கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நடனம்: வினா விடை

Page 1


Page 2

Gä*
* * 蠱
و الاثار الا
* பரதக் கலை தொடர்பான விபரங்கள், சிறு குறிப்புகள், பரிடசைகளுக்கான வினா - விடைகள் அனைத்தும் கொண்ட புதிய நூல்.
* வட இலங்கை சங்கீத சபைப் பரீடசைகளுக்கும்,
| J. GUIT. த சாதாரணதர, உயர்தரப் பரீடசைகளுக்கும்.
தோற்றுவோருக்குப் பயன் தரும் வகையில் ஆக்கப் பெற்றது.
* பரதக் கலை பயில்வோருக்குப் பயன் தரும் வழிகாடடி
99_ఇA_A (6_N_A لي ول . V J செல்வி 'நிலா
檗,、 དེ་ 121』。
விற்பனை: v/ கொழும்பு யாழ்ப்பாணம்: பூபாலசிங்கம் புத்தகசாலை, பூரீ சுப்பிரமணிய புத்தகசாலை,X
340, செட்டியார் தெரு, 235, காங்கேசன்துறை வீதி,
கொழும்பு - 11 யாழ்ப்பாணம். V
N' C/ ဓါဓရု@); 40/=
أكس

Page 3
சண்டிலிப்பாய், தெல்லிப்பழைக் கல்விக் கோட்டங்களின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் இலக்கிய வித்தகர் த. துரைசிங்கம் B.A. (Hons), Dip.in Ed. வழங்கிய
அணிந்துரை
ஆய கலைகள் அறுபத்துநான்கினும் மிக உயர்ந்த கலை பரதக் கலையாகும். இக்கலையானது பலவித கலைகளைத் தன்னகத்தே அல்லது தனக்குத் துணையாகப்
பெற்றுள்ளது.
நாடடிய இலக்கணமானது பிரம தேவனால் வரையறுக்கப்படடது என்பர். நான்முகன் இருக்கு வேதத்திலிருந்துவாக்கியமும், யசுர்வேதத்திலிருந்து அபிநயமும், சாம வேதத்திலிருந்து கானம் என்னும் பாடலும், அதர்வண வேதத்திலிருந்து ரச பாவங்களும் ஆகிய நான்கையும் எடுத்து ஒன்றாக்கி உலகின் மேன்மை மிக்க கலையாக நாடடியக் கலையின் இலக்கணத்தை வகுத்தார். தாளம் தவறாத நாடடியக் கலையில் மனித வாழ்வுமறுமலர்ச்சிபெறுகிறது. மனக் கிளர்ச்சியடைகிறது. அக்கிளர்ச்சியினால் புதுத்தெம்பு பிறக்கிறது. இக்கலையால் நமதறிவு சொல்ல முடியாததோர் ஆனந்த நிலையை அடைகிறது. அந்த ஆனந்த நிலை நமது செயற்பாடுகளுக்குத் தேவையான உற்சாகத்தையளிக்கிறது.
உள்ளத்தின் எழுச்சியால் உடல் ஆடுகிறது. ஆரம்ப கால கடடங்களில் அந்த ஆட்டம் வெற்று ஆட்டமாக இருந்தது. அதன் வரம்புகள் வகுக்கப்படவில்லை. இன்று ஆடற்கலை மிக மிக வளர்ச்சி பெற்றுள்ளது. இசைக் கலையும் நாடடியக் கலையும் இணைந்து செழித்துள்ளன. பரதக் கலை பயில்வோர்தொகை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.
பெருமைமிகு நடனக் கலை பயில்பவர்களுக்கும், பரீடசைகளுக்குத் தோற்றுவோர்களுக்கும் துணை புரியும் வகையில் வினா-விடை நூல் ஒன்றில்லையே என்கின்ற குறை நீண்ட காலமாக நிலவி வந்தது. இக்குறையினைப் போக்கும் வகையில் ஆடற்கலை வல்லுநரான செல்வி நிலா" இவ் வினா - விடை நூலினை ஆக்கியுள்ளமை பாராடடுக்குரியது. வட இலங்கை சங்கீத சபை நடத்தும் பரீடசைகளுக்கும், க. பொ. த. சாதாரணதர, உயர்தர பரிடசைகளுக்கும் தோற்றுவோருக்கு இந்நூல் பெரிதும் பயன்படுமெனக் கருதுகிறேன். காலத்தின் தேவையறிந்து வெளிவரும் இந்நூலினைப் பரதக் கலை பயில்வோர் நன்கு பயன் படுத்துவரென எதிர்பார்க்கிறேன்.
கோட்டக் கல்வி அலுவலகம், த. துரைசிங்கம்
சண்டிலிப்பாய்,
0l.. 10. 1994.

LĠJbġl: I
பரதம் என்றால் என்ன?
பாவம், ராகம், தாளம் இம்மூன்றின் சங்கமமே பரதம் எனப்படும். ஆடற்கலையின் இரு பெரும் பிரிவுகளும் எவை?
(i) தாண்டவம் (ii) G\fTGíðu JLé இவற்றுக்குப் பொதுவான முக்கிய அங்கங்கள் எவை?
(1) நிருத்தம் (i) நிருத்தியம் (i) அபிநயம்
தாண்டவம்' என்றால் என்ன?
திருக்கைலாயத்தில் சிவபெருமான் முன்னிலையில் எப்போதும் தவம்
3

Page 4
0.
1l.
2.
3.
14.
செய்து செய்துகொண்டு இறைவனின்நாடடியத்தை என்றும் இரசிக்கும் பேறுபெற்ற தண்டு என்ற முனிவரால் வகைப்படுத்தப்பட்ட இறைவனின் நாட்டடியம்தான் தாண்டவம்'. தாண்டவங்கள் எத்தனை?
108
இவற்றில் முக்கியமானவை எவை?
முக்கியமானவை 12. அவையாவன:
1. ஆனந்த தாண்டவம் 2. சந்தியா தாண்டவம் 3. சிருங்கார தாண்டவம் 4. திரிபுர தாண்டவம் 5. ஊர்த்துவ தாண்டவம் 6. முனி தாண்டவம் 7. சம்ஹார தாண்டவம் 8. உக்ர தாண்டவம் 9. பூத தாண்டவம் 10. பிரளய தாண்டவம் 11. புனாங்க தாண்டவம் 12. சுத்த தாண்டவம்
சிவபெருமான் ஆடிய 108 தாண்டவங்களில் அவர் தாமாகவே ஆடியவை எத்தனை?
நாற்பத்தெடடு
பார்வதியுடன் இணைந்து ஆடியவை எத்தனை?
முப்பத்தாறு.
திருமாலுடன் இணைந்து ஆடியவை எத்தனை?
ஒன்பது.
முருகனுக்காக ஆடிக்காட்டியவை எத்தனை?
மூன்று.
பிற தேவர்களுக்காக ஆடியவை எத்தனை?
பன்னிரண்டு.
லாஸ்யம் என்பது என்ன? N
பெண்கள் ஆடக்கூடிய நளினமான ஆடடம். அபிநயத்துக்கு முக்கியத்துவம் அளிப்பது.
நாட்டியம் என்பதன் பொருள் என்ன?
மேடையில் ஒருகதையை ஆடல், பாடல் ஆகியவற்றுடன் அபிநயித்தல்,
நாடடியம் என்பது நாடகமே. தற்போது இதனை நாடடிய நாடகம் என்று வழங்குகின்றனர்.
டற் கலைக்கப் பொதுவான பெயர் என்ன? 35( D-اوتاکہ நடனம்.

5.
16.
17.
8.
19.
20.
2.
22.
51(55g, is (Pure Dance) 6T6örprisi) 6T6öT60T
தாள லயத்திற்கேற்ப அதிகமான உடலசைவுகள், அபிநயங்கள் ஆகியவை இல்லாது ஆடப்படுவது. வாத்திய இசையோ, வாய்ப்பாட்டடோ இருக்காது.
நிருத்தியம் என்றால் என்ன?
இசை பின்னணியில் ஒலிக்க, உணர்வுகளையும், பாவங்களையும், கைகால் அசைவுகள், கண், கழுத்து, அசைவுகள் மூலம் வெளிப்படுத்தி ஆடுதல். இதற்குப் பாடல்கள் கிடையா. அதனால் அவற்றுக்கான அபிநயமும் கிடையாது.
அபிநயம் என்பதன் பொருள் ତtଶୋtତ୪r?
'ஒரு நாடகம் அல்லது நிகழ்ச்சியை (பார்வையாளர்களுக்கு) எடுத்துச்
செல்லுதல் அல்லது சொல்லுதல் என்ற பொருள்படும். (Representing or Carrying a Play towards the Spectators) 5 grtur &StJ isoflá) or GT உணர்வைப் பிரதிபலித்தல் என்றும் சொல்லலாம். ரஸா நுபவங்களையும் பாவத்தையும் அசைவுகள் மூலம் வெளிப்படுத்தல் என்றும் கூறலாம்.
அபிநயங்கள் எத்தனை வகை? அவை எவை?
நான்கு வகை. 1. ஆங்கிக அபிநயம் 2. வாசிக அபிநயம்
3. ஆஹார்ய அபிநயம் 4. சாத்விக அபிநயம்.
ஆங்கிக அபிநயம் என்றால் என்ன?
உடல் அசைவுகள், நிற்றல், நடத்தல், துள்ளுதல், தாண்டிக் குதித்தல், தலையசைவு, கண்ணசைவு, கழுத்தசைவு, கை அசைவுகள் (ஹஸ்தம் முத்திரைகள்), கால் அசைவுகள் (அடவுகள்) ஆதியன ஆங்கிக அபிநயமாகும்.
வாசிக அபிநயம் என்றால் என்ன?
வாய்ப் பேச்சு, வசனம், ஆகியவற்றால் ரஸம் (சுவை), பாவம் ஆகியவற்றை வெளிப்படுத்தல்; பாடலைப் பாடிக்கொண்டே ஆடுதல், அல்லது பின்னணியில் ஒலிக்கும் வசனம் அல்லது பாடலுக்கேற்றவாறு வாயசைத்துக்கொண்டே ஆடுதல்.
ஆஹார்ய அபிநயம் என்றால் என்ன?
ஆடை, ஆபரணங்கள் மூலம் அபிநயித்தல். நாடகப் பாத்திரம் ஆணா, பெண்ணா, குலமென்ன, வகுப்பென்ன, செய்யும் தொழிலென்ன, அந்தஸ்தென்ன, போன்றவற்றை அணியும் ஆடை ஆபரணங்கள், ஒப்பனை ஆகியவற்றால் வெளிப்படுத்தல்.
சாத்விக அபிநயம் என்றால் என்ன? விளக்குக.
எடடு விதமான உடல் - உள்ளம் - இரண்டின் நிலைகளை வெளிப்படுத்துதல்,
MYC || 9
5 1211 J4.

