கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செங்கதிர் 2011.05

Page 1
að GS60
est
SA
苏
66 குறிஞ்திவாணன்
 
 
 
 

60/=

Page 2
5 வருடத் திருமண சேவை நிறைவினை முன்னிட்டு 666ð é9ťUpgraði UkuguU eSØFaD6QJő கட்டணக் குறைப்பு
விபரங்களுக்குத் தனிமனித நிறுவனர் - “சுயதெரிவு முறை முன்னோடி மூத்த, புகழ்பூத்த சர்வதேச, சகலருக்குமான திருமண ஆலோசகர்/ஆற்றுப்படுத்துநர் குரும்பசிட்டியூர், மாயெழு வேல் அமுதனுடன் தங்கள், புதன், வெள்ளி மாலையிலோ, சனி, ஞாயிறு நண்பகலிலோ தயங்காது தொடர்புகொள்ளலாம்!
0.
* தொலைபேசி
2зво488 / 2звов94 / 487з929
()
0.
* சந்திப்பு:
qpạiữaWi)uIIỉ(Đẹpểig5qDaĐp (Consultation by 4ppointment)
0.
8.3.3 மெற்றோ மாழமனை (வெள்ளவத்தை காவல் நிலையத்திற்கு எதிராக, நிலப்பக்கம், 33 ஆம் ஒழுங்கை வழி) 55ஆம் ஒழுங்கை, வெள்ளவத்தை, கொழும்பு-06,
 
 

இலட்சியம் இல்லாமல் இலக்கியம் இல்லை
தோற்றம் 2008
வைகாசி 2011(தி.வ.ஆண்டு-204
ஆசிரியர்:
சொங்கதிரோன்
G5IT.Gud/TP -065-2227876
077-2602634
Lô660T6586) / E.mail
senkathirgopalG)gmail.com
துணை ஆசிரியர்: அன்பழகன் குளும்ை தொலைபேசி/TP - 0777492861 மின்னஞ்சல்/Email - croos aGyahoo.com
தொடர்பு முகவரி செங்கதிரோன் திரு.த.கோபாலகிருஸ்ணன் 19, மேல்மாடித் தெரு, மட்டக்களப்பு,
இலங்கை,
Contact : Senkathiron T.Gopalakrishnan 19, Upstair Road,
Batticaloa,
Sri lanka.
0ர். 2.
* விளாசல் வீரக்குட்டி
mo
விதை
9 செத்துப்போகும் வாழ்க்கை
0 பாவேந்தன் செவியினிலே பகர்ந்திடுவேன் ஒரு சேதி
0 கதை கூறும் குறள் - 20 20 9 கிழக்கின் போக்குவரத்து
சொல்வளம் பெருக்குவோம்- 23
மட்/தமிழ் எழுத்தாளர் 96 ജൂ|ഇLഖങ്കണ്ടു
25 3)
42
9 கச (சிறுகதை) 9 உறுத்தல் (குறுங்கதை) 9 மீண்டும் ஒரு காதல் கதை - 04
(தொடர் நாவல்)
9 கசக்கப்படும் அரும்புகள் (எனக்குப்பிடித்த என் கதை)
0 ஆசிரியர் பக்கம்
9 அதிதிப் பக்கம்
* பகிர்வு
9 கதிர்முகம்
9 விசுவாமித்திர பக்கம்
ஆக்கங்களுக்டு ஆக்கியோரே பொறுப்பு

Page 3
ஆசிரியர் பக்கம்
மே 1ம் திகதி தொழிலாளர் தினம். சமூக மாற்றங்களை இலக்கியங்கள் பிரதிபலிக்கின்றன. பதிவாக்குகின்றன என்பது மட்டுமல்லாமல் இலக்கியங் களால் சமூக மாற்றங்களை ஏற்படுத்தவும் முடியும். அடக்கு முறைக்கு - ஒடுக்கு முறைக்கு - சுரண்டலுக்கு எதிரான எத்தனையோ புரட்சிகளும் போராட்டங்களும் வரலாற்றில் வெற்றிவாகை சூடியிருந்தபோதிலும் கூட ஆளும் வர்க்கம் - ஆளப்படும் வர்க்கம்; உழைக்கும் வர்க்கம் - உழைப்பைச் சுரண்டும் வர்க்கம் என்ற ஏற்றத்தாழ்வுகள் இன்னும் மனித வாழ்வில் மறைந்துவிடவில்லை. "எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்.” என்ற திரைப்படப்பாடல் வரிகள் கூறும் சமத்து வமான சமூக அமைப்பை இன்றும் உலகம் அவாவி நிற்கின்றது. வெறும் பொழுதுபோக்கிற்காக இலக்கியங்கள் படைக்கப்படாமல் விளிப்பு நிலை மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்து அவற்றிற்குத் தீர்வு காணும் வகையில் உயர்ந்த - உன்னதமான இலக்கியங்கள் எழுதப்பட வேண்டும். அதற்கேற்ற வகையில் தங்கள் எழுத்தாணி களை இலக்கியக் கர்த்தாக்கள் இலட்சிய வேட்கையுடன் தங்கள் விரல்களிலே ஏந்தவேண்டும் என தொழிலாளர் தினம் கொண்டாடப்படும் இவ்வேளையில் “செங்கதிர்? வேண்டி நிற்கிறது.
-செங்கதிரோன்
அனிபானவர்களே! உங்களால் இயன்ற அன்பளிப்புக்களை வழங்கி "செங்கதிரி” இன் வரவுக்கும் வளர்ச்சிக்கும் உதவுங்கள்.
-éebáfrfurft
RSüößlosarĥ20

அதிதிப்பக்கம்
செங்கதிர் இதழின் இம்மாத அதிதி கவிஞர் குறிஞ்சிவானன் (சி.வி.பி.மாணிக்கம்) அவர்களாவார்.
மலையகத்தின் பதுளை (ஊவாமாகாணம்) மாவட்டத்திலுள்ள ‘எல்ல’ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தெமோதரை குரூப் , நெதர்வில் தோட்டத்தில் 1945.11.12 ந் திகதி அமரர்.பழனியாண்டி-கருப்பாயி தம்பதியினரின் கடைசி மகனாகப் பிறந்தவரே திரு.சி.வி.பி.மாணிக்கம் ஆவார். இவரது சகோதரர்களான வி.பி.சிவசாமி நாடக ஒப்பனையாளர். தபேலா வாத்தியம் வாசிப்பவர். இவரது இன்னொரு சகோதரர் மரக்காஸ் பொன்னையா சிறந்த மேடை (பெண் ) நடிகர் ஆவார்.
இவர் தற்போது அம்பாறை மாவட்டத்தில் (கிழக்கு மாகாணம்) உள்ள திருக்கோவில் பிரதேசத்திற்குட்பட்ட சாகாமம் கிராமத்தை வதிவிடமாகக் கொண்டுள்ளார். சாதாரண உழைப்பாளியான திரு.சி.வி.பி.மாணிக்கம் கவிதை, கட்டுரை, இசைப்பாடல்கள் ஆகிய துறைகளில் தமது படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார்.
வாசிப்புப் பழக்கமே தன்னை கவிதை எழுதத்துாண்டியதாகக் கூறும் இவர் தனது தந்தையாரும் அன்றைய படித்த இளைஞர்களாகிய திரு.பீ.கே. செல்லையா (கவிஞர், நாடகாசிரியர்) திரு.எல். அமிர்தலிங்கம்(ஆசிரியர்), திரு.எஸ்.பி. பழனிவேல் போன்றோரும் வாங்கிப் படிக்கும் வீரகேசரி , தினத்தந்தி, மாலை மணி , கல்கி, குமுதம், கல்கண்டு போன்ற பத்திரிகை , சஞ்சிகைகள் , திருக்குறள், அகநானூறு, புறநானூறு , கம்பராமாயணம் போன்ற நூல்களும் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, இங்கர்சால், பாரதியார், பாரதிதாசன் போன்றோரது நூல்களை வாசித்ததுடன் நெதர்வில் தோட்டத்தில் முத்தமிழ் மன்றம் ஒன்றையும் ஆரம்பித்து பேச்சுப் போட்டி கவிதைப்போட்டி பட்டிமன்றம் போன்றவற்றை நடாத்துதல். திருக்குறள் அகநானூறு புறநானூறு செய்யுள்களை மனனஞ் செய்தல் போன்றவற்றை
GDia... 20

Page 4
நடத்தி இளைஞர்களை ஊக்குவித்தனர். அதில் ஈடுபாடு கொண்ட திரு.சி.வி.பி.மாணிக்கம் எழுத்துத் துறையில் ஈடுபாடு கொண்டார்.
1963 ம் ஆண்டு வீரகேசரியில் கவிதை எழுத ஆரம்பித்து இன்று வரையும் இலக்கியப் பணி புரியும் இவரது ஆக்கங்கள் வீரகேசரி, தினகரன், தினபதி, போன்ற இலங்கையின் பிரபல நாளிதழ்களிலும் சிந்தாமணி, மித்திரன், ராதா, செய்தி, சூடாமணி, தினமுரசு போன்ற வார இதழ்களிலும், மாத சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளதுடன் இவர் எழுதிய கவிதை, மெல்லிசைப் பாடல்களில் சில இலங்கை வானொலியிலும் ஒலிபரப்பாகி யுள்ளன.
'குறிஞ்சிவாணன்’, ‘மாக்னி’, ‘மாவன்னா’, ‘அக்கரைப்பாமா’, ‘சாகாமம் மணியன்’ ஆகிய புனை பெயர்களில் எழுதிவரும் இவர் தமிழ்மொழி இலக்கியம், சமயம், பண்பாடு, சமூகசேவையில் ஆர்வம் உள்ளவர். மலையகத்தில் இவர் வாழ்ந்த காலத்தில் துங்கிந்த சாரலில் செழிப்புற்றிருந்த இலக்கிய வளர்ச்சிக்கு தனது பங்களிப்பை வழங்கி வந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
அக்காலத்தில் திரு.சி.வி.பி.மாணிக்கம் தன் முயற்சியினால் தட்டச்சு இயந்திரம் ஒன்றைத் தயாரித்து 1968 ம் ஆண்டு ‘மலைக்கிதம்’ எனும் இசைப் பாடல் தொகுதியும் கூட்டங்கள் சம்பந்தமான பிரசுரங்களும் அச்சிட்டுக் கொடுத்து தனது கை வண்ணத்தை வெளியிட்டதுடன் 1969 ம் ஆண்டு ‘தேனிசை” என்னும் இசைப் பாடல் தொகுதியும் வெளியிட்டுள்ளார். சிறந்தமேடைப் பேச்சாளராகவும் தமிழ் சிங்கள பாடகராகவும் விளங்கிய இவர் அக்காலத்தில் பல இடங்களிலும் நடைபெற்ற கலை நிகழ்வுகளிலும் பங்கு கொண்டுள்ளதுடன் சமூக சமய பணிகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவர் 1971 ல் அரசியல் காரணமாக தெமோதரையிலிருந்து இடம்பெயர்ந்து வந்து அக்கரைப்பற்றை தனது வதிவிடமாகக் கொண்டு 1974ம் ஆண்டு வரையும் வாழ்ந்திருந்த காலத்தில் இப் பிரதேச கவிஞர்களுடன் இணைந்து சமய, கலை, இலக்கிய விழாக்களில் இடம்பெற்ற பல கவியரங்குகளில் பங்கு பற்றியுள்ளதுடன் இப் பிரதேசத்தின் மூத்த தமிழ் அறிஞர்களின் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளார்.
1974ம் ஆண்டளவில் திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த சாகாமம் கிராமத்தை தனது வதிவிடமாகக் கொண்டு இக் கிராமத்தின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்து வருகிறார். சமூக சமய பணிகளில் ஈடுபட்டு
9ேங்கி 2

வருவதுடன் ஆக்கப் பணிகளிலும் தனது கவனத்தைச் செலுத்தி ஏராளமான கவிதைகள் , இசைப்பாடல்கள் என்பவற்றை படைத்து வந்துள்ளார்.
இவரது கவிதைகள் (போட்டோப்பிரதி) 1991ம் ஆண்டு பெர்லின் நகரில் நடைபெற்ற ஐரோப்பிய தமிழ் மாநாட்டில் இடம்பெற்ற புத்தகக் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதுடன் அம் மாநாட்டின் கார்பாக திரு.நடராஜா சுசீந்திரன் என்பவர் இவரது ஆக்கங்களைப் பற்றிப் பாராட்டிக் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.
1996 ம் ஆண்டு தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற திருக்கோவில் பிரதேச சாகித்திய விழாவில் திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு.சி.அமலநாதன் அவர்கள் இவருக்குப் பொன்னாடை போர்த்திக் கெளரவித்தார்.
1998ம் ஆண்டு இவரும் தம்பிலுவில் ஜெகா , முல்லை வீரக்குட்டி ஆகிய மூன்று கவிஞர்களும் சேர்ந்து ‘இன்னும் விடியவில்லை’ என்னும் கவிதைத் தொகுதியை வெளியிட்டனர். கடந்த 2010.03.10 ந் திகதி திருக்கோவில் பிரதேச கலை இலக்கிய கவிதைப்போட்டியில் இரண்டாம் இடத்தினைப் பெற்ற திரு.சி.வி.பி.மாணிக்கம் ‘துயரம் சுமக்கும் தோழர்கள்’ எனும் தலைப்பில் தனது கவிதைத் தொகுதி ஒன்றை வெளியிடவுள்ளார்.
-திருமதி.ஜெகதீஸ்வரி நாதன்(தம்பிலுவில் ஜெகா)
སྒ༽
b - குடிச்சிட்டு கலாட்டா வேற பன்றியா? நட ஸ்ரேஷனுக்கு.
குடிகாரம் - எனக்கு இன்ஸ்பெக்டர் சாரைத் தெரியும்; கொஞ்சம் மரியாதையாய்
GLIOtis.
பொலிஸ் - இன்ஸ்பெக்டர் சாரை தெரியுமா? எப்பிடித் தெரியும்?
Opanydt - éIöl GiböI.......... அவர் ஜீப்பிலை போகும்போது கண்டிருக்கேன்.
Gшоlab - gВLп јtШlamu.
ܢܠ GOtuda. 2幌

Page 5
るエタるF
நீபி.அருளானந்தம்
சேரிப் பக்கத் து மக்களும் கூலிவேலை செய்து வாழும் அந்தத் தொழிலாளர்களும் இருக்கின்ற இடத்திலே இப்போ கஷ்டப்பட்டுப் போய் இருக்கிற தானும் விசித் திரமான அந்த ஜனங்களுடன் ஒருவனாய்ச் சேர்ந்து இருக்கலாமே எண்றெண்ணித்தான் ராசுக்குட்டி என்பவன் அதிலே ஒரு கடையைப் போட்டான்.
சிறிய பெட்டிக்கடை மாதிரித்தான். பலசரக்குக்கடை அது. அந்தக் காணிச் சொந்தக் காரருக்கு கடைக்கான வாடகைப்பணம் மாதா மாதம் அவன் கொடுக்க வேண்டும். காணியின் மூலையிலே அந்தக்கடையை அதன் உரிமையாளரே கட்டிவிட்டிருந்தார். இந்தக்கடையை வாடகை எடுத்து நடத்திக் கைவிட்டவர்களை இரு கைவிரல்களளவுக்கு எண்ணிவிடலாம். நஸ்டப்பட்டுப் போக விரும்புகிறவர்கள் இந்தக்கடையைத்தான் நடத்திப் பார்க்க வேண்டும் என்பது மாதிரியாய் நட்டத்தைத் தவிர வேறெதுவுமே காணாத கடை என்பதாய் அந்த ஊருக்குள்ளும் ஒரு கதை அடிபட்டுக் கொண்டிருந்தது. முன்பு அந்தக்கடையை நடத்திப்போனவர்களும் தங்கள் மண்டைக்குள் நட்டத்தை ஏற்றி அதைப்பற்றி பலருக்கும் ஒருபுறம் செல்லியவாறாய்த் திரிந்தார்கள்.
“இதென்ன அப்பிடி யாவாரத்தில நட்டம் வாற கத . தூ போ! அப்பிடி செல்லுறவன் யாவாரம் ஒன்டுமே செய்யத் தெரியாதவன். தொழில் தெரிஞ்சவன் ஊசி வித்தும் லாபம் சேர்ப்பான். அதுதான் யாவாரத்தில இருக்கிற கெட்டித்தனம்.”
விெம 20
 
 

என்று தனக்கு அந்தக் கடையின் துர்ப்பாக்கியம் பற்றிச் சொன்னவர் களுக்கெல்லாம் தன் முகம் சிவக்க இப்படிப் பதில் ஒன்றைச் செல்விவிட்டுத்தான் ராசுக்குட்டி அந்தக்கடையாவாரம் துவங்கக் கால்வைத்தான். அவனுடைய கடையில் அரிசி, பருப்பு, உப்பு, மிளகாய், புளி, கிழங்கு, பீடி என்று பலதும் பத்துமான பொருட்களெல்லாம் தேவையானளவுக்குப் போடப்பட்டிருந்தது. கறார் விலை கைமேல் றொக்கம் என்ற உத்தி இல்லாமல் தளர்வாக கடன் கொடுத்து பின்பு காசு வாங்கியும் அவன் அவ்விடத்தில் யாவாரம் பண்ணினான். சாதாரண நியாயவிலை கூறி சாமான்களை அவன் விற்றதாலே சேரிப்பக்கத்துச் சனங்களெல்லாம் வேற அங்குள்ள கடைகளுக்குப் போகாமல் அவனிடமே பொருட்களை வாங்கிப்போக வந்தார்கள். சாந்தம், அமைதி, நிஜம் ஆகியவை கொண்ட அவனது கண்களில் உள்ள பார்வை சேரிப்பக்கத்து மக்களுக்கு பரவசமளித்தது. அவனுடைய முகஞ் சுண்டாத தன்மை, புதுப்போக்கு, பக்குவம் ஆகிய தன்மைகள் அவர்களுக்கெல்லாம் பிடித்திருந்தது. எனவே புன்முறுவலுடன் அவர்கள் தங்கள் மலகூட சுத்திகரிப்பு வேலையையும் அவனிடம் கூறி - வரும் மாதக் கடைசிச்சம்பளத்தில் தாங்கள் வாங்கும் கடனைத் தருவதாக கொப்பிக் கணக்கும் அவனிடமாய் அவர்கள் வைத்துக் கொண்டார்கள்.
தங்களின் யாவாரமெல்லாம் போய் இப்போது அவையெல்லாம் சேர்ந்து ராசுக்குட்டியின் கடையில் போய் குடியேறிவிட்ட நிலையில் அவன் நாசமாப் போகட்டும் என்று சொல்லித் திட்டிக் கொண்டு அங்கே அவன் கடைப் பக்கத்தில் கடைபோட்டிருந்தவர்களெல்லாம் ஒன்றும் சமாளிக்க முடியாமல் கடைகளைப்பூட்டிவிட்டுப் போய்விட்டார்கள். இதனால் ராசுக்குட்டியின் கடை வியாபாரத்தில் இன்னும் ஒளி படர்ந்தது.
அவன் பலருக்கும் கடன் கடன் என்று கடைப் பொருட்களைக் கொடுத்தாலும் அவையெல்லாம் அவனுக்கு புல்லின் மேல் அமர்ந்த வண்ணத்துப் பூச்சியைப் போல பெரிய பாரமாகத் தெரியவில்லை. இரண்டொரு கடன் கொடுத்து திரும்பி வராத விடத்திலும் அவன் போதிய லாபத்தைப் பெற்றுக் கொண்டு அந்தக் கடையை நடத்திக் கொண்டிருந்தான்.
அந்தக் கடையில், காலையில்தான் யாவாரம் அமளிதுமளியாக நடக்கும். பத்து மணியளவில் யாவாரம் குறைந்து அமைதியாகிவிடும் அதன் பிறகு அவன் மன ஆரோக்கியம் கருதி சில புத்தகங்களையும் வாசிப்பான்.
(7) ielas A2

Page 6
யார் யார் பொருட்கள் வாங்கவருகிறார்களோ அவர்களுக்குப் பொருட்களைக் கொடுத்துக் காசை வாங்கி லாச்சியில் போட்டு விட்டு கடைக்கு முன்னாலே கிடக்கின்ற கருங்கல்லிலே போய் குந்தி இருந்து கொண்டு அவன் புத்தகம் வாசிப்பான். முறுக்கேற்றப்பட்ட மனம் தளர இந்த வாசிப்புப்பழக்கம் அவனுக்குத் துணையாக இருக்கும். “மனதில் இன்பமான எண்ணங்கள் ஓடவும் உள்ளத்தைக் கிளறி உற்சாகப் படுத்துவதற்கும் இதற்கு ஈடாக வேறேதும் உண்டோ” எனற நினைப்பில் அவன் இந்தப்பழக்கத்தைத் தொடர்ந்துவைத்திருந்தான்.
அவன் இருந்து படிக்கின்ற அந்தக் கல்லுக்குப் பக்கத்தில் விறைப்பைத் தலையில் தூக்கிப் போட்டுக் கொண்டது மாதிரியாய் ஒரு கருங்காலி மரமும் கறுப்பு அழுத்த நிறம் பெற்றதாய் நின்றது. காற்றில் படபடக்காத இலைகளிலிருந்து உப்புச்சப்பற்ற நிழலும் அவனுக்கு சந்நியாசி மாதிரி அனுபவித்தபடி அதில் இருந்து கொண்டிருக்கச் சந்தோஷம்தான்.
நிலத்திலெல்லாம் வைரம் கலந்த கருங்காலி விதைகள் பளபளப்பில்லாத அளவில் அதிலே சிதறிக் கிடந்து அவனுக்கு காட்சி கொடுக்கும்.
புத்தகத்திலிருந்து தன் பார்வையை விலக்கி நிலத்தைப்பார்க்கும்போது கண்ணுக்குத் தென்படும் அந்த இறுகிய விதைகளை பார்த்தபடி தான் படித்துக் கொண்டிருக்கும் மகாபாரதக் கதையினிலே வரும் பாத்திரப் படைப்புக்களை கற்பனைக்கண்ணுடன் அவன் தன் சிந்தையிலேற்றுவான். அதையெல்லாம் சிந்திக்கும்போது தன் கண்களின் ஒளி பட்டு அந்தக்கருங்காலி விதைகளே தீயின் பயங்கர ஒளி விடுவதுபோல அவனுக்கு ஒருவிதபிரமையை ஏற்படுத்தும்.
மகாபாரதக் கதையிலுள்ள அந்தக் கதா பாத்திரங்களெல்லாம் தாங்கள் செய்கின்றவைகளை நியாயப்படுத்திச் சொல்லி அவனையும் யோசித்துப்பார்க்கும்படியாகக் கூறி நினைவில் அவனுக்குத் தொந்தரவு கொடுப்பதாக இருக்கும். இது நிலைமையில் அவனுக்கும் மகாபாரதத்தில் வரும் பீஷ்மரைப்போல அம்புப் படுக்கையின் ஒரு வித வேதனைதான். ஒழுக்கக்கேடுகளெல்லாம் அந்த நாளைய மகாபாரதக்கதையில் மட்டுமா நடந்தது. அந்தக் கதைச்சம்பவங்கள் இன்னும் முடியாத ஒரு காரியமாக அவன் தன் கண்ணாலும் இப்போது பார்க்கின்றான்தானே?
மகாபாரதக் கதையிலான அந்த வாழ்க்கை இப்போது ஒருபோதும் இல்லை
(8) ijas A2

