கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சூழல் மாசடைதல்

Page 1
KEBAB
sThomas col
 


Page 2


Page 3

2
དོད།
க.பொ.த உயர்தர (புதிய பாடத்திட்டம்)
இரசாயன மாணவர்களுக்கான
உசாத்துணை நூல்
சின்னத்தம்பி நோபிள் சுரேந்திரன் B.Sc. Special (Hons)
கணபதிப்பிள்ளை பாலசிங்கம் பாபு
B.Sc. Special (Chemistry) (இரசாயன ஆசிரியர்.பரிதோமாவின் கல்லூரி , கல்கிசை)
Price RS 65.00
ܔ

Page 4
Published by: V.J. P. International
(Publishers, Importers & Distributors) Book Shop
"Inter Mod", 240 Galle Road,
Colombo - 6 T.P : 503141
Copyright : Reserved
Edition, : First Edition, July 1997
Printed at : Sarasu Publications,
M-1 Bambalapitiya Flats
Colombo - 4
Price : RS: 65.00
A.

A.
அணிந்துரை
உலகத்தில் இன்று கவலை தரும் விடயம் சூழல் மாசடைவதினால் உண்டாகும் விபரீதங்கள் ஆகும். இவ் விபரீதங்கள் மனிதனுக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் ஒரு அச்சுறுத்தலாக அமையும் என விஞ்ஞானிகள் கருதுகின்றார்கள். தகுந்த முறையில் சூழல் மாசடைதலைத் தடுக்க நாம் முன்வர முடியாது போனால், உலகம் இதனால், தத்தளித்து, இதிலிருந்து தப்பமுடியாது. உலகத்திலுள்ள அத்தனை உயிரிகளும் அழிவதற்கு காரணமாய் அமையலாம் என கருத இடமுண்டு.
இன்று உலகில் உள்ள பல பல்கலைக்கழகங்கள் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் யாவும் சூழல் பாதுகாப்பு விடயமாக, கல்வி சார்ந்த கட்டுரைகளையும் வெளியிட்டு ஆராய்ச்சிகளையும் நடாத்தி வருகின்றன.இதே போல் பாடசாலைகளிலும் கல்லூரிகளிலும் சூழல் பற்றிய கல்வியறிவு போதிக்கப்படுகின்றது. நம் நாட்டிலும் இப்போது இக் கல்வி பரவலாக பரப்பப்படுகின்றது.
இது விடயமாக இளம் ஆசிரியர்கள் சேர்ந்து, வேண்டிய தரவுகளை ஒரு நூல் உருவில் வெளிக்கொணர முன்வந்தமை
போற்றற்குரியதொன்று. இந் நூல் தற்போது முக்கியமாக
வேண்டிய ஒரு "சூழல் உணர்வை” எமது மாணவர்கள் மனதில் விதைக்க முடியும். இந் நூலை வெளியிட இவ் ஆசிரியர்கள் முன் வந்தமை, காலத்துக்கேற்ற சிறப்பாகும். இந் நூலில் முக்கிய விடயங்கள், யாவரும் தெரிந்திருக்க வேண்டிய விடயங்கள் என்பன இந் நூலில் அடக்கப்பட்டுள்ளன. பாடங்களுக்காகவும் பரீட்சை களுக்காகவும், சித்தி பெறுவதற்காகவும் அல்லாது எமது நாடும், உலகமும் மாசாக்கலில் இருந்து விடுபடக் கூடிய வழிவகைகளை மக்களுக்கும் மாணவர்களுக்கும் தெரியப் படுத்துவதில் இந் நூல் முக்கிய பங்கு வகிக்கின்றது.
iii
d

Page 5
LLLLLLLL LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLkS
இந் நூல், காடழித்தல், வளிமாசடைதல், வளமாக்கிகள், பீடைகொல்லிகள், தொழிற்சாலை கழிவுகள், நீர் மாசடைதல், பசிய வீட்டு விளைவு, அமில மழை, ஓசோன் படை சிதைவடைதல், என்பனவற்றிலான மாசாக்கல் விடயத்தினை சற்று விரிவாக தந்துள்ளது.பல்கலைக்கழக மட்டத்தில், நூலகங்களில், சஞ்சிகைகளில் ,புதிய நூல்களில் , தெரிவிக்கப்பட்ட புதிய விடயங்களை இந் நூல் மூலமாக வெளிக்கொணர்வதில் இதை ஆக்கியுள்ளவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பது வெளிப்படை.
மாசாக்கல் விடயமாக இன்று பல நூல்கள், சஞ்சிகைகள் ஆங்கிலத்தில் வெளிவரும் இந் நாளில் இந் நூல்,குறிப்பாக தமிழ் பேசும் நல்லுலகத்தில் ஒரு முக்கிய நூலாக வரவேற்கப்படும் என்பது உறுதியாகும். இந் நூன்ல ஆக்கியோர்க்கு எனது ஆசிகள்
யாழ் பல்கலைக்கழகம் பேராசிரியர் விகே.கணேசலிங்கம்
யாழ்ப்பாணம். B.Sc (Hons.) (Cey), M.Sc.(Hawaii),
03.07. 1997. Ph.D (Lond)
விஞ்ஞான பீடாதிபதி
iv

LLL LL GL G LLLLLL LL LLL LLL LLL LLLLL LGLLLLLLL LL LLLLL LLLL LLLL LL LLLLLLLLLLL LL LLLLL LLLLLLLLL
சூழலில் உள்ள உயிரற்ற அல்லது சடத்துவ கூறுகளே
உயிரங்கிகள் வாழ்வதற்குத் தேவையானவற்றை வழங்குகின்றன. இதனால், சூழலில் ஒரு சமநிலை பெறப்படக் கூடியதாக இருந்தது. ஆனால், தற்பொழுது மனிதனின் தேவைகள் பன்மடங்காக ஆக்கப்பட்டதனால் சூழலில் அவனால் ஏற்படுத்திய, ஏற்படுத்துகின்ற தாக்கங்கள் சூழல் மாசடைதலாகப் பரிணமித்துள்ளது.
இன்று எல்லோராலும் கருத்துக்கள் பரிமாறப்படும்
ச் செயற்பாட்டை பற்றி இளம் பட்டதாரிகளான திரு.
ாலசிங்கம் பாபு, திரு. சின்னத்தம்பி நோபிள் சுரேந்திரன் கியோர் வெளியிட்டுள்ள இந் நூல் மாணவர்களுக்கும்,
<鹦
ଘର J
ருங்காலத்தில் சூழல் மாசடைதலினால் பாதிக்கப்படவுள்ள
‹ቓ*
ந்ததியினருக்கும் ஒரு பொக்கிஷமாக உள்ளதென்பது
3D
ள்ளங்கை நெல்லிக் கனியாகும்.
இவர்களது இம் முயற்சி மாணவ சமுதாயத்துக்கு
பச்சை விளக்காக அமையும் என்பதில் ஐயமில்லை. இதே
போல் பல நூல்களை மாணவ சமுதாயத்துக்கு தரவேண்டும்
;བ༩༠ལོ་ வாழ்த்துகிறேன்.
திருமதி.வரதா.விஸ்வேந்திரராஜ் B.Sc, Dip - in- Edu
பதில்தலைமைஆசிரியை, விஞ்ஞானபீடம் பரிதோமாவின் கல்லூரி, கல்கிசை,
V
w

Page 6
LLLLLLLkk
O
ஆரம்பத்தில் மனிதனின் பாதுகாப்புக்காகக் காணப்பட்ட சூழலை இன்று மனிதன் பாதுகாக்க வேண்டிய துரதிஷ்ட நிலை ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம், மிகையான சனத்தொகைப் பெருக்கத்தினால் மனிதன் தனது தேவைகளை நிறைவேற்றுவதற்காக சூழலை பல்வேறு விதமாக சுரண்டி சூழலில் வரையறையற்ற தாக்கங்களை ஏற்படுத்தியதன் விளைவாக சூழல் மாசடைதல் என்ற சர்வேதச ரீதியான பிரச்சனை உருவாகியுள்ளது. இதைத்தடுப்பதற்கு உலகலாவிய ரீதியில் பல்வேறு கோட்பாடுகள் தேசியரீதியாகவும், அரசசார்பற்ற நிறுவனங்கள்ரீதியாகவும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனினும், இதன் தாக்கங்கள் கட்டுப்பாடின்றிய நிலையில் காணப்படுகின்றன.
சூழல் மாசடைதலை மையமாகக் கொண்டு இரசாயன, பெளதீக, உயிரியல் நோக்கிலான அணுகுமுறைக்கு உட்படுத்தப்பட்டு இந்நூல் எனது இரு மாணவ மணிகளான திருசிநோபிள் சுரேந்திரன், திரு க.பாலசிங்கம் பாபு ஆகியோரால் மிகவும் தெளிவான முறையில் எழுதப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந் நூல்சிறப்பாக கா.பொ.த உயர்தர விஞ்ஞானமாணவர்களுக்கு ஒருவரப்பிரசாதமாக உள்ளது. மேலும், இது சூழல் மாசடைதலைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரு வழி காட்டியாக அமையும் என்பதில் ஐயமில்லை.
இந் நூலில் பச்சைவீட்டு விளைவு, அமில மழை , ஓசோன் படையில் துளையிடுதல், காடழித்தல், வளிமாசடைதல்,நீர் மாசடைதல் மற்றும் நற்போசனையாக்கல் போன்றவை நுணுக்கமாக
ராயப்பட்டுள்ளமை சிறப்பான அம்சமாகும்.
ஆ
இவர்களின் இவ்வாறான நற்பணி மேலும் தொடர வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.
திரு . விஸ்வலிங்கம் குகாதரன் B.Sc (Agric), Dip-in-Edu., MA(Edu)(Prim) தாவரவியல் ஆசிரியர், பரிதோமாவின் கல்லூரி, கல்கிசை Resource Person, Dept. of Biology, NIE Maharagama AGJ6L 6Mífl6JSONTJuurT6Třf,PGDE, NIE Maharagama.
---------
vi
4

இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் அதீத போக்கிற்கு தமிழ் ாணவர்கள் ஓரளவாயினும் ஈடுகொடுக்க வேண்டமேயானால், விஞ்ஞான நூல்கள் தமிழ் மொழியில் வெளிவர வேண்டியது மிக அவசியமான தொன்றாகும். குறிப்பாக, உயர்தர வகுப்புக்களுக்குரிய விஞ்ஞான நூல்கள் தமிழ் மொழியில் உருவாக்கப்படுதல் காலத்தின் தேவையாகும். இதனை நன்கு உணர்ந்து, தமிழ் மாணவ சமூகத்தின் விஞ்ஞானக் கல்வியின் ளர்ச்சிக்கு உறுதுணையாக அமைய இச் சூழல் மாசடைதல் என்னும்
சாத்துணை நூலை உருவாக்கியுள்ளோம்.
6
சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சனைக்ளுடன் ஒன்றிணைந் ததாக இன்று சர்வதேச ரீதியில் அலசி ஆராயப்படும் அம்சமாக சூழல் மாசடைதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சூழல் மாசடைதல் என்னும் மிக வியாபித்த பகுதியில், உயர்தர இரசாயனவியற் பாடத்திட்டத்துக்குள் உள்ளடக்கப்பட்டுள்ள அம்சங்களே இங்கு ஆராயப்பட்டுள்ளன். இந்நூலின் சில பகுதிகளில் நமது நாட்டில் காணப்படும் சூழலியல் தொடர்பான பிரச்சனைகளும், அவற்றுக்கான தீர்வுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. இந் நூலின் மூலம் சூழல் மாசடைதல் சம்பந்தமாக இன்று எழுத்துள்ள பிரச்சனைகளை மாணவர்கள் புரிந்து கொள்வதுடன், சூழற் பாதுகாப்பில் தம் முன் வைக்கப்பட்டுள்ள பணிகளையும், நன்கு உணர்ந்துகொள்வார்கள் : என நம்புகின்றோம்.
இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிச் சிறப்பித்த யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் வீ.க. கணேசலிங்கம் மற்றும் கல்கிசை பரிதோமாவின் கல்லூரி ஆசிரியர்கள் திருமதி.வரதா விஸ்வேந்திரராஜ், திரு.விஸ்வலிங்கம் குகாதரன் ஆகியோருக்கு எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். அத்துடன், இந்நூலின் உருவாக்கத்தில் பல்வேறு வழிகளில் உதவிகள் வழங்கிய அனைவரையும் நன்றியுடன் நினைவுகூறுகின்றோம். குறிப்பாக, திருமதி. தாரகா பாபு, அட்டைப்படத்தை வடிவைமத்து தந்த திரு.பே. இராஜகுலசிங்கம், மற்றும் செல்வன்கள், வைத்திலிங்கம் குமாரதாசன் ( பொறியியற் பீடம், மொறட்டுவ பல்கலைக் கழகம்) சங்கரபிள்ளை அறிவுச்செல்வன் (மருத்துவபீடம் யாழ்ப்பாண பல்கைலைக்கழகம்) ஜெயக்குமார் தினேஸ். (பரிதோமாவின் கல்லூரி கல்கிசை) ஆகியோருக்கு எமது நன்றிகள் உரித்தாகுக. இறுதியாக ஆனால் உயர்வாக இந்நூலை பிரசுரிக்கும் திருP.N பஞ்சாட்சரம் (VJ.P International ) அவர்களுக்கும், குறுகிய காலத்தில் அழகாக நூல் வடிவாக்கிய Sarasu Publications ஸ்தாபனத்தாருக்கும் எமது உளம்நிறைந்த நன்றிகைள தெரிவித்துக் கொள்கின்றோம்,
சுரேந்திரன்
vii

Page 7
LLLLLLLLLLLLLLLLLLLLLLkS
பொருளடக்கம்
1. 9 g,5up3ib Introduction O1 2. இரசாயன வளமாக்கிகள் 04
Chemical Fertilizers 3. விவசாய இரசாயனப்பொருட்கள் O7
Agro Chemicals 4. தொழிற்சாலை இரசாயனப் பொருட்கள் 11
Industrial Chemicals 5. கனியங்கள் அகழ்ந்தெடுக்கப்படுதல். 15
Mineral Mining 6 கல் உடைக்கும் தொழிலால் ஏற்படும் சூழல் மாசாக்கல் 20
Environmental Pollution Caused By The Operations Of Quarries 7 வாகனங்களில் இருந்து வெளியேறும் பதார்த்தங்கள்/
மாசாக்கிகள் 22 Emissions From Motor Vehicles.
8 வளி மாசடைதல் 26
Air Pollution
9. எண்ணெய் சிந்துதல் 34
Oil Spills
10. நீர் மாசடைதல் 38
Water Pollution
11. பச்சை வீட்டு விளைவு 47
Greenhouse Effect
12. ஓசோன் படை சிதைவடைதல் 52
Depletion Of Ozone Layer 13. 91 (5a) LD60p Acid Rain 58
14. கதிர் வீசலால் ஏற்படும் தீமையான விளைவுகள் 65
Harmful Effects By Radiation
15. காடழித்தல் 71
Deforestation
16. சூழல் மாசடைதலைக் கட்டுப்படுத்தலின் அவசியமும் 76
நடவடிக்கைகளும்.
Control Measures
A.
 
 
 
 

அறிமுகம் (Introduction)
சுற்றாடலின் இரசாயன அடிப்படைத் தன்மையை அறியும் போது, சூழலைப் பாதிக்கும் பொருளாதார, அரசியல் பிரச்சனைகளை இலகுவில் புரிந்து கொள்ளக் கூடியதாக அமையும்.
பூமியைச் சூழ்ந்து படையாக அல்லது போர்வையாகக் காணப்படும் மண், பாறை, நீர், வளி என்பன உள்ளடங்கலாக உயிரிகளைக் கொண்டிருந்து, அவற்றைத் தாங்கும் அனைத்தும் ஒன்றிணைத்து உயிரின மண்டலம் எனப்படும். இவ் உயிரின மண்டலத்தின் உப பிரிவுகளாக சூழல் தொகுதிகள் அமைகின்றன.
உயிருள்ள உயிரற்ற காரணிகளைக் கொண்டிருந்து, அக் காரணிகளுக்கு இடையிலான இடைத் தாக்கத்தின் மூலம், தொடர்ந்தும் பேணப்படுகின்ற, அல்லது இயங்கிக் கொண்டிருக்கின்ற தொகுதி சூழல் தொகுதி எனப்படும்.
சூழல் தொகுதியில் காணப்படும் தாவரங்கள்,விலங்குகள், நுண்ணங்கிகள் என்பன ஒன்று சேர்த்து உயிருள்ள காரணிகள் என அழைக்கப்படுகின்றன. உயிரற்ற காரணிகள் மேலும், பெளதீக, இரசாயன காரணிகள் என வகுக்கப்படுகின்றன. சுற்றாடலில் காணப்படும் ஒளிச்செறிவு, அமுக்கம், சாரீரப்பதன் வெப்பநிலை போன்றவை பெளதீக காரணிகளாகவும், காணப்படும் அல்லது கரைந்துள்ள வாயுக்கள், அமில காரத்தன்மை,கொண்டுள்ள இரசாயனப் பதார்த்தங்கள் என்பன இரசாயனக் காரணிகளாகவும் வகைப்படுத்தப்படுகின்றன.
ஏனைய உயிரங்கிகளைப் போன்று மனிதனும் சுற்றாடலை அல்லது சூழல் தொகுதியை ஆக்கும் கூறாக அமைகின்றான். மனிதன் தனியனாக அல்லது அங்கியாக சுற்றாடலில் வாழ முடியாது. ஒரு உயிரி அதே இன அங்கியில் அல்லது பிறிதொரு வகை உயிரியில், பின்வரும் ஏதோ, ஒன்று அல்லது ஒன்றுக்கு
Environmental Pollution S N. Surendran & B.Babu

Page 8
மேற்பட்ட காரணத்திற்காக தங்கியிருக்கும் * i. உணவு i.வாழிடம் i, பாதுகாப்பு iv.இடப்பெயர்ச்சி V இனப்பெருக்கம்
சாதாரண நிபந்தனைகளில், ஒரு சூழல் தொகுதியின் ஆக்கக் கூறுகள் ஒன்றுடன் ஒன்று ஒரு சமநிலையில் காணப்படும். இச் சமநிலை இயற்கைச் சமநிலை எனப்படும்.
இயற்கைச் சூழல் தொகுதி , (உதாரணமாக காட்டுச் சூழல் தொகுதியை எடுத்துக் கொண்டால்) தன்னைத் தானே தொடர்ந்து பேணக் கூடிய தன்மை கொண்டதால் , அங்கு இயற்கைச் சமநிலை தொடர்ந்தும் பேணப்படும். ஆனால் , செயற்கைச் சூழல் தொகுதி மனிதனால் உருவாக்கப்பட்டு, காலத்துக்கு காலம் மாற்றியமை க்கப்படுவதன் விளைவாக சூழலியற் காரணிகள் குழப்பப்படுவதால் தன்னைத் தானே தொடர்ந்தும் பேண முடியாத தன்மையைக் கொண்டதாக அமையும்.
இயற்தைச் சமநிலை ஏதாவது ஒரு காரணத்தால் குழப்பப்படும் போது, அது சூழல் தொகுதியில் அல்லது சுற்றாடலில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும், இயற்கைச் சமநிலையைப் பேணி, சுற்றாடலைப் பாதுகாக்கும் முக்கிய கடமை மனிதனுக்கு உண்டு. ஏனெனில், இயற்கைச் சமநிலையை குழப்பும் பிரதான காரணி மனிதனாவான்.
சூழல் தொகுதியில் மனிதன் நேரடியாக அல்லது மறைமுகமாக ஏற்படுத்தும் விரும்பத்தகாத அல்லது பாதகமான, பெரும்பாலும் மீள முடியாத விளைவுகள் சூழல் மாசடைதல் எனப்படும்.
சூழல் மாசடைதலுக்கு முக்கிய காரணம் , அதிகரித்து வரும் உலக சனத்தொகைப் பெருக்கமாகும். இதன் காரணமாக, அதன் தேவையை ஈடு செய்ய, பின்வரும் செயற்பாடுகளில் மனிதன் ஈடுபடுவதால் , சூழலில் பல நேரடியான அல்லது மறைமுகமான, பாதகமான விளைவுகள் ஏற்படுகின்றன. (1) உணவுத் தேவையை பூர்த்தி செய்ய விளைநிலங்கள்
அதிகரிப்படுதல்.
SN. Surendran & B.Babu
Environmental Pollution
 

(i) வீடமைப்புத் திட்டங்கள் குடியேற்றத் திட்டங்கள்
அமுலாக்கப்படுதல்
(ii) நீர்ப்பாசனத் திட்டங்கள், போக்கு வரத்து நெடும் சாலைகள்
உருவாக்கப்படுதல்.
(iv) தொழிற் சாலைகள், கைத் தொழில்பேட்டைகள் அதிகரிக்க
ப்படுதல்.
பொதுவாக பின்வரும் செயற்பாடுகள்/ மாசாக்கிகள் , சூழல் மாசடைதலில் பிரதான பங்கு வகிக்கின்றன. (i) இரசாயன வளமாக்கிகளும் விவசாய இரசாயனப் பொருட்களும். (i) உயிர்ச்சுவட்டு எரி பொருட்களின் பாவனை (i) வாகனங்களிலிருந்து வெளியேறும் மாசாக்கிகள். (iv) தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் மாசாக்கிகள். (v) கனியங்கள் அகழ்ந்தெடுக்கப்படுதல். (vi) எண்ணெய் சிந்துதல். (vi)கதிர் வீச்சு பொருட்களின் பாவனை
S.N. Surendran & B.Babu |
Environmental Pollution

Page 9
இரசாயன வளமாக்கிகள்
(Chemical Fertilizers)
அதிகரித்து வரும் உலக சனத் தொகையின் உணவுத் தேவையை ஈடு செய்வதற்காக, விளைச்சலை அதிகரிக்கும் நோக்குடன், செயற்கை உரங்கள் அல்லது இரசாயன வளமாக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன.
இரசாயன வளமாக்கிகள் தாவர உளர்ச்சிக்கு தேவையான முதன்மையான அல்லது மா முலகங்களையும், Mn , Mo போன்ற சுவட்டு முலகங்களையும் கொண்டிருக்கும்.
தாவரங்களின் வளர்ச்சிக்கு அவசியமான, எல்லைப்படுத்தும் முதன்மை மூலகங்களாகக் கருதப்படும் நைதரசன(N), பொசுபரசு (P), பொட்டாசியம் (K) கொண்ட இரசாயன வளமாக்கிகள் அதிகளவில் பயன் படுத்தப்படுகின்றன. உதாரணமாக urea, ammonium sulphate, potassium nitrate, LDfbp to super phosphate.
அண்ணளவாக , இலங்கையின் நிலப்பரப்பின் மூன்றில் ஒரு பங்கில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. விவசாயிகள் ஒரு ஹெக்ரேயருக்கு 77 கிலோகிராமிலும் அதிகமான வளமாக்சிகளைப் பயன்படுத்துகின்றனர். இது, ஏனைய நாடுகளில் பயன்படுத்தப்படும் வளமாக்கிகளின் அளவிலும் பார்க்க , இரண்டு முதல் எட்டு மடங்கு அதிகமாகும். இலங்கையில் சில மாவட்டங்களில் , குறிப்பாக நெற் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் இடங்களில் ஒரு ஹெக்ரேயருக்கு 124 கிலோகிராம் அளவிலான வளமாக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன.
இரசாயன வளமாக்கிகள் விளைச்சலைஅதிகரித்தாலும், காலப்போக்கில் சூழல் தொகுதியில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. (1) தொடர்ச்சியான பாவனை காரணமாக மண்ணின் இயற்கைத் தன்மை அல்லது கட்டமைப்பு பாதிக்கப்படுவதால் மண்ணின் வளம் குன்றும். செறிவான பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் இடங்களில் மேற்பரப்பு நீர் , நிலக்கீழ் நீர் என்பன பாதிப் படையும்.
Environmental Pollution S N. Surendran & B.Babu
 

