கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்துசாதனம் 2009.08.17

Page 1
काका गाव्या GGGiuGGS இரம் விரோதி டு ஆவணி 26 ஆம் உ39)
விரோதி வருடம் ஆவண (1z.o8.
நல்லைச் ع مجموع بني . பசுவின் உடலெங்கும் பால் வியாபித்திருந் தோன்றி தாலும், மடியிற் சுரப்பதே மக்களுக்குக் கிடைக்கின்றது. அப்பாற்ப அதைப்போல், அங்கிங்கெனாதபடி எங்குமே ஆண்டவன் ஆலயங்க நிறைந்திருந்தாலும் அவனுக்கென அமைக்கப்பெற்ற வாய்ப்புக் ஆலயங்களிலேயே விசேட சான்னித்தியத்துடன் அவன் வீற்றிருக்கின்றான்; தன்னை நாடிவரும் அடியவர்களின் கிழ்ச்சி அல்லல் அகற்றி ஆறுதலையும் அமைதியையும் ஆனந்தத்தையும் அவர்களுக்கு அருளி வருகின்றான்.
蚤爵 வீதியில்
மனக்க
கொ
ஆ தி யும் அந்த மும் அற்றவன் அவன்; எப்போது தோன்றினான்? எங்கே | தோன்றினான்? எப்படித்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Winorganion e-na editor Chindu organ.com வித் திங்கள் 1ஆம் நா பிரதி விலை 2009) eѣшт. 50.00
Fycoor = lனான்? - என்ற கேள்விகளுக் ட்டவன் அவன். ஆனால் அவன் சான்னித்தியமாகியிருக்கும் 5ளுக்கு ஆதி உண்டு; ஆரம்பம் உண்டு அதை அறிந்து கொள்ளும் களும் உண்டு
நல்லூர் கந்தசுவாமி கோவில் என்ற பெயர் காதில் ஒலித்த உடனேயே யும், புனித உணர்ச்சியும் உள்ளத்தில் ஊற்றெடுக்க, கற்பூர யும் கணக்கற்ற பக்தர் கூட்டமுமாய் நல்லூர் - பருத்தித்துறை அமைந்துள்ள அந்தக் கந்த கோட்டத்தின் கவின்மிகு காட்சிகள் கண்ணில் விரிய, கைகளைக் கூப்பியும், கன்னத்திற் போட்டுக் ாண்டும் பக்திப் பரவசத்திலே திளைக்கும் பலருக்கும் அதன் ரலாற்றை அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் இல்லாமற் போகாது என்பதற்காகத்தான் இதுவரை அதைப்பற்றிப் பலர் எழுதியிருக்கின்றார்கள்; அவற்றுட் சில நூலாகவு ளிவந்
திருக்கின்றன. క్తి

Page 2
இந்துசாதனம் O
அவை சொல்கின்ற அத்தனை விபரங்களையும் இடையிடையே காணப்படும் சில முரண்பாடுகளையும் அடுக்கடுக்காகச் சொல்லி உங்களுக்கு அலுப்பூட்ட விரும்ப வில்லை. கறாரான நேரத்தைக் காட்டும் "கடிகாரமாக" இருக்கும் அந்தக் கந்தனைத் தரிசிப்பதற்குக் கடுகதியிற் செல்லவிருக்கும் உங்களின் நேர அட்டவணையைச் சீர்குலைக்கவும் விரும்பாமல், பெருக்கமான அந்த வரலாற்றைச் சுருக்கமாகவே தருகின்றேன்.
திருப்பரங்குன்றத்துத் தெய்வ தவபாலனை, செந்தூர்ச் செல்வனை, பழனிப் பதிவாழ் பாலகுமாரனை, ஏரகத்துறையும் எழில்முதல்வனை, குன்றுதோறாடும் குமரப்பெருமானை பழமுதிர்சோலை மலைகிழவோனை நாமுவக்கும் நல்லூரில் நாடுவக்கும் நாயகனாகக் கோயில் கொள்ள வைத்த பெரும்பணியை - திருப்பணியைச் செய்த புண்ணியத்துக்கு உரியவர் அல்லது உரியவர்கள் யார்?
率
யாழ்ப்பாணத்திலே மிகப் பழைய காலத்திலேயே தமிழ் இராச்சியம் ஒன்று இருந்தது என்பது தமிழ் ஆய்வாளர்களுக்குத் தெரிந்த, ஆனால் வேறுசிலர் நம்ப விரும்பாத ஒர் உண்மை. ஒரு தடவை அந்த யாழ்ப்பாண இராச்சியம் அரசனில்லாமல் தவித்தபோது, யாழ்ப்பான்த்திலிருந்த மழவராயன் (பாண்டி மழவன்) என்பவனால் மதுரையிலிருந்து அழைத்து வரப்பட்ட சோழ இளவரசன் ஒருவன் நல்லூரைத் தலைநகராக்கி, சிங்கையாரியச் சக்கரவர்த்தி என்ற பெயருடன் யாழ்ப்பாணத்தின் அரசனானான். பின்னர், அவனுடைய பரம்பரையைச் சேர்ந்த சயசிங்கையாரியன் என்பவனின் ஆட்சிக் காலத்திலே மதுரையிலிருந்து வந்த நீல கண்ட ஐயர் என்பவர் அமைச்சராகப் பணியாற்றினார். அவருக்குப் புவனேகபாகு என்ற பட்டப் பெயர் இருந்தது. இப்போது கோவில் அமைந்துள்ள "குருக்கள் வளவு" என்ற இடத்திலே கந்தப் பெருமானுக்கு முதன் முதலிற் கோயில் எடுத்தவர் இந்தப் புவனேகபாகுவே என்று கூறுகின்றார், தமிழ் அறிஞர், உரையாசிரியர், மட்டுவில் ம.க.வேற்பிள்ளை. "ஈழமண்டல சதகம்" என்ற தன் நூலிலே இவ்விபரத்தைக் கொடுத்திருக்கும் ம.க. வேற்பிள்ளை,
இலகிய சகாத்த மெண்ணுரற் றெழுபதா மாண்டினெல்லை யலர்பொலிகமல மார்பனாம் புவனேகபாகு நலமிகு யாழ்ப்பாணத்துநகரிகட்டுவித்துநல்லைக் குலவிய கந்த வேட்குக் கோயிலும் குயிற்றினானே.
என்ற செய்யுளையும் ஆதாரமாகக் காட்டியுள்ளார். இதிலுள்ள சக ஆண்டு 870 என்பது கி.பி.948 ஆகும். ஆமாம் ! ஆயிரத்து அறுபத்தொரு ஆண்டுகளுக்கு முன்னரே கட்டப்பெற்ற ஆதி கோவில் அது கி.பி.1450 ஆம் ஆண்டு வரை நல்லைக் கந்தனின் அருளாட்சி, நல்லைத் தமிழ் மன்னர்களின் நல்லாட்சி ஆகியவற்றின் சங்கமத்தில் மக்களின் வாழ்க்கை அமைதி நிறைந்த ஆனந்த வாழ்க்கையாக அமைந்தது.
ஆனால், அதைக் கண்டு பொறுக்கமுடியாத கோட்டை
மன்னன் ஆறாம் பராக்கிரமபாகு, யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் நோக்குடன் 1450 ஆம் ஆண்டில் தன்னுடைய வளர்ப்பு மகன்

B.2O09 விரோதி ஆவணி01
சப்புமால் குமரையா என்ற சண்பகப் பெருமாளைப் படையுடன் அனுப்பினான். யாழ் மன்னன் கனகசூரிய சிங்கை ஆரியனால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. நல்லூரிலிருந்த மாட மாளிகைகள், கூடகோபுரங்கள் தரைமட்டமாக்கப்பட்டன; நல்லைக் கந்தனாலய மும் நாசமாக்கப்பட்டது. சண்பகப்பெருமாள் நல்லூரின் மன்னனானான். தந்தை வழித் தமிழ் இரத்தத்தைத் தன்னுள்ளே கொண்டிருந்த அவன், ஆலயத்தை அழித்தொழித்த பாவத்துக்குப் பிராயச்சித்தம் செய்யத் தீர்மானித்தான். கந்தப் பெருமானுக்குக் கவின்மிகு ஆலயமொன்றைத் தன் அரசிருக்கைக்கு அண்மை யிலேயே அமைத்தான். "குருக்கள் வளவு"க் குமரன் கண்ட முதலாவது "இடப்பெயர்வாக" இதைக் கொள்ளலாம். பதினேழு ஆண்டுகள் நல்லூரைஆண்ட சண்பகப்பெருமாள், அதன்பின் கோட்டைக்கு விரைந்தான்; ஆறாம்புவனேகபாகு என்ற பெயருடன் கோட்டையின் மன்னனானான். நல்லூர்க் கந்தசுவாமி கோயிலின் கட்டியத்தில் இடம்பெறும் புவனேகபாகு இவனேதான்.
பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கைக்கு வந்த போர்த்துக்கீசருக்குக் கோட்டையும் சரி, யாழ்ப்பாணமும் சரி, ஆக்கிரமிக்கப்படவேண்டிய, அடக்கி ஒடுக்கப்படவேண்டிய அரசுகளாகவே இருந்தன. ஆள் அணி அம்பு இருந்த காரணத்தால் அதை நிறைவேற்றுவதற்கு அதிக நாள் எடுக்கவில்லை. எந்த ஒர் இந்து ஆலயமும் இந்த மண்ணிலே இருக்கக்கூடாது என்ற இறுக்கமான நிலைப்பாட்டுடன் அவர்கள் செயற்பட்டபடியால், முத்திரைச் சந்தையிலே கம்பீரமாகக் காட்சியளித்த கந்தனாலயம் 1621ஆம் ஆண்டில் மீண்டும் கற்குவியலானது; மிக விரைவில் வேறோர் இடத்திலே கோட்டை ஒன்றை உருவாக்குவதற்குப் போர்த்துக்கீசருக்குக் "கை"கொடுத் தது ஆலயத்தின் விக்கிரகங்களை அண்மையிலுள்ள பூதராயர் குளத்திற் புதைத்துவிட்டு நீர்வேலிக்கு ஒடித் தப்பினர் குருக்கள்மார்!
போர்த்துக்கீசருக்குப் பின்னர் வந்த ஒல்லாந்தரின் மதவெறி சற்று " மாற்று"க் குறைந்திருந்தது. எனினும் முத்திரைச் சந்தையில் முன்னர் முருகனாலயம் இருந்த இடத்திலே தம்முடைய தேவாலயத்தைக் கட்டி முடிப்பதில் அவர்கள் மிகுந்த முனைப்புடன் செயற்பட்டனர். அப்போது அவர்கள் கட்டிய தேவாலயத்தை இன்றைக்கும் நாம் பார்த்துஎங்கலாம்
ஒல்லாந்தரின் மனப்பாங்கிலே தான் அவதானித்த மாற்றத்தைத் தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு கந்தனுக்குக் கற்கோயில் கட்டும் பணியில் இறங்கினார், கிருஷ்ணையர் சுப்பையர் என்னும் ஒருவர். ஆனால் 1734 ஆம் ஆண்டிலே மடாலயம் ஒன்றைத்தான் அவரால் அமைக்க முடிந்தது. முன்னர் கந்தனாலயம் இருந்த இடம், முடக்கப்பட்டுவிட்ட நிலையில், முத்திரைச் சந்தைக்கு அருகே அந்த மடாலயத்தை அவர் அமைத்தார். உள்ளே வேல் பிரதிஷ்டை செய்யப்பெற்றது; புராண படனம் கிரமமாக நடைபெற்றது.
பதினைந்து ஆண்டுகளின் பின்னர், 1739 ஆம் ஆண்டில், முன்னைய குருக்கள் வளவை அடையாளங் கண்டார் கிருஷ்ணையர் சுப்பையர். அக்காலத்தில் ஒல்லாந்தரின் அரச சேவையில் இருந்த தொன்யுவான் மாப்பாண முதலியாரின் உதவியுடன் "அம்பலவாணர் கந்தப்பச் செட்டி" என்ற பெயரில்
->

Page 3
இந்துசாதனம் 7.O.
அந்தக் காணியைப் பதிவு செய்து கோவில் கட்டும் பணியைத் தொடங்கினார். பொதுமக்கள் பலர் உதவி செய்தனர்; தொன்யுவானும் அந்தத் தொண்டில் தன்னை ஈடுபடுத்திக் G5ITGoTLITi.
கோவில் உருவாகிவிட்டது; கும்பாபிஷேகம் செய்யப் பெற்றது. பூசைப் பொறுப்பைக் கிருஷ்ணையர் சுப்பையர் ஏற்றுக்கொள்ள, கோவிலின் நிர்வாகம் மாப்பாண முதலியாரின் பொறுப்பானது. இவருடைய பரம்பரையினர் தாம் - சைவர்கள் தாம்-இன்றும் நிர்வாகிகளாக இருக்கின்றனர். குருக்கள் வளவுக்கு உரிமை பெற்ற அம்பலவாணர் கந்தப்பச் செட்டி, யார்? "வேதக்கார"ருக்கும் வேலாயுதப்பெருமானுக்கும் என்ன தொடர்பு? அமாவாசைக்கும் அப்துல் காதருக்குமிடையேயுள்ள தொடர்பு போன்றதுதானோ? என்ற நியாயமான கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டிய கடமையை நான்மறப்பேனா?
அம்பலவாணர் கந்தப்பச் செட்டி என்பவர் சாட்சாத் கந்தசுவாமியார்தான். (அம்பலவாணர் - சிவபெருமான்; கந்தப்பச் செட்டி - கந்தசுவாமியார்) கந்தப் பெருமான் "இருந்து" அருள்பாலிக்கும் இடம் அவர் பெயரிற் பதிவுசெய்யப்படுவதுதானே நீதி
தொன்யுவான் மாப்பாண முதலியார் பரம்பரைக் கிறிஸ்தவர் அல்லர், பஞ்சத்துக் கிறிஸ்தவரும் அல்லர்; அந்தக் காலத்தில் அரசாங்கத்திலே உத்தியோகம் பார்க்க விரும்பியோர், கிறிஸ்தவர்களாகவே இருக்கவேண்டும் என்ற காரணத்தினால், மறைமுகமான பலாத்காரத்தினால் "பாசாங்குக்" கிறிஸ்தவர் ஆனவர். அவருடைய இயற்பெயர் இரகுநாத மாப்பாண முதலியார். நம்பிக்கையால் சைவராகவும் நாமத்தால் கிறிஸ்தவராகவும் "பேர்" பெற்றவர் அவர் அந்தக் காலத்திலே கணிசமான தொகையினர் இந்த நோக்கத்துடன் மதம் மாறினர். இத்தகையோாைய் "பஞ்சாட்சரக் கிறிஸ்தவர்" என்றும் சிலர் குறிப்பிட்டனர்!
மீண்டும் குழப்புகின்றேனா?
தெளிவாக்குகின்றேன். பஞ்சாட்சரம் என்ஜர ஐந்தெழுத்து 1 ச - ம் - ப - ள -ம் ! (ந ம சி g ல ) சம்பளத்துக்காகக் கிறிஸ்தவர் ஆனோர் ஃ ஸ்தவர்
முன்னர் குறிப்பிட்ட சிறீ சங்கபோதி புவனேகபாகுவின் பெயருடன், இந்த இரகுநாதமாப்பாண முதலியாரின் பெயரும் நல்லூர் கட்டியத்தில் இடம் பெற்றுள்ளது. (மகோற்சவ காலங்களில் வீதி உலாவுக்காகப் பிரதான மூர்த்தி புறப்பட இருப்பதையும், பின்னர் அந்த வீதியுலா வெற்றிகரமாக நிறைவேறியதையும் பகிரங்கமாக அறிவிப்பது கட்டியம். அந்தப் பவனியிலே கலந்து கொள்பவர்களாக ஏனைய பல மூர்த்திகளின் பெயர்களும் அறிவிக்கப்படுகின்றன. நல்லூர்க் கந்தசுவாமி கோவிலை நிறுவியவர்கள் என்றவகையில், சிறீ சங்கபோதி புவனேகபாகு, இரகுநாத மாப்பாண முதலியார் ஆகியோரின் பெயர்களும் நல்லூர் "கட்டிய"த்தில் இடம்பெறுகின்றன. கோவில் மந்திரங்களை நேரடியாக ஒலிபரப்புவதில்லை என்ற நல்ல மரபு நல்லைக் கந்தன் ஆயத்தில் நடைமுறையில் இருப்பதால், இந்த விபரங்களைப் பலர் அறியாதுள்ளனர்).
கிழக்குப் பார்த்த கருவறையிலே கருணை மழை பொழிந்து கொண்டிருப்பவர்)து கந்தன் கை வேல் அது வீர வேல்;
O

2009 விரோதி ஆவணி01
வெற்றி வேல்; அடியவர்களின் அல்லல் அகற்றி அபயமளிக்கும் ஆறுமுகப்பெருமானின் அற்புதமான "சக்தி"வேல்
மகா மண்டபத்தின் வட பாரிசத்திலிருந்தபடி தெற் கேயுள்ள சண்முகதிர்த்தத்தின் குளிர்மையையும் தூய்மையையும் ரசித்துக் கொண்டிருக்கின்றார் சண்முகப் பெருமான். ஸ்நபன மண்டபத்திலே முத்துக்குமாரஸ்வாமியைத் தரிசிக்கலாம்-தெற்குப் பார்த்த சந்நிதிதான். தீர்த்த மண்படத்தில் வடக்கு நோக்கி நின்று அருள்பாலிப்பவர் தண்டாயுதபாணி
பிள்ளையார், வள்ளி - தெய்வயானை, சந்தான கோபாலர், வைரவர், சூரிய மூர்த்தி ஆகியோருக்குத் தனிச் சந்நிதிகள் உண்டு வசந்த மண்டபத்தின் அழகுக் கொழிப்பை பார்த்துத்தான் அனுபவிக்கவேண்டும்
வருடத்துக்கொருவடிவமும் வாரத்துக்கொருவனப்புமாய் - அற்புதமோ அதிசயமோ என்றுவியக்க வைக்கும் வகையில் எழில் கொஞ்சும் இந்திரலோகமாய், கலைஞானப் பொழிலாகக் காட்சி தருகின்றது இந்தக் கந்தன் கோயில், அறங்காவலர்களின் தரமான கற்பனையும் வளமான மனமுமே பிரதான காரணம்
ஆலய நிர்வாகம் என்பதின் அரிச்சுவடியையே அறியா திருப்பவர்களுக்கு நல்லைக் கந்தன் கோயில் ஒரு தி (சி) றந்த பல்கலைக்கழகம், கேட்டு அறிந்து கொள்வது சாத்தியமில்லா விட்டாலும், பார்த்துப் பின்பற்றுவதற்கு அங்கே பல விஷயங்கள் இருக்கின்றன.
நேரந்தவறாமை என்பது நல்லூர்க் கந்தனின் தனித் தன்மைகளுள் முதற் தன்மை கடிகாரத்தைப் பார்த்து நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றனவா அல்லது நிகழ்ச்சிகளைப் பார்த்துக் துதாரங்கள் இயங்குகின்றனவா என்பது பிரித்துப் பார்க்க முடியாத ஒரு பெரியமர்மம் ஒன்றை மிகவும் உறுதியாகச் சொல்லலாம். கோவில் நிகழ்ச்சிகளைப் பார்த்து உங்கள் கடிகாரங் களை நீங்கள் சரிசெய்துகொள்ளலாம்!
"கல்கி" ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஒரு தடவை நல்லூர்த் திருவிழாவைப் பார்க்க வந்திருந்தார். அன்றைய பகலில் அதிக தூரம் பிரயாணம் செய்ததால், உடம்பு அசதியாக இருந்ததாம். வீதியிலிருந்த வெள்ளி மணல், நீட்டி நிமிர்ந்து படுக்கும்படி தன்னைத் தூண்டிக்கொண்டே இருந்ததாம். ஆவலைக் கட்டுப்படுத்த முடியாமல் தன் அங்கவஸ்திரத்தை விரிக்க முயன்றபோது, கண்ணுக்குள் எண்ணெய் விட்டுக் கொண்டு வீதிகளில் நடமாடும் கோவிற்பணியாளர்கள் "அட, நம்ம கண்ணில் மண்ணைத் தூவி விட்டு இந்தக் குப்பை எப்படி இங்கே வந்து சேர்ந்தது? என்ற ஆத்திரத்தில் தன்னைத் தூக்கிக் குப்பையில் வீசிக் கொண்டுபோய் விடுவார்களோ!" என்ற பயம் திடீரென்று ஏற்பட்டதாம்; தன் அங்கவஸ்திரத்தை மீண்டும் தோளிலேயே போட்டுக் கொண்டாராம்
ஆயிரமாயிரம் அடியவர்கள் தினந்தோறும், கணந் தோறும் நிறைந்திருக்கும் நல்லூரில் சுத்தத்தைப் பேணுவதில் எத்துணை கவனம் செலுத்தப்படுகின்றதென்பதை இதைவிடச் சிறப்பாக விளக்கிவிடமுடியாது
ஆடி அமாவாசை கழிந்த ஆறாம் நாளில் கொடியேற்றம் நடைபெறுகின்றது. இருபத்து நான்காம் நாள் தேர்த் திருவிழா, -->
3