- இல்லை எனக் கூற முடியுமா? அதற்கு உதாரணமாய் அப்படியொரு வாழ்க்கைதனில் பங்கு பெற்றதாயுள்ள ஒரு பெண்ணானவள் அவன் கடைக்குப் பின்புறமுள்ள அந்தக் காணிக்குள் உள்ள குடிசையில் இப்போதும்தான் வசித்துக்கொண்டிருக்கிறாள். உலைக்களத்தீயில் கூர்ந்த பார்வையைவைப்பதுபோல அவளைக்காணும்போதெல்லாம் இவனும் இன்பச் சூட்டோடு அவளைப்பார்த்திருக்கிறான். அவளின் மஞ்சள் பூசிய பளபளப்பான சொக்கைகளையும் உள்வாங்கிய வயிற்றையும் இடையையும் அதற்குண்டான நளினமான மிருதுவான அவள் நடையையும் கண்களையும் பார்த்துவிட்டு அந்த நிச்சலனமான கருங்காலி மரத்தின் கீழ் லோய் கல்லின் மேல் அரைநிழலில் இருந்துகொண்டு சதுப்பு நிலத்தின் மூச்சுக்காற்றை போல் மனதுக்குள் மூச்சுவிட்டபடி அவள் வாழ்க்கையிலுள்ள வெக்கையின் பக்கங்களை தன் நினைவில் அவன் புரட்டிப் புரட்டிப் பார்த்திருக்கிறான்.
அழுத்தமான மனம் கொண்ட அவளுக்கு இரட்டைப் புருஷன்மார்கள் இப்போது இருக்கிறார்களென்பது அவனுக்கு விளங்கும். “இருவரையும் எப்படி எப்படியாக அவள் சமாளிக்கிறாள்? இரண்டாவது புருஷனுடன் ஆழமாகப் பதிந்துவிட்ட உறவின் தொடர்ச்சியாலும் அந்தக் குடும்பத்துக்குள் அவளுக்கு குழப்பமும் இல்லை. இவர்களுக்குள் ஏதாவது அப்படியொரு குழப்பம் வந்து அதைத் தான் பார்க்க வேண்டும் என்றதாய் இவனும் பலநாள் அதற்காகக் காத்துக்கிடந்தான். ஆனாலும் ஒரே வீட்டுக்குள் ஒன்றாக படுத்தெழும்பி அவளுடன் குடித்தனம் நடத்திக் கொண்டிருந்த அந்த ஆண்கள் இருவரிடத்திலும் முறுகிக் கொள்கிறமாதிரி கோபதாபமோ சண்டையோ எழவில்லை. இவர்களிருவரும் கருங்காலி மரத்தின் முரடான கிளைகள்போல ஒன்றையுமே வெளியில் காட்டிக் கொள்ளாமல் இறுகிய அமைதியுடன் சாதாரணமாகவே இருக்கிறார்கள்.
ஆனாலும் அங்குள்ள சனங்களுக்கு - தன் முதுகுகாட்டித் திரும்பிக் கொள்வதாய் இருந்து வாழும் அவள் ரகசியம், ஒருநாள் நடந்த சம்பவத்தின் மூலம் பிறகு வெளிப்படையாக அனைவருக்கும் தெரியத்தான் வந்தது.
அவளின் இரண்டாவது புருஷனின் தாலிகட்டிய சொந்த மனைவி அதிலே அவன் கடையடி வேலியருகில் நின்று அவளைக் கேட்டுவிட்ட கேள்விகளைக் கேட்டு பார்வையாளராய் நின்ற சனங்களுக்கு சகிக்க முடியாமல் போய் விட்டது.
Orga- 2.

Page 7
அவள் கேட்ட கேள்விகளை காதில் கேட்டு - சிரிக்க வேண்டியதன் அவசியத்தைப் புரிந்து கோடையின் அந்த வெப்பத்திலும் அவர்களெல்லாம் குளிர்மையாகச் சிரித்தார்கள்.
ஆனாலும் வேலிக்கு வெளியால் நின்ற அந்தப் பெண்ணோ ஈரமான தன்மையற்ற கருங்காலி விதை போன்று தன் கணவன் மேல் வ்ெறுப்புக்களை வைத்துக் கொண்டு அவனைப் பேசித்திட்டிக் கொண்டிருந்தாள்.
அந்தக் குடிசையின் பக்கம் பார்த்து கடுகடுப்பான குரலில் அவள்; “இவ்வளவு வயது போயும் உனக்கேன் புத்தி கெட்டுப் போச்சு? உன் கோத்திரமென்ன? குடும்பமென்ன? உன்ர பிள்ளைகளின்ர நிலை என்ன? எல்லாத்தையும் மறந்து போய் இந்த ஊத்தேக்க வந்து கிடக்கிறியே. உருப்படியான அறிவிருக்கா உனக்கு கடைசி காலத்தில உதவாக்கரைப் பிணமாவல்லே நீ போகப்போறாய்.” இப்படி அவள் சொல்ல யாரும் கவனமாகக் கேட்கக்கூடியதாக அவனும் கோபத்துடன் வாய்திறந்தான். “என்னை நீ வேண்டாமென்டால் நான் உனக்குச் செய்து தந்த அந்த ரெண்டு சோடிக்காப்பும் உன்ர கையில பிறகு எதுக்கு. அதைக் கழட்டி இப்ப வீசன் இங்கால எனக்கு.” அவன் அப்படிச் சொல்ல அந்த வெப்பத்தில் அவள் நெற்றியிலிருந்து ஒரு சொட்டுவியர்வை நிலத்தில் விழுந்தது.
“உன்ரை ஊத்தைக் காப்பை உன்னோடயாய் இந்தா இனி நீ வைச்சுக் கொள்ளு - அவளுக்கே இனி இதைப் போட்டு நீ அவளோட படு” சுட்டெரித்தது மாதிரியான ஒரு நிலையில் ஜுரவேகத்தில் வாய் பிளந்தபடி காப்பை ஒரு கையால் அவள் உருவிக்கழற்றி வேலிக்கு மேலால் உள்ளே வீசினாள்.
அதைச் செய்துவிட்டு சுட்டெரித்த வெய்யிலுக்காலே அந்த வீதியைக்கடந்து நடந்து பிறகு அவள் மறைந்தே போய் விட்டாள்.
அவள் போனதன் பிற்பாடு பயிற்சி பெற்ற விலங்குகளைப்போன்ற அந்த மூன்று மனிதர்களையும் வேலி இடுக்கு வழியாக அவன் ஒரு முறை பார்த்தான்.
‘அடக்கடவுளே’ ஒன்றுமே நடவாதது போன்று மிகச் சாதாரணமாக வல்லவோ அவர்கள் இருக்கிறார்கள். அவனுக்கு உலகமே பற்றி எரிவதற்குத் தயாராக இருப்பது போல அப்போதைக்கு நினைக்கத் தோன்றியது.
(10) Geisfilosus 20

இதற்குப் பிறகு கண்களை நிலத்தில் படிய விடுவதும் மகாபாரதம் படிப்பதுமாக சில மாதங்கள் அவனுக்குக் கழிந்தது.
இதன்பிறகு அடுத்த சம்பவம் ஒன்று: உடம்பில் முரட்டுத் துணிச் சட்டை போட்டிருந்த ஒரு பெண்ணை அது அவளின் பேத்தியாக்கும். அவன் கடையடிப்பக்கம் அந்தக் கிழவி கூட்டிக் கொண்டு வந்தாள். அந்தப் பெண் நிறைமாத பிள்ளைத்தாச்சி என்று தெரியுமளவிற்கு வயிறு ஊதிக் கிடந்தது. புத்திசாலியான முகமாய் அவள் முகம் அவனுக்குப் பார்க்கத் தெரியவில்லை.
கடையடிக்கு தன் பேத்திப் பெண்ணைக் கூட்டிவந்த அந்தக் கிழவியின் களைத்துப் போன முகத்தையும் இரக்கமான பார்வையையும் இவன் கண்டு விட்டு “என்னம்மா உங்களுக்கு வேணுமனை” என்று அக்கறையாக விசாரித்தான்.
இவனின் அன்பான பேச்சை கேட்டுவிட்டு கிழவியும் தன் குரலை தாழ்வாக்கிக் கொண்டு “ஒரு சோடா குடிக்க முதல்ல குடும்தம்பி. தாகம் நா வறட்டுது. அதைக் குடிச்சிட்டு சொல்லுறனப்பு.’
கிழவி இப்படிச் சொல்ல சோடா உடைத்துக் கொடுத்தான் அவன் கிழவி காய்ந்து போன தொண்டையின் அடியாழம் வரை போகும் அளவுக்கு அண்ணாக்காய் நிமிர்ந்து சோடா குடித்தாள்.
'puLöLDT” அரைவாசி மிச்சத்தை தனக்குப் பக்கத்தில் நின்ற தன் பேத்திக்குக் கிழவி நீட்டியபடி கேட்டாள்.
“(36600TT Lib' என்று கிழவிக்கு அவள் செல்லிவிட்டு கருங்காலி மரத்தைப் பார்த்துக் கொண்டு “இந்தக் கிளைகள் இனி எந்தத் திசைக்கு சென்றதாய் வளரும்’ என்று சிந்தித்தபடியாய் நின்றாள்.
கிழவி கண்களை மூடாமல் திறந்தபடி ஒரு கணம் அப்படியே இவனைப்பார்த்தாள்.
“தம்பி! வீடு எங்கயாவது இங்க வாடகைக்கு எங்களுக்கு இருக்க எடுக்கேலுமா..? ஒரு பறவைக்குஞ்சைப்போல தன் நாடி துடிக்கக் கேட்டாள் அந்தக் கிழவி.
GOthnig. 20

Page 8
“நீங்க எங்க உள்ளனியள். இப்பிடி இங்க வந்து உடன வீடு எங்களுக்கு வாடகைக்கெண்டு கேட்டா.”
“நாங்களும் மனுசர் தானேயப்பு. ஏதோ எங்களுக்கும் ஒரு தேவைக்குத்தான். அதிலயா இப்ப இருந்திட்டுப் போகக் கேக்கிறம் தம்பி.”
அவன் கேட்டதற்கு கிழவி சொன்ன பதில் - இன்னும் ஏதோ ஒரு துன்பச் சுமையை அவள் சொல்ல விருப்பதாக அவனுக்குத் தெரியப்படுத்தியது.
“இங்க அப்பிடி இப்பிடியான ஆக்கள்தான் இதுக்கயா எல்லாம் இருக்கினம் ஆச்சி. இதுக்கயா நீங்க வீடெடுத்து இறக்கிறதெண்டா ஒத்துவருமா சரியா உங்களுக்கு” “எப்பிடியான ஆக்களெண்டாலும் மனுசர்தானேயப்பு. இங்கின இருக்கினம். நாங்களும் இந்தப் பிள்ளையின்ற பேறுகாலம் முடிய போயிடுவம் எங்கட இடத்துக்கு.”
ஏன் அத நீங்க ஊரில இல்லாமலா இங்க வந்து செய்யப்பாக்கிறியள்.”
தோண்டி எடுக்கிற மாதிரி கிழவியை ஒருகேள்வி இப்படிக் கேட்டான் அவன்.
“ஐயோ அதுதானே மகன் இவளுக்கு நடந்ததாய் வந்திட்டுது. அதுதானே இப்பிடி வந்து நிர்க்கதியாய் நாங்க நிற்கவேண்டிக்கிடக்கு.” என்று அந்தக்கதையில் ஆரம்பித்து ஒரு இறுக்கமான சுவரை உடைத்துக் கொண்டு வெளியே வந்தது மாதிரியாய் ஒரு உண்மையை பிறகு கிழவி அவனுக்குச் சொன்னாள். “இவள் பாவி பாவி, ஒண்டும் தெரியாத ஒரு அப்புறாணிப்பிள்ளை. இவள இவளின்ட சகோதரியின் புருஷன் கெடுத்துவிட்டான் ராசா. அதால இவளும் வயித்தில வாங்கி எங்களுக்கும் அதைப்பற்றி சொல்லாமக் காலம் கடத்திட்டாள். இது பிறகு எங்களுக்குத் தெரிஞ்சு நாள் சென்டதால அங்க இங்கயா நாங்க இருக்கிற ஊருக்குத் தெரியாத இடம் வழியாகக் கூட்டிக் கொண்டுபோய் வைச்சிருந்து நாள் கடத்திப்போட்டு வாறம். இப்ப இவளுக்கு நாள் கிட்டிப்போச்சுத் தம்பி. ஆசுபத்திரி இருக்கிற இடமா இப்ப ரவுண் பக்கத்துக்கு இவள நான் கொண்டந்திருக்கிறன். விரலில புண்ணாப்போச்செண்டு கண்டா அதுக்காக கைய வெட்டி எறியேலுமே. எல்லாம் சொந்தத்துக்கையா உள்ளுக்க அப்பிடி இப்பிடி ஏதோ நடந்துபோச்சு. என்ன செய்யிறது. இது பிள்ளையும் எங்கயும் இனிப்போய்
(2. 20

வாழ்க்கைப்பட்டு சீவிக்க வேணுமே தம்பி. அதுதான் பிள்ளையைப் பெத்து அங்க எங்கயும் ஆருட்டையும் பிள்ளையை வளக்கக் குடுத்துப் போட்டு பிறகு ஊருக்கு இதக் கூட்டிக் கொணி டு போகலாமெண்டுதான் நினைச்சுக் கொண்டு நாங்களெல்லாம் இப்படியாச் செய்யிறம். என்ர கடவுளே எனக்கு நீதான் என்ற மகன் மாதிரி. இவளின்டையும் என்ரயும் பாவத்தைப் பார்த்து உதவ வேணும் பிள்ள.”
கையை விரித்துக் கொண்டு கிழவி சொல்லும்போது கைவிரல்களெல்லாம் அவளுக்கு நடுங்குகின்றது. ராசுக்குட்டிக்குக் கிழவியின் துயரக்கதை கேட்க அணை உடைத்து வெள்ளம் தன்னை அடித்துக் கொண்டு மரத்திலும் கல்லிலும் மோதிச் செல்வதானதோர் துன்பம். அவனுக்கு அந்தக் கிழவியிலும் அவள் பேத்தியிலும் மிகவும் இரக்கமாய் வந்து விட்டது. நெஞ்சில் எரிந்து கொண்டிருக்கும் வேதனையை மரம் மூச்சுவிடுவதுபோல வெளியே தெரியாமல் மூச்சு விட்டபடி அகற்றிக் கொண்டிருக்கும் அந்தப் பெண்ணைப் பார்த்து அவன் பரிதாபப்பட்டான். உடனே அவன் வறண்டு போன மாதிரியாய் நின்ற அவர்கள் இருவரையும் தன் தாய் வீட்டுக்குக் கூட்டிக் கொண்டுபோய் வாழ்வின் சில சந்தப்ப்பங்களில் பின்பற்ற வேண்டிய ஒரு பொய்யையும் தன் தாயிடமும் கூறி அவர்களுக்கு அங்கே தங்கிக் கொள்ள ஒரு அறையையும் ஒழுங்குபண்ணிக் கொடுத்தான்.
இதற்குப் பிறகு மிக மிக கண்டிப்பாக தன்னையே தான் கடிந்துகொண்டு, இப்படியான உதவியொன்றும் இனிமேல் யாருக்கும் தான் செய்வதில்லை என்றுதான் தனக்குள் அவன் உறுதியாயிருந்தான்.
ஆனாலும் பாரதக்கதை மூலம் பயிற்றுவிக்கப்பட்டுக் கொண்டிருந்த அவனுக்கு இதுபோன்று அவனிடம் நெருங்கிய சம்பவங்களிலிருந்து தன்னை தப்பித்துக் கொள்ள முடிந்ததா?
தவறுகள் மலிந்த நரகமான அந்த இடத்திலிருந்து இறக்கை இருந்தும் அவனுக்கு பறந்து போய்த்தப்பிக்க முடியாததைப் போலல்லவா ஆகியும் விட்டது.
அடுத்த கொடுக்கான் எங்கே இருந்து இனிவரப்போகிறதோ அவனை கொடுக்கால் கொட்டுவதுபோல வேதனை அளிப்பதற்கு. கடைசி நேரத்தில் கடை வியாபாரத்தில் அவனுக்கு நட்டம் ஏற்பட்டது. -
(bai.

Page 9
மாரிகாலம் வந்துவிட்டதாலே அவன் கடைபோட்டிருக்கிற அவ்விடத்திலுள்ள அனேகருக்கு தொழிலில்லாது பல கஷ்டங்களையும்பட்டு பட்டினி கிடக்க வேண்டிய காலமாய் வந்துவிட்டது. இவனிடம் தான் அவர்கள் கொப்பியைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள் கடனுக்கு. தான் அனுஷ்டித்து வந்த முறைகளை மாற்றாது இவனும்அவர்களுக்குக் கேட்டதெல்லாம் கடன் கொடுத்தான். அவர்களுக்குக் கடன் கொடுத்துக் கொடுத்து இவனும் கடனில் மூழ்கிக் கொண்டிருந்தான்.இந்தக் கஷ்டங்களுக்குள்ளும் அந்த இடத்தில் நடக்கிற மகாபாதகங்களைக் குறித்தும் அவன் மனம் அதிகம் கவலைப்பட்டது.
அங்கு அவன் கடைக்கு வருகின்ற அந்தப் பெண்ணினதும் புருஷனின் மீது இவனுக்குக் போபம் இருந்தாலும் அவளிடத்திலாக தன் உறுதியான குரலில் உனக்குக் கடன் இல்லை என்று பட்டவர்த்தனமாக சொல்லஏனோ அவனுக்கு முடியாதிருக்கிறது.
ஏமாற்றப்பட்டு இப்படியாகவும் சில பெண்களின் வாழ்வு சீரழிந்து போகிறதே என்று நினைத்தாலும் அவளோடு அதைப்பற்றிக் கதைப்பதற்கு வாய் திறவாமல்தான் அவன் இருக்கிறான்.
இவள் தன் புருஷன் என்று இப்போது சொல்லிக் கொள்பவனுக்கு இதுதான் தொழில். அவன் எங்கும் ஒரு தொழிலும் பார்க்கப்போவதில்லை. அவன் எங்கேயாவது வெளியூர்களுக்குப் போவான். அவ்விடங்களில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் குடும்பங்களை தேடிப்பார்த்து அவர்கள் வீட்டில் ஒருவாறாய்ச்சேர்ந்து கொண்டு சில நாட்கள் அவ்வீடுகளில் தங்குவான். அங்கு இருக்கிற காலங்களில் தன் கையிலுள்ள காசுகளையெல்லாம் அவர்களுக்காச் செலவு செய்வான். பின்பு அவர்கள் வீட்டிலிருக்கும் பெண் பிள்ளையைக் கல்யாணம் செய்து கொண்டு இங்கே கூட்டிவருவான். அதற்குப் பிறகு தான் அனுபவித்த சிறந்த இன்பம் அவளுடன் கழித்த நாட்களுக்கப்பால் தன் மனைவிக்கு மதுவை நிறையப்பருக்கி விபச்சாரத்தில் அவன் அவளை ஈடுபடுத்தி பணம் சம்பாதிப்பான். இதற்குப் பிறகு “உன் வாழ்க்கையைப் போய் நீ நடத்து” என்று அவளைத் தன் வீட்டால் இருந்து வெளியே கலைத்துவிட்டு திரும்பவும் வேறு ஒரு பெண்ணைத்தேடிப்பிடித்துக் கொண்டுவந்து பலிகொடுக்கப்படும் கடாபோலஅவளை வைத்திருந்துவிட்டுவழமைபோல தன் காரியம் நடத்துவான். அவன் இப்படியெல்லாம் குற்றச் செயல்கள் புரிந்தும் சட்டத்தின் கையில் மாட்டியதில்லை. அவன் அதிகப்படியான கிரிமினல் விவேகம்
(1) iasā 20

கொண்டிருந்தபடியாலே எல்லா குற்ற வழியிலுமிருந்தும் தன்னை தப்பித்தவாறாய் இருந்தான். அவனுடைய அவளும் இப்போ கடையடியில் நின்ற வண்ணம் அவனிடம் பாண் கடன் கேட்டவாறாய்த்தான் நிற்கிறாள். இப்போ பிள்ளைத்தாச்சியாகக் காணப்பட்ட அவள் இளைத்தும் வியாதி வசப்பட்டவளாகவும் மிரண்ட கண்களுடனும் அவனுக்குக் காணப்பட்டாள். தேகநிலை சரியில்லாததாகவே அவள் இருமிக் கொண்டிருந்தாள்.
“என்ன இருந்தாலும் நிறைமாத பிள்ளைத்தாச்சி. பாணி கடன் கேட்டுக்கொண்டு நிற்கும் இவள் ஜன்மத்திலேயே இன்றுதான் முதன் முதலாக இப்படியான ஒரு நிலைக்குத் தான் வந்துவிட்டதாக அழுகின்ற மாதிரியாகவும் நிற்கிறாள்.” என்று அவன் இவளைக் கண்டதில் மனதுக்கு அவனுக்குக் கவலையாகிவிட்டது. திடீரென அவனுக்கு இந்த நிலையில் உணர்ச்சிகளைக் கிளப்பிவிட்டது. “உண்மையில் நிஜமாக இந்தப் பழியெல்லாம் அவனையே சாரும். கடவுளின் தண்டனை அவன் மேல் ஒரு நாள் வந்துவிழும்” என்று அவன் நினைத்தான்.
“என்னவோ போறது போய்த் தொலையட்டும்’ என்று நினைத்துக் கொண்டு அவளுக்கு இரண்டுராத்தல் பாணைக் கொடுத்து அதிலே மேலும் நின்றுகொண்டிராமல் போக்காட்டிவிட்டான்.
அன்று இரவு முழுவதும் நித் திரையே வரவில்லை. எலி லா சம்பவங்களையும் படுக்கையிலே நினைத்துப்பார்க்க அவையெல்லாம் அவனுக்கு வியாகுலமுள்ளதாகவே இருந்தது. வழமைபோல எழும்பி வீட்டாலே இருந்து அவன் தன் கடையடிக்குப் போனான். அங்கே அவன் போய்ப்பார்த்தால் கடைக்கதவு திறக்க வேண்டிய அவசியம் இல்லாமல் பூட்டு உடைபட்டுக்கிடந்தது. கடைக்குள்ளே போய் அவன் பார்த்தான். கடைப் பொருட்கள் எல்லாம் அங்கே கொள்ளை போனதைக்கண்டு அவன் மனம் செத்துவிட்டது. உடனே மனக்கவலை தாங்க இயலாது வெளியே போய் கடைக்கு வெளியாலே உள்ள அந்தக்கல்லிலே இருந்தான். கள்ளர் சீனி மூட்டையைக் காவிக்கொண்டு போன வழியில் சீனித்துகள்கள் கொட்டுப்பட்டுக் கிடப்பது அவன் கண்களுக்குத் தெரிந்தது. ஒவ்வொரு துகளை ஒவ்வொரு எறும்புகள் இழுத்துப் போகின்றதும் விடிந்ததும் அவன் கண்களில் பட்டது. அதிலே நிலத்தில் கிடந்த கருங்காலி விதைகளை எறும்புகளும் தேடாதவிடத்து அவன் அந்த விதைகளையே இறுகிய தன் மனத்தோடு அவ்வேளை பார்த்துக் கொண்டிருந்தான்.
5) Gkiousuf 2OJ

