கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பாலர் விளையாட்டுக்கள்

Page 1
翡
 


Page 2


Page 3

பாலர் விளையாட்டுக்கள்
கலாநிதி சபா. ஜெயாாசா
முதுநிலை விரிவுரையாளர், கல்வியியல துறை
தலைவர், இராமநாதன் நுண்கலை நடனத்துறை,
யாழ். பல்கலைக்கழகம்.
வெளியீடு: நகர்ப்புற அடிப்படைச் சேவைகள் நிகழ்ச்சித்திட்டம் மாநகர சபை- யாழப்பாணம்
"வளர்ந்தோரின் கடமைகளில் தங்கியுள்ளது சிறுவரின் உரிமைகள்”

Page 4
GAMES FOR PRE SCHOOL CHILDREN
Author.
Dr. Saba Jayarasah B. Ed, M.A., Ph.D
Senior Lecturer in Education
Head, Ramanathan Acadamy of Fine Arts Dance,
University of Jaffna
Cove Design Mr. S. Shanmugarajah
Advisör Dr. R. TheirVendran M.B.B.S. (Cey), M.Sc. (Com. Med) Medical Officer of Health. Municipal Council Jaffna.
Publishing Editor; A.Jesuretnam B. A Area Project Officer
Urban Basic Services Programme Municipal Council Jaffna.
Published by: Urban Basic Services Programme Municipal Council Jaffna
Printed at:- JAFFNA, DISTRICT CO-OPERATIVE
COUNCIL, 4O/1, NAVALAR ROAD, JAFFNA.
First Published-1999

அணிந்துரை யாழ். பல்கலைக்கழக கல்வியியல் துறையின் தலைவராக விளங்கும் கலாநிதி சபா ஜெயராசா அவர்களினால் ஆக்கப்பெற்ற 'பாலர் விளையாட்டுக்கள்’ என்னும் நூலுக்கு அணிந்துரை வழங்குவதில் இறும்பூதெய்துகின்றேன்.
கலாநிதி சபா. ஜெயராசா அவர்கள் பாலர் கல்வி மீது கொண்டுள்ள பற்றின் வெளிப்பாடே இப் 'பாலர் விளையாட்டுக்கள் ” என்னும் படைப்பாகும்.
ஓடி,கூடி விளையாடு பாப்பா என்ற பாரதியின் கூற்றுக்கொப்ப விளையாட்டுக்கள் சிறார்களிடத்து மகிழ்ச்சியையும், ஒற்றுமையையும் வளர்க்கும் வகையில் திட்டமிடப்பட்டு முன் பள்ளிகளில் கிடைக்கப்பெறும் வளங்களைப் பயன்படுத்தி விளையாடக்கூடிய முறையில் வடிவமைக்கப்பட்டிருப்பது கலாநிதி சபா. ஜெயராசா அவர்களின் தனிப்பணியாகும
இன்றைய சிறார்கள் நாளைய தலைவர்கள் என்ற கூற்றினை மெய்ப்பிக்கும் வகையில் ஆரோக்கியமான இளைஞர் சமுதாயத்தை உருவாக்குவதற்குரிய முதற்படியாக இவ்வெளியீட்டைக் குறிப்பிடலாம்.
இப்பணியைப் பொதுநல நோக்கோடு நிறைவேற்றிய கலாநிதி சபா. ஜெயராசா அவர்களைப் பாராட்டுவதுடன் , இது போன்ற செயற்பாடுகளுக்குத் தேவையான நிதியை வழங்கி வரும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்திற்கும் எனது நன்றிகள்.
இறுதியாக இவ்வெளியீட்டினை முழுமையடைவித்தலில் முக்கிய பங்காற்றிய யாழ்பாண மாநகரசபையின் சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி இ.தெய்வேந்திரன் அவர்களையும், அவருக்கு உறுதுணையாக விளங்கிய மாநகரசபையின் நகர்ப்புற அடிப்படைச் சேவைகளின் திட்ட அலுவலர் திரு. அ. யேசுரத்தினம் அவர்களையும் உளமாரப் பாராட்டுகின்றேன்.
மாநகரசபை அலுவலகம், வே.பொ. பாலசிங்கம்
யாழ்பாணம், மாநகர ஆணையாளர்.
unpusT600TLD.