Page 4
இந்துசாதனம் 77 OE
அடுத்த நாள் தீர்த்தம்; அதற்கடுத்த நாள் பூங்காவனம். கொடியேற்றம், மஞ்சம், கைலாச வாகனம், மாம்பழத் திருவிழா, சப்பறம், தேர், தீர்த்தம், பூங்காவனம் ஆகியவை சிறப்புத் திருவிழாக்கள் என்று சொல்கின்றார்கள். ஆனால், அடியார்கள் ஒவ்வொரு திருவிழாவையுமே சிறப்புத் திருவிழாவாகக் கருதி, முண்டியடிக்கிறார்கள்!
நல்லூர்த் திருவிழாக்களுக்குச் செல்பவர்கள் அங்கே வேறு எதைத்தான் செய்யாவிட்டாலும், வேறு எதைத்தான் பார்க்காவிட்டாலும் அந்தந்த வேளையில் வீதியில் வந்து கொண்டிருக்கும் வேற்பெருமானை, முத்துக்குமாரஸ்வாமியை, வள்ளி தெய்வயானையை, பழனியாண்டவரை, சண்முகப் பெருமானைப் பார்க்காமல், பார்த்து, அந்த அழகைக் கண்களால் பருகாமல் வீடு திரும்பவே மாட்டார்கள். கந்தப் பெருமானை இந்தக் கோலத்திற் காணாத கண் என்ன கண்ணே என்று ஒவ்வொரு நாளுமே பாடி மகிழக்கூடியபடி, ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் அழகுக் கோலம் ஒவ்வொரு மாலைத் தொகுப்பு ஒவ்வொரு விதமான சாத்துப்படி அவனை அலங்காரக் கந்தன் என்று சொல்வதில் அர்த்தம் நிறைய உண்டு, ஆடம்பரக் கந்தன் என்றும் சிலர் சொல்வர். ஆனால் விலைவாசிகள் விண்வெளியிலே சஞ்சாரம் செய்துகொண்டிருக்கும் இந்த வேளையிலுங்கூட ஒரு ரூபாவை மட்டும் கொடுத்தால் முருகனுக்கு அர்ச்சனை செய்வித்துப் பிரசாதத்தைப்பெற்றுக்கொள்ள முடியும் என்பதையும் மறக்கக்கூடாது.
வல்லிபட்டி க. குமாரசாமி முதலியார், இருபாலைச் சேனாதிராய முதலியார், நல்லூர் பரமானந்தப் புலவர், நவாலியூர் சோமசுந்தரப் புலவர், கொக்குவில் சபாரத்தின முதலியார், சரவணை தில்லைநாதப் புலவர், பண்டிதர் நெ. வை. செல்லையா, புலோலி தியாகராசபிள்ளை, கரணவாய் செவ்வந்தி நாத தேசிகர், மகாவித்துவான் சி. கணேசையர், சுவாமி விபுலானந்தர், நல்லூர் சந்திரகேசர பண்டிதர், சுன்னாகம் முத்துக்குமார கவிராயர் போன்ற
 

B2O09 விரோதி ஆவணி01
இலக்கண இலக்கிய விற்பன்னர்கள், பெரும்புலவர்களெல்லாம் நல்லூரான் அருளை நயந்து பாடியிருக்கின்றார்கள். நம் கண் முன் வாழ்ந்த சித்த புருஷர் யோகர் சுவாமிகள் அற்புதமான பல பாடல்களைப் பாடியுள்ளார்.
தென்னிந்தியாவிலிருந்து இங்கு வரும் சைவத் தமிழ்ப் பேரறிஞர்கள் அனைவருமே, நல்லூரானைத் தரிசிக்காமல் திரும்பிச் செல்ல விரும்புவதில்லை. "யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களிலே நல்ல ஊர் நல்லூர். அது தலைசிறந்ததொரு புண்ணிய கூேடித்திரம். இந்தத் திவ்ய கூேடித்திரத்திலே சித்தியெய்திய மகானொருவரின் ஆத்மீக அலை, ஈழநாடு முழுவதிலும் பாரத நாட்டிலும், அப்பாலேயும் பரவியிருப்பது பிரசித்தம். இங்கே முருகனின் திருவருள் வெள்ளம் பிரவாகிக்கின்றது. வருடந் தோறும் எண்ணிறந்தவர்கள் அகமும் புறமுந் தூயராய் உய்தி தலைக் கூடுகின்றார்கள்" என்கின்றார் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை.
ஆகம முறைப்படி நல்லூர்க் கோவிலைக் கட்டுவதற்கு எடுத்த முயற்சிகள் கைகூடாமற் போனபோதும், "இந்தக் கோவிலில் அருள் விளக்கம் நிறைய இருக்கின்றது" என மன நிறைவுடன் சொன்னார் ஆறுமுகநாவலர்.
யாழ்ப்பாணத்துச் சித்த புருஷர் யோகர் சுவாமிகள், தன்னை நாடி வந்தவர்களுக்கு அடிக்கடி சொன்ன ஆன்மீக ஆலோசனை இதுதான்-நல்லூரானுக்கு அபிஷேகம் செய், அருச்சனை செய், போ".
"தன்னை நம்பியிருக்கும் என்னை நல்லூரான் கைவிடவில்லை; இனியும் கைவிடமாட்டான். அவனை நான் மறந்தாலும் என் கால் மறக்காது; என் கை மறக்காது; என் கண் மறக்காது" நல்லூரானைக் கும்பிடுவதிற் கொள்ளையின்பம் அடையும் ஒவ்வொருவரும் இப்படித்தான் சொல்கிறார்கள். நாங்களும் அவர்களுடன் இணைந்து கொள்வோமா? 人
s
நல்லூர் மஞ்சத் திருவிழா
-சிற்பி
தஞ்சமென நின்டிையைத் தாவியணைத் தேத்தித்
தாளலயத் தோடுதமி ழாலடியர் பாட
கொஞ்சுமொழிக் கோவையிதழ்க் கோதையிரு பேரும்
கூடவிருந் துன்ைெழிலைக் கூட்டிமுறு வலிக்க
பஞ்சவண்ண மாலையசைந் தேபரத மாட
பக்திமணம் வீசிடுநல் லூர்ப்பதியின் கண்ணே
மஞ்சமிசை மாமுருக! நீமலரும் மாட்சி
மாநிலத்து வேறிடத்திற் காண்பரிய காட்சி

Page 5
இந்துசாதனம் 7, O
சொல்லிய பாட்டின் பொரு
திருமுனைப்பாடி நாட்டிலே திருவாமூரிலே சை பெற்றோரை இழந்து தமக்கை திலகவதியாரின் அரவணை வாழ்ந்தவர் அவர் எனினும், சமணர்களின் போதனை கார சமயத்தைத் தழுவினார் விரைவிலே தருமசேனர் Graծյp 6)ւամ கண்டு வருந்திய திலகவதியார் அவரை மீண்டும் ை வீரட்டானேஸ்வரரை உளமுருக வேண்டினார். அவ் வேண்டு நோயை உண்டாக்கி அவரை வருத்தினார். நோயைக் கு கைவிட்டனர்.
நோயின் கொடுமையைப் பொறுக்க
திருவீரட்டானேஸ்வரரைத் தினமும் 3នា60,6916)
நாவுக்கரசர் என்ற பெயர் உனக்கு வழங் கும்
s பிழையின்றிப் பாடுவதற்கு =। ରକ୍ଷିଣାୟିତ
திருநாவுக்கரசர் திருப்பதிகம்
தலம்: திருவதிகை வீரட்டானம் பண்: விகால்லி
திருச்சிற்றம்பலம்
கூற்றா யினவா றுவிலக் கதிலீர்
கொடுமை பலசெய் தனநான் அறியேன் ஏற்றா யடிக்கே இரவும் பகலும்
பிரியா துவணங் குவனெப் பொழுதும் தோற்றா தென்வயிற் றினகம் படியே
குடரோடுதுடக் கிமுடக் கியிட ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில
வீரட் டானத் துறையம் மானே.
கெடிலம்: திருக்கெடிலம் என்னும் ஆற்றங்கரையிலுள்ள, அதிகை வீரட்டானத்து - திருவதிகை வீரட்டானம் என்னும் திருக்கோயிலில், உறை- எழுந்தருளியுள்ள, அம்மானே - தந்தையே (இறைவனே), கூற்று ஆயின ஆறு - சூலை நோயானது இயமனைப்போல் வந்து வருத்துகின்ற வகையை,
விலக்ககிலீர் - நீக்கி அருளுகின்றீரில்லை, செய்தன பல
LO Oe OOe OO OO MO OTOe OeO OeO OM OTO MTOe eOeO OO Oe ஆண்டு ஆயிர
சைவம் வளரத் தமிழ்வு
சார்ந்த நல்லற
பொய்மை போக்க வந்
புனித இந்து அ
வையத் தில்நூற் றிருப
வருடங் கண்ட
ஐயன் அம்பல வன் அ
ஆண்டு ஆயி
Qஒ999999999999999999
C
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

82OO9 விரோதி ஆவணி01
வருணர்ந்து சொல்லுவோம்
வேளாண்குலத்திற் பிறந்தவர் மருணிக்கியார் சிறுவயதிலேயே ாப்பிலே சைவ சமய நூல்களைக் கற்றுச் சைவ வாழ்க்கை F6OOTLDIT3, ëëëI DILIGLD 6LDijë 5LDub என நினைத்து அந்தச் நடன் சமண சமயக் குருவாக உயர்ந்தார். தம்பியின் போக்கைக்
சவ சமயத்துக்குக் கொண்டுவந்தருளும்படி திருவதிகை கோளுக்குச் செவி சாய்த்த இறைவன் தருமசேனருக்குச் சூலை படுத்தச் சமணரால் முடியவில்லை. அவர்கள் :
முடியாமல், தமக்கையாரை நாடிவந்தா தீரும் என்றார் திலகவதியார் அதற்கிணங்கத் தருமசேனர் சுரங்களும் பாடி முடிய, சூலைநோய் தீர்ந்தது இன்று முதல்
& p_mL நற்பலன் விரைவிலே கிடைப்பதற்கு ாழிப்புரை ஆகியவற்றை இங்கே தருகின்றோம்.
கொடுமை - அதற்குக் காரணமாக முன்செய்த பல கொடுமைகளை, நானறியேன் - நான் அறியமாட்டேன், ஏற்றாய்(எனினும் எளியேனையும்) ஏற்றுக்கொண்டவராகிய, அடிக்கே - தேவரீராகிய உம்முடைய திருவடியை, இரவும் பகலும் எப்பொழுதும் - இரவு பகலாகிய எந்நேரத்திலும், பிரியாது - இடைவிடாமல், வணங்குவன் - தொழுகின்றேன், தோற்றாதுபுலப்படாமல், என் வயிற்றின் அகம்படி - என் வயிற்றின் உள்ளிடத்தே, குடரோடு துடக்கி முடக்கியிட - குடரோடு சுற்றி முறுக்கிக்கொண்டு நிற்க, அடியேன்- அடியேனாகிய நான், ஆற்றேன் - பொறுக்கமாட்டேன்.
வியாழிப்புரை: வீரட்டானம் என்னும் திருத்தலத்திலே வீற்றிருக் கின்ற எம்பெருமானே 1 சூலை நோய், இயமனைப்போல் வந்து என்னைப் பெரிதும் வருத்துகின்றது. இந்த நோயை என்னால் தாங்க முடியவில்லை. என்ன கொடுமை செய்தபடியால் என்னை இந்நோய் வாட்டுகின்றது என்பதும் எனக்குத் தெரியாது. இரவும் பகலும் உம்மையே வணங்குவேன் (இக்கொடிய நோயை நீக்கியருளும்). 人
SOMe MO MOOe MOTO OTO OTO MO eOTOe OOO OO OTO OTO eSeS ம் வாழியவே! | مساحت قوی امیر
1ளரச் i pët të لٹا اور وہ بھی copouc00وؤ துதித்த , " தனமே!
த்து ாய், வளர்ந்தோங்கி ருளால் ரம் வழியவே

Page 6
இந்துசாதனம் 7.O
விநாயக சதுர்த்தி விரதம் இம்மாதம் 07ஆந்திகதி (23.08.2009)
எழுதியவர் ஆனைப்பந்தி மெ.மி. பாடசாலை அதிபராகப் பல்லாண்
விநாயக
எஸ்.சோமேஸ்வரபிள்ை
விநாயக தத்துவம்
உலகங்கள் இயங்குவதற்கு மூலகாரணமாகிய பொருள் பிரணவமாகும். இதற்குத் தலைமையாக இருக்கும் சக்திக்கு "விநாயகர்" என்று பெயர். விநாயகர் எனும் பதம் தமக்கு மேலானவர் என்று ஒருவருமில்லாத பெருந்தலைவர் என்பதைக் குறிக்கின்றது. வி-இல்லாத,நாயகர்-தலைவர்.
விநாயகர் தோற்றம்
விநாயகரின் தோற்றம் பல புராணங்களில் பலவாறாக சித்தரிக்கப்படுகின்றது. சிவனும் உமையம்மையும் சித்திர மண்டபத்திலே உள்ள பிரணவ எழுத்துக்களை நோக்குகையில் அவ்வெழுத்துக்களிலிருந்து இரண்டு யானைகள் தோன்றி, விநாயகரை உருவாக்கியதாகக் கந்தபுராணம் சொல்கின்றது. மேருமலையின் வடபாலுள்ள ஒரு கிராமத்தில் வசித்த பிராமணக் குடும்பம் நெடுநாளாகக் குழந்தைப்பேறு இன்றி வருந்தியது. சிவபிரானை வணங்கி, தான தருமங்கள் பல செய்து வழிபட்ட காரணத்தினால், அக்குடும்பத்தில் உமையவள் பிள்ளையாகப் பிறந்தாள். பின்னர் தவஞ்செய்து தக்கபருவமடைந்து சிவனைத் திருமணஞ் செய்தாள். இருவரும் அவந்தி நகருக்குச் செல்லும் வழியில் இரு யானைகள்கூடி மகிழ்ந்து உலாவுவதைக் கண்டு, தாமும் யானைகளாக உருவாகி மகிழும்போது, விநாயகர் தோன்றினார் என்பதும் ஒரு கதை. பிள்ளையார் விரதகாலத்தில் நமது ஆலயங்களில் படிக்கப்படும் பிள்ளையார் கதை நூலில் அவரின் தோற்றம் பற்றிக் கூறப்பட்டிருப்பதைக் காணலாம். இந்தக் கதையையே பிடியதனுருவுமை என்று தொடங்கும் தேவாரத்தில் ஞானசம்பந்தர் குறிப்பிட்டுள்ளார். விநாயகர் புராணத்திலும் விநாயகர் தோற்ற வரலாறு உண்டு.
 

32OO9 விரோதி ஆவணி01
அனுஷ்டிக்கப்படுகின்றது. விநாயகர் சம்பந்தமான இக்கட்டுரையை டுகள் பணியாற்றியவர்: நயினாதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.
b ELតាច
b6IT B.A. (SL) Dip.in.Ed.SLPS 2-1
தோற்றத்தத்துவம்
பிள்ளைப்பேற்றை விரும்பி, தானதருமம் செய்த அந்தணர் குடும்பத்துக்கு இப்பிறப்பில் பிள்ளைப் பாக்கியமே இல்லை என்று சிவம் கூறுவதும், உமையம்மை பிள்ளைப் பாக்கியத்தை வழங்க வேண்டுமெனக் கூறுவதும் எமக்கு அரிய உண்மைகளை உணர்த்துகின்றன. தவத்தின் வலிமை விதியையும் மாற்றி யமைக்கும் எனும் தத்துவம் உணரப்படுகின்றது. தவம் என்பதற்கு உறுதியோடு கூடிய நியாயமான விடா முயற்சி என்று விளக்கமளித்து "ஊழையும் உப்பக்கம் காண்பார் உலைவின்றித் தாழாது உஞற்றுபவர்" என முயற்சியின் வலிமை பற்றித் திருக்குறள் கூறுவதும் சிந்தனைக்குரியது. சிவன் உமை உரையாடலை, சிவனது மனதிலே ஏற்பட்ட நீதிக்கும் கருணைக்கு மான உரையாடலாகக் கருதலாம். வினையின் நியதியைச் சிவனது கருணை வென்றதனாலேயே அந்தணருக்கு உமையம்மையார் பிள்ளையாகப் பிறந்தார். பூமிபெருமையுறவும் தேவர்தம் கடமைகளை ஒழுங்குடன் செய்யவும் அந்தணர் தம் ஒழுக்கங்களில் சிறக்கவும், பசுக்கூட்டங்கள் உலகில் பொலிந்து பெருகவும் வேதாகம நீதி மேன்மையுறவும் விநாயகப் பெருமான் தோன்றினார்
66.
விநாயகருக்குப்பிழத்தமானவை
பிள்ளையாருக்கு மோதக நைவேத்தியம் படைத்து முதன் முதலாக வழிபட்டவர் வசிட்ட தவசியின் பத்தினியான அருந்ததிதேவியாரேயாவர். மோதகம் விநாயகருக்கு மிகவும் பிடிக்கும். கொழுக்கட்டை, அவல், பொரி, வடை, வெல்லம், கடலை, பழங்கள், எள்ளுருண்டை, தேங்காய் என்பன விருப்பமான பிரசாதங்களாகும்.
-->
நல்லூர் -கார்த்திகைத் திருவிழா
-அமரர். அராலி பரமேஸ்வர சர்மா -
கார்த்திகைப்பேர்க் காரிகையாரறுவ ருக்குங்
கைக்குழந்தையாய்முலைப்பா லுட்ட உண்டாய் கார்த்தடங்கண் வள்ளிக்காய்க் கள்வ னாnைய்
காத்தருளத் தேவர்க்காய் வீரன் ஆnைய் தீர்த்தன் நீ திருநல்லைப் பதிமன் nைவுன்
திருச்சரிதம் நான்பாடித் தீருந் தானோ கார்த்திகை நாள் அடியர்குழாம் கண்ணிர் மல்க
காத்திருந்தோம் கமலபதங் காணு மாறே.
->

Page 7
இந்துசாதனம் 7.O
முக்கியமாக மாவிலை, சங்கு புஷ்ய இலை, மாதுள இலை, அறுகம்புல், தங்க அரலி இலை, தும்பைப்பூ முதலியவை. பூசைக்கு உபயோகப்படுத்தப்படுகின்றன. துளசி இலையைப் பிள்ளையார் சதுர்த்தி தினத்தன்று பயன்படுத்துவதைக் காணலாம். பிள்ளையாருக்குக் காகிதத்தில் அழகான குடை ஒன்று செய்து வைக்கும் நடைமுறையும் உண்டு.
விநாயகவிரதங்கள்
1. சுக்கிர வார விரதம்
வைகாசி மாதத்து முதற்சுக்கிர வாரந் தொடங்கி சுக்கிர வாரந்தோறும் அனுட்டிப்பது.
2. விநாயக சதுர்த்தி விரதம்
ஆவணிமாத சுக்கிலபக்ஷ சதுர்த்தியில் அனுட்டிப்பது.
3. விநாயக சஷ்டி விரதம்
கார்த்திகை மாதத்து கிருஷ்ணபட்சப் பிரதமை முதல் மார்கழி சுக்கில பக்ஷ சட்டி வரை இருபத்தொரு நாட்கள் தொடர்ச்சியாக அனுட்டிப்பது.
திதிகளில் வணங்கும் கணபதி வழவாங்கள்
1. பிரதமை - நிருத்த கணபதி 2. துதியை - பாலகணபதி 3. திருதியை - தருணகணபதி 4. சதுர்த்தி - பக்தி கணபதி 5. பஞ்சமி - வீரகணபதி 6. சஷ்டி - சக்தி கணபதி 7. சப்தமி - சித்தி கணபதி 8. அட்டமி - உச்சிஷ்ட கணபதி 9. நவமி - விக்ன கணபதி 10.தசமி - ஷிப்ரகணபதி 1 ஏகாதசி - ஹேரம்ப கணபதி 12.துவாதசி - லக்சுமிகணபதி 13. திரயோதசி - மகாகணபதி 14. சதுர்த்தசி - விஜயகணபதி
15. பூரணை (பெளர்ணமி)
நிருத்த கணபதி
நல்லூர் - காலை -கோபாலர் உற்சவம் மாலை - கைலாச வாகனம்
-அமரர். அராலி பரமேஸ்வர சர்மா -
புவிவாழு முயிரனைத்துங் காக்கும் பூங்கண் பூபாலன் கோபாலன் புகழைப் பாடி நவமான தேன்கீத நாதம் பாய
நல்லவிழா நல்லையுளர் காலை கண்டும் சிவபாலன் வள்ளிதெய்வ யானைசேரச்
சிவாைர்போற் கைலாச மலையிற் றோன்றும் உவமான மில்காட்சி மாலை கண்டும்
ஊழகன்று உயர்பதத்தை உறுவர் மாதோ,