(i). மண்ணில் காணப்படும் நன்மை தரும் உயிரினங்கள் , குறிப்பாக நுண்ணங்கிகள் அழிக்கப்படும். இதன் காரணமாக, C வட்டம் ,N வட்டம் போன்ற இயற்கை வட்டங்கள் பாதிக்கப் படும்.
(ii) N,P கொண்ட வளமாக்கிகள் நீரோட்டத்தின் மூலம் , அல்லது வேறு காரணிகள் மூலம் நீர் நிலைகளை அடை யும் போது , நீர் வாழ் அல்காக்கள் மற்றும் நீர்த்தாவ ரங்களின் வளர்ச்சியை அதிகரிக்கும். இது "algal blooms " ( நீர் மலர்ச்சி அல்லது நீறுபூத்தல்) எனப்படும். இதன் கார ணமாக நீர் நிலைகள் மூடப்பட்டுகாலப்போக்கில் நற்போசணையாதலுக்கு (Eutrophication) உட்படும்.
)H2O + N, P -> உயிர்த்திணிவு + o + ܨco)
(iv) நீர் நிலைகளில் அல்காக்களினதும் மற்றும் நீர்த் தாவரங்களினதும்
வளர்ச்சி அதிகரிக்கும் போது: a) ஒளி ஊடுருவும் அளவு பாதிக்கப்படும். b) நீரில் கரைந்துள்ள ஒட்சிசனின் அளவு குறையும். C) நீரின் தன்மை மாற்றமடையும். d) நீர் வாழ் அங்கிகளின் இடப்பெயர்ச்சி தடை செய்யப்படும்.
மேற்குறிப்பிட்ட காரணங்களினால் நீர் வாழ் அங்கிகள் பாதிப்படைவது மட்டுமன்றி காலப்போக்கில் அவை இறக்கின்றன.
(v) நைதரசன் வளமாக்கிகள் நீரில் கரைந்து ஆவியாகும் போது NH3/ N2O ஆக வளிமண்டலத்தை அடையும். இவை பின்னர், இரசாயன மாற்றத்துக்குட்படுவதன் மூலம் நைதரசன் வாயுவாக மாற்றமடையும். இதனால் நைதரசன் வாயுவின் அளவு வளிமண்டலத்தில் அதிகரிக்கும். நைதரசனின் அளவு சூழலில் அதிகரிக்கும் போது உடல் நலபாதிப்புக்களை ஏற்படுத்தும். குறிப்பாக சிறுவர்கள் அதிகளவில் பாதிப் படைவர்.
N action if + HO -> NH3 (N2O
N2 (g)
S N. Surendran & B.Babu
Environmental Pollution

Page 10
தீமையான விளைவுகளைக் கட்டுப்படுத்துதல்.
ii.
iii.
iv.
உரியநேரத்தில் மாத்திரம் வளமாக்கிகளை பயன்படுத்துதல் அல்லது அவற்றின் பிரயோகத்தைக் கட்டுப்படுத்துதல்.
செயற்கை வளமாக்கிகளுக்குப் பதிலாக இயற்கை வளமாக்கிகளின் பாவனையை ஊக்குவித்தல்.
இயற்கை சூழலில் உயர் விளைச்சலைத் தரக் கூடிய பயிர் இனங்களை அறிமுகம் செய்தல்.
ஓரின பயிர்ச்செய்கைக்கு பதிலாக பல்லின பயிர்ச்செய்கை அல்லது சுழற்சிமுறைப் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளுதல்.
விவசாய வளமாக்கிகளின் தீமையான விளைவுகளை
விவசாயிகளுக்கு எடுத்துரைத்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் இரசாயன வளமாக்கிகளினால் ஏற்படும் பாதகமான விளைவுகளை கட்டுப்படுத்தலாம்.
Environmental Pollution
S N. Surendran & B.Babu
 

விவசாய இரசாயனப் பொருட்கள்
(Agro Chemicals)
விவசாய இரசாயனப் பொருட்களில், குறிப்பாக கிருமி நாசினிகளின் அல்லது பீடை கொல்லிகளின் பயன்பாடு, சூழல் மாசடைதலுக்கு முக்கிய காரணமாகும்.
மனிதனுக்கு நன்மை தரும் உயிருள்ள, உயிரற்ற அமைப்புகளைத் தாக்கி, பொருளாதார நட்டத்தை ஏற்படுத்தும் அங்கிகள் பீடைகளாகக் கருதப்படும். இவற்றைக் கட்டுப்படுத்து வதற்காக, இரசாயனப் பொருட்கள்பெருமளவில் பயன்படுத்த ப்படும் அதேவேளையில், அவை உயர் நச்சுத்தன்மை கொண் டவையாகக் காணப்படுகின்றன.
பீடைகளாக விலங்குகள் (முள்ளந்தண்டுள்ள, முள்ளந்தண்டற்றவை) தாவரங்கள், பங்கசுக்கள் என்பன அமைகின்றன.
கொல்தகவு / LD50; குறிப்பிட்ட பீடை அங்கத்தவரின் 50 சதவீதமான எண்ணிக்கையை அழிக்கும் அளவு ஒரு பீடை கொல்லியின் கொல் தகவு பெறுமானம் குறையும் போது அப்பீடை கொல்லியின் நச்சுத் தன்மை உயர்வாக இருக்கும்.
பீடை கொல்லிகள் பொதுவாக 4 பிரிவுகளுள் அடக்கப்படுகின்றன.
1) சேதன குளோரைட்டுகள் (Organochlorides)
eg: DDT, egy Güg-6ör. BHC
ii) GFg5GOT GLumts-G3Lugogoj 55 Git (Organophosphates )
eg: மொனோ குரோடபஸ்.
ii) காபமேற்று சேர்வைகள் (Carbomates)
eg: காபோபியுரன்.
iv) பய்ரதுரோயிட்டு சேர்வைகள் (Phyrathroids)
இவை தாவரங்கிலிருந்து பிரித்தெடுக்கப்படுகின்றன.
பீடை கொல்லிகள், நொதிய நிரோதிகளாக செயற்பட்டு பீடைகளின் நரம்புத் தொகுதியை அல்லது சுவாசத் தொகுதியை பாதிப்பதன்
S .N. Surendran & B.Babu
Environmental Pollution

Page 11
மூலம் அவற்றை கொல்கின்றன.
பீடை கொல்லிகளின் பாவனை ஒவ்வொரு 10 வருடமும் இரு மடங்காக அதிகரிக்கின்றது. இலங்கையில் பீடை கொல்லிகளின் பாவனை விரைவாக அதிகரித்து வருகின்றது. நெற் பயிர்ச் செய்கையின் போதே இவை உயர் அளவில் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது, இறக்குமதி செய்யப்படும் மொத்த பீடை கொல்லிகளில் 70 சதவீதமானவை நெற் பீடைகளைக் கட்டுப்படுத்துவதற்காகப் பிரயோகிக்கப்படுகின்றன. 1977-1983 காலப்பகுதியில் சராசரியாகப் பிரயோகிக்கப்படும் அளவு ஒரு ஹெக்ரேயருக்கு 1,200 கிராமிலிருந்து 1,600 கிரா மாக அதிகரித் திருந்தது. அதே வேளை, 50 முதல் 60 சத வீதத் துக்கு இடைப்பட்ட விவசாயிகள், அறிவுறுத்தப்பட்ட அளவிலும் பார்க்க குறைந்தது இரண்டு மடங்கு உயர்வாகப் பயன்படுத்து கின்றார்கள்.
பீடை கொல்லிகளின் பாவனையால் ஏற்படும்பாதகமான விளைவுகள் 1. பீடைகளை மாத்திரம் கொல்லாது, அவற்றுடன் தொடர்பான இரை கெளவிகள், ஒட்டுண்ணிகள் போன்றவற்றை கொல்வ தனால், இயற்கையான ஒழுங்காக்கும் பொறிமுறை பாதிக்க ப்பட்டு , இயற்கைச் சமநிலை குழம்பும். அதாவது சூழலின் கட்டமைப்பு பாதிக்கப்படும்.
i. மனிதனுக்கு நன்மை தரும் ஏனைய உயிரினங்கள் அழிக்க ப்படும். உதாரணமாக மகரந்த சேர்க்கையில் உதவும் பூச்சிகள் கொல்லப்படுதல். i. நீர் ஓட்டத்தின் மூலம் அல்லது காற்றின் மூலம் நீர் தேக்கங்களை அடையும் போது, மேற்பரப்பு நீர், நிலத்துக்கு கீழான நீர் மாசாக்கப்படுவதுடன், நீர் வாழ் உயிரினங்களுக்கு நஞ்சாக அமையும், அல்லது அருகில் உள்ள சுற்றாடலை பாதிக்கும்.
iv. தொடர்ந்தும் பாவிப்பதனால், எதிர்ப்புத் தன்மையுள்ள பீடைகள் தோன்றும். தொடர்ச்சியான பாவனை காரணமாக இன்றுநுளம புகள் DDT க்கு எதிர்ப்பு சக்தியைப் பெற்றுள்ளன. V. பீடை கொல்லிகள் உணவுச் சங்கிலிக் கூடாக செறிவடை வதால் நுகரிகளில் துணையான நஞ்சாக்கத்தை ஏற்படுத்தும். S.N. Surendran & B.Babu |
Environmental Pollution
 

vi)
viii.
உதாரணமாக DDT அனுசேபத்தின்போது உருவாகும் DDD இலகுவில் பிரிந்தழியாது, உணவுச் சங்கிலிக் கூடாக செறிவடையும். தற்பொழுதுDDT இன் பாவனை தடை செய்யப்பட்டுள்ளது.
சூழலில் இலகுவில் பிரிகையடையாது தேங்கி நிற்கும் பீடைகொல்லிகள் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தும். இதனால், மனிதன் மாத்திரமன்றி பறவைகள் போன்ற ஏனைய அங்கிகளும் பாதிக்கப்படும். DDT கல்சியத்தின் அனுசேபத்தைத் தடை செய்வதால் பறவைகளின் முட்டைகள் நலிந்த ஓட்டைக் கொண்டவையாக உருவாக்கப்படுகின்றன. இதனால், இடப்படும் முட்டைகள் சூழல் மாற்றங்களுக்கு முகம் கொடுக்க முடியாது பாதிப்படைவதால், DDT யை உள்ளெடுக்கும் பறவைகள், தமது இனத்தைத் தொடர்ந்து பேணுவதில் ஆபத்தை எதிர் நோக்குகின்றன. தெளிக்கப்படும் அல்லது விசிறப்படும் பீடை கொல்லிகள் வளி மண்டலத்தை அடைவதனால் வளி மாசடையும். இத னால் அங்கிகளின் சுவாசத் தொகுதி பாதிப்படைகின்றது. குறிப்பாக, மீதையில் குளோரைட்டு போன்ற பீடை கொல் லிகளின் செறிவு வளிமண்டலத்தில் அதிகரிக்கும் போது, அவை ஓசோன்படையை சேதப்படுத்துகின்றன.
கட்டுப்படுத்துதல்/ மாற்று நடவடிக்கைகள்.
i.
ii.
iii.
இரசாயன பீடை கொல்லிகளின் பாவனையை தடைசெய்தல் அல்லது குறைத்தல். குறிப்பாக, குறித்த பீடையை மாத்திரம் கொல்லும் பீடைகொல்லிகளை அறிமுகப்படுத்துதல். சூழலில் தேங்கி நிற்கும் பீடை கொல்லிகளின் பாவனையை முற்றாகத் தடைசெய்தல். இரசாயனப் பீடைக் கட்டுப்பாட்டுக்கு பதிலாக அனைத்து பீடைக்கட்டுப்பாட்டு முறைகளையும் ஒருங்கிணைத்த, ஒன்றி ணைந்த பீடை முகாமைத்துவ முறையை அமுல்படுத்துதல். செயற்கையாகத் தயாரிக்கப்படும் இரசாயன பீடை கொல் லிகளுக்கு பதில், தாவரங்களில் இருந்து பெறப்படும் இரசாயனப் பொருட்களையும் மற்றும் பூச்சிகளில் இருந்து வெளிவிடப்படும் பெரோ மோன்களையும் (Pheromones) பயன்படுத்துதல்.
Environmental Pollution
S.N. Surendran & B.Babu

Page 12
இலிங்க கவர்ச்சிக்காக, குறிப்பாக ஆண் பூச்சிகளை கவருவதற்காக பெரோமோன்கள் பெண் பூச்சிகளினால் சுரக்கப்படுகின்றன. இப் பெரோமோன்களை செயற்கையாக தயாரித்து, அவற்றின் மூலம் குறித்த பூச்சி பீடையின் ஆண் அங்கத்தவர்கள் கவரப்பட்டு அழிக்கப் படுவதன் மூலம் பீடைகள் பெருமளவில் கட்டுப்படுத்தப்படலாம்.
iv. குறித்த பூச்சி பீடையின் ஆண் அங்கத்தவர்களை கதிர்
வீசலுக்கு உட்படுத்தி அவற்றை மலடாக்குதல்.
V. இயற்கை எதிரிகளைப் (இரை கெளவிகள், ஒட்டுண்ணிகள், நோய்க்காரணிகள்) பயன்படுத்தி பீடைகளைக் கட்டுப் படுத்துதல். இது உயிரியற் கட்டுப்பாடு எனப்படும். இதனால் சூழல் மாசடைவது தடுக்கப்படுவதுடன், நச்சுப் பதா ர்த்தங்கள் சூழலுக்கு விடப்படுவதும் தவிர்க்கப்படும். அத்துடன் இயற்கை சமநிலை தொடர்ந்தும் பேணப்படும். பீடைகளில் நோயை ஏற்படுத்தும் அல்லது அவற்றை கொல்லும் நுண்ணுயிர்களை (பங்கசுக்கள் பக்ரீரியாக்கள், வைரசுகள்) விசுறுவதன் மூலம், அல்லது பரப்புவதன் மூலம் குறித்த பீடை கட்டுப்படுத்த ப்படும்.இவ்வாறு பயன்படுத் தப்படும் நுண்ணுயிர்கள் உயிரியற் பீடை கொல்லிகள் எனப்படும்.
wi. பீடைகளுக்கு எதிர்ப்பு சக்தி கொண்ட தாவரங்களைஅறிமு
கப்படுத்துதல். பிறப்புரிமை பொறியியல(Genetic Engineer ing) மூலம் இதனை மேற்கொள்ளலாம்.
wi. பீடை கொல்லிகளின் பிரயோகத்தால் ஏற்படும் பாதகமான
விளைவுகளைப்பற்றி கல்வியூட்டுதல்.
wi. சட்டங்களை அமுல்படுத்துதல். குறித்த இரசாயன பொரு ட்களின் பாவனையைத் தடை செய்தல். வெளி நாடுக ளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மூலம் பீடைகள் ஏனைய நாடுகளை அடையாது கண்காணித்தல்.
S.N. Surendran & B.Babu
Environmental Pollution
 

தொழிற்சாலை இரசாயனப்பொருட்கள் (Industrial Chemicals)
தொழிற்சாலைகளில் இருந்தும், மற்றும் மனிதனின் செயற்பாட்டின் மூலமும் தோற்றுவிக்கப்படும் இரசாயனப் பொருட்களின் அளவு அதிகரித்து வருவது மாத்திரமன்றி, இவ் இரசாயனப் பொருட்கள் வளி, நீர், தரை என்பவற்றிற்குள் விடப்படுவதால், உயிரியல் தேக்கத்திற்கு உட்பட்டு சூழலில் நஞ்சாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இது நீண்ட கால அல்லது குறுகிய கால விளைவாக இருக்கலாம்.
தீங்கு விளைவிக்கும் இரசாயனப் பொருட்கள் பொதுவாக 2 பிரிவினுள் அடக்கப்படும். 1. பார உலோகங்களும் உலோகப் போலிகளும்
(Heavy metals and mettaloids) i. பல் குளோரின் ஏற்றப்பட்ட அரோமற்றிக்கு சேர்வைகள்
(Aromatic polychlorinated compounds)
1 பார உலோகங்களும் உலோகப் போலிகளும்
உலோகங்களின் பிரித்தெடுப்பின் போதும், சுரங்கத் தொழிலின் செயற்பாட்டின் போதும் இவை உருவாக்கப்பட்டு, சூழலுக்குள் விடப்படுவதால் தீமையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
ஈயம், ஆர்செனிக்கு, கட்மியம், இரசம் என்பன உலோகப் பிரித் தெடுப்பின் போதும், சக்தி பிறப்பாக்கும் செயற்பாட்டின் போதும் உருவாக்கப்பட்டு சூழலுக்குள் விடப்படுகின்றன.
a) EFulb
1. பெற்றோலியப் பொருட்கள் தகனமடையும் போது வளிமண்டல த்துக்குள் விடப்படும். பற்றரி தொழிற்சாலைகளிலிருந்தும் வெளி விடப்படுகின்றது.
i. ஈயத்தினாலான குழாய்கள் பயன்படுத்தப்படும் போது, குடிநீரை சென்றடையும். தகரங்களில் அடைக்கப்பட்ட உணவுகள் மூலமும் நச்சாக்கலை ஏற்படுத்தும்.
i. நச்சுத் தன்மையானது, களைப்பு, துரக்கமின்மை, பசியின்மை
S.N. Surendran & B.Babu
Environmental Pollution

Page 13
(b)
ii.
iii.
போன்ற விளைவுகளை ஏற்படுத்தும். சிறுவர்களில் மைய நரம்புத்தொகுதி பாதிப்படையும் (நரம்புக் கணத் தாக்கம் கடத்தப்படுவதை பாதிக்கும்)
இரசம் மின்சார பொருட்களின் உற்பத்தியிலும், பூச்சுக்களின் உற்பத்தியிலும் பயன்படுத்தப்படும். மீதைல் மேக்கூரி/ மீதையில் இரசம் மிகவும் நச்சுத் தன்மையானது.
பெரும்பாலும் உணவு மூலம் உள்ளெடுக்கப்படுகின்றது கால் நடைகள்இரசம் சேர்த்த பதார்த்தங்களை உள்ளெடு ப்பதால் பாலுணவுகள் மூலம் தீமையான விளைவுகளை ஏற்படுத்தும். கடலில் இரசக்கழிவுகள் கொட்டப்படும் போது கடல் வாழ் உயிர்களில் செறிவடைவதால் கடல் உணவு மூலம் மனிதனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். உதாரணமாக மினாமாட்டா நோயை (Minamata disease) குறிப்பிடலாம்.
இரசப் பதார்த்தங்கள் மைய நரம்புத் தொகுதியைப் பாதிக் கின்றன.
C) கட்மியம்
i.
ii.
மின்சார உபகரணங்களின் உற்பத்தியிலும் மின்சார முலாம் இடுதலின் போதும் பயன்படுத்தப்படுகின்றது. பற்றரிகள் உற்பத்தியிலும் பயன்படுத்தப்படும். உணவின் மூலம் உள்ளெடுக்கப்படும். கட்மியம் பூசப்பட்ட கொளகலன்கள், பிளாஸ்திக்கு பொருட்களின் பாவனை இதற்கு காரணமாகும்.
i. கட்மியத்தைக் கொண்ட வளமாக்கிகள் பயன்படுத்தப்படும்
iv.
போது கட்மியம் மண்ணில் செறிவடையும்.
மனிதனில் குறிப்பாக சிறுநீரகத்தில் செறிவடைவதால் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். உதாரணமாக இற்றாய் நோயை (Itai - Itai disease) குறிப்பிடலாம்.
Environmental Pollution
S.N. Surendran d& B.Babu
 

(d) ஆர்சனிக்கு
1. சூழலில் பரந்த அளவில் விடப்படுவதனால் தாவரங்கள், மனிதன், மற்றும் ஏனைய விலங்குகளைப் பாதிப்படையச் செய்கின்றது.
i. பிரதானமாக பீடை கொல்லிகளின் தயாரிப்பு, மரத்தை பாதுகாக்கும் இரசாயனப் பொருட்களின் உற்பத்தி என்பவ ற்றில் பயன்படுத்தப்படுகின்றது.
i. அசேதன ஆர்சனிக்கு சேர்வைகள் (Carcinogenic) மனிதனில்
தோல் புற்று நோயை ஏற்படுத்துகின்றன. iv. உலோகப் பிரித்தெடுப்பின் போதும், பீடை கொல்லிகள், மரத்தை பாதுகாக்கும் இரசாயனப் பொருட்களின் பயன்பா ட்டின் போதும் சூழலுள் விடப்படுகின்றது. V உணவுப் பொருட்கள் குறிப்பாக கடல் உணவு மூலம் மனிதனை அடைகின்றது. குறிப்பாக மீன்கள், ஒட்டு மீன்கள் என்பன பெருமளவில் பாதிக்கப்படுகின்றன.
I. பல்குளோரின் கொண்ட அறோமற்றிக்கு சேர்வைகள்
Lu Güveg5GGIT IT ff6ör G35 IT GðoT Mg5 SGM6OrGiv (Polychlorinated biphenyi PCB) வகையைச் சேர்ந்த இரசாயனப் பொருட்கள் தீமையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
ஒடுக்கிகள், படிமாற்றிகள், வெப்பத்தை மாற்றும் தொகுதிகள், பம்பிகள், மேற்பரப்பு பூச்சுக்கள் ஒட்டும் பதார்த்தங்கள் என்பன தயாரிப்பில் இவை பயன்படுத்தப்படுகின்றன.
பின்வரும் வழிகள் மூலம் நச்சாக்கலை ஏற்படுத்துகின்றன.
1. உணவு ii. 92 lod3o6hu ft gf tib i. தொடுகை இவை பெரும்பாலும் பாலுணவுகள் மூலமாக மனிதனைச் சென்றடைகின்றன. அத்துடன் புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டவையாகவும் காணப்படுகின்றன. மனிதன் மாத்திரமன்றி, நீர் வாழ் விலங்குகள், வன விலங்குகள் என்பன
Environmental Pollution S.N. Surendran & B.Babu

Page 14
கூட பாதிப்படையும். குறிப்பாக PCBயின் அளவு கடல் வாழ் பறவைகளில் அதிகளவில் காணப்படுகின்றது. தற்போது PCB க்கு பதிலாக Polychloro benzene பயன்படுத்தப் படுகின்றது.
மரங்களைப் பாதுகாக்கும் இரசாயன பொருட்கள் ( Polychlorinated phenols), தகனத்தை குறைக்கும் பதார்த்தங்கள் (Aluminium hydroxide) என்பன புற்று நோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. இவை தவிர, கழுவும் தூள்கள், சுத்திகரிப்பு பதார்த்தங்கள் என்பவற்றில் காணப்படும் alkylsulphates DsbDjib alkylbenzene sulphates 6T6öTu60T6) to 56OLDuT60T விளைவுகளை ஏற்படுத்தும். அதே வேளை தொழிற்சாலைகளின் தொழிற்பாட்டின் போது CO, NO2, CO2 , SO2, அமில ஆவிதூசுகள், துகள்கள் என்பன வளிமண்டலத்தை அடைகின்றன.
தடுப்பு நடவடிக்கைகள்.
1. அரசாங்க மட்டத்தில், இரசாயன பொருட்களின் தயாரிப்பு, அவற்றின் பாவனை தொடர்பான சரியான திட்டமிடல் அவசியம்.
i. சூழலில் இவ் இரசாயன பொருட்களால் ஏற்படும் தீமையான விளைவுகளை மதிப்பீடு செய்து, அதற்கு ஏற்ப சட்டங்களை அமுல்படுத்துதல்.
iii பாவனையை குறைத்து, மாற்று தொழில் நுட்பத்தை நடை
முறைப்படுத்துதல் அல்லது கண்டு பிடித்தல்.
iv. சில இரசாயனபொருட்களின் பாவனையை பூரணமாக தடை
செய்தல்.
V. தீமையான விளைவுகளை மக்களுக்கு எடுத்துரைத்தல்.
S.N. Surendran & B.Babu
* Environmental Pollution
 
 
 
 
 
