைமையிலான போல்ஸ்விக் கட்சியில் இணைந்தார். சோவியத் புரட்சியில் பங்கேற்று 1917இல் புரட்சி வெற்றி பெற்ற பின்னர் லெனின் தலைமையிலான சோவியத் அமைச்சரவையில் சமூக நலன்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவரே முதல் பெண் முதலமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சராக பணியாற்றுகையில் எட்டு மணி நேர வேலை, சம சம்பளம், பிரசவ விடுமுறை, சுகாதார வசதி போன்ற உரிமைகளை ஏற்படுத்தினார்
அமைச்சராக மட்டுமன்றி நோர்வே, மெக்சிக்கோ, சுவீடன் ஆகிய நாடுகளில் சோவியத் தூதுவராகவும் கடமையாற்றி உலகின் முதலாவது பெண் தூதுவர் என்ற பெருமையைப் பெற்றார்.
15 நூல்களை எழுதியுள்ளார். இவற்றுடன் பிரசித்தி பெற்ற “சிவப்புக் காதல்” என்ற நாவலிற்கு எழுதப்பட்ட முன்னுரை இக்கால சூழலுக்கு பொருத்தப்பாடாக உள்ளது. உலகளாவிய ரீதியிலும், தமிழ் சூழலிலும் பெண்ணிலைச்சிந்தனைகள் பற்றி பேசப்பட்டு வரும் இக்காலகட்டத்தில் அலெக்சாண்டிராவின் கருத்துக்கள் தற்காலத்திலும் உயிரோட்டமாக உள்ளதை கீழ்காணும் முன்னுரையில் உணரக்கூடியதாக உள்ளது.
 

r முதல் பெண் அமைச்சர் பின் பெண்ணிலைச் சிந்தனைகள்
அந்த முன்னுரை வருமாறு:
இந்நாவல் அடிப்படையில் அறிவியல் குறித்த ஒரு ஆய்வோ அல்லது சோவியத் ரஸ்யாவில் உள்ள வாழ்வின் தரம் குறித்த ஒரு உரைச்சித்திரமோ அல்ல. இது போருக்கு பிந்தைய காலகட்டத்தில், உலக சமூகத்தில் நிலவிய பாலியல் குறித்த ஒரு மனவியல் ரீதியான ஆய்வு மட்டுமே.
இந்த ஆய்வுக்கு, எனது நாட்டைச் சூழலாகவும், எனது மக்களை கதாபாத்திரமாகவும் எடுத்துக் கொண்டுள்ளேன். ஏனெனில் எனக்கு அவர்களைப் பற்றித்தான் நன்றாகத் தெரியும். அவர்களது ஆத்மார்த்த வாழ்வு மற்றும் உணர்வுகளைக் குறித்து என்னால் உயிரோட்டத்துடன் பேச முடியும்.
இந்நாவலில் வந்துள்ள பெரும்பான்மையான பிரச்சினைகளை, வெறுமனே சோவியத் ரஸ்யாவிற்கு மட்டுமே உரியனவாகப் பார்க்க முடியாது. இது உலகளாவிய பிரச்சினை. இந்த மாதிரியான பிரச்சினைகளை ஒருவர் எந்த நாட்டில் வேண்டுமானாலும், எதிர் கொள்ளலாம். இந்த அமைதியான, மனவியல் ரீதியான உணர்வுப்பெருக்கு, தற்போதைய மாறிய பாலியல் உறவுகள் காரணமாக எழுந்துள்ளது. இதன் பரிணாமத்தை, குறிப்பாக பெண்களின் உணர்வு நிலை குறித்த மாறிய பரிணாமத்தை, தற்போதைய ஐரோப்பாவின் இளைய தலைமுறையினரிடம் தெளிவாகக் காணமுடிகிறது.
நாம் யாராவது ஒரு ஆணை, அவனது காதல் விவகாரத்தை வைத்து, எடை போடுகிறோமா? பொதுவாய் அவன் தனது பாலியல் உறவில், குறிப்பிட்ட நெகிழ்வான எல்லையைத் தாண்டாத வரைக்கும், அவனது பாலியல் வாழ்க்கையை அவனது தனிப்பட்ட விவகாரம்' எனச் சொல்லி, நாம் கண்டும் காணாமலும் விட்டு விடுகிறோம். ஆணின் குணாம்சங்கள், தனது குடும்ப அறவியலை அவன் எப்படி போற்றிப் பாதுகாக்கிறான் என்பதை வைத்து எடை போடப்படுவதில்லை. மாற்றாய் பணிபுரிவதில், அவனுக்கு உள்ள திறமை, அவனது அறிவு, அவனது திடம், சமூகத்திற்கும் அரசுக்கும் அவனது பயன்பாடு போன்றவற்றை வைத்து நிர்ணயிக்கப்படுகிறது. பெண்களைப் பொறுத்தவரை, சமூகத்திற்கும் அரசுக்கும் பெண்கள் செய்ய வேண்டிய நேரடியான கடமை என்று எதுவும் இல்லை. அவர்களது ஒட்டுமொத்த செயல்பாடும், குடும்ப எல்லைக்குள்ளேயே முடக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆகவே நாகரீகம் அடைந்த நாடுகளில் கூட, குடும்ப மற்றும் பாலியல் உறவுகளில் பெண் தான் ஆற்ற வேண்டிய சிறந்த அறவியலை வெளிப்படுத்தினால் போதும் என எதிர்பார்க்கிறது.
இன்று பெரும்பான்மையான நாடுகளில் உள்ள பெண்களில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஆண்களைப் போலவே உழைக்கிறார்கள், போராடுகிறார்கள். சமூகமும் அப்படிப்பட்ட பெண்களிடமிருந்து பல தேவைகளைக் கோரி நிற்கின்றது. பொதுவாகவே தற்போதைய சமூகத்தில், ஒரு
பிரவாகினி ஆனி 2011 இதழ் 32

Page 3
நாட்டின் குடிமக்கள், குடும்ப அறவியலில் கறை படியாமல் சிறந்தவராய் விளங்குதல் என்பதைக் காட்டிலும், தங்கள் சமூகக் கடமைக்கு ஈடுகொடுத்து நின்று விளங்குதல் என்பதுதான் முக்கியம் எனக் கருதப்பட்டு, அதற்குத்தான் அதிக மரியாதையும், முக்கியத்துவமும் தரப்படுகிறது. இன்றைய பெண்ணுக்கு குடும்ப வாழ்க்கை மட்டுமே செயல்பாட்டுக்கான தளம் என்று சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இருந்தாலும், அவளது சமூகக் கடமையின் காரணமாகவும், வீட்டை விட்டு வெளியே வந்து அவள் செய்யும் பணியின் காரணமாயும், அவள் தனது குடும்ப பொறுப்புகளை ஒருங்கே நிறைவேற்றுவதில், பெரும் துயரை எதிர்கொள்கிறாள் என்பதுதான் உண்மை. ஆகவே ஒரு பெண்ணை எப்படி எடைபோடுவது என்பதில், நாம் தாத்தாக்கள் பாட்டிகள் காலத்தில் உள்ளது போல் இல்லாமல், தற்போதைய வேறுபாட்டுடன் இருக்கிறோம்.
ஒரு பெண் தற்போதைய முதலாளித்துவ அமைப்பு நிர்ணயித்துள்ள குடும்ப அறவியலைச் சரியாக நிறைவேற்றி, சிறந்தவள் என மதிக்கப்படுகிறாள் என வைத்துக் கொள்வோம். அதற்காக அவளுக்குச் சமூகத்தில் இருந்து உண்மையான பாராட்டுதலோ, அல்லது அரசிடம் இருந்து தகுந்த மரியாதையோ கிடைப்பது கிடையாது. உண்மையில் அனைவரும் அவளை அப்படியே கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறார்கள். ஆனால் அதற்கு மாறாய், வேறொரு பெண் அரசியலிலோ, கலை மற்றும் அறிவியல் போன்ற எது ஒன்றிலோ வித்தகராய் இருந்தால், தற்போதைய முதலாளித்துவ பாலியல் அறவியல்படி, அவளை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாதவளாய் இருந்தாலும், அவளை அவ்வளவு எளிதில் உதறிவிட முடியாது. சொல்லப் போனால், யாருக்கும் அந்த மாதிரி பெண்ணின் முதுகுப்புறத்தில் இருந்து முணுமுணுக்கக் கூட தைரியம் இருக்காது.
இந்த இரண்டுவகையான பெண்களையும் எப்படி நாம் சமன்படுத்துவது? முதல் பெண் நாட்டுக்கோ அல்ல சமுதாயத்தில் எந்த உருப்படியான பங்களிப்பைச்
FSN
goucouuuuiz, Ivour BišJђеuЈоuge
Personality and Social Psychology 6T6irp Spj6).j60Th G66d மன அந்தரங்கங்களையும் ஏற்படுத்தும் நிலைகளில் உள்ளவர்க முன்வருகின்றனர் என ஆய்வு சுட்டிக்காட்டுகின்றது. இந்நிலைன் * கணிதம் போன்ற சிக்கலான பிரச்சினைகளை தீர்க்கும் பே * தனது சொந்த வாழ்க்கையில் இக்கட்டான நிலை ஏற்படும் * ஒரு நிலையற்ற தொடர்பு சார்பாக சிந்திக்கும் போது.
எல்லா ஆய்வுகளிலும் இம் மனநிலைக்கு உட்பட்டவர்கள் க காணப்பட்டனர். சாதாரண நிலைகளில் உள்ளவர்களைவிட இவ
சமய ஆர்வம் கொண்டவர்கள் நாளாந்த வாழ்க்கையில் தங்க காணப்படுவதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றது.
பிரவாகினி ஆனி 2011 இதழ் 32

