கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பூங்காவனம் 2011.09

Page 1

Foundation

Page 2
With Best Compliments From:-
Weekend English School
Sat & Sun
Morning Batch : 8.00 - 11.30 Evening Batch: 1.30 - 5.00
For Nursery to O/L students
HEAD SCHOOL : 40, Dharmarama Road, Kalutara.
BRANCHES : 45, Sheik Jamaldeen Road, Beruwela.
9, Lotus Road, Dharga Town. 564/A, Colombo Road, Gintota.
ONE OF THE BEST ENGLISH PROGRAMME IN THE ISLAND
www.edxlcollege.com Hotline: 0776.320623
with Best Compliments From...
@ POOBADASIOGAD). BOOK D6POC
IMPORTERS, EXPORTERS, SELLERS & PUBLISHERS OF BOOKS STATIONERS AND NEWS AGENTS
202, SeaStreet, Colombo - 11, Sri Lanka
Tel-2422321, 2435713 Fax-2337313 E-mail-pbdho(asltnet.lk
Branches
34O, Sea Street, 3O9A-2/3,Galle Road, 4A, Hospital Road, Colombo- 11, Colompbo O6, Jaffnpa. Sri Lapla. Sri Lampla. Tel: O2-2226693
Te: 2395665 Tel: 4515775, 25O4266
 
 
 
 

Best Queen Foundation வெளியீடு
பூங்காவணம்
இதழ் 06 - 2011 செப்டெம்பர்
SSN 2012 - 6700
ஆசிரியர் குழு
ரிம்ஸா முஹம்மத் எச்.எப். ரிஸ்னா டப்ளியு.எம். வஸர்
ஆலோசகர்
திருமதி. ஐரீனா முஸ்தபா
வங்கித் தொடர்புகளுக்கு
Commercial Bank, Mount Lavinia Branch, Best Queen Foundation, A/C No :- 89300 16177.
என்ற இலக் கத்திற்கு காசு, காசோலைகளை வைப்பிலிட்டு அவற்றின் பற்றுச் சீட்டுக்களையும், அல்லது காசுக் கட்டளைகளாயின் (M.F. Rimza - Dehiwala Post Office) என்று குறிப்பிட்டு அதற்கான பற்றுச் சீட்டுக்களையும் எமக்கு அனுப்ப வேண்டும்.
தனிப்பிரதி - 80/= தபால் மூலம் - 100/- வெளிநாடு - 2.5S
தொடர்புகளுக்கு
"Poongavanam"
21 E, Sri Dharmapala Road, Mount Lavinia, Sri Lanka
Email:- bestaueen12Qyahoo.com
Website:- WWW bestoueen 12.blogspot.com
Phone:- O094 (O)77 5009 222 O094 (O)71440325i
புதிய ஆக்கங்களும், இச்சஞ்சிகை பற்றிய
விமர்சனங்களும்
எதிர்பார்க்கப்படுகின்றன.
நூல் விமர்சனத்துக்கு
அனுப்புபவர்கள் A நூலின் இரண்டு பிரதிகளை
அனுப்ப வேண்டும்.
----------
J60LLIL56555 படைப்பாளிகளே பொறுப்பு. செவ்வைப்படுத்த ஆசிரியர் குழுவுக்கு

Page 3
அன்பான நெஞ்சம் கொண்ட உங்கள் அனைவரின் ஒத்துழைப்பாலும் ஊக்குவிப்பாலும் பல தடைகளையும் தாண்டி தலைநிமிர்வுடன், பூங்காவனம் ஆறாவது இதழை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சியடையும் அதே நேரம் உங்களனைவருக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மலையகம் வாழ் மக்கள் குறித்த பல அபிப்பிராயங்கள் பரவலாக எல்லோராலும் பேசப்படுகின்ற இத்தருணத்தில், அவர்களது கல்வித்துறை சார்ந்த விடயங்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது மிக முக்கியமாகின்றது.
தோட்டத்துறை மக்களின் கல்வியறிவு வீதம் நோக்கப்படுமிடத்து, ஆரம்ப காலத்தில் மிகவும் பின்தங்கிய நிலையே அங்கு காணப்பட்டது. அவர்களின் வாழ்க்கைத் தரம், பொருளாதார நிலைமை போன்றன போதியளவு வளர்ச்சியைக் கொண்டிருக்கவில்லை. எனினும் சமீப காலமாக அதிகரித்துவரும் அவர்களின் கல்வி மேம்பாட்டு நிலை மகிழ்ச்சியளிக்கின்றது.
குறைந்த சம்பளம் வழங்கப்பட்டும் அதிக உழைப்பு பெறப்பட்டும் காலங்காலமாக அடிமைகளாக வாழ்ந்து வந்த தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் இன்று நம்பிக்கையூற்றுக்கள் உற்பத்தியாகி வருகின்றன. தலைமுறை தலைமுறையாக தாழ்த்தப்பட்டு வந்தவர்கள் மத்தியில் நம்பிக்கை நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டிருக்கின்றன.
மலையக மக்கள் உழைப்பதற்காக சீவிப்பவர்கள் என்ற கருத்துநிலையை அடியொட்டாக மறுத்து, தோட்டப்புற பாடசாலையைச் சேர்ந்த சில மாணவர்கள் தமக்குள்ளும் திறமைகள் இருக்கின்றன என்பதை அகில இலங்கை ரீதியாக நடாத்தப்படும் பல போட்டிகளில் வெற்றி பெற்று தமது இருப்பு நிலையை நமக்கு உணர்த்தியிருக்கின்றார்கள். அதனுடாக ஏனைய மாணவர்களுக்கும் முன்மாதிரிகளாக அவர்கள் திகழ்கின்றார்கள்.
தேயிலை கொழுந்து பறிக்க பிள்ளைகளை அனுப்புவதை விடவும் இன்றைய பெற்றோர்கள் கல்வி கற்பிப்பதில் அதிக சிரத்தை எடுத்துக்கொள்வது வரவேற்கத்தக்க விடயம். இந்த முயற்சி தொடர்ந்தும் வெற்றி பெற்று அவர்களும் நல்ல நிலைமையில் வாழ வேண்டும் என்பதே எமது விருப்பமும்
in...
- ஆசிரியர் குழு
 
 

03
பூங்காவினுள்ளே ".
நேர்காணல்
திருமதி. நயீமா சித்தீக்
கவிதைகள்
(Заь.6ір. ағb60 ஜெனீரா ஹைருள் அமான் அ. பேனாட் கே. ஜோன் யோ. புரட்சி கலைமகன் பைருஸ் மன்னார் அமுதன் நஸிஹா ஹலால்தீன் 6T6t. LD653,6ITT செ. ஞானராசா மூதூர் கலைமேகம்
சிறுகதைகள்
எஸ்.ஆர். பாலசந்திரன் இக்ராம் எம். தாஹா பி.பி. அந்தோனிப்பிள்ளை சுமைரா அன்வர் பவானி சிவகுமாரன்
கட்டுரைகள்
கவிஞர் ஏ. இக்பால் கா. விசயரத்தினம் எம்.எஸ்.எம். சப்ரி
வாசகர் கடிதம்
நூலகப்பூங்கா
கலை இலக்கிய зорѣ சஞ்சிகை

Page 4
இலங்கையின் மலையகத்தில் பதுளை - ஹப்புத்தளையைப் பிறப்பிடமாகக்கொண்ட இவர் பண்டாரவளை சாஹிராக் கல்லூரி, ஹப்புத்தளைத் தேசிய பாடசாலை, காத்தான்குடி மத்திய கல்லூரி, பசறை மத்திய கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவியாவார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொதுக் கலைமாணிப் பட்டத்தையும், கல்வித் துறை டிப்ளோமா பட்டத்தையும் பெற்றுள்ளார்.
1960 களில் 7ம் வகுப்பிற் கற்கும்போது கல்வி எனும் தலைப்பில் இவர் எழுதிய முதல் ஆக்கத்தை தினகரன் பிரசுரித்தது. அதனைத் தொடர்ந்து கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், உருவகக் கதைகள், குட்டிக்கதைகள் என இலக்கியத்தின் பல்வேறு வடிவங்களில் இவர் முனைப்புடன் ஈடுபட்டார்.
இல்லற வாழ்க்கையில் இணைய முன்பு நயீமா ஏ. பவரீர் என எழுதிவந்த இவர் திருமணத்தின் பின்பு நயீமா சித்தீக் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டார். 1970 ஆம் ஆண்டில் ஆசிரியையாக நியமனம் பெற்ற இவர் இலங்கையின் பல பாகங்களிலும் பணியாற்றி தற்போது ஓய்வுபெற்றுள்ளார். அவரிடமிருந்து பகிர்ந்து கொள்ளப்பட்ட கருத்துக்களை பூங்காவனம் வாசகர்களுக்காகத் தருகிறோம்.
1. இலங்கையின் முன்னணி முஸ்லிம் பெண் சிறுகதை எழுத்தளரான உங்களின் குடும்பச்சூழல், வாழ்வுநிலை பற்றி கூறுங்கள்?
அழகிய இயற்கை எழில கொஞ்சும் ஹப்புத்தளை என்ற பிரதேசமே எனது ஊராகும். எனது தாயார் தாஜ் பீபி. தந்தை அப்துல் பவரீர் மரிக்கார். கணவர் முஹம்மத் சித்திக். பிள்ளைகள் பாத்திமா சியாமா, பாத்திமா ஷகீமா, பாத்திமா ஸஹற்ரானா. எனது பாட்டி, தாய் இருவருமே நிரம்பிய வாசிப்புப் பழக்கம் உள்ளவர்கள். பாட்டியின் சேமிப்பாக இருந்தவை பல்வேறு வகைப்பட்ட இஸ்லாமிய இலக்கியங்கள். மிகவும் கவனமாகவும்
4), இல4,4ய சமூக சஞ்சிகை
 

பயபக்தியுடனும் அவர் அவற்றைப் பாதுகாத்தார். தாய், பாட்டி இருவருமே வாராந்த, மாதாந்த தமிழ் சஞ்சிகைகள் அனைத்தையும் வாங்கி, தவறாது வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள்.
கல்கி, அகிலன், ந. பார்த்தசாரதி, லக்ஷ்மி, கி.வா. ஜகன்னாதன், சாண்டில்யன், ஜெயகாந்தன், மு.வ என்று எல்லோரது நாவல்களையும் வாசிப்பதோடு நின்றுவிடாமல் சிறந்த விமர்சகராவும் எனது தாய் இருந்ததை நினைத்து நான் வியப்பதுண்டு. ஏனென்றால் அதிகம் வெளியே செல்லாத, எட்டாம் வகுப்பு வரையே அதுவும் ஆங்கில மொழி மூலம் கற்ற அவரால் இவற்றை எப்படிச்செய்ய முடிந்தது என்பதுதான்.
2. எழுத்துத் துறைக் குள் தாங்கள் காலடி எடுத்து வைக்க முன்னோடியாக இருந்தவர்கள் பற்றி?
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த நான் காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலயத்தில் கல்வி கற்கச் சென்றதும் தமிழ் மீதுள்ள ஆசை துளிர்க்க இறைவன் வழிவகுத்தான். (அல்ஹம்துலில்லாஹற்) தொடர்ந்து பசறை மத்திய கல்லூரியின் விடுதி வாழ்க்கை, அங்கே சிந்திக்கக் கிடைத்த வாய்ப்பு, நல்ல நூலகம் ஆகியனவும் என் எழுத்துத் துறையில் பாரிய பங்களிப்புச் செலுத்தியுள்ளன. அத்துடன் பசறை மத்திய கல்லூரியின் தமிழ் ஆசிரியர் மதிப்பிற்குரிய அமரர் ஐ.சாரங்கபாணி அவர்களும் என் எழுத்துத் துறையின் முன்னோடியாவார்.
அவரது சொந்த நூல்களை வாசிக்கக் கொண்டு வந்து தருவார். அடிக்கடி போட்டிகளை நடாத்தி அவரது சொந்தப் பணத்தில் பரிசுப் புத்தகங்களை வாங்கித்தருவார். அவரால் தரப்பட்ட ஏராளமான தரமான புத்தகங்கள் இன்றும் என்னிடம் உள்ளன.
இந்த உதவும் கரங்களையும், வழிகாட்டிகளையும் இறைவன் எனக்கு அளித்தான்.
3. சிறுகதைத் துறை, நாவல் துறைகளில் ஈடுபட்டுவரும் நீங்கள் இதுவரை எத்தனை தொகுதிகளை வெளியிட்டிருக்கிறீர்கள்? அவை யாவை?
எனது சிறுகதைகளை பொதுவாக இலங்கையின் எல்லாத் தமிழ் வெளியீடுகளும் பிரசுரித்தன. கட்டுரைகள் பல் நூற்றுக் கணக்காக வெளிவந்தன். அவ்வப்போது கவிதைகளையும் எழுதினேன். நான் இதுவரை எழுதிவெளியிட்ட நூல்கள் பின்வருமாறு:-
1. வாழக்கைப் பயணம் (1975) - நாவல்
(வீரகேசரி பிரசுர வெளியீடு)

Page 5
Ut
2. வாழ்க்கைச் சுவடுகள் (1989) -
01 ஆவது சிறுகதைத் தொகுதி (கல்ஹின்னை தமிழ் மன்ற வெளியீடு)
3. வாழ்க்கை வண்ணங்கள் (2004) -
02 ஆவது சிறுகதைத் தொகுதி (உடதலவின்னை சிந்தனை வட்ட வெளியீடு)
4. வாழ்க்கை வளைவுகள் (2005) -
03 ஆவது சிறுகதைத் தொகுதி (மணிமேகலைப் பிரசுரம்)
5. ஆயிரம் வினாக்களும் விடைகளும்
(951ốlụp LJIL- bII6ò)
6. சீறாப்புராணம் நபி அவதாரப் படலம் (தமிழ் பாட நூல்)
4. வானொலித் துறையில் உங்களது பங்களிப்பு பற்றி.?
தரம் 9 படிக்கும் போது வானொலி கலைஞர் தேர்வில் தெரிவானேன். ஆரம்பத்தில் நிகழ்ச்சிகளில் பங்கு பற்றினேன். பின்னர் பிரதிகளை எழுதினேன். மாதர் மஜ்லிஸ் உரைச் சித்திரங்கள், நாடகங்கள் என்பவற்றை எழுதினேன். பல வானொலி கவியரங்குகளில் பங்குபற்றினேன்.
சாதாரண தரம் படிக்கும்போது வானொலிக்காக நான் எழுதியனுப்பிய முதல் பேச்சுப் பிரதி பாத்திமா நாயகியின் அடிச்சுவட்டில் என்பது. அது உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பேசுவதற்கான நேரம், திகதி, கொடுப்பனவு என்பன குறிக்கப்பட்டு அழைப்புக் கடிதம் வந்ததையும் எனதுயிர் பாட்டியுடன் சென்று ஒலிப்பதிவு செய்ததையும் மறக்கத்தான் முடியுமா? அல்ஹாஜ் கபூர், இஸட்.எல்.எம். முஹம்மத், குத்தூஸ் போன்ற பெரியார்கள் எனக்கு வழிகாட்டியதை இப்போதும் நான் நன்றியுடன் நினைவுகூருகிறேன். தொடர்ந்து வானொலிக் கதவுகள் எனக்காகத் திறந்துவிடப்பட்டன.
5. சிறந்த மேடைப் பேச்சாளராக இருக்கும் நீங்கள் அந்த அனுபவங்கள் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
பொது மேடைகளைப் பொறுத்தவரையில் எனது முதல் பேச்சு நான் ஆண்டு ஒன்று படிக்கும் போது ஒரு ஆசிரியரின் பிரியாவிடையின் போது ஒரு வாங்கின் மேல் ஏறி நின்று பேசியதுதான். நான் கற்ற பாடசாலைகள் மேடைகளை விசாலித்துத் தந்தன. பசறை மத்திய கல்லூரி மாதிரி பாராளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவி என்ற பதவி எனக்கு நிறைய வாய்ப்பைத் தந்தது. அக்கல்லூரியில் அக்காலத்தில் வருடாந்தம் பெரிய அளவில் இயல், இசை, நாடகம் என மூன்று நாட்களுக்கு முத்தமிழ் விழா நடக்கும். எத்தனை பிரமாண்டம்? எத்தனை நிகழ்வுகள்? எத்தனை
கலை, இலக்கிய சமூக சஞ்சிகை
 
 
 

07
பெரியோர்களின் வரவுகள்? மர்ஹஉம்களான ஈழமேகம் பகிர் தம்பி அஸ. அப்துஸ்ஸமது ஆகியோர்கள் மேடையில் பேசியவை இன்னும் பசுமையான நினைவுகளே,
6. தாங்களின் ஆரம்பகாலப் படைப்புக்கள் பெருமளவு தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியலை பரிண்ணணியாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. அதற்கான காரணம் யாது?
பதினாறாவது வயதில் ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸின் அகில இலங்கை பெண்கள் பிரிவின் தலைவியானேன். பொதுவாக மத்திய மலை நாட்டில் நான் ஏறியிறங்காத தோட்டங்கள் இருக்கவே முடியாது. காங்கிரஸ் கூட்டங்கள் மாத்திரமல்லாது பல்வேறு மன்றங்களின் கூட்டங்களுக்கும் சென்று உரையாற்றி இருக்கிறேன். அரச பாடசாலையில் ஆசிரியராகுமுன் "அசோகா கல்லூரி' என்று ஒரு பாடசாலையை நானே ஆரம்பித்தேன். தோட்டப்புறத்து மாணவர்கள் இதில் கல்விகற்றனர். இவ்வாறான அனுபவங்கள்தான் தோட்டத் தொழிலாளிகளின் வாழ்வியலை படைப்புகளுக்கூடாக சொல்ல காரணமாக இருந்தது எனலாம்.
7. ஊடகத்துறையில் உங்களுக்கிருந்த தொடர்பு பற்றியும், இதுவரை உங்களுக்குக் கிடைத்த விருதுகள் பற்றியும் குறிப்பிடுவீர்களா?
ஆரம்பத்தில் தினபதி, சிந்தாமணி பத்திரிகைகளின் ஹப்புத்தளை பிராந்திய நிருபராக கடமை புரிந்துள்ளேன்.
இதுவரை கிடைத்த விருதுகள்.
1. நஜ்முல் அதீப் (இலக்கியத் தாரகை)
1991 முஸ்லிம் சமயக் கலாசாரத் திணைக்களம்
2. சிறுகதை செம்மணி - 2004 சிந்தனை வட்டம்
3. கலாபூஷணம் - 2005 இலங்கை அரசு
அவ்வப்போது பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசு, அரசுசார்பற்ற அமைப்புக்களால் பொன்னாடை, பொற்கிழி, விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளேன்.
8. இறுதியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
எமது பணி ஒரு அற்பத்துளியாக இருந்தாலும் அது இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென்பதும், எழுத்தும் பேச்சும் எவ்வழிகளிலாவது மக்களுக்கு உதவ வேண்டுமென்பதுமே எனது நோக்கம். நமது எந்தச் செல் சுயநலமில்லாததாக இருக்கிறதோ நிச்சயமாக அதற்கு சமூக அங்கீகாரம் கிடைக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக நல்லது செய்தோம் என்ற மனநிறைவு கிடைக்கும்!!!

