கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்துசாதனம் 2009.06.15

Page 1
  

Page 2
இந்துசாதனம் 5 OE
நயினை நாகபு
வழிவந்தவர்களே இலங்கைத் தமிழர்கள் என்ற கருத்து நிலவுவதும் கவனிப்புக்குரியது.
அந்தச் சிறிய தீவு, ‘நாகதீவு ஆகி, ‘நாகதீபம்’ ஆனதற்கும், பின்னொரு காலத்தில் அநுராதபுரத்திற்கு வடக்கே யாழ்ப்பாணம் உட்பட்ட நிலப்பகுதி அனைத்துமே நாகதீபம்’ எனக் குறிப்பிடப்பட்டதற்கும் தொன்மைமிக்க அந்த நாக வழிபாடே அடித்தளமாக இருந்திருக்கலாமோ என்றும் எண்ணத் தோன்று கின்றது.
நாக வழிபாடு, காலப்போக்கில், நாகபூஷணி வழிபாடாகப் பரிணமித்தது.
இத்தீவுக்கு வடக்கேயுள்ள புளியந்தீவிலிருந்து நாகமொன்று, வாயிலே பூக்களுடன் கடல் வழியாக இங்கு வந்து அம்பாளை வணங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தது. ஒருநாள் கருடன் ஒன்று தன்னைக் கொல்ல வந்ததை உணர்ந்த அந்தப் பாம்பு, கடலிலிருந்த கல் ஒன்றைச் சுற்றிக்கொண்டது. வேறு ஒரு கல்லில் கருடன் இருந்துகொண்டது. தற்செயலாய் அங்குவந்த வணிகன் ஒருவன், பாம்பைக் கொல்ல வேண்டாம் எனக் கருடனிடம் கேட்டுக்கொண்டான். வணிகனான அவனிட மிருந்த செல்வம் முழுவதையும் பயன்படுத்தி அம்பாளுக்குக் கோயில் ஒன்றைக் கட்டுவதாக வாக்களித்தால், அவனுடைய கோரிக்கையை நிறைவேற்றுவதாகக் கருடன் கூறியது. வணிகன் வாக்குறுதியை வழங்கினான்; நாக பாம்பு பிழைத்தது. கோவிலும் கட்டப்பட்டது.
நாகபூஷணியாக இருந்த அம்பாள், நாகம் வழிபட்ட காரணத்தால் நாகேஸ்வரியாகவும் பெயர் பெற்றாள். திருவிழாக் காலங்களில் "பாம்பு சுற்றிய கல்"லையும் "கருடன் இருந்த கல்லை"யும் வழிபடும் வழக்கம் இன்றும் உண்டு. கோவிலைக் கட்டிமுடித்த அந்த வணிகன் இந்தியாவிலிருந்து நயினார்பட்டர் என்பவரை அழைத்துவந்து, பூசைப்பணியை அவரிடம் ஒப்படைத்தான். நயினார்பட்டர் அங்கே தங்கியிருந்ததனால், நாகதீவு, "நயினார்தீவு" ஆகியது.
காசியில் விசாலாட்சியாக, காஞ்சியில் காமாட்சியாக, மதுரையில் மீனாட்சியாக விளங்கும் திருவருட்சக்தி, புவனம் முழுவதற்கும் தலைவியாக, புவனேஸ்வரியாக விளங்கும் சிறப்பும் இந்தத் தலத்திற்கு உண்டு. இறைவனால் உருவாக்கப்பட்ட அறுபத்து நான்கு சக்தி பீடங்களுள் ஒன்றான புவனேஸ்வரி பீடம் இதுவாகும்.
விலை உயர்ந்த மாணிக்கக்கற்கள் பதிக்கப்பட்ட அரியணை ஒன்றின் உரிமைக்காக நாகமன்னர் இருவர் தமக்குட் சண்டையிட்டனர். அவ்வமயம் வான் வழியே சிவனொளிபாத மலைக்குச் சென்றுகொண்டிருந்த கெளதம புத்தர், அங்கிருந்திறங்கி, "இந்த அரியணை, தேவேந்திரனால், அன்னை புவனேஸ்வரிக்குக் காணிக்கையாக்கப்பட்டது. வேறு யாரும் உரிமைகோரக் கூடாது" என வழங்கிய தீர்ப்பை மன்னர்கள் இருவரும் மனமுவந்து ஏற்றுக்கொண்டனர். ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான "மணிமேகலை" இந்தத் தகவலை

S2OO9 விரோதி ஆனி0
பூஷணி அம்பாள்
உறுதிப்படுத்துகின்றது. கௌதம புத்தரின் காலத்துக்குப் பல ஆண்டுகளின் முன்னராகவே, அம்பாள், நயினாதீ"விற்கோயில் கொண்டுவிட்டார் என்பதற்கு இந்த நிகழ்ச்சியும் சான்றாக அமைகின்றது. மணிபல்லவம் என்ற பெயரில் மணிமேகலையில் இடம்பெற்ற சிறப்பும் இத்தீவுக்குண்டு இந்துக் கோவில்களை இடித்தழிப்பதைத் தம் "இலட்சி"யமாகக் கொண்டிருந்த போர்த்துக்கீசர் இந்தக் கோவிலையும் விட்டுவைக்கவில்லை. 1620 -\1624 காலப் பகுதியிற் கோவில் இடிக்கப்பட்டது. அம்பாள் விக்கிரகம், மரப்பொந்து ஒன்றினுள் ஒளித்து வைக்கப்பட்டது. ஒல்லாந்தர் காலத்திலே இராமலிங்கம் இராமச்சந்திரன் என்பவர் சிறிய கோவிலொன்றைக் கட்டி அம்பாளைப் பிரதிஷ்டை செய்வித்தார். 1882ஆம் ஆண்டில் யாழ்ப்பாணக் கச்சேரியில் இக்கோவில் பதியப்பெற்றது.
1944ஆம் ஆண்டில் வழங்கப் பெற்ற நீதி மன்றத் தீர்ப்பின்படி அறங்காவலர் சபைபோன்று கோவிலின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. இடையிடையே இதன் அமைப்பிற் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, கோவிலின் சிறப்பான வளர்ச்சிக்கும் சீரான நிர்வாகத்துக்கும் இச்சபை காலாக இருந்து வருகின்றது. சபையினர் காலத்துக்குக் காலம் திட்டமிட்டு நிறைவேற்றிய் திருப்பணிகள் காரணமாக இருநிலை விமானமுடைய கர்ப்பக்கிருகம், அர்த்த மண்டபம், மகாமண்டபம், வசந்த மண்டபம், கிழக்கு ராஜகோபுரம்,தெற்கு ராஜகோபுரம் முதலியவற்றுடன் அழகு கொலுவிருக்கும் அற்புதத் திருத்தலமாய்த் திகழ்கின்றது இந்த ஆலயம்.
மூலஸ்தானத்தில், ஐந்துதலை நாகத்துடன் சேர்ந்து அருளாட்சி செய்கின்றாள் நாகபூஷணி அம்பாள். தெற்குப் பார்த்த சந்நிதியில், உத்சவ மூர்த்தியாகிய மனோன்மணி அம்பாளின் ஐம்பொன் விக்கிரகம் உண்டு. புவனேஸ்வரி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சூரியன், சந்திரன், நால்வர், நவக்கிரகம், வைரவர், சண்டேஸ்வரர் ஆகியோருக்குத் தனிச் சந்நிதிகள் உள்ளன. தேரடியிலும் வைரவர் ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் தலவிருட்சம் வன்னி, நயினாதீவுச் சாமியார் எனப் போற்றப்பெறும் பூரீ முத்துக்குமார சுவாமிகளால், நாயினாதீவின் தென்மேற்கில் அமைக்கப்பட்ட "சித்தாமிர்த புட்கரணி" இவ்வாலயத்தின் புனித தீர்த்தத் தடாகமாகும்.
ஆலய நிர்வாகத்தை அறங்காவலர் சபையினர் பொறுப்பேற்றதன் பின்னர், 1951, 1963, 1983, 1998 ஆகிய ஆண்டுகளில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இப்போது நாள்தோறும் நான்கு காலப் பூசைகள் நடைபெறுகின்றன.
பிரம்மோற்சவம் என்னும் பெருந்திருவிழா ஆணி மாதத்தில் 15 நாள்கள் நடைபெறுகின்றது. மாதச் சங்கிராந்தி, மாதாந்தப் பூரணை (றுநீ சக்கர பூஜை) தை அமாவாசை, தைப்பூசம், மாசிமகம், சிவராத்திரி, பங்குனி உத்தரம், சித்திரை வருடப்பிறப்பு வைகாசி விசாகம், ஆனி உத்தரம், ஆடிப்பூரம், ஆவணிச்சதுர்த்தி, பிள்ளையார் கதை, கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, திருவெம்பாவை ஆகியவை விசேட அபிஷேகம், ஆராதனை, விழாக்களுக்குரிய
புண்ணியதினங்களாகும்.
一一>

Page 3
இந்துசாதனம் 5O6
நயினை நாகபூ
சர்வதேச இந்துமத குருபீடாதிபதி சிவபூரீ ச.மகேஸ்வரக் குருக்கள், சிவபூீ சோ.பாலசுந்தரக்குருக்கள், சிவபூீ கை. வாமதேவக்குருக்கள் ஆகியோர் ஆதீனக் குருமாராகப் பணியாற்றுகின்றனர். மஹா கும்பாபிஷேகங்களுக்குத் தலைமை ஏற்றுச் சிறப்பாக அவற்றை நிறைவேற்றி வைத்த கோப்பாய் சிவபூரீ வை.மு.பரமசாமிக் குருக்கள் மகோற்சவ குருவாகவும் பல்லாண்டுகள் பணியாற்றியுள்ளார். உடல் நலக் குறைவினால் அவராற் செயற்பட முடியாத நிலையில் அவருடைய சிரேஷ்ட புத்திரன் சிவழீப, முத்துக்குமாரசாமிக்குருக்கள், தந்தை வழியின் தனிச்சிறப்புக்களுடன் அன்னை பணியை முன்னெடுத்து வருகின்றார்.
இந்த ஆனி மாதம் 9ஆந் திகதி செவ்வாய்க்கிழமை
அமுதசுரபி பி
ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் நடைபெறும் பெருந்திருவிழாக்களுக்கு வரும் ஆயிரக் கணக்கான அடியார்களின் பசிப்பிணையைத் நீக்கும் உயரிய நோக்குடன் "நயினாதீவு பூரீநாகபூஷணி அம்பாள் யாத்திரீகர்களின் அன்னதான சபை" 1960 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. தலைவர் திரு. சி. க. தம்பையா, உபதலைவர் திரு. வே. கந்தையா, இணைச் செயலர்கள். திருவாளர்கள் R.R. பூபாலசிங்கம், க.வே. பரமலிங்கம், இணைப் பொருளாளர்கள் திரவாளர்கள். வே. க. தம்பிமுத்து, இ.குலசேகரம்பிள்ளை செயற்குழு உறுப்பினர்கள் 19 பேர்.
* 1968 ஆம் ஆண்டில் "நயினாதீவு பூரீ நாகபூஷணி அமுதசுரபி அன்னதான சபை" எனப் பெயர் மாற்றம் பெற்றது. அந்த
நயினை நாகபூஷணி அம்பாளைத் தரிசிக்க வரும் அடியார்களு சபையினர் நாள்தோறும் செய்து வருகின்றனர். இவ்வாண்டிே பணிகளைப்பற்றி யாழ் பல்கலைக்கழக இந்து நாகரிகத்துன் கட்டுரையிலிருந்து தொகுக்கப்பட்ட குறிப்புக்களைத்தருகின்றோ
ஆண்டில் நயினாதீவுக்கு வருகை தந்த "கலைமகள்" ஆசிரியர் கி.வா. ஜகந்நாதன் "அமுதசுரபி" என்ற பெயரை அன்னதான சபை மண்டபத்துக்குச் சூட்டினார். * 1998 ஆம் ஆண்டில் நடைபெற்ற மகாகும்பாபிஷேக நாளி லிருந்து ஒவ்வொரு நாளும் அன்னதானம் நடைபெறுகின்றது. இலங்கையில் வேறு எந்தத் திருத் தலத்திலும் இல்லாத சிறப்பு இது. * சபையினரால் 2003ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட அறநெறிப் பாடசாலை, நயினைச் சிறுவர்களுக்குச் சிறந்த முறையிலே அறநெறிக் கல்வியூட்டும் அறிவுச் சுரபியாகவும் மிளிர்கின்றது.
* சபையின் ஆரம்பகர்த்தாக்களைக் கெளரவிக்கும் நோக்குடன்

i2OO9. விரோதி ஆனி0
வரணி அம்பாள்
(23.06.2009) கொடியேற்றத்துடன் இவ்வாண்டுப் பெருந்திரு விழாக்கள் ஆரம்பமாகின்றன. 22ஆந் திகதி திங்கட்கிழமை (06.07.2009) தேர்த் திருவிழாவும் அடுத்த நாள் தீர்த்தத் திருவிழாவும் நடைபெறுகின்றன.
அடியார்களைத் தன் அன்புக் கரங்களால் அனைத்து அருள் வெள்ளத்தில் நீராட்ட அன்னை நாகபூஷணி காத்திருக்கின்றாள்; இன்முகத்துடன் வரவேற்று இனிய நல்லமு தூட்ட "அமுதசுரபி' அன்னதான சபையினர் அல்லும் பகலும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
தயக்கம் ஏதுமின்றி, தாமதம் சிறிதுமின்றி தலயாத் திரையை மேற்கொள்ளலாமே. 人
அன்னதான சபை
முப்பத்து மூன்று அறைகளைக் கொண்ட "அமுதசுரபி இறை பயணிகள் இல்லம்" 2006 ஆம் ஆண்டில் அமைக்கப் பட்டுள்ளது. வெளியூர்களிலிருந்து நயினாதீவுக்கு வரும் யாத்திரீகர்கள் இந்த இறைபயணிகள் இல்லத்திற் தங்கியிருந்து பூரீநாகபூஷணி அம்பாளைத் தரிசித்து மகிழ்கின்றனர். இந்த இல்லத்தில் அமைந்துள்ள அறை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சக்தி பீடப் பெயர் சூட்டப்பெற்றிருப்பது குறிக்கத்தக்கது. * சபையின் மகுட வாசகமான "அமலனுக்கு அமுதளித்த ஆதிநாயகி அன்பர்களுக்கு உணவளிக்கும் அன்னபூரணி என்பதைப் புலப்படுத்தும் அழகான அரிய சிற்பங்கள், நுழைவாயிலின் கிழக்குப் பக்கமாகவுள்ள பிரதான வீதியில்
நக்கு அன்னமூட்டும் அரிய பணியை அமுதசுரபி அன்னதான ல பொன்விழாக் காணும் பேறுபெற்ற அச்சபையின் பல்வேறு றைத் தலைவர் டாக்டர் மா.வேதநாதன் எழுதிய விரிவான
உயர்ந்து வளைந்து நிற்கும் தோரண வாயிலின் இரு பக்கங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. * மணி மண்டபத்தின் இருக்கைப் பகுதி செப்பனிடப்பட்டு, கிழக்கு, மேற்குச் சுவர்களில் அமுதூட்டல் பற்றி வரும் பெரியபுராணப்பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. * சபையின் பொன்விழா ஆண்டிலே தலைவராக்த் திரு. த. சிவானந்தன், உபதலைவராகத் திரு. ம. அம்பிகைபாகன், செயலாளராகத் திரு.கு. சாந்தலிங்கம், உப செயலாளராகத் திரு.ந. உருத்திரலிங்கம், பொருளாளராகத் ஆகியோர் 9 செயற்குழு உறுப்பினர்களுடன் இணைந்து சுறுசுறுப்புடன் செயலாற்றுகின்றனர். خلحر
his

Page 4
இந்துசாதனம் 5, O.
விரோதி வருட
கலாபூஷணம் சிவழுநீ
இந்துசாதனம் வைகாசி மாத இதழில் வாக்கிய பஞ்சாங்ககணிதர் பிரம்மழநீ இ.வெங்கடேச ஐயர் அவர்கள் சாந்திர மாகமாதத்திலேயே சிவராத்திரி கொள்ளவேண்டுமென்று சில ஆதாரங்களைக் குறிப்பிட்டுள்ளார்கள். சிவராத்திரி பற்றிய பிரச்சினை இன்று நேற்று ஏற்பட்டதல்ல, எத்தனையோ வருடங் களில் வந்துள்ளது. பிரச்சினை வரும்போதெல்லாம் புதுப்பிரச் சினையாகத் தலைதூக்குகின்றது. பிழைகள் திருத்தப்பட
கா சிவராத்திரி விரதம் எப்ே தை 30ஆம் திகதியே(2022 துசாதனம் இதழிலே குறிப்பிட்ட க்கணிதபஞ்சாங்க
வேண்டியனவே அன்றி நியாயப்படுத்தப் படவேண்டியன அல்ல
என்பதை முதற்கண் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். ஒருதடவை ஒரு பிரச்னை தீர்க்கப்பட்டால், பின்வரும் காலங்களில் அந்தத்தீர்மானங்களைச் செயற்படுத்துவதே மனிதப்பண்பாடு.
சிவராத்திரி விரகுமி
எந்த விரதத்தை எந்தமாதத்திற் செய்யவேண்டுமென்று பிரமாணம் கூறுகின்றதோ அந்த விரதத்தை அந்த மாதத்திற் செய்யவேண்டும். நவராத்திரி, கந்தஷஷ்டி என்பன சாந்திரமான விரதங்களாகும். பிரதிஷ்டை சம்புரோக்ஷணம், தீட்ஷை, சிவராத்திரி என்பன செளரமாதத்தில் செய்யவேண்டும்.
காமிகாகமத்தில்,
"கும்பம் கதேதிவாநாதெ கிருஷ்ணாயாத சதுர்த்தசி"
சூரியன் எப்போது கும்பராசியை அடைகிறானோ அந்த மாதத்துக்கிருஷ்ணபட்ச சதுர்த்தசியாகும்.
காரணாகமத்தில்,
"கும்பம் கதேஸ்விதரிபஷேகிருஷ்ணதரேசுயே த்ரயோதசீஸ்மாயுக்தம் சதுர்த்தச்யாம் மாஹாநிசி"
சூரியன்கும்பராசியை அடைந்தபின் கிருஷ்ணபட்சத்தில் திரயோதசியோடுகூடிய சதுர்த்தசி நடுநிசியில் சிவராத்திரி.
உத்தரகாரணாகமத்தில்,
"ஸெளரமாஸே விரதம் குர்யாத் சாந்தரமாநேநகாரயெத்"
என்பதால் சௌரமாதத்திலேயே விரதம் கொள்ளவேண்டுமென்றும் சாந்திரமாதம் தவிர்க்கவேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது. அடுத்த சுலோகத்தில்
 
 
 
 
 
 
 
 

2OO9 விரோதி ஆனி01
மஹா சிவராத்திரி
சி.சிதம்பரநாதக்குருக்கள்
"மாகபால்குனயோ:கிருஷ்ணசதுர்த்தச்யாம்சுபேதினே" என்று கூறப்பட்டுள்ளதால் மாகம் என்பது செளரமானதையே குறிக்கின்றது. இதில் "புஷ்யமாகயோ" என்று குறிப்பிடப்பட வில்லை என்பதை அவதானிக்கவும்.
ஆகமங்களில் வருகின்ற மாகமாதம் சாந்திரமானம் என்று மட்டும் கூறிவிடமுடியாது. பின்வரும் சுலோக வியாக்கியா னங்களில் உள்ள "கும்பகதேஸவிதரி" "கும்பகதே திவாநாதெ"
:
Lig5. அனுஷ்டிக்கப்படவேண்டும் என்பதைப்பற்றி இருவேறு ங்க கணிதர் பிரம்மரு ) அனுஷ்டிப்பதே சரி
என்ற வாக்கியங்களைக் கொண்டு மாகம் என்ற சொல்லுக்கு
சௌரமாசி என்று பொருள்கொள்வதே சரியானது. ஐயர் அவர்கள் கூற்றின்படி மார்கழி அமாவாசைக்கு மறுநாள் புஷ்யம் ஆரம்பித்துவிடும். சாந்திர புஷ்யம் என்பது தைமாதம் தானே. இந்த புஷ்ய மாதத்தில் (மார்கழியில்) விவாகம் செய்யலாம் என்று கூறுவாரா?
சிவராத்திரிபூஜையை நிர்ணயஞ்செய்யும் வசனரத்னாவளியில்,
"ஸிம்ஹேசரவிஸம்ப்ராப்தே ரோகிணிஸ்ஹிதாஷ்டமீ ததாதிகணனம் க்ருத்வாஸாசீதிசதுருத்தரா சதோபேததினாந்தேது சிவராத்ரிரிதிஸ்ம்ருதா"
ஆவணி மாதத்தில் ரோகிணி நட்சத்திரத்துடன்கூடிய அஷ்டமி (யூரீ கிருஷ்ண ஜயந்தி) என்று வருகின்றதோ அத்தினம் முதற்கொண்டு 184வது நாள் மகாசிவராத்திரியாகும்.
மேற்கூறப்பட்ட காரணங்களை ஆதாரமாகக் கொண்டு பார்க்குமிடத்து மாசி 29ஆம் திகதி (13.03.2010) சனிக்கிழமையே மஹாசிவராத்திரி என்பது ஊர்ஜிதப்படுத்தப்படுகிறது.
பிரம்மபூரீ ஐயர் அவர்கள் குறிப்பிட்டுள்ள மகாசிவராத் திரியானது தை மாதத்தில் வருவது மாத்திரமல்ல அன்று சங்கிராந்தியும் நிகழ்கின்றது. வாக்கிய பஞ்சாங்கப் பிரகாரம் தைமாதம் 30ஆம் திகதி சிவராத்திரி தினத்தன்று இரவு மணி 2 -19 இல் கும்ப சங்கிராந்தி நிகழ்கின்றது. எனவே அன்றைய தினம் தோஷமடைகின்றது. சங்கிராந்திதோஷ தினத்திற் சிரார்த்த திதிகூட குறிக்கப்படுவதில்லை.
காமிகாகமத்தில்,
"உதயாத் உதயாந்தஞ்சதிவாராத்திரிமேவவா ஸம்க்ரமஞ்சாபிஸ்ம்ராப்தே தோஷஞ்சேத் ப்ரகீர்த்திதம் ஸம்க்ரமேஷ"வபிகாலேஷ"ஸர்வகர்மாணிவர்ஜயேத்"
சூரிய உதயம் முதல் மறு சூரிய உதயம்வரை பகலிலாவது -->
)4