 
 

கனியங்கள் அகழ்ந்தெடுக்கப்படுதல். (Mineral Mining)
இலங்கை அதன் விஸ்த்தீரணத்துடன் ஒப்பிடும் போது உய ர்ந்த அளவில் கனிய வளங்களைக் கொண்டுள்ளது. இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானத்தில் 5 சத வீதம் கனியங்களின் ஏற்றுமதியிலிருந்து பெறப்படுகின்றது. இரத்தினபுரி மாவட்டம் இலங்கையின் பிரதான இரத்தினக் கற்களை வழங்கும் பிரதேச மாகக் காணப்படுகின்றது.
கனியங்களை அகழ்ந்தெடுப்பது, பொருளாதார ரீதியில் வரு வாயை பெற்றுத் தந்தாலும், சூழலியல் ரீதியில் பல தீய விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இரத்தினக் கற்கள் அகழ்ந் தெடுத்தல், முருகைக் கற்கள் அகழ்ந்தெடுத்தல், மண் அகழ்ந் தெடுத்தல் என்பன எமது நாட்டில் பல சூழலியல் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன.
(I) இரத்தினக் கற்கள் அகழ்ந்தெடுத்தல் (Gem Mining)
இலங்கையில் பொதுவாக இரத்தினக் கற்கள்நிலைக்குத்தாக குழிகள்தோண்டப்பட்டு பின்னர் கிடையாகச் சுரங்கங்கள் அமைக்கப்பட்டு அகழ்ந்தெடுக்கப்படுகின்றன. உயர்ந்தளவில் இயந்திரங்கள் இங்கு பயன்படுத்தப்படுவதில்லை.
குழிகள் நிலைக்குத்தாக 30 மீற்றர் ஆழத்துக்கு அகழ்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் கிடையாக 10 மீற்றர் நீளத்துக்கு சுரங்கங்கள் உருவாக்கப்படும். இச்சுரங்கங்களில் இருந்து இரத்தினக்கற் படிவுகள் எடுக்கப்பட்டு, அவை நீரோட்டத்தில் கழுவப்பட்டு வேறாக்கப்படும். வேறாக்கல் செயற்பாட்டின் போது உருவாக்கப்படும் நீர்ச்சுழற்சி, தேவையற்ற பாரமற்ற பதார்த்தங்களை பாரமான இரத்தினக்கற் பதார்த்தத்திலிருந்து வேறாக்கும். ஆற்றின் அணைக்கட்டுகள், மற்றும் ஆற்றுப்ப டுக்கைகளில் இருந்தும் இரத்தினக் கற்கள் அகழ்ந்தெ டுக்கப்படுகின்றன.
S N. Surendran & B.Babu
Environmental Pollution

Page 15
சுற்றாடலில் ஏற்படும் பாதிப்புக்கள்; (1) மண்ணரிப்பும் படிவாலும் நிகழும். ஆற்றுப் படுக்கையின் உறுதித் தன்மை குறைவடையும். மண் அகழ்ந்தெடு க்கப்படுவதால் மண்ணின் உறுதித் தன்மை குறையும். மழை, வெள்ளப்பெருக்கு காரணமாக மண் அகற்றப்ப டும். மண்ணரிப்பு படிவாதல் காரணமாக ; (a) ஆற்றின் அடித்தளம் உயர்த்தப்படுவதால் நீரைத் தேக்கி
வைக்கும் அளவு குறையும். (b) நீர்ப்பாசன மற்றும் நீர்கான் தொகுதியின் திறன் பாதிப்படையும் (c) நீர்மாசடைவதால் நீர் வாழ் அங்கிகளில் தீய விளைவுகளை
ஏற்படுத்தும். (d) மீன்களின் இனவிருத்தி நடைபெறும் இடங்கலில் படிவாதல் நிகழ்வதால் அவற்றின் வாழ்க்கை வட்டம் பாதிப்படையும். (i) ஆற்றின் அணைக்கட்டுகள் அகழ்ந்தெடுக்கப்படுவதால்
வெள்ளப் பெருக்கு ஏற்படும். (iii) அகழ்ந்தெடுத்தலின் போது தோன்றும் நீர் அருகிலுள்ள ஆறுகளை அடைவதும், இரத்தினக்கற் படிவுகள் கழுவப்ப டுதலும், நீர் மாசடைதலை ஏற்படுத்துவதால் நீர் வாழ் அங்கிகள் பாதிப்படையும். (iv) அகழ்ந்தெடுக்கப்படும் பகுதிகளில் காணப்படும் தாவரங்கள் அகற்றப்படுவதால் இயற்கை சமநிலை பாதிக்கப்படும். (v) அகழ்ந்தெடுக்கப்படும் இடங்களில் நீர் தேங்குவதால், நுளம்பு போன்ற நோய்களை ஏற்படுத்தும் உயிரிகளின் பெருக்கத்துக்கு வழி வகுக்கும்.
(vi) மண் வாழ் உயிரிகள் பாதிப்டையும்.
ஒழுங்காக்கலும் கட்டுப்படுத்தலும். () சட்டவிரோதமான அகழ்வுகளைத் தடை செய்தல்.
(ii) சரியான திட்டமிடல் அமுலாக்கல் அவதானிப்புக்களை மேற்
கொள்ளல்.
S N. Surendran & B.Babu
Environmental Pollution
 

(i) மண்ணரிப்பு மற்றும் படிவாதலைத் தடைசெய்ய புதிய திட்டங்களை
அமுல்ப்படுத்துதல்.
(iv) தீய விளைவுகளை சமுதாயத்தின் சகல மட்டத்தினருக்கும்
உணர்த்துதல்.
(II) முருகைக்கற்கள் அகழ்ந்தெடுக்கப்படுதல். (Coral Mining)
முருகைக்கற்கள் ஒரு வகை கடல் வாழ் சீலந்திரேற்றாக்கள் (அந்தோ சோவன்கள்) ஆகும். முருகைக் கற்களின் வளர்ச்சி மிக மெதுவானது. ஆகையால், இன்று காணப்படும் முருகைக்கற்கள் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டவையாகும். முருகைக்கற்களின் உருவாக்கத்துக்கு உகந்த வெப்பநிலை, ஒளி என்பன அவசியமாகும்.
முருகைக் கற்களின் பொருளாதார முக்கியத்துவம்
() சீமெந்து தயாரிப்பில் மட்டுமன்றி, கட்டிடப்பொருட்கள் தயாரிப்பிலும் போக்குவரத்து பாதைகளின் நிர்மாணத்திலும் பயன்படுத்தப்படுதல்.
(i) அழகுசாதனப் பொருட்களாக அல்லது அவற்றின் தயாரிப்பில்
உபயோகிக்கப்படுகின்றன.
(ii) பல கடல் வாழ் அங்கிகளின் இயற்கை வாழிடமாக அமைதல்.
(iv) அலைகளின் தாக்கம், கடல் அரிப்பு என்பவற்றில் இருந்து கரை
யோரப் பிரதேசங்களை பாதுகாத்தல்.
(v) உல்லாசப் பயணிகளைக் கவருதல்.
(v) மருத்துவதுறையில் பயன்படுத்தப்படுதல்.
(vii) தோல் அரிப்பு மற்றும் பெளதீக காயங்களை ஏற்படுத்துதல்.
பொருளாதார தேவைகளின் நிமித்தமும் மற்றும் ஏனைய காரணிகள் காரணமாகவும் முருகைக்கற்கள் அகற்றப்படுகின்றன.
குறிப்பாக : (1) வெடி பொருட்களைப் பயன்படுத்தி மீன் பிடித்தல்.
S N. Surendran & B.Babu
Environmental Pollution

Page 16
(ii)
மீன் பிடிப்படகுகளின் நங்கூரங்கள்
(ii) மீன்பிடிப் படகுகளின் போக்குவரத்து (iv) மீன் வளர்ப்பு தொட்டிகளில் பயன்படுத்த முருகைக் கல் மண்
எடுத்தல் போன்ற செயற்பாடுகளும் முருகைக் கற்கள் அகற்றப் படுவதற்கு காரணமாக அமைகின்றன.
முருகைக்கற்கள் அகழ்ந்தெடுப்பதால் ஏற்படும் சூழலியல் பாதிப்புக்கள்:
(i)
(ii)
பல கடல் வாழ் அங்கிகளின் இயற்கை வாழிடமாக அமை வதால்,முருகைக் கற்கள் அகற்றப்படும் போது இயற்கைச் சமநிலை குழம்பும். இதனால், பல அங்கிகள் பாதிப்படை வதுடன் அவற்றின் இறப்பும் நிகழ்கின்றது. கடல் அலையின் தாக்கம், கடல் அரிப்பு என்பவற்றுக்கு எதிராக இயற்கை அரணாக அமைகின்றது. இவ் இயற்கை அரண் அகற்றப்படும் போது கடல் அரிப்பு ஏற்படுவதுடன் கடற்கரையை அண்டிய பிரதேசம் கடலில் மூழ்கும் ஆப த்து ஏற்படுவதுடன் அப்பிரதேசத்தில் காணப்படும் தாவ ரங்களும் பாதிப்படைகின்றன. முருகைக்கற்கள் அகற்றப்படுவதால், கடற்கரையை அண்டிய பிரதேசங்களின் இயற்கைச் சமநிலை குழம்பு வதுடன், பல உயிரினங்களின் அழிவுக்கும் வழிவகுக்கும். இதே வேளை, புதிய தரைப்பிரதேசம் தீவுகள் என்பன தோன்றுவதற்கும் முருகைக் கற்களே காரணமாகும்.
இலங்கையில் சுண்ணாம்புக் கைத்தொழிலுக்காகவே பிரதானமாக முருகைக்கற்கள் அகழ்ந்தெடுக்கப்படுகின்றன. 1984ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின் படி அம்பலாங்கொட முதல் டிக்வெல பிரதேசம் வரை ஆண்டு தோறும் 18,000 தொன் முருகைக்கற்கள்
சுண்ணாம்புக் கைத்தொழிலுக்காக சேகரிக்கப்பட்டுள்ளது.
Environmental Pollution
S N. Surendran & B.Babu
 

(III) மண் அகழ்ந்தெடுத்தல் (Sand Mining)
கரையோரப் பிரதேசங்கள், ஆற்றுப் படுக்கையிலிருந்து பெருமளவில் மண் அகழ்ந்தெடுக்கப்படுகின்றது. கடற் கரைப் பிரதேசங்களில் கடல் அலை மூலம் அகற்றப்படும் மண் இழப்பு, ஆறுகள் மூலம் எடுத்துச் செல்லப்படும் மண்ணின் மூலம் பிரதியீடு செய்யப்படும். ஆனால், ஆற்றுப் படுக்கையில் இருந்து உயர் அளவில் மண் அகழ்ந்தெடுக்கப்படுமாயின் கரையோரப் பிரதேசத்தில் ஏற்படும் இழப்பு ஈடு செய்யப்பட மாட்டாது.
சூழல் பாதிப்புக்கள்
(1) ஆற்றுப் பிரதேசத்தில் இருந்து, கட்டுப்பாடற்ற வகையில் மனஅகழ்ந்தெடுக்கப்படுவதனால், ஆற்றின் அணைக் கட்டு
க்கள் இலகுவில் உடைகின்றன.
(ii) கரையோரப் பிரதேசங்களில் ஆற்றுப் படுக்கைகள் ஆழமாக்க ப்படுவதால், கடல் நீர் உட்செல்ல வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.
S.N. Surendran & B.Babu |
Environmental Pollution

Page 17
கல் உடைக்கும் தொழிலால் ஏற்படும் சூழல் LDTF Tög,6b (Environmental Pollution Caused By The Operations Of Quarries)
பல்வேறு நிர்மாண வேலைகளுக்காக கருங்கற் பாறைகள் உடைக்கப்பட்டுதேவைகளுக்கு ஏற்ப பல்வேறு அளவில் பெறப்படு கின்றன. பாறைகள் உடைக்கப்படும் போது வளி மாசடைவதுடன் தரைப் பிரதேசமும் பாதிப்படைகின்றது.
பின்வரும் செயற்பாடுகளால் பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.
1. பாறைகளைத் துளைப்பதற்கு பயன்படுத்தப்படும் இயந்தி
ரத்தாலும் டைனமைற் போன்ற வெடிபொருட்களை பயன்
படுத்திப் பாறைகளை வெடிக்கச் செய்வதாலும் உருவா க்கப்படும் பெரும் ஒலி சூழலை மாசாக்குகின்றது.
i. வெடி பொருட்கள் வெடிக்கும் போது தோன்றும் இரசாயனப் பொருட்களும், பாறைகள் வெடிக்கும் போது உருவாகும் தூசுகளும் வளியுடன் கல்க்கின்றன. கல்லுடைக்கும் தொழிற்சாலை அமைந்துள்ள சூழலில் உள்ள வளியில் நைதரசனின் ஒக்சைட்டுகள், மெதேன்ஆதரசன் சல்பைட்டு, கந்தகவிரொட்சைட்டு, காபனோரொக்சயிட்டு, தூசு, துகள் என்பன உயர் செறிவில் காணப்படுகின்றன. i. பாறைகள் வெடிக்கும்போது பிறப்பிக்கப்படும் அமுக்கம், நிலத்தில் ஏற்படும் அதிர்வுகள் என்பன கட்டிடங்களைப் பாதிக்கின்றன. இச் செயற்பாடுகள் காரணமாக இத் தொழிலை மேற்கொள்ளும் பிரதேசத்தை அண்டி வாழும் மக்களின் செவி பாதிக்கப்படுவதுடன், சுவாசத் தொகுதியுடன் தொடர்பான நோய்களும், சரும நோய்களும் தோன்றுகின்றன.
இலங்கையின் பல்வேறு இடங்களில் கல் உடைக்கும் தொழில் மேற்கொள்ளப்படுவதால், அதன் செயற்பாட்டின் மூலம் ஏற்படும் தீமையான விளைவுகளைக் கட்டுப்படுத்த மத்திய சூழல் அதிகார சபை (CEA) பின்வரும் தீர்வுகளை
Environmental Pollution S N. Surendran d& B.Babu
 

முன்வைத்துள்ளது.
i. ஒலி அதிர்வின் அளவைக் கட்டுப்படுத்துதல்.
i. அருகிலுள்ள கட்டடங்களைப் பாதிக்காதவாறு சிறிய அளவிலான வெடி பொருட்களைப் பயன்படுத்துதல்
i. கல்லுடைக்கும் இடத்திற்கு ஏற்ற வகையில் உருவாக்கும் குழியின் ஆழத்தையும் பயன்படுத்தும் வெடிபொருளின் அளவையும் நிர்ணயித்தல்.
கல்லுடைக்கும் நிலையையும் அமைந்துள்ள சுற்றாடலின் தன்மையும் கருத்திற் கொள்ளப்பட்டு மேலதிக கட்டுப்பாட்டு விதிகள் அமுல் படுத்தப்படலாம்.
Environmental Pollution
S.N. Surendran & B.Babu |

Page 18
வாகனங்களில் இருந்து வெளியேறும் பதார்த்தங்கள் / மாசாக்கிகள். (Emissions From Motor Vehicles)
வாகனங்களில் எரி பொருட்கள் தகனமடையும் போது CO, CO2 , SO2,காபன் துணிக்கைகள் என்பன வெளிவிடப்படுகின்றன.
வாகனங்களின் இயந்திரத்தின் உட்பாகத்தில் நடைபெறும் தகனத்தினால் (Spark ignition) NO உருவாக்கப்படுகின்றது. இது வளிமண்டல O2 உடன் சேர்ந்து NO2 ஐத் தோற்றுவிக்கும்.
NO - O --> NO2
uV ஒளி NO2 m NO + O
O + O2 --> O
O
O, + NO + C. Hy - R - C - O - O - NO, Peroxy Acetyl Nitrides
(PAN)
போக்குவரத்து நெரிசலின் போது குறிப்பாக மதிய வேளையில் PAN அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றது. இது கண் எரிவுக்கு வழி வகுக்கும் அதே வேளை, PAN ஒரு ஒளி இரசாயன மாசாக்கி ( Photo Chemical Pollutant) - S564 üb G Fuu sibu Guib.
வாகனங்களில் பெற்றோலிய பொருட்களின் தகனத்தின் போது ஈயம் (Pb) வளிமண்டலத்துக்கு விடப்படும். உதாரணமாக, gasoline இன் g, s, 6ðrg; gó)Gör GL frg) tetraethyl-lead (Pb(CH)) வெளிவிடப்படுகின்றது.
Environmental Pollution
S N. Surendran d& B.Babu
 

பெற்றோலியப் பொருட்கள் தகனமடையும் போது வெளி
விடப்படும் வளிமாசாக்கிகள்
முதலான மாசாக்கி துணையான மாசாக்கி
CO CO2
NO NO2
SO H2SO4
Pb O3
ஐதரோ காபன்
கழிவுபதார்த்தம்| டீசல் பெற்றோல்
CH அதிகம் குறைவு CO குறைவு அதிகம் NOx அதிகம் மத்திமம் SOx அதிகம் குறைவு Pb w. அதிகம் தொங்கும் துணிக்கைகள் அதிகம் குறைவு
பொதுவாக, வாகனங்களின் தகனத்தின் போது வளியும் எரிபொருளும் குறித்த விகிதத்தில் (15:1) கலக்கப்பட்டு தகனம் நடை பெறுகின்றது. எரிபொருளின் பூரண தகனத்தின் போது நீராவியும், காபனீரொட்சைட்டும் விளைவாகப் பெறப்படுகின்றன. இருந்த போதிலும், முற்றான தகனம் வாகனங்களில் நடைபெறு வதில்லை. குறைதகனத்தின் அளவு அதிகரிக்கும் போது, உருவாக்கப்படும் கழிவுகளின் அளவும் அதிகரிக்கும். தகனத்தின் வீதம் பல்வேறு காரணிகளில் தங்கியிருக்கும். குறிப்பாக () எரிபொருளின் தன்மை,(i) பாவனைக்காலம், (ii) வாயு/ எரிபொருள் விகிதம் என்பவற்றைக் குறிப்பிடலாம்.
இலங்கையைப் பொறுத்தவரை, காபன், நைதரசன், கந்தகம் போன்றவற்றின் ஒட்சைட்டுக்களின் தீய விளைவுகள் ஓரளவு அறியப் பட்டிருந்தாலும், ஐதரோக்காபன்களினதும் மாசுத்
S N. Surendran & B. Babu |
Environmental Pollution

Page 19
துணிக்கைகளினதும் தாக்கம், அறியப்படாத ஒன்றாகக் காணப் படுகின்றது. குறிப்பாக, வாகனங்களில் இருந்து வெளியேற்றப்படும் தொங்கும் பதார்த்தங்கள், ஐதரோக்காபன்கள், பல்வட்ட அரோமற்றிக்கு ஐதரோக்காபன்கள் (Polycyclic Aromatic Hydrocarbons - PAH) போன்றவை மிக தீமையான விளைவுகளை ஏற்படு த்தவல்லன.
இத் தீய பதார்த்தங்கள் புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. டீசல் வாகனப் புகையில் காணப்படும் பென்சோ GT GODLu rifaðir, (benzo - abyrene) GNL u 6ðir G3F IT LI G3 GMT IT UT 566ðir (benzo - fluoran thene) போன்ற புற்றுநோய் காரணிகள் கரு நாடிகளாகும். இவை அனுசேபத்தின் போது சைற்றோகுறோம் (Cytochrome) முன்னிலையில் புற்றுநோயை உண்டாக்கும் கருநாட்ட தன்மையுள்ள இடைநிலைகளை (Nucleophelic Intermediates ) தோற்றுவிக்கின்றன.
ஊக்கிகளை (Catalyst) வாகனங்களின் இயந்திரங்களில் பயன்படுத்துவதன் மூலம் குறை தகனத்தின் போது உண்டாகும் நச்சுப் பதார்த்தங்களின் அளவு வெகுவாகக் குறைக்கப்படுகின்றது. இம்முறை பெரும்பாலும் வளர்ச்சியடைந்த நாடுகளிலேயே நடை முறையிலுள்ள அதேவேளையில், ஊக்கிகள், குறைந்த ஆயுட்காலம் கொண்டவையாகவும், உற்பத்தி செலவு உயர் வாகவும் கொணடிருப்பதால் வளர்முக நாடுகளில் குறைந்தளவில் பயன்படுத் தப்படுகின்றன.
வாகனங்களில் இருந்து வெளியேற்றப்படும் பதார்த்தங்களால் ஏற்படும் மாசாக்கலைக் கட்டுப்படுத்த இலங்கையின் மத்திய gippit Lci) egy 55 TJ g'60) u (Central Environmental Authority - CEA) முன்வைத்துள்ள ஒரு சில தீர்வுகள் / திட்டங்கள். (1) பெற்றோலுடன் ஈயச்சேர்வை சேர்ப்பதனை தவிர்த்தல்
தொடர்பான சாத்தியக் கூற்றை ஆராய்தல்.
(i) எரிபொருட்களின் கந்தக அடக்கம், அவற்றைச் சந்தைப் படுத்துதல், கொள்வனவு செய்தல் என்பவரில் கட்டுப்பா டுகளை விதித்தல். (கந்தகத்தை உயர் அளவில் கொண்ட மசகு எண்ணெயின் இறக்குமதிச் செலவு குறைவாகவும்,
S N. Surendran & B.Babu
Environmental Pollution
 

கந்தகம் அகற்றப்பட்ட எரிபொருட்களின் இறக்குமதிச் செலவு உயர்வாகவும் இருப்பதால், பொருளாதார காரணிகளும் சூழல் மாசடைதலுடன் தொடர்புடையதாக அமைந்துள்ளன) (it) நீண்ட காலம் பயன்படுத்தப்பட்டு திருப்தியற்ற நிலையிலுள்ள வாகனங்களைப் பயன்படுத்துதல் சம்பந்தமான வேலைத் திட்டத்தை வகுத்தல்.
(iv) ஒவ்வொரு வாகனமும் குறைந்த பட்சம் வருடத்துக்கு ஒரு தடவையேனும் பரிசீலணைக்குப் உட்படுத்தப்படல் வேண்டும். (v) ஒவ்வொரு பீச்சும் பம்பியும் பரிசீலிக்கப்பட்டு, செப்பம்
செய்யப்படுதல் வேண்டும்.
(wi) குற்றமிழைக்கும் வாகனங்களுக்கு தடை உத்தரவு வழங்குதல். (vi) வாகனங்களால் வெளியேற்றப்படும் மாசாக்கல் தொடர்பான
கல்வி வேலைத் திட்டத்தை மேற்கொள்ளல்.
(vi)சில வகை வாகனங்களை வாயுவினால் இயக்குவத6.
சாத்தியப்பாட்டை ஆய்வு செய்தல்.
Environmental Pollution S N. Surendran & B.Babu