Page 5
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
அவையாவன:
1. உடல் அசையாமலிருத்தல் 2. வியர்வை வழிதல் 3. பயத்தை வெளிப்படுத்துதல் 4. குரலில் மாற்றத்தைக் காடடுதல் 5. நடுக்கம் 6. உடல் வண்ணம் சிவத்தோ -
வெளுத்தோ - கறுத்தோ மாறுபடுதல். 7. கண்ணிர் வடித்தல் 8. மயங்கி விழுதல்
ஆங்கிக அபிநயத்தின் மூன்று உட்பிரிவுகளும் எவை? விளக்குக.
1. அங்க 2. பிரத்யங்க 3. உபாங்க
அங்க: தலை, கைகள், மார்பு, விலாப்புறம், இடுப்பு மற்றும் கால்கள். - இந்த உறுப்புகளின் அசைவில் காடடப்படும் அபிநயம். (சிலர் கழுத்தை இப்படடியலில் சேர்ப்பர்)
பிரத்யங்க: தோள், மேற்கைகள், முதுகு, வயிறு, தொடை ஆகிய உறுப்புகளின் அசைவில் காடடப்படும் அபிநயம், (சிலர் கழுத்தசைவை இப்படடியலில் சேர்ப்பர்) உபாங்க கண்கள், புருவங்கள், விழிகள், கன்னம், மூக்கு, தாடை, பற்கள், நாக்கு, உதடுகள், முகம், பாதங்கள், கணுக் கால்கள், குதிக்கால்கள், கால் விரல்கள், கை விரல்கள், ஆகியவைகளின் அசைவில் காடடப்படும் அபிநயம். (சிலர் தோளையும் இப்படடியலில் சேர்ப்பர்)
‘சம’ என்றால் என்ன?
ஆடாமல், அசையாமல், குனியாமல், நிமிராமல் சமநிலையில் தலை இருத்தல்.
‘உத்வாஹித' என்றால் என்ன? தலையை உயர்த்துதல்
தலையைக் குனிதலை எப்படி அழைப்பர்?
அதோமுக என்றழைப்பர்.
"ஆலோலித” என்றால் என்ன?
தலையை வடடமாகச் சுற்றிச் சுழற்றுதல்.
தலையை இடமும் வலமும் அசைத்தலை எப்படி அழைப்பர்?
துதம் என்றழைப்பர்.
'கம்பிதம்’ என்றால் என்ன?
தலையை மேலும் கீழுமாக அசைத்தல்.
தலையை ஒரு பக்கமாகத் திருப்புதலை எப்படி அழைப்பர்?
'பராவிருத்தம் என்றழைப்பர்.
‘உசிப்தம்’ என்றால் என்ன?
தலையை ஒரு பக்கம் திருப்பி மேலே தூக்குதல்.
6

32. தலையை, பக்கத்துக்குப் பக்கமாக வெண்சாமரம் போல் அசைத்தலை
எவ்வாறழைப்பர்?
பரிவாஹிதம் என்றழைப்பர்.
33. கண்கள் மற்றும் விழிகளால் ஏற்படுத்தப்படும் அசைவுகளும் 'பார்வையும்’
எத்தனை வகைப்படும்? அவை எவை?
8.
எடடு வகைப்படும். அவையாவன:-
சம - இமைகளை அசைக்காமல் நேராகப் பார்ப்பது. ஆலோகித -சடடென்று உற்றுப் பார்த்தல்.
σπόg - விழியோரப் பார்வை. பிரலோகித-பக்கத்துக்குப் பக்கமாக விழிகளை அசைத்துப் பார்த்தல். நிமீலித-பாதி மூடிய கண்களால் பார்த்தல். ‘உல்லோகித - மேல் நோக்கிப் பார்த்தல். 'அனுவ்ரத - மேலும் கீழும் விரைவாகப் பார்த்தல். 'அவலோகித - கீழ் நோக்கிப் பார்த்தல்.
34. நான்கு வகைக் கழுத்தசைவுகளும் எவை?
.
2.
சுந்தரி - கழுத்தை இடமும் வலமுமாகப் பக்கவாடடில் அசைத்தல். திரஸ்ஸினா - கழுத்தை உயர்த்தி பக்கவாடடில் (பாம்பு போல்) அசைத்தல்
பரிவர்த்தித கழுத்தை இடமும் வலமும் பிறைச் சந்திரன் போல் அசைத்தல். பிரகம்பித- கழுத்தை முன்னும் பின்னுமாக (ஆண் புறாவைப் போல்) அசைத்தல்,
35. இருவகைக் கையசைவுகளும் எவை? விளக்குக.
1.
2.
1. ஹஸ்தம் 2. முத்திரை ஹஸ்தம்: கை முழுவதையும் ஆடடி, அசைத்து, வீசிக் காடடப்படும்
அசைவுகள்.
முத்திரை: முன்கையையும் விரல்களையும் இணைத்துக் காடடப்படும்
குறியீடுகள்.
36. ஒரு கை முத்திரைகள் (அசம்யுத ஹஸ்தங்கள்) எத்தனை? அவை எவை?
ஒரு கை முத்திரைகள் 28 என்று 'அபிநயதர்ப்பணம்' என்னும் நூல்
கூறுகிறது. அவையாவன:
1. பதாகம் 2. திரி பதாகம் 3. அர்த்த பதாகம் 4. கர்த்தரீமுகம்
13.
மயூரம் 6. அர்த்த சந்திரன் 7. அராளம் 8. சுகதுண்டம் (UpG#Lಣ್ಣ 10. இகரம் 11. கபித்தம் 12. கடகாமுகம் Gበyv@ል 14. சந்திரகலை 15. பத்ம கோசம் 16. சர்ப்ப சீர்ஷம்
7

Page 6
17. மிருகர்ேஷம் 18. ஸிம்ஹ முகம் 19. காங்குலம் 20. அலபத்மம் 21. சதுரம் 22. பிரமரம் 23. ஹம்சாஸ்யம் 24 ஹம்ச பக்ஷம் 25. ஸம்தம்சம் 26. முகுலம் 27. தாம்ர சூடம் 28. திரிசூலம் 37. இரு கை முத்திரைகள் ( ஸம்யுத ஹஸ்தங்கள்) எத்தனை? அவையெவை
இரு கை முத்திரைகள் 23. அவையாவன:
1. அஞ்சலி 2 கபோதம் 8. கர்க்கடம் 4 ஸ்வஸ்திகம் 5. டோலம் 6. புஷ்பபுடம் 7 உத்சங்கம் 8. சிவலிங்கம்
9. கடகாவர்த்தனம் 10. கர்த்தரீஸ்வஸ்திகம் 11. 38, f, 12. சங்கம் 13. சக்கரம் 14. சம்புடம் (சிமிழ்) 15. Jfr gaf 16. லேகம் (பிணைப்பு) 17. மத்ஸ்யம் (மீன்) 18. கூர்மம் (ஆமை) 19. வராகம் 20. கருடன் 21. நாகபந்தம் 22. கடவா (கட்டடில்) 23. பேருண்டம்
38. ‘ஒரு கை முத்திரைகளாகவும்', 'இரு கை முத்திரைகளாகவும் சந்தர்ப்பத்தி
கேற்றவாறு பயன்படுத்தப்படும் முத்திரைகள் எவை?
1. வியாக்ர 2. அர்த்தசூச்சி 3. 3, 5th 4. பல்லி
ஆகிய நான்கும்.
39. தெய்வங்களைக் குறிக்கும் முத்திரைகள் எத்தனை? அவை எவை?
தெய்வங்களைக் குறிக்கும் முத்திரைகள் 16. அவையாவன:
1. L TifóL DIT 2. சிவன் 3. விஷ்ணு 4. சரஸ்வதி
5. பார்வதி 6. இலக்குமி 7. கனேசர் 8. கார்த்திகேயர்
9. மன்மதன் 10. இந்திரன் 11. அக்கினி 12. யமன் 13. நிர்த்தி 14. வருணன் 15. வாயு 16. குபேரன்
40. சிவம் என்பதை உணர்த்த எம்முத்திரைகள் பயன்படும்?
'மிருகர்ேஷ'முத்திரையை இடதுகையிலும் 'திரிபதாக முத்திரையை வலது கையிலும் ஒரே நேரத்தில் பிடிப்பதன் மூலம் 'சிவம்' என்பதை
உணர்த்தலாம்.
41. 'திரிபதாகம் முத்திரையை இரண்டு கைகளாலும் அபிநயித்தால் அது
எத்தெய்வத்தைக் குறிக்கும்?
விஷ்ணுவைக் குறிக்கும்.
42. ஹஸ்தங்கள் எவ்வாறு காட்டப்படும்?
கைகளை ஐந்து விதமாக (மேல் நோக்கி, கீழ் நோக்கி, வலதுபக்கம், இடது பக்கம், முன் பக்கமாக) வீசி அசைப்பதன் மூலம் காடடப்படும். அவ்வாறு கைகளை வீசி, அசைக்கும்போது கால்களின் அசைவுகளுடன் அவை இணைந்து வரவேண்டும். இடது பக்க ஹஸ்தம் என்றால் இடது காலும், இடது கையும் இடது பக்கம் அசைய வேண்டும். வலது பக்க ஹஸ்தம்