B2O09 விரோதி ஆவணி0
விநாயகர்திருமேனிகள்
1)பாலகணபதி 2) தருண கணபதி 3) பக்தி கணபதி 4) வீரகணபதி 5) சக்திகணபதி 6)துவிஜகணபதி 7)சித்தி கணபதி 8) உச்சிஷ்ட கணபதி அல்லது
விஜயகணபதி 9) விக்ன கணபதி 10) கூழிப்ர கணபதி 1) ஏரம்ப கணபதி 12)லக்ஷமீகணபதி 13)மகாகணபதி 14) விஜயகணபதி 15) நிருத்த கணபதி 16) ஊர்த்துவ கணபதி 17) ஏகாட்சர கணபதி 18) வரகணபதி 19) திரயாக்ஷர கணபதி 20) கூழிப்ரபிரசாதகணபதி 2) ஹரித்திராகணபதி 22) ஏகதந்த கணபதி 23) சிருஷ்டி கணபதி 24) உத்தண்ட கணபதி 25)ரணமோசன கணபதி 26) துண்டி கணபதி 27)துவிமுக கணபதி 28) மும்முக கணபதி 29) சிங்க கணபதி 30) யோக கணபதி 31) துர்க்கா கணபதி 32)சங்கடஹர கணபதி
இங்கு கூறப்பட்ட 32 கணபதி வடிவங்கள் தவிர, இன்னும் புவன கணபதி, பிங்கள கணபதி, சக்தி கணபதி, பஞ்சபூத கணபதி, மூசிக கணபதி, மூலாதாரக் கணபதி, சித்தி புத்தி கணபதி, வல்லவை கணபதி, வாதாபி கணபதி, சர்ப்ப விநாயகர், கண் திருஷ்டி விநாயகர் எனும் பல திருமேனிகளும் பக்தர்களினால் பேசப்படுகின்றன.
விநாயகப் பெருமான் பூசையிலும் அருட் தோற்றத்திலும் தம்மை எளிமையாகக் கொண்டு வழிபடும் பக்தர்களுக்கு முழுமையான பெருவாழ்வும் சுகபோகமும் செளகரியங்களும் அன்பும் அருளும் அதிட்டங்களும் கிடைக்கும் என்பது உறுதியாகும்.
திருவாக்கும் செய்கருமம் கைகூடும் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக்
காதலால் கூப்புவர் தங்கை. 人
summarbase

Page 8
இந்துசாதனம் 747 ODE
சைவசித்
(இந்துசாதனம்-ஆடி 2009
முனைவர் ஆ.
பதிஎன்பதன் பொருள்
23. பதிஎன்னும் சொல்லின் பொருள் என்ன?
சைவ சமயம் முதற் பொருளைச் சிவம் என்னும் சிறப்புப்பெயரால் குறிப்பிடுகிறது. ஆயினும் தத்துவ முறையில் கூறும்பொழுது அம்முதற் பொருளைப் பதி என்றே குறிப்பிடும்.
பதி என்பதற்குக் காப்பவன் என்பது பொருளாகும். தன் கீழ் உள்ள எல்லா உயிர்களுக்கும் வேண்டுவனவற்றைச் செய்து நல்ல வகையிற்காக்கும் தலைவன் ஆதலின் பதிஎனப்படுகின்றான்.
தலைவனாகிய அவனைச் சார்ந்தே வாழ்வதற்குரிய உயிர்கள் அனைத்தும் அவனுக்கு எக்காலத்தும் அடிமையாம். உயிரல்லாத ஏனைய பொருள்கள் அனைத்தும் அவனுக்கு உடைமையாம். சுருங்கச் சொன்னால், பதிக்குப் பசு அடிமை; பாசம்
60L6).
பதியினால் அறிவு விளங்கப் பெற்று, அவனால் செலுத்தப்பெற்று, அவனால் ஆளப்பட்டுத் தமக்கென்று எச் சுதந்திரமும் இன்றி நிற்கின்ற உயிர்கள் தம்முடைய இந்த நிலையைச் சிறிதும் உணர்வதில்லை. பதிக்குத் தாம் அடிமை என்பதை நினையாமல், உலகப் பொருள்களுக்கு அடிமையாகி வாழ்கின்றன.
கடவுளின் இருப்பைநிறுவுதல் 24. கடவுள் ஒருவர் உண்டு என்பதைச் சைவ சித்தாந்தம்
எந்த முறையில் நிறுவுகிறது?
காணப்படுகின்ற இவ்வுலகின் அமைப்பை வைத்துக் கடவுளின் இருப்பை நிறுவுகிறது சித்தாந்தம்.
செய்யப்பட்ட பொருள் யாவும் காரியப்பொருள் எனப்படும். அஃது அறிவில்லாத சடமாய் இருக்கும். பல பகுதிகளைச் சேர்த்து ஒருங்கிணைத்து உருவாக்கிய பொருளாக இருக்கும். எனவே , அது பல பகுதிகளாகப் பிரிக்கப்படும் தன்மை உடையதாகவும் இருக்கும்.
இவ்வாறு சடமாகிய தன்மையும், பிரிக்கப்படும் தன்மையும் உடைய பொருள் எதுவாயினும் அது செய்யப்பட்ட காரியப்பொருளே என்று திட்டமாகக் கூறமுடியும்.
நாம் வாழும் இப்பெரிய உலகை நோக்கினால், இதுவும் ஒரு காரியப்பொருளே என்பது புலனாகும். ஏனெனில், காரியப் பொருளுக்குரிய தன்மைகள் இவ்வுலகத்தினிடமும் பொருந்தி யுள்ளன. இவ்வுலகம், சடமாயிருக்கிறது. நிலம், நீர், தீ, காற்று வானம் என்னும் பல கூறுகள் இணைந்து உருவானதே இவ்வுலகம். ஆகையால் பிரிக்கப்படும் தன்மை உடையதாகவும் இருக்கிறது.
 

2OO9 விரோதி ஆவணி01
தாந்தம்
- 11ஆம் பக்கத் தொடர்)
ஆனந்தராசன்
எனவே, இவ்வுலகம் செய்யப்பட்ட காரியப் பொருளே என்று
துணியலாம்.
எந்தக்காரியப்பொருளும் ஒரு காலத்தில் தோன்றி யதாகத்தான் இருக்கும். அம்முறையில் உலகமாகிய காரியமும் ஒரு காலத்தில் தோன்றியதேயாம்.
முன்னே இல்லாத உலகம் புதிதாகத் தோன்றியது என்பதைச் சைவ சித்தாந்தம் ஏற்பதில்லை. சைவ சித்தாந்தத்திற்கு அடிநிலையாய் இருப்பது சற்காரிய வாதம். உள்ளதுதான் தோன்றும் என்பதே இக்கொள்கை. அதன்படி, தோன்றுகிற காரியங்கள்யாவும் தோன்றுவதற்கு முன்னும் தம்தம் காரணங்களில் உள்ளவேயாம்.
காட்டாக, குடமாகிய காரியம் தனது காரணமாகிய மண்ணில் முன்னேயே உள்ளது. அக்காரணத்திற் புலப்படாமல் நுண்ணிய நிலையில் இருந்த அது, பின்னர் பருநிலையில் காரியமாய்ப் புலப்பட்டுத் தோன்றுகிறது.
அதுபோல, இப்பொழுது உள்ள உலகம், முன்னே தனது காரணமாகிய 'மாயையில் புலப்படாத நிலையில் நுட்பமாய் அடங்கியிருந்தது. பின்னர் அது காரியமாய்ப் பருநிலையில் வெளிப்பட்டது.
காரணத்தில் உள்ளது. தன்னைத் தோற்றுவிக்கின்ற ஒருவன் இல்லாமல் தானே தோன்றமாட்டாது என்பது கண்கூடாகத் தெரிகின்ற ஓர் உண்மை.
மண்ணாகிய காரணத்திற் புலப்படாமல், நுட்பமாய் அடங்கியிருந்த குடம், தானே செயற்பட்டுப் புலப்படுகின்ற காரிய நிலைக்கு வந்தது என்று யாரும் சொல்லார், அது, வனைவோ னாகிய அறிவுடையோனது செயற்பாட்டினாற் காரிய நிலைக்கு வந்தது என்பதை யாவரும் அறிவர்.
அதுபோல, உலகம் தனது காரணமாகிய மாயையில் நுண்ணிலையில் அடங்கி நின்று, பின் காரியமாய்த் தோன்றியது. எனின், சடமாகிய உலகம் தானே அவ்வாறு செயற்பட்டது என்று சொல்வது பொருத்தமாக இல்லை. பேரறிவும் பேராற்றலும் உடைய ஒருவனே, மிகப்பெரிய பொருளாகிய உலகத்தைத் தோற்று வித்தான் என்று கொள்வதே பொருத்தமாகும்.
இதனால், காரணத்தினின்று தோன்றும் காரியப் பொருள்கள் யாவும் செய்வோனை உடையன என்பது தெளிவாய் விளங்கும்.
இந்த முறையில் உலகத்திற்குக் கடவுள் ஒருவர் இன்றிமையாது வேண்டும் என்று சைவ சித்தாந்தம் வலியுறுத்து
கிறது.
-->
8

Page 9
இந்துசாதனம் 7C
மூன்று காரணங்கள்
25. காரியப்பொருள் எதுவாயினும் அது தோன்றுவதற்கு மூன்று காரணங்கள் வேண்டும் என்பர். அம் மூன்று காரணங்கள் யாவை?
அவை முதற்காரணம், துணைக்காரணம், நிமித்த காரணம் என்பன. ஒரு காரியப்பொருள் எந்த மூலத்திலிருந்து உண்டாகிறதோ, அந்த மூலப்பொருள் முதற்காரணம் எனப்படும்.
காரியப்பொருள் உண்டாவதற்குத் துணைசெய்யும் கருவிகள் துணைக்காரணம் எனப்படும். முதற் காரணத்தையும் துணைக்காரணத்தையும் கூட்டிச் செயற்படுத்திக் காரியப் பொருளைத் தோற்றுவிக்கின்ற கருத்தா அல்லது வினைமுதல் நிமித்த காரணம் எனப்படும்.
குடம் என்ற காரியப்பொருளை எடுத்துக்கொண்டால் அதற்கு மண் முதற் காரணம்; சக்கரம், கழி, நீர் முதலியன துணைக்காரணங்கள், வனைவோன் நிமித்த காரணம். இவ்வாறே பிற காரியப்பொருள்களிடத்தும் இம் மூன்று காரணங்கள் அமைந்திருக்கக் காணலாம்.
26. நீங்கள் முன்னே கூறியவற்றிலிருந்து உலகமாகிய காரியத்திற்கு மாயை முதற்காரணம் என்பதும், இறைவன் நிமித்த காரணம் என்பதும் விளங்கின. எஞ்சியுள்ள துணைக்காரணமாய் அமைவது எது?
துணைக்காரணமாகச் சொல்லப்படுவன இறைவனது ஆற்றலாகிய சக்தியும், உயிர்களின் வினையும் ஆகும்.
உலகத்திற்கு முதற்காரணமாய் உள்ள மாயையை இறைவன் நிமித்த காரணனாய் நின்று, தனது சக்தியைத் துணைக் காரணமாகக் கொண்டு செயற்படுத்தி உலகத்தை உயிர்களின் பொருட்டுத் தோற்றுவிப்பான் என இம் மூன்று காரணங்களையும் இணைத்துக் கூறலாம்.
உலகமும்மாயாவாதமும்
27. உலகம் உண்மையாகவே உள்ள பொருள் என்று சைவசித் தாந்தம் கொள்கிறது. அதற்கு மாறாக, உலகம் பொய் என்ற கருத்தும் சொல்லப்படுகிறதே! அக்கருத்தைக் கூறும் கொள்கை எது?
சங்கரர் மதமே அவ்வாறு கூறுகிறது. அதுவே வேதாந்த மதம் எனவும், அத்வைத மதம் எனவும் நாட்டில் வழங்கி வருகிறது. அதனைப் பின்பற்றுவோர் வேதாந்திகள் எனவும், அத்வைதிகள் எனவும் அழைக்கப்பெறுகின்றனர்.
28. சங்கரர் மதத்தை மாயா வாதம் என்று சைவ சித்தாந்த
நூல்கள் குறிப்பிடுவது ஏன்?
நம்மால் அறியப்படுகின்ற பொருள்கள் யாவும் வெறும் பொய்த்தோற்றங்களே எனவும்,உண்மையில் இல்லாத பொருள்கள் இருப்பதுபோலத் தோன்றுகின்ற பொய்த் தோற்றத்தை உண்டாக்குகின்ற சக்தியே மாயை எனவும் அது கூறுகிறது. இவ்வாறு கண்கூடாகவும், அனுபவமாகவும் நம்மால் அறியப் படுகின்ற பொருள்கள் அனைத்தையும் மாயை என்றே சொல்லிக் கழித்துவிடுவதால், சங்கரர் மதத்தை மாயாவாத மதம் என்று சைவ சித்தாந்தம் குறிப்பிடுகிறது.
29. உலகம் பொய்த் தோற்றம் என்பதை மாயாவாத மதத்தினர்
எவ்வாறு எடுத்துக் காட்டுகின்றனர்?
கயிற்றில் தோன்றும் அரவு என்ற உவமையில் வைத்து விளக்கிக் காட்டுகின்றனர்.
அந்தி மயங்கும் வேளையில், மங்கிய ஒளியில் தனியே நடந்து செல்லும் ஒருவன், வழியில் பாம்புகிடப்பதைப் பார்க்கிறான்;

B2O09 விரோதி ஆவணி01
பதறிப்போய்ப் "பாம்பு பாம்பு" என்று கூச்சலிடுகிறான். அதனைக் கேட்டுப் பலர் விளக்கை எடுத்துக்கொண்டு ஓடி வருகிறார்கள். விளக்கொளியில் பார்க்கும்பொழுது கிடப்பது கயிறு என்று தெரிகிறது. அந்த வழிப்போக்கன் பாம்பைக் கண்டது என்னவோ உண்மை. ஆனால், பாம்பு உண்மையாக இருந்தால் விளக்கைக் கொண்டு வந்து பார்த்தபொழுது அது இருந்திருக்கும். ஆகவே அது கயிற்றைப்போல் உண்மையன்று. அதே நேரத்தில் அது முற்றிலும் இல்லாததும் அன்று. இல்லாதது என்றால் பார்க்க முடியாது அன்றோ? ஆனால், அஃது அவனுக்குக் கண்கூடாகத் தெரிந்ததே.
அதுபோல உலகம், முற்றிலும் மெய்யாகவும் இல்லாமல், முற்றிலும் பொய்யாகவும் இல்லாமல் ஏற்பட்டிருக்கும் ஒரு தோற்றம் என்கின்றனர். தூயமெய்ப்பொருளாகிய பிரமமே இப்படி உலகமாகத் தோற்றமளிப்பது என்றும், இத்தோற்றத்திற்குக் காரணம் மாயை என்றும் அவர்கள் கூறுவர்.
30. அவர்கள் கூறுவதில் உள்ள குறைபாடு என்ன?
அவர்கள் காட்டும் உவமையில், கயிறு பாம்பாகத் தோன்றுவது ஒரு வழிப்போக்கனுக்கு. அதுபோலப் பிரமம் உலகமாகத் தோன்றுவது யாருக்கு? என்ற கேள்வி எழுகிறது. அவர்கள் கொள்கைப்படி பிரமத்திற்கு வேறாக இரண்டாவதொரு பொருள் இல்லை; எல்லாம் பிரமமே என்ற நிலையில், பிரமம் உலகமாகத் தோன்றுவது பிரமத்திற்கே என்றுதான் கூற வேண்டியுள்ளது. இதுபொருந்துமா?
மேலும் அவ்வுவழையிற் கயிறுபோலப் பாம்பும் ஒர் உள்பொருளே. பாம்பு அவ்விடத்தில் அப்பொழுது இல்லாத பொருளாகலாம். ஆனால் எவ்விடத்துமே இல்லாத பொருளன்று. அதனை முன்னமே பார்த்து அறிந்திருப்பதாற்றான் கயிற்றைக் கண்டதும், அதற்கும் பாம்புக்கும் உள்ள சில ஒற்றுமைகளால், வடிவம், வளைந்து கிடத்தல் முதலிய தன்மைகளில் ஒத்திருத்தலால், அது பாம்பாகத் தோன்றுகிறது. பாம்பை அதுவரையிற் பார்த்தே இராத ஒருவனுக்குக் கயிறு பாம்பாகத் தோன்றாது. பாம்பு, பார்த்தறிந்த உள்பொருளாக இருப்பதுபோலப் பிரமம் உலகமாகத் தோன்ற வேண்டுமாயின் உலகம் உள்பொருளாக இருக்க வேண்டும். இவ்வாறு கொள்வது அவர்கள் கொள்கைக்கு மாறாகும். இப்படிப்பலகுறைபாடுகளை எடுத்துக்காட்டலாம்.
31. பொய்த் தோற்றங்களை உண்மையில் இருப்பவைபோலத் தோற்றுவித்து மயக்குகின்ற மாயை என்பது உள்ளதா? அன்றி, இல்லதா? இது பற்றி மாயாவாத மதம் என்ன கூறுகிறது?
மெய்ப்பொருளாகிய பிரமம் ஒன்றே உள்ளது; அதைத்தவிர இரண்டாவதாக யாதொரு பொருளும் இல்லை என்பது அம்மதத்தினரின் அடிப்படைக் கொள்கை. அவர் கொண்ட இக்கொள்கை ஒரு பொருட் கொள்கை எனப்படும்.
அவர் மாயையை"உள்ளது" எனக் கூறினால், பிரமமும் மாயையும் என இரு பொருள்கள் உண்டு என்று ஆகி, அவர்தம் ஒரு பொருட் கொள்கை அடிபட்டுப்போகும். அதற்கு அஞ்சி மாயை "இல்லது" என்றால், இல்பொருளால் யாதும் விளைவதில்லை. ஆகையால், எல்லா விவகாரங்களும் மாயையினாலேதான் உண்டாகின்றன. என்ற அவர்தம் கொள்கை அடிபட்டுப்போகும். இவ்வாறு உள்ளது என்று கூறவும் வழியில்லை. இல்லது என்று கூறவும் வழியில்லாத நிலையில் அம்மதத்தினர் மாயையை "அநிர்வசனியம்" என்று கூறுகின்றனர்.
அநிர்வசனியம் என்பதற்கு "இத்தன்மையது என
வரையறுத்துச்சொல்லமுடியாதது" என்பது பொருளாகும்.
(வளரும்.)