Page 6
வாழ்க்கைப் பாதையில் சாதனைப் படைத்து சரித்திரம் படைக்க காத்திருக்கும் சகோதரா.
உன் சிந்திப்பு என்ற ஓர் உதிப்பின் பரிமாணங்களே நாளைய உலகின்
சோதனைகளும் வேதனைகளும் நேர்ந்திடலாம்.
எனினும் நீயோ சடைவுகளோ சலிப்புகளோ இன்றி சாதிப்பு என்ற சம்ராஜ்யத்தை நோக்கி
பிரம்மாண்டங்கள். தன்னம்பிக்கையுடன்
இன்றைய போராடு.
உன் எண்ணங்களே நாளைய உலகில்
நாளைய உலகின் நீ சூடும் கிரீடம் வண்ணங்கள். வெள்ளியா
வெண்கலமா என்று உன் பயணப் பாதையில் உன் முயற்சி சவால்களும் நிர்ணயிக்கும்!!!
இழப்புக்களும்
பரகடுவ - கே.எம். சம்ஸ்
வாசகர் கவனத்திற்கு
சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள். அது பூங்காவனம் சஞ்சிகை தொடர்ந்து வெளிவருவதையும், கிடைப்பதையும் உறுதி செய்யும். சந்தாதாரராக இணைந்து கொள்பவர்கள் ஆகக் குறைந்தது 500/= வை சந்தாவாக செலுத்தவும். பக்கச்சார்பற்ற முறையில் எழுதப்பட்ட, தெளிவான கையெழுத்தில் அமைந்த, இதுவரை பிரசுரமாகாத (சிறுகதைகள், இலக்கியக் கட்டுரைகள் A4 தாளில் 03 பக்கங்களுக்குள்) ஆக்கங்களையே பூங்காவனம் எதிர்பார்க்கிறது. பூங்காவனம் இதழில் விளம்பரங்களைப் பிரசுரிக்க மற்றும் கொடுப்பனவுகள், சந்தா, விற்பனை முகவர்களின் தொடர்புகள் ஆகியவற்றுக்கு 077 5009 222 என்ற தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்!
- ஆசிரியர் குழு -
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 

(கவிஞர். ஏ. இக்பால்)
பரீட்சை மணி டபம் ஒன்றில் மேற் பார்வையாளர்களாகவும் , பொறுப்பாளர்களாகவும் கடமையாற்றுவதற்கு வந்தவர்களில் பேராசரியர் கா. சிவத்தம்பியும், பேராசிரியர் எம்.ஏ. நுஃமானும் நானும் அடிக்கடி சந்தித்துக் கொள்வோம். இடைவேளையின்போது இலக்கியம் மட்டுமல்ல பலதையும், பத்தையும் கதைத்துக்கொள்வோம்.
தமிழில் அகராதி வருமுன் நிகண்டுதான் அவ்விடத்தை நிரப்பியது. பெஸ்கி எனும் வீரமா முனிவரின் சதுரகராதிதான் 1732 இல் தொகுக்கப்பட்ட முதல் அகராதி. இந்த அகராதி என்னிடத்தில் உண்டு எனும் சங்கதியை அகராதி பற்றிய கதையின்போது நான் கூறினேன்.
நுட்மான் என்னிடம் இக்பால் அதை எனக்குத் தாருங்கள். போட்டோ பிரதி எடுத்து பேராதனைப் பல்கலைக் கழகத்திற்கு கொடுக்க வேண்டும்’ எனக்கேட்டார். மறுநாள் நான் அதை எடுத்துச் சென்றேன். அட்டை இல்லை. இடைக்கிடை பூச்சரித்த நிலை. என்றாலும் முழுமையாக இருந்தது. முன்பக்க முகவுரைக்கு மேலே ‘கார்த்திகேசு என பேனையால் எழுதியிருந்தது. இதைக்கண்ட சிவத்தம்பியவர்கள் இது எனது தகப்பனாரின் எழுத்து. இது எங்களுடைய சொத்து' என உரிமை கொண்டாடினார்.
“உங்களுடைய சொத்தாக இருக்கலாம். இப்போது நான் அதனை சொந்தமாக்கியுள்ளேன். உரிமைக்கு வழக்குப் போட வேண்டும்' என்றேன்.
சரி. இது எப்படிடா கிடைத்தது எனக்கேட்டார்.
"பேராதனை தமிழ் வித்தியாலயத்தில் கற்பித்துக்கொண்டிருந்த எனக்கு 15.03.1966 இலிருந்து அட்டுலுகம முஸ்லிம் வித்தியாலயத்திற்கு மாற்றம் கிடைத்தது. அன்று கடமை ஏற்க அங்கே சென்றேன். ஆசிரியர்கள், மாணவர்கள் பாடசாலையை சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். அங்கேயிருந்த பலா மரங்களிலிருந்து பழங்களைப் பறித்து கூட்டமாக ஆசிரியர்கள் சிலர் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். நான் அதிபர் அறைக்குச் சென்று கடமை ஏற்ற கடிதம் கொடுத்துவிட்டு வெளியே வந்தேன். எதிரில் பத்திரிகைகள், பழைய கழிவு நூல்கள் குப்பையில் கொட்டப்பட்டு, மாணவர்களால் நெருப்பு வைத்து எரிவதைக் கண்டேன். பக்கத்தில் உள்ள பெருந்தடி ஒன்றை எடுத்து எரிந்துகொண்டிருந்த குப்பையைக் கிளறினேன். அட்டையில்லாத இந்தக் கோலத்துடன் இந்த அகராதி வெளிவந்தது. எடுத்துத்தட்டி எனது கைப் பைக்குள் வைத்துக்கொண்டேன். மீண்டும் விரித்துப் பார்த்த போதுதான் சதுரகராதி என பளிச்சிட்டது. இந்தப் பாடசாலையில் ஆரம்பகால அதிபராக இருந்த கார்த்திகேசுவின் நாமம் அதில் பொறிக்கப்பட்டிருந்தது. அப்போதுதான் தனது தந்தையார் அங்கு கற்பித்த கதையை பேராசிரியர் கா. சிவத்தம்பியவர்கள் கூறினார்.

Page 7
பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அதைப்பிரித்து போட்டோ பிரதி எடுத்தார். நான் அதை பைண்ட் செய்துகொள்வேன் என வாங்கிக்கொண்டேன்.
சதுரகராதி என்றால் நால்வகைப்பட்ட அகராதி என்று பொருள். பெயர், பொருள், தொகை, தொடை என நான்கு வகை அகராதியின் தொகுப்புத்தான் அவை. தமிழில் ஏராளம் அகராதிகள் வெளிவந்தபோதும் நால்வகைப்பட்ட அகராதி சதுரகராதிக்குப்பின் ஒன்றே ஒன்றுதான் வெளிவந்துள்ளது. 'இருபதாம் நூற்றாண்டு தமிழ்ப் பெயரகராதி' என்பது அதன் பெயர். இதன் ஆசிரியர் பி. இராமநாதன். இதன் முதல் பதிப்பு 1909 ஜனவரியில் வந்துள்ளது. மறுபதிப்பு 1991 மார்ச்சில் வெளிவந்தது. இரண்டு பாகங்களாக வெளிவந்த இவ்வகராதி பொருள், தொகை, தொடை, நெடிற்கீழெதுகை என்ற நான்கு வகைகளைக் கொண்டது.
பேராசிரியர் கா. சிவத்தம்பியின் தொடர்பு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் ஏற்பட்டிது. பாடநூல் ஆலோசனை சபை, கல்வியியல் சுற்றோட்டம், பரீட்சை நிலைய தொடர்புகள் எனும் கல்விசார்ந்த இணைப்பு நிறைய எங்களிடம் உண்டு. அதுமட்டுமல்ல இலக்கியம் சார்ந்த உறவும் அதிகமுண்டு. அவற்றை அலசும்போது, பல்கலைக்கழக தொடர்புகளுக்கு முன்னுள்ள விஷயங்கள் நிறைய வரும். பின்பு தொடர்ந்து அலசுவோம்.
(இன்னும் வரும்) திர்காலம் உனதே ப்ரிய சகி. நிலவுன் -
v V 6,60760)6OTL LJTU9595) அந்தி நேரம் - உன் நாயாகக் குரைக்கும் ஆத்திரங்களை r : மனித சர்ப்பத்தின் வேதனை உதிரத்தில் சீறல்களைச் செவிமடுக்காமல் தோய்த்தெடுத்து சாந்தமாய் நின்று தோழமையின் தயாளத்தை சாதனை படை! தேற்றிக்கொண்டாய்!
தொட்டிலை ஆட்டும் ವ್ಹೀಂ। முற்சிகளுக்கு பெண்களின் கைகளே ஓஊன்றுகோலாய் ಇಜ್ಡ! ஆள்கிறது தாமிருக்க தூற்றிய நா நச்சரிக்கும் நீசர்களின் நாளை உன்னை நயவஞ்சகததுள நசுங்கிவிடாதே! போற்றியே பேசும்!
எதிர்காலம் உனதே உன் திறமைகளை t ஊனமாக்கிவிடாது எதற்கும் அஞ்சாதே!!! உயர்ந்து செல்!
கிண்ணியா - ஜெனிரா ஹைருள் அமான்
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 

சிறுகதை - எஸ்.ஆர். பாலசந்திரன்
தூரத்தில் கணபதிப்பிள்ளை மாஸ்டரின் வருகையை உணர்ந்துகொண்டதும் அந்த வகுப்பிலுள்ள மாணவர்கள் நிசப்தமானார்கள். கணிதப் பாடத்தை சிறப்பாக கற்பிக்கக்கூடிய கணபதிப்பிள்ளை மாஸ்டர் கண்டிப்பானவர். அவரிடம் கற்று தற்போது நல்ல நிலையில் இருக்கும் பலர் கணபதி மாஸ்டரை சந்திக்க வரும்போது, படிக்கும் காலத்தில் தாம் பிரம்பால் பட்ட அடிகளை ஞாபகித்துச் சிரிப்பார்கள். வகுப்பில் நுழைந்த கணபதிப்பிள்ளை மாணவர்களைப் பார்த்து வழமைபோல "எல்லோரும் கணக்குப் புத்தகத்தை எடுங்கோ’ என்றார். சந்திரன் என்ற ஏழை மாணவன் புத்தகம் கொண்டு வராவிட்டால் பிரம்படி கிடைக்கும் என்று தெரிந்திருந்ததால் எப்போதும் போலவே மெதுவாக எழுந்து நின்றான்.
சந்திரனின் தகப்பனுக்கோ மாலை மயங்கினால் மது மயக்கம். உழைக்கும் பணத்தையெல்லாம் குடியிலேயே அழித்துவிடுவார். அவருடன் சண்டை பிடித்தே நோயாளியாகியிருக்கும் அம்மா. எனினும் படிப்பில் சந்திரன் கெட்டிக்காரன் என்பதால் அவனது பாடசாலை வாழ்க்கையை பாழ்படுத்த பெற்றோர் விரும்பவில்லை. ஆனால் சந்திரன் கேட்கும்போது புத்தகத்தை, சப்பாத்தை எல்லாம் வாங்கிக்கொடுக்கும் அளவுக்கு அவர்களுக்கு வசதியில்லாதபடியால் பலநாட்களாய் கணிதப் புத்தகம் இல்லாமல் அடிவாங்கியிருக்கிறான் சந்திரன்.
இன்றும் சந்திரன் எழுந்து நின்றதைக்கண்ட கணபதி மாஸ்டர் சீறினார். கையை நீட்டச்சொல்லி பிரம்பால் அடித்தார். “காசுக்கு வழியில்லாதவர்கள் ஏன்டா படிக்க வர்ரீங்க? போய் கொப்பனோடு கூலிவேலை செய்யடா’ என்று கடுமையாக திட்டினார். சந்திரன் அவமானம் தாங்காமல் கூனிக்குறுகிப் போனான்.
அன்று பாடசாலைவிட்டு வீடுசென்ற மாஸ்டர் தனக்காக வீட்டில் காத்திருந்த தரகரைக் கண்டு ஆச்சரியமடைந்தார். அந்த தரகருடன் வயதான இன்னொருவரும் இருந்தார். உள்ளே வந்தவரிடம் மனைவி இரகசியமாக "இஞ்சை பாருங்கோ. போன மாதம் மகள் சந்தியாவிற்கு பார்த்த சாதகம் பொருத்தமாம். கோவிலில் சந்தியாவைக் கண்ட மாப்பிள்ளைப் பெடியன் சம்மதம் தெரிவித்துவிட்டானாம். அவன் பட்டதாரியாம். தனியார் வங்கியில் நல்ல உத்தியோகம் பார்க்கிறானாம். இனியும் பிரமேரீஷன் கிடைக்குமாம், மகளுக்கு வயது 25 ஆகுதல் லோ, எப்பாடுபட்டாலும் இதை சரிப்பண்ணிடுங்கோ’ என்றாள்.
in Sintit, i ci t', ': si, fix);

Page 8
மாஸ்டர் முகம் கழுவி உடைமாற்றிக்கொண்டு வந்தமர்ந்தார். சம்பிரதாயப் பேச்சுக்களின் பின் சீதனம் பற்றிய பேச்சு தொடங்கியது. வந்தவர் மாப்பிள்ளைப் பெடியனின் பெரிய தகப்பனார். 'உண்மையைச் சொல்லிறதென்றால் நான் சம்பளக் காசில் வாழ்றவன். இந்த வீட்டை சீவிய உரித்தோடு தாறன். காசு 30,000/= தருவன். நகையும் என்னால் முடிந்தளவுக்கு செய்துபோடுவன்’ என்று மாஸ்டர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே வந்திருந்த அந்த முதியவர் ஏளனமாகச் சிரித்தார்.
'உந்தச் சீதனத்திற்கு ஒரு க்ளார்க் கூட கிடைக்க மாட்டான். இவன் மாப்பிள்ளை பட்டதாரி. ஏதோ பொம்பிளை வடிவாய் இருக்கிறாள் என்றுதான் சம்பந்தம் பேச வந்தனான்’ என்று பலவாறு சொல்லிக்கொண்டுபோக, கணபதி மாஸ்டர் உடைந்து போய்விட்டார்.
"இதோ பாருங்கோ. மிஞ்சிப்போனால் 5,000/= தான் எனக்கென்று இருக்கு. அது என் செத்தவீட்டுச் செலவிற்கும் போதாது. நான் முந்திறனோ மனிசி முந்துதோ தெரியாது. கொஞ்சம் மனசுவச்சு குமர் காரியத்தை முடிச்சி விடுங்கோ’ என்றார் மாஸ்டர்.
30,000/= பிச்சை காசுக்கும் இந்த ஓட்டை வீட்டுக்கும் மாப்பிள்ளை தர ஏலாது. உந்தச் சம்பந்தம் வேண்டாம். யோவ் தரகரே வாரும் போகலாம் என்றுவிட்டு எழுந்தார் அந்தப் பெரியவர். உள்ளே மனைவி விசும்பும் சப்தம் கேட்டது. மீண்டும் மாஸ்டர் அந்த முதியவரிடம் கெஞ்சிப்பார்த்தார்.
'ஏனய்யா காசுக்கு வழியில்லாததுகளுக்கெல்லாம் உத்தியோக மாப்பிள்ளை கேக் குது? ஒரு கடைக்காரனையோ, கூலிக் காரனையோ கட்டிக் கொடுக்குறதுதானே? உந்தச் சீதனத்திற்கு அவன் ஒத்துக்கொள்ளமாட்டான். விடுமய்யா' என்றுவிட்டு வெளியேறினார் அவர். மாஸ்டரின் உண்மை நிலை அறிந்திருந்தபடியால் எதையும் பேசாமல் தரகரும் வெளியேறினார்.
அடுத்த திங்கட்கிழமை கணிதப் பாடம் தொடங்கியது. ‘சந்திரன் இங்கே வா’ என்று கூப்பிட்டார். இன்றும் அடி நிச்சயம் என்று எண்ணிய சந்திரன் தயங்கிக்கொண்டே "மாஸ்டர் அடுத்த கிழமை கட்டாயம் கணிதக் கொப்பி கொண்டுவாறன்’ என்றபடி அடி வாங்குவதற்காக கையை நீட்டினான். என்ன ஆச்சரியம்? அவனது கையில் புத்தம்புதிய கணிதக் கொப்பியொன்றைக் கொடுத்து ‘இனிமேல் நல்லா கவனமாக படித்து எப்போதும்போல வகுப்பில் முதல் பிள்ளையாக வா’ என்று வாஞ்சையுடன் கூறினார் மாஸ்டர்.
சந்திரனுக்கு புதினமாக இருந்தது. ஆனால் புத்தகத்தைத் தரும்போது மாஸ்டர் ஏன் கண்கலங்கினார் என்றுமட்டும் அவனுக்கு புரியவில்லை!!!
E0LLLLHHLLLLSLLLLLLLLLSLLLLL00LLLLLLLLL0LLLSLSSLLSLSSSLSSSSSSSSSSSSaSSSSSLLLSSLLLLLLaLSSSSLSSLSSLLLSS o இலக்கிய சமூக சஞ்சிகை SSLLLLLLLL0LLLLLSLLLL0LLLSLLSLLLLLSLLLLL0qLSS0SLLLLLLLLLLLLLLLLL0LLLLLLLqLLLLLLLLLLLLLLL0LLLL000LLL0LLSLL
 
 
 

ஒவ்வொரு வைகறையும் உன்னை நினைக்கிறேன். ஒவ்வொரு விடியலிலும்
உனக்கான வரவேற்புக் m
"في*9ع
கவிதையை வாசிக்கிறேன்.
ஒவ்வொரு சித்திரையிலும் உன் வரவை எதிர்பார்க்கிறேன். ஆனால் சித்திரை நித்திரையாகிறது அதுதான் தர்மமா? அதுதான் உண்மையா?
அதுதான் KM” உன் தரிசனமா?
S აბ மெளனங்கள் உடைந்து
மனிதம் பேசட்டும்
சித்திரை நிலவே நீ நித்திரை கலைந்து எழுந்துவிடு. புன்னகைத் தீவில் பிரவேசிப்போம்!!!
நம் சந்தங்கள் சந்திக்கவில்லை ஆனாலும் உன் எண்ணம் மட்டும் என்னுள் வாழ்ந்தன.
உன்னிடத்தில் ஒப்புவிக்காத பல குமுறல்களை வெள்ளைத்தாள் மீது கொட்டித்தீர்த்தேன்.
காகிதத்தை என் நண்பனாக்கி என்னுள் இருக்கும் நட்பின் வலியை நானே தாங்கிக்கொண்டேன்.
வெளியே சிரித்து ரணங்களை மட்டும் மறைத்துக்கொள்கிறேன்.
என்னால் கூறு முடியாத உயிர் வேதனையை என்னோடிருந்தால் நீ உணர்ந்திருப்பாய்!!!

Page 9
|நுணாவிலூர் கா. விசயரத்தினம்
உலகிலுள்ள உயிரினங்கள் அத்தனையும் அன்பு, பரிவு, பாசம் காட்டுவதால் ஆண், பெண் பாலாரிடம் காதல் எழுந்து, அவர்கள் ஒன்றறக் கலந்து, தம் இன விருத்தியை நிலைநாட்டிப் பூமித்தாய்க்குப் பெரும்பங்காற்றி வருகின்றன. மனித இனத்தைத் தவிர்ந்த, மற்றைய உயிரினங்கள் யாவும் திருமணம் என்று வெளிப்படையாக நடாத்தாவிட்டாலும், அவையும் ஏதோ ஒரு வகையில் ஒரு மணம் புரிகின்றன.
திருமணங்கள் நாட்டுக்கு நாடு - காலத்திற்குக் காலம் வேறுபட்டிருக்கின்றன. திருமணங்கள் அனைத்திலும் சிறந்தது காதல் திருமணமேயாகும். காதல் திருமணத்தில்தான் ஒருவரையொருவர் புரிந்து கொள்வதற்குச் சந்தர்ப்பம் கிடைக்கின்றன.
எண்வகை மனங்கள்
காதல் திருமணங்கள் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே இருந்து வந்துள்ளன. வயது வந்த ஆணும், பெண்ணும் தம்முள் நட்புக்கொண்டு ஒழுகிய காதலை களவு' என்று அழைத்தனர். களவொழுக்கம் பற்றித் தொல்காப்பியர் சூத்திரம் அமைத்துள்ளார். அதில், மறையோரால் வரையறை செய்யப்பட்ட எண் வகை மணங்கள் பற்றிக்கூறியுள்ளார்.
இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்ப்ொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின் காமக் கூட்டங் காணுங் காலை மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் துறையமை நல்யாழத் துணைமையோர் இயல்பே. (பொருள். 89).
மணம் எட்டாவன :- (1)அசுரம், (2)இராக்கதம், (3)பைசாசம், (4)காந்திருவம், (5)பிரமம், (6)பிரசாபத்தியம், (7)ஆரிடம், (8)தெய்வம் ஆகியனவாம்.
இவற்றுள் முதல் மூன்றான அசுரம், இராக்கதம், பைசாசம் ஆகியவை கைக்கிளையைச் சாரும் என்று தொல்காப்பியர் சூத்திரம் அமைத்துள்ளார்.
முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே. (பொருள். 102)
இன்னும், இவற்றுள் கடைசி நான்கான பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம் ஆகியவை பெருந்திணையைச் சாரும் என்றும் கூறுகின்றது தொல்காப்பியம்.
 