செய்யாவிட்டாலும், குடும்ப அறவியலை பேணிக்காப்பவள். அடுத்தவள் நடத்தை கண்டனத்திற்கு உள்ளானது என்றாலும், அவள் மிகச்சிறந்த சமூக ஊழியை. நிச்சயமாக இரண்டாவது பெண்ணே சமூக மரியாதையைப் பெறுகிறாள்.
பாலியல் அறவியல் சம்பந்தமான நமது கருத்து மாறிக்கொண்டே இருக்கிறது. அக்கருத்து எப்போதும் தேங்கிப்போய், அப்படியே கிடப்பது கிடையாது. மனித வரலாற்றில் அறவியல் சம்பந்தமான பரிணாமம் துரிதமாக முன்னேறிச் சென்ற காலம்தான் அதிகம். எப்போதாவது அபூர்வமாகத்தான், எல்லாத் துறைகளிலும் உள்ளது போல, அறவியல் சம்பந்தமான விடயங்கள் தேங்கிக் கிடந்திருக்கிறது.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர்தான், துமாஸ்-பிலஸ் என்பவர்,மணமுறிவு என்பது ஒரு வீழ்த்தப்பட்ட உணிரி என்று எழுதினார். ஆனால் அதற்குள் இன்றைய பிரான்ஸ், திருமணம் செய்து கொள்ளாது தாயானவளுக்கும் சம உரிமை கொடுக்க வேண்டும் என்று விவாதிக்கப்படுகிறது. பாலியல் அறவியல்கள் குறித்து தீர்மானிப்பதிலும் யோசிப்பதிலும், பழைய முதலாள்த்துவ புனைவுகளில் வீச்சு, தற்பொழுது சிறிது சிறிதாக தளர்ந்து வருகிறது.
அறவியல் சம்பந்தமான பழைய பிற்போக்குத்தனமான முதலாளித்துவ சிந்தனைகளை எதிர்த்துப் போராட இப்புத்தகம் உதவும். கூடவே பெண் எப்படி தனது குடும்ப அறவியலை நிறைவேற்றினாள் என்பதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், அவள் தனது வர்க்கத்திற்காகவும், நாட்டிற்காகவும், மனிதாபிமானத்திற்காகவும் ஆற்றும் புத்திசாலித்தனமான பணி மற்றும் திறமை ஆகியவற்றை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டு மதிக்கப்பட வேண்டும் என்பதை எடுத்துக் காட்டவும், இந்தப் புத்தகம் உதவும் என நம்புகிறேன்.
நன்றி வானவில்
-2E=-
DJ umT TO GOJLuuGurgGGIT SHğiğGúig JF vulët தள்ளப்படுகின்றனர்
யிட்ட சஞ்சிகையில் வெளியான ஆய்வின் மூலம் கவலைகளையும், ளே சமயத்திற்காகவும் நாட்டிற்காகவும் தமதுயிரை அர்ப்பணிக்க ய ஏற்படுத்தும் சூழ்நிலைகள் கீழே காணலாம். அவையாவன.
து. பொழுது.
டும் போக்கான சமய கொள்கைகளில் ஈடுபாடு உடையவர்களாக "கள் சமய கடும்போக்கு கொண்டவர்களாக உள்ளனர்.
ளுடைய குறிக்கோள்களை அடைய முடியாதவர்களிலும் இந்நிலை
Tom Chivers

Page 4
செங்கடலும் தணிக்கையும்
செங்கடல் என்ற படத்தை இயக்கியவர் லீனா மணிமேகலை கதைவசனம் ஈழத்து புலம்பெயர் எழுத்தாளரான ஷோபா சக்தி என்பவர். கதையின் கருப்பொருளானது இலங்கையில் 2009 ஆம் ஆண்டு ஏப்பிரல் தொடங்கி மே மாதம் வரை நடைபெற்ற விடுதலைப் புலிகளிற்கும், இடையே நடந்த
உச்சக்கட்டப் போரில்
அகதிகளாக்கப்பட்ட இரத்தம் வடிக்கும் தமிழர் ஒருபுறம், கண்ணிர் வடிக்கும் தமிழக தமிழர் மறுபுறம், மற்றும் கடலுக்கு சென்று உயிரை விட்ட தமிழக மீனவர்கள் என முச் சமூகத் தின ர து துன்பங்களும், அதற்கான காரணங்களையும் வைத்து எடுக்கப்பட்டது. தமிழக தணிக்கை குழு உறுப்
பினர்களால் இந்த படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் சர்ச்சை உருவாகி
உள்ளது.
இத் திரைப்படத்தில் விடுதலைப் புலிகளை அழிக்க நடாத்திய யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் இலங்கை அரசை விமர்சிப்பதான வசனங்களும், தமிழக அரசிற்கு எதிரான வசனங்களும் இருப்பதாகவும் அவற்றை நீக்குமாறு கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வசன நீக்கமானது பேச்சுரிமையை நசுக்குவது போன்ற இச்செயல் ஜனநாயகத்திற்கு புறம்பானது என டெல்லி டிரிபியூனல் கோட்டில் வழக்கு தொடர உள்ளார்.
லினா ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழருக்காக அழைப்பை உருவாக்கி டெல்லிவரை சென்று போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தனது ஆவணப் படங்களை சமூக நோக்குடன் எடுத்து வருகின்றார். பறை, பலிபீடம் என்ற படங்கள் ரொரண்டோவில் வெளியிடப்பட்டுள்ளது. நல்ல
வரவேற்பையும் பெற்றுள்ளது.
இவரது சர்ச்சைக்குரிய செங்கடல் என்ற படம் எவ்வாறு வெளிவருகிறது என்பதை பெண்சமூகம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நன்றி தினக்குரல்
 

Dr. நவால் எல் சதாவி
(Dr. Nawal El Saadawi)
கிெப்திய நாட்டில் தகிர் சதுக்கத்தில் நடைபெறும் ஜனநாயகத்தை நிலைநாட்ட நடைபெற்ற போராட்டத்தில் காயமுற்றோருக்கு 150 தன்னார்வ வைத்தியர்களுடன் நவால் எல் சதாவியும் நின்று சேவையாற்றுகின்றார்.
எண்பது வயது மூதாட்டி நரைத்த கேசத்துடன் தைரியமான நெஞ்சுடனும் நின்று சேவை புரிவது வியக்கத்தக்கதே. இவர் ஓர் வைத்தியர், மற்றும் பெண்ணிலைவாதியும் கூட இவர் பெண்களின் இனப்பெருக்க உறுப்பை உருக்குலைக்கும் கலாச்சாரத்தை உடைய சமூகத்திற்கு எதிராக குரல் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
༤ ക്
: 6).J(U6yu (Faiz) இன் ! உருது மொழி கவிதையின் மொழி பெயர்ப்பு வடிவம்
Speakup, while your lips (thoughts) are (still) free Speakup, (while) your tongue is still yours VN Speak, for your strong body is your own speak
(while) your soulis still yours Look at the blacksmith's shop hot flames makes the iron red hot opening the (jaws of) locks every chain opens up and begins to break M Speak, for this brieftime is longenough before your i body and words die
Speak, for the truth still prevails Speak up, Say What you must.
WE WILL BE VINDICATED
பிரவாகினி ஆனி 2011 இதழ் 32