Page 10
(6)
TTTTTTLS LGGsLTTTLLLLLLLLS SSLLLTTTLG LMLTCLS SSLLLTsTMTL MTLLMTLLLLS நீங்களி படிதீததை-பார்தீததை-கேட்டதை-அறிநீததை இங்கே பகிரீநீது கொளிளுங்களி.
ஆதாம், ஏவாளைப்பற்றிய ஒரு ஓவியக்கண்காட்சி. அந்த ஒவியத்தைப் பார்த்துவிட்டு இந்தியன் சொன்னான் “ஆதாமும் ஏவாளும் நிச்சயம் இந்தியர்களாகத்தான் இருக்க வேண்டும்.” “எப்படிச் செல்லுகிறாய்” என்றுகேட்டான் அவனுடன் ஒவியத்தைப்பார்த்து இரசித்துக் கொண்டிருந்த பாகிஸ்தானியன். “ஆதாம் முகத்தைப்பார். அந்த முகத்தில் எவ்வளவு சாந்தம், அமைதி, அதே நேரம்எத்தனை கம்பீரம், என்ன உயரம், என்ன அழகு.” இந்தியன் தான் ஆதாம் ஏவாளை உரிமைகோரியதற்கான காரணத்தை எடுத்துரைத்தான்.
அதற்குப் பாக்கிஸ்தானியன் “இல்லை. நிச்சயமாக அவர்கள் இருவரும் பாக்கிஸ்தானியர்களாகத்தான் இருக்க வேண்டும். அந்தப் பெண்ணைப்பார் என்ன நிறம், என்ன உயரம், உன்ன அழகு”
இவர்கள் இருவரதும் சண்டையையும் வாதப் பிரதிவாதங்களையும், அவர்களுக்கு அணி மையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ஆப்கானிஸ்தான்காரன் “ஐயா! நீங்கள் ஏன் அர்த்தமில்லாது சணி டைபோடுகினி றிர்கள் . அவர்கள் இநீதியாவையோ, பாகிஸ்தானையோ சேர்ந்தவர்களாக நிச்சயமாக இருக்க முடியாது. ஆதாமும் ஏவாளும் நம்ம ஆப்கானிஸ்தானியர்கள்தான் என்பதில் எதுவித சந்தேகமும் கிடையவே கிடையாது’ என உறுதிப்படக்கூறி
நின்றான்.
“எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்லுகிறாய்” என இந்தியனும், பாகிஸ்தானியனும் ஆச்சரியத்துடன் கேட்க அதற்கு ஆப்கானிஸ்தானியன் “அந்த ஆதாம் ஏவாளைப் பாருங்கள். உண்ண உணவில்லை. உடுக்கத் துணியில்லை. ஆனாலும் தாங்கள் இருக்கும் இடம் சொர்க்கம் என்று நினைக்கிறார்களே.” என்றான்.
- செம்மாதுளன்
நன்றி. மாலனின் ‘நேற்றின் நிழல்கள்?
-ܓܠܠ (6) RSüftnessA 20N

வசதிதுப்போகும்வாழ்க்கை
மள்ளர் அமுதன்
கூடா நட்பால் குறைந்து விடுகிறது *சின்னவனின் மதிப்பெண்கள்?
நாகரிக மோகத்தில் ஸ்தம்பித்துக் கிடக்கிறது வேபரியவளின் வபாழுதுகள்?
சின்னத் திரைக்குள் சுழன்று திரிகிறது
மனைவியின் கடிகாரம்?
வாழ்வியல் சீர்திருத்தம் பெரும் புலம்பலாய்க் கழிகிறது *குடிகாரத் தந்தைக்கு?
ஒருவரை ஒருவர் சுட்டிக் கொள்கையில் செத்துப் போகிறது வாழ்க்கை
GDuais. 20
ل- - - --

Page 11
()
حال اسکار
ماسوب.
*リー
உறுத்தல்
- வேல் அமுதன்
9 AG
*அண்ணை’, ‘அண்ணை!”
அடுத்தறை சலரோக நோயாளி என னைக் கூப்பிடுகிறார் . நான் ஓடிப்போறன். “என்ன ஐயா? என்ன செய்யிது? என்ன வேணும்” - விசாரிக்கிறன்.
"960ii.60600T. Sugar Level குறைந்தமாதிரி இருக்கு. தலையிக் கை ஏதோ செயப் யிது. கழுத் தடி வேர்க்குது.”
நான் CalBel லை அமுக்கி அவ வைத தரிய சாலை
நேர்சை வரச்செய்து, உடன் கிகிச்சை வழங்கிட ஏற்பாடு செய்யிறன்.
ஏற்றிய ஊசி மருந்தோடை அந்நோயாளி நித்திரையாகிப் போனார்.
அவருக்கு வயது அறுபது இருக்கும்,
அவர் ஒரு குடும்பஸ்தன்,
மனைவி தவறிவிட்டார். இரண்டு ஆண் பிள்ளைகள். உடன் பிறப்புக்கள் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும். ஆனால், ஆரும் அவரில் நேர்மையாக அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை.
அவர் ஏன் உதாசீனப்படுத்தப்படுகிறார் என்பது மர்மம். அதைத் தெரிந்து கொள்ள என்னவோ தெரியாது எனக்கு ஆர்வம்.
(ề) Gółosił 20
 

அடுத்த நாளும் “அண்.ணை!” என உரக்கச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறார். Acute Diabetic நோயாளியான எனதுமனைவிக்குப் பணிவிடைக்கு நிறுத்தப்பட்டிருக்கும் நான் அடிக்கடி அவரிடம் ஒடிப்போவது கஸ்டம்தான்! இருந்தும் போகிறன். “Bed Pan தேவைப்படுகிறது” என்கிறார்.
ஒழுங்கு செய்தன்
அவர் Chronic Diabetic. எழுந்தோ, நிமிர்ந்தோ CalBel யை அமுக்க முடியாதவர். அத்தோடு பாவம் முற்கூட்டியே வலதுகால் கழற்றப்பட்டு விட்டது. இப்போது இடது காலிலும் புண். PrivateAttendance ஒருவரை ஏற்பாடு செய்யப்படுகிறது எனச் சொல்லப்பட்டது. ஆனால், செய்யப்படவில்லை!
இன்று வெள்ளிக்கிழமை மாலை. வெளியாட்கள் இரு பகுதியினருக்கும் வரத்தில்லை. நோயாளியோடு தனிமையிற் கதைக்க நல்ல வாய்ப்பு. மனதைக் குடைந்த சந்தேகங்களை வெளிப்படுத்துகிறன்.
நோயாளி மணந்திறந்து பேசினார்.
“எனது குடும்பத்தில் நான்தான் தலைமகன். எனது அப்பா எனது இளமைக்காலத்திலேயே காலம் சென்று விட்டார். நான் கெட்ட நண்பர் சகவாசத்திற்கும்,மதுவிற்கும் அடிமையானேன். ஒரு நாட்டாண்மை போலச் செயற்பட்டன். கஷ்டப்பட்டு எம்மை வளர்த்த எனது அன்புஅம்மாவை உதாசீனம் செய்தன். குடிவெறியில் சிலவேளைகளில் அம்மாவெனவும் பாராது உதைத்துத் தள்ளியுள்ளன். எந்தக் கால் பெற்ற அம்மாவை உதைத்ததோ அந்த வலது கால் இன்று எனக்குக்கழற்றப்பட்டு விட்டது! சுருக்கமாகச் சொன்னால் வினை விதைத்தவன் நான். வினையையே அறுக்கிறன்..!” அவரால் அதற்கு மேல் தொடர்ந்து பேச முடியவில்லை. ஆனால் அவரின் கண்கள் தெளிவாகப் பேசின - பொல பொலவென கண்ணிர் வடிந்தோடிய வழியால்!ப
(19) AsišGaasis 2o

Page 12
- கோத்திரன்
飄 ** HAIGUb WallShih Sulli) " | ༢ .འི་ இன்று ஒன்றிணைந்து செயற்படும் பிரிட்டனும் பிரான்சும் ஒருகாலத்தில் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டிருந்தன. இது 15ம் நூற்றாண்டின் ஆரம்பகாலம். சரித்திரத்தில் நுாறு வருடப் போர் என இது அழைக்கப்படுகிறது. 1429 ல் பிரான்சின்வடபகுதி முழுவதும் தென்பகுதியின் சில பகுதிகளும் வெளிநாடுகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன. ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பகுதிகளில் ஆங்கிலேயரே ஆதிக்கம் செலுத்தினர். அதில் முக்கியபகுதி ‘பர்குண்டன்’ எனப்படுவது. இம் மாநிலப்பகுதி எப்போதும் ஆங்கில அடிவருடிகளாலேயே ஆளப்பட்டு வந்தது. அதே நேரம் “ரோம் நகரத்து மத ஆதிக்கமும் மலிந்திருந்தது. இந்தப்போரில் பிரிட்டனிடமிருந்து பிரான்ஸ் பெரும் இழப்புக்களை அனுபவித்தது. காரணம் போரின் களம் பிரான்சில்தான் நடந்தது. சார்ள்ஸ் VI அப்போதைய பிரான்சு மன்னன். பிரிட்டனில் மிகக் கொடுங்கோலனான ஹென்றி V ஆட்சியில் இருந்தான். கர்ப்பிணியான தன் மனைவியையே கத்தியால் குத்திக் கொன்றவன் இவன். இவனது மாளிகை லண்டன் 'தேம்ஸ்’ பாலத்துக்கு அண்மையில் உள்ளது. இந்த மாளிகை இப்போது ஒரு சுற்றுலா மையம். இம்மாளிகையில் தான் இந்தியாவின் புகழ்பெற்ற காஷ்மீர் “கோகினுர்’ வைரம் வைக்கப்பட்டிருக்கிறது. ஆங்கில அரசும் வத்திக்கான் மதபீடமும் செய்திட்ட கொடுரமான ஒரு கொலையின் வரலாறே இப்பந்தி
“ஜோன் ஒவ் ஆர்க் அற்புதமான ஒரு பெண் குழந்தை. அழகான குழந்தை.வசீகரத்தின் வார்ப்புகளாக அவள் இருந்தாள். மற்றவர் கண்களுக்கு ஒரு தேவதை. சுறுசுறுப்பும் விவேகமும் வேகமும் அவளிடம் மேலதிகமானவை. 1412 ல் தொடங்கிய இந்த அற்புதமான தேவதையின் வாழ்வு 1431மே 30 ல் முடிவுக்கு வந்தது. 19 ஆண்டுகள் இந்த மண்ணில் பவனி வந்தாள் - பரிதாபகரமான முடிவைத் தேடிக் கொண்டாள். அப்பா பெயர் “ஜக்குவாய் டீ ஆர்க்’, அம்மா 'இஸபெல்லா றொமி’, 50 ஏக்கர்
9ேங்கி 20
 
 

பண்ணையின் சொந்தக்காரர் அப்பா. அத்துடன் அந்தப்பகுதியின் தலைமைக்காரர். தனது 12வது வயதில் 1424ல் அப்பாவின் பண்ணை வயல் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது சில உருவங்களின் ஆசிகளை இவள் பெற்றுக் கொண்டதாகக் கூறப்பட்டது. அந்த உருவங்கள் சென்ற் மைக்கல், சென்ற் கதரின், சென் மாக்கிரட் என்பவர்களின் ஆவிகள். அதன் பின் இவளிடம் அதிசயமான மாற்றங்கள் தென்பட்டன. மக்கள் நம்பினார்கள், ஆனால் வத்திக்கான் மதபீடம் நம்ப மறுத்தது. இவளைச் ‘சூனியக்காரி” என்றது.
அந்த நாட்களிலேயே பரிதாபத்துக்குரியதான மண்ணின் துன்பங்களையும் அந்நியர்ஆதிக்கத்தின் கொடுமைகளையும் இவள் புரிந்து கொண்டாள். அவள் மனதுள் ஒரு வைராக்கியம் மலர்ந்தது. தோல்வியின் விளிம்பில் இருந்த நாட்டை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்லும் தீவிரமான முடிவை எடுத்தாள். இவளொன்றும் ஆட்சிக்குடும்பத்தில் பிறந்தவள் அல்ல. ஆயுதப் பயிற்சி பெற்றவளும் அல்ல. போர்முறை தெரிந்தவளும் அல்ல. “பொறிமுறை தெளிவுடையவளுமல்ல. ஆயினும் ‘ஓர்மம்’ இருந்தது. தாகம்’ இருந்தது. தலைமைக்கான தகுதி இருந்தது. பொதுப்பணியில் நாட்டம் இருந்தது. புனிதர்களின் ஆசியும் இருந்தது. பிரிட்டன் படைகளின் அடிவாங்கி ஓடிப்போகும் பிரான்சுப் படைகளைப் பார்த்துக் கொதித்துப் போனாள். நேரே மன்னனிடம் சென்றாள். “எனக்கு ஒரு சந்தர்ப்பம் தாருங்கள்! என்னால் எதிரியை வெளியேற்ற முடியும்.” என்றாள். தன்முன் நிற்கும் 18 வயதே ஆன சிறுமியை மன்னன் ஆரம்பத்தில் நம்ப மறுத்தான். அப்புறம் அவள் நடவடிக்கைகளைப்பார்த்த பின் ஒப்புக்கொண்டான். 12000 வீரர்கள் கொண்ட தன் படையணியை அவள் தலைமையில் பணியாற்றுமாறு பணித்தான்.
களத்தில் அவள் காட்டிய வீரத்தையும் வேகத்தையும் கண்டு வியந்தது மக்கள் மாத்திரமல்ல மன்னன்கூட வரலாற்று ஆசிரியர்களும்தான். கடவுளின் ஆசியைப் பெற்றிராத எவராலும் இப்படி ஒரு காரியம் ஆற்றியிருக்க முடியாது. 1429ல் 'ஆர்' நதிக்கரையில் இவள் ஆடிய சமர் பிரசித்தமானது. அங்கு கம்பீரமாக நின்ற எதிரியின் “லாஷத்தே’, ‘முஸ்திபா’ கோட்டைகளை ஏழு நாட்கள் இடைவிடாது முற்றுகையிட்டு வெற்றி கொண்டாள் ஜோன். மக்கள் இவளை வழிபடத் தொடங்கினார்கள். இவள் வார்த்தைக்கு அது எதுவானாலும் மக்கள் கட்டுப்பட்டனர். வழிபாட்டுத் தலங்கட்குப் போகாமல் இவளது வரவுக்காகக் காத்திருந்தனர். 7ம் சார்ள்ஸ் தன் இராணுவத்தின் இணைத் தனபதியாக இவளை
60 ka- 20

Page 13
நியமித்துப் பெருமைப்படுத்தினான். ஆயினும் “ரோம்’ மதபீடம் இதை விரும்பவில்லை. உலகின் மிகச் சிறந்த சிந்தனைவாதிகட்கும் புரட்சிவாதிகளுக்கும் நடந்த அதே கதைதான் இவள் வாழ்விலும் நிகழ்ந்தது. சோக்கிரடீசுக்கும், கலிலியோவுக்கும் "மதம்” கொடுத்த அதே வரவேற்புத்தான் ஜோனுக்கும் கிடைத்தது. பழமைவாதிகளின் மந்திரக்கோட்டையான “ரோம் இவளுக்கு எதிராகத் திருப்பப்பட்டது. களத்தில் பெற முடியாததை மதக் காழ்ப்புகளின் மூலம் ஆங்கிலேயர் பெற்றுக் கொண்டனர். ‘பியோகிறஸ்’ என்ற தலைமைக்குரு இவளைச் ‘சூனியக்காரி’ என்று தூற்றினார். சிறு சிறு ஆட்சிகள் அனைத்தும் தங்கள் மணிமுடிகளுக்கு ஆபத்து வரப்போகிறது என அரண்டனர். இவர்களை ஆங்கில அரசு “ரோம் மதபீடம் மூலம் மூளைச்சலவை செய்தது. ‘பர்காண்டி’ என்ற மாநிலத்தின் அரசன் அதற்கான பகடைக்காயானான். அவனை ஜோனிடம் பழகவைத்து பழிவாங்க முடிவாயிற்று. இலட்சியமே எண்ணமாக இருந்த இவள் அதை அலட்சியம் செய்தாள். பக்கத்தில் உள்ளவர்கள்பலர் தடுத்தும் கேட்காமல் ‘பர்காண்டி’ க்குள் காலடி வைத்தாள் ஜோன். அங்குதான் படுகுழி காத்திருந்தது. வஞ்சகமாக தனிமைப்படுத்தப்பட்டபோதுதான் தான் பொறிக்குள் சிக்கியுள்ளதைப் புரிந்து கொள்ள நேர்ந்தது. ஏற்கனவே இவளிடம் அதிருப்தியுடன் இருந்த ‘சார்ள்ஸ்’ மதபீடத்தின் அனுசரணையுடன் காலை வாரிவிட்டான். கடைசி நேரத்தில் தனக்கு 500 படைவீரர்களையாவது தருமாறு கேட்ட ஜோனின் கோரிக்கையைக்கூட அவன் நிராகரித்ததுதான் உலகின் மிகப் பெரிய நன்றியைக் கொன்ற நயவஞ்சகம். அவன் இழந்திருந்த ஆட்சியின் முக்கால்வாசிப் பிரதேசத்தை அவனுக்கு மீட்டுக் கொடுத்த இந்த வீராங்கனைக்கு அவன் காட்டிய நன்றியுணர்வு அதுவாகும்.
ஜோன் சிறைப்படுத்தப்பட்டாள். சித்திரவதைக்குள்ளானாள். அவளை ஒரு பெண்ணாகவே அவர்கள் நினைக்கவில்லை. பாலியல் துன்புறுத்தல்களைத் தவிர்ப்பதற்காக சிறையில் அவள் ஒரு ஆணைப்போலவே உடை உடுக்க நேர்ந்தது. தன்னால் வாழ்ந்தவர்களே தனது உயிருக்கு உலை வைத்தார்கள் என்று புரியவந்தபோது புளுங்கிப்போனாள் ஜோன். வாழ்வின் முதல் தடவையாக அவள் கண்கள் நீரைச் சொரிந்தன. மீண்டும் சார்ள்சுக்கு ஒரு வேண்டுகோள் விட்டாள் அவள். ஆனால் அவன் அதைக்கண்டு கொள்ளவில்லை. அப்போதுதான் அவளுக்கு ஒரு உண்மை புலனாயிற்று. வீரம் என்பது போரில் மட்டுமல்ல, விவேகத்திலும், தன்னைச் சூழ்ந்திருக்கும் களத்தையும், நண்பர்களையும் கணிப்பதிலும் தங்யபிருக்கிறது என்பது. காலமறிந்து களமறிந்து செய்யும் காரியமே வெற்றி பெறும்.
(2) Gilies 20

எதிரியிடமிருந்து வெற்றியைப் பெற்றுக் கொள்வது மாத்திரமன்று தன்னையும் காத்துக் கொள்ளுதல் என்பதும் ஒரு தந்திரமான செயற்பாடு என்பதை ஜோன் உணர்ந்து கொண்ட போது அவளது நாட்கள் கணக்கிடப்பட்டுவிட்டன. ரோம் நகரத்துத் தலைமைக்குருவே அவளுக்கு தீர்ப்பு வழங்கும் நீதிபதியானான். அவனால் இவளுக்கு வழங்கப்பட்ட தண்டனை மிகவும் குரூரமானது. உலகத்தில் வேறு எந்தப் பெண்ணுக்கும் வழங்கப்படாதது. ரோம் மதப்பித்தர்கள் இவளைச் சூனியக்காரி என்றே வாதிட்டனர்.
1431 யூன் 30 ல் அந்தக் காட்டுமிராண்டித்தனமான படுகொலை நடந்தது. மக்கள் கூட்டிவைக்கப்பட்ட தெருச்சந்தியில் ஒரு தூணில் கட்டப்பட்ட நிலையில் உயிருடனே தீயிட்டுக் கொளுத்தப்பட்டாள் வீரமங்கை ஜோன். விடுதலையின் வெண்புறா வெந்தழலில் சாம்பலானதை உலகம் கண்டது. சரித்திரத்தில் இது ஒரு அருவருப்பான செயல் எனக் கூறப்பட்டிருக்கிறது. ஜோனின் மறைவுக்குப் பின்னும் 22 ஆண்டுகள் போர் தொடர்ந்தது. காட்டிக் கொடுத்தவர்கள் தம்முள்ளே மோதி அழிந்தார்கள்.
1452ல் அவளுக்கான இரங்கற் பிரார்த்தனைக்கு “ரோம் மதபீடம் இணங்கியது - கெளரவித்தது எனலாம். அவள் புனிதமானவளா? இறை அருள் பெற்றவளா என்ற ஆய்வு நடந்தது. 115 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 1458 யூலை 7ல் அவள் குற்றமற்றவள் தூய்மையானவள் என ஒப்புக் கொள்ளப்பட்டது. 1909 ல் பதவி பெற்ற பெனடிக்ட் XV என்ற என்ற போப்பாண்டவர் 1920 மே 16ல் ‘ஜோன் ஒவ் ஆர்க்கை’, ‘சென்ட் ஜோன் ஒவ் ஆர்க்” எனப் புனிதப்படுத்தினார். ஆக இந்த கன்னிவேங்கை அந்த மதத்தால் திருநிலைப்படுத்தப்பட 490 ஆண்டுகள் ஆவியாகக் காத்திருக்க வேண்டியதாயிற்று. இன்று ஜேர்மன் கத்தோலிக்க சர்ச்சுகளில் மிகப் பிரபலமான வணக்கத்துக்குரியவராக ஜோன் இருக்கிறார். - மதிக்கப்படுகிறார். துதிக்கப்படுகிறார்.
ஜோன் ஒவ் ஆர்க் என்ற உன்னதமான போராளி செய்த ஒரே ஒரு தவறு தன்னைச் சுற்றியிருப்பவர்களையும், களத்தையும் கணிக்காததுதான். விவேகம் அங்கே தடைப்பட்டு அங்கு வீரமும் வேகமுமே மேல் ஓங்கி நின்றன. தனது நிலத்தில் பெரும்பகுதியை மீட்டுத் தந்த ஜோனை, 7ம் சாள்ஸ் ஒரு சிறிய மனத்தாபத்துக்காகவும் மதத்துக்காகவும் கைவிட்டான். தனக்கு வேண்டியவன் என எண்ணிய ‘பர்காண்டி மன்னன் அவளை உள்ளே விட்டுத் தனிமைப்படுத்தி எதிரிக்கு உதவினான். ஜோன் என்ற
9ேவழி 2

