கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்துசாதனம் 2009.04.14

Page 1
சைவபரிபாலன சபை வெளியீடு ஆரம்பம்: விரோதி இநில ஆவணி மீ" 26 ஆம் உ (1889)
Web: www hinduorgan. com
վ:
தீக்ம்: 120 விரோதி வருடம் சித்திை '8':', . (4.04.
ஃைவ அன்
விளக்கக் கட்டு
 
 

úījuć56fīGD6uo e5 unr: 5O. OO email: editor (a) hindu organ. com
ரத் திங்கள் 1 ஆம் நாள் இதழ்: 04 2009)
※
እ T ධ්‍රැඩ්බීරිං گمحصے
تھیے۔۔۔
டுரை பக்கம் 2, 3

Page 2
இந்துசாதனம் 14O4.
நீ
6Das6dar
ள்ளை
- சொல்லின் செல்வரி இ
ஒரு கோடி மந்திரங்களைத் தன்னகத்தே கொண்ட சித்திர மண்டபம் ஒன்று திருக்கைலாய மலையில் இருந்தது. பார்வதிதேவியார் முக்கண்ணுடைய பரமசி வனாருடன் அம்மந்திர மண்டபத்திற்கு விஜயம் செய்த னர். அங்கு ஏழு கோடி மந்திரங்களுக்கு நடுவே இரண்டு ஒளிப்பிழம்புகள் தெரிந்தன. அவற்றுள் ஒன்று சமஷ்டிப் பிரணவம், மற்றையது. வியஷடிப் பிரணவம்.
சிவமும் சக்தியும் அப்பிரணவங்களின் பால் தம் முடைய அருட்பார்வையைச் செலுத்தினார்கள். இரு பிர ணவங்களிலிருந்தும் பிள்ளையார் அவதரித்தார். பிள் ளைக்கு பிரணவாகாரமாகிய யானையின் முகம் இருந் தது. தம்மை வணங்கிய பிள்ளையை அள்ளி எடுத்து உச்சிமோந்த இறைவனும் இறைவியும் பெருமகிழ்ச்சி யுற்று “உள்ளன்போடு உன்னை வணங்கி வழிபடுபவர் களுக்கு ஏற்படும் துன்பங்களைக் களைந்து அருள்புரி வாயாக” என்று வாழ்த்தினார்கள்.
விக்னேஸ்வரன், விநாயகர், கணநாதன், கணபதி, கணேசன், கணாதிபன் என்று பல திருநாமங்கள் பிள்ளை யாருக்கு உண்டு. ' பக்தர்களின் துன்பம் துடைக்கும் விக்னேஸ்வரன், அதர்மத்தின் வழிநடப்பவர்களுக்கு துன் பத்தைக் கொடுத்து நல்வழிக்கும் கொண்டு வருவார்.
விநாயகர் துணையுடன் - ஈழத்திருநாட்டின் வர லாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கைலாசநாதர் - நல்லூர் கைலாச பிள்ளையார் ஆலயம் பற்றி எழுதுகின்றேன்.
ஈழத்தமிழரின் வரலாற்றைச் சரியான முறையில் கூறும் வரலாற்று நூல்கள் மிகவும் குறைவு. கைலாய மாலை, யாழ்ப்பாண வைபவமாலை, என்பன முக்கிய மானவை. பின்னர் எழுதப்பட்டவை அனைத்தும் மேற் குறித்தவற்றை ஆதாரமாகக்கொண்டே எழுதப்பட்டி ருக்கின்றன.
செகராசன் என்னும் சிங்கையாரியன் நல்லூர் கைலாசநாதர் ஆலயத்தைக் கட்டுவித்தான் எனக் “கைலாய மாலை” கூறுகின்றது.
சிங்கையாரியன் மதுரைச் சொக்கநாதரை வழிபட முடியவில்லையே என்று சிந்தித்து நல்லூரில் சொக்க நாதர் கோவில் அமைக்க வேண்டும் என்று எண்ண முடையவனாக இருந்தான். பரம்பொருளான சிவன் உமை யுடன் கூடிக் கனவிலே தோன்றி நம்பெயர் “கயிலை நாதன், எம்மை மறந்தாயா?” எனக்கூறி மறைந்தார். இறைவன் கட்டளைப்படி ஆகமமுறை தப்பாமல் நல் லூரில் கைலாயநாதர் ஆலயத்தை அவன் அமைத்தான். பிரதிஷ்டை வைபவம் பிராமண ஆசிரியன் கங்காதரக் குருக்கள் மூலம் சிறப்பாக நடைபெற்றது.
திருக்கயிலாயமலையில் எழுந்தருளியிருக்கும் கயிலைநாதர், நந்திதேவரை நோக்கி “இதுவரை இந்தக் கயிலை மலையிலும் தென்கயிலை எனப்படும் திருக்காளத்தி மலையிலும் இருந்து வருகிறோம். இன்றுமுதல் முன்றாவது கைலையாகிய நல்லூரிலே கைலாசநாதர் கோவிலில் மற் றைய கயிலைகளிற் போலவே அமர்ந்தருள வேண்டும். I சோழநாட்டிலிருந்து யாழ் அங்கு செல்வதற்கு உன் செய்த சிங்கையாரிய மன கணங்களும் நீயும் புறப்படு வாயாக” என்ற திருவாக் குக் கூறினார்.
கைலாசநாதர் கோயில் என கோயில் சம்பந்தமான வரல

2OO9. விரோதி சித்திரை 01
தர்
கோவில்
f
நூ. செல்வவடிவேல் -
அதன்படி நல்லூர் கயிலைநாதர் கோவில் வந்து அங்கு பிரதிஷ்டிை செய்யப்பட்ட விக்கிரகத்தில் சாந் தித்தியமாகி அரசரும் மக்களும் சிறப்புடன் வாழுமாறு அவ்வாலயத்தில் எழுந்தருளினார்.
ஈழத்திருநாட்டில் போத்துக்கேயர் புகுந்து ஆட்சி நடத்தத் தொடங்கிய காலத்தில் தமது சமயத்தையும் திணிக்க முற்பட்டனர். சைவ ஆலயங்கள் உடைத்து நொருக்கப்பட்டன. மத வன்முறையில் பாதிக்கப்ப்ட்டு உடைக்கப்பட்ட கோவில்களில் கைலாசநாதர் கோவிலும் ஒன்றாகும்.
கோவில் இடித்தழிக்கப்படுவதற்கு முன்னர், கோவில் அர்ச்சகராக இருந்த மட்டுவில் குருக்கள், சிவலிங்கத்தை யும் அம்பாளையும் சிற்றுருளை பூட்டிய ஒரு வண்டியி லேற்றித் தன் சொந்த ஊராகிய மட்டுவிலுக்குச் கொண்டு போக முயன்றார். பாரம் மிகுந்திருந்தபடியால் வண்டியை இழுக்க அவரால் முடியவில்லை. ஆகவே அம்பாளின் விக்கிரகத்தைக் கோயில் திருமஞ்சனக் கிணற்றிலே போட்டு விட்டுச் சிவலிங்கத்தை மட்டும் மட்டுவிலுக்குச் கொண்டு சென்றார். இந்தச் சிவலிங்கம் இப்போது மட்டுவில் சந்திரமௌலீசர் ஆலயத்தில உள்ளது என ம.க. வேற்பிள்ளை பாடிய "ஈழமண்டல சதகம்” நூல் குறிப்பிடுகின்றது. இந்தக் குருக்களே பிள்ளையாருடைய சிலையையும் கிணற்றுட் போட்டிருக்கலாம்.
பின்நாளில் ஆறுமுகநாவலர் கோவில் கிணற்றி லிருந்த விநாயகர் விக்கிரகத்தை எடுத்தார். கோவில் வளவினுள் ஒலைக்கொட்டில் ஒன்றைக்கட்டி பிள்ளையார் கோவிலை உருவாக்கி வழிபட்டார். நாவலர் இந்தியா வுக்குப் புறப்பட்டபோது நாவலரின் குடும்பத்தினர் கோவி லைப் பராமரித்து வந்தனர்.
நாவலரின் மூத்த சகோதரர் தம்பு என்பவருக்குப் பிள்ளைகள் பிறந்து,பிறந்து இறந்தது. இதனால் தம்பு மிகவும் வருந்தினார். இந்தியாவிலிருந்த நாவலர் தன் தமையன் தம்புக்குக் கடிதம் ஒன்றை எழுதினார். இக்கடிதத்தில் “இனிப் பிறக்கும் பிள்ளைக்கு கைலாய பிள்ளை எனப்பெயர் வைத்து பிள்ளையார் கோவிலைக் கல்லினால் கட்டுவதற்கு நேர்த்தி வைக்கவும்” என எழுதினார்.
தமையன் தம்பு, தம்பியின் கடிதப்படி உள்ளன்புடன் நேத்திவைத்தார். துயர் துடைக்கும் விக்னேஸ்வரன் அருளினால் ஆண்குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு *கைலாசபிள்ளை” எனப்பெயர் சூட்டப்பட்டது. கோவி லும் ஒலைக்குடியிலிருந்து கற்கோவிலாகியது. 1902 இல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
வரலாற்றுப் பெருமைக்குரிய யாழ்ப்பாணம் நல்லூர் கயிலைநாதர் ஆலயம் இன்று “கயிலாயபிள்ளையார் கோவில்” என்று அழைக்கப்பட்டு வருகிறது.
1959 ஆம் ஆண்டு தஞ்சாவூரிலிருந்து சிற்ப சாஸ்திர முறைப்படி செய்யப்பட்டுக்கொண்டு வரப்பட்ட நவக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
கைலாயநாதர் சிற்பத்
ତୀର୍ଘା
ப்பாணத்திற்கு வந்து ஆட்சி ண்ணன் நல்லூரிலே கட்டிய ா அழைக்கப்படுகின்றது. இக் 0ாற்றுக்கட்டுரை இது.
O2
தேர் கோவிந்தராஜி னும் தஞ்சாவூர் சிற்பியின் தலைமையில் உருவாக்கப் பட்டது. இவரது தலைமை யிலான குழுவினரே வாய்க்
一>

Page 3
இந்துசாதனம் 14.04
6 passonifas
நி
இன்ை
காத்தரவைப் பிள்ளையார், நல்லூர் கந்தசாமி கோவில் ஆகியவற்றுக்கான சிற்பத்தேரையும் உருவாக்கி
i5്.
1971 ஆம் ஆண்டு பங்குனி அத்தத்தில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் பஞ்சமுகப்பிள்ளையார் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தஞ்சாவூரில் இருந்து கொண்டு வரப்பட்ட விநாயகர் திருஉருவம் சிறந்த சிற்ப இலக்கணத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.
1987 ஆம் ஆண்டு ஆலயம் மிண்டும் சேதமடைந்த துடன், இச்சூழலில் அவல மரணங்களும் நடைபெற்றன. சேதங்கள் திருத்தப்பட்டு 1988 ஆம் ஆண்டு ஆவணி மாதம் சுவாதி தினத்தன்று புனருத்தாரண கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கும்பாபிஷேகத்தின் போது இந்தியா விலுள்ள 180 சிவன் ஆலயங்களிலிருந்து மண் எடுத்து வரப்பட்டுள்ளது. அந்த ஆலயங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்களினால் சிவனுக்கு அபிடேகம் செய் யப்பட்டது. இதுபோன்று 64 சக்தி பீடங்களிலிருந்து பெறப்பட்ட தீர்த்தத்தினால் சக்திக்கும், 32 கணபதி ஆலயத் தீர்த்தத்தினால் விநாயகருக்கும் அபிடேகம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கைலாயநாதர் ஆலயத்தில் நித்திய பூசைகளும், விசேட பூசைகள், திருவிழாக்களும் பாண்டித்தியம் மிக்க அந்தணப் பெருமக்களினால் ஆகமமுறை தப்பாமல் செய் யப்படுகின்றன.
1971 ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்கு சிவபூரி ஐ கைலாயநாதக்குருக்கள் பிரதம குருவாக இருந்தார். சிவபூரி கி. சுப்பிரமணியசாஸ்திரிகளின் நெறிப் படுத்தலும் சிவபூர் கு.குமாரசுவாமிக்குருக்களின் அணு சரணையும் இருந்தன. 1988 ஆம் ஆண்டு கும்பாபி ஷேகத்திற்குப் பிரதம குருவாக சிவபூரீ. ஆ. சந்திரசேகள் குருக்கள் கடமையாற்றினார். சிவபூரி கி. சுப்பிரமணிய சாஸ்திரிகள் நெறிப்படுத்த திரு. கு. வைத்தீஸ்வரக் குருக்கள் (மணிக்குருக்கள்) அனுசரணையாகவும் இருந்திருக்கிறார். 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பாபி ஷேகத்திற்குப் பிரதமகுருவாக சிவபூரீ. ஆ. சந்திரசேகரக் குருக்கள் இருந்தார். சிவபூரி கு. குருசாமிசர்மா நெறிப் படுத்த சிவபூரி கு.மணிக்குருக்கள் அனுசரணையாள ராகவும் இருந்திருக்கிறார்.
தற்போது ஆலயத்தின் பிரதமகுருவாக இருந்து வரும் மணிக்குருக்கள் அவர்கள் புகழ்பூத்த சுப்பிர மணிய சாஸ்திரிகளின் வாரிசு எனக் குறிப்பிடலாம். இவர் காசியில், கங்கை ஆற்றங்கரையில் 7 ஆண்டுகள் பயிற்சி பெற்றவர் என்பதனைச் சிறப்பாகக் குறிப்பிடவேண்டும்.
2004 ஆம் ஆண்டு தற்போதுள்ள புதிய மண்டபம் அமைக்கப்பட்டது. இம்மண்டபம் “செளபாக்கிய கெளரி” மண்டபம் எனப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. திருக்கைலா யத்தில் உள்ள மண்டபப்பெயர், இம்மண்டபத்திற்கும் சூட்டப்பட்டுள்ளமை சிறப்பாகும். முன்பு இவ்வாலய மண்டபத்தில் இளைஞர் பலர் இருந்து “உலக உலா வருவார்கள்.” ஆனால் புதிய மண்டபம் அமைத்த பின்னர் தேவையில்லாமல் யாரும் இருப்பதில்லை என ஆலயத்தின் மீது மிகுந்த பக்திகொண்ட அன்பர் ஒருவர் என்னிடம் குறிப்பிட்டார்.
திருக்கைலையில் உள்ள செளபாக்கியகெளரி மண்டபத்தில் சிவன், பார்வதி சமேதராக அமர்ந்திருந்து அன்பர்களின் ஆன்ம ஈடேற்றத்திற்கு அருள்புரிவதாக நம்பப்படுகிறது.