Page 5
இந்துசாதனம் 5O
விரோதி வருட மத
இரவிலாவது சங்கிரமம் வந்தால் அத்தினம் தோஷமுடையதாகும். சங்கிரம தோஷத்தன்று சகல கருமங்களும் விலக்கப்படவேண்டும். இவ்வாறு முந்திய வாக்கிய கணிதர் பிரம்மபூரீ இ.சி.இரகுநாதையர் அவர்கள் 25.11.1967 இல் வெளியிட்ட பிரசுரமொன்றில் எழுதியிருக்கிறார். இதேவேளை விரோதி வருஷத்தில் தற்போதைய வாக்கிய கணிதர் சிவராத்திரி தினத்தைச் சங்கிராந்தியில் குறித்திருக்கிறார். அத்துடன் சிவராத்திரி தினத்தில் தேர்த்திருவிழா நடைபெறும் கீரிமலை நகுலேஸ்வர ஆலய மஹோற்சவத்தை மாசி இறுதியில் குறித்துவிட்டுச் சிவராத்திரியை தை 30 இல் குறித்திருக்கிறார். ஒரே பஞ்சாங்கத்தில் ஏன் இந்தக் குளறுபடி?
இதேபோல் 1964ஆம் சோபகிருது வருஷத்தில் இரண்டு பஞ்சாங்கங்களிலும் தைமாதம் சிவராத்திரி குறிக்கப்பட்டிருந்தது. அப்போது திருக்கணித பஞ்சாங்கம் வெளியிட்ட பிரம்மழநீ சி.சுப்பிரமணியஐயர் அவர்கள் தை 29ஆந் திகதி சிவராத்திரியைக் குறிப்பிட்டிருந்தார். அந்த வருடம் பல இடங்களில் கருத்தரங்குகள் நடைபெற்றன. திருக்கேதீஸ்வர ஆலய சிவராத்திரி நிர்ணயம் என்ற பிரசுரத்தில் திருக்கேதீஸ்வரம் குருகுல வேதாகம பாடசாலை அதிபராக இருந்த சிவபூீ ச. குமாரசாமிக்குருக்கள் அவர்கள் தன்னுடைய கட்டுரையில், "முந்திய வாக்கிய பஞ்சாங்கங்களில் மகாசிவராத்திரி தையில் குறிக்கப்படாது மாசி மாதத்திலேயே குறிக்கப்பட்டது. இந்த சோபகிருது வருஷப் பஞ்சாங்கத்தில் மாத்திரம் யாது காரணத்தாலோ தைமாதத்தில் சிவராத்திரி குறிக்கப்பட்டிருக்கின்றது. யாழ்ப்பாண வாக்கிய பஞ்சாங்கங்கத்திற் குறிப்பிட்டவாறே மாசியிற்றான் மகாசிவராத்திரி நடைபெற்று வந்தது. ஆகையால் முந்நிகழ்ந்தவாறு மாசி 29ஆந் திகதி சிவராத்திரி உற்சவங்கள் நடைபெறவேண்டுமென்பதே ஆன்றோர் வழக்கும் ஆகமவிதியுமாகும்" என்று குறிப்பிட்டிருக்கின்றார். இதிலிருந்து முந்திய காலங்களில் வாக்கிய பஞ்சாங்கங்களில் சிவராத்திரி மாசியில் குறிப்பிட்டதென்பது தெளிவாகிறது. இன்னும் பல பெரியோர்களது கட்டுரைகளும் கருத்தரங்குகளும் சௌரமாசியிலேதான் மகாசிவராத்திரி குறிக்கப்பட வேண்டு மென்று குறிப்பிட்டுள்ளது. எனவே யாம் சௌர மாசி மாதம்தான்
ONONONONONON
ஐந்தெழுத்தை ஒது
இடைவிடாதோது சிவநாட இதுவே எம்மை ஈ( தடைகள் செய்யும் மலங்கள் தந்த மயக்கம் தீர்ந் சடையில் கங்கை தன்னை ( சங்கரன் திருவைந் அடைவாய் என்றும் இறை6 ஆன்மஈடேற்றம் ஆ
ONJONJONJONJONJ9N.
C

S2OO9 விரோதி ஆனி01
ஹா சிவராத்திரி
சிவராத்திரிக்கு உகந்தது என்ற முடிவுக்கு வந்தோம். ஸுமந்தாகமத்தில்,
"த்ரயோதசீபகாகாரம் லிங்காகாரஞ்ச சதுர்த்தசி திதித்துவய யுதேகுர்யாத் பூஜாம்பரமேசிது"
காரணாகமத்தில்,
"திவாத்ரயொதசிசைவ ராத்ரெளசைவ சதுர்த்தசீ ஸ்ராத்ரி சிவராத்ரிஸ்யாத் உத்தமம் பரிகீர்த்திதம் த்ரயோதசீசதுர்த்தஸ்யாம் சிவராத்ரிம்ப்ரபூஜயெத் பாரணந்து சதுர்த்தஸ்யாம் விசேஷம் பரிகீர்த்திதம்"
திரயோதசி சக்தி ரூபமும் சதுர்த்தசி சிவரூபமும் உடையது. இந்த இரண்டு திதிகளும் சேர்ந்துவரும் நடுநிசியே சிவனுக்கு உகந்ததாகும். திருக்கணித பஞ்சாங்கப்படி மாசி 29ஆம் திகதி இரவு மணி 10-11 வரை திரயோதசியும் அதன்மேல் சதுர் தசியும் வியாபித்திருப்பதாலும் பாரணத்தின்போது சதுர்த்தசி வியாபித்திருப்பது விசேஷமானதாலும் உத்தம சிவராத்திரியாகக் கொள்ளப்பட்டது. வாக்கிய பஞ்சாங்கப்படி தை 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை திரயோதசி இல்லாமல் சதுர்த்தசி மட்டுமே வியாபித்திருக்கின்றது. அத்துடன் சங்கிராந்தி தோஷமும் சேர்ந்துள்ளது. உத்தமமான ஒரு சிவராத்திரி இருக்க, அதம சிவராத்திரியைக் கொள்ளுதல் "கனியிருப்பக் காய் கவர்தல்" போன்றதாகும்.
பஞ்சாங்கங்களை நம்பி இலட்சக் கணக்கான சைவ சமயத்தவர்கள் விரதங்களைக் கடைப்பிடிக்கின்றனர். பஞ்சாங்கம் வெளியிடுவோர் நன்கு ஆராய்ந்து விரத நிர்ணயங்களைச் செய்தல் வேண்டும். இவர்களுடைய தவறு இலட்சக் கணக்கான பக்தர்களை விரத அனுஷ்டிப்பில் நெறிபிறழச் செய்துவிடும். அது மகாபாவம். இவ்விஷயத்தில் தவறுகளை உணர்ந்து திருத்திக் கொள்ளுதல் மனிதநேயக் கடமையாகும்.
எனவே யாவற்றையும் நோக்கி மாசி 29ஆம் திகதி (13.03.2010) சனிக்கிழமையன்று சைவமக்கள் சிவராத்திரி விரதத்தை அனுஷ்டித்துநற்பேறடைவார்களாக. 人
ONONONONONO
மத்தை டேற் நிலைக்கும் ா மூன்றும் துபோகும் வைத்த தெழுத்தை ஒதி வன பாதம அதுவே ஆகும்.
-கவிஞர் வ. யோகானந்தசிவம்
ONONONONONO
5

Page 6
இந்துசாதனம் 5.O.
சொல்லிய பாட்டின் பொரு
(6)ull திரு.மு.க
திருஞானசம்ப
தலம்: திருப்பிரமபுரம்
திருச்சி
தாணுதல் செய்திறை கானிய மாலொடு தண்தா மரையானும் நீணுதல் செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங் கவர் கள்வன் வாணுதல் செய்மகளிர்முதலாகிய வையத் தவரேத்தப் பேணுதல் செய்பிர மாபுர மேவிய பெம்மான் இவனன்றே.
மாலொடு - திருமாலொடு, தண் தாமரையானும் - குளிர்ந்த தாமரையை இருக்கையாகவுடைய நான்முகனும், தாள் நுதல் செய்து - திருவடியையும் திருமுடியையும் முறையே வரைந்து கொண்டு, (மண்ணிறந்தும் விண்பறந்தும்) இறைகானிய இறைவனைக் காணுமாறு, நீணுதல் செய்து ஒழிய - (ஏனமாயும், அன்னமாயும்) பேருரு எடுத்து நெடுந்துTரம் சென்று முயன்றும்
球
காணாதொழிய, நிமிர்ந்தான் - எல்லை காண்பரிய பெரிய
நெருப்புருவாய் வெளிப்பட்டு நின்றவனாய், எனது உள்ளம் கவர் கள்வன் - என்னைத் தன்வயப்படுத்திக் கொண்டவன்,வாள்நுதல் செய் - ஒளி பொருந்திய நெற்றியையுடைய, மகளிர் முதலாகிய - பெண்கள் முதலான வையத்தவர் - உலகத்தவர்கள் ஏத்த - துதித்து வணங்க, பேணுதல் செய் - அவர்களைக் காப்பாற்றி அருளுகின்ற, பிரமாபுர மேவிய - சீகாழியின் கண் எழுந்தருளியுள்ள பெம்மான் இவனன்றே - பெருமானாகிய இவனே என்றவாறு.
வபாழிப்புரை: திருமால் பன்றி உருவெடுத்து மண்ணுள் நுழைந்ததும், பிரம்மா அன்னப் பறவையாகி மேலே பறந்தும், முறையே அடியையும் முடியையும் காண முடியாதபடி பெரிய நெருப்புருவாய் நின்றவனும், பெண்கள் முதலான உலஉலகத்தவ ரெல்லோரும் வணங்கி நிற்க அவர்களைக் காப்பாற்றுகின்றவனும்
ONONONONONO
சிறந்த dŵrifuunir uomiîøổasóždfaðir olmuốMaomas égaživalú வாழ்வையும் பெறுவதற்குச் சைவ சித்தார் 6ustodounov6762u/lb.
ONONONONONG
 
 

2OO9 6)3umá5 ළෂුග්r OI
ஊருனர்ந்து சொல்லுவோம் h gas boobu IIT
ந்தர் திருப்பதிகம்
o பண்: நபிடயாடை pLDLJ61)LD
சீகாழி பதியிலே எழுந்தருளியிருக்கின்றவனுமாகிய சிவபெரு மானே என்னைத் தன்வயப்படுத்தியவன்.
புத்தரொடுபொறியில் சமனும்புறங்கூற நெறி நில்லா ஒத்தசொல்ல உலகம்பலி தேர்ந்தென தள்ளங்கவர்கள்வன் மத்தயானை மறு கவ்வுரிபோர்த்ததோர் மாயம் இது என்ன பித்தர் போலும் பிரமாபுர மேவிய பெம்மான் இவனன்றே.
புத்தரோடு - புத்தர்களோடு, பொறியில் சமனும் - அறிவில்லாத சமணர்களும், புறங்கூற - பழி சுமத்தவும், நெறிநில்லா - நன்நெறியில் நில்லாத, உலகம் - உலகத்தவர், ஒத்த சொல்ல - தம் மனதுக்கு இயைந்தவற்றைச் சொல்லவும், பலி தேர்ந்து - பலி
ஏற்று, எனது உள்ளம் கவர் கள்வன் - என்னைத் தன்
வயப்படுத்திக் கொண்டவன், மத்தம் - மதம் பொருந்திய யானை - யானையானது, மறுக - (மனஞ் சுழலுமாறு) வருந்துமாறு, உரி போத்தது- அதன் தோலை (உரித்துப்போர்த்துக் கொண்டதாகிய, இது ஒர் மாயம் என்ன - இது ஒரு மாயச் செய்கையாம் என்று சொல்லும் வண்ணம், பித்தர் போலும் - பித்தரைப் போன்று பிரமாபுரம் மேவிய - சீகாழியில் எழுந்தருளியுள்ள, பெம்மான் இவனன்றே - பெருமானாகிய இவனே என்றவாறு.
வபாழிப்புரை: புத்த, சமண சமயத்தவர்கள் வீண்பழி கூறவும், நல்ல நெறியிலே நில்லாத உலகத்தவர் தம் மனம்போனபடி பேசவும், (அவற்றைக் கவனியாமல்) பலியை ஏற்பவனும், யானை வடிவிலிருந்த கயாசுரனின் மனம் வருந்தும்படி தோலை உரித்துப் போர்த்ததை ஒரு மாயச் செயல் என்றும் சொல்லும்படி பித்தரைப் போன்று சீகாழியில் இருப்பவனுமாகிய பெருமானே என்னைத் தயன்வயப்படுத்தியவன். الحر
பொக்கிஷம் த நன்மையையும் உதைத்திற் சுபீட்சமான தம் ஒரு சிறந்த பொக்கிஷம் எனக் கூறுவது
-பிரதிஷ்ட சிரேA9ணி சAசி. வில்விததக் குருக்கல்
NONONONONONO

Page 7
இந்துசாதனம் 5O6
EFLDULIIb di
கலாநிதி மனோன்ம
உலகத்திலுள்ள உயிர்களுக்கெல்லாம் நீர் இன்றியமை யாதது. இயற்கையின் கொடையான நீர் மனிதவாழ்வியலிற் பிறப்புத் தொடக்கம் இறப்புவரை தொடர்புபட்டுள்ளது. சிறப்பாகச் சமய நடைமுறைகளில் நீரின் பயன்பாடு முக்கிய இடம் பெற்றுள் ளது. வள்ளுவரும் நீரின்றமையாது உலகு எனக் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். புறநிலைத் தூய்மையில் நீர் பெரிதும் பங்கு கொண்டிருந்ததை நாயன்மாரும் தமது பாடல்களிற் பதிவு செய் துள்ளனர்.
நீர் மனித வாழ்க்கையோடு நெருங்கிய தொடர் புடையதால் அதனைப் பேணுகின்ற ஒரு பண்பாடும் தோன்றி யுள்ளது. சைவசமயம் இறைவன் தோற்றத்தோடு கங்கையை இணைத்து அதனை வழிபாட்டு நடைமுறையில் இணைத்துள்ளது. தேவாரத்திற் பலதொடர்கள் இதற்குச் சான்றாக உள்ளன. நீர் கலந்தருசென்னி, நீரடைந்தசடை, நீரார்முடி, நீருலாஞ்சடை, நீரின்மல்குசடை, நீரேறுசடைமுடி, நீரொடுங்கும்சடை எனச் சிவனுடைய சடைபற்றிய பல குறிப்புகள் உள்ளன.
வழிபாட்டிடங்கள் நீர் நிலைகளோடு பொருந்தியிருந்தன "கோயில்" என்னும் அமைப்புத் தோன்றுவதற்கு முன்னரேயே நீர் நிலைகளில் தெய்வம் உறைவதாக நம்பி வழிபாடு நடை பெற்றுள்ளது. ஆறு, குளம், கடல், கூவல், கிணறு, கயம் என நீர் உள்ளவற்றையெல்லாம் மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். சங்கப் பாடல்களிலும் சிலப்பதிகாரத்திலும் கடல்தெய்வம் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. கடல் தெய்வத்தைச் சாட்சியமாகத் தலைவன் கொண்டு சூளுரை செய்து தலைவியை மணந்துகொண்ட செய்தி அகநூற்றுப்பாடலில் உண்டு. பரிபாடல் வைகையாற்றில் நடைபெற்ற வழிபாட்டு நடைமுறைகள் பற்றி விரிவான குறிப்புகளைத் தருகின்றது. சிலப்பதிகாரத்தில் சூளுரை செய்து தன்னோடு சேர்ந்த காதலன் மறந்து தன்னை விட்டுப் பிரிந்தாலும் அவனைத் தண்டித்து விடாதே எனக் காதலி கடல் தெய்வத்தை வழிபாடு செய்வதாகக் கானல்வரிப் பாடல் செய்தி கூறுகின்றது.
இயற்கை நிலையில் மழையை மாரி என்று சிறப்புடன் குறிப்பிட்டு வழிபடும் மரபும் தமிழரிடையே தொடங்கி நிலை பெற்றுள்ளது. நீர் வளத்தை நல்கும் மழை வருடவிளைபொருள் முயற்சிக்குத் தேவையான நீரைத் தந்துதவுகின்றது. பருவ காலங்களில் மாரிகாலம் சிறப்பாகப் பேசப்படுகின்றது. பெண் தெய்வ வழிபாடாக மாரியம்மன் வழிபாடு பலகாலமாக மக்களிடையே செல்வாக்குப் பெற்றுள்ளது. ஆண்டாளும் மணிவாசகரும் மார்கழி நீராடல் என்ற எம்பாவை வழிபாடு பற்றிப் பாடல்கள் பாடியுள்ளனர்.
வழிபாட்டில் நீரின் முக்கியத்துவத்தை அப்பர் பாடலடிகள் சிறப்பாக உணர்த்துகின்றன.
"மாதர்ப்பிறைக் கண்ணியானைமலையான் மகளொடும் பாடிப் போதொடுநீர் சுமந்தேத்திப் புகுவாரவர் பின் புகுவேன்"

