கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆசிரியத்துள் நான்

Page 1
ՆԱԾ, ՀԱՀԱՆՔ
ԱՆ
Σς
R ჯ
::
წ ଚେଁ;
କ୍ଷୁଃ
ଝୁଟ୍ରୁ წჯჯ :::
ଝୁ ଛ୍ଯୁ ჯ
ଝୁଟ୍ରୁ 원
ଝୁଟ୍ରୁ წწ.
3
ჯ ଝୁ
3.333 S3 ଓଁ
ଝିଣ୍ଟୀ ୫ წჯ
$ଽ恩
 


Page 2


Page 3


Page 4

இராஜேஸ்வரி கொன்ஸ்ரன்ரைன்
Published by
NEO CULTURAL COUNCIL 28/1, St. James West Street,
Jaffna, Sri Lanka. 021-2223224

Page 5
யார் நம் அறிவைத்
தூண்டுகிறாரோ,
அந்தச் சுடர்
கடவுளின் போற்றுதற்குரிய ஒளியைத் iuIIGifiliu IIInIIă.
 

என் அன்பின் தந்தைக்கு
Dedicated to my beloved Daddy Late BENjamin ChristuDAS ABRAHAM O.O7. 9 8 - 2 O.O. 994
emeritus Rly. Station Master

Page 6
நாம் திறமையையும், தகுதியையும் வளர்க்கலாம், அறிவையும், தேர்ச்சியையும் பெருத்தலாம். ஆனாலி நம்மை நாமே அடர்திக்கொள்ள நாம் குற்றுக்கொள்ள வேணடும், இன்று தலையாயத் தேவை சமுதச் திட்டுப்பாடு,
*மனிதன் தன் இதயத்தில் என்ன எண்ணுகிறானோ ബ്രസ്മൃ அறு/ன் ജൂLUസ്ത്
சட்டங்களும் விதிகளும் நம்மைச் சீர்திருத்தி விட முடியாது. மாணவர்களுக்குத் தொடர்ந்து கட்டுப்பாடான பயிற்சி அளிப்பதன முலமும், நம் நடத்தை அவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைவதன முலமும்தானி நாம் முனர்னேற்றம் காணமுடியும், தலிவி மனிதனி உள்ளத்தைப் பணிபடுத்தாவிடிலி, தறிகட்டுப்பாட்டைப் போதிக்காவிடில் சமுகத்திலி அது வீண முயற்சியேயாகும்.
LI LI Tj, Li S. இரருேஷ்ணன்

BIBLOGRAPHICAL DATA
Title of the Book : ASIRIYATHIUL NAAN
Subject : Memories of Teaching
Author : Mrs. Rajeswary Constantine
Publisher : Neo Cultural Council
28/1, St James West Street, Jaffna, Sri Lanka
CopyRight : Author (All Rights Reserved)
Com. Typing & Layout : Jeyanth Center, 289Martyn Road, Jaffna Cover Design & Printing: Jeyanth Center
Printing : St. Joseph's Catholic Press, Jaffna
First Edition : May 2003
Size και 14 Χ 21 韶墨
No. Of Pages : 50 + 10+ 4
Price : 100.00 扇 的 参
நூல் பரிமாணம் s
நூலின் பெயர் ஆசிரியத்துள் நானர்
பொருள் கல்விச் சிந்தனைகள்
ஆசிரியர் திருமதி இராஜேஸ்வரி கொண்ஸ்ரண்ரைனர்
ിഖങിuീ நேயோ கல்சுரல் கவுணர்சில்
28/1, செனிஜேம்ஸ் மேற்கு வீதி, யாழ்ப்பாணம். பதிப்புரிமை ஆசிரியர் கணினிசார் சேவைகள்: ஜெயந்த் சென்ரர்
28, மாட்டினர் வீதி, யாழ்ப்பாணம்
அட்டை ஜெயந்த் சென்ரர்
அச்சுப் பதிவு புனிதவளனர் கத்தோலிக்க அச்சகம்,
யாழ்ப்பாணம்.
முதற் பதிப்பு : (GBLAD 2003
நூல் அளவு και 14 Χ 21
பக்கங்கள் : 50 + 10+ 4
660)6) : 00.00

Page 7
வாழ்த்துரை
Rev. Fr. J.P.E. Selvarajah
Vicar General
Bishop's House,
P.O.Box2, . - Jaffna, Sri Lanka. Tel: 021-222.2161
ஆசிரியர் திருமதி M.R.C. கொன்ஸ்ரன்ரைன் அவர்களை பல வருடங்களாக நான் அறிவேன். ஆசிரியத்தில் முப்பது ஆண்டுகள் நிறைவுகாணும் இவர், கடந்த 25 ஆண்டுகளாக புனித சாள்ஸ் மகா வித்தியாலயத்தில் சிறந்த பணியாற்றி இருக்கிறார்.
19956ు மக்கள் இடம் பெயர்ந்து சென்ற காலத்தில் இங்கு தங்கியிருந்த பிள்ளைகளை பல இடையூறுகள் மத்தியில் வழிநடத்தி, கல்வி ஊட்டிவந்த காலகட்டத்தை நான் நன்கு அறிவேன்.
இணைப்புப் பாடசாலை அதிபராக, உப அதிபர் சகோதரி மெற்றில்டாவுடன் இணைந்து, பாதிப்புகளுடனும், மிகவும் சொற்ப வசதிகளுடனுமே தமது பணியை அவர் செய்யவேண்டியிருந்தது. மாணவர் தமது கல்வியைத் தொடர்ந்து கற்பதற்கு அவரின் பங்களிப்பு மிகவும் அத்தியாவசியமானதும், அர்ப்பணம் நிறைந்ததாகவும் இருந்தது.


Page 8
பசுமைச் சுவடுகள்
Α.
ஆ. இராஜகோபால் (செம்பியன் செல்வன்)
B.A. Hons (Cey), Dip-in-Ed (Cey), SLPS 1 முன்னாள் யாழ். கோட்டக் கல்விப் பணிப்பாளர்.
மூன்று தசாப்த காலங்களை "ஆசிரியத்துள் நான் ஆகக் கழித்து விட்ட ஒரு வழிகாட்டியின் விழித்தடங்களின் பதிவுகள் இவை எனக் கூறலாம்.
புதிய அநுபவங்கள்; ஆத்மசோதனைகள்; மனுக்குலங்களின் மலர்ச்சி முகங்கள்; அவை தரும் போதங்களால் நித்தியம் பெற முனையும் ஆசிரியத்தின் குரல்.
ஆசிரியப்பணியை ஆண்டுதோறும் நிறைவு செய்யும் ஆசிரியர் மிகப்பலர். செய்த கடமைக்கும் தமக்கும் எந்தவித தொடர்புமில்லை என்று ஓய்வுக்கூலியை பெறுவதில் மிகவும் அக்கறை காட்டுவோரிடையே, இன்னொரு தசாப்த காலத்தை கடமைக்கென காலடியில் கிடத்தியவாறு, தான் விட்டு வந்த பசுமைச் சுவடுகளை விமர்சனம் செய்து, இனிவரும் பாதை, பணி, திசை எனப் புதிய திட்டமிடல் - செயலூக்கம் பெறுவதை இங்கு காண முடிகிறது.
உண்மையான சுயவிமர்சனம் என்பது வரலாற்றுப் பாதையைச் செப்பனிடலும், புதிய பாதையை ஒழுங்கமைத்தலும்தான்.
இதுதான் இங்கு நடந்து கொண்டிருக்கிறது. Giul6).J6OTOBTசமூகவரலாறா கல்வி வரலாறா நிகழ்கால நடப்புகளா? அரசியலா? பொருளாதாரமா? எவைதான் இங்கு பேசப்படவில்லை.
ஆனால் பேசப்பட்டுள்ள விதம் 'இலக்கியப் பரிசோதனை போல் படிப்போர் இதயங்களை அதிரவைக்கப் போகிறது என்பதில் என்னளவும் ஐயமில்லை.
 
 

யாழ். பிரதேசக் கல்வி வரலாற்றின் இடர்க்கால ஒருசில மாதங்களின் நிர்வாக நடப்புகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
எதிர்கால கல்வி வரலாற்றாசிரியர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் இங்கு வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் மிகமிகப் பயனளிக்கும். அதேபோல சமூகவியலாளருக்கான பலதகவல்களும் காணப்படுகின்றன.
திறந்த விரிந்த உள்ளத்தினின்றும் வெளிவந்திருக்கும் இவை, நம்பகரமானவை. நாளைய கல்வி கற்பிப்போருக்கும், கற்போருக்கும் ஒளிகாட்டும் வெளிச்சத் துணுக்குகள்.
காட்டப்பட்டுள்ள காட்சிகளும், கருத்துக்களும், கடந்தகாலச் சம்பவங்களும் - மனித குலத்தின் சிந்தனைகள் அமைதிக் காலத்திலும், போர்க்காலத்திலும் எவ்வெவ் வழிகளில் சுடரேற்றுகின்றன என்பதனைப் படிப்போர் மனதில் வரிகளோட வைக்கின்றன. இங்கு
மாணவர்க்கும் கற்பித்தல் நிகழ்கிறது.
கல்வி நிர்வாகிகளுக்கும் வழிகாட்டல் நிகழ்கிறது.
கல்வியின் புதிய பாதைகள் பற்றிய தெரிவு, தரம் காட்டப்படுகின்றன. அதேவேளையில் ஆத்ம பரிசோதனையும் நடக்கிறது.
м سہولہب (آب نگاہ
1904-2003 6000 كرويج ومع( இர்ச்சிட்

Page 9
நீடு இனிதே வாழ்க
திருமதி. E. பெனடிக்ற் B,Ed உப அதிபர் புனித மரியாள் தமிழ் மகளிர் வித்தியாலயம், பம்பலப்பிட்டி, கொழும்பு-04
மனித வாழ்வு சீரும், திருவும் பொலியச் (GFD60)LDUITs விளங்குமேயானால் அதுவே தெய்வீக வாழ்வாகும். தெய்வீக வாழ்வினை இப்பூவுலகிலேயே வாழமுடியும் என்ற வள்ளுவன் கருத்திற்கொப்ப வாழ்ந்து காட்டுபவர் திருமதி M.R.C. கொன்ஸ்ரன்ரைன் என்றால் அது மிகையாகாது.
சுறுசுறுப்பும், தெய்வ பக்தியும், பரோபகார சிந்தையும் உடைய இவர் பழகுவதற்கு இனியவர். எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் ஆற்றலுடையவர் இவர் எடுத்த கருமத்தை நன்கு திட்டமிட்டு நிதானமாகவும், விவேகமாகவும் செய்து முடிக்கும் மனோபலம் படைத்தவர். இத்தகைய மேலான பண்புகளுடன் கல்விச் சேவையை சிறப்புற ஆற்றிவரும் பெருமை இவருடையது.
இவரிடமுள்ள துணிவு, ஆற்றல், திறன், அயரா உழைப்பு மற்றும் பசித்தவருக்கு கேட்காமலே உணவளிக்கும் பண்பு இவையாவும் இறைவன் இவருக்கு அளித்த அருங்கொடைகள் என்றே சொல்ல வேண்டும்.
கரம் பிடித்த கணவனுக்கும், பெற்றெடுத்த பிள்ளைகளுக்கும் தனது கடமையைச் செவ்வனே செய்து இல்லத் தலைவியின் பொறுப்புக்களை உரிய முறையில் நிர்வகித்து இல்லற வாழ்வில் வெற்றியீட்டிய வண்ணம், மாணவர் தம் உளமறிந்து, திறனறிந்து கற்பிப்பதுடன் அவர்களின் முன்னேற்றத்தில் மட்டுமல்லாது அதிபர், ஆசிரியர் நலன்களிலும் மிகுந்த அக்கறை கொண்டுள்ள இவர் தம் பாடசாலையின் Li605 LILL முன்னேற்றங்களிலும் அதிக சிரத்தை கொண்டு உழைப்பவர் ஆவார்.
 

"எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும்” என்ற பரந்த மனப்பாங்கு கொண்ட இவரது விருந்தோம்பலுக்கு நிகரில்லை.
யாழ் மக்களின் இடப்பெயர்வுக் காலகட்டங்களில் மாணவரைப் பொறுப்புடன் இவர் வழிநடத்திய விதம் விதந்துரைக்கத்தக்கது. பொதுச்சேவையிலும், கலைச்சேவையிலும் மிகுந்த ஈடுபாடுடைய இவர் வாழ்க்கையில் சாதித்தவை பல.
இளம் வயதிலேயே ஆசிரியரான இவர் முப்பது ஆண்டுகளாக Elst'ILI600ILb மிகுந்த கல்விச் சேவையாற்றி வருவது மிகவும் பெருமைப்படத்தக்கது. இவரது சீரிய வாழ்க்கையைக் கண்டு பெருமிதப்படும் அதே சமயம் இவரது சேவையும், ஆற்றலும் நாட்டுக்கும், அனைத்து மக்களுக்கும் பயன்படும் வண்ணம் எல்லாம் வல்ல இறைவன் இவருக்கு நீண்ட ஆயுளையும், நிறைந்த ஆரோக்கியத்தையும், செறிவான முன உறுதியையும் நிறைவாக வழங்க வேண்டும் என இறைஞ்சுகிறேன்.
19,042003 E. fہوتی ہے لیے یہ عل
VIII ཡོད། " 《

Page 10
பதிப்புரை
NEO CULTURAL COUNCIL 28/1, St. James West Street, Jaffna, Sri Lanka. 021-2223224.
ஆசிரியர்கள் ஒரு நாட்டின் விலைமதிப்பற்ற செல்வங்கள். பல அர்ப்பணிப்புகள் ஊடாகத் தம்மை மெழுகுவர்த்தியாய் உருக்கிக் கொண்டு, நாட்டிற்கு நல்ல பிரஜைகளை உருவாக்கித் தருவதில் பெரும் பங்கு வகிக்கும் இவர்களது சேவையின் பெறுமதி பலராலும் உணரப்படுவதில்லை. அவர்களது மிகச் சிறிய தவறுகளையும் பூதாகாரமாக விமர்சனம் செய்யத் துணிகின்ற நாம் அவர்களது அர்ப்பணம் மிகுந்த பணியைப் பாராட்ட முன்வருவதில்லை.
நம்மில் பலர் நமது பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பிவிட்டு "அப்பாடா நமது கடமை முடிந்து விட்டது” என்று நிம்மதியாய் இருந்து விடுகிறோம். அங்கே ஆசிரியர்கள் அனுபவிக்கின்ற சுமைகளையும், எதிர்கொள்கின்ற பிரச்சனைகளையும், படுகின்ற சிரமங்களையும் நாம் அறிந்து கொள்ளத்தானும் அக்கறை கொள்வதில்லை. இது மிகவும் துரதிர்ஷ்டமான தொன்றாகும்.
திருமதி இராஜேஸ்வரி கொன்ஸ்ரன்ரைன் அவர்களின் “ஆசிரியத்துள் நான்” எனும் இந்நூல் பற்றி பிரபல்ய எழுத்தாளரும், கலை இலக்கியப் படைப்பாளியுமான திரு. செம்பியன் செல்வன் அவர்களின் மதிப்புரையை விட மேலாக நாம் எதையும் சொல்வதற்கில்லை என்றே நம்புகிறோம்.
ஒவ்வொரு ஆசிரியருக்கும் தம் பணிசார்ந்த சுய விமர்சனம் இருக்கத்தான் செய்யும். ஆனால் பலருக்கு அதனை வெளிப்படுத்துவதற்கான சந்தப்பங்கள் கிடைப்பதில்லை.
VIII
 

இந்நூலில் ஒரு ஆசிரியையின் செயற்பாடுகள் பல்வேறு புறச் சூழலில் எவ்வாறு அமைந்திருந்தன என்பதை நாம் அறிந்து கொள்ளக் கூடியதாயிருக்கின்றது இதன் மூலம் ஆசிரியையின் அனுபவமும், வாசகரின் மதிப்பீடுகளும் சங்கமித்து சிறந்த விளைவுகளை ஏற்படுத்துவதற்கான நல்லதோர் களம் உருவாக்கப் பட்டுள்ளதாகவே நாம் கருதுகிறோம்.
ஆசிரியத்தில் முப்பது ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ள நூலாசிரியர், தான் முகம் கொடுத்த பல்வேறு சம்பவங்களையும், சவால்களையும் மிக அழகாகவும், தெளிவாகவும் வெளிப்படுத்தியுள்ளார்.
இவ்வனுபவ நூலை வெளியிடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்தமைக்காக அவருக்கு நன்றி கூறுகிறோம்.
ஆசிரியத்துவம் ஒரு புனிதமான பணி அதில் ஈடுபடும் யாவரும்
நேர்மையுடனும் அர்ப்பணத்துடன் சேவையாற்ற வேண்டுமென வாஞ்சிக்கின்றோம்.
வாழ்க நலம்
23.04.2003 இயக்குனர்

Page 11
ஒவ்வொரு மனிதனிடமும் தெய்வீகத் தனிமையும் பூரணத்துவம் எனப்படும் முழுமையும் உள்ளது. உணர்மைக் கல்வியின் வழியே இத்தகைய முழுமை நன்கு வெளிப்படுகிறது.
(Education is the manifestation of perfection inherent in man)
சுவாமி விவேகானந்தர்
 
 

“ஆசிரியத்துவம் அர்ப்பணம் மிகுந்த ஒரு சேவையாகச் சிசய்யப்படும்போது அதன் பெறுமதி உயிர்ப்புடையது. ஆனால் அது ஒரு தோழிலாக நடைமுறைப் பருத்தப்பரும்போது தன் ஆண்மாவை இழந்து வீருகிறது”
என் அன்பு நெஞ்சங்களே,
ஆசிரிய நியமனம் பெற்ற நாள் இன்றுபோல் இருக்கிறது. முன்று பத்து ஆண்டுகள் எப்படிப் போனதென்றே தெரியவில்லை. எனது பாடசாலை நாட்கள், ஆசிரியராகப் பொறுப்பேற்ற நாள், இதுவரை நான் சந்தித்த ஆசிரியர்கள், அதிர்கள், மாணவர்கள், பெற்றோர் இவர்களையெல்லாம் என் மனத்திரையில் மீட்டுப் பார்க்கும்போது ஏற்படுகின்ற மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. சேவைக்காலம் முழுவதும் இளையோருடனேயே பழகுகின்ற காரணத்தால் எமது எண்ணங்களும் சிந்தனைகளும் என்றும் இளமையாகவே இருக்கின்றன என எண்ணுகிறேன். பல்வேறு பண்புகள் கொண்ட அதிபர், ஆசிரியர், மாணவர்களுடன். அவர்கள் பலங்களையும், பலவீனங்களையும் அறிந்து, முரண்பாடுகளைக் களைந்து வெற்றி நோக்கி தனது பயணத்தை முன்னெடுத்துச் செல்வது ஒவ்வொரு ஆசிரியனதும் சவால்கள் மிகுந்த பணி என்றே நான் கருதுகின்றேன்.
"ஓர் அசிரியன் பிறக்கின்றான் - உருவாக்கப்படுவதில்லை" (ATeacher s bon not Made) என்ற எண்ணக்கரு பற்றி நமக்குள் பல்வேறு அபிப்பிராயங்கள் இருக்கலாம். ஆனால் ஆசிரியத்தை நேசிப்பவர்களும், அர்ப்பணத்துடன் சேவையாற்றும் மனப்பாங்கைக் கொண்டவரும் மட்டுமே ஆசிரிய சேவையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது என்றே நான் நம்புகின்றேன். நாளைய சமூகத்தை வழி நடத்தப்போகும் இன்றைய

Page 12
மாணவரை உருவாக்குகின்ற பொறுப்பில் பெரும் பங்கு ஆசிரியனுடையதே.
முன்பெல்லாம் பாடத்திட்டங்கள் மடடுப்படுத்தப்பட்டதாயிருந்தது. பாடங்களை மனனம் செய்து ஒப்புவித்தலே போதுமானதாயுமிருந்தது. ஆனால் இன்று அவை பலபரிமாணங்களில் வளர்ச்சிகண்டு நாளும் பொழுதும் விரிவடைந்து கொண்டே செல்கிறது. மாணவன் பாடங்களை மனனம் செய்வதைவிட இவற்றைப் பற்றி நன்கு புரிந்துகொள்ள வேண்டியவனாய் இருக்கின்றான். வகுப்பறைக்கு கற்கும் ஆர்வத்துடன் வருகின்ற மாணவனுக்கு அவன் நாளாந்த வாழ்வில் பெறுகின்ற அனுபவங்கள் மூலம் நாம் கற்பித்தலை மேற்கொள்ளும்போது அவன் விடயங்களை இலகுவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. வாய் மூலம் ஆசிரியர் கற்பிப்பதை விட, செயல் மூலம் அவன் அதனைத் தானே செய்யும் போது அவனால் மிகவும் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது.
பாடப் புத்தகங்கள், கரும்பலகை, வெண்கட்டி, கட்புலசாதனங்கள் என முன்பு மட்டுப்படுத்தப்பட்டதாயிருந்த வகுப்பறை வளங்கள், (ClassRoom Resources) இன்று நூலக நூல்கள், கலைக்களஞ்சியங்கள், அகராதிகள், வரைபடங்கள் எனப் பல பாடசாலைகளில் வளர்ச்சி கண்டுள்ளன. வசதியுள்ள பாடசாலைகள் வானொலி ஒலி/ஒளி நாடாக்கள், தொலைக்காட்சி, திரைப்படங்கள், முதலியவற்றையும் (Teaching Machines) மேலதிகமாக சேர்த்துக் கொண்டு தமது வகுப்பறை வளங்களை மேம்படுத்தியுள்ளனர். இன்று அதிநவீனமான கணிப்பொறி (Computer) நமது வகுப்பறை வளங்களுள் இணைந்து கொண்டுவிட்டது. இவற்றையெல்லாம் உரிய முறையில் பயன்படுத்துவதற்கு ஒவ்வொரு ஆசிரியனும் தன்னைத் தகுதியள்ளவனாக ஆக்கிக் கொள்ளவேண்டும்.
கல்வி என்பது வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள் அடங்கிக் கிடப்பது ஒன்று அல்ல. சமூகத்தில் கிடைக்கக்கூடிய யனுள்ள வளங்கள் அனைத்தையும் மாணவர் அறிந்து கொள்வதற்கான வழிவகைகளை, வசதிகளை ஆசிரியர்கள் முன்னின்று ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
மாணவர்கள் அதிகமான கற்றலை பாடத்திட்டங்களுக்கு வெளியே (Outside the Study Programme) மற்றைய மாணவர்களுடன் இணைந்து தொழிற்படுவதனாலேயே பெறமுடியும்.
மாணவர் சங்கம், விளையாட்டுப் போட்டிகள், கலைப்போட்டிகள், இலக்கிய அவை, சமூக நிகழ்வுகள் ஆகியவற்றில் மாணவர்களை நாம் ஈடுபட வைப்பதன் மூலம் அவர்கள் பல விடயங்கள் பற்றிய அறிவைப் பெறுவதற்கும், தற்றுணிவை வளர்த்துக் கொள்வதற்கும், ஆளுமையை மேம்படுத்துவதற்கும். புதிய நண்பர்களை ஏற்படுத்திக் கொள்வதற்கும் நாம் களம் அமைததுக் கொடுக்கிறோம் என்பதை மறந்து விடக்கூடாது. அதேவேளையில் அவர்களைக் கல்வியிலும் அக்கறைகொள்ள வைக்கவேண்டும். விருப்பமான ஒரு செயலைச் செய்யும்போதே மாணவரது திறன் கூர்மையடைகின்றது. நமது வகுப்பிலுள்ள ஒவ்வொரு மாணவரைப் பற்றியும் நாம் நன்கு அறிந்துகொண்டு அதற்கேற்றவாறு செயற்பட வேண்டும். இது மிகவும் கஷ்டமான பணி என்பதில் ஜயம் சிறிதளவும் இல்லை. ஆனால் நம்மால் முடிந்தவரை நாம் இதனைச் செய்தேயாக வேண்டும்.
அயலிலுள்ள தொழிற்சாலைகள், சேவை நிலையங்கள், அருங்காட்சியங்கள், நூல் நிலையங்கள், சந்தைகள், பண்ணைகள், மற்றும் வெளியூர்களுக்கும் காலத்துக்குக் காலம் கல்விச்சுற்றுலாக்கள் மேற்கொள்வதன் மூலம் நம் மாணவரின்
2 -