 

15
பின்னர் நான்கும் பெரும்திணை பெறுமே. (பொருள். 103)
எண்வகை மனத்துள் எஞ்சிய ‘காந்திருவம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்திணையும் முதலாகக் கொண்டு அவற்றோடு பொருந்திவரும் யாழோர் கூட்டம், சிறப்புடன் பொருந்திய ஐவகை நிலத்தையும் பெறுதலின், அவை யாழோர் கூட்டம் ஐந்தெனப்படும். முதல் என்பது நிலமும் காலமும் ஆகும். ஐவகைக் கூட்டமாவது (1)களவு, (2)கற்பு, (3)உடன்போக்கு, (4)இற்கிழத்தி, (5)கமக் கிழத்தி / காதற்பரத்தை என்பனவாம். இதற்குரிய சூத்திரத்தைத் தொல்காப்பியனார் அமைத்த பாங்கினையும் காண்க.
முதலாகு புணர்ந்த யாழோர் மேன தவலருஞ் சிறப்பின் ஐந்நிலம் பெறுமே. (பொருள். 104)
இனி, தொல்காப்பியர் காலத்துக்கு முன்எழுந்த எண்வகை மணத்தையும் ஏழு திணைகளுக்கும் வகுக்கப்பட்ட சிறப்பினையும் ஒரு நிரல் படுத்திக் காண்போம்.
எண்வகை மணங்கள்:- (தொல். பொருள். 89)
அசுரம் - காளையை அடக்கித் திருமணம் புரிதல். இராக்கதம் - கைக்கிளையைச் சாரும். (தொல். பொருள் 102) 60)Ll&FFF8FLib காந்தருவம் - சடங்கு முறை ஏதுமின்றி இருவரும் ஒத்து மணம்புரிதல். ஐந்திணைக்குரியது. (தொல் பொருள். 89)
i
5. பிரமம் 6. பிரசாபத்தியம் - பெருந்திணையைச் சாரும். (தொல், பொருள். 103) 7. ஆரிடம் - முனிவர்கள் தொடர்பானது. ஆகமம்.
8. தெய்வம்
மேற்காட்டிய எண்வகை மணங்களையும் மகாபாரதத்திலும், மனுநீதி நூலிலும் பேசப்பட்டுள்ளதையும் இங்கு நோக்கற்பாலது.
கரனம்
ஆணும் பெண்ணும் கூடி வாழ்வாங்கு வாழ்வதற்கு, முதல் நிலையாய் இருந்த நிகழ்ச்சியைத் தமிழர் திருமணம் என்று அழைத்தனர். கரணம் என்பது சடங்கோடு கூடிய மணநிகழ்வாகும். இதைத் தொல்காப்பியனார்:-
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர், ஐயர் யாத்தனர் கரணம் என்ப (பொருள். 143)
என்று சூத்திரம் அமைத்தனர். தலைவன் தலைவியரிடையே பொய்யும், வழுவும் தோன்றிய பின்னர் ஆன்றோரும், சான்றோரும் சடங்கு முறைகளை வகுத்து, வரையறைகளை அமைத்தனர், "பொய்யும் வழுவும் தோன்றிய
Itro)იw' (წჭu\t,ზმს! ! !! ლყ'8; „ს დასა!”(N:l,

Page 10
16
பின்னர் என வரும் கூற்றால், பொய்யும் வழுவும் தோன்றாக் காலமொன்று இருந்தமை புலனாகின்றது. அக்காலம் தொல்காப்பியர் காலத்துக்கு முற்பட்டதென்பதும் தெளிவாகின்றது. இற்றைவரை இக் கரணம் நம் மத்தியில் நிலவி வருவது ஒரு சிறப்பாகும்.
தலைவி பெற்றோரைவிட்டுத் தலைவனுடன் ஒன்று சேர்ந்து தனிவழி போகுமிடத்தும், கொடுப்பதற்குத் தலைவியின் தமர் (பெற்றோரும், உற்றோரும்) இல்லாதவிடத்தும், சடங்குமுறையோடு கூடிய மணம் நடைபெறுதலும் go 6ot LD.
கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே புணர்ந்துடன் போகிய காலை யான (பொருள். 141)
என்பது தொல்காப்பியச் சூத்திரம்.
வதுவை மணம்
கடைச் சங்ககாலத்தில் எழுந்த எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான அகநானூற்றில் 86 ஆம் பாடலில் தமிழரின் பண்டைய திருமணமரபு பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன. பெண் வீட்டார் பந்தலிட்டு, தரையில் வெண்மணல் பரப்பி, மனை விளக்கேற்றி, எங்கும் பூமாலை தொடுத்து, சுபவேளை வந்ததும், மகனைப் பெற்ற,
தேமல் படர்ந்த வயிற்றினையுடைய, புத்தாடையணிந்த மகளிர் நால்வர் கூடி நின்று 'கற்பில் வழுவாது. நல்லவை உதவி, உன்னை மனைவியாகப் பெற்ற கணவனைக் காக்கும் துணைவியாவாயாக!' எனக்கூறி வாழ்த்தி, பூக்களையும், நெல்லையும் நீருடன் கலந்து அவள் தலையில் தூவி, அவள் கரிய கூந்தலில் அவை தங்கி நிற்ப், அவளை மங்கல நீராட்டி வதுவை மணமும் நிகழ்ந்து முடிந்தது. அதன் பின்னர், தலைவியின் தமர் விரைந்து வந்து "பெரிய இல்லக் கிழத்தி ஆவாய்' என்றுகூறித் தலைவியைத் தலைவனிடம் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து ஒரு தனி அறையில் முதல் இரவும் வந்தது. இது கடைச் சங்ககால முறை.
புதல்வற் பயந்த திதலை! அவ் வயிற்று வால்இழை மகளிர் நால்வர் கூடிக், கற்பினின் வழாஅ, நற்பல உதவிப் பெற்றோற் பெட்கும் பிணையை ஆக என நீரொடு சொரிந்த ஈர்இதழ் அலரி
பல்இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க வதுவை நன்மணம் கழிந்த பின்றைக், கல்லென் சும்மையர், ஞெரேரெனப் புகுதந்து, பேர்இற் கிழத்தி ஆக எனத் தமர்தர ஓர் இற் கூடிய உடன்புணர் கங்குல் (அகம் 86)
 
 
 
 

17
மேலும் அகநானூற்றில் 136ஆம் பாடலிலும் பண்டைத் தமிழரின் திருமண முறைகள் பற்றிப் பேசப்பட்டுள்ள காட்சிகளையும் காண்போம்.
நெய்யில் ஊறிய இறைச்சியோடு கலந்த வெண் சோற்றை மணவினை காணவந்தோர்க்குக் கொடுத்து, உரோகிணி கூடியதனால் எல்லாக் குற்றமும் நீங்கிய சுபநேரத்தில் மணவீட்டினை அலங்கரித்து, கடவுளை வணங்கி, மணப்பறையுடன் பெரிய முரசம் ஒலிக்க, மங்கல மகளிர் தலைவியை நீராட்டியபின், வாகையிலையையும் அறுகின் முகையையும் ஒன்றுசேர்த்துக் கட்டிய வெண்ணுாலைச் சூட்டி, தூய ஆடை உடுத்தி, மணப்பந்தலில் ஒன்றுகூடி, மழைச் சத்தம் போன்ற மனவொலி கூடிய பந்தரிலே, ஆபரணங்கள் அணிவித்த சிறப்பினால் ஏற்பட்ட வியர்வையைத் துடைத்து, பெற்றோர் (தமர்) 'நமக்கு இற்கிழத்தியாகத் தந்த தலைநாள் இரவின் கண்’ என்று வதுவை மணம் நடந்தேறி முடிகின்றது.
மைப்பு:அறப் புழுக்கின் நெய்க்கணி வெண்சோறு வரையா வண்மையொடு புரையோர்ப் பேணி
சகடம் மண்டிய துகள்தீர் கூட்டத்துக் கடிநகர் புனைந்து, கடவுட் பேணிப் படுமண முழவொடு பரூஉப்பணை இமிழ, வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்றுப். பூக்கணும் இமையார் நோக்குபு மறைய. மென்பூ வாகைப் புன்புறக் கவட்டிலை
பழங்கன்று கறித்த பயம்பமல் அறுகைத் தண்நறு முகையொடு வெந்நூல் சூட்டித், தூஉடைப் பொலிந்து மேவரத் துவன்றி,
மழைபட் டன்ன மணன்மலி பந்தர் இழைஅணி சிறப்பின் பெயர்வியர்ப்பு ஆற்றித் தமர்நமக்கு ஈத்த தலைநாள் இரவின் (அகம். 136)
இராக் கதம்
(i) மகாபாரதம்
காசி நாட்டு வேந்தன் தன் கன்னியர் அம்பை, அம்பிகை, அம்பாலிகை ஆகிய மூவருக்கும் சுயம்வரம் செய்வதை அறிவித்தான். சுயம்வர மண்டபத்தில் காசி நாட்டு வேந்தனும், அவனது மூன்று இளவரசிகளும், பல நாட்டு மன்னர்களும் கூடியிருந்தனர். இதை அறிந்த பீஷ்மர் அங்கு சென்றிருந்தார். அங்கு பீஷ்மரை அறிமுகம் செய்யும் பொழுது, அவரின் முதிர் வயதையும், பிரமச்சாரி விரதத்தையும் அறிந்த கன்னியர் விலகிச் சென்றனர். மேலும் கூடியிருந்த மன்னர்களும் பரிகாசம் செய்து அவரை அவமதித்தனர். இதனால் பீஷ்மர் கடுஞ்சினம் கொண்டு ‘சுயம்வரம்' என்ற முறையிலிருந்து தாவிச்சென்று இராக்கதம்’ என்ற முறையில் நின்று:-

Page 11
'அரசர்களே! மணங்களில் எட்டு வகை உண்டு. அந்த எட்டு வகையில் பெண்ணைப் பலாத்காரமாகக் கவர்ந்து சென்று திருமணம் செய்யும் இராக்கதம் என்பதே சிறந்தது எனத் தர்ம சாத்திரம் கூறுகின்றது. அந்த இரண்டாவது வகையைப் பின்பற்றி இம் மூன்று மகளிரையும் பலவந்தமாக நான் அழைத்துச் செல்லப்போகிறேன். அரசர்களே! உங்களுக்கு ஆற்றல் இருக்குமானால் இதனைத் தடுத்து நிறுத்துங்கள், பார்க்கலாம். என்று அதிகாரத் தொனியில் கூறிவிட்டு, தன்னை எதிர்த்த அரசர்களை வென்று, அம் மகளிர் மூவரையும் அழைத்துச் சென்றார். இது வீரச்செயல் திருமணமாகும்.
பீஷ்மர் வயது முதிர்ந்தவர். அவர் ஒரு பிரமச்சாரியுமாவார். இக் கன்னியர் மூவரையும் தான் திருமணம் புரியக் கொண்டு செல்லவில்லை. தனது சகோதரனான விசித்திரவீரியனுக்கு இம் மூவரையும் திருமணம் செய்து வைக்க விரும்பியே இவர்களைக் கவர்ந்து சென்றார். இவர்களில் அம்பை என்பவள் செளபல நாட்டு மன்னன் சால்வனை விரும்பியிருந்த காரணத்தால் அவளை அங்கு சென்று அவனைத் திருமணம் செய்ய அனுப்பிவிட்டார். மற்ற இருவரான அம்பிகை, அம்பாலிகை என்பவர்களை விசித்திரவீரியனுக்குத் திருமணம் செய்வித்து வைத்தார்.
(ii) கலிங்கத்துப் பரணி
கலிங்கத்துப் பரணியைக் கவிச் சக்கரவர்த்தி சயங்கொண்டார் பாடியுள்ளார். இதில் பாட்டுடைத் தலைவன் முதற்குலோத்துங்க சோழமன்னன் (கி.பி.1070 - 1120) ஆவான். இவனின் படைத் தலைவன் கருணாகரத் தொண்டைமான் எய்திய கலிங்க வெற்றியே சயங்கொண்டார் கலிங்கத்துப் பரணியைப் பாடுவதற்குக் காரணமாம்.
பரணியில் குலோத்துங்க மன்னன் போர்க்களம் இறங்கினான். பகையரசர் படைகள் அஞ்சிப் பின்வாங்கி ஓடின. இப்படித் தோற்றோடிய பகையரசர்களின் வெற்றி மகளைக் குலோத்துங்க மன்னன் கடிமணம் (கண்டதும் காதல்) புரிந்துகொண்டான். இதைக் கண்ணுற்ற தோற்றோடிய அரசர்கள் தங்களுடைய குதிரைகள், ஆண் யானைகள், பொருட்குவியல்கள் ஆகியவற்றைக் குலோத்துங்க மன்னனுக்குச் சீதனப் பொருட்களாகக் கொடுத்தனர். இது எண்வகை மணங்களில் ஒன்றான 'இராக்கதம்' என்பதைச் சார்ந்தது.
சரி களம்தொறும் தங்கள் சயமகள் தன்னை மன் அயன் கைப் பிடித்தலும் பரிகளும் களிறும் தன ராசியும் பாரிபோகம் கொடுத்தனர். பார்த்திபா (256)
(பாரிபோகம் - சீதனப் பொருள்)
சிலப்பதிகாரம்
இனி, இரண்டாம் நூற்றாண்டில் எழுந்த சிலப்பதிகாரத்தில் திருமணம் பற்றி எவ்வாறு பேசப்படுகின்றது என்பதையும் காண்டோம். யானைமீது மகளிரை
 
 
 

19
அமரச் செய்து புகார் நகரெங்கும் திருமணச் செய்தியை அறிவித்து, திருமண மண்டபத்தில் முரசு முழங்கி, மத்தளம் கொட்டி, சங்குகள் மங்கல ஓசை எழுப்பி, நல்ல வேளையில், வானத்து அருந்ததி போன்ற கற்புடைய கண்ணகியை மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட, கோவலன் மணம் புரிந்து, இருவரும் தீவலம் வந்த காட்சியை இளங்கோவடிகள் மூலம் காண்கின்றோம். இங்குதான் பார்ப்பான் திருமண வைபவத்தில் முதன்முதலாகப் புகுந்த முன்றி கண்டீர்.
இருபெரும் குரவரும், ஒருபெரு நாளால், மணஅணி காண, மகிழ்ந்தனர் மகிழ்ந்துழி, யானை எருத்தத்து, அணியிழையார், மேல் இரீஇ. மாநகர்க்கு ஈந்தார் மணம் (1 : 41 - 44)
நீலவிதானத்து, நித்திலப்பூம் பந்தர்க் கீழ், வானூர் மதியம் சகடு அணைய, வானத்துச் சாலி ஒருமீன் தகையாளைக் கோவலன், மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலம் செய்வது காண்பார் கண் நோன்பு என்னை! (1 : 49 - 53)
சிலம்புகழி நோன்பு
தமிழர்கள் மணமாகாத தம் பெண்களுக்குக் காலில் சிலம்பை அணிவித்து, 'அவர்கள் மணம் ஆகாதவர்கள் அவர்கள் திருமணத்தை எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர் என்பதை அறிவித்து, அவர்கள் மணம் புரிந்து கொள்ளும் பொழுது அச்சிலம்பினைக் கழற்றி ஒரு சடங்கு முறையும் செய்து விடுவர். 'சிலம்பு காலில் இல்லாதவிடத்து, அவர்கள் மணம் புரிந்த மகளிராயினர், இனி வேறு ஆடவர் அவர்களை மண விருப்புடன் பார்க்கலாகாது' என்ற மனநோக்குடன் வாழ்ந்து வந்தனர். மணநாளுக்கு முன்னாள் நிகழும் இச்சடங்கு முறையை சிலம்புகழி நோன்பு என்று கூறுவர்.
ஐங்குறுநூறு
சங்ககால எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான 'ஜங்குறுநூறு என்ற நூலில் சிலம்புகழி நோன்பு பற்றிப் பேசப்படுகிறது. இது ஒரு பண்டைய மரபு. மணமகளின் காலில் அவள் பெற்றோர்கள் அணிவித்திருந்த சிலம்பை, மணம் புரிவதற்கு முன்னர் நீக்குவதற்குச் செய்யும் ஒரு சடங்காகும். தலைவன் தலைவியைத் தன் இல்லத்துக்குக் கொண்டு போனான். அப்போது அவன் தாய் அவளுக்குச் சிலம்பை விலக்கி உரிய சடங்கைச் செய்தாள் என்பதை நற்றாய் கேட்டு அங்கிருந்து வந்தவர்க்கு எடுத்து உரைத்தது.
நும்மனைச் சிலம்பு கழிஇய அயரினும் எம்மனை வதுவை நன்மணங் கழிகெனச் சொல்லின் எவனோ மற்றே - வென்வேல் (ை1) விளங்கிய கழலடிப், பொய்வல் காளையை ஈன்றதாய்க்கே? (399)
கலை இலக்கிய சமூக சஞ்சிகை

Page 12
20
பண்டைக் காலத்தில் திருமணம் இரு பகுதி கொண்டது. முதற்பகுதி சிலம்பு கழித்தல் என்னும் சடங்காகும். இரண்டாம் பகுதி திருமணம் நிகழ்தலாகும். சிலம்பு கழிக்கும் செயல் மகளைப் பெற்ற நற்றாய் தன் மனையில் நடைபெற வேண்டுமென்று விரும்புவள். உடன்போக்கில் தலைவன் வீட்டில் சிலம்புகழிப்பது நிகழ்ந்தது. அதனால் நற்றாய் வருந்தினாள். சிலம்பு கழிநிகழ்வு மணமகன் வீட்டில் நிகழ்ந்ததால் தன் இல்லத்தில் வதுவை மணமாவது நிகழ வேண்டுமென்று நற்றாய் விரும்பினாள். அதனால் நும் மனையில் சிலம்பு கழித் திருமணம் ஆற்றுவையாயினும், எம் மனையில் நன் மணத்தைச் செய்வாயாக!' என்றாள் மகளைப் பெற்ற தாய்.
மகளிர்க்கு மணமாகாமுன் பெற்றோர் அணிவித்த சிலம்பை 'கன்னிமைச் சிலம்பு என்றும், திருமணம் நிகழும்போது கணவன் அணியும் சிலம்பை 'கற்புச் சிலம்பு என்றும், கணவன் தரும் சிலம்பை அணியும் திருமணம் 'சிலம்பு கழி இய மணம்' என்றும் கூறப்படும்.
நற்றிணை
சிலம்புகழி நோன்பு பற்றி எட்டுத் தொகையில் ஒன்றான நற்றிணையிலும் பேசப்படுகின்றது. கொடும் பாலை வழியில் தலைவனோடு தலைவி உடன்போக்கிற் சென்றுவிட்டனள். அவள் செயல் அறனொடு பட்டதென்று கருதினாலும், அவளைத் திடுமெனப் பிரிந்ததனால் தாயின் மனம் பெரிதும் வேதனைப்பட்டது. தலைவனை அவள் மணக்கும் காலத்தில் கழிக்க வேண்டிய சிலம்புகழி விழாவின் சிறப்பினை யானும் கண்டு மகிழாது, பிறர் கண்டு மகிழுமாறு அவன் பின்னால் போயினாள் அவள். அழகிய கலனணிந்த என் மகளின் அடிகள் அப்பாலை நிலத்திடையே சென்று இதுவரை எவ்வாறு வருந்துகின்றனவோ என்று பெருந்துயர் கொண்டாள்.
சிலம்பு கழிஇய செல்வம் பிறருணக் கழிந்தஎன் ஆயிழை அடியே! (279)
ஆற்றல் புரிந்து மணம்
அருச்சுனன் வில்லை எடுத்து, வளைத்து, நாண் ஏற்றி, அம்பு தொடுத்துச் சுழலும் மீன் வடிவ இலக்கை வீழ்த்தி, திரெளபதியை மணந்து கொண்டான். இதே வண்ணம், இராமனும் சிவதனு வில்லை எடுத்து, வளைத்து, நாண் ஏற்றி, அம்பு தொடுத்துச் சீதையை மணம் புரிந்துகொண்டான். திருமணம் செய்து கொள்ளும் ஆணும் பெண்ணும் ஒருவரிடமிருந்து மற்றவர் அன்பை எதிர்பார்த்தனர். அதையடுத்து ஆண், பெண்ணிடம் அழகு வேண்டும் என்று விரும்பினான். பெண், ஆணிடம் ஆற்றல் வேண்டுமென்று விரும்பினாள். ஆற்றல் காலத்துக்குக் காலம் மாறி வருகின்றது. அன்று உடல் வலிமையை குறித்தது. வில் முறித்தும், ஏறு தழுவியும் திருமணம் செய்தனர். பின், ஆற்றல் அறிவைக் குறித்தது. சோழன் மகள் அமராபதி, புலவர் கம்பனின் மகனாகிய அம்பிகாபதியை விரும்பி வாழ்வை முடித்ததும் இதற்குச் சான்றாகும்.
1லை இலக்கிய சமூக சஞ்சிகை V
 