Page 20
வளி மாசடைதல் (Air Pollution)
வாழுமிடத்திற்கு உள்ளான அல்லது வெளியேயான வளிமண்டலத்தில் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட வாயுக்கள் அல்லது துணிக்கைகள் காணப்பட்டு, அவற்றினளவு, தன்மை, தேங்கி நிற்கும் காலம் போன்ற தன்மைகளில் ஏற்படும் மாற்றம் காரணமாக , மனிதனுக்கும், தாவரங்கள், விலங்குகள் மற்றும் உடைமைகட்கும் தீங்கு ஏற்படுத்தப்படுமாயின், அத்தோற்றப்பாடு வளி மாசடைதல் எனப்படும்.
வளிமண்டலம் ஒரு சிக்கலான தொகுதியாகும். இதன் வெப்பம், அமுக்கம் என்பன உயரத்துடன் பெருமளவில் வேறுபடும். அத்துடன், வளிமண்டலத்தின் ஆக்கக்கூறுகள் ஒரு சீராகப் பரவிக் காணப்படமாட்டாது. வெப்பநிலையில் ஏற்படும் மாற்றத்தைக் கொண்டு வளிமண்டலம் குறித்த பகுதிகளாக வேறுபடுத்தப்படுகின்றது.
வளி மண்டலத்தின் பொதுவான ஆக்கக்கூறுகளாக நைதரசன் (N2), ஒட்சிசன் (O2), ஆர்கன் (Ar), காபனீரொட்சைட் (CO2) நியோன் (Ne), ஹீலியம் (He) கிரிப்ரோன் (K) ஐதரசன் (H2) மற்றும் செனொன் (xe), என்பன அமைகின்றன. இவற்றை g56?!J O3 , SO2, N2O, NH 3, CO 6T 6ől u Gugbg526ör egy GIT 6! வேறுபடுவதால் அவை சுவட்டு வாயுக்கள் எனப்படும்.
அதிகரித்து வரும் உலக சனத்தொகையும், அதனுடன் தொடர்பான தொழிற்சாலை மயமாக்கல், வீடமைப்பு குடியேற்றத் திட்டங்கள், அதிகரிக்கும் போக்குவரத்து என்பன வளி மாசடைதலுக்கு முக்கிய காரணங்களாகும்.
இலங்கையில் வளிமாசாக்கலின் தோற்றுவாய்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம். (a) நிலையான தோற்றுவாய்கள் (b) நகரும் தோற்றுவாய்கள்
() இருப்பிடப் பிரதேசம் (i) தொழிற்சாலைகளின் செயற்பாடு
S.N. Surendran & B.Babu |
Environmental Pollution
 

(ii) சக்தி பிறப்பாக்கல் (iv) கழிவுகளை எரித்தல்.
நிலையான தோற்றுவாய்களில் தொழிற்சாலைகளின் செயற்பாடு காரணமாகவும், சக்தி பிறப்பிக்கும் நிலையங்களின் தொழிற்பாடு காரணமாகவும் பெருமளவில் வளிமாசாக்கிகள் தோற்றுவிக்கப்படுகின்றன. இலங்கையில் தொழிற்சாலைகளின் மாசாக்கிகள் காரணமாக வளியிலும் பார்க்க நீர்ச் சூழல் பெருமளவில் மாசடைகின்றது.
நகரும் தோற்றுவாய்களில் போக்குவரத்து பிரிவு முக்கிய பங்கு வகிக்கின்றது. இங்கு பெற்றோலியத்தின் நுகர்வு மிக மோசமான மாசாக்கலை ஏற்படுத்துகின்றது. பிரதான வளி LonT FT 356f35 GMT nr 55 (i) CO (ii) SO2 (iii) O3 (iv) NO2 (v) Pb 6T 6ðir Lu GOT கருதப்படுகின்றன. இவை தவிர ஆவிப்பறப்புள்ள அல்லது ஆவிப்பறப்பற்ற முலகங்களும் (eg: AS, Cd,Pb)6)u6tf)LDfT #60)l—g59yjé5@5
காரணமாகும்.
SO2, NO, ஐதரோக்காபன்கள் பங்கு கொள்ளும் இரசாயனத் தாக்கங்கள் காரணமாக No,O, பெரொக்சைல் நைத்திரேற்று போன்ற மாசுக்கள் உருவாக்கப்படுகின்றன.
புகைபோக்கிகளில் இருந்து வெளியேற்றப்படும் தூசுகள், துகள்கள், வெப்ப பிறப்பாக்கிகளின் செயற்பாடு, மற்றும் புகைத்தல் காரணமாக வாழுமிடத்திற்குள்ளான வளி மாசடை கின்றது. குறிப்பாக CO, SO2 NOx (நைதரசனின் ஒட்சைட்டுக்கள்) என்பன வாழிடத்துக்குள்ளான வளி மாசாக்கிகளாக கருதப்படும்.
(a) காபன் மொனொக்சைட்டு (CO)
1. நிறமற்ற மணமற்ற சுவையற்ற வாயு.
i. பிரதானமாக சுவட்டு எரிபொருட்களின் குறைதகனத்தின் போது தோற்றுவிக்கப்படும். தொழிற்சாலைச் செயற்பாடு மற்றும் சேதனப் பதார்த்தங்களின் சிதைவு என்பவற்றின் போதும் உருவாக்கப்படு கின்றது. புகைபிடித்தலின்போதும் உயர் அளவில் வெளிவிடப்படும்.
Environmental Pollution S.N. Surendran & B.Babu

Page 21
i. தலையிடி, தலைச்சுற்று, சோர்வு, வாந்தி போன்ற உடல் நலக்குறைபாடுகள் ஏற்படும். CO கீமோகுளோபினுடன் சேர்வதால் கீமோகுளோபின் ஒட்சிசனைக்காவும் அளவு குறையும். கீமோகுளோபினுடன் சேரும் தன்மை ஒட்சிசனிலும் பார்க்ககாபன் மொனக்சைட்டுக்கு மிக (210 தடவைகள்)
உயர்வாகும்.
O, Hb —> COHb + O,
CO 36ör 21676| | O2Hb -> COHb பாதிப்பு
(ppm) ஆகும் வீதம்
100 2 தீர்மானிக்க/ சிந்திக்க
முடியாமை 100 15 தலையிடி, தலைச்சுற்று 250 32 சுயநினைவை இழத்தல் 750 60 பல மணித்தியாலங்களின்
பின் சாவு 1000 66 திடீர் சாவு
(b) @GFnrar (O3)
1. இதமான மணம் கொண்ட நீல நிற வாயு i. நைதரசனின் ஒட்சைட்டுக்கள் (NO) ஆவிப்பறப்புள்ள சேதனச் சேர்வைகளுடன் சூரியசக்தியைப் பயன்படுத்தி தாக்கமடையும் போது ஓசோன் தோற்றுவிக்கப்படும். i. இருமல், சுவாசத் தொகுதியில் அருட்டல் போன்ற உடல் நலக்
குறைபாடுகளைத் தோற்றுவிக்கும்.
(C) நைதரசனீரொட்சைட்டு (NO2)
1. கபில நிறமுடைய, அருட்டும் மணம் கொண்ட வாயு i. உயர் வெப்பநிலையில் தகனம் நடைபெறும் போது (1200°F) தோற்றுவிக்கப்படும். சக்தி பிறப்பாக்கும் நிலையங்கள்தொழிற் சாலைகள், மற்றும் வாகனங்களிலிருந்தும் வெளியேற்றப்படும்.
S N. Surendran d& B. Babu |
Environmental Pollution
 

i. மூக்கு, தொண்டை அருட்டப்படல் இருமல், தலையிடி, சுவாசத் தொகுதி பாதிப்படைதல், போன்ற உடல் நலக் குறைபாடுகள் உருவாக்கப்படும். அத்துடன், நைதரசன் ஒக்சைட்டு கீமோகுளோபனுடன் இணைவதால், கீமோகு ளோபினின் ஒட்சிசனை காவும் திறன் குறைக்கப்படும்.
(d) கந்தகவிரொட்சைட்டு (SO2)
1. நிறமற்ற, மூச்சுத் திணற வைக்கும் மணம் கொண்டது.
i. உயிர்த் திணிவுகளின் தகனத்தின் போதும் எரிமலைகள் வெடிக்கும் போதும், தொழிற்சாலைகளின் குறிப்பாக அனல் மின் நிலையங்களின் செயற்பாட்டின் போதும் வெளியேற்றப்படும்.
i. தொண்டை, சுவாசப்பை அருட்டப்படுதல், மூக்கிலிருந்து குருதி வடிதல் போன்ற உடல் நலக் குறைபாடுகளை ஏற்படுத்தும்.
வளி மண்டலத்தில் CO2, N2O, CH4 போன்ற வாயுக்கள் அதிகளவில் காணப்படும் இடத்து பசிய வீட்டு விளைவை ஏற்படுத்தும்.
நைதரசனின் ஒட்சைட்டுக்கள் (NO), SO2. காபனின் துணிக் கைகள் என்பன வளிமண்டல ஒட்சியேற்றத்திற்குட்பட்டு நீர்ப்பகுப் படைவதால், அமிலப் படிவுகள்,அல்லது அமில மழையை தோற்றுவிக்கின்றன.
ஈயம் போன்ற வளி மாசாக்கிகள், வாகனங்களில் எரி பொருள் தகனத்தின் போது வெளிவிடப்படும். இது தவிர, தொழிற் சாலைகளின் செயற்பாடின் போதும், உலோக பிரித்தெடுப்பின் போதும், ஆவி பறப்புள்ள அல்லது ஆவி பறப்பற்ற மூலகங்கள் (eg: AS, Cd, Hg) வெளிவிடப்படுவதால் அவை வளி மண்டலத்தை மாசாக்குகின்றன.
திண்ம, திரவ துணிக்கைகள், சில தொங்கும் பதார்த்தங்கள் போன்றன வளிமண்டலத்தில் காணப்படும். உதாரணமாக தூசுகள், துகள்கள், மகரந்தமணி போன்றவை கருதப்படும். தூசு பதார்த்தங்கள் தொழிற்சாலைகளிலிருந்தும் வாகனங்களில் இருந்தும் வெளியேறுகின்றன.
Environmental Pollution S N. Surendran & B.Babu

Page 22
மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) 1985ஆம் ஆண்டில் மேற் கொண்ட ஆய்வின் படி, புத் தளம் சீமெந்துத் தொழிற்சாலையிலுள்ள நிலைமின்னியல் வீழ்படிவாக்கி செயலிழ ந்தமையால், நாள் ஒன்றுக்கு 120-200 தொன்கள் சீமெந்து காள் வெளிவிடப்பட்டது அவதானிக்கப்பட்டது இதனால் , தொழி ற்சாலையை அண்டிய 10,000 ஹெக்ரேயர் நிலப்பரப்பு பாதிப்படைந்தது. இதனுள் 3,400 ஹெக்ரேயர் தென்னை பயிரிடப்படும் பிரதேசம் உள்ளடக்கப்பட்டிருந்தது.
சக்தி பிறப்பிக்கும் நிலையங்களில் இருந்து வேளியேறும் மாசாக்கிகள் பெருளமவில் வளிமாசடைதலை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக அனல் மின் நிலையங்களின் செயற்பாட்டின் போது வெளிவிடப்படும் SO2 அமிலப்படிவு, அமில மழை, மற்றும் உடல் நலக் குறைபாடுகளைத் தோற்றுவிக்கும் அதே வேளை, இச் சக்தி நிலையங்கள் தொழிற்படும் போது தோன்றும் சூடான நீர் அருகிலுள்ள கடலினுள் விடப்படும் போது அது கடல் வாழ் அங்கிகளை பாதிக்கின்றது. அத்துடன், மீன் பிடித்துறையும், பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த கரையோரப் பிரதேசமும் பாதிக்கப்படுகின்றது.
இலங்கையில் பிரதான வளிமாசாக்கி COஆகும். அதற் அடுத்ததாக SO2 கருதப்படுகின்றது.
ஒளி இரசாயனப் புகார், (Photochemical Smog)
ஒளி இரசாயனத் தாக்கத்தின் மூலம் உருவாக்கப்படும் ஒளி இரசாயன ஒட்சியேற்றிகள் (Photochemical Oxidants) வளிமண்டலத்தில் காணப்படும் ஐதரோகாபன்களுடன் தாக்கம் புரியும். ஒளி இரசாயன தாக்கத்தின் மூலம் உருவாக்கப்படும் ஒட்சியேற்றும் கருவிகள் ஒளி இரசாயன ஒட்சியேற்றிகள் எனப்படும்.
S N. Surendran & B.Babu
Environmental Pollution
 

பூமியின் மேற்பரப்பிற்கு அண்மையான வளிமண்டலத்தில் ஒட்சிசன், நைதரசனின் ஒட்சைட்டுக்கள் என்பன ஒளி இரசாயனத் தாக்கத்துக்குட்படும். ஒட்சிசன் அணு O3, peroxides என்பன ஒளி இரசாயன ஒட்சியேற்றிகளாகும்.
NO + O2 --> NO2
(fu। ଭୋଗrf, No. 9" "... No o O + O. --> O, O, + NO+ CH, -> Peroxy Acyl Nitrides
(PAN)
ஒளி இரசாயன ஒட்சியேற்றிகள் நிரம்பாத ஐதரோக் காபன்களுடன், குறிப்பாக அல்கீன்களுடன் தாக்கம் புரியும். இதன் போது எரிவைத் தோற்றுவிக்கும் மற்றும் நச்சுத் தன்மையான பதார்த்தங்கள் உருவாக்கப்படும். உதாரணமாக GLD5GaOT Tai) (methanal), HCHO, PANs (Peroxyacyl nitrides) Guit 66 paOT.
PANநச்சுத்தன்மையானது. கண் எரிவைத் தோற்றுவிப்பதுடன் தாவரங்களின் வளர்ச்சியையும் பாதிக்கின்றது. மிகக்குறைந்த அளவு, பாரதூரமான விளைவுகளை தாவரங்களில் ஏற்படுத்தும். ஒளி இரசாயனத் தாக்கம் தொடர்ந்து நடை பெற சிறிய மூலக்கூறுகள் ஒன்று சேர்ந்து பெரிய மூலக்கூறுகளை தோற்றுவிக்கும். இறுதியில் சிறிய துணிக்கைகள் உருவாக்கப்படும். இத் துணிக்கைகள் மண்ணிறமான NO2 உடன் சேர்ந்து புகார்த் தன்மையை தோற்றுவிக்கும். இது ஒளி இரசாயன புகார் எனப்படும்.
அல்டிகைட்டு
)0(ஒட்சியேற்றிகள்< حمحصحسي
4 an 8 12 4 8 pm
Environmental Pollution S N. Surendran d& B.Babu

Page 23
காலை வேளையில் வாகனங்களின் செயற்பாட்டால் NO தோற்றுவிக்கப்படும். இது பின்னர் NO2 ஆக மாற்றமடையும். மதிய வேளை சூரிய ஒளி உயர்வாக இருக்கையில் அல்டிகை ட்டுகள், PAN, propenal போன்ற பதார்த்தங்களும், ஒட்சி யேற்றிகளும் உருவாக்கப்படும். இவற்றால் ஏற்படும் ஒளி இரசாயனப் புகார் சுவாசம் மற்றும் கண் எரிவு சம்பந்தமான உடல் நல தீங்குகளை ஏற்படுத்தும். மாலை வேளைகளில் NO உருவாக்கப்பட்டாலும் , ஒளி இரசாயனத் தாக்கம் நிகழாமையினால் அல்டிகைட்டுகளும், ஒட்சியேற்றிகளும் உருவாக்கப்பட மாட்டாது.
ஐதரோகாபன்களினதும் நைதரசனின் ஒட்சையிட்டு க்களினதும் வெளியேற்றத்தை தடை செய்வதன் மூலம் ஒளி இரசாயனப்புகாரை கட்டுப்படுத்தலாம். வளி மாசடைவதாற் சூழலில் ஏற்படும் தாக்கங்கள். 1. பூமியின் வெப்பநிலை அதிகரித்தல். இதனால், உலக
காலநிலையில் மாற்றங்கள் ஏற்படும்.
i. உயிரங்கிகளின் தொழிற்பாடு பாதிக்கப்படுதல்.
(a) தாவரங்களின் அனுசேபச் செயற்பாடு, நொதியங்களின் செயற்பாடு என்பவற்றை பாதிப்பதன் மூலம் அவற்றின் வளர்ச்சி குறையும். ஒளி இரசாயன மாசாக்கிகள் கல மென்சவ்வு கலப்புன்னங்கங்களில் பாதிப்புகளை தோற்று விக்கும்.
(b) SO2 தாவர இலைகளில் நேரடியான பாதிப்பை ஏற்ப
டுத்தும்.
(c) ஓசோன் வாயு கலப்புன்னங்கங்களின் முதலுருவை சேத ப்படுத்துவதுடன், ATP உருவாக்கத்தையும் பாதிக்கும். i. மனிதனில் பல உடல் நலத் தீங்குகள் ஏற்படுத்தப்படும்.
iv. ஓசோன் இறப்பரில் வெடிப்பை ஏற்படுத்தும். அத்துடன் NOx
என்பன ஆடைச் சாயங்களின் நிறத்தை வெளிற்றும். V. அமில வீழ்படிவுகளால் கட்டடங்கள் உயிரினங்கள் பாதிப்படையும் SO2 தோலின் வலிைைமயக் குறைப்பதுடன், நிறம் நீக்கியாகவும் செயற்படும். Environmental Pollution
S .N. Surendran & B.Babu
 

(vi) சில வளி மாசாக்கிகள் மழை மூலம் அல்லது படிதல் மூலம் நீர்
நிலைகளை அடைந்து நீர் மாசாக்கலையும் ஏற்படுத்துகின்றன.
கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள்.
ஊக்கிகளை பயன்படுத்தி எரிபொருட்களின் தகனத்தின் போது
உருவாக்கப்படும் மாசாக்கிகளை அகற்றுதல்.
ii.
iii.
vi.
vii.
தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் மாசாக்கிகள் வளிமண்டலத்தை அடையாது தடுத்தல். அல்லது வெளி யேற்றப்படும் அளவை குறைக்க நடவடிக்கைகள் எடுத்தல் உதாரணமாக, SO2 வாயுவ்ை வெளியேற்றும் புகை போக் கிகளில் NaOH ஐ பயன்படுத்துவதன் மூலம் Na2SO4 பெற ப்படும். இது பின்னர், கண்ணாடி உற்பத்தியில் பயன்படு த்தப்படலாம். வெளியேறும் துரசுகளை அகற்ற, நிலை மின்னியல் வடிகட்டிகளைப் பயன்படுத்துதல்.
சுவட்டு எரி பொருட்களுக்கு பதிலாக மாற்று சக்தி மூலங்களை அறிமுகப்படுத்துதல்.உதாரணமாக, இயற்கை வாயு, சூரிய சக்தி, அலைச்சக்தி, புவி வெப்பசக்தி என்ப வற்றை பயன்படுத்துதல்.
கழிவுப் பொருட்களைச் சுத்திகரித்தல் அல்லது அவரின் நச்சுத் தன்மையை நீக்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
சூழல் பாதுகாப்பு சம்பந்தமான சட்டங்களை அமுல்படுத்தி அதற்கமைய தொழிற்சாலைகள் செயற்பட விழிவகுத்தல்.
கல்வி மூலம் வளி மாசடைதலின் தீய விளைவுகளை மக்களுக்கு உணர்த்துதல்.
சர்வதேச ஒத்துழைப்பு, மூலம் ஆராய்ச்சிகள், அவதானி ப்புக்கள் மேற் கொள்ளப்படுதல். புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்துதல்.
Environmental Pollution
S N. Surendran d& B.Babu

Page 24
எண்ணெய் சிந்துதல். (Oil Spills)
எண்ணெய் பொதுவாக கடற் கரைக்கு அப்பால், எண்ணெய்க் கிணறுகள் தோண்டப்பட்டு பெறப்படுகின்றது. பெறப்படும் எண்ணெய் கப்பல் மூலம் பிற பகுதிகளுக்கு அல்லது நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்படும்.
பெற்றோலிய ஐதரோக் காபன்கள் 4 வகைப்படும். 1. பரபின்கள் அல்லது அல்கேன்கள்
i. அரோமற்றிக் சேர்வைகள்.
i. ஒலிபீன்கள் அல்லது அல்கீன்கள்
in. நப்தீன்கள்.
எண்ணெய் கிணறுகள் அல்லது எண்ணெய் தாங்கிகளிலிருந்து வெளியேறும் கழிவுகளும், கப்பலில் எடுத்துச்செல்லப்படும் போது சிந்தப்படும் எண்ணெயும், கடல் நீரை மாசுபடுத்துவதன் மூலம், கடல் வாழ் உயிரங்கிகளைப் பாதிப்பது மட்டுமன்றி, மனிதனுக்கு தீமையான விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு 1000 தொன் எண்ணெயில் 1 தொன் சமுத்திரத்தை அடைகின்றது.
எண்ணெய் சிந்தப்படும் வழிகள்.
1. எண்ணெயை எடுத்துச் செல்லும் போது, எண்ணெய்த் தாங்கிக் கப்பல்கள் சேதமடையும் போது, மூழ்கும் போது அல்லது தீப்பற்றும் போது, யுத்தங்களின் போது, எண்ணெய் குதங்கள் அல்லது எண்ணெய் தாங்கி கப்பல்கள் தாக்க ப்படும் போது, பெருமளவில் எண்ணெய் சிந்தப்படும்.
i. எண்ணெய்த் தாங்கிக் கப்பல்கள் என்ணெயை இறக்கிய பின்னர், கப்பலின் சமநிலையைப் பேண எண்ணெய்த் தாங்கிகள் நீரால் நிரப்பப்படும் பின்னர்,நிரப்பப்பட்ட நீர் கடலுக்குள் செலுத்தப்படும்.
S N. Surendran & B.Babu
Environmental Pollution
 

iii.
iv.
எண்ணெய் சுத்திகரிப்பின் போது உருவாக்கப்படும் கழிவுகள் சமுத்திரங்களில் விடப்படும். கரைக்கப்பால் எண்ணெய் கிணறுகள் தோண்டப்படும் போது கழிவுகள், வடி கால்கள் மூலம் சமுத்திரங்களை அடைகின்றன.
துறைமுகங்களில் எண்ணெய் சேமிக்கப்படும் போது பாதுகா ப்பற்ற நடவடிக்கைகள் காரணமாக சமுத்திரத்தினுள் விடப்படும்.
கரையோரங்களில் காணப்படுகின்ற எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கும், துறைமுகத்துக்கும் இடையே குழாய் மூலம் இணைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டு எண்ணெய் அனுப்பப்படும். சமுத்திரங்களுக்குக் கீழான குழாய் மூலமான இணைப்பு பாதிக்கப்படும் போது, எண்ணெய் சமுத்திரத்தை யடைகின்றது.
எண்ணெய் நீரின் மேல் மிதக்கும். அதே வேளை, குறைந்த
பாகுத்தன்மை கொண்ட எண்ணெய், விரைவாகப் பரவி நீரின்
மேல் ஒரு படையாகக் காணப்படும். இதன் காரணமாக நீர்
வளியுடனான தொடர்பு துண்டிக்கப்படும்.
நீரின் மேற் பரப்பில் சிந்தப்பட்ட எண்ணெய், பின்வரும்
மாற்றங்களுக்குட்படும்.
i.
ii.
iii.
iv.
V.
vi.
இரசாயன தாக்கம்.
கரைசலாதல்.
பக்ரீரியாக்களின் தாக்கத்திற்குட்பட்டு பிரிந்தழிதல். உயிரினங்களால் உள்ளெடுக்கப்படுதல்.
துணிக்கைகளாக கடலினடித்தளத்தை அடைதல்.
ஆவியாதல் முலம் வளிமண்டலத்தை அடைந்து, பின்னர் ஒட்சி யேற்றத்திற்குட்பட்டு மழை மூலம் மீண்டும் நீர்ப்பரப்பை அடைதல்.
Environmental Pollution
S N. Surendran & B.Babu

Page 25
வளிமண்டல
-> Up ஒட்சியேற்றம் பரவுதல்
ஆவியாதல்
நீர் நாட்டல்
பக்ரீரியாக்களின் தாக்கம்
FITu605 இர 35 துணிக்கைகளாக g5ft d5J5LD
ரில் அமிழ்தல் J56OfT9FG) s856)
ア 安 உயிரினங்களால்
பற்ரீரியாக் களின்தாக்கம் உள்ளெடுக்கப்படுதல்
எண்ணெய் சிந்துதலின் பாதகமான விளைவுகள்
1. நீரின் மேற்பரப்பில் படையாகக் காணப்படுவதால் வளிம ண்டல O2 நீரிற்கரையும் அளவு, மற்றும் ஒளி ஊடுருவும் தன்மை எனபவற்றை பாதிப்பதால், கடல் வாழ் உயிரின ங்களின் உணவூட்டல், சுவாசம் போன்ற உடற்றொழிலியல் செயற்பாடுகள் பருதிக்கப்படும். அத்துடன் சில கடல் வாழ் அங்கிகளின் இனப்பெருக்கம், விருத்தி என்பனவும் பாதிக்கப்படும்.
i. நச்சுத் தன்மையை கொண்டிருப்பதால் (Carcinogenic)கடல்
வாழ் உயிரினங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும். உதார ணமாக தோல் அரிப்பு,பூக்கள் (மீன்களின்) சேதமடைதல் போன்ற தீய விளைவுகைளத் தோற்றுவிக்கும்.
i, ஐதரோ காபன் சேர்வைகள், கடல் வாழ் தாவரங்களின் தண்டு, மற்றும் இலைகளை அடைவதன் மூலம் அவற்றின் வளர்ச்சியை பாதிக்கும்.
Environmental Pollution S N. Surendran d& B.Babu
 