Page 5
ஆலோசகர் உரை
கலாநிதி சபா ஜெயராசாவினால் உருவாக்கம் பெற்ற பாலர் விளையாட்டுக்கள் என்ற நூலை வெளியிடுவதில் நாம் பெருமையடைகின்றோம். எமது நகர்ப்புற அடிப்படைச் சேவைகள் நிகழ்ச்சித் திட்டத்தின் பள்ளி முன்னிலைப்பிள்ளைகள் நலனுக்கான பணிகளில் ஒன்றாக இது அமைகின்றது.
முற்றிலும் விஞ்ஞான ரீதியான அண்மைக்கால உளவியல் சம்பந்தமான ஆய்வுகளைத் தழுவியும், எமது சூழலுக்கேற்பவும் உருவாக்கம் பெற்றுள்ளது.
இதன் ஆக்கத்திற்கு உதவிய கலாநிதி சபா. ஜெயராசாவுக்கும் வெளியிட உதவி வழங்கிய ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்திற்கும் எமது நன்றி.
வைத்திய கலாநிதி இ.தெய்வேந்திரன் சுகாதார வைத்திய அதிகாரி,
ஆலோசகர் நகர்ப்புற அடிப்படைச் சேவைகள் நிகழ்ச்சித் திட்டம்
யாழ். மாநகரசபை.

பாலர் விளையாட்டுக்கள்
அசைவுகளில் இருந்தே குழந்தைகளின் கல்வியை வளம்படுத்தவேண்டியுள்ளது. விளையாட்டுகளின் போது குழந்தைகளின் அசைவுகளைப் பொருண்மை கொண்ட அசைவுகளாக மாற்றும் பணியைப் பாலர் கல்வி ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
விளையாட்டுக் களோடு இணைந்த கற்றல விளையாட்டுக்களோடு இணைந்த புலன்களின் பயிற்சி மனவெழுச்சிக் காட்டுப்பாடுகள் முதலியவற்றை முன்னெடுக்கும் வகையில் ஒவ்வொரு விளையாட்டுக்களும் குழந்தை உளவியல் அடிப்படையிலே உருவாக்கப் பட்டுள்ளன.
விளையாட்டுகள் குழந்தைகளிடத்து மகிழ்ச்சியையும், உயர்ந்த விழுமியங்களையும் வளர்க்கும் வகையிலே திட்டமிடப்பட்டுள்ளன. அதிக பொருட் செலவின்றி சூழலிலே கிடைக்கப் பெறும் வளங்களைப் பயன்படுத்து மாறும் இந்நூலிலே குறிப்பிடப்படும் விளையாட்டுக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன்
பாலர் கல்வியின் உயர்ந்த இலக்கானது மாணவர்களின் உள்ளத்திலே நற்பண்புகளை வளரச் செய்தல் என்பதை ஆசிரியர்கள் மனங்கொள்ளல் வேண்டும்.
கல்வியியல் துறை, -சபா. ஜெயராசா யாழ் பல்கலைக்கழகம்.

Page 6

விளையாட்டு-1
உள்-வெளி விளையாட்டு நோக்கம்:-
விளையாட்டுக்களின் வாயிலாகக் கேத்திர கணித எண்ணக் கருக்கள் சிலவற்றை அறிதல்.
வேண்டப்படும் பொருள்:
பந்து,
செயல்:
வட்டம, சதுரம், முக்கோணி முதலியவற்றை நிலத்தில் அல்லது கடதாசியில் வரைந்து ஒரு மாணவர் ஓடிச் சென்று வடிவத்திலுள்ளே பந்தை வைத்தல் இன்னொருவர் ஓடிச்சென்று வெளியே எடுத்து வைத்தல்.
பந்தை வைக்கும் பொழுது மாணவர் உரத்துச் சொல்லுதல் வேண்டும்.
"வட்டத்தினுள்ளே பந்தை வைத்தேன்' "வட்டத்தின் வெளியே பந்தை வைத்தேன் ” "சதுரத்தினுள்ளே பந்தை வைத்தேன்' "சதுரத்தின் வெளியே பந்தை வைத்தேன்' முக்கோணியின் உள்ளே பந்தை வைத்தேன்' முக்கோணியின் வெளியே பந்தை வைத்தேன்