Page 5
இன்று இந்திய தேசத்தின் தேசிய நடனமாகவும், தமிழ் பாரம்பரியமாகவும் போற்றப்படும் நடனக்கலை ருக்மணி, அருண்டேல், உதயசங்கர் போன்றோரின் அயராத உழைப்பும் முயற்சியுமே நடனக் கலைக்கு ஐந்து நட்சத்திர அந்தஸ்த்து கிடைக்கப் பெற்றது. பரத்தையர் வளர்த்த கலை பரதநாட்டியம் என்றும், பாரத தேசத்தின் நாட்டியம் சுருங்கி பரத நாட்டியம் எனவாயிற்று என்ற வாத பிரதிவாதங்கள் போய்க்கொண்டு இருக்கின்றன. இந்திய நடனக்கலையை பாதுகாத்தவர்கள் தேவதாசிகள் என்பதை மறுக்க முடியாது.
இந்து வர்ணாச்சிரமத்தில் சமூகத்தில் ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு குலம் அமையப்பெற்று இன்றும் கைக் கொள்ளப்படுவது யாவரும் அறிந்ததே. இவ்வாறே ஆலயங்களின் பல்வேறு தேவைகளுக்காக பெண்களை அடிப்படையாகக்கொண்டு உருவான குலமே பரத்தையர் குலம். இக் குலப் பெண்களை பரத்தையர், தேவதாசி, தேவடியாள், கணிகை என பல்வாறு அழைக்கப் பெற்றனர். இக்குல பெண்கள் சடங்குகள் மூலம் கோவிலுக்கு தொண்டு செய்பவர்களாகவும், குடும்ப வாழ்க்கையை ஏற்க முடியாதவர்களாகவும் சமூகத்தில் இவளது உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இவர்களின் அடிப்படை தகமையாக நடனம் கட்டாயமாக கற்றிருத்தல், மற்றும் இவர்களது பணி அல்லது கடமையாக ஆலயங்களில் நடைபெறும் சகல கிரியைகளுக்கும் நடனத்தின் மூலம் இறை துதி செலுத்துதல் என்பனவாகும். பிற நேரங்களில் திருவிழா காலங்களில் மேடைகளில் ஆடி மக்களை மகிழ்விக்கும் பொழுதுபோக்கு அம்சமாகவும், அக்காலத்தில் பண்ணையார், ஜமீன் போன்றோரை கவனிக்கும் கலாச்சாரத்திற்கும் தள்ளப்பட்டார்கள்.
இறை துதியாக ஆலயங்களில் ஆடப்படும் நடனத்திற்கும், பிறரை மகிழ்விக்கும் நடனத்திற்கும் நிறையவே வேற்றுமைகள்
உள்ளன.
இன்றுள்ள பொழுதுபோக்கு சாதனங்கள் போல அன்று தாசியர்களை பாவித்துள்ளமை வருந்தத்தக்கது. பணம் படைத்தோர் தமது மேலதிக இச்சைக்கு இவர்களிடத்தில் சென்றுவந்தனர். இதனால் இவர்களது வறுமை நீக்கப்படும் நிலை ஏற்பட்டது.
அக்காலத்தில் ஆண்மையின் சிறப்பாக பல மனைவியரை மணத்தல், பரத்தையர் வீதிக்கு சென்றுவருதல் என அமைந்திருந்தது. சிலப்பதிகாரத்தில் தேவதாசிகள் பற்றி விரிவாக கூறியிருப்பதை நாம் காணலாம். கோவில் பூசகர் முதல்கொண்டு அனைத்து வர்க்க ஆண்களுக்கும் இவள் ஈடு கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இவர்களது சேவை சமூகத்தின் பொது ஒழுக்கத்திற்கு அவசியம் என அக்கால சமுதாயம் கருதியது. இது தவிர ஊர் விஷேசம், பெரிய மனிதரின் வீட்டு வைபவங்களிலும் பரத்தையர் நடனமாடினர்.
பிரவாகினி ஆனி 2011 இதழ் 82
 

தேவதாசிகள் நடனம் எனின் புத்துலக சமூகம் புறந்தள்ளி விடும் என்பதால் 'விலாசினி நாட்டியம் என பெயர் சூட்டப்பட்டு இந்நடனத்தை காப்பாற்ற சுவப்பண சுந்தரி என்ற நடனமணி முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றார்.
1948ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின் மூலம் தேவதாசி என பெண் பொட்டுக்கட்டுவது, கோவில்களில் நடனமாடுவது, விபசாரம் செய்வது என்பன தடை செய்யப்பட்டது. இச்சட்டம் தேவதாசி என்ற முறையில் பெண்கள் இழிவுப்படுத்தப் படுவதாகும் என்ற அடிப்படையிலேயே இச்சட்டம் கொண்டுவரப்பட்டது.
ஆங்கிலேய காலத்தில் இந்திய உயர் வர்க்கத்தினரின் மனோபாவம் மாறியது. ஆங்கில சட்டம், ஆங்கில கல்வி மற்றும் கிறிஸ்தவ சமூகப்பார்வை, சிந்தனைகள் என்பன தேவதாசிகளை இழி குலத்தவராக்கியது. பெண்களை கோவிலுக்கு பொட்டுக் கட்டுவது, கணிகை ஆக்குவது அறவே தடைசெய்யப்பட்டது. இதனால் பொருளாதார சிக்கல்களை பாரிய அளவில் எதிர்கொண்டனர். சமூகம் பொருளாதார மேம்பாட்டை இவர்களுக்கு செய்யாததால் இச்சமூகம் முழு விபசாரத்தில் ஈடுபட தொடங்கியது.
தாசிகளாக இருப்பதற்கென ஒரு குலத்தை உருவாக்கி வைப்பது மகா கொடுமை என பெண் விடுதலை விரும்பிகள் எண்ணினர்.
1991இல் எடுக்கப்பட்ட கணக்கின்படி கர்நாடக மாநிலத்தில் பெல்கரம் மாவட்டத்தில் மூவாயிரம் தேவதாசிகள் இருப்பதாகவும், 35% மாணவர்கள் வயோதிபர் அல்லது வெளிமாவட்டத்திற்கு சென்றோர் என்றும், மகாராஷ்டிராவின் கோலாலம்பூர் மாவட்டத்தில் ஏழாயிரம் பேர் வாழ்ந்து வருகின்றனர் என்று அறியப்படுகின்றது.
தேவதாசிகள் குல வழக்கை நோக்கும் போது பெண்கள் ஆணுக்கு சமமாக மதிக்கப்படுகின்றனர். இக்குலத்தில் சிசுக்கொலைகள் இடம் பெறுவதில்லை. பெண் பிள்ளைகள் பிறந்ததும் கோவிலுக்கு தத்து கொடுப்பதாக பெற்றோர் வேண்டிக்கொள்கின்றனர். அப்பெண் பூப்பெய்தியதும் கோயில் பணிக்கு விடுவது வழக்காக இருந்தது. சொத்துரிமையை நோக்குமிடத்து காணி, வீடு என்பவற்றில் பெண் உரிமை கொள்ள முடியும்.
தேவதாசிகள் புனர்வாழ்வுத் திட்டங்களை அமுல்படுத்தும் தொண்டர் நிறுவனங்களைச் சேர்ந்தோரின் தகவலின்படி பம்பாயில் காமாதிபுரத்தில் மலைப்பாங்கான பகுதியில் ‘சுவுந்தத்தி” என்ற கோவிலின் மூல தெய்வமாக எல்லம்மா என்ற தேவதாசி போற்றப்பட்டு வருவதமாகவும் இவர் தேவதாசிகளின் குல தெய்வம். ஒவ்வொரு வருடமும் வரும்