S2OO9. விரோதி ஆனி01
வாழ்வியல்
பணி சண்முகதாஸ்
எனத் திருவையாறு பதிகத்தில் அவர் குறிப்பிடும் அநுபவம் இறைவனை வழிடச் செல்வோரை எம் கண்முன்னே காட்டுகின்றது. இறைவழிபாட்டிற்குச் செல்லும்போது காலத்தில் மலரும் மலர்களையும் நீரையும் சுமந்து செல்லும் நடைமுறை இருந்ததை உணர்த்துகிறார். வயதில் முதியவரான அப்பர் வழிபாட்டு நடைமுறைகளை எல்லோருக்கும் உணர்த்த விரும்புகிறார். அவர் சைவசமய வழிபாட்டு நடைமுறையை விட்டுச் சமண சமயத்தைச் சார்த்திருந்தவர். பின்னர் சூலைநோயின் கொடுமை தீரச் சிவவழிபாட்டிற்குத் திரும்பி வந்தவர். நாள்தொறும் நீரும், பூவும், புகையும் கொண்டு வழிபாடு செய்து வாழ்ந்தவர். அத்கைய வழிபாடு அவர் உள்ளத்தைச் செம்மைப்டுத்தியது. அதனைப் பிறருக்கும் அறியத் தருகிறார். 'சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்” எனத் தனது பக்தி நெறிப்பட்ட வாழ்வியலின் சீர்மையைப் பாடலிலே உணர்த்தியுள்ளார்.
திருக்கோவிலுக்கு வழிபடச் செல்லு முன்னர் நீராடிச் செல்லவேண்டும் என்ற நடைமுறை இன்றுவரை கடைப்பிடிக்கப் படுகின்றது. திருக்குளத்திலே கால்களைக் கழுவித் தூய்மையாகக் கோயிலுட் செல்லவேண்டும். என்ற நடைமுறையும் உண்டு. இதனால் திருக்கோயில் அருகிற் குளம் அமைக்கப்பட்டது. இயற்கையாக நீர்நிலையுள்ள இடங்களில் திருக்கோயில் கட்டப்பட்டது. அங்கு பறவையினங்கள் மகிழ்வோடு தங்கிச் செல்லும், குயிலும், மயிலும், கிளியும், புட்களும், வண்டுகளும் நீர் அருந்தி மகிழும். நீரின் வளத்தால் செடி, கொடி, மரம் என்பன செழித்துவளரும். குளிர்மையான சுற்றுப்புறம் வழிபட வருவோரைக் கவர்ந்திழுக்கும். மலர்த்தோட்டம், கனி மரக்கா எனக் கண்ணுக் கினிய சூழலில் மனம் பரவசப்பட்டு நிற்கும்.
இத்தகைய பரவசநிலையை ஏற்படுத்தும் ஒரு வாழ்வியல் பேணப்பட வேண்டும். தண்ணிரின் பயன்பாட்டை வழிபாட்டோடு இணைத்து அதனைத் தொடர்ந்து செய்யும் பயிற்சியையும் எம் முன்னோர் காட்டியுள்ளனர். பலரும் வந்து வழிபாடு செய்யும் இடத்தில், நீர்,தாகத்தைத் தீர்க்கும் மருந்தாக, நோயைப் போக்கும் மருந்தாக, கண்ணுக்கு விருந்தாக, மனதிற்குக் குளிர்மையாக விளங்குகிறது. எனவே, நீரைப் பேணி அதன் பயனை எல்லோரும் அநுபவிக்க வேண்டும் என்ற முன்னோரின் பணி தொடரப்பட வேண்டும். திருக்கோவிற் சூழலில் அமைந்துள்ள நீர்நிலைகளில் ஒரு தெய்வீகம் உறைந்திருப்பதை எல்லோரும் உணர வேண்டும்.
"துன்பக் கடலிலே தோணித் தொழில் பூண்ட தொண்டர் தம்மை இன்பக் கரைமுகத்தேற்றும்" முயற்சியாக வழிபாட்டில் நீரின் தொடர்பு பேசப்படுகிறது. இன்று நீர்நிலைகள் செயற்கை நிலையில் அமைக்கப்படுவதால் அவற்றின் இயற்கையான அழகும் சிறப்பும் மறைந்து வருகின்றது. நீர்க்கரகம் ஒன்றிலே இறைவனைக் காணும் பக்திப் பண்பாட்டை மீண்டும் செயற்படுத்த வேண்டிய வேளையிது. கங்கையைச் சடையிற்கொண்ட இறைவன் தோற்றம் நீர்’ எமது தலையாய தகைமையுடையது என்பதை உணர்த்தி நிற்கின்றது. சமயம் ஒரு வாழ்வியலாக இயற்கையோடு இணைந்து எமது உள்ளத்திலும் உறைவதை உணரவைக்கிறது. 人

Page 8
இந்துசாதனம் 5. O6
42.
43.
45.
46.
47.
48.
49.
50.
நாவலர் சரிதமோது
கவியூர் இராசைய (இந்துசாதனம் - 2009 வைக
இலக்கண இலக்கியங்கள் எழுதரிநீதிநூல்கள் துலக்கமுள் விளக்க மோடுதாயநற் சைவ நூல்கள் கலக்கலில் லாப்புராணம் கருத்துடை இதிகாசங்கள் விலக்கலில் நூல்களெல்லாம் விதிமுறை கற்றுத்தேறி.
துடிப்பொடுதொடங்கிக்கல்வித்துறையெலாம்நுழைந்துமன்றில் நடிப்பவரருளினாலே நாவலராகும் பேறர் அடிப்படைத்தத்துவங்கள் அதனினுட் கருத்து யாவும் படித்ததிற் தெளிவுகொண்டார் பன்னிரன்டாண்டினுள்ளே.
. மன்னுலகதனை முன்போர்மணிக்குடைக் கீழே யாண்ட
அன்னவர் மொழியதான ஆங்கிலம் கற்க வெண்ணிப் பன்னிரு வயது சேரும் ஆவணிஜெயநல்லாண்டு உன்னிடுமாசையால்யாழ் மெதடிஸ்தமிசன்கல்லூரி.
ஆண்டுவாயிரத்தெண்ணுரற்றி முப்பத்திநான்கிற் சேர்ந்து சீண்டுமாங்கிலநனுக்கச் சிறப்புகள் கற்றுக்கொண்டே மூண்டிடுமாசை யாலே முத்தமிழ் விளக்க மெல்லாம் காண்டிடல் வேண்டுமென்ற கருத்தினை மனத் திருத்தி.
வேறு
பெருமாலைத் தீர்க்கவருபேரறிஞரான இருபாலைச் சேனாதி ராசரவ ரோடு பெருநாலை யோதசரவணமுத்துப் புலவர் இருநூலர் தாமுமெனக் கியைந்தகுரு வென்றே.
சிந்தையதிற் கொண்டுஅவர் திருவில்லம் சென்றே முந்துபுகழ் செந்தமிழி லுள்ளஅமு தெல்லாம் புந்திதனில் நன்குபுகுமாறுரைகள் ஒதித் தந்துதவ வேண்டுமெனத் தாளினை பணிந்தார்.
தந்தையவர் ஒன்பதினில் தவறுதுய ரோடும் நந்தமிழில் முடிக்காத நாடகம ஃ தொன்றை முந்தறிஞர் போலநனி முடித்ததிவ ரென்றே அந்தவருந் திறைமையினை அறிந்திருந்த தாலே.
வந்துபனி மாணவரின் வண்மையை நினைந்தே இந்தவுல கேழும்ந ைஏற்றவிருப் பார்க்கெம் செந்தமிழின் வேலையுள சிறப்பவைக ளெல்லாம் தந்துதவல் நங்கடனென் றொன்றியுடன் இசைந்தார்.
வேறு வெள்ளிமலை வாசரது விருப்பத் தாலே விரிஞாலம் சைவநெறி விளக்க வந்தார் தள்ளிவினை யாடாண்டு பன்னி ரண்டில் தாயதமிழ் இலக்கணமும் இலக்கி யமும் கிள்ளைமொழி யாங்கிலுமும் கிரம மாகக் கேட்பவர்க்குக் கற்பித்தும் கற்றுக் கொண்டும் அள்ளிடவே குறையாத அறிவினோடு அவனியிலே யுலவுமிரு குருமா ரிடமும்

2OO9. விரோதி ஆனி01
b
நற்றமிழ் மாலை
ா குகதாசன் ாசி பக் 12 இன் தொடர்ச்சி)
51.
52.
53.
54.
55.
56.
57.
58.
59.
நன்நாற்காண் டிகையுரையும் விருத்தியோடும் நாயன்மார் கட்டுக்குளத் திருந்தே யாத்த தொன் நரலா யிலங்கிரகு வம்சத் தோடு துலங்கிளங்கோ தந்த ஒரு சிலம்பின் நரலும் மன் நாலாய் வள்ளுவனார் வடித்தே தந்த திருக்குறள் சிந்தா மணியும் கோவை யாரும் பன்நாலும் கற்றுஒளிர் பண்பினோடே பாரெங்கும் போற்றும் பண்டிதராய் ஆனார்.
வேறு
கவினிரு மொழிகள் தன்னைக் கவனமாய்க் கற்ற காலை விவரமாயாங்கிலத்தை விளக்குதற் கெளிமையாக நவமுறையவைகள் யாவும் கத்திய ரூபமாக அவனியில் வடித்து வைத்த அவர்செயலதனைக் கண்டார்.
கத்திய ரூபமாகக் கவின்தமிழ்நால்களில்லை பத்திய ரூபமாயே பாரிலெம் நூல்களுண்டு கத்திய ரூபமாகக் காணும் நூல்கள் நடையும் சுத்தசெந் தமிழிலில்லை யென்றதும் தேர்ந்து கொண்டார்.
ஆண்டாண்டுகாலமாக ஆலயமாவைகள் தோறும் நீண்டநற் புராண மோதிநிகழ்த்துரைபொருள்க யாவும் காண்டிடும் விளைவினாலே கடுகியள் விடயங்கள் சென்றே பேண்டகு மாசையாலே பிரியமாய்க் கேட்டும் வந்தார்.
கேட்டவர் வந்த காலை கிளருரையதனிற் சைவக் கோட்பாட்டில் பிழையதானால் குறித்ததைவைத்துக்கொண்டு பாட்டொடு படிப்பு யாவும் முடிந்தபினவரைக் கேள்வி கேட்டதன் பொருள்களெல்லாம் புகன்றிடவேண்டுமென்பர்.
சொல்லிடு பொருட்கள் யாவும் தக்கவையாயி னேற்றும்
அல்லவை யாயினுள்ள அரும்பொருள் எதையெடுத்தே பல்வகை விளக்க மோடு படிப்பவர்க் குரைத்தும் கையில் நல்லரும் நூல்க ளோடு நலமுற விளங்கி வந்தார்.
ஆங்கிலந்தன்னை ஐயம் திரிபறக் கற்று வந்த பாங்கினில் மகிழ்ந்த அந்தப் பேர்சிவல் பாதிரியார் தாங்கிடும் ஆங்கிலம்கீழ் வகுப்பினிற் கோதியெங்கள் தீங்கனித் தமிழை மேலுள் மாணவர்க்குரைக்க வேண்ட
அன்னவர் வேண்டுகோளையன்புடனேற்றுச்சின்னாள் தன்னலங் கருதிடாதும் சன்மானம் வாங்கிடாதும் பன்னரும் மாணவர்கள் பயன்பெறுமாறும் நன்கே பொன்னனை கல்விதந்தார் பத்தொன்பதாண்டினெல்லை.
இருமொழியறிவிலாரும் இவரைப்போலில்லையென்றே பெருகியாழ்ப்பாண மெல்லாம் பேசுதல் கண்டும் கேட்டும் தருவிவர் பைபிள் நரலைத் தமிழினி லாக்க வென்றே பெருகிடுமாசை தேக்கிப் பேர்சிவல் பாதிரியார்.
(வளரும்.)

Page 9
இந்துசாதனம் 5 Oc
சைவசித்
(இந்துசாதனம்-வைகாசி 20
5. சைவம் என்னும் சொல் உணர்த்தும் பொருள் என்ன?
சைவம் என்ற சொல்லின் பொருளைத் திருமூலர் விளக்கியுள்ளார். சைவம் சிவனுடன் சம்பந்தம் ஆகுதல்' என்பது அவர் தரும் விளக்கம், சிவனுடன் தொடர்புற்று நிற்றல் என்பதுதான் சைவம் என்னும் சொல்லின் பொருள் என்பது இதனால் விளங்கும்.
எல்லாவுயிர்களும், சிவசம்பந்தம் உடையவை. உயிர், தனக்கும் சிவத்திற்கும் உள்ள பிரிவில்லாத தொடர்பை உணர்ந்து, தான் சிவனது அடிமை என்னும் உண்மையையும் உணர்ந்து, அவனைச் சார்வதே சிவ நெறியிற் பெறத்தக்க மிகவுயர்ந்த நலமாகும்.
சைவசித்தாந்தம்
6. சைவ சமயத்தின் தத்துவக் கொள்கையே சைவ சித்தாந்தம்
என்றிர்கள். தத்துவக் கொள்கை என்பது என்ன?
தத்துவம் என்பதற்கு உண்மை என்பது பொருள். எனவே, பொருள்களின் உண்மை நிலையைத் தருக்கமுறையால் ஆராய்தலே தத்துவ ஆராய்ச்சியாகும்.
சைவசமயத்தின் கொள்கை விளக்கமாக இருப்பது சைவ சித்த தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் இலகுவில் விளங்கிக் கொள்ள இடம்பெறுகின்றது. முனைவர் ஆ. ஆனந்தராசன் விடைகை "திருக்கைலாய பரம்பரை தினம்" - சைவப் பெரியார் திரு.ஐ.குலவிரசிங்கம்அவர்களின்அனுசரணையுடன் வினா-வி
சைவ சித்தாந்தம், உள்ளனவாகிய பொருள்கள் அனைத்தையும் பதி, பசு, பாசம் என்ற மூன்று வகையுள் அடக்கிக் கூறும். அம்முப்பொருள்களின் உண்மை நிலையை அளவை முறையால் ஆராய்ந்து கண்ட முடிவுகளே சைவ சமயத்தின் தத்துவக் கொள்கையாக அமைந்துள்ளன.
7. சைவ சித்தாந்தம் என்பதில் உள்ள ‘சித்தாந்தம்' என்ற
சொல்லின் பொருள் என்ன?
சித்தாந்தம் என்பதற்கு முடிந்த முடிவு என்பது பொருள். முடிவில் நன்றாக ஆராய்ந்து பார்த்துக் கொள்ளப்படும் முடிவே முடிவான முடிவாகும். அது மாறிப்போதல் இல்லை. அதுவே நிலையான முடிவாகி விளங்கும்.
அந்த அந்ச்சமய நூல்களைப் படிக்கும்போது நமக்கு அவைகளில் சொல்லப்பட்டவையே உண்மை என்பது போலத் தோன்றும். பின்பு அவைகளுக்கு மேற்பட்ட நூல்களைக் காணும்போது முன்கண்டவை பொருந்தாதவை என்பது விளங்கும்.
ஆயின், சைவ சித்தாந்த நூல்களை ஒதி உணரும் உண்மைகள் அவ்வாறு மாறிப் போதல் இன்றி எக்காலத்தும் நிலை பெற்று நிற்கும். அது பற்றியே, சைவ சமயத்தின் உண்மைகள் முடிந்த முடிவாகி விளங்குவன என்ற பொருளிற் சித்தாந்தம் எனப்படுகின்றன.
O

2OO9 விரோதி ஆனி01
தாந்தம்
9 - 19ஆம் பக்கத் தொடர்)
8. ஒவ்வொரு சமயமும் தனது முடிவுதான் சித்தாந்தம் என்று தானே கூறும். இந்நிலையில் சைவ சமயத்தின் முடிவே உண்மைச் சித்தாந்தம் என்பதை எப்படிக் காண்பது?
நம் நாட்டிற் பல சித்தாந்தங்கள் நிலவுகின்றன. பெளத்த சித்தாந்தம், சமண சித்தாந்தம், வைணவ சித்தாந்தம் என்பவற்றை இங்கு குறிப்பிடலாம். இந்தச் சித்தாந்தங்களுள் ஏதேனும் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், அந்தச் சமயத்தின் பெயரையும் உடன் சேர்த்துச் சொல்லவேண்டும். இல்லையென்றால் விளங்காது. பெளத்த சமயத்தின் முடிவை, சமயத்தின் பெயரைச் சேர்க்காது வாளா சித்தாந்தம் என்று குறிப்பிட முடியாது. பிற சமய முடிவுகளுக்கும் இது பொருந்தும்.
ஆனால் சைவ சமயத்தின் முடிவைச் சைவ சித்தாந்தம் என்று சமயத்தின் பெயரைச் சேர்த்துக்கூறவேண்டிய அவசியம் இல்லை. சித்தாந்தம் என்று சொன்னாலே போதும் அது சைவ சித்தாந்தம் ஒன்றையே குறிக்கும். இஃது எதைக் காட்டுகிறது? பல சித்தாந்தங்கள் இருந்தாலும், அவற்றுள் சிறந்து நிற்பது - உண்மைச் சித்தாந்தமாய் விளங்குவது சைவ சித்தாந்தமே என்பதைத்தானே காட்டுகிறது.
ாந்தம் சிறப்பும் பெருமையும் மிக்க இச்சித்தாந்தத்தைச் சைவத் வேண்டும் என்பதற்காக வினா - விடை உருவில் இத்தொடர் >ளயும் விளக்கங்களையும் தருகின்றார். மலேஷியாவினுள்ள சு.சிவபாதசுந்தரனார் அறங்காப்பு நிறுவனத்தைச் சேர்ந்த விடைகள்தொடர்ந்துவெளியாகும்.
எல்லா ஊர்களிலும் கோயில் இருந்தாலும், தில்லையில் உள்ளதையே கோயில் என்று வழங்குவது சைவ மரபு தில்லைக் கோயிலின் தலைமை பற்றியும், சிறப்புப் பற்றியுமே இவ்வழக்கு உண்டாயிற்று. அது போலவே, சித்தாந்தம் என்ற பெயர் பல சமயங்களின் முடிவுகளுக்கு உரிய பொதுப் பெயராக இருந்தாலும் சைவசமயத்தின் முடிவுக்கு மட்டுமே உரிய சிறப்புப் பெயராயிற்று. இவ்வழக்கை வைத்துச் சைவ சித்தாந்தமே உண்மைச் சித்தாந்தம் என்பதைக் காணலாம்.
சாத்திரமும் தோத்திரமும் 9. சைவ சமயத்திற்குரிய நூல்களாகச் சாத்திரம், தோத்திரம் என இரண்டு உள்ளன. அவற்றுள் ஒன்றைக் கற்றுணர்ந்தால் போதாதா? இரண்டையும் பயில வேண்டும் என்பது எதற்கு?
எனக்கு இரண்டு கண்கள் எதற்கு? ஒன்று போதாதா? என்று கேட்பதுபோல இருக்கிறதுநீஎழுப்புகிற வினா.
அறிவு நெறியை விளக்கிக் காட்டுவன சாத்திரங்கள். அன்பு நெறியில் செலுத்துவன தோத்திரங்கள்.
தோத்திரங்கள் இறைவனது புகழை எடுத்துரைப்பனவாக அமைந்து அவற்றை ஓதி வருவோர் உள்ளத்தில் அன்பைப்
->

Page 10
இந்துசாதனம் 5, O.
சைவசித்
பெருக்குவன. சாத்திரங்கள் அத்தோத்திரங்களில் அடிப்படையாக அமைந்திருக்கும் தத்துவக் கோட்பாடுகளைத் தருக்க முறையில் வகுத்துக் கூறுவன.
தோத்திரங்களை இலக்கியமாகக் கொண்டால் சாத்திரங்கள் இலக்கண நூல்கள் போன்றவை எனலாம்.
இலக்கியம் கற்கக் கற்க இனிமை பயந்து மேலும் தன்னைக் கற்கும்படி செய்து பலவாறு செல்லும் உணர்வுகளை ஒழுங்குபடுத்தும். அதுபோலத் தோத்திரங்கள் கடவுளது இயல்புகளை இனிமையாக எடுத்துக் கூறி நம் உள்ளம் அன்பினால் கனிந்து செம்மையுறுமாறு செய்யும்.
கற்பதற்கு இலக்கணம் எவ்வாறு கடினமாக உள்ளதோ அவ்வாறே சாத்திரமும் கற்பதற்குக் கடினமாக இருக்கக் கூடியதே. ஆயினும் அது நம் அறிவைச் செம்மைப்படுத்தக்கூடியது.
நன்னெறி என்ற நீதிநூல்,
எழுத்தறியார் கல்விப் பெருக்கம் அனைத்தும் எழுத்தறிவார்க்காணின் இலையாம்'
என்று கூறுகிறது. இலக்கணம் அறியாதவர்கள் தாம் எவ்வளவோ இலக்கியங்களைக் கற்றுள்ளதாக எண்ணிக் கொண்டிருக்கலாம். ஆயினும் இலக்கணம் அறிந்தவர்களின் முன்பு நிற்கும்போதுதான் தாம் உணர்ந்திருப்பன அவ்வளவும் தவறு என்பதைத் தெரிந்துகொள்ளமுடியும்.
இவ்வுண்மை தோத்திரத்திற்கும் சாத்திரத்திற்கும் கூடப்பொருந்தும், சாத்திரம் அறியாதவர்கள் தோத்திரம் முழுவதையும் தாம் உணர்ந்திருப்பதாக எண்ணிக் கொண்டிருக் கலாம். ஆனால் சாத்திரம் கற்றோருக்கே தோத்திரம் தன் உண்மைப்பொருளை விளங்கக் காட்டும்.
ஆகவே தோத்திரத்திற்குச் சாத்திரக் கல்வி இன்றியமை யாதது. இரண்டையும் கற்பவரே உண்மையில் நம் சமயத்தைப் பற்றி நன்றாக உணர்ந்துகொள்ள முடியும்.
இறைவனை அடையும் நெறிகள்
10. சைவ சமயத்தில் இறைவனை அடைதற்குரிய நெறிகள்
Tsomon?
இறைவனை அடையும் நெறிகள் இரண்டு என நம் முன்னோர் வகுத்துள்ளனர். ஒன்று அறிவு நெறி அல்லது ஞானமார்க்கம். மற்றொன்று அன்புநெறி அல்லது பக்தி மார்க்கம். இவையிரண்டும் ஒன்றைவிட்டு ஒன்று நீங்கி நிற்பனவல்ல. ஒன்றில் ஒன்று கலந்தேயிருக்கும்.
அறிவு நெறி என்பது தத்துவ நூல் வழியே இறைவனை உணர்ந்து அன்பு செய்வது. அன்பு நெறி என்பது தத்துவ நூல் வழியன்றி, இயல்பாகவே இறைவனது திருவருளை உணர்ந்து அவனிடத்தில் அன்பு பெருகி நிற்பது.