2009 விரோதி சித்திரை 01
* கோவில்
sturmfił
இந்த ஆலயச் சூழலில் ஏற்பட்ட அவல மரணங்கி னால் ஏற்பட்ட பாதிப்பினை நீக்கும் பொருட்டு 2005 ஆம் ஆண்டு தைப்பூசத்தன்று பிரஸ்னம் (சுய வழிபாட்டு முறை)செய்யப்பட்டு 108 சிவலிங்கங்களசிவபூரி. ஆ. சந்திர சேகரக் குருக்களினால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அடியவர்கள் தாமே பாலபிடேகம் செய்து பூச்சொரிந்து சுயமான முறையில் வழிபாடு செய்யலாம் என்பது மிகவும் சிறப்பான விடயமாகும். இறைவனுக்கும் பக்தர்களுக்கு மிடையில் யாரும் இல்லாமல் வழிபாடுசெய்யும் ஒழுங்கு முற்காலத்தில் இருந்திருக்கிறது என்பதை நினைவூட்டும் முறையாக இச்சுயவழிபாட்டு முறை அமைந்துள்ளது.
பிள்ளையார் கதைப்படிப்பு நடைபெறும் 21 நாட்களும் இங்கு சிறப்பான கணபதி ஹோமம் நடைபெற்று வருகிறது.
ஆலயத்தின் குரு, மணிக்குருக்கள் அவர்களிடம் ஆலயத்தின் கிரியைகள் பற்றி அறிந்துகொள்வதற்கு முற்பட்டேன். கோவிலில் நடைபெற்ற யாகங்கள் பற்றியும், சங்காபிடேகம் முதல் நடைபெறும் அனைத்துக் கிரியை கள் பற்றியும் விளக்கமாகக் குறிப்பிட்டார்கள். கிரியை களுக்குத் தேவையான பொருட்களைச் சுத்தமான முறை யில் சேகரிப்பது கிரியைக்குரிய நேரம், கிரியைக்குரிய மந்திரங்கள் போன்ற தகவல்களைக் கூறினார்கள். பெளர்ணமி பூசை (விளக்குப்பூசை) உங்கள் ஆலயத்தில் நடைபெறுகிறதா? எனக் கேட்டேன். சரியான முறையில் செய்யமுடியாத எந்தப் பூசையும் இங்கு நடைபெறு வதில்லை எனவும் குறிப்பிட்டார்.
பஞ்சாமிர்தம் செய்வது எப்படி? அரிசியை நீரில் ஊற வைத்து நைவேத்தியமாக வைக்கும் அவசர உலகில் பஞ்சாமிர்தத்தை இவ்வளவு நேர்த்தியாகச் செய்வது என்பது ஆச்சரியமான விடயமாகப்பட்டது. வேறு ஆல யத்தின் குரு ஒருவருக்கு பஞ்சாமிர்தம் செய்யும் முறையை விளக்கி கூறிய போது பஞ்சாமிர்தம் செய்யும் முறையை அடியேனும் அறிந்துகொள்ள முடிந்தது.
நாவலர் மரபினரே இக்கோவிலின் நிர்வாகிகளாக (மனேஜர்) இன்றுவரை இருந்து வருகின்றனர். விநாயகர் அருளால் பிறந்த கைலாயபிள்ளைக்கு மூன்று பெண் குழந்தைகள் இருந்தார்கள். ஆண் சந்ததியில்லை. இதனால் அக்கால வழக்குக்கு அமைய கோவில் நிர்வாகத்தை நாவலரின் தமையன் சின்னத்தம்பியின் LD56 இராமலிங்கம் ஏற்றுக்கொண்டார். அதன் தொடர்ச்சியாக இராமலிங்கத்தின் மகன் பொன்னம்பல மும், பொன்னம்பலத்தின் மகன் இராமலிங்கமும் மனேஜர் களாகச் செயற்பட்டனர்.
பேரன் இராமலிங்கத்தின் மனைவி இலட்சுமி அம் மாள் ஆவார். 1985 ஆம் ஆண்டு இராமலிங்கம் இறந்த பின்னர் அவரது மனைவி இலட்சுமி கோவில் நிர்வாகி யாகப் பொறுப்பு ஏற்றார். இராமலிங்கம் தம்பதியருக்கு நான்கு பெண் குழந்தைகள் உண்டு.
திருமதி இராமலிங்கம் இலட்சுமி தனது உடல் நலம் மற்றும் காரணங்களினால் ஆலயத்தைப் பராமரிக்கும பொறுப்பை ஆலய பிரதம குருவாக இருக்கும் வைத்தீஸ் வரக் குருக்களிடம் (மணிக் குருக்கள்) ஒப்படைத்தார். ஆலயத்தின் பூசைகள். திருவிழா, திருப்பணி வேலை களும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன. மணிக்குருக் களின் பொறுப்பில் ஆலயம் சிறப்பான முறையில் நடை பெறுகிறது.
(6).J6T (BLD)
ევ

Page 4
இந்துசாதனம் 14.04
19ங்கல விள
- பண்டிதர் சோ.
மங்கல விளக்கேற்றுதல் என்பது மங்கலம் விளக்கு ஏற்றுதல் என்னும் மூன்று சொற்களாலாய தொடர்மொழி. அவற்றுள் மங்கலமென்பது, நன்மை, நலம், காரிய சித்தி, பொலிவு, அறம் என்னும் பல பொருள்களைப் பயக்கும். ஆகவே, மங்கலத்தைத் தரும் விளக்கையேற்றி வணங்குதல் என்பது அதன் திரண்ட பொருளாம்.
தமிழ் நாட்டிலே, எல்லா மங்கல கருமங்களையும் விளக்கேற்றி வணங்கித் தொடங்கும் வழக்கம், மிகப் பழைய காலந்தொட்டு நிலவி வருகின்றது. அது தமிழ் மக்களின் விழுமிய பண்பாட்டையும் உயர்ந்த கடவுட் கொள்கையையும் காட்டுகின்றது.
விளக்கேற்றி வழிபடுதற்கு முன்பு செயற்பால சில கருமங்களை அறிதல் நன்று. இங்கே கூறப்படுவன எல்லார்க்கும் எளியனவாய்ப் பொது வகையில் அமை
606.
மங்கல கருமந் தொடங்கும் இடத்தையும், அதன் அயற் புறத்தையுந் தூய்மை செய்து, பொதுவிடமாயின், அங்கே ஒரு பீடம் வைக்க, அதனை வெண்டுகிலால் மூடி அழகுபடுத்துக. வேண்டுமாயின், அவ்விடத்தின் மேலே வெண்டுகிலால் விதானம் அமைத்தலும் நன்றாம். அழகு படுத்திய பீடத்திலே தலைவாழையிலைத் துண்டையிட்டு, ஒரு படி நெல்லையாயினும், நீருடன் சேர்ந்த மஞ் சட் பொடி அளைந்த பச்சையரிசியையாயினும் அதன் மேற் பரவி ஒப்பஞ் செய்து நிறைகுடம் வைக்க. எடுத்த கருமம் முட்டின்றி முடிதற் பொருட்டுக் காப்புத் தெய்வமாகிய பிள்ளையாரை வாழையிலையின்மேல் gb606)LDTL96) மாவிலையில் வைக்க.
பழம், பாக்கு, வெற்றிலை, மஞ்சள், மலர் வகை, சந்த னம், திருநீறு, குங்குமம், முதலிய மங்கலப் பொருள் களை ஆங்காங்கே அழகுற வைக்க, மலர்களுட் செம்மல ரும் வெண்மலரும் சிறந்தவை. குத்துவிளக்கைக் கிழக் குப் புறமாக வைக்க. நிறைகுடம், குத்துவிளக்கு என்பவற் றின் முடியிலே பூச்சூடுக.
பிள்ளையாருக்குச் சந்தனம், குங்குமம் முதலியன அணிந்து பூவும் அறுகுஞ் சாத்துக. குத்துவிளக்குக்கு அவ்வாறே அழகுபடுத்தி நாற்புறமும் திரியிட்டுத் தேங் காய்நெய் விடுக.
சாம்பிராணி ஊது
வத்தி முதலியவற்றால் மங்கல விளக்கேற்றுவதன் ே நறும் புகை எடுக்க இல்|வதற்கு முன்னர் செய்யப்படம் வாறு நிகழ்ந்த வழி, திரு யார், எவ்வாறு விளக்கேற்ற நீறு பெய்த ஒரு சிறுதட் 'தினகரன்’ இதழில் வெளியான டிலே கருப்புரத்தையிட் கண்டு அவற்றைநடைமுறைப்ப

2009
க்கேற்றுதல்
இளமுருகனார் -
விரோதி சித்திரை 01
டுச் சுடர் கொளுத்தித் தேங்காய் உடைக்கப் பல்லியங் கறங்க. மங்கல விளக்கேற்றித் "திரிகரண சுத்தியும் காரிய சித்தியும் அருள்வா” யென்று நீடு நினைக்க. நினைந்த பின்பு அருட்பாடலோதி வணங்கித் தங்கருமத்தைத் தொடங்குக.
இச்சடங்கு வகையெல்லாஞ் சைவத்தைச் சார்ந் தவை. பழந் தமிழர் வாழ்வுடன் சைவச்சடங்கு வகை இறுகப் பின்னிக் கிடந்ததை யாரும் மறுக்கார். பல வேறு காரணங்களாற் சைவச் சார்பு நிலைதளர்ந்து வரும் இந்நாளிலே, நிறைகுடம் வைத்து விளக்கேற்றித் தங்கருமத்தைத் தொடங்குவர்.
அத்தொடக்கத்தை ஆங்கிலச் செய்தித்தாள்கள் "பழைய வழக்கமாகிய நெய் விளக்கேற்றி அடிக்கல் நாட்டினார்” என்று செய்தியுரைத்தலைக் கிழமை தோறும் படிக்கின்றோம்.
சைவச் சார்பில்லாத தமிழரும் விளக்கேற்றித் தாம் வழிபடுந் தெய்வத்தை அதுவாகப் பாவித்து வணங்கித் தங்கருமந் தொடங்குதல் மிக நன்றாம். பெரும்பான்மை யான சமயங்கள் தங்கடவுளர் ஒளி வடிவினர் என்பதை உடன்படுகின்றன. “புத்த ஞாயிறு தோன்றுங்காலைத் திங்களும் ஞாயிறுந் தீங்குறா விளங்கும்" எனப் புத்தரை ஞாயிறாக உருவகஞ் செய்து கொண்டதை மணிமேகலையிற் காண்கின்றோம். “இயேசு என்னுயிர்க்கு ஒளியாக இருக்கின்றார்” என்று கிறிஸ்தவ சமயம் கூறும்.
இனி, இந்நாளில் இலங்கையில் அரசியல்வாதிகள் முதலானோர் எக்கருமத்தைத் தொடங்கும்போதும், விளக்கேற்றித் தொடங்குதல் பெருவழக்காகிவிட்டது. அதனால் அத்துணை ஏற்றமாகக் கலாசாரம் வளர்ந்து கொண்டது என்று கருதற்க. சமயா சாரமும் அன்பும் வணக்கமும் இன்றி விளக்கேற்றிக் கருமந் தொடங்குதல் அருவருக்கத்தக்க செயலாகும்.
பலவகைத் திறப்பு விழாக்கள், அடிக்கல் நாட்டுதல் முதலிய வைபவங்களை விளக்கேற்றித் தொடங்கு கின்றனர். அது மிக நன்று. பழைய பண்பாடு அழியாமற் காக்கப்படுகின்றது. ஆனால், அதன் உயிர் நாடியான உண்மையை எவருங் கருத்திற் கொள்ளுகின்றிலர். விளக்கிலே விளங்குஞ் சோதியைக் கடவுளாகப் பாவித்து, நெஞ்சார நினைந்து வாயார வாழ்த்தி வணங்கி, எடுத்த கமரும் இனிது முடியு
நாக்கம் என்ன? விளக்கேற்று வண்டிய ஏற்பாடுகள் எவை? வேண்டும்? 1967 ஆம் ஆண்டில் இக்கட்டுரையில் விடைகளைக் நத்துங்கள்.
4.
மாறு வேண்டுதல் இன் றியமையாததாகும். அங் ங்ணம் நிகழ்வது பல் லாயிரத்துள்ளே ஒன்
->

Page 5
இந்துசாதனம் 14.04
மங்கல விள
றாகலாம். நாட்டின் கல்வி வளர்ச்சிக்கென்றும், கலாசாரப் பாதுகாப்புக்கென்றும் கொடுக்குக்கட்டி நிற்கும் அரசியற் பெரியோர்களிற் பலர், ஒரு கையில் வெண் சுருட்டு எரியக் கால்களிற் சப்பாத்து செருப்பு முதலிய பாதுகங்கள் மிளிரத் தெய்வ சிந்தனையின்றிச் சித்தம் பிறிதாகிச் சிரித்து விளக்கேற்றிக்கொண்டு வைபவங் களைத் தொடங்குதல் உய்தியில் குற்றமாகும்.
பல்லாண்டு காறும் உயர்ந்த நோக்கத்துடன் கடைப் பிடிக்கப்பட்டு வந்த பண்பாடு, இவ்வகை வேண்டாப் பழக்கங்களால் இகழப்படுகின்றது. காணவுங் கருதவும் முடியாத கடவுளை ஒளி வடிவில் வைத்து வழிபடும் விழுமியக் கருத்து நிந்தனை அடைவது மட்டுமன்றிக் கடவுளும் நிந்திக்கப்படுகின்றார். ஆ இதுவோ மங்கல விளக்கேற்றுதலின் தத்துவம்? இதனைத்தடுத்து உண்மையுரைப்பார் இல்லையா?
வைபவங்களை விளக்கேற்றித் தொடங்குதலே சாலப் பயன்தருமென்று நம்புவோர், செருப்புச் சப்பாத்து முதலியவற்றைக் கழற்றிவிட்டுத் தம்மைத் தூய்மை செய்து, தாம் வழிபடுந் தெய்வத்தை அவ்விளக்கின் சுடராகப் பாவித்து வாழ்த்தியும் வணங்கியுந் தொடங்கக் கடவர். அதுவே முறை. அதுவே சிறந்த கலாசாரத்தை மதித்து வளர்த்துப் பாதுகாக்கும் நெறி.
நாட்டின் எதிர்காலச் செல்வங்களாகிய இளைஞர் அந்த நல்ல முறையைப் பார்த்துப் பழகிக் கொள்வர். அவர்கள் கருத்தில்லாத வெறும் போலிச் செய்கை களைக் கண்டு, அவற்றை உண்மையென்று நம்புவார் களாயின், அவர்கட்கு விளக்கேற்றித் தொடங்குதலின் தத்துவத்தை அறிவுறுத்துதல் அரிதாகும்.
இனி, விளக்கின் சுடர்க்கொழுந்து சிவத்தின் வடிவ மாகும். அதனைச் சிறிது விளக்குவோம்.
ஒம் என்பது பிரணவம், அ.து அகரம், உகரம், மகரம் என்னும் மூன்று எழுத்துக்களாலாகி உலகத் தோற்றத் துக்குக் காரணமான முதலோசை. அது தூய ஒளிவடி வானது . சிவலிங்கமும் பிரணவ வடிவமுடையது.ஆகவே, சிவலிங்கமும் ஒளிவடிவுமுடையது. அவையிரண்டும் சிவத்தின் அருட்குறிகள். ஓங்காரம் அருவப் பொருள். சிவலிங்கம் அருவுருவப் பொருள்.
அச்சிவம், ஞாயிற்றிலும் திங்களிலும் செந்தியிலும் கலந்து நின்று, உலகம் நிகழ்தற்பொருட்டு விளக்கந்