Page 7

(Oguj65
விளையாட்டு-2 ר-_____ புதிர்ப் பொதி விளையாட்டு
நோக்கம்:
பொருட்களை இனங் காணும் திறனையும், நினைவுத் திறனையும், வளர்த்தல்.
வேண்டப்படும் பொருட்கள்:
பெரிய கடதாசி உறைகள் , அதற்குள் போடப்படக் கூடிய பொருட்கள்.
எடுத்துக் காட்டு
பேனை, பென்சில், அழி, பல வண்ணக் கடதாசிகள் , சிறிய எளிய உபகரணங்கள் , பொருட்களைக் குறிக்கும் படங்கள், சொல் அட்டைகள் முதலியவை.
கடதாசி உறைக்குள் போடப்பட்ட பொருட்களை
மேசையிலே கொட்டி மாணவர் ஒரு குறுகிய நேரத்துள்
பார்க்கும் படி சொல்லவும். பார்த்ததன் பின்னர் அவற்றை மூடிவிட வேண்டும் ,
அதன் பின்னர் மாணவர் பார்த்த பொருட்களைச் சொல்லும் படி செய்யவும். மாணவர் சொல்லும் பொருட்களைக் குறிக்கும் படங்களை காட்டி மீளவலியுறுத்தல் செய்யலாம்.

Page 8

- 「かー விளையாட்டு-3 " , "ീ",
மலர் விளையாட்டு
நோக்கம்:-
நிறங்களை இனங்காணும் புலப் பயிற்சியை வளர்த்தலும் கோலமாக்கும் திறனை வளர்த்தலும்,
வேண்டப்படும் பொருட்கள்
பல வர்ண்ணங்களைக் கொண்ட பூக்கள்.
(og u 16Ó:-
மாணவர்களைச் சோடியாகப் பிரித்தல். ஒருவர் பூப்பறிப்பவர் மற்றவர் பறித்த பூவைக் கோலமாக அடுக்குபவர் வகுப்பறையின் நடுவிலே பூக்களை வைத்தல் சற்றுத் தூரமான இன்னொரு மண்டபத்தில் கோலமாக அடுக்குபவர்களுக்கு இடம் ஒதுக்கிக் கொடுத்தல்.
பூப் பறிப் பாளர் தமக் குத் தரப் பட்ட வண்ணத்தையுடைய பூக்களைத் தெரிந்தெடுத்துக் கொண்டு வந்து கோலம் அடுக்குபவருக்குக் கொடுத்தல் வேண்டும். வண்ணத் தெரிவு, வேகம், கோலவுரு அமைக்கும் திறன் முதலிய திறன்களை ஆசிரியர் கண்டறிதல் வேண்டும்.

Page 9

129298
விளையாட்டு-4 உறுப்பு அறிதல் விளையாட்டு
நோக்கம்:-
விளையாட்டு வாயிலாக உறுப்புக்களின் பெயரைத் திருத்தமாகப் பேசப்பழக்குதலும், சொற்களை இனங்காணுதலும்,
வேண்டப்படும் பொருட்கள்:
மனித உறுப்புக்களைக் குறிக்கும் சொல்லட்டைகள்
மனித உறுப்புக்களைக் குறிக்கும் சொல் அட்டைகளை நடுமேசையிலே பரவி வைத்தல், சுற்றி வர பெரிய வட்டமாக மாணவர்கள் நிற்றல் ஆசிரியர் அல்லது அணித்தலைவர் ஒரு மாணவரது பெயரைச் சொன்னதும் அவர் ஒரு முறை வட்டத்தைச் சுற்றி
ஓடிவந்து தான் விரும்பும் மாணவரின் ஏதாவது ஓர்
உறுப்பிலே தொட வேண்டும். (கண் என்ற உறுப்புத் தவிர்க்கப்பட்ட வேண்டும்) அவ்வாறு தொட்டதும் அந்த மாணவர் குறித்த உறுப்பின் பெயரைத் திருந்தமாகச் சொல்லல் வேண்டும். அந்த மாணவருக்கு வலப்புறம் நிற்பவர் மேசைக்குச் சென்று சரியான சொல் அட்டையை எடுத்துக் காட்டல் வேண்டும்.

Page 10
܀ܠ ܐ ܐ ܀ : 22 ܬܐ
 
 
 
 
 
 
 
 
 
 
 

நோக்கம்:
ஒருவட்டத்தின் நீளத்தின் ஆரை மாறாத் தன்மையை விளையாட்டின் மூலம் உணர்த்தல். (ஆசிரியர் கணிப்பு முறைகள் எதனையும் கற்பிக்கக்கூடாது. முற்றிலும் விளையாட்டாகவே இருந்தல் வேண்டும்) வேண்டப்படும் பொருட்கள்
உருளை வடிவிலான ஒரு மரத்தடி அல்லது ஒரு சிறிய உலக்கை @jភាតា நீளமான மெதுவான கயிறு, ஒரு சிறிய தடி
(Oguj6):
விளையாட்டுத் திடலின் மத்தியிலே சிறிய உலக்கையை ஆடாமல் உறுதியாக நட வேண்டும். சுற்றிச் அதனைச் சுற்றிச் சுழலக் கூடியவாறு வட்டவடிவமான கட்டுப் போடல் வேண்டும். அதில் மெதுவான கயிற்றைக் கட்டி பல்வேறு அளவுகளில் சிறிய தடியைப் பயன்படுத்தி மாணவர்கள் வட்டங்கள் போடுதல். வேண்டும். ஒரு வட்டத்தின் விட்டத்தின் விட்டத்துரம் எங்கும் சமமாக இருத்தலைச் செயல் வழியாகக் காட்டுதல் வேண்டும்.
F*
-~
{{
erbútico

