கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வைத்திய விளக்கம் என்னும் அமிர்தசாகர பதார்த்த சூடாமணியும் வைத்தியத் தெளிவும்

Page 1


Page 2


Page 3

வைத்திய விளக்கம் என்னும்
éllsjöflöJ Lljllsjö öLIIInnflush
வைத்தியத் தெளிவும்
அனுபந்தத்துடன்
பதிப்பாசிரியர்: ஐ. பொன்னையாபிள்ளை.
வெளியீடு:
மர்கான சுதேச மருத்துவத் திணைக்களம், சுகாதார அமைச்சு, வடக்கு' கிழக்கு மாகாணம்,

Page 4
அமிர்தசாகர பதர்த்த சூடாமணியும் வைத்தியத் தெளிவும்
முதற் பதிப்பாசிரியர் மீள் பதிப்பு
ஆண்டு பிரதிகள்
பக்கங்கள்
அட்டைப் படம்
அச்சுப் பதிப்பு
(அனுபந்தத்துடன்)
ஐ. பொன்னையாபிள்ளை. மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம், சுகாதார அமைச்சு வ.கி.மா.
2000.
1000,
Xνii + 16
ச. அ. அருள்பாஸ்கரன்.
பதிப்பக்த்திணைக்களம், வ.கி.மா.
AMRTHASHAHARA PATHARTHA SOODHAMIN KR
VYTHYA THELIVUM (ANUPANTHATHUDAN)
FIRST PUBLISHENG EDITOR
RE PRINTING
YEAR
COPES
PAGES
COVER DESIGN
PRINTED BY
I. PONNIAH PILLA,
PROVINCIAL DEPT OF INDEGENOUS MEDICNE MINISTRY OF HEALTH N.E.P.
2000.
000.
xvi + 61.
S. A. ARUBASKARAN.
PRINTING DEPARTMENT, N.E.P.

ஆளுநர் உரை
u60)pull வைத்திய முறைகளையும், மருந்து வகைகளையும் தன்னடக்கிய அழிந்தொழிந்து கொண்டிருக்கும் கிடைக்கரிய விலை மதிக்க முடியாத புத்தகங்களை மீள் பதிப்புச் செய்யும் கைங்கரியம் வரவேற்கத்தக்கது. பாராட்டுதற்குரியது. இந் நூல்கள் சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு ஏனையோருக்கும் பயன்படும் முறையில் ஆவண செய்யவேண்டும்.
இவ்வாறே கிடைப்பதற்கரிய ஏனைய புத்தகங்களும் தேடிக் கண்டுபிடித்து அச்சேற வழிவகுக்க வேண்டும். இப் பணியினை வடக்கு - கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு மேற்கொண்டிருப்பது சாலப் பொருந்தும்.
ஏ. கே. ஜயவர்த்தனா, ஆளுநர், வடக்கு - கிழக்கு மாகாணம்.
iii

Page 5
வாழ்த்துரை
சித்த ஆயுள்வேத மருத்துவ சம்பந்தமான நூல்கள் பல இலங்கையில் தோன்றியுள்ளன. அவற்றைப் பல மருத்துவ அறிஞர்கள் பதிப்பித்து வெளியிட்டுமுள்ளனர். அப்படியான நூல்களில் பரராஜசேகரம், செகராஜசேகரம், சொக்கநாதர் தன்வந்திரியம், இருபாலைச் செட்டியார் வைத்திய விளக்கம், அமுதாகரம் என பல வைத்திய நூல்கள் அடக்கம்.
இன்று முன்பு வெளிவந்த பல நூல்கள் கிடைப்பது அரிதாகவுள்ளது. மருத்துவ நூல்களை மீள் பதிப்புச் செய்வதற்குப் பலர் ஆர்வம் காட்டுவதும் குறைவு. இந்த நிலையில் வடகிழக்கு மாகாணசபை ஆரம்பிக்கப்பட்டு, சித்த ஆயுள்வேத யூனானி மருத்துவ நலன்களைக் கவனிக்க என்று சுதேச மருத்துவத் திணைக்களம் சுகாதார அமைச்சில் உருவாக்கப்பட்டது.
நாட்டில் வாழும் வைத்தியர்கள் வைத்தியர் நலன்புரி சங்கங்கள், ஆயுள்வேத வைத்திய பாதுகாப்புச்சபை போன்ற அமைப்புக்கள் வைத்திய நூல்களை வெளியிடுமாறு எமக்குக் கோரிக்கை விட்டன. அதன் முக்கியத்துவத்தையும் நன்மையையும் உணர்ந்த நாமும்,
iv

கெளரவ ஆளுநரிடம் வைத்திய நூல்களின் முக்கியத்துவத்தைக் கூறி சம்மதம் பெற்றோம்.
இன்று சில வைத்திய, நூல்கள் வடகிழக்கு மாகாண சபையினால் மீள்பதிப்பு செய்து வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நல்ல பணிக்கு ஊக்கமும் ஆக்கமும் தந்த கெளரவ ஆளுநருக்கு நாம் அனைவரும் நன்றி கூறவேண்டும்.
இப்புத்தகங்களை நல்ல முறையில் வெளியிட வேண்டும் என அயராது உழைத்த வடக்கு - கிழக்கு மாகாணசபை சுதேச மருத்துவ பணிப்பாளர் முனைவர் சு.பவானி அவர்களையும் அவருக்குப் பக்கபலமாக நின்ற சுகாதார அமைச்சின் செயலாளருக்கும் எமது பாராட்டுதல்கள் உரித்தாகுக.
புத்தகங்களைப் பதிப்பிக்க தமது பழம்பெரும் நூல்களைக் கொடுத்துதவிய வைத்திய கலாநிதி ரீபதிசர்மா அவர்களுக்கும் எமது நன்றிகள்.
புத்தகத்தை அழகுற அமைத்துப் பதிப்பித்த வடகிழக்கு O600T, பதிப்பகத் திணைக்களத்திற்கும் எமது பாராட்டுதல்கள்.
சித்த ஆயுள்வேத மருத்துவ நூல்களாகிய இம்மருத்துவ நூல்கள் வெளிவருவதற்காக உழைத்த மருத்துவர்கள், மற்றும் அமைப்புக்கள், சுகாதார, சுதேச மருத்துவ ஊழியர்கள் யாவர்க்கும், எனது வாழ்த்துக்களும் பாராட்டுதல்களும் உரித்தாகட்டும்.
இதுபோன்று மேலும் பல வைத்திய நூல்களை வெளியிட்டு பழம்பெருமை வாய்ந்த எம் சித்த ஆயுள்வேதத்துறை மென்மேலும் வளர்ச்சி பெற எல்லாம் வல்ல இறைவன் ஆசி புரிவாராக.
ஜி. கிருஷ்ணமூர்த்தி, தலைமைச் செயலாளர், வடக்கு - கிழக்கு மாகாணம். திருகோணமலை.
05.09.2000.

Page 6
කෙටුම්පත
මිනිසාගේ පිවිතය පවත්වා ගෙන යාමේ එක් පදනමක් වන්නේ නිරෝගිභාවයයි. ඒ සඳහා ශරීරය සහ මනාව පවත්වා ගත යුතු අතර ආහාර, වාපායාම මෙන්ම මංෂධ ද රට උපකාරී වෙ.
ආදි කාලයේ විසු ඉසිවරයන් සතුව වන මංෂධ පිළිබඳව ඉතා ඉහළ මටටමේ දැණුමක් පැවැතුනද එය කටවහරින් පැවත ආ නිසාත්, පුස්කොළ පොත්වල හෝ සඳහන් වූයේ ඉතා අල්ප වශයෙන් නිසාත් වර්තමානයේ ආයුර්වෙද වෛද්‍ය කුමය දියුණු මටටමකට පැමිණීමට නොහැකි වූ හේතුව ලෙස මම දකිමි. ආයුරීවෙද මාෂධ කූමය නැගෙනහිර ආසියාතිකයන්ගෙන් පාරම්පරිකව පැවත ආ සරල කූමයක් බව බටහිර රටවල ජෛවද්‍ය වරුන්ගේ මතය වුවද, එය ඉනගා උසස් මට්ටමක පවතින ජෛවද්‍ය කුමයකි.
සිද්ධ, ආයුරීවෙද, යුනානි යනුවෙන් ඇති මේ ජෛවද්‍ය කූම අනාගත පරපුර වෙනුවෙන් ආරකෂා කරදීම අපගේ යුතුකමක් වෙ. ආයුථහෙවදය පිළිබඳ ලියවුණු පොත් පත් පවා දුර්ලභ වූ අවධියක ඒ සම්බන්ධව ලියවුණු පොතක් නැවත මුද්‍රණය කිරීම ආයුරීවෙදයේ වර්ධනයට මහගු සේවයක් බව මම හිතමි.
ආථ. එම්. එස්. රත්නායක,
ලේකම්, සෞඛ්‍ය හා දේශීය වෛද්‍ය අමාත්‍යයාටශ, උතුරු - නැගෙනහිර පළාත, ක්‍රිකුණාමලය.
15.09.2000.
vi

ஆசிச் செய்தி
ஆரோக்கியம் என்பது மக்களின் வாழ்க்கை முறைக்கான அடித்தளமாகும். உடல், உள ரீதியான ஆரோக்கியம் திருப்தியளிக்கக் கூடியவகையில் சிறப்புப் பெறவேண்டுமானால் மன இயல் போக்குகளுடன் அள்ளுண்டுபோகும் வாழ்க்கை முறையினை தவிர்த்து சகலரும் போற்றும் பக்குவமானதும், உடற்பயிற்சி கொண்டதுமான வாழ்க்கை அமைப்பைப் பேணிக் கொள்வதே ஒரேவழி. இதற்கும் அப்பால் கிடைக்கப் பெறக்கூடிய சுக வாழ்விற்கான வழித்துணை மருந்து வகைகள்.
பழம்பெரும் ஞானிகளினாலும், சித்தர்களினாலும் பாதுகாக்கப்பட்டு வந்த எமது பாரம்பரிய ஆயுள்வேத மருத்துவமுறையானது வாய்ச்சொல் வழிபடிப்பாகவும்
ஏட்டுச்சுவடிகளில் எழுத்தாகவும் காணப்பட்டமையே அதன் வளர்ச்சி வேகக் குறைக்கான முக்கிய காரணியாக நான் கருதுகின்றேன். ஆயுள்வேத மருத்துவ முறையென்பது கிழக்காசிய மக்களின் வழிமுறை மருத்துவ சிகிச்சையாக தொன்று தொட்டு வழக்கத்தில் இருக்கும் மேலைத்தேசிய மருத்துவத்துறை சார் நிபுணர்களும் போற்றும் இலகுவான மருத்துவ முறையாகும்.
ஆயுள்வேதம் யூனானி, சித்த மருத்துவம் என்பவைகள் இன்றைய காலகட்டத்தில் நாளைய சந்ததிகளுக்காக பேணிப் பாதுகாத்து வைக்கக் கடமைப்பட்டவர்கள் நாங்களே. எமது அமைச்சினால் அரிதாகக் கிடைக் கப்பெற்ற ஆயுள்வேத மருத்துவ நூல்கள் ് பதிப்பு செய்யப்படுவதானது அம்மருத்துவ உயர் எழுச்சிக்கு நாம் வழங்கும் பாணிக்கையாகவே கருதுகின்றேன்.
ஆர். எம். எஸ். ரத்னாயக்க, செயலாளர், சுகாதார சுதேச மருத்துவ அமைச்சு, வடக்கு - கிழக்கு மாகாணம், திருகோணமலை.
15.09.2000.
vii

Page 7
வெளியீட்டுரை
கீழைத்தேச மருத்துவமான தமிழ் மருத்துவம் அல்லது சித்த மருத்துவம் மக்களின் ஆரோக்கிய நிலைமை பேணுவதற்கும், ஏற்பட்ட நோய்களை போக்குவதற்கும் பல உண்மைகளை கூறியுள்ளது. முற்காலங்களில் சித்தர்களினால் கூறப்பட்டிருந்த கருத்துக்கள் ஏட்டுச் சுவடிகளிலேயே எழுதப்பட்டிருந்தன.
பழமையான மருத்துவ ஏட்டுச்சுவடிகளை சேகரித்த ஏழாலையை பிறப்பிடமாகக்கொண்ட அமரர் ஐ. பொன்னையாபிள்ளை அவர்கள் சில அரிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டுள்ளார். ஆனால், இன்றைய காலகட்டத்தில் அந்த நூல்கள் கிடைக்கப்பெறுவது மிகவும் அரிதாகவே உள்ளது.
வடக்கு - கிழக்கு மாகாண சபையின் சுகாதார சுதேச மருத்துவ திணைக்களத்தினால், பல ஆணுள்வேத வைத்திய சங்கங்கள், ஆயுள்வேத வைத்திய பாதுகாப்புச் சபைகள் போன்ற அமைப்புக்களின் ஏகோபித்த வேண்டுகோளுக்கிணங்க அரிதான சித்த ஆயுள்வேத மருத்துவ நூல்கள் மீள்பதிப்பு செய்யப்படுவதானது மக்களின் இன்றைய தேவையினை அறிந்துகொண்ட ஆரோக்கியமான தொரு செயற்பாடாகும்.
முதற்கட்ட நடவடிக்கையாக திணைக்களத்தினால் மூன்று நூல்கள் மீள்பதிப்புச் செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றது. எமது மக்களுக்கான இப்பணி மேலும் தொடரும். இவ்வரிய பணிக்காக எல்லா வகையிலும் ஒத்துழைப்புக்களை வழங்கிய அனைவருக்கும் எமது நன்றிகள்.
நன்னோக்க அடிப்படையில் இந்நூல்கள் வெளியிடப்பட்டிருந்தாலும் எம்மையறியாமல் சில பிழைகள் அல்லது தவறுகள் ஏற்பட்டிருக்கலாம் எனவே அதனைக் கவனத்திற்கொள்வோர் மேற்கூறப்பட்டுள்ள விடயத்தைச் சுட்டிக்காண்பித்தால் அடுத்த மீள்பதிப்பு நடவடிக்கைகளின் போது திருத்தங்களை மேற்கொள்ள எமக்கு வசதியாக இருக்கும். எனவே ஆயுள்வேத வைத்தியர்கள் மற்றும் அறிஞர்கள் தமது கருத்துக்களை எமக்கு அவசியம் தெரியப்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றேன்.
டாக்டர். செ. குமாரவேற்பிள்ளை, பணிப்பாளருக்காக, மா. சு. மருத்துவத் திணைக்களம், வடக்கு - கிழக்கு மாகாணம், திருகோணமலை.
5.09.20OO.
viii

பதிப்புரை
வடக்கு - கிழக்கு மாகாணத்தில் சுதேச மருத்துவத் திணைக்களம் 1989ம் ஆண்டு தாபிக்கப்பட்டதாகும். சுதேச மருத்துவத் துறையென நாம் கூறும்போது அதில் ஆயுள்வேத வைத்தியம், சித்த வைத்தியம், யூனானி வைத்தியம் ஆகியவற்றுடன் இலங்கை நாட்டிற்குரியதான தேசிய பாரம்பரிய வைத்திய முறையும் உள்ளடக்கம். வடக்கு - கிழக்கு மாகாணத்தில் மூன்று இனத்தைச் சார்ந்த மக்களும் வாழ்கின்றனர். சிங்கள மக்கள் ஆயுள்வேத வைத்தியத்தையும், தமிழ் மக்கள் சித்த வைத்தியத்தையும், முஸ்லிம் மக்கள் யூனானி வைத்தியத்தையும் மேலும் சித்த ஆயுள்வேத வைத்திய முறையையும் பேணிப் பாதுகாத்து வருகின்றனர்.
ஒரு வைத்தியத்துறை முன்னேற்றமடைவதற்கு அந்த துறைசாாநத தரமுளள மருநதுகளும அதனை அனுசரித்துக் கையாண்டுவரும் மக்களும்தான் முதலிடத்தை வகிக்கின்றனர். இந்த தரமான மருந்துகள் முற்காலத்தில் ஏட்டுச்சுவடிகளில்தான் எழுதிப் பாதுகாக் கப்பட்டு வந்துள்ளது. பின்னர் அமரர் ஐ. பொன்னையாபிள்ளை போன்ற பெருந்தகைகளினால் அரிதாகக் கிடைக்கக் கூடியதான ஏட்டுச்சுவடிகள் சேகரிக்கப்பட்டு தரம்வாய்ந்த நூல்களாக வெளியீடு செய்யப்பட்டது. ஆயினும் பெரும்பாலான நூல்கள் இன்னும் அரிதாகவே உள்ளன. சில பழம்பெரும் வைத்தியர்களின் விலை மதிப்பிட முடியாத பொக்கிஷமாகப் போற்றப்படவேண்டிய அரிதான நூல்களாகவே இவைகள் கருதப்படுகின்றன.
மேற்படி நூல்கள் சகல வைத்தியர்களுக்கும் சித்த வைத்தியத்துறை சார்ந்த மாணவர்களுக்கும் கிடைக்கப் பெறல் வேண்டுமென்பதே வடக்கு - கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் பிரதான குறிக்கோ ளாகும். அதனை நிறைவேற்றுவதற்கு ஏற்புடையதாக அரிய சித்த மருத்துவ நூல்கள் சிலவற்றை மீள்பதிப்புச் செய்விது என்ற முடிவின் பிரகாரம் அதற்கென 1999ம்
ix

Page 8
செய்வது என்ற முடிவின் பிரகாரம் அதற்கென 1999ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் DT36T6 திட்டமிடற் குழுவினால் நிதி ஒதுக்கீடும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. முன்னைய மாகாண சுதேசமருத்துவப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி பூ.உரோமகேஸ்வரன் அவர்கள் இவ்விடயத்தில் மிகவும் அக்கறையுடன் மேற்கொள்ள முடியாது போய்விட்டது.
மீள்பதிப்புச் செய்வதற்கான நூல்களை துன்னாலை யைச் சேர்ந்த வைத்தியர் பூரீபதி சர்மா அவர்கள் தந்து உதவியுள்ளார்கள் என்பதனை பெருமையுடனும், நன்றி யுடனும் இங்கு குறிப்பிட்டேயாக வேண்டிய கடமைப்பாடு எனக்குண்டு.
அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணியும் வைத்தியத் தெளிவும் அடங்கிய இந்த நூல் அமரர் ஐ. பொன்னையா அவர்களினால் முன்னர் அச்சிட்டு வெளியிடப்பட்டது. பல பிணிகளினது விபரங்களும் அதற்கான சிகிச்சை முறைகளும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான தொரு நூலை மீள்பதிப்பு செய்வதில் வடக்கு - கிழக்கு மாகாண சபையின் ஆளுனர், பிரதம செயலாளர், திட்டமிடற் செயலாளர், மற்றும் அனைவரும் காண்பித்த ஆதரவானது சித்த வைத்தியப் பெருமக்களினால் என்றுமே நினைவு கூரப்படத்தக்கதொரு விடயமாகும்.
வடக்கு - கிழக்கு மாகாண சுதேச மருத்துவப் பணிப்பாளர் என்ற முறையில் இந்த புத்தகத்தின் மீள்பதிப்பு என்ற அரிய சந்தர்ப்பம் எனக்குக் கிடைத் தமைக்காக முதலில் எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகளைத் தெரியப்படுத்திக்கொள்வதுடன், இந்த நூலை வெளியீடு செய்வதற்காக பல்வேறு வகைகளிலும் ஒத்துழைப்புகளை வழங்கி உதவியாக இருந்த எனது திணைக்கள உத்தியோகத்தர்கள் சகலருக்கும் மற்றும் வடக்கு - கிழக்கு மாகாண பதிப்பகத் திணைக்கள ஊழியர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவிப்பதில் மகிழ்வு கொள்கின்றேன்.
பேராசிரியர் சுப்பிரமணியம் பவானி, பணிப்பாளர். மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம், வடக்கு - கிழக்கு மாகாணம், திருகோணமலை.

கணபதி துணை.
யாழ்ப்பாணத்து வைத்தியநூற் பிரசுரம் 1 யாழ்ப்பாணம்
இருபாலைச் செட்டியார் இயற்றிய
வைத்திய விளக்கம் என்னும் அமிர்தசாகரம் பதார்த்தசூடாமணி
இவை
யாழ்ப்பாணத்து ஏழாலை
சுதேச வைத்தியர்
ஐ. பொன்னையாUள்ளையான் (அருளானந்த சிவம்)
பல பிரதிருபங்களைக் கொண்டு பரிசோதித்து
யாழ்ப்பாணம் சைவப்பிரகாச யந்திரசாலையில்
பதிப்பிக்கப்பெற்றன
பிரபவ மாதம் ஆனி மாதம்
1927.
(Copyright Registered)
xi

Page 9
முகவுரை
பண்டைக்காலத்திலே யாழ்ப்பாணத்திலிருந்த பண்டிதர்கள் பலர் அரிய பெரிய வைத்திய நூல்கள் பலவற்றை உலகோபகாரமாக இயற்றி வைத்துள்ளார்கள். அவற்றுள் பிறர்க்குப் பயன்படுதல் கூடாது என்று எண்ணும் சுயநலக் கருத்துடைய நல்லறிவில்லா மாக்களிடம் அகப்பட்டுச் செல்லுக்கிரையாய் மாண்டொழிந்தன பல. இன்னும் ஒழிய இருப்பன பல. அரிய முறைகளில் முக்கியமான பாகங்களை மாறுபடுத்திக் கூட்டியும் குறைத்தும் ஏட்டில் எழுதிவைத்துப் பிறரை வஞ்சிக்கும் இயல்புடையோரும் நம்மூரில் ' காணப்படுவர். இத்தகையோரது வஞ்சகச் செயல்களினால் எத்தனையோ சிறந்த அவுடத பாகங்கள் எத்தனையோ சிறந்த நூல்கள்தம் உண்மை யுருவமிழந்து அறிதற் கரியனவாய்ச் சிதைந்து கிடக்கின்றன. ஒரு நூலில் எத்தனை பிரதிகளைத்தேடி ஒப்புநோக்கினாலும் எல்லாம் ஒன்றுக்கொன்று பெரிதும் முரண்பாடுடையனவாகவே காணப் படுகின்றன. தாமறிந்ததைப் பிறர் அறிதல் கூடாது என்னும் அறக்கொடிய எண்ணத்தினால் வைத்தியம்கற்கும் மாணவர்கள் தாமும் பெரும்பாலும் தப்புவழியே காட்டப்படுகின்றனர்.
இவைபோன்ற குறைபாடுகள் பல நம்மிடம் நிரப்பிக்கிடக்கும் போது “தமிழ் வைத்தியம் பிறரால் அலட்சியம்பண்ணப் படுகிறது” என்று கூக்குரல் போடுவதினாலும் கூட்டங்கள் பல வைப்பதினாலும் விளையும் பயன் யாதுமில்லையாம். நடுநின்று நோக்குவார். தமிழ் வைத்தியமானது ஆங்கிலம் முதலிய பிறவைத்தியங்கள் எவற்றிலும் பார்க்க எத்தனையோமடங்கு உயர்ந்தது எனும் உண்மையை மறுக்கமாட்டார். ஆயினும் நம்மவர்களிடத்துள்ள பொறாமையினாலும், சுயநலக் கருத்தினாலும், அதிற் பயில்வோர் பெரும்பாலும் கல்வியறிவில்லாதவர்களா யிருத்தலாலும் பிற குறைகளாலும் தன் மேன்மையிழந்து கீழ் நிலையை அடைந்துவிட்டது. தமிழ்ச் சித்தவைத்தியம் உயிர்நிலையடைந்து பிறராலும் பாராட்டப்படுதல் வேண்டுமாயின் இக்குறைபாடுகளெல்லாம் ஒழிந்து பழையனவும் புதியனவுமாகப் 6 நூல்கள் வெளிவருதல்வேண்டும். நம் தாய்நாடாகும் இந்தியாவில் ஆரியம் ஆங்கிலம் முதலிய பிறமொழிகளிலிருந்து பெயர்த்து சிறந்த வைத்தியநூல்கள் பல காலத்துக்குகாலம் தமிழில் எழுதப்படுகின்றன. எனினும் அவர்கள் தாம் பேசுவதுபோலவே அவ்வம் மொழிச் சொற்களை அப்படி அப்படியே தமிழெழுத்தினாலெழுதி அலங்கோலப்படுத்தி விடுகின்றனர். அது மொழிபெயர்ப்பு ஆகாது என்பதும் அந்நூல்களாற் பொதுமக்கள் பயனடைதல் கூடாது என்பதும் அவரறிந்திலர்.
யாழ்ப்பாணத்திலுள்ள பண்டிதர்களால் இயற்றப்பெற்றன பரராச சேகரம், செகராசசேகரம், தன்வந்திரியம், வைத்தியவிளக்கம், பதார்த்த சூடாமணி, செளமியகாண்டம் முதல் இன்னும்பலவுள. இவற்றுள் கிடைப்பனவற்றை ஒவ்வொன்றாய் வெளியிடக்கருதி முதலில் வைத்திய விளக்கம்', 'பதார்த்தசூடாமணி என்னும் இவ்விரு நூல்களையும் வெளியிட்டோம். வைத்தியவிளக்கத்தில் ஆசிரியர் சில நோய்களுக்குக் கொடுக்கும்படி குறிப்பிட்டிருக்கும் அவுடதங்க்ளுள் சாதிலிங்கக்கட்டு, கண்டாவிழ்தம்முதலியவை நமக்குக் கிடைத்த
xii

பிரதிகளில் ஒன்றிலாயினும் காணப்பட்டில. தம்மிடமுள்ள பிரதிகளிலிருக்கின்றன என்று கூறிய சிலர் அவற்றைக் கொடுக்க மறுத்துவிட்டனர்.
இவ்விரு நூல்களையும் இயற்றினார் இருபாலைச் செட்டியாராவர். இவரது இயற்பெயர் இன்னதென்பது நன்கு புலப்பட்டிலது. இவர்காலம் இற்றைக்குத் தொண்ணுாறு வருடங்களின்முன் என்றும் பிறந்த ஊர் மீசாலை என்றும் கூறுவர். வேளாண்செட்டி வமிசத்தைச் சேர்ந்த இவர் இருபாலையில் நீண்டகாலம் தங்கியிருந்தமையினால் அப்பெயர் பெற்றனர். இவர் ஓர் துறவுநிலையில் நின்ற பெரியோராவர். தமிழிலே சிறந்த வித்துவத்தன்மை யுடையாரென்பது இந்நூல்களைப் படித்துப்பார்க்க விளங்கும். காப்புச் செய்யுட்களை நோக்குமிடத்து சைவ சித்தாந்த உணர்ச்சி பெரிதும் உடையாரென்பது புலப்படும். இவரது வாக்குச்சித்தி முதலியவற்றைக் குறித்துப் பலகதைகள் வழங்குகின்றன. அக்காலத்தில் இவரது புகழ் பரவியிருந்தது என்பதற்கு “யாழ்ப்பாணச் சரித்திரம்” என்னும் நூலில் இவரது சரித்திரக் குறிப்புகள் சில காணப்படுதலே சான்றாகும். விரிவஞ்சி அவற்றை ஈண்டுக் காட்டா தொழிந்தேம்.
செளமியகாண்டம் என்னும் வைத்தியநூலை இயற்றினாரும் இவரே எனச் சில முதியோர் கூறுவர். செய்யுள் நடையும் இவரது செய்யுள் நடையையே பெரும்பாலும் ஒத்திருக்கிறது. அக்காரணத் தினால் அதையும் இவற்றோடு சேர்த்து வெளியிடவே எண்ணினோம். ஆயினும் கிடைத்த பிரதிகள் எல்லாம் உக்கிரகாண்டத்தோடு சேர்த்தே எழுதப்பட்டு இருத்தலாலும், அதன் ஆசிரியரே இதையுமியற்றினவ ராவார் எனச் சிலர் கூறியவதனாலும் அந்நோக்கம் தவிர்க்கப்பட்டது.
இங்குள்ள அரிய நூல்கள் பலவும் தக்கமுறையில் வெளிவருதல் வேண்டும் என்ற ஆர்வம் பெரிது முடையராய் எமக்கு ஊக்கந்தந்து இந்நூல் வெளிவரக் காரணமாய் நின்றவர், ஆங்கிலம், தமிழ் என்னும் இரு வைத்தியங்களிலும் தேர்ச்சிபெற்ற சுன்னாகம் திரு. அ. கந்தையாபிள்ளை யவர்களேயாவர். இன்னும் இவ்வெளியீட்டில் அவர்களைப்போலவே ஆர்வங்காட்டி வேண்டிய உதவிபுரிந்த அன்பர்கள் தமிழ் வைத்தியத்திற் பிரபலமுற்று விளங்கும் சுன்னாகம் திரு. வ. முத்துகிருஷ்ணபிள்ளை யவர்களும், தெல்லிப்பளை திரு. ச. தம்பையாபிள்ளை (Proctor S. C.) அவர்களும், தமிழ் வைத்தியர் கொல்லன்கலட்டி திரு. ம. விசுவநாதபிள்ளையவர்களும், யாழ்ப் பாணம் இந்துசாதன பத்திரிகாசிரியர் யூரீ ம. வே. திருஞானசம்பந்த பிள்ளையவர்களும் வேறு சில அபிமானிகளுமாவர். பொதுநலம் விழையும் இப்பெருந்தகையார்களது நன்றி எம்மாலும் இந்நூல்களாற் பயன்பெறுவோராலும் எஞ்ஞான்றும் மறவாது பாராட்டப்படுக.
காலந்தவறாது இதைப் பதிப்பித்துதவிய இவ்வச்சியந்திரசாலை அதிபரவர்கட்கும் இன்றியமையாத திருத்தங்களை வேண்டுங் காலங்களிற் செய்துதவிய சுன்னாகம் காவியபாடசாலைத் தமிழ்த் தலைமையாசிரியராகும் வித்துவான் பிரம்மறி சி. கணேசையரவர் கட்கும் எமது நன்றி உரியதாகுக.
இப்பதிப்பிற் சேராது தவறிய பாகங்களை வைத்திருப்போர் தயைகூர்ந்து நமக்கு அனுப்புவார்களாயின், அவர்க்கு ஒவ்வொரு
xiii

Page 10
புத்தகம் இனாமா யனுப்பிவைப்பதன்றியும், அடுத்த பதிப்பில் அவற்றை அவர்களது பெயரோடு சேர்த்தும் வெளியிடுவோம். வேறுதிருத்தங்கள் உண்டாயினும் அறிவிப்பின் நன்றியறிதலோடு ஏற்றுக்கொள்ளப்படும்.
ஐ. பொன்னை:யா ஏழாலை பிரபவ ரீ ஆனி மீ
நூன்முகம்
சிறந்த சைவசித்தாந்த அருனெறிச் செல்வரும் நியாயதுரந்தரருமாகிய
தெல்லிப்பழை
முரீமாங். சு. தம்பையாபிள்ளை அவர்கள் எழுதியது
உலகின்கண் உயிர்வாழும் மக்கள் வெப்பதட்ப ஏற்றத்தாழ்வு முதலிய பல ஏதுக்களால் பலவேறு வகைப்பட்ட நோய்வாய்ப்பட்டு வருகின்றனர். மக்கள் நினைவு, செய்கைகள், பழக்க வழக்கங்கள் காலகதியில் மாறிவருகின்றன. அவ்வேறுபாட்டால் நோய் வேறுபாடும் உளதாகின்றது. ஆயிர ஆண்டுகளுக்கு முன்னருள்ள நோயானது காலகதியில் மாறுதலடைந்து வேறு பெயரால் இக்காலத்து அறியப்படுதலுமுண்டு. அந்நோய் தீர்தற்கு அக்காலத்து ஆக்கப்பட்ட மருந்து இக்காலத்து ஏற்ற முறையில் திருத்திச் செய்யப்படல் வேண்டியதாகின்றது. இதையுணர்ந்து யாழ்ப்பாணத்திலே மருத்துவப் பயிற்சியில் சிறந்து விளங்கிய பண்டிதசிரோமணிகள் பலர் அரிய பெரிய வைத்திய நூல்கள் பலவற்றை இந்நாடு நலம்பெறத் தந்துதவினர். அவற்றுள் இற்றைக்கு ஏறக்குறையத் தொண்ணுாறு ஆண்டுகளுக்கு முன்னர் அப்பயிற்சியில் பெரும்புகழ் படைத்து
Xiv

விளங்கிய இருபாலைச் செட்டியார் என்னும் பெரியார் இயற்றியன (1) வைத்தியவிளக்கம் என்னும் அமிர்தசாகரம் (2) பதார்த்தசூடாமணி என்னும் இரு பெரும் நூல்கள். இச்செட்டியார் முறை யாழ்ப்பாணத்துள்ள சிறந்த வைத்தியர்கள் பலரால் கையாளப்பட்டு வருகின்றது. செய்பாகம் கைபாகம் முதலியன தவறாமல் இம்முறைப்படி செய்யப்பட்டுவரும் மருந்து நோய்களைத் தப்பாது நீக்கிக் குணஞ்செய்வது உலகு நன்கறிந்ததொன்றே.
இவர் நூல்களின் அருமை பெருமை இவ்வாறாகவும் அவை இதுகாறும் அச்சேறாமை கண்டு. ஆங்காங்குள்ள பற்பல ஏட்டுப் பிரதிகளை வருவித்து அவற்றில் நிறைந்து மலிந்து கிடந்த பல பிழைகளைத் திருத்தி யாவர்க்கும் பயன்படுமாறு மேற்குறித்த இருநூல்களையும் ஒருங்குசேர்த்து அருஞ் சொற்கள் பலவற்றிற்குக் குறிப்புரையும் எழுதி அச்சிடுவித்த பெரியாரும், சைவ சித்தாந்த அருணெறிச் செல்வரும், பரம்பரை வைத்திய சிகாமணியுமாகிய அருளானந்தசிவம் அவர்கட்கு உலகு செய்யும் கைமாறென்னே. அப்பெரியார் என்றும் எல்லா நலங்களும் எய்தி வாழுக.
இவ்விரண்டு நூல்களுள்ளும் முதலாவதான அமிர்தசாகரமானது, நாடிகளின் தோற்றம் தொழில் ஆகியவற்றையும்,சுரவகை அவற்றின் குணம் சிகிச்சை முதலியவற்றையும், சூரணம் மாத்திரை வகை களையும், மூலப்பவுந்திரம், கட்டு, புண், பற்பேத்தை, செங்கரப்பன், கபாலம், கயரோகம், நீரிழிவு, சன்னி வெட்டை சூலை முதலாம் பல கொடு நோய்களின் தன்மைகளையும், அவற்றிற்குரிய மருந்து, நெய் எண்ணெய் தைல வகைகளையும் சிறப்பாகக் கூறி, உடம்பு நலத்திற்கு இன்றியமையாத பச்சடிகள் இரசங்கள் நீராகாரங்கள் ஆகியவற்றைப் பொதுவகையாலுரைத்து உயிர்கட்கு உறுதி பயப்பது. இன்னும் இந்நூலானது பிள்ளைப்பெற்ற பெண்கள் சிறுபிள்ளைகள், உன்மத்தர் முதலாயினோர்க்கு வேண்டும் முறைகளையும் சரக்குச் சுத்தியையும் தெளிவாகக் கூறும்.
இனி, இரண்டாவதான பதார்த்த சூடாமணியானது உடம்போடு இயைந்து பயன் தரும் பொருட்களின் குணங்களை நன்கு விளக்குவது. இன்றும் இது நல்லன தீயனஎன்பவற்றைப் பகுத்துக் காட்டுவது. நிலம், நீர், தீ வளி, வான், இவற்றின் குணமும் உணவுக்குரிய சோற்றுவகை, சிற்றுண்டிவகை, புன்செய்தானியவகை. கீரைவகை, வேர்பூ காய் இலைவகைகளும், பால், தயிர், நெய், மோர், இறைச்சி, மீன், கடைச்சரக்கு இவைகளின் குணங்களும் உலோகவகை முதலாய பல பொருட்களின் குணங்களும் இந்நூலின் கண் தெளிவாகக் கூறப்படுகின்றன.
மக்கள் அறிவு வளர்ச்சிக்கும் உடல்நலப் பெருக்கத்திற்கும் இந்நூல்கள் பெரிதும் துணையாகவுள்ளன. இவைபோன்ற பல நூல்கள் இன்னும் அச்சிடப்படாமலிருக்கின்றன. அவற்றையும் அச்சிட்டு வெளியிடுவது பெரும் பயன் பயக்கும் அருஞ்செயலேயாம். ஆதலால் தமிழ் மக்கள் இவ்வரும்பெரும் முயற்சியில் கையிடத் திருவருள் துணை செய்வதாக.
求 一张 一 裘
XV’

Page 11
9.
சிறப்புப்பாயிரம்
இஃது
ğ 6663fT35Lfy
காவியபாடசாலைத் தமிழ்த் தலைமையாசிரியரும் வித்துவானும் ஆகிய
புன்னாலைக் கட்டுவன்
பிரஹ்மழறி சி. கணேசையர் அவர்கள் இயற்றியது
பொன்மலி யிலங்கைப் பூவகந் தன்னில் மின்மலி திலகம் போன்றுநணி விளங்கிச் செல்வங் கல்வி செழித்துமிக வோங்கும் நற்குலக் குடிகள் பற்பல வாழும் யாழ்ப்பாண மென்னு மெழில்பெறு நாட்டில் இருபாலைச் செட்டி யென்றுபெயர் தழைத்தோன் நோயொடு காரண நுண்ணிதி னாடித் தீர்க்கும் வாயுஞ் செவ்விதி னறியூஉக் காலமொ டிடமுங் கருதிச் செய்யும் வைத்திய சிகாமணி யாகி விளங்கினோன் செய்கையி னன்றித் தெய்வந் தன்னினும் எய்துபல பிணிக ணொய்தி னிங்கி இவ்வுல குய்யுமா றெய்திப் பலநூல் செய்திங் கமைத்தனன் றெரிந்துமுன் னுரல்கள் அங்கவை தம்மு எழகுபெற் றிலகும் அமிர்த சாகர மதனைப் பதார்த்த சூடா மணியொடு மேடார் பிரதிகள் நோக்கிப் பிழையற வாக்கி யெவர்க்கும் பயன்றர வச்சிற் பதித்துநன் குதவினன் ஏழாலை யென்றுபெய ரெய்திய வுரிற் பிறந்துபல பிணிக ளறிந்துமிக மாற்றித் திசையுற விளங்கு மிசையொடும் வைகிய ஐயம் பிள்ளையென் றறைந்திடு மண்ணல் பெற்றிடு மைந்த னற்றவக் குரிசில் சிவனடிக் கன்பு செய்திடும் பெரியோன் பிணிநிலை தெரிந்து தணிவுறப் பெரிது மருந்தருள் வன்மை பொருந்திய பண்பினன் பொன்னைய பிள்ளை யென்னம் பெயர்பூ நிலைபெற வைத்த தலைமை யோனே.
هWه هج همه arvs - arw - ww»
Xvi

இஃது
சுதேசநாட்டிய பத்திராதிபரும் சொந்தக்காரருமாகிய
பூனிமாந் க. வேலுப்பிள்ளை அவர்கள்
இயற்றியது
வாரிபா வகிலமிசை மேவுமா னுஷிபசம வாயமுறுநோயின் வகையை மனதிற்க ணத்தாய்ந்து நீக்குவா னாடிவிதி வாகுதருகுணவா கடம் மன்னிப்பதார்த்தசாரம் மருந்தாக்குவகை மட்டொனுபான வகைநோய் வந்துளா ரனுசரித் திடுமுறையைமுன்புகுறு முனிமகா ரிஷிசித்தரும் மாணுறரு ளாளர்பண் டிதருந் தெரிந்தபல வாகட முஞற்றி னாரவ் வழிமா றுறாதுதழி யருளாளர் பலகலைபன்மதியாளர் சுகுண பிரம
சாரியந் தழுவுகுண வாளர்மீ சாலையுதி சாதுசம் பிரம வாசத் தானமீ தென்றோரிரு பாலையூர்கொண்டசு தயாளர்பூ காஞ்சனம்மா தைத்தட்டி வாளிர்பாலைச்செட்டி யாரென்று சாற்றியுலகேத்துசிம்மம் தகையுறு வயித்தியவிளக்கமென்றிடும்முத சாகரமைஞ்ஞாறுகவியால் சார்முனுாற் றிருகவியினாற்கணி பதார்த்தகு டாமணியுஞற்றியாரும் சந்தேக மற்றுணருமாறுவைத் தனரதன் றகைமை யழியாது நிலவ
ஆரியத்தமிழென்னு மரியமொழி தனிலாழ்ந்தறிவு சாலுங்குமுணமன் ஆலயம்பலகொளே ழாலயம் பதியில்வே ளாளசி ராளபும்மான் அண்ணலையம்பிள்ளையாயுள்வே தியனன்றளித்த நற்குமாரனானோன் ஆர்வயித் தியபண்டி தன்நோயி னாரையன் பாயாத ரித்தவர் பிணி ஆற்றுசஞ் சீவியன் பொன்னைய மன்னுலவு மதிலோபகார மென்று
சீரிய வயித்தியசிகாமணிகள் மனைபலதிரிந்துபலஏடெடுத்துச்(கிணங்கச் சேர்ந்தசொற் பொருளெழுத் தசையடி தழைகள்கீர்திருத்திமுன்னுாற் செப்புகவி வாணர்பார் வைக்கனுப்பிப்பின்னர் செய்யவச்சிட்டுதவினான் தேசுலவு மரியவிந் நூலினா லுலகமனு தீர்க்காயுளடையவுமிதைச் செய்ததே சோபகா ரப்பிரமு திதனாயுள் தீர்க்கமுற் றிட்ட சித்திச் செயுமுறவு மரணுதவு குமரகுரு பரணருட்டிருவடியைவேண்டினேனே.
ܧ
xvii

Page 12

வைத்திய விளக்கம்
சிவமயம்
வைத்திய் விளக்கம்
என்னும்
அமிர்தசாகரம்
பாயிரம் காப்பு
ஆதியாய் நிலமாய் நீரா யங்கியாய் மருத்தாய் விண்ணாய்ச் சோதியாய்ச் சுயம்பா யொன்றாய்த் தோற்றமீ றிலதாய் மேவும் நாதமாய் விந்தா யெல்லா நடத்திடும் பொருளாய் மேலாம் போதமா யமர்ந்த புத்தேள் பொன்னடி தொழுதல் செய்வாம்.
குரவர் வணக்கம்
அகாரம்போ லுயிர்க டோறு மாயவன் சரணம் போற்றிப் பகாரமார் கலையி னுட்பம் பகர்ந்தருட் கிரணம் வீசி நிகாரமா மதத்தை நீங்கச் செய்யுநற் குரவர் பாதம் சிகாரமேற் சூட்டிச் செய்ய சிகிச்சையைச் செப்பு வேனே.
அவையடக்கம்
விரவிய பொதிகை மேவும் விண்ணவன்முதலா மற்றும் பெரியவ ருரைத்த மேன்மை பிறங்குவா கடங்கண் முன்னர் ஒருசிறிதறிவிலாதேனுரைத்தநூ றானுநிற்றல் பருதிமுன் கச்சோ தங்கள் பரந்துவாய் நிற்றல் போலும்.
இலக்கிய விலக்க ணங்க ளெனக்கறி வித்த சீரார் தலக்கணிற் புகழை நாட்டா சாரியர்ப் பணிந்து யான்சொல் துலக்கவில் வாக டத்திற் றுகளிருந் தாலு மத்தை விலக்கிநல் லருள்செய் வாரா மிகுபெரு மறிவி னோரே.
சொல்லருந் தவங்கள் செய்தோர் துய்த்திடு மின்ப வீட்டை அல்லலா ரகத்தோர் சேருங் கதியினை நினைப்ப தொப்பாம் எல்லையில்கல்வி யோர்க ளியம்பிட வேண்டு நூலைப் புல்லறி வுடைய யானும் புகன்றிட நினைத்தன் மாதோ.
மணியெனும் பயாவில் வீசு மாசில்மா னிக்க மாதி அணிநவ மணிக ஞக்கு மறைபடு மணிக ஞக்கும் நணியணி போலு முன்னோர் நவில்வைத் தியநன் னாம இணையினன் னுாற்கு நாயே னியம்புமிந் நூற்கு மாதல்.

Page 13
வைத்திய விளக்கம்
பண்டிதனிலக்கணம்
சீர்மேவு மனேக பேதஞ் செய்யவா கடங்கள் கற்றும் பேர்மேவு மவைக டம்மிற் பெரிதுமே பழக்க முற்றும் ஏர்மேவு பிறருக் குள்ள விரும்பொரு ளாசை யற்றும் நேர்மேவுஞ் சரக்கு மூலி நிறைகுண மிவைகண் முற்கும்.
உள்ளத்தி லறிந்தும் வேறு மோதிடு மதிகமான தெள்ளிய வறிவு நூலைத் தெரிந்துமன் பொழுக்க மோடு தள்ளரு மறிவு மிக்க சார்பொறை யடிக்கம் பெற்றும் கொள்ளச்ச மதமால் சோம்பு கொடுஞ்சின மிவைக ணத்தும்.
காலம்பாத் திரமே தெய்வ கன்மமோ டிடங்க டேர்ந்தும் சீலநன் மருந்து செய்யுந் திறத்தினை யறிந்து மேலாம் வாலறி வுடைய சோதி மலரடிக் கன்புண் டாயும் கோலநூண் ணியநற் புத்தி குசைநுனி போலப் பெற்றும்.
உத்தம செளமி யம்மே யோதுமா னிடந்தா னன்மை மெத்திய தெய்வ மோடு விளங்குமா சுரமென் றோதும் வித்தக வைத்தி யங்கண் மிக்கநற் றேசி கன்பால் நித்தமு முறையாய்க் கற்று நெடுநாளைப் பழக்க முற்றும்.
யாவருஞ் செய்ய வொண்ணா வினியகை பாக மோடு மேவுசெய் பாக மன்றி விளங்கிடை பாக மென்று தாவிலா விவைக டம்மிற் றான்மிகு பழக்க முற்றும் ஆவலா ரிலக்க ணங்க டாமிலக் கியங்கள் கற்றும்.
பிறர்க்குநோ யுற்ற தென்னப் பெருமுயிர் போல வோம்பும் திறம்பெற்று நோயி னோரைச் செப்பரும் பத்தி யத்தி லுறவையா தவர்க ளாசை யுற்றிடு மேன்மை யான கறையில் போசனங் கொடுத்துக் காப்பாற்று நன்மை பெற்றும்.
யாக்கையின் குணங்கை நாடி யெண்ணுநோய் குணங்க ளோடே ஆக்கிடு மருந்தின் வன்மை யறிந்தேற்ற வழியி னாலே தாக்கனு பான பேதந் தன்னாலே குறைத்துக் கூட்டி ஊக்கநன் மருந்தை நோய்கட் குய்த்திடும் வண்மை பெற்றும்.
ஆகுநாக் குறிகு ணங்க ளனுபவத் தால றிந்தும் தேகநோய் முதலா யெல்லாஞ் செப்பிடக் கேட்ட றிந்தும் ஒன ய்த் தாது பார்த்தே யுணர்ந்துபின் னோய்தீர் பாகம் ஆடா மருந்து நல்கும் பான்மைக ளொருங்கு ணர்ந்தும்.
சரக்குகள் சுத்தி செய்யுந் தன்மைக ளெலா மறிந்தும் சரக்குக ளொன்றோ டொன்று சார்ந்து மாழுதலை யோர்ந்தும் சரக்கின் சத்துருவி னோடு சாற்று மித்துருவை யோர்ந்தும் உரைக்குமைம் பூதந் தன்னா லாகிய வுடம்பி னோய்க்கு.
ஐம்பூத நாமம் பெற்ற சரக்குமான் மீயந் தன்னை நம்பிடுஞ் சட பதார்த்த மாயநன் மருந்திற் சேர்த்துச் செம்மையா யியங்கப் பண்ணுந் திறம்பெற்று லோக மாதி தம்மைச்சிந் துாரிக் கின்ற தன்மையின் மிகப்ப யின்றும்.
2

வைத்திய விளக்கம்
இருந்திடு மிவனைத் தானே யினிய நூல்பலவுங் கற்றுத் திருந்துவா கடங்கண் முற்றுந் தெளிவுறக் கற்ற மேலோர் அருந்திற லாயுள் வேத மாகிய கடலை முற்றுந் தெரிந்தநல் லாயுள் வேத சிரோமணி யென்பர் மாதோ.
இப்படிப் பட்ட மேலா மினிய நற்குண நிரம்ப ஒப்பிலா வாயுள் வேத முரைத்திடு முண்மை யெல்லாம் தப்பின்றி வியாதிக் காரன் முன்செயி னருமை யாகச் செப்புமெள் விதமா நோயுந் தீர்ந்திடு முண்மை யாக. இந்நூலிற் சொன்ன வாடுஞ் சரக்குட னிசைக்கு மூலி என்னுமிங் கிவைக ளெல்லா மெய்தாமற் சிலவந் தாலும் அன்னதை யவிழ்தஞ் செய்தே யருந்திட வன்னோய் தீரும்
சொன்னாரிம் முறையா லின்னுந் துகளிலா முனிவர் தாமும்.
இந்தநூ றன்னிற் சொன்ன விம்மருந் துகளே நோய்க்குத் தந்திட வேண்டு மென்னிற் சாற்றரும் பத்தி யத்தி லந்தநோ யாளர் தம்மை யடைய வையாம லேற்ற நந்தலில் புசிப்ப ருத்தி நல்கிட வேண்டு மன்றே. இப்பூவி லெந்த வேந்த ரிருஞ்சம யங்க டம்மிற் செப்பிய முழுதி லுந்தான் சிறந்ததோர் தரும மொன்றுண் டப்பொருந் தருமந் துன்ப மடைந்தவர்க் கன்னோய் தீர ஒப்பிலா வவிழ்தஞ் செய்தே யுவந்துதீர்த் திடுத லாமே.
நாடித்தோற்றம்
சொல்லுமா னிடவர் தேகந் தொண்ணுற்றா றங்கு லம்மே புல்லுறு நீள மாகும் புகுமிது நாடிக் கெல்லை யெல்லையி லெழுபத் தீரா யிரமதா மிவற்றி னுள்ளே யல்கலி னாடி பத்தா மவைபெயரறைய லுற்றாம்.
தச நாடி
இடைசுழு முனையி னோடே பிங்கலை யிசைகாந் தாரி அடைதகு குகுத னோடு சங்கினி யசனி பின்னும் புடையலம் புருட னல்லாற் சிங்குவை புருட னென்றே நடைதளு நாடி பத்துந் நற்று ணையா மிதற்கே.
தசவாயு
அடைந்திடும் வாயு பத்தா மவைபெயர் பிராண னோடு மிடைந்திடு மபான னல்ல வியானனே யுதானன் கூர்மன் நடந்திடுந் தேவ தத்தன் சமானனே நாக னோடு தடங்கலில் கிரிகரன் றான் றனஞ்செய னிவைக ளென்ப.
அவற்றின் தொழில்
ஆகுமே வாயு செய்யுந் தொழிலினை யறையக் கேளும் சோகமில் பிராணன் மூலந் தொடங்கியே கபால முட்டிப் பாகமார் நாசி தன்னிற் சுவாசமாய்ப் பாயு மற்ற தேகுமே லிரா றான வங்குலத் தள வினான் கும்.
3
20
21
22
23
24
25

Page 14
வைத்திய விளக்கம்
பாழ்தர வெட்டு முள்ளே பாயுமிவ் வளவ தாயோர் நாழிகை தனக்கு முன்னூற் றறுபதாய் நவிலி லோர்நாட் கூழுறு மிரண்டு பத்தோ டாயிரத் தறுநூ றாகும் பாழிலாப் பிராணன் னெஞ்சி லோடுமே பகருங் காலை.
குறைவறு மபானன் செய்ய குதனின்று மலச லத்தை மறுவறப் போக்கு மென்க வளங்கிய வபானன் றேகத் தறைமுறை வியாபித் தேதா னமர்ந்திடு முதானன் கண்டத் துறுமுண வதனைக் கீழே யுற்றிடச் செய்யும் பாரே.
ஆகுமே கூர்மன் ரோம மதுபுள கித்தி மைக்கும் வேகமார் தேவ தத்தன் கொட்டாவி விட்டு டம்பைத் தாகமாய் முறுக்கு மென்ப சமானன்றா னுந்தி நின்றே தேகமா ருணவு தன்னைச் செரிப்பிக்கு மென்று காணே.
நாகன்றா னெஞ்சி னின்றே நவிறரு விக்கல் சேர்க்கும் பாகமார் கிரிகரன் றான் பகர்தும் மறனையுண் டாக்கும் ஆகமார் தனஞ் செயன்றா னாவிபோ னாலும் போகா தோகையா ருடலை வீக்கி யுறசிரங் கிழித்துப் போமே.
இப்படிக் கூறு கின்ற விவையெலா முடம்பி னின்று முப்பெருங் கன்மத் தாலே முதிருநோ யளவு தன்னைச் செப்பினா லாயி ரத்தைச் சேர்ந்தநா னுற்றி னோடே தப்பிலா நாற்பத் தெட்டாந் தவறின்றி யறிந்து கொள்ளே.
நாடித் தொந்தம்
இடைகலை தானே வாத மியம்பு பிங்கலையே பித்தம் மிடைகழு முனையே சேடம் விளம்பிது நிற்கப் பின்னர்த் தடையிலா நாடித் தொந்தஞ் சாற்றுவ னிரட்டி வாதம் ஒடுபித்த மொன்றே வாத பித்ததொந் திப்பென் றோதும்.
வாதமே யிரட்டித் துப்பின் வளர்சேட மொருபங் காகில் ஒதிடும் வாத சேட தொந்திப்பென் றோதல் வேண்டும் தீதுறு பித்தம் ரெட்டி சேர்தரு வாத மொன்றே ஏதிலாப் பித்த வாத தொந்திப்பென் றிசைக்க லாமே.
பித்தந்தா னிரட்டிப் பங்கு பேசிடிற் சேட மோர்பங் கொத்திடிற் பித்த சேட தொந்திப்பென் றுரைப்பர் மேலோர் உய்த்திடுஞ் சேடம் ரெட்டித் துறுவாத மொருபங் காசில் வித்தகச் சேட வாத தொந்திப்பாய் விளம்ப லாமே.
சேடமோ ரிரட்டிப் பங்கு சேர்ந்தொரு பங்கு பித்தம் கூடிடிற் சேட பித்த தொந்திப்பாய்க் கூறல் வேண்டும் தேடுமித் தொந்திப் பாலே சேர்ந்திடு மிகுதி யாக நாடதி சார மென்று நவின்றிடுங் கொடிய நோயே.
அவத்தைக் குறி
வாதந்தான் பித்தத் தேறி வளர்பித்தஞ் சேட முட்டி ஏதமார் சேட மேலே யேறிடி லவத்தை யாகும்
4
26
27
28
29
30
31
32
33
34

வைத்திய விளக்கம்
சாதமார் குறியைக் கேளுஞ் சலமென மார்பு மூக்குக்
காதோடு பிறங்கை யாவுங் கண்டித்துக் குளிர்ந்து பின்னும்,
மேவிய வுச்சி தானும் வெச்சென வெதும்பிக் கையிற் தாவிய சேட நாடி தனிநடந் திட்டாற் கேளும் ஆவிதான் வெகு சுறுக்கி லகன்றிடு மென்று நந்தி தேவனார் முதன் முன்னோர்கள் செப்பினா ருண்மை யாக.
மரணத்தின. தேயன்றி வகுக்கக் கேண் முத லவத்தை விரணமா முடல் பிணம்போல் மிகுத்து நாறிடு மிரண்டில் முரணுறு வேர்வை நாறு மூன்றினி லெரியுந் தேகம் இரணம தன்றி நான்கி லெடுத்திடு மேலி ளைப்பு.
ஐந்தினின் முகமே வேர்க்கு மாறினிற் குளிரு மேழில் வந்திடு மன்ன நாடும் வளரெட்டிற் கண்பஞ் சாடும் உந்துமொன் பதிலு டம்பு வேர்த்திடு முறுபத் தின்கண் அந்தமா மரண மாவா ரறிகுண மின்ன முண்டே.
முத்தோஷங்களும் அதிகரிக்குங் குறி
மலசலஞ் சிக்கி நிற்கில் வாதமே யதிகமாகும் பலமதாய்ச் சூடுகொண்டாற் பகர் பித்த மதிக மாகும் சலமென வுடல் குளிந்தாற் சதிசேட மதிக மாகும் நலமுறை யிதுவே யென்ப நரம்பொன்றி னாடி மூன்றே.
நாடிப் பரீட்சை
தடையிலா தூன்றிப் பாரு தற்சனி விரலில் வாதம் அடையுமத் திமையிற் பித்த மனாபிகை தன்னிற் சேடம் வடுவிலா நடைய தாகு மைந்தர்க்கு வலக்கை பாரு இடுகிடை யரிவைமாருக் கிடக்கை யினாடி பாரே.
வாதம்வை கறையிற் றோன்று மத்தியா னத்திற் பித்தம் சீதமார் மாலை தன்னிற் சேடமே பிரவே சிக்கும் ஒதுநன் முறைய தரகு முறுமுறைபிறழ்ந்து தோன்றிற் காதுநோய் சேர்ந்ததென்னக் கருதியே யறிந்து கொள்ளே.
புரந்தனின் மூவர் வீடும் புகலுதும் பாதந் தொட்டு
வரம்பெறு முந்தி மட்டும் வாதத்தி னிருக்கை மேலே பெருந்திர மார்பு மட்டும் பித்தத்தி னிருக்கை யப்பாற் சிரமுடி வாக வெங்குஞ் சேட்டுமத் திருக்கை யாமே.
மண்ணினிற் கொடிய தாக வளர்சன்னி சுரமே யாதி திண்ணமார் நோய்க டம்மைச் செப்புங்கை நாடி யாதி பண்ணிடுங் குணங்க டம்மாற் பார்த்தறி வதினும் பார்க்க நண்ணிடு மரிய நாவின் குணத்தினா லறித னன்றே.
நாவுள்ளே பலாமுட் போல நண்ணு நாமற் றிடத்திற் றாவில்பா லாடைபோலச் சார்ந்து செந் நிறத்தி னோடு
5
35
36
37
38
39
40
4.
42
43

Page 15
வைத்திய விளக்கம்
மேவிடிற் கருமை பீதம் விளக்கிடு மதனுக் கேற்ற ஆவலார் மருந்தால் மாறு மக்குறி விளம்பக் கேனே.
நாக்கினி னுனி சிவப்பு நண்ணியே புள்ளி தோன்றும் தாக்குநாள் வரையிற் றானே தான்சிவந் திருக்கு நாக்குத் தேக்குநல் வைத்தி யத்தைத் திருத்தமாய்க் கற்ற மேலோர் ஊக்குமிக் குறிக டம்மை யுறுதியாய்ப் பார்ப்பர் நாளும்.
முச்சுரக் குடிநீர்
வாதத்திற் பித்தந் தன்னில் வளர்தரு கபத்தி னுற்ற தீதுறு சுரங்க டிரச் சீரக மிரண்டு சுக்கு மேதகு கொத்த மல்லி வெந்தய மீர ரத்தை சீதமார் கடுக்கா யெட்டுஞ் சேரொவ்வொன் றொருக ழஞ்சே.
இடித்ததைத் தூள தாக்கி யின்புதுப் பாண்டத் திட்டு வடித்த நீர் படிநான் கிட்டு வற்றவோர் படியாய்க் காய்ச்சி வடித் தொவ்வோர் சிறங்கை நீர்தான் வளமுட னந்தி சந்தி கொடுத்திட மூன்று நாளுங் குலைந்திடுஞ் சுரங்கள்ன்றே.
வாதகரத்தின் குணம்
வாதசுரத்தின் குணம்கேளிர் மலநீர் கட்டுந் தேகமுடன் பாதம்பாணி பொருத்து கணோம் பண்ணுஞ் சோம்புதினவுண்டாம் வேதையாக வுடம்பெங்கு மிகவே குத்து முடல் புரட்டும் சீதமுண்டா யுடல் பதறுந் திற்றி மறுக்கு நாப்பு விக்கும்.
இதற்குக் குடிநீர்
வாதமாஞ் சுரத்திற் குச்செய் மருந்துநற் கராம்பு நோயைக் காதுமுக் கடுகினோடு கருஞ்சீரங் கொத்த மல்லி ஒதமிவ் வாறுந்தானே யோரள வுறத்து ளாக்கிச் சீதநீர் படிநான் கிட்டுச் செப்புமோர் படியாய்க் காய்ச்சே,
காய்ச்சியே மூன்று நாளுங் களவின்றி யந்தி சந்தி பாச்சுவாய் சிறங்கை யாகப் பகர்வாத சுரந்தா னிங்கும் தீச்சுர நீங்கா தாகிற் செப்பிய சரக்கி னோடு, கூச்சமில் சுத்தி செய்த கொடிவேலி வேரும் பின்னும்.
விட்டுணு கிராந்தி வேரும் விளம்பு மோரளவாய்க் கூட்டித் திட்டமாய்க் காய்ச்சி முன்போற் செப்பிய மூன்று நாளும் நட்ட மிலாறு நேர முண்டிட நாடா தோடும் கெட்டிட தாகி லோட்டு மருந்தினைக் கிளத்தக் கேளே.
நல்லசாதி லிங்கக் கட்டு நவில்சரு வாங்க மாத்திரை சொல்லுமிவ் விரண்டி லொன்றைத் தோற்றுமுன் குடிநீர் தன்னிற் செல்லவே யுரைத் தருந்தத் தீர்ந்திடு மிவையே யல்லால் எல்லையில் வாதக் காய்ச்சற் கிசைந்தநன் மருந்து கேளே.
6
44
45
46
47
8
49
50
5
52

வைத்திய விளக்கம்
வாத சுர சன்னிக்குச் சிகிச்சை
தொந்தமா மிந்த வாத சுரத்தினிற் றோஷஞ் சன்னி வந்திடின் முன்னு ரைத்த மருந்து வாதாரி நோயைக் சிந்தரு ணோதயப் பேர்ச் சூறண மாதி சேர்த்தே நந்தலி. லனுபா னத்திற் கொடுத்திட நாடா தோடும்.
பித்த சுரத்தின் குணம்
பித்த சுரத்தின் குணங்கேளிர் பிதற்றிப் பேசுங் கிறுகிறுக்கும் சத்தி தலைக்குத் துண்டாகும் சாதம் வெறுக்குந் தாகமிகும் மெத்தவற்றி வெளுவெளுத்து விரணத்தோடு மெய்ந டுங்கும் புத்திபோம் வாய்நீ ரூறும் பொறுமைபோ நாக்கைப் பாமே.
சிகிச்சை
கரியசீ ரகம்வேர்க் கொம்பு கடுக்காய்முப் பிணிதீர் தேவ தருசத குப்பை நற்சீர் சரிவர வெடுத்தி டித்துப் புரிபுன லெட்ட்ொன் றாக்கிப் புகட்டினாற் பித்தக் காய்ச்சல் வெருவியே யோடு நிற்கில் வேர்வகை கூட்டிக் காய்ச்சே.
சீந்தில்பேய்ப் புடோலே சிற்ற மட்டியே பேர மட்டி காந்தி நன்னாரி யெல்லாங் கருதியோ ரளவ தாக ஆய்ந்தநற் புதிய பாண்டத்திட்டதை யந்தி சந்தி மாந்தப் போம் போகா தாகின் மன்னுமிக் குடிநீர் தன்னில்.
பூரண சந்தி ராதி பொருவில்சந் ரோத யத்தோ டேர்கண்டா வவிழ்த மென்ன வியம்புமாத் திரைகண் மூன்றிற் சார்வுறுமொன்றை யூட்டத் தணித்திடும் பித்தக் காய்ச்சல் பாரிய சடைமு டித்த படிவர் செய் முறையி தாமே.
சேடகரத்தின் குணம்
சேட சுரத்தின் குணங்கேளிர் சிரநெஞ் சுடனே விலாநோகும் வாடுஞ் சேம்பு மிருமலுண்டா மன்னும் வேர்வை நாவினிப்பாம் கூடிக்குறைந்து வருங்குணங்கள் கூட்டிக்குறைந்துஞ் செய்மருந்து நாடி நாக்கு முகக்குறிக ணாடித் திறந்தோ டினிதிருந்தே.
சிகிச்சை
சேற்பன சுரத்துக் குற்ற குடிநீர்கேள் தேவ தாரு வேற்றிலாக் கடுக்காய் சுக்கு விளம்புமீ ரரத்தை யோடு தேற்றமாங் கருமை யுற்ற சீரகம் வகையொவ் வொன்றுக் கேற்றொரு கழஞ்ச டுத்தே யிடித்ததைத் தூள தாக்கே.
ஆக்குநீர் படிநான் கிட்டே யரிதொரு படியாய்க் காய்ச்சித் தாக்குவாய் சிறங்கை நீர்தான் றவறின்றி யந்தி சந்தி நீக்கமின் மூன்று நாளுஞ் சென்றபி னிங்கா தாகில் மாக்கிளர் முன்பு சொன்ன சரக்குடன் வட்டு வேரே.
7
53
54
55
56
57
58
59
60

