கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யெளவனம்

Page 1


Page 2


Page 3

-
ら (?) J7ጉ . 4 二3
·臀
གཡོགས་མཐའ་མ་ཛ་ཡའི་མཚབ།
'A .சி ܐܬܐ
அயோ, ,ே வகள்
- ஊை
கண்டி
്. - 1987 "" - * **

Page 4
The Fourth Publication of Hill Country Publishing House (57, Mahinda Place, Colombo 6)
Y A V W A N A M
Collection. Of
Literary Articles
Written by
(δ
DEVADASON JEYASINGH :
('Dasons’ - 90, Main Street, Kengalle)
and Published by "CHINTHAMONI. Cover designed by
Mr. S. Doraisamy.
Printed at ROYAL PRINTERS, 190, COLOMBO ST, KANDY.
First Edition:- November 1987 Second Edition- January 1988
Price Rs. 2500
OUR SINCERE THANKS TO: "CHINTHAMON
 
 

அமைச்சரின் ஆசியுரை
மலையக, கலை இலக்கியப் பேரவையின் ஆற்றல் மிக்க எழுத்தாளர் கவிஞர் தேவதாசன் ஜெயசிங் அவர்களின் கைவண்ணத்தில் 'யெ ள வ ன b” வெளிவருவதை அறிந்து மட்டில்லா மகிழ்ச்சி யடைகிறேன்.
இறைமகன் இயேசுவின் வழியையும், இன்டித் தமிழ்மொழியையும் தமது இரு கண்களாகப் பாவித்து, இறை தொண்டோடு இலக்கியப் பணியும் ஆற்றிவரும் ஆற்றல் மிக்க கலைஞர் தேவதாசன் ஜெயசிங். ந்தாமணி” வார இதழில் இவர் எழுதிய இலக்கிய கட்டுரைகளின் தொகுப்பாக “யெளவனம்” மலர்ந்து மணம்
வீசுகிறது.
மலையகத்தாரின் மகத்தான இ லக் கி யப் பணியில் இவர் சிறப்பான இடத்தை வகிக்கிருர், இலக்கிய ஆர்வமும், இன்றைய தலைமுறையினரின் எழுச்சிக்கு ஏற்றதும் இனியதும் செய்ய வேண்டும் என்கின்ற இவரது துடிப்பும் பார்ாட்டுக்குரியன
இவரது இலக்கியப் பணியும், சமுதாயப் பணியும் டி மென்மேலும் வளர்ந்து சிறந்திட வேண்டுமென எல்லாம்வல்ல தி ரு வ ரு ளை ப் பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்.
,இராசதுரை ܕ ܬܐ 04-I I-87 பிரதேச அபிவிருத்தி,
இந்துசமய, இந்துகலாசார அமைச்சர்.
ــــــــــــــــ ــــــــــر سےر

Page 5
பாராட்டுரை
ஆண்டவரது படைப்பினுள் வெவ்வேறு விதமான கொடைகள் அமையப் பெற்றுள்ளன. அவற்றை வளர்ப்பதும் மறைப்பதும் எம்மவர் கரங்களிலேயே தங்கியுள்ளது.
இவ்வகையில் தேவனின் தாசனுகிய திரு. தேவதாசன் ஜெயசிங் எம்மத்தியில் அரங் கேறினர். அவர் அருளுரை ஆற்றுவதில் மட்டு மல்ல; எழுத்துத் துறையிலும் சளைத்தவரல்லர் என்பதற்குப் பத்திரிகைகளில் வெளியான இவரது கட்டுரைகள் சான்று பகர்கின்றன.
தெள்ளிய தமிழில் - இனிய சுவையில் எதையும் எடுத்துக் கூறும்போது அதனுள் ஒரு படிப்பினை யையும் இணைத்துக் கொடுப்பது இவரது தனிக் கலை. இவரது இலக்கியப் பணியினைப் பாராட்டும் அதே வேளை இவரைப் போன்று பல கலைஞர்கள் தமிழன்னையை அலங்கரிக்க வேண்டுமென்பதே என் அவா .
வாழ்க ஜெயம் ! வளரட்டும் இவரது கற்பனை!
தொடரட்டும் இவர் சேவை.
மறை திரு. கெனன் ஜோன் எஸ். ஐஸக்
- பிரதம குரு - கண்டி மாவட்ட தமிழ் குருவாதீனம்
கிறிஸ்துநாதர் ஆலயம் கண்டி,
 

மற்றும் ஒரு மணியாரம்
சிந்தாமணி வாசகர் ஒருவர் ஒரு நா ன் எ ன் னை ப் பார்க்க வந்தார். தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.
*நான் ஓர் இலக்கிய ரசிகன்; சிந்தாமணியில் வரும் இலக்கியக் கட்டுரைகளை விரு ம் பி ப் படிக் கி ற வன். தேவதாசன் ஜெயசிங் என்பவர் நன்முக எழுதுகிருர்’ என்ருர்,
'மிகவும் சந்தோஷம்" என்றேன் நான். தொடர்ந்து அவர் ஒரு கேள்வி கேட்டார்.
"உங்களுக்கு தேவதாசன் ஜெயசிங்கைத் தெரியுமா?" என்பதே அவர் கேட்ட கேள்வி.
தெரியாது" என்று நான் பதில் சொன்னேன்; அவர் திகைத்துப் போனுர்!
*தெரியாதா? அப்படியாளுல் தெரியாத, ஒருருேடைய கட்டுரைகளையா இப்படி, அடிக்கடி, சிந்தாமணியில் முக்கியத்துவம் கொடுத்து, படம் போட்டு, ஏழு கலம் தலைப்பும் போட்டு, பிரமாதப் படுத்திப் பிரசுரித்து வருகின்றீர்கள்?' என்ருர் அவர்.
"ஏன் இப்படிக் கேட்கிறீர்கள்? என்று நான் திருப்பிக் கேட்டேன்.
அவர் கூறிய பதிலைக் கே ட் டு அ ப் போது நா ன் திகைத்துப் போனேன்!
*சிந்தாமணி உட்பட பல பத்திரிகைகளுக்கு நானும் இலக்கியக் கட்டுரைகள் எழுதி அனுப்பி வருகிறேன். ஒன்றுகூட வெளிவரவில்லை. ஆசிரியருடன் பழக்கம் இருந் தால் தான் கட்டுரைகள் பி ர சுர மா கும் என்று சொன்னர்கள். அதனுல்தான் இன்று உங்களைப் பார்க்க வந்தேன்" என்ருர் அவர்.
நான் அவரிடம் சொன்னேன்: غیر "ஜெயசிங் என்பவரை எனக்குத் தெரியாது. அவரை, நான் கண்டதுமில்லை; அவருடன் பேசியதும் @ఊడి. அவர் கறுப்பா, சிவப்பஈ, நெட்டையா, குட்டையா என் பதைக் கூட நான் அறிவ மாட்டேன். ஆனல், அவர் ஒரு

Page 6
நல்ல இலக்கிய எழுத்தாளர் என்பதை மட்டும் நான் அறி வேன். இதை, அவரது கட்டுரைகளைப் படித்தே நான் தெரிந்து கொண்டேன். அவருடைய கையெழுத்துப் பிரதி என்னிடம் வரும்போது அவருடைய முதலாவது வாசகன் நான்தான்."
இப்படிக் கூறியதும், ஓர் அதிசய மனிதரைப் பார்ப்பது போல, அவர் என்னைப் பார்த்தார். நான் கூறியதை அவர் நம்பினரோ, நம்பவில்லையோ தெரியவில்லை. ஆயி னும், இன்றுவரை, அதாவது இந்த ஆசியுரையை நான் எழுதும் இன்றைய நாள் வரை, என் கூற்று சத்திய மானதாகும். தேவதாசன் ஜெயசிங் எ ன் 4 வரை எனக்கு நேரில் தெரியாது; தெரியவே தெரியாது.
எனக்கு அறவே தெரியாத ஒருவரின் கட்டுரைகளை நான் விரும்பிப் பல வருடங்களாக தினபதி-சிந்தாமணி பத்திரிகைகளில் பிரசுரித்து வந்திருக்கிறேன்; பணமும் அனுப்பி வந்திருக்கிறேன் என்ருல், அதற்கு மூன்று காரணங்கள் உண்டு:
ஒன்று, தரமான இலக்கியக் கட்டுரைகளை அவர் எழுதுகிருர் என்பது. இரண்டு, எழுதும் விஷயங்களை பத்திரிகைகளுக்கு ஏற்றவையாக, பாமரரும் படித்து அறியக்கூடிய, எளிய தமிழ் நடையில் எழுதுகிருர் என்பது. மூன்று, எடுத்தாளும் கவிதை க ளி ன் இலக்கிய தயங்களையும், இனிய பல சுவைகளையும் ரஸமாகப் பிழிந்து தருகிருர் என்பது.
இப்படியாக கட்டுரைகள் எ மு தி ஞ ல், எந்த ஒரு பத்திரிகாசிரியனுக்கும் அவற்றை நிராகரிக்க மனதுவருமா?
தரமான நல்ல கட்டுரைகளை, கவிதைகளை, கதை களைப் பிரசுரிப்பதற்கு, எந்த ஒரு நடுநிலைப் பத்திரிகாசிரி யனையும் இன் புளுவன்ஸ்” பண்ணத் தேவையில்லை. தரங் கெட்டவற்றைப் பத்திரிகையில் திணிப்பதற்குத் தான் பழக்கம், அறிமுகம், பெரிய இடத்து சிபார்சு எல்லாம் தேவைப்படலாம். -
தனது பத்திரிகையில் பிரசுரிப்பதற்கு ஒரு நல்ல படைப்பு கிடைத்துவிட்டால், அந்தப் பத்திரிகை ஆசிரியன் உற்சாகத்தால் துள்ளிக்குதிப்பான். காரணம், அதைப் பிரசுரிப்பதஞல், தனது பத்திரிகை வாசகர்களிடையே நன்மதிப்பையும், பாராட்டையும் பெறப் போகிறது என்ற மகிழ்ச்சியால் தான்.

இந்த உண்மைகளே அன்று என்னிடம் வந்த அன்பரிடம் விளக்கினேன். அவரும் ஏற்றுக் கொண்டார்.
ஜெயசிங் ஒரு சிறந்த எழுத்தாளர் என்பது மட்டுமன்றி நிறைந்த அடக்கமும் பணிவும் உடையவர். அவர் ஒரு தமிழ்ப் பாடசாலை அதிபர். அப்படியிருந்தும் அவர் எனக்கு எழுதும் கடிதங்களில் என்னை “இ லக் கி ய த் த த் தை” என்றும் "எனது எழுத்துலகக்குரு" என்றும் விளித்து எழுது வார். அத்தகைய ஓர் அந்தஸ்தை ஏற்றுக்கொள்வதற்கு என் ம்னம் ஒருப்படுவதில்லை. அளவு கடந்த அபிமானத் தால் அப்படி எழுதுகிருர் என்பது எனக்குத் தெரியும்.
என்ருலும், ஏகலைவன் ஒருவன் எங்காவது உருவாஞல், குறுக்கே நிற்பதற்கு நான் யார்? “கட்டைவிரலே காணிக் கை யா சு க் கொடு' எ ன் று கேட்கும் துரோனரின் கொடூரம் என்னிடம் ஒரு போதும் ஏற்படவே ஏற்படாது. பிறர், சிறந்த எழுத்தாளராக, கவிஞராக, மலர்வதைக் கண்டு, ம தி க் க ப் ப டு வ தைக் கண்டு மகிழும் மனம் என்னுடையது.
அந்த வகையில் “யெளவனம்" வெளி வருவதை நான் மனமார வரவேற்கிறேன். பிரசுரமான 23 இலக்கிய மணம் வீசும்" கட்டுரைகளைத் தேர்ந்து 23 மணிகளைக் கோர்த்த ஓர் ஆரமாகத் தருகிருர்
ஜெயசிங். இது, தமிழ் அன்னைக்கு அணியப்படும் மற்ருெரு
மணியாரமாகத் திகழட்டும்.
எழுத்தாளர் ஜெயசிங்கைப் பற்றி நான் உண்மையில் பெருமையடைகிறேன். அவர் ஆற்றலயும் உழைப்பையும் மதிக்கிறேன். அவருடைய தமிழ் நடையை ரசிக்கிறேன். இன்னும் பல நூல்களை அவர் தொடர்ந்து வெளியிட வேண்டும் என்று விரும்புகிறேன்.
மேலும் மேலும் அவர் வளர்ச்சியுற வாழ்த்தி ஆசி கூறுகிறேன்.
எஸ். டி. சிவநாயகம் 5, குணசேன மாவத்தை, பிரதம ஆசிரியர் கொழும்பு 12, தினபதி சிந்தாமணி 30-1 - 987.

Page 7
மதிப்புரை
சிறந்த எழுத்தாளர் வரிசையில் நாம் திரு. தேவதாசன் ஜெயசிங் அவர் களையும் வைத்துக் கொள்ளலாம். தான் படித்துச் சுவைத்த இலக்கிய நூல்களை ஏனையோரும் படிக்க வேண்டும்; அவர்களும் அவற்றைச் சுவை த் து இன்புற வேண்டும் என்ற குறிக்கோளை உடையவராக இவர் திகழ்கிருர்,
சிறந்த அதிபராகக் கடமையாற்றும் இவர் "கிறிஸ்தவ தமிழ் இலக்கியங்களும் ஏனைய இலக்கியங்களைப் போலவே சிறந்தன என்ற கருத்தினை யெளவனம்" என்ற பகுதியில் திறம்பட விளக்கியுள்ளார். மற்றும் பல காவியக் காட்சி களைத் தனது கட்டுரைகள் மூலம் வாசகர் மனக் கண் முன் ஒவியமாகவே உருப்படுத்தியுள்ளார்.
‘அமுதெனும் தமிழ் இலக்கியம் என்றும் எழிலும் இளமையும் உடைத்து" என்பதால் யெளவனம்’ எனும் பெயர் நூலுக்கு மிகப் பொருத்தமே. அழியா இலக்கியங்களை அசை போடவிரும்புவோருக்கு இது ஓர் அழகிய படைப் பெனலாம்.
ஆசிரியரது இலக்கியப்பணி மென் மேலும் சிறக்கவும், தொடர்ந்தும் தமிழ்மொழிக்குப் பயனளிக்கும் முறையில் இவர் பணியாற்றவும் வேண்டுமென மனப்பூர்வமாக
வாழ்த்துகின்றேன்.
சீடா நிறுவனம், கலாநிதி கே. எஸ். இராஜரட்னம், கல்வி அமைச்சு. விசேட கல்விப் பணிப்பாளர்.

பதிப்புரை
-
மலைமுகடுகளிலும், தேயிலைக்காடுகளிலும் ம ல ரு ம் இ லக் கி ய ப் படைப் புக ளை வெளியிடுவதே மலையக வெளியீட்டகத்தின் நோக்கமாகும். இதன் நான்காவது வெளியீடு கட்டுரை இலக்கியமாகும். இதனை தந்திருப்பவர் கவிஞர் தேவதாசன் ஜெயசிங்.
மலையக கலை இலக்கியப் பேரவையின் நிர்வாகக் குழு உறுப்பினரான இவர் கடந்த கால் நூற்ருண்டுக்கு மேலாக கல்விப்பணியைத் தொழிலாகக் கொண்டவர்.
மலைச் சிகரங்களைப் போல கலைச்சிகரங்களையும் மலையக வழித்தோன்றல்கள் தரிசிக்க வேண்டும் என்பதே இவர் நித்தம் காணும் கனவாகும். அதை. நனவாக்கும் அரும் பணியில் அயராது உழைத்தும் வருகின்ருர்,
கட்டுரை இலக்கியத்தில் கவிஞர் தேவதாசன் 體。 கைதேர்ந்தவர் இந்நூலில் "என் இதயத்திலிருந்து . . . .' என்ற பகுதியை ஒருபக்கம் முழுவதிலும் ஒரே வரியில் வரைந்துள்ளமை இதற்கு ஒரு சான் ருகும்.
இவரது கைவண்ணத்தில் பிறந்த சொற் - கோலங்கள் *சிந்தாமணி'யில் மலர்ந்து, ஆயிரக்கணக் காண இதயங் களில் மணம் வீசி, இன்று "யெளவனம்’ எனும் களஞ்சிய மாக கரங்களிலே தவழ்கின்றது.
இதனை வாழ்த்தி, வரவேற்க வேண்டியது இலக்கிய நெஞ்சங்களின் கடமையாகும்.
AAN
அந்தணி ஜீவா,
- நிர்வாகி, மலையக வெளியீட்டகம்,

Page 8
இ நன்றி
இருபத் ைதந்து ஆண்டுகளாக எழுதிவரும் எனது படைப்புகளிற் பலவற்றை அரங்கேற்றி அவற்றுட் சிலவற்றை நூலுருவிற் படைக்க சந்தர்ப்பம் அளித்த சிந்தாமணி ஆசிரியர் மதிப்புக்குரிய எஸ். டி. சிவநாயகம்
அவர்களுக்கு,
இ குறிப்பு:-
கட்டுரையின் அடியிற் காணப்படும் திகதி பத்திரிகையில் வெளிவந்த நாளைக் குறிக்கும். பத்திரிகைத் தலைப்புகள் அனைத்தும் நூல் வடிவுக்கு ஏற்றதாக மாற்றப்பட்டு இளமையும் எழிலும்” என்றும் குன்ருதது "தமிழ் இலக்கியம்" என்ற காரணத்தால் *யெளவனம்? எனப் பெயரிடப்பட்டுள்ளது.

9
* வாசகரின் வசதிக்காக . . . .
தி
d-CD " 6CU உறைவிடம்
1. பெளவனம் - தேம்பாவணி - 13 2. தென்றல் - பரஞ்சோதி முனிவர் - 18 3. சூரிய காந்தி மலரும் மாலையும் is 22 4. ஒற்றைக் கண் கம்பராமாயணம் 25 ܩ 5. பஞ்சபாணங்கள் - கம்பராமாயணம் 28 ܡ 6. சந்தன மரம் கலித் தொகை 33 7. தீர்ப்பு = இயேசுகாவியம் - 36 ؟ 8, படிகண்டம் காளமேகம் = 39 ال 9. பொருத்தம் - கம்பராமாயணம் 44 ܣ 10. Galiji i on živ பழம் இலக்கியம் - 47 11. பாதி வெண்பா - ஒளவையார் - - 52 12. பழிக்குப் பழி - கம்பராமாயணம் - 55 13. எதிரும் புதிரும் - கம்பராமாயணம் - 58 14. ஏக்கம் - ஒளவையார் 61 15. படையும்
கொடையும் - புறநானூறு 64 16. சதியும் சபதமும் - மகாபாரதம் - 68 17. கைராசி ம் ஆண்ணதாசன் - 70 18. அமுது – u sto- u Jõ) 74 ܗ 19. தூது - as the print Lorru 6007th - 77 20. தவமலர்கள் - தேம்பாவணி 80 ܣ 21. மதிவதனம் - பாரதி பாடல் - 85 22. விளாங்கனி - தேம்பாவணி 87 23. வேட்டை - தேம்பாவணி 90
* UN
ܬ ܐ ܐ

Page 9
10
இதயத்திலிருந்து OD 49 es அன்பு நெஞ்சங்களே,
1962ல் இலங்கை கலைக்கழகம் நடத்திய அகில இலங்கை தமிழ் நாடக எழுத்துப் போட்டியில் மூன்ருவது பரிசைப் பெற்றதனைத் தொடர்ந்து எழுதப் பயின்ற என்னை மதித்து - மடியில் தவழவிட்டு - நடைபயிற்றி இன்று நூலொன்றினை அமைக்கும் அளவுக்கு வளர்த்தெடுத்த பெருமை தினபதி - சிந்தாமணி பத்திரிகைகளையே சாரும் என்பதால் அவற்றின் இயக்குநர்களே எனது எழுத்துலக ஆசானு க மதித்து வருகின்றேன் என்பதைப் பகிரங்கப் படுத்திக் கொள்வதில் பெருமையடையும் அதேவேளை,
ஆசியுரை - வாழ்த்துரை - பாராட்டுரை மதிப்புரை. பதிப்புரை - அறிமுகம் ஆகியவற்ருல் என்னைக் கெளர வித்துள்ள பெரியார் களுக்கு இதயபூர்வமான நன்றிகளைக் கூறி,
அட்டைப்பட ஓவியர் - அச்சகத்தார் - அரங்கேற்றி யோர் - மனத்தால் ஊக்கப்படுத்தியோர் - பனத்தால் உற்சாகப்படுத்தியோர் அனைவரையும் மனப்பூர்வமாகப் பாராட்டி,
தனது வறுமையிலும் சிறுமையிலும் கூட நாடளாவிய ரீதியில் நான் பெருமைப்படுமளவுக்கு என் னைக் கல்வி மானுக்கிய காலஞ்சென்ற என் அருமைத் தந்தை திரு. எஸ். தேவதாசன் அவர்களையும் அன்புடன் நினைவு கூர்ந்து,
இம்மட்டும் என்னை ஜீவனே டு பாதுகாத்து வரும் எல்லாம் வல்ல இறைவனை நன்றியுடன் ஸ்தோத்திரித்து.
எனது எழுதுகோலுக்குத் தொடர்ந்தும் பணியாற்றும் பணியினை வழங்கும் உரிமையை வாசகர்களிடமே விட்டு விடைபெறுகின்றேன்.
நன்றி.
தாசன் ஸ்" இலக்கியப் பணியில், 90, மெயின் வீதி, தேவதாசன் ஜெயசிங்.
கெங்கல்ல.

11.
1975ம் ஆண்டு
குருத்தோலையாய்க் கழன்றுபோன
எம் குலக் கொழுந்து
சொலமன் டேனியல்
நினைவாக ܕܓܠܬܐ
யெளவனத்தின் யெளவனமே! யாமிழந்த செல்வமே! யெளவனத்தில் உதிர்ந்த இலரே! - யெளவனமாய் ஈந்தவென் படைப்பதனை ஈண்டுன் நினைவாக *யெளவனம்" எனத் தந்தேன் காண்.

Page 10

7 ܓ
1 யெளவனம்
இத்தாலிய இ லக் கி ய மேதை எனக் கூறப்படும் கொன்ஸ்டன்டைன் ஜோஸப் பெஸ்கி, சமயப் பணி மேற் கொண்டு தமிழ் நாடு வந்த போது தமிழிலக்கியங்களில் கொண்ட வாஞ்சையால் தமிழைப் பயின்ருர், "வீரமா முனிவர்" என்ற பெயரையும் கொண்டார். தேம்பாவணி என்ற தித்திக்கும் நூலே தீந்தமிழில் ஆக்கினர்.
உள்ள, உள்ள, உள்ளம் பூ ரி க்கு ம் தெள்ளுதமிழ்க் கவிதைகளால் அணி செய்யப்பட்ட இக் காவியத்தைப் பலரும் பலவாறு வருணிக்கின்றனர்.
தேம்பா அணி எனப் பிரித்து வாடாத அழகு, வாட்ாத அழகு, வாடாத மாலை என்பாரும், தேன்iபாtஅணி எனப் பிரித்து தேன் போன்ற பாக்களின் அலங்கா ரம் என் போரும்
1822). L. @YTT7", 魯
கம்பராமாயணம், சிலப்பதிகாரம் போன்றவற்றிற்கு ஈடுகொடுக்கும் வகையிலான கவிதைகள் மலிந்திருப்பதே இதற்குக் காரணம் என்றும் கூறலாம். கற்பனைத் திறனும் அவற்றின் அமைப்பு முறையும் கருத்தையள்ளும் கொள்ளை அழகாகக் காட்சி தருகின்றன.

Page 11
14
பெலிஸ் தியருக்கும் இஸ்ராயேலருக்கும் இடையே போர் நடக்கிறது. கொண்டல் குலவும் குன்றுகள் இரண்டு, எதிர் எதிராய் நிமிர்ந்து நிற்கின்றன. நடுவிலே, அமைதியாய் அயர்ந்து கிடக்கும் அகன்றதொரு பள்ளத்தாக்கு. ஒரு குன்றிலே இஸ்ராயேலரின் படைகள், எதிர்க்குன்றில் பெலிஸ் தியரின் படைகள்,
பெலிஸ் தியரின் பக்கத்திலே பயங்கரமான ஒரு வீரன், ஆறு முழமும் ஒரு ஜாணும் உயரம் கொண்டவன். வெண் கலத்தால் ஆக்கப்பட்ட கவசங்களை தலையிலும், மார்பிலும், தோள்களிலும், கால்களிலும் அணிந்தவன். அவன் கரம் பிடிக் கும் ஈட்டி நெசவுக்காரரின் படை மரத்தின் கனதியாக இருந்தது.
எதிர்த்த மலையில் அணிவகுத்து நிற்கும் இஸ்ராயேல ரைப் பார்த்து அவன் அறை கூவுகின்றன்.
அதை வீரமாமுனிவர் பின் வருமாறு வடிக்கின்றர்.
கூர்த்த போர் செயக் கூடினர்க்கு, ஒருவன் வந்தெய்தி *சீர்த்த நான், அவன், சிறந்த போர் தனித்தனி தாக்க; தோர்த்த பாங்கினர் தொழும்பரென் ருகுவர்' என்னு, ஆர்த்த ஒகையால் நகைத்து இகழ்வறைந்து அழைப்பான்.
அதாவது, "எதற்காக நீங்கள் போருக்கு அணிவகுத்து நிற்க வேண்டும்? உங்களில் தன் மானமுள்ள வீரன் ஒருவன் இருப்பானே யானுல், அவ ன் தனித்தவனுக என்னிடம் வரட்டும்; நானும் அவ னு ம் தனித்தனியாக பொருத வேண்டும். எவர் தோற்கின்றனரோ அந்தப் பகுதி மற்றப் பகுதியினர்க்கு அடிமைகளாவோம்” எ ன் று ஆகடியம் பண்ணி, அவர்களை நிந்தித்து, ஏளனம் பண்ணிக் கூறுகிருன்.
இஸ்ராயேலரின் தலைவனுன சவுலும், சகல வீரர்களும் அவ்வீர கர்ஜனையைக் கண்டு கலங்குகிருர்கள். இதை கவிஞர் இவ்வாறு எடுத்துக் காட்டுகிறர்.
பெரிய குன்றமோ, பேயதோ, பூதமோ, யாதோ உரிய தொன்றிலா உருவினைக் கண்டுளி, வெருவி கரிய விண், இடி கதத்த மின் கொடு விடுத் தன்ன அரிய கோலியாற்றறைந்த சொல் கேட்டனர் மருண்டார்.