Page 11
繆*壽*溪
 
 

விளையாட்டு-6
மேசை அலங்கரிப்பு விளையாட்டு
நோக்கம்:
மேசையை அலங்கரிக்கும் திறன்களை ഖണjpgൺ.
வேண்டப்படும் பொருட்கள்:
அலங்கரிப்புக்குரிய துணி பூச்சாடி, பூக்கள், புத்தகம், சோப்பு, பேனா, பென்சில் முதலியன.
மாணவரைத் தனியாகவோ குழுவாகவோ அலங்கரிப்பில் ஈடுபடுத்தலாம். விரிப்பு விகித சமம் 1.3 g Tig சமநிலை, மேசையின் வலதுபுறம் ഞ ഖ 5 5 L L L L 5 ♔ | [L ഞ ഖ , (9) L L] LI AMB LsĎ வைக்கப்படக்கூடியவை. மேசையோடிணைந்த கதிரை வைக்கும் முறை முதலியவற்றை ஆசிரியர் உற்று நோக்குதல் வேண்டும்.
அலங் கரிப் புக் கு முன் னர் மேசையைத் துடைத்தல், அலங்கரிப்புக்குப் பின்னர் கைகளைக் கழுவுதல் முதலியவை கவனத்திற் கொள்ளப்படுதல் வற்புறுத்துப்படுகின்றது.

Page 12

繼
t
S
விளையாட்டு-7
விழா மண்டபம் அறை அலங்கரிப்பு விளையாட்டு
நோக்கம்:-
உடலசைவுகளுடன் இணைந்த அழகியல் உணர்வை வளர்த்தல்.
வேண்டப்படும் பொருட்கள்:
பூக்கள் , மாலைகள், மாவிலை, தோரணம், கயிறு, பலூன்கள்,குத்துவிளக்கு, முதலியவை
ஆசிரியர் விழாவைக் குறித்துரைத்தல், அதன் நோக்கத்தை விளக்கி, மாணவர்களை முழுமையாகவோ குழுக் களாகவோ, தனியாகவோ பிரித் துக் செயற்பாடுகளை ஒப்படைக்கலாம். தேநீர் அல்லது இனிப்புப் பரிமாறுதல் ஒழுங்கு செய்யப்படுதல் சாலச் சிறந்தது. அதன் பின்னர் காட்சி வடிவை ஆசிரியர் உதவியுடன் மாணவர்கள் பட வடிவமாக்கும் கற்றலை முன்னெடுக்கலாம்.

Page 13

у
விளையாட்டு-8 ", "o
மாமர விளையாட்டு "
நோக்கம் : - -
மரத்தின் பல்வேறு உறுப்புக்களையும் மாணவர் அறிந்து கொள்ளல்.
வேண்டப்படும் பொருட்கள்
மாங்காய் அல்லது மாம்பழங்கள்- இவை இல்லாவிடிலும் விளையாட முடியும்.
செயல்
விளையாட்டுத் திட மணலில் ஆசிரியர் ஒரு பெரிய மாமரத்தை வரைதல். 56(36)Ii, Lä,5(36)Ii. நடுமரம், வலப்புறக்கிளை, இலை, பூ, காய், கனி முதலியவற்றை வரைந்து, முடியுமானால் மணலிலே பெயரிடல் வேண்டும். அதன் பின்னர் ஆசிரியர் சொல்லும் இடங்களில் மாணவர் சென்று நிற்றல் வேண்டும். (உ- ம்- ஒரு மாணவரைப் பார்த்து 'நடுவேரில் சென்று நிற்கவும்” என்றதும் அந்த மாணவர் சரியாக அந்த உறுப்பை அறிந்து போய் நிற்றல் வேண்டும்) விளையாட்டு முடிவில் மாணவருக்கு மாம்பழம், மாங்காய் முதலியவற்றைப் பரிசாக வழங்கலாம்.
エ* * 1 \
டா

