கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பார்வை (விமர்சன நூல்)

Page 1
இயல்வாணன்
செல்வி ஜெகதீஸ்
 

3. -
(636)
சன நூல்)
ஆக்கம் :
வரி சாங்தலிங்கம், B, A,
T GՁ15iքան 6 *ன்னாகம்

Page 2

FT AU (J Ť60)6)J
விமர்சன நூல்
கவிஞர் துரையர்
அவர்களின்
༣ །སྤྱི, V། ༣༦༽ ཅི༦། ། தெருவிளக்கு கவிதை நூலிற்கு
Gudiña#GOTüô
122925
1. இயல்வாணன் 2. செல்வி, ஜெகதீஸ்வரி சாங்தலிங்கம், B, A, Djp.
urur GausslušG A/

Page 3
| ܟܐܝܢ ܗܘܘܪ நூல*ஆ *ஆ urfgöre,
கவிதை விமர்சன நூல் PAAR WHY
*ஆ
ിഖണ0% :
பாமா வெளியீடு
118, ஸ்ரேசன் ஒழுங்கை சுன்னாகம் கிழக்கு.
1998-04. IO
கரன் புத்தக நிலையம், சுன்னாகம்,
துர்க்கா ஸ்ரேசனேஸ், சுன்னா கற்.
அச்சுப் பதிவு :
திருமகள் அழுத்த கம், 3996iiiirasaw T 5 b .
 

வெளியீட்டுரை
ாண்ஐடுஆேண்டி
உலகிலே தனிமனித விமர்சனங்கள் மலிந்துள்ள இக்கால கட்டத்தில் இலக்கிய விமர்சன நூல் வெளிவரு வதை இலக்கிய உள்ளங்களும் தமிழ் புத்திஜீவிகளும் வரவேற்பார்களென நினைக்கிறேன்.
இந்நூல் கவிஞர் துரையர் (சு. துரைசிங்கம் ) அவர் களின் * தெருவிளக்கு' என்றும் கவிதை நூலுக்கு இருவர் எழுதிய விமர்சனக் கட்டுரைகளை உள்ளட்க்கியதாகும்.
எழுத்தாளர் இயல் வாணன் அவர்களும் தமிழ்த்துறை ஆசிரியை செல்வி ஜெகதீஸ்வரி சாந்தலிங்கம் அவர்களும் விமர்சித்துள்ளார்கள் இந்நூலிற்கு அணிந்துரையை வடக்கு கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர் திரு. க. கந்தசாமி அவர்கள் தத்துதவியுள்ளார்கள். தெருவினக்கு ஆசிரியரைப் பற்றி உடுவில் கல்விக்கோட்டப் பிரதிக்கல்விப்பணிப் பாளர், திரு. அ. தற்பரானந்தன் அவர்களும் எழுதி உதவியுள்ளார்கள். கட்டுரையாளர்களைப் பற்றி துரையர் அவர்கள் தந்துள்ளார் இந்நூல் எமது மூன்றாவது வெளி பீடாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர்கள் யாவேருக்கும் நன்றி சொல்லும் வேனை யில் அச்சு அமைத்துத்தந்த திருமகள் அழுத்தகத்தினருக் கும் நன்றி.
- பாமா துரைசிங்கம்

Page 4
வடக்கு - கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர்
திரு. க. கந்தசாமி அவர்கள்
வழங்கிய
அணிந்துரை
* தெருவிளக்கு ' து ைரயரின் கவிதைத் தொகுதி. இத்தொகுதியை விமர்சிக்கும் 'இருவரின் பார்வை ’ என்னும் நூலுக்கு அணிந்துரை வழங் குவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். பெருமை யும் கொள்கின்றேன்.
இவ் விமர்சனங்கள் ஆலமரத்தின் விழுதுகள் போல ? தெருவிளக்கிற்கு' மேலும் பலம் கொடுக் குமென நம்புகிறேன்.
இன்னொரு வகையாக கூறுவதானால் பொற் குடத்திற்கு பொட்டிட்டது போல் அழகு வழங்கு மென நினைக்கிறேன்.
தெரு விளக்கு ஒர் அருமையான கவிதை நூல். இந்நூலில் உள்ள பல பாட்டுகள் இசை யோடு பாடப்படுமேயானால் அவை காலத்தை வென்று நிற்கக் கூ டிய  ைவ. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் பாட்டுக்கள் போன்று சிலநல்ல

iv
உணர்வை ஊட்டக்கூடியன. ஆழமான கருத்து கள் உள்ளன. ' தொழில் தருக" என்னும் தலைப் புடைய பாட்டு இதற்கு ஒர் உதாரணம். 'மூச்சு’ * துணை' ஆகியவையும் இவ்வகையினதே.
துரையரின் சமூகஞானம் பாராட்டக்கூடியது. * மாடாக மலையேறி வீடற்று நிற்கும் மலை நாட்டு மக்கள் பற்றியும் ' கால்பிடித்து ’ , வால் பிடித்துத் திரியும் கோழைகள் பற்றியும், கலப் படுத்தி வியாபாரம் செய்து பணம் பறிப்போ ரைச் சாடியும் உள்ள கவிதைகள் நல்ல சமுதாய உணர்வை ஊட்டுபவை. படிக்கும் போது இவர் கள் மேல் வெறுப்பையே கொட்டுகிறது. நல்ல வற்றைக் காட்டியும் இருக்கிறது இந்நூல்.
இன்றும் நம்மவரிடத்தே சுரண்டி வாழ் வோரும், அடக்கி ஆள்வோரும் அழியாது இருக் கின்றனர் இவர்களை சாடிக்காட்டுகிறார் துரையர், அவர் மனித நேயத்தை மதிக்கிறேன்.
திருகோணமலை க. கந்தசாமி 28 - 03 - 1998

Page 5
நூலாக்க எழுத்தாளர்கள்
இயல்வாணன்
இயல்வாணன் (சுப்பிரமணியம் பூரீகுமரன்) 1990ஆம் ஆண்டு எழுத்துத் துறையில் பிரவேசித்த இளைய தலை முறை எழுத்தாளரான சுன்னாகத்தினைச் சேர்த்த இவர் முதிய-பரந்த அறிவு கைவரப் பெற்றவர் நாவல், சிறுகதை,
கவிதைகள் எழுதி வருபவர்.
1992இல் இவர் எழுதிய சுவடுகள் என்ற நாவல் மீரா வெளியீடாக வந்தமை குறிப்பிடத்தக்கது. 1993இல் சுபமங்களா சஞ்சிகையும் தேசிய கலை இலக்கியப் பேர வையும் இணைந்து நடத்திய உலகளாவிய ஈழத்தவர் களுக்கான போட்டியில் மூன்றாவது பரிசினைப் பெற்றமை பாராட்டற்குரியது.
சிட்டு என்னும் அறிவியல் இதழின் இணையாசிரிய ராக இருந்த இவர் இப்பொழுது பலாலி ஆசிரியசுலர் சாலை மாணவராக இருக்கிறார். இவரின் பார்வையில் தெருவிளக்கு விமர்சிக்கப்படுகிறது.
செல்வி. ஜெகதீஸ்வரி சாங்தலிங்கம் B, A,
தன்னாகத்தினைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஸ்கந்தவரோதயக் கல்லூரி உயர்பீட தமிழ்த்துறை ஆசிரி யராகச் சேவையாற்றுகிறார்.
இலக்கிய ஆர்வலரும் விமர்சகருமான இவர் டானிய லின் நாவல்கள் பற்றி எழுதிய ஆக்கம் பலராலும் மெச்சப்பட்
lig5.
அமைதியாக எதனையும் ஆராய்ந்து எழுதும் ஆற்றல் கொண்ட இவரின் ஆக்கங்கள் தொடர வேண்டும் என்பது * 67 loĝ6) S-92y62J 7. O , - துரை யர்