 

iv
vi.
சில ஐதரோகாபன்கள் கலச்சுவரில் காணப்படும் புரத இலிப்பிட்டுப் படைகளுடன் தாக்கம் புரிந்து, கலமென் சவ்வுகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.
கடற் சாதாழைகள் எண்ணெயால் மூடப்படும் போது கடற் சாதாழைகளில் ஒட்டி வாழும் உயிரினங்கள் எண் ணெயின் வழுக்கும் தன்மை காரணமாக, கடல் அலை கள் மூலம் எடுத்துச் சொல்லப்படும். அதாவது, தமது ஆதாரத்தை அவை இழக்கும்.
நீர் வாழ் பறவைகள், முலையூட்டிகள் என்பன பாதிப்படையும். எண்ணெய் நீரின் மேற்பரப்பில் படையாகக்க காணப் படுவதால், நீர் வாழ் பறவைகள் உணவைப் பெற முடியா திருப்பதுடன், அவற்றின் உடலில் எண்ணெய் படிவதால் அவற்றால் நீந்த முடியாது அல்லது பறக்க முடியாது போகலாம். அத்துடன், உடலிற் படிந்துள்ள எண்ணெயை அகற்றும் நோக்குடன் அலகுகளால் துப்பரவு செய்யும் போது, நச்சுத் தன்மையான எண்ணெய் பதார்த்த ங்களை உள்ளெடுப்பதால் இறக்கின்றன.
தன்னைத் தானே சுத்திகரிக்கும் ஆற்றலை கரையோரத்தை அண்டிய
பிரதேசம் மிகவும் குறைவாகக் கொண்டிருப்பதால் இலகுவிற் பாதிப்படையும்.
சிந்தப்பட்ட எண்ணெயை அகற்றுதல்.
i.
ii.
iii.
பொறியியல் முறை ( பம்பிகளை பயன்படுத்துதல்) அகத்துறிஞ்சிகளைப் பயன்படுத்துதல்.
உயிரங்கிகளைப் பயன்படுத்தி அகற்றுதல். (குறிப்பாக பக்ரீறியா க்களைப் பயன்படுத்தி பிரிந்தழியச் செய்தல்)
Environmental Pollution
S N. Surendran d& B.Babu

Page 26
நீர் மாசடைதல் (Water Pollution)
(1) நீரின் தன்மையும் கரைந்துள்ள ஒட்சிசனும்.
Water Quality and Dissolved Oxygen
நீரின் இரசாயன பெளதீகத் தன்மை மாற்றமடையுமாயின் அந் நீர் மாசாக்கலுக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக கருதப்படும். சூழலில் நீர் கரைப்பானாகவும், காவியாகவும் மற்றும் ஊக்கியாகவும் செயற்படுகின்றது. உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாக நீர் விளங்கும் போது அது மாசடையுமாயின் உயிரிகள் பெருமளவில் பாதிக்கப்படும்.
நீரில் கரைந்துள்ள ஒட்சிசனது அளவானது அந் நீரின் தன்மையை எதிர்வு கூறும் அளவு கோலாகப் பயன்படு த்தப்படுகின்றது. நீரில் காணப்படும் சேதனப் பதார்த்தங்கள் பற்றீரியாக்களின் தாக்கததிற்குட்பட்டு சிதைவடைகின்றன. இதனால், இப்பதார்த்தங்கள் உயிரியற் பிரிகையாக்கத்திற்கு உட்படும் பதார்த்தங்கள் எனப்படும். நீரில் கரைந்துள்ள ஒட்சிசனைப் பயன்படுத் தி சேதனப் பதார்த் தங்கள் ஒட்சியேற்றப்பட்டு உயிரியல் பிரிகையாக்கத்திற்கு உட்படுகின்றன. இதன் காரணமாக, நீரில் கரைந்துள்ள ஒட்சிசனின் அளவு குறைவடை கின்றது. இத் தோற்றப்பாடு காரணமாக, இச் சேதனப்பதார்த்தங்கள் ஒட்சிசன் கோரும் கழிவுகள் (Oxygen - Demanding Wastes) 6760T egy60ypá, 5ül Gáfiai p60T.
ஒட்சிசனின் முன்னிலையில் உயிரியற் சிதைவுக்கு உட்படும் பதார்த்தங்களில் காணப்படும் காபன், ஐதரசன், நைதரசன், dig55td LDibajid Gusta, Lugal, 676irl 1607 CO2, HCO3, H2O, NO3, SO, மற்றும் பொஸ்பேற்றுக்களாக மாற்றப்படும். சில சந்தர்ப்பங்களில், காற்று வாழ் பற்றீரியாக்கள் செயற்பட முடியாத அளவிற்கு கரைந்துள்ள ஒட்சிசனின் அளவு குறைவடையும். ஆனாலும், காற்றின்றிய சுவாசத்தை மேற்கொள்ளும் பற்றீரியாக்களின் @g5 TfộjbLust"Lq-6ðr 35 IT UT GOOTLDT 55 CH4, NH3, H2S, PH3 6T 6ðru GOT தோற்றுவிக்கப்படுவதால் மாசாக்க ப்பட்ட நீர் விரும்பத்தகாத மணத்தை பெறுகின்றது.
Environmental Pollution
S N. Surendran & B.Babu
 

தாவரப்போசணைப் பதார்த்தங்களாகிய பொசுபரசு(P), நைதரசன்(N), பொற்றாசியம் (K) போன்ற மூலகங்களை அதிக ளவில் கொண்டிருக்கும் வளமாக்கிகள், மிகையான தாவர வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. தாவர வளர்ச்சி அதிகரிப்பத னால், இறந்து சிதைவடையும் சேதனப் பதார்த்தங்களின் அளவு அதிகரிக்கின்றது. இதன் காரணமாக, உயிரியற் சிதைவிற்கு ஒட்சிசன் தேவைப்படுவதால், நீரிற் கரைந்துள்ள ஒட்சிசனின் அளவு குறைவடையும். ஒட்சிசனின் செறிவு தொடர்ந்து குறைவடையும் போது, குறித்த அளவின் பின்னர், அந் நீர்ச் சூழற் தொகுதியில் உயிரினங்கள் வாழ முடியாது போகும்.
N , P கொண்ட சேர்வைகள் பின்வரும் வழிகளில் நீர் நிலைகளை அடைகின்றன. i. வீட்டுக்கழிவுகள்; உதாரணமாக பொசுப் பேற்றைக் கொண்டிருக்கும் சுத்திகரிப்புப் பதார்த்தங்கள், மற்றும் உடலிலிருந்து வெளியேறும் நைதரசன் கொண்ட
சேர்வைகள்.
i. விவசாய நிலங்களில் இருந்து எடுத்துச் செல்லப்படும் N,P
கொண்ட வளமாக்கிகள்.
ii, பண்ணைகளிலிருந்து எடுத்துச்செல்லப்படும் N கொண்ட
விலங்குக் கழிவுகள்.
சேதனப் பொருட்கள் அதிகளவில் தேங்குவதனால் நீர் மாசாக்கப்படுகின்றது. இதன் காரணமாக, நீரில் கரைந்துள்ள ஒட்சிசனின் அளவைத் துணிவதன் மூலம் மாசாக்கலின் அளவை எதிர்வு கூறலாம்.
சேதனப்பொருட்களின் தேக்கம் நீரில் ஒட்சிசனின் தேவையை ஏற்படுத்துகின்றது. இவ் ஒட்சிசன் தேவை இரண்டு விதமான சொற் தொடர்களால் அழைக்கப்படுகின்றது.
i gud Tugor said fair G25606i/Chemical Oxygen Demand(COD) நீர் மாதிரி ஒன்றில் காணப்படும் சேதனப்பதார்த்தங்கள் வலுவான இரசாயன ஒட்சியேற்றியினால் ஒட்சியேற்றப்படுமள விற்குச் சமமான ஒட்சிசனின் அளவு. அதாவது இரசாயன ரீதியில் ஒட்சியேற்றத் தேவையான ஒட்சிசனின் அளவு.
S.N. Surendran & B.Babu |
Environmental Pollution

Page 27
ii. 2 usinfugi) gold F6öT G.5Goal/Biological Oxygen Demand (BOD) நீர் மாதிரி ஒன்றில் காணப்படும் சேதனப் பதார்த்தங்கள் உயிரியற் சிதைவுக்குட்படுத்தப்படுவதற்கு தேவையான ஒட்சிசனினளவு.
நீர் நிலைகளிலிருந்து நீர் மாதிரிகள் பெறப்பட்டு BOD (நியமிப்பு முறை) COD (மீள்பாய்ச்சல் முறை ) என்பவற்றின் பெறுமானங்கிள் ஆய்வு சாலையில் கணிக்கப்படுகின்றன. உதாரணமாக BOD யின் கணிக்கப்பட்ட பெறுமானத்திற்கு முன்னால் BOD5 எனக் குறிக்கப்பட்டால்; குறித்த நீர்த் தொகுதியில் இருந்து பெறப்பட்ட நீர் மாதிரி, 5 நாட்களுக்கு உயிரியற் சிதைவுக்கு உள்ளாக்கப்பட்ட பின்னர் பெறப்பட்ட பெறுமானமாகக் கருதப்படும்.
நீர் மாதிரியில் சேதனப் பதார்த்தத்தினளவு அதிகரிக்க BODஇன் அளவு அதிகரிக்கும். அதாவது மாசாக்கல் அதிகரிக்க BOD ன் பெறுமானம் அதிகரிக்கும்.
வலுவான ஒட்சியேற்றி பயன்படுத்தப்படும் போது ஒட்சி யேற்றமடையும் சில சேதனப் பதார்த்தங்கள் நுண்ணங்கிகளின் உயிரியற் சிதைவாக்கலின் போது ஒட்சியேற்றப்படாமையினால், COD இன் பெறுமானம் BOD இன் பெறுமானத்திலும் பார்க்க உயர்வாக இருக்கும்.
நீரில் கரைந்துள்ள ஒட்சிசனின் அளவு குறையும் போது நுண்ணங்கிகள் வேறு தோற்றுவாயில் இருந்து ஒட்சிசனைப் பெறும். உதாரணமாக Soi பயன்படுத்தப்பட்டால் தோற்றுவிக்கப்படும். அமில ஊடகத்தில் S* அமிலமாக்க ப்படுவதற்கு உள்ளாவதால் H2S வாயு உருவாக்கப்படுகின்றது.
நீர் மாசடைதலின் தோற்றுவாய்கள்
பல்வேறு தோற்றுவாய்கள் மூலம் உருவாக்கப்படும் பதார்த்தங்கள் நீர் மாசடைதலுக்கு காரணமாக அமைகின்றன.
(1) நகர்ப்புறக் கழிவுகள்
குறிப்பாக, நகரப்புறங்களில் தோன்றும் வீட்டுக் கழிவுகள்
S N. Surendran & B.Babu
Environmental Pollution
 

மூலம் போசனைப் பதார்த்தங்கள், நச்சுப் பதார்த்தங்கள், எண்ணெய்கள், நுண்ணங்கிகள், படிவுகள் என்பன நீர் நிலைகளை அடைகின்றன. உதாரணமாக, கொழும்பு நகரில் அமைந்துள்ள பெய்ரா ஏரி (Beira lake) யின் மாசாக்கலுக்கு முக்கிய காரணம் நகர்ப்புற கழிவுகளாகும்.
இலங்கையின் குடித்தொகையில் 21.5 சதவீத மக்கள் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர்.1988இல் பெறப்பட்ட தரவுகளின் படி, கொழும்பு நகரில் வாழும் மொத்த சனத் தொகையில் 1015 சதவீதமானவர்கள் கழிவுகளை நேரடியாகவோ அல்லது மறை முகமாகவோ மேற்பரப்பு நீர் இணைப்பு தொகுதிக்குள் செலுத்துகின்றனர். களனி ஆற்றினுள் நாள் ஒன்றுக்கு 67,000 -90,000 மீற்றர் கனவளவு கழிவு பாய்ச்சப்படுகின்றது.
நகர்ப்புற கழிவுகள் மேற்பரப்பு நீரை மாத்திரமன்றி தரை நீரையும் மாசாக்குகின்றன. உதாரணமாக, யாழ்ப்பாணத்தில் கழிவகற்றல் ஒரு வழித் தொகுதியாக, பிரதானமாக குழி மலசல கூடங்கள் அமைவதாலும், மயசீன்காலத்துச் சுண்ணாம்புக் கற்களாலான தரைத் தோற்றத்தை கொண்டிருப்பதாலும், கழிவுகள் சுண்ணாம்பு பாறைகளில் காணப்படும் பிளவுகள், சால்கள் மூலம் சென்று நிலக்கீழ் நீரை மாசடையச் செய்கின்றன. (i) விவசாய விளை நிலங்கள்:
பிடைகொல்லிகள் , கரையும் திண்மங்கள், போசணைப் பதார்த்தங்கள், சேதனச் சேர்வைகள் என்பன விவசாய நிலங்களில் இருந்து நீரோட்டம் மற்றும் ஏனைய காரணிகள் மூலம் நீர்த் தேக்கங்களை அடைகின்றன. (i) தொழிற்சாலைக் கழிவுகள்
வடிகட்டும் தொழிற்சாலைகள், சாயமிடும் தொழிற் சாலைகள், அச்சுத் தொழிற் சாலைகள், தோல் பதனிடும் தொழிற் சாலைகள் என்பவற்றில் இருந்து வெளியேறும் கழிவுகள் நீர் நிலைகளை அடைந்து நீர்த்தொகுதியை மாசாக்குகின்றன. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மதிப்பீட்டின் படி கொழும்பிலுள்ள தொழிற்சாலைகளில் இருந்து கான் இணைப்பு தொகுதியுள் 3,900kg BOD கழிவுகள் செலுத்தப்படுகின்றன.
S N. Surendran & B.Babu
Environmental Pollution

Page 28
மேற்கூறிய தோற்றுவாய்களுடன் சேர்ந்ததாக பின்வரும் காரணிகளும் நீர் மாசாக்கலில் பங்கு கொள்கின்றன. (a) எண்ணெய் தாங்கி கப்பலில் இருந்து வெளியேறும் எண்ணெய் காரணமாகவும், அணுப் பரிசோதனைகள் காரணமாகவும் கரையோர, ஆழ்கடல் நீர் மாசடை கின்றது. கடற் கரையோரப்பகுதி, கழிவுப்பொருட்கள் (வீட்டுக் கழிவு, தொழிற்சாலைக்கழிவு) கொட்டப்படு வதனாலும், எண்ணெய் சிந்துவதனாலும் பெருமளவில் மாசாக்கலுக்கு உள்ளாகின்றது.
(b) காடுகளிலிருந்து எடுத்துவரப்படும் தேங்கும் பொருட்கள் ஒட்சிசன் கோரும் பொருட்களாகும். இவற்றால் நீரில் கரைந்துள்ள ஒட்சிசனின் அளவு குறைவடையும்.
(c) கனியங்கள் அகழ்ந்தெடுக்கப்படுவதால் தோன்றும் பாரமான உலோகங்கள் நீர் நிலைகளை அடைவதால் நீர்ச் சூழல் மாசடைகின்றது.
கிராமப்புறச் சுகாதாரம் ;
1981 இல் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின் படி, இலங்கையில் கிராமப்புற மக்களில் 5 சதவீதமானவர்கள் குழாய் நீரையும், 85 சத வீதமானவர்கள் கிணறுகளையும், ஏனையவர்கள் ஆறுகள், அருவிகள் என்பவற்றை தமது நீர்த் தேவையின் நிமிர்த்தம் பயன்படு த்துகின்றனர்.
பெரும்பாலான கிராமப்புற கிணறுகள் சுகாதாரரீதியில் பாதுகாப்பு அற்றவையாகும். கிராம மக்களில் 44 சதவீதத்தினர் குழி அல்லது வாளி மலசல கூடங்களை பயன்படுத்தும் அதேவேளை, 36.5 சதவீதமானவர்கள் மலசல கூட வசதி அற்றவர்களாகக் காணப்படுகின்றனர். தகுந்த சுகாதார வசதிகளும் அவற்றை நடை முறைப்படுத்தலும் இல்லாமையால், கிராமப்புற மக்கள் நீர் மூலம் பரவும் நோய்களுக் காளாகின்றனர். நீர் வழங்கல், மற்றும் கழிவுகள் அகற்றும் தொகுதி என்பன
S N. Surendran & B.Babu
Environmental Pollution
 

சரியான முறையில் அமைக்கப்படாமையினால், இலங்கையின் சனத் தொகையில் 40 சதவீதமானவர்கள் ரைபொயிட்டு(typhoid) , அமிபா மற்றும் பசிலசு வயிற்றோட்டம் (amoebic and baciliary dySentery), ஈரல் அழற்சி, புழுக்களின் தொற்றல் என்பவற்றுக்கு ஆளாகின்றனர்.
நீர் நிலைகளைச் சேரும் இரசாயனப் பதார்த்தங்களினால் அல்லது அயன்களினால் ஏற்படும் தீய விளைவுகள்.
வீட்டுக்கழிவுகள், விவசாய இரசாயன பொருட்கள், தொழிற்சாலைக் கழிவுகள் என்பன நீர் நிலைகளை அடையும் போது, அக்கழிவுகளில் காணப்படும் இரசாயனப் பதார்த்தங்கள் பல தீய விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
சாதாரணமாக நீரில் Na", K ,Mg’, Ca", Fe" போன்ற கற்றயன்களும், C, Soi, HCO3 போன்ற அன்னயன்களும் O2, N2, CO2 போன்ற வாயுக்களும் காணப்படும். இவற்றைத் தவிர, மனிதனின் செயற்பாட்டின் மூலம் வேறு இரசாயனப் பொருட்களும் சேர்ந்துகொள்கின்றன.
N கொண்ட வீட்டுக்கழிவுகள், வளமாக்கிகள் மற்றும் தொழிற் சாலைக் கழிவுகள் என்பன காரணமாக நீரில் நைத்திரேற்று அயன்களின் அளவு அதிகளவில் காணப்படும். குடிநீர் மூலம் சமிபாட்டுத் தொகுதியை அடையும் இவ் நைத்திரேற்று அயன்கள், பற்றீரியாக்களின் தொழிற்பாடுகள் காரணமாக நைத்திரைற்று அயன்களாக தாழ்த்தப்படுகின்றன.
- பற்றீரியாக்களின் NO, தொழிற்பாடு -o மனிதனின் குருதியில் காணப்படும் வழி அமைன்களுடன் இவ் நைத்திரைற்று அயன்கள் தாக்கம் புரிந்து, புற்று நோய்க்காரணியான நைத்திரசோ அமைனை தோற்றுவிக்கும்.
R R
NO,
- NO,+ R-N-H -> R-N-N= 0 (நைத்திரசோ அமைன்)
நைத்திரேற்று அயன்கள் கீமோகுளோபினுடன் சேருவதால், கீமோ குளோபினால் ஒட்சிசன் காவப்படும் அளவு குறையும். இது சிறுவர்களில் ஆபத்தான மெதமோகுளோபியா எனும்
S N. Surendran d& B.Babu
Environmental Pollution

Page 29
நிலையை தோற்றுவிக்கும்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் காணப்படும் நீர் நிலைகளே இலங்கையில் உயர் செறிவில் நைத்திரேற்று அயன்களைக் (200 mg/) கொண்டுள்ளன.
தொழிற்சாலைக்கழிவுகள், பீடை கொல்லிகள் என்பன நீர் நிலைகளை அடையும் போது, இரசம், அஸ்பெஸ்டஸ், குளோரீன் ஏற்றப்பட்ட ஐதரோகாபன்களான DDT, Dioxins, பல்குளோரின் øJ popot'u u ggt i SøOGOT Gü 55 Giī (Polychlorinated biphenyls - PCBs) என்பவற்றினளவு அதிகரிக்கின்றது.
இரசம், அசேதன இரசமாக நீர் நிலைகளை அடையும் போது, அவை நுண்ணங்கிகளின் காற்றின்றிய செயற்பாடு காரணமாக மீதையில் ஏற்றப்பட்ட இரசமாக மாற்றப்பட்டு, நேரடியாகவோ அல்லது உணவுச்சங்கிலி மூலமாகவோ மீன் போன்ற கடல் வாழ் அங்கிகளில் தேங்குகின்றது. கடலுணவு மூலம் மனிதனை அடையும் மீதையில் இரசம் நரம்புத் தொகுதியை பாதிப்பதுடன், நிற மூர்த்தங்களின் அமைப்பில் மாற்றங்களைகளையும் ஏற்படுத்துகின்றது.
அஸ்பெஸ்டஸ் பதார்த்தங்கள் நீரில் சேரும் போதுஅந் நீர் குடற் புற்றுநோயை ஏற்படுத்துகின்றது.
ஒட்டும் பதார்த்தங்கள் , பூச்சுக்கள், உராய்வு நீக்கிகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பல்குளோரினேற்றப்பட்ட இரு பீனைல்கள் (PCBs) நீர் சூழலில் செறிவடைவதால், ஈரல் புற்று நோய் மற்றும் இனப்பெருக்கத் தொகுதி செயற்படாமை போன்றன ஏற்படுவதுடன் தொய்வு, சரும நோய்கள் என்பனவும் தோற்றுவிக்கப்படுகின்றன.
Dioxins, PCBS என்பவற்றின் தேக்கம், வர்த்தகரீதியான மீன் பிடியியலில் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
DDT போன்ற பீடை கொல்லிகள் நீர் நிலைகளுக்கு எடுத்துச் செல்லப்படுவதால், நீர் வாழ் உயிரினங்களை பாதிப்பதுடன், உணவுச் சங்கிலிக்கூடாகச் செறிவடைவதால், நுகரிகளையும் பாதிக்கின்றது.
இயற்கை காரணிகள் காரணமாகவும், நீர் நிலைகளில் அயன்களினளவு அதிகரிக்கும். குறிப்பாக, இலங்கையின் புவியியல் நிலை காரணமாக புளோரைற்றுகளின் அளவு சில பகுதிகளில்
S.N. Surendran & B.Babu
Environmental Pollution
 