Page 14

3929
விளையாட்டு-9
பெரிது சிறிது விளையாட்டு
- துே, Fi/IP به سه پایه oജ?
G.
நோக்கம் :
பெரிய பொருளையும் சிறிய பொருளையும் கலந்து வைத்தல் (உ-ம்- பெரிய தோடம்பழம் சிறிய தோடம்பழம் , பெரிய வாழைப்பழம்,சிறிய வாழைப்பழம், பெரிய வெண்கட்டி, சிறிய வெண்கட்டி
(Ogou 16Ö:
இதனைத் தனி விளையாட்டாகவோ குழு 6,606itut Lai (86).It கொடுக்கலாம். பெரியவற்றை ஒரு பெட்டிக்குள் போடும் படியும் சிறியவற்றை இன்னொரு பெட்டிக்குள் போடும் படியும் மாணவரைப் பணித்தல் வேண்டும் சரியாகவும், விரைவாகவும் செய்பவர்களுக்கு வெகுமதி வழங்கலாம். இதனைத் தொடர்ந்து ஒரு தராசில் ஒரே பொருளின் பெரியதை ஒரு புறமும் , அதே பொருளின் சிறியதை இன்னொரு புறமாகவும் வைத்து நிறுத்தும் பார்க்கலாம்.

Page 15

- - *. ****B:
- .ടു*** بهترین ב - סהר"
ܨܵܛܵ__-רי-רו
விளையாட்டு -10 ---
கடித உறை விளையாட்டு
நோக்கம்
வண்ணங்கள் வடிவங்கள், சொற்கள் முதலியவற்றை அறியும் திறன்களை வள்ர்த்தல்.
வேண்டப்படும் பொருட்கள்
பயன்படுத்திய பழைய கடித உறைகள் வண்ணங்கள், இரண்டு தட்டங்கள், அல்லது திறந்த பெட்டிகள்.
(OEFU 6ð
ஒரு கடதாசியில் 'மாம்பழம்” என்று எழுதி அதன் உருவத்தை வரைதல், இன்னொரு கடதாசியில் - நிறம்
பூசிய மாம் பழத்தை வரைதல் இரண்டையும்
வேறுவேறுகடித உறைக்குள் இடுதல் , ஒன்றை ஒரு தட்டத்திலும் , மற்றதை வேறு ஒரு தட்டத்திலும் போடுதல் இவ்வாறு பழங்கள், ஒரே நிறத்தையுடைய பறவைகள், பொருள்கள் என்று தேவைக்கேற்ற படி வரைந்து பயன்படுத்தலாம் - முதல் தட்டத்தில் உள்ள கடித உறையின் வடிவத்துக்கு ஏற்ற வண்ணம் வரையப்பட்ட கடித உறையைக் கண்டு பிடித்து மாணவர்கள் ஆசிரியருக்குக் காண்பித்தல் வேண்டும்.

Page 16

விளையாட்டு-11
அடுக்குப்பெட்டி விளையாட்டு
நோக்கம்
பரப்பளவின் வேறுபாடுகளை அறிந்த (O.ET6iT6T6) TLD. வேண்டப்படும் பொருட்கள்
ஒன்றினுன் ஒன்றாக அடுக்கப்படக் கூடிய ஒலையால் அமைந்த பெட்டிகள் அல்லது மரம், பிளாஸ்ரிக் முதலியவற்றால் அமைந்த அடுக்குப் பெட்டிகள்.
(o)a Fu J6Ò
ஆசிரியர் அடுக்குப் பெட்டிகளை எடுத்துக் குலைத்து , தொடர்பு அற்ற முறையிலே பரப்பி வைத்து விடுதல் வேண்டும், அதன் பின்னர் ஒன்றினுள் ஒன்றாக எல்லாப் பெட்டிகளையும் அடுக்கும்படி மாணவர்க்குக் கூறுதல் வேண்டும். தனி விளையாட்டாகவோ குழு விளையாட்டாகவோ இதனைச் செயற்படுத்தலாம். அடுக்குகளை மாணவர்கள் சரியாக அடுக்கி முடிந்த பின்னர், பொருள் நிலையிலிருந்து படநிலைக்கு ஆசிரியர் மாணவர்களை அழைத்துச் செல்லுதல் வேண்டும். அடுக்குப் பெட்டிகளை ஒன்றுள் ஒன்றாக அமையும் சதுரங்களால் மாணவர்களை வரையும் படி செய்தல்
வேண்டும்.