தெருவிளக்கு ஆசிரியர் சுப்பிரமணியம் துரைசிங்கம் (துரையர்)
கந்தரோடையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கந்தரோடையின் இரு கண்மணிகள் போல் விளங்கும் கல் விக்கூடங்களான தமிழ்க் கந்தையா வித்தியாசாலையிலும் ஸ்கந்தவரோதயக் கல்லூரியிலும் முறையே ஆரம்ப உயர் கல்வியைக் கற்றவர். அன்று வகுப்பாசிரியர்களாக விளங்கிய திரு. சி. பொன்னம்பலம் ( ஆதவன் ) பேராசிரியர் ப. சந் திரசேகரம் ஆகியோரின் பாராட்டுதல்களால் உந்தப் பெற்று எழுத்துலகில் புகுந்தவர். பின்னர் ? தெருவிளக்கு ' என் னும் கவிதைத் தொகுதியை வெளியிட்டதன் மூலம் தனது கவித்துவத்தை வெளிக்காட்டியவர். முதன்முதலாக ' கவிக் குரல்கள் ' எனும் ஒலிப்பதிவு நாடா நூலினை வெளியிட்டு இலக்கிய இரசிகர்களின் சிறந்த பராட்டைப் பெற்றவர். * ஐம்பது நாடுகளை அறியுங்கள் ' எனற நூல்முலம் மாணவர்களின் சமூகக்கல்வி அறிவததேவையைப் பூர்த்தி
யாக்கிக் கல்விச்சமூகத்தின் மதிப்பினைப் பெற்றவர்.
* ஆடும் மயில் ’ என்னும் சிறுவர்களுக்கான கவிதைத் தொகுதியினை வெளியிட்டு சிறுவர் இலக்கியத்திற்கு அணி செய்தவர். இளம் எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கியவர் களுள் ஒருவராக இருந்து இளம் சந்ததியினரை ஊக்குவித்த பெருமையுடையவர். தான் ஆரம்பக்கல்வியைக்கற்ற தமிழ் கந்தையா வித்தியாலயத்திலேயே ஆசிரியத் தொழிலை 1960இல் ஆரம்பித்தார். பின்னர் பொகந்தலாவை, கம் பனை ஆகிய இடங்களில் ஆசிரியராகவும், கடுகண்ணாவை, குளவிசுட்டான், சுதுமலை வடக்கு மயிலணி ஆகிய இடங் களில் அதிபராகவும் இருந்து அரும்பணி புரிந்து வருகி றார். சிறந்த எழுத்தாளனும் கவிஞருமான இவரது படைப் புகள் சமுதாய முன்னேற்றத்திற்கு உந்து கோலாக உள்ளன.
அ. தற்பரானந்தன் பிரதிக்கல்விப்பணிப்பாளர் உடுவில் கோட்டக்கல்வி அலுவலகம்

Page 6
துரையரின் ' தெரு விளக்கு ' ஒரு வாசகப் பார்வை
- இயல்வாணன்
துரையர் எழுதிய தெருவிளக்கு என்னும் இக் கவிதை நூலை 1980 களின் நடுப்பகுதியில் வாசிப்பில் ஆர்வமுள்ள 8 ஆம் வகுப்பு மாணவ நிலை யில் - முதலில் படித்தேன். அன்றைய ரசனை நிலை யிலிருந்து மாறுபட்ட ரசனைப் புலத்தில் நிற்கும் ஒரு சாமானிய வாசகனாக இதனை மீளவும் படித்தேன். எனது உணர்வுகள் , அனுபவங்கள் மற்றும் அவதானங்களினூடே இந்நூல் பற்றிய எனது பகிர்வுகளை முன் வைப்பதாக இந்த விமர் சனம் அமைகிறது.
இந் நூல் சொல்லுஞ் சேதிகளும், படைப்பாக் கச் செயல் முறையும் பயன் பாடுடையனவா ? சமகால நடப்பியல்புகளை இது பிரதி பலிக்கிறதா ? என்ற இரு வினாக்களை எழுப்புவதன் மூலமே இந்நூலின் முக்கியத்துவம் பற்றி வரையறை βλάσιό αν φραγώ.
ஒரு படைப்பாளியை முக்கியப் படுத்துவது அவர் படைத்த படைப்புக்களின் எண்ணிக்கையா லல்ல. அது நலிந்த பிள்ளைகளின் குசேலனாக மட்டுமே அவரை அடையாளப்படுத்தும். மாறாக, அவர் படைத்த படைப்புக்களின் அழகியல் வெளிப் பாடும், கருத்துப் புலப்பாடுமே அவரை முக்கியப் படுத்தும். இது படைப்பாளியின் படைப்பாளுமை

υτή ουρου 2
யை, சிந்தனையோட்டத்தைத் தெளிவாகப் புலப் படுத்துகிறது. இதுவே அவரைச் சிறந்த படைப்பா ளியாக அடையாளப்படுத்துகிறது.
சொல் புதிது, பொருள் புதிது, சந்தம் புதிது என்று சோதி மிக்க நவகவிதை படைத்த பாரதியின் சிந்தனை மரபிலிருந்து உத்வேகம் பெற்ற நவீன தமிழ்க்கவிதை இன்றளவிலும் தன் விச்சோடு வளர்ந்துவந்திருக்கிறது பெருமளவில் கவிஞர்களும் களத்தில் இறங்கியுள்ளனர். மரபுக் கவிதை என்ற பெயரில் சொல்லடுக்குகளும் வார்த்தைச் சோடனை களும் வசனங்களுங் கூட குப்பைகளாய் குவிந் துள்ளன புதுக்கவிதைத் தாத்தா எனப் புகழப்ப டும் மு. மேத்தா உள்ளிட்ட பல பிரபல தமிழகக் கவிஞர்களின் கவிதைகளையும், இங்கே வாரமலர் களில் வெளியாகும் பெருமளவு கவிதைகளையும் இத்தகைய குப்பைகளாகவே கருத்திலெடுக்கிறேன்.
இந்த ரசனைப் புலத்தில் நின்று நல்ல கவிதை நூலாக தெருவிளக்கை என்னால் இனங்கான முடிகிறது.
இந்நூல் எழுந்த காலம் 1972 ஆம் ஆண்டு. இலங்கையின் அரசியல், சமூக, பொருளாதார வாழ்வில் முக்கியத்துவம் மிக்க காலப்பகுதி இது வாகும். இலங்கை குடியரசானது, தேசியம் என்ற எண்ணக் கருவலுவடைந்தமை சேகுவாரா கலகம் என வர்ணிக்கப்பட்ட ஜே. வி. பி அமைப்பின் ஆயு தப்புரட்சி ஒழிக்கப்பட்டு பெருமளவு இளைஞர்கள் கொல்லப்பட்டமை, சுதேசிய சுயசார்புப் பொருளா தாரத்துக்கு முன்னுரிமை யளிக்கப்பட்டமை, தமிழ்
3