 
 
 

21
பனை ஓலைத் தாலி
பழங்காலத்தில் திருமண நாளில் ஊரின் பெரியவர் முன்னிலையில், அவர் ஒரு பனை ஓலையில் மணமக்கள் இருவரின் பெயரையும் எழுதி வாழ்த்தி, அந்தப் பனை ஓலையைக் கயிற்றில் முடிந்து அதுவே திருமணம் ஆனதற்கு ஆதாரமாகவும், எழுத்தாணியால் எழுதப்பட்ட அந்த வாழ்த்தோலையே, அம்மணமக்களின் திருமணத்துக்குச் சாட்சியாகவும் விளங்க திருமணங்கள் நடைபெற்றுவந்தன. பனை ஒலைக்குத் தாலபத்திரம்' என்று பெயர். எனவேதான் மங்கல நானுக்குத் தாலி' என்ற பெயர் ஏற்பட்டது. நாட்கள் செல்லச் செல்ல பனை ஓலைக்குப் பதிலாக மஞ்சள் அல்லது பொன்னால் செய்த தாலி அணியும் வழக்கம் ஏற்பட்டது.
புலிப் பல் தாலி
பண்டைத் தமிழகத்தில் குறிஞ்சி நிலத்து இளைஞர்கள் சீறிப் பாயும் புலியுடன் பொருதி அதனைக் கொன்று, தமது வீரச் செயலை நிரூபித்துத்தாம் விரும்பிக் காதலித்த பெண்ணை மணந்து கொண்டனர். புலியைக் கொன்ற இளைஞர், தமது வீரத்திற்கு அடையாளமாகத் தாம் கொன்ற புலியின் பற்களை மங்கல நாணிற் கோர்த்து மணமகளின் கழுத்தில் அணிவிப்பர். இவ்வழக்கமே நாளடைவில் தாலி அணியும் வழக்கமாக வளர்ந்து தாலி பெண்ணுக்கு வேலி' என்ற தாரக மந்திரமாக அமைந்தது போலும். இதுகாறும் சங்க காலத்தில் அமைந்த எண் வகைத் திருமணங்களையும், சடங்கு முறைகளையும் பல கோணங்களில் நின்று பார்த்துப் படித்து மகிழ்ந்தோம்.
இற்றைய திருமண முறைகள்
இனி, இற்றைய நிலையில் நம் மத்தியில் நிலவும் ஒரு சில திருமண முறைகளை நிரல் படுத்திக் காண்போம்.
காதல் வயப்பட்டு அன்பினாற் கூடிய திருமணம் சடங்கோடு கூடிய திருமணம் மங்கள நீராட்டிய வதுவை மணம் கண்டதும் காதல் கொண்ட கடிமணம் சடங்கு முறையற்ற இருமனம் ஒத்த திருமணம் பன்மனை மணம் (ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர்) பல கணவருடைமை (ஒன்றுக்கு மேற்பட்ட கணவன்மார்) சம்மதத்துடன் பெண்ணைக் கடத்தி மணம் புரிதல் வன்முறை மணம்
10. ஒரினப்பால் திருமணம்
11. பதிவுத் திருமணம் 12. வலுக்கட்டாயத் திருமணம் 13. பேசிப் பொருத்தும் திருமணம் 14. பணத்தைக் காட்டி மயக்கிய திருமணம் 15. கன்னி காளையுடன் ஒடிச்சென்ற திருமணம்

Page 13
திருமணம் ஆணுக்கும், பெண்ணுக்கும் மிக வேண்டப்படுவது. அதனால் ஏற்படும் நன்மைகள் பலப்பல. திருமணக் கோட்பாடுகளுக்கமைய ஆணும் பெண்ணும் வாழ்க்கையை நடத்தினால் குடும்பச் சிறப்பு மேல்நிலையெய்தி இன்ப வாழ்வு அமையும் என்பது திடம். இன்று திருமணத்தின் பின் ஒற்றுமையின்மை, சச்சரவுகள், சண்டைகள், தனி வழி நடத்தல், பிரிவுகள், மணமுறிவு, பிள்ளைகள் தவிப்பு, குடும்பச் சீர்கேடு, பொருளாதாரக் குறைவு ஆகியன நம் கண்கூடு. இவை எதனால் என்பது ஒரு கேள்வி?
‘ஒருத்திக்கு ஒருவன் - ஒருவனுக்கு ஒருத்தி’ என்பது தமிழர் மத்தியில் ஒரு தாரக மந்திரம். திருமணத்தின் பின் ஒருத்தியுடனும், ஒருவனுடனும் வாழ்க்கையை நடாத்துவதுதான் மிகச் சிறந்த அறமாகவும், நல்நெறியாகவும் உலக ஆன்றோர் கணித்துள்ளனர். இதுதான் சமுதாயத்திற்கும், தனி மனித நேயத்துக்கும் உகந்ததுமாகும். இதை மீறியபடியால் நம் மத்தியில் புரையோடி நிற்கும் எத்தனையோ இன்னல்களை நாம் இன்று கண்டும், காணாமலும் தவித்த வண்ணம் உள்ளோம்.
பண்டைத் தமிழர் வாழ்க்கையை எடுத்துப் பாருங்கள். அவர்கள் கணவனுக்காகவும் , மனைவிக்காகவும் , பிள்ளைகளுக்காகவும் , பெற்றோருக்காகவும், உற்றார் உறவினருக்காகவும், சமூகத்துக்காகவும், நாட்டுக்காகவும், அரசுக்காகவும் பிரச்சினைகளை உருவாக்காது விட்டுக் கொடுத்து செம்மையான வாழ்வை மேற்கொண்டிருந்தனர். அவர்கள் மத்தியில் ஒரு மணமுறிவுதானும் எழுந்ததாகச் சங்க நூல்களில் செய்தி இல்லை. பண்டைத் தமிழர் மேற்காட்டிய பல திருமணங்களையும், பல சடங்கு முறைகளையும் ஏற்படுத்தி அவற்றோடு இணைந்த வாழ்க்கையை அமைத்துச் சீரும், சிறப்புடன் வாழ்ந்து காட்டி, அவர்தம் எச்சங்களை நம்மவர்க்கும் விட்டுச் சென்றுள்ளனர். அவர்கள் எச்சங்கள் எம்மவரை ஆற்றுப்படுத்தி அமையட்டுமென்று வாழ்த்துவோமாக!!!
மரத்தின்கீழ குடிசைக்கோயிலில் குடியிருந்தால் JFTLéapHébul.
ങ്ങമ്യ്രബീഞ്ഞിമം
மாளிகையில் இருந்தாலோ சிலர் மனிதரை மதிக்கிறார்கள். கோபுரம் இருந்தால்தான் &தாயிலுக்கும் சிலர் 3N கும்பிடப்போகிறார்கள். NM
பாவப்பட்டபூமியில் $' பகவானுக்கே இந்த ரிலை என்றால் S ug gikk frågorygih??? A
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 
 

மதிதனம் விரும்பி மானுட னென்றும் விதியிதுவென் றுழல்கின்றான் - பின்னே மதிதனம் விரும்பி காசுகள்ளெனக் கண்டு மதிமயங்கி வீழ்கின்றான்!
கதியிதுவென பின்னே கதிகலங்கி நிற்கின்றான் காலத்தை வீணே வைகின்றான் - இவன் மதியின்மை நோக்கா னென்றும் - தீதுநின்று மரண பயமின்றி வாழ்கின்றான்!
பதியினைப் போற்றா பெண்டிருட னிணைந்து பொழுதை வீணே கழிக்கின்றான் - தும்பி சுதிகொண்டு கள்விரும்பி வருவதுபோ லென்றும் சுற்றியே தினம் அழிகின்றான்!
கருடன்வாய்கொண்ட சென்னிவிரி நாகமென காதலனிவன் இருக்கின்றான் - பின்னே பேரே யழிந்துவிடும், பெருமூச்சு விடுகின்றான் பேதமை என்னென்பே னிவன்!
கொண்டவனை கொன்றுவிடும் விடநாக முண்டு கொண்டவனை நாவாலே கொளும் விடமுண்டு தீதொன்றறியா சீதேவி களுமுளர் பாரில் திருந்திவிடி னெல்லோரும் சீரே!
சீருடன் தரைமீது மேலெழலாம் - திருவிருக்க சீதேவிதனம் கொளின் மேலுயரும் பேரு கருவினிலே தீக்கருவறுத்து - நற் காரியங்கள் போற்றிட நினைத்திடு நெஞ்சே!
-கலைமகன் பைரூஸ்
இலக்கிய சமூக சஞ்சிகை

Page 14
சிறுகதை |கினியம இக்ராம் எம்.தாஹா
காலையில் அம்மா கொடுத்த இதமான காப்பியை ருசித்தவாறு நஜிம் அன்றைய வார இதழை கையில் எடுத்தான்.
நஜீம் கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் உதவிக் கணக்காளராக தங்கி வேலை செய்கிறான். ஞாயிற்றுக்கிழமை முழுநாள் விடுமுறை. சனிக்கிழமை அரை நாள் வேலை. அதனால் சனிக்கிழமை வேலை முடிந்ததும் பஸ் ஏறி ஊருக்கு வந்துவிடுவான்.
வீட்டிற்கு வந்தாலும் அன்றைய நாள் இரவு 10 மணி வரை வீட்டில் இருக்கமாட்டான். தன் ஊர் தோழர்களுடன் சுற்றித்திரிவான். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை எங்கும் போகாமல் வீட்டுவேலைகளில் அப்பா, அம்மாவுக்கு ஒத்தாசையாய் இருப்பான். திங்கட்கிழமை அதிகாலையில் மீண்டும் கொழும்பு போய்விடுவான். கடந்த மூன்று மாதங்களாய் நஜீமின் வாழ்க்கைச் சக்கரம் இவ்வாறு கால அட்டவணையில் சுழன்று கொண்டிருக்கிறது.
ஒரு மொடக்கு காப்பி ஒரு பக்கம் பத்திரிகை மறுபக்கம் என்று இரண்டையும் ஒரே நேரத்தில் ருசித்து, ரசித்துக்கொண்டிருந்த நஜீமின் பார்வையில் அந்த புகைப்படம் பதிந்தது. அது அவனை கொஞ்சம் நிலை தடுமாறச்செய்தது.
காப்பி கோப்பையை அப்படியே கீழே வைத்தவன், பத்திரிகையை இரண்டாக மடித்து அதிலிருந்த புகைப்படத்தை உற்று நோக்கினான். அவனால் நம்பவே முடியவில்லை. அன்று வந்த அதே நிலா. ஆம் அவளே தான். மீண்டும் புகைப் படத்திலாவது அவளைக் காணமுடியும் என்று அவன் நினைத்திருக்கவேயில்லை. வைத்த கண் வாங்காமல் கண்களை அகல விரித்துக் கதிரையின் நுனியில் அமர்ந்தவனாய் உலகையே மறந்து அவளின் புகைப்படத்தையே உற்று நோக்கிக்கொண்டிருந்தான்.
XXXXXXXXXXXXXXXX
அன்றும் ஒரு ஞாயிற்றுக்கிழமை. இயக்கத்தை மறவாமல் சூரியன் தன் கதிர்களை தரணியெங்கும் பரப்பிக்கொண்டிருந்தது. தாஹிர் நானாவும் வழமைபோல் தன் மாடுகளை மேய்ச்சலுக் காய் அழைத்துச் சென்றுகொண்டிருந்தார்.
‘மகேன் சும்மா தானே இருக்கீங்க. சின்ன வேலை ஒன்னு இருக்கு செய்வோமா? என்றவாறு தாய் ஜமீலா நஜிமின் அறைக்குள் நுழைந்தார்.
 
 

‘என்னம்மா..? கட்டிலில் சோம்பலுடன் புரண்டுகொண்டிருந்த நஜிம் எழுந்து நின்றான்.
அந்த ஸ்டோர் ரூம்ல உள்ள பெட்டிகள கொஞ்சம் துப்பரவாக்கினால் நல்லம். எல்லாம் எலி கடிச்சி நாசமாக்கி.
ஆ. அதுக்கென்ன வாங்க துப்பரவாக்கலாம்.
இருவரும் அந்த அறையின் மூலையில் சிலந்தி வலைகளின் இராஜ்ஜியத்திற்குள், தூசு படிந்திருந்த பெட்டிகளை வெளியே இழுத்து அதற்குள் இருந்த சாமான்களைக் கொட்டினார்கள். இவர்களின் திடீர் நடவடிக்கையை எதிர்பார்க்காத எலிக்கூட்டங்கள் "அபாயம் அபாயம்” என்பதைப்போல "கீச் பீச்” என கத்தியவாறு தலைதெறிக்க ஓடி ஒழிந்தன.
பெட்டிக்குள் இருந்தவற்றில் தேவையான பொருட்களையும் புத்தகங்களையும் ஜமீலா தெரிந்து கொடுக்க, நஜிம் அலுமாரியில் அழகாய் அடுக்கிக் கொண்டிருந்தான். அங்கே குவிந்திருந்த பழைய பொருட்களுக்குள் ஒரு பக்கம் கிழிந்து இன்னொரு பக்கம் எலி கடித்திருந்த கறுப்பு நிறத்திலான புத்தகம் ஒன்றைக் கையிலெடுத்த ஜமீலா அதில் படிந்திருந்த தூசுகளை Ֆւլգա 16)!TԱ}},
'இது 1965 இல வாப்பா கண்டி கடையில வேல செய்ற நேரம் வாப்பாக்கு சிங்கப்பூர் பேனா நண்பர் ஒருத்தர் இருந்தாராம். நல்ல கூட்டாளியாம். அவர்தான் வாப்பாக்கு இந்த அல்பத்தையும் சந்தோசமா அனுப்பியிருந்தாராம். வாப்பா எவ்வளவு பத்திரமா பாதுகாத்த அல்பம். சின்னத்துல நீங்க கிழிச்சி போட்டீங்க. இப்போ மிச்சத்த எலி திங்குது என வாடிய முகத்துடன் மகன் நஜீமிடம் சொன்னார்.
அது இரண்டு கனத்த அட்டைகளாலான ஒரு புத்தகம். நீண்ட சித்திரக் கொப்பி போன்றது. உள்ளே கறுப்புத் தாள்கள். அதன் இடையே புகைப்படங்களை அழுத்தி வைக்க சின்ன பட்டன்கள். ஒவ்வொரு பக்கமும் வெள்ளை டிசூ தாள். அன்றைய காலத்தின் பிரபலமான புகைப்பட அல்பம். அதுவும் சிங்கப்பூரிலிருந்து கிடைத்த அன்பளிப்பு. அந்தக் காலத்தில் எவ்வளவு பெறுமதியாய் இருந்திருக்கும் என நஜீமால் ஊகிக்க முடிந்தது.
‘என்னம்மா சொல்றீங்க. நான் கிழிச்சேனா..? நஜீமுக்கு அம்மா என்ன சொல்கிறார்? ஏன் தன் மேல் பழி சொல்கிறார் என்று மட்டும் புரியவில்லை. ஏனெனில் சின்ன வயதில் அவன் கிழித்ததாக அம்மா சொல்லும் விடயங்கள் அவன் மனதில் நினைவில் நிற்க வாய்ப்பு இல்லையே. மழலைப்பருவம் அல்லவா?
'நீங்க சின்ன வயசில. ஒரே இதில உள்ள பொடோ பாக்கிறது தானே வேல. பாத்திட்டு பக்கம் பக்கமா கிழிச்சு போடுவீங்க, வாட்பாக்கு ஆத்திரம் வரும். ஆனா ஒங்களுக்கு அடிச்சதில்ல. அலுமாரிக்கு மேலே வாப்பா அவர்ட சூட்கேஸஉக்கு உள்ளதான் அல்பத்த போட்டு வெப்பார், நாங்க அதை கொடுக்க இல்லென்னா அலுமாரிக்கு கீழ இருந்து பிடிவாதமா நெலத்தில்
கலை இலக்கிய சமூக சஞ்சிகை :

Page 15
26
காலை உதெச்சு உதெச்சு 'சூச்சு கேஸ’ புச்சாம் தா என்டு அழுவீங்க. அம்மா சொல்ல, தன் குறும்புத்தனத்தை எண்ணிச்சிரித்தான்.
மறுபுறம் தினம் தினம் அந்த அல்பத்தை பார்ப்பது மட்டுமல்லாது கிழித்த போதும் தன்னை அடிக்காமல் அரவணைத்த அப்பா, அம்மா இவ்வளவு தன்மேல் பாசமா என்று பூரித்துக்கொண்டான். நஜிம் அவர்களுக்கு ஒரே பிள்ளை. செல்லப்பிள்ளை. கிழிந்த அந்த அல்பத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய சில புகைப்படங்களே எஞ்சியிருந்தது. எல்லாம் கறுப்பு வெள்ளைப்படங்கள்.
'இது யாரும்மா? என்று அல்பத்தில் இருந்த ஒரு படத்தைக் காட்டிக் (335i LT667.
"அதுதான் வாப்பாட சிங்கப்பூர் கூட்டாளி அப்துல்லாஹற் பாய்’ என்றார் ஜமீலா.
தாஹிர் நானா வறிய குடும்பத்தில் பிறந்தவர். மூன்று சகோதரிகள். ஒரு சகோதரன். இவர்தான் மூத்தவர். தந்தை சுகயினமுற்றிருந்ததால் குடும்பப் பொறுப்பை இவர் ஏற்கவேண்டிய நிலை. படிப்பை பாதியில் நிறுத்தி கண்டி புடவைக் கடையில் சேல்ஸ்மேனாக வேலையில் சேர்ந்தார். அந்தக் கடையில் பல வருடம் வேலை செய்தார். மாதத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை. வீடு போவதென்றாலும் போய்வரும் போதெல்லாம் பாதி நாட்கள் வீதியிலே கழியும். கண்டியிலிருந்து அவ்வளவு தொலைதுாரத்திலிருந்தது இவரின் சொந்த ஊர். வேலைக்கு சேர்ந்த காலத்தில் பத்திரிகையில் வந்த வெளிநாட்டு பேன்ா நட்பின் மூலம் அறிமுகமானவர்தான் சிங்கப்பூரைச் சேர்ந்த அட்துல்லாஹற் பாய். அந்தக் காலத்தில் கடிதம் பரிமாறல் மட்டுமே. நேரில் சந்திக்காவிடினும் தொலைதூரத்தில் உள்ள அப்துல்லாஹற் பாயின் நட்பு ஆழமானது. தமது சுக துக்கங்களை மடல்கள் மூலம் பரிமாறி ஆறுதல் அடைந்துகொள்வார்கள். தாஹிர் நானாவின் மூன்று ச்கோதரிகளின் திருமண வைபவங்களுக்கும் தன் அன்பளிப்புக்களை மறவாமல் அனுப்பிவைத்த அன்புத்தோழன் அப்துல்லாஹற் பாய்.
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத் தகநக நட்பது நட்பு.’ என தூய்மையான நட்பை திருக்குறளில் (திருக்குறள் 786) குறிப்பிட்டதற்கு இலக்கணமாய் அமைந்தது தாஹிர் நானா - அப்துல்லாஹற் பாய் நட்பு.
இப்படி இருந்த இணை பிரியாத நட்பு, இடை நடுவில் தடைப்பட்டது. தாஹிர் நானா தனது தந்தையின் திடீர் இழப்பால் வீடுவந்தவர் திரும்பி வேலைக்குப் போகவில்லை. தந்தையின் இழப்பால் பதறியடித்துக்கொண்டு வீடுவந்ததால் வரும்வழியில் ஒரு கைப்பையை பஸ்ஸில் தொலைத்துவிட்டார். அதில் அப்துல்லாஹற் பாய் அனுப்பிய கடிதங்களும் முகவரியும் இருந்தது. தாஹிர் நானாவால் தோழனுக்கு கடிதம் அனுப்பிக்கொள்ள முடியவில்லை.
கடை முகவரி மாத்திரமே அப்துல்லாஹற் பாயிடமும் இருந்தது. எப்படியும் நண்பன் தன் கடைமுகவரிக்கு நிச்சயம் கடிதம் போட்டிருப்பான். அங்கு போனால் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஒருநாள் கண்டிக்கு போனார். ஆனால் அந்தக்கடை பூட்டப்பட்டிருந்தது. இந்தியர்களே அந்தக்கடையின்
 