岛
43. சுத்த நிருத்தத்திற்குப் பயன்படும் முத்தி ಙ್* அஒல் இன்வி
NG2gayev, 臀 * சுத்த நிருத்தத்திற்குப் பயன்படும் முத்திரைகள்:அவையாவன:
1. பதாகம் 2 ஸ்வஸ்திக்பப3ண்டிோலம் 4. அஞ்சலி 5. கடகாவர்த்தனம் 6. சகடம் 7. UTB is 8, 6.603, is 9. கபித்தம் 10. இகரம் 11. கூர்மம் 12. ஹம்சாஸ்யம் 13. அலபத்மம்
44. சூரியன் என்பதை எம்முத்திரைகள் மூலம் காட்டலாம்?
அலபத்மம்'இடதுகையிலும், கபித்தம் வலதுகையிலும் பிடித்து இரண்டு கைகளையும் கழுத்தருகே காண்பித்தால் அந்த முத்திரை சூரியன் என்பதைக் குறிக்கும்.
45. 'அலபத்மம்' இடது கையிலும் 'பதாகம் வலது கையிலுமாக காண்பித்தால்
அது எக்கிரகத்தைக் குறிக்கும்?
சந்திரனை. 46. நாட்டியத்தில் கால்கள் மற்றும் பாதங்களின் பங்கு என்ன என்பதை விளக்குக.
தலை, கண், கழுத்து மற்றும் கைகள் ஆகியவற்றால் காடடப்படும் அசைவுகளும், பாவங்களும், முத்திரைகளும் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் வாய்ந்தவை, கால்கள் மற்றும் பாதங்களின் அசைவுகள். கால்களால் நிற்பதும், துள்ளுவதும், தாண்டுவதும், பாதங்களால் நடப்பதும், உட்காருவதும், உடகார்ந்துகொண்டு சுழல்வதும், நின்று கொண்டே சுழல்வதும் நாடடியத்திற்கு அழகையும், எடுப்பையும், நிறைவையும் அளிக்கினறன.
47. அடவு என்றால் என்ன?
ஆடலின் ஒரு ஆதாரப் பகுதியைக் குறிக்கும். கால்கள் மற்றும்பாதங்களின் அசைவுகளை 'அடவு என்பர். இது நடனத்தின் ஓர் அளவை என்றே கொள்ளலாம். s
48, "தட்டடவு என்றால் என்ன? விளக்குக தடடடவு என்பது முதல் அடவாகும். இதில் கைகள் இரண்டையும் இடுப்பில் வைத்துக்கொண்டு, கால்களை லேசாக அகட்டடி நிற்க வேண்டும். முழங்கால் அளவில் கால்களை பக்கவாட்டில் அகடடி, மாறிமாறிக்கால்களைச் சற்றுத்தூக்கி, பாதங்களால் தரையைத் தடடவேண்டும்.
49. பாதங்களின் அசைவுகளை அபிநய தர்ப்பணம் நூல் எத்தனை வகைகளாகப்
பிரித்துக் கூறுகிறது? அவை யாவை?
நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரித்துக் கூறுகிறது. அவையாவன
1. மண்டலம் (Posture)
2. உத்ப்லவனம் (Leaping Movement or Jumping 3. ப்ரமரி (Flight Movement) TN, 4. பாதசாரி அல்லது சாரி (Gait)
9

Page 7
  

Page 8
64.
65.
66.
67.
68.
u இரண்டு பாதங்களையும் பக்கவாடில் நீடடி எகிறிக் குதித்த நிலையில்
உடலைச் சுற்றுதல். பரதமுனி விபரிக்கும் எட்டுவிதமான அகபாவங்கள்ையும் ரசங்களையும் எழுதுக.
பாவங்கள் ரசங்கள்
1. ஏதி (காதல்) 1. சிருங்காரம் 2. ஹாஸ (சிரிப்பு) 2. ஹாஸ்யம் 3. ஸோக (துன்பம்) 3. கருணை 4. குரோத (G33, Tu Lis) 4. ரெளத்திரம் 5. உத்ஸாஹ (உற்சாகம்) 5. வீரம் 6. பயா (நஹ) (பயம்) 6. பாயனகம் (பயம்) 7 ஜூகுப்ஸ் (வெறுப்பு) 7. பீபத்லம் 8. விஸ்மயா (அதிசயம்) 8. அற்புதம்
அபிநவகுப்தர் குறிப்பிடும் ஒன்பதாவது ரஸம் எது?
சாந்த ரஸம்
தொல்காப்பியர் தொல்காப்பியத்தில் குறிப்பிட்டுள்ள ரஸங்கள் (சுவைகள்) எத்தனை? அவை எவை?
எ.டு. 1. வீரம் 2. அச்சம் 3. இழிப்பு 4, 5T fou fò
5. அவலம் 6. வியப்பு 7. நகை 8. நடுவுநிலை
சாத்தனார் எழுதிய கூத்து நூல் குறிப்பிடும் பாவங்களையும், ரஸங்களையும் 6T (9 3595.
LTG sig, Gir தங்கள்
1. ७ा [55) 1. சாந்தம் 2. 35 TLD fò 2. சிருங்காரம் 3. அற்புதம் 3. அற்புதம் 4. வீரம் 4. 6նց լճ 5. ரெளத்திரம் 5. ரெளத்திரம் 6. ஹாஸ்யம் 6. ஹாஸ்யம் 7. Lo 7. பாயநகம் 8. கிருபா 8. கருணா சோகம் 9. பீபத்ஸம் 9. பீபத்ஸம் (வெறுப்பு)
விபாவம் என்பதன் பொருள் என்ன? விளக்குக.
விபாவம் என்றால்யாதேனும் ஒரு உணர்ச்சிக்கு அடிப்படையாக அமைவது எனப் பொருள்படும். இதனை மேலும் இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவையாவன, ஆலம்பன விபாவம், உபந்தீபன விபாவம் ஆகும். ஆலம்பன விபாவமானது ஒரு குறிப்பிடட உணர்ச்சியைத் தோற்ற, அடிப்படையாக அமைவது எனப் பொருள்படும். உபந்தீபன விபாவமானது தோற்றப்படட
12

69.
70.
71.
72.
73.
74.
ஒரு குறிப்பிட்ட உணர்ச்சியைப் பன்மடங்கு அதிகரித்துக் காட்டுவதற்கு ஏதுவாக உள்ளது எனப் பொருள்படும். அனுபாவ நிலையெனப்படுவது யாது?
விபாவத்தால் தடடியெழுப்பப்படட உணர்ச்சியினை அனுபவ நிலைக்குக் கொண்டுவந்து அக்குறிப்பிடட உணர்ச்சியினை அனுபவித்துக் காட்டுவதாகச் சித்திரித்துக் காடடுவதாகும். சாதாரணமாக அனுபவத்தை அபிநயத்தின் மூலம் நாம் வெளிக்காடடுகிறோம். இதனாற்றான் அபிநயத்தில் இடம் பெறும் அதிமுக்கிய உடபிரிவுகளாகிய ஆங்கிகம், வாசிகம், ஆகார்யம், சாத்வீகம் என்னும் பிரிவுகள் அனுபாவ நிலையில் அடங்குகின்றன.
வியாபிசாரி பாவம் என்றால் என்ன? விளக்குக.
வியாபிசாரி பாவம் என்றால் ஒரு குறிப்பிடட உணர்ச்சிக்கு எதிரிடையாக அவ்வுணர்ச்சியினைத் தோற்றுவிப்பதற்கு ஏதுவானதாகும். அடிப்படை உணர்ச்சியினைப் பன்மடங்கு பெருக்கிக் காடட வல்ல பாவம் வியாபிசாரி LIT GILDIT (g}Lö. எடுத்துக் காடடாக கோபம், கோபத்தினால் உண்டான ஆவேசம் ஆகியவற்றை அவ்வாறே செய்து காட்டாது , அக்கோபத்தினை இழிவுபடுத்தி எள்ளி நகையாடிக் காட்டுவதன் மூலம் அக்குறிப்பிட்ட சுவையினைப் பன்மடங்கு அதிகரித்துககாட்டுவதற்கு இது ஏதுவாகி வாய்ப்பளிக்கின்றது.
சாத்வீக பாவம் என்பதன் பொருள் என்ன?
இது குறிப்பாக பாத்திரத்தின் நிலையினை வெளிப்படுத்துதல் எனப் பொருள்படும். எடுத்துக் காடடாக இன்ப உணர்ச்சியினையோ துன்ப உணர்ச்சியினையோ நடிகையானவள் தானாகவே தன் நிலையிழந்து, மெய்மறந்து உருவகித்துக் காடடுதல் சாத்வீக பாவமாகும்.
பரதமுனிவரின் கூற்றுப்படி எத்தனை பாவப்பிரிவுகள் உண்டு?
41 பாவப்பிரிவுகள் உண்டு. இதில் நிரந்தரத் தன்மையுள்ள பாவங்கள், நிரந்தரத் தன்மையற்ற பாவங்கள் என இருவகையுண்டு.
ஸ்தாயி பாவம் என்றால் என்ன?
நிரந்தரத் தன்மையுள்ள பாவங்கள் எடடையும் ஸ்தாயி பாவம் என்று கூறுவர்.
ஸ்தாயி பாவங்கள் எவை?
காதல், சிரிப்பு, துன்பம், கோபம், உற்சாகம், பயம், அதிசயம், வெறுப்பு ஆகிய எடடுமாம். இவை எட்டு வகையான ரஸங்களைத்
3. 121 i SJ 4