Page 17

விளையாட்டு:12
கொடி விளையாட்டு
நோக்கம்
தசை நார் இயக்கத் திறன்களை வளர்த்தலும் கொடி வணக்க எண் ணக் கருவை விளங்கிக் கொள்ளலும்,
வேண்டப்படும் பொருட்கள்
பள்ளிக் கூடக் கொடிகள் - ജ| ഖ] ഞ } ஏற்றுவதற்கான சாதனங்கள்.
மாணவர்கள் கொடிகளைக் கையில் ஏந்திக் கொண்டு ஓடி கொடிக்கம்பத்திற்குச் செல்லல், ஆசிரியர் 6io Tajbólu J6)| TAMBI கொடியை நூற்கயிற்றிலே இலகுவாகத் தொடுத்து ஏற்றுதல் ஏற்றியதும் கொடிவணக்கம் செய்தல் ஒரு முறை கொடிக்கம்பத்தை வலம் வந்த 160160ff கொடியைப் பெளவியமாகக் கீழ் இறக்குதல். விரைவாக இச் செயலைச் செய்து முடிக்கும் மாணவர்க்கு முதல் வெகுமதி வழங்கலாம்.

Page 18

துே
ീഴൂ',
ീബും (3. ܥ ܐ .
விளையாட்டு-13 ബ SS *。 .7הלר/?
நிறை குட விளையாட்டு
நோக்கம்: -
தசைநார் இயக்கத்திறன்களை வளர்த்தலும், அழகியல் உணர்வை முன்னெடுத்தலும்,
வேண்டப்படும் பொருட்கள்
நிறைகுடம் வைப்பதற்குரிய பொருள்கள். மலர்கள், மாலை முதலியன.
(og-U 16Ö
நிறைகுடம் வைப்பதற்குரிய இடத்தைத் தயார் செய்வதிலிருந்து செயல் ஆரம்பமாதல் வேண்டும். நிறைகுடத்தில் நீரை நிரப்பும் செயலையும் மாணவர்களே மேற்கொள்ளுதல் சாலச் சிறந்தது. நிறைகுடம் வைத் தபின் நிறைகுடத் தை மலர் களாலும் மாலைகளாலும் மாணவர்கள் அலங்கரித்தல் வேண்டும்.மாணவரின் அலங்கரிப்பை உற்று நோக்கி அவர்களின் அழகியல் உணர்வின் ംഖണി[ILITEഞണ് இனங்காணுதலும் முக்கியமானது. அதன் பின்னர் மாணவர் நிறைகுடத்தை வண்ணப் படமாக வரையலாம்.

Page 19
须
 

விளையாட்டு-14
தண்ணிர் விளையாட்டு
நோக்கம் :
நீரின் கொள்ளளவுகளை அறிந்து கொள்ளல்.
வேண்டப்படும் பொருள்கள்
பல அளவுகளைக் கொண்ட ஒரே மாதிரியான குவளைகள், மாணவர் அள்ளக் கூடியவாறு நீர்த்தாங்கியில் அல்லது வாளியிலே நீர்.
பெரிது சிறிதாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் குவளைகளில் ஒன்றை மாணவர் எடுத்துச் சென்று அதனுள் நீரை அள்ளிக் கொண்டு வந்து எல்லாக் குவளைகளையும் நிரப்புதல் வேண்டும்.(ஆற்றல் மிக்க மாணவர் பெரிய குவளைகளையும் யார் வேகமாக நிரப்பி முடிக்கின்றாரோ அவருக்கு முதல் வெகுமதி வழங்கலாம். செயல் நிறைவேறியதும் குவளைகளின் கொள்ளளவு தொடர்பான செயல் முறைகளோடிணைந்த வினாக்களை ஆசிரியர் கேட்கலாம்.