Page 14
தேவதை காட்டிக் கொடுக்கப்பட்டிருக்காவிட்டால் பிரிட்டன் படுதோல்வியை அடைந்திருக்கும். போரிட்டு வெல்ல முடியாத “புனிதப்பெண்ணை’ மதநாமமிட்டு நாசப்படுத்தினர். ஜோனின் வாழ்வு வீரத்தையும் துணிவையும் மாத்திரம் நம்பி நடப்பவர்களுக்கு ஒரு ஆச்சரியமான பாடமாகிறது. வலிமையும் காலமும் அறிந்தமைபோல வெற்றியடைதற்கு தக்க இடமும் அறிந்து செயலாற்ற வேண்டும் என்கிறது ‘வள்ளுவம்'. "பகைவர்களை வெல்லக்கூடிய இடமறிந்து அவர்களிடமிருந்து தம்மைக்காத்துக் கொண்டு பக்குவமாய் செயற்படுவார்களானால் வலிமை இல்லாதவரும் வலிமை பெறுவர்; பகைவரையும் வெல்வர்” என்கிறது குறள். இதோ
“ஆற்றாரு மாற்றி யடுப விடனறிந்து போற்றார்கட் போற்றிச் செயன்”
(இடனறிதல் - குறள் 493)
கடலோரத்தில் நண்டுநடந்து கொண்டிருந்தது. மணலில் பதிந்த நண்டின் கால்தடத்தை அலை
அழித்துக் கொண்டே இருந்தது.
நண்டுக்கு ஒன்றும் புரியவில்லை.
ஒரு நாள் நரி கடற்கரை ஓரம் நண்டின் கால்தடம் இருக்கிறதா என்று தேடி அலைந்தது.
வளைக்குள் இருந்து ஒரக் கண்ணால் எட்டிப் பார்த்த நண்டுக்கு அலை தன் கால் தடத்தை அழித்த காரணம் இப்போதுதான் தெளிவானது.
அலையின் நட்பை அடிமனத்தால் போற்றியது நண்டு.
தனக்குள்ளேயே அது சொல்லிக்கொண்டது. ‘முன்பே காப்பான்
அன்பே நட்பு? )நன்றி. "காசி ஆனந்தன் கதைகள் - ܓܠ
9ேங்கில 20
 

கிழக்கிணி போக்குவரத்து
எஸ்.எச்.எம்.ஜெமில்
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கிழக்கு மாகாணப் போக்குவரத்து வசதிகள் எவ்வாறிருந்தன என்பதை அறிவது ருசிகரமான தகவலாகும்.
அக்கால அரச அதிபர்களின் வருடாந்த அறிக்கைகள், எஸ். ஒ.கனகரத்தினம் அவர்களால் எழுதப்பட்ட கிழக்கு மாகாண “LDLiss6ITL LDITGIL 660y Tss' (Monograph of the Batticaloa District), அன்று வாழ்ந்தோருடனான உரையாடல் என்பவற்றிலிருந்து பல தகவல்களைப் பெறமுடிகின்றது.
ஆங்கிலேயர் ஆட்சியின் ஆரம்பத்தில் கிழக்கு மாகாணத்தின் தலைநகராகத் திருகோணமலை இருந்தது.
1870 மே மாதத்தில் தலைநகர் மட்டக்களப்புக்கு மாற்றப்பட்டு அதன் முதல் அரச அதிபராக ஆர்.டபிளியூரி.மொரிஸ் என்பவர் பதவி ஏற்றார். 1960 களிலிருந்து மட்டக்களப்புக் கல்வித் திணைக்களம் இருந்த கட்டிடமே அரச அதிபரின் உத்தியோகபூர்வ இல்லமாக இருந்தது.
தலைநகரை மீண்டும் திருகோணமலைக்கே கொண்டு செல்ல வேண்டுமெனும் முயற்சிகள் ஓரிரு முறை மேற்கொள்ளப்பட்டனவாயினும் அவை வெற்றி அளிக்கவில்லை.
மட்டக்களப்பிலிருந்து மூன்று பிரதான வீதிகள் சென்றன. ஒன்று பதுளைக் கும் , மற்றொன்று வடகரை வீதியெனும் பெயரில் திருகோணமலைக்கும், பிறிதொன்று தென்கரை வீதியென கும்புக்கன் ஆறுவரையும் (மொனராகலையின் எல்லை) சென்றன.
நூற்றி மூன்று மைல் நீளமுடைய வீதி பதுளை வரைக்கும் சென்று அங்கிருந்து பதினெட்டு மைல்கள் பண்டாரவளை வரை சென்றது.
குதிரை வண்டியே இப்பிரயாணத்திற்குப் பயன்பட்டது. கொழும்பு செல்வோர் பண்டாரவளை வரை இவ்வாறு சென்று அங்கிருந்து புகையிரதத்தில் பயணத்தை மேற்கொண்டனர்.
9ேங்கிய 20

Page 15
கல்குடாவிலிருந்து நீராவிக்கப்பல் மூலம் கொழும்புக்குச் செல்லும் பிரயாண முறையும் வழக்கிலிருந்தது.
திருகோணமலைவீதி 84 மைல் தூரமுடையது. இடையில் ஏழு துறைகளைத் தோணி, வள்ளம், பாதை என்பன மூலம் கடந்து செல்ல வேண்டியிருந்ததனால் இதிற் பிரயாணம் செய்வது கஸ்டமாயிருந்தது.
கும்புக்கன் ஆறு வரையுமான தென்கரை வீதி நூற்றிரண்டு மைல் நீளமுடையது. மட்டக்களப்பிலிருந்து கோரைக்களப்பு வரையுமான 49 மைல்கள் கல்வீதியாயும், அங்கிருந்து நாவலாறு எனும் இடம் வரையிலான 23 மைல்கள் கிரவல் வீதியாயும், எஞ்சிய 30 மைல்கள் காட்டு வண்டிற் பாதையாயுமிருந்தன.
“கல்றோட்டு’ எனும் பொழுது தற்போதுள்ளது போன்று தார் வீதிகளல்ல. அவை பாரிய கருங்கற்களைப் பரவி அதன் மேல் சிறு கற்களைப் போட்டு அதற்கு மேல் களி கலந்த மணலைப் போட்டுஅழுத்தியிருப்பர்.
இன்னொருவகை அம்மிக்கல் போன்ற அமைப்பில் பாரிய துண்டுகளாகக் கருங்கல் வெட்டப்பட்டு பரவி அடுக்கப்பட்டிருக்கும். இத்தகைய வீதியொன்று காரைதீவுச் சந்தியிலிருந்து மாவடிப்பள்ளி வரை மிகச் சமீப காலம் வரை இருந்தது.
இவ்வீதிகளைப் போடவும் பராமரிக்கவும் பைனர்’ எனப்படும் இந்தியத் தொழிலாளர் வேலைக்கு அமர்த்தப்பட்டடிருந்தனர். அத்துடன் வீதியோரங்களில் ஆல், அரசு, வாகை, மருதம் போன்ற நிழல் தரு மரங்களை நடவும், அடைப்புக்கட்டிப் பாதுகாக்கவும், நீரூற்றவும் பராமரிக்கவும் தொழிலாளர் அரசினால் நியமிக்கப்பட்டிருந்தனர்.
கால் நடையாகவும், வண்டியிலும் பிரயாணம் செய்வோருக்கு இவை இதமான நிழலை வழி நெடுகிலும் வழங்கின.
கடந்த இரண்டு மூன்று தசாப்தங்களுள் தந்திக் கம்பிகளை இணைப்பதற்காக வீதியின் ஒரு புறமிருந்த மரங்கள் வெட்டப்பட்டன. மின்சாரக் கம்பிகளை இணைப்பதற்காக மறுபுறத்திலிருந்த மரங்களும் வெட்டப்பட்டு விட்டன.
இந்நாட்டின் இயற்கைச் சூழலுக்குச் செய்யப்பட்ட பாரிய அநியாயங்களில் இதுவுமொன்றாகும்.
26) Grisianists 20

மட்டக்களப்புக்கும் கும்புக்கன் ஆற்றுக்குமிடையே கிளை வீதிகள் மிக அரிதாகவே இருந்தன. கல்முனையிலிருந்து கடற்கரையிலிருந்த வாடி வீட்டுக்கு ஒரு கிளை வீதியும், இரு மைல் தொலைவிலுள்ள கிட்டங்கித்துறை எனுமிடத்திற்கு ஒரு கிளை வீதியும் இருந்தன.
அவற்றைத் தாண்டிச் சென்றதும் காரைதீவுச் சந்தியிலிருந்து சம்மாந்துறையூடாக இறக்காமத்திற்கு ஒரு வீதி சென்றது.
சம்மாந்துறையில் அதன் ஒரு கிளை பிரிந்து அம்பாறைக்குச் சென்றது. காரைதீவுக் கப் பாலி அரசடி எனினுமிடத்தில (தற்போதய அல்லிமூலைச்சந்தி) இருந்து மல்கம்பிட்டிவரை ஒரு வீதி சென்றது. சம்மாந்துறையூடான இறக்காமத்துப் பாதையுடன் இணைந்தது.
அக்கரைப்பற்றிலிருந்து சாகாமம் வீதியும், இறக்காமம் வண்டிப் பாதையும் பிரிந்து சென்றன.
“இரவுச்சாப்பாட்டின் பின் இரட்டை மாட்டுக் கூட்டு வண்டியில் சாய்ந்தமருதூரில் இருந்து புறப்படுவோம். வண்டியில் வைக்கோல் பரப்பி மெத்தை போன்றிருக்கும்.
அதன் மேல் பாய் விரித்திருக்கும். புறப்பட்டுச் சிறிது நேரத்தில் வண்டிக்காரன் உட்பட அனைவரும் நித்திரையாகி விடுவோம். மாடுகள் தம்பாட்டுக்கு நடந்து கொண்டிருக்கும். வண்டியின் கீழ் தொங்கும் ஹரிக்கன் லாம்பு மிக மங்கலான வெளிச்சத்தைப் பரப்பும், பட்டிருப்புத் தோட்டத்தடியில் மாடுகளைச் சிறிது நேரம் இளைப்பாறச் செய்துவிட்டு, மீண்டும் பயணத்தைத் தொடர்ந்து விடியற்காலையில் கல்லடித் துறையை அடைவோம்.
அப்போது கல்லடிப்பாலம் கிடையாது. அது 1930 ஆம் ஆண்டே கட்டப்பட்டது. காலைக் கடன்களை முடித்து அவ்விடத்திலேயே சாப்பிட்டு விட்டுத் தோணி மூலம் வாவியைக் கடந்து புளியந்தீவுக் கோட்டையடியில் இறங்குவோம்.
ஒல்லாந்தரினால் கட்டப்பட்ட இக்கோட்டையிலேயே கச்சேரியும் ஏனைய அரச அலுவலகங்களும் அமைந்திருந்தன. கச்சேரி அலுவல்களை முடித்துக்கொண்டு பிற்பகலில் தோணி மூலம் இப்பால் வருவோம்.
வண்டிக்காரன் அங்கேயே மீன் வாங்கி பயணத்தின்போது கொண்டுபோன
(27)tara of 20

Page 16
சமையற் பொருட்களைக் கொண்டு சோறு, கறி ஆக்கி வைத்திருப்பார்.
சாப்பிட்டு மீள் பயணத்தை ஆரம்பித்து அடுத்த நாள் அதிகாலை ஊர் அடைவோம்.’’ எனத் தாம் அக்காலத்தில் மேற்கொண்ட ஒரு பயணத்தைப்பற்றிப் பெரியவர் ஒருவர் குறிப்பிட்டார்.
இதே காலகட்டத்தில் கல்முனைக்கும் மட்டக்களப்புக்குமிடையேயான பிரதான போக்குவரத்துப் பாதையாக மட்டக்களப்பு வாவி விளங்கியது.
இப்பாதை ஒரு காலத்தில் சம்மாந்துறை வரை நீண்டிருந்தது. 15ம் நூற்றாண்டில் ஆறாம் பராக்கிரமபாகு மன்னனின் ஆட்சிக்காலத்தில் சுமாத்திராவிலுள்ள பாலம்பாங் எனும் இடத்திலிருந்து இலங்கை வந்து வாழ்ந்த ஆனந்ததேரரின் கூற்றுப்படி காசியப்ப மன்னன் நாட்டின் வடக்கு, மேற்கு, கிழக்கில் மூன்று துறைமுகங்களை அமைத்தான் எனவும், அவை வல்லிபுரம், களனி, சம்மாந்துறை எனவும் அறியக் கிடக்கின்றது.
எனவே சம்மாந்துறை நீண்ட காலத்திற்கு முன்னர் துறைமுகமாக இருந்திருக்கின்றது. சம்பன் என்னும் வகை வள்ளம் வந்தடையும் துறை எனப் பொருள்படும் இவ்வூர்ப் பெயரும் அதை நிலைநிறுத்தும்.
எனினும் இந்நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் கிட்டங்கியிலிருந்து சம்மாந்துறை வரையிலான வாவி, மண் அரிப்பினாலும் நாணற் புதர்களினாலும் மூடப்பட்டதினால் காலக்கிரமத்தில் உபயோகிக்க முடியாமற் போய்விட்டது.
கிட்டங்கித் துறை எனும் பெயர் ஒல்லாந்தர் காலத்தில் ஏற்பட்டது. அவ்வாட்சிக்காலத்தில் நெல், கொப்பரா முதலிய பொருட்களைச் சேமித்து வைப்பதற்கான கட்டிடமொன்றை பர்னாம் எனும் ஒல்லாந்தர் இவ்விடத்தில் நிறுவினார்.
அக்கட்டிடம் கிட்டங்கி எனப்பட்டது. அதையொட்டியே இவ்விடமும் கிட்டங்கித்துறை எனப் பெயர் பெற்றது.
மிகச் சமீபகாலம் வரை கல் முனையின் மேற்கேயமைந்துள்ள கிராமங்களுக்கும் கல்ஒயா குடியேற்றத் திட்டத்தின் சில கொலனிகட்கும் வாவியைக் கடந்து செல்ல இவ்விடத்தில் வள்ளங்களும் தோணிகளும் பயன்பட்டன.
(28) Grified 20

1975 ஆம் ஆண்டளவில் கிட்டங்கி - சவளக்கடை வீதியும், தாம்போதியும் வாவிக்கு குறுக்கே அமைக்கப்பட்டது.
வாவிப் போக்குவரத்தில் பாரிய அபிவிருத்தி ஒன்று 1891 இல் ஏற்பட்டது. அவ்வாண்டிலேதான் ஓ.எஸ்.டி.ஓகிரேடி என்பவர் “ஷாம்றொக்” (Shamrock) எனும் நீராவிப்படகுச் சேவையை ஆரம்பித்தார்.
ஒகிரேடி எனும் இவர் காரைதீவு, நிந்தவுர் ஒலுவில் ஆகிய இடங்களில் பாரிய தென்னந்தோட்டங்களை ஆரம்பித்து நடத்தியவர் ஆவார். இவரை கரடித்துறை எனவும் இவரது மனைவியை கரடியம்மா எனவும் இப்பிரதேச மக்கள் அழைத்தனர்.
இவரால் ஆரம்பிக்கப்பட்ட இப்படகுச் சேவை அக்காலத்தில் புரட்சிகரமாகக் கருதப்பட்டது. மணிக்கு 7 மைல் வேகத்தில் பயணம் செய்து மூன்றரை மணித்தியாலத்தில் இப்பயணத்தை முடித்தது. தினசரி காலையில் கிட்டங்கி யிலிருந்து புறப்பட்டு மட்டக்களப்பைஅடைந்தது. மாலையில் கிட்டங்கி மீளும். காலக்கிரமத்தில் ஸ்டான்லி கிரீன் என்பவர் 1907 இல் அலிஸ், பிரைல் ஆகிய இரு படகுகளை இப்பாதையில் சேவைக்கு விட்டார். a
மட்டக்களப்பின் தென் பகுதியிலிருந்து கண்டிப் பிரதேசத்துடனான போக்குவரத்து “தவளம்” மூலம் மேற்கொள்ளப்பட்டது. தவளம் என்பது காளைமாடுகளின் துணையுடன் செய்யப்படும் பிரயாணமாகும். பொருட்களைச் சாக்குகளில் கட்டி மாட்டின் முதுகில் இருபுறமும் தொங்கவிடுவர்.
ஒரு தவளத்தில் இருபதில் இருந்து நாற்பது வரையான மாடுகள் இருக்கும் அம்மாடுகள் காட்டினுாடாக ஒற்றையடிப்பாதையால் ஒன்றன் பின் ஒன்றாய் செல்லும். அவற்றின் கழுத்தில் கட்டப்படும் சகடை எனும் மணி பெரும் ஒசையை எழுப்புவதனால் வனவிலங்குகள் வெருண்டோடிவிடும்.
ஒக்கஸ்பிட்டி, வெல்லஸ்ஸ, பிபில போன்ற பிரதேசங்களினுடாகவே இக் கண்டிப் பயணம் நிகழ்ந்தது. கரையோரப் பிரதேசத்திலிருந்து உப்பு, கருவாடு, வெற்றிலை, சுண்ணாம்பு, புகையிலை முதலிய பொருட்களைக் கொண்டு செல்வர். மீண்டு வரும்போது குரக்கன், இறுங்கு, மிளகு, பாக்கு, பழவகைகள், சோளம், திணை, மண்டு, வற்றாளைக்கிழங்கு
29 Geisast 20

Page 17
என்பவற்றுடன் வருவர். வர்த்தகம் அனைத்தும் பண்டமாற்று முறையில் நடந்தது.
இத்தகைய மெதுவாக போக்குவரத்து முறைகள் இந்நூற்றாண்டின் முதல் மூன்று தசாப்பதங்களில் மெல்ல மெல்ல மாற்றமடைந்தன.
1910 ஆம் ஆண்டளவில் பைசிக்கிள் இப்பிரதேசத்தில் அறிமுகமாகியது. 1912இல் பஸ் ஓட ஆரம்பித்தது. கம்மல்துரை, சொளுக்கார், அலியார், தாஸ்பிரதர்ஸ், சைமன் முதலாளி, புஹாரி ஆகியோர் பஸ்சேவைகளை நடாத்தினர். திருகோணமலை புகையிரதப்பாதை 1927 மே 2ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 1928 இல் புகையிரதம் மட்டக்களப்பை வந்தடைந்தது. கல்லடிப்பாலம் 1930 இல் கட்டி முடிக்கப்பட்டது.
கிழக்கு மாகாணத்தின் போக்குவரத்து வசதிகளை அதிகரிப்பதில் அப் போதைய சட்ட நிரூபண சபை அங்கத் தினராயிருந்த ஈ.ஆர்.தம்பிமுத்துவின் பங்கு மிக முக்கியமானது.
இலங்கையின் ஏனைய பகுதிகளுடன் புகையிரத சேவையினால் மட்டக்களப்பை இணைத்தல் வேண்டும். மட்டக்களப்பு வாவிக்குக் குறுக்கே கல்லடியில் பாலம் அமைத்தல் வேண்டும் எனச் சட்ட நிரூபண சபையில் நிறைவேற்றப்பட்டு அடையாள நிதியும் ஒதுக்கப்பட்டது. இதற்கான வரைபடமும் தயாரிக்கப்பட்டது. மட்டக்களப்பிலிருந்து கடற்கரையோரமாக நிந்தவுர் வரையுமான பாதை அமைப்பதற்கான திட்டம் தீட்டப்பட்டுப் பாலங்கள், புகையிரத நிலையங்கள் அமைக்கப்பட வேண்டிய இடங்களும் வரைபடத்தில் அடையாளமிடப்பட்டன. உதாரணமாக, இன்றும் கல்முனைக் கடற்கரையருகே அமைந்துள்ள பொதுமராமத்து இலாகா அலுவலகம் முதலியன உள்ளடங்கிய பிரதேசம் ‘புகையிரத திணைக்களத்துக்கான நிலம் ’ என்றே ஆவணங்களில பதிவாகியுள்ளது. எனினும் மட்டக்களப்பிற்குத் தெற்கே புகையிரத சேவையை நீட்டும் பணி இன்றுவரை கனவாகவேயுள்ளது.
பொத்துவில் வரையான புகையிரதப்பாதை நீடிப்பு எப்போதாவது நிறைவேறுமா?
6 இக்கட்டுரை 1989 ம் அண்டு ‘சிந்தாமணி’ பத்திரிகையில் வெளிவந்து கட்டுரையாசிரியரின் ‘கிராமத்து இதயம்’ நூலிலும் (1995) இடம்பெற்றது.
9ேங்கில

பன்மொழிப்புலவர். த. கனகரத்தினம் கிரந்த எழுத்துக்களையோ பிற எழுத்துக்களையோா தமிழுடன் கலப்பது ஏற்றத்தகாது என்பது அறிஞர்கள் சிலரின் வாதமாகும். அந்த நோக்கில் மாதங்களின் பெயரை பின்வருமாறு தான் எழுதல் வேண்டுமென வரையறை செய்துள்ளனர். தை, மாசி, பங்குனி, சித்திரை என்றவாறு தமிழ் மாதங்கள் உள.கணிப்பு முறையில் ஆங்கில மாதங்களும் தமிழ் சிங்கள மாதங்களும் வேறுபடும். எனவே ஜனவரி என்பதைச் சனவரி என எழுதல் வேண்டும்.
பெப்பிரவரி - பெப்ருவரி LD மார்ச்சு ஏப்ரல் ஏப்பிரல்
(3D ($LD
ஜூன் சூன்/யூன் ஜூலை சூலை/யூலை ஆகஸ்ட் ஒகத்து செப்ரெம்பர் - செத்தெம்பர் ஒக்டோபர் - ஒத்தோபர் நவம்பர் நவம்பர் டிசம்பர் திசம்பர்
விஞ்ஞான மொழிக்கும் சாதாரண வழக்கிலுள்ள மொழிக்கும் வித்தியாசம் உண்டு. விஞ்ஞானமொழி நேரியதாக இருத்தல் வேண்டும். எளியதாக இருத்தல் வேண்டும். தருக்க ரீதியாக இருத்தல் வேண்டும், விஞ்ஞானச் சொற்கள் பிற மொழிகளிலே காலப்போக்கில் பிறந்தவை. அவை இயல்பாகப் பிறந்தவை என்று கூடச் சொல்லலாம். ஆனால், தமிழில் அவற்றைக் கொண்டு வரும்போது அவசரத்திற்காகப் பிறப்பிக்க வேண்டியிருப்பதால் “அவசரப் பிறப்பு’ ஆகிறது. இந்த அவசரப் பிரசவத்தில் பல்வேறு வகையான நுட்பச் சொற்கள் பிறப்பதும் உண்டு. அவரவர் ஆசை, விருப்பு வெறுப்புகளுக்கேற்பவும் சொற்கள் பிறந்து விடும். இதனால் இடர்ப்பாடுகளும் ஏற்படுவதுண்டு. உதாரணமாக Energy என்பதை ஒருவர் சக்தியென இன்னொருவர் Power என்பதையும் சக்தி எனக் கூறினால் விஞ்ஞானத்தை விளக்கத் தமிழ் தகுதியற்ற மொழியாகிவிடும். (Power என்பது வலு ஆற்றல் என அமையவேண்டும்.)
60ng Oasis 20