15
உக்கிரமான |a&e-ଜୋ", தோன்றும் பயங்கர இடி யோசை போன்ற குரலினுல் 'கோலியாத்" எனப்பட்ட அவ்வீரன் முழங்கியதைச் செவியுற்ற சவுலின் வீரர்கள் மலையோ, பேயோ, பூதமோ இவன் என எண்ணி வெருள் கின்றனர்.
இவ்வுரைகளைச் செவிமடுத்த மன்னன் சவுல், “எவனுெரு வன் இவனை வெல்லுவானே, அவனுக்கு என் மகளை மணம் செய்து வைப்பேன்; அவனை உயர் த் தி வைப்பேன்" என்கிருன்.
இவ்வேளையிலே தாவீது எ ன் ற இளைஞன், போர்க் களத்தில் சவுலோடு இருக்கும் தனது சகோதரர்களைச் சந்திப்பதற்காக அங்கு வருகிருன்,
பெலிஸ்தியரின் பக்கத்திலே கேரலியாத் வழமைபோல் ஆர்ப்பரிக்கிறதையும், எதிர்த் திசையிலே இஸ்ராயேலர் ஆமைகளாக-பதுமைகளாக அடங்கி ஒடுங்கி நிற்பதையும் அவதானிக்கிருன்,
மன்னன் சவுலிடம் செல்கிருன் சின்னவன் தாவீது,
'மன்ஞ! அவனை எதிர்க்க நானே சென்று வருவேன்; வென்றும் வருவேன்' என்கிருன்,
சவுல் அதிசயிக்கிருன் "சின்னவனே, உன்னை நான் நம்ப லாமா? உன்னுல் இது இயலக்கூடியதா?’ என்ற ஏளனப் புன்னண் கயோடு அவனை ஏற இறங்கப் பார்க்கிருன் மன்னன்,
தாவீது, மன்னனை நோக்கி மேலும் கூறுகிமு ன்.
"திறம் கடுத்த கொல் சிங்கமும் உளிவ மும் பாய்ந்து மறம் கடுத்து அதிர் வல்லியத்து இனங்களும் எதிர்ந்து கறங்கு அடுத்த கால் கழுத்தினை முறுக்கி, நான் கொன்றேன்; அறம் கெடுத்தவன் அவற்றிலும் வலியனுே' என் முன்,
"மன்ன..! அன்ருெரு நாள் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த வேளை ஒரு சிங்கம் அதனைத் தொடர்ந்து கரடி என்பன வந்து என் ஆடுகளைப் பிடித்தன. அவற்றைத் தனிமையில் எதிர்த்துக் கொன்றவன் நான். இந்த அற்ப மனுஷன் எனக்கு எம் மாத்திரம்?" என்கிறன்,

Page 12
6
மன்னவனின் ஆசியோடும், மற்றவர்களின் குதூகல ஒசை யோடும் சின்னவன் தாவீது கையிலே தடியுடன், கைப்பையிலே ஐந்து கூழாங் கற்களுடன், மறு கையிலே கவணுடன் கோலியாத்தை எதிர்க்கப் புறப்படுகிறன்,
இதைக் கண்ட கோலியாத், ஏளனத்தோடு -
* நீ அடா! எதிர் நிற்பதோ? மதம் பொழி கரிமேல் நாய், அடா! வினை நடத்துமோ? கதம் கொடு நானே வாய் அடா பிளந்து, உயிர்ப்பிட மறுகி நீ நுண் தூள் ஆய் அடா! உலகு அப்புறத்து ஏகுவாய்”
என்கிருன்.
கோலியாத் தாவீதை ஏளனம் செய்கிருன். "அடே சிறிய பயலே, மதம் பொழிகின்ற பெரிய யானையைப் போன்றி என் மீது சின்னஞ் சிறிய நாயைப் போன்ற நீயா போர் தொடுக்க வந்திருக்கிருய்? கதா யுதத்தைக் கொண்டு உன்னைத் தூள் தூளாக நொறுக்கி வீசி விடுவேன். அப் புறமாக ஒதுங்கிப் போடா” என் கிருன் கோலியாத்,
தாவீதோ, 'நீயோ பட்டயத்தை நம்பி, ஈட்டியின் பலம் கொண்டு என்னிடத்தில் வருகிருய்? நானே, நீ சபித்த இஸ்ராயேலரின் இறைவனின் பலத்திஞலே உன்னிடத்தில் வருகிறேன்' என் கிருன்,
கோலியாத் கோபத்தோடு நெருங்குகிருன், தாவீது தைரியமாக முன்னேறுகிருன்.
அப்பக்கம் அசைந்து வரும் யானையைப் போல கோலியாத் வருகிறன், இப்பக்கம் ஊர்ந்து செல்லும் ஆமையைப் போல தாவீது செல்கிருன்.
எங்குமே அமைதி நிலவுகிறது.
இருதிறத்தாரும், என்ன ஆகுமோ? எப்படிமுடியுமோ என ஏக்கத்தோடு நோக்கிக்கொண்டிருக்க, தாவீது பட் டெனப் பையுள் கையை விட்டு, பொட்டெனக் கல்லை எடுத்து கவனிலிட்டுக் கறங்கு போல் சுழற்றிச் சட்டென எறிகிருன்,
பட்டது கல் கோலியாத்தின் நெற்றியில்,

7
பட்ட மரமாய் நிலத்தில் வீழ்கிறது அப்பயங்கர உருவம்!
இந்தப் பயங்கர சம்பவத்தைப் புலவர் பின் வருமாறு எழுதுகிருர்,
கல்லை ஏற்றலும், கவணினைச் சுழற்றலும், அக்கல் 'ஒல்லை ஒட்டலும் ஒருவரும் காண்கிலர்; இடிக்கும். செல்லை யொத்தன சிலை நுதற் பாய்தலும் அன்னன். எல்லை பாய்ந்து இருள் இரிந்தென வீழ்தலும் கண்டார்"
இவ்வண்ணமாய் இத்தாலிய இலக்கிய சிற்பி வீரமா முனிவர் தம் இலக்கிய ஆற்றலைச் சித்தரித்துள்ளார்.
தாவீது வீசிய கல் கோலியாத்தின் நெற்றியில் பாய்ந்த தும் கோலியாத் வீழ்ந்தான். எப்படி? எவ்வளவு?விரைவாக வீழ்ந்தான் என்பதை வர்ணிக்கும் இடம் அற்புதமாக அமைந்திருக்கிறது.
ஒளி பாய்ந்ததும்ருேள் அகல்வது போன்ற வேகத்தில் கோலியாத் வீழ்வதை அங்கு கூடியிருந்தவர்கள் கண்டார் களாம்,
சீதா கல்யாணத்திலே ராமன் வில்லை எடுத்து முறிக் கும் கட்டத்தைக் கம்பன் "எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார்” என்று கூறியிருக்கிருன் அல்லவா? அது போன்றே இந்த இடமும் இலக்கியச் சுவை பயக்கிறது.
எல்லே பாய்ந்து இருள் இரிந்தென வீழ்தலும் கண்டார்!
2.02.84

Page 13
2 தென்றல்
நின்ற நிலையில் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் குண்டுகளும், அண்ட வெளியை வென்று வரும் அணு உபகரணங்களும் இன்று சர்வசாதாரணமாகி விட்டன. இவற்றிற்கெல்லாமே அடிப்படைக் காரணி, 'அறிவு முதிர்ச்சி" எனக் கொள்ளல் பொருந்தும்,
அறிவைப் பெறுதலும் அதை வளர்த்தலும், அதில் முதிர்ச்சி அடைதலும் இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு பெற்று விடக்கூடியன அல்ல.
உண்மையான அறிவைப் பற்றிக் கூற வந்த வள்ளுவப் பெருந்தகை,
"எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்கிருர்,
அதாவது, பலரும் பலதைக் குறிப்பிடுவார்கள். கூறு வார்கள். எவர் எவற்றைக் கூறினும், எவரது கூற்றினைக் கேட்பினும், அவற்றுள் உண்மைப் பொருள் எது? பயன்தரு விடயம் எவை? காக்க வேண்டிய கருத்து என்ன? என்பன வற்றைத் தெ வி வா க் கி க் கொள்வதிலேயே உண்மை யானதும், பயன்தரத் தக்கதுமான "அறிவு' அமைகின்றது என்பதாகும்.
எனவே, உண்  ைம அறிவைப் பெறுவதாயின் எந்த ஒன்றையும் மேலோட்டமாகப் பார்ப்பதினல் மட்டும் பெற்று விடல் முடியாது. அங்கும் இங்கும் சென்று அனைத்தையும் கற்றுத் தெளிவு பெற்றுத் தேற வேண்டும்.
வள்ளுவரின் கருத்துப்படி:
* ஆய்ந்தோய்ந்து" பார்ப்பதஞல் அ றி வு வளர்ச்சிமுதிர்ச்சி - இவற்றுக்குப் பயன்தரு நன்மைகள் கிட்டும்.

19
'வாசிப்பு ஒருவனைப் பூரண மனிதனுக்குகிறது" என்ற கோட்பாடு அனைவராலும் மறுக்கப்படாமல் ஏற்கப் படத்தக்க ஒன்ருகும். இதன்படி எதையுமே யாரும் வாசிக் கலாம். ஆனல் 'அறிவு பெறுதல்” என்ற அடிப்படையில் முதல் மாணுக்கரைப் போல இயங்குதலே சாலப் பொருத் தமுடையதாகும்.
*மாணுக்கரில் மூன்று பிரிவினர் உளர்" என்பதாக முன்னேர் வகுத்துள்ளனர். முதல் மானக் கர், இடை மாணுக்கர், கடை மாணுக்கர் என்போர்.
இவர்களுள் கடை மாணுக்கர் பன்னடையைப் போன்ற வர்கள். வடிகட்டும் போது நல்லவற்றை ஒழுக விட்டுத் தேவையற்றவைகளைத் தேக்கி வைத்துக் கொள்வது பன்ன டையின் இயல்பு. இதேபோல் இவர்களும் அவசியமான வற்றை விட்டு விட்டு அவசிய மற்றவற்றைக் களஞ்சியப் படுத்திக் கொள்வர்.
இடை மாணுக்கரோ கிளியுை போன்றவர்கள். 66f யானது வளர்ப்போர் சொல்லும் சொற்களைத் தவிர வேறெதையுமே ம ன தி ல் போட்டுக் கொள்வதில்ஃல. சொல்லிக் கொடுப்பதை மட்டுமே மீளவும் கூறிக் கொண்டி ருக்கும். அதேபோல் இவர்களும் தாம் செவியுற்றவற்றை அல்லது பார்த்தவற்றை விட்டு அப்பாலோ இப்பாலோ ஒரு இம்மியும் பிசகுவதில்லை.
என்ருலும் முதல் மாணுக்கரோ, அன்னப்பட்சியைப் போன்றவர்கள். பாலே நீருடன் கலந்து வைத்த போதிலும் கூட நீரை நீக்கிப் பாலைப்பருகுமாம் அன்னம்!
அஃதே போல் இவர்களும் (அறிந்தவற்றில்) ‘மெய்ப் பொருள் காண்பது அறிவு' என்ற வள்ளுவன் வாக்குப் படி தேவையானவைகளை மட்டுமே தெரிந்து கொள்வர்.
இவ்வாறு முப்பிரிவினரின் செயற்பாடுகளையும் நுணுகி நோக்குமிடத்து மு த ல் மா னு க் கரி ன் செயற்றிறனே அறிவைப் பெருக்க வல்ல சிறந்த ஆயுதமெனத் தோன்று கிறது. −

Page 14
20
சிறந்த அறிவினைப் பெறுதற்கு மேலோட்டமாகப் படித்தால் மட்டும் போதாது. சிலவற்றை இவ்வாறு படித்தாலும் கூட பலவற்றை நுணுகி நுழைந்து, ஆழ்ந்து அகன்று படிக்கவும் வேண்டும்.
ஏனெனில் "கல்வி கரையில; கற்பவர் நாள் சில” என்பது நாலடியார் கூற்று.
அதேவேளை, ஒளவையாரும்,
"கற்றது கைம் மண்ணளவு; கல்லாதது உலகளவு' என்கின் ருர்,
ஏன்? அகத்தியர் கடல் குடித்த குறுமுனி- தமிழ் குடிக்க முற்பட்டுத் தோல்வி அடையவில்லையா?
எனவே, அறிஞனுக்கு - அறிவைப் பெற முயல்பவனுக்கு அறிவை வளர்க்க ஆசைப்படுபவனுக்கு ஒரு வகைக் கல்வி எவ்வகையிலும் பயனளிக்காது. அவன் பல வழிகளில் சென்று பல து ைற க ளி லும் அறிவைப் பெற்றிருக்க வேண்டும்.
இவ்வாறு அறிவு பெறவிழையும் போது இலகுவாக அதை அடைந்து விடவும் முடியாது. சில சந்தர்ப்பங்களில் வசதியாகவும், வாய்ப்பாகவும், இலகுவாகவும் அதைப் பெற்று விட்டாலும் கூட பல சந்தர்ப்பங்களில் இடர்கள் தடைகள் சிரமங்கள் இல்லாமலுமில்லை. எனவேதான்,
*எத்தனையோ மேடுபள்ளம் வழியிலே - உன்னை இடற வைத்துத் தள்ளப் பார்க்கும் குழியிலே. அத்தனையும் தாண்டிக் காலே முன் வையடா..."
என்று கவிஞன் எழுதி வைத்தான் போலும்,
m இவ்வாருக முற்றுமுணர்ந்த அறிவினைக் கற்றுத் தெளி வதற்குத் தென்றலிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள
வேண்டிய முக்கிய அம்சங்களும் உண்டு என்கிருர் "பரஞ் சோதி முனிவர்". -

21
வீசும் தென்றலையும் பேசும் அஞ் சுகத்தையும், பாடும் குயிலையும், ஆடு ம் மயிலையும் காண்போர் கவனியாது விட்டாலும், கவிஞர் இலகுவில் விட்டுவிடுவதில்லை. இதற்குப் பரஞ்சோதி முனிவர் மட்டுமென்ன; விதிவிலக்கா?
மிக நெருக்கமான செடிகளையும் அடர்த்தியான கொடி களையும் வளர்த்தியான மரங்களையும் கொண்டது அச்சோலை. அதற்குள் செல்வதானுல் மேலோட்டமாக வெகு இலகு வாகச் சென்று விட முடியாது. தலையை வளைத்து நுழைந்து தான் செல்ல வேண்டும். -
அடுத்ததாக அமைந்திருக்கின்றது அந்த அமைதியான வாவி, அதன் மேலே இலேசாகச் செல்லலாம். சோலைக்குள் நுழைவது போன்ற சிரமம் அங்கு இல்லை.
அடுத்து, அவ்வாவியிலே பங்கய மலர்கள் நிறைந்து காணப்படுகின்றன. தென்றலுக்கு அ  ைவ அசைந்தாடு கின்றன. எனவே, தென்றல் அவற்றின் இதழ்களின் இடை களுக்குள் இயல்பாகவே புகுந்து துழாவுகின்றது.
தொடர்ந்து இருப்பன: மணமிகுந்த மயிலை, முல்லை, மல்லிகைப் பந்தர்கள். அந்தப்பந்தர்களும் த்தியான நிலையில் இருக்கின்ற காரணத்தால் தென்றல் அங்கே தாவிச் செல்கின்றது. இதன் பெறுபேருக எல்லா மலர் களின் மணமும் தென்றலோடு சேர்க்கப்பட்ட காரணத் தால் தென்றல் மிகவும் குளிர்ச்சியடைகின்றது.
அங்கிருந்து வெளியேறும் தென்றல் தான் பெற்ற அறிவின் பயணுக நிறைந்த நிம்மதியைப் பெறும் அறிஞனைப் போல, கலைகளை வெவ்வேறிடத்தில் கற்றுத் தேர்ந்து நல்ல வற்றைப் பெற்றுக்கொள்ளும் அறிஞனைப் போல் இயங்கு கின்றது.
இதைத் தான் திருவிளையாடல் புராணம் பாடிய பரஞ் சோதி முனிவர், 'பொங்கரின் நுழைந்து வாவி புகுந்து பங் கயந்துழாவிப் பைங்கடி மயிலைமுல்லை மல்லிகைப் பந்தர் தாவிக் கொங்கலர் மணங்கூட்டுண்டு குளிர்ந்து மெல் லென்றுதென்றல் அங்கங்கே கலைகள் தேரும் அறிவன் போலியங்கு மன்றே"
இத் தென்றலைப் போல் தேடியலைந்து தெளிவுற அறிவு பெறுதல் அறிவுடையார்க்கு அணிகலனுகும்.
25-05-86

Page 15
3 சூரியகாந்தி
முத்துப் பற்கள். மோகனப் புன்னகை. மின்னைப் பழிக்கும் இடை. மேனியோ மெருகூட்டிய ஓவியம். வேலைப் பழிக்கும் விழிகள். அன்னத்தை அவமதிக்கும் அழகு நடை. கார்மேகம் கவிந்து உருண்ட கூந்தல். பிறை நுதல்,
இவ்வாறெல்லாம் வருணிக்கப்படும் ஒருத்தியை வட்ட மிடுகின்றது ஒரு வாலிப வட்டம். எவஞே ஒருவனுக்கு மட்டுமே அந்த எழிலோவியம் உடமையாகிறது. மற்றவர் களுக்கோ ஏக்கம்!
மறுபுறத்தில், ஆ ட வன் எ ன் ரு ல் ஆடவன்தான் ஆணழகன் என்றுதான் கூற வேண்டும். புஜபல பராக்கிர மத்தில் அவனை நிகர்த்தவர் எவருமிலர் நாடிய நங்கையரோ பலர். நட்புக்கிடைத்ததோ ஒரே ஒரு த்திக்கு மட்டும்! ஏனை யோருக்கு ஏமாற்றமடைந்த காரணத்தால் கொஞ்சம் பொருமையும் கூட!
இவை இயல்பாகவே உலகில் நடந்த, நடக்கின்ற சம்பவங்கள் தாம். மனித குலத்தில் தான் இவ்வாறன போட்டி, பொருமை கெடுபிடிகளென்ருல். மலர்க்குலத் திலும் இந்நோய் புகுந்து விளையாடுகின்றதே! ஆச்சரிய மாக இல்லை?. ݂ ݂
ஆதவனின் அருளை ஆதியோடந்தமாய் அனுபவிக்கும் உரிமையும் பேறும் பெற்ற மலர் ஒன்று உண்டெண்ருல் அது 'கமலம்’ என்றுதான் குறிப்பிட வேண்டும். ஏனெனில், கதிரவனைக் கண்டதுமே கண்விழித்து கவர்ச்சியாகவும், கலகலப்பாகவும் காட்சியளிக்கும் இத் தாமரை மலர், அந்தி சாயும் போதிலே ஆதவனின் பிரிவின் துயர் பொறுக்க மாட்டாமல் அ  ைம தி யா ய் இதழ் மூடி மெளனியாகி விடுகின்றது.
கமலத்தைப் பாடும் புலவர்களும், கதிரவனைப் பாடும் கவிஞர்களும் இரண்டையும் தலைவன் - தலைவியாகப் புனைந்து ரைத்து இன்பம் கண்டனர்.

23
மணுளணுக்கேற்ற மங்கையாக - தலைவன் நிலைக்கேற்ற தலைவியாக கொழுநனுக்கேற்ற குலச் செல்வியாக - இக்க மலம் இலக்கியங்களில் எடுத்தாளப் படுகிறது.
இத்தகைய புகழ் பெறும் தாமரைக்கும் ஒரு 'வில்லி" இருக்கின் ருளே! அவள் யார்?
காதலர் இருவர் கருத்தொருமித்துச் சல்லாபிப்பதைக் களவாகக் காண்பதில் மகிழ்பவர்களும் இருக்கின்றர்கள் அல்லவா?
தாமரையின் தலைவனுகிய ஆதவனைப் பின் தொடரும் ஆரணங்கு ஒருத்தியை உளவு பார்த்து வந்த நாஞ்சில் கவிஞர் தேசிக விநாயகம் பிள்ளை அம்பலப்படுத்துகிருரீ.
அதிகாலையே கண்விழித்து, ஆதவன் செல்லும் வழியில் தொடரும் சூரியகாந்தியே இந்த ஒற்றரின் கண்களில் பட்ட வில்லியாவள். (வில்லி என்பது வில்லன் என்ற பதத்துக்கு பெண்பால் ஆகும்)
கண் நிறைந்த காதலியான கமல மலர் வைத்த கண் வாங்காது மலர்ந்த முகத்தோடு தன் மணனனைப் பார்த்து நிற்கும் போது நீ விண்ணிலே கண்ணுக நிற்பது ஏன்? ஆதவன் உன் (கள்ளக்) காதலன? என்று ஏளனமாகக் கேட்கிருர் கவிஞர்.
“ஆகாய வீதி யுலாவி வருமிந்த
ஆதவனே உன தன்பன டி? வேகாமல் வெந்து வெயிலில் உலர்ந்து நீ விண்ணிலே கண்ணுக நிற்பதேனே? என்கிருர்,
ஆதவன் உன்னை நினைத்திருக்க முடியாது. உன்னைத் தன் காதலியாக ஏற்றிருக்க மாட்டான். இராமபிரான் சூரிய குலத்தவன். அவனே ஏகபத்தினி விரதனுக இருந்தா னென்ருல் மாதவனன இந்த ஆதவன் - அக்குலத்தின் முதல்வன், இன்னேர் மங்கையை ஏறெடுத்தும் பார்ப்பான? இருக்கவே முடியாது.
காலையிலே நீ கலகலப்பாய் அவனை வரவேற்பதும், வெய்யில் கொடுமையிலும் அவனை நோக்குவதும், மாலை
யிலே மனந்தளர்ந்து வாடுவதும் உன் அறிவீனம்,

Page 16
24
அவன் உனது உண்மைக் காதலனுகவோ, அன்றேல் கள்ளக் காதலனுகவோ இருப்பானேயானல், 'அன்பே' என் ருெரு ஆசை வார்த்தையையேனும் கூறிவிட்டுப் போக மாட்டாணு? என்கிருரர்.
காலையிலே கதிர் வீசி வர = நிதம்
கண்டு களித்து மகிழ்ந்திடும் நீ மாலையிலே முகம் வாடித்தளர்ந்திட
வந்த வருத்தமும் ஏதடியோ? செங்கதிர் செல்லும் திசையது நோக்கி - உன்
செல்வ முகமும் திரும்புவதேன்? மங்கையே உன்மண வாளனவனகில் - இன்ப
வார்த்தை யொன்று சொல்லிப் போ கானே?
என்று சூரிய காந்தி மலரிடம் குத்தலாகக் கேட்கிளுர்,
உளவு பார்க்கும் கவிஞரின் கேள்விக்குப் பதில் இல்லை. காதலனைப் பார்த்த பார்வை பூத்ததோ? அல்லது மெய்ம் மறந்த நிலையில் நா பேச மறுத்ததோ தெரியவில்லை. வைத்த கண் வாங்காமல் சூரியனையே நோக்கி நிற்கும் சூரிய காந்தியின் எழிலையும், பொலிவையும், ஏக்கத்தையும், நோக்கத்தையும் இதயத்துள்ளே வைத்து இரை மீட்டு இறுதியாக ஒரு வித கிண்டல் செய்கிருர் கவிஞர்
ஆசை நிறைந்த உன் அண்ணலை நோக்கிட
ஆயிரங் கண்களும் வேண்டுமோடி? பேசவும் நாவெழ வில்லையோடி? கொஞ்சம்
பீத்தற் பெருமையும் வந்த தோடி? ബ மஞ்சள் குளித்து முகமினுக்கி - இந்த
மாயப் பொடி வீசி நிற்கும் நிலை கஞ்சமகள் வந்து காணிற் சிரிக்குமோ?
கண்ணிர் உகுக்குமோ? யாரறிவார்?
'தனக்குரியவனை மயக்க மா யப் பொ டி போட்டு நிற்கிருயே' என்பதை அந்தக் கமல மலர் கண்டால் உனக் காகக் கவலைப்பட்டுக் கண் ணி ர் விடுமோ? அல்ல து ஏளனமாய்ச் சிரிக்குமோ? என் கிருர்,
இவ்வாருக மலர்க்குலத்தின் காதல் போட்டியை எளிய நடையில் எமக்குப் படைத்த கவிஞரின் ஏனைய பாடல்களும் சுவை பயப்பன, நயம் மிகுந்தன எனக்கூறின் மிகையாகாது.
0-06-86

25 4 ஒற்றைக் கண்
"காகத்திற்கு இருப்பது" இரு கண்மணிகளல்ல; ஒரே கண்மணிதான் அதற்குண்டு என்று பெரியவர்கள் கூறும் போது, அது ஏன்? எதனுல் அப்படி வந்தது? எனக் கேட்டுக் கொள்ளாமலே ஏற்றுக் கொள்ளும் சிறுவர்கள் ஏராளம்,
எல்லாப் பறவைகளுக்குமே இரு கண்களை இறைவன் படைத்திருக்கும் போது இந்தக் காகத்திற்கு மட்டும் இந்த அவலநிலை ஏற்பட்டதற்கான காரணம் என்ன?
இதற்குப் பதிலளிக்கும் வ  ைக யி லும் வியப்புக்கும் நயப்புக்கும் ஏற்ற விதத்திலும் கம்பர்ாமாயணத்தில் கூறப் படும் ஒரு சுவையான சந்தர்ப்பத்தை இங்கு நோக்குவோம்.
கற்பிற்கரசியாம் சிறையிருந்த செல்வி சீதாபிராட்டி" தன் நாயகஞன இராகவனேடு, கல்லும் முள்ளும் நிறைந்த காட்டின் ஊடு சென்று சித்திர கூட மலையிலே தங்கியிருந்த வேளையிலே நடைபெற்ற சம்பவம் ஒன்றைக் கொண்டு காகத்திற்கு கண்மணி ஒன்றுகிய காரணத்தை அறியலாம்.
ஆளவேண்டிய அரண்மனையையும், வாழக்கூடிய அயோத் தியையும் நீத்து அடவி வாழ்வை மேற்கொள்ளப் புகுந்த இராகவன், தன் இல்லக்கிழத்தியாம் சீதையோடு சித்திர கூட பர்வதத்திலே தங்கியிருக்கிருன்.
காடெல்லாம் அலைந்து போந்த களைப்பு ஒருபுறம், உளையும் உளத்தோடு ஒய்வின்றி நடந்த அலுப்பு மறுபுறம். இராகவனும் இல்லற நல்லாளும் இடம், காலம் மறந்து ஒய்வுபெறும் வேளை,
அமைதியான நேரத்தை அலட்சியம் செய்வது போன்ற் அருவியின் சலசலப்பு. பறவைகளின் கலகலப்பு. இளந் தென்றலின் இனிய வருடல்.
இவற்றின் மத்தியிலே, இ  ைட மெல்லான் ந  ைட தளர்ந்து, உடை த ள ர் ந் து ஒரு புற த் தே அயர்ந் திருக்கின்ருள்.