2009 விரோதி சித்திரை 01
க்கேற்றுதல்
தருகின்றது. ஆகவே காணவுங் கருதவும் முடியாத சிவப்பொருளை அம் மூன்றிலும் வைத்துக் கருதி வழிபடுதல் எளிதாகும் என்று கண்ட அருட் சான்றோர், அவ்வழிபாட்டைப் பல்லாயிர வாண்டுகட்கு முன்னரே விதிப்பாராயினர்.
நாகரிக வாழ்விலே மிக மேம்பட்டுத் திகழ்ந்த பாரதநாடும், கிரேக்க நாடும், எகுபதி நாடும் இம் முச்சுடர்களையும் கடவுள் விளங்கும் ஒளிப் பொருள் களாகக் கருதி வழிபட்டு வந்தமை வரலாற்றால் அறியப்படும். இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்னிருந்த ஆசிரியர் தொல்காப்பியரும்
“கொடிநிலை வள்ளி கந்தழியென்ற
வடுநீங்கு சிறப்பின் முதலான முன்றுங்
கடவுள் வாழ்த்தோடு கண்ணிய வருமே.”
என்று கூறியருளியதும் காண்க. கொடி நிலை - ஞாயிறு வள்ளி - திங்கள், கந்தழி - தீப்பிழம்பு
இனி, அம் மூன்று சுடர்களையும் சிவத்தின் கண் களாகச் சைவநுால்கள் கூறும். "சுடர் மூன்றுங் கண் மூன்றாக் கொண்டான் றான்காண்," என்னுந் தேவாரத் திருமுறையும் அதனை வலியுறுத்தும். அதன் கருத்து எம்பெருமான் அம்மூன்றிலுங் கலந்து நின்று அவற்றைத் தொழிற்படுத்துவர் என்பதாம். ஞாயிறு - வலக்கண். திங்கள் - இடக்கண். செந்தீ - நெற்றிக் கண். இனித் "தேயமாரொளிகளெல்லாஞ் சிவனு ருத்தேதென்னார்” என்று சிவஞானசித்தியார் கூறுதலி னால், இவ்வுலகிற் காணப்படும் ஒளிப் பொருள்கள் எல்லாம் செம்பொருட் சிவத்தின் விளக்கமாமென்று துணியப்படும். "மாசற்ற
சோதி மலர்ந்த மலர்ச்சுடரே" - “சோதியே சுடரே சூழொளி விளக்கே” என்று அருட் சான்றோர் கூறியதுங்
காண்க.
தலைமை பற்றித் தம்முள்ளே செருக்கிச் சிவத்தின் அடியையும் முடியையும் தேடப் புகுந்து காணாமையாற் செருக்கடங்கிய அரிக்கும் அயனுக்கும் அளப்பரிய சோதி வடிவிற் காட்சி கொடுத்த வரலாற்றையும் நோக்கியறிக.
இனிச், சிவம் மிகச் சேய்மையிற்றுலங்கும் ஞாயிற்றி லும் திங்களிலும் முனைந்து நின்று விளங்குதல் போலவே,
எம்மைச் சூழ்ந்து காணப்படும் தீயிலும் விளங்குதலால், -GoD5

Page 6
இந்துசாதனம் 14.04
றங்கல விள
அதனை அவர்க்குத் திருமேனியாகக் கொண்டு சான்றோர் வணங்கி வருவாராயினர். "முழுத்தழன்மேனி - சொக்க தாகக் காட்டிய தொன்மையும்” என்று மணிவாசகப் பெரு
மான் கூறியருளியிருப்பதுங் காண்க.
பழைய இருக்கு முதலிய மறைகளும், அவற்றின் வழிப்பட்ட நூல்களும் சிவத்தை தீப்பிழம்பாக வைத்து வழிபட்டனவென்று வரலாறு கூறும். திருக்கோயிற் சடங்கு கட்கும், மணச் சடங்கு, பிணச் சடங்குகட்கும் தீ வளர்த்த லும், விளக்கேற்றி வைத்தலும், அவற்றைச் சிவமாகவே கருதி வழிபடுவதும் இன்றுகாறும் நடைபெற்று வரும் நிகழ்ச்சிகளாம். சுருங்கச் சொல்லுங்கால், வைதிக சைவச்சடங்குகளிலே தீ வளர்த்து வழிபடுதல் முதன்மை யுடைய தாமென்றுணர்க.
இனி, ஐம்பூதங்களும் சிவத்தின் விளக்கத்திற்கு இடமாயினும் தீப்பிழம்பு ஒன்றே அவருடைய அருள் விளக்கத்தை ஒருவாற்றான் காட்டி அவரை உருவடிவில் வழிபடுதற்கு இயைந்த கருவியாய் ஏனைப் பூதங்களைக் காட்டிலும் மேலோங்கித் தூயதாய் நிற்பது.
சிவம், மன்னுயிர்களின் அகத்தே நின்று தன்னரு ளொளியால் மலவிருளைப் போக்கி அருள் விளக்கந்
அடியார்களின்
- (3LIIIdrfluff (6).
அடியார்கள் என்பவர்கள் தம் உடல், பொருள், ஆவி அனைத்தும் இறைவனுடைய உடைமை என்று உறுதி யாக நம்பி வாழ்பவர்கள். அந்த இறைவனின் அடியார் கள், யாது வேண்டினும், தம் உயிரையே வேண்டினும் மிக மகிழ்ச்சியுடன் தருதலே தம் கடமை என்று நினைப்ப வர்கள். கேட்கப்பட்ட பொருள் எதுவாயினுஞ் சரி அதனை அகமிக மகிழ்ந்து தருதலே அவர்கள் வாழ்க்கையின் குறிக்கோள். ஒருவரிடம் கேட்கப்பட்ட பொருள் மனைவி
யாகவும், மற்றொருவரிடம் பிள்ளையாகவும் மூன்றாம
வரிடம் வெறும் சோறாகவும் இருக்கலாம். அதுபற்றிக் கவலை இல்லை. இம்மூன்று பேரும் தாம் தருகின்ற
பொருள் எது என்பதைப் பற்றிக் கவலை அடையாமல்,

2009 விரோதி சித்திரை 01
க்கேற்றுதல்
தருதல் போலத் தீப்பிழம்பும் மன்னுயிர்களின் புறத்தே யுள்ள இருளைப் போக்கி விளக்கந்தருகிறது.
சிவந்தாமே தூயராயிருந்து ஒன்றிலுந் தோயாது. தூய்மையில்லாத உயிர்களையும் மாயையையும் தூய தாக்குதல் போலவே, தீப்பிழம்பும் தானே தூய தாயிருந்து ஒன்றிலுந் தோயாது தூயவல்லாப் பொருட் களைத் தூயதாக்கிக் கொள்கிறது.
சிவம் அருவாயும் உருவாயும் நீக்கமற நிற்றல் போல, தீப்பிழம்பும் பொருள்களில் அருவாயும், உண் டாய வழி உருவாயும் நீக்கமற நிறைந்து நிற்கின்றது.
இங்ங்ணம் தீப்பிழம்பு சிவத்தை ஒருவாற்றான் ஒத்து நின்று அவரியல்பைச் சிறிதளவிற்காட்டுதல் காண்க. இவற்றின் திட்ப நுட்பங்களை மாப்பெரும் புலவர் மறை மலையடிகளார் எழுதிய திருவாசக விரிவுரையிற் கண்டு தெளிக. இத்துணையுங் கூறிய வாற்றான், தீப்பிழம்பு சிவத்தை ஒருபுடையெடுத்து நிற்றலாலும் அவரது அளப் பரிய அருளொளியில் அணுமாத்திரையே அதனிட மிருந்து உலகை நடைபெறச் செய்து வருவதாலும் விளக்கைக் கும்பிட்டு வழிபடுதல் மிகவுயர்ந்த கட வுள் நெறி என்பது போதரும்.
ன் குறிக்கோள்
. ஞானசம்பந்தன் -
"தருதல்" ஒன்றுதான் அறிய வேண்டுவது. தரப்பட்ட பொருள் எவ்வளவு வேறுபட்டாலும் தருபவருடைய
குறிக்கோள் மாறுபடுவதில்லையல்லவா?
இந்தப் பெரிய உண்மையை அறிவுறுத்தவே பெரிய
புராணம் எழுந்தது. வாழ்க்கையில் ஓர் ஒப்பற்ற குறிக்
கோளைக் கொண்டு வாழ்ந்து அதனால் பிறப்பின் பயனைப் பெற்றவர்கள் வரலாற்றை நமக்குக் கூறுமுக மாகப் பெரியபுராணம் அத்தகைய வாழ்வை நாமும் மேற்கொள்ளத் தூண்டிற்று. எனவே, குறிக்கோளற்ற வாழ்
வாகிய பெருநோய் பிடித்த சமுதாயத்திற்கு மருந்தாய்
அமைந்தது பெரியபுராணம். 藻
)6

Page 7
இந்துசாதனம் 4.04
திருவாவடுதுறை ജ്
- for a (இந்துசாதனம் - 2009 பங்குனி
ஆறுமுகம்பிள்ளை அவர்களிடமிருந்த உள்ளார்ந்த ஆற்றல்கள் பலவும், அவற்றைச்சரியாக இனங்கண்டு திருவாவடுதுறை ஆதீனம் அவருக்கு வழங்கிய "நாவலர்” பட்டமும் இணைந்து, நாவலர் என்றால் யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர் அவர்களே என்ற நிலை தமிழ் கூறும் நல்லுலகெங்கும் உருவாகக் காரணமாக அமைந்தன.
பலர் நன்கறிந்திராத வேறொரு சிறப்பையும் திருவாவடுதுறை ஆதீனம் நாவலர் அவர்கட்கு வழங்கியது.
1903 ஆம் ஆண்டு தை மாதத்தில் "திருத்தொண் டர் புராணம் மூலமும் சூசனமும்” என்ற நூலின் விசேட பதிப்பொன்றை, பதிப்பாசிரியர் திருமயிலை செந்தில்வேலு முதலியார் வெளிக்கொணர்ந்தார்.
நூல் முகப்பில் "திருவாவடுதுறை ஆதீனம் பூரீலழரீ அம்பலவாண தேசிக மூர்த்திகள் ஆஞ்ஞைப்படி" அந் தப் பதிப்பு வெளியாகின்றதென்ற குறிப்பும், முகப்புப் பக்கத்தின் பின்புறத்தில், "இது பூரீலழரீ ஆறுமுக நாவலரவர்கள் பிரதிக்கிணங்கப் பதிப்பிக்கப்பட்டது” என்ற குறிப்பும் இடம்பெற்றன.
நாவலரவர்களுடைய பிரதி என்றால், அது சுத்த மானதாக, சரியானதாக, தெளிவு நிறைந்ததாக இருக் கும் என்பது குருமகாசந்நிதானம் அவர்களின் கணிப்பு என்பதும், நாவலர் அவர்களுடைய பெயருக்கு முன் னால் பூரிலழரீ முரீலகூடியூரீ) என்ற அடைமொழி இடம் பெற்றது குருமகாசந்நிதானம் அவர்களுடைய ஆணை யின் விளைவே என்பதும், மேலேயுள்ள இரண்டு குறிப்புக்களையும் இணைத்துப் பார்க்கும்போது புலனா கின்றன.
ஓர் ஆதீனத்தின் தலைவரான குருமகாசந்நிதானம் அவர்களின் பெயருக்கு முன்னால் இடப்படும் "பூரீலழரீ" என்ற அடைமொழி, ஆதீனத் தலைவர் அல்லாத சைவத் தமிழ்த் தொண்டர் ஒருவரின் பெயருக்கு முன்னால் இடம்பெற்றது. இதுவே முதல் தடவை என்பது சிறப் பாகக் குறிப்பிடத்தக்கது.
சிதம்பர சபாநாத புராணம், சிவகள்ணாமிர்தம் சதுர் வேத தாற்பரிய சங்கிரகம், திருவிடை மருதூர் பதிற்றுப் பத்தந்தாதி, திராவிடப் பிரகாசிகை முதலிய பல நூல் களை எழுதிய யாழ்ப்பாணம் - கோப்பாய் சபாபதிப் பிள்ளை அவர்களுக்குப் பதினாறாவது குருமகா சந்நிதானம் அருள்திரு. சுப்பிரமணிய தேசிக சுவாமி கள் "நாவலர்” பட்டத்தை வழங்கிக் கெளரவித்தார்கள்; நல்லூர் தமிழறிஞர் சிற். கைலாசபிள்ளை அவர்களுக்கு "வித்துவான்” பட்டத்தை வழங்கினார்கள்.
தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் அவர் களின் தமிழ்த்தொண்டு உலகறிந்தது. நலிந்த நிலை யிலிருந்த பழந்தமிழ் ஏடுகளைத் தேடி எடுத்து, ஒப்பு நோக்கி, அவர் அச்சுவாகனம் ஏற்றியதனாலேதான்

2009 விரோதி சித்திரை 01
D Ag A y Ayo த்னமும் இலங்கையுற் ரனன் -
இதழ் 2 ஆம் பக்கத் தொடர்ச்சி)
பழந்தமிழ் இலக்கியங்களை எல்லோராலும் இன்று
பார்க்க முடிகின்றது, படிக்க முடிகின்றது; அவற்றாற் பயன்பெற முடிகின்றது.
நூற் பதிப்புத்துறையில் அவருக்கு முன்னோடியாக விளங்கியவர் யாழ்ப்பாணத் தமிழறிஞர் சி. வை. தாமோ தரம்பிள்ளை என்பதும் இவருடைய பதிப்புப் பணிக்கு உதவியாக இவ்வாதீனத்திலிருந்த தொல்காப்பியம், சூளாமணி, இலக்கண விளக்கம், கலித்தொகை முதலிய பல ஏட்டுச் சுவடிகளை வழங்கியவர் பதினாறாவது குருமகாசந்நிதானம் அருள் திரு. சுப்பிரமணிய தேசிக சுவாமிகள் என்பதும் குறிக்கத்தக்கவை.
யாழ்ப்பாணம் சித்தன்கேணியைச் சேர்ந்த தமிழறி ஞர் அம்பலவாணர் அவர்களையும் திருவாவடுதுறை ஆதீனம் "நாவலர்” விருதுடன் கெளரவித்தது.
2008 ஆம் ஆண்டில் கலாபூஷணம் K.S. R. திருஞான சம்பந்தன் அவர்களுக்குத் துறைசை ஆதீனத் திரு முறைத் தோன்றல்' என்ற விருதை சீர்வளர் சீர் சிவப்பிர காசதேசிக பரமாசாரிய சுவாமிகள் வழங்கி, மூன்றாவது தடவையாகவும் கெளரவித்தார்கள்.
கி.பி 14 ஆம் நூற்றாண்டில் இந்த ஆதீனத்தை நிறுவும்படி அருள்திரு நமசிவாய மூர்த்திகள் அவர் களுக்கு அருளாணை வழங்கியவர் சித்தள் சிவப்பிரகாசர் என்பதை இக்கட்டுரையின் தொடக்கப் பகுதியிற் குறிப்பிட்டிருந்தேன்.
அருள்திரு சித்தர் சிவப்பிரகாச தேசிகள் அவர்களின் பெயரைத் தீட்சா நாமமாகக் கொண்டு இந்த ஆதீனத்தின் இருபத்து மூன்றாவது குருமகா சந்நி தானமாக இப்போது அருளாட்சி செய்துவரும் சீர் வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள் 1983.04.07 இல் ஞானபீடத்தில் எழுந்தருளினார்கள்.
இவர்களுடைய அருளாட்சியில் முன்னரைவிடப் பரந்து விரிந்த அளவிலே சமயப் பணி, தமிழ்ப் பணி, சமுதாயப்பணி, கல்விப் பணி, திருக்கோயிற் திருப்பணி முதலானவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. -- Φ -