S2OO9 விரோதி ஆனி0
ந்தாந்தம்
அறிவு நெறியின் பின்னரே அன்பு நெறி வாய்க்கும் என்பதும், அன்பு நெறியில் உள்ளவரும்கூட முற்பிறப்பில் அறிவு நெறியில் நின்று அடைந்த பக்குவத்தின் பயனாக இப்பிறப்பில் இறைவன்மீது அன்பு மீதுாரப் பெற்றவரே என்பதும் சைவ சமயத்தின் துணிபாகும்.
முப்பொருள்கள்
11. சைவ சித்தாந்தம் கூறும் முப்பொருள் பற்றி முதலில் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படைச் செய்திகள்
யாவை?
முப்பொருளாவனபதி, பசு, பாசம் என்பவை.
பதிஎனப்படுவது கடவுள். பதிப்பொருள் ஒன்றே; பல இல்லை.
பசு எனப்படுவது உயிர் அல்லது ஆன்மா. சீவான்மா எனப்படுவதும் இதுவே. உயிர் ஒன்றல்ல; பல. பல என்பதற்கு எண்ணற்றவை என்பது பொருள். உயிர் என்று ஒருமையிலே சொன்னாலும் எண்ணற்ற உயிர்கள் என்றே கொள்ளுதல் வேண்டும்.
உடம்புதோறும் இருக்கின்ற உயிர்கள் வெவ்வேறாகும்; தனித்தனிப் பொருளேயாகும். தேவர், மக்கள், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என ஏழு வகையான பிறவிகள் சொல்லப்படும். இவ்வேழு வகையும் உடம்பு பற்றிச் சொல்லப்படுவனவே. உயிரில், மக்கள், விலங்கு முதலிய எந்த வேறுபாடும் இல்லை. இவ்வகை ஒவ்வொன்றிலும் எண்ணற்ற உடம்புகள் காணப்படுகின்றன. எனவே, இவ்வுடம்புகளை இடமாகக்கொண்டு வாழும் உயிர்கள் எண்ணற்றவை என்பது விளங்கும்.
உயிருக்குப் பசு என்ற பெயர் ஏன் வந்தது எனில், கயிறு கொண்டு பசுவைக் கட்டுவதுபோல, உயிர், பாசம் என்னும் திண் கயிற்றாற் கட்டப்பட்டுள்ளது. அக்காரணம் பற்றியே உயிர் பசு எனப்படுகிறது. பசு என்ற சொல்லுக்குக் கட்டப்பட்டது என்பது தான் பொருள்.
இனி, பாசம் என்னும் சொல்லுக்கு நேரான பொருள், கயிறு என்பதுதான். அச்சொல் சைவ சித்தாந்தத்தில் ஒரு கலைச் சொல்லாகப் பயின்று வருகிறது. அஃது உயிர்களைப் பிணித்திருக்கும் தளை அல்லது கட்டினைக் குறிக்கின்றது.
பாசம் என்று ஒருமையிலே சொன்னாலும் அதிலே மூன்று வகை உண்டு. அவை ஆணவம், கன்மம், மாயை என்பனவாம். இம்மூன்று தளைகளையும் சேர்த்துக் குறிப்பிடும் பொதுப்பெயரே பாசம் என்பது.
ஒருவரது கையிலும் காலிலும் இடப்பட்டுள்ள தளை அல்லது விலங்கு அவரைச் செயற்படவொட்டாமல் தடுப்பதுபோல, ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றும், உயிரின் அறிவு செயல்களைக் கட்டுப்படுத்தி வைத்தல் பற்றி அவை பாசம் என்னும்
பெயரைப் பெற்றுள்ளன.
- G

Page 11
இந்துசாதனம் 50
Fഖ്
இவற்றை மும்மலங்கள் என்றும் குறிப்பிடுவர். மலம் என்பதற்கு அழுக்கு என்பது பொருள். வெண்மையான ஆடையில் படிந்த அழுக்கானது எப்படி அதன் வெண்மை நிறம் தோன்றாதபடி அந்த ஆடையை மறைத்து நிற்கிறதோ, அப்படியே இம்மூன்றும் உயிரைச் சார்ந்து உயிரின் வியாபக அறிவை விளங்க வொட்டாதபடி மறைத்து நிற்பதாலும், பின்னர் அகற்றப்படுவதாலும் மலம் எனப் பெயர்பெற்றன.
முதலிற் கூறியபதி அறிவுடைப்பொருளாகும். அறிவுடைப் பொருளைச் சித்து என்பர். பசுவாகிய உயிரும் அறிவுடைப் பொருளே. எனவே பதியும் பசுவும் சித்து என்னும் வகையைச் சேர்ந்தவை.
ஆயினும் பதி, மிக நுண்ணிய அறிவுப்பொருளாயிருப்பது. நுண்மையைக் குறிக்கின்ற சொல் சூக்குமம் என்பது. எனவே பதி சூக்கும சித்து எனப்படும். பசுவாகிய உயிரின் அறிவுக்கு அப்படிப்பட்ட நுண்மையில்லை. அதன் அறிவு பருமையானது. பருமையைக் குறிக்கும் சொல் தூலம் என்பது. எனவே பசு தூல சித்து எனப்படும்.
பதியும் அறிவுடையது. பசுவும் அறிவுடையது என்றாலும் பதி சூக்கும சித்தாகலின் அதன் அறிவு தானே விளங்குவது; தனக்கு அறிவிப்பதற்குத் துணை எதுவும் வேண்டாமல் தானே அறிவது. பசுவினது அறிவு அவ்வாறின்றிப் பருமையான அறிவு ஆகலின் பிறிதொருபொருள் அறிவிக்கவே எதையும் அறியக்கூடிய தன்மையுடையது.
இனி, பாசமாகிய ஆணவம், கன்மம், மாயை என்பவை அறிவில்லாதவை, அவை சடப்பொருள் அல்லது அசித்துப் பொருள் எனப்படும்.
இவ்வாறு, தானே அறிவது (பதி) எனவும், அறிவித்தால் அறிவது (பசு) எனவும், அறிவித்தாலும் அறியாதது (பாசம்) எனவும் வேறுபடுத்திக் காணும் வகையில் முப்பொருள்களை அமைத்துக் கொண்டுள்ளது சைவசித்தாந்தம்.
12. முப்பொருள்களும் அநாதி என்பர். அதன் பொருள் என்ன?
பதி, என்றும் உள்ள பொருள். பதியைப் போலவே மற்றைய
ON KONKON ON ON KON
ஆலயங்கள் ஏன்
ஆலயங்களிலுஞ்சரி, வேறெங்குஞ்சரி, ஞானிகளுக்கு மட்டுந்தான். மற்றையோர்களுக்கு த மூலமாகத் தகுதியான அர்ச்சகர் ஒருவரால் சிவத்து நிகழக் கூடும்; தரிசித்த பலனும் கைகூடும். இந்த ஒரு விக்கிரகங்க்ள் பிரதிஷ்டையாயின; பூஜைக்கிரமங்கள்
ONONONON ON KON

i2OO9 விரோதி ஆனி0 தாந்தம்
பசுவும் பாசமும் என்றும் உள்ள பொருள்களே. முப்பொருள்களில் எந்தப் பொருளும் மற்றொன்றிலிருந்து தோன்றவில்லை. அவை ஒரு காலத்தில் தோன்றுதல் இன்றி உள்ளவையாதலால், அவை என்றும் அழிவனவும் அல்ல. தோன்றுதல் அழிதல் இன்றி என்றும் உள்ளவை என்ற பொருளில், அவை அநாதி என்று சொல்லப்படுகின்றன.
இப்பொழுது அநாதி என்ற சொல்லின் அமைப்பை நோக்கலாம். அதில் ந, ஆதி என்ற இருசொற்கள் உள்ளன. நகாரம் எதிர்மறையினை உணர்த்துவது. அதாவது, இன்மை என்ற பொருளைத் தருவது. ஆதி என்ற சொல் தோற்றம் என்ற பொருளை 960)Lugi).
ந, ஆதி என்ற இவ்விரு சொற்களும் வடமொழி இலக்கண விதிப்படி எவ்வாறு சேர்ந்து அநாதி என்று ஆகும் என்பதுஅறியத்தக்கது.
நகாரத்தில் ‘ந்’ என்ற மெய்யெழுத்தும் 'அ' என்ற உயிரெழுத்தும் உள்ளன. இம்மெய்யும் உயிரும் ஆகிய எழுத்துக்கள் பின் முன்னாக மாறி நிற்கும். அதாவது, ந் + அ என்பவை அ+ந் என மாறிநிற்கும்.
இவ்வாறு நகாரம் அந்' என மாறி நின்று வருமொழி யாகிய ஆதி என்பதனோடு சேர்ந்து அநாதி என்றாகும்.
முதலிற் கூறியபடி முன்னே உள்ள நகாரம் இன்மை என்ற பொருளையும், ஆதி என்பது தோற்றம் என்ற பொருளையும் உடையன. ஆகையால் அநாதி என்பது ಛಿ: எனப் பொருள்படுவதாயிற்று.
ஒரு பொருள் தனக்குத் Sதாற்றம் இலலாமல் நிற்குமாயின், அப்பொருளுக்கு அழிவு என்பது இல்னில், எனவே அஃது என்றுமுள்ள பொருளாகும்.
இம்முறையில் அநாதி என்பது என்றுமுழ்ள பொருளைக் குறிப்பதாயிற்று. இப்பொருளிலேயே, முப்பொரு அநாதி என்று சைவ சிந்தாந்தம் கூறுகின்றது.
(வளரும்.)
- SON SINGINGNON CD
தோன்றின?
சிவம் தானாகத் தோன்றிக் காட்சியளிப்பதும் குதியான மந்திரம், பாவனை, கிரியை என்பவற்றின் வ விளக்கம் ஏற்படுத்தப்பட்ட பின்னரே தரிசனம் காரணம் பற்றியே ஆலயங்கள் தோன்றின; அங்கு ா வகுக்கப் பெற்றன.
-மு. கந்தையா
JSON SON SINGNON Cd

Page 12
இந்துசாதனம் 5, O.
திருச்சிற்றம்பலம் வாழ்க வந்தனர் வானவரானினம் வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக ஆழ்க தீயதெல்லாமரனாமே சூழ்க வையக முந்துயர் தீர்க்கவே. திருச்சிற்றம்பலம் இந்து சாதனம் Hindu Organ
email: editorGhindu organ.com
விரோதி வூல ஆணி மீ"1ஆம் 2 (15.06.2009)
தர்மம் வெல்லும்
உண்மையே பேசு, நன்மையே பெறுவாய்
நீதியும் நேர்மையும் நிலை இன்பந்தனைநல்கும்
இறைவனை நம்பு இயன்றநற்பணிசெய்
தர்மம் வெல்லும், அதர்மம் அழியும்
நம் காதுகளில் அடிக்கடி ஒலித்துக்கொண்டி
ருக்கும் இத்தகைய அமுத மொழிகள், பாரத நாடெங்கும் பரந்து உலாவிய ஞானிகள், துறவிகள், இருடிகள், அவதார புருடர்கள் காலத்துக்குக் காலம் வெளியிட்ட அனுபவங்கள், மக்களுக்கு வழங்கிய உபதேசங்கள் போன்றவற்றின் பிழிவாகத் திகழ்கின்றன.
ஆனால், இவற்றின் அடிப்படையிலே தம்முடைய வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்களுட் பலர்சொல்லொணாத் தொல்லைகள், துன்பங்கள், துயரங்கள், அச்சுறுத்தல்கள், ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள், போன்றவற்றுக்கு ஆளாகி - அவமானப்பட்டு - கூனிக் குறுகி நிற்கும் அதே வேளையிற் பொய் சொல்பவர்கள், புறங்கூறுபவர்கள், அடிதடி, அக்கிரமம், கொலை, கொள்ளை முதலியவற்றைச் செய்வதைத் தம் 'தொழிலா' கக்கொண்ட சிலர் தம் பணத்தாலும் பதவியாலும் அவற்றைப் பக்குவமாய் மறைத்துக் கொண்டு "பெரிய மனிதர்களாகப் பவனி வருவதையும், மாலை மரியாதையும், மதிப்பான வரவேற்பும் அவர்களுக்கு அளிக்கப்படுவதையும் பார்க்கும்போது,-
மேற்போந்த அமுத மொழிகளெல்லாம் அர்த்த மற்றைவையா? ஆதாரமற்றவையா? அன்றாட வாழ்க்கைக்கு அவசியம் அற்றவையா? என்ற கேள்விகள் - அவற்றுடன் ஒட்டியுள்ள சந்தேகங்கள் - அவநம்பிக்கைகள் நெஞ்சைக் குடைவதும் - சிந்தனையைக் குழப்புவதும் - நிம்மதியை விரட்டுவதும், பலரையும் பாதிக்கும் 'பொது அனுபவங்களாகப் படர்ந்துள்ளன.
 

S2OO9 விரோதி ஆனி0
மயக்கத்தை விரட்டி மனத் தெம்பை விருத்தி செய்வதற்கு, தடுமாற்றத்தை ஒட்டி, தன்னம்பிக்ைகையை ஊட்டுவதற்கு, மகாபாரதம் உணர்த்தும் மகத்தான உண்மை ஒன்றை மனதிற் பதியச் செய்வது இன்றியமையாததாகத் தோன்றுகின்றது.
பஞ்ச பாண்டவர்கள் தர்ம சீலர்கள், அன்பையும் அறத்தையும் தம் இரு கண்ணாய்க் கொண்டவர்கள்; மறந்தும் பிறன் கேடுகுழாத மாண்புமிக்க மன்னர் குலக் கொழுந்துகள்; பெற்றோர்களுக்கும் பெரியோர்களுக்கும், கற்றோர்களுக்கும், கடவுளர்களுக்கும் பணிந்து நடப்பதை, "பயந்து" நடப்பதைத் தம் வாழ்வாகவே வரித்துக் கொண்ட வர்கள். ஆனால், அவர்களுக்கு எதிரான நோக்கும் போக்கும் கொண்டவர்களாக இருந்தவர்கள் அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர்களாகிய கெளரவர்கள் என்ற துரியோதனனாதியோர்.
பாண்டவர்களின் அறிவும் ஆற்றலும், கொள்கை யும் நடத்தையும், பேரும் புகழும் துரியோதனனின் உள்ளத்திலே பொறாமைக் கடலைப் பொங்கி எழச் செய்தன. சகுனியுடன் சேர்ந்து அவன் செய்த சதித்திட்டம் காரணமாக, பாண்டவர்கள் நாட்டை இழந்தனர்; வீட்டை இழந்தனர். காட்டிற்குச் சென்று கடின வாழ்க்கை வாழ்வதற்கும் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையிலும், அவர்கள் தர்மத்தினின்றும் தவறவில்லை. நீதியை விட்டு நீங்கவில்லை; துக்கத்தால் துவழவில்லை; துயரத்தாற்சோரவில்லை.
அதேவேளையில்
நல்வழியில் நடப்பவர்கள் நானாவிதக் கஷ்டங் களுக்கு உட்பட்டேதிருவர்; அத்துடன், காலங் கடந் தாயினும் அவற்றிலிருந்து விடுபட்டும் தீருவர் என்ற உலக இயற்கையை - உயர்ந்த ஒர் உண்மையை - தங்களின் வாழ்க் கையை உதாரணமாகக் காட்டி உலகினர்க்கு விளக்குவதற் காகவே "விதி"க் கடவுள் அல்லல்களுக்கும், அவலங்களுக்கும் தங்களை ஆளாக்கினான், என, தம் பரிதாப நிலைக்குச் சரியான சமாதானம் கூறி நிமிர்ந்து நின்றனர், வெற்றிமாலை சூடி, இறுதியில் நிம்மதியும் கொண்டனர்.
இது சம்பந்தமாக, அகராதியின் உதவியில்லாமலே அனைவரும் விளங்கிக் கொள்ளும் வகையிலே பாரதி Usp-(U
"தருமத்தின் வாழ்வதனைச் சூதுகள்வும் தருமம் மறுபடி வெல்லும்" என்னுமியற்கை மருமத்தை நம்மாலே உலகங்கற்கும் வழிதேடி விதியிந்தச் செய்கை செய்தான். கருமத்தை மேன்மேலுங் காண்போம், இன்று கண்டுண்டோம், பொற்றுத்திருப்போம், காலம் மாறும் தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்,
தனு உண்டு காண்டீவம் அதன் பேர் என்றான்.
என்ற பாடலை உள்ளத்திற் பதிப்போம், தர்மம் வெல்லும். خر

Page 13
இந்துசாதனம் 5 O6
எங்கள் பெயரால் இ6
TI li
வித்தியாயூஷணம், பிரம்மழுநீ ப. சிவான
சங்கல்பம் என்பது உறுதிபூணுதல் ஆகும். திடசங்கற்பம் என இதனைக் கூறுவர். சங்கல்பம் இல்லாமல் எந்த ஒரு கிரியையும் நடைபெறுவதிற் பயனில்லை. இறைசந்நிதியில் நாம் செய்யப்போகும் கிரியையை விளக்கமாகக் கூறி, அதனை என்ன நோக்கத்திற்காகச் செய்கிறோம் என்பதையும் கூறி, இதனை நான் செய்து முடிப்பேன் என்று உறுதி பூணுவதாகச் சங்கல்பம் அமைந்திருக்கும். சங்கல்பத்திலே இவற்றுக்கு அடுத்தபடியாக முக்கிய இடம்பெறுவது காலமும் இடமுமாகும். என்ன நாளில் எந்த இடத்தில் என்பது மிக விரிவாகவும் அழகாகவும் கூறப்படுகிறது. பொருளுணர்ந்து இதனைக் கூறும்போது அதனைச் சுவைத்து இன்புறலாம். அதுமட்டுமல்லாமல் நமது முன்னோர்கள் எவ்வளவுதூரம் வரலாற்று உணர்வு உடையவர்களாக, காலக் கணக்குகளை நுணுக்கமாகப் பேணி வந்தவர்களாக இருந் திருக்கின்றனர் என்பதும், புவியியல் அறிவிலும் சளைக்காத ஞானம் உடையவர்களாகப் பிரதேசங்கள் பற்றிய தகவல்களைத் திரட்டி வைத்திருந்திருக்கிறார்கள் என்பதும் இதன்மூலம் அறிந்து
வியப்புறமுடிகிறது.
கிரியைகள் நடைபெறும் காலமும் இடமும் மிக முக்கியமானவை. (இந்நூலாசிரியர் எழுதிய காலமும் இடமும் கருதிச் செயற்படுவோம் என்ற விரிவான கட்டுரையில் இதன் விளக்கத்தைக் காணலாம். இக்கட்டுரை இதுதான் இந்துமதம்
கோவில்களில் நடைபெறும் கிரியைகளின் விபரம், நோக்க போன்றவற்றைத் தெளிவாக விளங்கிக்கொண்டால்பூரணஈடுப கிடைக்கும். இக்கட்டுரையின் முதற் பக்தி 2009 வைகாசி ே வாசகர்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்:
என்ற நூலில் இடம்பெறுகிறது). அதனால் எந்த இடத்தில் எந்தக் காலத்தில் இக்கிரியையைச் செய்கிறோம் எனக் கூறிக்கொள்வது
i DJt.
இப்போது சாதாரணமாக நாம் அறிந்தவரையில் ஆண்டு, மாதம், திகதி கூறுவதுடன் காலநிர்ணயம் முடிந்துவிடுகிறது. பூவுலகத்தில், ஆசியாக் கண்டத்தில், இலங்கைத் தீவில், யாழ்ப்பாணப் பிரதேசத்தில். என்னும் கிராமத்தில் என்று கூறுவதுடன் இடநிர்ணயம் முடிந்துவிடுகிறது. ஆனால் இங்கே சுருக்கமான முறையிலும், விரிவான முறையிலும் தேவைக்கு ஏற்ற வகையிற் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்தப்படுகின்ற வேறு வேறு வகையான சில சங்கல்ப வாக்கியங்களின் தமிழ்க் கருத்து தரப்படுகிறது.
மமோபாத்த ஸமஸ்த துரித கூடியத்வாரா பூரீ பரமேஸ்வர ப்ரீர்த்யர்த்தம் அஸ்யாம் வர்த்தமானாயாம் சுப திதெள அஸ்ய தேவஸ்ய. அஹம் அத்ய கரிஷ்யே.
என்னால் செய்யப்பட்ட எல்லாப் பாபங்களும் அழிந்து