Page 9
தோற்றுவிப்பதற்கு ஏதுவாகவுள்ளன. இவற்றைவிட சாந்தம் என்னும் ரஸப்பிரிவு பிற்கால வழக்கில் வந்துள்ளது. நிரந்தரமற்ற பாவங்கள் எவை? விளக்குக
ஸ்தாயி பாவங்கள் எட்டும் தவிர்ந்த ஏனைய 33 பாவங்களும் நிரந்தரத் தன்மையற்ற வியாபிசாரி பாவங்களாகும். அடிப்படைப் பாவங்களான விபாவத்தை வலுவூட்டிமறையும் துணை பாவங்கள் இவ்வியாபிசாரிபாவம் எனலாம். நிரந்தர பாவங்களாகிய ஸ்தாயி JITQIEGSDIGT ஏற்படுத்த விபாவம் அவசியமானதாகும்.
சஞ்சாரி பாவம் என்பதன் பொருள் என்ன? விளக்குக.
ஒருகுறிப்பிடட ஆதாரத்தின் மேல் எழுப்பப்பட்ட பல்வேறுவித உணர்ச்சி பேதங்களைப் பல்வேறுவிதமாக எடுத்துக் காட்டுதல் எனப்பொருள்படும். எடுத்துக் காட்டு: பிரிவுத்துயரானது சந்தேகம், பயம், சஞ்சலம், மயக்கம், வெகுளி, விரக்தி என்னும் பல்வேறு உணர்ச்சிகளைப் பல்வேறு தடவைகள் ஒரே ஆதாரத்திற்கு உருவகித்துக்காட்டும்போது அது சஞ்சாரிபா வமென அழைக்கப்படுகிறது.
ரஸம் என்றால் என்ன?
பாவமானது சுவையினைத் தட்டி எழுப்புகின்றது. அச்சுவையே ]േങ്ങ அழைக்கப்படுகிறது. பாவமும் ரஸமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைக்கப்படடு வளர்ந்து வந்துள்ளன. இதனாற்றான் பாவரஸ்மென ஒருங்கே வர்ணிக்கப்பட்டுள்ளது.பாவ உணர்ச்சிகளின் மேம்மாட்டு எழுச்சிகளே ரஸம் அல்லது சுவையாகும்.
"ஸ்வ பாவிகங்கள் ' எனக் குறிப்படப்படுவன எவை?
அக பாவங்கள், ரஸங்கள், ஆகியவற்றுடன் நடனம், ஆடுவோர் பல மன அவஸ்தைகளையும் முக பாவத்தில் வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது. இவற்றைப் பரத முனிவர் நாட்டிய சாஸ்திரத்தில் ஸ்வபாவிகங்கள் என்று குறிப்பிடுகிறார். இவை முப்பத்து மூன்றாகும்.

பகுதி: 11 தென் இந்தியாவுக்குரிய நடனம் எது?
பரத நாடடியம்.
பரத நாட்டியத்தின் ஆரம்ப அப்பியாசம் எது?
தடடடபுெ
நாட்டடவுகளின் எண்ணிக்கை எத்தனை?
ତ!! !!!!!!!!!!!!!!-- {} },
குத்தடவின் சொற்கட்டு எது? தெய்ஹ தெய்ஹி ஆகும்.
5

Page 10
0.
11.
2.
13.
4.
5.
6.
அபிநயம் எத்தனை வகைப்படும்?
நான்கு வகைப்படும்.
மலர் தூவி அஞ்சலி செலுத்துவதை எப்படி அழைப்பர்?
புஸ்பாஞ்சலி என்று அழைப்பர்.
நடனத்தின் உட்பிரிவுகளில் ஒன்றை எழுதுக.
நிருத்தம்.
துரித காலத்தைக் காட்டும் குறி எது?
0 & 9 o q e
நாட்டியக் கலைக்குரிய அதிதெய்வம் யார்?
நடராஜர்.
சிங்க முகத்தையும், மனித உடலையும் எடுத்துக் கொள்ளும் தசாவதார ஹஸ்தம் எது?
நரசிம்மம்.
தாளத்திற்கு அமையாத உருப்படி எது?
விருத்தம்.
பரத நாட்டியக் கச்சேரியில் இதயம் போன்று அமைந்த உருப்படி எது?
வர்ணம்.
அன்னிய ஸ்வரத்தைக் காட்டும் குறி எது?
常
திவான ஸ்லோகத்தில் இறைவனது ஆங்கிககமாகக் குறிப்பிடப்படுவது
எது?
உலகம்.
கருத்தைப் புலப்படுத்தும் கைகளின் அசைவுகளை எவ்வாறு அழைப்பர்?
முத்திரைகள் என்று அழைப்பர்.
ரஸ் பாவங்களை உள்ளடக்கிய நடன பேதம் எது?
நாடடியம்.
தியான ஸ்லோகத்தில் குறிப்பிடப்படும் தெய்வம் யார்?
இவன்,
16

8.
19.
20.
2.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
3.
O.
ஆண்மையும் மிடுக்கும் நிறைந்த நடன வகையைச் சிவனிடமிருந்து கற்றுக்கொண்டவர் யார்?
தண்டு முனிவர்.
நாட்டிய நமஸ்காரத்தில் வரும் இரட்டைக் கை முத்திரை குறிப்பது
எதை?
அஞ்சலி செய்வதை
பரத சூடாமணி என்பது என்ன?
பரத நூல்.
தாதெய் தெய்த அடவின் எண்ணிக்கை எத்தனை?
நான்கு.
கருத்தைப் புலப்படுத்தாத நடனம் எது?
நிருத்தம்
திரிசூலத்தைத் தாங்கியிருக்கும் கடவுள் யார்?
இவன்
ததிங்கிணதொம் அமைந்துள்ள தாளம் எது?
ரூபகம்.
“பல், உதடு என்பவற்றை அபிநயிக்கப் பிரயோகிக்கும் முத்திரையின் @Ljufাঁ জামেস্টান্তো?
சிகரம்.
அஸம்யுத ஹஸ்தத்தில் பதினெட்டாவது முத்திரை எது?
சிம்ஹ முகம்.
காத்தல் தொழிலைச் செய்யும் தேவ ஹஸ்தம் எவை?
வ - த்ரிப தாகம், இ- த்ரிப தாகம்
'சுற்றல்' - இதனைக் குறிக்கும் பாத பேதம் எது?
பிரம்மரி.
பன்றி. இதனைக் குறிக்கும் முத்திரை எது?
வராகம்.
பஞ்ச நிருத்திய பரமானந்த தாண்டவமூர்த்தம் காணப்படும் சந்நிதி எது?
சிதம்பரம்
17

Page 11
3.
33.
34.
35.
36.
3.
38.
39.
40.
41.
42.
43.
"நாணம்' - இதற்குப் பிரயோகிக்கும் திருஷ்டி பேதம் யாது?
அவலோகிதம்.
5gri Lb6375r ஹஸ்தத்தினை எடுத்துக் கொள்ளும் நவக்கிரக ஹஸ்தம் எது?
(SSC).
சமுதாய வாழ்க்கையைப் பிரதிபலித்து ஆடும் நடனம் ஒன்றின் பெயர்
# ಗ್ರಿಸಿ.
குறவன், குறத்தி நடனம்
பல மண்டலங்களும் முத்திரைகளும் சேர்ந்து உண்டாவது என்ன?
ܘܠ ,{(P}(Gكه ് ബ് பாத ரேகைகளையும் கைகளில் மாறுபட்ட செயற்பாடுகளையும் எடுத்துக்கொள்ளும் அடவு எது?
குதித்து மெடிடடவு காங்கூல முத்திரையில் மோதிர விரல்ை நீட்டினால் வரும் முத்திரை
63.2
மரம் தீபம் முடி இவற்றைக் குறிக்கப் பிரயோகிக்கும் முத்திரையின் GLussi 6 5öTso -
திரிபதாகம்
பாத சாஸ்திரம், அபிநய தர்ப்பணம் என்னும் நூல்களை இயற்றியோர் kä BF 6Li ?
பரதமுனிவர், நந்திகேஸ்வரர். இரஸங்கள் எவ்வேதத்திலிருந்து எடுத்துத் தொகுக்கப்பட்டுள்ளன?
அதர்வண வேதத்திலிருந்து தொகுக்கப்பட்டுள்ளன.
சம்யுத ஹஸ்தங்களின் இருபதாவது முத்திரை எது?
அலடத்மடம்.
தகதிமி தக தரிகிட எவை சேரும்போது உண்டாவது?
சதுஸ்ரமும் கண்டமும் சேரும்போது உண்டாவது. ஸ்வரங்களால் அலங்கரிக்கப்பட்டு மனதிற்கு இன்பம் தருவது எது?
இராகம்
ஒரு குறிக்கப்பட்ட நவக்கிரஹ ஹஸ்தத்தின் வலது இடது கைகளை மாற்றிப் பிரயோகித்தால் உருவாகும் தேவஹஸ்தம் என்ன?
ஷண்முகன்.
3.
●