Page 8
இந்துசாதனம் 14.04
திருவாவடுதுறை ஆ
பிரதேச, நாட்டு எல்லைகளைப் பின்தள்ளி, பண்ணி சைவாணர்கள், புலவர்கள், சித்தாந்த வித்தகர்கள், சிவாச்சாரியார்கள், கலைஞர்கள். தமிழறிஞர்கள், முதலி யோருள் மிகச் சிறந்தவர்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கு ஆண்டுதோறும் பரிசுகள், விருதுகள், பாராட்டுக்கள் வழங்கப்படுகின்றன. இத்தகையோருள் இலங்கையைச் சேர்ந்த கீழ்க் கண்டவர்களும் (கட்டுரை யின் முடிவில் பட்டியல் தரப்பட்டுள்ளது) இடம் பெறு கின்றனர்.
தனி மனிதர்களுடைய ஆன்மீகச் செயற்பாடுகள், ஆற்றல்கள், சாதனைகள் போன்றவற்றை நன்கு கணித்து, உரிய பாராட்டுக்கள், பரிசுகளை வழங்கும் இவ்வாதீனம், அன்பர்களின் கூட்டு முயற்சியை ஊக்கு விக்கும் வகையில், மக்கள் மத்தியிற் சைவ சித்தாந்தக் கருத்துக்களைப் பரப்பி, மக்கள் சமய வாழ்க்கை வாழ் வதற்கு வழிகாட்டியும் உதவி செய்தும் வரும் சமய அமைப்புக்களுக்கும் விருதுகள் வழங்கி உற்சாகப் படுத்துவதை 2001 ஆம் ஆண்டிலிருந்து வழக்கமாக்கிக் கொண்டுள்ளது. இந்தவகையில், கடந்த ஒரு நூற்றாண் டுக்கு மேலாகப் பன்முகப்பட்ட சைவசமயப் பணிகளைச் செய்து வரும் நமது யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபைக்குச் "சித்தாந்த சைவச்சுடர் நிலையம்" என்ற விருதினை வழங்கிக் கெளரவித்துள்ளது.
米
பல ஆண்டுகளுக்கு முன்னர் சி. வை. தாமோதரம் பிள்ளை அவர்களின் தமிழ் நூற்பதிப்புப் பணிக்கு உதவிய இவ்வாதீனம் அன்னாருடைய நூற்றாண்டு விழாவையும் சிறப்பாகக் கொண்டாடி sel6(560)Lu தமிழ்ப் பணியைக் கெளரவித்தது. தாமோதரம்பிள்ளை அவர்களின் நூல்களை ஆய்வுசெய்து நூல் எழுதிய சென்னை மாநிலக் கல்லூரி இணைப் பேராசிரியர் திரு. ப. தாமரைக்கண்ணன் அவர்களுக்கு "அருந்தமிழ் ஆய்வுரைச் செம்மல்" விருதையும் ரூ 3000/= பொற்கிழி யையும் 2008.10.09 ஆந் திகதி நடைபெற்ற விழாவிலே வழங்கிக் கெளரவித்தார் இப்போதைய குருமகாசந்நி தானம்.
நாவலர் அவர்களின் சைவத் தமிழ்ப் பணிகளின் தன்மையையும் இன்றியமையாமையையும் இப்போதைய தலைமுறையினருக்குச் சரியாகவும் தெளிவாகவும் எடுத் துச் சொல்லும் உயர்ந்த நோக்குடன், ஆண்டுதோறும் ஆதீனத்திலே "தவத்திரு ஆறுமுகநாவலர் விழா"வைக் கொண்டாடுவதற்கும் இப்போதைய ஆதீன முதல்வர் அவர்கள் ஏற்பாடுகள் செய்துள்ளார்கள் (2008.11.30 ஆந் திகதி ஆதீனத்தில் நடைபெற்ற நாவலர் விழா சம்பந்த மான விபரங்கள் "இந்து சாதனம்" 2009- மாசி இதழில் வெளிவந்துள்ளன.)

2OO9) விரோதி சித்திரை 01
"A
ந்முைம் இலங்கையும்
இலங்கையின் பாடல்பெற்ற திருத்தலங்களுள் ஒன்றான திருக்கேதீஸ்வரத் திருக்கோவிலில் 2003 ஆம் ஆண்டு ஆவணியில் நடைபெற்ற மண்டலாபிஷே கத்திற் கலந்து கொள்ளுமாறு திருப்பணிச் சபையினர் குருமகாசந்நிதானம் அவர்களுக்கு விடுத்திருந்த அழைப்பு, இந்நாட்டிலே அவர்கள் திருத்தல யாத்திரை ஒன்றை மேற்கொள்வதற்குக்காலாக அமைந்தது.
அருள்மிகு கெளரியம்பாள் உடனுறை திருக்கேதீஸ் வரநாதர், கொழும்பு அருள்மிகு பொன்னம்பலவாணேஸ் வரர், திருக்கோவில், மன்னார் அருள்மிகு சித்திவிநாயகர், வவுனிக்குளம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரர், முறி கண்டி அருள்மிகு வழிப்பிள்ளையார், வண்ணை அருள் மிகு வைத்தீஸ்வரர், நல்லூர் அருள்மிகு கந்தசாமி கோயில், மாவிட்டபுரம் அருள்மிகு கந்தசாமி திருக் கோயில், தெல்லிப்பளை அருள்மிகு துர்க்காதேவி, கீரிமலை அருள்மிகு நகுலேஸ்வரர், ஈழத்துச்சிதம்பரம், திருகோணமலை அருள்மிகு கோணேஸ்வரர் முதலிய
திருக்கோவில்களுக்குச் சென்று வழிபாடாற்றினார்கள்; தர்மகர்த்தாக்கள், சிவாச்சாரியார்கள் முதலியோரால் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்கப்பெற்றார்கள்.
இலங்கை இந்துசமய விவகார அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு தியாகராசா மகேஸ்வரன் அவர் களின் அழைப்பிற்கிணங்க 2003 ஆம் ஆண்டு மார்கழி மாதம் குருமகாசந்நிதானம் அவர்கள் இரண்டாவது தடவையாக இந்நாட்டிற்கு எழுந்தருளினார்கள். நயினா தீவு அருள்மிகு நாகபூஷணி அம்பாள் ஆலய தரிசனத் தின் பின்னர் ஈழத்துச் சிதம்பரத்தில் அமைக்கப்பட்ட சைவசமய அறப்பணி நிலையத்தைத் திறந்து வைத்தார் கள். நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனக் கலாமண்டபத் தில் அரசு ஏற்பாடு செய்திருந்த ஆறுமுகநாவலர் குரு
பூசை விழாவிற் கலந்து கொண்டார்கள், நல்லை ஆதீனக் குருமகா சந்நிதானம் பூரீலழரீசோமசுந்தரதேசிக பரமா சார்ய ஸ்வாமிகளுக்கும் பொன்னாடை போர்த்திக் கெளர வித்தார்கள்.
இலங்கை இந்தியத் தமிழ் மக்களிடையேயுள்ள ஆன்மீக, மொழி, கலை, கலாசாரத் தொடர்புகள் மேலும் விருத்தியடையவும், "கடல் பிரித்தாலும் கருத்தால் பிரியாதவர்கள்” என்றநிலை மேலும் உறுதிப்படவும் திருவாவடுதுறை ஆதீனத்தின் இப்போதைய குருமகா சந்நிதானம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமா சாரிய சுவாமிகள் அவர்களின் அருளாட்சி தொடர்ந்தும் வழிவகுக்கும் என்பதே நம் எல்லோரினதும் நம்பிக்கை யும் பிரார்த்தனையுமாகும்.
ح<سسسسه
OS

Page 9
இந்துசாதனம் 1404
திருவாவடுதுறை ஆ
ஆண்டு பெயர்
2002 திரு. இ. நமசிவாயம் 明 (8
2003 திரு. தி. மகேஸ்வரன் ஆ
2004 திரு. கே. எஸ். ஆர். திருஞானசம்பந்தன் G
2005 சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி சி
2006 திரு. கே. எஸ். ஆர். திருஞானசம்பந்தன்
திரு. கே. கே. சுப்பிரமணியம் திரு. சி. கந்தசாமி
சிவபூரீ க. வைத்தீஸ்வரக் குருக்கள் திரு. கே. எஸ். ஆர். திருஞானசம்பந்தன்
திரு. க. சச்சிதானந்தன்
2007 திரு. த. சண்முகலிங்கம்
திரு. சு. கனகரத்தினம் திரு. க. சிவபாலன் திரு. ந. நவரத்தினம் திரு. ச. விநாயகமூர்த்தி
2004 ஆம் ஆண்டில் திரு. ஏ. அனுசாந்தன், 2008
ஆகியோருக்கு துறைசையாதீனச் சமயப் பரட்
சிவபிரானார் உலகம் உய்யும் பொருட்டு மேற்கொண்ட
வீரதீரச்செயல்கள் இடம்பெற்ற சிவத்தலங்கள்
தலம் - திருப்பறியலுர்
யானையின் தோல் உரிக்கப்பட்டதிருத்தலம்
எமனை உதைத்ததிருத்தலம் - திருக்கடவூர்
முப்புரம் எரிசெய்ய அருளிய தலம் - திருவதிகை வீரட்டானம்
பிரமனின் தலை கொய்யப்பட்டதலம் - திருக்கண்டியூர்
அந்தகாசுரனைக் கொன்ற திருத்தலம் - திருக்கோவனூர்
தக்கனின் யாகத்தைத் தகர்த்து அவனின் தலை வகாய்யப்பட்ட
சலந்தராசுரனைக் கொன்றதிருத்தலம் - திருவிற்குடி
- ഖന്ധ്രഖ്
காமன்எரிசெய்யப்பட்டதிருத்தலம் - திருக்குறுக்கை
- த சண்முகநாதன்,
புத்தூர்,

2009 விரோதி சித்திரை 01
தீனமும் இலங்கையும்
விருது/கெளரவம்
த்தாந்த வித்தகள், பொற்கிழி, பொன்னாடை பாராட்டிதழ், DITg5 Jub
புறப்பணிச்செல்வர்
பாற்கிழி, மோதிரம், பாராட்டிதழ்
வத்திருத்தொண்டர்
தய்வத் தமிழிசைச் செல்வர், பொற்கிழி வத்திருத்தொண்டர் வத்திருத்தொண்டர்
வாகமச்செல்வர் |றைசையாதீன திருமுறைத் தோன்றல் வத்திருத்தொண்டர்
வநெறிப்புரவலர் தய்வத் தமிழிசைச்செல்வர் டியார்க்கு அமுதுாட்டும் அண்ணல் வத்திருத்தொண்டர் வத்தமிழ்ச்செல்வர்
ஆம் ஆண்டில் திரு. செ. நவநீதகுமார் புநர் பணி நியமன ஆணை வழங்கப் பெற்றது. *
முத்தி தரும் சிவத்தலங்கள்
* தரிசிக்க முத்தி தருவது-சிதம்பரம்
* பிறக்க முத்தி தருவது-திருவாரூர்
* இறக்க முத்தி தருவது- காசி
நினைக்கமுத்தி தருவது-திருவண்ணாமலை
கேட்க முத்தி தருவது- மதுரை
பஞ்சபூதத் தலங்கள்
* நிலம்-பிருதுவி - திருவாரூர்,காஞ்சிபுரம்
* நீர்-அப்பு - திருவானைக்கா
* வநருப்பு-தேயு - திருவண்ணாமலை
* காற்று-வாயு - திருக்காளத்தி
* ஆகாயம் - சிதம்பரம்
D9

Page 10
இந்துசாதனம்
14.04
திருச்சிற்றம்பலம் வாழ்க அந்தணர் வானவ ரானினம் வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக ஆழ்க தீயதெல் லாமர னாமமே சூழ்க வையக முந்துயர் தீர்கவே.
திருச்சிற்றம்பலம்
இந்து சாதனம்
Hindu Organ
email: editor (a) hindu organ. com
விரோதி ஞல சித்திரை மாதம் மீ ஆம் உ 04.04.2009
பாட9ாக்க - பாடமும் ஆகும்
பல ஆண்டுகளுக்கு முன்புவரை, நல்ல ஒரு வழக்கம் நம்மக்களிடம் இருந்து வந்தது.
*அறஞ்செய்ய விரும்பு’ எனத் தொடங்கும் 'ஆத்தி சூடி,” “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" எனத் தொடங்கும் 'கொன்றை வேந்தன்" ஆகியவற்றுடன் “வாக்குண்டாம்” எனப்படும் முதுரை, வெற்றிவேற்கை, உலகநீதி, நல்வழி, நன் னெறி ஆகியவற்றையும் சிறுவயதிலேயே மனப் பாடம் செய்யும் வழக்கம் பரவலாக இருந்தது.
தம் பிள்ளைகளுக்கு 'ஏடு தொடக்கு" வதையும், பின்னர் பாடசாலைக்கு அவர்களை அனுப்புவதை யும் இன்றியமையாத தம் கடமைகளாகக் கொண்டி ருந்ததைப் போல், மேற் கூறியவற்றைத் தம் பிள் ளைகள் மனனஞ் செய்ய
வேண்டும் என்பதிலும் பெரும்பாலான பெற்றோர், கண்ணும் கருத்துமாக
இருந்தார்கள் , பிள்ளை களுக்கு ஊக்கமும் உற் சாகமும் ஊட்டினார்கள்.
அந்தக் காலத்தில், உப யோகிக்கப்பட்ட சிறுவர்க் குரிய மொழி, சமயப் பாடப் புத்தகங்களில், மேற்கூறிய வற்றுள் ஒன்றோ பலவோ சேர்க்கப் பட்டிருந்தன. அவற்றை மாணவர்கள் மன னஞ் செய்ய வேண்டும் என ஆசிரியர்களும் வலியுறுத் தினர்.
பெரியோர் சொல்லைத் தட்ட விரும்பாமல் - தட்ட முடியாமல் LITLLDITé85 வேண்டிய அனைத்தையும் பெருமளவிலான மாண வர்கள் பாடமாக்கினார் கள், போட்டி போட்டுக் கொணர் டு பாடமாக்கி னார்கள்.
அவற்றில் நம்பமுடியாத கற்பனைகள் இல்லை. நடக்கமுடியாத நிகழ்ச்சித் தொகுப்புகள் இல்லை. மாறாக, வாழ்க்கைக்குத் தேவையான - மகிழ்ச்சியும் திருப்தியும் அளிக்கக்
 

2009
விரோதி சித்திரை 01
கூடிய, சீரும் சிறப்பும் மிக்க வாழ்க்கைக்குத் தேவை யான - உண்மைகள், தத்து வங்கள், ஆலோசனை கள், அறிவுறுத்தல்கள், வழி காட்டிகள் போன்ற வையே நிறைய இருந்தன. ஆனால் அவை அனைத் தையும் நன்றாக விளங்கிக் கொண்டு தான் தமது வாழ்க்கைக்கு என்றுமே உதவியாக, உறுதுணை யாக அவை இருக்கும் என் பதை நன்றாக உணர்ந்து கொண்டுதான் அக்காலத் துச் சிறுவர்கள் அவற்றைப் பாடமாக்கினார்கள் என்று சொல்லமுடியாது. சிறிய, எளிய, இனிய சொற்களில், மோனை எதுகைகளுடன் அழகுநடையில் அவை ஆக் |கப்பட்டிருந்ததனாலும்,
அவற்றைப் வதை, பெற்றோர். உற் றார், கற்றோர் போன்றவர் களிடமிருந்து 'கெட்டிக் காரன், நல்லபிள்ளை" முத லிய "விருது"களைப் பெற வேண்டும் என்ற 'சிறு வயது" இலட்சியத்தை இலகுவில் ஈட்டுவதற்குரிய வழிகளுள் ஒன்றாக அவர் கள் கண்டுகொண்டதனா லும் அது சாத்தியமானது என்பதே பொருத்தமானது.
எனினும், விளையாட்டுச் சிறுவர்கள், காலப் போக் கில் வாலிபப் பருவத்துள் வளர் நடைபோடத் தொட ங்க, ஆண்டும் அறிவும் அநுபவமும் முதிர முதிர, அர்த்தம் தெரியாமல் அதைப் பற்றிக் கவலைப் படாமல், முன்னர் பாடமாக் கியவை எல்லாம் அர்த்தம் நிறைந்தவையாகி அவர் களுடைய நெஞ்சைக் கவ ரத் தொடங்கின் நல்லவற் றைச் செய்து அல்லவற்றை அகற்ற அவர்களைத் தூண்டத் தொடங்கின. இன்றைய இளைஞர் பலரி டம் காணப்படும் அமைதி யின்மை, ஆணவ வெறி,
பாடமாக்கு
அடிதடிப் போக்கு முதலி யவை ஒப்பீட்டளவில் அந் தக் காலத்தவர்களிடம் அருந்தலாகவே இருந் ததற்குரிய பல்வேறு கார ணங்கள் - சூழ்நிலைகளுள் அவர்கள் நீதிச் செய்யுள் களைப் பாடமாக்கியிருந் ததும் ஒன்று என்பதை மறுக்க முடியாது.
காலப்போக்கில் பாடப் புத்தங்களை அச்சிட்டு வெளியிடும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொண் டது. தொழில் பெறுவதற் குத் தகுதியானவர்களாக மாணவர்களை ஆக்குவது மட்டும் கல்வியின் நோக்க மாக முன் வைக்கப்பட்டது. இவை காரணமாக, நீதிச் செய்யுள்களைப் பாட மாக்குவது முக்கியமற்ற தாகி விட்டது.
நமது எதிர்காலச் சமு தாயம் எப்படி இருக்கும்? இன்றைய நமது இளைஞர் கள் எதை நோக்கி, எங்கே சென்று கொண்டிருக்கின் றார்கள்? பரம்பரை பரம் பரையாக நாம் பின்பற்றி வரும் சைவத் தமிழ்ப் பண் பாட்டை அவர்களும் பின் பற்றுவார்களா? அன்பு, இரக்கம், ஈகை, தர்மம், உண்மை, நேர்மை, தெய் வபக்தி போன்ற விழுமி யங்களுக்கு மதிப்பளித்து அவர்கள் ஒழுகுவார்களா? போன்ற கேள்விகள் உள் ளத்தைக்குடைய, நிச்ச யமற்ற எதிர்காலத்தை நினைத்துக் கலங்குபவர் களுக்கு நாம் கூறக்கூடிய ஆலோசனை இதுதான்.
நீதிச் செய்யுள்களைப் LumLLDITö(5ub upd5655605 மணி டும் நடைமுறைப்
படுத்துவோம், நிலை நிறுத்துவோம். பாடமாக் கப்படுபவை "பாடமும்"
ஆகி - 'படிப்பினை" ஆகி - பல தரப்பட்டோரை நல் வழிப்படுத்தும் என்பது நிச்சயம். 器
O