S2OO9. விரோதி ஆனி0 றைவனுக்கு "இவர்"
ால்கிறார்?
öğöēFůLom B.A (Hons) (GBISIÚILITruiu fromñ)
போவதற்காகவும், பரமேஸ்வரனின் மகிழ்ச்சிக்காகவும் இன்றைய இந்த சுபதினத்தில், இன்ன தெய்வத்தின், இன்ன கிரியையை நான் செய்கிறேன். இது மிகச் சுருக்கமான சங்கல்பமாகும். ஒரு பெரிய திருவிழா அல்லது கும்பாபிஷேகத்தின் உட்பிரிவுகளாயமையும் சிறு கிரியைகள் ஒவ்வொன்றும் தொடங்கும்போது இவ்வாறு சிறு சங்கல்பங்களைச் சிவாச்சாரியார் செய்வது மரபு. ஆனால் ஆரம்பத்தில் கோவில் தர்மகர்த்தா மற்றும் உபயகாரர்கள் ஆகியோரின் பெயர், நட்சத்திரம் முதலியன கூறி, கிரியை நடைபெறும் இடம், நாள், நட்சத்திரம், திதி, கிழமை, பட்சம், மாதம், அயனம், வருடம் என்பன யாவும் கூறிஇந்த சங்கல்பம் நடைபெறும்.
பொதுவாக நாளாந்தம் நடைபெறும் பூஜை, அர்ச்சனை முதலியவற்றிற் பயன்படுத்தப்படும் சங்கல்பம் ஒன்றின் முழுமையான கருத்தை இங்கு பார்ப்போம்.
"இறைவனின் கட்டளைப்படி, முதலாவது பிரமனின் இரண்டாவது பரார்த்தத்திற் சுவேதவராக கல்பத்தில், வைவஸ்த மனுவந்தரத்தில், இருபத்தெட்டாவது கால கட்டத்தில், கலியுகத்தில் முதற்பகுதியில், ஜம்புத் தீவில், பாரத வர்ஷத்தில், பரதகண்டத்தில், மேருமலைக்குத் தென்பாகத்தில் இப்போது நடந்துகொண்டிருக்கும் பிரபவ முதலிய அறுபது வருடத்தில் . என்ற பெயரையுடைய வருடத்தில் . அயனத்திலே . ருதுவிலே . மாதத்திலே . பட்சத்திலே . திதியிலே . நட்சத்திரத்திலே . கிழமையிலே
ம், ஒவ்வொன்றுக்குமுரிய மந்திரம், மந்திரத்தின் பொருள் ாட்டுடன் அவற்றைநிறைவேற்றலாம்; உரிய பலனும் விரைவிற் இதழில் வெளிவந்தது. கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை
அமைகின்ற இன்றைய சுபதினத்திலே . நட்சத்திரத்திற் பிறந்த . பெயரையுடைய இந்த எசமானனுடையதும் (கர்த்தா) அவரது குடும்பத்தினரதும் இக்கிராமத்திலிருக்கும் மக்களதும் சுகநலங் களுக்காகவும் தைரியம், வீரம், வெற்றி, ஆயுள், ஆரோக்கியம், அஷ்ட ஐஸ்வரியங்கள் ஆகியவற்றின் அபிவிருத்திக்காகவும் தர்மம், அர்த்தம், காம்யம், மோட்சம் (அறம், பொருள், இன்பம், வீடு) என்னும் நான்கு புருஷார்த்தங்களின் சித்திக்காகவும், சந்தான விருத்தியின் பொருட்டும் தெரிந்தோ தெரியாமலோ சென்ற பிறப்புக்களிலும் இப்பிறப்பிலும் செய்த பாவங்கள் அகலுவதற்காகவும். இடத்திலுள்ள. என்ற பெயரையுடைய இறைவனின். என்ற கிரியையைக் குருமுகமாக நான் செய்கின்றேன்.
இங்கு இரு வகையான சங்கல்பங்கள் பார்க்கப்பட்டன. சங்கல்பத்தில் முக்கியமாக மூன்று பகுதிகள் இருக்கும். ஒன்று "நான் இன்ன பலனை உத்தேசித்து இந்தக் கிரியையைக் குருமூலமாகச் செய்யப்போகிறேன்" என்று திடமாக உறுதி
கொள்ளுதல்.
ーー>

Page 14
இந்துசாதனம் 5,O
எங்கள் பெயரால் இறைவனுக்கு"
அதன் அங்கமாக வரும் மற்ற இரு பகுதிகளும் காலம் பற்றியதும் இடம் பற்றியதுமாகும். "இன்ன காலத்தில் நான் செய்கிறேன்"என்பதை வருடம், அயனம், மாதம், பட்சம், திதி, நட்சத்திரம், வாரம் இவற்றைச் சொல்லிச் சுருக்கமாக நிறைவு செய்தல் முன்பு காட்டப்பட்ட சங்கல்பத்தில் காணப்படும் ஒருவகை முறை. இதன் விரிவான முறையில் உலகின் உற்பத்தி முதல் இன்றுவரையான காலப்பகுதிகளைச் சுவைபட வர்ணித்துக் கூறுதல்.
இதேபோல சங்கல்பத்தின் மூன்றாவது பகுதி, கிரியை நடைபெறும் இடத்தைப் பற்றியது. "எந்தச் சுவாமியின் சந்நிதியில்" எனச் சுருக்கமாகச் செய்யும் முறையும் உண்டு. அண்டங்கள் யாவற்றையும் வர்ணித்துக் கூறி அதனுள்ளே நமது கிராமம் வரை கூறிக்கொண்டு வருதல் விரிவான முறையாகும். இந்த முறையிற் சங்கல்பம் சொல்லிமுடிக்கச் சுமார் ஒருமணிநேரம் தேவை. ஆனால் அதன் கருத்தை விளங்கிக் கூறும்போது சுவையான இலக்கியத்தைப் படிப்பதுபோல கற்பனை வளமும் சொல்லாட்சியும் சுவைத்து மகிழத்தக்கதாக இருக்கும். அந்த விரிவான மஹா சங்கல்பத்திலும் சிலபகுதிகளை இங்கு பார்க்கலாம்.
ஓம். பூநீபகவானும் மஹாபுருஷனும்பூரீமத் ஆதிநாராயண மூர்த்தியும் மனோதீதமான அளவிலாற்றலோடு சலனமின்றி இருக்கின்றவரும் அனந்தகோடி சூரியப்பிரபையோடு கூடினவரும் ஆகிய பூரீ மஹாவிஷ்ணுவுடைய சுய மாயையாற் கற்பிக்கப் பட்டனவும் பெரும் ஜலப்பிரவாக மத்தியிலே சுற்றுகின்றனவும் அநேக வடிவுடையனவும் ஆகிய அநேககோடி பிரம்மாண் டங்களிலொன்றானதும்,
வெளிப்படாத சமநிலைக்களமுடைய பிரகிருதியானது மஹான், அகங்காரம், பிருதுவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் முதலிய ஆவரணங்களாற் சூழப்பட்டதுமாகிய
இந்தப் பெரிய பிரமாண்ட கண்ட மத்தியில் எல்லாவற்றையும் அதிட்டிக்கும் ஆதிவராகத்தின் கொம்பிலே உலகிற்கு மூலஸ்கந்தமாகிய ஆதாரசக்தி ஆதி கூர்மங்களும் அனந்த, வாசுகீ, தக்ஷ, சங்கபால, குளிக, பத்ம, மஹாபத்ம, கார்க்கோடகர்களாகிய அட்டமஹா நாகங்களும்
ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புஷ்பதந்தம், சார்வபெளமம், சுப்பிரதீகம் என்னும் அட்டமா யானைகளும் ஆகிய இவற்றின்மேல் வைக்கப்பட்டுள்ளதும்
அதலம், விதலம், சதலம், தலாதலம், ரசாதலம்,மஹாதலம், பாதாளம் என்னும் எழுலகங்களுக்கு மேலுள்ளதும்
ONON ON ON ON
புனிதமான எண்ணங்கள் புனிதமானவையா பெறும் தம்மிடம் பணமும் அதிகாரமும் இ6 நல்லது செய்ய வேண்டும் என முடி வெற்றியடைவீர்கள். நல்ல எண்ணங்க கொடுக்கும்.
ONONONONONG

S2OO9 விரோதி ஆனி0 இவர்" என்ன சொல்கிறார்?
பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மஹாலோகம், ஜனலோகம், தபோலோகம், சத்தியலோகம் என்னும் ஏழுலகங்களுட் கீழுள்ள பூலோகமும்
சக்கரவாள சைல வலய நடுவிலே சூழப்படுவதால் பெரிய நாளம்போன்ற ஆதிசேடனது ஆயிரம் முடி வரிசைகளில் அலங்காரமாகத் தாபிக்கப்பட்டுள்ளதும் திக்கு யானைகளின் துதிக்கைகளால் தூக்கப்பட்டுள்ளதும் புறத்தே பேரிருளாற் சூழப்பட்டதும் அகத்தே சூரிய கிரணப் பிரகாச முடையதும் அம்புவதி, நயனவதி, சித்தவதி, காந்தர்வவதி, காஞ்சிவதி, அளகாவதி, அசோகவதி என்னும் புண்ணிய புரிகளால் மேலிடப்பட்டுள்ளதும்
இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் என்னும் லோகபாலகர்களால் அதிட்டிக்கப் பட்டதும்
சக்கரவாளகிரியால் சூழப்பட்டதும் உப்பு, கருப்பஞ்சாறு, தேன், நெய், தயிர், பால், சுத்தஜலம் என்னும் ஏழு சமுத்திரங்களாற் சூழப்பட்டதும்
ஜம்பு, ப்லக்ஷம், சால்மலி. குசம், கிரவுஞ்சம், சாகம்,புஷ்கரம் என்னும் ஏழு தீவுகளோடு விளங்குவதும், மஹேந்திரம், மலயம், சையம், சுத்தி, ருகூடிம், விந்தியம், பாரியாத்திரம் என்னும் ஏழு குலமலைகளோடு விளங்குவதும், மதங்கம், ஹிரண்யசிருங்கம், மாலியவான், கிஷ்கிந்தம், ருஷ்யசிருங்கம் என்னும் ஐந்து மலைகளினால் அதிட்டிக்கப்பட்டதும், இமயம், ஏமகூடம், சுதாசலம், நிசாசலம், சுவேதாசலம், சுநாசலம், சிருங்கவதம் என்னும் ஏழு பெருமலைகளினால் அதிட்டிக்கப்பட்டதும்,
இந்திரக்ண்டம், கசேருகண்டம், தாமிரகண்டம், கபத்திகண்டம், நாககண்டம், செளம்யகண்டம், கந்தர்வகண்டம், சரபகண்டம், பரதகண்டம் என்னும் ஒன்பது கண்டமயமானதும்
மஹாமானசத் தாமரைவடிவான ஐம்பது கோடியோசனை விசாலமுடைய பூமண்டல நடுவிலே, சுமேரு, நிஷதம், ஏமகூடம், சந்திரகோணகூடம், மஹேந்திர கூடம், விந்த்யாசலம், சுவேதாசலம் என்பவற்றுக்கும், ஹரிவர்ஷம், கிம்புருவர்ஷம் என்பவற்றுக்குத் தெற்கே கர்மபூமியில், மது வன குலம் என்பவற்றுக்குத் தென்புறத்திலே, பொதியமலைக்கு வடக்கே, தென்சமுத்திரத் திற்கும் இமயமலைக்கும் நடுவே உள்ளதும், ஒன்பது யோசனை அளவுகொண்டதும், பாரதம், கிம்புருஷம், ஹரி, இளாவிருதம், குரு, பத்ராஸ்வம், ரம்யம், ஹிரண்மயம், கேதுமாலம் என்னும் ஒன்பது வர்ஷங்களில் ஒன்றாகிய பாரத வர்ஷத்திலே, ஸ்வர்ணப்ரஸ்தம்,
-Ge. DNONSON ON ON ON Od
எண்ணங்கள்
க இருந்தால் அவை நிச்சயம் நிறைவேறும்; முழுமை bலையே என யாரும் நினைக்க வேண்டும். ஏதாவது வெடுத்தால் நீங்கள் அந்த விரதத்தில் நிச்சயம் ளின் சக்தி உங்களுக்குத் தேவையான பலத்தைக்
-ழுநீசத்யசாயிபாபா
DNJONONJ ONJ ONJONO
4

Page 15
இந்துசாதனம் 5. O6 எங்கள் பெயரால் இறைவனுக்
சந்த்ரம், சுபித்தி, ஆவர்த்தகரமணம், மதங்கஜாவரணம், மஹ்வாரண, பாஞ்ச ஜன்யவகம், சிங்களம், இலங்கை என்னும் ஒன்பது கண்டங்களாகப் பிரிக்கப்பட்ட பாஸ்கர கூேடித்ரத்திலே, தண்டகாரண்யம், விந்த்யாரண்யம், வீகூடிாரண்யம், நைமிசாரண்யம், கதளிகாரண்யம், பதரிகாரண்யம்,சம்பகாரண்யம், நஹாஷாரண்யம், காமிகாரண்யம், வடாரண்யம், தேவதாரண்யம் என்னம்பதினொருவனங்களோடு கூடியதும்,
அங்கம், வங்கம், கலிங்கம், காம்போஜம், கெளசலம், காஸ்மீரம், கசூரம், கர்ஜுரம், பர்ப்பரம், மருதம், குரு, காந்தாரம், செளவீரம், செளராஷ்டிரம், மத்ரம், மகதம், ஆந்திரம், நிஷதம், சிந்து, தசார்ணம், மாளவம், நேபாளம், பாஞ்சாலம், வங்காளம், மலையாளம், சோழம், கேரளம், சிங்களம், கௌடம், கோடம், கீகடம், கர்நாடகம், கரகாடம், மரகாடம், பாநாடம், பாண்டியம், புளிந்தம், குந்தம், திரிகர்த்தம், லாவந்தி, அவந்தி, விதேயம், விதர்ப்பம், கேகயம், கோசலம், கொங்கணம், டங்கணம், ஹணம், மற்சம், வற்சம், சகலம்பாகம், பாஹ்லிகம், யவனம், சாளுவம், சப்பன்னம் என்னும் ஐம்பத்தாறு தேசங்களாகிய பலவித பாஷைகளையுடைய விசேடித்த இராச்சியங்களினாலே அலங்கரிக்கப்பட்டதும்
ஸ்வாம்யவந்தி குருக்ஷேத்திரத்திலே, கங்கை, யமுனை, துங்கபத்ரை, சந்த்ரபாகை, ப்ரணிதை, பம்பை, பாபப்ரசமணி, பயோகூழி, பல்குனி, பவநாசினி, பீமரதி, சரஸ்வதி, குமுத்வதி, சிந்துநதி, அர்ஜுனி, கிருஷ்ணவேணி, பிநாகினி, கோதாவரி, மலாபஹாரி, தாம்ரபர்ணி, காவேரி, வேகவதி, வஞ்சுளி, சரயுமுதலிய ஆயிரம் நதிகளோடு விளங்குவதும்,
அயோத்தி, மதுரை, மாயா, காசி, காஞ்சி, அவந்திகா, துவாரகா முதலிய முத்திநகரங்களோடு கூடியதும் சுநகம், வற்சநகம், குல்மநகம், சவாமிநகம், மஹாமானச சரோருஹ வடிவான புஷ்கரத்யம், திரிகூடம், கைலாசம் என்னம் இவைகளின் நடுவாகிய பூமண்டலத்தில்,
பாற்கடல் நடுவே ஆதிசேடனது படமாகிய மஞ்சத்திற் சயனிக்கும் மஹாவிஷ்ணுவினுடைய உந்திக் கமலத்திற் தோன்றியவரும் சகல வேத நிதியாயுள்ளவரும்,
சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமார் முதலிய மகான்களுக்கும் இந்திரன் முதலிய முப்பத்து முக்கோடி தேவர் திர்யக் மனுடர் மலை முதலிய எண்பத்து நான்கு நூறாயிரம் யோனிபேத சராசரங்களுக்கும் அனேககோடி பிரம்மாண்டங் களுக்கும் ஆதாரபூதமான சிருஷ்டியில் முயன்றவரும், இரண்டு. பரார்த்தம் சீவிப்பவருமான பிரம்மாவின் முதற் பரார்த்தமாகிய ஐம்பது வயது கழிந்தபின் இரண்டாம் பரார்த்தமாகிய ஐம்பது வருடத்தின் முதலாம் வருடத்திலே முதலாம் மாதத்திலே முதலாம் பகூடித்திலே முதலாம் நாளிலே பகலிலே இரண்டாம் சாமத்திலே
ON KONSINON KONKON சங்காபிஷேக ஆலயங்களில் இறைவனுக்குச் சங்கினால் அபிஷேகம் செய்தபி பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவக் குணங்க ஆராய்ந்த கலிபோனிய நாட்டு விஞ்ஞானிஒருவர் தன் ஆராய்ச்
ON KONKON KON KONKON
15

2OO9. விரோதி ஆனி0 த "இவர்" என்ன சொல்கிறார்?
மூன்றாவது முகூர்த்தத்திலே பதின்மூன்றாம் நாழிகையிலே நாற்பத்திரண்டு வினாடி சென்று நாற்பத்துமூன்றாம் வினாடியிலே முதற்பிராணன் தொடங்கும் காலத்திலே,
பார்த்திவம், அனந்தம், கூர்மம், பதுமம், வராகம், சுவேதவராகம், பிரளயம் என்னும் ஏழு கற்பங்களுள் சுவேதவராக கற்பத்திலே,
சுவாயம்புவர், சுவாரோசிஷர், உத்தமர், தாமசர், ரைவதர், சாகூரஷர், வைவஸ்வதர், சூரியசாவர்ணி, பிரமசாவர்ணி, உருத்திரசாவர்ணி, இந்திரசாவர்ணி, அக்கினிசாவர்ணி, ரெளச்சியர், பெளச்சியர் என்னும் பதினான்கு மநுக்களின் காலமாகிய மன்வந்தரங்களுள் ஏழாவதாகிய வைவஸ்வத மன்வந்தரத்திலே,
இருபத்தேழு சதுர்யுகம் கழிய இப்போது நிகழும் இருபத்தெட்டாவது சதுர்யுகத்திலே, பதினேழு லக்ஷத்து இருபத்தெண்ணாயிரம் வருடமுடைய கிருதயுகம் கழிய, பன்னிரண்டு லக்ஷத்துத் தொண்ணுாற்றாறாயிரம் வருடமுடைய திரேதாயுகமும் கழிய, எட்டுலக்ஷத்து அறுபத்துநாலாயிரம் வருடமுடைய துவாபரயுகமும் கழிய, நாலுலகூடித்து முப்பத்தீராயிரம் வருடமுடைய நிகழ்வதான கலியுகத்திலே, ஐயாயிரத்தொரு வருடம் கழிய ஐயாயிரத்திரண்டாம் வருடமும்
மற்சம், கூர்மம், வராகம், நரசிங்கம், வாமனம், பரசுராமம், தசரதராமம், பலபத்திரராமம், பெளத்தம், கல்கி என்னும் பத்து அவதாரங்களுள்ளே ஒன்பதான பெளத்த அவதாரத்திலே,
யுதிஷ்டிர, விக்கிரம, சாலிவாகன, விஜயாபிநந்தன, நரசிங்கத் துருபத, நாகார்ச்சுன சகர்களாகிய ஆறு சக்கரவத்தி களின் அப்தங்களுள்ளே மூன்றாவதாகிய சாலிவாகன சகாப்தத்திலே,
ஆயிரத்தெண்ணுாற்றிருபத்திரண்டு வருடங்கழிய நிகழ்கின்ற ஆயிரத்தெண்ணுாற்றிருபத்து மூன்றாம் வருஷமாகி வழங்குகின்ற செளரமானம் சாந்திரமானம் சாவனமானம் நாகூடித்திரமானம் பார்ஹஸ்பத்தியமானம் என்னும் காலவகை களாய் நடைபெறும் பிரபவமுதலிய அறுபது வருஷங்களுள்ளே
மூன்றாம் விம்சதியான - சௌரமான - சார்வரி என்னும் பெயருடைய வருஷத்திலே தகூழிணாயனத்திலே சரத் ருதுவிலே ஐப்பசி மாதத்திலே பூர்வபக்ஷத்திலே
一>
JCS-NONCSNCS-NCSJO த் தீர்த்தம் ன் அடியார்களுக்கு வழங்கப்படும் தீர்க்குத்தில் ஏற்புவலிஉeபட * காணப்படுகின்றன. தீர்த்தத்தை விஞ்ஞான ரீதியாக நன்கு சிநூலொன்றில் இதைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். -
செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன்
ONONONON ONO