 

உரிமையாளர்கள். அது இலங்கையில் இனக்கலவரம் வெடித்துக்கொண்டிருந்த காலம். கொழும்பில் பல கடைகள் தீக்கிரையாகும் போதே இவர்களும் கடையை நிரந்தரமாய் மூடிவிட்டு இந்தியா திரும்பிவிட்டனர். ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய தாஹிர் நானாவால் தன் நண்பனை தொடர்புகொள்ள எந்த வழியும் இருக்கவில்லை.
தந்தையின் இழப்பிற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரே கடைசி தங்கையின் திருமணமும் நடைபெற்றது. தங்கைமார் மூவரையும் கரைசேர்க்கும் வரை, தான் கலியாணம் முடிப்பதில்லை என்ற உறுதியில் இருந்ததால் அவருக்கு 37 வயதும் தாண்டிக்கொண்டிருந்தது. காலப்போக்கில் ஜமீலாவை கலியாணம் முடித்து மனைவியின் ஊரிலே குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்தார்.
வேலையோடு வேலையாக அந்த அல்பத்திற்கு பின்னால் இப்படி ஒரு சோகக்கதை இருப்பதை தன் அம்மாவின் மூலம் நஜிம் அறிந்துகொண்டான்.
ஒழுங்குபடுத்திய அல்பத்தை பத்திரமாய் வைத்த நஜிம், 'அதுசரி எனக்கு தெரிஞ்ச வயசில இந்த அல்பத்த காணவே இல்லையே?’ என்று கேள்விக்குறியோடு அம்மாவை நோக்கினான்.
'உங்களுக்கு நாலு வயசு இருக்கும்போது நாங்க வாப்பாவோட பெரிய வீட்டுக்கு போனோம். அப்போ எதிர்பாராம பழைய புத்தகம் ஒன்னுக்குள்ள அப்துல்லாஹற் பாயோட அட்ரஸ் எழுதின காகிதம் கிடைச்சுது. சந்தோசமா வாப்பா எடுத்து வந்தார்.
"அப்போ வாப்பா அவருக்கு லெட்டர் போட்டாரா?
“காகிதம் போட்டாதானே. ஊட்டுக்கு வந்து அவசரமா காகிதம் எழுதி, அட்ரஸ் இருந்த காகிதத்தோட இந்த அல்பத்துக்குள்ள மூடி மேசைக்கு மேல வெச்சிட்டு பக்கத்து கடைக்கு எயார் மெயில் கவர் எடுக்க போனாரு அந்த நேரம் பாத்து நல்ல மழ வர கொஞ்சம் சுணங்கிட்டு. அதுக்குள்ள நீங்க அந்த காகிதம் ரெண்டயும் கப்பல் செஞ்சு மழ தண்ணியில விட்டீங்களே. அன்றைக்கு வாப்பக்கு வந்த ஆத்திரத்தில இந்த அல்பத்தக் கட்டி மூலையில போட்டாரு. ஆனா அந்த கூட்டாளிய நெனவுவார நேரமெல்லாம் அவருக்கு கவலதான்’ சொல்லும் போதே ஜமீலாவின் குரலிலும் சோகம் தோய்ந்திருந்தது.
சில மாதங்களின் பின்,
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே! நண்பனே! நண்பனே! இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே." என்ற பாடல் வானொலியில் ஒலித்துக்கொண்டிருக்க, தாஹிர் நானா தன்னையே மறந்து அந்தப் பாடலில் லயித்திருந்தார். அப்போது ட்ரிங். ட்ரீங். என வீட்டு தொலைபேசி அலறியது.
"ஹலோ.
ஹலோ. தாஹிர் இருக்கிறாரா?

Page 16
6
ஆமா. நான் தாஹிர். நீங்க யாரு..?
டேய் மச்சான்! நான் அப்துல்லாஹற். சிங்கப்பூர் அப்துல்லாஹற்’
தாஹிர் நானாவால் நம்பவே முடியவில்லை.
'அப்துல்லாஹற் பாய் சந்தோச மிகுதியால் உரக்க கத்திய கத்தலில், அடுப்படியில் இருந்த ஜமீலா
‘என்னங்க கனவு கினவு கண்டீங்களா? என அரக்கப்பரக்க ஓடி வந்தார். கணவனின் ஆனந்தக் கண்ணிர் கண்டு ஜமீலாவின் கண்களிலிருந்தும் ஆனந்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
நண்பர்கள் இருவருக்கும் தாங்க முடியாத மகிழ்ச்சி. பலதும் பத்தும் பல மணி நேரம் பேசினார்கள்.
‘எப்படி என்னோட டெலிபோன் நம்பர் கிடைச்சுது? என்ற தாஹிர் நானாவின் கேள்விக்கு
‘எல்லாம் பேஸ்புக்கின் ஹெல்ப்தான். என நடந்த விபரத்தை அப்துல்லாஹற் பாய் விபரமாய் சொல்ல தாஹிர் நானாவின் மனதுக்குள் பேஸ்புக் பற்றி மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது.
ஆம். இன்று எங்கும் எதிலும் வியாபித்திருப்பது இணையம். அதிலும் சமூக வலையமைப்பான “பேஸ்புக்’ என்றால் சின்னக் குழந்தையும் அறியும். ஒரு நாளைக்கு சாப்பிட மறந்தாலும் தினமும் யாரும் பேஸ்புக் பார்க்க LoBib5LDATI LTJ 56i.
அன்று அலுமாரியை அடுக்கிய பின்னர் தன்னால் தந்தையின் நட்பு நின்று போனதோ என்ற குற்ற உணர்வு நஜீம் மனதில் தோன்றவே, மறுநாள் கொழும்பு போகும் போது யாருக்கும் தெரியாமல் அந்த போட் டோக்களை எடுத்துப்போய் ஸ்கேன் செய்து தன் பேஸ்புக்கில் பத்திரப்படுத்திக்கொண்டான். பேஸ்புக்கால் தேட முடியாதது ஒன்றும் இல்லை. வீட்டிற்கு வீடு வாசல் படி என்பதைப்போல மனுசனுக்கு மனுசன் பேஸ்புக் என்றாகிவிட்டது. நஜிம் தன் தந்தையின் நண்பரைப்பற்றி எப்படியாவது தெரிந்துகொள்ளலாம் என்ற உறுதியான நம்பிக்கையில் இருந்தான். கடையில் வேலை நேரம் தவிர பேஸ்புக்கிலும் உலகம் முழுதும் சுற்றி வட்டமிடுவதும் இவன் வாடிக்கை. சில மாதங்களின் பின் லண்டனில் இருக்கும் பேஸ்புக் நண்பன் ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தான்.
'உன் பேஸ்புக்கில் இருக்கும் சிங்கப்பூர் அப்துல்லாஹற், என் பிரண்டோட
DfTuDT'.
உடனே லண்டன் நண்பனின் நண்பனை தொடர்பு கொண்டு, அவன் மூலம் இறுதியில் அப்துல்லாஹற் பாயின் தொலைபேசியில் தொடர்புகொண்டு
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 
 
 
 
 

29
பேசினான். தன் வீட்டு தொலைபேசி இலக்கத்தை அப்துல்லாஹற் பாய்க்கு தெரிவித்து, தன் தந்தைக்கு இன்ப அதிர்ச்சிகொடுத்தான்.
சேர முடியாத தண்டவாளம் போல இரு நண்பர்கள் இரு துருவங்களாய் நிற்க சேர்த்து வைத்து சரித்திரம் படைத்து அனைவர் மனதிலும் முதல் மரியாதை பெற்றுக்கொண்டது முகப்புத்தகம் (பேஸ்புக்). தாஹிர் நானா - அப்துல்லாஹ் பாய் இருவருக்கிடையிலான நட்பு மீண்டும் தளிர்விட்டு வளரத் துவங்கியது. அந்த அசுர வளர்ச்சியின் பிரதிபலிப்பால் அப்துல்லாஹற் பாய் இலங்கை வந்து ஒருகிழமை தங்கிச்சென்றார். அன்று அவரை வழியனுப்ப விமான நிலையம் சென்றபோதே, எதிர்பாராமல் அவளைப் பார்த்தான் நஜிம். எதிர்பாராமல் பார்த்தாலும் மீண்டும் மீண்டும் அவளைப் பார்க்கத்தூண்டும் வசீகர அழகி.
அருகில் தன் தந்தை இருப்பதையும் மறந்து நஜீம் அவளையே இரசித்துக் கொண்டிருந்தான். அவன் வாழ்வில் இப்படி ஒரு ஈர்ப்பு வேறு எந்தப் பெண்ணாலும் வந்ததில்லை. யாருக்கும் தெரியாமல் தன் ஒரக்கண்ணால் இடையிடையே அவளை பார்த்துக்கொண்டிருந்தான். அடுத்த சில நிமிடங்களில் நஜீமின் இதயம் “திக்” கென்றது. ஆம், அவள் ஒரு வாலிபனுடன் கைகோர்த்துக் கதைத்துக்கொண்டிருந்தாள். அவள் தனக்கு சொந்தமில்லை என்ற போதிலும் நஜீமால் அவளை மறக்கமுடியவில்லை. தாஹிர் நானா தன் நீண்ட நாள் நண்பரை வழியனுப்பிய சோகத்தோடு திரும்ப, நஜிம் கணப்பொழுதில் கண்டு கலைந்து போனவளை நினைத்து கவலையோடு வந்தான்.
XXXXXXXXXXXXXXXX
மகேன். காப்பி ஆறுது அம்மாவின் குரல் கேட்டு பழைய நினைவுகளிலிருந்து மீண்டவனாய், அந்த புகைப்படத்தை மீண்டும் பார்த்தான். தன் இதயத்தில் பதிந்த அவளேதான். படத்தோடு கொட்டை எழுத்துக்களால் இருந்த செய்தியை வாசிக்கத் துவங்கினான்.
"இளம் பெண் தற்கொலை!” கடந்த ஒருவருடத்திற்கு முன்னர் இந்த இளம்பெண் பேஸ்புக் மூலம் அறிமுகமான டுபாய் வாலிபருடன் ஏற்பட்ட நட்பு காலப்போக்கில் காதலாய் மாறியுள்ளது. "பேஸ்புக்கை தொடர்ந்து "ஸ்கைப்' மூலமும் வீடியோ கெமராவிலும் தினந்தோறும் அரட்டை அடித்துள்ளனர். வாலிபன் டுபாயிலிருந்து சென்ற மாதம் 15 நாட்கள் விடுமுறையில் வந்த வேளை பலமுறை இந்த பெண்ணுடன் சுற்றித் திரிந்துள்ளான். இன்னும் ஆறு மாதத்தில் திரும்பிவந்து நிச்சயம் திருமணம் முடிப்பேன் என்றும் ஆசை வார்த்தைகளால் நம்ப வைத்துள்ளான்.
அந்த வாலிபர் டுபாய் திரும்பிச்சென்ற பின்னர்தான் ஒருவர் சொல்லி அவன் ஏற்கனவே திருமணமானவன் என்ற விபரம் அறிந்ததும் அவனை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாக்குவதாப்பட்டுள்ளாள். அதன் பின்னர் இருவருக்கிடையே விரிசல் ஏற்பட அவளுடன் உல்லாசமாய் இருந்த புகைப்படங்களை, டுபாய் ஆசாமி பேஸ்புக்கில் இட அதிர்ச்சி ஆத்திரம்

Page 17
30
அவமானம் தாங்கமுடியமால் இளம்பெண் தற்கொலை செய்துள்ளாள். பொலிஸார் கள்ள ஆசாமியை தேடி வலை விரித்துள்ளனர்.
வாசகர்களே! இது "இண்டர்நெட் யுகம்'. இன்டர்நெட் இன்றேல் உலகம் இயங்காது என்ற நிலை. இருந்தும் நலவைப் போலவே நிறைய கெடுதிகளும் இதில் இருக்கிறது. அதிலும் பேஸ்புக்கில் நிறைய மோசடிகள் நடக்கின்றன. ஜாக்கிரதை செய்தியை வாசித்த நஜிமின் நெஞ்சில் எதையோ இழந்துவிட்டது போல் சோகம் ஆட்கொண்டது.
வலைப்பூவால் வலைவீசி நட்பால் அறிமுகம் கொடுத்து அன்பால் அனுசரித்து காதலால் அம்பு தொடுத்து காமத்தால் வேட்டுவைத்து கற்பால் உயிரை எடுத்து வஞ்சகமறியா கொடியிடையாளை வஞ்சித்து நிந்தித்தவனே உன்னால் எல்லோருக்கும் அவமரியாதை முகப்புத்தகம் மீது.
'எதுலயும் நலவு கெடுதின்னு இரண்டு பக்கம் இருக்கத்தானே செய்யும். நாம தான் யோசிச்சு நடக்கனும் நஜீம் தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்!!!
வேண்டு மெமக்கும் விடுதலை யென்று தீண்டும் வெயிலில் பட்டினி கிடந்துபின் ஆகாது அதுவென்று அறியும் ஒருநாளில் தீட்டினோம் கூராயுதம்!
ஆயினும் பெரிதாய் ஆக்கிய தொன்றில்லை பேயினுக் கெதிராய்ப் போர்க்கொடி தூக்கியெம் பூவையும் பொட்டையும் இழந்தோம் - நம்வீட்டு பூவைக்கு பூவைப்பார் யார்!
புண்ணதுவே புண்ணாக இருக்கட்டும் நெஞ்சத்தில் மண்ணுக்காய் இல்லாமல் மாண்டவென் தோழர்க்காய் வென்றே தரவேண்டும் விரைவாக சந்ததியை வா மணப்போம் விதவை!
S.
இறுதித் தருவாயில் உயிர்நீத்த உடற்கெல்லாம் சிறுதீ மூட்ட ஆளில்லை குற்றுயிராய்க் கிடந்த உடலேறிச் சுகம்கண்ட காடையரின் பண்பாட்டைப் பார்த்தே பழகு!
ஆண்டாண்டு காலமாய் ஆண்ட பூமியினை பூண்டோடு அழித்துப் புன்னகையைச் சீரழித்தீர் மாண்டோ போனோம் மறவர்நாம் வடலிகள் மீண்டும் வானுயரும்!!!
மன்னார் அமுதன்
AEGORGOS இலக்கிய சமுக சஞ்சிகை ialakúakúakika
 
 
 
 
 

ဏ္ဍု၍ (စ္ဆ=[®ó)
பூவெலிகட எம். எஸ். எம். சப்ரி
ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் 20 ஆம் நூற்றாண்டில் தமிழ் எழுத்துலகில் பெயர் சொல்லுமளவிற்கு பல காத்திரமான இலக்கியப் படைப்புக்களை தமிழுக்கு உவந்தளித்த கவிஞர்களுள் மஹாகவியும் ஒருவராவார்.
இவர் இலங்கையின் வடபுலத்தேயுள்ள அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவரின் இயற் பெயர் திரு. து. உருத்திர மூர்த்தியாகும். மஹஜன கல்லூரியில் கல்வி பயிலும் இளம் பாராயத்திலிருந்தே தமிழில் தீவிர மோகங்கொண்டிருந்தார். தமது 19 ஆவது வயதிலேயே எழுதுவினைஞராக கொழும்பில் தொழில் புரிய ஆரம்பித்தார். இவர் மாணவனாய் இருக்கும் போதே தமிழில் நனைந்த உள்ளமும், அந்த உள்ளத்திலே முகிழ்ந்த கவிதைக் காதலும் உடையவராய், யாழ் மறுமலர்ச்சிச் சங்கத்திலே இளம் உறுப்பினராய் இணைந்து, வரதர், நாவற்குழியூர் நடராஜன், அ.செ. முருகானந்தன், அ.ந. கந்தசாமி முதலியோரின் செம்மையான துண்டலினால், "ஈழகேசரி”, “மறுமலர்ச்சி” என்பவற்றில் கால்பதித்து 'மஹாகவி'யாகத் தோற்றம் பெற்றுக் கவிதைக் களத்திலே உலாவந்தார். கவிதைத் துறையிலே வளமான புதியதொரு பாதை வகுத்த சாதனையாளராக வளர்ந்தார். பின்னர் இலங்கை நிர்வாக சேவைக்கு பரீட்சையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு நிர்வாக உத்தியோகத்தராகவும், பின் உதவி ஆணையாளராகப் (அரசகரும மொழித்திணைக்களம்) பதவி உயர்வு பெற்றார்.
இவர் காலத்திற்கேற்ற வகையில் பல கவிதைகளை வளர்த்துச் சென்றவர் மட்டுமல்ல இலங்கையில் தமிழ்க் கவிதை வள்ர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் வழங்கியவராவார். தனது பதினாறாவது வயதிலேயே கவிதை உலகில் காலடி எடுத்து வைத்தார். பண்டிதன். மாபாடி, புதுக்கம்பன் போன்ற புனைப்பெயர்களில் எழுதி வந்தார். இவருடைய தனிச்சிறப்புக்கு பல காரணிகள் உள்ளன. இவரின் இலக்கிய ஆளுமை, தமிழ் புலமை, சமுதாயத்தின் மீது இவருக்குள்ள அக்கறை போன்ற பல காரணிகள் ஒன்றாக இணைந்து இவரது படைப்புக்களை சிறப்படையச் செய்துள்ளன என்பது எனது கருத்தாகும். கவிதை, ஓவியம், பா நாடகம் முதலிய துறைகளில் வெற்றிகரமான பல பரிசோதனைகளைச் செய்துள்ளார். அவற்றோடு இசைப் பாடல்களையும், வானொலிப் பாடல் நாடகங்களையும் இவர் இயற்றி வெளியிட்டுள்ளார்.
அவரது படைப்புகளான "கண்மணியாள் கதை. வீடும் வெளியும்' என்பன கவிதைத் தொகுப்புக்கள். 'கோடை ஒரு பா நாடகம், 'குறும்பா’ என்பது கிண்டலும் நகைச்சுவையும் கொண்டதாய் அதே சமயம் சிந்திக்கச்
H^რა)საu) &პისააt&მuII (3 ტყyაt, ) დახმi°ტა). ზ.

Page 18
32
செய்வதாய் அமைந்த குறும்(பு)பா ஆகும். இரண்டு காவியங்கள்', 'வள்ளி, ‘புதியதொரு வீடு' என்பன குறிப்பிடத்தக்க இவரது படைப்புக்களாகும். இவருடைய கவிதைகள் மத்திய, அதற்கும் அடித்தள நிலையில் உள்ள மக்களின் வாழ்க்கையையே சிறப்பாக சித்தரிப்பதாக அமைந்துள்ளதைக் காணலாம். எளிமை, இனிமை, மனிதாபிமானம் என்பன இவருடைய ஆக்கங்களில் மேலோங்கி நிற்கலின்றது. கற்பனைக்கு அதிக இடம்கொடுக்காமல் சாதாரணமாக தமிழ் சமூகத்தில் உலா வருகின்ற பாத்திரங்களைக் கொண்டு சமூகப் பிரச்சினைகளை யதார்த்த பண்புகளுடன் வெளியிட்டார்.
‘தற்கால வாழ்க் கைப்புலத்தைக் களமாகக் கொண்டு நடைமுறை வாழ்க்கையை யதார்த்தபூர்வமாக சித்தரிக்கும் முறையை தமிழ் கதையிற்கொண்டு வந்தமை மஹாகவியின் முக்கிய பங்களிப்புக்களில் ஒன்று எனலாம்' என்ற கவிஞர் எம்.ஏ. நுஃமான் அவர்களின் கூற்று நிதர்சனமானதாகும். அன்றியும் மஹாகவி கவிதை வடிவத்தில் ஒரு முழுமையைப் பேணி வந்திருப்பது இன்னொரு சிறப்பு உள்ளடக்கத்தின் பொருளோடு தொனிப்பொருள் ஒன்றும் தோன்றி வளர்ந்து நிறைவு பெறும் தன்மையையும் உருவத்தில் ஒரு சிறுகதை போன்ற நிறைவு தன்மையையும் கான முடியும்.
குறியீட்டு முறையில் அல்லது முற்றுருவகப் பாங்கில் குறிப்பாக பொருளைப் புலப்படுத்தும் நெறியில் பெரு வெற்றி கண்டவர். 'சிறுநண்டு மணல்மீது படம் ஒன்று கீறும் சிலநேரம் அதை வந்து கடல்கொண்டு போகும்' என்பது சிறு உதாரணமாகும். மஹாகவி முற்றிலும் ஒரு தனித்துவமான படைப்பாளியாக அன்றைய காலகட்டத்தில் திகழ்ந்தார். பிறரை சிறிதும் பின்பற்றாது தனது தனித்துவமான திறமையினால் உருவாக்கப்பெற்ற அனைத்து படைப்புக்களும் காலத்தால் அழியாதவையாகும். இவரது கூரிய மனப்பார்வையும், அடக்கமான அழகியற்காட்சியும் ஏவல் செய்யும் சொல்லாட்சியும் அவரது தனித்துவமான படைப்பாற்றலுக்கு காரணம் எனலாம். 'மஹாகவி மரயிலே ஊறித்திளைத்தவர். மரபும் புதுமையும் அவரிடம் சங்கமித்திருந்தன என்ற ஏ.ஜே. கனகரத்தினத்தின் விமர்சனக்கூற்று மஹாகவியின் படைப்பாளுமை எத்தகையது என்பதை விளக்குகின்றது.
அவர் எழுதிய பல கவிதைகளையும் நான் விரும்பிப் படிப்பேன். இருப்பினும் அவற்றுள்ளும் என்னை மிகவும் கவர்ந்த கவிதை "தேரும் திங்களும் ஆகும் . இக் கவிதையானது யாழ்ப் பாண மண் ணில் வாழ்ந்த சாதிவெறியர்களால் திகழ்ந்த தீய விளைவுகளை ஒரு சிறுகதைக்குரிய முழுமை நிலையில் கவிதையினுாடு கூறியிருப்பது நமக்கு புதியதொரு கவிதை யுக்தியை கற்றுத்தருகிறது. 'ஊரெல்லாம் கூடி ஒரு தேர் இழுக்கிறதே வாருங்கள் நாமும் பிடிப்போம் வடத்தை' என்று தொடங்கும் இக்கவிதை ஆரம்பத்தில் இயல்பான நிலையில் ஒரு சம்பவத்தைக் கூறுவதுபோல் தொடங்கி சாதிவெறியால் நிகழ்ந்த கொடுரங்களைக் கூறும் பாங்கு எமது கண் முன் தோன்றுகிறது.
 