Page 11
இந்துசாதனம் 14.04
நாவலர் சரிதமோது
- கவிஞர் இறுாை (இந்துசாதனம் - 2009 பங்கு
13.
14.
15.
தொட்டில் போடல்
நன்னரைஞாண்கள் பூட்டி நறுந்துகில் ஆடை மாட்டி மின்னனை மேனி மீது மிகுஅணி மணிகள் நாட்டி நன்னரும் பணிகள் காட்டி நாவலராவர் தம்மைப்
பன்னரும் தொட்டில் போட்டுப் பாடித் தாலாட்டுஞ்
சொன்னார்.
சிகைவருவித்தல்
பரந்தபல் ஆசை யாலே பரமதம் மாறல் போக்கி
அரன்திரு முறைபுராணம் ஆகம நூல்களாக்கி
பரன்நெறிமுறையை யிந்தப் பாரினில் நாட்ட வந்தார்
சிரந்தனின் சிகைமழித்துச் சந்தனம் நீறு சேர்த்தார்.
சோறுாட்டல்
வேறு
தக்கநறும் பால்பயறு பச்சரிசி சேர்த்து முக்கனியும் சர்க்கரையு மொக்கஅமு தாக்கி மிக்கலையுஞ் சைவஅேமு துண்டதனை வளர்ப்பார்க்
கக்கறையாய்த் திருநாளில் அழுதுசெய் வித்தார்.
ஏருதொடக்கல்
(36.g
16. நற்சைவப் பாட சாலை நாட்டினிற் பலதா பித்தே
அற்றவர் மோகந் தீர்க்க ஆங்கில மொழியும் போதித்
துற்றுழு உதவி நின்ற உத்தமர் கற்க நன்னாள்
சற்குரு கையாலேடு சால்புறத் தொடக்கி வைத்தார்.
வளர்ச்சி
17. தளர்வுறுநடை நடந்து தண்டமிழ் சைவ மேன்மை
ஒளிர்வுறப் பிரசங்கங்கள் உயர்ந்த நூலாக்க லென்றே
அளவறு பணிக்கு வந்தார் ஆண்டவன் அருளினாலே
வளர்பிறையெனவளர்ந்தே வயதினில் ஐந்தடைந்தார்.

|。2009 விரோதி சித்திரை 01
ல் நற்றமிழ்9ாலை ðuIII GööIIöfár னி-பக் 5 இன் தொடர்ச்சி)
18.
19.
20.
21.
24。
கல்வி
இறையருள் கூட நல்லூர் இருக்குமா வறிவு மிக்கோன் துறையதிற் புலமை யான சுப்பிரமணிய ரென்னும் நிறைவுறு பாத்தியாயர் நிகரில ரவரே கல்வி குறைவறக் கற்க நல்ல குருவெனத் தேர்ந்த றிந்தே.
சென்றவரில்லம் நாடிச் சிறப்புகள் பலவுஞ் செய்து நின்றவர் பாத மீது நிலமுறத் தாழ்ந்து வேண்டி அன்றலர் கமலம் போல அலர்ந்திடுவதனம் நோக்கி நன்றிவர் பாடங் கேட்க நல்கிடும் அருளை யென்ன.
முன்புநின்றின்ன வாறு முகமன்கள் செய்கு வார்மேல் அன்புறு முகத்தராகி அணைத்தெடுத் தருகிருத்தி நன்புடை நாட்குறித்தே நன்றுநீர் வாரு மென்று இன்புட னனுப்பி வைத்தார் எண்ணருங் குருவின்
மிக்கார்.
நற்றவர் குறித்த வோரை நாவலராகு மாறு முற்றவஞ் செய்து வந்தார் முன்னுற அமர்ந்திருந்தே சற்குரு சொல்லச் சொல்லத் தமிழ்மொழிநுட்ப
மெல்லாம் கற்றிடு மாசை யாலே கருத்தொடு கேட்டு வந்தார்.
வாக்குண்டா மென்ற மைந்த வரிசையுள் நீதி நூல்கள் நோக்குண்ட நிகண்டு மற்றும் நுவலரெண் சுவடி யோடு நாக்கொண்டு வியாசர் சொல்ல நம்பியார் விரைவி
னோடு பாக்கொண்டு எழுதி வைத்த பாரதக் கதைக
ளெல்லாம்.
அக்கறையாகக் கேட்டே அதிலெழு ஐயம் தீர தக்கவ ரோடு சேர்ந்து தர்க்கித்து அதனினுள்ளே தொக்கிநில் தத்து வங்கள் தோன்றிடாப் பொருள்க
ளெல்லாம்
மிக்குயர் விளக்கமோடு மிகச்சில நாளிற் கற்றே.
பாலனாய்த் தோன்றி வேலன் பாதக வடிவ சூரன் காலனாய் மாறி வேலாற் கதறிட மார்பிளந்தே கோலமா மஞ்சை ஏறிக் குக்குடக் கொடியும் பெற்ற சீலமா புராணந்தன்னைச் செப்புக என்று கேட்டார்.
பந்தம தாகிப் பார்மேற் பரவியே யோது வார்க்கு முந்தையின் வினைகள் யாவும் முருகரு ளாலே நீங்கி இந்திர ராகு வாழ்வை யிப்புவியளிக்க வல்ல
கந்தவேள் புராண மோதிக் கருத்ததும் விளம்ப லுற்றார்.
* (தொடரும்)

Page 12
இந்துசாதனம் 14.04
AV A y அநுபவம் - அற்பு
சென்னை மேற்கு மாம்பலத்தில் சக்கரபாணி வீதியில் தன் குடும்பத்தினருடன் வசித்து வந்தார் திரு. என். ராம மூர்த்தி என்பவர். ஏழைகள் என்றோ செல்வந்தர்கள் என்றோ சொல்லமுடியாத நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த அனைவருமே தெய்வபக்தி மிக்கவர்கள்.
மூத்த மகள் கெளரிக்கு 1981 நவம்பரில் திருமணம் நடைபெற்றது. இதற்குப் பத்து நாட்களின் பின்னர், திரு. ராமமூர்த்தியின் மனைவிக்கு இரண்டு கண்களிலும் கோளாறு ஏற்பட்டது.
எந்தப் பொருளைப் பார்த்தாலும், அது இரண்டு இரண்டாகத் தோன்றியது.
எதிரே ஒருவர் நின்றால், பக்கத்தில் அவரைப் போன்ற இன்னொருவர் நிற்பதாகத் தோன்றும். அடுப்பில் வெண்கலப் பானையிற் சாதம் கொதிக்கும்போது, பக்கத்தில் மற்றுமொரு வெங்கலப் பானையிலே சாதம் கொதித்துக்கொண்டிருக்கும்.
எது உண்மை, எது பொய் என்பது தெரியாது.
சாதம் வெந்து போய் விட்டதா என்பதை அறிய, எந்தப் பானைக்குள் கரண்டியை விடவேண்டும்? கடைசி யில் எந்த அடுப்பிலிருந்து பானையை இறக்கி வைக்க வேண்டும்? இரண்டு கணவர், இரண்டு பிள்ளைகள்!
ஒவ்வொரு கணமும் ஏற்பட்ட கஷ்டங்கள், தடுமாற் றங்கள், குழப்பங்கள். மிகப் பயங்கரமானவை.
அக்காலத்திலே சென்னையிலே பிரபலமாயிருந்த கண் வைத்தியநிபுணர் ஒருவரிடம் தன் மனைவியை அழைத்துச் சென்றார் திரு. இராமமூர்த்தி.
கண்களை நன்றாகப் பரிசோதித்தார் கண் வைத்திய நிபுணர்.
"இது வயதுக் கோளாறு. சில சமயம் பார்வையே போய்விடலாம்." எனக் குறிப்பாகச் சொன்னவர். “ஒரு கண்ணாடி எழுதிக் கொடுக்கின்றேன் வாங்கிப் போட்டுக் கொள்ளுங்கள்" என்றார்.
வைத்திய நிபுணருக்கு ஐம்பது ரூபாய் கொடுத்த திரு. இராமமூர்த்தி நூற்றைம்பது ரூபாவுக்கு மூக்குக் கண்ணாடி வாங்கி மனைவிக்குக் கொடுத்தார்.
தான் இழந்த கண்பார்வையை, இறைவனை ே சுந்தரமூர்த்திநாயனார் என்பது பெரியபுராணம் கூறு
அந்தத் தேவாரங்களைப் பக்தியுடன் பாராயண சென்னையைச் சேர்ந்த ஒரு குடும்பப் பெண், தென்னி ஆண்டுகளின் முன்னர் கடிதஉருவில் வெளிவந்தவிபரங்:

2OO9 விரோதி சித்திரை 01
நீல் - ஆனந்தம் -3
ஆனால் .முன்னர் சில சமயங்களில் மங்கலாகத் தெரிந்த இரட்டை உருவங்கள் இப்போது மிகத் தெளி வாக - பிரகாசமாகத் தெரியத் தொடங்கின.
இனி என்ன செய்வது? யாரிடம் போவது? என்ற ஒன்றுமே தெரியாமல் மனம் உடைந்து போனார்கள் கணவனும் மனைவியும்.
நாள்கள் சில இப்படியே கழிந்தன. தீவிர சிவபக்தர்களான அவர்களுக்கு, சந்தர்ப்பம் கிடைக்கும் வேளைகளிலே சமயப் பிரசங்கங்களைக் கேட்டுவந்த அவர்களுக்குச் சுந்தரமூர்த்தி நாயனார் கண்பார்வை இழந்ததும் இறைவனருளால் அதை மீண்டும் பெற்றுக்கொண்டதும் நினைவிற்கு வந்தன.
ஆழமாகச் சிந்தித்து இருவரும் ஒரு முடிவுக்கு வந்தனர். கண் பார்வை குண்மாக வேண்டிப் பிரார்த்தித்து ஒரு மண்டலம் திருமுறைப் பாராயணம் செய்வதெனத் தீர்மானித்தனர்.
பிள்ளையார் சந்நிதானத்திற் சங்கற்பஞ் செய்து கொண்டார்கள்.
பிள்ளையார் துதியாக “ஐந்து கரத்தனை” என்ற பாட்டையும், நால்வர் துதியாக “பூழியர்கோன் வெப் பொழித்த" என்ற பாடலையும் பாடிவிட்டு, சுந்தரமூர்த்தி நாயனார் திருவேகம்பத்திற் பாடிய "ஆலந்தான் உகந்து ” எனத் தொடங்கும் பதிகத்தையும் திருவாரூரிற் பாடிய “மீளா அடிமை” எனத் தொடங்கும் பதிகத்தையும் காலை, மாலை இருவேளையிலும் மனமுருகிப் பாராயணஞ் செய்தார்கள்.
அவர்களுடைய நம்பிக்கையும் விடாமுயற்சியும் வீண்போகவில்லை.
நாளுக்கு நாள் குணமடையத் தொடங்கிய கண் பார்வை, பாராயணத்தின் முடிவிலே பூரணமாகக் குணமாகிவிட்டது.
கண்ணாடி இன்றியே, முன்னரைப் போல் எல்லா வேலைகளையும் சரியாகவும் விரைவாகவும் செய்து முடிப்பதற்குத் திருமதி இராமமூர்த்தியால் முடிந்தது.
அவர்களுடைய கடவுள் நம்பிக்கை மேலும்
வலுவடைய வாழ்க்கையும் சிறப்புற்றது. 潔
வண்டித் திருப்பதிகங்களைப் பாடி மீளப்பெற்றவர் ம் வரலாற்றுச் செய்தி.
ாஞ் செய்து பார்வைக் கோளாறு நீங்கப் பெற்றாள்.
ந்தியா தருமபுர ஆதீன “ஞானசம்பந்தம்” இதழிலே சில களைக் கட்டுரையாக்கியுள்ளோம்.
2

Page 13
இந்துசாதனம் 14.04
சொல்லிய பாடின் சொல்லு
திருஞானசம்பந்தர் முதன் முதலில் திருப்பிரமபுரத்திற்
பாசுரங்களின் பதவுரை, பொழிப்புரை ஆகியவற்ை கசிந்துருகிப் பாடலாம்.
திருஞானசம்பந்தர் திருப்பதிகம்
தலம் திருப்பிரமபுரம் 1160i: Bill 11160L திருச்சிற்றம்பலம் ஒருமை பெண்மை உடையன் சடையன் விடை
ஒளரும்மிவனென்ன அருமையாக உரை செய்ய அமர்ந்தென துள்ளங்கவர்
கள்வன் கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததோர் காலம்மிது வென்னப் பெருமைபெற்ற பிர மாபுரமேவிய பெம்மான் இவனன்றே.
ஒருமை - ஒரு (இடப்) பாகத்தில், பெண்மையுடையன் - பெண் தன்மையை (உமாதேவியை)க் கொண்டவன், சடையன் - சடைக்கற்றையை உடையவன், விடை ஊரும் இவன் - எருதேறி அருளுகின்றவன், என்ன - என்று, அருமையாக - அரிய பெருமைகளைப் பாராட்டி, உரைசெய்ய - தொழுமாறு, அமர்ந்து - விரும்பி, எனது உள்ளம் கவர் கள்வன் - என்னைத் தன்வயப்படுத்திக் கொண்டவன், கருமைபெற்ற - கருநிறம் பொருந்திய, கடல்கொள்ள - கடல் கவரும்படி எழ, இது - இப்பதி, ஓர்காலம் - முன்னொரு காலத்தில், மிதந்தது என்ன - தோணியாகி மிதந்தது என்னப் புராணங்கள் புகழும்படி, பெருமை பெற்ற - சிறப்பு வாய்ந்த, பிரமாபுரமேவிய - சீகாழியின் கண் எழுந்தருளியுள்ள பெம்மான் இவன் - பெருமானாகிய இவனே.
பொழிப்புரை: தன் இடப் பாகத்திலே உமாதேவியாரை உடையவன், சடைக் கற்றையை உடையவன், எருதேறி அருளுகின்றவன் 6T60T பாராட்டித் தொழுமாறு அமர்ந்திருந்து என்னைத் தன்வயமாக்கிக் கொண்டவன். முன்னொரு காலத்திலே கடல்கோள் ஏற்பட்ட வேளையிலே தோணியாக மிதந்து நின்ற சீகாழியில்
அன்றே
- கவிஞர் வ. யே
அன்பைப் பிடித்தால் ஆக்கம் சேர்க்கும்
அணுவைப் பிடித்தால் அழிவைச் சேர்க்கும் அன்பைப் பிடிக்கப் பற்றை விடுங்கள்
அன்பு வடிவன் ஆவான் மனிதன்

