கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்துசாதனம் 2009.02.13

Page 1
சைவபரிபாலன சபை வெளியீடு ஆரம்பம்: விரோதி டூல ஆவணி மீ" 26 ஆம் உ (1889)
Web: ww.w hindu organ. com
சர்வதாரிவருடம் மாசி
(13.02.
26ua5õ 6
புத்தகம்: 120
-செஞ்சொற்செல்வரி
 
 

s रक्त एक * Antigos " " (
figgs 6iaD6oebur: 50.OO செய்தித்தாளாகப் பதிவு பெற்றது.
ß - -email: editor @ hindu organ. com
த் திங்கள் 1 ஆம் நாள் இதழ்: 02 2OO9)
ருஷூஞ்சல்
ஆறு. திருமுருகன் -
காலத்திலிருந்தே சைவசமயத்தையே தம் சமயமாகக் கொண்ட தமிழ் மக்கள் வாழ்ந்து வரும் தனிச்சிறப்பு வாய்ந்த ஊர். வரலாற்றுப் புகழ்மிக்கவளம் நிறைந்த இப்பேரூரில், அடியார் இடர் தீர்க்கும் ஆறுமுகப் பெருமானுக்கு அழகிய ஒரு திருக் கோவில் பல நூறு ஆண்டுகளாகவே இருந்து வரு கின்றது. இணுவில் கந்தசாமி கோவில் என்ற உடனேயே அங்குள்ள "உலகப்பெரு மஞ்சமும் அதிலே ஆறுமுகப்பெருமான் அமர்ந்திருந்து அரு ளாட்சி செய்யும் கோலமும் அடியார்களின் நினை வில் தோன்றி ஆனந்த பரவசத்தில் அவர்களை ஆழ்த்தும். இருநூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை வாய்ந்த இந்தத் திருமஞ்சம் உருவான வர லாற்றை இன்றைய சமுதாயத்தினர், குறிப்பாக இளைய பரம்பரையினர் அறிந்து வைத்திருப்பது அவசியம். "எல்லாம் அவன் செயல்" என்பதற்குக் கண்கண்ட உதாரணமாகக் கவின்பெற விளங்கு கின்றது இந்தக் கலைப் பொக்கிஷம்.
ஈழத்துச் சித்தர்களின் இடையறாப் பாரம்பரியத் தின் ஓர் அங்கமாக இரண்டு நூற்றாண்டுகளின் முன் னர் உதித்தவர் பெரிய சன்னியாசியார். இணுவில் வீதிகளில் ஓங்கி வளர்ந்திருந்த மரங்களின் நிழலில் தியானம் செய்வதும் காடுடைய சுடலையிலே தனித் திருப்பதும், தன்னை நாடி வருவோரின் தீராத நோய் களைத் தீர்ப்பதும் தன் விழி நோக்கால் பிறர் கண்ணிர் துடைப்பதும் இவருடைய வாழ்க்கைச் சிறப்பாக அமைந்தன. இடுப்பிலே சிறிய துண்டும் உடம்பு முழுவதும் திருநீறும் தரித்து ஊரில் உலா விய இவர் செய்த அற்புதங்கள் அனந்தம். இப் பெருந்தகையின் கனவிலே "என்னைத் திருமஞ் சத்தில் இருத்தி வீதியுலாக் கொண்டு வா" என ->

Page 2
இந்துசாதனம் 13.02.
உலகப் ெ
முருகப்பெருமான் கேட்டுக் கொண்டதன் விளைவே இங்குள்ள உலகப் பெருமஞ்சமாகும் கையிற் பிரம்போடு மண்ணிற் கூத்தாடிக் கொண்டு நின்ற சித்தர் சுவாமிகள் "மரங்களைக் கொண்டு வந்து குவியுங்கள்" என மக்களிடம் கூறினார். இணுவில் கிழக்கில் “மஞ்சத்தடி" என இப்போது சொல்லப்படும் இடத்தில் மரங்களை மலை போலக்குவித்தனர். பல ஊர்களைச் சேர்ந்த மக்கள் கன்னியாசியாரின் கையிலே காசு ஒரு சத்மும் இல்லை. என்றாலும் "முருகன் மஞ்சத்தில் வரப் போறான்” எனத் தினமும் உச்சரித்த வண்ணம் வீதிகளில் உலாவினார்.
ஒருநாள். அங்கி மயிலேறும் பெருமாள்மஞ்சத்தி ருந்து திடீரென்று பருத் கனவொன்றின் மூலம் அறிந்துே தித்துறைக் கடற்க உருவத்தால் மட்டுமல்லாமல் ரையை நோக்கிச் சென் சிற்பங்களாலும் உலகப்பெரு றவர் அங்கேயே தங்கி வகையிலே கனவை நனவாக்கி விட்டார். “குடும்பிக் கந்தரோடை ஸ்கந்தவே காரன் வருவான் வரு செஞ்சொற்செல்வர்திரு.ஆறு.
வான் எனக் கூறினாயே, எங்கே?" என ஏசிக் கொண்டும், ஆடிப்பாடி, உறங்கிக் கொண்டும் சில நாள்களைக் கழித்த அவள், குடும்பிகடுக்கனுடன் சிற்பக் கலைஞர்கள் பலர் கட்டு மரங்களில் வந்து இறங்கி யதைக் கண்டார். ஆனந்தமடைந்த சன்னியாசியார், அவர்களை இணு
விலுக்கு அழைத்து வந்தார்; வெறும் தரையிலே மஞ்சம் ஒன்றை வரைந்து, அதை மரத்தால் உருவாக்குமாறு
கட்டளையிட்டார்.
இந்த அரும்பெரும் பணியில் ஆண்டுக் கணக்காக அந்தக் கலைஞர்கள் ஈடுபட்டனர். கந்தபுராணத்திற் காணப்படும் சம்பவங்கள், பல்வேறு ஆன்மீக வரலாறுகள், தாயின் கருவறையில் மழலை தோன்று வது, பிறப்பது, தவழ்வது, நடப்பது என மனித வாழ்க்கையின் ஒவ்வொரு படிநிலைகள். நாம் இதுவரை கண்ணாற் காணாதவையுட்படப் பல்வேறு பறவைகள், கோபம் கொண்ட குதிரையொன்று தன் கால்களை உயர்த்தி ஒருவரை அடக்கும் காட்சி போன்ற எல்லாமே கலையழகுடனும் உயிர்த்துடிப்புடனும் பார்த்து இரசித்து மகிழக்கூடிய முறையிலே சிற்பங்களாகச் செதுக்கப் பட்டுள்ளன. 51 அடி உயரமுடைய இந்த மஞ்சத்தின் மேற்பகுதி சற்று ஆடி அசையக்கூடிய வகையில் இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட, வசதிகள் குறைந்த ஒரு கட்டத்தில் கலை நுட்பத்துடன் உரு வாக்கப்பட்டிருப்பது ஓர் அதிசயம் என்றே சொல்ல வேண்டும். பெரிய சன்னியாசியாரையும் சிற்பக் கலைஞர் களையும் முருகன் திருவருள் முன் நின்று நடத்தி

2OO9 சர்வதாரி மாசி 01
பருமஞ்சம்
யிராவிட்டரில் இது சாத்திய மாகியிருக்காது என்பது நிச்சயம். ஈழத்திலே பெரிய சித்திரத் தேர்கள் உருவா வதற்கு பல ஆண்டுகள் முன்னரே இத்திருமஞ்சம் உருவாக்கப்பட்டமை குறிக்கத்தக்கது. இணுவில் கிழக் கில் உருவாக்கப்பட்ட இம்மஞ்சத்தை இணுவில் மேற் கிலுள்ள கந்தசாமி கோவிலுக்குக் கொண்டு வருவதற் காக அமைக்கப்பட்ட அகலப் பாதை இப்போதும் கண் ணரக் காணக்கூடியதாக இருக்கின்றது.
மஞ்சத் திருவிழா ஆண்டுதோறும் இரவுவேளை யில் நடைபெற்று வந்துள்ளது. வருடாந்த மகோற்சவ
லும் ஏறமனங்கொண்டதைக் காலத்திலும் ஒரு நாள் கொண்ட சித்த புருஷர் ஒருவர் முருகப்பெருமான் மஞ்சத்
உயிர்க்களையுடன் கூடிய திற் பவனி வருவது வழக் மஞ்சம் எனப் போற்றப்படும் கம். இவ்விழாக்களுக்கும் iய கதையைக் கூறுகின்றார் | பல ஊர்களிலிருந்தும் ராதயக் கல்லூரி அதிபர் 1 மக்கள் குடும்பம் குடும்ப திருமுருகன் மாக வண்டியில் வந்து இருநாள் தங்கி, பொங்
கிப் படைத்து வழிபாடு செய்ததாக இங்குள்ள மூத்தோர் சொல்லி மகிழ்வர். அவர்கள் தங்குவதற்குக் கோவிற் சூழலில் மடங்களும் நீராடுவதற்குக் கேணிகளும் இருந்தனவாம்.
அரை நூற்றாண்டின் முன்னர் இலங்கைக்கு விஜயம் செய்த எலிசபெத் மஹாராணியின் யாழ்ப்பாண நிகழ்ச்சி களில், இந்த மஞ்சத்தைப் பார்வையிடுவதும் ஒன்றாக இருந்தது. அவ்வேளையில், மஞ்சம் ஓட முடியாத நிலை யில் அச்சு முறிந்திருந்தது. அதனால் தானோ என்னவோ மஞ்சத்தில் இருந்த சில பாவைகளையும் பறவைகளை யும் அவர் தன்னுடன் எடுத்துச் சென்றார் என இணுவிலில் வாழ்ந்த பெரும் கல்விமான் சபா. ஆனந்தர் குறிப்பிட்டுள் ளார். இலண்டனிலுள்ள நூதனசாலையிற் பல மரச்சிற் பங்கள், திருவாசிகள், நடராஜ வடிவங்கள் காணப் படுகின்றன. அவை தென்கிழக்காசியாவிற் பெறப்பட் டவை எனப் பொதுவாகக் குறிப்பிடப்பட்டாலும், மரச்சிற் பங்கள் பல இங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டவையே. இணுவிலைச் சேர்ந்த பொறியியலாளர் திரு. சோம சுந்தரம் கனகசுந்தரம் இவை சம்பந்தமாக ஆராய்ந் துள்ளார்.
ஓட முடியாத நிலையிற் பல ஆண்டுகள் இருந்த இந்த மஞ்சத்திற்கு லண்டனிலிருந்து அச்சு எடுப்பித்துப் பொருத்தி, மீண்டும் அதை ஒட வைத்த பெருமைக்குரிய வர் இணுவில் தனவந்தர் அமரர் கல்கி சின்னத்துரை, 1978 ஆம் ஆண்டில் சில அன்பர்கள் சேர்ந்து மஞ்சத் தைப் புனர்நிர்மாணஞ் செய்து, அதற்கென நிரந்தர இருப் பிடத்தையும் உருவாக்கியுள்ளனர். 鐵德
D2