Page 17
26
இவ்வேளையிலே, எ தி ர் பாரா த ஒரு சம்பவம். தென்றலின் தழுவலிலே சோர்வுற்ற மனநிலையில் திவ்ய பொலிவோடு அயர்ந்திருந்த அவளே.
இந்திரனின் புதல்வஞன 'ஜயந்தன்' அவதானித்து விட்டான்.
எப்படியும் அவளை அடைய வேண்டுமென்ற எண்ணங் கொண்டான். சித்திரகூட மலைக்குச் சிகரம் வைத்தாற் போற் திரண்டு நின்ற சீதா பிராட்டியின் மார்பகங்கள் அவனை மலைக்கச் செய்தன.
நிலைகுலைய வைத்தன.
மாயமான் உருக்கொண்ட மாரீசனப் போல இவனும் தன் உருவை மாற்றினுன்.
சிற்றிடையாள் சீதையின் மேல் கொண்ட சிற்றின்ப வேட்கை இவனது சிறுபுத்தியைச் சபலமுறச் செய்கிறது.
மனித உருவில் செல்வது மடைமை. என்பதை நன் குணர்வான் இவன். எ ன வே, இயற்கையோடியைந்த ஈடுபாடுகளாலேயே இவளை அடைவது ஏற்றது என்றது அவனது சபலபுத்தி.
காக்கையாக உருவெடுக்கிருன். கண்முடித் திறப்ப தற்குள் பறந்த அவன் ஏதோ எதிர்ப்ார்த்ததை அடைந்து விட்ட ஆனந்தத்தில் அவளது மார்பிலே அமர்ந்து, தனது நகங்களினுல் அங்கே.
அதற்கிடையில் அ  ைத அவதானித்து வி டு கி மு ன் அண்ணல் இராகவன்.
தன் கருத்துக்கினியவளின் கற்புக்குக் களங்கம் கற்பிக்க வந்த காக்கையைக் கொன்ருெழிக்க  ைக யி லே ஏதும் இல்லாத காரணத்தால் கல்லிலே முளைத்திருந்த ‘புல்" லொன்றைப் பிடித்திழுத்தான், அதை வில்லாய் வளைத் தடித்தான்.
*வல்லவனுக்குப் புல் லு ம் ஆயுதமன்ருே?" அ ன் று கெளதமரின் சாபத்தால் உடம் பெல்லாம் கண் பெற்ருன் இந்திரன். இ ங் கே இராமனின் புற்பாணத்தால் தன் ஒற்றைக் கண்ணைப் பறிகொடுத்தான் அந்த இந்திரனின் மகன் ஜயந்தன்

27
அன்று தொட் டு அனைத்துக் காகங்களுமே தம் ஒற்றைக் கண்களே இழந்தனவாம்.
அசோகவனத்திலே, அரக்கியர் சூழவிருந்த செல்வி சீதை. அன்று சித்திர கூட பர்வதத்திலே அரங்கேறிய அச்சம்பவத்தை ஞாபகப்படுத்திப் பார்க்கிருள்.
*அன்று சிறியதோர் த வ றி  ைழ த் த ஜயந்தனை அக்கணமே தண்டித்த அண்ணல் இராமன் இன்று இலங்கை யர்கோன் இழைத்துநிற்கும் இப்பெரிய தவறையும் இது வரை கண்டிக்க வரவில்லையே” என எண்ணிக் கலங்குகிருள்.
ஏசு வாளியவ் விந்திரன் செம்மன்மேற்
போக வேவி யதுகண்பொழிந்த நாள் காக முற்றுமோர் கண்ணில வாக்கிய
வேக வென்றியைத் தன்றலை மேற்கொள்வாள்
இந்தச் சம்பவத்தை எண்ணியெண்ணியேங்கி நின்ற அவள், அனுமனைக் கண்ட போது கூட இச்சம்பவத்தை இராமனுக்கு நினைவூட்டுமாறு பணிக்கின்ருள்.
'இராம தூதனே! நீ என்னை நேரிற்கண்டு என்னுடன் உரையாடிவிட்டு எனது நாயகனுன இராமனிடம் திரும்பிச் சென்றதை உறுதிப்படுத்துவதற்கு இ ச் சம் பவ த்  ைத அவரிடம் எடுத்துச்சொல் இது எனக்கும் எனது நாய கனுக்கும் மட்டுமே தெரிந்ததாகும். இதை நீ அவரிடம் கூறுவாயாயின், நீ என்னை நேரிற் கண்டு உரையாடிவிட்டு வந்தது உண்மைதான் எ ன் ப  ைதி அவர் தெ ரித் து கொள்வார்' என்று சீதை கூறி, காக உருவில் வந்த ஜயந்தன் தனது மார்பிலே நகத்தால் வருடியதையும், இராமன் கோபங்கொண்டு அவனத் தண்டித்ததையும் அனுமனிடம் எடுத்துக் கூறுகின்ருள்.
நாக மொன்றிய நல்வரை யின்றலை மேனுள்
ஆகம் வந்தெனை வள்ளுகிர் வாளி னழைந்த
காக மொன்றை முனிந்தயல் கல்லெழு புல்லால்
வேக வெம்படை விட்டது மெல்ல விரிப்பாய்.

Page 18
28
- இவ்வண்ணமாய்க் கம்பராமாயணத்தில் வரும் சந்தர்ப்பங்களைக் கற்பனையெனவும், வெறுங்கதையெனவும். இல்லை - உண்மையெனவும் பல ரு ம் பலவாறு கூறுவர். ஆயினும் நயப்புக்கும், வியப்புக்கும் ஈடுகொடுக்கமுடியா வகையிலான நறும் பெரும் சந்தர்ப்பங்களை நமக்கீந்துபோன கம்பன் ஒரு தெய்வீகப் பிறவியெனில் சாலவும் பொருந்தும்.
16-03-86
馨
5 பஞ்சபாணங்கள்
*ஆழ்ந்த பேரன்பினன்' என்றும், "தெய்வக் கற்பினுள்" என்றும் உயர் ந் த நிலைகளில் உவமித்துக் கூறப்பட்ட கைகேயியை ஈற்றில் கூற்றம்’ என்றும், கொடியோள்" என்றும் மாற்றிப் புனையப்பட்ட நிலையில் கம்பராமாணக் இதையோட்டம் செல்வதை அதைப் படித்தோர் அனைவரும் அறிவர்.
கேகயன் மடந்தையாகிய கைகேயியின் மேல் தசரதணுே கோசலையோ அன்றி இராம - இலக்குவரோ எது வி த மாசு மற்ற அன்பினையும் - நம்பிக்கையையும் கொண்டிருந் தனர். அதே போல், அவளும் அயோத்தி முழுவதிலும் ஆழ்ந்த பேரன்பு கொண்டவளாகவே இருந்தாள்.
எனினும், இராவணன் இழைத்த தீங்கு போல் ஆங்கு வரும் கொடுமனக் கூனி அவள் மனதையே மாற்றி விடுகிருள்.
பஞ்சதந்திரக் கதைகள் பலவுண்டு. என்ருலும் அவை அனைத்துமே ஐந்து பாரிய தந்திரங்கள்’ என்ற தலைப்புள் அடங்கி நிற்கின்றன.

29
இங்கே, "இராமாயணக் கூணி" எனப்படும் மந்தரை, தன் தலைவியாகிய கைகேயியின் மனதை மாற்றுதற்கு ஒருவித பஞ்ச பாணங்களைக் கையாளுகின் முள் எனலாம். மந்தரையின் பானங்கள் ஐந்தும் கைகேயியின் மன மாற்றத்திற்கு அடிப்படைக் காரணிகளாக அமைந்து விடுகின்றன.
அவற்றை இங்கு நோக்குவோம்.
எந்த வகையான தந்திரோபாயங்களைக் கையாண்டால் மனித மனம் மாறுபடுமோ, அவ்வகைகளை படிப்படியாக கைகேயியின் மனத்தில் படிய விடுகிருள் இம்மந்தரை,
1. "வீழ்ந்தது நின்னலம் திருவும் வீழ்ந்தது"
இராம - இலக்குவரைப் பெற்றிருக்கும் காரணத்தால் தனக்கு எஞ்ஞான்றும் வாழ்வே அன்றித் தாழ்வேயில்லை எ ன் ப  ைத நன்குணர்ந்தும் - ம கி ழ் ந் தும் இரு க்கு ம் கைகேயியை நோக்கி,
'வீழ்ந்தது நின்னலந் திருவும் வீழ்ந்தது
வாழ்ந்தனள் கோசலை மதியினுல்.” என்கிருள். இவ்வார்த்தைகளினலே, மா சற் ற கைகேயியின் தேசற்ற உள்ளம் மாசுறும். மயக்குறும். என மந்தரை எண்ணுகிருள்.
ஆணுல், இவ்வார்த்தைகள் அவளது எண்ணத்திலோ, இதயத்திலோ, எதுவித சலனத்தையும் ஏற்படுத்தவில்லே.
இராமன் கோமுடி சூடுவன் நாளை - வாழ்விது" என்பதாக, கோசலயின் வாழ்வைப் பற்றிக் கூறிய போதும் கூட கைகேயியின் மனம் மாசுபெறவில்லை.
மாருக மகிழ்ச்சி கொள்கிருள்.
மந்தரைக்கு முத்து மா லை யொன்றைப் பரிசாக அளிக்கிருள்.

Page 19
30
ஆத்திரம் கொள்ளும் மந்தரை தனது முதல் முயற்சி பலியாது போனதால் இரண் டா வ து பாணத்தைக் கையாளுகிருள்.
2. "நின் சேயொடு மாதுயர் படுக நீ.”
பிறர் வாழ வேண்டும்; அவர் நலம் பேண வேண்டும் என்று எண்ணுபவர்கள் கூட தனக்குக் கேடு வரும் வேளை அவற்றை மறந்து விடுவர்.
தனக்குக் கேடு சூழாது என்ற நம்பிக்கை இருக்கும் வரையில்தான் பலர் பிறரிடம் அன்பு காட்டுகிறர்கள். பிறர்க்கு நன்மை செய்வதில் முன் நிற்கிருர்கள். ஆயினும், தன் நலத்திற்குத் துன்பம் வரும் என்ற நிலை வருமேயானுல், அந்த உயரிய பண்புகள் எல்லாமே அவர்களை விட்டு நீங்கி விடும் என்பதை மந்தரை அறிந்தவளே.
அதனுல்தான்,
பேதை நீ பேதின்றிப் பிறந்த சேயொடு
மாதுயர் படுக; நான் நெடிதுன் மாற்றவள் தாதியர்க் காட் செயத் தரிக்கிலேன்.?
என் கிருள்.
உன் வாழ்வு மட்டுமல்ல; உன் மகன் வாழ்வும் தாழ்வு படுகிறது. உன் மாற்ருளாகிய கோசலைக்கு நீ பணி புரிய அவள் தாதியர்க்கு நான் பணிபுரிய என் வாழ்வுமே தாழ்வுபடப் போகிறது என்பதாக இர ண் டாவது பாணத்தை அரங்கில் கொடுத்து விடுகிருள்.
இரண்டாவது பாணத்தினுல் கைகேயியின் ம ன ம் சிறிதளவேனும் சலனப் பட்டிருக்கும் என்பது மந்தரையின் நம்பிக்கை. இச்சலனம் எவ்வகையிலும் சலனப்பட்டு விடக் கூடாது என்பதஞல், அப்பாணத்துக்கு மேலும் மெரு கூட்டுவது போல மூ ன் ருவ துர்பாணத்தையும் ஏற்றி விடுகிருள். -
3. "அவள் மகன் அரியணையில்.
உன் மகன் வெறும் தரையில்..'
எதிர்காலத்திலே கைகேயியும், மந்தரையும், பரதனும் அடையப் போகும் அவல வாழ்வினை எடுத்துக் காட்டுகிறள்.

'சிவந்த வாய்ச் சீதையும், கரிய செம்மலும் நிவந்தவா சனத்தினி லிருப்ப நின்மகன் அவந்தணுய் வெறுநிலத் திருக்க லான போ(து) உவந்தவா றென்னிதற் குறுதி யாதென்ருள்
“எதற்காக நீ மகிழ்வுறுகின்ருய்? எதை நம்பி எதிர்கால வாழ்வில் நீ உறுதியோடு இருக்கின்ருய்? இராகவனும், அவன் பிராட்டியும் - அவர்களோடு கூட கோசலையும் வாழ்வு பெறும் காலத்திலே சீதையோடு இ ரா ம ன் அரியணையில் அமர்ந்திருப்பான்.
அவ்வேளையிலே, உன் மகன் பரதன் சீரிழந்து செயலி ழந்து, நலமிழந்து, வலுவிழந்து வெறும் நிகத்தில் அமர்வ தோடல்லாது, அவர்கள் இடும் ஏ வலைத் தலைமேற் கொண்டு செயற்பட வேண்டிய அவல நிலைக்குள்ளாகப் போகிருனே." என்று ஏக்கப் பெருமூச்சோடு கூறுகின்ருள்.
தொடர்ந்து அ டு த் த பாணத்தையும் உடனேயே தொடுக்கின்ருள்.
4. *கரை செயற் கருந்துயர்க்
கடலில் வீழ்கின்ரு ய் '
எதிர் கால வாழ்விலே கைகேயிக்கு ஏற்படப் போகும் இன்னல்களை எடுத்துரைக்கின்ருள். வருங் காலத்தில் வரவி ருக்கும் கஷ்டங்களைக் காட்டுகிருள். அரச குலத்தில் பிறந்துஅரச குலத்தில் வாழ்க்கைப்பட்டு - பேரரசியாகத் திகழும் நீ எதிர்காலத்தில் கரையிலாத் துயர்க் கடலில் மூழ்கப் போகின்ருயே.
சொன்னுலும் கேட்கிருயில்லேயே'. என்கிருள்.
'அரசரிற் பிறந்து பின் னரச ரில் வளர்ந் தரசரிற் புகுந்துபே ரரசி யான நீ கரை செயற் கருந்துயர்க் கடலில் வீழ்கின்ருய் உரை செயக் கேட்கிலை யுணர் தியோ வென்முன்"
எ தி ர் கா ல வ ர ழ்  ைவ எதிரில் இருத்தி, "உன் தன்னலத்தை ம ற ந் து நீ மற்றவர்க்காக வாழ்வதில் பயணில்லை. எதிர் காலத்தில் நீ பாழ்க் கடலில் விழவேண்டி நேரிடும்" என்கிருள்.

Page 20
32
இச் சந்தர்ப்பத்திலேதான் மந்தரையின் மனத்தில் தன்னலத்துக்கும், அறத் துக் கும் போராட்டம் நடை பெறுகிறது. இந்நிலையில் மந்த  ைர தனது ஐந்தாம் பாணத்தை எய்கின் மூள்.
5. "எதிர்கால ஆட்சி அவன் பரம்பரைக்கே"
என் இனிய தலைவி, என் சொல்லைக் கேள். மூத்த வனுக்குத் தான் அரசு உரியது என்ருலும், தசரதன் இருக்கும் இவ்வேளையிலே இராமன் மகுடம் சூடுவதேன்? தசரதன் இருக்க இராமன் மகுடம் புனைவது மரபென்ருல், இராமன் இரு க் க பரத ன் அதையேற்பது தவருே? என் கிருள். −
மூத்தவற்குரித் தரசெனும் முறைமையின் உலகங் காத்த மன்னனில் இளையணன் ருே கடல் வண்ணன். ஏத்து நீண் முடி புனைவதற் கிசைந்தன னென்றல் மீத்தருஞ் செல்வம் பரதனை விலக்குமா றெவனே?
கைகேயி உரிமை இழக்கின்ற காரணத்தால் அவள் தந்தை பகைவர்க்கு அடங் கி வாழவும் நேரிடலாம். எப்படியும் இறுதி வ  ைர ஆட்சி பரதனுக்கே இல்லை என்பதையும் கூறுகிருள்.
பேரரசு அவன்குலக்கோமைந்தர் தமக்கும் அடுத்த தம்பிக்குமாம்; பிறர்க்காகுமோ..?. என்று அவனது அவல நிலையைப் படம் பிடித்துக் காட்டு கிருள். ".
இவ் வா று சாமர்த்தியமாகப் பிரயோகிக்கப்பட்ட மந்தரையின் ஐந்து பாணங்களால் அடியுண்ட கைகேயி நடுநிலை தவறுகிருள். சுயநலத்தள் ஆகின்ருள்.
கூனியின் துர்ப்போதனை மதுபான போதைபோலத் தலைக்கேற, நிதானம் இழந்தவளாக - தசரதனிடம் சென்று, இராமன் கானகம் போகவும், தன் ம க ன் ப ர த ன் உலகாளவும் வரம் வேண்டுகின்ருள்.
இதன் பயணுக அவள் இறுதியில் அடைந்தது என்ன!
மந்தரையின் ஞ் ச பாண வ் க ளா ல் மனம் மாறிய கைகேயி ஈற்றில் மஞ்சள் குங்குமம் இழந்தவள் ஆளுள், ஒரு பெண்ணுக்கு இதை விடப் பேரிழப்பு பிறிதொன்று உண்டோ
14-05-86

33
6 சந்தன மரம்
பெற்ற தாயும் பிறந்த பொன்னடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே."
என் ரு லு ம் கூட, பெண்களுக்கு பிறந்த கத்திலும் பார்க்க புக்ககமே மேலானது" எனக் கொள்ளுதலே மிக மிகப் பொருத்தமானதாகும்.
இருந்த போதிலும் சில தாய்மார் சில சந்தர்ப்பங்களில் தம் பிள்ளைகளை - குறிப்பாக பெண் பிள்ளைகளை திருமணம் புரிந்து பேரப் பிள்ளைகளைக் கண்ட பின்னர் கூட கணவன் மாருடன் தனிக் குடித்தனம் நடத்த அனுமதியாதிருப்பது கண்கூடு.
விதி வ ச த் தா சந்தர்ப்ப சூழ்நிலையால் - பழக்க தோஷங்களால் சில புற நடைகள் அமைந்து விடுவதுமுண்டு. அவற்றை இங்கு பெரிதுபடுத்துவது சிறப்பல்ல.
பொது நோக்கில் பெண்டிர்க்கு - தம் பிறந்த கமல்ல; புக்ககமே உயிர். கணவனே கண்கண்ட தெய்வம். பிறந்த வீட்டிற்கு அவர்கள் உரியவர்கள் அல்லர்.
பெற்றவர்களும் இதைப் புரிந்து கொள்ளல் அவசியம் என்பதை உலகுக்கு உணர்த்தும் வகையில் கலித் தொகை காட்டும் காட்சியொன்றினை இங்கு நோக்குவோம்.
அவனும் அவளும் இணைபிரியா காதலர்கள். களவியலில் கைதேர்ந்தவர்கள். எனினும் இருவரின் இணைவுக்கும் அவர் களின் இருப்பிடம் ஒத்து வரவில்லை.
பெற்றேரின் பிடிவாதம், உற்ருர் உறவினரின் நச்சரிப்பு, தலைவியும் தலைவனும் தனிமையை நாடுகிருர் கள்.
*திருமணம் செய்து கொள்ள இல்லத்தார் எதிராக இருக்கிருர்கள்; என்ன செய்யலாம்’ என்று தலைவி யோசிக் கிருள். அவளது முடிவு தன்னை அவனேடு இணைத்துக் கொள்வது தான்.

Page 21
34
உள்ளங் கவர்ந்த தலைவனுேடு புறப்பட்டு விடுகிருள் லை வி.
岛 நேரம் போகப் போக விடயம் வெளிப்பட்டு விடுகிறது. வீட்டார் அவளைத் தேடுகிறர்கள். அவளைத் தான் பெற்ற பிள்ளையைப் போல வளர்த்துச் சீராட்டிய செவிலி, மகளைக் காணுது துடிக்கிருள். அங்கும் இங்கும் ஒடி ஒடித் தேடுகிருள். ஊரைக் கடந்து செல்லும் பாதையிலே படுவேகமாகப் புறப்படுகிருள்.
அந்தணர் சில ர் அ வ ளு க் கு எதிர்ப்படுகிருர்கள். அவர்களிடம் அவள் கவலை தோய்ந்த முக த் து டன் கேட்கிருள்.
"அந்தணப் பெருமக்களே! தாங்கள் வரும் வழியில் காதலர் இருவர் கருத்தொருமித்துப் போதலை நீங்கள் கண்ட துண்டோ?
*எறித்தகு கதிர்தாங்கி ஏந்திய குடைநீழல் உறித்தாழ்ந்த கரகமும் உரைசான்ற முக்கோலும் நெறிப்படச் சுவல் அசைஇ வேறு ஒரா நெஞ்சத்துக் குறிப்புஏவல் செயல் மாலைக் கொளி நடை அந்தணிர்!
வெவ் இடைச் செலல்மாலை ஒழுக்கத்தீர்! இவ்இடை என் மகள் ஒருத்தியும் பிறள் மகன் ஒருவனும் தம்முளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர் அன்னர் இருவரைக் காணிரோ பெரும!”
அந்தணர்கள் அவளுக்குப் பின் வரும் பதிலைக் கூறு கின்றர்கள்.
*காணுேம் அல்லேம்,
கண்டனம் கடத்திடை
ஆண் எழில் அண்ணலோடு அருஞ்சுரம் முன்னிய
மாண்இழை மடவரால்
தாயிர்நீர் போன்றீர்.
பல உறு நறுஞ்சாந்தம்
படுப்பவர் க்கு அல்லதை
மலையுளே பிறப்பினும்
மலைக்கு அவைதாம் என் செயும்?
நினையுங்கால் நும்மகள்
நுமக்கும் ஆங்கு அனையளே:

35
சீர்கெழு வெண்முத்தம்
அணிபவர்க்கு அல்லதை
நீருளே பிறப்பினும்
நீர்க்கு அவைதாம் என்செயும்?
தேருங்கால் நும் மகள்
நுமக்கும் ஆங்கு அனயளே
ஏழ்புணர் இன்னிசை
முரல்பவர்க்கு அல்லதை யாழுளே பிறப்பினும்
யாழ்க்கு அவைதாம் என் செயும்? குழுங்கால் நும் மகள்
நுமக்கும் ஆங்கு அனயளே;
என வாங்கு,
இறந்த கற்பினுட்கு எவ்வம்படரன் மின்!
சிறந்தானை வழிபடி இச் சென்றனன்;
அறம் தலை; பிரியா ஆறும் மற்று அதுவே"
*ஆடவன் ஒருவனுடன் அவளொருத்தி போவதைக் கண்டோம். ஆணழகன் ஒருவனும் துணிச்சலுடைய ஒரு அழகியும் இணைந்து செல்வது இயல்புதானே” என்று எண்ணி னுேம்,
*அம்மணி! உங்களைப் பார்த்தால் அந்த இளமகளின் தாயார் போல் தோன்றுகிறது"
"அம்மா! சந்தன மரத்தை அறிவீர்களே. மலைகளிலே வளரும் அம்மரத்தினுல் அம்மலைக்கு ஏ தே னு ம் பயன் a gor G. It?
"ஆணுல், அதே சந்தன மரம் உலகில் எத்தனை மக்களுக்கு எவ்வாறெல்லாமோ. ப யன் படுகிறதே. எ ன் னி ப் பாருங்கள். இள மகளான உங்கள் இகளும் அத்தகையவள் அல்லவா?
*வெண் முத்துக்களை எண்ணிப் பாருங்கள். ஆழ்கடலிலே சூழ்ந்து நிற்கும் சிப்பிகளிடையே அவை தோன்றினுலும் கூட அச்சிப்பிகளுக்கோ, அ வ ற்  ைற வளர்த்து நின்ற அக்கடலுக்கோ எதுவித பயனை யும் அவை தருவதா யில்லையே, அ ப் படி நோக்கும் போது அம்மங்கையும் அத்தகையவள் தானே"

Page 22
36
'இசையைப் பற்றிச் சற்று சிந்தித்துப் பாருங்கள். இசை யாழில் பிறக்கிறது.
பிறந்தாலும் கூட அந்த இசை எங்கெங்கோ வாழும் பிறருடைய வாழ்வுக்கும் வளத்துக்கும் பயன்படுகின்றதே பன்றி அதைப் பிறப்பித்த யாழுக்கு எவ்வித பயனையும் தருவதாக இல்லையே. உங்கள் மகளும் அப்படித் தானே?
*ஆகவே, கற்புடைய காரிகையாகிய அவள், கணவனே கண் கண்ட தெய்வம் எனக் கருதிப் போயினமை தலேயாய அறம் என்றே கூறவேண்டும்."
"இம்மையில் மட்டுமன்றி மறுமையிலும் இருவரும் மகிழ்ந்திருக்க சிறந்த வழி அதுவேயாம்'
இவ்வாறு கூறிய அந்தணரின் அற நெறி கேட்டு அச்செவிலி அமைதியாகிருள்.
02-11-86 ܓܠ
7 தீர்ப்பு
பூக்கள் நெய்த பொன்ன விர்மேனி; நோக்கும் விழி களில் நோய் தரும் பாவை, "தவறு செய்தவள்’ எனக் குற்றம்சாட்டப்பெற்று தனியளாக்கப்பட்டவள்.
மாசு நிறைந்த மங்கையென மற்றவரால் குற்றம் சுமத்தப்பட்டு மகிமை நிறை இயேசுவின் எதிரில் கொண்டு வரப்படுகிருள்.
‘ஐய! இவள் அறங்கெட்ட மகள் கையும் மெய்யு மாய்ப் பிடிபட்ட பெண். மோயீசன் கூற்றுப்படி முறை கெட்ட இவளைத் தரைமீது வாழவிடல் தவறு" என்று கல்லெறிந்து கொன்ருெழிக்க வல்லவர் கூட்டமொன்று அங்கே வட்டமிட்டு நிற்கின்றது.

37
இயேசுவோ பேசவில்லை. அவரது ക്ന് அவர்களை நோக்க வில்லே.
ைேகவி ரல்கள் மண்ணிடைக் கீறின கால்கள் மெல்லத் தாள மிசைத்தன பொய் நிறைந்த மனத்தினர் சொல்வதில் ஐயன் உள்ளம் அலைந்து நெகிழ்ந்ததே'
என்கிருன் கண்ணதாசன். கல்லை ஏந்தி நிற்கும் கொல்வோர் கூட்டம் வில்போல் தம் புருவம் வளைத்து, 'கொல்வதே நல்லது” எ ன் று குசுகுசுத்து நிற்கின்றது. இயேசு பெருமான் பேசுகிருர்,
**யா வர் கைகள் பாவ மிலாதவோ யாவர் உள்ளம் பாசமி லாததோ நீவிர் அந்த முதற்பெருங் கல்லையே பாவை மீதிற் படிய எறிவீரே"
என் கிருர், சுற்றி நின்ற சுய நலமிகளின் விழிகள் ஒன்ருே டொன்று மோதுகின்றன.
கண்கள் இமைக்கின்றன. அதரங்கள் நெளிகின்றன. கரங்களோ கற்களை விடுவிக்கின்றன. கால்கள் திரும்பி நடக்கின்றன.
"இ யே சு சொல்லி அமைதியில் ஆழ்ந்தனர்
ஓசை யின்றித் தரையில் எழுதினர் கூசு கின்ற மனத்தினர் யாவரும் வீசு கல்லை விட் டோடினர் தாமரோ. அனைவரும் போன பின் இயேசு மீண்டும் பேசுகிருர்:
“யாரும் உன்னைத் தீர்ப்பிட வில்லையோ! சேரும் பாவம் இலாதவர் இல்லையோ? நேரில் நானும் தீர்ப்பிட வில்லைகள்ண் ஊரில் நீயும் ஒழுங்குற வாழ்வையே
இதுதான் இயேசு காட்டிய அன்பு, விவிலிய வேதம் சொல்கிறது, "இயேசுவில் இருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக் கடவது" என்பதாக,
அதுமட்டுமல்ல, மற்றவர்களைக் குற்றவாளியெனத் தீர்க்கிறவனே, நீ யாரானுலும் சரி; உனக்குப் போக்குச் சொல்ல இடமில்லை. அவர்கள் செய்கிற குற்றங்களை நீயே செய்கிருயே’ என்றும் எச்சரிக்கிறது விவிலியம்.

Page 23
ܵ
38
இது தொடர்பாக கவிஞரின் இயேசு காவியம் தரும் ஒரு பாடல்:-
எவரைப் பற்றி எந்த நேரத்திலும் குற்றம் பேசிக் குறை சொல் லாதீர் அப்படிச் சொன்னுல் அடுத்தநாள் உமக்கும் சட்டம் அதுவே தாக்குதல் திரும்பும் கண்டனம் செய்தால் கண்டிக்கப் படுவீர் மன்னித்து விட்டால் மன்னிக்கப் படுவீர் உமது கண்ணில் உத்தரம் கிடக்க சோதரன் கண்ணில் துரும்பைப் பார்ப்பதா? சொந்தக் கண்ணைத் துடைப்பீர் முன்னே அந்தக் கண்ணை அப்புறம் பார்க்கலாம்
*உன்னிடத்தில் நீ அ ன் பு கூர் வது பே ா ல வே பிறனிடத்திலும் நீ அன்பு செலுத்த வேண்டும்" என்பது தேவ கட்டளை.
"அன்பு செய்தார்க்கு அன்பு - என்ருல் ஆனந்தம் அதிலென்ன உண்டு அன்பற்ற பேருக்கு அன்பு - செய்தால் அதுவன் ருே மானிடப் பண்பு'
என்கிறது இயேசு காவியம்,
இன்றைய உலகில் அநேகர் பிறன் மீது அன்பு செலுத் தாமல் - தனக்கு இறைவன் கொடுத்த தாலந்துகளைப் பிறர் தேவைக் காகப் பயன்படுத்தாமல்
“ஆலயம் தொழுவதே சாலவும் நன்று" எனக் கொண்டு சமூகத்தின் தேவைகளைப் புறத்தே தள்ளி, நான் - எனது குடும்பம் - எனது சமயம் - எனது தொழில் என்று ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே வீழ்வதைக் காணக் கூடிய தாக இருக்கிறது. இயேசு காவியம் கூறுகிறது:
*மனிதர்பால் பகைகொண்டு இறை வனுக்கு மடிநிறையக் காணிக்கை செலுத்தி என்ன புனிதனெனப் பகைவனையும் உறவாய்ச் செய்து புண்ணியத்தைச் செலுத்திக்கொள் பிறகே கோயில் இனியவர்கள் அனைவரோடும் உறவு கொண்டு எதனைநீ கொடுத்தாலும் இறைவன் ஏற்பான்.”