Page 16
வைத்திய விளக்கம்
இத்துட னாடா தோடை யிலாமிச்சை யினிய கண்டங் கத்தரி சிறுகாஞ் சோன்றி தூதுளை காட்டும் வேர்கள் ஒத்திடு மளவே டுத்தே யுறு தூளாய் நறுக்கி முன்போற் சித்தமாய்க் காய்ச்சி யுண்ணத் தீர்ந்திடா தெனிலிந் நீரில்.
சந்திரோ தயமே கோரோ சனைமாத் திரையே யல்லால் அந்தமில் லாத கண்டா வவுடத மற்று மேற்ற நந்தலில் குளிகை யூட்ட நழுவிடுஞ் சேடக் காய்ச்சல் இந்தவா றுரைத்தா ரம்மா தென்மலை யிருக்க மேலோன்.
சொல்லுமிப் பித்த சேட சுரங்களிற் றோஷங் கண்டால் வல்லதா மிருதசஞ் சீவினி கோரோ சனையின் மாத்ரை நல்லதா மிரண்டி லொன்றை நவிறோஷஞ் சன்னி தன்னை வெல்லுநல் லனுபா னத்திற் கொடுத்திட மீளு மன்றே.
அதிசாரசுரத்தின் குணமும் மருந்தும் வாட்டதி சாரக் காய்ச்சல் வன்குண மும்ம ருந்தும் காட்டுவன் னழிச்ச னிங்காக் காய்ச்சலோ டிருமல் வேர்வை
மூட்டுநா வரட்சி யோடு முதிர்ந்திடுங் கையி னாடி சேட்டும மிரண்டு பித்த மொன்றதாய்ச் சேர்ந்து நிற்கும்.
அடிநாவிற் பலாமுட் போலா மன்றிமற் றிடம்பா லாடை வடிவதா மதற்குச் சுக்கு மன்னில வங்கப் பட்டை விடயமே தேவ தாரு மிகுகுறா சாணி தேற்றாப் படுவிரை யசம தாகம் பகர்சிறு தேக்கிவ் வெட்டும்.
இடைசம னாயெ டுத்தே யிடித்து வெவ் வேற தாக வடிவுறு மிளவ றுப்பாய் வறுத்துச்சேர்த் தொன்றாய் நான்கு படிசலத் திட்டுக் காய்ச்சிப் பகரொரு படியாய் வற்றத் திடமுட னிறுத்த நீரிற் றேனுங்கோ ரோசனையின் றுாளும்.
சிறுகவே யிட்ட ருந்தத் தீர்ந்திடுந் தீரா தாகில் மறுவில்கோ ரைக்கி ழங்கு மாதுளம் பழத்தோல் மாவின் வெறியுறு பழப்ப ருப்பு மேலத்திப் பட்டை யோடும் அறையிரு மட்டி வேரோ டாவிரை வேரிற் பட்டை
விட்டுணு கிராந்தி யெல்லா மிகாமலோ ரளவாய்த் தட்டி இட்டுமுற் சரக்கி னோடே யீரிரு படிநீர் விட்டு மட்டொரு படியாய் வற்ற வந்திடில் வழுத்தக் கேளு விட்டொரு சிறங்கை வீதம் விரைந்தெடு மாசி லாமல்.
மாசிலாப் பூர்ண சந்ரா திமாத் திரையாத னற்கோ ரோசனை மாத்ரையே யாத லுரைகண்டா வவிழ்த மாதல் ஒசைமிக் குலவு சந்ரோ தயமாத லொன்று ரைத்துக் கூசிடா தந்தி சந்தி கொடுத்திட வொழியு மன்றே.
சுரத்தில் வீங்கினால்
மண்டிய சுரத்தில் வீங்கி வாயுவான் மலமுங் கட்டிற் கண்டதிப் பிலிம ரீசங் கடுகுரோ கணிக டுக்காய்
8
6
62
63
64
65
66
67
68
69

வைத்திய விளக்கம்
எண்டகு சிற்ற ரத்தை யேகருஞ் சீர கத்தோ டண்டுநீர் முள்ளி வீழி யருநில பாக றானும்.
சாற்றுநா யுருவி வேருஞ் சரியதா யெடுத்தி டித்து வேற்றுமை யிலாது முச்சேர் வெள்ளாட்டுச் சலத்தை விட்டே ஏற்றநற் பாண்டத் திட்டே யியம்பெரு படியாய்க் காய்ச்சிப் போற்றியே வடித்த நீரிற் பொரிக்ாரம் பொரித்த தூளும்.
மேற்பொடி யாக விட்டே மேலுநற் சருவாங் கநோய் ஆற்றுவா தாரி யென்னவறையுமாத் திரையி ரண்டில் ஏற்றமாத் திரைகொ டுக்கி லேகிடும் வீக்க மெல்லாம் மாற்படு சுரமே வாயு மலசலந் தானும் போமே.
மந்தசுரத்தின் குணமும் மருந்தும்
மந்தசு ரத்தின் குணந்தாக மருவும்பொரும றலைக் குத்துப் பந்தஞ் சோம்பா முளங்கால்கூர் பாதத் தளவுஞ் சூடின்றி எந்த விடமுஞ் சூடாகு மிதற்கு மருந்து திரிகடுகோ டந்தக் கடுக்கா யுடன்கருஞ்சீ ரகமே கடுகு ரோகணியும்.
இஞ்சி யரத்தை சாரணைவே ரிவைகள் சமனாய் நறுக்கியதில் மிஞ்சா தளவாய்ப் புனல்விட்டு வேகவெட் டொன்றாய்க் காய்ச்சி அஞ்சா தருந்த வேருண்டோடு மகலா தேலிக் குடிநீரிற்
கொஞ்சமருணோ தயக்குளிகை கொடுக்கவகலுங் கொடுஞ்சுரமே.
அக்கரசுரத்தின் குணமும் மருந்தும்
அக்கர சுரத்தின் றன்மை யறைந்திடில் வாய்வ யிற்றில் மிக்கநா வதனி லும்புண் மேவிடும் விடாமற் காயும் மெத்தவே தாகஞ் செய்யு மிதுநீங்க மருந்து கேண்மோ தக்கநன் னெல்லிக் காயுந் தான்றியு மாயாக் காயும்.
சீரக மிரண்டு தேற்றாக் கொட்டையுங் கடுக்காய்ப் பிஞ்சும் நேரதாய்ப் புதுப்பாண் டத்தி னிர்விட்டுக் காய்ச்சி யுண்ணத் தீருமே தீரா தாகிற் செய்யமா துளம்ப ழத்தின் ஆர்தரு தோலோ டத்திப் பட்டையா விரைவேர்ப் பட்டை.
இம்மூன்று முன்னர்ச் சொன்ன வேருடன் கூட்டி நீரை அம்முறை சேர்த்துக் காய்ச்சி யருங்கோரோ சனைபொ டித்துச் செம்மைமேற் பொடியாய் விட்டுக் கொடுத்திடத் தீரா விட்டால் அம்மைசந் திரோத யத்தோ டருங்கண்டா வலிழ்த மேனும்.
பூரண சந்தி ராதி புகல்கோரோ சனையென் றோதும் நேரின்மாத் திரைக ளன்றி நிகழ்த்துமிச் சுரத்திற் கேற்ற
சீரின்மாத் திரையொன் றேனுஞ் சேர்த்துமுன் குடிநீ ருண்ணத் தீருமென் றுரைத்தா ரம்மா தென்மலை யிருக்கு மேலோன்.
பித்த சிலேற்பன சுரத்தின் குணம்
பூவின்மேற் கொடிய தாகப் புகல்பித்த சேட மென்று மேவிய சுரத்தின் றன்மை விளம்பிடிற் சேட மோர்பங்
9
70
7
72
73
74
75
76
ךך
78

Page 17
வைத்திய விளக்கம்
கோவிலாப் பித்தந் தானு மோரிரண் டான பங்காம், நாவின லடியி டத்தி னண்ணிடும் பலாமுட் போலே.
நாவினின் மற்ற மற்ற விடந்தொறு நல்ல பாலின் மேவிய வாடை போல விளங்கிடும் வேர்வை தோன்றும் ஒவினா வரட்சி தாக முழலையே தலைக்குத் துண்டாம் தாவுநா வினில ரோசி சார்குண மின்ன முண்டே.
சிகிச்சை
இடையின்றி மெதுவாய்க் காய்ச்ச விருந்திடு மிரும லுண்டாம் தடையின்றிக் காதி ரைச்ச றங்கிடுஞ் சரீர தாக்கம் அடையுமே மருந்தி தற்கு வெட்பாலை யரிசி சுக்கு நடைபெறு மரத்தை ரண்டு நவிலுசீ ரகமி ரண்டே.
தேவர்கடாரு வோடு சிறுதேக்குக் கடுக்கா யெல்லாம் மேவவோ ரளவாய்க் கொண்டு மிருதுவாய் நறுக்கிப்பின்னர்த் தாவிலாப் புதுப்பாண் டத்திற் சலமெட்டுப் படிவிட் டப்பால் ஆவலாய்க் காய்ச்சி நேர மாறொரு மூன்று நாளும்.
குடித்திட மாறா விட்டாற் கோரையின் கிழங்கு நோயை அடக்கிய விலாமிச் சம்வே ரரியநன் முட்டி ரண்டு கிடைக்குநெற்பொரியு நன்மை கிளர்ந்தபேய்ப் புடோலின் வேரும் அடுத்தியான் முன்னர்ச் சொன்ன வருஞ்சரக் கவைக டாமும்.
கூட்டியெண் படிநீர் விட்டுக் கூறுநா லொன்றாய்க் காய்ச்சி மாட்டினால் வளர்நோய் மாறு மாறாதே லருந்த வத்தை நாட்டிய முனிவர் யாரு நன்றெனச் சொல்லு கின்ற கோட்டமின் மருந்து தன்னைக் கொடுத்திட நன்ற தாமே.
அந்தநன் மருந்து சந்தி ராதிபூரணசந் திராதி நந்தில்கண் டாவ விழ்த நவில்கோரோ சனையென் றெண்ணும் இந்தமாத் திரைக ணன்றா மின்னுநோய்க் கேற்ற மற்றும் தந்திடப் போகு மீதே தவறிலா முறைய தாமே.
சுவாதத்தின் குணமும் மருந்தும்
கொடியதாஞ் சுவாதக் குத்துக் கூற்றென நிலவி யாவி முடியவே தோன்று மென்று முனிவர்கள் சொல்வ ரத்தின் கடியதாங் குணங்கள் குத்துக் கழிச்சனா வரட்சி மூச்சு மடியறாச் சுரமே தாகந் தலைவலி யுழலை மற்றும்.
இருமலு மிகவுண் டாகு மியம்பிய சிலகு ணத்திற் குரைசெயும் வீக்கந் தானு முண்டாகு மிதனை நீக்க மருவிய வவுட தந்தான் வாகுற வுரைப்பன் கேண்மோ தருமொரு சுக்க ரைத்துச் சாராய மதிற்க லக்கி.
இளஞ்சூடாய் க்கொதிப்பித் துப்பூ சிதுவன்றி மிளகி னோடு விளம்புதிப் பிலிவேர்க் கொம்பு மிகாமலோ ரளவ ரைத்தே வளம்பெறு கின்ற வுத்த மாகாணிச் சாறு தன்னிற் தளம்பிடக் கரைத்தே பின்பு தழலிடைக் கொதிக்க வைத்தே.
10
79
80
81
82
83
84
85
86
87
88

வைத்திய விளக்கம்
எடுத்ததைப் பொறுத்த சூடாய்ப் பூசவு மேகு மென்க கொடுத்திடு குடிநீர் கேளு கூவிளை வேரி னோடே அடுத்திடு மிரண்ட ரத்தை யசமோத *முட்டி ரண்டு வடுத்தவி ரத்திப் பட்டை வானவர் தாரு வின்னும்.
ந்ெந்பொரி விடய மோடு நிகழ்த்துமாம் பழப்ப ருப்புப் பொற்புறு தேற்றாக் கொட்டை புகலில வங்கப் பட்டை சொற்றவோ ரளவாய்க் கூட்டித் தொகுத்திள வறுப்ப தாக உற்றிட வறுத்த பின்ன ருரைபுதுப் பாண்டந் தன்னில்.
நீர்விட்டுக் குடிநீர் காய்ச்சி நேர்பெற வடித் தெடுத்து நேரிட்ட தேனுங் கூட்டி நிகழ்கோரோ சனையின் றுாளும் சீரிட்ட முந்நா ளாறு நேரமுஞ் செவ்வி தாகப் பார்திட்ட மாக வுட்டப் பகர்நோய்போம் போகா தாகில்.
மிருதசஞ் சீவி னியே மிகுத்தகண் டாவி டேகம் பொருவில்சந் திரோத யந்நற் பூரண சந்தி ராதி வருகோரோ சனையென் றோது மாத்திரை களிலே யொன்றைத் தெரியுமுன் குடிநீர் தன்னிற் சீருட னருத்து வாயே.
சுவாதத்திற்காணு முழலைதாகத்திற்கு குடிநீர்
அருந்திடு நோயி னாலே யளவறு முழலை தாகம் பெருத்திடு மதனை நீக்கப் பேசுதுஞ் சிற்றே லந்நற் திருத்தமாந் துளிரே நல்ல செவ்வந்திப் பூவும் வில்வத் துரத்திடு கனிய னல்ல வுட்சதை யதனி னோடே.
அரசுநன் முகையீ தெல்லா மளவதாய்ச் சேர்த்தி டித்து வருமிள வறுப்ப தாக வறுத்துநற் குடிநீர் காய்ச்சித் தெரிவுற வடித்தெ டுத்துக் தேன்றுளி கற்கண் டோடு தருகல்லக் கார மல்லாற் சர்க்கரை சேர்த் தருந்தே.
சின்னம்மைக்குணம்
சின்னம்மைக் குணத்தைக் கேளு செப்புதுஞ் சிரசு தன்னில் மன்னிய வலியுண் டாகி வளர்சுர மிரும றோன்றிப் பன்னிய தேக மெங்கும் பருவதாய்ப் பரந்து வேதை துன்னுமே யதனுக் கூட்டு மவுடதஞ் சொல்ல லுற்றாம்.
சிகிச்சை
கொட்டைதள் விக்க டுக்காய் கூறுநா யுருவி வேர்த்தோல் இட்டமாங் கரிய சீர மிடைசம னாயெ டுத்தே தட்டிலா நீர்விட் டேதான் தகவொடு காய்ச்சி யூட்டு கெட்டிடுஞ் சுரம்போ மட்டுங் கிளர்பனங் கட்டி கூட்டி.
பொசித்திடப் பேதி யுண்டாம் போசனந் தெளிவு தாலக் கசப்பிலாக் கட்டி கல்லக் காரங்கற் கண்ட தாகும் இசைத்திடு சுரந்தா னிற்கு மனவுமிங் கிவையே யல்லால் வசப்பிடு மற்றொன் றாகா வருஞ்சுரம் போய பின்னர்.
89
90
9.
92
93
94.
95
96
97
* முட்டிரண்டு - சிற்றாமுட்டி, பேராமுட்டி அசமோதமிட்டிரண்டு என்றும் பாடம்.
11

Page 18
வைத்திய விளக்கம்
குணமறிந் தாமே ரன்னங் குளிர்*புனற் பாகங் கஞ்சி மணமுள சிவடைகா யோடு வண்பனங் கட்டி தீதிற் கணமுறு கல்லக் காரங் கற்கண்டு சேர்த்திவ் வண்ணம் உணவரு வசூரி யோடே யல்லல்செய் பொக்கு விப்பான். பறவைக்கு மிவைபோன் மற்றும் பகர்தரு நோய்கட் கெல்லாம் குறைவுறா வகையே செய்வாய் கூறுமிந் நோய்கட் குள்ளே அறைபெரு வசூரி யென்ப தருவிர ணங்கள் காட்டும் நிறையும்பக் குவம தாக நீநினைந் ததனைப் பாரே.
மாந்தக் குடிநீர்
கறுத்தச்சீ ரகங்க டுக்காய் காட்டுநா யுருவி வேர்த்தோல்
நிறுத்தொரு அளவ தாக்கி நீரதற் கொக்க விட்டு மறுத்ததை வற்றக் காய்ச்சி மாந்திட மாந்த தோஷம்
பொறுக்கரும் பொருமல் காய்ச்சல் பொருந்திய அவியல்போமே.
தாகந்திர
சலரோகங் காந்தி மேகந் தருவயிற் றெரிவு காந்தல் பெலமுறு மிவற்றி னாலே பெருந்தாக முண்டாய் நிற்கில் வெலமிள கொருக ளஞ்சு வெள்ளறு கம்வே ரேலம் பலமது நீரிற் காய்ச்சிப் பசுவெண்ணெய் சேர்த்துண் மாறும்.
இலவங்கச் சூரணம்
இலவங்கப் பட்டை யோடே யிவ்விலை யேலங் கஞ்சா இலைதிரி கடுகு கோட்ட மியம்பவின் சிறுநா கம்பூ நிலைபெறு சிற்ற ரத்தை நெல்லிவா லுளுவை யோடு மலிவுறு மசம தாகம் வால்மிள கக்க றாவே.
சாதிக்காய் கராம்பி னோடு தாளிசங் கசக சாவே சாதிப்பூ வெண்கா ரம்பின் சாற்றதி மதுர மாதி தீதின்றி வகையொவ் வொன்று சேரொருக ளஞ்சி டித்துச் சாதித்தே யரைத்துப் பின்னர் வஸ்திர காயந் தான் செய்.
செய்துடன் மற்று மத்தைச் சிறுகவே வறுத்த ரைத்துச் செய்யதா மனுபா னத்திற் சேர்த்துண்ணத் தீருநோய்கேள் வெய்யதாங் கிராணி பேதி மிகுகடுப் பங்க நோவும் ஐயுறு மிருமல் சோம்பே யறைதரு வாயு வாதி. திண்ணமாய் மாறு மென்று செப்பிடு மாயுள் வேதம் பண்ணிடிற் றேகந் தேறும் பகருமிம் மருந்தி னாமம் உண்ணவே நோய்க டம்மை யோட்டிடு முண்மையாக எண்ணிடு மருமை யான விலவங்கச் சூர ணந்தான்.
வெந்தயச் சூரணம்
வெந்தயங் கொத்த மல்லி மிளகிரு சீர கங்கள் அந்தமாஞ் சுக்கி னோடே யசமதா கங்க டுக்காய்
98
99
101
102
103
105
* புனற்பாகம் - சமைத்ததை மறுபடி சமைத்த சோறு. # அடைகாய் - ஊறுகாய்.
12

வைத்திய விளக்கம்
இந்தநற் சரக்க தெல்லா மிடைசம னாயெ டுத்தே சிந்தையா யிடித்து நன்றாய்ச் செய்யவஸ் திரகா யந்தான். செய்தபி னிஞ்சிச் சாற்றிற் சேர்ந்துண்ண வாயு மந்தம் வெய்யநெஞ் செரிப்புக் குத்து மிதனி னாமம் மெய்மைசேர் புனித மிக்க வெந்தியச் சூர ணந்தான் மையல்சேர் வேறு நோய்க்கு மாட்டேற்ற வனுபா னத்தால்.
ஏலாதிச் சூரணம்
சீரக மிரண்டு சுக்குத் திப்பிலி யசம தாகம் நேரிய கண்டில் வெண்ணெய் நெற்பொரி கமல மூலம் பாருறு பனங்கி ழங்கு பத்திரி மூன்று வில்வம் வேருடன் பழத்தி னல்ல மிகுசதை முத்தற் காசே,
சாதிக்காய் மதுரங் கோட்டஞ் சார்தரு விடய மோடு சாதிப்பூ நெருஞ்சி மிக்க சந்தனந் தேவ தாரு பேதமி லுருத்தி ராக்கம் பெருங்கோரை கறுவாப் பட்டை ஒதசெங் கழுநீர் நெய்த லுறவெட்டி வேரி னோடே.
பலமுறு கராம்பு நோயைப் பாற்றுசெண் பகப்பூ வல்லாற் குலமுறு பசுங்கள்ப் பூரங் குங்குமப் பூவி னோடு நலமுறு புனுகு கோரோ சனையுட னாரி வேரும் வலமுறு நல்ல *மானின் மதமிவை கழஞ்சொவ் வொன்றே.
ஏலநாற் கழஞ்சு வில்வத் திதம்பெறு பூவி ரட்டி தோலறு சீந்தி லுற்ற துய்யமா வதற்கி ரட்டி சீலமா யுலர்த்தி மிக்க திறம்பட விடித்த ரித்துப் பாலுடந் நெய்தே னிஞ்சி பகர்ந்தசா றிவற்றி னாலே.
கொண்டிட மேக மாதி குலைந்திடு முட்ட ணங்கள் மிண்டிய வெள்ளை வெட்டை மிகுசலந் திரு மென்று பண்டுள வாயுள் வேதம் பகர்ந்திடு மிதனி னாமம் எண்டிசை புகழு நல்ல வேலாதிச் சூர ணந்தான்.
சண்டமாருதச் சூரணம்
தக்கவர் கண்ணெ னச்சொல் சண்டமா ருதங்கே ணோய்க்கு முக்கிய நெல்லிக் கெந்த மூவிரண் டாம்வ சம்பு சுக்குடன் சாதி லிங்கந் துய்யபொன் னரிதா ரந்தான் மிக்கவெண் கார மைந்து மிகாவகைக் கிருக ழஞ்சே. இரசமுக் கழஞ்ச தாகு மின்பொரி கார நான்காய்
வருகழஞ் சதுவுங் கூட்டி வண்மையாய் மைபோ லாட்டிப் பெருகவே முட்டாய்ப் பிள்ளைப் பெறாதவர் தமக்கு நன்மை
தருகொடிக் கள்ளி தன்னைத் தழல்வாட்டிப் பிழிந்த சாற்றில்,
மிகுத்திடா தொருக ழஞ்சு வெடியுப்பு மிட்டு நோயைப் பகைத்திடு சூர ணத்திற் பணவிடை யிட்ட ருந்தில் செகத்தினி லிரண்டு நாழி செல்லுமுன் பிள்ளை தன்னைச் சுகத்துடன் பெறுவார் வாதஞ் சொல்லிடு குத்து மந்தம்.
07
108
109
O
2
113
114
115
* மான்மதம் - கஸ்தூரி

Page 19
வைத்திய விளக்கம்
அண்டத்தின் வாத மோடே யரியநெஞ் சடைவா தம்போம் துண்டமாய் வீங்கும் வீக்கந் தொலைந்திடும் விஷங்க டீரும் மிண்டிய குன்ம மீளை விரைவாதஞ் சன்னி வாயு அண்டிடா தகலு மேற்ற வனுபானத் தருந்தி னாலே.
சித்திரமூலச் சூரணம்
திரிகடு கசம தாகஞ் சீரக மிரண்டு நோயைப் பிரிகடு கதனி னோடு பெருங்காயம் பகரிஷ் வெட்டும் ஒருசரி யாகச் சுத்தி யுறுகொடி வேலி வேரைச் *சரியிடை கழஞ்சு சேர்த்துச் சார்புறத் தூளா யாட்டே.
ஆட்டிய வெள்ளுள் ளிச்சா றருமுருங் கையினிற் சாறும் கூட்டியே கொடுக்க வாதம் வலிகுத்து நெஞ்ச டைப்புக் கோட்டிய வாதம் வாயு வுட்குத்துப் பிறவீச் செல்லாம் ஒட்டுமே யுரைத்த சித்ர மூலிச்சூ ரணம தாமே.
பரிபூரண சஞ்சீவிச் சூரணம்
கிரந்திக ணாய னோடு கிளர்த்துமோ ரிதழின் கஞ்சம் திருந்திய சிறுகாஞ் சோன்றி செப்புமிம் மூன்று மூலி பொருந்தவே சமூலம் வாங்கிப் பொருவிலா நிழலு லர்த்திப் பரிந்திவை சரியாய் வாங்கிப் பகரிதற் களவதாக.
சீரகஞ் செய்ய சந்தஞ் செவ்வையா யெடுத்த ரைத்தே சீரதாய் வஸ்திர காயஞ் செய்திடு சூர ணத்தை நேரதாய்ச் சீனி தன்னி னிகழ்த்தனு பான மாகச் சேரமண் டலம ருந்த வெருகடி தீரு நோய்கேள்.
நெஞ்சினில் வரட்சி பித்த நிறைகய மிரும றாகம் தஞ்சலி லெய்ப்பி ளைப்புத் தலைதனிற் சுழற்றி குக்கல் பஞ்சென வோடு மென்னப் பகர்பரி பூர ணஞ்சேர் சஞ்சீவிச் சூர ணத்தைத் தாக்குவாய் நோய்க ளுக்கே.
சிரங்காற்றிச் சூரணம்
கையாந் தகரை வல்லாரை கறுத்தப்பூ வழகார் கொன்றை செய்யது துளைமு சுக்கை சிறியகாஞ் சோன்றி யோடு மையிலாக் கிரந்தி நாயன் மால்காந்தி வவ்வி லொட்டி மெய்யுறு பிரமியல்லா னிலபாகல் விளம்பீராறும்.
பச்சிலை யாயெ டுத்தே பதனமாய் நிழலுலர்த்தி மெச்சிய வகையொவ் வொன்றும் விளம்புகாற் பலமாய்க் கூட்டி நச்சியே யிடித்துத் தெள்ளி நவையிலாக் கடுக்கா யோடே எச்சமில் கரிய சீர மிளகொவ்வொன் றிருக ழஞ்சாய்.
கூட்டிநல் லம்மி தன்னிற் குமுறவே வைத்த ரைத்து மீட்டுபின் வஸ்திர காய மேன்மையாய்ச் செய்து கொண்டு நாட்டிய பனைவெல் லத்தி னல்லனு பான மாக ஊட்டுவாய் விடியற் கால முறுவெறு'வயிற்றிற் றானே.
16
17
18
119
20
2
22
23
124
* சரியிரு கழஞ்சு என்றும் பாடம்.
14

வைத்திய விளக்கம்
உண்டிடக் குழந்தை கட்கு முறபெரி யோர்க்கும் பேதி கண்டிடுஞ் சிரங்க தெல்லாங் கதறியோ டிடுங்கி ரந்தி கொண்டிடு சொறிக ரப்பன் கூறுகா மாலை புண்கள் அண்டிடா தோடு மீதை யருந்தரை மண்ட லந்தான்.
பாண்டுரோகக் குணம்
அகட்டினில் வாயு வுண்டா மருந்திய வுண்டி நாளும் மிகச்செரி யாமை நிற்கு மீளவும் புரளு மென்க வெகுத்திடு விதனங் காட்டு மெய்கண்கை தான்வெ ளுக்கும் மிகச்சல மலத்தைக் கட்டு மேனிவே றாகுந் தானே.
நரம்பினின் வழிய தாக நடந்தெங்கும் பரந்து டம்பின் நிரம்பிய மஞ்ச னிர்போ லுட்டண நிகழுஞ் சீதம் வரம்பில தாகு மன்றி மார்பொடு வயிறு மற்றக் கரம்புறந் தாள தைக்குங் கதித்திடு மூச்சு முட்டும்.
வெய்யபோ சனங்கள் வேண்டு மீண்டவை யுண்ண வொட்டா
மெய்மினு மினுப்புக் கொள்ளும் வேறுஞ்செய் குணங்க ளுண்டாம்
பையுள்செய் பாண்டு ரோகம் பாற்றிடு மதனுக் கேற்ற செய்யநன் மருந்து தன்னைத் திறம்பட வினிது கேண்மின்.
வீக்காரிச் சூரணம்
கேள்சுரை நெருஞ்சி முல்லை சிறுகீரை கீழ்காய் நெல்லி விளிநா யுருவி யோடு விரும்புசா ரணைம ணித்தக் காளிநன் னாரி முள்ளி கருத்தக்கக் குறட்டை யேகற் றாழையின் சருகு பன்றித் தகரைவல் லாரை பின்னும்.
மாம்பழக் கொன்றை யோடு வகுத்தசித் திரைப்பா லாவி மேம்படு பிரமி கூறும் விட்டுணு கிராந்தி யெல்லாம் வாம்படு மிலைப றித்தே வைத்துப்பின் வகையொவ் வொன்றும் ஆம்பல மரையெ டுப்பா யத்துடன் சேர்ச ரக்கே.
ஏலம்வால் மிளகு சுக்கோ *டிசைதிரி பலைம ரீசம் கோலமார் கடுகு ரோணி கருஞ்சீரங் குளிர்மை யுற்ற சீலவெள் ளரியின் கொட்டை செப்பிய வகைக ழஞ்சு நாலதாய்க் கொண்டி டித்து நலமுற வரைக்கும் போதில்.
பொரிகாரம் வெண்கா ரந்தான் பொரித்துநீ வகைக்கு நான்காய் வருகழஞ் சதுவுங் கூட்டி யரைத்தபின் வஸ்திர காயம் பெருகவே செய்து வைத்துப் பேசுநோ யுற்ற பேர்கட் கரியதாம் பேதி பண்ணி யாறிய மற்றை நாளில்.
வெருகடி யிம்ம ருந்தை விளம்புசர்க் கரையி லாதல் வருபனங் கட்டி யாதல் வழங்கனு பானமாகத் தெரியரை மண்ட லத்திற் றின்றிடத் தீருந் தீரா தரியநோய் நிற்க மாகி லனுபான மிம்ம ருந்தாய்.
தஞ்சவா தாரி யோடு சருவாங்க மிவற்றி லொன்றை அஞ்சாம லரைய தாகு மண்டல மருந்து பின்னர்த்
25
126
27
128
129
30
13
132
133
* இசைந்த திப்பிலி என்றும் பாடம்.
15

Page 20
வைத்திய விளக்கம்
துஞ்சிடும் பாண்டு வீக்கஞ் சொல்லுமிம் மருந்துண் டாயீ ரஞ்சுநாட் கொருக்காற் சொன்ன வவிழ்தமுண் ணாமல் விட்டே.
சிறுசந்த னாதி யென்று செப்பிடு மெண்ணெய் வைத்தே
நெறியதாய் முழுகல் வேண்டு நிகழ்த்துமிவ் வவிழ்த நாமம் மிறைதவி ரறிஞர் போற்றும் வீக்காரிச் சூர ணந்தான்
முறையிது முதல்வன் சொல்லான் முனிசொன்ன வாக்குத்தானே.
பெருங்காயச் சூரணம்
ஏலநற் கராம்பு கோட்ட மிரண்டுசீரகம்வெள் ஞள்ளி சீலமார் கறுவரச் சுக்குத் திப்பிலி யுரைக்கு மிந்த மூலஞ்சிற் றரத்தை யோடு மொழி *கறி யசம தாகம் மேலதி மதுர மற்றும் வெந்தயஞ் சாதிக் காயே.
காயநன் மாயாக் காயே கடுகொடு மிகுத்த வாச நேயநற் கொத்த மல்லி நிகழ்குறா சாணி யென்ற ஏயதாஞ் சரக்க தெல்லா மின்புற வளவாய்க் கொண்டு மாயவைத் தரைத்துப் பின்னர் வஸ்திர காயஞ் செய்யே.
தின்றிட நோய்கட் கேற்ற திறமான வனுபா னத்திற் கன்றிய பொருமல் குத்துக் கழிச்சறான் வலியே வாதம் இன்றிய வாயு மந்த மேயவை யோடு மீதைத் துன்றிய பெருங்கா யத்தின் சூரண மென்று சொல்லே.
சஞ்சீவிச் சூரணம்
முற்றுநற் சீந்தில் வெட்டி முதிர்ந்திடு வெய்யி லிட்டே உற்றிடு மேற்றோல் போக்கி யுரறனி லிடித்த தூளைத் துற்றிய நீரிற் போடத் தூயதா மIர்தந் தோன்றும் மற்றதை யெடுத்து வெய்யில் வைத்திட்ட தூளி னோடே.
ஆவரை யிலைகாய் பூவே ரறைந்திடும் பட்டை யென்ற தாவிலிவ் வைந்தும் வெய்யி றன்னில்வைத் திடித்த தூளும் ஒவிலோ ரிதழார் கஞ்சத் துற்றிடு தூளு நன்மை மேவமுக் கிராயின் றுாளு மிகாமலோ ரளவாய்க் கொள்ளே.
அரியதாங் கடுக்காய் நற்சீ ரகமிவை யிரட்டி கூட்டி உரியநல் லம்மி வைத்தே யுற்றிட வரைத்துச் சீனி மருவணு பான மாக மண்டல முண்ணிற் றாகம் எரிதரு மூலச் சூடோ டிசைந்திடு மேக ரோகம். கணைச்சுரங் கிராணி யோட கழறருங் காந்த லேயுட் டணஞ்சல ரோகம் பித்த மருங்குடற் கொதியுந் தீரும் உணப்படு மிதன்ற னாம மோதுசஞ் சீவி யாஞ்சூ ரணமென்ப விதையே பூவிற் கமிழ்தென வைத்தார் மேலோர்.
சீரகச் சூரணம்
சீரகச் சூர ணத்தைச் செப்புது மொசுக்கைச் சாறும் ஏர்மலி கருப்பஞ் சாறு மெலுமிச்சம் பழத்தின் சாறும்
134
135
136
137
138
139
40
4.
42
* கறி . மிளகு.
16

வைத்திய விளக்கம்
நேரிலா விளநீ ரான்பா னிகழவெவ் வேறு வைத்தே சீரக மொவ்வொன் றோர்நாட் செப்புநன் முறையா யூற.
வைத்ததை வெயின்மு கத்தில் வைத்துநற் சூரணஞ்செய் துத்தம பாண்டத் திட்டே யுயர்சீனி யனுபா னம்மாய் மெத்துமண் டலமே யுண்ண மிகுகாந்தி யிரும றாகம் சித்திரக் கால்கை வெப்புத் தீர்ந்திடும் வெட்டை யின்னம். சலரோக மூல ரோகந் தலைகிறு கிறுப்புப் பித்தம் வலமாநி ரிழிவே யாதி மற்றுள முற்று நீங்கும் நலமாங்கண் குளிர்ச்சி மெத்த நண்ணிடு மென்று முன்னர்க் கலைபயில் முனிவர் சித்தர் கருதுவா கடங்கள் சொல்லும்.
வாயுக்குடார சூரணம்
பெருங்காயங் கழஞ்சொன் றாகும் பேசுசீ ரகமி ரண்டு மருங்குவாய் விளங்க மூன்று வன்கொத்த மல்லி நான்கு திருந்துசெவ் வியமு மைந்து செய்யசுக் கிருமூன் றாகும் ஒருங்குடன் மரீச மோரே ழுரைத்ததிப் பிலியு மெட்டே.
கோட்டமொன் பதுக டுக்காய் கூறிடு பத்து மாகும் நாட்டு *மை யவிபன் னொன்று நவிலோமம் பன்னி ரண்டும் ஈட்டுசித் திரத்தின் மூலி யிசைந்தபன் மூன்று நன்கு கூட்டியே யிளவ றுப்பாய்க் கொண்டுறத் தூள தாக்கே.
வத்திர காயஞ் செய்தே வரன்முறை யுண்ண வேயுட் குத்துடன் பிறவீச் சோடு கோதாரிக் கழிச்சல் குன்மம் மத்தமார் சன்னி மந்தம் வலிவிட வாதம் பாண்டு பத்துட னாறு வாயு மார்வலி படுவ னாதி.
மற்றுநோய் முற்ற மாறும் வருவாயுக் குடார மென்ற சொற்றவிச் சூர ணத்தைச் சொல்கத்தி முதலாம் வெட்டில் உற்றிடும் வெட்டு வாயி லுறுதியா யடைத்து மேலே பற்றுசா ராயம் விட்டாற் பற்றறும் விரைவி னம்மா.
அருணோதயச் சூரணம்
சூதங்கெந் தகங்க ராம்பு சொல்பொரி காரங் காந்தம் பேதமில் சிலைவெ ளுத்தற் பிசின்பெருங் காய நாவி சாதிக்காய் வெண்காரந்தான் சார்வசு வாசி நில்ல சாதிலிங் கத்தி னோடு தன்னில வங்க பத்ரி.
அரிதாரம் வகையொவ் வொன்று மாமொரு கழஞ்ச தாகும் வருமரு நிமிளை ரண்டும் வளர்வகை யிருக ழஞ்சு திரிகடு கோம நல்ல சீரகங் கணித வேதி மிருதாரு சிங்கி தானும் விளம்புமுக் கழஞ்சோ ரொன்றே.
இடித்தரைத் திட்ட பின்ன ரின்புதுப் பாண்டத் திட்டே அடுத்திடு மழலுண் டாகக் காய்ச்சியே யதையி றக்கி எடுத்தது டன்னைக் கொட்டி யியம்பரை நாழி கைக்கே கெடுத்திடா வகைவ றுத்துக் கேளொரு நாழி கைக்கே.
43
44
45
46
47
48
149
150
51
152
* ஐயவி - கடுகு,
17

Page 21
வைத்திய விளக்கம்
அரைத்திடா யிந்த வண்ண மாகுமேழ் தரமுஞ் செய்தே வருக்கமாய் வைத்துப் பின்னர் வளர்தரு நோய்கட் கெல்லாம் உரைத்தநல் லனுபா னத்தி லூட்டிட வொழியு நோய்கேள் பருத்திடு பதினெட் டாகும் வாதமே பரியும் வெட்டை.
காசம்விற் புருதி கோழை கண்டத்தின் மாலை சூலை கோசப்புற் றண்ட வாதங் கோதாரிக் கன்ம மீழை கூசிய வாயு மந்தங் குட்டமே வாத சன்னி பேசிய கிரந்தி ரத்தப் பிரமியம் பிளவை யோடு.
பற்றிடும் வலியீ ராறும் பவுந்திர மாதி யெல்லாம் இற்றிடுஞ் சற்பத் தோடே எலிபுலி முகச்சி லந்தி முற்றிடுங் கடியே யாதி முடித்திடு மிதன்பேர் தன்னைச் சுற்றரு ணோத யப்பேர்ச் சூரண மென்று சொல்லே.
கடுக்காய்ச் சூரணம்
இலவங்கஞ் சிறுநா கம்பூ வேர்கருஞ் சீர கந்நோய் விலகுவேர்க் கொம்பி னோடு மிளகுதிப் பிலிக டுக்காய் நலமுறை யொன்றி ரண்டு மூன்றுநான் கைந்தா றேழாம் அலகுசேர் கழஞ்சு தூக்கி யாட்டியே தூள தாக்கே.
கல்லக்கா ரத்தி லாதல் கற்கண்டுத் தூளி லாதல் நல்லவிச் சூர ணத்தை நாடொறுஞ் சேர்த்த ருந்திற் புல்லிய விரும றிரும் பொருந்துவா யக்கரம் போம் சொல்லிதன் பேர்க டுக்காய்ச் சூரண மென்பர் மாதோ.
நயனபூபதி மாத்திரை
இந்துப்புச் சீனக் கார மினியதிப் பிலிக டுக்காய் வந்தநோ யகற்றும் பீத ரோகிணி வகைக ழஞ்சொன் றந்தமாய்க் கூட்டி நந்தி யாவட்டம் பூச்சாற்றாலே சிந்திடா திரண்டு சாமஞ் செவ்வையா யரைத்து ருட்டி.
தண்ணிய நிழலு லர்த்திச் சார்முலைப் பாலி லல்லால் எண்ணிவேற் றனுபா னத்தி லினிமையாய்க் கண்ணிற் போடக் கண்ணினுட் படலம் புண்பூக் காசமே யாதி தீரும் நண்ணிய பேரு நல்ல நயனபூ பதியா மன்றே.
நயணசந்திராதி மாத்திரை
கரியசீ ரகமிந் துப்புக் கடுக்காயே சீனக் காரம் அரியதாம் பீதரோணி யைந்துமோ ரளவெடுத்தே உரியசம் பீர்ப்ப ழத்தின் சாற்றிலோர் சாம மாட்டிப் பெரியமா துளம்ப ழத்தைப் பிழிந்தசா றரையோர் சாமம். நந்திப்பூச் சாறு விட்டே நவையிலோர் சாமும் புள்ளி தந்தகற் றாழைச் சாற்றாற் சாமமொன் றிப்ப டித்தான் அந்தமாய் நாலு சாம மரைத்துப்பின் வழித்தெ டுத்தே சிந்தலில் குளிகை வீதஞ் சிறுபய றளவாய்ச் செய்யே. செய்தபின் னிழலு லர்த்திச் செவ்வையாய்க் கண்ணி லூற்ற வெய்யதாம் படலங் காசம் விரிந்தபூ விவைக டீர
18
53
154
55
156
157
158
59
160
161

வைத்திய விளக்கம்
எய்திடு முருங்கைப் பூவோ டீரவெங் காயச் சாற்றிற் பையவே யுரைத்துக் கண்ணிற் பாய்ச்சிடப் பறக்கு மன்றே. 162
கடுக்காய்த்தோற் றசையி னோடு கரியசீரகம வித்த வடுத்தவிர் நீரி லிந்த மருந்தினை யுரைத்துப் போட உடற்றுறு வலிநீர் பிளை யுறுசிவப் புடனே குத்துக் கெடுத்திடு நயன சந்தி ராதியாய்க் கிளத்தி னாரே. 163
சீதகேசரி மாத்திரை
தீதகல் கத்தி தன்னிற் றெளிந்தநேர் வாளமெட்டு மேதகு சுக்கு மூன்று மிளகிரண் டாகுங் கெந்தி சூதம்வெனன் கார மூன்றுஞ் சொல்லொவ்வோர் கழஞ்சு கூட்டச் சேதமில் சம்பி ரத்தின் செழுங்கனிச் சாற்றா லாட்டே 64
ஆட்டிப்பின் குன்றி போல வாயுருட் டனுபா னத்தை ஈட்டக்கே ஞப்புச் சீனி யெலுமிச்சம் பழத்தி னிரும் கூட்டிப்பா னக்கஞ் செய்து கொண்டுமேற் கூறு கண்டே ஊட்டுவா யிம்ம ருந்தை யுண்மையாய்ப் பேதி யுண்டாம். 165
ஆகுமே மருந்தில் லாம லடிக்கடி பானக் கத்தை ஒகையோ டருந்தி லம்மா வொத்திடப் பேதி யாகும் வேகமாய்ப் பேதியாகில் விரும்பு பாற் கஞ்சி தன்னைப் பாகமாய்க் கொடுக்க மாறும் பக்குவ மின்னங் கேளே. 166
பச்சைநீர் பரிசித் துக்கொள் பகரிந்த முறையே யல்லால் மெச்சிய வனுபா னங்கள் வேறுமுண் டனேக மாக நச்சிய தேகக் கூறு நவில்காலங் கண்டே யூட்டு நிச்சயங் கழியுஞ் சீத கேசரி யாகு நேர்பேர். 67
மந்தநாச மாத்திரை
கருவேம்பு நிலத்தின் பாகல் கசடிலிவ் விலையி ரண்டைத் தருகொழுந் தரிய நோய்தீர் சாரணை மூல மெல்லாம் விரிவுற வெடுத்துப் பின்னர் வெயிறனிற் காய வைத்தே தெரிவுற வகையொவ் வொன்றுஞ் சேர்பல மரையி தோடே. 168
கடுகுள்ளி மிளகு சுக்குக் கராம்புவெந் தயமே பின்னும் வடுவிலாக் கொத்த மல்லி பெருங்காயம் வகையொவ் வொன்றும் எடுகழஞ் சேக மாக விஞ்சியின் சாறு விட்டுப் படுசாம மிரண்ட ரைத்துப் பகர்ந்திடு மிலந்தைக் காய்போல். 169
உருட்டிநல் லனுபா னத்தி லோருண்டை கொடுக்க மந்தம் வெருட்டிய பெருங்க பூழிச்சல் வெப்புறு மலச லக்கட் டுருட்டியே பொருமல் குத்தோடோங்காளம் புளிப்பேப்பம்போம் வருட்டிய மந்த நாச மாத்திரை யிதன்பேர் மாதோ. 170
சந்திரோதய மாத்திரை
மானின்கொம்புருத்திராக்கம் வழங்கொவ்வோர் கழஞ்சு கொண்டே ஈனமில்லாத ரைத்தே யிதனோடீ ரரத்தை கோரைக் கானம்ாங் கிழங்கி னோடு காட்டிய தேற்றாக் கொட்டை தானதி மதுர மிக்க விடயஞ்சா திக்கா யோடே. 171
19

Page 22
வைத்திய விளக்கம்
சுத்திசெய் சாதி லிங்கஞ் சொல்லொவ்வோர் கழஞ்சு கூட்டி மெத்து சந்தனமே வில்வ வேரிவை தூளாய் வெட்டிப் புத்தியாய் நீரை விட்டுப் புகரிலாக் கனலை மூட்டி மத்தமா யெட்டி லொன்றாய் வற்றிய நீர்விட் டாட்டே.
ஆட்டியே நாலு சாம மகன்றபின் வழித்தெடுத்துக் கோட்டிய *முற்கம் போலக் குளிகை செய் நோயைக் கண்டு பூட்டியே யனுபா னத்தைப் புகன்றநன் முறைவ ழாமற் கூட்டியே கொடுக்க நீங்குங் கொடும்பிணி குழந்தை கட்கே,
அக்கர மிரும றொய்வோ டகட்டுளை வதன்க டுப்புத் தொக்கதோர் சுவாத மூச்சுத் தொலைந்திடுங் குழந்தைகட்கு மிக்கதோர் குழந்தை கட்கே யல்லது விருத்த ரோடு w தக்ககா ளையர்க்கு மாகுஞ் சாற்றுசந் திரோத யந்தான்.
d5LITLLDTijst))
சாதிக்காய் விடய மோமஞ் சார்குறா சாணி சுக்குத் தீதற்ற முத்தற் காசு தேற்றாவின் கொட்டை வெள்வேல் மேதகு கடலி றாஞ்சி விளம்பத்தி யிவற்றின் பட்டை ஒதிய விவைக ளெல்லா மொவ்வொரு கழஞ்சு சேரே.
சேர்த்திள வறுப்பதாகச் செவ்விதாய் வறுத்தி தற்கு வார்த்தரை கஷாயங் கேளு மலர்தாங்கி முசுட்டை நோயைப் போக்குமால் காந்தி மூன்றின் பொருவேரு மாவி லுற்ற சீர்க்கணிப் பருப்பொவ் வொன்றுஞ் சேரொரு பலத்திற் பாதி.
ஆகவே கொண்டு பொன்னி னருநிற மாய்வ றுத்தே தாகந்தீர் புனலெண் ணாழி தான் விட்டோர் நாழி யாகப் பாகமாய்க் காய்ச்சி யிந்தப் பழுதிலாக் கஷாயம் விட்டே வேகமா யிரண்டு சாமம் விடாதரைத் துருட்டு வாயே.
உருட்டுவாய் குளிகை வீத முயர்ந்தது துளம்ப ழத்தின் வருக்கமாய்க் நிழலுலர்த்தி வண்ணதி சாரக் காய்ச்சல்
பெருத்திடு சலரோ கம்பின் பெரும்பாடு பெருங்க பூழிச்சல் கரைக்கவே யனுபா னத்திற் கபாட மாத்திரைய கற்றும்.
சுரபூமணி மாத்திரை
இந்துப்புக் கடுகு ரோகிணி யிலுப்பைப்பூக் கடுக்காய் சுக்கு வந்ததிப் பிலிம ரீசம் வகையொன்று கழஞ்சொன் றாகும் நிந்தையில் சுத்தி செய்த நேர்வாள மிருகழஞ்சாம கந்தமார் மணித்தக் காளி கற்றாழை யின்சாற் றாலே.
இருசாம மரைத்து ருட்டி யிசைகுன்றி யளவு பாலர்க் கொருதூதி வீத மற்றோர்க் குரைத்திடிற் சன்னி வீக்கம் சுரமோடு கல்லடைப்புத் தொடுகுன்ம வாயு மந்தம் அருமல சலக்கட் டோடே யண்டத்தின் வாதம் போமே.
வேகமார் விடம தல்லால் விடசுர மற்று மான ஏகிடுஞ் சுரங்கட் கெல்லா மினியதோர் விரேச னத்துக்
172
174
175
76
177
178
179
180
* முற்கம் - பயறு.
20

வைத்திய விளக்கம்
காகுநல் லனுபா னத்தி லருந்திடி லியம்பு நோய்கள் போகிடு மேசு ரத்தின் பூமணி மாத்தி ரைக்கே.
சுரகுடாமணி மாத்திரை
இரசங் கெந்தகமே சாதி லிங்கமிம் மூன்றுஞ் சுத்தி மருவுறச் செய்த பின்னர் வகைக்கொரு கழஞ்சு கொண்டு கருமத்தம் விரைசுத் தித்துக் கழஞ்சுமூன் றெடுத்த பின்னர்த் திரிகடு கம்வ கைக்குச் சேருநாற் கழஞ்ச தாக. சம்பிரப் பழச்சாற் றாலே சார்வுற வரைத்து ருட்டிப் பண்புறு குளிகை குன்றி வீதமாம் பழஞ்சு ரங்கள் கெம்பிடு முறைச்சு ரங்கள் கேடுசெய் வாத சன்னி கும்பிடத் துரத்து மித்தைக் கொள்கவே றனுபா னத்தில்.
இஞ்சியின் சாற்றி லூட்ட வெழும்பிடும் வாதம் வாயு
அஞ்சியே யகன்று போகு மரியவிம் மருந்தின் பேரை நெஞ்சிடை யுன்னி னாலு நீங்காத சுரங்க ளெல்லாம் துஞ்சிடு மாத்தி ரைப்பேர் சுரைசூடா மணியா மன்றே.
சாதிலிங்க மாத்திரை
*திரிகடு சிற்ற ரத்தை சற்றேலம் சாதிக் காயே வருகராம் பக்க ராவே வசுவாசி கடுக்கா யெல்லாம் உரைதரு வகைக ழஞ்ச தொன்றாகக் கூட்டிச் சுத்தி மருவிய கொடிய வேலி வண்மையாய்க் கஷாயஞ் செய்தே.
சாற்றினை விட்டி ரண்டு சாமமே யரைத்துச் சுத்தி தோற்றிய சாதி லிங்கஞ் சொல்கழஞ் சிரண்ட தென்னும் கூற்றினைச் சேர்த்துப் பின்னர்க் கொடி வேலிக் கஷாயத் தாலே தேற்றமாய் நாலு சாமஞ் சேரவே யரைத்துக் கொண்டு.
குன்றியின் வீத முண்டை கொடுவலி சன்னி குத்துத் துன்றிய மேல்மூச் சல்லாற் சுரமந்தம் படுவ னாதி ஒன்றிய முடக்கு வாத முட்குத்துப் பிறவிச் சோடுங் கன்றிய திமிர்வி றைப்புக் கழிச்சலே யண்ட வாயு,
விடமுத லான வெல்லாம் விட்டோடு நோயா விக்கு வடவைநேர் சாதி லிங்க மாத்திரை யென்று பேரை அடையுமிவ் வவிழ்த நாம மலைகடல் சூழ்ந்த விந்தப் புடவியி லெவர்க ளாலும் புகன் றிட வெளிய தாமே.
பூரணசந்திராதி மாத்திரை
சுக்கதி விடய நன்மை தொகுவிழா லரிசி தன்னோ டக்கராத் தேவ தார மதிமது ரங்க ராம்பு மிக்கநன் னாரி வேர்வான் மிளகுசீ ரகமே மென்சா திக்காய்சிற் றரத்தை யோடுசிற் றேலங் கறுவாப்பட்டை.
விளம்பிய நத்தைச் சூரி விரையிவை யளவு வேண்டும் களங்கமில் கழஞ்சொவ் வொன்றாங் கருடபச் சைக்கல் லிரேட்
81
82
83
84
185
86
187
188
189
* திரிகடுகீரரத்தை என்றும் பாடம்.
21

Page 23
வைத்திய விளக்கம்
டுளங்கொளு மிதற்கி ரட்டி யுறுகாண்டா மிருகக் கொம்பு வளம்பெறு கழஞ்சு கூட்டி வண்மைசேர் சீந்திற் றண்டின்.
சாற்றொடு பொன்னாங் காணிச் சாறுமோ ரிதழ்க்கஞ் சத்தின் மேற்றிகழ் சாறு நேரே விளம்பவொன் றோர்நா ளாட்டித் தேற்றமாய் மூன்று நாளுஞ் சென்றபின் வழித்து ருட்டித் தோற்றுறு குளிகை வீதம் தூதுளம் பழமே குன்றி.
குன்றியி னளவா முண்டை குழந்தைகட் காவின் பாலில் மென்றிடுஞ் சீனி தன்னின் மிஞ்சிய விஞ்சிச் சாற்றிற் தின்றிட வனுபா னத்திற் செப்புநோய்க் கேற்ற வண்ணம் குன்றிய தேக மெங்குங் கொடும்பிணி குறையு மன்றே.
குறையுமே குழந்தை கட்குக் கொண்டிடு நோய்க ளெல்லாம் அரையுந்து துளம்ப ழத்தி னளவுண்டை முதியோ ருண்ண நிறைதரு மிருமல் பித்த சுரந்தாகம் வரட்சி நெஞ்சில் உறைதரு கபமே யிழை யுரத்திடு மதிசா ரம்போம்.
போகுமே நீர்கடுப்புப் பெரும்பாடு வெட்டை யெல்லாம் சாகுமே யத்திக் காய்ச்சல் சலரோகங் கபால நீங்கும் ஏகுமே பயித்தி யங்க ளென்றைக்குஞ் சவுக்ய மாகும் நாகமே லரனார் வைத்த நரர்களுக் கமிர்த மாமே.
ஆகுமே யுலகு தன்னி லடைந்திடுங் காந்தி யென்றும் வேகமார் வசூரி யென்ற வெம்மையை நீங்கு மென்றும் தாகமார் சசியே யென்று சாற்றிய மருந்தின் பேரைப் போகமோ டறையின் மிக்க பூரண சந்தி ராதி.
மிருதசஞ்சீவினி மாத்திரை
மிருதசஞ் சீவி னிப்பேர் மேம்படு மருந்து கேண்மோ தருமுத்துப் பவளம் வெள்ளி தங்கநற். குங்கு மப்பூ வருகோரோ சனையி னோடு வயங்குமிந் துப்புக் காண்டா மிருகத்தின் கொம்பு தேற்றா விரையுடன் கெருட பச்சை,
பச்சைக்கர்ப் பூர மான்கொம் பக்கராப் பழுதில் சுக்கோ டச்சமி லுருத்தி ராக்க மதிமது ரங்க டுக்காய் கொச்சியி லேலங் கொட்டந்திப்பிலி மிளகு கூறு நச்சுமீ ரரத்தை யோடு நவிரில்சீ ரகமி ரண்டே.
ஏதிலாக் கராம்பி னோடு வசுவாசி யிமையோர் தாரு தீதிலாச் சாதிக் காயே சிறு தேக்குக் கறுவாப் பட்டை மேதகு கடுகு ரோணி விடயம்வான் மிளகு மேலோர் ஒதிய நாகம் பூவு மொன்றோரு கழஞ்சு தூக்கே.
தூக்குமிம் மருந்த ரைக்கச் சொல்லுதுங் கஷாயங் கேளு மீக்கிளட் ராடா தோடை வேரொரு பலந்தான் றுாள தாக்கியெண் படிநீர் விட்டே ய..தொரு படியாய்க் காய்ச்சித் தாக்கியே யோர்நா ளாட்டு தப்பிலிம் முறைய தாக.
22
190
19
192
193
94
195
96
197
98
199

வைத்திய விளக்கம்
ஆகிய வில்வ வேர்த்து ளரியசெண் பகப்பூச் சந்தம் பாகமாய்ப் பலமொவ் வொன்று பகுத்துவெவ் வேறாய் முன்னர்ப் போகிய முறைய தாகக் கஷாயஞ்செய் தரைப்பாய் போற்றும் ஒகையார் கஷாய மொவ்வொன் றொல்வொரு நாளைக் கென்னே.200
அரியவிம் முறைமு டிந்த வதற் குப்பின் சாதி லிங்கம் உரைசெயுஞ் சுத்தி செய்தே யுறுபதின் கழஞ்சு தன்னை வரைவதாய்க் கூட்டி நல்ல வன்னில வங்கப் பட்டை தெரியுமோர் பலமெ டுத்துத் தெளிவுறக் கஷாயஞ் செய்தே. 20
செய்துநாற் சாம நன்றாய்த் தெரிவுற வரைத்து ருட்டி மெய்யுறக் குளிகை வீதம் விளம்பிய சிறு முற்கம் போற் செய்துநீ நிழலு லர்த்தித் திறம்பட வனுபா னத்தால் வெய்யரோ கங்க டீர்க்கும் விளம்பிதற் கிணைவே றுண்டோ. 2O2
கயமீழை யிருமல் மூச்சுக் காட்டுபீ லிகைசு வாதம் பயமுறு சன்னி யென்னும் பதின்மூன்றும் பறக்குமென்ப சயமுறு மருந்தைக் கண்டாற் சயவகை தொண்ணுாற் றாறும் துயர்செயும் பித்தந் தானுந் தொலைந்திடு மின்னுங் கேளே. 203
வாந்திநா வரட்சி தோஷம் வாதநா முள்ளு விக்கல் காந்தனிர்த் தோஷ மூலங் கணைச்சுரங் கழிச்சல் கோழை சாந்தமி லத்திக் காய்ச்சல் சலரோக மதிசா ரந்தான் போந்திடும் பழஞ்சு ரங்கள் பெரும்பாடு சுரவ லிப்பு. 204
மேகமக் கரங்கி ராணி வெட்டையே மந்தங் குன்மம் ஆகுமிந் நோய்க ளெல்லா மருணன்முன் பணியே போலப் போகுநல் லனுபா னத்திற் புகலுமிம் மருந்தை யீந்தால் ஆகவே சவமா னாலு மாருயிர் வந்து பேசும். 205
மலரயன் விதித்த வந்தம் வந்துதான் மரணித் தாலும் பெலமுட னெழுந்தி ருந்து பேசிப்பின் மரண மாவார் நிலவிய விதியை யாவு நீக்குமோ நீக்க மாட்டா - - அலைவுறு நோயை நீக்க அவுடதஞ் செய்வ தாமே. 206
அருணோதய மாத்திரை
துருசுவெண் காரநாவி துத்தம் பொன் னரிதா ரத்தோ டிருவியே சாதி லிங்க மிந்துப்பு நல்வேர்க் கொம்பு திரிபலை யிவையே யல்லாற் சேர்மனோ சிலையுஞ் செய்ய நிருவிட மும்வ கைக்கு நிறுத்தொவ்வோர் கழஞ்ச தாக. 2O7
சுத்திசெய் நேர்வா ளந்தான் சொல்லிரு கழஞ்சா யெல்லாம் சத்துமிக் குள்ள கையான் றகரையின் சாற்றா லாட்டிச் சித்தமாய் நாலு சாமஞ் செவ்வையா யரைத்துப் பின்னர் ஒத்திடு முற்கம் போல வுருட்டியே வைத்துக் கொள்ளே. 208
வைத்தரு ணோத யம்போல் மாத்திரை யாகு மித்தை ஒத்திடு மனுபா னத்தி லூட்டிடிற் றோஷஞ் சன்னி
23

Page 24
வைத்திய விளக்கம்
மெத்திய வாயு குன்மம் வீக்கமந் தம்வ லிப்புக் குத்துநீ ராமை வாதங் கொடுமல சலமும் போமே.
வாதாரி மாத்திரை
இரசங்கெந் தகமே நோய்கட் கினியசா திலிங்க மோடு வருகாந்த மிருப்புத் தூளும் வரன்முறை சுத்தி செய்தே வருமுறை யொன்றி ரண்டு வழங்குமூன் றொருநான் கெட்டாய்த் தருபங்கு சேர்த்துக் கையான் றகரையின் சாறு தன்னால்.
ஆறநா ளரைத்துக் குன்றி யளவதா யுருட்டிப் பின்னர்க் கூறிடு நோய்கட் கேற்ற குணவனு பானஞ் சேர்த்து மாறின்றிக் கொடுக்க வாத மந்தார காசஞ் சூலை நாறிடுங் குட்டங் குன்ம நவில்மகோ தரமே கோழை.
பேசருங் கயமுட் குத்துப் பிறவீச்சுப் பெருவி யாதி ஆசில்கா மாலை நாட்செ லருஞ்சுரங் குமர கண்டன் கூசுபீ லிகையே மந்தங் கொடுமல சலவ டைப்பு நாசமாம் புடையன் வண்டு நாகத்தின் கடியி னோடே.
எலிபுலி முகச்சி லந்திக் கடிசேட மிரும றானும் வலியொரு பன்னி ரண்டும் வலுத்திடு மண்ட வாதம் கொலுங்கண்ட மாலை வாயு கோதாரிக் கழிச்ச றிமை மலியுருத் திரமாம் வாயு முறைச்சுர மற்று நோயும்.
சுடர்கண்ட பனியே போலத் தொலைந்தஞ்சி யோடிப் போகும் படரும்வா தாரி யென்று பன்னுமிம் மருந்து தன்னை மடமலி மகளிர் பிள்ளைப் பெறநொந்து வருந்து வாரேல் அடைவுறு மறுபா னத்தி லருத்திடப் பெறுவார் பிள்ளை.
கோரோசனை மாத்திரை
கோட்டமக் கறாச்சிற் றேலங் கொளுஞ்சாதிக் காய்க ராம்பு வாட்டமில் லாம லைந்தும் வகைக்கொரு கழஞ்சு தூக்கி
ஆட்டிநன் காகத் தூள்செய் தருங்கோரோ சனையி னோடு காட்டுகுங் குமப்பூப் பச்சைக் கர்ப்பூரங் கழஞ்சு கொள்ளே.
வகையொவ்வொன் றொருகழஞ்சாய்மருவிடச் சேர்த்துப்பின்னர்த் தகைபெறு மலாக்காய்ச் சந்தந் தானொரு பலந்துாள் செய்தே புகரற நான்கு நாழி புனலரை நாழி யாகப் புகைபடு கனலிற் காய்ச்சிப் பொற்புற வடித்துக் கொள்ளே.
துப்புறு மிந்நீர் விட்டுத் துகளற விரண்டு சாமம் தப்பற வரைத்துப் பின்னர்த் தயங்கில வங்கப் பட்டை இப்படிக் கஷாயந் தான்செய் திருசாம மரைத்துக் கொண்டே அப்பிரே கத்தி னோடே யருஞ்சூத சிந்து ரந்தான்.
ஒரொன்று கழஞ்சு கூட்டி யுற்றசெண் பகத்தின் பூவைச் சீரொன்ற முன்போற் றானே செவ்வையாய்க் கஷாயஞ் செய்தந் நீரொன்ற விட்டரைத்த னெறியெனப் புகல்வர் நீத்தோர் ஈரொன்று சிந்து ரங்க ளின்றெனி லியம்பக் கேண்மோ.
24
209
210
21
212
23
24
215
26
27
218