Page 7
3 υπήρυδων
இளைஞர்களின் ஆயுதப் போராட்ட சிந்தனை உரு வெடுத்தமை ஆகியன இக்காலத்தின் முக்கிய அர சியல் சமூக பொருளாதார நடப்பியல்புகளாகத் துலங்குகின்றன.
இவற்றில் சிலவற்றையேனும் கருத்தில் எடுத்து துரையரின் கவிதைகள் வெளிப்பிரவகித்துள்ளமை தெளிவாகும். எனினும், இக்கவிதைகளுக்கு ஊடாக பெருமளவிலும் , முதன்மையளவிலும் பொதுவுட மைச் சிந்தனையின் வெளிப்பாடே துல்லியமாக வெளிப்பிரவகிக்கிறது.துரையரின் கவிதாநதி பெn துவுடமைத் திரைகளை எற்றி எற்றியே நடமிடுகி றது. மார்க்சிசம் உலகிலே நிதர்சனமாக்கிய வர்க்கப் பிரச்சனையின் அம்சங்களே துரையரின் கவிதை களில் ஊடுருவியிருக்கின்றன. துரையரில் மட்டு மல்ல, இவரின் சம காலத்தவராகிய முருகையன், புதுவை இரத்தினதுரை போன்றோரின் கவிதை களிலும் இதே அம்சங்களை அவதானிக்க முடியும்.
பாரதியிலிருந்து பிறந்த அல்லது பாரதிதோற்று வித்த சிந்தனை மரபின் தொடர்ச்சியில் ஏனைய முற்போக்குக் கவிஞர்கள் போலவே துரையரும் இணைந்து கொண்டு உள்ளமையை அவரது கவிதை கள் தெளிவாக்குகின்றன. பாரதியின் காலத்தில் சுதேசிய உற்பத்திக்கு மக்களை அணி திரட்ட வேண்டிய கடப்பாடிருந்தது. எனவே தான் அவர் ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் ஆலையமைப்போம் கல்விச் சாலையமைப்போம் எனப்பல்வேறு செயல்களையும் எடுத்துக் கூறி இறுதியில் உலகத் தொழிலனைத்தும் உவந்து செய் வோம் என்று தன்னையும் உட்படுத்திப்பாடுகிறார்

υσή ουρον 4
பிறிதொரு கவிதையில் ' இரும்பைக் காய்ச்சி உருக்கிடு விரே யந்திரங்கள் வகுத்திடுவிரே ' என்று அறைகூவல் விடுகிறார். துரையரின் கால மோ மாறுபட்டது. வேலை செய்வதற்கு ஆர்வமும் வலிமையுமுள்ள இளைஞர்கள் இருக்கின்றனர். அவர் களுக்குத் தொழில்தான் இல்லை. எனவே, அதிகார வர்க்கத்தை நோக்கிய குரலாக அவர் கவிதை வெளிப்பாடடைகிறது அக்கவிதை இப்படி ஆரம்பிக் கிறது.
தொழில் தருக - எமக்குத் தொழில் தருக நாடு புகழ் ஓங்க நல்ல தொழில் விங்க வாடும் எமை நோக்கி வாழும் வழி தூக்கி தொழில் தருக எமக்கு தொழில் தருக. எவ்வெவ் வழிகளில் தொழில் தரலாம் என்றும் துரையரின் அக் கவிதை பட்டியல் இடுகிறது.
** இரும்பு ஆலை ஆக்கி இரையும் காடு போக்கி கரும்பு சாறு கொள்ளக் கட்டி ஆலை மெல்லத்
தொழில் தருக. ' என்று அக்கவிதை அமைந் துள்ளது. இக் காலத்து மிக முக்கிய சமூகப் பிரச் சனையாக இருந்த இந்த அம்சம் பொதுவுடமைச் சிந்தனையும் சமூக அவதானமும் மிக்க துரையரைப் பாதித்ததில் வியப்பில்லை.

Page 8
5 ενη η σορών
இலஞ்சமும் வஞ்சமும் என்ற மற்றொரு கவிதை வேலை பெற்றுத் தருவதாகக் கூறி ஏய்ப்போரைப் பற்றிப் பேசுகிறது. யாழ் நகர வாலிபன் என்ற கவிதையில் அந்த வாலிபனை அறிமுகப் படுத்தும் போது வேலைதேடி விதியெல்லாம் அலைபவன் ' என்றே ஆரம்பிக்கிறார். அந்தக் கவிதையில் அவர் முழுமையாகவே வேலையற்றி ருக்கும் யாழ்ப்பாண இளைஞர்களின் பல்வேறு வகைமாதிரிகளை படைத்துத் தந்துள்ளார். வேலை தேடி அலைதல்; அகப்படும் தேர்வுகளை எல்லாம் எழுதுதல்; வன்னிக்கு விவசாயஞ் செய்வதற்குச் செல்ல ஆயத்தமாதல் என்றவாறாக 70 களின் வேலையில்லாப் பிரச்சனையின் சாரம் யாழ் நகர வாலிபன் கவிதையில் அச்சொட்டாக விழுந்திருக் கிறது. 鷲
மற்றொரு கவிதையான ' பின் கதவு 1 எந்தத் தொழிலைத் தேடுவதிலும் குறுக்கு வழி நடைமுறை களே மேலோங்கி இருப்பதைக் கூறுகிறது.
* ράά όλύ α (τήθώό7
மாட்டுத் தொழுவத்தில் பச்சை வெட்டியிட்டு பசுக்கள் பார்ப்பதற்கும் எச்சில் இலை யெடுப்பதற்கும் எந்தத் தொழிலதற்கும் பிச்சையெடுப்பதற்கும் பின் கதவு வேண்டுமே ' என்பது தான் இக்கவிதை. இது புதுக்கவிதை அமைப்பிலானது; மரபுப் பிறழ்ச்சியுடையது ஆனால்

š"
மாநகர அா d „nafngi orð varð606), 6
இது புதுக்கவிதையின் இன்றைய எதிர்பார்ப்புக் களைப் பூரணப் படுத்துவதாக அமையவில்லை, அதே போல மூச்சு, மனிதர்கள், நிர்வாணம், எறிந்த கல் போன்றனவும் புதுக்கவிதைகளே, இதில் மனிதர்கள் ' என்ற கவிதை தவிர ஏனையவை நல்ல கவிதைகளாக எனக்குப் படவில்லை அவை சரிவரப் புதுக்கவிதை அம்சங்களைப் பிரதிபலிக்க வில்லை யென்றே கருதுகிறேன்.
1972ஆம் ஆண்டு தமிழக இலக்கியச் சூழலில் மரபுக்கவிதை, புதுக்கவிதை ஆகியன தொடர்பில் விவாதங்கள் கால் கொண்ட காலமாகும். இந்த விவாதங்கள் இலங்கைக் கவிதைச் சூழலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பெரும்பாலான கவிஞர்கள் மரபுக் கவிதையையே கைக்கொண்ட னர். ஆனால் துரையர் மரபுக் கவிதையில் அதிகம் ஈடுபாடு காட்டிய போதும், நவீன கவிதையென முன் வைக்கப்பட்ட புதுக்கவிதையையும் கருத்தில் எடுக்கத்தவறவில்லை சமகால இலக்கியச் சூழலில்குறிப்பாக தமிழகக் கவிதைச் சூ ழ லி ல் - அவர் கொண்டிருந்த அவதானத்தை இது புலப்படுத்துகிறது. தவிரவும் நவினத்தை அங்கீகரிக்கும் அவரது மனப் போக்கும் அதைப் படைக்கும் ஆற்றலும் புலப்படு கிறது. - -
சமகால இலக்கியச் சூழலை, அரசியல் சமூகச் சூழலை உள்வாங்கி, அவர் படைத்துள்ள கவிதைக ளின் உருவமும் உள்ளடக்கமும் அவரை நல்ல கவி ஞனாக இனங்காட்டுகின்றது. சமூகப் பிரச்சனை கள் தொடர்பான அவரது கூர்ந்த அவதானிப்புக்