Page 6
முதல் மாதமாகிய ஜனவரி மாதத்தில் ஏற்படும் பூரணை தினத்தை தாசிகள் பூரணை’ என அழைக்கப்படுகின்றது என்றும் மகாராஷ்டிரா, கேரளம், ஆந்திரா, கர்நாடகம் போன்ற மாநிலங்களில் இருந்து எல்லம்மா கோவிலுக்குதாசியர் வருகை தருகிறார்கள். மேலும் அத்தினத்தில் பம்பாயில் இருந்து தரகர்களும் இங்கு வந்து முகாமிட்டு காத்துகிடக்கின்றனர்.
பூரணை அன்று இளம் தேவதாசிகள் சிவப்பு வண்ண உடையணிந்து எல்லம்மாவின் சிலையை தமது தலையில் சுமந்து குலதெய்வத்திற்கு தம்மை காணிக்கையாக்கும் சடங்குகளில் ஈடுபடுவர். இச்சடங்குகள் யாவும் நிறைவு செய்யப்பட்ட பின்னர் இவர்கள் ஏலத்திற்கு விடப்படுகின்றனர். இவைகள் யாவும் தடை செய்யப்பட்ட போதிலும் இவ்வணக்கம் தொடர்வதாக தொண்டர் நிறுவனங்கள் கூறுகின்றன
அக்காலத்தில் கோவில் தொண்டுக்கென விடப்பட்டவள் இக்காலம் நேர்த்தி முடிந்ததும் ஏலத்தில் விடப்டுகிறாள். இக்குல பெண்ணிற்கு திருமணம் செய்ய உரிமை இல்லாததால் வைப்பாட்டியாகவே தன் வாழ்நாள் முழுவதும் உரிமை மறுக்கப்பட்டவளாக கழிக்கிறாள். இன்றுள்ள தரகர்கள் ஏலத்தில் வாங்கும் தாசி பெண்களை சிவப்பு விளக்கு பகுதிகளுக்கு விற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
ஆய்வாளர் ஆய்வின்போது சந்தித்தவர்களில் ஒரு பெண் 12 வயதில் ஆயிரம் ரூபாவிற்கு ஏலத்தில் விடப்பட்டதாகவும், இன்னொருவர் 3 வயதில் பொட்டுக்கட்டியதாகவும் அறிந்துள்ளார்.
 

மகாராஷ்டிரா அரசின் தேவதாசி புனர்வாழ்வுத் திட்ட செயற்பாட்டாலும் தற்போது இவ் வழக்கு இல்லை என்கின்றனர். ஆனால் மகாராஷ்டிராவின் “ராஜய தேவதாசி முக்தி சங்கவிதானய” என்ற அமைப்பின் தலைவரான பேராசிரியர் விதால்பானே என்ற பேராசிரியர் இவ் அமைப்பின் தலைவர் ஆவார். இவர் கூறுகின்றார் இரகசியமான முறையில் இச்சடங்குகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றது என.
இக்குலத்தை பொருளாதார ரீதியாக புனர்வாழ்வு கொடுத்து, பெண் இழிவு நிலைகளைப் போக்கி இக்குலத்தை சமுதாயத்துடன் வாழ வைப்பது சமுதாயத்தின் பாரிய பொறுப்பாக உள்ளது.
(1997 இல் அருள் சத்தியநாதன் எழுதிய கட்டுரையை அடிப்படையாகக் கொண்டது)
தீர்மானம் எடுப்பதில் ஒரன்கள் இலக்கர்படுகின்றனர்
அனைத்து பரிமாணங்களிலும் தீர்மானங்கள் எடுக்கும் போது குடும்ப அளவிலோ அல்லது வேறு உயர்மட்டத்திலோ பெண்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. காலம்காலமாக இவ்விடயம் பேசப்பட்டாலும் இவ்விடயத்தில் முன்னேற்றம் காணமுடியவில்லை. மிக முக்கியமான முன்னேற்றத்திற்கு பெண்கள் எல்லா மட்டங்களிலும், குடும்பங்களிலும் போதிய அதிகாரமின்றி அவதிப்படுகின்றனர். அதிகமாக தந்தை எடுக்கும் முடிவின்படியே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பெற்றோர்களின் கவனிப்பின்றி விடுபடும் பெண்களே சுயமான தீர்மானங்களை எடுக்கின்றனர்.
பொருளாதார காரணிகள் போதாமையால் தொழில் வாய்ப்பு, கல்வி என வெளியேறும் பெண்களில் சிலரே தமது குறிக்கோளை எய்த முடிகின்றது. இன்னும் சிலர் எது தவறு, எது சரி என இனங்காண முடியாது கெட்ட ஆண்களிடம் சிக்கி தவிக்கின்றனர்.
திருமணத்திற்கு பின் இந்நிலைமை மிக பரிதாபகரமானது. பெண்கள் தமது உரிமைகள், கடமைகள் உணர்வதில்லை. கணவன் முடிவெடுக்கவும் அதனை பின்பற்றவும் செய்கின்றனர். இந்நிலை தமது கடமை என்றும் கலாச்சாரம் என்றும் எண்ணுகின்றனர்.
குடும்பத்தில் பெண், தாய் அதிகாரமற்ற நிலையிலுள்ளனர். தந்தை அல்லது மூத்த சகோதரனே இறுதி அனைத்து முடிவுகளையும் எடுக்கும் தன்மை மிதமாக உள்ளது. பெண்கள் கருத்துக்களை முன்வைக்காத முடிவுகளை எடுக்கும் தன்மை மிதமாக உள்ளது. பெண்கள் கருத்துக்களை முன்வைக்காத முடிவுகள் பல சமூக பிரச்சினைகளுக்கு வழி வகுப்பது நிச்சயம்.
sir Daily News
பிரவாகினி ஆனி 2011 இதழ் 32

Page 7
ஃபஹறிமாவின் கவிதைகளில்
gi/UD/7607
1980க்குப் பிறகு தமிழ்க் கவிதையில் வலிமையாக ஒலிக்கத் தொடங்கிய பெண்களின் குரல் - பல ஆண் கவிஞர்களையும் ஆண் முதன்மைச் சிந்தனை வட்டத்தினரையும் அசெளகரியப்படுத்திய அதே குரல் - ஃபஹீமாவின் கவிதைகளிலும் தீர்க்கமாக ஒலிப்பதை நாம் காண்கிறோம். பெண் என்ற வகையில் தனக்கு ஆண்களால் வரையறுக்கப்பட்ட எல்லையை அவர் உடைக்கிறார். அதை அவர் கேள்விக்கு உட்படுத்துகிறார். அவள் அவளாக என்ற கவிதை இதைப்பற்றிய ஒரு பிரகடனமாகவே அமைகிறது.
உனது தேவதைக் கனவுகளில் அவளுக்குக் கிரீடங்கள் வேண்டாம் உனது இதயக் கோவிலில் அவளுக்குப் பூசைப்பீடம் வேண்டாம் உனது ஆபாசத் தளங்களில் அவளது நிழலைக்கூட நிறுத்திவைக்க வேண்டாம். வாழ்க்கைப் பாதையில் அவளை நிந்தனை செய்திட உனது கரங்கள் நீளவே வேண்டாம்
அவளது விழிகளில் உனதுலகத்தின் சூரிய சந்திரர்கள் இல்லை அவளது நடையில் தென்றல் தவழ்ந்து வருவதில்லை அவளது சொற்களில்
சங்கீதம் எழுவதும் இல்லை அவள் பூவாகவோ தளிராகவோ
இல்லவே இல்லை
காலங்காலமாக நீ வகுத்த விதிமுறைகளின் வார்ப்பாக அவள் இருக்க வேண்டுமென்றே இப்போதும் எதிர்பார்க்கின்றாய்.
எல்லா இடங்களிலும் அவளது கழுத்தை நெரித்திடவே நெருங்கிவருகிறது உனது ஆதிக்கம் அவள் அவளாக வாழவேண்டும்
வழிவிடு.
கிரீடங்களை அவமதித்தவள் என்ற கவிதையிலும் இதே குரல் இன்னும் உரத்து ஒலிக்கின்றது.
எக்காலத்திலும் இனி உங்கள் பீடங்களில் முழந்தாளிட வரமாட்டேன் நீங்கள் ஆராதிக்கும் நாமங்களிலும் சேரமாட்டேன். ஆதிமுதல் போற்றிவரும் அந்தக் கிரீடங்களின் மீது அவமதிப்பை விட்டெறிகிறேன் உங்கள் அலங்காரப் பட்டினங்களின் துர்வாடையையும் பேரிரைச்சலையும் சகித்திட முடியாமல் அகன்று போகிறேன்.
பிரவாகினி ஆனி 2011 இதழ் 32