வைத்திய விளக்கம்
சொன்முறை சுத்தி செய்த துகளில்சா திலிங்க பற்பம் பன்னுநாற் கழஞ்சு கூட்டி யரைக்கினும் பழுது வாரா தின்னதைச் சேர்த்த ரைத்தே யெழிலுறு முண்டை குன்றி யென்னவே யுருட்டிப் பாண்டத் திட்டதை நிழலு லர்த்தே. 29
சேற்றுமந் தொண்ணுாற் றாறுஞ் செப்புநீர்த் தோஷஞ் சன்னி போற்றியே யோடிப் போகும் புகல்பெரும் பாடு மூலம் கூற்றுநோய் சுவாத மூச்சுக் குறைவறு தொய்வி னோடு சாற்றதி சாரக் காய்ச்ச றாகந்நா வரட்சி யின்னும். 220
அக்கர மென்பு ருக்கி யருஞ்சல ரோக மல்லால் மிக்கசேட் டுமசு ரம்போம் வெம்பித்த சுரமும் போகும் வைக்குங்கோ ரோச னைப்பேர் மாத்திரை யிதனி னாமம் தக்கவிம் மருந்தி னாலே தணிந்திடுஞ் சகல நோயும். 221
சருவாங்க மாத்திரை
உரைசரு வாங்க மென்னு மொப்பின்மாத் திரையைக் கேண்மோ கருநாவி சவ்வீரந்நற் காந்தமிம் மூன்றுஞ் சுத்தி அருகாமற் செய்து பின்ன ரருநத்தைச் சூரி வேரோ டுரியவிவ் விரையு மெல்லா மோரள வாகச் சேரே. 222
"இருப்பவல் பேய்க்கொம் மட்டி யிலைதயிர் வேளை மத்தம் அருப்பமி னிலத்தின் வாகை யவுரியே குப்பைமேனி மருக்கிளர் கொடிக்கொற் றானும் வகைவகை யாயி டித்துத் தருக்கியே பிழிந்த சாற்றிற் றணித்தனி யெட்டு நாளே. 223
இப்படி யரைத்த பின்ன #ரிரசித மிவற்றி னுக்குத் தப்பறச் சரியாய்க் கூட்டி யரைத்திடிற் சாரு மேன்மை ஒப்பிலா விரசி தஞ்சேர்த் துடனுரை யாம லுஞ்செய் செப்புமாத் திரையின் வீதஞ் சிறுபய றளவ தாமே. 224
மண்டல மிம்ம ருந்தை வளம்பெறு மனுபா னத்திற் கொண்டிடிற் சூலை குன்மங் கோழைகா மாலை யிழை மண்டுமந் தார வளர்கபம் வெட்டை மேகம் அண்டுநீ ராமை யேபே ராமையே கிரந்தி சோகை. 225
மகோதர மிலிங்கப் புற்று மார்படைப் யோனிப் புற்று நகுமேக வாத நாப்புண் ணாசிகா பீடங் கண்ட மிகுமாலை சொறிசி ரங்கு விடமூறல் பிள்வை கைகால் புகுமுடக் கரையாப் பேவிற் புருதியே கிராணி வாதம். 226
சொல்லிய குமர கண்ட வலிகொடு முறிகி ரந்தி கல்லடைப் பதுவே மிக்க கரப்பனே கெர்ப்ப சூலை எல்லையின் மண்டை சூலை வெடிசூலையோனிச் சூலை வல்பவுந் திரமே கெர்ப்ப வாயுவிந் திரிய கண்டி. 227
கோதாரிக் கழிச்ச னிங்குங் கூறுமிம் மருந்து தன்னை ஆதார மாக வேதா னடைவுறு மனுபா னத்தில்
* இருப்பவல் - குத்துக்காற் சம்மட்டி. # இரசிதம் - வெள்ளி.
25

Page 25
வைத்திய விளக்கம்
ஒதிய முறையே யீந்தா லுவகையாய்ப் பெறுவார் பிள்ளை தீதிலிம் மருந்த ருந்திற் றேகம்பொன் னாமெ வர்க்கும்.
விரியனே புடைய னாக விடங்கரு வழலை யல்லாற் றிரிபுலி முகச்சி லந்தி தீயெலி முதல்வி டங்கட் குரியநல் லனுபானத்தி லூட்டிட வொழிந்து போகும் புரையிலா விவற்றி லாய புண்ணும்போ மரைத்துப் போடில்.
பிரமியம் பெருவி யாதி பீலிகை பக்க வாயு வருசிர குட்ட மண்ட வாயுவெய்ப் பிளைப்பு மூலம் தருதசை யடைப்பேயாதி தவிர்ந்திடும் வாயு வோடு பரியெட்டுக் குன்மம் போகும் பாரினுக் கமிர்த மாமே.
உருத்திர வாயு வோடே யுட்குத்துப் பிறவிச் சாதி வருத்திடும் பிணிக ணிங்கும் வளர்சன்னி யெல்லாம் போகும் உருத்திடுஞ் சேட்டு மங்க ளுரைவிட் டோடுந் தீயின் எரித்திட்டுப் புகையை யூட்ட வேகுமே கிரந்திப் புண்கள்.
வைனதேய மாத்திரை
காக்கணங் கொவ்வை தன்னிற் கருதிலை கோடியே கொட்டை ஆக்குவேர் காயே சூத மரியநேர் வாள முள்ளி தூக்குவெண் காரந் துத்தந் துரிசுகொந் தாளங் கொட்டை நீக்கமில் வசம்பி னோடு பெருங்காய நிமிளை ரண்டே.
முக்கடு கடுகு ரோணி கடுக்காயே முதிர்நோய் போக்கும் மிக்கசா திலிங்க மெல்லா மிகாமலோ ரளவெ டுத்தே தக்கசம் பீர்ப்ப ழத்திற் றணித்தனி சாறு வாங்கி அக்கண மிரண்டு சாம மருங்கொடி வேலி வேரை.
செவ்வையாய்க் கஷாயம் வாங்கித் திருந்தவிட் டரையீர் சாமம் எவ்வமில் குளிகை வீத மிசை குன்றி தூதுளத்திற் கவ்விய பழம்போ லாகுங் களங்கமி னிழலு லர்த்தித் திவ்விய மாகச் செப்பிற் சேர்த்துவை காற்றே றாமல்,
வருத்திடும் வழலை நாகம் மண்டலி புடைய னோடு விரித்திடும் விரிய னாதி விடத்தினுக் கேற்ற தான அருத்திடு மனுபா னத்தி லருத்துது துளம்ப ழம்போற் பருத்திடு முண்டை கண்டாற் பறக்குமே விடங்க ளெல்லாம்.
குன்றிபோற் குளிகை தன்னைக் கூறுநல் லனுபா னத்திற் தின்றிட வெலிவி டங்க டீர்ந்திடும் புலிமு கந்தான் ஒன்றிய சிலந்தி யாலே யுறுபெரு விடமும் போகும் வன்றிறல் வயின தேய மாத்திரை யிதன்பேர் மாதோ.
சங்கார ருத்திர மாத்திரை
அரிதாரம் வசம்பே யிந்துப் பருமனோ சிலைநேர் வாளம் பொரிகாரம் பச்சை நாவி புகல்சிவப் புப்பா ஷாணம் கருடபா ஷாணஞ் சூதங் *கறிபெருங் காய முள்ளி வருமமுக் கிராய்வே 0ருக்கு மல்கிடுந் துடரி வேரே.
228
229
230
231
232
233
234
235
236
237
* கறி . மிளகு, 0ஊக்கு - கராம்பு.
26

வைத்திய விளக்கம்
எல்லாநல் வகைக ழஞ்சொன் றினியசா திலிங்கந் தானும் மல்கிரு கழஞ்சு தில்லை மரப்பால்விட் டொருசா மந்தான் புல்லிட வரைத்தெ ருக்கின் புகரில்பால் பேய்ப்பி சுக்கின்
நல்லசா றிரண்டும் விட்டே யரையிரு சாம நன்றாய்.
கொடிவேலிக் கஷாயத் தாலுங் குறித்தொரு சாம மாக நடைமுறை யரைத்துக் கொண்டு நற்குன்றி யளவு ருட்டி வடிவமாஞ் சிமிழில் வைத்து வளர்கரு வழலை நாகம் புடையனே யாதி யான பொருவினா கக்க டிக்கு. கொடுத்திடிற் பருதி கண்ட கொடுவிருள் போல மாறும் அடுத்திடும் பெருவி டங்கட் காமிது போலப் பூவிற் படைத்திடு மருந்தொன் றில்லைப் பகருமாத் திரைப்பேர் சர்வ விடத்தினைச் சங்க ஞ்செய் விளங்குருத் திரம தாமால்.
உக்கிராக் கிராணம்
பெருமருந் தரைப்பு மஞ்சள் பிரண்டைவெண் ணொச்சி யோடே
திரிகடு மாவி லங்கை செறிகராம் பாடா தோடை வருமொருகழஞ்செ டுத்தே வறுத்தரை வத்திர காயம் பிரியமாய்ச் செய்து பேணி வைத்திடிற் பிதற்றுஞ் சன்னி.
பத்தொடு மூன்றி னுக்கும் பகர் தோஷ நீரின் கோவை மத்தமார் சிரத்தி ரைப்பு வாயுதான் றலையிற் கொள்ளல் ஒத்திடு மூக்கி லூத வுரைத்தநோய் பலவு மோடும் மெத்துசித் திரத்தின் மூலி விளம்புசா திலிங்கங் கெந்தி.
இரதமுங் கூட்டி முன்ன ரியற்றிய வகையாய்ச் செய்தே பெருநாக விடமே யாதி பெருவிட மடக்க சன்னி தருவலி யெல்லா நீங்குஞ் சார்ந்திடு மூக்கி லூத உரைபேய்கள் சன்னி யோட்டு முக்கிராக் கிராண மாமே.
சன்னி முதலியவற்றிற்கு உண்டை கட்டல்
முருங்கையின் வேரி னோடு கொடுவேலி மிளகே யுள்ளி அருங்கடு கிந்த வைந்து மம்மியி லரைத்த பின்னர் ஒருங்குசா ராயம் விட்டுக் குழைத்ததை யுள்ளங் காலிற் பொருந்திய வுள்ளங் கைக ளிரண்டிற்கு மொவ்வோர் துட்டின்.
GBT GF6T6T வைத்துக் கலவோட்டை யதற்கு மேல் வைத் தாசிலாச் சீலைத் துண்டா லதுதனைக் கட்டப்போகும் பேசரும் வாத சன்னி பெருவிடம் வலியேர்ப்பு நாசமா மிதனைப் பூவி னலமெனக் கொண்டார் மேலோர்.
கடிந்திடுங் கடிகை யாறிற் கட்டினால் வலிகொ திப்ப தடைத்திடிற் கொடிய வேலி வேர்மிள கதுவுந் தூள்செய்
238
239
240
24
242
243
244
245
திடம்பெறு பொட்டளிக் குளிட்*டெண்ணெய் கொதிக்கத் தோய்த்தே
தடங்க லில்லாம லொத்தச் சாற்றிடா தோடு மன்றே.
மூலப்பவுந்திரத்திற்கு வளர்மூலப் பவுந்திரந்தான் மதுகலித் தென்ன வீங்கித்
246
தளர்கொதி வலியு முண்டாய்ச் சார்ந்திடு மிகவ ருத்தம்
* எண்ணெய் - நல்லெண்ணெய்.
27

Page 26
வைத்திய விளக்கம்
மிளிர்மரற் கிழங்கை வாங்கி வெய்யசாம் பற்குட் டாழ்த்துத் தெளிதர வவிந்த பின்னர்ப் பிசைந்தததைச் சிறுசூ டாக. 247 அந்தக்கட் டுடைக்குங் காறு மருகாமல் வைத்துக் கட்டி இந்தநற் கிழங்கு மத்தம் பிஞ்சிவை முன்போற் செய்தே வந்தவக் கட்டின் மேவுஞ் கொதிவலி மாறிக் கள்ளஞ் சிந்திடு மளவு மித்தைச் செப்பமாய்க் கட்டிப் பின்னர். 248 இயம்பிடு குறிஞ்சி தன்னி லிலையைமெல் லிதாயரிந்து வயம்பெறு பொன்னி றம்போல் வறுத்துப்பக் குவமாய்க் கட்ட வியந்தபுண் மாறு மென்று மிகுமரு ளறிவின் மிக்க உணர்ந்தவர் சொன்ன நூல்க ளோதிடு முணர்ந்து கொள்ளே, 249 கட்டிற்கு மருந்து கட்டிற்குமருந்து சொல்வோங் காக்கணங் குறிஞ்சி வெட்பா வட்டைமா தளைசம் பிரம் வன்புளி யிளந்த விர்க்கள் இட்டமா மிவற்றி லொன்றை மிளகுட னவித்துக் கட்டி வெட்டுவா யிடம றிந்து மென்மையாய் விவேகத் தாலே. 250 கருவியால் வெட்டிப் பின்னுங் காரமேற் றிடுநன் மஞ்சள் துரிசிவை யெருக்கம் பாலிற் றுகளற வரைத்துப் புண்வாய் பெருகிடு மதன்பின் முன்னர்ப் பேசிய விலைய வித்து மருவிடக் கட்டச் சீயும் வடிந்துகட் டாறு மன்றே. 251 ஆறியே சீயு மின்றி யருகிடி லதன்பின் முன்னர்க் கூறிய காக்க ணத்தின் கொழுமிலை தெங்கி னெய்யில் மீறிடா மற்பொ ரித்து மென்மையாய்ப் புண்ணிற் கட்ட ஆறிடுந் தொடைவா ழைக்கட் டாதிய கட்டுத் தானே. 252 புண்ணிற் கிருமிகண்டாற் சிகிச்சை கிருமி நாசம் புண்ணிற்சீப் பாய்ச்சன் மேவிப் பொறுக்கருங் கிருமி கண்டால் நண்ணு சம்பீர் முருக்கு நவில்புளி *மத்த மெல்லாம் எண்ணுறு மிலைய வித்தே யியம்புமப் புண்ணை நன்றாய் 0மண்ணல் செய்தரிய சூடன் வளம்பெற வரைத்த தூளை. 253
#கிருமிநா சனியா மென்று கிளத்துபச் சிலையின் சாற்றால் வருமுறை யரைத்துப் பூச மாளுமே கிருமி யாவும் தெரியுமிவ் வண்ண மாய்முன் செப்பினர் சிறந்தோர்யாரும் உரியபேர் கிருமி நாச மென்றுரைத்த திடலா மன்றே. 254
புண்ணிற்குக்காரம் - பிளவை நாசம்
பேசுறு பிளவை யாதி பெருங்கட்டு வகைக டம்மில் மாசுறு சீவ பூழிந்து வழிந்துநீர் கொண்டி ருந்தால் ஆசுதிர் நன்மருந்தோன் றறைகுவ மதனுக் கேற்கத் தேசுறு மிரதங் காலே சிறந்திடு துருசொன் றென்ப. 155 பொன்னரி தார முக்கால் புகறுத்த மரைக்க ழஞ்சு வன்முருக் கிலையின் சாற்றால் வழுவின்றி யரைத்துக் கொண்டு *மத்தம் - பூமத்தை, 0மண்ணல்செய்யு - கழுவி. #கிருமிநாசினி . ஆடுதின்னாப்பாலை . நிலவாகை. கிருமிவையிடங்க ளெல்லாங் கிளர்தரவிடைவிடாமல் மருவிடப் பூச வந்தக் கிருமிகள் மாறிப்போகும் என்றும் பாடலாம்.
28

வைத்திய விளக்கம்
சொன்னவப் புண்கி டங்கிற் றுகளிலா தேற்றிப் பின்பு பன்னுமோர் நாலு நாளும் பார்த்தந்தப் புண்ணின் வாய்தான்.
கரைத்திடா திருக்கி லந்தக் காரத்திற் சேர்ம ருந்து பருத்திடுஞ் சதுரக் கள்ளிப் பாலினைக் கொஞ்சஞ் சேர்த்தே வருத்திடு புண்ணி லேற்ற வருஞ்சியு நீர்ப்பற் றெல்லாம் கரைத்துவாங் கிடும் தற்பின் காக்கணங் கொவ்வை யோடு.
பாவட்டை குறிஞ்சி யல்லாற் பகரெலு மிச்சை யோடு தாவரும் புளியி லுற்ற தளையிவை தேங்காய்ப் பாலும் ஆவலார் கழுநீ ருஞ் சேர்த் தரைத்திடு மஞ்ச டானும் மேவுற வரைத்துச் சேர்த்து மேதக நன்காய் வைத்தே.
அந்திநற் சந்தி புண்ணிற் கட்டியவ் விலைய வித்துப் புந்தியாய்க் கழுவிப் புண்ணிற் பொலிந்திடு சீய்ப்பற் றெல்லாம் சிந்தியொப் புரவாய்ப் புண்வாய் சிவந்துதான் கருகி வந்தால் அந்தநல் லிலைக டம்மை யரிந்துதூ ளாக்கிப் பின்பு.
தெங்கினெய் சற்று விட்டுச் செப்புபொன் னிறம தாக இங்கிதை வறுத்துப் புண்ணுக் கிசையவே கட்டி னாக்காற் தங்குபுண் னன்றா யாறித் தழும்பதா மிதன்பேர் தன்னைப் பொங்கிடும் பிளவை நாச மாமெனப் புகல லாமே.
பற்பேத்தைக்கட்டின் குணமும் மருந்தும்
கொதிவலி மிகவு முண்டாய்க் கூறிடுந் திரட்சி யாகி அதிகவே தனைப்ப டுத்தி யதனாலே சரீரந் தன்னில் கொதியுண்டாய்ச் சிரசிற் காதிற் குத்துடன் வாய்தி றக்க விதனமாய்க் கதுப்புத் தானு மிகவுமே வீங்கு மாகில்.
உரைப்பர்பற் பேத்தைக் கட்டென் றுபாயமாய்க் கருவியாலே கருத்ததாய் வெட்டி யுள்ளிற் கள்ளநீர் தன்னைப் போக்கி விரைப்படு மிளகு முப்பு மரைத்தந்த வெட்டு வாயில் விரைப்படப் பூசி யேவெந் நீரைக்கொப் பளிக்க மாறும்.
பற்பொடி
எருக்கம்பா லொருபங் காகு மிருபங்காம் பராய்ம ரத்தின் உருக்கும்பா லிவற்றி னாலே யுவர்க்க டலுப்ப ரைத்துப் பெருத்திடு *மாத பத்திற் பேணியே காய வைத்துக் கருத்துறப் பழத்தேங் காயிற் கண்ணுடைத் திளநீர் தள்ளே. அதற்குமு னரைத்த வுப்பை யள்ளியிட் டாப்ப டைத்து விதித்தமண் சிலைசெய்து விளம் பிய புடத்திற் போட்டுப் பதித்தவச் சிரட்டை நீறும் பதத்தினி லெடுத்த ரைத்து மதித்துவைத் தெடுத்துக் கலை வளர்தந்த சுத்தி செய்ய. பல்வலி குத்தி னோடு பகர்தரு முளையே யின்னம் சொல்லிய முரசு தன்னிற் றுகளுறு கரைவு தானும் புல்லுபல் லலைவே யாதி போகுமிம் மருந்து போலப் பல்லினோய் வெல்ல வேறு பக்குவ மருந்தொன் றில்லை.
256
257
258
259
260
26
262
263
264
265
* ஆதபம் - வெயில்.
29

Page 27
வைத்திய விளக்கம்
செங்கரப்பன் கட்டிற்குச் சிகிச்சை
காதடி யுச்சி சந்து களுத்தடி முதலா மற்றும் ஒதிடு வன்மத் தானத் துறுபச்சைப் பால ருக்குத் தீதுசேர் கட்டெ முந்து சிவக்கில்விற் புருதி யென்பர் சாதுவா மருந்தி தற்குச் சாற்றுவன் சிவனார் வேம்பு.
வேம்பினிற் பட்டை செங்கத் தாரிவேர் சிவந்த சந்தம் வேம்பாடல் கரிய சீரம் விளம்பிடு மசம தாகம் ஒம்பிடு வசம்பீ தோரொன் றொருகழஞ் சவுரிச் சாற்றால் சோம்பிலா தரைத்த பின்னர்ச் சொல்லுகா னாழி யாக,
ஏரண்டத் தயிலம் விட்டே யிதைக்காய்ச்சி மெழுகென் றோதும் சீரிய பதத்தைப் பார்த்துச் செவ்வையாய் வடித்து வீக்கம் ஆருறு மிடத்திற் பூசி யறைக்கடுக் காய்க றுத்தச் சீரக மணித்தக் காளி சிறந்தசெம் பரத்தம் பூவும்.
சரியாகக் குடிநீர் காய்ச்சித் *தாலநற் கட்டி சேர்த்தே உரியவப் பாலர்க் குள்ளுக் கூட்டினால் மாறு மென்ப எரியுறு செங்க ரப்ப னாதிய வியங்கம் வேரிற் புரியெண்ணெய் பூசி னாலும் போய்விடு முண்மையாமே.
நகச்சுற்றிற்கு வெட்டலாற் கால்கை யூறு மிகுநகச் சுற்றினாலே தட்டிடு கொதிப்பே யாதி சார்ந்திடி லுப்பு மஞ்சள்
மட்டதா யரைத்து நீரில் வளமுடன் கரைதீ வைத்தே சுட்டிட வெடுத்துச் சீலை தோய்க்கட் டாறு மன்றே.
வெட்டுக்காயத்திற்கு
வெட்டிற்குக் கர்ப்பூ ரத்தில் வெறிமலி சாரா யத்தை விட்டரைத் ததிலே போட்டு மெல்லிய சீலைத் துண்டாற் கட்டிமே லற்ப மாகச் சாராயங் கவிழ்த்து விட்டால் எட்டுநாட் குள்ளே மாறு மீதுகை கண்ட தாமே.
நாசிகாபீடத்திற்கும் கபாலக்குத்திற்கும்
சேங்கொட்டை முகத்தைச் சீவித் தீயினில் வாட்டப் பால்வந் தோங்கிடு மதனைச் சீலை யூட்டித்தேற் றாவின் வித்தைப் பாங்குற மெலிதாய்ச் சீவிப் பகர்சிலைக் குட்பொ திந்து வீங்கிடா திறுகச் சுற்றி விழைபசு நெய்யிற் றோய்த்தே. எரியினைக் கொளுத்தி யூத விரும்புகை குழலால் வாங்கச் சொரிநாசி காபீ டந்தான் றொலைந்திடு மிகுநீர் சிந்திப் பரிகபா லக்குத் திற்குப் பண்ணியிப் படிநல் லெண்ணெய் மருவிடத் தலைக்கு வைக்க மாறிடுஞ் சாது வாக.
சஞ்சீவித் தயிலம்
ஏரண்டத் தயிலத் தோடே யின்மணித் தக்கா ளிச்சா றோரொன்றோர் நாழி கூட்டி யுறுமுறை யாகக் காய்ச்சிப்
266
267
268,
269
270
27
272
273
* தாலநற்கட்டி - பனங்கட்டி.

வைத்திய விளக்கம்
பார்மெழு காம்ப தத்திற் பதனமாய் வடித்தா றாமுன் நேர்பெறு நால்வ ராக னரிடைகோரோ சனைத்தூள் தூவே.
தூவியே யோர்நாள் விட்டுத் துய்த்திடும் வகையைக் கேளு மேவுற வோர்க ரண்டி விடியற்கா, லத்தி லுண்டே பாவனை யாக விச்சா பத்தியத் துடனே யெண்ணெய் ஒவற மண்ட லந்தா னுண்டிட வொழியு நோய்கேள்.
மூலத்தில் வெட்டை பித்த முதிர்வயிற் றுக்க டுப்புக் காலனே ரென்பு ருக்கி கயம்பெரும் பாடு காந்தி மேலுநி ரிழிவு டற்புண் மிக்கவக் கரப்புண் போகும் வாலையா முடலுந் தேறும் வலுவுண்டா மிரும லும்போம்.
கண்முத லங்க மெல்லாங் கவின்பெறக் குளிரு மிக்க புண்கனைக் காய்ச்சல் மேகம் போய்விடும் பேதி யாகும் எண்ணுறு சிறுவ ராதி யெவர்களும் புசிக்க லாகும் தண்மைசே ரிதன்ற னாமஞ் சஞ்சீவித் தயில மாமே.
பிள்ளைகற் றாழைச் சாறு பேசிய விதியே விட்டு எள்ளலின் முன்னே சொன்ன வியல்பதாய்க் காய்ச்சி யுண்டால் பிள்ளைக ளாதி யாகப் பெரியவர் தமக்கு மாகும் விள்ளவே முடியா திந்த மேம்படு மவிழ்த நன்மை.
கயரோக நிதானம்
கண்டமு நெஞ்சுங் காய்ந்து கண்ணுமுட் குழியு நீடி அண்டிடு காலை மாலை யருஞ்சுரந் தோன்றிக் கூறும் மிண்டிய விருமல் மிஞ்சி வெகுநாளாய் நிற்கி லீது கொண்டிடு கயுரோ கந்தான் கூறுநன் மருந்து கேண்மோ.
சிகிச்சை
வருபரி பூர ணத்தை வழங்குசஞ் சீவி யோடு திருநிறை கடுக்கா யேநற் சீரக மாமிப் பேர்கள் மருவுசூ ரணத்தி னோடு சஞ்சீவித் தயில மற்றிவ் வரியநல் லவிழ்தத் தொன்றை யருந்துமண் டலத்துக் கம்மா.
மண்டல மருந்து கின்ற வகைகேளு சீனி சேர்த்தே உண்டவப் பத்து நாளுக் கொருமுறை வில்வா திப்பேர் கொண்டநற் றயிலம் வைத்து முழுகிடக் குறையும் பின்னர் அண்டியே நிற்கி னல்ல வவிழ்தத்தை யறைய லுற்றாம்.
சுயசிந்தாமணிநெய்
*கேள்சிறு கீரை சீத்ை கிளர்நெல்லி முசுமு சுக்கை தாளிவல் லாரை கையான் றகரை யாவரை மணித்தக் காளிது துளைப ருத்தி கற்றாழை துளசி யேமா தாளையே பிரமி சாத்தா வாரியோ ரிதழின் கஞ்சம்.
செங்கழு நீரி னோடு செய்யநில் லாம்பல் சீதம் தங்குதா மரைநற் றண்டிற் சார்கிழங் கிவைக டம்மிற்
274
275
276
277
278
279
280
28
282
*கேள்சிறுகீரை கீழ்காய்நெல்லியே என்றும் பாடம்.
31

Page 28
வைத்திய விளக்கம்
பங்கமில் சாற்ற னோடே பசுவின்பா லிளநீ ரொவ்வொன் றங்கொரு நாழி யாக வளவதாய்க் கூட்டிக் கொள்ளே.
அரியவிச் சாற்றி னோடே யறைநீற்றுப் பூசி னிக்காய்த் தருசாறு நான்கு நாழி தக்கநற் பசுவி னெய்யும் இருநாழி யாகக் கூட்டி யிசைபெரும் பாண்டத் திட்டு விரைவுட னடுப்பி லேற்றி வேர்வகை விளம்பக் கேளே.
வெட்டிவேர் சிறுகாஞ் சோன்றி மிளிர்கோரை கண்டங் காரி வட்டாடா தோடை தூது வளையிலா மிச்சை சிற்றா முட்டிநா யுருவி சீந்தின் முள்ளிநன் னாரி பேரா முட்டிகீழ் காயி னெல்லி மொழிகொடிப் பாலை யத்தி.
சிறுபூளை விண்டு காந்தி சேரோன்று கழஞ்சு நான்காய் மறுவின்றிக் கொண்டி டித்து வருபுதுப் பாண்டத் திட்டே நறும்புனல் படியி ரெட்டு விட்டிரு நாழி யாகக் குறுகிடப் பிழிந்த நீரைக் குணமதாய்க் கூட்டிக் கொள்ளே.
அருத்திசேர் சரக்கு நாகம் பூவுட னமரர் தாரு உரைத்தசீ ரகமி ரண்டோ டுயர்ந்தசிற் றேல மேபே ரரத்தைதேற் றாவின் கொட்டை யரியவெட் பாலை யேசிற் றரத்தைதிப் பிலியின் மூல மருஞ்சந்தஞ் சிறுதேக் காமே.
சாதிபத் திரியே தாளி பத்திரி கராம்பு மஞ்சள் ஒதவான் மிளகு கோட்ட முறுகூகை நீறு மாஞ்சில் தீதின்முப் பலைபே ரீஞ்சின் றிங்கனி யிருப்பைப் பூவும் ஏதின்முந் திரிகை தன்னி னிரும்பழ மிவைக ளெல்லாம்.
வகையொவ்வொன் றிருக ழஞ்சு வளம்பெறக் கூட்டிப் பின்னர் மிகையிலா திடித்துத் தெள்ளி விருத்தமாம் பாண்டத் திட்டே தொகுமீரெண் படிநீர் விட்டுச் சொல்லிரு படியாய்க் காய்ச்சித் தகுமுறை பிழிந்து கூட்டிச் சால்புடன் கொதிக்கச் செய்யே.
இப்படிக் கொதிக்கச் செய்தே யியல்பொடு நான்கா நாளிற் செப்பிய மெழுக தென்னுஞ் சீர்பறு பதத்தைப் பார்த்துத் தப்புநே ராம லொன்றுஞ் சால்வுற வடித்த பின்னர் மெய்படு சிறுசூ டான வேளையிற் குங்கு மப்பூ.
பச்சைக்கர்ப் பூர மிந்து பகர்கோரோ சனைதா னெல்லாம் நச்சியொவ் வோர்க ழஞ்சு நலமுறப் பொடித்து விட்டே அச்சமில் லாம லுண்டா லதனமா நன்மை சாரும் இச்சைய திவைகள் சேரா தியற்றினு மியல்ப தாமே.
வடித்திடு மூன்றா நாளில் வளம்பெறு கரண்டி தன்னால் எடுத்துநற் சீனி தன்னை யிசையனு பான மாகக் கொடுத்திடா யந்தி சந்தி கூறுமண் டலத்துக் காகும் படுத்திடு தொண்ணுாற்றாறு கயம்பாறு சலரோ கம்போம்.
ஆறுமே மூல வெட்டை யக்கரம் பாண்டு வீக்கம் ஊறுசேர் நீர்க்க டுப்போ டுட்டணங் கோழை தாகம்
32
283
284
285
286
287
288
289
290
29
292

வைத்திய விளக்கம்
பாறிடு மீழை யோடே பயித்தியம் பழஞ்சு ரம்போம் கூறிடு வழலைக் கட்டுக் குலையுநெஞ் சடைக்கும் வாதம்.
பகளிலிம் மருந்த ருந்தும் பத்துநாட் கொருக்கா னியும் நிகரிலா மருந்துண் ணாம னேர்பெறு சந்த னாதி தகைவிலாச் சிறிய சந்த னாதியே சிற்றா முட்டி புகரிலிவ் வெண்ணெய் மூன்றிற் புகலொன்றை யினிமை யாக
இயம்பிய முறைய தாக வேர்பெறச் சிரசில் வைத்தே நயம்பெற மூழ்க வேண்டு நவையிலா திந்த வண்ணம் வியந்திடு முனிவர் சொன்னார் விரும்பித னாம மோதில் கயந்தனைத் துரத்து கின்ற கயசிந்தா மணிநெய் யாமே.
நீரிழிவுக் குணம்
தாகமே யதிக மாகித் தளர்ந்துநா வுலர்ந்து மிக்க சோகமாய்க் கிறுகி றுத்துத் தொடர்ந்துகை காலுஞ் சோர்ந்தே ஏகமாய்ப் பகலு மல்லும் விடாதுநீ ரிறங்கு மன்றி மோகமாய் மழைப னிக்கு முதிர்ந்திறங் கிடுஞ்ச லற்தான்.
துனியுறக் களையுண் டாகுந் தோமில்போ சனம்வெ றுக்கும் நனிவயி றெரிவுண் டாகு நாட்கழிந் திடுகிற் றேகம் இனிவெளுத் தாளும் வற்று மிருசெவி யடைத்து நிற்கும் தினநலி சலரோ கத்தின் றீக்குண மிதுவென் றாரே.
சிகிச்சை
மிஞ்சுமு னிந்நோய் தீர விளம்புது மருந்து கேளு சஞ்சீவிச் சூர ணந்நோய் தணித்திடுங் கபாட மாத்திரை செஞ்சவே யனுபா னத்திற் சேர்த்தருந் திடுவாய் மூழ்கிற் பஞ்சசீ தத்தி னெண்ணெய் பரிவுடன் வைத்து மூழ்கே.
மறுவிலிம் மருந்தி னாலே மாறிடு மாறா தாகில் உறுசல ரோகத் தாலே யுணர்வழிந் திட்ட பேர்க்குக் குறைவற விரணந் தீர்த்துக் குற்றுயிர் தரும ருந்தொன் றறைகுவ னதனை யாரு மன்புட னினிது கேண்மின்.
சலரோக சஞ்சீவிநெய்
அத்தியோ டுதிர வேங்கை யாவரை யரசு வெள்வேல் இத்திபூ வரசால் பூலா விருவிளா வொடுவ டக்கி நத்தலில் விடத்தனாவல் நறுவிலி * றாஞ்சி யேசெங் கத்தாரி மருதின் பட்டை கருதொரு பலம்வ கைக்கே.
இடியெல்லாந் தூள தாக்கி யிருபத்து நான்காய்ச் சொல்லும் படிபுனல் விட்டி ரண்டு படியாகக் காய்ச்சி நன்காய் வடிகொண்ட பின்னர்க் கேளு வல்லாரை பொன்னாங் காணி கடிமுசு முசுக்கை யேகீழ் காய்நெல்லி நெருஞ்சி கையான்.
ஓரிதழ்க் கஞ்சத் தோடே யுற்றவா வரையி வற்றின் சீரிய விலைவா ழைப்பூச் செம்பரத் தம்பூ சாத்தா
293
294
295
296
297
298
299
300
30
* றாஞ்சி - கடலிறாஞ்சி,

Page 29
வைத்திய விளக்கம்
வாரிசெங் கழுநீ ராம்பல் வாழையே கருணை யல்லால்
கோரைதா மரைநி லத்திற் கொழும்பனை யிவற்றின் * கந்தம்.
வெள்ளரி நெல்லி தாழை விரும்புமா தளையி வற்றின் கள்ளமில் காய்கற் றாழை கரும்பொடு கோவை சீந்தில் தள்ளருந் தண்டி வற்றின் சாறுக ளிளநீ ரான்பால் மெள்ளவே வகையொவ் வொன்று விளம்பரை நாழியாமே.
வெட்டி தூ துளைநன் னாரி யிலாமிச்சு வில்வஞ் சிற்ற மட்டியே யாடா தோடை வண்0சாயஞ் சிவதை பேர மட்டிநா யுருவி யல்லான் மன்னிய நத்தைச் சூரி தட்டிலா விவற்றின் வேருந் தகுவிளா நற்பே ரீஞ்சு.
முந்திரி யிவற்றி னல்ல முதிர்ந்திடு பழத்தி னோடு நந்துமுள் ளிலவி லுற்ற நறும்பிசின் வகையொவ் வொன்றும் சிந்திடா நாற்க ழஞ்சு சிற்றேலங் கன்னார் கோட்டம் கந்தமார் சாதிக் காய்பூக் களங்கமி னாகம் பூவும்.
திரிகடு கசம தாகஞ் செவ்வள்ளி சிற்ற ரத்தை கருதிரு சீர கந்நற் கராம்பொடு கடுக்காய்ப் பிஞ்சு தருசீன மிருப்பை யின்பூச் சாதிபத் திரியும் வண்பொன் னரிதாரஞ் சாதி லிங்க மதிமது ரம்வேம் பாடல்.
அரியசந் தனந்தக் கோல் மடவிகச் சோலம் வாசம் மருவில வங்கப் பட்டை வகையிரு கழஞ்சு தூக்கிப் பரிவுற வடித்தீ ரெட்டுப் படிபுனல் விட்டு வற்றி இருபடி யாகக் காய்ச்சி யெல்லா மொன்றாகச் சேரே.
ஆவினெய் யிரண்டு நாழி யதுவுஞ்சேர்த் தடுப்பு லேற்றித் தாவற மூன்று நாளுந் தழலிடைச் சிறுகக் காய்ச்சி மேவுறு நான்கா நாளில் மெழுகெனும் பதத்தின் முக்கட் தேவனை வணங்கி நல்ல தினத்தினில் வடித்தா றாமுன்.
குங்குமப் பூவிந் துப்புக் கொளுங் கோரோ சனையி னோடே புங்கநல் வாசப் பச்சைப் பூரமே யோர்க ழஞ்சாய் மங்குறா வகைது ளாக்கி மாசுதீர் நெய்க்கு விட்டே பொங்கிய தினந்தான் மூன்று போயபின் புசிக்கக் கேளே.
மருவுறச் சீனி சேர்த்து மண்டலங் கரண்டி யுண்டாற் பரிசல ரோக மெல்லாம் பறந்திடு மென்பு ருக்கி பிரமேக மிருபத் தொன்று பெரும்பாடு கல்ல டைப்புக் கிருச்சினம் வெள்ளை வெட்டை கிறுகிறுப் புடற்பு னின்னும்,
கயரோக மூல ரோகங் கைகாலை முடக்கும் வாதம் சயமுறு கோழை யாவுந் தவிர்ந்திடு மாத ருக்கு நியமமாய் வரட்சி நீங்கி நிகரிலாக் கருப்ப முண்டாம் அயர்வுட னிருது வில்லா வரிவையு மிருது வாவாள். சதிசல ரோகந் தீர்க்குஞ் சஞ்சீவி நெய்யி தன்பேர் பதனமா யந்தி சந்தி பத்துநா ளருந்தி யப்பால்
* கந்தம் - கிழங்கு. 0 stub - Frfu (36ft.
34
302
303
304
305
306
307
308
309
310
31

வைத்திய விளக்கம்
பதினோ ராநாள் விட்டருஞ் சந்த னாதி அதிசிறு சந்த னாதி யமுதசா கரமா மெண்ணெய். 312
சொல்லுமிவ் வெண்ணெ யொன்றைச் சுகம்பெற வைத்து மூழ்கி வெல்லவே மற்ற நாளின் மீளவு நெய்பு சித்து வல்லையி லிந்த வண்ண மண்டல முண்டா யானால் ஒல்லையிற் சலரோ கம்போ மொடுங்கிய மேனி தேறும். 313
பஞ்சசீத எண்ணெய்
*பஞ்சசீ தத்திற் சாறு பாலெண்ணெய் யிளநீ ரெல்லாம் மிஞ்சவொன் றொள்வோர் நாழி விட்டுச்சீரகமி ரண்டு செஞ்சுமுப் பலைக டாமுஞ் சேரொன்று கழஞ்ச ரைத்துக் கொஞ்சமாய் மூன்று நாளுஞ் சிறுகொதி கொதிக்க விட்டே. 34
மற்றநாள் வடித்து வைத்து மூழ்கினால் வரட்சி மேகம் உற்றகண் ணெரிவு மூல ரோகங்கை யெரிவு தாகம் முற்றுங்கா லெரிவு பித்த முதலிய வேகுங் குற்றம் அற்றநற் பஞ்ச சீத வெண்ணெயென் றறையி தன்பேர். 35
வில்வாதி யெண்ணெய்
வில்வவேர் பட்டை போக்கி வயிரத்தை விரைந்தெ டுத்தே மல்லல்சேர் மலாக்காச் சந்தம் வகையொரு பலமே தூக்கி மெல்லிய தூள தாக்கி மேவவெண் படிநீர் விட்டுச் சொல்லவோர் படியாய்க் காய்ச்சித் துகளற வடித்த தோடே. 316
பலைமூன்று கடுகு மூன்று பகர்ந்தசி ரகமி ரண்டு நலவகை கழஞ்சி ரண்டு நன்றாக வரைத்துச் சேர்த்தே 0திலவெண்ணெய்படி தான் விட்டுத் திரிநாளுங் கொதிக்கச் செய்து வலமுறை நான்கா நாளில் வருமெழு கெனும்ப தத்தில். 317
வட்டிலிற் றாழம் பூவின் மடலினைப் பரப்பி நன்றாய்க் கிட்டியிட் டந்த மாக்கிக் கிளர்ந்திட வடித்த வெண்ணெய் தட்டில்வில் வாதி யென்று சார்ந்தநற் பெயருஞ் சாற்றித் திட்டமாய் வைத்து மூழ்கிற் றீர்ந்திடும் வியாதி கேளே. 318 தீருமே கைகால் காந்தல் செறிந்திடு மிருமல் பித்தம் பேருமே மேக வெப்புப் பெருகிய கயமே காந்தி சாருறு கபால வெப்புத் தழன்மூல மற்று நோய்கள் சோருமே யென்று சொன்னார் துகளறு முனிவர் தாமும். 319
தாழங்கா யெண்ணெய்
நன்னாரி கோரைக் கந்தந் நவிலிலா மிச்சு வெட்டி மன்னுமீர் முட்டி மேவும் வளம்பெறு வேரி னோடு பன்னுமீ ரரத்தை தேவ தாருபச் சிலைகச் சோலம் வன்னமார் மாஞ்சி லோடு மரமஞ்சள் மஞ்சள் கோட்டம். 320
சந்தனந் நறும்பி சின்*னற் சதகுப்பை சிற்றே லந்தான் அந்தமா மதுர மெல்லா மாம்வகை கழஞ்சி ரண்டாய்
#பஞ்சசீதம் - பொன்னாங்காணி, சிறுகீரை, ஆவரை, சீந்தில், வல்லாரை என்பன. 0திலவெண்ணெய் - எள்ளெண்ணெய். * நார் - என்றும் பாடம். - நார் = கல்நார்.
35

Page 30
வைத்திய விளக்கம்
வந்திடக் கூட்டி நன்றா யிடித்துவன் பாண்டத் திட்டே உந்துநீர் படியெட் டிட்டே யோர்படி யாகக் காய்ச்சி.
வடித்தெடு நீரி னோடே வளர்தரு தாழம் பிஞ்சை இடித்தெடு சாறி ரண்டு நாழியும் பசுப்பா னாழி வடுத்தவி ரெள்ளி லெண்ணெய் வருமொரு நாழி கூட்டிப் படிக்குநூன் முறைவ ழாமற் பகர்தரு கஷாயஞ் செய்தே.
செப்பிய மூன்று நாளுஞ் செவ்வையாய்க் கொதிக்கச் செய்தே அப்புற நான்கா நாளி லருமெழு கெனும்ப தத்தில் துப்புறு தாழம் பூவின் றுகளறு மடலை வட்டில் ஒப்புறப் பரப்பிக் கிட்டி யுறப்பூட்டி வடித்தந் நேரம்.
இந்துப்பீர் கழஞ்சு தூளா யியல்பொடு தூவி யேபின் அந்தமாய்ச் சிரசில் வைத்தே யடுத்தநாட் டானும் வைத்துப் புந்தியாய் மூழ்கி னாக்காற் போகுநோய் புகலக் கேளு முந்துமுட் காய்ச்சல் கைகால் முடக்குக்கண் ணெரிவு மூலம்.
இருமல்கண் பசாடு மேக மிருபத்து நான்குங் கைகால் எரிவொடு கயங்க பால மியம்பரும் வரட்சி யாதி இரவிமுன் பணிபோற் போகு மியம்பலா மிதன்றன் பேரைச் சருவிய நோய்க டீர்க்குந் தாழங்கா யெண்ணெ யென்றே.
சிற்றாமுட்டி யெண்ணெய்
பாரிலுள் ளோர்கள் போற்றும் பகர்சிற்றா முட்டி யெண்ணெய் ஏர்பெற யாமு ரைக்க வினிதுட னெவருங் கேண்மின் சோர்விலாச் சிற்றா முட்டி தோற்றுவேர்த் தோல்ப லந்தான் ஒரொருபத்து வாங்கி யுறசலம் பதக்கு விட்டே
இருபடி யாக வற்ற வெரித்ததைப் பிழிந்த சாற்றோ டரியவெள் ளெண்ணெ யான்பா லறையுநாய்ப் பாகற் சாறு தருசாத்தா வாரிச் சாறு வெண்சீந்திற் றண்டிற் சாறு கருதிய தெங்கி லேநீர் காண்கிற குரும்பைச் சாறு.
வகைபடி யொன்றெ டுத்து வன்புதுப் பாண்டத் திட்டே தகவுட னடுப்பி லேற்றிச் சாற்றுசிற் றரத்தை * முக்காய் புகரில்சந் தனம்பீ நாறி புகுமர மஞ்சள் குக்கில் தகுமதி மதுர மோடு சார்ந்திடு மிவையொவ் வொன்றும்.
ஓரிரு கழஞ்சு தூக்கி யோதுநாய்ப் பாகற் சாற்றில் சீருற வரைத்து முன்னர்ச் செப்பிய கஷாயந் தன்னில் ஏருறக் கரைத்தே பின்ன ரியம்புநூன் முறைவ ழாமல் பாரொரு மூன்று நாளும் பக்குவ மாகத் தானே.
அளவதா யனலா றாம லாகச்செய் தடுத்த நாளில் உளமகிழ் மெழுக தென்றே யோதிய பதத்திற் காய்ச்சித்
தெளிவதாய் வடித்த வெண்ணெய் செய்திடுங் குணங்களெல்லாம்
எளிதல்ல வுரைக்கத் தேவ ரியம்புவ ரிதனின் மேன்மை.
321
322
323
324.
325
326
327
328
329
330
* முக்காய் - கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்.
36

வைத்திய விளக்கம்
பிதற்றிடும் பயித்தி யத்தாற் பேய்கொண்டு திரியும் பேர்க்கு விதித்திடிவ் வெண்ணெய் தன்னை மிகாவகை சிரத்திற் றப்ப மதித்துவைத் தடுத்த நாளு மளவொடு வைத்துக் கண்ணுட் பதித்திட விட்டு நெல்லிக் காய்ச்சிறு பயற ரைத்தே.
எலுமிச்சம் புளியுங் கூட்டி யினிமையாய்த் தப்பி மூழ்கி நிலைமையாங் குளிர்மை யுற்ற போசன மருந்த நீங்கும் உலைவுறு மலட்டு பித்த மிதன்பெய ரொருகாற் கூறில் விலகுமே சுடரைக் கண்டு விட்டோடு மிருளே போல.
மூலங்கண் வலிக பால முதிர்தரும் வரட்சி தொய்வு மேலுறு பயமே யாதி விளம்பிடு ரோக மெல்லாம் சீலமா மிதன்பேர் சொல்லத் தீர்ந்திடும் வைத்து மூழ்கக் கோலமார் குணத்தை யெம்மாற் கூறுதற் கெளிய தாமோ.
அமுதசாகரவெண்ணெய்
சந்தனம் பலமி ரண்டு சார்வில்வ வேருந் தோனித் தந்தநல் வயிரந் தானு மறையிரு பலமே சீவிச் சிந்திடாதிடித்துத்தெள்ளிச் செவ்வையாய்ப் புதுப்பாண்டத்தில் நந்தலி னான்கு நாழி சலம் விட்டு நலம தாக,
அடுப்பினி லேற்றிக் காய்ச்சி ய..தொரு படியாய் வற்ற வடித்திடு நீரிற் சேர்க்கும் வகைகேளு மகிழ்ந்து நீயும் நடந்திரு முட்டி வெட்டி நன்னாரி யிலாம்மிச் சோடே அடுத்திடு மமுக்கி ராவே ராம்வகை நாற்க ழஞ்சே,
சேர்த்திடு நவபாண் டத்திற் றிருத்தமா யிட்டு நீரும் பார்த்திரு நான்கு நாழி பழுதின்றி விட்ட வித்துப் பேர்த்தொரு படியாய் வற்றப் பிழிந்துமுற் கஷாயத் தோடே சேர்த்திரு சீர கந்தான் செப்புமீ ரரத்தை யோடே.
திரிபலை கடுகு மூன்று செஞ்சந்தந் தேவ தாரு வருசமுத் திராப்பேர்ப் பச்சை வளர்சிறு தேக்க தெல்லாம் தரும்வகைக் கிருக ழஞ்சு தானெடுத் திடிபாண் டத்தில் வரைவுட னிட்டு நீரும் வாரெட்டுப் படிய தாமே.
ஒருபடி யாகக் காய்ச்சி யுற்றதைப் பிழிந்து முன்னர்த் தருகஷா யத்திற் கூட்டிச் சாறுகேள் பொன்னாங் காணி சருகிலா வரை மொசுக்கை தந்தவிம் மூன்றிற் சாறு திருநிறை சீந்திற் றண்டு செப்பிய சாத்தா வாரி.
தெங்கினல் லிளநீர் தோன்றும் பருவத்திற் குரும்பை செப்பும்
மங்கலிற் றாழம் பிஞ்சோ டருநெல்லிக் காய்சம் பீரந் தங்கிய பழமே பிள்ளைக் கற்றாழை தாளிச் சாறும் பங்கமில் பசுவின் பாலு மிளநீரும் பகரொவ் வொன்று.
காற்படி யாகக் கூட்டிக் கழறுமுற் கஷாயத் தோடே தேற்றமாய் விட்டெள் ளெண்ணெய் சேரொரு படியே மூன்று பாற்படு நான்கு நாளுஞ் சிறுகொதிப் பருவ மாகத் தோற்றிடச் செய்து நான்கா நாளினிற் றுகளு றாமல்.
37
33
332
333
334
335
336
337
338
339
340

Page 31
வைத்திய விளக்கம்
எரித்துநன் மெழுக தென்றே யியம்பிய பதத்தி லேதான் மருக்கிளர் தாழம் பூவின் மடல்வட்டி றனிற்ப ரப்பி நருக்கியே வடித்த வெண்ணெய் நவிலுநன் முறைய தாகச் சிரத்தினில் வைத்து மூழ்கத் தீர்ந்திடும் வியாதி யெல்லாம். கயரோக மூல ரோகங் கபாலமே சலரோ கம்பின் நயனமா ருரோக மோடு நவின்மேக ரோகந் தாகம் பயமான வெட்டை ரோகம் பயித்திய முடல்வ ரட்சி தயவிலாப் பற்குத் தோடு சாற்றிடு மனேக நோய்கள். இரிந்திடுங் கோடைக் கீதே யல்லது சுகத்தி னோடு வருமின்ப முற்று நல்க வளமுள மற்றொன் றில்லைப் பொருந்திய மழைப னிக்குப் * பொருத்தியே யிருக்க லாகா அருஞ்செய லெண்ணெய் நாம மமுதசா கரமா மன்றே.
சன்னிவாதசுரத்திலெண்ணெய்
எருக்கலை வேரின் சாறு நானாழி யிலைப ருத்தி நருக்கிய சாறு மூன்று நாழிநற் சம்பீ ரத்தின் விரைக்கனிச் சாறு தானும் விளம்புமொன் றரையா நாழி சுருக்கமி லெள்ளி லெண்ணெய் சொல்லொரு நாழி யாமே.
சன்னிய ணாய னொச்சி சாரணை மாவி லங்கை நன்னாரி குமிழ் கிரந்தி நாயன் #சாய்க் கோரை வட்டுப் பன்னைநா யுருவி மேல்லி Aபரிவாலி சிவனார் வேம்பு கன்முரி சவுரி தூதி திராய்கான்றை நத்தைச் சூரி. இருவேலி யமுக்கி ராவீர் முட்டி0லா மிச்சு வாயே பெருமருந் தாம ணக்குப் பெருமயிற் குரத்தி னோடே வருமாடா தோடை வேர்கள் வகைக்குநாற் கழஞ்சு கூட்டித் தெரிவுற விடித்துத் தெள்ளிச்சேர்புதுப் பாண்டந் தன்னில். ஈரெட்டுப் படிநீர் விட்டே யியம்பொரு படியாய்க் காய்ச்சிச் சீரிட்டு வடித்தெ டுத்துச் செப்புமுற் கஷாயத் தோடே பேரிட்ட சரக்குச் சொல்வோம் பிழையிலாக் *கடுகு மூன்று நேரிட்ட சாதி யின்காய் நிகழ்த்துசீ ரகமி ரண்டே.
வசுவாசி கராம்பு கோட்டம் வானவர் தாரு வுள்ளி அசமோத மீர ரத்தை யகிலில வங்கப் பட்டை வசம்பேலங் கடுகு ரோணி மஞ்சள்பச் சிலைவெ ளுத்தற் பிசினதி மதுரஞ் சாளி பெருமர மஞ்சள் சந்தம்.
வெந்தயங் கணித வேதி விளாலெனு மரிசி மேன்மை தந்தவா லுளுவை யோடு சார்சத குப்பை யெல்லாம் சிந்திடா வகையொவ் வொன்று சேரொரு கழஞ்சு தூக்கிப் புந்தியா யிடித்துத் தெள்ளிப் புதுப்பாண்டந் தன்னி லிட்டே. புனல்படி யீரெட் டிட்டுப் புகவொரு படியாய்க் காய்ச்சி நினைவதாய் வடித்து முன்னர் நேர்கவுா யத்திற் கூட்டிக் க்னமுட னடுப்பி லேற்றிக் களங்கின்றி யினிதாய் மூன்று தினமுமே கொதிக்கச் செய்து செப்பிய நான்கா நாளில்.
341
342
343
344
345
346
347
348
349
350
*பொருத்தியிருத்தல் - தலைக்குத்தைலம்வைத்து நெடுநேரமிருத்தல். #சாய்க்கோரை -
சந்தனக்கோரை. மேல்லி . சிற்றாமல்லி. Aபரிவாலி - குதிரைவாலி. உவாய் எனப் பிரிக்க, *கடுகு மூன்று . சுக்கு, மிளகு, திப்பிலி.
38
0இலாமிச்சு -

வைத்திய விளக்கம்
வற்றிட வெரித்து நன்றாய் வருமெழு கெனும்ப தத்திற் சற்றுமே தவறா வண்ணஞ் சடுதியாய் வடித்திந் துப்புச் சொற்றவோர் கழஞ்ச ரைத்துத் தூவிமேற் பொடியாய்ப்பின்னர் உற்றநற் பாண்டந் தன்னி லுவந்துவை காற்று றாமல்.
வைத்துநாண் மூன்றொ டொன்றாய் வருஞ்சன்னி வாதத் திற்கு மெத்திடா தற்ப மாக மிருதுவாய்ப் பொருத்த நீங்கும் உய்த்திடு பழஞ்சு ரத்தோடு றுமுறைச் சுரத்தி னுக்கும் வைத்திட வேகு மென்பர் மாமுனி வோர்க டாமே.
காதடைப் பொடுகண் குத்துக் கடுமையார் காதிற் கட்டு வேதனை செய்யா தோடும் விளம்பிய முறைய தாகக் தீதின்றிக் காதுள் விட்டுச் செவ்விதா யடைத்தல் வேண்டும் ஏதில்பேர் சன்னி வாத சுரத்தெண்ணெ யென்பர் மாதோ.
சிறு சந்தனாதியெண்ணெய்
வில்வவேர் பட்டை போக்கி விரைகமழ் மலாக்காக் கெந்தம் கல்லியோர் பலம்வ கைக்குக் காய்ச்சுநீர் விட்டெட் டொன்றாய் நெல்லிக்காய் சம்பீ ரத்தி னேர்கனி முசுக்கை மூன்றின் நல்லசா றான்பா லெண்ணெய் நவையில்செவ் விளநீ ராமே. சேர்த்திடு வகையோர் நாழி திரிகடு கம்வ கைக்குக் கூர்த்திட வைங்க ழஞ்சு கொண்டுகோ வின்பா றன்னை வார்த்தரை மைபோ லெல்லா மருவிடக் கலக்கி யொன்றாய்ப் பார்த்துநீ மூன்று நாளுஞ் சிறுகொதிப் பருவ மாக. இட்டபி னான்கா நாளி னியல்புள மெழுக தென்னும் முட்டிய பதத்திற் காய்ச்சி வடித்ததை வைத்து மூழ்கில் சுட்டிடு பித்தங் காந்தி துன்னிய விருமல் மேகம் கெட்டிடுங் கபாலக் குத்துக் கிளர்கண்ணில் வலியும் புண்ணும். திகழுமிவ் வெண்ணெய் தன்னைச் சிறுசந்த னாதி யென்பர் மகிழ்கோரோ சனையே குங்கு மப்பூவே புனுகே யிந்து புகழ்பச்சைக்கர்ப்பூரந்தான் பொடித் தெண்ணெய் வடித்தநேரம் இகழ்விலா திட்டு வைத்து மூழ்கவே யினிய மேன்மை.
பெரிய சந்தனாதியெண்ணெய்
மிக்கசந் தனமோர் பத்துப் பலமெலி தாகச் சீவித் தக்கநற் பாண்டத் திட்டுச் சலமுப்பத் திரண்டு நாழி ஒக்கவே விட்டு வற்றச் *சோடசத் தொன்றாய்க் காய்ச்சித் தக்கோல மிளகு கோட்டஞ் சமுத்திராப் பச்சை யேலம்.
கார்ப்புகா வரிசி கோட்டங் கொத்தங் 0கஸ்தூரி மஞ்சள் சீரக மிரண்டு சுக்குச் சிறுதேக்குச் சிறுநா கம்பூ சார்மிரு தாரு சிங்கி தக்ககற் கடக சிங்கி பாரில் வங்கப் பட்டைபத்திரி கூகை நீறே.
சாதிப்பூத் தேவ தாரு சடாமாஞ்சில் செண்ப கப்பூ சாதிக்காய் பலையோர் மூன்று சாற்றதி மதுர மோடு கோதற்ற தேற்றாக் கொட்டை கூறுவான் மிளகி தெல்லாம் ஒதநல் வகைக ழஞ்சொன் றோருப்பட விடித்தி ரெட்டாம்.
351
352
353
354.
355
356
357
358
359
360
*சோடசத்தொன்று - பதினாறிலொன்று. 0கொத்தம் - கொத்தமல்லி,
Y Ο

Page 32
வைத்திய விளக்கம்
படிசலம் விட்டுப் பின்னோர் படியாகக் காய்ச்சி யந்த மடிவிலாக் கஷாயந் தன்னில் வார்த்திலா மிச்சு வில்வம் ஒடுகன்னார் சிற்ற மட்டி யோங்கிய பேர மட்டி அடையு'நா ரங்கம் வெட்டி வேரகி லத்திப் பட்டை.
மெல்லிய பாதி ரிப்பூ வில்வப்பூக் குசும்பைப் பூவே சொல்கரி சாலை யோடு துளகியே கீழ்காய் நெல்லி வல்லாரை முசுமு சுக்கை வன்கொட்டாங் கரந்தை சீதை மல்குநெய்ச் சுண்டி யோடு வளர்ந்தவெள் ளறுகு தானே.
சிறுகுமிழ் நெருஞ்சி யெல்லாஞ் செப்பிடு சமூல மாகும் மறுவில்கற் றாழை சீந்தில் வருதண்டு சாத்தா வாரி குறைவில்செங் கழுநீ ரோடு கொளுநிலப் பனையே யாம்பல் அறையமுக் கிரவு கோரை யாமிவை தங்கி ழங்கு.
மாதுளம் பழத்தி னோடு வளருமுந் திரிகை மேவும் தீதிலாப் பழமுஞ் சேர்த்துச் செவ்வையா யிடித்துக் கொண்டே ஒதநா னான்கு நாழி யொண்சலம் விட்டுப் பின்னர்ப் போதொரு படியாய்க் காய்ச்சிப் புகலுமக் கஷாயத் தூற்றி.
பாலுட னிளநீர் தானும் பகரோவ்வோர் நாழி விட்டு மேலதா மெள்ளி லெண்ணெய் மிகுமிரு நாழி சேர்த்துச் சீலமாய் மூன்று நாளுஞ் சிறுகொதி கொதிக்க விட்டே ஏலவே மறுநாள் வட்டி லினிற்றாழம் பூப்ப ரப்பி.
உரைமெழு காம்ப தத்தி லுறுதியாய் வடித்துக் கொண்டு வருகோரோ சனையிந் துப்பு வளம்பெறு குங்கு மப்பூப் பெருகுகள் தூரி யோடு பேசிடுஞ் சவாது தானும் தருவகைக் கொருக ழஞ்சு தானதிற் பொடித்துப் போடே.
சிரத்தினிற் பொருத்தி மூழ்கச் செறிசல ரோக மேகம் வருத்திடு மிருமல் மூல வரட்சியே கபாலம் பற்குத் துரைத்தகண் கைகா றம்மி லுற்றிடு மெரிவு தானும் துரத்திடுங் கயங்க ளாதி தொலைந்தோடு நொடியி லம்மா.
பெருஞ்சந்த னாதி யென்று பேசுமிவ் வெண்ணெய் மாரி பொருந்திய பனிகா லத்திற் பொருத்திவைத் திருக்க லாகா திருந்திறற் குமாரர்க் கன்றி யேனையோர்க் காகா தென்று விரிந்திடு பொதிகை மேவும் விண்ணவ னுரைத்த வாறே.
தீச்சுட்ட புண்ணிற்கு
எள்ளெண்ணெய் வெற்றிலைச்சா றேற்றதோ ரளவாய்ப்பாண்டத் துள்ளிட்டவ் விலைவெ டிக்கு முறுபதந் தனிலி றக்கி மெள்ளவே யாறும் போது வெள்ளைக்குந் திருக்கத் தூளை அள்ளிட்டுப் பூசு வீரே லக்கினி சுடுபுண் ணாறும்.
காதிற்குத்து-அடைப்பிற்கு பூமத்தங் காய்க்குள்வித்தைப் போக்கிவேப் பெண்ணெய்விட்டே தோமிலா வலம்பு ரிக்காய் சுக்குள்ளி மிளகு தானும்
36
362
363
364
365
366
367
368
369
*நாரங்கம் - நாரத்தை.
40

வைத்திய விளக்கம்
தேமுறு கடுகி னோடு வசம்பிவை தூளாய்ச் செய்தே யேமுறக் காய்ச்சிக் காது விடக்குத்தோ டடைப்புந் தீரும். 370
ஷ-வேறு புங்கம்வேர் துருவி நன்றாய்ப் பிழிந்தபால் தெங்கின் காய்ப்பால் சிங்கா தோரளவாய்க் கூட்டிச் செவ்வையாய்க் காய்ச்சி யெண்ணெய் அங்குற வடித்தே பின்னு மவ்வெண்ணெய் தன்னைக் காய்ச்சிப் பொங்கிய பதத்தைக் கேளு போட்டவெற் றிலைவெ டித்தால். 37
எடுத்துவைத் திளஞ்சூ டாக வியம்பிய துருசு துத்தம் விடுத்திடு வலம்பு ரிக்காய் வெள்ளைக்குந் திருக்கத் தூளை அடுத்தவவ் வெண்ணெய் தன்னுட் போட்டதை யன்பாய்க்கா தூள் விடுத்திடப் புண்ணினோடு மேவுகுத் தடைப்பும்போமே. 372
ஒடுவெண்ணெய் துத்தங்குந் திருக்கங் குக்கி றுரிசுடன் காசுக் கட்டி சித்திர மூலி சூதஞ் சேர்வகை யரைக்க ழஞ்சு
மத்தஞ்சா றேமு ருக்கின் வளிலைச் சாற்றி னோடே அத்தில்வே ரவித்தெ டுத்த கஷாயம்விட் டரைத்தப் பின்னர். 373
புங்கம்வே ருடனே தெங்கின் காய்ப்பூவுஞ் சரியெ டுத்தே அங்கையாற் பிழிந்தப் பாலை யடுப்பேற்றிக் காய்ச்சி யெண்ணெய் தங்குகாற் படியெடுத்துத் தவறின்றி யிதிலே சேர்த்துத் துங்கமாய்க் கலக்கிக் காய்ச்சிச் சோர்வினற் பதத்தைப் பாரே. 374 வெற்றிலை வெடிக்கு மந்தப் பருவத்தில் விரைந்து தானே உற்றதை வடித்துப் பின்னு முறுசிறு சூடாய்ச் செய்தோர் அற்பநற் செவிக்குள் வார்க்க வடைப்புடன் காதிற் குத்துப் பற்றிடு வீக்கங் கட்டுப் பகர்காதி லொடுப்பு னெல்லாம். 375 மாறுவ தன்றிப் பின்னும் வளுத்திடு மனேக மான வேறுபுண் டானு மாறும் விளம்புமிவ் வெண்ணெயைப் போற் தேறுகா துறுபி னிக்குத் திறமான மருந்தொன் றில்லைக் கூறோடு வெண்ணெ யென்று குணமாக விதன்பே ரோதும். 376 இயங்கம்வேர்த் தைலம் இயங்கம்வேர் காற்று லாங்கொண் டிடித்திரெண் படிநீர் விட்டுத் தயங்கிரு படியாய்க் காய்ச்சித் தவறின்றி வடித்த தோடே நயங்கொளொள் ளெண்ணெய் ரண்டு நாழி சேர்த் தரு"ம ரீசம் வயங்கொளுங் கரிய சீரம் வகைபல மொன்று தூக்கே. 377 தூக்கியே கஷாயந் தன்னாற் றுகளற வரைத்துச் சேர்த்துத் தாக்கிடு மடுப்பி லேற்றித் தவறின்றி யெரித்துக் காய்ச்சி
ஆக்குநன் மெழுக தென்னு மரும்பதத் தினில்வ டித்தே ஊக்கமாய் விரேச னஞ்செய் துடறனிற் பூசுங் காலை. 378
குத்துவிற் புருதி சூலை குட்டஞ்செங் கரப்பன் வாதம் மத்தமார் கற்க ரப்பன் வலிவண்டு கடிகி ரந்தி மெத்துசில் விஷஞ்சி ரங்கு வெய்யதா நோய்க ளெல்லாம்
சத்துறு மியங்கம் வேர்நற் றைலத்தாற் றணிந்து போமே. 379
*மரீசம் . மிளகு,
41