Page 3
இந்துசாதனம் 13.02.
IOSnon áF ருநீபதி சரீமா கிரும்
சிவனுக்குரிய விரதங்களுள் சிவராத்திரி விரதம் சிறப் பானது; இரவுடன் தொடர்புடையதால் மேன்மையானது. பொதுவாகவே உடலுக்கும் மனதிற்கும் ஓய்வு தரக் கூடிய நேரம் இரவாகும். இக்காலப்பகுதி, புலன்களுக்கு எட்டாத சிறப்புடையது. இருள் சூழ் இரவு எல்லாவற்றிலும் முதன்மையானது எனக் கவிஞர் மில்டன் கூறுகின்றார். அமைதியான இரவு, நிர்மலமானவனுடன் கலந்து பக்தி என்னும் அமுதத்தை ஏற்று மகிழும் ஆன்மாவுக்குப் புத்துயிர் அளிக்கவல்லது. பல ஆன்மீக எண்ணங்களைப் பிறப்பிக்கக் கூடியது. வானுலகினரும் மண்மேல் வந்து சிவனை அர்ச்சிப்பர் எனச் சிவஞானசித்தியார் கூறு கின்றது. இந்த வழிபாடு ஒவ்வொரு இரவிலும் நடை பெறுகின்றது.
எனவேதான் இரவில் உலகெங்கிலுமுள்ள சைவ அர்த்தசாமப் பூசைக்குப் திங்கட்கிழமை மஹா சிவரா பின், ஆலயத்துள் இருப் கின்றார்கள். சிவராத்திரி பதற்கு எவரும் அனுமதிக் விளக்கங்களையும் தருகின் கப்படுவதில்லை. சிவராத் சமஸ்கிருதத்துறைசிரேஷ்ட வி திரியில் மட்டுந்தான் கிருஷ்ணானந்த சர்மா. மானிட பக்தர்கள் ஆலயத் திலே தங்கி ஒவ்வொரு சாமமும் சிவனை வழிபட முடியும். மணிவாசகர் கூறுவது போல, சிவபெருமான் நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதன். நள்ளிரவு சிவனுக்கு மிகவும் பிடித்த புனிதமான காலமாகும். அவர் இரவிலும் விழித்திருந்து செயல்களைச் செய்பவ ராதலால் “நிசா சரர்” எனக் குறிப்பிடப்படுகின்றார்.
நித்திய சிவராத்திரி, பகூடிசிவராத்திரி. மாத சிவராத் திரி, யோக சிவராத்திரி, மஹா சிவராத்திரி எனச் சிவ ராத்திரிகள் ஐந்து உண்டு. ஒவ்வொரு மாதமும் வரு கின்ற இரண்டு சதுர்த்தசித் திதிகளும் வருடத்தின் இரு பத்தி நான்கு மாத சிவராத்திரிகள், தை மாத, கிருஷ்ண பகூடிப் பிரதமை முதலாகப் பதின்மூன்று நாள்கள் நிகழ் வது பகூடிசிவராத்திரி; திங்கட்கிழமை முழுவதும் அமா வாசைத் திதி கூடியிருக்கும் நாள் யோக சிவராத்திரி; தினமுமுள்ள நடுநிசி வேளை நித்திய சிவராத்திரி.மாசி மாதக் கிருஷ்ண பக்ஷ (தேய்பிறை) சதுர்த்தசித் திதியில் சிவபிரான் இலிங்கத்திலே தோன்றினார். இந்தத் தினமே மஹா சிவராத்திரி ஆகும்.
மஹாசிவராத்திரி விரத நிர்ணயம் பற்றி ஆகமங் களிலும் சமயநூல்களிலும் சிறப்பாகவும் விரிவாகவும் கூறப்பட்டுள்ளது. அவற்றுட் சிலவற்றைப் பார்ப்போம்.
மாசி மாதக் கிருஷ்ண பகூடித்தில்
பகல் திரயோதசியும் இரவு சதுர்த்தசியும் கூடியுள்ள தினமே மஹாசிவராத்திரி-காமிகாகமம்,
உதயத்திலிருந்து அஸ்தமனம் வரை திரயோதசியும் இராத்திரியில் சதுர்த்தசியும் கூடிய தினம் மஹாசிவராத்திரி - லலிதாகமம்.
திரயோதசியும் சதுர்த்தசியும் கூடிய உத்தமமான இரவில், அதாவது 29 நாழிகை திரயோதசியும் நாழிகை சதுர்த்தசியும் கூடிய இரவிலே சிவனை வழிபடவேண்டும் - 85sTU600Tseb DLb.

2009 சர்வதாரி மாசி 01
வுறாத்திரி டினானந்த சரிமா.
இரவில் இரு யாமத்திற்கு மேலோ அல்லது முழு இரவுமோ சதுர்த்தசி உள்ள தினமே மஹாசிவராத்திரி. முதல் இரு யாமத்துக்கு மேல்வரும் 1 நாழிகை மஹா நிசி காலம்; இலிங்கோற்பவ காலம். இதன்போது சதுர்த்தசி இருக்கும் தினமே மஹாசிவராத்திரி- குமார தந்திரம்
முதல் நாள் உதயம் முதல் மறுநாள் உதயம் வரை பகல், இரவு முழுவதும் சதுர்த்தசி இருந்தால்- மத்திமம் , பகல் திரயோதசியும் சூரிய அஸ்தமனத்திலும் பின்னரும் சதுர்த்தசியும் இருந்தால் உத்தமம்; சதுர்த்தசி அமாவாசையோடு கூடியிருப்பின் S95 LDLĎ காலோத்தராகமம்.
பெருமக்கள் 23.02.2009 த்திரி விரதத்தை அனுஷ்டிக் பற்றிய விபரங்களையும், Bார் யாழ் பல்கலைக்கழகச் fagsoprumrsmir. Umfuć æstudmr
சதுர்த்தசி இரவில் அதிக நாழிகை இருக்கும் நாளே மஹாசிவராத்திரி36JTuJLb6 SabLDub.
மஹாநிசி இலிங்கோற் பவ காலத்தில் சதுர்த்தசி இருக்கும் நாளே மஹாசிவராத்திரி ஈசானசம்ஹிதை.
சிவராத்திரி விரதம், செளரமான முறையிலே. சூரி யன் கும்பராசியிலே பிரவேசிக்கின்ற மாசி மாத நாளி லேயே பின்பற்றப்படல் வேண்டும். சாந்திரமான முறை யில், சந்திரனை முதலாகக் கொண்டு அனுஷ்டிப்பவர்கள் துன்பம் அடைவார்கள் எனச் சித்தாந்தசேகரம் என்னும் நூல் கூறுகின்றது.
அமாவாசையோடு கூடிய சதுர்த்தசித் திதி மத்திமம் என ஏற்கெனவே கூறப்பட்டுள்ளது. ஆனால், முதல்நாள் மஹாநிசிக்குப் பின்னர் திரயோதசி இருப்பின் மறுநாள் அமாவாசையோடு கூடிய சதுர்த்தசி இருப்பினும் தோஷ மில்லை எனக் காமிகாகமம் கூறுகின்றது.
எனினும், மஹாநிசியில் சதுர்த்தசி இருக்கும் நாளே சிறந்தது. சதுர்த்தசியில் கண் விழித்துச் சிவனை வழிபட வேண்டும். திருவோணம், அவிட்டம், சதயம் முதலிய நட்சத்திரங்களோடு சதுர்த்தசி சேர்ந்திருக்குமாயின் அமாவாசை தோஷம் அந்நாளில் கிடையாது எனவும் கூறப்படுகின்றது. மேலும், சூரிய அஸ்தமனத்தின் பின் 20 நாழிகைக்குப் பிறகு அமாவாசை சம்பந்தமிருந்தால் ,தோஷமில்லை என்றும் சொல்லப்படுகின்றது. இரசத்துடன் கூடிய பொன், நெருப்பிற் சுத்தமாவது போல, திருவோண நட்சத்திரத்தோடு கூடிய சதுர்த்தசி தினம், அமாவாசையோடு கூடியிருப்பினும் குற்றமில்லை எனச் சந்தான ஆகமம் கூறுகின்றது.
மாசி மாதத்தில் இரண்டு கிருஷ்ண பகூடிசதுர்த்தசி வரும்போது, இரண்டாவதாக வருவதே கொள்ளப்பட வேண்டும். மாதத்தில் இரண்டு நாள் (முதல் நாளும் மறுநாளும்) சதுர்த்தசி இருக்குமானால், சதுர்த்தசி அதிகமாக உள்ள, திரயோதசியுடன் கூடிய சதுர்த்தசி அமைந்துள்ள, இலிங்கோற்பவ காலத்திற் சதுர்த்தசி அமைந்துள்ள நாளிலும் சிவராத்திரி விரதம் மேற்கொள் ளப்பட வேண்டும். 一>
D3

Page 4
இந்துசாதனம் 13.02. மஹா சிவ
அம்பிகை, திரயோதசித் திதி எனவும், சிவன் சதுர்த் தசித் திதி எனவும், ஆகவே சிவசக்தி ஐக்கியமாக இரண்டு திதியும் சேர்ந்திருக்கின்ற நல்ல நாளிலேயே மஹா சிவராத்திரி விரதம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றுஞ் சுப்பிரபேத ஆகமம் கூறுவது நோக்கத்தக்கது.
மாசி மாதக் கிருஷ்ண பகூடி சதுர்த்தசியில் சிவன், சிவலிங்காகாரமாக, கோடி சூரியப் பிரகாசமாகத் தோன் றினார். அந்த இரவு சிவனுக்கு விருப்பமானது, புனித மானது; அந்த நடு இரவில் இலிங்கோற்பவ காலத்தில் இருக்கும் சதுர்த்தசியானது சாயுஜ்யத்தைத் தரவல்லது, அவ்வேளையிலே சிவனை வழிபடவேண்டும் என விஜயாகமம் கூறுகின்றது. மாசி மாத கிருஷ்ண பகூடி சதுர்த்தசி இருக்கும் நடு இரவில் சிவராத்திரிப் பூஜை செய்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன் ஏற்படும் என நாரதீய சம்ஹிதை கூறுவது இவ்விரதத்தின் சிறப்பை உணர்த்துகின்றது.
*மாசிமா தத்தில் தோன்றும் மதிக்கலை குறைந்து தேயும் ஆசிபன் நான்காம் பக்கத் தரையிருள் யாமந்தன்னில் தேசினால் விளங்கும் சோதிச் செஞ்சுடர் ஆகிநின்ற
காசிலா நுதல்கண் பெம்மான் தன்னுருக்காட்டி நின்றார்”
என்னும் பாடலும் சிவராத்திரி நிர்ணயம் பற்றிக் கூறுகின்றது.
சிவராத்திரியில் முதல் யாமத்தில் 108 கலச ஸ்நபந அபிஷேகமும், இரண்டாம் யாமத்தில் 49 கலச அபி ஷேகமும், மூன்றாம் யாமத்தில் இருபத்தைந்து கலச அபிஷேகமும், நான்காம் யாமத்தில் 16 கலச அபிஷேகமும் நிகழ்த்த வேண்டும் எனக் காரணாகமம் கூறுகின்றது. முதலாம் யாமத்திலிருந்து முறையே வில்வம், தாமரை, ஜாதிபுஷ்பம், நந்தியாவர்த்தம் ஆகிய மலர்களாலும் பஞ்ச வில்வங்களினாலும் அர்ச்சித்தல் வேண்டும். சிவனுடைய ஐந்து முகங்களுக்கும் பயற் றன்னம், பாயசான்னம், எள்ளன்னம், சர்க்கரையன்னம், சுத்தான்னம் என்பவை ஒவ்வொரு வேளைக்குமுரிய அன்னங்களாகும்.
உலக நன்மையின் பொருட்டு அம்பிகை சிவனை வழிபட்ட தினம் சிவராத்திரி எனவும், தேவர்கள் சிவனை
திருவ
திருவாதிரை சிறந்த ஒரு நட்சத்திரம். இந்த நட்சத்திரத்த என்பது ஐதீகம். சேக்கிழார் வயருமான் ஒரு திருவாதிரை நட்ச என்பதுவரலாறு.