44。
45。
46.
47.
48.
49.
50.
5.
52.
53.
54.
55.
56.
பாவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் நடனத்தின் உட்பிரிவுகளில் ஒன்றின் பெயர் எழுதுக.
நிருத்தியம்.
தாளத்தைச் சீராகக் கொண்டு செல்வது எது?
GIOR LÊ,
மயக்கம். இதற்குப் பிரயோகிக்கும் சிரோ திருஷ்டி பேதம் எவை?
ஆலோலிதம் - ஆலோகிதம்
திரியாங்கங்களை எடுத்துக்கொள்ளும் அபிநயவகை எது?
ஆங்கிகம்.
லாஸ்ய நடனத்தை உஷைக்குக் கற்றுக் கொடுத்தவர் யார்?
பார்வதி.
இராதை, கிருஷ்ணன், தோழி இவர்களைக் கதாபாத்திரங்களாக எடுத்துக்கொள்ளும் உருப்படி எது?
அஷ்டபதி,
நோய் பிணிகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள அம்மனை வேண்டி ஆடும் கிராமிய நடனத்தின் பெயர் என்ன?
கரகம்.
நவரஸங்களும் எவை?
சிருங்காரம், ஹாஸ்யம், கருணை, ரெளத்திரம், வீரம், பயானகம், பீபத்ஸம், அற்புதம், சாந்தம்.
நாடோடி நடனங்கள் எவை?
கும்மி, கோலாட்டம், கரகம், காவடி போன்றவை.
கோர்வை என்றால் என்ன?
அடவுகளின் சேர்க்கை,
சப்தம் என்னும் உருப்படி அமைந்துள்ள தாளம் எது?
மிஸ்ரசாபு,
ஜீவாத்மா, பரமாத்மா தத்துவத்தைத் தலைவன் தலைவி வாயிலாகப் புலப்படுத்தும் நாட்டிய உருப்படி எது?
பதம்.
'L.& . G წ. "კრწy 臀 *
தஞ்சைப் பெருவுடையார் பேரிசை' என்னும் நூலை எழுதியவர் யார்?
திரு. க. பொன்னையாபிள்ளை.
9

Page 12
57.
58.
59.
60.
6.
62.
63.
65.
66.
67.
68.
69.
70.
மன்மத ஹஸ்தத்தில் உள்ள வலது கை கடகாமுகத்தைப் பதாகமாக மாற்றினால் உருவாகும் தேவஹஸ்தம் என்ன?
வருணன். நட்சத்திரங்களை அதிதேவதையாகக் கொண்டது எது?
இEஇணிை
திரிபதாக முத்திரை பாவிக்கப்படாத நாட்டடவுகளின் எண்ணிக்கை என்ன?
6) (Ա.
தாளக் கட்டுப்பாட்டுக்குள் அடங்கி கருத்தைப் புலப்படுத்துவது என்ன?
நிருத்தியம் ஆகும்.
ஆபரணங்களால் கருத்தைப் புலப்படுத்தும் அபிநயம் என்ன?
ஆஹார்யம் ஆகும்.
தியான ஸ்லோகத்தில் குறிப்பிடப்படும் தெய்வமான சிவனின் ஆபரணங்கள் இரண்டு தருக.
சந்திரன், பாம்பு
பிரம ஹஸ்தத்தின் வினியோகங்களில் ஒன்று கூறுக.
இறக்கை.
அடவுகள் ஆரம்பிக்கும்போது அதன் நிலை என்ன?
அரை மண்டி நிலை.
நடனம் சார்ந்த கல்வித்துறை எது?
நுண்கலைத்துறை.
உத்வேகத்துடனும், மிடுக்காகவும் ஆடும் நடனம் எது?
தாண்டவம்.
'சப்தம்' என்ற உருப்படியில் முதலாவதாக அமைந்துள்ள ராகம்?
காம்போதி
பரதநாட்டிய சம்பிரதாய உருப்படியில் இறை அர்ப்பணமாக அமையும் உருப்படி எது?
அலாரிப்பு.
புல்லரித்தல், கண்ணீர் சிந்துதல் போன்ற செய்கைகளை எடுத்துக் கொள்ளும் அபிநயம் என்ன?
சாத்விகம்.
கடைக்கண் பார்வையைக் குறிக்கும் திருஷ்டி பேதம் எது?
Gnostig!).
20

ل
Ον 总
7.
73.
74.
75.
76.
77.
78.
79.
80.
8.
82.
83.
"சித்திரம் தீட்டல் இதற்குப் பிரயோகிக்கும் முத்திரை என்ன?
ஹம்ஸாசியம்.
மயிலின் அசைவைக் காண்பிக்கப் பிரயோகிக்கும் கண்டபேதம் எது?
பிரகம்பிதம் 爵
மிருகர்ேஷ ஹஸ்தங்கள் பிரயோகித்து உருவாகும் தசாவதார ஹஸ்தங்களின் எண்ணிக்கை என்ன?
மூன்று.
'தாளாங்கு தொம் இதற்குப் பிரயோகிக்கும் உத்பிளவன பேதம் எது?
கிருபாலகம்
பாத்திர அந்த பிராணன்கள் எத்தனை?
பத்து.
பரிவாஹிதம்' என்றால் என்ன?
தலையைச் சிறிதாக ஆடடல்.
வலது சிகரம், இடது - பதாகம் ஆகிய முத்திரைகளை எடுத்துக்
கொள்ளும் ஜாதி ஹஸ்தம் என்ன?
கூடித்திரியம்.
பஞ்ச பானங்கள் என்பது என்ன?
மன்மதனுடைய மலரம்புகள்.
சுத்த நிருத்தத்திற்குப் பிரதானமாக அமையவேண்டிய அம்சம் என்ன?
GULULð
திஸ்ரமும், சதுஸ்ரமும் சேரும்போது உண்டாவது என்ன?
தகிட தக திமி
நமஸ்காரத்தின்போது இருகைகளும் சிகரமாகச் சுற்றி வருவது குறிப்பது AJF68) J?
அஷ்டதிக்குப் பாலகரை,
மன்மதன், வில், துரண் ஆகியவற்றை அபிநயிக்கப் பிரயோகிக்கும் முத்திரை எது? சிகரம்.
இசைக் கூத்து என்றால் என்ன?
பண் ஆகிய இராகத்தை உயிராகவும், சொல்லாகிய பாடலை
உள்ளமாகவும், தாளத்தடடை உடலாகவும் கொண்டு ஆடப்படுவது.

Page 13
84.
8.
87.
88.
90.
91.
92.
93.
காட்சிக் கூத்து என்பது என்ன?
கண்ணில் தோன்றும் பாவத்தை உயிராகவும், உடலின் அசைவுகளை உள்ளமாகவும், கையில் காடிடப்படும் அபிநயங்களை உடலாகவும்
கொண்டு ஆடப்படுவது.
நாட்டிய அலங்காரத்தினை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்? அவை
{{6}}
நான்கு வகையாகப் பிரிக்கலாம். (1) அணி மணி அலங்காரம்.
(2) ஒப்பனையலங்காரம் (3) தலையலங்காரம் (4) உடையலங்காரம்.
கரணங்கள் என்றால் என்ன? அவை எத்தனை வகை?
உடலை வளைத்துக் கால்களை நீட்டியும் கைகளைப் பல வித்தியாசமான கோணங்களில் அலசப்பதற்குக் கரணங்கள் (அஃதாவது (நிற்கும்) சிற்ப நிலைகள்) என்று பெயர். இவை 108 வகைப்படும். 臀
பாம்பைக் காட்டுவதற்கு உபயோகிக்கும் முத்திரை எது?
சர்ட்ட சீர்ஷம்,
தமிழர் கிராமியப் பண்பாடுகளை விளக்கும் நடனங்கள் எவை?
தெம்மாங்கு, கும்மி, காவடி
அட்டமிச் சந்திரனைக் குறிக்கும் முத்திரை என்ன?
அர்த்த சந்திரன்.
பானா சுரனின் மகள் பெயர் என்ன?
உஷை
அனுபாவம் என்றால் என்ன? விளக்குக.
அனுபாவமாவது உணர்ச்சி பேதங்களை நாமாகவே அனுபவித்துக் காட்டுதலாகும். அனுபாவப் பிரிவில் நாட்டியத்திற்குத் தேவையான ஆங்கீகம்,ஆகாரியம், வாசிகம், சாத்வீகம் என்னும் அபிநயப் பிரிவுகள் அடங்குகின்றன.
'சங்கீத சாராம்ருதம் என்னும் நூலின் ஆசிரியர் யார்?
மராடடிய மன்னர் துளஜா மகாராசா,
நந்திகேஸ்வரரால் நாட்டிய உலகிற்குக் கிடைத்த செல்வம் என்ன?
தாண்டவம்
22

4.
95.
96.
97.
98.
99.
OO.
O.
O2.
3.03.
இந்திய நடனங்கள் எவை?
பரதநாடடியம், மணிப்புரி, கதக், கதகளி யஷ கானம், குச்சுப்புடி, ஒடிசி, பாகவதமேளம்.
தமிழருடைய மங்கல வாத்தியங்களில் ஒன்றைக் கூறுக.
தவில்.
தலையில் குடம் வைத்து ஆடும் நடனம் எது?
கரகம்,
இரு பதாகங்களையும் குறுக்கே பிடித்தால் வருவது என்ன?
ஸ்வஸ்திகம் ஆகும். ۔۔۔۔۔۔۔۔
எலுமிச்சம் பழம், பாக்கு மரம் இவற்றினை அபிநயிக்கப் பிரயோகிக்கும் முத்திரை எது?
3, 13.63).
ஸ்: இவ் அடையாளத்தை எடுத்துக் கொள்ளும் ஆட்சர காலங்கள்
எத்தனை?
நான்கு.
0 இஷ்டையாளத்தை எடுத்துக் கொள்ளும் தாள அங்கம் என்ன?
திருதம்,
குபேர ஹஸ்தத்தின் வலது முஷ்டி அப்படியே இருக்க இடது அலபத்மத்தை ஸ்ஸுசியாக மாற்றினால் உருவாகும் நவக்கிரக ஹஸ்தம் । ଶ୍ରୀ ଶର୍ଦ୍t?
புதன்
நடனக் கோர்வைகள் (ஜதிக் கோர்வைகள்) என்றால் என்ன?
நடனக் கோர்வைகள் என்பது தனித்தனி வகையாகப் பயின்ற 5. LGBT || அடவுகளை அழகாகவும் தாளக் கணக்குக்கு ஏற்பவும் ஒன்றோடொன்று சேர்த்து அணிகலன்களைப்போல உருவாக்கப்பட்ட தொடர்
அடவுகளாகும்.
பரத நாட்டிய உருப்படிகளில் முக்கிய பிரிவுகள் எவை?
1. ஆரம்ப துதிப் பாட்ல்கள் 2. ஜதீஸ்வரம் மற்றும் சூலாதிகள்.
ஸ்ட்தங்கள் 4 வர்ணங்கள் பதங்கள் 6. ஜாவளிகள் தில்லானாக்கள் 8. அலங்கார நடனங்கள்
குறுநாடடிய நாடகங்கள் 10 ஏனைய நாட்டியங்களைத்
தழுவிய நடனங்கள்.
23