Page 33
வைத்திய விளக்கம்
அடக்கமெழுப்பித் தைலம் இரதங்கெந் தகம்வ சம்போ டினியசா திலிங்க முள்ளி திரிகடு பெருங்கா யந்நற் சித்திர மூலி யெல்லாம் வரிசையாய்த் தூள தாக்கி வஸ்திரந் தனிற்கள் விப்பால் பரவிட்த் தோய்த்துத் தூளைப் பான்மையா யதிற்ப ரப்பி.
தடிதனிற் சுருட்டிக் கட்டி வேப்பெண்ணெய் தன்னிற்றோய்த்துத்
தடையின்றி யெரிக்கச் சிந்துந் தைலத்தை தலையில் வைக்க
விடம்வலி புடைய னாகம் வெங்கடி தன்னா லான்மா அடங்கியே சோம்பி னாலு மாவிமீண் டுய்வ தாமே.
கோதாரிக் கழிச்சல் சன்னி கொடுவலி யேர்ப்புச் சன்னி வாதத்தான் மூடு சன்னி வலிசன்னி முதலாச் சொல்லும் தீதுசே ரிவைக ளெல்லாந் தீர்ந்திடு மிதற்குப் பேர்தான் ஏதத்தைச் செய்ய டக்க மெழுப்பிடுந் தைல மென்னே.
பெருவியாதிக் குணம்
கருதிய பெருவி யாதி கைகளிற் கால்க டம்மில் வருமரு விரல்க டோறும் வகுக்கரி தாய்வெ டித்தே தருபுண்க ளாகி நாளுந் தான்குறைந் தளவிற் குத்தோ டருகலில் விரண் முண்டா மறைகுது மருந்து கேண்மோ
பெருரோகக்குடோரித் தைலம்
எட்டிமா விலங்கை வேம்போ டிலவு°பூ வரச பூழிஞ்சில் இட்டமா முருங்கை முள்ளி னிலவுநற் பறங்கி தன்னிற் பட்டையொவ் வொன்று நன்றாய்ப் பகர்பல மொன்று கூட்டித் தட்டிலா வேரு ரைப்போ மெருக்கலை சதுரக் கள்ளி.
சாறாணை நத்தைச் சூரி தயிர்வேளை காவி ளாயே கூறுபூ மத்தை குன்றி கொடுவேலி சிவனார் வேம்பு தேறிய வியங்கொவ் வொன்றுஞ் சேரரைப் பலம தாக மாறிலா திவற்றை யெல்லாம் வளம்பெற விடித்த பின்னர்.
அருநவ பாண்டத் திட்டே யறுநான்கு படிநீர் விட்டு வருமிரு படியா யட்டு வளமுடன் பிழிந்து விட்டே உரைநிம்ப மாவி லங்கை யுற்றபு மத்தை யோடு
தருமுருக்0 கிலைநல் வேளை தகுமிவை சாறோவ் வொன்று.
அரைநாழி யாய்ப்பி பூழிந்தே யக்கவுா யத்திற் சேரும் நிரைபெறு சரக்கு வெள்ளைப் பாஷாண நிறுவி டம்பின் வருமிரு நிமிளை யோடு மனோசிலை யிதரந் துத்தம் துருசுகுந் திருக்க மஞ்சள் சொல்திரி கடுகே யுள்ளி.
பெருங்காயம் வசம்பி னோடு பெருமெட்டி யழிஞ்சின் மத்தம்
380
38
382
383
384
385
386
387
பருங்கஞ்சா விவற்றின்கொட்டை பகர்ந்தசேங் கொட்டையொவ்வொன்
றொருங்குடன் கழஞ்சு தானு மொன்றள வாகக் கூட்டி நருங்கவே யரைப்ப தற்கு நன்முறை நவிலக் கேளே.
கொடிக்கள்ளி சதுரக் கள்ளி கூறெறக் ഗ്രൈഡേ தில்லை
388
எடுத்திடா யிவற்றின் பாலை யியம்பக்கேள் வகையொவ் வொன்றும்
*பூலாவழிஞ்சில் என்றும் பாடம், 0இலை என்பது ஏனையவற்றிற்குiேtாக்கும்.
42

வைத்திய விளக்கம்
தொடுத்தகாற் படிய தாகச் சொல்லிய சரக்கி னோடே அடுத்திடும் விரைக டம்மை யங்கமா யிவற்றின் பாலை. விட்டுவிட் டரைத்து நன்றாய் விரைவுடன் வழித்து முன்னர்ச் சுட்டிய கஷாயந் தன்னிற் றுகளறக் கரைத்து வேம்பின் ஒட்டிய வெண்ணெய் நாழி யொன்றதாங் கடுகி னெண்ணெய் இட்டதோர் நாழி யாக விருங்கஷா யத்திற் சேரே. சேர்த்துட னடுப்பி லேற்றிச் செவ்வையாய் மூன்று நாளும் பார்த்துடன் கொதிக்கச் செய்து நான்காநாட் பரியும் *புண்கள் தீர்த்திடும் பதத்திற் காய்ச்சிச் செவ்வையாய் வடித்து வைத்துப் பேர்க்கரும் பெருவி யாதி யுற்றிடு பேர்கட் கெல்லாம். அருவிரே சனத்தைச் செய்தே யறைதரு மண்ட லத்துக் குரையரு ணோத யப்பே ருற்றசூ ரணமே யல்லால் வருபெரு வியாதிக் கேற்ற வன்மருந் தினிதா யுண்டு தருமிந்த வெண்ணெய் தன்னைத் தப்பாமற் புண்ணிற் பூசே, பூசிப்பத் தியமுங் காக்கப் போகாத பெருவி யாதி தேசம்விட் டோடு மம்மா செப்புமிந் நோயே யல்லால் நாசமா மண்ட வாத நலிபக்க வாத சூலை கூசிய முடக்கு வாதங் கொள்ளுருத் திரமாம் வாயு.
உட்குத்துப் புறவீச் சோடே யுலைதரு கண்ட மாலை தட்பமில் வலியே வன்மத் தானத்திற் பிளவை யோடு கட்டுவிற் புருதி சன்னிக் கட்டுநன் னரம்பு தன்னில் முட்டிய சுருக்கு மாறாக் கிரந்தியே முறிகிரந்தி, நாய்புலி முகச்சி லந்தி நரியெலி புலியே யாதி பாய்தரு கடிக்கு முன்னர்ப் பகர்நோய்க்கும் பூச மாறும் காய்கரு வழலை நாக மண்டலி. கடுவே மிக்க தாய்வரு புடைய னாதி யருஞ்சர்ப்பக் கடிக டம்மால்.
விடந்தலைக் கொண்ட தற்கும் விளம்பிய வாதத் தாலே அடங்கிய சன்னி கட்கு மரியகோ தாரி யாலே மடங்கிய சன்னிக் குந்தான் றலையினில் வைக்க மாறும் கொடுஞ்செயற் றைல நாமம் பெருரோகக் குடொரி யாமே.
வெட்டையின் குணம்
வெட்டையின் குணமு ரைக்கின் மிகுதந்தம் போல வெள்ளை பட்டிடு மதன்பி னிரும் பாயுங்கோ சத்திற் குத்தி முட்டவே வலிக டுப்பு முதிர்ந்திடு மெரிவு கட்டிற் திட்டமா யுண்டா குந்நாட் செல்லிற்கோ சத்தி னின்றே. இரத்தமாய் விழுமி ரத்தப் பிரமிய மென்று முன்னோர் உரைத்தன ரிதனி னாம மொக்கநாட் கழியிற் கோசம் பெருத்துவீங் கிடுமு கப்பிற் பேசரும் புண்ணாய் மிக்க வருத்தமா மிதனுக் கேற்ற மருந்துசீக் கிரத்திற் செய்யே.
હીઠીકં65);
செய்யுநோய் கண்ட போதே சீரகச் சூர ணந்நற் துய்யசஞ் சீவி யாகுஞ் சூரண மப்பேர் பெற்ற
389
390
391
392
393
394
395
396
397
398
*புண்கள் தீர்த்திடும்பதம் - சற்று முதிர்ந்த பதம்.
43

Page 34
வைத்திய விளக்கம்
பொய்யிலாத் தைல மொன்றைப் புசிப்பிக்க மாறு மன்றேல் ஐயுறாச் சலரோ கத்தை யகற்றுசஞ் சீவி நெய்தான்.
வல்லையி லகற்றும் புற்று முகசிங்கி மருவிற் கேளு சொல்லரு ணோத யப்பேர்ச் சூரண மந்தி சந்தி வெல்லுநல் லனுபா னத்தில் விரும்பியே பத்துப் ப்ோது மெல்லவே யுண்ண மாறும் வெட்டைக்கும் புசிக்க நன்றே.
வாதகுலைக்குணம்
தீதுறு வாத சூலை செய்திகேள் பொருத்துத் தோறும்
வேதனை யாக வீங்கும் வெடித்துடன் கடுத்துக் குத்தும் ஒதுறு பிடிப்புத் தோன்று முளைவுண்டா நடக்க வொட்டா பாதங்கை முடக்கு முன்னே பகருநன் மருந்து செய்யே.
சிகிச்சை
இந்நோய்க்கு மருந்து கேண்மோ வேற்றநல் விரேச னஞ்செய் துன்னுறு சித்ர மூல மோதருணோத யந்தான் மன்னுநோய் தீர்க்குஞ் சண்ட மாருத சூர ணந்தான் சொன்னவிங் கிவற்றி லொன்றைத் துகளறு மனுபா னத்தில்.
சேர்த்தொரு மண்ட லந்தான் றின்றுகொண் டிஞ்சி தில்லை கார்த்திடு கொன்றை வேலிப் பருத்தியே கழற்சி வேளை கூர்த்தமா விலங்கை கஞ்சாங் கோரை காவிளைநீர் முள்ளி பார்த்திடு மாம ணக்குப் பாவட்டை யிவற்றி னோடே.
வாதகுலாங்குசம்
எட்டியி லுற்ற நல்ல விலைவாத மடக்கி யெல்லாம் தட்டின்றி யவித்த நீரிற் குளித்திந்தத் தண்ணி ரோடு மட்டதாய்ச் சதுரக் கள்ளி வாட்டியே பிழிந்த நீரும் விட்டெட்டிப் பட்டை வேம்பின் பட்டைசா ரணையின் வேரே.
கொடுவேலி வேரி னோடு கூறிடு மியங்கம் வேரும் நடைமுறை யளவாய்க் கொண்டு நண்ணிடு வசம்பே யல்லாற் கடுகுள்ளி மிளகு சுக்குக் காயமு மளவாய்க் கொண்டு கடினமா யரைத்து நன்றாய்க் கலக்கியே கொதிப்பித் துப்பின்.
வாதத்தின் பிடிப்பு வைகு மிடமெல்லாம் வழுவுறாமல் ஒதநா டோறுந் தானே யுறுமுறை பூச வந்த
வாதத்தின் பிடிப்பு முற்று மாறுமிம் மருந்தி னாமம் தீதிலா வாத சூலாங் குசமெனச் செப்ப லாமே.
கோதாரிக்கழிச்சலின் குணம்
கோதாரிக் கழிச்ச லென்னுங் கொடியநோய்க் குணங்க பம்மைக்
காதினாற் கேட்க வுந்தான் கள்ளர்க்கு மச்ச முண்டாம் வேதைசெ யிந்த நோய்க்கு வேற்றுமை பலவு முண்டாம் பேதியு முவாந்தி தானும் பெருக்கவே தோன்று மன்றோ.
44
399
400
40
402
403
404
405
406
407

வைத்திய விளக்கம்
சிலகுண மலம்வ யிற்றிற் சிக்கியே சலமாய்ப் பேதி வலுவதா யுண்டாங் குத்து வலியிவை வயிற்றிற் றோன்றும் சலமென வேர்வை காணுஞ் சடம்பிசின் போல்வ தாகும் நலிதரு தாகந் தானு நாவரண் டதிக மாமே.
அதிகமா யுடலி லுள்ள வருநரம் பெலாம்பு டைத்து முதிர்வுற வலித்துக் குத்தி மோகமாய்க் கடுத்து ளைந்து சதிசெயுஞ் சிலகு ணந்தான் சாற்றிய பேதி வாந்தி கதியுறக் கண்ட போதே கடுஞ்சன்னி பிரவே சிக்கும். குரலது கம்மிக் கண்ணுங் குழிந்துமூ லந்தொ டுத்துப் பரிவொடு நாவ ரைக்கும் பகர்தரு வரட்சி யுண்டாம் விரகுறு மலகு தானும் விறைத்துக்கா தடைக்கும் பேதி மருவிடு நிணங்க ரைத்து வந்திடு மதிக மாக.
சிகிச்சை
இப்படிக் கடுங்கு ணங்க ளின்னமுண் டனேக மாகச் செப்புவ னின்னோய் தீரச் செவ்வையா யவுட தந்தான் வெப்புறு சித்ர மூலம் வெந்தய மிலவங் கம்மே இப்பெயர்ச் சூர ணங்க ளின்னம்வா யுக்கு டோரி. இந்தநன் மருந்தி லொன்றை யேற்றிடு மனுபா னத்தில் வந்திடுங் குணங்கட் கேற்ற வகையதாய்க் கொடுக்க மாறும் சிந்தியே யொழியா தாகிற் செப்பரு ணோத யப்பேர் நந்தலில் சூர ணந் *நந் நாமமாத் திரைவா தாரி.
சருவாங்க மிந்த நாமஞ் சாற்றுமாத் திரைக ளல்லால் வருமிரு டீர்க்குஞ் சண்ட மாருத சூர ணந்தான் உரைதரு மிம்ம ருந்தி லொன்றினை யக்க ணத்திற் குரியநல் லனுபா னத்தி லூட்டிட வொழியு மன்றே.
மருந்தினைச் சத்தித் தாலு மறுதரமும்ம ருந்து திருந்தவே கொடுக்க வேண்டுந் தீர்ந்திடாச்சத்தி யாகில் அருந்துநற் 0பானக் கத்தை யருந்தியே சோம்பில் லாமல் இருந்துநன் மருந்து தன்னை யியல்புடன் கொடுத்தி டாயே. உளைவுகுத் ததிக மாகி லொத்துக வக்கங் காய்ச்சிக் கிளர்சன்னி மூடிக் கொண்டு கிடக்குதலன்றிப் பின்னும் குளிர்கொண்டு நின்றான் மிக்க குணங்கண் டுள்ளங் கால்கைக் களவதா #யுண்டை கட்டி யப்புறஞ் செய்யக் கேளே. சிரசினிற் பெருரோ கத்தைத் தீர்த்திடுங் குடோரி யாதல் அருமையா யடக்கந் தன்னை யெழுப்பிடுந் தைல மாதல் விரைவுற வைத்துப் பின்னர் மேன்மையாய்க் காய்ச்சிற் சன்னி வெருவியே யொடுங்கு மிந்த மேம்படு மருந்தி னாலே.
பிரண்டைத்தண்டுப்பச்சடி
பிரண்டையின் கொழுந்தை நெய்யிற் *பீதவன் னம்பொ ரித்தே திரன்டிடு மிளகு நல்ல சீரகம் வெந்த யத்தோ
408
410
41
412
413
44
45
416
*அருணோதயமாத்திரை. 0பானக்கம்-429-ம் செய்யுள் பார்க்க. #உண்டைகட்டல் 244-ம் செய்யுள் பார்க்க. *பிதவண்ணம் - பொன்னிறம்.
45

Page 35
வைத்திய விளக்கம்
டரண்டரு மிளகா யுப்போ டருங்கடு கிவைநே ராக முரண்டரச் சேர்த்து நன்றாய் முதிர்பழப் புளியுஞ் சேரே.
சேர்த்தரைத் தந்தி சந்தி தின்றிடப் பொருமல் மந்தம் ஆர்த்திடும் வாயு வாத மகற்றிடு மூலம் போக்கும் பார்த்திதைச் சாதஞ் சேர்த்துப் பகர்கறி யாக வுண்டால் நேர்த்தியாஞ் சுவைய தாகு நீளுடற் சுகம தாமே.
கருவேப்பிலைப் பச்சடி
கருவேம்பி னிலைபூ நெய்யிற் கதித்தபொன் னிறம தாக விரைவதாய் வறுத்துப் பின்னர் மிளகுசீ ரகமோ டுப்பும் உரைசெயுங் கடுகு நல்ல வெந்தய முறைப்பு மிக்க வருமிள காய்மற் றெல்லாம் வரிசையாய்ச் சேர்த்துக் கூட்டே.
கூட்டியே சம்பி ரத்தின் கொழுங்கனிச் சாறே யாதல் நாட்டிய 0வெகினி னுற்ற நற்பழப் புளியே யாதல் ஆட்டிவிட் டரைத்துப் பாக்கி னளவதா யந்தி சந்தி ஊட்டியே பசுமோ ருண்ண வொழித்திடும் வாதம் வாயு. நற்சுவை யாகு முண்ண நன்மணங் கொள்ளுங் கொண்டாற் பிற்சமித் திடவுஞ் செய்யும் பின்னிய மந்தம் போக்கும் சொற்றிடு தேகத் திற்குச் சுகமதா நாளு முண்பாய் அற்றமில் லாத வீதே யறைத்தனர் பெரியோர் தாமே.
வெந்தய ரசம்
வெந்தயங் *கதிக்கத் தட்டி வெள்ளுள்ளி குறையத் தட்டிச் #சிந்துசம் புளியுஞ் சேர்த்துத் தீயினிற் கொதித்த பின்னர் நந்தலில் பெருங்கா யத்தை நலமதா யுரைத்தீெ ருள்ளி வந்தநற் கரிய வேம்பி னிலைவளர் கடுகு தானே. சீரகஞ் சேர்த்து நெய்யி னல்லது தெங்கி னெய்யில் ஏருறத் தாளி தஞ்செய் தின்பமாய்க் குடிக்கப் போகும் நேரிலா மந்தம்வாயு நிகழ்த்திய வாத மல்லாற் பேர்மலந் தனையு மம்மா பின்னிடக் கழிக்கு மன்றே.
தூதுவளை ரசம் தூதளை யிலைகொ முந்து தூளதாய் வெட்டி நீர்விட் டேதமி னாலி லொன்றாய் வற்றிட விட்டி றுத்த மேதகு நீரி லுப்பு வெந்தய மிளகு மஞ்சள் தீதில்சீ ரகத்தி னோடு பழப்புளி சேர்த்த ரைத்தே. கருவேம்பி னிலைவெங் காயங் காய்மிள காய்க டுண்டாய்க் கருவியால் வெட்டித் தெங்கின் காய்ப்பாலு மற்பம் விட்டே எரியிடை யேற்றிக் காய்ச்சி யின்புறத் தாளித் தேபின் பருகநிர்க் கோவை சோகம் பறந்திடும் பசியுண் டாமே.
நீராகாரம்
வடித்திடு கஞ்சி யோடு வண்கழு நீரு மொன்றாய் எடுத்தொரு புதுப்பாண் டத்தி லெண்ணான்கு கடிகை வைத்தே
0எகின் புளியமரம். *கறியுந்தட்டி என்றும் பாடம், கறி . மிளகு, #சிந்துசம்-உப்பு 0ஈருள்ளி - ஈரவெங்காயம்.
46
47
48
49
420
42
422
423
424
425

வைத்திய விளக்கம்
வடித்ததிற் சம்பி ரத்தின் வளர்கனிப் புளியே யிஞ்சி கடுத்திடு மிளகா யுள்ளி கருவேம்பி னிலைவெங் காயம்.
கருவியால் வெட்டி யிட்டுக் கரைத்துநெய் யெடாத மோரும் அருகவே விட்டு நித்த மருந்தினால் வெட்டை காந்தி பெருகிய தாக மாதி பித்தவீ றெல்லாந் தீர்க்கும் நரருட றழையச் செய்யு நல்லநீ ராகா ரந்தான்.
மாவடு நீராகாரம்
மாவடுத் தோலைப் போக்கி மன்னுபால் கழுவித் துண்டாய்த் தோமிலாப் பாண்டத் திட்டுச் சுத்தநீர் விட்ட தன்கண் காமுறு மிளகாயுப்புக் கருவேம்பி னிலைவெங் காயம் தேமுற வரிந்து போட்டுத் தெளித்தருந் திடப்போந் தாகம்.
பானகம்
பானக மொன்று சொல்வேன் பன்னிடு மருந்து மேலாய் ஆனதோ ருவாந்தி யாகி யருந்தாக முழலை கொண்டாற் தேனுப்புச் சம்பி ரத்தின் றிங்கனிப் புளிய நேயக் கானநீர் விட்டி வற்றைக் கரைத்தருத் திப்பின் செய்யே.
செய்திடு மருந்து சத்தி தீராத வுழலை தாகம் ஐயமில் லாமற் றிரு மதிபித்த சுரமு மானாற் கையுட னின்ம ருந்துங் கனவைத் தியநூல் கற்ற
துய்யவே தியனுஞ் சோம்புத் தொழிலிலா திருத்தல் வேண்டும்.
இளநீ ரருந்த
போசனஞ் செய்த பின்பு புகலிள நீருக் குள்ளே நேசமார் சம்பி ரத்தின் நிறைபழப் புளியை விட்டு மாசில்கற் கண்டு சேர்த்து மண்டல முண்பி ராகிற் பேசரு மூல ரோக முட்டணம் பித்த மின்னும்.
தாகமே வரட்சி மற்றுஞ் சார்ந்த கையெரிவி னோடு வேகதா ளெரிவென் றோதும் விடற்கரும் பிணிக ளெல்லாம் போகுவ தன்றிப் பின்னும் பொலிவின்றி யிருந்த வந்த ஆகநற் சுகம தென்றே யறைந்திருந் திடலா மன்றே.
மெல்லிய தேகத்தோர்க்கு வெப்புத் தாக முதலியன தீர
வெய்யிலிற் காற்றின் மிக்க மழைதனில் வேகத் தீயில் மெய்யுறு பழக்க மில்லா மெல்லிய தேகத் தோருக் கெய்திடு வெப்பு வாந்தி யிருமல்கண் குத்துத் தாகம் தொய்வுறு தலைக்குத் தோடு சுழற்சி நாவரட்சி யாதி. தீரவே.மருந்து சொல்வோந் தேன்றோடம் பழச்சா றாதல் பாரினின் மிகப்ப முத்து வெடித்தமா துளம்ப ழத்தின் நீராதல் வடித்தெடுத்து நிகழ்த்துகற் கண்டுத் தூளைச் சாரவே யிட்ட ருந்தத் தணிந்திடுஞ் சாற்றி தோடு.
47
426
427
428
429
430
43
432
433
434

Page 36
வைத்திய விளக்கம்
செண்டு
பரிமள மிக்கி ருக்கும் பன்மல ரதனாற் செண்டு தெரிவுறக் கட்டி யோவா தேமண சம்பி ரத்தின் உரியநற் பழமுங் கூட்டி யோகையாய் மணப்பா யிதைத் தரையினின் மேன்மை யாகச் சாற்றுவர் பெரியோ ரன்றே.
சந்தனம் பூச உண்டபின் சந்த னத்தோ டொளிபெறு குங்கு மப்பூக் கண்டிடு பன்னீர் பச்சைக்கர்ப்பூரஞ் சேர்த்த ரைத்தே மண்டிய பன்னீர் தன்னில் வளமுடன் கரைத்துப் பூசக் கண்டனில் வலிகுத் தோடு கடுகிய சயமே மற்றும்.
மேகமே வெப்புத் தாகம் விரிந்திடு வெட்டை மூலம் வேகமார் சிரங்கு தானும் வெறிபயித் தியமே யெய்ப்புப் பாகமா ரின்ன லெல்லாம் பறந்திடுங் கோடைக் கல்லாற் சோகமார் மாரிக் காகா தோமெனச் சொல்வ ரன்றே.
கஞ்சியுண்ண
உட்டண மிருமல் மேக முயர்மூல காந்தி தாகம் கெட்டிடு தலைச்சு ழற்றல் கேடுசெய் வரட்சி யாதி சுட்டிய கஞ்சி தன்னிற் றுளதாங் கற்கண் டோடே
இட்டமாம் பச்சை வெண்ணெ யிட்டுணப் போங்கோ டைக்கே
பாலுண்ண ஆவின்பா, றண்ணிர் நேரா யதின்மிள கற்பமாக மேவுறப் பொடித்துப் போட்டு விரைவுற வற்றக் காய்ச்சித் தாவிலாக் கற்கண் டுத்து டானிட்டே யிரவி னிற்றான் ஆவலா யுண்டாண் மேக மங்கநோய் பித்த வெட்டை.
தடிமனே யிரும லாதி தணிந்திடுந் தேக நல்ல வடிவுறுந் தாது மெத்த வர்த்திக்கு நித்த முண்டாற் படியினி னரர்க்கு வேறு பகர்தரு நோயும் வாரா மடிவிலா திருந்து வாழ்ந்து சீவிய மருவ லாமே.
பிள்ளைக்கற்றாழைக் கறி தேசுலாங் குமரிக் குள்ள்ே சேர்ந்தநற் றசையை வாங்கி மாசிலா வேழு நீரில் வளம்பெறக் கழுவி வெள்ளிக் காசென வெடுத்து நல்ல கறிச்சரக் கவைகள் சேர்த்து நேசமா யரைத்து நீயு நிகருப்புப் புளியுங் கூட்டே பாகமாய்ச் சமைத்துச் சோற்றிற் பகர்கறி யாக வுண்ணப் போகுங்கை யெரிவி னோடு பொல்லாக் காலெரிவு தானும்
ஆகத்தை வருத்து மூல மகன்றிடு மலமும் போகும் வேகமார் மற்று நோயும் வீடுறு மென்று காணே,
சுகபேதிக்கு
கடுகுரோ கிணிக டுக்காய் கருதியோ ரளவாய்த் தூள்செய் வடிவுறு "புள்ளி பெற்ற கற்றாழஞ் சதையை வாங்கி
435
436
437 .
438
439
440
44
442
*புள்ளிகற்றாழை - பிள்ளைக்கற்றாழை.
48

வைத்திய விளக்கம்
அடைமுறை கழுவி நன்றா யத்தூளையதனிற் போட்டு மடியவே நாலு சாமம் வைத்திட நீர தாமே. 443
எடுத்ததை வடித்த பின்ன ரேரண்டத் தெண்ணெய் தன்னை அடுத்ததோ ரளவாய்ச் சேர்த்தே யன்புட னருந்தும் போதிற் புடைப்புறு மலந்தா னாளும் புகாதவர் தமக்கும் போகும் உடற்குறு மெரிவு காந்தி யொழிக்குமென் றுரைக்கு நூலே. 444
கண்ணோவிற்கு
புள்ளிக்கற் றாழை தன்னிற் புறத்தோலைப் போக்கி யேயின் தெள்ளிதாய்க் கழுவி வெள்ளைச் சீலையி லிட்டுநல்ல வெள்ளிய சீனக் கார மேம்படப் பொடித்துப் போட்டே உள்ளபொட் டளியா லொற்ற வொழிந்திடுங் கண்ணோ வன்றே. 445
மேற்படி வேறு
*வாரண முட்டை வெள்ளை வண்கரு வுக்குட் சீனக்
காரத்து விட்டுச் சீலை கட்டிப்பன் னிரிற் றோய்த்தே
ர்சிவப் புக்கண் ணோவுக் கடிக்கடி யொற்ற வந்நோய்
蠶 மாறு மீதோர் திவ்விய வவிழ்த மாமே. 446
கண்ணிற் பசாடுபிடித்தால்
கண்ணினிற் பசாடு லேசாய்க் கண்டிடில் வகையைக் கேளு திண்ணமாய்க்0 கண்டுத் தூளைச் செவ்விதாய்ப் போட நீங்கும் புண்ணதாஞ் சிவப்பி னோடு பொருந்திய வலிகுத் தும்போம் எண்ணரு மிம்ம ருந்தை யினிமையாய்ச் செய்யுங் காலே. 447 கண்ணிற்குப் புறவளையம் இரும்பினைத் தீயிற் காய்ச்சி யெடுத்ததைச் சம்பி ரத்தின் வருங்கனிச் சாறே யாதல் வளர்புளி யிலைச்சா றாதல் பொருந்திடப் பிழிந்து விட்டுப் புகல்சீனங் கரிய சீரம் வரம்பதா யரைத்துப் போட்டு வண்மையா யாட்டு வாயே. 448 ஆட்டியே வளைய மாக வன்புடன் கண்ணிற் போட மாட்டிய வலிகுத் தோடு வரம்பிலாப் பீளை சாறல் காட்டிய விவைக ளெல்லாங் களங்கின்றி நீங்கு மென்று நாட்டிய முனிவர் நூல்க ணவையற நவிலு மாதோ. 449 மேற்படி வேறு தலையிடை நொந்து கண்ணுட் டான்சிவந் திருக்கிற் சீனம் பலமுறு #கடுக்காய் தானும் பக்குவ மாய ரைத்தே நலமுறு மிரும்பைக் காய்ச்சி நல்லெலு மிச்சை தன்னிற் பலமுறு புளிவிட் டாட்டிப் பகர்புற வளையம் பூசே, 450 நோ முதலியவைகளுக்குச் சாராயப் பற்று தக்கநற் பாண்டந் தன்னிற் சாராயம் விட்டே பின்னர்ப் பக்குவ மிளகாய் தன்னிற் பழமுறு நுனியைத் தள்ளி *வாரண்முட்டை - கோழிமுட்டை 0கண்டு . கற்கண்டு. கண்டுதுளை என்பது
பாடமாயின் மேலே குறித்த சீனக்காரத்தூள் என்க. #கடுக்காய் மஞ்சள் எனவும், கடுக்காய் சுக்கு எனவும் பாடபேதங்களுண்டு.
49

Page 37
வைத்திய விளக்கம்
ஒக்கவே போட்டுக் காற்றங் குள்ளிட வொட்டா மற்றான் பக்கமாய் மூடி வைப்பாய் பகர்மூன்று மாத மட்டும்.
இப்படி வைத்த பின்ன ரியல்புட னெடுத்துச் சீலை தப்பாமற் றோய்த்துப் போடச் சார்ந்திடும் பழநோ வோடும் துப்புறு நரம்பி லுற்ற சுருக்குடன் கடின வாதம் செப்பிடா தோடு மீதோர் திவ்விய வவிழ்த மாமே.
கோழிச்சாறு
கோழிக்குஞ் சதனை வாங்கிக் குடறனைப் போக்கி நன்றாய்ப் பாழிய வம்மி தன்னிற் பதியவைத் தரைத்த தோடே காழுறு மிளகு மஞ்சள் கராம்புசீ ரகம்வெள் ஞள்ளி தாழ்விலாக் கொத்த மல்லி வசுவாசி சாதிக் காயே.
வெந்தயஞ் சிற்றே லந்தான் மிளகாயே கறுவாப் பட்டை சிந்துவி லுப்பொவ் வொன்றுஞ் சிறக்கவோ ரளவதாக அந்தமாய்க் கூட்டி நன்றா யரைத்துச் சேர்த் தளவ தாக நந்தலி னிரை விட்டுக் கலக்கிநல் லெண்ணெய் காய்ந்தால்.
காய்மிள காயி னோடே கருவேம்பி னிலைவெண் காயம் நேயமாய் வெட்டிப் போட்டு நிறைதரு தணலில் வைத்தே மேயதோர் சாறு காய்ச்சி மிருதுவா யிறக்கி யாற ஆயதோர் சம்பி ரத்தி னருங்கனிச் சாறு விட்டே.
வடித்ததைக் கொடுத்தி பின்னர் வளர்தரு வாத சன்னி விடுத்திடும் மெல்ல மெல்ல மெய்யுநற் பெலனை மேவும் கொடுத்திடு முணவி னோடே குறைவிலா மருந்து மாகும் படித்திடு சான்றோர் நூலும் பகருமிவ் வண்ண மாதே.
பிள்ளைப் பெற்றவர்களுக்கு
நேரிழை பிள்ளை பெற்ற நேரங்கஸ் தூரி தன்னில் ஒர்பண விடைதாம் பூலத் தொடுகலந் துண்டால் வாதம் ஏர்பெறு நரம்பு பாத விறைப்பிவை யேகு மென்ப சாருள்ளி யிஞ்சிச் சாறு சரியொரு சிரங்கை யாக,
மூன்றுநா ளாறு நேர முறையுட னந்தி சந்தி தான்றெரி வையர்க் கருத்தித் தகுதிவெற் றிலைபாக் குண்ணில் சான்றேலங் கராம்பி னோடு சாதிக்காய் காதிப் பூவும் தோன்றிய கறுவாப் பட்டை தொகுத்துண்ண முறைய தாமே.
வேம்பாடா தோடை யேமா விலங்கையே நொச்சி யொன்றிற் காம்பிலை நீரிற் காய்ச்சிக் கருத்துடன் குளித்து மஞ்கள் சோம்பற வயிற்றின் மார்பிற் றுகளிலா வகையே பூசி ஆம்வகை குளித்துப் பத்து நாளுமங் ககன்ற பின்னர்.
தீட்டுடைக்க நெய்யெண்ணெய் சேர்க்க லாகு நிறைகக மாயி ருந்தாற் பையவே முழுக லாகும் பருக்கொடு குத்திப் பூப்பு
50
451
452
453
454
455
456
457
458
459

வைத்திய விளக்கம்
நையவே தங்கிற் சுக்கு நற்சத. குப்பை யல்லால் மெய்மைசேர் கராம்பி னோடு மிளகருங் கடுக்காய் நேராய். 460
புனலதற் கேற்க விட்டுப் புதியநற் பாண்டத் திட்டுக் கனலினிற் காய்ச்சி யுண்டாற் கழிந்திடுந் துவாலை யின்றேல் வணமிகு சருவாங் கத்தின் மாத்திரை யொடுவா தாரி எனுமருந் திரண்டி லொன்றை யிந்நீரிற் கொடுக்க நன்றே. 461
சிறுபிள்ளை மாந்தத்திற்கு
குழந்தைகட் குறுமாந் தத்திற் கொதியுடன் பொருமல் சத்தி கழிந்திடல் வரட்சி தாகங் கண்டிடு மிவைக ளெல்லாம் ஒழிந்திட மாம்ப ருப்பி லுப்பரைத் தப்பித் தீயிற் குழிந்திடப் புதைத்துப் பொன்னி னிறங்கொளவெடுத் தேயுப்பை. 462
உடைத்தெறிந் தம்மி தன்னி லுறவரைத் தசம தாகம் எடுத்துநற் குடிநீர் காய்ச்சி யிதமதாய்ப் பிழிந்த நீரிற் கொடுத்திட நீங்கு மீது குழந்தைகட் கல்லால் யார்க்கும் அடுத்திடு கிராணி நோய்க்கு மாகுமென் றறிந்தோர் சொல்வர். 463
சுக்குத்தோல் தள்ளி யுப்பிற் செம்மியே பதத்திற் சுட்டு மிக்கவுப் பதனைத் தள்ளி விரைவதா யரைத்துக் கொண்டு மிக்கதாய்ப் பொருமல் பேதி வெறிமாந்த முள்ள பாலர்க் கக்கண மசம தாக மவித்தநீர் தன்னி லூட்டே. 464
பயித்தியத்திற்கு பயித்திய மாக விந்தப் பார்தனிற் றிரியும் பேர்க்கு வயித்தியஞ் செய்யக் கேளு *மதுகத்தின் பருப்பி னோடு
சயித்தியஞ் சார கத்திப் பழுப்புடன்0 மகிழங் கொட்டை செயிர்த்திடு மிளகுங் கூட்டிச் செவ்வையா யரைத்தப் பின்பு. 465
எலுமிச்சம் பழச்சாற் றாலே யிதையரைத் துடனே மூக்கில் வலுவதாய் நசியஞ் செய்து மறுவறு பசுப்பா னன்மை பொலிவுறு முசுமு சுக்கை புகழ்கீழ்காய் நெல்லிச் சாறு மலிவுறு சிற்ற கத்தி வருமிலைச் சாற்றி னோடே. 466
சம்பீரப் பழச்சா றல்லாற் சார்ந்தசெவ் விளநீர் (கூட்டி வம்புறு சந்த னந்தான் மலிவுறு வில்வம் வேரும் கெம்பிட வரைத்து விட்டுக் கிளர்ந்திடு மனலி லேதான் நம்பியே வைத்துக் காய்ச்சி நாலிலொன் றங்கண் வற்ற 467
எடுத்துட னன்றா யாற வினிமையாய்ச் சிரசிற் றப்பி அடுத்திட முழுக வார்த்தே யருங்குளிர்ப் போச னங்கள் கொடுத்திட மாறு மம்மா கொடும்பயித் தியந்தா னிற்கில் வடித்திடு சிற்ற மட்டி யெண்ணெய்வை பகரா தோடும். 468
தாம்பூல மருந்தும்வகை
வெற்றிலை துவர்க்கா யுண்ணும் வித்ங்கேளு நாடோ றுந்தான் பெற்றிடு காலை யுச்சி பேசிய மாலை யென்றே *மதுகம் - இருப்பை, 0பருப்புடன் (பாடபேதம்).
5

Page 38
வைத்திய விளக்கம்
உற்றமுக் கால முண்பா யொழிவிலாப் புளித்த லேப்பம் பற்றிடுகிருமி சேடம் பல்வலி தானு மின்றாம்.
பேதியா நாவ ரட்சி பெருகிய வரோசி சிேம்பல் காதிடு மகிழ்ச்சி யோடு கருதிய வழக்குண் டாகும் சாதிக்காய் சூட னேலஞ் சார்வசு வாசி யோடு தீதகல் கராம்பு கூட்டித் தின்னவுத் தமமா மன்றே. அதனமா யுண்ணிற் பல்லி னரியவேர் குலையுங் கண்ணும் விதனமாய்ப் புகையும் பாண்டு மேவிடு மற்று நோயும்
சதிசெயு மற்றி தற்குத் தக்கதோர் மருந்து மில்லை மதுவுண்ட பேர்கள் போலு மாமென வழங்கி னாரே.
நோய்கொண்டோர் இடம்மாற
வருத்தமாம் பெரிய நோய்கண் மாறாமற் பன்னி நின்றால் தெரித்திடு நிலநீர் காற்றாற் சேர்ந்தவேற் றுமைகண் மேவும் உரைத்திடு நோயி னோர்முன் னுறுமிடம் விட்டு வேறாம் அருத்திசேர் நல்லி டத்தி லமர்ந்திடச் செய்த பின்னர். பக்குவ மாய்ம ருந்து பண்ணுக மாறா தாயின் மிக்கதெண் டிரையிற் காற்று மேம்பட வைத்துச் சீராய்த் தக்கநல் லவிழ்த மூட்டித் தான்பரி கரித்த னன்றே திக்கினிற் சின்னு லாளர் செப்பின ரிந்த வண்ணம்.
சரக்குச் சுத்தி
*பாரத மாதி யான பலவைப்புச் சரக்குஞ் சிற்சில்
சீரிய மூலி தானுஞ் செயமான சுத்தி யின்றித் தேருநல் மருந்து சேர்த்துத் தின்றிட மரண மாமென்
றாரும்வா கடங்கள் சொல்லு மாகையாற் சுத்தி சொல்வாம்.
இரச கத்தி
சூதத்தின் சுத்தி கேளாய் சொல்லுமொட் டறையே மஞ்சள் ஈதினி லரைத்தே பின்ன ரிதமுடன் சம்பி ரத்தின் கோதிலாப் புளியும் விட்டுக் குணமுட னொருநா ளாட்டி ஒதவெற் றிலையே கையாந் தகரையே #யுன்மத் தந்தான்.
உத்தமா காணி பாக லுறமிலைச் சாறங் கெல்லாம் ஒத்திட வெடுத்துச் சூத மொருநாளிட் டாட்டிக் கொண்டே மெத்துசந் தனமு ருக்கு வேருமா முருங்கை யல்லால் வைத்திடு புரசென் றோதும் வளமான பட்டை யெல்லாம்.
ஒருசரி யவித்தெ டுத்த நீரிலோர் பகறா னாட்டி அருமறைக் கீரை யேசா றடைசிறு கீரை தான்னா யுருவியே மணித்தக் காளி யுற்றவே ரவித்த நீரில் ஒருபக லாட்டிக் கோட்ட முகந்ததோர் கடுகு மூன்று.
பலைமூன்று கரிய சீரம் பகரள வெடுத்த வித்த அலைவிலா நீரி லோர்நா ளாட்டிடச் சுத்தி யான
469
470
471
472
473
474
475
476
477
*பாரதம் - ரசம். *உன்மத்தம் - பூமத்தை.
52

வைத்திய விளக்கம்
தொலைவிலா விரசந் தன்னைச் சுரர்மறை யயன்மா லேத்தும் அலைபுனற் சடிலத் தெம்மா னாமென வறையு நூலே.
கெந்தக கத்தி
கரண்டியிற் கெந்த கத்தை களங்கின்றி யிட்டு ருக்கித் தரம்பெறா மணக்க நெய்யிற் சாய்மூன்று தரமிவ் வண்ணம் பரம்புவெள் ளாட்டின் பாலிற் பக்குவ மாகச் சாய்க்க நிரம்பிய களங்க மின்றி நிறைநல்ல சுத்தி யாமே.
இலிங்கம் காந்தம்
முன்னுசா திலிங்கந் தன்னை முலைப்பாலி லூற வைத்தே பின்னருஞ் சம்பி ரத்தின் பெருங்கனிச் சாற்றிற் சுத்தி தன்மையாங் காந்தம் வெட்டிச் சம்பிரச் சாறு கூட்டி நன்மையார் மோரில் மூன்று நாளவி கொள்ளச் சுத்தி.
மனோசிலை. நிமிளை
ஆமனோ சிலைய ணம்போ லாக்கியே சீலை கட்டித் தாமூன்று நாளுந் தானே சாகநீ ரதில விப்பாய் வாமமார் நிமிளை வெட்டிக் கட்டியே வாழைக் கந்தக் காமுறு நீரினோடு கழுநீரி லவியீர் சாமம்.
பொன்னிமிளை எலிப்பாஷாணம்
ஆகுபொன் னிமிளை தன்னை யருந்தேனி லாவினிரிற் பாகமாய்ப் பணம்போல் வெட்டி யவித்திடச் சுத்தி யாகும் சாகவே யெலிப்பா ஷாணஞ் சார்ந்தசுண் ணாம்பு நீரில் வேகமாய் நான்கு சாம மீட்டுமீட் டவிவி டம்போம்.
கெவுரி, தொட்டி
கவுரிபா ஷாணந் தன்னைக் கல்லுச்சுண் ணாம்பி னோடே பவமில்சம் பீர்ப்ப ழத்தின் பகர்சாறு விட்டோ ராறாம் அவமிலாச் சாமந் தானே யவித்திடு தொட்டி தன்னை நவமோடு வெட்டிக் காய்ச்சி நாள்மூன்றா நீரிற் காய்ச்சே,
வெள்ளைப்பாஷாணம்
வெள்ளைப்பா ஷானந் தூளாய் வெட்டிப்பொட் டளியாக் க்ட்டி எள்ளலி லாப்பா றன்னி லெருமைச்சா னியைக்க ரைத்தே கள்ளமில் லாம லோர்நா ளவித்திடு கார வல்லி உள்ளுறு சாற்றி னோடு மிளகவித் தவியோர் நாளே.
மற்றும் பாஷாணங்களின் பொதுச்சுத்தி, குக்கில் மற்றுநற் பாஷா ணங்கண் மரிசநீர் கருப்பஞ் சாறு நற்றேன்சுண் ணாம்பு நீரே நரிப்பய நிவையிற் சுத்தி செற்றமார் குக்கி றன்னைத் திப்பிலிக் கஷாயந் தன்னில் முற்றவே யவிக்கச் சுத்தி யாமென மொழியு நூலே.
53
478
479
480
481
482
483
484
485

Page 39
வைத்திய விளக்கம்
சவ்வீரம், அரிதாரம்
சவ்வீரஞ் சுண்ணாம்போடு சாற்றுமா மணக்க நெய்யில் எவ்வமில் சுத்தி யாகு மிசையரி தார மாநீர் செவ்வையாங் கழுநீ ராலே திருத்தமாய் மூன்று நாளும் எவ்வமில் லாமற் கட்டி யவித்திட விசைந்த சுத்தி. 486
தாம்பிரம்
தாமிரந் தகடாய்த் தட்டிச் சாலவே யுலைமு கத்தில் வேமனல் போலக் காய்ச்சிக் காய்ச்சியே விரும்பிக் கொள்ளைக் காமுற வவித்த நீரிற் கற்றாழஞ் சாற்றி னல்ல ஏமுறு புளியி லுற்ற விலையவி கஷாயந் தன்னில். 487
மிகப்புளித் திட்ட மோரில் விரும்பிய சீதைச் சாற்றில் தகைப்பட வேதா னேழு தரந்தோய்த்துத் துண்டாய் வெட்டி இகற்படு கருணைச் சாறோ டெருக்கலம் பாலா நீரும் புகற்றிறற் சம்பீ ரத்தின் புரையிலாக் கணிச்சா றாமே. 488
இவற்றினி லவித்தெ டுத்தே யினிமையா யுருக்கிப் பின்பு நவைப்படா தொன்றாய்ச் சேர்த்து நலனுற வராவித் தொங்கின் பவப்படாக் காய்ப்பூ தன்னிற் பக்குவ மாய்ப்பி சைந்தே அவப்படாக் கோழிக் கூட்டி லடைத்தந்தக் கோழி தன்னின். 489
மலந்தனைக் கரைத்து வைக்க மடிந்தெலாங் கீழே தூளாய்ப் பொலிந்திடும் பொன்னாங்காணிச் சாற்றினாற் கழுவப் பொன்போல் நலந்தரு மொளியுண் டாகு நாட்டுவாய் துறைகட் கெல்லாம் பலம்பெறு சுத்தி தப்பிற் பண்ணுமே விதனந் தன்னை. 490
இரும்பு இரும்பினை யராவி யெள்ளி னெண்ணெய்விட் டவித்தே பின்பு பருமெலு மிச்சை தன்னிற் பழச்சாற்றாற் கழுவிக் கொண்டு கருவேலம் பட்டைச் சாற்றிற் களங்கின்றி யவித்துக் காடி அருகாத வண்ணம்விட்டே யலம்பிடச் சுத்தி யாமே. 49
வங்கம் முதலியன. பொன். வெள்ளி
இரும்பலால் வங்க நாக மேதுறு மற்றுந் தாது தருமெண்ணெய்பாலே கூட்டி யாட்டின்பால் சலமிவ் வொன்றில் வெருவாம லுருக்கிச் சாய்க்கச் சுத்தியாம் வெள்ளி பொன்றான் கருகாத புடத்திற் சுத்தி யாமெனக் கழறு நூலே. 492
கரியபோளம், வெள்ளைப்போளம், வாளம்
கரும்போளம் பழச்சா றுாறச் சுத்திகாண் வெண்போ ளந்தான் கரும்புறு சாற்றி னோடே கழுநீரி லூறச் சுத்தி தருவாளந் தோலு டைத்துச் சாணாகந் தனிற்பொ திந்தே புரையிலா வுமியிற் றாழ்த்துப் புகன்முறை யவித்த பின்பு. 493 மயிற்றுத்தம், வெண்துத்தம் கற்றாளஞ் சோறு வெல்லங் கழறும்பா னெய்தான் விட்டு மற்றதை யவித்தாற் சுத்தி மயிற்றுத்த மாவின் மோரில்
54

வைத்திய விளக்கம்
உற்றிட வூறவைத்தாற் சுத்தியா முயர்வெண் டுத்தம்
நாவி
சொற்றிடு நாவி தன்னைத் துண்டாக வெட்டிக் கட்டி முற்றுநற் கோமி யத்தின் மூன்றுநா ளவிவெள் ளாட்டின் உற்றநி ரதிலும் மூன்று நாளவித் தொல்கா வண்ணம் மற்றதைக் காய வைப்பாய் வண்மையாஞ் சுத்தி யாமே.
கர்ப்பூர ரசிலாசத்து, துருசு, சவர்க்காரம் கர்ப்பூரச் சிலைகஞ் சத்தின் கந்தச்சா றுறச் சுத்தி நற்றுரு செண்ணெய் விட்டுக் கொதிப்பித்து நற்சம் பீரத்
துற்றிடு கனிச்சாற் றாலே யோங்கிட வரைக்கச் சுத்தி அற்றமில் சவர்க்கா ரத்தைக் காடியா லாட்டச் சுத்தி.
5Tj666),
இக்காடி தன்னாற் றானே யிசைதரு கார மெல்லாம் சிக்காமற் சுத்தி யாகுந் தெரிந்தநற் பொரிகா ரத்தை மிக்க*நீ ரதில லம்பிப் பொரித்திடச் சுத்தி மேலும் தக்கசம் பீர்ப்ப ழத்தின் சாற்றிலு மரைக்க லாமே.
ஐவகையுப்பு, வெண்காரம்
ஐந்துப்பிற் #சசியா முப்பை யளவதாய் வறுக்கச் சுத்தி தந்தநா லுப்புத் தானும் தயிர்மோர் 0கோச் சாகத் தின்னீர் சந்தமா மிவையிற் சுத்தி வெண்காரஞ் சம்பி ரத்தின் வந்திடு கனியின் சாற்றால் வண்மையா யரைக்கச் சுத்தி.
எட்டி விரை
எட்டியின் கொட்டை வெட்டி யியற்சிறு கீரை தன்னில் முட்டுவேர்ச் சாறு தன்னின் முதிர்ந்திட வுற வைத்தே தட்டிலாச் சமூலச் சாற்றின் மும்முறை தவறு றாமல் அட்டிடச் சுத்தியாகு மாமென வறையு நூலே.
கருவூ மத்தம்விரை, கொடுவேலி
கருமத்தம் விரைசம் பீரக் கணிச்சாறுங் கமலக் கந்தம் தருசாறு மூறச் சுத்தி சார்கொடு வேலி வேரை வருசாம மிருநான் கிற்கு வண்மையாய் மீட்டு மீட்டே அருகாத நீரி லூற வாக்கிடிற் சுத்தி யாமே.
சுத்திவேண்டா மருந்து சாற்றுமிவ் வண்ணமாகச் சார்ந்திடுஞ் சுத்தி யின்றி ஊற்றமா மருந்து செய்தே யுண்டிடன் முறையென் றெண்ணும்
ஆற்றல்சால் வாக டங்க ளறைவதி யாதுக் கென்றால் மாற்றரும் விரிய னாதி வன்பாம்பின் கடிக ஞக்கே.
494
495
496
497
498
499
500
501
*நீர்-காடிநீர். #சசியுப்பு:இந்துப்பு. இதைக் கருகாமல் வறுக்க. 0கோச்சாகத்தின்னீர் - பசுமூத்திரம், வெள்ளாட்டு மூத்திரம்.
55

Page 40
வைத்திய விளக்கம்
நூற் பெயர் உலகினுக் கிதம தாயு முயிர்க்குறு சித்தி யாயும்
பலமுறு மருந்து மாத்ரை பகருமுத் தமம தாயும் குலவுறு சீவ ராசி கொடும்பிணி நீக்க வென்றே
அலர்வுறு மிதற்கு நாம மமுதசா கரமா மன்றே. 502 வைத்திய விளக்கம் என்னும் அமிர்தசாகரம் முற்றுப்பெற்றது. திருச்சிற்றம்பலம்.
(சேர்க்கப்பட்டவை)
கண்டாவிழ்த மாத்திரை
கருத்துறு தங்கம் வெள்ளி கதித்தநற் பவள முத்தோ டுருத்திர மணிக லங்கொம் புறுமமுக் கிராய்தி ராய்வேர் அருத்திடு நிம்பந் தேற்றா *வாகரி கோட்டஞ் சுக்குப் பருத்திடு #கோவி னுற்ற பகர்மத மிவற்றி னோடே. 503
கூட்டு மான்0மதத்தி னோடு குங்குமப் பூவி தெல்லாம் ஏட்டினிற் சொன்ன வண்ண மெடுத்துமங் கையர்பால் விட்டே ஆட்டிநற் கடலை யின்ற னளவதா யுண்டை தேனிற் போட்டுநா வினிலே தேய்க்கப் புகல்கண்டா வவிழ்த மாமே. 504
வெற்றிவேலாயுத மாத்திரை 1 வெற்றிவே லாயு த்தின் மாத்திரை விளம்பக் கேண்மின் முத்துநற் பவளம் வெள்ளி முதன்மைசேர் தங்கந் தாம்ப்ரம் அத்தொடு வீரம் பூர மழகான லிங்கங் கெந்தி சத்துள மிருகக் கோடு தக்கநற் சிலையுங் கூட்டே. 505
கூட்டுதா ளகத்தி னோடு குளிரிந்து குங்கு மப்பூ நாட்டுரோ சனைகளில் தூரி நற்றுரி சுடனே காந்தம் ஆட்டுமஞ் சனமே கன்னா ரரத்தைநன் மதுரங் கோட்டம் வாட்டுமுந் திரிபே ரீஞ்சு மரிசமுங் கூகை நீறே. 506 சரக்கிவை சுத்தி செய்து தக்கநற் கல்வத் திட்டு - மருக்கிளர் வில்வப் பூவின் வளமிகு பன்னிர் தன்னால் அரைத்துநாற் சாம நன்றா யருமெழு காம்ப தத்தில் உரைக்குநன் மிளகு போல வுருட்டியே நிழலு லர்த்தே. 507 வெற்றிவேலாயுத மாத்திரை 2 முத்துநற் பவளம் வெள்ளி பொன்மொழி ருத்தி ராக்கம் நத்திய மிருகக் கோடு நத்தைச்சூ ரியினி லுற்ற சத்துள விரையு மானைத் தந்தமான் கொம்பி னோடே சுத்திசெய் வீரம் பூரஞ் சொல்லுசா திலிங்க மாமே. 508 அரிதாரம் விடயங் காந்த மயமுடன் கணித பேதி வருகோரோ சனைகளில் தூரி மருக்கிளர் குங்கு மப்பூத் திருநிறை கோட்ட முத்தஞ் செங்கழு நீரின் மூலம் அரியகன் மதமே பேரீஞ் சதுவுமுந் திரிகை யாமே. 509 நன்முறை வழாமற் சுத்தி நலம்பெறச் செய்த பின்னர்ச் சொன்முறை துளசிச் சாற்றாற் றுகளற வோர்நா ளாட்டி
*ஆகரி - திப்பிலி #கோவின்மதம் - கோரோசனை. 0மான்மதம் . கஸ்தூரி,
56

வைத்திய விளக்கம்
நன்மண முளலா மிச்சின் னற்கஷா யத்தி லோர்நாட் பின்முறை வில்வப் பூவிற் பிறந்திடு பன்னி ரோர்நாள். 510 சந்தன மவித்த நீருந் தகவறு செவ்வந் திப்பூ வந்திடு நீரும் வில்வ வயிரவே ரவித்த நீரும் சிந்திடா திவையொவ் வொன்றிற் றிறம்பட வோர்நா ளாட்டி நந்தலில் பதத்தின் மல்லி யளவதா யுண்டை செய்தே. 511
வேறு
*செய்துமிக வேலவனின் கிருபை யாலே
தேனிஞ்சி முலைப்பாலி லிட்டா யானால் மெய்யிலே பிடித்துவந்த சுவாத வாயு
வெகுரத்த பித்தமுட னெஞ்ச டைப்பு உய்யாத விக்கலொடு சுரத்தின் சன்னி
யுட்குத்துப் பிறவீச்சோ டுதர வாயு வையகத்தை விட்டோடு மனுபா னங்கண்
மற்றுமுள மாதளையின் கனியி னோடே. 512 கணிமைபெறு தேன்றோடங் கனியு நல்ல
காரிகையார் பாலிஞ்சி பன்னி ரோடே இனிமையுறு கற்கண்டு தேனுங் கூட்டி
யிப்படியே யனுபான மீந்தா யானால் கனவுயிரைப் பறிக்குமந் தகனை வெல்லக்
கந்தனது வேலிதென்று கருத லாகும் இனியதல மீதிலிஞ்சி தனிலே யிட்டா
லெழுசன்னி மாண்டுவிடு மியம்பக் கேளே. 513 கேளாக முறுதொய்வு காச மீழை
கெடியான சயரோகம் பாண்டு சோகை மாளாத கல்லடைப்புத் தீர நல்ல
வண்மைபெறு பொரிகாரம் பொரித்துக் கொண்டு தூளாக்கி முன்சொன்ன வனுபா னத்திற்
றுய்த்திடவே சுகமாகு மசுரை வென்ற வேளான முருகனது வேலி தென்று
வெள்ளியிலே சிமிழ்செய்து பதனம் பண்ணே. 514
சந்தான சன்னி மாத்திரை கருநாவி சூதங் கெந்தி கடுவெள்ளை கெவுரி தொட்டி அரிதார மிலிங்கம் பூர மருநிரு விடமேசீனம் பொரிகார மிவைய னைத்தும் பொருந்தநற் சுத்தி செய்தே# வருகோரோ சனையி னோடு மணமுள புனுகு கூட்டே. 515 இவைமுலைப் பால்செம் முள்ளி யின்சாறு கையான் சாறும் சுவைபெறு மணித்தக் காளிச் சொல்சாறும் வகைக்கோர் சாமம் தவமுற வரைத்து முந்தின் றகுமள வாயு ருட்டி நவமுறு மிஞ்சிச் சாற்றி னலிசன்னி சுரங்கள் போமே. 516 பத்தியம் வெள்ளாட்டுப்பாற் கஞ்சி சுக்கு மிளகு ஏலம் கூட்டிக்கொள்ளுக.
*இங்கு கூறிய அனுபானங்களும் தீரும்நோய்களும் மேற்கண்ட இரு மாத்திரைகட்கு முரியனவாகக் கொள்க. #சரக்கையெல்லாம் குமாரிச்சாற்றிற் தோலாயந்திரம் கட்டி அவித்துச் சேர்க்கும்படி சில பிரதிகளிற் காணப்படுகின்றது. தோலாயந்திரம் ஒரு சட்டியிறீ சாற்றை விட்டு, ' நடுவே துவாரமுள்ள ஓர் சட்டியினால் மேல் மூடி, அத்துவாரத்தின்வழியாக, சரக்குகளைக் கிளி கட்டித் தொங்க விட்டு ஆவி படும்படி அவித்தெடுப்பது.
57

Page 41

பதார்த்த சூடாமணி
36JLDub
பதார்த்தசூடாமணி
கடவுள் வணக்கம்
சிருட்டியே யாதி யைந்துஞ் செயவல்ல தாய்ப்பொ லிந்தே அருட்டரு குணத்த தாய்ச்சி ரானந்த மயமாய் ஞானத் தெருட்டருஞ் சதுர்வே தத்திற் சேர்ந்திடும் பொருளாய் நிற்கும் பொருட்டுணை யடிவ ணங்கிப் புகலுதும் பதார்த்தத் தன்மை.
நூல் - பஞ்சபூதம் நிலம் நீர் இவற்றின் பொதுக்குணம் அருவிநீர்
நிலஞ்செயுங் குணந்தான் பாண்டு நிறைவிக்கு மென்று சொல்வர் சலங்காசங் குன்ம மேகந் தணித்திடு மணலுந் தீர்க்கும் வலந்திக மூ*ரா முண்டான் மலையரு வியினி ருண்ணிற் கலந்திடுஞ் சுரங்கள் வாயு கவுசிசேற் றுமத்தி னோடே.
கங்கை நீர்
பொங்கிடு மகோத ரங்கள் புண் புழு மூலந்தானும் கங்கைநீ ருண்ணிற் பித்தங் கண்ணுரோ கங்கள் சத்தி தங்கிய குட்டந் தானுந் தவிர்ந்திடும் வாயு வுண்டாம் அங்கமுங் குளிரு மென்றேயறைந்திடு நூல்க ளன்றே.
காவிரிநீர், வைகைநீர்
காவிரி நீரே யுண்ணிற் கடுந்தாகம் வெப்புப் பாவை மேவிய சேத்ம வாதம் விஷம்பித்த ரோகந் தீரும் தூவுறு வைகை நீர்க்குச் சொல்லதி சாரம் வாதம் தாவிய பித்த மேகந் தாகமே விஷபா கம்போம்.
தாம்பிரவருணிநீர், அடவிநீர்
தாம்பிர வருணி நீர்க்குத் தாகங்கா யாசு வாதம் போம்பித்த வாயு தீரும் புகுத்திடுங் குட்டம் பாண்டு மேம்படு வாத மென்றே விதித்தன ரடவி நீர்க்குச் சோம்பொடு வரட்சி சீதஞ் சுரத்தலை வலியு முண்டே.
ஊற்றுநீர் உப்புநீர்
குளிர்ந்திடு மூற்று நீரின் குணஞ்சத்தி விக்க றாகம் கிளர்ந்திடா தடக்கும் வாதங் கேடுசெய் பித்த மையும்
வளர்ந்திட வொட்டா துண்ண மாண்பதா முப்பு நீர்க்கு விளைந்திடுங் குணங்கேள் வெம்மை மேவிடு மென்பர் மேலோர்.
*ஆம் - நீர்.
59

Page 42
பதார்த்த சூடாமணி
குளநீர், ஏரிநீர்
குளத்துநீர்க் குணந்தான் கேளு கொடுமையாய் வாதந் தன்னை வளர்த்திடு முடலிற் பார மன்னிடு மதிக மாகக் குளிர்ச்சியு முண்டா மேரி நீர்க்குணந் தன்னை நன்காய்க் கிளத்துவன் வாதந் தானே கெம்பிடு மென்பர் மேலோர்.
ஒடை நீர், சுனைநீர்
ஒடைநீர் தாகம் வெம்மை யோடிடும் பெலனு முண்டாம் சேடுசேர் மதுர முண்டாஞ் செப்புறு சுனைநீ ருக்கே கோடுமே வாதந் திற்றி யுண்ணலாம் வெம்மை யாகும் நீடிய நீர்க்கு ணங்க ணிலத்தின்பே தத்தி னாலே.
கிணற்று நீர்
ஊறுநற் கிணற்றின் றொன்னி ரொழிந்திட நிதமி றைத்தே மாறின்றிச் சனித்த நீரை மாந்திட லினிது மாந்தில் வீறுசெய் பித்தஞ் சத்தி வெம்மைபோ மதுர மாகும் பாறிடுந் நோய்க ளித்தைப் பாகஞ்செய் தருந்தினாலே.
வெந்நீர், சிறுகக் காய்ந்த நீர் மாசில்வெந் நீர்க்கு மந்த மலங்கபஞ் சயமே யல்லால் காசம்பி னிசஞ்சு வாசங் கடுநவ சுரமும் போகும் நேசமாய்ச் சிறுகக் காய்ந்த நீரினில் மூழ்கிற் கண்ணும் தேசுறும் பெலமுண் டாகுந் தேகமு மிறுகு மன்றே.
தண்ணீர், காய்ந்தாறிய நீர்
தண்ணிரி னானஞ் செய்யிற் றாகமு மெரிவும் போகும் கண்ணிர்போற் குளிரும் பித்த காந்தியு மொழிந்து போகும் வண்மையாய்க் காய்ச்சி யாற வைத்தநீ ருழலை தாகம் அண்ணிய மூர்ச்சை விக்க லதிசாரந் திரிதோ ஷம்போம்.
வன்னி முதலிய காடுகளின் நீர்
வன்னியே யாதியாக வழுத்துசில் லூரி னிரை உண்ணவு நோய்க ளுண்டா முலகினி லுளநீ ரல்லால் இன்னவின் னிர தென்றே யியம்புத லெவர்க்கு மேலா தன்னதா லவற்றை யாங்காங் காய்ந்துநீ யறிந்து கொள்ளே.
நீரின் சுத்தி
அறிந்துநீ யவற்றை யெல்லா மன்புட னுண்ண வேண்டில் சிறந்திடச் சுத்தி செய்தாற் றீர்ந்திடு நீரின் றோஷம் செறிந்தவிந் துப்பு முத்துச் சிவதையே கடுக்காய் தேற்றா உறுங்கம லப்பூ வல்லி யொவ்வொன்றுஞ் சுத்தி நீர்க்கே.
நெருப்பு. காற்று. ஆகாயம் நெருப்புக்கு வலிப்புங் குத்து நீங்கிடுங் காற்றுக் கண்ணோய் பெருத்திடும் புண்ணோய்க் காகா பேசுமே கக்க டுப்பும்
60
12