2009 சர்வதாரி மாசி 01
நூத்திரி
வழிபட்ட நாள் எனவும், திருமாலும் பிரமனும் கொண்ட அகந்தையை அடக்குவதற்காக ஒளிவடிவில் இலிங் கோத்பவராகச் சிவன் தோன்றிய நாளே சிவராத்திரி எனவும் கூறப்படுகின்றது.
“செங்கணானும் பிரமனுந் தம்முளே எங்குந் தேடித் திரிந்தவர் காண்கிலார் இங்குற்றே னென்று இலிங்கத்தே தோன்றினான் பொங்குஞ் செஞ்சடைப் புண்ணிய முர்த்தி
என அப்பர் பெருமான் பாடியுள்ளார்.
அறிந்தோ அறியாமலோ இந்நாளிற் சிவபூஜை செய்பவர்கள் முத்தியடைவர் என்பதற்கு உதாரணமாக, வேடன் ஒருவன் இத்தினத்தில் தான் பூஜை செய்வதை அறியாது சிவலிங்கத்தின் மேல் வில்வ இலைகளைப் போட்டு முத்தியடைந்த நிகழ்ச்சி கூறப்படுகின்றது.
சிவராத்திரி புராணம் என்னும் நூல் இலங்கையைச் சேர்ந்த நெல்லைநாதர் என்பவரால் இயற்றப்பட்டது. ஐந்து அத்தியாயங்களையும் 303 பாடல்களையுமுடைய இந்நூல் 1881 இல் சென்னையிற் பதிப்பிக்கப்பட்டது. இதே பெயரில் வரதராஜ பண்டிதராலும் (வரத பண்டிதர்) ஒரு நூல் ஆக்கப்பட்டது , குமாரசூரியபிள்ளை என்பவர் எழுதிய உரையுடன் 1913 இல் பதிப்பிக்கப்பட்டது. இலங்கையிலே இவ்வாறு இரண்டு புராணங்கள் இயற்றப்பட்டிருந்தமை இலங்கையிற் சிவ வழிபாட்டின் மேன்மையை எடுத்துக்காட்டுவதாகக் கொள்ளலாம்.
இருள் நம்மை என்றுமே அச்சுறுத்துவது. புற இருள்போல் அக இருளையும் நாம் போக்க வேண்டும். “தமஸோ மா ஜோதிர்கமய” என்னும் உபநிடத வாக்கியம் “இருளிலிருந்து நம்மை ஒளிக்கு இட்டுச் செல்லட்டும்” என்பதாகும். இருளைப் போக்கி ஒளியைக் கொடுப்பதற்கும் அறியாமையிலிருந்து விலகிச் சிவஞானப் பொருளை அடைவதற்கும் சிவனே காரணமானவன். ஒவ்வொரு ஆன்மாவையும் பற்றிப் பிடித்திருக்கின்ற ஆணவ மலமே இருள். இது சிவனின் அருள் மூலமாகவே குணப்படுத்தப்பட வேண்டியது. சிவபெருமானின் அரு ளால் சிவராத்திரி விரதத்தை மேற்கொண்டு இம்மை, மறுமைப்பேறுகளை அடைவோமாக. 灘
ாதிTை
ன்று ஆரம்பிக்கப்படும் கருமங்கள் நன்கு சிறந்து விளங்கும் த்திரத்தன்றே வரியபுராணத்தைப்பாடுவதற்கு ஆரம்பித்தார்
影
- மகேஸ்வரன் தரும சுரபி திறப்பு விழாவில் கலாநிதி சிவத்திரு. க. வைத்தீஸ்வரக்குருக்கள் -
O4.

Page 5
இந்துசாதனம்
3O2
а-пошѓФ ćeg5 6n
- கலாநிதி மனோன்
"வாழ்க்கை வாழ்வதற்கே" என்ற கருத்து இன்று மேலும் தெளிவுபடுத்தப்பட வேண்டியுள்ளது. நாம் வாழும் காலத்தில் வாழ்க்கையில் ஏற்படும் பட்டறிவு எமது ஐயத்தை நீக்கிவிடும். மூத்தோருடைய முதுமொழிகள் எல்லாம் இத்தகைய தெளிவால் உரையாக்கம் பெற் றவையே. "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" என்ற ஆன்றோர் வாக்கின் தெளிபொருள் அனைவராலும் நன்கு உணரப்பட வேண்டும். ஒரு குழந்தை முதலில் தாயைத்தான் தன்னுடைய நம்பிக்கைக்குரிய உறவாக உணர்கிறது. பின்னர் தாயின் அறிமுகத்தின் மூலம் தந் தையை அடையாளம் காண்கிறது. குழந்தையின் தேவை களை அன்னையும் பிதாவும் காலமறிந்து நிறைவேற்றி
வைப்பதால் அவர்கள் மீது நம்பிக்கை கொள்கிறது. தன் வாழ்க்கைக்கு வழிகாட்டிக ளாய் அன்னையும் பிதாவும் தொழிற்படும் போது, அவர் களைத் தெய்வமாக மதிக்கத் தொடங்குகிறது.
முதன் முதலிலே தன் தா: அன்பை, பரிவை, ஊட்டுப் கொள்ளும் குழந்தையின் குரு, உற்றம் சுற்றம் என வி மனிதனாக வளர, வளர வாழ்க்கைத் தேவைக் இறைவனைப் பற்றியும் வாழ்வின் இயல்பாக ஆகின்
குழந்தையின் வளர்ச்சி
நிலையில் பிறிதொரு படிமுறையும் நமது முன்னோர் இனங்காட்டியுள்ளனர். மாதா, பிதா, குரு, தெய்வம் என் னும் நான்கு தொடர்பாளர்கள் மனித வாழ்வியலில் வழிகாட்டிகளாயுள்ளனர். மாதாவின் மூலம் தந்தையை அறிந்த குழந்தை தந்தையின் மூலம் தனது கல்விப் பயிற்சிக்கான குருவையும் அடைகிறான். குருவிடம் பெறும் கல்வியறிவு தெய்வத்தை அறியும் மனப்பக்கு வத்தை நல்குகின்றது. கல்வியின் உச்சமான பயன் தெய்வ சிந்தனை வயப்பட்ட வாழ்க்கையை வாழும் நிலையே. மனித வாழ்வின் செம்மையான செல்நெறிக்கு "தெய்வம்" பற்றிய நம்பிக்கையே அடித்தளமாக அமைய வேண்டும். இத்தெய்வம் பற்றிய அடிப்படையான நம் பிக்கை முதுமொழி நிலையிலும் மக்களிடையே பரவி யுள்ளது. "தாயிற் சிறந்தொரு கோவிலில்லை" "தந்தை சொல் மிக்க மந்திரமில்லை" தன்னை ஈன்ற தாயின் கருவறையைப் பற்றி மனிதன் கொண்டிருந்த மதிப்பையும் தந்தையின் சொற்களில் பெற்ற நன்மையையும் குழந்தை நிலையில் உணரமுடியாவிட்டாலும் வளர்ந்த பின்னர் நிச்சயமாக உணரமுடியும் என்ற வாழ்வியல் அநுபவத்தையும் இம்முதுமொழிகள் நன்கு உணர்த்தி நிற்கின்றன.
உறவுநிலையில் மனிதவாழ்வியலில் ஏற்படும் தொடர்புகள் மனிதனின் வளர்ச்சி நிலைகளை மேலும் துல்லியமாகக் காட்டிநிற்கின்றன. அத்தகைய தொடர்பு களைச் சமயவாழ்வியல் நிலையிலிருந்து நாவுக்கரசர்

20○9 சர்வுதாரி Draf O.
m26furéis - 2
மணி சண்முகதாஸ் -
பெருமான் ஒரு பாடலிலே வரிசைப்படுததக காட்டி யுள்ளார்.
*அப்பன்நீ அம்றைநீ ஐயனும் நிஷான்புடைய மாமனும்
LDT5ub
ஒப்புடை மாதரும் ஒண்பொருளும் நீ ஒரு குலமும் சுற்றமும் ஓர் ஊரும் நீ துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்றுவாய்நீ துணையாய் என்நெஞ்சம் துறப்பிப்பாய் நீ இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்தும் நீ இறைவன் நீ
ஏறுார்ந்த செல்வன் நீயே”
யை, அந்தத் தாய் காட்டும் மனிதனுடைய வாழ்க்கையில் b பாதுகாப்பை உணர்ந்து ா அன்பு உலகம் தந்தை வளர்ச்சிநிலை இல்லறத்தை ரிவடைகின்றது. குழந்தை ஏற்கும் பருவமாகும் தன்னு இத்தகைய உறவுக்ளை, களைக் கொடுத்துவரும் சிந்திக்கின்றது. சமயம்,
மிக முக்கியமான படிமுறை
டைய வாழ்க்கைத்துணை யின் பெற்றோரை அன்புடைய உறவாக, மாமனும் மாமியு
*றது. மாகப் பெற்று மகிழும் காலம் இதுவே. சிறப்பாக ஆண் மகனின் வாழ்க்கைத் துணை யாக வருகின்ற இல்லாளை அவனுக்குத் தருகின்ற மிக நெருங்கிய உறவாக மாமனும் மாமியும் அமைகின்றனர். ஒப்பில்லாத ஒரு மனைவியை அவனது மனைக்குத் தலைவியாகப் பெறுவதற்கு மாமன் மாமியின் உறவு ஒரு பாலமாய் அமைந்து வாழ்க்கைப் பாதையைச் செப் பனிட்டுக் கொடுக்கிறது. திருமணம் இரு குடும்பத்தவரை ஒரு குலமாக இணைத்துச் சுற்றத்தவர் என்ற நிலையில் பலரது தொடர்புகளை ஏற்படுத்தி மனித வாழ்க்கைக்குப் பக்கபலமாக அமைந்துள்ளது. இத்தகைய சுற்றம் ஓர் ஊர் என்றநிலையில் ஒன்றுபட்டு வாழும் இடமாக நிலைத்து விடுகிறது. அநுபவிக்க வேண்டிய இன்பங்களையும் ஏற்படக்கூடிய துன்பங்களையும் பகிர்ந்து கொண்டு வாழும் பக்குவத்தையும் ஏற்படுத்தி விடுகிறது. இவ் வேளையில் இத்தகைய நல்லுறவுகளை யெல்லாம் எமக்கெனத்தந்த இறைவன் பற்றிய உணர்வு உள்ளத்தில் குடியேறி வாழ்க்கையின் அடித்தளமாக அசையாத நம்பிக்கையாக மனிதனைப் பற்றிக் கொள் கிறது; அவனுக்கு என்றுந் தோன்றாத் துணையாய் வழி காட்டியாய் நிலைத்து நிற்கிறது.
இந்த நம்பிக்கை மனிதன் உள்ளத்திலே படரும் போது மனித வாழ்க்கைக்குத் தேவையானவை என்று கருதப்படும் பொன், மணி , முத்து எல்லாமே இறைவனால் அருளப்படும் என்ற மனத்தெளிவும் ஏற்பட்டு விடுகிறது. அதுவே மனித வாழ்வியலில் சமயநெறியைப் பேணும்
D5

Page 6
இந்துசாதனம் 3O2.
பக்குவத்தைக் கொடுக்கிறது. மனித வாழ்க்கையில் தனிமைக்கு இடமில்லை. சைவவாழ்வியல் ஒரு பண்பட்ட சமூகத்தின் வாழ்வியல் என்பதை உலகமே உணர்ந் துள்ளது. ஒரு பாடலில் அதனைத் தெளிவாக விளக்கும் நாவுக்கரசருடைய பாடல் அவரது வாழ்வியல் அநுப வத்தைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளும் அருள்நெறியாக அமைந்துள்ளது. இந்த நெறி மனித வாழ்வியலை ஆற்றுப்படுத்தும் பக்திநெறியாகப் பல்லாயிரம் ஆண்டு களாகத் தொடர்ந்து வருகின்றது.
வாழ்க்கையைப் பற்றிய தெளிவை எக்காலத்தவரும் உணரும் நிலையில் இத்தகைய நெறிப்படுத்தலைச் செய்த இறையடியவர் வரிசையில் நாவுக்கரசர் 81 ஆண்டுகள் இவ்வுலகத்தில் வாழ்ந்தவர். அவர் மனித வாழ்வினுடாகப் பெற்ற வாழ்வியல் அநுபவம் எல்லோரை
திருவாவடுதுறை ஆதீ
யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகம்பிள்ளை அவர்களு தமிழ்ப்பணிகளின் சிறப்பையும் ‘கேட்டார்ப்பிணிக்குந் தகை செய்தவர் தென்னிந்தியா திருவாவடுதுறை ஆதீன கர்த்தரா தேசிகபரமாச்சாரியசுவாமிகள்.
'நாவலர் என்றால் யாழ்ப்பாணத்துநல்லுர்ஆறுமுகநாவு
தென்னிந்தியத் தமிழகத்திலுள்ள புதிய தலைமுறையின ஆவது குருமகாசந்நிதானமாக இப்போது விளங்கும் சீ திருவுள்ளங்கொண்டார்கள்.
அதற்கு அமையவிசன்ற20.11.2008 வியாழக்கிழமை ஆ விழாசிறப்பாக நடைபெற்றது.
சென்னை 'அமுதசுரபி' மாத இதழ் ஆசிரியர் திரு. தி சிந்தனைகள் பற்றியும், யாழ் - சைவ பரிபாலன ச ஈழத்திருநாட்டிற்சைவசமயவளர்ச்சி பற்றியும்சொற்பொழி
திரு திருப்பூர் கிருஷ்ணன் அவர்களுக்குத் தெய்வத் 'சித்தாந்தச் சைவச்சுடர்நிலையம்" என்றவிருதும் வயாற்கிளி
வழிகாட்டுவோம்
சமயநெறி காட்டும் தத்துவங்களை, போதனைகளை நன்கு தெரிந்து கொண்டு அவற்றின் வழியில் சமூகத்திற் கும் சமயத்திற்குமுரிய கடமைகளைச் செய்யக் கூடியதாகப் பிள்ளைகளை நாம்வழிநடத்தவேண்டும்.
-இந்துசாதனம் அறிமுக விழாவில் அரச அதிபர் திரு. க.கணேஷ் -