உயர்வாக காணப்படுகின்றது. பற்களில் தேங்கும் பதார்த்தங்களின் நொதித்தல் செயற்பாட்டை ஊக்குவிக்கும் நொதியங்களின் தொழிற்பாட்டை புளோரைட்டுகள் பாதிப்பதால் பற் சுகாதார த்திற்கு உதவுகின்றது. புளோ ரைட்டு உயர் அளவில் காணப்படும் போது "Dental Fluorosis" எனும் நிலை தோன்றும். இலங்கையில் பொலநறுவை அனுராதபுர மாவட்டங்களின் நீர் நிலைகள் உயர் அளவில் (9 mg/1) புளோரைட்டைக் கொண்டுள்ளன.
கடலுக்கு அடியில் மேற்கொள்ளப்படும் அணுப்பரி சோத னைகள் காரணமாகவும், கடலில் புதைக்கப்படும் அணுக்கழிவுகள் காரணமாகவும், கடலில் கதிரியக்க சமதானிகள், மற்றும் கதிர்ப்புத் துணிக்கைகளின் அளவு அதிகரிப்பதால், கடல் வாழ் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிப்பதுடன், கடல் உணவு மூலம் மனிதனையும் அடைகின்றன.
இதன் காரணமாக கடல் வளத்தின் பயன்பாடு பாதிப்ப டைகின்றது. நன்னீர் மற்றும் கடல் நீர், கழிமுகங்களில் காணப்படும் சயனோ பக்ரீரியாக்களின் ( Cyanobacteria) மலர்ச்சியால், நச்சுத் தன்மையான தொக்சின்கள் (Toxins) சுரக்கப்படுகின்றன.இதனால், நீர்ச்சூழல் மாசாக்கப் படுவதுடன், சுரக்கப்படும் தொக்சின்களினால் ஒட்டு மீன்கள், சிப்பிகள் போன்றன பெருமளவில் பாதிப்ைைடகின்றன. இக் கடல் உணவுகளை உட் கொள்வதன் மூலம் மனிதனில் உடல் நலக் குறைபாடு கள் ஏற்படுகின்றன. பொதுவாக இத் தொக்சின்கள் hepato toxins (eg: microcystins), neurotoxins (eg: anatoxin -a), endotoxins ( eg இலிப்போ பல்சக்ரைட்டுகள்) எனப்படும்.
மகாவலி நீரில் காணப்படும் சில கூறுகள் (1986)
கூறு 6&a (ppb)
Gaftul (Cu) 04 - 37 [5T Süd (Zn) 02 - 270 FFuulib (Pb) 01 - 04 கட்மியம் (Cd) 01 - 02 குளோரைட்டு 11 - 27 நைத்திரேற்று 480 - 3100 பொசுபேற்று 37 - 473
S N. Surendran & B.Babu
Environmental Pollution

Page 30
நீர்
ii.
iii.
iv.
vi.
vii.
viii.
ix.
மகாவலி.களனி நீரில் காணப்படும் உலோகங்களின் சராசரி (1986)
கூறு மகாவலி களனி
(ppb) (ppb) கட்மியம் 1
கோபால்டு 5 ஈயம் 3 9 நாகம் 58 53
மாசடைதலைக் கட்டுப்படுத்துதல்.
நகர்ப்புற மற்றும் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் நீர்நிலைகளை அடையாது தவிர்த்தல்,கழிவுகள் அகற்றப்ப டுவதற்காக கான் தொகுதி இணைப்புக்களை உருவாக்குதல். தொழிற் சாலைக் கழிவுகள் நீர் நிலைகளை அடைவதைத் தடை செய்தல்.தொழிற்சாலைகள் மற்றும் வைத்திய சாலை களில் தொற்று நீக்கும் தாங்கிகளை அமைத்தல்.
வளமாக்கிகள், மற்றும் விவசாய இரசாயணப் பொருட்களின் பாவனையைக் கட்டுப்படுத்ததுல்.
தீங்கு விளைவிக்கும் இரசாயனப் பொருட்களின் புாவனையைத் தடை செய்தல். கிராமப்புற சுகாதார நிலையை மேம்படுத்துதல்.
சூழல் பாதுகாப்பு சட்டங்கள் உருவாக்கப்பட்டு, அவற்றை தேசிய ரீதியில் அமுல்படுத்துதல். தோன்றும் கழிவுப்பொருட்களை நவீன தொழில் நுட்பத்தைப் பாவித்து வேறு பொருட்களாக, அல்லது தீங்கற்ற பொருட்களாக மாற்றுதல்.
கடலுக்கடியில் மேற்கொள்ளப்படும் அணுப் பரிசோதனை களைத் தடை செய்தல். சமுதாயத்தின் எல்லா மட்டத்தினருக்கும் நீர் மாசடைதலின் தீய விளைவுகளை எடுத்துரைத்தல்.
Environmental Pollution
S N. Surendran d& B. Babu |
 

பச்சை வீட்டு விளைவு (Greenhouse Effect)
Kgo, H0, CH, CFC, D
சூரியனில் இருந்து காலப்படும் கதிர்களில் ஒரு பகுதி பூமியின் மேற் பரப்பை அடைந்து, அதனைச் சூடாக்குவதுடன், மீண்டும் பூமியின் மேற்பரப்பால் அண்ட வெளியை நோக்கி செலுத்தப்படுகின்றது. இதன் காரணமாக பூமியின் மேற்பரப்பு வெப்ப சமநிலை பேணப்படுகின்றது.
வளிமண்டலத்தில் காணப்படும் சில வாயுக்கள் காரணமாக பூமியின் மேற்பரப்பில் பட்டுதெறிக்கும் அல்லது காலப்படும் கதிர்கள், அண்ட வெளியை அடைவது தடை செய்யப்படும். இவ் வாயுக்கள் சக்தி குறைந்த, அலை நீளம் கூடிய கதிர்களை அகத்துறிஞ்சி, மீண்டும் பூமியை நோக்கி கெலுத்துவதன் மூலம், பூமியின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிக்கின்றது\இவ்வாறு பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும் தோற்றப்பாடு பச்சை வீட்டு விளைவு எனப்படும்.பச்சை வீட்டு விளைவுக்குக் காரணமான வாயுக்கள், பச்சை வீட்டு வாயுக்கள் எனப்படும்.
S N. Surendran d& B. Babu |
Environmental Pollution

Page 31
CO2, H2Oy, CH4N2O, CFC போன்ற வாயுக்கள் பச்சை வீட்டு வாயுக்களாகக் கருதப்படுகின்றன. ஓசோன் கூட ஒரு பச்சை வீட்டு வாயுவாக செயற்படும்.
வெப்பத்தை பற்றுவதில் பிரதான பச்சை வீட்டு வாயுவாக நீராவி கருதப்பட்டாலும்,'மனிதனின் செயற்பாட்டின் மூலம் அதிகளவில் வளி மண்டலத்துக்குள் செலுத்தப்படும் பச்சை வீட்டு வாயு CO2 ஆகும். CO2 வளி மண்டலத்தின் கீழ்ப்பகுதியில் காணப்படும் வளியை சூடாக்குகின்றது.
வளிமண்டலத்தினுள் விடப்படும் பச்சை வீட்டு வாயுக்களின் அளவு அதிகரிப்பதனால், அடுத்த நூற்றாண்டில் (2050) பூமியின் வெப்பநிலை 15°C- 45°C வரை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இயற்கையில் வளிமண்டலத்தில்கோணப்படும் CO2 நீராவி போன்ற வாயுக்கள் காரணமாக பூமியின் வெப்ப சமநிலை பேணப்படுகின்றது. இது இயற்கையான பசிய வீட்டு விளைவு எனப்படும். ஆனால், அதிகரித்து வரும் உலக சனத்தொகை காரணமாகவும், மனிதனின் செயற்பாடுகள் காரணமாகவும் பசிய வீட்டு வாயுக்கள் அதிகளவில் வளி மண்டலத்தை அடைவதால், பூமியின் வெப்பநிலை அதிகரிக்கின்றது.
பச்சை வீட்டு வாயுக்கள் வளி மண்டலத்தை அடையும் பிரதான வழிகள்;
*a) CO2 வளி மண்டலத்தை அடையும் வழிகள்
i. வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் செயற்பாட்டிற்கு சுவட்டு எரிபொருட்கள் (மண்ணெய், டீசல், பெற்றோல்) பயன்படுத்தப்படும் போது பெருமளவில் வெளிவிடப்படும். சுவட்டு எரி பொருட்களை எரிப்பதனால் மாத்திரம்
ஆண்டு தோறும் 2.5 x 101* தொன் CO2 வளிமண் டலத்தை அடைகின்றது.
S.N. Surendran & B.Babu
Environmental Pollution
 

ii.
ii.
iii.
iv.
ii.
iii.
காடுகள் அழித்தல் போன்ற செயற்பாடுகள் காரணமாக தாவரங்கள் அழிக்கப்படுவதானால், வளிமண்ட லத்தை அடையும் CO2 இன் அளவு அதிகரிக்கும்.
b) CFC வளிமண்டலத்தை அடையும் வழிகள்.
குளிரூட்டிகளில் பயன்படத்தப்படுதல்.
நுரைகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படல். தெளி கருவிகளில் உந்து சக்தியாக பயன்படுத்தப்படுதல்.
பிளாஸ்ரிக் பொருட்களின் தயாரிப்பில் பயன்படுத்தப்படுதல், போன்ற செயற்பாடுகளினால் வளிமண்டலத்தை அடைகின்றது.
C) வளிமண்டலத்தை அடையும் வழிகள்.
விவசாய நிலங்களில் வைக்கோல் போன்றவற்றின் தேக்கமும், விலங்கு பண்ணைகளின் விலங்குகளின் கழிவுகள் என்பனவும் பக்ரீரியாக்களின் தாக்கத்துக்கு உட்படும் போது உருவாக்கப்படு கின்றது.
d) N2O வளிமண்டலத்தை அடையும் வழிகள்;
மண்ணிலுள்ள நுண்ணங்கிகளின் செயற்பாடு. N வளமாக்கிகள் இரசாயன தாக்கத்துக்கு உட்படும் போது
சுவட்டு எரி பொருட்கள் தகனமடையும் போது.
Environmental Pollution
S N. Surendran & B.Babu

Page 32
வெப்பநிலையுயர்வில் பசிய வீட்டு வாயுக்களின் பங்கு
Others(HO(g)) CH
13% 8%
CFCS
民
C
6ー
CO2 49%
வளிமண்டலத்தில் பசிய வீட்டு வாயுக்களின் தேக்கம்
ஆண்டு CO2 N2O CH4 CFC - 11 CFC - 12
ppm ppb || pbb ppt ppt
தொழில்
புரட்சிக்கு முன் 280 285 700 AO
1959 315.8 -
1969 323.9 138.5
1979 336.7 296.3 1545 167 283
1988 351.3 306.3 169.7 263 439
வளிமண்டலத்தில் பசிய வீட்டு வாயுக்களின் அளவு அதிகரிப்பதால் உலக காலநிலை மாற்றங்கள் ஏற்படும். இது பாதகமான மற்றும் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.
பச்சை வீட்டு விளைவின் தாக்கங்கள்;
1. வெப்பநிலை அதிகரிப்பதால் பூமியின் ஒரு பகுதி வறட்சியான
காலநிலையைப் பெறும்.
i. வெப்பநிலை உயர்வு காரணமாக நீர்ஆவியாதலின் அளவு அதிகரிக்கும். இதனால், மழை விழ்ச்சி அதிகரிக்கும். i. வெப்பநிலை அதிகரிப்பதால் பனிக்கட்டிகள் உருகும். இதனால் கடல் நீர் மட்டம் அதிகரிக்க, தாழ் பிரேதசங்கள் S N. Surendran d& B. Babu |
Environmental Pollution
 
 
 

iv.
vi.
அல்லது தீவுகள் கடலினால் மூடப்படலாம்.உதாரணமாக பங்களாதேசம்மாலைதீவு, போன்ற நாடுகள் ஆபத்து க்குள்ளாகும். 2050ம் ஆண்டளவில் கடல் மட்டம் 30cm -50cm அளவால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வெப்பநிலை உயர்வு சமுத்திர நீர் ஓட்டத்தை பாதிப்பதனால் நீர்வாழ் அங்கிகளின் பருவ வாழ்க்கை முறை பாதிப்படையும்.
பருவகால மாற்றங்கள் ஏற்படுவதனால் உயிரங்கிகளின் இயற்கை வாழிடம் அவரின் வாழ்க்கை முறையும் பாதிக்கப்படும். இதனால், எதிர்காலத்தில் பல இனங்கள் அழிந்து போகலாம். வளிமண்டலத்தில் CO2 இன் அளவு அதிகரிப்பதால் தாவரங்களின் ஒளித்தொகுப்பு வீதம் அதிகரிக்கும். குறிப்பாக, நீர் வாழ் தாவரங்கள், அல்காக்ககளின் வளர்ச்சி என்பன அதிகரிப்பதால் நீர் மலர்ச்சி ஏற்படும். இது மீன் பிடித் துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
பச்சை வீட்டு விளைவைக் கட்டுப்படுத்துதல்.
i.
ii.
iii.
iv.
vi.
சுவட்டு எரி பொருட்களின் பாவனையைக் குறைத்தல். காடுகள் அழிக்கப்படுவதைத் தடை செய்தல். CFC பாவனையை தடை செய்தல். CFCக்கு பதிலாக HCFC
யை பயன்படுத்துவதன் மூலம், பசியவீட்டின் விளைவைக் குறைக்கலாம். உதாரணமாக CF2C12 பசியவீட்டு விளைவை 2.8-3.4 வீதம் ஏற்படுத்தினால் CHF 2C ஆனது 0.32-0.37 வீதம் பாதிப்பை ஏற்படுத்தும்.
விவசாய நிலங்களில் அறுவடைக்கு பின்னான தேக்கத்தையும், பண்ணைகளில் விலங்கு கழிவுகளின் தேக்கத்தையும் கட்டுப் படுத்துதல் அல்லது " மீள் ஒட்டத்தில் " பயன்படுத்துதல். தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் பசிய வீட்டு வாயுக்கள் வளிமண்டலத்தை அடையாது தடை செய்தல்.
சுவட்டு எரி பொருட்களுக்கு பதிலாக மாற்று சக்தி மூலங்களை பயன்படுத்துதல். குறிப்பாக, சூரிய சக்தி , அணுச்சக்தி, அலைச் சக்தி, புவிவெப்பசக்தி போன்ற சக்தி மூலங்களைப் பயன்படுத்துதல்.
Environmental Pollution
S.N. Surendran & B.Babu

Page 33
ஒசோன் படை சிதைவடைதல் (Depletion of Ozone Layer)
இயற்கையில் பூமியின் வளிமண்டலத்தில் ஓசோன் (O3) வாயுப்படை காணப்படுகின்றது. இப்படை சூரியனில் இருந்து வெளிவிடப்படும் தீங்கு விளைவிக்கும், குறித்த அலை நீளம் கொண்ட UV (Ultra - Violet / ஊதா கடந்த) கதிர்களை அகத்துறிஞ்சும் தன்மை கொண்டது.இவ் ஓசோன் படை காரணமாக தீங்கு விளைவிக்கும் UV கதிர்கள் பூமியை அடைவது தடை செய்யப்படுகின்றது.
བློ་ 莺 个60
ਐ “.િ ཟི- 40 ܓܠܒ * 頭 N
tS 30 བྷི་སྐྱེ་ ) S. 20 フ
ཐོབྱེལྕེ་ 10
S.
10 11 12 12 10 10 10 10 ஓசோன் செறிவு ( மூலக்கூறு/cm)-
சூழலில் காணப்படும் எல்லா UV கதிர்களும் சூரியனில் இருந்து காலப்படுகின்றது. UV கதிர்கள் பொதுவாக 200nm - 400nm க்கு இடைப்பட்ட அலை நீளம் கொண்டவை. வளிமண்டலத்தில் காணப்படும் ஒட்சிசன், நைதரசன் வாயுக்கள் 200nm லும் குறைந்த அலைநீளம் கொண்ட UV கதிர்களை அகத்துறிஞ்சுகின்றன.இதன் காரணமாக, இரசாயன தாக்கத்துக்குட்படும் ஒட்சிசன் மூலக் கூறுகள் ஓசோன் மூலக்கூறுகளைத் தோற்றுவிக்கும்.
Environmental Pollution S N. Surendran & B.Babu
 

கட்புலனா UV கதிர்கள் “1 گ۔۔ --سہ ، گل ۔ حR கதிர்கள் கும்கதிர்கள்
200 300 00 600 800 w 120
F/UV N/UV56uto ܐܝܢܘܬܐ அலை நிளம்
O ()
F / UV - far UV : N / UV - near UV கு - தோல் எரிவு ா குளோரபில் a
க் குளோரபில் a
ஓசோன் மூலக் கூறுகள் 200nm க்கும் 300nm க்கும் இடைப்பட்ட அலைநீளம் கொண்ட கதிர்களை அகத்துறிஞ்சும். இக் கதிர்கள் " சேய்மையான UV"(Far-UV) கதிர்கள் எனப்படும். காலப்படும் கதிர்களில் 300nm க்கும் 400nm க்கும் இடைப்பட்ட அலை நீளம் கொண்ட UV கதிர்கள் பூமியை வந்து அடைகின்றன. இக் கதிர்கள் "அண்மையான UV "(Near UV) கதிர்கள் எனப்படும்.
சேய்மையான UV கதிர்களுக்கும், அண்மையான UV கதிர்களுக்கும் இடைப்பட்டதும் 290nm, முதல் 320nm அலைநீளம் GNSST GẩoT gyuDm7 GOT UV Sigfri 56T, UV - B (Biologically active UV / உயிரியல் தொழிற்பாட்டு UV ) கதிர்கள் எனப்படும்.இவ் UV கதிர்களே தீமையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. வளிமண்டல ஓசோன் படையில் ஏற்படும் 16% இழப்புக் காரணமாக பூமியை அடையும் தீங்கு விளைவிக்கும் கதிர்களின் அளவு 14% ஆல் அதிகரிக்கின்றது.
UV கதிர்கள் ஏற்படுத்தும் பாதகமான விளைவுகள்
i. கண்களைப் பாதித்தல்.
i. தோல் எரிவு, மற்றும் தோலின் மேற்தோல் கலங்களில்
காணப்படும் DNA இன் கட்டமைப்பை மாற்றுவதன் மூலம் தோல் புற்று நோயை ஏற்படுத்துதல்.
S N. Surendran & B.Babu
Environmental Pollution

Page 34
ஒசோன் படலத்தில் ஏற்படும் 1% இழப்பு, தோல் புற்றுநோய் ஏற்படுவ தில் 3% அதிகரிப்பை உண்டாக்கும்.
i. தாவரங்களின் வளர்ச்சியை குறைப்பதனால் விவசாய
உற்பத்தி வீழ்ச்சியடையும்.
iv. நீர் வாழ் குடம்பிகள் பாதிப்படையும்.குறிப்பாக அம்பீபியா க்களின் முட்டைகள் நீர் மேற்பரப்பில் காணப்படும் போது UV கதிர்களின் தாக்கத்துக்குட்படுவதனால் DNA இன் கட்டமைப்பு மாற்றமடையும், இதனால்,அம்பீபியாக்கள் அருகிச் செல்லும் தன்மை அதிகரிக்கும்.
V. நிர்ப்பீடனத் தொகுதியில் காணப்படும் நிணநீர்க் குழியங்களின், தொழிற்பாட்டை பாதிப்பதால் நோயினால் பீடிக்கும் தன்மை அதிகரிக்கும்.
wi. பிளாஸ்ரிக் பொருட்களின் பிரிந்தழிதலைத் துரிதப்படுத்துதல்.
Vi. சூழற் சமநிலை பாதிக்கப்படுதல்.
wi. கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவதால், கடலின் உணவு
உற்பத்தி பாதிப்படையும்.
ix. ஒளி இரசாயன புகாரின் உருவாக்கத்தில் பங்கு கொள்வதன்
மூலம் வளி மாசடைதலை ஏற்படுத்துதல்.
சூரிய கதிர் வீசல் வளி மண்டலத்தில் காணப்படும் குளோரின் மற்றும் புரோமினைக் கொண்ட வாயுக்களை இலகுவில் பிரிகையடையச் செய்யும். இதன் காரணமாக தோற் றுவிக்கப்படும் குளோரின் மற்றும் புரோமின் மூலிகங்கள் தொடர்ச்சியான சங்கிலித் தாக்கத்துக்குட்படும்.
Environmental Pollution S N. Surendran & B.Babu

UV கதிர்கள்
CFC 3 மொனொக்சைட்டு ↓ܠ
CO ... O
சுயாதீன குளோரின் மூலிகம்
CFCI 2 (Ο3) O2
CFC 3 -> CFCl2 + Clo
Cl + O3 -> ClO + O2
ClO + 'O' -> Cl " + O2
வெளிவிடப்படும் ஒரு தனி குளோரின் மூலிகம் ஒரே மாதிரியான 100,000 க்கும் மேற்பட்ட தாக்கங்களுக்கு உட்படுவதனால், பல்லாயிரக்கணக்கான ஓசோன் மூலக் கூறுகள் தனி மூலிக்ம் ஒன்றினால் சிதைக்கப்படுகின்றன.
மனிதனால் உருவாக்கப்படும் இரசாயனப் பொருட்கள் வளிமண்டலத்தை அடைந்து O3 படையைத் தாக்கி சேதப்படுத் கின்றன. குறிப்பாக, குளோரோ புளோரோகாபன் (CRC) சேர்வைகள் வளி மண்டலத்துள் விடப்படும் போது, அவை விரைவாக ஓசோன் படையைச் சேதப்படுத்துகின்றன.
உயர் அளவிலான ஓசோன் படைச் சிதைவு அந்தாட்டிக் பகுதிகளில் அவதானிக்கப்பட்டுள்ளது. CFC யின் பாவனை அதிகரித்தமையே இதற்கு பிரதான காரணமாகும்.
CFCகள் ஓசோன் படையைச் சிதைப்பதனால் பூமியின் மேற் பரப்பை அடையும் ஒளிக் கதிர்களின் அளவை அதிகரிக்கும் அதே வேளை, CFCபசிய வீட்டு வாயுவாகவும் செயற்படுகின்றது. இதனால் இவரின் பாவனை உலக காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தும்.
S N. Surendran d& B.Babu
Environmental Pollution

Page 35
CFCS பல்வேறு செயற்பாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக CF2CL2, CFCL3 போன்றவை குளிரூட்டிகள், ஆசன மெத்தைகள், உலோக சுத்திகரிப்பு, கிருமி நீக்கிகள் , தெளிகரு விகளில் உந்தும் பதார்த்தங்கள், கரைப்பான்கள், மற்றும் நுரை களைத் தோற்றுவிக்கும் கூறுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
ஓசோன் படலம் சிதைக்கப்படும் ஏனைய வழிமுறைகள்
1. குறித்த அளவு சேதத்தை ஒளி ஏற்படுத்தும். ஆனால்,
அச்சேதம் மெதுவானது.
O2 + 36fi -> O -- O2
of O + O3 - O + 2 O2
i. நைதரசனின் ஒட்சைட்டுக்கள் வளிமண்டலத்தை அடையும்
போது அவை குறித்தளவு சேதத்தை ஏற்படுத்தும்.
NO+O3 -> NO2 +O2 NO2 + O -> NO + O2
அதிவேக/ மிகை ஒலி விமானங்களின் போக்குவரத்தும் நைதரசனின் ஒட்சைட்டுக்களின் உருவாக்கத்துக்கு காரணமாகும். அத்துடனர் N கொண்ட வளமாக்கிகள் அதிகளவில் பயன்படு த்தப்படுவதால், அவை நுண்ணங்கிகளால் நைதரசன் இறக்க த்க்குட்படும். இதனால், வளி மண்டலத்தில் நைதரசனின் ஒட்சைட்டுக்களின் அளவு அதிகரிக்கும். i. மீதையில் குளோரைட்டு போன்ற பீடை கொல்லிகளின்
பாவனையும் ஒசோன்படையைச் சேதப்படுத்துகின்றது.
ஓசோன் படையைப் பாதுகாத்தல் :
1. சூழல் பாதுகாப்பு சம்பந்தமான சட்டங்கள் இயற்றப்பட்டு
நாட்டினுள்ளும், நாடுகளுக்கு இடையேயும் அமுல்படு - த்தப்படல் வேண்டும்.
i. CFCs இன் பாவனையைத் தடை செய்தல்.
Environmental Pollution S N. Surendran & B.Babu
 

ii, புதிய தொழில் நுட்பமுறைகளை கண்டு பிடித்தல். உதார
ணமாக CFC க்கு H சேர்ப்பதன் மூலம் CFCஇன் உறுதித் தன்மையைக் குறைக்கலாம்.
V. CFC க்கு மாற்றீடான இரசாயன பொருளை உருவாக்குதல்.
V. N வளமாக்கிப் பிரயோகத்தைக் கட்டுப்படுத்துதல்.
wi. தூவிகளாகப் பயன்படுத்தப்படும், ஓசோன் படையைச்
சிதைக்கும் பீடை கொல்லிகளின் பாவனையைத் தடை செய்தல்.
Environmental Pollution S .N. Surendran & B.Babu