Page 9
( '
,
களே கவிதைகளாக வந்து விழுந்துள்ளன. தவிர வும் சமூகப் போலிமைகள் மீதான கோபமும் கவி தைகளாகியுள்ளன. அந்தக் கோபம் சாடலாகவும், எள்ளலாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏனோ ? ' என்ற கவிதை இப்படி அமைகிறது.
*" வள்ளுவனார் வாக்கெடுத்து
வாழ்ந்திடவே தெரியாது வள்ளுவர்க்கு விழாவெடுத்து வாய் பிதற்றித் திரிகின்றிர் . ' * . . இறப்பதற்கு முன்னிங்கி எத்தனையோ இனம் வகுத்துக் கறுப்ப னென்றும் சிவப்பனென்றும் கணக்கிட்டு அழைப்பதேனோ ? பிறப்பில் எல்லோரும் ஒன்றென்று வள்ளுவர் கூற இங்கே வள்ளுவருக்கு விழா எடுப்பவர்கள் இனஞ் சாதி என்று பேதப்படுத்தும் நிலையை எடுத்துக் கூறி அவர்களை இக்கவிதையினூடாக அழுத்தமா கச் சாடுகிறார்.
* சந்தி கிரிக்கிறது ' என்ற கவிதை எள்ளல் பாங்கானது. மறு புறத்தில் ஆழமான சமூகச் சீர் கேட்டின் பின்னான அவலத்தைச் சுட்டிக் காட்டுவது ஆலமரத்தில் கட்டப்பட்டிருக்கும் தப்பாகப் பிறந்து இறந்த ஒரு சிசுவின் சடலத்தின் கூற்றே அக்கவிதை என்பது எனது கவிதானுபவம் வேறொரு வாசக அனுபவத்தில் அது வேறாகவும் இருக்காலாம்.

υα ή συνών 8
என்னைக் கண்டவர் எல்லோரும் எச்சில் உமிழ்ந்து சென்றாரே முன்னைச் சென்றவன் செயலாலே முகத்தைச் சுருக்கிச் சென்றாரோ ?
என்று தொடங்கும் இக் கவிதையின் முதற்பா, அந்த வஸ்துவின் சோகத்தையும், அவலத்தையும் அதற்கு வித்துரண்டியவர் மீதான எள்ளல் சார்ந்த எதிர்வினையையும் லாவகமாக வெளிப்படுத்துவ தாக நான் கருதுகிறேன்.
பிறந்த பொன்னாட்டைப் பாடாத கவிஞர்கள் குறைவு அதிலும் மரபார்ந்த கவிஞர்களிடம் இப் பண்பு அதிகம். ப ா ர தி தா ச னி லி ரு ந் து, இலங்கைவளம் பாடிய தங்கத் தாத்தா சோம சுந்தரப் புலவர் வரை அதற்குப் பின்னர் காரை சுந்தரம்பிள்ளை, துரையர் வரை இந்தப் பண்பு இருந்து வந்துள்ளது. இணையிலா ஈழநாடு என்னுந் தலைப்பிட்டு எழுதப்பட்ட கவிதை இப்படித் தொடங் குகிறது.
இரையுமலை மோதுகின்ற நாடு - என்றும் இாத்தினம் போல் மின்னுமெங்கள் விடு விரையு நதி வண்டலுடன் செல்லும் வரவை விளையும் நெல் வயல்களுமே கொள்ளும்
சந்தம் ஒத்திசைந்து அழகுணர்ச்சியை ஏற்படுத்து வதாக இக் கவிதை காணப்படுகிறது. 60களில் எழு தப்பட்டிருக்கலாம் என நான் கருதும் இக்கவிதை

Page 10
9 υπήσοολυ
யில் இறுதி அடிகள் சமதர்மச் சிந்தனையுடைய பேதங்களும் பிரச்சனைகளுமற்ற ஒரு தேசத்தைக் காணும் ஆவலாய் எழுந்திருக்கின்றன
தக்கவளம் சேர்ந்திலங்கும் நாடு - இதைச் சார்ந்த கோடி மக்கள் சமர் நாடி ஒக்கலரா யுண்டுறங்கும் நாடு - இது உலகினை பிலா ஈழநாடு. கவிஞர் காண விரும்பிய-சொர்க்க புரியாக விளங் கிய - இந்நாடு இன்றோ பேய்விடாகிக் கிடக்கிறது உலகின் பிச்சைக்கார நாடாகவும் குற்றச் செயல் களில் முதன்மை வகிக்கும் நாடாகவும், மனித உரி மைகளைப் புறந்தள்ளும் நாடாகவும், சிறுபான்மை பினரின் அடிப்படை உரிமைகளை மறுதலிக்கும் நாடாகவும் கீழ்மையடைந்திருக்கிறது. கவிஞரதும் பொதுமக்கள் பல்ரதும் அவா என்று நிறைவேறு βαρα 2
பாரதியின் குரு அருளம்பலப் புலவர் ( இவர் ஈழத்தவர் ) அமெரிக்க கறுப்பின மக்களின் உரி மைக்காகப் போராடிய மாட்டின் லூதர் கிங் ஆகி யோர் குறித்த கவிதைகளையும் தெருவிளக்கு ' உள்ளடக்கியமை குறிப்பிடத்தக்கது. துணை, வந் தது பதிலும், புன்னகை விசி போன்ற மென்மை யான கவிதைகளையும் கவிஞர் படைத்துள்ளார். சூரிய காந்திப் பூவின் மலர்வு தன்மைநவிற்சியா கவும் உவமையாகவும் உருவகமாகவும் தோற்றங் கொடுக்கும் வகையில் மூன்று வகையில் இன்பம் பயப்பதாக புன்னகை விசியே கவிதை அமைந்திருப் பது சிறப்பாகும். ஏக்கம், வடு இரண்டும் சோகவு ணர்வையும் சமூகச் சீர்கேட்டினதும் அவலத்தின தும் குரலையும் வெளிப்படுத்துகின்றன.

υ/τήόω6ν 10
பற்று/விடேன் என்ற கவிதை அவரது கவிதைப் பிரகடனங்களாகவே தொனிக்கிறது.
மலைநாட்டு அனுபவங்களும் கவிதைகளாக அதிகம் வந்திருக்கின்றன. அழகும் அவஸ்தையும், சிறுமைகண்டு பொங்கு வாய், கண்டேன் போன் வை இவ்வகையானவை. இதுதான் உலகம் நீங்கள் ார் ? திருமா, போட்டி ஏன், நாடு நலம்பெற, பணம் பறிப்போர், உண்டு இல்லை, அப்பாவி ஆகியன தொழிலாளரின், விவசாயிகளின் பிரச்சனைக ளைப் பேசுகிறது. பொதுவாக அவரது கவிதைகள் ஒடுக்கப்பட்ட மக்களின் வேதனைக் குரலாக, ஆவே சக் குரலாகவே வெளிப்பாடடைகிறது எனில் மிகை யல்ல. இந்தப் பிரச்சனைக்கு அவர் தீர்வாக வைப் Uது .
உண்டிங்கு உண்டு ! 22925 αρη ή 3 αιώ
பண்டு கண்ட நல்வழி 1 பற்றி விடில் பொதுவுடமை
என அவர் தீர்வு கூறுகிறார். பொதுவுடமை அழ கான சித்தாந்தமாக இருக்க அதனைப் பிரயோகிப் பவர்கள் அடிக்கும் ' குத்துக் கரணங்கள் ' அந் சிந்தனையில் இருந்து மக்களைத் தூர விரட்டியி ருப்பது இன்றைய யதார்த்தம். சிறுவர் கவிதை எழுதுவது கடினமானது சிறிய இலகுவான சொற் களை கையாண்டு சந்தத் துள்ளலுடன் எழுதப்பட வேண்டியது அந்தத் துறையிலும் துரையரின் கை வண்ணம் பளிச்சிடுகிறது. காகித வள்ளம் கவிதை எனக்கு அதிகம் பிடித்தமானது.