2009 சர்வதாரி மாசி 01
யும் சிந்திக்க வைக்கும். துன்பங்களைக் கண்டு துவண்டு விடாமல் தனிமையை எண்ணி நலிந்து போகாமல் மனித வாழ்க்கையைப் பயனுள்ளதாக்க வேண்டும். வாழ்க்கை என்பது எமது நிலையில் நின்று பார்க்கும் ஒரு செயற் பாடாக அன்றி ஓர் ஒருங்கிணைந்த அன்புநெறி என்பதை அனைவரும் அறியவேண்டும். குறிப்பாக இன்றைய இளந்தலைமுறை வாழ்க்கையின் செம்மையான செல் நெறியை உணரவேண்டும். அதற்கான முதியோரது வழி காட்டல் இன்றியமையாதது. நம்முன்னோர் சொல்லிச் சென்றவற்றைக் காலத்தின் போக்கிற்கு ஏற்ப ஒரு கற்கைநெறியாக மட்டுமன்றிச் செயற்பாட்டு நெறியாகவும் வாழ்ந்துகாட்ட வேண்டும். அதுவே இன்று மனிதனுக்குத் தேவையான ஒரு பண்பாட்டுப் பயிற்சியாக வாழ்க்கையைப் பற்றிய தெளிவைப் புகட்டும் அன்பு நெறியாக அமையும் என்பதில் ஐயமில்லை. 崇
னத்தில் நாவலர் விழா
நக்கு நாவலர் பட்டத்தை வழங்கி அவர்களுடைய சைவ, பவாய்க் கேளரும் வேட்பப் பேசும் ஆற்றலையும் உலகறியச் ன 15 ஆவது பட்டம் அருள்மிகு சீர்வளர்சீர் அம்பலவான
பலர் அவர்களேளன்றநிலையும் ஏற்பட்டது.
ருக்கு நாவலர் அவர்களுடையவதாண்டின் ஆதீனத்தின் 23 ர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்
தீனத்திலுள்ளவேணுவனலிங்க விலாச அரங்கிலே நாவலர்
ருப்பூர் கிருஷ்ணன் நாவலர் நூல்களில் நல்லொழுக்கச் பைத்தலைவர் சிவநெறிப்புரவலர் த. சண்முகலிங்கம் வாற்றினார்.
தமிழ்மணி" என்ற விருதும் யாழ். சைவபரிபாலன சபைக்கு யும்வழங்கப்பட்டன.
திருக்கடைக்காப்பு: தேவாரம்: திருப்பாட்டு
தேவாரப் பதிகங்களின் பலனைச் சொல்லும் இறுதிச் விசய்யுள் ‘திருக்கடைக்காப்பு என்று சொல்லப்படுகின்றது. எனினும் திருஞானசம்பந்தர் பாடிய முதல் மூன்று திருமுறை களையும் திருக்கடைக்காப்பு என்றும், திருநாவுக்கரசர் பாடிய அடுத்த மூன்று திருமுறைகளையும் தேவாரம் என்றும், சுந்தரர் பாடிய ஏழாந் திருமுறையைத் திருப்பாட்டு என்றும் சிறப்பாகக் குறிப்பிடும் வழக்கமும் உண்டு.
3.

Page 7
இந்துசாதனம்
13.02.
арӕ6мшfun தோற்றமும் வளர்ச்சி
1898 ஆம் ஆண்டு FA பரீட்சை முடிவுகள்:
யாழ் இந்துக் கல்லூரியில் கற்று கொல்கொத்தா கலை முதலாண்டு
(FA) பரீட்சைக்கு 1898ஆம் ஆண்டு தோற்றியவர்களுள் அ. விசுவ நாதன், CG கனிபோல்ஸ், சின்னக் குட்டி, க. ஆறுமுகம், V. M. சரவண
முத்து, சி. துரையப்பா, TN வேலுப் பிள்ளை ஆகிய அறுவர் சித்தி பெற்றார்கள். அவர்களைப் பாராட் டும் அரங்கேறல் கொண்டாட்டம் 07.07.1898 ஆம் திகதி கல்லூரி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்
றது. திரு. அ. மயில்வாகனம், J.P. தலைமை வகித்தார். கல்லூரி அதிபர் நெவின்ஸ் செல்லத்துரை அவர்கள் துக்க சம்பவமொன்று
சமுக மளிக்கவில்லை. ஆசிரியர் வீ. கதிர
காரணமாக விழாவுக்குச்
வேற்பிள்ளை, B. A. அவர்கள் அதிபர் சார்பில் கூட்டத்தின் நோக் கம் பற்றிப் பேசினார்கள். பின் மாணவர்கள் ஒவ்வொருவரும் பேசி னர். தமது ஆசிரியர்களுக்கு நன்றி யும் பிரியாவிடையும் கூறினர். இறுதி யில் நியாயதுரந்தரர் அ. கனக 860Ꭰl I, திருநாவுக்கரசு, கோமர் வன்
னியசிங்கம், H. A. P சந்திரசேகரா, சட்டத்தரணி திசைநாயகம், வண. நைல்ஸ், கச்சேரி முதலியார் S. பஸ்தியாம்பிள்ளை, இலங்கை
நாயக முதலியார், கதிர்காமர் ஆகியவர்கள் கல்லூரி வளர்ச்சி பற்றியும் மாணவர்களின் தேர்ச்சி பற்றியும் புகழ்ந்தும் பாராட்டியும் (8; }ઈ60ાit.
BLIITITfirfuff 6ò.
விசேட மகாசபை
சைவபரிபாலன
புரிய வேண்டுபெ கொண்டிருந்த சி இச்சபையின் அத வாகசபை ஆகிய (35
வதற்காகவும் சன
கத்தவராகச்
டங்கள் சிலவற்றை வும் சபையின் வி கூட்டமொன்று 18 ஐப்பசி மாதம் 6 இந்துக் கல்லு அக்கூட்டத்திற்கு உபதலைவர் திரு. அ.
தலைமை
856 தாங் செயலாளரும் உ
வருகை தராமை சபாரத்தினம் ( இரண்ட செயலாளராகக்
5é8
னார். கூட்டத்தில் தீர்மானங்கள்
பட்டன.
அ) கல்லூரியை
ஏற்படுத்தப்ட சபையில்
ராகக் கடமை வழி அங்கத் வேண்டும்.
ஆ) திருவாளர்கள் வை. சண்மு
பலம், இ. மு அ. கிருஷ்ணி

2009
ਸ68 up O
'66) area) ugó шаоѓаѣебn5ѓъ — 24
குமாரவடிவேல்
க் கூட்டம்
சபைக்கு உதவி )ன்று பேரவாக் ல பிரபுக்களை நிகாரசபை, நிரு |வைகளில் அங் ர்த்துக் பயின் சட்டதிட் மாற்றுவதற்காக சேட மகாசபைக்
98 ஆம் ஆண்டு ஒன்பதாம் திகதி ரியில் கூடிற்று. ச் சபையின் நியாயதுரந்தரர் ாகசபைப்பிள்ளை
கொள்
கினார். சபைச்
ப செயலாளரும் யால் திரு. ச. u JITpt'' பாணக் ாம் முதலியார்)
BL-6OLDu Jfföß பின்வரும் நான்கு மேற்கொள்ளப்
நடத்துவதற்காக படும் நிருவாக கல்லூரி அதிப யாற்றுபவர் பதவி தவராக இருத்தல்
ர் அ. கனகசபை,
கம், இ. அருளம் மு. தில்லைநாதர், ணபிள்ளை க.கா.
S))
FF)
கந்தையாபிள்ளை, கதிரவேற்
பிள்ளை, T. விசுவநாத
பிள்ளை M. சிதம்பரநாதர், சு. சோமசுந்தரம், (U). சிவப்பிர காசம், பொ. இராஜகோபால், இ. கதிரவேலு, S. செல்லப்பா,
R. நாகலிங்கம், S. பொன்
னுத்துரை சபையின் அதிகாரசபையில்
என்பவர்களைச்
சேர்த்துக் கொள்ளுதல் வேண் டும். அதற் கிசைய சபையின் சட்ட திட்டங்களைத் திருத் திக் கொள்ளுதல் வேண்டும்.
திருவாளர்கள் S. கனகரத்
தினம், ச. சபாரத்தினம், S.நாக நாதர், அ. கிருஷ்ணபிள்ளை, இ. மு. தில்லைநாதர், வை. சண்முகம் ஆகிய அறுவரை யும் நிருவாகசபையில் சேர்த் துக் கொள்ளுதல் வேண்டும். அதற்கிசைவாகச் சபைச் சட்ட திட்டப் பிரமாணங்களைத் திருத்திக் கொள்ளுதல் வேண் டும்.
சபை அங்கத்தவர்கள் அனை வரும் 1898 ஆம் ஆண்டு தை மாதம் தொடக்கம் சபைக்குச் செல்ல வேண்டிய தங்கள் கையொப்பங்களை (வாக்குப் பண்ணிய நன்கொடைப் பணங் களை) அந்த அந்த வருடத் தில் கொடுத்து விடுதல் வேண் டும். அப்படிக் கொடாதொழி யின், அவர்கள் சபை அங் கத்துவத்திலிருந்து நீக்கப்படு தல் வேண்டும். (தொடரும்)
穆
O7

Page 8
இந்துசாதனம் 13.02
திருச்சிற்றம்பலம் வாழ்க அந்தணர் வானவ ரானினம் வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக ஆழ்க தீயவதல் லாமர னாமமே சூழ்க வையக முந்துயர் தீர்கவே.
திருச்சிற்றம்பலம்
இந்து சாதனம்
indu Organ
email: editor (a) hindu organ. com
சர்வதாரி ஞல மாசி மாதம் மா ஆம் உ 03.02.2009
சைவச் ஆழலும் சத்தான
2,னவுற்
மூடநம்பிக்கைகள், அநா
கரிகப் பழக்க வழக்கங்களி
லிருந்து நமது மக்களை முழுமையாக மீட்டெடுப்ப தாகச் சொல்லிக்கொண்டு, கல்வியை வளர்ப்பதாகக் காட்டிக்கொண்டு, கிறிஸ் தவ மதத்தைப் பரப்பும் முயற்சியிலே தீவிரமாக ஈடு பட்டிருந்த மிஷனரிக ளுக்கு எதிராக பூரீலழரீ ஆறு முகநாவலர் குரல் கொடுத் தார், செயல் தொடுத்தார்.
சைவ சமயத்துக்கும் சைவப் பண்பாட்டுக்கும் ஏற் படத்தொடங்கிய ஆபத்தை, அதன் ஆழத்தை நன்கு ணர்ந்த அவர் சைவப் பிள்ளைகளுக்குச் சைவச் சூழலிலே கல்வி கற்பிக்கப் பட வேண்டிய தன் அவசி யத்தைப் பற்றி - அவசரத் தைப் பற்றி எழுதினார்; பேசி னார்; அவற்றுடன் திருப்திப் படாமல் செயலிலும் இறங் கினார்; வண்ணை வைத் தீஸ்வரன் கோவிலுக்குப் முன்னால் இருந்த ஒரு
நாவலர்
வீட்டிலே பாடசாலை ஒன்றை நிறுவினார்; தனியாகவும் கூட்டாகவும் சேர்ந்து ஒவ் வொரு பிரதேசத்திலும் சைவப் LF6D65606 நிறுவுமாறு சைவாபிமானி களைத் துண்டினார்.
யாழ் குடாநாட்டின் பல பாகங்களிலும் சைவப் பாட
சாலைகள் நிறுவப்பட்டன, கற்றல், கற்பித்தல், உடற் பயிற்சி, விளையாட்டுக்கள், நுண்கலைகள் போன்றவற் றின் நிலைக்களமாக மட்டும் இராமல், சtoயதிட்சை, நாயன்மார் குருபூசை, சமய விழாக்கள் போன்றவற்றின் செயற்றளமாகவும் இருந்து, கருதிய சைவச் குழலை உருவாக்கத் தொடங்கின. வளாகங்கள் சிலவற்றிலே கோவில்கள்
TLF6)6)
கட்டப்பட்டு, வழிபாட டுக்கு வசதிகளும் செய்து
மாணவர்களின்
 