அறிவை மேம்படுத்தலாம். இதன் மூலம் மாணவர்கள் தம்மை சூழ என்ன நடைபெறுகின்றது? இவற்றிற்கும் நமக்கும் உள்ள தொடர்பு என்ன? அவை நமக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகின்றன? என்பது போன்ற பல விடயங்களுக்கான விடைகளைக் கண்டுகொள்ள முடியம்.
போக்குவரத்திலும் (Transport) தொடர்பாடலிலும் (Communication) மற்றும் தகவல் தொழில் நுட்பத்திலும் (Information Teachnology) நாம் இன்று கண்டுள்ள் அதீத வளர்ச்சி உலக மக்கள் ஒவ்வொருவரும் ஒருவரில் ஒருவர் தங்கி நிற்க வேண்டிய நிலைமையை உருவாக்கியுள்ளது. நம்மையும், நமது அயல் ஊர்களையும், அயல் நாடுகளையும் நாம் அறிந்துகொள்ள வேண்டியவராயும், அவரது பண்பாடுகளையும், கலாசாரங்களையும் புரிந்துகொள்ள வேண்டியவராகவும், அவற்றிற்கு மதிப்பளிக்க வேண்டியவராயும் நம்மையும் அறியாமல் நாம் மாற்றப்பட்டுள்ளோம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. விஞ்ஞானம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சி ஒரு தலைமுறைக்கு முன்பு இருந்தவர்கள் அறிந்த கொள்ள வேண்டியிருந்ததை விட மிக மிக அதிகமான விடயங்களை நாம் அறிந்துகொள்ளவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு நம்மை தள்ளியுள்ளது. இதன் காரணமாக இந்தப் பாடங்களை கற்பிப்பதற்கு தகுதியான, பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் பற்றாக்குறை வளர்ந்து கொண்டே வருகிறது.
பரந்த அளவிலான பாடநெறிகளை, வளர்ந்து கொண்டேபோகும் 6T60060fligos, fault SDT மாணவர்களுக்குக் குறைந்து கொண்டேபோகும் எண்ணிக்கை கொண்ட ஆசிரியர்களால் கற்பிக்கவேண்டிய நிர்ப்பந்தம் நமக்கு எற்பட்டுள்ளது. இந்தப்பிரச்சினைக்கு சம்பந்தப்பட்டவர்கள் விரைவாக தீர்வு கண்டேயாக வேண்டும்.
கற்றல் கற்பித்தலை மேம்படுத்துவதற்கு கற்பித்தல் பொறிகளை (Teaching Machines) உரிய முறையில் பயன்படுத்துவதன் மூலமும், ஆசிரியர்கள் குழுமமாக கற்பித்தல் (Team Teaching) செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற முறைமையை அறிமுகப்படுத்துவதன் மூலமும் ஓரளவுக்கு தீர்வு காணமுடியும் என நம்புகிறேன்.
ஆசிரியப்பணியில் நம் அதிபர்களையோ அன்றி அதிகாரிகளையுோ திருப்திப்படுத்த வேண்டுமென்ற அவசியம் நமக்கில்லை. நமது பணி மூலம் நமது ஆன்மாவைத் திருப்திப்படுத்துகிறோமா என்பதே முக்கியமானது.
ஆசிரிய சேவையை மூன்று தசாப்தங்களாக சிறப்புற ஆற்றுவதற்கு வேண்டிய வல்லமையை நிறைவுற வழங்கிய வல்லானுக்கு என் நெஞ்சம் நெகிழ்ந்த நன்றிகள். என் பணிசிறக்க தம் மேலான ஒத்துழைப்பை வழங்கிய அதிபர்கள், ஆசிரியர் மாணவர், பெற்றோர் மற்றும் நல் இதயங்கள் யாவருக்கும்
レ
என் மனங்கனிந்த வாழ்த்துக்கள்.

Page 13
இந்நூலிற்கு வாழ்த்துரை வழங்கிய யாழ் மறை மாவட்ட மல் அருட்திரு PB செல்வராஜா அடிகளாருக்கும் அணிந்துரை வழங்கிய கலை இலக்கியப் படைப்பாளியும் முன்னாள் கோட்டக் கல்வி அதிகாரியுமான திரு ஆ. இராஜகோபால் அவர்களுக்கும் (செம்பியன் செல்வன்) பாராட்டுரை வழங்கிய பம்பலப்பிட்டி புனித மரியாள் த. ம. வி உபஅதிபர் திருமதி இ. பெனடிக்ற் அவர்களுக்கும் இந்நூலின் கணினிப்பதிப்பு வடிவமைப்பு மற்றும் அட்டைப்படம் ஆகியவற்றை அழகுற வடிவமைத்துத் தந்த "ஜெயந் சென்ரர்" ஸ்தாபனத்திற்கும் சிறந்த முறையில் பதிவு செய்து தந்த 'புனித வளன்" அச்சகத்தாருக்கும் இந்நூலினை வெளியிடுவதற்கு முன்வந்த "நேயோ கல்சரல் கவுன்சில்' இற்கும் orgit LoorLOffshë (Schflä6ft.
வாழ்க வளமுடன்,
*醬蒂蕾
கல்வி எனப்படுவதனுள் அறிவுப் பெருக்கத்துக்கு உதவும் அனுபவங்கள் LDL (Superial மாணாக்கர்களது உடல் வளர்ச்சி, மனவெழுச்சி,
முதிர்ச்சி, சமூக வளர்ச்சி போன்றவற்றிற்குத் துணைசெய்யும்
அனுபவங்களும் அடங்கும்.
service to a people vanishes with yesterday and does not count and there is no credit in bank left to draw them.
வீட்டினர் வளங்களையும் வருமானத்தையும் உச்ச அளவில் பயனர்பாட்டுக்குக் கொணர்டு வரும் தொழில் நுட்பம் மனைப் பொருளியலாகும்.

&difrif yr Iaith
ஆசிரியையாக நியமனம் பெற்று
ஆணர்டுகளி முப்பது நிறைவுறும் இவ்வேளையில் எனர் நினைவலைகள் ஆசிரியத்தில் நான் மகிழ்ந்த இனிமையான
காலத்தை மீட்டுப் பார்க்கின்றன.
இற்றை நாள்வரை பத்து அதிபர்களுடன் பணியாற்றியுள்ளேன். சில நுாறு ஆசிரியர்களுடன் சேவையாற்றி உள்ளேன். பல நூறு மாணவர்களுக்குக் கற்பித்துள்ளேன். இந்தச் சேவையில் சமூகத்தின் பல தரப்பட்ட மக்களுடனும் பழகுகின்ற ருெவாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதிகாரிகள், கல்விமான்கள், மருத்துவர்கள், பேராசிரியர்கள், கலைஞர்கள், தொழில் நுட்பவியலாளர்கள், சாதாரண மக்கள், போராளிகள், துறவிகள், மக்களவை உறுப்பினர் அமைச்சர்கள் மற்றும் நாட்டின் அதி உயர் பதவி வகிக்கும் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களையும் அவர் வாசஸ்தலத்தில் சந்தித்து உரையாடும் வாய்ப்பினையும் பெற்றிருந்தேன். பல்வேறு தரப்பினருடனான கருத்துப் பரிமாற்றங்கள் மூலம் என்னை நானே புடம் போட்டுக் கொண்டது ஒரு பெரும் அனுபவமாகும். இவற்றிற்கு மேலாக எனது முந்நாள் மாணவர்கள் பலரை எனது இந்நாள் மாணவர்களின் பெற்றோராக சந்தித்துக் கொண்டிருப்பது மிகவும் வித்தியாசமான ஒரு அனுபவமாகும் ஒருவன் எவ்வளவு காலம் வாழ்ந்தான் என்பதை விட அவன் எத்துணை அனுபவங்களைப் பெற்றான் என்பதே அவனுக்குப் பெருமை தரும் என நம்புகிறேன்.
தேசிய நோக்கங்களை அடைவதற்கு இன்றியமையாததான சமூக, சமய, பொருளாதார கலாசார மாற்றங்களை ஏற்படுத்துவதற்குக் கல்வி ஒரு மிகப் பெரிய ஆயுதமாகும். கல்வி என்பதற்குள் அறிவுப் பெருக்கத்திற்கு உதவும் அனுபவங்கள் மட்டுமன்றி மாணாக்கர்களது உடல் வளர்ச்சி, மனவெழுச்சி, முதிர்ச்சி, சமூக வளர்ச்சி போன்றவற்றுக்குத் துணை செய்யும் அனுபவங்களும் அடங்கும். இன்று (yp6OopsFirir 956ò6) (Formal Education) (p60op FITUITěži 956ů6ố) (Non Formal Education) அணுகுமுறைகளின் மூலம் மாணவரை மேம்படுத்த வேண்டிய ஒரு தேவை <۔ کسے صح<

Page 14
ஏற்படுத்தப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் இவ்விரு முறைகளிலும் தேர்ச்சியுடையவராய் இருக்க வேண்டியதன் அவசியம் உணரப்படுகின்றது.
கற்பித்தல் என்பது அடிப்படையில் மாணவரைக் கற்கச் செய்வதாகும். கற்பித்தல் மூலம் மாணவர் மட்டுமே கற்கின்றனர் என்ற எண்ணக்கரு (Concept) தவறானதாகும். கற்பிக்கும் ஆசிரியனின் அறிவும் தெளிவுபடுகின்றது என்பது தான் உண்மை, கற்பித்தல் என்பது முழுமை பெற்ற, முடிந்த செயல் என்று முதிர்ந்த அனுபவம் வாய்ந்த ஆசிரியரும் கூட எண்ணிவிடக்கூடாது. முன்பெல்லாம் ஆசிரியனை மையமாக வைத்தே கற்பித்தல் நிகழ்ந்தது. அன்று அவன் மாணவர் மேல் சகலவற்றையும் கட்டுப்படுத்தி திணிப்பவனாக செயற்பட்டான். ஆனால்
இன்று கற்பித்தல் கற்றல்
செய்கிரமத்தில் (Process), அவன் மாணவர்கள் கற்பதற்கு Զ(U5
ஊக்குவிப்பாளனாகவே (Catalyst) பணியாற்றுகின்றான்.
முன்பெல்லாம் ஆசிரியர்கள் பயிற்சி எதுவும் பெறாதவராகவே பணியாற்றினார்கள். பின்னர் அவர்களுக்கு ஆசிரியப் பயிற்சி வழங்கப்பட்டது. தொடர்ந்து காலத்துக்குக் SIT6ULß பயிலரங்குகளும், கருத்தரங்குகளும், அறிவுறுத்தல்களும், வழங்கப்படுவதுடன் அவ்வப்போது ஏற்படும் கல்வித் சீர்திருத்தங்கள் பற்றிய விளக்கங்களும் கொடுக்கப்பட்டு வருவது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும். இத்தகைய பயிலரங்குகள், கருத்தரங்குகளில் ஆசிரியர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென்றே நான் கருதுகின்றேன் அத்துடன் கல்வி உலகில் உலகளாவிய ரீதியில் ஏற்பட்டு வரும் மாற்றங்களையும், புதிய சிந்தனைகளையும், போக்குகளையும் முடிந்த வரை தொடர்பு ஊடகங்கள் மூலம் நாம் அறிந்து கொள்வதற்கு முயலவேண்டும். அப்போதுதான் நாம் துணிவுடனும் மிகுந்த நம்பிக்கையுடனும் வகுப்பறையில் மாணவர்களை எதிர்கொள்ள முடியும்.
இன்று ஆசிரியப் பணி ஒரு தேர்ச்சி பெற்ற தொழிலாகவே கணிக்கப் படுகிறது. ஆகவே நாம் பெற்ற கல்விச் சான்றிதழ்களுக்குத் தொடர்ந்தும் நாம் தகுதியானவர்களாகவே உள்ளோம் என்பதை உறுதிப்படுத்துவதற்கு நாம் இடை விடாது கற்றே ஆகவேண்டும்.
நல்லாசிரியர்கள் பாடசாலைச் சமூகத்தில் தமது மாணவர்களுக்கு மேலான இடத்தைப் பெற்றுக் கொடுப்பதிலேயே முனைப்பாய் இருப்பார்கள். தமது பணியின் பெறுமதி பற்றி நன்கு உணர்ந்துள்ள அவர்கள் அர்ப்பணம் மிகுந்த தமது பணியினை மேம்படுத்துவதில் கண்ணாயிருப்பதுடன், உளவியல் முதிர்ச்சி
 

பெற்றமையால் அதிக பொறுப்புடையவராகவும், மனித உறவுகளைப் பேணுவதில் சமூக கலைத்துவம் உடையவராகவும் இருப்பர். தாம் மேற்கொண்டுள்ள கற்பித்தல் பணியை விட கற்பதற்கான மனிதத்துவ கவிநிலை (Climate) மிக முக்கியமானது என்பதிை அவர்கள் நன்கு அறிவர். -
பல தலைமுறைகளாக வளர்ச்சி கண்டுகொண்டே வரும் நமது அறிவு, திறமை, மனப்பாங்கு பெறுமானம் என்பன இன்று மிகவும் ஆழமாகவும், அகலமாகவும், கூர்மையாகவும் மானிடத்துள் வேரூன்றி படிக்கிரமமாக விரிவாக்கம் பெற்ற வண்ணமுள்ளன. இவற்றை மிகுந்த அவதானத்துடனும், பக்குவத்துடனும், மாணவர்க்கு வழங்க வேண்டியது ஆசிரியனது பாரிய கடமையாகும்.
பல்வேறு பகைப்புலங்களில் இருந்து மாறுபட்டதும், அளவுகளில் வேறு பட்டதுமான திறன்களைக் (Ability) யைக் கொண்டவர்களாக நமது வகுப்பறைக்கு வருகை தரும் மாணவர்களின் வேற்றுமை (Difference) பற்றிய பொறுப்பு ஆசிரியர்களாகிய நம்முடையதல்ல. ஆனால் அதிக அளவில் மனோசத்தி பெற்றிருக்கும் மாணவரும் அவரவர் நிலைகளில் சிறப்புற செயற்படுவதற்கும், கற்றல் அனுபவத்தை நேசிப்பதற்குமான இயக்கத்தை மேற்கொள்ளும் பொறுப்பினை ஆசிரியனே ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு மாணவனின் கற்றல் முயற்சியைத் தூண்டுவதறகு ஆசிரியனே பொறுப்பேற்றுள்ளான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
நாம் முதலில் ஒரு உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் அதாவது எந்த ஆசிரியனும் ஒரு மாணவனைக் கற்கவைக்க முடியாது. நாம் அவனைக் கற்றலில் ஈடுபடுவதற்கான பெரும் முயற்சிகளை மட்டுமே மேற்கொள்ள முடியும். மாணவர்கள் பாடங்களை வித்தியாசமான வேகங்களிலும், வேறுபட்ட அளவுகளிலுமே கற்றுக்கொள்கிறார்கள். நமது வகுப்பறைகளில் மீத்திறன் மாணவர்களையும், மெல்லக் கற்போரையும் கண்டு நாம் பிரமிப்படைவதுண்டு சில மாணவர்கள் தமது கல்வியில் உண்மையாக பெருமுயற்சி எடுக்கின்ற போதும்க அவர்களது சிந்தனைக் குழப்பமானது அவர்களை சக மாணவர்களது தரத்துடன் இணைய முடியாமல் செய்து விடுகின்றது. மாணவர்களின் கற்றல் முயற்சியின் தரம் அவர்கள் கொண்டுள்ள முன்னறிவிற்கேற்ப பாதிப்புக்குள்ளாகின்றது. இதன் விளைவுதான் பாடசாலை மட்டக் கணிப்பீடு.
ஒவ்வொரு ஆசிரியனும் தனது வகுப்பறையை ஒரு ஆற்றுகைக்கான
<>

Page 15
அரங்காகவே எடுத்துக் கொள்ள வேண்டும் ஒரு ஆற்றுகைக்கு முன்பதாக குறிப்பிட்ட அரங்கு நமது தேவைக்கு ஏற்றவாறு அமைந்துள்ளதா என்பதை நாம் முன்னதாகவே பார்த்துக் கொள்வதைப்போல் பாடம் புகட்டப்பட இருக்கும் வகுப்பறையில் எத்தனை மாணவர்கள் இருக்கப் போகிறார்கள்? அவர்கள் அமருவதற்கு போதுமான தளபாடங்கள் உள்ளனவா? ஆசிரியரின் மேசை பொருத்தமான இடத்தில் வைக்கப்பட்டுள்ளதா? கரும்பலகை எப்படி? வெண்கட்டி துடைப்பான் என்பன உள்ளனவா? கற்பித்தலுக்குத் தேவையான உபகரணங்கள் ஆயத்தமாக உள்ளனவா? என்பன போன்ற விடயங்களை முன்கூட்டியே உறுதி செய்துகொள்ள வேண்டும். மேலும் பாடம் எடுக்கப்படும் வேளையில் வகுப்பறையின் சூழல் பற்றியும் நாம் அக்கறை கொள்ளவேண்டும் கற்பித்தல் நிகழும்போது புலன்களை திசை திருப்பக்கூடிய நிகழ்வுகளுக்கான சாத்தியங்கள் இருக்குமாயின் தேவையான சூழல் மாற்றங்களையும் ஏலவே செய்துகொள்ள வேண்டும்.
தனது சேவைக்காலம் முழுவதும் இளையோர்களுடனேயே தொழிற்பட வேண்டிய பெரும் பேற்றினைக் கொண்டுள்ள ஆசிரியன் தனது மாணவர் பற்றிய விபரங்களையும் நடத்தைகளையும், சமகாலப் போக்குகளையும், மாற்றங்கள் பற்றிய தகவல்களையும் நன்கு உணர்ந்தவனாக இடைவிடாது கற்றுக் கொண்டேயிருக்க வேண்டும். அதேவேளை தனது உடல், உள ஆரோக்கியத்திலும் அவன் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும்.
குறிப்பிட்ட ஆற்றுகைக்குச் செல்வதற்கு முன் ஒரு நடிகன் எவ்விதம் தான் பேசப்போகும் வசனங்கள், வெளிப்படுத்தப்போகும் உணர்வுகள், அணியப்போகும் ஆடை ஒப்பனை அரங்க அசைவுகள் பற்றி அக்கறை கொள்வானோ அதைவிட மேலாக ஆசிரியனும் தானி கற்பிக்கப்போகும் பாட ஆயத்தத்துடன் தனது ஆடை ஒப்பனை முதலியவற்றிலும் அக்கறை
கொண்டவனாயிருந்தாக வேண்டும். அப்போது தான் அவன் வகுப்பறையில் நன்கு துலங்க முடியும்
வகுப்புறையிலுள்ள பல தரப்பட்ட மாணவர் மத்தியில் மாணவர்க்கும் தனக்கும் இடையே உ ஸ்ள உறவை சிறந்த முறையில் மேம்படுத்திக் கொள்வதெப்படி என்பதை ஆசிரியன் அறிந்து வைத்திருக்க வேண்டும். குழுமங்களுக்கு முன்பாக பேசுவது எப்படி? அவர்களுக்கிடையிலான நடத்தைகளைப் புரிந்து கொள்வதெப்படி? வியாக்கியானம் செய்வதெப்படி? என்றெல்லாம் அவன் நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும், சிறப்பாக கலவன் பாடசாலைகளில் கல்வி கற்கும் ஆசிரியனி மிக ಙ್ಗಣ-ಣಸಿ அவதானத்துடனும், அர்த்தமுள்ள விதத்திலும் நடந்து கொள்ளவேண்டும்.
பாடி விரிவுரைகள் நிகழ்த்துவதற்கும் மாணவர்களைக் கலந்துரை
யாடல்களுக்கு திட்டுச் செல்வதற்கும் திட்டமிடலும் மதிப்பீடு செய்வதும்
<>
 
 
 
 
 