) 62Uair 672u2üuantidef, usinj) მ7 upქრზ0Üშტ
இந்த வகையான எதிர்ப்புணர்வு ஃபஹீமாவின் பல கவிதைகளில் வெளிப்படுகிறது. பெண்ணின் துயரத்துடனும் குமுறலுடனும் கோபத்துடனும் அது பதிவாகியுள்ளது. அம்மா, அவனை வழியனுப்பிய இடம், எல்லைக் கோட்டில் தடுக்கப்பட்டவள். காட்டு மிராண்டியிடம் சிக்குண்டவள், ஊற்றுக்களை வரவழைப்பவள், பேய்களால் தின்னப்படுபவள், பேறுகள் உனக்குமட்டுமல்ல, எனது கைமாற்றி ஏந்திக்கொள், தற்கொலை போன்ற கவிதைகளை இதற்கு உதாரணமாகக் காட்டலாம். விழிப்புற்ற பெண்மை பற்றிய பிரக்ஞையின் வெளிப்பாடாக நாம் இக் கவிதைகளைப் புரிந்துகொள்ள முடியும்.
ஆதித் துயர், ஆதித் திமிர் ஆகிய தொடர்களை சமூகத்தில் வேரோடியுள்ள நெடுங்காலப் பால்நிலைப் பிளவின் குறியீடுகளாகத் தன் கவிதைகள் சிலவற்றில் ஃபஹீமா கையாண்டுள்ளார். இவ்வகையில் ஆதித் துயர் என்ற கவிதை மிகவும் கலின்ப்ேபுக்குரியது. பாலை வெய்யிலில் ஒரு மூதாட்டியின் வழி நடைப் பயணத்தின் ஊடாக துயர் படிந்த பெண்ணின் வாழ்வு இக்கவிதையில், சித்திரமாகின்றது. பெண்ணின் நெடுங்காலத் துயரின் குறியீடாகவே இச்சிறிய கவிதை அமைகின்றது எனலாம்.
நிழல் மரங்களற்றுச் சூரியன் தவிதவித்திடும் நெடுஞ்சாலையோரம் வெய்யிலை உதறி எறிந்தவாறு நடக்கிறாள் மூதாட்டி
குதிக் கால்களால் நெடுங் களைப்பை நசுக்கித் தேய்த்தவாறு காற்றைப் பின் தள்ளிக் கைகளை வீசுகிறாள்
வெய்யில் மிகப் பெரும் தண்டனையை வழிநீளப் பரவ விட்டுள்ளது வேட்டை நாய்போல அவள் முன்னே ஒடிச் செல்கிறது நிழல்
பதிந்தெழும் ஒவ்வொரு சுவட்டிலும் தேங்கித் துடிக்கிறது ஆதிமுதல் அவளைத் தொடரும் துயர்.
பெண்ணின் துயர் ஆதித் துயரெனின், ஆணின் திமிர் ஆதித் திமிராகின்றது. ஃபஹமாவின் கவிதைகளில் தற்கொலை ஆனால் வஞ்சிக்கப்பட்ட பெண்ணைப் பற்றிய கவிதை. வலுவான மொழியில் ஆணின் ஆதித் திமிர் பற்றி அது பேசுகிறது.
அற்ப புழுதான் -நீயெனினும் வலுத்த குரலுடனும் ஓங்கிய கரங்களுடனும் எப்பொழுதும் அவளை விரட்டினாய் ஆதித் திமிரின் அடங்காத ஆங்காரத்துடன் எளியவளின் தேவைகளை எட்டி உதைத்தாய்

Page 8
நீ கொடுத்த சுமைகளையும் அந்த உடலையும் உன்னிடமே எறிந்து விட்டாள் இனி எக்காலத்திலும் உன்னெதிரே வரப்போதில்லை நீ துன்புறுத்திய அவள் ஆத்மா.
ஆணின் ஆதித் திமிரை நிராகரிக்கும் பிறிதொரு கவிதை கடைசிச் சொல் ‘நம்மெதிரே வீழ்ந்து கிடக்கிறது காலத்தின் பிறிதொரு முகம் என கவித்துவ வீச்சோடு தொடங்குகிறது கவிதை.
நீ உரிமை கொண்டாடிய எல்லாவற்றிலிருந்தும் எனை விடுவித்துக்கொண்டேன் துயரத்தில் பதைபதைத்த சொற்களையும் துரோகத்தால் நசுங்குண்ட சத்தியங்களையும் உனது சுவர்களுக்குள்ளேயே விட்டுவிட்டு வெளியேறிப் போகிறேன்.
இப்பொழுதும் ஆதித் திமிர் தடுத்திட உன்னிடம் எஞ்சியுள்ளது ஒரு சொல் விதி தன் கண்ணிரை வழியவிட்ட சொல் நாம் நமக்குக் கிடைத்திடக் காத்திருந்த கடைசிச் சொல்.
அந்தக் கடைசிச் சொல் எதுவாகவும் இருக்கலாம். அது அவ்விருவரின் இழப்பையும் மீட்டெடுக்கக்கூடிய சொல். ஆதித் திமிர் அதையும் தடுத்துவிட்டது என்கிறாள் பெண். இவ்வாறு ஆணின் ஆதித் திமிருக்கு எதிரான, பெண்ணின் ஆதித் துயரிலிருந்து மீள்வதற்கான விழிப்புற்ற பெண்ணின் குரலாக அமைகின்றன ஃபஹிமாவின் பெரும்பாலான கவிதைகள்.
காதல் உணர்வு சார்ந்த அவரது சில கவிதைகளிலும் கூட ஆண்மைக்கு அடிமைப்பட்டுப் போகாத சமத்துவமான காதலுக்கான குரலே ஒலிக்கின்றது. மிகையுணர்ச்சியற்று வாழ்வின் முரண்பாடுகளை எதிர்கொள்ளும் குரல் இது.
அன்பு பொங்கிப் பிரவகித்த அபூர்வ நாட்களில் நிழல்போலப் பிரிவைச் சொல்லிப் பின்வந்தது காலம் நான் வரச் சாத்தியமற்ற இடங்களில் நீயும் நீ வரத் தேவையற்ற இடங்களில் நானும்
பெரியார் 30களில் கூறியது.
Tெஸ்த்துவு மூடப்பற்று, மூடப்ட நற்பயனுக்காகவும்: தேசம், எனது மதம் ஒன்றையும் நான் என்று கருதினால் என்பதானது என மானத்துடன் வா விட்டுவிட்டுப் பயன்
 