Page 18
எனவே தான் Energy என்பது சக்தி யானால் Power என்பது "வலு" என்றாக அமைதல் வேண்டும். இத்தகைய பிரச்சினைகளுக்கு அறிவியல் மதி திய நிறுவகம் இருத்தல வேணர் டுமென அறிஞர்கள் விதந்துரைக்கின்றனர். மேலும் கலைச் சொற்கள் தரப்படுத்தப்படலும் அவசியம்.
கால வளர்ச்சியில் தரப்படுத்தப்பட்ட ஒலிப்பெயர்ப்பு எழுத்துப் பெயர்ப்புக்கு விதிகள் கண்டுள்ளோம். Oxygen என்பதைப் பிராண வாயு, தீயகம், உயிரகம் என்ற சொற்களில் வழங்கி வந்தோம். ஆக்ஸிஜன், ஆக்ஸிசன் என்றும் எழுதி வந்தோம். இப்போது கிரந்த எழுத்துக்களைத் தவிர்த்து எழுத்து மயக்க விதிகளுக்கும் அமைய ‘ஒட்சிசன்’ என்று வழங்குகின்றோம். இது பெருவழக்கு பெற்றிருக்கிறதல்லவா? இற்றைக்கு நூறாண்டுகளுக்கு முன் கீறின் வைத்தியர் (1822 - 1884) ஒட்சிசன் என்பதை அக்சிதம் என அழைத்தார். அவ்வாறே Hydrogen என்பது ஹட்ரஜன், ஐட்ரசன் என வழங்கி வந்த காலம் போய் ஐதரசன் எனப் பெருவழக்குப் பெற்றிருக்கிறது. கீறின் வைத்தியர் இதனை வழங்கினார். ஆனால் தமிழ்ச் சங்கம் நீரகம் எனச் சென்னை அரசாங்கம் ஹைடிரஜன்’ என இலங்கை அரசு ஐதரசன் என வழங்குகினறது.
கந்தகை எனும் Sulphate சல்பேற்று என்றும் கந்தசை எனும் Suphite சல்பைற்று என்றும் கந்ததை எனும் Sulphide சல்பைட்டு என்றும் வழங்குகின்றன.
இம்முறையிற்றான் கலைச் சொல்லாகத்தில் ஆங்கிலச் சொற்கள் தமிழுருவம் பெறுதல் நிகழ்கிறது.
இவ்வகையான கலைச் சொல்லாக்கத்தை நோக்கும்பொது ஒரு விடயம் நமக்குப் புலனாகின்றது. ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழுருவங் கொடுத்தே தமிழகத்திலும் இலங்கையிலும் கலைச் சொற்களாக்கப் படுகின்றன. இதே கொள்கையைத் தான் நூறு ஆண்டுகளுக்கு முன்னே கீறின் வைத்தியரும் கையாண்டார். கலைச் சொற்களை ஆக்கும்போது இரண்டு அடிப்படைக் கொள்கைகள் அனுசரிக்கப்பட்டுள்ளன. ஒன்று சொற்கள் சுருக்கமாகவும் தெளிவாகவும், பொருள் பொதிந்தனவாகவும் இருத்தல். இரண்டாவது சொற்கள் தமிழோடு தமிழாய்க் கலக்கும் இயல்பினவாய் இருத்தல். இம்முறையில் வேற்றுமொழிச் சொற்களைச் சேர்த்துச் சொல்வளம் பெருக்குவோமாக.ப
9ேவழி

S స్థతో
சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் (2011 பேராளராகக் கலந்துகொண்ட எழுத்தாளர் æðaflgnæat-S.P. æaraðunugil B.AcHons) அவர்களுடன் ஒரு நேர்காணல்.
S LLTLLLLLT TLLTLL TsTTSTTLLLLLTLMS SSLTTLTS
9 உங்கள் வாழ்க்கை பற்றிய முக்கிய குறிப்புக்களைக்
கூறுங்கள்
வாவிக்கரையும் உப்புக்காற்றும், வயலும் வாருதியும் வரலாறு பேசுங் கோயில்களும் குளங்களும் வடிவழகுக் கலைகளும் வானளாவிய தென்னஞ் சோலைகளும் நிறைந்த மீன்பாடும் தேனாட்டின் திருக்கோயில் என்ற அழகிய கிராமத்தில் கள்வடியும் வெற்றிலைக் களுதாவளை அடிவந்த விஷவைத்தியர் அமரர் சின்னத்தம்பி பூபாலப்பிள்ளை அவர்களுக்கும், சுந்தரம்மாவிற்கும் ஐந்தாவாது மகனாகப் பிறந்தேன். திருக்கோயில் மெதடிஸ்த மிஷன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், தம்பிலுவில் மகாவித்தியாலயத்தில் மேற்பிரிவுக் கல்வியையும் மட்டக்களப்பு கல்லடி உப்போடை இராமகிருஷ்ண மிஷன் சிவானந்த வித் தியாலயத்தில் உபகாரச் சம்பளத்துடன் கூடிய கல்லூரிக்கல்வியையும் பெற்ற பின்பு பேராதனைப் பல்கலைக் கழகத்திலும் எனது பட்டப்படிப்பினை முடித்தேன். பின்னாளில் ஜேர்மனியில் மியூனிச் நகரிலுள்ள லும்விக் மக்ஷி மில்லியன் பல்கலைக்கழகத்திலும், கனடாவின் மொன்றியால் மாநகரிலுள்ள பிரசித்தி பெற்ற மக்கில் பல்கலைக்கழகத்திலும் பட்டப்பின் படிப்புக்கள் பெறும் வாய்ப்புக்களும் பெற்றேன்.
9ோழி 20

Page 19
காரேறு மூதூராம் காரைதீவில் சுவாமி விபுலானந்தர் பரம்பரையில் வந்த அதிபர் முருகப்பர் வீரக்குட்டியினதும் திருக்கோயில் ஏகாம்பரம் அழகம்மாவினதும் மகளாகிய கலாமணியைத் திருமணஞ் செய்து கோபி விநோபா, பகவத்கீதா, தேவிமனோகர் என்ற மூன்று குழந்தைகளுக்குத் தந்தையானேன். இலங்கையில் அரசாங்க எழுது வினைஞர் சேவையில் இணைந்து கூட்டுறவு, கமத்தொழில் கல்வித்திணைக்களங்களில் முறையே கொழும்பு, அம்பாறை, பேராதனை, கல்முனை, கண்டி ஆகிய இடங்களில் கடமைபார்த்தேன். 1976ல் வெளிநாடு சென்று மூன்று வருடங்களின் பின்பு மீண்டும் இலங்கை வந்து வாழைச்சேனை இலங்கை வங்கியில் இரண்டாண்டுகள் கடமைபார்த்து மீண்டும் வெளிநாடு சென்று கனடாவில் குடிவரவுத் திணைக்கள/அகதிச்சபை மொழி பெயர்ப்பாளராகவும், பின்பு கனடாவின் சண்லைப் தாபனத்தில் நிதி ஆலோசகராகவும் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றேன்.
அடிக்கடி இலங்கை வந்து செல்வேன். உடல் கனடாவில் இருந்தாலும் உயிர் நமது நாட்டில் இருப்பது போன்ற உணர்வோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
9 தமிழ் இலக்கிய உலகின் பிரவேசத்திற்கான முதற்படி
பற்றிய உங்கள் கருத்து.
தமிழ் இலக்கிய உலகின் பிரவேசம் என்னும் போது அது கொழும்பில் நானும் கவிஞர் காசிஆனந்தனும் கூட்டுறவுத் திணைக்களத்தில் கடமையாற்றும்போதுதான் ஏற்பட்டதெனலாம். அப்போது - அறுபது - எழுபதுகளில் - தமிழ் இலக்கிய உலகில் தரங்காணப்பட்ட தலைசிறந்த இலக்கியப்படைப்பாளிகளுடனும், கவிஞர்களுடனும் ஆர்வலர்களுடனும் பழகக் கூடிய ஒரு பொற்காலமாகவே கொழும்பு இருந்தது. அனைவரையும் கொழும்பில் சந்திக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏராளமாகவே இருந்தன. நானும் காசியும் நண்பர்களானபடியால் இருவரும் ஒய்வு வேளைகளில் இத்தகைய இலக்கியகர்த்தாக்களைத் தேடிச் செல்வோம் அல்லது அவர்கள் எங்கள் திணைக்களத்திற்கு வந்து அளவளாவுவார்கள்.
எழுபதுகளின் ஆரம்பத்தில் திருக்கோவில் திருஞானவாணி
முத்தமிழ் மன்றத்தின் செயலாளராக நான் இருந்தேன். அப்போது |

காசி ஆனந்தன் தலைமையில் திருக்கோவில் ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய முன்றலில் கடற்கரையில் ஒரு மாபெரும் முத்தமிழ் விழாவை நாணி ஏற்பாடு செய்தேனி . அப் போது “திருஞானவாணி” என்ற ஒரு மலரும் முதன் முதலாக வெளியிடப்பட்டது. அம்மலரின் ஆசிரியராக நானிருந்தேன். அத்தோடு அம்மலரில் என் கவிதை ஒன்றும் வெளியானது. இவ்விழாவிற்கு என் தமிழ் இலக்கிய நண்பர்கள் நிறையப்பேர் வந்து சிறப்பித்தனர்.
9 புலம் பெயரவும் அதனால் ஏற்பட்ட வாழ்க்கை மாற்றமும்
35)
இலக்கியத்தில் ஏற்படுத்திய தாக்கம் என்ன?
புலம்பெயர்ந்ததால் எனக்கு மட்டுமல்ல இலங்கைத் தமிழர்கள் அனைவருக்கும் வாழ்க்கையில் மாபெரும் மாற்றங்கள் ஏற்படுத்தியிருப்பது முழுக்க முழுக்க உண்மை. அதன் காரணமாக இலக்கியநடவடிக்கைகளிலும் கணிசமான மாற்றங்கள் ஏற்பட்டன. என்னைப் பொறுத்தளவில் புதிய உலகின் புதுக்கோணங்களும், கோலங்களும் பெரிதளவில் பாதிக்கவே செய்தன. இலங்கையில் இருந்தபோது கிடைத்த அந்தப் பொன்னான அறிமுகங்களும் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. எல்லாவற்றிற்கும் மேலாகப் போர்க்கால எழுத்துலகம் ஒன்று புலம் பெயர் நாடுகளில் படம் விரித்தாடியது. தமிழின் தரம் கூடக் குறையத் தொடங்கியது. இலக்கிய இலக்கண அறிவு குறைந்தவர்கள் ஏராளமானோர் புலம்பெயர் நாடுகளில் முளைத்தார்கள். ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூச் சர்க்கரை மாதிரியெனலாம். இத்தகைய ஒரு நிலையிருந்தாலும் ஒரு சில நல்ல தரமான இலக்கியப் படைப்பாளிகளும் இருக்கவே செய்தார்கள். போர்க்கால ஒரு பக்கச்சார்பான இலக்கியங்களோ விழாக்களோ எனக்குப் பெரிதாகப் பிடிக் காத காரணத்தால் அவற்றிலிருந்து விலகியிருந்தேன். “அறப்போர் அரியநாயகம்” என்ற நூலை நான் படிக்கின்றபோது எழுதியிருந்தேன். அப்போதிருந்தே அறந்தான் சிறந்தது என்று நினைத்து வாழுகின்றபடியால் இந்தப் புறங்கூறும் துறையில் அதிகநாட்டங்காட்டவில்லை ஆனால் ஒரேயொரு கவலையென்னவென்றால் வெளிநாடு வராமல் இலங்கையிலிருந்திருந்தால் இன்னும் மிகமிக அதிகமாகவே தமிழ் இலக்கிய உலகில் நனைந்திருக்கலாம். புலம்பெயர் கனடாவில் அநீத நுழைவு பல போராட் டங்களுக்கு மத்தியில்
Maišőfiosrf? 20

Page 20
முன்னெடுக் கப்பட வேணி டியிருந்தது. உதாரணமாகச் சொல்வதாயிருந்தால் உண்மைகளை மூடிமறைத்து எழுதத் தூண்டும் ஒரு கூட்டமும் எழுதி உண்மைகளை மறைக்கும் கூட்டமும் முப்பது ஆணிடுகளாக இலங்கையை விட வெளிநாடுகளில்தான் கூடுதலாக இருந்ததெனலாம்.
9 உங்களது ஆக்கங்களைப்பற்றி (நூலுருப் பெற்றவை)க்
கூறுங்கள்.
“அறப்போர் அரியநாயகம்” என்ற சிறிய நூலே எனது முதலாவது படைப்பு. மறைந்த மாபெரும் மதிப்புமிக்க தமிழ்த்தலைவர் RWV. அரியநாயகம் அவர்களது வாழ்க்கைக் குறிப்பு நூல். எழுபதுகளில் எழுதியது. இதே காலகட்டத்தில் வெளிவந்ததுதான் “திருஞான வாணி’ முத்தமிழ் மலர். திருக்கோவில் திருஞானவாணி முத்தமிழ் மன்றத்தின் பன்னிராண்டு நிறைவையொட்டி வெளியிடப்பட்ட மலராகும்.
அதைத் தொடர்ந்து அமரர் பேரறிஞர் கலாநிதி K.D செல்வராஜகோபால் (ஈழத்துப்பூராடனார்) அவர்களும் நானும் சேர்ந்து எழுதிய “மட்டக்களப்பு மாநிலத்தின் பண்டைய வரலாற்று அடிச்சுவடுகள்” என்ற வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய நூல். இது இராவண ஊழியிலிருந்து கண்டிக்காலம் வரையுள்ள மட்டக்களப்பு வரலாற்றுத் தகவல்களைப் பதிவு செய்வோருக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஏற்ற ஒரு ஆராய்ச்சி நூலாகும். இதன் இரண்டாம் பாகம் அச்சில் உள்ளது. முதலாம் பாகம் இலங்கையில் அன்புமணி அவர்களின் தலைமையில் வெளியிடப்பட்டது. கனடாவிலும் லண்டனிலும் வெளியிடப்பட்டது.
அடுத்துத் ‘தேரோடும் திருக்கோவில்” என்ற தொகுப்பு நூல் வெளிவந்தது. திருக்கோவில் பூரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் பற்றிய தகவல்கள் அடங்கிய நூல். அதிகமான கிழக்கிலங்கை மக்களுக்கு இக்கோவில் வரலாற்றுத் தொன்மை புரியவில்லை. கிழக்கிலங்கைக்கு ஒரு வரலாறு இருக்கிறதென்றால் அது திருக்கோவில் இல்லாமல் ஒருபோதும் இருக்காது. சிற்றரசன்
36) MariñGaasis 2o

வாழ்ந்த பகுதி, துறைமுகப்பட்டினம், ஈழத்துணவு ஏற்றுமதியான கந்தபாணத்துறை, தேரோடிய தேவாலயம், அழகன் முருகனின் திருக்கோயில்.
அண்மையில் (20.02.2011) எண் கவிதைகள் ‘கலி கிதாசன் கவிதைகள்’ என்ற பெயரில செங் கதிர் ஆசிரியர் த.கோபாலகிருஷ்ணன் அவர்களால் அறிமுகஞ் செய்து வெளியிடப்பட்டது.
இவை தவிர ஏராளமான கவிதைகள், கட்டுரைகள், கதைகள் என எழுதிப் பதி திரிகைகளிலும் வானொலியிலும் இறுவட்டுக்களிலும் வெளிவந்துள்ளன.
9 ஒரு எழுத்தாளராகப் பரிணமிக்கத் தூண்டுதலாக
இருந்தவர் அல்லது இருந்த காரணி எது?
இயல்பாகவே எழுதும் ஆற்றல் ஏற்படக் காரணமாயிருந்தவர்கள் எனது மனங்கவர்ந்த குருமார்கள் (ஆசிரியர்கள்) தான். குரு என்றதும் முதலில் என் கண்முன் தோன்றுபவர் அமரர் S.M. லீனா அவர்கள்தான். அவர் ஒரு தமிழ்க் கவிஞர். ஆங்கிலப் புலவர். சுவாமி விபுலானந்தரின் மாணவர். அவர் மீது எனக்கு அளவு கடந்த மதிப்பும் மரியாதையும் எப்போதுமே இருந்தது. இருக்கிறது. அதனாலோ என்னவோ அவரைப்பற்றியே “ஈழமணி” என்ற ஒரு பத்திரிகையில் (அறுபதுகளின் இறுதியில்) எழுதினேன். அவரைப்போலவே இன்னும் பல ஆசிரியர்களின் அறிவுச் சுடர் என் னைத் தாக்கவே நான் எழுதத் தொடங்கினேன். அத்தகையோரில் இளவாலையைச் சேர்ந்த நடராசா மாஸ்டர், ஏ.இ.கனகரத்னா, S. வன்னியசிங்கம், சி.கணபதிப்பிள்ளை போன் றோரும் பின்னர் சிவானந்தாவில் வித்துவான் பண்டிதர் வீ.சி.கந்தையா அவர்களது அறிவுட்டுந் திறனும், வழிகாட்டலும் என்னை ஒரு எழுத்தாளனாகவர மிகவுந் தூண்டியது. தொடர்ந்து பேராசிரியர் வித்தியானந்தன், கைலாசபதி, சிவத்தம்பி மற்றும் மகாகவி, குங்குமம்நாதன், கோவைமகேசன், சவாரித்தம்பர், சிவஞானசுந்தரம் போன்றோருடன் அளவளாவியபோதெல்லாம் நானும் எழுத வேண்டும் என்ற தாகம் ஏற்பட்டுக் கொண்டேயிருந்தது.
30 Givifioensitiâ 20N

Page 21
9 தமிழ் இலக்கிய உலகில் உங்களை அறியச் செய்த
உங்கள் ஆக்கம் எது?
1968ல் மட்டக்களப்புக் கிழக்கிலங்கைச் சனசமூக நிலையங்களின் கலைவிழா மலரான ‘கலைக்கதிர்’ என்ற நூலில் என்னுடைய ஆக்கமான “கிராமிய இலக்கியத்தில் நாட்டுப்பாடல்கள்? என்றகட்டுரை வெளியாகியது. இதற்குப் பல வாழத்துக்கள் கிடைத்தன. “கலைக்கதிர்” மலர்க்குழுவில் எனது குரு பண்டிதர் வித்துவான் வீ.சி.கந்தையா அவர்களும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திரு.கா.நடராசா B.A. அவர்கள் இம்மலருக்கு ஆசிரியராகவிருந்தார். நாட்டுப்பாடல்களைப் பற்றி மட்டக்களப்பு மக்கள் அதிகமாகவே அறிந்திருந்தார்கள் எனலாம். காடு. மலை, கடல், வயல், வாவியெங்கும் ஒலித்த மதுரமான நாட்டுப் பாடல்களில் நான் மயங்கித்திரிந்த காலமது. இவ் வினிய கானங்களைப் பாதுகாக்க வேண்டுமென்பது எனது விருப்பம். அதனால்தான் அக் கட்டுரையின் இறுதியில் “அருகிவரும் நாட்டுப்பாடல்களைப் பாதுகாக்குமாறு’ வேண்டி முடித்திருந்தேன்.
9 கனடாவில் உங்களது இலக்கியப்பணிகளைப் பற்றிக்
கூறக்கூடியது என்ன?
வட அமெரிக்காவிலிருந்து முதன் முதலில் வெளிவந்த சிற்றிதழான ‘தமிழ் எழில்’ என்ற சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவிருந்தேன். கனடா ஈழத்தமிழர் ஒன்றியம் என்ற அமைப்பின் துணைத் தலைவராகவிருந்து நிறையவே தமிழ்ப்பணி செய்தேன். தொடர்ந்து கனடாத் தமிழ் கலாசாரச் சங்கத்தின் தலைவராகவிருந்த காலத்தில் வட அமெரிக்காவில் முதன் முதலாக “வில்விஜயன்’ என்ற மட்டக்களப்பு வடமோடி நாட்டுக்கூத்தைப் பழக்கி மேடையேற்றினேன். அதற்கு நிறைந்த பாராட்டும் வரவேற்பும் கிடைத்தது. இந்த நாட்டுக்கூத்தில் எனது மூத்த மகன் கோபிவிநோபா அர்ச் சுனனாகவும் , சிறீசுக் கந்தராசா கிருஸ்ணராகவும், கொழும்பைச் சேர்ந்த செல்வி சசிதரி இராஜசந்திரா திரெளபதையாகவும் நடித்து அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுக் கொண்டனர்.
உலகத் தமிழ்ப் பண்பாட்டியக்கத்தின் கியூபெக் மாநிலத் தலைவராகவிருக்கும் நான் இவ்வமைப்பின் 21வது ஆண்டு
69tag. 20

நிறைவு விழாவை மொன்றியால் மாநகரில் வெகு விமரிசையாக நடத்தியபோது இலங்கையிலிருந்து பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களையும், தமிழ் நாட்டிலிருந்து டாக்டர்.ஜனார்த்தனம், இயக்குநர் பாரதிராஜா முதலானோரையும் வரவழைத்து உரை நிகழ்த்த வைத்தேன்.
கனடாவிலிருந்து வெளிவரும் உள்ளுர்ப்பத்திரிகைகளில் இடைக்கிடை எழுதுவேன். வாணிவிழா மலரிலும் வானொலியிலும் æ6sog5 Lu6ol-gsgsstGsmst. "THE PATH NOT TAKEN” 616örgo அமெரிக்கத் தேசியப் படிப்பகத்தின் கவிதைத் தொகுப்பில் "SINKINGDREAM” என்ற எனது கவிதை 1995 ல் சேர்க்கப்பட்டுள்ளது.
“திருக்கோவில் பக்திப்பாடல்கள்” என்ற இறுவட்டொன்றைத் தமிழகத்தில் வெளியிட்டிருந்தோம். இது கனடாவிலும் இலங்கையிலும் வெளியிடப்பட்டது. இதில் உள்ள பாடல்களை நானும் இரா.தெய்வராசனும், கோவிலூர் செல்வராசனும் எழுதியிருந்தோம். சென்னையிலுள்ள நண்பர் சதீஸ் அவர்கள் இசையமைத்திருந்தார்.
இதே போல நோர்வேயில் திரு.இராசிறீதரனால் வெளியிடப்பட்ட “வெற்றி நிச்சயம்” என்ற இறுவட்டிலும் “ulu TL umrGSLô ஈழமெங்கள் நாடு தானடி” என்ற எனது பாடல் ஒன்றும் உள்ளது. இவைபோல ஏராளமான இலக்கியப் பணிகளைக் கனடாவிலிருந்து செய்ய முடிந்தது மிகவும் மகிழ்வு தரும் விடயமே!
9 ஒரு கவிஞராக இன்னும் எதனை ஆக்க வேண்டும் எனக்
கருதுகின்றீர்கள்?
நான் ஒரு கவிஞராக மட்டும் இருப்பதெப்படி! மாறாக ஒரு கலைஞனாகவே இருக்க விரும்புகிறேன். காரணம் “நித்தமும் உழைப்போம்! முத்தமிழ் காப்போம்” இது எனது Moto, இயல், இசை, நாடகம் என்ற மூன்று துறைகளிலும் நான் ஈடுபட்டிருப்பதால் அப்படியே தொடர விரும்புகின்றேன்.
“கலி கிதாசனி கதைகள்” என்ற நூாலும் தொடர்ந்து. “வடபாயாசம்” என்ற நூலும் வெளிவரவிருக்கின்றன. இதில்
39 Oleští DASA 20