Page 10
இந்துசாதனம் 77 OE
EFLDULIIb di 6 கலாநிதி மனோன்ம6
எமது வாழ்வியலில் நாம் பயன்படுத்தும் பொருட்களைப் பெயரிட்டு அழைக்கின்றோம். இயற்கையின் சக்திகளுக்கும் பெயர்களை நம்முன்னோர் வழங்கியுள்ளனர். தமது ஆற்றலாற் கட்டுப்படுத்த முடியாத ஐம்பூதங்களையும் வாழ்வோடு இணைத்துக் கொள்ள வழிபாட்டைத் துணையாகக் கொண்டனர். நீர்,தீ,காற்று, நிலம், ஆகாயம் எனப் பெயர் கொண்ட ஐம்பூதங்களையும் வழிபட்டு வாழும் முறைமையைக் கொண்டிருந்தனர். இறைவனைப் பற்றித் தாம் பாடிய பாடல்களில் இக்கருத்தைப் பதிவு செய்துள்ளனர்.
இந்த ஐம்பூதங்களின் ஒன்றான தீ, சமயவாழ்வியலில் வழிபாட்டுப் பெருமை பெற்றிருப்பது மட்டுமன்றி, உலகவாழ் வியலிலும் இன்றியமையாத ஒன்றாக விளங்குகிறது. செயற்பாட்டிற்கும், பயன்பாட்டிற்கும் ஏற்றநிலையில் வேறு பெயர் களைப் பெற்று விளங்குகிறது. நெருப்பு, எரி, கனல், அழல், அனல் என்னும் சொற்கள் தீயின் பயன்பாட்டு நிலையால் வழங்கப்பட்ட பெயர்களாகும். இறைவனுடைய திருமேனி, திருச்சடை என்பன சிவந்த நெருப்புப் போன்ற வண்ணமுடையவை. சமயச் சடங்குகளில் எரியோம்பல் முக்கியமானது. தீ யென்ற சொல் எல்லாவற்றையும் முழுமையாக அழிக்கும் சக்தி கொண்டது எனும் பொருள் தருவது.எரிபல்வேறு பொருட்களை ஆக்கும் நிலையில், உலகியல் நிலையில் உணவைப் பதப்படுத்துகின்ற செயற்பாட்டுடன் தொடர்புடையது. கனல் என்பது வெம்மை எனப் பொருள் தருவது. இத்தகைய பொருள் வேறுபாட்டு நிலையைப் பழந்தமிழ்ப் பாடல் களும்,தேவாரப்பாடல்களும் நன்கு விளக்கிக் காட்டுகின்றன.
கற்றாங்கு எரி ஒம்பி எனத் திருஞான சம்பந்தர் பாடல் குறிப்பிடுகின்றது. சமயச் சடங்குநிலையிலே, யாக குண்டங்களிலே நெருப்பு எரித்தல் என்பது சில முறைமைகளோடு செய்யப்படுவது. அதற்கென வேதங்களைக் கற்று, மந்திரங்களைச் சொல்லி எரியோம்பப்படுகிறது.உலகியல் நிலையில் உணவைப்பதப்படுத்தும் நிலையில் எரியைப் பாதுகாக்கும் பொறுப்பு பெண்களுடையதாக இருந்தது. அடுப்பு நாச்சியார் வழிபாடு என்னும் நடைமுறை இன்றும் கிராம மட்டத்திலே பெண்களால் நடைமுறைப்படுத்தப் படுவது இதற்கு நல்லசான்றாகும்.
சிவன் தன்னுடைய கையிலே எரியைத் தாங்கி நிற்கின்ற காட்சியைத் தேவாரங்கள் குறிப்பிடுகின்றன. 'எரிகொள்மேனியர்' என்ற தொடர் இதனைக் காட்டுகின்றது. சிவனுடைய திருமேனி யின் வண்ணம் பற்றிக் கூறும்போது, எரிகின்ற இளஞாயிறன்ன மேனி என்ற பதிவைக் காணமுடிகின்றது. இங்கு எரியின் நிறம் புலப்படுத்தப்பட்டுள்ளது.
தீயினார் திகழ்மேனியாய் தேவர் தொழுந்தேவன்’ எனச் சம்பந்தர் இறைவன் தோற்றத்தைப் பாடியுள்ளார். திருப்பிரம புரத்திலே தீயோம்பும் மறையோர்களைப் பற்றியும் சம்பந்தர் பாடல் குறிப்பிட்டுள்ளது. எல்லாவற்றையும் முற்றாக அழிக்கக்கூடிய தீயை வழிபட்டுப் பயன்பெறுகின்ற வாழும் முறைமை ஒன்று முன்னர் பேணப்பட்டதையும் இத்தொடர் தெளிவாய்ப் புலப்படுத்துகிறது.
இறைவனுடைய திருச்சடையின் வண்ணம் பற்றிக் குறிப்பிடும்போது நாவுக்கரசர் "நெருப்பினாற் குவித்தாலொக்கு
1

2OO9 விரோதி ஆவணி01
பாழ்வியல் - 8 னி சண்முகதாஸ்
நீள் சடை" எனக் குறிப்பிட்டுள்ளார். நெருப்பராய் நிமிர்ந்தா லொக்கு நீள் சடை எனப் பிறிதொருபாடலில் திருச்சடையின் தோற்றத்தை வருணித்துள்ளார். உலகியல் வாழ்க்கையில் நெருப்பு எரிகின்றதோற்றத்தை நாம் காணும்போது அதன் வண்ணத்தையும் வடிவையும் நன்கு உணரலாம்.
சிவனுடைய தலையிற் சூடப்பெற்றுள்ள கண்ணியை நாவுக்கரசர் கனலும் கண்ணி எனச் சிறப்பித்துக் கூறுகின்றார். பிறிதோரிடத்தில் இறைவன் திருநடனம் பற்றிக் குறிப்பிடும்போது வருமாறுபாடியுள்ளார்.
"கனலங்கைதனிலேந்திவெங்காட்டிடை
அனலங்கெய்திநின்றாடுவர் பாடுவர்."
இங்கு கனல், அனல் என்ற இரு சொற்களும் பயன் படுத்தப்பட்டுள்ளன. நெருப்பின் வளர்ச்சிநிலையை இவ்விரு சொற்களும் உணர்த்துகின்றன. உள்ளே இருக்கின்ற நெருப்பைக் கனல் என்று குறிப்பிடும் வழக்கம் உண்டு. சுந்தரர் உள்ளத்துள்ளே மூடிவைத்திருக்கும் துன்பத்தை "மூளாத் தீபோல் உள்ளே கனன்று முகத்தால் மிக வாடி" என்று குறிப்பிட்டுள்ளார். ‘அனல்’ என்பது நெருப்புப் பரவும் விரைவான நிலையைக் குறித்தது. அனற் காற்று என்ற தொடர் தற்போதும் மக்களிடையே பயன்பாட்டில் உண்டு. அழலங்கையினன்’ ‘மூவெயில் ஒள் அழல் ஊட்டினான்' அழலுமிழுங் கையானே’ போன்ற தொடர்கள் அழல் பற்றிய விளக்கத்தைத் தருகின்றன.
காரைக் காலம்மையார் தாம் பாடிய அற்புதத் திருவந்தாதியில் ஒரு பாடலிற் சிவன் தோற்றத்தை வருணிக்கும் போது அழல் தீ அனல் என்ற மூன்றுசொற்களையும் பயன்படுத்தி யுள்ளார்.
"அழலாட வங்கை சிவந்தவோ வங்கை யழகாலழல் சிவந்தவாறோ - கழலாடப் பேயாடுகானிற் பிறங்க வனலேந்தித் தீயாடுவாயிதனைச் செப்பு"
இங்கு அம்மையார் நெருப்பின் மூன்று வேறுபட்ட நிலையையும் பாடலில் ஒருங்கே காட்டியுள்ளார். சிவனின் தோற்றத்தைக் கற்பனையிலே பாடும்போது வண்ணத்தின் வேறுபாடு துல்லியமாக வெளிக்காட்டப்படுவதற்கு வேறுபட்ட சொற்களே துணை செய்துள்ளன. இது கவிதையின் சிறப்பாயமைந்துள்ளது.
மக்கள் வாழ்வியலிற் காணும் நெருப்பை இறைவழி பாட்டுடன் இணைத்துக் கூறும்போது, இயற்கையின் நுட்பமான வேறுபாடுகள் மனங்கொள்ளப்பட்டுள்ளன. இருசுடர்' என அழைக்கப்படும் சூரிய, சந்திரரது வெப்பத்தின் தாக்கத்தை அளவிட்டுக் கூறுவதற்கு இச்சொற்கள் பயன்படுத்தப்பட்டன. ஐம்பூதங்களின் ஒன்றான தீயின் இயல்பைக் கனல், அனல், தழல், அழல், எரி போன்ற சொற்கள் துல்லியமாக விளக்கியுள்ளன. தேவாரங்கள் இவற்றைப் பதிவு செய்வதன்மூலம் சமயம் ஒரு வாழ்வியல் என்ற கருத்தை நன்கு வலியுறச் செய்துள்ளன. 人

Page 11
இந்துசாதனம் 7.O
Etnobu Is III தோற்றமும் வளர்ச்சிய பேராசிரியர் இ.கு
மகாசபைக் கூட்டம்-1900:
சைவபரிபாலன சபையின் வருடாந்த மகாசபை 1900ஆம் ஆண்டு ஆடித்திங்கள் முதலாம் நாள் இந்துக்கல்லூரியிலே கூடிற்று. ஏறக்குறைய நூறு அங்கத்தவர்கள் சமுகமளித்திருந் தனர். சபையின் உபதலைவராகியதிரு.அ.கனகசபை தலைமையில் கூட்டம் நடைபெற்றது.1898-99 ஆம் ஆண்டுக்கான அறிக்கையும் வரவு - செலவு அறிக்கையும் வாசிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன. சபையின் 1900ம் ஆண்டுக்கான உத்தியோகத்தர்களாகப் பின்வருவோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
காப்பாளர் திரு.பொ.குமாரசுவாமி
தலைவர் திரு. தா.செல்லப்பாபிள்ளை
உபதலைவர்கள் : ராவ்பகதூர் கு.முருகேசம்பிள்ளை
திரு. அ.கனகசபை
செயலாளர் : திரு.வி.காசிப்பிள்ளை
உபதலைவர்கள் : திரு.ச.சபாரத்தினம் திரு.வை.சண்முகம்
பொருளாளர் திரு. சித.மு.பசுபதிச்செட்டியார்
கணக்குப்
பரிசோதகர்கள் : திரு.இ.கந்தையா
திரு.சி.வேலுப்பிள்ளை
இவ்வுத்தியோகத்தர்கள் உட்பட நாற்பத்துநான்கு அங்கத்தவர் களைக் கொண்ட அதிகாரசபையும் அவருள் இருபத்துநான்கு அங்கத்தவர்களைக்கொண்ட நிருவாகசபையும் நியமிக்கப்பட்டன.
ஆசிரியநியமனங்கள்:
இந்துக்கல்லூரி பிரதம ஆசிரியர் திரு.N.செல்லத்துரை அவர்கள் 1900ஆம் ஆண்டு தைமாதம் முதல் வைகாசி மாதம் இருபதாம் திகதிவரையும் விடுமுறை பெற்றுச் சென்னை மாநகருக்குச் சென்றிருந்தார். அச்சமயம் திரு. I.K. நமசிவாயம் பிள்ளை, B.A. அவர்கள் தமது கடமையோடு பிரதம ஆசிரியராகவும் கடமையாற்றினார். ஆனி மாதம் திரு.கு.மா.சண்முகசுந்தரம் என்பவரை ஓர் ஆசிரியராகவும் கார்த்திகை மாதம் முதல் திரு.Sஐயாசாமி சாஸ்திரிகள், M.A. என்பவரை உய - பிரதம ஆசிரியராகவும் நியமித்தார்கள்.
அதிர்ஷ்டலாபச் சீட்டு மூலம்நிதிசேகரிப்பு:
சபையின் சில அங்கத்தவர்களின் தீவிர முயற்சியால், இந்துக்கல்லூரிக் கட்டட நிதிக்காக அதிர்ஷ்டலாபச் சீட்டொன்று 1900ஆம் ஆண்டு மார்கழி மாதம் நடத்தப்பட்டது. சீட்டு ஒன்றின் விலை பத்துச் சதம். ஒரு இலட்சம் சீட்டுக்கள் அச்சிடப்பட்டன. சீட்டுக்கள் விற்பனைமூலம் 7822சதம் 60 சேர்ந்தது. இதில் வெற்றி பெற்ற 850 பேருக்கு பரிசு வழங்கவென ரூபா 3540- ஒதுக்கப் பட்டது. சீட்டுக்கள் அச்சிட்ட மற்றும் சில்லறைச் செலவுகள் ரூபா 640 சதம் 25.பெற்றுக்கொள்ளாத பரிசுகளின் பெறுமதியாலும் பரிசு பெற்றோர் கொடுத்தநன்கொடையாலும் கிடைத்தவரவு ரூபா925.
இவ்வதிர்ஷ்டலாபச் சீட்டை ஆரம்பித்துப் பெரிதும் முயன்று வெற்றிகரமாக நிறைவேற்றியவர்களுள் சபையின் உபசெயலாளர் திரு.வை.சண்முகம், சபை அங்கத்தவர் R.N.அருளம்பலம் ஆகியோர்களின் ஊக்கமும் சிரத்தையும் குறிப்பிடத்தக்கவை. இவர்கள் கொழும்பு முதலான இடங்களுக்குக் கப்பல்மூலம் பிரயாணம்செய்து சீட்டுக்களை விற்பனை செய்ததாக அறியக்கிடக்கின்றது.

3.2O09 விரோதி ஆவணி01
|l Lഞ്ഞിബi - 2B
மாரவடிவேல்
மைகளுர் சமஸ்தானமந்திரியின் யாழ்ப்பாண வருகை
மைசூர் சமஸ்தான மந்திரியாக இருந்த சேர். K. குமாரபுரம் சேஷாத்திரி ஐயர், K.C.S.I. 1901 ஆம் ஆண்டு தைமாதம் யாழ்ப்பாணம் வந்திருந்தார். இவரை இந்துக்கல்லூரிக்கு அழைத்து 1901 ஆம் ஆண்டு தை மாதம் இரண்டாம் திகதி திரு. தா. செல்லப்பாபிள்ளை தலைமையில் நடந்த கூட்டத்தில் பாராட்டுப் பத்திரம் வாசித்தளிக்கப்பட்டது.
விக்ரோறியாமகாராணியின் மறைவு
விக்ரோறியா மகாராணியார் 1901 ஆம் ஆண்டு தைமாதம் 22ஆம் திகதி இறந்தார். இதையறிந்ததும் சபையார் 26ஆம் திகதி திருதா.செல்லப்பாப்பிள்ளை தலைமையில் ஒரு விசேட கூட்டம் கூட்டி தேசாதிபதிமூலமாக இராச குடும்பத்தவர்களுக்குத் தங்கள் அநுதாபத்தைத் தெரிவித்தார்கள். அந்த அநுதாபச் செய்தி 6 (SLDITp: "Resolved that the Saiva Paripalana Sabaion behalf of the Hindu Community place on record its sense of the great loss the British Empire has sustained by the death of Her Most Gracious Majesty our beloved Oueen Empress Victoria under whose reign the Hindus have enjoyed all blessings of peace, progress and good government for the unprecedented long period of 64 years.
That the President of the Sabai do wire to His Excellency
the sense of the above resolution asking His Excellency to communicate the same to the royal family:"
ஆசிரியர்களின் விலகல்
1895 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் முதல் இந்துக் கல்லூரியில் தர்க்க சாஸ்திர, கணிதப் பேராசிரியராகவும் (Professor of Logic and Mathematics) இடையிடையே பிரதம ஆசிரியராகவும் (Principal) கடமையாற்றிய திரு.K. நமசிவாயம்பிள்ளை அவர்கள் B.L. பரீட்சையில் தேறியபடியால் வக்கீல்தொழில் பார்ப்பதற்காக 1901ஆம் ஆண்டு பங்குனி மாதம் இந்துக்கல்லூரி ஆசிரியப் பணியிலிருந்து விலகினார். திரு.ச.சிவப்பிரகாசபிள்ளை என்ற ஆசிரியரும் நொத்தாரிஸ் பரீட்சையில் தேறியபின் 1901 மாசி மாதத்தில் ஆசிரியர் பணியில் இருந்து விலகினார்.
ஆரியகுமாரசபை
ggi 960)6T65i Friu5ò (Young Men's Hindu Association) (YMHA) ஒன்று ஆரிய குமாரசபை என்ற பெயருடன் முதன்முதலில் தொடங்கப்பட்டது இந்துக்கல்லூரியிலாகும்.
"Hindu Organ"இல் இது பின்வருமாறு ஆவணப்படுத்தப் படுத்தப்பட்டுள்ளது.
"An Association for improving the religious condition of Hindu Young men has been started under the above name by the students of the Jaffna Hindu College and two meetings have been already held on the 27th April and the other on the 6th May 1901 under the presidency of Mr.Canagasabapathy Iyer of Nallur. The first lecture was on "Saiva Siddhantha" and the other on "Siva". The Lecturers dealt with the subjects fully and were much appreciated by the audience. Mr. Ayachamy Iyer, the Vice-Principal of the Jaffna Hindu College has been chosen as the Chairman of the association" மேற்குறிப்பிட்ட ஐயாசாமி சாஸ்திரிகள் 1901 ஆவணி முதலாம் திகதியிலிருந்து ஆசிரியர் பணியில் இருந்து விலகிக் கொண்டார். அதே மாதம் 19ஆம் திகதி முதல் தெல்லிப்பளை திரு. இ.கனகசுந்தரம் என்பவர் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். (வளரும்.)

Page 12
இந்துசாதனம் 17.o.
திருச்சிற்றம்பலம் O வாழ்க அந்தணர் வானவரானினம் வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக ஆழ்க தீயதெல்லாமரனா மமே சூழ்க வையக முந்துயர் தீர்கவே. திருச்சிற்றம்பலம் இந்து சாதனம் Hindu Organ
e-mail: editorGhindu organ.com
விரோதி (u) ஆவணி மீ"1ஆம் 2 (7.08.2009)
121ஆவது அகவையில்
இந்து சாதனம்
நாம் பெருமையடைகின்றோம்; பெருமகிழ்ச்சி யடைகின்றோம்; இன்னும் சில நாள்களில் - இந்த ஆவணி மாதம் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை (1.09.2009) "இந்து சாதனம்" தன்னுடைய நூற்றிருபத்தோராவது அகவையில் அடியெடுத்து வைக்கவுள்ளது என்பதை அறிவிப்பதில் - நினைவூட்டுவதில் பணிவும், நிதானமும் நிறைந்த பெருமையும், பெருமகிழ்ச்சியும் அடைகின்றோம்.
அரசியல், சமூக, மொழி ரீதியாகக் காலத்துக்குக் காலம் பல்வேறு பிரச்சினைகளுக்கும் - நெருக்கடிகளுக்கும் சிக்கல்களுக்கும் - இந்த நாட்டுத் தமிழ்ச் சிறுபான்மையினர் உள்ளாகிவந்துள்ளனர் என்பது கசப்பான ஓர் உண்மை. அவர்களுள் ஒர் அங்கமான சைவத் தமிழ் மக்கள், மேலதிகமாகச் சமய, பண்பாட்டு ரீதியாகவும் பல கஷ்டங்களை எதிர் கொண்டு வந்துள்ளனர். அத்தகைய சைவத் தமிழ் மக்கள் சார்பில், நூற்றிருபது ஆண்டுகளாக ஒரு பத்திரிகை வெளிவந்துகொண்டிருப்பது சாதாரண விஷயமல்ல; ஒரு சாதனை!
ஐந்தாங் குரவர், சைவத் தமிழ்க் காவலர், என்றெல்லாம் ஏற்றிப் போற்றப்பட்ட பரீல பரீ ஆறுமுக நாவலர் ஏற்படுத்திய சைவ சமய விழிப்புணர்ச்சியின் விளைவாக 1888 ஆம் ஆண்டில் உருவானது யாழ்ப்பாணம் சைவ சமய பரிபாலன சபை. இந்தச் சபை பின்னர் சைவபரிபாலன சபை எனப் பெயர்மாற்றம் பெற்றது.
சைவ மக்களுக்கும் தமிழருக்கும் பயன் தரக்கூடிய பத்திரிகைகளைத் தமிழிலும், ஆங்கிலத்திலும் தொடங்கி நடத்துதல் என்பது சபையின் நோக்கங்களுள் ஒன்றாக இருந்தது.
அந்த நோக்கம் செயலுருப்பெற்ற முதல் நாள், விரோதி வருடம் ஆவணி மாதம் 26ஆந் திகதி புதன்கிழமை (1.09.1889). வெளியே Hindu Organ, ஆங்கிலத்திலும் உள்ளே இந்து சாதனம், தமிழிலுமாக ஒரே பத்திரிகையாகவே இரண்டும் வெளிவந்தன. யாழ்ப்பாண மண்ணின் மைந்தரும்
 