 
 

33
சாதிப் பிரிவினை, தீண்டாமை என்பவற்றுக்கு எதிராக போராட்டமொன்றை நிகழ்த்துவதற்கு இணையாக கவிதைக் கணை மூலம் அமைதிப் போராட்டத்தை நிகழ்த்திவிட்டார். அவர் கவிதை புனையும் அக்கால கட்டத்தில் நீல்ஆம்ஸ்ரோங் நிலவில் முதன்முதலாக காலடி எடுத்துவைத்தார். திருவிழாவில் தேரிழுக்க வந்த ஏழை இளைஞனும் ஆம்ஸ்ட்ரோங்கும் சமமானவர்கள் என்றும் மனிதர்களிடையே ஆண் - பெண் என்பதைத் தவிர வேறெந்த பிரிவினைகளும் இல்லை என கூறவிளைவதினுாடு மஹாகவி ஒற்றுமையையும் மனித நேயத்தையும் கட்டியெழுப்ப எத்தனிக்கிறார். இந்த சகலகலா வல்லவனின் ஆயுள் மேலும் நீண்டிருந்தால் இத்தகைய சிறப்பான படைப்புகளைக் கற்று இன்புற்றிருப்போம். அவரது மெய்க்கீர்த்தி இவ்வுலகை விட்டு அகலாது!!!
நன்றி - கலாநிதி S.S. ஆனந்தன், பண்டிதர் சு. வேலுப்பிள்ளை
கடலின்றி அலையில்லை நீயின்றி நானில்லை எனக்கூறி என்நெஞ்சில் அழியாமல் இடம்பிடித்தாய்!
ஈராண்டு சென்றதன் பின் உயர்படிப்பை முடித்துவிட்டாய் இன்னொருத்தியை மணமுடித்து அவள் மனசில் தடம் பதித்தாய்!
பார்த்திருந்து சோர்ந்துவிட்டேன் வேதனையில் மூழ்கிவிட்டேன் துன்பங்கள் தாங்கவில்லை இன்பங்கள் வேறு இல்லை!
கனிவான என்நெஞ்சு கற்பாறை ஆயிடுச்சு கடலோடு கலந்துவிட்டேன் கடல்நீரும் கூடிடுச்சு!!!
நஸஹா ஹலால்தீன் தியத்தலாவ
கலை இலக்கிய சமுக சஞ்சிகை

Page 19
சிறுகதை பி.பி. அந்தோனிப்பிள்ளை - முருங்கன்
ஐயாத்துரை தாத்தாவிற்கு இரண்டு நாட்களாக ஒரே உற்சாகம். பேத்தி சாகிதாவிற்கு வெள்ளவத்தையில் திருமணம். இரண்டு நாட்களில் கொழும்பு போக இருக்கிறார். பல வருடங்களுக்கு முன்பு கொழும்பில் உத்தியோகம் பார்த்தவர்தான் அவர் ஓய்வுபெற்று பதினைந்து வருடங்கள் கடந்துவிட்டன. இரண்டுமுறை அங்கு போய்வந்திருக்கிறார். அப்போதே ஏற்பட்ட மாற்றங்களைப் பார்த்து வியந்திருக்கின்றார். சாதாரணமாக நடமாடித் திரிந்த இடங்களில் சனநெரிசலும், வாகன போக்குவரத்தும் பலமடங்கு அதிகரித்து சமாளிக்க முடியததாகிவிட்டது. வயது காரணமாக பதட்டமும் ஏற்படுவதால் கடந்த பத்து வருடங்களாக கொழும்பு பயணத்தையே நிறுத்திவிட்டார்.
இப்போது அவருடைய மகள் வழிப்பேத்தி சாகிதாவிற்கு திருமணம் நடக்கவிருக்கிறது. கணவர் யாழ்ப்பாணம் தெல்லிப்பளையைச் சேர்ந்தவர். அரசாங்க திணைக்களம் ஒன்றில் உத்தியோகம், சாகிதா ஆசிரியை. உறவினர் மூலமாக பேச்சுவார்த்தை நடந்து திருமணம் நிச்சயமாகிவிட்டது. வவுனியாவிலிருந்து புயிைரதத்தில் அனைவரும் போக முடிவு செய்யப்பட்டிருக்கிறது. முதலில் ஐயாத்துரையை அவரது வயோதிபம் கருதி விட்டுவிட்டுப் போகத்தான் எண்ணியிருந்தார்கள். பக்கத்துவீட்டில் சாப்பாட்டுக்கும் ஒழுங்குசெய்தாயிற்று. என்ன நினைத்தார்களோ பேத்தியுடைய திருமணத்தை பார்க்கட்டுமே என்று அழைத்துப்போகிறார்கள்.
இந்தக் கிழட்டை கூட்டிப்போனால் உபத்திரவம்தான். சும்மாவும் இருக்காது. ஒரே தொணதொணத்துக்கொண்டே இருக்கும். ஒன்டும் கதைக்கவும் ஏலாது. எங்கேயும் முட்டிமோதினால் எங்களுக்குத்தான் உத்தரிப்பு என்று சில இளவட்டங்கள் மறைவாகவும், காதுபடும்படியும் பேசியது ஐயாத்துரை தாத்தாவின் காதுகளில் விழாமல் இல்லை. எப்படியோ திருமணமும் இனிதே நடைபெற்று மீண்டும் வவுனியாவிற்கு போவதற்காய் கோட்டை புகையிரத நிலையத்துக்கும் வந்தாயிற்று.
அவராலும் தனது வயோதிபத்துக்குரிய தன்மைகளை விடமுடியவில்லை. ஆதலால் எந்நேரமும்
புள்ள சங்கிலி வெளியே தெரியாமல் சட்டைக்குள் மறைத்து வை'
டேய் தம்பி வெளியில் எட்டிப் பார்க்காத
தங்கச்சி பிள்ளைக்கு சளி பிடிக்கும். யன்னல் பக்கம் இருக்காத
 
 
 
 
 
 

என்று ஏதாவது புத்திமதி கூறிக்கொண்டே இருப்பார். இந்த கிழட்டை கூட்டி வந்தது தப்பாப்போச்சு என்ற புறுபுறுப்பு தொடங்கிவிட்டது.
தாத்தா புகையிரத பெட்டியில் பிரயாணிகள் போக்குவரத்து செய்யும் ஒரமாக இருக்கும் ஆசனத்திலேயே அமர்ந்துகொண்டார். பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. அநுராதபுரம் வந்ததும் பெருழ்பகுதி பிரயாணிகள் இறங்கிக்கொண்டார்கள். ஒருசில புதியவர்கள் ஏறினார்கள். புதியவர்களில் ஒருவன் சந்தேகத்திற்கிடமானவனாக தென்பட்டான். அவன் அடிக்கடி கதவைத் திறப்பதும் மூடுவதுமாக பல தடவை செய்துகொண்டிருந்தான். பின் மலசலகூடத்துக்குப் பக்கமாக வந்து சாய்ந்துகொண்டான். ஐயாத்துரை தாத்தா அவனைப் பார்க்கும்போது துங்குவது போல பாசாங்கு செய்தான். பிறகு பயணிகளை நோட்டம் விட்டான். புகைவண்டி ஓடிக்கொண்டே இருந்தது. பயணிகள் பலர் தூங்கி இருந்தார்கள்.
இன்னொரு தரிப்பிடத்தில் நின்ற புகையிரதம் மீண்டும் புறப்பட்டது. சந்தேகத்துக்குரியவன் அசைவதுபோல தெரியவே ஐயாத்துரை தாத்தா எச்சரிக்கையானார். இரண்டு வினாடிகளுக்குள் "ஐயோ திருடன்’ என தாத்தாவின் மூத்த மகள் கத்த, திருடன் ஓடி வரும்போது தாத்தா குறுக்காக காலை நீட்டினார். வேகமாக ஓடிவந்தவன் நிலைதடுமாறி விழுந்தான். பெண்ணின் அபாய குரலைக் கேட்டு விழித்தவர்கள் திருடனைப் பிடித்துக்கொண்டதோடு அவன் பறித்த சங்கிலியையும் மீட்டுவிட்டனர். அன்றைய நிகழ்வோடு நடந்த ஏனைய விடயங்கள் முக்கியமல்ல. அந்தப் பயணத்தில் கலந்துகொண்டவர்களுக்கு வயதானவர்களைப் பற்றிய மனப்பான்மை மாறிவிட்டதே இதில் மிகவும் முக்கியம்!!!
(GFb u6 Lb 2063ð60OLD)
நிறங்களும் கனவாகிய இத்தனை சோகங்கள் என் என் வாழ்வில் இதயத்தில் தணலாய் நிலையில்லா எண்ணங்கள். தகித்தபோதும் நான்
ஆறுதல் காண்பதே உன் தென்றலும் தீயான நட்புக்குள்தான் தோழா! என் சோலையில் கானலான கனவுகள்! இதயம் திறந்து
உன்னை அழைக்கிறேன் இன்பங்களும் இறுதிவரை என் பகையாகிப்போன என் இனிய நண்பனாக இளமைதனில் சிறகில்லா உயிரோடு உறவாடும் ஆசைகள். தோழனாக நீ வரவேண்டும்!!!
எஸ். மஞ்சுளா - கிரிஎல்ல
கலை இலக்கிய FD&E சஞ்சிகை

Page 20
செ. ஞானராசா அன்புவழிபுரம்
தாயே உன்னை நினைத்து நானே நோயே அடைந்தேனே.
தொட்டில் உறவோடு தூக்கி வளர்த்தாயே. கட்டில் மனையடைந்த பின்னும் என் கதைகேட்டு ஆறுதல் அளித்தாயே!
பிள்ளை பிள்ளை என்று பேணி வளர்த்தாயே. தொல்லை உனக்களித்து தூர சென்றேனே!
அம்மா நீ இருக்க அனைத்தும் இருந்ததாய் உணர்ந்தேன். அம்மா உன்னை இழந்து அநாதை ஆகிவிட்டேன்!
மனைவி மக்களிருந்தும் மற்றும் உறவிருந்தும் துணை நீர் இழந்த தூண்டில் மீன் ஆனேன்!
நித்திரைக் கனவில் வந்து போக நிம்மதி இழந்தேனே. செத்தது உண்மையா? உயிர்ப்பே இல்லையா? செயலிழந்து பேனேனே!
 
 
 
 

பக்கத்துவீட்டு ஆரவாரம் எனக்கு தெளிவாக கேட்டது. இரவை பகலாக்கிக்கொண்டிருக்கும் ஒளி ஜாலங்களுடன் ஆங்கிலப் பாடல்களின் அதிர்வுகளும் நவநாகரீகத்தில் ஊரித்திளைத்த இளவல்களின் சிரிப்பொலிகளும் இவை யாவையும் மிஞ்சிவிடும் சமையல் வகையராக்களின் அதீத மணமும் அந்த அழகிய கிராமத்தின் நிசப்த ராத்திரியை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தன. நான் வலுக்கட்டாயமாக எனது மனதை புத்தகத்தில் இருத்தினேன். கொஞ்ச நேரம்தான். அதற்குள் என் அம்மம்மாவின் பேச்சுக்குரல் கேட்டது.
நிவேதாம்மா. இன்னும் உடுத்தலியா? இதென்ன இந்த நேரத்தில் புத்தகமும் கையும்.
நான் போகல்ல அம்மம்மா
‘என்னம்மா. நீதான் அமுதாவின் வலது கையாச்சே, நீ போகாட்டி அவ ரொம்ப கவலப்படுவா. போயிட்டுவாம்மா’
"ஐயோ அம்மம்மா. என்ன விட்டிடுங்களேன். நான் பிறகு அமுதாவ சமாதானப்படுத்திக்கிறேன்’
அம்மம்மா என்னை வற்புறுத்தவில்லை. என்னவென்றாலும் அவர் படித்தவர். ஆசிரியரல்லவா? மரியாதையாக இருந்துவிட்டார். அவர் எதையும் கேட்காதது அப்போதைக்கு எனக்கு ஆறுதலாக இருந்தது. விடயத்தை பிறகு சொல்லலாம் என்று எண்ணிக்கொண்டேன்.
அன்று. யுத்தகாலத்தில் அம்மா, அப்பா, தங்கை, கணவர் என ஒட்டுமொத்த உறவுகளையும் ஒரே ஸ்தலத்தில் பலிகொடுத்து அதிர்ந்து திக்பிரமை பிடித்து நடுத்தெருவில் நின்றபோது பக்கத்து ஊரிலிருந்த அம்மம்மாதான் எஞ்சியிருந்த என் குடும்ப மூலவேர். ஒடோடிவந்து எனைத் தாங்கினார். மரத்துப்போன வாழ்வில் தனித்துப்போன நான் பழைய நினைவுகளில் இருந்து என்னை விடுவித்துக்கொண்டு தேறி, அம்மம்மாவின் ஆலோசனைப்படி சாந்தி இல்லத்து அநாதை சிறுவர்களுக்கு அறிவொளியூட்டும் பணியை விரும்பியேற்று தொண்டர் ஆசிரியை ஆனேன்.

Page 21
38
பால்வடியும் முகங்களின் பரிதாபங்கள். முகவரி இழந்த பச்சிளங் குழந்தைகளின் இழப்புகளின் வடு என் சோகங்களை சிறுபுள்ளியாக்கியது. நான் அவர்களுடன் ஐக்கியமானேன். இழப்புகளை சந்தித்தவர்களுக்கே தெரியும் ஆதரவின் அருமை. வாழ்க்கையை மீளுருவாக்குவதிலுள்ள தேவையும், கஷ்டமும். அன்பையும், ஆனந்தத்தையும் காணும் ஏக்கங்கள் அநாதரவாளர்களுக்கு மட்டுமே புரியும் . நானும் இழப்புகளின் சிதிலங்களிலிருந்து மீண்டு(ம்) முளைத்த பயிர் ஆதலால் அன்பின் தேவையுணர்ந்தேன்.
வாழ்வை புதிய கோணத்தில் நான் தொடர்ந்தபோதே அமுதா எமது பக்கத்து வீட்டுக்கு குடிவந்தாள். ஒரு வயது மூத்தவள். இரு குழந்தைகளின் தாய். கணவர் சுவிஸில் வேலை, மாமி, நாத்தனாரின் கொடுமை தாங்காது இங்கே வந்தாளாம். அரச அலுவலகமொன்றில் கணனி இயக்குனராக வேலை பார்க்கிறாள்.
அமுதா! பேருக்கேற்ற வசீகரத்தோற்றம். கலகலப்பான, இனிமையான பேச்சு. கதைத்த முதல் தடவையே தன் ஆளுமையால் கவர்ந்துவிட்டாள். அவள் குழந்தைகளுக்கு அம்மம்மா பாசச் சுரங்கமானாள். கண்மணிபோல் குழந்தைகளைப் பார்த்துக்கொண்டார். நானும் அமுதாவும் நெருங்கிப் பழகினோம். அமுதா தன் சோகங்களை சொல்லி ஆறுதல் பெறுவாள். அவள் தனியாக குழந்தைகளோடு போராடுவதாலும், அவளின் ஆதரவற்ற நிலை கண்டதாலும் எனக்கு அவளைப் பார்க்க பாவமாக இருந்தது. இயல்பிலேயே அன்பான எனது உள்ளம் அவளது கையறுநிலை கண்டு மிகவும் இரங்கியது. நான் அமுதாவுக்கு பக்கத் துணையானேன். அமுதாவுக்கு ஏதும் சுகவீனம் என்றால் எனக்கு அழுகை வரும். அப்படியொரு உள்ளார்ந்த பாசம். அற்புதமான நட்பு. அன்னியோன்னியமான ஆத்ம உறவு.
தசாப்தம் கடந்தது. உலகில் மாற்றமில்லாதது மாற்றமொன்றுதானே? அமுதாவின் நாத்தனார் மணமுடித்து வெளியூர் சென்றுவிட்டாள். மாமியார் மாரடைப்பால் இறந்துபோனார். கணவரும் கைநிறைய செல்வத்தோடு நாடு திரும்பினார். குடியிருந்த வீடு சொந்தமாகி மாடிவீடானது. வாகன விற்பனை நிலையமொன்றை ஆரம்பித்தார். அமுதாவின் வாழ்க்கைக்கோலம் மாறியது. கணவரின் தங்கையர் ஐக்கியமாகினர். உறவுகள் சேர்ந்தன. இப்போது சொந்தம், செல்வம், உல்லாசம் என புதுவிதத்தில் கழிந்தது அமுதாவின் ഖT!pഖ.
அமுதாவை காண்பதே அரிது. இருந்தாலும் நானே தேடிப்போய் கதைப்பேன். சிலவேளை எமக்கிடையே இடைவெளி பரவுவதுபோல் பிரமை தோன்றும். நான் எதையும் பொருட்படுத்தவில்லை. அமுதாவின் மகள்மாரின் மேலதிக படிப்பு, அவளது வெளிவிவகாரங்கள் என அவளின் வேலைகளை ஆசையோடு செய்வேன். அமுதாவுக்காக எதையும் செய்யும் நிலையில் நானிருந்தேன். உண்மை நட்பின் தாற்பரியம் அதுதானே? தானொன்று நினைக்க தெய்வமொன்று நினைக்கும் என்பார்கள். என் வாழ்விலும் அது சரியாகியது. அந்தக்காட்சி திரும்பத் திரும்ப என்னுள் தோன்றியது. நேற்று அமுதாவின்
கலை இலக்கிய சமுக சஞ்சிகை
 
 
 
 