வாழ்வின் விதிமுறைகள் எனதுலகையும் உனதுலகையும் வேறு பிரித்தவேளையில் விடைபெற்றோம் ஒன்றித்துப் பறந்த வானத்தையிழந்தோம் இறுதியாக அன்றுதான் அழகாகச் சிரித்தோம்
எனது சூரியனும் தனித்துப் போயிற்று உனது சந்திரனும் தனித்தே போயிற்று
(எனதுசூரியனும் உனது சந்திரனும்)
உனது மகிழ்ச்சிகளையெல்லாம் என்னிடமிருந்தே பெற்றுக் கொண்டாய் எனது துயரங்களையெல்லாம் நீயன்றோ ஏற்படுத்தித் தந்தாய்? தாங்க முடியாத வலிதருகின்ற உன் தளைகளிலிருந்து என்னை விட்டுவிடேன் - போகிறேன்
உனது அதிகாரங்களையும்
என அண்டிவாழ்தலையும்
கீழிறக்கிவைத்துவிடுவது
சாத்தியப்படுமெனில் ஒன்று சேர்வோம்
(நீ அவனைக் காதலித்தாயா)
நெடுங்காலத் தாமதத்தின் பின் இப்போது அழைக்கிறாய் எந்த மன்னிப்புமற்ற வியாக்கியானங்களோடு பதுங்கிப் பதுங்கி வந்திருக்கிறாய்
முதன் முறையாக உன்னை எறிந்தேன் இதயத்திலிருந்து சாக்கடைக்கு மாசுற்றவைகளைத் தூக்கியெறிந்திட இரு தடவைகள் சிந்தித்ததேயில்லை நான்.
சொல் அன்பானவனாக இருந்தாயா?
தாரை வார்த்துத் தந்திட எவருமே முன்வராத வாசலொன்றில் தாகித்துக் கிடந்தவளைக் கைவிட்டுச் சென்றபோதும் அன்பானவனாக இருந்தாயா?
நன்றி ஆதித்துயர்
க்காக என்று எனக்கு ஒன்றினிடத்தும் பற்றுக் கிடையாது. அது க்தியே ஆகும். குணத்திற்காகவும், அக்குணத்தினால் ஏற்படும் 9 தான் எதனிடத்திலும் பற்று வைக்கக் கூடும். எனது மொழி, எனது : என்பதற்காகவே, எனது மொழி பழமையானது என்பதற்காகவோ, பாராட்டுவதில்லை. எனது நாடு எனது லட்சியத்திற்கு உதவாதும் உடனே விட்டுவிட்டு போய்விடுவேன். அதுபோலவே எனது மொழி : ாது லட்சியத்திற்கு, எனது மக்கள் முற்போக்கடைவதற்கு, 9 ழ்வதற்குப் பயனளிக்காது என்று கருதினால் உடனே அதை னளிக்கக் கூடியதைப் பின்பற்றுவேன். :
O
சான்று ஆ.இரா.வெங்கடாசலபதி (காலச்சுவடு பதிப்பகம்) :
LLLL L L LLS LL LLL LLL LL LL LLLL SS LL SSLLL LLLL LLLL LL LL L LLSS LLLS LL LLL LLL LLL LLLL LL LL S LLS S LLS SLLS SLLL
பிரவாகினி ஆனி 2011 இதழ் 32

Page 9
யுத்த பூமியில் இறுதிவரை வாழ்ந்த சமூக சேவகி லூயிசா அருளம்மா
போதகராக பணியாற்றிய AC தம்பிராசா அவர்களை லூயிசா 1937 ஆம் ஆண்டு செப்டம்பர் 3ம் நாளில் சாவகச்சேரி சபையில் திருமணம் செய்துகொண்டார். இருபத்திரெண்டு வருடங்களாக துணைவருடன் சேர்ந்து ஆன்மீக பணியில் ஈடுபட்டார்.
எலிசெபத் பேகரின் சொந்த நாடான இங்கிலாந்தில் இருந்த மூலதனத்துடனும், அவரது நண்பர்கள் கொடுத்த நிதியுடனும் பரந்தன், முரசுமோட்டையில் நவஜீவனத்தை நிறுவினார். இவருடன் அருளம்மா குடும்பமும் இணைந்து 1959இல் பணியை ஆரம்பித்தனர். நவஜீவனம் தமிழ் இளைஞர்களை விவசாயத் துறையில் ஈடுபட வைப்பதற்காகவே ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிறுவனத்தில் முற்றுமுழுதாக ஆண் பிள்ளைகளே சேர்க்கப்பட்டார்கள். மனநிலை குன்றியோர், நன்நடத்தை இன்றி செயற்பட்டோர், உடல்நிலை குன்றியோர், வசதியற்றோர் போன்றோரே காணப்பட்டனர். பெரும்பாலும் குற்றமிழைத்த சிறுவர்களை பொலிசார் கொண்டுவந்து சேர்ப்பார்கள். இங்குள்ளவர்கள் ஆண்டு 5இல் இருந்து உயர்தரம் வரை கல்விகற்றார்கள். ஆரம்ப காலத்தில் கால்நடைகள் வளர்க்கப்பட்டு பணம் சம்பாதிக்கப்பட்டது. பின்னர் வயல் தோட்டம், நெல்லுக் குற்றும் ஆலை என்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இளைஞர்களுக்கு தங்குமிட வசதிகள் என அனைத்தும் சிறப்பாக அமைத்துக்கொடுக்கப்பட்டிருந்தது. அம்மையார் அங்குள்ளோருக்கு மருத்துவம், உணவு
பெண்களின் முறைப்பாடுகள் அதிகரித்து
சென்ற ஆண்டைவிட இவ்வாண்டு முறைப்பாடுகள் சு கிடைக்கப்பெற்றன. ஆனால் இவ்வாண்டு 8ம் மாதத்திலேயே 500 ஆண்டை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது என Women 'Daily News’ நாளிதளிற்கு கூறியுள்ளார். இம்முறைப்பாடுகளால்
(1) ஜீவனோபாயம் சார்பானது (2) பதவி உயர்வும்,
இவ்விடயங்கள் சார்பாக இரகசிய தன்மை பேணப்படுகின்றமை
முறைப்பாடு செய்ய விரும்புவோர் கீழ்கண்ட தொலைபேசி Ot-2877612 Fax No.: 011-2877617 siteosu 9.30 LD50 fuS655
6Jimé, Gastsir GITUGlth. Ministry of Womens Empowerment an அஞ்சல் முகவரியூடும் முறைப்பாடுகளை அனுப்பி வைக்கலாம்.
பிரவாகினி ஆனி 2011 இதழ் 32
 

கொடுத்தல், உடைகள் வழங்கல் என அனைத்தையும் கவனித்து வந்தார். சிறப்பான முறையில் சந்தோஷமாக வாழ்ந்ததைக் குறிப்பிட்டார்.
வாரத்திற்கு ஒருநாள் மானிப்பாய், மற்றும் இணுவிலில் இருந்து வைத்தியர்கள் மருந்து கொண்டு வருவார்கள். தானும், பேகரும் சிகிச்சை கொடுத்ததாகவும் புண்களுக்கு கட்டுப்போடல் போன்ற அனைத்தையும் பேகர் அம்மையார் சிறப்பாக செய்ததை அவர் மறக்கவில்லை. 1995, 1996 இல் மக்கள் அடைக்கலமாக நண்பர்கள், உறவினர்கள், சாதாரண மக்கள் என யாழில் இருந்து நவஜீவனத்திற்கு வருகை தந்திருந்தனர்.
1982 கணவரின் மறைவிற்க்கு பின்னர் அம்மையாரே பணிகளை பொறுப்பேற்று நடத்தி வந்துள்ளார். 1996இல் ஷெல் தாக்குதல் அதிகமாக இருந்தது. அதனால் பரந்தனில் இருந்து தர்மபுரம் சென்றனர். 2002இல் இல்லம் புனரமைக்கப்பட்டது. 2008இல் முற்றாகவே சேதமாக்கப்பட்டது. அங்கிருந்தவர்கள் அனைவரும் அகதிகள் ஆக்கப்பட்டனர். ஷெல் சத்தங்கள் தாங்கமுடியாது, கானாவில் ஒரு வாரம்தங்கி பாதுகாப்பில்லாததால் மூன்று மைல்களுக்கு அப்பாலுள்ள விசுவமடுவில் நிலத்தின் கீழ் அமைக்கப்பட்டி பதுங்கு குழிகளில் 2 கிழமை கஷ்டப்பட்டு பின்பு சுதந்திரபுரத்தை சென்றடைந்தார். உணவின்றி, வீதிகளை விட்டு விலகமுடியாத சன நெரிசல் என சொல்லமுடியாத கஷ்டங்கள். சுதந்திரபுரத்தில் தகரங்களால் அமைத்த கூடாரத்தில் 1 வாரமாக தங்கினார். மீண்டும் வான்தாக்குதல், ஷெல் தாக்குதல் என சொல்லமுடியாத அவலங்கள். அனேகமான பலர் இறந்துவிட்டனர். அங்கு இருக்கும்போது இராணுவத்தினர் எல்லோரையும் வெளியில் வருமாறு அழைத்து ஒருநாள் முழுக்க திறந்த வெளி வெய்யிலில் இருந்து பின்னேரம் 5 மணிக்கு வாகனத்தில் ஏற்றி நீண்ட பரிசோதனையின் பின்னர் ஓமந்தைக்குச் சென்றார். அங்கு ஆண்கள் இல்லை. எல்லோரும் பெண்கள்தான். 2 நாட்களின் பின் அகதிமுகாம் மாற்றப்பட்டு 4 நாட்களின் பின்னர் 18.02.2009 விடுதலை செய்யப்பட்டு பேத்தியரின் அழைப்புடன் வவுனியா சென்றார்.
இவ்வளவு துன்பங்கள் துயரங்கள் மரணங்களை கண்டு அனுபவித்த பின்பும் தனது மன உறுதியையும், மனோபாவத்தையும் ஆன்மீக தன்மை என்பவற்றிலிருந்து வழுவாது வயதிற்கேற்ற சுகவாழ்வு, நல் ஆரோக்கியத்துடன் 2009 நவம்பர் மாதத்தில் இருந்து கொழும்பில் வாழ்ந்து வருகின்றார். தனது 100 வது பிறந்தநாளையும் இங்கு கடந்துள்ளார்.
iளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்
டுதல் அடைந்துள்ளன. சென்றவருடம் 900 முறைப்பாடுகள் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. வருட இறுதியில் சென்ற S Empowerment and Social Welfare Ministry P.Pathiranage J60T,
சம்பள உயர்வும் சார்பானது (3) பாலியல் துன்புறுத்தல்
குறிப்பிடத்தக்கது.
எண்களுடன் தொடர்பு கொள்ளலாம். 011-237761 அல்லது
ந்து மாலை 4.30 மணிவரை வேலை நாட்களில் முறைப்பாடுகள் Social Welfare 5th Floor, Sethsiripaya, Battaramulla.6Tsip
Dir Daily News
9