2009
சர்வதாரி மாசி 01
கொடுக்கப்பட்டுள்ளன.மான வர்கள் வாழும் வீட்டுச் சூழ லுக்கும் அவர்களை வளர்க் கும் பாடசாலைச் சூழலுக்கு மிடையே வேறுபாடுகள் அரி தாயிருப்பது ஆளுமை விருத்திக்கு உத வுகின்றது. இவ்வாறு, மத மாற்றத்தின் வேகம் மட்டுப் படுத்தப்பட்டு பின்னர், பெரு மளவிற் கட்டுப் படுத்தப் பட்டிருக்காவிட்டால், நமது சைவ சமயத்துக்கு ஏற்பட்டி ருக்கக் கூடிய அவலங் களையும் அழிவுகளை யும் பற்றிச் சிந்தித்துப் போருக்கு இப்பாடசாலை கள் ஆற்றிய, ஆற்றிவரு கின்ற பணிகளின் முக்கி யத்துவம் இலகுவிற் 6) னாகும்.
அவர்களின்
LUTTÜ
இத்துணைச் சிறப்பு மிக்க இப்பாடசாலைகளிற் பயிலும் மாணவர்களுக்குச் சமீப 86ᎠᎧl8 மதிய உணவுடன் கடலுண வும் சேர்த்து வழங்கப்பட்டு வருவது வேதனை அளிக் கின்றது.
56). DE
சத்துணவு வழங்கப்படு வது மாணவர்களின் உடல், உள வளர்ச்சிக்கு உதவும் நாம் மறுக்க வில்லை. வறுமைக் கோட் டின் கீழுள்ள களுக்கு இலவச உணவு ஒரு வரப்பிரசாதம் என்பதை யும் நாம் மறுக்கவில்லை. ஆனால், மட்டுந்தான் அந்தச் சத்து இருக்கின்றதென்பதையே மறுக்கின்றோம்.
என்பதை
மாணவர்
கடலுணவில்
Vegetarian diet 6166tu6055, தாவர உணவு என்று குறிப்
என்று சொல்வதிலிருந்தே நமது சமயத்தில் அதற்கு
பிடாமல், "சைவஉணவு"
அளிக்கப்பட்டுள்ள முக்கி யத்துவத்தையும் உயர்ந்த இடத்தையும் உணர்ந்து கொள்ளலாம். பரம்பரையாக மச்ச மாமிசம் உண்டுவந்த பலர், குறிப்பாக மேலை நாட்டினர் சைவ உணவின்
மகத்து வத்தை உணர்ந்து,
தமது உணவுப் பழக்கங்
களை மாற்றிவரும் இவ்
வேளையில் நமது மாணவர்
களிடம் அசைவ உணவை
நாம் திணிக்கலாமா? நாவ லரும் அவர்வழி வந்தோரும் கஷ்டப்பட்டுக் கட்டியெழுப் பிய சைவச் சூழல், பாட
சாலைகளிற் பாதிப்படை வதற்கு நாம் உடந்தையாக இருக்கலாமா?
தான் விரும்பும் உணவை உண்ணும் உரிமை ஒவ் வொருவருக்கும் என்பது உண்மை. அதற்
உண்டு
காக, சைவப் பாடசாலை களில், சைவப் பண்பாட் டுக்கு முரணான கடலு னவை, இலவசம் என்ற கவர்ச்சியுடன்கட்டாய உண வாக்கலாமா?
நல்லை ஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் பூரீலழறீ சோமசுந்தர பரமாசாரியார் தவிர்ந்த ஏனைய சமயப் பெரியார்களும் நிறுவனங் களும் இவ் விஷயத்தில் மெளனம் சாதிப்பது ஏன்?
"மீண்டும் ஒரு நாவலர் ஈண்டுவர வேண்டும் என
வேண்டுவதைத் தவிர, வேறொன்றுமறியேன் பரா பரமே" என்றிராமல், இவ்
விஷயத்தில் 2 - 607 19ds கவனம் செலுத்தி, சைவப் பாடசாலைகளின் சாத்வீகச்
சூழலைக் காப்பாற்றும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கின்றோம். 馨
s

Page 9
802.
O GOG)
email: exame (a) h
மாணவச் செல்வங்களே!
வணக்கம். இந்தக் காலத்து மாணவர்கள் தம் மனம் போனபடி நடக்கின்றார்கள்,வயற்றோர்வபரியோர்
களை அவர்கள் மதிப்பதில்லை; அவர்களை யாரா லுமே கட்டுப்படுத்த முடியாமலுள்ளது - என்ற கருத்துக் களை அடிக்கடி சிலர் வெளியிட்டுவருகின்றனர்.
அவர்களுடைய கருத்துக்களை முழுமையாக நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் அனைத் தையும் ஒரேயடியாகநிராகரிக்கவும் முடியவில்லை.
சில சந்தர்ப்பங்களிற் சில மாணவர்கள் நடந்து கொள்ளும் முறை ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாக இருக்கின்றது.
கற்க வேண்டியவற்றைத் தெளிவாகக் கற்று, நல்ல பழக்கங்களைக் கைக்கொண்டு, உங்களின் எதிர்கால
6)ö6)čFIDL 960
விநா
தொகுத்தளிப்பவர் &
6. தோப்புக் கரணம், குட்டி வழி டங்கியுள்ள
படுதல் முறைகளை விளக்கிக் மேலெழும்பி, கூறுக? உடல் முழு முதலில் வலக்கையால் முகத் இதனால் உ துக்கு மேலே வலப்பக்கத்தி பும் உளனழு லும், இடக்கையால் இடப்பக் றது. தியானி கத்திலும் குட்டி, காதுகளை ஒருமைபபா வலக்கையால் இடக்காதை கிடைக்கிறது 1 D, இடக்கையால் வி* 18. சிதறு தேங்க காதையும் மாறிப்பிடித்து இரு கால் முடக்கியிருந்து எழுந்து கருததைகக கணபதியை வணங்குதல். உருண்டு தி
● 略 s கள் விநா 7. தோப்புக்கரணம், போடுவதால், உடைந்து
உடம்பில் ஏற்படும் நன்மையாக நினைந்து ே அறிவியல் கூறுவதுயாது? அடித்துச்
விநாயகள் சந்நிதியில் நெற்றி தீவினைகள் யில் குட்டிக் கொள்வதும் தோப் எண்ண வேை புக் கரணம் போடுவதும் வழி பாட்டு முறையாகும். இதனால் 9. வலம்புரி இ மூலாதாரத்தில் உள்ள குண்ட என்றழைப்பது லினி எழுப்பப்பட்டு அதனால் சுஷாம்ச நாடி திறந்து கொள் கிறது. நெற்றியில் குட்டிக் வலபLறமாக
கொள்வதால் அங்கே உள்ள வலம்புரி வி
விநாயகருை
s
 

选 பகுதி
indu organ. com
task.
வாழ்க்கை ஒளிமயமாக அமைவதற்குரிய அத்தி பாரத்தை மாணவப் பருவத்திலேயே நீங்கள் இட்டுக்
ബsI6rബ് ബേങ്ങ്.
தெரிந்தோ தெரியாமலோ நாம் ஏதாவது தவறு விசய்தால் என்றோ ஒருநாள் இறைவனின் தண் டனைக்கு ஆளாக நேரிடும் என்பதை நன்றாக உணர்ந்து நல்லவர்களாக, இறைபக்தி உடையவர் களக வாழ்வதற்கு இன்றே உறுதி எடுத்துக்கொள் ளுங்கள். அந்த உறுதியிலிருந்து சிறிதும் வழுவாமல் நடவுங்கள். உங்கள் கருத்துக்களை எழுதியனுப்
சர்வதாரி மாசி 01
இந்துசாதனம்,
கல்லூரி வீதி, நீராவியடி
Tureorb.
- குருநாதன்
D6 66rff (BLITrfb
μααδή
இரா. செல்வவடிவேல்
அமிர்தகலசம் அந்த அமிர்தம் வதும் பரவுகிறது. டம்பில் சுறுசுறுப் ச்சியும் உண்டாகி |ப்பதற்கேற்ற மன (6b இதனால் .
ாய் உடைப்பதன்
10.
இடப்புறமாக வளைந்திருப்பின் இடம்புரி விநாயகர் என்றும் அழைக்கின்றோம். 66) b புரியை விசேடமாகக்கொள்வர்.
விநாயகருடைய முப்பத்திரெண்டு வகையான பெயர்களையும் வடி
வங்களையும் அவற்றின் அமைப்
npas ? புக்களையும் விவரித்துக் கூறுக. ரண்ட நம் பாவங் 1. பாலகணபதி: வாழைப் யகர் அருளால் பழம், மாம்பழம், ಱ್' ? பலாப்பழம், கரு PG g நம் DL ※ ஆகியவற் தொலைந்ததாக றைத 5LD廷汕 Fö(BLb. நான்கு கைகளி லும் தரித்துக்
டம்புரி விநாயகர் கொண்டு, ஐந்
து எதனால்? தாவது கையான துதிக்கையில் டய துதிக்கை | மோதகத்தைக் கொண்டிருப்பவர், வளைந்திருப்பின் இளம்பரிதிக்கு நிகரான திரு
நாயகர் என்றும்,
(3LD6660)u Ju 60Lu 6ft.
O9.

Page 10
இந்துசாதனம்
2. தருணகணபதி: கயிறு,
மாவெட்டி, அபூ பம் விளாம்பழம், நாவற்பழம் தம் முடைய ஒற்றைக் நெற்கதிர், கரும்பு ஆகியவற்றைத் தமது எட்டுக் கைகளிலும் எப்பொழுதும்
கொம்பு,
கொண்டுள்ளவடிவம்.
3. பக்தி கணபதி; தேங்காய்,
மாம்பழம், வாழைப் * பழம், வெல்லத் தாலான பாயாசம் நிறைந்த பாத்திரம் ஆகியவற்றையும் தமது நான்கு கைகளிலும் கொண்ட
வடிவம்.
4. வீரகணபதி: வேதாளம்,
வேல்,பாணம், வில், சக்ராயு தம், சக்தி, கேடயம், சம்
மட்டி, கதை
மாவெட்டி, நாகம், கயிறு ஆகிய வற்றையும் சூலத்தையும், குந் தம், கோடரி கொடி என்ப வற்றையும் தன் பதினாறு கைகளிலும் கொண்ட வடிவம்.
என்ற இர6
கைகளில் ெ
வம்.
சைவபரிபாலன சபை,
O O யாழuபானDe
புண்ணியநாசீசி அம்ை
யாழ். நீராவியடியிலுள்ள நாவலர் ஆச்சிரமமண்டபத்தில் நடைவபறவுள்ளது. சிறப்புச் சொற்வபாழிவுகள், பாடசாலை மனனப்போட்டிஆகியவற்றில்பரிசில்வற்றோருக்குப்பரிசு வ அன்புடன் அழைக்கின்றோம்.
 