2009 விரோதி சித்திரை 01
பொருளுரிைந்து (β6»Ιηrό.
பாடியருளிய திருப்பதிகத்தின் மூன்றாம் நான்காம் றத் தருகின்றோம். கருத்தை அறிந்து கொண்டால்,
எழுந்தருளியுள்ள சிவபெருமானே. (எனக்குப் பாலூட்டி uj6)661)
மறைகலந்த ஒலி பாடலோடாடல ராகிமழுவேந்தி இறைகலந்தஇன வெள்வளை சோரஎன் உள்ளங்கவர்
கள்வன் கறைகலந்தகடி யார்பொழில் நீடுயர் சோலைக்கதிர் சிந்தப் பிறைகலந்தபிர மாபுரமேவிய பெம்மான் இவனன்றே.
மறை ஒலி கலந்த - வேதத்தின் சுரங்களோடு கூடிய, பாடலோடு - சாமகானத்தோடு, ஆடலர் ஆகி - திரு நடனத்தை 9-60)Luj6) if ஆகி, மழு ஏந்தி மழுவினைத் தரித்து, இறைகலந்த - கையினிடத்துப் பொருந்திய, இன வெள்வளை - வெள்ளிய வளையல்கள் எல்லாம், சோர - சோர்ந்து விழுமாறு, என் உள்ளம் கவர்கள்வன் - என்னைத் தன்வயப்படுத்திக் கொண்டவன், கறைகலந்த இருள் செறிந்த, கடி ஆர் - மணம் பொருந்திய, பொழில் - பூஞ்சோலைகளிடத்தும், நீடு ? uur சோலை - நீண்டு உயர்ந்த சோலைகளிடத்தும், கதிர் சிந்த - தனது ஒளிக்கதிர்கள் சிந்தும்படி, பிறைகலந்த - சந்திரன் பொருந்தித் தவழ்கின்ற, பிரமாபுர மேவிய - சீகாழியின் கண் எழுந்தருளிய, பெம்மான் இவன் - பெருமானாகிய இவனே
பொழிப்புரை:- வேத ஒலிகளுடன் கூடிய பாடல்களுக்கு ஏற்பத் திருநடனஞ் செய்பவள் , மழுவாயுதத்தை ஏந்திய வர் ; என் கையில் நான் அணிந்த வெள்ளி வளையங்கள் கழன்று விழும்படி என்னைத் தன்வயப்படுத்தியவர் : இருள் நிறைந்த, நீண்டு உயர்ந்த பூஞ்சோலைகளுடே தன் ஒளிக் கதிர்களைச் செலுத்துகின்ற சந்திரன் தவழ்கின்ற சீகாழிப் பகுதியில் எழுந்தருளியுள்ள சிவபெருமானே (எனக்குப் பாலூட்டியவர்)
aros ாகானந்தசிவம் -
அன்பு வடிவே சிவம தாகும்
அனைத்து உயிரும் ஒன்றாய்த் தோன்றும் அன்பு மலர்ந்தால் ஒற்றுமை கூடும்
ஆக்க வழிசமுதாயம் வளரும்

Page 14
இந்துசாதனம்
4.04
வாழும்
- வசந்தித
இயற்கையின் கூறுகள் யாவுமே இறை வடிவங்கள்! இந்தச் சிந்தனையின் வழியேதான் தெய்வ வழிபாடு தோற்றம் பெற்றது. வேதங்கள் இறை பற்றிய சிந் gb60)60T60)u வெளிப்படுத்த, உபநிடதங்களோ வேதசார மாக உருப்பெற்றன. அவை, உண்மைப் பொருளைத் தேடுவனவாய், மகான்களின் சிந்தனைக் கருவூலங்களாய் வளர்ச்சி பெற்றன. அதனுடன் மனித சமுதாயம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கநெறிகள் குறித்தும் அவை பல கருத்துக்களைக் கூறின.
ஞானிகள் உணர்ந்த இவ்வுண்மைகள் மக்களிடையே கொண்டு சேர்க்கப்படலும், நடைமுறை வாழ்வுடன் பின்னிப் பிணைக்கப்படலும் அவசியமாயிற்று. வழிபாட்டு முறைகளும் நம்பிக்கைகளும் வளர்ந்தன. அவை பக்தி மார்க்கமாகப் பரிணமித்தன. இறைவனைக் காட்சி நிலை யில் காண்பது, பாடிப் பணிவது என்பன அதன் செயற் பாடுகளாயின. நாயன்மாரும் ஆழ்வார்களும் முன்னெடுத்த பக்தி இயக்கம் இதன் பாற்பட்டதே. அது படிப்படியாக
மக்கள் இயக்கமாக மலர்ச்சி பெற்றது. சராசரி மனிதனிடத்து இறையுணர்வை ஊட்டுவதில் அது பெரும்பங்கு வகித்தது. பண்ணமைந்த பாடல்களும்
புராண இதிகாசங்களும், உபநிடதக் கருத்துக்களை எளிமைப்படுத்தித் தந்தன. வாழ்வின் சகல அம்சங்களி லும் சமயம் பிரிக்கமுடியாததொரு கூறாகிற்று.
இறை அருட்சக்தியின் நிலைக்களன்களாகத் தோன்றியவை கோயில்கள்! “சமுதாய மைய நிலை யங்களாக" அவை முதன்மை பெற்றுத் திகழ்ந்தன.
மகான்களின் பாதங்கள் பட்டு அவை புனிதம் பெற்றன. தெய்வ சாந்நித்தியம் பெருக, கோயில்களில் வழிபாட்டு முறைமைகள் நிலைபெற்றன. மனித சமுதாயத்தைச் செவ்வனே வழிநடத்துவதில் அவை பெரும் பங்கு ஆற்றின.
வருடங்கள் உருண்டோட, சமுதாயத்தின் செல்நெறி யில் மாற்றங்கள், கருத்துக்கள் எல்லாமே விமர்சனத் துக்கு உள்ளாகத் தொடங்கின. மாற்றங்களுக்கு ஈடு கொடுக்கும் பொருட்டு அவை தம்மை மீள்கட்டமைப்புச் செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டது.
சமயம் பல முனைகளிலுமிருந்து மிகுந்த தாக்கு தலை எதிர்கொண்டது. அறங்கள் புறக்கணிக்கப்பட்டன.
சமூகம் எதையுமே அறிவு
பூர்வமாகவும் தருக்கரீதியாக வும் மட்டுமே புரிந்து கொள் ளத்தலைப்பட்டது. ஆன் மீகத்தை அறிவு பூர்வமாகப் புரியவைப்பது நடைமுறைச் சாத்தியமான விடயமன்று! வாதப் பிரதிவாதங்களுக்கு
சமய உண்மைகளை மக்
இறையுணர்வை ஏற்படுத்
கள் உதவும். ஆனால் சம தும் சம்பிரதாயங்களை தான் சமயம் ஆகிவிடா. ந. Lύο στοιμ 6τυρά δωμυ φτι பாடுகள் இன்றையகாலக
f

2009 விரோதி சித்திரை 01
aA-Soz66b
ITLITõr
அப்பாற்பட்டு, அவற்றையெல்லாம் கடந்து நிற்பதே ஆன்ம அனுபூதி! எனினும், அதைச் சமூகத்தின் மத்தி யில் சேர்ப்பதற்கு, அன்றைய நிலையில் சடங்குகளும் சம்பிரதாயங்களும் கைகொடுத்தன. அவை அவசிய மானவை ஆகவும் அமைந்தன. இன்றோ, சடங்குகளும் ஆரவாரங்களும் பெருகிவிட்ட நிலையில், சமயத்தின் உண்மைகள் மறக்கப்படும் ஆபத்தை நாம் எதிர்நோக்கு கிறோம்.
ஆன்மா என்றுமே சுதந்திரமானது. அது இறையுடன் நேரடியாகப் பேசவும் கலக்கவும் வல்லது. நூல்களும் ஆசான்களும் இன்னும் பலவும் "மனிதனுள் உறங்கிக் கிடக்கின்ற ஆன்மீக உணர்வைத் தட்டியெழுப்ப மட்டுமே உதவமுடியும்" என்கிறார் சுவாமி விவேகானந்தர். ஆழ்ந்த மனப்பக்குவத்துடன் செய்யப்படும் பிரார்த்தனை இறைவனுடன் எம்மைப் பிணிக்கின்றது. மாறாக, அற் புதங்களைத் தேடி அலைவதாலும், சடங்கு சம்பிர தாயங்கள் மீது அளவிறந்த ஈடுபாடு கொள்வதாலும் ஆன்மசக்தி இழக்கப்படுகிறது.
பழமை, புதுமை எதுவாயிருப்பினும் நல்லவற்றை நாடுதலே நலம் பயக்கும். கிரியை முறைகள் மிதமிஞ்சும் நிலையில் இளம் தலைமுறையினர் பல கேள்விகளை எழுப்பக் காண்கிறோம். அவை, நாளடைவில் மதத்தி லிருந்து அவர்களை அந்நியப்படுத்திவிடலாம். மானுடத் தின் அவலங்களைத் தணிப்பதில் மதத்தின் பங்கு குறித்த குழப்பங்களும் அவர்களிடையே ஏற்படலாம். காலத்துக்குக் காலம் இத்தகைய நிலைகள் தோன்றி யுள்ளதை நாம் காண்கிறோம். அப்போதெல்லாம் மனித நேயச் சிந்தனையை முன்வைத்த பலரை வரலாறு எமக் குக் காட்டி நிற்கிறது. புறநிலைச் செயற்பாடுகள் பெரு கியதைக் கண்டித்த சித்தர்களும் அத்தகையோரே!
அன்பையும் சிவத்தையும் ஒன்றாகக் காண்பது, சக மனிதனின் துயரில் பங்குகொள்வது போன்ற பண்பு மலர்ச்சிகளைச் சித்தர்கள் வற்புறுத்துகின்றனர்.
“பக்தி இயக்கம் சராசரி மனிதனிடம் இட்டு வந்த இறையுணர்வுக்கு கிரியை முறைகளின் பெருக்கத்தினாலும் புறநிலை ஆசாரங்களாலும் தடைகள் ஏற்பட சூழ்நிலை களில் அவற்றை விமர்சித்து உண்மையைப் பற்றி நிற்கு மாறு வற்புறுத்தினர் சித்தர்கள்”
5ளிடம் பதிய வைப்பதற்கும்
துவதற்கும் சமயக் கிரியை யக் கிரியைகளைச் செய்வ ப் பின்பற்றுவதும் மட்டும் ால்வரைப் போன்று மக்களி படுத்தக்கூடிய பல செயற் படத்தின் தேவை.
4.
என்று இந்தியச் சிந்தனை மரபு என்ற நூலில் பேராசி ரியர் நா. சுப்பிரமணியன் கூறுகிறார்.
சமயம் எவ்வாறு சாதா
ரண மனிதனைச் சென்ற ---->

Page 15
இந்துசாதனம் 14.04
வாழும்
டையலாம் என்பதை "செயன்முறைவேதாந்த"மாக சுவாமி விவேகானந்தர் விளக்குகிறார். பசித்திருப்பவனுக்குச் சமயத்தைப் போதிப்பது எந்தவகையில் நியாயமானது என்ற கேள்வியை அவர் பல தடவைகள் எழுப்புகிறார். சமூக ஒட்டுறவுக்கான தளமாகவும் மனிதரிடையே அன்பை வளர்க்கும் நெறியாகவும் இருந்ததே - இருக்க வேண்டியதே சமயம்! சடங்குகளின் வளர்ச்சியாக அது மாறுகின்றபோது ஆன்ம வளர்ச்சி குன்றத் தொடங்குவது கண்கூடு!
இந்துமதம் இன்று மிகவும் இக்கட்டானதொரு கால கட்டத்தில் உள்ளது. துன்பக்கேணியாகிவிட்ட வாழ்வில், மக்களின் சோகச் சுமைகளை இறக்கிவைக்க, ஆறுதல் பெற, தீர்வைக் காண்பிக்க, சமயத்தின் பங்களிப்பை அவர்கள் நாடிநிற்கிறார்கள். உன்னதமான - பழைமை யான மதம், ஆழமான உண்மைகள், அர்த்தமுள்ள பல கிரியைகள் என்ற எதையுமே எவரும் மறுப்பதற்கில்லை. ஆனால் வாழ்வின் அடிப்படைத் தேவைகளுக்கே அல்லாடும் மக்களுக்கு நாம் செய்யும் சேவைகள் சமயத்தை இன்னும் அர்த்தமுள்ளதாக்க வேண்டும்.
இன்று நம்மவர் வேற்று மதங்களின்பால் ஈர்க்கப் படுவதற்கு நாமும் எமது தூரநோக்கற்ற செயற்பாடு களினால் ஒரு வகையில் வழிசமைத்துக் கொடுக்கிறோம். இன்றைய சவால்கள் பல நூறு வருடங்களின் முன்புகூட இருந்தவைதான். ஆனால் தொண்டை முன்னிறுத்திய அப்பரும், பக்தி இயக்கத்தையே நடத்திய சம்பந்தரும் மக்களின் வாழ்வோடு சமயத்தைப் பொருத்திக்காட்டிய மாணிக்கவாசகரும், சுந்தரரும் மக்களிடையே சமய எழுச்சியைத் தோற்றுவித்தனர். ஆனால் இன்றைய
இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாமில் இருப்பவர்களு K. கணேஸ் அவர்கள் வயற்றுக்கொண்டு அதற்கான கடித அவர்களுக்கு வழங்குவதையும் திட்டமிடல் பணிப்பாளர் கை.க. விசாகரத்தினம், உதவிச்செயலாளர் தி. மாணிக்கவ
 