39
*உன் சகோதரனுடன் சமாதானமாகி, பின்வந்து உன்காணிக்கையைச் செலுத்து’ என்பது இயேசுவின் அருள் வாக்கு, இது போன்ற எண்ணற்ற அருளுரைகளை தனது இயேசு காவியத்தின் மூலமாக கவியுருப்படுத்தி இலக்கிய உலகுக்குப் படைத்துச் சென்றுள்ளார் கண்ணதாசன்.
இவ்வாருக இயேசுவின் போதனைகளை கவியுருவில் அள்ளித் தந்த அமரனுக்கும் - அவனது காவியத்துக்கும் உலகனைத்தும் விழாவெடுப்பது உகந்ததாகும்.
(28-07-1988Ꮝ பிரதேச அபிவிருத்தி அமைச்சர் மாண்பு மிகு செல்லேயா இராசதுரை அவர்களது தலைமையில் கண்டியில் நடைபெற்ற கிறிஸ்தவ இலக்கிய
விழாவில் அரங்கேறிய "இயேசு காவிய" அறிமுகத்தை யொட்டிப் பிரசுரிக்கப்பட்டது)
23-07-83
8 MMU MAO 366JOJ I Liño
அன்று அரசன் திருமலை ராயனின் அவையே அமர்க் களப்பட்டது. காரணம், காளமேகப் புலவரின் எதிர்பாராத வரவு தான்.
அறுபத்தினுலு தண்டிகைக் காரரும், அப்புலவர்களின் தலைவனகி அதிமதுர கவிராயனும் அவையிலே ஆசனமிட்டு அமர்ந்திருக்கிருர்கள்.
ஏற்கனவே இவர்கள் அரசன் திருமலை ராயனை எச்சரித் திருந்தபடியால் அவனும் காளமேகப் புலவரை உபசரிப் பதில்லை என்று தீர்மானம் பண்ணியிருந்தான்.
காளமேகம் அவைக்குள் புகுந்தார். அவரை அரசன் வரவேற்கவில்லை, மற்றெவரும் வரவேற்கவில்லை. ஆசனமும் கொடுக்கவில்லை.

Page 24
40
என்ருலும் புலவர் தன் கரத்தில் கொணர்ந்திருந்த எலுமிச்சம் பழத்தினை அரசனிடம் நீட்டி அவனை ஆசீர் வதித்தார் - இதை அரசன் பெற்றுக் கொண்ட போதிலும் கூட ஆசனம் கொடுக்க முன்வரவில்லை. உட்காரும்படி கூறவுமில்லை.
ஆத்திரமுற்ற காளமேகம் சரஸ்வதியைத் துதித்து முப்பது வெண்பா கொண்ட பிரபந்தம் ஒன்றினைப் பாடினர். உடனே அரசனுடைய ஆசனம் வளர்ந்து அகன்று அவருக்கு இடம் கொடுத்தது, புலவர் அதில் அமர்ந்தபடி அவை யோரை ஏளனமாகப் பார்த்தார்.
அந்தமட்டில் தன் புகழை வெளிக்காட்ட விழைந்த அவைப் புலவர்களின் த லை வ ஞ ண அதிமதுரகவி தன் கவித்துவ வித்துவத்தை விளக்கி,
'மூச்சுவிடும் முன்னே முன்னூறும் நானூறும் ஆச்சென்ருல் ஐநூறும் ஆகாவோ - பேச்சென்ன வெள்ளைக் கவிக்காள மேகமே உன்னுடைய கள்ளக் கவிக்கடையைக் கட்டு"
என்ற வெண்பாவைப் பாடினர்=
அதாவது "வெள்ளைக் கவி பாடும் காள மேகமே, மூச்சு விடும் முன்னமே முன்னுாறு நானுாறு பாடலும், மூச்சு விட்டாச்சு என்ருல் ஐநூறும் யாம் பாடுவோம். சும்மா பிதற்ருமல் உன் நடையைக் கட்டு" என்பதாகும்.
விடுவாரா காளமேகம்? “இது பெரிய விந்தையோ? கேளும், வாயைத் திறக்குமுன் எ மூ நூறு எ ன் னு று பாடலும், வாயை ஒரு தடவை திறந்து மூடிவிட்டால் ஆயிரம் பாடலும் பாடுவேன். சந்தர்ப்பம் கிட்டினுல் மேகம் போல பொழியும் பெரும் காளமேகம் நா ன்" என்ற GLIT(56i LuL
"இம்மென்னும் முன்னே எழுநூறும் எண்ணுாறும் அம்மென் ருல் ஆயிரம் டாட் டா காவா? - சும்மா இருந்தால் இருப்பேன் எழுந்தேனே யாகில் பெருங்காள மேகம் பிளாய்”
என்று பாடி முடித்தார்.
காரசாரமான இப்பதில் கவியைக் கேட்டு அவையே அமர்க்களப்பட்டது. இது எவ்வளவில் முடியுமோ? என்று அனைவரும் யோசித்தனர்.

41
உடனே அதிமதுரகவி 'அரிகண்டம் பாட உனக்கு முடியுமா' என்று கேட்க அரிகண்டமென் ன, யம கண்டமே பாடுவேன்' என்ருர் காளமேகம்.
அரசனின் ஆணைப்படி காளமேகம் "யம கண்டம்" பாடவேண்டியதாயிற்று. அதன் படி ப தி ஞ று கன அடி அளவுள்ள குழி வெட்டப்பட்டு நாற்புறமும் நிலத்திற்கு மேலே பதினறு அடி உயர இரும்புத்தூண்கள் நாட்டப் பட்டன.
அவற்றிற்கு மேலே நாற்புறமும் இரும்புச் சட்டமிட்டு குறுக்கே ஒரு சட்டமிடப்பட்டது. இதில் பெரிய உறி ஒன்றும் இட்டப்பட்டது.
குழிக்குள் விறகு அடுக்கப்பட்டு குழிக்கு மேல் இரும்புக் கொப்பரை வைக்கப்பட்டது, விறகுக்குத் தீயிடப்பட்டது.
கொப்பரையில் மெழுகு குங்கிலியம் முதலியன உருகிக்
கொதிக்க வைக்கப்பட்டன.
காளமேகத்தின் இடுப்பிலும் கழுத்திலும் நன்ஞன்கு கத்திகள் கட்டப்பட்டன. அக்கத்திகளின் பிடிகள் சங்கிலி களிஞல் கட்டப்பட்டு அச்சங்கிலிகளில் நா ற் புற மு ம் நான்கு யானைகள் கட்டப்பட்டன.
புலவர் உறியில் ஏறி அமர்ந்து கொண்டார். யார் எதைப் பாடும்படி கேட்டாலும் அதற்குரிய பாடலை உடனே அவர் பாட வேண்டும். தவறின் யானைகள் நாற்புறமும் இழுக்க புலவர் சிரமும் இ  ைட யு ம் துண்டிக் கப்பட்டு இரும்புக் கொப்பரையுள் விழுந்து மடிய வேண்டி நேரிடும்.
உறியின் மீது காளமேகம் உட்கார்ந்ததும் அவையில் நிசப்தம் நிலவியது. என்ன நடக்குமோ என எல்லோரும் பயந்து நின்றனர். புலவரோ புன்னகையுடன் வீற்றிருந் தார். கீழே கொப்பரை கொதித்தபடி இருந்தது.
அதிமதுர கவிராயரும் அறுபத்து நான்கு தண்டி ைஇக் காரரும் எவ்வளவோ விஷயங்களைப் பாடும் படி கொடுத் தனர். அவ்வளவுக்கும் பொருத்தமான கவி (வெண்பா) பாடித் தன் புகழை நிலைநாட்டினர் காளமேகம்.

Page 25
42
அவற்றுள் சில வருமாறு:
"திருமாலின் பத்து அவதாரங்களையும் ஒரே வெண் பாவில் பாட வேண்டும்" என்ருர் அதிமதுரகவி. ஒன்றென்ன பாதி வெண்பாவிலேயே பாடுவேன்" என்ருர் காளமேகம்.
*மெச்சுதிரு வேங்கடவா! வெண்பாவிற் பாதியிலென் இச்சையிலுன் சன்மம் இயம்பவா? - மச்சாகூர் மாகோலா சிங்காவா மாராமா ராமாரா Lor Gestruir G) y Lorr6)r 6ur”
என்று பாடிஞர்
பன்னிரு ராசியையும் அடைமொழி இல்லாமல் முறை பிறழாமல் ஒரே வெண்பாவில் பாட வேண்டும்" என்ருர் ஒருவர்.
'பகருங்கால் மேடம் இடபம் மிதுனம் கர்க்க டகம்சிங்கம் கன்னி துலாம் விர்ச் - சிகந்த னுசுமகரம் கும்பமீனம் பன்னி ரண்டும் வசையறுமி ராசி வளம்"
என்ற வெண்பாவினல் அ ந் த வினவுக்கும் விடை பகர்ந்தார்.
*மும்மூர்த்திகளின் பெயர், அவர்கள் அருந்தும் கறி, உண்ணும் உணவு, ஏந்தும் ஆயுதம், பூணும் பூஷணம், ஏறும் வாகனம், வசிக்கும் இடம் இவையனைத்தும் ஒரே வெண்பாவில் வரட்டும்” என்ருரீ ஒருவர்.
பாடினர் காளமேகம்.
"சிறுவன் அளை பயறு செந்நெற் கடுகு மறிதிகிரி தண்டு மணிநூல் - பொறியரவம் வெள்ளேறு புள்ளன்னம் வேதனரன் மாலுக்கு கற்ருழம் பூவே கறி.
- என்ருர், அதாவது, சிவன், பிரமன், விஷ்ணு ஆகியோரின் கறி பிள்ளை, பயறு, வெண்ணெய், என்றும்

43
உணவு- செந்நெல், பூமி, விஷம் என்றும்ஆயுதம்:- மான், சக்கரம், தண்டம் எனவும். பூஷணேம்:- கெளஸ்துவம், உபவிதம், சர்ப்பம் எனவும் வாகனம்:- ரிஷபம், கருடன், அன்னம் என்றும் வசிப்பிடம்: கைலே, பாற் கடல், தாமரை என்றும் கூறப்பட்டது.
‘ஈயேற மலை குலுங்கியது என்ற பொருளில் ஒரு வெண்பா பாடு' என்ருர் ஒருவர். "மலையென்ன? உலகமே குலுங்கியதாகப் பாடுகிறேன்’ என்ருர் காளமேகம்,
*வாரணங்கள் எட்டும் மகமேரு வும் கடலும் தாரணியு மெல்லாம் சலித்தனவால் - நாரணனைப் பண்வா யிடைச்சி பருமத்தி னலடித்த புண்வாயில் ஈமொய்த்த போது'
OG
என்று பாடினர் - அதாவது,
பூரீ நாராயணன் கண்ணனய் வெண்ணெய் திருடிய போது பருத்த மத்தினல் அடிபட்டுப் புண்ணுகிய இடத்தில் ஈ வந்து அமர்ந்த போது அவன் திருமேனி அசைவுற்றது. அவ்வேளை அவனுள் அடங்கிய உல க மே குலுங்கியது என்றபடி பொருள் வைத்துப் யாடினரீ.
“ஒன்று மு த ல் பதினெட்டு எண்களை பும் கொண்டு வெண்பா பாடு” என்ருெருவர் ஆக்ஞாபித்தார்.
“ஒன்றிரண்டு மூன்று நான் கைந்தாறு ஏழெட்டு ஒன்பது பத்துப் பதினென்று க பன்னி ரண்டுபதின் மூன்றுபதி ஞன்குபதி னைந்துபதி ணுறுபதி னேழுபதி னெட்டு"
என்று பாடினர்.
இவ்வாறே அறுபத்து நான்கு தண்டிகைப் புலவரும் அதிமதுரகவியும் கேட்ட அ னை த் துக் கேள்விகளுக்கும் அகிலாண்ட நாயகியினருளினல் அழகாய்ப் பதிலிறுத்தார் காளமேகம்,
இவ்வளவு ஆற்றல் படைத்திருந்தும் கூட அவ்வரசனும் அவைப் புலவரும் அவரை மதியாதபடியால் அவ்வூரை விட்டே அகன்ருர் புலவர்.
காளமேகப் புலவரின் கவித்திறன் தான் என்னே!
04-05-86

Page 26
44
9 பொருத்தம்
மந்தரையின் சூழ்ச்சியால் ம ன ம் மாறிய மங்கை கைகேயி தசரதன தன் வழிக்குக் கொண்டு வருவதற்காக நாடகமொன்றையே அ ர ங் கே ற் றி விடுகிளுள். அந் நாடகத்தின் 'கரு'வை நெறிப்படுத்துவதற்காக த ன து உருவையே மாற்றிக் கொள்கிருள்.
அவளது நடிப்புத் தி ற ன் நாடகத்திற்கு மன்னர் பரிசைத் தட்டிக் கொடுக்கிறது. ஆம்!
கைகேயியின் சூழ்ச்சியால் கமலமுகன் இராமன் வனம் சென்று வாழ வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது.
அரசனிடம் வரத்தைப் பெற்று விட்ட அவள் அவசர மாக இராமனை அவளது இருப்பிடத்திற்ரு அழைக்கிருள். "அம்மா..!" என்று இதயத்தில் எழுந்த குரலோடு அவ்விடம் செல்கின்றன், இராமன்.
*தாயென நினைவான் முன்னே கூற்றெனத் தமியள் வந்தாள்.'
-என்கிருன் கம்பன். "அன்னை அழைக்கின்ருளே’ என்று ஒடி வந்தவனது எதிரே எமன் போல இவள் வருகிருள். வந்தவள் கூறுகிருள்.
'ஆழிசூழ் உலகெலாம் பரதனே ஆள,நீபோய்த் தாழிருஞ் சடைகள் தாங்கித் தாங்கருந் தவமேற்கொண்டு பூழிவெங் கானம் நண்ணிப் புண்ணிய துறைகள் ஆடி ஏழிரண் டாண்டில் வாவென் றியம்பினன் அரசன்’ என்ருர்
இ -தசரதனிடம் தான் பெற்ற இரு வரங்களையும் பற்றிக் கூறினல் "குட்டு வெளியாகிவிடும் என்பதைக் கைகேயி அறிவாள். ஆகவேதான் 'இயம்பினன் அரசன்' என்று தசரதன் மேலேயே பழியைப் போட்டு விடுகிருள்.
இராமன் அதற்குத் தந்த பதில் என்ன?

45
* மன்னவன் பணிஐன்ருகில் நும்பணி மறுப்பனே. யான்" -என்று கூறி மன்னவனிருக்கையின் திக்கு நோக்கித் தொழுகிருன், மா விரி  ைக  ைய அடைகிருன், ம ர வு ரி புனைகின் முன், மனைவியிடம் விடை பெற்றுக் கொள்ள வேண்டுமே; அவளிடம் செல்கிருன்; சொல்கிருன்.
“என் தம்பி பரதன் நாடாள்வன்; யானே காவலன் ஆனைப்படி காடு சேர்வேன்; மீண்டும் வ ரு வே ன், நீ வருந்தனை"
வார்த்தைகளைக் கேட்ட வ ணி  ைத வடிக்கின் முள் கண்ணிர். துடிக்கின்றன அதரங்கள். இடிக்கிறது நெஞ்சு, கடுந்துயரடைந்த அவள் கண் ணி ர் அ ல் ல; இரத்தக் கண்ணிரே வடிக்கின்ருள் என்றுதான் கூற வேண்டு ம். அத்தகைய சோர்வு நிலையை அடைகிருள்; விம்மு கிருள், வெதும்புகிருள்: தேம்பித் தேம்பி அழுகின்ருள்.
இவ்வளவு கவலையும் ஏன்? நாட்டை ஆள,வேண்டிய நம் தலைவன் அத் த னை யை யும் இழந்து அடவி சூழ் பிரதேசத்துள் வாழப் போகிருனே என்ற கவலையோ? அது தான் இல்லை. வள்ளுவர் கூறுகிருர்,
*தீயினுற் சுட்டபுண் உள்ளாறும் ஆருதே
நாவினுற் சுட்ட வடு'
அது போல் தன் நாயகன் கூறிய வார்த்தைகளே அந் நங்கை நல்லாளை அத்த ைதூரம் அழ வைத்து விட்டனவாம்,
நீவ ருந்தலை நீங்குவென் பானென்ற தீய வெஞ்சொல் செவிசுட விம்மினுள்"
- என்று குறிப்பிடுகின்றன் கம்பன்.
*பஞ்சின் மெல்லடிகள் பாதையற்ற அட விகளில் பரந்து
கிடக்கும் பருக்கைக் கற்களால் நோகுமே; அவற்றைத்
தாங்க உன்னல் கூடாதே" என்கிருன் இராமன்.
சீதையோவென்ருல், 'கணவனைப் பிரிந்து தனிாக இருக்கும் வெம்மையைக் காட்டிலும் வேறு வெம்மை ஏது? பாலே வனத்தின் பருக்கைக் கற்கள் தரும் நோ" இதன் முன்சர்வ சாதாரணம்" என்று பதிலிறுக்கின்ருள்.

Page 27
46
சொல்லியவள் மாளிகையுட் செல்கிருள். மறுபடியும் அவன் முன்னே மரவுரியோடு காட்சி தருகிருள்.
"காதலர் இருவர் கருத்தொரு மித்து ஆதரவு பட்டதே இன்பம்"
-என்பதற்கிணங்க இன்பத்தில் இணைந்த இவர்கள் துன்பத்திலும் இணைந்தே வாழ முற்பட்டமை இன்றைய இல்லறவியலார்க்கு ஒர் நல்லுரை போலாகும்.
காட்டையடைந்த தம்பதியர் கோதாவரி ஆற்றங் கரைக்கு வருகின்ருர்கள். இவர்களை வரவேற்க விழைந்த கோதாவரி தன் அலைக் கரங்களினலே உதிர்ந்து வரும் மலர்களை அவர்கள் நிற்கின்ற கரையில் ஒதுக்கி (அவர்கள் பாதத்தில் படைத்து வழிபடல் போல்) நிற்கின்றது.
ஆற்றங்கரைக் காட்சிகளை அள்ளிப் பருகிய வண்ணம் இருவரும் சென்று கொண்டிருக்கிறர்கள். அங்கே ஒருபுறம் அ ழ கி ய அ ன் ன ம் நடை பயில்கின்றது. இவர் களைக் கண்டதுமே வழி விலகி ஒதுங்குகிறது.
இராமன் அ  ைத ஆச்சரியத்தோடு பார்க்கின்ருன். தன்னவளின் மென்னடையைக் கண்டு அன்ன நடை தோற்ற காரணத்தினுலேயே அது வெட்கி ஒதுங்கிச் செல்கின்ற தாகப் பெருமை கொண்டு சிதையைப் பார்த்துப் புன் முறுவல் செய்கின்ருன். ஆனல் அதேவேளை எதிர்ப்புறத்திலே ஒரு யானை நீரைப் பருகிவிட்டு வந்த வழி திரும்புகிறது.
சீதை அதைப் பார்க்கிருள், தி ரு ம் பி இராமனைப் பார்க்கிருள்; புன்னகைக்கிருள். காரணம், வீறு கொண்ட தன் வேந்தனவன் ந  ைட  ைய க் கண்டு அதற்கெதிரே என்னடை எம் மட்டு?’ என்று எண்ணியே அந்த யானை திரும்புவதாக அவளது எண்ணம் இதைக் கா வி ய ம் படைத்த கம்பன் பின்வருமாறு காட்டுகிருன்.
ஓதிம மொதுங்கில்குண்ட வுத்தம னுழையளாகும் சீதைதன் னடையைநோக்கிச் சிறியதோர் முறுவல்
=செய்தான் மாதவ டானுமாண்டு வந்துநீ ருண்டுமீளும் போதக நடப்பநோக்கிப் புதியதோர் முறுவல்பூத்தாள்.

47
-அது மட்டுமல்ல; இருவரின் பார்வையும் இப்போ நதியை நாடுகின்றன. அங்கே கொடிகள் அசைகின்றன. அவற்ருேடு உறவாடிய இராகவனின் விழிகள் சீதையின் இடையில் குத்திட்டு நிற்கின்றன. சீதையின் கண்களோ அங்கு குவிந்து கிடந்த நீலோற்பல மலர்களில் மோதிப் பின்னர் தெறித்து இராமனின் உடலின் நீலத்தில் பி ர தி பிம்பிக்கின்றன. இதைக் கம்பன் எடுத்தாளும் விதம் இவ்வாறு:-
வில்லிய தடக்கைவீரன் வீங்குநீ ராற்றின் பாங்கர் வல்லிக ணுடங்கக் கண்டான்; மங்கைதன் மருங்குநோக்க எல்லியங் குவளை கானத் திடையிடை மலர்ந்துநின்ற அல்லியங் கமலங்கண்டா ளண்ணறன் வடிவங்கண்டாள்.
-இச் சந்தர்ப்பங்களை நோக்கும் போது காதலர் இருவர் கருத்தொருமித்தால் கா ன க த் தி லும் மகிழ்ச்சியாக வாழலாம் என்பது தெளிவாகின்றது.
20-10-85
馨
10 (36) и ш од 260
நீர்வளம், நிலவளம் பொருந்திய தேன் தமிழ் நாட்டில் வேளாள குலத்தில் "வாணன்' என்று ஒரு பிரபு இருந்தான். அவனுக்கு ஒர் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சொற்ப காலத்தில் தாயார் இறந்து போஞர்.
பச்சைப் பாலகனை வளர்க்கப் பெரிதும் கஷ்டப்பட்ட "வாணன்' தனக்குரிய திரவிய மெல்லாவற்றையும் தன்னை உயிருக்குயிராய் நேசித்த பண்ணையாளான "ஏ கன் சாம் பான்’ என்பவனிடத்தில் ஒப்புவித்து, தன் பாலகனையும் அவனிடம் கையளித்து,

Page 28
48
அன்பனே, கொல்லைப் புறத்திலே அளவற்ற திரவியத் தைப் பூமியுள் புதைத்துள்ளேன். இப்பிள்ளையை உன் பிள்ளை போல் வளர்த்து அப் புதையலையும் நீயே எடுத்துக் கொள்' என்று கூறி, மரணமடைந்தான்.
ஏகன் சாம்பான் குருபக்தி மி க் க வன். ஆக வே எசமானின் ஆ  ைச ப் படி யு ம், ஏவற்படியும் பிள்ளையை வளர்த்துப் பாண்டித்தியம் பெற வைத்து, வயது வந்த போது திருமணம் செய்வித்து - அப்புதையலையும் பெற்றுக் கொள்ளும்படி கூறினன்.
அப்பிள்ளையானவன் புதையலைத் தோண்ட முற்பட்ட போது அப்புதையலை ஆண்ட பூதம் கனவில் தோன்றி, "நான் பல வருடமாகப் பாதுகாக்கும் இவ்வேழு கோடி திரவியத்தை நீ எளிதில் அடையலாமோ? தயை, உண்மை, பக்தி பூண்ட ஒரு நரபலி எனக்குக் கொடுத்தால் திரவியம் உனக்குக் கிட்டும்’ என்று கூறிற்று.
இக்கனவை அப்பிள்ளையாண்டான் ஏகன் சாம்பானிடம் கூறவே, இரவோடிரவாக அவ ன் போய் அப்புதையல் இருக்கும் இடத்திலே தன் கழுத்தை வெட்டிக் கொண்டு பலியாகினன்.
அந்தப் பொழுதே பூதம் வாணனின் மகனிடம் போய் *எனக்குரிய நரபலி கிடைத்து விட்டது. உன் பண்ணையாளே எனக்குப் பலியாகிவிட்டான். நீ வந்து திரவியத்தைப் பெற்றுக் கொள்' என்றது.
அதிர்ச்சியடைந்த அவன், உடனே போய் அங்கு பார்க்க ஏகன் சாம்பான் பலியாகிக் கிடந்தான். அழுகையோடும் கண்ணிரோடும் அந்தி மக் முடித்துவிட்டுப் புதையலையும் எடுத்துக் கொண்ட அப்பிள்ளை யாண்டான், தனக்காக உயிர் விட்ட ஏகன் சாம்பானையும் தனக்குக் கல்வி புகட்டிய கம்பரையும் தன்னைப் பெற்ற வாணனையும் கெளரவிக்க எண்ணி, தன் பெயரை "ஏக-கம்ப-வாணன்" (ஏகம்பவாணன்) என வைத்துக் கொண்டான்.

49
ஏழு கோடி திரவியங்களால் தன் வாழ்வைப் பெருக்கிக் கொண்ட “ஏ கம்பவாணன்' தனக்கொப்பாரும் மிக்காரு மின் றிச் செல்வத்தில் திளைத்திருந்த வேளை, சேர, சோழ, பாண்டியர் மூவரும் அவன் வீட்டுக்கு வந்து ‘ஏகம்பவாண முதலியார் எங்கே?' எனக் கேட்டனர்.
*அவர் கழனிக்குப் போயிருக்கிருர்’ என மனைவி கூறி யனுப்பினள் முடி மன்னர் மூவரும் அவர் குலத் தொழிலைக் குத்திக் காட்டுவது போல “முதலியார் முடி நடப் போயி ருக்கிருரோ" என்று கேட்டார்கள்.
வேலையாள் மூலம் இந்த ஏளனப் பேச்சைக் கேட்டு ஆத்திர மடைந்த மனைவியானவள்.
*சேனை தழையாக்கிச் செங்குருதி நீர்தேக்கி
ஆனை மிதித்த அடிச்சேற்றில் -மான பிரான் மாவேந்தன் ஏகம்ப வாணன் பறித்து நட்டான் மூவேந்தர் தங்கள் முடி’
என்ற வெண்பாவினை எழுதி அவர்களுக்கு அனுப்பினள். அதாவது, நமது முதலியார் முடி நடுவது மெய்தான்” ஆனல் அவர் இந்தச் சொற்பமான நாற்று முடியா நடுவார்?
மூவேந்தரின் மு டி களை யும் பறித்து அவர்களின் சேனைகளை அழித்து, யுத்த பூமி என்னும் கழனியிலே அவற்றை எருவாக்கி, வடியும் இரத்தத்தை நீராய்த் தேக்கி, தனது யானையைக் கொண்டு சேருக்கி, அதில் அம்முடிகளை நட்டு வருகிருர்’ என்று கருத்துப்பட எழுதி அனுப்பினுள். பாடலைப் பார்த்த மூவரும் செய்வதறியாது, ஆத்திரத்துட னேயே தமதிருப்பிடம் மீண்டனர்.
ஏகம்பவாண முதலியார் வீட்டுக்கு வந்ததும் செய்தியை அறிந்து, இவர்கள் கர்வத்தை அடக்க எண்ணி, தமக்கு உதவிய பூதத்தை அழைத்து, "நீ போய் அந்தச் சேரனத் தூக்கி வா” என்ருர், உடனேயே சேரன் பூதத்தினுல் இடத்திவரப்பட்டான். அவனைச் சிறையிலிட்டார் முதலி யார். சேரன் அவரைச் சமாதானம் செய்து, ஆண்டுதோறும் திறை செலுத்துவதா கக் கூறிதன், தேசம் மீண்டான்.
அடுத்ததாக சோழனைத் தூக்கி வரும்படி பூதத்தைப் பணித்தார் முதலியார். அவ்வாறே அவனும் கொண்டு வரப்பட்டு சிறையிடப்பட்ட போது, அவன் சேரனப் போலவே திரவியம் செலுத்த உடன்பட்டுத் திரும்பினன்.