 
 
 
 

2009
சர்வதாரி மாசி 01
ணபதி பச்சை
நிறம் தோய்ந்த
திருமேனியையு
60) U தேவி
யைத் தழுவிய
ருவருக்கொருவர்
ண்டுள்ளஇருப்பை
ந்தியா ந்நிறம் தோயப்
பிறு, மாவெட்டி
85.T6)Lib
0ண்டையும் தம்
காண்டுள்ள வடி
பதி: புத்தகம்,
ருத்ராட்சமாலை,
தண்டம், கமண்
டலம் ஆகியவற் றைக் கொண்ட
யானை முகம்
டன் பரசு வைத்த நான்கு
கரங்களி லும் கொண்ட பூரி ஸ்ம்ருத்தி என்ற தேவியுடன்
வீற்றிருக்கும் வடிவம்.
8. உச்சிஷ்ட கணபதி:
குவளைமலர், மாதுளம்பழம்,
வீணை, நெற்
கதிர் கயிறு,
குன்றிமணியா
லான மாலை ஆகியவற்றை
ஐந்து கைகளிலும் கொண்ட
கரும்பச்சை நிறமுடைய திரு
மேணி.
சக்கரம், தமது
வம்.
கொம்பு, மாவெட்டி, நெற்கதிர்,
ணபதி: நான்கு
. . . சரம் ஆகிய வற்றை பன்னி J(955 tDTLDUpLD, :ܘ ளிலம் கொண் பூங்கொத்துக்கள், ரணடு கைகளலும கொணட கருப்பங்கழி, எள் பொன் நிறத் திருமேனி. ளாலான மோத (தொடரும்) கம் ஆகியவற்று 臻
மயார் நினைவுதினம்
19.02.2009 வியாழக்கிழமை காலை புண்ணிநாச்சி தினம்
மட்டத்தில் நடத்தப்பட்ட பண்ணிசைப் போட்டி, திருக்குறள்
ழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் இடம்வபறும். அனைவரையும்
இரா.செல்வவடிவேல்
லகளரவதேர்வுச்செயலர்

Page 11
இந்துசாதனம் 1802.
மீன்ரும் சிவ சிவத்தமிழ் வித்தகரீதி
சைவத்தின் காவலராகச் சைவ சேனாதிபதியாக இருந்து சைவமும் தமிழும் வாழ்வதற்காகத் தன் வாழ்வையே பரித் தியாகம் செய்த நாவலர் பெருமானின் சிந்தனைகளுக்குச் செயல்வடிவம் கொடுப்பதற்காகத் தோன்றிய நிறுவனமே சைவபரிபாலன சபையாகும். நாவலர் பெருமான் தனித்துநின்று சைவ சமயத்தின் வளர்ச்சிக்காகப் பணிகள் பல புரிந்தார். 1822 இல் அவதாரம் செய்த நாவலர் பெருமான் தனது 57 ஆவது வயதில் 1879 இல் சிவபதம் அடைந்தார். இவருடைய மறைவுக்குப் பின்பு ஒரு தசாப்த காலம் சைவசமய வளர்ச்சியில் தொய்வுநிலை ஏற்பட்டது. நாவலர் இல்லாத சைவம் கேட்பார், மேய்ப்பார் இல்லாத நிலைக்கு வந்துவிட்டது. யாரும் சவாரி விடலாம் என அந்நிய மதத்தவர்கள் நினைத்தார்கள்.
இவர்களுடைய நினைப்பை மாற்றி நாவலர் பெருமான் விதைத்த விதையைத் தொடர்ந்து பெருவிருட்சமாக வளர்த்தே தீருவோம் என்று கூறி உறுதிப்பாட்டோடு அவர் வழிவந்த சைவப்பெரியார்கள் பலர் ஒன்றுகூடி முயற்சி செய்தார்கள். இவர்களுடைய பெருமுயற்சியின் பயனாக (29.04.1888) இல் நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலையில் யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபை ஆரம்பிக்கப்பட்டது.
இச் சபையின் முதலாவது தலைவராக நாவலரின் மருமகன் வித்துவ சிரோன்மணி பொன்னம்பலபிள்ளை யும், செயலாளராக நாவலரின் அண்ணர்மகன் கைலாச பிள்ளையும் பொருளாளராக நாவலரின் உறவினர் பசுபதிச்செட்டியாரும் இருந்தார்கள். வண்ணை வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து குத்து விளக்கேற்றி அதன் தீபத்துடன் நாவலர் சைவப்பிரகாச வித்தியா சாலைக்கு வந்து சைவபரிபாலன சபையைச் சைவப் பெரியார்கள் ஆரம்பித்தார்கள். குத்துவிளக்கேற்றிச் சபையைத் தாபித்த தன் நோக்கம் அச்சபை நமது நாட்டிற்கு ஒரு சைவ ஞானதீபமாக விளங்க வேண்டும் என்பதற்காகவே எனச் சைவபரிபாலன சபையின் பொருளாளராகச் சமயப் பிரசாரகராகப் பணியாற்றிய திரு. மு. மயில்வாகனம் திருக்கேதீஸ்வரக் கும்பாபிஷேக மலரிலே குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கிலேய அரசினர் நமது மக்களை மத மாற் றம் செய்வதில் பல்வேறு யுக்திகளைக் கையாண்டார் கள். ஆங்கிலக் கல்வி என்ற இனிப்புப் பண்டத்தைக் காட்டி மதமாற்றம் செய்யும் முயற்சிகள் மறைமுகமாக மிஷனரிகளால் எடுக்கப்பட்டு வந்தன. சைவச் சூழலில் எமது பிள்ளைகள் உயர்கல்வியைப் பெறக்கூடிய கல்வி

2O09 சர்வதாரி மாசி 01
ாபூமியாக.
ரு. சிவ. மகாலிங்கம்
நிறுவனம் அமைக்கப்படல் வேண்டும் என்று விரும்பிய நாவலர்பெருமான் வண்ணார்பண்ணையில் 1872 ஆம் ஆண்டில் சைவ ஆங்கிலப் பாடசாலை ஒன்றை நிறுவி னார். போதிய பணமின்மையாலுமி, பிள்ளைகள் பலர் சேராமையாலும் அரச அங்கீகாரம் கிடைக்காததாலும் இப்பாடசாலை நான்கு ஆண்டுகள் மட்டுமே நடைபெற்றது.
சைவப் பண்பாட்டுச் சூழலில் ஆங்கிலக்கல்விக் கூடம் நடத்தும் நாவலருடைய சிந்தனை அவருடைய காலத்தில் செயல்வடிவம் பெறமுடியாவிட்டாலும் அவள் வழிவந்த சைவப்பெரியார்களின் கூட்டுமுயற்சியினால் 1890 ஆம் ஆண்டு விஜயதசமி நாளில் இன்றுள்ள இடத்தில் யாழ். இந்துக் கல்லூரி ரம்பிக்கப்பட்டது. இக்கல்லூரியின் நிர்வாகத்தினைச் சைவபரிபாலன சபை யினரே சில வருடகாலம் நடத்திவந்தார்கள். யாழ்ப் பாணக் குடாநாட்டில் தொடர்ந்து பல சைவ ஆங்கிலக் கல்லூரிகள் தோற்றம்பெற்றன. இக் கல்லூரிகளைப் பரிபாலனம் செய்த இந்துக் கல்லூரிச் சபையிடம் யாழ் இந்துக் கல்லூரியும் ஒப்படைக்கப்பட்டது. 1889 ஆம் ஆண்டு முதல் இருகிழமைக்கு ஒரு வெளியீடாகத் தமிழில் இந்துசாதனம் என்ற பத்திரிகையையும் Syaś6dgjöf6ò gbg 9&56ŐT (Hindu Organ) 676ŐB பத்திரிகையையும் வெளியிட்டு வந்தார்கள். ஈழத்தில் வாழும் சைவத் தமிழர்களின் குரலாகப் பல வருடகாலம் இந்து சாதனம் பத்திரிகை வெளிவந்தது.
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளினால் சில வருடகாலம் இந்து சாதனம் வெளிவருவதில் தடை ஏற்பட்டாலும் மீண்டும் புத்துயிர் அளிக்கப்பட்டு l இரத்தம் பாய்ச்சப்பட்டு அது வெளிவர ஆரம்பித்துள் ளமை மகிழ்ச்சிக்குரியது.
Li6Opu60 கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினாற்றானே
என்ற நன்னூலார் வாக்கிற்கு அமைய ஆன்மீகக் கருத்துக்களை அறிவியலுடன் சேர்த்து வழங்குகில் வேண்டும். ஆரோக்கியமான சிந்தனையுஸ் இளிைரிே சமுதாயம் உருவாகுவதற்கு இத்தகிைய ஆக்ழ்க சஞ்சிகைகளே வழிகாட்டமுடியும்.
சைவ ஞான தீபமாக மிளிரவேண்டிய சைவபரி பாலன சபையார் ஆற்றவேண்டிய பணிகள் நிறைய உண்டு. நூற்றி இருபது வருடங்களைக் கடந்து நற்பணி யாற்றி வருவதும் நாவலரின் கனவுகளை நனவாக்கத்
தோன்றியதுமான சைவபரிபாலன சபை நமது சொத்து
1.

Page 12
இந்துசாதனம் 3.02.
என்ற நினைப்பு ஈழத்தில் வாழும் சைவப்பெருமக்கள் அனைவரிடமும் உருவாகவேண்டும்.
சைவபரிபாலன சபை ஆரம்பித்த காலத்தில் அதன் நோக்கங்களாகப் பின்வருவன வெளிப்படுத்தப் பட்டன.
1. சைவசமயத்தை வளர்த்தல், பிற சமயத்தில்
நம்மவர்களைச் சேரவிடாது தடுத்தல்.
2. சைவமுறைப்படி சைவப்பிள்ளைகள் தமிழையும் ஆங்கிலத்தையும் பயில்வதற்குச் சைவப் பாட சாலைகளை ஊர்கள் தோறும் தாபித்து நடத்துதல்.
3. கல்வி அறிவு ஒழுக்கமுடைய பெரியோர்களைக் கொண்டு சைவசமய விருத்தி கருதிப் பிரசங் கங்கள் செய்வித்தல்.
4. சைவ மக்களுக்கு நலன் தரும் பத்திரிகைகளைத்
தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்துதல்.
5. அழிந்திருக்கும் சைவாலயங்கள், திருமடங்கள் ஆகியவற்றைப் புதுப்பித்து இயங்கச்செய்தலும் அவற் றுக்குரிய தருமச் சொத்துக்களைப் பராமரித்தலும்.
6föITUIĞf6 - Pö
2009.01.14 ஆம் திகதி வெளிவந்த 'இந்து சாதன திருவுருவப்படம் பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது.
நாம் குறிப்பிட்ட மூன்று இடங்களிலும் வலம்புரி விநாய
ஒரு சிறு தொழில்நுட்பத் தவறு காரணமாக நமது இத வருந்துகின்றோம்.
இங்கே.
மஹா சிவராத்திரி புண்ணிய காலத்தில் பக். செய்து வழிபாடாற்றும் வழக்கம் திருக்கேதீஸ்வரத்
பாலாவித் திருக்குளத்தில் நீராடும் பக்தர்கள் திருச் வைத்து, சிவபுராண பாராயணத்துடன் கோவிலுக்கு அபிஷேகம் செய்து வழிபடும் காட்சி, கண்கொளாக் கா
இத்தகைய ஒரு வழக்கம் கடந்த சில ஆண்டுகள் அம்பாள் சமேத விஸ்வநாதஸ்வாமி கோவிலிலும். ந
கோவிலுக்கு முன்னால் அமைந்துள்ள கிணற்றி கிணற்று நீரைக் குடங்களிலே ஏந்தி கோயிலின் உள்: எழுந்தருளியுள்ள சிவலிங்கப் பெருமானுக்கு அபிே

2009 8Fñi6ha5Trñ LDrTasß O1
6. வாசிகசாலை, நூல்நிலையம் தாபித்து, நடாத்து
தல் சைவ நூல்களை வெளியிடல்.
7. சைவத்தையும் தமிழையும் வளர்ப்பதற்கான
வேறுபணிகளையும் செய்தல்.
மேற்கூறிய நோக்கங்களைச் செயற்படுத்துவதற்கு திரிகரண சுத்தியுடன் பணியாற்றக்கூடிய ஆளணியின ரைச் சபையுடன் இணைத்துக் கொள்ளவேண்டும். உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள்தோறும் சைவபரிபாலன சபையின் கிளைகள் திறக்கப்படல் வேண்டும். கிராமங் களில் உள்ள சைவப்பற்றுள்ளவர்கள் அனைவரும் இச்சபையில் அங்கத்தவர்களாக வேண்டும். இளைஞர் களும் மாதர்களும் சபையின் செயற்பாடுகளில் முக்கிய பங்காளர்களாக இணைக்கப்படல் வேண்டும்.
உயிர்த்துடிப்புள்ள சைவசமய நிறுவனமாகச் சைவ பரிபாலன சபை இயங்க ஆரம்பித்தால் மதமாற்றம் செய் வோர், நமது சமயபாரம்பரியங்களை எள்ளி நகை யாடுவோர் அந்நிய நாகரிக மோகத்தினால் கவரப்பட்டுத் தடுமாறுவோர் அனைவரும் செயலிழப்பர் நாவலர் என்றும் போற்றிய கந்தபுராண கலாசாரம் தான் நமது கலாசாரம் என்று மார்தட்டிக்கூறும் நிலை நம்மவர்க்கு ஏற்பட்டுவிடும். ஈழ மணித்திருநாடு மீண்டும் சிவபூமியாக மாறும். 藻
திருத்தக் குறிப்பு
ம் இதழின் முதற் பக்கத்தில் இடம்பெற்ற “விநாயகி -
கியின் திருவுருவமே காணப்படுகின்றது.
தழில் இடம்புரிவிநாயகியாக அச்சாகிவிட்டது. தவறுக்காக 發 - ஆசிரியர்
. இப்படி
தர்களே சிவலிங்கப் பெருமானுக்கு அபிஷேகம்
திருத்தலத்தில் உண்டு.
$குளத் தீர்த்தத்தைக் குடங்களில் மொண்டு, தலையில் வந்து மேற்கு வீதியிலுள்ள புராதன லிங்கத்துக்கு ட்சி.
ாக சுன்னாகம் மயிலனி திருக்குட வாயில் விசாலாட்சி
டைமுறையில் உள்ளது.
லே பக்தர்கள் நீராடிவிட்டு, ஈரத்துணியுடன் அந்தக் வீதியில் ஈசான மூலையில் வில்வமரத்தின் கீழ் ஷகம் செய்து வழிபட்டு வருகின்றார்கள்.