Page 14
04.
05.
06.
07.
108.
09.
0.
1ll.
12.
3.
4.
15.
ஆரம்ப துதிப்பாடல் நடனங்கள் என்றால் என்ன?
ஒரு நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போது கடவுள், குரு, சபையோர் இவர்களை ܟ݂. வணங்கிச் செய்யப்படுகின்ற நடனங்கள், ஆரம்ப துதிப் பாடல் நடனங்கள் எனப்படும். ஆரம்ப துதிப் பாடல் நடனங்கள் சிலவற்றின் பெயர் தருக.
1 அலாரிப்பு 2. புஷ்பாஞ்ஜலி 3. கணேசாஞ்ஜலி 4. குரு பாதாஞ்சலி அல்லது குரு ஸ்துதி 5. கவுத்துவம் 6. ιρούς υπή 8 ף
தோடைய மங்களம் தேவர் நாமஸ்மரணம்.
ஸாம வேதத்தின் உபவேதமாகக் கருதப்படுவது எது?
காந்தர்வ வேதம்.
பண்டைத் தமிழிலக்கியங்களில் முருகன் ஆடியதாகக் கூறப்படும் ஆடல்
6া $1?
துடியாடல்.
“பீபத்லம்' என்பது குறிப்பது எதனை?
வெறுப்பினை.
'தகப்பன் ஸ்வாமி' என்று அழைக்கப்படும் கடவுள் யார்?
குகன்.
நாட்டியத்திற்கு ஆதாரமானவை எவை?
பாவம், ராகம், தாளம்.
மட்டக்களப்பு மக்களிடை வழங்கிவரும் பாரம்பரிய நடனம் எது?
கொம்பு முறி நடனம்.
தென்னிந்திய நாட்டிய மேதைகள், இசை வல்லுநர்கள் தோன்றிய இடம் ஒன்று தருக.
தஞ்சாவூர்.
சமஸ்கிருத மொழியில் இராமாயணம் இயற்றிய மகரிஷி யார்?
வால்மீகி
*அபிநய தர்ப்பணம்’ என்பது என்ன?
நந்திகேஸ்வரரின் நாட்டிய நூலாகும்.
விஷ்ணு ஆமை உருவெடுத்த அவதாரம் என்ன?
கூர்ம அவதாரம் (கூர்மம் - ஆமை)
24

118.
9.
20.
121.
122.
16.
17.
தொழிலைச் சித்திரிக்கும் கிராமிய நடன் :
உழவர் நடனம்.
&.*
ঢাঞ্জ)ঞ্জী Pribyum grondo பண்டைக் காலத்தில் பரதக் கலையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழங்கப் பெற்ற பட்டம் எது?
தலைக்கோலி என்னும் பட்டடம்.
நரகாசுரனை அழித்ததற்காகக் கொண்டாடப்படும் விழா எது?
தீபாவளி
மிஸ்ரஜாதி துருவ தாளத்தின் எண்ணிக்கை என்ன?
இருபத்து மூன்று.
அரங்கேற்றம் - என்பதனை விளக்குக.
பயிற்சி முடிந்த ஒரு மார்கம் (அலாரிப்பு முதல் தில்லானா வரை) அல்லது இரண்டுமார்கங்கள் முடிந்த பின் முதல் முறையாக அரங்கேறி ஆடுவது அரங்கேற்றம்' என்று குறிக்கப்படும். அரங்கேற்றம் அவையோருக்குப் புதிய நடனக் கலைஞரை அறிமுகமாக்கும் விழா. அத்தோடு மாணவி குருவிற்கும், பக்கவாத்தியக் கலைஞர்களுக்கும் தன் மரியாதையை உணர்த்தும் வகையில் புத்தாடைகளும், பொன்னும் வழங்கி வணங்க வேண்டிய விழாவாகும். அரங்கேற்றம் என்பது கலைவாழ்வின்
புனிதமான தொடக்கம் எனலாம்.
அலங்கார நடனங்கள் சிலவற்றின் பெயர் தருக.
காவடி நடனங்கள், கரக நாடடியம், ராதாகிருஷ்ன நடனம், சிவதாண்டவம், சக்தி நாடடியம், கீதோபதேசம், குறத்தி நடனம், மயில் நடனம், ஆண்டாள் நடனம், மீரா நடனம், கோபியர் நடனம், காளிங்க
நடனம்
குறு நாட்டிய நாடகங்கள் சிலவற்றின் பெயர் தருக.
தோ கல்யாணம், இராம சரிதம்,பொன்மான் வதம், வாலிவதம், பாஞ்சாலி
சபதம், கிருஷ்ண லீலா, ேேதாபதேசம், பாரிஜாதம்.
123. மேல் நாட்டு நடனங்களின் முக்கிய இரு பிரிவுகளும் எவை?
1. சாஸ்திரிய "பாலே" (Ballet) நடனம்.
2. நிகழ்கால புதிய நடனம் (Modern Dance)
25

Page 15
பகுதி:
சிறுகுறிப்புகள் 1. அடவு:
ஒரு தாளத்திற்கு அமைய, ஒரு கால் அசைவினையும் ஒரு கை அசைவினையும், ஒரு உடல் நிலையினையும் லய சுத்தத்துடன் செய்யும் போது அதனை அடவு என்போம்.
2. கண்டிய நடனம்
கண்டியைச் சேர்ந்த நடன விற்பன்னர்களால் தமது சொந்த மொழி, கலை, கலாசார, சமூக, சமயப் பண்பாடுகளுடன் கூடி இந்நாடடியக்
கலை வளர்க்கப்படுகின்றது. இது சிங்கள மக்களின் கலாசார நாடடிய வடிவமாக அமைந்துள்ளது.
26
 
 

7.
0.
கண்டிய நடனக் கலையானது நான்கு முக்கிய வகையான நடனங்களை உள்ளடக்கிய நடனமாகும். இவையிாவன:- வெஸ் நடனம், நையாண்டி நடனம், பந்தரு நடனம், உடுக்கி நடனம்.
அல்லியம்: s
கண்ணனின் மாமனாகிய ஹம்சன் அனுப்பிய யானையின் கொம்பை ஒடித்தபின் கண்ணன் ஆடிய நடனம் அல்லியம் ஆகும். அதனையே அலிப்பேடு என்றும் கூறுவர்.
கொடுகொட்டி
சிவபிரான் தன் புன்முறுவலினால்திரிபுர அசுரர்களை எரித்தபின் வெற்றிக் களிப்பில் அன்னை பார்வதியுடன் கைகொடடி ஆடிய நடனம்.
குடைக் கூத்து:
இது முருகன் தன் குடையினை முன்னே சரித்து ஆடிய நடனமாகும்.
குடக்கூத்து: -
இது பானகரன் தன்மகள் உஷை என்பவள் காரணமாக, காமன் மகன் அநிருத்தனைச் சிறைப்படுத்தியதனால், திருமால் பாணனை அழித்தல் வேண்டுமென வேண்டி ஆடிய நடனமாகும்.
Gu LTL6): - ۔۔۔۔
இது காமன் தன் மகன் அநிருத்தனைச் சிறையினின்று மீடடபின்
ஆண்மைத் தன்மையில் பெண்மைக் கோலம்பூண்டு ஆடிய நடனமாகும்.
துடியாடல்:
இது ஆடல் நடுவே, வேற்றுருவாய் நின்ற சூரனின் வஞ்சனைச் சிந்தனையை அறிந்த முருகப் பெருமான், அவனைக் கொன்று கடல் அலையைத் தளமாகக் கொண்டு நின்று ஆடிய நடனம்.
பாண்டரங்கம்:
இது சிவபிரான் திரிபுரம் எரிக்கச் சென்ற போது திசைமுகனாகிய
நான்முகன் காண வெண்ணிறு பூண்டு ஆடிய நடனம்.
தாண்டவம்:
தாண்டவமானது சிறந்த துரித கால்வீச்சுக்கள், திருப்பங்கள், உயிர்ப்பூட்டும் காந்த சொரூப நிலைகள், கம்பீரமான தோற்றங்களையும் செயற்பாடுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இது நாடடியக் கலையில் நிருத்த வகையைச் சார்ந்ததாகும். உயிர்ப்பூடடும் எழில் தவழும் நிலைகளை இது தன்னகத்தே கொண்டுள்ளது.
நிருத்த கூறாகிய தாண்டவக்கூறு பகுதி பகுதியாகவோ அன்றித் துண்டு துண்டாகவோ ஆடப்படும் நடனம் அன்று. தாண்டவத்துக்கே உரிய
2
7