Page 11
11 υσή σφεν
தொகுத்து நோக்கினால் ஆரம்பத்தில் எழுப்பிய வினாக்களைக் கருத்திலெடுக்கும் போது, 1. துரையரின் கவிதைகள் சொல்கின்ற சேதிகள் சமூகத்தை நோக்கியவை; சமூகப் பிரச்சனை களை முன் மொழிபவை; அவற்றுக்குத் திர்வு காண்பவை. இக்கவிதைகளின் படைப்பாக்கம் சிறப்பானது; அழகுணர்ச்சியும் கருத்துப் புலப் பாடும் மிக்கன.
2. சமகால அரசியல் சமூக பொருளாதார ரீதியி லான பிரச்சனைகளை, பிரச்சனைகளின் வினை வுகளை, பிரச்சனை சார்ந்த போலித்தனங்களை அவலங்களை இக் கவிதைகள் பேசுகின்றன, சம கால நடப்புச் சித்திரங்களாகவே பெரும்பாலான கவிதைகள் உருப் பெற்றிருக்கின்றன என்பது புலனாகிறது.
எனவேதான் 1970களின் கவிதை நிலைப்பட்ட கண்ணோட்டத்தில் இந்நூலைச் சிறப்பானதொரு நூலாக என்னால் இனங்காண முடிகிறது. மரபுக் கவிதையிலே சொல்லணிகளின் கட்டிற்குள் தமது எண்ணப்பகிர்வை முழுமையாக வடித்துவிட முடி யாத தன்மை பெரும் இடர்ப்பாடானது இந்த இட ருக்குள் துரையரும் இடைக்கிடை சிக்கியிருக்கிறார். எனினும் மரபுக் கவிதை வேண்டும் இயல்புகளோடு மலர்ந்த சிந்தனையை முன்வைக்காமல் நவீன சிந் தனைகளை முன் வைத்தமையால் அவர் தனித்து வம் பளிச்சிடுகிறது. துரையரின் கவிதா நதி வற்றி அடங்கி விடாமல் தொடர்ந்தும் பிரவகிக்க வேண் டும்; அதிலே நாம் நீராடிப் பயன்துய்க்க வேண்டும் என்பதே இந்த வாசகனின் ஆவலும் எதிர்பார்ப்பும்.

எனது பார்வையில் "தெரு விளக்கு'
ா செல்வி ஜெகதீஸ்வரி சாந்தலிங்கம்
ஈழத்து பூதந்தேவனாருடன் ஆரம்பிக்கும் ஈழத் துத் தமிழ்க் கவிதைப் பாரம்பரியம் இருபதாம் நூற் றாண்டில் ஒரு புதிய சகாப்தத்தை ஆரம்பிக்கின்றது எனலாம். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பதுக ளின் பின் ஈழத்துத்தமிழ்க்கவிதைகளில் மறுமலர்ச்சி தோன்றத் தொடங்கியது என்பர். நாற்பதுகளில் தோற்றம் பெற்ற மறுமலர்ச்சிச்சங்கம் இதற்கு உந்து சக்தியாக விளங்கிற்று. இம்மலர்ச்சி ஐம்பதுகளில் எழுச்சி பெற்று அறுபதுகளில் சமூகப் பிரக்ஞை, முற்போக்குச் சிந்தனை என்ற பரந்த நோக்கில் வளரத் தொடங்கியது. இக்காலப் பின்னணியில் வளரத் தொடங்கிய எழுத்தாளர்களில் ஒருவராகிய துரையரின் தெரு விளக்கு ( 1972 ) என்னும் கவிதை நூல் இங்கு திறனாய்வுக்கு எடுத்துக் கொள் ளப்படுகின்றது.
" தெருவிளக்கு என்னும் நூலின் பெயரே இவர் கவிதைகளுக்கு கலங்கரை விளக்காக அமை கின்றது. இருட்டில் வழி தெரியாது தடுமாறுபவர் களுக்கு தெருவிளக்கு வழிகாட்டுவது போல் இவர் கவிதைகள் மக்கள் சமூகத்திற்கு வழிகாட்டுகின் றன. இவர் எழுதத் தொடங்கிய காலத்தின் போக் கிற்கேற்ப இவர் கவிதைகளும் சமூக உணர்வு, முற் போக்குச் சிந்தனை கொண்டவையாகவே அமைந் துள்ளன. ' அரசியல், இசை ஆகிய இறக்கைக

Page 12
13 Uz#ణం, 122925 \OSSAQ"
ளிற் பறக்கும் போது கவிதை மிக உயர்ந்து செல் லும் என்பர். சோவியத் நாட்டுக்கல்விமானும் இலக் கியத் திறனாய்வாளருமாகிய கே. ஸெலின்ஸ்கி ' என தமிழ்த்துறைப் பேராசிரியர் சி. தில்லைநாதன் தனது முன்னுரையிலே கூறுகிறார். துரையரது கவிதைகளும், இந்த இறக்கைகளிலேயே பறக்கின் றமையை இவரது கவிதைகைளைப் படிக்கும் போது உணரலாம். இக்கவிதைத் தொகுதியில் நாற்பத் தெட்டுக் கவிதைகள் உள்ளன. இவற்றில் ஏழு கவி தைகள் சிறுவர் சிறுமியருக்குரியவை முகிலே, கலைந்தகனவு, உண்டுவழி போன்ற பல தலைப்பு களில் அமையும் இக் கவிதைகள் இயற்கை அழகு, வேலையில்லாப் பிரச்சினை, தொழிலாளர் பிரச் சினை, நாட்டுப்பற்று, தேசிய உணர்வு, சமுக ஏற் றத்தாழ்வு, ஏமாற்றுவேலை, கலப்படம், இலஞ்சம், போன்ற பல்வேறு கோணங்களில் அமைந்துள்ளன.
* முகிலே இக் கவிதைத் தொகுதியின் முதற் கவிதையாக உள்ளது. கவிஞரின் நாட்டுப் பற்றைக் காட்டும் இக்கவிதை ஓசை நயம் நிறைந்ததாகவும் உள்ளது. மனிதர் குடிக்கக் குன்றாத நீரைக் கேட் கும் கவிஞர் நாட்டின் செல்வம் செழிக்கவும் முகி லைக் கேட்கின்றார். இத்துடன் நின்று விடாது நாட் டின் பிளவை நீக்கும் பாரிய பணியையும் முகிலுக்கே கொடுக்கிறார். இதனை
* பருத்தி தந்த பஞ்சு போலப்
பார்க்கத் தோன்றும் முகிலே - நீ பொருத்திப் பிளவை நாட்டிற் செல்வம் பெருக்கித் தருவாய் முகிலே '
 
 