Page 22
“வடபாயாசம்” என்ற நூல் மட்டக்களப்பு மக்களுக்குக் காணிக்கையாக வெளிவரவுள்ளது. காரணம் இது முழுக்க முழுக்க அரசியல், சமூகத்தாக்கங்களைப் பற்றி எடுத்துக் கூறும் நூலாக விருப்பதே! “கல்கிதாசன் கவிதைகள்” 2ம்பாகமும் வெளிவரும்.
9 நீங்கள் விட்டுச் சென்ற உங்கள் பிரதேச இலக்கியத்தின்
தற்போதைய நிலை எவ்வாறு உள்ளது?
எனது பிரதேச இலக்கியம் வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது என்பதற்கு உங்கள் செங்கதிரும் ஒருசாட்சியாகவுள்ளதே! நான் நாட்டை விட்டுச் செல்லும் போது செங்கதிர் ஆசிரியர் திரு.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்குத் தமிழ் ஆர்வம், இலக்கிய ஆர்வம், சமூகப்பணி விருப்பம் - இப்படிப்பல நல்ல எண்ணங்கள் இருப்பதை உணர்ந்த நான் ஒரு காலத்தில் தமிழுக்கு இவர் ஏதாவது செய்யக்கூடும் என்று நினைத்திருந்தேன். அப்படியே நடந்துள்ளது.
அன்று கிராமிய இலக்கியமாகவிருந்த நமது பிரதேச இலக்கியம் இன்று நகர, மாநகர, இலங்கை, உலக இலக்கியமாகப் பரிணமித்துள்ளது. புதிய முகங்கள், புதிய பேனாக்கள், புதிய வார்ப்புக் கள் , புதிய பதிவுகள் மத்தியில் பழைய மூத்தபடைப்பாளிகளின் இலக்கியப் பங்களிப்பு இன்னும் பலமாகவே இருப்பதைப் பார்க்க மிக்க மகிழ்ச்சியாயுள்ளது. இஸ்லாமியத் தோழர்களின் இலக்கியப்பணி எண்ணற்றதாகவே தென்படுகின்றது. அன்புமணி, மட்டுநகர் முத்தழகு, எருவில் மூர்த்தி, ஈழத்துப்பூராடனார், காசி ஆனந்தன், மருதூர்க்கொத்தன், OK குணநாதன், கோவிலுார் செல்வராஜன், செங்கதிரோன், அக்கரை மாணிக்கம் , கலி லாறு சதிஸ் , திருமதி ராஜேஸ் வரி பாலசுப்பிரமணியம், செல்வி தங்கேஸ்வரி, அஜந்தா ஞானமுத்து, தம்பிலுவில் தயா, தம்பிலுவில் ஜெகா, நவநாயகமூர்த்தி, திருக்கோவில் கவியுவன், யோகா யோகேந்திரன், மகிழடிமகேசன், கவிஞர் இக்பால், அஸ்ரப் சிகாப்தீன், திருக்கோவில் தெய்வராஜன், கல்கிதாசன் இப்படி நம்பிரதேசத்தைக் கட்டிக்காத்த - கட்டிக்காக்க கரங்கள் உள்ளன.
GO AGIÑöfaasis 20

பாவேந்தன் செவியினிலே பகர்ந்திடுவேன் ஒரு சேதி !
- முறவுர் சந்திரசேகரன் சசிதரன்
பாய்வடன்றால் பாரதியின் நினைவே மோதும் - அவன் பரம்பரையும் பசுமைலயாடு அகத்தில் ஆடும் பட்ஸ்பான்றாற் பரம்பரையின் விதியே மாறும் - அதன் பரம்பலினால் பாருலகே ஒளிலபற்று உய்யும்
நாட்டினர் வநஞ்சினில் நல்லுணர்வு விபய்தவன் - ஒரு நாளினில் பன்னூறாய்ப் பாமழையும் லிபய்தவன் ஏட்டிலும், எழுத்திலும் எழுச்சிகள் செய்தவன்! - அவன் எழில் மிகும் காவியம் இயற்றியே மக்கள் மனங்கொய்தவன்
எங்கெங்கு காணினும் சக்தியா என்ற முழக்கம் - அது எட்டயபுரத்தானின் வாரிசின் முதல் முழக்கம் எங்கெங்கு வமாழிக் கிழிவு நிகழ்ந்தாலும் துடிக்கும் - அவன் இதயமே, தமிழ்', 'தமிழ்" என்றேதான் துடிக்கும்
புதுவையில் நின்றும் புறப்பட்டு வந்த குயில் - அந்தப் புரட்சிக்கவி பாடல்களை நீநிதமும் பயில் மதுவையும் விஞ்சிடும் மதுரத் தமிழோ மயக்குவமாயில் - இந்த மகிதலம் இன்று அவன் கவி மறந்தே கொள்ளுதபா துயில்
வபண்ணியம் போற்றிய விபரும் புலவன் - என்றாலும் வபண்ணியம் பேசுவோர்க்கு அவன் இன்று எளியன்! தன்வமாழி விவறியன் என்றிடும் விமர்சனம் 1 - ஏனோ தமிழ்ப் புலவன் அவன் வமாழியுணர்வு புரிந்திலர் - வரும் விசனம்
வமாழி அழகைப் படங் கொண்டு பதித்தொரு சித்திரம் - அவன் வமாழிப்பற்றை உதறிவிட்ட நவ உலக விசித்திரம் விழிகள் விற்றுக் காட்சி கொள்ளும் கலப்படம் என் விழியோ நிதம் தேடிப் பயிலுவதோ பாவேந்தன் கவித்துவம்
(4) îfilossi a

Page 23
மட்/தமிழ் எழுத்தாளர் சங்க அனுபவங்கள்
அன்புமணி)
1961 மே மாதம் அளவில் மட்டக்களப்புத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆரம்பமானது. இதை உருவாக்குவதில் மும்முரமாக ஈடுபட்டவர் திரு.எப்.ஜி.ஜெயசிங்கம் ஆவார். முதல் செயற்குழுவில் திரு.ரீ. பாக்கியநாயகம் தலைவராகவும் , திரு.எப்.ஜி.ஜெயசிங்கம் செயலாளாராகவும் பணி ஆற்றினர். எம்.எஸ்.பாலு, ம.த.லோறன்ஸ், நவம், தங்கன், கவிஞர் திமிலைத்துமிலன், கவிஞர் திமிலை மகாலிங்கம், திமிலைக்கண்ணன், ராஜபாரதி முதலியோர் செயற்குழு உறுப்பினராக இருந்தனர்.
அடுத்தவருடம் புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டபோது திரு.ரீ.பாக்கியநாயகம் தலைவராகவும் , நான் (அன்புமணி) செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டோம். மேற்குறிப்பிட்ட அனைவரும் செயற்குழு உறுப்பினராக அமைந்தனர்.
இதே குழுவினர் நிர்வாகம் சில வருடங்கள் எவ்வித மாற்றமுமின்றித் தொடர்ந்தது. அதன்பின் f.பாக்கியநாதன் போசகராகவும் அடியேன் தலைவராகவும் ந.ச. அருள்ராசா(தேனாடன்) செயலாளராகவும் அமைந்து மட்/தமிழ் எழுத்தாளர் சங்கம் செயற்பட்டது.
1970 வரை இச் சங்கத்தின் செயற்பாடுகள்மிகத் தீவிரமாக அமைந்தன. இதன் உயிர் நாடியாகச் செயற்பட்டவர் அமரர்.ரீ.பாக்கியநாயகம் தான். 1960 களில் மட்/தமிழ் எழுத்தாளர் சங்கம் மிகவும் பிரபலம் பெற்றது. மாதம் ஒரு நிகழ்வு , வாரம் ஒரு கருத்தரங்கு எனத் தொடர் நடவடிக்கைகளில் இச் சங்கம் ஈடுபட்டது.
வார நிகழ்வுகள் : ரீபாக்கியநாயகம் இலக்கியத் துறையிலும் பத்திரிகைத் துறையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஆங்கிலத்திலும் , தமிழிலும் சிறப்பாக எழுதவல்லவர். அவரது ஆலோசனையின் பேரில் வாரம் ஒரு முறை ‘எழுத்துலகில் நாம்’ என்ற தலைப்பிலான ஒன்று கூடலில் எமது சங்க உறுப்பினர்கள் சந்தித்தோம். திரு.ரீ.பாக்கியநாயகம் தீவிரமான
9ேங்கில 2.

பத்திரிகை , சஞ்சிகை வாசகர். இவர் அந்த வாரம் முழுவதிலும் வெளிவந்த சங்க உறுப்பினர்களின் ஆக்கங்களைத்தேடிப்பிடித்து அவை பற்றிய குறிப்புக்களை எழுதிக் கொண்டு வந்து உரையாற்றுவார்.
எமது சங்க உறுப்பினர்களில் சிறுகதை, கட்டுரை, கவிதை எழுதுவோர் பலர் இருந்தனர். அதனால் ஒவ்வொரு வாரமும் பல ஆக்கங்கள் விமர்சிக்கப்பட்டன.
கவிஞர் திமிலைத்துமிலன், அன்புமணி, ராஜபாரதி முதலியோருடைய ஆக்கங்கள் அடிக்கடி பத்திரிகைகளில் வெளிவரும். இவை பற்றி கலந்துரையாடும் வாய்ப்பை இந்த ‘எழுத்துலகில் நாம் தந்தது.
எமது சங்க உறுப்பினரான ம.த.லோறன்ஸ் கூட்டுறவு வங்கி உத்தியோகத்தராகவும் , பத்திரிகை நிருபராகவும் (வீரகேசரி) இருந்தார். அதனால் சங்க நிகழ்வுகள் உடனுக்குடன் பத்திரிகைகளில் வெளிவந்தன.
இந்த சந்திப்பின்போது பலர் பரிசுகள் பெற்றமையும் குறிப்பிடப்பட்டன. அந்த வகையில் பலரது பெயர்கள் இடம்பெற்றன. கவிஞர் திமிலைத் துமிலன் ஆனந்த விகடன் நடாத்திய கவிதைப்போட்டியில் முதற்பரிசு பெற்றார்(வழி தவறிய வண்டு). நவம் கல்கி நடாத்திய ஈழத்துச் சிறுகதை போட்டியில் முதற்பரிசு பெற்றார்டுநந்தாவதி). அன்புமணி இலங்கை கலைக் கழகத்தின் நாடகப்போட்டியில் முதற்பரிசு பெற்றார்(திரைகடல்தீபம்).
மாத நிகழ்வுகள்: மட்/தமிழ் எழுத்தாளர் சங்கம் 1960 இல் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களிடையே பேச்சு, கட்டுரைப் போட்டியை நடாத்தியது. இதன் பரிசளிப்பு மிகக் கோலாகலமாக நடைபெற்றது.
அடுத்தடுத்த மாதங்களில் பாரதி நினைவு தின விழா, விபுலானந்தர் நினைவு விழா முதலிய விழாக்களை நடாத்தியது. பல தழிழறிஞர் களுக்கான வரவேற்பு விழாவையும் சங்கம் நடாத்தியது.
கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜகந்நாதன், குழந்தைக் கவிஞர்
அழ.வள்ளியப்பா, கலையரசு சொர்ணலிங்கம், அன்பர் பூபதிதாசர் முதலியோர் இதில் அடங்குவர்.
9ேங்கில 20

Page 24
மட்/தமிழ் எழுத்தாளர் சங்கம் நடாத்தும் விழாக்கள் பெரும்பாலும் மட்டக்களப்பு நகர மண்டபத்திலேயே நடைபெறும். இவ் வைபவங்களில் பாடசாலைகளிலிருந்து கலை நிகழ்ச்சிகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டன. அதனால் இவ் வைபவங்களின் போது மட்/நகர மண்டபம் நிரம்பி வழியும். மண்டபத்தின் இரு புறத்திலுமுள்ள விறாந்தைகளில் மக்கள் திரண்டு நிற்பர்.
அநேகமான நிகழ்ச்சிகள் மாலை 6.30 - 9.00 வரை நடைபெற்றன. இந்த விழாக்கள் நிறைவடைந்ததும், சங்க உறுப்பினராகிய நாங்கள் எல்லாம் ஒதுங்கவைத்துவிட்டுப் புறப்பட எப்படியும் இரவு பத்துமணியாகிவிடும். மேற்படி விழாக்களில் பொங்கல் விழா, சித்திரைப் புத்தாண்டு விழா முதலியனவும் இடம்பெற்றன.
சில முக்கிய நிகழ்வுகள்: எமது செயற்குழு உறுப்பினர் வி.கி.இராஜதுரை (ராஜபாரதி) புகழ் பெற்ற கவிஞர். ராஜபாரதியும் யாழ்ப்பாணத்தின் பிரசித்தி பெற்ற மற்றொரு கவிஞரான யாழ்ப்பாணனும் கவிதைக் கடிதத் தொடர்பு கொண்டிருந்தார்கள். கவிஞரான யாழ்ப்பாணன் (வே.சிவக்கொழுந்து) பாடசாலை மாணவர்களுக்கான கணித நூல்களைத் தொடர்ந்து எழுதிப் புகழ்பெற்றவர். அதைவிடக் கவிஞர் யாழ்ப்பாணன் என்னும் பெயரில் அதிகம் புகழ் பெற்றவர்.
கவிஞர் ராஜபாரதியின் வேண்டுகொளின் பேரில் அவர் இந்தக் கடிதத் தொடர்பை “முலி லைக் கொழுந்து’ என்ற பெயரில் நூலாக வெளியிட்டிருந்தார். அந்த நாலின் அறிமுக விழாவை சங்கம் மட்/அரசடி தமிழ் மகா வித்தியாலயத்தில் நடாத்தியது. இது ஒரு முக்கிய நிகழ்வாகும்.
மட்டக்களப்பின் புகழ்பெற்ற பெண் எழுத்தாளர் மண்டுர் அசோகா, இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி “கொன்றைப்பூக்கள்’ (மட்டக்களப்பு எழுத்தாளரின் முதலாவது சிறுகதைத் தொகுதி என்று கூடச் சொல்லலாம்)இந்நூல் வேலணை வீரசிங்கத்தின் அனுசரணையுடன் வெளிவந்தது.
இந்த நுாலுக்கான அறிமுக விழாவை மட்/தமிழ் எழுத்தாளர் சங்கம் மட்/பொது நுாலக மண்டபத்தில் நடாத்தியது. அக் காலத்தில் சிறுகதை கவிதை நூல்கள் முதலியன மட்டக்களப்பில் வெளிவந்தது மிகமிக குறைவு. அந்த வகையில் மண்டுர் அசோகாவின் “கொன்றைப்பூக்கள்’
9ேங்கை

சிறுகதைத் தொகுதி அறிமுக விழா ஒரு முக்கியமான இலக்கிய நிகழ்வு எனக் கூறலாம்.
“கைராசி பாக்கி வசூல் இது ஒரு வேடிக்கையான நிகழ்வு. எழுத்தாளர் சங்கத்திற்கு நிதி சேர்ப்பதற்காக ஒரு சினிமா நிதி உதவிக் காட்சி நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான டிக்கட் விற்பனை வாழைச்சேனை வரை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது நான் B.N. 4003 என்ற "போட் விரிக்ட் காரை வைத்திருந்தேன். எனது தம்பி நல்லையாவுக்கு வாடகைக்கார் தொழிலுக்கு எனப் பெறப்பட்ட இக் காரை நான் எழுத்தாளர் சங்கத் தேவைக்கும் பயன்படுத்தினேன்.
மட்டக்களப்பிலிருந்து காலை 9 மணிக்குப் புறப்பட்டு வாழைச்சேனை வரை ஒவ்வொரு இடமாக டிக்கட்டுக்களை வழங்கி மாலை 31/2 மணி அளவில் மட்டக்களப்புக்குத் திரும்பினோம். நிதி உதவிக் காட்சி மாலை இம்பீரியல் தியேட்டரில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
ஆனால் அதன் பின் பல மாதங்கள் ஆகியும் விற்பனைப் பணப்பாக்கியைப் பெற முடியவில்லை. ஒவ்வொரு மாத செயற்குழுக் கூட்டத்திலும் “கைராசி பாக்கி வசூல்’ என்ற விசயம் பேசப்படும். ஆனால் பாக்கி வசூலில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. ஈற்றில் இவ் விடயத்தில் நேரத்தை செலவழிப்பது வீண் என எல்லோரும் ஏகமனதாகத் தீர்மானித்ததால் இவ்விடயத்துக்கு ஒரு முழுக்குப்போட்டு அவ் விடயத்தை நீக்கி விட்டோம்.
அந்தக் காலத்தில் நிதி உதவி காட்சிகள் மிகவும் பிரபலம். இப்போது அது பற்றிய பேச்சே இல்லை. எல்லோரும் பட்டுத்தேறி விட்டனர் போலும்.
வேறு சில நிகழ்வுகள்: அந்தக் காலத்தில் மட்டக்களப்பில் மிகவும் புகழ் பெற்றிருந்தவர் மட்/ மத்தியகல்லூரியின் இளைப்பாறிய அதிபர் S.V.O. சோமநாதர். ஒய்வு பெற்ற பின் இவர் கல்குடாவில் ஒரு தென்னந் தோட்டத்தில் அமைந்த ஒரு பழைய வீட்டில் குடியிருந்தார்.
அவரது அழைப்பின்பேரில் நமது செயற்கமு உறுப்பினர்கள் அவரது வீட்டுக்குச் சென்றிருந்தோம். அங்கே போனதும் எங்களுக்குப் பெரும்
9ேர். 2.

Page 25
அதிர்ச்சி. அது நமது வீடுபோல இருக்கவில்லை. எங்கும் பழைய பொருட்கள் நிறைந்திருந்தன. இவற்றிற்கு மத்தியில் அவர் உட்கார்ந்திருந்தார்.
மட்டக்கணப்பின் மகத்துவத்தை பாரம்பரிய நடைமுறைகளைத் தமது கட்டுரைகள் மூலம் உலகெங்கும் பரப்பியவர். அங்கே ஒரு அப்பாவியாக உட்கார்ந்திருந்தார். மட்டக்களப்பில் தான் கண்டு கேட்டு அறிந்த பல்வேறு பாரம்பரிய சிறப்புக்களை மிகவும் ஆர்வத்துடன் எடுத்துக் கூறினார். நமது எழுத்தாளர்கள் பொறுமை இழக்கும் வரை அவர் தொடர்ந்து பேசினார்.
அத்தகைய ஒரு மகா புருஷரின் எழுத்துக்களும் சேகரிப்புக்களும் 1978 புயலில் அழிந்து போனதாகப் பின்னர் அறிந்தோம்.
மட்டக்களப்பு மக்கள் அவரது ஆக்கங்களைச் சரியான முறையில் ஆவணப் பதிவாக்கவில்லை என்பதே எமது ஆதங்கம்.
s வரவு: ཛོད༽
? ہم عص , நூல்:- சிதைந்துபோன தேசமுக் தூர்ந்து போன மனக்குகையும்
(கவிதைகள்) ஆசிரியர்:- சண்முகம் சிவலிங்கம் முதல் பதிப்பு:- ஜூலை 2010 Y. இணைந்து வெளியிடுவோர்- தமிழியல், லண்டன்; காலச்சுவடு பதிப்பகம் 669, கே.பி சாலை நாகர்கோவில் - 629001 காலச்சுவடு பதிப்பக வெளியீடு:- 343 விலை - 175/= (இந்திய ரூபாய்)
9 நூல் வெளியீடு 19.03.2011 சனிக்கிழமை கல்முனை கிறிஸ்தவ இல்லத்தில் கல்முனை கலை இலக்கிய நண்பர்கள் ஏற்பாட்டில்
திருமதி.கமலாம்பிகை லோகிதராஜா தலைமை யில் \: V
 

6gni si. Brtoo
மீண்டும் ஒரு காதல் கதை
- திருக்கோவில் யோகா.யோகேந்திரன்
ஜயலத் அவர்களுக்கருகில் போய் ச் சேருவதற்குள் அந்தப் பெண்ணின் நீட்டிய கரங்களுக்குள் சிறைப்பட்ட குழநீதையை அவளர் வாரியணைத்துக் துாக்க அவளின் கழுத்தைக் கட்டிக் கொண்டு மகிழ்ச்சியால் திணறிச் சிரித்துக் குதுT கலித் தபடி அவளினி கணினத்தில் மாறிமாறி முத்தமிடுவதையும் குழந் தையின் அன்புத் திக்கு முக்காடலில் திகைத்துப் போன அவள் தன்னைச் சுதாகரித்துக்கொண்டவளாக அவளும் குழந்தைக்கு முத்தமிடுவதையும் கண்டு பிரமை பிடித்தவனாக சில நிமிடங்கள் மெளனித்த ஜயலத் சுய நினைவு வந்தவனாக அவர்களை நெருங்கினான். அவனுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை.
உயரத்தில் - நிறத்தில் - முகத்தோற்றத்தில் - சுருண்ட அடர்த்தியான கேசத்தில் அகன்ற விழிகளில் அப்படியே தன்மனைவியைப் போல குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட பெண்போல இருந்தாள் அவள்.
இப்படியும் இருக்குமா? ஒருவரைப்போல பலர் இருப்பதாகக் கூறுகின்றனர்.
u (5
9ேங்கி 20

Page 26
அவனும் அப்படியான உருவ ஒற்றுமையுள்ள சிலரைப் பார்த்திருக்கிறான். ஆனால் இப்படி அச்சு அசலாக யாரையுமே கண்டதில்லை. இரட்டைப் பிறவிகளில் கூட இந்தமாதிரி ஒரு ஒற்றுமை இருப்பது அபூர்வம் என வியந்தான் அவன்.
வித்தியாசம் என்றால் தன் மனைவி 'ஒசறி’ எனப்படும் சிங்கள முறையில் சாரி கட்டுவாள். இவள் சாதாரணமாக தமிழ் பெண்கள் கட்டும் விதத்தில் சாரி கட்டியிருந்தாள். அவள் பொட்டு வைப்பதில்லை. இவள் பொட்டு வைத்திருக்கிறாள். ஆக அவை புற வித்தியாசங்கள்தானே என எண்ணினான்.
அவர்களுக்கருகில் பேச நாவெழாது விக்கித்து நின்றவனை குழந்தையின் பேச்சு சுய நினைவுக்குக் கொண்டுவந்தது.
“தாத்தி! மே வலன்ன, மகே அம்மி அவில்லா” தந்தையிடம் தகவல் சொல்லிய குழந்தை,
“கோ அம்மே மல்லி பபா?” என்று கேட்டது. குழந்தையின் கேள்விக்கான பதில் தெரியாமலும், எதுவும் பேசாமல் நிற்கும் தந்தையின் மெளனம் புரியாமலும் குழப்பமடைந்தாள் அந்தப் பெண்.
அவன் தன் தவறை உணர்ந்தவனாக “என்னிய மன்னிச்சுக்கோங்க மேடம். கொளந்த பண்ண தப்புனால நாம கொஞ்சம் கொளப்பமாகிப்
போனது” என்றான் கொச்சைத் தமிழில்.
இவன் ஒரு சிங்கள மனிதனாக இருப்பான் என்பதை குழந்தை சிங்களம் பேசியதில் ஏற்கனவே அவள் யூகித்திருந்தாள்.
“குழந்தை தப்பேதும் பண்ணல. ஒரு ஆளைப்போல ஏழு பேர் இருப்பாங்களாம். அதுபோல நானும் உங்க மனைவியைப் போல
இருக்கிறேனாக்கும். அதுதான் உங்கள் மகள் குழம்பி விட்டாள்”
“ஆமா மேடம். ஒரே அச்சு. ரெட்டைப் பொண்ணுங்க போல”
9ேங்க 2.