Page 16
பாடடுடன், லய சுத்தத்துடன், கம்பீரம் வழுவாமல் ஆடிய நஈடடியமாகும். தாண்டவக் கூறு நாடடியத்தில் ஆடவருக்கே பொருத்தமானது எனக் கருதப்படடபோதிலும் கூட, இதனைப் பெண்களும் ஆடலாம் என்பதனைச் சிதம்பர நடனச் சிற்பங்கள் பெண் சிற்பங்களாக இருப்பதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
11. நாட்டியம் பயில்வதால் ஏற்படும் பயன்கள்:
நாடடியம் பயில்வதால் உள்ளமும் உடலும் உரம் பெறகிறது. உடலின் ஒவ்வொரு அவயவங்களும் தனித்தனியாக இயக்கப்பெற்றுச் சிறந்த ஆரோக்கியத்தைப் பெறுகின்றன. நாடடியம் பயில்வதால் பலவிதமான நோய்களிலிருந்து உடலானது காப்பாற்றப்படுகிறது. நாடடியத்தைப் பார்க்கும் மனிதனும் ஆடுகின்ற மனிதனும் தர்மார்த்த காமமோக்ஷமாகிய நான்கு புருஷார்த்தங்களையும் பெறுகின்றான்.
இதனால் இவர்களது உள்ளமும் உடலும் செம்மையுறுகிறது. நாடடியத்தினைச் செய்வதால் நரம்பு சம்பந்தமான நோய்கள் வருவதில்லை. மேலும் உடலின் தேவையற்ற சதைவளர்ச்சியைக் குறைப்பதுடன் தேவையான சதைவளர்ச்சியை அதிகரிக்கச் செய்கின்றது.
12. நாட்டியத்திற்கேற்ற இசைக்கருவிகள்:
முற்காலத்தில் நாடடியத்திற்கென இருந்த கருவிகள் மத்தளம், அல்லது சுத்த மத்தளம், முகவீணை, புல்லாங்குழல், யாழ் ஆகியவையாகும். தற்காலத்தில் ஹார்மோனியம், வயலின், சிதார், வீணை, கிளாரினெட, புல்லாங்குழல், பியானோ, தபேலா,மிருதங்கம், கோல், மற்றும், டோல்கி, பல்வகை தாள துணைக் கருவிகள் (Effects Instruments) bo, உடுக்கை, ஆதியன பயன்படுகின்றன.
13. நிருத்ய ஆபரணங்கள்:
நெற்றிச்சுடடி, சூரிய சந்திர சுடடிகள், இராக்கொடி, காதுத்தோடு, காதுஇழை என்கின்ற தொங்கபடடான் (ஜிமிக்கி), நாசிபிறை என்கின்ற புல்லாக்கு, நாசியில் போடுகின்ற நந்து, வங்கிகள், கைவளையல்கள், உள்கழுத்து ஆரம் (நெக்லஸ்), நீள் கழுத்து ஆரம், முத்துமாலை, இடைமாலை, உடியாணம், நூபுரமால்ல, ஜடைபிள்ளை, குஞ்சலம், நாகஜடை, மோதிரம், பஞ்ச உங்குரம் அல்லது மோதிரத்தோடா, சலங்கை, காசுமாலை.
14. நாடக ஆபரணங்கள்
கிரீடம் (ஆண், பெண் இருபாலார்க்கும் வெவ்வேறானவை) நாகாபரணம், உருத்திராடசம், குண்டலங்கள், செவியணி, நெற்றிச் சின்னம், புல்லாக்குமாடடல், அடட்டிக்கை, தோளில் அணிகின்ற புஜ கங்கனம், கங்கனம், பொன் பூனூல், மார்புக் கவசங்கள், இடையாபரணம், (ஆண்களுக்குரியது) உடியாணம், சிவலிங்க ஆரம்,
28

கங்கண மோதிரம், கழல், தண்டை, சலங்கை, நீள்கழுத்து மாலை,
ஆயுதங்கள், (வாள், வில், கத்தி, கேடயம், அம்பு, திரிசூலம்)
15. சதங்கைகள்:
நடனம் ஆடுபவரின் இரண்டு கால்களிலும் கட்டப்படும் குலுங்கும் சதங்கைகள் தாளக்கடLடிற்கு ஏற்ப ஒலிஎழுப்பும். ஆடுபவருக்கும் 5 TG). பிரமானத்தைக் கணக்கிடவும், கேடபவரின் காதுக்கு இனிமையூடடவும் உதவுபவை சதங்கைகளே. சதங்கையின்றி நாடடியத்தைக் கற்பனை
செய்ய இயலாது. ஆடுபவரின் ஒவ்வொரு காலிலும் நூறு சதங்கைகள் கோர்த்த படடை கட்டடப்படடிருக்கும். அவை வெண்கலத்தில் செய்யப்படட சிறுசிறு கிண்கிணிகளாகும். இனிய ஓசையை எழுப்பக் கூடிய இச்சதங்கைகள் ஒன்றுக்கொன்று ஒரு விரற் கண்ட இடைவெளிவிடடு நீலப்படடையில் தைக்கப்படடிருக்கும்.
16. அலாரிப்பு: ܝ܀
இது இறை வணக்க நிகழ்ச்சியாகும். முரசுகளின் அதிபதியான விநாயகர், வானம், பூமி ஆகியவற்றை வணங்குதல் மரபு. இது சுத்த நிருத்தமாக, எந்தவித இசைப் பின்னணியோ, பாடல்களோ, அபிநயங்களோ இன்றி ஆடப்படும். தாளம் மடடுமே, வாய் ஜதிகளாகவும், தாளம்' எனும் கருவியாலும் எழுப்பப்படும். அலாரிப்பினை பஞ்ச ஜாதிகளுக்கேற்பச் செய்யலாம். இதனால் அலாரிப்பு ஐந்து எண்ணிக்கையாகின்றது.
.goo)QJuJTGjG6: 1. சதுஸ்ர அலாரிப்பு: இது ஆதி தாளத்தில் செய்யப்படும். இது நான்கு
எண்ணிக்கையுடையது. 2. திஸ்ர அலாரிப்பு: இது திஸ்ர ஏக தாளம் அல்லது ரூபகதாளத்தில்
செய்யப்படும். மூன்று எண்ணிக்ஸ்கயுடையது. 3. மிஸ்ர அலாரிப்பு: இது மிஸ்ர சாபு அல்லது திஸ்ர ஜாதி திருபுடை
தாளத்தில் செய்யத்தகுந்தது. ஏழு எண்ணிக்கையுடையது. 4. கண்ட அலாரிப்பு: இது ஐந்து எண்ணிக்கையுடையது. இது கண்டசாபு
தாளம் அல்லது ஜாதி ரூபகதாளத்தில் செய்ய ஏற்றது. 5. சங்கீர்ண அலாரிப்பு: இது சங்கீர்ண ஜாதி ஏக தாளத்தில் செய்ய ஏற்றது. மற்றும் கண்ட ஜாதி திருபுடை தாளம், மிஸ்ர ஜாதி ரூபகதாளத்திலும் இதனைச் செய்யலாம். இது ஒன்பது எண்ணிக்கையுடையது.
7. புஷ்பாஞ்சலி,
கைகளில் மலரை ஏந்திக்கொண்டு கால்களில் அடவுகளை, அஃதாவது கடினமான பாத வேலைகளையும் அரங்கம் முழுவதும் சுற்றி வந்து செய்யக்கூடியதுமான நடனமே புஷ்பாஞ்சலியாகும். இதுவும் முதலில்
29

Page 17
ஆடப்படும் இறை வணக்க நிகழ்ச்சியே. தீமைகளை ஒழித்து, நல்லன காத்து, ஆடுபவரை ஆதரித்து, ஆசிரியருக்குப் புகழ் சேர்த்து, ஆசி வழங்கும்படி இறைவனை வேண்டுதல். ஆடுபவர்"புஷ்ப"முத்திரையுடன் அபிநயிப்பார்.
18. ஜதீஸ்வரம்:
பரத நாடடிய நிகழ்ச்சிகளில் ஆரம்ப நடனத்துக்கு அடுத்தபடியாகச் செய்யப்படுகின்ற நடனம் ஜதிஸ்வரம் என்பதாகும். தமிழிசையில் இது போன்றே சூலாதி, பிரபந்தங்கள் என்ற இரண்டு பிரிவுகள் உள்ளன. இவற்றையும் ஜதீஸ்வரம் என்றே சொல்லலாம். ஸ்வரங்களின் பின்னணியில் ஜதிகளைப் போன்று செய்யப்படுகின்ற சுத்த நிருத்தமே ஜதீஸ்வரம் எனப்படும். ஜதிஸ்வரங்கள் மூன்று முதல் நான்கு ஸ்வர அமைப்புகளை உடையதாக இருக்கும். பல்லவி, அனுபல்லவி, சரணம், போல மூன்று அமைப்புடன் இருக்கும். ஆனால் பாடல்கள் இருப்பதில்லை. பாடகர் ஒரே சீரான பல்லவி போன்ற ஸ்வரத்தினைப் பாடிக்கொண்டிருக்க அதன் பின்னணியில் பலவிதமான அடவுகள் நெருடலான கணக்குகளுடனும் பின்னிப் பிணைந்த அழகிய அசைவுகளுடனும் செய்யப் படுகின்றன. இதனையே ஜதீஸ்வரம் என்கிறோம்.
ஜதீஸ்வரங்கள் ஆதிதாளம், ரூபகதாளம் ஆகியவற்றிலேயே அதிகமாக இருக்கின்றன. திஸ்ரதிருபுடை, மிஸ்ர ஜெம்பை, கண்ட ஜாதி அடதாளம் போன்றவற்றிலும் ஜதீஸ்வரங்கள் உள்ளன.
19. Sisi 600 kiy:
வர்ணம் என்பதைப் பொதுவாக நிறம் என்கிறோம். இசையில் வர்ணம் என்பது இராக சாயலுடனும் தாளங்களின் நுடபங்களுடனும் கூடிய ஒரு அமைப்பு எனலாம். வர்ணங்கள் நாடடிய நிகழ்ச்சியில் நடனம் ஆடுபவரின் திறமையை வெளிப்படுத்தும் அளவு கோலாகும். நடன நிகழ்ச்சியில் விறுவிறுப்பூட்ட வர்ணத்தில் ஜதிகள் இடையிடையே
சேர்க்கப்படும்.
20. பதங்கள்:
இது நாடடியத்தின் பிற்பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சி. அபிநயத்துக்கு முக்கிய இடமுண்டு. ်g ၈|႕, 9, கால' த்தில் பாடப்படும். நாடடிய லடசணப்பாடல்கள், இலக்கியம், இதிகாசம், புராண, நிகழ்ச்சிகள், சமூகப்பாடல்கள் கூடப் பதங்களாகவே கொள்ளப்படும். பதங்கள் வர்ணங்கள் இரண்டுமே நடனமணிகள் செய்கின்ற அழகிய முகபாவங்களை - நவரசங்களைப் பொறுத்தே சிறப்புப் பெறுகின்றன.
2. தீபாஞ்சலி:
நடனம் ஆடுபவர்கள் தங்கள் இரண்டு கைகளிலும் விளக்கினை வைத்துக்கொண்டு பாடல்கள் அல்லது வாத்திய இசைக்கேற்ப ஆடுவது தீபாஞ்சலிஎன்பர். இது ஆலயங்களில் தீப ஆசை நடைபெறும் காலங்களில் விசேடமாக நடைபெறும். சில 5ಠ್ಠ056ಗಿ: இது கிராமிய நாடடியமாக,