அவசியமாகும். ஒவ்வொரு ஆசிரியனும் இத் துறைகளில் தன்னைத்தானே வளர்த்தெடுக்க முயலவேண்டும்.
ஓர் ஆசிரியன் தன் இல்லத்தில் ஓர் அன்புத் தந்தையாகவோ, தாயாகவோ, பிள்ளையாகவோ அன்றி வேறு ஒரு பொறுப்பில் உள்ளவனாகவோ இருக்கிறான். அவனுக்கென்று சுயமான விருப்பு வெறுப்புக்கள் உண்டு வெற்றிகள், வேதனைகள் உண்டு அவற்றின் தாக்கம் அவனை ஏதோ ஒரு வகையில் பாதிப்படையவே செய்கின்றன. இது தவிர்க்க முடியாததொன்றாகும். ஆனால் ஆசிரியன் பாடசாலைக்கு வந்ததும் தன் இல்லத்தின் உறவுகள் ஏனைய பிரச்சினைகள் அனைத்தையும் முழுமையாகத் தூக்கி எறிந்து ஆற்றுகைக்கு என அரங்கிற்கு வந்துவிட்ட நடிகன், தனது பாத்திரம் என்ன என்பதை அறிந்து எப்படி முழுமையாக தன்னை ஈடுபடுத்தி கொள்கின்றானோ அதே போன்று தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டு மாணவர்களுக்கான கற்பித்தலில் ஈடுபட வேண்டும் பாடசாலைப் பணி நேரம் முழுவதும் பாடசாலைச் சமூகத்தின் மேம்பாட்டுக்காக அவன் அர்ப்பணத்துடன் செயல்ப்பட வேண்டும். இது மிகவும் கடினமான பணி என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்கமுடியாது. ஆனால் ஆசிரியத்தை ஆத்மீக ரீதியில் யோசித்து ஏற்றக் கொண்டவர்களால் நிச்சயமாக இது சாத்தியமாகும்.
பாடசாலையில் ஆசிரியன் ஒரு தேர்ந்த கலைஞனாக செயற்பட வேண்டும் அங்கே மாணவரின் திருப்தியும் மகிழ்ச்சியுமே முக்கியமான பிரமாணங்களாகக் கருதப்பட வேண்டும், சிறந்த முறையிலான கற்பித்தல் மாணவரின் கற்பனா சக்தியை கிளர்ச்சிகொள் சிந்தனைகளுடன் கூடிய, ஆரோக்கியமான உரையாடலுக்கு உயிர்ப்பித்துவிடும்.
மாணவர்களுடன் எப்பொழுதும் மகிழ்ச்சியாக அக்கறை கொண்டவராகப் பழகவேண்டும். மற்றவர்கள் மீது புன்னகை புரிவதால் நாம் எதையும் இழந்து விடுவதில்லை, மாறாக அவர்கள் அன்பினை வென்றுவிட முடியும் மாணவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வதோடு அவர்களைப் பாராட்ட வேணிடிய நேரத்தில் கஞ்சத்தனம் காட்டாமல் தாராளமாகப் பாராட்டி ஊக்குவிக்க வேணடும் மாணவர்களிடமிருந்து நல்ல கருத்துக்கள் வரும்போது அது சிறியதாக இருந்தாலும் பெரிதாக வரவேற்க வேண்டும்.
பாட விரிவுரைகள் நடத்தும்போது மாணவர்களைப் பேசவைப்பதுடன் கேள்விகள், விளக்கங்கள் விபரங்கள் ஆய்வுகள் மூலம் மாணவர்களுடன் ஆரோக்கியமான உரையாடல்களை விரிவுரை நிறைவுபெறும்வரை போ வேண்டும் எந்த விடயத்திலும் மாணவர்களுக்கு ஆசிரியன் வழிகாட்ட வேண்டுமே தவிர, கட்டளையிடுபவனாக மாறிவிடக் கூடாது.
ஆசிரியனின் கூற்றுக்கள் மாணவர் விடையளிப்பதற்கான சந்தர்ப்பங்கா
KC

Page 16
கொடுத்து மாணவர் சுயமாகவும் சுதந்திரமாகவும் ஆசிரியருடன் உரையாடுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமேதவிர, பாடவேளை முழுவதும் மாணவரை மெளனித்திருக்க வைப்போமேயானால் அவர்கள் தடுமாற்றத்திற்கும் குழப்பத்திற்கும் உள்ளாவது தவிர்க்கமுடியாததாகி விடும்.
நாட்டிலுள்ள 10,000 பாடசாலைகளில் 45 இலட்சம் மாணவர்கள் இன்று கல்வி கற்கின்றார்கள். இவர்களில் G.C.E (A/L) பரீட்சையில் சித்தி பெறுபவர்களில் 97% மாணவர்களுக்கு நாட்டிலுள்ள 13 பல்கலைக் கழகங்களில் ஏதாவது ஒன்றில்தானும் அனுமதி கிடைப்பதில்லை. நம்மில் பலர் பல்கலைக்கழகம் செல்வதற்கு வாய்ப்புப் பெறும் ஒரு சிறு தொகையினர் மட்டிலேயே அதிக அக்கறை கொள்கிறோம். பாடசாலையை விட்டு வெளியேறும் பெரும்பாலான மாணவர்கள் சமூகத்தில் எங்காவது வேலை பெறக்கூடிய தகுதியற்ற தராதரங்களுடனேயே வெளியேறுகின்றனர் என்பதை நாம் கண்டு கொள்வதில்லை. ஒரு மாணவன் பாடசாலையை விட்டு வெளியேறும்போது ஏதாவது ஒரு தொழிலை பெறக்கூடிய தகுதியுடன், வேலை வாய்ப்புச் சந்தையில் ஏற்கப்படக் கூடியவனாக வெளியேறுகின்ற தன்மையை நாம் உருவாக்க வேண்டும்.
இன்றைய மாணவர் வேண்டுவதெல்லாம் ஜனநாயகத் தன்மை, ஒத்துழைக்கும் பாங்கு அன்பு, பொறுமை, ஒத்துப்போகின்ற தன்மை, நற்பண்பு, திறந்த மனது, நீதி, பல்துறை அறவு, மாணவர் பால் அக்கறை போன்றவற்றை ஒருங்கேகொண்டு நன்கு வழிநடத்தக்கூடிய ஒரு ஆசிரியரையே.
冷、
நவீன கற்பித்தல் முறைகளுக்கு முன்னோடிகளாய் இருந்தவர்களுள் ஒருவர் ஜோகனி ஹீன்றிச் பெஸ்ரலோசி (Johann Heinrich Pestalozzi) (1746-1827) (36) iii. 376 fibgital) sigif நாட்டைச் சேர்ந்த ஒரு ஆசிரியர் நேரடி அனுபவங்கள் மூலம் கற்பிப்பது மிகவும் சிறந்தது என்ற கொள்கையில் நம்பிக்கையுடையவர். மாணவர்களை தோட்டங்களுக்கும், வயல் வெளிகளுக்கும் அழைத்துச் சென்று மரங்கள், விலங்குகள், பறவைகளை நேரடியாக காணர்பித்து மாணவர்களுடனர் கலந்துரையாடி இயற்கையைப் பற்றிய கற்பித்தலை மேற்கொணர்டார்.
10
 

நினைவுகள் அழியாத நாட்கள்
"The aast teaches the present not to repeat it's Misfortunes in the Future"
செப்படம்பர் திங்கள் 19ம் நாள் வெள்ளி தினம் 1952ம் ஆண்டு பெஞ்சமின் கிறிஸ்துதாஸ் ஏபிரகாம் அவர்களுக்கும் மரியம்மா (றோளம்மலர்) அவர்களுக்கும் மகளாகப் பிறந்தேன். என் உடன்பிறப்புக்கள் அறுவர். எனக்கு அடுத்த இருவரும் பெண்கள்.
காங்கேசன் துறையில் சீமேந்து தொழிற்சாலை ஆரம்பிப்பதற்கு முன்முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது சீமேந்து பிரயோகம் பற்றிய சிறப்புக் கல்வி கற்பதற்கு (Applied Chemist) எனது தந்தையார் இந்தியாவில் பெஸ்வாடாவிலுள்ள ஆந்திரபிரதேஸ் சீமேந்துக் கம்பனியில் சேர்ந்து பயிற்சி முடித்து நாடு திரும்பியும் பல மாதங்களாக சீமேந்து தொழிற்சாலை ஆரம்பிக்கப்படவில்லை. அதனால் அவர் இலங்கை புகையிரத சேவையில் இணைந்து புகையிரத நிலைய அதிபராக கடமையாற்றினார். எமது குடும்பம் யாழ்ப்பாணம் நாலாம் குறுக்கு வீதியிலிருக்கும் எமது வீட்டில் இருந்தது.
எனது ஆரம்பக்கல்வி 16.01.1957ல் யாழ். கன்னியர் மடத்தில் ஆரம்பமாகி தொடர்ந்து 18.04.1969 வரை நடைபெற்றது. தினசரி பாடசாலைக்கு எம்மை மிக அன்புடனும் பாதுகாப்புடனும் ஒருவர் தமது றிக்ஷா வண்டியில் அழைத்துச் செல்வார். அந்தச் சவாரி மிகவும் ஆனந்தமாய் இருக்கும். வண்டியிலிருந்து கொண்டு பாதையில் போவோர் வருவோரையும் மற்றும் வாகனங்களையும் பார்த்துக் கொண்டே செல்வது மிகவும் சுவாரசியமானது. மழை நாட்களில் உட்புகாதவாறு முன் பக்கமாக மறைத்து மெழுகுசீலை ஒன்றைப் பொருந்தி

Page 17
விடுவார். நாம் சில சமயங்களில் அந்தச் சீலையை சற்று விலக்கிய வண்ணம் தெருவோரங்களைப் பார்த்துக்கொண்டே செல்வோம். வணிடியின் வலது கரத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சைக்கிள் பெல் மூடியை, நூலில் கட்டி தொங்கவிடப்பட்டு இருக்கும் இரும்புத்துண்டு ஒன்றினால் அவர் அடித்துக் கொண்டே வண்டிய்ை இழுத்துச் செல்வார். அந்த ஒலி இன்றும் என் காதில் ஒலித்த வணிணம் இருக்கிறது. ஆனால் அந்த றிக்ஷா வண்டிகள் இன்று முற்றாக மறைந்து விட்டன.
GC E (O/L) வரை யாழ் கன்னியர் மடத்தில் எனது கல்வியைத் தொடர்ந்தேன். அப்போது அருட்செல்வி விக்டறின் அவர்கள் அதிபராக கடமையாற்றினார். அவரின் அன்பும் ஆளுமையுமிக்க தலைமையும் பாடசாலைச் சமூகத்தைச் சிறப்புற வழிநடத்தியது. முன்பெல்லாம் பாடசாலகள் யாவும் இரு நேரப்பாடசாலைகளாவே இயங்கி வந்தன. காலை 8.80மணி முதல் 12:30மணி வரையும், பின்னர் 130 முணிமுதல் 330மணி வரையும் பாடங்கள் நடைபெற்றன. பிய, 12:30-130 வரை மதிய உணவு இடைவேளை, பெரும்பாலான மாணவர்கள் மதிய உணவுக்காக தங்கள் தங்கள் வீடுகளிற்குச் சென்று உணவருந்தி விட்டு மீண்டும் ஓடி வருவார்கள் தொலைவிலிருந்து வருபவர்கள் காலையிலேயே மதிய உணவையும் கொண்டு வருவார்கள். அனேகமாக மதிய இடைவேளைக்குப் பின்னர் சித்திரம், சங்கீதம், தையல் ஆகிய பாடங்களாகவே இருக்கும். மாணவர்களும் ஆசிரியர்களும் மிக ஆர்வமாக கற்றல் கற்பித்தல் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. ஆனால் இன்று வகுப்பறைக்கு வரும் மாணவர்களில் பலர் காலை உணவு கூட அருந்தாமலேயே வருகிறார்கள், ஏன் சில ஆசிரியர்கள் கூட பல விதமான காரணங்களால் காலையில் உணவு உண்ணாமல் வருவதுண்டு. இந் நிலையில் கற்றல் கற்பித்தல் எவ்வாறு அமையும்?
அந்த நாட்களில் காலை 10.30மணியளவில் ஆரம்பப்பிரிவு மாணவர்கள் அனைவருக்கும் பால்மா இலவசமாக கரைத்துக் கொடுப்பது வழக்கமாயிருந்தது மூத்த மாணவரே அப்பணியை செய்து வந்தனர். நானும் அதில் பங்களித்துள்ளேன்.
அன்றைய ஆசிரியர்கள் பல பாடங்களை படிப்பிப்பதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்கள் அதைவிட மேலாக அவர்கள் மிகுந்த அற்பணத்துடன் செயல்பட்டு வந்தார்கள், நான் GCE (O/L) கற்ற போது திருமதி அல்பிறட் அம்மா என்பவர் எமக்கு கணக்குடன் சேர்த்து ஐந்து பாடங்களைக் கற்பித்தார். ஒவ்வொரு பாடத்திலும் மிகுந்த அக்கறை செலுத்திக் கற்பிப்பதுடன் தேவையானபோது பாடசாலை நேரத்தின் பின்பும் மேலதிக வகுப்புகளை எடுத்து எம்மை சிறப்புச் சித்திகள் பல எடுக்க வைத்தார், அந்த நாட்களில் ரீயூசன் கலாசாரம்
صراحS
 
 

இயக்குனராக நியமிக்கப்பட்டிருந்தார். அவர் எமக்குத்
கிடையாது. நாமே சுயமாகக் கற்க வேண்டியிருந்தது, ஆசிரியர்கள் அனைவருமே எம்மில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்கள், குறிப்பாக அருட்செல்வி பேபியன் அவர்கள் என் முன்னேற்றத்தில் மிகுந்த ஆர்வம் 495 ITL "Lq. 60Trrfr, 1967alib G, C, E, (O/L) L//fz",679n #167ab திறமையாக சித்தியடைந்திருந்தேன். அப்போதுதான் 6TLog| LITL.ff6mâulfli, G.C.E. (A/L) 6(5||Lool ஆரம்பிப்பதற்கு முன்முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் அவற்றை ஆரம்பிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால் 09-01-1970ல் யாழ் திருக்குடும்ப கன்னியர் ஆங்கில மடத்தில் GCE (AL) வகுப்பில் சேர்ந்து 1971 நடைபெற்ற Lisfl "Godgiflod சித்தியடைந்தேன், அரசியல் விஞ்ஞானம், புவியியல், தமிழ், கிறிஸ்தவம் ஆகியவை எனது பாடங்களாய்
ந்தன. யாழ் கன்னியர் மடத்தில் கற்ற காலத்தில் வகுப்பில் முதல் மாணவியாக கடமையாற்றியதுடன் சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் பிரிவிலும் இணைந்து செயற்பட்டேன். அப்போதெல்லாம் பிரபலமான பாடசாலைகள் மாணவரை கல்விச் சுற்றுலாக்களுக்கு அழைத்துச் செல்வது வழக்கம், இலங்கையில் எழில் பொழியும் மலையகம், வரலாறு சொல்லும் புராதன நகரங்கள், பல்வேறு கலாசாரங்களை வெளிப்படுத்தும் தென்பகுதி நகரங்கள் ஆகியவற்றிற்கு இரு தடவைகள் (1967 1988) கல்விச்சுற்றுலாக்களில் பங்கு பற்றிய அனுபவங்கள் பசுமையானவை. மேலும் யா திருக்குடும்ப கன்னியர் (ಘ್ನ மடத்தில் கற்றபோதும் ஒருமுறை அருட்செல்வி செறப்பின் அவர்களுடன் தென்னிலங்கை கல்விச்சுற்றுலாவில் பங்கு கொண்டேன். சிகிரியா, அனுராதபுரம் முதலான இடங்களைப் பார்த்து வந்தது மிகவும் பயனுடையதாயிருந்தது.
பாடசாலையில் நான் மாணவர் தலைவியாகச் செயற்பட்டதன் மூலம் பெற்ற அனுபவங்கள் பின்னாளில் எனக்குப் பெரும் துணை புரிந்துள்ளன. A/L வகுப்பில் கற்றுக் கொண்டிருக்கும்போதே அருட்செல்வி செறபின் அவர்களின் தூண்டுதலால் அப்போதைய யாழி ஆயர் மேதகு எமலியான்ஸ்பிள்ளை அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட முதலாவது மறையாசிரியர் பயிற்சி நெறியில் முழுமையாகக் கலந்து கொண்டு மறையாசிரியையாக சித்தியடைந்தமை குறிப்பிடத்தக்கது. அப்போது முன்னாள் யாழ். பாராளுமன்ற உறுப்பினராயிருந்த அமரர் ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்களின் சகோதரரான அருட்திரு பாலசுந்தரம் அடிகள் முதலாவது மறைக்கல்வி
தந்த ஊக்கமும் உற்சாகமும் வரவேற்கத்தக்கது.
எனது கல்வியில் frog தாயும் தந்தையாரும் மிகுந்த ஆர்வம் காட்டினர். இதைவிட
மேலாக எமது பெரிய தந்தையார் அருட்கலாநிதி AB
அன்ரனைனஸ் (OMI) அடிகள் என் முன்னேற்றத்தில்
மிகுந்த அக்கறை காட்டினார். பெரும் கல்விமானான இவர் அடிக்கடி ஐரோப்பிய
سے 13 2 1 Ο Ω Ώ 1 صبح

Page 18
அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று சமூகவியல் தொடர்பான விரிவுரைகள் ஆற்றி 6 (D.6)lg/
வழக்கம். ஒவ்வொருமுறை வரும்போதும் என்னை வந்து ஆசீர்வதித்து நீ ஒரு ஆசிரியராக வரவேண்டும் என்று கூறி
ஊக்குவித்துச் செல்வார். நானோ ஒரு புன்னகை புரிந்து விட்டுச் செல்வேன். இந்த வேளையில் எனது பெற்றோர் எனக்குத் திருமணம் செய்வதற்கு நிச்சயித்தனர். எனது நிச்சயதார்த்தம் 12-07-1972 புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. அன்றைய தினம் மாலை என் கணவர் திரு. V, . கொன்ஸரன்ரைன் அவர்கள் தலைவராயிருந்த ஐக்கிய முன்னணியின் திறந்தவெளி கலையரங்கம் அவரது தலைமையில் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.
எனது திருமணத்திற்கான அழைப்பிதழைக் கொடுப்பதற்காக அருட் செல்வி விக்ரரீன் அவர்களிடம் சென்றபோது அவர் ஆச்சரியத்துடன் என்னை அணைத்து வாழ்த்தியதுடன் மனைப் பொருளியல் ஆசிரிய விண்ணப்பப் படிவம் ஒன்றினைத் தந்து இதற்கு நீர் கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டும். உமக்கு நிச்சயம் கிடைக்கும் என்று வாழ்த்தினார்.
அப்போதைய அரசில் பிரதம மந்திரியாக இருந்த தற்போதைய ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரின் தாயார் ருரீமாவோ பண்டாரநாயக்கா அவர்கள் அறிமுகப்படுத்திய ஒரு திட்டத்தின்படி தொகுதிகள் தோறும் ஒரு மனைப் பொருளியல் ஆசிரியையை நியமிப்பது என்ற திட்டத்திற்கமைவான விண்ணப்பப் படிவமே அது. ஆசிரியையாக வேண்டுமென்ற அவா என்னுள் இருந்ததால் நானும் அப்பதவிக்கு விண்ணப்பித்தேன்.
1972 ஆவணித் திங்கள் 19ம் நாள் சனிக்கிழமை காலை 7 மணியளவில் எமது திருமணம் யாழ் புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. திருமண வரவேற்பு கோண்டாவில் புகையிரத நிலைய பங்களாவில் நடைபெற்றது. அப்போது எனது தந்தையார் அங்கு புகையிரத நிலைய அதிபராயிருந்தார். 6T6015) குடும்பத்தினரும் அங்கேயே வசித்து வந்தனர். உறவினரும் நண்பரும்ாகப் பெருந்தொகையானோர் கலந்து கொண்டனர். கோண்டாவிலுக்குச் செல்லும் வழியில் கன்னாதிட்டியிலிருந்த செல்லம்ஸ் ஸ்ரூடியோவில் எமது திருமணப் புகைப்படம் எடுக்கப்பட்டது. எனது கணவரின் தாய் தந்தையாரின் திருமணத்தை செல்லம்ஸ் ஸ்ரூடியோ உரிமையாளரின் தந்தையார் புகைப்படம் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனது கணவருக்கு நான் முறைப்பெண். நாம் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்தும் புரிந்தும் இருந்ததால் எமது இல்லற வாழ்வு மிகவும் இனிமையாகவே உள்ளது. எனது கணவரின்
 
 

தாயார் திருமதி கத்தரீன் வெலிச்சோர் (கிறிஸ்தீன்) அவர்கள் என்னை மிகவும் நேசித்தார். அவருக்கு மூன்றும் ஆண் பிள்ளைகள். (இரு ஆண் பிள்ளைகளும் இரு பெண் பிள்ளைகளும் இளவயதிலேயே அவரைப் பிரிந்து விட்டனர்) அதனால் என்மீது அளவற்ற அன்பைப் பொழிந்தார். பழகுவதற்கு மிகவும் இனியவரான அவர் இறைபக்தி மிகுந்தவர். தனக்கென தனித்துவமான கொள்கைகளுடன் வாழ்ந்தவர். நிறைய வாசிப்பவர். சிறந்த நிர்வாகப் பண்புகளும், ஆளுமையும் அவருடன் பிறந்தது. எனது மாமனார் அன்ரனி வெலிச்சோர் அவர்கள் கொழும்பில் ஐரோப்பியரது நிர்வாகத்தில் இருந்த G.O.H. இல் நிர்வாக உத்தியோகத்தராக கடமை புரிந்தவர். வசீகரமும் கம்பீரமுமான தோற்றம் கொண்ட இவர் யாழ். சம்பத்திரிசியார் கல்லூரியில் கல்வி கற்ற காலத்தில் LITLET606)tist உதைபந்தாட்டக் குழுவிற்கும், துடுப்பாட்டக் குழுவிற்கும் தலைமை வகித்தவர். கொழும்பில் இவர் பணியாற்றிய காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து வரும் இவரது நண்பர்களுக்கும் உறவினர்க்கும் இவரது இல்லமே "இலவச விருந்தினர் விடுதி” யாக இருந்ததாக இன்றும் பலர் அவரது விருந்தோம்பலின் மேன்மையைப் புகழ்வதுண்டு. பலருக்குப் புதிய துறைகளில் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுத்து அவர்களது குடும்பங்கள் மேன்மையடைவதற்கு வழி சமைத்துக் கொடுத்தவர் என்பதைப் பலர் இன்னும் நினைவு கூர்கின்றனர். 1962 ஆவணி மாதம் 29ம் திகதி அவர் மறைந்த நாளில் இருந்து எனது மாமியார் எவரது துணையுமின்றி தனது 3 பிள்ளைகளையும் சிறப்புற வளர்த்தமை மிகவும் பாராட்டுக்குரியது.
நவம்பர்த் திங்கள் முதல் வாரத்தில் ஒரு நாள் காலை தபாற்காரரின் மணிச்சத்தம் கேட்டது. எனது பெயருக்கு கடிதம் ஒன்று வந்திருந்தது. பெரு வியப்புடன் பிரித்துப் படித்தேன் 15.11.1972 முதல் யா சென் ஜேம்ஸ் மகள் பாடசாலையில் மனைப் பொருளியல் ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளதற்கான கடிதம் ஒன்று. என்னால் நம்ப முடியவில்லை. கனவா அல்லது நினைவா என்று சில விநாடிகள் திகைத்து நின்றேன். அருட்செல்வி விக்டரின் அவர்கள் என் மனத்திரையில் நிழலாடினார் உள்ளூர மகிழ்ச்சியடைந்தேன். என் மாமியாரும் (அம்மா என்றே நாள் அழைப்பேன்) என் கணவரும் என்ன சொல்வார்களோ என்ற ஒரு அங்கலாய்ப்பு ஏனென்றால் நான் வேலைசெய்ய வேண்டுமென்ற அவசியமிருக்கவில்லை என் மாமியார் தனக்குத் துணையாக இருக்க வேண்டுமென்றுதானே விரும்புவர் என நினைத்தேன். ஆனால் மாறாக அவரே என்னை வாழ்த்தி " நீ நியமனத்தை ஏற்றக்கொள். நான் வீட்டைப் பார்த்துக் கொள்கிறேன்” என்றார் என் கணவரும் ஒப்புதல் தந்தார். நானும் பூரித்துப் போனேன்.
15