2OO9) விரோதி சித்திரை 01
авкоалибо
சவால்களோ எமது காலடி மண்ணைக் கரைப்பனவாய்க் கூர்மைபெற்றுள்ளன. அவற்றின் ஆணிவேரைத் தேடியறிவதும் களைவதும் எம்முன்னுள்ள பணிகள்!
சகிப்புத்தன்மை, இந்துக்களின் மேலான பண்பு ! எல்லா மதங்களையும் மதிக்கக் கற்றுத்தருவது எமது
சமயம் எல்லா மதங்களையும் மதக்காழ்ப்பின்றி அர
வணைக்கும் அதேவேளை, உண்மையான இந்துக்களை உருவாக்கவும் எமக்கென ஒரு செயற்றிட்டம் அவசிய மாகிறது. வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில் பக்தி இயக்கங்கள் தோற்றம் பெற்றமைக்கும், மகான்கள் அவற்றை நெறிப்படுத்தியமைக்கும் காரணம் அவர்கள் இந்த நோக்கத்தை முன்னிறுத்தியதேயாகும்.
எங்கெல்லாம் நாம் பாராமுகமாக இருந்தோமோ, அங்கெல்லாம் உலகி இலாபங்களைக் காட்டியும், உதவிக்கரம் நீட்டியும், மனங்கள் மாற்றப்படுகின்றன. சமூக நோக்கற்ற எமது சில செயற்பாடுகளும் கேலிப் பிரசாரங்களுக்கு வசதியாகின்றன. மதத்தின் பெயரால் நாம் செய்ய வேண்டிய சமூகப்பணிகள் எம்முன் குவிந்து கிடக்கின்றன. எமது ஆற்றல் அவற்றை நிறைவேற்று வதில் செலவழிக்கப்படவேண்டும்.
அன்பு - மனிதநேயம் - சமத்துவம் என்பன இறை தத்துவத்தின் படிநிலைகளாக, நிலையான சமய உண்மைகளாகப் போதிக்கப்பட வேண்டியது அவசியம். இந்துசமயம், சமூகத்தின் நலன் நோக்கியதாகத் தன்னை நெகிழ்த்தியும் புதுக்கியும் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யுமிடத்து எதிர்காலத் தலைமுறை உண்மையான இந்துமதத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யும்; அதனை வாழவைக்கும்.
நக்கு வழங்கப்பட்ட வாருள்களை யாழ் அரசாங்க அதிம் த்தை சபையின் பரீட்சைச் செயலாளர் இரா. வசல்வவடிவேல் ம. பிரதீபன், சபையின் கெளரவ அச்சகப் வபாறுப்பாளர் ாசகர் ஆகியோர் அருகில் நிற்பதையும் படத்தில் காண்க

Page 16
இந்துசாதனம்
14O4.
ағФишб) берб 6
- 56D66 DBGOTITdr
இயற்கையை மனிதவாழ்வியலோடு இணைப்பது சமயம். எம்மைச் சுற்றியுள்ள காட்சிகளை இறைவன் கோலங்களாகப் பார்க்கும் பயிற்சி ஒன்று தேவை.
பருவமாற்றங்களால் இயற்கை காட்டும் வண்ணங்களை யும் வடிவுகளையும் ஊன்றிக் கவனிக்கும் நிலை எம்மை நல்வழிப்படுத்தும் என்ற உண்மையை சமயகுரவர்கள் அறிந்திருந்தனர். மனிதனின் சுற்றுப்புறச் சூழல் அவனை மகிழ்வூட்டும். அழகிய கோலங்களைக் காணும்போது தன்னையும் அழகுபடுத்த வேண்டும் என்று மனிதனுக்குத் தோன்றுவது இயல்பாக உள்ளது. பலர் கூடும் இடங் களில் அழகான சூழல் அமைக்கவேண்டும் என்ற கவின்மரபும் தோன்றியுள்ளது.
சைவம் ஒரு வாழ்வியலாக இருப்பதை எமக்கு உணர்த்த முன்னோர் செய்த முயற்சிகளின் ஒரு பெறு பேறாகத் தேவாரப்பதிகங் கள் கிடைத்துள்ளன. இறை வனைப் பற்றிய பதிகங்களில் மனித வாழ்வியலை வளம் படுத்தும் சிறந்த பண்புகளையும் அவர்கள் இணைத்துள் ளனர். மனித நிலையில் இறைவன் பற்றிய எண்ணத்தை ஏற்படுத்தச் சில வழிகளையும காட்டியுள்ளனர். அந்தவகை யில் மனிதன் விரும்பும் நிலைகளைச் சுட்டி அதனுாடே இறைவன் பற்றிய ஒரு மனப்பதிவைப் பெறலாம் என உண்ர்த்தியுள்ளனர். மனித வாழ்வியலில் இன்றும் வண்ண மும் வடிவமும் இன்றியமையாதவை என்ற கருத்து நிலை பெற்றுள்ளது. இளமை முதல் முதுமை வரை இக்கருத ’துப் பேசப்படுகிறது. மனிதனைச் சிலவேளைகளில் இனங் காட்டும் சாதனங்களாகவும் வண்ணமும் வடிவும் அமை கின்றன.
வண்ணம் மனித உறுப்புகளில் மிக இன்றியமையாத கண்களுக்கு விருந்தாக அமைவது. இயற்கையின் வண் ணங்கண்டு மகிழும் மனிதனுக்கு அந்த வண்ணங்களு டாக ஒரு வழிபாட்டு நெறியையும் காட்டும் பணியைத் தேவாரம் செய்துள்ளது. கண்ணில் தெரியும் வானம், முகில், மலை, கடல், ஆறு, மரம், செடி, கொடி, மலர், சுனை, மடு, ஓடை, நிலவு, ஞாயிறு எனப் பல வற்றையும் பார்க்கும்போது அவற்றின் வண்ணத்தையும் வடிவையும் மனதில் பதியவைப்பது மனிதனுடைய அழகுணர்வால் ஏற்படும் அநுபவமாகும்.
பொன்வண்ணம், கருநிறக்குவளை, பால்நிறமதியம், வெண்ணிறு, செஞ்சடை, பொன்னைவகுத்தன்னமேனி, செய்யர், கருவரை, செங்கண்கருங்கயல், செங்கண்மால், கரியகண்டத்தர், செங்கண்மேதி, பைங்கண்வாளை, வெண்
பொடி, செந்நெல், வெண்மலர்,
பச்சைமேனியர், வெண் கொடி, வெள்வளை செவ் வழல், நீலநெய்தல், பச்சை யான், பொன்மலர்,செங்கால், வெள்ளெருக்கு, வெண்மதி
கரியமிடறு, கருமேதி,
வண்ணமும் வடிவும் மனித
களையும் என்றுமே ஈர்ப்பன காட்டி அதனூடாக இறைவனின் யும் தேவாரத் திருமுறைகள் படுத்தும் பல பண்புகளும் நிை
போன்ற தொடர்கள் வண்
ணங்களின் வேறுபாட்டை விளக்கிக் காட்டுகின்றன. தேவா ரங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள இத்தகைய தொடர்கள் ഖങ്ങ வ்கள் பற்றிய வேறுபாட்டையும் தெளிவையும் உணர்த்துகின்றன. மனிதன் விலங்குகளையும் செடி கொடிகளையும் கூர்ந்து நோக்கும் போது இவ்வேறுபாடு களை அறிந்து கொள்ள முடியும். அத்துடன் வண்ணங் களின் தோற்றம் காட்டும் அழகாலும் ஈர்ப்பு அடைகிறான். இத்தகைய ஈர்ப்புநிலை உலகியல் வாழ்க்கைக்கு மட்டுமன்றி ஆன்மீக வாழ்க்கைக்கும் அவனை அழைத்

விரோதி சித்திரை 01
2009 ாழ்வியல் - 4 மணி சண்முகதாஸ் -
துச் செல்லவல்லது. வண்ணங்களை இறையுணர்வுடன் இணைத்து நோக்கும் மனப்பக்குவம் மன திற்கு அமைதியையும் பரவசத்தையும் ஏற்படுத்தும். மனித அழகு நிலைக்கு அப்பால் ஒரு தெய் வீக அழகைக் காணும் நிலை தோன்றும். கண்ணுக்குத் தோற்றாத இறைவனைக் காண்பதற்கு வழி செய்யும். இயற்கையின் பேராற்றலை உணரும்போது அவற்றை ஆக்கிய ஓர் அற்புத சக்தியைப் பற்றிய எண்ணம் உண் டாகும். அந்தச் சக்தியை இயற்கையின் உருவமாகக் காணும் ᎥᏝ60ᎰᎿ ] பக்குவம் ஏற்படும். இறைவன் எங்கும் நிறைந்திருக்கி றான் என்ற மெய்யுணர்வு தோன்றும்.
வழிபாட்டில் வண்ணங்கள் அழகுநிலையில் இணைக் கப்பட்டபோது மனிதன் அதனால் ஈர்க்கப்பட்டான். செம்மை, வெண்மை, பொன்னிறம், நீலம், பச்சை, கருமை என்ற அடிப்படையான வண்ணங்கள் எங்கும் இயற்கை நிலை யில் இணைந்திருந்தன. சிவனுடைய அருட்சிறப்புகளில் அழகுக்கோலம் ஒன்றாக அமைவது. செய்யமேனி, கறைக கண்டம், செஞ்சடை, பச்சைமேனி, பொன் வண்ணமேனி எனத் திருக்கோலம் உருவாகிற்று மனித வாழ்வியலிலும் பல்வேறுநிலைகளில் இத்தகைய வண்ணங்கள் இணைந்து கொண்டன. ஆடை, அணிகள், வண்ணப்பூச்சு, இருப்பிட அழகு நிலை என எங்கும் வண்ணங்கள் இணைய மனிதன் அழகை ஆராதிக்கும் குணமுடையவனாகினான். அவன் பேச்சிலும் நடையுடைபாவனைகளிலும், ஏனைய செயற்பாடுகளிலும் வண்ணங் களைப் பொருத்தமாக இணைத்துக் கொண்டான்.
தனிமனிதனுடைய வாழ்விருப்பிடங்களை விட பொது வான ஓர் உறைவிடமாகக் கோயில் தோன்றிய போது வண்ணமும் வடிவும் பலரும் கண்டு பரவசமடையும் நிலை தோன்ற வாய்ப்பு ஏற்பட்டது. இறைவனின் திருக் கோலங்களில் வண்ணத்தையும் வடிவையும் கண்டு பக்தியுணர்வுடன் வழிபடும் மரபும் தோன்றியது. திருவுரு வத்தில் இறைவன் அழகை எல்லோரும் இணைந்து நின்று காணும் ஒரு பொதுமையான ரசிப்புத் தோன்றியது. தனிமனித நிலையில் வண்ணங்களாலும் வடிவாலும் அழகுபடுத்த முடியாதவர்களும் அழகைக் கண்டு மெய்மறந்து நிற்கும் அற்புதநிலை ஏற்பட்டது.
இத்தகைய ஒரு பக்தி நெறியை மனித வாழ்விய லோடு இணைத்த சமயகுரவர்கள் காலத்தால் முற்பட்ட வர்கள். ஆனால் அவர்கள் பாடிவைத்த பாடல்கள் வண் ணத்தையும் வடிவையும் பற்றிய ஓர் உணர்வை இன்றும் நாம் பெறுவதற்கு உதவுகின்றன. இயற்கை யழகிலே பெரிதும் ஈடுபட்ட இளவயதினரான சம்பந்தரது தேவாரப் பாடல்களில் இப்பண்பு மிக்கோங்கியுள்ளது. அலையும்
மனத்தை இயற்கை அழ
எண்ணங்களையும் இதயங் வ. இயற்கையின் லக் அருளையும் உணரச் செய் ரில் மனித வாழ்வை வளம் மந்துள்ளன.
கால் நெறிப்படுத்தும் அன்பு நெறியாகச் சமயத்தை எமக்கு அறிமுகம் செய்த சம்பந்தரது பாடல் அதற்குச் சான்றாக உள்ளது
“வண்ணமுகிலன்ன வெழிலன்ைனலொடு சுண்ணமலி
வண்ண மலர்மேல் நண்ணவனு மெண்ணரிய விண்ணவர்கள் கண்ணவனலங் கொள்பதிதான் நுண்ணிடையி னெண்ணரிய வன்ன
நடையின் மொழியினார் திண்ணவன மாளிகை செறிந்த விசை யாழ் மருவு தேவுபூரதுவே.”
灘
வண்ணவன

Page 17
இந்துசாதனம் 14.04
email: exame (a) |
மாணவச் செல்வங்களே!
வணக்கம். "அகரமுதலஎழுத்துஎல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு."
- திருக்குறள்
உலக வமாழிகளிலுள்ள எழுத்துக்கள் அனைத்திற் கும் 'அ' மூலமும் முதலுமாக அமைகிறது. அதுபோல, உலக உயிர்கள் அனைத்திற்கும் இறைவனே மூலமும் முதல்வனும் ஆவான்.
சமயவாழ்வு ஒழுக்கமாக வாழ்வதற்கு உறுதுணை யாக இருக்கும். இந்துசாதனத்தின் மாணவர் பகுதிக்கு உங்கள் ஆக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. சமய வாழ்வும் மாணவர்களும் என்பதை அடிப்படையாகக்
GO)56)IGLDUI 660 விநா தொகுத்தளிப்பவரி: ே
11. “கம்" மென்று இரு - காரியம் ! 14.கணபதியைத்
ஆகும். இதன் பொருள் யாது? கொண்ட புராண இது வழக்கிலுள்ள ஒரு பழமொழி பார்க்கவபுராண சும்மா இருந்தால் காரியமாகி யக புராணம். விடும் என்பது பொருளன்று. “கம்" என்பது கணபதி மந்திரத்தின் முருகன் மூலமந்திரமாகும். கணபதியைப் பற்றிக்கொள் காரியம் கைகூடும் 1) முருகனுக்குரிய என்பதே இதன் பொருள். களையும் எழுதி .ளையும் தருக *س سے 6 12. "சங்கடஹர சதுர்த்தி” என்பதை 1. முருகன்
விளக்குக? selp(3560)Luj6 ஒவ்வொரு மாதத்திலும் பெளர் 2. குமரன். ணமி கழிந்த நான்காம் நாள் சங் இளையவன கடஹர சதுர்த்தி எனப்படும். இந் யிருப்பவன் நாளில் இரவில் ஒன்பது மணிக்கு 3. குகன். அன் மேல் சந்திரனைப் பார்த்த பிறகே குகையில் விநாயகர் வழிபாடு நடைபெறும். Lj6)66T மாசி மாதத்தில் வருவது மஹாசங் 4. காங்கேயன் கடஹர சதுர்த்தி எனப்படும். செவ் கங்கையில் வாய்க்கிழமைகளில் பொருந்தி 5. சரவணபவன் வருமாயின் சிறப்பானது. சரவணப்பெr
தவன் 13. விநாயகருக்குரிய விரத நாள்கள் 6. சேனாதிபதி
எவை? தேவர்களின் வெள்ளிக்கிழமை, விநாயக சதுர் ഖങ്ങ த்தி, சங்கடஹர சதுர்த்தி 7. சுவாமிநாதன் ଗତୟୌtUତ01. தந்தைக்கு
 

2009
ர் பகுதி
hinduorgan. com
விரோதி சித்திரை 01
கொண்டு சுருக்கமாக உங்கள் ஆக்கங்களை எழுதி அனுப்புங்கள். தகுதியானவைபிரசுரிக்கப்படும்.
மாணவர்களே! அடுத்த இதழிலிருந்து மாணவர் களுக்கான வினாக்கள் வெளிவரவுள்ளன. இந்து சாதனத்தில் இடம்வபறும் விடயங்களிலிருந்து இவ் வினாக்கள் கேட்கப்படும். சரியான விடை, சரியான விடைகளை எழுதி அனுப்புபவர்களுக்குப் பரிசும்
உண்டு.
மாணவர்களே இந்து சாதனத்தை முழுமையாகப் படியுங்கள். உங்கள் ஆக்கங்களை எழுதியனுப்புங்கள்.
இந்துசாதனம்,
கல்லூரி வீதி, நீராவியடி
யாழ்ப்பானம்,
- குருநாதன்
D6h 616 riffic3LIITs)
ша5ff
இரா. செல்வவடிவேல்
தலைவராகக் 8. வேலன் ம் எது? வேலினை ஏந்தியவன்
ம் என்னும் விநா
பல்வகைப் பெயர்
, அவற்றின் பொரு
வன்(முருகு அழகு)
Tu எழுந்தருளி
பர்களின் இதயக்
எழுந்தருளியிருப்
தாங்கப்பட்டவன்
ாய்கையில் உதித்
சேனைத்தலை
T
உபதேசித்தவன்
9. கந்தன்
ஆறு உருவங்களும் உமா
மகேஸ்வரியால் ஒன்று சேர்க்
கப்பட்டவன் 10. கார்த்திகேயன்
கார்த்திகைப் பெண்களினால் 66Tidb85 Jul L6),661
11. சண்முகன்
ஆறுமுகங்களை உடையவன் 12. தண்டபாணி
தண்டாயுதத்தைக் கரத்தில்
ஏந்தியவன் 13. சுப்பிரமணியன்
மேலான பிரமத்தின் பொரு
ளாக இருப்பவன் 14. வடிவேலன்
அழகுடைய வேலை ஏந்திய
ഖങ്ങ
15. ஆறுமுகன்
ஆறுமுகங்களையுடையவன் 16. குருநாதன்
தந்தைக்குக் குருவாக இருந்து
கேசிச் உபதேசததவன ->
7