கன்னிகை நடனம் என்று திருமணமாகாத கன்னியர்களினால் நடிக்கப் பெறுகின்றது. தீபாஞ்சலி நடனம், பாடல்களைப் பின்னணி இசையுடன் செய்யும்போதே அழகும் சிறப்பும் பெறுகின்றது.
22. தில்லானாக்கள்:
(v)
நாடடிய நிகழ்ச்சியில் நடனமணிகளின் திறமை, உழைப்பு, வேகம், நளினம், தாள ஞானம் போன்றவை அனைத்தும் வர்ணத்திலும் தில்லானாவிலுமே தெரியவரும். தில்லானாக்கள் செய்யும்போது ஒவ்வொரு பாணியைப் பொறுத்து நடன அமைப்பு இருக்கும். தற்போது நாடடிய ஆசிரியர்கள் தமது கற்பனை வளத்துக்கேற்பவும், புதிய புதிய உத்திகளுடன் நாடடியத்தினை அமைக்கின்றனர். பொதுவாகத் தில்லானாக்களில் பின்வரும் அம்சங்கள் இருக்கும்.
தில்லானாக்களின் ஆரம்பம் நிலையான இடத்திலிருந்து நளினமான உடல் அசைவுகளுடன் திரிகாலம் செய்யப்படும். அவற்றை அலங்கார அசைவுகள் எனலாம்.
கடடடவுகளுடன் கூடிய பாத வேலைகள் இரண்டாவதாகச் ܢܝܬܐ செய்யப்படும். இதில் ஆசிரியரின் கற்பனைத் திறமையும் தாள ஞானமும், நடனமணியின் லயஞானமும் வெளிப்படும்.
கத் என்கின்ற அமைப்புடன் கூடிய பாதவேலைகள் மூன்றாவது பாகமாகச் செய்யப்படுகின்றது. இது தாளத்தில் அடைவுகளின் (தடடடைவும், சிமிறடைவும் கூடியது) பின்னங்களால் செய்யப்படுகின்றது.
நான்காவதாகப் பல கோர்வைகள் செய்து காடடப்படும். அழகிய நாடடிய அசைவுகளும், அரங்கம் முழுவதும் நகர்ந்து செல்லக் கூடிய அசைவுகளை நடன மணிகள் செய்வார்கள். பலநாடடிய ஆசிரியர்கள் கோர்வைகள் அனைத்தையுமே ஏகலயம் அல்லது சதுஸ்ர ஜாதியிலேயே செய்கின்றனர். ஆனால் தில்லானாக்களில் கோர்வைகள் ஒவ்வொன்றும் பஞ்ச ஜாதிகளைக் காடடுவதாக அமைத்தல் நன்றாகும்.
தில்லானாக்களில் சரணங்கள் இரண்டும் பாடல் இயற்றியவரின் முத்திரையுடன் கூடிய பாடலும் இருக்கும், இவை நாட்டிய ஆசிரியரின் திறமையான நாடடிய அமைப்பினாலும், நடனமணிகளின் வேகம், முகபாவத்தினாலும் சிறப்படை கின்றன.
25. மோ இனி ஆட்டம்:
சதிர் கதகளி ஆகியவற்றின் செய்முறைகளின் சேர்க்கையின் காரணமாகப் பிறந்ததே மோகினி ஆடடம் பாதங்களை அகடடி வைத்துக் கதகளியில் ஆடப்படும் நிலைகளை இந்த நடனத்தில் காணலாம். பெண்களே கையாளும் மரபு கொண்டதால் சதிரைப் போலவே சிருங்காரத்தையும், லாஸ்யத்தையும் முக்கிய அம்சங்களாக இந்த நடனம் கொண்டிருக்கும். சதிரில் பயன்படுத்தப்படும் ஜதிஸ்வரம், சப்தம், வர்ணம், பதம் போன்ற உருப்படிகளே மோகினி ஆடடத்திலும்
3

Page 18
கையாளப்படும். இவை தவிர சதிரில் இன்று நடைமுறையில் இல்லாமற்போன சொற்கட்டு என்னும் உருப்படியும், மற்றும் பந்தாடடம் போன்ற மிக நளினமான உருப்படியும் மோகினி ஆடடத்தில் காணப்படும். நல்ல அடவுக் கோர்வைகளும், அபிநயமும், சமமாக இடம்பெற்றுச் சலிப்புத்தடிடாத அழகிய லாஸ்யம் இந்த மோகினி ஆடடமாகும்.
24. கதக்
இது வட இந்திய நடனமாகும். சுமார் ஆயிரம் ஆண்டுகளாகவே வடபாரதத்தில் இந்நடனம் ஆடப்பெற்று வந்துள்ளது எனலாம். ஆனால் அது கிராமிய நடனமாகவே, அந்தந்தப் பிராந்தியமக்களுக்கேற்ப இருந்து வந்துள்ளது. கதக்கின் உடையமைப்பு நீளமான காலங்கியும் பெரிய மேல் சடடையும்ஆகும். பார்வதியிடம் நாடடியம் பயின்ற பானாசூரனுடைய மகள் உஷை அதனைக் கோபிகைகளுக்குக் கற்றுத்தர அவர்கள் ஆடிய ஆடடமே கதக் என்பார்கள். கடிமான தபேலா போல்களுடனும் (தபேலா சொற்கள்), நின்ற நிலையிலும், இருந்த இடத்திலேயே பல் சுற்றுக்களைச் செய்வதுமே கதக்கின் விஷேச பாணி எனலாம். கதக் நாட்டியத்தின் பாதவேலைகள் பரத நாடடியத்தில் தட்டடவைப் போன்றது. ஆனால் தாளத்தில் நுட்பமான கணக்குகளுடன் செய்யப்படுகின்றது. கதக் நாடடியம் பயில்பவர்களுக்குத் தாளத்தின் கனக்கு முறைகளும்கற்றுத் தரப்படும். 25. பரத நாட்டியப் பாணிகள் (Styles)
பரதநாடடியம் பல்வேறு இடங்களில் கற்றுத்தரப்பட்டாலும் குரு அல்லது குருவின் குரு தாம் இந்தப்பாணியில் கற்றுத்தருகிறேன் என்று சொல்வதைக் கேடகலாம். தமிழகத்தில் தஞ்சாவூர், பந்தனை நல்லூர், காஞ்சிபுரம் என்கின்ற மூன்று பாணிகள் உள்ளன். பந்தனை நல்லூரில் மீனாடசி சுந்தரம்பிள்ளையவர்களின் பாணியே மிகப்பழைமையானது என்பர். இவரது பாணி மிக எளிமையும் அழகிய சிற்ப நிலைகளைப்போன்று கரணங்களை அடிப்டையாகக் கொண்டதும் என்றும் கூறுவர்.
தஞ்சாவூர் பாணி என்பது வடிவேல் சின்னையா, பொன்னையா சகோதரர்களால் தோற்றுவிக்கப்பெற்றது. இவர்களே நாடடிய பத்ததியைச் சீர்ப்படுத்தினார்கள். நாட்டியங்களுக்கெனப் பலபாடல்கள், ஜதீஸ்வரங்கள் ஜாவளிகள், பதவர்ணங்கள், தில்லானாக்கள், போன்றவற்றை இச் சகோதரர்களே எழுதினார்கள். தஞ்சாவூர் பாணி மிக எளிமையானதும் நுட்பமானதுமாகும்.
காஞ்சிபுரம் பாணி, காஞ்சிபுரம் கந்தப்பாபிள்ளை என்பவரின்
முப்பாடடனார்கள் பயிற்றுவித்த பாணியாகும். இப்பாணியினை நன்கு
புகழ் மனக்கச் செய்தவர்கள் காஞ்சிபுரம் எல்லப்ப முதலியார்,
நயினாப்பிள்ளை ஆகியோராவர். காஞ்சிபுரம் பாணியில் 108 கரண
நிலைகள் மிக விளக்கமான அளவிலும் ஏராளமான முத்திரைகளுடனும்
உபயோகப்படுத்தப்படுகின்றன.
"
C.


Page 19

|- )
|-- |-|- --*---