ωτή ούρων 14
என்னும் அடிகளாற் காட்டுகிறார். சோமசுந் தரப்புலவர் தமது இலங்கை வளப் பாடலில் 'எ. கிய பஞ்சினை முகிலுக்கு உவமையாக்க இவரோ தமது பாடலில் பருத்திப் பஞ்சினை உவமையாக்கி ιεύφά3ροσά .
கலைந்த கனவு இவரது கனவைக் கவிதை யாகத் தருகிறது. இதில் கவிஞர் காண விளை
யும் சமத்துவம் தெரிகிறது.
அடுத்த கவிதையில் உண்டு வழி ' என புது வழி காட்டுகிறார். ' அப்பழுக்கு அற்ற சேவையை நல்கும் மலையக மக்கள் நாட்டில் உரிமையிழந்தவர் களாக வாழ்கிறார்கள் என்பது கண்கூடு. ஒட்டாண் டிகளாக - உரிமையற்றவர்களாக நடைப் பிணங் களாக வாழும் அவர்கள் உறைவதற்கு உருப்படியான வீடுகளே இல்லை. இந்த விடில்லா அவலத்தை நீக் வதற்கு புதுப்பாதை சமைப்போமென இளைஞர்க ளுக்குக் கவிஞர் அழைப்பு விடுக்கிறார் ' என சு. கா. இக்கவிதை பற்றிய தனது கருத்திலே குறிப்பி டுவது ( தினகரன் 07 - 01 - 1973 ) இவ்விடத்தில் மனங்கொள்ளத் தக்கது. தேசிய ஐக்கியம், முத லாளிகளின் ஏமாற்று வேலை என்பவற்றையும் இக்கவிதை எடுத்துக் காட்டுகின்றது. ' பாதும் ஊரே யாவரும் கேளிர் ' எனப் புறநானூற்றில் கணியன் பூங்குன்றனார் கூறி எல்லோரையும் உற வினராக்க இவரோ
* இலங்கையில் மக்களெல்லாம்
இனத்தால் ஒன்றென்று.
எல்லோரையும் ஓரினம் ஆக்குகின்றார்.

Page 13
15 αναγή βορών
ஏனோ ? எனும் கவிதை சமூகத்தைச் சீர்திருத் தும் நோக்கில் அமைகிறது இதில்
" வள்ளுவனார் வாக்கெடுத்து
வாழ்ந்திடவே தெரியாது வள்ளுவர்க்கு விழாவெடுத்து வாய் பிதற்றித் திரிகின்றிர் 1 என்ற அடிகள் வாய்ச் சொல் விரர்களை அம்பலப் படுத்துகிறது மேலும்.
இறப்பதற்கு முன்னிங்கு எத்தனையோ இனம் வகுத்துக் கறுப்பனென்றும் சிவப்பனென்றும் கணக்கிட்டு அழைப்பதேனோ ? ' என திண்டாமைக்கு எதிரான கருத்தை முன்வைக் கிறார். இந்நூல் வெளியிட்டின் போது திருச்செந் தூரன் முன்வைத்த வெள்ளை மனிதன் கறுப்பு மனிதன் ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந் தவன் என்ற பேதநிலை மாறிச் சமத்துவ அடிப் படையில் மனிதர்கள் மதிக்கப்படல் வேண்டும் என்ற (தினகரன் 2 -12-72) கருத்தும் நினைவு கூரத்தக்கது. ஏனோ ? என இவ்வினாவுக்கான விடையை வாசகரிடமே விட்டு விடுகிறார்.
தொழில் தருக" ஓசை நயமும் இசை இனிமை பும் கொண்ட கவிதையாக உள்ளது இதில் நாட்டின் வளம் பெருகத் தொழில் தரும்படி வேண்டுகிறார். இதுதான் உலகம் பனியென வாழ்வின் நிலையாமையைக் காட்டி நிலைத்திருக்கும் வரை நன்மையைச் செய்ய வலியுறுத்துகிறது. இதில்

υισή ώρων 1ό
தனக்கென வாழாத் தரணிக்கு வாழ்வோர் ' என்னும் அடி புறநானூற்றுப் பாடலில் வரும் ( உண்டாலம்மவிவ்வுலகமிந்திரர் என்னும்)
* தமக்கென முயலா நோன்ராட்
பிறர்க்கென முயலூர் உண்மையானே'
என்ற அடிகளை நினைவூட்டுகிறது.
நீங்கள் யார்?' ஒவ்வொருவரும் தன்னைத் தான் உணர்ந்து தன்னிலையைச் சிந்திக்க வைக் கிறது. இக்கவிதை குறித்து பேராசிரியர் சி. தில் லைநாதன் முன்னுரையில் குறிப்பிடும் கருத்து இங்கு பொருத்தமானது. 'தன்னைச் சூழ்ந்த மக்களையும் அவர்களது சமூகத்தையும் அரசியலையும் அவதா னிக்கும் துரையர் துன்பப்படுபவர்களையும் துன்பப் படுத்துபவர்களையும் இனங்கண்டு தாம் யார் பக்கம் என்பதைக்காட்டி நிற்பதோடு எங்களையும் பார்த்து நீங்கள் யார்? எனவினவி நிற்கிறார்' அண்ணல் தனது கவிதையில் 'நீ யார்?' எனக்கேட்க இவர் நீங்கள் யார்? எனக்கேட்கிறார்.
பாரதியின் குருவே பாரதியின் குருவைப் போற்றுகிறது. இலஞ்சமும் வஞ்சமும் ஏமாற்றிப் பணம் பறிக்கும் கயமைத்தனத்தை அம்பலப்படுத்து கிறது. வேலை எடுப்பதற்கும் இலஞ்சம் பாடசாலை யில் சேர்ப்பதற்கும் இலஞ்சம். இது எதுவரையோ ? எனக் கவிஞரும் அங்கலாய்க்கிறார்.

Page 14
17 பார்வை
*யாழ்நகர வாலிபன்' எனும் கவிதை வேலை தேடி அலையும் அப்பாவி யாழ்நகர வாலிபனை கண்முன் கொண்டு வருகிறது. கவிஞர் தனது காலச் சூழலுக்கேற்ப தான் கண்ட அநுபவத்தை இக்கவி தையில் தருகிறார். வேலையில்லாப் பிரச்சினை யால் வளமான எதிர்காலத்தை உருவாக்கவேண்டிய இளைஞர்கள் படும் அவலம் இதிற் புலனாகிறது.
கவிஞர் தான் கண்ட சமூகச் சீர்கேடுகளை நகைச்சுவையாகக் கண்டேன். எனும் கவிதையிற் புலப்படுத்துகிறார். ஆண்கள், பெண்கள், மாணவர் கள் போன்ற சமூகத்தின் பலதரப்பினரும் விடும் தவறுகளை இக் கவிதையில் நையாண்டியாகக் கூறுகிறார்.
* தாலி கட்டிய தன்னவன் பின்வர
கோலி வெட்டிய குறள் சடையதனுடன்
என்ற அடிகளை உதாரணமாகக் கூறலாம்.
** இணைப்பிலா ஈழநாடு ' கவிஞர் தாய் நாட் டின் மீது கொண்ட ஆழமான பற்றினை வெளிப் படுத்துகின்றது. தனது நாட்டு வளம் கண்டு அத னால் பெருமை கொள்கின்றார் கவிஞர் மலை, ஆறு, வயல், தேயிலை, இறப்பர், வெந்நீரூற்று, அருவி, சிகிரியா, தம்புலக்குன்று என இலங்கை யின் சிறப்புக்கள் யாவையும் கண்டு கவிஞர் மனம் நிறைகிறார்.
* நிர்வாணம் என்னும் கவிதையில் சமூகச் சீர்கேடுகளைத் துணிச்சலாக எடுத்துக் நிர்வான மாக எடுத்துக்காட்டி சாட்டையடி கொடுக்கிறார் கவிஞர்.
 