“அப்பிடியா? அதுசரி ... நான் வர்ர போது ஏதோ எழுதிக் கொண்டிருந்தீங்களே என்ன அது?’ அவன் கையிலிருந்த தாள்களை சுட்டிக்காட்டிக் கேட்டாள். “அதுவா ..? அது வந்து ஒரு கதப். நாம ஒரு லேக்கக்கயெக். அப்படீன்னா கதப் எல்லாம் எழுதுற ஆளு.”
“என்ன கதை அது?”
“கதயப் பேரு நில் மகுதே ஹந்த நங்கலா’ “அப்படியானா நீலக்கடலின் சந்திரோதயம் என்று வரும் இல்லையா?”
“ஆமா. அதேதான் ஒங்களுக்கு நல்லாவே சிங்கள தெரியுது”
“கதைக்கப் பேச நல்லாவே தெரியும். ஆனா எழுத வாசிக்கத் தெரியாது”
“பரவா இல்லே, பேச முடிஞ்சது மிச்சம் நல்லம், நீங்க சிங்கள பேசறது. நாம தெமள பேசறது சண்டை போறது. ஒத்துமை வாறது” “அது சரிதான்’ “ஆமா. நீங்க எங்க இருக்கீங்க? ஒங்கட பேரு என்ன?”
“நான் மட்டக்களப்பு ஆஸ்பத்திரிக்குக் கிட்ட இருக்கிற சூரியா லேன்ல இருக்கிறன். பேர் ராதா. நீங்க எங்க இருக்கிறீங்க?”
“நாம கல்லடியில வீடு ஒன்னு எடுத்துக்கிட்டு இருக்கிறது. நம்ம பேரு ஜயலத். நமக்கு வின்சன்ட் ஸ்கூல்ல சிங்கள படிச்சுக் குடுக்கிற வேல. அது வந்து. டீச்சர் வேல”
“அப்பிடியா? உங்களைச் சந்திச்சது சந்தோசம். நீங்கபோய் எழுதுங்க. குழந்தை என்கூட கொஞ்ச நேரம் இருக்கட்டும்.’’ என்று கூறியபடி சற்றுத்
தூரத்தில் நிறுத்தியிருந்த தன் காரை நோக்கி குழந்தையுடன் சென்றாள் ராதா.
அவன் எழுதுவதற்காக தான் ஏற்கனவே உட்கார்ந்திருந்த இடத்திற்குச் சென்றான்.
குழந்தையுடன் கார் அருகில் சென்ற ராதா கார்க் கதைைவத் திறந்ததும் குழந்தை காருக்குள் தாவியது.
9ேர். 20

Page 27
காருக்குள் இருந்த சொக்லேற் ஒன்றை குழந்தைக்குக் கொடுத்தாள் ராதா, அது மழலையில் என்னவெல்லாமோ பேசியது. பெயரை கேட்டபோது "நிலுபபா” என்றது.
ராதாவுக்கு சிங்கள மொழியில் எழுத வாசிக்கத் தெரியாத போதும் ஆற்றொழுக்காகப் பேச வரும். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அவள் கற்றபோது அவளுக்கு நிறையவே சிங்கள நண்பிகள் இருந்தனர். தவிரவும் தனிச்சிங்களப் பிரதேசமான ராகம வைத்தியசாலையில் அவள் பணிபுரிந்ததால் அவளது சிங்களப் பேச்சுத் திறன் மேலும் கூடியிருந்தது.
ஆயினும் நிலு பேசிய மழலைச் சிங்களத்தின் அர்த்தம் அவளுக்குப் புரியவே இல்லை. இருந்தபோதும் நிலுவின் தாயார் பிரசவத்திற்காகத் தாய் வீடு சென்றிருப்பதையும் ஒரு தம்பிப் பாப்பாவை எதிர்பார்த்து இந்த நிலு அக்கா காத்திருப்பதையும் ஓரளவு ராதாவால் யூகித்துக் கொள்ள முடிந்தது.
ராதா சிறிது நேரம் குழந்தையுடன் பேசிக் கொண்டிருந்தாள். பேசிக்கொண்டிருந்தாள் என்பதை விட குழந்தை பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தாள் என்பதே பொருந்தும். பொலு மொலுவென்று அத்தனை பேசியது குழந்தை.
திடீரென 'அபி செல்லம் கறமுத” என விளையாட அழைத்தாள் நிலு.
ராதா சரியெனத் தலையசைக்க காரிலிருந்து இறங்கி குடுகுடுவென்று ஒடிச் சென்று தந்தைக்கருகில் இருந்த சிறிய பையை எடுத்துக் கொண்டு வந்து மணலில் கொட்டினாள் நிலு. சிறு சிறு பிளாஸ்டிக் பாத்திரங்கள் வந்து விழுந்தன. ராதாவும் அருகில் வரவே இருவரும் உட்கார்ந்தனர்.
மேல்பக்கமாக இருந்த காய்ந்த மண்ணை ஒதுக்கி விட்டு ஈரமண்ணை பாத்திரத்தில் நிரப்பி மண் பிட்டுச் செய்ய ஆரம்பித்த நிலு ராதாவுக்கும் ஒரு கிண்ணத்தைக் கொடுத்து தான் செய்வது போல செய்யுமாறு கூறினாள்.
ராதாவும் அதே போல மண்பிட்டுச் செய்யவே அதைப்பார்த்து கைகொட்டி ஆரவாரம் செய்தாள் நிலு
50 Geisslausuf 20

இருவரும் சிறித நேரம் மணலில் விளையாடிக்கொண்டிருந்தனர். நேரம் ஆறுமணியை நெருங்கிக்கொண்டிருந்தது. வீட்டிற்குப் போக நினைத்த ராதா குழந்தையை அழைத்துக்கொண்டு ஜயலத்திடம் சென்றாள்.
குழந்தையை அவனிடம் விட்டு விட்டு போக எத்தனித்தவளை அது போக விடுவதாக இல்லை.
"நிலு அபி பஸ்ஸ யமு” எனக் கூறியபடி குழந்தையைத் தூக்கிக் கொண்டு கடலோரத்திற்குச் சென்றான் ஜயலத்.
கரையில் நின்று அலைவரும்போது நிலுவின் கால்கள் நீரில் நனையுமாறு தூக்கிப்பிடிப்பதும் அலை போன பின் ஏந்தி வைத்துக் கொள்வதும் அவளுக்கு மிகவும் பிடிக்கும். அலை வரும்போது கூச்சலிட்டு ஆர்ப்பரிப்பதும் அலை போன பின் பொய்யாக அழுவதும் ஜயலத்திற்கும் பிடிக்கும். அந்த நிலையில் கரைக்கு வர விடவே மாட்டாள்.
அப்படிப்பட்ட நிலு அழுது திமிறிக் கொண்டு ராதாவை நோக்கி ஓடினாள்.
ஜயலத்திற்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அவனது சங்கடத்தைப் புரிந்து கொண்ட ராதா “ அதனாலென்ன மிஸ்டர் ஜயலத் , நீங்களும் என்னோட வாங்க உங்கள வீட்ல விட்டிட்டு போறன்’ என்றாள்.
வேறு வழியின்றி அவன் குழந்தையுடன் காரில் ஏறிக்கொள்ள கார் புறப்பட்டது. மிகக் குறைந்த வேகத்தில் காரை ஓட்டிச் சென்ற ராதா
“எங்கே சார் வீடு” என்று கேட்டாள்.
“கல்லடிப்பாலம் வாரத்துக்கு முன்னால நிப்பாட்டுங்க. நாம அப்பிடியே நடந்து போக ஏலும்.”
“ஏன் சார் நான் உங்க வீட்டுக்கு வரக்கூடாதா. வீட்டுல கொண்டு விடுறன். இடத்தைச் சொல்லுங்க”
“இல்ல ஒங்களுக்கு கரச்சல் தானே? அதுதான். ஆ. இந்த ரோட்டுதான். இதால திரும்பினா சரி”
650polisi... a .

Page 28
கிழக்குப் பக்கமாக செல்லும் ஒரு கிறவல் பாதையை அவன் காண்பிக்க கார் திரும்பியது.
கார் போய்க்கொண்டிருக்கும் போதுஇடையிடையே குழந்தைதான் பேசிக் கொண்டேதே தவிர அவர்கள் எதுவும் பேசவில்லை. கொஞ்சம் கூட வித்தியாசம் இல்லாமல் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட உருவம் போல தன் மனைவியின் சாயலில் இருக்கும் இந்தப் பெண் சினிமாக்களிலும் கதைகளிலும் வருவதுபோல இரட்டைப் பிறவிகளாக இருப்பார்களோ. ஒருத்தி தமிழ் வீட்டில் வளர மற்றவள் சிங்கள வீட்டில் வளர்ந்தவர்களோ? என்றெல்லாம் பலவாறாகச் சிந்தனை செய்து கொண்டு வந்தான் ஜயலத்.
ராதாவோ வேறு விதமாகச் சிந்தனை செய்தாள். ஜயலத்தின் மனைவி குழந்தை பெற்றுக் கொண்டு வந்ததும் திடீரென்று ஒரு நாள் அவள் முன்னாள் வந்து நின்று அசத்த வேணும். இது பற்றி ஜயலத் அவன் மனைவியிடம் சொல்லாமலிருக்க மாட்டான். சொன்னாலும் பரவாயில்லை. நேரில் தன்னைக் காணும் போது எத்தனை த்ரில்லாக இருக்கும். மனசுக்குள் கற்பனை செய்து ரசித்தாள்.
“இதுதான் நம்ப வீடு” அவன் காட்டிய ‘கேற்றடியில் கார் நின்றது.
அவளுக்கு நன்றி கூறிய ஜயலத் காரிலிருந்து இறங்கி முன் சீற்றில் இருந்த குழந்தையைத் தூக்க கைகளை நீட்டினான். அது ராதாவையும் பிடித்து இழுத்தது. கீழே இறங்கும் படி கேட்டது. அவனுக்கு மேலும் சங்கடம்.
“உங்க மகள் விடமாட்டா போலிருக்கே? எனக்கும் நேரமாகுது. சரி பரவாயில்லை” எனக் கூறியவளாக காரிலிருந்து இறங்கினாள். அவள் காரை விட்டு இறங்குவதைகு கண்ட ஜயலத் முன்னே சென்று கதவைத் திறந்தான்.
சிறிய வீடுதான். அவனுக்குப் பின்னால் வீட்டிற்குள் நுழைந்த ராதா அப்படியே விக்கித்துப் போய் பேச நாவெழாது நின்றாள்.
62a.
(கதை தொடரும். )

“தொழிலாளர் வாழ்க! தொழிலாளரின் உரிமைகளில் கை வையாதே தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!...”
என்ன வீரக்குட்டியண்ணே, றோட்டு நீளத்துக்கும் என்னவோல்லாம் கத்திக் கொண்டு சனமெல்லாம் கூட்டம் கூட்டமாகப் போகுதுகள்? இண்டைக்கு என்ன விசேசமாம்!
“அடே நல்ல தம்பி உனக்கு ஒரு இழவும் தெரியாதுபோல. இணி டைக்கு உலகத் தொழிலாளர் தினமெலுவா!” “அதுக்கேன் தொண்ட கிழியக்கத்திப் போறாங்க!” “நல்லதம்பி சித்திரவருசம் வந்தா நாமெல்லாம் பலகாரம் செய்யிறல்லையா முறுக்குச்சுடுறல்லையா? துதல் கிண்டிறல்லையா? அதப்போலதான் தொழிலாளர் தினம் வந்தா இப்படியெல்லாம் சுலோகங்கள் எழுதின கார்ட்போர்ட் மட்டைகள தூக்கிப் பிடிச்சுக் கொண்டு கத்திக்கத்தி ஊர்வலம் போவாங்க. இந்த ஊர்வலத்தில போறவங்க கொஞ்சப் பேருக்கு மேதினத்திட தாப்பரியம் உன்னப்போலதான் ஒண்டும் தெரியா! போனவருசமும் உனக்கிட்ட நான் இதப்பத்திச் சொன்னனான்தானே. மறந்துபோயித்துபோல கிடக்கு. அடே நல்லதம்பி அந்தநாளையில அமெரிக்காவில தொழிலாளர்களெல்லாம் ஒய்வொழிச்சல் இல்லாம நீட்டுக்கும் ராப்பகலா வேலசெஞ்சாங்க. ஒருநாள்கூட ஒய்வே இல்ல. அதனால தொழிலாளர்கள் எல்லாரும் சேர்ந்து எங்களுக்கு எட்டுமணிநேரம் வேல செய்ய அனுமதிக்க வேணுமெண்டு முதலாளிமாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்துவேலநிறுத்தம் செய்தாங்க. இதனால ஆத்திரம் கொண்ட முதலாளிமாரெல்லாம் பொங்கி எழுந்தாங்க. எண்டாலும் தொழிலாளர் போராட்டத்த அடக்க முடியாமல் பொயித்து. கடசியில ஒண்டுக்குமேலாம ராணுவத்தக் கொண்டு தொழிலாளர்கள சுட்டுத்தள்ளினாங்க. தொழிற்சங்கத் தலைவர்களைப் புடிச்சி மறியலூட்டுக்க அடச்சாங்க. அப்பயும் தொழிலாளர்கள் சவுக்கல்ல. போராட்டம் முத்திவெடிச்சி பெரிய பிரளயமாகப் பொயித்து. கடசியில முதலாளிமார்கள் இறங்கிவந்து தொழிலாளர் கேட்டபடி குடுத்தாங்க. இது நடந்தது 01.05.1886 ம் ஆண்டெண்டு நினைக்கிறன். அந்த நினைவாத்தான் இண்டைக்கு நம்மட ஆக்களும் ஊர்வலம் போறாங்க. அதுக்குப் பிறகு கூட்டம் போட்டு கன்னா பின்னாண்டு ஏசித்தள்ளுவாங்க. வாவன் நாமளும்போய் என்ன சொல்றாங்கெண்டு முஸ்பாத்தியாக் கேட்டுப்பாப்பம்!”
“என்ன! ஏலாதா! நீயும் ஒரு தொழிலாளிதானேடா! இதில போய் மினக்கெட்டா உன்ட தொழில் கெட்டுப் போகும். மறுகா பொஞ்சாதி ஊட்டில சோறும் தரமாட்டாளா? அப்பசரி. நான்மட்டுமாச்சிலும் போய் என்ன கதைக்கிறானுகளெண்டு கேட்டுத்து வந்து நாளைக்கு விளாசித்தள்ளுறன்.”
9ேர். 20

Page 29
ஈழத்து மூத்த சிறுகதை எழுத்தாளர்கள் தங்களுக்குப் பிடித்த தாங்கள் எழுதிய கதைகளை இங்கே தருகிறார்கள்.
யாழ் இளம் எழுத்தாளர் சங்கம் 1960 களில் அகில இலங்கை ரீதியில் நடத்திய சிறுகதை போட்டியில் பரிசு பெற்றதன் மூலம் எழுத்துலகில் காலடி பதித்தார்.
இவருடைய படைப்புகள்:
சிறுகதைகள் : 165
நாவல்கள்
(1) விடிவு கால நட்சத்திரம்
(2) மனநதியின் சிறு அலைகள் (3) மனித நிழல்கள் (பரிசு பெற்றது அச்சில் வெளிவரவில்லை) (4) அன்னையின் நிழல் (சிறுகதை தொகுப்பு ) (5) பலே பலே வைத்தியா (சிறுவர் கதை )
தொடர் கதைகள் : 16
1. சலன கோலங்கள் 2. இளமை வசந்தங்கள் 3. றெஜினா 4. கனவு அலைகள் 5. இரு நதிகள் 6. பறந்தாலும் விடமாட்டேன் 7. பிரியமுடன் ராஜி 8. இன்னிசைதேவதை
9.
அன்புள்ள சுகன்யா
நூல் விமர்சனங்கள் : 600 க்கும் மேல் பத்திரிகையில் தயாரித்தளித்துள்ள பக்கங்கள் கலாசாரம், இலக்கிய உலகம் , கலையமுதம் இலக்கியச்சாரல் (கலை இலக்கிய அம்சங்கள்) அரசியல், உப கண்டம், உலகத்திரை ( இலங்கை இந்திய உலக
9ேர். 20
 
 

அரசியல் விவகாரங்கள்) அரசியல் கட்டுரைகள் - கலை இலக்கிய விமர்சனங்கள் என ஏராளமான படைப்புகள் வானொலி நாடகங்கள் அரசியல் மற்றும் இலக்கிய உரைகள் வானொலியிலும் தொலைக்காட்சி சேவையிலும் ஆற்றியுள்ளார்.
எழுதிய பத்திரிகைகள், சஞ்சிகைகள்: வீரகேசரி , தினகரன், சிந்தாமணி, ஈழநாடு, சுடரொளி, வசந்தம், மல்லிகை, ஞானம், சிரித்திரன், தீபம், கணையாழி, செம்மலர், மேகம், தமிழினி
புனை பெயர்கள்: அக்கினிக்குஞ்சு, சீமான் சஞ்சாரி, மேக வர்ணன், இளவேனில், மின்மினி
தொழில்: வீரகேசரி ஆசிரிய பீடம் (விவரண ஆசிரியர் ) மற்றும் சுடரொளி ஆசிரிய பீடம்
ஈடுபாடு: எழுத்து, கலை இலக்கிய கருத்தரங்குகள், அரசியல் மற்றும் இலக்கிய உரைகள்
சீமான் சஞ்சாரி, அக்கினிக்குஞ்சு ஆகிய புனை பெயர்களில் எழுதிய நூற்றுக்கும் அதிகமான கட்டுரைகள் நகைச்சுவை பாணியில் எழுதப்பட்ட விசய அளவில் காத்திரமான விமர்சன கட்டுரைகளாகும். ஏராளமான ரசிகர்களின் பாராட்டினைப் பெற்றுவரும் இந்த பத்தி எழுத்துக்கள் போலித்தனமான சிந்தனையாளர்களின் தாக்குதல்களுக்குள்ளாகி வருகின்றது.
“மனித நிழல்கள்” வீரகேசரி பத்திரிகை ஸ்தாபனம் அகில இலங்கை ரீதியில் நடத்திய நாவல் போட்டியில் முதலாம் பரிசை பெற்றுக் கொண்டபோதும் 1983ம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரத்தில் அதன் பிரதி நெருப்புக்கு இரையானது துரதிஸ்ட மாகும். அதன் காரணமாக அச்சாகும் பாக்கியத்தை நல்ல நாவல் இழந்தது.
வீரகேசரி பத்திரிகை ஸ்தாபனத்தில் விவரண ஆசிரியராக பணியாற்றிய விஜயன் ஆசிரிய தலையங்கப் பகுதியின் பெறுப்பாசிரியராகவும் கலாசாரம் மற்றும் அரசியல் ஆகிய பகுதிகளையும் தொகுத்து வழங்கி வந்தார்.
தனக்குப் பிடித்த தனது கதையாக வீரகேசரி (08.09.1996) யில் வெளிவந்த ‘கசக்கப்படும் அரும்புகள்’ எனும் கதையைத் தருகிறார்.
9ேர். 2.

Page 30
கசக்கயிUடும் அரும்புகள்
கே.விஜயன்
அப்பொழுது தங்கமணிக்கு எட்டு வயதிருக்கும். அப்பனின் கையினைப் பிடித்து தன் சூம்பிய காலினை இழுத்து இழுத்து தவளைப் பாய்ச்சலுடன் வேகமாக நடந்து பஸ் ஏறி கொழும்பு வந்து ஒரு வீட்டில ஐந்து வருடங்களை வேலைக்காரியாகக் கழித்து இன்று * மறுபடியும் மலைநாட்டிலிருக்கும் லயன்
காம்ராவை நோக்கி
பஸ் வேகமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. ஜன்னலருகில் அமர்ந்திருக்கும் அவள் முகத்தை கூதல் காற்று ஊதித்தள்ளுவது போல் விசுக்கிவிட்டு கொண்டிருக்கும் அந்திவானின் சிவப்பு வெளிச்சத்தில் இருள் நிழல்களாக மலைச்சரிவுகளின் தரிசனம். கண்ணிமைகளில் அசைவில்லை.
'அம்மாவைப் பார்க்கலாம்’என காதருகில் ஒரு முணுமுணுப்பு ஒரு நினைவு அலைக்கழிப்பின் பிரமையாக்கும்.
மலைச்சரிவுகளில் பஸ் வண்டியின் சறுக்கலோட்டம்.
அந்த நினைவுகள் அடிக்கடி வரும். தெருவோரம் போகும் நேரமெல்லாம் அம்மா நினைவில் பதிவாள்.
கீரை விற்றுக் கொண்டிருப்பாளே அந்த மூக்குத்திப் பெண். அவளைக் கண்டதும் மனம் பேதலிக்கும். அலைமோதும்.
SILöLOT!
நெஞ்சு கதறும். அவள் அம்மாவைப்போல அச்சொட்டாகவிருப்பாள்.
மெலிந்த முகம் , பெரிய கண்கள், வெற்றிலை சாறல் வடிக்கும் சிவப்பு
உதடுகள், மூக்குத்தி வெளிச்சம் காட்டும் நாசி. அட அம்மாதான் அம்மாவே தான். மனம் அடித்துக் கொள்ள ஆவலால் உடம்பு நடுங்கும்.
() () () 56) PåGloss 2o
 