Page 18
2) (38FFTLaF (16)
சுப்பிரமணிய முர்த்
தங்கள் எவை?
3) முருகப்பெருமானின்
சத்திதரர் ஸகநதன சேனாபதி கஜவாகனர் சரவணபவன் கார்த்திகேயன் சுப்பிரமணியர் குமாரசாமி ஷண்முகன் தாரகாரி
சேநாதி
பிரமசாஸ்தாமூர்த்தி
வள்ளிகல்யான சுந்தரர்
பாலசுப்பிரமணியர் கிரெளஞ்சபேதனர் மயூரவாகனர்
பன்னிரண்டு
திருக்கைகளிலும் உள்ள ஆயுதங்
களின் பெயர்களை வரிசைப்படுத்தி
எழுதுக.முருகப் பெருமானின் வலது
புறம் உள்ள ஆறுகரங்களில்
SLJuЈ86ЈLID கோழிக்கொடி வச்சிரம்
அங்குசம்
அம்பு வேல் முதலியனவும்
இடப்புறம் உள்ள ஆறுகரங்களில்
வரதகரம் தாமரை uᏝ600fl
ԼՈ(Լք தண்டாயுதம் வில்
முதலியனவும் உள்ளன.
4) முருகப்பெருமானின் ஆறுமுகங்க
ளும், பன்னிரண்டு கைகளும் செய்
யும் தொழில்கள் யாவை? ஆறுமுகங்கள்:
உலகுக்கு ஒளிதருவது ஒரு முகம் வேள்வி காப்பது ஒருமுகம் அடியார் குறைநீக்கி அருள் புரிவது ஒருமுகம் வேத ஆகமப்பொருளை விளக் குவது ஒருமுகம் அதர்மத்தை அழித்து தரு மத்தை காத்தல் ஒருமுகம் வள்ளிக்கு (ஆன்மாக்களுக்கு) மகிழ்வைத்தருவது ஒருமுகம்
5)
6)
7)
பன்னிரண்டு பை முதலிரு கைப்பல் முனிவர்களையு 3 ஆவது கை துகிறது. 4 ஆவது கை அமர்த்தியுள்ளது 5 ஆவது 6 அ வேலைச்சுழற்று 7 ஆவது 60 பொருளை விள 8 ஆவது கை மாலையோடு சே 9 ஆவது 60 ஏற்கிறது. 10 ஆவது கை கிறது. 11 ஆவது கை ளுகின்றது. 12 ஆவது கை கின்றது.
(திருமுருகாற்றுப்பன படும் கருத்து)
முருகப்பெருமான Sh
ஐவகை உறுப்பு 1. கிம்புரி
கோடகம் பதுமம் LD05Lib 5TLDLD
உள்ள
வள்ளி - தெய ஆகியோர்
Süberuomast?
வள்ளி 95 யானை - கிரிய ஞானசக்தி (முருகனுக்கு வள்ளியும் இடது uJIT6060Tub 2
ஆறுபடை வீடு 1. திருப்பரங்கு (மதுரைக்கு 2. திருச்சீர6ை (திருச்செந் 3. திருவாவின 4. திருஎரகம் 5. குன்றுதோ
(திருத்தணி 6. பழமுதிர்ச்
ரைக்கு அ

06ń:
தேவர்களையும் ம் காக்கின்றன. அங்குசம் செலுத்
தொடையில்
.
!,ബg| கின்றன.
முனிவர்க்கு ாக்குவது. மார்பில் உள்ள ர்ந்துள்ளது. க வேள்வியை
கைகள்
மணியை ஒலிக்
(D60)p60)u 9 (5
மணமாலை சூட்டு
DLuis) காணப்
før தலையில் த்தில் உள்ள
கள் எவை?
O O tualluteoar, 3also
வெச் சக்தியின்
சாசக்தி, தெய்வ ாசக்தி, வேல்
வலது புறத்தில் புறத்தில் தெய்வ ள்ளனர்.)
கள் எவை?
நன்றம்
அருகில்)
lo6.jsful
Tir)
ங்குடி (பழனி)
(சுவாமி மலை)
BTL6)
|கை முதலியவை) சோலை (மது
ருகில்) என்பன
8)
9)
10)
சூர சம்காரத்தின் தத்துவம்
யாது?
ஆணவமலம் நிறைந்த உயிரே சூரன். அதிகரித்த நிலையில் உயிர் இறைவனை
ஆணவம்
ஒரு போதும் காணாது. ஆண வத்தை ஒழித்தால்தான் இறை வனோடு ஒன்ற இயலும். ஆன வத்தைப் போக்கவல்லவரான இறைவன், உயிர்களின் மீது கொண்ட கருணையால் உயிர் களின் ஆணவமாகிய சூரனின்
போக்கி
(ஆணவமலம் நீங்கிய சூரனின்)
ஆத்மாவைத் தன்னுடன் சேர்த்
ஸ்துால உடம்பைப்
துக்கொள்ளுகிறான் என்பதே சூரசம் காரத்தின் உட்கருத்
தாகும்.
முருகனுக்கு வழிபாடு செய்யக்
கூடிய முக்கிய நாள்கள் எவை?
சஸ்டித்திதி, விசாகம், கிருத் திகை நட்சத்திரங்கள், செவ் வாய்க் கிழமை, வெள்ளிக்
கிழமை ஆகியவை.
வெள்ளிக்கிழமை விரதத்தின்
சிறப்பை எழுதுக.
வெள்ளிக்கிழமை விரதம் முரு
கனுக்கு மிகவும் சிறப்பானது.
இவ்விரதத்தில் நினைத்ததன் பயன் கைகூடும். இதன்
சிறப்பை,
*வெள்ளிநாள் விரதந்தானே
விண்ணவர் உலகைக் காத்த
வள்ளல்தன் விரதமாகும்,
மற்றது புரிந்த மேலோர்
உள்ள மேல் நினைந்த வெல்
லாம் ஒல்லையின் முடியுமன்றே"
என்று கந்தபுராணம் உயர்
வாகச் சொல்கிறது. 彰
(6)6TT(bLD)
|3

Page 19
Hindu Organ 1.
TIE CONCEPT OF 'GOOD SF
Prof. A. Sanmugadas, Ph. D. (
The concept of "Good Shepherd' is mainly spoken in Christian religion. But comparative religious studies have shown to us that the concept of Good Shepherd is found in most of the religions. God or His messengers were considered as Good Shepherds. This concept must have evolved among the people who led the pastoral life. A good shepherd rears the cattle and brings them safely to the cattle - shed. Similarly, God, like the shepherd, looks after the human beings. This has been taken as an excellent metaphor to express the God's gracefulness towards the people. Jesus Christ Said "I am the Good Shepherd. A good shepherd will give his life for a sheep." (Jovan, Chapter 10 Verse 11) Sacred Al Quoran refers to the disciples as cattle and it insists that stray sheep should be brought back to the cattle.
Vaishnava religion speaks of this concept.
One of the incarnations of Lord Vishnu is
Krishna. Krishna lives in a society where pastoral life ("Gokula valvu) prevails. He Himself
rears the cattle and uses His sacred flute to keep the cattle and the human beings in order. Vaishnava hymns speak highly of this concept.
Nammalvar in his Tiruvaymoli says:
நீக்க மில்லா அடியார்தம்
69iluumrit Suurri GT riu
கோக்கள் அவர்க்கே குடிகளாய்ச்
செல்லும் நல்ல கோட்பாடே"
The article reveals that thi
generally attributed
in other re.
Edited & Published by Mr.S.Shivasaravanabavanonbehal Printed at Bharathi Pathippakam,430, K.K.S Road, Jaffna.

.04.2009 Virothi Sithirai 01
IEPERD' S T UNIVERSAL2
Edinburgh), Emeritus Professor.
"The crowded devotees and their devotees and
their devotees are our cows.
They go as Lord's citizens and it is a good
concept."
Nammalvar refers to the concept itself. In the
West, it is the sheep, but in the East, especially in
India, it is the cow.
In the light of the above discussion, one
would ask whether this concept of "Good
shepherd" is found in Saiva religion. The answer is yes. Saint Sundarar in his very first
Tevara Patikam sings as follows:
*நாயேன்பல நாளுநினைப் பின்றிமனத் துன்னைப்
பேயாய்த்திரிந் தெய்த்தேன் பெறலாகாவருள் பெற்றேன்
வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட்
டுறையுள்
ஆயாவுனக் காளாயினி யல்லேலென லாமே”
Sundarar refers Lord Shiva as "aya (glu IIT)
"Shepherd". 'ayam' (sub) is the herd of cows.
The relationship between the Lord and the
people are referred to in Saiva Siddhantam as
Pati-Lord of the Soul; and Pacu - the Soul that
has been fettered by Pacam. Here the people are
referred to as 'cows'. Lord Shiva, the Supreme
Being as a Good Shepherd guides the cows
throughgood paths to eternal happiness.
Taking the above facts into consideration, one
can safely say that the concept of 'Good
Shepherd" is Universal.
e concept of "Good Shepherd, to Christianity is found ligions as well.
".
fofthe Saiva Paripallana Sabai 450, K. K.S Road, Jaffna & 4.04.2009 (1" Day of Sithirai Thinkal). Phone: 0212227678
19

Page 20
இந்துசாதனம்
3'
14.04
சைவுபரிபா
தோற்றமும் வளர்ச்சி
சைவபரிபாலன சபையின் பணி கள் பொருட்குறைவால் தளர்வெய் தும் நிலை அடைந்த சமயங்களில் யாழ்ப்பாணத்தில் அக்காலத்திருந்த நாட்டுக்கோட்டை நகரத்தார்களும் தனவந்தர்களும் தாமாகவே முன்வந்து கைகொடுத்து உதவினர்.
LDTMB):
சைவப்பற்றுள்ள
அவற்றுட் சில பின்வரு
அ) யாழ்ப்பாணத்திலிருந்த நாட்டுக் கோட்டை நகரத்தார், யாழ்ப் பாணத்திலிருந்து கொச்சி, மலை யாளம் முதலிய இடங்களுக்கு ஏற்றுமதி செய்த புகையிலையில் கண்டி (500 இறாத்தல்) ஒன்றுக்கு ஆறேகால் சதவீதம் மகமை (வர்த்தகர்கள் தங்களுக்குள்ளே ஏற்படுத்திக் கொள்ளும் ஒதுக் கீடு) ஏற்படுத்தி அவ்வாறு சேக ரித்த பணத்தை வருடந்தோறும் இந்துக் கல்லூரிக்கு உபகரிப்ப தாக 1899ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கூட்டம் கூடித் தீர்மானம் மேற்கொண்டனர். இதனால் வரு டந்தோறும் இருநூறு (200) ரூபா சேர்ந்தது. இம்முயற்சிக்கு பெரி தும் உறுதுணையாக இருந்தவர் அக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் நீதவானாக இருந்த திரு. T. M. தம்பு ஆவார்.
பருத்தித்துறை வர்த்தகர்கள் தாம் இந்தியாவிலிருந்து தருவிக் கும் நெல்லில் கரிசு (200 புசல்) ஒன்றுக்கு கால் ரூபா மகமை ஏற்படுத்தி அவ்வாறு
ஆ)
வீதம்
இ)
吓)
صٹگه
)
சேகரித்த பை ஆண்டு ଜୋ தொடக்கம் இ உபகரித்து
வாறு சேர்ந்த 1 சதமாகும்.
பெரிதும் ஈ காலத்தில் L ஆராய்ச்சி ! இருந்த திரு.
s)6)JT56TT6)J.T.
1899 ஆம் ஆ இரண்டாம் : யைச் சேர்ந் முகர்கள் பலி சித்தி விநாய ஒரு கூட்டம் துறையைச் ே அல்லாதோர் பொருளுதவி தனர். அக்க களிக்கப்பட்ட
சதம் 94 ஆகு ரூபா 843 சதம்
யாழ்ப்பாணத்த வியாபாரிகளில்
சுருட்டுக் உண்டியல் படுத்தி அப்ெ பணத்தை இ உபகரித்துத6 வாறு கிடைத்
242 - 42/2ਤ
யாழ் குடாந தாரிசுமார்கள்.
-
ඡායූ)Jö"
கஜமுகன் ே
 

2OO9.
விரோதி சித்திரை 01
66 at-6) *யும் பணிகளும் - 25
னத்தை 1899 ஆம் பப்ரவரி ந்துக் கல்லூரிக்கு வந்தார்கள். அவ் பணம் ரூபா 127 - 69
மாதம்
இம்முயற்சியில் அக் ருத்தித்துறையிலே உத்தியோகத்தராக இ. பொன்னம்பலம்
டுபட்டவர்
ஆண்டு தை மாதம் திகதி வடமராட்சி த சைவப் பிர 0ர் பருத்தித்துறை பகள் கோவிலிலே
கூட்டி பருத்தித் சர்ந்த வர்த்தகர்கள் தங்களாலியன்ற புரியத் தீர்மானித் கூட்டத்தில் வாக் தொகை ரூ. 2361 ம். கூட்டத்திலேயே
94 வசூலானது.
திலிருந்த சுருட்டு ல் அநேகள் தமது கொட்டகைகளில் பெட்டிகளை ஏற் பட்டிகளில் சேர்ந்த ந்துக் கல்லூரிக்கு பினார்கள். இவ் த தொகை ரூபா
5ம் ஆகும்.
ாட்டிலுள்ள நொத் உத்தியோகத்
吓)
தர்கள் மாதாந்தம் இயன்ற தொகை உபகரித்தனர். இதில் நொத்தாரிஸ்மார் உபகரித்த தொகை மட்டும் ரூபா 188 - 06 சதம்.
வண்ணார்பண்ணை கிழக்கு,
ஐயனார் கோவிலடி, ஒட்டுமடம், கொட்டடி, ஆனைக்கோட்டை ஆகிய இடங்களிலே வாழ்ந்தோர் வளவு ஒன்றிலிருந்து இரண்டு அல்லது மூன்று தென்னை மரங்களை இந்துக் கல்லூரிக்கு சாட்டி விட்டிருந்தார்கள். இதனால் சேர்ந்த தேங்காய் 7172 ஆகும். அதை விற்று வந்த பணம் 124
еђЦТ 14% இவ் வாறாகப் பொருள் சேகரிப்பதில்
சதமாகும்.
முன்னின்று உழைத்தவர் "மாவ டித்தம்பி” திரு. இ. இரகுநாதன் அவர்
களாவர்.
என அழைக்கப்பட்ட
அக்காலத்தில் "இந்திரசபா" என்ற பெயர் கொண்ட நாடகக் குழு நாடகங்கள் நடத்தி வந்தது. அதிலே ஒரு நாள் நாடகத்தில் வரும் பணத்தை இச்சபைக்குக் அத்தினத்தில் அதிக பணம் சேருவதை உறுதி செய்தும் கொண்டவர்கள். திரு.
கிடைக்கவும்
வை. சண்முகம், திரு. R. N அரு
ளம்பலம் ஆகியோராவர். இதன்
மூலம் ரூபா 225 கிடைத்தது. ே
(வளரும்)
гарахот:
AnonTLeGGQI LIñir
]ரான்லி வீதி,
ாணம்.
O