2OO9 விரோதி ஆவணி01
தென்னிந்தியா திருவிதாங்கூரில் பிரதம நீதியரசராக இருந்து ஒய்வுபெற்றவருமான த.செல்லப்பாபிள்ளை ஆங்கிலப் பதிப்பின் ஆசிரியர் ; நாவலர் அவர்களின் பெறாமகன் த.கைலாசபிள்ளை தமிழ் இதழின் ஆசிரியர், தத்தமக்குரிய மொழிகளிற் பூரண பாண்டித்யம் உடையோராய் உச்சி தொட்டு, உள்ளங்கால்வரை சைவசமயிகளாக இருந்த இந்த இருவரினதும் பொறுப்பில் வெளிவந்த பத்திரிகைகள் எத்துணை மதிப்புக்கும், சிறப்புக்கும், வரவேற்புக்கும் உரியனவாய் இருந்திருக்கும் என்பதை விரித்து விளக்கவும் வேண்டுமா? அவர்களுக்குப் பின்வந்த ஆசிரியர்கள் அனைவருமே அந்த முன்னோடிகள் வகுத்த மரபைப் பேணிக் காப்பாற்றுவதில் மிகுந்த அக்கறை உடையவர்களாகவே இருந்துள்ளனர்.
பழைய இதழ்களைப் பார்க்கும்பொழுது, மக்களைப் பாதிக்கின்ற, அரசியல், சமய, சமூகப் பிரச்சினைகளில் ஆழ்ந்த கவனம் செலுத்தி மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளமை தெரிகின்றது.
மாகாணப் பத்திரிகைகள் வெளிவராத அந்தக் காலத்தில், கொழும்பிலிருந்து வெளிவந்த இரண்டொரு நாளிதழ்களை மட்டும், புதினத்திற்காக எதிர்பார்த்துக்கொண்டிருந்த அந்தக் காலத்தில், இந்துசாதனம், Hindu Organ ஆகியவை, நாட்டின் புதினங்களை வெளியிடும் பணியையும் மேற்கொண்டிருந்தன.
தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு, குறிப்பாகச் சைவ சமய இலக்கியங்களின் பரவலுக்கு இந்துசாதனம் கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளதைக் குறிப்பிடுவதும் அவசியம்.
சமீப காலத்தில் "இந்துசாதனம்" வெளிவருவதில் எதிர்பாராத விதமாக ஏற்பட்டிருந்த தாமதமும் தடையும் கவலைக்கும், அது, தொடர்ந்து வெளிவருவதற்கு இறையருளின் துணையுடன் சபையினர் மேற்கொண்ட முயற்சிகள் மகிழ்ச்சிக்கும் உரியன.
கடந்த சில ஆண்டுகளாக நமது நாட்டின் அரசியல், சமூக பொருளாதாரத் துறைகளில் ஏற்பட்டு வரும் குழப்பங்களும், எதிர்பாராத மாற்றங்களும் மக்களின் போக்கிலும், நோக்கிலும் பெருந்தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன.
பணம் மட்டும் இருந்தாற்போதும், இந்த உலகிலே எதையும் செய்துவிடலாம் என்ற நம்பிக்கை வேரூன்ற - உத்தியோகம் பெறுவதும், உயர்ந்த சம்பளத்தை அனுபவிப் பதுமே கல்வியின் நோக்கங்களாகக் குறுக - உண்மை, அன்பு, நேர்மை, இறை நம்பிக்கை, தியாகம், சாந்தி, சமாதானம் போன்றவை மதிப்பிழக்கத்தொடங்கிவிட்டன.
இந்தகைய எண்ணங்கள், போக்குகள் நீங்க வேண்டும்; நீக்கப்படவேண்டும்.
இந்த நிலைக்கு வழிவகுக்கின்ற சமய உண்மைகளை - தத்துவங்களை அறிந்துகொள்வதுடன் அமையாமல், அவற்றை ஒவ்வொருவரும் தம் வாழ்க்கையிற் கடைப் பிடிக்கவும் வேண்டும்.
இவற்றை நேரடியாகவும், மறைமுகமாகவும் வலி யுறுத்தி, நல்ல ஒரு சமுதாயத்தை நம் கண்முன்னாலேயே கட்டி யெழுப்புவதற்குப் பெருமளவிலே துணைசெய்யும் ஆக்கங் களுடன் "இந்துசாதனம்" தொடர்ந்தும் வெளிவருவதற்கு இறையாசியையும் சைவ அறிஞர்கள், எழுத்தாளர்கள், வாசகர்களின் உதவியையும், ஒத்துழைப்பையும் ஆலோசனை களையும் கோருகின்றோம்.
மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல் லகதிக்கு யாதுமோர் குறைவில்லைக் கண்ணிநல் லஃதுறும் கழுமல வளநகர்ப் பெண்ணிநல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே. A

Page 13
இந்துசாதனம் 7,OE
தமிழ்த்
č6.6)IT.gčE
முருகன் தமிழ்த் தெய்வம். இப்படிச் சொல்வதனால் அவனுடைய பெருமையை ஒரு குடத்துக்குள் அடைப்பதுபோல ஆகி விடுகிறது என்று சிலர் எண்ணலாம். முருகன் உலகத்துக்கும் தெய்வந்தான். ஆனால், அவனுடைய இராசதானி தமிழ் நாடு. இதனாற்றான் அவனைத் தமிழ்த் தெய்வம் என்று சொல்கிறோம். அருவமும் உருவுமாகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப், பிரமமாய் நின்றசோதிப் பிழம்புதான் முருகன் திருக்கோலம் கொண்டு வருகிறது. அந்தக் கோலத்தின் பெருமையையும் அழகையும் தமிழர்கள் உணர்ந்துகொண்ட அளவுக்கு மற்றவர்கள் உணரவில்லை. இந்தக் கருத்தை அடிப்படையாகக்கொண்டே முருகன் தமிழ்த் தெய்வம் என்று சொல்லுகிறோம்.
முருகன் தமிழ்நாட்டின் தெய்வம்; தமிழ் மொழியின் தெய்வம். இதற்கும் நல்ல காரணம் உண்டு. தமிழ் இலக்கண இலக்கியங்களின் வாயிலாக முருகனைத் தெரியும் அளவுக்குப் பிறமொழி நூல்களால் தெரிந்துகொள்ள முடியாது. தமிழ்மொழி எல்லாச் சமயத்தினருக்கும் பொதுவானது. தமிழ் மொழியின் இலக்கண இலக்கியங்களைப் படைத்தவர் எந்தச் சமயத்தின ராயினும் முருகனைப் பற்றிச் சொல்லாமல் இருப்பதில்லை. அவனுக்குரிய மதிப்பைக் குறைப்பதில்லை. இதனால், அவன்
சைவர்கள் தெய்வம் என்று சொல்லாமல் தமிழ்த்தெய்வம் என்று சொல்கிறோம். இதைச் சற்றே ஆழ்ந்து கவனிக்க வேண்டும்.
தமிழில் பொருள் இலக்கணத்தை அகம் என்றும், புறம் என்றும் பிரித்து வைத்திருக்கிறார்கள். இலக்கியங்களிலும் இந்தப் பிரிவு உண்டு. அகப் பொருளில் ஐந்து திணைகள் உள்ளன. அதில் முதல் திணை குறிஞ்சி. மலையும் மலையைச் சார்ந்த இடமுமாகிய பகுதியைக் குறிஞ்சிநிலம் குறிக்கும் என்று சொன்னார்கள். இப்படியே பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்று மற்றத் திணைகளுக்குப் பெயர் வைத்திருக்கிறார்கள்.இந்த அமைப்புக்கள் எப்போது உண்டாயின என்று தெரியவில்லை. மிகப்பழங்கால முதலே இந்த வரையறைகள் இருக்கின்றன.
ஐந்து திணைகளில் முதல் திணை குறிஞ்சி, உலகம் தோன்றும்போது, அதாவது பிரளயத்தில் மூழ்கியபிறகு மறுபடியும் உலகம் தோற்றம் அளிக்கும்போது, முதலில் மலையே தோன்றிற் றாம். "மலைஞாறிய வியன் ஞாலத்து" என்றும், "கற்றோன்றி மண்தோன்றாக் காலத்தே" என்றும், தமிழ் இலக்கிய இலக் கணங்கள் கூறுகின்றன. நிலநூல்வல்லாரும் இந்த உண்மையை ஒப்புக்கொள்கிறார்கள். அதனாற்றான் குறிஞ்சித் திணை முதற் றிணை ஆயிற்று.
 

B2OO9 விரோதி ஆவணி01
தெய்வம் ந்நாதன்
நிலவகையாற் குறிஞ்சி முதலில் இருப்பது போலவே ஒழுக்க வகையாலும் குறிஞ்சியே முதலிடம் பெறுகிறது. ஒழுக்கத்தை உரிப்பொருள் என்று வழங்குவது இலக்கண மரபு. குறிஞ்சித் திணையின் உரிப் பொருள் புணர்ச்சியும், அதனோடு தொடர்புடைய நிகழ்ச்சிகளும். பிரிவு, இருத்தல், ஊடுதல், இரங்குதல் என்ற மற்ற நான்கு திணைகளுக்குமுரிய உரிப் பொருள்கள் குறிஞ்சி உரிப்பொருளாகிய புணர்ச்சிக்குப் பின்னரே நிகழ்பவை. ஆகவே, குறிஞ்சித் திணையே முன்வைக்கப் பெறுகிறது.
ஒவ்வொரு திணைக்கும் கடவுள் இன்னார் என்ற வரையறை தமிழ் இலக்கணத்தில் இருக்கிறது. குறிஞ்சிக்கு முருகனும், பாலைக்குத் துர்க்கையும், முல்லைக்குத் திருமாலும், மருதத்துக்கு இந்திரனும், நெய்தலுக்கு வருணனும் தெய்வங்கள். முதற்றிணையாகிய குறிஞ்சிக்குத் தெய்வம் முருகன். "விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ" என்று நக்கீரர் பாடுகிறார். முருகனை முதலில் தோற்றிய குறிஞ்சித்திணைக்குத் தெய்வமாக வைத்ததில் ஒர் உண்மை புதைந்திருக்கிறது. முதலில் தோன்றிய மலையில் தோன்றிய மனிதனே முதல் மனிதன். முதல் மனிதனுக்குக் கடவுள் உணர்ச்சி தோன்றி அன்பு செய்தபோது
அவன் கடவுளை முருகனாகக் கண்டான் என்ற கருத்தைத் தமிழர்கள் கொண்டிருந்தார்கள் என்று இதைக்கொண்டு சொல்லலாம் அல்லவா?
இழிேது நமக்குக் கிடைக்கும் தமிழ் நூல்களில் மிகப் vgoODELIM60Tgl தொல்காப்பியம் 95ولن
"சேயோன்ைேய மைவரை உலகமும்"
ன்று முருகனைக் குறிஞ்சித் தெய்வமாகக் கூறுகிறது. இதற்கு முன்புள்ள நூல்களும் இப்படித்தான் சொல்லியிருக்க வேண்டும். அவை நமக்குக் கிடைக்கவில்லை. தொல்காப்பியர் மறைவழி ஒழுகியவர். ஆதலால், அவர் முருகனை முதல் திணைத் தெய்வமாக வைத்துப் பாடியதில் வியப்பு ஒன்றும் இல்லை.
வீரசோழியம் என்ற இலக்கணநூல் ஒன்றுண்டு. அதை இயற்றியவர் புத்தமித்திரர். அது ஐந்து இலக்கணங்களையும் கூறும்நூல். புத்தமித்திரர் பெளத்தர். வேதநெறி அவருக்கு உடம்பாடு அன்று.
அகத்தியருக்குச் சிவபெருமான் தமிழை அறிவுறுத்திய தாக நாம் சொல்வோம். இந்தப் பெளத்தரோ அவலோகிதேசுவரர் ->

Page 14
இந்துசாதனம் 7.O.
என்ற பெளத்த சமயதேவர் உபதேசித்ததாகச் சொல்வார். அங்கே அவர் மதமாற்றம் செய்திருக்கிறார்.
அத்தகையவர் ஐந்திணைகளுக்குரிய தெய்வங்களைச் சொல்கிறார். முதற்றிணைக்கு முருகனையே தெய்வமாகச் சொல்கிறார். அவன் சைவர் தெய்வமென்று எண்ணியிருந்தால், ஒருகால் மாற்றியிருக்கலாம். அவனைத் தமிழ்த் தெய்வமாகவே எண்ணினார். ஆகவே, இலக்கணமரபிலே மதமாற்றம் செய்யாமல் குறிஞ்சிக்குத் தெய்வம் முருகன் என்றே சொல்லுகிறார்.
வைதிகநெறியை ஒப்புக்கொள்ளாத இந்திய நாட்டுச் சமயங்களில் மற்றொன்று சைனம். சிறந்த அகப் பொருள் இலக்கணம் என்று போற்றப்பெறும் நூலாகிய அகப்பொருள் விளக்கத்தின் ஆசிரியர், நாற்கவிராச நம்பி என்ற சைனர். அவர் முருகனை வழிபடுபவர் அல்லர். ஆயினும், அவர் சைனதீர்த்தங்கரர் ஒருவரைக் குறிஞ்சித் தெய்வமாக அமைக்கவில்லை. முருகனையே அகப்பொருளில் முதல் தெய்வமாக அமைத்து இலக்கணம் செய்திருக்கிறார். கிறிஸ்துவப் பாதிரியாக இருந்து, தமிழ் கற்றுத் தேம்பாவணி என்ற காப்பியத்தைப் பாடிய வீரமாமுனிவர் தொன்னூல் என்ற இலக்கணம் இயற்றினார். அவரும் முருகனுக் குரிய தலைமையை மறுக்கவில்லை; மாற்றவில்லை. முருகனை ஐந்திணைகளில் முதற்பீடத்தில் ஏற்றி வைத்திருக்கிறார். சமயங் கடந்த உண்மை இதுவாதலால் இதனையாரும் மறக்கவில்லை; மறைக்கவும் இல்லை.
முருகன் பல சமயத்தினரும் ஒப்புக்கொள்ளும் தமிழ்த் தெய்வம் என்று சொல்வதில் தடை உண்டா?
அகப்பொருளிற் களவு, கற்பு என்று இரண்டு பெரிய பிரிவுகள் உண்டு. எல்லா வகையிலும் சிறப்புற்று ஒத்த தலைவனும் தலைவியும் அடுப்பாரும் கொடுப்பாரும் இன்றித் தாமே சந்தித்துப் பிறர் அறியாதவாறு காதல் செய்வதைக் களவு என்றும், பலர் அறியத் திருமணம் செய்துகொண்டு இல்வாழ்வில் இன்பம் துய்ப்பதைக்கற்பு என்றும் கூறுவர். கற்பிற் களவின்வழி கற்பு, களவின் வழிவராக் கற்பு என்று இருவகை உண்டு.
அகப் பொருளுக்கு ஆலவாய் இறைவனே அறுபது சூத்திரங்களால் இலக்கணம் வகுத்திருப்பதாகத் தமிழர் நம்புவர். இறையனார் அகப்பொருள் என்று பெயர்பெறும் அந்நூல் இன்றும் நமக்குக் கிடைக்கிறது. அகப்பொருளுக்குத் தந்தை இலக்கணம் வகுக்க, தான் இலக்கியமாகநின்று நடத்திக் காட்டினவன் முருகன், களவு மணத்தை வள்ளி நாச்சியாரிடம் செய்த காதலிலும், கற்பு மணத்தைத் தேவயானையம்மையாரிடம் காட்டும் அன்பிலும் அவன் செய்து காட்டினான். இந்தக் கருத்தைப் பரிபாடலில் உள்ள பாட்டு ஒன்று தெரியவைக்கிறது. இதனாலும் முருகன் தமிழ்த் தெய்வம் என்பது வலியுறுகிறது.
புறப்பொருள் பெரும்பாலும் வீரத்தைப்பற்றியே பேசுகிறது. அகப்பொருளே காதலாகிய ஈரத்தைப் பற்றி விரிப்பது. முருகன் காதல் விளையாட்டும் நிகழ்த்தினான்; வீரவிளையாடலும் புரிந்தான். அவன் திருமார்பிலுள்ள போகத்துக்குரிய தாராகிய கடம்பு அவன் காதல் காட்டும் தெய்வமென்பதைப் புலப்படுத்து கிறது. அவன் திருக்கரத்தில் உள்ளவேல் அவன் பெருவீரன் என்பதைக் காட்டுகிறது. இப்படி அகத்துக்குரிய காதலின்பத்தில்

B2OO9. விரோதி ஆவணி0
திளைத்துச் சிறந்த காதலனாகத்திகழும் முருகன், புறத்துக்குரிய வீரத்திலும் சிறந்து ஏறுபோல் நிற்கிறான் என்பதைத் திருமுருகாற்றுப்படையில்,
"மங்கையர்கணவ, மைந்தர் ஏறே" என்று அடுத்தடுத்து வரும் இரண்டு திருநாமங்கள் புலப்படுத்துகின்றன. கர்தலில் சிறந்து மங்கையர் கணவனாகவும், வீரத்தில் உயர்ந்துமைந்தர் ஏறாகவும் அவன் திகழ்கிறான்.
குறிஞ்சித் திணையாகிய முதல் அகத்திணையில் தலைமைபூண்டு நிற்கும் முருகன், புறத்திணைகளிலும் முதல் திணையில் ஒருவாறு வந்து தோன்றுகிறான். அகத்திணையில் முதல் திணையாகிய குறிஞ்சிக்குரிய குறிஞ்சிப்பூ முருகனுக் குரியது. புறத்திணையில் முதல்திணை வெட்சி அதற்குரிய பூவும் வெட்சி என்னும் பெயருடையது. அதனால்தான் அந்தத் திணைக்கே பெயர் வந்தது. அந்த வெட்சிமுருகனுக்குரிய பூ
"வெட்சித்தண்டைக்காலென்கிலை" என்று அருணகிரிநாதர் பாடுவார். ஆகவே, புறப்பொருளின் முதல்திணையிலும் அவனுடைய தொடர்பு இருக்கிறது.
இந்த வகையாலும் முருகனுக்கும் தமிழுக்கும் உள்ள உறவு தெள்ளத்தெளிய விளங்குகிறது.
இலக்கண வகையில் பார்த்தபோது, இந்த உண்மையைப் பல திறத்தாலும் அறிந்துகொண்டோம். இனி இலக்கிய வகையிலும் வேறுவகையிலும் முருகனுக்கும் தமிழுக்கும் உள்ள ஒட்டுறவைக் காணலாம். தமிழ்ச் சங்கத்திற் குன்றம் எறிந்த குமரவேளும் புலவனாக இருந்து தமிழராய்ந்த செய்தி வருகிறது. அதனாற்றான் குமரகுருபரர்,
"சங்கத் தமிழின் தலைமைப்புலவாதாலோ தாலேலோ" என்று பாடுகிறார். புலவனாக இருந்ததோடன்றி அவன் செந்தமிழாசிரியனாகவும் இருந்திருக்கிறான். அகத்தியனாருக்குத் தமிழை அறிவுறுத்தியவன் அவன். சிவபெருமானிடம் தமிழைக் கேட்டுத் தெளிந்த அம் முனிவர், முருகனிடம் பின்னும் உயர்ந்த படிப்பைப் படித்துப்பெரிய இலக்கணத்தை இயற்றும் பேராசிரியராகி விட்டார்.
"குறுமுனிக்கும் தமிழுரைக்கும் குமரமுத்தம் தருகவே" என்று குமரகுருபரரும்,
"சிவனை நிகர் பொதியமலை முனிவனாக மகிழ இரு
செவிகளிலும் இனிய தமிழ் -பகர்வோனே" என்று அருணகிரிநாதரும் பாடுவர்.
கடைச்சங்க நூல்களை மூன்று வரிசைகளாகப் பிரித்து அமைத்திருக்கிறார்கள். பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என்பன அவை. பாட்டு, தொகை, கீழ்க் கணக்கு என்று ஒன்றன்பின் ஒன்றாக வைத்துச் சொல்வது மரபு. அந்த வரிசையில் முதலில் நிற்கும் மாலை பத்துப்பாட்டு. அதிற் பத்து நெடும்பாட்டுக்கள் இருக்கின்றன. அவற்றில் முதலாக நிற்பது திருமுருகாற்றுப்படை. அது முருகனைப் பற்றி நக்கீரர் பாடியது. கடைச்சங்க நூல்கள் முப்பத்தாறு. அவற்றில் முதல் வரிசையில்
-->

Page 15
இந்துசாதனம் 7OE
நிற்பது பத்துப் பாட்டு, அதில் முதற் பாட்டாக நிற்பது திருமுரு காற்றுப்படை
"பாவுள், முன்னுற வந்துநிற்கும் முருகாற்றுப் படைமொழிந்தான்" என்பர் சிவப்பிரகாச சுவாமிகள்.
முப்பத்தாறு தத்துவங்களில் முன் நிற்கும் சிவதத்துவம் போல, முப்பத்தாறு நூல்களில் முதலாவதாக நிற்பது முருகனுடைய புகழ் கூறும் நூல். தமிழ் இலக்கியத் தொகுப்பில் முருகனுக்கு முதலிடம் உண்டு என்ற உண்மையை இது தெரியவைக்கிறது.
எட்டுத்தொகை நூல்களில், முதலில் தொகுக்கப்பெற்றது குறுந்தொகை என்று தக்க காரணங்களுடன் அமரர் டாக்டர் ஐயரவர்கள் எழுதியிருக்கிறார்கள். ஆகவே, எட்டுத் தொகை
C: LOTOT TO Oe TO TOMeMeMOMM OMOM OOMMOMe OT
யாழ்ப்பானம் புதிய உயர்கல்லூரி மண்டப
2009.07.08 செவ்வாய்க்கிழமை நடைெ
O O O பெரிய புராணம் காட்டும் வாழ்வி
கருத்தரங்கிலேசபையினர் எழுப்பியவினா
கொலை பாவமா? அன்றா? என்பது அதைச் கிலேயே தங்கியிருக்கின்றது. வீட்டிற்குள் புகும் திருடர் கொலைசெய்து திருடிச்செல்கிறார்கள் என்றால் அங் கொலை இடம்பெறுகின்றது என்றே கொள்ளவேண்டும். இ ஒருவர் நீதி வழங்கும்போது, மரணதண்டனை விதிக்கின் ஒரு படைவீரன் அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநிறு உயிர்களைக் கொல்கின்றான் என்றால் இவை பாவச் ே எனவே, சிறுத்தொண்டர் பாவக் காரியங்களைச் செ
ஏற்றுக்கொள்ளமுடியாதது.
தனது பிள்ளையை அரிந்து கறி சமைப்பது என் கொள்கைப்பற்றை உலகுக்கு எடுத்துக்காட்டுவதற்காக கண்ணப்பன் தனது உறுப்பைத் தானம் செய்தார். சிறுத்ெ போய்த் தனது அருந்தவப்பிள்ளைச் செல்வத்தைத் தா தனது அன்னதானம் சிறப்படையவேண்டுமென்பதற்காக இடப்பெறுகின்றது.
வடநாட்டு பைரவசந்நியாசிகள் நரமாமிசம் உண்ட இக்கதையூடாகப் பெறப்படுகிறது. அத்தகைய ஒரு முரண் உருவாக்கி, பக்தியின் உச்சத்தை வெளிக்காட்டவே நிலைக்குச் சிறுத்தொண்டர் ஆட்படுகின்றார். சிறுத்தொண் எய்துகின்றமை அவர் பாவி அல்லர் என்பதை நிரூபிக்கின்
1.