கொழும்பில் பெரியவீடு, வீட்டில் எல்லோருமே நல்லவர்கள். ஐயா, அம்மா அந்த டிரைவர் அன்புக்கு குறைவில்லை. அதுபோல் வேலைக்கும் பஞ்சமில்லை. கால்களை இழுப்பதும் நடப்பதும் ஏதாவது செய்து கொண்டுமிருப்பதும், ஒயாது கடைக்குப்போவது, தோட்ட வேலை, மலசலகூடம் கழுவுவது இப்படி பலப் பல.
சாப்பாட்டிற்கு குறைவில்லை. மிஞ்சுவதெல்லாம் அவர் வயிற்றுக்குள்தான்.
சம்பளம் கிடைத்தது. ஒரு கள்ளனைப் போல் அப்பன் அதனை எடுத்து பொத்திக் கொண்டு நைசாக நழுவிவிடுவான்.
ஆவல், ஆர்வம், அம்மாவைப் பற்றிய நினைவுகள் உந்தித்தள்ள அப்பாவைப் பார்க்க கால்களை இழுத்து இழுத்து வருவாள்.
வெளியே வந்தால் அப்பாவை காண முடியாது. அவர் அங்கிருந்து நகர்ந்து நாழிகைகள் கடந்து விட்டிருக்கும். மறுபடியும் கால்களின் இழுப்பாட்டுடன்.
வேகமாக “கேட்டருகில் வந்தால் கொஞ்சம் தொலைவில் தெருவைக் கடந்து போய்விட்டிருப்பார்
அப்பாவைக் கண்ட நாட்களும் உண்டு அப்பொழுதெல்லாம்.
“ஏலே! என்ன உருப்படியா ஒரு வேலையும் செய்ய மாட்டியாமே. உரிச்சுப்புடுவேன். தோலை உரிச்சுப்புடுவேன். அம்மா ஐயா எல்லார் கிட்டயும் மருவாதியா நடக்கணும் தெரிஞ்சுதா?”
என உறுமலொன்று பாய்ந்து வர கரிக்கட்டைபோன்று கறுத்த மெலிந்த கையொன்று நீண்டு வந்து ணங் ணங் கென கன்ன வெலும்பில் ஒரு சுண்டு சுண்டும்.
‘அம்மா’. நினைவு வலியும் கன்ன வலியும் இணைந்து ஒரு வேதனை அழுகை எழும்பும்.
அது எதனையும் செவிக்குள் நுழைத்து மனதில் சுமக்காமல் அப்பா என்ற அந்த கறுவல் மனிதன் மறைந்து விடுவான்.
எசமானி மோசமானவர் அல்ல. அன்பானவர்தான். எப்பொழுதோ ஒரு நேரம் சட்புட்டென கத்துவார். அவ்வளவுதான்.
எசமான் சூரியன் மாதிரி. வருவார், போவார், அவர் எண்ணமெல்லாம் கணக்கு வழக்குகளில் சதா பணம் சம்பந்தமான நினைவுகளுடன் உருளுவது வாழ்க்கையானவர். பக்தியில் பழுத்துப் போனவர் அத்திபூத்தாற்போல் அன்பான சில வார்த்தைகள் எப்பொழுதாவது பேசுவதுண்டு.
Oேங்கிக 20

Page 31
“LibLDT LITTais85" (8LuTa56OOTLDT? ” “sed Lib! sən Lib!” தங்கமணி பேச முடியாமல் தலையாட்டுவாள்.
தலையாட்டுதலில் மகிழ்ச்சி பொங்கிப் பிரவாகிக்கும். கண்கள் நட்சத்திர மணிகளென ஒளிர்வு பெறும்.
“தீபாவளி வரட்டும்”
“s lub! Lib'
அது அம்மாவின் காதில் விழுந்து விட்டதாக்கும்.
அவ்வளவுதான் அறைக்குள் ஐயாவை அவள் மிரட்டுவாள். “என்ன தீபாவளி அது இதுன்னு தங்கமணியை கொழப்புறீங்க. அதுக்கு இங்க என்ன கொறைவா இருக்கு. சும்மா இருக்கிற புள்ளைய அது இதன்னு எதையாவது சொல்லி சீண்டிக்கிட்டிருக்கிறதே உங்களுக்கு வேலையாப் போச்சு.”
அத்துடன் ஐயாவின் நினைவு அறுந்துவிடும். எனினும் என்றாவது ஒரு நாள் மறுபடியும் அப்பன் வருகிற பொழுது அந்த நினைவு வந்தவராக அடடா தங்கமணியை தீபாவளிக்கு அனுப்பாமல் விட்டிட்டமே. சரி கொஞ்சம் பணம் கூட கொடுத்து அப்பனோடு ரெண்டு நாள் அனுப்பி வைப்போம். பச்சப்புள்ளதானே. அம்மாவோடு கொஞ்சம் இருந்திட்டு வரட்டும். என மனதிற்குள் மனித நேயம் நெருட அப்பனிடம் சொல்லி அசட்டுதனமாகச் કfીiILITit.
அப்பனோ சர்ப்பம் தீண்டியவனாகக் குதிப்பான் “ஜயய்யோ! என்னங்க ஐயா! குட்டி வேலை செய்யுரா இல்லியா. கொன்னுபடுவேன். அவ அங்கே போய் ஆத்தாவுக்கு என்ன செஞ்சுட போரா. உங்க காலடியில கெடந்து சவமேனு வேல செஞ்சிக்கினு இருந்தா நானு அவ ஆத்தா ஏதோ அரைச்கஞ்சியாவது குடிச்சிட்டு கிடப்போம்.”
என படபடவென அலறலோடு சொல்வான்.
கதவருகில் எசமானியம்மா வந்து நிற்பாள். கோபம் கொண்ட முனிவர்களுடையதைப்போன்று கண்கள் நெருப்பினை உமிழும். “என்ன சொல்லியும் இந்த மனுஷனுக்கு ஏறுதில்லையே.”
என பற்கள் நறநறக்க அங்கலாய்த்துக் கொள்வார். தங்கமணியின் அருமை எசமானிக்கல்லவா தெரியும், இத்தனை நாடகத்தையும் இன்று கண்கள் கண்டு விட்டன. நெஞ்சிற்குள் கல்செருகிக் கொண்டாற்போல் இறுகிவிட
பொழுது முருங்கைக் கொப்பிலிருந்து சளாரென சிட்டுக் குருவிகள் சிறகடித்துப் பறந்தன. பட்சிகள் வான் கடலுக்குள் ஒரு புள்ளியாயப் அமிழ்ந்துவிடும் வரை மடல்களில் அசைவில்லை.
69tai

மலைச் சரிவுகளில் நீரோடைகளில் மண் வெளிகளில் தேயிலைச் செடிகளின் இடைவெளிகளில் கால்களை இழுத்து ஓடிட சின்னான் , வேலன், தெய்வானை , மீனாட்சி இப்படியொருகூட்டம் சிட்டுக்குருவிகளாக ஒட்டமாகவோடி கூச்சிலிட்டு ஆர்ப்பரித்துச் செல்வதில் மனமும் கண்களும் இலயித்துக் கிடக்கின்றன.
“தங்கா!”
எவரோ அழைப்பது போல எசமான் குரல்தான். நினைவு கரைந்து எழுந்து நடந்த பொழுது, ஆமாம் எசமான்தான் கடைதிறக்க போய்விட்டாரே. மறுபடியும் ஏன் வந்தார்.
இல்லை இல்லை அவள் நினைத்தமாதிரி எசமான் அல்ல. அவர் எப்பொழுதோ போய் விட்டிருந்தார்.
தங்கா எசமானியின் படுக்கை அறை அருகில் வந்து நின்றாள்.
அது சாத்திக் கிடக்கிறது. மெதுவாகத் திறந்தாள்
() () ()
நகருக்குள் இருள் இலேசாகக் கனத்துவிட்ட வேளையில் பஸ்வந்து நின்றது.
தேயிலைச் செடிகளினூடாக நடந்த பொழுது அப்பன் தலையில் குட்டுகளைச் சொரிந்தவாறே முனங்கிக் கொண்டே வந்தான்.
“ஏலே! அந்த அம்மா ஒரு நாளும் உன்னை கூட்டிப்போக சொல்லமாட்டாங்க. இன்னைக்கு ஏன் அவ்வளவு அவசரமாக கூட்டிப்போ
தங்கமணியின் கண்களில் மருட்சி தெரிந்தது. அப்பன் இன்னும் அதிகமாக குட்டுவானோ என்ற பயத்தில் கால்களை எட்டி எட்டி இழுத்து நடந்தாள்.
வீட்டுவாசல் அருகில் வந்தபொழுது இருள் கனத்து விட்டது. அம்மா குப்பி லாம்பு வெளிச்சத்தில் என்னவோ இடித்துக்கொண்டிருந்தாள்.
என்ன அதிசயம். தங்கமணி இல்லே வந்திருக்காஎன துடிதுடித்துவிட்ட அவள் மகளை அணைத்துப்பிடித்துக் கொண்டாள். கண்ணிர் முத்துக்கள் மாலையாக வருவழிக்கலாயின.
“உம்! செல்லப்பிள்ளை கட்டிப் பிடிச்சுக்கோ. முத்துன கிறுக்கி இவ.
59 üsseusta

Page 32
இவள கொன்னு இந்த மலைச்சரிவிலே தள்ளிப்புடனும்” அப்பன் எரிச்சு விழுந்தான்.
“உம் உம்! சும்மா இருங்க. என் புள்ளைய பார்த்தே எத்தின வருஷமாச்சு.” பெற்றவளின் கண்ணிர் நிற்கவில்லை.
“ஏலே ஒனக்கு விசயம் தெரியுமா? என்னது?” அப்பன் அம்மாவின் காதில் எதனையோ சிசுகிசுத்தான்.
“அந்த வீட்டுடிரைவர் பயலோடு இந்த சின்ன சிறுக்கி கன்னாயின்னாவென நடந்து கொள்கிறநேரத்திலே எசமானியம்மா கண்டுட்டா. அதுதான் அனுப்பி வச்சிட்டாங்க.”
‘அம்மாவின் குடலே அறுந்து விழுந்தது'
“அடிப்பாவி மகளே!”
() () 0
நடுச்சாமமாக விருக்கக்கூடும்
ஆழ்ந்தநித்திரையில் இலயித்துக் கிடந்த தங்கமணி திடுமென விழித்துக் கொண்டாள்.
குப்பி லாம்பு எரிகிறது. அம்மா சுவரில் சாய்ந்தவண்ணம் யோசனையில் ஆழ்ந்து கிடக்கிறாள்.
தங்கமணி மறுபடியும் கண்களை மூடினாள். ஆனால் சீ.சீ. மீண்டும் அந்த நிகழ்ச்சி கனவாக வருகிறது.
யாரோ அழைப்பதுபோன்று ஒசை கேட்டு தங்கமணி எசமானியின் படுக்கையறை கதவைத்திறந்த பொழுது டிரைவரும் அம்மாவும் அலங்கோல நிலையில். சிறுமி தங்கமணி உருண்டாள். உளறினாள். எழுவதற்கு கடுமையாகப் பிரயத்தனப்பட்டாள்.
அவள் திமிறியெழுந்து விழித்துப் பார்த்தபொழது முகமெங்கும் முத்து முத்தாக வியர்வைமணிகள் வருவிக்க அம்மா கண்கள் அசைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
அந்தக் கண்களில் ஏதோ உண்மையறிந்த மலர்ச்சி தெரிகிறது.
(யாவும் கற்பனை)

silaisijy uäsi
நோ க்கல்
இந்த இதழில் “நோக்கல்’ என்ற புதிய பகுதியினை அறிமுகஞ் செய்கின்றோம். நூல் விமர்சனங்களே இப்பகுதியில் இடம்பெறும். எமது வேண்டுகோளை ஏற்று இப்பணியினைச் செய்ய ‘விசுவாமித்திரன்’ ஒப்புக்
கொண்டுள்ளார். விசுவாமித்திரன் என்னசொல்கிறார் என்பதை அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
“நமது ஆக்க இலக்கிய விமர்சனத்துறையானது முதிர்ந்த விமர்சகர்கள் ஓரிருவருடன் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. விமர்சனத்துறைக்குப் புதிய இரத்தம் பாய்ச்சப்படல் வேண்டுமென்று யாரும் சிந்திப்பதாக இல்லை. செங்கதிரோனைப் போன்ற ஒரு சிலர் மாத்திரம் இலக்கியத்தைத் தலையிலி சுமந்து கொண்டு வியர்வை துடைக்க நேரமில்லாமலி அலைந்து திரிகின்றார்கள்.”
“அஸ்வாமித்திரன் மகன் இஸ்வாமித்திரன் மகன் விஸ்வாமித்திரன் என்ற எனது மூன்று தலைமுறைப் பெயரை அண்மையிலிதான் ‘விசுவாமித்திரன்’ என எண்னை மாற்றிக் கொணர்டேன். அதன் மூலம் இரண்டாம் விசுவாமித்திரன் என எண்னை நானே பிரகடனம் செய்து கொண்டேன். பெயர் மாற்றம் தொடர்பாக செங்கதிரோனுடன் கதை கொடுத்தபோதுதான் விமர்சனப் பணியை ஒப்புக் கொள்ள வேண்டியதாயிற்று.”
“ஆக்கலி உர்ை பணி நோக்கலி எண் பணி. நான் வரித்துக் கொண்ட கொள்கையிது. நன்னூலார் காலத்து விமர்சனம் இந்தக் காலத்துக்கு ஒத்துவராது. ‘விமர்சனம் ஒரு படைப்பை வாழ வைக்க வேண்டும்’ என்பதுதானர் விசுவாமித்திர வாய்ப்பாடு. அதுதான் என் சுயமும் கூட. அதை அடியொற்றியதாகவே செங்கதிரினர் ‘நோக்கலி’ என்ற விமர்சனப் பகுதி அமையும். ஒரு படைப்பாளி தனது சிருவுர்டியை வெளிக்கொணர எத்துணை அலீலலிகளைச் சந்தரித்திருப்பான என்பதைப் புறந்தள்ளிவிட்டு வித்துவச் செருக்குடன் ஒரு படைப்பை நோக்குதலி என்பாற்பட்டதலில. நலிலவற்றைத் தூக்கிப் பிடிப்பேனர். அலிலாதவற்றைத் தாக்கி
(6) Goiásfaasis 2o

Page 33
அடிப்பேன். அது எனக்குக் கை வந்த கலை, மேடைகளில் நான் செய்த விமர்சனங்களாலி மேலெமும்மி அரியாசனத்துக்குச் சரியாசனம் போட்டு உட்கார்ந்தவர்களும் உண்டு. முகம் சுழித்துப் போனவர்களும் உணர்டு. விசுவாமித்திர அறிமுகத்தின் ஒரு துளிதான் இது.
விசுவாமித்திரன் யார் என்பதை அறிந்து கொண்டீர்கள். இந்த இதழில் *எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களின் அறிவாக்கங்கள்’ என்ற முதலாவது விமர்சனம் இடம்பெறுகின்றது. ‘நோக்கல்’ என்ற இப்பகுதி பற்றியும் விசுவாமித்திரனின் விமர்சனப் பார்வை பற்றியும் உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறோம். எழுதி அனுப்புங்கள்.
தங்கள் படைப்புகளின் விமர்சனங்களை செங்கதிரிலி எதிர்பார்ப்போர். இரண்டு பிரதிகளை எமக்கு அனுப்பிவைக்கவும்.
- ஆசிரியா
நூல் : “எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களின் அறிவாக்கங்கள் ஆசிரியர்: எஸ்.எல்.சியாத் அஹமட் விடயம்: நூல் விபரப் பட்டியல்
zšíř
இலங்கைப் பாராளுமன்றத்தின் உதவி நூலகராகக் கடமை புரிபவர் எஸ்.எல்.சியாத் அஹமட் அவர்கள். நூலக சங்கத்தின் கற்கை நெறிகளுக்கான விரிவுரையாளர். தந்தைவழி நுால கருமி கூட. இவர் தனது நுாலக விஞ்ஞானவியல் தொழில்துறை அனுபவத்தை முதலீடாக்கி எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களின் அறிவாக்கங்கள்? என்ற தலைப்பில் விபரப் பட்டியல் நூல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். 208 பக்கங்கள். குமரன் புத்தக இல்லத்தின் வெளியீடான இந்நூலுக்குப் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் ஆசி வழங்கியுள்ளார்.
எளிமையான ஆனால் பொருத்தமான அட்டை கொண்ட இந்நூல் எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களின் ஆற்றலிலக்கியத்தினதும் ஆக்க இலக்கியத்தினதும் தகவல்கள் அனைத்தினதும் மொத்த வெளிப்பாடு எனலாம். அரிதான இப்பணிக்காக நூலாசிரியரைப் பாராட்டுதல் தகும்.
இந்நூலானது எஸ். எச். எம்.ஜெமீல் அவர்களின் தகவல்களை பின்வரும் எட்டுத் தலைப்புகளில் பட்டியலாக்கியுள்ளது.
9ேங்கி 20
 

01) நூல்கள் - 30
02) வெளியீட்டுரைகள் - 47
03) கட்டுரைகள் - 116
04) பேச்சுக்கள் - 187
05) வானொலி உரைகளும் கலந்துரையாடல்களும் - 42
06) தொலைக்காட்சி - 6
07) ஆய்வுகள் அறிக்கைகள் - 08
08) ஜெமீல் பற்றியும் அவரது நூல்கள் பற்றியும் பிறர் - எழுதியவை - 38
இவற்றை விட ஜெமீல் அவர்களின் வாழ்க்கைக்குறிப்புக்கள் வெளிநாட்டுப் பயண விபரங்கள் வெட்டியெடுக்கப்பட்டு பகுக்கப்பட்டு தொகுக்கப்பட்டு ஆண்டுரீதியாக அல்பங்களாக்கப்பட்டு ஜெமீல் வசம் உள்ளதான செய்தியும் நூலிற் கிடந்தது.
நூலாசிரியர் தனது பதிப்புரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். “மேற்போந்தவற்றிலிருந்து தயாரிக்கப்பட்ட இவ்வறிவாக்க விபரப்பட்டியலின் மூலம் வேறு பல தகவல்களையும் நாம் பெறக்கூடியதாகவுள்ளது. அநேக எழுத்தாளர்களின் நூல்கள் பற்றிய விபரங்கள், காலத்துக்குக் காலம் நாட்டின் பல பாகங்களிலும் நடைபெற்ற விழாக்கள், கல்முனை ஸாஹிறாக் கல்லூரி பழைய மாணவர் சங்கம், இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம் மற்றும் முஸ்லீம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சு என்பன வெளியிட்ட நூல்களின் தரவுகள், அவை தொடர்பான விழாக்கள் போன்ற இன்னோரன்ன விடயங்களையும் இந்நூல் தருகின்றது.”
(02)
இஸ்லாமியத் தமிழ் அறிஞரும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சின் முன்னாள் செயலாளருமான எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் பின் அரைப்பகுதியில் எழுத்துப் பணியை ஆரம்பித்தவர். இன்றுவரை ஆரவாரமில்லாமலும் அலட்டிக் கொள்ளாமலும் தனக்கெனத் தனி வழியொன்றினை அமைத்து அப்பணியில் அகலக் காலூண்றி நிற்கும் கல்விமான். இம்மாதம் மலேசியாவில் நடைபெறவுள்ள இஸ்லாமியத் தமிழ் எழுத்தாளர் மகாநாட்டின் இலங்கை முகவரி என அடையாளம் காணப்பட்டவர். இலங்கையின் மூத்த முஸ்லிம் எழுத்தாள
9ேர். 20

Page 34
ஜாம்பவான்களில் ஒரிருவரைத்தவிர ஏனையோருக்கு இனியவர்.
2010 வரையான இவரின் ஆக்க இலக்கிய - ஆற்றலிலக்கிய வெளிப்பாடுகளிள் விபரங்கள் அனைத்தையும் எதுவும் விடாமல் மிகக் கவனமானத் தொகுத்து ‘எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களின் அறிவாக் கங்கள்’ என்ற தலைப்பில் விபரப்பட்டியலாக இந்நூல் வெளிவந்துள்ளது. எழுத்துத் துறை சார்ந்த பாரிய இப்பணி நூலாகக் கனிந்தள்ளமை அனைவருக்கும் பெருமையும் முன்னுதாரணமும் எனலாம்.
எஸ்.எச.எம்.ஜெமீல் அவர்கள் எழுதிய நூல்களின் எண்ணிக்கை தொடர்பில்(பக்VII, பக்-33) சரிபார்க்கப்படாமை, அவர் குடும்பம் பற்றிய இன்னுமொரு நூலும் உணர்டெனக் குறிப்பிடப் படுகின்றமை, ஆசியுரையில் பேராசிரியர் கா.சிவத்தம்பி நூல் பற்றி எதுவும் குறிப்பிடாமை, எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களின் அனுபவம் தொடர்பிலான குறிப்பொன்றினைப் பெற்றுப் பிரசுரிக்காமை என்பன போன்ற எதுவும் இந்நூலின் கனதியை எவ்வகையிலும் குறைத்து விடவில்லை.
நூலாசிரியரின் பதிப்புரை பின்வருமாறு முடிவடைகின்றது. “இத்தகைய ஓர் அறிஞரின் அறிவாணி மையை வெளிப்படுத்தும் இந்நூல் அனைவருக்கும் பிரயோசனமாயிருக்குமென எதிர்பார்க்கிறேன்.”
(03)
வரலாற்றில் வாழ்தல் என்பது எல்லோருக்கும் எளிதான ஒன்றல்ல. தன் வாழ்வியல் எச்சங்களை பிறருக்கும் பயன்தரும் முறையில் வெளிப்படுத்தும் இயலுமை கொண்டவர்களால் மட்டுமே அது சாத்தியம். எஸ்.எச்.எம். ஜெமீல் அவர்களுக்குச் சாத்தியமாயிற்று என்பதும் ‘எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களின் அறிவாக்கங்கள்’ என்ற விபரப் பட்டியல் அதன் ஒரு காட்டி என்பதும் பின்னமற்ற உண்மையாகும். எம்முள் இருக்கும் இன்னும் சிலரும் இவர்பாங்கிற் பணிசெய்து எதிர்காலத் தலைமுறையினருக்கு செய்திகளை வழங்குதல் நம்கடன்.
- 2ம் விசுவாமித்திரன்
6) Rússlausrâ 2Cu

“செங்கதிர்’ ஆண்டுச் சந்தா : ரூ.1000/-க்குக் குறையாத இயன்ற அன்பளிப்பு
* "செங்கதிர் இன் வரவுக்கும் வளர்ச்சிக்கும் அன்பளிப்புச் செய்ய
விரும்பும் நலம் விரும்பிகள் (உதவும் கரங்கள்) தாங்கள் விரும்பும் தொகையை ஆசிரியரிடம் நேரில் வழங்கலாம்.
அலிலது
* மக்கள் வங்கி நகரக்கிளை), மட்டக்களப்பு, நடைமுறைக் கணக்கு
இல . 13100158588996 க்கு வைப்பிலிடலாம். People's Bank (Town Branch) Batticaloa. Current account No.: 113100 138588996 - For bank deposit
அலிலது
காசுக்கட்டளை அனுப்பலாம். Post Office, Batticaloa - For money orders
* காசோலைகள்/காசுக்கட்டளைகளைதகோபாலகிருஸ்ணன் எனப்
函 Glujba, Cheques/Money orders in Favour of TGopalakrishnan

Page 35
நான் அகத்திய மாமுனிவன் பேசுகிறேன். இலங்கையின்
மாபெரும் நகைச்சுவை ஏடா கோருகின்றேன். துன்பப்படுவே இந்தச் சஞ்சிகைக்கு விளம்ப திட்டத்தை உறுதிப்படுத்துங்கள். பிரதியை உறு
65ITLÜ
15. 6ւյսմl66) ဓါတ်], உலகத் தொலைபேசி எ
 
 
 
 
 
 
 
 
 
 

பொதிகை மலையில் இருந்து கிழக்கில் இருந்து வெளிவரும் ம் சுவைத்திரளை ஆதரிக்கக் ார்கள் சிரித்து மகிழ வெளிவரும் ரம் கொடுத்து அதன் இருப்புத்
சந்தாதாரராகச் சேர்ந்து உங்கள் திசெய்யுங்கள்.
புகள்
திரள்
ԼDԼւ556IIւնվ: , SOUT: O77 O26 5351