Page 29
50
மூன்ருவதாக, பாண் டி யனை த் துர க் கி வரும்படி பூதத்திற்குக் கட்டளை கொடுத்தார் முதலியார் பூதமோ போகப் பயந்தது. காரணம், பாண்டியன் எப்போதும் வேப்ப மாலை அணிபவன். இவ்வேப்ப மாலை பேய்களுக்கு விரோதமானதாகையினலேயே, பூதம் அவனிடம் போகப் Lu uu lʼi Lu L’-l —-g5I .
இது தொடர்பாக என்ன செய்யலாம் என யோசித்த முதலியார், தன் குருவாகிய கம்பரின் ஆலோசனைப்படி நான்கு பெண்களை அலங்கரித்து பாண்டியனிடம் சென்று, அவனை மயக்கி எப்படியும் வேப்பமாலையைக் கழற்றி விட வேண்டுமெனக் கூறி அனுப்பினர்.
அவர்கள் நால்வரும் ரம்பை, ஊர் வ சி, மேனகை, திலோத்தமை போல அங்கு சென்று ஆடிப் பாடி அவனை மகிழ்வித்தனர். அரசன் பாண்டியன் மயங்கி, பல விலை யுயர்ந்த மணி மாலைகளைப் பரிசளித்தான். அதைப் பார்த்த ஒரு பெண்.
'மாப்பைந்தார்க் கல்லமுத்து வண்ணத்தார்க்
கல்ல என் பெண் வேப்பந்தார்க் காசை கொண்டு விட்டாளே -
பூப்பைந்தார்
சேர்ந்திருக்கு நெல்வேலிச் சீவிலிமா முதமிழை ஆய்ந்திருக்கும் வீரமா ரு’
என்று ஒரு பாடலைப் பாடினுள் அதாவது, “மன்ன, நீர் தந்த முத்துமோகன மாலைகளிலே ஆசை கொண்ட வளல்ல என் பெண். உன் கழுத்தில் உள்ள வேப்ப மாலை தான் அவளுக்கு ஆசை. ஆகவே அதையே நீ தரவேண்டும்" என்பதாகக் குறிப்பிட்டாள்.
"அதை எப்படிக் கொடுப்பது' என்று யோசித்த அரசன், எதுவுமே பேசவில்லை. எ ன வே, இரண்டாவது பெண், அக்கருத்தை ஆமோதித்தபடி, "ആ
"தென்னவா! மீனவா! சீவலிமா ருமதுரை மன்னவா! பாண்டிவள நாடா! - முன்னம் சுரும்புக்குத் தாரளித்த துய்ய தமிழ் நாடா! கரும்புக்கு வேம்பிலே கண்”

51
என்று பாடினள். இதைக் கேட்டதும் அயர்ந்து போன அரசன் பதிலே பேசவில்லை. மூன்ருமவளும் தொடர்ந்தாள்:
'வேம்பா கிலுமினிய சொல்லுக்கு நீமிலைந்த
வேம்பா கிலுமு தவ வேண்டாவோ? - மீன் பாயும் வேலையிலே வேலை வைத்த மீனவா! நின் புயத்து மாலையிலே மாலைவைத்தாள் மான்'
என்று தன் விரு ப் பை யும் பாவில் அமைத்துப் பாடினுள். அதற்கும் அரசன் இசையாது போகவே, நான் காமவள் அம்மூவரையும் விளித்துப் பின் வருமாறு பாடினுள்
“இலகு புகழாறை ஏகம்ப வாணன்
அலகை வரும் வருமென் றஞ்சி - உலகறிய வானவர்கோன் சென்னிமேல் வண்கை வளை எறிந்த மீனவர் கோன் நல்கிடான் வேம்பு’
அதாவது, “கேளுங்கள் சகோதரிகளே! பாண் டி ய மன்னன் இவ்வேப்ப மாலையை எப்படியும் தந்து விடுவார். ஆனல், ஏகம்பவாணனுடைய பூதம் தம்மைப் பிடிக்குமே என்றஞ்சியே இவர் தர மறுக்கிருர் பாவம்' என்பதாகும்.
இப்பாடலினுல் வெட்கப்பட்ட மன்னன் வேப்பம் மாலை
யைக் கழற்றிக் கொடுக்கவும், ஏகம்பவாணனின் பூதம் உடனடியாக பாண்டியனைக் கொண்டுபோய் விட்டது.
அவனும் சிறைப்பட்டான். ஈ ற் றி ல் பாண்டியனின் மனைவியின் வேண்டுகோளின்படி அவனும் உடன்படிக்கை செய்து கொண்டதன் மேல் விடுவிக்கப்பட்டான்.
29-06-86

Page 30
52
11 பாதி வெண்பா
'உக்கிரப் பெருவழுதி" என்னும் பாண்டிய மன்னன் மதுரையில் அரசோச்சிய காலம் அது. சங்கம் வளர்த்த மதுரை வாழ் புலவர் பலர், “தமக்கு ஒப்பாரும் மிக் காரும் இல்லை" என்று கர்வம் கொண்டிருந்த காலகட்டம் அது.
ஆ தி க்கு ம் பகவனுக்கும் அருந்தவப் புதல் வனப் அவதரித்து ஆயிரத்து முன்னுாற்று முப்பது குறள்களையும் அணுவும் பிசகின்றி பாடியவர் வள்ளுவப் பெருந்த ைக. குறளுக்குச் சிறப்புப் பாயிரம் எழுதிப் பெறுவதற்காக மதுரைத் தமிழ்ச்சங்கப் புலவர்களைச் சந்திக்க வந்தார். அவருடன் ஒளவையாரும் சென்றிருந்தார்.
தம்மையே தலைப் புலவர்கள்’ என எண்ணி இறுமாப் புற்றிருந்த அச் சங்கப் புலவர்களைக் கர்வபங்கம் செய்ய வேண்டுமென ஒளவையார் எண்ணங்கொண்டார்.
ஒளவையார் அவை நடுவே எழுந்தார். வலக்கரத்தை உயர்த்தினர். ஐ ந் து விரல்களையும் குவித்தார். பிற கு மூடினர். அப்புறம் சிறிது திறந்தார். பி ன் ன ர் சுட்டு விரலொன்றை மட்டும் நீட்டினர். அதைத் தொடர்ந்து ஐந்து விரல்களையும் அகலத் திறந்தார், பின் ஆசனத்தில் அமர்ந் தார். சங்கப் புலவர்களை விளித்து 'புலவர்களே! யான் காட்டிய கைச் சைகைகளின் பொருள் தெளிவுபட (புலப்பட) கவிசமைத்துத் தருவீர்களா?” என்ருர், புலவர்கள் அதைப் பெரிது படுத்திக் கொள்ளவில்லை. இது என்ன? சிற்றின்பம் தொடர்பான ஒரு சின்ன விஷயம் தானே. இதற்குப் போய் ஏன் பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டும்? என்று மிக
இலேசாக பதில் இறுத்தனர்.
அப் பதில் பின்வரும் வெண்பாவாகப் பிரதிபலித்தது.
“இவ்வளவு கண்ணுடையாள் இவ்வளவு சிற்றிடையாள் இவ்வளவு போன்ற இளமுலையாள் - இவ்வளவா நைந்த வுடலா ணலமேவு மன்மதன்றன் ஐந்துகணை யால் வாடினுள்"

53
-இவ்வெண்பாவை மிக ஏளனமாகவே அவர்கள் எளிதில் பாடி முடித்தனர். ஒளவையார் அசட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்தார். பின்னர் புலவர்களே, நீங்கள் கூறுவதை நான் குறிப்பிட வில்லை. நீங்கள் உங்கள் சின்னப் புத்தியால் சிற்றின் பத்தைப் பற்றி பாடிவிட்டீர்கள். அதல்ல இதிற்குப் பொருள். நான் கூறுகின்றேன் கேளுங்கள்" என்ருர்,
பின்வரும் வெண்பாவை பாடினர்.
"ஐயம் இடுமின், அறநெறியைக் கைப்பிடிமின் இவ்வளவே னும் அன்னம் இட்டுண்மின் - தெய்வம் ஒருவனே யென்று முனரவல் லீரேல் அருவினைக ளைந்தும் அறும்"
-இவ்வாருக ஞானுர்த்தங்களுடன் கூடிய பாடல்களைத் தான் நாம் பாடுவோம் என்பதை தலைக்கணம் கொண்டி ருந்த அப் புலவர்கள் உணரும்படியாக ஒளவையாரின் வெண்பா அமைந்தது.
இத்தகைய ஆற்றல்வாய்ந்த ஒளவையார் தம் அவையில் இருப்பதை அறிந்த இ  ைட க் கா ட ர் திருவள்ளுவரின் குறளுக்குத் திறமையான ஒரு பாயிரத்தை அளித்திட வேண்டு மென்ற ஆர்வத்தினுல்,
“கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்"
- என்பதாக குறள் பாணியிலேயே சிறப்பித்தபோது புலவர்கள் கரகோஷித்தனர். ஒளவையாரோ சாந்தமாக "அப்படியல்ல" என்று மறுத்தார்.
"அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்"
என்பதுதான் சரி என்ருர், திருவள்ளுவநாயனுரை விடவும் ஒளவையார் கவித்துவத்தில் ஒரு தனித்துவம் பெற்றவர் என்றே கூற வேண்டும். காரணம், ஆயிரத்து முன்னூற்று முப்பது குறளில் அவர் தெளித்த அறம் பொருள், இன்பம் மூன்ருேடு வீட்டையும் (மோட்சத் தையும்) சேர்த்துக் கொண்டு நாலே வரியில் - நளினமாக ஒரு வெண்பாவினல் விளக்கிவிட்டார் எ ன் ரு ல் அவர் ஆற்றலைப் பற்றிப் பேசுவது முறையோ? அவ்வெண்பா வருமாறு:-

Page 31
54
"ஈதலறம், தீவினைவிட் டீட்டல் பொருள்; எஞ்ஞான்றும்
காத லிருவர் கருத்தொருமித் - தாதரவு பட்டதே யின்பம்; பரனை நினைந் திம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு”
- இவ்வாருக செருக்குடன் சீவித்த புலவர்களை அடக்கி வந்த ஒளவையார் கம்பரையும் விட்டு வைத்தாரில்லை.
சோழ நாட்டிலே சிலம்பி’ என்ருெரு தாசி இருந்தாள். * கம்பரின் வாக்கினலே பாடல் பெறுபவர்கள் செல்வரா கின்றனர்" என்று அவள் கேள்வியுற்ருள். ‘எப்படியாவது என் மீது ஒரு கவி பாட வேண்டும்’ என்று அவரை மன்ருடினுள். ஆனல், கம்பரோ 'ஆயிரம் பொன் தந்தாலொழிய யாம் கவி பாடுவதில்லை’ என்று கூறிவிட்டார். சிலம்பிக்கு ஒரே கவலை. என்ருலும் எப்படியும் செல்வந்தி ஆக வேண்டும் என்ற ஆசையினுல் தன்னிடம் இரு ந் த ச க ல சம்பத்தையும் விற்றுப் பார்த்தபோது எல்லாமாக ஐந்நூறு பொன் மட்டுமே தேறியது.
அதைக் கையில் எடுத்துக் கொண்டு கம்பரை அடைந் தாள். "ஐயா எப்படியாவது இந்த ஐந்நூறு பொன்னையும் வைத்துக் கொண்டு என் மீது கவி பாடுங்கள்; நான் செல்வந்தி ஆனதும் பாக்கியை வட்டியோடு தந்து விடு கிறேன்’ என்ருள். ஆனல் கம்பரோ, "இல்லவே இல்லை; ஐந்நூறு பொன்னுக்கு அரைப் பாட்டுத்தான்" என்று கூறிவிட்டார்.
"தண்ணிரும் காவிரியே; தார்வேந்தன் சோழனே
மண்ணுவ தும்சோழ மண்டலமே”
- என்ற ஈரடிகளைப் பாடி அவளது வீட்டு வாசற்படிக்கு மேல் சுவரில் எழுதிவிட்டுப் போய்விட்டார். சிலம்பியோ. அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்டேனே' என்று புலம் பினுள், உடுக்க உடையின்றி, உண்ண உணவின்றித் தவித்
தாள்.
அளவிறந்த பசியோடு அங்கு வந்த ஒளவையார் சிலம்பியின் வீட்டுத் திண்ணையை அடைந்தார். "மெத்தப் பசியோடிருக்கும் எனக்குக் கொஞ்சம் கூழ் தருவாயா?" என்று கேட்டார். அது கேட்ட தாசி உடனே ஒடிப்போய் தனக் காகக் கரைத்து வைத் திருந்த கூழைக் கொண்டு வந்து ஒளவையாரின் பசி போகும் வரை வார்த்தாள்.

55
பசிக்களை தீர்ந்த ஒளவையார் சுவரிலே எழுதியிருப் பதை அவதானித்து 'அவ்விரண்டு அடிகள்' பற்றி வினவினர். சிலம்பி முழு விவரத்தையும் கூறினுள். ஒளவையார் தனது கவித்திறனைக் காட்டினர்.
-பெண்ணுவாள் அம்பற் சிலம்பி அரவிந்தத் தாள் அணியும் செம்பொற் சிலம்பே சிலம்பு"
-என்ற தொடர் அடிகளினல் அவ்வெண்பாவை முடித் தருளிஞர்.
உடனே தாசியின் கால்களில் செம்பொற் சிலம்புகள் தோன்றின.
01-02-87
12 பழிக்குப் பழி
இலங்காதிபன் இராவணன் நெறி தவறியதால் உயிர் இழந்தான். கொடுங்கோலனுண அவனைக் கொன்று நீதியை நிலை நாட்டியது யார்?
இராமனே போர்க்களத்தில் இராவணனைக் கொன்ருன்" என்பது நாம் அறிந்த கதை. ஆணுல் இராவணனின் தம்பி விபீஷணனே தனது அண்ணன் இராவணனை இராமன் கொல்லவில்லை என்கிருன்.
அப்படியானல் உண்மைக் கொலையாளி யார்? விபீஷ ணனே வெளியிடும் ஒரு தகவல் இதனை விவரிக்கிறது.

Page 32
56
இராவணேசனின் தங்கை சூர்ப்பனகை தனியானவள் அல்லள்; திருமணமானவள். பாரம்பரிய முறைப்படி ஒரு அரக்கனை மணந்து குடித்தனம் நடத்தியவள். இல்லறமாம் நல்லறத்தை மேற்கொண்டு அவள் இனிது வாழ்ந்து வந்த கால கட்டத்தில், ஒரு நாள் அந்த எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்து விட்டது. அதையும் "விதி" என்றுதான் கூற வேண்டும்.
சூர்ப்பனகையின் கணவன் ஒரு தடவை போர்க்களம் புகுந்திருந்தவேளை, அவனது மைத்துனனுகிய இராவணன் விதி வசத்தாலும், எதிர்பாராத விதமாகவும், இனத் தெரியாமல் தனது மைத்துனனையே வாளால் அரிந்து, கொன்று விட்டான்.
கணவனைப் பறி கொடுத்த தங்கை சூர்ப்பனகை பரித வித்தாள். தன்னந்தனியாகப் போர்க் இளம் புகுந்தாள். அங்கு குவிந்திருந்த பிரதேங்களைப் புரட்டித் தன்னவனைக் ಹ6ÝLTdr.
ஆவியற்ற சடலத்தைக் கண்டு தன் ஆவி சோர்ந்தாள். அரற்றினுள், பிரேதத்தின் மீது புரண்டு புலம்பினுள்.
*முன்னமே தான் என்னை முறைமையா லேகொடுத்துப் பின் என நூல் இழப்பித்த இராவணனும் என்தமையன்
தன்னை மூவுலகரள யான் கண்டு தாரவுணர்
மன்னனே உடல் சுமந்து வாழ்வேனே வாழ்வேனே"
- இவ்வாறு கதறினுள் சூர்ப்பனகை,
*உன்னைக் கொன்ற பின் அவன் ஆண்டு நின்றிருக்க அதை நான் பார்த்துக் கொண்டு உயிர் வாழ்வதோ?’ என்ருள் அந்தப் பரிதாபத்துக்குரிய மடந்தை. அவள் உள்ளத்தில் பழிவாங்கும் எண்ணம் பிரதிபலித்தது.
அமர்க் களம் நீத்து அரண்மனை சென்ற அவள், தனது அண்ணனைக் கண்டாள். அழுது புலம்பிய தங்கையைத் தேற்றி தண்டக வனத்தில் அமைதியான வாழ்க்கையை ஆரம்பிக்கும் படி இராவணன் கூறினன்.
தமையனின் கூற்றுப்படி தண்டகவனம் சேர்ந்த ಛಿ? தனது பழிவாங்கும் எண்ணத்தை மறக்கவில்லே, வைரா கியத்துடனேயே வனத்தில் வாழ்ந்தாள். விதவையாக அவள் காட்டில் வாழ்ந்து வரும் வேளையில்தான் அந்தச் சம்பவம் நடந்தது.

57
அயோத்தி அண்ணலாம் இராமன் தனது அன்பு மனை யாள் சீ  ைத யு ட னு ம், இலக்குவனுேடும் பஞ்சவடிச் சோலைக்குள் பிரவேசித்தான். அவர்களைக் கண்டதுமே அரக்கி மகிழ்ந்தாள். ‘என்னவனைக் கொன்றவனைப் பழி வாங்கும் காலம் வந்து விட்டது!’ என இதயம் பூரித்தாள். இயற்கையிலேயே சிற்றின்ப வெறி படைத்த இராவணன் இச் சீரடிப் பாவையைப் பற்றிக் கேள்விப் பட்டதும் அங்கு வருவான் என்று சீதையைக் கண்டதுமே அவள் எண்ணி விட்டாள்.
'நீலமா மணிநிற நிருதர் வேந்தனை
மூலநா சம்பெற முடிக்கும் மொய்ம்பினுள் மேலைநாள் உயிரொடும் பிறந்து தான் வினை காலமோர்ந்து உடனுறை கடிய நோயனுள்"
- இவ்வாறு அரக்கர்குல வே ந் த னை அ டி யோ டு நாசமறுக்கும் தன்மை கொண்டவளாய் குர்ப்பன கை சிதையை நோக்கினுள். அவள் மனதில் பெரும் திட்டம் உருவாகியது. இராமன் மீது மோகம் கொண்டு அவனை அடைய முடியாத நிலையில் இலக்குமணனிடம் மூக்கையும் இழந்து, இலங்காபுரி சென்று இராவணனைச் சந்தித்தாள். பழிக்குப் பழி வாங்கும் எண்ணத்துடன் சீதையின் பேரெழிலை அத் தார்வேந்தனிடம் வர்ணித்தாள்.
க ச த ல் என்னும் உவப்பேறி - காமத்தீ வளர்ந்த காரணத்தால், காட்டை நோக்கிப் புறப்பட்டான் காவலன். சீதையைக் கவர்ந்தான். வாதையை வாங்கினன். வாழ்வை நீங்கினன்.
இராவனேசன் இறந்து கிடக்கும் வேளையில் அவன் இளவலான விபீஷணன் அங்கு வந்து அழுது புலம்புகிருன். 'இராவணனைக் கொன்றவன் இராமன் அல்லன்; சூர்ப்பன கையே" என்று அவன் இதயம் புலம்புகிறது.
*கொல்லாத மைத்துனனைக் கொன்ருய்என் றதுகுறித்துக் கொடுமை சூழ்ந்து பல்லாலே இதழதுக்கும் கொடும்பாவி நெடும்பாராப் பழிதீர்த்தாளே”
இராவணனைக் கொன்ற உண்மைக் கொலையாளி யார் என்பதை விபீஷணன் இவ்விதம் மனம் திறந்து கூறுகிருன் ,
14-12-86

Page 33
13 எதிரும் புதிரும்
கம்ப காவியத்தின் தலைவனுன இராமன் ஏக பத்தினி விரதன். இன்று வரை கம்பராமாயணத்தில் மட்டு மன்றி, கதைப்போர் ஒவ்வொருவரது கருத்திலும் இராமனுக்கு கெளரவம் கிடைக்கின்றது என்ருல் அதற்கான காரணங் களில் இதுவும் ஒன்று என்று திடமாகக் குறிப்பிடலாம்.
அறுபதினயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்த இராமனின் தந்தை தசரதன் கூட மனைவியர் மூவருடன் வாழ்ந்தவர். அதுமட்டுமன்றி பல்லாயிரம் இல்லக்கிழத்திகளும் அவருக்கு இருந்தார்கள். இதற்கு மாருக, மகனுகிய இராமன் ஏக பத்தினி விரதத்தினை மேற்கொண்டிருந்தான்.
சிறையிருந்த செல்வியை அனுமன், அசோக வனத்திலே சந்தித்தபோது, தன் கணவனது ஏக பத்தினி விரதத் தைப் பற்றி அனுமனுக்கு எடுத்துக் கூறுகிமுள் சீதை.
வந்துஎனக் கைப்பற்றிய வைகல் வாய் இந்த இப் பிறவிக்கு இருமாதரைச் சிந்தையாலும் தொடேன் என்ற செவ்வரம் தந்த வார்த்தை, திருச்செவி சாற்றுவாய்
இேராம தூதுவனே, அவர் என்னை மிதிலையில் கரம் பற்றிய வேளை கூறிய உறுதி மொழியைக் கேள். இப்பிற வியில் இந்த உள்ளத்தால் உன்னத் தவிர வேறு ஒருத்தியை எண்ணியும் பார்க்க மாட்டேன் என்ற உயரிய வரம் அவர் எனக்கு அளித்தவர்' என்கிருள்.
இவ்வாரு க, இலக்கிய விதிகளாலும், ரசிகர்களினலும் ஏக பத்தினி விரதம காரணமாக இராமன் போற்றிப் புகழப் படும் அதே வேளையில் இராவணனது நிலை வேறு. அவனது உயரிய குணங்கள் - உன்னத வீரம் இவைகள் மறைக்கப் பட்டு அவனது பெயர் எ ஸ் எரி நகையாடப்படுகிறது. அதற்கு அவன் ஒரு காமுகன் என்பதே காரணமாகும்.
அவனது தங்கை சூர்ப்பனகை சீதையைக் கண்டபோது,
அவனைத் தன் தமையனுகிய இராவணன் அடைய லுேண்டும் என்ற நோக்கில், சீதையின் அழகைப் பற்றித் இராவணனிடம் எடுத்துக் கூறு கி ரு ள். அ வ் வே ஃள, 'இராவணன் ஏற்கனவே பல மனைவியருடன் வாழ்கின்றவன்" என்பது அவள் மூலமாகவே குறிப்பிடப்படுகின்றது.
. . . . .

59
"மன்னு உனக்கு மட்டும்தான் நான் நல்லவளாக இருக்கிறேன். (அழகிய ஒருத்தியை உ ன க் கு அளிக்க வேண்டும் என்ற எண்ணம்) ஆணுல் உன் அரண்மனையிலே உன்னுடன் வாழும் உன் காதலியர்க்கெல்லாம் (புதியவளை அறிமுகம் செய்வதனுல்) கேடு புரிகின்றவளாகின்றேன்" என்கிருள்.
வள்ளலே, உனக்கு நல்லேன் மற்றுநின் மனையில் வாழும் கிள்ளைபோல் மொழியார்க் கெல்லாம் கேடுகுழ் கின்றேன் அன்றே
இராம தூதணுகிய அனு ம ன், சீதையைத் தேடிச் செல்லும் வழியிலே இராவணனுடைய மாளிகையைக் காண்கிருன், அது பூரண சந்திரனைப் போல் பொலிவுற்று
நிற்கின்றது.
அம்மாளிகையைச் சூழவும் வானத்தின் தாரகை போன்ற ஏராளமான சிறு மாளிகைகள் தெரிகின்றன. அவை என்ன வென்று நோக்குமிடத்து அங்கே இராவணனுடய காதற் கிழத்தியர் வாழ்வளிக்கப்பட்டிருக்கின்றனர்.
போர் இயற்கை இராவணன் பொன்மனை சீர் இயற்கை நிரம்பிய திங்கள் ஆத தாரகைக் குழுவில் தழுவித் தொடர் நாரியர்க்கு உறைவாம் இடம் நண்ணினுன்,
இவை மட்டுமல்ல, இராவணன் சீதையை எண்ணித் துயருற்றிருந்த காலை ஏ ன ய காதலியர்களை அவ ன் நினைத்தும் பார்க்கவில்லையாம். ஆனல், அவர் க ளோ அவனையே நினைத்து உறங்காமல் வருந்தினர் என்பதாகவும் கம்பன் குறிப்பிடுகின்றன்.
மேலும், அனுமன் கண்ட அரக்கமாதர்கள் நான்கு கோடி இருக்குமாம். இயக்கியர்கள் ஆயிரமாயிரம் கோடி யினராம். விஞ்சை மாதர் பன்னிரண்டு கோடியாம். சித்தி யர்கள் ஏராளமானுேர் இருந்தார்களாம்.
இவர்கள் எல்லாருமே இராவணனுடைய காதற் கிழத்தியராம். இவையெல்லாம் செயற் பட முடியாத கற்பனைகளா யிருந்தாலும், இராவணன் ஒரு காமுகன் என்பதனைக் காட்டுவதற்காகவே கம்பன் இக் கற்பனையைக் கையாண்டிருக்க வேண்டும்.
AY a na .