Page 19
16.11.1972 யா/ சென் ஜேம்ஸ் மகளிர் பாடசாலையில் மனையியல் ஆசிரியையாக பொறுப்பேற்றேன் அதிபர் அருட்செல்வி ஜேன் மேரி என்னை மகிழ்வுடன் வரவேற்று சக ஆசிரியருக்கு அறிமுகம் செய்து வைத்தார். புதிய சூழலில் மிகுந்த உட்சாகத்துடன் எனது ஆசிரியப்பணியை ஆரம்பித்தேன்.
மனையியல் பாடநெறி முதன் முதலாக பாடசாலையில் ஆரம்பிக்கப் படுவதால் நானே சகலவற்றையும் திட்டமிட்டு செயற்படுத்த வேண்டியிருந்தமை நல்ல அனுபவமாயும் அமைந்தது.
மார்கழித் திங்களில் மனையியல் ஆசிரியருக்கு கண்டி நகரில் நடாத்தப்பட்ட பயிலரங்கில் கலந்து கொண்டது மிகவும் பயனுள்ளதாய் இருந்தது.
31.1272 எனது மாமியரின் திடீர் மறைவு என்னால் தாங்கிக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்தது ಅ॥6॥ULಳಿಗೆ 6) IAEA BIT607(g) மாதங்களில் நான் அவரிடம் கற்றுக் கொண்டது அதிகம். விசேடமாக Lð6öð6ötuffL" flissis நுட்பங்களையும், மனித உறவுகளைப் பேணும் முறையினையும், விருந்தோம்பலையும் நான் அவரிடமே கற்றுக் கொண்டேன். மரணப்படுக்கையிலும் மகிழ்ச்சியுடன் இருந்த அவரை என்னால் மறக்க
முடியவில்லை.
23.04.1974 - 31.12.1975 வரை பலாலி ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் மனையியல் ஆசிரியையாக சிறப்பு பயிற்சி பெற்றேன். எமது கலாசாலைக்கு அருகில் பலாலி விமான நிலையம் அமைந்திருந்தது. எனது பயிற்சி வகுப்பில் இலங்கையின் பல பகுதிகளில் இருந்து வந்த 29 ஆசிரிய மாணவர்கள் பங்கு பற்றினர். என்னுடன் இன்னும் மூவர் மாத்திரமே திருமணமானவர்கள் எமக்கு அங்கு நல்ல மதிப்பும், மரியாதையும் இருந்தது. எம்முடன் பகிடிவதை எதையும் எவரும் வைத்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
பயிற்சிக் காலம் மிகவும் பயனுடையதாகவும் மகிழ்ச்சிகரமாகவும் இருந்தது. எமக்கு விரிவுரைகள் எடுத்தவர்கள் அனைவரும் துறை தேர்ந்தவர்களாய் இருந்தார்கள். அமெரிக்காவில் உயர் கல்வி கற்று வந்த செல்வி S சின்னப்பு மற்றும் செல்வி செல்லையாப்பிள்ளை அவர்களும் குறிப்பிடத் தக்கவர்கள். திரு கந்தசாமி என்பவர் பலாலி கலாசாலையின் அதிபராக அப்போது கடமையாற்றினார்.
ஆசிரிய மாணவர்களில் சாய்ந்தமருதுவைச் சேர்ந்த திருமதி அபூபக்கர், நிந்தவூரைச் சேர்ந்த நர்கிளப், ஏறாவூரைச் சேர்ந்த சுபைதா, யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தா, அழகசுந்தரி, சாவித்திரி, சுதா, சரோஜா, றோகினி, யசிந்தா, றஞ்சினி ஆகியோர் எனது நெருங்கிய தோழிகளாயிருந்தனர். அவர்களுடன் பழகிய நாட்கள் மறக்க முடியாதவை. ஆசிரியப் பயிற்சியின்போது திறமையாகக் கற்பிக்கக் கூடியவர்
 

என்ற பெயரைப் பெற்றுக் கொண்டேன்.
11.1976 - 31.12.1977 வரை காரைநகர் இந்துக் கல்லூாயில் ஆரியையாகப் பணியாற்றியுள்ளேன். அங்கும் மனையியல் பாட நெறியை நானே முதலாக ஆரம்பித்து வைத்தேன். தினமும் காலை 6 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு இரண்டு பளப்கள் மூலம் பாடசாலைக்குச் சென்று மாலை 6 மணியளவில் திரும்பவேன். அப்போது திரு. நடராஜா என்பவர் அங்கு அதிபா கடமையாற்றினார். மிகவும் நல்ல மனிதர், ஆசிரியருடனும் மாணவருடனும் மோ உறவினைப் பேணி வந்தார் அங்கு கற்பித்த அதிபர் அவர்களின் நாளி திருமதி நடராஜா திருமதி நாகபூசணி, திருமதி தியாகராஜா ஆகியோர் மா மிகவும் நேசித்ததோடு எனது பணிக்கு சிறந்த ஒத்துழைப்பும் வாக்குவிப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது. நான் ஆசிரியப் பயிற்சிக் கலாசாமி இருந்தபோதும் வர்த்தகப் பிரிவில் பயிற்சி பெற்ற திருமதி தியாகராஜா அவர்களும் என்னுடன் அதே பாடசாலைக்கு பஸ்ஸில் பயணிப்பார் விரைவிலேயே நாமிருவரும் மிக நெருங்கிய தோழிகளானோம்.
01.01.1978 முதல் யா/ புனித சாள்ஸ் மகாவித்தியாலயத்தில் பணியை ற்றோ அப்போது திரு ஞா. யோன்பிள்ளை அவர்கள் அதிபராயிருந்தார். பணி நேரத்தி மிகவும் கண்டிப்பானவர். ஆனால் ஒவ்வொரு ஆசிரியரையும் மாணவாயு நன்கு புரிந்து வைத்திருந்தார். பழகுவதற்கு இனியவர்.
வெள்ளை நஷனல் சேட்டும், வேட்டியும் கட்டிய வணிணம் மிந்த
நடையோடு பிரம்புடன் வகுப்பறைகளைச் சுற்றி நடை போடுவார். பாடசாலை எப்போதும் அமைதியாகவே Օրյոլիկիան)ւի, முன்மாதிரியாகவே இவர் நடந்து காண்டார். தனக்குச் சரியெனப்பட்டதைத் துணிவுடன் செயற்படுத்தும் பண்புடையவர். எனது வயதில் அவருக்கு ஒரு மகளிருந்ததால் அவர் ஒரு தந்தைப் பாசத்துடனேயே 6T660037 வழி EL AM loomil, பாடசாலையை நடத்துகின்ற நுட்பங்கள் பலவற்றை அவர் மூலம் கற்றுக் கொண்டேன். எமது பணிகளில் மற்றவர்களது தலையீட்டை ஒருபோதும் அனுமதிக்க கூடாது என்ற கருத்தை எமக்கு எப்போதும்
வலியுறுத்துவார்.
மாவடி பள்ளிக்கூடம் என்று முன்பு கொஞ்சம் தரக்குறைவாக அழைக்கப்பட்ட பாடசாலையை புனிதர் சாள்ளப் பாடசாலை என்றும் பின்னர் புனித சாள்ஸ் மகாவித்தியாலயம் என்றும் தரம் உயர்த்திய பெருமை இவருடையதே பாடசாலைக்கென ஒரு இலச்சினை, கொடி மாணவர்களுக்கான கழுத்துப்பட்டி சீருடை ஆகியவற்றை அறிமுகப்படுத்தியதும் இவரே 14 ஆண்டுகள் இப்பாடசாலையில் சிறப்புறப் பணியாற்றிய இவர், பாராளுமன்ற உறுப்பினர்களாக காலத்துக்குக் காலம் பதவி வகித்த அமரர்கள் ஜீ.ஜீ. பொன்னம்பலம், 0) மாட்டீன், அல்பிறட் துரையப்பா மற்றும் நலன் விரும்பிகளின் உதவிகளைப்

Page 20
பெற்றுப் பாடசாலைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டார். இவரது வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர் திரு CX மாட்டீன் அவர்கள் பாடசாலைக்கு மாடிக் கட்டிடம் ஒன்று நிறுவியமை குறிப்பிடத்தக்கது.
தற்போது எமது ஆரம்பப் பாடசாலை இருக்கும் 3 % ஏக்கர் காணியை அப்போதைய ஆயர் மேதகு வ. தியோகுப்பிள்ளை அவர்களிடமிருந்து நன்கொடையாகப் பெற்று கட்டிடங்களை நிறுவியவரும் இவரே. இவரது காலத்தில் எமது உடன் ஆசிரியராகப் பணியாற்றிய பிரபல கவிஞர், அமுதகவி யாழ் ஜெயம் (ம. விக்ரர்) அவர்கள் பாடசாலைக்கென ஒரு பாடலை வடித்துத் தந்தார் அதுவே இன்று வரை எமது பாடசாலைக் கீதமாக இசைக்கப்படுகின்றது. (காலத்தால் அழியாத " இதய வீணை" சிந்தை இனிக்கும் செல்வம்” போன்ற பல கவிதைத் தொகுப்புக்களை அள்ளித்தந்த அந்த அற்புதக் கவிஞன் 2001ம் ஆண்டு
i్య மே மாதம் மலரவன் பாதம் சேர்ந்தது ஈழத்து இலக்கிய
உலகிற்குப் பெரும் இழப்பாகும்.)
பாடசாலையின் வளர்ச்சிக்காகப் பல்வேறு வழிகளில் தனது மேலான சேவையை வழங்கிய திரு. யோன்பிள்ளை அவர்கள் தமது 59 ஆவது வயதில், 1980ம் ஆண்டு வைகாசித் திங்கள் 21ம் நாள் ஒய்வு பெற்றார்.
யாழ். பிரதான வீதியிலிருந்த Aw Centre நிறுவனத்தில் வெளிவாரி பட்டதாரிப் பரீட்சைக்கு ஆயத்தம்செய்து 1978ம் ஆண்டு B.A பரீட்சைக்குத் தோற்றினேன்.
15.01.1980 முதல் திரு. ஆசீர்வாதம் அவர்கள் பாடசாலையின் அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஆளுமையும், நேர்மையும், நற்பண்புகளும் கொண்ட இவர் சிலரது அரசியல் செல்வாக்கினால் பதவியேற்ற ஒருசில தினங்களிலேயே மாற்றம் செய்யப்பட்டது மிகவும் வருந்தத்தக்கது.
திரு. ஆசீர்வாதத்தைத் தொடர்ந்து எமது பாடசாலையின் அதிபராக பணிபுரிந்து கொண்டிருந்த திரு. நீக்கிலாப்பிள்ளை அவர்கள் அதிபராக நியமிக்கப்பட்டார். அவரது பாரியாரும் எம்முடனேயே பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. திருமதி நீக்கிலாப்பிள்ளை அவர்கள் ஆசிரியர்களை உபசரிப்ப்தில் மிகவும் அக்கறை கொண்டவர்.
திரு. நீக்கிலாப்பிள்ளை அவர்கள் ஒய்வு பெற்றதும் திரு. A,B.L. குணநாயகம் அவர்கள் அதிபராக வருகை தந்தார். ஆங்கில மொழியில் பாண்டித்தியம் பெற்ற இவர் வெள்ளை மனம் கொண்டவர். ஆசிரியர் மனம் புண்படாதபடி கருமங்களை ஆற்றியவர். இவரது பதவிக் காலத்தில் சிறப்புக் கல்வி பெறுவதற்குச் சில மாதங்கள் பாகிஸ்தான் நாட்டிற்குச் சென்று வந்தார். அவர் பாகிஸ்தானிலிருந்த காலத்தில் எம் உடன் ஆசிரியர் திரு. S மருசலீன் அவர்கள் உப அதிபராகக் கடமை புரிந்தார். அதேவேளை திரு அல்போண்ஸ் அவர்களும் உப அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார். இறைபக்தியும், மென்மையான உள்ளமும் கொண்ட இவர் ஒரு நற்பண்பாளன். இவரைத் தொடர்ந்து திரு. பென் அல்பிறட் அவர்கள் எண்பதுகளின் பிற்பகுதியில் அதிபர்


Page 21
உணராத உண்மைகள்
நாம் ஒரு விடயத்தை ஒருவருக்கு விளக்கும்போது அவர் அதனை
SaTTea6a 615 strañaraSikapas ன்ேறால் அது அவருடைய தவறு அண்று, அவர் விளங்கிக் கொள்ளும் வகையில் நம்மால் விளக்க மூடியவில்லை எண்பது தான் ®2... ፈሺ፩፻፴)፲፬D„
யாழ்நகரில் வசதிகளும், வளங்களும் நிறைந்த பாடசாலைகளான
சம்பத்திசியார் கல்லூரி, பரியோவான் கல்லூரி, சுண்டிக்குளி மகளிர் கல்லூரி, திருக்குடும்ப கன்னியர் மடம், மத்திய கல்லூரி ஆகியவற்றின் மத்தியில் பெரும்பாலும் வறுமைக்கோட்டிற்கு கீழேவாழும் மக்களின் பிள்ளைகளையும், பிரபல பாடசாலைகளில் அனுமதி பெறமுடியாத மத்திய தரவகுப்பினரின் பிள்ளைகளையும் சமூகத்துக்குபயனுள்ள பிரஜைகளாக உருவாக்கித்தருகின்ற பாடசாலைகளுள் புனித சாள்ஸ் மகா. வி. குறிப்பிடத்தக்கது.
பல்வேறு தரப்பட்ட பகைப்புலங்களிலிருந்து வரும் மாணவர்களில் பெரும்பாலானோர் மாற்றமடைந்து வரும் சமூகச்சக்திகளுக்கு ஈடுகொடுக்கமுடியாத குடும்பப் பின்னணியை உடையவர்கள். நாளாந்தம் பெறும் சிறிய வருமானத்துடன் அதிக எண்ணிக்கையைக் கொண்ட குடும்ப அங்கத்தவர்களைப் பராமரிப்பதற்கு பெரிதும் சிரமப்படும் இவர்களின் பெற்றோர்கள் படும் துன்பம் சொல்லும் தரமன்று. இதன் காரணமாக அவர்கள் தமது அன்றாட உழைப்பில் அக்கறை கொள்கிறார்களே தவிர பிள்ளைகளின் கல்வியில் அக்க% ற கொள்வது மிகக் குறைவு. இருந்தபோதும் நான் இப் பாடசாலையில் பணி ஏற்ற நாள் முதல் இற்றை வரை ஒப்பீட்டளவில் கணிசமான அளவு முன்னேற்றம் காணப்படுவதை என்னால் உணரக் கூடியதாக உள்ளது.
<20>
 

மனைப் பொருளியல், வாழ்க்கைத்திறன், சுகாதாரமும் கல்வியும் போன்ற பாடங்களைக் கற்பதன் மூலம் எமது மாணவர்களில் பலர் அரச, தனியார் வைத்தியசாலைகளிலும், மாநகரசபை, பிரதேச சபைகளிலும் மற்றும் தனியார் நிறுவனங்களிலும் நிரந்தர வேலை பெற்றுள்ளமையையும் சுய தொழில் முயற்சியில் ஈடுபட்டுள்ளமையையும் காணமுடிகிறது. மேலும் சிலர் வெளிநாடுகளில் உணவகங்களிலும், வைத்திய சாலைகளிலும் அதிக வருமானத்துடன் பணியாற்றுவது மகிழ்வைத் தருகின்றது.
ஒருவருக்கு நூறு ரூபாய் இனாமாகக் கொடுப்பதை விட அவர் நூறு ரூபாய் உழைக்கக்கூடிய ஒரு வழியைக் காட்டுவதே மேல் பாடசாலையை விட்டு ஒரு மாணவன் வெளியேறும்போது தன்னைத்தானே காப்பாற்றக் கூடியவனாக, தொழில் வாய்ப்புகளைப் பெறுவதற்கு தகுதி உள்ளவனாக, அவன் வாழும் சமூகத்திற்குப் பயன்படக் கூடியவனாக நாம் அவனை உருவாக்க வேண்டும். அப்போது தான் நாம் கற்பித்தலிலும் அவன் கற்றலிலும் அர்த்தம் இருக்கும். தன் மாணவன் ஒருவன் சிறப்புடன் « வாழ்கின்றான் என்பதைக் காணும் போது ஏற்படுகின்ற மகிழ்ச்சியை விட ஒரு ஆசிரியனுக்கு மேலான மகிழ்ச்சி வேறு எதுவும் இருக்க
(ULg). Urgle
இப்பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்களும் நிர்வாகிக்கும் அதிபர்களும்
பலவிதமான சிரமங்கள் மத்தியிலேயே பணியாற்று கின்றார்கள் என்பதை பலரும் புரிந்து கொள்வதில்லை.
மாணவர்களில் சிலர் காலை உணவு அருந்தாமலே பாடசாலைக்கு வருகின்றார்கள். வயிற்றில் பசி இருக்கும் போது கற்றல் முழுமையாக நடைபெற வாய்ப்பே இல்லை. மேலும் பல மாணவர்களின் பெற்றோர் கல்வியறிவு குறைந்தவர்களாக இருப்பதால் தமது பிள்ளைகளுக்கு உரிய விதத்தில் உதவ முடியாதிருக்கின்றார்கள். இன்று புதிய கல்வித் திட்டத்தில் ஒப்படை, கணிப்பீடு, மதிப்பீடு என்பன மாணவர் கல்வியில் முக்கிய பங்கினை வகிக்கின்றன. கற்றலுக்குத் தேவையான சிறிய பொருட்களைக் கூட வீட்டிலிருந்து கொண்டு வருவதற்கு அக்கறையற்ற மாணவரும், அவற்றை எப்படியாவது தமது பிள்ளைகளுக்குத் தேடிக் கொடுக்க வேண்டும் என்ற ஊக்கமுமற்ற பெற்றோரும் இருப்பது வருந்தத்தக்கது.

Page 22
மாணவர்களுக்கு சுத்தம், ஒழுக்கம் பற்றிய அறிவு அவரவர் வீடுகளில்தான் ஆரம்பமாக வேண்டும். அப்போது தான் கற்றலில் அவர்கள் ஆர்வம் காட்ட முடியும் மாணவரின் உருவாக்கத்தில் பெற்றோரின் பங்கு அளப்பரியது. இதனை அவர்கள் நன்கு கருத்தில் கொள்ளவேண்டும். இன்றைய சூழலில் குழந்தைகளைக் கற்க வைக்கவேண்டும் என்றால் பெற்றோர் தமது கல்வித்தரத்தையும், பொருளாதார வளத்தையும் உயர்த்திக் கொள்ள வேண்டியது மிக அவசியமானதாகும். நிவாரணங்களையும், சலுகைகளையும் முழுமையாக நம்பி வாழ்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் சமூகத்திற்குத் தேவையான நல்ல பிரஜைகளைப் பிரசவிக்க முடியும்.
冷、
பிரெட்றிக் புறோபெல் (Friedrich Froebe) (17821852) என்ற ஒரு ஜெர்மனியர் மாணவர்கள் இயல்பாகவே கொணர்டிருக்கக்கூடிய 35ԼՉ35/ விருப்பத்திற்கேற்றவாறு கல்வியை கற்கும்போது அது அதிக பயனளிக்கும் என அவர் நம்பினார். பொதுவாக மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வமிருக்கும். அவர்களுக்கு விளையாட்டு மூலம் கல்வியைத் தகுந்த முறையில் சொல்லிக் கொடுப்போமானால் அது செழுமையான கற்றல் விளைவுகளைக் கொடுக்கும் என்பது அவரது கருத்து. 1837ம் ஆணர்டு இந்தக் கோட்பாடுக்கு அமைவாக ஒரு பாடசாலையை ஆரம்பித்து அதற்கு கிர்ைரர் காட்டனர் (Kinder Garter) என்ற (o)Ljuidsf) - L/Tsj. ஜெர்மனி மொழியில் கிர்ைரர் காட்டனர் என்றால் Children's Garden (குழந்தைகள்
தோட்டம்) என்று பொருள்.
خسر 22 ح5

in Libering cla)........
One Caste The Caste of Humanity One Language - The Language of the Heart One Religion The Religion of Love
அர்ைபெனும் வேதமும் இதயம் பேசும் மொழியும் (65,163 it. ஒரே குலம் மனிதகுலம்
புனித சாள்ஸ் மகாவித்தியாலயத்தில் மனைப் பொருளியல் ஆசிரியையாக
பணியேற்ற நாள் முதல் பாடசாலையின் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு எனக்குக்கிடைத்த சந்தர்ப்பங்கள் மூலம் நிறைய அனுபவங்களைப் பெறக்கூடியதாயிருந்தது. திரு. பெண். அல்பிரட் அதிபராயிருந்த காலத்தில் (1989) இப் பாடசாலையின் உப அதிபர்களில் ஒருவராக சேவை புரிந்தபோது பெற்ற அனுபவங்கள் பல் பரிமாணங்களுடையவை. பாடசாலை நிர்வாகம் ஒழுக்கம் நன்னடத்தை சுத்தம், சுகாதாரம், சூழல் பாடசாலை தளபாடம் பொருட்கள் ஆகியவற்றின் மேற்பார்வையும் காரியாலய அலுவல்கள் உள் நிர்வாகம் ஆசிரியர் வரவு ஒழுக்கம், ஒழுங்கு ஆகியவற்றின் நேரடிப் பொறுப்பும் எமக்கு வழங்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக நாம் பல்வகையான சவால்களை எதிர்கொள்வது எப்படி? முரண்பாடுகளை அடையாளங்கண்டு நல்ல முடிவுகளை எடுப்பது எப்படி? என்று நிறையக் கற்றுக் கொண்டோம் மாணவ ஆலோசகர்களில் ஒருவராகவும், முதலுதவி, சுகாதாரம், உடற்கல்வி மற்றும் தொழில் பாடங்களான மனைப்பொருளியல், வாழ்கைத்திறன் ஆசிரியராகவும் பணிபுரிந்த அனுபவம் மிகவும் சிறப்புடையது.
கல்வித் திணைக்களத்தினால் காலத்துக்கு காலம் நடாத்தப்படும் சேவைக்காலப் பயிலரங்குகள், மனைப்பொருளியல், உடற்கல்வி ஆசிரியர்