 

υπήόσοολν 18
கவிஞர் புயலே செல்வாய்" எனப் புயலிடம் சோகமாகத் துரது அனுப்புகிறார். நாரா ய் நாராய் ' எனச் சத்திமுற்றப் புலவர் நாரை யைத் துரது அனுப்ப இவர் புயலைத் துரதாக அனுப்புகிறார். கண்ணிர் சொரிந்து பதியே பதியே பார்க்க வாரீர் என்றே அலறும் எம்மவர் குடியி னில் சென்றே நானும் செப்புவதுரைப்பாய்
என இவர் புயலைத் துரதாக அனுப்புவதைக் காணலாம். இம்மக்களின் அவலமான போராட்டம் நிறைந்த நிலையற்ற வாழ்க்கையை இக்கவிதை அழகாகக் காட்டுகின்றது.
பின் கதவு சமூகச் சீர்கேட்டைக் கேலியாக எடுத்துச் சொல்கிறது. "பிக்சையெடுப்பதற்கும் பின் கதவு வேண்டுமே என்னும் அடி இதனை எடுத்துக் காட்டுகின்றது.
திருமா? தொழிலாளர் பிரச்சினையைக் காட்டி அது திருமா ? என தலைப்பையே வினா αλνη ά ά Φώτση σή .
1 22 O2 R.
சமூக பிரச்சினையை εοφανοσαά கொண் டது இவரது மூச்சு" என்ற கவிதை, ஒவ்வொருவரும் தன்னைத் தானே திருத்தினால் சமூகம் தானே திருந்திவிடும் என்ற கருத்தினைத் தருகிறது.
சந்தி சிரிக்கிறது ! எனும் கவிதை மக்களின்
மூடக் கொள்கைகளை எண்ணிச் சிரிப்பதாக அதே நேரம் சிந்திக்க வைப்பதாக உள்ளது.

Page 15
Ι9 υ σή όσοσλν
மறந்தேன்’ எனும் கவிதை மறந்து விட்டவளை நினைத்து வாழ்நாளை வினாக்கும் இளைஞர்க ளுக்கு அறிவுரை கூறுகிறது. கறுப்பின மக்களின் உரிமைக்குக் குரல்கொடுத்த மாட்டின் லூதர் கிங்கின் நினைவாக மாட்டின் லூதர் கிங்' என்னும் கவிதை அமைந்துள்ளது.
துணை' எனும் கவிதையில் அன்புடையவர் களைத் துணைக்கழைக்கிறார் கவிஞர்.
போட்டிஏன் ? எனும் கவிதை வயலில் வேலை செய்யும் பெண்களின் கடின வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டுகிறது போட்டி ஏன் ? என வினா வெழுப்பும் கவிஞர் பஞ்சம் வாட்டிடப் போட்டியிற் கலந்தாள் என்று அதன் காரணத்தையும் தருகிறார். இக்கவிதையில் மருதநிலக் காட்சியை வாசகர் கண் முன் நிறுத்துகிறார்.
சின்னத்தம்பிப்புலவரின் 'மஞ்சளாவிய மாடங் கள் தோறும் .' என்ற பாடலில் வரும் சுறாக்கள் பலாக்கனிகீறி இஞ்சி வேலியின் மஞ்சளிற் போய் விழுந்தன. ஆனால் கவிஞர் எறிந்த கல் மாங் கனி, தேங்காய், பூ எல்லாவற்றையும் பறித்துக் கொடுக்கிறது.
கவிஞரின் நாட்டுப் பற்று, சுதேச உணர்வு, உள் ளூரில் எல்லாவற்றையும் உற்பத்தி செய்யும் ஆர்வம் என்பன நாடு நலம் பெற என்னும் கவிதையில் காணப்படுகின்றன.

பார்வை 20
இவரது ஏற்றத் தாழ்வற்ற சமுதாயப்பார்வை இவரது சிறுமை கண்டு பொங்குவாய்' எனும் கவிதையில் தெரிகிறது. மலையக மக்களின் அவல வாழ்க்கையை நேரிற் கண்டு அநுபவிக்கும் வகையில் இக் கவிதை அமைந்துள்ளது.
"எட்டடி அறையில் எண்ணலை பரப்பிக்
கட்டிய மனைவி காலதில் உறங்கத்
தொட்டிடும் குழவி துரங்கிடத் தொடையில் முட்டுடன் வாழும் ஒருத்தனும் உளனே
ஈழத்தை ஒரு பெண்ணாக உருவகித்து சுதந் திரமின்றிச் சூறையாடப்படுவதையும் மலையக மக் களின் சிறுமை நிலையையும் சமுதாய ஏற்றத்தாழ் வையும் கூறி பொங்கியெழுந்திடு என எல்லோரை யும் விழித்தெழ வைக்கிறார் கவிஞர்
வேலைக்காகப் பிரிந்து சென்ற கணவனதும்
மனைவியதும் ஆதங்கத்தை வந்தது பதிலும் என்ற கவிதை காட்டுகின்றது. எழுவாய் ' என்ற
கவி ைத உழைப்பின் சிறப்பினைக் காட்டி உழைத் தி ட எழும்படி அழைக்கிறது.
வடு ' என்னும் கவிதை தவறு செய்த இளை ஞன் ஒருவனுக்கு ஒரு பெண் கொடுத்த சரியான தண்டனையைக் காட்டுகிறது. மூன்றாந்தரமாகப் பெண்களை நினைப்பவர்களுக்கு இக்கவிதை ஒரு பாடமாகின்றது.
பற்றுவிடேன் எனத் தனது இலட்சியங்க ளைச் செய்யக் கட்டளை இடுகின்றார்.

Page 16
2I υητή συνων
* உண்ண உணவின்றி அலையும் மக்களை
உய்யத் தொழிலிந்து உயர்த்தப் பணித்தேன் கண்ணுக் கிமை போல் நாட்டினைக் காக்கும் கருணை கொள்ளெனக் கண்ணே பணித்தேன் '
* மலர்திடுமா ? ? எனும் கவிதையில் பொலிந் தின்ே ? நீங்குமா ? என வாழ்வு மலர வழி தேடு கின்றார். செத்ததையே எனும் கவிதை துரை மார்களின் ஒழுங்கீனத்தை அம்பலப்படுத்துகிறது.
* சுத்தியே திரிவார் துரைமார்கள்
பத்தினி யெனவே செத்ததையே ' என்ற அடிகள் கேலியாக ஆனால் ஆழமாகச் சிந் திக்க வைக்கிறது.
பற்றிவிட்டால் பொறாமையால் நிம்மதி யற்ற எம்மவர் வாழ்க்கையை நாகுசாகக் காட்டு கிறது. "நித்திரையிலேனும் நிம்மதியைக் காணாது" எனும் வரிகள் பொருட் செறிவுடன் மனதில் பதி கிறது. எல்லைப் பிரச்சினை, பாகப் பிரிவினை எல்லாம் நீக்க பொதுவுடமை என்ற புதுவழியும் காட்டுகிறார்.
* பணம் பறிப்போர் எனும் கவிதை ஓசை நயம் கொண்டது கலப்படம் செய்து ஏமாற்றிப் பிழைப்போரை அறிமுகப்படுத்துகிறது ' பணம் பறிப்பதற்காக உணவுப் பண்டங்களில் கலப்படம் செய்யும் சமுதாய புல்லுருவிகளை விளித்து ஏனிந்த அநியாயம் என வினவுகின்றார்; குமுறுகிறார் 1 என்ற சு. கா அவர்கள் கருத்து இங்கு மனங் கொள்ளத்தக்கது. (தினகரன் உரைகல் 07-03 - 73)