Page 34
60
எண்ணற்ற பெண்களின் இதயத்தைக் கவர்ந்தும் - இன் பத்தை நுகர்ந்தும் இராவணனுடைய காம வெறி அடங்க வில்லை. அதற்கு மகுடம் வைத்தாற் போன்று அவள் இராக வனின் மணையாட்சியில் கரம் நீட்டத் துணிந்த வேளை மடிய நேரிட்டது.
இராவணனின் மகனகிய இந்திரசித்து கூட இப்படிப் பலருடன் தொடர்பு கொண்டிருந்தானும், அனுமன் இலங்கை யிலே சீதையைத் தேடுகின்றன். புகை நுழைந்து செல்ல முடியாத வழியிலும் கூட நுழைந்து செல்லும் ஆற்றல் வாய்ந்த அனுமன் இந்திரசித்தனுடைய அரண்மனையுள் நுழைகின்ருன். அங்கே பல பெண்களின் நடுவே அவன் உறங்கிக் கொண்டிருக்கிருன் இதை
ஒக்கநோக்கியர் குழாத்திடை உறங்கின் முனைப் புக்குநோக்கினன் புகை புகா வாயிலும் புகுவான்
-என்கிருர் கம்பர்.
இச்சம்பவங்களில் இருந்து இராவணனது வீழ்ச்சிக்கு அவனது காம வெறியே காரணம் என்று தெளிவாகிறது. இராமனது மாட்சிக்கு அ வ ன து ஏகபத்தினி விரதமே காரணம் என்பதும் நன்கு உணர்த்தப்படுகிறது.
கம்பராமாயணத்திலே கற்பனைகள் ம லி ந் தி ரு ந் த போதிலும், கடைப்பிடிக்க வேண்டிய பல நல்ல கருத்துக் களும் கம்பனல் கூறப்பட்டிருக்கின்றன.
இராவ டைய கடைசி நேரத்தில் கூட அவனது காம வெறி கல்பனல் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இராம - இராவண யுத்தத்திலே, இராம பாணம் அவனது உடலெல்லாவற்றையும் துளைத்து விடுகின்றது. இராவணன் வீழ்ந்து கிடக்கிருன்.
அவளது தர்ம பத்தினியான மண்டோதரி ஒடி வருகிருள். அவன் உடலின் மீது கிடந்து புலம்புகிருள் அவனது உடலை க் கவனிக்கிருள். எ ன் ன ஆச்சரி? எள்ளிருக்க இடமின்றி அம்புகள் துளைத்திருக்கின்றன. அதன் காரணத்தை அவள் வாயிலாகவே கம்பர் கூறுகின்ருர்,

61
தன் கணவன் இறப்பதற்குக் காரணமே அவன், சீதை மேல் கொண்ட காதல் தான். அந்த எண்ணம் ಅyo 60Tg! உடலினுள் இருக்கவே கூடாது என்பதால்தான் இராம பாணம் அவ்வளவு துளைத்ததோ என்கிருள்.
வெள்ளெருக்கம் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி மேலும் கீழும் எள்ளிருக்கும் இடமின்றி உயிரிருக்கும் இடம் நாடி இளைத்த வாறே கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச் சிறையில் கவர்ந்த காதல் உள்ளிருக்கும் எனக் கருதி உடல் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி.
தன் மனைவியே தனக்குச் சான்றிதழ் கொடுக்குமளவுக்கு அமைந்திருந்தது இராவணனின் காம வெறி. இதை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இராமனது ஏகபத்தினி விரதம் கொடிகட்டிப் பறப்பது போன்ற பிரமை ஏற்படுகின்ற தல்லவா?
31-05-87
14 ஏக்கம்
ஆத்திசூடியின் அன்னையான ஒளவையார், அயலூருக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தார். அவ்வேளை பொழுது சாய்ந்து விட்டதால் இடையில் இருந்த ஊரில் இரவைக் கழித்து விடியப் புறப்படலாம் என்ற எண்ணத்தில், வழியில் வந்தவர்களை விளித்து, 'ஐயா, இன்றிரவை இவ்வூரில் சழித்துப் போக வேண்டும். படுத்துக் கொள்ள இடம் கிடைக்குமோ” என்ருர்,
அதைக் கேட்டவர்கள் அவரிடம், "அம்மணி, அயலிலே ஒரு திருவாசற் சாவடி உண்டு. அங்கே படுத்துக் கொள்ள போதிய இடவசதியுண்டு. ஆனல், அங்கே ஒரு பேய் இருக் கிறது. அங்கே படுக்க வருகின்றவர்களை அது அறைந்து விடுகிறது. ஆதலால் அங்கே படுப்பதற்கு எல்லாருமே பயப்படுவார்கள், என்றனர்.

Page 35
62
ஒளவையாரோ, "பேயைப் பேயடிக்குமே" என்று கூறிக் கொண்டு அச்சாவடியில் இரவைக் கழிக்க விரும்பினர். போய்ப் படுத்துக் கொண்டார்.
அவ்வேளையிலே அங்கு குடியிருந்த பெண் பேய் வெளியே சென்றிருந்தது. ஒளவையார் நன்கு குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார். முதலாம் ஜாமத்திலே அந்தப்
பேய் அங்கு வந்தது. ஒளவை யாரைக் கண்டது. ஆத்திரம்
கொண்டது.
*ஆரடா அது. என் எல்லைச்குள் வந்தவன். ? எவ்வளவு துணிச்சல் உனக்கு” என்று ஆவேசத்தோடு வந்து 'எற் றெற்று" என்று அறையப் பார்த்தது.
அக்கணமே ஒளவையார் கண்விழித்துக் கொண்டார்.
அறைய வரும் பேயை அலட்சியமாய்ப் பார்த்தார்.
வெண்பா ஒன்றைப் பாடினுர்,
*வெண்பா விருகாலிற் கல்லான வெள்ளோ லே கண்பார்க்கக் கையால் எழுதானைப்-பெண்பாவி பெற்ருளே பெற்ருள் பிறர் நகைக்கப் பெற்ருளென் றெற்ருேமற் றெற்ருேமற் றெற்று”
இவ்வாறு ஒளவையார் பாடியதைக் கேட்டதுமே அப் பேய் "எழுத்து வாசனை அறியாத ஒரு மூடனைத் தான் இச்சித்த தனது பூர்வீகக் கதையை அல்லவா இவள் சொல்கிருள்! அப்படியானுல் இவள் மானிடப் பிறவியல்லள் இவள் ஒரு தேவியாய் இருக்க வேண்டும்" என் றெண்ணி அகன்று போனது. -
பொழுது போய்க் கொண்டிருந்தது. ஒளவை மீண்டும் படுத்துக் கொண்டாள். இரண்டாம் ஜாமத்திலே அப் பேய் மீண்டும் வந்தது. ஒளவையைக் கண்டு ஆத்திரப் பட்டது. “எற் றெற்று' என்று அறையப் புறப்பட்டது. ஒளவையார் விழித்துக் கொண்டார். மீண்டும் ஒரு வெண் பாவினுல் அப் பேயை எதித்தார்.
"கருங்குளவி சூரைத்தூ றிச்சங் கனிபோல விருந்தினர்க்கொன் றியாதான் வாழ்க்கை - அரும்பகலே இச்சித் திருந்த பொருள் தாயத்தார் கொள்வரென் றெற்ருேமற் றெற்ருேமற் றெற்று”
ആ

63
இந்த வெண்பாவைக் கேட்டதுமே வெகுண்டு ஓடி பது பேய், "அப்பாடா, தொல்லை தீர் ந் த து’ என்று ஒளவையார் மீண்டும் உறக்கம் கொண்டார். எனினும், மூன்ரும் ஜாமத்திலும் அப் பேய் திரும்பவும் வந்தது. “எற்றெற்று' என்றது. ஒளவையார் எழுந்துவிட்டார். மீண்டும் ஒரு வெண்பா பிறந்தது.
"வான முளதால் மழையுளதால் மண்ணுலகில் தான முளதால் தயையுளதால்-ஆன பொழு தெய்த்தோ மிளைத்தோமென் றே மந் திருப்போை எற்ருேமற் றெற்ருே மற் றெற்று' -
இப்படி ஒளவையார் பாடினர். ஒடி விட்டது பேய். ஒளவையும் படுத்துக் கொண்டாள். மீண்டும் நாலாம் ஜாமத்திலே பேய் வந்தது. ‘எப்படியாவது இவளை அறைய வேண்டும்" என்று எண்ணி 'எற் றெற்று' என்று வந்தது. ஒளவையார் எழுந்தார். து னி ந் தார். மீண்டும் ஒரு
வெண்பா,
'எண்ணு யிரத்தாண்டு நீரிற் கிடந்தாலும் உண்ணிரம் பற்ருக் கிடையேபோல் - பெண்ணுவார் பொற்ருெடி மாதர் புணர்முலைமேற் சாராரை எற்ருேமற் றெற்ருேமற் றெற்று”
என்று பாடிய போது, அப்பேயுருக் கொண்ட பெண் ஒளவை யாரை வந்து வணங்கினள். இரக்கமுற்ற ஒளவை அதன் பூர்வீக வரலாற்றைக் கேட்ட போது, அப் பேய் பின் வருமாறு கூறியது.
*நான் ஒர் இளவரசி, ஒரு நாள் மாடத்தில் இருந்த வேளை, அவ் வழியாக வந்த ஒர் இராஜகுமாரன் மேல் மையல் கொண்டேன். எனவே, என் எண்ணத்தை எனது காதோலை யிலே நகத்தால் எழுதி, அன்றிரவு என்ன ஊர்ச் சாவடி யில் வந்து சந்திக்குமாறு குறித்து அவன் முன் போட்டேன். ஆணுல், அவன் கல்வியறிவில்லாதவன் என்று எனக்குத் தெரியாது. அவன் அதை வாசிக்கும்படி அங்கிருந்த ஒரு குஷ்ட ரோகிக்குக் காட்டியிருக்கிருன், வாசித்தறிந்ததும் அவன் இராஜகுமாரனைப் பயமுறுத்தி ஊருக்கு வெளியே துரத்தி விட்டு, நான் குறித்த இடத்தில் எனக்காகக் காத்திருந்தான். அங்கு சென்ற நான் கெடுக்கப்பட்டேன்.

Page 36
64
எதிர்பாராத விதமான இத் தடுமாற்றத்தால் நான் தற்கொலை செய்து கொண்டேன். எப்படியும் மீண்டும் மானுட ஜென்மம் எடுத்து அவரை அடைய வேண்டும்" என்ருள்.
அதே வேளை, 'தனக்காகத் தன் உயிரையே இழந்தாள்
இராஜகுமாரத்தி’ எனக் கேள்வியுற்ற அவ் இராஜ குமாரனும் தற்கொலை செய்து கொண்டிருந்தான்.
அவனும் அவ்வேளையிலே ஆவேச வு ரு வில் வந்து ஒளவையாரை வணங்கி நின்றன். இருவரது நிலையை யும் அவதானித்த ஒளவையார் பெண்ணுவேசத்தை விளித்து 'நீ உறை யூரில் வாழும் மரகதவடிவின் மகளாய்ப் பிறந்து விரும்பிய வாழ்வைப் பெறுவாய்' எனவும் ஆணுவேசத்தை நோக்கி "அதேலுரிலே விறகுதலையன் என்பவனுக்கு மகனுகப் பிறந்து உரிய காலத்தில் இவளை மனைவியாக அடைவாய்" எனவும் வாழ்த்தினர்.
அவ்வாறே அவர்களிருவரும் எ தி ர் காலத் தி ல் ஒன்றிணைந்ததாகக் கதைகள் கூறுகின்றன,
08-12-85
繫
15 படையும் கொடையும்
வீரம்" என்ருல் முரட்டுக் குணம் என்பதல்ல. அதுவும் நற்குணங்களுள் ஒன்றே.
வீரமுடையோரது உள்ளம் மிக்க இரக்க குணம் உடைய தாகவே இருக்கும். “இன்று போய் நாளை வா" என்று இரா கவன் கூறியதை இங்கு ஒத்து நோக்கலாம்.
படை வீரம் கொடை வீரம் = நடை வீரம் என்பன அரசர்க்கு இருக்க வேண்டியவை.

65
இவ் வீரங்களைப் பற்றிய பல கதைகளைப் பண்டைய இலக்கியங்களில் பார்க்கலாம். பகைவராய் இருந்தாலும் கூட பண்புடன் அவர் வேண்டுவாராயின் "இன்று என்று கூருது எடுத்தருள்க’ என்று கூறுதலே வீரரின் இயல்பு.
இத்தகைய இயல்பு கொண்ட மன்னன் ஒரு வ ைது வாழ்வில் நடந்த சம்பவத்தைப் புறநானூறு அழகாக எடுத்துக் காட்டுகின்றது.
தமிழகத்திலே முடியுடை மூவேந்தரும் தமக்கொப்பாரும் மிக்காருமின்றி வாழ்ந்த காலம் அது.
பறம்பு நாடு" எனப்படும் நாட்டிலே "பாரி" என்னும் பெருவள்ளல் சீரும் சிறப்பும் பெற்று வாழ்கின்றன்.
முன்னூறு ஊர்களிலும், மலைவளம், மழைவளம், வன வளம், பண வளம், கலை வளம் போன்ற எல்லா வளங்களும் மிகுந்து அந்நாட்டவர் அனைவருமே மனவளம் நிறையப் பெற்று நிம்மதியாய் வாழ்கிருர்கள்.
பாரியோ பெரும் வள்ளல், இரக்கமே வடிவானவன். கொடுப்பதில் பேர் போனவன். ஆனபடியால் தென்னகத் திலே தமிழ் நாட்டிலே பாரிக்குத் தான் அனைத்துப் புகழும்.
பறம்பு மலையிலே அவன் அரண் அமைத்து அங்கே குடி யிருக்கிருண், பேராற்றல் மிகுந்த பெரு வீரஞன அவனுக்கு பெண்கள் இருவர் இருக்கின்றனர்
நாட்டில் நீல் ல புகழ் ஓங்கியிருந்த காரணத்தால் மூவேந்தரும் அவனத் தம் உறவினனுகக் கொள்ள விரும்பு கிருர்கள். எனவே தத்தமக்கு அவன் பெண் தரவேண்டும் எனத் தூது அனுப்புகிறர்கள்.
காதலின் வழி வரும் அடிமணத்தில் நம்பிக்கை கொண் டிருந்த வள்ளலும், அவன் வாரிசுகளும் இதை ஏற்கவில்லை.
வள்ளலும் மக்களும் தம் இச்சைக்கு இணங்கி வராத காரணத்திஞலே மூவேந்தரும் பறம்பு மலையை முற்றுகை யிட்டு பாரியின் மகளிரைப் பலவந்தமாய்ச் சிறை பிடிக்கத் திட்டம் இடுகிருர்கள்.

Page 37
66
மூவரினதும் நால்வகைப் படைகளும் பறம்பு மலேயைச்
சூழ்ந்து முற்றுகையிடுகின்றன. வைத்த கண்வாங்காமல்
வேந்தர் மூவரும் "முற்றுகை வெற்றிபெறலாம் என எண்ணி வாசலை நோக்கிய வண்ணம் நிற்கின்றனர்.
பாரியின் உயிர் நண்பரான கபிலர் அங்கு வருகின்ருர், மூவேந்தரினதும் மூடத்தனமான முடிவை நோக்குகின் ருர், அவர்களை அணுகுகின்ருர்,
அரசர் பெருமக்களே, பாரியின் பண்பினை நன்கறிந் தவன் நான். அரசர்க்கேற்ற அறநெறியாக இந்த முற்றுகை அமையவில்லையே! ஆனலும் கூட உங்களால் அவனை வெல்ல முடியாது. காரணம் அவன் மாபெரும் வீரன். இருந்த பொழு திலும் பாரியின் பறம்புமலை பண்புடையது. உங்களைப் போல பெருமை கொண்டதல்ல. பெருமுரசு கொட்டிப் போரிடும் நீங்கள் மூவரும் எத்தனை நாள் முற்றுகையிட்ட போதிலும் இம்மியனவு கூட அதை அசைத்துவிட உங்களால் முடியாது.
காரணங்களைக் கேளுங்கள்! உழவர் உழாமலே தாமே பயிராகத்தக்க நால்வகை விளைபொருள் இங்குண்டு. ஒன்று: மூங்கிலிலே விளையும் நெல், இரண்டு: தித்திக்கும் பலாக் கணி. மூன்று: வள்ளிக் கிழங்கு. நான்கு: எஞ்ஞான்றும் ஒழுகிக் கொண்டிருக்கும் தேன் கூடுகள்.
இவ்வாறு நெல், பழம், கறி மது இவற்றுக்கு இங்கு குறைவே இல்லை. மற்றது; மலையோ அகன்ற பரப்புடையது. எண்ணற்ற நீர்ச்சுனைகளை இயல்பாகவே கொண்டது. பரவலான இடமும் பாங் க்ான நீரும் உடைய இம் மலையில் உள்ள ஒவ்வொரு மரங்களிலும் உங்கள் யானைகளைக் கட்டி, இடமெல்லாம் உங்கள் தேர்களைப் பரப்பி வைப் பினுங் கூட போர் முயற்சியால் நீங்கள் பாரியை வெல்வது முயற்கொம்பு.

67
ஆனலும் அவனை வெல்ல ஒரே வழியுண்டு. யாழெடுத்துப் பாணர் போல் பாடி அவனிடம் செல்வீர்களாயின் பறம்பு மலையென்ன? முழுநாட்டையுமே தரக் கூடியவன் அவன்” என் கிருர்,
அளிதோ தானே பாரியது பறம்பே நளிகொள் முரசின் மூவிரும் முற்றிலும் உழவர் உழாதன நான்குபயன் உடைத்தே ஒன்றே சிறி இலை வெதிரின் நெல் விளையும்மே இரண்டே தீஞ்சுளைப் பலவின் பழம் ஊழ்க்குமே; மூன்றே கொழுங்கொடி வள்ளிக்கிழங்கு வீழ்க்கும்மே
நான் கே அணிநிற ஒரிபாய்தலின், மீது அழிந்து திணிநெடுங் குன்றம் தேன் சொரி யும்மே வான் கண் அற்று அவன் மலையே வானத்து மீன் கண் அற்று அவன் சுனையே; ஆங்கு மரந்தொறும் பிணித்த களிற்றின ராயினும் புலம்தொறும் பரப்பிய தேரின ராயினும்
தாளின் கொள்ளலிர், வாளின் தாரலன்; யான் அறி குவன் அது கொள்ளு மாறே; சுகிரிபுரி நரம்பின் சீறியாழ் பண்ணி விரையொலி கூந்தல்நும் விறலியர் பின்வர ஆடினிரி பாடினிர் செலினே; நாடும் குன்றும் ஒருங்குஈ யும்மே”
பாரியின் ஈடிணையற்ற படை வீரமும் அதே வேளை அவனுக்கமைந்த கொடை வீரமும் இங்கே தெட்டத் தெளிவாய் எடுத்துக் காட்டப்படுகின்றன.
23-1 ↑ -86

Page 38
16 சதியும் சபதமும்
பதினெட்டு நாட்களாகப் பயங்கரமாக நடைபெற்று வந்த பாரதப் போரிலே பத்தாவது நாள் படுகாயமுற்ற பீஷ்மர் அம்புப் படுக்கையிலே அமைதியாகி விட்ட வேளை அதுவக்க
அண்ட சராசரங்கள் அனைத்துமே அமைதியிழந்து விட்டது போன்றதொரு பிரமை, கெளரவர்களின் படை களுக்குத் தலைமை தாங்கிப் போர் புரிந்த பீஷ்மர் அமைதி யாகி விட்ட காரணத்தாலே, அந்த இடைவெளியை நிரப்ப ஏற்ற ஒரு தானத் தலைவனை துரியோதனன் எதிர் பார்த்திருக்கின்றன்.
அந்த வேளையிலே கர்ணன் பீஷ்மரிடம் ஆசீர் வாதம் பெற்றுக் கொண்டு ஆயுத பாணியாகப் புறப்பட்டுப் போர்க் களம் வருகின்ருன், கெளரவரின் இளிப்பும் வரவேற்பும் அவனது வீ ரத் துக் கும் இள  ைமக்கும் விருந்தாக அமைகின்றன.
துரியோதனன் கர்ணனிடம் கூறுகிருன்;" கர்ணு பிரபல வீரனுக நின்று போரிட்ட பீஷ்மர் இப்போ அம்புப் படுக்கையிலே அமர்ந்து விட்டார். அவருடைய இடத்தை நிரப்பவும், தானத் தலைமைப் பதவியை ஏற்கவும் தகுதி யுடையவர் யாரென நீ கருதுகிருயோ, அவரையே சேனுதி பதியாக்கும் சித்தங் கொண்டவனுய் இருக்கிறேன்" என்கிருன்.
கர்ணன் பதிலிறுக்கின்றன். 'ஐயனே, அரசர்கள் பலர். எமக்கு ஒத்துழைப்பு நல்கி வருகின்ருர்கள்; அவர்கள் அனைவருமே தமக்கு ஒப்பாரும் மிக்காரும் இன்றித் தானத் தலைவராய்ப் பதவியேற்கத் தகுதி வாய்ந்தவர்களேயாவர். ஆனலும், ஒருவரைச் சேனதிபதியாக்கினல் மற்றவர் மனமுடைந்து போவார் அல்லவா?
ஆகவே, அரசர்களைத் தலைவனுக்கும் எண்ணத்தைக் கைவிட்டு, போர் வீரர்களின் ஆசானும், அறிவிலும் வயதிலும் முதிர்ச்சி பெற்றவருமான துரோணரை நமது சேனதிபதியாக நியமித்தலே நன்று.

69
அன்று அசுரர்களை எதிர்க்கப் புறப்பட்ட தேவர்கள், தம் தானத் தலைவனுக சுப் பிர ம ணிய  ைர நியமித்துப் போருக்குப் புறப்பட்டது போல, நாமும் துரோணர் தலைமையில் புறப்படல் நன்றென்பது என் கருத்து"
கர்ணனின் எண்ணமும் கருத்தும் துரியோதனனுக்கு நன்றெனப் படுகிறது, சேனையின் நடுவே நிற்கும் துரோணரை தானைத் தலைவனுக்க முடிவு செய்கின்றன்.
துரோணரை வண்ங்கி, "தலைவா, தேவர்களை தேவேந் திரன் காப்பது போலக் கெளரவரைக் காக்கும் தலைவனுக தாங்களே பொறுப்பேற்க வேண்டும்” என்கிருன். அரசர் களும் அனேத்து வீரர்களும் அதை வரவேற்கின்றனர், அவரும் ஏற்றுக் கொள்கிருf.
கெளரவ சேனை துரோணரின் தலைமையில் சகட வியூக மாக வகுக்கப்படுகிறது, பாண்டவ சேனை கிரவுஞ்ச வியூக மாக மாறுகிறது போர் ஆரம்பமாகிறது.
த ன் னை ச் சேனதிபதியாக்கிப் பெருமைப்படுத்திய துரியோதனனுக்குப் பிரதியுபகாரமாக ஏதாவது செய்ய வேண்டுமென்று விரும்புகிருர் துரோணர், தன் விருப்பத்தைத் துரியோதனனிடம் கூறுகிருர், துரோ ணரின் எண்ணத்தைக் கர்ணன் - துச்சாதனன் இருவரிடமும் கூறிக் கலந்துரையாடிய துரியோதனன் ஒரு முடிவுக்கு வருகிருன்,
'தருமனை உயிரோடு பிடிக்க வேண்டும். அதுவும் அவன் தம்பியர்கள் பார்த்திருக்க தருமனே எனது பக்கத்தில் பணயக் கைதியாக வைத்திருக்க வேண்டும்" என்கிருன்.
இவ் வேண்டுகோள் துரோணருக்கு மகிழ்ச்சியையே அளித்தது. அவர் துரியோதனனைப் பார்த்து 'மன்ன! தருமனே வதைக்கும்படி கூருமல், பணயக் கைதியாகப் பிடித்து வரும்படி கேட்கிருயே! உன் எண்ணம் வரவேற்கப் பாலதே. அப்படியானல், பாண்டவருக்குரிய பாகத்தை அவர்களிடமே விட்டுவிட விரும்புகிருயோ? என்கிருர்,
துரியோதனன் பதிலாக, "குருவே, தருமன் கொலையுண் டால் ஏனைய பாண்டவர்கள் எங்கள் அனைவரையுமே அழித்து விடுவர். அத்துடன் அவர்கள் எல்லாரையுமே நாங்கள், கொன்று போட்டாலும் கூட கிருஷ்ணன் இவ்வுலகையே வென்று திரெளபதிக்கோ அல்லது குந்திக் கோ கொடுத்து விடுவான்.

Page 39
70
ஆகவே, தருமனை உயிருடன் பிடித்து மீண்டும் சூதாட வைத்து தோல்வியுறச் செய்து மீண்டும் பாண்டவரை வனவாசத்திற்கு அனுப்புவதே வசதியாக அமையும். ஆகவே தான் அவனை உயிருடன் பிடிப்பதை விரும்புகிறேன்" என்கிருன்.
பாண்டவர் மீது பற்றுடையவரான துரோணர் துரியோதனனின் கபட எண்ணத்தை அறிந்து கொள்கிருர்,
எனவே தானும் ஒரு இழுக்கு வைத்து வாக்களிக்கிருர், "மன்ன, அர்ச்சுனனுல் தருமன் காக்கப்படும் வரைக்கும் இது நடவாத கருமமாகும். என்ருலும், அர்ச்சுனன் அகன்று நிற்கும் சமயம் பார்த்து தருமனை உயிருடன் பிடிப்பேன்’ என்கிருர்,
தன்னை உயிருடன் பிடிக்கத் துரோணர் திட்டம் வைத் துள்ளதை ஒற்றர் மூலம் உணர்ந்த தருமன், 'தம்பி அர்ச்சுனு துரோணரும் = துரியோதனனும் இட்டிருக்கும் திட்டம் நிறைவேருமல் தடுக்க நீ என்னுடனேயே நிற்க வேண்டும்” என்கிருன்.
“என்னுயிரே போனுலும் அண்ணனைப் பிடிக்க நான் அனுமதியேன்' என்பதாகப் பார்த்தன் சபதம் எடுக் கின்றன். அவ்வாறே கடைசி வரையும் இக்காரியம் கைகூட வில்லை.
05-04-87
17 கைராசி
அண்மைக் காலத்திலே அரசவைக் கவிஞராக இருந்து அமரத்துவம் பெற்ற கவிஞர் கண்ணதாசன் எழுதிய திரைப் படப் பாடல்களை பல இலக்கியக் கதைகளை இன்பம் பயக்கும் நயத்தோடும் பொருளோடும் எடுத்துக் கூறுவன வாய் அமைந்திருக்கின்றன.
நீண்ட காலமாக நெருக்கமான உறவு கொண்ட காதலர் இருவர் கருத்தொருமித்து வாழவேண்டிய காலகட்டத் திலே, தலைவனின் பிரிவு தலைவியை வாட்டி வதைக்கிறது.