Page 10
தமிழ் எழுத்தாளர் ஆய்வூரங்கில் வாசித்த கட்டுரையின் சிறிய ஒதாகுப்பு
அண்மையில் கொழும்பு தமிழ்சங்கத்தில் நடைபெற்ற ஆய்வரங்கில் இக்கட்டுரை வாசிக்கப்பட்டது.
அறிவியல், வளர்ச்சி, முழுமைபெறாத காலத்திலேயே பெண்ணியம்' என்ற கருத்து நிலவியுள்ளது. தமிழ் அகராதியில் பெண்’ என்ற சொல்லிற்கு தான்சார்ந்த ஓர் இனத்தை தோற்றுவிக்கும் ஒரு பிரிவு என பொருள் கொள்ளப்பட்டுள்ளது.
ஆதியில் அதிகாரமும் ஆற்றலும் இயல்பாகவே பெற்றிருந்தாலும்தன் உடற்கூற்றைமுன்வைத்து ஆண்சோர்ந்தே வாழ்ந்தாள். ஒரு காலகட்டத்தில் பெண்ணின் உரிமைகள், கல்வி மறுக்கப்பட்ட நிலையில் சிந்தனாவாதிகளால் பெண்ணிலை மற்றும்,
பெண்ணிலைவாதம் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.
இலக்கியத்தில் பெண்ணின் ஆற்றலை போர்புரிதல், போருக்கான ஆயத்தம் செய்தல், ஆலோசனை வழங்கல், வீரம், வாதிடல் என விபரிக்கப்படுகின்றது. நீதி கேட்டு மதுரையை கண்ணகி எரித்தபோது கண்ணகியானவள் புரட்சிப் பெண்ணாக பார்க்கப்படுகின்றாள். ஆண்டாள் தன் காதலை தானே வெளிபடுத்தியுள்ளார்.
பண்டைய காலத்தில் பெண்ணானவள் ஓரளவு சுதந்திரத்தை அனுபவித்துள்ளாள். ஆணின்றி பெண் கருவுற இயலாது. (கரு) திருவாகும் பெருந்தகைமை வாய்ந்தவள் பெண். இவள் மட்டுமே தன் குருதியை பாலாக்கி குழந்தைக்கு ஊட்ட முடியும். இப்படிப்பட்ட பெண்ணை இன்று தனித்து இயங்கவிடாமல் அவர்களது ஆற்றலை தமது ஆதிக்கத்துக்குள் கட்டுப்படுத்த முயன்றபோது உருவான ஒலியே பெண்நிலை வாதம்.
மனை என்ற சொல்லில் இருந்தே மனைவி உருவானது. மனைவி என்பதற்கு ஆண்பால்ச்சொல் இல்லை. இருப்பினும், இன்று கணவன் என வழக்கில் உள்ளது. இல்லாள் இல்லத்தை ஆள்பவள். இதற்கு எதிர்பாற் சொல் கிடையாது. பெண்ணானவள் ஆதியில் ஆதிக்கம் கொண்டவள் என
தெரியவருகின்றது.
இன்று பெரிதும் முன்வைக்கப்படும் பெண்ணிலைவாதம் பற்றி, சமூகத்திடையே விழிப்புணர்வு ஏற்பட்டாலே சீர்பெறும்.
நன்றி தினகரன்
10
 
 

பெரியதாய்
சேலம் மாவட்டத்தில் வசிக்கும் எழுபது (70) வயதுடைய மூதாட்டி தனது பதினாறாவது (16) வயதிலிருந்து ஆயிரத்திற்கு (1000) மேற்பட்ட பிரசவங்களை சிறப்பாகவும், தன்னம்பிக்கையுடனும் பார்த்துள்ளார். ஒரு பிரசவத்திற்கு இருபத்தைந்து ரூபாய் பணமும், ஒரு நிறைப்படி அரிசியும் மாத்திரமே காணிக்கையாக பெற்று வருகின்ற இவர் மீதி நேரங்களில் வயலில் வேலை செய்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தை பெறப்போகும் பெண்ணின் உடலில் சில அறிகுறிகளை பார்த்து பிரசவிக்கப் போகும் நேரம், பிரசவம் இலகுவானதா அல்லது கடினமானதா என்பதை முற்கூட்டியே தனது அனுபவத்தின்மூலம் கண்டறிந்து கொண்டு தன்னை தயார்படுத்திக்கொள்கிறார். இதற்கு இவர் விளக்கெண்ணையை மருந்தாகவும், தனது இரு கைகளை கருவியாகவும் பயன்படுத்துகின்றார். குழந்தைப் பேறின்போது சில தாய்மாரிற்கு அதிக இரத்தப்பெருக்கு ஏற்படின் புளியமிலையை அவித்து அவற்றைக் கொண்டு ஒத்தடம் கொடுப்பது அல்லது பத்துப்போடுவதன் மூலம் இரத்தப் பெருக்கை நிறுத்துகின்றார்.
கர்ப்பிணிப்பெண்ணை பரிசோதிக்கும் பெரியதாய்
மனிதநேயம்கொண்ட கிராமத்து மருத்துவச்சியாக திகழும் பெரியதாயின் சேவை ஏழைகளுக்குத் தேவை
நன்றி குங்குமம்
ஐ.நா. பாதுகாப்பு ஆலோசனைச்சபைக் கூட்டம்
ஐ.நா.பாதுகாப்பு ஆலோசனைச்சபை பெண்களின் அமைதியும், பாதுகாப்பும் என்ற அடிப்படையில் (UNSCR 1325) 31ம் திகதி ஒக்டோபர் மாதம் 2000ம் ஆண்டில் ஆணித்தரமாக ஏகமனதாக உறுதியான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தீர்மானம் எல்லா ஐ.நா. உறுப்பு நாட்டிற்கும் பெண்களுக்கு சம பங்களிப்பு, சுயமாக தீர்மானம் எடுக்கும் பொறுப்புக்களை ஒப்படைக்கும் பொறுப்பை உறுதி செய்தல் வேண்டுமென
கேட்கப்பட்டுள்ளது. திரும்பவும் அவர்களுக்கு இந்த
பிரவாகினி ஆனி 2011 இதழ் 32