பதார்த்த சூடாமணி
உரத்திடுந் தாக சோக மொழிக்குமா காயத் தன்மை உரைத்திட வருமை யென்றே யுணர்த்தின நூல்காள் மாதோ.
சாதவகை ஈர்க்குச்சம்பா, புழுகுசம்பா, கைவரைச்சம்பா
ஈர்க்குச்சம் பாவின் சாத மினிமையா மெவர்க்கு மாகும் ஆர்க்குநற் புழுகு சம்பா வதிகமாம் பெலனுண் டாக்கும் பார்த்திடு முடற்கு நன்றாம் பகர்ந்தகை வரைச்சம் பாவும் ஆக்கமுஞ் சுகமு நல்கு மாமென வுரைத்திட் டாரே.
கல்லுண்டை, பிசானஞ்சம்பாபொது
கல்லுண்டை பெலனை நல்குங் கனலுறு பசிதோன் றாது சொல்லுநற் பிசானஞ் சம்பா சுகமொடு பெலனை நல்கும் எல்லையில் சம்பா வெல்லா மின்சுவை மணமுண் டாக்கும் அல்கலி லவைக டம்மி லளவரி தறைய வன்றே.
smgílá
நலமில்கா ரரிசி வாயு நவையுறு கரப்பன் மந்தம் அலகிலா நோய்க ளுண்டா மங்கமும் பெருக்கு நாளும் பொலியுமே கசப்பு மென்று பொறைதரு நூலு ணர்ந்த சலமிலா முனிவர் யாருஞ் சாற்றின ரீது மாதோ.
கருங்குறுவை, வாலான், இளங்கலையன், மொறுங்கன் இரண்டு
உரைக்குநற் குறவை யோடே யொளிர்வாலா னிவற்றி னுக்கு வருசல ரோக நோவு மாறிடும் வாயு வுண்டாம் தருமிளங் கலைய னோடு சாற்றிய மொறுங்கன் ரண்டும் கருதியே பொசிக்க நன்று கரப்பனுங் கிரந்தி யும்போம்.
பெருநெல்லு, நெற்பொரி, தவிடு
பெருநெல்லுக் கரப்ப னோடு பேர்க்கருங் கிரந்தி சேர்க்கும் பரம்பிவற் றின்பொ ரிக்குப் பகர்சுரந் தாகம் வாந்தி வெருவிடு மரிசி தன்னின் மேவிய தவிடு வாயு உரம்மந்தஞ் சேர்க்கு மொவ்வா திரப்பவர் தமக்கு மோதில்.
அவல். பச்சரிசி சோறு இடியவல் மந்தஞ் சேர்க்கு மினியபச் சரிசிச் சோறு படுசல ரோகம் பித்தம் பாறச்செய் திடுமாம் மந்த முடன்பெல முண்டா மீதை யுத்தர பூமி யோர்கள் அடைவுடன் விரும்பி யுண்பா ராமென வறையு நூலே.
சுடுசோறு, குளிர்ச்சோறு
சுடுசோறே யிரத்த பித்த முட்டணந் தோற்று மந்தம் படுமலந் தானும் போக்கும் பகள்குளிர்ச் சோறு சீதம்
61
14
15
16
19
20

Page 43
பதார்த்த சூடாமணி
முடுகிடும் பாண்டு ரூட்சை மூத்திரக் கிரிச்சம் போக்கும் தடையுற மலமுங் கட்டு மாமெனச் சாற்றி னாரே.
குழைந்தசோறு, கட்டுச்சோறு
குழைந்தசோ றுண்கிற் சேடங் கொண்டிடுஞ் சோம்புண் டாகும் கழிந்திடும் பிரமே கங்கள் கட்டுச்சோ றுண்கின் மேகம் கிளர்ந்தகண் டத்து ரோகங் கெட்டிடச் செய்யுங் குன்மம் எழுந்திடும் பீனி சங்க டாமுமென் றியம்பி னாரே.
புழுங்கலரிசிச்சோறு, வடிகஞ்சி, குடிகஞ்சி
புழுங்கலி னரிசிச் சோறு புசிக்கநன் றுரோகம் வாரா வழங்குதென் பூமி யோர்கள் வண்மையாய் நாளு முண்பர் அழுங்கல்செய் வடிகஞ் சிக்கே யடைந்திடுங் கரப்பன் சீதம் கொழுங்குடி கஞ்சி யுண்ணக் குறையுநோய் சுகமுடற்கே.
புனற்பாகம்
புனற்பாகக் கஞ்சி யோடு புகலுமச் சோறு தன்னை இணையுநோ யுற்ற பேர்கட் கீயநன் றிவ தற்கு நனிபழ வரிசிச் சோறு நாடநா டாது நோயைத் தினப்புது வரிசிச் சோறு சேர்க்குநோய் செரித்திடாதே.
பழஞ்சோறு, பழங்கஞ்சி
நிகழ்த்திய சோறு தன்னி னிர்விட்டே யோர்நா ழிக்குள் புகழ்ச்சியாய்ப் பித்த தேகி புசித்திட வினிமை யாகும் மகிழ்ச்சிசேர் பழைய கஞ்சி மருவுமித் தன்மைத் தேயாம் இகழ்ச்சியில் லாமற் கால தேயத்தா லிவற்றை யோரே.
disTLs
காடிக்கு வீக்கம் பித்தங் காமாலை மகோத ரம்போம் கூடிய மயக்கம் வாதஞ் சீரணங் குறையுந் தேகம் நீடிய வெப்ப கற்று நிகழ்த்துமிக் காடி தானே கேடுறு முடற்கு நன்றா மென்னவே கிளத்தி னாரே.
அரிசிக்கூழ், களி, பாயசம்
அரிசிக்கூழ் பித்தத் தோடே யரியநீர்க் கோர்வை யாற்றும் தெரியுமிக் களிக்கு வாயு தீராத மந்த மின்னும் தரும்வயிற் றிரைவு மென்று சாற்றினர் பாய சந்தான் திரிபயித் தியமே பித்தஞ் செறிதாக மருவா வன்றே.
மோதகம், பிட்டு உறட்டி, கொழுக்கட்டை
*சட்டகம் பருக்குஞ் #சக்குக் குளிர்ந்திடும் பெலனுஞ் சாரும் கட்டமா மலமும் போக்குங் கழறுமோ தகத்தி னோடு பிட்டுறட் டியுமே கொள்ளும் பிடிகொழுக் கட்டை யெல்லாம் இட்டமாம் வாயு மந்த மிசைவிக்கும் பெலனுண் டாமே.
2
22
23
24
25
26
27
28
*சட்டகம் - உடம்பு #சக்கு - கண்.
62

பதார்த்த சூடாமணி
வரகு, கம்பு, செஞ்சோழன், கருஞ்சோழன்
வரகது கரப்பன் வாயு வளர்ப்பிக்குங் கம்பு சீதம் பெருகவே செய்யு மென்பர் பேசுசெஞ் சோழ னுக்கு மருவிடும் புண்சி ரங்கு வளர்கருஞ் சோழ னுக்கு வெருவிய தினவு போகு மென்னவே விளம்பி னாரே.
கோதும்பை, மூங்கிலரிசி, பனிச்சாமை
கோதும்பை பெலனி னோடே குறித்திடு மழகுண் டாகும் ஒதிடு மூங்கிறன்னிலுற்றிடு மரிசிசத்தி வேதையா மிரத்த பித்தம் விலக்கிடும் பசித்தி டாது காதிய பனிச்சா மைக்குக் கரப்பனும் புண்ணு முண்டாம்.
புற்சாமை, கருஞ்சாமை, குரக்கன், தினை
பொருவில்புற் சாமை யோடு கருஞ்சாமை புசிக்க நன்றாம் உரைதரு குரக்கன் மந்த முட்டண வாய்வுண் டாக்கும் வருதினை யனலி னோடே வளர்விக்கும் பித்தந் தன்னைத் தருசீத சுரமும் வாத சன்னியுந் தவிர்க்கு மாமே.
冰 米
தாவரப் பொருட்கள் கொள்ளு, எள்ளு, பிண்ணாக்கு
கொள்ளிற்கு வாதம் வாயு கொடுஞ்சுர வெப்பும் போகும் எள்ளிற்குக் குளிர்ச்சி யுண்டா மியம்பரும் பெலனுஞ் சேரும் அள்ளுமிப் பிண்ணாக் குண்ண வருஞ் சல ரோக மூலம் கொள்ளுநீர்க் கடுப்பெ ரிப்புக் குறைந்திடு மந்த மாமே.
எள்ளெண்ணெய்
இவ்வெண்ணை காந்தி பித்த மிளைப்புநேத் திரத்தின் ரோகம் கவ்வைசேர் சிரவ லிப்புக் கபாலமுட் டணஞ்சி ரங்கோ டெவ்வமார் கிருமி போக்கு மெழி லுங்கண் ணொளியு முண்டாம் செவ்வையாம் பெலனு முண்டா மென்னவே செப்பி னாரே.
ஆமணக்கெண்ணெய்
உரைத்தவா மணக்கி னெண்ணெய்க் குட்டணம் பித்த வெட்டை கரப்பனே சிரங்கு மூலங் கபாலம்புண் கிருமிக் காய்ச்சல் வரட்சியோ டட்ட குன்மந் தலைவலி வளர்மே கம்போம் உரைத்திடு பெலனு முண்டா முத்தமம் பேதிக் காமே.
சிறுபயறு, உழுந்து, தட்டைப்பயறு
சிறுபயறதன்ப ருப்பாற் பயித்தியம் பித்தந் தீரும் மறுவறு மதுர முண்டா மந்தமாம் பெலனு மாகும்
கறையிலா வுழுந்து வாதம் மந்தமாங் காது நோய்க்காம் அறைதட்டைப் பயறு வாத மதனோடுட் டணமுண் டாமே.
63
29
30
31
32
33
34
35

Page 44
பதார்த்த சூடாமணி
பெரும்பயறு. மொச்சை, கொடிப்பயறு முதலியன
பெரும்பய றதனினோடு பேசிய மொச்சை யின்னும் வருங்கொடிப் பயறே யாதி மற்றுள பயற தெல்லாம் தரும்பெலன் மந்தம் வாதஞ் சாற்றிய வாயுச் சீதம் பரப்பவே செய்யு மென்று பகர்ந்தனர் முனிவர் தாமே.
பெரும்பயற்றிலை, காராமணிப்பயற்றிலை, கொடிப்பயற்றிலை பெரும்பயற் றிலையை யுண்ணிற் போக்கரு மந்தம் வாயு தருமிகு பொரும லுண்டாந் தான்காரா மணியி லுற்ற கருமிலை சோகை போக்குங் கண்டிடும் பசியு மென்ப வருங்கொடிப் பயற்றி லைக்கு வளர்ந்திடும் பொருமன்மந்தம்.
அறைக்கீரை, சிறுகீரை
அறைக்கீரை நீர்க்க டுப்போ டருங்கய ரோகக் காய்ச்சல் சுறுக்கதாய் நீக்கு மென்ப சொல்லுபத் யத்திற் காகும் வெறுப்பிலாச் சிறிய கீரை விழிக்கேற்கு மேனி தன்னில் பொறுக்கலா வெளிவு நீக்கு மாமெனப் புகலு நூலே.
முளைக்கீரை. கீரைத்தண்டு முளைக்கீரை யரோசி போக்கு மொழியிற்பத் தியத்திற் காகும் தளர்ச்சிசே ருடலைத் தேற்றுந் தனையரா தியர்க்கு மாகும்
விளைத்திடுங் கீரைத் தண்டு வெட்டைநீர்க் கடுப்புச் சீதம் உளைத்திடு மூல ரத்தம் போம்வலி வாய் வுண்டாமே.
அரிகீரை, பரட்டைக்கீரை
அரிகீரை பத்தி யத்திற் காகுமே யரோசி போக்கும் தெரிதரு சுவையு மெத்தத் தின்றிடி னெவர்க்கு மேற்கும் வருநல்ல பரட்டை வாய்க்கு மதுரமாந் நீர்ச்சி றுப்புச் சருவிட வாத பித்த சிலேற்பனஞ் சமனா வைக்கும்.
முசுட்டையிலை, வேளையிலை
முசுட்டையின் றழைவா தத்தை முதிர்விக்கும் பித்தம் போக்கும் திசைப்புறு சலரோ கம்போந் தித்திக்கு மெரிப்பு நீங்கும் கசிவிலா வேளை குன்மங் காதினோய் குடலில் வாதம் வசனவிற் புருதி சன்னி வலிகுத்து மேகு மாமே.
பயிரியிலை, பலவனிலை குளிர்ச்சிசேர் பயிரி வெட்டை கொடும்பயித் தியம ரோசி இழித்திடு நீர்க்க டுப்பு மியம்புநீர்ச் சிறுப்பும் போக்கும்
ழித்தநற் பலவன் றன்னின் மிளிரிலை யுண்டி மாய்த்துத் தெளித்திடும் வாத பித்த சேத்துமஞ் சமனாச் செய்யும்.
புளிக்கீரை, எழுத்தாணிக்கீரை
புளிக்கீரை ரத்த பித்தம் பொறுக்கருங் கரப்பன் பித்தம் ஒழித்திடு மரோசி போக்கு முற்றிடும் வாத மென்ப
64
36
37
38
39
40
41
42

பதார்த்த சூடாமணி
எழுத்தானிக் கீரை சீத மிசைபழ மலங்க ரப்பன் கழித்திடுஞ் சொறிசி ரங்கு கடுப்புட னகற்று மாமே.
சாணாக்கி, துயிலி. வெதுப்படக்கி
புழுத்தபுண் கோழை மந்தம் போக்குஞ்சா ணாக்கி யென்ப பழிப்பிலாத் துயிலி வெட்டை பழமல முழலை புண்ணோ டழித்திடுஞ் சீதஞ் சேர்க்கு மாம்வெதுப் படக்கி வாதம் வழிப்படாச் சுரத்தைப் போக்கு மாற்றிடு மிரத்தந் தானும்.
முக்குளிக்கீரை, மரியர்கூந்தல்
முக்குளிக் கீரை சேட மதிர்சிதம் பேதி சேர்க்கும் மிக்கதா மணலைப் போக்கு மேம்படு மரியார் கூந்தல் தொக்ககை மயக்க மீழை சொறிவாத கபமே மாந்தை சிக்கிய காச மோடு செறிபருப் படுவன் றீர்க்கும்.
ஆடுதின்னாப்பாலை, குதிரைவாலி
ஆடுதின் னாத பாலைக் ககன்றிடுங் குட்ட மெல்லாம் கேடுறு சிலந்தி வாதங் கிருமிவாய் வுடனே போக்கும் பீடுறு குதிரை வாலிக் கிடுப்பினில் வலிக டுப்புப் பாடுறு கழிச்சன் மேகம் பரிவாத சுரந்தா கம்போம்.
முடக்கொத்தான். புனலித்தண்டு
முடக்கொத்தான் காலில் வாத முதிர்சூலைப் பிடிப்பு வாயு தொடர்ச்சிசேர் சொறிசி ரங்கு தொலைவிலாக் கரப்பன் போக்கும் விடுக்கரும் புனலித் தண்டு மேகம்புண் சூலை வாயு முடக்கிடும் வாதங் கட்டு முதிர்ந்திடா தடக்கு மாமே.
சிறுபுள்ளடி, கொட்டைப்பாசி
சிறியபுள் ளடிக்கு ணங்கே டியபே ராமை மந்தம் முறுகிய குன்ம மெல்லா முடித்திடுங் கொட்டைப் பாசி சொறிதரு கரப்பன் மேகஞ் சுரம்புழு வனைத்து நீங்கும் அறையுந்தீ பனமா மென்றே யரியவா கடங்கள் சொல்லும்.
சிறு சித்திரைப்பாலாவி, பேய்ம்ருட்டி
சிறியசித் திரைப்பா லாவி செய்திடுங் குணங்கண் மேகம் உறுகாந்தி தினவு மற்று மொழிந்திடும் பேய்ம ருட்டி செறிமாந்தங் கணக்க பூழிச்ச நீர்ந்திடுஞ் சுரங்க ரப்பன் மறுகிய வயிற்றி லுற்ற வலியையு மாற்று மாமே.
ஊசிமல்லிகை, இண்டிலை ஊசிமல் லிகைக்கு ணங்கே ஞடற்குவி ரியத்தை நல்கும் கூசுகா மாலை வீக்கங் கொடுமேக விஷயா கத்தோ
டாசுசேர் பொருமல் சோகை யருஞ்சுரங் கயமும் போக்கும் பேசிலிண் டிலைக்கு மண்டைக் கரப்பன்பி னிசமும் போமே.
65
43
45
46
47
48
49
50

Page 45
பதார்த்த சூடாமணி சிறுகுறிஞ்சா, பெருமருந்து கர்ப்பூரவல்லி
வருஞ்சிறு குறிஞ்சா நோவே வயிற்றிற்புண் பாட்டை நீக்கும் தரும்பெரு மருந்தே யற்ப சயித்திய மாகு மென்ப திருந்துகர்ப் பூர வல்லி செப்பிடுங் கிரந்தி யோடு வருங்கரப் பனையு மாற்று மென்றுவா கடம்வ ழுத்தும்,
குறிஞ்சா, நீராரை
குறிஞ்சாவி னிலைநோப் புண்ணே கோரமாம் வாயு வாதம் குறுகிட வொட்டா தென்று கூறும்வா கடங்க ளெல்லாம் நெறிகொணி ராரை செய்யுங் குணத்தினை நிகழ்த்துங் காலைத் தறுகண்செய் பித்தமோடு சலரோகந் தவிர்க்கு மாமே.
காரை, சேம்பு, கொடிப்பாலை
புகழ்காரை சேம்பி னிற்குப் புகலரு மூலம் போகும் மகிழ்கொடிப் பாலை தன்னின் வளரிலை யுண்ணப் பித்தம் இகழ்வுறு தீமை யான பிரமேக சுரமே யின்னும் திகழ்விலாக் கிரிச்சி னந்தான் றீர்ந்திடு மென்பர் மேலோர்.
பாலைமரத்தின்பால்-பழம்-பட்டை-தயிலம்.
பாலை நன் மரத்தி லுற்ற பான்மாதர் தம்மைச் சேரக் கோலமார் பெலனை நல்குங் கொழுங்கனி தாத டக்கும் சீலமார் பட்டை யோடு செப்பதின் றயிலந் தேகம் சாலவே தகர்ந்த நோவைத் தானகற் றிடுமா மன்றே.
அவரையிலை காய்
அவரையி னிலையை யுண்டா லகலுமே மயக்க பித்தம் இவரிரத் தத்தின் பித்தக் கடுப்புமே கிடுமி தன்காய் நுவலுபத் தியத்திற் காகு நோக்கரு மரோசி மந்தம் தவறிடு மனஞ்செ ரிக்கு மாமெனச் சாற்றி னாரே.
கோழியவரை, புரசு, களப்பன்னை
கரப்பன்சில் விஷமு மாறுங் கருதுமுட் டணமா மென்றே உரைத்தனர் முனிவர் தாமு முயர்கோழி யவரைக் கேதான் கருத்துறு புரசினோடு களப்பன்னை யிவைக டம்மிற் பெருத்திடு குணங்கள் சொல்லிற் பேசுமூட் டணம தாமே.
புரசம் விரை
புரசினின் விரைவ யிற்றிற் புழுவாதம் வலியி ரைச்சல் கிருமிசீ தங்க ரப்பன் கிளர்கயங் காச மேலே
சருவியே படரு கின்ற தாமரைக் கிரந்தி நீக்கும் பரவிய பித்தஞ் சேர்க்கு மென்னவே பன்னு நூலே.
66
5
S2
53
54
55
56
57

பதார்த்த சூடாமணி
கரையிலை-தண்டு-காய்-கொழுந்து, முன்னையிலை
சுரையிலை பித்தம் போக்குஞ் சொல்லுந் தண்டிற்கு வாதம் மருவிடா தகலுங் காய்தான் வாயுவாங் கொழுந்து வாதம் திரிபித்தஞ் சேட நீக்குந் திகழ்முன்னை யிலையுட் காய்ச்சல் வருபிர மேகம் பித்த மாற்றுநன் மணமுண் டாமே.
எலிச்செவி, கொற்றான்
எலிச்செவி யிலையை யுண்டா லேகுமே கிருமி மேகம் பெலத்தநீர்க் கடுப்பி னோடு பிரமியஞ் சுரமே தாகம் உலப்பிலாக் கொற்றான் பித்தங் கிரிச்சின முடம்பெ ரிப்பு விலக்கிடும் பிரமே கம்போ மேம்படுஞ் சயித்தி யந்தான்.
வல்லாரை
வல்லாரை யிலையை யுண்ண மடிந்திடும் பயித்தி யங்கள் அல்லாத கறைக்கி ராணி யனலுடம் பெரிப்பு மேகம் பொல்லாத மற்று நோய்கள் போமென நந்திக் கந்நாள் எல்லார்க்கு முதல்வ னாய விறைபகர்ந் திட்ட வாறே.
தூதுளையிலை-பூ -காய்-வேர், தும்பை
தூதுபத் திரியன் னத்தைத் தொலைக்கும்பூத் தாதுண் டாக்கும் மேதகு காய்ச்சே டத்தை மீட்கும்வேர் மூன்று தோஷம் சேதமாய்ப் போகச் செய்யுந் தெளி தும்பை யிருமல் கோழை வேதனைச் சளியி னோடு மிகுசீத சுரமும் போக்கும்.
கோரைக்கிழங்கு
கோரையின் கிழங்கு செய்யுங் குணம்பித்தம் வாந்தி காந்தி நீரிழி வகலா வெட்டை நேர்பித்த சுரம்பெ ரும்பா டார்வுறு கிறுகி றுப்போ டதிசாரங் கயமே மூர்ச்சை காரமா முந்தி யாகக் கடுப்பாதி வேதை போக்கும்.
&#FTüu66) i'r
சாயவேர்க் குணத்தைச் சொல்லிற் சாராது பித்தஞ் சேடம் மேயதோர் முட்டுத் தொய்வு வெல்லரு மிரும லோடு நேயமில் சுவாசம் பின்னுந் நிகழ்த்திய சுரங்க ளெல்லாம் போய்விடும் பொருமன் மாறு மாமெனப் புகன்றிட் டாரே.
சாரினை,
தொகுத்தசா ரணையின் வேர்க்குத் தொலைந்திடு மநேக நோய்கள்
வகுத்ததிற் சிலவே சொல்வோம் வாதமே சூலை குன்மம் பகுத்திடா மலக்கட் டோடு பருவயி றேகுங் காசம் மிகுத்திடாத் திரிசு ரம்போ மாமேன விளம்பி னாரே.
67
58
59
60
6
62
63
64

Page 46
பதார்த்த சூடாமணி
பிரண்டை
பிரண்டையின் குணத்தை யோதிற் பித்தமாம் வாயு மந்தம் திரண்டமார் வலியே குன்மஞ் சேட்டுமஞ் சூலை வாதம் வெருண்டநாய் நரிக டித்த விடமகோ தரமே மூலம் உருண்டுபோ மற்று நோயு மோடுமென் றோதி னாரே,
திராய், கொட்டாங்கரந்தை
சொற்றநற் றிராய்க்கு வாதஞ் சொல்பித்தஞ் சேட வெப்போ டற்றமார் தோஷந் தாக மரோசியே தலைக னப்பும் இற்றிடும் பெரும்பா டேகு மிருங்கொட்டாங் கரந்தை குன்மம் சுற்றிய சூலை யோடு சொல்கபம் வாதம் போக்கும்.
முள்ளங்கியிலை-கிழங்கு-வித்து
முள்ளங்கி யிலைக்கு வாயு முதிர்ந்திடும் வலிகுன் மம்போம் எள்ளலி லிதன்கி ழங்கிற் கேகுமே மூல மேகம் விள்ளுறு சேட காச மிகுகுன்ம மிருமல் வாந்தி தள்ளிடு மிதனின் கொட்டை சார்கொள்ளிக் கரப்ப னிக்கும்.
பூசினியிலை - பூ - காய்
பூசினி யிலைபூக் காயே புகல்சுரந் தினவு பித்தம் நேசமில் கரப்ப னோடு நிறைசிரங் கதிக மாகும் பேசிய பொருமன் மந்தம் பிறந்திடுங் கிரந்தி யுண்டாம் ஆசிலா முனிவர் சொன்ன வருங்குண மிவையா மன்றே.
நீற்றுப்பூ சினிக்காய்
நீற்றுப் பூசனிக்காய் செய்யு நிறைகுண மலசலம் போம் மாற்றிடுங் கயமே பித்த மருத்தீடு காய்ச்ச றாகம் போற்றுறு சரீர நோய்கள் போமேனி திடமே யேறும் வேற்றுமை யில்லா வாத மிகு முண்ண வினிதா மன்றே.
நாயுருவி, பசளை இருவகை
நல்லநா யுருவி மந்த நவசுர மரோசி வாயு சில்விட மூலமாதி தீர்த்திடும் பசளை தானும் சொல்லிரு வகைத்தா மென்பர் துகளுறு வெட்டை யோடு வெல்லுநீர்க் கடுப்புப் பித்த மீட்டும்வி ரியமுண் டாக்கும்.
பேயத்தி, பேய்ப்பீர்க்கு, பேய்ச்சுரை, பேய்ப்பாகல்,
பேய்க்கும்மட்டி, பழுபாகல், அலரி, ஊமத்தை, கருமத்தம்விரை
பேயத்தி பேய்ப்பீர்க் கோடு பேய்ச்சுரை பேயின் பாகல் ஆய்தரு பேய்க்கு மட்டி பழுபாக லலரி மத்தம் தீயதா மதிக பித்தஞ் சேர்க்குஞ்சில் விஷத்தைத் தீர்க்கும் நேயமாங் கருமத் தம்வித் தருஞ்சுர நீக்கு மன்றே.
68
65
66
67
68
69
70
71

பதார்த்த சூடாமணி
ஊமத்தங்காய், பாகற்காய்
வாகுள வுமத் தங்காய் மயக்கம்வன் பித்தஞ் சேர்க்கும் வேகமார் சிரங்கு வாதம் விலக்கிடுங் கரப்ப னிக்கும் பாகற்காய் கிருமி போக்கும் பயித்திய பித்தஞ் சேர்க்கும் பாகமா யுண்ம ருந்தைப் பகைத்துடன் கெடுக்கு மாமே.
வெண்கொடுவேலி, முட்காவிளாய், புளிநறளை, பச்சை, வெண்குன்றி, மரல், உமரி, செங்கத்தாரி
வெண்கொடு வேலி முட்கா விளாய்புளி நறளை பச்சை வெண்குன்றி மரலி னோடே யுமரியு மூல மீட்கும் எண்கொண்ட செங்கத் தாரி யேகாத சலரோ கந்தான்
புண்கொண்ட பெரும்பாட் டோடு போகாத கரப்பன் போக்கும்.
வஞ்சி, வெண்காக்கணம், மல்லிகை, நந்திப்பூ
கஞ்சாங்கோரை, நரிப்பயறு
வஞ்சிவெண் காக்க ணந்நன் மல்லிகை நந்திப்பூவும் துஞ்சுகண் வியாதி நீக்குஞ் சொல்கஞ்சாங் கோரை வாதம் அஞ்சிடு முளைவு மாற்று மறைநரிப் பயறு வாதம் மிஞ்சவே செய்யு மென்ப மிகுசீதந் தானு முண்டே.
கவிழ்தும்பை, அமுக்கிரர், நெய்ச்சுட்டி, வாதமடக்கி
அறைகவிழ் தும்பை யோடே யமுக்கிரா குன்மம் வாயு குறைவிக்கு மற்று நோயுங் கூறுமுட் டணமே யாகும் அறையுநெய்ச் சுட்டி யற்ப சைத்திய நேரு மென்ப அறிவாத மடக்கி வாத மடக்குமுட் டணமா மன்றே.
துவரை, அழிஞ்சில், காற்றோட்டி, காட்டுநாரத்தை, பராய், கள்ளி, உப்பிலி
துவரையே யழிஞ்சி னற்காற் றோட்டியே காட்டி னாரம் தவறிலாக் கண்கா தோடு தலைவாயி லரிப்பு மூன்றாய் நுவலும்பி னிசமு நீக்கு நோன்மைசால் பராயே கள்ளி அவமிலுப் பிலிதான் வாத மடக்குமுட் டணமா மன்றே.
கொடுவேலி, சிவதை
கொடுவேலி யண்ட வாதங் குன்மம்வா யுப்ப றங்கி கடும்வாத சன்னி குட்டங் காதிடும் விடம்வ லிப்புப் பிடிவாதங் குமர கண்டன் பெருரோக மாதி தீர்க்கும் வடுவிலாச் சிவதை குன்மம் வாயுப்போம் பேதி யாமே.
உத்தமாகாணி, கொடிக்கள்ளி
உத்தமா காணி வாத முட்டணம் பெருமூச் சுப்போம் நத்தலில் கொடியாங் கள்ளி நற்கொழுந் ததனை வாட்டி ஒத்திடப் பிழிந்தநீரிற்கொழிந்திடு நீர டைப்பு மெத்திய மலங்கி ரந்தி வெங்குடல் வலியுங் குத்தும்.
69
72
73
74
75
76
77
78

Page 47
பதார்த்த சூடாமணி
வீழி வவ்விலொட்டி, குருவிச்சம்பூ, கிரந்திநாயன், சன்னிநாயன்
வீழியே வவ்வி லொட்டி வீக்கநோய் போக்கு மென்பர் காழுறு குருவிச் சம்பூக் கட்டுகள் பழுக்கச் செய்யும் தாழ்விலாக் கிரந்தி நாயன் சயமொடு கிரந்தி தீர்க்கும் சூழுறு சன்னி நாயன் றுரத்திடுஞ் சன்னி வாதம்.
நாய்ப்பாகல், இயங்கு
பழுதினாய்ப் பாகல் பித்தம் பயித்தியம் போக்கு மென்ப விழுமமா மியங்கிற் குச்சில் விடமொடு செங்க ரப்பன் கெழுமிய சொறிசி ரங்கு கேடுசெய் முடக்கு வாதம் பழுதறத் திரு மென்று பகர்ந்தனர் முனிவர் தாமே.
கோவைக்காய், வெட்சி, நறுவிலி, கடலை, பீளை
நறுங் கொவ்வைக் காய்கை யாது நாடொறு முண்ணிற் றேகம் இறுகுறு மிளமை யுண்டா மேகிடும் வெட்டை காந்தி உறுதியாய் வெட்சி வாய்ப்புண் ணுந்தியிற் புண்ணுந் தீர்க்கும் நறுவிலி கடலை பீளை நலிசல ரோக மாற்றும்.
குப்பைமேனி, சின்னி, சிறுசின்னி, துளசி, சாத்தாவாரி, இலாமிச்சு, துத்தி, துடரி
குப்பைமே ணிக்கு வாயு குன்மம்வா தம்வி ஷம்போம் துப்புறு சின்னி ரண்டுந் துளசிசில் விஷங்கண் மாற்றும் செப்புறுஞ் சாத்தா வாரி சீரிலா மிச்சுத் துத்தி தப்பிலாத் துடரி நன்மை சாருமுட் டணவா தம்போம்.
வத்தகப்பழம், கக்கரிப்பழம், சித்திரைப்பலாவி, நன்னாரி
வத்தகப் பழங்கு விர்ச்சி மன்னிடும் பைத்தி யம்போம் சத்திபோம் பித்தந் தீருந் தவறிலாக் கொடியி தல்லால் ஒத்தகக் கரியும் வெம்மை யொழித்துச்சீ தளமுண் டாக்கும் நத்துசித் திரைப்பா லாவி நன்னாரி மேகம் போக்கும்.
வெள்ளரிவிரை-காய்.-பழம்.-பிஞ்சு
வித்துத்தான் சலவ டைப்பை விலக்குங்காய் வாத மாக்கும் மெத்திய பழத்தாற் பித்தம் வீடிடுந் நீரும்போகும் உத்தம மான பிஞ்சா லோங்கிடுஞ் சிறுநீர் போகும் வைத்திடிக் குணங்க டாமே வளரும்வெள் ளரியின் றன்மை.
கொம்மட்டிக்காய், பீர்க்கங்காய்
கொம்மட்டிக் காய்க்குத் தாது குறைந்திடுஞ் சேடங் கூடும் மெய்மைகண் புகையுமென்று விளம்புவர் முனிவர் யாரும் விம்மிய பீர்க்கங் காய்க்கு மேம்படும் பித்தம் பின்னர் செம்மையில் வாதத் தோடு சேடமுஞ் சரியாய்ச் சேர்க்கும்.
70
79
8O
81
82
83
84
85

பதார்த்த சூடாமணி
கூத்தன்குதம்பை, தாளி, குன்றி, கண்டி பெருங்குருந்து, மருக்காரை, பொன்முகட்டை, பிரமி
ததும்புகூத் தன்கு தம்பை தாளியே குன்றி சுண்டி வதிந்திடு பெருங்கு ருந்து மருக்காரை பொன்மு சுட்டை சிதைவிலா விவைதான் மிக்க சீதள மாகு மென்பர் உதிதரு பிரமி பேதி யுடன்குளிர்ச் சியுமுண் டாக்கும்.
வெட்டிவேர், நெருஞ்சி, சிறு நெருஞ்சி, வெட்பூலா முட்பூலா, விட்டுணுகிராந்தி
வெட்டிவே ரிருநெ ருஞ்சி மிகவுஞ்சீ தளமா மென்ப தட்டிலா விருபுல் லாந்தி சலரோகம் பெரும்பா டீதைத் திட்டமாய்த் தவிர்க்கு மிக்க சீதளந் தானுண் டாக்கும் விட்டுணு கிராந்தி காய்ச்சல் விலக்கிடு மென்பர் மேலோர்.
காவிளாய், பாகல். முட்கத்தரி, நிலாவரை. பொடுதலை.
சிறுகுமிழ், கருவேம்பு
காவிளாய் பாக லேமுட் கத்தரி யுடனே பேசும் பூவிலா வரையீ தல்லாற் பொடுதலை சிறுகு மிழ்க்கும் மேலிடு முட்ட ணந்தான் மிளிர்கரு வேம்பு வாயு தாவிய வாதம் போக்குஞ் சமித்திடச் செய்யு மன்றே.
சிற்றமட்டி, பேரமட்டி, தாமரைத்தண்டு-பூ
வளர்சிற்ற மட்டி வேர்த்தோல் வன்பித்த சுரத்தை மாற்றும் குளிரத்தி சுரத்தைப் பேர மட்டிவேர்த் தோல்கெ டுக்கும் நளிர்மலி வனசத் தண்டு நவிலிப்பூ வரட்சி பித்தம் தளர்மேக மிரத்த வெட்டை மூலமுந் தணிக்கு மன்றே.
ஓரிலைத் தாமரை
ஓரிலை வனசந் தாக முரைக்குநீர்க் கடுப்புப் பித்தம் தேரருங் கயவ ரட்சி வெட்டையுந் தீர்க்கு மென்ப சீரிய பாலி லாத தெரிவையர் மோரி லிட்டு வாரமாய்க் குடிப்பா ராகில் வந்திடும் பால வர்க்கே.
செங்கழுநீர், ஆம்பல், நிலப்பனை இவற்றின் கிழங்கு செங்கழு நீரின் கந்தஞ் சிறந்திடு மாம்பற் கந்தம் தங்கிய குணங்கேண் மூலஞ் சலரோக மூலம் பித்தம் மங்குமெய் வரட்சி போக்கு நிலப்பனைக் கிழங்கு வாதம் பங்கமா முட்ட ணம்போம் பகர்தாது விருத்தி யாமே.
சீந்தில் சீந்திலின் குணங்கே டாகஞ் செப்பிடுங் கயவ ரட்சி மாய்ந்திடும் பயித்தி யந்தான் மடிந்திடும் பித்தக் காய்ச்சல் போந்திடு மிந்த மூலி புவியினி லுள்ள வான வாய்ந்திடு மூலி கட்குள் வானமிர் தென்று ரைப்பர்.
71
86
87
88
89
90
9.
92

Page 48
பதார்த்த சூடாமணி
கறுத்தப்பூக்கொடி கீழ்காய்நெல்லி இலவம்பிசின்
கறுத்தப்பூக் கொடியே பேதிக் காமெனக் கழறு நூல்கள் மறுத்தவிர் கீழ்காய் நெல்லி வளர்பித்தம் பயித்தி யத்தைச் செறுத்திடு மென்று சொல்வர் செழுமில வம்பி சின்றான் குறைத்திடு மென்னுநூல்கள் கொடுஞ்சல ரோகந் தன்னை.
பொன்னாங்காணி
அதிகமாம் பொன்னாங் காணிக் கேரோசிநீர்க் கடுப்புப் பித்தம் முதிர்சல ரோகங் கண்ணோய் மூலம்பி னிசங்க யம்போம் குதியினில் வாத மோடு கொடியபி லிகையும் போகும் மதுரமா முண்ணக் காந்தன் மாறிடுங் குளிர்ச்சி யுண்டாம்.
கையாந்தகரை, மொகமொசுக்கை
சேடங்கண் குத்து மேகஞ் சிரவலி பித்த மெல்லாம் ஓடச்செய் திடுநற் கையாந் தகரையென் றுரைப்பர் சித்தர் தேடுநன் முசுமு சுக்கை சேடமே வரட்சி தாகம் ஒடரு மிருமல் பித்த முழலையே சுரத்தை மாற்றம்.
பற்படாகம், நத்தைச்சூரி, புளியாரை. குளப்பாலை
சுரமேநோ நீர்க்க டுப்புத் தொலைக்கும்பற் படாக மென்ப வருமரு நத்தைச் சூரி வரட்சியே வாத பித்தம் உரைகபந் தனையு மாற்று மொண்புளி யாரை காந்தி பரவிய பித்தந் நீக்குங் குளப்பாலை மேக மாற்றும்.
ஆவரைப்பஞ்சாங்கம், கார்த்திகைக்கிழங்கு, சீதேவியார்
மேகங்கண் னோயே தாகம் விரைசல ரோகம் மூல ரோகமே பயித்தி யத்தை யோட்டுமா வரைப்பஞ் சாங்கம் வேகக்கார்த் திகைக்கி ழங்கு மிகுநஞ்சாஞ் சரக்கு நீற்ற ஆகுஞ்சீ தேவி யாருக் கதிகமாங் குளிர்ச்சி யாமே.
அறுகு, வெள்ளறுகு வெள்ளைச்செவ்வந்தி, ஈச்சங்குருத்து
அறுகற்ப குளிர்ச்சி வெள்ளை யறுகொடு வெண்மை யான கறையில்செவ் வந்தி மேகங் கடுந்தாகம் வரட்சி மாற்றும் நிறைகுளிர்ச் சியுமா மீஞ்சி னேர்குருத் துண்ட போதே குறைமதி நுதலார் நஞ்சுக் கொடியினைக் கரைக்கு மன்றே.
பிள்ளைக்கற்றாழை
சாலவே குளிர்ச்சி யாகுந் தலைவலி கண்ணிற் குத்து மூலமுட் டணம்வ ரட்சி மொழிந்திடு மேகமோடு சீலமில் குன்மம் போகுஞ் சேர்மல சுத்தி யாகும் மேலதாம் புள்ளி பெற்ற மிகுபிள்ளைக் கற்றா ழைக்கே,
72
93
94
95
97
98
99

பதார்த்த சூடாமணி
மணித்தக்காளி, பஞ்சபாண்டவர்முல்லை
பித்தமே சேட மேகம் பெருமூல மிவைகள் போக்கும் சுத்தபே தியுமே யாக்குந் துகளிலா மணித்தக் காளி ஒத்தபாண் டவர்கண் முல்லை யுரைத்திடும் பொரும லோடு மெத்திய வீக்கந் தன்னை மீட்குமென் றுரைக்கு நூலே.
ஆடாதோடை சிறுகாஞ்சோன்றி.
கான்றைக்காய்-இன்லை.
சேட்டும மிரும றோஷந் தீர்த்திடு மாடா தோடை கோட்டமில் சிறுகாஞ் சோன்றி கொடுஞ்சேடங் கிரந்தி வீக்கம் வாட்டிடு சிரங்கி னோடு வாதமே சொறியா மெல்லாம் வீட்டிடுங் கான்றைக் காய்நல் லிலைகாசம் விலக்கு மென்ப.
கான்றைப்பழம், குமிழம்பழம்
கான்றையிற் கனியி னன்மை கபாலமாம் வாயு வாயிற் தோன்றிய நாற்ற மேசொல் பீனிசந் தலைய ரிப்போ டான்றிடும் பித்தத் தாலுண் டாகிய பிணியைத் தீர்க்கும் சான்றவர் குமிழ்ப்ப ழத்தின் றன்மையு மிதுவே யென்றார்.
மாவிலங்கை, அகில், நுணா
தாவிலா மாவி லங்கை தன்பட்டை வேரி னோடு பூவிலை வாத மெல்லாம் போக்கிடு மென்பர் சித்தர் மேவகி னுணாவே சேடம் விளம்பிடுங் காச மன்றி ஒவிலாச் சுரங்க டாமு மொழிக்குமென் றுரைக்கு நூலே.
பேய்ப்புடோல், முட்காவேளை
சொற்றபேய்ப் புடோலே பித்தந் தோஷமே யிருமன் மாற்றும் உற்றிடு முட்கா வேளை யோங்குகாற் பிடிப்பு வாயு பற்றிடு மனலே வெட்டை பகர்பித்தம் வெப்பென் றெல்லாம் இற்றிடு மென்று மேலோ ரியற்றிய நூல்கள் சொல்லும்.
கருணை, வெருகு, நீர்முள்ளி
கருணையின் கிழங்கி னோடு கழன்றிடும் வெருகுக் கந்தம் உரைமூல முட்ட ணத்தை யோட்டுநீர் முள்ளி வீக்கம்
சுரமெலா மகற்று மின்னுஞ் சொல்லுநீர்க் கடுப்பி னோடே அரியதாம் வெள்ளை தோன்ற லழித்திடு மென்னு நூலே
சதுரக்கள்ளி நீர்-பால்
சதுரக்கள் வியினை வாட்டித் தான்பிளி நீர்நோ மாற்றும் வதிதரு மிந்தப் பாலே விடஞ்சன்னித் தயிலத் திற்காம் முதிருநீ ரிழிவில் லாமன் முதிர்ந்திடும் பிளவைக் காகும் கதிசெயுங் கட்டு கட்குக் காரமேற் றிடவு நன்றே
73
100
10
102
103
04
105
106

Page 49
பதார்த்த சூடாமணி
அவுரி, எருக்கு - அதின்பால், பராயம்பால்
விடத்துமாற் றாகுங் குட்டம் விளம்பிடுங் கருக்கி ரந்தி படுத்திடு மவுரி தானே பகர்ந்திடு மெருக்குச் சேடம் தொடுத்திடுங் காசம் வாதஞ் சொல்லிடு வாயுப் போக்கும் அடுத்தபால் பராய்ப்பால் பற்குத் தவ்வலி யக்கட் டாற்றும்
பருத்திக்காய் - கொட்டை பால் - இலை - பூ நொச்சிப்பூ வேர் - இலை
பருத்திக்காய் கொட்டை வித்தின் பாலிலை பித்தஞ் சேடம் துரத்திடும் பூச்சி லந்தி விடந்தொடர் பெரும்பா டாற்றும். உரைந்திடு நொச்சிப் பூவே ரோங்கிடு மிலையே சேடம் வருத்திடுங் காச மன்றி வளர்வாத சுரமு மாற்றம்
கண்டில் வெண்ணெய்
மருவிய கண்டில் வெண்ணெய் வருத்திடு மிருமல் காந்தி உரைசெயுந் தொண்டைக் கட்டோ டோதிடு நீர்க்க டுப்பு வருமூலத் துள்ளி ரத்த மாற்று மென் றுரைக்க ஞானப் பொருவிலா முனிவர் சித்தர் புகலாயுள் வேத மன்றே
கத்தரிப்பிஞ்சு - காய்
கத்தரிப் பிஞ்சு ரோசி கண்ணினோய் மலமும் போக்கும் மத்தமார் மூன்று தோட மருவிடா வுண்டி தன்னை மெத்தவே விரும்புந் தேக மிகுசவுக் கியம தாகும் தித்தமார் காய்கி ரந்தி தினவொடு பித்தஞ் சேர்க்கும்
கத்தரிப்பழம், கொடிவழுதலைக்காய், வட்டுக்காய்
கடிகொளு மிதனி னுற்ற கனிசேட மகற்று மென்பர் கொடிவழு துணையின் காய்தான் கூறிடி னெவர்க்கு மேற்கும் மடிவுறு சேட்டு மம்போம் வட்டுக்காய்க் குணவு மேவும் அடையும்பத் தியத்திற் காகு மருந்துதற் கின்ப மாமே
வட்டுப்பழம் - கொட்டை - வேர்
ஆமிதன் பழத்தின் கொட்டைக் ககன்றிடும் பற்பு ழுக்கள் வாமமார் வேரி னுக்கு வந்திடுஞ் சுரங்க ணிங்கும் காமுறாச் சேடத் தோடு கரப்பனே கிரந்தி யாதி தோமுறு கயமு மாற்றுந் தோலைவிலா நோயும் போமே.
கண்டங்கத்தரி வேள்
கண்டங்கத் தரியின் வேர்க்குக் கயந்தொண்ணுற்றாறு மோடும் அண்டாசே டஞ்சே டசுரமரு மிருமல் பின்னும் மண்டிடு கரப்ப னாதி மாறிடு முணவை நாடும் கண்டிடு மிதன்கு ணத்தைக் கழறுதற் கெளியதாமோ.
74
07
08
109
10
11
12
13

பதார்த்த சூடாமணி
சுண்டைக்காய் வற்றல், முட்பாகற்காய்
சுண்டைக்காய் வற்ற லுண்ணச் சுரமொடு வாய்வ ரோசி அண்டிடா நோய்போ மென்ப ரறையும்பத் தியத்திற் காகும் கண்டிடு முட்பா கற்காய் காசமே வாத மாதி துண்டாகச் செய்யு மென்ப சொல்லுந்தீ பனத்திற் காமே.
பாவட்டங்காய், கக்கங்காய்வற்றல்
அதிசாரங் கடுப்பு வாயி னரோசிகங் கபத்தி னோடு பதிவாத சுரமு நீக்கும் பாவட்டங் காயென் றோர்வாய் முதிர்தரு வாதம் வாயு முந்திய வரோசி கம்போம் துதிகொண்ட பித்தஞ் சேர்க்குஞ் சுக்கங்காய் வற்ற லென்னே.
புடோலங்காய், பன்றிப்புடோல், ஆகாயக்கத்தரிக்காய்
புடோலங்காய் சேடமாகும் புலம்புறு பித்தஞ் சேர்க்கும் அடுபன்றிப் புடோறான் சீத மணுகிடு மநேக ரோகம்
அடைவுடன் மேலே காய்க்கு மாகாயக் கத்த ரிக்காய் தொடுமையங் கரப்பன் பித்த தோஷமு மணலு மாமே.
மிளகாய்
தீதிலா மிளகாய்க் குள்ள செய்கையைச் சொல்லக் கேண்மோ வாதமே சேடம் வாயு மந்தமென் றினைய வெல்லாம் காதும்போ சனங்க டம்மைக் கடிதினிற் சமிக்கப் பண்ணும் பேதமார் பித்தந் தோன்றும் பிரிவில்சீ மலமும் போமே.
கஞ்சா
ஒன்றிய வாயு வாத மோடிடு மனலே பித்தம் துன்றிடு மிகும யக்கந் தொடருமெஷ் விதமா யேனும் தின்றபோ சனஞ்செ மிக்கச் செய்திடு மலத்தைக் கட்டும் பொன்றிடாச் சித்தர் கட்கும் புரையில்சந் நியாசி கட்கும்.
எப்போது முரிய மூலி யிசைத்திடும் வாத மாதி செப்பிடு நொய்க ளெல்லாந் தீர்த்திடும் போச னத்திற்
தப்பருந் தாக நாளுஞ் சார்ந்திடு மிதன்பேர் சொல்லில் ஒப்பிலாக் கஞ்சா வல்லா லுயர்ந்தகோ ரக்கர் மூலி.
புகையிலை
புகையிலை யின்கு னங்கண் புகையுநெஞ் சுலரு மன்றித் தகைமையா ருடல்வெ ளுக்குந் தாள்கர மெரிவெடுக்கும்
மிகையான விரும றோன்று மேலி ரற்கருகிப் போமென் றகமிலா முனிவர் சொன்ன வரியவா கடங்கள் கூறும்.
இஞ்சி
இஞ்சியின் குணங்கே ளிழை யிருமனெஞ் செரிப்பு மந்தம் மிஞ்சிய சன்னி குத்து மிகுசேடம் வாதங் கோழை
75
4
115
6
18
9
20

Page 50
பதார்த்த சூடாமணி
வஞ்சமார் கரப்பன் குன்மம் வருத்துமந் தார காசம் அஞ்சியே யோட லன்றி மலசுத்தி தானு மாமே.
வாழைப்பூ-காய்-தண்டு
வாழையின் பூவி னாலே வளர்பெரும் பாடு போங்காய் சூழுறு மரிய மூலப் பிரமேகந் தொலைக்கு மித்தண் டாழுறு மலக்கட் டெல்லா மகற்றுமென் றுரைத்தார் முன்னே தாழ்விலாப் பொதிகை மேய தபோதனர் கோமான் றானே.
வாழைக்கிழங்கு-பழம்-கப்பற்பழம்
மருவிய கிழங்கு வெட்டை மேகத்தை மாற்று மென்ப பெருகிய கனியே வாதம் பித்தமே சேட மோடு சருவிய கரப்பன் சேர்க்குஞ் சார்க்கப்பற் கணிதாம் மந்தம் மருவிடும் வாத மாதி மதுரமு மாகு மன்றே.
கதலிப்பழம். இதரைப்பழம்-பூ கதலியின் கனியே விக்கல் கக்கலுந் தீர்க்கு மென்ப சிதைவிலா விதரை வாழைச் செழுங்கனி யேழு பித்தம்
உதரத்தில் வாயு வோடுட் காய்ச்சலு மொழிக்கு மிப்பூ மதிநிகர் முகமின் னார்க்கு வளர்த்திடுங் கருப்பந் தன்னை.
மொந்தன்காய்-கிழங்கு-பூ பேயன்வாழைப்பழம்
மொந்தன்காய் வாயுச் சேர்க்கு முதிருடற் புண்ணைத் தீர்க்கும் கந்தத்திற் றண்ணிர் பித்தங் கட்டும்பூ வாயு வாகும் முந்திய பேயன் வாழை முதிர்பழ மரோசி பித்தம் உந்திய கயங்க ளோட்டு மோங்கிடுங் குளிர்ச்சி யென்ப.
நாரத்தம்பழம். தமரத்தம்பழம்
ஆகுநா ரத்தை தன்னி னருங்கனி யிரத்த பித்தம் பாகமார் சேற்ப பித்தம் பரிவுறு மென்பர் மேலோர்
தாகமே வாந்தி பித்தந் தமரத்தைக் கனியே யுண்ணப் போகுமென் றிசைப்ப ரம்மா பொருவிலா முனிவர் தாமே.
எலுமிச்சம்பழம்-இலை. பலாப்பழம்-காய்கொட்டை
வயமாஞ்சம் பீர மேவும் வண்பழம் பித்தம் போக்கும் கயமான விழிக்கு நன்றாங் கருதுமிவ் விலைபுண் ணுக்காம்
நயமான பலாப்ப ழங்காய் நண்ணுமை வாத பித்தம் பயமான கரப்பன் றானும் பகர்வித்து வாதம் வாயு.
தான்றிப்பழம், தேன்றோடிப்பழம், மாதுளம்பழம்
தான்றியின் கனிதான் வாதம் பித்த*மை சமனாச் செய்யும் தேன்றோடம் பழத்தாற் பித்தந் தீருமா துளம்ப ழத்தால் * -Bas (Bufob.
76
2
22
23
25
26
127

பதார்த்த சூடாமணி
தோன்றிய பித்த மூலஞ் சொல்கபம் வரட்சி மேகம் ஆன்றிடு மெரிவு தாக மறை கிறு கிறுப்பும் போமே.
மாதுளையிலை-காய்-வேர்-பூ
கண்ணுமே குளிர்ச்சி யாகுங் கழறுமிவ் விலைகு விர்ச்சி நண்ணும்புண் ணிற்கு மாகு நவின்றிடு காய்தான் வாதம் எண்ணும்வேர் வாந்தி போக்கு மிப்பூதா னிரத்த பித்தம் தண்ணெனுஞ் சத்தி விக்க றணிக்கும்பி னிசமும் போக்கும்.
தாழங்காய்-பூ-விழுது கொம்மட்டிமாதுளை
பொலிவுறு தாழங் காயும் பூவுநல் விழுதும் பித்தம் தலைவலி வரட்சி மேகந் தவிர்த்திடும் வெட்டை தானும் வலியகொம் மட்டி யென்னு மாதுளை பித்தஞ் சேடம் மலியரோ சிகமா மின்ன மாற்றிடு மென்பர் மேலோர்.
தாதுமாதுளம்பூ முந்திரிகைப்பழம்-இலை
தாதுமா துளம்பூத் தாகஞ் சாற்றிடு மிரத்த பித்தம் ஒததி சாரம் போக்கு முயர்ந்தமுந் திரிகை மேவும் தீதிலாக் கனிவ ரட்சி சேர்கய மேகம் பித்தம் வாதையாந் தாக மோட்டு மலசுத்தி தானு மாக்கும்.
முந்திரிகையிலை, பேரீச்சம்பழம், நெல்லிக்காய்
இவ்விலை யழுகி நாற்ற மிருந்திடும் புண்ணிற் காகும் செவ்வையார் பேரீஞ்சுள்ள செழுங்கனி வரட்சி தாகம் கவ்வையார் பித்தம் போக்குங் களங்கமி னெல்லிக் காயே எவ்வமா ருழலை சேட மீனஞ்செய் வரட்சி யின்னும்.
நெல்லிவற்றல்
தாகமே பிரமே கந்தான் றலைகிறு கிறுப்பு மூல ரோகமே பித்தஞ் சென்னி யுறுவலி பயித்தி யங்கள் போகுமே தாது மெத்தப் பொலிந்திடு மிக்கு ணந்தான் வேகந்தீர் ந்ெல்லிக் காயின் மேம்படு வற்ற லுக்கே.
கடுக்காய்-பூ கொட்டை
கடுக்காயெண் வகையுண்டென்று கழறுவ ரவையே வாதம் அடுத்திடு மிரும லீழை யருங்கோழை வரட்சி பித்தம் மிடுக்கான சுரங்கண் னோயே விடங்கப மூல மென்று தொடுத்திடு மெல்லா நோயுந் தொலைந்திடு மின்னு மீதின்.
நலத்தையார் சொல்லற் பாலார் நாடிடுங் காய சித்தி மலச்ச்த்தி யாகு மீதின் மன்னிய பூவே வாதம் பெலத்திடு பித்தஞ் சேடம் பேர்த்திடு மீதின் வித்தும்
சொலத்தகு கண்ணோய்க் கன்றிச் சொல்பிற நோய்கட் காகா,
77
28
29
30
31
32
33
134
135

Page 51
பதார்த்த சூடாமணி
மாம்பிஞ்சு-பழம்-காய்-யூ-வித்து வாகுள மாவின் பிஞ்சு வாதமை பித்த மாறறும பாகமாங் கணிக ரப்பன் பகர் வாதம் பித்தந் தானும்
ஆகுங்காய் கிரந்தி வாத மாம்பூவித் திற்கு மந்தம் ஆகமார்கிராணி வாயு வதிசாரஞ் சலரோ கம்போம்.
மாங்காய் வற்றல்
தாகமே யுழலை பித்தந் தளருமூத் திரக்கி ரிச்சி சோகமார் வரட்சி வெம்மை துகளுறு மயான ரோகம் வேகமார் புண்க ளன்றி விளம்பிடு வாத மெல்லாம் போகுமா மாங்காய் வற்றல் புசித்தவர் தமக்கு மாதோ.
விளாம்பழம்-காய்
தீதிலா விளாம்ப ழத்தாற் றீராத வரட்சி தாகம் ஒதிடுங் கிறுகி றுப்போ டோங்கிய சோகங் காய்ச்சல் வாதைசெய் மலமும் போகும் வந்திடுங் குளிர்மை யென்ப கோதிலாக் காய்வ யிற்றி னுளைவிற்குக் கொள்ள லாமே.
இலந்தைப்பழம். மருதம்பட்டை
இலந்தையின் கனிக்குச் சேட மென்பது மிதனி னோடே கலந்திடும் வாதந் தானுங் காய்ச்சலிற் சீதம் வாயு மலஞ்சல மறிப்பு மந்தம் வாதத்தி லுவாந்தி யும்போம் நலந்தரு மருதம் பட்டை நலிசலி ரோக மாற்றும்.
கொய்யாப்பழம், பூனைக்காலி, நீர்வெட்டிமுத்து
பொருமன்மந் தங்க ரப்பன் புகல்கொய்யாப் பழத்திற் காகும் தருரத்தங் கரப்ப னிங்குஞ் சார்பூனைக் காலிக் கென்ய வரையுநீர் வெட்டி முத்து வாதந்திக் கிரந்தி குட்டம் பரவிட வொட்டா தென்று பகரும்வா கடங்கண் மாதோ.
தேற்றாஇலை-காய்-பழம்-வித்து-பட்டை வேர்த்தோல்
தேற்றாவி னிலைக்கு வீக்கந் திரிசுர மேகுங் காய்க்கும் தோற்றிய கணிக்கும் போகுஞ் சோகை யிவ்விரைக்கு வெட்டை ஆற்றருங் கிராணி வாந்தி யதிசாரங் கபமேல் மூச்சுச் சாற்றரும் பிரமே கம்மே சலரோகந் திரிதோ ஷந்தான்.
கழிச்சலே யாதி நோய்கள் கழன்றிடுங் கலங்க ணீரில் இழிப்பிலா துரைத்து விட்டா லினியநந் நிர தாகும் பழிப்பிலாப் பட்டை வாதம் பகர்விஷ வாதம் வீக்கம் ஒழித்திடும் வேரின் மேற்றோல் விடமோட்டு நஞ்ச தாமே.
பெருமரப்பட்டை, கடலிறாஞ்சிப்பட்டை, காஞ்சிரப்பழம்-வித்து பெருமரப் பட்டை ரத்த நோயோடு கிராணி போக்கும் வருகட லிறாஞ்சிப் பட்டை சலரோகம் வரட்சி மேகம்
78
36
37
38
39
40
4.
42

பதார்த்த சூடாமணி
இரியச்செய் திடுமே யெட்டி யின்கனி வாத மெல்லாம் வெருவச்செய் திடுமா மீதின் விரைசூலை குட்டந் தீர்க்கும்.
பறங்கிப்பட்டை, பூதவிருக்கம்
மேகமே குட்டஞ் சன்னி மிகுமுறி கிரந்தி யோடு தாகமார் முடக்கு வாதந் தாளினிற் பிளவை மூலம் மோகமார் பறங்கிப் பட்டை முடிக்கும்பூ தாவி ருக்கம் வேகமார் சன்னி வாதம் விடமிவை தீர்க்கு மென்ப.
முருங்கையிலை-யூ-காய்
உண்டிடு முருங்கை தன்னி லுறுமிலை வாயு மந்தம் அண்டிடா மயக்கந் தீர்க்கு மணுகிடும் பித்தம் பூவால் கண்டகண் பசாட்டி னோடு கருங்கணோய்ப் படலம் போகும் மண்டுகாய் பெலனுண் டாக்கு மறுவில்பத் தியத்திற் காமே.
முருங்கைவேர். பொன்னாவிரை
முருங்கைவே ரெலிவி டத்தை முனிந்திடும் வாதஞ் சன்னி நெருங்கிய வலியே வாயு நீங்கும் பொன் னாவி ரைக்குச் சுருங்கலில் பித்தம் வாயு சொற்றமற் றனேக ரோகம்
மருங்கினும் வாரா தென்று வகுக்குவா கடங்கண் மாதோ.
அகத்தியிலை-யூ-பிஞ்சு-பழுப்பு
அகத்தியி னிலைபே திக்கா மவ்விலை பூவே பிஞ்சு மிகத்தினஞ் சமைத்தே யுண்டால் வெறிப்பயித் தியங்க ளோடு திகைத்திடுங் கிறுகி றுப்புத் தீர்ந்திடுங் குளிர்ச்சி யுண்டாம் பகுத்திடா விதன்ப முப்பா னசியஞ்செய் பயித்தி யம்போம்.
மைக்கொன்றைப்பூ பாதிரிப்பூ புன்னைப்பூ
மின்னுமைக் கொன்றைப் பூவான் மேகந்தி வெப்பு மாறும் சொன்னபா திரிப்பூப் பித்தஞ் சுரத்தொடு வெட்டை போக்கும் புன்னைப்பூக் கரப்பன் மேகம் பொருந்திய சிரங்கும் போக்கும் பின்னிடு மயக்கத் தோடு பித்தத்தை விளைக்கு மென்பர்.
புன்னை, புங்கு, வன்னியிலை-பூ
புன்னையும் புங்குங் குட்டம் புண்வகை சொறிகி ரந்தி மன்னிய வாத மெல்லா மாற்றிடு மென்பர் நீத்தோர் வன்னிபத் திரிக்குக் கர்ப்பம் வளர்ந்திடு மிதனின் பூவைத் தின்னவே வெட்டை யோடு வலிகடுத் தீரு மின்னும்.
வன்னிப்பட்டை-காய், வாகை, வஞ்சி, உவாய். கொன்றைவேர்-பட்டை-காய்-இலை
பட்டைக்காய் தன்னைக் காய்ச்சிப் பருகனி ரழிவு மாறும் மட்டிலா வாகை வஞ்சி யுவாய்மலர்க் கொன்றை வேர்நற்
43
44
145
46
147
148
149

Page 52
பதார்த்த சூடாமணி
பட்டைகா யிலைக்கு ணங்க ளொருசரி பகர ரிப்புக் குட்டநோய் விடத்தி னோடு குறிகளிற் புற்று மாற்றும்.
வில்வஇலை-யூ -காய்-வித்து-பழம்
கூவிளத் திலைமே கத்தைக் குறைத்திடு மிதனி லுற்ற பூவழி தாது கட்டும் புகலுறு மேகம் போக்கும் தாவில்காய் வித்து மூழ்கிற் றலையரி கரப்பன் போக்கும் மேவிய பழந்தான் பித்த மிகுதாக மடக்கு மின்னும்.
வில்வவேர்ப்பட்டை-வயிரம்-இத்திப்பட்டை, ஆலம்பட்டை
வேரினிற் பட்டை நஞ்சாம் விளம்புகா னாக்க டிக்காம் தூரினில் வயிரம் பித்த சுரத்தொடு மேகம் போக்கும் பாரினி லித்தி யாலின் பட்டைகள் சலரோக கத்தோ டார்பெரும் பாடு பித்தத் தால்வரு பிணியுந் தீர்க்கும்.
அரசமுகை-இலை-பட்டை-வெட்சிப்பூ
அரசினின் முகைதா கத்தை யடக்கிடு மிலைதீச் சுட்ட பரிவுறு புண்ணைத் தீர்க்கும் பட்டைக்குச் சலரோ கத்தோ டரியதோர் பெரும்பா டும்போ மழகுறு வெட்சி யின்பூச் சுரதாக மிளைப்பு மேக வனறொலைத் திடுமா மன்றே.
மந்தாரைப்பூ நாவற்பூ -பழம்-ஆத்தி
தாவின்மந் தாரைப் பூவாற் றவிர்ந்திடும் வெய்ய நோய்கள் நாவற்பூ மலத்தைக் கட்டு நவிறரு புகைச்சல் காய்ச்சல் மேவுநீ ரழிவைப் போக்கு மிளிர்பட்டை சலரோ கத்தைத் தாவவொட் டாதா மீதிற் சார்ந்திடு கணிக்கு ணங்கேள்.
மலமது கட்டுஞ் சேட மருவிடுங் கண்ணோ வோடு தலைவலி கிரந்தி தானுஞ் சாலவுண் டாக்கு மாத்தி தொலைவிலா விரத்த பித்தந் தொலைந்திடு மரிவை யர்க்கும் மலைவுறு பித்தத் தாலே வரும்பிணி யகற்று மின்னும்
ஆத்தியிலை, பூவரசம்பட்டை-பழுப்பு
இலையழற் சுட்ட புண்ணை யேருற வாற்றும் பன்னாட் தொலைவுறச் சென்ற முற்றற் றுயபூ வரசின் பட்டை மலிசல ரோகம் புண்ணு மாற்றிடு மிதன்ப முப்புப் பலவகைப் புழுத்த புண்ணும் பற்றற மாற்று மன்றே.
அத்தப்பட்டை
அத்தியிற் பட்டை யாலே ய ர மத்திக் காய்ச்சல்
பித்தத்தா லுற்ற காய்ச்சல் பெரும்பாடு வயிற்றி னுட்புண் ஒத்திடு மக்க ரந்தா னுறவயிற் றிற்க டுப்புச்
80
150
15
152
53
154
55
156