மூத்த மகளின் நிச்சயதார்த்தம். என் மகளின் விழா போல என்னுள் பூரிப்பு அமுதாவுக்கு வேளைப்பளு என்பதால் நானே எல்லாம் முன்னின்று செய்தேன். அமுதாவை புடைசூழ பெண்கள் கூட்டமொன்று சென்றது. என்னோடு விழா ஒழுங்குகள் பற்றி கதைத்துவிட்டு அப்பால் சென்றாள் அமுதா. 'நானோ வேலைகளில் மூழ்கிப்போனேன். அப்போது அமுதாவின் சின்னவள் கோரிக்கையொன்றை அம்மாவிடம் கூறுமாறு என்னிடம் வற்புறுத்தவே பரிதாபம் பொறுக்காத நான் அமுதாவை பார்க்கச்சென்றேன். அவர்களின் உரையாடலில் எனது பெயர் அடிபடவே நின்று அவதானித்தேன்.
‘அமு. யாருப்பா அது? நம்மள மிஞ்சுற உன்ர கொம்பு? காலேஜில பாலும் தேனுமாயிருந்த நம்மளவிட அவ ரொம்ப நெருக்கம் போல?
"யாரு நிவேதாவா? பாவம்பா அது. யுத்தத்தில் குடும்பத்தையே இழந்து தனிச்சிடுச்சி. பார்க்க அனுதாபமா இருந்திச்சி. கொஞ்சம் ஆதரிச்சேன். அந்தகாலத்துல இந்த ஊரும் நமக்கு புதுசு. நிவேதாவுக்கு ஊர்ல நல்ல செல்வாக்கு அவட உதவி எனக்கு தேவப்பட்டுச்சி. அதனால நா அவகிட்ட கொஞ்சம் நெகிழ்ச்சியா நடந்துக்கிட்டேன். ஆனா அது என்னடான்னா நான்தான் உயிர்னு என்மேல பாசம்கொட்டுது. எனக்காக ரொம்பவே பாடுபடுதுப்பா.
'ரொம்பவே வலியுறாபோல. அப்படித்தானே அமு?
ஆமாடா சுஜி. நான் வெளியில போனா சின்னவளுக்கு நல்ல பாதுகாப்பு. மற்றது அது தனிக் கட்ட போதாததுக்கு ஞானி மாதிரி வேறு பக்குவப்பட்டிருக்கு. அதுக்கு சொத்தில ஆசை வராது. என்னில நிறைய அன்பிருக்கிறதால துரோகம் செய்யவும் மாட்டாது. இதே இடத்த என் நாத்தனாருக்கு கொடுத்தா அமிழ்த்துவிட்டிருக்கும். மொத்தத்துல எனக்கு நல்ல பாதுகாப்பு அரண் அனுசரணை. அது ஒரு வெகுளி. அதனால அவமேல ஒரு சின்ன அனுதாபம்! அவ்வளவுதான். அன்பு ஆத்ம நட்பு அது இதுன்னு நீ வேற பகிடி பண்றே என்று அமுதா சொல்ல அங்கே சிரிப்பொலி பரவுகிறது.
எனக்குள் பேரதிர்ச்சி. அமுதாவின் வார்த்தைகளா இவை? அமுதாவுக்கு இப்படி பேசவும் வருமா? அழகான அமுதாவுக்குள் இவ்வளவு அசிங்கமா? வக்கிரமா? நினைத்துப் பார்க்கவே நடுங்குகிறது. திக்பிரமை பிடித்திருந்தேன். மெதுவாக படிகளில் இறங்கினேன். தசாப்த நட்பு, ஆத்ம நட்பு, 'அனுதாபம் எனும் குண்டு வெடித்ததால் சிதறி சின்னாபின்னமாகியது. எப்படித்தான் வீடுவந்து சேர்ந்தேனோ? இன்று முழுவதும் நான் அந்தப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. அவள் என்னைத் தேடவும் இல்லை. சூரியக் கூட்டத்துக்குள் நட்சத்திரத்துக்கு என்ன வேலை. நர்ன் செலுத்திய கைம்மாறு கருதாத ஆழ்ந்த பவித்திரமான அன்பும் நட்பும் அற்ப அனுதாபமானதால் அவமானத்தால் என்னிதயம் குறுகியது. குற்றுயிராய்க் குலைந்தது. மீண்டும் அமுதாவைப் பார்க்கவோ, உறவைத் தொடரவோ திராணியற்று குமைந்தேன்.
என் வாய் முணுமுணுத்தது. அன்பு. அனுதாபம். அமுதா. அற்பம்!!!

Page 22
அகஸ்ட் நான்கெமக்கு
ஊர்விட்டுச் சென்று தினம் அகதியாய் மூதூர் மக்கள் அல்லற்பட்ட துன்பதினம்
அமைதி கண்ட மூதூரில் 2ஆட்டி வெறி ஆர்ப்பரிப்பு
FITLD salapam proMsoNoių சவக்காடு மனித உடல்
குண்டுவெடி மழை தூவ குடில் வீடு தரை சாய புண்பட்ட காயத்தவர்
கதறும் நிலை மறுக்கிலோமே!
கலைமேகம்
வெள்ளி காலை ஊர்கடந்து வெளிக்கிட்ட மக்களினை கல்மலையாம் கிணாந்திமுனை காடருகே தடுத்திட்டார்
அவர்களங்கு செய்த சதி போர் வகுத்த முதற்பாடம் துயர்பெற்ற முஸ்லீம்கள் இதை என்றும் மறுவாரே
எத்தனையோ உடலந்த எறிகணைக்குப் பலியானார் இத்தனைக்கும் யார் பொறுப்பு இன்றுமது கானல் நீர்!!
66 இலக்கிய
சமூக சஞ்சிகை
 
 

4. 2.
ஜில் விழர்ஜின்ஜர்னல்
- பவானி சிவகுமாரன்
இலைகள், கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட படகுகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன. உல்லாசப் பயணிகளின் ஆரவாரம் இங்கு வலை கேட்டது. குட்டைச் சுவரில் சரிந்து தன் உடல்பாரத்தை அதில் ஏற்றியபடி பார்த்துக் கொண்டிருந்தான் கலிஸ்ரோ.
கடல்நடுவே பாறைத் தீவு. படகுகள் கரையை அண்மிக்கும் போதெல்லாம் பறவைகள் மேலெழுவதும், பறப்பதும் பின் இறங்குவதுமாய், பச்சை மரங்கள் அசைவில் தேவாலய உச்சிச் சிலுவை தெரிந்தது. தேவாலயத்தைத் தரிசிப்பதாய் வரும் உல்லாசப் பயணிகள் அங்கு சமைத்து சாப்பிட்டு "ஸ்விம்மிங்' 'போட்டிங் என்று பொழுது போக்குவது வழக்கம்.
நின்றதில் கலிஸ்ரோவுக்கு கால்கள் வலித்தன. கால்களை வலிந்து இழுத்து பீரங்கியின் மேல் ஏறி அமர்ந்தான். தீவைப் பார்க்கும் பொழுதெல்லாம் பல ஞாபகங்கள் எழும். ஒருகாலத்தில் ஹெரோயின், பொப்பிச் செடிகளின் வளர்ப்பிடம் இது. பின் கடற்கொள்ளையரின் சாம்ராஜ்யமாக சிலகாலம் இருந்தது. அதன்பின். பிறகு.
இன்று ஞாயிற்றுக்கிழமை, பாவப்பட்ட மக்களெல்லாம் அதைக் கழுவுவதற்குச் சென்றிருந்தார்கள். கலிஸ்ரோ மக்கள் கூடுமிடங்களைத் தவிர்த்துவிடுவான். அங்கு காட்சிப்பொருளாக அவன் விரும்புவதில்லை.
இந்தக் கோட்டை அவனுக்கு மிகப்பிடித்த இடம். எத்தனை தரம் இதைச் சுற்றி வந்தாலும் சலிப்பதில்லை. சிறுவயதில் தன் அண்ணாக்களுடன் இங்கு "ஃபுட்போல் விளையாடியிருக்கிறான். இந்த ஆலமரத்தின் விழுதுகளில் நண்பர்களுடன் ஊஞ்சல் ஆடியிருக்கிறான். அவர்களெல்லாம் எங்கே உயிருடன் இருக்கிறார்களா? அவனையறிமால் பெருமூச்செறிந்தான்.
திடீரென கேட்கத்தொடங்கிய இரைச்சல் அவன் கவனத்தை ஈர்த்தது. கண்களில் ஆர்வம் தொற்றிக்கொள்ள ஆலமரத்தின் விழுதினைப் பற்றியபடி கோட்டைக் குட்டைச் சுவரில் அமர்ந்தான். இராணுவ விசைப் படகுகள் நீரைக் கிழித்தபடி புள்ளியாகின. மனம் அவற்றின் குதிரைச் சக்தி பற்றிக் கணக்கிட்டது. இவையென்ன? இவற்றின் அப்பன், பாட்டன் படகுகளை அவன் கண்டிருக்கிறான். இழப்புகள் ஒன்றன் பின் ஒன்றாய் மனதில் நிழலாட பார்வையைத் திருப்பினான்.
ஆராதனை முடிந்து மக்கள் திரும்பிக் கொண்டிருந்தனர். அக்கா வந்துவிடுவாள். பசித்தது. குட்டைச் சுவரிலிருந்து இறங்கி நடக்கத் தொடங்கினான். காலையில் அக்காவும், பிள்ளைகளும் சென்றபின் வழமைபோல் கடைசியாய்ப் பாத்திரங்களை ஆராய்ந்தபோது சிறிது கஞ்சி எஞ்சியிருந்தது. அக்கா சேர்ச் இலிருந்து வந்து சமைக்கும்வரை பிள்ளைகள்

Page 23
42
பசிபொறுக்கமாட்டார்கள். அவன் சாப்பிடவில்லை. சமையல் வாசல்வரை மணத்தது. வாசலுக்கு வெளியே இறக்கியிருந்த தடுப்பின் கீழ் வழமைபோல் கலிஸ்ரோ அமர்ந்தான்.
கலிஸ்ரோ நீ காலையில் சாப்பிடவில்லையா?
முதலில் சாப்பிடு' கிழங்குகளுடன் மீன்கறி, பொறியல்.
கடற்கரை நகரம். எது இருக்கிறதோ இல்லையோ மீன்களுக்கு மட்டும பஞ்சமில்லை. சிலநேரங்களில் அக்கா எட்வினாவால் மீன்பொறியல் மட்டும் சமைக்க முடிந்தது. வறுமை. ஐந்து பிள்ளைகளுடன் அக்கா. அத்தான் ஆர்னல்டோவிற்கு எதுபற்றியும் கவலையில்லை. பெருந்தலைகள் எல்லாம் போரில் மடிந்துவிட அல்லது நகரைவிட்டுச் சென்றுவிட, கொஞ்சம் படித்திருந்த ஆர்னல்டோ தன்னைத்தானே தலைவனாக வரித்துக்கொண்டான். வீடுபற்றி அவன் கவலைப்படுவதேயில்லை. அக்காவிற்கு தன் கணவன் பற்றி எக்கச் சக்கமான பெருமை. அவனுடைய குறைகள் அவளுக்குத் தெரிவதில்லை.
கலிஸ்ரோ. உன் மச்சான் இன்று கவர்னரை சந்திக்கப் போயிருக்கிறார்’
கவர்னர் சென்றமுறை இங்கு வந்தபோது தன்னை வந்து பார்க்கும்படி சொல்லியிருந்தார்’
கலிஸ்ரோ பேசவில்லை. பேச என்ன இருக்கிறது. தன் குடும்பத்தில் அக்கறை ವ್ಹಿಜ್ಡಲ್ಯ நாட்டில் அக்கறை இருக்க முடியுமா? புகழ். எல்லாம் புகழ் செய்யும் வேலை.
கப்பல் விட்டார் முன்னவர்கள். கப்பல் விட்டார் முன்னவர்கள்’ திரும்பத் திரும்ப பாடலின் முதல்வரியை மனனஞ் செய்துகொண்டிருந்தான் அக்காவின் மூத்த மகன். யாரோ ஒரு தேசியகவி நகரின் பழம் பெருமைபற்றி மிக்ஸ்டெகோ மொழியில் பாடியது.
கப்பல் விட்டார் முன்னவர்கள் கடலைக் கடந்தார் திசைதோறும்போய்
தேசந்தோறும் விற்று வந்தார் கப்பம் கொண்டு சிற்றரசர் காலில் விழுந்து பணிபுரிந்தார் தெப்பம் கொண்டு யவனரெல்லாம் தேடி வந்து குடிபுகுந்தார்’
"மம்மீ யவனர் என்றால் யார்? அக்காவால் விடை சொல்ல முடியவில்லை. வெறும் ஐந்தாம் வகுப்பு. கலிஸ்ரோ முன்வந்தான்.
'யவனர் என்றால் அந்நியர்
'ዘ á,,,'{ j'ሖሽ M፤.
 
 
 

எல்பசோ மத்திய அமெரிக்க பண்டைய வர்த்தகத் துறைமுக நகரம். வரலாற்றுப் புகழ்கொண்டது. அதுவே அதன் சீரழிவுககும் காரணமாயிற்று. ஆதியில் மன்னர்கள் படையெடுப்பில் சிதைவடைந்தது. பின் சுயெஸ் கால்வாய் நாடு காண் படலத்தில் ஸ்பானிஷ் வசமாகியது. பின் விடுதலை பற்றுக் கிட்டிய மாநில சுயாட்சியில் மத்திய அரசால் உரிமைகள் மறுக்கப்பட, சுரண்டப்பட, வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட உள்நாட்டுப் போரில் பாரிய அழிவைச் சந்தித்தது.
அத்தான் ஆர்னல்டோ அட்டகாசமாக வந்தான். கூடவே வழமைபோல நிழலாய் நாலுபேர்.
‘எட்வினா. குடிப்பதற்கு ஏதும் எடுத்து வா
அக்கா பின் கதவால் வெளியேறுவது தெரிந்தது. கோப்பி, சீனி என்று கடன் கேட்பதற்குச் செல்கிறாள். அக்கா மேல் கோபம் வந்தது. இப்படி இவன் கேட்டதும் செய்வதால்தான், அத்தான் பொறுப்பில்லாமல் சுற்றுகிறான். இப்போது இவர்கள் போகப் போவதில்லை. உள்ளே வந்து உறங்கலாமா என்று யோசித்தான். சிறிய வீடு. அதில் அவன் உறங்கும் மூலையில் இப்போது வெடிமருந்துகள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன.
"மச்சான் ஆர்னல்டோ இந்த வெடிமருந்துகளை எப்போது அகற்றப்போகிறாய்?
"பொறு பொறு பொலீசுக்கு சொல்லியிருக்கிறேன். அவர்களுக்கும் நேரம் கிடைக்க வேண்டுமே
வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது.
'அன்று எவ்வளவு நேரம் காத்திருந்தேன் தெரியுமா? எங்கள் கடலில் வெளியாட்கள் மீன் பிடிப்பதுபற்றி எனக்கு நிறைய முறைப்பாடுகள் கிடைத்தன. பொலீசுக்கும் சொன்னேன். வரவில்லை. கடைசியில் நாங்கள் நாலுபேர், பற்றை மறைவில் பூச்சிக்கடி, எறும்புக்கடி நடுவில் ஐந்து மணித்தியாலங்கள் கிடந்தோம் தெரியுமா? சாமம் இரண்டு மணிக்கு வெளிச்சம் இல்லாமல் நான்கு போட்டில் வந்தார்கள். ஒரே அமுக்கு. ஒரேயடியாக அமுக்கிவிட்டோம்.
“எத்தனைபேர் சிக்கினார்கள்?
"அவர்கள் தப்பிவிட்டார்கள். அதுவல்ல முக்கியம். வெடிமருந்துகள் கருவிகள் எல்லாம் கைப்பற்றிவிட்டோம். பொலிசுக்கும் அறிவித்தோம். அவர்கள் இன்னும் வந்து எடுக்கவில்லை. எங்கள் பையன்கள் நிம்மதியாக மீன் பிடிக்கிறார்கள்.
வீரப்பிரதாபங்கள், பீற்றல்கள் தொடர்ந்தன. அக்கா கோப்பியுடன் வந்தாள்.
'விரைவில் இங்கிருந்து வெடிமருந்துகளை அகற்றிவிடுங்கள். இல்லாவிட்டால் கலிஸ்ரோவுடன் அவற்றைச் சம்பந்தப்படுத்திவிடுவார்கள்.
அவன் பந்ததைத்தான் அக்கா சொல்கிறாள். பொழுது போகவில்லை கலிஸ்ட்ரோவுக்கு. இன்று ஞாயிற்றுக் கிழமை. ஏனைய நாட்களில் அக்காவும்

Page 24
44
அயலவர்களும் காயப்போடும் கருவாட்டைக் காவல்காப்பான். அவனுக்கு சில பெசோக்கள் - பணம் கிடைக்கும். அக்காவுக்குப் பாரமாய் இருப்பது உறுத்திக்கொண்டே இருக்கிறது. கிடைக்கும் பணத்தை அக்காவிடம் கொடுத்துவிடுவான்.
எட்வினாஆ! உனக்கு சேதி தெரியுமா? புதன் கிழமை எமது ஊருக்கு கொஸ்மி வருகிறார்.
கலிஸ்ரோ நிமிர்ந்து உட்கார்ந்தான்.
“எனக்கு தலைக் குமேல் வேலை. சகல ஒழுங்கையும் என்னைப் பார்த்துக்கொள்ளும்படி கவர்னர் சொல்லிவிட்டார். அவருக்கு என்னில் அவ்வளவு நம்பிக்கை, கடற்கரையில் மேடைபோடுவதற்கு ஆயத்தங்கள் செய்ய வேண்டும். கூட்டம் முடிய எமது சமூக சேவைகள் அலுவலகத்தை கொஸ்மி திறந்து வைப்பார். ஒ. ஜீஸஸ் எப்படி எல்லாம் செய்யப்போகிறேனோ தெரியவில்லை'
‘கப்பல் விட்டார் முன்னவர்கள்
அக்காவின் மகன் பாடிக்கொண்டு ஓடினான். கலிஸ்ரோவிற்கு உடம்பெல்லாம் எரிந்தது. மேற்கொண்டு அவர்கள் பேசுவதைக் கேட்க முடியவில்லை இரு கைகளையும் பின்னால் நிலத்தில் ஊன்றி பிருஷ்டத்தை தேய்த்தும் தேய்க்காமலும் உடலை நகர்த்தி அங்கிருந்து உள்ளே சென்றான்.
மறுநாள் கருவாடு காக்கும் வேலை இல்லை. ஊரே கடற்கரைக்குச் சென்றுவிட்டது. மேடை போடுகிறார்கள். அக்கா வழமைபோல் ஒவ்வொருவரிடமும் கெஞ்சி சில பெசோக்கள் கொடுத்து மலிவாக வாங்கிக் காயவைத்த கருவாடுகளை மட்டும் பார்த்துக்கொண்டால் போதும்.
'அக்கா! நான் சிறிது நேரத்தில் கடற்கரைக்குச் செல்லப்போகிறேன்.
எட்வினா ஆச்சரியமாகப் பார்த்தாள். பொதுவாக ஆட்கள் கூடுமிடங்களுக்குச் செல்வதில்லை கலிஸ்ரோ.
சரி. நான் கருவாடுகளை உள்ளே வைக்கிறேன். நீ போகும்போது கதவை மூடிவிட்டுச்செல். நான் சந்தைக்குப் போகிறேன். சமைப்பதற்கு ஒன்றுமில்லை. இருக்கும் கருவாடுகளை விற்றால்தான்.
கால்கள் வலித்தன. அதைவிட மனம் வலித்தது. பாவம் அக்கா. நாளாந்தம் உணவு என்பதே பெரிய போராட்டம். மற்றவர்களுடன் பேசும்போது கலிஸ்ரோ தன் தம்பியல்ல, மூத்தபிள்ளை என்கிறாள். கலிஸ்ரோ மணலில் அமர்ந்து கால்களுக்கு ஓய்வு கொடுத்தான். தர்ம நிறுவனம் தந்த செயற்கைக் கால் அவனுக்கு சரியாகப் பொருந்தவில்லை. வீட்டிலிருக்கும் போது அதைக் கழற்றிவிட்டு ஊர்ந்து திரிந்தான். வெளியே செல்லும்போது மட்டும் சிலுவை சுமநதான.
மேடை அமைக்கும் வேலை மும்முரமாக நடந்துகொண்டிருந்தது. ஆர்னல்டோ அங்குமிங்கும் ಟ್ತಿ ச்சீ. மந்தைக் கூட்டம். எவ்வளவு சுலபமாய் பழையதெல்லாம் மறந்துபோகிறார்கள், ஆங்காங்கே போஸ்டர்களில்
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 
 
 
 