2009 விரோதி ஆவணி01
நூல்களில் முதலில் நிற்பது குறுந்தொகை என்று சொல்லலாம். அதில் கடவுள் வாழ்த்துச் செய்யுளாக இருப்பது. "தாமரை புனையும்" என்றபாட்டு. அது முருகனை வாழ்த்தும் பாட்டு. ஆகவே பத்துப்பாட்டில் முதலில் முருகன் நிற்பதுபோல எட்டுத் தொகை யிலும் நிற்கிறான் என்று சொல்லலாம் அல்லவா?
இப்படியே முருகனைத் தமிழர்கள் முன்வைத்துப் போற்றிய திறத்தைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
பழைய இலக்கண இலக்கியங்களை ஒட்டிச் சொன்ன இந்தக் கருத்துக்களோடு இந்தக் கட்டுரையை நிறைவு செய்கிறேன்.
முருகன் தமிழ்த் தெய்வம் என்ற உண்மையை மறுக்க வகை உண்டோ? 人
ヒつ
TTOe TOT TOeTOOTOTOTTOT TOMOOO TOOMOe TOOTOOOTOOOOL
த்தில் பெரியபுராணத்தில் இடம்பெறும் சிறுத்தொண்ட நாயனார் போர்வீரனாக இருந் தவர். பல lLugogo கொலைகளைச் செய்திருக்கின்றார். இதற்காக யல்" இறைவன் வழங்கிய தண்டனையாகத் தனது பிள்ளையை அரிய வேண்டியநிலை இவருக்கு ஏற்பட்டது எனக்கருதலாமா? --------ل- ----
செய்பவரின் மனப்பாங்
==========
○琴つ
கள் வீட்டுக்காரரைக் கு அநீதியின்பாற்பட்ட இது பாவச்செயல். நீதிபதி ாறார் என்றால் அல்லது பத்துவதற்காகப் போராடி செயல்களாக அமையா இணைப்பாளருள்
ய்தவர் என்ற கருத்து ஒருவராகப்
பணியாற்றிய ாபது சிறுத்தொண்டரின்
வைக்கப்பட்ட பரீட்சை,
கோப்பாய்றோ.க.
தாண்டர் ஒருபடி மேலே பாடசாலை அதிபர்,
னமாகக் கொடுக்கிறார்; திரு.ச.லலிசன் இந்தப்பிள்ளைத்தானம் O
வழங்கிய பதில்,
வர்கள் என்ற செய்தியும்
எநிலைப் பாத்திரத்தை பிள்ளையை அரியும்
○琴つ
Iடர் குடும்பம் சிவப்பேறு
றது.

Page 16
உறவுகள்
9) நானே பெரியவன். நானே சிறந்தவன் என்ற அகந்தையை
விடுங்கள். <0) அர்த்தமில்லாமலும் பின்விளைவு அறியாமலும் பேசிக்
கொண்டேயிருப்பதை விடுங்கள். 8) எந்த விஷயத்தையும், பிரச்சனையையும் நாசூக்காக
கையாளுங்கள், விட்டுக் கொடுங்கள். 6) சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துத்தான் ஆக
வேண்டும் என்று உணருங்கள். 0) நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள்.
குறுகியமனப்பான்மையைவிட்டொழியுங்கள். 6) உண்மை எது? பொய் எது? என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும், அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள். இ) மற்றவர்களைவிட உங்களையே எப்போதும் உயர்த்தி
நினைத்துகர்வப்படாதீர்கள். )ே அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள். 0) எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக் கொண்டிருக் காதீர்கள்.
நல்லூருக்
முநீலழுநீ ஆறு இராகம் : அசாவேரி
பல்லவி சிவகுரு நாதருக்குச் செயமங்களம் - நல்ல மங் செங்கமல பாதருக்குச் செயமங்களம் LoGör அனுபல்லவி புங்க பவமறுத் தெனையாளும் பன்னிரு தோளருக்கு 6i தவமுனிவர்களுளந் தங்கரு ளாளருக்குச் சிவ)
சரணங்கள் சங்க கன்னிவள்ளி நேசர்பாவநாசருக்கு மங்களம் தன் கதிர்காம வேலரீழ தேசருக்கு மங்களம் 6 IIT
மன்னுமடி யார்க்கருளு மாசில்குமரேசருக்கு துன்னிய அனந்தகோடி சூரியப்பிரகாசருக்கு (சிவ) துங்
 
 

2009 விரோதி ஆவணி0
GELDİbLIL OOO
0) கேள்விப்படுகிறஎல்லா விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள். 9 அற்ப விஷயங்களைப்பெரிதுபடுத்தாதீர்கள். 6) உங்கள் கருத்துக்களில் உடும்புப்பிடியாய் இல்லாமல், கொஞ்சம்
தளர்த்திக் கொள்ளுங்கள். 9) மற்றவர் கருத்துக்களை, செயல்களை, நடக்கின்ற நிகழ்ச்சி
களைத் தவறாகப் புரிந்துகொள்ளதீர்கள். 9) மற்றவர்களுக்குரிய மரியாதை காட்டவும், இனிய, இதமான
சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள். 9) புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச்
சொல்லவும் கூட நேரமில்லாததுபோல் நடந்துகொள்ளாதீர்கள். 9) பேச்சிலும், நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து அடக்கத்தையும், பண்பையும் காட்டுங்கள். 9) அவ்வப்போது நேரிற் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள். 9) பிரச்சனைகள் ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கிவர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவக்க முன்வாருங்கள்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிவழி
தமங்களம்
முகநாவலர்
தாளம் : ஆதி
கையுமை பாலர்வடி வேலருக்கு மங்களம் ணுமறை நூலரனுகூலருக்கு மங்களம் மிகு சிவகாம போதக சுசீலருக்குச் கையில் விளங்குவளைத் தெய்வயனை லோலருக்குச் (சிவ)
ரன்குமாரர்குல்லைத் தாரருக்கு மங்களம் விகரில் லாதநல்லுரருக்கு மங்களம் ங்குசினத்தவுணரைப் போரில்வென்ற வீரருக்குத் 5வகத்தியற்கருள் தோமிலதி தீரருக்குச் (சிவ)

Page 17
o 、接 Lib (62,
முரீபதி சர்மா கிருவி
ஆலயக் கிரியைகள் அனைத்தும் ஆகமங்களைப் பிரமாணங்களாகக் கொண்டு நிகழ்த்தப்படுவன. ஆகமங்களுடன் தொடர்புகொண்டு மூல நூல்களாக விளங்குவன வேதங்கள். வேதாகமங்களின் துணை நூல்களாக வேதாங்கங்கள், சூத்திரங் கள், இதிகாச புராணங்கள், தந்திரசாஸ்திரங்கள், சிற்பசாஸ்திரங் கள் என்பன விளங்குகின்றன. வேதாகங்கள், கிரியைகள் வளம் பெற நன்கு உதவின. வேதாங்கங்களில் ஒன்றான ஜோதிஷம் இவற்றுள் முக்கியமானதாகும்.
2010 e.
ஆகமங்கள், கர்ஷணம் முதல் பிரதிஷ்டைவரை, பிரதிஷ்டை முதல் உற்சவம்வரை, உற்சவம் முதல் பிராயச்சித்தம் வரையான கிரியைகளைப் பற்றி எடுத்தியம்புவன. இக்கிரியைகள் யாவும் கால நிர்ணயம் மற்றும் சகுனம், நிமித்தம் முதலிய அம்சங்களுடனும் நன்கு தொடர்புகொண்டவையாகும். இதிகாசபுராணங்கள், கிரியைகளை வளம்படுத்திய வகையில், கிரியைகள் யாகம், தவம், தீர்த்தம், தோத்திரம், தியானம், விரதம், பூசை எனப் பல்வேறு நிலைகளில் வளர்ச்சிபெற்று விளங்கின. மக்களாற் பின்பற்றப்பட்டு வருகின்ற இக்கிரியைகளின் பல்வேறு அம்சங்களும் இன்றைய நிலையில் ஆலயத்துடன் மிக நெருங்கிய தொடர்புடையதாக விளங்குவது நோக்கத்தக்கது. விரதங்கள்சில ஆண்டுக்கொரு முறை நிகழ்வன, சில, மாதந்தோறும் நிகழ்வன, சில, இருவாரங் களுக்கொருமுறை நிகழ்வன, சில வாரந்தோறும் கடைப்பிடிக்கப் படுவன. இவை நக்ஷத்திரத்தை அல்லதுதிதியை அல்லது வாரத்தை அடிப்படையாகக் கொண்டு நிகழ்த்தப்படுவன.
இவ்விரதங்கள் நிகழ்த்தவேண்டிய காலம், வேளைகள் பற்றி நிர்ணயம் செய்து மக்களுக்குக் குறிப்பாக எடுத்தியம்புவன பஞ்சாங்கங்கள். வார விரதம் தவிர்ந்த ஏனைய விரதங்கள் திதி அல்லது நகூடித்திரத்தை அடிப்படையாகக் கொண்டு, பெரும்பாலும் நிர்ணயம் செய்யப்படுகின்றன. திதிகள் - கலைகள் சந்திரனோடு தொடர்புடையன. திதியை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயம் செய்யப்படும் விரதங்கள் சந்திரனை அடிப்படையாகக் கொண்டே நிர்ணயிக்கப்படுகின்றன. நக்ஷத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு, நிர்ணயம் செய்யப்படும் விரதங்கள் சூரியனை அடிப்படையாகக் கொண்டே நிர்ணயம் செய்யப்படுகின்றன. இவ்விடத்தில் "திதிப்பிராதானம் சாந்திரமானம்" என்னும் ஆகம வசனம் நோக்கத்தக்கது. மேலும் கும்பாபிஷேகக் கிரியை விளக்கம்
==سنے حسبت سے سس۔ நல்லூர் -மாம்பழத் திருவிழா
-அமரர். அராலி பரமேஸ்வர சர்மா -
தித்திக்கும் மாம்பழத்தைத் தோற்றா யென்று
திருவிளையாட் டொன்றெடுத்தே யாண்டியாகி எத்திக்கு மருளெறிக்கும் பழனிக் குன்றில்
எழுந்தருளி யெமைவிழிநீ ரெய்த வைத்தாய் சத்திக்குங் கடல்நடுவண் மாங்க னரிசேர்
மாமரத்தைச் செயங்கொண்டு மகிழ வைத்தாய் புத்திக்கு மெட்டாத பழம்நீ உந்தன்
புகழ்பாடி உளம்புனித மடைதுமன்றே.
 
 

2OO9 விரோதி ஆவணி01
டினானந்த சர்மா
பற்றிக் கூறுகின்ற வழி நூலொன்று கும்பாபிஷேகக் கிரியைகளின் காலநிர்ணயத்தை வகுத்துக் கூறுகின்ற வகையில், திதிப்பிராதான மான - கலைகளோடு தொடர்புடைய சில கிரியைகள் சந்திரனை அடிப்படையாகக் கொண்டும் ஏனையவை சூரிய சஞ்சாரத்தைக் கொண்டு நிர்ணயம் செய்யப்பட வேண்டுமெனக் கூறுவதும் நோக்கத்தக்கது.
சிவராத்திரி பூஜா விதிப் படலத்தில் காரணாகமத்தில் "மாக பால்குனயோ கிருஷ்ணசதுர்த்தஸ்யாம் சுபேதினே" என்று கூறுவதனை நோக்கும்போது, திதிப்பிராதானம் சாந்திரமாணம் என்ற கருத்துநிலை பின்பற்றப்பட்டுள்ளதை நோக்கலாம். எனினும் இன்னோர் இடத்தில் "சௌரமாஸே விரதம் குர்யாத் சாந்திரமாஸே நகாரயேத்" என்றும் கூறப்பட்டிருப்பதனையும் காணமுடிகிறது. இங்கு ஒரு மாறுபட்ட கருத்துநிலை தோன்றுவதற்கு ஏதுவாக இவ் வசனப்பிரமாணங்கள் அமைந்துள்ளன.
ஆகமம் என்பது தொன்றுதொட்டு வரும் மரபு எனப் பொருள்படும். 'ஆகம க ச சம்பிரதாயக"எனக் கூறப்படுகின்றது. இச்சந்தர்ப்பத்திற் காமிகாகமம், மகுடாகமம் என்பவற்றிற் கூறப்பட்டுள்ள பின்வரும் வசனப்பிரமாணங்களை நோக்குவோம்.
"ஆரப்தம் யேன தந்ரேண கர்ஷணாதிஅர்ச்சனாந்தகம்
தேன சர்வம் ப்ரகர்த்தவ்யம் நகுர்யாத் அன்ய தந்ரதக" "குர்யாத் சேத் தக்ர சங்ரகம் தந்ர சங்கிர தோஷேணராஜ ராஷ்டிரம் விநஸ்யதி"
இங்கு கர்ஷணம் முதல் வழிபாடுகள் வரை ஒரே ஆகம முறைமையே பின்பற்றப்பட வேண்டும் எனவும், ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு ஆகம முறைகள் பின்பற்றப்படுவது - சங்கிரதோஷம் என்றும் அது தவிர்க்கப்பட வேண்டும் எனக் கூறப்படுவதும் நோக்கத்தக்கது.
நாம் முன்பு கூறியபடி கிரியைகள் கால நிர்ணயத்துடன் தொடர்புடையன. தமது கிரியை நடைமுறைகளுக்கு ஆலயமோ அல்லது அடியவரோ காலநிர்ணயத்திற்கு அடிப்படையாக அவரவர் பின்பற்றி வருகின்ற பஞ்சாங்கம் கூறுகின்ற வழியைப் பின்பற்றி அவ் ஒழுங்கின் வழியே தந்திர, சங்கிரக தோஷம் ஏற்படாதவாறு ஆகம மரபின் அடிப்படையில் ஒழுகுவதே பொருத்தமானதாகும். A

Page 18
இந்துசாதனம் 7 OE
மாணவச்செல்வங்களே,
வணக்கம், ஒவ்வொருவருக்கும் மிகமிக இன்றியமையாததாக இருப்பது கண். கண் இல்லாவிட்டால் ஒருவர் அடையும் கஷ்டங்கள் கணக்கற்றவை. ஒரு துணியால் உங்கள் கண்களை நன்றாகக் கட்டிவிட்டுச் சிறிது நேரம் இருந்து பார்த்தால், அந்தக் கஷ்டங்களை ஒரளவாவது உங்களால் உணரமுடியும். கல்வி என்பது கண்ணுக்குச் சமமானது. கல்வியை நன்கு கற்காதவர் கண் இல்லாதவருக்குச் சமம் என்கின்றார் திருவள்ளுவர். கல்லாதவரின் முகத்தில் இருப்பவை கண் அல்ல, புண் என்றும் அவர் கூறுகின்றார்.
கண்ணுடையர் என்பவர் கற்றோர், முகத்திரண்டு புண்ணுடையர்கல்லாதவர் (திருக்குறள் 393)
என்ற குறளை என்றுமே நீங்கள் நினைவிலிருத்தி நல்ல முறையிலே கல்வியைக் கற்று வாழ்க்கையில் நல்லவர்களாக இருக்கவேண்டும்.
始 Yr N
"இந்து சாதனம்" ஆடி இதழில் இடம்பெற்ற சமய அறிவுப்
போட்டி 03 இற்குரிய கேள்விகளையும் சரியான விடைகளையும் தருகின்றோம்.
1. பஞ்சபூதத்தலங்கள் எவை?
நிலம்-பிருதுவி திருவாரூர்,காஞ்சிபுரம் நீர் - அப்பு திருவானைக்கா நெருப்பு-தேயு திருவண்ணாமலை காற்று- வாயு திருக்காளத்தி ஆகாயம் சிதம்பரம்
2. "ஒருமை பெண்மை உடையன்" எனத் தொடங்கும்
தேவாரத்தைப் பாடியவர் யார்? திருஞானசம்பந்தமூர்த்திநாயனார். 3. சேக்கிழார்பெரிய புராணத்தை எந்த நட்சத்திரத்திற்பாட
ஆரம்பித்தார்? திருவாதிரை நட்சத்திரத்தில் 4. திருக்கடைக் காப்பு என்றால் என்ன?
தேவாரப்பதிகங்களின் பலனைச்சொல்லும் இறுதிச் செய்யுள் 5. 64 சக்தி பீடங்களுள் ஒன்றான புவனேஸ்வரி பீடம்
எங்குள்ளது? நயினாதீவுநாகபூஷணி அம்மன் கோவிலில்
LLSLLLLLLSS LLLLLSS SLLLSSSLLLSSLSSL SLL SSSSLSL SSSS SLSSSSSSLSSSSSSLSLSLSSSLSLSSSSSSLSSSLSS
நாங்கள் விதித்த நிபந்தனைகளுக்கு அமைவாகக் கீழ்க் கண்ட மூவர்மட்டுமே சரியான விடைகளை அனுப்பியிருந்தனர்.
முதற்பரிசு:ரூபா 100/-
செல்விவன்னியசிங்கம் கிருஷாந்தி
141/4,கோவில் வீதி,நல்லூர் பாடசாலை:நல்லூர் இந்துத்தமிழ் பெண்கள் பாடசாலை
أص ܢܠ
 

2OO9
இரண்டாவது பரிசு:ரூபா 50/- செல்விசீவரத்தினம் துர்க்காயினி 14/1, கச்சேரி நல்லூர் வீதி, யாழ்ப்பாணம் பாடசாலை. நல்லூர் இந்துதமிழ் பெண்கள் பாடசாலை
மூன்றாம்பரிசு ரூபா 25/- செல்வி வன்னியசிங்கம் தனுஷா 141/1, கோவில் வீதி, நல்லூர் பாடசாலை: நல்லூர் இந்துதமிழ் பெண்கள் பாடசாலை
பரிசு பெறும் மூவரும் ஒரே பாடசாலையைச் சேர்ந்தவர்கள். மாணவிகளையும் அவர்களை நல்வழிப்படுத்தி ஊக்கமளித்துவரும் அதிபரையும் பாராட்டுகின்றோம். பரிசுத் தொகை விரைவில் அனுப்பிவைக்கப்படும்.
முடிவுத் திகதிக்குப் பின்னர் வந்த விடைகள் பரிசீலனைக்கு எடுக்கப்படவில்லை
gFuDu Kom56ů (Bumig2 6@Gud. O4
இவ்வாண்டில் வெளியான "இந்து சாதனம்" இதழ்களில் விடைகளைத் தேடிக் கண்டுபிடிக்கலாம்.
- குருநாதன்