Page 13
இந்துசாதனம்
மதப்பள்ளிகள்
1976 ஆம் ஆண்டு அகில உலக இந்து மகாநாடு ஒன்று மலேசியாவைச் சேர்ந்த கோலாலம்பூரில் நடை பெற்றது. அம்மகாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அடியேனுக்கும் கிடைத்தது. உலகம் முழுவதிலுமிருந்து பல பிரதிநிதிகள் வந்திருந்தனர். மகாநாட்டு முடிவில் விரும்பிய பேராளர்களை மலேசியா முழுவதும் அழைத் துச் சென்று பல இடங்களிலும் உபந்நியாசங்களுக்கும் ஏற்பாடு செய்திருந்தார்கள். எம்மோடு உடன் வந்தவர் களில் திரு. T.M.P மகாதேவன் பாலித்தீவைச் சேர்ந்த
திருமதி ஒகா மேடானைச் சேர்ந்த பூரீஇராமுலு முதலி யோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
ழரீஇராமுலு அவர்கள் நாங்கள் எல்லோரும் இந்தோநேசியாவுக்கு வரவேண்டுமென்று அழைப்பு விடுத் தார்கள். 1977 ஆம் ஆண்டு
13.02.
இந்தோநேசியாவில்
- ஆத்மஜோதி
அடியேன் மறுபடியும் மலே
சியா செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. மலேசியா வில் நின்று பூரீஇராமுலுவுக்கு ஒரு கடிதம் எழுதினேன். அவர் கட்டாயம் மேடானுக்கு வர வேண்டும் என்று வற்
இந்துக்கள் என்று சொல் திருப்தியடையாமல் 560LÜ வாழும் இந்தோநேஷியத் தய கட்டுரை சென்ற இதழில் 6ெ பாடசாலைகள், இந்துசமய வரலாற்றை இந்தக்கட்டுரை
புறுத்தி எழுதியிருந்தார்கள். அடியேன் அதனைப் பயன் படுத்திக்கொண்டு பினாங்கி லிருந்து மேடானுக்கு விமான மூலம் இருபத்தைந்து நிமிடங்களில் சென்று சேர்ந்தேன். அடியேனை வர வேற்பதற்காக மாரியம்மன் கோயில் தலைவர் திரு. சி. மாரிமுத்து, பூரீ இராமுலு முதலாக பதினைந்துபேர் வரை விமான நிலையத்திற்கு வந்திருந் தார்கள். அந்தப் பிரயாணத்தின்போது இருபத்தெட்டு நாட்கள் மேடானில் தங்கிப் பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும் வாய்ப்பினை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
அத்தருணத்தில் கோயில்களிலும் வீடுகளிலும் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் நான்கு ஐந்து நிகழ்ச்சிகளிலும் பங்குபற்ற வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் தமிழில் பேச, வாசிக்க, எழுதக்கூடிய வல்லமையுள்ளவர்களாக இருந்தார்கள். வாலிபர்களுக் குத் தமிழில் பேசினால் விளங்கக்கூடிய ஆற்றல் இருந் தது. சிறார்களுக்கு எழுதவோ பேசவோ வாசிக்கவோ தெரியாது. உனது பெயர் என்ன என்று குழந்தைகளைக் கேட்டால் அவர்கள் பெற்றாருடைய முகத்தை நிமிர்ந்து பார்ப்பார்கள். பெற்றார் இந்தோநேசியன் மொழியில் சொன்னதன் பின்பே தமது பெயர்களைச் சொல்வார்கள்.
இருபத்தெட்டு நாட்கள் பணியாற்றியபின் மேடான் றி மாரியம்மன் கோயிலில் பிரியாவிடை வைபவம் ஒன்று நிகழ்ந்தது. அதிலும் அடியேன் தமிழை மறந்தபின் நாம் தமிழர் என்று சொல்லிக்கொள்ள முடியாது. தமிழை மறந்தால் எமக்கு மதமும் இல்லை என்ற கருத்தை மிகமிக வற்புறுத்திக் கூறினேன்.

2O09 dita,ajrif Drra 01
) இந்துத்தமிழர்கள் 5T. duP560.5IIIT
கூட்டத்தில் ஒருவர் எழுந்து, கடந்த நான்கு வாரங் களாகத் தமிழின் முக்கியத்துவத்தைப் பற்றியே பேசி வருகின்றீர்கள்.
தமிழை மறந்துவிட்ட சமூகத்தில் இதனை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதைப்பற்றிச் சிறிது கூறுவீர்களா? என்று கேட்டார்.
வீட்டிலே தமிழிலேயே பேசுங்கள், தமிழன் தமிழ னைக் கண்டால் தமிழிலேயே பேசவேண்டும். இந் தோனேசியக் குழந்தைகளுக்கு ஏழு வயதில்தான் பாட சாலையில் சேர்வதற்கு அநுமதி கிடைக்கிறது. மூன்று வயதுமுதல் ஏழு வயது வரை குழந்தைகள் தமிழ் மொழி மூலம் மதத்தைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு இருக் கின்றது. காலையில் இந்தோநேசியப் பள்ளிக்குச் செல் லும் மாணவர்களுக்கு மாலையிலும் மாலையில் இந் தோநேசியப் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர் களுக்குக் காலையிலும் தமிழ்மொழி மூலம் மதப்
· பள்ளிகள் நடத்தலாம். இதனை அரசாங்கம் அநு மதிக்கிறது.
லிக்கொள்வதுடன் மட்டும் pறையிலும் இந்துக்களாக 5. ಉಹ67 பற்றிய அறிமு நீங்கள்தான் இப்பாட வளிவந்தது. ೨rಓಡಿಹ தமிழ்ப் சாலைகளை ஆரம்பித்து யபாடசாலைகளஉருவான வைக்க வேண்டும் என்று விளக்குகின்றது. கேட்டுக் கொண்டார்கள். குறிப்பிட்ட இடங்களில் பாடசாலைக் கட்டிடத்தை எழுப்பிய பின் அறிவியுங்கள். உங்கள் அறிவித்தல் கிடைத்த உடன் வருகின்றேன்."
ஆறு மாதத்திற்கிடையில் அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்று வந்து சுமார் ஆறு மாதங்கள் தங்கி னேன். தொடக்கத்தில் முக்கியமாக ஆறு இடங்களில் மதப்பள்ளிகள் உருவாகின. அவை பத்திசா, டாராட், பசுண்டான் அவுரி, புல்லுக்கொல்லை, புலோபராயன் என்னும் ஆறு இடங்களாகும். இப்பாடசாலைகளில் கல்வி கற்பிக்கத்தக்க ஆசிரியைகளை அந்தந்தப் பாடசாலை யின் சூழலிலேயே கோயில் நிர்வாகம் தெரிவு செய்தது. தமிழ் கற்கும் மாணவர்களுக்கு தமிழ்ப் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
தமிழ் கற்பிக்கும் ஆசிரியைகளுக்குத் தமிழ் கற்பிக் கும் விதம் பற்றியும் தமிழ் அறிவை மேம்படுத்துவது பற்றியும் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுச் சரியாக மூன்று மாதங்களில் ஒரு கலைவிழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தோம். பேச்சு, பாடல் பரதநாட்டியம், கிராமிய நடனம், நாடகம் நகைச்சுவை நிகழ்ச்சிகள் சம்பந்தமான விஷயங்களில் போட்டிகள் நடைபெற்றன. மாணவர் காட்டிய திறமைகளைக் கண்டு பெற்றாரே வியந்தனர். அக்கலைவிழாவின் பின் தமிழ் கற்கும் மாணவரின் தொகை எக்கச்சக்கமாகக் கூடியது ஆசிரியைகளும் கற்பித்தலில் மிகமிக ஆர்வம் காட்டினர். கூட்டுவழிபாட்டுப் பாடல்களை முறையாகக் கற்றுக் கொடுத்தனர். சிவபுராணத்தை முற்றும் ஓதல் போட்டியில் பல மாணவர்கள் வெற்றி கண்டனர். அவர்களைப் பாராட்டி ழரீமாரியம்மன் கோயில் தலைவர் திரு. சி. மாரிமுத்து அவர்கள் பரிசுகளும் வழங்கினார். இரண்டா (149b Udisdbb Uffiths)

Page 14
இந்துசாதனம் 13:02 சொல்லிய பாதேன் சொல்லு தேவாரங்களின் பொருளை நன்கு தெரிந்துகொண்டா
பாடவும் முடியும், திருஞானசம்பந்தர் முதன்முதலி இரண்டாவதுபாசுரத்தின் பதவுரை, பொழிப்புரை ஆகிய
முற்றலாமை யிள நாகமோடேன முளைக்கொம்
பவையூண்டு வற்றலோடு கல னாப்பலி தேர்ந்தென துள்ளங்
856AT85GCTGQ6 கற்றல்கேட்டலுடை யார்பெரியார் கழல் கையால்
தொழுதேத்தப் பெற்றமுர்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே
முற்றல் ஆமை - முதிர்ந்த ஆமை ஒடு, இளநாகம் ஒடு - இளம்பாம்பு எனும் இவைகளோடு, ஏனம் முளை கொம்பு - பன்றியின் முளைபோன்ற கொம்பு, அவை பூண்டு ஆகிய அவைகளை அணிகலனாக அணிந்து வற்றல் ஒடு - தசை கழிந்த பிரமனது தலை ஒட்டினை, கலனா - (பலிப்) பாத்திரமாக, பலி தேர்ந்து - (தேவர்களது குருதியையும் அகந்தையை யும்) பிச்சையாகக் கொண்டு, எனது உள்ளம் கவர் கள்வன் - என்னைத் தன்வயப்படுத்திக் கொண்ட வன், கற்றல் கேட்டல் உடையார் - வீட்டு நெறிக்கு
இந்தோநேசியாவில்
-13ஆம் பக்கத் தொடர்ச்சிவது முறை அடியேன் செல்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக தலைவர் சி. மாரிமுத்து அவர்கள் நாவலப் பிட்டிக்கு நேராக வந்து இந்தோநேசியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்கள்.
சி. மாரிமுத்து அவர்கள் அவரது மகள் லீலா, பேரன் இராஜா ஆகிய மூவரும் வந்திருந்தார்கள். கண்டி, கதிர்காமம், நுவரெலியா, கொழும்பு போன்ற இடங் களைப் பார்வையிட்டுச் சென்றார்கள்.
மதப்பள்ளிகளில் காலையில் இரண்டு மணி நேரமும் மாலையில் இரண்டு மணி நேரமும் தமிழ் சொல்லிக் கொடுக்கப்படுகின்றது. ஆசிரியைகளுக்குரிய சம்பளத் தைக் கோயில் நிர்வாகமே வழங்கிவருகின்றது. தமிழ் கற்கும் பிள்ளைகளுக்குத் தமிழ்நாட்டு அரசாங்கம் பாலர் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு ஈறான பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பாடநூலை அனுப்பிவைத்து உதவி செய்திருக் கிறது. கல்கி, ஆனந்தவிகடன், குமுதம் போன்ற வார வெளியீடுகளையும் இந்தியத்தூதுவர் காரியாலயம் வர வழைத்துக் கொடுத்துக்கொண்டு வருகிறது.
தமிழ் அச்சகம் ஒன்று இல்லாத இவர்களுக்குத் தமிழ்நாட்டு அரசாங்கம் செய்த இப்பேருதவி ஒரு வரப்பிரசாதமாகும்.
அரசினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஏதாவது ஒரு மதத்தைச் சார்ந்தவர்களாக இந்தோநேசியர்கள் வாழ வேண்டும். மதம் இல்லாதவர்களுக்கு இங்கு வாழ்க்கை யும் இல்லை. எந்த மதத்தையுஞ் சாராத நாஸ்திகள் களுக்கு இங்கு இடமில்லை. மதமற்றவர்கள் நீண்டகாலம் அரசினர் விருந்தினராகவே இருக்க நேரிடும். இத்தகைய வர்கள் விடுதலை அடைய வேண்டுமானால் மதகுருவாக உடையவர் ஒருவர் வந்து பொறுப்பேற்க வேண்டும். பொறுப்பேற்றவருடன் அரசாங்கமும் இவர் கோயிலுக்குச்