Page 23
கருத்தரங்குகள், செயன்முறை வகுப்புக்கள், மீளாக்க நலவியல் கருத்தரங்குகள், பூரண சுகாதார கருத்தரங்குகள். ஆசிரியர் தொடர் கல்விப் பாடநெறி (தொலைக் கல்வித் துறை, தேசிய கல்விநிறுவனம்) போன்ற பல கற்றல் நடவடிக்கைகளில் முழுமையாக கலந்து கொண்டதன் மூலம் எமது அறிவையும், ஆற்றலையும், ஆளுமையையும் நிறையவே வளர்த்துக் கொள்ள முடிந்தது. 1999ம் ஆண்டு பட்டதாரி ஆசிரியர் வாண்மை விருத்தி அமைப்பு நடாத்திய அதிபர் தரம் , I, II இற்கான தொடர் வகுப்புக்கள் அனைத்திலும் கலந்து கொண்டு அதிபர் பரீட்சையிலும் தோற்றியது மிகுந்த திருப்தியைத் தந்தது.
மேலும் பல்கலைக் கழகம், பாடசாலைகள், கலை கலாசார அமைப்புக்கள், தனியார் நிறுவனங்கள், கலாசாலைகள் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்குகள் (Seminars), Lutfo DIS(556i (Workshops), கண்காட்சிகள் (Exhibitions), gbibgp160556i (Performances), 5/T65 (0.616ffic)3,6i (Book Launching), 65 prisai எனப் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டமை மிகவும் மகிழ்ச்சி உடையதாயும், பயன் நிறைந்ததாயும் இருந்தது என்பதை நான் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
“கற்றிலன் ஆயினும் கேட்க அஃது ஒருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணைர்
(திருக்குறள் 414)
பரீட்சை நோக்கராகவும். பரீட்சைத்தாள் மதிப்பீட்டாளராகவும் பல தடவைகள் பணிபுரிந்துள்ள நான் மாணவர் மத்தியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளுக்கு நடுவராகவும் பணிபுரிந்த அனுபவம் மிகவும் சுவாரசியமானது.
34 கலைப் பிரிவுகளினூடாகக் கலை, கலாசார நடவடிக்கைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திய வண்ணம் செயல்பட்டுவரும் Centre for Performing Arts (திருமறைக் கலா மன்றம்) இலங்கையின் பல பாகங்களிலும் மற்றும் ஐரோப்பா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் கிளைகளைக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்ட அனுபவம் புதுமையானது. இதன் கலைப் பிரிவுகளில் ஒன்றான சைவ சிந்தாந்த ஆய்வுகூடம் நடத்திய சைவ சித்தாந்த வகுப்புகளிலும், மாநாடுகளிலும் பங்குபற்றியது மனநிறைவைத் தந்ததுடன் அறிவுத் தெளிவையும் வழங்கியது. மற்றும் மன்றத்தின் இலக்கிய அவை, பண்பாட்டு அவை, நாடகப் பிரிவு முதலியவற்றால் நடாத்தப்பட்ட பெரும்பாலான கருத்தரங்குகளில் கலந்துகொண்டதுடன் பல இலக்கிய, பாரம்பரிய, விவிலிய, வரலாற்று, சமூக நாடக ஆற்றுகைகளைப் பார்த்து இரசித்த அனுபவம் இனிமையானது.

மன்றமும் நாடக அரங்கக் கல்லூரியிலும் இணைந்து தை- 1989-தை- 90 வரை நடாத்திய நாடகப்பட்டறையில் முழுமையாகக் கலந்துகொண்டு சான்றிதழும் பெற்றமை ஒரு வித்தியாசமான அனுபவமாகும். 1990ல் திருமறைக் கலாமன்றம் மேடையேற்றிய முதலாவது இசைநாடகத் தயாரிப்பான “ஞானசெளந்தரி'
நாடகத்தின் ஆரம்ப விழாவினை தொடக்கிவைத்து அதில் பங்குபற்றிய கலைஞர்களுக்கு நாடகப் பிரதிகளை வழங்கிய அந்த இனிமையான நிகழ்வினை மீட்டுப் பார்க்கையில் என் மனம் மகிழ்வடைகின்றது. இந் நாடகம் ஆற்றுகையிலும், வசூலிலும் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
இறுதிநாள் மேடையேற்றத்தின்போது பெருந்திரளான மக்கள் அரங்கிற்குள் பிரவேசிக்க முடியாது போனதால் தொடர்ந்து இரண்டாம் காட்சி விசேடமாக காண்பிக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
1995ல் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற மாபெரும் இடப்பெயர்வை தொடர்ந்து 1996/02/01 முதல் 1996/05/08 வரை இயங்கிய 24 பாடசலைகளின் மாணவர்களை உள்ளடக்கிய இணைப்புப் பாடசாலையின் (புனித சாள்ஸ் மகாவித்தியாலயம்) அதிபராக நான் சேவையாற்றிய அனுபவம் ஒர் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும்.
ހޮހފ25ت~

Page 24
அறிவு நோக்கிய
66
"No body can't teach nobody rothing”
O.B. Kolstoe
(College preferring 1975 P; 61)
“யாதாறும் நாடாமல் இராமால் விண்ஒருவண்
சாந்துணையும் கல்லாத-வாறு”
(திருக்குறள் - 397)
னெது கணவர் பல கம்பனிகளில் வர்த்தக முகாமையாளராகக் கடமையாற்றியதன் காரணமாக இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்று வந்துள்ளார். இலங்கையில் அவர் போகாத இடம் மக்கள் வாழாத இடமென்பார். எல்லா நகரங்களிலும் அவருக்கு நண்பர்கள் இருந்தனர். அதனால் பாடசாலை விடுமுறை காலத்தில் நானும் எனது இரு பிள்ளைகளுடன் சுற்றுலாக்கள் சென்றுவர வாய்ப்புக் கிடைத்தது பெரும் பேறு என்றே கருதுகின்றேன். மடு, மன்னார் திருமலை, வவுனியா, அனுராதபுரம், மிகுந்தலை, டம்புள்ள, குளியாப்பிட்டிய மொனராகல, குருநாகல், பொலநறுவை, மட்டக்களப்பு, கல்முனை, பதுளை, கண்டி, நுவரனலியா, பண்டாரவளை, ஹப்புத்தளை, கற்றன், கொழும்பு அளுத்கம எனப் பல இடங்களுக்கும் சென்று வந்தது பெரிய அனுபவத்தையும், மகிழ்ச்சியையும் தந்தது. முன்னர் எனது பாடசாலை நாட்களிலும் மேற்குறிப்பிட்ட சில இடங்களுக்கு கல்விச் சுற்றுலா சென்று வந்துள்ளேன். ஆனால் இரண்டு அனுபவங்களும் வித்தியாசமானவையாகவே இருந்தன.
இந்தப் Lusories offs மூலம் நல்ல மனிதர்கள் பலரைச் சந்திக்கக்கூடியதாகவும், உயர்ந்த உள்ளங்களுடனான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளக் கூடியதாகவும் இருந்தது. தவிர எனது கணவர் கலை இலக்கியத் துறைகளிலும் ஈடுபாடுடையவராய் இருப்பதால் A AGN) கலைஞர்கள், எழுத்தாளர்களுடனும் பழகக் கூடிய வாய்ப்புக் கிடைத்தமை பெரும் அதிஷ்டம் என்றே கூற முடியும். இதன் மூலம் பல்துறை விடயங்களைப்பற்றி இலகுவாக அறியவும், பல்வேறுபட்ட கருத்துக்களைப் பெறவும், அபிப்பிராயங்கள் கூறவும்,
–
 
 
 
 
 
 

அனுபவங்களைப் பெறவும் வாய்ப்புக்கள் கிடைத்தமையை மறுக்க முடியாது.
1982ம் ஆண்டில் எனது குடும்பத்துடன் தென்னிந்திய யாத்திரை சென்று வந்தது மிகவும் மகிழ்ச்சிகரமான அனுபவமாகும். கேரளா மாநிலத்தின் தலை நகரான திருவாங்கூர் என்னும் இடத்திற்கு கொழும்பில் இருந்து விமானம் மூலம் சென்ற நாம் சில நாட்கள் அங்கு பரடைஸ் (Paradise) ஹேட்டலில் தங்கி இடங்களைச் சுற்றிப்பார்த்ததை மீள நினைக்கும் போது மனதில் ஏற்படுகின்ற மகிழ்ச்சி அளவிட முடியாதது. மணம் வீசும் மல்லிகைப் பூக்கள் சூடிய மலையாள மங்கையரின் அழகும் ஒரு அழகுதான். கற்றவர்கள் அதிகமாக வாழுகின்ற மாநிலம் கேரளம்தான். சாதாரண தேநீர்க்கடை வைத்திருப்பவரில் கூட BA அல்லது M.A படித்தவராய்த்தான் காணப்பட்டார்கள். மாக்சிய சித்தாந்தங்களால் கவரப்பட்ட மக்களையே அதிகமாகப் பார்க்க முடிந்தது. வேலையில்லாப் பிரச்சினை
இங்கு அதிகம்
அழகிய கோவளம் கடற்கரையும், பொன்முடி &sög|6UT மையமும்
குறிப்பிடத்தக்கவையாகும். திருவாங்கூரிலிருந்து பஸ் மூலம் கன்னியாகுமரி சென்று வந்தது மறக்கமுடியாதது. அரபுக்கடலும், இந்துமா சமுத்திரமும், வங்கக் கடலும் கலக்கின்ற குமரிமுனையில் நாம் நீராடியபோது மட்டற்ற மகிழ்ச்சியடைந்தோமீ. குமரி முனையிலே ஒரு சிறிய மண்டபம் அமைந்துள்ளது. அதன் மேற்பக்கமாக எழுதப்பட்டுள்ள வாசகம் இதுதான். 'நீலக்கடல் அலை ஓரத்திலே நின்று நித்தம் தவம் செய்யும் குமரி 6T6606).” குமரிமுனையிலிருந்து சிறிது துரத்தில் சுவாமி விவேகானந்தர் சமாதியடைந்த பாறை உள்ளது. உல்லாசப் பயணிகளை அங்கு தோணியில் ஏற்றிச் செல்வார்கள். நாமும் அங்கே சென்றோம். அங்கிருந்த சுவாமி விவேகானந்தரின் தியான " மண்டபத்தின் வாயிலுக்குள் நுழைந்ததுமே நம்மை அறியாமலேயே நாம் மெளனித்து விட்டோம் உள்ளே மண்டபம் இருட்டாகவே இருந்தது. ஒரு சிறிய தியான தீபம் எரிந்து கொண்டிருந்தது. ஒரு தெய்வீக உணர்வினை அங்கு நாம் உணர்ந்தோம். அந்த இடத்திலே தான் சுவாமி விவேகானந்தர் அவர்கள் தியானத்தில் இருந்தபடியே மறைந்ததாக சொன்னார்கள். திருவாங்கூரிலுள்ள மிருகக்காட்சிச் சாலையை பார்த்தபோது நமது கொழும்பிலுள்ள மிருகக்காட்சிச்சாலை பல மடங்கு சிறந்தது என்பதை உணர்ந்தோம். திருவாங்கூரிலிருந்து இரவு ரயில்மூலம் கோயம்புத்தூருக்கு பயணித்தோம். படுக்கை வசதிகள் கொண்ட அந்த ரயிலில் வசதியாக பயணம் செய்யக்கூடியதாக இருந்தது. ரயில் தரிக்கின்ற ஒவ்வொரு நிலையத்திலும் உணவு, தேநீர், கோப்பி, பெறக்கூடியதாக இருந்தது. பொழுது விடிந்ததும் திருச்சூர் அடைந்தோம். தொடர்ந்து அதே ரயிலில் பயணித்து மதியத்தின் பின் கோயம்புத்துார் அடைந்தோம். அங்கிருந்து இன்னுமொரு ரயிலிலேறி மேட்டுப்பாளையம் என்ற

Page 25
மலைப்பாங்கான இடத்திற்கு சென்றோம். அப்பொழுது மாலை மங்கிய سسه மலைச்சாரல் நிறைந்த இடமாகையால் குளிரும் அதிகமாயிருந்தது. அங்கிருந்து நாம் உதகமண்டலம் எனப்படும் ஊட்டி செல்வதுதான் நோக்கம். விசாரித்த போது அடுத்த ரயில் காலை 8.30 மணிக்குத்தான் என்றார்கள். நிலையத்திலுள்ள தங்குமிடத்தில் எல்லா அறைகளும் நிறைந்த விட்டன என்றார்கள். வேறு விடுதிகள் என்றால் கொஞ்சம் துாரம் செல்ல வேண்டும். நாம் புகையிரத நிலை பொறுப்பதிகாரியிடம் சென்று எமது நிலையைக் கூறினோம். அவர் மொட்டையாக எதுவும் செய்ய முடியாது என்றார். பின்னர் நான் எனது தந்தையார் இலங்கையில் புகையிரத நிலைய பொறுப்பதிகாரி என்றேன். உடனே அவர் அப்படியா என்று மன்னிப்பு கேட்டுக்கொண்டு "நீங்கள் இந்த நேரத்தில் வெளியில் போவது பாதுகாப்பு இல்லை. நானும் இனி வீட்டிற்கு போய்விட்டு காலையில் தான் வருவேன். நீங்கள் என்னுடைய இந்த அறையில் தங்கலாம்' என்று கூறி பொயின்ஸ்மன் ஒருவரை அழைத்து “இவர்கள் இங்கு தான் இரவு தங்குவார்கள்.
வேறு எவரையும் விடவேண்டாம். நன்றாகப் பார்த்துக்கொள் ” என்றதும் எமக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இந்த ஜடியாவை நமக்குத் தந்தவர் கோயம்புத்தூரிலிருந்து நம்முடன் பயணித்த ஒரு இந்தியப் பயணி என்பதை குறிப்பிட்டேயாக வேண்டும். விடிந்தது தெரியவில்லை ஒரே பனிமூட்டமாய் இருந்தது. புகையிரத நிலையப் பொறுப்பதிகாரி வந்தார். 830 இற்கு இரயிலும் வந்தது அது மீட்டர் கேஜ் ரயில் அகலம் குறைந்தது முன்புறமும் பின்புறமும் எஞ்சின் பூட்டப்பட்டிருந்தன வசதியாக ஒரு கம்பாட்மெண்டில் ஏறிக் கொண்டோம். மலையைச் சுற்றிய வண்ணம் ஊட்டி நோக்கி ரயில் புறப்பட்டது.
இரு மருங்கிலும் நாம் கண்ட இயற்கைக் காட்சிகள் பரவசத்தை ஏற்படுத்தின. பல அழகிய மலைச்சாரல்களை ஊடறுத்தவண்ணம் சென்ற அந்த அழகிய சிறிய இரயில் மதியத்தின் பின்னர் ஊட்டியை அடைந்தது. இரயிலை விட்டு இறங்கியபோது புதியதோர் உலகினில் நுழைந்ததுபோல் இருந்தது. அத்துணை இயற்கை அழகு, ஒரிரு வாகனங்களே காணப்பட்டன. இன்னொருவரை பயணத்திற்கு ஏற்றிக்கொண்ட வண்டிச் சாரதி ஒருவர் எம்மிடம் வந்து "சார் இன்று ராக்ஸிகள் எல்லாம் ஸ்ரைக், ஆனபடியால் உங்களுக்கு
 

வாகனம் கிடைக்காது. வேண்டுமானால் நான் இந்தச் சவாரியை முடித்துவிட்டு வந்து கூட்டிப் போகிறேன்' என்றார். எமக்கும் வேறு வழியே இல்லை. அவரையே வரச் சொன்னோம். சிறிது நேரத்தில் மோட்டார் வண்டி வந்தது. இங்குள்ள நல்ல ஹொட்டலுக்கு கூட்டிப்போகச் சொன்னோம். அவர் வுட்லண்ட்ஸ் (Woodlands) என்ற பெரிய ஹொட்டலுக்கு அழைத்துச் சென்றார். அழகிய மலைச்சாரலில் அமைந்துள்ள பிரமாண்டமான ஹொட்டல் அது முன்பக்கமாக கீழ்ப்பகுதியில் உள்ள மைதானத்தில்தான் பிரபல்ய ஊட்டி குதிரைப் பந்தயம் நடைபெறும். நாம் சென்றதும் அந்தப் பந்தயம் நிகழுகின்ற காலமாதலால் நாம் தங்கிய அந்தக் ஹொட்டலின் கட்டணம் சற்று அதிகரிக்கப்பட்டிருந்தது. ஏனெனில் ஹொட்டலில் உள்ளவர்கள் அங்கிருந்தவாறே குதிரைப் பந்தையத்தைப் பார்வையிடலாம். அங்கு லக்ஷறி அறை (Luxury Room) ஒன்றைப் பெற்றுக்கொண்டோம்.
மதிய உ LL த வண்டியில் சூழவுள்ள இடங்களைப் பார்க்கச் சென்றோம். முதலில் மிகப் பிரபல்யம் மிக்க பிலோமினா ஆலயம் பார்க்கச் சென்றோம். அழகிய மலர்ச் செடிகள் சார்ந்த சூழலில் அமைதி நாடி வருபவர்களை அன்புடன் வரவேற்று நின்றது அந்த அழகிய ஆலயம், நம் மனதிலும் அமைதி தோன்றவே செய்தது.
தொடர்ந்து பிரமாண்டமான தாவரப் பூங்காவிற்குச் (Botanical Garden) சென்றேன். 1947ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தப் பூங்கா இரண்டு ஹெக்ரேயர் நிலப்பரப்பில், கடல் மட்டத்தில் இருந்து 2400 மீற்றர் உயரத்தில் உள்ள இப்பூங்காவில் 150 இற்கும் மேற்பட்ட மரவகைகள் 2500 இற்கும் மேற்பட்ட தாவர இனங்கள் உள்ளன. பூங்காவைச் சுற்றி வந்த போது எமது தலையும் பிரமிப்பால் சுற்றியது.
கடல் மட்டத்தில் இருந்து 2633 மீற்றர் உயரத்தில் உள்ள தொப்பட்டா என்ற மலைச் சிகரத்தை நோக்கி எமது வாகனம் சுற்றிச் சுற்றிச் சென்றபோது சொர்க்கத்திற்குச் செல்கிறோமா? என்ற உணர்வே தோன்றியது. மூசிப் பெய்யும் மாசிப்பனியை ஒத்த பனிப்புகாரை ஊடறுத்து நாம் சென்ற அந்த அனுபவத்தைச் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. சிகர உச்சியில் ஒரு றெஸ்ரோறண்ட்
<د کیسے

Page 26
உள்ளது. அங்கு சென்று நாம் (3, அருந்தினோம். அங்கு பொருத்தப்பட்டிருந்த தொலை நோக்கி மூலம் ஊட்டிப் பிரதேசம் முழுவதையும் பார்வையிடக்கூடியதாய் இருந்தது. அப்பப்பா கொள்ளை அழகு. இதே றெஸ்ரோறண்டில்தான் வசந்த மாளிகை திரைப்படத்தில் சிவாஜிகணேசன் கோப்பி அருந்துவதாக ஒரு காட்சி வருகிறது என்று வழிகாட்டிவந்த எமது கார் சாரதி கூறினார். நாமும் அங்கு ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டோம் புகையிரத நிலையத்திலிருந்து 1Km தூரத்தில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் 1500 வகையான ரோஜாக்கள் உள்ள ரோஜாத் தோட்டத்தினுள் (Rose Gardens) நுழைந்தபோது சொர்க்கத்திற்கே போய்விட்ட உணர்வுதான் வந்ததது. அப்பப்பா இத்துணை ரோஜாக்களா? அத்தனையையும் தலையில் சூடவேண்டும் போலிருந்தது. கவிதைகள் இங்கு தானாகவே பிறக்கும் என்பதில் ஐயமில்லை. பூமித்தாய்
இவ்வளவு இனிமை உடையவளா?
பளம் எப்ராண்டிலிருந்து 1Km தூரத்தில் 1824 ஆம் ஆண்டு வெள்ளைக்காரரால் செயற்கையாக உருவாக்கப்பட்ட பெரிய ஏரி ஒன்று உள்ளது. அங்கு உல்லாசப் பயணிகள் படகு சவாரி செய்வதற்கான வசதி உண்டு. நாம் வாடகைக்குப் படகுகளை சாரதியுடனோ, சாரதி இல்லாமலோ அமர்த்திக் கொள்ளலாம். அந்த ஏரியில் படகில் நாம் வலம் வந்தபோது இயந்கையின் வளத்தை ஆசைதீர அள்ளி அனுபவித்தோம். இந்த ஏரியில்தான் மூன்று முடிச்சுப் படத்தில் ரஜனி, கமல், ருரீதேவி ஆகியோர் படகில் செல்லும் காட்சி படமாக்கப்பட்டது என அறிந்தோம்.
ஏரிக்கரையில் குதிரைச்சவாரி செய்வதற்கு குதிரைகள் தயாராக நின்றன. பிள்ளைகள் இருவரும் மகிழ்வுடன் குதிரைச் சவாரி செய்தார்கள்.
இன்னொரு நாள் நாம் நகர் வலம் வந்தபோது படசூட்டிங் ஒன்றிற்கு ஒப்பனையுடன் சென்று கொண்டிருந்த ரீதேவியை நேரில் சந்தித்தோம். ஒப்பனை இல்லாவிடில் இவர்கள் எப்படி இருப்பார்கள் என மனதுள் நினைத்துக் கொண்டேன். சிரிப்புத்தான் வந்தது.
ஊட்டியிலிருந்து 21 Km தொலைவில் மைசூர் செல்லும் பாதையில்
 