Page 19
இந்துசாதனம் O
நாவலர் சரிதமோது
கவிஞர் இராசை (இந்துசாதனம் - 2009 ஆடி -
79. செந்தமிழுலக மெல்லாம் சிறந்தபேரறிஞர் வாழும்
80.
8.
82.
83.
84.
85.
86.
87.
88.
89.
இந்திர வுலகென்றோது மிச்சென்னை மாகாணத்துள் பைந்தமிழ் வல்லார் கூடிப் பார்த்திதை ஆய்ந்த பின்தான் உந்தமினுரையை நாங்கள் உகந்ததென்றேற்ப மென்றார்.
அன்னவருரைத்த வார்த்தை கேட்டுளமயர்வு எய்தி என்னவமான மென்றே எடுத்தவர்க்குரைக்கநகைத்தே என்னிதற் கிரங்குகின்றீர் என்னுரைநடையிலேயோ பன்னிடுமுறையிலேயோ பிழையிலை யென்று கூறி.
என்னுரைநடையிலேயோ எழுதிய முறையிலேயோ அன்னவர் பிழையுரைத்தால் அதைப் பிரமாணங் கொண்டே நன்கித வென்று நானே நாட்டுவன் மயக்கம் வேண்டாம் நின்னவர்க்குரையுமாய்வை நிகழ்த்திடுமாறு என்றே.
கிழ்ப்படுகுணத்தினாலே கிஞ்சித்தும் யோசியாது காழ்ப்புடனுரை செய்தாரின் கருத்தது மாறுமாறும் தாழ்த்தியே பேசு வார்க்கெம் தகுதியைக் காட்டலோடு யாழ்ப்பாணத் தமிழையெங்கும் நாட்டிடல் வேண்டுமென்றார்.
வன்னமா மொழிகள் மூன்றும் வல்லவர் இவர்தா மென்று சென்னைமாநகரே போற்றும் சிறப்புடை மகாலிங்கையர் தன்னையேயணுகியிந்தத் தமிழ்மொழிபெயர்ப்பை ஆய்ந்து என்னவாந்தரத்ததென்று எமக்குரை செய்கவென்றார்.
அம்மொழிபெயர்ப்பை ஆய்ந்த ஐயருள் நெகிழ்ச்சியோடு இம்மொழிபெயர்ப்பைப் போல எம்மொழிபெயர்ப்புமில்லை செம்மொழிவைப்பின் பாங்கும் செழுந்தமிழ்நடையின் வீச்சும் நம்மொழியாழ்ப்பாணத்தில் நன்குறத் தழைத்த தென்றே.
தம்மனந் திறந்து வாழ்த்திமிசனரிமாரைக் கூட்டி இம்மொழிபெயர்ப்பி லெந்த இலக்கணத் தவறு மில்லை அம்புவிக்களிக்க அச்சில் பதிப்பிக்கத்தகுந்த தென்றே சம்மதங்கொடுக்க வாங்கிச் சாதித்த மகிழ்வினோடும்.
எம்மவர்தமையிகழ்ந்த அம்மகர் வாயினாலே நம்முடையாழ்ப்பாணத்துத் தமிழ் புகழ்நாட்டி வைத்தும் அம்மொழிபெயர்ப்பைநன்கே அச்சினிற் பதித்துக்கொண்டும் நம்பரும் பார்சிவலும் யாழ்ப்பாணம் திரும்பினார்கள்.
வந்தவரிருந்த காலை வகுப்பினில் ஒன்றாய்க் கற்றே வந்துபின் ஆங்கிலத்தில் வல்லராய்ப் பேர்சிவலார் தந்திடுபாடசாலை யுபாத்தியாராகிவிட்ட தந்தமர் தில்லைநாதபிள்ளையும் சின்னப்பாவும்
தம்மதமான சைவ உண்மைகளறிந்தி டாதே வம்மினிங்குயர்ந்த வாழ்வை வழங்குவ மெனும் கிரீஸ்து அம்மத ஞானஸ் நானம் அளிக்கநாட்குறித்து மார் சம்மதங்கொடுத்து வந்த சங்கதியாவும் கேட்டே
மாறிட இருந்தார் தம்மை மறித்தொரு இடத்தில் வைத்து நீறதன் மகிமையோடுநீள்சைவ உண்மை யெல்லாம் கூறிநல் உயர்வுணர்த்திகுறித்தநாள் ஞானஸ்நானம் தேறிடுசிவஞானத்தாற் செல்வதைத் தடுத்து வைத்தார்.
90. பார்க்குமிச்செயலினாலே பாதிரிகோபமாகி
நீக்குவார் வேலை விட்டே யென்றதைச் சிந்தையெண்ணார்

3.2009 விரோதி ஆவணி01
நற்றமிழ் மாலை
ா குகதாசன் பக், 22 இன் தொடர்ச்சி)
9.
92.
93.
94.
95.
96.
97.
98.
99.
வாக்கினால் வசம தாகிவினர்மதமாற்றை நீக்கும் நோக்கினை நெஞ்சிற்கொண்ட நுவலரியுண்மை சொன்னார்.
நோக்கினை மாற்றி ஞானஸ் நானத்துக் கிருவர் தாமும் போக்கினைக் காட்டிச்சென்ற புன்மையைநினைத்துக்கோபம் தேக்கிய முகத்தினோடு சென்றுஅப்பாதிரியார் வாக்கினைத்தந்து விட்டேன் வரவில்லையென்று கேட்டார்.
குறித்தநாள் ஞானஸ் நானம் கொண்டிடா தேத என்று மறிந்துமே கேட்டவர்க்கு மனதுள துரைத்திடாதே உறுத்துநால் விவிலியத்துக் கோட்பாட்டின் சந்தேகங்கள் குறித்துநாம் ஆய்ந்தவற்றைத் தெளிந்தபின் பெறுவமென்றார்.
நன்றும சந்தேகத்தை நாளது சுணங்கிடாமல் சென்றுநீர் தீர்த்துக்கொண்டு சீக்கிரமாக வந்தே நன்றொரு நாட்குறித்து ஞானஸ்நானத்தை நீங்கள் சென்றுமே பெற்றுவிட்டே சேருமெம் மதத்திலென்றார்.
பிறிதொரு வழியினாலே பேர்சிவல் பாதிரியார் அறுமுகப் பிள்ளை கூட்டி அருஞ்சைவ உண்மை கூறி பெறவரஇருந்தார் தம்மைப் போதித்துத் தடுத்தாரென்றே அறிதலும் கோபத்தோடு அவர்வீட்டிற் பிரவேசிக்க,
ஞாயிறுஞானஸ்நானம் நயந்துநாம் பெறுவ மென்று நேயமாயுரைத்துச்சென்ற நேசராமிருவர் தம்மை தாயராயிருந்துநீவிர்தடுத்தது என்னை?யென்ன மாயிருள் தன்னை நீக்கல் மாண்பினர்க் கழுகி தென்றே
கற்றவ ரொருவர் தாங்கள் கற்றுணர்ந்தவற்றை யெல்லாம் மற்றவர்க்குரைத்துயர்த்தும் மரபினைப் பற்றி நானும் பெற்றிருந்தரிய சைவப் பேருண்மை யாவுமென்னை உற்றவர்க் கறிய வைத்தல் உரிமையும் கடனும் மென்றார்.
என்றவர் மொழியக் கேட்டு ஏளனமாய்ந கைத்தே என்னிடமுத்தியோகம் சம்பளம் பெற்றுக்கொண்டு உன்னிநம் மதத்திற் சேர ஒப்பிவந்தவரைத் தடுத்த தன்மையில் நடந்ததுங்கள் தகுதிக்கு இழுக்கி தென்றார்.
உம்மிடத்துத்தியோகப் பண்டிதராயிருத்தல் சம்மதமில்லையானால் சற்றுந்தாமதித்திடாதே நம்மிடத்திருந்திப் போதேநீங்கிறேனென்று சொல்லி தம்கதும் நீட்டித் தலைப் பாகையை எடுத்துக் கொண்டார்.
அம்மகரெடுத்த காலை அன்புடன் கையைப் பற்றி அம்புவி கிறீஸ்துவத்தைப் பரப்பிடத் தெரிந்தெடுத்தே கீழ்மையிங் கனுப்பிவைத்த வெஸ்லியன் மிசனரிக்கும் தம்அபிப் பிராயத்திற்கும் விரோதியாயிருந்தபோதும்.
100. நந்தமக்கிவரைப் போல்நற்பண்டிதர் ஒருவர் தாமும்
இந்தநல்லுலக மேகும் தேடினும் கிடைக்காரென்றெ தந்தன துள்நினைந்து தயவுடனவரை நோக்கிக் குந்தக மேதுமில்லைக் கோபிக்க வேண்டாமென்றே.
101. நந்தமர் வந்து காதில் நவின்றஅச்செய்தியாவும்
எந்தளவுண்மை யென்றே அறிந்திட விழைந்தே நானும்
உந்தமைக் கேட்டனல்லால் உம்குற்றமில்லை நீவிர்
பந்தம தாகி முன்போல் பார்த்திடும் வேலை யென்றார்.
(வளரும்.)

Page 20
இப்பத்
"ஒருவர் மேலுள்ள பகையை மற்றொருவர் சாதித்தற்கு ஏற்ற கருவி பத்திரிகை என்பது சிலருடைய கருத்து. நாம் இதற்கு முழுமாறான கருத்துடையோம். பலருக்கும் பொதுவான நன்மைக்குரிய விஷயங்களைப் பேசுவதே பத்திரிகையென்பது நம்முடைய கருத்து. பத்திரிகைகளை நடத்துகிறவர்கள் பலர். முதலிலே பத்திரிகையினால் உண்டாகும் பயனை வேண்டிய மட்டும் விரித்துப் பேசியிருக்கிறார்களாதலால், நாம் அதனை எல்லோரும் அனுபவத்தால் அறிந்துகொள்ள வைத்துவிட்டு, இந்து சாதனம் என்னும் இப்பத்திரிகை தொடங்கிய நோக்கத்தை மாத்திரம் இங்கே காட்டுவோம்.
நம்முடைய சட்ட நிரூபணசபையில், அந்த அந்தச் சாதியாருக்கு உள்ள குறைகளைப்பேசி நிறைவேற்றுதற்கு ஒவ்வொரு சாதியாருக்கும் ஒவ்வொரு பிரதிநிதி ஏற்பட்டிருத்தல் போல இலங்கையிலுள்ள மற்றைய எல்லாச் சமயத்தாருக்கும், சாதியாருக்கும் வேண்டிய விஷயங்களைப் பேசவேண்டிய பத்திரிகைகள் இருக்கின்றன. சைவர்களாயுள்ள தமிழர்களுக்கு மாத்திரம் ஒரு பத்திரிகையும் இல்லை. நம்மவர்கள் சைவத்தைப் பற்றி விளம்பரந்தானும் பத்திரிகைகளில் வெளிப்படுத்த வேண்டு வாராயின், சென்னப்பட்டணம் முதலான தூரமான இடங்ளுக்கு அனுப்பவேண்டி இருக்கின்றது.
இனி நம்முடைய நாட்டிலே ஒற்றுமை கிடையாது. ஒற்றுமை மாத்திரம் உண்டாயின் நம்மவர் உயர்வும் ஐசுவரியமும் செளக்கியமும், இஷ்டமும் அடைய வேறு யாதுந் தடையில்லை. ஒற்றுமையின்மையால் அநேகர் தங்களுக்குள்ள குறைகளை நிவிர்த்தி செய்ய இயலாதவர்களாயிருக்கிறார்கள். சிலர் தங்களுக்குள்ள குறைதான் இன்னதென்று அறியாதவர்க ளாயிருக்கிறார்கள். இங்கிலாந்திலே ஏறக்குறைய நாலாயிரம் பத்திரிகைகள் உலாவுகின்றன. ஆதலால் அங்கே ஒற்றுமை மிகவும் உண்டு. ஒற்றுமையை உண்டாக்குவது பத்திரிகையென்பது பிரசித்தம். இன்னும் நம்மவர்களுக்குள் அபிமானங்கிடையாது. அந்நிய சாதியார் அந்நியதேசத்தார் அந்நியசமயத்தார்
 
 

32O09 விரோதி ஆவணி01
வருட மாதம் 26ஆந் திகதி"இந்து சாதனம்" விர்அவர்களுடைய பெறாமகன் தம்பு கைலாசபிள்ளை,
தம்மைப்பற்றி எவ்வளவு இகழ்ந்து பேசினாலும், நம்மவர் கேட்டுச் சகித்துக்கொண்டு மெளனமாயிருக்கின்றார்கள். எதிர்வார்த்தை பேசுகிறார்களில்லை. தங்களுடைய சாதிக்கும், தங்களுடைய தேசத்துக்கும், தங்களுடைய சமயத்துக்கும், தங்களுடைய முன்னோருக்கும் உள்ள பெருமையை முழுதும் மறந்து விட்டார்கள். அந்நியர் எதைச் செய்தாலும் அதுவே நல்ல முன்மாதிரி என்று அதையே பின்பற்றுகிறார்கள். அன்றித் தங்களுடைய கல்வி, தங்களுடைய சாத்திரம், தங்களுடைய சமயம், தங்களுடைய தொழில் என்னும் இவை முதலியவைகளை விருத்தி செய்யவும் இவைகளிலே மேன்மேலும் திருத்தமடையவும் நினைக்கிறார்க ளில்லை.
ஆதலால் பலதலைப்பட்டுக் கிடக்கும் வெவ்வேறு எண்ணமுடைய நம்மவர் எல்லோரும் தமக்குள்ள குறைகளையும் அவைகளை முடிக்கும் வழிகளையும் அறிந்து, அபிமான முடையராய்த் திரண்டு, ஒற்றுமைப்பட்டுப் பெற்று வாழத் தூண்டி விடுவதும் அவர்களுக்காக அன்புகொண்டு பேசுவதும் இப்பத்திரிகையின் முழுநோக்கமாகும்.
நம்மவர் ஒற்றுமையுற்றுப் பொதுவாக நன்மையை அடைய வேண்டுமென்னும் ஒரே கருத்து நமக்கு இருத்தலால், உட்சமயக் கலகங்களுக்கும் வசை மொழிகளுக்கும் இப்பத்திரிகையில் இடம் சிறிதுங்கிடையாது.
பத்திராதிபர்கள் பலர் பலமுறை நட்டமடைந்து கை சோர்ந்ததைக் கண்டுங்கண்டும், நம்மவர் அந்நியரால் அடையும் சிறுமையைப் பார்த்துச் சகிக்காது பொது நன்மைக்காகவும், சமய விருத்திக்காகவும் இப்பத்திரிகையைத் தொடங்கியிருக்கின்றோம். இதனைத் தளர்வடையாது நிலைபெறும்படி செய்தல் நம்மவர் எல்லாருக்குங் கடனாகும். இதையுந் தவறவிட்டால், நம்மவர்க்கு வேறு பத்திரிகை வாய்ப்பது அரிது அரிது. கையொப்பகாரருடைய உதவி இருக்குமாயின், மாசமிரண்டு தரம் வெளிப்படுத்தத் தொடங்கிய இப்பத்திரிகையை மாசம் நாலு தரம் வெளிப்படுத்த ஆயத்தமாக இருக்கிறோம்."
நல்லூர் - சப்பரத் திருவிழா
- அமரர். அராலி பரமேஸ்வர சர்மா -
சோதியென ஒளிவீசித் திகழு கின்றாய்
சொர்க்கம்வாழ் பவர்க்கெல்லாம் வாழ்வு தந்தாய் பாதிமதி யணிசடையார் கண்வந் துள்ளாய்
பாவிகளா மசுரர்தமை மாய்வு செய்தாய் கதிலடி யார்கள் தொழு முகமா றுள்ளாய்
கழும்பழி பாவமெலாந் தீர்த்தாய் நல்லை வீதிவரு சப்பரத்து வீர வேலா
விதந்துன்னைக் கந்தனென விழிக்குள் வைப்பாம்.

Page 21
இந்துசாதனம் 17.O
கோவில்கள் பல இருந்தாலும்"கோவில்" எனத் தனிய கோவிலையே குறிக்கும். கோவில்களிலே பல சந்நிதி தொண்டைமானாறுசெல்வச்சந்நிதியையே குறிக்கும். அத் வரலாற்றை, அடியார்களின் ஆவலையும் గోపి ,
செல்வச் சந்நிதி ഖങ്ങഖ þ.< கல்வி அ
மெய் சிலிர்க்க வைக்கும் அற்புதங்களையும், வரலாற்றுப் பாரம்பரியங்களையும் கொண்ட தொண்டைமானாற்றில் ஆற்றங்கரையோரமாக அமைந்து அருள் பாலிக்கும் செல்வச் சந்நிதி ஆலயம் - காலம் குறிப்பிட்டுக் கூறமுடியாதபடி பல ஐதீகங்கள் நிறைந்த தொன்மைவாய்ந்த ஒரு ஆலயமாக விளங்குகின்றது.
ஒரு கோயிலின் வரலாற்றுடன் ஐக்கியமாகிவிட்ட ஐதீகங்களும், புராண வரலாறுகளும் அதன் வழிபாட்டுக் குழுமத்தினால் மரபு வழியாகப் பரம்பரை பரம்பரையாகப் பின்பற்றப்படும்பொழுது அதுவே அந்தக் கோயிலின் வரலாறாக எழுதப்படுவதும் தவிர்க்க முடியாததாகி விடுகின்றது. அந்த வகையிற் செல்வச் சந்நிதியின் ஐதீகங்களுடனும் புராண, இதிகாச சம்பவங்களுடனும் தொடர்புபட்ட முறையிலேயே அதன் வரலாறும் மரபுகளும் பின்னிப்பிணைந்து காணப்படுகின்றன.
இன்றுதொண்டைமானாறு என்று அழைக்கப்படும் ஆறு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சிறியதொரு நதியாக வல்லி நதியாறு என்று அழைக்கப்பட்டுவந்தது.
முருகப்பெருமான் திருச்செந்தூரில் இருந்துகொண்டு வீரவாகு தேவரை அழைத்து, மகேந்திரபுரியில் உள்ள சூரபத்மனிடம் அனுப்பியவேளை, வீரவாகுதேவர் முருகனின் கட்டளையைச் சிரமேற்கொண்டு, இந்த வல்லி நதிக் கரையின் கல்லோடைப் பகுதியில் கால்வைத்துச் சென்றதாக ஒரு ஐதீகம் நிலவுகின்றது. அப்பாதச் சுவடுகள் இன்றும் கல்லோடைப்பகுதியில் காணப்படுகின்றன. சூரபத்மனிடம் சென்றுவிட்டுத் திரும்பிய வேளை சந்திக் காலமாகிவிடவே முருகப் பெருமானுக்குச் சந்திக் காலப் பூசை செய்ய வேண்டிய பணி அவரது மனதில் உதித்தது. அந்தக் கணமே, கல்லோடைப் பகுதியில் தரித்து நின்ற வீரவாகு தேவர் அவ்விடத்தில் வேல் ஒன்றைப் பிரதிட்டை செய்து, சந்திக்காலப் பூசை வழிபாட்டினை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து முனிவர்களும். சித்தர்களும், யோகிகளும் இவ்விடத்தில் தவம் செய்து முக்தி அடைந்ததாகக் கருதப் படுகின்றது.
இவ்வாறு வீரவாகுதேவர் மற்றும் முனிவர்கள், யோகிகள், ஞானிகள் என்போர் கல்லோடையில் கந்தனை நினைத்துப் பூசித்து வந்ததால் சந்நிதிக் கந்தன் "கல்லோடைக் கந்தன்" என்றும் அழைக்கப்படுகின்றான்.
இதுபோன்று செல்வச் சந்நிதி ஆலயத்துடன் தொடர்பான இன்னுமொரு ஐதீகமும் பாரம்பரியமாக நிலவுகின்றது.
வியாழ பகவான் தன்னுடைய கட்டளைப்படி ஒழுகத் தவறிய தேவலோகக் கந்தர்வனான "ஐராவசு" என்பவனை யானையாகப்
4
 
 