2O09 oriassf LDm3 01
பொருளுர்ைந்து Жбөorбо. ல் அவற்றை இலகுவில் மனனம் செய்யவும் உளமுருகிப்
ல் திருப்பிரமபுரத்திற் பாடியருளிய திருப்பதிகத்தின் வற்றைத்தருகின்றோம்.
ஏதுவாகிய உண்மை நூல்களைக் கற்றலும் கேட் டலுமுடையவர்களாகிய, பெரியார் - பெரியார்கள், கழல் - (பற்றும் பற்றாகிய) இறைவன் திருவடிகளை கையால் - தமது கைகளால், தொழுது ஏத்த - வணங்கித் துதிக்க, பெற்றம் - இடபத்தை, ஊர்ந்த - ஊர்தியாகக் கொண்டருளிய, பிரமாபுரம் மேவிய - சீர்காழியில் எழுந்தருளிய, பெம்மான் இவன் - பெம்மானாகிய இவனே.
பொழிப்புரை - ஆமையின் ஒடு, பாம்பு, பன்றிக்கொம்பு ஆகியவற்றை ஆபரணமாய் அணிந்து, பிரமதேவ னுடைய தலை ஒடாகிய பிச்சைப் பாத்திரத்தில், தேவர்களுடைய இரத்தத்தையும் அகந்தையையும் பிச்சையாக ஏற்று என்னைக் கவர்ந்தவனும், முத் திக்கு வழிகாட்டும் நூல்களைக் கற்றும், கேட்டும் தெரிந்த பெரியோர்கள் வணங்கும் திருவடிகளை உடையவனும் எருதினை ஊர்தியாகக் கொண்டு பிரமாபுரத்தில் எழுந்தருளியிருக்கின்ற சிவபெரு LDITG6GT. 羲
) இந்துத் தமிழர்கள்
சென்று ஒழுங்காக வழிபடுகின்றாரா என்பதை அடிக்கடி கூர்ந்து கண்காணித்து வருகின்றது.
ஏதாவது ஒரு மதத்தையும் சாராதவர்கள் அரசியல் சட்டப்படி கடுமையான தண்டனைக்குள்ளாவார்கள். எந்த ஒரு சமயத்தையுஞ் சாராதவர்கள். சமய வாழ்வில் ஈடு படாதவர்கள் ஆகிய இத்தகையவர்கள் கொம்மி யுனிசுக்கள் என்று அழைக்கப்படுவார்கள். கொம்மி யுனிசுக்களின் கொடுமைகளுக்கு ஆளானவர்கள் பலர் இங்கு இருக்கின்றார்கள். ஆதலினால் கொம்மியுனிசுக் களை இங்குள்ள அரசாங்கமும் மக்களும் உலகிலேயே மிகக் கொடியவர்கள் என்று கருதுகின்றார்கள். இதனால் நாட்டினுள்ளே கொம்மியுனிசுக்களோ அன்றி அவர்கள் கொள்கைகளோ புகுந்துவிடாதபடி அரசாங்கமும் மக்க ளும் மிக விழிப்போடு இருக்கின்றனர். எந்த உருவத்தில் யார் நூல் கொண்டுவந்தாலும் அதனைக் கடுமையாகப் பரிசீலனை செய்த பின்பே அந்த நூலைக் கொண்டு
செல்ல அநுமதிக்கிறார்கள்.
கொம்மியுனிசு என்று ஒருவர் நிரூபிக்கப்பட்டால் அவருக்குக் கிடைக்குந் தண்டனையும் மிகப் பார தூரமானதாகும். இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய மூன்றும் கூட்டுச் சேர்ந்து கொம்மியுனிசுக்களை ஒழிப்பதில் ஒரு கூட்டு ஒப்பந்தம் செய்துள்ளன. கொம்மி யுனிசாக இருக்கும் ஒருவன் இராஜத்துரோகம் செய்த வனாகக் கருதப்படுகின்றான். கொம்மியுனிசுக் களுக்குக் கொடுக்கும் தண்டனையை ஒருவன் ஒருமுறை பார்த்து விட்டானானால், வாழ்க்கையில் எப்பொழுதாவது தன்னை ஒரு கொம்மியுனிக் என்று சொல்லிக்கொள்ள ஆசைப் படவே மாட்டான். ஒரு காலத்தில் இங்கு வாழ்ந்த கொம்மி யுனிசுக்கள் மக்களை மிகக் கொடுரமாக நடாத்தியுள் ளார்கள். அந்தப் பயமே இப்பொழுதும் தலைமுறை தலைமுறையாக இரத்தத்தில் ஊறிப் போயுள்ளது. *
தொடரும்
4.

Page 15
Hindu Organ 13.
Saiva Tamil Clinical
"T"
Drawing the attention of all to a hitherto our learned writer stresses the need to h, visit hospitals and homes to give comfort a
Prof. A. Sanmugadas,
In our religio - social life, we encounter certain instances where someone has to be brought in to do some care- giving activities. There are many people either in hospitals or at homes ailing with mental, psychological, terminal or any other form of illness where a trained person is needed to help in the spiritual needs of such patients, sometimes of their families. Our Brahmin Gurus do not go to the hospitals or to private houses to attend to such needs. Therefore, trained Saiva or Intu Potakarkal (Saiva or Hindu Pastors) are needed for the delivery of compassionate care to Patients and families.
If an educational programme is developed for training of such Pastors/ Preachers, a part of the course should consist of "The Saiva
Clinical Spiritual Education".
An eminent academician and Catholic
Priest Prof. Dr. Rev. Fr. A.J.V. Chandrakanthan
from Toronto University has devised such a programme to help the Saiva Tamil Community living in Canada. Saiva Tamil Clinical, Spiritual Education is designed as a method of practical learning which blends clinical, religious and spiritual experience and insights into real life application in the context of the delivery of spiritual care to needy persons. The main objectives of this course are (1) Utilization of the unique Saiva tradition of medical services, healing rituals and spirituality as a religious and cultural means of healing and wholeness (2) Development of a professional identity as a clinical spiritual counsellor (3) Integration of knowledge of

92.2009 Sarvathari Masi 01
Spiritual Education
neglected service in our religio-Social life. ave a body of spiritually trained people to ind solace to those ailing there.
Ph. D. (Edinburgh)
behavioural sciences, theology and saiva spiritual insights into one's own care-giving function.
ASaiva or Intu potakar, apart from his or her function of preaching and practising, has to serve in many of the settings, such as general hospitals, mental health facilities, nursing homes as a minister to individuals, families, and to small groups of people as a chaplain. Therefore, candidates for this educational programme, apart from learning saiva texts, history, rituals, etc. have to have basic information of the clinical areas such as: Crisis / Trauma, Oncology, Paediatric & Neonatal ICU, Haemodialysis, Psychiatry, Cardiology / Coronary Care Units, Medical Intensive Care units, Chronic, etc.
Health care and attending to spiritual needs of the patients are not strange things for the saivaites. Their god himself is called Vaidyanathan "Master of Health care or Treatment'Historian Prof. Nilakanta Sastri says that during the Chola period, the saiva temples were rendering enormous services to the South Indian people as banks, centres of learning arts, Treasury, and as Hospitals. This programme has to be designed to help interested Saiva youths to develop their knowledge and skills in their roles as Saiva Spiritual care support personnel and counsellors. For this, we will need the help of the academics from the Departments of Hindu Civilization / Philosophy, Tamil, History, Sociology and Philosophy and of the
Medical Experts. 殺

Page 16
இந்துசாதனம் 13.02.
யாழ் சைவபரிபாலன சபைத் துணைத்தலைவர் சைவப்புலவர் மு. திருஞானசம்பந்தபிள்ளை தலைமை யில் இந்துசாதனம் - Hindu Organ 120 ஆம் ஆண்டின் முதலாவது இதழ் அறிமுகவிழா சபை நாவலர் ஆச்சிரம மண்டபத்தில் நடைபெற்றது.
தைத்திருநாள் அன்று நடைபெற்ற இந்த விழாவில் சபைப்ப்ரீட்சைச் செயலர் இர்ா. செல்வ்வடிவ்ேல் வரவேற் புரை நிகழ்த்தினார்.
சைவப்புலவர் மு. திருஞானசம்பந்தபிள்ளை தமது தலைமை உரையில் சைவபரிபாலன சபை வரலாற் றையும் சபையின் சமயப் பணிகளையும் எடுத்துக் கூறினார்.
கலாநிதி செங்கைஆழியன் க. குணராசா இந்து சாதனம் அறிமுக உரைய்ை நிகழ்த்தினார்.
இந்துசாதனம் சைவப்பணிப் பிரச்சாரத்தை மட்டுமே மேற்ஃ"ே வருகின்றது என்ற #? இன்று பலரிடமும் உண்டு. இது ஒரு தவறான கூற்றாகும். கால் நூற்றாண்டுக்கு முந்திய காலத்தில் இந்துசாதனம் Hindu Organ_பத்திரிகைகளைப் பார்த்தால் அதன் இலக்கியப் பணி புரியும்.
பழம் தமிழ் இலக்கியம், நவீன இலக்கியம் இரண் ற்கும் இந்துசாதனம் ஏட்டில் நிறைய இடங்கொடுக்கப் பற்றுள்ளது.
கொ(9tell as flypa. The Ceylon Daily THE INTL The Excerpts from the apprecia 1. ്
is issue of the Inthu Sathanam for the us who would like to know more about Hinduism in journals could also add more knowledge and infor photos contains interesting and educative pieces Sanmugadas, affirms that Saiva Siddhantham is the roots in our classical Thamil Literature.... All in all
the spiritual kind would appreciate the contents of Ir
Edited & Published By Mr.S.Shivasaravanabavanon behalf Printed at Bharathi Pathippakam, 430, K.K.S. Road, Jaffna.
 

2OO 9 Ffraig,5 Tri LDmraj O1
b அறிமுக விழா
தொடர் கதைகள் பல இந்துசாதனத்தில் தொடர்ந்து பிரசுரமாகி உள்ள்ன.
அன்றைய இந்துசாதனம் ஏடுகளில் பிரசுரமான இலக்கியக் கட்டுரைகள், சிறுகதைகளில் தரமானவற்றை இந்துசாதனம் மீள்பிரசுரம் செய்வது புதிய தலைமுறை யினருக்குப் பெரும் உதவியாக அமையும், என்று கூறினார்.
அரச அதிபர் க. கணேஷ் அவர்கள் சமயம், இலக்கியம், ப்ொதுப்பணி, ஆலய நிர்வாகம் பற்றி நிறைய எடுத்துக் கூறினார்.
அரச அதிபர், இந்துசாதனம் முதல் பிரதியை, சைவபரிபாலன சபையர்ல் தோற்றுவிக்கப்பெற்ற யாழ் இந்துக் கல்லூரியின் இன்றைய் அதிபர் வி. கணேசராசா அவர்களுக்கு வழங்கியதன் மூலம் விற்பனையைத் தொடக்கி வைத்தார்.
Sbgig Tg560T b - Hindu Organ ಙ್ಗಃ தளத்தை யும் இந்த சுபநேரத்தில் அரச தொடக்கி வைத்தார்.
இந்துசாதனம் - Hindu Organ கெளரவ ஆசிரியர் சிவ. சரவண்பவன் (சிற்பி) அவர்கள் ஏற்புரையை நிகழ்த்தினார்.
சைவபரிபாலன சபைத் துணைப்பொதுச் செயலர் தி.மாணிக்கவாசகள் நன்றியுடன் விழா நிறைவுற்றது. *
/ NeWS WelCOmes
J SATANAM tion written by K. S. Sivakumaran.
current year reachedusa few days ago. For those of general and Saiva Siddhantham in particular such mation. The 16 page publication with two colour of writing..... The article in English by Prof A. unique philosophy of the Tamil Hindus and has its I benefitted reading this journal. I am sure readers of thu Sathanam
of the Saiva Paripalana Sabai 450, K.K.S Road, Jaffna & 3.02.2009 (1" Day of Masi Thinkal). Phone: 0212227678