45
கொஸ்மி சிரித்துக்கொண்டிருந்தான். கொஸ்மி முன்பு விடுதலை இயக்கத்தில் மத்தியகுழு உறுப்பினர். ஏன் கலிஸ்ரோ கூட ஆரம்ப கால உறுப்பினர்தான். அரசியல்துறை, உளவுத்துறை, ஆயுதப்பிரிவு என்று அவன் அங்கம் வகிக்காத துறைகள் இல்லை. கடைசியில் கடற்தாக்குதல் பிரிவிற்குத் தலைமை வகித்திருந்தான்.
எல்லாம் முடிந்துபோயிற்று. எல்லாமே. இன்று கொஸ்மி மத்திய அரசில் ஒரு முக்கிய புள்ளி. கலிஸ்ரோ? வெறும் நடைப்பிணம். ஒரு காலில்லை. வயிற்றில் குண்டு பாய்ந்ததில் நிமிர்ந்து நடக்க முடியாது. அதனால்தான் இன்று உயிரோடு இருக்கிறான். மருத்துவமனையில் ஒருவருட காலம் அவன் சிகிச்சைபெற்று வெளியே வந்தபோது போர் ஓய்ந்து விசாரணைகள் முற்றுப்பெற்றிருந்தன. இயக்கம் மறக்கடிக்கப்பட்டிருந்தது. அவனால் மறக்க முடியவில்லை.
தன் இளமையை, உயிர்துடிப்பு மிக்க காலத்தை தொலைத்து விட்டிருந்தான். அவன் வீடு வந்தபோது அவன் பெற்றோர் சகோதரர்கள் உயிருடன் இல்லை. அக்கா மட்டும் எஞ்சியிருந்தாள் வறுமையுடன். அக்காவிற்குப் பாரமாயிருப்பது நிஜத்தில் உறுத்திக்கொண்டே இருக்க, கனவில் பழைய நண்பர்கள், பயிற்சிகள், தாக்குதல்கள் தோன்றி அவன் நிம்மதியைக் குலைத்தன. இங்கிருந்து பார்க்கும் போது பாறை தீவு தெரிகின்றது. இந்தத்தீவு, ஸ்பானிஷ் கோட்டை, பீரங்கி இவை எல்லாமே அந்நிய ஆதிக்கத்தை, இவர்களின் கையாலாகாத் தனத்தை நினைவுபடுத்தியபடி தொண்ணுாறு வீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஸ்பானிஷ் மொழி பேசுகிறார்கள்.
ஆர்னல்டோ வந்தான்.
'மச்சான். இந்த வர்ணக் கடதாசிகளில் அலங்கார மாலை செய்து தா'
கொஸ்மியை நான் வரவேற்பதா? கடதாசிகளைத் தூக்கிப் போட்டுவிட்டு நடந்தான்.
அக்கா கத்திக்கொண்டிருப்பது கேட்டது. கலிஸ்ரோ விரைவாக நடக்க முயன்றான்.
'ஏய் உனக்கு எத்தனை தடவை சொல்லுவது. கதவை மூடிவிட்டுப்போ என்று. இங்கே பார் நாய் எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட்டது
கலிஸ்ரோ கலவரத்துடன் பார்த்தான். கருவாடு ஒன்றையும் காணவில்லை. பாத்திரங்கள் கழுவி வைத்தாற்போல் உணவின்றி உருண்டு கிடந்தன.
போ. போய் வேடிக்கை பார். உதவாக்கரை. உதவி செய்யாவிட்டால் பரவாயில்ல. உபாத்திரவம் செய்யாமல் இரு. ம்.. ஆ. ஆ.
கோபம் அழுகையில் முடிந்தது. கலிஸ்ரோவிற்கும் அழுகை வந்தது. கதவை மூடிக் கயிற்றை கொழுவி விட்டுத்தான் சென்றிருந்தான். காற்றின் வேகத்தில் கயிறு அறுந்துவிட்டிருக்கிறது. அக்கா எங்கோ புறப்பட்டுச் சென்றாள்.
"கலிஸ்ரோ எழுந்திரு'
கலை இலக்கிய சமுக சஞ்சிகை

Page 25
8&Sess
அவன் விழித்துப் பார்த்தபோது அக்கா ரொட்டித்துண்டுடன் நின்றிருந்தான்.
'எனக்கு வேண்டாம். பிள்ளைகளுக்குக் கொடு
அவர்கள் சாப்பிடுகிறார்கள். நீ சாப்பிடு'
தன்னை அவள் தன் மூத்த பிள்ளை என்று சொல்வது நினைவில் வர கண்களில் நீர் வந்தது.
'அழாதே. அழாதே. சாப்பிடு. நான் கோபத்தில் ஏதோ சொல்லிவிட்டேன்’
கலிஸ்ரோவிற்கு எதுவும் பிடிக்கவில்லை. அக்கா கோபத்தில் சொன்னாலும் உண்மை அதுதானே? உதவாக்கரை. ஒருகாலத்தில் துடிப்புமிக்க போராளி அவன். பல தாக்குதல்களில் பங்கேற்றுத் தேறியவன். குண்டுத் தாக்குதல்கள், தற்கொலைக் குண்டுதாரி என்று தீவிரவாதத்தின் உச்சங்களைத் தொட்டுவைத்தது அவனது இயக்கம்.
'கப்பல் விட்டார் முன்னவர்கள்.
அக்காவின் மூத்த மகன் இன்னமும் முதல்வரியிலேயே நின்றான். அக்காவின் மகள் வந்தாள்.
'மாமா..! உனக்கு நித்திரை வரவில்லையா? எனக்கும் வரவில்லை. அண்ணன் இன்று முழுதும் கத்திக்கொண்டே இருக்கிறான். கப்பல் விட்டது யார்?
‘எங்கள் தாத்தாக்கள். கொள்ளுத் தாத்தாக்கள். எங்கள் ஊருக்கு உறங்காத ஊர் என்று பெயர். கப்பல்கள் நிறைய வருமாம். இரவு முழுவதும் விளக்கு எரியுமாம். விளக்கொளியில் வியாபாரிகள் பொருட்களை இறக்குவதும், விற்பதுமாய் இருப்பார்களாம். ம். அது ஒரு காலம்
'பிறகு.?
பிறகு ஸ்பானிஷ்காரர் எங்கள் நாட்டைக் கைப்பற்றினார்கள். அத்தோடு எங்கள் அழிவு காலம் தொடங்கிவிட்டது.
'எனக்கு கப்பலில் போக ஆசை நீ போயிருக்கிறாயா?
நாங்கள் கப்பல் விட்டதில், கப்பல் கவிழ்ந்து போய்விட்டது.
கொஸ்மி துரோகி. சர்வதேச ஆயுதக் கடத்தல் வலையமைப்பில் இயக்கத்தின் முக்கிய புள்ளி. அதில் அவன் சொத்து சேர்த்தது இவர்களுக்குத் தெரியவில்லை. தெரியவந்த போது இவர்களின் அஸ்தமன காலம் ஆரம்பமாகியிருந்தது. ஆயுதப் பற்றாக் குறை. நவீன ஆயுதங்கள் தேவைப்பட்டன. கப்பலில் ஆயுதங்கள் அனுப்பும்படி கொஸ்மி கேட்கப்பட்டான். கப்பல் வரவில்லை. நடுக்கடலில் மூழ்கிவிட்டதாகச் சேதிவந்தது. இவர்கள் சளைக்கவில்லை. ‘கப்பல் போனால் போகட்டும். ஆயுதங்களைக் கொண்டுவா’.
உடனடியாக கொஸ்மி வலையமைப்பிலிருந்து நீக்கப்பட்டான். வெளியுலகு உண்மை அறியவில்லை.
 
 
 
 
 

தன் கிழமை மக்கள் காத்திருந்தனர். சில மணித்தியால தாமதத்தின் பின் வாகனத் தொடரணி வந்தது. செக்கியூரிட்டிகள் குதித்திறங்கி திக்கெட்டும்
டி, ஆயுதங்களுடன் பார்த்து நிற்க, தொப்பியும் கூலிங்கிளாஸ"மாகக்
காஸ்மி இறங்கினான். மக்கள் எழுந்து நின்று ஆர்ப்பரித்தனர். ஒரு காதிலிருந்து மறுகாதுவரை சிரித்தான். கைகள் கூப்பினான். கைகளை உயர்த்தி அசைத்தான். ஒரு தேர்ந்த அரசியல்வாதி போல் நடந்துகொண்டான். ஆர்னல்டோ ஓடிச்சென்று கைகொடுத்து வரவேற்றான். பிரமுக்ர்கள் பலர் பேசினர். அவை ஒன்றும் கலிஸ்ரோவின் காதுகளில் விழவில்லை. வைத்த கண் வாங்காமல் கொளல்மியைப் பார்த்துக்கொண்டிருந்தான். கொஸ்மி எழுந்தான்.
"என் உயிரிலும் மேலாக நான் மதிக்கும் என் மக்களே!’
உன் மக்களா? உயிரினும் மேலாக மதிக்கிறாயா? மிதித்தல்லவா விட்டாய்.
‘விடிவு காலம் வந்துவிட்டது. இனி பயந்து வாழத் தேவையில்லை. சுபீட்சத்திற்கான பாதை எம்முன் திறந்துள்ளது.
உண்மைதான். உனக்குப் பயமில்லை. சுபீட்சம்தான்.
முன்னைய நிலை இனி ஒருபோதும் வராது. பட்ட கஷ்டங்கள் போதும்.
புணருத்தாபன வேலைகள் தொடங்கவுள்ளேன். அமைச்சரவை நிதியொதுக்குவதாய் வாக்கு தந்துள்ளது.
அதில் உனக்கு எவ்வளவு தேறும்? சாத்தான் வேதம் ஒதும் அதிசயத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். பேச்சு முடிந்தது. கொஸ்மி புறப்பட்டான். போகும் போது, மேடைத் தூணைப் பிடித்தபடி நிமிர முடியாமல் முகத்தில் வேதனை கோடிட நின்ற கலிஸ்ரோவைப் பார்த்தான். யோசிப்பது போல்பட்டது.
கலிஸ்ரோ அங்கு சென்ற போது, சமூக சேவைகள் அலுவலகத்தை திறந்து வைத்துவிட்டு கொஸ்மி மேடைக்கு சென்றுகொண்டிருந்தான். கலிஸ்ரோவைக் கண்டதும் தடுமாறினான். நின்றான்.
"தோழர் கலிஸ்ரோ. நீயா..? உயிருடன் இருக்கிறாயா? எனக்குத் தெரியாமல் போய்விட்டதே?
தெரிந்தால் காட்டிக்கொடுத்திருப்பாயா?
ஆர்னல்டோ ஓடி வந்தான். "சேர். கலிஸ்ரோ எனது மச்சான்தான்.
'மச்சான் மைக் வேலை செய்யவில்லையாம். போய் பார்’
ஆர்னல்டோவை அங்கிருந்து கலிஸ்ரோ விரட்டினான். சிரிப்பு சென்ற்றி மீற்றர் தன்னும் குறையாமல் கொஸ்மி கலிஸ்ரோவை அணைத்தான்.
கலிஸ்ரோவும் அவனை இறுகத் தழுவிய வேளை அவ்விருவருடன் இன்னும் முப்பத்து சொச்ச மக்களும் உடல் சிதறி மாண்டு போயினர்!
hoopsn Sound:gru en open, ofsbrfino)et

Page 26
பூங்காவனம் ஜூன் இதழ் கிடைக்கப்பெற்று வாசித்தேன். உண்மையிலேயே தமிழ் இலக்கியத் தாகம் பிடித்தவர்களுக்கு வண்ண வண்ணமாக மட்டுமல்ல வாசனை வீசும் பூக்களைத் தரும் பூங்காவனமாகவே அமைந்த கலை இலக்கிய இதழாக பூங்காவனம் காணப்படுகின்றது. இலங்கையின் சஞ்சிகை வரிசையில் பூங்காவனமும் பாரிய பங்காற்றி வருகின்றது. இதழில் தனித்துவத் தோற்ற்மும் வரவர விரிவடைகிறது. பூங்காவனம் நிர்வாகிகள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள்!
ஏ.எச்.எம். அத்தாளல்
இதழ் ஐந்தில் வெளிவந்த கினியம இக்ராம் எம். தாஹா எழுதிய உரிமைக்குரல் என்ற சிறுகதையின் அமைப்பு எனக்கு மிகவும் பிடித்தது. காரணம் பலர் இப்போது பெண்ணியம் மற்றும் சமூக முற்போக்கு சிந்தனைகள் தழுவிய கதைகளை எழுதுகிறார்கள். ஆனால் அதில் வரும் பாத்திரங்கள் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள் அவ்வளவு சிறப்பாக இருப்பதில்லை. எனினும் உரிமைக்குரல் கதையில் வரும் பாத்திரங்கள் பலகோண நியாயங்களையும் ஆதரித்து பேசுவதால் கதையில் ஒரு யதார்த்தம் தெரிகிறது. கதாசிரியர் இக்ராம் எம். தாஹாவுக்கு எனது பாராட்டுக்கள். தரம் கண்டு அதைப் பிரசுரித்த பூங்காவனம் இதழின் வளர்ச்சிக்கும் எனது வாழ்த்துக்கள்!
பி.பி. அந்தோனிப்பிள்ளை - முருங்கன்
பூங்காவனம் ஐந்தாவது இதழ் சமீபத்தில் வாசிக்கக் கிடைததது. கண்ணைக் கவரும் அட்டைகளுடன் மிகவும் நேர்த்தியாக வெளிவந்துகொண்டிருக்கும் பூங்காவனம் , சஞ்சிகையின் முன்னைய இதழ்களையும் வாசிக்க பேராவல் கொண்டுள்ளேன். தரமான படைப்புக்களை பிரசுரித்திருக்கிறீர்கள். கவிதைகளில் இன்னும் கவனம் செலுத்தினால் சஞ்சிகையின் காத்திரத் தன்மை இன்னும் அதிகரிக்கும் என்று அபிப்பிராயப்படுகிறேன். எனினும் ஆரம்ப எழுத்தாளர்களுக்கு ஏணி கொடுத்துவிடத் தவறுகின்ற பல சஞ்சிகைகளுக்கு மத்தியில் இலைமறை காய்களாக இருக்கும் படைப்பாளிகளின் ஆற்றலை வெளிக்கொணரும் விதத்தில் வெளிவருகின்ற பூங்காவனத்தை வாழ்த்தாமல் இருக்க முடியாது. பாராட்டுக்கள்!!!
வி. சுதன் - மஸ்கெலியா
 
 

நூலகப்பூங்கா
6)õrreo)Goguef - o38 22973o9
விலை - 150/-
நூல் - குற்றமும் தண்டனையும் (சிறுகதை) நூலாசிரியர்-எம்.பி.எம். நிஸ்வான் தொலைபேசி - O382297309 வெளியீடு-ரஹ்மத் பதிப்பகம் 6. f6O)6) - 20O/-
நூலாசிரியர்-கமலசுதர்சன்
வெளியீடு-அம்பிகை விலை - 150/=
நூல்- மெளனத்தின் சப்தங்கள் (கவிதை) நூலாசிரியர்-எம். ரஸ்லான் ராசிக் 6) IT6O)6)03 Jef - O352247666 வெளியீடு-பத்ரியா மத்திய கல்லூரி ஊடகப்பிரிவு 65606 - 14O/=
boo)bu Sel ს: ტყ}\t, s! დსა}}kx), ll,
நூல் - மூன்றாம் தலாக் (சிறுகதை) நூலாசிரியர்-எம்.பி.எம். நிஸ்வான்
வெளியீடு-முஸ்லிம் சமுதாய மறுமலர்ச்சி இயக்கம்
நூல்- அவல அடைகாப்பு (கவிதை)
தொலைபேசி - 0773 53O 922

Page 27
நூல்-விடியலின் விழுதுகள் (சிறுகதை) நூலாசிரியர்- ஸ்க்கியா ஸித்தீக் பரீத் (6)5I60)6noćLlef' - Oll 27926585, O718 4392OO6 வெளியீடு- எக்மி பதிப்பகம் விலை - 175/=
நூல்-இதயத்தின் ஒசைகள் (கவிதை) நூலாசிரியர் - ஸக்கியாஸித்திக் பரீத் (6)5II60)6ubć3Lièf - Oll 27926585, O718 4392OO6 வெளியீடு-முஸ்லிம் கல்வி முன்னேற்றச் சங்கம் விலை-15O /=
நூல்-முதிசம் (பொன் மொழித் தொகுப்பு) நூலாசிரியர் - ஸ்க்கியா ஸித்திக் பரீத் (6)5II60)60G3Uèf - Oll 2726585, O718 4392OO6 வெளியீடு-இலங்கை இஸ்லாமிய
முற்போக்கு இலக்கிய மன்றம் ඛණ්ඤතඛතා - මු75/=
நூல் - கிறுக்கல்கள் சித்திரமாகின்றன (கவிதை) நூலாசிரியர்-பி. அமல்ராஜ் 6) IT6O)6)(3LJaf - O23 2251364, O773 s26893 விலை-150/-
VIGGOROND இலக்கிய சமூக சஞ்சிகை
...disaas
 
 
 
 
 
 

பூங்காவன் ... 51
நூல் - ரோஜாக் கூட்டம் (சிறுவர் கதை) நூலாசிரியர் - ஏ.சீ. ஐரீனா முஸ்தபா 6)ğ5İT606263Lief - Oli 5O2O936 வெளியீடு- எக்மி பதிப்பகம் ഖിഞ്ഞാ - 16Of=
நூல் -37ம நம்பர் வீடு (சமூக நாவல்) நூலாசிரியர் - ஏ.சீ. ஐரீனா முஸ்தபா 6)5IT6606)(3Lvěf - Oll 502O936 வெளியீடு- எக்மி பதிப்பகம் விலை - 25O/=
நூல் -சுனாமியின் சுவடுகள் (கவிதை) நூலாசிரியர்- எஸ். ஜெகன் 6)75II6O)6)(3LJaf - O778O62696 வெளியீடு- கிராம மாதர் கிராம அபிவிருத்திச்
சங்கங்களின் சமாசம் 656Oa - 15OfF
நூல் -விழி தீண்டும் விரல்கள் (கவிதை) நூலாசிரியர் - அமல்ராஜ் 6)5T6O)6(3 Jaf - O775 38.2544 வெளியீடு- வெற்றி நாயகி ஆலயபரிபாலன சபை 6f6ØDao — OO/**
கலை இலக்கிய 3 (Updb சஞ்சிகை

Page 28
With Best Compliments From:- AEL - HAJ. AFZAL DEEN
Genuine Jewellery & Latest Designs
多
Address : No. 76, Galle Road, Moratu Kwa, Sri Lanka.
Te : 01.1732.9999,072732.9999,0777 8.89923
With Best Compliments From:- J.P. Jayaram J.P
Proprietor
JANYANIRAMBROERS
SSLLLLLL LL 00SLLS LLLLLLL 0SLLLLLSSS GGLSGL LLLLS GLLLLS SY LLLLL GGLLLLS LLLGLLGLLLLLLL LSLSL GLLLLLS GGLLGLLS SSS LLLLGLLS LLLScL0S LLLLLLLLS LLLLL SLS SLLLLLLSLLLLLSSL SLLLSLLLLLLL
Address : 118/7, S.R. Sarawa na muthu Mw, (Wolfendhal Street), Colombo - 13, Sri La Faka. Te : 011 2445615, 2348430, 2345099, 2345142 Fax : 94 - 1 - 2330.64 E-mail :jayaramb@sit.net. Elk
- With Best Compliments From:-
Address : No. 16, Ediriveera Avenue, Dehiwala, Sri Lanka.
Mobile : (0773235.543
'தென்றலின் வேகம்" கவிதைத் தொகுதியைப் பெற விரும்புவர்கள்
Bank Of Ceylon, Dehiwala Branch, M.F. Rimza, ACN0 - 2017143 என்ற இலக்கத்திற்கு 200/- காசை வைட்பிலிட்டு அதன் பற்றுச்சீட்டையும், காசுக் கட்டளைகளாயின் (M.F Rimza - Dehiwata Post Office) என்று குறிப்பிட்டு அதற்கான பற்றுச்சீட்டையும் பின்வரும் முகவரிக்கு அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.
Rimza Mohamed, 21 E. Sri Dharmapala Road, Mount Lavinia. Mobile: - 077 5009 222
 
 
 
 
 
 
 
 
 
 

NA TEL 0094 - 0

Page 29
4.94 5089.
tiS`FrOm
317A. Galle Road Welawat 250 0098 / F:
B ±94摧2堑447Q
s! (1) 而 T이...... E O (_) 역한 CD Cs _C >
I
 

74/2A Sা:
GMPORIUM (Pvt) Ltd.
W BAWA rating a decade of gifting you with O
asion SNCF 1990)
e, Colombo 06, Sri Lanka. 4 / E infoglittleasia.k / www.little