Page 36
அமில மழை (Acid Rain)
நீர்பகுப்பு
ஒட்சியேற்றம்
NO " அமில மழை
SO
தாவர இலைகள்
பாதிக்கப்படுவதால் ஒளித்தொகுப்பு குறையும்
வளர்ச்சி பாதிக்கப்படும்
1 ཚུལྷ༤ ཉོ་ཚུ༔ ཉོ་ཚུ༔ ༔
நீர்ச் சூழலின் அமில
த்தன்மை அதிகரித்தல்
2 − լ Օ6ծ01 \l Caஅகற்ற அமிலத் நிலக்கரி, தண்மையை ப்படுதல் எண்ணெய், பெறல் உயிர்திணிவு, கல் Ai”. தாவரங்களால் தகனமடைதல் குனறு உள்ளெடுக்கப்படுதல்
தொழிற்சாலை மயமாக்கலும், சுவட்டு எரி பொருட்களின்
பாவனையின் அதிகரிப்பின்
காரணமாகவும் எழுந்துள்ளதும்,
பொருளாதார அரசியல் அரங்கில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதுமான
சூழல் மாசாக்கலின் விளைவுகளில் ஒன்றே அமில மழை ஆகும்.
இயற்கையில் மாசாக்கலுக்கு உட்படாத வளிமண்டலத்தில்
கந்தகத்தைக் கொண்ட சேர்வைகள் ஒரு குறித்த அளவில் காணப்படும்.
Environmental Pollution
S N. Surendran & B. Babu |
 

சேதனப்பதார்த்தங்கள் பக்ரீரியாக்களின் செயற்பாட்டின் மூலம் சிதைவடையும் போதும், எரிமலைகள் வெடிக்கும் போதும் கந்தகச் சேர்வைகள் இயற்கையில் வெளிவிடப்படுகின்றன.
மனிதனின் செயற்பாட்டின் மூலம் தொழிற்சாலைச் சுற்றாடல் அதிகரிப்பதால், வளிமண்டலத்தை அடையும் கந்தகத் துணிக்கைகளின் அளவு அதிகரிக்கின்றது.
நிலக்கரி மற்றும் எண்ணெய் தகனமடையும் போது பெருமளவில் SO2 வெளிவிடப்படுகின்றது. அபிவிருத்தி அடைந்த நாடுகளில், குறிப்பாக ஐக்கிய அமெரிக்காவில் ஆண்டு ஒன்று க்கு 30 மில்லியன் தொன் SO2 வளிமண்டலத்துள் செலுத்தப் படுகின்றது.
கந்தகச் சேர்வைகளில் பிரதானமாக கந்தகவிரொட்சைட்டு (SO2) விரும்பத்தகாத, தீமையான விளைவுகளை ஏற்படுத்தும் வளி மாசாக்கியாகக் கருதப்படுகின்றது.
வளி மண்டலத்தில் SO2 இன் அளவு அதிகரிப்பதால், உடல் நலம் மாத்திரமன்றி, பெறுமதி மிக்க உடமைகள் கூட பாதிப்படைகின்றன. எல்லாத் தீமையான விளைவுகளும் SO2 ஆல் ஏற்படுத்தப் படுவன அல்ல. குறிப்பாக SO2 ஒட்சியேற்றத்துக்குட்படுவதால் தோன்றும் SO3 கூட பிரதான தீமை விளைவிக்கும் மாசாக்கியாக அமைகின்றது.தோற்று விக்கப்பட்ட SO3, நீர்த்துளிகளில் கரைவதால் சல்பூரிக்கமிலம்
உருவாக்கப்படுகின்றது.
SO, 十 HوO)( - HSO Os
SO, (g) * H.O. ബ H2SO4e
மழை நீரில் சல்பூரிக்கமிலம் காணப்படும் போது அது அமில மழை என்னும் தோற்றப்பாட்டுக்கு காரணமாக அமைகின்றது. நைதரசன் ஒட்சைட்டு ஒட்சியேற்றத்திற்கு உட்பட்டு தோற்றுவிக்கப்படும். NO2 பின்னர் O2 நீராவி என்பவற்றுடன்
Environmental Pollution SN. Surendran dB.Babu

Page 37
சேர்ந்து நைத்திரிக்கமிலத்தை தோற்றுவிக்கும். அத்துடன் பல்வேறு செயற்பாடுகளின் போது வெளி விடப்படும் காபன் துணிக்கைகள் ஒட்சியேற்றப்பட்டு நீராவியுடன் சேர்ந்து காபோனிக் கமிலத்தை தோற்றுவிப்பதன் மூலம் அமில மழையின் உருவா க்கத்தில் பங்கு கொள்கின்றன.
அமில வாயுக்கள் மற்றும் ஆவிப்பறப்புத் துணிக்கைகள் மழை நீருடன் இணையும் போதும் அமில மழை உருவாகின்றது. அமில வாயுக்களின் ஒட்சியேற்றத்தில் NH3, H2O2, O3 என்பன ஊக்கிகளாகத் தொழிற்படும்.
அமிலத் தன்மையை தோற்றுவிக்கும் சேர்வைகளாக i) SO2 ii) H2SO4 iii) H2S iv) HNO3 v) 601535 UT FGör SF'G) FLIG Vi) அமோனியம் உப்புக்கள vi) சேதன அமிலங்கள் (போமிக் அமிலம், அசற்றிக் அமிலம்) என்பன தொழிற்படுகின்றன. இயற்கையில், தூய மழை நீரின் pH 5.6 - 6 வரை வேறுபடும். அமில மழையின் pH 5 இலும் பார்க்க குறைவானது. சில பிரதேசங்களில் அமில மழையின் pH 4 - 4.5 வரை வேறு படுகின்றது.
அமில வாயுக்களை தோற்றுவிக்கும் தொழிற்சாலை மையங்கள் அல்லது சக்தி பிறப்பாக்கும் நிலையங்களுக்கு அருகில் திண்ம அமிலப் படிவும் இடம் பெறலாம்.
SO2 வை உருவாக்குவதில் பங்கு கொள்ளும் தோற்றுவாய்கள்
Domestic
Others 13%
Power stations 38 Οι Industry
60% SSS 18%
Environmental Pollution S N. Surendran & B.Babu
 
 
 
 

அமில மழையின் பாதிப்பு, அதனை தோற்றுவிக்கும் தோற்றுவாய்கள் அமைந்துள்ள இடத்திலிருந்து பல நூறு மைல்களுக்கு அப்பாலும் ஏற்படலாம்.
அமில மழையால் ஏற்படும் தீமையான விளைவுகள்.
i. மனிதனில் சரும எரிவு ஏற்படுவதுடன், சுவாசத்தொகுதியின் மென்சவ்வுகள், மேலணிக்கலங்கள் பாதிக்கப்படுதல் போன்ற உடல் நலத்துக்கு தீமையான விளைவுகள் ஏற்படும்.
i. தாவரங்களின் பகுதிகள், குறிப்பாக இலைகள் பாதிக்கப் படுவதால்,தாவரவளர்ச்சி குன்றும். இதனால், விவசாய உற்பத்தி வீழ்ச்சியடையும். காட்டுச் சூழல் தொகுதி பாதிக்கப் படுவதால், இயற்கை வட்டங்கள்குழம்புவதுடன், வன விலங்கு களும் பாதிப்படையும்.
i. மண் வாழ் அங்கிகள் பாதிப்படையும். குறிப்பாக பக்ரீரியா, பங்கசு போன்ற நுண்ணங்கிகள் பாதிப்படையும் போது அல்லது அவற்றின்எண்ணிக்கை குறையும் போது சேதனப் பதார்த்தங்களின் பிரிந்தழியும் வேகம் குறையும். இதனால் சேதனப் Nதார்த்தங்களின் தேக்கம் அதிகரிக்கும்.
iv. அமிலப் படிவுகள், அமில மழை என்பன மண்ணின் அமில காரத்தன்மையை மாற்றுவதுடன், மழை நீரோட்டத்தின் மூலம் போசணைப் பதார்த்தங்கள் மண்ணிலிருந்து அகற் றப்படுவதால், மண்ணின் வளம் குன்றும். மண்ணில் அலு மினியம் அயன், சல்பர் அயன் போன்றவற்றின் அளவு அதிகரிக்கும். கல்சியம் போன்ற அயன்கள் நீரோட்டத்தின் மூலம் மண்ணில் இருந்து அகற்றப்படும். பூமியின் மேற் பரப்பில் காணப்படும் சிலிக்கேற்றுக்கள் மற்றும் கனியங்கள் அமிலத் தன்மை காரணமாக அவற்றின் தனித்துவத்தை இழக்கின்றன.
V. நீர் நிலைகளில் காணப்படும் நீரின் pH வீச்சு 6.5 - 8.5 ஆகும். நீர் நிலைகளின் அமிலத்தன்மை அதிகரிப்பதனால், நீர் வாழ் அங்கிகள் இறக்கின்றன. நீரின் pH4 இலும் குறையும்
S.N. Surendran & B.Babu
Environmental Pollution

Page 38
ii.
போது, எல்லா முள்ளம் தண்டுள்ள பிராணிகளும் பெரும் பாலான முள்ளம் தண்டற்ற விலங்குகள், நுண்ணங்கிகள் என்பனவும் அழிக்கப்படும். நீர் நிலைகளின் அமிலத் தன்மை அதிகரிக்கும் போது, மீன்களின் பூக்கள் பாதிப் படையும். அமில மழையில் காணப்படும் சல்பேற்று அயன்கள், அலுமினியம் அயனுடன் சேர்ந்து அலுமினியம் சல் பேற்றைத் தோற்றுவிக்கும். இச் சேர்வை பூக்களில் காணப்படும் சீதத்துடன் திரள்வதால், மீன்களின்
வாயுப்பரிமாற்றம் பாதிப்படையும்.
கட்டடப்பொருட்கள்,உலோகங்கள் என்பன அரிப்புக்குள் ளாகின்றன. இதனால் கட்டடங்கள், பாலங்கள் என்பன பாதிப்படையும். குறிப்பாக, சுண்ணாம்புக் கல்லால் ஆன கட்டடங்கள், நினைவுச் சின்னங்கள், ஸ்தூபிகள் என்பன சேதமடைகின்றன.
தீர்வுகள் அல்லது தடுப்பு நடவடிக்கைகள்
அமில வாயுக்களை வெளியேற்றும் தோற்றுவாய்களின் செயறபாட்டை குறைத்தல் அல்லது கட்டுப்படுத்துதல். குறிப்பாக, குறைந்த அளவில் கந்தகத்தைக் கொண்டிருக்கும் எண்ணெயை சந்தைப்படுத்துதல், நவீனதொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிலக்கரியை வாயு நிலைக்குரிய எரிபொருளாக மாற்றுகின்ற போது கணிசமான அளவு கந்தகம் அகற்றப் படும். சுண்ணாம்புக்கல் படுக்கையில் நிலக்கரியை எரிக்கும் போது கந்தகம் அகற்றப்படுவதால், கந்தக வீரொட்சைட்டு உருவாக்கல் குறைக்கப்படும்.
சக்தி பிறப்பாக்கும் நிலையங்களில் இருந்து வெளியேறும் SO2, பல்வேறு வழிகளில் அகற்றப்படுகின்றது. இச் செயல் முறை " எரிபொருள் வாயுவில் இருந்து கந்தகத்தை நீக்கல் ” எனப்படும். பொதுவாக காரக்கரைசல்கள் பய ன்படு த்தப்பட்டு, சூழலில் பாதிப்பை ஏற்படுத்தாத, கந்தகத்தை கொண்ட வேறு சேர்வைகளாக மாற்றுவதன் மூலம் மேற் கொள்ளப்படுகின்றது. தோற்றுவிக்கப்படும் கந்தகச் சேர்வை வேறு பொருட்களின் உற்பத்தியில் பயன்படுத்தப்படலாம்.
Environmental Pollution
S N. Surendran d& B.Babu
 

a) மக்னீசியம் ஒக்சைட்டை பயன்படுத்துதல்.
H,O MgO + SO2 --> MgSO3
Δ ഖ", "lര= ' மீள் ஒட்டப்படுதல் MgO sp,
தொழில் முறை ரீதியான H2SO4 இன் உற்பத்தி
b) தூளாக்கப்பட்ட சுண்ணாம்புக்கற்களைப பயன்படுத்துதல்.
e- e
iii.
எரி வாயு% கந்தகம் 9. ΘδώΤΘδOH Π. Ο
நீக்கப்பட்டது
சக்தி - கந்தகத்தை புகை
g5¡réir -> JG3i 1ff5á) பிறப்பாக்கும் வடிக்கும் அகற்றும் நலையம் பகுதி நிலையம்
[ . . م] <ے۔ ا|
பிளாஸ்ரர் CaO + SO2 -> CaSO3 சீமெந்துதயாரிப்பு
CaCO3 + SO2 -> CaSO3 + CO2
2CaSO3 + O2 + 4H2O -> 2CaSO4 : 2H2O ( gligio) சுவட்டு எரி பொருட்கள் மூலம் சக்தி பிறப்பிக்கும் நிலைய ங்களுக்கு பதிலாக, மீளப்பெறக் கூடிய சக்தி மூலங்களைப் பயன்படுத்துதல். i. (5sful & 55 (Solar Energy) ii. 960 audi F dig, (Wave Power) i. காற்றுச் சக்தி (Wind Power)iv. புவி வெப்ப சக்தி (Gothermal Energy) குறிப்பாக இலங்கையில் அனல் மின்
நிலையங்களை நிறுவும் போது அவற்றின் சூழல் பாதிப்புகளை மதிப்பிடுதல் அவசியமாகும்.
Environmental Pollution
S N. Surendran & B.Babu

Page 39
iv. சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயற்படும் தொழிற்சாலை நிர்வாகத்துக்கு எதிராக சட்ட நடவடி க்கைகளை மேற்கொள்ளல்.
V. தீமையான விளைவுகள் மற்றும் பாதகமான நடவடிக்கைகள்
பற்றி மக்களுக்கு அறிவுறுத்துதல்
S N. Surendran & B.Babu
Environmental Pollution
 

கதிர் வீசலால் சூழலில் ஏற்படும் தீமையான விளைவுகள். (Harmful Effects By Radiation)
அறிவியல் மறுமலர்ச்சியும், நவீன தொழில் நுட்ப முறைகளும் மனித குலத்தின் மேம்பாட்டிற்கு வழி வகுத்தாலும் , அவை பாதகமான விளைவுகளை சூழலில் ஏற்படுத்துவதற்கு மறந்து விடவில்லை. அவ் விளைவின் ஒரு அங்கமாக அணுப் பரிசோதனைகள் மேற்கொள்ள ப்பட்டதுடன் அணு உலைகளும் உருவாக்கப்பட்டன.
அணுசக்தி உருவாக்கலின் போது உருவாக்கப்படும் கதிர் வீசலுக்கும், இயற்கையில் காணப்படும் கதிர்த் தொழிற்பாட்டு மூலகங்களிலிருந்து வெளியேறும் காலலுக்கும் உயிரினங்கள் முகம் கொடுக்கின்றன.
மனிதன் வாழ் நாள் முழுவதும் சிறியளவில் அயனாக்க கதிர் வீசலுக்கு உள்ளாகின்றான். எடுத்துக்காட்டாக, அண்ட வெளி கதிர்கள் (Cosmic rays ) இயற்கையில் காணப்படும் யுரேனியம் (Uranium ) ரேடியம் (Radium) போன்ற மூலகங்களின் கதிர் வீசல் என்பன அமைகின்றன. இது மாத்திரமன்றி மனித உடலில் கதிர்ப்புச் சமதானிகள் "K,"C இயற்கையாகக் காணப்படுகின்றன.
இயற்கையான கதிர்ப்பிலும் பார்க்க மனிதனால் உருவாக் கப்பட்ட பொருட்களிலிருந்தான கதிர் வீசல் இரு மடங்காக வெளிக்காட்டப்படும்.
உதாரணம்; மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் கதிர் இயந்திரம்.
பொஸ்பேற்று வளமாக்கிகள், தொலைக்காட்சி பெட்டி, அணுஆயுதங்கள், மற்றும் அணு உலைக் கசிவுகளில் இருந்து வெளியிடப்படும் கதிர்வீசலே உயிரினங்களுக்கு பாரிய தீமை விளைவிப்பனவாக அமைகின்றன.
S N. Surendran & B.Babu
Environmental Pollution

Page 40
1986ம் ஆண்டு ஏப்ரல் 26ம் திகதி அன்றைய சோவியத்து ஒன்றியத்தின் செர்நோபில் (Chernobyl) என்னுமிடத்தில் அமைந்திருந்த அணு நிலையத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக உருவான அணு கசிவின் விளைவாக, ஆயிரக்கணக்கான மக்கள் கதிர்வீச்சின் தாக்கத்ததுக்கு உட்பட்டதோடு, பல லட்சம் மக்கள் விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இதன் விளைவு பின்னர் சுவீடன் நாட்டிலும் உணரப்பட்டது.
5(D5 56T6 (Nucler fission) 505 g (5d 56 (Nuclear fusion) gair GLITg, Glau afGupjlb alpha (o) beta (3) gama(c) 59îrgian 2.uit ră,3 கொண்டவை. அத்துடன் ஊடுதிறன் மிக்கவை. இதனால், இக் கதிர்கள் மூலக்கூறுகளை அயனாக்குவதுடன், அவற்றின் தொழிற் பாட்டையும் ஊக்குவிக்கின்றன. உருவாக்கப்படும் சுயாதீன மூலிகங்கள், உயிரியல் சேர்வைகளுடன் தொடர்ச்சியான இரசாயனத் தாக்கத்துக்கு உட்படுவதால், உயிரியற் கலங்களின் தொழிற்பாடு பாதிப்படைகின்றது.
கதிர்த் தொழிற்பாட்டுத் தோற்றுவாயின் உயிரியல்ரீதியான விளைவுகள் பின்வரும் காரணிகளில் தங்கியிருக்கும். i. கதிர் வீசல் கொண்டிருக்கும் சக்தி.
சக்தி அதிகரிக்க சேதம் உயர்வாக இருக்கும்.
i. கதிர் வீசலின் ஊடுருவும் திறன்.
ஏற்படும் பாதிப்பு கதிர்வீச்சு துணிக்கைகளினதும், கதிர்களினதும் ஊடுருவும் திறனில் தங்கியிருக்கும்.
i. கதிர் வீசலின் அயனாக்கும் ஆற்றல்.
உயிருள்ள இழையங்களில் காணப்படும் மூலக்கூறுகள், கதிர் துணிக்கைகளால் அயனாக்கப்படும் தன்மை பெருமள வில் வேறுபடும். துணிக்கைகள் அதி ஊடுருவும் திறன் கொண்டிருந்தாலும், குறைந்தளவு அயனாக்கத்தில் ஈடுபடும். மாறாக, துணிக்கைகள் குறைந்த ஊடுருவும் திறன் கொண் டிருந்தாலும் பெருமளவில் அயனாக்கத்தில் ஈடுபடும். இதனால், துணிக்கைகளை காலும் புளூட் டோனியம் (Plutonium) போன்ற கதிர் வீச்சு மூலகங்கள் அதிக சேத த்தை ஏற்படுத்துகின்றன.
Environmental Pollution S N. Surendran & B.Babu
 

iv. கதிர் வீச்சு தோற்றுவாயின் இரசாயன இயல்பு.
கதிர் வீச்சு மூலகத்தினால் உருவாக்கப்படும் சேதம் , கதிர் வீச்சு மூலம் உடலில் தேங்கி நிற்கும் காலத்தில்
85 90 தங்கி இருக்கும். உதாரணமாக, K Sr என்பன
36 38 B துணிக்கைகளை உருவாக்கு கின்றன.ஆனால், கிரிப்ரோன் (Krypton) சடத்துவ வாயுவாக இருப்பதனால் இரசாயனத் தாக்கத்தில் ஈடு படாது. மறு புறத்தில் துரொந்சியம் (Strontium) இரசாயன ரீதியில் கல்சியத்தை ஒத்த
தாகையால் என்பு மச்சையில் செறிவாகின்றது.
Rem என்ற அலகு மூலம் கதிர்த் தொழிற்பாட்டின் அளவு குறிக்கப்படும். உதாரணமாக கதிர் தொழிற்பாடு 500rem ஆக இருப்பின் இறப்பு ஏற்படும்.
கதிர் தொழிற் பாட்டின் மூலம் உயிரங்கிகளில் இரு வகையான சேதங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.
a) அங்கியின் உடலில் ஏற்படுத்தப்படும் சேதம்.
b) அங்கியின் பிறப்புரிமை அமைப்பில் ஏற்படுத்தப்படும் சேதம்.
உயிரி ஒன்று தனது வாழ்நாளில் பெற்றுக்கொள்ளும் கதிர் வீசல் காரணமாக அவ் அங்கியின் உடலில் ஏற்படும் சேதம் அவ் அங்கியில் மட்டும் காட்டப்படுமாயின் அது" உடற் சேதம்” (Somatic damage) எனப்படும். கதிர் வீசலின் அளவு உயர்வாக இருப்பின் இறப்பு நேரிடும். குறைவாகக் காணப்படும் பட்சத்தில் நீண்ட காலத்தின் பின் சேதம் வெளிக்காட்டப்படும். அங்கியில் கதிர் வீசல் காரணமாக, அவ் அங்கியின் பிறப்புரிமை அலகில் ஏற்படும் சேதம் அல்லது மாற்றம் காரணமாக தோற்று விக்கப்படும் பாதிப்பு, அவ்அங்கியின் சந்ததியிலும் காட்ட ப்படுமாயின் அது " பிறப்புரிமைச் சேதம்” ( Genetic damage) எனப்படும்.
கதிர் வீசல் காரணமாக என்பு மச்சை, குருதித் தொடுப்பு இழையம், நிணநீர் முடிச்சுக்கள் என்பன விரைவாகப் பாதிப்படையும்.
S N. Surendran & B.Babu
Environmental Pollution