பைசாரா ஏரி உள்ளது இங்குள்ள விசேடமென்னவென்றால் வனவிலங்குகளையும் வகைவகையான பறவைகளையும் நாம் அவற்றின் இயற்கையான சூழலில் வண்ணக் காட்சிகள்போல் கண்டு களிக்கலாம்.
ஊட்டி தமிழ் நாட்டின் எல்லையில் நீலகிரி மலைத்தொடரில் உள்ள ஓர் அழகிய கோடைகால வாசஸ்தலம். 1822ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த ரம்மியமான இடத்திற்கு உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பெருந்தொகையான உல்லாசப் பயணிகள் வருகை தருகின்றார்கள். கோடை காலத் திருவிழாவாக வருடா வருடம் மே மாதத்தில் மிகப் பிரமாண்டமான மலர்க் கண்காட்சி இங்கு ஒழுங்கு செய்யப்படுகின்றது. இதனைக் காண்பதற்கு உலகின் பல பகுதிளிலுமிருந்தும் 3000 முதல் 10000 பேர்வரை வருகை தருகிறார்கள். 1895 முதல் இன்று வரை இம் மலர்க் கண்காட்சி நடைபெற்று வருகின்றது. 1980 முதல் தமிழ்நாடு உல்லாசப் பயணச்சபை இதனை சிறப்புற நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
ஊட்டியை அடுத்துள்ள குன்னூர் வெலிங்டன் கிராமங்களும் மிக நேர்த்தியானவை. பார்க்கும் இடம் எல்லாம் பசுமை மரங்கள் வகை வகையான வண்ண மலர்களும்தான். இங்கு நாம் நின்ற நாட்களில் நமக்கிருந்த பிரச்சினை எல்லாம் எதைப் புகைப்படம் பிடிப்பது, எதை விடுவது என்பதுதான். இத்துணை இயற்கை அழகு அங்கு செழித்துக் கிடக்கின்றது. என்ன, நீங்களும்
ஊட்டியைக்கான புறப்பட்டு விட்டீர்களா? காலம் எல்லாம் இங்கேய்ே வாழ்ந்து விடக் கூடாதா என்ற எண்ணத்துடன் மைசூர் செல்லும் பேரூந்தில் எறியபோது நெஞ்சம் கனத்தது.
மைசூர் நோக்கிய பேருந்துப் பயணம் மனதிற்கு இதமாகவேயிருந்தது. எம்முடன் ஒரு பாதிரியார் தமது குடும்பத்துடன் பயணித்தார். அவர் தன் மனைவியிடம் நாம் இப்போ மைசூர் போய் இங்கிருந்து சென்னை போகிறோம் என்றார். எனவே அவர் மனைவி 'அப்போ நாம் இடங்களை Running லேயே தான்
K>

Page 27
பார்க்கப் போகிறோமா' என்று ஏக்கத்துடன் கேட்டார். எனக்குள் நான் சிரித்துக் கொனர்டேன்,
மாலையில் நாம் மைசூர் சென்றடைந்தோம். அங்கு நாம் ஒரு தரமான விடுதியில் தங்குவதற்கு இடம் எடுத்துக் கொண்டோம். அது ஒரு இரட்டை விடுதி, ஒரு பக்கம் சைவ உணவு விருந்துச்சாலையும், மறு பக்கம் அசைவ உணவு விருந்துச்சாலையும் கொண்டது நீண்ட பிரயாணம் செய்த களைப்பில் நாம் உணவருந்தி விட்டு உறக்கத்திற்குச் சென்றோம்.
பொழுது புலர்ந்தபோது நாம் கனவு கலையாத துாக்கத்திலிருந்தது போல் இருந்தது. மைசூர், சந்தணத்திற்கும், பட்டுக்கும் பிரசித்தி பெற்றது என்று என் தாயார் சொல்லி நான் அறிந்திருந்தேன். காலையில் கடைத் தெருவிற்குச் சென்று அவற்றை வாங்கியதுதான் என் முதல் வேலையாக இருந்தது. துணிகளில் எத்தனை வகை? சந்தணத்தில்தான் எத்தனை வகை? வியப்பாயிருந்தது.
தங்கியிருந்த ஹேட்டல் மூலம் வாடகைக்கு ஒரு காரை அமர்த்தி மைசூரில் உள்ள சுற்றுலா மையங்களுக்குச் சென்று வந்தோம். மைசூர் மகாராஜாக்கள் வாழ்ந்த பிரமாண்டமான அரண்மனைகளைப் பார்த்தபோது அந்தக் காலத்திற்கே போய்விட்டது போன்ற ஒரு நினைவு எழுந்தது. அற்புதமான வேலைப்பாடுகள் கொண்ட அந்த அரண்மனைகளின் கட்டடக் கலையை எப்படி விபரிப்பது. பளிங்குக் கற்கள் பொறிக்கப்பட்ட அந்த அரண்மனையில் வெறுங் காலுடன் நடப்பதற்கே எம் கால்கள் கூசின. பிரமாண்டமான வேலைப்பாடுகளைக் கொண்ட அந்த அரண்மனைக் கதவுகளில் பொருத்தப்பட்டிருந்த நிலைக் கண்ணாடிகளில் நமது பிம்பம் தெறித்தபோது நமக்கே நாணம் ஏற்பட்டது. அந்தப் பெரிய அரண்மனையைச் சுற்றிப்பார்த்து களைத்தேபோனோம். என்ன, உங்களால் நம்ப முடியவில்லையா? பெருந்தொகையான சுற்றுலாப் பயணிகள் தினமும் இங்கு வருகை தருகிறார்கள்.
அருங்காட்சியகங்கள், புராதன நிலையங்கள், தொல்பொருள் காட்சிச்சாலைகள் எனப் பலவற்றைப் பார்த்த நாம் நடுவில் சங்கமத்தில் (மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்தில்) முகம் கழுவி, கால்களை நனைத்துக் கொண்டு மாலை 6 மணியளவில் வெகு பிரமாதமாய் பேசப்படும் பிருந்தாவனம் சென்றோம் பிருந்தாவனம் பார்ப்பதானால் மாலை வேளையில்தான் செல்ல வேண்டுமென்று ஏற்கனவே அறிந்திருந்தோம். அப்போதுதான் பலவகையான வர்ண ஒளிவிளக்குகளின் ஜாலத்தைக் காணமுடியும். பெருமளவில் பல இடங்களிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் முண்டியடித்துக் கொண்டு பிருந்தாவனத்துள் நுழைந்தபோது நாழும் அவர்களுடன் நுழைந்தோம். செயற்கை முறையில் இங்கு ஓடிய நீர்வீழ்ச்சிகளின் அழகும் ஒரு அழகுதான். ஒளி ஜாலத்தில் மாய உலகில் நாம் நுழைந்து விட்ட உணர்வைப் பெற்றோம். என்மனதில் மிஸ்ஸியம்மா திரைப்படப்பாடல் “பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொது செல்வமன்றோ” என்ற பாடல் ஒலித்தது. ஒரு காலத்தில் கண்ணனும்
 

ராதையும் நிச்சயமாக இங்கு இருந்திருப்பார்கள் என்றே தோன்றியது. மன்னிக்கவும் பிருந்தாவனத்தின் அழகை என்னால் வர்ணிக்க முடியவில்லை. அதன் அழகை ரசிப்பதற்கு ஆயிரம் கண்களும் போதாது. நீங்களும் ஒருமுறை சென்றுதான் பாருங்களேன். -
மறுதினம் மைசூரிலிருந்து பேருந்து மூலம் கர்நாடகத்தின் தலைநகரான பெங்களுள் புறப்பட்டோம். மக்கள் தொகை அதிகம் நிறைந்த அந்த நகரில் ஆட்டோக்கள் ஈசல் போல் பறந்து திரிந்தன அங்கு “லஷமி” ஹோட்டலில் தங்கினோம். பெரிய ஹேட்டல் அது சகல வசதிகளும் உண்டு. பங்களுள் புகையிரத நிலையம் மிகவும் அழகானது. நன்கு திட்டமிட்டுக் கட்டப்பட்டிருந்தது. பெங்களூரில் பெரிய பெரிய நிறுவனங்கள் நிறைய இருந்தன. அதே நேரத்தில் சிறிய வர்த்தக நிலையங்கள் ஆயிரக்கணக்கில் இருந்தன. மக்கள் எல்லோரும் எப்போதும் உற்சாகமாக தொழிற்பட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் நகர எல்லைக்கு அப்பால் பார்க்க முடியாதவாறு பெரும் சேரிகள். பெங்களூரின் மதிப்பை அவை குறைத்த வண்ணமிருந்ததாகவே நாம் உணர்ந்தோம்.
இரு தினங்கள் தங்கிவிட்டு மாலையில் பேரூந்தில் சென்னைக்குப் புறப்பட்டோம். நல்ல சொகுசு பஸ். பிரயாணக் களைப்பே தெரியவில்லை. அதிகாலை 4 மணியளவில் சென்னையை அடைந்தோம். விடியாத பொழுது எங்குபோய்த் தங்குவதென்று தெரியவில்லை. எனது கணவர் பஸ் டிப்போ பொறுப்பாளரிடம் சென்று நாங்கள் இலங்கையில் இருந்து வந்திருக்கிறோம். நல்ல ஒரு ஹோட்டலுக்கப் போக வேண்டும் என்றார். உடனே அவர் தமக்குத் தெரிந்த ஒரு ஆட்டோக்காரனை அழைத்து சில ஹோட்டல்களின் பெயரைச் சொல்லி பத்திரமாய் கொண்டு போய் விட்டு வரும்படி கூறினார் அந்த ஆட்டோக்காரரும் குறிப்பிட்ட ஹோட்டலுக்கு எம்மை அழைத்துச் சென்று அறை கேட்டார். துரதிஸ்டவசமாக எங்கும் இடம் கிடைக்கவில்லை. எமக்கு ஒரே யோசனையாக இருந்தது. ஆட்டோக்காரர் சளைக்கவில்லை நீண்ட பயணத்தின் பின் Woodlands Hotel இல் மிகவும் வசதியான அறை கிடைத்தது. இந்த ஹோட்டல் நிறுவனத்திற்கு சொந்தமான சங்கிலித்தொடர் ஹோட்டல்கள்
<سے G KO Z 35 "ހފިށުت~~
பெங்களுரில்

Page 28
இந்தியாவிலும் சில வெளிநாடுகளிலும் உண்டு, மிகப் பிரபல்யமான ஹோட்டல்,
அப்போது எனது கணவர் கொழும்பில் Harrison's Lister Engineering கம்பனியில் Commerical Officer ஆகப் பணிபுரிந்து கொண்டிருந்தார். இந்தியாவில் சென்னையிலுள்ள Enfield கம்பனியின் இலங்கை முகவராக எனது கணவரின் கம்பனியிருந்தது. Enfield கம்பனியின் Export Manager ஆன திரு. இராஜகோபால் வர்த்தக நிமித்தமாக கொழும்பு வந்து செல்வதுண்டு. அப்போது என் கணவருடன் தொழில் ரீதியாக நெருங்கிய நட்பு ஏற்பட்டிருந்தது. தொலைபேசியில் நாம் சென்னை வந்துள்ளதாக திரு. இராஜகோபாலுக்கு அறிவித்த அரை மணி நேரத்தில் அவரது உதவியாளர் திரு. நடராஜன் என்பவர் எமது ஹோட்டலுக்கு வந்து திரு இராஜகோபால் இப்போது வர்த்தக மாநாடு ஒன்றில் இருப்பதாகவும் அது முடிந்தபின் சந்திப்பதாகவும் கூறி எம்மை வேண்டிய இடங்களுக்கு அழைத்துச் செல்லும்படி பணித்துள்ளார் என்றும் கூறினார். எதையெல்லாம் நாம் இங்கு பார்க்க வேண்டுமோ அங்கெல்லாம் நீரே அழைத்துச் செல்லும் என்று என் கணவர் அவரிடம் கூறி அவரது வாகனத்தில் ஏறிக் கொண்டோம்.
“மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்” என்ற சினிமாப் பாட்டுத்தான் என் காதில் இரைந்தது. வெள்ளம் போல் மக்கள் கூட்டம், எல்லோரும் வேகமாக நகர்ந்து கொண்டு இருந்தனர். நாம் பல இடங்களைப் பார்வையிட்டோம். ராஜாஜி மண்டபம், Snake Garden, மெரீனா கடற்கரை, சாந்தோம் தேவாலயம், எக்மோர் எனப் பல இடங்கள் Enfield தொழிற்சாலைக்கும் சென்று பார்வையிட்டோம். பிரமாண்டமான தொழிற்சாலை, அங்கு நூற்றுக் கணக்கானவர்கள் பணியாற்றிக் கொண்டு இருந்தார்கள். எம்மை ஒரு சதம் கூட இவர்கள் செலவு செய்ய விடவில்லை. திரு இராஜகோபாலை நாம் சந்தித்தபோது அவர் இன்னும் சில நாட்கள் தம்முடன் தங்கும் படியும் தென்னிந்தியா முழுவதும் எம்மைச் சுற்றிக் காண்பிப்பதற்கு தமது கம்பனி விரும்புகின்றது என்றும் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் எனது கணவர் பிடிவாதமாக மறுத்து விட்டார்.
நாம் மேலும் சில தினங்கள் சென்னையை நன்கு சுற்றிப் பார்த்தோமீ. மகாபலிபுரம் மிக அமைதியான சூழலிலே இருக்கும் ஒரு சுற்றுலாமையம் அங்கு பல்லவர் காலத்து சிற்பங்களைப் பார்த்ததும் பிரமித்துப் போனோம். வரலாறு சொல்லும் அந்தச் சிற்பங்களின் அழகும் அமைப்பும், கலையம்சமும் சொல்ல முடியாதவை. பிரமாண்டமான யானைகள் கல்லிலே உயிருள்ளவைபோல் செதுக்கப்பட்டிருந்தன. பிள்ளைகள் அதன் அருகே நின்று படம் பிடித்துக் கொண்டார்கள். கற்பாறைகளில் அழகுறு சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வரலாறு சொல்லியது. வழிகாட்டி (Guide) ஒருவர் எமக்கு விளக்கங்கள் தந்து கொண்டிருந்தார் என்மனதில் கல்கியின் சிவகாமியின் சபதம் சரித்திர நாவல் நிழலாடியது. பல்லவர் காலத்திற்கே போய்விட்ட உணர்வு நெஞ்சைத் தொட்டது. அன்று மாலையில் பாரதிராஜாவின் "கல்லுக்குள் ஈரம்' திரைப்படம் பார்த்தோம். வித்தியாசமாயிருந்தது. சென்னையிலிருந்து சில மைல் தூரத்தில் கனரக வாகனங்களை உற்பத்தி செய்யும் மிகப் பெரிய தொழிற்சாலையான "அசோக் லேடண்ட" நிறுவனம் இருக்கும் இடத்தைத் தாண்டி எண்ணுர் என்னும் கிராமத்தில் VGP 'Golden Beach" என்னும் சுற்றுலா மையம் உள்ளது. நல்ல முறையில் திட்டமிட்டு கேளிக்கை வசதிகள் கொண்டதாகவும் சிறுவர் முதல் பெரியவர் வரை யாவரையும் கவர்ந்திழுக்கும் வகையிலும் அமைந்துள்ள இந்த
C

இடத்திற்கு நிறைய சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றார்கள். இங்குள்ள சிற்றுாண்டிச்சாலை ஒன்றில் 4அடி நீளமான குடும்ப தோசை பரிமாறுகிறார்கள். எமக்கு வியப்பாய் இருந்தது. கணிப்பொறி (Computor) மூலம் ஜாதகம் கணிக்கப்பட்டு விரும்பியவர்களுக்கு வழங்கப்படுவதை முதன்முதலாக நாம் அங்குதான் பார்த்தோம். இன்று பல நவீன வசதிகளுடன் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதாக அறிகின்றோம். சென்னை மெரீனா கடற்கரை மிக நீண்ட கடற்கரை, ஞாயிறு தினங்களில் மக்கள் மிக அதிகமாகக் கூடுவார்கள். மணலில் பிள்ளைகள் மகிழ்வுடன் விளையாடுவார்கள். உழைத்துக் களைத்த தொழிலாளர்கள், உத்தியோகத்தர்கள், உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்ற பேதமில்லாது சகலரும் மனநிறைவுக்காகக் கூடும் இக்கடற்கரைப் பகுதியில்தான் அண்ணல் காந்தியின் சிலை, கண்ணகியின் சிலை, உழைப்பாளர் சிலை எனப் பல பெரியவர்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கடற்கரையின் ஒரு பகுதியில் தமிழ் நாட்டின் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் சமாதியும் இருக்கின்றது. "எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகின்றது” என்ற வாசகம் அதில் எழுதப்பட்டுள்ளது. மிகப் பிரமாண்டமான சென்ரல், எக்மோர் ரயில்வே நிலையங்கள், LIC கட்டிடம், քlճմիլԸII தியேட்டர்கள், வானுயர்ந்த கட்டிடங்கள், பல்கலைக்கழகங்கள், புத்தக நிலையங்கள், அங்காடிகள் என பார்க்க வேண்டிய இடங்கள் நிறையவே இருக்கின்றன.
எமது பயணத்தின் முக்கிய நோக்கம் வேளாங்கண்ணிக்கு போவதாகவே இருந்தது. மெட்ராஸிலிருந்து காலையில் பேரூந்து மூலம் புறப்பட்டோம். நெடுந்தூரப்பயணம். நாகூர் சென்று அங்கிருந்து வேளாங்கண்ணி சென்றடைந்தோம். ஆலயத்துள் பிரவேசித்ததும் உடல் சிலிர்த்தது. ஆரோக்கிய அன்னையின் அருட்சியை உணர்ந்து கொண்டோம். நீலக் கடலோரத்தில் அமைந்துள்ள அந்த அழகிய ஆலயம், தேடிவரும் பக்தர்களுக்கு கோடி அற்புதங்களை நாளும் புரிந்துகொண்டிருப்பதை பலரும் அறிவர். அன்னையின் அடைக்கலத்தில் இருந்த சில நாட்கள் மறக்க முடியாதவை.
அருகே உள்ள நாகப்பட்டணம் இனிப்புப் பண்டங்களுக்கு பெயர்போனது. நாகை அல்வா ஒரு தனிச்சுவைதான்.
வேளாங்கண்ணியில் இருந்து நாம் பேரூந்து மூலம் தஞ்சாவூர் சென்றடைந்தோம். அங்கு பாண்டியன் லொஜ்ஜில் தங்கினோம் 'மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று ஆனை கட்டிப் போரடிக்கும்.99. என்ற பாடல் வரிகள் என் நினைவுக்கு வந்தன. நெற்செய்கைக்குத் தஞ்சாவூர் பெயர்போனது. தஞ்சையின் சிறப்பே இராஜராஜ சோழன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயில்தான். கோபுர உச்சியின் நிழல் நிலத்தில் விழுவதில்லை என்று கூறினார்கள். கோவிலைச் சுற்றி 64 நாயன்மார்களின் திரு உருவங்கள் செதுக்கப்பட்டிருந்தன. ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட பிரமாண்டமான நந்தியின் உருவம் எம்மைப்
வைத்தது. தஞ்சாவூரிலிருந்து பேரூந்தில் மதுரை புறப்பட்டுச் சென்றோம். அங்கு College House என்ற விடுதியில் தங்கினோம். மதுரைத்தலமாளும் மீனாட்சி அம்மனின் ஆலயம் நாம் தங்கிய விடுதிக்கு அண்மையில்தான் இருந்தது. அந்த ஆலயத்தின் கலையழகைக்கான நம் கண்கள் போதாது. ஒரே மாதிரியான நான்கு வாசல்கள் கொண்ட இந்த ஆலயத்திற்குள் பிரவேசிப்பவர் பலர் வழிமாறி விடுவர்

Page 29
உல்லாசப் பயணிகளும், பக்தர்களும் பெருந்தொகையினராகத் தரிசிக்கும் இந்த ஆலயம் மிகவும் பிரபல்யமானது. சிவபெருமானின் நெற்றிக்கண்ணால் சுட்டெரிக்கப்பட்ட நக்கீரர் வீழ்ந்த பொற்றாமரை வாவியை சுற்றியுள்ள சுவர்களில் தெய்வப்புலவன் திருவள்ளுவரின் குறள்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
மதுரை நகரில் பயணிகள் சைக்கிள் றிக்ஷாவிலேயே பயணிக்கிறார்கள். நாமும் சைக்கிள் றிக்ஷாவில் மதுரையைச் சுற்றிப்பார்த்தது புதிய அனுபவமாயிருந்தது. கைத்தறித் துணிகள் மிக அதிகமாகவே இங்கு காணப்படுகின்றன. இரண்டு நாட்கள் மதுரையில் தங்கிய நாம் ரயில் மார்க்கமாக இராமேஸ்வரம் புறப்பட்டோம்.
இராமேஸ்வரத்தில் உள்ள இராமர் கோவில் மிகவும் பிரபல்யமானது. வட இந்தியாவிலிருந்து நிறைய யாத்திரிகரிகர்கள் வந்தனர். கப்பல் மூலம் இலங்கை செல்வதற்காகவும் பயணிகள் பலர் வந்திருந்தனர் யாழ்ப்பாணத்தில் முன்னர் வாழ்ந்த இந்தியர் சிலர் எம்மை அடையாளங்கண்டு மகிழ்வுற்றனர். ஒருநாள் அங்கு தங்கிய நாம் மறுநாள் தனுஷ்கோடி சென்று கப்பல் மூலம் தலைமன்னார் பயணித்தோம். பல இனிமையான நினைவுகளுடன் கூடிய கப்பல் பயணம் மறக்க முடியாததாக அமைந்தது. தலைமன்னார் கப்பல் தரிக்கும் இடத்தில் எனது தந்தையார் எம்மை மகிழ்வோடு வரவேற்கக் காத்துநின்றார்.
இத்தகைய சுற்றுலாக்கள் நம் ஒவ்வொருவருக்கும் அவசியம் என்றே நான் கருதுகின்றேன். தமிழ், சிங்கள, ஆங்கில, மலையாள, கன்னட, தெலுங்குமொழி பேசும் பல்லின மக்களைச் சந்தித்தமை, அவர்களது வாழ்க்கை முறைமை, கலை, கலாசாரங்களை, அறிந்து கொண்டமை எல்லாமே புதுமை மிக்க அனுபவங்களாகும். ஒருவரை ஒருவர் நாம் நன்கு புரிந்து கொள்வதன் மூலம் நமக்குள் வேறுபாடுகள் நீங்கிவிடும். பிரதேச உணர்வுகள் உறைந்து விடும். "யாதும் ஊரே யாவரும் கேளிா” என்ற உண்மை உறுதிபடத் தெரிந்துவிடும்.
உணவில் அறுசுவை வேண்டும் அதைப் போல் ஆசிரியர்களிடம்
அணர்பு
அதிகாரம்
பணர்பு
firgi
பொறுப்பு
கட்டுப்பாடு
என்ற ஆறு சம்பவங்கள்
அடங்கினால் ஆசிரியப்பணி சிறப்படையும்.
<ہ سے