Page 20

', "శి? விளையாட்டு-15 ി', ' G';
விடையோட்டம் -
உடனடியாக விடை சொல்லும் திறனை மாணவர்களிடத்து வளர்த்தல்.
வேண்டப்படும் பொருட்கள்
விலங்குகள், பறவைகள், பூக்கள், பொருள்கள் முதலியவற்றின் படங்கள், கடித உறைகள். (OSU 6)
முதலில் மாணவர்களை வட்டவடிவில் அல்லது நீள் வட்ட வடிவில் உட்காரவைத்தல். ஒரு மாணவரை ஆசிரியர் வரவழைத்து ஒரு படத்தை ஏனைய மாணவர்கள் பார்க்காதவாறு கொடுத்தல் வேண்டும்.
முடியுமானால் கடித உறைகளினுள்ளே படத்தை வைத்துக் கொடுக்கலாம். படத்தை வாங்கிய மாணவர் ஏனைய மாணவர்களுக்கு முன்னால் வட்டமாக ஓடி, விரும்பிய மாணவருக்கு படத்தைக் கொடுத்தல் வேண்டும். படத்திலுள்ள பொருளை உட்கார்ந்து இருக்கும் மாணவர் சரியாகச் சொன்னால் அவர் அதே இருக்கையில் தொடர்ந்து இருக்க முடியும். சரியான விடை சொல்லாவிடில் அந்த மாணவர் படம் கொண்டு வந்த மாணவருக்குக் தமது இருக்கையைக் கொடுத்து விட்டு படத்தை வாங்கிக் கொண்டு ஓடி இன்னொரு மாணவருக்குக் கொடுத்தல் வேணடும். இவ்வாறு சங்கிலித் தொடராக விடையோட்டத்தை நிகழ்த்த முடியும்.

Page 21

விளையாட்டு-16
கயிற்றுவிளையாட்டு நோக்கம்
தசை நார் இயக்கத்திறன்களுக்குப் பயிற்சியளித்தலும் நீளம் தொடர்பான எண்ணக்கருவை ബണ] (|)
வேண்டப்படும் பொருள்கள்
ஒரே தன்மையுள்ள ஒரே நீளத்தைக் கொண்ட கயிற்றுத் துண்டுகள்
(Olafu Gl).
LD I 600I 6)I j ஒவ்வொருவருக்கும் GF LsD எண்ணிக்கையான கயிற்றுத் துண்டங்களைக் கொடுத்து அவற்றை ஒன்றுடன் ஒன்று முடிந்து ஒன்றாக்கும்படி கூறல், வேகமாக முடிக்கும் மாணவருக்கு வெகுமதி வழங்கல் அடுத்து, இணைக்கப்பட்ட கயிற்றின் நீளத்தினை ஆசிரியர் உதவியுடன் மாணவர்கள் அளந்து குறித்தல் இவ்வாறாக ஒவ்வொரு மாணவரும் தாம் முடிந்த கயிறுகளின் நீளத்தை அளந்து ஒப்பிடல். முடிச்சு அமைத்தலில் கூடிய கயிற்றை பயன்படுத்திய மாணவரது கயிறின் நீளம் குறைவாக இருக்கும். அதனை ஆசிரியர் சுட்டிக்காட்டி , முடிச்சு அமைத்தலின் சிக்கனத்தன்மையை குறிப்பிடலாம்.

Page 22

** : : Ֆro- స్కా
o s .エー。 சுருள்வலை விளையாட்டு
விளையாட்டு -17
நோக்கம்
இழுவிசை என்ற எண்ணக்கருவை விளையாட்டு மூலம் புலப்படவைத்தல் കഥ , 塹 to der ' (1) ട്ട ('#
வேண்டப்படும் பொருள்கள் ീlo
பிளாஸ்ரிக் அல்லது நொய்தான கம்பியியால் ஆன சுருள்வலை (ஸ்பிறிங் நீளம் அளக்கும் மீட்டர் மட்டை அல்லது நாடா, ஸ்பிறிங் தராசு
(og-U 165
சுருள் வலையின் ஒரு புறத்தில் ஒரு மாணவரும் மறுபுறத்தில் இன்னொரு மாணவரும் நின்று அதனை இழுத்தல், இழுக்கும் பொழுது அது விரிவடையும், விரிவடைந்த நிலையில் அதன் நீளத்தை ஆசிரியரின் உதவியுடன் குறித்தல் கூடிய வலுவைப் பயன்படுத்தி இழுக்கும் பொழுது நீளம் கூடுதலை மாணவர் அறிந்து கொள்வதற்கு ஆசிரியர் உதவுதல் வேண்டும். இக்கருத்தை வலுப்படுத்த ஆசிரியர் ஸ்பிறிங்தராசைப் பயன்படுத்தி மீள வலியுறுத்தல் செய்யலாம். ܗ
s