Page 11
முக்கியத்துவத்தைவழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அவர்களுடைய பங்களிப்புகளுக்கு சமபங்களிப்புகளுக்கும் முன்னேற்றத்திற்கும் இடையூறின்றி இருத்தல், 1325 சரத்தை கணிப்பீடு செய்வதற்கு 4 முக்கிய காரணிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும். அவையாவன தடுப்பு, பாதுகாப்பு,
பங்களிப்பு, ஆறுதல் என்பனவாகும்.
இந்த வருடம் (2010) 1325 ஆலோசனை சபையின் தீர்மானங்களில் சொல்லப்பட்டவைகள் யாவும்
செயற்பட்டுள்ளனவா என்பதை மதிப்பீடு செய்ய உள்ளது.
இலங்கையில் இந்து சமயத்தில் நிலவும்
ஆன் தலைமைத்துவ சிந்தனைப் போக்குகள்
(UNFPA) ஐ நா சபையின் நிதி ஆதரவுடன் 2009 ஆம் ஆண்டு ஒர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்து சமயத்தினூடு பெண்கள் எங்ங்ணம் பால் வேறுபாட்டிற்கு உள்ளாகின்றனர். பெண்கன்பாரபட்சநிலைக்குதள்ளப்படுவதற்கு இந்துமத சடங்கு, சம்பிரதாயம், நம்பிக்கைகள், எண்ணக்கருக்கள் எந்த அளவிற்கு வழிகோருகின்றன என ஆராயப்பட்டது.
கள ஆய்வுக்கு மலைநாடு, யாழ், திருகோணமலை, மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்கள் உட்படுத்தப்பட்டது. கள ஆய்வில் கிடைக்கப்பெற்ற அறிக்கைகளைக் கொண்டு, இறுதியான முடிவுகள் நூல் வடிவில் வெளிக் கொண்டுவரப்பட்டது.
இந்துமதம்சார் அகல்வியலாளர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் என்போருக்கு பரிந்துரை மாநாடு ஏற்படுத்தப்பட்டு ஆய்வின் பெறுபேறுகள், முடிவுகள் என்பன முன்வைக்கப்படவுள்ளது. இதன் பிரகாரம் மீளவும் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் விளிப்புணர்வை ஏற்படுத்தும்
வகையில் பயிலரங்குகள் நடக்கவுள்ளன.
பிரவாகினி ஆனி 2011 இதழ் 32
 

இலங்கையில் இதன் பொருட்டு கலந்துரையாடல் உலக நாடுகளின் மத்தியில் பெண்களின் இடையூறுகளை நீக்கும் பொருட்டு பலதரப்பட்ட ஸ்தாபனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் முக்கியமாக கலந்துரையாடல், பரிமாற்றங்கள் யாவும் நடைபெற்று இதன் விளைவாக கீழ் மட்டத்திலுள்ள அனுபவங்களையும் அவர்களின் நிலைமைகளை புரிந்துகொள்ள இலங்கை எவ்வளவு தூரம்
மேற்குறிப்பிட முடியும் என்பதை கணிப்பீடு செய்வதாகும்.
தெற்ாடுவி
y - テ*。
III) 666ff6ð 6O)LDLÍD
டெமாகாணத்தில் பெண்ணுரிமை பற்றிய அறிவு வழி விளக்கம் (Gender Sensitivity) மிகவும் தாழ்ந்த நிலையில் காண்பதையும், பெண்ணியம் சம்பந்தமான இலக்கியங்கள் கிடைப்பது மிக அரிதாக இருப்பதையும் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் (WERC) அவதானித்தது. பால்நிலை சார்பான விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலையை உருவாக்கியபோது, நிகழ்வுகளில் பங்குபற்றிய பெண்கள் நூல் நிலையங்களில் பெண்ணிலைவாதம் சம்பந்தமான இலக்கியங்கள் பெறுவது அரிதாக உள்ள நிலைப்பாட்டை தெரிவித்தனர். எனவே பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் யாழ் நகரில் ஒர் வளவியல் மையம் ஒன்றை நிறுவ தீர்மானித்தது.
எமது தோழி, பெல்ஜியத்தைச் சேர்ந்த இறையியல் துறை சார்ந்தProf LieveTroch என்பவர் சேகரித்த நிதியுடனும், மனித g flooLn356ir gibaoh (Home for Human Rights) gasir GIT Xavier வழங்கிய சிறிய இடவசதியில் இம்மையம் 46, செட்டிதெரு, யாழ்ப்பாணம் என்றமுகவரியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தமிழ் பிரசுரங்கங்ள், சில கதிரைகள், மேசைகள் என்பனவற்றை WERC நிறுவனம் வழங்கியது. மேலும் இணைப்பாளர் ஒருவரையும் நியமித்துள்ளது. வேலை நாட்களில் தினமும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாசகர்கள் பயன்
பெற வாய்ப்பு கிட்டியுள்ளது.
11

Page 12
முச்சக்கர வண்டிக்கான (Trishaw)
பயற்சித்திட்டம்
யாழ்ப்பாணத்தில் கணவனை இழந்த தனிப் பெண்களின் மேம்பாட்டிற்கான WERCநிறுவனத்தினால் 2010ம் ஆண்டு யூன் மாதம் முச்சக்கர வண்டி ஒட்டுனர் பயிற்சி நெறி ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கான நிதி உதவியை Global Fund For Women இடம் பெறப்பட்டது.
இதற்காக நடாத்தப்பட்ட பயிற்சியில் 12 பெணகள் வண்டி ஒட்டுனராகும் தகுதியைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விதவைப் பெண்களுக்கான அதிகாரமளித்தலும் தற்காலிக இணைப்பும்
ஐ நா பெண்கள் அமைப்புடன் இணைந்து செயற்படுவதற்கு WERC நிறுவனத்திற்கு அழைப்பு கிடைத்தது. ஐநா பெண்கள் அமைப்பின் நோக்கம் சமூகத்தில் விலக்கப்பட்ட ஓரங்கட்டப்பட்ட பெண்களின் உரிமைகளை மேம்படுத்துவதாகும். இந்திய, இலங்கை, நேபாளம் ஆகிய 3 நாட்டு பிரதிநிதிகளான 18 பங்காளர்கள் இந்தியாவில்மார்ச் மாதம் 22ம் திகதி நடைபெற்றகலந்துரையாடலில் ஒன்று கூடினர். இலங்கை சார்பாக WERCநிறுவனத்தில் இருந்து கலாநிதி செல்வி திருச்சந்திரன், மற்றும் செல்வி ஹரிஷணி பின்னவலஎன இருவர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். இச்செயற்திட்டமானது 3 வருடங்களைக் கொண்டது. 3 நாடுகளில் இருந்தும் தலா 500 ஆக 1500 கணவனை இழந்த தனிப் பெண்களுக்கு ஒரு மேம்பாட்டு நிலையை உருவாக்குவதாக இக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.
தொகுப்பு :பூங்கோதை தங்கமயில் Σ
செல்வி திருச்சந்திரன்
Women's Education er Research Centre
58, Dharmarama Road,
Colombo - 06,
Sri Lanka.
T. P. : 259.5296, 2590985 Fax : 25963 13
E-mail womedre GSltnet.lk
12
 

மொழி பெயர்ப்பு வசதிகளைக் கொண்ட பெண்கள் கல்வி ஆய்வுநிறுவன கேட்போர் கூடம்
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தினது கருத்தரங்கு மண்டபம் 50 சொகுசு இருக்கைகளைக் கொண்டது. மற்றும் சமகால மொழி பெயர்ப்புக் கருவிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. உணவு, தேநீர், வசதி செய்து கொடுக்கப்படும். உங்கள் கூட்டம், கருத்தரங்கு, செயலமர்வு, படக் காட்சி, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்குத் தகுந்த வசதிகள் வழங்கப்படும்
WIERC
Auditorium Charges
Hall Charges A/C Non A/C O Full Day (8 hours) 8,500/- 7,000/- O For TWO Hours 3,500/- 2,250/- O Every Additional
One Hour 750/- 500/-
Facilities Television 400/- VCR 300/- Overhead Projector 300/- MultiMedia Projector 5000/- Mikes (each) 75/- Simultaneous Translation Unit 5000/- Head Phones (each) 300/-
Service Charges 10% of the total amount Food from out will not be permitted Maximum Seating Capacity 50 Ample Parking Space.
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் 58 தர்மராம வீதி, கொழும்பு 06 தொலைபேசி : 2595296, 2590985 தொலைநகல் : 2596313
く
TO :
Tamil Sangam 7,57 Lane
Rudra Mawatha Colombo 06
பிரவாகினி ஆனி 2011 இதழ் 32