இணைப்புப் பாடசாலையின் Sol IIITIS
உண்னுடைய காலைகள்
அலுவலகத்திற்குச் சிசாந்தமானவை.
உண்னுடைய மாலைகள்
உனக்குச் சிசாந்தமானவை
lf god has given you ability, and put you in charge of the work of others, take the responsibility seriously.
1995, ஆண்டு அக்டோபர் மாதம் 30ம் திகதி திங்கட்கிழமை ஈழத்தமிழர் வரலாற்றில் ஒரு சிவப்பு நாளாகும். நம் வாழ்வியலில், பல்வேறு பரிமாணங்களில் மாற்றங்கள் ஏற்படுத்திய மாபெரும் இடப்பெயர்வு நிகழ்ந்த அந்த நாளை யார் தான் மறக்க முடியும்? சொந்த உறவுகளுக்கும், பல்லாண்டுகளாய்க் கூடி வாழ்ந்த அயலவர்க்கும் எதுவித வார்த்தையும் கூறாது. நாள் பார்த்து நல்லநேரம் பார்த்துக் குடிபுகுந்த இல்லங்களையெல்லாம் விட்டு விட்டு, இடுக்கண் வந்த போதெல்லாம் தஞ்சம் தந்த ஆலயங்களை தேடாது தம் உயிர் காத்தால் போதுமென்று தம்மால் சுமக்கக்கூடிய பொதிகளை ஏந்திய வண்ணம் யாழ்ப்பாணச் சமூகம் தம் சொந்த மண்ணை விட்டு ஓடிய போது அந்த அவலங்களை காணப் பொறுக்காது வானம் சிந்திய கண்ணீர் பலரது வரண்டுபோன நாவினை ஆறுதல் படுத்திய வரலாற்றைச் சொல்லவும் கூடுமோ?
பல ஆண்டுகளாக தொடர்ந்து மரணத்துள்ளேயே வாழ்ந்து அதற்கு இசைவாக்கம் பெற்றுவிட்ட என் தாயார் 'பிள்ளைகள் நீங்கள் வாழவேண்டியவர்கள் எங்காவது ஒடித் தப்புங்கள் வாழ்வின் மாலைப்பொழுதில் இருக்கும் என்னால் எங்கும் வரமுடியாது. என்னை சொந்த மண்ணிலேயே விட்டு விடுங்கள்' என்று உறுதிபடக் கூறினார். தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை என்பார்கள். அதனால் எனது குடும்பம் இங்கேயே தங்குவது என தீர்மானித்து யாழ் திருக்குடும்ப கன்னியர் மடத்தில் அடைக்கலம் கொண்டது. எம்மைப்போல் பல்வேறு காரணங்களால் போகமுடியா ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் மடத்தில் தஞ்சம் புகுந்தனர். ஆனால் நாட்கள் செல்லச்செல்ல பெரும்பாலானோர் வெளியேறிச்


Page 30
செல்லவேண்டிய நிர்ப்பந்தத்திற்காளாகினர். இடம் பெயர்ந்து சென்ற பலர் தென்மராட்சிக்கும், வடமராட்சிக்கும் சென்றனர். கணிசமான தொகையினர் பாதுகாப்பிற்காக வன்னிக்கும் சென்றனர். எமது மடத்தில் இறுதியாக பெற்றார் பிள்ளைகள் என 165 பேரும, சம்பத்திரிசியார் கல்லூரியில் 225 பேரும் எஞ்சியிருந்தனர். நவம்பர் 14ல் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி நாவற்குழியைத் தாண்டுவதற்கு முன் இராணுவத்தினர் யாழ் நகர் நோக்கி எறிகணைகளை ஏவத்தொடங்கினர். வருண பகவானும் தம் பங்கிற்கு பொழிந்து தள்ளினார். நாள் செல்லச்செல்ல நாம் உயிர் தப்புவோம் என்ற எண்ணம் எம்மை விட்டு போயிருந்தது.
பாடசாலை மண்டபத்திலுள்ள அரங்கின் கீழே ஒரு நிலவறை (Cellar) உண்டு. அதுதான் எமது செபக்கூடமாக மாறியிருந்தது. தினமும் மாலை வேளையில் நீண்ட செயவழிபாடு நடைபெறும் நடமாடக் கூடியவர்கள் யாவரும் கலந்துகொள்வார்கள் அருட் சகோதரிகள் மெற்றில்டாவும், கிறிஸ்ரியானாவும் தெரிவு செய்யப்பட்ட நற்செய்தி வாசகங்களையும், சங்கீதங்களையும் படிப்பார்கள் அவை எமக்கென்றே சொல்லப்பட்டவை போலிருக்கும்.
"ஆதலால் உங்களுக்குச் சொல்லுகிறேன் உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலை மூட எதை உடுப்பது என்றோ கவலைப்பட வேண்டாம். உணவை விட உயிரும், உடையை விட உடலும் உயர்ந்தவையல்லவா. " (மத்தேயு 6:25-34)
ண்டவரை நோக்கி “நீரே என் புகலிடம், நீரே என் அரண், என் ஆ இறைவா நான் உன்னை நம்பியுள்ளேன் என்று சொல்” (சங்கீதம் 90.2)
"உன் அருகில் ஆயிரம் விழட்டும், உன் வலப்பக்கத்தில் பத்தாயிரம் விழட்டும் உன்னை எதுவும் அணுகாது” (சங்கீதம் 907)
இந்த வாசகங்களின் உண்மையை நாம் நிதர்சனமாகவே கண்டோம். எம்மில் ஒருவர்தானும், ஒரு வேளையாகிலும் பட்டினியாக இருக்கவில்லை என்பதை யாராவது நம்ப முடியுமா?
ஒரு நாள் இரவு நாம் செபித்துக் கொண்டிருக்கையில் எமக்கு அருகில் ஒரு ஆட்டிலறி ஷெல் வீழ்ந்து வெடித்தது. சில நிமிடங்கள் மயான அமைதி. நாம் மரணித்து விட்டோம் என்றே எண்ணினோம். ஆனால் ஒருவருக்குக் கூட ஒரு சிறுகாயமும் ஏற்படவில்லை. பாடசாலையின் வடக்குப்புற மதிலும் கட்டிடமும் பெரும் சேதமடைந்திருந்தது.
தினமும், ஷெல்மழை பொழிந்த வேளையிலும்கூட குரு முதல்வர் அருள்திரு JPE செல்வராஜா அடிகளார் ஆயர் இல்லத்திலிருந்து சைக்கிளில் வந்து சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றியது எமக்கு மிகப் பெரிய ஆன்மீக பலத்தைத்தந்தது. ஒரு நாள் அவர் திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்த வேளையில் திடீரென இரு ஆட்டிலறி ஷெல்கள் ஆலயத்தின் தெற்கு வாசலில் வீழ்ந்து வெடித்தன. நம்மில் பலர் சத்தத்தைத் தாங்கமுடியாது வீழ்ந்தேவிட்டோம். குருவானவர் பலிப்பீடத்தில் சாய்ந்து கொண்டார். அப்போதும் நாம் மரணித்து விட்டதாகவே நினைத்தோம். ஒரே புகை மண்டலமாயிருந்தது. சுயநினைவுக்கு வர
38

சிறிது நேரம் பிடித்தது. நம்மில் எவரும் பாதிக்கப்படவில்லை. அதிர்வினால்
கோவில் கதவிலிருந்து கண்ணாடியின் ஒரு சிறிய துண்டு பூசை கேட்டுக் கொண்டிருந்த டாக்டர் AL ஏபிரகாம் அவர்களது கையில் சிறிய காயமொன்றை ஏற்படுத்தியிருந்தது.
பரா வெளிச்சத்தின் (Paraight) இரவுகள் எல்லாம் பகலாக மாறியிருந்த ஒருநாளில், நவம்பர் பிற்பகுதியில் சம்பத்திரிசியார் கல்லூரியில் மாலை வேளையில் வீழ்ந்த செல்லொன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த தகப்பன், மகன் மற்றும் பேரப்பிள்ளை (பெணி) ஆகிய மூவரை காவு கொண்டது. அந்த இருண்ட நாட்கள் என் ஜென்ம விரோதிக்குக் கூட வரக்கூடாது என்றே வேண்டுகிறேன். திடிரென மார்கழி 2ம் திகதி செல் சப்தங்களும் துப்பாக்கி வேட்டுக்களும் மெளனித்து விட்டன. பற்றுக்கள் எதுவுமின்றி அதுவரை வெறும் ஜடங்களாக மரணத்துள் வாழப் பழகிக்கொண்ட எமக்கு உயிர் வாழ வாய்ப்புண்டு என்ற நம்பிக்கை துளிர்த்தது. இரவும் பகலும் திருக்குடும்ப கன்னியர் மடத்தை சேர்ந்த அருட்செல்விகள் மெற்றில்டா, கிறிஸ்ரியானா ஆகிய இருவருடனும் மதபேதமின்றி கத்தோலிக்கரும், இந்துக்களும் கூட்டாகக் கூடி செபித்த வேண்டுதல்கள் கேட்கப்பட்டதை உணர்ந்தோம். நமது இருத்தலுக்கும் ஒரு அர்த்தம் உண்டு. நமது சந்ததி இந்த மண்ணிலே உரிமையோடு வாழ்வதற்கான ஒரு தளத்தினை
ஏற்படுத்துவதற்கே இறைவன் எம்மை இங்கு வைத்திருக்கின்றார் என்ற எண்ணம்
என் மனதில்பட்டது. மார்கழி மாதம் இரண்டாம் திகதி சம்பத்திரிசியார் கல்லூரிக்கு வந்த இராணுவத்தினர் ம்ே திகதி எமது மடத்திற்கு வருகை தந்தனர். அன்று முதல் எமது அடிப்படைத் தேவைகளுக்காக குரல் கொடுப்பதன் மூலம் எமது புதிய வடிவிலான போராட்டம் (Struggle) ஆரம்பமாகியது.
மடத்தின் சிற்றாலயத்தில் சாமப் பூசையுடன் ஆரம்பித்த கிறிஸ்து பிறப்பு
விழா சிறப்புற நடைபெற்றது. அந்த விழாவில் முதல் தடவையாக
இராணுவத்தினரும், பொலிசாரும், பொதுமக்களாகிய நாமும் கூட்டாக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும். காலையில் நடைபெற்ற ஒன்று கூடலில் சமாதானத்திற்கான் கருத்துகள் எம்மால் முன்வைக்கப்பட்டமை முக்கியமான ஒரு நிகழ்வாகும்.
எம்முடன் இருக்கும் மாணவர் கல்வி பற்றிய சிந்தனை முன்வைக்கப்பட்டது. இரு முகாம்களிலும் இருக்கிற ஆசிரியர்களின் விபரங்கள் திரட்டப்பட்டன. அவர்களுள் எமது மடத்தில் இருந்த திரு விஜயரட்ணம் அவர்கள் ஊர்காவற்றுறை R.C. பாடசாலை அதிபர் என அறிய வந்தோம். நானும் சிஸ்ரர் மற்றில்டாவும் திரு விஜயரட்ணம் அவர்களுடன் கலந்துரையாடி, நோக்கம் எதுவுமின்றி காலம் கழித்து வரும் மாணவர்க்கு எமது மடத்திலேயே வகுப்புகளை நடாத்துவதென தீர்மானித்தோம்.
அதற்கான ஆயத்தங்களை நாம் மேற்கொண்டிருந்த வேளையில் தை மாதம் 20ம் திகதி திடீரென மாகாண கல்விப் பணிப்பாளர் செல்வி T பெரியதம்பி எமது முகாமிற்கு வருகை தந்தார்கள். எமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாயிருந்தது. அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆசிரியர் கூட்டத்தில் வகுப்புகளை ஆரம்பிப்பது என்ற எமது தீர்மானத்தை முன் வைத்தோம். அவர் மிகவும் சந்தோசமடைந்தார். நாமாக எடுத்த இந்த முடிவினைப் பாராட்டினார். இது
தொடர்ந்து பொங்கல் விழா வந்தது. ஒன்று கூடலும் நிகழ்ந்தது.

Page 31
விடயமாக நீண்ட நேரம் ஆராய்ந்த பின்னர் இரு முகாம்களிலுள்ள மாணவர் நன்மை கருதியும், பாதுகாப்பு கருதியும் புனித சாள்ஸ் மகாவித்தியாலயத்தில் பாடசாலையை ஆரம்பியது என முடிவெடுக்கப்பட்டது. அதற்கான பூர்வாங்க ஏற்பாட்டினை மேற்கொள்ளும் வண்ணம் அதிபர் திரு N.J. விஜயரட்ணம் அவர்களைப் பணித்ததுடன் யாழ் புனித சாள்ஸ் மகாவித்தியால யத்தின் அசையும் சொத்துகளின் விபரப் பட்டியலைத் தயாரித்து கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டார். பாடசாலையின் நிர்வாகக் கட்டமைப்பிற்கான இடமாற்ற உத்தரவினை உடன் அனுப்பி வைப்பதாக அவர் கூறினார். தொடர்ந்து பெற்றோர் பிரதிநிதிகளுடன் உரையாடி மாணவர்களின் தேவைகளை கேட்டறிந்து கொண்டார்.
21.01.1996ல் மாகாணக் கல்விப் பணிப்பாளர் செல்வி T பெரியதம்பி அவர்கள் மீண்டும் திருக்குடும்ப கன்னியர் மடத்திற்கு வருகைதந்து ஆசிரியர் கூட்டத்திற்கு தலைமைதாங்கினார். அப்போது
(1) படிவம் JRIT/01/96 ஆசிரியர்களால் பூர்த்தி செய்யபட்டு மாகாணக்
கல்விப் பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டது. (2) பாடசாலை காரியாலய தேவைகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. (3) மாணவர்களின் தேவைகள் ஆராயப்பட்டன. பாடங்களின் தேவை கருதி
தொண்டர் ஆசிரியர் சேவை அவசியம் என வலியுறுத்தப்பட்டது. (4) கணித, விஞ்ஞான ஆசிரியர்கள் ஆண்டு 10, 1ற்கு தேவை என்பது
சுட்டிக்காட்டப்பட்டது. (5) ஆசிரியர்களை அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்
படுமென மாகாணக்கல்விப் பணிப்பாளரால் அறிவிக்கப்பட்டது.
26.01.96ல் வடமாகாணப் பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்திற்கு சென்று திரு விஜயரட்ணம் அவர்களால் புனித சாள்ஸ் மகாவித்தியாலயத்தில் வகுப்புகளை ஆரம்பிப்பதற்கான வேலைகளை மேற்கொள்வதற்கு அனுமதி கோரப்பட்டது. அதற்கமைய 16T/104-96/01/26 பக்கத்தில் முற்பகல் 11.30 மணிக்கு 28048 என்ற இலக்கம் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தரால் அவரது வாக்கு மூலம் பதியப்பட்டது.
31.0196ல் சிவில் நிர்வாக இணைப்பாளர் பிரிகேடியர் சரத் பெரேரா அவர்கள் சமுகம் கொடுத்து பாடசாலையை நாளை (01.02.98) ஆரம்பிக்கும்படி கேட்டுக்கொண்டார். இராணுவத்தினரால் பாடசாலையும் அதன் சுற்றுப்புறமும் துப்பரவு செய்யப்பட்டது.
01.02.96ல் யாழ் புனித சாள்ஸ் மகா வித்தியாலயத்தில் இறை வணக்கத்துடன் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.
04.02.96ல் பாடசாலை வகுப்பறைகள், தளபாடங்கள் இராணுவத்தின் உதவியுடன் சிரமதானம் மூலம் கழுவி சுத்தப்படுத்தப்பட்டது.
05.02.96ல் யாழ் மரியன்னை தேவாலயத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்,

பழையமாணவர் மற்றும் நலன்விரும்பிகள் ஒன்று சேர்ந்து காலை 10.00 மணிக்கு நன்றித்திருப்பலி ஒப்புக்கொடுத்தனர். திரு சின்னப்பு பிலிப்னேரி, செல்வி இவாஞ்சலன் தயாளினி தனரத்தினம் ஆகியோர் முறையே கணிதம், விஞ்ஞானம் ஆகிய
பாடங்களை கற்பிக்க அனுமதிக்கப்பட்டனர்.
07.02.96ல் மாகாணக் கல்விப் பணிப்பாளர் செல்வி தி, பெரியதம்பி அவர்கள் பாடசாலைக்கு சமூகம் தந்து 1996.02.03 திகதியிடப்பட்டதும் வகி/மா/மாகதி/ஆநி/ஏ/59 இலக்கம் கொண்டதுமான தற்காலிக இணைப்புக் கடிதங்களை ஆசிரியர்களுக்கு வழங்கினார். இக்கடிதத்திற்கு அமைவாக,
1) திருமதி M.R.C. கொன்ஸ்ரன்ரைன் அவர்கள் யா/புனித சாள்ஸ்
மகாவித்தியாலய அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்
2) பின்வரும் ஆசிரியர்கள் அவர்களின் பெயர்களுக்கு எதிரே காட்டப்பட்டுள்ள பாடசாலைகளிலிருந்து விடுவிக்கப்பட்டு இன்று தொடக்கம் யா/புனித சாள்ஸ் ம.வி. தற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ளார்கள்.
1. அருட் சகோ. M. ஞானப்பிரகாசம் உப அதிபர் - யாழ்
திருக்குடும்ப கன்னியர் மடம்
2. செல்வி M.G.T.S. கிறிஸ்ரியன் - யாழ் வேம்படி மகளிர்
உயர்தரப் பாடசாலை
3. செல்வி S. சவுந்தரநாயகம் - யாழ் வீமன்காமம் ம.வி.
தெல்லிப்பளை,
வடக்குக் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரின் NEP/PDE/CCO/ 03/1996.02.07 திகதியிடப்பட்ட கடிதத்திற்கு அமைய யா/ஊர்காவற்துறை றோக, ஆண்கள் பாடசாலை அதிபர் திரு N. விஜயரட்ணம் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு வலிகாமம் பிரதேச பிரதி கல்விப் பணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டார். இப்பாடசாலையின் நிர்வாகப் பொறுப்பை அன்று முதல் உத்தியோக பூர்வமாக திருமதி, M.R.C. கொன்ஸரண்ரைன் ஆகிய நான் N.J. விஜயரட்ணத்திடமிருந்து பொறுப்பேற்றுக் கொண்டேன்.
07.02.96ல் யாழ்/ சுண்டுக்குளி மகளிர் பாடசாலையில் தொழில்நுட்பப் பாட ஆசிரியையாக கடமை புரிந்த செல்வி, றொட்றிகஸ் அவர்களையும், யா/ சம்பத்திரிசியார் கல்லூரியில் ஆரம்பப்பாடசாலை ஆசிரியையாக கடமைபுரிந்த திருமதி. இராமக்கிருஷ்ணன் அவர்களையும், DELIC பயிலுனர் திருமதி J.PL மரியதாஸ் அவர்களையும் பாடசாலையின் தேவை கருதி சேவை அடிப்படையில் பணிபுரிய தாமாக முன்வந்ததையடுத்து அவர்கள் மூவரையும் பாடசாலைச் சேவையில் இணைத்துக் கொண்டேன்.
09.02.96ல் முன்பு யா/ பளை மத்திய கல்லூரியில் பணிபுரிந்நத வர்த்தக பட்டதாரியான செல்வி, ஞானேஸ்வரி சின்னத்தம்பி உதவி ஆசிரியையாக அன்று
கடமையேற்றுக்கொண்டார்.