பதார்த்த சூடாமணி
சத்துவ நீக்கு கின்ற சலரோகந் தானு மாறும்.
கருவேல், நிலவிளா
கருவேலு நிலவி ளாவுங் கருப்பத்தி லுற்ற புண்ணும் பரிசல ரோகத் தோடு பகருமக் கரத்தின் காய்ச்சல் வருபெரும் பாடுந் தீர்க்கும் வலிமைகெட் டலைந்த பல்லை உரமுறு விக்கு மென்ப ரொாள்ளிய முனிவர் தாமே.
வேல். அசோகு, உதிரவேங்கை, விடத்தல், ஒடுவடக்கி இருவிளா
வேலசோ குதிர வேங்கை விடத்தலோ டொடுவ டக்கி மாலிரு விளவி வற்றின் மன்னிய பட்டை கட்குச் சோலிசெ யிரத்த பித்தந் துனியுறு பெரும்பா டல்லாற் சாலநி ரிழிவு பித்தத் தால்வரு பிணிக ணிங்கும்.
வேப்பிலை-பூ-காம்பு-வேர்-எண்ணெய் வேம்பினி னிலைவா தத்தை வீட்டிடு மிதனி னொண்பூக் காம்புபித் தத்தோ டையைக் காதிடும் வேர்க்கு ணங்கேள்
பாம்புப்பல் விடத்தை நீக்கும் பகருமிந் நெய்க பத்தோ டாம்பல கிரந்தி சன்னி யகற்றுமுட் டணமுண் டாக்கும்.
வேப்பம்பட்டை, நிலவேம்பு, மலைவேம்பு சிவன்வேம்பு, புளியிலை-பட்டை பட்டைக்கு மகோத ரம்போம் பகர்வலி விடங்குன் மங்கள்
எட்டும்போ நிலத்தின் வேம்பிற் கேகிடும் பித்த மென்ப திட்டமாய் மலையின் வேம்பு தீர்த்திடும் பீனி சத்தைச்
சிட்டர்போற் றரன்வேம் பிற்குத் தீர்ந்திடும் விடங்க ளின்னும்.
குட்டம்புண் பிளவை வாதங் கொடியநோய் பலவுந் தீரும் மட்டிலாக் கற்ப மாகு மாந்துளிர் நிறமாந் தேகம் தட்டிலாப் புளியி னுற்ற தழைகண்ணின் வலிய கற்றும் பட்டிடும் புண்க ளும்போம் பட்டைவா யுக்கள் போக்கும்.
புளியம்பூ-காய்-பழம்
பூவினிற் பித்தம் போகும் புகலிதன் காய்தான் வாதம் மேவுறு பித்தஞ் சேட மிகுகிரந்தியுமுண் டாக்கும் தீதுறு நோய்கள் சேருந் தேம்பழ மலமுத் தோஷம் தோமறு பித்தம் வாயுத் தொலைத்திடு மந்தம் போமே.
புளியம்வித்து-பருப்பு-வித்தின்தோல்-பழ்ப்புளி காய்வற்றல்-பூவற்றல் வித்துறு பருப்பு மந்த மேவிடு மிதன்றோ லுக்கு மெத்ததி சார மல்லான் மிகுபூப்புச் சலரோ கம்போம் பொத்திலா வாண்டு சென்ற புளியுடன் வற்றல் பூவும் பத்தியந் தனக்கா மென்ற பகர்ந்தனர் முனிவர் தாமே.
இலுப்பையிலை-பூ-நெய்
இட்டமா மதுகத் துற்ற விலைதலை வலிபோக் கும்பூ
81
57
58
159
60
6
62
63
64

Page 53
பதார்த்த சூடாமணி
முட்டிய வாதத் தோடு முதிர்குடல் வாதம் போக்கும் கொட்டையி னுற்ற நெய்க்குக் கொடுஞ்சூலை கிரந்தி மேகம் குட்டமெண் பத்து நான்காய்க் கூறுவா தங்க ளும்போம்.
கொட்டைப்பாக்கு-களிப்பாக்கு
கொட்டைப்பாக் கதின்கு ணங்கேள் கூறிய மலபந் தம்போம் இட்டமாய்ப் புசிக்கி லேகுங் கிருமியென் றிசைப்பர் யாரும் நிட்டையாங் களிப்பாக் கிற்கு நிகழ்குண மதுர முண்டாம் கட்டிய மலங்க பம்போங் கழன்றிடும் வரட்சி பித்தம்.
தென்னம்பூ-பாளைநீர்-குரும்பை கயர்-இளவற்தேங்காய்
நாளிகே ரத்தி னற்பூ நலிபெரும் பாடு மாற்றும் பாளைநீர் திறலுண் டாக்கும் பகர்ந்திடு மிதன்கு ரும்பை சூளுறு பித்த நீக்குந் துவருட னிளவற் றேங்காய் நாளுமுண் டவர்க்குத் தேக நன்றதாங் குளிர்ச்சி யுண்டாம்.
இளநீர்
போசனஞ் செய்த பின்னர்ப் புகலித னிளநீர் தன்னை வாசமா யுண்ணிற் பித்தம் வாதஞ்சேட் டுமமா மூன்றும் நாசமா மலம்போந் தேக நலமுட னிளமை யுண்டாம் தேசுடன் குளிருங் கண்க டீபன முண்டா மின்னும்,
செவ்விளநீர்-கெவுளி
செப்புமிவ் விளநீர் தன்னிற் செவ்விள நீர்நன் றாகும் இப்பெய ரிளநீர் தன்னி லெழிலுறு கெவுளி யுற்றால் ஒப்பிலை யிதனைத் தேவ ருண்டிடு மIமிர்த மென்பர் துப்புறு மிளநீர்த் தன்மை சொல்லிட வருமை யாமே.
தேங்காய்நீர்-பால்
தெங்கின்காய் நீர்க்கு வாதஞ் சேட்டும மந்த காசம் பொங்கிடும் பசிவ யிற்றிற் பொருந்திடா வலியுண் டாக்கும்
மங்கிடா விதன்பா லிற்கு வலுமிக வுண்டாம் வாதம் தங்கிடும் வாயு வுண்டாந் தாதுவிர்த் திக்கு மன்றே.
தேங்காய்நெய், பனங்குருகு, கள்ளு
நிகழ்த்துமிப் பாலிலட்ட நெய்யது பீனி சத்தை அகற்றிடு மலமும் போக்கு மழகிதாந் தாளி தத்திற் குகப்புறு பனையின் கண்ணே யுற்றிடு குருகு மந்தம் திகைப்புறு கள்ளுப் பாண்டு தீர்த்திடும் மயலுண்டாமே.
கருப்பநீர்-நுங்கு-பழம்-பூரான்
செப்பிதன் பதநீர் வெம்மை தீர்த்திடு நுங்க ருந்தில் வெப்புநா வரட்சி பித்தம் விலகிடுங் குளிர்ச்சி யுண்டாம்
82
65
67
68
69
70
7

பதார்த்த சூடாமணி
உப்பிச முறும்ப ழத்தை யுண்டிடி லுடல்க னக்கும் தப்பிலாக் கொட்டை யுற்ற *தகன்வாத மென்பர் மேலோர்.
பனங்கிழங்கு-பிட்டு-கூழ்-பனங்கட்டி, கற்கண்டு
கிழங்குநன் மதுர மாகுங் கெட்டியாய் மலத்தைப் போக்கும் களங்கமில் பிட்டு மற்றே காமர்கூழ் மலத்தைப் போக்கும் பழந்திரள் மலங்குன் மம்போம் பனங்கட்டி யுண்டாற் கண்டு முழங்கிய சேடங் குன்ம முதிர்ந்திடா தடக்கு மன்றே.
தித்திக்கனி-கள்ளு-குருகு-வெல்லம்
தித்தியின் கனியுங் கள்ளுஞ் செழுங்குரு கதுவுங் கேண்மோ பித்தத்தைப் போக்கு மீதின் பெருவெல்ல மெரிவு பித்தம் பற்றறு மிதனை நித்தம் பாலொடு சேர்த்த ருந்தில் உத்தமத் தாதுண் டாக்கி யுடலினை யிறுக்கு மன்றே.
அல்லிப்பூ, தயிர்வேளைப்பூ
உயரல்லிப் பூப்புண் ணோடே யொழிக்குநீ ரிழிவு மேகம் அயர்வுறு தாகம் வெப்ப மகன்றிடு மென்று சொல்வர் தயிர்வேளைப் பூவி னாலே தாழ்ந்திடும் வாயு மந்தம் துயர்தரு வாத நீக்கு மாமெனச் சொல்லு நூலே.
காட்டாத்திப்பூ களாக்காய்
காட்டாத்திப் பூவி ரத்தக் கடுப்பிரத் தக்க பூழிச்சல் கோட்டமா மேக மோடு குலைத்திடும் பேதி கட்டும் மாட்டிய களாக்காய் தாக மரோசிகம் பித்த வாந்தி வாட்டிய ரத்த பித்த மடித்திடும் பசியுண் டாமே.
சங்கங்குப்பி, இதுவே பீச்சுவிளாத்தி
புகழ்சங்கங் குப்பித் தன்மை புகலக்கேள் சிரங்கு புண்ணோ டிகழ்புழுப் பூச்சி சேர்சில் விடமிகு மிரும லோடு நிகழ்பல கிரந்தி யெல்லா நீக்கிடு மிதனைத் தானே மகிழ்பீச்சு விளாத்தி யென்று வழுத்துவ ராயுள் வேதர்.
தழுதாழை, கோடகசாலை தழுதாழை யெண்பான் வாதந் தவிர்க்குநீர்க் கடுப்புச் சேடம் பழுதாம்பி னிசத்தி னோடு பற்றறு மற்று நோயும் அழகார்கோ டகசா லைக்கே யருமையா மேகங் குட்டம் முழுகாத கரப்ப னெல்லா முடிந்திடு மென்று காணே.
தேன்
வாதமே கபமே கக்கன் மகோதரங் குன்மம் புண்ணோய் ஏதமார் கண்ணோய் வாந்தி யீழையே கோழை யோடு
73
74
75
176
77
178
*தகன் . பூரான்.
83

Page 54
பதார்த்த சூடாமணி
வாதையார் நெஞ்செ ரிப்பு மந்தமே குக்கன் மாற்றும் ஒதிடு மலமுங் கட்டு முவகையார் தேன்றான் மாதோ.
வெல்லம், சீனி. கற்கண்டு
வெல்லமே குளிர்மை யுண்டாம் விலக்கிடுங் கிராணி தன்னை மல்கிய சீனி வாந்தி வளர்சுரங் கிருமி யோட்டும் புல்லிடும் வாதந் தானும் புகன்றிடு மலமும் போக்கும் சொல்லுகற் கண்டு வாந்தி கபமோடுட் டணந்து ரத்தும்.
பஞ்சதாரை அல்லது சர்க்கரை
பித்தமே யுழலை வேர்வை பெருஞ்சுரங் கிறுகி றுப்பு மெத்திய விருமல் வாந்தி மிஞ்சத்தி சுரமே மேகம் நித்தமும் வருத்துங் காயா சுவாதமு நீங்கு மென்ப சத்தியம் பஞ்ச தாரை யல்லது சர்க்க ரைக்கே.
முலைப்பால் வகை முலைப்பால்-கறுப்பியின் பால்-சிவப்பியின் பால்
மாதர்தம் முலைப்பால் சேடம் வரட்சியே யிரும றாகம் காதிடு மூல ரோகங் கணைச்சுரம் பயித்தி யம்போம் தீதிலாக் கறுத்தத்தேகத் தெரிவைபால் கண்ணுக் காகும் ஒதுசெம் மேனி யாள்பா லொருமூன்று தோஷ நீக்கும்.
சேட பித்த வாத தேகிகளின் பால்
சேடமாந் தேகி யின்பா றீர்த்திடும் விழிநோய் தன்னை நாடிடும் பித்த தேக நங்கைபா றானே வாத மோடரும் வாயு மாற்று மோதிடும் வாத தேகம் கூடும்பெண் முலைப்பா லாலே குறைந்திடுஞ் சுரங்க ளன்றே.
மிருகப் பொருட்கள்
பசு மூத்திரம்-பசுப்பால்-வெண்பசுப்பால், கபிலைப்பால்
கோசலந் தனிற்க டுக்காய்க் கொட்டையை நீக்கி யிட்டு மாசறக் காய்ச்சி யுண்டர்ன் மகோதரங் குன்மம் வாதம் நாசமா முதர கீடந் நவையற வகற்று மென்ப வாசமார் பாற்குப் பித்தம் வரட்சியு மிருமன் மாறும்.
கயமுதற் பிணிகளும் போங் காயத்திற் பெலனு முண்டாம் நயமதாய்த் தாது விர்த்தி நாளுமுண் டாகு மென்ப வியன்மிகு வெள்ளை யாப்பான் மெல்லிதா மெவர்க்கு மேற்கும் கயமுறு கபிலை யின்பால் கனத்திடு மென்பர் மாதோ.
சிவப்பு-கறுப்பு-முதுகொத்தி-இளங்கொத்தி ஆகிய இப்பகக்களின்பால்-பாலாடை
செய்யவான் கரிய வான்பா றீர்க்குங்கால் கபமு திர்ந்த வெய்யவான் பான்மந் திக்கும் விறன்மிகு வாய்வுண் டாக்கும்
84
79
80
18
182
183
84
85

பதார்த்த சூடாமணி
துய்யதா மிளங்கொத் திப்பா றுய்த்திட வெவர்க்கு நன்றாம் மையில்பா லாடை தாது வர்த்திக்கும் பெலனுண் டாமே. 86
பசுவின் இளந்தயிர்-முதுதயின்
இளந்தயிர் கிருச்சி ரத்தோ டிளைப்பருந் தாகம் போக்கும் வளர்ந்திடும் வாத மப்பால் வருமுது தயிர்க்கு ணத்தை விளம்பிடின் மதுர மாகு மேம்படு பெலனுஞ் சாரும் உளந்தனின் மகிழ்ச்சி யுண்டா முறுதிமிர் தீர்க்கு மன்றே. 187
வெண்ணெயெடுத்த மோர்-வெண்ணெயெடாத மோர்
ለስ
வெண்ணெய்-நெய்-பல்-எலும்பு
கரைத்துடன் வெண்ணெய் தன்னைக் கவர்ந்திடு மோர்க்கு ணங்கேள் செரித்திடு மன்னந் தானுஞ் செவ்வையாய் மலமும் போகும் அருத்தியாய்ப் பசியுண் டாகு மவ்வெண்ணெ யெடாத மோராற் சிரத்துநோய் கண்ணோய் காசஞ் செறிபிர மேகத் தோடே. 88
உட்டணங் கிராணி பித்த முற்றநீர்க் கடுப்பு மாறும் மட்டில்வெண் ணெய்க்குத் தாது வளர்ந்திடும் பெலனுண் டாகும் வெட்டைமூ லம்போங் கண்ணு மிகவொளி யுண்டா மெய்யும் திட்டமா யழகுண் டாகுந் தீர்ந்திடு மிரத்த பித்தம். 89
வாதமை பித்தந் நாளும் வருத்திடா திருக்கு நெய்க்குச் சீதமு மழகு முண்டாஞ் சிறப்புறக் குளிருங் கண்கள் தாதுவர்த் திக்கும் பித்தந் தவிர்ந்திடு மிளமை யுண்டாம் ஒதபல் லெலும்பு கண்ணோ யொழித்திடு மென்பர் சித்தர். 90
கோரோசனை
கோவின்ரோ சனைக்குத் தேகங் கொழுத்திடுஞ் சுரம்வ ரட்சி தாவுமூச் சிருமன் மேகஞ் சலரோக முழலை யோடு நாவினின் வரட்சி யாவி நலியதி சாரம் போகும் தேவனா மீசன் முன்னாட் செப்பிய படியி தாமே. 9
எருமைப்பால்-தயிர்-வெண்ணெய்நெய்-மோர்
மேதிப்பா றயிரே வெண்ணெய் மிகுவிக்குங் கிரந்தி மந்தம் சீதத்தோ டரிய வாயு செப்புறு நெய்யு மிற்றே ஏதுற்ற வெண்ணெய் தன்னை யெடுத்தமோர் கிராணி தாகம் வாதைக்கா மாலை பாண்டு வன்சல ரோகம் போக்கும். 192
ஒட்டகப்பால்-தயிர்-மோர்-நெய்
ஒட்டகப் பாறான் மந்தம் பித்தமு மோங்கச் செய்யும் முட்டிடு தயிரே வாயு மோர்தோஷம் வாயு வென்பர்
நட்டமா நெய்யி ரத்த நோய்நாடு மிவைக ளெல்லாம் கெட்டவாம் பொருட்க ளென்று கிளத்தினார் முனிவ ரம்மா. 93
85

Page 55
பதார்த்த சூடாமணி
கழுதைப்பால்-மலம்
கழுதைப்பால் பயித்தி யத்தைக் காதிடு மற்று நோய்கள் முழுவது மீதி னாலே முதிர்ந்திடு நாளுந் நன்றாய்ப் பழகினாற் கால தேய பருவத்தா லேற்கு மென்ப கெழுமிய மலம்பு கைக்கக் கிரந்திகண் மாறு மன்றே.
கழுதைமூத்திரம்-குளம்பு-எலும்பு-பல்லு மற்றிதின் சலந்தான் மேகம் வாதம்வன் கிருமி சூலை துற்றிய பத்து மூன்று சன்னியுந் துரத்து மென்ப உற்றகாற் குளம்பு சன்னி யொடுபரி வலிப்பு மாறும் பற்றிய வெலும்பும் பல்லும் பகர்விழி நோய்கண் மாற்றும்.
வெள்ளாட்டுமூத்திரம்-பால்
வெள்ளாட்டு நீர்க்குப் பேதி மிகவுண்டாங் கிருமி வீக்கம் கள்ளமில் லாமற் றிருங் காசில்பா னோய்க ளுக்காம்
உள்ளுறு கிரந்தி வாத முறுசூலை மந்தம் வாயு விள்ளரும் பழைய காய்ச்சன் மேவிய குணமும் போமே.
ஆட்டுத்தயிர்-வெண்ணெய்-இறைச்சி அட்டிடு தயிர்க்கு வாத மருங்குன்மஞ் சேட காசம் கெட்டிடும் பசியுண் டாகுங் கிளர்வெண்ணெய் நோய்க டீர்க்கும்
இட்டமா மிதனி றைச்சி யேற்றிடும் பத்தி யத்திற் கெட்டியும் பாரா *தைதா னிரும்பெல னுண்டாம் பின்னும்.
செம்மறிப்பால்-தயிர்-இறைச்சி
வாதம்வா யுக்க ரப்பன் மருவிடா நோய்கள் போகும் ஏதமார் செம்ம றிப்பா லிதன்தயி ரிறைச்சி யாவும் தீதுறு வாத பித்தஞ் சேட்டுமங் கிரந்தி மற்றும் ஒதிய நோய்க ளெல்லா முற்றிடு மென்பர் நீத்தோர்.
பள்ளையாட்டிறைச்சி, கொடியாட்டிறைச்சி
பள்ளையாட் டிறைச்சி யுண்ணிற் பலமதாந் தாது வுண்டாம் உள்ளமிக் கனலாம் வாயு வுதித்திடுங் கொடியாட் டின்றன் தள்ளரு மிறைச்சி குன்மந் தவிர்த்திடும் வயிற்றி னோயும் எள்ளரு மிடுப்பி னுற்ற விரணமும் வலியு மாற்றும்.
ஊர்ப்பன்றியிறைச்சி-நெய்-காட்டுப்பன்றியிறைச்சி ஊர்ப்பன்றி நிணநெய் யுண்ணி லுறுந்திரி தோஷம் புண்ணே தீர்க்கருங் கரப்பன் வெட்டை தினவொடு மற்று முண்டாம் ஈர்த்திடும் வரட்சி மூல மிளைப்பும்போ மதுர மாகும் கார்க்காட்டுப் பன்றி தன்னின் கடுநிணங் கரப்பன் வாயு.
மரை, மான் இவற்றின் இறைச்சி
உட்டண மதனி னோடே யுதரத்தில் வலியுண் டாக்கும் தட்டிலா மரையி றைச்சி தவிர்விலா மந்த மாகும்
194
95
196
97
198
99
200
* ஐ-சிலேற்பனம்,
86

பதர்ர்த்த சூடாமணி
பெட்புடன் பெலனு முண்டாம் பெருமைசேர் மானி றைச்சி திட்டமாய்ப் பெலனுண் டாக்குஞ் சேர்த்திடு மந்தந் தன்னை.
மான்கொம்பு
ஆகுமிங் கிதனின் கொம்புக் ககன்றிடும் வரட்சி மூச்சுத் தாகமே தொய்வினோடு சாற்றரு மலடு பித்தம் மேகமே யிருமல் காந்தி வெட்டைவெங் கயமே யீழை போகுமே கிராணி யெல்லாம் புகல்சல ரோக மற்றும்.
முயலிறைச்சி
முயனிண மிரும லீழை மொழிந்திடு சுவாச காசம் கயமலக் கட்டுப் பித்தங் கருதரும் வரட்சி யோட்டும் நயனுறு நடையுண் டாக்கு நல்லன்னஞ் செரிக்கப் பண்ணும் சயமுறு கொழுப்பி னோடு சார்ந்திடும் பெலனு மன்றே.
பறவைவகை மடையான், வெண்கொக்கு உள்ளான்
மடையானின் கறிக ரப்பன் வளர்சிரங் கையஞ் சேர்க்கும் மிடையும்வெண் கொக்க ருந்த மேகம்புண் கரப்பன் சேரும் வடிவுள வுள்ளான் மேகம் வாதபித் தத்தைப் போக்கும் அடையும்பத் தியத்திற் காகு மருந்திடிற் பசியுண் டாமே.
சிறகை. கூழைக்கடா
சிறகைதான் கிரந்தி யோடே தினவையுஞ் சேர்க்கு மென்ப குறியசுகூ ழைக்க டாவூன் கொடியநீர பூழிவைப் போக்கும் மறுகிய சூலைப் புண்ணும் வந்திடுங் கரப்பன் சேரும் செறிதரு வாத ரோசி சிரங்கையுஞ் சேர்க்கு மாமே.
தாரா. கிளுவை
தாராவின் கறிகிரந்தி தருவிக்குந் தாதுண் டாக்கும் பாரினிற் கிளுவைப் பட்சி பாலிலா மங்கை மார்க்குச் சீரொடு பால்சு ரக்கச் செய்திடுஞ் சிரங்கு பித்தந் தீரும்புண் ணாறு மென்று செப்பினார் முற்று ணர்ந்தோர்.
சூறை, சிட்டு
சூறையின் கறிக்குக் குன்மஞ் சோகையே குட்டம் வாயு பாறிடும் பத்தி யத்தோர் பண்புட னுண்ன வேற்கும் வீறுசேர் பவுந்தி ரங்கள் விட்டிடுங் கிருமி போகும் மாறிடச் சிட்டி றைச்சி மலமோடு கிருமி போக்கும்.
கோட்டான், ஆட்காட்டி, வான்கோழி
பகர்ந்தகோட் டானி றைச்சி பத்தியந் தனக்கே யாகும் சுகந்தரு பசியுண் டாக்குஞ் சொல்லுதீ பனத்திற் கேற்கும்
87
20
2O2
203
204
205
206
207

Page 56
பதார்த்த சூடாமணி
மிகுந்தவாட் காட்டி மேகம் விலக்கும்பத் தியத்திற் காகும் மகிழ்ந்தவான் கோழி யுண்ண வந்திடுங் கரப்ப னையும்.
கானாங்கோழி, கடலுறாய்ஞ்சி
சிறந்திடுங் கானாங் கோழி தீர்த்திடு மிருமல் சேடம் பிறந்திடுங் கரப்பன் றானும் பிழையில் பத்தியத்திற் கேற்கும் பறந்திடுங் கடலு றாய்ஞ்சி பத்தியந் தனக்கே யாகும் சொறிந்திடுங் கரப்பன் மேகந் தொலைத்திடுங் கிரந்தி யோடே.
கருவெளவால், வெள்வெளவால்
கருவெளவால் சிரங்கு மேகங் காட்டுநீ ரிழிவு புண்ணே மருவுசெங் கரப்ப னாதி வந்திடச் செய்யு மென்ப குருகுசேர் வெளவால் பித்தங் கொடுமையார் கரப்பன் றீர்க்கும் பரவுபத் தியத்திற் காகு மென்னவே பகர்வர் மேலோர்.
தூக்கணங்குருவி, சிற்சுழிக்குருவி. நாரை
தூக்கணாங் குருவி யோடு துகளில்சிற் சுழிக்கு ரீயின் ஆக்கிய கறிம லத்தோ டரோசிக மையந் தீர்க்கும் தாக்கிய நாரை யுண்ணச் சலரோகந் தவிரு மேகம் நீக்கமில் கரப்பன் வாதம் புண்ணிவை நேருமாமே.
குயில், மயில்
குயிற்கதி வாத பித்தங் குன்மம்போ மேகந் தீர்க்கும் நயத்தபத் தியத்திற் காகு நவிறரு சொறியும் போக்கும் மயிற்கறி வாத சேடம் வருத்துசூ லைப்பி டிப்பும் வியப்போடு நீக்குநாளு மேவிடு மனலென் றோரே.
நீர்க்காக்கை, அண்டங்காக்கை
நீர்க்காக்கை பித்த பாண்டு நிகழ்சோகை பித்தம் போக்கும் காக்கரு மேகத் தோடு கரப்பனுண் டாக்கு மென்ப சேர்க்கவே யண்டங் காக்கை செறிசோகை பாண்டு பித்தம் நீக்குங்கா மாலை யாதி நெறியுட னென்பர் மாதோ.
கவுதாரி
கவுதாரிக் கறிக்கு ணங்கேள் கயம்வாதம் பித்தஞ் சேடம் அவமுறு வரட்சி யெய்ப்பு மாறிடும் வீரி யத்தோ டுவகையார் பெலன்கொ முப்பு முற்றிடு மிளமை யுண்டாம் தவர்கள்போற் றகத்தி யன்முன் சாற்றிய முறையி தாமே.
f6
காடைக்கு வாத பித்தங் கண்ணினோய் சுவாச காசம் சூடுறு சுரமே குன்மஞ் சோகையே கிராணி புண்போம் பீடுறு பெலனுண் டாகும் பிராணனுக் கினிமை யாகும் நாடொறு முணவுண் டாக்கு மென்னவே நவின்றிட் டாரே.
88
208
209
20
211
23
214
215
216

பதார்த்த சூடாமணி
ஊர்க்குருவி, புறா ஊர்க்குரு வியின்கு ணங்கே ளொளிபெல னிளமை யுண்டாம் தீர்க்கரும் வாத பித்தஞ் சேடமுஞ் சுரமுந் தீரும் சேர்த்திடும் புறாக்க றிக்குத் திரமொடு மதுர முண்டாம் பார்த்திடிற் றேகந் தேறு மாமெனப் பகரு நூலே.
கரிக்குருவி, மணிப்புறா, மனைப்புறா
கரிக்குரீ யையம் வாதங் காமாலை சொறிசி ரங்கு வருத்திய கரப்பன் றீர்க்கு மணிப்புறா வாதங் குன்மம் கருத்தழி சயம்வாய் வோடு கழிக்கும்பத் தியத்திற் காகும் சுரக்கமின் மனைப்பு றாவூன் றொகுத்திடுஞ் சொறிக ரப்பன்.
வரிப்புறா, மாடப்புறா, பச்சைப்புறா தவிட்டுப்புறா
வரிப்புறா வாத பித்தம் வளர்பாண்டு சோகை தீர்க்கும் வருத்துமா டப்பு றாத்தான் வாதமாம் பத்தி யத்திற் கருத்தியாம் பச்சை யாகும் புறாவினா லகலு மூன்றும் பெருத்திடா தவிட்டு வென்னும் புறாவினாற் பித்த மேகும்.
கோழியிறைச்சி-முட்டை-எலும்பு
கோழியின் கறிக்கு வாதங் குடி போகுங் குன்ம நீங்கும் வாழ்பெல னனலி னோடு வன்பசி யுண்டா முட்டை பாழ்செயுங் கிரந்தி யல்லாற் பகரருங் கரப்பன் சேர்க்கும் காழுறு மிதனெ லும்பு கண்ணுரோ கங்கட் காமே.
பலபட்சிமுட்டை, முசுற்றுமுட்டை பலபல பட்சி முட்டை பரிசேடம் வாயு சேர்க்கும் மலியுட லிறுக்கு மெத்த வர்த்திக்கு மிரத்த மென்ப
தலைமையா முசுற்று முட்டை சன்னிதா கஞ்சு ரத்தோ டலைவுசெய் பித்தந் தானு மகற்றிடு மென்று காணே.
உடும்பு
உடும்பதன் கறிக்கு ணங்கே ஞண்மூலங் கடுப்புச் சோகை கடும்வாத பித்தந் தாகங் காசம்புண் சேட மாற்றும் வடுவுடல் கொழுப்பி னோடு வண்மையார் பெலனுண் டாக்கும் படுமிவ்வூ னுடம்பி னெங்கும் பரிவொடு சேரு மாமே.
எலி, பெருச்சாளி
எலிக்கறி சேட மூல மியம்பதி சாரங் குன்மம் விலக்கில்விற் புருதி பன்னோய் பீலிகை மீட்கு மென்பர் உலப்பிலாப் பெருச்சா விக்கே யுரைத்திடு மிளைப்புக் குட்டம் வெலற்கருங் கிராணி வாதம் பீனிசம் பித்த மீளும்,
மீன்வகை நண்டு, நத்தை
நண்டினிற் றாது நட்ட நணுகாது சுரங்கண் ணோய்போம் கொண்டமேல் வீக்கம் வாதங் குறைந்துடல் வாடு மென்ப
89
28
29
22
222
223

Page 57
பதார்த்த சூடாமணி
தண்டலில் லாத நத்தைச் சதையினை நாளும் நாடி உண்டிடி னினிடவாழ்நா ஞற்றிடுந் தேக நன்றாம். 224
சுறா, அயிரை, திருக்கை
சுறாக்கறி கிராணி குன்மஞ் சூலைவன் னதிசா ரத்தோ டறாப்பிணி சுரமும் போக்கு மயிரைமீ னரோசி போக்கும் சிறார்க்கு நன்றாகு மன்னஞ் செரித்திடுந் திருக்கை மீனால் உறாவாத பித்தந் நாளு முறும்பசி பெலனுண் டாமே. 225
வாளைமீன்-வாளைக்கருவாடு. மற்றைக் கருவாடுகள்
வாளைமீன் பலமாம் வாத மருவுமிக் கருவாட் டிற்கு மீள்வலி பித்தம் வாயு விலக்கிடும் பெலனுண் டாக்கும் கேள்மற்றுங் கருவாட் டிற்கும் கிளர்மந்தஞ் சேட குன்மம் மாளுமே பசியுண் டாகும் வயிற்றுறு வலியும் போமே. 226
இறால், உழுவை, கெண்டை
இறான்மிக மந்த மென்ப வினிமையா, மதுர மாகும் உறாவெட்டை யுழுவை யுண்ணி லொண்மையா மனஞ்செ ரிக்கும் அறாக்கெண்டை மீனையுண்ணி லரிப்பொடு வயிற்று நோயும் பொறாமற்று நோயும் புண்ணும் பொருந்திடும் வாய்வுண் டாமே. 227
மடவை, கத்தலை, சிற்றிறால்
மடவைமின் கரப்பன் வாதம் வளர்மூல மந்தத் தோடு குடல்வாதஞ் சூலை சேர்க்குங் குறித்தகத் தலைமீ னுண்ணில் மடியுறு பொருமல் பேதி வளர்ந்திடுங் கரப்பன் றீரும் வடிவில்சிற் றிறால்க ரப்பன் வாதந்தீ பனமுண் டாக்கும். 228
கெளிறு, வரால், ஆமை
கெளிறுணப் பசியுண் டாகுங் கிளர்பித்தம் வாதம் போகும் தெளிவரா லுண்ண வாதஞ் சேடமே பித்தம் வாயு எளிதினின் மாறு மாமை யின்கறி கிராணி பித்தம் ஒளிவிலா வாத சேட முண்மூல மதிசா ரம்போம். 229
கடைச்சரக்குவகை கெருட பச்சைக்கல். நண்டுக்கல்
தாகமே சுரம்வ ரட்சி சாற்றிடு மூல மேகம் சோகமே கயமே பித்தந் தொலைத்திடுங் கெருட பச்சை வேகமார் சலவ டைப்பும் வீக்கமுந் நண்டுக் கல்லுப் போகச்செய் திடுமென் றம்ம புகன் றிடுஞ் சித்தர் நூலே. 230
காண்டாமிருகக் கொம்பு
விழற் கரிய காண்டாமிருகநற் கொம்பின் மேன்மை தளம்பல் றவத்தின் மிக்க தாபதர் தம்மாலன் றிக்
90

பதார்த்த சூடாமணி
கிளம்புதீ வினைகள் சூழ்ந்து கெட்டிடு நம்மா லத்தை உளங்கொள முடியா தேனு முறுகுரு வருளி னாலே.
ஒதுதும் பயித்தி யங்க ளோடிடும் பித்தந் தாகம் தீதுறு வரட்சி மேகஞ் செப்பருங் கயங் கபாலம் ஏதமா மெய்ப் பிளைப்போ டெரிவுநஞ் சுண்ட வெப்பம் கோதுறு மருத்தீ டாதி குலைத்திடு மடமிர்தோ டொக்கும்.
சங்கு, சோகி, பீதரோகிணி, கிருமிசத்துரு
சங்கொடு சோகித் தன்மை சயித்திய மிகவுண் டாக்கும் தங்குகண் வியாதி பீதரோகிணி தவிர்க்கு மென்ப பொங்கிடுங் கிருமி சத்ரு புண்புரை கிரந்திப் புண்ணே அங்கமார் கரப்ப னோடே சிரங்கையு மவிக்கு மாமே.
அக்கராகாரம், மல்லி, வாய்விளங்கம்
அக்கரா காரஞ் சன்னி யருந்தோட நொடியி லாற்றும் மிக்கதாங் கொத்த மல்லி குளிர்காய்ச்சல் வெட்டை வாயு அக்கண மகற்ற லன்றி யரோசிகந் தனையு மாற்றும் தக்கவாய் விளங்கம் வாயு வாதத்தைத் தணிக்கு மாமே.
கற்கடகசிங்கி, பேரரத்தை
சொல்லுகற் கடக சிங்கி சூலைமுத் தோடம் வாந்தி பொல்லாத வாயு வாதம் புரையுறு சுரங்க ரப்பன் எல்லாம்போம் பேர ரத்தை யின்குணம் விடஞ்சி ரங்கே அல்லாமல் வாதபித்த மையொடு கரப்பன் மாற்றும்.
சிற்றரத்தை
கூறிடுஞ் சிற்ற ரத்தைக் குணத்தினைச் சொல்வன் கேண்மோ ஊறுசெய் சன்னி தோஷ சுரமுறு மூன்று தோஷம் மாறுசெய் தொண்டைக் கட்டுஞ் சேடமும் வரட்சி யோடு தேறுபி னிசமு மல்லாற் றீர்ந்திடுங் கரப்பன் றாணும்.
திப்பிலி
திப்பிலிக் குணத்தைக் கேண்மின் றிரிதோஷஞ் சுவாச காசம் சொற்றிடு வாத பித்தஞ் சூலைமார் படைப்புச் சேடம் குற்றமார் கண்ணு ரோகங் குன்மந்தி மந்தங் காசம் பொற்பிலாச் சன்னி யாதி போமெனப் புகலு நூலே.
ஆனைத்திப்பிலி, அவின்
தேற்றமாய்ச் சொல்வ னானைத் திப்பிலி யதின் குணங்கேள் சோற்றினைச் செமிக்கப் பண்ணுஞ் சுரத்துட னிரும றிர்க்கும் போற்றிடு மவின்கு ணங்கேள் புகல்பேதி வாயுப் போக்கும் ஊற்றமாம் பித்தஞ் சேர்க்கு முறுதாது வளரச் செய்யும்.
91
231
232
233
234
235
236
237
238

Page 58
பதார்த்த சூடாமணி
திப்பிலி மூலம், சடாமாஞ்சில்
திப்பிலி மூலம் வாயு தீர்க்கருஞ் சன்னி குன்மம் சொற்பெறு வலிக ளெல்லாந் தொலைத்திடு மென்று சொல்வர் நற்சடா மாஞ்சிற் றன்மை நவிலுவன் கிறுகி றுப்பு பொற்பிலாப் பித்த மெல்லாம் போக்கிடுஞ் சீக்கிரத்தில்.
சிறுதேக்கு, ஓமம், குறாசாணி
சிறுதேக்குக் கடுப்புப் பித்தஞ் சேட்டும முழலை வாயு குறைவிக்கு மென்ப ரோமங் கூறரும் வலியே வாயு கறையுற்ற விரைச்சன் மந்தங் கழிச்சலு மாற்று மென்ப அறைகுறா சாணி பேதி யகற்றிடுஞ் சரத மாமே.
விழாலரிசி, வெட்பாலையரிசி, பெருங்காயம்
வரும்விழா லரிசி வாந்தி வலியதாங் கிறுகி றுப்புக் கிரந்தியே கரப்ப னாதி கெடுத்திடு நல்வெட் பாலை யரிசிதா னிரத்த பித்தங் கிராணியை யகற்று மென்ப பெருங்காயம் வாயுக் குன்மம் பெருவாயுத் திரட்சி நீக்கும்.
கார்புகா அரிசி, இலவங்கப்பட்டை-பத்திரி
கார்புகா வரிசி போக்குங் கரப்பனே சொறிசி ரங்கு சீரில வங்கப் பட்டை செய்குணம் பித்தம் வாந்தி பேருத ரக்க டுப்புப் பின்னதி சாரம் போக்கும் பார்மலங் கட்டு மிந்தப் பத்திரிக் குணமு மிற்றே.
வெந்தயம், மஞ்சள்
வெந்தயக் குணத்தைக் கேண்மோ மிகுசுரங் கழிச்ச லோடு மந்தமு மற்று மாற்றும் வண்ணமார் மஞ்ச ஞக்கு மந்தமார் நோய்க ரப்பன் வளர்பித்தங் கபங்கி ரந்தி நிந்தைசெய் புலானாற் றம்போ நிறைமேனி யுழகுண் டாமே.
கஸ்தூரிமஞ்சள், கச்சோலம், அடவிகச்சோலம் வரங்கொள்கஸ் தூரி மஞ்சள் மந்தம்வன் சுரங்க ரப்பன் சிரங்குபோக் கிடுஞ்சு ரத்திற் செறிகுளிர் தானும் போக்கும் அருங்கச்சோ லத்தி னோடே யடவிகச் சோலத் தன்மை இருங்குளிர்ச் சியையுண் டாக்கு மென்னவே யியம்பி னாரே.
குளவிந்தமஞ்சள், மரமஞ்சள், கோட்டம்
குளவிந்த மஞ்சள் வெப்புக் கொடும்வாயு கிராணி மாற்றும் வளர்மர மஞ்சள் காய்ச்சல் வருத்துநீர்த் தோஷ மாற்றும் தளர்விலாக் கோட்டங் கண்ணோய் சயங்காச சுவாதம் வாதம் அளவிலாச் சுரங்கள் வாந்தி யருமீழை விக்கன் மாற்றும்.
கசகசா, வலம்புரிக்காய்
சொல்கச கசாத்தான் பித்த மயக்கமுந் தொடரச் செய்யும் அல்லலார் கழிச்ச லுந்நீர்த் தோஷமு மகற்ற மென்ப
92
239
240
24
242
243
244
245

பதார்த்த சூடாமணி
நல்லதாம் வலம்பு ரிக்காய் நவில்காதி னடைப்புங் குத்தும் சொல்லிடு சுரமு மண்டைக் கரப்பனுந் தொலைக்கு மாமே.
கடுகுரோகிணி, சதகுப்பை
கடுகுரோ கிணிதான் மந்தங் கடுஞ்சுரஞ் சிரங்கு தோஷம் அடையுத ரத்திற் றோன்றும் மவ்வலி முற்று மாற்றும் தொடர்போதி தானு மாக்குஞ் சொல்சத குப்பை காய்ச்சல் மிடைமூலக் கடுப்பி னோடு தலைவலி மீட்கு மாமே.
அதிவிடயம், வாலுழுவை வெளுத்தற்பிசின்
கூறதி விடயத் தன்மை கொடுஞ்சுரங் கடுப்பி னோடு மாறிலாக் கழிச்சன் மாற்றி மலத்தையுங் கட்டு மென்ப தேறுவா லுழுவை வாதம் வீக்கத்தைத் தீர்க்கு மென்ப மீறிடும் வாதஞ் சன்னி வெண்பிசின் மாற்று மன்றே.
கோழிக்காரம், பூனாகம்
சுரசன்னி வாதங் குன்மஞ் சொல்குடல் வாத மோடு மருவிய விடமி ளைப்பு மாற்றிடுங் கோழிக் காரம் புரையில்பூ னாகஞ் சூலை புகல்வீக்கம் வெட்டுக் காயம் உரமார்பின் வலிவ யிற்றின் வலிவாத மோட்டு மாமே.
கல்நார், கல்மதம், அன்னபேதி, வால்மிளகு
கன்னார்கன் மதமி ரண்டுங் கண்ணினிற் குளிர்ச்சி யாகும் மன்னிய வன்ன பேதி மலமுடன் வாதம் போக்கும் சொன்னதி பனமுஞ் சேர்க்குந் துகளில்வான் மிளகு வாய்ப்புண் பன்னுமுட் டணநோ யன்றிப் பகர்சிக்கு மலமும் போக்கும்.
மிளகு
மிளகினாற் சன்னி சூலை விடாச்சுரம் வாயு மந்தம் ஒழிவில்கா மாலை சோகை யுறுகுன்மஞ் சிரங்க ரோசி தெளிவிலாப் பீனி சம்மே சில்விஷங் கபங்க ரப்பன் இழிவுற வருத்து கின்ற வியம்பரும் வலியி னோடே.
திரம்பெறு மற்று நோயுந் தீர்த்திடு நாத்தி ருந்தும் நிரம்பிய வழகு புத்தி நிகரிலா விளமை யுண்டாம் உரம்பெறு பித்தத் தோர்க்கீதொவ் வாதென் றுரைத்தார் முன்னே வரம்பெறு முனிவர் வாழ்த்த மலையகத் திருந்த கோவே.
சாத்திரபேதி, மாங்கிஷபேதி
சாத்திர பேதி புண்ணே சாற்றுமுட் டணம்வி டங்கள் பேர்த்திடு மென்று முன்னர்ப் பேசினர் முனிவர் தாமும் சீர்த்தமாங் கிஷமாம் பேதி செப்பிட நீர்ச்சி றுப்புக் கூர்த்ததுன் மாங்கி ஷங்கள் குறைத்திடு மென்னு நூலே.
93
246
247
248
249
250
25
252
253

Page 59
பதார்த்த சூடாமணி
துத்தம், துருசு, ஏலம்
துத்தமுந் துருசு மாறாப் புண்ணுடன் சுவாச காசம் பத்திர மான கண்ணிற் படலமே காசம் போக்கும் உத்தம மான வேல முறுவாந்தி விக்கல் வெப்பு மெத்திய சுரமே யிழை வீட்டுமென் றுரைப்பர் சித்தர்.
சிற்றேலம், நிமிளை
சிற்றேலம் விக்கல் சிக்கு மலம்வாயுத் தீர்க்கு மென்ப
பற்றிடு நிமிளை சூலை பலசன்னி குத்துக் குட்டம் வற்றிடுங் குன்மங் காணாக் கடிவிடம் வலியி னோடே
சொற்றிடு கொடுநோ யெல்லாந் தொலைத்திடு மென்னு நூலே.
வெண்காரம், சீனக்காரம், பொரிகாரம்
வெண்காரஞ் சேடங் காசம் வீட்டிடுஞ் சலமும் போக்கும் தங்கிடுஞ் சீனக் காரஞ் சாற்றுபல் லரணை வாயு பொங்குகண் வியாதி போக்கும் பொரிகாரம் வாத வீக்கம் பங்கமார் கபத்தி னோடு பகர்சல நன்றாய்ப் போக்கும்.
வெடியுப்பு. கடலுப்பு, மற்றை உப்புக்கள், இந்துப்பு
புடவிய லனேக முப்புப் பொலிந்திடு மவற்றுட் டானே வெடியுப்புச் சலவ டைப்பை விலக்கிடுங் கார முண்டாம் கடலுப்பு மற்று முப்புங் கடுந்திரி தோஷஞ் சேடம் கொடுமையார் வாதம் வாயுக் குன்மமுந் தவிர்க்கு மின்னும்.
மலசுத்தி தானு மாக்கும் வளருமுட் டணமே யென்ப நலத்தவிந் துப்பு மிக்க நளிராகுந் தோஷம் வாயு தொலைத்திடும் பேதி யாக்குஞ் சொன்மல பந்தம் போக்கும் அலக்கண்செய் கண்ணி னோயு மகற்றிடு மென்னு நூலே.
சூடன். செவ்வியம்
சூடன்புண் புழுக்க ரப்பன் சொல்லிடுங் கிரந்தி மாற்றும் தேடுசுண் ணாம்பி லிட்டுத் தின்றிடப் பல்வி யாதி வாடிடுந் தொண்டை நோயு மாற்றுஞ்செவ் வியமுத் தோஷம் நாடிடா மந்தம் வாந்தி நவின்றிடு வலியு மாற்றும்.
சவாது, சட்டம்
பொலிந்திடுஞ் சவாதின் றன்மை புகன்றிடிற் றாது மெத்த மலிந்திடுங் கரப்பன் புண்ணே வாதமே சிரங்கு மம்ம மெலிந்திடுங் கபமும் போக்கும் வியன்சட்டஞ் சுரமே வாதம் நலிந்தவுட் டணத்தினோடு நவிர்வெய்கல் லடைப்பு மாற்றும்.
புழுகு
புழுகின்றன் குணமு ரைக்கிற் புகல்வாத பித்த சேடம் வழுவிய தொந்தக் காய்ச்சல் வண்கய மசீர ணம்போம்
94
254
255
256
257
258
259
260

பதார்த்த சூடாமணி
பழகுவி ரியம்ப லத்தோ டனுபவ மாயு வுண்டாம் விழுமமென் மணமு டைத்தாம் விருப்பமும் வெருகு மன்றே.
பச்சைக்கள்ப்பூரம்
பச்சைக்கர்ப் பூர மூன்று பகுதியா மிவைநி றங்கேள் அச்சமில் வெண்ணி றத்தோ டழுக்குவெண் ணிறமே மஞ்சள் மெச்சிய நிறமே யாகு மேகம்பீ னிசங்க பாலம் முச்சுரத் தோஷந் தாக முதிர்கப மீழை பித்தம்.
தலைவலி யுழலை யோடு சாற்றுமுட் டணமே மூலம் நிலைகெடு மற்று நோயு நிகழ்த்துமிச் சரக்கி னாலே உலைதரு நோயை யெம்மா லுரைத்திட வெளிய தாமோ அலைவிலா முனிவர் சொல்வ ரங்கதை யறிந்து பாரோ.
செண்பகப்பூ, கச்சோலம்
செண்பகப் பூச்சீ யோடு சலதோஷஞ் சுரமே யன்றிக் கண்படு வியாதி தீர்க்குங் கச்சோலங் குளிர்ச்சி யுண்டாம் நண்ணுநீர்க் கோவை யோடு நவிறலை வலிபோ மென்று பண்புள பொதிகை நாதர் பகர்ந்திடு நூல்க ளோதும்.
மஞ்சிட்டி, வெண்குந்திருக்கம், கிளியூறல்
மஞ்சிட்டி வாதம் வாயு மண்டைநோய் தலைநோய் கண்ணோய் துஞ்சிடச் செய்யும் வெண்குந் திருக்கநீர்த் தோஷ மாற்றும் நெஞ்சுநோ வெந்தப் புண்ணு நீக்கும்பல் லுரக்கு மென்ப விஞ்சிய கிளியி னுாறல் மிளிர்சுரம் வெப்பு மாற்றும்.
நாகம்பூ குக்கில்
நாகப்பூச் சோகை யோடு நலிதரு சென்னி நோயும் ஏகச்செய் திடுமே கண்ணி லெய்திடு மிகக்கு விர்ச்சி வேகமார் குக்கி லீழை மெலித்திடும் வாத சூலை சோகமார் கிருமி மண்டைச் சூலையோ டிருமல் போக்கும்.
பொன்மெழுகு நன்மெழுகு, கொசுமெழுகு பழஞ்சுரம் வீக்க மெய்ப்புப் பகர்ந்திடு மிளைப்புத் தன்னை வழங்குபொன் மெழுகு தானே மாற்றிடு மென்று சொல்வர்
ஒழிந்தநன் மெழுகு புண்ணின் மருந்திற்கென் றுரைப்பர் யாரும் விழைந்திடு கொசுகா லாகு மெழுகினால் வசிய முண்டாம்.
புத்திரசோகி, சமுத்திரசோகி
புத்திர சோகி மேகம் பொல்லாத தாகம் வெப்பு மெத்திய வெட்டை மீட்கு மிளிர்சமுத் திரமாஞ் சோகி மத்தமா ரரோசி யையம் வருத்துநீ ரழிவி னோடே உற்றிடு முதர வாய்வு மோட்டுமென் றுரைக்கு நூலே.
95
26
262
263
264
265
266
267
268

Page 60
பதார்த்த சூடாமணி
ஈரவெண்காயம்
ஈரவெண் காயத் தன்மை யியம்பக்கே ளிரத்த மூலம் தீருமுட் சுரங்க டுப்புத் திரிபிலாக் கிரந்தி வாயு பேருமே யுதர வெப்புப் பெருகிய மூல ரோகம் கோரமார் கரப்பன் மாறு மென்னவே கூறு நூலே.
கடுகு
கடுகினற் குணத்தைக் கூறிற் காரமாம் வாயு மந்தம் கெடுசன்னி குன்மந் தோஷங் கிளத்திய வாதங் குட்டம் படுவலி யேம யக்கம் பாறிடு மனலுண் டாக்கும் வடுவிறா ழிதத்திற் காகு மாமென வகுக்கு நூலே.
நாய்க்கடுகு, மாயாக்காய்
சூதக வாயு வாயுச் சுரோணித வாதந் தன்னைக் காதுநாய்க் கடுகு போக்குங் கருதிய மாயாக் காய்க்குத் தீதுசேர் மேக வேகந் தீர்ந்திடு மக்க ரங்கள் மோதிய பொரும லோடு முடிந்திடு மென்று காணே.
நற்சீரகம்
சீரகக் குணத்தைக் கேளு திரிசுர மரோசி வாந்தி காரமார் வெட்டை மூலக் கடுப்பொடு தாகம் வாயு வாரமின் மேக பித்தந் தலைவலி மடியு மற்றும் தீருங்கண் குளிருந் தேகந் திரமுறு வாச முண்டாம்.
கருஞ்சீரகம்
கரியசீ ரகந்தான் செய்யுங் களங்கமில் குணத்தைக் கேண்மோ சுரமந்தங் கரப்பன் புண்ணே சொல்லுபீ னிசத்தி னோடு சிரவலி கண்ணி லுற்ற தீவலி முதனிங் குங்கால் வருபேதிக் காகு மென்று வகுத்திட்டார் மலைய நாதர்.
கராம்பு
காரமார் கராம்பி னல்ல குணத்தைக்கேள் கபமே கோழை ஈரமில் குன்மம் வாத மீழையே வலியே சன்னி தீருமே சீவ தாது சேர்ந்திடுஞ் சோம்பு தீரும் சீருறு தாம்பூ லத்திற் சேர்த்தருந் திடவு நன்றே.
வசம்பு, உள்ளி
வசம்பிற்குச் சன்னி குன்மம் வலிவாயு விஷம்போ மென்பர் இசைந்திடு முள்ளிக் குத்தா னியம்பருஞ் சன்னி வாதம் வசஞ்செயாச் சேட சீதம் வாயுநீர்க் கோவை மந்தம் நிசந்தலை வலியு நீங்கு நிறையனல் பித்த முண்டாம்.
96
269
270
271
272
273
274
275

பதார்த்த சூடாமணி
தாளிசபத்திரி, மதுரம்
தாளிச பத்தி ரிக்குத் தானத்தி சுரம யக்கம் மீளுமே பித்தம் வாந்தி விக்கலே பிரமே கம்போம் கேளதி மதுரந் தாகங் கெட்டிடு வரட்சி வெட்டை கோளுறு சுரமே பித்தங் கொடியதாங் கடுப்பு மாறும்,
சுக்கு
கேள்சுக்கின் குணத்தைச் சூலை கெடுகபம் வாத வீக்கம் கோளைநீர்க் கோவை மந்தங் குன்மநெஞ் செரிப்பு வாயு
ஈளையே புளித்தேப் பந்தா னிருமலே சுவாச காசம் மூள்வலி மூன்று தோஷம் முச்சுரந் தலைநோ யின்னும்.
மலக்கட்டுச் செவிய டைப்பு வயிற்றுறு பொரும லோடு விலக்கரு நோய்க ளெல்லாம் விலக் கிடுமென் றுரைத்தார் சலத்தினைத் தவிர்த்த தன்வந் திரியெனும் பகவா னோடு நலத்தகொங் கணரு மற்றை நவையிலா முனிவர் தாமும்.
நேர்வாளம், வேம்பாடல்
நேர்வாளம் விடத்தை நீக்கி நிறைகத்தி செய்தாற் பேதி சார்விக்குஞ் சுரமே தோஷஞ் சன்னிக டமையு மாற்றும் சீர்செய்வோம் பாடற் றன்மை சிரங்கு புண் கரப்ப னோடு தீர்விலாக் கிரந்தி யெல்லாஞ் செவ்வையாய்த் தீர்க்கு மன்றே.
வசுவாசி, சாதிக்காய்
வசுவாசி மந்தம் வாதம் புளித்தேப்பம் வாயு போக்கும் இசைசாதிக் காய்ம லத்தை யிறுக்கிடுந் தாது தானும் நிசமாக வலுக்கும் வாத சேட்டும நீங்குந் தேகம் நிசநிற மாகு நீங்காப் பொருமலு நீங்கு மாமே.
சமுத்திராப்பச்சை, கூகைநீறு
சமுத்திராப் பச்சை பித்தந் தாகமே வரட்சி தொய்வு துமித்திடுங் கயமே சேடந் தொலைத்திடு முடற்கு நன்றாங் அமைத்திடுங் கூகை நீறே யருந்தாகஞ் சுரம்வ ரட்சி சமித்திடு முடற்கு நன்று தண்மையுஞ் சாரு மன்றே.
கறுவாத்தயிலம்-பட்டை
கறுவாவின் றயிலத் திற்குக் கடுமையா முடக்கு வாதம் குறைவுறு மிதன்பட் டைக்குக் கொடியதாங் கார முண்டாம் சிறுகிடும் வாயு வாதந் தீர்ந்திடும் வயிற்றுப் புண்ணும் முறைதவ றாத வண்மை முனிவரு முரைத்தா ரிற்றே.
கஸ்தூரி, கர்ப்பூரசிலாசத்து
புரையில்கஸ் தூரி விக்கல் புகன்றிடு வசூரி தோஷம் உரைசெய்நீ ரோட்டந் தாக மோட்டுமென் றுரைப்பர் மேலோர்
97
276
277
278
279
280
281
282

Page 61
பதார்த்த சூடாமணி
கருதிடு மேன்மை யாகுங் கர்ப்பூர சிலாசத் தாலே வருசல ரோகம் போகு மாமென வகுத்திட்டாரே.
நெரியரிசி, சாம்பிராணித்தயிலம்
நெரியரி சிக்கு ணங்கே னிர்த்தோஷ நீங்கு மன்றி மருவுநீரிழிவு மாற்று மலிந்தசி தளமுமாகும் தருமணச் சாம்பி ராணித் தயிலம்பன் னோவை மாற்றும் சிரமயிர் தனக்கு மாகு மெனச்செப்பு நூல்க ளெல்லாம்.
சாளியா, மதனகாமியப்பூ உருத்திராட்சம்
சாளியாக் குத்து நோவுந் தள்ளிடும் பற்றுப் போடக் கோளுறு காமப்பூவுங் கொடுங்கஞ்சாக் குணத்தோ டொக்கும் ஆளுறு முருத்தி ராக்க மக்கிநோய் வரட்சி தொய்வு மீளுமே தாக மூச்சு மேகமே பித்த மாதி.
குங்குமப்பூ சுரந்தாகம் வரட்சி மேகஞ் சொல்கண்ணோ யிருமல் மூச்சு அருமூலஞ் சயத்தி னோடுள் ளவியல்கண் முற்று மாற்றும்
உரமல நன்றாய்ப் போக்கு முயர்ந்த குங்குமப்பூ மேவும் தரமிலாக் குணமீ தென்று சாற்றினர் சீற்ற மில்லார்.
இரசம்
சிவவிந்தா மிரசஞ் செய்யுஞ் செய்யநற் குணங்கள் செப்பில் தவநந்தாக் கும்ப யோனி சார்தன்வந்திரியே சித்தர் அவமுந்து மற்று முள்ள வறிவுசேர் முனிவர்க் கல்லால் சிவநந்து நம்மா லாகா வாயினுஞ் சிற்சில சொல்வாம்.
பெருரோக மேகங் காசம் பிளவை காமாலை சூலை சுரமகோ தரங்கி ரந்தி சொல்வலி வாதங் குன்மம் மரிமுறி கிரந்தி பாண்டு மார்படைப் யோனிப் புற்று வருமுடக் கரையாப் போடு சன்னிவிற் புருதிப் புண்ணும்.
உட்குத்துப் புறவீச் சண்டவாதமுட் டணம்பே ராமை மட்டநீ ராமை பக்க வாதந்திக் கண்ட மாலை குட்டமார் பாணி யோடு கொடுமுருத் திரவாய் வின்னம் நட்டஞ்செய் குமர கண்ட னாகத்தின் விடமே யாதி.
விடமொடு மற்று முள்ள விதனமா ருரோக மெல்லாம் கெடுமிந்த விரசந் தன்னைக் கேதமுற் றிடாத வண்ணம் வடிவமாய் மாட்டு கின்ற வகையதை யறிந்தா லித்தால் விடவரு மிரச வாத வேதியுஞ் செய்ய லாமே.
சாதிலிங்கம்
சாதிலிங் கத்தின் றன்மை சாற்றிடிற் குணமே யாதி சூதநே ராகுங் குட்டஞ் சூலைதீக் குன்மங் குத்து
வாதமே வலிசு ரங்கள் வளர்சன்னி பாண்டு வாயு ஒதிடுங் கோழை யிழை யுரைதரு மிவையே யாதி.
98
283
284
285
286
287
288
289
290
291

பதார்த்த சூடாமணி
பலவகை நோய்க ளெல்லாம் பானுமுன் பணிபோ லேகும் சொலவகைக் கடங்கா விந்தத் துகளிலாச் சாதி லிங்கம் இலகிய துறைய ஹிந்து மருந்துகட் கெல்லா மாட்ட நலவகை யறிந்தா லற்றே நற்சீவ நிலையா மென்ப.
சர்ப்பக் கண்டம்
மேவிய சர்ப்பக் கண்ட வியன்குண மினிது கேண்மோ ஆவியை வருத்துஞ் சன்னி யரும்வாத மிவற்றினோடு தாவறு பெருநா கத்தின் றழல்விட முதலவாய யாவையு மகற்று மென்றே யிசைத்தனர் பெரியோ ரம்மா.
மனோசிலை, மடலரிதாரம்
புகன்மனோ சிலையின் றன்மை பொல்லாத சன்னி வாயு இகலான சுரமே வாத மிவைதமை நீக்கு மென்ப தகுமட லரிதாரந்தான் சாற்றிடுஞ் சுரங்கிரந்தி மிகுவாயு வாதி மற்றும் வீட்டுமென் றுரைத்தார் மேலோர்.
தாளகம் அல்லது அரிதாரம்
தாளகந் தானே யல்ல தரிதார மதன்கு ணங்கேள் கோள்செயுங் குன்ம மல்லாற் கொடுமழு கண்ணி சன்னி நாளுமே வருத்துகின்ற மண்டைநோய் நளிரார் காய்ச்சல் மாளுமென் றுரைத்தார் முன்னே வாருதி யுண்ட மேலோர்.
சிவந்த தாளகம், பஞ்சபாஷாணம்
சிவந்ததா ளகத்தின் றன்மை செப்பக்கேண் மேகம்வாயு அவந்தரு குட்டஞ் சூலை யருஞ்சுரந் தமைய கற்றும் உவந்திடு முரிய பஞ்ச பாஷாண மோதுங் காலை நிவந்திடுங் குளிர்புண் காய்ச்ச னிங்குமென் றுரைப்பர் மாதோ.
தொட்டி, கெவுரி
தொட்டிப்பா ஷாணத் தன்மை சொல்வாத வித்தைக் கேற்கும் துட்டமார் கிரந்தி வாயு விடக்கடி தொலைக்கு மென்ப கெட்டியாம் வாத வித்தை கெவுரிபா ஷாணத் தாலே கிட்டிய சுரங்கள் சன்னி கெடுமொரு நொடியி லம்மா.
நெல்லிக்காய் கெந்தகம்
நெல்லிக்காய் கெந்த கத்தி னெறிகேளாய் கவுசி குன்மம் வல்லதாம் வாயு குட்டம் வலிவிடங் கடுங்கி ரந்தி சொல்லிடுஞ் சுரங்க ளெல்லாந் தொலைந்திடு மென்று முன்னர் பல்வகை முனிவர் சித்தர் பகர்ந்தவா கடங்கள் சொல்லும்.
சவ்வீரம்
சுரமண்ட வாயு சன்னி தொடர்வலி குமர கண்டன் வருவிஷங் கண்ட மாலை வாதம்விற் புருதி கோழை
99
292
293
294
295
296
297
298

Page 62
பதார்த்த சூடாமணி
உரைபெரு நோய்க ரப்ப னுட்குத்துப் புறவிச் சீழை சருவிய கிரந்தி குட்டஞ் சவ்வீரந் தொலைக்கு மாமே.
கருநாவி
கருநாவிக் குணங்கேள் சன்னி மந்தார காசங் குன்மம் சுரமீழை யிருமல் குத்துச் சூலையே விஷம்வ லிப்பே உரைசெயுங் கபமே சேடமுட்குத்துப் புறவீச் சாதி அரமிரும் பினைய ராவு மப்படிச் செய்யு மாமே.
முத்து
முத்துநற் குணத்தைக் கேளாய் முதிர்பிர மேகமோடு சத்தியே கழிச்ச றோஷந் தாகமு முட்க பந்தான்
பித்தமே சயம்வ ரட்சி பெருந் தொண்டைக் கட்டுச் சேடம் வித்தகப் பருதி கண்ட மின்மினி போலா மன்றே.
பவளம்
புரையிலாப் பவளந் தன்மை புகலுவ னினிது கேண்மோ சுரமொடு வரட்சி மூச்சுத் தொய்வருந் தாகஞ் சேடம் இருமலே வாத பித்த மினையவை நீக்கு மென்று வரமலி முனிவர் சித்தர் வகுத்தவா கடங்கள் சொல்லும்.
உலோகவகை தாம்பிரம், வெண்கலம், காந்தம்
கிரந்தியே கரப்பன் கோழை கிளத்திடு மிருமல் குட்டம் வருந்தச்செய் வாயு முற்றுந் தாம்பிர மாற்று மென்ப பொருந்து வெண்கலத்தின்றன்மை புகன்றிடிற்கபத்தை மாற்றும் திருந்திய காந்தத் தாலே திரிதோஷ மகோத ரம்போம்.
பொன், வெள்ளி
பொன்வெள்ளிக் குணங்கேள் பித்தம் புகன்றிடுங் கொடிய சன்னி குன்மமந் தார காசங் கொடுமையார் சேடமோடு
பன்னுமுத் தோஷ மெல்லாம் பறந்திடப் பண்ணு மென்று மன்னுயர் கும்ப யோனி வகுத்தவா கடங்கள் சொல்லும்.
இரும்பு, கிட்டம் உருக்கு
கரும்பொன்கா மாலை காசங் கயமகோ தரமு மாற்றும் பெரும்பழங் கிட்டம் பாண்டு பெருவயி றுரமுந் தீர்க்கும் உரம்பெறு முருக்கு மிற்றே யோதுமே ழுலோக மற்றும் வரம்பெறச் சிந்து ரிக்கின் மாட்டலாந் துறைகட் கெல்லாம்.
பதார்த்த சூடாமணி முற்றுப்பெற்றது.
திருச்சிற்றம்பலம்.
100
299
300
30
302
303
304
305

வைத்திய விளக்கய் பொருளட்டவணை
அக்கரசுரத்தின் குணமும் மருந்தும் , அடக்கமெழுப்பித்தயிலம் அதிசாரசுரத்தின் குணமும் மருந்தும் அமுதசாகர எண்ணெய் அருணோதயச் சூரணம் அருணோதய மாத்திரை அவத்தைக்குறி 960)665D இயக்கம் வேர்த்தயிலம் இலவங்கச்சூரணம் இளநீரருந்த உக்கிராக்கிராணம் எலாதிச்சூரணம் ஒடுவெண்ணெய் கஞ்சியுண்ண கடுக்காய்சூரணம் கட்டிற்கு மருந்து கண்டாவிழ்த மாத்திரை கண்ணிற்குப் பிறவளையம் மேற்படி வேறு கண்ணிற் பசாடுபிடித்தால் கண்ணோவிற்கு மேற்படி வேறு 35urTLLDIt gigo) கயசிந்தாமணிநெய் கயரோகநிதானம் கயரோக சிகிச்சை கருவேப்பிலைப்பச்சடி காதிற்குத்து அடைப்பிற்கு மேற்படி வேறு குரவர் வணக்கம் கோதாரிக்கழிச்சலின்குணம் கோதாரிக்கழிச்சலின் சிகிச்சை கோரோசனை மாத்திரை கோழிச்சாறு சங்காரருத்திர மாத்திரை சஞ்சீவிச் சூரணம் சஞ்சீவித் தயிலம் சண்டமாருதச் சூரணம் சந்தனம் பூச சந்தானசன்னி மாத்திரை சந்திரோதய மாத்திரை சருவாங்க மாத்திரை சலரோகசஞ்சீவிநெய் சன்னி முதலியவற்றிற்கு உண்டைக்கட்டல் சன்னிவாதசுரத்திலெண்ணெய்
101