Page 16
இந்துசாதனம் 5O6
எங்கள் பெயரால் இறைவனுக்கு
வியாழக்கிழமையோடு கூடியதும் விசாகநகடித்திரத்தோடு கூடியதும் ஆயுஷ்மான் யோகம் பாலவ கரணம் துலா லக்னம் முதலிய புண்ணிய விசேஷங்களோடு கூடியதும் ஆகிய துவிதியை என்னும் புண்ணிய திதியிலே அநாதியே அவித்தையின் தொடர்பால் நிகழுகின்ற இந்தப் பெரிய சம்சாரசக்கரத்திலே பலவிதமாகிய கன்மகதிகளாற் பலவிதமாகிய யோனிகளிற் பின்னும் பின்னும் பலதரம் பிறந்து யாதோ ஒரு புண்ணிய கர்ம விசேஷத்தால் இப்போது மானுட உடம்பில் பிறவி விசேடத்தை அடைந்துள்ளேன்.
கோத்திரத்தில். நக்ஷத்திரத்தில். ராசியில் பிறந்த. பெயரடைய எனது பிறவிப் பயிற்சியால் உடம்பெடுத்த நாள்முதல் இந்தக்கணம் வரையும் இடையில் நிகழுகின்ற பால்யம், கெளமாரம் யௌவனம் வார்த்திகம் என்னும் பருவங்களில்,
மனம் வாக்கு காயம் என்னும் திரிகரணங்களாலும் செய்யப்படும் வினைகளால், சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி என்னும் அவஸ்தைகளில், காமம் குரோதம் லோபம் மோகம்மதம் மாற்சரியம் என்னும் இவைகளினாலே, மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஞானேந்திரியங்களினாலும் வாக்கு பாதம் பாணி பாயு உயஸ்தம் என்னும் கன்மேந்திரியங்களாலும் அறிந்தும் அறியாமலும் என்னாற் செய்யப்பட்ட புத்திபூர்வமாக விளங்குகின்ற பிரமஹத்தி கட்குடிபொற்களவு முதலிய மகாபாதகங்களும் உபபாதங்களும்,
அறியாமையினால் ஒருதரம் செய்யப்பட்டவையும் அறிந்து ஒருமுறை செய்யப்பட்டவையும் அறிந்தும் அறியாமலும் ஒருமுறை செய்யப்பட்டவையும் மிகப்பயின்று செய்யப்பட்டவையும் இடையீடின்றிப் பயிற்சியாகச் செய்யப்பட்டவையும் நெடுங்காலம் பயிலப்பட்டவையும் ஒன்பதும் ஒன்பது வகையும் பலவும் பலவகையும் ஆகிய எல்லாப்பாவங்களையும்,
உடனே தீர்த்தற்பொருட்டு ரத்னாகரம் மஹோததி ஆகிய இரு சமுத்திரங்களுக்கு நடுவே கந்தமாதன பர்வதத்திலே பாஸ்கர க்ஷேத்திரத்திலே காசி விஸ்வேஸ்வரர் ராமநாதர் சேதுமாதவர் காலபைரவர் சீதா லக்ஷமண பரத சத்ருக்ன ஹனுமாரோடு கூடிய ராமச்சந்திரர் என்பவர்களின் சந்நிதியில்
சிவகாமசுந்தரரி சமேத சிதம்பரேஸ்வரர் சந்நிதியில் , ஹரிஹரர் முதலிய பல தேவர்களின் சந்நிதியில், தவப்பிரா மணர்களின் சந்நிதியில்,
இயன்ற நியமத்தோடும் இயன்ற வகையில் இயன்ற திரவியங்களோடு தர்மசாஸ்திரங்களிற் சொல்லியபடி சபையினரை வழிபடுதலை முன்னிட்டு அச் சபையாருபதேசித்தபடி சர்வ பாபப் பிராயச்சித்தமாக சர்வ பாபங்களும் ஒழியும்பொருட்டு பூரீராம தனுஷ்கோடிஸ்நானத்தை நான் செய்கின்றேன்.
இங்கு தடித்த எழுத்துக்களிற் காட்டப்பட்டவை மாற்றத்துக்குரியவை. உதாரணத்திற்காக ஒரு குறிப்பிட்ட நாளிலே சேதுசமுத்திர ஸ்நானம் என்னும் கிரியையைச் செய்வதற்காகச் சொல்லப்பட்ட சங்கல்பம் இது. இதேபோல என்ன கிரியையை எந்த நாளிலே செய்யப்போகிறோமோ அவற்றைப் பொருத்தமாக அந்தந்த இடத்திற்சொல்லவேண்டும்.

2009 விரோதி ஆனி0 "இவர்" என்ன சொல்கிறார்?
இந்த சங்கற்பத்தில் மிகப்பல விடயங்கள் பற்றி நாம் மனங்கொள்ளலாம்.
1. நாம் ஆலயங்களிலே கிரியைகள் ஆற்றத் தொடங்கும்போது திரிகரணங்களாலும் இறைவனை நாடி அவனையே சிந்தித்து மன ஒருமைப்பாடு கொண்டு அதன்பின் இச்செயலை நான் செய்துமுடிப்பேன் என்று உறுதிகூறி சங்கல்பம் செய்வதன் அவசியம்புரிந்துகொள்ளப்படுவது.
2. அந்த சங்கல்பத்திலே என்ன கூறப்படுகிறது என்பதைப் புரிந்து
கொள்ளுதல்.
3. அங்கு பயன்படுத்தப்படும் சொற்செட்டான வார்த்தைப் பிரயோகங்களும் அழகான அடுக்குமொழிகளும் அற்புதமான கற்பனைவளமும் சுவைத்தின்புறத்தக்கன.
4. புவியியல் ரீதியாக, உலக அமைப்பும் அதன் உட்பிரிவுகளும் சொல்லப்படும் முறை வியப்போடு உற்றுநோக்கத்தக்கவை. அதுமட்டுமன்றிப் புராண இதிஹாசங்களிற் சொல்லப்பட்ட இத்தகைய விடயங்களையும் புவியியல், விஞ்ஞான, வரலாற்றாசிரியர்கள் கூறியிருக்கும் கருத்துக்களையும் ஒப்பிட்டு ஆய்வுசெய்தல்.
5. காலம் பற்றிய சிந்தனை எவ்வாறு நம் முன்னோர்கள் உள்ளத்தில் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது என்பதை அறிவ தோடு பருவகாலங்கள், அதன் உட்பிரிவுகள் இவைபற்றிய விரிவான சிந்தனைகள் அவதானிக்கத்தக்கவை.
6. இவற்றோடு தத்துவார்த்தமான இன்னொரு சிந்தனையும் நமது உள்ளத்தில் துளிர்விடவேண்டும். நாம் ஒரு சிறிய கிராமத்தில் இருக்கிறோம். அந்தக் கிராமத்தின் பெயரையும் விரிவான சங்கல்பங்களின்போது சொல்கிறோம். அந்தக் கிராமத்தை அடுத்த நகரம், மாகாணம், நாடு, கண்டம் எனவிரிந்துகொண்டு போகின்ற இந்தப் பிரபஞ்சம் எனும் பெரும் அண்டத்தை இங்கு நாம் மனக்கண்ணிற் காண முடிகிறது. நாம் இந்தப் பேரண்டத்தின் ஒரு துளியில் நிற்கிறோம் என எண்ணி நமது சிறுமையையும் ஆண்டவனின் பெருமையையும் கருத வேண்டும். இதேபோல நமது வாழ்நாள் ஆகக்கூடியது நூறு ஆண்டுகள். இந்தச் சங்கல்பத்திலே சொல்லப்படுகின்ற காலக்கணக்குகள் - யுக யுகாந்திரமாக இந்தப் பிரபஞ்ச இயக்கத்தை நடத்தும் ஆண்டவனின் மகத்துவம்தான் என்னே என்ற வியப்பும் குறிப்பிடத்தக்கதன்றோ?
கலசபூஜை
பூர்வாங்கக் கிரியைகளில் அடுத்ததாக நாம் கவனிக்கத்தக்கது கலசபூஜை, கலசம் என்பது பூஜையில் பயன்படுத்தப்படும் நீர்ப்பாத்திரம். அதனுள் இருக்கும் நீரைப் பூஜையில் அடிக்கடி பயன்படுத்தவேண்டிய தேவை சிவாச்சாரியருக்குண்டு. அதனால் அதனைத் தெய்வீக நிலைக்கு உயர்த்துதல் இக்கிரியையின்போது நடைபெறுகிறது.
கலசம் சந்தனம், குங்குமம், அட்சதை, புஷ்பம் என்பவற்றால் அலங்கரித்து "கலசஸ்ய முகே விஷ்ணு." என ஆரம்பிக்கின்ற ஒரு
H

Page 17
இந்துசாதனம் 5. O6
ளங்கள் பெயரால் இறைவனு
மந்திரம் இங்கே ஜபிக்கப்படுகிறது. கலசத்தின் வாயில் விஷ்ணுவும், கழுத்தில் ருத்ரனும், அடியில் பிரம்மாவும், நடுப்பகுதியில் தாய்த்தெய்வங்களும், உள்ளே ஏழு சமுத்திரங்களும், பூமியின் ஏழு தீவுகளும், நால்வேதங்களும், குடிகொண்டிருப்பதாகப் பாவனை செய்து அங்கே கங்கை, யமுனை முதலிய சப்த நதிகளையும் வந்து சாந்தித்தியம் செய்யும்படி வேண்டுதல் செய்வதாக இம் மந்திரம் அமைகிறது.
கல்லிலே கடவுளைக்காணும் பாவனைதான் நமது வழிபாட்டின் அடிப்படை. அதேநிலையில் இந்தக் கலசத்தில் உள்ள நீரின் புனிதமும் மகத்துவமும் இப்போது புரிந்துகொள்ளத்தக்கதன்றோ? விரிந்த நிலையில் கிரியைகள் நிகழும்போது இக்கலச பூஜையின் தொடக்கத்தில் கலசத்தில் நீர் நிரப்பும்போதும் ஒரு அழகிய வேதமந்திரம் சொல்லப்படுகிறது. "ஆபோ வா இதகும்." என்னும் இந்த மந்திரம் தண்ணிரின் மகத்தவத்தைக் கூறுகிறது.
இந்த உலகம் முழுவதும் தண்ணிரினாலேயே நிலைபெற்றிருக் கிறது. அமிர்தமயமானது தண்ணிர், என்று அழகாக வர்ணிக்கிறது இந்த வேதமந்திரம்.
கண்பா பூஜை
கண்டா என்பது மணி மணியோசை மங்கலமானது. மங்கல நிகழ்வுகளிலும், பிரார்த்தனைகளிலும் மணி அடிக்கப்படுகிறது. கிரியைகளின் ஆரம்பத்தில் கைமணிக்குச் சந்தன, குங்கும அலங்காரங்கள் செய்து, அதன் மேற்பகுதியிலிருக்கும் இடபத்தின் அங்கங்களில் பிரம்மா முதலிய தேவர்களும், மணியின் நாக்கிலே சரஸ்வதியும், அதன் வாய்ப்பகுதியில் நாதத்துவமும் இருப்பதாகப் பூசித்தபின் "தேவர்கள் வருவதற்காகவும், அசுரர்கள் அகலுதற் காகவும் இந்த மணியை அடிக்கிறேன்" என்ற சுலோகத்தைச் சொல்கிறார்கள்.
தீபழஜை
பம் மஹாலட்சுமியின் வடிவம். தீப ஒளி இருக்குமிடம்
ly. ஒ (5
ONONONON ONON
(9,60L
விழாக்கள், புண்ணிய காலங்கள் நிகழும்போெ ஆராதனைகள் செய்கின்றார்கள். இதன் கருத்து யாது? பேராற்றல் வாய்ந்த நித்திய வஸ்துவை நாம் என்றும் மற காட்டுதற்காகத்தான் மனிதன் தனதாற்றலைக்கொண்டு ஒ உடுப்பனவற்றைக் கடவுளுக்கும் அர்ப்பணஞ் செய்கின் அர்ப்பணங்கள்செய்ய எல்லோருக்கும் வசதிகள் கிடை ஆலயங்கள் பொதுவாக அமைக்கப்படலாயின.
ONONONONONO

2OO9 விரோதி ஆனி0
த "இவர்" என்ன சொல்கிறார்?
தெய்வீகமானது. பூரணை நாட்களிற் பெண்கள் பலர் சேர்ந்து திருவிளக்குப் பூஜை எனத் தீப பூஜை செய்யும் மரபும் இப்போது உண்டு. சாதாரணமாகக் கிரியைகளின் ஆரம்பத்தில் லட்சுமீகரத்தை வேண்டி சிவாச்சாரியர் குத்துவிளக்கிற்குச் சந்தனம்,குங்குமம் இட்டுப்புஷ்பம் சாத்தி வழிபாடு செய்கின்றார்.
"எமது எதிரிகள் தொலைந்துபோய் சுபம், மங்களம், ஆரோக்கியம், செல்வம் ஆகியவை விருத்தியாவதற்காக இந்த மங்கள ஜோதியை வணங்குகிறேன்"எனப்பிரார்த்திக்கப்படுகிறது.
வருணகும்பபூஜை, புண்யாக வாசனம்,பஞ்சகவ்யபூஜை
இவை பூர்வாங்கக் கிரியைகளின் நிறைவாக, விரிவாக நிகழும் ஒன்றோடோன்று தொடர்பான கிரியைகள் ஆகும். வருணன் வேதகாலம் முதல் ஆகமக் கிரியை மரபுகளின் காலம்வரை இந்துக்களின் வாழ்க்கையிற் பெறும் முக்கியத்துவமும், அவனது அதிஷ்டானத்திலுள்ள தண்ணிர் இங்கு பெறும் சிறப்பும், புண்யாக வாசனத்திற் சொல்லப்படும் வேத மந்திரங்களிற் காணப்படும் அதியுன்னதமான சமூக விழுமியக் கருத்துக்களும் தனியான - விரிவான விளக்கத்திற்குரியன. பசுவுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவமும், பசுவின் பயன்களான ஆணைந்து எனப்படும் பஞ்சகவ்யத்தின் சிறப்பும் அத்தகையனவே. அவை தனியாக விபரிக்கப்படும்.
எனவே, ஆலயத்திற்குச் சென்றோம். பணத்தைக் கொடுத் தோம், பெயர் - நட்சத்திரத்தைச் சொன்னோம். யாவற்றையும் அர்ச்சகரிடம் பொறுப்புக் கொடுத்துவிட்டு நடப்பதைச் சிவனே என்று பார்த்திருந்தோம் என்றில்லாமல் வ்கு நடக்கும் கிரியைகளுடன் ஒன்றி லயித்துப் பயன்பெ ஃ அதற்கு இம்முயற்சி சிறிதேனும் பயன்தருமா நலமே என்னும் கருத்தோடு அமைகின்றோம். జెన్రీ
குறிப்பிட்டதுபோல புண்ணியாக வாசனம்:Sமுதலிய யகள் பற்றியும் கிரியைகளின் நிறைவாக அமையும் ஆசீர்வர்க் என்பது பற்றியும் பார்க்கலாம். حالر
O O
56
நல்லாம் மக்கள் ஆலயங்கட்குச் சென்று, காணிக்கை வழங்கி
சர்வ உலகங்களையும் சீவராசிகளையும் படைத்த அந்தப் வாது சிந்திக்கின்றோம். நன்றியறிதலுடையோம் என்பதைக் அணுவைத்தானும் அசைத்துவிட இயலாது. நாம் உண்பன றோம். இல்லங்களிலிருந்து கடவுளுக்கு ஆராதனைகள் பது அரிது. ஆகையாற்றான் யாவருஞ் சென்று வணங்க
- ஜெகத்குரு முரீ சங்கராச்சாரிய சுவாமிகள்.
NON ONONONONO

Page 18
இந்துசாதனம் 5. O6
மாணவச் செல்வங்களே,
வணக்கம். செய்வதற்கு அருமையான செயல்களைச் செய்ய வல்லவரே பெரியோர் என்றும், அத்தகைய செயல்களைச் செய்யமாட்டாதவர்கள் சிறியோர் என்றும் திருவள்ளுவர் கூறுகின்றார்.
"செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்"
என்ற26ஆவது குறளை என்றும் நினைவில் வைத் திருங்கள், அரிய செயல்களைச் செய்து பெரியோராக நீங்கள் புகழ் பெறுவதற்கு இப்போதிருந்தே முயற்சி செய்யுங்கள்.
மாணவர்களாகி நீங்கள் சிறு வயதிலிருந்தே சமய அறிவைப் பெற்றுக்கொள்ள வேண்டும்; சமய வாழ்க்கை வாழவேண்டும். சமய அறிவைத் தேடிப் பெறுவதை ஊக்குவிப்பதற்காகவே சமய அறிவுப் போட்டியை நடத்துவதற்கு நாம் தீர்மானித்தோம். சென்ற இதழில் ஐந்து வினாக்களை வெளியிட்டு, நீங்கள் செய்யவேண்டியவை என்ற தலைப்பிலே கீழ்க் காண்பவற்றைக் குறித்திருந்தோம்.
(அ) வெள்ளைத் தாளிலே ஒவ்வொரு கேள்வியையும்
அதற்குரிய பதிலையும் எழுதுக. (ஆ) கேள்வியும்பதிலும் உங்கள் சொந்தக் கையெழுத்திலேயே
எழுதப்படவேண்டும். (இ) விடைகளின் முடிவில் உங்கள் பெயர், முகவரி, படிக்கும் வகுப்பு, பாடசாலை ஆகியவை எழுதப்படவேண்டும். (ஈ) விடைத்தாளில் உங்கள் கையொப்பமும் உங்கள் வகுப்பாசிரியர் அல்லது அதிபரின் கையொப்பமும் இடப்படவேண்டும்.
ஆனால், பலர் இவற்றைக் கவனித்துச் செயற்பட்டதாகத் தெரியவில்லை; முற்றிலும் சரியானவிடைகளும் கிடைக்கவில்லை. "இந்துசாதனம்" இதழ்களில் வெளியாகும் கட்டுரைகள், கவிதைகள், தகவல்களை வாசித்தால், வினாக்களுக்குரிய விடைகளை அறியமுடியும். உங்கள் கையெழுத்து அழகாக இருக்க வேண்டும். எழுத்துப்பிழை, சொற்பிழை போன்றவை இருக்கக் கூடாது. நீங்களே விடைகளை எழுதவேண்டும். உங்களுக்காக வேறுயாரும் எழுதக்கூடாது. இவற்றை உறுதிப் படுத்துவதற் காகவே உங்கள் வகுப்பாசிரியர் அல்லது அதிபரின் கையொப்பம் இடப்படவேண்டும். என்றும் குறிப்பிட்டிருந்தோம்.
சென்ற இதழில் வெளிவந்த வினாக்களையும் விடைகளையும் தருகின்றோம்.
1. விநாயகரின் பெண் உருவம் (விநாயகி) காணப்படும்
இடங்களைத் தருக. விடை:ஜபல்பூர் அருகிலுள்ள பீராகோட், சுசீந்திரம்,
திருவண்ணாமலை
2. ஆற்று மண்ணால் லிங்கம் அமைத்து ஆவின் பாலால்
அபிஷேகம் செய்து, தினமும் பூசைசெய்து முத்தி அடைந்த நாயனார் யார்?
 