Page 32
12.02.96ல் யுத்தம் காரணமாக 1995ம் ஆண்டு நடைபெறாது போன ஆண்டு 5ற்கான புலமைப் பரீசில் பரீட்சை, ஆண்டு 9 ற்கான தொழில்நுட்ப சான்றிதழ் பரீட்சை, க.பொ.த சாதாரண தர பரீட்சை ஆகியவற்றிற்கான தற்போதைய மாணவர்களின் விண்ணப்பப்படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு கொழும்பிலுள்ள பரிட்சை ஆணையாளருக்கு இராணுவ அலுவலர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
15.02.96 இலங்கை வானொலியில் 14.02.96 இரவு ஒலிபரப்பில் கல்வி அமைச்சினால் மறு அறிவித்தல் வரை நாடு முழுவதும் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன என்ற அறிவித்தலைத் தொடர்ந்து மாணவர் வரவின்மையால் பாடசாலை மூடப்பட்டது.
16.02.96 இல் ქ|6)წერს நிர்வாகப் பொறுப்பாளர் பிரிகேடியர் சரத் பெரேரா அவர்கள் பாடசாலைக்கு வருகை தந்து நாட்டின் இதர பகுதிகளில் பாதுகாப்புக் காரணமாகவே LITLEIT60556. மூடப்பட்டுள்ளதாகவும் இங்கு பாடசாலையை 19.02.96 திங்கள் முதல் வழமைபோல் நடாத்தும்படியும் கேட்டுக் கொண்டார். இவ் விடயம் பற்றி கல்வி
அமைச்சுக்குத் தாம் தகவல்  ைகொடுப்பதாகவும் கூறினார். பாடசாலை
விடயங்கள் சம்பந்தமாக தேவைப்படும்போது யாழ் சுண்டுக்குளியிலுள்ள இராணுவப் பொறுப்பதிகாரி பிரிகேடியர் வணிகசூரியா அவர்களுடன் தொடர்புகொள்ளும் வண்ணம் கேட்டுக் கொண்டார்.
19.02.96 இல் பாடசாலை மீண்டும் வழமைபோல் ஆரம்பிக்கப்பட்டது. பாடசாலை மாணவரின் சீருடைத் தேவை விபரங்கள் மாகாண கல்விப் பணிப்பாளருக்கு ஏழு (7) பிரதிகள் பதிவுத் தபால் மூலம் (பதிவு எண் 5028) அனுப்பி வைக்கப்பட்டது.
பாடசாலையின் அறைக் கதவுகள் மற்றும் முன் வாசல் கதவு ஆகியவற்றின் பூட்டுக்கள் அனைத்தும் ஏற்கனவே உடைக்கப்பட்டிருந்தன. இவற்றிற்குப் புதிய பூட்டுக்கள் போட்டுத் தரும்படி பொலிஸ் அலுவலர் திரு தர்ம்சேனாவிடம் கோரப்பட்டது.
1998ம் ஆண்டு முதலாம் தவணைக்கான பாடநேர அட்டவணை தயாரித்து வேலைகள் பகிரப்பட்டது.
20.02.96 இல் பொலிஸ் அலுவலரால் பாடசாலையின் கதவுகளுக்குப் புதிய
 
 
 
 
 
 
 
 
 

பூட்டுக்கள் பொருத்தபட்டன. ஆமைப்பூட்டு கிடைக்காததால் வெளி வாசல் கதவுக்கு பூட்டுப் போடப்படவில்லை.
21.02.96 பகல் 12 மணியளவில் சிவில் நிர்வாகப் பொறுப்பதிகாரி பிரிகேடியர் சரத் பெரேரா அவர்கள் பாடசாலைக்கு வருகை தந்து வெண்தாமரை இயக்கம் (Sudu Nelum Movement) பாடசாலையின் மிகச் சிறந்த ஜந்து மாணவர்களுக்குப் புலமைப் பரிசில்கள் வழங்கவிருப்பதாகக் கூறி நாளைய தினம் ஐந்து மாணவரைத் தெரிவு செய்து தரும்வண்ணம் கேட்டுக்கொண்டனர். மாணவர்க்கு பாடசாலை நாட்களில் பால் வழங்குமாறு விண்ணப்பித்ததையடுத்து தினமும் இரண்டு பைக்கற் பால்மாவும் தேவையான சீனியும் வழங்குவதற்கு தாம் ஒழுங்கு செய்வதாக பிரிகேடியர் சரத் பெரேரா உறுதியளித்தார். அத்துடன் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு N.J.விஜயரட்ணம் அவர்களை 27.02.96ல் அலுவலக விடயமாக கொழும்பு கல்வி அமைச்சுக்கு செல்வதற்கு ஆயத்தமாய் இருக்கும் வண்ணம் கேட்டுக் கொண்டார்.
22.02.96 இல் வெண்தாமரை இயக்கம் புலமைப்பரிசிலுக்கு தகுதியான ஐந்து மாணவர்களின் பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டு வெண்தாமரை இயக்க செயலாளருக்கு சிவில் அதிகாரி மேஜர் ஜெனரல் பாகொட ஊடாக இராணுவ அலுவலர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
இராணுவத்தினர் மூலம் எதிர்வரும் 24.02.96 சனிக்கிழமை ஆசிரியர் தெரிவுப் பரீட்சை இங்கு நடைபெறும் என்ற தகவல் தரப்பட்டது. உடன் அறிவித்தல் போடப்பட்டது.
24.02.96 இல் இராணுவத்தின் பாதுகாப்புடன் மேற்படி பரீட்சை நடாத்தப் பட்டது. பரீட்சை மேற்பார்வையாளராக கடமையாற்றினேன்.
26.02.96 இல் உதவி ஆசிரியை செல்வி S. சவுந்தரநாயகம் அவர்கள் சேவையிலிருந்து ஒய்வு பெற்றதையடுத்து செல்வி யஸ்மின் அலஸ், செல்வி கிறிசாந்தி தர்மலிங்கம் ஆகிய இருவரையும் தொண்டர் ஆசிரியராக பணியாற்ற அனுமதித்தேன்.
2003.96 இல் செல்வி சிவமனோகரி செல்லத்துரை என்பவரை தொண்டர் ஆசிரியராக சேவையாற்ற நியமித்தேன்.
213.96 இல் யா/ ஆவரங்கால் மகாஜன வித்தியாலய கணித பாட உதவி ஆசிரியர் திரு. க. உதயநாதன் 19396 திகதி எழுதிய கடிதம் காலை கிடைக்கப் பெற்றது. அவர் பாடசாலைக்கு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.
உதவி ஆசிரியை செல்வி சகுந்தலா சவுந்தரநாயகம் அவர்கள் 19396 இருந்து இப் பாடசாலையிலிருந்து ஒய்வு பெற்றுள்ளார் என்பதை வலி. பிரதி கல்விப் பணிப்பாளருக்கு அறிவித்துள்ளேன்.
25.03.96 இல் திருமதி G. சண்முகதாஸ் அவர்கள் வடகிழக்கு மாகாண கல்விப்
~~് 36

Page 33
பணிப்பாளருக்கு சமர்ப்பித்த விண்ணப்பத்தின் பெயரில் பிரதி கல்விப்பணிப்பாளரின் வேண்டுகோளுக்கினங்க தற்காலிகமாக கடமையேற்கும்படி பணிக்கப்பட்டுள்ளார். இவரை எனது பாடசாலையில் அனுமதித்துள்ளேன்.
29.03.96 மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் மேலதிக செயலாளர், யாழ், சிவில் அலுவலகப் பொறுப்பாளர் பிரிகேடியர் சரத்பெரேரா மூலம் விடுத்த அழைப்பின் பேரில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களான செல்வி குயின் தோமஸ், செல்வி எட்னா மரியதாஸ், செல்வி சபீனா நயிமுதீன், செல்வன் ககந்தசாமி, செல்வன் கமரியநாயகம் ஆகியோரை ஆசிரியை திரு J.P.L. மரியதாஸ் துணையுடன் கொழும்பில் நடைபெறும் வெண்தாமரை இயக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அழைத்துச் சென்றேன். பாடசாலைப் பொறுப்பை பிரதி அதிபர் அருட் சகோதரி மெற்றில்டா அவர்களிடம் முறைப்படி ஒப்படைத்துவிட்டு பகல் 30 மணிக்கு இராணுவத்தினரின் பாதுகாப்புடன் பலாலி விமான நிலையம் சன்றோம். எமது பாதுகாப்புக்காக உதவிப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் புகாரி அ வர்களை அனுப்பி வைத்தனர். கொழும்பில் சுகததாச விளையாட்டரங்கிற்கு அருகாமையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கவைக்கப்பட்டோம்.
30.3.96 கொழும்பில் சுகததாக வின் வாயாட்டரங்கில் நடைபெற்ற வெ'ைதாமரை இயக்கப் புலமைப்பரிசில் வழங்கும் சிறப்பு நிகழ்வில் மேன்மை
தங்கிய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயகா அவர்களுடன் எனது LTLFT666) LDIT600T6 it இருவரும் இணைந்து மங்கள விளக்கேற்றினர், ஜனாதிபதி அவர்களால்
மாணவர்களுக்கும் புலமைப்பரிசில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. செல்வன் கமரியநாயகம், செல்வி சபீனா நயிமுதீன் மங்கள விளக்கேற்றியவர்கள்.
31.03.96 மாணவர்க்கு கொழும்பு நகரம் (மிருகக்காட்சிச்சாலை உட்பட) சுற்றிக் காண்பிக்கப்பட்டது. உயர்ந்த கட்டடங்களையும், செறிவான மக்கள் 溪、 தொகையும், முண்டியடித்துச் செல்லும் பலவகையான வாகனங்களையும் கண்ட மாணவர்கள் பிரமித்துப் போயினர். மாணவர்களுக்கு மொழி ஒரு தடையாக இருந்தபோதும் மற்றய மாணவர்கள் காட்டிய அக்கறையிலும், உபசரிப்பிலும், அன்பிலும் மனம் மகிழ்ந்தனர்.
01.04.96 மாலை தபால் அமைச்சர் திரு. மங்கள சமரவீர அவர்கள் எமக்கு தேனீர் விருந்தளித்தார். புலமைப்பரிசில்கள் பெற்ற மற்றைய மாணவரும் வருகை
 
 

தந்திருந்தனர். மாணவர்களிற்கிடையே நடாத்தப்பட்ட சங்கீத கதிரைப்போட்டியில் எமது மாணவர்களில் 4 பேர் வெற்றியீட்டினர். அத்துடன் 1ம் 2ம், 3ம் இடங்களை எமது மாணவர் தட்டிக்கொண்டது குறிப்பிடத்தக்கது. எமது மாணவர்கள் அனைவர்க்கும் பல்வேறு பரிசில் பொருட்கள் வழங்கப்பட்டன. (வானொலி, உடைகள்) 02.04.96 காலையில் மேன்மை தங்கிய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயகா குமாரதுங்க அவர்கள் தமது வதிவிடமான அலரிமாளிகைக்கு எம்மை அழைத்து விசேட குளிர்பான விருந்தளித்தார். அவருடன் அருகருகே இருந்து உரையாடிய போது பல்வேறு விடையங்களை மனம் திறந்து பேசினார். யுத்ததின் காரணமாக மக்கள் அடைந்த துயரங்கள் கொடியது. அது போதும் எனக்கூறி, இடம் பெயர்ந்த மக்கள் மீண்டும் தங்கள் சொந்த இடங்களில் வந்து குடியேறுவதற்கு வழி செய்யுமாறும், சமாதானம் ஏற்படுவதற்கு வகை செய்யுமாறும் கேட்டுக் கொண்டேன். அத்துடன் அர்ப்பணத்துடன் எனது பாடசாலையில் சேவையாற்றும் தொண்டர் ஆசிரியர்களைப் பற்றி கூறியபோது அவர் மிகவும் பாராட்டி அவர்களுக்குத் தம்மால் முடிந்த உதவி வழங்குவதாக கூறினார். இந்தச் சந்தர்ப்பத்தில் அவரது இரு பிள்ளைகளும் எம்முடன இருந்தனர். எமது மாணவர்களை அக்கறையுடன் விசாரித்த பின்னர் ஜனாதிபதி அவர்கள் நானும் எனது தந்தையை இழந்திருக்கிறேன், எனது கணவனை இழந்திருக்கிறேன் அதனால் உங்கள் பிரச்சினைகளை என்னால் நன்கு உணரமுடிகிறது. விரைவில் சமாதானம் ஏற்பட வழி செய்வேன், என்றார். அவரது கண்கள் பனித்தன. என் நெஞ்சம் நெகிழ்ந்தது. மாலையில் நாமனைவரும் இரத்மலானையிலிருந்து விமானமூலம் பலாலி சென்றோம். பாடசாலையை மீண்டும் நான் பொறுப்பேற்றுக் கொண்டேன்.
01.04.96 இல் அருட் சகோதரி மேரி பெலிசிற்றா அவர்கள் வட கிழக்கு மாகாணக் கல்வி பணியாளர்களுக்கு விண்ணப்பித்ததின்பேரில் பிரதிக் கல்விப் பணியாளரின் வேண்டுகோளுக்கிணங்க 6TLD5Ι பாடசாலையில் கடமையேற்கும்படி பணிக்கப்பட்டுள்ளார். பிரதி அதிபர் அருட் சகோ மெற்றில்டா அவர்கள் அனுமதி வழங்கியிருந்தார்.
04.04.96 அதிபர் திருமதி M.R.C. கொன்ஸ்ரன்ரைன் தலைமையில் பாடசாலையின் பரிசளிப்பு விழா நடைபெற்றது. திருமறைக் கலாமன்ற பொதுச் செயலாளர் திரு. VJ கொன்சன்ரைன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். ஒவ்வொரு வகுப்பிலும் சிறந்த மாணவர்களுக்கு அதிபர் பரிசில்கள் வழங்கினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. பிரதி அதிபர் ஞா மெற்றில்டா அவர்களால் நன்றியுரை வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் மாணவர்களின் முன்னேற்ற அறிக்கை வழங்கப்பட்டதுடன் முதலாம் தவணைக்கான LT 36ö)6) விடுமுறை விடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
<3)

Page 34
10.04.96 சென் ஜோண்ஸ் கல்லுரியில் நடைபெற்ற புத்தாண்டு நிகழ்ச்சியில் அழைப்பின்பேரில் கலந்து கொண்டேன்.
12.04.96 யாழ் மத்திய கல்லுரி மைதானத்தில் 4SLLI இராணுவப் பிரிவினர் நடித்திய புத்தாண்டு நிகழ்ச்சியில் அழைப்பின் பேரில் கலந்து கொண்டேன்.
14.04.96 யாழ் பிரதான வீதியிலுள்ள மக்கள் வங்கி மீள் ஆரம்பம் செய்து வைக்கப்பட்டது. வங்கி ஊழியர் திரு. மல்லசேகர, திரு. விமலரட்ன ஆகியோர் முன்னின்று நடத்தினர்.
22.04.96 இரண்டாம் தவணைக்காக பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. காலை 9.30 மணியளவில் இலங்கை வங்கியின் முதல் தர கிளையின் மீள் ஆரம்ப விழாவில் அழைப்பின் பேரில் கலந்துகொண்டேன.
25.04.96 இடம் பெயர்ந்து சென்று மீண்டும் வந்துள்ள யாழ் கல்வித் திணைக்கள ஆசிரியர்கள் சிலர் எனது அலுவலகத்திற்கு சமுகமளித்து தமது வரவினைப் பதிவு செய்து கொண்டனர்.
25.04.96 இன்று முதல் இடம் பெயர்ந்து சென்று மீண்டுவரும் ஆசிரியர்களை வலயம் ஒன்றிலிருக்கும் கல்விக் கந்தோருக்குச் சென்று அவர்களது பதிவினை மேற்கொள்ளும்படியும், மாணவர்களை இங்கு பதிவுசெய்து வகுப்புகளில் சேர்த்துக்கொள்ளும்படியும், மேலும் இருக்கின்ற LIITL புத்தகங்களை முடிந்தவரையில் மாணவர்களுக்கு வழங்கும்படியும் வலி பிரதிக் கல்விப் பணிப்பாளர் கேட்டுக்கொண்டார்.
06.05.96 இன்று காலை யாழ். வலயம் 1 இன் கல்விப் பணிப்பாளர் திரு. இ. சிவானந்தன் அவர்கள் எனது அலுவலகத்திற்கு வருகைதந்து பாடசாலை பற்றிய விபரங்களை ஆர்வத்துடன் கேட்டறிந்தார்.
திருமதி சண்முகரட்ணம் (A.D.E. மனையியல்) அவர்கள் பாடசாலைக்கு வருகைதந்து பாடசாலை பற்றிய விபரங்களை ஆர்வத்துடன் கேட்டறிந்து தனது பாராட்டுதல்களை என்னிடம் தெரிவித்தார். -
07.05.96 கோப்பாய் அரசினர் பயிற்சிக் கலாசாலை அதிபர் திருமதி S. இராமநாதன் அவர்களும், விரிவுரையாளர் செல்வி வேலுப்பிள்ளை அவர்களும் பாடசாலைக்கு வருகைதந்து மிகவும் அசாதாரணமான ஒரு சூழுலில் இணைப்புப் பாடசாலை அதிபராக நான் கடமையாற்றுவது கண்டு தமது மன மகிழ்ச்சியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்தனர். தமது வரவினைப் பதிவுசெய்துகொண்ட
<3)
 
 

உடன் ஆசிரியரில் ஒரு சிலர் தமது கடமையை மேற்கொள்வதில் பின்னடிப்பு
செய்தனர்.
08.05.96 இன்று காலை 11 மணியளவில் சிவில் அலுவலகத்தைச் சேர்ந்த பிரிகேடியர் சரத் பெரேரா அவர்கள் பாடசாலை நிலவரங்களை என்னிடம் கேட்டறிந்ததுடன் புனித சாள்ஸ் ஆசிரியர்களுடனும் கலந்துரையாடி, பல தெளிவுகளை ஏற்படுத்தி, மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் அனைவரும் தமது கடமைகளை உடன் பொறுப்பேற்று பாடசாலையை சிறப்புற நடத்துவதற்கு ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொண்டார்.
வலி / பிரதிக் கல்விப் பணப்பாளர் திரு N.J. விஜயரட்ணம் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க பாடசாலையின் நிர்வாகப் பொறுப்பினை இப் பாடசாலையில் இடம்பெயர்வுக்கு முன் அதிபராயிருந்த திருமதி PF சின்னத்துரை அவர்களிடம் ஒப்படைத்தேன்.
முன்பு ஒருபோதும் அனுபவித்திராத ஒரு புதிய சூழலில், மாபெரும் இடம்பெயர்வு நடைபெற்ற வேளையில், யாழ்நகரில் இயங்கிய ஒரேயொரு பாடசாலையில், யாழ் குடாநாட்டின் 24 பாடசாலைகளை உள்ளடக்கிய இணைப்புப் பாடசாலையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அதிபராக கல்விச் சேவையாற்றிய அனுபவம் மிகவும் வித்தியாசமாக இருந்தது.
மாணவர்களின் பெற்றோர் மிகவும் அசாதாரணமான சூழலில் தங்கள் பிள்ளைகளின் கல்வியில் காட்டிய அக்கறை சிறப்புக்குரியது. சில பெற்றோர் தமது பிள்ளைகளைத் தொலைவிடங்களிலிருந்து கூட்டிவருவதுமல்லாமல் பாடசாலையிலேயே தங்கி பாடசாலை முடிந்ததும் தமது பிள்ளைகளை பாதுகாப்புடன் அழைத்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
இத்தகையதொரு கல்விச் சேவையாற்றும் பாக்கியத்தை எனக்கு வழங்கிய இறைவனுக்கு என் முதல் நன்றி. என்மீது பெரும் நம்பிக்கைகொண்டு பணியாற்றும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்த மாகாணக் கல்விப் பணிப்பாளர் செல்வி T பெரியதம்பி அவர்களுக்கும், பாடசாலையைச் செம்மையுற் நடத்துவதற்குத் துணைபுரிந்த வலிகாகம் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு. N.J. விஜயரட்ணம் அவர்களுக்கும், ஒரே சமூகமாக என்னுடன் சிறப்புற இணைந்து செயற்பட்ட இணை ஆசிரியர்களுக்கும், அர்ப்பணத்துடன் சேவையாற்றிய தொண்டர் ஆசிரியர்களுக்கும் மற்றும் பல்வேறு வழிகளில் துணைபுரிந்த நல் இதயங்கள் அனைவருக்கும் என் நெஞ்சம் நெகிழ்ந்த நன்றிகள்.
இப் பிரதேசத்தில் இடம்பெயர்ந்து சென்ற மக்கள் மீண்டும் வந்து தமது இயல்பு வாழ்க்கையை மீள ஆரம்பிப்பதற்கு ஏதோ ஒரு வகையில் இறைவன் எம்மையும் ஒரு கருவியாகப் பயன்படுத்தியுள்ளார் என்பதனை வரலாறு என்றும் நினைவுகொள்ளும் என்றே நம்புகின்றேன்.
凉冷、冷

Page 35
1.
புனித சாள்ஸ் மகா வித்தியாலயம் 66600T disas LL LITLGFIT60)6Outao ஆசிரியராக பணிபுரிந்தோர் விபரம். (01.02.1996 முதல் 08.05.96 வரை)
திருமதி M.R. C கொன்ஸ்ரன்ரைன்
அதிபர்
அருட் சகோதரி மெற்றில்டா ஞானப்பிரகாசம்
பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியை பிரதி அதிபர் - யா/ திருக்குடும்ப கன்னியர் மடம். செல்வி சகுந்தலா சவுந்தரநாயகம்
B.A., Dip. in Ed., M.A. in Ed. உதவி ஆசிரியை - யா/ வீமன்காமம் ம. வி. தெல்லிப்பளை, செல்வி M.F.T. செல்வராணி கிறிஸ்ரியன்
பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியை உதவி ஆசிரியை - யாழ்/ வேம்படி மகளிர் பாடசாலை, செல்வி ஞானேஸ்வரி சின்னத்தம்பி
B.A. (Com) உதவி ஆசிரியை - கிளி பளை மத்திய கல்லூரி. திருமதி கிறிஸ்ரியன் யோகமணி இராமகிருஷ்ணன்
பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியை (பலாலி) உதவி ஆசிரியை - யா/புனித சம்பத்திரிசியார் கல்லூரி செல்வி கில்டா றொட்றிகஸ்
மனைப் பொருளியல் டிப்ளோமா
உதவி ஆசிரியை - யா/ சுண்டுக்குளி மகளிர் கல்லூரி
48
 

7. திருமதி PL, மரியதாஸ்
DELIC Trained தொண்டர் ஆசிரியை
திருமதி குணமணிதேவி ஷண்முகதாஸ்
8.
B.A. (Peradenia) உதவி ஆசிரியை - யா/ வைத்தீஸ்வரா கல்லூரி
9. அருள் ககோதரி மேரி பெலிசிற்றா
பயிற்றப்பட்ட ஆசிரியை உதவி ஆசிரியை
10. திரு N. அரியரட்ணம்
B.Sc. (தொண்டர் ஆசிரியர்) செல்வி இவாஞ்சலின் தயாளினி தனரத்தினம்
(தொண்டர் ஆசிரியை)
12. திரு. சின்னப்பு பிலிப்பு கோரி
இளைப்பாறிய பயிற்றப்பட்ட கணித ஆசிரியர் (தொ.ஆ)
翡
11.
(தொண்டர் ஆசிரியை)
14. செல்வி கிரிசாந்தி தர்மலிங்கம்
(தொண்டர் ஆசிரியை)
LDITGOTof algorgofessoa5:
யாழ் குடாநாட்டின் 24 பாடசாலைகளைச் சேர்ந்த 94 மாணவர்கள்.
வகுப்புக்கள்:
ஆண்டு 1 முதல் 13 வரை
ーへ"イ

Page 36
/36
யா/ புனித சாள்ஸ் மகா வித்தியாலயம்
பாடசாலைக் கீதம்
பல்லவி புனித சாள்ஸ்கலா நற்சாலை கலை வாழும் பொற்சாலை
அநுபல்லவி
இயல் இசை நாடகம் எண் எழுத்தின்பம் இலங்கும் செந்தமிழ்ச் சோலை
சரணம்
மரகதத் தீவின் யாழுரில் - மிக மகத்துவ மோங்கும் கலை வீட்டில் உண்மை ஒழுக்க நெறியுடனே- எங்கள் உடல் உள பண்புகள் ஒங்கிடவே தாயகம் தாங்கும் பிரசைகளாகத் தலைநிமிர்ந் தென்றும் வாழ்த்திடவே அழியாத கல்வி நிலையான செல்வம்
3 6 3. 6 2 அதை நாளும் மனமார பெறுவோமே
(புனித)
(புனித)
முயற்சியினால் வரும் திரு' - வென்னும் - பொது
மறை மணி வாக்கினை மறவோமே தூய்மை சாந்தம் ஞானம் எழில் பொறை வாய்மையும் உடைய புறா வெனவே எழுத்தறிவிப்போன் இறையவன் என்றே இதயத்தில் ஏற்றிப் போற்றிடுவோம் பரிசுத்த ஆவி நிறைந்த கலைக் கோவில் பரிவோடு மனமார வாழ்த்துவமே
ஆக்கம்:
(புனித)
அமுதகவி அமரர் யாழ். ஜெயம்
(ம. விக்ரர்)
《། ཕྱི་མ་《
 


Page 37


Page 38

|PA,露|-|w.y sae
·