Page 63
சாதிலிங்க மாத்திரை சித்திரமூலச் சூரணம் சிரங்காற்றிச் சூரணம் சிறுசந்தனாதியெண்ணெய் சிறுபிள்ளை மாந்தத்திற்கு சிற்றாமுட்டியெண்ணெய் சின்னம்மைக்குணம் சின்னம்மைச் சிகிச்சை சீதகேசரி மாத்திரை
சீரகச் சூரணம்
சுகபேதிக்கு
சுரகுடாமணி மாத்திரை சுரத்தில் வீங்கினால் சுரபூமணி மாத்திரை சுவாதத்திற்காணு முழலைதாகத்திற்குக் குடிநீர் சுவாதத்தின் குணமும் மருந்தும் செங்கரப்பன் கட்டிற்குச் சிகிச்சை செண்டு
சேடசுரத்தின் குணம் சேடகரத்தின் சிகிச்சை
தசநாடி தசவாயு, தசவாயுவின் தொழில் தாகந்தீர தாமபூலமருநதும வகை தாழங்காயெண்ணெய் தீச்சுட்டபுண்ணிற்கு
தீட்டுடைக்க
தூதுவளை ரசம்
நகச்சுற்றிற்கு நயனசந்திராதி மாத்திரை நயனபூபதி மாத்திரை நாசிகாபீடத்திற்கும் கபாலக்குத்திற்கும் நாடித்தொந்தம்
நாடித் தோற்றம்
நாடிப் பரீட்சை
நீராகாரம்
நீரிழிவுக்குணம்
நீரிழிவுச் சிகிச்சை
நூற்பெயர் நோ முதலியவற்றிற்குச் சாராயப்பற்று நோய்கொண்டோரிடம்மாற பஞ்சசீத எண்ணெய் பண்டிதனிலக்கணம்
பத்தியத்திற்கு பற்பேத்தைக் கட்டின் குணமும் மருந்தும் பற்பொடி பாண்டுரோகக்குணம்
பாலுண்ண
பானகம் பித்தசிலேற் பனசுரத்தின் குணம். பித்தசிலேற் பனசுரத்தின் சிகிச்சை
102

பித்தசுரத்தின் குணம், சிகிச்சை - பிரண்டைத்தண்டுப் பச்சடி பிளவைநாசம்
பிள்ளைக்கற்றாழைக்கறி
பிள்ளை பெற்றவர்களுக்கு
புண்ணிற்குக்காரம்
பூரண சந்திராதி மாத்திரை பெரியசந்தனாதியெண்ணெய் பெருங்காயச் சூரணம்
பெருரோகக்குடோரித்தயிலம்
பெருவியாதிக்குணம் மந்தசுரத்தின் குணமும் மருந்தும் மந்தநாச மாத்திரை
மாந்தக்குடிநீர்
மாவடு நீராகாரம் மிருதசஞ்சீவினி மாத்திரை
முச்சுரக்குடி நீர் முத்தோஷங்களும் அதிகரிக்கும் குறி மூலப்பவுந்திரத்திற்கு மெல்லியதேகத்தோர்க்கு வெப்புத்தாகம் முதலியனதிரவாதசுரசன்னிக்குச் சிகிச்சை வாதசுரத்தின் குடிநீர்
வாதசுரத்தின் குணம் வாதகுலாங்குசம், வாதகுலைக் குணம், சிகிச்சை வாதாரி மாத்திரை
வாயுக்குடாசூரணம்
வில்வாதியெண்ணைய் வீக்காரிச் சூரணம் வெட்டுக்காயத்திற்கு
வெட்டையின் குணம் VM வெட்டையின் சிகிச்சை
வெந்தயச் சூரணம் M வெந்தயரசம் வெற்றிவேலாயுத மாத்திரை வெற்றிவேலாயுத மாத்திரை 11
வைனதேய மாத்திரை
சரக்குச் சுத்தி
அரிதாரசுத்தி - இரசம் - இரும்பு - இலிங்கம் - எட்டிவிரை எலிப்பாஷாணம்
ஐவகையுப்பு
கரியபோளம் கருவூமத்தம்விரை
103

Page 64
கர்ப்பூரசிலாத்து காந்தம் காரவகை குக்கில்
கொடுவேலி சவர்க்காரம்
SL65tb சுத்திவேண்டாமருந்து தாம்பிரம்
துருசு
தொட்டி
நாவி
நிமிளை
பொன் பொன்னிமிளை மயிற்றுத்தம் மற்றும் பாஷாணங்களின் பொதுச் சுத்தி மனோசிலை வங்கம் முதலியன வாளம்
வெண்காரம் வெண்துத்தம் வெள்ளி வெள்ளைப்பாஷாணம் வெள்ளைப் போளம்
104

பதார்த்த சூடாமணி உள்ளுறை
கடவுள் வணக்கம்
58
பஞ்சபூதம்
58 - 59
சாதவகை
60 - 62
தாவரப் பொருட்கள்
62 - 83
முலைப்பால்வகை
83
மிருகப் பொருட்கள்
83 - 86
பறவைகள்
86 - 88
மீன் வகை
88 - 89
கடைச் சரக்குவகை
89 - 99
உலோகவகை
105
99

Page 65
பதார்த்த சூடாமணிய் பொருளட்டவணை
9).
அகத்தி இலை - பூ - பிஞ்சு - பழுப்பு அகில்
அக்கராகாரம்
அசோகு அடவிகச்சோலம் அடவிநீர் அண்டங்காக்கை அதிவிடயம் அத்திப்பட்டை அமுக்கிரா
அயிரைமீன் அரசு முகை - இலை - பட்டை அரிகீரை
அரிசிக் கூழ்
அரிதாரம்
அருவிநீர்
அலரி
அல்லிப்பூ அவரை இலை - காய் அவல்
அவின்
அவுரி
அழிஞ்சில்
அறுகு
அறைக்கீரை அன்னபேதி
ஆகாயக் கத்தரிக்காய் ஆகாயம் ஆடாதோடை ஆடு தின்னாப்பாலை ஆட்காட்டியிறைச்சி ஆட்டுத்தயிர் - வெண்ணெய் இறைச்சி ஆத்தி - இலை ஆமணக்கெண்ணெய் ஆமை ஆம்பற்கிழங்கு ஆலம்பட்டை ஆவரைப் பஞ்சாங்கம் ஆனைத்திப்பிலி
106

இஞ்சி
இண்டிலை
இதரைப்பழம் பூ e இத்திப்பட்டை ar இயங்கு இரசம் - இரும்பு
இருவிளா
இலந்தைப்பழம்
இலவங்கப்பட்டை - பத்திரி
இலவம்பிசின்
இலாமிச்சு
இலுப்பையிலை - பூ - நெய்
இளங்கலையன்
இளநீர் . இளவற்றேங்காய் இறால்
ஈச்சங்குருத்து ஈரவெண்காயம் ஈர்க்குச்சம்பா
உடும்பு
உதிரவேங்கை
உத்தமாகாணி
உப்பிலி உப்பு-வெடியுப்பு:கடலுப்பு இந்துப்பு மற்றையஉப்புகள் - உப்பு நீர் உமரி
உருத்திராட்சம்
உவாய்
உழுந்து
உழுவைமின் s உள்ளானிறைச்சி உள்ளி உறட்டி
ஊசி மல்லிகை ஊமத்தங்காய் - ஊமத்தை ஊர்க்குருவி * » ஊர்ப்பன்றியிறைச்சி - நெய் aஊற்று நீர்
107
67 88
58
68

Page 66
எருக்கு - அதின் பால்
எலி
எலிச் செவி எலுமிச்சம்பழம் - இலை எழுத்தாணிக்கீரை
6
எருமைப்பால் - தயிர் - வெண்ணெய் - நெய் - மோர்
எள்ளு - பிண்ணாக்கு - எண்ணெய்
ஏரி நீர் ஏலம்
ஒடுவடக்கி
ஒட்டகப்பால் தயிர் - மோர் -
ஒடை நீர் ஓமம் ஓரிலைத் தாமரை
கக்கரிப் பழம் கங்கை நீர்
ëëታã5öቻff
கச்சோலம்
கஸ்தூரி கஸ்தூரி மஞ்சள் கஞ்சா கஞ்சாங்கோரை கடலிறாஞ்சிப்பட்டை கடலுப்பு கடலுறாய்ஞ்சி
6L60)6)
கடுகு கடுகு ரோகிணி கடுக்காய் - பூ - கொட்டை கட்டுச்சோறு கண்டங்கத்தரி வேர் கண்டில் வெண்ணெய் கதலிப்பழம் கத்தரிப் பிஞ்சு - காய் - பழம் கத்தலைமீன் கப்பற்பழம்
கம்பு
ஏ
நெய்
108
73 84 88
75 63 62
59 93
80 84
59 9 70
69 58 9. 91 96 91 74 68 77 93
69 95 92 76
73 73 75
89 75 62

கராம்பு
கரிக்குருவி
கருங்குறவை
கருஞ்சாமை
கருஞ்சீரகம்
கருஞ்சோழன்
கருணை
கருநாவி
கருப்பநிர்
கருமத்தம்விரை
கருவாடு; வாளைக்கருவாடு
மற்றைய கருவாடு
கருவேம்பு
கருவேல்
கருவெளவால்
கர்பூரசிலாசத்து
கர்ப்பூரவல்லி
கல்லுண்டையரசி
கல்நார், கல்மதம்
கவிழ்தும்பை
கவுதாரி
கழுதைப்பால்-மலம்-மூத்திரம்-குளம்பு-எலும்பு-பல்லு
களப்பன்னை
களாக்காய்
களி
களிப்பாக்கு
கள்ளி
கறுத்தப் பூக்கொடி
கறுவாத்தயிலம் - பட்டை
கற்கடகசிங்கி
கற்கண்டு
காஞ்சிரம்பழம் - வித்து காடி
6)
காட்டாத்திப் பூ காட்டு நாரத்தை காட்டுப் பன்றியிறைச்சி காண்டாமிருகக் கொம்பு காந்தம் காய்ந்தாறியநிர் காரரிசி காராமணிப்பயற்றிலை காரை கார்த்திகைக் கிழங்கு கார்புகா அரிசி காவிரிநீர்
காவிளாய்
109

Page 67
காற்று காற்றோட்டி காணாங்கோழி
கான்றைக்காய் - இலை -
&Lub கிணற்றுநீர் கிரந்திநாயன் கிருமிச்சத்துரு கிளியூறல் கிளுவைப்பட்சி
கீரைத் தண்டு கீழ்காய்நெல்லி
குக்கில் குங்குமப் பூ குடிகஞ்சி குதிரைவாலி குப்பை மேனி குமிழம்பழம் குயில்
குரக்கன் குருவிச்சம்பூ குழைந்த சோறு குளநீர் குளப்பாலை குளவிந்தமஞ்சள் குளிர்ச்சோறு குறாசாணி குறிஞ்சா
குன்றி
கூகைநிறு கூத்தன் குதம்பை 360psis85LIT
கெண்டைமீன் கெருடபச்சைக்கல் கெவுரி கெவுளியிளநீர் கெளிறு
கெ
10
96 70 86

6D
கையாந்தகரை கைவரைச்சம்பா
ରଥist
கொசுமெழுகு கொடிக்கள்ளி கொடிப்பயறு கொடிப்பயற்றிலை கொடிப்பாலை கொடியாட்டிறைச்சி கொடிவழுதலைக்காய் கொடுவேலி கொட்டாங்கரந்தை கொட்டைப்பாக்கு கொட்டைப்பாசி கொம்மட்டிக்காய் கொம்மட்டி மாதளை கொய்யாப்பழம் கொழுக்கட்டை கொள்ளு
கொற்றான் கொன்றைவேர் - பட்டை - காய் - இலை
கோ
கோடகசாலை
(335f.
கோட்டன்
கோதும்பை
கோரைக்கிழங்கு
கோரோசனை
கோவைக்காய்
கோழிக்காரம்
கோழியவரை கோழியிறைச்சி - முட்டை எலும்பு
சங்கங்குப்பி
சங்கு
சடாமாஞ்சில்
சட்டம்,
சதகுப்பை சதுரக்கள்ளி - நீர் - பால் சமுத்திரசோகி
82 91
62.
84 69 92
88
82 90 9. 93. 92
94.

Page 68
சமுத்திராப்பச்சை சம்பாபொது சர்க்கரை சர்ப்பக்கண்டம் சவாது
சவ்வீரம் சன்னிநாயன்
EFs சாணாக்கி சாதிக்காய் சாதிலிங்கம் சாத்தாவாரி சாத்திரப்பேதி சாம்பிராணித் தயிலம் சாயவேர்
சாரணை சாளியா
சிட்டு சித்திரைப்பாலாவி சிவதை சிவந்த தாளகம் சிவன்வேம்பு சிறகை சிறுகக்காய்ந்த நீர் சிறுகாஞ்சோன்றி சிறுகீரை சிறுகுமிழ் சிறுகுறிஞ்சா சிறுசித்திரைப்பாலாவி சிறுசின்னி சிறுதேக்கு சிறுநெரிஞ்சி சிறுபயறு சிறு புள்ளடி சிற்சுழிக்குருவி சிற்றமட்டி சிற்றாத்தை சிற்றிறால் சிற்றேலம் சின்னி
சீதேவியார் சீந்தில் சீனாக்காரம்
சீனி
112

சுக்கங்காய்வற்றல் சுக்கு
சுடுசோறு
சுண்டி சுண்டைக்காய்வற்றல்
சுரையிலை - தண்டு - காய்
சுறா சுனைநீர்
சூடன் சூறை
செங்கத்தாரி செங்கழுநீர் செஞ்சோழன் செண்பகப்பூ
- கொழுந்து
ରଥF
செம்மறிப்பால் - தயிர் - இறைச்சி
செவ்வியம் செவ்விளநீர்
சேம்பு
சோகி
தண்ணிர்
தமரத்தம்பழம் தயிர்: ஆட்டுத்தயிர்
பசுவின் இளம் தயிர்
முது தயிர் எருமைத் தயிர் ஒட்டகத்தயிர் செம்மறித்தயிர்
தயிர்வேளைப்பூ
தவிடு
தழுதாழை
(8
(33FM
74
60 70 74 66 89 59
65
90
59
85 84 84
84 85 82 60

Page 69
த
தாதுமாதுளம்பூ தாமரைத்தண்டு - பூ
ம்பிரம்
தா
தாம்பிரவருணிநீர்
தாரா
தாழங்காய் - பூ - விழுது
தாளகம
தாளி
தான்றிப்பழம்
த்
தித்திக்கனி- கள்ளு - குருகு - வெல்லம் திப்பிலி, திப்பிலி மூலம்
திராய்
திருக்கை
தினை
தூதுவளையிலை - பூ - காய் - வேர்
தெ
தென்னம்பூ - பாளைநீர் - குரும்பை - குரும்பைக்கயர்
இனவற்றேங்காய் - இளநீர்
தே
தேங்காய் நீர் - பால் - நெப் தேற்றாஇலை - காய் - வித்து - பட்டை
14
76 70
58 86 76 98 70
75
82
67
89 82
69 69
68 93
93
87 36
懿1
8 דך 77
75

தொட்டி
நண்டு நண்டுக்கல் நத்தை " நத்தைச்சூரி நந்திப்பூ நரிப்பயறு நறுவிலி நற்சீரகம் நன்மெழுகு நன்னாரி
5F நாகம்பூ நாய்க்கடுகு நாரத்தம்பழம் БТ6ирц. - LII 601. - Шри நாயுருவி biTujuur86) நாரை
நிமிளை
நிலம்
நிலவேம்பு நிலப்பனைக்கிழங்கு நிலவிளா
நிலாவரை
நீராரை
நீர்
நீர்முள்ளி நீர்வெட்டி முத்து நீற்றுப்பூசினிக்காய் நீரின்சுத்தி நீர்க்காக்கை
நுங்கு b6TT
நெய்: பசுநெய், ஒட்டகநெய்
எருமை நெய் ஊர்ப் பன்றி நெய்
நெய்ச் சுட்டி
நெரிஞ்சி
நெரியரிசி
115
98
88 71 68 69 95
69

Page 70
நெருப்பு நெல்லிக்காய் - வற்றல் நெல்லிக்காய் கெந்தகம்
நெற்பொரி
நே நேர்வாளம்
நொ நொச்சிப் பூ - வேர் - இலை
பசள்ை - இரு வகை பசுமூத்திரம்-பால்-வெண்பசுப்பால்-கபிலைப்பசுப்பால் சிவப்புப் பசு - கறுப்புப் பசுப்பால் முதுகொத்தி - இளங்கொத்தி பசுவின் பாலாடை - இளந்தயிர் முதுதயிர் வெண்ணெய் எடுத்த மோர் - எடாத மோர் வெண்ணெய் - பல் - எலும்பு
பச்சரிசிச்சோறு
பச்சை பச்சைக்கற்பூரம்
பச்சைப்புறா பஞ்சதாரை பஞ்சபாஷாணம்
பஞ்ச பாண்டவர்முல்லை பயறு:சிறுபயறு,தட்டைப்பயறு,பெரும்பயறு,கொடிப்பயறுபயிரிலை, பரட்டைக்கீரை பராய் MMM. பராயம்பால் பருத்திக் கொட்டை - பால் பருத்தியிலை - பூ பலபட்சி முட்டை
பலவனிலை
பலாப்பழம் - காய் கொட்டை
u616. Tip
பழங்கஞ்சி, பழஞ்சோறு
பழப்புளி
பழுபாகல்
பள்ளையாட்டிறைச்சி
பறங்கிப்பட்டை
பற்படாகம் NWA பனங்குருகு - கள்ளு - கருப்பநீர் - நுங்கு - பழம் - பூரான் - கிழங்கு - பிட்டு - கூழ் - கட்டி - கற்கண்டு - பனிச்சாமை ܚ பன்றிப்புடோல்
Unts6) ~~~~
பாகற்காய்
பாதிரிப்பூ
116
59 76 98
96
73
70 68 78

uTusb பாலை மரத்தின் பால் - பழம் - பட்டை - தயிலம் பாவட்டங்காய்
GS
பிரண்டை
jL5 பிள்ளைக்கற்றாழை
பீச்சுவிளாத்தி பீதரோகிணி பீர்க்கங்காய் பிளை
புகையிலை
புதுகு புடோலங்காய்
புத்திரசோகி
புரசு - விரை
Lup5
Lq(geb LDL JIT
புழுங்கலரிசிச் சோறு
புளிக்கீரை
புளியம் பூ - காய் - பழம் புளியம் வித்து - பருப்பு - தோல் - காய்வற்றல் பூ வற்றல்
புளிக்நறளை
புளியாரை புறா - மணிப்புறா - மனைப்புறா - வரிப்புறா மாடப்புறா - பச்சைப்புறா - தவிட்டுப்புறா புற்சாமை
புனலித்தண்டு
புனறபாகம
புன்னைப் பூ
பூசனியிலை - பூ - காய் பூதவிருக்கம் பூவரசம் பட்டை - பழுப்பு பூனாகம்
பூனைக்காலி
பெ
பெருங்காயம் பெருங்குருத்து பெருச்சாளி
17
67 78 79
77
9
70 88

Page 71
பெருமரப்பட்டை பெருமருந்து பெரும்பயற்றிலை பெருநெல்லு
பேயத்தி பேயன் வாழைப்பழம் பேய்க்கும்மட்டி, பேய்ச்சுரை பேய்ப்பாகல், பேய்ப்பீக்கு பேய்மருட்டி
பேய்ப்புடோல்
பேரமட்டி
பேரரத்தை
பேரீச்சம்பழம்
(3
GLIII பொடுதலை பொரிகாரம் பொன் பொன் முசுட்டை பொன்மெழுகு பொன்னாங்காணி பொன்னாவிரை
மஞ்சள் மஞ்சிட்டி LDL6)ffs.Tyub
D66 மடையானிறைச்சி மணித்தக்காளி மதனகாமியப்பூ மதுரம் மந்தாரைப்பூ மயில் மரமஞ்சள் மருக்காரை மரல் மரையினிறைச்சி மரியார்கூந்தல் மருதம்பட்டை LD66 மலைவேம்பு மல்லிகை மனோசிலை
மாம்பிஞ்சு - பழம் - காய் - பூ - வித்து மாங்காய் வற்றல் மாங்கிஷபேதி மாதுளம்பழம் - இலை - காய்
118

மாதுளம் வேர் பூ
DT u JIT di5.6fTuu மாவிலங்கை மானிறைச்சி மான்கொம்பு
மிளகாய் மிளகு
முக்குளிக்கீரை
முசுட்டையிலை
முசுற்றுமுட்டை
முடக்கொத்தான்
முட்கத்தரி
முட்காவிளாய்
முட்காவேளை
முட்பாவற்காய் முட்பூலா - முந்திரிகைப்பழம் - இலை - முயலிறைச்சி முருங்கையிலை - பூ - காய் வேர் - முலைப்பால்: கறுப்பியின் பால் சிவப்பியின் பால்
சேடதேகியின் பால்-பித்ததேகியின் பால் வாததேகியின் பால் lv
முளைக்கீரை முள்ளங்கியிலை - கிழங்கு - வித்து முன்னையிலை
ep மூங்கிலரிசி
6) D மைக் கொன்றைப் பூ
Guds மொசுமொசுக்கை மொச்சை மொத்தன்காய் - கிழங்குப் பூ மொறுங்கன் இரண்டு
CDs மோதகம்
ଈ
வசம்பு வஞ்சி
வஞ்சி
19
76 95 72
86
74 92
64 63 88 64 70 68 72 74 70 76 86 78
83
67 66
62
78
7. 63 75 60
6
95 68

Page 72
வசுவாசி
வடிகஞ்சி வட்டுக்காய் - பழம் - கொட்டை - வேர் வத்தகப்பழம்
வரகு
வரால
வலம்புரிக்காய்
வல்லாரை
வல்விலொட்டி வன்னிமுதலிய காடுகளின் நீர் வன்னியிலை - பூ - பட்டை - காய்
6T60) வாதமடக்கி
வாய்விளங்கம்
வாலானரிசி
வாலுழுவை, வால்மிளகு வாழைப் பூ - காய் - தண்டு - கிழங்கு - பழம் வாளைமீன் - கருவாடு
வான் கோழி
କେଁ
விடத்தல்
விட்டுணகிராந்தி வில்வமிலை-காய்-வித்து-பழம்-வேர்ப்பட்டை-பழம் விழாலரிசி
விளாம்பழம் - காய்
வீ வீழி
ଗor
(6)6չllգեւը`յլ4
வெட்சி வெட்சிப்பூ வெட்டிவேர் வெட்பாலையரிசி வெட்பூலா வெண்கலம் வெண்காக்கணம் வெண்காரம் வெண்குந்திருக்கம் வெண்குன்றி வெண்கொக்கு
120
96 6. 73 69 62 89 9. 66 69 59 78
78 68 90
92 75 89. 86
80 70 79 9
69

வெண்கொடுவேலி
வெதுப்படக்கி
வெந்தயம்
வெருகு
வெல்லம்
வெளுத்தற்பிசின்
வெள்ளறுகு வெள்ளரிவிரை - காய் - பழம் - பிஞ்சு வெள்ளாட்டு மூத்திரம் - பால் வெள்ளாட்டுத் தயிர் - வெண்ணெய் - இறைச்சி வெள்ளி
வெள்ளைச் செவ்வந்தி
வென்னிர்
வே
வேப்பமிலை -யூ-காம்புவேர்-எண்ணெய்-பட்டை G6JuburTL6)
வேல் வேளையிலை
6)6. வைகைநீர்
வெள
வெளவால் - கருவெளவால் - வெள்வெளவால்
121
58
87

Page 73

யாழ்ப்பாணத்து வைத்தியநூல் வெளியீடு - 1
சிவமயம்
வைத்தியத்தெளிவு அனுபந்தத்துடன்
செட்டியார் இயற்றியது
இ..து யாழ்ப்பாணத்து ஏழாலை சுதேச வைத்தியர் ஐ. பொன்னையாப்பிள்ளையால்
பரிசோதித்து
சுன்னாகம் திருமகள் அச்சியந்திரசாலையில் பதிப்பிக்கப்பெற்றது.
பிரமோதுரத - ஐப்பசி
1930.
உரிமைபதிவு செய்யப்பெற்றது

Page 74
நூன்முகம்
“செட்டியார் இயற்றிய வைத்தியத்தெளிவு" என்று இந்நூற் பிரதி ஒன்றின் முகப்பிற் காணப்படுகின்றது. வைத்திய விளக்கம் இயற்றிய இருபாலைச் செட்டியாரே இதனையும் இயற்றியவராகும் என்றுசிலர் கூறுவர். தீவு பக்கங்களில் வசித்த முத்துச்செட்டியாரே இதன் ஆக்கியோன் என்பர்வேறுசிலா. இந்நூல் ஏறக்குறைய 500 செய்யுட்களையுடைய தென்பர். எம்மிடம் கிடைத்துள்ள பகுதியை அச்சிட்டு வெளிப்படுத் தினோம். மிகுதியை வைத்திருப்போர் தயைகூர்ந்து எமக்கு அனுப்பிவைப்பாராயின் உடனே வெளிப் படுத்தப்படும். ஆயின் வைத்தியநூல் வைத்திருப்போருள் நூற்றுக்குத் தொண்ணுாற் றொன்பதின்மரும் தம்மிடம் உள்ள ஏடுகளைப் பிறருக்குக் காட்டவும் உடன்படாத உயர்ந்த மனப்போக்கினை உடையார் என்பதை நாமறிவோமாயினும், பொது நலம் விழையும் புண்ணியர் சிலர் அத்திபூத்ததுபோல் அங்குமிங்கும் இருப் பதையும் கண்டோமாதலால் அத்தகையோரை உன்னியே அங்ங்ணம் கூறினோம். ஏனையோர் (கொடுக்க மனமில் லாதோர்) அதற்காக எம்மீது கோவங்கொள்ளாதிருப்பாராக.
முன் எம்மால் வெளியிடப்பெற்ற வைத்திய விளக்கம், பரராசசேகரம் 1ம் 2ம் பாகங்கள் என்னுமிவைகள் போதிய அளவு விலைப்படவில்லை. ஆதலால் அவற்றால் எமக்கு மிக்க பொருள் நட்டமே நேர்ந்துவிட்டது. இப்பொழுது அச்சிலிருக்கும் பரராசசேகரத்து மூன்றாம் பாகமாகிய சுரரோக சன்னிரோக நிதானங்களும், சொக்கநாதர் தன்வந்திரியம், வைத்திய சிந்தாமணி முதலிய வைகளுமாகிய இவற்றை விரைந்து முடித்தற்கண் ஊக்கமில்லா தொழிந்தமைக்கும் அதுவே காரணமாகும். பரோபகாரசிந்தைபடைத்த உத்தமர்கள் பலர் எமது இந்த நன்முயற்சியை ஆதரிக்க முன்வருவார்களாயின் இவற்றோடு இன்னும் பல அரிய நூல்கள் காலத்தில் வெளிவருவதற்கு ஏதுவாகும். அங்ங்ணமாவதற்கு எல்லாம் வல்ல இறைவன் திருவடிகளை வழுத்துவோமாக.
ஐ. பொன்னையா. ஏழாலை, பிரமோதுரத வருடம், ஐப்பசி மாதம்.

வைத்தியத்தெளிவு
Dசிவமயம்
வைத்தியத்தெளிவு
காப்பு
ஆதி யந்த மிலாத வருட்பெருஞ் சோதி யாயட்ட மூர்த்தி சொரூபமாய் நாத மாயெப் பொருட்கு நடுவுறும் போத மாஞ்சிவன் பொன்னடி போற்றுவாம்.
ஆயுள்வேத வரலாறு
ஆயுள் வேதத்தை யாதியி லத்தனார் மாயா சத்தி மனதி லுரைத்தனர் மாயா சத்தி மறுபடி சித்தர்க்குக் காய மாந்தரைக் காக்கக் கழறினாள்.
மருத்துவரியல்பு
சுத்த சைவத்திற் றோன்று மருத்துவர் சித்தம் வாக்குச் செயல்புரி தேகத்தால் நித்தங் கர்த்தனை நேசித்துப் பூசித்துப் பத்தி கொண்டு பவப்பகை வெல்வரே.
கலைய னைத்துங் கருத்தி லிருத்தியே நிலைகொ ணோய்களை நீக்கு மருத்துவர் கொலைமு தற்கொண்டு கூறிய பாவத்தை விலக நீக்கி யருளில் விளங்குவார்.
நாடிமூன்றின் நடைவேறுபாடு
கோழி யன்னங் குயினடை வாதமாம் தாழு மட்டை தரையாமை பித்தமாம் பாழிப் பாம்பினம் பாயுந் தவளைபோல் கோழை சேடங் குமுற நடக்குமே.
வாதத்தின்குணம்
வாத வன்மை வழுத்துவன் மாந்தர்க்குத் தாது நாசமாய்ச் சந்துகால் நோவதாம் தீது செய்மலஞ் செவ்வையாய்ப் போகாது ஒது நீர்மல முரத்துக் கறுக்குமே.
பித்தத்தின் குணம்
பித்தந் தானும் பிதற்றித் தலைவீசும் சத்தி பண்ணிச் சரீரம் வரட்சியாம். சித்தம் பேதமாய்த் தீனை மறப்பிக்கும் சுத்த நீர்மலஞ் சுட்டுக் கடுத்திடும்.
125

Page 75
வைத்தியத்தெளிவு
சிலேற்பனத்தின் குணம்
சேடச் செய்கையைச் செப்பின் மயக்கமாம் கூடும் வேர்வை கபமாய்க் குரல்கம்மும் நாடு மூச்சு நவில்வா யினித்திடும் வாடி மாந்தர் மலநீர் வெளுக்குமே.
தோந்தத்தில் வாதம் கோபித்தால் குணம்
நீருறு வாத நாடி நின்றதிற் கோப மானால் பாரினி லெவர்க்கும் வாயு பற்றிடு மந்த மாகும் வேரிசேர் குழலாய் வாதம் விரிந்ததி லெதிர்த்து நின்றாற் கூருறு சன்னி வந்து கூடிடு மூன்று நாளில்.
வாதசுரம்
வாதஞ் சேர்சுரம் வாட்டி வருத்தியே சீதங் கொண்டுபின் சிந்தை கலங்கிடும் சாதந் நீக்கிடுஞ் சத்தித்து நெஞ்சுநோம் பாதஞ் சந்து பருக்க வுளையுமே.
பித்தகரம்
பித்தஞ் சேர்சுரம் பேதமாய் வாய்கைக்கும் சத்தி பேதியுஞ் சாரும் வெதும்பிடும் மெத்த நீரு மலமுஞ் சிவந்துபோம் மத்த பித்த மயக்கச் சுரக்குணம்.
சிலேற்பனகரம்
சேடஞ் சேர்சுரந் தேக மழன்றிடும் நாடும் வேர்வையு நாவு மினித்திடும் கூடு நெஞ்சுநோங் கோழையு மூச்சுமாம் வாடுஞ் சோம்பு மலசலம் வெண்மையாம்.
வாததோஷம்
முந்து வாதத்தின் மொய்த்திடு தோஷந்தான் சிந்தை கெட்டுச் செவியு மடைத்திடும் மந்த மாகி மலஞ்சலங் கட்டியே சந்து நொந்துபின் றாது குறையுமே.
பித்ததோஷம்
பித்த தோஷப் பெலத்தை யுரைத்திடில் சத்தி மேற்படுந் தாகங் கதித்திடும்
மெத்தப் பேதியாய் மெய்யு மெலிந்திடும் சுத்தக் கண்கள் சுறுக்கிற் சிவக்குமே.
126
13
4.

வைத்தியத்தெளிவு
சிலேற்பனதோஷம்
ஐய தோஷத் தடைவை யுரைத்திடில் வெய்ய காய்ச்சல் மிகுந்து வெதும்பிடும் மெய்வெ ளுத்து வியர்வை மிகுதியாம் கைந டுங்கிடுங் காறுஞ் சறளியே. 5
விஷசுரம்
சுரமேதோன்றி வீக்கமுண்டாய்ச் சோருங் கைகால்சலமடைக்கும் திரமாய்ப் பேச வொட்டாது தீனுங் குறைந்து துயில்குறையும் சரமுந் தங்கித் தாகமுண்டாந் தாக்கு மிரும லிடையிடையே உரமார் விஷத்திற் சுரமெனமே யுரைத்தா ருண்மை யுலகோர்க்கே. 16
சோர்வாதம்
சோரும் வாதத்திற் றொந்த முரைத்திடில் நீரி னோடு மலமுந் தடைப்படும் பாரின் மாந்தர்மெய் பக்கம் விறைத்திடும் சேரு நாவினைச் செப்பவி டாதுகாண். 7
சீதவாதம்
சீத வாதத்தின் செய்கையைச் செப்புவன் வாத மெத்தி வலுத்திடுஞ் சேடமும்
ஒது நாக்கு முரத்துத் தடித்திடும் பாதந் தானும் பருத்துப் பொருமுமே. 18
புழுமேய்ச்சல்
பிடரி யுச்சி பெருக்கப் புழுவெட்டி அடருங் கூந்த லதிகங் குறைந்திடும் தொடரு மண்டையிற் றோலு முரிந்துதான் விடம தாகப்பின் மெய்யும் வெதும்புமே. 19
துடைவாழை
தொற்றித் தோன்றுந் துடைவாழை செய்குறி பற்றிக் கான்மேற் பருக்கத் திரண்டுதான் முற்றி நொந்துமுடக்கி மடக்கிடும் கற்ற பேர்கள் கருத்தாய்க் கழறினார். 20
வாயுத்தொந்தம்
சொல்லும் வாய்வுகள் தொந்தித் திடுங்குணம் செல்லுஞ் சோற்றைச் செரிக்க விடாதுகாண் கல்லுப் போலவே மேனி கனத்திடும் பல்லுக் கிட்டிப் பதைக்க மயக்குமே. 21
127

Page 76
வைத்தியத்தெளிவு
மந்தசுரம்
வாதந்தான் றணித்து நின்று வரிந்திடும் பந்து போலத் தீதற வெழுந்து நின்று சிக்கியே மந்தம் பற்றும் ஏதுவாய்ச் சுரங்க டாமு மிடைவிடா நிற்கு மல்லாற் தாதுவுங் குறைந்து நின்று தன்னையு மறக்கச் செய்யும். 22
அக்கரசுரம்
நாக்குத் தடிக்கும் வாய்வெருவு
நயனம் வெறிக்கப் பார்வைதரும் தாக்கங் கொடுக்கு முடம்பெங்குந்
தங்கா வயிறு தான்கழியும் போக்குஞ் சரீரம் பேதிக்கும்
பொருமுஞ் சுரமு மிகவுண்டாம் நீக்குங் காது கேளாது
நிகழு மக்கர சுரமிதுவே. 23
அக்கரக்கணை
முகம்பிறங் கால்பி றங்கை மோதியே மினுமி னுக்கும் நகம்விழி வெளிறிக் காட்டுந் நஞ்சுண்டாப் போன்ம யக்கும் மிகமிக வெதுப்பு முண்டாய் வெடித்துநா வுதடு புண்ணாம் சுகமிலை வருத்தந் தோன்றுஞ் சொல்லுமக் கணையின் வாறே. 24
உட்குத்துப் பிறவீச்சு
நெஞ்சிற் குத்தி நெருக்கும் புறத்தினில் மிஞ்ச வேர்வைகொண் டேவிக்க றோன்றிடும் கொஞ்ச நேரத்திற் கொட்டாவி கொண்டுதான் தஞ்ச மென்று சலிக்கு முடம்புகள். 25
குடல்வலி
குடல்வ லிக்குங் குணத்தை யுரைத்திடில் இடர்செய் யும்மல மிறங்கா தொருக்காலும் சடலம் வேர்வையாய்த் தாகமுஞ் சத்தித்துப் படப டத்துப் பதறிப்பின் சாவரே. 26
சத்தி
சத்தி வந்திடிற் றாகஞ் சருவிடும் பித்தம் மெத்திப் பெருத்திடும் பேதியும் சித்த மேங்கித் திடுக்கிடச் சன்னிகள் வித்த தாக விரைவி லெழும்புமே. 27
விக்கல்
விக்கல் செய்குறி வேதம் விதித்திடும் கக்கல் பண்ணிக் கதித்திடு நாகனும்
128

வைத்தியத்தெளிவு
நக்குந் நாக்கு வரண்டு நடுங்கவே ஒக்குந் தோஷ மொருங்குடன் றோன்றுமே.
நடுக்கம்
நடுக்கஞ் செய்குறி நாட்டி லுரைக்கிறேன் படுக்கக் கூடாம லேபதைப் புண்டாகும் கடுக்குஞ் சந்துகை காலும் வலித்திடும் திடுக்கி டப்பண்ணுந் தீபனம் வேண்டாதே.
இருமல்
இருமல் செய்யுங் குணத்தை யியம்புவன் பெருமு டம்புப் பெலத்தையும் வாட்டிடும் உருவைக் காட்டு முயர்வான கண்களும் கருகி யேவெளுப் பாகிக் கலங்குமே.
FF63p
ஈழை வந்தா லிரும லதிகமாம் பீளை கண்ணிற் பெருக்கப் பொருந்திடும் நீள நெஞ்சு நெருப்பெனச் சூடுண்டாம் வாழு மாந்தர் மலத்தை வரட்டுமே.
பைத்தியம்
ஊணு மின்றி யுறக்கமு மின்றியே காணுங் கண்கள் கலங்கி மயங்கிடும் வீனில் வார்த்தைகள் விள்ளுவர் மெத்தவே நாண மின்றி நடப்பர் பைத்தியம்.
செங்கண்மாரி
செங்கண் மாரிநோய் தேகத்திற் றோன்றிடில் அங்கம் வற்றி யழகு குறைந்திடும் பொங்கு கண்ணிற் சிவந்துறும் பீளையும் தங்கி நீருஞ் சலித்துச் சிவந்துபோம்.
செங்கண்மாரி முரிந்தால்
செங்கண் மாரி முரிந்திடிற் செப்புவன் அங்கம்மஞ்ச னிறமாய்க் கருகிடும் தங்கு நீருந் தடித்துச் சிவந்துபோம் பொங்கு நோயிது பொல்லாத தென்பரே.
மலக்கட்டு
மலத்தைக் கட்டுங் குணங்கேளாய்
வாயு மிஞ்சி வயிறுப்பும்
129
28
29
30
31
32
33
34

Page 77
வைத்தியத்தெளிவு
சலத்தை மிகவும் போக்காமற்
றாகங் கொள்ளுந் தலைகனக்கும்
பெலத்த மூச்சு முண்டாகிப்
பேசப் பெலனுங் கெட்டிருக்கும்
நிலத்தி லுள்ள மாந்தர்க்கு
நெடுத்த வாத நேரிடுமே.
வீக்கம்
வீக்கம் வந்தால் விழிவிங்கி
மேனி சற்றே வெளுத்திருக்கும் தூக்கம் வராது நாவுலருந்
துடைக ளிரண்டு மதைப்பாகும் வாக்குப் பேச வியலாது
வயிறு விம்மு முடல்கணக்கும் நீக்கு முணவை யெப்போது
நினைவுங் குறையு நிலைபரமே.
கழிச்சல்
வாதம் மெத்தி வலுத்துக் கழிந்திடும் போதந் தன்னைப் பொருந்த மயக்கியே சாத முண்டபின் சத்தியைச் சார்ந்திடும் சேதம் பண்ணச் சிலேற்பனஞ் சேருமே.
படுவன்
ஏற்க வந்த விழுக்குப் படுவனும் பார்க்கு ளோர்கள் பதறக் கழிந்திடும் வேர்க்கு மேனி விறைத்து வெளுத்திடும் காற்று மூக்கிற் கதிக்க வுதைக்குமே.
குட்டம்
திட்ட மாகவே தேகத்தில் மாந்தர்க்கு வட்ட மாகத் தடிக்கும் வகையைக்கேள் கட்ட மாகவே கால்கை குறைந்திடில் குட்ட ரோகமென் றேவகை கூறலாம்.
இந்திரகண்டி
இசையு மிந்திர கண்டி யிலக்கணம் அசையு மேனி யவியலுண்டாகியே தசைக ளெல்லாந் தழைவு கெடாமலே விசைகொள் பித்தமு மேவி வளருமே.
காந்தி
காந்தி வந்தாற் கலங்கிடுங் கண்கடாம் வார்ந்து மேனி வடிவைக் குறைத்திடும்
130
35
36
37
38
39
40

வைத்தியத்தெளிவு
ஏந்து நெஞ்ச மிடிக்கு மிளைத்திடும் போந்த நாக்குப் பெர்ருமி வெடிக்குமே.
நயனரோகம்
நாட்டு ளோர்க்கு நயனஞ் சிவந்துபின் மீட்டு நீர்கள் மிகவும் வெளுத்திடும் பூட்டிக் கண்கள் பொருந்திடப் புண்ணுண்டாய் நீட்டிப் பார்வை நிலையுறத் தோன்றாதே.
உட்டணம்
உட்ட ணத்தி னுரத்தை யுரைத்திடில் வெட்டை மிஞ்சியே விம்மிக் கடுத்துப்போம் திட்ட மாகவே தேகம் வெளுத்திடும் விட்ட மூத்திரம் வெண்மையாய்த் தோற்றுமே.
கல்லடைப்பு
கல்ல டைத்திடுங் காரியங் கேட்டிடில் மல்லுக் கட்டி மலஞ்சல மாறிடும் சொல்லுந் தேகத்திற் சோர்வு மிகுந்திடும் வெல்லும் வாகடர் வேத விதியிதே.
சதையடைப்பு
சதைய டைப்புச் சலத்தைத் தடக்கியே பதைய தைத்துப் படுக்கப் பதறுவார் விதையு மேனி விரைவிற் குறைந்துபின் சிதையு மென்று தெளிந்தவர் செப்பினார்.
இந்திரியநோய்
மாதர் தம்மை மருவ வலியின்றிக் காத லாய்மிகக் கண்டு மயங்குவார் தாது நீறிச் சடுதியிற் றாழ்ந்துபின் ஏதஞ் செய்திடி லிந்த்ரிய நோயதே.
புருடர்புண்
ஆட வர்கட் கடங்கலும் புண்படில் வேடம் மாறியே மேல்க ளுரிந்திடும்
வீடு விட்டு வெளிப்படக் கூடாமல் பாடு காட்டியே பங்கப் படுவர்கள்.
ஒட்டுப்புண்
கட்டுங் கன்னங் கைமூலங் கபோலத்தில் முட்டுப் பட்டு முளைத்ததிற் சீயுண்டாய்
131
4.
42
43
44
45
46
47

Page 78
வைத்தியத்தெளிவு
நட்டஞ் செய்ய நரர்க்கது நாடினால் ஒட்டி வந்திடு புண்ணென் றுரைப்பரே.
மூலப்பவுந்திரம்
மூலந் தன்னில் முளைக்கும் பவுந்திரம் காலந் தன்னிற் கடுத்து வெடித்திடும்
சீலு நீருடன் சீக்கிரந் தோன்றியே கோல மேனி குறைந்து வருந்துமே.
than 6061
கும்பந் தன்னிற் குடைந்த பிளவைகள் வம்பு செய்ய வளர்ந்து வலித்திடும் வெம்பிச் சீயும் வெளியில் மிகுதியாம் நம்ப வேண்டா நரர்க்கது நாசமே.
சிலந்தி
வதன மூக்கினில் வந்த சிலந்திகள் விதனஞ் செய்திடு மேனி மெலிந்திடும்
நிதமு நெற்றியி னிர்கள் பறிந்திடும் உதர வுந்தி யுரத்துத் தடிக்குமே.
அரையாப்பு
அரையிற் கட்டி யரிக்கு மரையாப்பு விரைவில் வேதனை கொண்டு வெடித்திடும் திரைகள் போற்சியல் சீக்கிரஞ் சேர்ந்துதான் புரைய தாய்ப்புழுப் புண்ணிற் பொருந்துமே.
முகசிங்கி
கோசத் தானத்திற் கொப்புளங் கொண்டுதான் வாசஞ் செய்து வலித்து வருத்தியே ஆசை யெல்லா மடங்கி யொடுங்கத்தரன் மோசம் பண்ணு முகசிங்கி யென்பரே.
யோனிப்புண்
மங்கை யோனி மருவுஞ் சிலந்திகள் பங்கம் பண்ணிப் பசந்து பரந்திடும் துங்க மின்றித் துவந்துவ நாறிடும் சங்கை யின்றிச் சருவு முடம்பிலும்.
கரப்பன்
கரப்பன் காணிடிற் கால்கை சொறிந்துதான் உரத்து மேனியி லொக்க வவிந்திடும்
32
48
49
50
51
52
53
54

வைத்தியத்தெளிவு
சிரத்திற் சீகள் திரைபோற் பறிந்துபின் புரத்திற் றாவிடும் புண்கள் மணக்குமே.
தேமல்
சேருந்தேகத்திற்றேமல் செறிந்திடில் சீர பூழிந்து தினமுந் தினவுண்டாம் வேர்வை கண்டிடின் மெத்த விதனமாய்ப் பாரின் மாந்தரைப் பங்கப் படுத்துமே.
படர்தாமரை
படருந் தாமரைப் பண்பைப் பகர்ந்திடில் அடரு மேனி யடங்கத் தடித்திடும் தடவச் சற்றுந் தணியாமற் றாக்கிடும் விடமதாக விறைக்கும் விரைவிலே.
வெப்புப்பாவை
வெப்புப் பாவை விபரம் விளம்பிடில் அப்பு மெய்யி லதிகமுண் டாகியே ஒப்பி லாத வுதரத்தி லேகட்டிக் கைப்புக் கொண்டுவாய் காய்ச்சலுண் டாகுமே.
கெர்ப்பநீர்க்கட்டு
கெர்ப்ப நீர்க்கட்டுக் கேற்குங் குணங்கள்கேள் அற்ப வுந்தி யதிகம் பொருமியே சற்று நேரத்திற் றாக மிகுந்திடும் மற்றுந் தோஷம் வகையுடன் றோன்றுமே.
கீரைப்பாம்பு
கீரைப் பாம்பிற் குணங்கள் கிளத்துவன் நீரும் வாயினி லூறுந் நிலைகெடும் சேருஞ் சத்தி யுறங்கிற்றிடுக்கிடும் சோரு மேனி துவக்கு வெளுக்குமே.
வீக்கந் தோன்றும் விறைப்பும் வலிப்புமாம் தூக்கஞ் சேர்ந்திடுந் தொண்டை துடித்திடும்
நாக்கும் வாயு முலருஞ் சுரமுறும் பாக்கை யிட்டெனப் பல்லை நெரிக்குமே.
விஷபேதி மூன்றில்
1-கொம்பன்
கொம்ப னக்கரங் கொள்ளும் படுவனும் என்ப மூன்றும் விடபேதி யாமிவை
133
55
56
57
58
59
60
6

Page 79
வைத்தியத்தெளிவு
கொம்பன் பேதிக் குணங்குளிர் வேர்வையாம் துன்பஞ் செய்து சுறுக்கினிற் கொல்லுமே.
2-படுவன்
ஏற்க வந்த விழுக்குப் படுவனும் பார்க்குள் ளோர்கள் பதறக் கழிந்திடும் வேர்க்கு மேனி விறைக்கும் விரைவினில் காற்று முக்கில் கதிக்க வுதைக்குமே.
3-அக்கரம்
அக்க ரக்குண மாறாக் கடுப்புடன் சிக்க லின்றி யிரத்தமுஞ் சீயும்போம் திக்குந் தாகமுஞ் சேர்ந்திடுஞ் சத்திக்கும் விக்கி னம்மிலை விலகு மறுநாளில்,
பத்தியத்திற்காவன
பத்தி யத்திற் குரியப தார்த்தங்கேள் சுத்த தூதுளைசுண்டைபொன்னாங்கண்ணி கத்த ரிப்பிஞ்சு கருவாழை யின்பிஞ்சு அத்திப் பிஞ்சு மவரையின் பிஞ்சுமே.
நாவி லுருசிக்கு நலமா முருங்கையின்
தாவு பிஞ்சு தகுந்ததக்காளியும் மாவின் பிஞ்சொடு மாங்காய்ப் பருப்புமாம் ஆவின் பால்நெய் யாட்டுப்பால் நெய்யுமே.
சிறிய பயறொடு சேருந் துவரையின் மறுவி லாத பருப்பு மகிழ்ந்தெடு நறிய கற்கண்டு நாறுங் கருவேம்பும் உறுதி கோவை யுலர்த்திய வற்றலே.
ஏய வறைக்கீரை யினிய சிறுகீரை மேய சீரகம் மிளகொடு வெந்தயம் தூய்தா யுப்பினைச் சுத்தியுஞ் செய்திடு காயு நீரைக் கருதிட நன்கதாம். சாய்ந்த கல்லுண்டை சம்பாவின் றண்டுலம் ஆய்ந்து கொண்டே யருந்திட நன்கதாம் தேய்ந்து நோய்களுந் தீர்ந்திடு முண்மையே ஏய்ந்து கொள்ளு மருந்து மினிதுறும்.
பத்தியத்திற்காகாதன
புத்தி யத்திற்கா காத பதார்த்தங்கள் குற்ற முள்ள புகைக்குடி தாம்பூலம் தத்து மீன்கள் மிருகம் பறவைகள் ஒத்த பல்லுயி ரூன்களு முண்ணாதே.
134
f52
63
64
65
66
67
68
69
70

வைத்தியத்தெளிவு
கள்ளுச் சாராயங் கைத்திடும் பாகற்காய் தெள்ளு மாப்பண்டந் தேங்காய் பழவகை அள்ளு கஞ்சி யரிவையர் போகமும் எள்ளு மாதி யிகந்திட வேண்டுமால்.
சிலப தார்த்தங்கள் சேர்க்கவுங் கூறினோம் சிலப தார்த்தங்கள் சேர்க்கக்கூ டாதென்றோம் பலப தார்த்தங்கள் பாரின்மே லுண்டுகாண் குலவ யித்தியர் கூட்டக் குணங்கண்டே.
அவுடதவகை
நசியம்
சுக்கு விபூதி துரிசு மிளகுடன் மிக்க திப்பிலி வேம்பின்பிண் ணாக்குமாம் வைக்குங் கெந்தி வகையள வாகவே தக்க தும்பையின் சாற்றா லரைத்திடே.
நிழலு லர்த்தி நிதானமாய் மாந்தர்க்கு வளரு மூக்கில் வகைபெற வுதிட உளறுஞ் சன்னி யொதுங்குமுத் தோஷமும் சளச ளப்பொடு சார்ந்திடு வாயுவும்.
காது மந்தங் கண்ணோயும் விலகிடும் பேதம் பண்ணிப் பெலத்திடு நீர்க்கோவை சீதஞ் செய்யுஞ் சிரத்திற் கணப்பும்போம் வாதஞ் செய்யும் வலிகாச மேகுமே.
வெந்தயச்சூரணம்
வெந்தய மோமம் வெட்பாலை சீரகம் சந்தன மேலந் தக்கவி லாமிச்சு முந்திரி வற்றல் முதிர்ந்த மதுரமும் அந்த நெல்லி யளவா யரைத்திடே.
மேல்வி ளம்பிய வெந்தயச் சூரணம் பாலில் நெய்யிற் பருக வெருகடி மூலவாயு முடுக்குங் கிராணிநோய் ஒல மிட்டிவை யோடும் விரைவிலே.
பித்த ரத்தம் பெருத்திடு வெட்டையும் நித்தங் கத்தி நெருக்குங் கசமதும் அத்தி வெப்பு மடர்ந்த சுரதோஷம் உத்த பாலர்க் குறுங்கனை போகுமே.
சூலை குன்மந் தொடர்ந்திடு சத்தியும் ஆலத் தாக மடர்ந்த வதிசாரம் மேலிற் பீனிசம் வேக விருமலும் கோல மாந்தரைக் கூடாது நீங்குமே.
135
7
72
73
74
75
76
77
78
79

Page 80
வைத்தியத்தெளிவு
அட்டசூரணம்
சுக்கு மோதகஞ் சொல்லிரு சீரகம் தக்க மஞ்சள் மிளகுள்ளி சார்வசம் பொக்க வெல்லா மிளவறுப் பாகவே மிக்க சூரணஞ் செய்து வெருகடி.
உண்டுவெந் நீர்கு டிக்க வுடன்செரி யாத மந்தம் வண்டணி குழலி னாளே வயிற்றினிற் பொருமன் மாறும் கண்டதோ ரன்னந் தண்ணி ரிவற்றிலே கருத்துக் கொள்ளும் அண்டருக் கிறைவன் சொன்ன வாயுரு வேத மாமே.
பொன்னாவரைச் சூரணம்
பொன்னி னாவரை பூக்கா யிலைபட்டை துன்னும் வேருந் தொகைபல மோர்சரி சொன்ன வைந்தையுந் தூளாய் வெருகடி தின்னப் பஞ்சாங்கஞ் சீனக்கற் கண்டுசேர்.
கரப்பன் மேகங் கடிய கசரோகம் உரத்த பாண்டு மொடுநீ ரழிவுமாம் பெருத்த பித்தம் பிரமியம் வெட்டைநோய் வரட்சி தாகமும் வந்த கிராணியும்.
மாத ருந்தி மருவுந் துவாலையும்
ஒதும் வெப்பு முரத்திடும் வீக்கம்போம் நாதம் விந்துவு நன்றாய் வளர்ந்திடும் பேத மூலமும் பின்னக் கடுப்பும்போம்.
அமிர்தசஞ்சீவிச்சூரணம்
சீந்தில் சந்த மிலாமிச்சுச் சீரகம் சார்ந்த வாவரை யைந்துகோ ரோசனை போந்த வோமம் புரத்துநன் னாரியும் வாய்ந்த சாதிக்காய் வாகா மதுரமே.
கோட்ட முத்தங் குறாசாணி கர்ப்பூரம் நாட்டி லேலந் நயந்த வசுவாகி வாட்டு முந்திரி மற்றுங் கராம்புடன் கூட்டு வெந்தயங் கோலக் கறுவாவே.
இப்பொ ருட்க ளிரவியிற் காய்ந்தபின் ஒப்பக் கூட்டி யுரலிட் டிடித்துமே தப்பில் லாமற் றகவுடன் சுத்தித்து வைப்புக் கற்கண்டில் வையும் வெருகடி
இச்செய்யுள் மற்றோர் பிரதியிற் பின்வருமாறு காணப்படுகின்றது.
செப்பு தாமரைத் தாதொடு கூவிளை ஒப்பும் பூவு முரைக்கும் புனுகுமாம்
36
80
81
82
83
84
85
86
87

வைத்தியத்தெளிவு
தப்பில் கஸ்தூரி யாவுஞ் சமனிடி வைப்புக் கற்கண்டில் வையும் வெருகடி
அமிர்த சஞ்சீவி யாகுமிச் சூரணம் திமிரும் வாதங்க டீராக் கயங்கள்போம் நிமிரும் பித்த நெடுத்த கணங்களும் குமிறி யோடுங் குறியினுங் கூறுவோம்
மேக வெட்டை விறைப்புப் பிடிப்புடன் ஆகந் தன்னி லடர்ந்த கரப்பனும் போகப் புண்கள் புலம்பும் பயித்தியம் வேக வாந்தி விளம்பு மதிசாரம்
சடத்தில் வெப்புடன் றாகங் கிரந்திநோய் கடுப்பி ரத்தங்கா மாலை கிராணிபோம் திடத்த வாயு சிதறும் பலசுரம் அடுத்தி டாம லகலு மனேகநோய்
கெர்ப்பசூடாமணிலேகியம்
கறுவாக் கோட்டங் கராம்பு வசுவாசி மறுவில் சந்தன மாசியின் காய்மல்லி விறல்சேர் வெந்தய மோமஞ் சிவதைவேர் சிறிதாந் தேக்குடன் சீரகஞ் செவ்வியம்
தேவ தாரஞ் சிறந்திடு திப்பிலி மேவு மாவரை யைந்து மிலவங்கம் கோவின் ரோசனை குங்குமப் பூவுமாம் தாவு மொவ்வொன் றிருகழஞ் சாகவே
மேவ வெல்லா மிடத்த தரித்தபின் கோவின் பாலொரு நாழியிற் கூறிடும் தாவு கற்கண்டு சாரப் பலமூன்று துாவிக் காய்ச்சிச் சொலத்தகும் பாகினில்
பற்பந் தன்னைப் பரப்பி மசித்திட்டுக் கற்றா நெய்யது காற்படி விட்டிடு கெர்ப்ப சூடாமணி கெட்டியாம் லேகியம் பற்றுஞ் சந்தியிற் பாக்கள வுண்ணுமே
மங்கை கெர்ப்ப மருவிடு ரோகம்போய்த் தங்கி விந்துவுஞ் சாருஞ் சிசுவுண்டாம் பொங்கும் வாதமும் போம்பித்த சேடமும் பங்கஞ் செய்வெட்டை பற்றா திருமலே
காய்ச்சல் குன்மங் கடுஞ்சூலை வாதமும் மூச்சி ளைப்பு முடக்குங் கிரந்திபோம் பாய்ச்சு வாந்தியுந் தாகமும் பற்றறும் காய்ச்சு மேகமுந் தீர்ந்திடுங் காண்மினே
137
88
89
90
91
92
93
94
95
96
97

Page 81
வைத்தியத்தெளிவு
சன்னித்தைலம்
சூதம் பொன்னரி தாரஞ் சுரைக்கெந்தி ஒதும் வெண்பிசி னுாசியின் காந்தந்நோய் காது நல்லவின் காய முயிற்றண்டம் மாது கேள்பொரி காரம் வகைசமன்
கூட்டி யேரண்ட வெண்ணெயு நிம்பெண்ணெய் ஆட்டு நல்லெண்ணெ யாமிவை தம்மிலே போட்டுக் காய்ச்சிப் பொருத்து சிரத்தினில் வாட்டு சன்னி வகையெலாம் போகுமே
விநாயகன் மாத்திரை
சூதங் கெந்தியுஞ் சொல்லு மரீசமும் *நாதந் 0தந்தியு நல்ல கடுக்காயும் ஏதம் போக்கிய விஞ்சிநீர் விட்டரை ஆதி யைங்கர னான வவுடதம்
அருந்த வேண்டுதற் கான வனுபானம் பொருந்து சீனி புளியெலு மிச்சையிற் கிரந்தி குன்மங் கெடுஞ்சூலை யொன்பதும் வருந்து காய்ச்சலும் வாய்வும் வலியும்போம்
கூடும் வாதமுங் குற்றஞ்செய் விக்கலும் சேடஞ் சன்னிதிரிதோஷ மந்தமும் நீடுஞ் சத்தி நெருங்குஞ் சறளிகள் ஒடு மாமென் றுரைத்தார் மருத்துவர்
சிவமாத்திரை
சாதி லிங்கந் தரும்படி கட்டியே ஒது திப்பிலி யொன்றுக் கிரண்டதாய் மாது பால்விட் டரைத்து மறுபடி சேத மின்றித் திரட்டிடு குன்றிபோல்
சேருஞ் சுக்கினைச் சீவி யவித்திடும் நீரி லுண்டிட நேர மிரண்டுண்டை தீரும் வாதஞ் சிதறும் பலசுரம் கோர சன்னியுங் குட்டங் கிரந்திபோம்
மந்த மேப்ப மயக்கங் கபங்குன்மம் தொந்த தோஷஞ் சுவாத மதிசாரம் வந்த சூலை வருத்தும் பலநோய்கள் சிந்த வெட்டுஞ் சிவத்தின் குளிகையே
தேவிமாத்திரை
#சத்தி யிந்துப்புத் தாளகஞ் சவ்வீரம் துத்தம் வெண்காரந் துரிசு மிளகுமாம்
98
99
100
10.
O2
103
104
105
*நாதம்-சாதிலிங்கம். 0தந்தி-நேர்வாளம், #சத்தி-கெந்தம்.
138

வைத்தியத்தெளிவு
வைத்த லிங்கம் வளருங் கடுக்காயும் மெத்தி டாமன் மிகுமிஞ்சிச் சாற்றினால் 106
ஆட்டி *முர்க்கத் தளவு திரட்டியே நாட்டுஞ் சுக்குநீர் நங்கை முலைப்பால்தேன் வாட்டு முள்ளித் தயிலமும் வண்மையாய்க் கூட்டி யுண்ணக் கொடுமைசெய் வாதங்கள் 107
ஆறு பத்துநா லாகுஞ் சுரங்களும் சீறுந் தோஷங்கள் சேருந் தசவாயு மாறுங் குட்ட மருவாது சூலைகள் கூறுங் குன்மங் குறித்த கபங்கள்போம் 108
காச மந்தங் கரப்பன் பவுந்திரம் வாசப் புண்கள் வருத்துங் கிரிச்சினம் பேசும் பித்தமும் பேர்கல் லடைப்புடன் வீசு மூச்சு வியர்வை விறைப்பும்போம் 109
மேவுஞ் சென்னி விழிநாச் செவிகண்டம் தாவு நோய்கள் சடுதியிற் றீர்ந்திடும் ஏவு சர்ப்பத்தி னேறும் விடங்களும் தேவி மாத்திரை யுண்ணச் சிதறுமே 110
வெற்றிவேலாயுதமாத்திரை
இலிங்கம் பூர மெரிகெந்தி தாளகம் துலங்கும் வீரமுந் துத்த மனோசிலை நலங்கொள் வெள்ளி நருக்கு மரபொடி குலஞ்சி றந்த பவளக் கொடியுமே 11
கல்லி னாருங் கனத்தநீ லாஞ்சனம் வல்ல சாத்திர வேதி வகையுடன் சொல்லுந் #தேசியிற் சுத்தித் தரைத்திட்டு வெல்லும் மாத்திரை குன்றியின் வீதமாம் 12
சாதி நாரத்தை தாதுவின் பன்னிரும் மாது ளங்கனி மங்கையர் பாலுமாம் தீத கற்றிய தேனிஞ்சி கற்கண்டு சேத மின்றியே சேர்த்துக் கொடுக்கலாம் 113
மேலிம் மாத்திரை வெற்றிவே லாயுதம் கால னேயுங் கதறக் கடிந்திடும் சூலை குன்மஞ் சுரஞ்சன்னி தோஷமும் மூல வாயு முடக்கஞ் சறளியே 14
இரத்த ரோக மெழுந்திடு சத்தியும்
உரத்த தாக முடம்பி னெரிவுகள் சரத்தின் முட்டுடன் றங்கிய விக்கலும் சிரத்தி னோய்களுஞ் சீக்கிரந் தீருமே 15 *முர்க்கம்-பயறு, #தேசி-எலுமிச்சம்புளி, சரக்குகளைச் சுத்திசெய்து எலுமிச்சம்புளியி லரைக்க என்பது கருத்து.
139

Page 82
வைத்தியத்தெளிவு
வாசஞ் செய்து வருத்திடும் வாதமும் வீசுபித்தமும் வேகிக்குஞ் சேடமும் காச மீளை கசத்தி லிருமலும் நாச மாக நவின்ற மருந்திதே
கந்தன் கைவேல்
சுக்குடன் சாதிக் காயுந் துகளறு கஞ்சா விஞ்சி மிக்குள வபினோ ரொன்று மிகாமலோர் கழஞ்சுகூட்டித் தக்கவெந் நீர ரைத்துத் தகுமுறை குளிகை யாக்கி ஒக்கவெந் நீரிற் கொள்ள வோடிடும் வியாதி சொல்வாம்
உண்டிடிற் சுரக்க பூழிச்ச லுறுசன்னிக் கழிச்சல் வாயு மிண்டிடுங் கிராணி யெல்லாம் விடுமிது கந்தன் கைவேல் விண்டிடுங் குளிகை தன்னை விரும்பியே முத்தற் காசிற் கொண்டசி ரகத்தி லூட்டக் கூறிய கடுப்புப் போமே.
சுரவீரவாகுமாத்திரை
கார மொன்று கடும்பூர மிரண்டெடு சேரும் லிங்கந் திரியங்கு செப்பிடில் வீர வாளத்தில் வித்தது நாலுமாம் பாரிற் றேசியிற் பண்பா யரைத்திடே.
அரைத்த பின்ன ருழுந்தது போலவே உரைத்த வண்ண முருட்டி நிழலில்வை கரைத்து நல்கிட விஞ்சியின் சாற்றினில் உரத்த சன்னி சுரங்களு மோடுமே.
வாயு பத்துடன் வாதங்க ளெண்பதும் தேயுங் குட்டந் திகைக்குங் கிரந்தி நோய் மாயுந் தோஷ மருவாது சூலைகள் சாயுங் குன்மஞ் சலத்தி லடைப்பும்போம்.
கல்ல டைப்புக் கனத்த மலச்சிக்கும் அல்லல் செய்யு மனேக வியாதிபோம் சொல்ல வேண்டிற் சுரவீர வாகுக்கு வல்ல பாம்பின் வளர்விடந் தீருமே.
சோதிசங்கரநாமக்குளிகை
நெல்லிக் கெந்தக நேர்வாளஞ் சவ்வீரம் நல்ல தாளக நாட்டு மனோசிலை வல்ல வெள்ளை வடிவாங் கெவுரியும் அல்ல லின்றி யளவு கழஞ்சொன்றே.
இலிங்க மிரட்டி யிடைகுறை யாமலே பலங்கொ விஞ்சிநீர் படிவீசம் விட்டரை பெலங்கொள் பாகம் பிரமாணங் குன்றிபோல் உலர்ந்த பின்ன ருரைக்கும் வகைகேளே.
140
16
17
8
19
120
12
122
23
124