Page 41
1. புற்று நோய் ;
கதிர்த் தொழிற் பாட்டுத் துணிக்கைகள் உடலில் செறிவடையும் போது, அவை கலங்களின் பெருக்கத்தை அதிகரிப்பதனால் அல்லது சில கலங்களின் இறப்பைத் துண்டுவதன் காரணமாக புற்று நோய் உருவாக்கப்படுகின்றது. உதாரணங்களாக; a) அணுக்கருவெடிட்யின்போது உருவாக்கப்படும் கதிர்தொழிற்பாட்டு lodine - 131 வளிமண்டலத்தை அடைந்து, பின்னர் தாவரங்கள் மீது படிவடைகின்றது. இத தாவரங்களை உணவாக உட்கொள்ளும் கால் நடைகளில் இருந்து பெறப்படும் பாலுணவுகள் மூலம் இக் கதிர்த் தொழிற்பாட்டு மூலகம் மனிதனில் தைரொயிட் சுரப்பியில் செறிவடைகின்றது. இதனால், தைரொயிட் சுரப்பியின் வளர்ச்சி பாதிப்படைவதுடன், தைரொயிட் புற்றுநோயும் ஏற்படுத்தப்படுகின்றது.
b) துணிக்கைகளைக் காலும் துரொஞ்சியம் இரசாயன ரீதியில் கல்சியத்தை ஒத்தது ஆகையால், அது என்பு மச்சையில் செறிவடையும். இது வெண்கலங்களின் (Whitecells) எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் "லியூகேமியா" (Leukemia) நிலையை ஏற்படுத்தி புற்று நோயை தோற்றுவிக்கின்றது.
i. கதிர் வீசல் காரணமாக பரம்பரை இயல்புக்குரிய காரணிகள் (DNA, நிறமூர்த்தம், பரம்பரையலகு) பகுதியாக அல்லது பூரணமாக சேதப்படுத்தப்படுவதனால் உருவாகும் விளைவு, அல்லது விகாரம் சந்ததிகளுக்கு கடத்தப்படும்.இதனால், கதிர்த் தாக்கத்துக்கு உட்பட்ட வரின் சந்ததியினர் தோற்றுவிக்கப்பட்ட பாதகமான விளைவை வெளிக்காட்டுவர். கதிர் தொழிற்பாட்டு துணிக்கைகள் வளர்ச்சியை பாதிப்ப தனால் கர்ப்பம் அடைந்த தாய்மார் கதிர்த் தாக்கத்துக்கு உட்படும் போது, வளரும் சிசுவும் பாதிக்கப்படுவதால், அங்கவீனமான குழந்தைகள் பிறக்கின்றன.
i. இனப்பெருக்ககலங்கள் இலகுவில் கதிர் வீசலால் பாதிப்ப
டைவதால் மலட்டுத் தன்மை ஏற்படுகின்றது.
பீடைக்கட்டுப்பாட்டில் மலடாக்கல் மூலம் பூச்சி பீடைகள் கட்டுப்படுத்த ப்படுகின்றன.இம்முறையில் கதிர்ப்புதுணிக்கைகள்(°Co)பயன்படுத்தப்பட்டு பூச்சிகள் மலடாக்கப்படுகின்றன.
S N. Surendran & B.Babu
Environmental Pollution
 

iv. கடலுக்கடியில், மற்றும் நிலத்திற்கடியில் அனுப்பரிசோ தனைகள் மேற் கொள்ளப்படுவதாலும் அணுகழிவுகள் புகைக்கப்படுவதாலும் (அணுக்கழிவுகள் ஈயப் பாத்திர ங்களில் மூடி புதைக்கப்படுகின்றன), கடல்வாழ் விலங்குகள் தாவரங்கள் என்பன கதிர் வீசலுக்கு உள்ளாவதால், அவ் அங்கிகள் பாதிப்படைவது மாத்திரமன்றி அவற்றின் நுகரி களும் பாதிப்படைகின்றன. அதே வேளை, போசணக் குறைபாடுள்ள மணி, நீர், என்பன வெளி விடப்படும் கதிர் வீச்சு சமதானிகளை உள்ளெடுப்பதால் அச் சூழலில் கதிர் வீசல் செறிவடைகின்றது.
கதிர்வீசலின் சேதத்தை தடுத்தல்/ கட்டுப்படுத்துதல்.
இன்றைய அணுயுகத்தில் பல்வேறு தேவைகளுக்காக அணுச்சக்தி பயன்படுத்தப்பட்டாலும், அணுக்கதிர் வீசல் காரணமாக பாதகமான விளைவுகளும் ஏற்படுகின்றன.
விண்வெளிபயணம் மற்றும் தொழிற்சாலைகளின் செயற்பாட்டிற்கு சக்தி வழங்கும் தோற்றுவாயாக அணுச்சக்தி விளங்குகின்றது. மருத்துவத் துறையில் கதிர் வீச்சு மூலம் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றது. உதாரணமாக, புற்று நோய்ச் சிகிச்சையில் புற்று நோய்க்கு காரணமான கலங்கள் குறித்தளவு கதிர் வீசலுக்கு உள்ளாக்கப்படுகின்றது. இங்கு (°Co, * St, °1) போன்ற கதிர் தொழிற்பாட்டு மூலகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஒரு புறத்தில் அதிக நற் பயன்களைத் தந்தாலும் மறு புறத்தில் தீமையான விளைவுகளையும் ஏற்படுத்துவதால் சேதத்தைக் கட்டுப் படுத்த வேண்டிய தேவை உருவாகின்றது. இதற்காக,
i. அணு உலைகள் மற்றும் அணுச்சக்தி நிலையங்களில் இருந்து அணுக் கசிவு ஏற்படாதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ளல்.
i. எந்த உயிரினங்களுக்கும் தீமை ஏற்படாத வகையில் அணுப் பரி சோதனைகளை நடாத்தும் அதே வேளையில், அணுக்கழிவுகள் பாதுகாப்பான முறையில் அகற்றப்படுதல் வேண்டும்.
S N. Surendran & B.Babu
Environmental Pollution

Page 42
iii.
iv.
vi.
இயன்றளவு கதிர்த் தொழிற்பாட்டு மூலகங்களின் பயன்பாட்டைக் குறைத்தல்.
இன்று மனித உயிரிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் அணு ஆயுதங்களின் உற்பத்தியை பூரணமாக தடைசெய்வதுடன், உருவாக்கப்பட்ட அணு ஆயுதங்களைச் செயலிழக்கச் சர்வதேசரீதியில் நடவடிக்கைகளை எடுத்தல்.
உணவுப்பொருட்களை பழுதடையாது பேண கதிர் வீசல் பயன்படுத்தப்படுகின்றது. கதிர் வீசலின் அளவு உயர்வாக இருக்கும் போது அது தீமையான விளைவுகளை ஏற்படு த்துவதால், கதிர் வீசலுக்கு உட்பட்ட பொருட்களின் பாவ னையைத் தடை செய்தல்.
கதிர் வீசலால் ஏற்படும் பாதகமான விளைவுகளை மக்களுக்கு எடுத்துரைத்தல். -
Environmental Pollution
S N. Surendran d& B.Babu
 

காடழித்தல் (Deforestration)
இயற்கைச் சூழலை பேணும் ஒரு சூழல் தொகுதியாக காட்டுச் சூழல் அமைவதுடன், ஒரு நாட்டின் அல்லது ஒரு பிரதேசத்தின் கால நிலையை தீர்மானிக்கும் இயற்கை காரணியாக அமைகின்றது.
வனப்பிரதேசம், வனத்துடன் தொடர்பற்ற தேவைகளின் நிமிர்த்தம் மாற்றப்படுதல் அல்லது அகற்றப்படுதல் வனமழித்தல் அல்லது காடழித்தல் எனப்படும்.
இலங்கையில் இயற்கை காடுகள் காணப்படும் நிலப்பிரதேசத்தின் விஸ்தீரணம் 1956 - 1961 ஆண்டு காலப் பகுதியில் 2.9 மில்லியன் ஹெக்ரெயர்களாகக் காணப்பட்டது. ஆனால், 1982-1985 ம் ஆண்டு காலப்பகுதியில் அது 1.75 மில்லியன் ஹெக்ரெயராகக் குறைந்திருந்தது. அதாவது, இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 24.9 சத வீதம் இயற்கைக் காடுகளாகக் காணப்பட்டது. 1989 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின் படி மொத்த நிலப்பரப்பில் 24 சத வீதம் இயற்கைக் காடுகளாகக் காணப்பட்டது. இன்று, இலங்கையில் ஒரு வருடத்திற்கு 40,000 -50 000 ஹெக்ரெயர் விஸ்தீரணத்திலுள்ள காடுகள் அழிக்கப்படுகின்றன. மனிதனின் செயற்பாடுகளே காடுகள் அழிக்கப்படுவதற்கு பிரதான காரணிகளாக அமைகின்றன. འ་
இலங்கையில் இயற்கைக் காடுகளின் பரம்பல்
凶%份f
Natural Föfest
so 900 1958 1983 1990
Year
S N. Surendran & B.Babu
Environmental Pollution

Page 43
காடுகள் அழிக்கப்படுவதன் பிரதான நோக்கங்கள்
i.
ii.
iii.
iv.
உணவு உற்பத்தியை அதிகரிக்க மேலதிக விளை நிலங்கள் தேவைப்படுவதால், காடுகள் அழிக்கப்பட்டு பயிர்ச்செய்கை மேறகொள்ளப்படுகின்றது. குறிப்பாக சேனைப் பயிர்ச்செய்கை காரணமாக பெருமளவு காடுகள் அழிக்கப்படுகின்றன.
குடியேற்றத் திட்டங்கள், வீடமைப்புத் திட்டங்களுக்காக காடுகள் அழிக்கப்பட்டு அங்கு நிர்மாண வேலைகள் மேற் கொள்ளப்படுதல்.
வெட்டு மரங்கள் பெறுவதற்காகவும் எரி பொருட் தேவை க்காகவும் காட்டுமரங்கள் பயன்படுத்தப்படுதல். இலங்கை யில் எரிபொருட்தேவைக்கு பயன்படுத்தப்படும் மரங்களில் 25% காட்டு மரங்களிலிருந்து பெறப்படுகின்றது.
நெடுஞ்சாலைகள், போக்குவரத்து பாதைகள் உருவாக்கு வதற்காக, குறித்த காட்டுப்பிரதேசங்கள் அழிக்கப்படுதல்.
தொழிற்சாலைகள் கைத் தொழிற்பேட்டைகள், நீர் சேமிப்பு, நீர்மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதற்காகக் காடுகள் அழிக்கப்பட்டு நிலங்கள் பெறப்படுதல்.
வன வளத்தைப் பாதிக்கும் ஏனைய காரணிகள்;
(i) இயற்கையாகத் தன்னைப் பேணும் மட்டத்திலும் பார்க்க,
உயர்வான பாவனை.
(ii) மேய்ச்சல் நிலமாகவும், விலங்குகளின் உணவுத் தேவைக்கும்
பயன்படுத்தப்படுதல்.
(i) பூச்சி பீடைகளினதும் நோய்களினதும் தாக்கம்.
(iv) சூறாவளி, வெள்ளப்பெருக்கு, காட்டுத் தீ போன்ற இயற்கை
அழிவுகள்
(v) தாவர இலைகளைப் பாதிக்கும் இரசாயனப் பொருட்களின்
f' 65 65)6ò .
Environmental Pollution
S N. Surendran d& B.Babu
 

காடுகள் அழிக்கப்படுவதால் ஏற்படும் பாதகமான விளைவுகள்.
காடுகள் சூரிய வெப்பத்தின் அளவைக் குறைப்பதுடன், வளிமண்டல ஈரப்பதனை குறித்த அளவில் பேணுகின்றன. அது மாத்திரமன்றி, கால நிலைகளைத் தீர்மானிப்பதிலும், இயற்கை வட்டங்களைப் பூரணப்படுத்துவதிலும் காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
1. காடுகள் அழிக்கபடும் போது இயற்கை வட்டங்கள் பாதிக்க
ப்படுவது மட்டு மன்றி மழைவீழ்ச்சியும் குறைகின்றது.
i. தாவரங்கள் அழிக்கப்படுவதால் CO2 வாயுவின் அளவு
வளிமண்டலத்தில் அதிகரிக்கும். இது பசியவீட்டு விளைவை ஏற்படுத்துவதால் வரட்சியான கால நிலை தோன்றும்.
i. வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை அழிவுகள் ஏற்படுகி ன்றன. வெள்ளப் பெருக்கு காரணமாக மண்ணரிப்பு ஏற்படுவதுடன், வளமான மண் எடுத்துச் செல்லப்பட்டு மண்ணின் வளம் குன்வதுடன், அருகிலுள்ள நீர் நிலை களை அடையும்போது நீர் நிலைகள் மாசடைகின்றன.
iv. நீர்ப்பாசனக் காண்கன்களினதும், நீர்த் தேக்கங்களினதும் வாழ்வுக்காலம் குறைக்கப்படுவதுடன், ஒழுங்கற்ற நீர் ஒட்ட ங்களும், இயற்கை ஊற்றுக்கள் வற்றிப் போதலும் ஏற்படும்.
V. காடுகள் காற்றின் வேகத்தைக் குறைப்பதுடன், ஒலி மாசா
க்கிகளின் அளவையும் கட்டுப்படுத்துகின்றன. கரையோர வனங்கள் அழிக்கப்படும் போது காற்றின் மூலம் மண் பெருமளவில் எடுத்துச் செல்லப்படும்.
Vi. இயற்கையான காட்டுச் சூழற் தொகுதியில் பேணப்படும் இயற்கைச்சமநிலை குழம்புகின்றது. இது பல உயிரினங்களைப் பாதிக்கின்றது.
காட்டுச் சூழற் தொகுதி உயிரியற் பன்மையையும் (Biological diversity) Lípů L inflaOpuDÜli Lu GõT GOLDGOpuuuq tio (Genetic divercity) பேணிப்பாதுகாக்கின்றது. காடுகள் அழிக்கப்படுவதால் விலங்கியற் பன்மை (Animaldiversity) பெரிதும் பாதிக்கப்படும். அதாவது காட்டுச் சூழல் பல்வேறு வகையான உயிரிகளையும் பேணிப்பாதுகாக்கின்றது.காட்டுச் சூழல் அழிக்கப்படும்
S .N. Surendran & B.Babu
Environmental Pollution

Page 44
போது பல உயிரினங்கள் அழிவதுடன் சில தாவர, விலங்கினங்கள் பூரணமாக பூமியிலிருந்து அற்றுப் போகின்றன. குறிப்பாக ஓரிடத்து இனங்கள் (Endemic Species) அழியும் போது அச் சூழல்தொகுதி தனது பல் லினத் தன்மையை இழக்கின்றது. Vi. காடுகளழிக்கப்படுவதால் பல வன விலங்குகள் தமது இயற்கை வாழ்விடங்களை இழக்கின்றன. இதன் காரணமாக, வன விலங்குகள் பாதிக்கப்படுவதுடன், பல இனங்கள் அற்றுப்போகின்றன. குறிப்பாக, சேனைப் பயிர்ச்செய்கை காரணமாக காடுகள அழிக்கப்படுவதால் யானைகள் தமது வாழிடத்தை இழக்கின்றன. இதனால், இலங்கையில் இன்று யானைகள் அருகிவருகின்றன. அண்மையில் பெறப்பட்ட தரவுகளின் படி இலங்கையில் ஏறத்தாள 3,000 யானைகளே வாழ்கின்றன. Vi. காடுகளின் கட்டமைப்பும் ஆக்கக் கூறுகளும் அளவியல் ரீதியில் மாற்றமடையும் போது காடுகள் அவற்றின் தனித்து வத்தையும் பெறுமதியையும் இழக்கின்றன.
காடுகளைப் பேணுதல்
காடுகள் இயற்கை வளங்களாகக் கருதப்படுவதால், அவற்றைத் தொடர்ந்து பேணுவதற்கு நிலையான திட்டங்கள் அமுல்ப்படுத்தப்படுதல் வேண்டும்.
குறிப்பாக, மனிதனின் செயற்பாடுகள் காடுகள் அழிவதற்கு காரணமாக அமைவதால் சமுதாயத்தின் சகல மட்டத்திலும் காடு அழிப்பதால் ஏற்படும் தீமையான விளைவுகளை எடுத்துரைப்பதுடன்,காடுகளைப் பேணுவது ஒவ்வொரு மனித னதும் கடமை என்பது நன்கு உணர்த்தப்படுதல் வேண்டும்.
மனிதனின் தீமை விளைவிக்கும் செயற்பாடுள் கட்டுப்படுத்தப்படுதல் வேண்டும் அல்லது தடுக்கப்படுதல் வேண்டும். குறிப்பாகச் சேனைப் பயிர்ச்செய்கைக்கும், வெட்டு மரங்கள் பெறுவதற்கும் , எரி பொருட் தேவைக்கும் மரங்கள் வெட்டப்படுதல் கட்டுப்படுத்தப்படுதல் அவசியமாகும்.
Environmental Pollution S .N. Surendran & B.Babu
 

தேசியரீதியில் சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு, முன்னனுமதி பெற்ற பின்னரே இப்படியான செயற்பாடுகளில் ஈடுபட அனுமதி அளித்தல் வேண்டும்.
காடுகள் அருகிச் செல்வதைக் கட்டுப்படுத்துவதற்கு, சுற்றுச் சூழற் பாதுகாப்பு நிறுவனங்கள் மீள் வனமாக்கலை (Aforestation) ஊக்குவிப்பதுடன், சில பிரதேசங்களை வனப் பாதுகாப்பு வலையங்களாகப் பிரகடனப்படுத்துவதன் மூலம், வனங்களை மாத்திரமன்றி வன விலங்குகளையும் பேணக்கூடியதாக இருக்கும். இலங்கையில் மீள் வனமாக்கல் ஆண்டுக்கு 10,000 - 15,000 ஹெக்ரேயர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படுகின்றது.
இலங்கையின் பருமனைக் கருத்தில் கொள்ளும் போது காடழித்தலின் அளவு மிக உயர்வாகக் காணப்படுகின்றது வறுமையின் காரணமாக விவசாயம் செய்ய வேண்டிய அவசியம் (இலங்கையில் 70% மக்கள் விவசாயம் செய்தலுடன் தொடர்புடையவர்கள்), மற்றும் சனத்தொகைப் பெருக்கம் என்பன முக்கிய பங்கு வகிப்பதால், இலங்கையின் சமூக பொருளாதார நிலை காடழித்தலுடன் தொடர்புற்றுக் காணப்படுகின்றது. இதனால் சமுக பொருளாதார மேம்பாட்டுடன் இணைந்த வனப்பாதுகாப்புத் திட்டங்கள் அமுல் படுத்தப்படுதல் அவசியமாகும்.
Environmental Pollution S N. Surendran & B.Babu

Page 45
சூழல் மாசடைதலைக் கட்டுப்படுத்தலின் அவசியமும் நடவடிக்கைகளும் (Control Measures)
எதிர் காலத்தில் பூமியில், மனிதனின் சஞ்சாரத்துக்கு சவாலாக அமைந்துள்ள சூழல் மாசடைதல், இன்று பொருளாதார, அரசியல் களங்களில் முக்கிய இடம் பிடித்துள்ளது.
பூமியில் தொடர்ந்தும் உயிரினங்கள் வாழ வேண்டுமாயின், சுற்றாடலை பாதுகாக்க தகுந்த பாதுகாப்புத் திட்டங்கள் நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியத்தை இன்று அனை த்து நாடுகளும் உணரத் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக சர்வதேச ரீதியில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு சம்பந்தமான கருத்தரங்குகளும், ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
தொழில்முக நாடுகளின் செயற்பாடும், குறித்த வகைப் பொருட்களின் உற்பத்தியும் அவற்றின் நுகர்வும், சர்வதேசரீதியில் குந்தகம் விளைவிப்பவையாக அமைகின்றன. இதனால் இன்று, வளர்ச்சி அடைந்த நாடுகள் மாத்திரமன்றி, வளர்முக நாடுகள் கூட பல்வேறு சூழல் பாதுகாப்புத் திட்டங்களை அமுல்படுத்த வேண்டிய இக்கட்டான சூழ் நிலையில் உள்ளன.
மீளப்பெறக் கூடிய, மீளப்பெற முடியாத இயற்கை வளங்களின் பாவனையைக் கட்டுப்படுத்தி, அவ்வியற்கை வளங்களைப் பேணுவது மாத்திரமன்றி, இயற்கை வளங்களின் அதிக நுகர்வு காரணமாக ஏற்படும் சூழல் பிரச்சனைகள் இனம் காணப்பட்டு, அதற்கான தீர்வுகள் முன்வைக்கப்படுதல் வேண்டும்.
சூழல் பாதிப்புக் காரணமாக அழிந்து செல்லும் உயிரினங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இயற்கை சரணா லயங்களை அமைப்பதுடன், வனப்பாதுகாப்புச் சட்டங்கள் உருவாக்கப்பட்டு, தகுந்த முறையில் அமுல்படுத்தப்பட வ்ேண்டும் நாடுகள் ஒவ்வொன்றும் தமக்குரிய இனங்களைப் பேணிப் பாதுகாப்பதுடன் உயிரினங்களின் பல்லினத் தன்மையை
S N. Surendran & B.Babu
Environmental Pollution
 

பேணுவதற்கு நடவடிக்கைகளை எடுத்தல் அவசியமாகும்.
தொழிற்சாலை மயமாக்கலும், விவசாய அபிவிருத்தியும் சூழல் மாசாக்கலில் பிரதான பங்கு வகிப்பதால், எந்த ஒரு திட்டமோ அல்லது செயற்பாடோ நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னர், அச் செயற்பாட்டால் அல்லது திட்டத்தால் ஏற்படும் தாக்கம் அறியப்படல் வேண்டும். குறிப்பாக, தொழிற்சாலைகளின் செயற்பாட்டால் சூழலில் எற்படும் குறுகியகால, நீண்டகால விளைவுகள் அறியப்படல் வேண்டும். இலங்கையில் அமுல் படுத்தப்படும் திட்டங்கள், மத்திய சுற்றாடல் அதிகாரசபை (Central Environmental Authority (CEA) u926ör egIg9/LDá5lu/LG60TGu செயற்படுத்தப்படுகின்றன.
விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடன் வளமாக்கிகள், பீடைகொல்லிகள் என்பவற்றின் பாவனை அதிகரிப்பதால் தோன்றும் சூழல் மாசாக்கலின் அளவைக் குறைப்பதற்கு, இயற்கை வளமாக்கிகளின் பாவனையை ஊக்குவிப்பதுடன், சில பீடை கொல்லிகளின் பாவனையை முற்றாகத் தடை செய்தல் அவசியமாகும். பீடைகளைக் கட்டுப் படுத்துவதற்கு, உயிரியற் கட்டுப்பாட்டுடன் இணைந்ததாக ஒன்றிணைந்த பீடை முகாமைத்துவத்தை (Integrated Pest Management - IPM) அறிமுகப்படுத்தி, நிலையான விவசாயத்தை மேற்கொள்ள திட்டங்கள் அமுல்படுத்தப்படல் வேண்டும்.
இன்றைய அணுயுகத்தில், அணுச்சக்தி பல ஆக்க பூர்வமான செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டாலும், அவற்றால் ஏற்படும் அழிவுகளும் கவனத்தில் எடுக்கப்பட்டு, அணுச்சக்தியின் பாவனை, பரிசோதனை என்பவற்றில் மிகக் கவனம் எடுப்பதுடன், அழிவுக்கு பயன்படுத்தப்படும் அணு ஆயுதங்களின் ஒழிப்பு சர்வதேசரீதியில் மேற் கொள்ளப்படுதல் அவசியமாகும்.
புதிய தொழிநுட்ப அறிவுகளைப் பயன்படுத்திச் சூழலில் வெளிவிடப்படும் கழிவுப்பொருட்களிலிருந்து, அல்லது பயன்படுத்தப்பட்ட பொருட்களில் இருந்து, வேறு பொருட்களை அல்லது அதே பொருளை மீண்டும் பெறும் திட்டங்களை
S.N. Surendran & B.Babu
Environmental Pollution

Page 46
அறிமுகப்படுத்துதல். இவ்வாறு பயன்படுத்தப்பட்ட பொருட்களில் இருந்து மீண்டும் அதே பொருட்கள் உருவாக்கப்படுதல் “மீள் ஒட்டல்” (Recycling) எனப்படும். உதாரணமாக, பயன்படுத்தப்பட்ட கடதாசிகள், கண்ணாடிகள், ரயர்கள் போன்றவற்றில் இருந்து, மீண்டும் அதே பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. இப் புதிய தொழில் நுட்பமுறை காரணமாக, சூழலுக்குள் விடப்படும் கழிவுகள் வெகுவாகக் குறைக்கப்படலாம்.
எல்லாவற்றிற்கும் மேலாக, மனிதன் சூழலின் ஆக்கக் கூறாக அமைவதால், சுற்றுச் சூழல் பாதுகாப்பில் தனி மனிதனின் பங்கு தவிர்க்க முடியாத ஒன்றாகும். இதனால், சமுதாயத்தின் சகல மட்டத்திலும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு, மற்றும் சூழல் மாசடைவதால் ஏற்படும் பாதிப்புக்கள் உணர் த்தப்பட்டு, அதற்கான தீர்வுகளும் முன்வைக்கப்படுதல் அவசியமாகும். குறிப்பாக நிலையான அபிவிருத்தியை அடைய அரசுக்கள், பொருளாதாரச் சிந்தனையுடன், சூழலியற் கொள்கைகளையும் ஒன்றினைக்க வேண்டியது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
S N. Surendran & B.Babu
Environmental Pollution
 


Page 47
Publisher & Distr
(v. J P Intern
(Publishers, Importers &
" Inter IMC
240, Galle Ro
Colombo -
T.P. 50314.
Sarasu : M-1 Bambalapitiya Flats, Co
 

=
ibutOr
lational
Distributors)