71.
ஆண்டு பலவாக அருகிருந்து அனைத்தவன்- நெருங்கி உறவாடியவன் - கொண்டவளைக் குதூகலிக்கச் செய்வதற் காக திரை கடலோடித் திரவியம் தேடச்சென்று விட்டான்.
அழகனத்தும் குழைத்துக் கூட்டிய பளிங்கு உடல்; பார்வையை மீளப் பெற முடியாத பசும் பொன் சிலை; ஆயிழை அவளின் விழிகளோ, தென்னவன் பாண்டியனின் கைபிடிக்கும் வாள் போன்றவை; நீண்டவை; கூரியவை.
கொல்விழி’ என்றே கூற வேண்டும்.
மாலை தோறும் மயங்கி நிற்கும் அவள் எதிரிகளின் படையால் தாக்கப்படுவது போன்ற வேதனையை அனுப விக்கிருள். 'இன்றிரவு வருவார்' என்று ஒவ்வொரு மாலையும் அவளை ஏங்க வைக்கும். அந்த ஆசை காரணமாக ஆலிலை போன்ற அவளது பூவுடல் துளுகிறது. இன்பம் துய்க்கிறது. இறுதியில் தோல்வியைக் கண்டு துவஞகிறது.
அந்தி வேளை தரும் தொந்தரவு காரணமாக ஆயிழை அவளின் விழிகளிலே உறக்கம் இல்லை. பருகத் துடிக்கும் அதரங்களும் உ ரு வ ம் விரும்பும் உதரமும் வீணுய்த் தம்பொழுதைக் கழிக்கின்றன. சேர்ந்து அரவணைக்க வேண்டிய கரங்கள் சோர்ந்து விழுகின்றன. தோழியர் கூறும் ஆறுதல் மொழிகள் அவளுக்குத் தேறுதலை அளிக்கவில்லை. ஆடுகின்ற மயிலின் எழில் அவள் வாழ்வில் பொலிவைக் கொடுக்க வில்லை. பாடுகின்ற குயிலின் குரல் அவள் இதயத்தில் இன்பத்தை வருவிக்க வில்லை. ஒடுகின்ற புள்ளிமானின் கள்ள விழிப்பார்வை அவளது போக்கில் ஒரு புதுமையைத் தருவிக்க வில்லை.
பிதற்றுகிருள்; பெருமூச்செறிகிருள். க  ைட சி யி ல் 'கண்ணு! எ ன் ன ல் பொறுத்துக் கொள்ளவே முடிய வில்லையே, தனிமையிலே இனிமை காண முடியவில்லையே.
வரமாட்டாயா" என்று கதறுகிருள்.
இக் காட்சியை கவிஞர் கண்ணதாசன் "கைராசி" என்னும் படத்தில், கடிதம் ஒன்றைக் காதலி எழுதுகின்ற பாணியில் கவியாக்கிக் காட்டுகிருர் இவ்வாறு:-

Page 40
72
அன்புள்ள அத்தான் வணக்கம்-உங்கள் ஆயிழை கொண்டாள் மயக்கம் தென்னவன் கையிருக்கும் திருவாளைப் போலிருக்கும் கண்ணிருந்தும் இல்லை உறக்கம்
மாலுேப் பொழுது வந்து படைபோலக் கொல்லும் வருவார் வருவார் என்ற சேதியும் சொல்லும் ஆலிலை போன்ற உடல் ஆசையில் துள்ளும் அந்தியிலே இயற்கை என்னையும் வெல்லும்
பருவம் நிறைந்திருந்தும் எனக்கென்ன சுகமே பருகும் இதழிரண்டு இருந்தென்ன Luj (Bar கரங்கள் இரண்டிருந்தும் அணைப்பதற் கில்லை கண்ணு! இனிநான் பொறுப்பதற் கில்லை
இவ்வாருக தலைவனைப் பிரிந்த ஒரு தலைவி தலைவனது பிரிவு ஆற்ருமை காரணமாக அழுது புலம்பியெழுதிய ஒரு கடித அமைப்பில் இப்பாடலை எழுதி அதன் மூலமாக ஒரு இலக்கியக் காட்சியையே அமைத்துள்ளார் கவிஞர்.
இவ்வாறு வெந்தழியும் தலைவியின் கடிதம் எழுதப் பட்டுக் கொண்டிருக்கும் நேரத்திலேயே தலைவனும் அங்கு வந்து விடுகிருன்.
"கனவா? அன்றி நனவா?’ என்று அவள் திகைக்கின் ருள்.
கனவு அல்ல; நனவேதான் என்பதாக அவள் புரிந்து கொள்ளட்டும் என்பதற்காக கடிதத்தை வாசித்த அவன் கேட்கிருன்.
“இப்படி எழுதியும் நான் வரவில்லையென்ருல் நீ என்ன
செய்வாய்.? سمي
ஆச்சரியத்தோடும் ஏக்கத்தோடும் நிற்கும் தலைவி
உடனே ஏங்கி ஏங்கி அழுகின்ருள்.
'நீங்கள் தழுவாத என் மெல்லிடை மெலியும்; அதன் காரணமாக என் மேகலாபரணம் கழன்று வீழ்ந்து விடும்." அது மட்டுமல்ல; 6ான் கால்களும் மெலிகின்ற காரணத் தால் அங்கே அணியப்பட்டிருக்கும் என் சிலம்புகளும் கழன்று விழும்.

73
கைகள் மட்டும் என்னவாம்? உங்களை அணைக்காத காரணத்தால் மெலிந்து வளையல்கள் எல்லாமே கழன்று விடும்.
இத்தனை கஷ்டங்களையும் ஏந்தி ஜீரணிக்க முடியாமல் இதயம் சோர்வதினுல் என் நிலை தடுமாறி மயக்கமுற்று க்ண்களும் மூடிக் கொள்ளும்.
பார்ப்போர் கேட்போர். எல்லாருமே உங்களைத்தான் பழி சொல்வார்கள்” என்பதாகக் கூறுகிருள்.
இப் பொருளைத் தரும் பாடலை எத்தனை இலக்கிய நயத்தோடு கவிஞர் எழுதியிருக்கிருர் பாருங்கள்,
'பொன்மணி மேகலை பூமியில் வீழும்
புலம்பும் சிலம்பிரண்டும் எனவிட்டு ஒடும் கைவளை சோர்ந்து விழும் கண்களும் மூடும் காண்பவர் உங்களைத்தான் பழிசொல நேரும்"
தலைவன் தலைவி தொடர்பு-உறவு- பிரிவு-பிரிவிஞல் உறும் துன்பம் உடல் மெலிவு அணிகலன் நெகிழ்தல் போன்ற பழைய இலக்கிய மரபுகள் பல இப்பாடலின் மூலம், இத்திரைப்படத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
மேற்குறிப்பிடப்பட்ட படத்தில் மட்டுமல்ல; இன்னும் பல திரைப்படங்களில் வரும் பல பாடல்கள் படிக்கப் படிக்க இலக்கிய இ ன் பம் சொட்டுவனவாக அமைந் துள்ளன.
03-08-86

Page 41
18 அமுது
கற்பனைத் திறன் படைத்த அற்புதக் கவிஞன் பாரதி. அவன் இறந்து ஆண்டு பல ஆயினும், அவனை மறந்தவர் எவரும் இருக்க முடியாது.
செந்தமிழ், தீந்தமிழ், கன்னித் தமிழ், கன்னற் தமிழ் என்றெல்லாம் எங்கும் புகழப்படும் தமிழுக்கு வரைவிலக் கணம் கொடுக்க விழைந்த பாரதி தமிழை நுகர்ந்து - நயந்து - வியந்து =
*யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்
இனிதாவ தெங்குங் காணுேம்.”
- என்று பாராட்டியுள்ளான். திராவிட மொழிகளிலே மிகப் பழைமை வாய்ந்தது 'தமிழ்” எனலாம். தமிழி லிருந்தே ஏனைய மொழிகள் பல தோன்றின என்கிருர் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை.
*பல்லுயிரும் பலவுலகும்
படைத்தளித்துத் துடைக்கினு மோர் எல்லையறு பரம்பொருள்முன்
இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமும் களிதெலுங்கும்
கவின் மலையா ளமூம் துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும் ஆரியம்போல் உலகவழக்
கழிந்தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம் வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே”
அமுதெனும் தமிழ் மொழியானது, ப ல் லு யி ரு ம் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கப்பட்டாலும் எல்லை யற்ற பரம் பொருளாகிய இறைவனின் திருவில் எதுவித மாற்றமுமின்றி இருந்தபடியே இருக்கிறது.
அதுபோல் க ன் ன ட ம், தெலுங்கு, மலேயாளம், துளுபோன்ற மொழிகளெலாம் தமிழின் வயிற்றிற் பிறந்து வாழ்ந்து வந்த போதும், 'ஆரியம் அழிந்தது போல் அழிந்து விடவில்லை

75
மாரு க, குன்ரு நலமும், குறையாப் பொலிவும் கொண்டு என்றும் இளமையோடு நின்று நிலவுகின்றது. அதன் தோற்ற ஏற்றங்களை ஏட்டிலோ எழுத்திலோ அடக்கி விட முடியாது.
"கம்பனும் சோழனும் கருத்தொருமித்த நண்பர்கள்? என இலக்கிய வரலாறு கூறுகின்றது. அந்த இணைப்புக்கும், அவர்களது பிணைப்புக்கும் இடையிலே நின்றது தமிழே CUIT (5 LD.
கம்பனின் தமிழில் காதல் கொண்ட காரணத்தினுல் சோழன் அவனை ஆஸ்தான கவிஞணுகக் கொண்டிருந்தான். ஆயினும் ஏதோ காரணமாக இருவருக்குமிடையில் பிணக்கு ஏற்படுகிறது. ஆத்திரமுற்ற கம்பர்
“மன்னவனும் நீயோ, வளநாடும் உன்னதோ. உன்னையறிந்தோ தமிழை ஒதினேன் - என்னை விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ உண்டோ குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு?”
- என்ருர், அகன்ருர், ஆந்திர தேசத்து அரசன் அவரை ஆதரித்தான். தன் அழகு தமிழால் அவனே வசப்படுத் தினன். கவியரசன் கம்பனுக்கு புவியரசன் பிரதாபருத்திரன் அடைப்பைக் காரணுகினன்.
இக்கதையிலிருந்து கம்பனின் புலமை மட்டுமல்ல; தமிழின் புனிதமும், அதன் தனித்துவமும் தெளிவாகின்றது. “இத்தகைய அழகு தமிழுக்கு அடைக்கலமானவர் அமரரின் நிலையைப் பெறுவார்' என்கிருர் பாரதியார்.
'தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்"
A. - இது பாரதியின் வாக்கு. இன்ப நுகர்வையும் இறவாமை என்னும் இன்னுேரன்ன சிறப்பையுமே இங்கு 'அமரரின் சிறப்பு” என்கிருன் புலவன், "சங்கங்களில் அரங்கேற்றிப் புடமிடப்பட்ட மொழி, ‘அறிஞர்களால் ஆ ர ஈ ய் ந் து செப்பனிடப்பட்ட மொழி என்ற பொரு ள் பட வே *தெள்ளுற்ற தமிழ்” என்று குறிப்பிடுகின்றன்.

Page 42
76
ஆசமனம் செய்ய வேண்டிய நீரைக் காகம் தட்டி விட்ட காரணத்தால் ஆத்திரம் கொண்ட அகத்திய முனிவன் ஆழியின் நீரையே பருகி முடித்தான். ஆனல் அவனுல் தமிழின் கரையைக் கண்டுகொள்ள முடியவில்லை.
"கடல்குடித்த குடமுனிஉன் கரை காணக் குறுநாடில் தொடு கடலை உனக்குவமை சொல்லுவதும் எளிதாமோ'.
- என்பதாக தமிழின் ஆழம் அகலம் பற்றிக் கூறப்
பட்டது. அத்தகைய தமிழை ஆய்ந்து நுகர்ந்து அனுபவப்
பட்டவர்கள் அதனுள்ளேயே அமரரின் வாழ்வை அனுப விக்க முடியும் என்பதே பாரதியின் கருத்து.
*யாமறித்த புலவரிலே கம்பனைப் போல்
வள்ளுவர் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை'
- இவர்களின் சிறப்புக்கு இவர்களது பிறப்பே காரணம். அதாவது தமிழன்னையின் மடியில் தவழ்ந்ததாகும். எனவே தான்.
“ஒரு சொற் கேளிரி,
சேமமுற வேண்டுமெனில் தெருவெலாம்
தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்” -என்று அறை கூவுகின்றன் அமரகவி பாரதி.
இன்று குறிஞ்சித் தலை நகரிலே எடுக்கப்படும் தமிழ்த் தின விழா பாரதியின் கனவுகளில் ஒரு பகுதியையேனும் நினைவு படுத்தி நிற்கின்றது எனலாம்.
(09-11-1984ல் கிராமியக் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு செளமியமூர்த்தி தொண்டமான் அவர்களது தலைமையில் கண்டியில் நடைபெற்ற அகில் இலங்கைப் பாடசாலேகளின் 15வது தமிழ்த் தின விழாவை யொட்டிப் பிரசுரிக்கப்பட்டது.)
04, 184

19 தரது
கவியுலகில் மகுடம் சூடா மன்னஞய்த் திகழ்ந்த கம்பன், தான் அரங்கேற்றிய இராமாயணத்திலே அனுமனையும் ஒரு பாத்திரமாக்கி, அவனை 'இராகவன் தூதன்' என்றும், "நாயகன் தூதன்' என்றும் வருணித்து வந்திருக்கிருன். அந்த அனுமன் அசோக வனத்தை நாடி வந்த வேளை, சந்தித்த இராவணனிடம் தன்னைப் பின்வருமாறு அறிமுகப் படுத்திக் கொள்கிருன்
*செங்கணுேர் வில்லிதன் தூதனுய்
இலங்கை மேயினேன்.”
இளங்கோவடிகள் த ந் த சிலப்பதிகாரத்தில் ஒரு காட்சி. ஊழ் வினையால் ஊர் மாறிச் செல்லும் கோவலன், விற்கக் கொண்டு சென்ற சிலம்பு, விதி வசத்தால் பாண்டி யனின் அவையேறுகிறது. அங்கே பொற் கொல்லனின் சூழ்ச்சி அரசனுக்கு அவசர முடிவைக்கூற வழிகோலுகிறது. * கொன்றச் சிலம்பு கொணர் க." என்று தீர்ப்பையே வழங்கி விடுகிருன் தெய்வம் போல் தீர்ப்பளிக்க வேண்டிய தென்னவன்.
ஆனல், இங்கோ, அத்தனை அவசரத்துடன் இராவணன் நடந்து கொண்டதாகத் தெரியவில்லை.
அரசவைக்கு வந்த அந்நிய தூதுவனெருவன், ஆத்திர மூட்டும் வகையில் முறை பிறழ்ந்து பேசிய காரணத்திஞலே தான் இராவணன் சினம் கொள்கிறன், "ஒரு குரங்கு தனக்கு உபதேசிக்க வந்ததே" என்பதைக் கூட அவன் ஆரம்பத்தில் பொருட்படுத்தவில்லை.
"அனுமனைக் கொல்" என்று அவன் ஆணை பிறப்பித்த போது அவனது தம்பியாகிய விபீஷணன் பின்வருமாறு கூறுகின்றன்.
*மாதரைக் கொலைசெய்தோர்கள் உளரென வரினும் வந்த
தூதரைக் கொன்றுளார்கள் யாவரே தொல்லைநல்லோர்’
*அண்ணலே பெண்களைக் கொன்றவர்கள் இருக்கலாம்; ஆளுல் தூது வந்த ஒருவரைக் கொன்றதாக வரலாறே கிடையாது”. என்கிருன்,

Page 43
78
கம்பன் தான் படைத்த பாத்திரத்துக்குத் 'தூதுவன்' என்ற பெயரைச் சூட்டி விடுகின்றன். இராவணனுக்கு அறிவுரை புகட்ட வந்த விபீஷணனும் இவன் அனுமன்இராமனின் தூதன்' என்று நாமகரணம் செய்து விடுகிருன்.
வள்ளுவர் சொல்கிருர்:
"அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்(கு)
இன்றி யமையாத ஒன்று
அஃதாவது, தூதுவஞகப் பிறிதோர் இடத்திற்குச் செல்லும் ஒருவனுக்கு இருக்க வேண்டிய இன்றியமையாத மூன்று பண்புகள் எவையெனில், தான் சேவிக்கும் அரச ணிடத்திலே கொண்டிருக்கும் அன்பு, இரண்டாவதாக, அவனுக்குத் தானறியும் அறிவுடைமை. அடுத்ததாக மற்ற அரசனிடத்தில் பேசும் போது ஆரா ய்ந்து பேசும் (சொல்வன்மை) ஆற்றல் என்பனவாகும்.
இவை, இந்த அனுமனிடத்தில் அமைந்துளவா?
*அறிவு உரு ஆராய்ந்த கல்வி இம்மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு."
- என்கின்ருர் வள்ளுவர்.
*சிறந்த அறிவும், கண்டோர் விரும்பும் தோற்றப் பொலிவும், பலகாலம் பயின்று ஆராயப்பட்ட கல்வியும் இம் மூன்றும் செறிந்த ஒருவனே, "தூது" என்னும் பணிக்குச் செல்க' என்கிருன். அதாவது மற்றவர்கள் செல்லவே கூடாது என்பதே பொருள். -
இவை மூன்று ம் அனுமானிடத்தில் எந்தளவுக்கு அமைந்துள்ளன? அவை மட்டுமல்ல,
"கடனறிந்து காலம் கருதி இடன் அறிந்து
எண்ணி உரைப்பான் தலை."
- 6ான்று ஒர் ஆழ்ந்த கருத்தையும் கூறுகிருர் வள்ளுவர். தான் தூது செல்லும் வேற்றரசரிடத்துத் தான் செய்யும் முறைமை அறிந்து - ஏற்ற சமயம் பார்த்து, சென்ற கருமத்தைச் சொல்லுதற்கு ஏற்ற இடமறிந்து சொல்ல வேண்டியவைகளை ஏற்கனவே ஆராய்ந்து தீர்மானித்துப் போய்ச் சொல்பவனே சிறந்த (தலையாய) தூதுவனவான்.

79
இவற்றுள் எத்தனை குணதிசயங்களை நாம் இராம பக்த அனுமானிடத்தில் கானலாம்?
உண்மையிலேயே இவன் இராம தூதுவனுக இருந்திருந் தால் நேரே இராவணனிடம் சென்றிருக்க வேண்டும். அரசனின், அனுமதியின்றியே அசோக வனத்துள் பிரவேசிக் கின்றன். மன்னன் ஒருவனுல் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் பெண்ணுெருத்தியை (தூதனுக) வந்த இவன் கள்ளத்தன மாகக் கடத்திக் கொண்டு போக எத்தணிக்கிருன்.
"பொன்திணி பொலங்கொடி என் மென்மயிர் பொருந்திக் துன்றிய புயத்தினிது இருக்கத் துயர் லிட்டாய் இன்துயில் விளைக்கவோர் இமைப்பி னிறை வைகும் குன்றிடை உனக்கொடு குதிப்பேன் இடை கொள்ளேன்"
என்று சீதா பிராட்டியிடம் கூறுகின்றன் 'சினத்தைப் பொருள் என்று கொண்டவன் கேடு நிலத்து அறைந்தான் கைபிழையா தற்று" - என்பது வள்ளுவர் கூற்று.
நிலத்திலே தன் கையாலறையும் ஒருவனது கை வேதனை யடைவது போலவே, கோபத்தை ஒரு சிறந்த ஆற்றலாகக் கருதுபவனுக்கு வரும் கஷ்டமும் அமையும் என்பது இதன் பொருள்.
- க ள் ள த் த ன மாக உள்ளே நுழைந்த அனுமன், "இந்திரன் பொழிலும் இவ்வனத்திற்கு ஈடாகாது’ என்று வியக்கப்யட்ட அந்த அழகிய அசோக வனத்தை அழித்துத் துவம்சம் செய்து அலங்கோலம் ஆக்குகின்ருன்.
மேலும், இந்த அனுமனுக்கு இடப்பட்ட கட்டளை என்னவாக இருந்ததென்ருல், சீதையைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டுமென்பதே ஆகும். காளுமற் போன ஒன்றைக் கண்டுபிடிக்கும் உணர்வோடு தேடித்திரிபவனை தூதுவன்' என்பது பொருந்துமோ? என்பதற்கு விடையளிக் கப்படுமாயின் அவ்விடை எவ்வாறு அமையும் என்பதை வாசகர்களே புரிந்து கொள்ளட்டும்.
11-08-85 ۔۔۔۔۔

Page 44
80
20 நவ மலர்கள்
'வாடாத மாலை யென்றும், ‘தேன் சிந்தும் பாக்களால் அணி செய்யப்பட்டது" எனவும் வருணிக்கப்படுவது "தேம் பாவணி' ஆகும்.
இந்தத் திவ்விய நூலைப் படைத்த இத்தாலிய வித்தக ரான வீரமாமுனிவர் என்னும் பெஸ்கி, தேவதாயார் மேல் தீராத பக்தி கொண்டிருந்தவர்.
மாசற்ற அன்னையின் மகத்தான தன்மையை மாசுற்ற மக்களுக்கு மாண்பாய் எடுத்துக் காட்ட அவர் சில தனித் தன்மைகளைத் தனது கற்பனைத்திறன் மூலம் கையாண்டி ருக்கிருர்,
அவற்றுள் ஒன்று தான் தேவதாயாரின் திவ்விய நிலை பற்றிச் சூசையப்பர் கண்டதாகக் கூறப்படும் இக் கனவுக் காட்சி,
ஆத வனைத் தனது ஆடையாகவும், அம்புலியைத் தனது அடியாகவும், விண்மீன்களைத் தனது முடியாகவும் கொண்டு தேவதாயார் (மரியாள்) ஆகாயத்தில் எழுந்து நிற்கின்ருர்,
"ஆண்டவன் தாய் மரி” என்னும் இனிய வாசகத்தை தம் மார்ப்பதக்கமாக அணிந்த வானவர்கள் அங்கே சூழ்ந்து வருகின்றர்கள்.
அணிக்கு நூற்றுவராக ஆங்கு ஒன்பது அணிகளாய் வரும் வானவர்கள் லில்லி, ருேஜா, கமலம், சூரியகாந்தி, குமுதம், செவ்வந்தி, சண்பகம், வகுளம், தும்பை ஆகிய நவமலர் Lorras2.it நூறு நூருக அவர் தம் அடி வைத்து வணங்குகின்றர்கள்.
அவ்வாறு படைக்கப்படும் மலர்கள் ஒவ்வொன்றுக்கும் கவிஞர் காரணம் காட்டி மகிழ்கின்ருர்,

81
1 லில்லி மலர்
"மந்த மாருதத்திலும் சண்ட மாருதத்திலும் கூட மணம், குணம் மாரு லில்லி மலர் போன்ற தேவதாயாரின் மாசற்ற கற்பையும், தூய தன்மையையும் எடுத்துக் காட்டுவதற் காக வெண்ணிறமான லில்லி மலர் படைக்கப்படுகின்றது"
என்று அழகாகக் கூறுகின் ருர்,
நீமமுடைத் திங்கள்துடைத்து, ஒளியைப் பாய்ந்த
நேரடியாள் நேர் அறப்பூ விள்ளா வண்ணம் காமம் உடைத்து, ஒளி உடுத்து, சுடரில் தூய கருத்தில் அமை கன்னிநலம் காட்டுதற்கே தாமமுடைத் தண்தாது மடுஉ டைத்து
சாய்த்தமது வெள்ளமொடு வாசம் வீசி, ஏமம் உடைத் தணிவிருது என்று, அலர்சு வேத
இலீலியெனும் மாலைபதத்து ஒருநூறு; உய்த்தார்.
2 ருேஜா மலர்
எத்தனையோ பாதுகாப்புடன் இருந்து வரும் எழிலும் பொலிவும் கொண்ட ரூேஜா பிறரின் தேவை கருதி தன்னை அர்ப்பணிப்பதில் பின் நிற்பதில்லை. R
அதே போல், இறைவன் தன் திருக்குமாரனுக்கூடாக மானுடர் மேல் கொண்ட மாசற்ற அன்பைப் பிரதிபலிக்கும் பிரதி நிதியான தேவதாயாரின் திவ்யபண்பைக் காட்டு வதற்காக ருேஜா மலர் படைக்கப்படுகின்றது.
இருதி எழில் படுத்தியவான் வரத்து வல்லாள் இவர் வானேர் நிலை கடந்து அன்புவிஞ்சக்
கருதி,எழில் படுத்திய, ஒன்று ஆயனந்தை கண்ணி அமை நேஇநலம் காட்டுதற்கே
குருதி எழில் படுத்தியசெந் தாது உலாவும்
கொழுந்தண்தேன் உரோசைஎனும் கோதைகொண்டு
பருதி எழில் படுத்தியசீ ரடியைப் போற்றி
பணியாக முன்படைத் தார்ஒருநூறு; அன்ருே

Page 45
82
3. கமல மலர்
தன்னைச் சூழ்ந்திருக்கும் சேற்றையும் பொருட்படுத் தாது மலர்ந்த முகத்தோடு விரிந்து நிற்கும் கமல மலர் போன்ற தந்நிகரில்லாத் தாயாரின் தயாள குணத்தைத் தரணிக்குக் காட்டுவதற்காக ஆங்கே கமல மலர் மாலைகள் படைக்கப்படுகின்றன.
வீடுஅவிழ்த்த நலம் காட்டும் வனப்பின் நல்லாள்
விரிபுவிமன் னுயிர்கள் எலாம் இன் புற்று உய்ய கேடு அவிழ்த்த நெஞ்சினர்க்கும் உறுதிசெய்யும் கிளர்த்தனதன் தயாபநலம் காட்டுதற்கே நீடு அவிழ்த்த வாய்இடத்துப் பிரிந்து ஓடும்; பல்
நீர்க்குஎல்லாம் அடைக்கலம் செய் வாவிபூத்த தோடு அவிழ்த்த விரைக்கமல மாலை மாற்றி
சூடியதாள் தொழுகின்றர் ஒருநூறு; அன்றே,
4 சூரியகாந்தி மலர்
அந்தி சந்தி மத்தியான வேளைகளிலும் கூட ஆதவனின் அடியொற்றித் திரியும் சூரிய காந்தி போல இறை வழியில் இம்மியும் பிசகாது வாழ்ந்து வரும் தேவதாயாரின் பக்தி நெறியைக் காட்டுவதற்காக அங்கே சூரிய காந்தி மலர் மாலைகள் படைக்கப்படுகின்றன.
துறை கெழுநூல் வழிஅனைத்தும் அடையாஞானத் துறை அன்னுள்; மாசறுநல் உணர்வின் ஈர்த்து மறைகெழுநூல் வழிவழுவாக் க்டவுள் நற்ருள் மாறிலமெய்ஞ் ஞானநலம் அமைந்ததற்கே முறைகெழுநூல் வழிஅன்ன வெய்யோன்,வானில்
முடுகுவழி விடாதிரியும் இரவிக்காந்தம் அறைகெழுநூல் வழித்தொடைபோல் தொடையல் ஆகிக் அருச்சனைசெய்து, அடிஅணிந்தார்; ஒருநூறு- அன்ருே
في في حة لا تنمية

83
5 குமுத மலர்
குமுதமலர்கள் இயல்பாகவே, இ ர வி ல் மலர்வன, கஷ்டம் நிறைந்த க ங் கு ல் வே ளே யி ல் கூட கவலை கொள்ளாமல், கண்துயிலாமல், அக்கினிக்கு அஞ்சாத ஒர் ஆரணங்கு போல மிளிர்ந்து காட்சிதரும் குமுத மலரன்ன குலேயா உறுதி கொண்ட தேவதாயாரின் திருவுளத்தை நினைவூட்டிக் கொள்வதற்காக நீண்ட பல குமுத மலர் மாலைகள் படைக்கப்படுகின்றன.
மாசு என்று மதியம் மிதித்து உயர் தூய்த்தாளாள்,
மனங் கலங்கத் துயர்வரினும் நெருப்பிற்கஞ்சாத் தேசு என்று குலேயா நெஞ்சு உறுதி எஞ்சா
செல்லலினுக்கு உயர்ந்த திறம் காட்டு தற்கே, தூசு என்று மலைசூழ்ந்து, ஒல் எனத் தாழ்ஒடி
துறும் வெள்ளத்து அளவில்,தலை நிறுவிப் பூண்ட காசுஎன்று தேன் துளிக்கும் குமுத மாலை
கால் அணியாய்த் தொழுதிடுவார் ஒருநூறு; அன்ருே
6 செவ்வந்தி மலர்
மண்ணில் நிறைந்திருக்கும் மாசு அத்தனைக்கும் மத்தியில்
மலரும் செவ்வந்தி மலர் தன்வண்ணத்தில் என்றுமே மாறு வதில்லே. - 鼬
அதைப் போல், எவ்வித உ ல கி ய ல் இடர்ப்பாடு களிஞலும், அழுக்குருத அப்பழுக் கற்ற இரவியிலும் சிறந்த தன்மை பொருந்திய தேவதாயாரின் உயர் மாண்பை உணர்த்தவே செவ்வந்தி மலர் மாலைகள் படைக்கப்படு கின்றன.
மட்பொதுளும் சேற்றெழுகும் கதிர்சேறு ஆகா
வண்ண மென, கதிர் கலங்கின் கலங்கா நெஞ்சாள், கட்பொதுளும் இன்ன மைக்கு அழுக்குருதாள்,
கதிரினும் தூய்மாட்சி நலம் அணிந்த தற்கே, முட்பொதுளும் மணம் பொதுளும் நொய் அம்தாது
முருகுஒழுகு முகைவிண்ட செஞ்செவ்வந்தி விட்பொதுளும் நலம் தொடுத்த மாலையாக விழுந்து, இறைஞ்சிக் கொணர்ந்தனரே
ஒரு நூறு; அன்றே 8 2 3 1 6

Page 46
84
7 égF6ööT Lug5 Lo 6n) ri
பாவக்கறை கிஞ்சித்தேனும் படியாத தேவதாயாரின் தூய திருமேனிக்கு அடையாளமாக வண்டனுகாச் சண்பக மலர் படைக்கப்படுகின்றது.
இத்திறத்தால் வெஞ்சுடரும் எஞ்ச, எஞ்சாது
இயல்பு:உயர்ந்தாள்- இன்பு அருந்திச்
செயிர் நாம் செய்த அத்திறத்தால், வந்த தவம் செயிர் ஒன்று இன்றி, அரிது உலகம் அதிசயிப்ப நோற்ருள் என்னு, மைத்திறத்தால் விரிசிறகை ஒச னித்த
வண்டு அணுகாச் சண்பக அம் தொடையை,
அன்றேற மெய்த்திறத்தால் மறை தொடுத்த தொடையல் என்னு,
விசித்து அணித்தார் - தான் வணங்கி,
ஒருநூறு; அன்ருே
8 வகுள மலர்
தாழ்ந்து, தவழ்ந்து தேனுேடும் மணத்தோடும் திவ்ய மலராய்க் காட்சிதரும் வகுளமலர் போலவே தாம் தேவ தாயார் என்ற திவ்ய நிலையை எய்திய போதிலும் தாய்மை யையே தம் அணிகலனுய்க் கொண்ட அவரது இதயப் பாங்கை வெளிக் காட்ட வகுளமலர் படைக்கப்படுகின்றது.
வானுரும் நடுக்குற்று வணங்கும் தேவ
வரத்து உயர்ந்த வான் அரசாள், நவை நாம்மாருக்
கூஞரும் செருக்கு ஆருத் திறத்தின் நாணக்
குணிக்க அரிய தாழ்ச்சிஅருள் கொண்டாள்என்னு
தேனரும் மலர் இனத்துள் புன் மைகொண்டு
தேறலொடு மணத்தினெடும் எவையும் வெல்லும்
கானரும் வகுளம்பூ மாலைதாள்மேல்
களிப்புஎழவிட்டு இறைஞ்சுகின்ருர் - ஒருநூறு; அன்ருே
9 தும்பை மலர்
துயர் துடைத்த வீரனுக்குத் தும்பைமலர் மாலை சூட்டப் படுவது போல, தனது தூயவாழ்க்கைத் திறனுல் அநீதியையும், அசுத்தத்தையும் வெற்றி கொண்ட தேவ தாயாருக்கு தும்பைமலர் மாலையும் படைக்கப் படுகின்றது.