வைத்தியத்தெளிவு
சோதி சங்கர நாமக் குளிகையை ஆதிப் போதினு மந்திப் பொழுதினும் கோதி லாச்சுக்கு நீரிற் கொடுத்திட வாத பித்த வளர்சேட வன்சுரம்.
சன்னி தோஷந் தசவாயு வுட்குத்துக் குன்மஞ் சூலை கொடிய புறவீச்சுத் துன்னும் வெப்பினிற் றோன்றிய கட்டுநீர் இன்னும் பல்பிணி யேகிடு மென்பரே.
சிவராசகுளிகை
நாவி பொன்னரி தார மனோசிலை காவி திப்பிலி காந்த முரோகணி தாவு சாத்திர வேதிநற் சந்தனம் கோவின் ரோசனை குங்குமப் பூவுமாம்.
ஆகு மிந்துப்பு மக்கறா காரமும் வாகு சேர்பொரி கார மதுரமும் தாக மாற்றத் தகுந்தகளில் தூரியும் வேக மாரெலி மேவு குதிரையே.
சேரு மஞ்சனஞ் சுக்குச் சிறுதேக்கு நேருந் துத்தந் துரிசிரு சீரகம் தேருஞ் சாதியின் சேர்காய் வசுவாசி நேரில் கோட்ட நிருவிடஞ் சாதிக்காய்.
உற்ற வெள்ளைக் கெருட னெலிகொல்லி மற்றி ரண்டு நிமிளை வெண்காரமும் முற்று முள்ளின் முருக்கினில் வித்துமே சொற்ற வெல்லாந் தொகுகழஞ் சாகவே.
சாதி லிங்கந் தகுந்தசெஞ் சந்தனம் ஏத நீங்க வெடுமுக் கழஞ்சதாய் மாதர் பாலின் மதித்தரை மூன்றுநாள் ஒது கன்னலி னுற்றிடு சாற்றிலும்.
சாதி நாரத்தை தங்கிய சாற்றிலும் தீது தீரவொவ் வோர்தின மாட்டியே ஒது முர்க்கத் தளவு குளிகைசெய் காது நோயனு பானங் கழறுவாம்.
சேர்ந்த சுக்கினைச் சீவி யவித்திடில் நேர்ந்து நின்ற பலசுர நீங்கிடும் கூர்ந்த நீரொடு கொண்மது மங்கைபால் தீர்ந்து வாய்வு சிதறிடுங் காண்மினே.
கரும்பு தோடங் கனியிஞ்சி வெற்றிலை முருங்கை யுற்றிடு பட்டை முலைப்பால்தேன் விரும்பி யூட்ட மிகுந்த சுவாதநோய் பொருந்து காசம் புகைக்கு மிருமல்போம்.
141
25
26
27
128
129
130
3.
132
33
134

Page 83
வைத்தியத்தெளிவு
இருமல் தீர வினித்திடு குன்றியின் மருவு சாறு மதுவுடன் கூட்டலாம் பொருவு மிஞ்சி புகன்மது மங்கைபால் விரைய வுட்ட விலகுமுத் தோஷமே.
இஞ்சி நீரு மெலுமிச்சை யிற்புளி விஞ்சு தேனும் விரவிப் பருகிட மிஞ்சு தாகமு மேலிடு பித்தமும் அஞ்சி யோடு மரோசிய மாதியே.
நிம்பப் பட்டைக்கு நேர்ந்திடு சன்னிபோம் துன்ப நீங்குந் துளசியு மாகுமால் பின்பில் வீச்சொடு பேசிடு முட்குத்து மன்பு ரத்து வருபக்க வாயுவும்.
தீரக் காயமு முள்ளியுஞ் சேர்த்தவி நீரிற் கொள்ளுக நெஞ்சடை வாய்வுக்குப் பாரில் வெற்றிலை நீரிற் பருகிடக் கூரு மண்டத்தின் வாயு குறையக்கேள்.
வெள்ளை யுள்ளி வசம்பு நெருஞ்சிவேர் கொள்ளு சுக்குக் குடிநீரிற் கொள்ளலாம் அள்ளு மேரண்ட வெண்ணெய் முடிதும்பை எள்ள லின்றி யிவையு மனுபானம்,
மாத ருக்கு வருங்ககர்ப்ப வாய்வினுக் கோது முள்ளியுங் காயமு முற்றவி சீத மேவு வயிற்று வலியினைக் காது நல்ல வசம்பு கருக்குநீர்.
நீர டைப்புக்கு நேர்வெள் ளரிவிதை மார்ப டைக்குஞ் சறளிக்கு வாகிஞ்சி பாரி டத்துப் படர்சிறு காஞ்சொறி சீரு டைத்த சிறுகத் தரியுமே.
மேய தூதுளை #வாசை முயிற்றண்டம் ஆய பூவுறு நாக மருஞ் *சனி
தோயும் புட்டவி நீரொடு திப்பிலி தூய தூளொடு தோகை முலைப்பால்தேன்.
கூட்டி யுண்ணக் குலைந்திடுஞ் சேடமும் நாட்டு மூச்சு நலியு மிருமலும் மூட்டு சன்னி மொழிந்திடு தோஷமும் ஈட்டு நோய்க ளினும்பல தீருமே.
தீரு நோய்களுக் கேற்ற வனுபானம் பாரின் மெத்தவு முண்டு மருத்துவர் தேரு மாறு தெரிந்திட நன்றதாம் சேரு மாத்திரை யுஞ்சிவ ராசனே.
135
36
37
38
139
40
41
142
43
144
#வாசை-ஆடாதோடை. *சனி-கண்டங்கத்தரி.
142

வைத்தியத்தெளிவு
இராமபாணக்குளிகை
துத்தம் வாளந் துடுக்குக் கெவுரியும் ஒத்த வண்ண மொருகழஞ் சொவ்வொன்று சுத்தி யாக்கிப்பின் றோற்று மவுரியும் மத்தஞ் சாறு மளவாக விட்டரை.
அரைத்த பின்னை யளவு பயறுபோல் உரைக்கு மாத்திரை யுள்ளிதே னிஞ்சியில் கரைத்து நல்கக் கபமிளை வாயுவும் உரத்த சேடமு முட்குத்து வீச்சும்போம்.
தினச்சு ரத்துடன் றீர்க்கு முறைச்சுரம் கனத்த தோஷங் கடுஞ்சன்னி விக்கல்போம் இனத்திற் குன்ம மெழுஞ்சூலை யொன்பதும் அனர்த்தந் தீர்க்கு மதுராம பாணமே.
கோரோசனைக்குளிகை
கோட்ட மக்கறாக் கோரோசனை கர்ப்புரம் கூட்டு மேலமுங் குங்குமப் பூவுமாம் காட்டு காதியின் காய்தீ முறுகலும் நாட்டு மொன்று நயந்து கழஞ்செடே.
இலிங்கந் நாலு மிதமாகச் சுத்தித்துத் துலங்கு சந்தனஞ் சொற்ற கராம்புடன் உலர்ந்த செண்பகப் பூவு முரைத்திடிற் பலங்கா லாகப் பருக்க விடித்துமே.
நிரை விட்டு நெருப்பினி னாலொன்றாய் நேரக் காய்ச்சி யிறுத்திடு நீரினால் சேர வாட்டித் தெரிந்த பதத்தினில் கூரு மாத்திரை குன்றியின் வீதமே.
அந்தி சந்தி யனுபானத் தோடுண வந்த பித்தம் வருத்து மிருமல்போம் மந்த தோஷ மருவாது சன்னிகள் தொந்தக் காய்ச்சல் தொடராது சூலையே.
அண்ட வாத மலைக்கு மதிசாரம் தொண்டைச் சேடந் தொடுத்த சுவாதநோய் கொண்ட வாயு குழந்தை வியாதிகள் விண்டு நீங்கும் விதமினுங் கூறுவோம்.
பாரக் குன்மம் படர்ந்திடு புண்குட்டம் நீரிற் கோர்வையு நீண்ட கழிச்சலும் ஊருஞ் சில்விட மோடும் வலியபேர் கோரோச னாதியென் றேமுறை கூறினார்.
143
145
146
147
148
49
150
151
152
153

Page 84
வைத்தியத்தெளிவு
பஞ்சபூதமாத்திரை
தாரம் வீரமுந் தக்க கெவுரியும் கோர வெள்ளை குணமுள லிங்கமும் நேரும் வாள நிறுத்தபின் றேசிநீர் சேர விட்டுத் திடமா யரைத்திடே.
பின்னு மிஞ்சியின் பேசிய சாற்றினால் மன்ன வாட்டி வகுத்த பயறுபோல் துன்னு மாத்திரை சூழ வுருட்டியே வன்ன மென்முலை வந்திடு பாலொடே.
கரும்பு தேனிஞ்சி கரட்டி னெருக்கிலை முருங்கை வேர்ப்பட்டை மூட்டு மிளகுநீர் விரும்பு சாரணை வெள்ளுள்ளி சேர்த்திடின் அருந்து தற்கணு பானம தாகுமே.
சொல்லுபானந் தொகுமுறை கூட்டினும் அல்ல தொன்றி லடுத்துக் கொடுக்கினும் வல்ல நோயின் வகையை விளங்கியே நல்ல வாகடர் நாட்டுவர் கூட்டுவர்.
பஞ்ச பூதிய மாத்திரை பாருளோர் மிஞ்சு சன்னியு மெய்யிற் சுரங்களும் அஞ்சு குன்ம மடுத்திடு சூலையும் விஞ்சு தோஷமும் வெய்ய வலிகளும்.
குட்ட மந்தங் குறித்திடு மீளையும் விட்டு நீங்கும் விலகிடுஞ் சேடமும் பட்ட தேமல் படர்ந்த கிரந்திநோய் கெட்ட புண்கள் கெடும்பல நோய்களே.
நோய்செய் வாத நுவலரு மீளையும் பாயும் பாம்பிற் பலவிட மாணவும் தோயுஞ் சில்விடஞ் சூழு மெலிவிடம் மாயு மென்று வகுத்தனர் வாகடர்.
மிருத்தியாதிமாத்திரை
முத்த மிச்சு முதிர்ந்திடு நெல்லிக்காய் கொத்த மல்லியுங் கோட்ட மிலவங்கம் வைத்த வெட்டி வசுவாசி தற்கோலம் சத்து மாசிக்காய் தான்றி கல்நாருமே.
ஏலம் பூர மிடுதேவ தாரமும் கோலச் செண்பகப் பூவுங்கோ ரோசனை நீல வஞ்சன நேரு மகிலுமாம் மேலிக் கற்க மிகாமற் சமன்கொளே.
தென்னம் பிஞ்சிற் சிறந்திடு நீரினால் உன்னி யாட்டி யுருட்டி மிளகுபோல்
144
154
55
56
157
158
159
60
161
162

வைத்தியத்தெளிவு
வன்னி தன்னில் வறுத்தவி யோமநீர் பின்னுஞ் சீரகம் பேசுங் கஷாயமே.
சந்தி காலத்திற் சாப்பிட வீருண்டை வந்த தாகம் வளர்பித்தஞ் சேடம்போம் முந்து தோஷமுறியுஞ் சுரம்வாந்தி சிந்துஞ் சன்னியுஞ் சீதக் கழிச்சல்போம்.
விக்கல் சத்தி வெதும்பிடு வாயுவும் கக்கல் பீனிசங் காணு மயக்கமும்
மிக்க மங்கையர் மேவு சுவாதமும் அக்கி மேவு மதிக விருமலும்.
பெருத்த காசமும் பிள்ளைக் கணங்களும் வருத்துங் கண்ணோய் வரட்சியு மாறிடும் திருத்த மாகவே தேகங் குளிர்ந்திடும் மிருத்தி யாதிக்கு மெய்யி லழகுண்டாம்.
சந்தனாதிக்குளிகை
சந்தனங் கோட்டந் தக்கவி லாமிச்சு முந்தி ரிக்கனி முத்த மிருவேலி அந்த வெட்டிவே ராவின்கோ ரோசனை முந்து பேரீஞ்சின் முற்றும் பழமெடே.
கருட பச்சை கறைக்கண்டன் பூரமும் மருவு தான்றிக்காய் மாசிக்காய் நெல்லிக்காய் சரிய தாகச் சரக்கை நிறுத்துமே அரிய செவ்விள நீரா லரைத்திடாய்.
உண்டை குன்றி மணிபோ லுருட்டியே கொண்ட சீரகங் கூறுங் குடிநீரில் விண்ட மாத்திரை யிட்டுக் குடித்திடப் பண்டை வெக்கை பறக்கு மிருமலே.
பித்த சேடம் பெருத்த சுரங்களும் சத்தி மூர்ச்சையுஞ் சார்த்திடு விக்கலும் கத்துங் காசங் கணைதரு மக்கரம் முற்றுங் காந்தி மொழிந்த வரட்சிபோம்.
சிந்துந் தேமலுஞ் சேரா தரோசியம் வந்து லாவி வருத்துஞ் சுவாதம்போம் தொந்த நோய்க டொலையு மிதன்பெயர் சந்த னாதி தகுந்த குளிகையே.
புனுகேலாதிக்குளிகை
நாவிச் சட்டமு நல்ல புனுகுமாம் தேவ தாரஞ் சிலாசத்துச் சீரகம் தாவு வெட்டிவேர் சந்தனம் பேரீஞ்சு மேவு நற்பழ மேன்மையாய்க் கூட்டுமே.
145
163
64
65
66
167
168
169
170
171
172

Page 85
வைத்தியத்தெளிவு
கோட்டங்கோ ரோசனை கூறு மிலவங்கம் நாட்டு முத்த நலந்தரு முந்திரி வாட்டும் வற்றல் வளர்கொத்த மல்லியும் ஈட்டுஞ் செண்பகப் பூவுட னேலமே.
சாதிப் பூவுஞ் சரக்குக் கழஞ்சொன்று தீதி லாப்பன்னிர் சேர்த்தே யரைத்திடு ஒது பாக முருட்டு மிளகுபோல் நீதி யாக நிகழ்த்து மனுபானம்.
கரும்பின் சாறுடன் காரிகை பாலுமாம் உரஞ்செய் மாத்திரை யுன்னி லிரண்டுடெடு விரும்பிச் சாப்பிட விட்டோடு நோயின்பேர் பரம்பும் வாதம் பகர்பித்தஞ் சேடமும்.
தாகம் வீக்கமுஞ் சாராது சன்னிகள் வேகக் காய்ச்சல் விலகுஞ் சலபேதி மேக வாயுவும் வெட்டை கடுப்புடன் தேக வெப்பறுஞ் சேராது வாந்தியே.
மூர்ச்சை யைய முடக்கு மிருமல்போம் தீர்க்கும் பேதி சிதறுங் கசரோகம் வேர்க்கு நோய்கள் விரைவில் விலகிடும் பார்க்கு ளோருக்குப் பற்றா தரோசியம்.
சரளி நீங்கிடுந் தாது வளர்ந்திடும் அரிய வல்விட மாற்றுஞ் சடுதியில் நரர்கள் யாவரு நன்றாய் வளர்ந்திடத் திருவும் வாசமாய்ச் சேர்க்குமே லாதியே.
வீரக்கலிங்கம்
துரிசு திப்பலி சுக்குநேர் வாளமாம் மிரியல் கோட்டமு மிக்க பெருங்காயம் எரியுங் கெந்தி யெடுசம னாகவே அரிய விஞ்சி யரைக்க வுரிமையே.
கொடியின் வெற்றிலைச் சாற்றிற் குழைத்துப்பின் வடிவக் கண்களில் வண்மையாய்ப் பூசிடக் கொடிய சத்தியுங் குத்து வகைகளும் படியுந் தோஷம் பறக்குஞ் சுரங்களே.
ஐயம் வாத மகலும் விழிநோய்கள் வெய்ய சூலை விலகும் விஷங்களும் செய்ய வீரஞ் சிறந்த கலிங்கத்தால் வையத் தோருக்கு வாராது நோயொன்றும்.
சாதிலிங்கக்கட்டு
சுத்த போசனத் தோகையர் பாலிலும் வைத்த சம்பிர வன்புளி தன்னிலும்
146
173
174
175
176
177
178
179
180
181

வைத்தியத்தெளிவு
சுத்தி லிங்கஞ் சுருக்கிடக் கட்டிடும் வித்து நெல்லிடை வெந்தய நீரிலே.
பேதி சத்தி பெருத்த சுரங்களும் வாதம் வாயு வளர்குட்டஞ் சூலையும் ஒதுங் காச முரத்த கரப்பனும் தீது சேர்சன்னி யாவையுந் தீருமே.
இரசகர்ப்பூரக்கட்டு
இரச கர்ப்பூர மெடுகட்டி யோர்பலம் நிசமா மிஞ்சியி னீரிற் சுருக்கிடு வசமா மணக்கின் வடியெண்ணெய் சீனியும் இசைவாய்ச் சீர மெரித்தாறு நீரிலே,
உதய காலத்தி லுண்டிட நெல்லிடை சிதறும் வாதமுஞ் சேராது சூலைகள் பதறுங் குன்மம் பழமல நீங்கிடும் விதனஞ் செய்யும் விஷசுரம் வாயு போம்.
அரிதாரக்கட்டு
பொன்னரி தாரம் பொருந்தப் பலமொன்று வன்னத் தேசியில் வாகாய்ச் சுருக்கிட்டுத் தன்னி யப்பாலிற் றாக்கிடு நெல்லிடை வின்ன சேடம் விலகும் விரைவிலே,
காச மீளை கரப்பன் கபங்கள்போம் மோசஞ் செய்யுங் கசமுறிந் தோடிடும் வாசப் புண்கள் வளர்ந்த விருமலும் கூசி யோடுங் குணமுள கட்டுக்கே.
தாளக்கட்டு வண்ணத் தாளகம் வாகாய்ப் பலமொன்று சுண்ணந் தன்னிற் சுகமுறச் சுத்திசெய் மண்ணி னன்றாய் வளர்ந்த குருக்கத்தி எண்ணும் பாலி லிசைய நனைத்திடே. அங்கு பின்ன ரடர்ந்தவப் பூவிதழ் தங்க வொட்டிடு சாற்றிய வவ்விலை பொங்க வாட்டிப் பொதிந்து கவசமாய்க் கங்கு றன்னிற் புடமிடக் கட்டிடும். கட்டுந் தாளகங் காசங் கபமிழை துட்ட மார்பருத் தோஷஞ் சுரஞ்சன்னி எட்டு மைந்தும் விலகிடு மிஞ்சியின் சொட்டு நீர்மற்றுஞ் சூழு மனுபானம்.
வீரக்கட்டு வீர "மோர்பலம் வில்வப் பழச்சதை சேர நன்றாய்க் கவசித்துச் சீலைமண் கூரச் செய்து குழிமண் மறைவிலே
147
182
83
84
185
86
87
188
189
190

Page 86
வைத்தியத்தெளிவு
தேரு மீரெருச் சேர்த்துப் புடமிடு. 90
சொன்ன வாறு புடந்தொறு மோரெரு
மன்ன வேற்றி வகுத்த தசபுடம் பின்ன மொன்றும் விரவாது பேணியே துன்ன விட்டு முடிந்தபின் சொல்லுகேன். 9.
சுத்தி செய்த கருவங்க மோர்பலம் அத்தை யோட்டி லுருக்கி யதனிறை சொற்ற தாளகந் தூவி வறுக்கவே மற்று வங்கம் பொடிபடு மாண்புகேள். 92
கேளு மப்பொடி தன்னிறை தாளகம் நீளக் கூட்டி நிலைபெறு கல்வத்தில் துர்ள தாய்வரு தோகையர் பாலினால் மாள வாட்டி வகுத்திடு வீரத்தை. 193
கவசஞ் செய்து கருதிடு சீலைமண்
தவறு றாவணஞ் செய்து தசபுடம்
அவியு நற்புட மாயிட வீரமும்
கவரு றாவணங் கட்டிடு மென்பரே. 194
வாத மையம் வகுத்த சுரஞ்சன்னி சீதம் வல்விடஞ் சேர்ந்திடு சூலைகள் மோதி நின்று முருக்குங் கிரந்தியும் ஆதி நோய்க ளகலுமென் றோதினார். 195
சாதிலிங்க உருக்குக்கட்டு
*ஒதும் வங்கத்தி னுற்ற கவசத்தால் சாதி லிங்கங் குழிமண் மறைவிலே ஒதும் வண்ண முமிப்புட மிட்டிடப்
பேத நீங்கிடக் கட்டுமுருகியே. 196
சாதிலிங்க சிந்துாரம்
இலிங்கக் கட்டி லிசையும் பழச்சாறு துலங்கக் கூட்டி யரைத்துச் சுகமுறப் பெலங்கொள் வெய்யிலிற் பேணிவை வில்லையை சலந்த விர்ந்தபின் றக்கசிந் தூரமே. 97
இம்ம ருந்தை யெடுத்துப் பணவிடை அம்மை பாலு மடுத்திடு தேனுள்ளி சும்மை யைந்தையுந் தூளாக்கிச் சேர்த்திடச் செம்மை யாகவே தீரும்வியாதிகேள். 198
வாத மெண்பதும் வந்த சுரங்கள்போம்
பேதி சன்னி பெருத்த விரணநோய்
தீது காசஞ் செறிந்த கரப்பன்கள்
சீத மந்தமுந் தீருங் கிராணிபோம். 199
*ஒதும்வங்கம் என்றது மேற்கூறிய வங்கப்பொடியை. இது ஒருபலம் முலைப்பாலா
லரைத்து ஒருபலம் சுத்திசெய்த இலிங்கக்கட்டிக்குக்கவசித்து சீலைமண் ஏழுசெய்து
உமிமறைவிற்புடமிட உருகிக்கட்டும்.
148

வைத்தியத்தெளிவு
குட்டஞ் சூலை கொடிய கிரந்திகள் வெட்டை மேகம் விலகுஞ் சலரோகம் தொட்ட தோஷந் தொடராது வாய்வுகள் சுட்டி டாதுமேற் றுன்பங்க டீருமே.
இரசகர்ப்பூ ரபற்பம்
பூரக் கட்டினைப் பூவையர் பாலினாற் சேர விட்டுத் திறமா யரைத்திடு பாரில் வில்லை பகலவன் பார்த்திட நீர்வ டியுந்நி சமூன்று நாளிலே.
பற்பந் நெல்லிடை வெல்லம் வெருகடி
உற்ற மாந்தர்க ளுண்டிடத் திருநோய் குற்ற வாதங் கொடுஞ்சூலை யொன்பதும்
தொற்றுங் குன்மந் தொடைவாழை யாதியே.
149
200
201
202

Page 87
வைத்தியத்தெளிவு - அனுபந்தம்
வைத்தியத்தெளிவு - அனுபந்தம் பறங்கிக்கிழங்குச் சூரணம்
பாரார் பறங்கிக் கிழங்காறு பலமிளகு
பரவுசுக் கிவைவகைக்குப் பலமொன்று சீரகந் திப்பிலி வகைக்கரைப்
பலமுலவு கெந்திசூதம் ஏரார் கழஞ்சுநான் கிவைவகைக் கதிமதுர
மேலமதி விடயமுலுவா விலவங்கம் வசுவாசி பொன்னிமிளை வெண்ணிமிளை
யிலிங்கமொடு சிற்றரத்தை பேரா ரத்தைதிப் பிலிமூல மோமம்
பெருங்காய முள்ளி கோட்டம் பேசுகர்ப் பூரநா கம்பூ வெளுத்தற்
பிசின்மல்லி குங்குமப்பூக் காரா ரபின்கடுகு வாய்விளங் கந்துரிசு
காந்தமில வங்கபத்ரி கடுகுரோ சனைகுறா சானிசிறு மூலமுங்
கராம்புசா திக்காயுமே.
சாதிபத் திரிகருஞ் சீரகஞ் சிறுதேக்குச் சதகுப்பை கோரோசனை தக்கசாத் திரபேதி பொரிகாரம் வான்மிளகு
சாரமிகு நறியகறுவாத் தீதில்சீ னக்கார மரிதார முயர்மனோ சிலைதுத்த முலவுவாசச் செண்பகப் பூவிவை வகைக்குக் கழஞ்சொன்று
சீந்திலரை பொடியியங்கும் ஒதுநத் தைச்சூரி கொடுவேலி கிட்டமோ ரொன்றுநாற் கழஞ்சாகவே யொப்புறு மமுக்கிரா யிருகழஞ் சிவையெலா
முரலில்வே றாயிடித்துக் காதலொடு நன்றாய்க் கலந்துபி னரைக்கக்
கறுத்தநற் பற்பமாகுங் கருதியிதை யுண்ணவனு பானமொடு பத்தியங்
கழறுவன் கேளுமயிலே.
அறியுமிப் பற்பத்தை வெந்நீரில் வெருகடி
யருந்தவரை மண்டலந்தா னாறாத வெட்டை பிரமிய நோய்க ளாதியன
வரையாப்பு வாதமெல்லாம் முறிகிரந் திப்புண்கள் புற்றுக்கண் மூலங்கண்
முதலாய நோய்கடிரு முருகுகமழ் தேனிலுட் கொள்ளவேயிருமல்வகை
முற்றுமற் றொழியுமின்னம் நறுநெய் யினிற்கொள்ள மந்தார காசங்க
னவிலிழை யிருமல்போகு நரைதிரைகண் மாற்றியுட லுயிர்கொள்ளு முண்மையாய்
நயனங்கள் பிரபைகாணும்
150

வைத்தியத்தெளிவு - அனுபந்தம்
கறியுப்பை நன்றாய் வறுத்தபின் கூட்டலாங்
கத்தரி யொடுமுருங்கைக்
காய்வகைக ஞண்ணலாஞ் சொற்பமாய்ச் சுட்டதேங்
காயையுஞ் சேர்க்கலாமே.
சிவகரத்தைச் சூரணம்
அதிவிடயங் கஸ்தூரி மஞ்சள் கோட்ட
மாவரையி லஞ்சுவகை யவின்கர்ப் பூரம் இதமுறுகோ ரோசனைநன் னாரி முத்த
மிலவங்க மிந்துகுறா சாணி சீரம் சதுர்மறையோ ருகந்தசந்தந் தாமரைப்பூச்
சாதிக்காய் வசுவாசி கராம்பு நெல்லி மதுகப்பூ வோமநிறை சமன தாக
வளம்பெறவே யிடித்துநன்றாய் வடிகொள்வாயே.
வடிகொண்ட பொடியினிடை சிவக ரந்தை
வளம்பெறுசர்க் கரையிரண்டு பலமுங் கூட்டித் திடமுடனே யரைத்துநன்றா யெடுத்துக்கொண்டு
தினமிரண்டு வேளையொவ்வோர் கழஞ்சு கொள்ளக் கொடியபடர் தாமரையு மேக மெல்லாங்
கூறுகின்ற நீர்க்கடுப்புக் கிராணி யோடே அடைபடருஞ் சலக்கழிச்சன் மூல ரோக
மக்கினிமந் தம்பொரும லகலுந் தானே.
மேகசஞ்சீவச் சூரணம்
மதுரநற் கராம்பு திப்பிலி யுள்ளி
வருமிரு சீரகங் காயம் விதையுறு குலக்கா யொடுவசு வாசி
விளம்பிய வவின்பெருங் காயம் மதியுட னொன்று நாற்கழஞ் சாக
வகுத்திடு பறங்கியின் பட்டை அதுவுமெண் பலமாய் நிறுத்திவை யெல்லா
மரியகூஸ் மாண்டத்தின் வயிற்றில்.
குடலுடன் விதையு நீக்கியங் கிட்டுக்
கூறுநற் புங்கின்பால் படியும் கடிபெறு கரும்பின் சாறொரு படியுங்
கட்டியாண் பனையின தாக உடனதிற் கரைத்துக் கூடவே யிட்டு
மொருபங்கு முன்மருந் ததனைத் கிடமுடன் மேலு மிட்டதை மூடிச்
செவ்வையாய்க் கட்டிநெல் லதனுள்.
வைத்துநா ளேழு சென்றபி னெடுத்து
வருபுறத் தோலினை யகற்றி
உற்றதோர் பழமு மருந்தும்வெவ் வேறா
யுலர்த்தியே சூரணஞ் செய்து
நித்திய மருந்து வெருகடி தின்று
நினைவுட னைந்துநாட் பின்னர்
151
4.

Page 88
வைத்தியத்தெளிவு - அனுபந்தம்
சுத்தநீர் தோய வுட்டண வாதந்
தொலையுமேற் கால்கையிற் பிடிப்பும். 8
உளைவுடன் பிடிப்புந் தீர்ந்திடத் தேங்கா
யுற்றழ வறுத்ததிற் பனையின் விளைவுறு கட்டி யுடனிடித் திணிக்கும்
வெறிதரு தேன்கலந் ததிலே வளமுறு மருந்து கொள்ளுக மூலம்
வலிதரு கெர்ப்பத்தில் வாயு குளிருறு வெப்புப் பாவைதீர்ந் திடத்தேன்
கூறுகா ரெள்ளிலெண் ணெயுமாம். 9
ஆமினுங் கொடிய சீப்பிர மியத்துக்
காவுறு தயிரினிற் கொள்ளப் போமது பலவாம் பிரமியங் களுக்கும்
பொற்புறு மஞ்சனிர் நன்றாம் காமுறு பசுநெய் தேனுடன் சீனி
கலந்துசீ னட்டிநெல் லரிசி ஆமதின் மாவு மருந்ததுங் கூட்டி
யதிரசஞ் சுட்டுணச் சிலநாள். 10
பின்பனை வெல்லந் தன்னிலுஞ் சாம்பல்
பேசிய வாழையின் பழத்தில் முன்புறு மிளநீர் சர்க்கரை யிவற்றின்
முறைப்படி பத்துநா ளாக அன்புடன் கொள்ள நன்றதாம் புளியை
யகற்றியே யுப்பினை வறுக்கப் பொன்பெறு காணி யுடனறைக் கீரை
புகறுது மிவைகள் பத்தியமே. 11
சாதிக்காய்ச் சூரணம்
முருங்கைப்பிசின், விளாம்பிசின், ஒதியம்பிசின், அத்திப்பிசின், இலவம்பிசின், இலந்தைத்தம்பலம், தேற்றாவிதை, ஆவரம்பட்டை, ஆவரையரிசி, நாயுருவியரிசி, புல்லாந்திப்பட்டை, ஆலம்விழுது,"முகைவித்து, அரசம்வித்து, கஞ்சாவித்து - இலை, மலைதாங்கிவேர் இலை, நன்னாரிவேர், கோரைக்கிழங்கு - வகைபிடிக - சாதிக்காய் - கழஞ்சு-2. ஏலம், இலவங்கம், சாதிபத்திரி, இலவங்கபத்திரி, கராம்பு, ஓமம், உலுவா, மாயாக்காய், ஆதியதிவிடயம், கைப்பு, களிப்பாக்கு, வசுவாசி, அதிவிடயம், அவின், நற்சீரகம், சுக்கு, வசம்பு, கோட்டம், உள்ளி, பெருங்காயம், கர்ப்பூரபத்திரி, தாளிசபத்திரிவகை கழஞ்சு - 1. இடித்துச் சூரணம்பண்ணவும். வெருகடிதேன், நெய், Um 6b, மாதுளம்பழச்சாறு, கற்கண்டு முதலியவற்றில்கூட்டி உண்ண பிரமியம், மதுமேகம், தந்திமேகம், இந்திரியஒழுக்கு, வெள்ளை, வெட்டை, பிரமேகம் முதலியனதிரும். இந்திரியபுஷ்டி யுண்டாகும்.
வெள்ளறுகுச் சூரணம்
வெள்ளறுகுவேர்-இலை, கொடுவேலிவேர், சிவனார்வேம்புவேர், எருக்கலைவேர், உவாய்வேர், இயங்கம்வேர், பறங்கிக்கிழங்கு-வகை
பலம் - 1. கராம்பு, வசுவாசி, சாதிக்காய், திப்பிலி, திப்பிலிமூலம்,
152

வைத்தியத்தெளிவு - அனுபந்தம்
இருசீரகம், நெல்லிக்காய்க்கெந்தகம், மனோசிலை, பொன்னரிதாரம், ஆதியதிவிடயம், அவின், சாதிலிங்கம், இரசம், குங்குமப்பூ, கோரோசனை-வகை-கழஞ்சு - 1.
வேர்வகை, இலை, பறங்கிக்கிழங்கு, சரககுகள் இவற்றை வெவ்வேறாயிடித்துக்கலந்து, கீெந்தகம் முதலியவற்றையும் சுத்திசெய்து வேறாகபொடிபண்ணிக் கலந்துபின் குங்குமப்பூ கோரோசனை சேர்த்துக்கடைசியில் இரசம்சேர்த்து இடித்து வேட்டில் அவித்துலர்த்தி அரைத்தெடுக்கவும். வெருகடி தேனில்தின்று வெந்நீர்குடிக்கவும். பத்தியம் பாலும்சோறும். மற்றொன்றுமாகாது. கைகால்குத்துளைவு, முடக்கம், சூலை, கிரந்திவாதசூலை, பிரமிய வாதகுலை, பறங்கிவாதசூலை, முறிகிரந்தி, சந்துவாதம், கொருக்குப் புண்வாதங்கள் பலவுந்தீரும்.
சீரகலேகியம்
ஆவரைவேர்ப்பட்டை-இலை-காய்-பூவிதை, கடலிறாஞ்கிப்பட்டை, அரசம்வேர், அத்திப்பட்டை, மாம்பட்டை, ஆண்பனைவேரில்முகை, வல்லாரைசமூலம், சிறுகாஞ்சோன்றிவேர், தூதுவளைவேர், நன்னாரி வேர், காட்டுமுல்லைவேர், பற்படாகம், படுக்கைவிளாத்திவேர், இலாமிச்சம்வேர், வெட்டிவேர், வில்வம்வேர், முசுமுசுக்கைவேர், தேற்றாவேர், சிற்றாமுட்டிவேர், கண்டங்கத்தரிவேர், கருவாழைக் கிழங்கு-வகைக்குபலம்கால், இடித்து துாள்செய்து தூணிநீர் எட்டொன்றாக வற்றவைத்துப் பிழிந்து அத்துடன் தென்னம்பாளைச்சாறு படி 1, கலந்து, கராம்பு, சாதிக்காய், வசுவாசி, சுக்கு, வகைக்கு விராகனிடை 4, இந்துப்பு விராகனிடை 3. திப்பிலி, கோரோசனை வகைக்கு விராகனிடை 1, காட்டுச்சீரகம் விராகனிடை - 3, இவற்றுள் சாதிக்காய், வசுவாசி, கோரோசனை என்னும் மூன்றையும் வெய்யிலில் உலர்த்திப்பொடிபண்ணவும். ஏனையவற்றை இளவறுப்பாய் வறுத்துப் பொடிபண்ணவும். நற்சீரகம் விராகனிடை 160 பொறுக்கி எடுத்து எலுமிச்சம்புளியில் முப்பது நாழிகை ஊறவைத்து நிழலிலுலர்த்திப் பொடிபண்ணவும். கற்கண்டுநூறு விராகனிடை காயவைத்து மாவாகனடுக்கவும். பால் நாலுபடியில் உள்ளி பத்துவிராகனிடை சேர்த்து பாகுகாய்ச்சிக் கொள்ளவும். முந்திய கஷாயத்தைப் பாகுபருவத்தில் காய்ச்சி ஆறிய மறுபடி அடுப்பில்வைத்து பால்சேர்ந்த குழம்பும் நெய் அரைப்படியும் விட்டுக்காய்ச்சி எல்லாம்சேர்ந்து பொன்னிறமாக வரும்பொழுது சரக்குத் தூளும், சீரகத் தூளுங் கலந்து சிறுகச்சிறுகத்தூவிக் கைவிடாமல் துளாவிக்காய்ச்சவும். கற்கண்டுத் தூளும் அப்படியே தூவிக்கிண்டி லேகிய பதம்வரும் நேரம் இறக்கி வைத்துக்கொண்டு, தேன்-படி அரை சற்றே சுடவைத்து லேகியத்தில் வார்த்துக் கிளறிக்கொள்ளவும். மூன்றுநாள் தானியபுடம் வைத்து எடுத்துக் கொட்டைப்பாக்களவு தின்னவும்; மூன்று நாளைக்கு புளி ஆகாது. இந்த மூன்றுநாளும் காலையில் மட்டும் மருந்து உண்ண அதன்பின் இருவேளையும் உண்ணலாம்.
மாங்காய், பாகற்காய், பூசினிக்காய், கத்தரிக்காயிவை தவிர
மற்றெல்லாமாகும். குளிர்ந்தநீரில் குளிக்கலாம். பழஞ்சோறு பிழிந்து புதுத்தண்ணிர் கூட்டி ஊறுகாய் சேர்த்து உண்ணலாம்.
153

Page 89
வைத்தியத்தெளிவு - அனுபந்தம்
மேகவகை, நீரழிவுவகை, சரீரத்தளர்ச்சி, வாதபித்த சிலேற்பனங்கள் பிரிந்து சிதறிநிற்பது, உஷ்ணரோகம் முதலிய பலநோய்கள் தீரும். -
தயிர்க்குழம்பு
இஞ்சி கரும்பு தேசிப்புளி ஈருள்ளி நீர்முள்ளியிலை மாதுளம்பழம் தோடம்பழம் இவை சாறுவகை படி கால், பசுத்தயிர் படி 3 தேன் படி கால். கற்றாழைவேர் சாரணைவேர்வகை பலம் கால். நாலொன்றாயவித்து இறக்க. ஆண்பனைப் பனங்கட்டி-பல.இ. கீச்சுக்கிட்டம் கோசலத்திற் சுத்திசெய்து-பலம்.இ. காந்தம். பலம். இ. சிறிகடுகு ஓமம் கடுகுரோகணி வசம்பு மல்லி உள்ளி கோட்டம் மதுரம் கராம்பு வசுவாசி சாதிக்காய் கிருமிசத்துரு இந்துப்பு வகை-கழ1. வேரவித்த நீரிலரைத்துக் கூட்டி குழம்பாகக் காய்ச்சிப் புதுப்பாண்டத்தில் வைத்து அந்தி சந்தி பாக்களவு மண்டலம் கொள்ள சோகை வீக்கம் முட்டு இருமல் தீரும்.
இந்திர ஏலாதிக்கடுகம்
மாலயன் றேடிக் காணா மான்மியன் மார்க்கண் டற்காய்க் காலனை யுதைத்த மூர்த்தி கருணைகூர்ந் தெடுத்துக் கூறச் சேல்விழி மகிழு மிந்த்ர வேலாதிக் கடுகந் தானே பாலர்கள் விருத்த ரெல்லாம் பருகிட வினிய தாமே. 1
ஆமிது மயூர மானு மாவின்ரோ சனையி னோடே ஏமமா ரிரலை மேதி யேனங்காண் டாவின் கொம்பு தோமிலா விரச தார சிந்துாரம் வீரச் சுண்ணம் பூமிலி பூரச் சுண்ணம் புனுகொடு தேவ தாரே 2
தார்செறி நாவி வாசி சாதிக்காய் கராம்பு திப்பில் பார்செறி சந்தஞ் சுக்குப் பவளஞ்சாம் பிராணி பச்சை கார்நெறி கெருட பச்சை கற்பாசி குங்கு மப்பூப் பேர்சிறு நாகங் கோட்டம் பெருநாக மலருஞ் சேரே 3
சேர்ப்பாய் நல்ல பிசினினொடு திகழு மதுரம் வான்மிளகு ஆர்க்கு மாத்தி காஞ்சூரை யலரு மிருப்பை மாவிலங்கை வேர்கொள் வில்வ முல்லைகளின் விரும்பு மலரு முந்திரிகை தீர்க்கும் பிஞ்சுஞ் செங்கழுநீர் தேரு மரத்தை கோரையுமே 4.
மேவு மாஞ்சின் மோதகமும் விரும்புங் கறுவாப் பத்திரியும் தாவும் வகைக்குக் கழஞ்சொன்றாந் தங்கத் தானு மெண்கழஞ்சு பூவி லாறு மாணிக்கம் புகலும் வெள்ளி நாலாகும் தூவு நல்ல முத்திரண்டாந் தூயதாக்கிக் கொள்ளுகவே 5
கொண்டே யேலம் பலமொன்று குலவும் பதக்கு நீர்விட்டுச் சுண்டக் காய்ச்சி யரைப்படிநீர் தொகுத்தே யெடுத்து நாலொன்று நன்றா யாட்டி யத்துடனே நலஞ்சே ரிலிங்க நாற்கழஞ்சு கண்டேய் மொழியாய் கர்ப்பூரங் கஸ்தூ ரியுமே நாலாமே 6
நாற்ப லந்தா னிஞ்சியதி னல்ல சாற்றா னாற்சாமம் சாற்று மாதளம் பழவிரசந் தனிலேநாலு சாமமரை
154

வைத்தியத்தெளிவு - அனுபந்தம்
தோற்றுந் தோடம் பழச்சாறு துலங்க வரைத்தே யுலர்ந்தபின்னர் ஊற்றுநொச்சிச்சாறதனி லுறவாயிரண்டு பொழுதரையே. 7
பொழுதே யிரண்டு போகியபின் பொன்னி னம்பர் கழஞ்சிரண்டு பழுதே யொன்றும் வாராமற் பாவை பாலி னாளிரண்டு தொழுது சிவனை வழிபட்டுத் தோற்றும் பயறு போலுருட்டி வழுவில் லாது நிழலுலர்த்தி வடிவாந்தங்கச் சிமிழில்வையே. 8
வைப்பாய் பாண்ட மொன்றுக்குள் வளமாய்க் கறுப்பு நெல்லுகுத்துக் கைப்பாகந்தான் வழுவாமற் கணக்காயிருபதுநாள்வைத்துத் தைத்தே யமிர்த மின்னாளைச் சரியா யெண்ணாள் பூசித்துப் பைத்தேன்பாலுங்கரும்பிரசம் பருகத்திராச்சுரம்போமே. 9
சுரர்தாரரத்தை நொச்சிமலர் சொல்லுமிலுப்பைகுங்குமப்பூக் கரவா முயிற்று முட்டையுடன் கஷாய மாக்கி முலைப்பாலில் சுரமார் சன்னி பலவுளவுந் தொலையுந் தோஷ சுரம்போகும் பரமேயடைந்தோர்க்கன்ன மிட்டோர்பாவம்போலாம் பொய்யாதே. O
பொய்யாஞ் சேற்பமுட்டடைப்புப் பொலிமேன் மூச்சோ டிளைப்பிவைக்கு மெய்யாந்திப்பிலிதோடையிலை மேவுமரத்தைதுதுளம்வேர் செய்ய குன்றி சிறுவட்டுச் சேர விட்டு வண்டவித்துத் துய்யசாறுமுலைப்பால்தேன் றுலங்கக்கலந்து குடிப்பதுவே.
அனுபானமும் தீரும் நோயும் கூறும் செய்யுட்கள் இன்னமும் முப்பத்தொன்றுக்கு மேலுள்ளன. தேடிப்பார்க்க என்று பிரதியில் எழுதப்பட்டிருக்கிறது.
கர்ப்பூராதிமாத்திரை
சூடன், பச்சைக்கர்ப்பூரம், கோரோசனை குங்குமப்பூ, சாதிலிங்கம், வெள்ளைப்பாஷாணம், தீமுறுகல், நாவி, கோட்டம், மதுரம், இரசம், கராம்பு, திரிகடுகு-வகை-கழஞ்சு-1. உள்ளிச்சாறு, இஞ்சிச்சாறு, வசம்புச்சாறு இவற்றால் வகைக்கு ஒருநாளரைத்து மிளகளவுருட்டி நிழலுலர்த்தவும்.
பிரண்டை, வசம்பு, உள்ளி அரைத்து வெந்நீரிற் கலக்கி வடிகட்டிக் குளிகைகூட்டிக் கொடுக்கச் சன்னி-18-வலி-12 உட்குத்து, புறவீச்சு, சுவாதம், குளிர்வாதம், சேடப்பொறுப்புத் தீரும். முலைப்பாலில் முட்டுமூச்சும் அதிமதுரக்கஷாயத்தில் சரளியும், உள்ளித்தயிலத்தில் கண்டக்கரப்பன் உள்ளடைப்புந்தீரும்.
நவலோக பூ பதிமாத்திரை
வெண்கலம், பித்தளை, செம்பு, தங்கம், வெள்ளி, நாகம், வங்கம், காந்தம், அயம்-வகை-பல-2. சீனக்காரம், வெண்காரம், வெடியுப்பு, இரசம், கெந்தகம், மனோசிலை, அரிதாரம், கெவுரி-வகை-பலம்-1. எல்லாம் தனித்தனி நன்கு சுத்திசெய்து சீதேவிச்சாறு, செருப்படிச்சாறு, கையாந்தகரைச்சாறு, இவற்றால் வகைக்கு ஒருநாளரைத்து வில்லை செய்து கொள்ளவும்.
155

Page 90
வைத்தியத்தெளிவு - அனுபந்தம்
கொண்டிடு வில்லை குணமா யுலர்ந்தபின் சென்றிடு மயானந் திறமுட னத்தி எரிந்ததை யெடுத்தே யின்புடன் வெண்கரு குணமுடன் விட்டரை கொண்டிடு மெழுகுபோல் தவறின்றிக் கவசமாய்த் தான்செய்த பின்பு வாயது குவிந்த கரகத்திற் கற்சுண்ணம் பலமோ ராறு பரிவுட னிட்டுச் செயம்பெறு வில்லை தீர்க்கமாய்வையே
வைத்தபின் மேலும் வலுவாயச் சுண்ணம் இட்டமா யழுத்தி யீசுர மூலி அதனிற்சாறு செயம்பெற விட்டுச் சீலையேழி செய்து நவசத்தி பூசை நலமுற முடித்துக் கெசபுடம் போட்டுக் கிருட்டியின் பூசை அன்புடன் செய்தே யாறி யெடுக்க ஊதா வன்ன முவப்புட னிருக்கும் முத்துப் பவளம் முறைதரு சிவப்புப் பத்திசே ரக்குப் பகர்மான் கொம்பு குங்குமப் பூவும் கோரோ சனையும் கஸ்தூரி பச்சைக் கர்ப்புர மிவைகள் செப்பமா யொன்பான் சேர்நிறை யாக இலிங்கசிந் தூர மெடுவகை மூன்று கரும்புக் கஷாயம் விரும்பிவிட் டரைத்து மாதுதன் பாலான் மறுநா ளரைத்துக் கயிறுபோ லுருட்டிக் கனகச் சிமிழில் பண்புள பூபதி பரிவுட னடையே அடைத்திடு பூபதி யருளை யுரைக்கச் செகத்துள மானிடர் செய்தவ மாமே தவம்பெறு முனிவர் தம்முரை யெல்லாம் விரும்பியே யிாய்ந்து விளம்பினன் சேகரன் கரமுறு பூபதி கருத்துடன் முலைப்பால் திறமுற வுரைத்துத் தீட்டிடு நாவில் கறைமிடற் றண்ணலைக் கருத்தி லிருத்திக் கொண்டிட வெகுநோய் குதித்துப் பறக்கும் உற்றிடு சன்னி யுள்ளன வெல்லாம் பற்றிடு காசம் பகரீ ராறும் சுற்றிடு சேற்பந் தொண்ணுற் றாறும் அகத்துறு பித்த மடுத்திடு வாதம் இத்தனை வகையு மிதனாற் போமே பூபதி தன்னைப் பூதல முள்ளி நாரியர் பாலி லைமுறு மதுவில் நாளது மூன்று நாடியே யுண்ண வாடிடும் வாயு வந்திடு மூச்சுத் தேடிய வேர்வை சீக்கிரம் போகும் அசாத்திய நோயை யாய்வது தகுமே சார்ந்திடு பிணியைத் தவிர்த்திடு முண்மை சேகரன் படையெதிர் திசையோர் போலும் நாவினாற் சிவனது நாம நவிற்றும் உத்தமர்க் கன்ன மூட்டிடு மேலோர்
156

வைத்தியத்தெளிவு - அனுபந்தம்
பாவம் போகும் பரிசது போலும் உடலுறு பிணியெலா மோடிடு மென்று மறையுரை தேர்ந்து வழுத்திய திதுவே.
காந்த அமிர்தலிங்கமாத்திரை
திருநிறை காந்தந் தங்கஞ் சிவந்திடு மிலிங்கந் தானும் வருமுறை கழஞ்சு நான்கு வகுத்துநற் சம்பி ரத்தின் மணம்பெறு புளிகாக் கொத்தில் வருவெடி யுப்பு நாலு குணம்பெற வுற விட்டுக் குறிப்புடனரைக்கும் போது நலம்பெறு வீரந் நாற்கழஞ் சிட்டுத் திண்மூன் றரைத்துத் திரள்பதம் வில்லை செயம்பெறவுலர்த்தி, உமிக்கரி யுடனே யுறுவெண் காரம் வெண்கரு விட்டரை வில்லைக்குக் கவசஞ்செய் நன்றா யுலர்த்தி நாதனை நினைந்து கெசபுட மிட்டெரி யாறி யெடுத்திட அனிச்சம் பூப்போ லழகு தருமே தருசெறி முத்துத் தலஞ்சேர் சிவப்புப் பவளம் வெள்ளி பச்சைக் கர்ப்புரம் காரகில் சந்தனங் கதித்த தேவதா ரேலங் கோட்ட மிசைசாதி பத்திரி திரிகடு கரத்தை சேர்பழ மூன்று வசுவாசி நாகம் வருகஸ் தூரி நாவி யிருவி நற்குங் குமப்பூ மான்மதம் பசுமத மயிர்க்கோ ரோசனை இந்துப் போடில வங்க மென்றிவை வகைக்கொரு கழஞ்சு வண்மையாய்ச் சேர்த்துப் பன்னீர் விட்டுப் பகர்நாற் சாமம் முலைப்பால் மூன்று சாமமு மரைத்துக் கொடுவே லியினிற் குடிநீர் சாமம் பயறுபோ லுருட்டி பண்புற வுலர்த்தே உலர்ந்திடு மாத்திரை யொன்றினை யெடுத்துச் சிறந்திடு முலைப்பால் தேனதி லுண்ணப் பொருந்திடு சன்னி புகன்றவெச் சுரமும் நிறைந்திடு நாமுள் நீலக் கறுப்பும் கரந்திடு சிங்ங் வை கடிய வாதமும் நாடி தளர்தலுந் நலமிலாக் குளிரும் இரவிமுன் னெதிர்த்த பனியெனப் போகும் அகலும் பலவகை யான சுவாதமும் நண்புள விஞ்சி நாரத் தம்பழம் நறுந்தேன் கரும்பு நங்கை முலைப்பால் காச விருமல் காயா சுவாதம் தொடர்ந்த மூச்சுத் தொலையுமே பாலில்.
மிகுதி, தேடிப்பார்க்க என்று பிரதியில் எழுதப்பட்டிருக்கிறது.
157

Page 91
வைத்தியத்தெளிவு - அனுபந்தம்
வெள்ளை வெண்காய லேகியம்
குறுணிதரு மாப்பாலில் வெள்ளுள்ளி பலமாறு
கொண்டவித் தீருழக்குக் கோநெய்யும் விட்டுக் கடைந்தேலமதுரங்
குலக்கா யவின்கராம்பு மறுவில்செவ் வள்ளிமுக் கெந்தமுச் சீரகம்
வாசியில் வங்கமோமம் வான்மிளகு கோட்டமா யாக்காய் குறாசாணி
மாஞ்சில்வளர் நாகமுகையும் திறிகடுக மக்கறாக் கடுகுரோ கணியுலுச்
செண்பகங் கஸ்தூரியுஞ் சிறுமூலகஞ்சிற் றரத்தைகன் னாரிங்கு செப்புதற் கோலமினிவேர் நறியகண் டங்காலி சாரணை யமுக்கிரவு
நாயுருவி வாகைகோரை நன்னாரி நிலவடலி தூதுவளை யோரொன்னு
நவிலுங்க ழஞ்சுகொள்ளே கொண்டுபா லினிலரைத் தேமுன்பு வெந்திடு
குழம்புடன் சேர்த்தெரித்துக் கூறுதேன் னாழியிட் டேசீனி யுரியையுங்
கூட்டிலே கியபாகமாய்க் கண்டபோ தேயெடுத் திருநேர மும்புனைக்
காயள வருந்திவரவே காமாலை யரிசலங் குத்திரும லுடலிற்
கடுப்புநீ ரெரிவுவழலை அண்டுமே கஞ்சத்தி விக்கல்பிர மேகவகை
யங்கமெங்குஞ் சொறிதலு மாறாத சுரமிருமல் பித்தவகை நாற்பதொ
டரிக்குமுட லிற்கிருமியும் மிண்டுசேற் பனரோக மோங்காள மிவைதீரும்
வீரியவி ருத்திபெலமும் மிகுமறிவு விழிமிக விளங்குமுடல் பூரிக்கும்
வெண்காய லேகியமிதே.
மிளகு சந்தனாதியேண்ணேய்
மிளகு - படி - 4. இடித்துப்பதினாறுபடி தண்ணிர்வைத்து 2-படியாய் வற்றவைத்துப் பிழிந்து அதில் கையாந்தகரை, மாற்றுவெற்றிலை, துளசி, இயங்கு, அவுரி, முருக்கு, ஆடாதோடை, "குல்லை-இவை சாறு எலுமிச்சம்புளி, பால், இளநீர்-இவை-வகைக்குப் படி-1, நன்னாரி, இலாமிச்சு, முத்தற்காசு, சிற்றமட்டி, தூதுவளை, கண்டங்கத்தரி, சிறுகாஞ்சோன்றி-வகை-பல-1. திரிபலை-வகை-பலம்-2. சுக்கு, கோட்டம், தேவதாரு, அகில், மரமஞ்சள், கஸ்தூரிமஞ்சள், செண்பகப்பூ, அதிமதுரம், பச்சை, சந்தனம், கச்சோலம், செவ்வள்ளி, ஏலம், இலவங்கம், திப்பிலிமூலம், சடாமாஞ்சில், பூலாங்கிழங்கு, அரிசிவகைஆறுவகை-பலம்-1. இடித்து வேர்வகை சரக்குவகை வெவ்வேறாய் அவித்துக் கலந்து நல்லெண்ணெயும்விட்டு எட்டுந்ாளுறி மெழுகுபதத்தில் வடித்து இளஞ்சூடாயிருக்கும்போது - குங்குமப்பூ,
*குல்லை - கஞ்சா.
158

வைத்தியத்தெளிவு - அனுபந்தம்
கோரோசனை, பச்சைக்கர்ப்பூரம், புனுகு-இவை-ஒருபடி எண்ணெய்க்கு ஒருகழஞ்சு வீதம் பொடித்துத் தூவவும். தானிய புடத்தில் ஒரு பட்சம்வைத்தெடுத்துத் தலைக்கு வைத்து நசியமும் செய்துவரசிலேற்பனநோய் தொண்ணுாற்றாறும், பீனிசம், மூக்குநீர்ப்பாய்ச்சல், தும்மல், அரிப்பு, சிராய்விழுதல், கபாலவலி, கணப்பு, பித்தம், கிறுதி, உட்டணம், உட்டணவாயு இவை தீரும். சிகைக்காய் வெந்நீரில் எண்ணெய் கழற்றி அன்று பால், தயிர் முதலியன நீக்கிப் பத்தியமிருக்க.
பெரிய முலைப்பாலெண்ணெய்
உலகுதனி லேசிறுவர்க் குற்றகணை யாதி பலபிணிக ணீங்கும் படிகேள் - முலையிலுறு பாலதுவு நானாழி பண்புடைய நற்பசுவின் பாலுமிரு நாழியுடன் பங்கயத்தின் - மூலம் வருசாறு சீதேவி மன்னுமதன் சாறு தருமிளநீர் நாழியொன்று தாமும் - மருவவே எள்ளெண்ணெய் நாழியுமிட் டேற்ற கஷாயமதில் வல்லபுங்கு சிற்றமட்டி மஞ்ஞையுடன் - சொல்லவே முத்தமிரு வேலியொடு மொய்குழலே நன்னாரி வைத்த வமுக்கிரா யிலாமிச்சு - மெத்த எடுமேநி நாற்கழஞ் சேற்றகடைச் சரக்குத் தொடுமே பேரரத்தை சுக்குச் - சடாமாஞ்சில் பச்சைமர மஞ்சள் பகர்கடுகு ரோகணியும் இச்சைதரு மேல மிலவங்கம் - கச்சோலம் நற்சீ ரகில்குப்பை நாகம்பூச் செவ்வள்ளி அச்சமில் லாமதுர மத்தனையும் - மெச்ச வகைக்குக் கழஞ்சொன்றாய் வாங்கியே வேர்கள் அரைத்துக் கரைத்துவிடு மப்பால் - பருத்ததொரு சந்தந் தனைச்சீவிச் சாருமறு பலமும் இந்துவில்வ வேரு மிருபலமாய்க் - கொந்துளப மாயன் றனைநினைந்து வாகாய்நற் பாண்டத்தில் பூவையெண்ணாழி புனலினைவிட் - டாவலுடன் எட்டொன்றாய்க் காய்ச்சி யிறுத்துக் கஷாயமதில் விட்டறுநா ஞறி மெழுகுபதத் - திட்டமாய் வட்டி லெடுத்து மகிழம்பூத் தான்பரப்பி மட்டவிழ்கஸ் தூரி வருபுனுகு - சட்டமுடன் கோரோ சனைவகுத்த குங்குமப்பூ மேற்றுாவிச் சீராய் வடித்துச் செயம்பெறவே - காரானை மாமுகனைப் பூசித்து வண்மையுறு பாலகர்க்கு நேமமாய் வைத்து நினைவுடனே - சேமம் தருசிகைக்கா யெண்ணெய் தனையகற்றப் பூசி மருவுமிள வெந்நீரில் மூழ்க - ஒருவுபிணி வாதசுரம் பித்தசுர மாறாத சேடகரம் வாதைசெயு மத்திசுரம் வாயவியல் - தீதாங் கணையக் கரமதுவுங் கண்பீளை சாறல் மணல்போலு நாமுள் வரட்சி அணையும் கனநோய்க ளெல்லாங் கதிரவற்கண் டஞ்சும் பனிபோலப் போகும் பறந்து.
159

Page 92
நன்றியுரை
எமது சித்த - ஆயுள்வேத வைத்திய சம்பந்தமான நூல்கள் பல இலங்கையில் தோன்றி உள்ளன. எமது நாட்டில் தட்ப வெப்ப சூழ்நிலைக்கும், மக்களுக்குமேற்ப சில தனித்துவங்களை கொண்டு தோன்றியது இயல்பு ஆகும்.
எமது நாட்டில் தோன்றிய நூல்களில் பல கால மாற்றத்தில் அழிந்திட சில நூல்கள் அங்கொன்று. இங்கொன்றாக உயிர்வரிந்தன. கிடைத்த நூல்களும் சரிவர பேணப்படாவிட்டால் காலவோட்டத்தில் அழிந்துவிடும் என உணர்ந்த நல்ல உள்ளங்கள் மருத்துவ சுவடிகளை சேகரித்து பாதுகாத்தன. சிலர் அதனை அச்சு வடிவில் நூல்உரு ஆக்கினர். அப்படி அச்சு வடிவில் வெளியிட்ட நூல்களும் இன்று எமக்கு கிடைப்பது அரிதாயிற்று.
மருத்துவ நூல்களை பதிப்பித்து வெளியிட்டு வைத்தவருள் மருத்துவர் ஐ. பொன்னையாபிள்ளை என்பவர் போற்றத்தக்கவர் ஆவர். இவர் பரராசசேகரம், செகராசசேகரம் மற்றும் சொக்கநாதர் தன்வந்திரியம் போன்ற முக்கிய நூல்களையும் வேறு நூல்களையும் பதிப்பித்து வெளியிட்டுள்ளார் என அறியமுடிகின்றது.
வடக்கு - கிழக்கு மாகாணத்தில் சுதேச மருத்துவத் திணைக்களம் தாபிக்கப்பட்டதும் அதன் முதலாவது சுதேச மருத்துவ மாகாண பணிப்பாளராக கடமையாற்றியவர் வைத்திய கலாநிதி. பூ உரோமகேஸ்வரன் ஆவார். அவரின் காலத்தில் ஆயுள்வேத வைத்திய பாதுகாப்புச் சபையும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வைத்தியர்கள் பல கோரிக்கைகள் விட்டனர். அதில் ஒன்று வைத்தியப் புத்தகங்களை மீள் பதிப்புச் செய்து வெளியிடுதல் வேண்டும் என்பதுமாகும். இதனை கவனத்திலெடுத்த சுதேச மருத்துவத் திணைக்களம் அதற்கான ஆக்கபூர்வமான செயற்பாடு களை “தொடங்கிவைத்தது.
இதற்கான பலதிட்டங்களைதீட்டி அதற்கான அனுமதியையும் வடக்கு - கிழக்கு மாகாண ஆளுநர், தலைமைச் செயலாளர் மற்றும் அதிகாரிகளிடம் இருந்தும் பெற்றதுடன் ஆலோசனையையும் பெற்று புத்தக பதிப்புக்கு என ஒரு குழுவையும் அமைத்து, பணிப்பாளர் அவர்களே அதற்கு தலைமையும் ஆனார்.
இந்த நிலையில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி பூ உரோமகேஸ்வரன் அவர்களின் பதவிக்காலம் முடிய, புதிய பணிப்பாளராக பேராசிரியர் சுப்பிரமணியம் பவானி அவர்கள் கடமையேற்றார்கள். அவரும் புத்தக மீள் பதிப்பின் முக்கியத்துவம் உணர்ந்மு, அதற்காக பாடுபட்டு முதற்கட்டமாக சில புத்தகங்களை மீள்பதிப்புக்கு கொடுத்தார். அதன் பேறாக இன்று சில புத்தகங்கள் எமக்கு கிடைக்கக் கூடியதாக உள்ளது. ஆகவே வைத்தியர்கள் ஆகிய நாம் சுதேச மருத்துவத் திணைக்களத்துக்கு நன்றிகூற கடமைப்பட்டுள்ளோம்.
160

இன்று இப் புத்தகங்கள் வெளிவருவதற்கு, சகலவிதத்திலும் உதவியும், அனுமதியும் அளித்த வடக்கு - கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கும் நாம் நன்றி கூறுகின்றோம்.
புத்தகங்கள் வெளிவர சகல உதவிகளும் ஆலோசனைகளும் அளித்து ஊக்கப்படுத்திய தலைமைச் செயலாளர் அவர்கட்கும் நன்றி கூறுகின்றோம்.
புத்தகங்களை வெளியிட நாளிலும் பொழுதிலும் ஊக்கமுடன் உழைத்த சுதேச மருத்துவத் திணைக்கள பணிப்பாளர், சுகாதார அமைச்சு செயலாளர் ஆகியோருக்கும் நன்றி கூறுகின்றோம்.
இன்னும் புத்தக வெளியீட்டில் ஒத்துளைத்து சுதேச மருத்துவத் திணைக்கள ஊழியர்கள், சிறப்புற புத்தகத்தை அச்சிட்டு உதவிய பதிப்பகத் திணைக்கள அதிகாரிகள், ஊழியர்கள் ஆகிய சகலருக்கும் நன்றி கூறுகின்றோம்.
முக்கியமாக புத்தகங்களை பதிப்பிக்க உதவியாக, தமது பழைய புத்தகங்களை தந்து உதவிய வைத்தியகலாநிதி. முரீபதிசர்மா அவர்களுக்கும் நன்றிகூற கடமைப்பட்டுள்ளோம்.
நன்றி.
இ. தர்மராஜா, D. A. M. S. புத்தக குழு உறுப்பினர், தலைவா, ஆயுள்வேத வைத்திய பாதுகாப்புசபை, திருகோணமலை.
61

Page 93


Page 94


Page 95