2O09
பர் பக்கம்
விடை சண்டேஸ்வர நாயனார்.
3. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் முதன்முதலிற் பாடிய
தேவாரத்தை வரிக்கிரமமாக எழுதுக.
விடை:
தோடுடைய செவியன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக் காடுடைய சுடலைப்பொடியூசியென்னுள்ளங்கவர்கள்வன் ஏடுடைய மலரான்முனை நாட்பணிந்தேத்தவருள்செய்த பீடுடையபிரமாபுரமேவிய பெம்மானிவனன்றே.
4. பூநீலழரீ ஆறுமுகநாவலர் அவர்களுடைய தாய் தந்தை
பெயர்களை எழுதுக.
விடை சிவகாமி, கந்தப்பிள்ளை
5. வண்ணை வைத்தீஸ்வரன் கோவிலின் பரிவாரக்
கோவில்கள் எவை?
விடை வேம்படிப் பிள்ளையார் கோவில், கற்கட்டு வைரவர் கோவில் , வண்ணை மேற்கு ஐயனார் கோவில், பத்திரகாளி கோவில், பண்ணை முத்துமாரி அம்மன் கோவில்,
முற்றிலும் சரியான விடைகள் கிடைக்காதபடியால் யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை.
இந்த மாதத்திற்குரிய கேள்விகளைத் தருகின்றோம். 2009ஆம் ஆண்டில் தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் வெளியான "இந்துசாதனம்" இதழ்களில் இவற்றுக்குரிய விடைகளைத் தேடிக் கண்டுபிடிக்கலாம்.
சமய அறிவுப் போட்டி இல : 02
முதற்பரிசு ரூபா 100, இரண்டாம்பரிசு ரூபா 50! மூன்றாம் பரிசு ரூபா 25 1:
1. ஐந்து சிவராத்திரியின் பெயர்களையும் எழுதுக.
2. ஆலயங்களில் எந்த இடத்தில் நின்று, பிரசாதம்
கொடுக்கப்பட வேண்டும்?
3. தமிழகத்திலே திருவாவடுதுறை ஆதீனத்துக்குச்
சொந்தமான கோவில்கள் எத்தனை?
4. "புண்ணிய நாச்சியார் தினம்" யாழ் சைவ பரிபாலன சபையினரால் ஆண்டுதோறும் எந்தத் திகதியிற் கொண்டாடப்படுகின்றது?
5. யாழ்ப்பாணம் யோகர் சுவாமியின் குருயார்?
மேலே நாங்கள் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளுக்கு
அமைய, உங்கள் விடைகளை 03.07.2009இல் அல்லது அதற்கு
முன்னர் கிடைக்கும்படி அனுப்புக, அனுப்ப வேண்டிய முகவரி, இந்துசாதனம், இல,66,கல்லூரி வீதி, நீராவியடி, யாழ்ப்பாணம்.
- குருநாதன்
(வளரும்)

Page 19
இந்துசாதனம் 5,O
இந்தோநேவரியாவில் ஆத்மஜோதி நா.
காகம் இல்லாத ஊர்
சுமாத்திராவில் காகத்தைக் காணமுடியாது. காகத்தை மலாய் மொழியில் காக்கா என்றே அழைப்பர். இங்குள்ள இந்துத் தமிழர்கள் புரட்டாதி மாதத்தில் சனிக்கிழமை விரதம் அனுட்டிப்பர். எங்கள் ஊரவர்களைப்போற் காகத்திற்குச் சோறு வைப்பதில்லை. சனீஸ்வரனுடைய வாகனம் காகம். ஆனபடியினாற் காகத்திற்குச் சோறு வைத்தே உண்ணும் வழக்கம் நம்மவரிடத்தில் உண்டு. இங்கு காகம் இல்லாதபடியினால் அத்தகைய வழக்கம் இல்லாது போய்விட்டது.
நம்மவரிற் சிலர் தினமும் உண்ணுமுன் காகத்திற்குச் சோறு வைத்து அது உண்டபின் உண்ணும் வழக்கம் உடையவர். ஏதாவது ஒரு உயிருக்கு உணவு கொடுத்து உண்ணும் வழக்கத்தோடு உணவுப் பரிசோதனையுமாகின்றது. நஞ்சுள்ள உணவைக் காகம் இலகுவில் அறிந்துகொள்கிறது. அத்தகைய உணவை அது உண்பதில்லை.
வேற்று இன, மத, மொழிகளைச் சேர்ந்த மக்கள் மத்தி தகவவல்கள் உதவியாக இருக்கும்; சிலதகவல்கள் எச்சர்
நவக்கிரகங்களை ஒன்பதுமுறை சுற்றிக்கும்பிடுவார்கள். ஆனால் சிவனையோ அம்பிகையையோ ஒரு முறைதான் சுற்றிக் கும்பிடுவார்கள். காரணம் சனீஸ்வரனுக்கு அவ்வளவு பயம். சனிக்கிழமைகளில் நவக்கிரக வழிபாட்டிற்காகப் பெருங்கூட்டம் உண்டு. முக்கியமாகச் சனீஸ்வரனுக்கு எண்ணெய் ஊற்றி விளக்கேற்ற வருவார்கள். சிலர் நவக்கிரகத்திற்கு எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி ஒன்பதுமுறை சுற்றிக் கும்பிட்டுவிட்டு மற்ற மூர்த்திகளுக்கு வணக்கம் செலுத்தாமலே சென்றுவிடுவர். சனிக்கிழமைகளில் கூடும் கூட்டம் வெள்ளிக்கிழமைகளிற் கூடுங் கூட்டத்தைவிட மிக அதிகமாயிருக்கும்.
தமிழ்நாட்டிலிருந்து வரும் சோதிடர்கள் சனி தோஷம், செவ்வாய் தோஷம் என்று கூறி அத்தோஷ நிவர்த்திக்காகச் சாந்தியும் செய்வார்கள். சோதிடம் சொன்னதற்குக் கூலிகொடுத் ததை வாங்குவார்கள். சாந்தி செய்வதற்கு இவ்வளவு கொடுத்தாக வேண்டும் என்று நிறையக் கறந்துவிடுவார்கள்.
சாந்தி செய்யப் பணவசதியில்லாதவர்கள் கடைசியாக அடியேனிடம் வருவார்கள். அவர்களுக்கு "ஓம் நமசிவாய மந்திரத்தைக் காலை மாலை நூற்றெட்டு முறையாவது செபம் செய்யுங்கள்" என்று வழிப்படுத்தி விடுவேன். அவர்கள் குடும்பமாகவே மந்திர செபம் செய்து கிரக தோஷம் நீங்கப் பெற்றிருக்கிறார்கள். இது எப்படி என்று சிலர் கேட்பார்கள். இது சிவபெருமான் ஒருவரே எல்லோருக்கும் எஜமானன்; நவக்கிர கங்கள் அவருடைய வேலைக்காரர்கள். வேலைக்காரனைக் கும்பிடுவதிலும் பார்க்க எஜமானனைக் கும்பிட்டாற் பலன்
கூடுதலாக உண்டல்லவா?

S2OO9. விரோதி ஆனி01
இந்துத் தமிழர்கள்
வேயுறு தோளிபாங்கன்விடமுண்டகண்டன்
மிகநல்ல வீணை தடவி மாசறுதிங்கள் கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால் ஞாயிறுதிங்கள் செவ்வாய்புதன் வியாழம் வெள்ளி
roofLnrhyodorOBi pLGBoor ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியாரவர்க்குமிகவே.
என்ற கோளறு பதிகத்தைப் பாடிப் பரவுங்கள் என்று சொன்னால் அதன் பிறகு விளங்கிக்கொண்டு சிவபெருமானையே கண்ணிர்வார வேண்டிக் கிரகதோஷம் நீங்கப் பெறுபவர்கள் உண்டு.
கிரக தோஷத்திலும் பார்க்கச் சோதிடர் சொல்லும் கிரகதோஷம்மக்களைப்பயத்தில் ஆழ்த்திவிடுவதுமுண்டு.
பில் வாழும் நமது மக்களுக்கு, இக்கட்டுரையில் வரும்
ரிக்கையாக இருக்கும்
இந்தோநேஷியன் மொழியில் நரிக்கு வார்த்தை இல்லை. காரணம் அங்குநரியில்லை. அதனால் அதைக் குறிக்கும் சொல்லும் இல்லாது போயிற்று. நரியும் நாயும் ஒன்று என்பது பலருடைய கருத்து. ஒரு பேராசிரியரிடம் இதுபற்றி வினவியபோது "இங்குநரி என்றொரு மிருகம் இல்லை" அதனால் அப்பொருளுக்குரிய சொல்லும் இல்லை; என்றார். படத்தில் நரியைப் பார்த்தவர்கள் இதுவும் ஒரு சாதி நாய் என்றே கருத்தில்கொண்டார்கள்.
ஆராய்ச்சி மாணவர்களின், ஆராய்ச்சி ஆர்வத்தைத் தூண்டுவதற்காகவே சிலசொற்களைக் குறிப்பிட்டேன். இந்தோநேஷிய மொழியைப் பூரணமாக ஆய்வு செய்தால், இந்துக்களைப் பற்றியும், தமிழ்மொழியைப் பற்றியும் இன்னும் எத்தனையோ தகவல்கள் கிடைக்கக்கூடும். இன்றைய இந்தோநேஷியன் மொழியில் நூற்றுக்கு 65 வீதமான சொற்கள் தமிழ்ச் சொற்களேதான். அவை மருவி வேறு உருவம் பெற்றுக்கொண்டுவருகின்றன.
மதுரையில் நடந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டில் யப்பானிய மொழி தமிழிலிருந்து தோன்றிய மொழி என்பதைத் தகுந்த ஆதாரங்களுடன் விளக்கங் கொடுத்து நிலைநிறுத்தினர். தமிழ்மொழி ஆராய்ச்சியில் ஈடுபாடுடையவர்கள் இந்தோநேஷியன் மொழியை நன்கு கற்று ஆராய்ச்சி செய்வார்களேயானால் அந்த ஆராய்ச்சி மிகப் பயனுள்ளதாக அமையும். இந்த ஆராய்ச்சி தமிழ் மொழிக்குச் செய்யுந்தொண்டாகவும் அமையும்.
urrigLT
இந்தோநேஷியாவில் அரசாங்கத்தால் ஒப்புக் கொள்ளப் பட்ட சமயங்கள் நான்கு. அவை இஸ்லாம், இந்து, பெளத்தம்,
一>

Page 20
இந்துசாதனம் 5.O. இந்தோநேவழியாவி
கிறிஸ்துவம் என்பன. இந்த நான்கு சமயங்களையும் பேதமின்றிப் பாதுகாக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. சமயங்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட சபை "பாரிசாடா" எனப்படும். இச்சபை இந்தோநேஷியா முழுவதிலும் உண்டு. அதாவது இந்தோநேஷிய இராச்சியம் இருபத்தேழு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இருபத்தேழு மாகாணங்களிலும் பாரிசாடாக்கள் உண்டு.
ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனியான பிரிவுகள் உண்டு இந்துக்கள் தமது இந்து சமயப் பாதுகாப்புச் சபையைப் "பாரிசாடா" என்று அழைப்பதுபோல இஸ்லாமியர் "மொபாலின்" என்றும், பெளத்தர் "வாலுபி" என்றும், கிறிஸ்தவர் "டெஹேயின்" என்றும் அழைப்பர். மாகாணாதி பதிக்குக் கீழே அடுத்த தலைவராக இருப்பவர் இந்தச் சமயத்
தலைவர்களாவர்.
அரசியல் நிர்வாகத்துக்குக் கீழே மத நிர்வாகம் அமைந்திருந்தாலும் மதத்திற்கே முதலிடமும் முக்கியத்துவமும் கொடுக்கப்படுகிறது. மதத்திற்குக் கீழேதான் அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. அதாவது மதம் மேலேயும் அதன் பாதுகாப்பில் அரசியல் நிர்வாகமும் அமைந்துள்ளது.
நான்கு மதத்தலைவர்களும் சேர்ந்து பேசும் வாய்ப்புக்கள் உண்டு. இம்மதத் தலைவர்களை அழைத்து அரசாங்கம் தமது பிரசைகளை நல்வழிப்படுத்தும் முறைபற்றி ஆலோசனைகளைக் கேட்கிறது. அவர்கள் சமர்ப்பிக்கும் நல்லாலோசனைகளை அரசாங்கம் வழிப்படுத்துகிறது. எந்தச் சமயத்தவராயினும் அவன் தன் சமயத்திற் பற்றுள்ளவனாகவும், சமய அனுட்டானங்களை அனுட்டிப்பவனாகவும் இருக்கவேண்டும். சமய நம்பிக்கை ஒன்றினாற்றான் மனிதன் மனிதனாக வாழமுடியும் என்பதை அரசாங்கம் நூற்றுக்கு நூறு ஒப்புக்கொள்கின்றது.
நான்கு சமயத் தலைவர்களும் சேர்ந்து பேசுவதை "சிறுகுணன் பிராஹம" என்ற பெயரால் அழைப்பர். பாரிசாடாவின் முக்கிய வேலை அரசாங்க உதவியுடன் இந்து சமயத்திற்காகப் பாடுபடுதல். அ. கோயில் இல்லாத இடங்களிற்கோயில் கட்டிக்கொடுத்தல்.
r =
FSF
ளங்களுக்கு வந்த கடிதங்கள்; நீங்களும் வாசிக்கலாம்
அன்புடையீர்,
"இந்து சாதனம்" புதுப்பொலிவுடன் மீண்டும் வெளிவரத் தொடங்கியதைச் சைவ உலகம் பாராட்டி வரவேற்கின்றது. இந்துசாதனம் ஒரு பெரும் பொக்கிஷம். தொடர்ந்தும் தரமான விஷயங்களுடன் வெளிவந்தால் கனடா, பிரித்தானியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற புலம்பெயர் நாடுகளில் வாழும் நம்மவர்கள் பல வழிகளிலும் உதவுவார்கள்,
三

6.2OO9 விரோதி ஆனி O
ம் இந்துத் தமிழர்கள்
ஆ.இந்துமதப்பிரச்சாரம் செய்தல். இ. சமயநூல்களை வெளியீடு செய்தல் ஈ. சமய சஞ்சிகைகளை நடத்துதல் உ. சமய நூல்களை இனாமாகக் கொடுத்தல் ஊ.ஏழைகளுக்கு உதவிசெய்தல்.
எ.பாடசாலைகள் நடத்துதல்
வருடந்தோறும் பத்தாயிரம் பேருக்குக் குறையாமற் பூர்வ குடிகள் இந்துக்களாகச் சேர்ந்துகொண்டே இருக்கின்றனர்.
கோயில்களைப் பாரிசாடா ஏற்றுக்கொண்டபின் கரகம், காவடி ஆடுதல்,செடில் குத்தி உடல் வருத்துதல், முள்ளுமிதியடியில் நடத்தல் போன்ற செயல்களை நிறுத்தி, பஜனை, திருமுறை ஒதுதல், நாமஜெபம், தியானம் போன்றவற்றுக்குக் கோயில்களில் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இதனால் ஆலய வழிபாட்டின்போது ஒரு அமைதியைக் காணமுடிகின்றது. மக்களும் மன அமைதி பெற்று, மன நிறைவோடு வீடு திரும்புகின்றனர். வீடுகளிலும் ஜெபம், தியானம் என்பவற்றில் ஈடுபடத் தூண்டப் படுகின்றனர். மேளம் போன்ற வாத்தியங்கள் இங்கு இல்லாமையினாற் பூஜையின்போது நாமபஜனையும், பக்திப் பாடல் ஒதுதலும் நடைபெறுகின்றன. வழிபாட்டுக்கு வருபவர்கள் அத்தனைபேரும் இதில் கலந்துகொள்கின்றனர். பூசகரும் இதிற் கலந்துகொள்கின்றார். அவரே வழிகாட்டியாகவும் விளங்கு கின்றார். இதனால் வழிபடுவோரின் உள்ளத்தில் ஒரு நிறைவைக் காணமுடிகிறது. தாமும் வாழிபாட்டிற் பூரணமாகக் கலந்து கொண்டதாக மனப்பூரிப்பு எய்துகின்றனர். இதனால் இறைவனோடு மனந்திறந்து பேசும் ஒரு வாய்ப்பினைப் பெறுகின்றனர்.
கோயில்களில் வருடாந்த உற்சவங்கள் நடத்த விரும்புவோர் முன்கூட்டியே தாம் உற்சவம் நடத்தும் முறைபற்றிப் பாரிசாடாவுக்கு எழுத்துமூலம் அறிவித்து அவர்களின் உத்தரவைப் பெற்றுக்கொள்ள வேண்டும். பாரிசாடாத் தலைவர் - உற்சவம் நடத்துபவர்களை அழைத்து அமைதியான முறையில் எப்படி வழிபாடு நடத்தலாம் என்பதுபற்றி ஆலோசனைகளைக் கூறுவார். அவர்கள் சொல்லும் ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டாற்றான் அவர்களுக்கு உற்சவம் நடத்த உத்தரவுகிடைக்கும். 人
ஆதரிப்பார்கள், யாழ்ப்பாணத்து ஆறுமுகனாருக்கு "நாவலர்" பட்டம் வழங்கிக் கெளரவித்த திருவாவடுதுறை ஆதீனம், "இந்துசாதனம் " "சித்தாந்த சைவச்சுடர் நிலையம்" என்ற பட்டத்தை வழங்கிக்
இதழை வெளியிடும் சைவ பரிபாலன சபைக்கு
கெளரவித்தமை பொருத்தமானதே. யாழ்ப்பாணம் புண்ணியபூமி. ஆறுமுக நாவலர் போன்றோரை ஈன்றெடுத்த மண். இந்த வரிசையிலே கடைசியாக உள்ளவர் சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா
அப்பாக்குட்டி ஆவார். அன்புள்ள 瓷 கே.கே.சுப்பிரமணியம்
纥 ཚེ་ இல.28, இரத்தினகார இடம்,
.தெகிவளை ܝܗܝ
O

Page 21
O
15. Ο
சைவபரிபாலனசபை தோற்றமு 1899 doub 66
1899ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ஆம் திகதி இந்துக்கல்லூரி பரிசளிப்பு விழா நடந்தது. உயர்நீதிமன்ற நீதியரசர் Joseph Grenier Uflor6flûq 6)îypT6)4ö(55 தலைமை தாங்கினார். நிருவாகசபை அங்கத்தவர்கள் எல்லோரும் ஒவ்வோர் பரிசுக்கு உதவினார்கள். அத்துடன் கொழும்பு பொ. அருணாசலம் (பின்னர் சேர் பொன். அருணாசலம்) T. M. தம்பு ஆகியோரும் ஒவ்வோர் பரிசு உதவினார்கள். பிரதித் தலைவராக இருந்து அகாலமரணமடைந்த அட்வக் கேட்
சபையின்
சி.நாகலிங்கம் அவர்கள் ஞாபகமாக பசுபதிச் செட்டியாராலே ஒரு பரிசு அளிக்கப் பட்டது.
1898 - 99 கட்டட வேலைகள்
1898 - 99 ஆம் வருடங்களில் பொருட்குறைவு காரணமாக கட்டட வேலைகள் கல்லூரியில் அதிகளவில் நடைபெறவில்லை. கிணறு ஒன்று வெட்டு வதற்கும் சில்லறை வேலைகளுக்குமாக இந்த இரு வருடங்களிலும் ரூபா 563 சதம் 72% செலவிடப்பட்டது.
1898-99 சைவப் பிரசங்கம்
இவ்விரு வருடங்களிலும் சைவப்
பிரசங்கம் பல்வேறு காரணங்களால் முன்பு
போல் அதிகம் நடைபெறவில்லை.
1898-99 இந்துசாதனம்
இந்துசாதனப் பத்திரிகைக்கு அன்பளிப்பாகவும் விளம்பரங்கள் மூலமும் 1898-99 ஆம் ஆண்டுகளில் சேர்ந்த வரவு ரூபா 1613 சதம் 25. இவ்விரு வருடங்களிலும் அச்சுக்கூலி நீங்கலாக காகிதம், முத்திரை இவற்றிற்கு ரூபா 937 சதம் 40 1/2 செலவிடப்பட்டது.
Victoria Reading
விக்ரோரியா ஐம்பது வருடங்க 6 பொன்விழாத் தினமா ஆனி மாதம் 20ஆம் அட்வக்கேட் நாக நண்பர்கள் சிலரும் V என்னும் பெயரோடு (s தொடங்கினார்கள் 1895ஆம் ஆண்டு ப இந்துக் கல்லூரிக் வந்தார்கள் என்று மு தோம். இவ்வாசிக சா அட்வக்கேட் நாகலிங் மரண மடைந்தபின் வாகம் சிறிது நலிவுற்ற யாவில் உதவி வன பா உத்தியோகம் வகித்த V.S.குருநாதபிள்ளை
Hindu "
வெளிவரும் நாளே திரு.அருணாசலம் (t 9(5600TITS Goth) "The India", "The Amirt என்ற பத்திரிகைகள் லிருந்து திருதா.செ Weekly Edition of "The Madras Stan
Star"
திரு.அ.சபாபதி அவ Independent" GT6örg திரு.வி.காசிப்பிள்ை Standard" 61 sits
திரு. அ.கனகசபை Observer", "Cathol
எனும் ெ
என்னும் ட
CNNNNNN
நாகபூஷணியின் மன்னுசீர் இலங்காட மாபெரும்புகழு இன்னல்மேவியநல் இருஞ்சிறைக்க இன்னபாஷையென் இலங்கு கற்சாத தன்னை நேரிலாநில் சாட்சியாம் நாக
CareerCaeellaCasaCe
2

S2OO9
விரோதி ஆனி0)
ம் வளர்ச்சியும் பணிகளும் - 27 ய்ாடு பரிசளிப்பு:
lal
மகாராணி முடிசூடி ர் பூர்த்தியடைந்த ாக 1887ஆம் ஆண்டு திகதியின் ஞாபகம்ாக லிங்கமும் அவரது 'ictoria Reading Hall ரு வாசிகசாலையைத் எனவும் அதனை மார்கழி மாதம் முதல் கட்டடத்தில் நடத்தி ழன்னர் குறிப்பிட்டிருந் லையின் தாபகராகிய கம் அவர்கள் அகால வாசிகசாலை நிரு றபோதும், தென்னிந்தி ரிபாலன அதிகாரியாக யாழ்ப்பாணத்தவரான
"The
சென்னையிலிருந்து
என்பவர்
ட்டையும்; கொழும்பு பின்னர் சேர் பொன்.
"The
ha Bazaar Patrika" ளை யாழ்ப்பாணத்தி
"The
the London Times", dard", "The Westen பத்திரிகைகளையும்
New Age",
ல்லப்பாபிள்ளை
is sit "The Ceylon றும் பத்திரிகையையும், psit "The Ceylon ம் பத்திரிகையையும் "The Ceylon ic Guardian" géŝuu
பத்திரிகைகளையும் திரு.மு.பசுபதிச் செட்டியார்"சுதேசமித்திரன்" என்ற பத்திரிகையையும் திரு.R.N.அருளம்பலம் "The Theosophist" 67 sip L55sf6056Ou
"The
Theosophic Glea ner" 6T 6üT gph பத்திரிகையையும் இந்துசாதன நிருவாகம் (gigs FT560T 9,60LLuth) "The Ceylon
யும் திரு .S. வேலுப்பிள்ளை
Examiner", "Timer of Ceylon", Weekly Edition of the Independent", "Hindu Organ", "Awakened India", "Mahratta", இந்துசாதனம், சூரியஜனப்பிரியன், ஸற்ஜன பத்திரிகா, லோகோபகாரி, விவேகதின கரன், பிரமவித்தியா, ஞானபோதினி, அமிர்த வசனி, விகடதூதன், பாண்டியகுல பரி பாலினி, தேசபிமானி, திருச்சிநேசன், "The Astrological Magazine" (p565u பத்திரிகைகளையும் உதவிவர விக்ரோறியா வாசிகசாலைதொடர்ந்து இயங்கிவந்தது.
இவ்வாசிகசாலையை 1899ஆம் ஆண்டில் திரு.அ.கனகசபை அவர்களைத் தலைவராகவும் திரு.வி.காசிப்பிள்ளை அவர்களை உபதலைவராகவும், திரு.N. செல்லத்துரை அவர்களை செயலாள ராகவும் திரு.ச.சிவகுருநாதரை பொரு ளாளராகவும் திரு.R.N.அருளம்பலத்தை கணக்குப் பரிசோதகராகவும் சி.மு.பசுபதிச் செட்டியார், அ.சபாபதி, வை.சண்முகம், ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை, பெ.கார்த்திகேசு, சீ. கந்தை யா, ச. சிவப்பிரகாசம், J.K.நமசிவாயம்பிள்ளை, அ.சிவகுருநாதர், இ.கதிரவேலு ஆகிய பதின்மரை அங்கத்த வராகவும் கொண்ட ஒரு சபையே நடத்தி
வந்தது. 人
Nenese Nened
தெய்வீகப் பெருமை
ரியிலம்பிகை நின் க்கு இலக்காய் வரவுசுற்றியகல் ருடன் மேவியகல் றறிவுறா எழுத்தால் னம் இரண்டு ர் உருவெனும் ஐந்தும் பூஷணியே.
வரகவிதியாகர் இராமச்சந்திரர்
CaCaCaCaCae
1.