Page 23
靈》
 

ബിങ്ങബu'T' (, -18 கருத்து அறிதல் ഖിഞണu'T' (
நோக்கம்
புத்தகத்தை பயன்படுத்தும் திறனை வளர்த்தல்.
வேண்டப்படும் பொருள்கள்
ஒரே புத்தகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பிரதிகள்.
(OFUJ6)
மாணவர்களை வரிசையாக இருக்கச் செய்தல். அவர்களுக்கு நேராக ஒவ்வொரு மேசைகளை அல்லது வாங்குகளை வைத்து அவற்றின் மேல் புத்தகங்களை மூடிவைத்தல். பின்னர் ஆசிரியர் விடுக்கும் கட்டளைகள் சில வருமாறு. ஏழாம் பக்கத்தில் காணப்படும் படம் என்ன? ஒன்பதாம் பக்கத்தில் காணப்படும் தலைப்பு என்ன? புத்தகத்தின் ஆசிரியர் யார்? முதலியன - ஆசிரியர் ஊது குழலை ஊதியதும் மாணவர் ஓடிச்சென்று, புத்தகங்களைப் புரட்டிப் - பார்த்து சரியான விடையை ஆசிரியருக்கு முதலில் வந்து சொல்பவருக்கு வெகுமதி வழங்கலாம். N

Page 24

விளையாட்டு 19
மணம் அறி விளையாட்டு
நோக்கம்
முகரும் புலனுக்குப் பயிற்சி தருதலும், அதனை மொழி வயிலாக வெளிப்படுத்துதலும்,
வேண்டப்படும் பொருள்கள்
பல்வேறு விதம் விதமான மணங்களை எழுப்பக் கூடிய பொருள்கள்-எடுத்துக்காட்டாக-மல்லிகைப்பூ மிளகு, உள்ளிப்பூடு, வெங்காயம், ஒடிக்கொலோன்.
செயல்
LDT 600I 6) i B60) 6II ഖ ' | ഖg ഖഥ1, உட் கார வைத்தல். அவர்களுக்கு நடுவே ஒரு மேசையில் மணம் தரும் பொருள்களை அவற்றின் பெயர்களுடன் ※ பார்வைக்கு வைத்தல் மாணவர்களுக்குத் தெரியாமல் அப்பொருளின் மனம் புலப்படக் கூடியவாறு சிறிய பொதிசெய்து வைத்தல். ஒரு மாணவர் வட்டமாக ஓடிவந்து யாராவது ஒரு மாணவருக்கு ஒரு பொதியை முகரும்படி கொடுப்பார். அந்த மாணவர் சரியாக விடை சொன்னால் இருக்கையில் உட்கார்ந்து கொள்ளலாம். சொல்லாவிடில் அதனை வாங்கிக் கொண்டு ஓடிச்சென்று இனி னொரு மாண வருக் குக் கொடுக் கும் படி தொடர்ச்சியாகச் செய்தல் வேண்டும்.

Page 25

விளையாட்டு20
நிறம் அறி விளையாட்டு
நோக்கம்
வர்ண் ணங்களையும் , அவற்றின் மாறும் கோலங்களையும் மாணவர்கள் அறிந்து கொள்ளல்.
வேண்டப்படும் பொருள்கள்
கண்ணாடி அல்லது வெண்நிற பிளாஸ்ரிக் குவளை, கரையும் வர்ண்ணங்கள், தண்ணீர்,
நூலகட في إفريق (o)FU 16Ö اوقron( 35 )ث*
யாழ்ப்பர் «»wLD . முதலில வர்ணி னங்களை க கலந்து புதியவர் ண் ணங்கள் ஆக் குதலை ஆசிரியர் காண்பித்தல் வேண்டும். பின்னர், குவளைகளில் ஒவ்வொரு வர்ண்ணங்களையும் கரைத்து வைத்தல் அதன் பின்னர் மாணவர்களுக்கு வேண்டுகோள்களை விடுத்தல் வெள்ளை வர்ண் ணத்தைப் பச்சை வர்ண்னமாக்குக- மஞ்சள் வர்ண்னத்தைப் பச்சை வர்ண்ணமாக்குக- முதலியன மாணவர்கள் புதிய வர்ண்ணங்கள் ஆக்குதலைச் சரியாகச் செய்து முடிந்த பின்னர் வர்ண்ணங்களை அவற்றுடன் தொடர்புடைய பொருள்களுடன் இணைத்துப் படங்களை வரையலாம். அல்லது ஒட்டுச்சித்திரங்கள் ஆக்கலாம்.

Page 26


Page 27
GAMES FOR PRE SCHI
Dr. SABA JAYAR Senior Lecturer in E Head, Ramanathan Acadamy
- University of Ja
Published by Urban Basic Services F
Municipal Council
With UNICEF Assista
'CHILDRENS RIGHTS ARE ADUL
*。
Jaffna District Co-operative Council Press.

OOL CHILDREN
ASAH ducation
of fine Arts Dance ffna
rogramme laffna
Ce
'S OBLIGATIONS"