பார்வை 22
ஏக்கம் ஒரு பெண்ணின் ஏக்கத்தை அப்ப டியே பிரதிபலிக்கிறது. இக் கவிதை இசை, இனிமை கொண்டதாத உள்ளது.
பண்புடன் கலைத்தோம் அந்நிய ஆதிக்க எதிர்ப்பையும் கவிஞரின் தேசப் பற்றையும் காட்டு கிறது.
புன்னகை விசியே புன்னகையில் மயங்கிய கவிஞரின் தடுமாற்றத்தைப் புலப்படுத்துகிறது.
காசில்லாக் கூட்டமான ஏழை மக்களின் வறு மையிலும் செம்மையான அமைதி நிறைந்த வாழ்க் கையை உண்டு இல்லை என்ற கவிதை அழகா கத் காட்டுகின்றது.
அழகும் அவஸ்தையும் கவிஞரின் அழகுணர்ச் சியைக் காட்டுகின்றது, இக் கவிதையில் மலைய கத்தின் அழகினை அநுபவ உணர்வோடு காட்டுகி βο σή .
காற்று முகிலைத் தள்ளிவிடவே - அது காட்சி விட்டினுள் கொடுத்திடுமே ' இந்த அடிகளில் இதனைக் காணலாம்.
தரகர்களின் ஏமாற்று வேலையை இவரது " அப்பாவி " எனும் கவிதை எடுத்துக் காட்டுகிறது. அப்பாவிகள் ஏமாற்றப்படுவதை இக்கவிதை அழகா கச் சித்தரிக்கிறது.
இப்படியும் எனும் கவிதை பக்கத்து விட்டா ரின் பசுக்கன்று வந்ததற்கும் திருமண ஓலையில்

Page 17
23 υη ή ουρου
திருநாமம் வராததற்கும் சினம் கொள்ளும் மனப் பாங்குக்கும், சாதிச் சண்டைகளுக்கும் நகைச் சுவையாகச் சாட்டையடி கொடுக்கிறது. இதனை
' எல்லைத் தடியதனை இழுத்தாரே யென்பதனால் தொல்லை பலசெய்து தொடுக்கின்ற வழக்கதனால் எல்லை இல்லாமல் ஏராளஞ் செலவிடுவர் முல்லைக்குத் தேரிந்த வள்ளலின் பரம்பரையோ? ' என்ற அடிகளில் எல்லைப் பிரச்சனையை நகைச் சுவையாகக் கூறுவதைக் காணலாம். இக் கவிதைத் தொகுதியிலுள்ள ஏனைய ஆறு கவிதைகளும் சிறுவர் சிறுமியரின் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் சின்னக் கவிதைகள் குழந்தைகளின் மனங் கவரும் நிலவினை வருவேனே என்ற கவிதை யும் நேருவின் இழப்பால் ஏற்பட்ட சோகத்தை ரோசாவும் நேருவும் என்ற கவிதையும் நல்ல சிறுமிகளுக்களுக்கு உதாரணமாக நல்ல சிறுமி கள் என்ற கவிதையும், சிறுவரின் காகித வள்ள விளையாட்டை காகித வள்ளம் ' எனும் கவிதை பபும ஒருவர் தெய்வமாக என்ன செய்ய வேண்டும்
என்பதை " தெய்வமாக வேண்டும் ' எனும் கவிதை
பபும் அறிவுரை கூறுவதாக இலாபமா நட்டமா ? எனும் கவிதையும் பிறருக்கு உதவி செய்யும் பண்பை வளர்ப்பதாக நொண்டித்தாத்தா " எனும் கவிதை யும் அமைந்துள்ளது.
இச் சிறுவர் கவிதைகள் சிறுவர் சிறுமியருக்கு அறிவுரைகளையும் நிதிக் கருத்துக்களையும் கூறி அவர்களை நல்வழிப்படுத்து வதாகவும் அவர்கள் மனங்களை மகிழ்விப்பதாகவும் அமைந்துள்ளன.
 

να ή ούρων 24
முழுமையாகப் பார்க்கும் போது இவரது கவி தைகளிற் சில எதுகை, மோனை போன்ற வரை யயைகளுக்காக இயல்பான தன்மையில் இருந்து சிறிது விலகியுள்ளமையைக் காணக் கூடியதாக உள்ளது. கண்டேன், செத்ததையே, அப்பா வி போன்ற சில கவிதைகளில் இத் தன்மையைக்
safe" ()/Co.
இவர் கவிதைகளில் அறைந்த மொழி, தேட்டம், ஆக்கன்று, யாத்து, வேனி, ஒக்கலர் போன்ற சில சொற்களைப் பயன்படுத்தியிருப்பது வாசகர் சில ருக்கு விளங்குவதிற் சிரமத்தை ஏற்படுத்துகின்றது. இயல்பான சாதாரண மக்களுக்குத் தெரிந்த சில சொற்களைப் பயன் படுத்தியிருந்தால் மேலும் சிறப்பாக அமைந்திருக்கும்.
இவரது கவிதைகள் சிலவற்றுக்குக் கருவாக அமைந்த சம்பவங்கள் சில அவை நடந்த காலங் கள் கடந்து விட்டநிலையில் கவிஞர் கண்ட அநுப வித்த அதே உணர்வை ஏற்படுத்த இயலாத நிலை யில் உள்ளன. உதாரணமாக மூச்சு, சந்தி சிரிக் கிறது போன்ற கவிதைகளைக் குறிப்பிடலாம்.
கவிஞர் தான் காணும் பிரச்சினைகள் யாவற் கும் பொதுவுடைமைக் கொள்கையையே தீர்வாகக் கூறுகிறார். அது எவ்வாறாயினும் ' முரண்பாடு களும் போராட்டங்களும் மிகுந்த இம்மக்கள் யுகத் திலே முன்னைய காலங்களை விட மிகுதியான அளவிற் சுதந்திரம் பெற்றிருப்பவர்களும் அத்தகைய சுதந்திரம் பெற்ற மானிடத்தைச சாாந்து நிற்பவர்

Page 18
25 υ/τή σύρων
களுமான கவிஞர்கள் அரசியலுக்கு அப்பால் அதிக தூரம் சென்றுவிட முடியாது ' என்ற பேராசிரியர் சி. தில்லை நாதனின் கருத்து கவனிக்கத்தக்கது. ( தெருவிளக்கு - முன்னுரை )
இந்நூல் பற்றிய கலாநிதி சபா. ஜெயராசா வின் கருத்தையும் இவ்விடத்தில் குறி ப் பி டு த ல் பொருத்தமானதாகும். அவர் ' கவிதைக்குச் சொற் களின் அமைப்பு இன்றியமையாதது. கவிதைகள் பொருட்களைக் கொண்டுள்ளன. ஆனால் வெறும் இயற்கையைக் கொண்டதாக இருக்கக் கூடாது. விஞ்ஞான ரீதியான சிறந்த தத்துவங்களைக் கொண்டிருக்க வேண்டும். இவையாவும் இந்நூலைச் சிறப்புடையதாக்குகின்றன (தினகரன் 2 - 12 -72) αγρότυρτή .
\S్నFSASలి65
மேலும், துரையரது கவிதைகள் எளிமையாக வாசகர்களுக்கு விளங்கும். வகையில் அமைந்துள் ளன. அரசியல், சமயம் போன்ற பல அம்சங்களை யும் தனது கவிதைகளில் உள்ளடங்கியிருக்கிறார்.
இறுதியாக, தெரு விளக்கு என்னும் இக் கவிதை நூல் சில குறைபாடுகளைக் கொண்டிருந்த போதும் சமூகப் பார்வையும் மானுடநேயமும் அதில் மிளிர்வது விதந்து குறிப்பிடத்தக்கது.
122925


Page 19
りA 《ད༽།
திருமகள் அழுத்தகம், சுன்