Page 22
இந்துசாதனம் 5O6
முேதசுரபி : இயூபுத்தி
LITäsLir Lor. I
எடுக்க எடுக்க அமுது குறையாத "அமுதசுரபி" என்னும் அட்சய பாத்திரத்தைச் சரஸ்வதியின் அம்சமான புவனேஸ்வரி அன்னை, தன் அடியவர்களான ஆபுத்திரன் என்பவருக்கு வழங்கினாள் என்பதை "மணிமேகலை" நூல் வாயிலாக அறிய முடிகின்றது. அந்த அட்சய பாத்திரத்தைக் கொண்டு, ஆபுத்திரன் தினந்தோறும் மதுரை மாநகரத்திலே அமுதூட்டும் பணியைச் சிறப்பாகச் செய்து வந்தான். அந்தச் சிறப்பைக் கண்டு பொறாமை கொண்ட இந்திரன், அந்தப்பணியைத் தடுக்கப்பல சூழ்ச்சிகளைச் செய்தான். ஆகவே, சாவக நாட்டிலே தன் பணியைத் தொடர்ந்து செய்வதற்காக ஆபுத்திரன் மரக்கல மொன்றிலே பயணத்தை மேற்கொண்டான். ஆனால் சீரற்ற கால நிலை காரணமாக, அந்த
ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான "மணிமேகலை " யி அறிஞர்கள் பலரின் கருத்தாகும். ஆபுத்திரன், மணிமேகை ஆகியவற்றுடன்கொண்டிருந்த தொடர்புகளைக்கூறுகின்றார்யா
மரக்கலம் நயினாதீவு என்ற மணியல்லவத்திற் கரை ஒதுங்கியது. அடுத்த நாள், கடற்பயணம் தொடர்ந்தபோது, ஆபுத்திரம் அதில் இல்லை என்பதை மரக்கலத்தில் இருந்தவர்கள் கவனிக்க வில்லை. சில நாளின் பின்னர் அவர்கள் மணிபல்லவத்துக்குத் திரும்பிவந்து பார்த்த போது, அத்தீவிலுள்ள "கோமுகி" என்னும் பொய்கைக்கருகில் ஆபுத்திரன் இறந்து கிடந்ததைக் கண்டு மனம் வருந்தினர்;அந்த இடத்திலேயே அவனை அடக்கஞ்செய்தனர்.
"மன் உயிர் ஒம்பும் இம்மாபெரும் பாத்திரம்" என "மணிமேகலை" கூறும் அட்சயபாத்திரம் கோமுகிப் பொய்கையிலே போடப்பட்டிருந்தது.
நயினாதீவில் பூரீநாகபூஷணி அம்பாள் ஆலயத்தின்
ONONONONONONO
அன்னை நாச
பெற்றதாலன்னை பெறுமு பேணலால் அன்ை
உற்றதாலன்னை விரும்பிய உதவலால் அன்ை சொற்றதாலன்னை உலகெ தொழுதலால் அன் பற்றதாங்கருணை பொழி
பராயரை நாகபூவு
ONONONONONONO

2OO9 விரோதி ஆனி0
JeÖT : LD6UufiGELDE6606)
வேதநாதன்
தென்மேற்குத் திசையிலே இந்தக் கோமுகிப் பொய்கை அமைந்திருந்தது. அந்தப் புனித தீர்த்தப் பொய்கையின் வளாகத்துள்ளேயே அமுரசுரபியுடன் ஆபுத்திரன் சமாதி அடைந்த இடம் இருக்கவேண்டும். அதில் ஒரு சமாதி ஆலயம் இருந்து, பின்னர் அழிந்திருக்கலாம். இது உறுதிப்படுத்தப்பட்டால், "அன்னதானத் தொண்டர்" ஒருவரின் புனித சமாதி தொன்மைக் காலத்திலே இருந்ததென்ற பெருமை மணிபல்லவமாகிய நயினாதீவுக்கு ஏற்படும்.
மணிமேகலையும் அமுதசுரபியும்
"மணிமேகலை" எனும் மங்கை நல்லாள், பசிப்பிணி
ல் வரும் மணிபல்லவம், இப்போதைய நயினாதீவு என்பதே Dல ஆகியோர் மணிபல்லவம் - நயினாதீவு, அமுதசுரபி ழ், பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறைத்தலைவர்.
நீக்கும் நோக்குடன் மணிபல்லவத்திற்கு வந்ததை "மணிமேகலை" கூறுகின்றது. ஆபுத்திரன் கோமுகி எனும் பொய்கையிற் போட்ட "அமுதசுரபி" என்ற அட்சயபாத்திரம், அவள் கையிற் கிடைத்தது. அவள் அந்த அட்சய பாத்திரத்தைக்கொண்டு மணிபல்லவத்தில் அன்னதான அறப்பணியைச் சிறப்பாகச் செய்தாள். மணிமேகலை, கத்திக் கத்தி அமுதூட்டிய இடம் இன்று" கத்தியாக் குடா" எனும் பெயரில் விளங்குகின்றது. கத்தியாக்குடாவில் அமைந்துள்ள தில்லைவெளிப் பிடாரி அம்பாள் ஆலயத்தின் வடபால் உள்ள பூரீபிடாரி அம்பாள் அன்னதான சபையில் வைகாசித்திங்களில் வரும் வேள்வி விழாநாளில் அன்னமிடும் பணி சிறப்பாக நடைபெறுகின்றது. திருமதி முத்தையா ஞானேஸ்வரி என்பவரின் தலைமையில் இந்த அன்னதானசபை அமுதூட்டி வருகின்றது.
NONONONONO
பூஷணி
பிரனைத்தும் ன பெற்றிடுவோர்
அனைத்தும்
அஎக்கலையும்
ாடு வானும் னையென்றென்றும்
தலாலன்னை
னியாள்.
- நயினை நாகமணிப் புலவர்
NONONONONO

Page 23
eógrganió 5.O 0 Th 6 திரு.சி.வே
உருவவழிபாடு என்பது இந்துசமயத்திற்கு உடன்பாடான தாகும். உருவம் என்பது இறைவனுடைய திருமேனியையும் வழிபாடு என்பது இறைவனுக்குச் செய்யும் அபிஷேகம், அலங்காரம், தூபதீபம்,அர்ச்சனை போன்றவற்றையும் குறிக்கும்.
பரம்பொருளாகிய இறைவன் அன்பர்கள் செய்கின்ற வழிபாட்டால் மகிழ்ந்து கருணையுள்ளம் கொள்கிறான்; ஆன்மாக்களாகிய நமக்குத் திருமேனியிடமாக இருந்து திருவருள் புரிகின்றான். உருவத் திருமேனிக்குச் செய்யும் வழிபாடுதான் சரியை வழிபாடு என்று சொல்லப்படுகின்றது. உருவத்திருமேனி சகளத்திருமேனிஎனவும் சொல்லப்படும்.
இறைவன் எங்கும் நிறைந்திருப்பவன். எனினும், ஞானிகள் உள்ளம், திருக்கோவில் ஆகிய இரு இடங்களிலும் சிறப்பாகத் தோன்றி விளங்கி நிற்பான். அதனாலேயே அனைவரும் சென்று அமைதியாக வழிபாடாற்றத் திருக்கோவில்கள் எடுத்து இறைவனுடைய திருமேனியை அங்குப்பிரதிட்டை செய்து வழிபாடு செய்கின்றோம்.
விறகில் தீயைப்போலவும், பாலில் நெய்யைப் போலவும் கலந்து மறைந்து நிற்கின்ற இறைவன், உருவத் திருமேனியில் திருக்கோவிலில் நமக்குக் காட்சி தருகின்றான். அவனைக் கண்ணாரக் கண்டு அவனுடன் தொடர்புகொண்டு அவனை மனமுருக வேண்டி வழிபாடு செய்து அவனுடைய திருவருளைப் பெறுவதே ஆன்மாக்கள் செய்யவேண்டிய கடமையாகும். அப்பர் பெருமான் இந்தக் கருத்தை அழகியபாடலாகத்தருகின்றார். "விறகில் தீயினன் பாலில் படுநெய்போல் மறையநின்றுளன் மாமணிச்சோதியான் உறவுக் கோல்நட்டுஉணர்வுக் கயிற்றினால் முறுக வாங்கிக் கடையமுன்நிற்குமே." கோயிலிற்காணப்படும் இறைவனின் அழகுத்திருமேனிதிருமேனிகள் எவரோ சாதாரணமான ஒருவர் உண்டாக்கி வைத்ததன்று இறையருள் பெற்ற ஞானியர் மனத்துள் கண்ட யோகக் காட்சியே அத்திருமேனி. அவர்கள் தாங்கள் கண்ட அந்த யோகக் காட்சியைப் பாடல்வழி எடுத்துக் கூறியுள்ளார்கள். இதற்குச் சான்றாக அண்மைக்காலத்தில் வாழ்ந்து மறைந்த இராமலிங்க சுவாமிகள் திருத்தணிகை முருகனைத் தம் வீட்டுக் கண்ணாடியிலே தரிசித்ததைக் குறிப்பிடலாம்.
சரியை வழிபாட்டுக்குரிய உருவ வழிபாடு தொடக்க நிலைக்கு மிகமிக இன்றியமையாததாகும். வயதுவந்த, பக்குவம் பெற்ற அருளாளர்களுக்குத்தான் உருவமற்ற வழிபாடு. உலக வாழ்க்கையில் உழல்கின்ற சாதாரண மக்கள் உருவம் இன்றி இறைவனை வழிபடுவது இயலாத செயல் என்பதை நன்றாக உணரவேண்டும்.
இல்லத்தில் இறைவனின் படத்தையோ செம்பால் ஆகிய சிலையையோ வைத்து வழிபடுவதன் நோக்கம் இதுதான். ஆயினும், அவற்றில் "உயிர்" இல்லை. இதனை உணர்ந்துகொண்டு கோயிலுக்கு அவசியம் சென்று இறைவனின் உருவத் திருமேனியைக் கண்டு தொழவேண்டும். கோயிலுள்ள திருமேனி யில்தான் அருட்சக்தி பொலியும். அதற்குக் காரணம் அந்தத் திருமேனிய்ைய பிரதிட்டை செய்யும்போது அதனடியில் உயிர்ப்புள்ள எந்திரத்தகட்டைவைப்பதேயாகும்.
இறைவனுக்கு உருவமில்லையே, அப்படியிருக்க உருவத் திருமேனி ஏன்? எனச் சிலர் வினவுகின்றனர். இது தவறான

2O09 விரோதி ஆனி01 glunB லுச்சாமி
வினாவாகும். இறைவன் ஆன்மாக்களிடம் கொண்ட பெருங் கருணையால் அருவமான தன்டதிருமேனியைக் கொண்டானே தவிர அவன் உருவமுள்ளவன் என்பதைக் காட்டுவதற்காகவன்று.
"அருவமாகிய கடவுளை நாம் உருவத்துடன் கலந்துறையும் காலம்வரை, உருவமாகக் கண்டுகளிக்க முடியுமே தவிர அருவமாகக் கண்டு அடையமுடியாது. நாம் அருவநிலையை அடையும் காலம்வந்தால் இறைவனையும் அருவமாக வணங்கலாம். அதுவரை அவரை உருவமுடையவராகவே வணங்கமுடியும்; அருவமாக வணங்க முடியாது."
இப்படி விளக்கம் தருகின்றார் நாகர் கோவில் பண்டித பூஷணம் கே.ஆறுமுகநாவலர் அவர்கள்.
"அருவாகிநின்றானை ஆரறிவார்தானே உருவாகித் தோன்றானேல் உற்று?" எனக் கேட்கிற சிவஞானபோதக் கருத்தும் இதுதான்.
நம்முடைய சைவ சமயச் சாத்திரங்கள் இறைவனுக்கு மூவகைத் திருமேனிகளைச் சொல்கின்றன. ஆன்மாக்கள் அனைத்தும் சமமானவையல்ல; மூவகைப்பட்ட ஆன்மாக்கள் உள்ளனவல்லவா? அவ்வவற்றின் பக்குவ நிலைக்கு ஏற்றவாறு அருள்செய்ய இறைவன் அருவத் திருமேனி, உருவத் திருமேனி, அருவுருவத் திருமேனி என்னும் மூன்று திருமேனிகளை எடுக்கின்றான் எனச் சிவஞான சித்தியார் செப்புகின்றது. பாடலைப்பாருங்கள்:
"சிவன்சக்திநாதம் விந்து
சதாசிவம் திகழும் ஈசன் உவந்தருள் உருத்திரன்தான்
மால்அயன் ஒன்றின் ஒன்றாய்ல் பவந்தகும் அருவம் தானிங்(கு)
உருவம்நாலுபயம் ஒன்றாய் நவந்தரு பேதன் ஏக
நாதனேநடிப்பன் என்பர்" சிவஞானகித்தியார்
அருவத் திருமேனி என்பது உருவமற்றது.அது நாதக்விந்து, சக்தி, சிவம் என நான்காகும்.
அருவுருவத் திருமேனி என்இது உருவுந்அருவும் அற்ற திருமேனி, அஃது இலிங்கம்.
உருவத்திருமேனி என்பதுஉருவமுடைங்திருமேனி, அது பிரமன், விஷ்ணு, உருத்திரன், மக்ேசுவரன் என நான்காம், ஆக ஒன்பது திருமேனிகளாகும். இதனையே "நவம் தரு பேதம்" எனக் குறிப்பிடுகிறது சிவஞான சித்தியார்.
கோயில்களில் சிவலிங்கம், முருகன், விநாயகர்,அம்பாள், விஷ்ணு போன்ற தெய்வங்களின் சகளத் திருமேனியை வைத்து வழிபடுகிறோம். இவையனைத்தும் பரம்பொருளாகிய சிவனை வழிபடுவதாகவே அமையும்.
"யாதொருதெய்வம் கொண்டீர்
அத்தெய்வம் ஆகியாங்கே மாதொரு பாகனார்தாம்
வருவர்". -சிவஞான சித்தியார்
என்னும் பாடல் இதனை நமக்குக் காட்டுகிறது. ஆனால், சிறு தெய்வங்களாகிய முனியாண்டி, சுடலை மாடன், முனீஸ்வரன், கருப்பண்ண சுவாமி போன்றவற்றைக் கோயிலில் வைப்பதும் வழிபாடு செய்வதும் சிவனையும், திருமாலையும், முருகனையும், விநாயகரையும், சக்தியையும் வழிபாட்டுத் தெய்வங்களாகக் கொண்ட இந்துசமயத்தவருக்குச் சற்றும் ஒவ்வாததாகும்."

Page 24
இந்துசாதனம் 15. O {
All in all, the Hindu temples played
ദ %Aソ/2ー 少/>- during the (24 y z et WHAT IS /
/ ZO? 2. ۶ / یهـ ____________s Prof A. Sanmugada
Temple is a house of God; a house of deity that is built on earth. Appar and Sambandar visited Tirumaraikkadu (Vedaraniyam) where Appar sang to open the Temple and Sambandar Composed a patikam to close its gate Appar's Song is as follows:
பண்ணினேர் மொழியாளுமை பங்கரோ மண்ணினார்வலஞ் செய்ம்மறைக் காடரோ கண்ணி னாலுமைக் காணக் கதவினைத்
திண்ணமாகத் திறந்தருள் செய்ம்மினே.
Appar clearly states in this hymn that the temple is for the sake of the people on earth (Logiorgoof GOTITissues Galil). The goal of the temple is to bring about Contact between man and god through the worshipper's. approach towards the inner sanctum. As he moves from a world of illusion (maya) towards knowledge and truth, he is symbolically searching for moksha, release from the cycle of rebirth, central to Hindu belief. Appar in his hymn states that the people on earth would like to see you with their naked eyes, Lord, therefore open the gates of the temple
(கண்ணி னாலுமைக் காணக் கதவினைத் திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே).
The Hindu religion and culture are centred round the temple. Our temples have been used over the years as "centres of excellence" for education, fine arts, architecture and structural engineering. Above all, these temples are the centres which offerinfinite peace
ON SON ON ON ON SON
கீழுள் గీ قریه
*、
Material Comforts an
a The demand for material comforts is 1
rid is entitledtő, is a better, life, more food, mcبہہ گئی above all, security. But what is difficult to un without developing the spiritual values by whic will to render life secure, the heroism to rise ab attained them.
O~ESNON SIN KONSON
Edited & Published by Mr.S.Shivasaravanabavan on behalf Printed at Harikanan Printers No.424, K.K.S. Road, Jaffna, 15.06
 

i2OO9. விரோதி ஆனி01
a pivotal part in the life of the people, Chola period
A TE.M. P. L. E?
Ph.D. (Edinburgh)
to the mind of man. South Indian Historian Prof. K.A. Nilakanta Sastri observes that the temple during the Chola period rendered services to the people as a bank, hospital, School and Centre of arts. The women who learnt the arts of dance and music performed in the Temple. Sambandar in his Tiruvaiyaru Patikam mentions "வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர"which is a clear evidence for actual dance peroformance round the temple. Sundarar in one of his hymns mentions about the Treasury in the Temple (gigi) (360T siggp56) ஆடையாபரணம் பண்டாரத்தே எனக்குப் பணித்தருள வேண்டும்").
For a longtime our Temples were supported by kings and people and in turn the Temples Supported many people. An inscription on the Brihadeshvara Temple in Tanjore gives a list of people Supported by the temple. The list includes dancing-girls, dancing masters, singers, pipers drummers, lute-players, Conch blowers, superintendents of temple women and female musicians, accountants, sacred parasol bearers, lamplighters, Sprinklers of Water, potters, Washermen, bearers, astrologers, tailors, jewel-Stitchers, brazierlighters, carpenters, and superintendents of goldsmiths, totalling more than six hundred persons.
A Hindu temple is a collective work of art, the temporary dwelling of a god, a symbol of the Cosmos and a path leading the Worshiper into Contact with the god, form the temporal to the eternal. 人
JC-JO-JOJC-JO-JO d Spiritual Values
latural and legitimate. What the world wants, reclothing, better shelter, some happiness and derstand is this unsatiable craving for them, we can earn them - Courage tenacity and the ove the dread of losing these things before we
- 2K}7, 77'luunshi, ONON ONON ONO
f the Saiva Paripalana Sabai No.450, K.K.S. Road, Jaffna & 2009 (1' Day of Anithinkal). Phone: 0212227678