85
வஞ்சஞ்சேர் தந்திரத்தால் பழியேவிஞ்ச
மன்னுயிர்கள் பகைத்து அழிக்கும் குணுங்கு இனங்கள் நெஞ்சஞ்சேர் நஞ்சு உகுப்ப எடுத்தநாக
நெடுந்தலையை, என்தொடையால் நேராவல்லாள் கஞ்சஞ்சேர் திருப்பதத்தால் மிதித்த வெற்றி
காட்டமதுக் கான்ற நறுந் தும்பைமாலை பஞ்சஞ்சேர் உவப்பினெடு பைம்பொன்சேர்ந்த பதத்து,அணியாய்த் தொழுது அணிந்தார்;
ஒரு நூறு; அன்ருே.
- இவ்வாறு உலகோரால் உயர்த்தி நோக்கா வகையான மலர்களைக் கூட உன்னதத்தின் தூதர் கரம் கொண்டு தேவ தாயாரின் திருவடிகளில் படைப்பிப்பதன் மூலம் அம்மலரி
களுக்கே ஒரு மவுசை ஏற்படுத்தி விட்டிருக்கிருர் வீரமா முனிவர்.
எனவே, "தெவிட்டாத தெள்ளமுது தேம்பாவணி" எனக் கூறல் எவ்வகையிலும் பிழையாகாது.
22-12-85
21 மதிவதனம்
*மதிவதனம்" என மாதர் முகத்தை வருணிப்பது இயல்பு. ஆனல் பாரதியோ, பெண்களின் முகமானது வயதின் முதிர் விஞலும், துன்பத்தின் தொடர்பினுலும், உடற் பிணியினு லும் அழகு குன்றக் கூடியது. ஆகவே, பொதுவான பெண்ணின் முகத்தை உனக்கு ஒப்பிடல் பொருந்தவே பொருந்தாது” என அந்த மதியிடமே கூறிவிடுகின்றன்.

Page 47
86
*மாதர் முகத்தினை நினக்கினை கூறுவர் வெண்ணி லாவே - அஃ வயதிற் கவலையின் நோவிற் கெடுவது
இக்கவியினல், ஆண்டு பலவாய் ஈண்டு குறிப்பிடப்படும் *மதிவதனம்" என்ற உவமைக்கு மாசு கற்பிப்பதோடு முற்றுப் புள்ளியும் வைத்து விடும் புலவன், "அப்படியானுல் வெண்ணிலவுக்கு ஒப்பிடக் கூடியது வேறு எது? என்பதையும் கூருமல் விட்டுவிடவில்லை.
கன்னிப் பருவத்தினளாய் - காதலுணர்வுடையவளாய் மன்மதனுடைய வி ல் லொ த் த அழகிய புருவத்தைக் கொண்டவளாய் - பொங்கிவரும் அன்பினுல் உதிர்க்கும் புன் சிரிப்பை பூண்டவளாய் விளங்கும் ஒரு கட்டழகியானவள் தன் காதலனது முத்தத்திற்கு ஏங்கி நின்று தனது முகத்தை அவனெதிரே நீட்டுகின்ற ஒரு தன்மையை உணர்த்தும் ஒரு காட்சியை புலவன் கற்பனை செய்கின்றன்.
அந்த இனிய கற்பனையிலே அவன் விரும்பிய விடிை உருவாகின்றது. அத்தகைய நிலையில், தான் எதிர்பார்க்கும் எ பூழி ல் மு க ம் ஒன்றுதான் 'மதிவதனம்’ எனக்கூறப் பொருந்தும் என்ற முடிவுக்கு வருகின் ருன்.
'காதலொருத்தி இளைய பிராயத்தள் வெண்ணிலாவே - அந்தக் காமன்றன் வில்லை இணைத்த புருவத்தள் வெண்ணிலாவே மீதெழும் அன்பின் விளைபுன் ணகையினள் வெண்ணிலா வே = முத்தம் வேண்டி முன் காட்டு முகத்தி னெழிலிங்கு வெண்ணிலா வே?
வெண்ணிலவு பற்றி ய பல பாடல்களைப் பாரதி சாதாரணமாகப் பாடியிருந்தாலும் கூட ஒவ்வொன்றிலும் உட் கருத்துச் செறிவு இருப்பதை உணரக் கூடியதாக விருக்கின்றது. இவ்வாருக புதுமைப் பெண் படைத்த புரட்சிக் கவிஞன், வெண்ணிலவை எ ண் ணி ப் பாடும் பாடலிலும் ஒரு புதுமையை ஏற்படுத்தியுள்ளான்.
18-11-84

87
22 விவரங்கனி
ஆயிரத்தி எழுநூரும் ஆண்டளவில் ஆக்கப்பெற்று= அன்று தொட்டு இன்று வரை தமிழ் பேசும் நல்லுலகில் வாடாத மாலையாக - வாசமுள்ள மலர்ச் சரமாக - பவனி வரும் ஒரு நூல்தான் தேம்பாவணி.
1680 நவம்பர் 28 ஆம் நாள் இத்தாலியில் பிறந்த ஜோசப் பெஸ்கி' என்ற பாலகன் 1710 இல் இந்தியாவுக்கு வந்தபோது முப்பது வயதுள்ள வாலிபனுக இருந்தார். தமிழ் நாட்டிலே காலடிவைத்த காலந்தொட்டு, தமிழைக் கற்று தமிழ் இலக்கணம் வரையக் கூடிய அளவு பாண்டித்தியம் பெற்ருர்,
தமிழிலே அவர் கொண்ட பற்றுக் காரணமாக ‘என்றும் வாடாத ஒரு இனிய மாலையைத் தமிழ்த் தாயின் கழுத் திலே அணிந்து அழகு பார்த்திட வேண்டும்’ என்பது இவரது பேரவாவாக இருந்தது. தமிழகத்தில் கோனன் குப்பம் என்ற ஊரிலே இருந்த தேவதாயாரின் திருவுருவை தமிழகப் பெண்ணுகப் பெரிய நாயகி அம்மையார்” எனப் பெயரிட்டு உருவகித்து அவர் திருவருள் வேண்டினர். அதன் பெறு பேருக எழுந்ததே "தேம்பாவணி' எ ன் ற கிறிஸ்தவ இலக்கிய நூலாகும்.
பல உன்னத பாடல்களையும், வாடா மலர் போன்ற வண்ண அழகினையும் தன்னகத்தே கொண்டிருக்கும் அத் தேம்பாவணியில் வரும் ஒரு காட்சி:
அன்றைய அரச கட்டளைப்படி அனைத்து நாட்டிலும் குடி மதிப்பு எழுதப்படலாயிற்று. அதன் காரணமாக வெவ் வேறு வதிவிடங்களில் வாழ்ந்த மக்கள் கூட்டம் தத்தம் பிறப்பிடம் - இருப்பிடம் நோக்கிப் புறப்படலாயிற்று.

Page 48
88
சூசையப்பர் என்பவரும், அவருக்கு மனேவியாக நியமிக் கப்பட்டு இறையருளால் கருவுற்றிருந்த மரியம்மையும் பெத்லகேம் நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறர்கள். வாகன வசதியற்ற அக் காலகட்டத்திலே பரம ஏழை களான இவர்களிருவரும் பாதசாரிகளாகவே பல காதம் செல்ல வேண்டியிருந்தது. வழியிலே வானவர்கள் அவர் களுக்கு உதவி புரிந்தார்கள்.
நிறை கர்ப்பிணியான மரியாளும், மறைவல்லுநரான சூசையப்பரும் வழி நடக்கின்ற வேளையிலே காம வேட்கை கொண்ட 'காந்தரி' என்ருெரு பெண் அவர்கள் முன் எதிர்ப்படுகின் ருள். பலவித ஆபரணங்களும், பகட்டான பூமாலையும், அகிற்புகையூட்டப்பட்ட ஆடையும் அன்னவளை அலங்கரித்து நிற்கின்றன. அவளின் தோற்றத்தினை தேம் பாவணி இவ்வாறு வருணிக்கின்றது.
வெஞ்சி னக்கரி மேய்ந்துகும் வெள்ளிலோ? நஞ்சின் முற்றிய காஞ்சிர மோ?நகை விஞ்சி வெற்றெழிற் பாவையின் வேடமோ? நெஞ்சி நற்றகை நீத்தெழி ஞரியே.
இவள் யானை உண்ட விளாங்கனியோ? அன்றி நஞ்சிலே முதன்மை பெற்று நிற்கும் எட்டியோ?. அல்லது அணி கலன் சூட்டப்பட்ட பொம்மையின் வேடமோ? என்கிறது. அது மட்டுமல்ல, அவளது பார்வை செய்கை இவை யெல்லாம் அங்கு வாலிபரை வரவழைக்கின்றன.
காது வரை நீண்டு கண்களின் மருண்ட பார்வையால் தன் காமவுணர்வைத் தன் ஆடையிலிருந்து வெளியேறும் அகிற்புகை மணத்தினுாடாக இளைஞர்களுக்கு வெளிப்படுத் து கிருள். அவளது மயக்கும் விழிகளில் வாலிபர்கள் வளைந்து விடுகின்றர்கள்.
பாற் கலந்தன நஞ்சு பருகினுள் போற் கலந்தன வின்பொடு புன்கண மாற்க லந்த ம னத்துண மைந்தர்சூழ் வேற் கலந்த கண் வெஃகி நெருங்கினர்'
வாலிபர் வளைந்து வரும் காரணத்திஞலே அவள் அவர்களை வசியப்படுத்தும் ஒரு வணிதையாகின்ருள்.

89
காமத் தீயெழ ஒர்நகை காட்டினள், வீமத் தீயெழ வெஞ்சினம் காட்டுவாள்; தூமத் தீயெழ தோன்றிருள் போன்று,கண் வாமத் தீயெழ வுண்ணிசி மல்குமால்
காண்பவர் மனத்திலே காமத் தீ சுவாலிக்கும் படியாக சிரிப்புக் காட்டி - பின்னெரு கோபம் காட்டி நிற்கின்ருள். அவ்வேளையிலே, இரவு நேர த்  ைத ப் பற்றிய இன்ப நினைவு கள் பார்ப்பவர் மனத்திலே தோன்றப் பண்ணுகிருள்.
இத்தகைய பாவ வாழ்க்கை நடத்தி நிற்கும் பரத்தை ஒருத்தியை பரிசுத்த கன்னி மரியம்மை நேருக்கு நேர் சந்திக்கின் ருர். அவளது தன்மை கண்டு மனம் இரங்குகிருர்,
உடல் அழகாக இருந்தும் உள்ளம் மாசுற்று நிற்பதை அம்மாதா மரியம்மை காண்கின்றர். மாபெரும் பிசாசு ஒன்று அம்மங்கையைப் பிடித்து வசப்படுத்தி வைத்திருப்பதை யிட்டுப் பெருமூச்செறிகின்ருர்,
வீய் கலந்த வனப்பொடு வீங்கு உளம்
பேய் கலந்து குடியெனப் பேர்கிலாத் தீய் கலந்த சிதைவுடைப் பேதையை நோய் கலந்த வுயிர்ப்பொடு நோக்கினுள்
“காந்தரி என்ற பெயரில் அவளுக்குள் குடிகொண்டு அவளை அலட்டி நிற்கும் அப் பிசாசை சூசையப்பருக்குக் காட்டுகின்ருர் கன்னி மரியாள். அதைக் கண்ணுற்ற அவர், *உன் கருவிலே திருவுருக் கொண்டிருக்கும் இயேசுவின் நாமத்தால் அப் பிசாசை விரட்டுவாயாக" என்கிருர்,
அதன்படி மரியாள், அப்பிசாசை வெளியேறும்படி கட்டளையிடுகிருர், உடனே அப் பிசாசானது, துஷ்டன் ஒருவனின் வாயிலிருந்து பொய் எவ்வளவு விரைவாக வெளி யேறுமோ அவ்வளவு விரைவாக வெளியேறுகின்றது, என் கின்ருர் பேரறிஞர் பெஸ் கி.

Page 49
90
மொய்கொள் நீரொடு மூவுல கிற்கெலா மெய்கொள் நாயகி மேவியுள் ளேவலால் மைகொள் சோகு பழம்பதி மாற்றிவாய்ப் பொய்கொள் வேக நரகுறப் போயதே
பிசாசின் போக்கை மிகவும் அழகாகத் தருகின்றது தேம்பாவணி.
சுமார் முன்னூறு ஆண்டுகள் கழிந்து விட்ட போதிலும் இக்காட்சிகளும், கவிகளும் எம்இதயக் கண்களில் இன்றும் வாடா மாலையாக - வசந்தவுருவாக இருப்பது இரசனைக்
3-09-87
馨
மழலை இயேசுவை ஏந்திய மரியம்மையுடன் சூசை யப்பர் எருசலை நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்த G362t அது
குறிஞ்சி நிலத்தைக் கடந்துவிட்ட கால்கள் முல்லையில் அடி பெயர்த்துக் கொண்டிருக்கின்றன. வண்ண மலர் களையும் வளமான சோலைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள அவ்வுன்னத முல்லைத்தொடரில் நடைபெற்ற ஒரு சம்ப வத்தை நயம்பட இனிய பாடல்களில் எழுதுகின்றன் இலக்கிய மேதை வீரமா முனிவன்.
 
 
 

91.
அடர்ந்த காட்டில் நிறைந்த, மரங்கள். அவற்றின் உயரங்களை அளக்க முயல்வன போன்று ஒடித் தாவிப் படர்ந்து நிற்கும் கொடிகள், நெருங்கிய பற்றைகளில் ஒடுங்கிச் செல்லும் ஒற்றையடிப்பாதைகள். இடைக்கிடை பெரும்பாதைகள், பறவைகளின் மெல்லொலியும் சில மிருங்களின் வல்லொலியும் அக்காட்டை எந்நேரமும் அமைதி இழக்கச் செய்கின்றன.
இவற்றையெல்லாம் பொருட்படுத்தாத படி போய்க் கொண்டிருந்த சூசையப்பர் அவ்வழகிய மலர் நிறைந்த மரத்தினை மட்டும் ஆச்சரியத்துடன் நோக்குகின்றர் தன் துணைவிக்கு எதையோ குறிப்பிட்டுக் -
அழகிய புரு ஒன்று தன் அன்புப் பெடையுடன் இன் புற்று இருக்கிறது. இருவரும் அதை மகிழ்வுடன் usmrtifi&63) Gör முர்கள். இம்மானுடத் தம்பதியரின் பார்வை அப்பறவைத் தம்பதியரின் மேனியிலே பட்டுத் தெறித்துக் கொண்டி ருக்கும் வேளையிலே -
அரவம் கேட்டு இருவருமே திரும்புகின்றர்கள். அதிரும் உள்ளமும் உதிரும் வியர்வையும் கதிகலங்க வைக்கிறது அவர்களே. அங்கே.
உலைவளர் எரிச்செங்கண்ணுன் ஊன் எயிற்று உட்ற்றுவாயான் கொலைவளர் புலிப்பால் உண்டு கொலைபேசி வளர்ந்தவேடன் நிலை வளர் நிறப்பூங்காவில் எய்தி அப் பறவைகண்டே,
கொலைஈண்டுஉள்ளிச் சிலை வளைத்து அணுகிச் சேர்ந்தான்
உலேக் களத்தில் உயர்ந்து வரும் தீச்சுவாலை போன்ற சிவந்த கண்கள், ஊன் உண்ணும் அவாவினல் உமிழ்நீர் சுரக்கும் வாய்; இளமையிலே கொலைத் தொழில் பயில்கை யில் அவன் புலிப்பால் அருந்தி வளர்ந்திருக்க வேண்டும். அத்தகைய முறுக்கேறிய உடம்பு, வண்ணமலர் நிறைந் திருக்கும் அம்மரத்தே துணையுடன் இணைந்து நிற்கும் புருவின் உயிர் பறிக்கும் நோக்குடன் அன்பை விடுத்து - அம்பு தொடுத்து. சொல்லைக் களைந்து - வில்லை வளைத்து மெல்ல மெல்ல அடிபெயர்க்கின்றன்.

Page 50
92
வேடனது ஆசை அப்புருக்களின் நிணத்திலும், அவனது அம்பு அவற்றின் உயிரிலும் நாட்டம் கொண்டு குறி பார்க்கும் அதே வேளை, சூசையின் உள்ளம் அப்பறவை களின் இணைப்பையும் பிணைப்பையும் எண்ணி மகிழ்கின்றது.
இன்னும் ஒரு நொடிதான். அவனது ஆசை வென்று விடும். காரணம்; அம்பு அவற்றிலொன்றைக் கொன்று விடும். ஒன்று உயிரிழக்க - மற்றையது துணையின்றி துயருற்று துவஞம். வேடனது பற்களோ பதப்படுத்திய அச்சிறிய உடலைப் பதம் பார்க்கும். இதையெண்ணி மரியம்மைக்கும் மனக் கவலைதான்.
அதே வேளை ஆ கா யத் தி லே. "விருந்தொன்று கிடைக்கப் போகிறதே என்ற வேட்கையினல் பருந் தொன்று வலம் வருகிறது. மரியாளும் சூசையும் மாறி
மாறிப் பார்க்கிருர்கள் ஒருபுறம் வேடுவனின் அம்பு; மறுபுறம் பருந்தின் அலகு, இரண்டுமே இலக்குவைப்பது ஒரே விருந்தைத்தான்.
இருபுறமும் தம் உயிருக்கு உலைவைக்கும் கொலே யாளிகள் இருக்கின்றர்கள் என்பதை எள்ளளவும் எண்ணிப் பாராது மகிழ்ந்திருக்கும் அக் கபடமற்ற புருக்களைப் பற்றிக் கவலை கொள்கிருர்கள் இருவரும்,
ஒர்பகை இவன் கீழ்உள்ள, உலவிமேல் பருந்துதானும் கூர்பகை உஇச்வவ்வாமுன் கொடியகண இரையை வவ்வி பேர் பகை உணர்ந்துசூழ, பிறரெலாந் தமைப்போல் எண்ணிக் ܨܘܪܬܐ சேர்பகை உணராஅப்புள் சிறுமை கண்டு இளைந்தான் சூசை
என்று இச்சந்தர்ப்பத்தை எழுதுகின்றன் புலவன்.
பருந்துதான் பறந்துவிட்டாலும் பாணம் மறந்து விடாது. பாணம் தவறிஞல்கூட பருந்து தவறவிடாது. வேடனைத் துரத்துவதா? பருந்தினைக் கலேப்பதா? பாவம்
புருக்கள். எ ன் ன செ ய் ய ல 7 ம் இருவருமே மனம் உளைகின்றனர்.
இங்கே. வேடன் நெருங்கிவிட்டான்; வில்லை வளைத்து விட்டான். பல்லைக் கடிக்கின் முன். அவனது குறி'என்றுமே பிழைத்ததில்லை. இதோ, அம்பை நா னி ல் இறுக்கி இழுக்கின்றன்.

அங்கே. பருந்து பல வட்டங்கள் இட்டுத் தனது இறுதி வட்டத்தினை ஆரம்பித்து விட்டது. இரையை எடுக்காமல் இதுவரை அப்பருந்து திரும்பியதே இல்லை. இதுதான் அதன் இறுதித் தாக்குதல்.
அதோ! இறங்கிவிட்டது பருந்து!
இதோ! இழுத்து விட்டான் அம்பை
இதயம் படபடக்க இருவருமே கண்களை இறுக மூடிக் கொள்கின்றனர்.
மறுகணம் வேடனின் அலறல் கேட்டு யேப்புடன் t நோக்குகின்றனர். வேடன் விழுந்து துடிக்கின்றன். வில்லும்
அம்பருத்தூணியும் எதிரில் கிடக்கின்றன. "
மறுபுறம் அப்பருந்து இறந்து கிடக்கின்றது. புருக்கள்? நான்கு கண்களும் ஒரே முறையில் நோக்குகின்றன. அவை அங்கே இல்லை. எதிர்ப்புறம் உள்ள மரத்தில் இணைந்து அமர்ந்திருக்கின்றன.
நடந்தது இதுதான். அடிமேல் அடிபெயர்ந்து வந்த வே உன் அங்கு ஊர்ந்து வந்த அரவமொன்றை மிதிக்க - அது அவனைக் கடிக் க - அவன் திணற - வில் தவற - அம்பு திசைமாறி பருந்தில் பட. கதையே மாறி விடுகிறது.
சிட்டமிட்டு எழுதப்பட்ட சிறகுஒளி செகுப்ப,பாறும் வட்டமிட்டு இழிந்துபாய வருகையில் வேடன் வாளிச் சட்டமிட்டு எய்யசர்ப்பம் தனை மிதித்திடும் கால் தீண்ட தட்டமிட்டு அவனும்மாய்ந்தான்; தவிர்ந்தகோல் பருந்தும்கொய்தே,
என்கின்ருன் புலவன்.
"நாம் எண்ணுவதற்கும் மேலாக இயங்குவதற்கு
இறைவன் ஒருவன் இருக்கின்றன்" என்பதற்கு இது நல்ல தோர் உதாரணமாகும்.
18-10-87

Page 51
ஆசிரியரின் ஆக்கங்கள்.
() வெளி வந்தவை.
1. சிறுவருக்கேற்ற வேதாகமக் கைநூல்
2. யெளவனம் - இலக்கியக் கட்டுரைகள்
சேர்க்கை
ß၌) @. Z). ති වූ
a narranean
− ത്ത
இல,
risis. *****inം a i அயோததி ழில் சேவைகள்
- པiདུ་བས་ཚོམས་བམ་པ་ཅ་
இ வெளிவர இருப்பவை
இளமையின் நுகம் பிறந்த நாட் பரிசு
சாலமோனின் காதல்
சங்கீதம் கவிதையாகிறது சாரோனின் பள்ளத்தாக்கில்
மலர்ந்த
8 7 9 1 -ܗ
- 1987
= நாவல் = நாடகம் - கவிதை
- கதை
94.
“Lord! Make Me A Channel of your Peace'
 
 
 
 


Page 52
ஆசிரியரைப் ட
திரு. செ. நடரா முதல்வர், அசோ
&ଘ
இந் நூலாசிரிய ஜெயசிங் அவர் வருடங்களாக
தனது 18லது
பணியை ஆரம் அதிபராய்ப் ப த வி யேற் று த ன து சேவையால் பதவியுயர்வுகள் பல ெ முதலாந்தர அதிபராகப் பணியாற்றி
ஆசிரியப்பணியை ஆரம்பித்த ஆண்ே தயாரித்தளித்த கலைநிகழ்ச்சிகள் வத்ே போட்டிகளில் முதலிடங்கள் பலவற் 1962ல் இவரது நாடகப் பிரதியான " சிங்கன்’ அகில இலங்கை ரீதியில் பரிசு ( இவரது ஆக்கமான "வேதா கமக் சை பட்டமை - 1983 ல் இயேசு காவிய பூ இலக்கியப் பெருவிழாவாக ஏற்பாடு .ெ நிகழ்வுகள் இவரது இலக்கிய முயற்சிக காட்டுகளாகும். 1969 தொடக்கம் இ தினபதி - சிந்தாமணி பத்திரிகைகள கொண்டிருக்கின்றன.
விழாக்கள் ஏற்பாடு செய்வதில் ( யவே மாட்டார். திறமையுள்ள மாணவ களையும் தக்க சந்தர்ப்பங்களில் ஊக்கு படுத்துவது இவரது மற்ருெரு அருங்கு
இவரது குடும்பமே ஒரு கலை க்குடு கூறவேண்டும். அது அவர் களுக்கு இ6 கொடை, ஆழ்ந்த மத ப்பற்றுள்ள ஜெயசிங் அவர்கள் 1986ல் குருநாகலை அ, ஆலய உதவி ஊழியனுக அங்கீகாரம் கிறிஸ்து நாதர் ஆலய திருச்சபையி வருகின்றர். இவரிடமிருந்து பல பய8 தொடர்ந்தும் எதிர்பார்க்கின்ருேம்.
v,
 
 

பற்றி . . . .
ஜா BSc அவர்கள் "கா வித்தியாலயம்,
T
ர் திரு. தேவதாசன் களை நான் முப்பது ந ன் க றி வே ன், வய்தில் ஆசிரியப் பித்த இவர் 1972ல்
அப்பழுக் கற்ற ப ற் று இ ன் று வருகின்றர்.
ட (1959ல்) இவர் தகம வட்டாரப் றைப் பெற்றன. பூரீ விக்கிரமராஜ பெற்றமை - 1978ல் நூல்" வெளியிடப் அறிமுகத்தினை ஓர் சய்தமை போன்ற ளின் சில எடுத்துக் வரது ஆக்கங்கள்
சில் வெளி வ ந் து
இவர் சோர் வடை ர்களையும், இளைஞர் தவித்து உற்சாகப் ணமாகும்.
ம்பம் என்று தான் றைவன் கொடுத்த திரு. தேவதாசன் த்தியட்சாதீனத்தில் பெற்று கண்டி - ல் தொண்டாற்றி னுள்ள பண்களைத்