B2OO9. விரோதி ஆவணி01
ாகச் சொன்னால், அது சிதம்பரம் நடராஜப்பெருமானின் கெஞ் இருந்தாலும் "சந்நிதி என்றால் யாழ்ப்பாணம் செயங்களும் அற்புதங்களும் நிறைந்த அந்தக்கோவிலின்
ண்டும்வகையி
துகின்றார்.
நியின் தோற்றம்
அனந்தராஜ்
9.
திகாரி
போகுமாறு சாபம் கொடுத்தார். வியாழ பகவானின் சாபத்திற்கு ஆளான "ஐராவசு", யானை உருவில் கதிர்காமத்தைச் சூழ உள்ள அடர்ந்த காட்டில் அலைந்து திரிந்தான். யானை உருவில் அலைந்து திரிந்த ஐராவசு, பல அட்டகாசங்களைச் செய்துவரும் வேளையில், சிகண்டிமுனிவரையும் தாக்கமுற்பட்டான்.
அந்த யானையின் அட்டகாசத்தைக்கண்ட சிகண்டி முனிவர், அதனுடைய பூர்வீக வரலாற்றைத் தன் ஞான திருஷ்டியால் அறிந்ததும், "வெற்றிலை நுனி" ஒன்றினால் வேற்பெருமானை நினைத்து சடாட்சர மந்திரத்தை உச்சரித்தபடி மதங்கொண்ட யானையின் நெற்றியில் அடித்தார். உடனே அந்த வெற்றிலை நுனி வேலாக மாறி, யானையைத் தாக்கவே அது அலறித் துடித்தபடி வீழ்ந்து, மீண்டும் கந்தர்வனாக உருவெடுத்தது. பழையபடி ஐராவசுவாக உருமாறிய கந்தர்வன் தனக்கு முக்தி அளித்து அருள வேண்டுமென சிகண்டி முனிவரை வணங்கி நின்றான். அவனுடைய வேண்டுதலுக்கு இரங்கிய சிகண்டிமுனிவரும்,
"நீ வடபால் சென்று சந்நிதி தலத்திலே கோயில் கொண்டருளும் வேற்பெருமானை வணங்கி முக்தி அடைவாயாக" என்று கூறித் தொண்டைமானாறு செல்வச் சந்நிதிக்கு ஆற்றுப்படுத்தினார். கந்தர்வனும் அவ்வாறே வட பகுதி சென்று, சந்நிதிக் கல்லோடைத்தலத்தில் வந்து தியானம் செய்தான். அங்கே உள்ள வரலாற்றுப் பெருமை படைத்த தலவிருட்சமாக விளங்கும் பூவரச மரத்தின் கீழ் முக்தி அடைந்ததாகவும் கூறப்படுகின்றது.
சிகண்டி முனிவரால் வேல் வடிவிலான வெற்றிலை நுனியினால் மதங்கொண்ட யானையை அடித்து கந்தர்வனை முக்தி அடையச் செய்த வரலாற்றை நினைவுபடுத்துமுகமாகவே, இன்றும் எழுந்தருளி வேலின் முகப்பில் வெற்றிலைநுனி வைக்கப்பட்டுவருகின்றது.
அமைதியான சூழலில், பல நூறு வருடங்களுக்கு மேலாக அருள்பாலித்துக் கொண்டிருந்த முருகன் ஆலயம் கி.பி.16ஆம் நூற்றாண்டிற் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டது. அதன்பின்னர் ஒல்லாந்தர் காலத்தின் இறுதிப் பகுதியிலே மருதர் கதிர்காமரி னால் இவ்வாலயம்புனரமைக்கப்பட்டுவழிபாட்டிற்குரியதாகியது.
'கோயில் வரலாறு பற்றிய குல சபாநாதனின் குறிப்புக்களில் இருந்து சந்நிதி கோயிலின் அற்புதத்தை அறியமுடிகிறது.
"அநாதி மல முத்தனாகிய முருகப்பெருமான், சந்நிதியில் எப்பொழுது கோயில் கொண்டெழுந்தருளினார் என்ற சரித்திர ஆராய்ச்சியில், சிற்றறிவும் சிறுதொழிலுமுடைய மக்கள் ஈடுபட்டு உண்மை காண்பதரிது. பண்டைக் காலத்தில் ஈழத்திற் சைவசமயம் சிறப்புற்று ஓங்கிய பொழுது, செல்வச் சந்நிதி முருகன் கோயில் பல வீதிகளுடைய சிறந்த ஆலயமாக விளங்கியது. போர்த்துக்கேயரும் -->
i

Page 22
இந்துசாதனம் 7,O
ஒல்லாந்தரும் (டச்சுக்காரர்) இலங்கையில் ஆட்சிபுரிந்த காலத்தில் தத்தம்சமயக் கொள்கிைகளைப் பரப்பியதுமன்றி சைவக் கோயில்களைத் தகர்த்து, அவை இருந்த இடமும் தெரியாமல் தரைமட்டமாக்கிவிடும் கைங்கரியத்திலும் ஈடுபட்டிருந்தனர். கதிர்காமத்தை இடிக்கச் சென்ற ஒல்லாந்தர் வழி தடுமாறி மயங்கிக் கடைசியில் அதனை அடைய முடியாது திரும்பி வந்துவிட்டதாக ஒல்லாந்தரே எழுதிய சரித்திரத்தில் குறிப்பிட்டிருக்கின்றனர். அதுபோலவே சந்நிதியிலும் ஒரு திருவிளையாடல் நடைபெற்றது. செல்வச்சந்நிதி முருகன் கோயிலை இடிக்கச் சென்ற ஒல்லாந்தர் அதனை முற்றாக இடிக்கமுடியாது திரும்பிவிட்டனர்".
ஒல்லாந்தரின் ஆட்சிக்கால முடிவில் மீண்டும் ஈழத்தில் சைவமும் தமிழும் தழைத்தோங்கத் தொடங்கின. அவர்களது ஆட்சிக்கால முடிவில், சமய சுதந்திரம் ஓரளவு கிடைத்ததும், தொண்டைமானாற்றில் வாழ்ந்த செட்டிமார் என்னும் பிரிவினர் அந்த இடத்திலேயே சிறு கோயில் ஒன்றை அமைத்து வழிபட்டு வந்தனர். அவர்களும் பின்னர் அதனை முறையாகப் பேணாததுடன், தமக்குத் தாமே பிணக்குப்பட்டு பூசைகள் செய்யாது கோயிலைப் பூட்டி வைத்திருந்தனர். இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சுப்பிரமணியர் தன்னை இடைவிடாது வணங்கி வரும் மருதர் கதிர்காமரிடம் தன்னைப் பூசித்து வழிபடும் உரிமையைக் கையளிக்கத்திருவுளம் கொண்டார்.
தொண்டைமானாற்றில் கடற்றொழில் செய்து சீவியம் நடத்தும் மருதர் கதிர்காமரிடம் ஆடு மேய்க்கும் சிறுவனாகத் தரிசனம் கொடுத்து.
"அடேய் கதிர்காமா! . நான் எத்தனை நாளாகப் பசி கிடக்கிறன். என் பூசையைச் செய்வாயா?" என்று கேட்டார் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்த கதிர்காமர்,
"சுவாமி!. நானோ கடற்றொழில் செய்பவன். கிஞ்சித்தேனும் கல்வியறிவில்லாதவனாகிய எனக்குப் பூசை செய்யும் முறைகள், மந்திரங்கள் எதுவும் தெரியாது. என்னால்
==یہ بہت سی ---------------
 

B2OO9 விரோதி ஆவணி01
எப்படிப் பூசை செய்ய முடியும்?" என்று உள்ளம் நெகிழ்ந்து போய் மன்றாடினார். "நீ வாய் கட்டி மந்திரமின்றிப் பூசை செய்யலாம்" என்று சொல்லியருளினார்.
அதற்கும் தயங்கிய மருதர் கதிர்காமருக்குப் பல சோதனைகளைக் கொடுத்த முருகன், அவரைக் "கண்ணை மூடுக!" எனப் பணித்து அங்கிருந்தபடியே ஒரு இமைப் பொழுதிற்குள் கதிர்காமம் அழைத்துச் சென்று அங்கே நடைபெறும் பூசை முறைகளைக் காட்டி அவரிடம் பிரதிட்டை செய்து வழிபட ஒரு வெள்ளி வேலையும் வழங்கினார்.
மருதர் கதிர்காமர், கதிர்காமத்தில் கிடைத்த வேலைக் கொண்டு பூசை செய்ய முற்பட்டபோது, முன்னர் தமக்குள் பிரச்சினைப்பட்டுக் கொண்டிருந்த செட்டிமார், அவரைப் பூசை செய்ய விடாது தடுத்தனர்.
இதனால் மனமுடைந்த மருதர் கதிர்காமர் முருகனை நினைந்து வணங்கிய பொழுது, முருகன் அவரது கனவிற் தோன்றி, "கதிர்காமா. நீ இந்த வேலை, அன்னதான மடத்தில் வைத்துப் பூசை செய்யலாம். இவர்கள் இந்த இடத்தைவிட்டு இரண்டு வருடத்தின்பின் இல்லாது போய்விடுவார்கள். அதன்பின் ஆறு மாதத்திற்குள் பூசைகள் இல்லாமற் கதவு பூட்டப்பட்டிருக்கும். அதற்குப்பின் இங்கே உள்ளவை எல்லாம் உனக்கே வரும்." என்று சொல்லி அருளினார். மருதர் கதிர்காமரும், முருகனின் உத்தரவுப்படியே அன்னதான மடத்தில் வேலை வைத்துக் கிரமமாகப் பூசைகள் செய்து வந்தார். அந்தக் காலத்திற்றான் செட்டிமார் தமக்குள்ளேயே மீண்டும் பிரச்சினைப்பட்டு, ஆலயக் கதவையும் பூட்டிக்கொண்டு வெளியேறி விட்டார்கள். அன்று தொடக்கம் இரண்டு வருடத்தினுள் ஊனமான ஒரு செட்டியைத் தவிர ஏனையோர் எல்லோருமே அழிந்துவிட்டனர். எஞ்சியிருந்த அந்த ஊனமான செட்டி, தனது தவற்றை உணர்ந்தோ என்னவோ அக்கோயிலின் உடைமைகள் யாவற்றையும் கோயில் வாசலிற் கொண்டுவந்து மருதர் கதிர்காமரை அழைத்து ஆலயத்
ப்பையும் ெ க்கவிட் mIGFoimT. திறப்பையும் கொடுத்துவிட்டு அகன்று சென்றார்
நல்லூர் - தேர்த் திருவிழா
-சிற்பி
வேலவனவி வெள்ளிமணிப் பீடந்தனி லேறி
வீதிகளில் வெற்றிநட மாடிவருங் காட்சி காலையிளம் பரிதிஒளி ഥേങ്ങധിക്കേ தவழ
கனகமணிக் கோவையெனக் கந்தன்வருங் காட்சி சீலமுறு மடியவர்கள் சேர்ந்துதிரு நல்லூர்த்
தேரின்வடம் மெல்லனடுத் தேயசைக்கும் காட்சி
கோலம்பல காணாத கண்னென்ன கண்ணே!
குமரனெழில் காணாத கண்னென்ன கண்ணே!

Page 23
இந்துசாதனம் 7.O.
அன்று அவரிடம் திறப்பை வாங்கிய மருதர் கதிர்காமர் முழு ஆலயத்தையும் பராமரித்துக் கிரமம் தவறாது பூசைகளைச் செய்து வந்தார்.
கதிர்காமத்தில் பூசை முறைகளைப் பார்த்த கதிர்காமர் முருகப்பெருமான் காட்டிய இடத்தில் ஆலயம் அமைத்து முருகனின் வேண்டுகோளின்படியே அறுபத்தைந்து ஆலம் இலைகளில் அமுது படைத்துச் சைவ ஆசாரங்களை மேற்கொண்டு வாய் கட்டிப் பூசை செய்து வந்தார். பூசை முடிந்ததும் பக்தர்களின் முன் திருநீற்றுத் தட்டினை நீட்டி திருநீற்றை எடுக்கும்படி மருதர் கதிர்காமர் கூறுவார்.
அப்பொழுது திருநீறு கொடுக்கும் முறை தெரியாது துயருற்ற கதிர்காமருக்கு முருகப் பெருமான் மீண்டும் காட்சி கொடுத்து,
"கதிர்காமா. நீதிருநீற்றை எடு. நான் கொடுக்கின்றேன்" என்று கூறி மறைந்தார். அன்று தொடக்கம் இன்று வரையில் செல்வச் சந்நிதியில் முருகனே "பூசகர்" உருவில் வந்து திருநீற்றை வழங்குவதாக பக்தர்கள் கருதுகின்றனர். பூசை முடிந்ததும், கோயிலின் பிரதம பூசகரால் திருநீறு வழங்கப்பட்டு வரும்போது, பூசகரின் காலைத் தொட்டு வணங்கித் திருநீற்றைப் பயபக்தியுடன் குனிந்து பெற்றுக் கொள்வார்கள். அவ்வாறு வணங்கித் திருநீற்றைப் பெறுபவரின் தலைமீது திருநீறு போடப்பட்டிருப்பதைக் காணலாம். இவ்வாறு தலையில் இடப்படும் திருநீறு முருகப் பெருமானால் இடப்படுவதாகவே பக்தர்கள் எண்ணிப் பரவசடைகின்றார்கள்.
இவ்வாறு பூசைகள் நடைபெற்று வரும் காலத்திலேயே, மீண்டும் முருகன், அவரது கனவிற் தோன்றி "எனக்குத் திருவிழா நடத்த வேண்டும். பத்தாம் பதினைந்தாம் நாட் திருவிழாக்களில், நானே ஆட்களுடன் ஆளாக உலாவந்து எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு திரிவேன்"என்று கூறியதுடன்,
"நிவேதனப் பொருள் என்ன வந்தாலும், சுவாமிக்கென்று
CDC
OMOMOOMOO OOMOMOMOMOMOMOOMOO M OM TOTO O M
பெரியபுராணம்
படிக்கும்போது இன்பம் செய்வதோடு பின்னரும் நிலைத்து நின்று வாழ்வைத் திருத்தும் நல்லதொரு பணியைச் செய்கின்ற ஒன்றையே இலக்கியம் என்று நம் நாட்டவர்கள் கருதி னார்கள். பெரிய புராணம் என்று வழங்கப்பெறும் திருத்தொண்டர் புராணம் தோன்றியது, இக் காரணத்தை அடிப்படையாக்கிகொண்டுதான்.
ஆசிஞானசம்பந்தன்
 
 

2O09 விரோதி ஆவணி01
வை. அவற்றை நாலாகப் பிரித்து மூன்று பங்கையும் அவித்துக்
س- *
குவித்துப்போட்டுக் கதவைத்திறந்து” %Tதக் கொழுத்திவை, அதுவே எனக்குச் சந்தோஷ>ே ప్తి வந்தவனுக்கும் சந்தோஷம். அவனுக்கு ಗಾ?'கொண்டு போய் சாப்பிடுவந்தவர்களுக்கும்கொடு.வாயைக் கட்டிப்பூசைசெய்." என்று திருவிழாமுன்றகளையும் கூறிவழிநடப்பித்தார்.
சந்நிதியானுடன் நேருக்கு நேராக நின்று ஒட்டி உறவாடும் மருதர் கதிர்காமருக்கு முருகன் சிறுவனாகவும், வயோதிபராகவும் இன்னும் பல தோற்றங்களிலும் அடிக்கடி அழகழகாகக் காட்சி கொடுத்து, ஆலயத்தின் முன்புறம் உள்ள திண்ணைகளில் எதிரும் புதிருமாக அமர்ந்து, கோயிற் பூசை முறைகளைப் பற்றியும் அமைந்திருக்கும் இடத்தின் சிறப்பைப் பற்றியும் பேசிக்கொண்டே இருப்பர். கதிர்காமரும் முருகனின் வழிகாட்டலின்படி பூசை களையும் திருவிழாக்களையும் செய்துவந்தார்.
முருகப் பெருமானும் கதிர்காமரும் அமர்ந்து உரையாடிய தாகக் கூறப்படும் இரு திண்ணைகளும் ஆலய நந்திக்குப் பின்னால் இன்றும் பேணப்படுகின்றன. அவரைத் தொடர்ந்து அவருடைய பரம்பரையினரே செல்வச் சந்நிதி முருகனுக்குரிய பூசைகளையும் திருவிழாக்களையும் சைவ ஆசாரத்துடன் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எளிமையும், அழகும் நிறைந்த சந்நிதியின் மூலஸ்தானம், மகாமண்டபம், முகப்பு மண்டபம், பூங்காவன மண்டபம், மணிக் கூட்டுக் கோபுரம் ஆகியன 1986 ஆம் ஆண்டு மோட்டார் தாக்குதலினாலும், செல் தாக்குதலினாலும், விமானக் குண்டு வீச்சுக்களினாலும் அழிக்கப்பட்டு பூசைகள், வழிபாடுகள் யாவும் நிறுத்தப்பட்டிருந்தன.
மீண்டும் 1988 ஆம் ஆண்டின்பின் சந்நிதியான் அடியார்களினாலும், ஆலயத்தின் பூசகர்களினாலும் எத்தனையோ முயற்சிகளின் மத்தியில் ஆலயம் புணரமைப்புச் செய்யப்பட்டு பழைய தோற்றத்தைப் பெற்று, அடியார்களின் மனக் குறை தீர்க்கப்பட்டது. 人
警つ ୪୪୪,୪୪,୪୪,୪୪,୪୪,୪୪,୪୪,୪୪,୪୪୬
இந்துசாகுனம் - சந்தாவிபரம்
உள்நாடு தனிப்பிரதி : 50/- ஆண்டுச் சந்தா : ரூபா 600/- 参见
காசோலைகள் Saiva Paripalana Sabai ACCount No. 1090946
என்று எழுதப்பெறுதல் வேண்டும். வெளிநாடு Australia (AUS) 35 Europe XX 25 India (Indian Rs) - 500 Malaysia (RM) - 50 அனுப்ப வேண்டிய முகவரி: Canada (S) 35 கெளரவ முகாமையாளர் UK (£) - 15 இந்துசாதனம் Olher (USS) - 25 இல66, கல்லூரி வீதி,
யாழபபாணம.
உ9R3R3R3R3R3R3R3R3R3R3R3R3R3R3R3R3R9
3.

Page 24
இந்துசாதனம் 17.o:
No one can assic aterial wealth is indisp
-് --༣ goal nausgasiiga is great West in the Gre
Do You WA TERNALGRE
Prof. A. Sanmugada
Swami Sivananda commenting on Tirukkura said: "Tirukkural is the life, Tiruvasagam is the heart, and Tirumantiram is the Soul of Tamil Culture". Tirukkural in One of its couplets says:
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க் இவ்வுலகம் இல்லாகியாங்கு (247)
This World in not for Wealth less ones That World is not for graceless ones (Dr. G.U. Pope
According to this couplet, the author of Tirukkura has said in no uncertain terms that in this world you need wealth. Whatever Dhaana or Dharma you want to do, you must have enough wealth to do so. But we in fact, know that all the people in this World are not fortunate to have such wealth. Is there any way to have immense wealth by all? 'Yes' is the answer. But the kind of wealth that all people could have is the eternal wealth. How is it possible? Saint Sambanthargives the answerto this pertinent question.
Sambanthar in his Tevaram hymn on the God who resides in Thiruppiramapuram temple says:
சிலையது வெஞ்சிலையாகத் திரிபுரமூன்று எரிசெய்த
வைநுனைவேற்றடக்கையன் ஏந்திழையாள் ஒருகூறன் அலைபுனல் சூழ் பிரமபுரத்து அருமனியை அடிபணிந்தால் நிலையுடைய பெருஞ்செல்வம் நீடுலகிற் பெறலாமே.
Meaning: ܓ¬ܢ
"One holding in long hands the sharp edğed ea like) Spear, - .> ܓ
Who burnt the three puras with the mount astre lethal bow;
OT OM OTO OMO Os OsOO OOO OO OOO OsO OsOO OOO OO OOO OO OOO OO eeS
There is little chance for a ship losing her the true north. So also, if the mind of man - ti always towards God without oscillation, it will
Q父父、父父父父父、
Edited & Published by Mr.S.Shivasaravanabavan on behalf Printed at Harikanan Printers No.424, K.K.S. Road, Jaffna. 17.08

B2OO9. 鄒 விரோதி ஆவணி0
ensable to us, human beings. But our ultimate
.dق کر
ATWEALTH IN THIS WO
is Ph.D. (Edinburgh)
RLD?
Partner ეf beautiful Lady; When the Rare Gemat Thiruppirampuram Surrounded by tidal waters is Saluted,
one can get eternal great wealth in this grand world"
The poem is self explanatory. He is suggesting a simple way to get eternal great wealth in this grand world. If you could fall down at the rare gem like feet of the God who resides at Thiruppiramapuram, the great eternal wealth will be at your feet. If one goes to the temple every day and falls down at the feet of God, he will develop a faith in God and satisfaction in all worldly matters. It will in turn give him or her a life full of happiness and fullness. A person needs wealth to live happily and with full satisfaction. If that could be achieved by a simple prayer at the temple, what else do | – L’ant ?
One who falls down at the feet of the God of hirup pirama puram earns the Wealth called erutceivam. This wealth is eternal. It cannot be stolen or misused. That is why the great Valluvar says:
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள. (241)
The wealth of wealth is the wealth of grace
thy wealth even the basesthas. -(Dr.G.U. Pope)
Sambanthar in conclusion says that those who reach Him will be bestowed with the wealth of grace; they have got gold; they have got very many enjoyments, the are virtuous ("பொன்னடைந்தார் போகங்கள் பல அடைந்தார் புண்ணியரே") الجر
雛
ee OT OO OsO OOO O OO OO OOO OO OOO OeeO OOO OO OO OOO OeO OeS ld towards God -
pourse, so long as the compass points towards he compass needle of the ship of life - is turned steer clearofevery danger. ဗွို · · · ·
of the Saiva Paripalana Sabai No.450, K.K.S. Road, Jaffna & 2009 (1"Day of Avanithingal). Phone: 0212227678